கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்து சக்தியின் அற்புதங்கள்

Page 1


Page 2

s LLLeLLeKLLkeLeLeeLTeTeq SLLLL itseseses
أسس صدس
常
B
தரப்பூட்டும் என்றனது தன்னார் விறைப்படுத்தம் அப்பூட்டும் தீயவரரியசிறை வீட்டிருக்கும் இப்பூட்டும் நிர்ப்பூட்டா யெண்சிறையை நீக்கியருள் செப்பூட்டும் பொற்றாட் சிவகாம சுந்தரியே.
8.
ஆக்கம்: மூ.சிவலிங்கம்
يح R R ی qqLLLLLSLLLLLLLL L LSLLLLL LLLLLLLLSLLLLS LLL LLSLLL T LSLA S SLL LLLLe LLL LSee L0LSL M LLLLL SLLMkeALLLSMALLLLLLLSMMALLSLMALALLSSMASLLLSMLLqLLLLLLLLqLALLqLLLAALLLLLAASeeSLLLSAAAAASS

Page 3
நூலின் பையர்
ஆக்கம்
பக்கங்கள்
முேத்து அளவு
பக்க அளவு
கணனி வடிவமைப்பு:
அச்சுப் பதிப்பு
வெளியீடு
66Db
விைை
ஈழத்து சக்தியின் அற்புதங்கச்
மூ.சிவலிங்கம்
Xiv + 8G
12
A5
வே.செந்தின்வேன்
சண்சைன் கிரபிக்ற்ை கே.கே.எஸ் விதி இனுவின்,
இணுவின் சைவத்திருநெறிக்கழகம்
ഗ്ഗത് 2009
ΕΡΟΟΛ=
-: iii :-

ஆசியுரைகள் வாழ்த்துரைகள் அணிந்துரை முன்னுரை வெளியீட்டுரை
பொருளடக்கம்
இணுவில் சிவகாமி அம்பாள் திருத்தலம்
இணுவில் கோண்டாவில் காரைக்கால் மாரி அம்பாள் திருத்தலம்
நயினை நாகபூஷணி அம்பாள் திருத்தலம் தெல்லிப்பழை துர்க்காதேவி திருத்தலம் சுன்னாகம் வாரியப்புலம் மகாமாரி திருத்தலம் சீரணி நாகபூஷணி அம்பாள் திருத்தலம் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் திருத்தலம்
நவாலி களையோடை அம்பாள் திருத்தலம்
சங்கரத்தை பிட்டையம்பதி பத்திரகாளி அம்பாள் திருத்தலம் வண்ணை நாச்சிமார் கோவில் (வண்ணார்பண்ணை)
வண்ணைநகள் வீரமாகாளி அம்பாள் திருத்தலம் உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்பாள் திருத்தலம் இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் திருத்தலம்
மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகி அம்பாள் திருத்தலம்
சிட்டிவேரம் (சுட்டிபுரம்) அம்மன் திருத்தலம்
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்பாள் திருத்தலம் வதிரி உல்லியனொல்லை கண்ணகி அம்பாள் திருத்தலம்
வற்றாப்பளை கண்ணகி அம்பாள் திருத்தலம்
திருகோணமலை பத்திரகாளி அம்பாள் திருத்தலம் மட்டுநகள் துறைநீலாவணை கண்ணகி அம்பாள் திருத்தலம்
மாத்தளை முத்துமாரி அம்பாள் திருத்தலம் மலர் ஆக்கத்திற்கு உதவிய துணை நூல்கள்
நன்றியுரை
-: iii :-
U.50
O - OS
06 - O7
08 - 2
3 - 19
20 - 23
24 - 26
27 - 30
3 - 32
33 - 35
36 - 37
38 - 39 40 - 44
45 - 46
47 - 5
52 - 55
56 - 59
60 - 62
63 - 68
69 - 74
75 - 80
8 - 84.
84. 85 - 86

Page 4
9 ஒனுவில் சிவகாமி அம்பாள் தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் சிவமுறிநீ.சாம்பசிவசோமசபேசக்குருக்கள் அவர்களின்
ஆசியுரை
GeFor Yožo Gyōbi) "அம்பிகையைச் சரனடைந்தால் அதிகவரம் பெறலாம்" இந்த ஈரேழு புவனங்களையும் கருனையுடன் காப்பவர் மகாசக்தி. சக்தியின் வடிவமான சிவகாமி அம்பாள் இணுைவில் திருவூரின் குடிகொண்டு மக்களையெல்லாம் காப்பவரும் அவளே. அன்னை சிவகாமி பல அற்புதங்களைக் காண்பித்தாள். அன்னையை உள்ளத்தூய்மையுடன் வழிபட்ட யாவருக்கும் வேண்டியவற்றை வேண்டியவாறு வழங்கிய புதுமையுடையவள். சக்தியின் தூய வழிபாட்டினால் இணுைவில் கிராமமே சகல செல்வங்களையும் நிறைவாகப் பெற்று வளமுடன் வாழ்வதை அறிகிறோம்.
இவ்வாலயத்தின் முன்பாக அமைந்துள்ள சிவகாமி அறநெறிப்பாடசாலை தனது பதினொராவது ஆண்டு நிறைவைக் கண்டுள்ளது. இவ்வாண்டு விழாவில் சிவகாமி அம்பாளை முன்னிறுத்தி இலங்கையிலுள்ள இருபத்தொரு சக்தியின் ஆலயங்களின் வரலாற்றைத் தொகுத்து நூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நூலி சிவகாமி அறநெறிப்பாடசாலைப் பொறுப்பாளர் திருமூ.சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்டது. இணுைவிலி சைவத் திருநெறிக்கழகம் இந்நூலை இன்று வெளியிடுகின்றனர்.
மக்களுக்கு நல்ல சமயக்கருத்துக்களை வெளியிடும் இதுபோன்ற நூல்கள் மேன்மேலும் வெளிவரவேண்டுமென அன்னை சிவகாமியை இறைஞ்சுகிறேன். இவ் அறநெறிப்பாடசாலை நன்கு சிறப்பாகப இயங்க வேண்டுமெனவும். இன்று வெளிவரும் இந்நூல் யாவருக்கும் நல்ல ஆன்மிக தத்துவங்களைத் தரவலிலது என்றும், யாவரும் சிவகாமி அம்பாளின் பேரருளினால் சிறப்படைய வேண்டுமெனவும் நல்லாசி கறி வாழ்த்துகிறேன்.
“வேத சிவாகம கிரியாரத்தினம்” சிவமுற்.சhம்JசிவசேAPசUேசக்குருக்கள் பிரதமகுரு, இணுவில் சிவகாமி அம்பாள் தேவஸ்தானம்
- : 1V :-

2 செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களின்
ர
(పై గుర్తిసెYస్త్ర సె) 終 “அம்பிகையைச் சரணடைந்தாலி அதிகவரமீ 3 பெறலாம்" எங்கும் நிறைந்த சக்தியை வழிபாடு செய்யும் உன்னத மரபு ஈழத்திருநாட்டில் நிலைபெற்று விளங்கு கின்றது. சக்தியின்றிச் சிவமிலிலை என்ற உன்னத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திருநாட்டில் எண்ணிறைந்த சக்தி தலங்கள் காலத்துக்குக்காலமி தோற்றம் பெற்றுள்ளன. இத்திருத்தலங்களின் தெய்வீக Síðustfasecoeir erlö(Yper(Beornrf almú6udmjól tofumas எடுத்துரைத்துள்ளனர். சில ஆலயங்களின் வரலாறு நூலுருப்பெற்றுள்ளன. ஆனிமாக்களை ஆற்றுப் படுத்துவதற்காக தடத்தலட்சனமி கோணித S TTTTTT S LLLLtTTtMLTeY S sT LLLTTutTT LMeTMS LMLLLLL ஆட்கொள்வதற்காக எழுந்த சிறப்புக்களை அந்புதமாகக் கருதும் வழக்கமீ எம்மிடையே உண்டு. இவ்வகைதில் ஆதாட்சின்ங்கும் சக்திகலங்களின் அருட்சிறப்பை, அற்புத மகிமைய்ைத்தொகுத்துநிலைபெறச்செய்யவேண்டும் என எண்ணியதன் வினைவே இந்நூல்உருவாக்கத்திற்கு காரணவமனனது இவ் எண்னத்தைச் சுமந்து அதன இந்நூலூடாக இறக்கி வைத்திருப்பவர் உயர்திருமூ.சிவலிங்கம் ஐயா அவர்கள். இணுவில் கிராமத்தில் பிறந்து சைவத்தமிழ் ஆர்வத்தோடு இறுதினமும் அயராது தொகிைடு செய்பவர் இவர், இவராலி காலத்துக்குக் காலமீ அரியநூலிகளி &sited stuttg
லுெளியிடப்பட்டுர்ஜன்கு இரல் பயன்தந்சேய்திகளுட සද්ඤ இம்முயற்சிபார்ட்டுக்குரியில் அக்னி §சிங் என்ே
தெய்வங்களைப் பிரார்த்தித்து வாழ்த்தி அமைகிறேனர்.
"யாவர்க்குமாம் என்றும் இன்னுரைதானே"
ஆறு.திருமுருகன்
தலைவா, ரீதுர்க்காதேவி தேவஸ்தானம் - தெல்லிப்பழை, சிவபூமி அறக்கட்டளை - கோண்டாவில்.
-: V :-

Page 5
ஈழத்துச் சக்தி ஆலயங்கள் - 21
குலதெய்வமாகக் சிவலிங்கம் அவர்கள் பற்பல சமயத்தொண்டினையும், தமிழ்த்தொண்டினையும் செய்து வருகிறார் என்பது உலகறிந்த உண்மையாகும்.
வாழ்த்து “சக்தி வழிபாட்டில் சார்ந்துநூல் எழுதியே சித்தியைப் பெற்ற மூ.சிவலிங்கம் வாழ்கவே"
உரை ஆதிகால வரலாறுடைய இணுைவையூர் சைவத்திலும் தமிழிலும் வல்ல பேரறிஞர்களை முன்போலி இன்றும் கொண்டு விளங்குகின்றது. இயல், இசை, நாடகமாகிய முத்தமிழிலுஞ் சிறந்த இவ்வூரில் சிவகாமி அம்மையைக் கொண்ட ஓய்வுபெற்ற கிராம9லுவலர் திரு.மூத்ததம்பி
அவர் 1997ல் சிவகாமியம்மன் திருக்கோயிலின் கிழக்குத் திசையில் சைவத்திருநெறிக்கழகத்தைத் தாபித்து, சிறார்களுக்காக ஒரு அறநெறிப் பாடசாலையையும் நடாத்தி வருகிறார். அஃதன்றி பல சைவத் தமிழ் நூல்களையும் வெளியிட்டுள்ளார். அந்தவகையில் அமீபிகையினி அந்த மகோற்சவ காலத்தில் வெளியிட்டது.
Sri G (SBsfor effarir ISK
எம்பி ராட்டி சிவகாமி உள்ளிட்ட அம்பிகைக் கொண்பதும் அரியகாளிக்கே நம்பிட இரண்டும் நல்துர்க்கைக் கொன்றும் வீரமா காளிக்கு விரும்பிட ஒன்றுமாய் தீரமாய் கணினகி தேவிக்கு நான்கையும்
மாரிக்கு நான்கும் வகையாய்ச் சேர்த்தே இருபத்தொரு சக்திக்கும் ஏற்றமா யெழுதிநல் உரிமையா யாக்கிய உத்தமர் சிவலிங்கம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்தவர் தொண்டாற்ற எல்லாம் வல்ல இறைவிதான் சொல்லாண்டு வாழ்த்துவேன் சுருதிபோல் நிலைக்கவே.
முதுபெரும்புலவர், கலாபூஷணம் புலவமண்ணி.வை.க.சிyர்UலவனW -: vi:-
 

9 - ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் எனும் நூலிற்கான 6)ISYgpš5gj6oogr GeoEyởò af:?) பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்தவண்னம் காத்தவளே! பின் கரத்தவளே! கறைக்கண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே | மாத்தவளே!உன்னைஅன்றிமற்றோர்தெய்வம் வந்திப்பதே
6TadřD 9|LIntólů u Lři arš5lufleoř பெருமையைப் பாடியுள்ளார். மேலும்,
*சொற்சக்தி, பொருட்சக்தி துலங்கிமிக வந்திடவே அச்சந்தி எல்லாம் அருள்வார் கெளரியவள்"
என்று ருரீகேதாரகெளரி காப்புப் பாடலி கூறுகின்றது. அன்பின் உருவமாகவும் ஆற்றலின் சக்தியாகவும் இன்னலிகள் தீர்த்து இறைவனின் உடல்பாதியாக நின்று உலகத்தைக் காப்பவள்தான் சக்தி,
சக்தி வழிபாடானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். தாயன்பு என்பது உலகத்திலேயே மேன்மையான அன்பு என்று கொள்வர். அந்தவகையிலே உலகத்தின் தாயாக விளங்குபவள் உலகநாயகியாம் சக்தி, இச்சக்தி வழிபாடானது மிகப் பழமைவாய்ந்த காலத்திலே மிகவும் உன்னதம் பெற்று விளங்கியமையை நாம் பண்டைய நாகரிக வரலாறுகளை எடுத்து நோக்குகையில் தெரியும், பண்டைய காலங்களில் பெண்களைத்தெய்வமாகவும் பெண் தேவதைகளுக்கான வழிபாடுகளும் நடைபெற்று வந்துள்ளன.
இந்த வகையிலே தமிழ்கறும் நல்லுலகில் சக்திக்கென 64 சக்தி பீடங்கள் இருக்கின்றன. இங்கு இந்நூலிலே ஈழத்தின் சக்தி வழிபாட்டுத் திருத்தலங்களில் 21 திருத்தலங்கள் தெரிவுசெய்யப்பட்டு அக்கோயில்களின் அற்புதங்களும் வரலாறும் தொகுக்கப்படுவதானது எக்காலத்திலும் அழியாமல் இக்கோயிலிகள் பற்றிய வரலாறுகளையும் சிறப்புக்களையும் பேணிக் காத்தலுக்கும் இவை பற்றி இரிைவரும் சந்ததியினர் அறிந்து பயன்பெறவும்
- V1.1 -

Page 6
இந்நூலி காலத்தின் தேவைக்கேற்ப உருவாக்கப்படும் ஒரு சிறந்த பொக்கிஷம் என்றே கூறலாம்.
இநீநூலானது வளரும் சமுதாயத்திற்கு சக்திவழிபாட்டினி முக்கியத்துவத்தையும், அறநெறியையும் வளர்த்து அனைவரும் ஈழத்துச் சக்தியின் இற்புதங்களை அறியவும், அறிந்து பயணிபெறவும், மென்மேலும் உலகனைத்துமீ சக்தியினி அருளை ஈழத்து மக்கள் மாத்திரமணிறி உலகனைத்தும் சக்தி பெருமையைப் பரப்பி நிற்க பராசக்தியின் பாதம் பணிந்து ஆசிகறி வாழ்த்துகிறேன். வாழி
திருமதி மஞ்சுnெதேவி சதீசன்
பிரதேச செயலர், வலிதெற்கு - உடுவில்.
-: viii :-

2_ கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களின்
அணிந்துரை تم ترم) : وجبة) ، وتجرية) மக்கள் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைவது தெய்வவழிபாடாகும். வழிபாடு மனத்தைச்
செம்மைப்படுத்தும் செயற்பாடுகளிலி சீர்மையைக் கொணரும். தோற்றத்திலி புதிய பொலிவைத் தரும். கொடையுனர்வைப் பெருக்கும். நமது முன்னோரது வாழ்வியல் அநுபவம் வழிபாட்டின் பயன்களை நாம் நன்கு உணரவைத்துள்ளது. சமயகுரவர்களும் மெய்யடியார்களும்
வழிபாட்டினைத் தொடர்ந்து செய்து இறை அன்பைப்
பெற்றவர்கள். இவ்வுலக வாழ்க்கையில் எம்மை எதிர்கொள்ளும் துன்பங்களை
வெலிலுவதற்கு இறை வழிபாடே என்றும் துணைநிற்கும். இருபதாம்
நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் கவிஞனான பாரதி பக்திநெறியின் பயன்களை வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“பக்தியினாலே - இந்தப் பாரிaoரி லெய்திடும் மேன்மைகள் கேளடி சித்தந் தெளியும் - இங்கு செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும் வித்தைகள் சேரும் - நல்ல வீரருறவு கிடைக்கும் மனத்திடைத் தத்துவ முண்டாம் - நெஞ்சிற் சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும்”
வழிபாடு எம்மை நல்நெறிப்படுத்துவதற்கு மேலும் உறுதுணையாய் இருப்பவை வழிபாட்டுத்தலங்களாகும். தெய்வம் உறையும் தலங்களைத் தரிசிப்பது மிகவும் நன்று. நாயன்மாரும் ஆழ்வாரும் தெய்வீகத் தலங்களை வழிபட்டுப் பெற்ற அநுபவத்தைப் பாடல்களிலே பதிவுசெய்துள்ளனர். அப்பாடலிகள் சொற் சித்திரங்களாக வழிபாட்டுத்தலங்களையும் அவற்றின் சிறப்புகளையும் வரைந்து as TilgueiroltaoT.
இந்தவகையில் ஈழநாட்டிலுள்ள சக்தி வழிபாட்டுத் தலங்களை நாம்
தரிசிக்கவென ஒரு நூல் இயற்றப்பட்டுள்ளது. திருமூ.சிவலிங்கம் அவர்கள்
"ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள்" என்ற மகுடத்தின் கீழ் இருபத்தியொரு அம்மன்
ஆலயங்கள் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளார். பலிவேறு
சிறப்புடைய திருப்பெயர்களுடன் அம்மன் உறையும் திருத்தலங்களை ஒரு
- X -

Page 7
பார்வையில் காணிபதற்கு இந்நூலி வழிசெய்துள்ளது. சிவகாமி. மாரி, நாகபூஷணி, துர்க்கா, மகாமாரி, புவனேஸ்வரி, பத்திரகாளி, நாச்சிமார், வீரமாகாளி, பர்வதவர்த்தணி, கண்னகி, முத்துமாரி எனப் பல பெயர்களைத் தாங்கிய அம்மன் திருத்தலங்களின் வரலாற்றையும் அருட்செயலிகளையும் சுருக்கமாக இந்நூல் தருகிறது.
எளிமையான மொழிநடையில் அமைந்த கட்டுரைகள் வழிபாட்டுத் தலங்கள் பற்றிய வரலாற்றை எதிர்காலத் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் இலக்குடன் வரையப்பட்டுள்ளன. இணுைவில் சிவகாமி அம்பாள் திருத்தலம் முதலாக மாத்தளை முத்துமாரி அம்பாள் திருத்தலம் வரையான கட்டுரைகள் கறும் செய்தி இளந்தலைமுறையினருக்கு அம்மன் வழிபாட்டுத் தலங்களை நன்கு அறிமுகம் செய்வதாக அமைந்துள்ளன. தலங்களின் பரம்பரை வரலாறு, அற்புத நிலைகள், அழகுத்தோற்றம் என்பன எளிமையான மொழிநடையில் எடுத்துரைக்கப்பட்டுள்ள முறைமை நூலினி தேவையை நன்கு உOைrர்த்தியுள்ளது. திருத்தலங்களை அமைப்பதற்கு முன்னின்று உழைத்தவர் களுடைய முயற்சிகள் சிறப்பாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பிடியரிசி எடுத்தும் திருவாக்குச் சொல்லியும் திருப்பOைரி செய்த அடியார்கள் தொண்டு நன்கு விளக்கப்பட்டுள்ளது. பெண்களின் திருப்பoைரித்தொண்டு நன்கு விதந்துரைக்கப் பட்டுள்ளது. நாற்பது ஆண்டுகளாகத் தன்னலமற்ற தனயாத பக்திநெறிநின்று பணிசெய்த இணுைவில் சாத்திரம்மாவும், தெல்லிப்பழை துர்க்காதுரந்தரியும் சிறப்புநிலையில் அறிமுகம் செய்யப்படவேண்டியவர்கள். சக்தி வழிபாட்டின் பெருமையை உலகறியச்செய்த பெண்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அதனை நூலாசிரியர் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.
திருத்தலங்களின் வரலாறுகள் சுருக்கமாகவும், தெளிவாகவும் இந் நூலில் இனைக்கப்பட்டுள்ளன. திருத்தலங்களின் அமைவிடம், இயற்கைச் சூழல், கட்டட அமைப்பு என்பன மனத்தில் நிலைபெறும் வண்னம் எழுத்துருப் 6usbDefreiraor.
"மாணிப்பாய் நெடுஞ்சாலையில் வடபால் சுதுமலைக் கிராமத்தின் மையமாக அமைந்துள்ளது. இவ்வாலயம் அமைந்துள்ள இடத்தில் அன்று தெற்கிலும் மேற்கிலும் கணிதரும் பழமுதிர்சோலைகள் ஓங்கி வளர்ந்து கானப்பட்டன. வடபாலி அமைந்த நீர்நிலையின்
-X -

வளத்தினால் வடக்கிலும் கிழக்கிலும் வயல்நிலங்களும் இயற்கையாகவே
தோன்றின. இச்சூழல் யாவரையும் ஈர்க்கும் தெய்வீகபூமியாகவும்
தோன்றியது.” எனச் சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் திருத்தலச் சூழலைக் கண்முன்னே கொணர்ந்து நிறுத்தும் வகையில் அமைந்த மொழிநடை இதற்கு ஓர் எடுத்துக் காட்டாகும்.
அறநெறிப்பாடசாலையில் பயிலும் சிறாருக்கு அம்பாள் திருத்தலங்கள் பற்றிய ஈடுபாட்டை ஏற்படுத்த இந்நூலி உதவும். பிஞ்சு உள்ளங்களிலி முன்னோருடைய வழிபாட்டு மரபு பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்தும், சக்தி வழிபாட்டுத்தலங்களின் பெருமை, உலகையே காத்து நிற்குழி தாய்மையின் சிறப்பு என்பவற்றைச் சிறுவயதிலேயே உனர இந்நூல் கைகொடுக்கும்
வாழ்க்கையின் செம்மையான செல்நெறியைப் பிஞ்சு உள்ளங்களில் பதியவைக்கும் காலத்தின் தேவையை உணர்ந்த இந்நூலாக்கம் பாராட்டப்பட வேண்டியது. நூலாசிரியர் தமது பணியைச் சிறப்பாகவே செய்துள்ளார். இன்றைய காலகட்டத்திலி சுற்றுலா நிலையிலி திருத்தலங்களைப் பார்வையிடச் செல்லும் மரபு ஒன்று உருவாகி வருகின்றது. நாயன்மார்கள் தமது பாடல்களில் திருத்தல வழிபாட்டின்சிப்பைப் பதிவுசெய்துள்ளனர். அதேபோன்று இந்நூல் ஆசிரியரும் வழிபாட்டு மரபுசிதைந்துவிடாமல் தொடர்வதற்காக உரை நடையில் அம்பாள் திருத்தலங்களின் சிறப்பைத் தொகுத்து வழங்கியுள்ளார். நூல்களைப் படிக்கும் பழக்கம் அருகிவரும் நிலையில் சுருக்கமான நூல்களை வெளியிடுவதே நலீtலது. எழுத்துப்பணியிலி பலகாலமாக ஈடுபட்ட நூலாசிரியரின் இந்த நூல் தொலைநோக்குடன் எழுதப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்து வாழும் தமிழரிகர் அடுத்த தலைமுறை தமிழல்லாத பிறமொழிகளில் நம் நாட்டுத் திருத்தலச் சிறப்புக்களை அறிய உள்ளனர். அந்தவகையில் பிற மொழிகளில் மொழிபெயர்க்கக்கடிய இந்நூல் எதிர்காலத்தில் உலகை வலம்வர வேண்டும். ஆசிரியர் பணி மேலும் வளரவேண்டும்.
கலnதித்மனேடின்மனி சண்முகதலி யாழ்பல்கலைக்கழகம்
-: xi :-

Page 8
9 66Grfaii Geogr (žGoFyšio ryža) இணுைவிலி கிழக்கிலி சிவகாமி அம்பாள் ஆலயத்தின் முன்பாக அமைந்துள்ளது எமது இணுைவிலி சைவத்திருநெறிக்கழகம், சைவசமயத்தை இளஞ்சிறார்களிடம் போதிப்பதன் பேரில் எமது ஆதரவில் சிவகாமி அநநெறிப் பாடசாலை என்னும் சைவசமயக்கல்வி நிலையத்தை நிறுவினோம்.
இச்சூழலிலுள்ள பல சிறார்களுக்கு இன்றுவரை நற்போதனைகள் இலவசமாகவே புகட்டி வருகிறோம். மேலும் இளஞ்சிறார்களுடன் ஏனையவர் களும் கற்றறிவதன் பேரில் வருடாவருடம் சமய நூல்களை வெளியிட்டோம். இவ்வாறு வெளியிடப்படும்நூல்கள்எமது அறநெறிப்பாடசாலையை ஆரம்பித்தவரும் எமது கழகத்தினி ஆயுட்கால உறுப்பினரும், அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாளரும், ஓய்வுபெற்ற கிராமசேவையாளருமான திருமூ.சிவலிங்கம் அவர்களால் எழுதப்பட்டன.
இன்று எமது சிவகாமி அறநெறிப்பாடசாலை தனது பதினொராவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதன் பயனாக எம்மையெல்லாம் வழி நடத்தும் சிவகாமி அம்பாளின் பெருங்கருனையுடன் தமிழர்கள் கடிவாழும் பிரதேசங்களிலுள்ள 21 சக்தி வழிபாட்டுத்தலங்களின் வரலாற்றைக் கொண்ட "ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள்” என்னும் நூலினை வெளியிடுகிறோம்.
எம்மால் வெளியிடப்படும் எல்லா நூல்களும் எமது சிவகாமி அறநெறிப் பாடசாலையின் வளர்ச்சிக்காகவே பயன்பெறுவதையிட்டுப் பெருமையடைகிறோம். மேலும் சக்தி வழிபாட்டின் அற்புதங்களையும் யாவரும் இலகுவில் அறியும் வண்னம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.
இதற்குமுன்எம்மால்வெளியிடப்பட்ட எல்லா நூல்களும் பல்லோராலும் பாராட்டப்பட்டமை எம்மை உய்விக்கும் சிவகாமி அம்பாளின் பேரருளேயாகும். சமயக்கல்வி பேனுழு யாவரும் இதனைக் கற்றுப் பயனடைவார்களாக,
இணுவில் சைவத்திருநெவிக்கழகத்தினA
-: xii :-

முன்னுரை
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன் ஞானகுரு வாணிபதம் நாடு.
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும் பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பணியே போல நண்ணிய நின்முன் இங்கு
நசிந்திடல் வேண்டும் அன்னாய்.
இணுவில் திருவூரில் அன்று தொட்டு இயல்பாகவே சிவ நெறியும், செந்தமிழும், ஆய கலைகளும் சிறந்து விளங்குகின்றன.
எம்மண்ணில் தோன்றிய சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், அருளாளர்களும், நாவலர் பெருமானின் அடியொற்றி நாடு நலன்பெற நல்லனவற்றை எல்லாம் எமக்குப் போதித்தனர்; வாழ்ந்து காட்டினர். யாவும் சிறப்புற்றது; அறம் வளர்ந்தது.
இவை யாவும் எம்மண்ணில் தொடர்ந்து பிரகாசிப்பதன் பேரில் சிறார்களுக்கு நல்லன புகட்ட இணுவில் கிழக்கில் சிவகாமி அம்பாள் திருத்தலத்தின் முன்னால் அறநெறிப்பாடசாலையை ஆரம்பித்தோம். 1997 இல் ஆரம்பமான இணுவில் சிவகாமி அறநெறிப்பாடசாலை தனது பதினொராவது ஆண்டை நிறைவுசெய்துள்ளது. இதன் வளர்ச்சியில் எம்மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
எமது அறநெறிப்பாடசாலை மாணவருடன் சமயநெறி கற்கும் அனைவருக்கும் உதவும் வண்ணம் சமய நூல்களை வருடா வருடம் எழுதி வெளியிட அன்னையின் திருவருள் கைகூட்டியது. இதுவரை வெளியிட்ட நூல்களின் சிறப்பு மாணவரல்லாத பெரியார் களையும் நன்கு கவர்ந்தன. யாவரும் மேலும் பல ஆக்கங்களை வெளியிடத் தூண்டினர்.
-: xiii :-

Page 9
பலரின் வேண்டுதலின் பேரில் எங்கள் குலதெய்வமான சிவகாமி அம்பாளை முன்னிறுத்தி சக்தி வழிபாட்டுத் திருத்தலங்கள் பற்றி எழுதமுற்பட்டேன். அற்புதங்களை நேரில் தோன்றியும், கனவில் தோன்றியும் அவ்வப்போது அருள்புரிந்த இருபத்தொரு திருத்தலங் களைத் தெரிவுசெய்தேன்.
சக்தி வழிபாட்டில் இலக்கம் ஒன்பது மிகப் பொருத்தமானது. அன்னையின் அருளினால் தொகுத்தும் தனித்தும் என்னால் வெளியிடப்பட்டன பல. இம்மலர் ஒன்பதாவதாக அமைந்துள்ளமை சிறப்பானதாகும். “சக்தியின் அற்புதங்கள்’ என்னும் இந்த நூல் எம் மாணவர்கள் சக்தி வழிபாட்டை விருப்புடன் பேண உதவுகிறது.
இந்த நூலில் யாழ் குடாநாட்டிலுள்ள தீவகம், வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி ஆகிய பிரிவுகளிலுள்ள அற்புதமான பதினேழு சக்தியின் திருத்தலங்களைத் தெரிவு செய்தேன். மேலும் வன்னியில் வற்றாப்பளை கண்ணகி அம்பாள், திருகோணமலையில் பத்திரகாளி அம்பாள், மட்டக்களப்பில் துறைநீலாவணை கண்ணகி அம்பாள், மாத்தளை முத்துமாரி அம்பாள் ஆகிய நான்கு திருத் தலங்களையும் மாவட்ட ரீதியில் தெரிவு செய்தேன்.
இவ்வாலயங்களின் பெருமையை எமது சான்றோர்களான பல மூதறிஞர்களின் ஆலோசனையுடனும், பல அரிய நூல்களைத் துணையாகக் கொண்டும் நிறைவுசெய்யத் திருவருள் கைகூட்டியது.
இந்த நூலில் அமையும் திருத்தலங்களின் வரலாற்றிலிருந்து எமது தமிழ்மொழி, சைவநெறி ஆகியவற்றின் தனிப் பாரம் பரியத்தையும், பண்பாட்டையும் அவ்வவ்விடங்களின் நடைமுறை களையும், அளவற்ற பக்திசிரத்தையையும், சக்தி வழிபாட்டின் சிறப்புடன் அமைந்துள்ள கிராமங்களின் வரலாற்றுச் சிறப்பையும் காணலாம்.
நிறைவாக எம் மாணவரும், மக்களும் சமயநெறியை நேசித்து எமது மண்ணின் பெருமையைப் பேணுவதற்குச் சக்தி வழிபாடு பெருந் துணைநிற்க உள்ளன்போடு இறையருளை வேண்டுவோமாக.
ep.5665rabb
-: Xiv :-

இணுவில் சிலுகரழி அற்புரள் திருத்தலம்
Z/ முற்காலத்தில் *ய்ாழ்”ருவினை அரசாண்ட தமிழ் மன்னர்கள் தம்பணி y சிறக்க யாழ்ப்பாணத்தைப் பல பெரும் பிரிவுகளாக்கி ஒவ்வோர் பிரிவுக்கும் * ஒவ்வோர் தலைவனை நியமித்தனர். இணுவிலை மையமாகக் கொணர்ட
பேராயிரவன் இயற்கையாகவே சிவநெறியாளன் சக்தி வழிபாடுமிக்கவன் இப்பகுதியில் கடமையற்றிய போது தமது குலதெய்வமான நடராசப் பெருமானையும் அவர்தம் சக்தியான சிவகாமசுந்தரியையும் நெஞ்சிற்குடியிருத்தி இறைபணியுடன் கூடிய தமது நிர்வாகப் பொறுப்பை நிலைநாட்டினான். அவனது நெஞ்சிற் பதிந்திருந்த அன்னை சிவகாமியின் அருள் இன்பத்தை நேரிற்பெற எண்ணினான்.
திருவுருவச்சிலையை இங்கு தருவித்து தமது வதிவிடச் சூழலில் ஓர் ஆலயம் அமைத்து வழிபட்டான். அன்னை சிவகாமியின் பேரருள் அவனது அரசபணி சிறக்க உதவியது. இவ்வூர் மக்களும் இறைவியை வழிபட்டு மன அமைதியையும் பல சிறப்புக்களையும் பெற்று இன்புற்றனர்.
அந்நிய நாட்டவரின் படையெடுப்பினால் எமது சமய ஆலயங்கள் யாவும் அழிக்கப்பட்டன. எமது மக்கள் இன்னலுற்ற போதும் மதம் மாறாது சைவத்தை அகத்தளவில் பேணிவந்தனர். இணுவில் கிழக்கில் வாழ்ந்த முத்தமிழ் வல்லுநரான இணுவில் சின்னத்தம்பிப்புலவர் என்பவர் குலதெய்வமான அன்னை சிவகாமியைத் தமது குன்றாத பக்தி மேலிட்டினால் இடையறாது ஈழத்துச் சக்திவின் அற்புதங்கள் -: 0 :- முசிவிங்கம்

