கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சின்னச் சிட்டுக்கள்

Page 1


Page 2


Page 3

ൽ8 ---------- (: ::::::::::::::::::::: 33.3. ბა 2. - 2. భయభ్ళ్ళు
భ
E:::::: . : قتين * * * * * * * * * * * * * * * * -
/'; 33
يت * التي
X. :
' ,
tP:05:416క్కడకు
47493

Page 4
முன்னுரை
சின்னச் சிட்டுக்கள் என்ற இத் தொகுப்பிலுள்ள பாடல்கள் யாவும் 4 வயது முதல் 10 வயது வரையான சிறுவர்களை மனதில் கொண்டே எழுதப்பட்டன.
இப்பாடல்களை இசையோடு பாடலாம். அபிநயம் பிடித்து ஆடலாம்,
சிறுவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையிலும், சிறுவர்களுக்கு நல்வழி காட்டும் வகையிலும் இத்தொகுப்பிலுள்ள பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.
எனது சுட்டிக் குருவிகள் என்ற மழலைப் பாடல்களை வெளியிட்ட நண்பர் ஓ.கே.குணநாதன் அவர்கள் இதனையும் த்துே எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினூடாக அழகான பதிப்பாக வெளியிடுகிறார்.
இந்நூல் வெளியீட்டில் பெரிதும் அக்கறை காட்டிய நண்பர் ஓ.கே.குணநாதன் அவர்களுக்கு என் நன்றிகள் என்றும் உரியன.

என் நூலாக்க முயற்சிகளுக்குப் பெரிதும் உதவி வரும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்திற்கும், குறிப்பாக அதன் தலைவர், மக்கள் சேவை மாமணி, நா.சேனாதிராஜா அவர்களுக்கும்,
வவுனியா இந்துமா மன்றத்திற்கும் குறிப்பாக அதன் செயலாளர் சிவநெறிப் புரவலர், சீ.ஏ.இராமஸ்வாமி அவர்களுக்கும்,
வழமைபோல இந்நூலாக்கத்திற்கும் உதவிய என் தம்பி க.குமாரகுலசிங்கம் அவர்களுக்கும்,
பாடல்களைப் பிரதியெடுத்தும் அச்சுப் பிழைகளைத் திருத்தியும் உதவிய என் மனைவிக்கும் என் நன்றிகள் என்றும் உரியன.
உங்கள் ஆதரவில் என் சிறுவர் இலக்கியப்பணி தொடரும்.
அன்புடன் 90. திருநாவற்குளம் அகளங்கன் வவுனியா (நா.தர்மராஜா)

Page 5
பதிப்புரை 4.
சின்னச் சிட்டுக்கள் -
இது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 28வது வெளியீடு.
தமிழறிஞர் அகளங்கனின் 4வது நூல்,
ஏலவே, இம்மையத்தின் வெளியீடாக அகளங்களின் சுனாத குயில்கள், பாரதப்போரில் மீறல்கள், சுட்டிக் குருவிகள் ஆகிய நூல்கள் வெளிவந்தன.
அவை நல்ல வரவேற்பைப் பெற்றன.
அவற்றைத் தொடர்ந்துவரும் இந்த நூலானது நிலை-2 சிறுவர்களுக்காக எழுதப்பட்ட 30 பாடல்களைக் கொண்டது.
இந்நூலானது சிறுவர்களுக்கு பாடி-ஆட சிறந்த நூலாக அமைபம் என நம்புகின்றேன்.
தமிழறிஞர் அகளங்கன் அவர்களின் நூல்கள் இம்மையத்தினூடாக வெளிவருவதனைப் பெருமை யாகக் கருதுகின்றேன்.
இன்னும் அவரின் பல நூல்கள் இம்மையத்தினால் வெளியிடப்படும் என்ற நம்பித்கையுண்டு.
மீண்டும் இன்னுமொரு நூலில் சந்திப்போம்.
பிரியமுடன், ஓ.கே. குன்நாதன்
DITTT. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்

