கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் பெண்களும் ஆட்சிமுறையும்

Page 1
இலங்ை பெண்
ஆட்சிமு

கையில் களும்
)றையும்
ாலி பின்ரோ ஜெயவர்த்தன னி கொடிக்கார

Page 2

இலங்கையில் பெண்களும்
ஆட்சிமுறையும்

Page 3

இலங்கையில் பெண்களும் ஆட்சிமுறையும்
கிஷாசாலி பின்ரோ ஜெயவர்த்தன சூலனி கொடிக்கார
இ
@豆、 s
இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் கொழும்பு

Page 4
International Centre for Ethnic Studies 2, Kynsey terrace, Colombo 8, Sri Lanka
Copyright (O 2003 by ICES
ISBN: 955-580-082-0
Printed by Unie Arts (Pvt) Ltd
NO. 48B, Bloemendhal Road Colombo 13

பொருளடக்கம்
நன்றியுரை முன்னுரை
அறிமுகம்
1 இலங்கை: நேற்றும் இன்றும்
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியற் பதவிகளில் பெண்களின் இனவிகிதாசாரம் அரசியலில் பெண்களின் பிரவேசம் ஆண்களின் வலையமைப்புக்களும் உறவு முறைகளும் சுதந்திரமான வேட்பாளர் பால் நிலை விடயங்கள் நல்ல பெண்களா அல்லது விலைமாதர்களா? வன்முறை: பலியானோரும் முகவர்களும்
11 வரம்புமீறிய தடைகள்: காலனித்துவத்திற்குப்
பின்னர் இலங்கையில் பெண்களின்
செயலாற்றல் முறை
நிலைமாறும் காலம் நாளாந்த ‘வாழ்க்கை' விவகாரங்கள்: நலன் புரி நன்மைகள் தொடக்கம் பொருளாதார அதிகாரத்துவம் வரை போட்டியிடும் கட்சிகள்: சேரடியான அரசியற் பங்கேற்பினை நோக்கி மரபுசார் அரசியலுக்கு வெளியே எதிர்ப்பு இயக்கங்கள் சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண் தொழிலாளர்கள் மனித உரிமைகளும் சமாதானமும்
111 ஒத்துளைப்பும் பிணக்கும்; அரசுடனான
பெண்களின் இடைத்தாக்கமும் குடியுரிமைக்கான பேச்சுவார்த்தையும்
பெண்களுக்காக வாதிடுதல்: பேரம் பேசுதலுக்கான வரையறைகள் பெண்கள் பிரச்சினைகளை முன்வைக்கும்
νίί іх
13 16 22 26
27. 28 31 35
39
43
50
53
54 57
64
64

Page 5
அரச இயந்திரம்: பால் நிலை அடுக்குகளும்
செயற் களமும் 73
IV அரசினை மீளுருவாக்கும் பெண்கள் 81. பால் நிலைச் சமநிலை அரசு? 86 பெண்களுக்கான ஒதுக்கீடுகள் 86 அரசு, ஆட்சிமுறை மற்றும் அரசியலுடன் பெண்களுக்குள்ள ஈடுபாடு 90
ஆய்வுத்துணைகள்
பின்னிணைப்பு 1 - நேர்காணலுக்கு உட்படுத்தப்பட்ட
பெண்கள் 105 பின்னிணைப்பு II - தெரிவுசெய்யப்பட்ட பெண்
அரசியல்வாதிகளின் விடய ஆய்வு 107

நன்றியுரை
... (3 UT j L 9 y Liu 60 L pp 61J 607 g. g. 60T (T 65 (Ford Foundation) நிதியுதவியளிக்கப்பட்டு “பெண்கள் மற்றும் ஆட்சிமுறை/சனநாயகச் செயன்முறைகள்: அரசினை மீளுருவாக்கல்” எனும் தலைப்பினைத் தெற்காசியப் பிராந்திய ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கிய இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையத்துக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த முயற்சியானது மிகவும் "பயனுள்ள கற்றல் அனுபவமாக இருந்தது. இந்த ஆய்வுக்கான வெளிக்கள நடவடிக்கைகள் திருமதி ஜனிஸ் ரா வாஸ் குணவர்த்தன, திரு ஆர். குமாரசிங்கம், திருமதி கமறுான் புகாரி ஆகியோரின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கான வினாக்கொத்து அளவீடானது திரு. நாமல் வீரசேன, திருமதி லலிதா ரணதுங்க, திருமதி கே. எம். சம்பா குமுதினி, திருமதி எஸ். டி. அல்கம ஆகியோரினால் பல மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டது. வெளிக்கள ஆய்வுகள், வெளிக்களத் தரவுகளை அட்டவணைப்படுத்தல், இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆரம்ப பூர் வாங்க திட்ட வரை பினை வடிவமைத் தல என்பனவற்றில பெற்றுக் கொள்ளப்பட்ட உதவிகளுக்காக குறிப்பாக திருமதி வாஸ் குணவர் தீ தன அவர்களை இந்தச் சநீதர் ப் பத்தில் நன்றியுடன் நினைவுகூருகின்றோம்
இந்த ஆய்வில் வெளிக் கள அளவீட்டுக்கான முறையியலை வடிவமைத்துக்கொள்வதற்கு பெறப்பட்ட உதவிகளுக்காக கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு. எஸ். ஹெற்றிகே அவர்களுக்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். மேலும் இந்த ஆய்வுக் கட்டுரையின் பூர்வாங்கத் திட்ட வரையினை அமைத்த வேளையில் மிகவும் பயனுள்ள கருத்துக்கள் பலவற்றை வழங்கிய செல்வி திருச்சந்திரன், சேபாலி கொட்டுகொட ஆகியோருக்கும் எமது நன்றிகள். அத்துடன் வெளியீட்டுக்காக இந்த ஆய்வினைப் பதிப்பிற்கு ஏற்ற வகையில் திருத்தியமைத்து உதவிய நிக்கி பஸ்ரியனுக்கும், விடய ஆய்வுகளைப் பதிப்பிற்கு ஏற்ற வகையில் திருத்தியமைத்து உதவிய நிமந்தி இராஜசிங்கத்திற்கும் இவ்வேளையில் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவர்களைவிட இந்த வெளியீட்டின் அச்சுப் பதிப்புச் செயன்முறையினை ஒழுங்கமைத்துத் தந்த திரு. பி. தம்பிராஜா அவர்கட்கும் நன்றியினைத் தெரிவிக்கும் அதேவேளையில் ராதிகா குமாரசாமி அவர்கட்கு அவர் வழங்கிய உதவிகளுக்காக விசேட நன்றிகளையும் தெரிவிக்கின்றோம். மேலும் எம்முடன் எப்பொழுதும் தமது நேரத்தினைச் செலவிட்டு உதவி புரிந்த தரங்கா டி. சில்வாவிற்கும் எமது நன்றிகள். இறுதியாக இந்த ஆய்வுத் திட்டத்தினை
vii

Page 6
ஒருங்கிணைத்து நடாத்தியது மட்டுமன்றி இந்த ஆய்வின் இன்றைய வடிவத்தைப் பதிப்பிற்கு ஏற்ற வகையில் திருத்தியமைத்து உதவிய ஜஸ்மின் தம் பையா அவர்கட்கும் எமது சிறப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவற்றினைவிட இலங்கையில் அரசு, அதன் ஆட்சிமுறை மற்றும் அரசியல் பற்றிய கருத்துக்கள் மற்றும் தமது அனுபவங்கள் என்பனவற்றினை எம்முடன் பகிர்ந்துகொள்வதற்கு தம்து நேரத்தின் ஒரு பகுதியினைச் செலவிட்ட அரசியலில் ஈடுபட்டுள்ள பல பெண்கள் உட்பட வேறு பல பெண்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
கிஷாலி பின்ரோ ஜெயவர்த்தன மற்றும் சூலணி கொடிக்கார பங்குனி, 2003.
viii

முன்னுரை
இந்த வெளியீடானது இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு “பெண்கள் மற்றும் ஆட்சிமுறை/தெற்காசியாவில் சனநாயகச் செயன்முறைகள்: அரசினை மீளுருவாக்கல்’ எனும் தலைப்பில் அமைந்த தெற்காசியப் பிராந்திய ஆய்வின் இலங்கை நாட்டிற்கான அறிக்கையாகும். இந்த ஆய்வானது 1998-2000 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஃபோர்ட் அடிப்படை மன்றத்தினால் நிதியுதவியளிக்கப்பட்டு 6 நாடுகளினது குழுக்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. அவையாவன: அயின் ஒ சாலிஷ் கேந்திர (பங்களாதேஷ்), அஸ்மிதா (தென் இந்தியா), ஏக்கற்றா (வட இந்தியா), ஷிர்கற் கா (பாகிஸ்தான்), ரீ சக்தி (நேபாளம்), இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் (ICES) (இலங்கை) என்பனவாகும். இச் செயற்றிட்டமானது பின்வரும் விடயங்கள் தொடர்பாக அரசிலும், சனநாயகச் செயன்முறைகளிலும் பெண்களின் ஈடுபாட்டினைப் பரிசீலித்துப் பகுப்பாய்வு செய்கின்றது.
(1) பெண்களின் அரசியற் பங்கேற்பு (2) பால்நிலை, அரசியல், அரசு என்பனவற்றிற்கிடையிலான தொடர்பு (3) பெண்களின் பிரஜாவுரிமை தொடர்பான பேச்சுக்கள் (4) குடியியல் சமூக நிறுவனங்களில் பெண்களின் ஈடுபாடு (5) அரசினைப் பற்றிய பெண்களின் நோக்கு (6) பெண்களின் சிபார்சுகள்
இத்தகைய பரந்த சட்டகத்துக்குள் முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய பிரச்சினைகள் என்ற வடிவில் ஒவ்வொரு நாட்டுக் குழுவினாலும் அடையாளப்படுத்தப்பட்ட முதன்மைப் பிரச்சினைகளை அல்லது ஒரு தொகுதிப் பிரச்சினைகளை ஒவ்வொரு நாட்டுக் குழுவும் அடையாளம் செய்து ஆய்வில் ஈடுபட்டது. இந்த ஆய்வின் முழுக் கண்டுபிடிப்புக்களும் 2002 ஆம் ஆண்டு மார்கழி மாதம் இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தினால் ஒப்பீட்டுத் தொகுதியாக வெளியிடப்பட்டது. அதேநேரம் ஒவ்வொரு நாட்டுக் குழுக்களும் தமது தனிப்பட்ட சொந்த அறிக்கைகளைத் தனித்தனியாகப் பிரசுரம் செய்வதற்கான உரிமையையும் கொண்டிருந்தன.
இனத்துவ கற்கைக்ளுக்கான சர்வதேச நிலையம் மேற்கொண்ட இலங்கை நாட்டிற்கான ஆய்வில் அரசியல் செயன்முறைகளில் பெண்களின் ஈடுபாட்டினைத் தீர்மானிப்பதில் அரசியல் மற்றும் சமூக வன்முறைகளின் பங்கினை விளங்கிக் கொள்வதனைத் தேடிநிற்கின்றது. பொது அரங்கில் அரசியல், பேரம் பேசும் ஆற்றல் என்பன வன்முறைகளினால் யாழ்
ix

Page 7
படுத்தப்பட்டதொரு பின்னணியில் அரசுடனான பெண்களது தொடர்பின் இயல்புகளை அடையாளம் செய்வதற்கு இவ்வாய்வு முயற்சித்தது. ஒரு பக்கத்தில் வடக்கில் இனமுரண்பாடும், தெற்கில் சமூக அமைதியின்மையும் சமூகத்தினைப் பெருமளவு இராணுவ மயப்படுத்தியது. பாரம்பரியமான பெண்களின் பங்கில் உருமாற்றத்தினையும், அரசுடன் அதிகளவான இடைத்தொடர்புகளையும் ஏற்படுத்தி பொதுத்துறையில் பெண்களின் பங்குபற்றுதலுக்குத் தூண்டுதல் அளிப்பதில் வெற்றிகண்டது. மறுபக்கத்தில் எதிர்பாராத மட்டத்துக்கு உயர்வடைந்த காட்டுமிராண்டித்தனம், வன்செயல்கள் என்பனவற்றினால் சனநாயகச் செயன்முறைகளின் பிரதான நீரோட்டத்தில் முறைசார் அரசியலிலிருந்து பெண்களை மேலும் ஓரங்கட்டியது எனலாம். எனினும் இந்த ஆய்வு முடிவடைந்த பின்னரான இரண்டு வருட காலப்பகுதியில் இலங்கையின் அரசியல் நிலவரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது எனலாம். இலங்கை தற்பொழுது சமாதானத்தின் நுழைவாயிலில் உள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையே கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அதனது இரண்டாவது வருடத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது. சமாதானச் செயன்முறைகளின் வெற்றியானது சகல இனங்களினதும் போட்டி மிகுந்த ஆர்வங்களை வசதிப்படுத்தும் முகமாக இலங்கை அரசின் இயல்பும் பண்பும் எவ்விதம் மாற்றமடைய உள்ளது என்பதிலேயே தங்கியுள்ளது. இந்த ஆய்வின் ஆரம்பத்தில் நாம் அவதானித்தது போன்று அரசினைச் சீர்ப்படுத்துவதற்கான விவாதங்கள் தொடர்ந்தும் ஆரம்பநிலை ஒன்றிலேயே இருக்கின்றன. அதாவது சிறுபான்மை இனத்தவரின் தேவைகளை வழங்குதல், பல்லினங்களின் பண்பினை எடுத்துக் காட்டக்கூடிய முறையில் அது மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவை என்பனவற்றால் அரசியலமைப்பு ரீதியாகக் காணப்படுகின்ற தோல்வி பற்றியே அதிகம் கலந்துரை யாடப்படுகின்றது. அரசு சம்பந்தமாகப் பெண்களின் அக்கறைகள், பெண்கள் தொடர்பாக அரசின் பொறுப்புக்கள், சாத்தியமான அரசியல் மாற்றம் தொடர்பாக பெண்களின் கருத்துக்கள் என்பன ஒன்றாக எடுத்து இணைக்கப்படுவதற்கு சிறியளவு இடத்தினையே கொண்டிருக்கின்றன. எனினும் இந்நிலை மிகவும் மெதுவாக மாற்றமடைந்து வருகின்றது.
இலங்கையில் பெண்கள் இயக்கங்களின் வெற்றிகரமான பிரசாரம் ஒரு பகுதிக் காரணமாக அமைய, பல்வேறு முயற்சிகளின் மூலமாகத் தற்போதைய அரசாங்கம் பெண்களின் அக்கறைகள், பிரச்சினைகள், விருப்பு வெறுப்புக்கள் என்பனவற்றை எடுத்துக் காட்டும் வகையில் ஈடுபாடு ஒன்றினை வெளிக்காட்டி வருகின்றது. ஐந்து வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றக்கூடிய முறையில் உள்ளுராட்சித் தேர்தல் நியமனப் பட்டியலில் 25 சத வீத ஒதுக்கீடு பெண்களுக்கு இருக்க வேண்டும் என்ற வகையில் அரசாங்கம்
ΣK

தனது ஈடுபாடு ஒன்றினை வெளிக்காட்டியுள்ளது. மேலும் அரசாங்கமானது நாட்டின் அரசியற் கலாசாரத்தில் மாற்றம் ஒன்றினைக் கொண்டு வருவதற்கும், நல்லாட்சி முறையொன்றினை உறுதிப்படுத்துவதற்கும் வழிசமைக்கின்ற அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பல சுதந்திர ஆணைக்குழுக்களில் அங்கத்தவர்களாகப் பல பெண்களை நியமித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் 2002 ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாம் சுற்று சமாதானப் பேச்சுவார்த்தையின் முடிவில், சம்பந்தப்பட்ட சகல குழுக்களும் சமாதானச் செயன் முறையில் பெண்கள் பிரச்சினைகளை உள்ளடக்குவதனை உறுதிப்படுத்தும் முகமாகப் பெண்கள் குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதனை முழுமனதாக ஏற்றுக்கொண்டன. இந்தக் குழுவிற்கு தனது சொந்தப் பரிந்துரைகளைத் தயாரிப்பதற்கான உரிமை வழங்கப்பட்டது.
அரசுடனான பெண்களின் தொடர்பும், பெண்களின் நாளாந்த வாழ்க்கையில் அரசின் தாக்கங்களும் ஏற்கனவே குழப்பமும் சிக்கல் தன்மையும் கொண்டதாக இருந்ததுடன், தொடர்ந்தும் அதேநிலையிலேயே இருக்கப்போகும் அதேவேளையில், சனநாயகரீதியானதும் பெண்களை உள்ளடக்கக்கூடியதுமான "அரசியற் கட்டமைப்புக்களை உருவாக்கும் சாத்தியக்கூறுகளை, சமாதானச் செயன்முறை உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முறையியல்
இலங்கை தொடர்பான இவ்வாய்வு சுவடிகளை அடிப்படையாகக் கொண்டும், முதனிலைத் தரவுகளானது, வினாக்கொத்து அளவீடு மூலமும், ஆழமான நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், தெரிந்தெடுக்கப்பட்ட குழுக் கலந்துரையாடல்கள், விடய ஆய்வுகள் ஆகிய முறைகளின் மூலமும் சேகரிக்கப்பட்டது. வினாக்கொத்து அளவீடு 500 பதிலளிப்பவர்களை உள்ளடக்கியிருந்தது. இவர்களில் 90 சத வீதமானோர் பெண்களாக இருந்ததுடன் அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 60 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களாகவும் இருந்தனர். மிகுதி 10 சத வீதமானோர் ஆண்களாகவும் மேற்குறிப்பிட்ட அதே வயதெல்லைக்குட்பட்டோராகவும் இருந்தனர். அரசு பற்றிய பெண்களின் உணர்வுபூர்வமான கருத்துக்கள், அனுபவங்கள்
தற்போது பாராளுமன்றத்தில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினால இந்த ஈடுபாடு முதன்முதலாக வெளிப்படுத்திக் காட்டப்பட்டது. ஆட்சியதிகாரத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 2001 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் அக் கட்சி முதன்முதலாகப் பெண்களுக்கான கொள்கை விளக்கப் பிரகடனமொன்றினை ஆரம்பித்து வைத்தது. பிரதான அரசியற் கட்சியொன்றினால் பெண்களுக்கான கொள்கை விளக்கப் பிரகடனமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டமை இதுவே முதற்றடவையாகும்.
xi

Page 8
என்பனவற்றை உள்ளடக்கும் முகமாக எல்லா நாடுகளுக்கும் பொதுவான ஒரு தொகுதி வினாக்களை வினாக்கொத்து உள்ளடக்கியிருந்தது. இதற்கும் மேலதிகமாக குடும்பத்திற்குள்ளும் சமூகத்திற்குள்ளும் வன்முறைகளுடன் தொடர்பான பிரச்சினைகளை வெளிப்படுத்தும் வினாக்களையும் அது கொண்டிருந்தது. தேசிய, மாகாண, உள்ளுர் மட்டத்திலுள்ள பெண் அரசியல்வாதிகளுடன் மிக ஆழமான நேர்காணல்கள் இடம்பெற்றதுடன் அரசசார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிய பெண்களுடனும் அவை மேற்கொள்ளப்பட்டன.
xii

பெண்களும் ஆட்சிமுறையும்: இலங்கை
அறிமுகம்
தெறி காசிய சமூகங்கள் பொதுவான பல பரிரச் சினைகளை எதிர்நோக்குகின்றன. சகல பெண்களுக்குமான நீதி நியாயத்தையும், சமத்துவத்தையும் எவ்வாறு நியாய்ப்படுத்துவதென்பது இவற்றுள் முதன்மையானதொன்றாகும் , பெண்கள் உட்பட சில நலிவடைந்த குழுக்களுக்கு அதிகாரம் வழங்கி அவற்றைக் கட்டியெழுப்புவதில் அரசு கண்டுள்ள தோல்வி சில கேள்விகளை எழுப்புவதற்குத் தூண்டியுள்ளது. அதாவது பாரம்பரிய சனநாயகச் சட்ட அமைப்புக்கள் சமத்துவமான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைக் கட்டமைப்புக்களைக் கொண்டன என்ற எடுகோள் தொடர்பாகவும், பிரசைகளின் உரிமைகளை நிச்சயப்படுத்துவதில் பிரதான அங்கமாக விளங்கும் அரசு ஒன்றின் பங்களிப்புத் தொடர்பாகவுமே இக் கேள்விகள் எழுந்துள்ளன.
சுதந்திரத்தை அடுத்த காலத்தின் போது அரசானது ஆள் புல ஒருமைப்பாட்டினை வரையறை செய்வதில் சில முக்கிய பொறுப்புக்களைக் கொண்டிருத்தல், இந்த ஆள்புல வரையறைக்குள் வாழும் மக்களின் சமூக நலன்களைப் பேணிப் பராமரித்தல், ஒழுங்கினையும், நல்லதொரு அரசாங்கத்தினையும் கொண்டிருக்கும் வகையில் சட்டங்களையும் ஒழுங்குவிதிகளையும் உருவாக்கல் போன்ற சில பொறுப்புக்களைக் கொண்டுள்ளது என உணர்வுபூர்வமாகக் கருதப்பட்டது. இந்த வகையில் அரசானது வெளிச்சக்திகளுக்கெதிராக நட்புரீதியில் அல்லது பலவந்தமான முறையில் தனது பிரசைகள் சார்பாகப் பேசுவதற்கும், தனது சொந்த இருப்பினைப் பாதுகாக்கும் முகமாக அதிகாரத்தினைப் பிரயோகிக்கவும் சட்டரீதியான அந்தஸ் தினைப் பெற்றுக் கொணிடது. பொதுவான நன்மைக்காகவே அரசு ஒன்று நிலைத்திருக்கின்றது என்ற எண்ணம் அதனது எல்லா நடவடிக்கைகளையும் தன்னிச்சையாக ஏற்றுக்கொள்ளுதல் என்ற ஒரு நிலையை வளரச் செய்கின்றது. அத்தகைய வஞ்சகமற்றதொரு எண்ணம் இயற்கையானதும் புதிய தேசிய அடையாளங்கள் தோற்றம் பெறுவதற்கும் அவசியமானதாக உள்ளது.
அரசியலமைப்பு அதிகாரத்தின் மீதான நம்பிக்கை இந்த எடுகோளுக்கு இன்றியமையாததாக இருந்தது. பாராளுமன்ற சனநாயகத்தில் மரபுரீதியாகப் பெறப்பட்ட பிரிட்டிஸ் சம்பிரதாயங்கள், அரசியலமைப்புவாதம், அரசியலமைப்பு நிறுவனங்கள் என்பனவற்றின் ஊடாக இடம்பெற்ற அதிகார மாற்றத்துக்கான

Page 9
சீர்திருத்தம் சனநாயகத்திற்கான மிகவும் சிறந்ததொரு நிலைமையாகக் கருத்திற் கொள்ளப்பட முடியும் என எடுத்துக்காட்டி நிற்கின்றன. எனினும், இது மிகவும் விரைவில் தவறான நம்பிக்கை என நிரூபித்தது. சமூகங்கள் வெவ்வேறாகப் பிரிவடையும்பொழுதும் அரசும், அரசின் வேறுபட்ட நிறுவனங்களும் எவ்வாறு மறுசீரமைக்கப்பட முடியும் என்ற ஆய்வு ஆரம்பமாகியது. ஆனால் இந்த மறுசீரமைப்புத் திருத்தங்களைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற விவாதங்கள் எந்தவொரு வடிவிலான சீர்திருத்தத்திற்கும் மத்திய நிலையமாக அரசே விளங்குகின்றதென்ற வரையறுக்கப்பட்ட பழைய பரமாணங்களுக்குள்ளேயே தொடர்ந்து இடம்பெறுகின்றன. எனவே இந்நிலையில் மேற்குறித்த விடயத்தின் மையக் கருவானது போட்டிமிகு தேர்தல் செயன்முறைகள், பல கட்சிமுறை ஒன்றை உருவாக்குதல், சுதந்திரமான நீதி நியாயத்துறை, உரிமைகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட விடயங்களை நோக்கி நகர்ந்துள்ளது. எனினும் இந்த நகர்வானது அரசியலமைப்புக் கோட்பாட்டுக்கும் அதன் நடை முறைக்குமிடையே காணப்படுகின்ற மிகவும் உறுதியான வேறுபாடுகள், பல சமூகங்களில் மனித உரிமைகளையும், சனநாயகப் பெறுமானங்களையும் உறுதியாகக் கடைப்பிடிப்பதில் அரசியலமைப்பு தவறும்பொழுது எழுகின்ற மிகவும் ஆழமான நம்பிக்கையிழப்புடன் இணைந்து காணப்படுகின்றது. இவையிரண்டினையும் இணக்கப்பாட்டிற்குக் கொண்டுவருதல் இந்நூற்றாண்டு எதிர்நோக்குகின்ற மிகப்பெரிய அரசியலமைப்பு நெருக்கடியாக வரையறை செய்யப்பட்டுள்ளது.*
அரசியலமைப்பு ஒழுங்கு தொடர்பான விவாதம் தெற்காசியாவில் காணப்பட்டதுடன் குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்களின் தேவைகளை வழங்குவதற்கான அரசியலமைப்புவாதக் கோட்பாடு தோல்வி கண்ட சந்தர் ப் பங்களிலும் ஆட்சியமைப்பு ஒழுங்கில் பல லினப் பணி பு எதிரொலிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களிலும் இவ் விவாதங்கள் இடம்பெற்றன. இந்தப் போராட்டமானது பல்வேறு காலங்களில் குடியியல் சமூகங்களின் தலையீடுகளினாலும் சட்டரீதியான கட்டளைகள் மீது இராணுவ ஆட்சி நிலவிய பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் நீதித் துறை மற்றும் பத்திரிகைத் துறை போன்ற நிறுவனங்களின் தலையீடுகளினாலும் தனியாக விபரமாக எடுத்துக் காட்டப்பட்டது. ஆனால் பெண்களும்கூட சமத்தவத்துக்கான தமது சொந்தப் போராட்டங்களுக்காக இந்த விவாதங்களை அதிகளவில் பயன்படுத்திக் கொண்டார்கள். நாட்டின் அரசு இத்தகைய தாக்குதல்களுக்கான மையக் களமாக மாறத்தொடங்கியது. உண்மையில், பெண்களின் வாழ்க்கையில் அரசின் தாக்கம் மிகவும் குழப்பம் நிறைந்ததாகக் காணப்பட்டது. ஒரு பக்கத்தில் உள்நாட்டிலும் (அதனது
2
திருச்செல்வம். என். "தெற்காசியாவில் அரசியலமைப்புவாதத்தின் நெருக்கடி', சனநாயகத்தின் பிரச்சினைகள், அரசியலமைப்புவாதம் மற்றும் அரசியல் வன்முறைகள், பதிப்புக்கு ஏற்றவகையில் திருத்தியமைத்தவர் யு. இவேடிங், கோத்தே நிறுவனம், கொழும்பு. 1993, பக். 24.40.
2

அரசியலமைப்பு ஊடாக) சர்வதேசரீதியிலும் (சர்வதேச சாதனங்களை ஏற்று அங்கீகரிப்பதனூடாக) பெண்களின் உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கின்ற தத்துவங்கள், கொள்கைகள் மீது தனது பற்றார்வத்தைத் தெரிவிப்பதற்கு அரசு கடமைப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் பால்நிலைப் பாரபட்சங்களினாலும் நடைமுறைகளினாலும் பெண்களுக்கு அதிகளவு அநீதி இழைக்கப்பட்டது. இந்த அநீதிகள் தொடர்ந்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு துறைகளில் பெண்களை விட ஆண்களை அதிகாரத்துவம் கொண்டவர்களாக மிகவும் உறுதியுடன் ஏற்றுக்கொள்கின்ற அரசினால் குற்றம் என்று கொள்ளாமல் மன்னித்து விடப்பட வேண்டியதாக இருந்தது. உதாரணமாக இலங்கையில் சேமநலன்கள் மீதான அரச செலவினங்கள் பெண்கள் வாழ்க்கையின் பெளதிகரீதியான தரத்தில் நேரடியானதும் சாதகமானதுமான தாக்கம் ஒன்றினைக் கொண்டிருந்த அதேவேளையில் பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய வேறுபட்ட சந்தர்ப்பங்களின் அதிகரிப்பிலோ அல்லது குடும்ப ஆட்சித் தலைவருக்குரிய கட்டமைப்பு, கலாசாரம், மனப்பான்மை என்பவற்றை மாற்றுவதிலோ மிகச் சிறிய பங்கினையே கொண்டிருந்தது என்பதனை நிரூபித்தது. அரச இயந்திரங்களின் பிரதிநிதிகள் பெண்கள் உரிமைகளைப் பற்றி வாயளவில் பேசுவதில் மிகவும் செல்வாக்குப் பெற்றவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் பெண்கள் ஆட்சிமுறையுடன் தொடர்புபட்ட பிரச்சினைகளில் முக்கியமான பங்கினை வகிப்பதிலிருந்தும் தமது சொந்த வாழ்க்கையை மாற்றும் அரசியல் நடிகர்களாக மாறுவதிலிருந்தும் தடுக்கப்பட்டார்கள்.
ஒரு புறத்தில் சனநாயகத்தினை விரும்பிப் பின்பற்றுபவர்களுக்கும் பன்மைவாதிகளுக்கு இடையேயும், மறுபுறத்தில் தேசியத்துவத்தினை வரவேற்பவர்களுக்கும் அடிப்படைவாதிகளுக்கும் இடையேயும் குடியியல் சமூகத்தில் இடம்பெறுகின்ற போராட்டத்தின் உண்மை நிலை பெண்கள் அரசினைப் பற்றிக் கொண்டிருக்கின்ற அபிப்பிராயத்திற்கு புதியதொரு பரிமாணத்தினைச் சேர்த்துள்ளது. ராதிகா குமாரசுவாமி இதனைப் பின்வருமாறு நோக்குகின்றார்:
'நெருக்கடி நிலையில் மட்டுமல்லாது தமது நாளாந்த வாழ்க்கையில் சகிப்புத்தன்மையிலும் சனநாயகத்திலும் உள்ள பெறுமானங்களை நம்புகின்ற பெணகளில் பலர் இப்பொழுது போராடிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற எல்லாவற்றினையும் விட உங்கள் சமயத்திற்கும் இனத்துவ அடையாளத்திற்கும் முனனுரிமை வழங்குகினற தனித்துவமான அரசியல எணர்ணத்திலிருந்து உருப்பெற்று வளர்கின்ற குடியியற் சமுகத்தில், இயக்கங்கள் வளர்வதுபோல இப் பெணகளும் உருவாகின்றார்கள். மேலும் தனித்துவ அரசியல் என்பதில் பகுத்தறிவு வாய்ந்த சுய ஆர்வம் என்பதனைவிட பிறப்பும், இரத்தமுமே கூடிய முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. அதேபோல சமுதாய ஆர்வம், அரசியல் நம்பிக்கை
3

Page 10
என்பனவற்றினைவிட சமுதாயத்தினர் மொழி, மதம் என்பனவே கூடிய முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருக்கின்றன.”
பெண்களுக்கும் சமூகத்துக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் முனைப்பாக இரு துருவ நிலையை அடைந்த ஒரு நிலையுடன் அரசு வழமையான தனது 'மூளை நோய் பங்கிற்கு தன்னை மாற்றியமைத்து பெண்களுடன் இணைந்து அவர்களை மேம்படுத்தவும், சமூகத்துடன் இணைந்து அதனை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டது. இதனடிப்படையில், பிரசைகள் அரசிடமிருந்து கோரிக்கைகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளனர் என அவர்களைச் சுட்டிக்காட்டுவதனால் தேசியத்தினை உருவாக்கி வெளிப்படுத்திக் காட்டுதல் என்பது கூட சாதகமானவை என விவாதிக்கப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நற்செயலாற்றும் அரசு' என்ற கற்பனைக்கு எதிராக சவால் விடுத்துள்ளது. அத்துடன் மூன்றாம் உலக நாடுகளில் பெண்களின் நடவடிக்கைகள் எதிர்நோக்க வேண்டிய எதிர்கால சவால்களையும் தெளிவாக வரையறை செய்துள்ளது.
பால் நிலைச் சமத்துவம் தொடர்பாக நன்கு உயர்ந்த தரமான குறிகாட்டிகளைக் காட்டி நிற்கும் இலங்கை அரசு பெண்கள், ஆட்சிமுறை, சனநாயகம் போன்ற விடயங்களில் இத்தகைய உண்மை நிலைகளும், கருத்து முரண்பாடுகளும் ஊடுருவி நிற்கின்றன. எமது நாடானது பெண்களின் மேம்பாட்டிற்கென தேசிய இயந்திரம் எனக் கருதப்படுகின்ற சமத்துவத்துக்கான நியாயப்படுத்தக் கூடிய அரசியலமைப்பு உத்தரவாதம் என்பதனைக் கொண்டிருக்கின்றது. அதேபோல பெண்கள் அரசாங்கத்தில் உயர் மட்ட நிலையில் இருத்தல், உயர் வருமான மட்டங்களை அடைந்த நாடுகளுக்கு சமமான முறையில் பெண்கள் பெளதிக வாழ்க்கைத் தரமொன்றினைக் கொண்டிருத்தல் என்பனவும் எமது நாட்டில் காணப்படுகின்றது. 1994 இல் தான் சனாதிபதியாகப் பதவியேற்க முன்னர் சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 'மேற்குலக நாட்டில் உள்ள பெண்களைப் போலன்றி இலங்கைப் பெண்கள் தமது விடுதலைக்காகக் கூக்குரலிட்டுப் போராட வேண்டிய தேவையில்லை எனவும் ஆனால் அரசியற் தலைமைத்துவத்தைக் கருத்திற் கொள்ளும்பொழுது எமது நாட்டில் ஆண்கள் அதனை விருப்பத்துடன்
ராதிகா குமாரசுவாமி, கலாச்சாரப் பன்முகப்படுத்தலும் பரந்த முழு உலக தத்துவமும், சட்டரிதியான நோக்கு. ஆவணக் கோவை இல. 35, சமூக நடவடிக்கைக்கான சட்ட வளங்கள் (இந்தியா) பக். 25. ராதிகா குமாரசுவாமியின் அதே ஆய்வு வெளியீடு. * மொறிஸ், டி மொறிஸ், உலக வறியவர்களின் நிலையினை அளந்தறிதல்: பெளதிக வாழ்க்கைத் தரக் குறிகாட்டி, பேர்கமன், நியூயோர்க், 1979,
4

விட்டு நீங்கும் நிலையில் காணப்படுகின்றது போல் தெரிகின்றது” எனக் குறிப்பிடுகின்றார்.
எனினும் அரசியல்ரீதியாக அதிகாரம் அளிக்கப்பட்ட பெண்கள் பற்றிய புனைகதையைச் சட்டத்திற்கு உட்பட்டதாக்கும் சனாதிபதி குமாரதுங்காவின் கருத்து முழுக் கதையின் ஒரு பகுதியேயாகும். இலங்கைப் பெண்கள் தமது உரிமைகளைக் கோரி மிகவும் ஆர்வத்துடன் போராடி வருகின்ற அதேவேளையில் வாக்கிற்கு அப்பால் தமது அரசியல் சமூக நோக்கங்களைத் தெளிவாக எடுதி துக் காட் டுவதரில் இனி று வரை யரிலி மிகவும் கட்டுப்படுத்தப்பட்டவர்களாகவே உள்ளனர். கல்வி சார்ந்த படிவங்களினால் பெண்களின் உயர்ந்த அளவிலான எழுதப் படிக்கத் தெரிந்த நிலை (83.1%) பற்றி எடுத்துக் காட்டப்படுகின்றது. அது பெண்களின் பொதுத்துறைப் பிரவேசத்தைக் கட்டுப்படுத்துகின்ற சமூக நம்பிக்கை முறைகளையும், கலாச்சாரங்களையும் மேலும் வலுப்பெறச் செய்கின்றது. இலங்கை மக்களின் சாதாரண வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் அரசியலிலும், பொதுத்துறை வாழ்க்கையிலும் புகுந்துகொள்வதற்கு ஆணுக்கு மிகச் சிறியளவிலான சவாலே காணப்படுகின்றது. இதற்கு ஆணிாதிக்கம் எல்லா இடங்களிலும் இருப்பதே காரணமாகும். முழுமையான பிரசை என்ற எண்ணம் தொடர்ந்து ஆண்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளையில் பெண்கள் தொடர்ந்தும் தீர்மானம் மேற்கொள்ளல் செயன்முறைகளில் ஓரங்கட்டப்பட்டவண்ணமே உள்ளனர். அத்துடன் பிரசை என்ற முறையில் அவர்கள் வேறுபட்ட முறையிலேயே உள்ளடக்கப்படுகின்றார்கள். அண்மைக் காலங்களில் இலங்கையில் பெண்கள் அதிகளவு எண்ணிக்கையில் பொதுத்துறையில் புகுந்துள்ள போதிலும் (சில வேளைகளில் இந்த அத்தியாயத்திலுள்ள ஏனைய ஆய்வுகளில் இது முரணி பட்டுக் காணப்படலாம்) கல வியிலும் , வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கான சம சந்தர்ப்பம் தொடர்ந்தும் கடினமான பாதை ஒன்றிற் செல்வதாகவே தெரிகின்றது. ஒரு சில தனிப்பட்ட உதாரணங்களைத் தவிர பெண்கள் அரசியல் செயன்முறை நீரோட்டத்திலும் தேசிய நிருவாகத்தின் உயர் பீடங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் ஒதுங்கி மிகவும் குறைந்ததொரு நிலையிலேயே உள்ளனர் என்று கூறலாம்.
பெண்கள் உரிமைகள், அவற்றிற்கான அமைப்புக்கள், வளங்கள் என்பன அவர்களின் போராட்டங்கள், போட்டிகள் என்பனவற்றிற்கான அடையாளங்களாக இருக்கின்ற பொழுதும் கூட அவர்களின் உரிமைகள், பொறுப்புக்கள் என்பனவற்றைத் தெளிவாக வரையறை செய்து வெளிக்காட்டுவதில் அப்பெண்பிரசைகளின் முனைப்பான பங்குபற்றுகை தடைப்படுத்தப்படுகின்றது அல்லது மறைக்கப்படுகின்றது' எனலாம். அரசு அதனது பொறுப்புக்கள்
* பி.ம. பெண்கள் ஓரங்கட்டப்படவில்லை, சண்டே ரைம்ஸ், கொழும்பு, ஒக்டோபர்
9 ஆம் திகதி, 1994, பக். 20.
" தம்பையா ஜஸ்மின், இந்த அத்தியாயத்தின் அறிமுகத்தில்
5

Page 11
தொடர்பான பெண்களின் கரிசனைகள், முழுமையான ஆட்சியமைப்பு முறை தொடர்பாக ஆக்கபூர்வமான திருத்தங்களுடன் கூடிய அரசியல் மாற்றத்திற்கான அவர்களின் சிபாரிசுகள், அபிப்பிராயங்கள் கருத்துக்கள் என்பன பொதுத்துறை அரங்கில் குறைந்தளவிலேயே வெளிப்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக அரசியல்ரீதியான அமைப்புக்களில் ஆண்களைவிடக் குறைந்தளவு இலங்கைப் பெண்கள் காணப்படுவது மட்டுமன்றி பொதுத்துறைகளில் பொதுவாகவும், கொள்கை உருவாக்கம், சட்ட உருவாக்கம் என்பன போன்ற செயன்முறைகளில் குறிப்பாகவும் பால்நிலை கூருணர்வுத்திறனின் பற்றாக்குறை என்பது தெளிவாகப் புலப்படும் ஒன்றாக உள்ளது. தனியார், தேசிய அபிவிருத்தியில் இதன் விளைவிலான மோசமான தாக்கம் உயர்மட்ட அரச கொள்கை உருவாக்கல் செயன்முறையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது?
இரண்டாவது நிலையில் இலங்கை அரசு, ஆட்சிமுறை, அரசியல் என்பவற்றுடனான பெண்களின் இடைத் தாக்கங்கள் மிகவும் செறிவான மனப் போராட்டம் ஒன்றின் கட்டமைப்பின் கீழேயே கடந்த மூன்று தசாப்தங்களாக நடாத்தப்பட்டுள்ளன. ஒரு பக்கம் வன்முறைகளின் மிகவும் தீவிரமான பங்கு பெண்களை வீட்டுக்குள்ளிருந்து வெளியே கொண்டுவந்து வேகமாக அழிந்துகொண்டிருக்கின்ற, அழிந்துவிட்ட பொதுத்துறை அரங்கிற்குள் விட்டது. 1980 களின் பிற்பகுதியில் தெற்கில் காணப்பட்ட அமைதியின்மை, வடக்குகிழக்கில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற இனப் போராட்டம் என்பன வழமையான பெணி களினி பங் கினை மாற்றியமைத்து வீட்டுத் தலைமைத்துவம், வீட்டினை முழுமையாக நிதி அடிப்படையில் பராமரிப்பவர் போன்ற வழமைக்கு மாறான கதாபாத்திரங்களில் ஈடுபடத் தூண்டின. (இலங்கையில் இன்று 20% மான வீடுகளில் பெண் தலைமைத்துவம் உள்ளது) எனினும், வளர்ந்து வருகின்ற வன்முறைகள் மிகவும் முனைப்பான அதிகாரம் கொண்ட அரசு ஒன்றின் வலிமையான காப்பிடம் ஒன்றினையும், ஒன்றில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற இனப் போராட்டங்கள், அதிகரித்து வருகின்ற பொது வன்முறைகளாலோ அல்லது உருவாக்கப்படுகின்ற சிறப்பான தேர்தல் வன்முறைகளிலோ அரசினாலும், அரசு துறையைச் சாராத ஏனையவர்களினாலும் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளின் ஓர் உபகரணமாக அதிகாரத்தினைச் சட்டத்திற்கு உடன்பட்டதாகச் செய்யும் ஒன்றினையும் கண்டன. எனவே இலங்கை அரசு நவீன சனநாயக நீரோட்டத்தில் ஆழமாகக் காலை ஊன்றியது போல காணப்பட்ட அதேவேளையில் உள்நாட்டு யுத்தம் ஒன்றினைத் தொடர்ந்து நீடித்து வைத்திருக்கவும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடவும் குறிப்பிடத்தக்க திறமை ஒன்றினைக் காட்டிக்கொண்டும் நின்றது 6[606)sflD,
* பெண்களும் ஆட்சிமுறையும், பெண்கள் விவகார அமைச்சர் ஹேமா
ரத்நாயக்காவின் உரை, டெய்லி நியூஸ், கொழும்பு, டிசம்பர் 10 ஆம் திகதி, 1997, Jä. 11.

மிகவும் தனிப்படுத்தப்பட்டதும் அதிகாரம், ஆட்சிமுறை தொடர்பாக கட்டுப் படுத்தப் பட்ட எணி ணங்களுக்கு இடைப் பட்டதுமான ஒரு வரம்பெல்லைக்குள் இலங்கைப் பெண்கள் தற்போது காணப்படுகின்ற பொது வன்முறைகளையும் தனிப்பட்ட வன்முறைகளையும் எதிர் கொண்டு வருகின்றார்கள். மேலே குறிப்பிடப்பட்ட இந்த அதிகாரம் அல்லது ஆட்சி என்பது அரசு வட்டத்தையும் முதன்மையாகக் கொண்டதாகும். இந்த விதிக்கு விதிவிலக்காக ஒரு சில மாத்திரமே உள்ளன. ஏனைய சந்தர்ப்பங்கள் எல்லாவற் றரிலும் பெணிகள் நிலைத் திருக்கக் கூடிய, சகி திமிகு வெளிப்படுத்தலுடன் கூடிய தமது கோரிக்கைகளுக்கான சட்டவரம்பு ஒன்றினைக் கட்டியெழுப்ப முடியாதவர்களாக உள்ளனர். குடும்பத் தலைமைத்துவம் தொடர்பான ஆழமான பாரபட்சங்கள், கலாசாரக் கட்டமைப்புக்களில் ஆழமாக வேரூன்றியுள்ள ஆர்வங்கள் போன்றவை பெண்களின் உள்ளார்ந்த ஆற்றல் தொடர்ந்து மறைக்கப்பட்டு மழுங்கடிக்கப்படுவதற்கே வழிவகுக்கின்றன. அத்துடன் வசதியான முறையில் நிர்க்கதியற்றவர்களாகவும் அவர்கள் பராமரிக்கப்படுவதற்கும் அவை உதவுகின்றன. இது தனிப்பட்ட மற்றும் கூட்டுச் சக்தி வீழ்ச்சியடைவதற்கு உதவுகின்றது. இல்லாவிடின் இத்தகையதொரு சக்தி சாதகமான தலையீடுகள் மிகவும் வேண்டப்படுகின்ற இடங்களில் பிரயோகிக்கப்பட்டிருக்க முடியும். எனவே இலங்கையில் பெண்களை அதிகாரத்துவம் கொண்டவர்களாக மாற்றுதல் என்பது பெண்கள் மீது அழிவு மிகு தாக்கத்தைக் கொண்டுள்ள வன்முறைத் தாக்கத்தின் சக்திகளுக்கு மத்தியில் சர்வதேச நியமங்கள், எண்ணங்களுடன் ஆர்வமற்ற இணக்கப்பாடு ஒன்றினுக்கு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்று கூறலாம்.
இதன் பிரகாரம் அரசினை மீள் யோசனையின் கீழ் புதிதாகக் கட்டியெழுப்ப வேண்டிய ஓர் அழுத்தமான தேவை காணப்படுகின்றது எனலாம். அதாவது நாட்டின் சம பிரசைகளாகப் பெண்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடிய உறுதி மிகுந்த பால்நிலை விழிப்புணர்வு கொண்ட அரசு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அதன் கருத்தாகும். இந்த ஒரு நிலையிலிருந்து மட்டுமே இலங்கைப் பெண்கள் நவீன அரசியலமைப்பு ஒழுங்குகள், சமூக உருமாற்றங்கள், ஆட்சி உருவாக்கங்கள் என்பனவற்றிற்கு வழிசமைத்துச் செல்லும் என்பதனை உறுதிப்படுத்தும் முகமாக இலங்கை அரசினையும் அதனைச் சார்ந்த நிறுவனங்களையும் சூழ்ந்துள்ள அரசியலமைப்புரீதியான விவாத விடயங்களை மறுசீரமைப்பதற்கு தொடங்க முடியும்.
இனத் துவக் கறி கைக் கான சர்வதேச நிலையத் தினால மேற்கொள்ளப்பட்ட பெண்களும் ஆட்சிமுறையும் தொடர்பான ஆய்வானது அளவீடு ஒன்றின் அடிப்படையிலும், 1998-1999 காலப் பகுதிகளில் பெண்கள் குழுக் களிடையே நடாத் தப் பட்ட தெரிந்தெடுக் கப்பட்ட குழுக் கலந்துரையாடல்களின் அடிப்படையிலும் நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டது. இலங்கை தொடர்பான இந்த ஆய்வு தொடர்கின்ற வன்முறைகளுக்கு மத்தியிலே
7

Page 12
அரசு தொடர்பான பெண்களின் நோக்கங்கள், அனுபவங்கள் என்பனவற்றிற்கும், அதிகாரத்திலும், ஆட்சிமுறையிலும் பெண்களின் பங்குபற்றுகையின் இயல்பு என்பதற்கும் கூடிய அழுத்தம் கொடுத்தது. பரந்த பொதுத்துறை அரசினுக்குள் மரபுரீதியான அரசியற் கட்டமைப்பில் பெண்களின் ஈடுபாடு என்ற விடயத்தில் இந்த ஆய்வு தனது கவனத்தினைச் செலுத்தியது. வன்செயல்களினாலும், இலஞ்ச ஊழல்களினாலும் வரையறை செய்யப்பட்ட அரசியல் நீரோட்டத்தின் நடவடிக் கை மற்றும் பெணிகள் பங்கு பற்றுதலுக்குத் தீங்கினை விளைவிக்கக்கூடிய மரபுரீதியான அரசியல் நிறுவனங்கள் என்பவற்றைக் கொண்ட தற்போதைய இலங்கையின் அரசியல் நிலையில் பரந்ததொரு நோக்கினூடாகப் பெண்களின் அதிகாரம், பொதுக் கண்ணோட்டம் போன்ற பிரச்சினைகளை நோக்குவது அவசியம் என்பதனை நாம் உணர்ந்தோம். எனவே பொது ஈடுபாட்டின் மாற்று வழிவகைகளும் பெண்களுக்கு மேலதிக முக்கியத்துவங்களை வழங்கும் எனக் கருதப்படுகின்றது. சுதந்திரத்தை அடுத்த காலப்பகுதியில் நாட்டில் இடம்பெற்ற பலவகைப்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களின் பின்னணி கருத்திற் கொள்ளப்பட்டு இது மேற்கொள்ளப்பட்டது.
சட்டரீதியான நியதிச் சபைகள், அவற்றின் உருவாக்கம்; அரசியற் கட்சிகள் பெண்கள் அதிகாரத்தை அடைவது தொடர்பான அவற்றின் எண்ண உணர்வுகள்; அரசியற் கட்சிகள் எவ்வாறு பெண்களை கட்டமைத்துக் கொள்கின்றன; எவ்வாறு பெண் அரசியல் ஆர்வலர்கள் அரசு இயந்திரத்துடன் இடைத்தாக்கம் செய்கின்றனர்; பெண்களைப் பிரதிநிதித்துவம் செய்தல் அவர்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான பிரச்சினைகள்; பொது வாக்காளரின் வெளிப்பாடுகள் என்பனவற்றுடன் தொடர்பான வினாக்கள் பதிலிறுப்பாளர்களிடம் கேட்கப்பட்டன. இராணுவ நடவடிக்கைகளில் பெண்கள் பங்குபற்றுதல், காடைத்தனம் போன்ற அரசியல் வன்செயல்களின் வாய்விட்டுச் சொல்லாத அனுமதி அல்லது இராணுவ நடவடிக்கைகளில் பெண்கள் பங்குபற்றுவதன் மூலம் விளையக்கூடிய பின் விளைவுகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் மிகவும் அவதானமாக ஆராயப்பட்டன. எனவே பெண்களின் அரசியல் ஈடுபாட்டிற்குத் தடையானதொரு விடயமாக வன்செயல்களின் பல நிலைத் தாக்கங்கள், வரையறை செய்யப் பட்ட பங்குகள்/ வரம்பெல்லைகள் என்பனவற்றை எல்லை மீறி நடப்பதற்குள்ள சந்தர்ப்பங்கள் போன்றவை இனத்துவ ஆய்விற்கான சர்வதேச நிலையத்தின் ஆய்வின் மையமாக இருந்தன. இத்தகைய மையக் கருக்களின் ஊடாக மேற் குறிப்பிடப்பட்ட ஆய்வானது இலங்கைப் பெண்கள் அரசினை எவ்வாறு வரையறை செய்கிறார்கள், அரசுடனான பெண்களின் இடைத் தாக்கம், பெண் பிரசைகளுக்கான அரசின் நடைமுறை வரையறைகளும் கடமைப்பாடுகளும் போன்ற விடயங்களை நுணுக்கமாக ஆய்வதற்கு முயற்சிக்கின்றது.

இலங்கை நேற்றும் இன்றும்
அரசியல்யாப்புச் சீர்திருத்தத்திற்கான டொனமூர் ஆணைக்குழு 1928இல் சர்வசன வாக்குரிமை வழங்குவது குறித்து ஆய்வு செய்த போது “இந்தியப் பெணி களைப் போல இலங்கைப் பெணி களும் வாக்க ளிக் கதி தகைமையுள்ளவர்களே என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தது. இந்தியப் பெண்களில் கணிசமானோருக்கு ஏற்கனவே வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது".
இலங்கையில் பெண்களுக்கான வாக்குரிமை இயக்கம், பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின் விதந்துரையின் பேரில் இச்சங்கம் 1927 இல் ஸ்தாபிக்கப்பட்டது. கல்வி கற்ற மத்திய வகுப்புப் பெண்கள் சிலரும், சில தீவிரமான ஆண்களும் இச்சங்கத்தில் அங்கம் வகித்தன்ர். அவர்களது முன்னெடுப்பு “மிதமாகவும் கவனமாகவும்'," மேற்கொள்ளப்பட்டதெனினும் எவ்வித வேறுபாடுகளையும் காட்டாது சகல பெண்களுக்கும் வாக்குரிமை வழங்குவதற்கு ஆணைக்குழு விதந்துரை செய்ய வேண்டுமென்னும் அவர்களது கோரிக்கை குறிப்பிடத் தக்கது. தூதுக்குழுவின் தலைவரும், சங்கத்தின் செயலாளருமான அக்னஸ் டி சில்வா தான் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்ததை இவ்வாறு நினைவுபடுத்தனார்: “நாம் போர் வீரர்களைப் போல் உள்ளே சென்று கேள்விகளுக்கு ஆர்வத்துடன் பதில் அளித்தோம், டொனமூர் பிரபு இந்திய வம்சாவழி தொழிலாளர் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்க வேண்டுமா என வினவினார். நான் உடனே ஆம் எனப் பதிலளித்தேன். அவர்களும் பெண்கள் தானே. எல்லாப் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு.”
முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாத்திரமே வாக்குரிமை வழங்கப்பட வேண்டுமென டொனமூர் ஆணைக்குழு விதந்துரைத்த போதும் 1931இல் சீர்திருத்தம் அமுல் செய்யப்பட்ட போது 21 வயதுக்கு மேற்பட்ட சகல பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது." சேர். பொன்னம்பலம்
9 Met thananda, T., "Women in Sri Lanka, Traditions and Change', in Women at the Cross Roads: A Sri Lankan Perspective. (ed.) Sirima Kiribamune and Vidyamali samarasinghe, ICES, Kandy, 1990. p. 68.
' Metthananda, T., op.cit., p. 67.
Jayawardena, Kumari, Feminism in Sri Lanka in the Decade 1975-1985: Third World Perspectives in Women Struggles and Strategies, ISIS International, 1986, p. 129.

Page 13
இராமநாதன் போன்ற மூத்த அரசியல் வாதிகள் இதனை எதிர்த்தனர். “இதனால் குடும்பத்தில் நிலவும் சமாதானமும், தூய்மையும், இணக்கமும் அழிந்து போய்விடும் என அவர்கள் வாதிட்டனர்,”.*
சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கைப் பெண்களின் சுகாதாரம், கல்வி, தொழில் முதலியவற்றில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. இன்று இலங்கையில் பெண்களுக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண் (HD) அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகும் என புகழ்ந்துரைக்கப்படுகின்றது.* கல்வி, சுகாதாரம், தொழில் ஆகியவற்றில் இலங்கைப் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை நாம் குறைத்து மதிப்பட முடியாது. எனினும் எமது பெண்கள் தொடர்பான சகல அம்சங்களையும் இச்சுட்டெண்ணினால் மறைத்து விட முடியாது. தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையில் பங்கேற் பதற்கு வசதியாக இலங்கைப் பெணி கள் வலுவுட்டப் பட்டிருக்கவில்லை. உயர்வான மனித அபிவிருத்திச் சுட்டெண் என்பது பெண்களின் வலுவூட்டலை உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும். இலங்கை அரசாங்கம் சமூக நலன் பேணலில் அக்கறை காட்டுகின்றது என்பதற்கும் சுதந்திரத்துக்குப் பின்னர் அரசாங்கம் சமூக நலனில் தொடர்ச்சியாக நிதியைச் செலவீடு செய்கிறது என்பதையுமே இந்த உயர்தரச் சுட்டெண் காட்டி நிற்கிறது. “பெண்கள் பிரச்சினை” தொடர்பாக அரசாங் கமி சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் எடுத்து வந்துள்ளது. பெண்கள் பணியகம், பெண்கள் விவகார அமைச்சு, சமத்துவத்துக்கான யாப்பு உத்தரவாதம், பெண்கள் உரிமைச் சாசனத்தை ஏற்றல் போன்றன இவற்றில் சிலவாகும். எனினும் அரசாங்கத்தின் பெண்கள் நலன் தொடர்பான கொள்கைத் திட்டமிடல், அமுல் படுத்தல் போன்றவை ஆண் ஆதிக்கம் சார்ந்த கலாச்சாரம், மனப்பாங்குகள் அமைப்புகளைப் பெரிதாக மாற்றிவிடவில்லை. பொது வாழ்க்கையில் பெண்களின் பிரவேசம் இன்னும் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியே உள்ளது. உழைப்பாளர் படையில் பெண்களின் பங்கேற்பு விகிதம் ஆண்களின்
* Metthananda, T., 1990, op.cit., p. 67.
பெண்களின் எழுத்தறிவு வீதம் 83.1 ஆகும். இது ஆண்களின் எழுத்தறிவு வீதமான 90.1 என்பதிலும் பார்க்க ஓரளவு குறைவாகும். பாடசாலை சேர்வு விகிதத்தில் ஆண்களின் சேர்வு விகிதம் முதனிலை மட்டத்தில் அதிகமாகவும் பெண்களின் வீதம் பல்கலைக்கழகம் உட்பட உயர்நிலை மட்டத்தில் அதிகமாகும். ஆண்களின் ஆயுள் எதிர்பார்ப்பு வீதம் 69.5; பெண்கள் 74.2. பால் விகிதம் ஆண்களுக்கு பெண்கள் 97.4:100. தாய் மரண வீதம் 50 சத வீதம் குறைந்துள்ள போதிலும் இலங்கையில் பெண்கள் அடைந்துள்ள உயர்கல்வி அடைவுகள் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன. திருமண வயதும் அதிகரித்து இன்று 25.5 வருடமாக உள்ளது. இது பெண்களின் வாழ்க்கையில் திருமணம் தான் முதன்மையானது என்பதில்லை 6T6) is as Tig Slibašiai D5). (Women and men in Sri Lanka: A Report, Department of Census and Statistics Colombo, 1995).
10

சரி அரைவாசியாகும். இது பெண்களின் உண்மையான பொதுவாழ்வு அந்தஸ்தை வெளிப் படுத்துகின்றது." அரசியல் நிறுவனங்கள் உட்பட பொதுத்துறை தீர்மானம் மேற்கொள்ளும் அமைப்புகளில் பெனர்களின் பிரசன்னம் இன்னும் மோசமானது.
நாம் எங்கே தவறிழைத்து விட்டோம்? பெண்கள் தொடர்பான அரசியல் திட்டங்கள் யாவும் அவர்களைத் தாய்மாராகவும் மனைவிமாராகவும் கொண்டே தீட்டப்பட்டன. பிள்ளை பெறுதல், குடும்பப் பணிகளைச் செய்தல்தான் அவர்களது தலைவிதி எனக் கருதப்படுகின்றது. இப்பணிகளுக்கு மேலதிகமாக அவர்கள் முறைசார்ந்த அல்லது முறையில் பொருளாதாரத் துறைகளிலும் சம்பளத்துக்காகப் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். உண்மையில் உத்தியோக ரீதியான தொழில்சார் புள்ளி விபரங்கள் பெண்கள் சம்பளமில்லாமல் செய்யும் குடும்பப் பணிகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இவர்கள் குடும்பப் பணிகளுக்கு மேலாக குடும்ப வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதற்கும் பங்களிக்க வேண்டியுள்ளது. மத்தியதர, உயர்வகுப்புப் பெண்கள் தமக்கு மிகவும் ஆதரவாக விளங்கும் கணவன்மாரைக் கொண்டிருக்கக்கூடும். அல்லது குடும்பப் பொறுப்புகளையும், பிள்ளைப் பராமரிப்பையும், குடும்பத்தினுள் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் பால்ரீதியாக குடும்பப் பணிகள் பிரிக்கப் பட்டிருப்பதாலும் பகலும் இரவும் அவர்கள் பணி புரிய வேண்டி இருப்பதாலும் பெணிகள் பொதுவாழ் வில் தீர்மானம் மேற் கொள்வோராகவோ தலைவராகவோ உயர்வு பெற முடியவில்லை.
ஆண்கள் பெண்கள் எனும் அடிப்படையில் வேறுபட்ட எதிர்பார்ப்புகளும் சமூக ரீதியாக ஏற்றுக் கொணி ட நடத்தையும் காலம் காலமாக பொதுவாழ்க்கையில் பெண்களின் பங்குபற்றல்களுக்குத் தடையாக இருந்து வந்துள்ளன. இலங்கையில் ஒரு நல்ல பெண் என்பவள் வெட்கமும் பயமும் உள்ளவள்ாக இருக்க வேண்டும். இக்கருத்து இன்னும் எமது சமூகத்தில் நிலைத்திருப்பதாக குமாரி ஜயவர்த்தன குறிப்பிடுகின்றார். இந்த வெட்கமும் பயமும் என்ற எண்ணக்கருவை ஜயவர்த்தன பின்வருமாறு விளக்குகின்றார். “கற்பு, நாணம், அடிபணிதல், தியாகம், வீட்டில் அடங்கியிருத்தல், பிள்ளைகள் புருஷன் உறவினர், புருஷனின் நண்பர்கள் ஆகியோரைக் கவனித்தல் மற்றும் கனவனுடைய சொத்துக்களைப் பாதுகாத்தல் ஆகியவை ஒரு பெண் என்பவள் செய்யக் கூடியவை. சத்தமாகக் கதைத்தல், சிரித்தல், ஓடுதல், ஓய்வாக இருத்தல், சுதந்திரமான (எனவே மோசமான) பெண்களுடன் சகவாசம் வைத்தல் ஆகியவை ஒரு பெண் செய்யக்கூடாதவை.”*
* தொழிற்படையில் பெண்களின் பங்குபற்றல் வீதம் 31.8% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆண்களின் பங்குபற்றல் வீதத்தில் பாதியாக இருந்தபோதும் தற்போது விரைவாக அதிகரித்து வருகிறது.(Women and Men in Sri Lanka. Department of Census and Statistics, Colombo, 1995)
"o Jayawardena, Kumari, op.cit, p. 23.
11

Page 14
வீட்டில் இருந்து தொடங்குகிற சமூகமயமாக்கல் செயன்முறையின் ஊடாகவே நல்ல பெண் எனும் அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதை ஒரு பெண் கற்றுக் கொள்கிறாள். இக் கருத்துக்கள் பெண்களால் உள் வாங்கப் பட்டு பரம் பரை பரம் பரையாகத் தொடர் கரிணி றன. இம் மனப் பாங்குகளையும் புலக் காட்சிகளையும் கல வியாலி மாற்ற முடியவில்லை. ஆனால் இவை சமூக கலாச்சார மீள் உயிர்ப்பை ஏற்படுத்தி பால் சார்ந்த வகிபங்குகளை உறுதிப்படுத்துகின்ற காரணிகளாக விளங்கி வருகின்றன. பிரித்தானிய காலனித்துவவாதிகளினால் பின்னர் மிசனறிகளால் வளர்க்கப்பட்ட கல்வி முறையானது பெண்களுடைய கல்வி என்பது “அச்சமும் நாணமும் பயிர்பும் கொண்ட சிறந்த கிறிஸ்தவப் பெண்களையும் சிறந்த மனைவிமாரையும்” உருவாக்குவதற்கு அவசியம் என்ற அடிப்படையைக் கொண்டிருந்தது. சுதந்திரத்துக்குப் பின்னர் கல்வியானது சமத்துவ அபிவிருத்தியை அடைவதற்கான ஒரு கருவி என ஏற்றுக்கொள்ளப்பட்டது. சமூக பொருளாதார சமத்துவமினி மைகளைக் குறைப் பதற்கான கொள்கைகளில் உணவு மானியம், சுகாதார சேவை முதலான சமூக நலநோக்கு ஏற்பாடுகளுடன் கல்வியும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. எனினும் இலங்கைப் பெணிகளைப் பொறுத்தவரையில் “நல லது” மற்றும் “முறையானது” எனும் சக்தி வாய்ந்த எண்ணக்கருக்கள் அவர்கள் சமூக வாழ்வில் வலுவூட்டப்படுவதற்கு எதிராகவே இருந்து வந்துள்ளன." இதில் ஊடகங்களின் பங்கும் மிகவும் முக்கியமானது. அண்மைக்காலங்களில் தொழில்நுட்பவியல் வளர்ச்சியின் காரணமாகப் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகிய போதிலும் கூட இந்த ஊடகங்கள் பெண்களைப் பிரதானமாக சிறந்த தாய் மாராகவும் சிறந்த மனைவிமாராகவும் உருவாக்கிக் காட்டுவதிலேயே மிகச்சிறந்த பிரசார ஊது குழல்களாக இருந்து வருகின்றன.
குடும் பத்துக்குள்ளும் சமூகத்திலும் காணப்படுகின்ற வன்முறை ஆணாதிக்கக் கலாசாரத்தின் இன்னொரு அம்சமாகும். பொதுவாழ்க்கையில் பெண்களின் பங்கேற்பைத் தடுப்பதில் இதுவும் முக்கிய பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் ஏற்படக்கூடிய வன்முறை இரகசியமாக வைக்கப்படல் வேண்டும் என்பது இந்தப் பிரச்சினை தொடர்வதற்கு அடிப்படையாக ICES ஆய்வின் படி 91.9 சத வீதமான பெண்கள் குடும்பு அங்கத்தவர் ஒருவர் பிள்ளைகளின் மீது வன்முறையைப் பாவிப்பதைத் தாம் காணவில்லை என்றும் 88.7 சத
Jayaweera, Swarna, Women and Education', in Status of Women,
University of Colombo, Colombo. 1979, p. 259. De Alwis, Malathi. "Towards a Feminist Historiography: Reading Gender in the Text of the Nation', in An Indroduction to Social Theory, eds. R. Coomaraswamy and N. Wickremesinghe, Konark Press. Delhi, 1994, pp. 86- 107.
17
12