Page 10
உள்ளன்போடு வழிபட்டு வந்தார். இவரின் கல்விச் சிறப்பினால் ஒல்லாந்தரின் அரசபண்யில் “தோம்பு” எழுதும் பேறு பெற்றார். இவரின் பணிச்சிறப்பின் மீது பொறாமை கொண்ட ஒருவன் கொடுத்த பொய்த்தகவலின் பேரில் சமய பக்தரான புலவர் ஒல்லாந்தரின் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை சென்ற புலவர் சிறையிலிருந்த வசதியீனங்களினால் பெரும் அவலநிலையை அடைந்து வருந்தினார். நாள் தவறாது வழிபட்ட தமது குலதெய்வத்தைத் தரிசிக்க முடியாமல் சிறையிருந்து நரகவேதனை அனுபவிப்பதை உணர்ந்தார். அன்னை சிவகாமியைச் சிறையிலிருந்தவாறு தமது கொடிய சிறையிலிருந்து விடுவிக்குமாறு விண்ணப்பித்தார்.
இயற்கையாகவே கவிபாடுவபர் தமக்கேற்பட்ட துன்பத்தில் இருந்து விடுவிக்குமாறு அன்னை சிவகாமியின் மீது ஒரு பதிகம் பாடினார். பாடல்கள் தொடர்ந்தன. ஏழாவது பாடல் தொடங்கியது. தன் பிள்ளையின் துன்பம் திக்க எண்ணிய இணுவில் சிவகாமியம்மை தமது பேரருளினால் சிறைக்கதவின் பூட்டைத் தானாகவே உடையச் செய்தார். இச்செயலினால் அச்சமடைந்த அதிகாரிகள் புலவரை வணங்கி விடுதலை செய்தனர்.
தமது குலதெய்வத்தின் பேரருளை வியந்த சின்னத்தம்பிப் புலவர் தாம் பாடிய சிறைமீட்புப் படலத்தைப் பாடி நிறைவு செய்தார். மேலும். சிவகாமி பிள்ளைத்தமிழ், சிவகாமி அம்மைத் துதி, திருவூஞ்சற் பாமாலை ஆகியவற்றை அன்புடன் சிறப்பாகப் பாடிக் காணிக்கையாக்கினார். இச்சிறை மீட்பினால் இணுவில் சிவகாமி அம்பாளின் அற்புதமும் புகழும் ஓங்கின. சின்னத்தம்பிப்புலவரின் பக்தியும், நாவன்மையும் திக்கெட்டும் பரவியது. சக்திவழிபாடு செய்யவும் பக்தர் கூட்டமும் பெருகியது.
அக்காலத்தில் சிறு ஒலைக்குடிசையாக இருந்த ஆலயம் பக்தர்களின் பேராதரவால் கருங்கற் கோயிலாக மாற்றத் திருவருள்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:02:- ഗ്ഗdിഖിക്ക

பாலித்தது. பலர் அவ்வப்போது ஆலயத் திருப்பணிக்குத் தம்மாலானவை செய்தனர். நிறைவுபெறவில்லை. அன்னையின் பெயர் கொண்ட சிவகாமசுந்தரி என்னும் பெண் அன்னை சிவகாமியின் உந்தலினல் தன்னை இறைபணிக்கு அர்ப்பணித்தார். அன்னை - சிவகாமியின் அற்புதத்தினால் திருவாக்குச் சொல்லியும் பிடியரிசி எடுத்தும் திருப்பணியை நிலைநாட்டினார்.
சிவகாமி அம்பாளின் சக்தியால் திருவாக்குச் சொல்வதை எம்மக்கள் சாத்திரம் சொல்வதாக எண்ணி அவரை அன்புடன் சாத்திரம்மா என்றே அழைத்தனர். சாத்திரம்மா ஆரம்பத்தில் திருவாக்குச் சொல்லும்போது அவரிடம் வருவோர் தட்சினையாக ஒருபணம் (ஆறுசதம்) தந்துதவினர். திருவாக்குச் சொல்லிய பின் சாத்திரம்மா இல்லங்கள் தோறுஞ் சென்று பிடியரிசி எடுத்து வந்தார்.
திருவாக்குச் சொல்லியும், எடுத்த பிடியரிசியை விற்றும் கிடைக்கும் பணத்தில் அன்னை சிவகாமியின் திருத்தலம் புதியதாக அமைக்கப்பட்டது. கருவறை, பிரதான மண்டபங்கள், வானுயர் வாசற்கோபுரம், முன் மணிமண்டபம் யாவும் கருங்கற்களினாலும் வெள்ளை வைரப் பொளிகற்களினாலும் அமைக்கப்பட்டன.
பொதுமக்களின் பக்திமேலிட்ட அன்பளிப்பும் சாத்திரம்மாவின் தூய அரும்பணியும் திருப்பணி சிறக்க நேரிட்டது. சாத்திரம்மா தமது தள்ளாத பருவத்திலும் நாற்பது வருட காலமாக தன்னலமற்ற தணியாத பக்தியும் உற்சாகமும் பெருந்தன்மையும் இணுவில் சிவகாமி அம்பாளின் திருப்பணியும் சக்தியின் அற்புதத்தின் சிறப்பம்சமாகும்.
இணுவில் கிராமத்தின் இணையற்ற இருபத்தொரு கோயில் களில் பெருவிழாக் காணும் ஆலயங்கள் ஆறு வானுயர் கோபுரங்கள் அமைந்த பெருங்கோயில்கள் நான்கு. சிறப்பான அற்புதங்கள் நிறைந்த தாய்த் தெய்வமாக இணுவில் சிவகாமி அம்பாள் திருத்தலம் ஒன்றுே அருள்பாலிக்கிறது.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 03:- மூசிவலிங்கம்

Page 11
இவ்வாலயத்தின் அடியார்களான ஒரு சிலரின் பிடியரிசி சேமிப்புடன் நாளாந்த அரைச்சதம் கூலி தரும் ஒரு கட்டுச் சுறுட்டுக் கூலியும் இன்றுவரை (78 வருடங்கள்) விழாக்காணும் மகிடாசூரன் அமைக்கவும் உதவியது. சிறுதுளியைப் பேணிப் பெரும் நிதியாக்கி அன்னைக்கு அழகு சேர்த்த அடியார் கூட்டம் செய்த நற்பேற்றினால் ஆலயம் சிறந்துள்ளது.
மூன்று சித்திரத்தேர்கள், சப்பறம், மஞ்சம், கைலாயவாகனம், தங்கரதம் மேலும் பல அழகிய வாகனங்கள் அன்னையின் அலங்கார வீதிவலப் பவனிக்கு அணிசேர்க்கின்றன. விழாக்கள் பக்திபூர்வமாக அமையவும், அறநெறிபேணும் மக்கள் இன்புறவும் சக்தியின் அற்புதங்கள் மேலும் பிரகாசிக்கின்றன.
பரமாத்மாவான இணுவில் சிவகாமி அம்பாளின் அதிசிறந்த அற்புதங்களினால் பாரெங்கும் பரந்து வாழும் ஜீவாத்மாக்கள் பயனடைகின்றன. அன்னையின் ஆலயஞ் சிறக்க ஆதரவு நல்கவும், அறம் வளரவும், சைவசமய நெறி விளங்கவும் எம்மண்ணின் பெருமை பிரகாசிப்பதும் எமது முற்றவப் பேறாகும்.
தை மாதம் தொடக்கம் இவ்வாலயத்தில் விழாக்காலமும் ஆரம்பமாகிறது. தை அமாவாசை அன்று அபிராமிப்பட்டர் விழா நடைபெறும். கும்பாபிஷேகம் நடைபெற்ற திகதியையொட்டிய இருபத்திநான்கு விழாக்கள், பத்துநாட்கள் இலட்சார்ச்சனை, பங்குனி உத்தரநாளன்று தீர்த்தத் திருவிழா அமைய பன்னிரு பெருவிழாக்கள் நடைபெறும். இக்காலத்தில் விழாச் சிறப்பை நாடிப் பக்தர்கூட்டம் அலைமோதும். பன்னிருநாட்களும் விசேட அன்னதானம் மக்களை
அரவணைக்கிறது.
ஆடிமாதம் பூரவிழா வெகுசிறப்பாக நடைபெறும். மாலை கற்பூரத்திருவிழாவுக்காக அன்னை பூந்தண்டிகையில் வீதியுலா வருங் காட்சி வெகுசிறப்பாகும்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 04:- மூ.சிவலிங்கம்

பக்திபூர்வமாக நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் மகிபாசூர சங்கரம்
சிங்க வாகனத்தில் பவனிவருவது வேறெங்கும் காணமுடியாத தனிச்
இணுவில் மேற்கிலுள் பி கோயிலுக்கு ஆயிரக்கனக்கில்
: 5 திருவுலா 6565 Gasolārfigகும்.
விஜயதசமியன்று தொடங்கி கேதாரகெளி நோன்புவிழா 21 நாட்கள் இடம்பெறும் வழிபடும் பெண்கள் கட்பம் அன்னையின்
ва தும பூசைகளு gelesailkatu
பில் கி த்தின் சிறப்பாக ங்கவில் விமாக்கள்
சேட காலங்களில் a. O pe பிஞ்சுப்பராயத்தினர் முதல் தலை பஞ்சாய்ப்போன தள்ளாத 5 gia sĩ 6\mang ங்களே பாடவேண்டுமென் நிசயத் аънаиәoапіо
LaFGA வாழும் isaiasalai Gaiari நிறைர் ia:Alt Garai as வாழவைக்கும் அற்புதத்தை எம்மக்கள் அனுபவிக்கிறார்கள்
ம் சக்தியின் புகழ் ஓங்குகி
SDS SSJS) SSe
தன்னை மறந்து சுக ை2 கிைணைற்
maia faláxãesã mais - stima | | sar6u gashuaigs Saggi Göaiö

Page 12
காரைக்கால் சிவன் கோயில் ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட சரித்திரத் தொடர்புடையது. யாழ்ப்பாணத்தை அரசாண்ட கருணாகரத்தொண்டமான் தனது சேனை, படை (குதிரை) களுடன் இணுவில் ஊடாக உலாவரும்போது விவசாயப் பெருநிலப்பரப்பாக இருந்த காரைக்கால் பதியில் தங்கி நின்று சிவனை வழிபட்டு அயலில் ஒய்வெடுத்துச் சென்றதாக சரித்திரச் சான்றுகளும், செவி வழிச் செய்திகளும் செப்புகின்றன.
1860 இல் இணுவிலில் அவதரித்தவர் சுப்பிரமணியம் என்னும் பெரிய சந்நியாசியார். இவ்வூரில் பெரும் விவசாயிகள் தமது நன்மை கருதிப் பட்டிப்பசுக்களை வளர்த்து வந்தனர். வாலிபனான சுப்பிரமணியம் தமது குடும்ப ஆநிரைகளை மேய்த்து வந்தார். காலையில் ஆநிரை களைக் காரைக்கால் பகுதிக்கு அழைத்து வந்து மேயவிடுவார். தாயார் இவரின் மதிய உணவைத் தினமும் எடுத்துவந்து தருவார். மாலையில் பசுக்களுடன் வீடேகுவார்.
இச்சிவன் கோயிலில் பரிவாரமூர்த்தமாக அமைந்துள்ள மாரியம்பாள் மிக அற்புதமானவர். தம்மை மெய்யன்போடு வழிபடுவோருக்குத் தாயன்போடு அருள்புரிபவர். மாரியம்பாளின் திருவிளையாடலின்படி சுப்பிரமணியத்தின் மதிய உணவு அன்று வரத் தாமதமானது. உரிய நேரம் வந்ததும் பசியும் மனச்சோர்வும் மேலிட மாரியம்பாளின் ஆலயச்சூழலில் இருந்த பெருமரநிழலில் பசியுடன் உறங்கிவிட்டார்.
அண்டமெல்லாம் வாழும் சகல உயிரினங்களையும் காப்பவளான அன்னையவள் ஒரு பிள்ளை பசியுடன் உறங்கியதை உணர்ந்தார். பசிபோக்கும் தூய அன்புடன் அவரின் பெற்ற தாயின் நடை, உடை, பாவனையில் மதிய உணவை எடுத்துவந்து சுப்பிரமணியத்தை அழைத்து உணவருந்தும்படி கொடுத்தார். அவரும் தமது பசி நீங்க அவ்வுணவை உட்கொண்டார். தன் பிள்ளை உணவருந்தும் வாஞ்சையைக் கண்டு மகிழ்வுற்ற மாரியம்பாள் மறைந்தருளினார். பசியாறிய சுப்பிரமணியத்தின் பெற்ற தாயார் வழமைபோல தான் எடுத்துவந்த உணவை அவரிடம் வழங்கினார். ஏற்கனவே மாரியம்பாளின் கையால் வாங்கி உண்ட உணவு ஞான உணர்வைத் தரவும் உண்மைநிலையை அறிந்து பரவசமடைந்தார்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 06:- மூ.சிவலிங்கம்

தமது பெற்ற தாயிடம் மாரியம்பாள் திருவமுது தந்து தமது ஞானக் கண்ணைத் திறந்ததை அதிசயத்துடன் கூறி இன்புற்றார்.
மாரியம்பாளின் திருவமுது சுப்பிரமணியத்தைப் பெருஞ் சித்தராக்கியது. இறையருளின் சித்தியினால் காரைக்கால் திருப் பதியில் பல திருப்பணிகளை மேற்கொண்டார். இச்சூழலில் மூலிகை மரங்கள், கனிதரும் மரங்கள், நிழல் மரங்கள் உட்பட 1008 மரங்களை நாட்டினார். இந்த மரங்களுக்கு நீர் ஊற்றவென ஏழு திருக்குளங்களை வெட்டுவித்தார். மக்களின் தேவைக்கேற்பச் சமய, சமூகப் பணிகளை மேற்கொண்டார். பசித்தவர்களுக்கு உணவளித்து அன்னதானப் பணியை மேற்கொண்டார்.
இக்காலத்தில் இணுவைக் கந்தப் பெருமானின் வேண்டுதலின் பேரில் உலகப் பிரசித்திபெற்ற மிகப் பெரிய திருமஞ்சத்தினை உருவாக்கினார். முக்காலத்தையும் உணர்ந்தார். தமது சமாதியடையும் நாள், நேரத்தையும் அறிந்தார். தமது சமாதிக்கென வேண்டிய சமாதிக் கிடங்கையும் வெட்டுவித்தார். இச் சமாதிக்கென உரிய பொருட்களையும் தேடிவைக்க ஏற்பாடு செய்து குறிப்பிட்ட நேரப்படி சமாதியானார். இவரின் அடியாாகள் சமயச் சடங்குகளைச் செவ்வனே நிறைவேற்றினர். இச்சமாதியின் மீது அவர் வழிபட்டு வந்த வேலாயுதத்தை நிறுவிய பொதுமக்கள் பெருஞ்சித்தரின் விருப்பப்படி குடிசையமைத்து வணங்கினர். இத்தலம் இன்று மஞ்சத்தடி முருகன் ஆலயமாக அமைந்துள்ளது.
காரைக்கால் பதியிலுள்ள மாரியம்பாள் வழங்கிய திருவமுது எம்மண்ணில் ஒப்பற்ற பெருஞ்சித்தரை உருவாக்கியது. மேலும் அவரின் அறச்செயலும், சமய, சமூக சேவையும், பசித்து வந்தோருக்கு ஆலயத்தில் அன்னதானப் பணியாற்றிய சிறப்பும், அன்னை சக்தியின் அற்புதமான அருளாட்சியும் எம்மண்ணின் விடிவுக்கு அடிகோலியது. இவ்வூர் மக்களும் அன்னையின் பேரருளை வியந்து உள்ளன்புடன் வழிபட்டு வருகின்றனர்.
மாரியம்பாள் தமது அடியாருக்கு அன்னம் வழங்கிய மரத்தடிச் சூழலில் அன்னதானப்பணி, சமய, கலை, கலாசார வைபவங்கள் நடைபெற வசதியாக ஓர் அழகிய மணிமண்டபம் அமைந்துள்ளது இறையருளாகும்.
சக்தியின் அற்புதங்களும் பேரருளும் ஓங்கட்டும். Go žabe) Ges>øe) Go žabe)
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 07:- மூ.சிவலிங்கம்

Page 13
1அரவனைக்கும் தாய்த் தெய்வம்
நாகபூஷணி அம்பாள்.
இவ்வாலய வரலாறும் அம்பிகையின் அருட்பிரவாகமும் சொல்லில் வடிக்க இயலாதவை. இதன் 7* ܃
தொன்மையும், கருனையும் மிகப்
ஆதியில் இவ்விடத்தில் நாகவழிபாடு நடைபெற்றதால் நாகதிவு எனவும் வழங்கப்பட்டது. காலங்கள் மாறவும் சக்திபீடத்துப் புவனேஸ்வளியாகவும், நாகதேவதைகளும் நாகமும் வழிபட்டுப் பூசித்ததால் நாகபூஷணி எனவும், ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான
C iъ aыїїшй i GGL in og ல் மணிபல்
வாய்ந்தது எனப் பல சான்றுகள் பகர்கின்றன. இவ்வாலயத்தின்
அதன் பின்னிருந்து தனது படத்தினால் நிழல்தரும் ஐந்துதலை நாகமும் அவற்றின் அமைப்பின் மூலம் பல்லாயிரக் காைக்கான வருடங்களுக்கு மேல் அமைந்தவை எனச் சிற்பசாத்திர நிபுனர்கள்
பியுறுத்தியுள்ளனர். இச்சி d aSA ung gann m ஈழத்துச்ši asriigiir <5gyiñGdi -: ES:- முசிவிங்கம்
 
 
 
 

என்பதைக் கூறமுடியாது. சுயம்புவாகவே அமைந்ததால் வரலாற்றுப் பெருமை வாய்ந்தது.
இச் சிறப்பான சக்திபீடத்தின் பெருமையை அறிந்த இந்திரன் பல மாணிக்கக் கற்கள் பதித்த அரியணை ஒன்றைத் தேவலோகத்திலிருந்து தருவித்து அன்னை புவனேஸ்வரிக்குக் காணிக்கையாகக் கொடுத்துப் பூசித்து வழிபாடு செய்தான். இவ் அரியணையின் அழகையும், பெருமையையும் அறிந்த இரு நாக மன்னர்கள் தாம் அபகரித்துச் செல்ல முயன்றனர். தமக்கே உரியதென இருவரும் போரிட்டனர்.
புத்தபிரான் மூன்று முறை இலங்கைக்கு வந்துள்ளார். மூன்றாம் முறை வரும்போது மணிபல்லவத்தையும் தரிசிக்க வந்தார். இச்சமயம் இரு நாக மன்னர்களும் அரியணைக்காகப் போரிடுவதை உணர்ந்தார். புத்தபெருமான் அவர்களை அணுகி இந்த அரியணை தேவேந்திரனால் புவனேஸ்வரி அம்பாளுக்கு வழங்கப்பட்டது. இதை நீங்கள் கவர்ந்து செல்ல முடியாது. இதன் சிறப்பை நன்கு கண்ணாரக் கண்டு வணங்கிச் செல்லுங்கள் எனச் சமாதானமடையச் செய்தார். அவர்களும் பகை நீங்கிச் சென்றனர்.
முன்னொரு காலத்தில் இப்புவனேஸ்வரி அம்பாளை ஒரு நாகம் தூய பக்தியுடன் வழிபட்டு வந்தது. இத்தீவின் வடபாலுள்ள புளியந்தீவில் மலர் கொய்துகொண்டு கடல்வழியே அம்பாளைத் தரிசிப்பதற்காக வேகமாக நீந்தி வந்தது. பாம்பின் விரோதியான கருடன் ஒன்று இந்த நாகத்தைக் கொல்லும் நோக்கில் மேலே பறந்து தொடர்ந்து வந்தது. கருடனைக் கண்டு அஞ்சிய நாகம் கடலின் நடுவேயிருந்த பெரிய கல்லைச் சுற்றிய வண்ணம் மறைந்திருந்தது. கருடனோ பாம்பு வெளிவரும்பொது கொல்வதற்காக வேறொரு கல்லில் அமர்ந்திருந்தது.
இதேசமயம் மாநாய்கன் என்னும் வணிகன் அவ்வழியே மரக்கலத்தில் சென்றான். பாம்பின் பரிதாப நிலையைக் கண்டு அதன் மீது மனமிரங்கி தனது மரக்கலத்தைக் கற்களின் அண்மையில் நிறுத்தினான். கருடனை நோக்கி இவ்விடத்திலிருந்து அகலுமாறு ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 09:- மூ.சிவலிங்கம்

Page 14
கேட்டான். கேட்டதும் "உன்னிடமுள்ள எல்லாச் செல்வங்களையும்
கொள்வேன்” என அசரீரி வாக்குக் கேட்டது. அசரீரி கேட்ட வணிகன் தனது சொத்துக்களை வழங்க மனப்பூர்வமாகச் சம்மதித்தான். கருடன் அவ்விடம் விட்டகன்றது. நாகம் தனது நன்றியைத் தெரிவித்து விட்டுத் தன் இட்டதெய்வத்தை வணங்கச் சென்று தனது கடமையை நிறைவேற்றியது. வணிகனும் தனது நாட்டுக்குச் சென்றான்.
அன்றிரவு வணிகனும் மனைவியும் நித்திரைக்குச் செல்ல முற்பட்டனர். அச்சமயம் கண்ணைக் கூசவைக்கும் ஒரு பேரொளி தோன்றியது. அவர்கள் இருவரும் அவ்வொளியை நாடினர். பல நாகரத்தினக்கற்கள் அவர்களின் படுக்கை அறையினுள் தென்பட்டன. அவர்கள் அவற்றைக் கண்டதும் நயினாதீவு அம்பாளின் அற்புதத்தை வியந்த வண்ணம் அம்பாளைக் கண்டு தரிசித்துத் தமது பணியினை நிறைவேற்ற ஆயத்தமானார்கள்.
இவ்வணிகன் இங்கு வந்ததும் இத்தீவகத்தின் வடகீழ்த் திசையிற் கடற்கரையோரமாக இத்திருத்தலத்தை அமைத்தான். கோயிலின் சிறப்புக் கருதி ஏழு வீதிகளும், கோபுரமும் ஆகம விதிமுறைப்படி அழகுற மிளிரச்செய்தான். பூசைக் கிரமங்களை நெறிப்படுத்துவதற்கென நயினார்பட்டர் என்னும் அந்தணப் பெரு மகனை நியமித்தான். இவர்கள் இக்கோயிலின் தென்பகுதியில் “மண்ணிப்புளி” என்னும் இடத்தில் வாழ்ந்தார்கள். இக்காணி பிற்காலத்தில் “பட்டன்வளவு” என வழங்கப்பட்டது. அந்தணரின் பெயர் நிலைக்கவும் முன்னர் மணிபல்லவம் என அழைக்கப்பட்ட இவ்விடம் நயினார்தீவு என வழங்கப்பட்டது. இப்பெயர் காலங்கள் செல்லவும் நயினாதீவு என மருவியது. நயினாதீவு என்னும் பெயர் இன்றுவரை நிலைத்துள்ளது.
நயினாதீவில் நாகம் வந்து பூசித்த சம்பவத்துக்குச் சான்றாக இதன் வடகடலின் நடுவே இரு பெரிய கற்கள் இன்றும் காணப் படுகின்றன. அவைகள் "பாம்பு சுற்றிய கல்”, “கருடன் இருந்த கல்” என அழைக்கப்படுகின்றன. இவ்வாலயத்தின் அற்புதத்தின் புராதன வரலாற்று எச்சங்களகவே இவை தெரிகின்றன. இங்கு
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: :- மூ.சிவலிங்கம்

ஆதியில் நாகரும், நாகமும் பூசித்ததன் பேறாக அன்னையை நாகேஸ்வரி, நாகபூஷணி என அன்று தொட்டு இன்று வரை அழைக்கின்றனர். இதனை உறுதிப்படுத்தும் சான்றாக இத்தலத்தின் யாக பூசையின்போது "நாகராஜேஸ்வரி மந்திர புஷ்யம் சமர்ப்பயனமி” என மந்திரம் ஒதிப் பூசிக்கப்படுகிறது.
வணிகனால் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்ட இத்திருத்தலம் போர்த்துக்கேயரினால் இடித்து அழிக்கப்பட்டதுடன் பெறுமதிமிக்க பொருட்கள் யாவும் சூறையாடப்பட்டன. இங்கு இடிபட்ட கட்டடத்தின் கற்கள் ஊர்காவற்றுறையில் பறங்கியரால் கடற்கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டது. ஆலயம் அழிக்கப்பட்ட போது சைவமக்கள் மனம் வெதும்பியதுடன் செய்வதறியாது திகைத்தனர். ஒரு சில பக்தர்கள் உலாவரும் அம்பாளின் சிலையை மேற்கேயுள்ள ஆலமரப் பொந்தில் வைத்து அகத்தளவில் வணங்கினர். இந்த ஆலமரம் இன்றும் “அம்பாள் ஒளித்த ஆல்” என மக்களல் வணங்கப்படுகிறது.
ஆட்சி மாறி டச்சுக்காரரின் காலத்தில் சைவமத வழிபாட்டின் தடைகள் விலகின. ஆலயம் கட்டடப் பணியால் சிறக்கத்
சிற்ப முறையில் நிர்மாணிக்கப்பட்டன. இவ்வேலைகள் அன்னை நாகபூஷணியின் திருவுளப்படி நிறைவுகண்டு 1951 இல் மகா
நாட்டில் வேறெங்கும் காணமுடியாத பல அற்புதங்களையும் சித்தரிக்கும் சித்திரத்தேர் உருவாகி 1958 இல் தேர்த்திருவிழாவில் பவனி வந்தது. விநாயகள், முருகனுக்கு வேறான தேர்களும், திருமஞ்சமும் உருவானது. ஆலயத்தின் தெற்கே கோபுரமும், வடக்கில் திருமண மண்டபமும், யாத்திரிகள் தங்குமிடமும் சிறப்பா அமைந்தன.
ஆரம்பத்தில் பத்துப் பெரும் திருவிழாக்கள் நடைபெற்றன. கோயிலின் வளர்ச்சியும் புதுமையும் நோக்கி இன்று பதினாறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. 1986 இல் நடந்த அசம்பாவிதங் களின்போது விநாயகள், முருகன் தேரும், திருமஞ்சமும் அழிக்கப் ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: :- pിലഠിക്ക

Page 15
பட்டன. இரண்டாயிரமாம் ஆண்டில் புதிய திருமஞ்சம் உருவாகிப் பெருவிழாவில் பவனி வந்தது. வேப்பமரச் சோலையில் குடிகொண்ட அம்பாளின் தலவிருட்சம் வன்னிமரமாகும்.
இம்மண்ணின் மைந்தரான சித்தர் முத்துக்குமாரசுவாமிகள் அன்னை நாகபூஷணியின் மீதிருந்த அளவிறந்த பக்தி காரணமாக மேற்குக்கரையில் “சித்தாமிர்த புஷ்கரணி” என்னும் தீர்த்தக்கேணியை பக்தர்களின் உதவியுடன் நிறைவேற்றினார். அம்பாளின் பெருவிழாவில் தீர்த்த விழாவின்போது சித்தாமிர்த புஷ்கரணி பயன்படுகிறது. மறுநாள் நன்கு அலங்கரிக்கப்பட்ட வள்ளத்தில் அம்பாள் எடுத்துச் செல்லப்பட்டுக் கடலில் தீர்த்தத்திருவிழா நடைபெறும்.
ஆனி மாதத்தில் நடைபெறும் அன்னையின் பெருவிழாக்கள் பெருஞ்சிறப்பும் அற்புங்களும் நிறைந்தவை. சித்தர் முத்துக்குமார சுவாமிகளின் தூய உள்ளம் பெருவிழாக்களுக்கு வரும் அடியார் களுக்கு அன்னதானம் வழங்க முற்பட்டது. பெருவிழாவுக்கு முன்பாகவே யாழ் நகரிலும் அதன் சூழலிலும் உள்ள தமக்கு இசைவானவர்களிடமிருந்து பொருட்களாகவும், பெருநிதியாகவும் சேகரிக்கப்படும். விழாவின் முதல்நாள் நிதியும் பொருட்களும் குறிப்பிட்ட இடத்தில் சேர்க்கப்படும். அன்னதானப் பணியில் தானும் ஒரு ஊழியனாக இருந்து அயராது உழைத்தார். அவர் இட்ட அன்னதான வித்து இன்று பெருவிருட்சமாகி அமுதசுரபியாகிப் பலரையும் அரவணைக்கிறது.
சக்திபீடமான இங்கு அன்னையின் அற்புதத்தால் தேவேந்திரன், புத்தர் பெருமான், வணிகன் யாவரும் இங்கு வந்து அன்னையை வழிபட்டு பணிகள் செய்து பெருமையடைந்தனர்.
அன்னை சக்தியின் பேரருளால் பாரெல்லாம் பரந்து வாழும் தமிழ்நெஞ்சங்களில் அன்னை குடியிலிருந்து அவர்களை ஆன்மீகப் பணியாற்ற வைப்பதும் சக்தியின் அற்புதமேயாகும்.
Gežo SÐ Gosào c) QC732G)
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 2 :- மூ.சிவலிங்கம்

தெல்லிப்பழை துர்க்கரதேவிதிருத்தலம்
case இலங்கையின் சக்தி வழிபாட்டின் జ్ఞ ஊற்றென விளங்கும் ஆலயங்களில் தெல்லிப்பழை துர்க்காதேவியின் திருத்தலம் வரலாறு, புனிதம், கருணை, அரவணைப்பு யாவற்றையும் சிறப்பாகத் தன்னகத்தே
கொண்டுள்ளது.
யாழ் - காங்கேசன்துறை பெரு வீதியில் எட்டாம்கல் தொலைவில் மேல் திசையை நோக்கினால் அனைவரையும் வரவேற்பது "அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம், தெல்லிப்பழை" எனப் பதிக்கப்பட்ட அலங்கார வளைவாகும். மேலும் புனிதமான அரச மரங்களும், வானளாவும் பஞ்சதள வாயிற்கோபுரமும் எம் வரவை எதிர்கொள்ளும் அருள்நிறைந்த அன்னை துர்க்காதேவியின் பேரருளேயாகும். அன்னையைக் கண்டதும் கைதொழ வைக்கும் கருணையின் சக்தி எம்மை அரவணைக்கிறது. இதனால் நாம் பெறுவது பெரும்பேறான மனநிறைவாகும்.
இயற்கை வனப்பு
தெல்லிப்பழை வளமான செம்மண் பூமி. இவ்வனப்பில் செந் நெல்லும், செங்கரும்பும், உபஉணவுப் பயிரினங்களும் பெரு விளைச்சலைத் தருகிறது. ஒருபால் நறுங்கனி தரும் சோலைகளும், அரசு, வேம்பு, இலுப்பை போன்ற தெய்வீக மரங்களும், கற்பக தருவாம் பனஞ்சோலைகளும் ஓங்குபுகழ் தெங்கும் நாட்டை வளம் படுத்தி நலமடைய வைக்கும் பூர்வீகச் சொத்தாகும்.
பண்டைக் காலத்தில் வாழ்ந்த எம் மக்கள் விவசாயத்தையே வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டனர். உறுதுணையாக இல்லங்கள் தோறும் ஆநிரைகளைப் பேணிவந்தனர். அதனால் அதிக நன்மை ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -13- மூ.சிவலிங்கம்

Page 16
அடைந்தனர். நிறைவான வாழ்க்கையில் வருவோரை ஆதரித்துப் பகுத்துண்டு வாழ்ந்தனர். இவர்களின் சிந்தையில் சிவநெறி குடி கொண்டிருந்தது. யாவரையும் சிவமாகவே கருதினர். அறம் வளர்ந்தது. ஆன்மீகம் பரவியது.
ஆலய வரலாறு
தெல்லிப்பழையில் வவுணாவத்தை என்னும் பிரிவில் உயர்ந்த வேளாண்குடியிற் பிறந்து செய்தொழிலான விவசாயத்தில் அரும் பாடுபட்டு அதிக பொருளிட்டியவர் கதிர்காமர் என்னும் அருளாளர். இவரின் சிந்தையிற் குடிகொண்ட தெய்வீகம் இவரை இறைவனின் திருத்தல யாத்திரையை மேற்கொள்ள வைத்தது. 1750 ஆம் ஆண்டளவில் கதிர்காமர், இந்தியத் திருத்தல யாத்திரைய மேற் கொண்டு கடல் மார்க்கமாக வேதாரணியத்தை அடைந்தார். பத்து வருட காலமாக இவர் திருத்தல யாத்திரையுடன் செந்தமிழையும், சமஸ்கிருதத்தையும் நன்கு கற்றுத் தேறினார். இவர் இந்தியாவில் உள்ள இந்து ஆலயங்களைத் தரிசித்தார். அற்புதங்கள் நிறைந்த பிரசித்திபெற்ற தலங்களிற் சில நாட்கள் தங்கியும் வழிபட்டார். எல்லாத் திருத்தலங்களையும் மனநிறைவுடன் தரிசிக்க இவர் கால் நடையாகவே சென்று நிறைவு செய்யப் பத்து வருடங்கள் நீடித்தன. தல யாத்திரையின் நிறைவாகக் காசிக்கு செல்லமுற்பட்டார்.
64 சக்தி பீடங்களின் சகல கலைகளும் பொருந்திய துர்க்கா தேவி சொப்பனேஸ்வரி பீடத்தில் உறைந்துள்ளார். சக்தி உபசாகரான கதிர்காமர் காசியிற் பல நாட்கள் தங்கியிருந்து வழிபட்டார். சக்தியின் பக்திமேலிட்டினால் துர்க்காதேவி யந்திரத்தையும் பூசை வழிபாட்டுக் கென வெண்கலத்தினாலான ஒருமுகக் கெண்டி ஒன்றையும் பெற்றுக் கொண்டு தாயகம் திரும்பினார். கடல் மார்க்கமாக காங்கேசன்துறையை வந்தடைந்த கதிர்காமர் எமது மண்ணின் கீரிமலைக்குச் சென்றுவர எண்ணினார். கீரிமலையில் தீர்த்தமாடியதும் அங்குள்ள நகுலேஸ்வரப் பெருமானையும் தரிசித்து ஆசியும் பெற்றுத் தமது பிறந்தகம் திரும்பினார்.
கீரிமலையிலிருந்து கால்நடையாகவே வரும் பக்தரைத் தமது தெய்வீகமான நிகழ்வினால் சோதனை செய்ய அன்னை சக்தி ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 14:- மூ.சிவலிங்கம்