ନିର୍ବାଣୋନ୍ବା ୫୬ (táa>ö
இT

Page 6
சின்னச் சிட்டுக்கள்
O 6 சிறுவர் பாடல்கள் O எழுதியவர்: அகளங்கள் (நா.தர்மராஜா)
பதிப்புரிமை திருமதி. யூதர்மராஜா B.A. (III 1. } C
町 னுெளியீடு: எழுத்தாளர் இளக்குவிப்பு மையம் (பிரியா பிரசுரம்- 28) C முதற் பதிப்பு:
Εί όό05 -
O அட்டை, கணனி வடிவமைப்பு: ஏ.எம். பறக்கத்துல்லாஹற் (கல்முனை) O
ஓவியம்: ஒருானகுரு, சுசிமன் நிர்மலவாசன்
அச்சுப் பதிப்பு
g + gO விலை: ரூபா 128.00
O ISBN: 955-8715-24-7
இந்நூல் இலங்கைத் தேசிய நூல் அபிவிருத்திச் சபையின் அதுசரணையுடன் அச்சிடப்பட்டது. இதன் உள்ளடக்கக் கருத்துக்கள் சபையின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை என்பதுடன், இது கையெழுத்துப் பிரதி நிலையில் சபையால் திருத்தம் செய்யப்பட்டது என்பதனைக்
கவனித்துக் கொள்ளவும்.
 

அம்மா
அம்மா போல அன்பு செலுத்த ஆரும் இல்லையே - அந்த ஆண்டவனின் வடிவம் எங்கள் அம்மா ஆகுமே.
பால் பருக்கி சோறு ஒளட்டி பக்குவ மாக - அனைத்து பக்கத்திலே படுக்க வைத்து பாது காப்பாவே.
ஈ எறும்பும் கடிக் காமல் எம்மை வளர்ப்பார் - என்றும் இரவுபகல் பார்க் காமல் எங்களைக் காப்பார்.
கட்டி அணைத்து முத்தம் தந்தால் கவலை போய்விடும் - எமது கண்ணிர் கண்டால் அம்மா உள்ளம் கரைந்து போய்விடும்.

Page 7
சிட்டுக் குருவி
சிட்டுக் குருவியே சிட்டுக் குருவியே கிட்ட இங்கே வாராய் சிறகைத் தொட்டுப் பார்க்கப் போறேன்
சீக்கிரம் வாராய்.
பட்டுத் துணிபோலப் பள பளக்கிறாய் பக்கத்திலே வாராய் பறந்து செல்லச் சிறக டிக்கிறாய் பக்கத்திலே வாராய்
எனக்கும் சிறகு முளைத்து விட்டால் நானும் வருவேன் இனிக்கும் இந்த உலகைச் சுற்றி இன்பம் அடைவேன்.
 
 
 
 
 
 
 

ஊஞ்சல்
மா மரத்திலே ஊஞ்சல் கட்டுவோம் மாமா வாருங்கோ. மரக் கிளையிலே கயிறு சுற்றி
பலகை போடுங்கோ.
அக்கா தம்பி இரண்டு பேரும் ஏறிக் கொள்ளுங்கோ. அன்னா ஒளஞ்சற் பலகை யினை
மெல்லத் தள்ளுங்கோ.
அப்பா சொன்ன ஒளஞ்சற் பாட்டை அக்கா பாடுங்கோ.
அடுத்த வீட்டு ஹனிபா வாறான் ஏறச் சொல்லுங்கோ.

Page 8
நாய்க்குட்டி
சம்பளம் இல்லாக்
காவல்க் காரன்
எங்கள் நாய்க்குட்டி
சாப்பாடு போட்டால்
போதும் காவல்
காத்திடுவானே.
கள்வன் வந்தால்
குரைத்துக் குரைத்துக்
கலைத்து விடுவான்.
காலை நக்கி
அன்பு காட்டி
வாலை ஆட்டுவான்.
 
 
 
 
 

கொழும்புத் தமிழ்ச்சங்கம் 7, 57வது ஒபூங்கை
கொபூல்:
கனறுக குடடி
துள்ளிக் குதிக்கும் கன்றுக் குட்டி தூரப் போகாதே - உன்னைத்
தொட்டு விளை யாடப் போறேன்
தூரப் போகாதே.
மடியில் முட்டிப் பால் குடித்து மகிழ்ந்து துள்ளுறாய் - யார்
மறித் தாலும் நிற் காமல்
ஓடிக் குதிக்கிறாய்.
நானும் உனது தாயின் பாலைக் குடிப்பவன் தானே - அதனால் நான் உனக்கு எந்த நாளும்
சகோதரன் தானே.
11

Page 9
வானில் எத்தனை நட்சத்திரம்
வந்து பார்நீ இரவினிலே
பகலில் ஒன்றையும் காணவில்லை
பறந்து எங்கே போயிற்று.
ال
சூரியன் வந்தால் ஓடிவிடும்
துணிச்சல் இல்லா இவையெல்லாம்
இரவில் இராச்சியம்
நடத்துதல்போல்
இங்கே பலபேர் இருக்கின்றார்.
 