வீதமான பெண்கள் தம்மீது வன்முறை மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினர். ஆனால் பெண்கள் பொதுவாழ்வில் பங்குபற்றுதலைத் தடை செய்து அவர்களின் குடும் பத்துக்குள்ளேயே முடக்கி வைப்பதற்கு தந்தைமாரும் கணவன்மாரும் சகோதரர்களும் மட்டுமல்லாது மகன்மாரும் கூட வன்முறையைக் கையாணி டுள்ளதாகப் பெண் தலைவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர். அனுராதபுர மாவட்டத்தில் பிரதேச சபை ஒன்றின் பெண் உறுப்பினர் பின்வருமாறு கூறினார். “எமது சமூகத்தில் பெண்களும் ஆணிகளும் தத் தமது கடமைகளைக் கொண்டுள்ளனர். அறியாமை காரணமாக இந்த நிலைமையை மக்கள் ஏற்றுக்கொள்ளும் போது அதனைத் தொடர்ந்து பின்பற்றவும் செய்கின்றனர். என்னுடைய ஆதரவாளர்களான பெண்கள் பலர் எனக்காகப் பிரசாரத்தில் ஈடுபடவும் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபடவும் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால் அவர்களுடைய கணவன் மாரின் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் கூட்டங்களுக்குக் கூட வருவதில்லை. இது என்னுடைய அனுபவம்.”*
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்
பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதிலும் அரசியல் பதவிகளுக்கு அவர்களை உயர்த்துவதிலும் ஆசியாவில் இலங்கை முதன்மை வகித்த போதிலும் தேசிய, மாகாண மற்றும் உள்ளுராட்சி அரசியலில் அவர்களது பிரதிநிதித்துவம் மிகவும் குறைவானதே. இதனால் ஆட்சி அதிகாரத்தில் அவர்களது குரல் மேல் எழும்பவில்லை. 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் 11ஆவது பாராளுமன்றத்தில் மொத்த உறுப்பினர் 225 பேரில் 9 பேர் மாத்திரமே பெண்களாவர். இவர்களில் 8 பேர் தெரிவு செய்யப்பட்டனர். ஒருவர் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தேசியப் பட்டியல் உறுப்பினர் ஆவார். 10ஆவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த பல பெண் உறுப்பனர்கள் தமது ஆசனத்தைத் தக்க வைத்துக்கொள்ளவில்லை. 44 பேரைக் கொண்ட அமைச்சரவையில் அறுவர் மாத்திரமே பெண்களாவர். பிரதி அமைச்சர்களில் ஒருவரேனும் பெண்களில்லை. அமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த பல பெண்கள் தேர்தலில் தோல்வி அடைந்தனர். அவ்வாறு தோல்வி அடைந்தவர்களில் பெண்கள் விவகார அமைச்சரான ஹேமா ரட்நாயக்க, பிரதி அமைச்சர்களான சுமித்ரா பிரியங்கனி அபயவீர, நிருபமா ராஜபக்ஷ ஆகியோரும் அடங்குவர். புதிய பாராளுமன்றத்தில் உள்ள 9 பெண் உறுப்பினர்களில் 6 பேர் புதுமுகங்கள் ஆவர்.
* எவ்வாறிருப்பினும், சமூகத்துக்கிடையிலான வன்முறை மிக அதிகமென்பதைப்
பெணிகள் ஏற்றுக்கொண்டனர். * குசுமா இரத்நாயக்காவுடன் நேர்காணல். உறுப்பினர், தலாவ பிரதேச சபை.
13

Page 15
1989ஆம் ஆண்டு முதல் பாராளுமன்றம் மற்றும் ஏனைய அரசியல் நிறுவனங்களுக்கான தேர்தல்களில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே பின்பற்றப்படுகிறது. இது முன்னைய தேர்தல் முறையை விடப் பெண்களுக்குச் சாதகமானது. ஆனால் இநீ நாட்டில் காணப் படுகின்ற பல வேறு முரண்பாடுகளைப் போலவே இந்த விடயத்திலும் பெண்கள் முன்னரை விடப் பின்தள்ளப்பட்டுள்ளனர். முன்னர் இருந்த 4.8% பெண்கள் பிரதிநிதித்துவம் இப்போது 4% ஆகக் குறைந்து போய் விட்டது. (அட்டவணை 1) எனவே விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தால் கூடிய பெண்களைச் சட்ட மன்றத்திற்கு கொண்டு வர முடியவில்லை.? இதன் மூலம் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மாத்திரம் பெண்களை அரசியலில் மேம்படுத்தி விட முடியாது என்பது தெரிய வருகிறது. அது கொண்டு வரக் கூடிய நன்மைகள் அரசியற் கட்சி அமைப்புக்கள் மற்றும் சமூக கலாசார பின்னணி ஆகியவற்றில் பெரிதும் தங்கியுள்ளது. ஜேர்மனி, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் விகிதாசார பிரதிநிதித்துவம் காரணமாக கூடிய பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதற்கு ரஷியா புறநடையானது. அங்குள்ள அரசியல் கலாசாரமும், அபிவிருத்தி இல்லாத அமைப்புகளும், பெண்களின் நம்பிக்கையீனமும் அரசியற் கட்சிகள் பெண்களின் நலன்களில் ஈடுபாடு காட்டாமையும் இதற்கான காரணங்களாகும்* 1989ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவானது. 1989, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்தல்களில் பெண்கள் முறையே 2.9%, 4.7%, 3.3% மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். (அட்டவணை 2)
உள்ளுராட்சி மட்டத்தில் இந்தப் புள்ளி விபரங்கள் இன்னும் பாதகமாகவே உள்ளன. 1997 புள்ளி விபரங்களின் படி மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றில் முறையே 3.4%, 2.6%, 1.7% ஆகவே பெண்களின் பிரதிநிதித்துவம் இருந்தது (அட்டவணை 3). இரண்டு மாநகர சபைகளில் மாத்திரமே பெண்கள் தலைமை வகிக்கிறார்கள். “3137 பிரதேச சபைகளில் நான்கில் மாத்திரமே பெண்கள் தலைவர்களாக இருக்கின்றார்கள். 35 நகர சபைகளில் எந்த ஒரு சபையும் பெண்ணுடைய தலைமையின் கீழ் இல்லை.”
*' Pinto Jayawardena, K., Proportional representation, political violence and the participation of women in the political process. ICES/IDS, unpublished.
21 Karam. Azza (ed), Women in Parliament: Beyond Numbers, International
IDEA Sweden, 1998.
14

அட்டவணை 1: பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் (2000, 1994)
2000 1994米米
மொத்தம் பெண்கள் | % மொத்தம் பெண்கள் %
உறுப்பினர்கள் 225 9 4.0 225 1 4.8
அமைச்சர்கள் 44 3 4.5 20 3 150 **米 20 28 4 14.2 பிரதி அமைச்சர்கள் 35 O 0.0 26 5 19.2 率来米 21 1. 30 3 10.0
*Sources: "Can more women politicians help?" (Editorial Island of 18th January 2001, Island of 20th October 2000, Daily News of 15th and 19th Septemper 2001.
**Source: Leiten, Tressie, "Women in Political participation and Decision Making'. in Post Beijing Reflections: Women in Sri Lanka 19952000, CENWOR, 2000.
*** This refers to a subsequent cabinet reshuffle.
அட்டவணை 2: மாகாண சபைகளில் பெண்கள்
1999 1993
ιDπεδπ6υσιό மொத்தம் பெண்கள் % மொத்தம் பெண்கள் %
மேல் 104 2 1.9 104 7 6.7
வட மத்தி 34 l 2.9 36 4 1.1
வட மேல் 51 3 5.8 52 3 5.8
SS6 32 1 3.1 34 0 0.0
மத்தி 58 3 5.1 58 1.7 தென் 55 1 1.8 55 2 3.6
சப்பிரகமுவ 43 2.3 44 1 2.3 மொத்தம் 377 12 3.3 383 18 4.7
Source: Ministry of Women's Affairs - 1998, as published in The Daily
News, Colombo. 16th March 1998.
15

Page 16
அட்டவணை 3: உள்ளுராட்சி சபைகளில் பெண்கள்
1997 1991
மொத்தம் பெண்கள் % மொத்தம் பெண்கள் %
மாநகர சபைகள் 252 9 3.4 201 6 2.9 நகர சபைகள் 33 9 2.6 235 6 2.4 பிரதேச சபைகள் 3, 137 55 1.7 2,632 42 1.9
Source: Leiten, op.cit.
அரசியல் பதவிகளில் பெண்களின் இனவிகிதாசாரம்
அரசியல் பதவிகளில் நியமிக்கப்படும் பெண்கள் மிகவும் சிறுபான்மையினர். அவர்களில் இன்னும் சிறுபான்மையினர் உள்ளனர். பெண் அரசியல்வாதிகளில் பெரும்பான்மையினர் சிங்கள இனத்தைச் சார்ந்தவர்கள். இலங்கை பல்லின தேசம். இங்கு சிங்களவர்கள் 74 சத வீதமும் தமிழர்கள் 18 சத வீதமும், முஸ்லிம்கள் 8 சத வீதமும் உள்ளனர். எனினும் இந்த இனத்துவ பன்மைத்துவம் பெண் அரசியல்வாதிகளின் பரம்பலில் காணப்படவில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலும் கூட தமிழ் முஸ்லிம் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவானதாகும்.
அரசியலில் தமிழ்ப் பெண்கள்
1932 ஆம் ஆண்டில் கொழும்பு வடக்குத் தொகுதியின் சார்பில் அரசாங்க சபைக்கு நேசம் சரவணமுத்து தெரிவு செய்யப்பட்டமை தமிழ்ப் பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கு சிறந்த அடியெடுத்துக் கொடுத்தது. அவர் இந்தத் தொகுதியைப் பத்து வருடங்கள் பிரதிநிதித்துவம் செய்ததோடு அரசியலிலும் சிறந்து விளங்கினார். அதற்குப் பின்னர் சுமார் அரை நூற்றாண்டு காலம் எந்த ஒரு தமிழ்ப் பெண்ணும் சட்ட மன்றத்துக்கு வரவில்லை. 1980ஆம் ஆண்டு ரங்கநாயகி பத்மநாதன், அவருடைய சகோதரனின் மரணம் காரணமாக பொத்துவில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். 1989ஆம் ஆண்டு தனது கணவனின் மரணத்துக்குப் பின்னர் இராஜமனோகரி புலேந்திரன் வவுனியா தொகுதிக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1994இல் திரும்பவும் தெரிவு செய்யப்பட்டதோடு கல்வி இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்று மந்திரிப் பதவி வகித்த முதலாவது
16

தமிழ்ப் பெண்மணி என்னும் பெயைைரயும் பெற்றார். வேலம்மாள் செல்லச் சாமி மட்டுமே இதுவரை மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு தமிழ்ப் பெண்ணாவார். 1993இல் மேல் மாகாண சபைக் குத் தெரிவு செய்யப்பட்ட இவர் 1999 தேர்தலில் மீணி டும் தெரிவு செய்யப்படவில்லை.
உள்ளுராட்சி மட்டத்தில் ஒரு சில பெண்கள் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளனர். 16 ஆண்டுகளுக்குப் பின்னர் 1997இல் வட மாகாணத்தில் சில பகுதிகளில் உள்ளுராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. சரோஜினி யோகேஸ்வரன் யாழ்ப்பாண மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்டதோடு பின்னர் மேயராகவும் தெரிவு செய்யப்பட்டார். எனினும் ஒரு சில மாதங்களில் அவர் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார். எல்.ரீ.ரீ.ஈ. யினால் படுகொலை செய்யப்பட்ட அவரது கணவர் யோகேஸ்வரன் முன்னர் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பாகத் தேர்தலில் போட்டியிட்ட அவர் நீர், சுகாதாரம் ஆகிய வசதிகளை மேம்படுத்தப் போவதாக வாக்குறுதி அளித்ததுடன் துப்பாக்கிக் கலாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டுமெனவும் கோரினார். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் யோகேஸ்வரன் ஓர் இரட்டை எதிரியாக இனங்காணப்பட்டார். ஒருபுறம் அவர் சமாதானம் கோரும் ஒரு பெணி அரசியல் வாதி மறுபுறம் அவர் தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கைக்குத் துரோகமிழைத்த ஒரு கட்சியின் உறுப்பினர். அவரது மரணம் சாதாரண யாழ்ப்பாண மக்களுக்குப் பேரிடியாக அமைந்தது.
யாழ்ப்பாண மக்கள் இரண்டு பயங்கரவாதங்களுக்கு முகங் கொடுக்க வேண்டியிருந்தது. ஒருபுறம் இலங்கை இராணுவத்தினரின் பயங்கரம், மறுபுறம் விடுதலைப் புலிகளின் கொடுரங்கள். எனினும் அவரது படுகொலை ஒன்றைத் தெளிவாக உணர்த்தியது. அதாவது போர்ப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் மீது தான் கொண்டிருக்கும் பிடிக்கு எந்தவித இடையூறும் ஏற்படுவதை விடுதலைப் புலிகளின் உயர்பீடம் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை?
* கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழர் அரசியல் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் அவர்களது தனிநாட்டுக் கோரிக்கை மற்றும் அதனை அடைவதற்கு அவர்கள் பெறுகின்ற வன்முறை ஆகியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டே வந்துள்ளது. இக்கால கட்டத்தில் மிதவாதியொருவர் அரசியல் தலைவராகவோ அல்லது சமூகத் தலைவராகவோ இருப்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை. தமது கருத்துக்குத் தடையான எவரும் அல்லது மக்களுக்கு உகந்த இன்னொரு மாற்றுவழியை உருவாக்குபவர்கள் எவரும் அவர்களால் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள்; அழிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த அடிப்படையில் மிதவாத தமிழர்கள், ஆண்களோ அல்லது பெண்களோ தமிழர் அரசியலில் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளனர்.
17

Page 17
இவ்வாறு அரசியல் நிறுவனங்களில் தமிழ்ப்பெண்களின் பங்களிப்பு ஒன்றுமில்லாத நிலையிலும் கூட விடுதலைப்புலிகள் அமைப்பில் அவர்கள் குறிப்பிடக்கூடிய பங்காற்றி வந்துள்ளனர். வடபுல போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு 1960களில் சத்தியாக்கிரகங்களில் ஈடுபட்ட தமது கணவன்மாரின் நடவடிக்கைகளுக்கு உரமூட்டுவதாக அமைந்திருந்தது. ஆனால் 1980களில் இந்நடவடிக்கைகள் இராணுவ மயப்பட்ட தீவிர நடவடிக்கைகளாக மாறின.* இச் செயன்முறையில் பெண்களின் பங்களிப்பினைப் பற்றி சாமுவேல் பின்வருமாறு கூறுகிறார்.
ஆரம்பத்தில் பெணகள் பிரசாரம் செய்தல், சேவைகளை வழங்குதல், ஆட்சேர்ப்பு, நிதிதிரட்டல் ஆகிய பணிகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டனர். ஆனால் படிப்படியாக அவர்கள் போர்ப்பயிற்சி பெற்று களத்தில் இறங்கிப் போராடினர். ஆரம்பத்தில் சாதாரண மரபுரீதியான போரில் ஈடுபட்டாலும் பின்னர் விடுதலைப்புலிகள் அவர்களைத் தற்கொலைப் படையணியில் சேர்த்துக் கொணர்டனர். போரில் ஈடுபடாத பெனர்களைத் தமது பிள்ளைகளைக் குறிப்பாக, ஆணர் பிள்ளைகளைப் போராட்டத்துக்குத் தியாகம் செய்யுமாறு தூணர்டப்பட்டனர். பெணகளின் வகிபங்கு விரிவடைந்தது. தாய்மாராகவும் மனைவிமாராகவும் விளங்கிய அவர்கள் இப்போது ஆணகளின போராட்டததுககும் உதவ வேணடியிருந்தது. போராட்டத்துக்காகப் பிள்ளைகளைப் பெற்றுத்தந்த அவர்கள் இப்போது போர் வீராங்கனைகளாகவும் மாறினர்?
விடுதலைப் புலிகளின் படையணிகளில் 50 சத வீதத்துக்கும் மேல் பெண்களே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1986க்கும் டிசம்பர் 1992க்குமிடையில் சுமார் 381 பெண்கள் போரில் மடிந்துள்ளனர்? விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு மிகவும் உறுதியானது. அவர்கள் அரசியல் மற்றும் புலனாய்வுப்
* Maunaguru, Sitralega, "Gendering Tamil Nationalism: The Construction of Women in Projects of Protest and Control". in P. Jeganathan and Q. Ismail (eds). (Un)making the Nation: The Politics of Identity and History in Modern Sri Lanka, Social Scientists Association. Colombo, 1995. pp. 58-175.
Samuel, Kumudini," Gender Difference in Conflict Resolution: The Case of Sri Lanka", unpublished paper, p. 12.
* Adele Ann, Women Fighters of Liberation Tigers, released by the
Publication Section of the LTTE, 1993 -
18

பணிகளில் ஈடுபடுகிறவர்கள். அத்துடன் அவர்கள் சுதந்திரமானதொரு அமைப்பினைக் கொண்டுள்ளனர். ஆண்களைப் போலவே அவர்களும் கஷ்டங்களும், ஆபத்துக்களும் நிறைந்த பணிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களது பங்களிப்புகளுக்கு உரிய இடமும் வழங்கப்படுகிறது. பெண்கள் உயர்தர தற்கொலைப் படையணிகளில் அங்கம் வகிப்பதோடு பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை போன்ற முக்கிய ஒப்படைகளை அவர்கள் பொறுப்பேற்றார்கள். இந்தச் செயன்முறையில் தமிழ் பெண்மையின் அடையாளங்களாகக் கருதப்பட்ட பல நடத்தைப் பண்புகள் மற்றும் நடையுடைபாவனைகள் கைகழுவிவிடப்படுகின்றன. குமாரசுவாமி குறிப்பிடுவதைப் போன்று 'கன்னிப் பெண்களை வீட்டிலும், மாதவிலக்கான பெண்களை வீட்டுக்குப் பின்புறத்திலும் தடுத்துவைத்த நியாயமற்ற சமூகப் பழக்கங்கள் போர்ப்படையணியில் சேர்தல் போன்ற புதிய நடத்தைப் பாங்குகளுக்கு இடம் விட்டு ஒதுங்கிக் கொண்டன”*
இவ்வாறான தமிழ் பெணிகளின் இராணுவமயப் படுத்தலின் பெறுபேறுகளில் ஒன்று பிரதான தமிழ் தேசியவாதக் குழுக்கள் அனைத்தும் பெண்களின் பிரச்சினைகளைத் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டமையாகும். பெண்களின் விடுதலையை அவர்கள் ஏதோவொரு வகையில் பெற்றுக் கொண்டனர். பால்நிலை தொடர்பான விடயங்களை தமது அரசியல் பிரச்சினைகளில் ஒன்றாக ஏற்றுக் கொண்டனர்.
தமிழ் தேசியவாத இயக்கங்கள் மற்றும் பெண்ணிலைவாதக் குழுக்களின் தேசியவிடுதலை குறித்த கருத்தியல் நிலையில் ‘புதுமைப்பெண்’ என்னும் எண்ணக்கரு தோற்றம் பெற்றுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு பெண்ணிலைவாத செயல் வீரர்கள் ‘தமிழ் கலாசார கருத்துநிலையின் ஆணாதிக்கம் மற்றும் பணிவுடைமை, அமைதி பேணல் முதலான மரபுரீதியான பெண்மையின் பண்புக் கூறுகளை எதிர்க்கத் தலைப்பட்டனர்* ஆயுதப் போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு மாறுநிலையைக் காட்டுகிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், எந்தளவுக்கு இந்த மாற்றங்கள் நிலையானவை என்னும் கேள்வி எழவே செய்கிறது. ஆண் போராளிகளுக்கு சமதையாகக் களத்தில் நிற்கும் பெண் போராளிகள் தன்னாதிக்கம் குறித்த பல கேள்விகளை எழுப்புகின்றனர். இப்பெண்கள் எந்தளவுக்குத் தன்னாதிக்கம்/சுதந்திரம் கொண்டவர்கள்? இப்பெண்களை வெறுமனே பயன்படுத்துகிறார்களா? அவர்களுக்கு சுதந்திரமான தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளதா? குமாரசுவாமி கூறுவதைப்போல பெண் போராளிகளைப் பற்றி விடுதலைப் புலிகளின் சித்தாந்தவாதிகள் என்னதான் புகழ்ந்துரைத்த போதும் உயர்மட்ட தீர்மானம் மேற்கொள்ளும் குழுவில்
* Coomaraswamy, Radhika, “The Tiger Women and the Question of
Emancipation', in Pravada, Vol.4, No. 9, 1996. p. 8.
* Maunaguru, Sitralega, op. cit, pp. 64-168.
19

Page 18
இப்பெண்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்குக் குறித்த சான்றுகள் எதுவும் இல்லை. அவர்கள் கருத்துகளைப் புதிதாக உருவாக்குபவர்கள் அல்ல. வேறு சிலரால் ஆண்களால் தீர்மானிக்கப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துபவர்களாகவே உள்னர'?
எனவே ஜே.வி.பி.யைப் போலவே விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளின் ‘இராணுவமயப்படுத்தலிலும் பிரமாணங்களை வகுத்தல் அவர்களிடம் வழங்கப்படவில்லை. கட்சியின் ஆண் தலைமைப்பீடமே அதனையும் தீர்மானிக்கின்ற மரபுரீதியான தமிழ்ச்சமூகத்தின் தளைகளிலிருந்து அவர்கள் வலுவூட்டப்பட்டனர் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு வரையறைகள் இல்லாமலில்லை. குமாரசுவாமி கூறுவதைப்போல ‘இந்தச் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளுக்கு உண்மையான அரசியல், சமூக வலுவூட்டல் இல்லை. சகல மட்டங்களிலும் சுதந்திரமாகவும் ஜனநாயகரீதியாகவும் தீர்மானம் மேற்கொள்ளலில் அவர்களுக்கு பங்கு வழங்கப்படாவிடில் அவர்கள் உரிமையற்றவார்களாவே கணிப்பிடப்படுவர்’**
முஸ்லிம் பெண்களின் அரசியல்
வரலாற்றுரீதியாகவே முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்கேற்பு மிகவும் குறைவானதேயாகும். இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. குறைந்த கல்வி அறிவு, தனிமையில் இருத்தல், தொழிலுக்குச் செல்லுவதை விட திருமணம், குழந்தை என்பவற்றுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை போன்றவை இக்காரணிகளில் முதன்மையானவை. முஸ்லிம் ஆண்கள் பொதுவாக வியாபாரத்திலும், வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட, முஸ்லிம் பெண்கள் பொதுவாக வீட்டுப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 1970களின் பிற்பகுதிகளிலும் 1980களிலும் தான் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. பல முஸ்லிம் பெண்கள் இடைநிலை மற்றும் உயர்கல்வியில் ஈடுபடத் தொடங்கினர்."
1947இல் கொழும்பு மத்திய பல் உறுப்பினர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட ஆயிஷா ரவூப்" என்பவரே அரசியலில் ஈடுபட்ட முதலாவது
* Coomaraswamy, Radhika, op.cit, 1996, p. 9.
29 Ibid.
Knoerzer, Shari, "Transformation of Muslim Political Identity', in Culture and Politics of Identity in Sri Lanka, eds. Thiruchelvam and Dhattatreya, ICES Colombo, 1998. ரவூப் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். அவர் இலங்கையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மணமுடித்ததால் 1944இல் இலங்கைக்கு வந்தார். பட்டதாரியான அவர் பயிற்சி பெற்ற ஆசிரியர். 1946 இல் அவர் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முதலாவது அதிபராக நியமிக்கப்பட்டார்.
31
20

முஸ்லிம் பெண்மணி ஆவார். அவர் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். 1949இல் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு கொழும்பு மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். ஓர் அரசியல் பதவியைப் பெற்ற முதலாவது முஸ்லிம் பெண்மணி இவரே ஆவார். எனினும் அவர் முஸ்லிம் பெண்கள் கல்லூரியின் அதிபர் பதவியையும் தொடர்ந்து வகித்து வந்தார். 1952இல் அவர் பிரதி மேயராக நியமனம் பெற்றார். எனினும் இரண்டு பதவிகளையும் தொடர்ந்து அவரால் வகிக்க முடியவில்லை. 1961இல் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றபோது அரசியலில் இருந்து அவர் விடை பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்பட்டது.? அவரைத் தொடர்ந்து உள்ளுராட்சி மட்டத்தில் ஒரு சிலரைத் தவிர வேறு முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடவில்லை.
பிரதேச சபைக் குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் பெண்மணி 1999இல் ஜே.வீ.பீ. சார்பில் தெரிவு செய்யப்பட்ட அஞ்ஞான் உம்மா ஆவார். 2000 ஒக்டோபர் தேர்தலில் ஜே.வீ.பீ. யின் தேசிய பட்டியலில் இடம் பிடித்ததன் மூலம் அவர் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த முதலாவது முஸ்லிம் பெண்ணென்னும் பெருமையையும் பெற்றார். இந்தப் பெருமையை பேரியல் அஷ்ரப் 'இத்தா கடமையில் ஈடுபட்டிருந்த காரணத்தினால் பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது.° அவரது கணவரும் ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் புகழ் பெற்ற தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பரிதாபத்துக்குரிய திடீர் மறைவினால் திகாமடுல்ல மாவட்டத்திலிருந்து பேரியல் அஷ்ரப் 80,000 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். தனது கணவனால் அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய கூட்டமைப் பின் தலைவராகவும் , முஸ்லிம் காங்கிரசின் இணைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டமையினால் ஓர் அரசியல் கட்சியின் தலைமைப் பதவியை அலங்கரித்த முதலாவது முஸ்லிம் பெண்மணி என்னும் பெருமையை அவர் பெற்றுக் கொண்டார். அத்துடன் கிராமப்புற வீடமைப்பு மீள்கட்டமைப்பு புனர்நிர்மாண அமைச்சராக நியமனம் பெற்றதன் மூலம் அமைச்சர் பதவியைப் பெற்ற முதலாவது முஸ்லிம் பெண்மணியும் இவரேயாவார். பாராளுமன்றத்தில் பால் நிலைச் சீர்திருத்தத்தை எதிர்ப்போரில் முன்வரிசையில் இருக்கும் இறுக்கமான அமைப்புக் கொண்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இவரது வகிபங்கு வெறுமனேயே அலங்காரமாக இருக்கப் போகின்றதா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.
32 Haniffa, Farzana, A Woman of the Brotherhood: Ayisha Rauf and the Quest
for Muslim Women's Emancipation (Unpublished paper).
* இத்தா என்பது முஸ்லிம் பெண்கள் தமது கணவன் இறந்தபின்னர் 4 மாதங்களும் 10 நாட்களும் கடைப்பிடிக்க வேண்டிய மார்க்கக் கடமையாகும். இறுக கமான மதக் கருத துப் படி இப் பெணி கள முறி றா கதி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு இக்காலத்தில் பெண்களையும் நெருங்கிய ஆண் உறவினர்களையும் மட்டுமே பார்க்க முடியும்.
21

Page 19
திரு. அஷ்ரப் மரணமடையாது இருந்திருந்தால் சில வேளைகளில் முன்னைய முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபரும் கல்வியாளருமான திருமதி ஜெசிமா இஸ் மாயில் பதினோராவது பாராளுமன்றத்தில் நுழைந்திருக்கக் கூடும். திருமதி இஸ்மாயில் அஷ்ரப் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர். திரு. அவர் ரபின் வேண்டுகோளின் பெயரில் அவரது பெயர் சமாதானம் தேசிய நல்லிணக்கம் ஆகிவற்றின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு காரணமாக பொதுஜன ஐக்கிய முன்னணி தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது. எனினும் தேர்தலுக்குப் பின்னர் பல கட்சிகளினதும் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு ஏற்பட்ட போட்டா போட்டி காரணமாக திருமதி. இஸ்மாயில் நியமிக்கப்படவில்லை."
அரசியலில் பெண்களின் பிரவேசம்: விதவைகள், மனைவியர் மற்றும் மகள் மார்
தேர்தல்களில் வேட்பாளர்களை நியமிப்பதில் அரசியல் கட்சிகள் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றன. கட்சியின் அதிஉயர் மட்டத்தில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது. கட்சியின் கொள்கைகளின் மீது அர்ப்பணிப்பு, கட்சிச் செயற்பாடுகளில் ஈடுபாடு அல்லது அரசியல் தேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் மகளிர் அணிகளைக் கொண்டுள்ளன. பெண்களின் அரசியல் பங்களிப்பு இந்த மகளிர் அணிகளுக்கு ஊடாகவே செயற்படுகின்றன. ஆனால் இந்த மகளிர் பிரிவுகள் கட்சியின் ஆணி வேட்பாளர்களுக்கு தேர்தல்களில் பெண்களின் ஆதரவுகளைப் பெறுவதற்காகவே செயற்படுகின்றன. இது பற்றி விமலா டி சில்வா பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
நலப்பணிகள் செயற்பாடுகள், நிதிதிரட்டல் ஆகியவை தொடர்பாகவே அவர் களது பிரதான செயற்பாடுகள் அமைந்துள்ளன. கூட்டங்களில் பின்னணி ஆதரவை வழங்குதல், ஊர்வலங்களில் செல்லுதல் ஆகியற்றிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். வறுமை ஒழிப்புத் திட்டங்கள்
34 இன்றைய அரசாங்கம் கடந்த அரசாங்கத்தைப் போலவே NUA மற்றும்
ழரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) ஆகியவற்றின் ஆதரவில் தங்கியுள்ளது. திருமதி. இஸ்மாயில் தேசிய பட்டியலில் நுழைக்கப்பட்டதும் திருமதி அஷ்ரப் மந்திரிப் பதவி பெற்றதும் இக்கட்சிகளில் அரசியல் சமநிலை என்ற அடிப்படையில் பார்க்கப்பட வேண்டும்.
22

போன்றவற்றில் ஏற்படக் கூடிய நன்மை காரணமாக ஆளும் கட்சியின் மகளிர் பிரிவுகளில் சேர்வதற்குப் பெண்கள் விரும்புகின்றனர். ஆனால் மகளிர் பிரிவுகளில் உறுப்புரிமை பெற்றாலும் கூட அது அரசியலின் உண்மையான ஆர்வம் கொண்ட பெண்களுக்கு அரசியலில் ஈடுபடவும் அரசியலில் தலைமைத் துவத்தைப் பெறவும் தளமாக அமைந்து விடுவதில்லை.*
எனினும் சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையின் பெண்கள் அரசியற் பதவிகளைப் பெறுதல் வெகுவாக அதிகரித்துள்ளது. 1931 தேர்தலில் ஒரேயொரு பெண் தான் போட்டியிட்டாள். ஆனால் 1994 தேர்தலில் 55 பெண்களும் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் தேர்தலில் 117 பெண்களும் போட்டியிட்டனர்.° உதிரி அரசியல் கட்சிகளின் பெருக்கமே பெண் வேட்பாளர்களின் அதிகரிப்புக்குக் காரணம். ஆனால் பிரதான கட்சிகளான மக்கள் ஐக்கிய முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியும் முறையே 14, 8 பெண் வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தி இருந்தது. இது மிகவும் வேதனைக் குரியதாகும். இன்று பிரதான அரசியல் நீரோ டையில் முக்கியத்துவம் பெற்றுவரும் இடதுசாரி ஜே.வி.பி. 23 பெண் வேட்பாளர்களை நிறுத்தியது. கூடிய பெண்களை வேட்பாளர்களாக நிறுத்திய கட்சி இதுவேயாகும்.
1999 மாகாண சபைத் தேர்தலில் 198 பெண்கள் போட்டியிட்டாலும் தெரிவு செய்யப்படும் பெண்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்படவில்லை. சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியை ஒப்பிட்டு நோக்கும் போது தெரிவு செய்யப்பட்ட பெண்களின் தொகையில் குறிப்பிடக்கூடிய மாற்றம் ஏற்பவில்லை என்பது தெரிய வரும். அரசியல் கட்சிகள், அரசியலில் போட்டியிடக் கூடிய துணிவுள்ள பெண்களை உருவாக்குவதில் பெரிதாக அக்கறை காட்டவில்லை என்பது தான் இதன் காரணமாகும். தெரிவு செய்யக் கூடிய பல திறமையுள்ள பெண்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவசியமான பணபலமும், ஆள்பலமும் இல்லாத காரணத்தினால் தெரிவு செய்யப்படுவதில்லை. தெரிவு செய்யப்படும் பெண்கள் பொதுவாக அரசியல் குடும் பங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளதையே நாம் எப்போதும் காண்கிறோம். அரசியல் குடும்பங்கள் தேர்தல் நிதியை மாத்திரமல்ல, தேவையான பரம்பரைச் செல்வாக்கையும் இவர்களுக்குத் தருகின்றன.
De Silva, Wimala, Political Participation of Women in Sri Lanka 19851995, in Facets of Change: Women in Sri Lanka 1986-1995, CENWOR, Colombo, 1995, p. 240.
° எனினும் இந்தத் தேர்தலில் 5,048 ஆண் வேட்பாளர்களிருந்தனர். 1994இல்
இது 1,410 ஆகவிருந்தது.
23

Page 20
மரணித்துவிட்ட தமது கணவன்மார் அல்லது மகன்மாரின் மேல் ஏற்படும் அனுதாப அலையின் காரணமாகவே பெண்கள் அரசியற் பதவிகளைப் பெறுகின்றனர். அல்லது ஆண்களின் உதவி, உறவுகளின் அடிப்படையிலேயே அவர் களது அரசியல வாழி வு அமைகிறது. ஆணாதிக் கமுள்ள சமூகத்திலிருந்து அரசியலில் நுழையும் பெண்கள் அதே வரையறைக்குள் மாத்திரமே அரசியல் நடத்த முடிகிறது.
1960இல் திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசியலில் அடியெடுத்து வைத்தார். தமது இறந்த கணவன் அல்லது உறவினரின் 'மரணப்படுக்கையிலிருந்து அரசியலில் நுழையும்” தென்னாசியாவுக்கு உரிய புதிய அரசியல் தோற்றப்பாடு தொடங்கியது. இலங்கையில் உயர் வகுப்புப் பெண்கள் தான் இவ்வாறு அரசியலில் நுழைந்தனர் எனக் கூறுவதற்கில்லை. 1980களில் தொடங்கிய வன்முறை அரசியல் காரணமாக ஏனைய வகுப்புப் பெண்களும் இவ்வாறு அரசியலில் நுழைந்தனர். தேசிய, மாகாண, கிராம மட்டத்தில் நிகழ்ந்த அரசியற் கொலைகள், கொலையுண்ட நபரின் தாயோ, மனைவியோ, மகளோ அரசியலில் நுழைய அடியெடுத்துக் கொடுத்தது. எனினும் இலங்கை அரசியலில் ஆரம்பத்திலிருந்தே இது சாதாரணமான அம்சம் தான். அரசாங்க சபையில் நுழைந்த முதற் பெண்மணியிலிருந்து பாராளுமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த முதற் பெண்மணி வரை அவர்கள் அனைவருமே வாழும் அல்லது இறந்த ஓர் அரசியல்வாதியின் மனைவியாகவோ அல்லது மகளாகவோ இருந்துள்ளனர். அரசாங்க சபையின் முதற் பெண்மணியான அலின் எமாலமுரே தனது தந்தையின் மரணத்தின் பின்னர் தான் அவரது இடத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் இவர் தனது கணவரான ரீசர் பிரான்சிஸ் எமாலமுரேயுடன் சேர்ந்து அரசாங்க சபையில் அங்கம் வகித்தார். சரவணமுத்து தேர்தல் மனு காரணமாகப் பதவியையும் சிவில் உரிமையையும் இழந்ததன் காரணமாக அவரது மனைவி நேசம் சரவணமுத்து 1931 உப தேர்தலில் போட்டியிட்டார். அவர் அரசாங்க சபையில் அங்கம் வகித்த போது திரு. சரவணமுத்து கொழும்பு மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.? இந்த அரசியல் சோடியைப் பின்னர் பலர் பின்பற்றினர். எஸ். ஏ. விக்கிரமசிங்கவும் அவரது மனைவியான டொரீனும், லெஸ்லி குணவர்தனவும் விவியனும், பிலிப் குணவர்தனவும் குசுமாவும், என். எம். பெரேராவும் செலினாவும் இத்தகைய அரசியல் சோடிகளாவார். 1986இல் மாகாண சபைகள் அமைக்கப்பட்டதுடன் இந்த 'சோடி அரசியல்’ இன்னுமொரு பரிமாணம் பெற்றது. தமது அதிகாரத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காக பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மனைவிமாரை மாகாண சபைகளில் நியமித்தனர். எ.எம்.எஸ். அதிகாரியும் அவரது மனைவியான இராணி; பெஸ்டஸ் பெரேரா, மேரி லாரின்; டி.எம்.
' Wijesekara, Chitra, Women in our Legislature: A Sri Lankan Study (from
1931-1977), Sarvodaya Visva Lekha Printers. Colombo, 1995.
24

ஆனால் இங்கு ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் குறிப்பிட வேண்டும். 1930, 1940, 1950களில் அரசியலில் பிரவேசித்த பெண் மணிகள் அரசியல்வாதிகளின் மனைவிமார் மட்டுமல்ல. அவர்கள் தமது கணவன்மாரில் தங்கியிராமல் சுதந்திரமான அரசியலைக் கொண்டிருந்தவர்கள் அவர்களில் பலர் திருமணத்திற்கு முன்னரே அரசியலில் ஈடுபட்டிருந்தனர். உதாரணமாக மூத்த இடதுசாரி அரசியல்வாதியான விவிலியன் குணவர்தன அரசியல் தாகம் கொண்டிருந்ததுடன் பெண்ணுரிமை, தொழிற்சங்க இயக்கம், சமாதானம், சர்வதேச பிரச்சினைகளில் தம்மை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். ஆணாதிக்கவாதிகள், திமிர்த்தனமான பொலிஸ் அதிகாரிகள், சுரண்டல் முதலாளிகள் மற்றும் தீவிர இடதுசாரி, தீவிர வலதுசாரி அரசியல் எதிரிகளுடன் அவர் தொடர்ந்து போராடி வந்தார். கட்சியின் உயர்மட்டத்திற் கூட மிகவும் வெளிப்படையாகப் பேசும் தைரியம் கொண்டவராக அவர் விளங்கினார். தமது மாமாவான பிலிப் குணவர்தன, தனது கணவர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் வெளிப்படையான அரசியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.° விவியன் தமக்கென அரசியல் இலட்சியங்கள் இல்லாது வெறுமனே தமது கணவன் மாரின் அரசியல் முகவர்களாக மட்டும் விளங்குவதோடு அதில் பெருமையும் கொள்ளும் தற்காலப் பெண் அரசியல்வாதிகளிலிருந்து பெரிதும் வேறுபட்டவர்.
கடந்த ஜனவரி 1999 தேர்தலில் போட்டியிட்ட ஒரு பெண் வேட்பாளரது இலட்சிய நோக்கு யாது என ஒரு பத்திரிகையாளர் வினவியபோது அவர் தனது கணவரது இலட்சிய நோக்கினை அமுல்படுத்துவதே தமது இலட்சியம் எனக் குறிப்பிட்டார்.° இதே தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முதன் மந்திரிகளாகத் தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பு பெற்ற இரு பெண் வேட்பாளர்கள் பதவி விலகி தமது கணவன்மாருக்கு அந்த வாய்ப்பினை வழங்கினர். (நளினி வீரவன்னி, ஊவா மாகாணம், ஜயானி திசாநாயக்கா, வடமத்திய மாகாணம்) ஒரு பெண் வேட்பாளர் முக்கிய அமைச்சரான தமது கணவரைத் தனக்காக தனது வெற்றிக்கு நன்றியுரை நிகழ்த்துமாறு கேட்டுக் கொண்டார். இதில் முக்கிய அம்சம் என்னவெனில் வாக்களித்த மக்கள் இவ்வாறான ஏற்றுக் கொள்ள முடியாத நடத்தைகளைப் பொறுத்துக் கொள்வது
38 Jayawardena, Kumari, “Vivienne Goonewardena: “La Pasionaria” of Sri Lanka’.
Pravada. Vol. 4, No. 10 & 11, 1997. pp. 16-18.
39 வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கு சற்றுமுன்னர் 12.01.1999 இல் இந்திராணி தசநாயக்கா, ராவய பத்திரிகைக்கு அளித்த பேட்டி. பொதுஜன ஐக்கிய முன்னணியில் பாராளுமன்ற உறுப்பினரான டி.எம். தசநாயக்கவின் மனைவி அதிகளவு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இத்தேர்தலில் கணவன் மனைவியான இவர்கள் பேரிலேயே மிகக் கூடியளவு முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டன.
25

Page 21
தான். ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கேலிக்குள்ளாக்கும் இவ்வாறான அரசியல் நடத்தைகள் பற்றி ஒரே ஒரு குழுவினரே எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இத்தகைய விதவைகளும் , மனைவியரும் , மகள் மாரும் தென்னாசியாவின் அரசியலில் குடும்பமும் உறவும் கொண்டுள்ள குலப் பரம்பரை முறையின் அடையாளங்களாக மட்டுமே உள்ளனர். இந்தியா நேருகாந்தி குலப்பரம்பரையைப் போலவே இலங்கையிலும் சேனநாயக்க, பண்டாரநாயக்க குலப்பரம்பரையினர் தமது குடும்பங்களுள்ளும் இடையிலும் தமது கூட்டுகள், சண்டைகள், விரோதங்கள் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் அரசியலை நிர்ணயித்துள்ளனர். இதற்கு ஒரு சில விதிவிலக்குகள் மட்டுமே உள்ளன. குடும்பங்கள் தமது செல்வாக்கையும், அதிகாரத்தையும் (அண்மைக் காலங்களில் செல்வத்தையும்) பெருக்கிக் கொள்ள கட்சிகளைப் பயன்படுத்தின. கட்சிகள் இதற்காக சித்தாந்தங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றை விட உறவுமுறைகளிலேயே பெரிதும் தங்கி இருந்தன.* இலங்கையின் பாராளுமன்ற அரசியல் பற்றி ஆய்வு செய்த ஜிக்கின்ஸ் (Jiggins) பின்வருமாறு கூறுகிறார். ‘சர்வசன வாக்குரிமை இருந்த போதும் பாராளுமன்ற நடவடிக்கைளிலும் தேர்தல்களில் அரசியல் அதிகார மாற்றத்திலும் குடும்பங்களின் செல்வாக்கு பெரிதாகத் தோல்வி அடையவில்லை. அண்மைக் காலங்களில் இந்த குலப்பரம்பரை அரசாங்கத்தில் பல்வேறு மட்டங்களிலும் ஊடுருவி விட்டது. பல குடும்பங்கள் இவ்வாறு குலப்பரம்பரை வலையமைப்புகளை உருவாக்கி நில ஒதுக்கீடு, தொழில்கள் முதலான பல்வேறு அம்சங்களில் செல்வாக்குச் செலுத்தி வந்துள்ளன. அண்மைக்கால தேர்தல்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாக்கல் செய்யப்படும் நியமனப் பத்திரத்தில், இருக்கும் அல்லது இறந்து போன அரசியல்வாதிகளின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைக் காணலாம்.
ஆண்களின் வலையமைப்புகளும் உறவுமுறைகளும்
குடும்ப உறவுகள் இல்லாத பட்சத்தில் ஆண்களின் வலையமைப்புகள் மற்றும் 'குரு-சிஷ்யன்’ போன்ற உறவுகள் பெண்கள் அரசியலில் நுழைய வழி வகுத்துள்ளன. மற்றவர்களுடைய துணையுடன் அரசியலில் நுழைவது இப்பெண்களுக்குத் தமது சுய ஆளுமையை அரசியலில் வெளிப்படுத்தவும் தமது அடிமைத்தளைகளை உடைத்தெறியவும் தடையாக அமைந்து விட்டன. அரசியலில் நேரடியாகத் தொடர்புபட்டிராத குடும்பங்களைச் சேர்ந்த பல
" Jiggins, Janice, Caste and Family in the Politics of the Sinhalese 1947-1976.
K.V.G. De Silva, Colombo, 1979.
26

பெண்களை எமது ICES குழுவினர் சந்தித்தனர். இவர்கள் பிரதேச அரசியல் வாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். உள்ளுர், தேசிய மட்டங்களில் இப்பெண்களைப் போட்டியிடுமாறு இந்த அரசியல்வாதிகளே ஊக்குவித்தனர். அத்துடன் இவ்விடயத்தில் இப்பெண்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பவர்களும் இவர்களே. தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் இப்பெண்கள் இத்தலைவர்களுக்குக் கடமைப்பட்டுள்ளதாக உணர்வதுடன் தமது செயற்பாடுகளில் இவர்களது அறிவுரைகளையும் கேட்டு நடக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ்விடயத்தில் வேதனைக்குரியது என்னவெனில் இப்பெண்களில் பலர் நேரடியான சமூகத் த்ொடர்பு கொண்டவர்கள். மற்றவர்களின் உதவி இல்லாமல் நேரடிய்ாக அரசியலில் நுழைந்திருப்பின் மிகவும் சிறந்த தலைவர்களாக மாறி இருப்பர். சில சந்தர்ப்பங்களில் ஆண்களுக்குப் பதிலாக பெண்களே இவ்வாறு தேர்தலில் போட்டியிட தெரிவு செய்யப்பட்டனர். உதாரணமாக தென் பகுதியில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட ஏழு சகோதரர்கள் இருக்கத்தக்கதாக அவர்களது சகோதரி உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட தெரிவு செய்யப்பட்டார். இதற்குக் காரணம் அவரது திறமையேயாகும். அவர்களது சகோதரர்கள் திரைமறைவு அரசியல் நடத்தவே விரும்பினர்.
சுதந்திரமான வேட்பாளர்
குடும்ப உறவுகள், அரசியல் தொடர்புகள் முதலியவை இல்லாமல் அரசியலில் நுழைந்த பெண்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். இப்பெண்களுக்கு பொதுவாக சமூகத் தொடர்புகள் அதிகம். தமது பிரதேச மக்களினாலேயே இவர்கள் அரசியலில் தள்ளப்பட்டனர். எனினும் இவர்களால் உள்ளுர் மட்ட அரசியலில் மட்டுமே நுழைய முடிந்தது. அதன் காரணம் அவர்கள் மேற்கொண்ட சமூகப் பணிகளாகும். கீழ் மட்டத்தில் அரசியலில் பெண்கள் நுழையக் கூடிய வாய்ப்புகளுக்கு இது நல்ல உதாரணமாகும். ஆனால் இவ்வாறு நுழைந்த பின்னர் இவர்களால் அரசியல் ஏணியில் மேலே ஏற முடியாதுள்ளது. தேர்தல் செலவுகள், கட்சித் தொடர்புகள், ஆணி அரசியல்வாதியின் ஆதரவு போன்றவை இதற்கான சில காரணிகளாகும். இப்பெண்கள் தமது உள்ளூர் மட்ட அரசியலில் அர்ப்பணிப்புக் கொண்டவர்களாக இருப்பதால் தேசிய, மாகாணமட்டத்தில் அரசியல் செல்வாக்குடன் உள்நுழைந்த பெண்களை விட பெண்களின் பிரச்சினைகள் பற்றி தெளிவான விளக்கம் கொண்டுள்ளனர். இந்நிலைமையைத் திருத்தி அமைக்க இலங்கை அரசியலில் பெண்களுக்காக இட ஒதுக்கீடு செய்வது பற்றிச் சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது.
27

Page 22
பால்நிலை விடயங்கள்
பெண்கள் ஆண் உறவினர்களின் துணையுடன் முகவர் அரசியல்வாதிகளாக அரசியலிலி நுழைவது பெண களினி தலைமை த துவதி தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. திருமதி பண்டாரநாயக்கா அரசியலில் நுழைந்த போது அவருக்கு 'சமையலறைத் தீயை விடக் கடுமையான ஒன்றையும் தெரியாது’ எனக் கூறியவர்கள் இருந்தனர். ஆனால் அவர் வெற்றிகரமான தலைவராக மாறியதோடு பல சந்தர்ப்பங்களில் தமது நுண்ணிய அரசியல் சாதுரியத்தையும் வெளிக்காட்டியுள்ளார்.
1971ஆம் ஆண்டு இளைஞர் ஈகிளர்ச்சியை அவர் தயவு தாட்சணியமின்றி அடக்கிக் காட்டினார். அதற்காக ‘அமைச்சரவையில் உள்ள ஒரே ஓர் ஆண் மகன் எனும் பெயரையும் பெற்றுக் கொண்டார். தனது தலைமைத்துவத்தின் காரணமாக அணிசேரா இயக்கம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தை சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்துவதற்கு வழி செய்தார். அதுவும் பனிப்போரின் உச்சக் கட்டத்தில் அவரால் இவ்வாறு செய்ய முடிந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடக்க இருந்த ஒரு யுத்தத்தை தனது சாமர்த்தியத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார். இவை யாவும் அவரது அரசியல் வாழ்வின் நினைவுத் தூண்களாகும். 1977-1994 ஆண்டுகளில் ஆட்சி செய்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அவரது குடியுரிமையைப் பறித்தெடுத்தது. 1994இல் மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அவரது குடியுரிமையை மீளளித்தது மட்டுமல்லாமல் அவரது உடல் தளர்ச்சியின் மத்தியிலும் அவரைப் பிரதம மந்திரியாக நியமித்தது. 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கைக்குப் பின்னர் தனது 84ஆவது வயதில் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அவர் மரணம் அடைந்த போது முழுத் தேசமும் 'ஒரு நல்ல தலைவரையும் நல்ல பெண்மணியையும்” இழந்த சோகத்தில் மூழ்கியது.
1994ஆம் ஆண்டுத் தேர்தலில் படுகொலை செய்யப்பட்ட ஒரு தந்தையின் மகள் என்ற அடிப்படையிலும் அதே போல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு கணவனின் கைம்பெண் என்ற அடிப்படையிலும் வீசிய அனுதாப அலையின் அடிப்படையில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிக் கொண்டாலும் அவர் வசீகரமும் சக்தியும் கொண்ட அரசியல் தலைவர் என்பதை அவரது எதிரிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டாலும் கூட 1999ஆம் ஆண்டு திரும்பவும் அவர் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
ஆனால் பெண் அரசியல்வாதிகள் தேசிய அரசியலில் பெண்களை முன்னுரிமைப் படுத்துவதிலும் பெண்ணுரிமையை மேம்படுத்துவதிலும் எந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் பாடுபட்டுள்ளனர்? அரசியலில் பெண்கள் பங்கு பற்றுவதைப் பெண் தலைவர்கள் எந்தளவுக்கு மேம்படுத்தியுள்ளனர்? அல்லது 'ஆண் ஆதிக்கவாதிகள் எந்த அளவுக்கு தாமே பொறுப்பாளியாக
28

இருந்துள்ளனர். பொதுவாக இலங்கைப் பெண் அரசியல்வாதிகள் பெண்களின் நலன்களையும் முன்னுரிமைகளையும் அழுத்தி உரைத்தது கிடையாது. பல பெண்கள் பெண்களின் உரிமை குறித்து வாயளவிலேயே சேவை செய்துள்ளனர். தமது தந்தையர் கணவன்மார், மகன்மார் அல்லது அரசியற் கட்சிகளின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்வதிலேயே அவர்கள் ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.
பெண்கள் 3 காலகட்டங்களில் ஆட்சியலில் இருந்துள்ளனர். (முரீமாவோ பண்டாரநாயக்க (1960-1965), (1970-1977; சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (1994-2000). இக்கால கட்டச் செயன்முறையிலும் அதற்கு வெளியிலும் இவர்கள் கூடிய கவனம் எடுத்திருக்கலாம். 1994-2000 காலகட்டத்தில் பிரதம மந்திரியும் ஜனாதிபதியும் பெண்களாக இருந்தனர். அவர்களிடம் நிர்வாகம் சட்டவாக்க அதிகாரங்கள் இருந்தன. இருந்த போதிலும் இந்நாட்டில் பெண்களின் உரிமை குறித்துப் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை.
சந்திரிகா குமாரதுங்க தனது காலத்தில் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பல்வேறு கூட்டமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. இது அவரது செயற்பாடுகளுக்குத் தடையாக இருந்தது. 1995இல் திருமண வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் 18ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முஸ்லிம்களின் எதிர்ப்புக் காரணமாக முஸ்லிம் சட்டத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை. பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு ஏனைய சிறு கட்சிகளுக்கு மத்தியில் ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் கூடுதலாகத் தங்கி இருக்க வேண்டிய காரணத்தினால் குமாரதுங்க அரசாங்கத்தினால் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பை முறியடிக்க முடியவில்லை.
அத்துடன் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பெரிய முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவும் இல்லை. 1965-1977 காலகட்டத்தில் ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இருந்த பூரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் 4 பெண்களை மாத்திரமே நியமனம் செய்தது." குமாரதுங்க 1994இல் ஜனாதிபதியாகிய பின்னர் இரு பெண்களுக்கு அமைச்சுப் பதவியும் 5 பெண்களுக்குப் பிரதி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டன. இதைத்தவிர தனது தாயை விட வித்தியாசமான அரசியல் ஆளுமையைக் கொண்டிருந்த போதும் அரசியலிலும் கொள்கை உருவாக்கத்திலும் பெண்களை வலுவூட்டுவதற்கு குமாரதுங்கவும் முயற்சி எடுக்கவில்லை. பதிலாக பிரபலம் அடையும் நோக்கத்துன் அவர் முரண்பாடான கூற்றுக்களை முன்வைத்தார்.
41 Kamalawathie, I.M. “Women in Parliamentary Politics in Sri Lanka'. in Women At the Crossroads, eds Sirima Kiribamune and Vidyamali Samarasinghe, ICES, Kandy, 1990.
29

Page 23
(இக் கட்டுரையின் ஆரம்பத்தில் எடுத்தாளப்பட்ட அக்கூற்றுக்கள் அந்நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன). ஆனால் அவரது கூற்றுக்கள் இலங்கைப் பெண்களின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடியனவாக இருக்கவில்லை.
இதற்கான உண்மையான காரணம் யாது? சமகால அரசியல் அமைப்புக்களுக்கு இடையில் பெண்கள் பின் பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நியமனங்களை உடைத்தெறிய முடியாமைக்கான காரணத்தைக் கண்டறிய முடியுமா? அல்லது இந்தப் பெண் அரசியல்வாதிகள் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபு சார்ந்த சிந்தனைகளையும், அமைப்புக்களையும் உடைத்தெறிய தம்மளவில் ஏதேனும் முயற்சிகளை மேற்கொள்வதில்லையா? அல்லது பெண் அரசியல்வாதிகளின் அரசியல் பிரவேசத்துக்கு அரசியல் அறிவும் சமகாலப் பிரச்சினைகள் பற்றிய விளக்கமும் தேவை என்பதை விட ஆண் அரசியல்வாதியுடன் உள்ள தொடர்புதான் முக்கியம் என்ற நிலைமையின் காரணமாகவா? முன் னுக்கு வந்து கொண்டிருக்கும் சில பெண் அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டதில் சில சுவையான தகவல்கள் வெளிவந்தன. தென் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் அரசியல்வாதி எமது ICES குழுவினருக்குப் பின்வருமாறு கூறினார்:
கட்சியின் உயர்பீடத்தில் அல்லது எமது ஆணி சகபாடிகளுடன் பெண தலைமைத்துவம் பற்றி நாம் கதைத்தால் உடனடி விளைவு நாம் நகைப்புக்கு இடமாவது தான். அவர்களுடன் முரணர்படாமல் போவதுதான சிறந்தது. அதாவது அவர்கள் விரும்பியபடி எமது பணிகளைச் செய்து கொண்டு போக வேணடும். ஆனால இம்முறை நாம் எம்மை எமது தொகுதிகளில் வலுப்படுத்திக் கொண்டுள்ளோம். எனவே மாற்றங்களுக்கான நேரம் வரும் போது நாம் தயாராக இருக்க (iptջպա5.
மேற்படி அரசியல்வாதி தனது தந்தை அரசவிரோத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டதன் காரணமாகப் பதவிக்கு வந்தவர். தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலமாக அரசியல் பணிகளை முன்னெடுத்துள்ளார். வேண்டுமென்றே கிராமியத் தோற்றத்தைத் தன்னில் காட்டிக் கொண்டுள்ளார். அவர் இதனை ஏற்காவிட்டாலும் தனது மக்கள் பெண்கள் இப்படித்தான் உடுத்த வேண்டும், நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தான் அதன்படி நடப்பதாகவும் கூறினார்.
இதற்கு விதிவிலக்குகளும் இல்லாமலில்லை. விவியன் குணவர்தன பெண்ணுரிமைக்காகவும் அவர்களை வலுவூட்டுவதற்காகவும் மிகவும் சிரமப்பட்டார். வறிய குடும்பப் பெண்களுக்காகக் கடினமாக உழைத்தார். எனினும் தன்னை ஒரு பெண்ணிலைவாதி என இனங்காட்டிக் கொள்ள அவர்
30

விரும்பவில்லை. அரசியல் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் பெண்மனியான ஆயிஷா ரவூப் முஸ்லிம் பெண்களின் கல்விக்கு ஆர்வத்துடன் உழைத்தார். அத்துடன் தீர்மானம் மேற்கொள்ளலில் பெண்கள் பங்கு பற்ற வேண்டுமென்பதை அவர் ஏறறுக் கொண்டிருந்தார்.
நாம் உள்ளுர் மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் உரையாடிய பெண் அரசியல்வாதிகள் பொதுவாக பெண்கள் பிரச்சினைகள் பற்றி விளக்கம் உள்ளவர்களாகக் காணப்பட்டனர். அவர் களது கல்வி அறிவும் இப்பிரச்சினைகள் பற்றிய அரசு சாரா நிறுவனங்கள் நடத்தி வருகின்ற நிகழ்வுகளும் மற்றும் ஊடகங்களும் இவ்விளக்கத்துக்குக் காரணமாக இருக்கலாம். அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி இந்த பெண்கள் தமது எதிர்ப்பைக் காட்டத் தவறவில்லை. கூட்டங்கள் நடத்தியும், தீர்மானங்கள் நிறைவேற்றியும், சட்டங்களை வலுப்படுத்துமாறு ஜனாதிபதியைக் கோரியும் இவர்கள் செயற்பட்டுள்ளனர். பாலியலி குற்றங்களுக்கு மரண தணி டனை வழங்க வேணி டுமெனப் பலர் பிரஸ்தாபித்தனர். மாகாணசபை உறுப்பினரான சுரங்கனி எல்லாவல இந்தியாவின் மது எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். பெண்களைத் திரட்டி சட்டவிரோத மதுபான உற்பத்திக்கெதிராகத் தான் போராடப்போவதாகவும் அவர்களுக்கு வேலை வழங்குவதற்கு மாற்று ஏற்பாடுகளை மேற் கொள்ளப்போவதாகவும் கூறினார். இலங்கைப் பெண்கள் கல்வி அறிவில் மேம்பட்டு இருந்த போதிலும் இந்தியாவின் கிராமியப் பெண்களிடையே காணப்படுகின்ற தைரியம் இவர்களிடமில்லை என்பது அவரது அபிப்பிராயமாக இருந்தது.
நல்ல பெண்களா அல்லது விலை மாதர்களா?
பெண்கள் அரசியல் மூலமாகப் பொதுவாழ்க்கையில் நுழையும் போது அது அவர்களது இரண்டாவது செயற்பாடாகவே கருதப்படுகிறது. ஒரு நல்ல தாயாகவும், மனைவியாகவும் இருக்க வேண்டுவதே அவர்களது முதன்மை வகிபங்கு என எதிர்பார்க்கப்படுகிறது. திருமதி பண்டாரநாயக்கா பெண் அரசியல்வாதிகளுக்கு ஒரு சக்திமிக்க முன்மாதிரியாகக் கொள்ளப்படுகின்றார். ஒரு நல்ல தாயாக இருக்க விரும்பிய அவர் பரிதாபமாக அரசியலுக்குள் தள்ளப்பட்டார். நாட்டை வழிநடத்திய போதும் தனது பெண்மை பற்றியும் “பெண்ணின் சரியான வகிபங்கு” பற்றியும் அவர் பெரிதும் அக்கறை கொண்டிருந்தார்.? உலகின் முதல் பெண் பிரதம மந்திரி என்ற அடிப்படையில்
* திருமதி. பண்டாரநாயக்க தேசத்தின் தாய்' எனவும் 'அம்மா’ எனவும் அழைக்கப்பட்டார். 1970 பொதுத்தேர்தலில் பின்வருமாறு கோஷம் எழுப்பப்பட்டது. ‘எமது அம்மா அருகே வருகிறாள். இரண்டு கொத்து அரிசி கொண்டு வருகிறாள்' சிங்களவர்களின் தாய்மை மற்றும் வீரத்தின் அடையாளமான விகாரமாதேவியுடன் இவரும் இணையாக வைத்து எண்ணப்பட்டார்.
31

Page 24
ஒரு தனித்துவமான ஆளுமையைக் கொண்டிருந்த போதும் தான் ஒரு தாய் என்னும் அடையாளத்தை அவர் எப்போதும் முன்னிலைப்படுத்தி வந்தார். ஒருமுறை அவர் பின்வருமாறு கூறினார்:
ஒரு பெண்ணினர் முதன்மை ஸ்தானம் அவரது இல்லம் தான் என்பதிலும் அவரது கணவனையும் பிள்ளைகளையும் கவனிப்பது தான் அவரது முதன்மைக் கடமைகள் என்பதிலும் நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். எனினும் பொது வாழ்விலும் அவர் ஆற்ற வேண்டிய பணி உள்ளது. சமுகப் பணிகளுக்கு அவர் தமது நேரத்தில் சிறிதளவேனும் செலவிடவே வேணடும்.*
அண்மையில் அவர் மரணமடைந்த பொழுது ஊடகங்களில் அவரது அரசியல் தலைமைத்துவம் மட்டுமன்றி ஒரு விதவையாக நின்று தனது பிள்ளைகளை ஆளாக்கிய விதம் குறித்தே பலரும் சிலாகித்து எழுதினர். சமகாலப் பெண் அரசியல்வாதிகள் தாம் ஆண் அரசியல்வாதிகளை விட மாறுபட்ட முன்னுரிமைகளைக் கொண்டிருப்பதாகவே கூறுகிறார்கள். தாய் மற்றும் மனைவியாகத் தாம் ஆற்ற வேண்டிய பணிகளைத் தாம் நிராகரித்து விட முடியாது என அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். 1999 தேர்தலில் போட்டியிட்ட ஒரு படித்த இளம் பெண் அரசியல்வாதி எம்மிடம் இவ்வாறு கூறினார். ‘நான் தாயாகவும் மனைவியாகவும் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்து வருகிறேன். எப்போதும் அவற்றை அசட்டை செய்ததில்லை. ஆனால் இரண்டுக்கும் இடையில் தெரிவு செய்ய வேண்டிய நாள் வரும்போது அரசியலைக் கைவிட்டு விடுவேன்.”*
தமது கணவன் மாரிடையே குடும்பப் பொறுப்புகளைச் சமமாகப் பகிர்ந்தளிக்க முடியாமைக்கு பெண்களைப் பற்றிய சமூக எதிர்பார்ப்புக்கள் முக்கிய காரணிகளாகும். இருவழிக் கடமைகளையும் பெண்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்பது தெரிந்த போதும் இந்நிலைமையை மாற்ற முடியவில்லை. இவ்வாறான சமூக எதிர்பார்ப்புகள் முஸ்லிம் பெண்களைப் பொறுத்தமட்டில் இன்னும் அதிகமாகவே உள்ளன.*
43 Quoted in Seneviratne, Maureen, Sirimavo Bandaranaike, Hansard
Publishers, Colombo, 1975, p. 151.
44 ஷர்மிளா ஜெயவர்தனவுடனான நேர்காணல், வேட்பாளர், மேல் மாகாண
சபைத் தேர்தல், 1999,
45 திருமதி ஆப்தீன் உடனான நேர்காணல்கள், அங்கத்தவர், கல்கிசை
மாநகரசபை, திருமதி ஹாஜரா சாலி, அங்கத்தவர், மாநகரசபை, காலி.
32