திருவுளங் கொண்டார். கதிர்காமருக்கு உடல் தளர்வுற்றது. உள்ளம் பதறியது. எட்டியடி வைக்க முடியாமல் சோர்வு ஏற்பட்டது. அவதியுற்ற கதிர்காமர் அருகிலிருந்த இலுப்பமரச் சோலையை அடைந்து மர நிழலில் ஒய்வெடுத்தார். அதேசமயம் அவர் முன் ஒரு பிரகாசமான சோதி தோன்றியது. தம்முடன் வைத்திருக்கும் துர்க்காதேவி யந்திரத்தை அவ்விடத்திலேயே தாபிக்குமாறு சோதி கதிர்காமரைப் பணித்தது. சக்தியின் சோதியின் சித்தப்படி கதிர்காமர் எடுத்து வந்த யந்திரத்தை உழுகுடைப் பகுதியான இலுப்பை மரச்சோலையில் ஒரு மரத்தடியில் தாபித்துப் பூசைகள் நடத்தினார். இந்த இலுப்பை மரச் சோலையே இன்று துர்க்காதேவியின் திருத்தலம் அமைந்துள்ள இடமாகும்.
இவ்விடத்தில் பாம்புகள் வந்து செல்வது வழக்கம். சிறிது நேரத்தில் மறைந்துவிடும். இங்கு பூசை செய்ய வருபவர்கள் பாம்பு களுக்குப் பால், பழம் வைத்து வழிபடுவர். அவற்றை உட்கொண்டதும் அவை தாமாகவே மறைந்துவிடும். மகாசக்தியின் திருவிளையாடலாகவே இந்த நிகழ்வுகள் யாவும் அமைந்தன. உரிய காலத்தில் அன்னை துர்க்காதேவி தமது திருவுளப்படி அமைப்பித்து எத்தனையோ ஆன்மாக்களுக்குத் தாயாக இருந்து அருள்பாலிக்கிறார். இவ்வரிய சிறப்பான காலத்தில் வாழ்ந்து தெய்வீகக் காட்சியைக் காணும் யாவரும் பாக்கியசாலிகளேயாவர்.
தூய உள்ளம் படைத்த கதிர்காமரும் அவரின் வழித் தோன்றல்களும் தமது இயல்புக்கேற்ப வழிபாட்டையும், பொங்கல் பூசைகளையும் நடாத்தி வந்தனர். காலங்கள் செல்லவும், பொது மக்களின் பக்திமேலிட்டினால் திருப்பணிக்கு உதவ முன்வந்தனர். இதனால் 1820 இல் கற்கோயிலாக மாற்றியமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. நித்திய பூசைகள் தொடர்ந்தன. 1820 இல் யாழ் கச்சேரியிலுள்ள இந்து ஆலயங்களின் பதிவேட்டில் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் கற்கோயிலாக இருந்ததென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்னை சக்தியிடம் முருகன் கொடியவர்களை அழித்து ஜீவாத்மாக்களைக் காப்பதன் பேரில் சக்திவேல் பெற்ற புராணத் ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 15 :- மூ.சிவலிங்கம்

Page 17
தகவலை நாம் அறிவோம். அந்த உறவுமுறையில் மாவைக்கந்தன் அயலிலுள்ள சக்தியின் திருத்தலமாக அமைந்த இவ்வாலயத்துக்கு 1829ம் ஆண்டு புரட்டாதி மாத விஜயதசமி அன்று எழுந்தருளி வந்து வன்னி வாழை வெட்டும் புனித நிகழ்வு ஆரம்பமானது. வருடாவருடம் மானம்பூ இங்கு நடைபெறுவது வாசிட்ட இலிங்க புராண சுப்பிரமணிய பராக்கிரமத்தை மூலாதாரமாகக் கொண்டது. இவ்விரு ஆலயங்களின் தொடர்பு புராதன ஏடுகளிலிருந்து அறிய முடிகிறது. - -
இத்திருத்தலத்தின் பொற்காலம்
1948 வரை இத்திருத்தலத்தை நிர்வகித்த உரிமையாளர்கள் இவ்வாண்டு 11 பேரைக் கொண்ட அறங்காவல் சபையிடம்
ஒப்படைத்தனர். பொதுவான அறங்காவல் சபை பொறுப் பேற்ற பின்னர் பொதுமக்களின் பங்களிப்பும், சிவநெறியின் எழுச்சியும், அறங்காவல் சபையின் வழிநடத்தலும், விடாமுயற்சியும் அன்னை துர்க்காதேவியின் திருவருளும் ஒரேநோக்கில் அமைய இத்திருக் கோயிலின் திருப்பணிகள் சிறந்து மேலோங்கியது. இதன் பேறாக 1965ம் ஆண்டு ஆவணித் திருவோணத்தன்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. துர்க்காதேவியின் திருத்தல கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து முதன்முதல் 1968ம் ஆண்டு ஆவணிப் பூரத்தில் ஆரம்பமான பெருவிழா 12ம் நாள் விழாக் கண்டு திருவோணத்தன்று தீர்த்தத்திருவிழாவுடன் உற்சவம் நிறைவடையும்.
1962 இல் திருப்பணிச் சபையின் உறுப்பினராகவும், பொருளாளராகவும் பணியாற்றிய (அமரர்) தங்கம்மா அப்பாக்குட்டியின் பெருமுயற்சியும், இதர நிர்வாக உறுப்பினர்களின் ஊக்கமும் துர்க்காதேவியின் திருவருளம் கைகூட பெருநிதியம் சேர்ந்தது. ஆலயத் திருப்பணிகள் காலத்துக்குக் காலம் புதியவையாகவும், சிறப்பாகவும் நடந்தன. 16 வருடங்களுக்கொரு முறை 1965, 1981, 1997 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகங்கள் நிகழ்ந்தன. ஆலயப் பொலிவும், அம்பிகையின் திருவருளம், தூய அடியவர்களின் வழிபாட்டு நெறியும், காணிக்கைகளும், மக்களிடையே அன்னை துர்க்காதேவி மீது பயபக்தியும் அமுதசுரபியாகப் பெருகியது. பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஆலயத்தை நாடிவரும் அடியார் கூட்டத்தை அன்னை துர்க்காதேவி அரவணைத்து ஆசிகூறுவது போல அன்னையின் பணியாளரான செல்வி தங்கம்மாவும், ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 16:- -nசிவலிங்கம்

ஆறு.திருமுருகனும் ஆன்மிக அருளுரை கூறி வாழ்த்துவர். இதனால் இவ்வாலயம் இன்றுவரை சக்தியின் பெருமையை யாவரும் உரை வைத்தது.
துர்க்காதேவஸ்தானத்தின் சிறப்பான பணிகள்
மிகச் சிறப்பான கட்டுமானப் பணிகள் ஆகம விதிப்படி அமைந்தமை, பஞ்சதள இராஜகோபுரம் அமைத்தமை, வெளி வீதியில் திருமுறை மண்டபம், திருமண மண்டபம், இரு பெரிய அன்னதான மண்டபங்கள், தீர்த்தக்கேணி, யாத்திரிகள் விடுதிக்கான இல்லம், அநாதைச் சிறுமிகளுக்கான சைவ மகளின் இல்லம், திக்கற்ற விதவைகளுக்கான அன்னையர் இல்லம், செந்தமிழும் சிவ நெறியும் சிறக்க, அறிவுப்பசி தீர்க்க ஆய்வுக்கான பெருநூலகம் போன்றவை பல கோடி ரூபா மதிப்பில் யாவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதத்தில் உருவாக்கியமை சக்தியின் மகத்துவமேயாகும். பிரதம சிவாச்சாரியாருக்கான வதிவிடமும் சிறப்பாக அமைந்துள்ளது.
மேலும் தம்பணி சிறக்க நல்லைக்கந்தனின் வடமேற்கு வீதியில் சைவக்கலாசாரம் பேணவும், நல்லூர்ப் பெருவிழாக்கால அன்னதானம் மற்றும் திருமணத் தேவைகளுக்குமான சிறந்ததொரு (துர்க்கா) மணிமண்டபம் அமைத்துள்ளனர். இந்த ஆலயத்தில்
அர்ச்சகள் உட்பட முப்பதுபேருக்கு மேலாகத் துய பணியாற்றுகின்றனர்.
நிதிவளம்
வருடாவருடம் இவ்வாலயத்தின் சமய, சமூகப்பணிகள் சிறக்கவும், ஆலயம் அழகுடன் விளங்கவும், இவ்வாலய மகா சக்தியின் மீள அடியவர்களின் இறைசிந்தனையினால் வளங்கப் படும் நிதிக்கொடை பாரெல்லாம் பரந்து வாழும் நாடுகளிலிருந்து சக்தியை நாடி வந்து குவிகிறது. இத்தூய நிதியானது அள்ள அள்ளக் குறையாத சங்கநிதி, பதுமநிதியென வளர்ந்து அறப் பணிக்காகவே பயன்தருகின்றன. ஆலய அபிவிருத்திப் பணியுடன் நூற்றுக்கு மேற்பட்ட சிறுமிகள், ஐம்பதுக்கும் மேற்பட்ட திக்கற்ற அன்னையர் ஆகியோரைச் சிறப்புடன் பராமரிக்கும் சமூகப் பணிக்கும் பயன்படுகிறது. ஈழத்துச் சக்தியின்e அற்புதங்கள்O -: 17- மூசிவலிங்கம்

Page 18
நோயாளரின் அவசியத் தேவைக்கென மருத்துவமனை களுக்கும், பலதரத்திலுள்ள கல்வி நிறுவனங்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கும், சமய, சமூக நிறுவனங்களின் வளர்ச்சிக்கான அறக்கொடைகளுக்கும் இவ்வாலயப் பொதுநிதி பயன்பட உதவுகிறது. ஆவலுடன் கற்கும் வசதி குறைந்த தனி மாணவர்கள், வறுமையால் வாடும் விதவைகள், நலிவுற்றோர், வாழ்வாதாரம் பெற நோக்குவோர் காலத்துக்குக்காலம் தேவை கருதி அரவணைக்கப்படுகின்றனர்.
அன்னை துர்க்காதேவி மனிதநேயம் மேம்பட ஆடிய நாடகத்தில் சிறப்பாக நடிக்கவென்றே தோன்றிய செல்வி தங்கம்மாவை அறப்பணியின் தத்துவத்தை உணரவைத்தார். நற் கல்வி தந்து, நல்லாசிரியர் பணி தந்து, அல்லலுறும் மக்களின் துயர் நீக்க அருள்தந்து, இல்லறம் நாடாத பேரன்னையாக நாற்பத்தாறு வருடங்கள் தம்பணியாம் இறைபணியை நிலைநாட்டவும், யாழ் மண்ணின் சிறப்பான சிவப்பணியைப் பாரெல்லாம் போற்றவும், எம்மண் சிறக்கவும் வித்திட்டார்.
இக்காலத்துக்குள் சமய ஆதீனங்கள், நிர்வாகப் பணிக்கென இளவரசை நியமிப்பதுபோல நற்குடி மகனைத் தத்தெடுத்து மகனென உறவாடி தமிழ், சைவநெறி துலங்க அரும்பணியில் இணைத்து, அன்னை துர்க்காதேவியின் திருவுளப்படி அன்னை தங்கம்மாவால் அறப்பணிக்னெ வளர்க்கப்பட்டவர் ஆறுதிருமுருகன். தமது மாதாவும் குருவுமான அன்னை தங்கம்மாவின் வழிகாட்டலினால் அவரின் விட்டபணி தொட்டபணியைத் தொடரவென இறையருள் சேர்த்தது. அன்னை துர்க்காதேவியின் திருத்தல அறங்காவலர் சபைத் தலைமைப் பதவிக்கு ஏகமனதாக நியமிக்கப்பட்டார். சக்தியின் திருவருளால் துர்க்கா தேவியின் வீதியுலாவுக்கான திருமஞ்சப்பணி 2008 விஜயதசமியன்று ஆரம்பிக்கப்பட்டது. இறையருளும் அடியார்களின் தூய பக்தியும் துணைநிற்க திருமஞ்ச உருவாக்க வேலைகள் தொடர்கிறது.
நிறைவாக
ஆலயத் திருப்பணிகள் சிறப்படைகின்றன. அன்னையை நாடி வந்தோர் சிறப்பாகப் பராமரிக்கப்படுகின்றனர். அன்னையின்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 18- மூசிவலிங்கம்

அருள்தேடி ஓடிவந்தோர் நிறைவான அருளசி பெறுகின்றன். ஆலயத் தேவையுடன் ஆலய இல்லங்களில் அரவணைக்கப்படுவோரின் அன்றாட பாவனைக்கேற்பப் பசும்பால் சுரக்கும் கோமாதாக்கள் நிறைந்த கோசாலை அணிசெய்கிறது. மகோற்சவம் மற்றும் விசேட
விழாக்காலங்களில் சிறப்பான அன்னதானம் வழங்கப்படுகிறது. குறிப்பாக காலத்துக்குக்காலம் குவியும் பெருநிதியம் சமூக
என்ற இக்காலத்துக்கேற்ற நியதியாக இவ்வாலயம் பல இலட்சம் ரூபாவைச் சமய, சமூக சேவைக்கென வழங்குவது சிறப்பம்சம் ஆகும். உலகமகா சக்தியின் திருவிளையாடலின் சிறப்பை இங்கு காணலாம்.
தெல்லிப்பழை துர்க்காதேவியான சக்தியின் அற்புதங்கள் தெய்வீகப் பணிச் சிறப்புக்கு உறுதுணையாக அமைந்தது இறையருளேயாகும்.
ஒரு சமயம் இவ்வாலயத்திலுள்ள நகைகள், பெறுமதி மிக்க பொருட்கள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டன. யாவரும் வருந்தி அன்னை துர்க்காதேவியின் அற்புதத்துக்காக ஏங்கினர். அன்னை சக்தியின் பேரருளால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் முழுவதும் சாக்கிலிடப்பட்டு ஆலயத் தெற்கு வாசலில் வைக்கப்பட்டிருந்தது. சக்தியவள் யாவரையும் தமது மகிமையால் பரவசமடையச் செய்து இன்புற வைத்தார்.
சக்தியின் புகழ் ஓங்குகிறது. அறப்பணிகள் வளர்கின்றன. மக்கள் அனைவரும் சக்தியை உள்ளன்புடன் வழிபடுகின்றனர்.
இவை யாவும் சக்தியின் அற்புதமான திருவிளையாடலேயாகும்.
“மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்"
Gesso D -GessàɔVeÐ GežVeÐ
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் - 19 - மூசிவவிங்கம்

Page 19
36õrerrasò eurtuguebi usurpur é burcir திருத்தலம்
சைவமரபில் சக்தி வழிபாட்டிலும், சக்தியின் மீதிருந்த பக்தி மேலிட்டினாலும் அன்று வாழ்வாங்கு வாழ்ந்த எம்மினம் தெய்வ நம்பிக்கையே மேலனெப் போற்றி வந்தது.
சக்தியின் ஒரு அம்சமான மாரியம்பாள் தம்மை உள்ளன்போடு நேசித்து வழிபடுவோருக்கு வாரி வழங்கினார். யாவரையும் தமது பெருங்கருணையால் நலமுடன் வாழவைத்தார். மக்களும் மாரியன்னையைப் பயபக்தியுடனும், ஒழுக்கம் பேணி ஆசாரமாக நோன்புகள் நோற்றும் ஏற்றிப் போற்றியும் வந்தனர். இதனால் மக்களின் இல்லங்கள் யாவும் பல வளங்களும் மிகுந்து பிரகாசித்தன.
சக்தி மீது தமது நன்றியுணர்வாக நன்னெறி பேணி யாவரையும் அன்பினால் அரவணைத்து ஆன்மிக சிந்தனையை வளர்த்தனர். இவ்வாறான அன்பென்னும் தூய சிந்தனையால் நோக்கும் இடமெல்லாம் சிவமயமாகவே தென்பட்டன.
இறை சிந்தனையிலும், செயலிலும் அவநம்பிக்கையும் அலட்சியமும் தோன்றுமிடத்தில் தெய்வ நிந்தனைக்குரிய தண்டனை கிடைக்கிறது. இறைவன் தீயவர்களைத் தண்டிப்பதன் பேரில் சக்தியிடம் சில முத்துக்களை வழங்கினார். எங்கு அநீதியும் அகம்பாவமும் மிகுந்தும், ஆசாரமும் பக்தியும் குன்றுகின்றதோ அங்கு தெய்வநீதியான தண்டனை வழங்கப்படுகிறது.
இதேநிலையில் சக்தியான மாரியம்பாள் தண்டனைக்குரிய முத்தினை வீசியெறிகிறார். இதனால் அம்மக்களிடையே கொடிய தொற்று நோய்களான பெரியம்மை, சின்னமுத்து, கொப்புளிப்பான், பேதிநோய் ஆகியன பரவுகின்றன. இப்பெரும் ஆபத்திலிருந்து விலகுவதன் பேரில் வேப்பிலை கொண்டு வீசியும், மாரியம்மன் தாலாட்டுப் பாடியும், கரகம் ஆடியும், சக்தியை மகிழ்வித்து உபசரிப்பள். நோயின் வெம்மை படிப்படியாகக் குறைந்து செல்லும். நோயினால் பாதிக்கப்பட்டோரும், அயலவர், உறவினர்களும் மாரியன்னையிடம் மண்டியிட்டு அன்னையின் அருளால் நலமடைவள்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 20 :- மூ.சிவலிங்கம்

சுகாதார முறைப்படியும், ஆயுர்வேத வைத்திய முறைப்படியும் இக்கொடிய நோய் காணப்படுமிடத்து வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை கிருமிநாசினிகளாக ஏற்று மருந்தாக உபயோகிப்பர். ஆனால் மஞ்சள், குங்குமம், வேப்பிலை போன்றவை சக்தியின் அணிகலனேயாகும். குறைந்தது ஊருக்கொரு சக்தியின ஆலயமாவது அமைந்திருப்பதை அறியலாம். இச் சக்தி ஆலயங்களில் வேப்பமரங்கள் சூழ்ந்திருப்பதையும் அறிகிறோம். நெறிதவறுவோருக்கு தண்டனை தரும் அம்பாள் தம்மை உள்ளன்போடு வழிபடுவோருக்கு எல்லா நன்மைகளையும் வாரிவழங்குவதால் மாரியம்மன் என்றே அழைக்கப்படுகிறார். பண்டைக் காலத்திலிருந்து இக்கொடிய தொற்றுநோயினால் பீடிக்கப்பட்டவர் குடும்ப உறுப்பினர் களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கும் முறை இன்றும் இருப்பதை நாம் அறிகிறோம்.
இற்றைக்கு இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் சுன்னாகம் என்னும் புனித பூமியின் வடபால் அமைந்த வாரியப்புலம் என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்த மக்களின் பக்தியையும் திறமையையும் சோதிப்பதன் பேரில் மாரியம்பாள் சித்தங்கொண்டார். ஒரு பெண் இக்கொடிய நோயினால் பீடிக்கப்பட்டாள். உறவினர் அப்பெண்ணை குடும்ப உறவினரிடமிருந்து வேறாக்கிப் பராமரித்தனர்.
வேப்பிலை கொண்டு வீசியும், மாரியம்மன் தாலாட்டுப் பாடியும் மாரியம்பாளை வேண்டினர். விதியின் சதியால் அப்பெண் இறந்து விட்டாள். உறவினர் இறந்த பெண்ணின் சடலத்தைப் பாயினால் சுருட்டிக்கொண்டு போய் வாரியப்புலத்தில் சனநடமாட்டமற்ற ஒரு பனந் தோப்பில் வடலிப்பனைகளின் நடுவே மறைத்துவிட்டு வந்தனர்.
கொடிய தொற்றுநோயால் இறந்தவரின் சடலங்களை பகலில் எடுத்துச் சென்று புறம்போக்கான இடத்தில் வைப்பர். சனநடமாட்டம் அடங்கிய இரவுவேளைகளில்தான் அவ்வுடலைப் புதைப்பது வழக்கம். தமது கிராம வழக்கத்தின்பேரில் பனந்தோப்புக்குச் சென்று சடலத்தை அடக்கஞ்செய்வதற்காக உறவினர்கள் இரவு அங்கு சென்றனர். அவர்கள் பகலில் வைத்த இடத்தில் பாய் மட்டும் இருந்தது. ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 21 :- மூ.சிவலிங்கம்

Page 20
சடலத்தைக் காணாது மனவேதனையுடன் தத்தமது வீடுகளுக்குச் சென்றனர்.
அன்றிரவு இறந்தவரின் கிட்டிய உறவினர் ஒருவரின் கனவில்
ஒரு பெண் தோன்றி “நான்தான் மகா மாரியம்மன் நீங்கள் சடலத்தைத்
தேடவேண்டாம். கவலையை விடுங்கள். அச்சடலத்தை வைத்த இடத்தில் என்னை ஆதரியுங்கள் என்று கூறி மறைந்தருளினார்.
இச்செய்தியை அறிந்ததும் பல மக்கள் கூடி மறுநாட் காலை அவ்விடஞ்சென்று இறைபணியாற்றத் தொடங்கினர். குறிப்பிட்ட இடத்தைச் சுத்தஞ்செய்து ஒரு சிறிய குடிசை அமைத்தனர். அக் குடிசையில் ஒரு கல்லை வைத்து மாளியம்மனாகப் பாவித்து ஆசார முறையில் பூசைகள் செய்து வழிபட்டனர். மேலும் பொங்கலிட்டுப் படைத்துத் தம் பணியைச் சிறப்பித்தனர். இப்பணி செய்து வழிபட்ட அனைவரும் பெருநன்மையடைந்தனர்.
மாரியம்பாளின் சிறப்பான புதுமையால் வழிபடுவோரும் பெருந் திரளாக வரத் தொடங்கினர். மகாமாரி அம்மனின் பேரருளும், மக்களின் துாயபக்தியும் மேலோங்கியது. பக்தர்களுக்கு ஆலயத்தைச் சிறப்பிக்கும் ஆர்வம் தோன்றியது. நாளாந்தப் பூசைகள், பொங்கல், தூய வழிபாடுகள் தொடர்ந்தன. பொது மக்களின் ஆதரவினால் குடிசையைக் கற்கோயிலாக்கும் அம்பாளின் திருவருளும் கைகூடியது. காலத்துக்குக் காலம் ஆலயக் கட்டடப்பணிகள் வளர ஆரம்பித்தன.
இன்றைய சூழலில் காணப்படும் இப் புதுமையான ஆலயம் சைவாகம முறைப்படி நிலையமெடுத்துக் கட்டுமாணப் பணிகள் தொடர்ந்தன. கருவறை மற்றும் பிரதான மண்டபங்கள் முதலில் நிறைவுகண்டது. பின்னர் பரிவாரமூர்த்திகளான விநாயகர், முருகன், வைரவர் ஆகியோருக்கான தனிச் சந்நிதிகள் தோன்றின. தொடர்ந்து கொடித்தம்பம் அமைத்து பெருவிழாக்களும் ஆரம்பித்தன. புதிய சித்திரத்தேள்களும் இதர ஊர்திகளும் அமைக்கப்பட்டன.
10.01.2000 அன்று புதிய சித்திரத்தேள் வெள்ளேட்டம் கண்டது. இதே ஆண்டில் கொடியேற்ற விழாவும் சிறப்பாக அமைந்தது. ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 22 :- மூசிவலிங்கம்

பெருந்திருவிழாக்கள், நவராத்திரி சோமவார விழாக்கள், திருவெம்பாவை ஆகிய விரத காலங்கள் அன்னை மகாமாரி அம்பாளின் பெருமைக்கு மெருகூட்டுகின்றன.
வழமையான பூசைகளுடன், காலத்துக்குக் காலம் பொங்கல் விழாக்கள், குளிர்த்தி ஆகிய பணிகள் மேலும் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. இங்கு குடிகொண்டுள்ள மகாமாரி அம்பாளின் பேரருளினால் நல்ல சிறப்பான சக்தி வழிபாடு அமைந்துள்ளது.
இத்திருத்தலத்தின் சிறப்பினால் சுன்னாகம் என்னும் திருவூரின் பெருமையும் அதிகரித்துள்ளது. மக்கள் யாவரும் இறைசக்தியால் ஈர்க்கப்பட்டு நற்பணிகள் பல புரிந்து இம்மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து அறப்பணியை நாடும் பெருஞ்சிறப்பு எமது சிவநெறியின் பேரருளாகும்.
G-SPD G>:JD GxIO
உலகத்த நாயகியே! - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி உன் பாதம் சரண்புகுந்தோம் ~ எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி கலகத் தரக்கர்பலர் - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்த மாரி கருத்தினுள்ளே புகுந்துவிட்டார் - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி பலகற்றும் பலகேட்டும் ~‘எங்கள் முத்த மாரியம்மா, எங்கள் முத்தது மாரி பயனொன்ற மில்லையடி ~ எங்கள் முத்த
மாரியம்மா, எங்கள் முத்த மாரி நிலையெங்கும் காணவில்லை - எங்கள் முத்த
மாரியம்மா, எங்கள் முத்து மாரி நின்பாதம் சரண்புகுந்தோம் ~ எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 23 :- - மூ.சிவலிங்கம்

Page 21
இவ்வாலயம் யாழ்ப் பாணம் காரைநகர் வீதியில் சண்டிலிப்பாய் கிராமத்தின் சீரணிச் சந்தியிலிருந்து மேற்கே ஐம்பது யார் தொலைவில் மிகக் கவர்ச்சியுடன் அமைந்துள்ளது.
AIEARA Si இலங்கையில் சிவபிரானின் "*" لمببیہ அதிசிறப்பான சிவாலயங்களாகத் திருக்கேதீஸ்வரமும் திருக் கோணேஸ்வரமும் போல யாழ்ப்பாணத்தில் நயினை நாகபூஷணியும், சீரணி நாகபூஷணியும் சக்திபீடங்களாகத் திகழ்கின்றன.
முற்காலத்தில் தம்மை வழிபட்டு வந்த நாகபாம்பைத் தமது திருமேனியில் ஆபரணமாக அணிந்து சிறப்பித்ததால் நாகபூஷணி அம்மை எனப் போற்றி வணங்கினர். அம்பாளின் அற்புதங்களினால் சீரணி மக்கள் பெருங்கோயில் கட்டி இன்று பக்தியுடன் வழிபடு கின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்பவர் ஒரு சக்கரம் அமைத்து அதன் மகிமையால் சோதிடம் சொல்லிப் புகழடைந்தார். அவருடன் கூட வாழ்ந்த இராமுத்தள் என்பவர் சாத்திரியார் மதுமயக்கத்தினால் சக்கரத்தை நன்கு பூசிக்கத் தவறியதால் பல அபசகுணங்கள் தோன்றி இரவில் கலகலப்பான பேரிரைச்சல் செய்ததாகவும் உணர்ந்தார். இதனால் மன வெறுப்படைந்த இராமுத்தர் ஒரு நாளிரவு பொன்னம்பலம் மது போதையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது சக்கரத்தையும் அதன் உபபொருட்களையும் பெட்டியுடன் சேர்த்து எடுத்துக்கொண்டு போய் அலரிப்பற்றைக்குள் எறிந்துவிட்டார்.
கருணையுள்ள தெய்வமான நாகபூஷணி அவ்வயலிலுள்ள தூய சிந்தனையாளர் பலரின் கனவில் தோன்றி தான் நயினை நாகபூஷணியம்பாள் என்றும், தம்மைச் சீரணியில் வைத்து ஆதரிக்குமாறும் தெரிவித்தார். அவர்கள் தாம் வறிய நிலையில் இருப்பதால் ஒரு தெய்வத்தை ஆதரிக்க வசதிகளற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். தம்மை ஆதரித்தால் பல பக்தர்கள்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 24 :- மூ.சிவலிங்கம்
 

இவ்விடம் வந்து தரிசிப்பதுடன் பல உதவிகளும் செய்வர். ஆலயம் சிறப்படையும். செல்வம் பெருகும், நாடு நலம்பெறும், வாழ்வு மலரும் என்று அருளினார். பின்னர் முருகேசபிள்ளை என்னும் பக்தரின் கனவில் தோன்றி சக்தியின் பல அற்புதங்களை உணரவைத்துத் தம்மை ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அவ்விடத்தில் வழிபடுமாறு கூறினார். அம்பாள் மறைந்ததும் தாம் கண்ட கனவினை எவருக்கும் சொல்லப் பயந்து தமது அகத்தளவில் பூசித்து வந்தார். வேறொரு நாள் அன்னை சக்தி சிவன், முருகனுடன் சோமாஸ்கந்த வடிவத்தில் முருகேசபிள்ளையின் கனவில் வெளிப்பட்டு "நாம் முதலில் தெரிவித்ததை நிறைவேற்றவில்லை” என்று கூறினார். மேலும் அற்புதத்தை அவருக்கு உணர்த்துவதன் பேரில் அதோ தெரிகிற தென்னை மரத்தில் இளநீர் பறித்துவருமாறு கூறினார்.
அவர் காண்பித்த தென்னை வரண்டு காய்களற்ற நிலையில் இருப்பதாகக் கூறினார். அவரை மரத்தின் அண்மையில் சென்று பார்க்குமாறு அன்னை தெரிவித்தார். அவர் அங்கு சென்றதும் மரத்தில் குலைகுலையாக இளநீர் தொங்கியது. இவ்வற்புதத்தைக் கண்டவர் சக்தியின் பெருமையை எண்ணி அதிசயித்து மூன்று இளநீரைப் பறித்து வந்து மூவருக்கும் வழங்கினார். அவர்களும் மிகத் தாகத்தில் இருந்ததுபோல வாஞ்சையுடன் வாங்கிப் பருகினர்.
பின்னர் தாம் நின்ற இடத்தில் தோண்டிப் பார்த்தால் ஒரு சிலை தென்படும். அச்சிலையைத் தாம் குறிப்பிட்ட இடத்தில் நிறுவி ஒரு மண்டபம் அமைத்து வழிபடு. இதையறிந்து பல பக்தர்கள் வந்து கூடுவர். சக்தி வழிபாட்டினால் நன்மையடையும் அவர்கள் பல உதவிகள் செய்வர். ஆலயம் சிறக்கும் என்று கூறி பூசை செய்வதற்கான மந்திரமொன்றை உபதேசித்து ஆசி கூறியதும் மறைந்தருளினர்.
நாகபூஷணி அம்பாளின் பேரருளினால் மறுநாட் காலை குறிப்பிட்ட இடத்தை அகழ்ந்தபோது விம்ப வடிவிலமைந்த சிலை தென்பட்டது. அதனைக் கண்டதம் கண்ணீர் மல்க, உடல் பதைபதைக்க பரவசமடைந்தவராக "இனி ஈஸ்வரியின் செயலால் எல்லாம் இனிதாகும்” எனக் கூறியபடி திருப்பணி வேலையைத் துரிதப்படுத்தினார். ஒரு மண்டபம் உருவானது. 1896ம் ஆண்டு
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:25:- மூ.சிவலிங்கம்

Page 22
ஆடிமாதம் திங்கட்கிழமை ஒரு சுபவேளையில் பூசையைத் தொடக்கினார். நியமந் தவறாது பூசை ஒழுங்குகளை நடாத்தினார். அம்பாளின் அற்புதங்களை அறிந்து பல ஊர்களிலிருந்தும் அடியர்கள் பெருங்கூட்டமாக வந்து வழிபட்டனர். சக்தியின் பேரருளினால் அடியார்களின் தூய வழிபாட்டின் பேறாகத் தீராத கொடிய நோய்கள் அகலவும், நாகதோஷம் காரணமான விவாகத் தடைகள் நீங்கவும், புத்திரப் பேறற்றவர்கள் மழலைச் செல்வங்களை அடையவும் சக்தியின் திருவருள் பாலித்தது. இதனால் சீரணி நாகம்மாளின் ஆலய கட்டுமாணப் பணிகள் நிறைவேறவும் பல்வேறு சிறப்புக்களும் அமைந்தன. சக்தியின் அற்புதங்களும், புகழும் மேம்படவும், பொதுமக்களின் பக்திநெறி பெருகவும், அயலூர் மக்கள் பலர் திருப்பணிகளுக்காக உதவ முன்வந்தனர். இப்பெரியார்களின் சித்தப்படி திருப்பணிகளை நல்ல முறையில் செயற்படுத்துவதன் பேரில் 1962 இல் திருப்பணிச்சபை அமைக்கப்பட்டது. இச்சபையில் உறுப்பினர்கள் தத்தமது ஊர்களிலும் பலரிடம் திருப்பணி நிதியைத் திரட்டினர்.
திருப்பணிச்சபையினரின் அரும்பணியின் பேறாக இத் திருத்தலத்தின் பிரதான மண்டபங்கள், வாயிற்கோபுரம், சித்திரத்தேர் யாவும் சிறப்பாக அமைந்தன. பெருந்திருவிழாக்கள் வருடாவருடம் சித்திரை மாதத்தில் ஆரம்பமாகிச் சித்திரைப் பூரணையன்று தேர்த் திருவிழாவும் நடைபெறுகிறது. இவ்வாலயச் சிறப்பும் அன்னையின் அற்புதங்களும் நடைபெறும் விழாக்களைத் தரிசிப்பதன் பேரில் நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் பலர் வந்துகூடி அன்னையின் அருளை நாடுவர்.
இச்சிறப்புமிகு ஆலயத்தில் உறைந்திருக்கும் அன்னை நாகபூஷணி இப்பகுதி மக்களின் நன்மைக்காகவே அடியார்களின் கனவிற்தோன்றி ஆதரிக்குமாறு வேண்டினார். திருவருளினால் ஆலயம் சிறப்புடன் அமையவும், எண்ணற்ற அடியார்கள் கூடிச், சக்தி வழிபாடு செயதனர். அவர்கள் வேண்டுவதை வழங்கி வளமுடன் வாழ்வாங்கு வாவைத்து அனைவரையும் புனிதராக்கி அனைத்துச் செல்வப் பேறுகளையும் தந்தார். நாடு நலம்பெற அன்னையின் அற்புதங்களை வியந்து நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.
G0 >55peô Gos55pe G0 =55oeo
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:26:- மூ.சிவலிங்கம்