கிளிக்குஞ்சு
கூண்டைத் திறந்து கிளிக் குஞ்சைப் பறக்க விடுங்கள். - கிளிக் கூண்டைப் பிய்த்துக் குழியில் புதைத்து முடி விடுங்கள்.
பறக்கா திருக்க அதன் சிறகை வெட்டியவர் யார். - கொடும் பாவம் பெரும்
பாவம் அதைச்
編 செய்தபாவி யார்.
எங்கள் கையைக் காலை வெட்டி
எறிந்தால் சரியோ, - பிடித்து எங்களையும் --། சிறையில் பூட்டி அடைத்தால் முறையோ. N

Page 10
୪
வானில் வரும் வெண்ணிலவே
வளரும் தேயும் வெண்ணிலவே
நாளை உனது நாட்டில் நாங்கள் நண்டும் நரியும் கதை படிப்போம்.
வானில் வரும் வெண்ணிலவே
வளரும் தேயும் வெண்ணிலவே
நாளை உனது நாட்டில் நாங்கள் நல்ல தமிழ்ப் பாட்டு இசைப்போம்.
வானில் வரும் வெண்ணிலவே
வளரும் தேயும் வெண்ணிலவே
நாளை உனது நாட்டில் நாங்கள் நல்ல மனிதர் ஆக வாழ்வோம்.
வானில் வரும் வெண்ணிலவே வளரும் தேயும் வெண்ணிலவே
நாளை உனது நாட்டில் நாங்கள்
நல்ல தலைவர் ஆக வாழ்வோம்.
 

15
பாடுவோம் ஆடுவோம்
பாட்டுப் பாடுவோம்
ஆட்டம் ஆடுவோம்
பாலர்நாங்கள் ஒன்றுகூடி பக்குவமாய் ஒற்றுமையாய்
பாட்டுப் பாடுவோம்
ஆட்டம் ஆடுவோம்.
நாளை உலகின் தலைவர் நாங்கள்
நாளை உலகம் எங்கள் கையில்
ஏழை செல்வன் ஏற்றத் தாழ்வு
இல்லா உலகம் எங்கள் உலகம்.
பகையும் இல்லை போரும் இல்லை
பஞ்சம் இல்லை பசியும் இல்லை
அமைதி நிலவும் உலகில் நாங்கள்
அன்பு பொங்கும் வாழ்வு வாழ்வோம்.

Page 11
தோகை விரித்து ஆடுகின்ற புள்ளி மயிலே - உந்தன் தோகையிலே எத்தனை கண்
சொல்லு மயிலே.
மழைமேகம் வானில் வந்தால் புள்ளி மயிலே - நி மகிழ்ச்சி கொண்டு ஆடுகின்றாய்
புள்ளி மயிலே
ஆட்டத்தை நீ எங்கே கற்றாய் புள்ளி மயிலே - அதை ஆருணக்குச் சொல்லித் தந்தார் புள்ளி மயிலே.
புள்ளி மயிலே - நீ எப்பொழுது பழக்கப் போறாய்3 புள்ளி மயிலே.
.., . . ., .. '' .. '' .. . . . . . « × × ×
-- 8
-
எனக்குச் சொல்லித் தருவாயா இS
-" -س"" 3۔ تینتین
篷
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

17
சுததம - சுகம
சுத்தமாக வாழுவோம் சுகமாக வாழுவோம். நித்தம் இந்த உலகில் நாங்கள் நிம்மதியாய் வாழுவோம்.
நோயில்லாத வாழ்வு தானே குறைவில்லாத வாழ்வு ஆகும் நோயில்லாமல் வாழ நாங்கள் நூல்கள் கற்றும் பயனில்லை.
குடிக்கும் நீரைச் சுத்தநீராய்க் கொதிக்க வைத்துப் பருகுவோம் குடியிருக்கும் வீட்டை என்றும் கூட்டிச் சுத்தம் செய்குவோம்.
அசுத்தப் பொருளைக் குழியில்போட்
ஆழப் புதைத்து முடுவோம். அழுக்கின்றி கையை உடலை
அவ்வப் போது கழுவுவோம்.