இவ்வாறாக பெண்கள் தாய் மாராகவும், மனைவிமாராகவும் , கைம்பெண்களாகவுமே அரசியலில் நுழைய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.* பொதுவாழ் வில் பெணிகள் தாய் மாராகவும், மனைவிமாராகவுமே நோக்கப்படுவதால் பெண்களின் உடை, பேச்சு, பழக்கவழக்கம் ஆகியவை கூர்ந்து அவதானிக்கப்படுகின்றன. இவை மீறப்படும் போது அவர்கள் அவமானத்துக்கும் துாற்றுதல்களுக்கும் உள்ளாகின்றனர். விவியன் குணவர்தன அச்சமற்றவராகவும் நேரடியாகக் கதைக்கக் கூடியவராகவும் விளங்கியதால் “வாயாடி’ எனும் பெயர் பெற்றிருந்தார். பெணி அரசியல்வாதிகள் பெண்மையின் திருவுருவமாக விளங்கினாலும் கூட அவர்களைப் பொதுவாழ்விலிருந்து அகற்றுவதற்கு அவர்களது பெண்மையும், ஒழுக்கமுமே கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. 1960 தேர்தலின் போது திருமதி பண்டாரநாயக்காவை ஓரங் கட்டி ஐக்கிய தேசியக் கட்சி இந்தவகையான முறையையே கையாண்டது. அவரது பிள்ளைகளின் உண்மையான தந்தை குறித்தும் ஒரு இடதுசாரித் தலைவருடன் கூட்டு ஏற்படுத்துவதற்காக அவருடன் தகாத உறவு கொண்டிருப்பதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டதோடு’ பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்களும் வரையப்பட்டன. அவருக்கு ‘ஆட்டக் காரி' போன்ற பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த முதியோர் அவர் “தனது பெயரையும் குடும்பத்தின் பெயரையும் அழித்து விட்டுத்தான் ஓய்வார்’ எனக்கூறத் தொடங்கினர்' எனினும் பொதுவாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் தனது சீரிய நடத்தையின் மூலம் திருமதி பண்டாரநாயக் கா இந்த அவப்பெயர்களின் தாக்கத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார்.
படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் பாரியார் திருமதி ஹேமா பிரேமதாசாவின் நடத்தை திருமதி பண்டாரநாயக்காவின் நடத்தையிலிருந்து பெரிதும் வேறுபட்டது. திருமதி பண்டாரநாயக்கா பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஹேமா கீழ் வகுப்பைச் சேர்ந்தவர். தனது கணவன் ஜனாதிபதியானவுடன் “முதற் பெண்மணி” என்னும் அந்தஸ்தையும், சேவா வனிதா இயக்கத்தின் தலைவி என்னும் அந்தஸ்தையும் பயன்படுத்திக் கொண்டு* நன்கு பிரசாரம்
48 De Alwis, Malathi, Gender, Politics and the "Respectable Lady", in (Un) making The Nation, eds. Pradeep Jeganathan and Quadri Ismail, Social Scientists' Association, Colombo, 1995, pp. 137-157. Remark attributed to Paul Deraniyagala, quoted in De Alwis, ibid. * சேவா வனிதா இயக்கம் 1983இல் ஜே.ஆர். ஜெயவர்தனா (ஜனாதிபதி 1977-1988) அவர்களின் மனைவியான எலினா ஜெயவர்தனா அவர்களால் அமைக்கப்பட்டது. ஜனாதிபதி நிதியினால் நிதி வழங்கப்பட்ட இந்த இயக்கத்தில் கீழ் மட்டத்திலிருந்து அமைச்சு மட்டம் வரை பதவி வகித்த அரசாங்க அதிகாரிகளின் மனைவிமார் அங்கம் வகித்தனர்.
33

Page 25
செய்யப்பட்ட “சமூக சேவை" நிகழ்வுகளின் மூலம் தன்னைப் பிரபல்யப் படுத்திக் கொண்டார். அதுவரை சில அரசுசாரா நிறுவனங்களினதும், இடதுசாரி அரசியல் கட்சிகளினதும் பிடிக்குள் இருந்த சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டங்களைத் தானே முன்னின்று நடத்தினார். ஓரியன்ட் கிளப்பில் அவரது டென்னிஸ் பாடல்கள், நுவரெலியாவில் குதிரைச் சவாரி ஆகியவையும் இவ்வாறு ஊடகங்களால் பிரபல்யப்படுத்தப்பட்டன. பிரேமதாசாவின் இறுதிக் காலகட்டத்தின் போது ஹேமாவைப் பற்றி வதந்திகளும், கிசுகிசுப்புக்களும் வெகுவாக அதிகரித்தன. அவரது ஒழுக்கம் குறித்து கீழ்த்தரமான அநாமதேய “பாக்ஸ்’ செய்திகள் விநியோகிக்கப்பட்டன. தனது கணவரின் மரணச் சடங்கின் போது அவரது தரிசன நோக்கினை முன்னெடுத்துச் செல்வதாக உறுதி கூறிய போதும் அவரது அரசியல் வாழ்விற்கு அவரது அரசியற் கட்சியே முற்றுப்புள்ளி வைத்தது. தமது கணவன்மாரின் மரணத்திலிருந்து மனைவிமாரின் அரசியல் வாழ்வுதொடங்கும் செல்நெறியானது இவரது விடயத்தில் இடம்பெறவில்லை. 1994 ஆகஸ்ட் பொதுத்தேர்தலின் போது தனது கணவரின் தொகுதியிலிருந்து போட்டியிடும் அவரது முயற்சி யு.என்.பி. யினால் முறியடிக்கப்பட்டது. இதற்கு பிரேமதாசாவின் கொடுர ஆட்சியிலிருந்து யு.என்.பி. தன்னை விலக்கிக்கொள்ள முயன்றமை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் இவரைத் தைரியமும், பகட்டும், ஆணவமும், பேராசையும் கொண்ட ஒரு பெண்ணாகக் கட்சியினர் நோக்கியமையாகும். இலங்கையில் பெண்கள் உரிமை தொடர்பாக எந்தவொரு பெண் தலைவரையும் விட இவர் தீவிரமான நோக்குகளைக் கொண்டிருந்த போதும் இறுதியில் “கெளரவமற்றவர்’ என்னும் பெயர் சூட்டப்பட்டு ஒதுக்கப்பட்டார்."
1994 இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து பெண் அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்துத் திரும்பவும் விவாதம் தொடங்கியது. தனது தாயைப் போலல்லாது தனது தனிப்பட்ட வாழ்க்கையைத் தான் விரும்பியவாறு வாழும் தனது உரிமையை அவர் வலியுறுத்தினார். பொது உரையாற்றல் களில் அவர் ஒரு “குறிப்பிட்ட வகுப்பினர்’ மட்டுமே பயன்படுத்தும் சொற்களைக் கையாண்டமை பற்றிக் கண்டனங்கள் எழுந்தன. “மரியாதை’ என்பது பெண் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே உரியது என்னும் விதியை அவர் தூக்கி எறிந்தாலும் அதில் முரண்பாடுகள் இல்லாமலில்லை. தனக்கு அபகீர்த்தி உண்டு பண்ணியமைக்காக அவர் இரு பத்திரிகைகளின் மேல் வழக்குத் தொடர்ந்தார். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நடத்திய விருந்துபசாரத்தில் அவர் அகாலவேளையில் இருந்ததாக இப்பத்திரிகைகள் செய்திகளைப் பிரசுரித்திருந்தன. இப்பத்திரிகைகளின் பெண்ணடிமைவாத
' De Alwis, ibid.
34

மனப்பாங்குகள் தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. ஆனால் ஊடகங்களின் மீது தண்டனைக் கோவையைப் பயன்படுத்தி வழக்குத் தொடர்ந்தது தொடர்பான விவாதம் காரசாரமாக முன் எழுந்தது. பெண் அரசியல்வாதிகளின் “முறையான” நடத்தை பற்றிய சட்டரீதியான விவாதம் சில சுவையான அம்சங்களை வெளிப்படுத்தியது.
இரவு 12.30 மணிக்கு ஒரு பிரமச்சாரியின் ஒட்டல் அறைக்குள் பாலியல் இன்பங்களில் ஈடுபடும் நோக்குடன் பின் கதவால் நுழைந்தார் (இச்செய்தி உண்மையல்ல) என்னும் செய்தியானது ஜனாதிபதியின் நடத்தைக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்குடன் வெளியிடப்பட்டது என ஜனாதிபதியின் சார்பில் வாதிடப்பட்டது. சமுக நகர்வு காரணமாக இன்று பெண்கள் ஆண்களுக்குச் சமம் என்னும் ஒரு சிறிய “கிசுகிசு’ செய்து ஜனாதிபதியின் நடத்தைக் கு எவ்வகையிலும் ஊறு விளைவித்து விடாது என்றும் எதிர்த் தரப்பில் வாதாடப்பட்டது. அத்துடன் பொதுவாக ஜனாதிபதி இவ்வாறுதான் நடந்துகொள்கிறார் என்றும் எனவே இவ்வாறான செய்திக் குறிப்பை மோசமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் கூறப்பட்டது. இதே போன்ற வாதங்களே இதே போன்ற செய்தியை வெளியிட்ட சிங்களப் பத்திரிகை விடயத்திலும் முன்னெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் இரண்டு வழக்குகளிலும் (அவை இரண்டுமே இப்போது மேன்முறையீட்டில் உள்ளன.) வெளிப்படுத்தப்பட்ட தீர்ப்புகள் நீதிபதிகளின் வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தன. ஆங்கிலப் பத்திரிகை வழக்கில் நீதிபதி பத்திரிகையின் மீது குற்றம் கண்டார். பயன்படுத்தப்பட்ட சில சொற்றொடர்கள் ஜனாதிபதிக்கு மாசு கற்பியக்கக் கூடியவை என அவர் குறிப்பிட்டார். சிங்களப் பத்திரிகை வழக்கில் விருந்துக்குத் தனியே செல்வதாகக் குறிப்பிட்டமை எவ்வகையிலும் அப்பெண்ணுக்கு அவதூறு கற்பித்தலாகாது எனக்கூறிய நீதிபதி ஆசிரியரை விடுதலை செய்தார்."
வன்முறை பலியானோரும் முகவர்களும்
கடந்த 25 வருடங்களாக இலங்கை அரசியலிலும் அதிகார மாற்றத்திலும் பொதுவாகவும் குறிப்பாகவும் வன்முறையே ஆக்கிரமித்து வந்துள்ளது. கள்ளவாக்குப் போடுதல், வாக்காளரைப் பயமுறுத்தல், அச்சுறுத்தல், வன்முறை, அரசியற் படுகொலை முதலிய பல்வேறு அரசியல் காடைத் தனங்கள் தாராளமாக நடந்து வருகின்றன. தேர்தல் செயன்முறையானது பொது அரசியல கலாசார தி தைக் குறி றங்கள் கொணி டதாக
The Democratic Socialist Republic of Sri Lanka v Sinha Ratnatunge HC case No. 7397/95. The Democratic Socialist Republic of Sri Lanka v P. A. Bandula Padmakumara. HC case No. 7580/95D.
35

Page 26
மலினப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காகக் கட்சியில் உட்பூசல்கள் அதிகரித்து விட்டன. அத்துடன் தற்போது நடைபெறும் சிவில் யுத்தமும், 1980 களில் ஜே.வி.பி. யின் எழுச்சியும் சமூகத்தை இராணுவ மயப்படுத்தியுள்ளது. அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அரச முகவர்கள் அதிகாரத் தினை தன்னிஷடப் படி பயன்படுத் துவதும் அதிகரித்துள்ளதோடு, அதன் காரணமாக சிவிலியன்களைக் கட்டுப்படுத்தல், அச்சுறுத்தல், காணாமற் போதலும் தாராளமாக நடக்கின்றன. பெண்கள் குடும்பத்துக்கு உழைக்கும் தமது கணவன்மாரை இழந்து தாமே அந்த வகிபங்கை ஏற்க வேணி டியுள்ளது. பிணக்குகளின் காரணமாகப் பெரு நீ தொகையான ஆணிகளும் , பெணிகளும் , பிள்ளைகளும் இடம்பெயர்ந்துள்ளனர்.
இவ்வாறான வன்முறை இலங்கை அரசியலை ஆண் உடைமையாக மாற்றியுள்ளது. வாக்குக் கேட்பதிலும், வாக்களிப்பதிலும், வேட்பாளராக இருப்பதிலும் பெண்களுக்கு இருக்கக்கூடிய சிறிதளவு இடமும் பெண் அரசியல்வாதிகளுக்கு இல்லாமற் போய்விட்டது. 1997 உள்ளுராட்சித் தேர்தல் “அதிகூடிய வன்முறைகளைக் கொண்டது” எனத் தேர்தற் கண்காணிப்பாளர்கள் தேர்தல் முடிந்தவுடன் பிரகடனம் செய்தனர். இத்தேர்தலில் 30 நாட்களில் 1000 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
எனினும் 1999 ஜனவரியில் முடிந்த வடமேற்கு மாகாணத் தேர்தலில் நடந்த வன்முறைகள் 1997 தேர்தலையும் மிஞ்சி விட்டது. கொலைகள், கொலை முயற்சி, பயமுறுத்தல், வேட்பாளர்களையும் ஆதரவாளர்களையும் தாக்குதல், தீவைப்பு, குண்டுவைப்பு, கள்ளவோட்டுப் போடுதல் முதலிய சகல குற்றச் செயல்களும் இங்கு தாராளமாக நடந்தேறின. மாகாணத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு பெண் அரசியல்வாதி இவ்வாறு கூறினார்:
"இந்தத் தேர்தல் இவ்வாறு நடக்குமென்று தெரிந்திருந்தால் நான் போட்டியிட்டிருக்கவே மாட்டேன். எனது வாழ்வில் இப்படியொரு பயங்கரத்தை நான் பார்த்ததேயில்லை." தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடல், தேர்தல் முகவர்களாகச் செயற்படல், வாக்களித்தல் முதலிய எதிலுமே பங்கெடுக்க முடியாதவாறு பெண்கள் இலகுவாக அச்சுறுத்தப்பட்டனர்.? பல நிகழ்வுகள் பாலியல் சார்ந்தனவாக இருந்தன. குறிப்பாக இவை தனியாகப் பயணம் செய்தல், இரவு நேரங்களில் பணிபுரிதல் போன்றவற்றிலிருந்து பெண்கள்
51 ஹேவன் ஹேரத்துடனான நேர்காணல், வேட்பாளர், வடமேல் மகாண சபைத்
தேர்தல் 1999 மற்றும் முன்னாள் அங்கத்தவர், வடமேல் மாகாணசபை.
* De Mel, Neloufer and Nasry, Laila, "Distorted Politics. The Wayamba Elections: Setting a Trend?", Options, No. 17, First Quarter, 1999, pp. 2-4.
36 ·

ஒதுங்கி இருக்க வழிசெய்யக் கூடியவையாகவிருந்தன. இதன் மூலம் இலங்கையின் பிரதான அரசியல் நீரோடையிலிருந்து பெண்கள் மேலும் ஒதுக்கப்பட்டனர்.° 50 வயதான பி.எம். சந்திராவதி இரும்புக் கம்பிகளாலும், துப்பாக்கியின் அடிப்பாகத்தாலும் தாக்கப்பட்டு உடையினைக் களையுமாறு கட்டளையிடப்பட்டார். அவர் பின்வருமாறு எங்களிடம் விபரித்தார்: "அவர்கள் எம்மை அடித்தனர். எமது ரவிக்கையைக் கழற்ற மறுத்த போது எமது மார்பகங்களை அறுத்தெறியப் போவதாகக் கூறினர்.” இன்னொரு சம்பவத்தில் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த காடையர்கள் ஒரு தாயை அவரது இரு பிள்ளைகள் பார்த்திருக்கத்தக்கதாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் போவதாகக் கூறினர். அவர் கெஞ்சிக் கூத்தாடிய போது அவர்களில் ஒருவன் அவள் முகத்தில் ‘அசிட்' வீசிக் காயப்படுத்தினான்." மத்திய மாகாணத்தில் பெண்கள் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சிங்கள-தமிழ் பெண்களின் வலையமைப்பின் தலைவரை அரசாங்கக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவரைப் போட்டியிடுவதிலிருந்து தடுப்பதற்காகப் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் போவதாகப் பயமுறுத்தினார். கடைசியாக நடந்த தேர்தலில் கள்ளவாக்குப் போடப்படவில்லை, வாக்குகள் திருடப்பட்டன என்று கூறலாம். தேர்தற் தினத்தன்று காடையர்கள் சில தேர்தல் தொகுதிகளில் வாக்குச் சீட்டுக்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். அதில் பெண்கள் பெரிதும் அச்சுறுத்தப்பட்டனர்.
மறுபக க ம பார் கி கும் போது பெணி களே வன முறையரினி ஊக்குவிப்பாளராகவும் மாறினர். முன்னரே குறிப்பிட்டவாறு பெரும்பாலான பெண் அரசியல்வாதிகள் ஆண் அரசியல்வாதிகளின் படுகொலையின் விளைவாக அரசியலில் நுழைந்தனர். அவர்கள் தமது ஆண் அரசியல் உறவினர்களிடமிருந்து அதிகாரத்தையும் செல்வாக்கையும் மரபுரிமையால் பெற்றிருந்தனர். அத்துடன் அரசியல் கலாசாரத்தில் வன்முறையின் இயல்புகள் பற்றியும் அறிந்து வைத்துள்ளனர். அதன் காரணமாக அரசியல் ஏணிப்படியில் அவர்களால் ஏற முடிகிறது. இதன் காரணமாக விரும்பியோ அல்லது விரும்பாமலோ வன்முறையை ஏற்படுத்துபவர்களாகவும், இன்றைய ஊழல் மலிந்த அரசியலின் பங்காளிகளாகவும் அவர்கள் ஆகி விடுகின்றனர். அரசியற் கட்சிக்கு விசுவாசம் காட்டும் மரபில் பழக்கப்பட்டு விட்டதனால்
Tambiah, Yasmine, Gender and Politics: An Asian Commonwealth Overview, paper presented at the Commonwealth Asian/ European Symposium on Gender, Politics, Peace, Conflict Prevention and Resolution, Brighton, March 1998.
' 'Police close eye on political striptease' The Sunday Times of 7th February 1999, p. 4 and 'Atrocities on women of Wayamba'. The Sunday Leader of 7th February 1999, p. 3.
37

Page 27
வித்தியாசமான அரசியலைத் தேர்ந்தெடுக்கத் தமக்கு வாய்ப்பு இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.
கடைசியாக நடந்த மாகாணசபைத் தேர்தல்களில் இக்கருத்துக்கள் மீண்டும் பிரத்தியட் சமாயின. சில பெண் அரசியல் வாதிகள் தமது கணவர்களைப் போலவே தாமும் பயங்கரமானவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டினர். பிறரை அடிப்பணிய வைப்பது பற்றி இப்பெண் அரசியல்வாதிகள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்த போதும் வன்முறை என்பது சுயபாதுகாப்புக்கு அவசியமானது என்பதில் இவர்களிடையே எவ்வித கருத்து வேறுபாடுமில்லை. ஒரு மாநகரசபை பெண் உறுப்பினர் இவ்வாறு கூறினார்: “தேர்தல் காலத்தில் என்னில் புதைந்து கிடக்கும் ‘ஆணர்' வெளியே வந்து விடுகிறது. சேலையை வரிந்து கட்டிக்கொண்டு நான் களத்தில் இறங்கி விடுகிறேன். என்னைத் தாக்குவதாகவும், துண்டம் துண்டமாக வெட்டிக் கொல்வதாகவும் விடுக்கப்படும் சவால்களுக்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. வன்முறைக்கு அவரது பதில் வன்முறைதானா என வினவிய போது அவர் கூறினார்: "ஆம் எமது குழுக்கள் எங்களுக்காக வேலை செய்கின்றனர், அல்லது எம்மால் வெற்றி பெற முடியாது'. ஆனால் சாதாரண பெண்களின் அரசியல் பிரவேசத்துக்கு அந்தத் துப்பாக்கிக் கலாசாரம் ஒரு தடையாக அமைந்து விடுகிறது. வன்முறையில் ஈடுபடுவதற்கு விருப்பும் ஆற்றலும் இருந்தால் அரசியலில் ஈடுபட முடியும் என்ற நிலைமை வரும்போது பல பெண்கள் (ஆண்களும் கூட) அரசியலில் ஈடுபடத் தயங்கி விடுகின்றனர். மேலே குறிப்பிட்டதைப் போன்ற அரசியல் வன்முறைகளில் ஆண், பெண் என்ற வேறுபாடுகள் இல்லை என்பதில் எமக்கு உடன்பாடு உண்டு. இந்த வன்முறையின் காரணமாக அறிவும் ஆற்றலும் கண்ணியமும் கொண்ட பல ஆண்களும் பெண்களும் சமகால அரசியல் களத்தில் இறங்குவதற்கு மறுத்து விட்டனர்.
38

I
வரம்பு மீறிய தடைகள்: காலனித்துவத்திற்கு பின்னர் இலங்கையில் பெண்களின் செயலாற்றல் முறை
நிலைமாறு காலம்
'ஆண் தலைமைத்துவ ஆட்சி, ஆண்களைக் கொண்ட அரசுகள் என்பவற்றால் எம்மீது சுமத்தப்பட்டுள்ள வரம்பு மீறிய தடைகள், விலங்கு மாட்டப்பட்ட நிலை என்பவற்றிற்கு முடிவு காண்பதற்கும் எமக்காக குரலெழுப்புவதற்கும் வாழ்வின் எல்லையில் இருக்கும் பெண்களுக்கு சமூகரீதியான அந்தஸ்தினை ஏற்படுத்துவதற்கும், எம்மிடையே மன உணர்வுகளை உருவாக்குவதற்கும் எமக்கு புதிய உபாயங்கள் தேவைப்படுகின்றன.*
தொழிலாளர் இயக்கங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் , சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் உருவாகியிருந்த இடதுசாரி இயக்கங்கள் என்பன இலங்கையின் பொது அரசியல் வாழ்வில் இதுவரையில் அறிந்து கொள்ளப்படாத பெண்களின் பங்குபற்றுகைக்கான சந்தர்ப்பங்களும், இடங்களும் கிடைக்கப் பெறுவதற்கு வழிகோலின. பெண்கள் தனிப்படவும், ஒன்று சேர்ந்தும் முன்னெப்பொழுதும் இல்லாத எண்ணிக்கையில் தமது வீடுகளிலிருந்து வெளியேறிப் பொதுவான செயற்களத்தில் புகுந்தார்கள். அதிகளவிலான அரசியல் கலந்துரையாடல்கள், கூட்டங்கள், எழுச்சிப் போராட்டங்கள், கூட்டமுடிவெடுப்புக்கள், எதிர்ப்புக்கள் போன்றவற்றைக் கொண்ட பதற்றம் நிறைந்த நாட்களாக அவை இருந்தன. கிறீஸ்தவ, பெளத்த சமயப் பரப்பாளர்களின் கல்வி மூலம் நன்மையடைந்த உயர், மத்திய வகுப்பைச் சார்ந்த பெண்களின் ஆரம்ப முயற்சிகளின் ஊடாக அதிகளவில் சுயாதீனமான பெண்கள் குழுக்கள் உருவாகிய காலப் பகுதியாகவும் இது விளங்கியது. இந்தப் பெண்கள் குழுக்களில் சில முழுமையாக சேமநலன் நோக்குடையவையாகவும், மற்றும் சில இயற்கையிலேயே எதிர்ப்புத் தன்மை
55 Women for Peace "Through the eyes of women: A new way of seeing and knowing our reality'. Statement of women for peace (October 1995) in Pravada Vol 4, No. 5 & 6, 1996, pp. 37-38.
39

Page 28
கொண்ட குழுக்களாகவும் காணப்பட்டன. இக்காலப்பகுதியில் பெண்களின் உரிமை அமைப்புக்கள், அகில இலங்கை பெண்கள் இயக்கம், பெண்களின் அரசியல் இயக்கம் போன்ற பல்வேறு அமைப்புக்களின் ஊடாகப் பெண்களின் சட்டரீதியான பொருளாதார, அரசியல் உரிமைகள் மிகக் கடுமையான முறையில் தெளிவாக எடுத்து வைக்கப்படும் நிலைமை ஆரம்பமாயிற்று.* 1948இல் சுதந்திரம் அடையப் பெற்றதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள பெண்கள் வாக்களிப்பதற்கான உரிமையைப் பெற்றார்கள். சுதந்திரம் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புப் போன்ற துறைகளில் பெண்களைப் பொறுத்து துரித முன்னேற்றத்தையும் கொண்டு வந்தது. உதாரணமாக 19461981 காலத்தில் பெண்களின் எழுத்தறிவு நிலைமை இருமடங்காயிற்று. 1923ஆம் ஆண்டின் திருமணம் முடித்த பெண்களின் சொத்துடைமைக் கட்டளைச் சட்டம், பெண்களின் உரிமைகளுக்கான சட்ட சமத்துவ அங்கீகாரம் போன்றன உட்பட பெண்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டிய அதிக எண்ணிக்கையிலான குடியேற்ற காலச் சட்டங்களும் இக் காலத்தில் திருத்தியமைக்கப்பட்டன. படிப்படியான சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் ஊடாக இது சிறியளவிலான முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறினை எடுத்துக்காட்டியது. எனினும் இத்தகைய திடீர் நன்மைகள் இயக்கங்களின் இயல்பான தன்மையிலிருந்து எழுந்த சில தடைகளினால் விளக்கத் தேவையில்லாத ஒன்றாக இருந்தது. குமாரி ஜெயவர்த்தன இந்த இயக்கம் நடுத்தர வர்க்கப் பெண்களிடையேயேயும் அதற்கு குறைந்த வர்க்கப் பெண்களிடையேயும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே தொடர்ந்து காணப்பட்டது என்றும், சமூகப் பரமாணங்களிடையே அது நிலைபெற்று தொழிற்பட்டதனால் அது குடும்ப ஆட்சித் தலைவருக்குரிய சமூக அமைப்பினைப் பற்றியோ அல்லது பெண்களின் தலைமையின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றின் பங்கு பற்றியோ எதுவித கேள்வியினையும் கேட்கவில் லையென்றும் ” குறிப்பிடுகின்றார்."
எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையில் சுதந்திரம் குடியியற் சமூகத்தின் செயல் நடவடிக்கைக்குரிய இடங்களையெல்லாம் உடனடியாகக் கவர்ந்தது.* இலங்கையிலும் இந்தியாவிலும் தேசிய இயக்கங்கள் குடியியற் சமூகத்தைச் சுதந்திரத்திற்கு முன்பு அரசியல் நடவடிக்கைகளின் மையத்தில் வைத்ததனால், அது குடியேற்றவாதத்தின் முடிவில் பொருளாதார, அரசியல், சமூக மாற்றத்தின் பிரதான காரணியாக அரசினை நோக்கி நகர்ந்தது.
* ஜெயவர்த்தன குமாரி, 1986, op.cit.
57 Ibid., p. 135.
Coomaraswamy, Radhika, "Civil Society: A South Asian Perspective", Paper presented at meeting on Civil Society and Governance in South Asia Organised by the International Center for Ethnic Studies on 29 August 1998, Colombo.
40

சுதந்திரத்தின் ஆரம்ப நிலையில் பெண்களின் ஆன்மீகப் போராட்டத்திற்கு மாறாக சுதந்திரம் பெண்களை இல்லற வாழ்க்கைக்கு இட்டுச் சென்றதுடன் பெண்களின் தேவைகளை வழங்குவதற்கு நலன் புரி அரசின் மேல் நம்பிக்கையினையும் ஏற்படுத்தியது. எனவே, பெண்கள் அதிகளவு முன்னேற்றத்தை அடைந்த பொழுதிலும் பெண்களின் கீழ் மட்டநிலையின் பொதுவான பாங்கு சுதந்திரத்திற்குப் பின்னர் முதல் இரண்டரைத் தசாப்தங்களாக எந்தவித மாற்றமுமின்றி அப்படியே நிலைத்திருந்தது.*
1975இல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பெண்களுக்கான சர்வதேச வருடம், பெண்களுக்கான சர்வதேச தசாப்தம் என்பனவற்றின் பிரகடனத்துடன், பெண்கள் எதிர் நோக்குகின்ற சமத்துவமின்மைப் பிரச்சினைக்கு வழிகாணும் முகமாக இலங்கையில் பெண்கள் இயக்கங்கள் புதிய உத்வேக முயற்சிகளை ஆரம்பிக்கத் தொடங்கின. அதிக எண் ணிக்கையில் பெணிகள் செயல்நடவடிக்கைக் குழுக்கள் சுதந்திரத்தை அடுத்த காலப் பகுதியல் காணப்பட்ட மருட்சியிலிருந்து விடுபடுவதற்காகக் கிளர்ந்தெழுந்தன. இக் குழுக்கள் பெண்களின் அரசியல், குடியுரிமைகளுக்காக மட்டுமன்றி அவர்களின் சமூக பொருளாதார் உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பின. 1979இல் பெண்களின் உரிமைகள் தொடர்பாகப் பேசுபவர் ஒருவரின் கருத்தின் அடிப்படையில் முதல் சுயாதீன பெண்கள் அமைப்பு ஒன்று பெண்களின் குரல் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல அமைப்புக்கள் உருவாகின. இந்த அமைப்புக்களின் முதற் தொழிற்பாடுகளாக கல்வி, பெண்களின் பிரச்சினைகள் தொடர்பான மன உணர்வுகளைத் தட்டியெழுப்புதல், தகவல்களைப் பெண்களிடையே பரப்புதல் என்பன அமைந்தன. பெண்களின் குரல் என்ற அமைப்பு பெண்களைப் பாதிக்கின்ற பல விடயங்களைக் கருத்தில் எடுத்து சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தனது இதழ் ஏடுகளை வெளியிட ஆரம்பித்தது. 1980களில் ஆய்வு நோக்கம் கொண்ட பல பெண்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. பெண்கள் ஆய்வுக்கான நிலையம், பெண்கள் கல்வியும் ஆய்வு நிலையமும், முஸ்லீம் பெண்களின் ஆய்வு மற்றும் செயல் நடவடிக்கை அமைப்பு போன்றவை இதில் உதாரணமாக குறிப்பிடத்தக்கன. பெண்களின் கீழ் நிலை, அடக்குமுறை என்பனவற்றிற்கான காரணங்களை விளங்கிக் கொள்ளல், சமூகத்தில் ஆண்கள் தொடர்பாகக் காணப்படும் பக்கச் சார்பு நிலைகளை வெளிப்படுத்தல், பெண்களின் இழந்த வரலாற்றையும் பால்நிலையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய விடயங்களையும் மீளக் கொண்டுவருதல் போன்றவற்றின் ஒரு முயற்சியாக இந்த அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. பல கிராமிய அடிப்படையிலான பெண்கள் அமைப்புக்கள் பெண்களின் தாழ்மட்ட பொருளாதார நிலை என்பதற்கு முக்கியத்துவம்
Coomaraswamy, Radhika, "Civil Society: A South Asian Perspective", op.cit.
41

Page 29
கொடுத்து அவர்கள் மூலவளங்களை அடையப் பெறுவதற்கும் , தமது வருமானத்தைச் சீர்திருத்திக் கொள்வதற்குமான பல உபாயங்களை அமைத்துக் கொண்டன.
இந்த அமைப்புக்களில் பல காலாகாலங்களில் ஒன்றுபட்டு சிலகுறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஒருமித்து தொழிற்பட்ட அதேவேளையில் நாட்டில் 1993இல் உருவாக்கப்பட்டட இலங்கைப் பெண்களின் அரசசார் பற்ற Đ60oudů Lisab6f6 96örgóuð (Sri Lanka Women’s NGO Forum) u6ů (36ugOJUÜL அமைப்புக்கள் ஒரே குரலில் பேசுவதற்கும் பொதுவான உபாயங்களை விருத்தி செய்து கொள்வதற்குமான ஒரு பொதுக்களத்தை வழங்கியது எனலாம். ஆரம்பத்தில் 1995இல் பிஜிங்கில் நடைபெற்ற நான்காவது உலகப் பெண்கள் மகாநாடு, அரச சார்பற்ற அமைப்புக்களின் ஒன்றியம் என்பவற்றில் இலங்கை பெண்களின் பங்குபற்றுகையினை வசதிப்படுத்திக் கொடுக்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒன்றியம் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பெண்களின் முன்னேற்றத்திற்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஆய்வாளர்கள், கல்விமான்கள், சமுதாய அடிப்படை அபிவிருத்திப் பணியாளர்கள் , ஆர்வமாக செயல்படுபவர்கள் பேண்ற பல ரைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஏறக் குறைய 50 பெண்கள் சுயாதீன அமைப்புக்களின் பரந்த வலைப்பின்னலாகத் தொழிற்பட்டுத் தனது பணியைத் தொடர்ந்தது. தகவல்களைப் பகிர்ந்து கொள்ளல், வலைப்பின்னல் அமைப்பினைப் பெருமளவில் இலகுபடுத்தி இணைத்தல், நகர கிராம அடிப்படையிலான அமைப்புக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்தல், ஆதரவு தேடுதல் போன்ற நடவடிக்கைகளினூடாக இந்த ஒன்றியமானது பீஜிங்கில் மெற் கொள்ளப்பட்ட நடவடிக் கைத் தீர்மானங்கள் இலங்கையில் நிறைவேற்றப்படுவதனைக் கண்காணித்தல், இலங்கையில் பெண்கள் நடவடிக் கைகளுக்கான மையநிலையமாகத் தொழிற்படல் போன்ற பணிகளைச் செய்து வந்தது.
அரச அமைப்புக்களை நேரடியாகவே எதிர் கொண்ட எதிர்ப்புப் போராட்டங்கள், பெண்களின் பொருளாதார நிலையினைச் சீர்திருத்துதல் என்ற நோக்கத்தினைக் கொண்ட நடவடிக்கைகள் என்ற அடிப்படைகளில் இலங்கையின் பெண்கள் இயக்கங்களின் சாதனைகள், வெற்றிகள். தோல்விகள் என்பனவற்றைக் கீழே எடுத்துக் காட்டப்படும் தெரிவு செய்யப்பட்ட சில விடயங்கள் மூலம் நாம் பகுப்பாராய்வு செய்வோம். இலங்கையில் கடந்த தசாப்தத்தில் வளர்ச்சியடைந்த மற்றொரு வகையான பெண்கள் இயக்கமும் உள்ளது. 1980களின் இறுதியில் தெற்கில் ஏற்பட்ட அமைதியின்மை, தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கும் இன முரண்பாடு என்பனவற்றின் பின்னணியில் இந்த இயக்கங்கள் உருவாகியுள்ளன. தமது கணவர்மார், தந்தையர், ஆண் சகோதரர்களை இழப்பதன் மூலம் தமது குடும்பத்தின் தலைமைத்துவத்தினை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது அகதி முகாம்களில் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்ற பெண்களுக்கு ஏற்படுகின்ற
42

தனிப்பட்ட, பொது நெருக்கடி நிலைகளில் உதவி செய்தல் என்ற பிரதம இலக்கினை அடிப்படையாகக் கொண்டு இந்த இயக்கங்கள் செயற்படுகின்றன. இந்த வேறுபட்ட இயக்கங்களுக்கிடையேயான வேறுபாடு தெளிவு, பகுப்பர்ய்வு வசதி என்ற காரணங்களின் நிமித்தம் செய்யப்பட்டது. உண்மையில் அவ்வேறுபாடுகள் தெளிவற்றவையாகவே உள்ளன. உதாரணமாக பொருளாதார வலுவூட்டலை அடிப்படையாகக் கொண்ட பல வெற்றிகரமான பெண்கள் அமைப்புக்கள் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் மனவுணர்வினை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அதேவேளையில் உணர்வு அதிர்ச்சிக் கோளாறுகளுக்கான நல்லாலோசனை வழங்கும் திட்டங்கள், மன உளச்சான்றுக்கு கட்டுப்பட்ட திட்டங்கள் உட்பட பலமான பொருளாதார மூலகம் ஒன்றினைக் கொண்டும் காணப்படுகின்றன.
நாளாந்த வாழ்க்கை விவகாரங்கள்: நலன்புரி நன்மைகள் தொடக்கம் பொருளாதார அதிகாரத்துவம் வரை
இலங்கையில் முதலாவது நலன்புரி நோக்குடைய பெண்கள் இயக்கங்களில் ஒன்று 1931இல் நிறுவப்பட்ட 'மஹிலா சமித்தி' (Mahila Samithi) என்பதாகும். கனடாவில் உள்ள பெண்கள் நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த நாட்டின் வைத்தியரான மேரி ரட்னம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு பெண் களுக்குப் பொருளாதார அதிகாரத்துவம் பெறுவதற்கான தொழிற் பயிற்சிகளையும் திறன் விருத்திப் பயிற்சிகளையும் வழங்கியது. மஹிலா சமித்தி கைப்பணிப்பொருள் உற்பத்தி, சமையற்கலை, வீட்டுத்தோட்டம் அமைத்தல் என்பனவற்றில் பெண்களைப் பயிற்றுவித்ததுடன் அவர்களுக்கு சுகாதாரம், போஷாக்கு, முதலுதவி, பிள்ளைப் பராமரிப்புப் போன்ற துறைகளிலும் அறிவுறுத்தல்களை வழங்கியது. மேலும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முகமாக சமித்தி அரச உதவிகளையும் பெற்றுக் கொண்டது. நாடு முழுவதிலும் அறுநூறுக்கு மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாக இன்று வரையிலும் இலங்கையில் நலன்புரி நோக்குடைய பாரிய பெண்கள் இயக்கங்களில் ஒன்றாக அது செயற்பட்டு வருகின்றது. அத்துடன் நாட்டில் காளான்கள் போல முளைத்தெழுகின்ற அத்தன்மை கொண்ட பல தாபனங்களின் உருவாக்கத்திற்கும் தூண்டுதல் அளித்து வருகின்றது. இந்த முயற்சிகள் பொருள் ரீதியான பெறுகையினைப் பெண்களிடையே அதிகரிக்கச் செய்து அதன் மூலம் முழுமையான வீட்டு வருமானத்தை உயர்த்துவதற்கு உதவும் அதேவேளையில் அவை பெண்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட சமூக வட்டத்தில் இயங்குதல் என்ற காரணி அதாவது சமையல் விளக்கமளிப்பு, தையல் வேலை வகுப்புக்கள், கைப்பணிப் பொருட் பயிற்சி போன்றதொரு வட்டத்தில் செயற்படுதல் என்ற
43

Page 30
காரணி ஒன்றில் இருபாலார் தொடர்புகளில் அல்லது சமூகத்தில் அல்லது குடும்பத்தில் பெண்களின் சுயாதீன தொழிற்பாட்டு சீர்திருத்தங்களில் மிகக் குறைந்த அளவு தாக்கத்தினையே கொண்டிருக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டி நிற்கின்ற ஐக்கிய பெண்கள் முன்னணி அங்கத்தவர்களால் சமித்தி தொடர்பாக வெளிப்படுத்தப்படும் மிகக் கடுமையான கண்டனங்கள் (கீழே பார்க்கவும்) அந்த அமைப்புக்குப் பொறுப்பான முறைமையினை அல்லது கிராமத்தின் அடிப்படைப் பொருளாதாரத்தை மாற்றுவதற்கு அது எவ்வகை முயற்சிகளையும் மேற்கொள்வதில்லை என்ற முறையில் அமைந்திருக்கின்றது. (அவர்களின் சமுதாயங்களில் உள்ள குடும்ப ஆட்சி அமைப்பு, பெறுமானம் என நாம் சேர்த்துக் கொள்ளலாம்) எனவே சமித்தியும் அதனை ஒத்த நிறுவனங்களும் அடிப்படையில் கிராமிய மக்களை மாற்றுவதற்கு முயற்சிக்காது இருக்கின்ற வாழ்க்கைப் பாங்குகளிடையே காணப்படுகின்ற வறுமைச் சூழ்நிலைகளில் அக்கிராமிய மக்களை ஒரளவு தரம் கொண்டவர்களாக மாற்றுவதற்கு மட்டுமே முயற்சித்து வருகின்றன என்று கூறலாம். இந்தத் திறனாய்வுக் கருத்துக்கள் இன்றுவரையில் பெறுமதிமிக்கவையாகவே இருக்கின்றன.?
இதற்கு மாறாக 1970களிலும் 1980களிலும் ஆரம்பிக்கப்பட்ட கீழ்மட்ட நிலைப் பெண்கள் இயக்கங்கள் பல, அவர்களின் சமுதாயங்களிலும் வீடுகளிலும் காணப்பட்ட சமமற்ற அதிகார அமைப்புக்கள்/தொடர்புகள் என்பனவற்றிற்குச் சவாலாக இருக்க விரும்பிய காரணத்தினால் கிராமியப் பெண்களின் வாழ்க்கையில் முனைப்பான பல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு "முயற்சித்தன. சிலாபத்தில் இயங்கிய வில்பொத்த பெண்கள் சேமிப்புத் திட்டம், அம்பாந்தோட்டையில் காணப்பட்ட பெண்கள் அபிவிருத்தி சமாஜம், நுவரெலியாவில் இயங்கிய சிங்கள, தமிழ் கிராமியப் பெண்கள் வலையமைப்பு போன்ற பல பெண்கள் இயக்கங்கள் பெண்கள் வறுமையிலிருந்து விடுபடுவதற்கும் அவர்களின் சுதந்திரத்தை அதிகரிப்பதற்குமாக இலங்கையில் பொருளாதாரரீதியாக பெண்கள் அதிகம் நன்மை பெறாமல் இருந்த பகுதிகளுக்குள் அவர்களை எடுத்துச் செல்லக்கூடியவையாக இருந்தன. இலங்கையில் கிராமிய சமூகங்களின் உயர்வான அரசியல் மயமாக்கத்தின் அடிப்படையில் குறிப்பாகப் பெண்களுக்கான சுயாட்சியை உருவாக்குவதில் இந்தப் பெண்கள் இயக்கங்கள் காட்டிவரும் பங்களிப்பு மிகவும் முக்கியம் வாய்ந்தது என்று கூறலாம். ஜெயதேவ உயன்கொட அவர்கள் குறிப்பிட்டுக் காட்டுவது போல இலங்கையில் கிராமப் புறங்கள் அரசியல் விசுவாசிகளினால் பிளவுப்படுத்தப்பட்டு, சார்புரீதியாக அச் சமூகம் மிகவும் பலவீனமான
' De Mel, Neloufer and Muttetuwegama, “Ramani, Sisters in Arms:
The Eksath Kantha Peramuna'. Pravada, Vol 4, No. 10 & 1 1, 1997, pp. 22 – 26.
44

நிலையில் உள்ளது எனலாம். காவல் துறை, கிராம சேவகர்கள் (பிரதேச அலுவலகர்கள்), வனவியல் அலுவலகம், விவசாயக் கரியாலயம் போன்ற நிறுவனங்களின் ஊடாகப் பொதுமக்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்ற அரசியல்வாதிகளினால் குறிப்பாக ஆளும் கட்சியினால் குடியியற் சமூகங்கள் முழுமையாக ஆட்சி கொள்ளப்பட்டுள்ளன எனலாம்." 1977இல் புத்தளம் மாவட்டத்தில் 10 பெண்கள் ஒன்று சேர்ந்து வில்பொத்த பெண்கள் சேமிப்பு இயக்கத்தினை ஆரம்பித்தனர். கணவன்மார் தாம் பெற்றுக் கொண்ட வரட்சி நிவாரணங்களை மதுபானத்தின் பொருட்டு வீணாகச் செலவழித்த காரணத்தினால் அதனைப் பெண் விவசாயிகள் பெற்றுக் கொள்வதற்கு உதவி செய்யும் நோக்கத்துடன் இந்த இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இது தொடர்பாகக் கதைத்து தமது சொந்தக் கைகளில் அத்தகைய நிவாரண உதவிகள் கிடைக்க வழி செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் ‘மாதம் ஒன்றிற்கு ஒரு ரூபாய்' என்கின்ற சேமிப்பு நிதியத்தை ஆரம்பித்தார்கள். இந்த நிதியம் கடந்த 20 வருடங்களில் 1,500,000 ரூபா என்ற அளவிற்கு சுழல் நிதியமாக விரிவடைந்துள்ளது. கால்நடை வளர்ப்பு, குடிசைக் கைத்தொழில்கள், விவசாயம், மரக்கறிப் பயிர்ச்செய்கை, வீட்டுத்தோட்டம், கடை போன்ற சிறியளவிலான முயற்சிகள் போன்ற சுய தொழில் முயற்சிகளுக்கும் வருமான உருவாக்கல் நடவடிக்கைகளுக்கும் இந்த நிதியம் கடன்களை வழங்கியது. இந்த இயக்கமே உள்ளுரில் கிடைக்கப் பெற்ற மூலப் பொருட்களைப் பயன்படுத்தி பூக்கள், அழுத்தப்பட்ட அட்டைகள், கடிதக் கூடுகள் போன்றவற்றைத் தயாரித்தல், கடதாசியினை மீள் சுழற்சிக் குட்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. தச்சுத் தொழில், கட்டட நிர்மாணத் தொழில் போன்ற மரபுரீதியற்ற தொழில்களில் இந்த இயக்கம் பெண்களுக்குப் பயிற்சிகளை வழங்கியது. இந்த பகுதியில் வாழ்ந்த ஆண்களின் ஏளனத்திற்கும் மத்தியில் இந்த இயக்க அங்கத்தவர்கள் தமது சொந்த சனசமூக நிலையத்தை அமைத்ததன் மூலம் தமது தன் முனைப்புக்களை வெளிப்படுத்தினர். இந்த இயக்கம் காட்டியல் உணவுப் போசாக்குத் திட்டங்கள் போன்ற நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முகமாக கிராமிய மட்ட அமைப்பக்கள், மற்றும் சில அமைச்சுக்கள் என்பனவற்றுடன் மிகவும் ஒன்றிணைந்து தொழிற்படுகின்றது. 1998இல் அவர்கள் உள்ளுர் பாராளுமன்ற அங்கத்தவர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடாத்தி குழந்தைகள் உணவுத் தொழிற்சாலை ஒன்றினை ஆரம்பிப்பதற்கு ஒரு ஏக்கர் நிலத்தினைப் பெற்றுக்கொண்டனர்.
ICES குழுவினருடன் கலந்துரையாடிய பொழுது இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் கிராமிய பெண்களினால் பணம் கொடுத்து வாங்கக்கூடிய
81 Uyangoda, Jeyadeva, " Elections: Why do they beget violence?" in
Pravada, Vol 5, No. 8, 1998, p. 22.
45

Page 31
ஆரோக்கியமான குழந்தைகள் உணவு ஒன்றினைத் தாம் உற்பத்தி செய்வதற்கு எண்ணியுள்ளதாகக் குறிப்பிட்டனர். அத்துடன் பார்லிஸ்’ மற்றும் ‘நெசில்ஸ்' போன்ற உற்பத்திகள் மிகவும் உயர்வான விலை கொண்டனவாக இருப்பது மட்டுமன்றி சிறிய கிராமியக் கடைகளில் அவை கிடைக்கப்பெறுவது இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். சூழல் அரசியற் பரிபாலனம் ஒன்றில் தாம் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் எடுத்துக் காட்டினர். இதில் தமது சூழலைச் சுரண்டாமல் தாம் பரிபாலிக்க முயற்சியெடுத்து வருகின்றனர் எனவும் அவர்கள் கூறினர். இந்த இயக்கம் இப்பொழுதும் சிறியதொன்றாக ஏறக்குறைய 80 அங்கத்தவர்களைக் கொண்டு காணப்படுகின்றது.
இதையொத்த மற்றொரு பெண்கள் அமைப்பு இலங்கையின் தென் பகுதியில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் காணப்படுகின்றது. இது சற்று வித்தியாசமான வரலாற்றினையும், கணிசமான அளவு அங்கத்தவர்களையும் கொண்ட அமைப்பாகும். பெண்கள் அபிவிருத்தி சமாஜம் அல்லது ஜனசக்தி வங்கிச் சங்கம் என்றழைக்கப்படும் இவ்வமைப்பு, ஏறக்குறைய 27,000 பெண்களை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. வில் பொத்த பெண்கள் அமைப் பினைப் போன்றல் லாது இங்கு இந்த இயக் கத்தினை ஆரம்பிப்பதற்கான ஊக்கம் அரசிடமிருந்து வந்தது. மாவட்டத்தில் குறை ஊட்டச்சத்து, தரக்குறைவான ஆரோக்கிய நிலை என்பன காணப்படுகின்றன என்பதனைத் தெரியப்படுத்திய அம்பாந்தோட்டை அரசாங்க அதிபரினால் மேற்கொண்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைந்த (அந்நேரம் அரசாங்க வறுமை ஒழிப்புத் திட்டம்) ஆய்வு ஒன்றின் விளைவாக ஊட்டச்சத்து, ஆரோக்கியம் என்பனவற்றுடன் தொடர்புபட்ட விடயங்களில் பெண்களின் விழிப்புணர்வினை உயர்த்தி பெண்களை ஒர் அமைப்பின் கீழ் கொண்டுவரும் முகமாகக் கிராமியப் பெண் கள் அபிவிருத்திச் சங்கங்கள் பல உருவாக்கப்பட்டன. இந்த அமைப்புக்கள் பின்னர் நேரடி பொருளாதார அதிகாரமளிப்பு என்பதற்கு இணையாக வங்கிகள் சங்க சமாஜம் என விருத்தியடைந்தன. தற்பொழுது இந்த அமைப்பு 498 சங்கங்களையும் 67 வங்கிகளையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றது. அத்துடன் உயர்ந்த வட்டியினை வசூலிக்கின்ற நகை அடைவு பிடிப்பவர்கள், வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் போன்றவர்கள் மீது பெண்கள் தமது பணத் தேவைக்கு தங்கியிருக்கும் பகுதிகள், கடனைப் பெறுவதற்கான வசதிகள் மட்டுப் படுத்தப்பட்ட பகுதிகள் போன்றவற்றில் இந்த அமைப்பு ரூபா 1000 தொடக்கம் 100,000 ரூபா வரையிலான கடன் வசதிகளையும் வழங்கி வருகின்றது.?
* Leelasena, W. M., and Chitrani Dhammika, “Women Banking for Success: Women's Development Federation (WDF) in Sri Lanka', in Marilyn Carr, Martha Chen, and Renana Jhabvala, (eds.). Speaking Out: Women's Economic Empowerment in South Asia, Vistaar Publications, 1998, p. 133.
46

இந்த அமைப்புக்களில் ஈடுபட்டுள்ள பெண்கள் பல ஆக்கபூர்வமான நடவடிக் கைகளில் ஈடுபடுவதற்கு முயன்று வருகின்றனர். இந்த அமைப்புக்களினால் கையாளப்படும் உபாய நடவடிக்கைகள் பெண்களின் அடக்கு முறைமை, அவர்களின் அதிகாரமற்ற நிலை என்பனவற்றிற்கான காரணங்களின் விளக்கம் ஒன்றினை அடிப் படையாகக் கொணி டு அமைந்திருப்பதுடன் , அவற்றின் மையக் கருவாக முழுமையான அதிகாரமளிப்பு என்பதாகவும் உள்ளது. இந்த அமைப்புக் களின் அங்கத்தவர்கள் தமது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தியிருப்பதன் மூலம் தமது குடும்பங்களையும் அந்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் இப்பொழுது மிக அதிகளவில் இயங்குநிலை ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதுடன் தமது சமுதாயத்திலும் குடும் பங்களிலும் தீர்மானம் மேற்கொள்ளும் பங்களிப்பினைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். அவர்கள் உள்ளுர் நிறுவனங்கள் உயர் குழாம்கள் என்பனவற்றுடன் பேரம் பேசும் ஆற்றலை உயர்த்தியிருப்பதுடன் மூலவளங்களின் அடைகையிலும் திறன் பெற்றுள்ளனர். வில்பொத்த பெண்கள் சேமிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் தலைவி கருணாவதி மெனிக்கே எவ்வாறு அவளது கிராமத்தில் தனது வாழ்க்கையும் ஏனைய பெண்களின் வாழ்க்கையும் இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றதன் மூலம் மாற்றியமைக்கப்பட்டது என்பதனை எமக்கு எடுத்துக் கூறினார்.
ஆரம்பத்தில் இந்த அமைப்பில் எனது ஈடுபாடு தொடர்பாக எனது கணவனிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ஆகவே அவரைச் சந்தோசப்படுத்தி இனங்கச் செய்யும் முகமாக நான் அமைப்பின் வேலைகளுக்காக வீட்டை விட்டு நகர்குவதறகு முனனர சகல வfட்டு வேலைகளும் பூரணப்படுத்தப்பட்டு விட்டனவென்பதனை நிச்சயப்படுத்திக் கொள்வேன். ஆனால் எமது அமைப்பு நல்ல முறையில் தொழிற்பட ஆரம்பித்து நானும் எனது சொந்த வருமானத்தை வீட்டுக்குக் கொண்டுவந்த பொழுது அவரது எதிர்ப்பு மெதுவாக மறையத் தொடங்கியது. குறிப்பாக இந்தப் பகுதியிலிருந்து ஆணர்கள் தமது வாழ்க்கைக்கான வருமானத்தை உழைத்துக் கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டு கொணடிருநத காரணத்தினால் எனது கணவரினர் எதிர்ப்பு குறைந்தது எனலாம். எமக்கு நிலங்கள் இருந்த போதிலும் மிகவும் கடுமையான வரட்சி ந?லைமை காரணமாகப் பயிர்ச் செய்கையினை மேற்கொள்வது கடினமாக இருந்தது. நான் இப்பொழுது எநத நேரத்தபிலும் வட்டை விட்டுப் போகக்கூடியதாக உள்ளது. நன்கொடையாளர் ஒருவரைச் சந்திப்பதற்காக நான் கொழும்புக்குச் செல்ல வேணர்டிய நேரங்களில் அல்லது எமது கைப்பணிப் பொருட்களை
47

Page 32
வாடிக்கையாளர் ஒருவரிடம் எடுத்துச் செல்ல வேண்டிய நேரங்களில் நான் அதிகாலையில் புறப்பட்டு மாலையில் வீடு வந்த பல நாட்களும் உள்ளன. (இருந்தும் நான் இப்பொழுதும் எனது குடும்பத்திற்கான உணவினை வfட்டை விட்டுச் செலவதற்கு முனர் சமைப்பதற்கு முயற்சிக கவிறேன) முக்கியமானதொரு தர்மானம் எடுக்கும் பொழுது அவர் எப்பொழுதும் என்னை இப்பொழுது கலந்தாலோசிக்கின்றார். பிரச்சினை ஒன்றுடன் பிள்ளைகள் அவரை அணுகும்பொழுது உங்கள் அம்மா என்ன நினைக்கின்றார் என்று கேட்கும்பழ அவர்களிடம் கூறுகின்றார். நாம் எமது சொந்தச் சமுக அபிவிருத்தி மன்றத்தினைக் கட்ட ஆரம்பித்த பொழுது ஆணர்கள் பொறுத்திருந்து பாருங்கள் கூரை அமைக்கும் பொழுது அவர்களுக்கு எம்முடைய உதவி தேவைப்படும் எனறு கூறினர். ஆனால நாம் அவர்களுக்காகக காத்திருக்கவிலலை. நாம் நாமாகவே எமது மணறக் கூரையினை அமைத்துக் கொணர்டோம். இப்பொழுது எமது பெண்கள் அளவைசார் நில அளவீட்டில் (Quantity Surveying) பயிற்றுவிக்கப்படுவதுடன் திட்டப் படங்கள் அமைப்பதற்கும் பயிற்சி வழங்கப்படுகின்றனர். அண்மையில் நாம் இந்தியாவுக்குப் புனித யாத்திரை ஒன்றினை ஒழுங்கமைத்தோம். எமது அமைப்பிலிருந்த 35 அங்கத்தவர்கள் இந்த யாத்திரையில் பங்குபற்றினார்கள். இது இதற்கு முன்னர் நினைக்கப்பட முடியாததொன்றாக இருந்தது.
இது எப்பொழுதும் இலகுவானதொரு செயன்முறையல்ல. 1995இல் பீஜிங்கிற்கு தான் மேற்கொண்ட பிரயாணம் மூலம் மீள உயிர்ப்பூட்டப்பட்டதாக கருணாவதி மெனிக்கே கூறுகின்றார் (இலங்கைப் பெண்கள் அரசசார்பற்ற அமையத்தின் மூலம் இப்பிரயாணம் ஒழுங்கமைக்கப்பட்டது.) அத்துடன் தான் அங்கு நிகழ்ச்சித்திட்டங்கள், கருத்திட்டங்கள் என்பனவற்றில் கற்றறிந்தவற்றை இங்கு உட்புகுத்துவதற்கு முயன்று வருகின்றார்.
அம்பாந்தோட்டையிலும் பெண்களுக்கு இலகுவான முறையில் கடன் வழங்கப்படுவதில்லை. பால்நிலை விழிப்புணர்வு, மக்கள் துயர்துடைப்பு என்பவை இந்த நிகழ்ச்சித் திட்டங்களின் ஓர் இணைந்த பகுதியாக உள்ளன. ஆண், பெண் இருபாலாருக்கும் கூட அடிப்படைப் போசாக்கு, இனப்பெருக்கச் சுகாதாரம், குடும்பத்திட்டம் என்பன பற்றிக் கல்வி போதிக்கப்படுகின்றது. பெண்கள் ஏனைய சில வீட்டுப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்பொழுது இயக்கத்தில் உள்ள மற்றைய உறுப்பினர்களின் நட்புரீதியான புத்திமதிகள் மூலம் உதவப்படுகின்றனர். பெண்னொருவர் தனது கணவன் மூலம் ஏதாவது பிரச்சினைகளை எதிர்கொள்வாரானால் அவருடன் பணிபுரிகின்ற மற்றொரு
48

பெண்மணி அவருடைய வீட்டுக்குச் சென்று நட்புரீதியான முறையில் அந்தத் தகராறில் தலையிட்டுக் கொள்கின்றார். உண்மையில் உயர்மட்ட மதுபான நுகர்வு மற்றும் வீட்டுப் பிரச்சினைகளுடன் சம்பந்தப்படுகின்ற விவகாரங்கள் போன்ற சமூகங்களில் நிலவுகின்ற ஏனைய சமூகப் பிரச்சினைகள் கூட இந்தச் செயன்முறையின் ஊடாகச் சனசக்தி வங்கிச் சங்கத்தினால் மிகவும் சாமர்த்தியமான முறையில் தீர்த்து வைக்கப்படுகின்றன.
இந்த நிறுவனங்களிற் பல கையாளுகின்ற மற்றொரு உபாயம் அரசியல்ரீதியாக நடுநிலை வகிக்கின்ற அதே வேளையில் அப்பொழுது ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைப்பினை வழங்கித் தொழிற்படுவதாகும். நலன்புரி நோக்கினைக் கொண்டிருக்கின்ற அல்லது பொருளாதார ரீதியான அதிகாரமளிப்பு செயல் நடவடிக்கையினைக் கொண்டிருக்கின்ற பெண்கள் அமைப்புக்கள் அவை நட்பு ரீதியாகச் செயற்படுபவை என்ற மன எழுச்சிக் கருத்துக் காரணமாக அரசினால் நன்கு ஏற்றுக் கொள்ளப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக பிரேமதாச அரசாங்கம் சனசக்தி வறுமை ஒழிப்புத் திட்டத்தினைக் கவனத்தில் கொண்ட பொழுது போசாக்கு, மனிதவள் அபிவிருத்தி, சூழல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முகமாக அரசுடன் சேர்ந்து பங்காளிகளாக சமுதாய அபிவிருத்தி நிறுவனங்கள் தொழிற்படும் என்று கருதப்பட்டது. அடிமட்டத்தில் இயங்கும் பெண்கள் அமைப்புக்கள் இக் கொள்கையினால் பெரிதும் நன்மையடைந்தன. அவை மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களில் கீழ் உள்ளடங்குகின்ற அதிகளவு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்குக் கணிசமான அளவு பணத்தினைப் பெற்றுக் கொண்டன. இதற்கு முன்னர் ஆராயப்பட்ட இரு பெண்கள் அமைப்புக்களும் கடந்த அரசாங்கத்தில் சனசக்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பங்காளிகளாகப் பணிபுரிந்தன. தற்போதைய அரசாங்கம் இத்தகைய பங்களிப்பு நிகழ்ச்சித்திட்டங்களில் சிலவற்றைக் கைவிட்டுள்ள போதிலும் அந்த அமைப்புக்கள் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் சேர்ந்து பணிபுரிந்து வருகின்றன. 1998இல் வில் பொத்த பெண்கள் சேமிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் தலைவி கருணாவதி மெணிக்கே சிங்கள, தமிழ் கிராமியப் பெண்கள் வலையமைப்பின் தலைவி விமலி கருணாரட்னவுடன் இணைந்து சமுதாய அபிவிருத்தியில் காட்டிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக சனாதிபதி விருதினைப் பெற்றுக் கொண்டனர். (விபரம் கீழே பார்க்கவும்)
அரசாங்கத்திற்கும் இந்தப் பெண்கள் அமைப்புக்களுக்குமிடையிலான தொடர்பானது ஆட்சியிலுள்ள கட்சி மீது உள்ள விசுவாசத்தினால் மட்டுமன்றி இந்த பெண்கள் அமைப்புக்களின் உறுதிப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பு, ஆற்றல் என்பனவற்றினாலும் கட்டியெழுப்பப்பட்டது. தனிப்பட்ட பெண் அங்கத்தவர்கள் தமக்குரிய அரசியல் இணைப்புக்களைக் கொண்டவர்களாக இருக்கின்ற அதேவேளையில், தாம் பெறக்கூடிய அரச ஆதரவை இழந்துவிடக்கூடும் என்ற பயத்தின் காரணமாக வழமையான அரசியல் செயன்முறைகளில்
49

Page 33
எந்த ஒரு நேரடிப் பங்களிப்பினையும் பொதுவாகத் தவிர்த்து வருகின்றனர். எனினும் ஏனைய சில விடய ஆய்வுகள் 'பொருளாதாரம் அரசியல் ரீதியானது' என்பதனை எடுத்துக் காட்டி நிற்கின்றன.? கார் (Carr) என்பவர் 'சமூக ஒழுங்கினை மறுசீரமைப்பதனை விட இந்தப் பெண்கள் அமைப்புக்கள் அவர்களின் நடைமுறைத் தேவைகள், வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் காணுதல் போன்றவற்றின் பொருட்டுக் கூட்டங்கள் கூடுவதனை நோக்கிக் கூடுதலாகத் தூண்டப்படும் அதேவேளையில் அவர்கள் எடுக்க வேண்டும் என வற்புறுத்தப்படுகின்ற நடவடிக்கைகள் அதிகாரத்தைப் பெறுதல் , அவற்றை நடைமுறைப் பிரயோகம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கிய அரசியல் தன்மை கொண்டவையாக உள்ளன எனக் குறிப்பிடுகின்றார்" சிலாபம், நுவரெலியா, அல்லது தென் பகுதி எதுவாக இருந்தாலும் தமது குடும்பங்களிலும், சமுதாயங்களிலும் இந்தப் பெண்கள் தமது தொடர்புகளை மீள நிலைநிறுத்தக் கூடிய வழிகள் அவர்களால் கையாளப்படுகின்ற உபாயங்கள் என்பன பொது வாழ்வில் அவர்களின் சுதந்திரத்தின் அளவினை விரிவுபடுத்துவதற்கான முக்கிய பாடங்களை வழங்குகின்றன.
போட்டியிடும் கட்சிகள்: நேரடியான அரசியல் பங்கேற்பொன்றினை நோக்கி
மத்திய மாகாணத்திலிருந்து 1999ஆம் ஆண்டின் மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு நுவரெலியாவை அடிப்படையாகக் கொண்ட சிங்கள, தமிழ் கிராமிய பெண்கள் வலையமைப்பினால் எடுக்கப்பட்ட ஆரம்ப முயற்சி ஒன்றின் மூலம் அரசியல், அரச அமைப்புக்களில் காணப்படுகின்ற மிகவும் நேரடியான சவால் ஒன்று எடுத்து விளக்கப்படுகின்றது. விமலி கருணாரத்ன என்ற மிகவும் துடிப்பான செயல் வல்லமை கொண்ட பெண் ஒருவர் 1988இல் நுவரெலியாவில் இந்த வலையமைப்பினை ஆரம்பித்தார். அதிகளவிலான இந்தியத் தமிழ் குடித்தொகையினைக் கொண்ட மத்திய மலைநாட்டில் இன ஐக்கியத்தை பாதுகாத்து மேம்படுத்துவதற்காகவும் உள்நாட்டுப் பிரிவினை யுத்தத்தால் இடம் பெயர்ந்த பெண்களுக்கு நிவாரணம் வழங்கும் முகமாகவும் இந்தக் கிராமியப் பெண்கள் வலையமைப்பினை கருணாரத்ன ஆரம்பித்து வைத்தார். எனினும் இந்த வலையமைப்பு பின்னர் வறுமை நிவாரணம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சிறிய கடன்கள், சுகாதாரம், போசாக்கு, கல்வி, பாலியலும் இனப்பெருக்க உரிமைகளும்
Carret al., ibid, p. 215 Ibid., pp. 215-216.
50