சுதுமலை புவனேஸ்லுரி அற்பரர் திருத்தறை
யாழ் மாவட்டத்திலுள்ள சக்தி ஆலயங்களுள் சுதுமலையில்
குடிகொண்டுள்ள இத்தலம் புராதன தொடர்புகளையும் பல அற்புதங்
களையும் தன்னகத்தே கொண்டுள்ள சிறப்புடையதாகும்.
இத்தலம் யாழ் தாவடி - மானிப்பாய் நெடுஞ்சாலையில் வடபால் சுதுமலை கிராமத்தின் மையமாக அமைந்துள்ளது. இவ்வாலயம் அமைந்துள்ள இடத்தில் அன்று தெற்கிலும், மேற்கிலும் கனிதரும் பழமுதிர்சோலைகள் ஓங்கி வளந்து காணப்பட்டன. வடபால் அமைந்த நீர்நிலையின் வளத்தினால் வடக்கிலும் கிழக்கிலும் வயல் நிலங்களும் இயற்கையாகவே தோன்றின. இச்சூழல் யாவரையும் தன்பால் ஈர்க்கும் தெய்வீக பூமியாகவும் தோன்றியது.
மதுரையில் நீதிக்காக வாதாடிய கண்ணகி தனது கற்புக் கனலால் அந்நகரை எரியூட்டி அழித்தார். தமது சினம் தனிந்து மன அமைதியை நாடி இங்குள்ள பல சோலைகளில் தங்கினர். தம்மை ஆதரித்த மக்களுக்கு தமது தெய்வீக சக்தியால் நல்லருள் பாலித்தார். இவ்வாறு சோலைகளை நாடிய கண்ணகி சுதுமலையில் உள்ள சோலையைக் கண்டதும் இங்கு தங்கச் சித்தங்கொண்டார்.
ஒரு சுபதினத்தில் இவ்வூரைச் சேர்ந்த கதிர்காமர் வேலாயுதர் கீழ்த் திசையிலுள்ள வயலில் மதியவேளை உழுதுகொண்டிருந்தார். சக்தி உபாசகரான இவர் மேற்கே நோக்கியபோது பெருஞ்சோலை நடுவே ஒரு மூதாட்டி நிற்பதைக் கண்டார். அவரிடஞ் சென்ற விவசாயி அவரின் தளர்வுற்ற முதுமை நிலையையும் வெண்மையான தலைமுடியுடன் வெண்துகில் அணிந்த கோலத்தையும் கண்டு வியந்தார். அவர் வேலாயுதரிடம் பருகுவதற்கு நீர் கேட்டார். அவருக்கு நீரெடுக்கச் சென்றவர் இளநீர் எடுத்துக்கொண்டு அவரிடம் வந்தபோது மூதாட்டியைக் காணாது திகைத்தார். பல இடங்களில் தேடியும் அவரைக் காணாது விவசாயி விசனமுற்றார். வேலாயுதருக்கு கவலை மேலிட்டதால் உடலும் உள்ளமும் சோர்ந்து பதைபதைத்தார். தமது கவலையுடன் உறங்கிய வேலாயுதரின் கனவில் பகல்வேளை தன்னி கேட்டுவந்த அதேகோலத்துடன் தோன்றிய மூதாட்டி தாம் ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 27- மசிவங்

Page 23
அதே இடத்தில் தங்குவதாகவும், தம்மை ஆதரிக்குமாறும் கூறிவிட்டு மறைந்தருளினார். அதிகாலை துயிலெழுந்த வேலாயுதர் தமது முதல் நாளைய நிகழ்வுகளையும் இரவு கண்ட கனவையும் சுற்றத்தினர் உறவினருடன் கூடி இருந்து உரையாடி மகிழ்ந்தார்.
ஒரு சுபதினமான வைகாசி மாதம் அன்னை காட்சிதந்த இடத்தில் ஒரு புனிதமான குடிசை அமைத்து விளக்கேற்றிப் பொங்கலிட்டுப் படைத்து மலர்தூவி உள்ளன்போடு வழிபட்டார். தொடர்ந்து இடையறாது வழிபாடும், பூசைகளும் காலத்துக்குக்காலம் இனிய பொங்கலிட்டும் அன்னையை ஆதரித்துவந்தார். இதன்பேறாக அவரது குடும்பம் நன்கு சிறந்து விளங்கியதுடன் பல நன்மைகளையும் அடைந்தார்.
வேலாயுதரின் வழிபாட்டினை அறிந்து அவ்வூர் மக்களும் அன்னையை ஆதரித்து அவ்விடத்தில் பொங்கல், பூசைகள் செய்து நற்பலனடைந்தனர். யாவரும் அம்பாளின் அற்புதங்களை உணர்ந்து “பள்வவர்த்தனி அம்பாள்” என அழைத்து வந்தனர்.
பொதுமக்களின் ஆதரவில் 1775 இல் சிறந்ததொரு மண்ணினாலான ஆலயம் அமைக்கப்பட்டது. காலங்கள் கடந்தன. மக்களின் பக்தியும் நிதிவளமும் மேம்பட்டதால் 1822 இல் சிறப்பான கற்கோயிலாக மாறியது. இவற்றுக்குச் சான்றாக யாழ் செயலகத்தில் கோயில்களின் வரலாற்றுப் பதிவேட்டில் இவ்வாலயம் 1775 இல் மண்ணினால் அமைக்கப்பட்டதென்றும், 1822 இல் இவை கற் கோயிலாக மாற்றியமைக்கப்பட்டதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாலயம் அமைந்த இடத்தில் மரங்கள் அடர்ந்து ஓங்கி வளர்ந்து அற்புதமான சோலையாக இருந்தன. இன்றும் இத்தலத்தின் மேற்திசையில் பெருமரங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதை அறிய முடிகிறது. கண்ணகி அம்மன் வந்து தங்கி அருள்பாலித்த இச்சோலை "தங்குசங்குளை” எனற அழைக்கப்படுகிறது. இத்தங்கு சங்குளை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாகவும் அமைந்துள்ளது.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 28:- மூ.சிவலிங்கம்

இவ்வாலயத்தில் வழிபடும் யாவரும் சக்தியின் பேரருளால் நல்வாழ்வும் நற்பயனுமடைந்துள்ளனர். இதனால் அனைவரும் தமது முன்னேற்றத்தின் பிரதிபலனாக அன்னையின் ஆலயத்தை வெகு சிறப்பாக அமைக்கப் பலவகையாலும் உதவினர். கருவறை முதல் பிரதான மண்டபங்கள், பரிவாரமூர்த்திகளின் தனிச் சந்நிதிகள் போன்றவை யாவும் சிறப்பாக ஆகம விதிப்படி அமைந்தன. பக்தர்களின் பெருந்தன்மையும் உயர்ந்த உள்ளங்களின் சிறப்பினால் அன்னையின் ஆலயத்தில் வானுயர் இராஜகோபுரமும் அமைந்துள்ளமை சக்தியின் அற்புதமேயாகும்.
இக்கோபுரத்தை பல புராதன சரித்திரக்கதைகளையும் தத்துவங்களையும் சித்தரிக்கும் பாவைகள் வெகு சிறப்பாக அலங்கரிக்கின்றன. கோபுரதரிசனம் கோடிபுண்ணியம் என்ற நியதிப்படி இவ்வாலயத்திலும் வழிபடும் பக்தர்களுக்கெல்லாம் அன்னை புவனேஸ்வரி நிறைவான திருவருளை வாரிவழங்குகிறார். இறை வழிபாடும் கோபுரதரிசனமும் மக்களின் முற்றவப்பயனும் கைகூடுவதால் கோடானுகோடிக்கும் சமமான நல்வாழ்வை அடைகின்றனர்.
ஆலயத்தின் சிறப்பான கட்டுமானப் பணிகள் மக்களின் ஆதரவுக்கேற்பவும் சைவாகம விதிப்படி அமைந்ததும் சக்தியின் பேரருளாகும். வைகாசிப் பூரணையில் தீர்த்தத் திருவிழாவை மையமாகக் கொண்ட பதினெட்டு நாட்கள் பெருவிழா எடுக்கப் படுகின்றன. இப்பதினெட்டு நாட்களும் கிராமமே விழாக்கோலம் பூணும் சிறப்பினையுடையது.
இவ் ஆலயத்தில் அம்பாள் வீதி வலம் வரும் அற்புதமான சித்திரத்தேரும், விநாயகருக்கும் முருகனுக்கும் வேறான இரு தேர்களுமாக மூன்று தேர்கள் மிக விமரிசையாகப் பவனிவருகின்றன. வேறெங்கும் காணப்படாதவாறு இங்கு தேர்த்திருவிழா அற்புதமான பாரம்பரியத்தையும் எமக்களிக்கிறது. தேரில் அன்னை வீதிவலம் வரும்போது பக்தர்கள் வாயிலில் பந்தலிட்டு பொங்கலுடன் சுளகு மடை வைத்து நிவேதனஞ் செய்வர். சுளகு மடையில் அரிசிப்பிட்டு,
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 29 :- மூ.சிவலிங்கம்

Page 24
ஒடியல்பிட்டு, குரக்கன்பிட்டு (தமது விளை நிலத் தானியங்களின்) ஆகியவற்றையும், அன்னைக்கு உவப்பான பலாக்காய்க் கறியும், இதர முக்கனிகளும் படைத்துத் தமது நேர்த்தியை நிறைவுசெய்வர். முற்காலத்தில் இச்சுளகுமடையில் அசைவ உணவுகள் படைக்கப் பட்டன. இப்போது அசைவக்கறிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இப்பொழுதும் ஒருசிலர் தமது சுளகு மடையில் அவித்த முட்டையையும் படைக் கிறார்கள்.
புவனேஸ்வரி மாதாவின் இவ்வாலயம் இயற்கையின் அழகும், விளைபயிர்களின் அமோக விளைச்சலும், மக்களின் சமயபக்தியும், ஆலயத்தின் அற்புதமும், சிறப்பும் சுதுமலை என்னும் கிராமத்தின் அணிகலன்களாகவே அமைந்து பிரகாசிக்கின்றன. இங்கு நடைபெறும் தேர்த்திருவிழா வீதிவலக்காட்சியும் பக்தர்களின் (இவ்வூர் மக்களுடன் அயற்கிராமத்தவர்களும்) சக்தியின் சிறப்பினால் கவரப்பட்டு பொங்கல் சுளகுமடை படைக்கும் அருங்காட்சியும் தனிச்சிறப்பாகும்.
சக்தியின் பேரருளினால் இங்கு நடைபெறும் பக்திபூர்வமான நெறிமுறைகள் யாவும் தமிழரின் பண்டைய நடைமுறைகளைத் தழுவவைத்தமை புவனேஸ்வரி அன்னையின் அற்புதமாகவே அமைந்துள்ளன.
Gožo O Gossible) GolžbeÐ
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை - தஞ்சமென்றே வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு.
வையகத்துக் கில்லை மனமே நினக்குநலஞ் செய்யக் கருதியிவை செப்புவேன் ~ பொய்யில்லை எல்லா புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற சொல்லால் அழியும் தயர்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 30 :- மூ.சிவலிங்கம்

நவூரலிகஏைரயேரடை அம்மன் திருத்தலம்
செந்தமிழும் சிவநெறியும் மேலோங்கிய நவாலியூர் பல
கல்விமான்களையும், ஆசாரசீலர்களையும், உழுதுண்டு அறப்
பணியாற்றும் தர்மசீலர்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இவ்வூரின் தென்பகுதி கல்லுண்டாய் வரை நீண்டு செல்லும் செந்நெல் விளைபூமியாக அமைந்துள்ளது. இவ்வயற் பரப்பில் ஆங்காங்கே மணற்திட்டுக்களும் காட்சியளிக்கின்றன. மகாசக்தியின் திருவிளையாடலைக் கண்டறிவதற்காக அவருக்கே விபரம் ஏதும் தெரியாத நிலையிலிருந்த அவ்வூர் விவசாயி ஒருவர் தமது வயலை நாடிச் சென்றார். இயற்கையாகவே பிறரிடத்தில் அன்பும் ஆதரவும் தெரிவிக்கும் பண்புள்ள விவசாயி செல்லும் பாதையருகிலுள்ள மணற்திட்டில் கையில் ஒரு ஊன்றுகோலுடன் களைத்துப்போன நிலையில் மூதாட்டி ஒருவர் இருக்கக் கண்டார். அந்த மூதாட்டி தன்னருகே அழைத்து "மகனே எனக்குத் தாகமாக இருக்கிறது குடிப்பதற்கு நீர் தருவாயா?” என்று கேட்டார்.
அச்சூழலில் உவர் நீர்ப்படலம் இருந்ததையால் எவரும் குடிநீர்க் கிணறு தோண்டவில்லை. விவசாயி மூதாட்டியை நோக்கி இச்சூழலில் நன்னீர் கிடைக்காது. வீட்டுக்குச் சென்று நீர் பருகலாம் என அழைத்தார். மூதாட்டியும் எழுந்து சென்று அவருடன் சிறிது தூரம் சென்றதும் களைப்பு மேலிட அவ்விடத்தில் அமர்ந்தார். "மகனே என்னால் நடக்கமுடியவில்லை வீட்டுக்குப்போய் நீர் எடுத்து வா” என்றதும், விவசாயி வீட்டுக்குச்செல்ல முற்பட்டார். உடனே மூதாட்டி “கொஞ்சம் நில் மகனே” என்று கூறித் தமது கையிலிருந்த ஊன்றுகோலை நிலத்தில் ஊன்றினார். சக்தியின் அற்புதத்தினால் ஊன்றிய இடத்திலிருந்து நல்ல குடிநீர் பீறிட்டுப் பெருகி மேலெழுந்தது. மூதாட்டி தன் இருகைகளாலும் நீரெடுத்துப் பருகினார். தாம் முன்பிருந்த இடத்துக்கு விவசாயியையும் கூட்டிச்சென்றார்.
அங்கு சென்றதும் மூதாட்டி விவசாயியை நோக்கி "மகனே எனக்குப் பேன் கடிக்கிறது. பேன் எடுத்து விடுகிறாயா? என்று கேட்டார். விவசாயியும் உடன்பட்டார். மூதாட்டி அவரின் மடிமீது
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 31 :- ഗ്ഗിലിജ

Page 25
தலையை வைத்துப் படுத்திருந்தார். விவசாயி அன்னையின் பஞ்சு போன்ற வெண்கூந்தலைக் கோதினார். மகாசக்தியான ஆயிரம் கண்ணுடையாள் எனப் பெயரெடுத்த அன்னையின் தலையில் கண்ட இடமெங்கும் கண்களாகவே தென்பட்டன. இதைக் கண்டதும் அவர் பயந்து மயங்கிவிட்டார். மயக்கம் தீர்ந்து எழுந்து பார்த்தபோது மூதாட்டியைக் காணவில்லை. அம்பாள் திருவிளையாடல் காண்பிக்கவே அவ்விடம் வந்தார். வந்த பணி நிறைவுகண்டதும் அவ்விடத்திலிருந்து மறைந்துவிட்டார்.
அன்றிரவு விவசாயியின் கனவில் ஓர் அழகிய பேரிளம்பெண் தோன்றி "மகனே நான்தான் கண்ணகை. இன்று மதியம் உன்னிடம் தண்ணி கேட்ட கிழவி. நான் தண்ணி பருகிய இடத்தருகே எனக்கொரு அமைவிடம் அமைத்துவிடுவாயாக. நான் இவ்விடத்திலிருந்து உனக்கும் இவ்வூர் மக்களுக்கும் நல்லருள் புரிவேன்’ என்று கூறி மறைந்தருளினார். அன்னை கண்ணகையின் வேண்டுதலினால் அவ்விடத்தில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. தண்ணி பொங்கியெழுந்த இடத்தில் இரண்டுமுழ ஆழமான நன்னீர்க் கிணறு அமைந்துள்ளது.
கஜபாகு மன்னன் இந்தியாவிலிருந்து ஒரு சிறப்பான கண்ணகி சிலையை இலங்கைக்குக் கொண்டு வரும் போது மாதகல் ஊடாகவே வந்து நவாலியில் தங்கிச் சென்றதாகக் கர்னபரம்பரைக் கதைகள் உண்டு. வான்மழை பொய்த்த காலத்திலும், தொற்றுநோய்கள் பரவும் காலத்திலும் விசேட பொங்கல், குளிர்த்தி ஆகியவற்றை உள்ளன்போடு செய்து இங்குள்ள மக்கள் வழிபடுவர். இதனால் அம்பாளின் திருவருளால் நற்பலன் கிடைக்கிறது. இவ்வூரில் சக்தியின் அற்புதங்களும் அருளாசியும் மக்களை நிறைவுடன் வாழ்வாங்கு வாழவைக்கிறது. இச்சூழலில் வாழும் மக்கள் ஏழ்மையில் இருந்தாலும் அன்னையின் பேரருளால் வறுமையிற் செம்மையாக, மனநிறைவாக உழுதுண்டு வாழ்கின்றனர். தம்மை நாடி வருவோரை அரவணைத்துப் பசியாற ஒரு பிடியேனும் தந்து பகுத்துண்டு வாழும் நற்பண்பை அன்னையின் திருவருளால் பெற்று நிறைவுடன் வாழ்வதும் தனிச்சிறப்பாகும்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 32 :- மூ.சிவலிங்கம்

பல்வளங்களும் சூழ்ந்த வலிகாமம் மேற்கில் சங்கரத்தை என்னும் சிறுகிராமம் இயற்கையாகவே தெய்வீகம் நிறைந்து காணப் படுகிறது. இப்பகுதியில் நெல்வயல்களால் சூழப்பட்ட பிட்டியம்பதி ஒரு புண்ணிய பூமியாகவே இன்று அமைந்துள்ளது. இங்கு நல்லருள் பாலித்து மக்களுக்கு மனநிறைவைத் தரும் பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரரும் அங்கு வாழும் மக்களின் நெஞ்சில் குடியிருந்து அவர்களை நெறிப்படுத்தி வருவது திருவருளேயாகும்.
பிட்டியம்பதியில் அமைந்துள்ள நெற்பெருநிலப்பரப்பின் உரிமையாளரான மருந்துய்யமுதலியாரின் சந்ததியினரே தமது வயலில் உழுதுண்டு வந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த வயற் சொந்தக்காரர் பெருமையினாரின் மகன் முதன்மையினார் என்பவர் தமது வயலின் நடுவேயுள்ள புளியமரம் தமக்கு இடையூறு தருவதாகச் சிந்தித்தார். இப்புளியமரம் பறவைகளின் சரணாலயமாக விளங்கியது. இந்தச் சூழலில் நெல்விளையும் காலத்தில் மரத்தில் வந்தமரும் கிளிகள் நெற்கதிர்களை அறுத்துச் சென்று தமது உணவாக்கி வந்தன.
இதனால் வெறுப்புற்ற விவசாயி சினமடைந்தார். 1768 இல் இப்புளிய மரத்தைத் தறிக்கவும் முற்பட்டார். ஒரு தச்சுத் தொழிலாளியை அழைத்து வந்து மரத்தைத் தறிக்குமாறு கூறினார். அங்கு வந்த தொழிலாளி மரத்தின் சூழலையும் மரத்தினடியில் இருந்த பாம்புப்புற்றையும் அவதானித்ததும் மரம் தறிப்பதற்கு மறுத்து விட்டார். முதன்மையினார் தமது வயலிலுள்ள நெற்பயிரை நாசஞ் செய்யும் புளிய மரத்தைத் தாமே தறிக்க முற்பட்டார்.
அச்சமயம் மரத்தினடியிலிருந்த புற்றிலிருந்து ஒரு நாகபாம்பு தோன்றி விவசாயியைத் துரத்தியது. அவர் பயத்துடன் வெகுதூரஞ் சென்று பாம்பை நோக்கினர். பாம்பு வெகுதூரஞ் செல்லாது அவ்விடத்தில் தலைதுாக்கிப் படம்விரித்து ஆடியது. அப்போது ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 33 :- மூ.சிவலிங்கம்

Page 26
நடுநடுங்கிய நிலையில் தான் செய்தது தவறென உணர்ந்து தன் அகத்தளவில் பிரார்த்தித்தார். இதே சிந்தனையில் பயவுணர்வுடன் காணப்பட்டார்.
அன்றிரவு அவரின் கனவில் அம்பாள் தோன்றி அந்த மரத்தினடியில் ஒரு நிழல் அமைத்து வழிபடுமாறு பணித்து மறைந்தருளினார். ஏற்கனவே அச்சமடைந்தவர் அம்பாளின் வார்த்தைக்கு மறுவார்த்தையின்றி மறுநாள் காலை மிகுந்த பய பக்தியுடன் புளியமரத்தடியில் ஒரு சிறுகுடிசையமைத்து வழிபட்டார். அன்று தொடக்கம் தமது குல ஆசாரப்படி உள்ளும் புறமும் தூயவனாக அவ்விடஞ் சென்று பத்திரகாளி அம்பாளுக்குத் தாமே பூசைகள் செய்து தூயபக்தி செலுத்தி வழிபட்டார். இப்பணியினால் அவரும் சிறப்படைந்தார். பத்திரகாளியம்மனின் அருளும் புதுமையும் அப்பகுதியில் பிரபலமடைந்தது. இதனை அவதானித்த ஊர் மக்களும் அயற்கிராமத்தவரும் பொங்கலிட்டுப் பயபக்தியுடன் பூசைவழிபாடுகள் செய்து நற்பயனை ஈட்டினர். இங்கு ஆடு, சேவல் போன்ற உயிர்ப் பலியும் நடைபெற்றது. தொடர்ந்து முதன்மையினார் வழித் தோன்றல்கள் வாழையடி வாழையாக அமைந்து பூசகர்களாகவும், ஆலய அறப் பணியார்களாகவும் பணியாற்றி வந்தனர். ஆலயத்தின் புதுமையையும் அற்புதங்களையும் அறிந்து வழிபடுவோர் தொகையும் அதிகரித்தது. அம்பாளின் திருப்பணிக்கென காணிக்கைகள் பெருநிதியாக வளர்ந்தது.
இவ்வாலயத்தில் வழிபடுவோர் புளியமரத்தடியில் ஒரு கதிரையை வைத்து அதை வீரபத்திரக் கடவுளின் அமர்விடமாக அகத்தளவில் எண்ணி வழிபட்டும் வந்தனர். தெய்வீகநாட்டமுள்ளோரின் பூரண ஒத்துழைப்பினால் சிறுகுடிசையாக முன்னிருந்த கோயில் கற்கோயிலாக மாறியது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருவறை, பிரதான மண்டபங்கள் பரிவாரமூர்த்திகளான விநாயகர், முருகன், வைரவர் ஆகியோரின் தனிச்சந்நிதிகள் ஆகியன அமைக்கப் பட்டு மக்களின் புனித வணக்கத்தின் மையமாக அமைந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொடித்தம்பம் நாட்டப்பட்டு பெருவிழாக்களும் நடைபெற்றன. பங்குனி மாத உத்தர
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 34 :- மூ.சிவலிங்கம்

நட்சத்திரத்தன்று தேர்த்திருவிழாவும், மறுநாள் தீர்த்தத் திருவிழாவுமாக அமைந்து பதினொரு நாள் உற்சவங்கள் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது.
பக்தர்களின் வேண்டுதலின்பேரில் வீரபத்திரக்கடவுளுக்காக ஆனிமாதத்தில் பத்துநாட்கள் பெருவிழாக்கள் நடைபெறுகின்றன. பிட்டையம்பதி வீரபத்திரர் சமேத பத்திரகாளி அம்பாளின் விழாக் காலங்களில் அன்னதானமும் வழங்கப்படுவது சிறப்பாகும்.
கருவறையிலுள்ள விக்கிரகங்கள் சிறப்பானவை. 1880 இல் எழுந்தருளி விக்கிரகங்களும் உருவாக்கப்பட்டன. பொதுமக்களின் வேண்டுகோளின்படி அறங்காவலரால் ஆலயத்தில் நடை பெற்றுவந்த ஆடு, சேவல் பலியிடுதல் நிறுத்தப்பட்டது. விசேட விழாக்களில் நீற்றுப்பூசனிக்காய்களே வெட்டி பலியிடப்படுகிறது. தமது நேர்த்திக் கடனாக மக்கள் ஆடு, சேவல்களை கோயிலுக்குக் காணிக்கையாக இன்றும் வழங்கிவருகின்றனர்.
1978 இல் சித்திரத்தேர்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருடா வ்ருடம் தேர்த்திருவிழாவை அல்ங்கரிக்கின்றன. 1985 இல் ஆலயத்தின் பிரதான திருத்தவேலைகள் நடைபெற்று நவக்கிரக மண்டபமும், சண்டேஸ்வரர் மண்டபமும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் மக்களின் வழிபாட்டின்பேரில் கட்டுமானப் பணிகள், பூசைகள், விழாக்கள் யாவும் சைவாகம முறைப்படியே அமைந்துள்ளன.
புளிய மரத்தையே தலவிருட்சமாக அமைத்து மக்களின் வழிபாட்டினைத் தொடரும் வகையில் மூர்த்தி, தலம், தீர்த்தம் யாவும் சிறப்பாக அமைந்துள்ளன. வேண்டுவார் வேண்டுவனவற்றை வாரிவழங்கும் பிட்டையம்பதி பத்திரகாளி அம்பாளின் அற்புதங் களினாலும் அன்னையின் அரவணைப்பினாலும் சக்திவழிபாடு சிறப்படைந்துள்ளது.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 35 :- மூ.சிவலிங்கம்

Page 27
0.
Veðrænder BräFévri Sasulad GeVeðræUruñueireader2 சிவபூமியான யாழ்ப்பாண நகரத்தின் வடபால் காங்கேசன்துறை வீதியில் மேற் திசையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இச்சூழல் விஸ்வப்பிரம்ம குலத்தினரின் வதிவிடமாகும். இக்கோயிலில் காமாட்சியம்பாள் கருவறையில் உறைந்து அருள்பாலிக்கின்றார்.
இப்பதியில் ஒரு குளமும் அருகே மருத மரங்களும், நாவல் மரங்களும் செழித்து
fÈMES: வளர்கின்றன. இவ்வூர்ப் பெண்கள் மரங்களின் கீழ் விறகு சுள்ளிகள் பொறுக்குவது வழக்கம். ஒரு நாள் கன்னிப் பெண்ணொருத்தி விறகு பொறுக்கச்சென்ற சமயம் மருதமரத்தின் கீழ்க் குந்தியிருந்து சிறுநீர் கழித்தாள். அச்சமயம் மரத்திலிருந்து ஒரு தேவதை இறங்கி வந்து அக்கன்னிப் பெண்ணின் இருமுலை களையும் திருகியதன் வேதனை உணர்வுபட்டதும் செய்வதறியாது வேதனையுடன் தனதிடஞ் சென்று பதைபதைத்தாள். இதைக்கண்டு அயலிலுள்ளோர் பயத்தினால் நடுநடுங்கினர்.
இச்சமயம் அயலில் வாழ்ந்த கண்ணாத்தை என்னும் முது கிழவி இப்பெண்ணுக்கு ஆறுதல் கூறி அரவணைத்தாள். கிழவி அன்று தொடக்கம் அம்மரத்தடியில் வழிபட்டு வந்தாள். தினந்தோறும் ஆசாரத்துடன் சென்று விளக்கேற்றி மலர்கள் சூட்டி மருதமரத்தை வலம்வந்து பேரன்புடன் தூயபக்தி மேலிட வணங்கி வந்தாள். காலத்துக்குக்காலம் பொங்கலிட்டும் தெய்வத்தைச் சாந்தப்படுத்தி வந்தாள். அயலிலிருந்த அனைவருமே தாமும் வழிபாடு, பொங்கல், பூசைகளைத் தவறாது செய்துவந்தனர். இதனால் அனைவரும் நற்பயனை அடைந்தனர்.
1880 இல் இவ்வூரைச் சேர்ந்த காசிநாதர் தம்பர் என்னும் பக்தர் அவ்விடத்தின் புனிதமும் அற்புதமும் கண்டு கல்லினால் ஒரு ஆலயம் அமைத்தார். இப்பகுதி மக்கள் விஸ்வேஸ்வரரின் அடியார்களானதால் தமது தாய்த்தெய்வமான காமாட்சியம்பாளைக் கருவறையில் மூலவராக வைத்து வழிபட்டனர். தொடர்ந்து பொது மக்களின் ஆதரவில் சைவாகம முறைப்படி எல்லா அம்சங்களும் அமைய ஒரு சிறப்பான ஆலயமாகக் கட்டப்பட்டு 1887 இல்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 36 :- மூ.சிவலிங்கம்
 

கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்னை நாச்சிமார் (காமாட்சியின்) அருளும் புகழும் ஓங்கியது. மாரியம்மனின் உருவச் சிலையொன்றும் நிறுவப்பட்டது. தொடர்ந்து பிரதான மண்டபங்களும் கட்டப்பட்டுக் கொடிதம்பமும் நாட்டப்பட்டு 1926 இல் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இவ்வாலயச் சிறப்பு நோக்கி, பெருந்திருவிழா 15 நாட்கள் நடைபெறுகின்றன. அன்னையின் திருவருளால் காலத்துக்குக்காலம் கட்டடங்கள், இராஜகோபுரம், திருத்தேள், சப்பறம் போன்ற பல சிறப்பம்சங்களும் இவ்வாலயத்தில் நிறுவப்பட்டன.
எந்த நாட்களையும் விசேட நாட்களாகவே கருதும் பொது மக்கள் தமது வற்றாத பேரன்பினால் அதிகளவு கூட்டமாக வந்து வழிபட்டு ஆலயத்தின் புனிதத்தையும் சிறப்பையும் மெருகூட்டுகின்றனர். இன்றைய சூழ்நிலையில் தமிழர்களாகிய நாம் தெய்வ வழிபாட்டினை உள்ளன்போடு பேணுவதால் மன அமைதியை அடையலாம். இதே சிந்தனையில் சிவநெறி மேலோங்குகிறது.
வஞ்சனை ஏதுமறியாத கன்னிப்பெண் செய்த சிறுகுற்றத்தினால் பொறுமையிழந்த தெய்வம் அட்பெண்ணுக்குத் தண்டனையை வெளிக் காட்டியது. மூதாட்டியான கண்ணாத்தை தெய்வத்தைச் சாந்தப்படுத்தி வழிபட்டு ஏனைய மக்களுக்கும் வழிகாட்டினார். மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமிரங்கிய நாச்சிமார் / காமாட்சியம்பாள் இன்று அற்புதங்கள் புரியும் சக்தியின் உறைவிடமானது அன்னையின் பேரருளேயாகும்.
இங்கு தமிழ்மரபும் சைவ வழிபாட்டு நெறியும் நன்கறிந்த பெரியார்களினால் நன்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. சமய கலாசார விழுமியங்கள் பேணவும், மக்களின் விசேட ஒன்றுகூடல், திருமணம் போன்ற விசேட வைபவங்களின் பேரில் இத்திருத்தல அறங்காவல் குழுவினரால் தென்பகுதியில் ஒரு சிறப்பான கலாசார மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.
இறையருளைப் பெறும் மத, கலை, கலாசார வைபவங்கள் சிறக்க, சைவாகம நெறியை மக்கள் உள்ளன்போடு பேணி வருகின்றனர். இவ்வரிய செயல்களை நெறிப்படுத்தும் சக்தியின் பேரருளினால் மக்கள் மன அமைதி பெறுகின்றனர். நாடு நலம் அடைகிறது. தெய்வத்தாயின் பேரருளால் அறம் வளர்கிறது.
சக்தியின் புகழ் ஓங்குக. Gožo G) Gežole) Gosởpe) ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:37:- மூ.சிவலிங்கம்

Page 28
ggirab60155it Gjy1prestrefi ësbp&r 83555eob
தமிழ் மன்னர்களால் யாழ்ப்பாணம் ஆட்சிசெய்யப்பட்ட காலத்தில் செந்தமிழும், சிவ நெறியும், கல்விச்செல்வமும், விவசாயம் கடின உழைப்பு ஆகியவற்றினாலான பொருட்செல்வமும், அரசர்களின் போராற்றலினால் வீரச்செயல்களும் மிகுந்து காணப்பட்டன. இதனால் நவராத்திரி காலத்தில் சக்திவழிபாடு சிறப்படைந்தது.
அரசர்கள் தமது படைபலத்துடன் கல்வியையும் சிவநெறியையும் இணைத்தே நல்லூரைத் தமது தலைநகராகக்கினர். நல்லூரின் காவற்பணியின் பேரில் நாற்றிசையும் சிறப்பான ஆலயங்களை நிறுவினர். இதன்பேறாக கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், தெற்கில் கைலாயபிள்ளையார் (சிவபிரானையும்) கோயிலையும், மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயிலையும், வடக்கில் சட்டநாதர்சிவன் கோயிலையும், காவற்தெய்வங்களாக அமைத்துச் சிறந்த கோயில்களாக்கி வழிபட்டு அறம் வளர்த்தனர்.
தமது பணி சிறப்பாக அமையவேண்டி நாளாந்தம் நான்கு கோயில்களுக்கும் அதிகாலையில் சென்று வழிபட்டு அறத்தினை வளர்த்தனர். போர்க்காலங்களில் போருக்குப் புறப்படுமுன் தமது உடைவாளை வீரமாகாளி அம்பாளின் திருமுன் வைத்து பூசை வழிபாடுகள் செய்து பிரசாதத்துடன் சக்தியிடமிருந்து வீரத்திலகம் இடுவித்தனர். இவ்வரிய வழிபாட்டினால் அரசர்களின் போர்முனை சிறப்பான வெற்றிகளை ஈட்டித்தந்தன. அன்னை வீரமாகாளி அம்பாள் அரசர்களுக்கான வெற்றிக்கு ஆசிகூறிய சிறப்ப அளப்பரியது.
இவ்வாலயத்தில் மேலும் பல அற்புதங்களைச் சக்தியவள் தோற்றுவித்து எம்மக்களை அரவணைத்துள்ளார். அன்னையில் அருளால் மக்களும் கூடிய பயபக்தியுடன் இடையறாது வழிபட்டு நற்பலனடைந்தனர். சிவநெறி பிரகாசித்தது.
மேலைத்தேயப் பறங்கியரின் படையெடுப்பில் இந்து ஆலயங்கள் யாவும் இடிக்கப்பட்டு வந்தன. எமது வீரத்தாயின் ஆலயத்தை இடிக்கும் காலநேரம் வந்ததும் கூலிப்படைகள் இக் கோயிலை நோக்கி நகள்ந்தனர். வீரத்தாயும் தமது வீரதீரச் செயலைப் பிரயோகிக்க முன்வந்தார். ஒரு மாபெருஞ்சிங்கம் கோயில் வாசலில் நின்று சடையை விரித்துக் கள்ச்சித்தது. அழிக்கும் பணிக்கு வந்தோர் பயந்தோடினர். சிங்கமும் மறைந்துவிட்டது.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 38 :- மூ.சிவலிங்கம்
 