Page 12
சின்னக் குயிலே சின்னக் குயிலே இங்கே பறந்துவா - நீ
ـــــــــــــــــ
திண்ண உனக்கு
மாந் தளிர்கள்
நான் தருவேனே.
மயக்கும் உனது குரலைக் கேட்க மனம் படும்பாடு - நீ மாந் தளிர்கள் தின்று விட்டு பாட்டொன்று பாடு.
என்னைக் கண்டால் எழுந்து பறக்க
முயலாதே நில்லு - நீ எங்கு கற்றாய்
ܢܸܬ̇ܬ̇4:
*
. "N
και η இந்தப் பாட்டை ༽ 、y, )
எனக்கதைச் சொல்லு.
ॐ* 1 8 «.
。
 
 
 
 
 
 
 
 
 

பாரதி
பாப்பாப் பாட்டுப் பாடியவன்
பாரதி தானே - அவன்
பாட்டை நாளும் பாடுவது
நல்லது தானே.
ஓடி விளை யாடச் சொல்லிப்
பாடி வைத்தானே - நம்மை ஒற்றுமையாய் வாழச் சொல்லி
எழுதி வைத்தானே.
சாதி பேதம் இல்லை என்று
சொன்னவன் தானே - மனித சமத்துவத்தை வளர்க்கச் சொன்ன
மன்னவன் தானே.
பாரதி யின் பாடல் களைப்
பாடித் துள்ளுவோம் - இந்தப் பார்புகழத் தமிழர் என்று
பெருமை கொள்ளுவோம். நீ

Page 13
அணிற் பிள்ளையாரே
அணிற் பிள்ளையாரே
IDT மரத்தில் ஓடித் திரியும் அணிற் பிள்ளையாரே - எனக்கு
மாம் பழங்கள் பிடுங்கித் தாரும்
அணிற் பிள்ளையாரே.
பழுத்துக் கனிந்த மாம் பழத்தை
அணிற் பிள்ளையாரே - நீர்
பக்கு வமாய்ப் பிடுங்கித் தாரும்
கடித்து எச்சில் படுத்த வேண்டாம் ...
அணிற் பிள்ளையாரே - மிகக்
கவன மாகப் பிடுங்கித் தாரும் =
سس
& அணிற் பிள் ளையா ரே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேனியாரே
தேன் குடிக்கும் ஈயாரே தேனியாரே. தேன் குடிக்க வரட்டுமா தேனியாரே.
பூக்களிலே அமர்கிறீர். புதிய தேனைக் குடிக்கிறீர். பாக்களையும் படிக்கிறீர்.
பரவசமாய்ப் பறக்கிறீர்.
எனக்குச் சிறகு இல்லையே என்ன செய்வேன் ஈயாரே பறக்க என்னால் முடியுமோ
பாரும் என்னை ஈயாரே.
எனக்கும் தேனைத் தருவிரோ. எடுத்து இஊட்டி மகிழ்விரோ. உமக்கு நன்றி சொல்லுவேன் உதவி என்றும் செய்குவேன்.
21

Page 14
பச்சைக்கிளி 22
பச்சைக் கிளியின் பேச்சுச் சத்தம் மகிழ்ச்சி தருகுது பாய்ந்து ஓடும் அருவிச் சத்தம் மகிழ்ச்சி தருகுது.
தென்னங் கீற்றுச் சல சலப்பு மகிழ்ச்சி தருகுது தென்றல்க் காற்று இலை வருட மகிழ்ச்சி தருகுது.
மா மரத்துக் குயிலின் இசை மகிழ்ச்சி தருகுது
T5)335 ET) குருவிச் சத்தம் மகிழ்ச்சி தருகுது.
இயற்கை ஒலி யாவும் நெஞ்சில் இன்பம் நிறைக்குது\ எங்கள் மனிதத்
துயர ஒலம்- 才
இதயம் நொருக்குது.
 