சுகாதாரமும், சூழல், சமாதானம் போன்ற பல விடயங்களுடன் தொடர்புபட்ட பிரச்சினைகளைக் கையாளுகின்ற சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அசைவு நிறுவனமாக உருவெடுத்தது. ஆணிகள், பெண்கள் ஆகிய இருபாலரும் உட்பட தற்பொழுது இந்த அமைப்பில் உள்ள அங்கத்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,500 என மதிப்பிடப்படுகிறது. அவர்கள் 5000 பேரை ஆண் அங்கத்தவர்களாகக் கொண்டிருக்கின்றார்.
நாளாந்த வாழ்க்கையின் அரசியலில் இந்த வலையமைப்பு உருளைக் கிழங்கு இறக்குமதி, புதிய நீர் மின்சார நிலையம் ஒன்றின் அமைப்பு, மாவட்டத்தில் அரசியல் அறிமுக எழுச்சி போன்ற பலதரப்பட்ட விடயங்களுடன் தொடர்புபட்ட பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டுக் காணப்படுகின்றது. அறுவடைக் காலத்தில் கூட மரக்கறி இறக்குமதியினை அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் கொள்கை காரணமாக குறிப்பாக உருளைக்கிழங்கு பயிர்செய்கை உட்பட சகல மரக்கறி உற்பத்தியாளர்களும் எதிர்நோக்கிய இயலா நிைைம என்பது இப் பிரதேசத்தில் பிரதான பிரச்சினையாக இருந்து, இலங்கை விவசாயிகள் மலிவான இறக்குமதி இனங்களுடன் போட்டிபோட முடியாத நிலையில் இருப்பதனால் பண்டங்கள் யாவும் முழுமையாக சந்தையிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்பதனை அவர்கள் நிலை நிறுத்த முயன்றார்கள். சிங்கள தமிழ் கிராமியப் பெண்கள் வயைமைப்பு உருளைக் கிழங்கு இறக்குமதிக்கு எதிராகப் பல போராட்டங்களை ஒழுங்கமைத்ததுடன் இது தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள மரக்கறிப் பயிர்ச் செய்கையாளர்களுடன் சம்பந்தப்பட்ட ஏனைய பிரச்சினைகள் தொடர்பாகவும் பல முறைப்பாடுகளை அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்தது. எனினும் அரசாங்கம் இவர்களுடைய கோரிக்கைகள் எவற்றிற்கும். செவிசாய்க்காத காரணத்தினால் அம்முயற்சிகள் தோல்வியைத் தழுவின.
பொதுவாக ஆட்சிமுறை, அரசியல்வாதிகள் மற்றும் அரசின் அரசியல் என்பனவற்றில் ஏற்பட்ட வெறுப்பு, விரக்தி என்பனவற்றடன் இணைந்து அரசாங்கம் இநீதப் பெணிகள் அமைப் பின் கோரிக் கைகளுக்குச் செவிசாய்க்காததினால் ஏற்பட்ட தோல்வியின் காரணமாக 1999ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற மாகாண சபைகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மூலம் இந்த அமைப்பானது இளம் அங்கத்தவர்களின் அரசியல் தலைமைத்துவம் மூலம் தனது நிலையை வெளிப்படுத்தியது. சிங்கள தமிழ் கிராமிய பெண்கள் வலையமைப்பு இத்தேர்தலில் சுயேட்சைக் குழுக்களில் ஒன்றாகப் போட்டியிட்டது. போட்டியிடப்பட்ட அங்கத்தவர்களின் எண்ணிக்கையில் பெண்கள் 18 ஆகவும் ஆண்கள் 4 ஆகவும் இருந்தனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் மரக் கறிப் பயிர்ச் செய்கையாளர்களாக இருந்தனர். அத்துடன் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தேவையான நிதியம் குடும்பப் பின்னணி என்பன இல்லாதவர்களாயும் இருந்தனர். ஆனால் இவர்கள் யாவரும் மாவட்டத்தின் சமூக அபிவிருத்திப்
51

Page 34
பணிகளில் பரந்த பின்னணியைக் கொண்டு காணப்பட்டனர். எனவே பலதரப்பட்ட இனக்குழுக்கள் சமயப் பின்னணி என்பவற்றிலிருந்து இடம்பெற்ற இந்த அங்கத்தவர்களின் நியமனமானது அரசியல் கட்டமைப்பில் உள்ள வகுப்பு, இன பக்கச் சார்பு என்பனவற்றிற்கு மட்டுமன்றி பால்நிலைப் பக்கச் சார்பிற்கும் ஒரு சவாலாகக் காணப்பட்டது. நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், பால்நிலை கூருணர்ச்சிப்பாடு ஆகிய செய்முறைகளுக்குப் பங்களித்தல் என்ற முழுமையான நோக்கத்தின் கீழ் தமது சமுதாயங்களின் தேவைகளை நிறைவு செய்து, மாற்றம் ஒன்றினைக் கொண்டு வருவதற்கான நேர்மையான விருப்பம் ஒன்றின் அடிப்படையிலேயே தேர்தலில் போட்டியிடுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் கருணாரத்ன அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திக் கூறினார். கருணாரத்னவின் குற்றம் சுமத்தும் பாணியில் அமைந்த விளக்கங்கள் அவர்களது நிலையினை ஒட்டுமொத்தமாக எடுத்துக்காட்டியது. ‘பெருந்தோட்டச் சமுதாயத்தினர் மீது எந்தவோர் அரசாங்க அதிகார சபையோ சட்டரீதியான நியதிச் சபைகளோ, அல்லது வேறு ஏதாவது சமூக சேவை அமைப்புக்களோ எநீ தவிதமான பாதிப்புக்களையும் ஏற்படுத்த முடியாதனவாக இருக்கின்றன. இதுவரையில் இவற்றில் எவையும் பிரச்சினைக்கான தீர்வில் தலையிடவில்லை. கிராமிய பெண்கள் வலையமைப்பு தமது ஈடுபாட்டின் மூலம் ஏற்படுகின்ற அதிகார மாற்றம், அதிகரித்துச் செல்லும் வன்செயல்கள, இலஞ்ச ஊழல்கள், தவறான முகாமைத்துவம், திறமையின்மை, அதிகார இனத்துவக் குழறுபடிகள் போன்றவற்றிற்கெல்லாம் சுமுகமான தீர்வு ஒன்றினை வழங்கும் என நம்பியது.
கடுமையான தேர்தற் பிரசாரத்தின் இறுதி நாட்கள் முழுவதிலும் கருணாரத்னவுடனும் அவருடைய அங்கத்தவர்களுடனும் இணைந்து கொண்ட ICES குழுவினருக்கு சிங்கள, தமிழ் கிராமிய பெண்கள் வலையமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஆண் அங்கத்தவர்கள் நடைபெற்ற பல பொதுக் கூட்டங்களின் பொழுது தமது கொள்கைகளை வெளிப்படையாக அறிவித்தமை ஆச்சரியம் கலந்த நம்பிக்கையைத் தருவதாக இருந்தது. இவர்களது பிரச்சாரம் முழுமையாகக் கால்நடையாகவே இடம்பெற்றது. மக்கட் குழுவினரிடையேயும் கிராமங்களில் சிறிய கூட்டங்களை ஒழுங்கமைத்தும் அவர்கள் பிரச்சாரம் இடம்பெற்றது. இந்தக் குழுவினருக்குச் சொந்தமாக ஒரே ஒரு வானில் பிரசாரத்தின் பொழுது அதன் இயலளவுக்கு ஏற்ற அங்கத்தவர்கள் நெருக்கி ஏற்றப்பட்டு தமது தொகுதிகளுக்கு பஸ்ஸில் செல்வதற்கு வசதியான இடங்களில் ஒருவர் பிணி ஒருவராக இறக்கிவிடப்படுவர். நலன் விரும்பிகளிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடைகள் மூலம் தயாரிக்கப்பட்ட கவர்ச்சிகரமான துண்டுப் பிரசுரங்கள், சுவர் விளம்பரங்கள் என்பன தேர்தல் தினத்தை அண்மித்த காலப் பகுதியில் பற்றாக் குறையாக இருந்தமையால் அவை கவனமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட வேண்டியிருந்தன. தேர்தலில் இந்த அமைப்பிற்கு ஏற்பட்ட முடிவு எதிர்காலத்தில் அரசியலில் நுழைவதற்கு
52

முயற்சிக்கும் இதனைப் போன்ற அமைப்புக்களுக்கு சுகந்தரும் ஓர் எச்சரிக்கையாக அமைகின்றது. பெண்கள் வலையமைப்பு தேர்தலில் ஓர் இடத்தைக் கூட பெற்றுக்கொள்ளவில்லை. திருமதி. கருணாரத்னாவை வாயை மூடி மெளனித்து இருக்கச் செய்யும் முகமாக அவர் கற்பழிக்கப்படுவார் என்ற அளவுக்கு அரசாங்கத் தரப்பிலுள்ள மிகவும் பலம் வாய்ந்த எதிரமைப்பு அங்கத்தவர் ஒருவரினால் மேற்கொள்ளப்படட் வெளிப்படையான பயமுறுத்தல் உட்பட குறிப்பிடத்தக்க பல பெளதிக ரீதியான அச்சுறுத்தல் காணப்பட்டதொரு சூழ்நிலையில் இந்த அமைப்பினால் 2000 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. ஏனைய சில காரணங்களும் தேர்தல் தோல்விக்குப் பங்களிப்புச் செய்தன. நடைமுறையில் இருந்த அரசியல் சூழ்நிலையின் கீழ் அரசியலிலும் அரசியல்வாதிகளிலும் மக்கள் வெறுப்பு காட்டிய நிலையில் இந்த அமைப்பானது வழமையான அரசியலில் ஈடுபடுவதனை பொதுமக்கள் சாதகமானதொரு நடவடிக்கையாக எடுத்துக் கொள்ளாததுடன் அந்த அமைப்பின் சில சொந்த அங்கத்தவர்களே அதனை எதிர்ப்பவர்களாகவும் காணப்பட்டனர். நுவரெலியாவில் பலர் எம்முடன் நடாத்திய முறைசாராத கலந்துரையாடல்களின் போது தேர்தலில் போட்டியிடுவது என மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பின்னணியில் காணப்பட்ட நோக்கம் தொடர்பாக ஆழமான சந்தேகத்தை வெளிப்படுத்தினர். சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தைச் சீர்திருத்தம் செய்யும் ஒரு முயற்சி போலன்றி அதிகார வேட்கையினைக் காட்டுவதாவே அத்தீர்மானம் காணப்பட்டது. கடந்த காலத்தில் நல்ல பல வேலைகளைச் செய்த அமைப்பு ஒன்று அத்தகைய தீர்மானத்தை எடுத்தது தொடர்பாகப் பொதுமக்களில் பலர் வருத்தம் தெரிவித்தனர். ஒருவேளை இந்தப் பகைமையும், கடும் வெறுப்பும் மிகவும் அதிகளவில் ஆண்களையே கொண்ட அரசியல் களம் ஒன்றினுக்கு சவாலாக பெண்கள் ஒன்று சேர்ந்து தம்மை ஓர் அமைப்பின் கீழ் ஒழுங்கமைத்துக் கொண்டமையின் பிரதிபலிப்பாகக் கூட இருக்கலாம்.
மரபுசார் அரசியலுக்கு வெளியே எதிர்ப்பு இயக்கங்கள்
அரசுக்கு நேரடியாகவே சவாலாக விளங்கிய எதிர்ப்பியக்கங்களுக்கு இடையே காணப்பட்ட பெண்களின் தீவிர நடவடிக்கைகள் தேசியகுடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியில் அடையாளம் காணப்பட முடியும். 1930களில் ‘சூரியமல் இயக்கத்தில் நடுத்தர உயர்தர வகுப்பைச் சார்ந்த பல பெண்கள் முனைப்பான பங்களிப்பொன்றினை வழங்கியிருந்தார்கள். ஞாபகார்த்த தினங்களில் செயற்கையான வண்ணப் பூக்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும் பகுதியினை வெளிநாட்டுக்கு அனுப்புவது என்ற குடியேற்ற கால் அரசாங்கக் கொள்கைக்கு எதிராகவே இந்த இயக்கம் உருவாக்கப்பட்டது. 'சூரியமல் இயக்கமானது 1931ஆம் ஆண்டிலிருந்து
53

Page 35
பொப்பி’ மலருக்குப் பதிலாக சூரிய காந்திப் பூவினை விற்பதன் மூலம் உள்நாட்டில் இறந்த படை வீரர்களுக்கான நிதிச்சேகரிப்பினை சம காலத்தில் ஆரம்பித்து வைத்தது.
ஆனால் சுதந்திரத்திற்கு முன்பு உருவாக்கப்பட்ட மிகத்தீவிரமான பெண்கள் அமைப்பாக ஐக்கிய பெண்கள் முன்னணி விளங்கியது. எனினும் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்பு கலைக்கப்பட்டு விட்டது. இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்டும் தொழில் விற்பன்னர்கள், தொழில்புரிகின்ற மத்திய வகுப்பு பெண்கள் என்போரை உள்ளடக்கியும் காணப்பட்ட இந்த முன்னணி அக்குறுகிய காலத்தின்போது உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவு அரசின் நிர்வாக, எழுதுவினைஞர் சேவைகளில் பெண்களின் நுழைவிற்கு எதிராகக் காணப்பட்ட பாரபட்சம் நீக்கப்படுதல் சேரிப்புற நிலைமைகளை திருத்தம் செய்தல் போன்ற பிரச்சினைகள் தொடர்பாகக் கிளர்ந்தெழுந்தது. அத்தகைய முன்னிகழ்ச்சிகள் இலங்கைப் பெண்களின் அண்மைக்கால அசைவுகளை அறிவிக்கின்றன. அவற்றுள் இரண்டு கீழே கருத்திற்கொள்ளப்படுகின்றன. சுதந்திர வர்த்தக வலயங்களில் பெண்களின் உரிமைகள், மனித உரிமைகளும் சமாதானமும் என்பனவே அவையிரண்டுமாகும்.
சுதந்திர வர்த்தக வலயத்தில் பெண் தொழிலாளர்கள்
வெளிநாட்டு முதலீடுகள் ஊடாகப் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தும் முகமாக 1977இல் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயங்கள் உருவாக்கப்பட்டன. இந்த வலயங்களில் முதலீடுகளை மேற்கொண்ட முதலீட்டாளர்கள் வரிச்சலுகைகள், கடன்கள், சாதகமான நிபந்தனைகளின் கீழ் நிலம் கிடைக்கப் பெறுதல், மலிவான நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்படை போன்ற பல நன்மைகளைப் பெற்றனர். தற்போது மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வலையங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் இன்று 80 சத வீதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்களாவர். அத்துடன் இலங்கைக்கான அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டித்தரும் பிரதான மூலங்களில் ஒன்றாக உள்ளது. எனினும் இந்த வலயங்களில் பணிபுரியும் பெண்களின் நிலைமையானது ஒருவகையான சுரண்டல், அடக்குமுறை, தரம் குறைந்த வாழ்க்கை நிலை என்பனவற்றுடன் தொடர்புபட்டுள்ளது. நாட்டின் தொழிற் சட்டங்கள் எதுவித மாற்றமும் செய்யப்படாமல் இந்த வலயங்களில் பிரயோகம் செய்யப்படுகின்ற போதிலும் அவை மீறல் செயல் நடவடிக்கைகளின் போது பெரிதும் அலட்சியப் படுத்தப்படுகின்றன. எனவே பெண்கள் குறைந்த சம்பளம், தொழிலாளர் சேமலாப நிதி, தொழிலாளர் நம்பிக்கை நிதி போன்ற வேலைவாய்ப்பு
54

நன்மைகளின் பற்றாக்குறை, விடுமுறைத் தகுதிகள், கடுமையான வேலை நிலைமைகள், வன்செயல்கள், துன்புறுத்தல்கள் போன்ற பிரச்சினைகளால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வலயத்திற்கு வெளியே வீட்டு வசதிப் பற்றாக்குறை, சுகாதாரப் பற்றாக்குறை, போக்குவரத்து வசதிப் பற்றாக் குறை போன்ற பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேணி டியவர்களாக உள்ளனர். சட்டரீதியாக தொழிற் சங்கங்கள் வலயங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் அவை தடைப்படுத்தப்பட்டுள்ளன. 1980களிலிருந்து சில நிறுவனங்களின் முகாமைத்துவத்தினால் ‘பணியாளர் சபைகள் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களின் சீராக்கத்திற்கும், நிவாரணத்திற்கும் மிகச் சிறிய பங்களிப்பினையே அவை வழங்கியுள்ளன.*
1994ஆம் ஆண்டின் பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் பொதுசன ஐக்கிய முன்னணி அதனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாங்கள் பதவிக்கு வந்தால் பொருளாதாரத்தின் சகல துறைகளிலும் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடியதும் கைத்தொழில் தொடர்புகளின் மிகவும் சமத்துவமான முறையொன்றினுக்கு வழி சமைக்கக் கூடியதுமான தொழிலாளர் சாசனம் ஒன்றினைத் தாம் பிரகடனம் செய்வோமென உறுதியளித்தனர். பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் முதலாவது வருட ஆட்சியின் போது சாசனம் ஒன்று உருவாக்கப்பட்ட பொழுதிலும் மந்திரிசபை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சாசன உருவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முதலீட்டுச் சபை (BO) மற்றும் ஏனைய தொழில் வழங்குநர் குழாம்களிலிருந்து ஏற்பட்ட அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தது*
முதலாவது, தொழிற்சாலைகளும் ஒன்று சேர்ப்புக் கூடங்களும் வலயங்களில் நிறுவப்பட்டு 20 வருடங்களுக்கு பின்னரும் தொழிலாளர்கள் ஒன்று கூட முடியாதவர்களாக அல்லது தொழிற் சங்கங்களில் சேர முடியாதவர்களாக உள்ளனர். சுதந்திர வர்த்தக வலயங்களில் திடீர் கலவரங்களும், வேலை நிறுத்தங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவை சில குறிப்பிட்ட சம்பவங்களுக்கு எதிர்ப்புக் காட்டும் முகமாகக் தன்னிச்சையாக எழுகின்ற கூட்டு நடவடிக்கைகளாக இருக்கின்றனவேயன்றி, தொழிலாளர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்
* Abeygunawardene, Violet, Hilda, Consey, Samanmalie H. I., Rosa, Kumudhini; "Da Bindu, a space for women workers in Many Paths, One Goal: Organising Women Workers in Asia, Committee for Asian Women, 1991.
Strong Daughters, A Study of Women Workers in the Free Trade Zones of Sri Lanka. Women Working Worldwide, March 2000.
55

Page 36
ஒழுங்கமைக்கப்பட்ட நீடித்த முயற்சிகளாக இருப்பதில்லை. வலயத்திற்கு வெளியேயுள்ள பெண்கள் சுதந்திர வலயங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஒன்று சேர்ந்து போராடுவதுடன் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயத்தில் 'திரண்ட வியர்வைத் துளிகள்' 'வலயத்தில் நாம்’ போன்ற அரசசார்பற்ற அமைப்புக்களின் ஊடாகவும் (சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்த முன்னைய தொழிலாளர்களில் ஒரு சிலர்) மற்றும் சில பெண்கள் ஒன்று சேர்ந்தும் பெண் தொழிலாளர்கள் எதிர்நோக்குகின்ற சில குறிப்பிட்ட பிரச்சினைகள் பற்றி வெளிப்படையாகவே குரலெழுப்புவதற்குரிய இடம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளார்கள். வியர்வைத் துளிகள் இயக்கம் 1984ஆம் ஆண்டில் சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள பெண் தொழிலாளர்கள் சம்பந்தமான பிரச்சினைகளை முன்வைக்கவும், வலயத்தில் காணப்படுகின்ற அநீதி, சுரண்டல் போன்றவற்றை வெளிப்படுத்தவும் முயற்சிகளை ஆரம்பித்தது. பெண் தொழிலாளர்களிடையேயும் மற்றும் அரசுக்கும் அவர்களுக்கிடையேயும், முகாமைத்துவத்திற்கும் ஏனைய பெண்கள் தொழிலாளர் அமைப்புக்கும் இடையேயும் காணப்படுகின்ற தொடர்பியல் இடைவெளியினை நீக்கி அதனைப் பூர்த்தி செய்யும் முகமாக புதினப் பத்திரிகை ஒன்றினை வெளியிட்டமை திரணி ட வியர் வைத் துளிகள் இயக்கத்தினால் மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகளுள் ஒன்றாக உள்ளது. இந்தப் புதினப் பத்திரிகை பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளோடு தொடர்பான கதைகள், சான்றுகள், சட்டரீதியான ஆலோசனைகள், தொழிலாளர்களின் ஆக்கபூர்வ எழுத்துக்கள, கவிதைகள் என்பனவற்றை உள்ளடக்கியிருந்தது. 'திரண்ட வியர்வைத் துளிகள் அமைப்பின் ஊழியர்கள் அப்பகுதியிலுள்ள விடுதிகளுக்குச் சென்று பெண் தொழிலாளர்களிடையே அப்பத்திரிகைகளை விநியோகம் செய்து வருவர். எனினும் விடுதி வாழ்க்கை நிலைமைகள் பத்திரிகையில் வெளியிடப்படும் என்ற பயத்தின் காரணமாக விடுதி உரிமையாளர்கள் இந்த முயற்சியினை நட்புரீதியற்ற விதத்திலும், பகைமையுணர்வுடனும் நோக்கினர்.? இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் அந்தப் பத்திரிகை படிப்படியாகப் பிரபல்யமாகி இன்று கணிசமான வாடிக்கையாளர்களைக் கொண்டு காணப்படுகின்றது. வலயங்களுக்கிடையே பெண் தொழிலாளர்களின் உண்மைகளுக்காகப் போராடும் பிரதான பிரச்சாரச் சாதனமாக இது மாற்றமடைந்தது. 1987இல் இப்பத்திரிகையில் வெளிவந்த
* தயினது என்பது வியர் வைத் துளிகள்
* Silva, W. Wilfred, Diriya Diyaniyo, Fredrich Ebert Stiftung, Colombo,
1997 (Sinhala).
56

‘வாழ்க்கை" என்ற கவிதையினை எழுதிய மெனிக்கே என்ற பெண் தொழிலாளர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். திரண்ட வியர்வைத் துளிகள் 'இயக்கம்’ இந்தப் பிரச்சினையை அவளுடைய கிராமத்தில் உள்ள மனித உரிமைகள் இயக்கங்கள், வெகுசனத் தொடர்பு சாதனங்கள் என்பனவற்றிற்கு எடுத்துக் காட்டியதுடன் அதனைப் பாராளுமன்றத்திற்குக் கூட எடுத்துச் சென்றது. மூன்று மாதத்திற்குள் மெனிக்கே மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டமை இந்த இயக்கத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.° அதிலிருந்து இந்த இயக்கம் நீதியற்ற முறையில் தொழிலை இழந்த அல்லது தமது தொழிலாளர் சேமலாப நிதி, தொழிலாளர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளாத அல்லது தொழில் விபத்திற்கான நட்ட ஈட்டினைப் பெற வேண்டிய பெண் தொழிலாளர்கள் தொடர்பாக நீதிமன்றங்களில் வெற்றிகரமாக வழக்காடியும் வந்துள்ளது.
எனினும் தொழிலாளர்களின் வாழ்க்கை, தொழில் தொடர்பான பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ளும் முகமாக அவர்களை வலயத்திற்குள் ஒழுங்கமைப்பது இன்றும் பிரச்சினைக்குரியதொன்றாகவே உள்ளது. வலயத்தில் தொழிலுக்காக வருகின்ற பெண்கள் ஒரு சில எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தமது முனைப்பான பொருளாதாரக் கஷ்டத்திலிருந்து நிவாரணம் பெறுவதற்காக அங்கு வேலைக்கு வருகின்றார்கள். இதனால் மிகவும் சிறிய அளவிலேயே தாம் ஒன்று சேர்ந்து ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். வலயத்தில் பெண்மணி ஒருவரின் வேலைக் காலப்பகுதி ஏறக்குறைய 5-10 வருடங்களாக உள்ளது. அக்காலப்பகுதிக்குள் தமது குடும்பப் பொருளாதார நிலையினை சிறிதளவு உயர்த்துவதற்கு அல்லது தாம் திருமணம் செய்யும் பொழுது நகை அல்லது தளபாடங்கள் வாங்குவதற்கு சிறிதளவு பணத்தினை சேமிப்பதற்கு அவர்கள் முயல்கின்றனர். இந்தப் பெண்கள் தமது உரிமைகள் தொடர்பான கடுமையான வரம்பு மீறல்களைச் சமாளித்து நடப்பதற்கு விரும்புகிறார்கள். மாறாக தமது வேலை நிலைமைகள், வேலை நிபந்தனைகள் தொடர்பாக எதிர்ப்புக்களைக் காட்டுவதன் மூலம் தமக்குரிய சந்தர்ப்பத்தை இழக்க விரும்பாதவர்களாக உள்ளனர். எனவே இப்பிரச்சினைகளைக் கையாளுகையில், பெண்கள் சார்பான இயக்கங்கள் பெரும்பாலும் அப்பெண் தொழிலாளர்களின் எதிர்ப்பினையே முதன் முதலிலி வெற்றிகொள்ள வேண்டியுள்ளது.
மனித உரிமைகளும் சமாதானமும்
குடியியற் சமூகம் சமுதாய அபிவிருத்தி நிறுவனங்கள் என்பனவற்றிற்கூடாகப் பெண்களின் அரசியல் நடவடிக்கை, பால் சமத்துவம், நீதி என்பனவற்றிற்கான
Ibid., Abeygunawardene et al., op.cit.
57

Page 37
போராட்டம் , பொருளாதார மீட்சியின் நடைமுறைப் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. இன முரண்பாடு, ஆயுதமேந்திய கலகங்கள் போன்றவற்றின் பின்னணியில் ஆயுதப் படையினராலும் அதிகளவிலான உள்நாட்டு இடப் பெயர்வுகளினாலும் பெருமளவிலான மனித உரிமைத் துஷ்பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளன. பெண்கள் மனித உரிமைகள், சமாதானம், முரண்பாட்டுத் தீர்மானம் போன்ற முக்கிய விடயங்களில் தலையிட வேண்டிய தேவை உள்ளது. குமுதினி சாமுவேல் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
'மனித உரிமைகள் இயக்கத்தின் முக்கியமான கருத்துக் கூறு யாதெனில அதனது செயற்பாட்டின பல வேறுபட்ட வீச்சுக்களுக்கிடையிலும் அதனது நிலைகளுக்குமிடையிலும் காணப படும் பெனகள ஈடுபாட்டின அசைவும் எண்ணிக்கையுமாகும். பெண சட்டத்தரணிகள், கல்விமான்கள், ஆசான்கள், பத்திரிகைத் துறையினர், எழுத்தாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கூட மனித உரிமைச் செயற்பாட்டுத் திசையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை கொண்ட பெண்கள் மனித உரிமைகள் அமைப்புக்களில் தலைமைத்துவ நிலையைக் கொணடிருப்பதுடனர் கூடவே பணிபுரியும் ஆணர்களுடனர் நெருக்கமான இடைத் தாக்கங்களையும் கொணடும் காணப்படுகின்றனர்."
(அ) வடக்கிலும் தெற்கிலும் உள்ள அன்னையர் முன்னணிகள்
1980களில் உருவாகிய முக்கியமான மனித உரிமைகள் அமைப்புக்களில் வடக்கு, தெற்கின் அன்னையர் முன்னணியும் ஒன்றாகும். இதில் மறைந்த போன தமது புதல்வர்கள், தந்தையர், கணவன்மார் என்போர் எங்கேயுள்ளனர் என்பதனை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியாக அன்னையர் என்ற தமது பங்கினைப் பயன்படுத்தி இலங்கையின் வடக்கிலும், தெற்கிலும் உள்ள அன்னையர் ஒரு புரட்சிகரமான வழியில் பொதுவாழ்வில் நுழைந்தனர்.
வடக்கின் அன்னையர் முன்னணி 1984இல் ஆயுதப் படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட ஆண்களின் விடுதலை வேண்டி உருவாக்கப்பட்டது. அன்னையரினால் நடாத்தப்பட்ட அமைதியான எதிர்ப்புப் போராட்டங்கள் பல இளைஞர்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் எல்.ரி.ரி.ஈ. யினர் தமது
Samuel, Kumudini, "Gender Difference in Conflict Resolution: The Case of Sri Lanka'. Unpublished paper. p. 6.
58

சமுதாயத்திற்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறல்களையும் ஆயுதப்படையினரின் மனித உரிமை மீறல்களையும் கண்டித்து இப்பெண்கள் தொடர்ந்தும் செயற்துடிப்பு உள்ளவர்களாகக் காணப்பட்டனர். மேலும் இவர்கள் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றினையும் வேண்டி நின்றனர். தெற் கினி அணி னையர் முன்னணி 1990 ஜூலையிலி உருவாக்கப்பட்டது. இக்காலம் மக்கள் விடுதலை முன்னணியினரின் எழுச்சிக் காலமாகவும், அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புக் காலப் பகுதியாகவும் காணப்பட்டது. 1992இல் இந்த முன்னணி பின்தங்கிய கிராமியப் பின்னணியைக் கொண்ட ஏறக்குறைய 25,000 பதிவு செய்யப்பட்ட தாய்மார்களை அங்கத்தவர்களாகக் கொண்டிருந்தது, இந்த முன்னணியின் முக்கியமான, கவர்ச்சிப் பேச்சாளராகக் காணப்பட்ட வைத்திய கலாநிதி மனோராணி சரவணமுத்து செல்வாக்குமிக்க, முக்கியமான கொழும்புத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைத்தியராவார். இவரது சொந்த மகனும் பிரபல்யமான பத்திகையாளருமான றிச்சாட் டி சொய்சா 1990ஆம் ஆண்டில் அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்ட முகவர் மூலம் கடத்திக் கொல்லப்பட்டார். தன்னைவிட ஆற்றல், சக்தி குறைந்த பெண்கள் மீது கொண்ட ஆழமான அக்கறை, நேர்மையுணர்வு என்பனவற்றின் அடிப்படையில் அவர் தனது ஆதரவினை முன்னணிக்கு வழங்கினார். அவர் ஆட் கொணர்வு மனு ஒன்றினைச் சமர்ப்பிக்கக்கூடிய நிலையில் இருந்தார். ஆனால் அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் விடப்பட்ட நிலையில் நாட்டை விட்டுச் சென்று இந்த ஆட்கள் காணாமல் போதல் பிரச்சினையைச் சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த அன்னையர் முன்னணி காணாமல் போனவர்களைப் பற்றிய பதிவுகளை மேற்கொண்டதுடன் குடும்பங்களில் ஆண்களை இழந்தவர்களைத் தேடும் பொருட்டு பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், தடுப்பு மையங்கள் என்பனவற்றிற்கெல்லாம் விஜயமும் மேற்கொண்டது. முன்னணி மேலும் அரச நிறுவனங்கள் அலுவலகங்கள் என்பனவற்றிற்கு முறைப்பாட்டு மனுக்களையும் அனுப்பி வைத்தது. அத்துடன் முன்னணிக் கூட்டங்கள், பாத யாத்திரைகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பனவற்றை காணாமல் போனவர்களைத் திரும்பவும் கையளிக்கும்படி கோரி ஒழுங்கமைத்தது. இவற்றிற்பல தலைநகர் கொழும்பில் இடம் பெற்றன." இவர்கள் தமது எதிர்ப்புக்களை தூபங்கள், கண்ணிர், சடங்குகள் என்பனவற்றின் ஊடாக உருவாகிய தாய்மையின் உணர்ச்சி உணர்வலைகள் மூலமாக வெளிப்படுத்தியதுடன், தமது கணவர்மாரை வீடுகளில் விட்டு தமது
De Mel, Neloufer, "Crossing the Issues-Mother Politics and Women's
Politics: Notes on the Contemporary Sri Lankan Women's Movement', unpublished paper; Samuel, Kumudini, "Gender Difference in Conflict Resolution: The Case of Sri Lanka', unpublished paper.
59

Page 38
மகன்மாரை ஆண்மை நிறைந்தவர்களாக வளர்க்கக் கூடிய ஒரு இயல்பு வாழ்வினைத் தமக்கு ஏற்படுத்தித் தரும்படியும் வேண்டி நின்றனர்.”* டி அல்விஸ் மேலும் குறிப்பிட்டுக் காட்டுவது போல பாரம்பரிய குடும்பப் பெறுமானங்களின் மனவுறுதி, அவர்களின் விசனம் என்பனவற்றின் மூலம் கட்டியெழுப்பபட்ட கேள்விக்கிடமில்லாத அதிகாரம் அன்னையர் முன்னணிக்கு அக்காலத்தில் ஏனைய அமைப்புக்களுக்கு இல்லாமலிருந்த எதிர்ப்புக்கான முக்கிய இடம் ஒன்றினை வழங்கியது எனலாம். 1994ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலிலும் சனாதிபதித் தேர்தலிலும் 17 வருடங்களாக ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியினைத் தூக்கியெறிவதற்கு இந்த அமைப்பு முக்கியமான பங்களிப்பினை வழங்கியது. ஆனால் பொது அரசியல் துறையிலிருந்து இந்த அமைப்பு பின்வாங்கத் தொடங்கியது.
நிறுவனரீதியான ஆதரவு எதுவுமினி ரி ஒட்டுமொத்தமாக வன்செயல்களுக்கு இலக்காகி உயிர் வாழ்கின்ற பெண்களில் பலர், தாமாகவே அழுத்தம் தரும் சில அமைப்புக்களை உருவாக்கி வல்லமைமிக்க அரசியல் சக்திகளாக மாற்றியுள்ளமைக்கும் பல உதாரணங்கள் உள்ளன. ஆர்ஜென்ரீனாவில் உள்ள பிளாசா டி மயோவின் அன்னையர் பாட்டிமார் கழகம் நன்கு தெரிந்த இப்படியானதொரு அமைப்பாகும். ஆனால் இலங்கையில இது தொடர்பாக இனிறுவரையிலி தொடர் நீ து காணப்படுகின்றதொரு குழப்பம் என்னவெனில் அரசியல்வாதிகளுக்கு முகம் கொடுத்தல் , ஆர்ப்பாட்டங்களை நடாத்துதலி, நீதிமன்றங்களில், முறைப்பாடுகளை முன்வைத்தல் போன்றவற்றிலெல்லாம் அனுபவமுள்ள வடக்கு, தெற்கு அன்னையர் முன்னணி அங்கத்தவர்கள் 1994ஆம் ஆண்டின் அரச மாற்றத்தின் பின்னர் முக்கிய அரசியல் நீரோட்ட நடவடிக்கைகளில் பங்குபற்றுவதற்கு ஏன் இடம் வழங்கப்படவில்லை என்பதாகும். வித்தியாசமான சமூக வகுப்புக்கள், இனக் குழுக்கள் என்பனவற்றின் பின்னணியில் பொது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வற்புறுத்தப்பட்ட இந்தப் பெண்கள் பொதுத் துறையிலிருந்து முழுமையாகவே மறைந்துவிட்டார்கள். இப் பெண்களின் பொதுத்துறைப் புறக்கணிப்புக்கான காரணங்கள் பலவாகும். வடக்கில் விடுதலைப் புலிகளின் அடக்கு முறைக் கொள்கைகளின் கீழ் இந்த அன்னையர் முன்னணி சமாதான முறையில் இயங்குவதென்பது முடியாத காரியம் என்பது வெளிப்படையானதாகும். அரசிற்கு எதிராக அன்னையர் முன்னணி தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வரையில் விடுதலைப் புலிகளுக்கு அவர்களின் நடவடிக்கைகள் பிரயோசனமாக இருந்தன. ஆனால் இம் முனி னணி சமாதானத்திற்கு அறைகூவலி விடுத்து தனது
' De Alwis, Malathi, "Motherhood as a space of protest: Women's political participation in contemporary Sri Lanka' in Appropriating Gender: Women's Activism and Politicized Religion in South Asia, P. Jeffery and A. Basu (eds), Routledge, New York, 1998, p. 185.
60

நடவடிக்கைகளை விரிவுபடுத்தத் தொடங்கிய பொழுது விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு அன்னையர் முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகளைக் கடுமையாக கட்டுப்படுத்தியது எனலாம்.
தெற்கில் அரசியல் மூர்க்கத்தனம், சமூக மட்டத்தில் தொடர்ந்து காணப்படுகின்ற வன்செயல்கள் என்பன இதே செயன்முறைகளின் கீழ் பெண்களின் மிகவும் ஆழமான ஈடுபாடு ஏற்பட்டுள்ள நிலையின் பின்னரும் கூட அவர்கள் பொது அரசியலில் தொடர்ந்து ஈடுபாடு காட்டுவது என்பது கடினமானதொன்றாக மாற்றியுள்ளது. இப்பெண்கள் பலரின் வாழ்க்கையில் காணப்படுகின்ற உண்மையான கடினத்தன்மை, குடும்பத்தில் தனித்து ஒரு தாயாக இருந்து போராட வேண்டிய நிலைமை, மிகவும் மோசமான நிதி நெருக்கடிகள் அல்லது மிகவும் குறைந்தமட்ட வருமானம் போன்ற காரணங்களுக்கும் பொதுவிடயங்களில் ஆர்வமாகப் பங்குபற்றுவதில் தடைகளை ஏற்படுத்துவனவாக உள்ளன. ஏன் முன்னணி இறுதியில் எந்தவிதமான தொழிற்பாடுகளுமின்றிக் காணப்படுகின்றது என்பதற்கு மற்றொரு முக்கியமான காரணியும் உள்ளது. தெற்கின் அன்னையர் முன்னணியானது வைத்திய கலாநிதி மனோரி சரவணமுத்துவின் தலைமைத்துவம், ஆதரவு என்பனவற்றிலிருந்து பலத்தினைப் பெற்றுக் கொண்ட போதிலும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரு பாராளுமன்ற அங்கத்தவர்களினால் இம் முன்னணி வழிநடத்தப்பட்டது. பொதுசன ஐக்கிய முன்னணியின் தேர்தல் வெற்றியினை அடுத்து இந்த முன்னணியின் இரு ஆண் இணைப்பாளர்களும் ஏனைய சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நிறுவப்பட்ட புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களானார்கள். அவர்கள் பிரதேச மட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைக்காக மூன்று ஆணைக் குழுக்களை நியமித்து காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கினர். பல பெண்கள் ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் அரசியல்ரீதியான சார்புள்ளவர்களாக இல்லாதிருந்த போதிலும் புதிய அரசாங்கத்திற்கும் அன்னையர் முன்னணிக்கும் இடையிலான உறவானது காப்பாளர், வாடிக்கையாளர் என்ற நிலைக்கு மாறியது. சில அன்னையர் முன்னணிக் குழுக்கள் தொடர்ந்தும் விதவைகள் மற்றும் வீட்டுத் தலைவிகளாக உள்ள பெண்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாகத் தமது பணியை மேற்கொண்டன. எனினும் வைத்திய கலாநிதி சரவணமுத்து எதிர்பார்த்தது போலன்று முழுமையாக, சுதந்திரமான மனித உரிமைப் பாதுகாப்பு அமைப்பாகத் தம்மை அவர்கள் மாற்றிக் கொள்வதற்கு முடியாதவர்களாக இருந்தனர். வைத்திய கலாநிதி சரவணமுத்து வன்செயல்களினால் உணர்வுபூர்வமாக மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்கள், தாய்மார்கள் என்போருக்கு உதவுவதற்காகவும் அவர்களுக்கு வலுவினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் குடும்ப சேவைகளுக்கான நிலையம் ஒன்றினைத் தானே உருவாக்கியிருந்தார். நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் மிகவும்
61

Page 39
மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு இந்த நிலையம் தொடர்ந்து பணியாற்றுகின்றது.
மேலும் தெற்கில் உள்ள அன்னையர் முன்னணி வடக்கில் உள்ள
தமது சகோதரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி வலையமைப்பு ஒன்றினை நிறுவுவதற்கும் முயற்சிக்கவில்லை. சிங்கள, தமிழ் பெண்களை இணைக்கின்ற பரந்ததொரு கூட்டமைப்பினை அடையப் பெறுவதற்கு முயற்சி ஒன்று மேற்கொள்ளப் பட்டிருக்குமானால் அது சமாதானத்திற்கும், இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு ஒன்றிற்கும் தொழிற்படுகின்ற சக்திமிக்க இயக்கமாக உருவாகி நிலைத்திருக்க முடியுமென டி மெல் கருதுகின்றார்."
(ஆ) சமாதானத்தில் பெண்கள்
Gu60.856ft bl6higs 6055 (5(g (Women's Action Committee-WAC) (19831987) சமாதானத்திற்கான பெண்கள் (1984), இலங்கையின் அன்னையரும் புதல்வியரும் (1990-இன்றுவரை) மற்றும் மிகவும் அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட சமாதானத்திற்கான பெண்கள் கூட்டமைப்பு (1997-இன்றுவரை) போன்ற பல பெண்கள் கூட்டமைப்புக்கள் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை வேண்டியும் இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுவொன்றை நாடியும் காலத்திற்கு காலம் உருவாக்கப்பட்டுள்ளன.
பெண்கள் நடவடிக்கைக் குழு கல்விசார் உயர் தொழில் சார் பெண்களிடையே ஆதரவு தேடிப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 1984ஆம் ஆண்டு சமாதானத்திற்கான் பெண்களினால் முதலாவது பொது அறைகூவல் ஒன்று விடுக்கப்பட்டது. அத்துடன் இக்குழு சமாதானத்திற்கான கோரிக்கை ஒன்றினை சிங்கள, தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நாட்டின் தேசியப் பத்திரிகைகளில் வெளியிட்டது. சமாதானத்திற்கான பெண்கள் எனத் தம்மை அழைத்துக்கொண்ட 100 பெண்கள் இந்த மனுவில் கைச்சாத்திட்டனர். எல்லா இனங்களையும் மதங்களையும் சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பின்னர் கையெழுத்திட்டனர். சமாதானத்திற்கான பெண்கள் கூட்டமைப்பு 1997இல் உருவாக்கப்பட்டது. அத்துடன் இந்தக் கூட்டமைப்பு சகல வகுப்புக்களையும் அரசியல் இன, மத சமூகங்களையும் சார்ந்த பெண்களை உள்ளடக்கிக் காணப்பட்டது. இந்த அமைப்பு தனது வழிகாட்டும் குறிப்பினை ஐரிஸ் பெண்கள் கூட்டமைப்பிலிருந்து பெற்றுக்கொண்டது. இந்த ஐரிஸ் பெண்கள் கூட்டமைப்பு வட அயர்லாந்தின் சமாதான செயன்முறையிலும் பெரிய வெள்ளி உடன்படிக்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தினைக் கொண்டிருந்தது. சமாதானத்திற்கான பெண்கள் கூட்டமைப்பு பெண்களின்
* De Mel, unpublished. op, cit.
62

குரல்கள் கேட்கப்படுகின்றன, அவை சமாதானத்திற்கான பாதையை அறிவித்துக் கொண்டிருக்கின்றன போன்றவற்றை உறுதிப்படுத்துவதை வேண்டி நின்றது. பொதுமக்களைக் கவருவதற்கான கடும் முயற்சியிலிறங்கிய கூட்டமைப்பு வெகுசன தொடர்பு சாதனங்கள், சுவரொட்டி விளம்பரங்கள், வீதி ஆர்ப்பாட்டங்கள் என்பனவற்றினைப் பயன்படுத்தும் உபாயமொன்றினை மேற்கொண்டது. முதல் நடவடிக்கையாக கூட்டமைப்பு கையெழுத்து வேட்டை ஒன்றினை ஆரம்பித்து, தனது ஸ்தாபிதத்தை வெளிப்படுத்துவதற்கும், தொடர்ந்து இடம்பெறும் யுத்தத்தில் தனது அக்கறையினை வெளிப்படுத்தும் முகமாகவும் 2000இன் ஆரம்ப காலப் பகுதியில் உள்ளுர்ச் செய்திப் பத்திரிகை ஒன்றில் அறிவித்தலொன்றினையும் வெளியிட்டது. இது பத்திரிகைத்துறையில் காணப்பட்ட யுத்தத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவான முயற்சிகளைக் கண்காணித்ததுடன் சமாதானத்திற்காக உழைத்த அரசியல் கட்சிகள், ஏனைய அமைப்புக்கள் என்பனவற்றுடன் செயற்திறன்மிக்க வலையமைப்புக்களை உருவாக்கியும் கொண்டது. இந்தக் கூட்டமைப்பானது பயன் மிகு தலையீட்டினை மேலும் அதிகரித்துக் கொள்ளும் முகமாக உலகின் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகளைப் பற்றியும் தனது அங்கத்தவர்களுக்கு எடுத்துக் கூறி கற்பிப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொணர்டது. அரசின் சகல மட்டங்களிலும், பேச்சுவார்த்தை செயன்முறைகளிலும் பெண்கள் பிரதிநிதித்துவத்தின் தேவையைக் கூட்டமைப்பு மீண்டும், மீண்டும் வலியுறுத்தியது. இதன் மூலம் பெண்களின் கருத்துக்களும் சமாதான செயன்முறையில் பிரதிபலிக்க முடியும் என அது பூரணமாக நம்பியது." எனினும் சமாதானத்திற்கான பெண்களின் அபிலாசைகள் சமாதான இயக்கத்திற்கிடையே அவர்களின் செயற்திறன்மிக்க நடவடிக்கைகள் என்பன இதுவரையில் சமாதானச் செயன்முறையின் உள்ளடக்கத்தினை அல்லது திசையினைத் தீர்மானிக்கும் முறையில் மாற்றப்படவில்லை என்பது இங்கு குறிப்படத்தக்கது."
* Murali, Jayadeva, Crusade for Peace: Women's Coalition in the Forefront', Sunday Times, 5" March 2000, Plus Section, pp. 6-7 * Samuel, Kumudini, 1999, op. cit.
63

Page 40
ஒத்துழைப்பும் பிணக்கும் அரசுடனான பெண்களின் இடைத்தாக்கமும் குடியுரிமைக்கான பேச்சுவார்த்தையும்
பெண்களுக்காக வாதிடுதல்: பேரம்பேசுதலுக்கான வரையறைகள்
கொள்கைத் தீர்மானங்கள், சட்டங்கள், அரசின் செயல்கள் மற்றும் செயலின்மைகள் என்பன பெண்களுக்கு முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்தின. அரசினால் பிரகடனஞ் செய்யப்பட்ட சட்டங்கள் ஆண்களிலும் பெண்களிலும் வெவ்வேறு வகையில் பாதிப்புக்களை ஏற்படுத்தியது மட்டுமன்றிப் பெண்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் குறிப்பாக, கருச்சிதைவுக்கான உரிமையை ஒழுங்குபடுத்தும் போதும் அல்லது வல்லுறவு என்பது எதனை உள்ளடக்குகிறது என வரையறை செய்யும்பொழுதும் அரசு தலையிடும் நிலையில் இருந்துள்ளது. பெண்கள் கூட பெருமளவில் ஆண்களிலும் பார்க்க அரசிலேயே தங்கியிருப்பது போல இருந்தது.
பெண்களின் மேம்பாடு, கட்டுப்பாடு மற்றும் உயிர்களைக் காத்தல் என்னும் அரச அதிகாரங்களின்படி, பெண்ணியவாதிகளிடையே, அரசுக்கும் பெண்களுக்கும் இடையில் காணப்படும் தொடர்புகளின் இயல்பினை எண்ணக்கருவாக்கம் செய்தல் மற்றும் விளங்கிக்கொள்வதில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தீவிரவாதப் பெண்ணியவாதிகள், உதாரணமாக, அரசினை இயல்பில் தந்தை வழியாகவே பார்க்கின்றனர். தாராளவாதப் பெண்ணியவாதிகள் குறிப்பிடுவது போன்று அரசு ஒரு நடுநிலை நிறுவனம் என்றும், அதில் பெண்கள் நியாயமின்றி விலக்கப்படுகின்றனர் எனினும் கொள்கையளவில் தமது முன்னேற்றங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றனர்." ஏனைய பெண்ணியவாதிகள், குறிப்பாக ஸ்கண்டிநேவிய நாடுகள், நலன்புரி அரசுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம், பொதுவாகப் பெண்களின் ஆர்வங்களை மேலோங்கச் செய்வதில் அரசுக்கு உள்ள ஆற்றலை இனங்கண்டுள்ளன. அரசிடமிருந்து வளங்களைப் பெற்றுக் கொள்ளலாம்
Bryson, Valerie, Feminist Political Theory: An Introduction, Macmillan Press, London, 1992.
64

என்பதால் தனி மனிதனில் பெண்கள் தங்கியிருப்பதனின்றும் தப்பிக் கொள்ளலாம் என வாதிடுகின்றனர். மிக அண்மைக்கால எழுத்துக்கள் (நூல்கள்) அரசினைத் தந்தை வழி, இரக்கம் மற்றும் நலன் சேவை நோக்குடைய அல்லது நடுநிலையானது என எண்ணக்கருவாக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. அரசினை நல்லது அல்லது தீயது என எடுத்துக்காட்டுவது மிகவும் இலகுவானது என்று வேய்லன் (Waylem) என்பவர் எடுத்துக் கூறும் பொழுது, அது போராட்டத்தின் பகுதி எனக் கருதத் தோன்றும். அங்கு அரசு பால்வகை உறவு மாற்றத்தில் இடைவெளி காண்பதுடன் பெரும்பாலும் பெண்களைக் கீழ்நிலைப்படுத்தும் வகையிலேயே செயற்படுகிறது” சாள்ரனும் (Charlton) ஏனையவர்களுழ் இதுபற்றி விபரிக்கும்பொழுது, அரசானது பன்மை இயல்புடையதும், வரலாறு மற்றும் சமூகரீதியாக உருவாக்கப்பட்ட நிறுவனம் என்றும் கூறுவதுடன் அவை நியமஞ்சார் ஒழுங்கினையும் கொணி டிருக் கினிறன என கினி றனர்." இத்தகைய நியமஞ சார் ஒழுங்குமுறையானது, அடிக்கடி பேச்சுவார்த்தைக்கு உள்ளாவதுடன் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கூட்டங்களில் அவை அறைகூவலுக்கும் உள்ளாகின்றன. எனினும் பெண்களுக்கு வலுவூட்டும் வகையிலும் அவை அமைந்துள்ளன." சென் (Sen) என்பவரின் ஒத்துழைப்பும் பிணக்கும் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், அரசுக்கும் பெண்களுக்குமுள்ள தொடர்பினை ஓர் ஒத்துழைப்பும் பிணக்கும் என்ற அடிப்படையிலேயே இயல்புபடுத்துகிறார். மறுபுறத்தில் பெண்களுக்குச் சாதகமான கொள்கைகளை உருவாக்கவும் சட்டங்களை இயற்றவும் அரசுக்கு அதிகாரம் உண்டு. எனினும் இன்னொரு விதத்தில் அதனுடைய வளங்களையும் அதிகாரங்களையும் பயன்படுத்தி, தற்பொழுதுள்ள பால் வகை சார்ந்த பிற்போக்கு அடிப்படைகளை மீளவலியுறுத்தவும் பயன்படுத்தலாம்." இத்தகைய ஒத்துழைப்பும் பிணக்கும் என்ற அடிப் படையிலேயே இலங்கைப் பெண் களின் அரசுடனான அனுபவங்களையும் தொடர்புகளையும் பார்க்க வேண்டும். இலங்கைச் சட்டச் சீர்திருத்த வரலாற்றில் அதிகமாகக் கலந்துரையாடப்பட்ட அடையாளங்களுடன் நாம் ஆரம்பிக்கலாம். அங்கு அரசின் இரு முகத்தன்மையும் தெவிவாகத் தெரிகின்றது.
Waylen, Georgina, Gender in Third World Politics, Lynne Rienner Publishers, USA, 1996, pp. 16-17. Charlton, S., Everett, J., and Staudt, K., Women, the State and Development, SUNY, New York, 1989. Subramaniam, Ramya, "The Politics of Gender and State" in Legal Perspectives, Documentation File No.35, Legal Resources for Social Action (India), n.d., p. 29. ' Agarwal, Bina, A Field of One's Own: Gender and Land Rights in South Asia
Cambridge University Press, Cambridge, 1994, p.77.
65

Page 41
1994இல் நடைபெற்ற சனாதிபதி மற்றும் பாராளுமனி றத் தேர்தல்களின்போது பல பெண்கள் குழுக்கள் தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளுக்கும் இலங்கைப் பெண்கள் பற்றிய முக்கிய விடயங்களைச் சார்ந்த பட்டியலை உள்ளடக்கிய ஒரு கொள்கை அறிக்கையை அனுப்பி வைத்தது. இந்த அறிக்கையானது, பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இனங்கண்டிருந்ததுடன், அதனை அரசு கவனிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது. பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம், அதிகாரத்துக்கு வந்தபோது, 100 வருடப் பழைமை வாய்ந்த தண்டனைக் கோவையைப், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாளும் ஏற்பாடுகளைப் பலப்படுத்தும் வகையில் சீர்திருத்தங்கள்ை மேற்கொண்டது. 1995இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தண்டனைச் சட்டக்கோவைத் திருத்தங்கள், வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்டது. வல்லுறவுக்கான ஆகக் குறைந்த தண்டனையாக 7 வருடத் தண்டனையும், ஆகக் கூடியது 20 வருட சிறைத் தண்டனையும் வழங்குவதுடன் வல்லுறவினை நிரூபிப்பதற்கு அங்கீகரிக்கப்பட்ட உடற் காயங்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை. பராமரிப்பு மற்றும் குழு வல்லுறவு, சிறு வல்லுறவு கருவுற்றிருக்கும் பெண் அல்லது உடற்குறைபாடுடைய பெண்மீது மேற்கொள்ளப்பட்டால், அதற்குரிய சிறைத்தண்டனை ஆகக்குறைந்தது 10 வருடங்களாகும். பாதிக்கப்பட்டவருக்கு நட்டஈடு வழங்கும் அதிகாரமும் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. பாலியல் துஷ்பிரயோகம் என்ற குற்றம் முதன் முறையாக, தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கப்பட்டதுடன் அதற்குத் தண்டப் பணமும் சிறைவாசமும் விதிக்கப்பட்டது." இத்தகைய ஏற்பாடுகள் தொடர்பாக அரசுக்கும் பெண்கள் குழுக்களுக்குமிடையே முக்கியமான ஆலோசனைச் செயல்முறைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
ஆயினும், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இறுதித் திருத்தத்தில் இரண்டு மிக முக்கியமான, நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய திருத்தங்களான பெண்களின் பாதுகாப்பும் உடல்ரீதியான நேர்மை என்பன இடம்பெறவில்லை. இவை பாராளுமன்றத்துக்கு உள்ளும், வெளியிலும் குறிப்பாக முஸ்லிம் மற்றும் கிறித்தவக் குழுக்களின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டன. பெண்கள் குழுக்களின் ஆலோசனையுடன் வரையப்பட்ட அசல் மசோதா திருமண வல்லுறவைச் சட்டத்தினால் தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகவே ஏற்றுக்கொண்டது. அத்துடன் வல்லுறவு, முறைதகாப்புணர்ச்சி நிலைமைகளின் போது கருச்சிதைவினை மேற்கொள்ளல் பெண்களின் உரிமையாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டன. இறுதித் திருத்தத்தில் திருமண வல்லுறவுக்கான ஏற்பாடுகள், கணவனும் மனைவியும்
* பார்க்க, 1995 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க தண்டனைக் கோவைச்
(திருத்தப்பட்டது) சட்டம்,
66

சட்டரீதியாகப் பிரிந்து வாழும் நிலைமைகளுடன் மட்டுப்படுத்தப்பட்டன. கருச்சிதைவு பற்றிய ஏற்பாடுகள் முற்றாக நீக்கப்பட்டன. எனவே கருச்சிதைவானது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை காரணமாக இலங்கையில் சட்டரீதியாகச் சாத்தியமாக இருந்தது. எனினும் நாளொன்றுக்கு 700 சட்ட ரீதியற்ற கருச்சிதைவுகள் இடம்பெறுகின்றன; பெண்களைப் பொறுத்தவரையில் இவை உயிராபத்தானவை.* பல அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இத்தகைய சட்டங்களை மாற்றுதல் வேண்டும் என்பதை அங்கீகரித்த வேளையிலும் இறுதியில், சக்திவாய்ந்த சமய அமைப்புகள் பெண்களின் நலன்களைப் பேணல் மற்றும் பாதுகாப்பு என்பன 'குடும்பம் மற்றும் திருமணம் என்ற நிறுவனத்தின் விருப்பத்திற்குரியது என்றும் விவாதித்து வெற்றிகண்டன.* . .
1995இல் தண்டனைச் சட்டக் கோவையில் திருத்தத்தினை மேற்கொண்ட அதேவேளையில், ஆண்களுக்கும் பெண்களுக்குமான திருமண வயதினை அரசு 18 ஆக உயர்த்தியது. இஸ்லாமியச் சட்டத்தில் இதற்கு இணையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. இருந்தாலும் இலங்கையில் முஸ்லீம்களுக்கு ஆகக் குறைந்த திருமண வயதும் இல்லை. மற்றும் சட்டத்தின் கீழ் பிள்ளைத் திருமணமும் சாத்தியமாக இருந்தது. (தண்டனைச் சட்டக்கோவையில் 1995இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தமும் சட்டரீதியான வல்லுறவுக்கான வயதினை 12 இலிருந்து 16 ஆக உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் திருமணமான முஸ்லீம் பெண் பிள்ளைகளுக்கு விதிவிலக்கும் அளித்தது). நீதியமைச்சர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்
82 Soysa, Priyani, "Women and Health" in Post Beijing Reflections: Women in
Sri Lanka 1995-2000, CENWOR, 2000, p. 46.
* சமவாய்ப்பு மசோதாவுக்கும் இதுவே நடந்தது. சிங்களப் பெரும்பான்மையினர் இம்மசோதாவைக் கடுமையாக எதிர்த்ததுடன் அதற்காக வாதாடியவர்கள் நாட்டிலுள்ள சிங்களப் பாடசாலைகளுக்கு இம் மசோதா பயமுறுத்தலாக அமையும் என்றனர். ஏனெனில் இம் மசோதாவின்படி இப்பாடசாலைகளில் குறிப்பிட்ட தொகையினரான சிறுபான்மையினரை அனுமதிக்க வேண்டியிருக்கும் என அவர்கள் வாதாடினர். உயர்நீதிமன்றத்தில் இம்மசோதாவை எதிர்த்துப் பல மாறுதல்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதியமைச்சர் இம் மசோதாவை பாராளுமன்றத்திலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார். இதற்கான ஒரு மாற்று ஏற்பாடாக ஒரு திருத்தப்பட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்டு இருக்கலாம். சில மயக்கமான ஏற்பாடுகளைத் தவிர்த்துவிட்டு நடுவர் மன்றங்களில் (Tribunal Court) சட்ட அதிகாரம் தொடர்பான பிரச்சினைகளுக்குரிய ஏற்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் திருத்தப்பட்ட மசோதாவை அமைத்திருக்கலாம். திரும்பப்பெறப்பட்ட மசோதா நாட்டில் பால்நிலை உரிமைகளைக் கணிசமான அளவுக்கு வலுப்படுத்தியிருக்கும். ஆனால் இம் மசோதா வாபஸ் பெறப்பட்டமை பெண்களைப் பாதிக்கும் விடயங்களில் சிறுபான்மை பெரும்பான்மைப் பிரிவினர் மேற்கொண்ட எதிரெதிர் நிலைகளின் உரிமையை எடுத்துக் காட்டிற்று.
67

Page 42
பொழுது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கை நியாயப்படுத்தியதுடன் முஸ்லிம்கள் தமது சட்டங்கள், வழக்கங்கள் என்பவற்றினடிப்படையில் கருத்திற் கொள்ளப்பட உரித்துடையவர்கள் எனக் கூறினார். முஸ்லிம் சமூகத்தினரின் கலாசாரப் பாரம்பரியத்தினையும் அபிலாஷைகளையும் அங்கீகரிக்காத ஓர் ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்வது பயனளிக்காது. இக்காரணத்தினடிப்படையிலேயே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கு நியாயப்படுத்தப்பட்டது. அவர் தொடர்ந்து கூறியதாவது:
பல்வகைப்பட்ட கலாசாரங்களை நாம் மதிக்கின்றோம். இப் பல்வகைத்தன்மை எமது நாட்டைச் செழுமைப்படுத்துகின்றது. இதன் பின்புலத்திலேயே அரசாங்கம் அத்தகையதொரு விதிவிலக் கை வழங்குகின்றது. இது அரசாங்கத்தின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு விடயமன்று. ஆனால் சனநாயக மரபுகளை உள்ளடக்கியதாக அமைகின்றது. பல்வேறு கலாசார விழுமியங்களை அங்கீகரித்து அவை யாவற்றையும் பரந்ததொரு சட்டத் தொகுதியில் உள்ளடக்கிக் கொள்வது எமது நாட்டைப் பொறுத்தவரையில் இச் சனநாயக மரபுகளைப் பிரதிபலிப்பதாக அமைகிறது.*
சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினை தமக்குரிய தனிப்பட்ட சட்டங்களின் உள்ளடக்கத்தைப் பற்றித் தீர்மானிப்பதற்கு அவர்களுக்குள்ள சுதந்திரத்தை இலங்கை அரசு எப்போதுமே, வரலாற்றுரீதியாக அங்கீகரித்து வந்திருக்கிறது. இலங்கையில் முஸ்லீம் சட்டமானது, அச் சமூகத்தைச் சேர்ந்த கற்றோர் குழாத்தினால் 1929இலும் 1956இலும் இரு சந்தர்ப்பங்களில் வெற்றிகரமாகத் திருத்தியமைக்கப்பட்டன. இது உண்மையான இஸ்லாமிய உணர்வுடன் இணைந்து செல்லும் வகையிலான ஒரு முயற்சியாகும். மிக அண்மையில் முஸ்லீம் பெண் தீவிரவாதப் போக்குடையவர்களால், பெண்களின் சம்மதத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் திருமணத்துக்கான ஆகக் குறைந்த வயதினை நிர்ணயித்தல் என்ற வகையில் சட்டங்களைத் திருத்தியமைக்க மேற் கொள்ளப்பட்ட முயற்சிகள் சிறிதளவிலேயே வெற்றியளித்தன.* தனித்துவ அடிப்படை அரசியலிலும், அரசாங்கத்தின் சிதைந்து போகும் வலுச்சம நிலையிலும், அரசானது வேறுபாடு கர்ட்டும் தனிப்பட்ட சட்டங்களைத் திருத்தியமைக்கும் நண்பராக விளங்குமெனச் சிறுபான்மைப் பெண்கள் , நம்பவில்லை. சமயம் அல்லது கலாசாரம் என்ற பெயரில் பெண்களுக்கு
* ஹன்சாட், தொகுதி 101, பக். 209-210.
* பார்க்க, 1990 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரத்தியேகச் சட்ட சீர்திருத்தக் குழுவுக்கு முஸ்லிம் பெண்களின் ஆய்வு மற்றும் செயற்பாட்டு மையத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை.
68

எதிராக வேறுபாடு காட்டும் நடைமுறைகளைத் தொடர்வதில் அரசு ஓர் உடன்பாடான பங்குதாரதாகவே இருந்தது.
சிறுபான்மையினரின் கலாசார உரிமைகள் மீதான அரசினுடைய போதனைகளும் அவற்றின் பெறுமானங்களின் உணர்திறனும் எல்லோருக்கும் பிரயோகிக்கக்கூடிய ஆகக் குறைந்த திருமண வயதிலிருந்து முஸ்லீம் பெண்களை விலக்கி வைப்பதில் அரசியல் நெருக்கடியின் பின்னணிகள் வெளிப்படையான முகமுடியாகவே இருந்தது. ஆனால் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் குறுகிய பாராளுமன்றப் பெரும்பான்மை இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட பல சிறிய கட்சிகளில் தங்கியிருந்தது. முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் முஸ்லீம் சமூகத்தின் பேச்சாளராக இருந்தது.* முஸ்லீம் ஆதரவினை இழக்க விரும்பாமையால், இனத்துவத் தனித்துவத்தின் துருவப்படுத்தலுடன் இணைந்த வகையில், சிறுபான்மையினர் அவர்களுடைய கலாசார மற்றும் சமய சுதந்திரத்திற்கு மாறாக நடந்து கொள்ளமாட்டார்கள் என்பதனை உணராமல், முன்னேற்றகரமான சட்டத் திருத்தங்களை உருவாக்குதலில் அரசாங்கத்திற்குப் பெருங்கஷடங்கள் இருந்தன.
இலங்கையின் சமகால நிலைமையில் சிறுபான்மைச் சமூகங்களிலுள்ள கற்றோர் குழாத்தின் அதிகாரங்கள் அவர்களது பிரத்தியேக/தனிப்பட்ட சட்டங்களுடன் மட்டுப் படுத்தப் பட்டுள்ளன எனக் கூற முடியாது. இலங்கையிலுள்ள சகல பெண்களுக்கும் செல்லுபடியாகும் பொதுச் சட்டங்கள் சார்ந்த முன்னேற்றகரமான திருத்தத்தினை, குறிப்பாக கருச்சிதைவு தொடர்பானவற்றைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை. மிக அண்மைக் காலத்தில், உள்ளுராட்சி மட்டத்தில் பெண்களுக்கான ஒதுக்கீடுகள், (1997இன் நகல் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தது) 2000ஆம் ஆண்டு ஆகஸ்டில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட வரைவில் இடம் பெற்வில்லை." ஏனெனில் முஸ்லீம் கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் பொருத்தமான பெண வேட்பாளர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டனர்.
ஆகவே, அரசுடனான பெணி களினி பேரமீ பேசுமி நிலை வரையறுக்கப்பட்டிருந்தது. சில பிரச்சினைகளில் மட்டும் அரசு பெண்களுடன் ஒத்துழைக்கலாம்; ஏனையவற்றிலல்ல, அது அக்கறையில் தங்கியிருக்கின்றது, பெண்கள் ஏன் தொடர்ந்தும் வித்தியாசமான முறையில் பிரசைகளாக
* விகிதாசாரப் பிரதிநிதித்துவமானது பாராளுமன்றத்தில் சிறுபான்மைக் கட்சிகளின்
பிரதிநிதித்துவத்தை அதிகரித்ததுடன் பாராளுமன்றத்துக்குள்ளே அவர்களின் பேரம் பேசும் சக்தியையும் வலுப்படுத்தியது. அதேவேளை பாராளுமன்றத்துக்குள்ளே பெண்களுக்குச் சாதகமான சட்டச் சீர்திருத்தங்களுக்கான ஆதரவைக் குறைத்துவிட்டது.
87 2000 ஆம் ஆண்டு ஆவணியில் நகல் அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால் பெரும்பான்மை கிடைக்காதெனத் தெரிந்த பின்னர் அதனை அரசாங்கம் மீளப் பெற்றுக் கொண்டது.
69