அக்காலத்தில் சைவநெறி பேணுவது தடைப்பட்டது. பின் ஆட்சிக்கு வந்த ஆங்கிலயேர் காலவத்தில் சமய வழிபாட்டுத் தடைகள் தளர்த்தப்பட்டன. இந்துக் கோயில்கள் சிறப்பிக்கப்பட்டுக் கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இத்தலத்திலும் கட்டுமானப் பணிகளும் பூசை விழாக்களும் கிரமமாகச் செயற்பட்டன. வீரத்தாயின் அருள்பெற்ற அடியார்கள் திருப்பணி பலசெய்து மன நிறைவடைந்தனர்.
ஒரு திருத்தலத்தின் சிறப்பை அங்கு நடைபெறும் புனிதமான பூசைகள், விழாக்கள், அலங்கார அமைப்புக்களினால் அறியமுடியும். வீரமாகாளியம்மனின் திருப்பணிகள் சிறந்தன. அன்னை பெருவிழாக் கால்களில் வீதியுலா வருவதற்கான இதர ஊர்திகள் செய்யப்பட்டன. 1941 இல் அம்பாளின் வெளிவீதியுலாவுக்கான புதிய சித்திரத்தேள் சிறந்த சிற்பக்கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டத்துக்கு விடப்பட்டது. வெள்ளோட்டத்தின்போது வீரமாகாளி அம்பாளே ஒரு மூதாட்டியின் உருவத்தில் வந்து சிற்பக்கலைஞருக்கு ஐந்து ரூபாவைத் தட்சிணையாக வழங்கினார். மேலும் சிற்பக்கலைஞரின் வழங்காதிருந்த ஒருகையை லேசாகத தடவிட்டார். கை பூரண சுகங்கண்டு சாதாரணமான நிலையை அடைந்தது. முதுபெரும் மூதாட்டியாக வந்து அருள்புரிந்தமை அன்னை வீரமாகாளியின் அற்புதமேயாகும். அன்றைய தேர் வெள்ளோட்ட விழாவுக்கு வந்தோர் இதனைக் கண்டு பெருவியப்படைந்தனர்.
உள்ளன்போடு பூசித்துத் தமது கடமைகளை நேர்மையுடனும் துணிவுடனும் செய்யும் எவரும் இறையருளினால் ஆசீவதிக்கப்படுவர் என்னும் நியதியை வண்ணைநகள் வீரமாகாளி அம்மனாம் சக்தியின் அற்புதங்களின் சிறப்பு இன்றும் இலைமறைகாய் போல நடைபெறுகிறது. அடியார்களும் தமது தூயபக்தியினால் அன்னையைப் போற்றி வழிபடும் மரபு எம்மண்ணில் நன்கு பிரகாசிக்கிறது.
இத்தலத்தில் நவராத்திரிக் காலம் வெகு விமரிசையாக அமைந்துள்ளது. ஒன்பதாம் நாள் மகிடாசூரன்போர் பக்தர்களின் சிறப்புப்பணியாகவும் பிரகாசிக்கிறது. இச்சூழலில் சக்தயின் வழிபாட்டுக்கும் அற்புதங்களுக்கும் உறைவிடமாக அமைந்தமை எம்மக்களின் பெரும்பேறாகவே அமைந்துள்ளது.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 39 :- மூ.சிவலிங்கம்

Page 29
ர்வதவர்த்தனி அம்பாள் திருத்தலம்
வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் |தென்மேல் திசையில் (நல்லூர், உடுவில் பிரதேச எல்லையில்) அமைந்துள்ள பண்பட்ட கிராமம் உரும்பிராய் என அழைக்கப்படுகிறது.
முற்காலத்தில் 25 பிராய் மரங்கள் நடப்பட்ட இடமே இக் கிராமமாகும். (தமிழ் இலக்கங்களான உ-2, ரு-5 என்பவை 25 - உரு + பிராய் என அமைந்ததாக |ஆன்றோர் கூறினர்.)
இக்கிராமத்தின் தென்மேல் திசையில் கருணாகரகத் தொண்டமானால் நிறுவப்பட்ட கருணாகரப்பிள்ளையார் தமக்கே உரிய திசையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இவ்வாலயத்தின் வடகீழ் எல்லையில் சிதம்பர சுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ளது. அதன் கிழக்கெல்லையில் பர்வதவர்த்தனி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. இம்மூன்று திருத்தலங்களும் ஒரே தொடரில் அமைந்ததால் மூன்று கோயில் எனப் பிரசித்திபெற்றுள்ளன.
இக்கிராமம் ஆலயங்களின் தெய்வீக சக்தியாலும், இங்குள்ள செம்மண்ணின் விவசாய விளைவினாலும், இங்கு அமைந்துள்ள மூன்று பிரதான சைவப்பாடசாலைகளினாலும் பல சீருஞ்சிறப்பும் மிகுந்த பெருமையைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
தெய்வீக சக்தியால் நற்சிந்தனையாளர் பலர் தோன்றினர். இறைபணியும், அறவாழ்வும் மேற்கொண்டனர். அறம் வளர்ந்தது. மண்ணின் செழிப்பு மேழிச்செல்வம் சிறக்க உதவுகிறது. பல்லினக் கிழங்கு வகைகள், தானியவகைகள், காய்கறிப் பயிர்கள், வாழைகள், கொடிமுந்திரிகை ஆகிய விளைபொருட்கள் இவ்வூர்ச் சந்தைகளிலும் கொழும்பு வரையும் சென்று விற்பனையாகி இவ்வூரின் சிறப்பை மேம்படுத்தியுள்ளன.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 40 :- மூ.சிவலிங்கம்
 

இவ்வூரிலுள்ள மூன்று பாடசாலைகளிலும் கற்ற பலர் சிறந்த கல்விமான்களாகவும், உயர்பதவி வகிக்கும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களில் அணிசேர்க்கின்றனர்.
இவ்வூரில் தோன்றி நல்லன கற்றுத் தமது அறிவாற்றலினால் பல்லோராலும் புகழ்ந்து பேசப்பட்ட பஞ்சலிங்கம் சகோதரர்கள் ஐவர் தமது பெற்றோரின் முற்றவப்பயனை நிலைநாட்டினர். ஒருவர் பிரதம நீதியரசராக இருந்தபோது இலங்கையில் பதில் மகா தேசாதிபதியாக முதன்முதல் அமைந்த இலங்கையர் எனப் பெயர் எடுத்தவர். மற்றொருவர் கணிதமேதையாக, கல்விமானாக, மந்திரியாக, அடங்காத் தமிழர் எனப் பேரெடுத்தவர். ஏனையோர் சிறந்த நியாயவாதியாகச் சட்டவல்லுநர்களாக அதியுயர் பதவிகளை வகித்தனர். இவர்கள் தமது சிறப்பான பணியினால் பார்போற்றும் மேதைகளாக இந்த மண்ணின் மைந்தர்கள் என்பதில் இந்த மண் சிறப்படைந்தது. இவர்கள் உலகத்தின் அரிய சொத்தெனப் போற்றப்பட்டவர்கள். இவை யாவற்றுக்கும் இங்கு குடிகொண்டுள்ள அற்புதங்கள் நிறைந்த ஆலயங்களும் வழிபாட்டின் பெருமையும் இடையறாத இறைபக்தியுமே காரணமாகும்.
அன்னையவள் தமது பிள்ளைகளான கணேசனுடனும்,
முருகனுடனும் அருகருகே அமர்ந்து மக்களுக்கு அருளாசி புரிந்து நாட்டில் அனைவரையும் நல்லவண்ணம் வாழ வைக்கின்றனர்.
பர்வதமலையில் பரமனுடன் உடனிருந்த பார்வதி இவ்வூரில் ஆதிபராசக்தியாம் பர்வதவர்த்தனியாக எழுந்தருளியுள்ளார். உரும்பிராயில் பர்வதவர்த்தனி அம்பாளின் தோற்றம் பற்றி எவராலும் காலம் அளவிடமுடியவில்லை. இவ்வாலயத்தின் தெற்கு வீதியில் ஒரு வில்வமரம் ஓங்கி உயர்ந்து காணப்பட்டது. இந்த வில்வ மரத்தடியில் அம்பாள் இடையிடையே தோன்றி இறையன்பு மிக்கோருக்கு நேரில் காட்சி தந்துள்ளார். அந்த வில்வமரம் கால கதியில் சிதைந்துபோனாலும் அதன் வேரிலிருந்து முளைத்து இன்று தெற்குவீதியில் தெய்வாம்சத்துடன் காட்சிதருகிறது.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 41 :- மூ.சிவலிங்கம்

Page 30
அம்பாள் காட்சிதரும்போது சீறிவரும் பாம்புகளை அணி கலனாக அணிந்திருந்தார். அம்பாள் அம்மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது அரவங்கள் அன்னையின் மடியில் தவழ்ந்து திரியும். அம்பாள் மறைந்தாலும் ஒருசில பாம்புகள் அவ்விடத்தில் நடமாடின.
- அம்மன் மீது இடையறாத பக்தி கொண்ட பக்தரான விநாசித்தம்பி என்பவர் அம்பாளின் மடிமீது திரிந்த பாம்புக்குப் பால் வைத்து அன்னையை வழிபட்டார். இப்பெரியாரின் பக்தியை மெச்சிய அன்னை ஒரு அற்புதமான இரவு கனவில் தோன்றினார். தமக்கென ஒரு ஆலயம் அமைத்து ஆகமவிதிப்படி பூசைகள் செய்து வழிபடுமாறு தெரிவித்து மறைந்தருளினார். அம்பாளின் அன்புக் கட்டளையைச் சிரமேற்கொண்ட விநாசித்தம்பி செயற்பட ஆரம்பித்தார். மறுநாட்காலை ஒரு சிறுகுடிசை அமைத்து வழிபடத் தொடங்கினார். விதிப்படி பூசைகள் செய்வதற்கென ஒரு அந்தணரைக் குடும்பத்துடன் ஆலயத்தினருகே குடியேற்றிப் பூசை ஒழுங்குகளை மேற்கொண்டார். பூசைகளும் வழிபாடும் பக்தர்கள் கூட்டமும் சிறப்பாக அமைந்தன.
1930 இல் குடிசையிருந்த இடத்தில் கற்கோயில் உருவானது. கருவறையும் மண்டபங்களும் உள்வீதியைச் சுற்றிவர மதில்களும் நிறுவப்பட்டன. வெளிவீதிக்கென அம்பாளின் அடியர்கள் தமது நிலங்களில் போதியளவு தருமசாதனஞ்செய்தனர். இதனால் இவ்வாலயம் நிலப்பரப்பில் அறுபத்தைந்து பரப்புக் காணியைத் தனதாக்கிக்கொண்டது. கோயில் வெளிவீதி நாற்புறமும் முள்ளுக் கம்பியினால் வேலியமைத்துப் பாதுகாக்கப்பட்டது. கோயிலின் புதிய கட்டுமானப் பணியை ஆலயத்தை ஆரம்பித்த விநாசித்தம்பியின் பேரனாகிய ஆவேலுப்பிள்ளை என்பவர் முன்னின்று நிறைவேற்றினார்.
1932 இல் பொதுமக்களின் அபிலாசைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களின் பங்களிப்புடன் வருடா வருடம் திருப்பணி வேலைகள் நடைபெற்றன. பிரதான மண்டபங்கள், பரிவாரமூர்த்திகளுக்கான சந்நிதிகள், கொடித்தம்பம் யாவும் ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:42:- மூ.சிவலிங்கம்

அமைக்கப்பட்டன. சிவாகம முறைப்படி அமைக்கப்பட்ட இவ்வாலயத்தில் 1948 இல் கொடியேற்ற வைபவமும், பத்துநாட்கள் பெருவிழா எடுத்து சித்திரைப் பூரணையன்று திர்த்தத்திருவிழாவும் நடைபெற்றன.
ஊர்மக்களின் வசதியைக் கருத்திற்கொண்டு கொடியேற்ற வைபவமும் பெருவிழாக்களும் வைகாசிமாதத்திற்கு மாற்றப்பட்டன. வைகாசிப் பூரணையன்று தீர்த்தத் திருவிழாவுடன் பெரு விழாக்கள் நிறைவடையும். பெருவிழாக்களின் சிறப்பை அறிந்த ஊர்மக்களும், வெளிநாடுகளில் வதியும் அன்பர்களும் அம்பாள் மீது பேரன்பு பூண்டு ஆலயம் சிறக்க ஆவணசெய்தனர். இதன் பேறாக ஆரம்பத்தில் கட்டப்பட்ட சகல கட்டுமானப்பணிகளும் அகற்றப்பட்டுச் சிறப்பான திருப்பணிகள் ஆரம்பமாகின.
கருவறை, புதிய விமானம் அமைக்கப்பட்ட அழகிய பொலிவுடன் காட்சிதந்தது. பிரதானமான மண்டபங்களும் அழகுற அமைந்தன. மணிக்கோபுரமும் அமைக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளுடன் சிறப்பான வீதியுலாவுக்கான வாகனங்கள் மற்றும் வெளிவீதியுலாவுக்கென ஊர்திகளான கைலாயவாகனம், சப்பறம், சித்திரத்தேர் ஆகியன அமைக்கப்பட்டன. கட்டுமானப் பணிகள் பூர்த்தியாகி 1963, 1990, 2004 ஆகிய வருடங்களில் கும்பாபிஷே கங்களும் நடைபெற்றன. பெருவிழாக்களுடன் சிறப்பான விழாக்கள் யாவும் அவ்வக்காலங்களில் விமரிசையாக நடைபெறுகின்றன.
பங்குனி மாதத்தில் வரும் திங்கட் கிழமைகளில் சிறப்பாகப் பொங்கலிட்டு அம்பாளை மகிழ்விப்பள். ஊர்மக்கள் அனைவரும் தவறாது தனித்தனியாகப் பொங்கிப் படைத்து தமது நேர்த்தியை நிறைவுசெய்வர். மேலும் இம்மாதத்தில் கோடை வெப்ப மிகுதியால் வெப்புநோய்களும், பெரியம்மை, சின்னமுத்து போன்ற தொற்று நோய்களும் பரவும். இதனை அகற்றுவதன் பேரில் அம்பாளுக்கு வருடாவருடம் சிறப்பான குளிர்த்தியும் மதியம் அன்னதானமும் நடைபெறும்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -43- மூசிவலிங்கம்

Page 31
அன்று மாலை கிராம மக்களின் நலனுக்காக அன்னை வீதியுலா வருவார். கிராமத்தின் நாற்திசையும் பவனி வந்து மறுநாள் காலையே ஆலயத்தை வந்தடைவார். இப்பவனியால் மக்கள் யாவரும் குதூகலத்துடன் ஊரெங்கும் விழாக்கோலம் பூண்டு இன்புறுவர்.
ஆலயப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதன் பேரில் பல பெரியார்கள் தமது விளைநிலத்தில் ஆலயத்திற்கென தருமசாதனம் செய்துள்ளனர். இக்காணியின் குத்தகைப் பணம் உரிய காலத்தில் ஆலயம் வந்தடையும். காலைப் பூசைக்கென ஒரு அன்பரும், வேறொரு அன்பர் மாலைநேர விளக்கேற்றலுக்காகவும் ஆலயத்தின் பேரில் வைப்பிலிட்டுள்ளனர். இவ்வகையான வருமானங்களினால் ஆலயப்பணி சிறப்படைகிறது.
உரும்பிராயில் பர்வதவர்த்தனி அம்பாளின் அற்புதத்தினால் நன்கு கவரப்பட்ட அன்பர்களின் பேராதரவினால் ஆலயத் திருப் பொலிவும், பூசைகள், அபிஷேகங்கள், விழாக்கள், பெருவிழாக்கள், பொங்கல் வழிபாடுகள் யாவும் சிறப்புடன் நடைபெறுகின்றன. பக்தர்களின் வேண்டுதலுக்கேற்ப பள்வதவர்த்தனி அம்பாளும் அவரவர் செய்த நல்வினைக்கேற்ப வேண்டியவற்றையெல்லாம் வரையறையின்றி வாரி வழங்குகிறார்.
இங்கு அறம் வளர்கிறது. ஆலயம் சிறக்கிறது. அன்னையின் அருள் அனைவரையும் அரவணைக்கிறது. அன்னை சக்தியின் புகழ் ஓங்குகிறது. எமது சைவசமயம் நன்கு பிரகாசிக்கிறது.
Q de) Q de) Q so
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணற் சுடர்கின்ற மீனையெல்லாம் - பண்ணியதோர் சக்தியே நம்மைச் சமைத்ததுகாண் நாற்றாண்டு பக்தியுடன் வாழும் படிக்கு.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 44 :- மூ.சிவலிங்கம்

6abliss G5 eyesareibaud &burar as
வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் வடபால் அமைந்தது இடைக்காடு என்னும் திருவூர். இங்கு இயற்கையான மண்வளமும் அற்புதமான விவசாயப் பெருநிலப்பரப்பும் மண்ணின் பெருமையும் தெய்வீக சக்தியும் தோன்றியுள்ளது. குறுகிய தூரத்தில் இருக்கும் சந்நிதி வேலவனின் நிழற்காற்றும் இயற்கையும் இங்கு பல அருளாளர் களையும் கல்விமான்களையும் தோன்றச் செய்தது.
நறுமணங் கமழும் மண்வாசனையுடைய இப்பண்பட்ட பூமியில் தோன்றிய பல அறிவாளிகள் மத்தியில் சிவப் பொலிவுடைய அருளாளர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டின் முற் பகுதியில் வாழ்ந்தார். இவரிடம் நேரில் தோன்றிய தெய்வமகளிர் ஒருவர் ஒரு சிவலிங்கத்தையும் செப்பினாலான சிலம்பையும், கருங் கல்லினாலான ஒரு அம்மன் சிலையையும் தந்ததும் மறைந்துவிட்டார்.
அன்றிரவு அப்பெண் தெய்வம் அப்பெரியாரின் கனவில் தோன்றி தாம் பகலில் தந்த மூன்று மூர்த்தங்களையும் வைத்து நித்தியபூசை செய்து வழிபடுமாறு கூறி மறைந்தருளினார்.
அடியாரும் அம்பாள் அளித்த அற்புதமான மூர்த்தங்களை அரியதோர் குடிசை அமைத்துத் தினமும் உள்ளன்புடன் பூசித்து வந்தார். அவ்வடியாரும் அவரின் அடுத்தடுத்த சந்ததியினரும் அம்பிகையை அலங்காரப் பூசையினால் அகங்குளிர வைத்தனர். அன்னையும் அவர்களுக்கு நற்பலன்கள் தந்து பெருவாழ்வு வாழ வைத்தார். இவ்விடம் வருவோர் இவ்வாலயத்தின் பூசை வழிபாட்டின் சிறப்பையும் மகிமையையும் நேரில் கண்டு தாமும் வழிபட்டனர். தம்மை நாடி வந்து வழிபடுவோரின் கோரிக்கையை அன்னை நிறைவேற்றினார்.
சக்தி வழிபாட்டின் பெருமையால் அனைவரும் நல்வாழ்வுடன் பல நன்மைகளைப் பெற்ற நன்றிக்கடனுக்காக அன்னையின் ஆலயத்தைச் சிறப்பிக்க முன்வந்தனர். பூசகரின் அனுசரணையுடன் ஊர்மக்கள் ஒருங்கிணைந்து சிறுகுடிசையான இடத்தில் ஒரு கற் கோயிலை நிறுவினர். இங்கு தலவிருட்சமாக அரசும் வேம்பும் அமைந்துள்ளன. இந்த அரசும் வேம்பும் ஏற்கனவே குடிசை அமைத்த
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:45:- ഗ്ഗdിലിക്ക

Page 32
கருவறையில் புவனேஸ்வரி அம்பாள் அருள்புரிகிறார். பரிவார முள்த்தங்களாக கண்ணகியும் சந்தானகோபாலரும் நிறுவப்பட்டுள்ளனர். ஓரளவு பூர்த்தியான ஆலயக் குடமுழுக்கு 1920 இல் நடைபெற்றது. தொடர்ந்து பூசைகள் அபிஷேகங்கள் சிறப்புடன் நடைபெற்றன.
ஆலய வளர்ச்சி கைகூடும் நற்காலம் வந்ததால் பொது மக்களின் ஆதரவும் மேலோங்கியது. காலத்துக்குக்காலம் கட்டுமாணப் பணிகள் தொடர்ந்தன. பல நிர்மாண வேலைகள் சிறக்கவும் புதுப் பொலிவுடன் 1974 இல் மீண்டும் குடமுழுக்குவிழா நடைபெற்றது. மக்கள் நல்லாதரவு தந்து வழிபட்டுத் தம் வாழ்வை மேம்படுத்தினர்.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக ஆலயம் சேதமடைந்தது. மக்களும் அவலமுற்று இடம்பெயர நேர்ந்தது. இதனால் சில வருடங்கள் இவ்வாலய பூசைகள் வழிபாடுகள் தடைப்பட்டன. காலநிலை மாறவும் மக்களின் வதிவிடங்கள் இயல்பு நிலைக்கு வந்தது. மக்கள் தமது வழிபாட்டுத் தெய்வத்தின் ஆலயப் பணிகளை மேற்கொண்டனர்.
இவ்வாலயத்தின் புனர்நிர்மான வேலைகள் நடைப்ெறறன. பரிவாரமூர்த்திகளான விநாயகள், முருகன், வைரவர், நவகோள் நாயகர்கள், நாகதம்பிரான், சண்டேஸ்வரி ஆகியோரிற்கு தனித் தனியான சந்நிதிகள் அமைக்கப்பட்டன. கொடித்தம்பமும் அமைக்கப் பட்டது. பல சிறப்புகளுடன் 08:061989 அன்று புனருத்தாரண கும்பாபிஷேகமும் நடைபெற்றது. ஆலயமும் சிறப்படைந்தது.
புவனேஸ்வரி அம்பாளின் திருவருளும் மக்களின் பங்களிப்பும் கைகூட சித்திரைமாதப் பூரணை தினத்தன்று தீர்த்தத் திருவிழா அமையும் வண்ணம் பத்துநாட்கள் பெருவிழா நடைபெற்றன. தொடர்ந்து வருடாவருடம் கொடியேற்ற வைபவத்துடன் பெருவிழாக்கள் நடை பெறுகின்றன.
பெருவிழாக்களுடன் இதர விசேட விழாக்களும் நடைபெற்று ஆலயச் சிறப்பு மேலோங்கியது. எமது சைவசமய நெறிமுறைகளுக்கு அமைய இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் விழாக்கள் யாவும் சிறப்புடன் நடைபெறுவது சக்தியின் அற்புதமாகவே அமைந்துள்ளது.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் - 46 :- மூ.சிவலிங்கம்

தமிழ்கூறும் நல்லுலகில் நாடறிந்த நற்கல்விமான்களையும் சைவசமய ஒழுக்க சீலர்களையும்
கிராமங்களுள் மட்டுவில் கிராமமும் ஒன்றாகும். இங்கு தோன்றிய சிறந்த கல்விமான்களால் எமது நாடே சிறப்படைந்தது.
மட்டுவில் கிராமத்தவரின் வாழ்வாதாரம் விவசாயத்தொழில் ஆகும். நாள் முழுவதும் வியர்வை சிந்தி உணவுக்கான செய்பயின் மூலம் பெற்ற விளைவினைத் தமது வஞ்சமில்லா நெஞ்சில் குடி கொண்ட தெய்வங்களுக்கும், தம் உறவினருக்கும், நாடிவந்தோருக்கும் தாம் உண்பதில் ஒரு பிடியேனும் நல்கி, விருந்தோம்பி, நல்லறமாம் இல்லறவாழ்வில் அறம் வளர்த்தார்கள்.
9g62i60án மியில் நாடெல்லாம் நடந்து திரியும் சித்தர் இறைபித்தர்களும், அருளாளர்களும் கால்பதித்தனர். வந்தோரை வாழவைக்கும் இம்மக்களின் நற்பண்பினால் கவரப்பட்டு இங்கு வந்து உலாவித் தவப்பொழுதாக்கிய தவசீலரின் பாதங்கள் படிந்த இந்த மண் புனிதமடைந்தது. சுவர்க்க பூமியானது. கலைமகளும் திருமகளும் இதய மலரில் அமர்ந்து அருள்பாலித்தனர்.
இதன்பேறாக இல்லங்கள் பொலிவுற்றன. நல்லனவற்றைத் தேடிக்கற்று, நல்லாசானாகி, நற்றவக்கல்வியை நாடெங்கும் பரப்பிச்
மேம்பட்ட பலரை இந்த மண் உவந்தளித்தது. இச்சிறப்புக்கெல்லாம் இவ்வூரில் அலைபாயும் இறையருளே மூலப்பொருளானது. இவ்வூர் மக்களின் நல்ல வேண்டுதலுக்கேற்பத் திருவருளும் நல்லதையே தந்து அரவணைத்தது. இதனால் இங்கு அறம் வளர்ந்தது. தமிழ் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் நாவில் உறைந்தது. சைவநெறி துலங்கியது. யாவரும் கள்ளம்கபடமற்ற ஆசாரசீலர்களாகவே காணப்பட்டள்ை.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் - 47- முசிவிங்கம்

Page 33
ஆன்மிக சிந்தனை மேலோங்க இறைவழிபாட்டில் கூடிய கவனம் செலுத்தினர். இறையருள் வேண்டி ஆலயங்கள் அமைத்து அவற்றை உள்ளன்போடு ஆதரித்து, அரும்பணியாற்றினர். மட்டுவிலில் இவ்வாறு அமையப்பெற்ற திருத்தலங்களில் நாடுபோற்றும் பன்றித் தலைச்சிக் கண்ணகி அம்மன் திருத்தலமும் ஒன்றாகும். ஆதியில் அமைந்த இத்தலத்தில் உறைந்த தாய்த்தெய்வம் கண்ணகியே. காலப்போக்கில் மக்களின் அபிலாசைக்கேற்ப இங்கு சிவகாமி அம்பாள், இராஜராஜேஸ்வரி அம்பாள், சக்திவாசினி அம்பாள் ஆகிய அன்னையரும் எழுந்தருளி இருந்து அருள்பாலிக்கின்றனர். இதனால் இத்திருத்தலத்தின் புராதனமும் தற்போதுள்ள புதுமையும் யாவரையும் நலமுடன் வாழ நல்லருள் வகை செய்கிறது.
முற்காலத்தில் கோவலன் கொலையுண்டதும் கற்புடைய கண்ணகி அரசனிடம் நீதி கேட்டாள். காலதேவதை தன் கடமையைச் செய்யவும் கண்ணகியின் கோபாவேசம் கற்புக்கனலாக மாறி மதுரையை அழித்தது. கண்ணகி அமைதி பெறவில்லை. சிந்தனைப் புயல் அமைதியை நாடவைத்தது. இலங்கையின் வனப்புமிகு பசுஞ் சோலைகளை நாடினார். தனது மனச்சாந்திக்காகச் சோலைகளில் காணப்படும் எம்மவரிடம் வயோதிபப் பெண்ணுருவில் நேரிலும், கனவிலும் தோன்றித் தன்னை ஆதரிக்க வேண்டினார். அறவாழ்வு வாழும் மக்கள் மூதாட்டியை ஆதரித்து வழிபடவும், தமது சிந்தை நெகிழ்ந்து பத்தினித் தெய்வமாக அருள்சுரக்கும் தாயாக மக்களுடன் உறவாடிச் சாந்தசொரூபியாக இலங்கையில் பல இடங்களில் தமக்கென கோயில் அமைப்பித்து எங்கும் வியாபித்தருளும் தாய்த் தெய்வமானார். கோயில்கள் அமைந்த இடமெல்லாம் பல அற்புதங்களைக் காண்பித்தார். இதனால் இலங்கையில் தமிழர் வாழும் இடமெங்கும் கண்ணகி வழிபாடு சிறப்படைந்தது. இவ்வாறு அமையப்பெற்ற மட்டுவில் திருத்தலத்தில் ஏற்பட்ட அற்புதம் யாவற்றையும் விட சிறப்பானதால் நாடுபோற்றும் நற்தலமாகப் பிரகாசிக்கிறது.
கண்ணகியின் மட்டுவில் வரலாற்றில் மாட்டுத்தலை பன்றித் தலையாக மாறிய அற்புதத்தை வெளிப்படுத்தியது. இது செவிவழிக் கதையாகவே தெரியவந்தது. இதனால் இருவகையான கருத்துக்களை ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 48 :- மூ.சிவலிங்கம்

அறியமுடிகிறது. முதலில் பறங்கியள் காலத்தில் புலையர்கள் விவசாயி ஒருவரின் பசுத்தொழுவத்தினுட் சென்று சிறந்த பசுவொன்றைத் திருடிவந்து கொன்று இறைச்சியை எடுத்துக்கொண்டு அதன் தலையை யாருமறியாமல் புதைத்ததாக இவ்வூர் வித்துவான் ச.பொன்னம்பிள்ளை கூறியுள்ளார்.
அடுத்து வழக்கத்தில் உள்ள கதையை அறிவோம். கண்ணகி அம்மன் திருத்தலத்தில் பறைமேளம் அடிக்கும் புலையர் எறிந்த கூராயுதமொன்று ஒரு பசுவின் மீது பட்டதும் அப்பசு துடி துடித்து இறந்துவிட்டது. இதனால் அஞ்சிய புலையரான பக்தன் தன் இறைபணிக்குப் பசுக்கொலை இழுக்கானது என எண்ணி வருந்தினான். செய்த பிழைக்காக அம்மனை வழிபட்டுக்கொண்டு இக்கோயிலின் தென்கீழ்த் திசையிலுள்ள பனந்தோப்பில் பற்றைகள் இடையே பசுவின் உடலைப் புதைத்துவிட்டான். காணாமல் போன பசுவின் உரிமையாளர் இதனையறிந்து பசுக்கொலை செய்தவனை நீதியின் முன் நிறுத்தினார். தன்மீது நீதி விசாரணை வருவதை அறிந்தவன் கண்ணகி அம்மனிடம் பணிந்தான். அம்மனும் பக்தனுக்கு அருள்புரிய எண்ணினார். கண்ணகியம்பாள் கிழிவியின் வடிவில் பக்தனின் கனவில் தோன்றி “நாளை பசுக்கொலை பற்றிய விசாரனை நடைபெறும். அப்போது நான் பசுவைக் கொல்லவில்லை. ஒரு பன்றியைக் கொன்று அதன் இறைச்சியை எடுத்துக்கொண்டு பன்றியின் தலையைப் புதைத்தேன்” என்று கூறுமாறு தெரிவித்தார்.
மறுநாள் பசுக்கொலை சார்பான விசாரணையில் பக்தனான புலையன் நேரிற்சென்று தான் மாட்டைக் கொல்லவில்லையென்றும், பன்றியையே கொன்று அதன் தலையைப் புதைத்தேன் என்றும் வாதாடினான். புதைத்த இடத்தைப் பரிசோதித்தபோது அவ்விடத்தில் பன்றித்தலையே தென்பட்டது. அன்னையின் பெருங்கருணையை எண்ணிப் பக்தன் ஆடிப்பாடிப் பரவசமடைந்தான். தலைமேல் கூப்பிய கரங்களுடன் அன்னையை நோக்கி "பன்றித் தலைச்சி" எனப் பலமுறை கூவிப் பத்தினித் தெய்வத்தைப் பணிந்தான்.
அடியவனின் பக்தியையும் கண்ணகி அம்பாளின் அற்புதத்தையும் யாவரும் வியந்தனர். கண்ணகி கிழவியின் தோற்றத்தில் அடியவனுக்கு காட்சி கொடுத்ததால் அன்னையைத் தரிசிக்கும் யாவரும் பக்தி ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:49 :- முசிவிங்கம்