 

23
96.OD
ஆமையாரே ஆமையாரே
அழகான ஆமையாரே
அசைந்தசைந்து எங்கே போகிறீர் - நீர்
ஆரைப் பார்க்க ஒளர்ந்து செல்கிறீர்.
மழை பெய்தாலும் நனைய மாட்டிர்
வெயில் என்றாலும் வருந்த மாட்டீர்.
வளைவான ஒட்டுள் வசிக்கின்றீர் - நீர்
நடமாடும் வீட்டைச் சுமக்கிறீர்.
தண்ணி ரிலும் நீந்தித் திரிவீர்
தரையி லேயும் இளர்ந்து திரிவீர்
எண்ணிப் பார்த்தால் ஆச்சரியந்தான் - நாமும்
எங்கும் வாழப் பழகவேண்டும்தான்.

Page 15
24
பந்தடிப்போம்
பந்தடிப்போமே - நாங்கள்
பந்தடிப்போமே
பாய்ந்து பாய்ந்து எல்லோரும்
பந்தடிப்போமே.
ஒற்றுமையாய்க் கூடி ஆடிப்
பந்தடிப்போமே
ஒழுங்காக ஓடிப் பாடிப்
பந்தடிப்போமே.
சண்டையின்றிச் சந்தோச மாய்
பந்தடிப்போமே
 
 
 
 
 
 

籌
':
கோழி ஒன்று மேட்டிலே :
இரை எடுத்து ஒளட்டியே
தாயுள்
குஞ்சு பத்தைக் கூட்டியே
8
' ')
-
... ::::
6
இங்கும் அங்கும் திரிந்தது.
பருந்து ஒன்று வந்தது பத்துக் குஞ்சைக் கண்டது
விருந்து என்று எண்ணியே
| { காத்த வந்த பருந்தினைக்
விரைந்து அருகில் சென்றது.
கோழி கண்டு வருந்தியே
துடிக்கும் உள்ளம் தாயுள்ளம்
கொத்திக் கொத்திக் கலைத்தது A குஞ்சைச் சிறகுள் அணைத்தது. W
... 函
துன்பங் கண்ட போதிலே
அன்பு கொண்ட தாயையும்
:
-تم تج سي
அடி பணிந்து வணங்குவோம்.'E*C)
-

Page 16
|- ¿ , , : |-|× |× , , , ---- |- |-|- ¿ ) ~
|- ---- |× ¿ |-: , |- |×
...
- - - - -
------ - - - - - - -
---------- -- - - - - -
- - - - -
- - - - - - -
: ...
|×) :}}, , , , , , , . : !, ،, ), |- : : , : ,· |-·
":"
: ہے 6)6060D
------
, ، ، ،
· · · · · -
றொரு ருந்தது
:55 GTū
பறவை இ
睦
பறவை இனம்
அறிவாயா தம்பி - அது
ந்தக் காலப்
அழிந்ததே தம்பி
தி
கலநஆ வைததால
பிரிக்குமே- அது
LITE5O 3AOL
பாலும் நீரும்
மே.
-
கில் வாழுவாய் தம்
b
க்கு
GLIITau
ய் த
ம் ஒ_ல
பாலை மட்டும்
ன்ன
ம்
பருகி விட்டு நீரை வில
பயிலுவா
நியு
 
 
 
 
 
 
 
 
 
 
 

காகம் 27
காகா என்று கரையும் அந்தக் காகத்தைப் பாராய் - கறுப்புக்
காகத்தைப் பாராய். ஆகா அதன் பண்பை அறிந்தால் அதிசயம் கொள்வாய் - மிகவும்
அதிசயம் கொள்வாய்.
காகா என்று கரைந்து இனத்தைக் காகம் அழைக்குமே - அழைத்து ஆகா ரத்தை ஒன்றாய்ச் சேர்ந்து அருந்தி மகிழுமே.
ஒற்று மையாய்க் காகம் எல்லாம் ஒன்றாய் வாழுமே - அதில்
ஒன்று இறந்து போனால் அவை ஒன்றாய் வருந்துமே.