Page 43
உள்ளடக்கப்பட்டுள்ளனர் என்பதனை இது விளக்குகிறது. இலங்கையில் ஆண் பிரசைகளிலும் பார்க்க பெண் பிரசைகள் வித்தியாசமான முறையில் நடத்தப்படுவதற்குப் பல உதாரணங்கள்/சந்தர்ப்பங்களை எடுத்துக் காட்டலாம். குடியேற்றவாத ஆட்சியின் போது தொகுக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் பெண்களை வேறுபடுத்தி வைக்கின்றவையுமான தனிப்பட்ட சட்டங்கள் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாதனவாக உள்ளன. இத்தகைய சில வழமையான சட்டங்கள் குடியேற்றவாத ஆட்சியாளரினால் மறுபொருள் விளக்கம் செய்யப்பட்டதுடன் திரித்துக் கூறலுக்கும் உட்பட்டது. அக்காலத்தில் அவர்களுடைய சொந்தச் சட்டங்களில் நிலவிய தந்தைவழி நியமங்கள் இவர்களில் செல்வாக்குச் செலுத்தியிருந்தன. T
குடியுரிமைச் சட்டப்படி, பிறநாட்டவரைத் திருமணம் செய்யும் இலங்கைப் பெண்கள், வெளிநாட்டுப் பெண்களைத் திருமணஞ் செய்யும் ஆண்களைப் போல, தமது கணவன்மாருக்கும் பிள்ளைகளுக்கும் குடியுரிமையைப் பெற்றுக்கொள்ளும் உரிமையற்றவர்கள். தாயின் மூலம் குடியுரிமையைப் பெறும் பிள்ளைகளைப் பொறுத்தவரையில், பெற்றோர் விவாகரத்துச் செய்தல், பிரிந்துவாழ்தல் அல்லது தாய் விதைவையாதலுடன் அவள் பாதுகாப்பில் இருத்தல் மற்றும் இலங்கையில் வாழ்தல் என்பனவற்றினால் சாத்தியமாகாது. மேலும் , அணி மைக் காலம் வரையில் , வெளிநாட்டு வாழ்க்கைத் துணைகளுக்கு வதிவிட விசாவினை வழங்கும் ஒழுங்கு விதிகளும் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் வேறுபட்டனவாக இருந்தன. வெளிநாட்டுப் பெண் ஒருத்தி உள்நாட்டு ஆணைத் திருமணஞ்செய்தால், வதிவிட விசாவினைப் பெறுவதற்குத் திருமணத்துக்கான காரணத்தை மட்டும் கூறினால் போதும் என்ற நிலையில் இலங்கைப் பெண் ஒருத்தியின் வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர் ஆண்டுதோறும் US$9000 உழைக்கும் ஆற்றல் உள்ளவராக இருப்பதுடன், US $ 25,000 வங்கி வைப்பிலும் இடவேண்டும் . இந்தத் தொகை கட்டுப்பாட்டாளரின் சிபார் சின்றி விடுவிக்கப்படமாட்டாது. அத்தகைய வாழ்க்கைத் துணைகள் இலங்கையில் தொழில் தேடுவதற்கும் உரிமை மறுக்கப்படுவதுடன், அவர்கள் நிதியுதவி தொடர்பாக மனைவிமாரில் தங்கியிருக்கவும் முடியாது. இலங்கைப் பெண்ணைத் திருமணஞ் செய்த ஜேர்மன் நாட்டவரொருவர் 1999 இல் தொடர்ந்த அடிப்படையுரிமை வழக்கொன்றில், (SL விண்ணப்ப இல. 436/ 99) உச்ச நீதிமன்றமானது வதிவிட விசா வழங்குதலை இரகசியமாக நிறுத்தி வைக்குமாறும் வேறுபடுத்தும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் புதிய ஒழுங்குவிதிகளை வரையுமாறும் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளைப் பணித்தது.? வதிவிட விசாக்களை வழங்குவதில் இலங்கைச் சுதேசிகளின்
* உயர்நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அடிப்படை உரிமைகள் பற்றிய வழக்கில் பகிரங்கப்படுத்தப்பட்ட வழிகாட்டல்களின்படி 'இலங்கை நாடு தந்தை வழி மரபினைப் பின்பற்றுவதால் இலங்கையர்களின் பெண்வாழ்க்கைத் துணைக்கு மட்டுமே வழமையாக வதிவிட விசாக்கள் வழங்கப்படுகின்றன.
70

வெளிநாட்டு ஆண் பெண் துணைகளை வேறுபடுத்தாத புதிய ஒழுங்குவிதிகள் பாதுகாப்பு அமைச்சினால் 2001இல் மேற்கொள்ளப்பட்டது. இது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய இரண்டு ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றது. வெளிநாட்டவர்களுக்கு வதிவிட விசாக்களை வழங்குதல் தொடர்பான நிருவாகரீதியான வழிகாட்டல்கள் போலன்றி, தற்பொழுது அதற்குச் சட்டரீதியான அறைகூவல் உள்ளது. குடியுரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகளை நீதிமன்றத்தில் கொண்டுவரமுடியாது. ஏனெனில் இந்தச் சட்டமானது தற்பொழுதுள்ள அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ளது. நடைமுறையிலுள்ள சகல சட்டங்களையும் இந்த அரசியலமைப்பு நடைமுறைப்படுத்துவதுடன் அரசியலமைப்பு சாராத பிரச்சினைக்குரிய சட்டங்களில் சட்டத்தரணிகள் சங்கம் தடையிடவும் கூடும். பாராளுமன்ற நடவடிக்கையின் மூலமே சீர்திருத்தங்களை அடையலாம். எனினும் கடுமையாகவும் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படவில்லையானால் இதற்குரிய சாத்தியக்கூறுகள் இல்லாமல் போய்விடும். இலங்கையின் சட்ட ஆணையாளரால் பிரிவுகள் 4 இலும் 5இலும் மேற்கொள்ளப்பட்ட விதந்துரைகளில் பால் சமத்துவம், பெண்கள் எதிர்நோக்கும் நடைமுறைக் கஷ்டங்கள், தொடர்பான திருத்தங்கள் அவசியமானவை; பாதுகாப்பு அதிகாரிகள் இதுவரையில் இவற்றிற்குச் சாதகமாக இருக்கவில்லை. இலங்கைப் பெண்கள் திருமணம் என்பதன் மூலம் தம் மை வெளிநாட்டவருக்கு விற்பதுடன் அந்த அந் நியக் குடிவரவாளர்கள் நாட்டிற்குள் படையெடுக்கிறார்கள் என்பதனைக் கருத்திற் கொணர் டு இத்தகைய சட்டங்கள் ஆழமான அறிவினடிப்படையிலி பொருத்தமாக நியாயப்படுத்தப்பட வேண்டும். ஏனைய திறந்த முறையில் வேறுபடுத்தும் சட்டங்களும் உள்ளன. மகாவலி விவசாயத் தொகுதியிலுள்ள புதிய குடியேற்றங்களில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் நிலங்களைப் பெறத் தகுதியுடையவர்கள். ஒரு பெண் திருமணமானால், கணவன் பெயரில் நிலம் பதிவு செய்யப்படும்போது அவர் எதேச்சையாகவே குடும்பத்தலைவனாக அங்கீகரிக்கப்படுகிறார். இலங்கையின் பொதுச் சட்டத்தினால் இனங்காணப்பட்ட இருபக்க உரிமைசார்ந்த நியமங்களைச் சட்டமும் மீறுகிறது. இப் பிரதேசக் குடியிருப்புகளுக்கு தொடர்ந்து உரிமையாளர் ஒருவரை நியமிக்கத் தவறுமிடத்து, உரிமையானதி ஆண்கள் வழிசேர்வதுடன், குறிப்பாக எல்லோரிலும் பார்க்க வயதில் மூத்த ஆண் ஒருவருக்கு முன்னுரிமையுண்டு. 1981இன் நில அபிவிருத்திக் கட்டளைச் சட்டமானது (திருத்தியமைக்கப்பட்டது) 1935ஆம் ஆண்டின் நில அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் வேறுபடுத்தும் அட்டவணையை மீணி டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போதைய அரசியல் யாப்பு பாலி நிலைச் சமத்துவத்துக்கு உத்தரவாதம் அளிப்பதோடு பாரபட்சமான ஏற்பாடுகள் சட்டமாகும் முன்னர் அவற்றை எதிர்ப்பதற்கான வாய்ப்புகளையும் வழங்குகின்றது. இவ்வரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்ட பின்னரே இத்திருத்தம் கொண்டுவரப்பட்ட போதிலும்
71

Page 44
பொதுமக்கள் மத்தியில் சட்டங்கள் பற்றிய விளக்கமும் அறிவும் போதியளவுக்கு இல்லாதிருந்ததன் காரணமாக இக்குறிப்பிட்ட சட்ட மசோதா எவராலும் எதிர்க்கப்படவில்லை.*
பொருளாதாரத் துறையில், தாராளமயப்படுத்தும் கொள்கைகள் பெண்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ள போதிலும் தொழிலாளர் சார்ந்த பாகுபாடுகள் பால்வகை சார்ந்ததாகவே அமைகின்றன. பெண்களுடைய உழைப்புக்குக் குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது; குறைந்த பாதுகாப்புக் கொண்டது; தொழிலாளர் செறிவுடையது. அவை நீண்ட நேரத் தொழில்களாக இருப்பதுடன் தொழில்சார் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகளும் குறைவு, பொருளாதாரத்தின் இரண்டு முக்கிய துறைகளில் பெண்கள் முன்னணி வகிக்கின்றனர்; அவை சுதந்திர வர்த்தக வலயமும் மேற்கு ஆசிய நாடுகளுக்குப் பணியாளர்களாகப் புலம் பெயர்தலுமாகும். பல் தேசியக் கம்பனிகளாலும் வெளிநாட்டு வேலை கொள்வோராலும் பெண்கள் மலிவான தொழிலாளராகக் கருதப்பட்டுச் சுரண்டப்படுவதால் அரசும் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது. பெருந்தோட்டத்துறையில், 1984 வரையில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான சம்பளம் பெறவில்லை. பெருந்தோட்டங்கள் பலம்வாய்ந்த தொழிற்சங்கங்களையும், அவற்றில் பெண்களின் அங்கத்துவம் 50%க்கு மேல் இருந்துள்ள போதிலும். அச்சங்கங்களில் தீர்மானம் மேற் கொள்ளும் பங்களிப்பில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவு. பெண்களின் பொருளாதார வலுவூட்டல், நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களிப்புச் செய்வோர் என்ற வகையில் தமது உரிமைகளைப் பயன்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கக்கூடியதாக இருந்ததுடன், தமது தேவைகளைத் தெளிவாக எடுத்துக் கூறவும் அவர்களுடைய அதிகரித்த ஆற்றலை அங்கீகரிக்கவும் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் சக்தி என்பன தனியார் மற்றும் பொதுதுறைகளால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்."
அரசானது பொதுவாக, சிறந்த சுகாதாரம் மற்றும் கல்விச் சேவைகளை வழங்குதல் அல்லது வறிய பெண்களுக்கும் ஆண்களுக்கும் வருமானம் ஈட்டும் சந்தர்ப்பங்களை வழங்குதல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களில், அபிவிருத்திக்கான அடிப்படைத் தேவை அணுகுமுறையைக் கையாளுதல் பற்றிய பிரச்சினைகளில் பெண்களுடன் ஒத்துழைத்து வருகிறது. வளங்களை ஒதுக்கீடு செய்வதில் பிறழ்வு ஏற்படும்போது குறைந்தளவிலேயே அதனைச் செய்ய முடிகிறது." அல்லது தனித்துவம் மற்றும் கலாசாரத்தினைப் பேணுதல்
Goonesekere, Savitri, "Women, Equality Rights and the Constitution" in Thatched Patio (Special Issue), Vol. 3, No. 3, ICES, May/June 1990, p. 28. Kottegoda, Sepali, "The Economic Empowerment of Women since Independence', in Dialogue, Vols. XXV-XXVI, the Educational Institute for Study and Dialogue, Sri Lanka, 1999. *' Agarwal, op.cit, p. 78.
72

என்றவகையில் அவர்களுடைய வகிபங்கிற்கு பெண்கள் சவாலாக இருக்கும் போது, அல்லது நாட்டின் இனப்பெருக்குனராக விளங்கும்போது இவ்வாறு நிகழ்கிறது. ஆயினும் அரசு பெண்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் போது பெண்கள் மலினமானவர்கள், வடுப்படத்தக்கவர்கள் என்ற நிலையிலிருந்தே அதனைச் செய்கிறது. ஆகவே, அவர்களுக்கும் பாதுகாப்பு அவசியமானது. பெண்கள் தொடர்பான அரசியலமைப்பு ஏற்பாடுகள் இத்தகைய எதிர்மறைக் கருத்தினை நன்கு எடுத்துக் காட்டுகின்றன. இலங்கையின் அரசியல் அமைப் பானது, பெணி களர் அவர் களது பாலி அடிப் படையில வேறுபடுத்தப்படக்கூடாது என்பதனை ஏற்றுக்கொள்கின்ற வேளையில், பெண்களைப் பிள்ளைகளுடன் சேர்ந்த வகையிலும், வலது குறைந்தவர்களும் அவர்களது முன்னேற்றம் கருதிச் சில விஷேட ஏற்பாடுகளை அரசு மேற்கொள்வதற்குத் தகுதியுண்டு. (உறுப்புரை 12 (4) இலங்கை அரசியல் யாப்பு). 1995இல் தண்டனைச் சட்டக் கோவை திருத்தியமைக்கப்பட்ட வேளையில், சுனிலா அபேசேகர சுட்டிக்காட்டியது போல, “பாராளுமன்ற உறுப்பினர்கள் கருச்சிதைவினைத் தாராளமயப்படுத்துதல் பற்றி விவாதித்த போது, அதனை தந்தைவழியடிப்படையிலும் பாதுகாப்புவாத நோக்கிலுமே விவாதித்தார்கள். பெண்கள் உரிமை பற்றிய எண்ணக்கரு முழுவிவாதத்தின் போதும் வெளிவரவில்லை'.?
பெண்கள் பிரச்சினைகளை முன்வைக்கும் அரச இயந்திரம்: பல்நிலை அடுக்குகளும் செயற்களமும்
1970களின் பிற்பகுதியிலிருந்து, இலங்கை அரசானது பெண்களின் குறிப்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் பலவற்றை எடுத்தது. இவற்றுள் சில பெண்களின் இயக்கங்களாலும் ஏனையவை 'அபிவிருத்தியில் பெண்கள்' என்னும் பெண்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் தசாப்தத்தின் மூலமாகவும் அல்லது அபிவிருத்தி நிதியுடன் இணைக்கப் பட்ட அழுத்தத்தினாலும் வெளிவந்தன. பெண்களின் நலன்களைக் கவனிக்கவென 1978இல் உருவாக்கப்பட்ட முதல் நிறுவனம் பெண்கள் பணியகம் ஆகும். பெண்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்குரிய செயல்களை ஊக்குவித்தலே இதன் பரந்த கடமையாகும். பெண்கள் விவகாரம் தொடர்பான இணைப்பு
அமைப்பாகவும் செயற்படுகிறதுடன் தேசிய அபிவிருத்தியில் பெண்களின்
' Abeysekera, Sunila, "Some Reflection on Women's Human Rights in the Context of the Abortion Debate: Sri Lanka 1995', (Work in progress), Paper presented at the Fifth National Convention on Women's Studies, 1996.
73

Page 45
பங்கேற்பினை உறுதிப்படுத்தும் அரச கொள்கை உருவாக்கம் மற்றும் அமுலாக்கம் என்பவற்றையும் ஊக்குவிக்கிறது.* ஆனால் இப்பணியகமானது செயற்றிட்டங்களுக்கான கருத்தியல் ரீதியான வரைச் சட்டத்தினைக் கொண்டிருக்கவில்லை என்றக் குற்றச்சாட்டும் காணப்படுகின்றது. அத்துடன் இப்பணியகம் அரச அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை அமுலாக்கும் முகவரகம் என்ற நிலையிலேயே இருக்கின்றது.* இப் பணியகமானது, பெண்களுக்குரிய வருமானம் பிறப்பிக்கும் செயற்றிட்டங்களை விருத்தி செய்வதில் முக்கியமாகக் கவனஞ் செலுத்துவதுடன், இத்தகைய நிகழ்ச்சித்திட்டங்கள் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று நம்புவதுடன் பெண்கள் விவகாரங்கள் பற்றிய விழிப்புணர்வுக்கு வழிகோலி தலைமைத் துவத்தையும் வளர்க்கிறது.* அணி மைக் காலத்தில் , பணியகமானது, சட்டமும் மனித உரிமைகளும், சுகாதாரமும் போஷாக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் புலம்பெயரும் தொழிலாளருக்கான பயிற்சி போன்ற நிகழ்ச்சித் திட்டங்களைப் பொறுப்பேற்று வருகின்றது. அத்துடன் இப்பணியகமானது இரத்தினபுரி, காலி, கொழும்பு கட்டுநாயக்கா, கொக்கலை, இரத்மலானை, பியகம ஆகிய இடங்களில் ஆலோசனை நிலையங்களையும் நிறுவியுள்ளது.
பெண்கள் விவகாரங்களுக்கான தனி அமைச்சு ஒன்றும் முதன் முதலாக 1983இல் பெண்கள் குழுக்கள் மற்றும் தீவிரச் சிந்தனையாளரின் வேண்டுகோளுக்கு அமைய உருவாக்கப்பட்டது. இதன் கீழ்வரும் சகல முகவர்களினதும் நடவடிக்கைகளையும் நிதி முகாமைத்துவத்தையும் இயைபுபடுத்துதல் அமைச்சின் பொறுப்பாகும். பெண்கள் பணியகம், பெண்கள் பற்றிய தேசியக் கமிட்டி அத்தகைய முகவர்களாகும். இந்நடவடிக்கையானது, பால் வகையைப் பிரதான நீரோட்டத்தில் சேர்த்தல், கொள்கைகளை உருவாக்குதல், அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல், பெண்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களும் செயற்றிட்டங்களும் என்பனவற்றுக்காக இடம்பெறுகின்றது. 1977இல், இதற்கென அதிகளவில் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு கிடைத்ததுடன், பெண்களை வேறுபடுத்தும் சட்டங்களை மீளமைக்கும் நடவடிக்கைகளையும் தொடக்கி வைத்தது. இவை பல்வேறு அமைச்சுகளின் சகல செயற்றிட்டங்களிலும் பால்வகையை முதன்மைப்
Women's Environment and Development Organisation, Mapping progress: Assessing the Implementation of the Beijing Platform, Women's Environment and Development Organisation, 1998. Hassendeen, Shafinaz, "National Machinery on Women after Beijing',
in Post Beijing Reflections: Women in Sri Lanka 1995-2000, CENWOR, Colombo, 2000, p. 205, quoting Jayaweera.
Ibid., p. 206.
74

படுத்துவதுடன், பெண்கள் அரசுசாரா நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவும் உதவின. ஆயினும் நிறுவனரீதியான ஈடுபாடு இங்கு குறைவாக இருப்பதுடன் , அவற்றை முன்னெடுத்துச் செல் வது தனிப்பட்டவர்களிலும் தங்கியிருக்கிறது.
1981 ஒக்டோபரில் இலங்கையானது பெண்களுக்கு எதிரான சகலவித பாரபட் சங் களுக்கு எதிரான சர்வதேச சமவாயத் தினைப் பின்னுறுதிப்படுத்தியதுடன் இரண்டு மாதங்களின் பின்பே அது நடைமுறைக்கு வந்தது. 1991இல் நாடு அதன் சொந்தப் பட்டயத்தினை உருவாக்கியது. அன்று சனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச பெணிகள் பட்டயத்துக்கான அடிப்படைத் தூண்டுதலை 1990ஆம் ஆண்டில் பெண்கள் தினத்தில் வழங்கினார். பின்னர் பட்டயத்தை வரைவதற்குப் பெண் தீவிரப்போக்குடையவர்களின் உதவியைக் கோரினார். இப்பட்டயமானது பெண்களுக்கெதிரான சகலவிதமான பாரபட்சங்களையும் அகற்றுதல் பற்றிய சமவாயத்தின் (CEDAW) தராதரக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொணர் டிருந்தாலும் , இலங்கையிலுள்ள பெண்களின் சந்தர்ப்பச் சூழ்நிலைகளையும் கவனத்திற் கொணர் டது. உதாரணமாக, இது பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்குக் கூடிய அழுத்தம் கொடுத்ததுடன், பல்வகைப்பட்ட குடும்பச் சட்டங்களைத் திருத்துவதற்கான படிப்படியான அணுகுமுறைகளையும் ஏற்றுக்கொண்டது. அரசின் மீது சுமத்தப்பட்ட கடப்பாடு என்றவகையில் இன்னொரு முக்கிய ஏற்பாடானது கல்விச் சமவாய்ப்பினை உறுதி செய்தல் என்பது மட்டுமன்றி, கல்வியின் உள்ளடக்கத்தில் மாறாது காணப்படும் பால்நிலைசார்ந்த அடிப்படைகளை நீக்குதல் என்பனவற்றுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நீக்குவதற்கான சகல முயற்சிகளையும் எடுக்கவேண்டும்.* பட்டயத்தில் கூறப்பட்ட ஏற்பாடுகள் அமுல்செய்யப்படுவதைக் கண்காணிக்க பெண்கள் பற்றிய தேசியக் கமிட்டியொன்றும் உருவாக்கப்பட்டது. தேசியக் கமிட்டியானது விரைவில பெணிகளுக்கான தேசிய ஆணைக் குழுவாக மாற்றி யமைக்கப்படுவதுடன் பெண்களின் முறைப்பாடுகளை விசாரிக்கும் ஓரளவு நீதி அதிகாரங்களையும் கொண்டிருக்கும். அத்துடன் அது நியாயங்களையும் வழங்கும். பெண்களின் அரசுசாரா நிறுவனங்களுடனான கலந்தாலோசனையுடன், இலங்கையும் பெய்ஜிங் மகாநாட்டுச் செயன்முறைகளை அமுல் செய்யும் தேசிய மட்டத்திலான செயன்முறைத் திட்டத்தினை உருவாக்கியுள்ளது. இத்திட்டமானது எட்டு முதன்மையான விடயங்களை இனங்கண்டுள்ளதுடன் (இலங்கைக்கு
Coomaraswamy, Radhika, "The Women's Charter: An Introduction', in Law and Society Fornightly Review, 16 June 1992, Vol. II. No. 40,
pp. 7-9.
75

Page 46
மிகவும் பொருத்தமானவை எனக் கருதப்பட்ட) குறுங்கால, நடுத்தர மற்றும் நீண்ட கால உபாயங்களையும் அரசு சார்பாகவும் உருவாக்கியுள்ளது.*
அரசுக்கும் பெண்களுக்கும் இடையில், சட்டம் மற்றும் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்னும் வியடங்களில் பிரச்சினைக்குரிய முக்கிய பிரிவுகளும் உள்ளன. சட்டங்கள் இலங்கைப் பெண்களுக்குரிய அனுபவங்கள், அவற்றின் நடைமுறைப்படுத்தல்கள், அவை தொடர்பாக அரச நிறுவனங்கள் என்பனவற்றுடன் இலங்கைப் பெண்களுக்குரிய அனுபவங்கள், அரசினைப் பகுப்பாய்வு செய்யும் பெண்ணியவாதிகளால் எடுத்துக் காட்டப்படும் இன்னொரு விடயமாகும்.
அரசுக்கும் பெண்களுக்குமிடையில் பதட்டத்தை ஏற்படுத்தும் மற்றொரு முக்கிய விடயம் சட்டம் மற்றும் சட்ட அமுலாக்கல் தொடர்பானது. சட்டம் மற்றும் அதன் அமுலாக்கம், அரசின் பல்வேறு நிறுவனங்கள் தொடர்பான இலங்கைப் பெண்களின் அனுபவமானது பெண்ணிலைவாதிகளின் அரசு பற்றிய கருத்து நிலைப்பாட்டை விளக்குகின்றது. அதாவது இது ஒரு முனைப்பட்ட ஒரு தொகுதியாகவன்றி பல்வகைப்பட்ட மட்டங்களையும் விடயங்களையும் உள்ளடக்கியதாகும். இவ்விடயம் பற்றி அகர்வால் சுட்டிக் காட்டுவதாவது:
பால்நிலைப் படிமுறை ஒழுங்கினைக் குறைத்தல் (அல்லது வலுப்படுத்தல்) தொடர்பாக ஈடுபாட்டினையும் இவ்விடயம் பற்றிய வெவ்வேறுபட்ட விளக்கத்தையும் கொண்ட பல்வேறு தரப்பினரிடையே அரசானது பால்நிலைச் சச்சரவுக்கானதொரு தளமாக நோக்கப்பட்டது. இத்தகைய போட்டிநிலை ஒரு திணைக்களத்தில் பணிபுரியும் அரசாங்க அதிகாரிகளுக்குள்ளும் அரசாங்க அமைப்பின் வெவ்வேறு மட்டங்களுக்குள்ளும் (உதாரணமாக கொள்கையாக்கம் செய்யும் அமைப்பு அதனை நடைமுறைப்படுத்தும் அமைப்பு என்பதற்கிடையில்) அல்லது அரசாங்க அமைப் பரிணி வெவ் வேறு பிரா நீ தியக் கூறுகளுக்கிடையிலும் இடம் பெறலாம்.?
பெணிகள் எதிர் நோக்கிய பிரச்சினைகள் தொடர்பாக, பொலீஸ் உத்தியோகத்தர்கள் காட்டிய முனைப்புக்கள் எதிர்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பிரச்சினையாகும். கொழும்புப் பொலீஸ் தலைமையகத்தில் 1993இல்
* இலங்கையில் பெண்களுக்கான தேசிய செயற்திட்டம் - பால் நிலைச் சமத்துவத்தை நோக்கி, போக்குவரத்து, சூழல் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு, 1996, * Agarwal, op. cit, p. 79.
76

பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் எதிரான வன்முறைகள் தொடர்பான வழக்குகளைக் கையாள விஷேட பிரிவொன்று உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக, நாடளாவியரீதியில் 33 பொலீஸ் நிலையங்களில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்குமான பிரிவுகள் உருவாகின. இந்த பிரிவானது, பிரச்சினைகளைப் பதிவுசெய்தல், முறைப்பாடுகளைப் புலனாய்வு செய்தல் மற்றும் நீதிமன்றங்களுக்கு வழக்குகளை எடுத்துச் செல்லல் என்னும் விடயங்களைக் கண்காணிப்பதுடன், அதற்கு முதன்மையான கணிப்பையும் வழங்கியது. முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவும் 24 மணிநேரச் சேவையொன்று நடைமுறையிலிருந்தது.* ஆயினும் இவற்றின் நடவடிக்கைகள் பால்நிலைசார்ந்த வன்முறைகளுடன் ஈடுபாடு காட்டும் சட்டத்தரணிகளாலும் தீவிரப்போக்குடையவர்களாலும் விமர்சிக்கப்பட்டன. இந்தப் பிரிவில் ஆளணிப் பற்றாக்குறை இருந்ததுடன், இதனை நடத்திய பெண்களுக்கு வீட்டு வன்முறை மற்றும் வல்லுறவு பற்றிய முறைப்பாடுகளை எவ்வாறு கையாளுதல் என்பது பற்றிப் போதியளவு பயிற்சியும் வழங்கப்படவில்லை. அதேவேளையில், வல்லுறவு மற்றும் பாலியல் சார்ந்த தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகள் 1995இல் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதிலிருந்து அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது. மக்கள் வேண்டிக்கொண்டதாலும், நியாயவாதிகள் அவற்றை அமுல செய்ய வேணி டியிருந்ததாலும் 1995இல் சட்ட ஆக்கங்களுடன் இணைந்தவகையில் புதிய சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் குறிப்பான நிகழ்ச்சித் திட்டங்களும் உருவாகின என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். இதற்கு முதன்மை கொடுக்கப்பட வேண்டும் எனக் கருதப்படவில்லையாயினும், இவ்விடயம் தொடர்பாக, பெண்கள் விவகார அமைச்சின் பொறுப்புகள் போதாதுள்ளன. சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களின் தொகைரீதியான அதிகரிப்பானது இலங்கைப் பெண்களின் வாழ்க் கையில் தர அடிப் படை முன்னேற்றங்களுடன் இணைந்திருக்கும் என்பது கருத்தல்ல என்பதற்கு இதனை ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம். சில நிலைமைகளில் அரசினால் உருவாக்கப்பட்ட நிறுவனம் சார்ந்த பல பொறிமுறைகள் வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் வினைத்திறமையின்மை காரணமாக இணங்கிச் செல்ல முடியவில்லை.
மீண்டும், அரசின் இரட்டைத்தன்மை அமைப்பும், அதன் பல்வகைப்பட்ட செயற்பரப்புகளும் தற்கால இலங்கையிலுள்ள சிறுபான்மை தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களால் கூடுதலாக அனுபவிக்கப்பட்டன. உள்நாட்டுப் போர்ச் சூழலில் எல். ரி. ரி. ஈ. பிரிவினைவாதப் போராளிகளுக்கு எதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, அரசினை ஒரு
CENWOR, Evaluation of Women's and Children's Desks in Police Stations, CENWOR, Colombo, 1997.
77

Page 47
துஷ்பிரயோகி மற்றும் நிலைகுலைப்பவர் என்ற கருத்து உருவானது. கடந்த 15 வருடகாலத்தில், முரண்பாடுகளின் அதிகரிப்பு காரணமாக, ஆயுதந்தாங்கிய படையினரும் பொலீசாரும் தமிழ்ப் பெண்களினதும் ஆண்களினதும் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களாக இருந்தனர். சட்ட ரீதியற்ற கைதுகள், தடுத்துவைப்புகள் மற்றும் காணாமற் போதல், துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு அரசே பொறுப்பானதாக இருந்தது. பிணக்குகள் எப்படிப் பெண்களைப் பாதித்தன என்பதனை முன்னரே விளக்கியுள்ளோம். குடும்ப உறுப்பினரான ஆண்களை இழக்கும் கொடுமை, பிள்ளைகளை வளர்க்கும் முழுப் பொறுப்பையும் தாங்குதல் , குடும் பத்துக்கு உதவியாகவும் வாழ்க்கைக்கு ஆதரவாகவும் இருத்தல் போன்றவற்றைப் பெண்கள் ஏற்கவேண்டியிருந்தது. வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கான நேரடி இலக்காகப் பெண்கள் இருப்பதுடன், எல்லைப்புறப் பிரதேசங்களில் பாதுகாப்பு நிலைமைகளின் குறைபாடுகளாலும் துன்புறுகின்றனர். இராஜசிங்கம்சேனநாயக் கா சுட்டிக் காட்டுவது போன்று, பெண் களின் வெளி வேலைகளுக்கான அசைவும் ஆற்றலும் பலமுனைத் தாக்குதல்களில் அகப்படுதல் என்னும் அச்சத்தினாலும் சோதனை நிலையங்களில் இடம்பெறும் உடற்சோதனைகள் என்ற பால்நிலை அரசியலினாலும் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இவை வழமையாகப், பயமுறுத்தும்/அச்சமூட்டும் கலைகள், துன்புறுத்தல்கள் என்பவற்றில் பயிற்றப்பட்ட ஆயுதந்தாங்கிய இளைஞர்களால் நடாத்தப்படுகின்றன. பிணக்குகளில் ஈடுபட்டிருக்கும் இருபிரிவினராலும் போருக்குரிய ஆயுதமாக, வல்லுறவு பயன்படுத்தப்படாத போதிலும் (பொஸ்னியாவைப் போலல்லாது) அரசாங்க பாதுகாப்பு படையினர் சோதனைச் சாவடி வல்லுறவில் ஈடுபட்ட பல நிகழ்வுகள் உள்ளன." இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிகழ்வுகளில் மிகக் கொடுரமான செயலாக, செம் மணிச் சோதனைச் சாவடியின் எட்டுப் படையினராலும் ஒரு பொலீஸினாலும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியின் கொலையையும் அதனைத் தொடர்ந்து, அவரைத் தேடிச் சென்ற அவருடைய தாய், சகோதரன் மற்றும் அயலவரின் கொலையையும் குறிப்பிடலாம்.
அதேவேளையில , அதனுடைய குடிமக் களுக்கு எதிரான குற்றச்செயல்களின் காவலாகக் கருதப்படும் வேளையில் அரசு இடம் பெயர்ந்த பெண்களுக்கு நிவாரணம் வழங்க முயற்சி எடுத்ததுடன், தமிழ் மக்கள் அவர்களின் சொந்த நிறுவனங்களால் மனித உரிமை மீறல்களுக்கு உட்பட்டபோது, நியாயம் கோரும் மேன்முறையீடுகளுக்கும் பொறுப்பாக
' Rajasingham-Senanayake, Darini, 'After Victimhood: Women's Empowerment in War and Displacement', Pravada, Vol. 6 No. 2 & 3, 1999, pp. 25-30.
78

இருந்துள்ளது. அரசின் நீதிமன்றங்களும் ஏனைய பொறிமுறைகளான மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமற் போதல் மற்றும் துன்புறுத்தலுக்கு எதிரான குழு பற்றிய ஆணைக்குழு போன்றவை ஆயுதப்படைகள் மற்றும் பொலீசாரால் தமது உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களையே தமிழ் மக்களுக்கு வழங்கின. உதாரணமாக, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள பெண்கள் காணாமல் போதல் தொடர்பான ஆணைக்குழுவிடமிருந்து தமது கணவர்கள், மகன்மார் அல்லது தந்தைமார் காணாமற்போனமைக்கான இழப்பீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். கிருஷா நீ தி குமாரசுவாமி வழக்கில் , அரசாங்கமானது குற்றத்திற்கு உட்பட்டவர்களைத் தணி டிப்பதற்கு அவசரப்பட்டமையால், சட்டவாட்சியையும் குற்றவாளிகளாகக் காணப்பட்ட அதன் சொந்த முகவர்களின் மனித உரிமைகளையும் மீறியது." பெண்கள் குழுக்களால் நாட்டுக்குள்ளும் வெளியிலும் மேற்கொள்ளப்பட்ட பரந்தளவான நடவடிக்கைகளினால், இந்த வழக்கில் சர்வதேச அபிப்பிராயம் செல்வாக்குச் செலுத்தியமை தெளிவாகின்றது. ஆனால் ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல வல்லுறவு சார்ந்த விடயங்கள் அறிவிக்கப்படவில்லை; அதற்குத் தணர்டனைகளும் வழங்கப்படவில்லை. இதன் பின்னர், குமாரசுவாமியின் தீர்ப்புக் காரணமாக ஏற்பட்ட உந்துதல்கள் படிப்படியாக அழிந்து போயின. இதே போன்றே கொடுரமான ஏனைய வழக்குகள் இன்னும் தொடங்கப் படாமல உள் ளன. அரசியலமைப் புக் கு முரணான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபடும் படை உறுப்பினர்கள், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகால விதிகள் என்பவற்றின் கீழ் தப்பித்து விடுகின்றனர். அத்துடன் நீதிமன்றங்களின் தலையீடுகளினால் தனிப்பட்ட நிலைமைகளிலேயே அநீதிகள் களையப்பட்டுள்ளன. இவை சட்டங்களிலும் பார்க்க விதிவிலக்கானவை. பக்கச்சார்பான கைதுகள், காணாமல் போதல், துன்புறுத்தல் போன்ற அரச முகவர்களின் செயல்கள் அறிவிக்கப்பட வேண்டியவை; மனித உரிமைகள் ஆணைக் குழுவானது, அவற்றை நிரூபிப்பதிலும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. 1988-1989 ஆண்டுகளில் நாட்டின் தென் பகுதியில் காணமற்போனவர்களின் குடும்பங்களுக்கு அரசினால் இன்னும் கணக்குக் கூறமுடியவில்லை.
அரசானது, UNHCR போன்ற சர்வதேச முகவர்களுடன் இணைந்த வகையில் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நலன்களுக்கும் அவர்களுடைய புனருத்தாரணம் மற்றும் மீள்குடியேற்றம், பிணக்குகளின் போது பாதிப்புக்குள்ளான நகரங்கள் மற்றும் புனர்நிர்மாணம்
' Kois, Lisa, 'Beyond the Rhetoric: Human Rights and Breakdown of the Law-The Krishanti Kumaraswamy Case', (unpublished outline for a
paper).
79

Page 48
என்பனவற்றிற்குப் பொறுப்பாக இருந்துள்ளது. ஆயினும் ராஜசிங்கம்சேனநாயக்கா வாதிடுவது போல, அரசினால் மேற்கொள்ளப்பட்ட அநேகமான நிவாரண முயற்சிகள், தனிப்பட்ட கொடுரங்களின் போது பெண்களுக்கு வலுவூட்டும் உதவிகளிலிருந்து மீள்வதற்கு எங்ங்ணம் உதவலாம் என்பதைக் கண்டறியவில்லை. மேலும் அவர்கள் கூறும்போது. நீண்டகால ஆயுதப் பிணக்குகளாலும் இடப்பெயர்வினாலும் நிகழ்ந்துவரும் சமூக மாறுதல்களின் போது, பெண்களுக்கு வலுவூட்டுவதற்கு கலாசாரரீதியாகப் பொருத்தமான மற்றும் வினைத்திறன் மிகுந்த உபாயங்களை வகுப்பதற்கு முயற்சிப்பதிலும் பார்க்க, அரசாங்க நிவாரணமும், புனருத்தாரண அதிகாரசபையும் அரசுசாரா நிறுவனங்களும் ஒழுங்கு செய்யும் பல்நிலை சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்கள் பல இன்னமும் மரபுசார் அபிவிருத்திச் சிந்தனைகளுடனேயே இருந்து வருகின்றன என எடுத்துக்காட்டியுள்ளனர்.
80

IV
அரசினை மீளுருவாக்கும் பெண்கள்
'பெண்களே, மிண்டும் தொடங்குவதற்கு இதுவே சந்தர்ப்பம் உங்களுடைய நிலைமையையும் எமது நரிலைமையையும் பற்றி மறுபடியும் சிந்தித்துப் பாருங்கள், நாங்கள் சாதித்து விட்டோம் என்று சொன்னால் மட்டும் போதாது. மற்றவர்கள் எம்மிது சுமத்தியுள்ள வரையறைகளை நாம் கடந்து செல்ல வேணடும். எமக்கு முனனாலர் இருக்கக் கூடிய புதிய சாதகமான, அரசாங்கபூர்வமான சாதத7யக்கூறுகள் எவையெனர்பதை நாம் நோக்குதல் வேணடும். பெண்கள் என்ற முறையில் நாம் ஒன்றிணைந்து சாதிக்க முடியும். அத்தோடு நாம் ஒன்றிணைந்து சமாதானத்துக்காகப் போராடும்
பெண்களாக உருப்பெற முடியும் '?
குடியேற்றவாத ஆட்சிக்குப் பின்வந்த இலங்கை அரசு கூடியளவில் மத்தியமயப்படுத்தப்பட்டதாகவும், நலன் சேவை இயல்புடையதாகவும் இருந்ததுடன் அதில் உயர்குழாத்தினைச் சேர்ந்த பூஷ்வாக்கள் முதன்மை பெற்றிருந்தனர். கடந்த 25 ஆண்டுகளில் இதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1977இல் திறந்த பொருளாதாரத்தை நோக்கிய நகர்வானது அரசின் பொருளாதார வகிபங்கில் அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவையை உருவாக்கியது. பொருட்களையும் சேவைகளையும் வழங்குதல், பகிர்ந்தளித்தல் என்ற நிலையிலிருந்து மாறி, தனியார் துறையினரால் உற்பத்தியையும் பகிர்வையும் மேற்கொள்வோராக மாறியது. அரசு சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி முறை போன்ற சமூகநலன் வசதிகளைக் கட்டுப்படுத்தும் முதல் முயற்சியை எடுத்தமையை இச் செயன்முறை எடுத்துக் காட்டுகின்றது. இவை நாட்டினால் தாங்க முடியாத அளவுக்குச் செலவினை ஏற்படுத்தின. ஆகவே சுகாதாரம் மற்றும் கல்வி மீதான அரசாங்கத்தின் செலவினம் மொத்தத் தேசிய உற்பத்தியின் விகித அளவில், இத்தகைய சேவைகளுக்கான கேள்வி கூடுதலாக அதிகரித்ததுடன் ள கடந்த இரண்டு தசாப்தங்களிலும் ஏறக்குறைய நிலையானதாகவே இருந்துள்ளன. பாதுகாப்புச் செலவில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டமையால்,
* Women for Peace, op. cit.
81

Page 49
நலன்சேவை அரசு என்பதும் முற்றுகைக்குள்ளானது. சுதந்திரத்துக்குப் பின்வந்த காலத்தில், 1970கள் வரையில், இலங்கையின் பாதுகாப்புக்கான வரவு செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5% இலும் குறைவாக இருந்ததுடன், 1980களின் தொடக்கத்தில் 1% அளவிலேயே காணப்பட்டது. 1983 ஆம் ஆண்டு தொடக்கம், பாதுகாப்புச் செலவு படிப்படியாக அதிகரித்து 1996 அளவில் மொத்த உள் நாட்டு உற்பத் தியில் 6% மாக மாற்றமடைந்தது.1°
1977 ஆம் ஆணி டு தொடக்கம் நிலவிய அமைப்புரீதியான சீராக் கல களும் வர்த்தகத் தாராளமயமாக்கலும் , பெண் களினி வேலைவாய்ப்பில் முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியது. மாறுநிலைக் கம்பனிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட, விரிவடைந்து வரும் பூகோளப் பொருளாதாரத்தில் அரசின் நுழைவுடன், தொழிலாளர் மற்றும் இயற்கை வளங்களின் பெறுமானங்களைத் தீர்மானிக்கும் மத்திய நடுவராகச் சந்தைகள் தோற்றம்பெற்றன. இந்த மாற்றத்துக்குள்ளாகும் காலத்தில் அரசானது அதனுடைய பெண் குடிமக்களின் தேவைகளைப் பாதுகாக்க இயலவில்லை. சுதந்திர வர்த்தக வலயங்களிலும், மத்திய மாகாணத்திலுள்ள மரக்கறி விவசாயிகள் மத்தியிலும் உள்ள பெண் தொழிலாளரது போராட்டங்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். இவ் விடயமானது, பொது விருப்பங்கள், பொதுப் பொருட்களை மேம்படுத்துதல் தொடர்பாக அரசின் அதிகாரம் குறைந்து செல்லல் என்பனவற்றுடன் இணைந்திருந்தது. சந்தைகள் திறக்கப்பட்டதனாலும், மலிவான பொருட்கள் கிடைத்தமையினாலும் சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த பெண்கள் பலர் வாழ்க்கையைப் பேணும் மரபுவழிமுறைகளை இழந்தனர். சுவர்ணா ஜயவீர எடுத்துக்காட்டுவது போல, நெசவுக் கைத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டாகும். 1970களில் நெசவுத்துறையில் ஈடுபட்டிருந்த 60,000 பேரில், 40,000 பேர் கட்டில்லாச் சந்தைக் கொள்கைகளின் (free market policy) அறிமுகத்தினால் வேலையிழந்தனர். ஏனையவர்கள் அடுத்த சில வருடங்களுக்கு வாழ்க்கைக்காகப் போராடினர்."
அபிவிருத்தியிலும் யதார்த்த அரசியலிலும் இடம்பெற்ற இத்தகைய மாற்றங்களுடன், அரசு/அரசாங்கமே பிரதான சேவைகளை வழங்குவதாகவும், தமது பிள்ளைகளுக்கு வேலை கொடுப்பவர்களாகவும் இருக்கின்றது என
' Institute of Policy Studies, Sri Lanka: State of the Economy 1999,
Institute of Policy Studies, Colombo, October 1999.
' Jayaweera, Swarna, "Structural Adjustment Policies, Industrial Development and Women in Sri Lanka, In Mortgaging Women's Lives: Feminist Critiques of Structural Adjustment, Zed Books. London, 1994, pp. 96-115.
82

இலங்கைப் பெண்கள் கருதினர். இவற்றின் தொடர்ச்சியானது, அவர்களுடைய சொந்த வாழ்க்கைக்கு அத்தியாவசியமாக இருந்தது. இதனால், அரசு பற்றிய பெணி களின் அனுபவங்களுக்கும் அவர் களைப் பற்றிய அரசின் எதிர்பார்ப்புகளுக்குமிடையில் கணிசமான இடைவெளி காணப்பட்டது. இத்தகைய முரண்பாடுகள் பரந்த மனப்பான்மை கொண்ட நலன்சேவை அரசின் மீது கொண்ட விரக்தியுணர்வு காரணமாக பல சந்தர்ப்பங்களிலும் வெளிக்காட்டப் படவில்லை என்பதுடன், ICES ஆய்வுகளில் அரசு/ அரசாங்கமானது சில முக்கியமான விடயங்களில் அதன் பொறுப்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டுமென்பதை எதிர் பார்க்கின்றது. ICES ஆய்வொன்றில் விடைதந்தோரில் 50.4 சத வீதத்தினர் சமூகச் சீர்திருத்தங்கள், சமூக சேவைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் என்பனவற்றை முக்கிய விடயங்களாக இனங்கண்டனர். ஆயினும் 30.6 சத வீதத்தினர் அரசுக்குள்ள நலன்சேவை சார்ந்த சுமைகள் அளவுக்கதிகமானவை என்பதுடன் இவை சிவில் சமூகங்களுக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் மாற்றப்படக கூடியவை, இந்த விடயங்களை வினைத்திறனுடன் கையாளக் கூடிய நிலைமை இத்தகைய நிறுவனங்களுக்கே உள் ளது எனக் குறிப் பிட்டனர். சமுதாயத்திலுள்ள தீவிர செயற்பாடு கொண்ட அரசுசாரா நிறுவனங்களால் பேணப்படும் உயர் நோக்குத் தொடர்பாக, 65 சத வீதமானோரின் அபிப்பிராயப்படி அரசுசாரா நிறுவனங்கள் மூலமாகச் சமூக மாற்றத்துக்குப் பணியாற்றுவது நல்லது எனவும் எடுத்துக்காட்டப்பட்டது.
இலங்கையும் மத்தியமயப்பட்ட அரசிலிருந்து பரவலாக்கம் கொண்ட அரசாங்கமாக மாறுவதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தமானது மர்காணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படுவதனை எடுத்துக் காட்டுவதுடன், ஆட்சியைப் பாதிக்கும் மாற்றங்கள் சார்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் அவை நடைமுறைப்படுத்தவும் பட்டன. எனினும் பரவலாக்கத்தின் உறுதிமொழிகள் அடையப்படவில்லை. மத்தியமயப் படுத்தப் பட்ட கலாசாரத்துடன் வினைத்திறன் மிகுந்த பரவலாக்கம் செய்யப்படுதல் பெருந்தடையாகக் காணப்பட்டது. உள்ளுர்மட்ட நிறுவனங்களான, மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் கூட உள்ளுர்ச் சமூகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரங்களைக் குறைவாகவும், சிறதளவு நிதியையுமே கொண்டிருந்தன. அநேகமான மக்கள், பெண்கள் உட்பட, தீர்மானம் மேற்கொள்ளல் மற்றும் ஆளுமை என்னும் விடயங்களில் ஓரங்கட்டப்பட்டிருந்தனர். ஆய்வுக்குட்பட்ட பல ஆண்களும் பெண்களும் சமுதாயம் பற்றிய தீர்மானம் மேற்கொள்ளலில் தமக்குக் கருத்துக் கூறும் வாய்ப்பு இல்லையெனத் தெரிவித்தனர்.
மீண்டும், பரவலாக்கம் பற்றிய மக்களின் அனுபவத்திலிருந்து, பல பணிக்குழுவாட்சியின் சிக்கல்நிலையும் தடைகளும் காரணமாக ஆண்களும்
83

Page 50
பெணிகளும் சட்டம், நீதி, நிதியும் வரிகளும், சமூக நலன்களும் பாடசாலைகளும் நீர் மற்றும் வீடு போன்ற பிரச்சினைகளைக் கவனிக்க மத்தியமயப்படுத்தப்பட்ட அரசாங்கத்திலேயே கூடுதலாகத் தங்கியிருக்க வேண்டியிருந்தது. உள்ளுர் மட்டத்தில் அத்தகைய விடயங்களை நன்கு செய்யலாம் என்பதனை மிகச் சிலரே உணர்ந்திருந்தனர் (பார்க்க: அத்தியாயத்தின் இறுதியிலுள்ள அட்டவணை) மறுபுறத்திலே, வளங்களின் உரிமை போன்ற பிரச்சினைகள், காடுகள், பாவனைப் பொருட்கள், தண்ணிரும், கனியங்களும் போன்றவை அரசுக்குச் சொந்தமானவை என 42% தொடக்கம் 56%மான ஆண்களும் பெண்களும் கருதியிருந்தாலும் குறிப்பிடத்தக்களவு சிறுதொகையினர் (32% தொடக்கம் 40%) இத்தகைய வளங்கள் மீது உரிமைகொள்ளலாம் என்பதை உணர்ந்திருந்தமை, மக்கள் நம்பிக்கையுடன் அரசு அவற்றை வைத்திருக்கலாம் என்ற உண்மையை வலியுறுத்துகிறது. அத்தகைய வளங்களின் நிர்வாகம் மற்றும் பேணுதலும் பற்றிய பொறுப்பு அரசிடமே இருந்துள்ளன.
தமது வாழ்க்கையைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க சமூக மற்றும் கிராமிய மட்டங்களில் ஒழுங்குகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களும், ஊக்குவிப்புக்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகக் குறைவாக உள்ளன. இந்த ஆய்வில் அடங்கும் சில சக்திவாய்ந்த பெண்கள் ஒழுங்கமைப்புகள் நியமத்திற்குட்படாதவையாயினும் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில், தம்மையும் தமது சமூகங்களையும் வலுவூட்டவும் உள்ளுர் மட்டங்களில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கவும் ஆயத்தமாக இருந்தன. பொதுவாக, சமூகமட்ட நிறுவனங்களில் பெண்களின் பங்கேற்பானது மரபுரீதியான நலன் சேவை நோக்குடைய நிறுவனங்களுடனும் கடன் சங்கங்களுடனும் பெருமளவில் மட்டுப்படுத்தப் பட்டிருந்தன. இந்த ஆய்வில் 39.5% மட்டுமே சமுதாய நிறுவனங்களில் உறுப்புரிமை பெற்றிருந்த வேளையில் , 61.1% மான ஆணர்கள் ஏதோ வகையான சமுதாயமட்ட நிறுவனங்களில் உறுப்புரிமை பெற்றிருந்தனர். ஆயினும் சமூகமட்ட நிறுவனங்களில் ஆண்களினதும் பெண்களினதும் பங்கேற்பு பிரதானமாக மரண உதவிச் சங்கங்களில் (Maranadara Samithis) காணப்பட்டன. (இவை, அண்மையில் மரணமான ஒருவரின் குடும்ப உறுப்பினருக்குப் பணம் மற்றும் ஏனைய உதவிகளை வழங்குபவை) சமுதாய நிறுவனங்களில் பங்கேற்கும் பெண்களில் பெரும்பாலும் அரைப் பங்கினர், 43.7% மரண உதவிச் சங்கங்களிலேயே உறுப்பினராக இருந்துள்ளனர். 17.2% சமுர்த்தி நிறுவனங்களிலும் 13.5% சனச வங்கிச் சங்கங்களிலும் 9.7% பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களிலும் உறுப்பினராக இருந்தனர். ஆண்களில் 75% மரண உதவிச் சங்கங்களில் அங்கத்துவம் வகித்தனர் (அட்டவணை 4). சமுதாய நிறுவனங்களில் பெண்கள் பங்கேற்காமைக்கு நேரமின்மை, ஆண்களின் ஈடுபாடு, கிராமம் அல்லது நகரத்தில் சங்கங்களின் செயற்பாடு இல்லாமை மற்றும் ஆர்வமின்மை ஆகிய காரணங்களைக் கூறலாம் (அட்டவணை 5).
84

அட்டவணை 4: சமுக நிறுவனங்களில் உறுப்புரிமை
நிறுவனங்கள் பெண் මෙර්ෙග්r
தொகை 1 % தொகை %
கூட்டுறவுச் சங்கம் 16 8.6 1. 2.7 கிராம அபிவிருத்திச் சங்கம் 15 8.1 5 13.8 சமய நிறுவனங்கள் 26 14.0 6 16.6 மரணவுதவிச் சங்கங்கள் 81 43.7 27 750 சர்வோதயம் 10 5.4 l 2.7 F6F8F 25 13.5 3 8.3 சமூர்த்தி 32 17.2 6 16.6 இளைஞர் ஸ்தாபனம் 13 7.0 5 13.8 பெண்கள் ஸ்தாபனம் 31 16.7 பாடசாலை அபிவிருத்திச் சங்கம் 18 9.7 1 2.7 ஏனையவை 34 18.3 5 13.8
அட்டவணை 6: பாங்கேற்காமைக்கான காரணங்கள்
நிறுவனங்கள் பென் ஆண்
தொகை % தொகை %
செயற்பாடற்ற சங்கம் 42 14.9 11. நேரமின்மை 56 19.9 38.9 குடும்பத்திலுள்ள ஏனையவர்களின் ஈடுபாடு 44 15.6 இடம் புதியது 33 1.7 5 27.7 ஈடுபட விருப்பமின்மை 2 74 - விருப்பமின்மை 30 10.6 1 5.6 சந்தர்ப்பமின்மை 29 0.3 2 1. பிரயாணம் கடினமானது 3 1.1 ஏனையவை 9 3.2 தெரியாது 3 1.1 பதிலில்லை 12 4.2 5.6 மொத்தம் 282 100.0 18 100.0
85

Page 51
பால்நிலைச் சமநிலை அரசு?
தற்கால இலங்கை அரசின் இன்னொரு பண்பு பற்றி நாங்கள் ஏலவே குறிப்பிட்டிருந்தோம். ஆயினும் அளவீடானது, பெண்களும் ஆண்களும் அதிகளவில் பால்வகைச் சமநிலையுடைய அரசினையே எதிர்பார்த்துள்ளனர் எனத் தெரிவிக்கின்றது. முறைசார் அரசியல் தொடர்பாக ICES அளவீட்டிற்கு உட்பட்ட பெரும்பாலான பெண்கள் (86.8%) தமது ஆண் துணைவர்களுடன் (85.2%) சேர்ந்து பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதனைக் கொள்கையளவில் ஏற்றுள்ளனர் என்பதுடன் அரசியல் ஆண்களுக்குரிய செயற்பாடு அல்ல என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். ஆயினும் தேர்தலில் போட்டியிட தமக்குச் சந்தர்ப்பம் இருந்தாலும் தாம் அவ்வாறு செய்யமாட்டோம் என 72.4% பெண்கள் கூறியுள்ளனர். அதற்கு அரசியலையே பிரதான காரணமாகப் (20.8%) பெண்கள் கூறியுள்ளனர். ஏனெனில் அரசியலில் ஈடுபடுதல் குடும்பப் பொறுப்புகளில் தலையிடுவதாக (19.2%) அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 17 சத வீதமானோர் தமது சுய ஆற்றலின்மை மற்றும் பெறுமதியின்மை என்பனவற்றைக் காரணங்களாகக் கூறினர். முறைசார் கல்விக்கு அப்பால், பெண்களை எதிர்மறையாக நிலைப்படுத்தும் சமூகப் பழக்கவழக்கங்களும் சக்திவாய்ந்த தடைகளாகத் தொடர்ந்தும் செயலாற்றுகின்றன. இன்னும் 9.6% மானவர்கள், தாம் போதியளவில் கல்வி பெறவில்லை என்பதனையும் தெரிவித்தனர். இத்தகைய பெறுமதியற்ற தன்மை, இன்னொரு வகையில், விடைதந்த பெண்களின் வெளிப்படையான கற்றலின்மையைத் தற்கால அரசியல் கலாசாரத்தை மாற்றும் சக்தியற்ற தன்மையிலும் பிரதிபலித்தது. (இத்தகைய ஆற்றலை 2% த்தினர் மட்டுமே உறுதிப்படுத்தியிருந்தனர்)
பெரும்பாலும் பதிலிறுத்தவர்களில் சமதொகையினரான ஆண்களும் தாம் தேர்தலில் போட்டியிடமாட்டோம் எனக் கூறியிருந்தனர். 20.5 சத வீதமானோர் தாம் அரசியலை விரும்பவில்லை என்றும், மேலும் 17.5% தாம் சமகால அரசியல் கலாசாரத்தை விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். ஆண்களின் மத்தியில் கூட, ஆற்றலின்மை (10.2%), கல்வி போதாமை (12.8%) என்பன தேர்தலில் போட்டியிடாமைக்கான காரணங்களாகக் கூறப்பட்டிருந்தன. ஆயினும் 63.3% மான பெண்களும் 57.4% மான ஆண்களும் ஆண்களிலும் பார்க்கப் பெண்கள் அரசியலில் ஈடுபாடு காட்டுவது மிகக் கடினம் என்னும் கருத்தில் உடன்பாடு கொண்டிருந்தனர்.
பெண்களுக்கான ஒதுக்கீடுகள்
அரசியல் நிறுவனங்களில் பெண்களின் குறைவான பிரதிநிதித்துவம் இலங்கைக்குப் பிரத்தியேகமானதன்று. மிகச் சில விதிவிலக்குகளுடன், இதனை ஓர் உலகளாவிய போக்காகக் கூறலாம். ஆயினும், தற்பொழுது
86

பெண்கள் அரசியல் நிறுவனங்களில் முக்கிய இடம்பெறுவது, பெண்களின் முன்னேற்றத்துக்கும் வலுவூட்டலுக்கும் அவசியமானது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எமது சனத்தொகைக் கூட்டினைச் சரியாகப் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமன்றி, (பெண்களின் தொகை சனத்தொகையில் 50% மேலாக உள்ளது) பெண்களின் அக்கறைகள் மற்றும் விருப்பங்களும் முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கு உறுதி செய்யப்படுதல் முக்கியமானது. இவற்றினை அடைவதற்கான ஒரு வழியாக பெண்களுக்கான பங்கீடு அல்லது ஒதுக்கீட்டினைக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ளுராட்சி அல்லது பஞ்சாயத்துகளில் 33% ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதனால், பெரும்பாலும் ஒரு மில்லியன் பெண்கள் இத்தகைய நிறுவனங்களுக்குள் கொணிடுவரப்பட்டதுடன் , அவை உள்ளுர் மட்டத்தில் அதிகாரச் சமநிலையையும் குறிப்பிடத்தக் களவில் உருவாக்கி வருகின்றன. இலங்கையில், அரசாங்கத்தின் சகல மட்டங்களிலும் பெண்களுக்கான ஒதுக் கட்டுதி தேவைகள் அவசியம் என்பதைப் பெணி தீவிரப் போக்குடையவர்கள் வலியுறுத்திய போதிலும் அவை அரசியல்வாதிகளின் வாதத்துக்கு இன்றும் இலக்காகியுள்ளன. உள்ளுராட்சிமட்ட ஆசனங்களில் 25% ஒதுக்கீடுகள் என்னும் ஏற்பாடு, புதிய அரசியல் யாப்புக்குரிய அரசாங்கத்தின் ஆலோசனைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது." இந்த விடயம் அங்கீகரிக்கப்பட வேண்டியது எனக் கருதப்பட்டதுடன், கிராமியப் பெண்கள் வாக்களித்தல் மற்றும் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்று இருந்தாலும் உள்ளுராட்சிச் சபைகளில் பால்நிலைச் சமநிலையின்மை பரந்தளவிலுள்ளது. உள்ளுர்மட்ட அரசியலானது மாகாண அல்லது தேசியமட்ட அரசியலிலும் பார்க்கப் பெண்களுக்கு மிகவும் வாய்ப்பானது எனக் கருதப்பட்டுள்ளது. உள்ளுர் மட்டத்தில் மாத்திரமே அரசியல் பின்னணியின்றி வரும் பெணி னொருத்தி, பணரீதியான உதவியின்றிப் பொது அரசியலில் வெற்றிகரமாக ஈடுபட முடியும் . இந்த மட்டத்திலும் பெண் களின் பிரதிநிதித்துவம் மிகக்குறைவாகும். கடந்த 25 வருடங்களில் நடத்தப்பட்ட உள்ளுராட்சித் தேர்தல்களின் புள்ளிவிபரப்படி பெண்களின் பிரதிநிதித்துவம் 5% மேல் அதிகரிக்கவில்லை. இளைஞர் பங்கீடுகூட இளம் ஆண்களுக்குச் செய்தது போல இளம்பெண்களுக்கு நன்மை பயக்கவில்லை." ஆயினும் அரசியலமைப்பு வரைவினை 2000ஆம் ஆண்டு ஆகஸ்டில் விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட போது, அந்த ஏற்பாடு, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க உள்ளடக்கப்படவில்லை.
* பந்தி, 42 ஆவது பிராந்தியப் பட்டியல், 1997 நகல்வரைபு.
* 1990 இல் இருந்து இளைஞர் ஆணைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையின் காரணமாக உள்ளுராட்சி மற்றும் மாகாண அரசாங்க வேட்பாளர்களில் 40 சத வீதம் இளைஞர் வேட்பாளராக இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. அதாவது 18-35 வயதுக்கிடையில்.
87

Page 52
போதியளவு பெண் வேட்பாளர்களைத் தேடுதல் கடினம் என்பதனை அவர் உணர்ந்திருக்கலாம்.
உண்மையிலே பெண்களுக்கான ஒதுக் கீடு பற்றிய ஏற்பாடு அரசாங்கத்தின் முயற்சியினால் உள்ளடக்கப்பட்டதே தவிர நாட்டிலுள்ள பெண்கள் குழுக்களின் எடுத்துக்காட்டுதல்களின் விளைவாகவன்று. கடந்த மூன்று ஆண்டுகளில், பெண்கள் குழுக்கள் தீவிரமாகச் செயற்பட்டு, அரசியல் நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத் தீர்மானம் மேற்கொள்ளும் அமைப்புகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் போதியளவில் பெற்றுக்கொள்ள ஈடுபாடு காட்டின. இது இலங்கைப் பெண்கள் தொடர்பாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயமாக இருந்தது. 1999 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் மற்றும் 2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களின் வேட்புமனுத் தாக்கலின்போது, இலங்கைப் பெண்களின் அரசுசாரா நிறுவன அரங்கம், பெண்களுக்கான தேசியக் குழு உட்பட்ட பல பெண்கள் குழுக்கள் சகல அரசியல கட்சிகளையும் ச நீ தரித து, பெணி களுக்கான பல வேட்புமனுத்தாக்கல்களுக்கு வேண்டுகோள் விடுத்தன. 1997 இல் நடைபெற்ற அரசுசாரா அமைப்புகளின் மகாநாட்டில் இரண்டு வருட ஊடக பிரச்சாரமாக பெண்களின் அரசியற் பங்கேற்பு முதல் கருப்பொருளாக (பெண்கள் அமைப்புகளின் ஒரு கூட்டு) பெய்ஜிங் மகாநாட்டின் செயற்பாட்டுக்கான பிரச்சினைகளை தேசிய மட்டத்தில் அறியச் செய்வதனைக் கவனத்தில் கொண்டிருந்தது. 2000 ஆம் ஆண்டு ஆகஸ்டில் 25 சதவீத ஒதுக்கீடு மீளப்பெற்றுக்கொண்டதன் காரணமாக, அதனை மீண்டும் அரசியலமைப்பு வரையில் சேர்த்துக் கொள்ள, பெண்கள் குழுக்கள் இப் பொழுது பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன.
பெண்களுக்கான பங்கீடு என்னும் விடயம் பற்றிய கலந்துரையாடல்கள் இரணிடு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. முதலாவதாக ஒதுக்கீட்டுக்கான திட்டவட்டமான விகிதாசாரம். இரண்டாவதாக, மாகாண/ பாராளுமன்றதேசியமட்டங்களில் ஒதுக்கீட்டுக்கான தேவைகள் பங்கீடு பற்றிய விகிதாசாரத்தில் பெண்களிடையே உடன்பாடுகள் இல்லை. சிலர் உயர்ந்தபட்சம் 50% த்தைக் கோருகின்றனர். ஏனையவர்கள் 40% அல்லது 30% த்துடன் இணங்கிச்செல்ல விரும்புகின்றனர். பெண்கள் குழுக்கள் 33% த்துக்கு உடன்பட விரும்புகின்றன. உள்ளுர் மட்டத்திலான ஒதுக்கீடுகள் போதாது எனப் பெண்கள் குழுக்கள் தெளிவுபடுத்தும் அதேவேளையில், மிகப்பொருத்தமான மற்றும் பயன்படக்கூடிய விதத்திலான ஒதுக்கீடு ஒன்றினை ஆகக் குறைந்தது பெண்களுக்கு பாராளுமன்ற மற்றும் மாகாணமட்ட அரசாங்கங்களில் நடைமுறைப்படுத்துதல் பற்றிய வாதங்களும் இடம்பெறுகின்றன. இவை தேசியப்பட்டியல் ஒன்றினைப் பயன்படுத்துவதன் மூலம் இடம்பெறலாம். இலங்கையிலுள்ள தேர்தல் முறைமையின் கீழ், 50 உறுப்பினர் கொண்ட தேசியப் பட்டியலானது 225 உறுப்பினர் கொண்ட பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 22 சத வீதமான இடங்களை ஒதுக்குவதற்கு
88