Page 34
மேலீட்டினால் பன்றித்தலைச்சி "கிழவி” என மெய்யுருகப் போற்றி
ஆதிகாலத்தில் ஆரம்பித்து வழிபட்ட இத்தலம் சிறு குடிசை யிலேயே அமைந்திருந்தது. கி.பி 1750 ஆம் ஆண்டளவில் கற் கோயிலாகக் கட்டப்பட்டது இத்தலம். 1900 ஆம் ஆண்டின் பின்பே பிரபலமடைந்தது. பங்குனித் திங்கட்கிழமைகளில் பொங்கலும், விழாக்களும் அம்பாள் வீதிவலம் வருவதும் இடம்பெற மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகி அம்மன் கோயில் பலராலும் போற்றி வழிபடவும் அன்னை அருள்பாலித்துள்ளார். தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்காக பங்குனித் திங்கட்கிழமைகளில் வந்து பொங்கிப்படைத்து பகிர்ந்துண்டு சென்றனர்.
ஆன்மிக மேம்பாட்டினால் இறைபித்தர்களான செல்லப்பாச் சுவாமிகளும் அவரின் மெய்ச் சீடரான யோகர்சுவாமிகளும் இவ்வாலயத்துக்கு வந்து தரிசிப்பர். 1910 ஆம் ஆண்டில் செல்லப்பா சுவாமிகள் யோகர்சுவாமிக்குத் திருவடிதீட்சை வழங்கிய பெருமை இத்தலத்துக்கு உண்டு. இவர்கள் இருவரும் வருடாவருடம் பங்குனி மாதத்தின் முதலாவது திங்கட்கிழமை இங்குவந்து பொங்கிப் படைத்து அடியார்களுடன் சேர்ந்து தாமும் உண்டதாகவும், யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலைய வெளியீடுகள் சான்றுபகர்கின்றன. 1958 இல் இலங்கையில் இனக்கலவரம் வந்தபோது இத்திருத்தலத்தில் ஒரு சிறப்பான அபிஷேகத்தைச் செய்யுமாறு யோகர்சுவாமிகள் பணித்தார்கள். அவரின் ஆணைப்படி இங்கு மிகச்சிறப்பான அபிஷேகம் செய்து கண்ணகி அம்பாளை வழிபடவும் கலகம் அடங்கியது. இப்பதியில் உறைந்துள்ள கண்ணகி அம்பாள் தமது பெருங்கருணையால் நாட்டில் ஏற்படும் தொற்றுநோய்கள் மன அழுத்தங்கள், கலகங்கள் மற்றும் பெரும் துன்பங்கள் போன்றவற்றை ஒழித்து மக்களை நலமுடன் வாழவைக்கிறார். இவ்வருஞ் செயலுக்காகப் பங்குனித்திங்கள் நாட்களில் நாட்டின் பலபாகங் களிலிருந்தும் வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வண்ணம் சிறப்பான பொங்கலும் மோதகமும் படைத்து மனநிறைவு பெறுகின்றனர். தம்மாலான பெருநிதியையும் அன்னைக்குக் காணிக்கையாக்குகின்றனர்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் - 50:- மூ.சிவலிங்கம்

பக்தர்களின் அன்புக் காணிக்கையான பெருநிதியும், இவ்வாலயத்தின் சொந்த ஆதனங்களின் வருவாயும் திருப்பணிகளைச் சிறப்பித்தன. கருவறை மற்றும் பிரதான மண்டபங்கள், பரிவர மூர்த்தங்களுக்கான தனிமண்டபங்கள், காரியாலயப் பணிமனை, தீர்த்தக்கேணி, பொங்கல் மண்டபம், மூன்று பெரிய குடிநீர்த் தாங்கிகள் யாவும் சிறந்த வெள்ளைக் கற்களால் அமைக்கப் பட்டுள்ளன. கருவறையில் தாமிர விக்கிரகமாகக் கண்ணகி அம்பாளும், சிவகாமி அம்பாள் தனிக்கோயிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இராஜராஜேஸ்வரி அம்பாள் எழுத்தருளி விக்கிரகமாக அமைக்கப்பட்டு விழாக்களில் வீதியுலா வருகிறார். இங்கு பூரிசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எல்லாச் சக்திகளும்
அருள் பாலிக்கின்றனர்.
காலத்துக்குக்காலம் மண்டபங்கள் அமைக்கப்பட்டும் புள் நிர்மானம் செய்யப்பட்டும் மகாகும்பாபிஷேகங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. “உருவேறத் திருவேறும்” என்றாற்போல இவ் ஆலயத்தில் இன்று நான்கு நேர நித்தியபூசையும், மக்களின் வழிபாடும் கிரமமாக நடைபெறுகின்றன. இதரவிழாக்களும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெறுகின்றன. திருவருள் பொழிகின்றது.
வருடாவருடம் மார்கழித் திருவெம்பாவை ஆரம்பதினத்தன்று மகோற்சவ விழாவுக்கான கொடியேற்ற விழாவும் தொடர்ந்து பத்து நாட்களும் பெருவிழாவாகவே அமைந்துள்ளன. இத்தலத்தில் அமைந்துள்ள நீர்த்தடாகம் பிணி தீர்க்கும் மருந்தாக அமைந்து பெரிய அற்புதத்தை நிலைநாட்டுகிறது. இங்கு தரிசிக்க வரும் பக்தர்கள் இப்புனிதமான திர்த்தத்தால் தம்மை நனைத்து உள்ளும் புறமும் தூயவராகவே தமதில்லம் ஏகுவர்.
பற்பல அற்புதங்களுக்கும் புதுமைக்கும் மூலகாரனமாக அமைந்துள்ள மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்பாவின் சிறப்பான பொங்கல் வழிபாட்டையும் புனித திர்த்தத்தையும் அனுபவித்து அன்னையின் பெருங்கருணையை யாவரும் பெற்று எமது தீவினை அகல வழிபடுவோமாக.
GosàɔO QožbeÐ Gessàroed ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் - S :- மூசிவவிங்கம்

Page 35
● P.
álegeselygii) (sylelelpub) éltbpcöá5q555eob
シ
எழில்கொஞ்சும் பல்லின மரங்களின் காப்பகமாகவும்
சோலையாகவும் இன்றும் திகழ்வது தென்மராட்சிப்
பிரே கும் இப்பிரதேசத்தின்
魏 அமைதியையும், மனநிறை இவையும் தன்னகத்தே பேணி ... م . يعية
**** இன்வரும்வரணி என்னும் திருவல் சிட்டிவேரம் ஒரு புண்ணிய பூமியாகும். இங்கு அரசு, ஆல், வேம்பு, சந்தனம், கொக்கட்டி, மா போன்ற தெய்வீக மரங்கள் அடர்ந்து ஓங்கி வளர்ந்த சோலையாக அமைந்துள்ளன.
புராதன காலந்தொட்டே புனித பூமியான இவ்விடத்தில் அமைந்த சக்தியின் ஆலயம் யாவரையும் கவர்ந்து அரவணைக்கும் அற்புதங்கள் நிறைந்துள்ளது. கண்ணகி வழிபாடு இலங்கையில் பல இடங்களிலும் ஏற்பட்டது. இவற்றுள் மக்களின் ஆதரவுக்கும், அன்னையின் அற்புதங்களுக்கும் உறைவிடமான இவ்வாலயம் மிகப் பிரசித்தமானது.
முற்காலத்தில் கோவலன் மதுரையில் கொலையுண்டதும் அவளது பதிவிரதையான கண்ணகி நீதிகேட்டு தனது கற்புக் கனலால் மதுரையை அழித்ததும் கற்பென்னும் மகாசக்தி தெய்வீகக் கோலத்தில் அமைதிபேணி இலங்கையை நாடியது. முதலில் காரைநகள் கல்லுவத்தை தொடர்ந்து மானிப்பாய் கட்டுடை (சீரணி), மட்டுவில், மண்டுவில் வரணி சிட்டிவேரம், கச்சாய், பொறிக்கடவை இறுதியாக வற்றாப்பழை போன்ற பல தலங்களில் தங்கி அமைதி பேணியதாக அறியலாம். அவ்வவ்விடங்களில் ஆன்மிக சிந்தனையுள்ள அடியார் களின் கனவில் தோன்றித் தம்மை ஆதரிக்குமாறும் அதனால் நாடு நலம்பெறுமெனவும் தெரிவித்தார். மேலும் புனிதமான முது கிழவி போல நேரில் வந்தும் அற்புதங்கள் பல செய்தும், அடியார் களிடத்தே அறச்சிந்தனையையூட்டியுள்ளார்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:52:- மூ.சிவலிங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்களும் அன்னையை ஆதரித்து அவரின் அரவணைப்பால் இன்றும் பலசெல்வங்களும் பெற்று நலமுடன் வாழ்கின்றனர்.
ஆரம்பத்தில் கண்ணகியைத் தெய்வீக நோக்குடன் வழிபட எண்ணிய இலங்கை மன்னன் முதலாவது கஜபாகு என்பவன் இந்தியாவிலிருந்து தன்னகம் செல்ல வரணியூடாகச் சென்றதாக நம்பப்படுகிறது. மன்னன் சென்ற வீதி ராஜதெரு என அழைக்கப் பட்டது. அதுவே பழைய கண்டி வீதியாக அமைந்தது. கஜபாகு மன்னன் கண்ணகியின் சிலையுடன் தம் பிரதேசத்தை நோக்கிச் செல்லும்போது கண்ணகியின் அற்புதத்தினால் கண்ணகி வழிபாடு எமது நாட்டிலும் அநேக இடங்களில் ஆரம்பிக்கப்பட்டது. கண்ணகி வழிபாடு இன்றும் பிரசித்தி பெற்றுச் சக்தியின் பெருமையை நிலை நாட்டியுள்ளது.
... in த்தில் தமிழகத்தைச் சேர் ffu ir Lui aG: சிட்டிபேரம் அம்பாளைப் பூசித்து வந்தனர். இந்த மரபில் வந்த ஒருவர் இவ்வாலயச் சூழலில் பனம்பழம் சேகரிப்பதன் பேரில் ஒரு கடகத்தில் அவற்றை நிறைத்த பின் கடகத்தைத் தலையில் வைக்க முற்பட்டார். ஆனால் தூக்க முடியாது அவதியுற்றபோது ஒரு கிழவி முன்வந்து அவருக்கு உதவினர். அவர் கிழவியிடம் நன்றியறிதலுடன் ன்பம் மரி ம் சேர இன்முகம் காட்டினர். கிழவியும் · விட்டார்.
அன்றிரவு ஒரு மூதாட்டி அவரின் கனவில் தோன்றித் தமது அமைவிடத்தைக் கோயிலாகக் கட்டி வழிபடுமாறு தெரிவித்தார். சக்தியின் சொப்பனம் ஊர்மக்கள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. சமயபக்தியில் ஆழத்தியது. யாவரும் கோயில் திருப்பணிக்கு எனத் தம்மாலான உதவிகளைச் செய்தனர். திருப்பணி C i நி ன்டு கும்பாபிே b drs QhUri அம்பாளுக்கு வேண்டிய பூசைகள், அபிஷேகங்கள், விழாக்களை அதி விமர்சையாகச் செய்து தமது பங்களிப்பை மக்கள் அர்ப்பணித்தனள், தொடர்ந்து புதிய சித்திரத்தேரும் உருவானது. சிவாகம விதிப்படி வேண்டிய மண்டபங்களும் அமைக்கப்பட்டன. ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் 2:SS - முசிவிங்கம்

Page 36
சைவக்குருமாரினால் ஆகம முறைப்படி தினமும் இரு நேரப் பூசைகள் நடைபெறுகின்றன. பிரதி திங்கட்கிழமை தோறும் விசேட பொங்கல் வழிபாடுகள் நடைபெறும். பங்குனி மாதத் திங்கள் நாட்களில் வெகுசிறப்பான அபிஷேகம், பூசை மற்றும் குளிர்த்தி ஆகியனவற்றுடன் விழாக்களும் நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்துடன் கூடிய 15 நாட்கள் அலங்காரப் பெருவிழாவும் நடை பெறுகிறது. இவ்வாலயத்தின் காவலரணாக எல்லாத் திசைகளிலும் எட்டு ஆலயங்கள் அமைந்துள்ளமை சக்தியின் பெருமையை எடுத்துக் காட்டுகிறது. இவ்வாலயத்தின் சிறப்பம்சமாக கோவலன் கண்ணகி வரலாற்று எட்டுச் சுவடிகள் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளதுடன் அவற்றைப் படித்தும் பயனடைகின்றனர். இவ்வூர் மக்களின் தூயநெறியால் சக்தியின் விரதங்கள், உரிய விழாக்கள் கடைப்பிடிக்கப்பட்டு அன்னையின் ஆலயத்தின் அற்புதங்களுக்கு மெருகூட்டப்படுகின்றன.
இவ்வாலயத்தில் சிறப்பாக ஆடிப்பூரம், நவராத்திரி, மானம்பூ, கேதாரகெளரி நோன்பு, தைமாத அமாவாசையில் அபிராமிப்பட்டர் விழா, பெளர்ணமி தோறும் திருவாசக முற்றோதல், அமாவாசை தோறும் அபிராமி அந்தாதி ஒததல் போன்ற சக்திக்குரிய விழாக்கள் விரதங்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சமய அபிவிருத்தியின் பேரில் அறநெறிப்பாடசாலை நடாத்திச் சிறார்களை நல்வழிப்படுத்துகின்றனர். இவ்வாலயத்தின் தொன்மையையும், அற்புதங்களின் சிறப்பையும் நன்கறிந்த இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தென்மராட்சியில் யாத்திரிகள் தலமாக அறிவித்துள்ளமை சக்தியின் திருவருளாகும்.
புராதன காலந்தொட்டே இயற்கையாகத் தெய்வீக மரங்களும் இடையிடையே செந்நெல்லும், செங்கரும்பும் ஓங்கி வளர்ந்து நாட்டில் வளம் சேர்கிறன. சிட்டிவேர்ம் என்றும் பெயர் நாளடைவில் மருவியதால் சுட்டிபுரம் என வழங்கப்படுகிறது. இச்சூழலின் இயற்கை வளங்களையும் அதனுடன் சார்ந்த விவசாயத் தொழிலையே சீவாதாரமாகக் கொண்டு வாழ்ந்த நற்குடிமக்கள் தமது தேவை கருதி இல்லங்கள் தோறும் கால்நடைகளையும் பேணிவருகின்றனர். ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:54:- மூசிவலிங்கம்

அடர்ந்த புல்நிலங்களில் தமது பட்டிப்பசுக்களையெல்லாம் ou விட்டு பசுக்களின் சகல செல்வங்களையும் அனுபவிக்கின்றனர்.
இந்த நவீன உலகில் வாழும் இப்பதிவாழ் மக்கள் தமது பெருமையைத் தொலைத்தொடர்பு சாதனத்திலும் ஏட்டிலும் பதிவு செய்து ஆவணப்படுத்த எண்ணினர். தமது மண்ணின் வாசனை சக்தியின் அற்புதம், செய்தொழிலின் சிறப்பு யாவற்றையும் பதிவு செய்ய முற்பட்டனர். முத்தமிழில் வல்ல தெய்வீகக் கவிஞரான இணுவில் வீரமணி ஐயர் மூலம் சுட்டிபுரம் அம்பாள் மீது பாடல்கள் படைப்பித்து ஒலிநாடாவில் பதிவுசெய்தனர். முன்னைப் பழமையையும் பின்னைப் புதுமையும் ஒன்றுசேர்க்க கவிமாமணி சீர்காழி கோவிந்தராஜனினால் இத்தலத்தில் இசைமழை பொழிவிக்கப்பட்டது.
இப்பாடலில் சுட்டிபுரம் அம்பாளின் வரலாறு, அற்புதங்கள், நாட்டுச்சிறப்பு, சோலை, அழகுடன் மண்வாசனை குடிமக்களின் மாண்பு, பட்டிப் பசுவினங்கள் யாவும் அமைந்து இல்லங்கள் தோறும் சக்தியின் புகழை இசைமழையாகக் கேட்க முடிகிறது. இவ்வாறு ஆவணப்படுத்துவதில் ஆன்மிகம் பரவுகிறது. எதிர்காலச் சந்ததியினரும் சக்தியின் பெருமையை ஆவலுடன் அணுக இறையருள் கைகூட்டும்.
O SŽDD Osip D GisgoÐ
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண் புஞ்சுக்கு நேர்பல தன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ 'வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்த ரெல்லாம் தஞ்சமென் றேயுரைப் பீர் அவளர் பேர் சக்தி
ஒம சக்தி ஓம்சக்தி ஓம்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:55:- முசிவிங்கம்

Page 37
லுல்வெடித்துறை முத்துறரரியற்பூரர் திருத்தலம்
mis தமிழ் மன்னர்களல் யாழ்ப்பாணம் ஆட்சிசெய்யப்பட்ட காலத்தில் (வடமறவர் ஆட்சி) வடமராட்சி பெருநிலப்பரப்பில் கடல் வணிக நகரமாக வல்வெட்டித்துறை திகழ்ந்தது.
கருணாகரத் தொண்டைமான் தமது காலத்தில் எம்மண்ணில் விழைந்த உப்பை இலகுவாகக் கரைசேர்ப்பதன் பேரில்
சிறந்த கால்வாயை வெட்டுவித்தான். "அவனின் பெயரால் இக்கால் வாயப் தொண்டைமானாறு என்னும் பெயரில் பல சிறப்புகளையுமுடைய வடமராட்சியை அலங் கரிக்கிறது.
தமிழ் மன்னர்கள் தமது குன்றாத சிவநெறியின் பேரில் யாழ் மண்ணில் சைவசமயத்தை வள்த்க எண்ணிப் பல வழிபாட்டுத் திருத்தலங்களை அமைத்துத் தாமும் நெறிதவறாது வழிபட்டு மக்களையும் வழிபட உதவினர். தமிழ் மன்னர்கள் தமது எக் காரியத்தை ஆரம்பிக்கும்போதும் தெய்வவழிபாடு செய்தே ஆரம்பிப்பர். போருக்குச் செல்லும்போது பெண் தெய்வமான மாரியம்பாளை வழிபட்டு அன்னையின் அருளும் ஆசியும் பெற்று வீரத்திலகமிட்டு வீறுநடையுடன் போரை எதிர்கொண்டு வெற்றிவாகை சூடியும் வந்தனர்.
இத்தமிழ் மன்னர்கள் காலத்தில் சிவநெறியுடன் தமிழ்மரபும் அறப்பணி மூலம் பொருளிட்டலும் எம்மண்ணில் சிறப்படைந்தன. சிவநெறியும் தமிழ்மரபும் அறப்பணியும் நற்பொருளிட்டலும் வாழ்வாதாரப் பணிக்கான விவேகமும் சுறுசுறுப்பும் எம்மண்ணில் இன்றும் நிலைத்துநின்று எமது யாழ் மக்களைப் பார்போற்றும் பாரம்பரியத்தில் பதிய வைத்துள்ளது.
அக்காலத்தில் இந்தியத் தென்பகுதித் துறைகளுக்கும் வடமராட்சித் துறைகளுக்கும் இடையேயுள்ள கடற்பாதையின் தூரம் ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:56:- pിഖിs
 

குறைவாக இருந்ததன் காரணமாக வல்வெட்டித்துறையிலிருந்து மக்கள் வள்ளங்களின் மூலம் வணிகப்பொருட்களை ஏற்றி
இறக்குவதுடன் மக்களின் அன்றாடப் பிரயாணத்தையும் நிறைவு செய்தனர். வல்வெட்டித்துறை வள்ளமோட்டிகள் இந்தியக்கரை சென்று திரும்பும்வேளை ஒரு மூதாட்டி ஒரு வள்ளமோட்டியை அணுகினார். தன்னை இலங்கைக் கரையில் சேர்ப்பிக்குமாறு மூதாட்டி கேட்டதன் பேரில் வள்ளமோட்டி மூதாட்டியை வல்வெட்டித்துறைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்.
வள்ளத்தின் மூலம் வல்வெட்டித்துறையை வந்தடைந்த மூதாட்டி மறைந்துவிட்டார். ஒருநாள் இரவு ஒரு புனிதமான இடத்தில் ஒரு அற்புதமான பேரொளி தோன்றியது. மக்கள் யாவரும் இப் பேரொளியைக் கண்டு பரவசமடைந்து வியந்தனர். அம்மக்களின் பேரவாவின் விளைவினால் அவ்வொளி தென்பட்ட இடத்தில் ஒரு பெண் தெய்வமே காட்சிதந்தது என அறிந்தனர். அப்புண்ணிய பூமியில் ஒரு குடிசை அமைத்து யாவரும் பயபக்தியுடன் வழிபட்டு வந்தனர். அன்னையும் பக்தர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து மாரி மழைபோல அனைவருக்கும் வேண்டியனவற்றையெல்லாம் வாரி வழங்கினர். மக்களும் மாரிபோல வாரி வழங்கிய அம்பாளை மாரியம்பாள் என மேன்மேலும் போற்றி வழிபட்டு வாழ்வாங்கு வாழ்ந்தனர்.
வல்வெட்டித்துறையில் வந்தமர்ந்து குடிகொண்ட மாரி அம்பாள் வாரிவழங்கிய காரணத்தால் வடமராட்சியில் கடல் வணிக மூலம் பெரும் செல்வம் பெருகியது. கல்விச் செல்வம் மேலோங்கியது. அறம் வளர்ந்தது. அம்பாளின் மகிமையும் பெருமையும் மேலோங்கியது. நாடு நலமடைந்து நற்புகழ் பெற்றது. யாழ் மண்ணில் வல்வெட்டித்துறை சகல செல்வங்களுக்கும் உறைவிடமானது.
இப்பொற்காலத்தின் பேரிடியாக இலங்கைக்கு வந்த அந்நியரின் படையெடுப்பினால் எம்மண்ணில் வழிபாட்டுடன் தமிழ் மரபும் ஆலயங்களும் சின்னாபின்னமாகியது. அந்நியரின் ஆட்சியில்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 57 :- மூ.சிவலிங்கம்

Page 38
ஏறக்குறைய 250 ஆண்டுகள் இருளடைந்திருந்தது. பதினெட்டாம்
நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சிமாற்றங்கள் ஏற்படவும் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டது. தம் மனம் மாறாத மக்கள் தம் மதம் மாறாது மாரியம்பாளின் திருத்தலத்தை புதியதாக்கிப் புதுப்பொலிவில் அமையும் புதுமையை நாடினர்.
நல்லகாலம் வந்ததும் தமது சமயநெறியைத் துலக்க எண்ணி வழிபட்ட வல்வெட்டித்துறை மக்களை மாரியம்பாள் ஆசீர்வதித்தார். அக்காலத்தில் இங்கு கடல் வணிகம் கொடிகட்டிப் பறந்தது. வல்வெட்டித்துறை குபேர நகரமானது. மக்களும் தமக்கு இன்னருள் புரிந்த அன்னையின் அழகிய ஆலயத்தை அகப்பொலிவுடன் ஆதரிக்கத் தொடங்கினர்.
முற்காலத்தில் இவ்வாலயத்தில் திருக்குளம், கிணறுகள் நிறுவப்பட்டிருந்தன. மேலும் ஆலயத்தின் பிரதான மண்டபங்களும் அமைந்து சிறப்பித்தன. மக்கள் சைவாகம முறைப்படி தாம் வணங்குவதற்கேற்ப கருவறை மற்றும் பிரதான மண்டபங்களுடன் பரிவாரமூர்த்தங்களுக்கான தனிச் சந்நிதிகள், நந்திபலிபீடம் யாவற்றையும் காலத்துக்குகாலம் நவீன முறையில் எழில்தரும் வண்ணக்கோலத்தில் அமைத்தனர்.
அம்பாளின் திருவருளும், அடியார்களின் அயராத அறப் பணியின் ஆர்வமும் மேலிட யாவும் பூர்த்தியானது. 1935 ஆணி மாதம் இருபத்திநான்காம் திகதி குடமுழுக்கும் நடைபெற்றது. திருப்பணிகள் தொடவுரம், 1943 இல் பெரிய மணியும் நிறுவப்பட்டு அழகிய மணிக்கோபுரமும் அமைந்தது. 1952 இல் உள்வீதி மண்டபங்களும் பூர்த்திசெய்யப்பட்டன.
1957 இல் முன்பிருந்த கோபுரம் இடிக்கப்பட்டு கருங் கல்லினாலான புதிய இராஜகோபுரம் புதுப்பொலிவுடன் அமைக்கப் பட்டது. அந்தணப்பெருமக்கள், அறங்காவலர்கள், தொண்டர்கள், பக்தர்கள் யாவரும் அன்னையின் சக்தியால் கட்டுண்டு அம்பாளின்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -38- மூ.சிவலிங்கம்

ஆலயத்தை மேலும் சிறப்பிக்கத் தம்மாலான அரும்பணிகளை நெறிதவறாது ஆற்றிவருகின்றனர். இவர்களின் தூயசேவையையும் அன்னையின் பெருங்கருணையும் இத்திருத்தலத்தின் கவர்ச்சியான தோற்றமும் ஆலயத்துக்கேற்ற புனிதமும் ஊருக்கே பெருமை சேர்க்கிறது.
நித்தியபூசைகள், அபிஷேகங்கள், விழாக்கள், பெருவிழாக்கள் யாவும் பக்திசிரத்தையுடன் நடைபெறுகின்றன. உருவேறத் திருவேறும் என்றாற்போல யாவரும் உள்ளன்புடன் வழிபட்டு அன்னையின் அருளுக்காக ஏங்கி நிற்கின்றனர். பக்தர்களின் சிறந்த வழிபாட்டில் மகிழ்ந்த மாரியம்பாளும் தமது பெருங்கருணையை வாரிவழங்குகிறார்.
வல்வெட்டித்துறையில் உறைந்துள்ள முத்துமாரியம்பாளின் வற்றாத பெருங்கருணையால் மக்கள் யாவரும் பல செல்வங்களையும் பெற்று தூயசிந்தனையுடன் அறப்பணிகள் பல செய்து இம்மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்றனர். மக்களின் வேண்டுதலுக்கேற்ப வேண்டியவற்றை வாரிவழங்கும் மாரியம்பாளின் புகழ் திக்கெட்டும் பிரகாசிக்கிறது.
Gooc) gloo Q Spe)
நல்லதந் தீயீதஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள் அல்லதர் நீங்கும் என்றே யுலகேழும்
அறந்தி டுவா முர சே! சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு
சொல்லு மவர் தமையே! அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம் சக்தி ஓம் சக்தி ஒழ்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 59 :- மூ.சிவலிங்கம்

Page 39
KD ●,
em 26b6ólugayroco a seivaxy 8 eiburcir
aqbigjeob
ஈழத்திருநாட்டின் தலைபோல அமைந்தது சைவமும் தமிழும் ஒன்றிய யாழ்ப்பாணம். இத்தலைசிறந்த யாழ்ப்பாணத்தில் பல சிறப்பான கல்விமான்களையும் பல சமயப் பெரியார்களையும், உழைப்பால் உயர்ந்த உத்தமர்களையும் தன்னகத்தே தோற்றுவித்து இலங்கையின் மூளையெனத் திகழ்வது வடமராட்சிப் பிரதேசமாகும். விவசாய நிலங்களையும் கடின உழைப்பாளிகளையும் வாழ்வாங்கு வாழவைத்த வதிரித் திருவுபூரில் உல்லியனொல்லை என்னும் பகுதியில் உறைந்து அருள்பாலிப்பவர்தான் உல்லியனொல்லை கண்ணகி அம்பாள்.
2
வடமராட்சியின் கட்டைவேலி கோயிற்பற்றில் வதிரிக் கிராமம் தெய்வீகம் நிறைந்த பெருமை பெற்றது. அன்னையின் பேரருளினால் நற்பயன் தரும் கனிமரங்களும் விவசாயப் பெருநிலப்பரப்பும் அணி செய்யும் உல்லியனொல்லையில் வாழ்ந்த மக்கள் பண்டுதொட்டே தாம் தேடிய தேட்டத்தை மண்ணில் புதைத்து வைக்காது தமது வாழ்வின் சிறப்பாகப் பகுத்துண்டு வாழ்ந்தனர். தம்மை நாடி வந்தவர்களை அரவணைத்து அன்புடன் உபசரித்து வேண்டியன தந்து இன்புற்றனர். இதனால் இன்றும் இப்பிரதேசம் சிறப்புடன் திகழ்வது இவர்களின் தூயவாழ்வின் பிரதிபலிப்பேயாகும்.
இற்றைக்கு இருநூற்றைம்பது வருடங்களுக்கு முன் உல்லியனொல்லைப் பகுதியிலுள்ள தூய்மையான வேப்பமரமிருந்த சூழலில் ஒரு வயோதிபத் தம்பதியினர் சிறுகுடிசையில் வாழ்ந்து வந்தனர். இவ்வேப்பமரச் சூழலும், தூயநெறிபேணிய தம்பதியினரின் புனித வாழ்வும், இம்மண்ணின் தெய்வீக சக்தியும் யாவரையும் கவர்ந்தது.
ஒருநாள் அறவாழ்வில் நிறைந்த ஆத்மதிருப்தியுடன் அவர்கள் ஒய்வாக இருந்தனர். அச்சமயம் வெள்ளைநிறச் சேலையும், பஞ்சு போல நரைத்த தலைமுடியும் அருளொளி வீசும் தோற்றமும் கொண்ட ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 60 :- மூ.சிவலிங்கம்

அழகிய மூதாட்டி ஒருவர் அவர்கள் முன் தோன்றினர். தான் கடல் கடந்து இவ்விடம் வந்ததாகவும், இக்குடிசையில் தான் இருக்கப் போவதாகவும் கூறிவிட்டு மறைந்தருளினர்.
இயற்கையாகவே அடுத்தவருக்கு உதவும் அரிய குனம் உடைய தம்பதியினர் தம்மை நாடிவந்தவர் ஒரு தெய்வ மகளிராக இருட் எண்ணிப் பொகமி ந்தனர். வந்தவள் தம் Tä
வந்த மூதாட்டியின் தோற்றத்திலும் செயலிலும் அவரை ஒரு தெய்வமாகவே எண்ணி அச்சூழலிலுள்ள அனைவரும் வியப்புற்றனர். அன்று முதல் அச்சிறு குடிசையை ஒரு புனிதமான ஆலயமாகக் கருதி யாவரும் அகப்புறத் தூய்மையுடன் அவ்விடம் வந்து வழிபட்டனர். இக்கிராமத்தை வதிரியம்பதி எனவும் அழைத்தனன். வந்த மூதாட்டியின் உருவத்தையும் செயலையும் கண்ட மக்கள் ‘உல்லியனெல்லை கண்ணகி அம்பாள் என விதந்துரைத்து அவ்விடத்தில் நன்கு வழிபட்டு வந்தனர். அப்பகுதி வாழ் சைவாபிமானிகளும் இச்செயலை நன்கு வரவேற்றனர்.
கண்ணகி அம்பாளைச் சிந்தனையில் இருத்திய மக்களின் அபார பக்தியும், தூய வழிபாடும் அன்னையின் சித்தத்தை நெகிழ வைத்தது. அன்னையும் தம்மை ஆதரித்து வழிபடும் மக்கள் மீது கருணையுடன் அருள்பாலித்ததால் மக்கள் யாவரும் தம் துயர் நீங்கி இன்புற்றனர். மக்கள் யாவரும் கல்விச்செல்வம், பொருட் செல்வம், புத்திரச்செல்வம் மிகுந்து காணப்பட்டனர்.
மக்களிடையே அறம் வளர்ந்தது. யாவற்றையும் தமக்கென எண்ணாது யாவர்க்குமாம் என்பதைச் செயற்படுத்தினர். இதனால் மக்களிடையே நல்லுறவாம் கூட்டுறவும் அன்பும் நற்பண்பும் தோன்றியதால் சிறப்பான வாழ்வை அனைவரும் அன்னையின் அருளல் அனுபவித்தனர்.
கல்வியறிவால் பகுத்தறிந்து நாட்டுக்கு நலம்தேடி நற் பொருளிட்டி சகல செல்வங்களையும் பெற்று நல்லறம் போரினர். இங்கு குடிகொண்டுள்ள கண்ணகி அம்பாள் யாவரையும் நன்கு ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் - எ :- முசிவிங்கம்

Page 40
சிந்தித்துச் செயலாற்றி அறங்கள் பல செய்து வாழ்வாங்கு வாழ அருளினார். அன்னையின் அருள்பெற்ற அனைவரும் ஆலயத்தைச் சிறப்பிக்க முன்வந்தனர்.
வதிரியைச் சேர்ந்த கனகசிங்கமுதலியாரின் பரம்பரையினரே வாழையடி வாழையாக வந்து இவ்வாலயத்தின் திருப்பணியை அறப் பணியாக எண்ணி மேம்படுத்தினர். இவர்களின் திருப்பணிக்கு இவ்வூர் மக்களும், வெளிநாடுகளில் வாழும் இவ்வூரவர்களும் உதவிக்கரம் நீட்டினர்.
ஆரம்பத்தில் வேப்பமர நிழலிலிருந்த சிறுகுடிசையான ஆலயம் அடியார்களின் அறப்பணி காரணமாகக் கற்கோயிலாக மாறியது. கருவறை, பிரதான மண்டபங்கள் தோன்றின. கோயில் புனரமைக்கப்பட்டதும் ஆவணிமாத ரேவதி நட்சத்திரத்தன்று குட முழுக்கு நடைபெற்றது. இத்திதியை மையமாக வைத்தே பதினான்கு நாட்கள் அலங்கார உற்சவமும், பதினான்காம் நாள் தேர், தீர்த்தத் திருவிழாக்களும் வருடாவருடம் நடைபெறுகின்றன.
அடியார்களின் பக்திமேலீட்டினால் ஆகம விதிப்படி அமைய வேண்டிய திருப்பணிகள் தொடர்ந்தன. 1987ம் ஆண்டு தை மாதம் (09.02.1987) மகா கும்பாபிஷேகம் இறுதியாக நடைபெற்றது. பூசைகள், அபிஷேகங்கள், விழாக்கள் கிரமமாக நடைபெற்று வருகினறன.
அறங்காவலர்களின் விருப்பின்பேரில் மேலுவம் திருப்பணிகள் நடைபெற்று யாவும் சிறப்புடன் திகழ்கின்றன. எம்மண்ணில் ஏற்பட்ட பல அனர்த்தங்களின் மத்தியிலும் கண்ணகி அம்பாளின் பெருங் கருணையும், அடியார்களின் தாராளசிந்தையும் பக்தியும் மேலிட ஆலயப்பணிகளான பூசைகள், விழாக்கள் யாவும் கிரமப்படி நடைபெறுவது நாட்டின் பெரும்பேறாகும்.
QSðO Q>?E) Qx?O
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 62 :- மூ.சிவலிங்கம்