Page 17
தம்பி ஒன்று சொல்லு கின்றேன் சற்று நின்று கேட்டிடு நம்பி இதனை ஏற்று உலகில்
நன்மை செய்து காட்டிடு.
சாதி சமய ஏற்றத் தாழ்வுச் சாக் கடையில் விழாதே ஆதி மனிதன் என்ற நிலையில் அச்சம் கொண்டு அழாதே.
மனிதர் யாரும் ஒன்று இந்த மண்ணில் என்று போற்றுவாய் துணிவு கொண்டு உன் பணியைத்
தொடங்கி உலகை மாற்றுவாய்.
ஏழை என்றும் அடிமை என்றும் எவரையும் நீ எள்ளாதே நாளை உலகம் உனது கையில் நல்ல வார்த்தை தள்ளாதே.
 

XXX.......... 5. - ჯ, - ჯ, — გ. 5 × × ჯ. ჯ. ჯ. ჯ. ჯ.
நிலா
வட்ட வட்ட நிலவே வண்ணப் புது நிலவே கிட்ட வந்து போனாலே கட்டி முத்தம் தருவேனே.
எட்டி அடி வைத்து இங்கே வாவா நிலவே தொட்டுப் பார்க்கப் போகின்றேன்
தூர ஓடிப் போகாதே.
犯
நேற்று வந்த நிலவே
நீட்டிக் கையை ஆட்டாமல்
காற்றுப் போலே போய்விட்டாய்
காலை பார்த்தேன் இல்லையே.
::::::::::::::::::: ... :::::::::::::::
இ
------

Page 18
சின்னப் பறவைகள்
சின்னச் சின்னப் பறவைகளே சிறகடிக்கும் பறவைகளே என்னைப் போல சட்டை போட முடியுமா - காலையில் · TWሶኔ எழுந்து நீங்கள் பள்ளி செல்ல
pLņLIL DI T.
வண்ண வண்ணச் சட்டை போட்டு வடிவாகத் தலைஇழுத்து அன்னா அக்கா வோடு பள்ளி
செல்வேனே - நான்
அறிவு பெற்று இவ் வுலகை
வெல்வேனே.
உங்க ளோடு மாலை யிலே விளையாட நான் வருவேன். ஒளர் சுற்றி கல்வி கற்று வாருங்கள் - இந்த
உலகம் பற்றி எனக்குச் சொல்லித்
 

நாளைய உலகின்
தலைவர்கள் நாங்கள்
நல்ல கல்வி பெறுவோமே.
கோழைக ளாக ::::::
::::::::::::::::
3.
X.
------ ! ! ! ! ! ! 3.
வாழவே மாட்டோம் கொள்கையில் உறுதி கொள்வோமே.
ஏழையும் செல்வனும்
யாவரும் மனிதரே
ஏற்றத் தாழ்வுகள் எமக்கில்லை. C-C-C-C-COO Xg,Q• • , நாளைய உலகில் భళ్ల
நாமெல் லோரும் - - - - ---
சமமென்றாகும் நிலை படைப்போம்.
JFTIG FLDLLI ஏற்றத் தாழ்வுகள் 2 சரித்திரக் கதையாய் மறைந்திடுமே) நிதி நெறியில் 台
மானுடம் ஒன்றே
سانسیسی؟
நிலைக்கும் நாளை உலகினிலே, !

Page 19
画 32 மனிதப் பண்பு
பபுத்தம் என்னும் அரக்கன் இல்லா யுகம் ஒன்று வருகுது
யுகம் யுகமாய் வந்த துன்ப யுகம் மறைந்து போகுது.
ஆயுதங்கள் வன் முறைகள் அடி தடிகள் இனிஇல்லை அழிவு சேதம் அகதி துன்பம் அகிலம் எங்கும் இனிஇல்லை.
கொலை களவு கொடுமை திமை குத்து வெட்டு இனிஇல்லை. குரோதம் பகைமை போட்டி பொறாமை குவல யத்தில் இனிஇல்லை.
அன்பு நட்பு அமைதி பொ அகிலம் எங்கும் பெருகி4ே
 
 
 
 
 
 
 

--------------------- as 3.
நரி அழைத்த பாதை யிலே
நண்டு சென்றது. - குள்ள
நரி அதனை ஏமாற்றித் தின்று விட்டது.
புனை சொன்ன கதையை நம்பி எலியும் சென்றது - கள்ளப்
பூனை அதனைப் பிடித்துக் கடித்துக்
கொன்று தின்றது.
முயல் சொன்ன செய்தி கேட்டு
சிங்கம் சென்றது. - சின்ன
முயல் அதனைப் பாழுங் கிணற்றில்
வீழ்த்திக் கொன்றது.
பகைவர் சொல்லும் சொல்லைக் கேட்டு
நம்பி விடாதே - அழைத்த ﷽ • →
பாதை யிலே சென்று நீயும் வெம்பி அழாதே. ܝܠܼܲܠ