உத்தரவாதமளிக்கலாம். இந்த 50 இடங்களும், போட்டியிடும் அரசியற் கட்சிகள் தேசியமட்டத்தில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் விகிதாசாரத்துக்கு ஏற்ப ஒதுக்கப்படும் போது, பெண்களை மாத்திரம் பிரேரிக்கும்படி கட்சிகளைக் கட்டாயப்படுத்தலாம். இத்தகைய ஆலோசனையானது தற்பொழுது இடம்பெறுகின்ற கலவரங்கள் மற்றும் நிதிச் சுமைகளைக் கவனிப்பதற்குப் பெண்களை அமர்த்துதல் என்ற நடைமுறைப் பிரச்சினைக்குச் சிறந்த தீர்வாக இருக்கும்.
நாம் பேசியுள்ள பல உயர் தொழில்களில் ஈடுபடும் பெண்கள் அரசாங்கத்தில் சகல மட்டங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் வேண்டும் என்னும் தேவையை ஏற்றுக்கொள்கின்ற வேளையில், அவர்கள் பட்டியல் முறைக்குச் சார்பாகவுள்ளனர். அவர்கள் தேர்தற் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு விரும்பவில்லை. பாரிய செலவு, வன்முறைகள், கலவரங்கள் காரணமாக அதனை விரும்பவில்லை. பெண் தூதுவரும், புகழ்பெற்ற தீவிர செயற்பாடு கொண்டவருமான மானெல் அபேயசேகர, அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஒரு துண்டுமுறைப் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதை வெறுக்கிறேன் என்றும்; ஆயினும் அதற்கு மாற்றுவழி ஒன்றில்லை என்றும் தெரிவித்துள்ளார். பட்டியல் முறை அதற்குரிய சில குறைபாடுகளைக் கொண்டது. எனினும் அந்தப் பட்டியலானது ஏலவே அதிகாரத்திலுள்ள அரசியல் வாதிகளின் மனைவிமாரையும் மகள் மாரையும் கொணி டு நிரப்பப்படமாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஒரு பெண் மாநகரசபை உறுப் பினர் எங்களுக்குச் சுட்டி காட்டியது போல, அதிகாரத்திலுள்ளவர்கள் அவர்களது சொந்த உறவினர்கள் மற்றும் மனைவிமாரைக் கொண்டே பட்டியலை நிரப்புவர். இன்றைய அரசியலில் தனிப்பட்ட நன்மைகளே இடம்பெறுகின்றது. அதனாலேதான் எதுவும் நடைபெறவில்லை. ஒதுக்கீட்டுப் பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் முறைக்கு அப்பால், ஏனைய பல அடிப்படைப் பிரச்சினைகளும் நிலவுகின்றன. 1931இல் முதலாவது அரசாங்க சபை தொடக்கம் அரசியல் நிறுவனங்களில் பெண்களின் பிரதிநிதித்துவ விகிதாசாரம் கூடுதலாகவோ, குறைந்ததாகவோ இருந்தபோதிலும் அரசியல் அலுவலகங்களிலுள்ள பெண்களின் தொகை பல வருடங்களாக அதிகரித்து வந்துள்ளது. 1994ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் 55 பெண் வேட்பாளர்கள் இருந்தனர். எனினும், பொருத்தமான, தகுதியுடைய பெண் வேட்பாளர்களையும் ஆண் வேட்பாளர்களையும் தேடுவது பிரச்சினையாக இருந்தது.
ஆயினும் மொத்த அளவில் பார்க்கும்போது ஒதுக்கீடு பற்றிய ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும் என்பதில் உடன்பாடுகள் உள்ளன. CBS அளவீட்டின் போது நேர்காணலுக்கு உட்பட்ட 85.7% பெண்களும் 85.2% ஆண்களும் பெண்களுக்கான ஒதுக்கீட்டினை அங்கீகரிப்பதாகத் தெளிவாக எடுத்துக் காட்டியிருந்தனர். பெண்களின் அரசியல் ஆற்றல் மற்றும் தலைமைத்துவ ஆற்றல் பற்றி ஆண்களுக்கும்
89

Page 53
பெண்களுக்கும் இடையே நிலவிய கருத்துக்களும் சாதகமானவையாக இருந்தன. 90% பெண்களும், 92.2% ஆண்களும் அரசியல் என்பது ஆண்சார்ந்த செயலன்று என்பதனைத் தெளிவாக உறுதிப்படுத்தியிருந்தனர். 73.7% பெண்களும் 72.2% ஆண்களும் அரசியல் நிறுவனங்களில் பால்நிலைச் சமத்துவம் காணப்படுதல் நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்தும் என்ற அபிப் பிராயத்தைத் தெரிவித்தனர். அத்தகைய நிலைகள் அரசியல் வேட்பாளர்கள் என்ற வகையில் பெணி களின் பங்கேற் புக் கான பேச்சுவார்த்தைகளுக்குரிய வலுவான அடிப்படையாக விளங்கும் என்பதனையும் எடுத்துக் காட்டியதுடன், 15.8% பெண்களும் 18.4% ஆண்களும் மட்டுமே அரசியற் பிரதிநிதித்துவம் பற்றிய தமது தெரிவினைக் கணிப்பிடுவதில் பால்நிலையை முக்கியமெனக் கருதினர். பெண்கள் சிறந்த முறையில் பொது மற்றும் அரசியற் தீர்மானங்களை மேற்கொள்பவராக இருக்க மாட்டார்கள் என 78.8% பெண்களும் 79.5% ஆண்களும் உடன்பாடு கொண்டிருக்கவில்லை.
பெண்கள் அரசியல்ரீதியாகச் செயற்படுபவராக இருத்தல் வேண்டும் என 26.6% பெண்கள் உணர்ந்தனர். ஏனெனில் அவர்கள் பெண்களின் பிரச்சினைகளை நன்கு அணுகுவர் என்ற முறையில் பெண்களுக்கு அரசியலை மாற்றியமைக்கும் ஆற்றல் உணர்டென 19.6% ஆண்கள் எண்ணிேனர். பெண்கள் மத்தியில் 2.0 சத வீதத்தினர் மட்டுமே தமக்கு அத்தகைய மாற்றியமைக்கும் ஆற்றல் உண்டெனக் கூறினர். இதனைத் தொடர்ந்து பார்க்கும் போது ICES அணியினர், தமது குழுநிலைக் கலந்துரையாடல்களில் பெண் அரசியல் வாதிகள் பெணிகளின் பிரச்சினைகளைக் கையாளக் கூடிய மனோநிலை உடையவர்களாக இருக்கின்றனரா எனக் கண்டறிய முற்பட்டனர். இதனடிப்படையில் பெண் அரசியல்வாதிகளுக்குச் சுற்றாடல், பெண்கள் விவகாரம் மற்றும் சுகாதாரம் போன்ற "இலேசான அமைச்சுக்களை வழங்குதல் மூலம் திருப்திப்படுத்தலாம். இத்தகைய நேர்காணல்கள் மற்றும் குழுமுறைக் கலந்துரையாடல்கள் மூலம் வெளிவந்த வலுவான கருத்துக்கள் யாதெனில் உள்ளுராட்சி மட்டம் மற்றும் மாகாண, பாராளுமன்ற மட்டங்களில் தரரீதியான வேறுபாடுகளைக் கொண்டு வருவதற்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டால், அரசியற் செயல்முறைகளில் வாய்ப்பினைப் பெற்றுப் பணியாற்றும் பெண் அரசியல்வாதிகள் தீவிரமான பால்நிலை உணர்வுமிக்கவர்களாக இருப்பதுடன் மாற்றங்களைக் கொண்டு வருவதில் ஈடுபாடுடையவராகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய சவாலை ஏற்கப் பெண் அரசியல்வாதிகள் எவ்வளவுக்கு ஆயத்தமாக உள்ளார்கள்?
அரசு, ஆட்சிமுறை மற்றும் அரசியலுடன் பெண்களுக்குள்ள ஈடுபாடு
சட்டசபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தமது உரிமையை வாக்காளர் என்ற வகையில் பயன்படுத்தும் போது, இலங்கையிலுள்ள
90

பெண்கள் பலர் மரபுரீதியாக, அரசியல் மற்றும் ஆட்சிப் பிரச்சினைகளின் செல்வாக்குக்குப் பெரிதும் உட்பட்டுள்ளனர். பெண்கள் வாக்குரிமை பெற்ற காலம் தொடக்கம் அது முக்கியமானதொரு குடியியற் பொறுப்பாக இருந்ததுடன் தேர்தற் செயன்முறைகளிலி அவர்களின் உற்சாகமான பங்கேற்பும் இருந்தது. தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளில் காணப்பட்ட நீண்ட வரிசைகளில் ஆண்களும் பெண்களும் சமதொகையினராக இருந்தனர். ஆகவே 1977 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட பொதுத்தேர்தல்களில் பெண் வாக்காளரின் பங்கேற்பு வீதம் ஆண்களுக்கு அண்மித்திருந்தது. மொத்தமாகப் பார்க்கும்போது, ஒவ்வொரு தேர்தலிலும் இது 80% த்திற்கு அதிகமாக இருந்தது." ICES அளவீட்டின் படி 67.3 சத வீதமான பெண்களும், 68.5 சத வீதமான ஆணிகளும் அளவீட்டிற்கு முன்னர் நடந்த தேர்தலில் வாக்களித்திருந்தனர்.
ஆயினும், பெண்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றிய அவர்களின் தீர்மானங்களில் குடும்பத்தின் செல்வாக்கு காணப்பட்டது. இலங்கையின் கிராமப் புறங்களில் இடம்பெற்ற குடும்ப அடிப்படையிலான வாக்களிப்புக் கோலங்களின் செல்வாக்கானது, தனிப்பட்டவர்களின் விருப்பத்திற்கு முரணானது என்பதுடன், அதுவும் குறிப்பிட்ட வீதாசாரத்தைக் கொண்டிருந்ததுடன், அளவீட்டின்படி 33.1% மான பெண்கள் குறிப்பிட்தொரு கட்சிக்கு வாக்களித்தமைக்கு, அக்குடும்பம் ஒரு கட்சியைச் சார்ந்திருந்ததுடன், அங்கு தீர்மானங்களை மேற்கொள்வதில் ஆண் அங்கத்தவர்கள் முக்கியமான வகிபங்கினை ஏற்றிருந்தனர். (தமது வாக்களிப்புப் பற்றிய தீர்மானங்களில் குடும்பரீதியான வாக்களிப்புக் கோலம் செல்வாக்குச் செலுத்தியதாக 11.1 சத வீதத்தினரும், இன்னும் 3.1 சத வீதத்தினர் தமது குடும்பம் எப்பொழுதும் ஒருவருக்கு வாக்களித்தமையால் தாமும் தனிப் பட்ட ஒருவருக்கே வாக்களித்தனர் என்றும் கூறியிருந்ததுடன், எப்பொழுதும் தமது குடும்பம் குறிப்பிட்டதொரு குடும்பத்துக்கு வாக்களித்தமையால் தாமும் அவ்வாறே செய்தனர் என 8.0 சத வீதத்தினரும் கூறுகின்றனர்) தமது குடும்பத்திலுள்ள ஆணிகள் வாக்களித்தது போல 9 சத வீதமானவர்கள் மட்டுமே வாக்களித்தனர் எனத் தெரிவித்தனர். இத்தகைய குடும்பரீதியான வாக்களிப்புக் கோலத்தின் பல்வகைத் தன்மைக்கு மத்தியில் கட்சியின் கொள்கைகளும், முக்கியத்துவமற்ற வகிபங்கினைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் குறிப்பிடுதல் வேண்டும் என்ற கருத்தும் 20.2 சத வீதமாக இரண்டாம் இடத்தில் இருந்தது. இத்தகைய போக்கானது, இரு வேட்பாளருக் கிடையில் வாக்களிக்கக் கோருமிடத்து, வாக்காளர் ஒருவர் கருத்திற் கொள்ளும் முக்கியமான நியதிகள் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் நிலவி வந்தன. அச்சந்தர்ப்பத்தில் 27.9 சத வீதமானவர்கள் தனியாள் ஒருவர் எக்கட்சியைச்
*” Kamalawathie, I.M., op. cit
91

Page 54
சார்ந்தவராக இருக்கின்றார் என்பதைப் பொறுத்து அமைவதாகக் கூறினார். ஒரு கட்சிக்குரிய பற்றுறுதியில் குடும்பம் முக்கியத்துவம் பெற்றால், அதனைப் பொறுத்தே தனியாளுடைய நேர்மை, நாணயம், தலைமைத்துவம் போன்ற பண்புகளும் இடம் பெறும். வாக்களிப்புக்கு அப்பால், ஒரு சில பெண்கள் மாத்திரமே கிராமிய மட்ட அரசியல் முயற்சிகளில் தீவிர பங்கேற்றுள்ளனர். எடுத்துக்காட்டாக, 15.4 சத வீதமான பெண்கள் மாத்திரமே அரசியற் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கும் பொழுது 35.2 சத வீதமான ஆண்கள் அரசியற் கட்சிகளில் உறுப்பினராக இருந்தனர். இவ்வாறான பெண்களில் ஒரு சிலரே மத்திய அல்லது கிளை மட்டத்தில் குழு உறுப்பினர்களாக இருந்த்துடன் மேலும் சிலரே பதவிகளையும் வகித்தனர்.
இலங்கைப் பெண்கள் தமது வாழ்க்கையில் கட்டுப்பாடுகளையும் அரசியற் செயன்முறைகளில் ஈடுபாடும் காட்டுவதற்கு ஏற்ற வகையில் உண்மையிலே வலுவூட்டப்பட்டிருந்தால், அரசியல், ஆட்சிமுறை, சனநாயகம் மற்றும் அரசு பற்றிய எண்ணக்கருக்கள் பற்றிய பெண்களின் விளங்கிக் கொள்ளலை விரிவுபடுத்த வேண்டிய தேவையிருந்திருக்கும். எழுத்தறிவு நிலை பற்றிய மிகைப்படுத்தல்களும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக வெளிவரும் தற்போதைய அரசியற் செய்திகள், விவாதங்களை அறிதலும், அரசியல் பற்றிய பெண்களின் புரிந்துணர்வும் கருத்துகளும் அரசியல் அதிகார அமைப்பு, வாக்களிப்பு, தேர்தல் செயன் முறைகள் தொடர்பாக வரையறுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு சில பெண்கள் மாத்திரமே அரசியலை ஒரு பல்பரிமாண எண்ணக்கருவாக விவரணம் செய்ததுடன், குடியியல் உரிமைகள் மற்றும் பொருளாதார சமூக உரிமைகளையும் தாங்கி நிற்கின்றனர். இலங்கையிலுள்ள ஆண்களும் பெண்களும் சனநாயக வழித்தோன்றும் ஒதுக்கீடு பற்றிய கருத்தினைப் போதியளவில் மதிக்கவில்லை. ICES ஆய்வானது, அரசு பற்றிய புரிந்துணர்வினை இலக்காகக் கொண்ட வினாக்களைக் குறிப்பாக வினவியது. கணிசமான பெரும்பான்மைப் பெண்கள் (ஏறக்குறைய 66.0%) கிராமியக் குடிசைகளில் வசிக்கும் பெண்கள் தொடக்கம் நகர அரசியல் தலைவர்கள் வரையில் தலைமை வகிக்கும் பெண்கள் நாட்டிலுள்ள பொருளாதார வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டங்களை நன்கறிந்திருந்தனர். எனினும் அரசுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் உள்ள வேறுபாடுகளைக் கண்டுகொள்ளவில்லை அல்லது அரசாங்கத்தினை அரசின் இயந்திரமாக மட்டும் பார்க்காது, அது மக்களுக்கு நேரடியாக விடை கூற வேண்டிய, மக்களால் தெரிவு செய்யப்பட்ட தற்காலிக அமைப்பு எனவும் அவர்கள் காருதுகின்றனர். ஆயினும் 81.6 சத வீதமானவர்கள் அரசாங்கம்/ அரசு தம்மைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்னும் உரிமையைத் தாமாகவே கோரினர். அதில் 23.3 சதவீதத்தினர் தாம் குடிமக்கள் என்ற காரணத்தால்தான் இது இடம் பெற்றுள்ளது எனக் கூறினர்.
92

அரசின் குடிகளாக இருப்பதால் உருவாகும் குடிசார் பிரதிநிதித்துவம் பற்றிய பரந்த வினாவும், குடியுரிமையின் காரணமாக உள்ளார்ந்த உரிமைகளைக் கோருதலும் சில கவனக் குழுசார் கலந்துரையாடல்களிலும், தனிப்பட்ட நேர்காணலிலும் எழுப்பப்பட்டன. அவை சில ஆர்வமூட்டும் அகக்கட்சியைத் தோற்றுவித்தன. வடமேல் மாகாண பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பின்வருமாறு தனது கருத்தினைத் தெரிவித்தார். அதிகாரத்துக்கு வரும் எந்த அரசாக இருந்தாலும் நாம் அரசில் பங்கு கொள்கின்றோம். உதாரணமாகக் கூறுவதானால், நான் கிராமத்தில் ஒரு கிணற்றினை அகழ வேண்டியுள்ளதெனில். எனில் இந்த அரசாங்கம் அதற்குப் பணம் தரவேண்டும். அதற்குக் குரல் கொடுக்கவும் கோரவும் எமக்கு உரிமையுண்டு.?
மேலும், ஆய்வு மதிப்பீட்டின்படி பெண்களில் 23 சத வீதத்தினர், அரசுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் வேறுபாடு கணிடதுடன் அவ்வேறுபாடுகளை விளக்குவதில் கஷ்டங்களையும் எதிர்நோக்கினர். பல்வேறு வழிகளில் வேறுபாடுகளை எடுத்துக்காட்டுவதற்கு மிகச் சிறிய தொகையினர் முயற்சித்தனர். ஒரு வகையிலே, அரசு என்பது ஒரு தொடரான செயற்பாடு என்றும் அதனுள்ளேயே அரசாங்கம் இடம் பெறுவதுடன், கால இடைவெளியோடு அது தொடர்கிறது எனவும் கண்டனர். இத்தகைய நோக்கில் அரசாங்கமானது, அரசியல் அமைப்பினை ஆள்கின்ற ஒரு கருவியாகக் கருதப்பட்டது. அரசாங்கத்தினை மாற்றும் அதிகாரம் தமக்கு உண்டென விடைதந்தோர் எண்ணினர். ஆனால் அரசு அவ்வாறானதன்று. ஏனையோர் அரசாங்கமானது குறிப்பிட்ட சில விருப்பங்களைப் பிரதிநிதித்துவம் செய்வது போல அரசு எல்லா விடயங்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. அரசு என்ற அமைப்பின் மூலமாகவே சகல சமூகங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். பின்னர் கூறப்பட்ட கருத்தினைச் சிறுதொகையினரே வெளிப்படுத்தினர் (கொண்டிருந்தனர்). அவர்கள் எல்லோரும் ஒரேவிதமான கல்வியைப் பெற்றவர்களாகவோ அல்லது, அரசியல் விஞ்ஞானத்தைக் கற்று அல்லது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதன் மூலம் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்கள் அல்லர். இந்தியத் தமிழ்ச் சிறுகடை உரிமையாளர், தென் இலங்கையிலுள்ள ஒரு காய்கறி வியாபாரி, மற்றும் பிரதேசசபை உறுப்பினரான பெண் ஆகிய மூன்று விடை தருவோரிடம் கூடுதலான வேறுபாடுகள் காணப்பட்டன என்பதுடன், அவர்கள் வழமையான பெண் அரசியல்வாதிகளிலிருந்தும் வேறுபட்டுக் காணப்பட்டனர். அவர்களுடைய அபிப்பிராயங்கள், சமூக விவகாரங்களைக் கருத்திற் கொண்டதும், அவர்களுக்கு விருப்பமான விடயங்களைச் சார்ந்துமே அமைந்திருந்தன. இவை பெரும்பாலும் தங்களின் மீள் பரிசீலனையாகவும், கலந்துரையாடலாகவும் அமைந்தன. எனினும் தனிப்பட்ட முறையில் பெண் அரசியல்வாதி பின்வரும் கருத்தினை எடுத்துக் காட்டுகின்றார்:
* குமாரி எக்கநாயக்கவுடனான நேர்காணல். அங்கத்தவர், மாவத்தகம பிரதேச
F6).
93

Page 55
அரசாங்கம் என்பது ஆளுங்கட்சியாகும். மறுபுறத்தில் அரசு என்பது ஆளுங்கட்சியை உள்ளடக்கியது. எதிர்க்கட்சி என்பது சிறு கட்சிகளையும் சிறுபான்மையினரையும் கொண்டது. இது எல்லா மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறது. இத்தகைய எல்லாக் கட்சிகளிலிருந்தும் கருத்துக்களும் ஆலோசனைகளும் வெளிவருவதுடன், அரசாங்கமானது வேறுபட்ட குரல்கள் மற்றும் வேறுபட்ட தேவைகளில் கவனமெடுத்தல் வேண்டும். அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் (அரசு) இடையிலான தொடர்பாடல் வழிமுறைகளை மாற்றுதல் வேண்டுமென நான் நினைக்கின்றேன். அரசாங்கம் அரசுக்குச் செவிமடுக்க (36)J60iii (6Lö."°
எங்களால நடத்தப் பட்ட நேர் காண லி மற்றும் கவனக் குழுக் கலந்துரையாடல்கள் என்பவற்றிலிருந்து, பெண்கள் எவ்வாறு அரசியலில் பங்கேற்பதை விளங்கிக் கொள்கின்றார்கள், அனுபவிக்கின்றார்கள் என்னும் வினா, முழுச் சந்தர்ப்பத்திலும் அரசியற் கட்சிகள் மற்றும் அரசியல் செயன்முறைகளில் ஆழப் பதிந்த மயக்கத்திலிருந்து தெளிவைப் பிறப்பிக்கின்றது. இத்தகைய மயக்கத் தெளிவானது, அரசியலோடு பதியப் பெற்ற கலவரங்களிலிருந்து மாத்திரமன்றி, தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தமது சேவை வழங்கும் வகிபங்கினைச் சரிவர நிறைவு செய்ய முடியாமையினாலும் உருவானது எனலாம். மேலும், இத்தகைய விடைகள் பெண்கள் தமது குடியியல் சமூகப் பொறுப்புக்களை வினைத்திறனுடன் மேற்கொள்வதை உறுதி செய்தல் என்ற வகையில் பொறுப்புகளைக் கடந்து செல்லுதல் என்ற நிலையினூடாகவே வந்தது. ஆகவே நிலம், சமூகம், கூட்டம் மற்றும் நீதி போன்ற விடயங்களில், விடைதந்தோர், சமூகத்தில் தீர்மானம் மேற்கொள்ளுதல் மீது செல்வாக்குச் செலுத்தும் உரிமையைப் பூரணமாகத் தட்டிக் கழிக்கும் போக்குக் காணப்பட்டது.
ஆட்சிச் செயன்முறை பற்றிய மட்டுப்டுத்தப்பட்ட புரிந்துணர்வினால், இலங்கைப் பெண்கள் கூடுதலான பால்நிலைச் சமத்துவம் மற்றும் பால்நிலை - அகிம்சை அரசு என்னும் நோக்குடையவர்கள் என்பதனை CBS ஆய்வில் சுட்டிக்காட்டும் விடயங்கள் உள்ளனவா? அத்தகைய அரசொன்று எப்படி அமைக்கப்படலாம்? CES குழுவுக்கு வித்தியாசமான கண்ணோட்டங்களையே நேர் காணல கள் வழங்கின. உள்ளுராட்சி அரசியல் வாதியான பெண்ணொருத்தி மிகக்கடுமையாகப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
* குசுமா இரட்நாயக்கவுடனான நேர்காணல். பிரதேச சபை அங்கத்தவர், தலாவ,
அனுராதபுரம்.
94

பெண்கள் தனிப்பட்ட அரசியல் கட்சிகளான பூரீலங்கா சுதந்திரக் கட்சி, (SLFP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) போன்றவற்றில் தொடர் நீதும் ஈடுபடுவது வருந்தத் தக்கது என நான் நினைக்கின்றேன். ஆற்றலும் இயலுமையுமுடைய பெண்கள் கட்சிகளாலனி றிச் சுதநீ தரமான நிறுவனங்களால தேர்ந்தெடுக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவதுடன், நாட்டின் நிலைமைகளையும் கல்வியின் முக்கியத்துவத்தையும், தொகுதியில் இடம்பெறும் குறைபாடுகளையும் அவர்களுக்குக் கற்பித்தல் வேணி டும். தலைமைத் துவப் பணிபுகளில் அவர்களுக்குப் பயிற்சி வழங்குதல் வேண்டும். தாம் விரும்பிய கட்சியைத் தெரிவு செய்யக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். இத்தகைய பெண்கள் அவர்கள் குறிப்பிட்ட அரசியற் கட்சியில இரு நீதாலோ அலி லது சுதநீ திரமாகப் பணியாற்றினாலோ, அவர்கள் சமூகத்தின் நன்மைக்காக உழைத்தல் வேண்டும்.
இவர் ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர். எனினும் இவருடைய கருத்துக்கள் கூடுதலாக ஆண்களை மையமாகக் கொண்ட மற்றும் உயர் கட்சி அமைப்பில் வேலை செய்த அனுபவங்களிலிருந்து வருகின்றன. பெண் அரசியல்வாதிகளிடையே “பெண் அதிகாரம்' பற்றிய சில உணர்வுகள், கட்சி வேறுபாடுகளின்றிக் காணப்படுகின்றது. ஓர் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உள்ளுராட்சி உறுப்பினர், மக்கள் ரீமாவோ பண்டாரநாயக்கவையும் சந்திரிக்கா குமாரதுங்கவையும் மேற்கோள் காட்டும் போது, தான் குழப்பமடைவதாகவும் , நாட்டைக் கெடுத்துவிட் டவர்கள் பெணி அரசியல் வாதிகளே என்றும் குறிப்பிடுகின்றார். இவ்வாறானதொரு வசனத்தைக் கேட்கும் போது அது எம்மைக் குழப்பமடையச் செய்கிறது. ஆயினும் பெண்களுக்கான அதிகாரம் போதாது ஏனெனில், மக்கள் பெண்களுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியமில்லை. இது எதிர்காலத்தில் மாற்றமடையும். ஏனெனில், மக்கள் இரு பெரும் கட்சிகளுடனும் மனச்சோர்வடைந்துள்ளனர். ஆயினும் இதற்குக் காலஞ் செல்லும்.
மேலும், பிரதேசசபைப் பெண் உறுப்பினர் ஒருவர் குறிப்பிடும் பொழுது உள்ளுராட்சி சபைகளில் ஆகக் குறைந்தது 40 சத வீதமான பெண்கள் பங்கேற்க வேண்டும் என எடுத்துக் காட்டினார். ஒரு பெண் என்ற வகையில், கட்சிகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து பணியாற்றுதல் சாத்தியமானது என்பதுடன், இரு பக்க அணுகுமுறையைக் கடைப் பிடித்தல், சில பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் சாத்தியமானது. நான் சில சமயங்களில் தனிமையை உணர்கிறேன்." எல்லாவற்றிலும் மேலாக, CES ஆய்வானது
" குசுமா இரட்நாயக்கவுடனான நேர்காணல். பிரதேச சபை அங்கத்தவர், தலாவ,
அனுராதபுரம்.
95

Page 56
இலங்கையில் பெண் வாக்காளர்கள் அரசினை மாற்றியமைக்கும் ஆற்றல் அற்றவர்கள் என்பதை எடுத்துக் காட்டியுள்ளமை போதாது. ஆனால் அத்தகைய அதிகாரத்தை அவர்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் கோர முடியும். அரசாங்கமானது முக்கியமாக பால்நிலை சார்ந்த விவகாரங்களை நிறைவு செய்யலாம் என்னும் மனப்பாங்கினைக் கொண்டிருக்கிறது. மேலும், நாட்டிலுள்ள பெண்கள் குழுக்கள் இத்தகைய விவகாரங்களை எதிர்கொள்ள விரும்பவில்லை.
அரசு பற்றிய எண்ணக்கரு குறிப்பாக தந்தைவழி, நலனளிக்கும் அரசு எனும் எண்ணக் கரு பற்றிய மாயையை இல் லாதொழித்தல் முக்கியமானது. இலங்கைவாழ் பெண் வாக்காளர்களின் உளப்பாங்கில் அடிப்படையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியதொரு தேவை இருக்கிறது. இதனூடாக அவர்கள் அரசு பற்றிய தமது புதிய எதிர்பார்ப்புக்களையும் அரசியற் செயன்முறைகளையும் பயன்படுத்திப் பிரதான அரசியல் நீரோட்டத்தில் ஏற்கனவே இணைந்துள்ள பெண்களை அரசியல்ரீதியாக நிர்ப்பந்திக்கலாம். அரசியல் நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகள் அமர்ந்திருக்கும் பொழுது தேசிய அரசியல் நிகழ்ச்சித் திட்டத்தையும் மாற்றியமைக்கலாம். அரசு பற்றிய பெண்களின் பார்வைகள், அரசியற் கலாசாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது பற்றிய அவர்தம் நோக்குகள் அரசின் அமைப்பு என்பன உள்ளுர் மற்றும் தேசிய மட்டக் கொள்கைகளை உருவாக்கும் வகையில் மறுசீரமைக்கப்படல் வேண்டும். அத்தகைய கொள்கைகள் பெண் பிரசைகளின் தேவைகள், நிலைமைகள் என்பவற்றைப் போதியளவு உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். ஆட்சிமுறையின் போக்குகளில் இது செல்வாக்குச் செலுத்துவதினூடாக நாட்டின் சகல மக்களினதும் அபிலாஷைகளை யதார்த்தபூர்வமாகப் பிரதிபலிக்கும் வகையிலான ஓர் அரசினை ஏற்படுத்த இது உதவும்.
96

அட்டவணை 6: சட்டம் மற்றும் நீதிக்கான பொறுப்பு
சட்டம் மற்றும் நிதிக்கு பெண்கள் ஆண்கள் யார் பொறுப்பாக
இருக்க வேண்டும்
மத்திய அரசாங்கம் 278 59.4 28 51.8 உள்நாட்டு அரசாங்கம் 1 0.2 நிறைவேற்று 39 8.3 5 9.3 சட்டத் துறை 36 7.7 3 5.6 நீதித் துறை 3 0.7. l 1.8 காவல் துறை 34 7.2 5 9.3 நிர்வாக சேவை 20 4.3 6 . மக்கள் 5 1.1 3 5.6 தனியார் துறை அரசுசாரா நிறுவனங்கள் - அரசு + மக்கள் அரசு + தனியார் 3 0.7 - - யாருமில்லை OWO - ஏனையோர் 1. 0.2 l 1.8 தெரியாது 48 10.2 2 3.7 மொத்தம் 468 100.0 54 100.0
அட்டவணை 7: வரிகள் மற்றும் நிதிகளுக்கான பொறுப்பு
வரிகள் மற்றும் நிதிகளுக்கு பெண்கள் ஆண்கள்
யார் பொறுப்பாக
இருக்க வேண்டும்
மத்திய அரசாங்கம் 299 63.8 40 740 உள்நாட்டு அரசாங்கம் 8 1.7 2 3.7 நிறைவேற்று O 2.1 1 1.8 சட்டத் துறை 36 7.7 1 1.8 நிர்வாக சேவை 39 8.4 4 7.4 மக்கள் 3 0.7 1.8 தனியார் துறை - அரசுசாரா நிறுவனங்கள் - அரசு + மக்கள் 1 0.2 a அரசு + தனியார் 2 0.5 யாருமில்லை - ஏனையோர் 1 0.2 தெரியாது 69 14.7 5 9.3 மொத்தம் 468 100.0 54 100.0

Page 57
அட்டவணை 8: சமுகநலனுக்கான பொறுப்பு
சமுகநலனுக்கு பெண்கள் ஆண்கள் யார் பொறுப்பாக
இருக்க வேண்டும்
மத்திய அரசாங்கம் 36 67.5 30 70.3 உள்நாட்டு அரசாங்கம் 1 0.2 நிறைவேற்று 15 3.2 2 3.7 சட்டத் துறை 32 6.8 1. 1.8 நிர்வாக சேவை 31 6.6 6 11.1 மக்கள் 13 2.8 - தனியார் துறை 1 0.2 - அரசுசாரா நிறுவனங்கள் 9 1.9 1. 1.8 அரசு + மக்கள் 6 1.3 அரசு + தனியார் 3 0.7 l 1.8 யாருமில்லை ஏனையோர் 1 0.2 3 5.6 தெரியாது 40 8.6 2 3.7 மொத்தம் 468 100.0 54 100.0
அட்டவணை 9 பாடசாலைகள், நீர் மற்றும் வீடமைப்புக்கான பொறுப்பு
பாடசாலைகள், நீர், பெண்கள் ஆண்கள் வீடமைப்புக்கு யார் பொறுப்பாக இருக்க வேண்டும்
மத்திய அரசாங்கம் 315 67.3 36 66.6 உள்நாட்டு அரசாங்கம் 22 4.7 1 1.8 நிறைவேற்று 7 15 2 3.7 சட்டத் துறை 45 9.6 1 18 நிர்வாக சேவை 46 9.8 9 16.7 மக்கள் 8 1.7 1.8 தனியார் துறை 1 0.2 - அரசுசாரா நிறுவனங்கள் 1 0.2 அரசு + மக்கள் - அரசு + தனியார் 5 1.1 யாருமில்லை - - ஏனையோர் - 5.6 தெரியாது 18 3.9 3.7 மொத்தம் 468 100.0 54 100.0
98

0°00 I WS |0°00 I 89ỹ [0°00's þS |0’00 I 89ţ | 0°00'L Þs || 0:00 I 89ţ |0’00I Þs || 0:00 I 89#gi@gẫugle) -- 19 L 99 ||6 || I |z-9 6z | - - |z-9 6z |- - [89 zɛIĢIrmự1@e) L'ɛ z |L’I 8 |6| I |wo z | -- | Z’0 I6. I l soo zf0c09Tm10900919 |-1 |z,'O I ||-- |z:0 | | -- |Z’0 I |-- |ZrO I || 'sgio II o ‘IG-4-osio L’8 Z | L*| 8-- loz ( 6 | -~ | ¡7°Z | I || 9°ç 9 | 8" | 8ĴurnĻ9$+ !oso 0L L SLL 00 0L S SLL S 0L L SLL L SLL L SLL L S L0L LLS00L |-- | †7°0 --- || 9°0 $ | -- - -|-6. I | | Ş | L |q|199f9IŪĶĪ· Loos@ L’8 Z | ț7°0 Z6’I I 1970 9 || 9° 9′ Z | £” I 9 | 9o 9 Z |#7’0 ZGjøs@sırnıyog, 907 ZZ||S’9ɛ OLI 1907 ZZ || 89 811 | 6'8% iz |Logg 8çi |0'Lo oz|gozɛ zsiĮ9oqoqi L’Ċț7 · 97 |#7'6ț7 I 9 Ż |Z’8ț7 9Z || #7’0$ 99 Z | 6" IS 8Z |6’yç LçZ |0, 09 LZ 10^{7ç ÇçZ电ft5书 % (190919 | % (12,919 || % (1,919 | % (190919 | % (190919 | % (1,919 | 94 · 190919 | 94 · 1,919 ****sel seosene | seosesse lleogene | iesprese | sezone | sposofiepossorių9qı9)ņaesneg) ஒஒடுஞ ollaigí su puo popīgħırıų9ņụcoop心論Ileopg)ırıņemri .999)பeĶegum
dico s-a spojeoņılılere : 01 lorowere-ızılç
99

Page 58
ஆய்வுத் துணைகள்
Abeyesekera, Sunila, Organising for Peace in the Midst of War, Experiences of Women in Sri Lanka in From Basic Needs to Basic Rights. Women's Claim to Human Rights edited by Margaret Schuler, Washington D.C., Women, Law and Development International, 1995 Abeygunawardene, Violet. Hilda, Consey, Samanmalie. H.I., Rosa, Kumudhini, Da Bindu - A Space for Women Workers in Many 'Paths, One Goal: Organising Women Workers in Asia, Committee for Asian Women, 1991 Abeysekera, Sunila, Some Reflections on Women's Human Rights in the Context of the Abortion Debate: Sri Lanka 1995 (Work-inProgress), paper presented at the Fifth National Convention on Women's Studies, Colombo, CENWOR, 1996 Adele Ann. Women Fighters of Liberation Tigers, released by the
publications section of the LTTE, 1993 Agarwal, Bina, A Field of One's Own: Gender and Land Rights in South
Asia, Cambridge University Press, 1994. Carr, Marilyn, Chen, Martha, and Jhabvala, Renana. (Eds) Speaking Out: Women's Economic Empowerement in South Asia, Vistaar Publications, 1998 Coomaraswamy, Radhika, The Principle of Universality and Cultural Diversity, in DIALOGUE, Legal Perspectives, Documentation File No. 35. Coomaraswamy, Radhika. Civil Society, A South Asia Perspective, paper presented at meeting on “Civil Society and Governance in South Asia' organised by ICES, Colombo on 29th August 1998. Coomaraswamy, Radhika, The Tiger Women and the Question of Emancipation in "Pravada', Vol. 4, No.9, Colombo, Social Scientists Association, 1996 Coomaraswamy, Radhika. The Women's Charter: An Introduction in "Law and Society Fortnightly Review", Colombo, Law and Society Trust, 16th June 1992 De Alwis, Malathi, "Gender, Politics and the 'Respectable Lady" in Unmaking The Nation. The Politics of Identity and History in Modern Sri Lanka, edited by Pradeep Jeganathan and Quadri Ismail , Colombo, Social Scientists Association, 1995
100

De Alwis, Malathi, Motherhood as a Space of Protest in Appropriating Gender: Women's Activism and Politicized Religion in South Asia edited by Patricia Jeffery and Amrita Basu, Routledge, 1998 De Alwis, Malathi, The Moral Mother Syndrome in “Pravada", Vol.6, No. 2&3, Colombo, Social Scientists Association, 1999 De Alwis, Malathi. Towards a Feminist Historiography: Reading Gender in the Text of the Nation in An Introduction to Social Theory, edited by R. Coomaraswamy & N. Wickremasinghe, Konark Press, Delhi, 1994 De Mel, Neloufer & Muttetuwegama, Ramani, Sisters in Arms: The Eksath Kantha Peramuna, “Pravada”, Vol 4, No. 10 & 11, Colombo, Social Scientists Association, 1997 De Mel, Neloufer & Nasry, Laila, Distorted Politics, The Wayamba Elections: Setting a Trend?, "Options', No. 17, First Quarter, Colombo, Women and Media Collective, 1999 De Mel, Neloufer, Crossing the Issues - Mother Politics and Women's Politics: Notes on the Contemporary Sri Lankan Women's Movement, Unpublished De Silva, Gloria, Gender in Disaster Mitigation: The Armed Conflict
in Southern Sri Lanka. February 1996 Evaluation of Women's and Children's Desks in Police Stations,
Colombo, CENWOR, October 1997. Facets of Change: Women in Sri Lanka, 1986-1995, Colombo,
CENWOR, 1995 Gender and Education in Sri Lanka: Women, Schooling and Work,
Colombo, CENWOR, 1990. Goonesekera, Savitri, Women, Equality Rights and the Constitution in "Thatched Patio" (Special Issue), Vol.3, No.3, ICES, May/June 1990 Haniffa, Farzana. A Woman of the Brotherhood: Ayisha Rauf and the
Quest for Muslim Women's Emancipation (unpublished paper) Hassendeen, Shafinaz, National Machinery on Women after Beijing in Post Beijing Reflections: Women in Sri Lanka 1995-2000, Colombo, CENWOR, 2000, Kamalawathie, I.M., Women in Parliamentary Politics in Sri Lanka, in Women. At the Cross Road: A Sri Lankan Perspective edited by Sirima Kiribamune & Vidyamali Samarasinghe, Kandy, ICES, 1990
101.

Page 59
Jayawardena, Kumari, Feminism and Nationalism in the Third World,
Zed Books, 1996. Jayawardena, Kumari, Feminism in Sri Lanka in the Decade 1975 - 1985: Third World Perspectives in Women, Struggles and Strategies, ISIS International. 1986 Jayawardena, Kumari, Vivienne Goonewardena: “La Pasionaria” of Sri Lanka, "Pravada', Vol.4, No. 10 & 11. Colombo, Social Scientists Association, 1997 Jayaweera, S. Colombo, Status of Women, 1979 Kamalini Wijayatilleke, Case Study of Vehilihini Development
Centre, 1994. Karam, Azza (Ed), Women in Parliament: Beyond Numbers, International Idea, International Handbook Series, 1998 Kiribamuna, Sirima (Ed). Women and Politics in Sri Lanka: A
Comparative Perspective, Kandy, ICES, 1999 Knoerzer, Shari. Transformation of Muslim Political Identity in Culture and Politics of Identity in Sri Lanka edited by Mithran Thiruchelvam and C.S. Dhattatreya, ICES, 1998. Kois, Lisa, Beyond the Rhetoric: Human and Breakdown of the Rule of Law - The Krishanti Kumaraswmay Case (unpublished outline for a paper) Kottegoda, Sepali. The Economic Empowerment of women since
Independence in Dialogue, Vols. XXV-XXVI, 1999 Leiten, Tressie, Women in Political Participation and Decision Making in Post Beijing Reflections: Women in Sri Lanka 1995 - 2000, Colombo, CENWOR, 2000 Liyanage, Pulsara, Vivi: A Biography, Colombo, Women's Education
and Research Centre, 1998 Mapping Progress: Assessing the Implementation of the Beijing Platform, Women's Environment and Development Organisation, 1998 Maunaguru, Sitralega. Gendering Tamil Nationalism: The Construction of Women in Projects of Protest and Control in Unmaking the Nation: The Politics of Identity and History in Modern Sri Lanka, edited by Pradeep Jeganathan and Qadri Ismail, Colombo, Social Scientists Association, 1995 . Metthananda T. Women in Sri Lanka: Traditions and Change in Women at the Cross Roads: A Sri Lankan Perspective edited by Sirima Kiribamune and Vidyamali Samarasinghe, Kandy, ICES, 1990
102

Metthananda, T (Ed), Votes for Women in 50 Years of Franchise,
Colombo, K.M. de Silva, 1980. Morris, D Morris Measuring the Conditions of the World's Poor; The
Physical Quality of Life Index, Pergamon, New York, 1979 Perera, Sasanka, Political Violence in Sri Lanka, Dynamics, Consequences and Issues of Democratization, Colombo, CENWOR, 1998 Perera, Sasanka, The Other Victims in Culture and Politics of Identity in Sri Lanka edited by Mithran Tiruchelvam and C.S. Dattathreya, ICES, 1998 r Pettman, Jan Jindy, Worlding Women: A Feminist International Politics.
Routledge, 1996. Pinto Jayawardena, K., Proportional Representation, Political Violence and the Participation of Women in the Political Process, ICES/ IDS, unpublished. Post Beijing Reflections: Women in Sri Lanka 1995-2000, CENWOR,
2000 Rajasingham, Dharini, On Mediating Multiple Identities: The Shifting Field of Women's Sexualities within the Community, State and Nation in Basic Needs to Basic Rights: Women's Claim to Human Rights, edited by Margeret Schuler, Washington D.C., Women, Law and Development International, 1995 Rajasingham-Senanayake, Darini, After Victimhood: Women's Empowerment in War and Displacement, “Pravada", Vol.6 No.2 & 3, Colombo, Social Scientist Association, 1999 Samuel, Kumudini, Gender Difference in Conflict Resolution: The Case of Sri Lanka, "Options', No. 14, 2nd Quarter, Colombo, Women and Media Collective, 1998 Senanayake, Kelly, Women, The Revolution and the JVP in "Options",
No. 10, Colombo, Women and Media Collective, 1997 Seneviratne, Maureen, 'Sirimavo Bandaranaike', Colombo, Hansard
Publishers, 1975 Sri Lanka: State of the Economy 1999, Colombo, Institute of Policy
Studies, October 1999 Strong Daughters: A Study of Women Workers in the Free Trade Zones of Sri Lanka, Women Working Worldwide, March 2000 Tambiah, Yasmin, Gender and Politics: An Asian Commonwealth Overview, Paper presented at the Commonwealth Asian/ European Symposium on Gender, Politics, Peace, Conflict Prevention and Resolution, Brighton, March 1998
103

Page 60
Thiruchandran, Selvy, The Politics of Gender and Women's Agency in Post Colonial Sri Lanka, Colombo, Women and Education and Research Centre, 1997 Tiruchelvam, N. Crisis of Constitutionalism in South Asia in Problems of Democracy, Constitutionalism and Political Violence edited by U. Everding, Colombo, Goethe Institute, 1993. Uyangoda, Jayadeva, Elections: Why do they beget violence? in "Pravada", Vol.5, No. 8, Colombo, Social Scientists Association, 1998 Waylen, Georgina, Gender in Third World Politics, Lynne Rienner
Publishers, 1996. Wijayatilake, Kamalini. Violence against Women: Review of a Decade in Facets of Change, Women in Sri Lanka 1986-1995, Colombo, CENWOR, 1995 Wijesekara, Chitra, Women in our Legislature: A Sri Lankan Study (from
1931 - 1977), Sarvodaya Visva Lekha Printers, 1995 Women and Men in Sri Lanka, A Report, Department of Census and
Statistics, 1995. Women for Peace, "Through the Eyes of Women: A new way of seeing and knowing our reality: Statement by Women for Peace' in “Pravada”, Vol 4, No. 5 & 6, Colombo, Social Scientists Association, 1995.
104

2.
:
10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21.
22. 23. 24. 25. 26. 27.
பன்னிணைப்பு 1
பெண் அரசியல்வாதிகளுடன் இடம்பெற்ற நேர்காணல்கள்
தயாவதி கங்கானம்கே, அங்கத்தவர், எம்பிலிபிட்டிய பிரதேச சபை மாயாதுன்னகே தோன காந்தி, அங்கத்தவர், எம்பிலிபிட்டிய பிரதேச
F6FDL
நில்மினி லியனகே, அங்கத்தவர், அகுரஸ்ஸ பிரதேச சபை மதுகா விஜேசூரிய், அங்கத்தவர், அம்பலந்தோட்டை பிரதேச சபை எம்.எச்.எம். ரன்மெனிகே, அங்கத்தவர், வடமேல் மாகாண சபை குஸ"மா பாலசூரிய, முன்னாள் அங்கத்தவர், இராஜாங்கனை பிரதேச
F6D குஸ"மா ரத்னாயக்கா, அங்கத்தவர், தலாவை பிரதேச சபை சித்ரா ஜயசிங்க, அங்கத்தவர், ஹப்புத்தளை நகர சபை சிறியானி அபேவர்தனகே, முன்னாள் அங்கத்தவர், குருநாகல் பிரதேச
SF6DU குமாரி ஏக்கநாயக்க, அங்கத்தவர், மாவத்தகம பிரதேச சபை மாலி அல் கம, அங்கத்தவர், பியகம பிரதேச சபை ரேனுகா ஹேரத், பாராளுமன்ற அங்கத்தவர் திமுது ஆட்டிகல, பிரதம அமைப்பாளர், ஜேவிபி பெண்கள் பிரிவு சர்மிளா ஜயவர்த்தனா, வேட்பாளர், மேல் மாகாண சபை சுனேத்ரா விக்கிரமசிங்க, அங்கத்தவர், நகர சபை, கொழும்பு கசந்தா அத்துகோரால, அங்கத்தவர், தம்பலகமுவ பிரதேச சபை நலின் திலகா ஹேரத், அங்கத்தவர், நுவரெலியா நகர சபை ராணி அதிகாரி, அங்கத்தவர், வடமத்திய மாகாண சபை அசோகா லங்காதிலக, அங்கத்தவர், முல்லேரியா பிரதேச சபை சித்ரா மந்திலக, அங்கத்தவர், மத்திய மாகாண சபை ரி.டி. குணவதி, அங்கத்தவர், ரீ ஜயவர்தனபுர-கோட்டை பிரதேச
திருமதி டபிள்யூ. செல்லச்சாமி, அங்கத்தவர், மேல் மாகாண சபை ஹாஜிரா சாலி, அங்கத்தவர், பிரதேச சபை நந்தா கிரேரோ அமரகோன், அங்கத்தவர், வத்தளை பிரதேச சபை திருமதி ஆப்தீன், அங்கத்தவர், தெஹிவளை நகர சபை குவென் ஹேரத், முன்னாள் அங்கத்தவர், வடமேல் மாகாண சபை டல்சி டி சில்வா, தலைவர், சம சமாஜக் கட்சி
105

Page 61
8
10.
செயற்பாட்டாளர்/நிறுவனங்களுடனான நேர்காணல்கள்
நில்மினி ஏக்கநாயக்க, அங்கத்தவர், வன்சாவலை பெண்கள் சங்கம் பிரேமலதா வீரக்கொடி, தலைவர், பெண்கள் மகா சங்கம், திரிப்பனே ஊவா சமூக அபிவிருத்தி நிலையம், பதுளை யு. சீலவதி, ஊவா வெல்லஸ்ஸ விவசாய பெண்கள் சங்கம், புத்தள திலகா ஹேரத், எகமுது காந்தா சமிதிய கருனாவதி மெனிகே, வில் பொத்த காந்தா இதுரும் பரிசிறமய திருமதி. பாலசிங்கம், தலைவர், திருகோணமலை பெண்கள் நலன்புரிச் சங்கம் 曾 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான கண்டி சங்கம் விமாலி கருணாரத்ன, சிங்கள் தமிழ் கிராமிய பெண்கள் வலையமைப்பு, நுவரெலியா ஜனசக்தி பெண்கள் மஹா சங்கம், அம்பாந்தோட்டை
106

LsøřGofesoøowLúy II
பெயர் ரி.டி.குனவதி
தொழில் நகரசபை உறுப்பினர் பூரீ ஜயவர்த்தனபுர கோட்டே விவாகமானவரா ஆம்
கட்சி : பூஞரீலங்கா சுதந்திரக் கட்சி
நான் கொழும்பு மாவட்டத்திலுள்ள நுகேகொடை தெல் கந்த சந்தி என்னுமிடத்தில் பிறந்தேன். எனது வயது 50. எனது குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். எனக்கு ஒரு சகோதரர் மட்டுமே உள்ளார். நான் ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர். எனது பெற்றோரும் ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களே. ஆனால் அவர்கள் அரசியலில் ஆர்வத்துடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. எனது குடும்பத்தில் முதன்முதலில் நான்தான் அரசியலில் ஈடுபட்டேன். நான் 1991இல் கோட்டே நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டேன். அதில் நான் 120 வாக்குகளால் தோல்வியடைந்தேன். 1997இல் நான் கோட்டே நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
உங்களை அரசியலில் ஈடுபடத் தூண்டியது எது?
எனது தந்தை அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த போதும் அவர் தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. எனக்கு 10 வயதாயிருந்த போது, எனக்கு அரசியல்வாதிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கட்சி ஆதரவாளர்கள் தங்கள் வீடுகளில் அரசியல் கூட்டங்களை நடாத்த விரும்பாத போது எமது வீட்டில் அரசியல் கூட்டங்கள் மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் நடப்பது உண்டு. இப்பிரதேசத்தில் நடைபெற்ற அநேக அரசியல் சம்பவங்கள் இப்போதும்கூட எனது பெற்றோருக்கு ஞாபகம் இருக்கின்றது. உள்ளுர் அரசியலுடன் இருந்த தொடர்புகள் எனக்கும் அரசியலில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது.
நான் திருமணமானவள். எனது கணவருக்கும் அரசியலோடு தொடர்பிருந்தது. நான் அவரைத் திருமணம் செய்தபோது அவர் நுகேகொடை கந்தவத்த சுதந்திரக் கட்சிக் கிளையின் உறுப்பினராக இருந்தார். அந்தக் கிளையின் தலைவராக அவர் 21 வருடங்கள் இருந்தார். அரசியல் செயற்பாடுகளில் அவர் எனக்கு உற்சாகமளித்ததுடன் தொடர்ந்தும் என்னை ஊக்கப்படுத்தினார். அவருக்குத்தான் முதலில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைத்தது. அவர் ஒரு சாரதியாக இருந்தபடியாலும் போதுமான தகைமைகள் இல்லாதபடியாலும் அவர் அதை மறுத்து விட்டார்.
107

Page 62
முதன்முதலில் அரசியலில் ஈடுபட்டபோது நீங்கள் முகம் கொடுத்த தடைகள் எவை?
எந்தப் பிரச்சினையும் தடைகளும் எனக் கிருக்கவில்லை. ஆனால் வன்முறைகள் இடம்பெற்ற காலங்களில் நான் அரசியலில் ஈடுபட்டிருப்பதை எனது குடும்பத்தினர் விரும்பவில்லை. அவர்களுக்கு அது மனவருத்தத்தைக் கொடுத்தது. எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமென எண்ணவும், அச்சம் கொள்ளவும் தலைப்பட்டனர். அந்தப் பயங்கர காலகட்டத்தில் தனியாக ஒரு பெண்ணுக்கு தேர்தல் பிரசாரத்துக்குப் போக முடியவில்லை. முன்பின் அறிமுகமற்ற ஆட்கள் என் வீட்டுக்கு பிஸ்டல்களுடனும் ரைபிள்களுடனும் வந்தார்கள். அதன் காரணமாகவே எனது குடும்பம் பயந்தது. நான் கொல்லப்படுவேன் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் எனது கணவர் வன்முறைகளைப்பற்றி அச்சம் கொள்ளவில்லை. அவர் எனக்கு முழுமையாக ஆதரவை வழங்கினார்.
பெண் கள் அரசியலில் ஈடுபடும் போது பொதுவாக அவர்கள் எவ்வகையான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவரும்?
எனது அனுபவத்தில் கோட்டே நகர சபை உறுப்பினராகவும், கோட்டே கான்தா பலமண்டலவின் தலைவியாகவும் (மகளிர் அணித் தலைவி - சுதந்திரக்கட்சி) இருந்தபோது பெரும்பாலான பெண்கள் அரசியலில் ஈடுபடப் பயந்தனர். அதுவும் விசேடமாக 1977இக்குப் பின்னர் அநேகமான பெண்கள் அது ஆபத்தானது என அச்சங்கொண்டனர்.
அத்துடன் இளைய தலைமுறையினர் அரசியல் செயற்பாடுகளில் ஆர்வம் கொள்வதில்லை. அரசியலில் ஈடுபடுவதன் மூலம் எவ்வித நன்மைகளும், அனுகூலங்களும் ஏற்படப்போவதில்லை என அவர்கள் எண்ணுகின்றனர். இதை நான் மிகவும் மனவருத்தத்துடனேயே சொல்கிறேன். மறுபுறத்தில் எம்மில் அநேகர் ஏராளமானவற்றைத் தியாகம் செய்தும் இழந்துமே அரசியலில் ஈடுபட முன்வந்தோம். இந்த நேர்காணலுக்காக நான் எனது வீட்டுக்கு உங்களை அழைக்காததற்குக் காரணம் நாங்கள் மிகவும் வெட்கத்துடனேயே வாழ்கிறோம். நாங்கள் வாழும் வீடு இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. எனக்கு தெல்கந்தவிலும், பன்னிப்பிட்டியவிலும் 30-40 பேர்ச் காணி இருக்கின்றது. அது ஓரளவு பெறுமதியானது. ஆனால் என்னிடம் பணம் இல்லை. நீங்கள் எனது வீட்டுக்கு வருகைதந்தால் என்னிடம் ஒன்றுமே இல்லை என்று நீங்கள் நினைப்பீர்கள். கணவன்மாரின் செயற்பாடுகளும் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்குத் தடையாக அமைகின்றன. எண் அனுபவத்தில் கூறுவதானால் அநேக கணவன்மார் தமது மனைவியரை கிளைக் கூட்டங்களிலோ அல்லது மகளிர் சங்கம் உட்பட ஏனைய
108

கூட்டங்களிலோ பங்குபற்ற அனுமதிப்பதில்லை என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் கூட ஒருசிலர் தமது மனைவியரை இக்கூட்டங்களில் பங்குபற்ற அனுமதிக்கின்றனர். ஆனால் கூட்டம் முடிய 15 அல்லது 30 நிமிடங்களுக்கு முன்னர் அவர்கள் தமது மனைவிமாரை அழைத்துச் செல்வதற்கு வந்துவிடுவார்கள்.
அநேகமான பெண்கள் தாம் அரசியல் கட்சிகளில் இணைந்தால் வீண் பிரச்சினைகள் ஏற்படும் என்று நினைக்கின்றனர். அதாவது தமது பிள்ளைகள் வேலை வாய்ப்புக்களைப் பெறும்போது பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதே அவர்களது எண்ணம். தாம் பழிவாங்கப்படுவோம் என்று நினைப்பதனால் அவர்கள் இதில் ஈடுபடப் பின்வாங்குகிறார்கள். ஒரு உதாரணம் எனது வீட்டருகில் வசித்த ஓர் ஆசிரியை எனது அரசியல் நடவடிக்கையில் பங்கெடுத்துக் கொண்டதன் காரணமாக 1977ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் இரத்தினபுரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். 1994இல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு நான் அவரைத் தெகிவளை கரகம்பிட்டியவில் உள்ள ஒரு பாடசாலைக்கு மாற்றம் செய்ததே நான் செய்த முதற் காரியம். அரசியலுக்கு வந்தால் தங்களது உயிர் உடைமைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என பதறி காக மட்டுமல ல சில வகையான தொ நீ தரவுகளுக்கு ஆளாகவேண்டிவரும் என்பதாலும் மக்கள் அரசியலுக்கு வர அஞ்சுகின்றனர்.
பெண்கள் பெருமளவில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன்?
ஆம். தற்போதைய ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் ஆகிய இருவருமே பெண்கள், சில பெண் அமைச்சர்களும் இருக்கின்றனர். ஆகவே ஏன் ஏனைய பெண்களும் முன்வந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது? ஆனால் அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கான பின்னணி இருக்க வேண்டும். ஆகவே அவ்வாறானவர்கள் அச்சமின்றி அரசியலில் ஈடுபட முன்வரலாம். வன்முறைகளுக்கு நான் பயப்படுவதில்லை, ஆகவேதான் இன்று நான் அரசியலில் இருக்கின்றேன். நிறையப் பெண்கள் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டால்தான் நாடு முன்னேற்றமடையும் என்று நான் நினைக்கின்றேன். நான் ஆணி அரசியல்வாதிகளைக் குறை சொல்லவில்லை. ஆனால் பெண்களும் அரசியலில் ஈடுபட முன்வர வேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களுக்கு 25 சத வீதம் ஒதுக்குவதை விரும்புகிறீர்களா?
ஆம். அது ஒரு நல்ல யோசனை. ஆனால் பெண்கள் முன்வருவதில்லை என்பதுதான் பிரச்சினையே. பெண்கள் முன்வந்தாலும் கூட நடுத்தர வயதுப்
109

Page 63
பெண்களே (40-50 வயது) முன்வருகின்றனர். நிறைய இளம் பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு வரும்போது மிகவும் உற்சாகமாக இருக்கின்றது. ஆனால் தலைமைப் பொறுப்பை ஏற்கும் சந்தர்ப்பம் வரும்போது அவர்கள் அதை விரும்புவதில்லை.
கான்தா பலமண்டலவில் (மகளிர் அமைப்பு) இளம் பெண்களின் பங்களிப்பு எவ்வாறுள்ளது?
கான்தா பலமண்டலயவில் இளம் பெண்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆனால் அவர்கள் பொறுப்புக்கள் எதனையும் பாரமெடுப்பதில்லை என்பதுதான் பிரச்சினையே. பயமா அல்லது வேறு காரணங்களா? உண்மையான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் எந்த ஓர் அரசியல் பதவிகளிலும் அமர்த்தப்படுவதை விரும்புவதில்லை.
உங்கள் அனுபவத்தில் இந்த நிலையை எப்படி மாற்றலாம் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
நான் முன்னர் குறிப்பிட்டது போன்று, அநேகமான இளம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதன் மூலம் துரிதமாகப் பயனடைய விரும்புகின்றனர். எங்கள் வயதுப் பெண்கள் அதாவது 40-50 வயதுடையவர்கள் குறைந்தது தங்கள் மகனுக்கோ மகளுக்கோ வேலை ஒன்றை எதிர்பார்க்கின்றனர். அது ஒரு இளம் பெண ணாக இரு நீ தாலி அவருகி கு ஒரு வேலை தேவைப்படுகின்றது. இவை ஒன்றையும் எதிர்பாராமலேயே நாங்கள் அரசியலுக்கு வந்தோம். என் குடும்ப வட்டத்தில் ஏழு இளைஞர்கள் தொழிலின்றி இருக்கின்றனர். ஒருசிலர் அரசியலில் ஈடுபட்டாலோ அல்லது என்னைப் போல் நகரசபை உறுப்பினராக இருக்கும் ஒருவர், முதலில் செய்வது தனது குடும்பத்தவர்க்கும் உறவினர்களுக்கும் தொழில் ஒன்றைத் தேடுவதாகும். நகரசபை உறுப்பினர்களாக இருக்கும் எமக்கு தெருக் கூட்டுபவர்கள் அல்லது குப்பை அள்ளுபவர்கள் போன்ற தொழில்களையே வழங்க முடியும். இதற்குக் கூட நாங்கள் ஏனைய 20 உறுப்பினர்களுடன் போராட வேண்டியுள்ளது. ஆகவே ஒரு நபருக்குத் தொழில் ஒன்றைத் தேடுவது மிகவும் சிக்கலான விடயம். தங்கள் குறிக் கோள்களை அடையக்கூடிய மார்க்கங்கள் இருந்தால் அநேக பெண்கள் அரசியலில் ஈடுபட முன்வருவார்கள் என்று நான் நினைக்கின்றேன். சுதந்திரக் கட்சியின் தெல் கந்த கிளையின் செயலாளராக 17 வருடங்கள் பணிபுரிகின்றேன். இப்பகுதி கான்தா சமித்தி (பெண்கள் சங்கம்) கிளையின் தலைவியும் நான்தான். அத்துடன் கோட்டே கான்தா பலமண்டலயவின் தலைவியும் நானே. இப்பகுதியில் 10 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இப்பிரிவுகளில் உள்ள
110

எல்லா கான்தா சமித்தி தலைவர்களுக்கும் செயலாளர்களுக்கும் ஒரே மாதியான மனக்குறைகளே இருக்கின்றன. மக்களின் குறைகளைத் தீர்க்கவும் அவர்களுக்கு உதவி வழங்கும் நிலையிலும் நாங்கள் இல்லை. ஆகவே எங்களால் மக்களுடன் நம்பிக்கையுடன் பேசவோ அல்லது அவர்களது குறைகளைத் தீர்ப்பதற்கான உத்தரவாதம் அளிக்கவோ முடியாதுள்ளது. ஆகவே சில நேரங்களில் எங்களால் அவர்களை எதிர்கொள்ள முடிவதில்லை. ஆகவேதான் எங்கோ தவறு இருக்கின்றது என்று நான் சொல்கிறேன். எங்களால் என்ன செய்ய முடியும்? எங்களால் வீடுகளையோ, காணியையோ, அல்லது தொழிலையோ வழங்க முடியுமா? ஆனாலும் ஒரு நகரசபை உறுப்பினராக இப்பகுதி மக்களுக்கு ஏதாவது சேவைகளைச் செய்யமுடியும் என நான் நினைக்கின்றேன்.
பெண்கள் பிரச்சினைகளைப் பொறுத்தவரை கட்சியின் கொள்கை மற்றும் ஆணைகள் என்ன?
கட்சித் தலைமையகத்தில் கான்தா பலமண்டலய உள்ளது. திருமதி. கமலா ரணதுங்க அதனி செயலாளராக இருக் கினி றார் . அவர்களும் எங்களைப் போல்தான். அவர்களால் எமக்கு உதவ முடிவதில்லை. எங்களுக்கு இருக்கும் அதே மனக் கஷடங்களே அவர்களுக்கும் உள்ளன. எங்கள் பிரச்சினைகளுக்குப் பதில் சொல்லக்கூடிய நிலையிலோ அல்லது எமக்கு உதவி செய்யக்கூடிய நிலையிலோ அவர்களும் இல்லை. 17 வருடங்களுக்குப் பின்னர் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நிலைமை விரைவில் மாறுமென நினைத்தோம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
காரணம் என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?
அடி முதலி நுனிவரை எங்கோ, ஏதோ தவறு இருப்பதாக நான் நினைக்கின்றேன். ஆனால் என்னால் எங்கே தவறு இருக்கின்றது என்பதைச் சரியாகச் சுட்டிக்காட்ட முடியாது. கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் நாங்கள் சிந்தித்தால், இது நடக்காது. வாக்காளரை வெல்வது என்பது இலகுவான காரியம் அல்ல. அது எங்கள் முழுமையான உழைப்பிலேயே தங்கியுள்ளது. சிலவேளைகளில் ஒரு வாக்குக்காக நாங்கள் நீண்ட நேரம் பேச வேண்டியிருக்கும். யாருக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லும் மக்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர். சிலவேளை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நீண்ட நேரத்தைச் செலவழித்து அவர்களுக்கு விளக்கி உரையாற்ற வேண்டியுள்ளது. அநேக மக்கள் கட்சியிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே வாக்களிக்கின்றனர். அதற்காக நாங்கள் அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. எனது பகுதியில் உள்ள அநேக
111