NA
QhOnÜUSDP SsörsYß EdDér BGHGeoid
செல்வங் கொழிக்கும் வன்னிப்பெரு நிலப்பரப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்தது வற்றாப்பழை என்னும் அழகிய கிராமம். கிழக்கே நந்திக்கடலும், மறுபக்கம் செந்நெற் களஞ்சியமான நீண்ட வயல்வெளியும், எழில் கொஞ்சும் சோலை களும் இக்கிராமத்தைச் சூழ்ந்து அணிசெய்கின்றன. இப்புண்ணிய பூமியில் அமைந்து மக்களுக்கு அருளாட்சி புரியும் கண்ணகி அம்மன் பல அற்புதங்களையும் காண்பித்தார்.
மதுரையிலே கோவலன் கொலையுண்டான். கோவலனின் பதிவிரதையான கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டுத் தனது கற்புக்கனலால் மதுரையை எரியூட்டினார். தமது கற்பென்றும் சக்தியால் தெய்வீகக்கோலமாக மாறி மன அமைதியை நாடினார். மன அமைதிக்கு ஈழத்துச் சோலைகள் அவரை வரவேற்றன. முதலில் காரைநகரில் இருந்த சோலைகளில் ஒய்வெடுத்து வேறிடங்களையும் நாடினார். இவ்வாறு பல இடங்களில் தங்கியிருந்தார். நிறைவாக வற்றாப்பழையை வந்தடைந்தார். இவர் தங்கிய எல்லா இடங்களிலும் தம்மை ஆதரிக்குமாறு கூறிப் பல அற்புதங்களையும் நிலை நாட்டினார். ஊர் மக்களும் கண்ணகியை உள்ளன்போடு வணங்கிச் சிறப்பான கோயில்கள் கட்டி வழிபட்டனர். கண்ணகி வழிபாடு இன்று பல்வேறு இடங்களிலும் சிறப்படைந்துள்ளமை சக்தியின் பேரருளாகும்.
அன்னை வற்றாப்பழையிலுள்ள சோலைதனில் தமது மகிமையை மக்களுக்குக் காண்பிக்கச் சித்தங்கொண்டார். நந்திக் கடலோரப் புற்தரையில் இடைச்சிறுவர்கள் வழமைபோல மாடுகளை மேயவிட்டு அயலிலுள்ள பாலை மரச்சோலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். உடல் முதுமையால் தளர்வுற்று கையிலேந்திய தடியை ஆதாரமாக ஊன்றிய வண்ணம் வெள்ளை வெளேரென நரைத்த தலையுடன் வெள்ளை நிறச் சேலை அணிந்த முதுகிழவியாக விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை நாடிவந்தார். நடக்கமுடியாது தள்ளாடிய மூதாட்டியை கண்ட சிறுவர்கள் அவரை நோக்கினர். ஒடிச்சென்று ஆச்சி என்று அன்புடன் அழைத்து வந்து
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 63 :- மூ.சிவலிங்கம்

Page 41
கலப்பைக்காக வெட்டிய வேப்பமரப் படுவாளின் மீது இருத்திக் குசலம் விசாரித்தனர். களைப்பு மிகுந்திருந்த பாட்டி தமக்குப் பசிக்கிறதெனக் கூறினார். சிறுவர்கள் பாட்டிக்குப் பொங்கலிட்டுப் பசிதீர்க்க முற்பட்டனர். தமது மேய்ந்துகொண்டிருந்த மாடுகளில் பால்கறந்து கொண்டனர். தாம் வழமையாகப் பொங்குமிடத்தில் அவசரஅவசரமாகப் பொங்கி முடித்தனர். ஆச்சிக்குப் பொங்கல் வழங்குவதற்கு இலை தேடி அங்குமிங்கும் அலைந்தனர். பின்னர் அயலிலிருந்த விடத்தல் மரத்திலிருந்து இலைகளைப் பிடுங்கி வந்து ஆச்சியிடம் கொடுத்தனர். அவர் அவ்விலைகளை ஒன்றுடன் ஒன்றாக இணையத் தைத்துத் தட்டாக்கி அதனுள் தமக்குப் பொங்கலைத் தருமாறு கேட்டார். சிறுவர்கள் முதலில் ஆச்சிக்குப் படைத்து மகிழ்ந்தனர். தாமும் ஒன்றுகூடிப் பொங்கலை உண்டு பசியாறினர். ஆச்சியுடன் சிறுவர்களும் பசியாறியதும் களைப்பு நீங்கி உற்சாகமடைந்தனர்.
இதேசமயம் மூதாட்டி சிறுவர்களை நோக்கித் தமக்குப் பேன் கடிப்பதாகவும் பேன் எடுத்துவிடுமாறும் கேட்பர். சிறுவர்களும் பாட்டிக்கு உதவமுன்வந்தனர். அவர்கள் பாட்டியின் தலையை விரித்தபோது தலை எல்லாம் கண்களகக் காட்சியளித்தன. சிறுவர்கள் கண்டதும் பயந்து பாட்டியிடம் இதனைத் தெரிவித்தனர். அவரும் இதுபற்றிப் பதற்றமடையாது ஊர்மக்களுக்குத் தெரிவிக்குமாறு கூறினார். சிறுவர்கள் விரைவாகச் சென்று அயலில் உள்ள ஊர்மக்களுக்குத் தெரிவித்தனர். யாவரும் ஓபோடி வந்தபோது ஆச்சி அவ்விடத்திலிருந்து மறைந்துவிட்டார். ஆச்சி அமர்ந்திருந்த வெட்டிய வேப்பமரமான படுவாளை நோக்கினர். அந்தப் படுவாள் தளைத்திருந்ததைக் கண்டதும் யாவரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த அற்புதங்களை நேரில் கண்டும், கேட்டும் வியந்த மக்கள் மூதாட்டி அமர்ந்திருந்த வேப்பமரத்தடியில் ஒரு குடிசையை அமைத்து வழிபட்டனர். சக்தியின் அற்புதங்களை அறிந்த பொதுமக்கள் வருடாவருடம் வைகாசிப் பூரணையை அண்டிய திங்கட்கிழமையில் பொங்கலிட்டுப் பெருவிழாவாகக் கொண்டாடு கின்றனர். இதனால் நாடு நலம்பெறவும், மக்கள் பலவளங்களும், பதினாறு பேறும் பெற்று நிறைவுடன் வாழ்ந்தனர். சக்தி வழிபாட்டின் ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -:64:- மூசிவலிங்கம்

பெருமையை உணர்ந்த பொதுமக்கள் பல இடங்களிலிருந்தும் வருடாவருடம் பொங்கவும், திருப்பணிகளைச் செய்யவும் தலைப் பட்டனர். சிறுகுடிசையிலமைந்த வற்றாப்பழை கண்ணகி அம்மன் கோயில் இன்று ஆகம விதிகளுக்கமைவான பிரதான மண்டபங் களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் பிற வீதிகளில் சிறப்பான அன்னதான மண்டபங்களும் அமைந்து இத்திருத்தலத்தை அலங்கரிக்கின்றன.
கண்ணகி அம்பாளின் அற்புதங்களில் தம்மையே பயபக்தியுடன் அர்ப்பணித்த வன்னிப் பெருங்குடிமக்கள் வருடாந்தம் பொங்கல்விழா எடுப்பதில் ஒரு தனிச்சிறப்புண்டு. வழிபாட்டில் தமக்கே உரியவையான பழைய பாரம்பரிய நம்பிக்கையைத் தொடர்ந்தும் ஆசாராமுறைப்படி பேணி வருவது அவர்களின் குலமரபின் தனிச் சிறப்பாகும். தம்மையெல்லாம் பலவகையிலும் சிறப்புடன் வாழ வைத்த தெய்வத்துக்கு வருடமொருமுறை பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்வடைகின்றனர். வைகாசி மாதம் வந்ததும் வன்னி மக்களின் இல்லங்கள் யாவும் குதூகலத்துடன் செயற்பட ஆரம்பிக்கும்.
வைகாசி மாதப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல்விழா நடப்பதை இருவாரங்களுக்கு முன்பே பாக்குத் தெண்டல் என்னும் நிகழ்ச்சி மூலம் வற்றாப்பழை கண்ணகி அம்மன் கோயில் உரிமையாளர்களுக்கு ஞாபகமூட்டுவர். அடுத்த திங்கள் பொங்கல் திகதிக்கு ஏழு நாட்கள் முன்பான திங்கட்கிழமை கடலில் தீர்த்தமெடுத்து விளக்கேற்றும் வைபவம் நடைபெறும். இக்கோயில் விழாவுக்கென அரும்பணியாற்றுவதற்கென்றே நியமித்த குலத்தவர் ஒருவர் புதிய மண்பானையுடன் புறப்படுவார். அவரைத் தொடர்ந்து கோயில் உரிமையாளர்களும், பூசகரும் முல்லைத்தீவின் அண்மையில் உள்ள சிலாவத்தைக் கடற்கரையில் வழமையாகத் தீர்த்தம் எடுக்கும் இடத்தில் புதுப்பானையில் தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாகத் திரும் புவார்கள். இவர்கள் தீர்த்தம் எடுத்துக் கொண்டு முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தை வந்தடைவர். வந்ததும் தீர்த்தப் பானையில் வெள்ளைத் துணியிட்டுத் தீபமேற்றுவர்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 65 :- மூ.சிவலிங்கம்

Page 42
பின்னர் பூசகரும், கோயில் பணியாட்களும் காட்டுவிநாயகள் ஆலயத்திலிருந்தே கண்ணகை அம்மன் கோயில் பொங்கலுங்கான ஆயத்தவேலைகளைச் செய்வர். அடுத்துவரும் ஞாயிறு இரவு பூசகள் சிலம்பு, வெள்ளைப்பிரம்பு ஆகியவற்றுடன் முன்செல்ல கோயில் பணியாட்கள் விளக்கு, மட்பாண்டங்கள் யாவற்றையும் எடுத்துக் கொண்டு வற்றாப்பழை கண்ணகி அம்மன் கோயிலை நாடிச்செல்வர். இவர்களை கோயில் உரிமையாளர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் செல்வர்.
யாவரும் கண்ணகி அம்மன் கோயிலை வந்தடைந்ததும், பூசகர் தமது பொங்கல் விழாவுக்கான கடமைகளைச் செய்வார். மண்டபத்தில் சிலம்பு கூறும் படலம் ஆரம்பமாகும். சிலம்புகூறல் என்பது கோவலன் பாண்டிய மன்னனின் அரண்ம்னையில் கொலையுண்டதும் கண்ணகி தன் ஒற்றைச் சிலம்புடன் அரசசபையில் நீதிகேட்டு வாதாடியும் நீதிதவறிய மன்னனும் ராணியும் இறக்கவும், கண்ணகியின் கற்புக் கனலால் மதுரை எரிந்து அழியவும் கண்ணகியின் கற்பென்னும் சித்தியால் தெய்வமான பகுதியைச் சிலப்பதிகாரம் என்னும் நூலிலிருந்து படித்துப் பயன்சொல்லுவர். கற்றறிந்த கல்விமான்கள் இப்பணியில் இணைந்து இப்பாரம்பரிய நிகழ்வைச் சிறப்பிப்பர். ஒருவர் படிக்க அடுத்தவர் அதன் பொருளை விரிவாக விளக்குவார். இந்நிகழ்வு திங்கள் இரவுவரை நீடிக்கும். படிப்பவர்களும் பயன்சொல்வோரும் ஒருவர் பின் மற்றவராக அமர்ந்து புராணபடனத்தை நிறைவேற்றுவர். முதியோர்கள் உட்படப் பலர் கூடியிருந்து கேட்டு இன்புறுவர். தெய்வநிலையை அடைந்த கண்ணகி கோபம் தணிந்து பல இடங்களிலும் தங்கியபின் வற்றாப்பளையில் உறைந்துள்ளார் எனப் புராணவரலாறுகள் செப்புகின்றன.
பல அற்புதங்களைச் செய்த அன்னை கண்ணகியை மகிழ்விப்பதன் பேரில் வருடாந்தப் பொங்கல்விழா வெகுசிறப்பாக நடைபெறுகிறது. அக்காலத்தில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் மாட்டுவண்டில் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்று பொங்கலிட்டு மனநிறைவடைவர். அம்பாளின் பொங்கல் விழாவின்போது இரவிரவாக வீதிகளில் ஆடல், பாடல், கரகம், காவடி, கும்பி போன்ற ஆன்மிகக் கலைநிகழ்வுகள் கண்கொள்ளாக்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 66 :- மூ.சிவலிங்கம்

காட்சிகளாகும். இவை யாவும் கண்ணகி அம்பாளின் திருவருளினாலேயே இனிது நிறைவடைகிறது.
மாமன்னன் பண்டாரவன்னியனின் ஆட்சிக்காலத்தில் முல்லைத்தீவை நிர்வகித்த பொறுப்பாளரான நெவில் என்னும் வெள்ளையன் வற்றாப்பழை கண்ணகி அம்பாளின் கோயிலை இடிப்பதன் பேரில் தமது போர் வீரர்களுடன் குதிரையில் வந்திறங்கினான். வந்தவர்களின் நோக்கமறிந்த ஆலயபூசகள் பல புதுமைகளைச் செய்த இக்கோயிலை இடிக்கவிடாது வாதிட்டார். சற்றுச் சிந்தித்த வெள்ளையன் மறுதினம் வரும்போது இந்த அம்மன் புதுமை செய்யாவிட்டால் தமது திட்டம் செயற்படுமெனக் கூறிச் சென்றான். அன்று பூசகர் நேர்ந்த கதியை அன்னையிடம் முறையிட்டார். அன்றிரவு பூசகரின் கனவில் தோன்றிய அன்னை கோயிலிலிருக்கும் வெள்ளிப்பிரம்பை எடுத்துச்சென்று முன்பாகவுள்ள பணிச்சம்மரத்தினை வலம்வந்து பிரம்பினால் ஒருதரம் மரத்தின் மீது தட்டுமாறு கூறி மறைந்தருளினார்.
குறிப்பிட்டபடி வெள்ளையன் வந்ததும், பூசகள் கோயிலுனுள் சென்று பிரம்பை எடுத்துவந்து பனிச்சம்மரத்தை வலம்வந்து ஒருமுறை பிரம்பினால் மரத்தில் தட்டினார். அம்பாளின் அற்புதத்தினால் பல காய்களுடன் செழுமையாகப் பரந்துநின்ற பணிச்சமரம் பலமாக ஆடத் தொடங்கியது. மரத்தின் காய்கள் வெள்ளையன் மீது குண்டுகள் தாக்குவது போலப் பலமாக விழுந்தன. இதனால் பயமும் வேதனையும் அடைந்தவன் தான் தப்பினால் போதும் என எண்ணிக் குதிரை மீதேறிப் பாய்ந்தோடினான். அவன் நந்திக்கடலூடாக முல்லைத்தீவை நோக்கி ஓடிய இறக்கம் கோடைகாலத்தில் நன்கு புலப்படும். இவன் குதிரையுடன் பாய்ந்தோடிய இறக்கம் இன்றும் குதிரை பாய்ந்த இறக்கம் என அழைக்கப்படுகிறது. இந்த அற்புத நிகழ்வின் பின் இந்தப் பணிச்சம்மரம் காய்ப்பதில்லை.
வற்றாப்பழை கண்ணகி அம்பாளின் வைகாசிப் பொங்கல் விழாவில் வோறொரு விசேடத்தையும் அறியலாம். நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து கதிர்காமப் பெருவிழாவைத் தரிசிக்க நடை பவனியாகச் செல்லும் பல அடியார்களும் இப்பகுதியில் ஒன்று ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 67 :- மூ.சிவலிங்கம்

Page 43
கூடுவர். யாழ்ப்பாணத்திலிருந்து கரையோரப்பாதை வழியே கதிர்காமம் செல்லும் அடியார்களும் இங்கு சங்கமமாவர். சிவநெறி ஓங்க, நாடு செழிப்புற, தீமைகள் அகல, திருத்தல யாத்திரையைப் பாத யாத்திரையாக ஏற்று கரையோரப்பாதை வழியே கதிர்காமம் செல்லுமுன் வற்றாப்பழை அம்மனை வணங்கி ஆசிபெற்று ஒரு சுபதினத்தில் ஒரே அணியில் தமது சிந்தனையையும் ஒருமனதுடன் ஒருங்கமைத்து ஆரம்பிப்பர்.
சக்தியின் அற்புதங்களில் திருத்தல யாத்திரிகள்களுக்கு ஆசிவழங்குவதுடன் அவர்களுக்குத் தீமைகள் ஏதும் நிகழாமல் காப்பவரும் அன்னையேயாவார். நெஞ்சிற் கறைபடியாத தூய சிந்தனையுடன் தம்மை நாடி வரும் அடியார்களுக்கு வேண்டுவன வழங்கி அனைவரையும் வாழ்வாங்கு வாழவைப்பதும் சக்தியின் அற்புதங்களாகும்
Go (550 cc) . Go >>>p o Go >>Goc)
கலையாத கல்வியும் குறையாத வயமுமோர்
கபடுவா ராத நட்பும் கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும் சலியாத மனமும்அன் பகலாத மனைவியும்
தவறாத சந்தா னமும் தாழா கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள்வா ராத கொடையும் தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
தண்பமில் லாத வாழ்வும் தய்யநின் பாதத்தில் அன்பும்உத விப்பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய் அலையாழி அறிதயிலு மாயணத தங்கையே ஆதிகட வுரின் வாழ்வே! அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிரா மியே!
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 68:- மூ.சிவலிங்கம்

3o5é857&DruD&bep Jä58gs5Teft éublJTer 355356ob இலங்கையின் கீழ்க்கரையில் மிகப் பிரசித்திபெற்ற இயற்கைத் துறைமுகமும், நெல்வயற்பரப்பும், கோணமாமலையில் அமர்ந்து శ్రీ அருள் பாலிக்கும் திருக் கோணேஸ்வரப் * பெருமானின் வற்றாத கருணையும் இருப்பதால் திருகோணமலையில் திருவருளும் சிவநெறியும் இயற்கையாகவே குடிகொண்டுள்ளன.
*' இவ்வமைப்புக்கள் திருகோணமலையின் நகரை அலங்கரிக்கின்றன. ஒரு சிவாலயம் எவ்வளவு சிறப்புடையதோ அதே சிறப்புடன் நகரின் மத்தியில் எழுந்தருளியிருக்கும் திருகோணமலை பத்திரகாளி அம்பாளும் பல சிறப்புக்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார். இவ்வாலயம் மிகப் பழமை வாய்ந்தது. இங்கு அருளாட்சி புரியும் அன்னையே பல புதுமைகளுக்கும் உறைவிடமானவர். இப்பதியின் ஆரம்ப காலத்தை எவராலும் சரிவரக்கூறமுடியவில்லை. பதினொராம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் காலத்தில் மிகப்பிரசித்தமாக இருந்து யாவராலும் பயபக்தியுடன் வழிபடப்பட்டது.
இங்கு காணப்படும் தகளி, அம்பாள் விக்கிரகம், சிங்க வாகனம் மற்றும் கல்வெட்டுக்கள்ை ஆராய்ந்த சரித்திர தொல்பொருள் ஆய்வாளர்கள் இவ் வாலயம் மேலும் பல வருடங்கள் முந்தியவையெனத் தெரிவித்தனர்.
பன்னெடுங் காலத்துக்கு முன் இவ்வாலயம் அமைந்துள்ள இடத்தில் ஒருவர் தமது வேறு தேவை கருதி நிலத்தை அகழ்ந்தார். அப்போது ஒரு தகளி தென்பட்டது. அத்தகளியை மெதுவாக வெளியே எடுத்துப் பரிசீலித்தார். அதனுள் அம்பாளின் தாமிர விக்கிரகம் காட்சி தந்ததாம். இப்புனிதமான விக்கிரகம் தாமாகவே தோற்றமளித்த இடத்தில் ஒரு கோவில் அமைத்து வழிபட்டனர். காலங்கள் செல்ல இத்தாமிர விக்கிரகத்தை விசேட விழாக்களில்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 69 :- மூ.சிவலிங்கம்

Page 44
வீதியுலாவுக்காக எழுந்தருளச் செய்தனர். இன்றுவரை இவ்விக்கிரகமும் தகளியும் வேறுபொருட்களுடன் சிறந்தமுறையில் பராமரித்து வரப்படுகின்றன.
இவ்வாலயத்தை நாட்டு மக்கள் யாவரும் நன்கு ஆதரித்து வழிபட்டனர். அம்பாளும் தமது புதுமைகளைக் காலத்துக்குக்காலம் வெளிப்படுத்தி வருகிறார். சிறிதுகாலஞ் செல்ல ஒரு சமயம் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட அழகிய சிங்கவாகனம் ஒன்றைக் கப்பலில் ஏற்றிக்கொண்டு இந்துசமுத்திரத்தில் பயணஞ் செய்தனர். இப்பத்திரகாளி அம்பாளின் திருத்தலத்துக்கு நேராக வந்ததும் கப்பல் நகரமுடியாமல் தரித்து நின்றது. பலவாறு முயற்சித்த கப்பல் தலைவன் மனவேதனையுடன் காணப்பட்டான். அன்றிரவு கப்பல் தலைவனின் கனவில் தோன்றிய அன்னை பத்திரகாளி குறிப்பிட்ட சிங்கவாகனத்தை இறக்கி இக்கோயிலில் சேர்ப்பிக்குமாறு தெரிவித்தார். கப்பல் தலைவனும் உடன்பட்டு அச்சிங்கவாகனத்தை பத்திரகாளி அம்பாளின் ஆலயத்தில் சேர்ப்பித்தான். அம்பாளின் கருணையால் அக்கப்பல் எதுவித சிரமமுமின்றித் தாமாகவே நகர்ந்தது. இவ்வற்புதம் கள்ணபரம்பரைக் கதைகளாகத் தெரியவந்தது. இந்தவாகனம் பத்திரகாளியம்பாளின் அற்புதத்தினால் இங்கு கிடைக்கப்பட்டது. இது இன்றும் நல்லமுறையில் மெருகூட்டப்பட்டுப் பாவனையுடன் நன்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திருகோணமலை நகரில் பல்வேறு இன, மதம் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சிவநெறி பேணும் மக்கள் முன் வீதியால் பிரயாணம் செய்யும்போது பயபக்தியுடன் வழிபட்டுச் செல்வர். வேற்று மதத்தினர் இக்கோயிலை வணங்காது செல்வர். ஒருநாள் ஒரு யாவுகப் பெண்ணொருத்தி தலைவிரிகோலமாக அம்பாளின் ஆலயத்தைக் கடக்கும்போது அலட்சியமாகச் சென்றாள். அவளின் அலட்சியப்போக்கு அம்பாளை அவமதித்ததாக அமைந்தது. கடந்து சென்றதும் அப்பெண்ணுக்கு கழுத்துவாங்கல் பிடித்துக் கொண்டது. இதனால் அப்பெண் வேதனை தாங்காது தவித்தாள். அன்றிரவு அன்னை பத்திரகாளி அப்பெண்ணின் கனவில் தோன்றித் எனக்கு அபசாரஞ் செய்ததால்தான் உனக்கு நோய் கண்டது எனத் தெரிவித்து மறைந்தார். ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் . 70- மூ.சிவலிங்கம்

அம்பாளின் கனவை உணர்ந்த பெண் தனது தலைமயிரை அம்பாளுக்குக் காணிக்கையாக்க முன்வந்தாள். மறுநாள் தனது தலையின் நீண்ட கூந்தலை அகற்றிச் சுத்தஞ் செய்து நறும்புகையூட்டி அம்பாளின் ஆலயத்தில் காணிக்கையாக்கினாள். அத்துடன் அம்பாளைப் பணிந்து வழிபட்டுத் தனது நோயைக் குணப் படுத்துமாறு மன்னிப்பாக வேண்டினாள். அன்னை பத்திரகாளியின் திருவருளினால் பூரண சுகம் கண்டாள். இவ்வற்புதம் இற்றைக்கு நானுாறு ஆண்டுகளுக்கு முந்திய செயலாகும். அப்பெண்ணின் கூந்தல் நவராத்திரிகால மகிஷா சூரன்போருக்கு எழுந்தருளும்போது அன்னைக்குக் கூந்தலலங்காரம் செய்யப்படுகிறது. இவற்றில் ஒருபகுதியை இன்று நன்கு பாதுகாத்து வருகின்றனர்.
முன்னொரு காலத்தில் ஆலய அர்ச்சகள் இரவுப்பூசை முடிந்ததும் கதவை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றார். கோயிலுக்கு அழைத்துச் சென்ற தமது பிள்ளையை மறந்துவிட்டார். இரவு உணவருந்தும்வேளை தமது பெண்குழந்தையைக் காணாது தேடினர். இரவு கதவு அடைக்கப்பட்டால் சாத்திரவிதிப்படி மறுநாள் காலை வேளைதான் திறக்கலாம். இதனால் மறுநாள் காலை மகளை அழைக்க எண்ணினார். அவரின் மனைவியின் வற்புறுத்தலின்பேரில் உடன் சென்று கதவைத் திறந்தார். ஆலயத்தின் காவல்தெய்வமான வைரவக்கடவுள் அர்ச்சகரின் அடாத செயல் கண்டு அச்சிறுமியை இரண்டாகக் கிழித்துவிட்டார். பின்னர் உக்கிரமான வைரவக்கடவுளை மந்திர தந்திர கிரிகைகள் மூலம் அம்பாளின் ஆலயத்திலிருந்து அகற்றி ஒரு மலையில் தாபித்தனரென்பதை ஆலயக்குருக்கள் தெரிவிக்கிறார்.
வேறொரு சமயம் ஒரு நாகபாம்பு ஆலயத்தினுள் வந்து சுருண்டு படுத்திருந்தது. ஒருவர் கிடாரமொன்றை அப்பாம்பு படுத்திருப்பதை அறியாது அதன்மீது வைத்துவிட்டார். இதனால் அந்த நாகம் நசியுண்டு இறந்துவிட்டது. நாகதோசம் சூழ்ந்ததால் கோயில் பூசகரின் சந்ததியில் ஏழு தலைமுறைக்கு ஆண்குழந்தைகள் பிறக்கவில்லை. பெண்பிள்ளைகளே பிறந்தனர்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 71 :- மூ.சிவலிங்கம்

Page 45
பிற்காலத்தில் பூசகரான பிரம்மறி.சு.கு.சோமசுந்தரக்குருக்களின் தந்தை காலமானதால் தமது பதினாறாம் வயதில் இவ்வாலயப் பூசைப்பொறுப்பை ஏற்றார். அப்போது ஆலயம் சிதைவுற்றும், மூலஸ்தானம் இடிந்துவிழும் நோக்கில் இருந்ததால் மரங்களினால் முட்டுக்கொடுத்துப் பாதுகாத்தனர். வயதில் குறைந்தவராக இருந்த போதும் “என்கடன் பணி செய்துகிடப்பதே’ என்பதை மனத்தில் ஏற்றுக்கொண்டார். அம்பாளின் துணையை வேண்டி வணங்கிவிட்டுத் தமது இலட்சியம் நிறைவேறத் திருப்பணி வேலைகளை ஆரம்பித்தார். அன்னையின் பேரருளினாலும் அடியார்களின் ஒத்துழைப்பினாலும் ஒரளவு திருப்பணி வேலைகள் பூர்த்தியானதும் 1933 இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து பெருவிழாக்களும் நடைபெற்றன. முதலில் கட்டுத் தேர் கட்டியே தேர்த்திருவிழா நடைபெற்றது. திருப்பணி வேலைகள் ஆர்வத்துடன் செயற்பட்டு ஆகமவிதிப்படி பிரதான மண்டபங்கள் நிறைவுகண்டன. கருவறையின் விமானம் புனரமைக்கப்பட்டுச் சப்த கன்னிகைகளின் உருவங்களும் மற்றும் பாவைகளும் வைத்து அலங்கரித்தனர். இவ்வாலயத்தில் விமானங்களிலும், ஆலயத்துள்ளும் பரிவாரமூர்த்திகளாகவும் வசந்த மண்டபத்தில் சக்தியின் பல்வேறு உருவங்களும் வைத்துப் பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. கருவறையில் அன்னை பத்திரகாளி சூலம், டமாருகம், கடகம், கபாலம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும் ஏந்தியவண்ணம் பத்மாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கின்றார். இவ்வாலயத்தில் சக்தி வழிபாட்டின் மகிமையை எடுத்துக்கூறும் வகையில் சக்தியின் உருவங்களான பத்திரகாளி, இராஜராஜேஸ்வரி, துர்க்காதேவி, இலட்சுமி, சரஸ்வதி, கெளரிதேவி சமேத கேதீஸ்வரப்பெருமான், சண்டேஸ்வரி மற்றும் சப்தகன்னிகைகள் வரையான சக்தியின் பல திருவுருவங்களையும் மனநிறைவுடன் வழிபடலாம்.
பத்திரகாளியின் வாகனமான சிம்மம், பலிபீடம், கொடித் தம்பம், மூலாதாரக் கணபதி யாவும் ஆகமவிதிப்படி அமைந்துள்ளன. வெளிமண்டபத்தினருகே நாற்பது அடி உயரமான மணிக்கூட்டு மண்டபத்தில் அறுநூறு இறாத்தல் நிறைகொண்ட கண்டாமணி ஏற்றப்பட்டுள்ளது. வருடாவருடம் பங்குனி உத்தரத்தன்று தீர்த்தத் திருவிழா அமைய பத்துநாட்கள் பெருவிழா நடைபெறுகின்றன.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 72 :- மூ.சிவலிங்கம்

மூன்று பெரிய சித்திரத்தேர்கள், திருமஞ்சம் ஆகிய ஊர்திகள் பெருவிழாவில் பயன்படுத்தப்படுகின்றன. கோணேசப்பெருமானின் மலையடிவாரக் கடற்கரைக்கு அதிகாலையில் அம்பாள் எழுந்தருளித் தீர்த்தத் திருவிழாவைச் சிறப்பிப்பார். இங்கு பவனிவரும் சித்திரத் தேர் கிழக்கிலங்கையிலேயே முதன்முதல் உலாவந்த சிறப்புடையது. இப்பெருவிழாக்காலத்தில் அம்பாளின் பக்தர்கூட்டம் அதிகமாக இருக்கும். யாவும் அன்னை பத்திரகாளியின் அற்புதமே.
வைகாசிப் பூரணைக்கு முந்திய திங்கள் அன்னைக்கு அடியார்கள் பொங்கல்விழா எடுப்பர். ஆலயப் பொங்கல் மண்டபம் நிரம்பி வெளிவீதிகள் நாற்புறமும் அடியார்கள் பொங்கி வழிபடும் காட்சியைக் காணலாம்.
நவராத்திரிக் காலம் ஒன்பது நாட்களும் அதிவிசேட நாட்களாக அமைகின்றன. மறுநாள் விஜயதசமியன்று ஆலயத்தின் எதிரிலுள்ள மைதானத்தில் மானம்பூ உற்சவம் நடைபெறுகிறது. அன்று வீதிகளெல்லாம் காவடி, கரகம், ஆடல், பாடல் ஆகியன மிகச்சிறப்பாக நடைபெறும்.
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் திருகோணமலை கடற்படைத்தளம் நிர்மாணிப்பதன் பேரில் இந்தியாவிலிருந்து சீக்கியர் களும், பஞ்சாபியர்களும் அழைத்து வரப்பட்டனர். இந்துக்களான சீக்கியர் தம் நாட்டு வழமைபோல இங்கு கும்பமேளாவைத் தொடக்கி வெகுசிறப்பாகக் கொண்டாடினர். அவர்கள் தம்பணி நிறைவு கண்டதும் தமது தாயகம் திரும்பினாலும் எம்மக்கள் அதன் விசேடத்தை நன்கு கற்றுத் தாமே இன்றுவரை இவ்விழாவைச் சிறப்பிக்கின்றனர்.
இலங்கையில் வேறெங்கும் காணமுடியாத இக்கும்பமேளவை திருகோணமலை பத்திரகாளி அம்பாளின் ஆலயத்தில் மட்டும் காணலாம். பஞ்சாபியர்கள் தம் நாட்டில் நடப்பது போல கரகம் மாதிரியாக முக்கோண வடிவில் பத்தடி உயரங்கொண்டதாக வடிவமைத்து பல நிறப்பூக்களாலும் காகிதத்தினாலும் அலங்கரித்து அவற்றை வண்டிகளில் பூட்டி வீதிகள் தோறும் அலங்கார உலாவாகப்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 73 :- மூ.சிவலிங்கம்

Page 46
பவனி வருவர். விழா முடிந்ததும் இதனை எடுத்துச் சென்று விஸ்வ பத்திரிக் கோணேசர் ஆலயத்தின் அருகிலுள்ள குளத்தில் போடுவார்கள். இதனால் இக்குளம் தக்கியாக்குளம் என அழைக்கப் பட்டதாம்.
அடியார்களின் பக்தியும், நம்பிக்கையும், திறமையும் இக்கும்பவிழா விஜயதசமியன்று இங்கு வருடாவருடம் இரவு முழுவதும் குதுாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வாலயத்தில் கேதாரகெளரி விரதம் மிக எண்ணிக்கையான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்களால் பக்திபூர்வமாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும் சக்திக்குரிய எல்லா விரதங்களும் பக்தர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
சிவராத்திரி விழாவின்போது மாதுமை அம்மை சமேத கோணேஸ்வரப் பெருமான் இங்கு வந்து ஒருநாள் தங்குவர். அன்றைய தினம் இவ்வாலய அறங்காவலர்களால் நன்கு வரவேற்கப்பட்டுச் சிறப்பான பூசைகளும் விழாக்களும் எடுக்கப்பட்டு அன்று மாலையே கோணேசப்பெருமான் தமது ஆலயத்துக்கு எழுந்தருள்வார்.
இங்கு குடிகொண்டிருக்கும் அம்பாளின் அற்புதத்தினால் நன்கு கவரப்பட்ட அடியார்கள் பயபக்தியுடன் அன்னையை வழிபடுகின்றனர். மேலும் அடியார்களின் பக்தி மேலிட ஆலயச் சிறப்புக் கருதி ஏழு தளம் கொண்ட திருக்கோபுரத் திருப்பணியை 1996 இல் ஆரம்பித்தனர். எழிலான தோற்றமும் 65 அடி உயரமும் கொண்ட இப்பணி 2001 இல் நிறைவுகண்டது.
அடியார்களின் பக்திவயலில் அன்னை உலாவருகிறார். அவர்களின் விருப்பப்படி வேண்டியன எல்லாம் தந்து வாழ்வாங்கு வாழவைக்கும் பல புதுமையும் சிறப்பும் மிக்க பத்திரகாளி அம்பாளான அன்னை சக்தியை நாம் எமது வினையகல வேண்டி வழிபடுவோமாக.
G POG) Go->Оo G 52 c) ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 74 :- மூ.சிவலிங்கம்