Page 20
சிரிக்கவிருங்கள்
சிரிக்க விடுங்கள் - எங்களைச்
சிரிக்க விடுங்கள்.
சிறுவர் நாங்கள் பேதம் இன்றிச் சேர்ந்து மகிழ்ந்து பாடி ஆடிச் சிரிக்க விடுங்கள் - எங்களைச் சிரிக்க விடுங்கள்.
அடிமை களாய் வீட்டுக் கூலி ஆளாய் எம்மை அனுப்ப வேண்டாம். அடித டிக்குள் எம்மைச் சேர்த்து ஆயுதத்தால் அழிக்க வேண்டாம்.
சாதி பேதச் சாக் கடைக்குள் தள்ளி எம்மை வீழ்த்த வேண்டாம்.
சமய பேதப் போர்க் களத்தில்
தலையுட்ைக்க அனுப்ப வேண்டாம்.
34
 
 

ஒற்றுமைப் பாட்(
ஒற்றுமையாய் கூடுவோம். ஒன்றாக ஆடுவோம். உலகம் எங்கள் கையில் என்று உரிமை கொண்டு Ba॥Th.
காற்றும் எங்கள் ஆணை கேட்கும். கடலும் எங்கள் பாதம் நக்கும். வேற்றுக் கிரகம் கூட எங்கள் விழி அசைவைப் பார்த்து நிற்கும்.
நேற்றி ருந்த மாந்தர் தந்த நெறியை நன்கு போற்றி யே ஏற்றம் மிக்க மானு டத்தின் எலும்பு நிமிரப் பாடு வோம்.
எறும்பு போலச் சுறுசுறுப் பாய்
என்றும் வாழப் பழகு வோம். இரும்பு போல உறுதி யான இதயம் கொண்டு நிமிரு வோம்.
யுத்தம் அற்ற உலகை ஆக்கும் யுக்தி பெற்ற சிறுவர் நாம். - இரத்த வெறிப் பேய்கள் அற்ற
இனிய இகை ஆக்குஜாம்.
r

Page 21
ள்ளி மானைப் போலே நானும் துள்ளி ஓடுவேனே - அதன் புள்ளிகளை ஒவ்வொன்றாக
எண்ணி மகிழுவேனே.
கேள்வி கேட்பேனே - அதை பக்கு வமாய் அனைத் தெடுத்து
ம் கொடுப்பேனே.
ல நானும் கூவிக் கூவிக் கூப்பிடு வேனே - அந்தக்
யிலைப் போட்டிக்கு அழைத்து நானும் தாற் கடிப்பேனே.
மயிலின் தோகை அழகில் நானும் மகிழ்ந்து போவேனே - அந்த மயிலைப் போல ஆட்டம் ஆடி மகிழ்ச்சி கொள்வேனே.
 


Page 22


Page 23
ढु
estates:
பண்டைய தமிழ் மணத்தையும், இன்றைய தமிழ் உணர்வையும் தனது எழுதி துக் களாலும் பேச்சுக்களாலும் வாழ்வியலாலும் Diaban DiësSnap Us Gijsbruari.
இதுவரை 30 நூல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழிலக்கியக் கட்டுரைகள், கவிதை, ஆய்வு, நாடகம், சிறுவர் இலக்கியம், அறநூல் உரைகள், இசைப் பாடல்கள், சிறுகதை எனப் பல்வேறு தளங்களில் இயங்குபவர்.
தேசிய, வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய விருதுகள், வடக்குக் கிழக்கு மாகாண ஆளுனர் விருது மற்றும் அரச அரச சார்பற்ற சமுக, சமய நசிறுவனங் களின் தேசிய விருதுகளையும், பரிசுகளையும் பட்டங்களையும் பெற்ற சிறந்த இலக்கிய கர்த்தா
கந்தையா யூனிகணேசன்
விரிவுரையாளர், வவுனியா வளாகம்
 

ISBN 955-3715-24.
125|-