Page 64
மக்களுக்கு நான் அவர்களுக்குச் செய்வதற்காக ஒன்றையும் சம்பாதிக்கவில்லை என்பது தெரியும். ஆகவேதான் அவர்கள் என்னைப் பேசுவதில்லை. அவர்கள் என்னை மன்னிக்கிறார்கள்.
கோட்டே நகரசபையில் வேறு பெண் உறுப்பினர்களும் இருக்கின்றார்களா?
இல்லை. எதிர்கட்சியில் கூட இல்லை. நானும் இன்னொருவருமாக இரண்டு பெண்கள் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டோம். ஆனால் நான் மட்டும்தான் தெரிவு செய்யப்பட்டேன்.
ஆண் உறுப்பினர்கள் உங்களை எவ்வாறு நடத்துகின்றார்கள் ? அவர்கள் உங்களுக்கு உதவுகின்றார்களா?
எனக்கு சகல உறுப்பினர்களும் உதவுகிறார்கள். எதிர்கட்சி உறுப்பினர்கள் கூட உதவுகின்றனர். நான் கொண்டுவரும் பிரேரணைகளுக்கு எனக்கு 100 வீதம் ஆதரவு கிடைத்துள்ளது.
பெண்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான தீர்மானம் எதனையும் நகரசபையில் நீங்கள் முன்மொழிந்திருக்கின்றீர்களா?
நான் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்குத் தண்டனையை அதிகரிப்பதற்கான பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்திருக்கின்றேன். தற்போதைய தண்டனைகள் போதுமானதாக இல்லை. சட்டங்கள் திருத்தப்பட்டு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இம்மாதம் சபையில் பிரேரணை விவாதத்துக்கு வருகின்றது. நூறு வீதமான ஆதரவு இந்தப் பிரேரணைக்குக் கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.
கடந்த ஐநீ து வருடங்களில் பெண் களுக்கான வணி முறை அதிகரித்துள்ளது என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் ஏன்?
ஆம். அது வேகமாக அதிகரித்துள்ளது. எனது தனிப்பட்ட பார்வையில் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. உதாரணம்: ரிட்டா ஜோன் வழக்கு. ஒவ்வொரு கிராமத்திலும் தூக்கு மேடைகள் அமைக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் பிள்ளைகளைக் கிணற்றில் விழுவதிலிருந்தோ, வீதியைக் கடப்பதிலிருந்தோ பாதுகாக்கக் கூடியதாயிருந்தது. இன்று நிலைமை அப்படியல்ல. சில நேரங்களில் குழந்தைகளை அவர்களது தந்தைமாரிடமிருந்தே நாம் காப்பாற்ற வேண்டியுள்ளது. ஜனாதிபதிக்கோ
112

அரசாங்கத்திற்கோ தனியாக இப்போராட்டத்தை நிறுத்த முடியாது. இது வீட்டிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பின்னர் கிராமங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.
பெண் அரசியல்வாதிகளின் செயற்திறனை எப்படி மதிப்பிடுகின்றீர்கள்?
திருமதி அசோகா குணதிலக்க என்று ஒருவர் பக்கத்தில் இருக்கின்றார். கொட்டிக்காவத்தைப் பிரதேச சபையின் பிரதித் தலைவர் அவர்தான். அவர் கடுமையான உழைப்பாளி. அரசியலுக்காக அதிகளவு நேரத்தை அவரால் ஒதுக்கக்கூடியதாக இருந்தது. கடந்த மாதம் எங்களுக்கு எம்பிலிப்பிட்டியவில் 3 நாள் பயிற்சிப்பட்டறையில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் நான்கு பெண் உறுப்பினர்களே சமூகமளித்தனர். கடந்த மாதம் இலங்கை மன்றக் கல்லூரியில் அனைத்துக் கட்சிப் பெண் உறுப்பினர்களுக்கான பயிற்சிப் பட்டறை ஒன்று நடைபெற்றது. தங்களது யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லையென கலந்துரையாடலின் போது சில உறுப் பினர்கள் தெரிவித்தனர். அத்துடன் தமது பிரேரணை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை எனவும் தாம் இரண்டாம் பட்சமாக நடாத்தப் படுவதாகவும் தெரிவித்தனர் . ஆனாலி நான் இதனை ஒத்துக்கொள்ளவில்லை. சிலநேரம் நான் ஆண் உறுப்பினர்களையும் மீறிச் சென்றிருக்கின்றேன். ஒருவரினாலும் என்னைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சிலவேளை அவர்கள் என்னைத் தடுப்பதற்கு முயற்சித்திருக்கலாம். நாங்கள் வானத்தில் இருந்து குதித்து வந்த உறுப்பினர்கள் அல்ல. அதுதான் எம்மிடம் உள்ள பலம். நான் அர்ப்பணிப்புடனும் தியாகத்துடனும் அரசியலுக்கு வந்தவள் என்பது அனைவருக்கும் தெரியும். இதனாலேயே எனக்கு அனைவரின் உதவியும் கிடைக்கின்றது.
பெண் களுக்கான பொதுவான பிரச்சினைகளில் பெண் அரசியல்வாதிகள் கட்சிகளைக் கடந்து செயற்பட முடியுமா?
எல்லா அரசியற் கட்சிப் பெண் உறுப்பினர்களும் இணைந்து செயற்பட்டால் அது மிகவும் நல்லது. ஆனால் அது சாத்தியமற்றது என்று நான் நினைக்கின்றேன். ஏனென்றால் ஒவ்வொரு கட்சிகளுக்கிடையிலும் அநேக கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனது கிராமத்தில் உள்ள அநேக சங்கங்களில் நான் உறுப்பினராக இருக்கின்றேன். எனது கிராமத்தில் உள்ள கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற பல சங்கங்களில் நான் முக்கிய பதவிகளில் இருக்கின்றேன். நான் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒரு கிராமப் பெண் என்ற முறையில் இச் சங்கங்களில் இணைந்து பணியாற்றுகின்றேன். நான் இக் கூட்டங்களுக்கு வரும்போது அரசியலை வெளியில் வைத்துவிட்டு வருகின்றேன். அதனால்தான் எனக்கு மற்றவர்களுடன் இணைந்து பணியாற்ற
113

Page 65
முடிகின்றது. எனது அரசியற் கொள்கையின்படி, ஒரு அரசியல்வாதியாக அன்றி ஒரு சமூக சேவகியாக எனது கிராமத்திற்கு என்ன செய்திருக்கின்றேன் என்பதையே நான் கவனத்தில் எடுக்கின்றேன். இந்த கிராமச் சங்கங்கள் நான் அரசியலில் நுழைவதற்கு ஒரு பாலத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. அரசியலில் ஈடுபட ஒருவருக்கு அது மட்டுமே போதாது. ஆனால் தற்போது அரசியல் மட்டும் நடத்தும் சில நபர்கள் இருக்கின்றனர். இவர்கள் ஒரு கிராமத்தின் மரண ஆதார சங்கத்தில் கூட உறுப்பினர்களாக இருப்பவர்கள் அல்ல. நான் அதை விரும்பவில்லை. நான் நகரசபை உறுப்பினராவதற்கு முன்பு கூட பல கிராமிய சங்கங்களின் அங்கத்தினராக இருந்திருக்கின்றேன். இன்னும் கூட நான் இச் சங்கங்களில் உறுப்பினராகவும் பொறுப்பான பதவிகளிலும் இருக்கின்றேன்.
ஓர் அரசியல்வாதி என்ற வகையில் நீங்கள் வகிக்கும் பதவியை (பாத்திரம்) எவ்வாறு நோக்குகிறீர்கள்?
எனக்கு உதவித்தொகை கிடைத்தாலும் நான் இதை ஒரு தொழிலாகக் கருதவில்லை. நான் அந்த வருமானத்தைப் பெறுவதில்லை என்று சொல்லவில்லை. நான் அதைப் பெறுகின்றேன். நான் அதை வேண்டாம் என்று சொல்ல நான் வசதியானவள் அல்ல. ஒவ்வொரு முறையும் நான் இந்த வருமானத்தைப் பெறும்போது இந்த வாய்ப்பை எனக்குத் தந்தவர்கள் இப் பிரதேச மக்கள் என்பதை நான் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். இந்த வருமானத்தை எனக்கு நகரசபை வழங்கினாலும் கூட மக்கள் எனக்கு வாக்களித்ததன் காரணமாகவே நான் நகரசபை உறுப்பினராக ஆகி இருக்கின்றேன் என்பதை நான் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் எனக்குரிய வருமானத்தைப் பெறும்போது நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்கிறேன். வீதிகளை அமைக்கவும், வீதிகளுக்கு விளக்குகள் போடவும், பாலங்கள் கட்டித்தரவும், வடிகால்கள் அமைத்துத் தரவுமே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன். உங்களுக்கு வேலை பெற்றுத்தரவோ காணி மற்றும் வீடுகள் பெற்றுத்தரவோ என்னால் முடியாது என்று நான் சொல்லியிருக்கின்றேன். நகரசபை மூலம் எதைச் செய்ய முடியும் என நான் நினைத்தேனோ அவற்றை மட்டுமே நான் வாக்குறுதியாக அளித்தேன். நான் தொழில் வழங்குவதாகவோ அல்லது வீடுகள் வழங்குவதாகவோ கூறி மக்களிடம் வாக்குக் கேட்கவில்லை. எனது பதவியின் கடைசி நிமிடம் வரை மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் பாடுபடுவேன்.
விருப்பு வாக்கு தேர்தல் முறையைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
விருப்பு வாக்குமுறைத் தேர்தல் பற்றிக் கூறுவதற்கு அகராதியில்கூட சொற்கள் கிடையாது. அது ஒரு தவறான முறை. இந்த முறையினால் ஒரே கட்சி
114

உறுப்பினர்கள் கூட சவால்களையும் தொல்லைகளையும், மேலும் இது போன்ற சம்பவங்களையும் தமது கட்சி உறுப்பினர்களிடமிருந்தே சந்திக்க வேணி டியுள்ளது. எம்மைப் போன்ற வறிய நாட்டுக்கு இம் முறை பொருத்தமானதல்ல. நாம் இந்த முறையை நீக்கிவிட்டு தொகுதிவாரித் தேர்தல் முறையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும். தொகுதிவாரித் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டால் அப்பிரதேசத்திற்கு நிறைய சேவைகளைச் செய்யலாம். இந்த முறையின் கீழ் ஒரு சிறிய பரப்பளவுக்கே நாங்கள் தேர்தற் பிரசாரத்திற்குப் போக வேண்டிவரும். தற்போதைய முறைமையில் எங்களுக்கு வாக்குகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நாங்கள் தேர்தற் பிரசாரத்திற்காக சகல பகுதிகளுக்கும் போக வேண்டியுள்ளது. ஆகவே ஒருவர் தேர்தற் பிரசாரத்திற்காக ஏராளமான பணத்தைச் செலவிட வேண்டியுள்ளது. இது கூட பெண்கள் அரசியலில் நுழைவதற்கு ஒரு தடையாக அமைகின்றது என நான் நினைக்கின்றேன். 1991இல் நான்கூட போட்டியிடுவதற்கு மறுத்து விட்டேன். இந்த நிமிடம் வரை நான் தான் மிகக் குறைவான பணத் தைத் தேர்தலுக் காகச் செலவழித்திருக்கின்றேன்.
இப் பகுதியில் பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினைகள் என்ன?
வீடில்லாப் பிரச்சினைதான். இப் பகுதியில் சனத்தொகை அதிகம். ஆனால் நிலம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளது. 15 பேர்ச் காணி வைத்திருக்கும் பெற்றோர் அவர்களுக்கு 4-5 பிள்ளைகள் இருந்தால் 15 பேர்ச்சை இப்பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டியுள்ளது. அநேக மக்கள் வாடகையைக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். அடுத்த முக்கியமான பிரச்சினை குப்பைகளை அப்புறப்படுத்தும் பிரச்சினையாகும். குப்பை லாரிகள் ஒரு நாளைக்கு குப்பை அள்ளிச் செல்லாவிட்டாலும் கூட எங்களால் வீட்டிலிருக்க முடியாது. மக்களிடமிருந்து ஏராளமான புகார்களும் தொலைபேசி அழைப்புக்களும் வந்து கொண்டேயிருக்கும்.
பெண்களை அரசியலில் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கு நீங்கள் என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றீர்கள்?
நாங்கள் எப்போதும் பெண்களை முன்னிலைப்படுத்தவே விரும்புகின்றோம். பெண்கள் வாக்களிப்பதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். அவர்கள் போட்டியிட விரும்புவதில் லை என்பதுதான் பிரச்சினை. அநேகமான பெண்கள் பொறுப்புக்களை ஏற்க விரும்புவதில்லை. ஆகவே நாங்கள் அவர்களுக்கு அழுத்தமும் ஊக்கமும் கொடுத்து முன்னிலைக் குக் கொண்டுவர வேண்டியுள்ளது.
115

Page 66
உங்களது எதிர்காலத் திட்டம் என்ன? மாகாணசபைத் தேர்தல் அல்லது பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் ஏதாவது இருக்கின்றதா?
இல்லை. என்னால் என்ன செய்யமுடியும். எனது நிலைப்பாடு என்ன என்பது பற்றி எனக்குத் தெரியும். நான் பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மாகாணசபை உறுப்பினராகவோ தெரிவு செய்யப்பட்டாலும் கூட பெரிதாக ஒன்றும் என்னால் செய்வதற்கில்லை. பாராளுமன்றத் தேர்தலிலோ அல்லது மாகாணசபைத் தேர்தலிலோ போடடியிடுமளவுக்குப் பணவசதி இல்லை என்பதும் எனக் குத் தெரியும். ஆகவே இதற்கு அப்பால் போகும் உத்தேசமில்லை. மேல்மாகாணசபை என்பது மிகவும் பரந்துபட்ட பிரதேசம். ஆனால் 45 நிமிடத்தில் கோட்டே உள்ளுராட்சித் தொகுதியில் தேர்தற் பிரசாரத்தை முடித்து விடலாம். இருந்தாலும்கூட என்னைப்போல் ஒருவருக்கு இதனைச் செய்வது பெரும் கஷ்டமாகவுள்ளது. அனைத்து வேட்பாளர்களிலும் நான்தான் மிகக் குறைந்த பணத்தைத் தேர்தற் பிரசாரத்திற்காகச் செலவழித்திருக்கின்றேன்.
மீண்டும் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் இருக்கின்றதா?
நகர சபையினி ஆயுட் காலம் 2001இல் முடிவடைகின்றது. நான் போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் அது எந்தளவு எனது வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கின்றேன் என்பதைப் பொறுத்த விடயம். அது அந்த நேரத்தைப் பொறுத்தது. நான் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. ஆகவே இப்போதைக்கு போட்டியிடும் நிலையில் இல்லை.
116

பெயர் சுனேத்ரா விக்கிரமசிங்க
தொழில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் விவாகநிலை திருமணமானவர்
பிறந்த திகதி : 18 டிசம்பர் 1949
கட்சி பூீரீலங்கா சுதந்திரக் கட்சி
எனது இளமைப் பருவத்திலிருந்தே அதுவும் 5 அல்லது 6 வயதிலிருந்தே எனக்கு அரசியலில் ஈடுபாடிருந்தது. எனது மாமா ஒருவர் கொழும்பு மாநகரசபை கவுன்சிலராக இருந்ததுதான் காரணம். அவர் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவர். சிறுவயதிலிருந்தே அவரது உரையைக் கேட்பதற்காகவும், அவர் மக்களுடன் இணைந்து செயற்படுவதைப் பார்க்கவும் அவருடன் பிரசாரக் கூட்டங்களுக்குச் செல்வேன். இது போன்ற வேலைகளால் நான் கவர்ந்திழுக்கப்பட்டேன். பாடசாலையில் கூட நாங்கள் சமூக சேவையில் ஈடுபட உற்சாகமளிக்கப்பட்டது. கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதி பாடசாலையில் இருந்து வெளியேறியதும் நான் சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். நான் திருமணம் முடிக்கும்போது எனக்கு 18 வயது. எனது கணவரும் ஒரு சமூக சேவகர் ஆவார். நான் திருமணம் முடித்தவுடன் கொள்ளுபிட்டியில் இருந்து பொரல்லைக்கு இடம் மாறினேன். பொரல்ல சமூகப் பிரச்சினைகள் மலிந்த இடம் என்பதை நான் அங்கு போனவுடன் கண்டுகொண்டேன். சில பிரதேசங்கள் மிகவும் ஏழ்மையான பிரதேசங்களாக இருந்தன. குறிப்பாக வனாத்தமுல்லையைச் சொல்லலாம். அங்கு குடியேறிய நாள் தொடக்கம் இம்மாதியான மக்களின் வாழ்க்ககைத்தரத்தை அபிவிருத்தி செய்ய விரும்பினேன். நான் 1974 வரையிலும் சமசமாஜக்கட்சி உறுப்பினராக இருந்தேன். திருமணத்தின் பின் எனக்கும் கட்சிக்கும் இடையில் இடைவெளி ஏற்பட்டது. 1975ஆம் ஆண்டு நான் சமசமாஜக் கட்சியில் இருந்து விலகி ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தேன். தங்கள் சார்பாகப் பேசக்கூடிய மற்றும் தங்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய ஒருவர் இப்பகுதி மக்களுக்குத் தேவைப்பட்டது எனும் காரணத்தினாலேயே நான் இக் கட்சியில் இணைந்தேன். இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்கு ஓர் அரசியல் கட்சி தேவை என்பதை நான் உணர்ந்தேன்.
1977ஆம் ஆண்டுத் தேர்தலில் ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்தது. இருந்தபோதும் அதன் பிறகு நான் கட்சிக்காகக் கடுமையாக உழைத் தேனி , அவி வேளை ஏராளமான மக்கள் சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறினார்கள். நான் கட்சிக்காகப் பாடுபடுவதென முடிவு செய்தேன். அத்துடன் மக்களுடன் நெருங்கி வேலை செய்யத் தொடங்கினேன். விசேடமாகப் பெண்கள் கட்சிச் செயற்பாடுகளில் எனக்கு உதவியளிக்கத் தொடங்கினர். நான் பெண்கள் மத்தியில் தவிர்க்க
117

Page 67
முடியாத ஒருவராக மாறினேன். நான் அவர்களை புரிந்து வைத்திருக்கின்றேன் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். எனக்கு அவர்கள் மதிப்பளித்தனர். நான் மரணாதாரச் சங்கம், பெண்கள் நலன்புரிச் சங்கம் போன்றவற்றை ஆரம்பித்தேன். வருடாந்தம் இலவசப் புத்தக விநியோகத்தை ஏற்பாடு செய்தேன். 1991ஆம் ஆண்டு நிமல் சிறிபால டி சில்வா கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட என்னை வேட்பாளராகத் தெரிவு செய்தார். நான் பொரல்லை ஆசனத்தில் 7000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன். 1982ஆம் ஆண்டு பிரதேச வாசிகள் என்னைத் தேர்தலில் போட்டியிடுமாறும் கூறினர். ரீமாவோ பண்டாரநாயக்கவினால் எனது பெயர் பிரேரிக்கப்பட்ட போதும்கூட பின்னர் அது நீக்கப்பட்டு எனக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. நான் நகரசபை உறுப்பினரான பின்பு முதலில் கஷ்டமாக இருந்தது. ஆண்கள் எனக்கு ஒத்துழைக்கவில்லை. நான் பெண் என்ற காரணத்தினால் அவர்கள் என்னைப் பலவீனமானவளாக நினைத்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன். அப்போது இரண்டு பெண் உறுப்பினர்கள் இருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பெண்ணொருவர் இருந்த போதும் சில காரணங்களினால் அவர் விலகிச் சென்றார். பின்னர் நான் மட்டுமே நகரசபையில் பெண் உறுப்பினராக இருந்தேன். அப்போது ரத்னசிறி ராஜபக்ஷ கொழும்பு மேயராக இருந்தார். அவர் அடிக்கடி எனது வேலைகளுக்குத் தடைபோட முயற்சித்தார். என்னால் கொண்டுவரப்படும் பிரேரணைகள் ஒதுக்கப்பட்டன. 6 மாதங்களில் நான் பெண் என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிடத் தீர்மானித்தேன். பின்னர் 52 உறுப்பினர்களும் நான் ஆண்களைப் பார்க்கிலும் மேலானவள் என்பதைப் புரிந்துகொண்டனர். அரசியலுக்கு வரும் பெண்கள் பலவீனமானவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருக்கக் கூடாது என்பது எனக்குப் புரிந்தது. நான் முதலில் அவர்களுடன் வாதாடினேன். அது முடியாமற்போனபோது நான் அமர்வுகளைப் பகிஷ்கரித்தேன். மகசின் வீதிப் பகுதியில் உள்ள மலசல கூடங்களைச் சுத் தம் செய்ய எவ்வித நடவடிக் கையும் எடுக் காதரிரு நீ தபோது அங் கிருந்த குப் பைகளை அகற்றவும் , மலசலகூடங்களைச் சுத்தம் செய்யவும் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கும் வரை நான் அவற்றின் மத்தியில் அமர்ந்து போராட்டம் நடத்தினேன். அவர்கள் பொய் வாக்குறுதிகளை அளித்து என்னை எழுப்புவதற்கு முயன்றபோது நான் மண்ணெண்ணெய் கலன் ஒன்றை எடுத்துக் கொண்டு மேயரின் அறைக்குச் சென்று எனக்கு நானே தீமூட்டிக் கொள்ளப்போவதாக எச்சரித்தேன். இச் சம்பவம் பத்திரிகையில் கூட வெளிவந்திருந்தது. இது போன்ற முடிவுகளை எடுக்க நான் பயப்படுவதில்லை.
நான் அரச சார்பற்ற நிறுவனமொன்றிலும் (என்.ஜி.ஓ) இணைந்து பங்காற்றினேன். அது ஒரு பெண்கள் வங்கி, அதை நந்தசிறி என்பவர் ஆரம்பித்திருந்தார். எனது அரசியல் ஈடுபாடு காரணமாக நான் அதில் ஒரு நிரந்தர அங்கத்தினர் அல்ல. ஆனால் நான் அவர்களது பணிகளில் நிறைய
118

உதவி செய்தேன். அவர்களுடைய கூட்டங்களுக்கு நான் ஒரு சுயாதீனக் கண்காணிப்பாளராகக் கலந்து கொள்வேன். அந்த அமைப்பு பெண்களுக்கு பாரிய சேவைகளைச் செய்கிறது. அவ்வமைப்பு 10 பெண்கள் அடங்கிய குழுக்களுக்கு கடன்கள் வழங்குவதன் மூலம் அப்பெணிகளுக்குச் சக்தியையும் ஊக்கத்தையும் வழங்குகிறது. இப்பிரதேசப் பெண்களுக்கு இக் கடனைப் பெற்றுக் கொடுக்க நான் உதவி செய்தேன். இந்தப் பணிகளுடன் எனக்கிருந்த தொடர்புகள் காரணமாக அவர்கள் அண்மையில் என்னை யப்பானுக்கு அனுப்பினார்க்ள். முன்னைய அரசாங்க காலத்தில் திரு. கணேசலிங்கம் மேயராக இருந்த போது நான் 'அரசியலில் பெண்களின் பங்கு' எனும் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கும் வறிய மக்களிற்கான வீடமைப்புத்திட்டம்’ எனும் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அகமதாபாத்திற்கும் பயணம் செய்திருக்கின்றேன்.
ஆனால் இந்த அராசங்கத்தில் வீடமைப்பு அமைச்சில் இரண்டு அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்கள் எம்முடன் ஆலோசனைகளில் ஈடுபடுவதில்லை. அது மட்டுமல்ல எந்த ஒரு மாநாட்டுக்கும் அழைப்பு விடுப் பதுமி இல லை . நான் இதை மிகவும் வருத தததுடன சொல்லிக்கொள்கிறேன். கொழும்பு மாநகர சபையில் இருக்கும் ஒரே ஒரு பெண் உறுப்பினர் நான்தான். என்னிடம் தொலைநோக்குடன் கூடிய பயன்மிக்க திட்டங்கள் இருக்கின்றன.
இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதற்காக அமைச்சரைச் சந்திக்க முயற்சி செய்திருக்கின்றீர்களா?
ஆம். வீடமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் எனது பிரதேச கட்சி அமைப்பாளர் தான். அவர் அமைச்சரான போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவரை எனக்கு தெரிந்த நாளில் இருந்து இதைப்பற்றி எம்மால் பேசக்கூடியதாகவும் இணைந்து பணியாற்றக் கூடியதாகவும் இருந்தது. எனது பிரதேசத்தில் வீடுகளை அமைப்பதற்காக என்ன செய்ய முடியும் என்பதையும் அவற்றை எப்படி நல்லவிதமாக முடிக்கலாம் என்பது பற்றியும் நான் அவரைச் சந்தித்த சமயத்தில் எனது ஆலோசனைகளைக் கூறி இருக்கின்றேன். ஆனால் எனது தூரதிருஷ்டமோ அல்லது மக்கள் தூரதிருஷ்டமோ அவர்கள் எமது கருத்துக்களைக் கேட்க விரும்பவதில்லை. நான் பிரதியமைச்சர் இந்திக குணவர்த்னவுடனும் இது பற்றிப் பேச முயன்றேன். ஆனால் அதுவும் பயனளிக்கவில்லை. அவர்கள் உயர்மட்ட அதிகாரிகளுடனும் பொறியியலாளர்களுடனும் மட்டுமே ஆலோசனை நடத்துகின்றனர். எமது ஆலோசனைகளின் மூலமும் பங்களிப்புச் செய்யலாம் என்பது பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. ஆகவே நான் இப்போது அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதை விட்டுவிட்டேன். பதிலாக நான்
119

Page 68
இப்போது முன்னர் குறிப்பிட்ட என்.ஜீ.ஓ.வுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாயிருக்கின்றேன் . வீடுகள் கட்டுவதற்காக அவர்களுக்கு பெல்ஜியத்திலிருந்து நிதி கிடைத்தது என அண்மையில் சொல்லியிருந்தேன். இதைப் பற்றி நான் மேயரிடம் பேசுவேன். இந்த இடத்தில் நாங்கள் கட்சி அரசியலைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. வேலைகளை முடிப்பதில் எமது கட்சி அமைச்சர்கள் ஆர்வம் காட்டாவிடில் நான் மேயருடன் இணைந்து செயலாற்றுவேன். (அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராயிருந்தாலும் கூட) இதைப்பற்றி நான் மேயருக்கு எழுதுவேன். இதற்கு அவர் எவ்வாறு பதிலளிப்பார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஒத்துழைத்தால் இது சம்பந்தமாக நான் இணைந்து "செயற்படுவேன். ஆனால் எமது அரசாங்கம் இதைப்பற்றி ஆர்வம் கொள்ளாமல் இருப்பது வேதனையான விடயம்.
நீங்கள் பெண் என்றபடியால் தான் இந் நலை என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
இருக்கலாம். எமக்குப் போதிய கல்வியறிவு இல்லை என அவர்கள் நினைக்கலாம். எமது கல்வியை அடிப்படையாக வைத்து அந்த முடிவிற்கு வருவது தவறானது என்று நான் நினைக்கின்றேன். நான் ஓர் உதாரணம் சொல்கின்றேன். இந்தப் பதவிக்கு வந்த நாள் தொடக்கம் ஒரு வேலை செய்து முடிக்கும் வரை நான் காத்துக் கொண்டிருப்பதில்லை. அந்த வேலை முடியும் வரை நான் பொறியியலாளர்களினதும் வேலையாட்களினதும் பின்னாலேயே அலைந்து கொண்டிருப்பேன். ஒரு குழாய் பொருத்தும் வேலையாக இருந்தாலும்கூட நான் அந்த இடத்திற்குப் போய் அது எவ்வாறு செய்யப்படுகின்றது என்பதை அவதானிப்பேன். ஆகவே எனக்கு தற்போது எப்படி எங்கே குழாய் இணைப்புக்களைப் பொருத்துவது என்பது தெரியும். இந்த அறிவு அனுபவத்தில் வரக்கூடியது. அண்மையில் ஒவல் மைதானத்தின் அருகில் தண்ணிர்க்குழாய் இணைப்பொன்று சதா ஒழுகிக் கொண்டே இருந்தது. நாங்கள் பெரும்பணம் செலவு செய்து அதைத் திருத்தினோம். ஆனால் சில நாட்களின் பின்னர் மீண்டும் தண்ணிர் ஒழுகத்தொடங்கியது. காரணம் குழாய் இணைப்பானது நிலத்தில் ஓரளவு பள்ளம் தோண்டப்பட்டே போடப்பட்டிருந்தது. பிஸியான அந்தப்பாதையில் ஏராளமான வாகனங்கள் அடிக்கடி அதற்கு மேலால் சென்று கொண்டிருந்தன. இதனாலேயே மீண்டும் மீண்டும் உடைப்பெடுத்தது. ஆகவே அந்த இடத்தில் ரவுண்டபவுட் (சுற்றுவட்டம்) போடாமல் திருத்த வேலைகளைச் செய்வது பிரயோசனமற்ற செயல் என நான் பொறியியலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினேன். முதலில் அவர்கள் தயங்கினாலும் பின்னர் அதனைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து கொண்டு அதற்கு உடன்பட்டனர். நான் இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், நாங்கள் பல வருடங்களாக மக்களுடன்
120

நெருங்கிப் பணியாற்றுவதனால் எமக்கு அதன் மூலமாக அனுபவ அறிவு கிடைக்கின்றது. வீடமைப்புத் துறையிலும் இதுபோல்தான். ஆனால் எமது அமைச்சருக்கு இது புரியவில்லை. எங்களில் யார் அதிகம் வேலை செய்கிறார்களோ அவர்கள் மக்கள் பக்கம் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க முடியாது. எமது அமைச்சருக்கு முடிவில்லாத கூட்டங்கள், கலந்துரையாடல்கள், பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் செய்தது ஒன்றுமில்லை. உண்மையில் வீடமைப்புக்காகப் பல மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் ஏன் ஒன்றும் செய்யப்படவில்லை? ஏன் அவை விரைவில் செய்யப்படாமல் தாமதமடைகின்றன? இந்த அரசாங்கம் மக்களுக்கு வீடுகளை வழங்கினால் அது அவர்களது எதிர்காலத்திற்கு நல்லது. நான் திரு. பிரேமதாஸவைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர் வித்தியாசமான மனிதர, அவரிடம் தவறுகள் இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பணியாற்றக் கூடியவர்களை அவர் தம்மிடம் இணைத்துக் கொண்டார். அது ஒரு மிகச்சிறந்த பண்பு. ஆகவே மக்கள் உதவியுடன் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்ய நான் முயற்சிப்பேன்.
நீங்கள் நகர சபையில் கொண்டு வந்திருக்கும் பிரேரணைகள் என்ன?
அண்மையில் எனது அந்தரங்க கோவையைப் பார்த்தேன். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. நான் ஏராளமான பிரேரணைகளைக் கொண்டு வந்திருந்தேன். 6 வருட நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் நான் சீவலி லேனில் ஒரு வாசிகசாலை கட்டும் பிரேரணையைக் கொண்டு வந்தேன். அது இப்போது நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கொழும்புப் பொது நூலகத்தில் இப்போது இடப்பற்றாக்குறை. சில மாணவர்கள் காலை 4 மணிக்கு எழுந்து பொது நூலகத்திற்கு வரவேண்டியுள்ளது. இருந்தும் அங்கே இருந்து படிப்பதற்கு இடமில்லை. ஆகவே இங்கு நான் நூலகம் ஒன்று அமைக்க விரும்பினேன். அது இப் பகுதி நான்கு பாடசாலைகளில் படிக்கும் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பை வழங்கும். அத்துடன் மகஸின் வீதியில் வாசிகசாலை, உடற்பயிற்சி நிலையம் ஆகியவற்றுடன் கூடிய பொழுதுபோக்கு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான பிரேரணை ஒன்றும் என்னிடம் உள்ளது. அது சம்பந்தமான பணிகளை நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை. இந்தப் பிரேரணை 1994ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நான் பல பொது மலசல கூடங்களை இப் பிரதேசத்தில் அமைத்துக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் என்னுடன் வந்தால் உங்களால் அநேக குடிசைவாசிகளைக் காணக் கூடியதாயிருக்கும். அவர்களிடம் ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
ஏதாவது பிரேரணைகள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றதா?
ஆம். மாநகரசபையின் நிர்வாகத்தை அபிவிருத்தி செய்வது சம்பந்தமான சில பிரேரணைகள் கொண்டு வந்தேன். அவை யாவும் கிடப்பில் போடப்பட்டு விட்டன.
121

Page 69
அனைத்து ஊழியர்களை நிரந்தரமாக்குவது சம்பந்தமாகவும், நகரசபையினால் மேற்கொள்ளப்படும் பணிகள் யாவும் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் சில பிரேரணைகள் கொண்டு வந்தோம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. நான் கொழும்பில் இருக்கும் குடிசைகளின் எண்ணிக்கையைத் தெரிவிக்க வேண்டுமென்று ஒரு பிரேரணை கொண்டுவந்தேன். ஆனால் அவர்கள் ஒவ்வொரு நாளும் புள்ளிவிபரங்களை திரட்டிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அது ஒரு போதும் முடியப் போவதில்லை.
பெண்கள் பற்றிய பிரேரணைகள் ஏதாவது கொண்டு வந்திருக்கின்றீர்களா?
ரீட்டா ஜோனின் கொலையின் பின்னர் நான் ஒரு கூட்டமொன்றில் பெண்களுக்கு இது போன்ற கொடுமைகள் இழைக்கப்படக் கூடாதென்றும் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டுமெனவும் பேசி இருந்தேன். தற்போதைய ரோமன் டச்சுச் சட்டம் போதுமானதாக இல்லை. நான் சதாசிவம், குலசிங்கம் கொலையை உதாரணமாக முன்வைக்கின்றேன். அன்று தொடக்கம் இன்றுவரை பெண்கள் விளையாட்டுப் பொருட்களாக நடத்தப்படுகின்றனர். பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் வாதாடினேன்.
ஆனால் இவை பாராளுமன்றத்திலேயே நிறைவேற்றப்பட வேண்டும், நகரசபையில் அல்ல?
ஆம். ஆனால் இது ஜனாதிபதியிடம் ஒரு முறைப்பாடாக வந்தது. உங்களுக்குத் தெரியுமோ அல்லது தெரியாதோ 1995இல் சட்டங்கள் கடுமையாகத்தான் இருந்தன. ஆனால் மரண தண்டனை முறை இருக்கவில்லை. மரண தண்டனைதான் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது பாருங்கள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும்கூட மீண்டும் விடுதலையாகி வந்து அதே தவறைச் செய்கின்றார்கள். சிலவகைக் குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்க வேண்டும். சிலருக்கு இது போன்ற தண்டனைகள் வழங்கும் போது குற்றங்கள் மெதுவாக சமூகத்திலிருந்து அகன்றுவிடும்.
அரசியற் செயற்பாடுகளில் நீங்கள் எவ்வகையான முட்டுக்கட்டைகளை எதிர்நோக்கி இருக்கின்றீர்கள் என்று எமக்கு சொல்ல முடியுமா?
திருமணமான பெண்ணாயிருந்தால் கணவர் புரிந்துணர்வும் ஒத்தாசை புரிபவராகவுமிருந்தால் பிரச்சினை இல்லை. என் கணவர் விஷயம் தெரிந்தவர்.
122

ஆகவே எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் ஒரு பெண்ணுக்கு எப்படி நடந்து கொள்வது என்பது தெரிந்திருக்க வேண்டும். அவருக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமாயின் அவரை வேறு காரணங்கள் குழப் பக்கூடாது. அரசியலுக்கு வரும் சில பெண்கள் அவர்களாகவே பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற தூய எண்ணத்துடன் பெண்கள் அரசியலுக்கு வருகிறார்கள் எனின் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அவருக்கு எந்த நேரத்தில் எங்கும் போகலாம். சில நேரங்களில் நான் கூட்டங்களுக்கு போய்விட்டு ஒன்று, இரண்டு மணிக்குக்கூட வீட்டிற்கு வந்திருக்கின்றேன்.
உடல்ரீதியான வித்தியாசத்தைத் தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது. நாங்கள் எமக்கு தேவையானவற்றைச் செயல்ரீதியாகச் சிந்திப்பதில் திறமையுள்ளவர்கள். இப்பொழுது நாட்டின் அதிஉயர் பதவியைப் பெண்ணொருவர்தான் வகித்துக்கொண்டிருக்கின்றார். பெண்களால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை.
தேர்தலில் போட்டியிட இப்போது அதிகளவான பணம் வேண்டுமல்லவா?
ஆம். தற்போதைய அரசியல் முறையில் எங்களுக்கு வெற்றிகரமாகத் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்குப் பெருந்தொகையான பணம் தேவை. ஆனால் நான்தான் மிகக்குறைந்தளவு பணத்தைத் தேர்தலில் செலவிட்டு வெற்றி பெற்றவள். மக்கள் என்னிடம் எதனையும் எதிர்பார்க்கவில்லை. நான் அதிர்ஷ்டசாலி. எனக்கு வேலை செய்பவர்கள் என்னிடமிருந்து ஒரு கோப்பை தேநீர் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் எவ்வழியிலாவது மரணம் போன்றவற்றுக்கு நான் உதவுகின்றேன். நான் வசதியானவளாக இருந்திருந்தால் அநேக மக்களுக்குப் பண உதவி செய்யக்கூடியதாய் இருந்திருக்கும். மக்களுக்கு உதவி செய்வதற்கு எம்மிடம் எதுவுமில்லை. அரசாங்கம் இதைப் புரிந்து கொள்வதில்லை. இல்லாவிட்டால் எமக்கு நிறையச் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். எப்படியிருப்பினும் நான் பணம் சம்பாதிப்பதற்காக அரசியலில் இருக்கவில்லை. ஆகவே தொடர்ந்திருப்பேன்.
எவ்வளவு தூரம் வன்முறை ஒரு தடையாகவுள்ளது?
இன்று நடைபெற்றுவரும் வன்முறை அரசியலில் எனக்குப் பிரத்தியேகமான அனுபவம் உள்ளது. பொரல்லைப் பகுதியில் எனக்கு அதிகமான வன்முறை போட்டியோடு சமாளிக்க வேண்டியிருந்தது. பிரசாரத்தின்போது நான் கொல்லப் படுவேன், படுகொலை செய்யப் படுவேன், துணி டுகளாக வெட்டப்படுவேன் என்று எனக்குக் கூறிப்பட்டது. அந்தச் சமயத்தில் ஏராளமான வாக்கு மோசடி நடைபெற்றது. ஆனால் நான் அதைப்பற்றியெல்லாம்
123

Page 70
திரும்பியும் பார்க்கவில்லை. இது போன்ற சமயத்தில் என்னுள் மறைந்து கிடந்த ஆண் வெளிப்பட்டான். இது போன்ற நேரங்களில் பெண் என்பதை நீங்கள் மறந்து விடவேண்டும். சில நேரங்களில் நான் எனது சேலையை இடுப்பில் மடித்துச் செருகிக் கொண்டு சண்டைக்குத் தயாராகி இருக்கின்றேன்.
வன்முறை அரசியல் சம்பந்தமாக அரசாங்கத்துக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?
அவர்கள் வன்முறையை நிறுத்துவதற்குத் தேவையான எல்லாவித நடவடிக்கையையும் எடுக்கவேண்டும். நான் அறிந்தவரையில் எமது அமைச்சர்கள், வடமேல் மாகாணத்தில் எந்தவிதமான சட்டவிரோத வன்முறை நடவடிக்கையையும் நாடிச்செல்ல வேண்டாம் என ஒவ்வொருவருக்கும் கூறி இருப்பதோடு, மக்கள் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்கள். நாங்கள் வண் முறையை நாடாவிட்டால் மக்கள் எமக்கு வாக்களிப் பார்கள்; இல்லாவிட்டால் எமக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் வித்தியாசம் இல்லாமற் போய்விடும். நடுநிலையான பெண் அல்லது ஆணுக்கு தெரிவு இல்லாமற் போய்விடும். இது உண்மையில் ஒரு நல்ல விடயமல்ல. நாங்கள் எங்கள் கடமையைச் செய்திருந்தால், வாக்குகளைப் பெறுவோம்.
பெண்கள் அரசியலில் பங்குபற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? உள்ளுராட்சி மட்டத்தில் பெண்களுக்கு 25 சத வீத ஒதுக்கீட்டை நீங்கள் அனுமதிக்கிறீர்களா?
ஆம். நிறையப் பெண்கள் அரசியலில் நுழைய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்போது மட்டும்தான் எமது குரல்களை எம்மால் பலப்படுத்த முடியும், ஒதுக்கீடு ஒரு நல்ல விடயம் என்று நான் நினைக்கிறேன். அதிகமாக திறமையுள்ள இளம் பெண்கள் அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபட விரும்புவார்கள். ஆனால் வன்முறை, நிதிப் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் அவர்கள் பயப்படுகிறார்கள். இந்தப் பெண்கள் பாராளுமன்றம் நுழைவதற்குப் பட்டியல் முறையில் வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்று எனக் கு ஒரு யோசனை இருக கரிறது. உதாரணமாக நாணி , பெருந்தொகையான பணம் தேவையென்பதால் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆகவே பட்டியல் மூலம் போட்டியிடும் வாய்ப்பு திறமையான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
என்னுடைய அனுபவத்தில், கொழும்பு மாநகரசபை வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தோ அல்லது பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்தோ 10 பெண் வேட்பாளர்களுக்கு மேல் இருந்ததில்லை. பெண்கள் நியமிக்கப்பட்டு
124

தேர்தலில் போட்டியிட்டாலும் கூட (கடந்த தேர்தலில் ஏறக்குறைய 12 அல்லது 15 போட்டியாளர்கள் இருந்தார்கள்) அவர்கள் வெற்றி பெறுவதில்லை. அவர்களுக்கு வெல்ல முடியாது. அவர்களால் வாக்குகளைப் பெற முடியாது. ஏனென்றால் ஒருவர் அர்ப்பணிப்போடு மக்களோடு இணைந்து நீண்டகாலம் பணியாற்ற வேண்டியிருக்கிறது. உண்மையில் பெண்கள் அர்ப்பணிப்போடு இருந்தாலும் கூட, வன்முறை, தேர்தலில் போட்டியிடுவதற்கான செலவு ஆகியவற்றினால் அவர்கள் அரசியல் நீரோட்டத்தில் நுழைவதற்கு விரும்புவதில்லை.
ஆனால் உண்மையில் பட்டியல் முறையில் அதன் குறைபாடுகள் இருக்கும். அதிகாரத்திலுள்ளவர்கள் தங்கள் சொந்த உறவினர்களைக் கொண்டும் மனைவிமாரைக் கொண்டும் அதனை நிரப் புவார்கள், பெண்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய வாய்ப்புகள் அலட்சியப்படுத்தப்படும். இன்று அரசியலில் பரவலாக இருப்பது சொந்த இலாபம். அதனாற்தான் வன்முறை பெருகுகிறது.
அதிகமான பெண்கள் இருந்தால் அரசியலில் வன்முறை குறைவாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
உண்மையில் அது குறைவடையும் என்று நான் நினைக்கின்றேன். நல்ல ஆட்சி இருக்கும். பெண் அதிபர்களால் நடத்தப்படும் பாடசாலைகளில் அதி ஒழுக் கமும் , படிப் பும் நல ல நிர்வாகமும் உள் ளதை நாணி அவதானித்திருக்கிறேன்.
ஆனால் தற்போது அரசியலில் உள்ள பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர்கள் பூரீலங்காவில் உள்ள பெண்களுக்குச் சேவையாற்றியிருக்கிறார்களா?
எனக்கு அதிகமாக இந்தப் பெண்களைப் பற்றித் தெரியாது. சில பெண்கள் மக்களோடு நெருக்கமாக வேலை செய்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அநேகமான மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது என்னவென்றால் வேலைவாய்ப்பு. அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாத போது ஓர் அரசாங்கம் வீழ்ச்சியடைகிறது. எதிர்காலத்தில் இந்தக் கட்டமைப்பில் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். வேலைவாய்ப்பிற்கான வழிகளைச் சீராக உருவாக்குவதற்கு நாம் சோஷலிஸத்தை நோக்க வேண்டியிருக்கிறது. ஆனால் இரண்டு அரசாங்கங்களும் எதிர்த்திசையில் போய்க்கொண்டிருக்கின்றன. தற்போதைய முறையின் கீழ் சமுதாயத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியினரே நன்மைகளையும் வளங்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். அங்கே சமமான பிரிவுகள் இல்லை.
125

Page 71
பின்பு, இருப்பவர்களை இல்லாதவர்கள் எப்போதும் பொறாமையாகவே நோக்குகிறார்கள். அங்கே நேயம் இல்லை. பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க சரியான திட்டங்கள் இல்லை. சரியான திட்டங்களும், கொள்கையும் இல்லாதபோது ஒன்றுமே செய்ய முடிவதில்லை. அரசாங்கம் தன்னுடைய ஆட்களுக்குச் செய்கிறது. தகைமையுடையோர் ஓரங்கட்டப்படுகிறார்கள். இந்த விடயங்கள் ஒவ்வொரு அரசாங்கத்தின் கீழும் நடைபெறுவதோடு, இந்த அரசாங்கத்தின் கீழும் நடைபெறுகிறது.
நீங்கள் கட்சியின் மாதர் பிரிவில் ஒரு முழுநேர உறுப்பினரா?
நான் ஓர் உறுப்பினர். ஆனால் நான் முழுவதுமாக அதில் ஈடுபட்டிருக்கவில்லை. அவர்கள் செய்யும் அதிகமான வேலைகள் எனக்குத் தெரியாது.
அப்படியானால் அவர்கள் என்ன செய்கிறார்கள்?
நல்லது. அவர்கள் எப்போதாவது எதையாவது கொண்டாடுவதற்காகச் சந்திக்கிறார்கள். உதாரணமாக மார்ச் 8 ஆம் திகதி. ஆனால் எப்போதும் ஒரே ஆட்களே விளக்கேற்றுகிறார்கள். மேடையிலேறிப் பேசுகிறார்கள். பத்திரிகைகளில் தங்களுடைய புகைப்படங்களை வரவைக்கிறார்கள். அதற்கப்பால் அவர்கள் அதிகமாக ஒன்றும் செய்வதில்லை. ஜனாதிபதியும் கூட ஒரு பெண்ணாக இருக்கின்றபடியால் பெண்களாகிய நாம் அதிகமாகச் செய்ய முடியும் என நான் உணர்கிறேன்.
உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் என்ன?
நான் இறக்கும் வரைக்கும் மக்களோடு இணைந்து வேலை செய்வேன். அமைச்சர்களால் எங்களுக்கும் பிரயோசனமில்லை, அரசாங்கத்துக்கும் பிரயோசனமில்லை. மக்கள் இன்னும் எங்களையிட்டுச் சலிப்படையவில்லை. நான் எப்போதும் அவர்களோடு இணைந்து வேலை செய்வேன். ஆனால் மீண்டும் நான் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. இந்த வாய்ப்பு இப்போது ஒரு இளம் நபருக்குப் போகவேண்டும்.
நீங்கள் பாராளுமன்றத்துக்குப் போக நினைக்கிறீர்களா?
நான் விரும்புகிறேன். ஆயினும் பரந்தளவில் மக்களுக்குச் சீராகச் சேவையாற்ற
விரும்புகிறேன். நிதிரீதியாக அது சாத்தியமற்றது. அது பணத்தை விரயமாக்குவதாகவே முடியும்.
126

பெயர் கீ வென் ஹேரத்
தொழில் முன்னாள் உறுப்பினர், வடமேல் மாகாணசபை விவாகமானவரா ஆம்
கட்சி : ஐக்கிய தேசியக் கட்சி
நான் கொழும்பில் பிறந்தவன். இரண்டு, மூன்று பாடசாலைகளுக்குச் சென்று இறுதியில் பிஷொப்ஸ் கல்லூரியில் படிப்பை முடித்தேன். நான் ஒரு பெளத்தராகப் பிறந்தேன். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினேன். எனது குழந்தைப் பருவ நாட்களில் பிஷொப்ஸ் கல்லூரியின் சுற்றுப்புறச் சூழ்நிலையால் வெகுவாகக் கவரப்பட்டேன். எனக்கு 12 வயதாயிருக்கும் போது எனது பெற்றோர் பிரிந்துவிட்டனர். நான் அதிகமாக என்னுடைய தாயோடுதான் வளர்ந்தேன். எனக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருக்கிறார்கள். நான் என்னுடைய உயர்தரக் கல்வியை முடித்து விட்டு, பல்கலைக்கழகம் செல்லக் காத்திருக்கும் போது ஒரு திரைப்படத்தில் பங்கெடுத்தேன். பின்பு ஆங்கில இலக்கியம் படிப்பதற்காகச் சிறிது காலத்திற்கு பேராதனைப் பல கலைக் கழகம் சென்றேன். ஆனால் நான் எனது பட்டப்படிப்பை முடிக்கவில்லை. எனக்கு 'பெலோ' நடனத்தில் மிகுந்த ஆர்வம் இருந்தது. நான் 'பெலோ’ நடனத்தால் ஆக்கிரமிக்கப்பட்டேன். இப்போதும் அப்படியேதான் என்று நினைக்கிறேன். ஆகவே நான் நிறுத்திய பெலோவைத் தொடர்வதற்கு மீண்டும் நான் கொழும்புக்குச் சென்றேன். இந்த நேரத்தில் என்னுடைய அம்மா என்னைப் பத்திரிகைத் தொழில் டிப்ளோமா செய்வதற்கு இணங்கச் செய்தார். நான் ஆங்கிலத்திலும், எழுத்திலும் திறமையாக இருந்தேன். ஆனால் நான் பெலோ, சங்கீதம், நடனம், எழுத்துத்துறையில் ஈடுபட்டு இருந்தேன். எனது பால்ய பருவத்திலிருந்தே எழுத்துத் துறையில் ஈடுபட்டு இருந்தேன் என நான் நினைக்கின்றேன்.
நான் 1965இல் திருமணம் முடித்தேன். திருமணம் எனக்கு ஒரு புதுவிதமான வாய்ப்புகளைத் தந்தது. நான் ஒரு மத்திய தரமும் , கட்டுப்பாடானதுமான குடும்பத்தில் இருந்து வந்தவள், என்றுமே எனக்கு வெளியே செல்ல வாய்ப்புக் கிடைத்ததில்லை. எனது கணவர் ஒரு செல்வம் மிகுந்த குடும்பத்திலிருந்து வந்தவர். திருமணம் முடிந்தவுடனேயே நான் அரசியலில் காலடி எடுத்து வைத்தேன். எனது கணவர் 1977 தேர்தலில் போட்டியிட்டார். அதற்கு முன்னரேயே அவர் அரசியல், அதற்கான ஏற்பாடுகள் முதலியனவற்றில் ஈடுபட்டிருந்தார். ஆகவே நாளுக்குநாள் இந்த நடைமுறைப் பழக்கத்தில் நான் ஆழ்ந்து இருந்தேன். நான் ஒருபோதும் அரசியல்வாதியாக இருந்ததில்லை. எனக்கு என்றுமே அரசியலில் ஈடுபடவேண்டியிருந்ததில்லை. நான் அரசியலுக்குப் பொருத்தமற்றவள் என்று இன்னும் உணர்கிறேன். ஏனென்றால் எனது வாழ்க்கை நோக்கும், எனது உலகமும் அரசியலிலிருந்து முற்றிலும் மாறானதாக இருந்தது. நான் அதிகளவு கலையைச்சார்ந்தவளாக
127

Page 72
இருந்ததோடு, எழுதுவதில் அதிக நாட்டங்கொண்டேன். நடனத்திலும் அதிக ஆர்வம் கொண்டேன். நான் பாடசாலையிலும், பொதுப்பாடசாலை அளவிலும் ஒரு விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்ந்தேன். இவ்வாறானதொரு நபருக்கு ரீலங்கா அரசியலில் இடம் பெறுவதற்கு அது மிகவும் கடினமாகும். ஆனால் எப்படியோ அதை என்னால் சமாளிக்க முடிந்தது. அதன்பிறகு என்னுடைய மற்றைய எல்லா ஈடுபாடுகளையும் பின்னணியில் போட்டுவிட்டு, என் கணவருக்கு உதவி செய்வதற்காக மேடையேறி எல்லா இடங்களுக்கும் போனேன். ஆகவே, 1977இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். 1993இல் நான் அரசியலில் இடம்பெற்று அதனடிப்படையில் போட்டியிட்டு வென்றேன்.
இதைச் செய்வதற்கு எது உங்களைத் தூண்டியது?
எனக்கு இது தேவைப்படவில்லை. அதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டேன். எனது கணவர் நாத்தாண்டியத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். நான் வடமேல் மாகாணத்தில் போட்டியிடவேண்டுமென்றும், நான் அவ்வாறு போட்டியிடாத பட்சத்தில் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கப்போவதில்லை என்றும் எல்லா அமைப்பாளர்களும், மகளிர் சங்கங்களும், இளைஞர் அமைப்புகளும் ஒருமனதாக என்னைக் கோரினார்கள். உண்மையில் அவர்கள் எனது கணவரை வற்புறுத்தினார்கள். அவர் அதை விரும்பவில்லை. எவ்வாறாயினும் நான் அதை ஏற்றுக் கொண்டதன் பின்னர்தான் அரசியல் என்றால் என்ன என்றெல்லாம் எனக்குத் தெரிந்தது. நான் நிதியமைச்சிலும் பின்னர் வெளிநாட்டு அமைச்சிலும் சிறிது காலத்திற்கு வேலை செய்தேன். எனவே எனக்கு அரசியல் என்பது தூங்குவது, உண்பது, குடிப்பது போன்றும் அத்துபடி ஆயிற்று.
நீங்கள் மாகாணசபை உறுப் பினராக 5 வருடங்கள் இருந்திருக்கிறீர்கள் அது எவ்வாறு இருந்தது?
நான் மிகவும் உண்மையான ஒரு நபர். நான் குறிப்பிடத்தக்கதான பங்களிப்பைச் செய்தேன் என நினைக்கவில்லை. உண்மையில் எனக்குக் கிடைத்த வளங்களைக் கொண்டு என்னாலானவற்றை நான் செய்தேன். ஆனால் நான் போன வித்தியாசமான இடங்களிலும், வித்தியாசமான இலக்குகளிலும் நிறைய வேலைகள் செய்ய வேணி டியுள்ளன. நான் இன்னும் கூடுதலாக உதவியிருக்கலாம். எனது முயற்சிகள் பெரும்பாலும் இளைஞர்களையும், பெண்களையும் இலக்கு வைத்திருந்ததுடன் வடமேல் மாகாணசபையிலிருந்து கிடைத்த எல்லாவிதமான வளங்களையும், பணத்தையும் நான் அவர்களுக்கே கொடுத்தேன். உண்மையில் அது மிகவும் சிறிய தொகை.
நான் பிரதேசத்தில் விளையாட்டை முன்னேற்றுவதற்காக நிறையப் பணம் செலவிட்டேன். 'திருமதி. ஹேரத் ஏன் இவ்வளவு பணத்தை விளையாட்டுக்காகச்
128

செலவிடுகிறீர்கள்’ எனப் பலர் என்னிடம் கோட்டார்கள். எனது வாதம் இதுதான். நான் பிரதிநிதித்துவப்படுத்தும் 70% வீதமான இளைஞர்கள் கிராமப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வேலையற்றிருக்கிறார்கள். விளையாட்டு சமுதாயத்தை வளர்க்கிறது. அது மது, போதைப்பொருள், சச்சரவுகள் போன்றவற்றிலிருந்து விலக்கி வைக்கிறது. உதாரணத்துக்கு கரப்பந்தாட்டம் அபிமான விளையாட்டாக விளையாடப்படும் இந்தக் கிராமத்தில் நான் ஒரு கரப்பந்தாட்ட விளையாட்டுக் கழகத்துக்கு உதவி செய்தேன். இப்போது இந்த இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாலை 4 இலிருந்து 5 மணி தொடக்கம் நன்றாக இருட்டும் வரை விளையாடுகிறார்கள். ஆகவே, அவர்கள் வீடு செல்லும் போது மிகவும் களைப்படைந்து விடுகிறார்கள். அவர்களுக்கு வேறு கெட்ட பழக்கங்களில் கவனம் செலுத்துவதற்கு நேரமில்லை. இந்த நோக்கத்தில் தான் நான் அதனைப் பார்க்கிறேன். அது அந்த அளவுக்கு வெற்றியாகவிருந்தது. அது சமுதாய வளர்ச்சிக்கும் பங்களிப்பதோடு, தனிமைப்படுத்தப்பட்டு இல்லாமல் இளைஞர்களிடையே கூட்டுறவை வளரக்க ஊக்கமளிக்கிறது. இந்த விடயங்கள் இளைஞர் சந்ததியினரைக் கட்டியெழுப்ப மிகவும் அவசியமானவை. நான் பாடசாலையில் இருந்தபோது பல்வேறு விதமான மனிதர்களைப் பற்றி அறியக்கூடியதாயிருந்தது. அந்தப் பயிற்சி எனக்கு அரசியலில் பங்கெடுக்க வழிசமைத்தது. இல்லாவிட்டால் பிஷொப்ஸ் கல்லூரியிலோ அல்லது மகளிர் கல்லூரியிலோ இருந்து வந்த ஒரு பெண் கிராமத்து அரசியலுக்குப் பொருந்துவாள் என நீங்கள் நினைக்க மாட்டீர்கள்.
நீங்கள் மக்களோடு இணைந்து கொள்வதற்கு அல்லது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஏதாவது பிரச்சினை உங்களுக்கு இருந்ததா?
இல்லை. நான் படிப்படியாக என்னையும் அறியாமல் எனது தோற்றத்தை மாற்றிக் கொண்டேன். உதாரணத்துக்கு, நான் எனது ஆடையணிதலை மிக எளிமையானதாக மாற்றிக்கொண்டேன். மற்றவர்கள் கூறியது போன்று மக்களை ஏமாற்ற நான் அவ்வாறு செய்யவில்லை. நான் ஞாயிற்றுக் கிழமைகளில் கிறிஸ்தவப் பள்ளிக்குப் போகும் வேளைகளில் பெண்கள் ஆடையணியும் முறையைக் கண்டுள்ளேன். நான் அவர்களைவிட நன்றாக ஆடையணிந்தால் நான் தானி தனிமைப் படுத்தப் படுவேனேயொழிய அவர்களல்ல என்பதை உணர்ந்தேன். எவ்வாறாயினும் இவ்வாறு செய்வதன் மூலம் நான் அவர்களில் ஒருவராக மாறினேன். அதன்பிறகு, அவர்களோடு தொடர்பு வைப்பது மிகவும் சுலபமானது என்பதைக் கண்டுகொண்டேன். அதன் பின் ஏறக்குறைய 10 வருடங்களுக்குப் பிறகு சடுதியாக நான் கொழும்பில் எனது நண்பர்களைச் சந்திக் நேர்ந்தபோது அவர்கள் திகைப்படைந்தார்கள். நான் ஆடம்பரமான ஆடைகளை விட்டுவிட்டேன். நீங்கள்
129

Page 73
பல்கலைக்கழகம் செல்லும் போது ஒதுங்கி இருக்க முயற்சிப்பீர்களேயானால் நீங்கள் ‘ராக்கிங்' செய்யப்படுவீர்கள். ஆகவே எப்போதுமே மற்றவர்களுக்கு ஏற்றவிதமாக எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் அரசியலிலும் அப்படித்தான்.
பெண்கள் மீது நீங்கள் அக்கறை எடுத்ததாகக் கூறினீர்கள். உங்களால் கொண்டு வரப்பட்ட முன்மாதிரயான தீர்மானங்கள் எவை?
பிரதானமாக நான் ஒரு மீன் பிடி வளமுள்ளதும், விவசாய வளமுள்ளதுமான தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். நான் ஒரு இயற்கையிலேயே விவசாயம் மட்டுமல்ல தோட்டக்கலை நிபுணியும் கூட. என்னுடைய தகப்பனார் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறை விரிவுரையாளர். ஆகவே இயற்கையாகவே அவரது மரபணுத் தாக்கம் என்னிடம் இருக்கும். ஆகவே, நான் எப்போதும் கூடிய முக்கியத்துவத்தை விவசாயத்துக்குக் கொடுத்திருக்கிறேன். விசேடமாக குறுகியகால விவசாயம் மற்றும் வீட்டுத்தோட்ட வளர்ப்பு என்பன. நான் மாதத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை பெண்களுக்கு அவர்களது சொந்தத் தோட்டத்தில் பயிர்வளர்ப்பு மூலம் உணவைப் பெறுவதன் முக்கியத்துவம் பற்றி விரிவுரைகள் நடத்தினேன். நான் பெற்றுக் கொண்ட 50 சத வீதமான பணத்தைப் பெணி களை, ஆணி களையல் ல, இநீதச் செயப் கையில் ஈடுபட ஊக்கப்படுத்துவதற்கும், இதை முன்னேற்றுவதற்கும் பயன்படுத்தினேன். நாத்தாண்டியப் பிரதேசத்தில் வளர்க்கப்படக்கூடியதான எல்லாவற்றையும் தென்னங்கன்று, மாங்கன்று, வாழை, மரக்கறி போன்றவற்றையும் நான் வழங்கலானேன். ஒவ்வொரு வீடுகளிலும் ஏதாவது இருப்பதைக் காண்பீர்கள். அது எனினுடைய பணத்திலிருந்து வந்த தல ல. அது வடமேல் மாகாணசபையின் பணம். ஆனால் உணவுத் தேவைக்கான வளர்ச்சிக்கு நான் பொறுப்பாகவிருக்கிறேன். அத்தோடு அநேகமான பெண்கள் ஒவ்வொரு நாளும் ஒரேவிதமான மரக்கறியை உண்ண முடியாது என முறைப்பாடு செய்கிறார்கள். பின்னர் எனக்கு ஒரு யோசனை வந்தது. உங்கள் அயல் வீட்டுக்காரரைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவரை வித்தியாசமான மரக்கறி வகையை வளர்க்கச் சொல்லுங்கள். பிறகு பண்டமாற்றுச் செய்யுங்கள் என்று நான் சொன்னேன். அது மிகவும் பிரபலமானது. நான் கட்சி அரசியலோடு முற்றுப் பெறவில்லை. நான் விசேடமாக விளையாட்டுச் சங்கங்கள், மாதர் சங்கங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளில் இருந்தேன். நான் ஒருபோதும் அவர்களைக் கறுப்பா, சிவப்பா, நீலமா என்று கேட்டதில்லை. அவர்களுக்கு அது தெரியும். அவர்கள் அதற்குச் சாட்சியாக இருப்பார்கள். அவ்வாறுதான், என்னால் இந்த மக்களுக்கும் எனது கணவருக்குமிடையில் சிறந்த உறவைக் கட்டியெழுப்ப முடிந்தது. அவர் பெரும்பாலும் கொழும்பிலிருந்தபோது எப்போதும் அவருக்கு இரண்டு அமைச்சுப் பதவிகள் இருந்தன. ஆகவே,
130

அவருக்கு கொழும்பில் நிறைய வேலைகள் இருந்தன. இவ்வாறுதான் நான் இவற்றை நடத்திச் சென்றேன். நான் அவர்களுக்குச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் தருவேன் என்று ஒருபோதும் உறுதியளித்ததில்லை. நான் மிகவும் யதார்த்தமானவள்.
நீங்கள் கொண்டு வந்த திட்டங்களில் உங்களால் நிறைவேற்றப்பட முடியாமற் போனவை உண்டா?
ஒரு திட்டம் இருந்தது. அதை என்னால் செய்ய முடியவில்லை. அதற்காக நிறைய வருந்துகிறேன். கரையோரத்தில் ஒரு பெரிய ஐஸ் தொழிற்சாலை அமைப்பதே அது; இதனால் மீனவர்களுக்கு இதன் வசதிகளைச் சாதாரண கட்டணங்களில் பெற்றுக்கொள்ள முடியும். இலவசமாக இல்லை. ஏனென்றால் அவரகள் அதைப் பெறுமதியாகக் கொள்ளமாட்டார்கள். மீன்களைக் களஞ சியப் படுத் துவது எமது மன வர் களுக்கு ஒரு பெரும் பிரச்சினையாகவுள்ளது. மீனைக் காயவைப்பதோ, அற்பமான சிறு தொகைக்கு விற்பதோ அல்லது வீசிவிடுவதோ ஏதோ ஒன்றைச் செய்யவேண்டியுள்ளது. நான் சில வெளிநாட்டுத் தூதுவராலயங்களை அணுகினேன். அவர்களும் அதில் கவனமெடுக்க விரும்பினார்கள். ஆனால் அந்த நேரத்தில்தான் எனது கணவருடைய அமைச்சுப்பதவி மாற்றமடைந்தது.
நான் பழங்கள் தகரத்திலடைக்கும் தொழிற்சாலையொன்றை அமைக்க ஆர்வத்துடன் இருந்தேன். மாம்பழம், அன்னாசி போன்றவை எங்களுக்கு நிறைவாக உள்ளன, ஆனால் பருவகாலமல்லாத நாட்களில் மாம்பழம் உங்களுக்குக் கிடைக்காது. உள்ளுர்ச் சந்தைக்காக, பருவகாலங்களில் இலாபமாகக் கிடைக்கும் பழங்களைத் தகரத்திலடைப்பதற்காக தற்காலிக தொழிற்சாலையொன்றை தற்காலிக தொழிலாளர்களோடு அமைக்க நான் யோசித்தேன். அதுவும் கூட செய்ய முடியாமல் போனது.
உங்களால் அதிகமாக சேவையாற்ற முடியவில்லை என்று நீங்கள் கூறினிர்கள் அது ஏன்?
அது ஒரு வளங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனின செய்ய வேண்டுமென்றாலும் உங்களுக்கு வளங்கள் தேவை. எங்களுக்கு ஒரு வருடத்துக்குப் பத்து இலட்சம் ரூபா மட்டுமே கொடுக்கப்படுகின்றது. பத்து இலட்ச ரூபாவால் உங்களால் ஒரு வருடத்துக்கு என்ன செய்யமுடியும். அது மிகவும் கடினமானது. அனைவருக்கும் ஏதாவது தேவைப்படுகிறது. எங்களிடம் ஏறக்குறைய 70,000 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரியவர்கள். அப்பொழுது சிறுபிள்ளைகள்? இந்த பத்து இலட்சத்தில் நாங்கள் கல்வி, இளைஞர் அலுவல்கள். விவசாயம், நீர் வசதி, சிறு வீதிகள் முதலியவற்றில்
131