1D1k(65a5ír ğ5yeDApfßeaoTau6KD6IQT 356«ièr&Ura8 é9tibuurdir
disg01b.
மீன்பாடும் மட்டுநகள் வாவியும், வற்றாத ஜீவநதியாய் வளம் கொழிக்கும் செந்நெல் வயற்பரப்பும், இயற்கை அன்னையின்
அரவணைப்பில் திகழ்வது மட்டக்களப்பு ஆகும்.
மட்டுநகரின் தென்பால் 24 கல் தொலைவில் துறைநீலாவணை என்னும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை மட்டு நகள் பெருவாவியும் சிறுகுளங்களும் வயற்பெருநிலப்பரப்பும் அணி செய்கின்றன. இக்கிராமத்தின் வடபால் பெருவாவியின் தென்கரையில் தென்பால் வயல்வெளியும் சூழ கண்ணகி அம்மன் குடிகொண்ட ஆலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் அமைந்த சிறுகுன்றுகளும் இடையிடையே பாறைகளும் தென்படுவதால் இங்கு எழுந்தருளியுள்ள சக்திதேவியை “கல்லடி அம்மன்” எனவும், “கல்லடி ஆச்சி” எனவும் அன்பு கலந்த மொழியில் போற்றி வழிபடுகின்றனர்.
முற்காலத்தில் இப்பகுதி பல மூலிகை மற்றும் தெய்வீக மரங்களாலும், இதர பலன் தரும் மரங்களாலும் சூழப்பட்டு ஓங்கி உயர்ந்து விளங்கிய காடுகளாகக் காணப்பட்டது. இவ்வனப்பு மிகுந்த தெய்வீக மரச்சோலையால் கவரப்பட்ட சில சித்தர்களும் முனிவர் களும் தம்பணி சிறக்க இங்குவந்து வசித்து வந்தனர். இவர்கள் தமது தவக்காலத்தில் மந்திர, தந்திர, சித்து மார்க்கங்களையும் கையாண்டனர். இதனால் அஞ்சிய ஊர்மக்கள் இப்பகுதிக்கு வருவதில்லை.
காலங்கள் செல்ல முனிவர்களின் வந்த காரியங்கள் நிறைவேறியதும் இவ்வனப்பகுதியை விட்டகன்றனர். அவர்களின் நடமாட்டம் இல்லாத காரணத்தால் ஊர்மக்கள் மெல்ல மெல்ல இப்பகுதியை நாடினர். ஊர் மகனொருவர் காட்டை ஊடுருவிச் சென்றபோது ஒரு குன்றின் அருகே மூன்று சிலைகளையும், முக்கோண வடிவமுடைய அழகிய இரு சோடி சிலம்புகளையும், ஒருசோடி தண்டச்சிலம்புகளையும் கண்டார். இவற்றைக் கண்டதும் பயந்து ஓடோடிச்சென்று ஊர்மக்களுக்குத் தெரிவித்தார்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 75: மூ.சிவலிங்கம்

Page 47
இவ்வற்புதத்தை நேரில் காண்பதற்காகப் பல மக்கள் அவ்விடத்தை அணுகினர். நன்கு அவதானித்ததும் இவைகள் கண்ணகி அம்மனின் சிலைகள் என உறுதிப்படுத்தினர். மிகுந்த பயபக்தியுடன் அவற்றை வழிபடத் தொடங்கினர்.
இச்சிலைகள் அமைந்திருந்த இடத்திலிருந்த குன்றையும் இச்சிலைகளையும் மையமாக வைத்து வாவியை நோக்கி வடதிசையை வாசல் வரும் வண்ணம் ஒரு கோயில் அமைத்தனர். யாவரும் இங்கு வந்து கண்ணகி அம்மனை அன்பும் பக்தியும் மேலிட வழிபட்டனர். கோயிலை அமைத்து வழிபட்டபோதும் பூசைகள், விதிமுறைகள் தெரியாதிருந்தனர். இச்சமகாலத்தில் குறுமன் வெளியில் வாழ்ந்த முனிவர்களை அணுகி முழு விபரங்களையும் தெரிவித்தனர். அவர்களின் வேண்டுதலின்படி "கெங்காதரஐயர்” என்பவர் வந்து சிலைகளைப் பார்வையிட்டார். கண்ணகி அம்மனுக்குப் பூசைசெய்யும் விதிமுறைகள் அடங்கிய ஏட்டுப் பிரதியான பத்ததியை அவர்களிடம் வழங்கி இதன்படி பூசைகளையும், விதிமுறைகளையும் தொடருமாறு கூறிச் சென்றார்.
பத்ததியின் பிரமாணத்துக்கமைய ஒரு பூசகரை நியமித்துப் பூசைகளைச் செய்தனர். வருடமொருமுறை நடைபெறும் விழாக்களின் பூசை நிறைவுபெற்றதும் அப்பூசகள் இறந்துவிடுவார். இதனால் ஊள் மக்கள் அஞ்சினர். செய்வதறியாது கண்ணகி அன்னையை மனமுருகி வழிபட்டனர். ஏற்கனவே குறிப்பிட்டபடி அடுத்துவரவிருக்கும் பூசகரான "தன்மார்’ என்பவருக்கு அன்னை தரிசனம் கொடுத்து மூன்று சிலைகளுள் மிகப் பிரகாசிக்கும் சிலை மூர்க்கமானது. இச்சிலையை கோயிலின் எதிரே மட்டுநகர் வாவியில் நான்கு உபவாவிகள் சங்கமிக்கும் இடத்தில் ஆழ்த்திவிடுமாறு கட்டளையிட்டார்.
தமது கட்டளைப்படி ஊர்மக்களின் உதவியுடன் பூசகர் அச்சிலையை நீரில் ஆழ்த்திவிட்டார். இதன் பின்னர் வருடாந்தப் பூசைகளின் நிறைவில் திடீர் மரணம் ஏற்படவில்லை. மேலும் பூசையின்போது வாவியை நோக்கியும் தீபாராதனை செய்யும் வழமை இன்றுவரை நடைபெறுகிறது. ஏனைய இருசிலைகளில் ஒன்றைக் கருவறையில் நிறுவியுள்ளனர். அடுத்த சிலையை விழாக்காலங்களில் தேரில் இருத்தி ஊர்வலஞ் செல்ல வழிவகுத்தனர். ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 76 :- மூ.சிவலிங்கம்

இவ்வாலயத்தில் மிகச்சிறந்த நாகபாம்புகள் சஞ்சரிக்கின்றன. கோயிற்
கதவு அடைக்கப்பட்டதும் நாகபாம்புகளே காவல்புரிகின்றன.
பயபக்தியுடன் வழிபடுவோர்களுக்கு இவை தீங்குகள் எதுவும்
செய்வதில்லை. தீய சிந்தனையுடன் செல்வோரை இப்பாம்புகள் விரட்டிவிடும். முற்காலத்தில் இங்கு வாழ்ந்த ஒரு நாகம் வாவியை
நீந்திக்கடந்து மண்டூர்த் திருத்தலத்துக்குச் சென்று வழிபட்டு
வந்ததாகவும் மூதறிஞர்கள் செப்பியுள்ளனர்.
வருடாந்தம் விழா வைகாசிப் பூர்வபட்சத்தில் நடைபெறும். இவ்விழா ஏற்பாடுகளை வண்ணக்கள், கோயில் நிர்வாகிகள், ஊர் மக்கள் ஆகியோர் கூடித் தீர்மானிட்டன். பண்டுதொட்டே செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி அடுத்த திங்கள் இரவு விடியும் வரை ஏழுநாட்கள் விழா நடைபெறும். வெள்ளிக்கிழமை இரவு அம்மனை ஊர்வலமாகக் கொண்டு செல்வர். இதனைப் “பல்லக்கு ஊர்சுற்று” என அழைப்பர். ஞாயிறு பிற்பகல் "கல்யாணக் கால்வெட்டு” நடைபெறும். அன்றிலிருந்து கோயிலில் சிறப்பான பூசைகளும், காவடியாட்டமும், மக்கள்கூட்டமும் சிறப்படையும். அம்மனால் தெரிவிக்கப்படும் பூவரசமரக்கிளை வெட்டப்படும். பூசகள் அன்று உண்ணாவிரதமிருந்து பயபக்தியுடன் குறிப்பிட்ட கல்யாணக்காலை வெட்டியெடுப்பர். பூசகரும் ஊர்மக்களும் இதனைக் கிரியைகள் செய்து தோளில் சுமந்துகொண்டுபோய்க் கல்யாண மண்டபத்தில் வைப்பர். கல்யாணக்காலை வைத்ததும் அன்றிரவு கோவலர் கண்ணகியின் கல்யாண வைபவமும், பூசைகளும் சிறப்பாக நடைபெறும்.
கல்யாணக்கால் வெட்டுக்குச் செல்லும்போது உருவேற்றப் பட்ட சிலம்புப் பெட்டிகளுடன் அம்மன் பல்லக்கு பெருந்திரளான மக்களால் சூழப்பட்டு ஊர்வலமாகச் செல்லும். சிலம்புப்பெட்டியைத் தலையில் வைத்துச் செல்பவள் விரதமிருந்து ஒருவேளை உண்டு அன்றைய வெள்ளிக்கிழமை உபவாசமிருந்து ஆசாரசீலராகவே செல்வார். இவர் சிலம்பின் உருவேற்றத்தால் அடிக்கடி மயங்குவார். சிலம்புகளும் பெட்டியிலிருந்து வெளியேவர முயற்சிக்கும். கோயில் பூசைநெறிமுறைகளை நன்கறிந்த மூவர் சிலம்புகள் வெளியேவராது பிடித்துச்செல்வர். இவ்வரிய காட்சியானது காண்போரைப் பக்திப்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 77 - மூ.சிவலிங்கம்

Page 48
பரவசமாக்கும். தன்னை வழிபடுவோரின் உள்ளங்களைக் கவரும் சக்தியின் அற்புதம் மேலோங்கியுள்ளது.
திங்கட்கிழமை நடைபெறும் பூசையை “நெல்குற்றும் பூசை” எனவும், “வட்டுக்குற்றும்பூசை” எனவும் அழைப்பர். மலைக் குன்றிலிருந்து குளியாக்கப்பட்ட நெல்குற்றும் இடத்தில் பூசைகள் நடைபெறும். பூசைகள் முடிந்ததும் பூசகள் உலக்கையால் மூன்று தரம் குற்றுவார். பின்னர் பிள்ளைப் பேறற்ற பெண்கள் பூசகரிடமிருந்து உலக்கையை வாங்கித் தாமும் ஒருவர் பின் ஒருவராக மாறிக் குற்றுவர். இதனை “உலக்கை பறித்தல்” என அழைப்பர். இவ்வரிய நிகழ்வில் அயலூர்களிலுமிருந்து வரும் பிள்ளைப் பேறில்லாத பெண்களும் தெய்வீக அருளைநாடி நெல்குற்றுவர். இக்காட்சியைக் காண இருகண்களும் போதாத சிறப்புடையதாகும். சக்தியின் பேரருளால் “உலக்கை பறித்தல்” என்னும் விழாவில் தூய சிந்தையுடன் தம்மை அர்ப்பணிப்போர் மழலைச் செல்வங்களுடன் வந்து நன்றிசெலுத்துவதையும் காணலாம்.
இவ்வாறு குற்றி எடுக்கப்படும் அரிசி மறுநாள் அதிகாலையில் நடைபெறும் குளிர்த்திப் பொங்கலுக்காகக் கோயில் நிர்வாகிகளால் பொறுப்பேற்கப்படும். செவ்வாய்க்கிழமை அதிகாலை வழமைபோல் அம்மன் குளிர்த்தியும், நாகங்களின் பாணக்கப்பூசையும் நடைபெறும். உலக்கை மாறல் நிகழ்வினைத் தொடர்ந்து இரவோடிரவாக சிறுவர்களின் வசந்தன்கூத்து, கோலாட்டம் மற்றும் பக்திபூர்வமான கலைநிகழ்வுகள் இடம்பெறும். இவற்றைக் கண்டுகளிக்கவென்றே ஊர்மக்கள் கோயிலுக்கு அணியணியாகச் திரளுவர்.
திருக்கோயிலின் சிறப்பான விழாக்களின் ஏழுநாள் நிறைவில் இவ்வூர் மக்களுடன் அயலூரவர்களும் அன்னை மீதுள்ள பக்தியின் மேலீட்டினால் விரதமிருந்து பொங்கலிட்டு அன்னையை மகிழ்விப்பள். பெருந்திரளான மக்கள் ஆலயச் சூழலிலுள்ள வயல்வெளியெங்கும் நிரம்பியிருந்து நிறைவாக பொங்கி மகிழ்வடைவர்.
வருடத்துக்கு ஒருமுறை வரும் கண்ணகை அம்மனின் சிறப்பு விழா என்றால் ஊரே விழாக்கோலம் போட்டுப் பக்தியை வெளிக் ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 78 :- மூ.சிவலிங்கம்

காட்டுவர். இல்லங்கள் யாவும் உள்ளும் புறமும் சுத்தம் செய்யப்படும்.
ஆசாரம் பேணி அசைவ உணவினை விடுத்து தூய சைவ உணவை நாடுவர். தமிழ்ப் பண்டிகைக் காலங்களில் புத்தாடை வாங்க வசதியற்றவர்களும் அம்மனின் விழாக்காலங்களில் புத்தாடை அணிந்து புத்துணர்ச்சியுடனும் புன்முறுவலுடன் பூசித்துப் புதுப் பொலிவைப் பெறுவர்.
சிறுவர்கள் தம் கலைநிகழ்விலும், பெற்றோர் பொங்கல் பணியிலும் இணைந்திருப்பர். இதர பொதுமக்கள் ஆர்வமிகுதியால் இச்சூழலில் நடைபெறும் சகல வைபவங்களையும் மாறிமாறிச் சென்று கண்டுகளிப்பர். அதிகாலை ஐந்து மணியளவில் கோயில் பூசகள் அம்மன் வேடம் தாங்கி உலாவரும் அம்மனைத் தாங்கிய வண்ணம் முன்மண்டபத்துக்கு வருவார். வந்ததும் இதற்கென நியமிக்கப்பட்டவர்களால் குளிர்த்தி ஏடு படிக்கப்படும். பூசகள் வசந்தன் விழா ஏடு படிக்கவும் தமது சுயநினைவிழந்து காணப்படுவார். இந்த விழாக்கால ஏழு நாட்களிலும் கண்ணகியின் வழக்குரை படலம் வாசித்து அதன் பயன்கருதி இன்புறும் மக்கள் கூட்டம் பெருகும்.
ஏழுநாள் விழா நிறைவு பெறுவதைக் “கதவடைப்பு” என அழைப்பர். இப்போது கருவறையிலிருக்கும் கண்ணகி அம்மனின் திருவுருவச் சிலையை எடுத்து அதே அறையிலுள்ள மஞ்சுகளின் மேல் அதற்கென உரிய துவாரங்களின் மூலம் பூசகள் தமது கைகளால் எடுத்து வைப்பர். இம்மாடத்தில் வதியும் நாகபாம்புகள் படம்விரித்து ஆடிக்கொண்டிருக்கும். சக்தியின் பணியினைச் செய்யும் பூசகர் அங்குள்ள காவலர்களான நாகங்களுக்கு அஞ்சுவதில்லை. தமது கடமையை உள்ளன்போடு நேசித்து மந்திரங்கள் சொல்லிக் கதவடைப்பார். இத்துடன் கதவடைப்பு விழாவும் இனிது நிறைவுபெறும்.
தொடர்ந்து கருவறைக் கதவுக்கு முன்னால் வெள்ளிக்கிழமை தோறும் படையல் படைத்து பூசை வழிபாடுகள் நடைபெறும். தமது வாழ்வு நலம்பெற வேண்டுவோர் வெள்ளிக்கிழமைகளில் பெருந் திரளாகக் கூடி வழிபாடு செய்வர்.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் - 79 - மூ.சிவலிங்கம்

Page 49
அன்று தொட்டு இன்றுவரை மட்டக்களப்பு மக்களிடையே உறைந்த பாரம்பரியங்கள், சைவமரபு, புராணவைபவ நிகழ்வுகள் யாவும் ஆன்மீக மேலிட்டினால் பக்தியைப் பெருக்கும். இங்கு குடியிருக்கும் கண்ணகி அம்மனின் வற்றாத கருணையினால் குடி மக்கள் யாவரும் உள்ளன்புடன் பக்திபரவசமாக இறையருளை நாடுகின்றனர். மக்கள் தூய சிந்தனையுடன் வழிபடுவதால் அனைவரதும் நெஞ்சில் சக்தி குடிகொண்டுள்ளார்.
மக்கள் ஆன்மிக நெறியால் மட்டுநகள் வாவியின் தென்பால் அமைந்த துறைநீலாவணை கண்ணகி அம்பாளைத் தமது குல தெய்வமாகச் சிக்கெனப் பிடித்துள்ளனர். தமிழர் மரபுபேணி நல்லொழுக்க சீலராக வாழ்வாங்கு வாழ்வது எமது தாய்மொழியாம் தமிழுக்கும், தூய நெறியாம் சைவத்துக்கும் தெய்வீகக்கலை, கலாசாரப் பண்புகளுக்கும் தம்மை அர்ப்பணித்துள்ளனர்.
சூரியன் கிழக்கிலிருந்து எழுவதுபோல இலங்கையின் கிழக்கிலுள்ள குடிமக்களும் தமது புராதன பண்பாட்டினால், கல்வியால், செல்வத்தால், பக்தியால் மேலெழுந்து நிற்பது சக்தியின் அற்புதங்கலாளேயாகும். சைவமும் முத்தமிழும் வளரும் உறைவிடமான கிழக்கிலங்கை மக்களின் வாழ்க்கையின் பண்பாடு பார்போற்றும் வண்ணம் இன்றும் திகழ்வது இறையருளேயாகும்.
G POG) G-2 Go Go->?с)
ཀ་
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும் பண்ணிய பால மெல்லாம்
பரிதிமுன் பணியே போல நண்ணிய நிண்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!
سـ
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 80 :- மூ.சிவலிங்கம்

மாத்தளை முத்துமாரி அம்பாள் திருத்தலம்
ଽ : ' § ' .. ** இலங்கையரின் வனப்புமிகு மலையகத்தின் வடபகுதி மாத்தளை
மாவட்டம் ஆகும். இங்குள்ள “லக்கல” என்னும் இடத்தில் இராவணனின் கோட்டை
கொத்தளங்கள் இருந்ததாக ஆய்வியல்
வரலாறுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஆதியில் “நாகர்’ குலத்தவர் வாழ்ந்து மாத்தளை நகரிலுள்ள சக்தியை வழிபட்டதாகவும், பல தலைகளையுடைய *நாகம் இவ் அம்மனைப் பூசித்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன. பல நாகங்கள் இங்கு வழிபட்டதால் "பன்னாகம்’ என்னும் பெயரும் இந்த நகருக்குண்டு. இங்கு ஆதிகாலத்திலிருந்தே உறைந்திருக்கும் முத்துமாரி அம்பாள் பல அற்புதங்களையும் காண்பித்துள்ளார். அவ்வப்போது அடியார்களுக்குத் தமது பல வடிவங்களில் காட்சி தந்துள்ளார் எனக் கர்ணபரம்பரைக் கதைகளும் உண்டு.
இவ்வாலயம் அமைந்துள்ள இடம் இயற்கையாகவே குறிஞ்சி, முல்லை, மருதம் என்னும் மூவகை நில அமைப்புக்களையும் கொண்டது. குற்றாலம் அருவி என்னும் ஏழு அருவிகள் கொட்டும் அழகுடன் மலைக்குன்றுகளும் மகாவலி கங்கையின் கிளைகளும் இந்த நகரினைச் சூழ்ந்து அணிசெய்கின்றன. மேலும் இங்கு சிவ நெறியின் சிறப்பினால் முத்துமாரியம்பாள் ஆலயத்தைச் சூழ நாற் புறமும் பல இந்துக்கோயில்கள் அருள்பாலிக்கின்றன.
அந்தக் காலத்தில் இலங்கையின் வடபகுதியிலிருந்து மலையகத்துக்கு வருவோர் கால்நடையாகவும் பின்னர் மாட்டுவண்டி மூலமும் வரும்போது மாத்தளையில் வந்து தங்கி நீராடி அம்பாளைப் பூசித்து அங்கு அமைந்துள்ள சத்திரத்தில் தங்கி ஓய்வெடுப்பர். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் மலையகத்தில் வேலை செய்வதற்கென தென்னிந்தியாவிலிருந்து கூலியாட்களைத் ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 81 :- மூ.சிவலிங்கம்

Page 50
தருவித்தனர். சக்தி வழிபாடு செய்யும் இவர்கள் கடல்வழியே மன்னார் அரிப்புத்துறைகளில் இறங்கி மலையகத்தை நோக்கி வருவர். வரும்பாதை கரடுமுரடான காடு மேடாக இருந்ததால் பல துன்பங்களுக்கு மத்தியில் நடந்து வருவர். வரும்பாதையில் அமைந்துள்ள மாத்தளையில் தங்கி அம்பாளையும் வழிபட்டே மலையக நகரங்களுக்குச் சென்றனர். இவ்விபரங்களைக் காண பரம்பரைக் கதைகளிலிருந்து அறியலாம்.
ஆதியில் இங்கு வாழ்ந்த ஒப்பனைக்கலைஞர் ஒருவருக்கு முத்துமாரி அம்பாள் ஒரு வில்வமரத்தடியில் காட்சி கொடுத்து மறைந்தார்.
மாத்தளையில் வந்து தங்கிச் செல்லும் இந்துக்களின் வருகையும் வழிபாட்டின் சிறப்பும் பெருகியது. நாட்டுக்கோட்டை வணிகர்கள் தமது லாபத்தில் ஒரு பகுதியை அம்பாளின் திருப்பணிக்கு உதவினர். இவர்கள் இங்குள்ள சத்திரத்தில் தங்கியிருந்தபோது ஒருநாள் ஒரு சிறுமி தென்பட்டாள். பின் மறைந்து விட்டாள். மறுநாள் அவளின் சட்டையொன்று காணப்பட்டது. அன்றிரவு அம்பாள் நல்லமுத்து என்னும் பக்தனின் கனவில் தோன்றி முதல் நாள் அம்பாளே சிறுமியாக வந்ததாகவும் இவ்விடத்தில் ஒரு கல்லைக் காட்டி இங்கு அம்பாள் இருப்பதால் விளக்கேற்றுமாறு தெரிவித்து மறைந்தார். இச்செய்தி பலரிடமும் பரவியது. அம்பாளின் அற்புதத்தை மெச்சிய பலர் வியந்தனர்.
சிவகங்கை காளையர் கோயில் என்னும் இடத்தைச் சேர்ந்த கறுப்பண்ணன் சாமி என்னும் பக்தன் ஒரு சிறு குடிலமைத்து வழிபடலானார். அவரின் சீடனான சுப்பன்பிள்ளை என்பவர் பூசை முறைகளைக் கிரமமாகச் செய்துவந்தார். ஒரு வைகாசி மாதத்தில் கறுப்பண்ணன் சாமி விழாக்களை ஆரம்பித்து வருடாவருடம் விழாச் சிறப்புறப் பணியாற்றினார்.
காலங்கள் செல்லவும் சுப்பன்பிள்ளை 1850 இல் தமக்கு உதவியாக ஐந்துபேர் கொண்ட சபையை நிறுவி ஆலயம் சிறக்க
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 82 :- மூ.சிவலிங்கம்

ஏற்பாடு செய்தார். சுப்பன்பிள்ளை இருவருடங்களின் பின் அயலில் உள்ள நிலத்தை வாங்கி சிறப்பாக கோயில் கட்ட நிதியுதவிக்கான ஏற்பாடும் செய்தார். நொத்தாரிஸ் முருகேசு என்னும் பக்தர் நிர்வாகப் பணியை ஏற்றார். தென்னிந்திய வணிகச் செட்டியார்களும் யாழ்ப்பாண வர்த்தகர்களும் பெரிதும் உதவினர். முதலில் வரிச்சுகளும் களி மண்ணும் கொண்டு சுவர்கள் எழுப்பி நாட்டு ஒட்டினால் கூரை வேயப்பட்டு வழிபாடு சிறக்க வைத்தனர். அம்பாளின் திருவருளும் பக்தர்களின் ஆதரவும் நிதியுதவியும் கோயில் திருப்பணிகள் சிறக்க ஏதுவானது.
கருவறை, பிரதான மண்டபங்கள், வாயிற்கோபுரம் யாவும் சிறப்பாகக் கட்டிமுடிக்கப்பட்டன. விழாக்களும் சிறப்புற நடைபெற ஆலயம் சிறக்கவும் அடியார்களும் மேன்மேலும் திருப்பணிக்கென வாரிவாரி வழங்கிய பெருநிதியில் 1977 இல் அம்பாளுக்குச் சிறப்பான சித்திரத்தேர் அமைக்கப்பட்டது. பூசைகளும் அபிஷேகங்களும் இதர விழாக்களும் பொதுமக்களினால் பக்திசிரத்தையுடன் செய்ய ஏற்பாடானது.
1983 இல் நடைபெற்ற வன்செயலின்போது இவ்வாலயத்தின் திருமண மண்டபம் உட்பட அநேக மண்டபங்கள் சேதப்படுத்தப் பட்டன. தேர் மற்றும் ரதங்கள் அழிக்கப்பட்டன. ஆலய வளர்ச்சி குன்றியது. மக்கள் வேறிடங்களுக்குச் சென்றனர். 1992 இல் அறங்காவலர் குழுவின் தலைவராக இருந்த மாரிமுத்துச் செட்டியார் ஆலயவளர்ச்சிக்காகப் பல்லின மக்களையும் ஒன்று சேர்த்து அவர்களின் ஒத்துழைப்புடன் சகல திருப்பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றினார். ஆலயச்சிறப்பு நன்கு பிரகாசிக்க இறையருள் கைகூட்டி அடியார்களின் மன இசைவுக்கேற்ப கொடித் தம்பம், சிதைவுற்ற மண்டபங்கள் நவீன மயப்படுத்தப்பட்டன. புதிய தேரும் வடிவமைக்கப்பட்டது.
தொடர்ந்து பரிவாரமூர்த்தங்களுக்குத் தனித்தனிச் சந்நிதிகளும் அமைக்கப்பட்டன. காசியிலிருந்து அழகிய சிவலிங்கம் எடுத்துவரப்பட்டுப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மலையகத்தில் அருள்புரியும் திருத்தலங்களில் மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம் மிகச் சிறப்புடையது. ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 83 :- மூ.சிவலிங்கம்

Page 51
இயற்கை வனப்பும் அம்பாளின் அற்புதங்களும் பொது மக்களின் சக்தி வழிபாட்டின் நம்பிக்கையில் ஏற்பட்ட விடாமுயற்சியும் நிதிவழங்கலும் சாதகமாக அமைந்தன. மாத்தளை மாரியம்பாளின் அற்புதங்கள் யாவரையும் தம்பால் ஈர்த்தது. அவர்களுக்கு வேண்டியன வழங்கும் சக்தியின் புதுமையும் கருணையும் சைவ சமயம் மேலோங்க வைத்தது. அன்னை சக்தியினை உள்ளன்போடு வழிபட்டு நாமும் இறையருள் பெறுவோமாக.
தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி கேடதனை நீக்கிடுவாய் கேட்டவரந் தருவாய்
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய் கோடிநலஞ் செய்திடுவாய் குறைகளெல்லாந் தீர்ப்பாய்
எப்பொழுதுங் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி ஒப்பியுன தேவல்செய்வேன் உணதருளால் வாழ்வேன்
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி பக்தியுடன் போற்றி நின்றால் பாயமனைத்தந் தீரும்
ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும் யாதானுந் தொழில் புரிவோம் யாதமவள் தொழிலாம்
தன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம் அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிகவரம் பெறலாம்.
o »po o »O G. 92 о
ஆக்கத்து உதவிய துணைநூல்கள்
பஞ்சவர்ணத்தூது
இணுவில் சிவகாமியம்மை தமிழ் மயரமங்கலம் கும்பாபிஷேக மலர் 2000 - மயரபதி, கொழும்பு தெல்லிப்பழை துர்க்காதேவி திருத்தல கும்பாபிஷேகமலர். உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்பாள் கும்பாபிஷேக மலர் - 2004 மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்பாள் வரலாறு.
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 84 :- மூ.சிவலிங்கம்

sióidioios/fu/a/foot........
சைவமும் தமிழும் போற்றப்படும் திருவூராம் இணுவிலில் தாய்த் தெய்வமாக அமைந்த அறக்கல்வியை ஊட்டும் அறநெறிப்பாடசாலையை வழிநடத்தும் சிவகாமி அம்பாள் சமய நூல்களை வெளியிடும் பணியில் இணைத்துள்ளார். எம்மைச் சக்தி வழிபாட்டின் பெருமையை உணரவைத்து இந்த நூலை வெளியிடத் திருவருள் புரிந்த இணுவில் சிவகாமி அம்பாள் என்றும் துணைநிற்க இறைஞ்சுகிறோம்.
சக்தி வழிபாட்டினை நூல் வடிவில் வெளியிட்டு எமது கிராமத்தின் பெருமையையும் சிவகாமி அம்பாளின் புதுமையை நிலைநாட்டுமாறு உணர்த்திய எமது பிதாமகரான அமரர்.தமிழவேள் இ.க.கந்தசுவாமி அவர்களின் ஆன்மாவுக்கும் நன்றிகள்.
அன்னை சிவகாமியின் ஆலயம் சிறக்க எமது ஆலய வழிபாட்டுக்கு ஆத்மஞானத்துடன் இணைத்து எமது ஆலய வழிபாட்டுக்கு உந்துசக்தியாக அமைந்து எமது மலருக்கு ஆசியுரை தந்தும், எமது ஆக்கப்பணிகளுக்கு உற்சாகமூட்டும் ஆலய பிரதமகுரு வேத சிவாகம கிரியாரத்தினம்" பூநீசாம்பசிவ சோம சபேசக்குருக்கள் ஐயாவுக்கும் எமது நன்றிகள்.
கனக விழா எடுக்கும் பருவத்திலும் கன உறுதியான வாழ்த்துக் களுடன் அன்னை சிவகாமியின் பேரருளை வியந்து கவிபாடும் எம்மூர் முதுபெரும்புலவர் கலாபூஷணம், புலவர்மணி வை.க.சிற்றம்பலம் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
இணுவில் மண்ணின் பெருமையை நன்குணர்ந்து தமது கற்ற கல்வி அறிவாலும், அனுபவத்தாலும் நேரிற்கண்டு பூரிப்பவரும், எமது ஆன்மிகப் பணிக்கு அருங்கருத்துகளால் அலங்கரித்து வாழ்த்துச்செய்தி தந்து அகமகிழும் வலி.தெற்கு - உடுவில் பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுளாதேவி சதீசன் அவர்களுக்கும் நன்றிகள்.
இணுவில் மண்ணில் தோன்றிய பெருமையாலும், தமது பெற்றோரின் குலப்பெருமையாலும் கற்ற கல்வி நாடிய ஆன்மிகப்பணி யாவற்றின்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 85 :- மூ.சிவலிங்கம்

Page 52
சிறப்பினாலும் பார்போற்றும் சமயநெறிக்காவலரும், எமது நூல் ஆக்கங் கங்களுக்கு அடியெடுத்துத் தந்து ஆசியுடன் அருளுரையும் தந்து பல அறப்பணிகளின் ஊற்றாகவும், தெல்லிப்பழை துர்க்காதேவி திருத்தலத்தின் அறங்காவல் குழுவின் தலைவருமான செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களுக்கும் நன்றிகள்.
கல்வி கற்கும் பருவம் முதல் இன்றுவரை சைவமும் தமிழும் வளர உளமார அரும்பணியாற்றுபவரும் தமது கல்வியை யாவருக்கும் புகட்டித் தக்கார் பலரைத் தோற்றுவித்தவரும், எண்ணற்ற தமிழ் மற்றும் ஆன்மிக நூல்களை எழுதியும், நாளேடுகளுக்குத் தொடர் ஆன்மிகக் கட்டுரைகள் எழுதி எல்லா நெஞ்சங்களையும் கவர்ந்த அன்னை கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களை நாடியபோது இம்மலருக்கான அணிந்துரையை சக்தி வழிபாட்டுக்கென்றே அற்புதமாக எழுதி எம்மை உற்சாகமூட்டிய நற்சிற்தனையாளருக்கும் நன்றிகள் பல.
இந்த மலருக்கான ஆலோசனைகளையும் அச்சுப்பதிப்பை ஒப்பு நோக்கியும் இந்த நூலைச் சிறப்புடன் வெளிவர உதவிய எண்மகன் சி.சரவணபவனுக்கும் நன்றிகள்.
இம்மலர் சிறக்க கணனி அச்சுப்பதிவு மற்றும் நூலுருப்பெற ஏற்ற சகல பணிகளையும், இம்மலருக்கான வெளி மட்டையை வடிவமைத்தும் தமது முதிர்ந்த பணியின் சிறப்பைச் செயலில் காட்டிய இவ்வூர் மைந்தரும் இணுவில் சண்சைன் கிரபிக்ஸ் நிறுவன நிர்வாகியுமான வே.செந்தில்வேல் அவர்களுக்கும் நன்றிகள் பல.
எண்றும் ஆண்மிக பணியின்
இணைந்த மு.சிவலிங்கம்
ஈழத்துச் சக்தியின் அற்புதங்கள் -: 86 :- மூ.சிவலிங்கம்


Page 53