Page 74
கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஒரு தொகுதியின் கல்வித்தேவைகளைச் சமாளிக்கக்கூட இந்த 10 இலட்சம் போதாது. பாடசாலைகளுக்கு உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக நன்கொடை ஸ்தாபனங்களோடு நான் தொடர்பு வைத்திருந்தேன். முத்துக்கடுவ பாடசாலைக்காக நான் ஒரு வாசிகசாலையைக் கட்டினேன். எல்லா வேலைகளுக்கும் மறைந்த திரு. சிறில் கார்டினர் அவர்களால் நிதியுதவி செய்யப்பட்டது. பின்பு நான் இன்னொரு பிரமுகரிடமிருந்து புத்தகங்களைப் பெற்றேன்.
மாகாண சபைகள் முற்றுமுழுதாக நாட்டுக்குப் பயனற்றது என நான் நினைக்கிறேன். செலவினங்கள், தகராறுகள், தேவையற்ற தேர்தல்கள், திட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து" அது இன்னமும் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. அமைச்சர்களின் நிர்வாக மட்டத்திற்கு உதவுமுகமாகவே இது உருவாக்கப்பட்டது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளுடன் முரண்படுகின்றனர். அதில் பல்வேறு உள்ளகப் பிரச்சினைகளும் காணப்படுகின்றன. எங்களுக்கு சம்பளம் தரப்படுகின்றது. நாங்கள் போய் அமர்ந்து பேசுகிறோம். விவாதங்களில் ஈடுபடுகின்றோம் அவ்வளவுதான்.
அரசாங்கத்திடமிருந்து உங்களுக்கு இலகுவாக நிதிவளங்களைப் பெறக்கூடியதாக இருக்கும் அல்லவா?
இல்லை. நீங்கள் ஓர் அமைச்சரின் மனைவியாக இருந்தால் அல்லது உங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்தால் எங்களால் அவ்வாறு பெற்றுக் கொள்ள முடியம். தற்போதைய சூழ்நிலையில் என்னால் முடியாது. நான் ஒரு எதிக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரின் மனைவியாக இருப்பதுதான் காரணம். ஏன் இவர்கள் இது போன்ற மனநிலையில் இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. உலகக்கிண்ண ஆட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் எனது பெணிகள் கிரிக்கெட் அணிக்குக் கூட என்னால் நிதியைப் பெறமுடியவில்லை.
பெண்கள் கூடுதலாக அரசியலில் ஈடுபட வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
நிச்சயமாக. ஆனால் எமது பெண் அரசியல் வாதிகளைப் பாருங்கள். உதாரணத்திற்கு திருமதி. அத்துலத் முதலியை எடுத்துக் கொள்வோம். அவர் ஒரு சிறந்த பெண்மணி. அவர் பல காலமாக வெளிநாடுகளில் இருந்திருக்கின்றார். பல்வேறுபட்ட மனிதர்களையும் சந்தித்திருக்கின்றார். அவரிடம் சக்தி வாய்ந்த அமைச்சுப் பதவி இருக்கின்றது. இருந்தும் அவர் ஏன் பெண்களுக்காக ஒன்றும் செய்யவில்லை. பாராளுமன்றத்தில் உள்ள பெண்களை அவரைச் சார்ந்த கட்சிகளே மதிப்பது கிடையாது. பெண் என்கிற
132

படியால் பெண்களாலேயே அவர்கள் தோற்கடிக்கப்படுகின்றனர். பெண்கள் விவகாரங்களுக்கான அமைச்சுப் பதவி எனக்கு இருந்தால் என்னால் நிறையச் செய்திருக்க முடியும். நான் புதிய சட்டங்களை இயற்ற முயன்றிருப்பேன். கற்பழிப்புகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அது மரண தண்டனையாக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு 25 சத வீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அது மிகவும் நல்லது. ஆனால் பெண்கள் முன்வராவிட்டால் என்ன பயன்.
பெண்கள் முன்வருவதில்லை என்று ஏன் நீங்கள் நினைக்கிறீர்கள்?
வன்முறைகள் காரணமாக இருக்கலாம். வீட்டுப் பிரச்சினைகள் மற்றும் குடும்பப் பொறுப்புக்கள் காரணமாகவும் இருக்கலாம்.
அரசியற் கட்சிகள் இவர்களைப் பற்றி என்ன நிலைப்பாட்டில் உள்ளன?
ஐக்கிய தேசியக் கட்சி பெண்கள் அரசியலுக்கு வருவதை விரும்புகின்ற போதிலும் பெண்கள் அவ்வாறு வருவதில்லை. காரணம் என்னவென்று எனக்குத் தெரியாது. வடமேல் மாகாணத் தேர்தலில் இந்தளவு வன்முறைகள் இடம்பெறும் என்பது எனக்கு முன்னரே தெரிந்திருந்தால் நான் தேர்தலில் போட்டியிட்டிருக்கமாட்டேன். என் வாழ்க்கையின் மிகப் பெரிய பயங்கரமாக அதை நான் எண்ணுகின்றேன். என்னை நம்புங்கள். அது ஒரு பயங்கரத் திகில் படம் போன்று இருந்தது. அதைப் பற்றிச் சொல்லப்போனால் ஒருநாள் போதாது. எனது பிள்ளைகளை அரசியலில் ஈடுபடுத்தக்கூடாது என்று நான் தீர்மானிக்கின்றேன்.
எமது சரித்திரத்தில் வடமேல் மாகாணத் தேர்தல்தான் வன்முறைகள் நிறைந்த தேர்தலா?
ளஅரசியற் சரித்திரத்தில் மிகவும் மோசமான தேர்தல் அது. நான் இப்போது 50 வயதைக் கடந்து விட்டேன். அரசாங்கத்தின் பொறுப்பில் இது போன்று ஒன்று நடைபெறுவதை நான் அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன். சகல அமைச்சர்களும் தமது அடியாட்களுடனும் சுடுகலன்களுடனும் குண்டுகளுடனும் அங்கு முகாமிட்டிருந்தனர். சகல அரச வாகனங்களும் இதற்குப் பயன்பட்டன. இது சட்டத்திற்கு முரணானது. அரச வாகனங்களைத் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது. அமைச்சர் ஒருவர் வாக்களிக்கும்
133

Page 75
நிலையத்திற்கு வரக்கூடாது அதுதான் சட்டம். வேட்பாளர்கள் மட்டுமே வாக்களிப்பு நிலையத்திற்குள் வரலாம். எனது கணவர் நாத்தாண்டிய தேர்தற் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய போதும் கூட அவர் வாக்குச் சாவடிக்கு வரவில்லை. நான் மட்டுமே சென்றேன். அவர் வெளியே இருந்து கொண்டு என்னை மட்டுமே அனுப்பினார். ஆனால் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் அடியாட்களும் கட்டுக்கட்டாக வாக்குகளைப் போட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். நான் இதை யாரிடமும் கூறுவதற்குப் பயப்படவில்லை.
தேர்தலில் வெற்றி பெற்றதையிட்டு அரசாங்கம் மகிழ்ச்சி அடைந்திருக்கும். எப்பாடுபட்டாவது அவர்களுக்கு வெற்றிபெற வேண்டி இருந்தது. ஒரு வாக்குப்பெட்டியில் ஒன்றின் மேல் ஒன்றாக புத்தகம் போல் வாக்குச்சீட்டுக்கள் இருப்பதை நான் பார்த்தேன். அது எப்படி நடந்தது. மற்றுமொரு வாக்குச்சாவடியில் காலை 8.30 மணிக்கு உள்நுழையும் அமைச்சர் எல்லா வாக்குப்பெட்டிகளும் நிறைந்து விட்டன அவற்றைச் சீல்" செய்ய வேண்டும் எனக் கூறினார். ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாக்கை அளிப்பதற்கு சரியாக 3 நிமிடங்கள் தேவைப்படுகின்றது. அப்படி இருக்கும் போது எப்படி காலை 8.30 மணிக்குள் 2000 வேட்பாளர்கள் வாக்குகளை அளிக்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சியும் கூட இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
நீங்கள் தனிப்பட்ட முறையில் வன்முறைகளுக்கு முகம் கொடுத்திருக்கின்றீர்களா?
ஆம். வடமேல் மாகாணத்தில் நான் தேர்தற் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது எனது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.
நாட்டில் பெண்களை அழுத்தும் பிரச்சினைகள் என்று நீங்கள் எதை உணர்கிறீர்கள்?
அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டிருக்கின்றனர். வேலை செய்யும் ஒரு பெண்ணுக்குக்கூட சுதந்திரமில்லை. அவளது எண்ணங்களைக்கூற அவளுக்கு இடமளிப்பதில்லை. அடிப்படையில் எமது பெண்கள் ஆண்களால் புறக்கணிக்கப்படுகின்றனர். ஆண்கள் பெண்கள் மீது தமது மேலாதிக்கத்தைச் செலுத்துகின்றனர். தந்தை அல்லது கணவர் கூறும் வார்த்தையே இறுதியான முடிவாகும். அங்கு மறுபேச்சிற்கு இடமில்லை. எனது கணவர் ஒரு சுதந்திர விரும்பியாக இருந்தபோதும் நான் ஒன்றைச் செய்யுமுன் எனது கணவரை ஆலோசித்து விட்டே அதைச்செய்கிறேன்.
134

அரசாங்கத்தைப் பற்றி எப்படி விளக்கமளிப்பீர்கள்?
அரசாங்கம் என்பது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிலரால் நாட்டை முன்னிலைப்படுத்தவும் மக்களின் நோக்கங்களை அடைவதற்காகவும் நடத்தப்படுவதாகும். எமது நாட்டில் இது நடைபெறுவதில்லை. அரசாங்கம் தனது கட்சியைப் பிரதிநிதிப்படுத்துகின்றது எனக்கூறும் போது எல்லாக் கட்சிகளும் சுயநலப் போக்குடையவைதான். அவைகள் எல்லாமே தமது நன்மைகளை முன்னிலைப்படுத்தியே செயற்படுகின்றன. தேர்தல் முடிந்துவிட்டால் கட்சி மறக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசாங்கமாக மாறும். ஐக்கிய தேசியக் கட்சியினதோ பொதுஜன ஐக்கிய முன்னணியினதோ அரசாங்கமாக அல்ல. எமது நாட்டில் இப்படி நடைபெறுவதில்லை. நீங்கள் கிராமத்துக்குச் சென்று பாருங்கள். நான் ஒரு ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவள் என்ற வகையில் சகல உதவிகளையும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுக்கே வழங்குகின்றேன். இதனால் எனது நிலையை நான் பாதுகாத்துக் கொள்கிறேன். எனது கட்சியையும் அரசாங்கத்தையும் கூடப் பாதுகாக்கின்றேன். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கூட நான் திருமதி. சந்திரிகாவை எனது ஜனாதிபதியாக ஏற்றுக்கொள்கின்றேன். அத்துடன் அவரது அரசியல் நடவடிக்கைகளில் நான் குற்றங்களையும் காணுகின்றேன்.
அரசாங்கத் துக்கும் அரசுக் குமிடையில் வித்தரியாசத்தைக் காண்கின்றீர்களா?
ஆசிய நாடுகளில் அல்ல--அரசாங்கம் தான் அரசாக மாறுகின்றது.
அரசாங்கத்திடமிருந்து மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அவர்களுக்கு எல்லாமே வேண்டும். எமது நாடடிலுள்ள மற்றொரு குறை இதுதான். இலவச உணவு, இலவச ஆடைகள், இலவசக் கல்வி எல்லாமே அவர்களுக்கு வேண்டும். நீங்கள் அவர்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் வேலைக்கு வரமாட்டார்கள். எமது மக்கள் கெடுக்கப்பட்டு விட்டார்கள் என்றே நான் நினைக்கின்றேன். நாங்கள் அவர்களுக்கு எல்லாவற்றையும் தாம்பளத்தில் வைத்துக் கொடுத் திருக்கின்றோம். இப்போது அதை அவர்கள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர்.
உங்கள் அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?
இல்லை. இன்னும் நான் மக்களுக்குத் தேவையாக இருக்கின்றேன். அத்துடன் எனது கணவர் இன்னும் அரசியலில் இருக்கின்றார்.
135

Page 76
ஆகவே தேர்தலில் போட்டியிட இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால் போட்டியிடுவீர்களா?
இதே நிலையில் போட்டியிட நான் தயாரில்லை. நான் என்றாவது ஒருநாள் பாராளுமன்றம் செல்லவே விரும்புகின்றேன். அங்கே சில பங்களிப்புக்களைச் செய்யலாம் என்று எண்ணுகின்றேன். அந்தச் சந்தர்ப்பம் வருமா வராதா என்பது எனக்குத் தெரியாது.
136

பெயர் சித்ரா மன்திலக்க
தொழில் : மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர் விவாகநிலை : திருமணமானவள்
கட்சி : ஐக்கிய தேசிய கட்சி
நான் கண்டி மாவட்டத்திலுள்ள குண்டசாலை தேர்தல் தொகுதியின் கெங்கல்ல எனும் கிராமத்தில் பிறந்தேன். எனது பெற்றோருடன் சேர்த்து எனது குடும்பத்தில் ஐந்து பேர். மூன்று பிள்ளைகளுமே பெண்கள்தான். எனது தந்தை கண்டி வலல்ல மத்திய கல்லூரியில் அதிபராக இருந்தார். இப்போது ஓய்வு பெற்று என்னுடன் வீட்டில் இருக்கின்றார். எனது தாயும் ஒரு ஆசிரியையாகத்தான் இருந்தார். நான் உட்பட எனது சகோதரிகள் யாவரும் பட்டதாரிகள். ஒருவர் கட்டிடக்கலை நிபுணராகவும் மற்றவர் சுவீடனிலும் இருக்கின்றனர். நான் எனது பல்கலைக்கழக புகுமுகப் பரீட்சையை கண்டி ஹைஸ்கூலில் கற்கும் போதுஎழுதினேன். நான் 1977ஆம் ஆண்டில் சமூக விஞ்ஞானத்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்றேன். பட்டம் பெற்றதன் பின் நான் சட்டக்கல்லூரி முதலாமாண்டுப் பரீட்சை எழுதினேன். ஆனால் அது தொடரவில்லை. பின்னர் விவசாயத்துறையில் டிப்ளோமா கல்வியைத் தொடர்வதற்காகப் புலமைப்பரிசில் பெற்று ஜப்பான் போனேன். 1979 ஆம் ஆண்டு நான் ஓர் அரசாங்கப் பாடசாலையில் ஆசிரியையாக வேலைக்குச் சேர்ந்தேன். ஒன்றரை வருடங்கள் சேவையாற்றிய பின்னர் அதிலிருந்து விலகி 'சீடா’ நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் 'பெண்களுக்கான கூட்டுறவு முறைக் கல்வியைப் பயிற்றுவிக்கும் நிறுவனத்தில் இயக்குனராகச் சேர்ந்தேன். இதன் மூலம் வட கிழக்கு உட்பட சகல மாகாணத்திலும் உள்ள பெண்களுக்கு நாடளாவிய ரீதியில் கூட்டுறவு விவசாயங்கள் பற்றி பயிற்சி வழங்கினேன். பின்னர் நான் திட்ட இயக்குனராகப் பதவி உயர்வு பெற்றேன். எனது சகோதரி சுவீடன் போகவேண்டி இருந்ததனாலும் 1984இல் நான் இந்த வேலையில் இருந்து விலகினேன். நான் 1984 ஆம் ஆண்டு திருமணம் முடித்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினேன். திருமணமானதன் பின்னர் நான் எனது சொந்த கால்நடைப் பண்ணையையும் மரக்கறி பயிர்ச்செய்கையையும் ஆரம்பித்தேன். நல்ல முறையில் நான் செயற்பட்டதனால் கணிடி மாவட்டத்தில் சிறந்த பண்ணையாளராக நான் கருதப்பட்டேன்.
எப்படி அரசியலுக்கு வந்தீர்கள்?
எனது தகப்பனார் அரசியலில் தீவிரமாக ஈடுபடாத போதிலும் எனது குடும்பம் பல தலைமுறைகளாக ஐக்கிய தேசிய கட்சி சார்பாகத்தான் இருந்தது. அரசியலில் நான் நுழைந்தது ஒரு புதிய கதை. நான் பல்கலைக்கழகத்தில்
137

Page 77
படிக்கும் போது எனக்கு அரசியலைப்பற்றி அவ்வளவாகத் தெரியாது. எனக்கு அரசியலில் அப்போது ஆர்வமிருக்கவில்லை. எனது நண்பர்களின் சந்தோசம் கருதி நான் அப்போது லங்கா சமசமாஜக்கட்சி ஆதரவாளராக இருந்தேன். நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது படிப்பிலும் விளையாட்டிலும் மட்டுமே ஆர்வம் செலுத்தினேன். நான் அங்கு படிக்கும் போது இலங்கை கூடைப் பநீதாட்ட அணியரின காப் டனாக இரு நீ தேனி . நான பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்தவுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளனாக மாறினேன். 1977 தேர்தல் காலத்தின் போது நான் ஐக்கிய தேசிய கட்சி தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்குப் போய் தேர்தற் பிரசாரங்களை செவிமடுத்தேன். சிறிது காலத்திற்குப் பின்னர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவுடன் ஒரு திடீர் சந்திப்பு ஏற்பட்டது. 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட நான்தான் பொருத்தமான வேட்பாளர் என்பதை அவர் கண்டு பிடித்தார். மாகாணசபை வேட்பு மனுவில் என் பெயரை உள்ளடக்குவதற்காக நான் கொழும்புக்கு அழைக்கப்பட்டேன். மக்கள் என்னை விரும்புகின்றார்கள் என்பதையும் நான் பிரபல்யம் பெற்றவள் என்பதை ஜனாதிபதி உணர்ந்திருந்ததன் காரணமாகவும் அவ்வாறு கொழும்புக்கு அழைத்தனர். நான் கிராம இளைஞர்களை ஒன்று திரட்டி கிட்டத்தட்ட 12 சிறிய தேர்தல் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தேன். இறுதியில் நான் 25,000 வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றேன். தெரிவு செய்யப்பட்ட 14 ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் நான் ஐந்தாவதாக இருந்தேன். நான்தான் மாகாணசபையில் ஒரே ஒரு பெண் உறுப்பினராகவும் இருந்தேன். ஐந்து வருடகால சேவையின் பின்னர் தற்போது மாகாணசபை கலைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் நான் வெற்றி பெறுவேன் என்ற நம் பிக்கை இருக் கினி றது. இவ் வருடம் மற்றொரு பெண னும் போட்டியிடுகின்றார். அவரது பெயர் சிறியானி டேனியல், அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
நீங்கள் அரசியலில் பிரவேசிக்கும் போது ஏதேனும் பிரச்சினைக்கு முகம் கொடுத்தர்களா ? உங்களது குடும் பத்தினர் உங்களுக்கு உதவினார்களா?
கிராமத்தில் பிறந்திருந்தாலும் மாகாணசபை உறுப்பினராவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கொடுக்கப்பட்ட போது என் தந்தை மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆகவே எனது குடும்பத்தின் முழு ஒத்துழைப்பும் எனக்குக் கிட்ைத்தது. எந்த ஒரு அரசியல்வாதியினதும் ஆதரவு இல்லாமல் எனது சொந்த முயற்சியினூடாகவே நான் அரசியலுக்கு வந்தேன்.
138

முதல் முயற்சியிலேயே 5 ஆவது இடத்தைப் பெற்றிருக்கும் நீங்கள் அதற்கு எந்த வகையில் உழைத்திர்கள்?
நான் கண்டி மாவட்டத்திலுள்ள 5 பாடசாலைகளின் பழைய மாணவிகள் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தேன். நான் நான்கு பாடசாலைகளில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன் அப்பாடசாலைகளின் அபிவிருத்திச் சங்க உறுப்பினராகவும் இருந்திருக்கின்றேன். தொகுதியின் ஒரு பகுதி மக்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்தது. எனது அலுவலகம் இங்கிருந்த போது நான் கூட்டுறவுத்துறையில் பல்வேறு சேவைகளைச் செய்ததுடன் நிறைய நன்மதிப்பையும் பெற்றிருந்தேன். இன்னொரு பகுதி மக்களைக் கவர்வதற்கு இது உதவியது. கண்டி மாவட்டத்தில் குறிப்பாக கடுகன்னாவ, பேராதனை போன்ற பகுதிகளில் பாடசாலை அதிபராக கடமையாற்றி நிறைய நன்மதிப்பை எனது தந்தை பெற்றிருந்தார். ஆகவே இப்பகுதி வாக்குகளும் எனக்குக் கிடைத்தது.
எஞ்சிய வாக்குகளை எனது திறமையான தேர்தல் பிரசாரங்கள் மூலம் கவர்ந்தேன். எனது அணுகுமுறை மக்களை இலகுவாகச் சென்றடைந்தது. எனது வெற்றிகரமான முதல் தேர்தலின் பின்னர் எதிர்வரும் தேர்தலுக்கு முகம் கொடுக்கும் வகையில் நான் பல வேலைகளைச் செய்திருக்கின்றேன். எனக்கு அரசியல் பின்னணியோ அரசியல் குருவோ இருக்கவில்லை. எனது பரம்பரைப் பலத்தின் மூலமும் திரு. பிரேமதாஸவின் உதவியின் மூலமுமே இவற்றைச் செய்யக் கூடியதாக இருந்தது.
மாகாணசபையில் ஏதாவது பதவியை வகித்தீர்களா?
இல்லை. நாங்கள் புதுமுகங்களாக இருந்ததுடன் நாய்க் குட்டிகளைப் போன்று நடத்தப்பட்டோம் (நகைச்சுவையாக). நான் முதன் முதலில் எனது தகைமைகளையும் திறமைகளையும் வெளிப்படுத்தவில்லை. அது ஒரு பெரிய இழப்பு என்பதை இப்போது நான் உணர்கின்றேன்.
பெண்கள் மிகக் குறைந்தளவில் அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என்று ஏன் நீங்கள் நினைக்கலின்றீர்கள்?
அரசியலில் குறைந்தளவிலான பெண்களே ஈடுபட்டிருக்கின்ற போதும் பெண்கள் ஏராளமான மகளிர் அமைப்புக்களில் இணைந்து பணிபுரிகின்றனர். பெண்ணியம் அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். பெண் என்பவள் ஆண்களின் மதிப்பைப் பெறும் வழியைத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அடிமையாகக் கூடாது. எனது தந்தை, கணவர், மைத்துனர் ஆகியோரின் ஆசிர்வாதத்துடனேயே நான் அரசியலில் பிரவேசித்தேன்.
139

Page 78
அன்றிலிருந்து நான் என்ன செய்தாலும் எங்கு போனாலும் எனது கணவரதும் தந்தையினதும் அறிவுறுத்தலின் படியே நடந்து கொள்கிறேன். ஆகவே எனது ஐந்து வருட அரசியல் வாழ்க்கையில் இதுவரை பிரச்சினைகள் எதுவும் ஏற்பட்டதில்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எப்படி நடந்து கொள்வது, பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது எனக்குத் தெரியும். ஆனால் எல்லோருக்குமே இப்படி நடந்து கொள்ள முடியாது. ஒரு சில பெண்கள் தமது நோக்கங்களை அடைவதற்காகத் தமது துய்மையைக் கூட இழந்திருக்கின்றார்கள் என்பதை நான் கேள்விப்பட்டும் அறிந்தும் இருக்கின்றேன்.
குடும்பத்தினரினதும் திருமணாகியிருந்தால் கணவனினதும் நம்பிக்கை, உதவி, ஒத்துழைப்பு என்பன இணைந்தே அரசியலில் ஈடுபடும் பெண்ணின் 'வெற்றியைத் தீர்மானிக்கின்றது. இதையே பெண்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபோன்ற செயல்கள் அவர்களை ஊக்கப்படுத்துகின்றது. எப்படியாயினும் அவமதிப்புக்களைப் பொறுத்துக்கொண்டு வெற்றி பெற்ற பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். தடைகளை எதிர்கொண்டு இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டால் நிச்சயம் வெற்றியடையத்தான் செய்வார்கள். எப்படியாயினும் பெண்கள் மனப்பூர்வமாக, தங்கள் இலட்சியத்தை அடையவும் வழியில் ஏற்படும் தடைகளை வெற்றி கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
வன்முறைகள் சாதாரணமாக பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயக்கம் காட்டுகிறார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?
குறுகிய இந்த ஐந்து வருடங்களில் என்னைப் போல் அரசியலிலி வன்முறைக்கு முகம் கொடுத்த ஒரு பெண் இருக்க முடியாது. என்னைப்பற்றி வானொலி, தொலைக் காட்சி, பத்திரிகைகளில் கூட செய்திகள் வந்திருக்கின்றன. தேர்தல் சமயத்தில் என்னை வீட்டில் தனிமையாக இருக்க வேண்டாம் என்றுகூட எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், நான் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தனிமையாகவே எனது பயணத்தைத் தொடர்ந்தேன். உண்மையில் பெண்கள் அரசியல் வன்முறைகளை விடவும் வீட்டில் தமது கணவன்மாரிடமிருந்து வரும் வன்முறைகளுக்கே பயப்படுகின்றனர்.
நீங்கள் அவமதிப்புக்கள் எதையாவது சந்தித்திருக்கின்றீர்களா?
பெண்கள் சில சந்தர்ப்பங்களில் அரசியலில் அவமானத்தை சந்திக்க வேண்டியுள்ளது. நான் 1993 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த பொழுது எனது கணவர் இலங்கை வணிகக் கழகத்தில் இயக்குனராக இருந்தார்.
அப்பொழுது அவருக்கெதிராக பல்வேறு அவமானங்களும் குற்றச்சாட்டுக்களும்
140

இழைக்கப்பட்டன. பத்திரிகைகளில் ‘சித்ரா மன்திலக்கவின் கணவர் சட்ட விரோத ஆயுதங்களுடன் பிடிபட்டார்’, ‘ஹஉஸ்மா உசைன் வழக்கில் சித்ரா மன்திலக்கவின் கணவர் சந்தேகத்தில் கைது!’ என்றெல்லாம் செய்திகள் வந்தன. இதனால் எனது கணவர் நான்காம் மாடியில் 105 நாட்கள் வைக்கப்பட்டிருந்தார். எனது கணவருக்கெதிரான மேற்படி பிரசார வேலைகள் அவரைப் பாதிக்கவில்லை. ஆனால் என்னை அவமானப்படுத்தவே செய்யப்பட்டன. ஆனால் இதிலெல்லாம் நான் கவனம் செலுத்தவில்லை. திரு.ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது ஏராளமான விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டன. காமினி திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது வாகனத் திருடன்’ என அழைக்கப்பட்டார். திரு.பிரேமதாஸ 'போக்குவாயன்' என்று அழைக்கப்பட்டதுடன் அவரது சாதியைக் குறிப்பிட்டும் இழிவுபடுத்தப்பட்டார். அவர் ஜனாதிபதி வேட்பாளர் ஆன பின்னர் இதே போன்ற விமர்சனங்களை திரு. லலித் அத்துலத் முதலி மீதும் சுமத்தப்பட்டன. ஆனால் இவர்கள் இந்த விமர்சனங்களையெல்லாம் ‘எலினாவின் கணவர்’ என்றோ ஹேமாவின் கணவர்’ ‘ரீமணியின் கணவர்’ என்றோ குறிப்பிட்டு சொல்லி விமர்சிக்கவில்லை. இவர்கள் எல்லாம் அரசியலில் உயர்நிலைக்கு வந்த பின்னரே ஊடகங்களின் தாக்குதலுக்கு இலக்கானார்கள். ஆனால், நான் தென் மாகாணசபை தேர்தல் பிரசாரத்திற்காக ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சென்றபோது நான் அரசியலுக்கு புதியவளாக இருந்த போதும்கூட நான் ஊடகங்களின் தாக்குதலுக்கு இலக்கானேன். ஏன் அப்படி நடந்தது. எனது கணவர் ‘சித்ரா மண் திலக் கவின் கணவர்' என்று அவர்கள் தெரிந்து கொண்டதனால்தான் அவ்வாறு நடந்தது.
மாகாணசபைக் கூட்டங்களில் பெண்கள் பிரச்சினை சம்பந்தமாக நீங்கள் ஏதாவது பேசியிருக்கின்றீர்களா?
மாகாண சபையில் நடக்கும் தியவதன நிலமே தேர்தலில் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமென நான் தீர்மானம் கொண்டு வந்தேன். இவ்வாறு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது அதுவே முதல்முறையாகும். அத்துடன் நான் சிறுவர் காப்பகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டு வந்தேன். மாகாண சபை விவாதங்களில் பெண்களுக்காக வாதாடியிருக்கின்றேன். இலங்கையில் ஆண்களை விட பெண்களே அதிகளவான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். உதாரணத்திற்கு ஒரு பெண்ணைப்பற்றி அவர் வீட்டில் இருக்கின்றாரா? என்று கேட்டால் அவர் வீட்டில் இல்லை என்றே பதில் வரும். அவர் சந்தைக்கோ, கூட்டுறவுக் கடைக்கோ, பிள்ளையை அழைத்துவர பாடசாலைக்கோ போயிருப்பார். இதைபோல ஒரு ஆணைப்பற்றி கேட்டால் அவர் கிரிக்கெட் அல்லது காற்பந்தாட்டம் பார்க்க, திருமண வீட்டுக்கு அல்லது
141

Page 79
பார்க்குக்கு போயிருக்கின்றார் என்றே பதில் வரும். குடும்பப் பாரம் அனைத்தையும் பெண்களே தமது தோள்களில் சுமக்கின்றனர் என்பதையே இது காட்டுகின்றது. பெண்களே குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டும். அது மாற்றப்படவோ திருத்தப்படவோ கூடாது என்று ஒரு கருத்து இலங்கையில் நிலவுகின்றது. ஆகவே ஆணாகப் பிறப் பவனி அதிர்ஷ்டசாலியாகின்றான்.
இது போன்ற பிரேரணைகளுக்கு ஆண் அரசியல்வாதிகளின் உதவி கிடைத்ததா?
ஆம். தியவதன நிலமேயை தெரிவு செய்யும் தேர்தலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என்ற எனது முதலாவது பிரேரணைக்கு சபையின் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். பெண்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்குவதற்கு ஆண்கள் தயாராய் இருக்கின்றார்கள் என்றுதான் நான் சொல்வேன்.
இப்பகுதியில் பெண்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் எதையாவது செய்திருக்கின்றீர்களா?
இப்பிரதேசப் பெண்களை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டிருக்கின்றேன். எதிர்கால அரசியல் வித்தியாசமானது. செலவு கூடியது. அரசியலுக்கு வர விரும்புபவர்களின் குடும்பத்திற்கு நிதிப்பற்றாக்குறை இருக்கக்கூடாது. அது போல் குடும்பத்தில் எதிர்ப்போ தடையோ இருக்கவும் கூடாது. அவர்கள் வாகனங்களைச் செலுத்தக் கூடியவர்களாகவும் தனது தொகுதியை மட்டுமல்லாது முழு மாவட்டத்திற்கும் பிரசாரத்திற்காக செல்லவும் வேண்டும். அவ்வாறு செய்வது இன்று பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் கூட கஷ்டமான விடயமாக உள்ளது.
பெண்களை அரசியலில் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பெண்கள் கிராமிய மகளிர் அமைப்புக்களில் இணைந்து முனைப்புடன் செயற்படவேண்டும். கிராமிய மட்டத்தில் தலைமைத்துவத்தை ஏற்று செயற்பட வேண்டும். அவ்வாறு செய்தால் இயல்பாகவே அரசியலில் ஈடுபடுவதற்கான தலைமைத்துவப் பணிபு ஏற்பட்டுவிடும். ஆனால் பெண்கள் இன்று கிராமங்களில் ஏதாவது பதவியைப் பெறுவதற்கு பயப்படுகின்றனர். அத்துடன் அதிலிருந்து ஒதுங்குவதுடன் வீட்டில் வேலைச்சுமை , அதிகம் என்றும்
142

கூறுகின்றனர். எப்படி இருந்தாலும் கிராமிய மட்டத்தில் ஆண்களை விட பெணிகளுக்கு தலைமைத் துவத்தை அடைவதற்கான ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன.
பெண்களை அரசியலில் ஈடுபடச் செய்வதற்கு அரசாங்கம் என்ன வகையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நீங்கள் கருதுகின்றீர்கள்?
வேட்பு மனுவில் இளைஞர்களுக்கு 25 சத வீதமும், பெண்களுக்கு 35 சத வீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் வேட்பு மனுப்பட்டியலில் 9 பெண்கள் இருக்க வேண்டும். ஆனால் இரண்டு பெண்களின் பெயர்கள்தான் இருக்கின்றது.
இதற்கு என்ன காரணம், விண்ணப்பதாரிகள் இல்லை என்பதா?
இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வசதிகள், நிதியின்மை, அச்சம், நற்பெயருக்கு களங்கம் ஏற்படல் இப்படிப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
பெண்கள் அரசியலுக்கு வந்தால் நிறைய நன்மைகள், அபிவிருத்திகள் ஏற்படும் என்று நினைக்கின்றீர்களா?
நிறையப் பெண்கள் அரசியலுக்கு வந்தால் நல்லதுதான். திறமையான, கடும் உழைப்பாளிகளான பெண்கள் அவர்களது தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் ஆண்களோடு தோளோடு தோள் சேர்த்து வேலை செய்யத் தயாராய் இருந்து, ஏராளமான பெண்கள் அரசியலுக்கு வந்தால் நாட்டில் பல்வேறு மாறுதல்களை உருவாக்க முடியும்.
143

Page 80
பெயர் குசுமா ரத்நாயக்க தொழில் தலாவ பிரதேச சபை உறுப்பினர் அநுராதபுரம்
மாவட்டம் விவாகநிலை திருமணமானவர் өuш45 : 5
நான் குருநாகல் மாவட்டத்திலுள்ள வாரியபொலையில் பிறந்தேன். நான் க.பொ.த. சாதாரண தரம் வரை கல்வி கற்றேன். எனக்கு திருமணமானதன் காரணமாக சாதாரண தரம் சித்தியெய்திய போதும் உயர்தரம் படிக்கவில்லை. திருமணமானபோது எனக்கு வயது 18. என் கணவர் பெருந்தோட்டத்துறையில் வேலை செய்தார். திருமணம் முடிந்ததும் நாங்கள் கணவரின் ஊரிலேயே ஆரம்பத்தில் வாழ்ந்து வந்தோம். பின்னர் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப்பிரதேசத்தில் எமக்கு காணி கிடைத்தது. நாங்கள் இங்கு குடிவந்ததன் பின்னர் எனக்கு தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆர்வமேற்பட்டது. என்னிடம் ஆற்றல் இருந்தது. அத்துடன் எனது திறமைகளை மகாவலி அதிகாரிகளும் உணர்ந்து கொண்டனர். நான் ஒரு தன்னார்வ சுகாதார ஊழியராக வேலை செய்ய ஆரம்பித்ததுடன் மலேரியா ஒழிப்புத் திட்டம் மற்றும் சுகாதார போஷாக்குத் திட்டம் ஆகியவற்றிலும் இணைந்து பணிபுரிந்தேன். இத்திட்டங்களில் தலைமையேற்று பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இவ்வகையான வேலைகளைச் செய்யும் போது எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் இருக்கவில்லை. ஆனால் நான் செய்த சேவைகளின் காரணமாக மக்கள் என்னைப்பற்றி அறிந்திருந்ததுடன் அவர்கள் மத்தியில் எனக்கு வரவேற்பும் இருந்தது. பின்னர் இயற்கையாகவே நான் அரசியலின் பக்கம் ஈர்க்கப்பட்டேன்.
நீங்கள் அரசியலில் எவ்வாறு ஈடுபடநேர்ந்தது?
நான் ஒரு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருக்கின்றேன். எனது ஊரில் ஐக்கிய தேசியக் கட்சி பெண்கள் அமைப்பின் செயலாளராகவும் இருந்தேன். உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி விண்ணப்பம் கோரி இருந்தது. விண்ணப்பம் கோரியிருந்தபோது எனக்கு யாரும் விண்ணப்பிக்குமாறு தனிப்பட்ட முறையில் சொல்லவில்லை. போட்டியிட விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று பொது அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டது. கிராமத்திற்கு வந்த நான் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ளவர்கள் முன்வரும்படியும் பெண்களிடம் கூறினேன். நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு எண்ணி இருக்கவில்லை.
144

ஆனால் பிரதேச மக்கள் என்னை விண்ணப்பிக்குமாறு கூறினார்கள். சமூகத்திற்கு சேவை செய்ய நான்தான் தகுதியானவள் என்று கூறிய மக்கள் என்னைப் போட்டியிடுமாறு கூறினர். ஆகவே நான் விண்ணப்பித்தேன். தலாவ பிரதேச சபைக்கு போட்டியிட 270 விண்ணப்பங்கள் வந்திருந்த போதும் அதில் நான்கு மட்டுமே பெண் விண்ணப்பதாரிகளினுடையதாகும். 24 பேர் மட்டுமே தெரிவு செய்யப்படுவர்.
ஐக்கிய தேசிய கட்சி பட்டியலில் 24 பேரைத் தெரிவு செய்வதற்காக கட்சிக்குள்ளேயே முதற்கட்ட தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது. நாங்கள் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட கட்சியின் ஆதரவாளர்கள் எமக்கு வாக்களிக்க வேண்டும். இந்த விடயத்தில் கட்சியின் ஆண் உறுப்பினர்கள் எனக்கு பல்வேறு பிரச்சினைகளைக் கொடுத்தனர். எனது ஆதரவாளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. அங்கே ஓர் அச்சுறுத்தலான ஒரு சூழ்நிலை நிலவியது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இது போன்ற செயல்கள் அப்படி ஒன்றும் ஆச்சரியமானதல்ல. எது எப்படி இருந்தபோதும் கட்சி ஆதரவாளர்கள் எனக்கு வாக்களித்து என்னை ஆறாவதாகத் தெரிவு செய்ததுடன், தேர்தலில் போட்டியிடுவதற்கும் நான் தெரிவு செய்யப்பட்டேன். இதுதான நான் தெரிவு செய்யப்பட்ட விதம். என்னை யாரும் அழைக்கவில்லை. எனது சொந்த திறமை காரணமாகவும் மக்கள் எனக்கு அளித்த ஆதரவை அடித்தளமாகக் கொண்டும்தான் என்னால் இவற்றைச் சாதிக்க முடிந்தது.
பெண்கள் அரசியலில் ஈடுபடுவது பற்றி உங்களின் அபிப்பிராயம் என்ன?
பிரதேச சபையில் குறைந்தது ஒரு பெண் உறுப்பினராவது இருப்பது அவசியம் என்று நான் நினைக்கின்றேன். அண்மையில் நான் பிரதேச சபைகளில் ஆகக்குறைந்தது 40 சத வீதம் பெண் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும் என்று யோசனை ஒன்றை முன் வைத்தேன். இதைப்பற்றி ஜனாதிபதியிடம் எடுத்துச் சொல்லுமாறு நான் எமது பிரதேச சபைத் தலைவருக்குக் கூறினேன். பல்வேறு காரணங்களினால் ஆண்களுடன் வேலை செய்வது சிக்கலாக உள்ளது. பெண்களை யாரும் மதிப்பதில்லை. பெண்கள் திறமையற்றவர்கள். ஆண்களால் மட்டுமே ஒரு வேலையைச் செய்து முடிக்கலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். கட்சிகள் வேறு வேறாக இருப்பினும் பெண்களால் சேர்ந்து பணியாற்றலாம் என்று நான் நினைக்கின்றேன். சிலவேளை நான் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக உணர்கிறேன். பெண்கள் மற்றும் அபிவிருத்தி பற்றிய எனது பிரேரணைகளுக்கு இன்னும் பணம் ஒதுக்கப்படவில்லை. நிதி எல்லாம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
இன்னுமொரு உதாரணம், அண்மையில் இப்பிரதேசத்தில் காடுகள் அழிக்கப்படுவதையிட்டு நான் எனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தேன். இதில் சில செல்வாக்கான அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ருந்தனர். இப் பிரதேச
145

Page 81
மக்களுக்கு எற்படும் இழப்பைப் பற்றியும் அநீதியைப் பற்றியும் நான் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் பிரதேச சபை எனது எதிர்ப்பை முற்றாகவே ஒதுக்கித்தள்ளியது. அவர்கள் மரங்கள் எல்லாவற்றையும் வெட்டி வீழ்த்தி நிலத்திற்கு தீ வைத்துவிட்டு அந்த நிலத்தைக் குறிப்பிட்ட சிலருக்கு பகிர்ந்தளித்தனர். இது ஒரு துக்கமான நிகழ்வு. ஆளுங்கட்சியைச் சேர்ந்த மற்றொரு பெண் உறுப்பினர் அங்கு இருந்திருந்தால் இந்தச் செயலை அவர் அனுமதித்திருக்க மாட்டார் என்று நான் உணர்கின்றேன். ஆகவேதான் அதிகளவான பெண்கள் அரசியலில் பங்குபற்ற வேண்டுமென்கிறேன்.
ஆனால் அரசியலுக்கு வரும் பெண்கள் மக்கள் மத்தியிலிருந்து வருவதுடன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் வேண்டும். இன்று அநேக பெண் அரசியல்வாதிகள் அவர்களது இனம், குடும்பத் தொடர்பு மற்றும் பணப் பின்னணி காரணமாகவே வந்திருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். பெண்கள் மத்தியில் தொடர்புகளும் மக்களின் ஆதரவும் உள்ள ஒரு பெண்ணாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு ஜாதித் தொடர்போ அல்லது பணமோ தேவையில்லை. கிராமிய மட்டத்தில் நாங்கள் மக்களுடன் நெருங்கிப் பணிபுரிவதுடன் அவர்களுடன் இணைந்தும் பணிபுரிகின்றோம். அவர்களது எண்ணங்களையும் கனவுகளையும் நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம்.
அநேக கிராமியப் பெண்கள் கிராம அபிவிருத்தி வேலைகளில் பங்கெடுத்துக் கொள்வதில்லை. வீட்டு வேலைகள் இருப்பதாகக் கூறி மன்னிக் கும் படி கூறுகிறார்கள். அல்லது அவரது கணவரையும் குழந்தைகளையும் கவனிக்க வேண்டியுள்ளது என்று கூறிவிடுகின்றனர். பெண்களிடத்தில் எதையும் சாதிக்கும் திறமை இருக்கின்றது. நாம் கணவனின் சம்மதத்துடனும் உதவியுடனும் பெண்களினதும் கிராமத்தினதும் நாட்டினதும் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்ய வேண்டும். அநேகமான பெண்கள் அவர்களால் ஏதாவது செய்ய சந்தர்ப்பம் இருந்தாலும் கூட இவ்வாறு சிந்திப்பதில்லை.
உங்களுக்கு அரசியல் வன்முறை பற்றிய அனுபவம் உள்ளதா?
என் அரசியல் வாழ்க்கையில் நான் ஏராளமான அச்சுறுத்தல்களையும் வன்முறைகளையும் சந்தித்த அனுபவம் எனக்கு இருக்கின்றது. நான் வேட்பாளராகத் தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் கட்சிக்குள்ளிருந்து முதலில் எனக்கு எதிராக வன்முறைகள் ஏவிவிடப்பட்டன. பின்னர் எதிர் கி கட்சியிடமிருந்து அச்சுறுத்தல் வந்தது. இன்னும் வந்து கொண்டிருக்கின்றது. நான் இந்த வன்முறைகளுக்குப் பயப்படுவதில்லை. பயப்படாமல் செய்து முடிக்க வேண்டுமானால் பயப்படாமல் தொடர்ந்து செய்யவேண்டும். 1994இல் என் கணவர் எரிக்கப்பட்டார். இதன் காரணமாக
146

அரசியலை விட்டு விலகுமாறு எனது குடும்பத்தினர் என்னை வற்புறுத்தினர். பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒருவரும் இருக்கவில்லை என்பதனால் நான் அவ்வாறு செய்யவில்லை. தேர்தல் சமயத்தில் இப்பகுதி வாக்காளர்களுக்கு நிறைய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. வேறு எந்தப்பகுதியிலும் நிகழாத அளவுக்கு வன்முறைகளும் காடைத்தனங்களும் மகாவலி கிராமங்களில் நடைபெற்றது என்று நான் நினைக்கின்றேன். இப்பிரதேசத்தில் வசிக்கும் அநேகம் பேருக்கு வாக்களிக்க முடியவில்லை. என் ஆதரவாளர்கள் பலரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. பிரதேச சபைத் தேர்தலில் எல்லா விருப்பு வாக்குகளையும் விரும்பிய ஒருவருக்கே வாக்களிக்கலாம். எனக்குரிய எல்லா வாக்குகளையும் நான் பெற்றிருந்தால் தற்போதைய பிரதேச சபைத் தலைவருக்கு என்னிலும் பார்க்க குறைந்தளவு வாக்குகளே கிடைத்திருக்கும். மக்களை அச்சுறுத்தி அவர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர். எவ்வித தயக்கமுமின்றி இதை என்னால் சொல்லமுடியும். எனது வாக்கை அளித்துவிட்டு வீடு திரும்பக் கூடியளவுக்குப் போதியளவு பாதுகாப்பு இருக்கவில்லை. பொலிஸ் பாதுகாப்பும் இருக்கவில்லை. அரச இயந்திரம்கூட பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கவோ பெண்களுக்கு உதவவோ இல்லை.
சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அடுத்தநாள் அப்பகுதிக் காடையர்கள் வீட்டைத் தாக்கியதுடன் வீட்டுத் தளபாடங்களையும் உடைத்தனர். இது போன்ற சம்பவங்களைக் காணும் இளம் பெண்களின் பெற்றோர் அவர்களது பிள்ளைகள் என்னுடன் இணைந்து பழகுவதை விரும்புவதில்லை.
என் அரசியல் பணிகளில் இணைந்து கொண்ட பெண்களும் இருக்கவே செய்கின்றனர். ஆனால் வன்முறை காரணமாக அவர்கள் மனம் தளர்கின்றனர். இப்பகுதியில் வன்முறைகள் பரவியிருக்கின்றது என எவரும் கூறலாம். பெண்கள் அரசியலில் ஈடுபட இது பொருத்தமான இடமல்ல. நான் ஒருதடவை தேர்தல் பிரசாரத்திற்கு போய்க் கொண்டிருந்த போது எனக்கு உதவியாக வந்து கொண்டிருந்த ஒரு இளம் யுவதியை உள்ளுர் காடையர்கள் அச்சுறுத்தி தொந்தரவு கொடுத்தனர். அந்த சம்பவத்தினால் அவள் பயந்து போனாள். எனக்கும் இது போன்ற சில அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நான் பயப்படவில்லை. ஒரு பெண் ஜனாதிபதியாக இருந்த போதும் கூட, பெண்கள் தொடர்ந்து ஒரம் கட்டப்படுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். அவர்களுக்கு எங்கும் இடமில்லை. நாங்கள் அறிவாளிகளாக திறமையானவர்களாக இருந்த போதும்கூட பிரதேச சபையில் இருக்கும் ஆண்கள் எம்மை ஒரு கமிட்டியினதோ அல்லது உப கமிட்டியினதோ தலைமைப் பதவிக்கு நியமனம் செய்ய விரும்புவதில்லை.
எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நாட்டம் உள்ளதா?
மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு போட்டியிடுமாறு கட்சி எனக்கு அழைப்பு விடுக்கவும் இல்லை. தலாவ பிரதேச
147

Page 82
சபையைச் சேர்ந்த ஓர் ஆண் உறுப்பினரின் பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. என்றாவது ஒருநாள் தலாவ பிரதேச சபையின் தலைவியாக நான் வருவேன் என்று நான் எண்ணியிருந்தேன். ஆனால் அது சாத்தியமா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. கட்சி எனக்கு அந்த வாய்ப்பைத் தரப்போவதில்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். சேவை மூப்பு மிகவும் முக்கியம். உதாரணத்திற்கு வடமத்திய மாகாணசபைத் தலைவர் காலமான போது விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றவராக பெண் ஒருவரே இருந்தார். ஆனால் அவர் பிரதேச சபைத் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை.
148

பெயர் : நந்தா கிரேரோ அமரக்கோன் தொழில் வத்தளை பிரதேச சபை உறுப்பினர் விவாகநிலை : விதவை
கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி பிறந்த திகதி : 1940
நான் ஓர் ஆயுர்வேதப் பட்டதாரி டாக்டர். எனது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக ஆயுர்வேத வைத்தியர்களாக இருந்திருக்கின்றனர். எனது கணவரும். ஆயுர்வேத வைத்தியராகத்தான் இருந்தார். நான் 1974 ஆம் ஆண்டு திருமணம் முடித்து எனது கணவரின் ஊரான இங்கு குடிபுகுந்தேன். எமது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். எனக்குத் திருமணமானபோது எனது கணவர் ஹெந்தளை பட்டின சபையின் தலைவராக இருந்தார். அவர் ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்ததுடன் நீண்ட காலமாக அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்குபற்றி வந்தார். 1977இல் ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியடைந்த போது, அவர் பல்வேறு தொல்லைகளுக்காளானார். ஒரு நாள் நாங்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் ரவுடிகள் வந்து எமது வீட்டு ஜன்னல்களை உடைத்திருந்தனர். உண்மையில் அவர்கள் எம்மிடம் சிகிச்சை பெற்றும் இலவச மருத்துவ உதவிகளைப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு போத்தல் சாராயத்திற்கும் பத்து ரூபாவுக்காகவும் மட்டுமே அவர்கள் இவ்வாறு செய்தனர். மற்றொரு நாள் எனது கணவர் வீட்டில் இல்லாத சமயம் வந்த அவர்கள் எனது கணவரைத் தேடினர். கதவைத் திறக்காவிட்டால் எம்மை கொன்று விடுவதாகப் பயமுறுத்தினர். அவர்கள் உண்மையில் பார்க்க கொடுரமானவர்களாகத் தெரிந்ததனால் நான் கதவைத் திறந்தேன். நாங்கள் வெளியே இருக்க, அவர்கள் வீடு முழுக்கத் தேடினார்கள். மருந்து போத்தல்களை அடித்து உடைத்தனர். இந்தச் சம்பவம் பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்தால் அன்று மாலை 5 மணிக்கு முன்னர் எனது கணவரைக் கொன்று விடுவதாக அவர்கள் போகுமுன் கூறிச்சென்றார்கள். இது போன்ற அனுபவங்கள் எமக்கு இதற்கு முன்னர் ஏற்பட்டது கிடையாது. பின்னர் எம்மைக் கிராமத்தை விட்டும் பிரதேச சபையை விட்டும் போய் விடுமாறும், எம்மைக் கொன்று விடுவதாகவும், கொன்று வாவியில் போட்டுவிடுவதாகவும் ஏராளமான அநாமதேயக் கடிதங்களும் அச்சுறுத்தல்களும் எமக்கு வந்தன.
1977இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அவர்களுக்கு ஹெந்தளை பட்டின சபையில் பெரும்பான்மைப் பலம் இல்லாத காரணத்தினால் சுதந்திரக்கட்சி உறுப்பினர் ஒருவரை விலைக்கு வாங்கினார்கள். எனது கணவர் இது பற்றி கேள்விப்பட்டதும் அவரது பதவியை இராஜினாமா செய்தார். அரசியல் எமக்கு வேண்டாமென்று நான் அவரிடம் கூறினேன். அவரிடம் மருத்துவத் திறமையிருந்ததால் ஒரு இலட்சாதிபதியாகும் வாய்ப்பு இருந்தது.
149

Page 83
1988 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எனது கணவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதுவரை அரசியலே வேண்டாம், அமைதியான குடும்ப வாழ்க்கையை மேற்கொள்வோம் என்றே நாங்கள் தீர்மானித்திருந்தோம். அழைப்பு வந்த பின்னர் எங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. நாங்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்தோம். ஆனால் எமது தொகுதியில் போட்டியிடும் எமது கட்சி வேட்பாளருக்கு உதவும்படி எமது கணவருக்கு உத்தரவிடப்பட்டது. அந்த வேட்பாளர் புதியவர் என்பதனாலும் அவரது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டிய தேவை கட்சிக்கு இருந்ததனாலும் கட்சியின் வேண்டுகோளை தட்டிக்கழிக்க முடியாமல் எனது கணவர் அவருக்கு உதவ சம்மதித்தார். ஆகவே தேர்தலில் அந்த வேட்பாளர் தோல்வியடைந்த போதும் கூட எனது கணவர் மீண்டும் அரசியலை நோக்கி இழுக்கப்பட்டார். பின்னர் எல்லா பிரச்சினைகளும் 1989 இல் வர ஆரம்பித்தன. ஒரு நாள் எனது கணவர் கடத்தப்பட்டார். அன்று முழுவதும் அவர் வீட்டுக்கு வரவில்லை. இராணுவ உடையில் வந்தவர்களே எனது கணவரைக் கடத்தினர். அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடியாட்கள் என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும்.
1991இல் உள்ளுராட்சித் தேர்தல் நடந்த போது எனது கணவர் ஆதரவளித்த வேட்பாளர் எனது கணவர் சார்பாக என்னைப் போட்டியிடும்படி கூறினார். அந்தச் சமயத்தில் எனது பிள்ளைகள் பாடசாலைக்குப் போய்க் கொணடிருந்ததனாலும் அவர்கள் அதை விரும்பாததினாலும் நான் முடியாதென்றேன். பின்னர் 1997இல் அவர்கள் மீண்டும் என்னிடம் கேட்டனர். முதலில் எனக்கு விருப்பமில்லை என்ற போதும் பிரதேச மக்களும் பெண்கள் அமைப்புக்களும் நான் போட்டியிட வேண்டுமெனக் கோரினர், நான் போட்டியிடா விட்டால் பொதுஜன ஐக்கிய முன்னணி தோல்வியடையும் என்று அவர்கள் என்னை வற்புறுத்தினர். எனது பிள்ளைகள் தற்போது பெரியவர்களாகி விட்டபடியினாலும் மக்களின் அழுத்தம் காரணமாகவும் நான் சம்மதித்தேன். தேர்தலில் மிகக் குறைந்தளவில் பணத்தைச் செலவிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் நானாகத்தான் இருக்க வேண்டும். நான் எனது சொந்தப் பணத்தையே செலவு செய்தேன். பிரதேச மக்கள் எனக்கு உதவினர். பிரதேச சபைக் கு 13 பேர் தெரிவு செய்யபப் பட்டனர் . நான் பன்னிரெண்டாவதாக தெரிவு செய்யப்பட்டேன்.
நீங்கள் அரசியலில் நுழைவதற்கான காரணங்கள் யாது?
எனக்கு சில உண்மைகள் தெளிவாகியிருந்தது. ஆனால் காரணம் இதுதான். அந்த நேரத்தில் எனது கணவர் அதிகாரத்தில் இருக்கவில்லை. எனது கணவர் கடத்தப்பட்டுமிருந்தார். அவரது எதிரிகள் மீண்டும் அதிகாரத்தில் இருந்தனர். அவரைக் கடத்திப்போவதை அவர்கள் இன்னும் நிறுத்தவில்லை. என்றைக்காவது ஒருநாள் என் கணவர் அரசியலுக்கு வந்து போராட முடிவெடுத்தால் அவர்
150

எல்லோருக்கும் ஆபத்தானவராகவும் சவாலாகவும் இருப்பார் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆகவே இவர்களது தனிப்பட்ட நலனுக்காக சந்தர்ப்பத்தை அவர்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஏராளமான அப்பாவி சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள் அப்போது கடத்தப்பட்டனர். எனது கணவர் அச்சமயம் அரசியலில் மும்முரமாக ஈடுபடாமல் இருந்த போதும் கூட அவர் கடத்தப்பட்டார் என்று நான் எண்ணினேன். ஆகவே அவர்களுக்கு தேவைப்பட்டால் எவ்வேளையிலும் உங்களது வீட்டிற்கு வந்து உங்களை கடத்திக் கொண்டு போகலாம். எப்படி இருப்பினும் ஒருநாளைக்கு நாம் இறக்கத்தான் வேண்டும். ஆகவே நான் பயப்படவில்லை.
பிரதேச சபையில் நீங்கள் கொண்டு வந்த பிரேரணைகள் யாவை?
இப் பிரதேசத்தில் கடந்த இருபது வருடங்களாக சரியான நீர்ப்பாசன வசதியின்மை காரணமாக எம்மால் நெல் பயிரிட முடியவில்லை. இது சம்பந்தமாக நான் பிரேரணையொன்று கொண்டு வந்தேன். தண்ணிர் வரும் மார்க்கங்கள் அடைபட்டிருந்தன, கால்வாய்கள் அடைபட்டிருந்தன. இதனால் சில பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆகவே நீர்ப்பாசன முறையை மாற்றியமைக்க வேண்டுமென்று நான் யோசனை தெரிவித்தேன். பாதைகளும் ஒழுங்கற்றுக் காணப்பட்டன. ஆகவே பாதைகள் திருத்தப்பட வேண்டுமென்ற பிரேரணையையும் நான் கொண்டு வந்தேன். இதனால் இப் போது பாதைகள் திருத்தப்படுகின்றன. நான் வீதிகளுக்கு முக்கியத்துவமளித்திருக்கின்றேன்.
பெண்களுக்கு உதவும் பிரேரணைகள் எதனையும் நீங்கள் கொண்டுவந்தீர்களா?
இரண்டு மாதங்களுக்கு முன்னர் நான் பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தணடனை வழங்க வேண்டுமென்று முறையிட்டிருந்தேன். உதாரணமாக அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்று பிரேரணை கொண்டு வந்தேன். பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவளித்தனர்.
பெண்கள் அரசியலில் ஈடுபடுவது பற்றிய உங்களின் கருத்து யாது?
பெணிகள் அரசியலில் ஈடுபாடு கொள்ள வேண்டுமென்றே நான் நினைக்கின்றேன். பெண்கள் குடிப்பதில்லை. பெண்களே வீட்டை நிர்வகித்து வழி நடத்துகின்றனர். ஆகவே அவர்களுக்கு ஒரு நாட்டை வழிநடத்தும் சில அறிவாற்றல்கள் இருக்கின்றது. நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது ஊர்வலங்கள் ஏற்பாடு செய்திருந்த சந்தர்ப்பங்களில் நிறைய பெண் பாராளுமன்ற
151

Page 84
உறுப்பினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவர்கள் ஆற்றலும் ஆர்வமும் மிக்கவர்கள். இப்பெண்களில் அநேகமானவர்கள் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள். நானும் அப்படிப்பட்ட ஒரு பெண் தான். அநேக வேதனைகளையும் வன்முறைகளையும் அனுமதிக்கும் பெண்கள் பலசாலிகளாக மாறி விடுகின்றனர். எனது சொந்த அனுபவங்களின் மூலம் நான் இதனை நம்புகின்றேன். இதன் மூலம் உங்கள் பயம் இல்லாமற் போகின்றது.
ஆகவே வன்முறைகள் பெண்களுக்கு ஒரு தடை அல்ல என்று நீங்கள் கூறுகின்றீர்களா?
அப்படி இல்லை. அது ஒரு தடை என்றே நான் நினைக்கின்றேன். ஆனால்
வன்முறையை சந்தித்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அதன் பின்னர் வன்முறை என்பது ஒரு தடையே அல்ல.
152

பெயர் : ஷர்மிலா ஜயவர்தன
தொழில் : வேட்பாளர் மாகாணசபை, மேல் மாகாணம் பிறந்த திகதி : 1970
விவாகநிலை : திருமணமானவர்
கட்சி : ஐக்கிய தேசிய கட்சி
தொழில்ரீதியில் நான் ஓர் ஆடை வடிவமைப்பாளன். எனது க.பொ.த உயர்தரப் படிப்பின் பின்னர் எல்.எல்.பி. படிப்பிற்காக நான் இலண்டன் சென்றேன். இரண்டு வருடம் எல்.எல்.பி. படித்து விட்டு ஆடை வடிவமைப்பில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தேன். ஆடை வடிவமைப்பில் நாண் பல விருதுகளைப் பெற்றிருக்கின்றேன். பின்னர், நான் திரைப்படத்துறையில் நுழைந்தேன். நான் ஒரு தொலைக் காட்சி நாடகத்தையும் திரைப் படமொனி றையுமி தயாரித்திருக்கின்றேன். எனது பெற்றோருக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. ஆனால் எங்களுக்கு விஜயகுமாரதுங்க வைத் தெரியும் (ஜனாதிபதி சந்திரிகாவின் கணவர்). அவர் எமது நெருங்கிய குடும்ப நண்பர். எனக்கு 12 வயதாக இருந்தபோது தேர்தல் ஒன்றில் விஜயகுமாரதுங்கவுக்கு உதவுவதற்காக நாங்கள் மின்னேரியாவுக்குப் போயிருந்தோம். என் அப்பா ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக்காரர். விஜய எமது குடும்ப நண்பர். நான் கலந்து கொண்ட முதலாவது தேர்தல் பிரசாரம் அதுதான். அப்போதே அரசியல் என் இரத்தத்துடன் கலந்து விட்டது. அப்போதிருந்தே நாங்கள் லலித் அத்துலத்முதலிக்கு (ஐ.தே.க) உதவி செய்திருந்தோம். நாங்கள் அத்துலத் முதலிக்காக நிறைய வேலை செய்தும் உதவியுமிருக்கிறோம். அச்சமயத்தில்தான் அரசியல் என்றால் என்னவென்பது பற்றி நான் நிறையத் தெரிந்து கொண்டேன். கிராமத்தில் பிறந்ததால் மக்களின் தேவை என்ன என்பது எனக்குத் தெரியும். அரசியலில் ஏராளமான வாக்குறுதிகளையும் திட்டங்களையும் கூறுவார்கள். ஆனால் இறுதியில் மக்களுக்குத் தேவையானதை நிறைவேற்ற முடியாமல் தோல்வியடைவார்கள்.
1994 ஆம் ஆண்டு தினேஸ் குணவர்தன (மஹஜன எக்சத் பெரமுன) பொதுத் தேர்தலில் போட்டியிட என்னை அழைத்தார். அந்த நேரத்தில் ஓர் அரசியல் கட்சியில் சேரவேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. பின்னர் உத்தேசத் தீர்வுப்பொதி வந்த போது அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்று நாங்கள் நினைத்தோம். தீர்வுத் திட்டத்திற்கு எதிராகப் பேசுவதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம். உனக்கு நாட்டின் மீது அக்கறையிருந்தால் நீ ஏன் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று அவர் கூறினார். அதுதான் நான் வேட்பாளராக மாறுவதற்கு உண்மையான காரணம். ஆனால் அவர்களுடைய கொள்கையில் எனக்குப் பூரண உடன்பாடில்லை. நான் எப்போதுமே ஐக்கிய தேசியக் கட்சி சார்பானவள்.
153

Page 85
பிறகு 1997 ஆம் ஆண்டின் உள்ளுராட்சித் தேர்தலில் நான் கரு ஜயசூரியவுக்கு உதவினேன். அப்போது எல்லோருமே நானும் போட்டியிட வேண்டுமென்று நினைத்தனர். ஆனால் அப்போது நான் எனது முதலாவது குழந்தைப் பேற்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி உயர்மட்டக்குழு என்னை மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சிபாரிசு செய்ததுடன் வேட்பாளராக தெரிவு செய்வதற்கும் உதவியது.
அரசியலில் உமது பங்கேற்புத் தொடர்பாக உமது குடும்பப் பிரதிபலிப்பு எவ்வாறிருந்தது?
என் குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை. எனக்கு அரசியல் பித்து தலைக்கேறிவிட்டது என்பதும் என்னை தடுக்க முடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியும். எனக்கு எப்போதும் நாட்டைப் பற்றியும் எனது மதத்தைப் பற்றியும் அக்கறை இருக்கின்றது. எப்படிப்பட்ட மக்கள் துன்பப்படுகின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். எந்த ஓர் அரசியல்வாதியும் போகாத கொழும்பிலுள்ள சேரிப்புறங்களுக்கு நான் போயிருக்கின்றேன். நான் வெற்றியடைந்தால் எனது சம்பளத்தையோ அல்லது ஏனைய சலுகைகளையோ பெற்றுக்கொள்ளும் எண்ணம் என்னிடம் இல்லை. வசதியான வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் எனக்கு இருக்கிறது. ஏனெனில் எனக்கு எந்தத் தடைகளும் இல்லை. எனக்கு மக்களுக்கு முழுமையாக சேவையாற்ற முடியுமென்று நான் நினைக்கின்றேன். எனது கணவரும் எனக்கு உதவுகின்றார். உண்மையில் ஒரு மனைவியாகவும் தாயாகவும் வீட்டிற்கு எதைச் செய்ய வேண்டுமோ அவற்றை நான் நிறைவேற்றுகிறேன். இவை இரண்டையும் சரிசமமாக என்னால் நிறைவேற்ற முடியாது என்று நான் உணரும்போது அரசியலை விட்டு விலகிவிடுவேன். என் கணவர் எவ்வாறு ஒத்துழைக்கிறார் என்பதைப் பொறுத்தே இவை அனைத்தும் தங்கியிருக்கின்றது.
தேர்தல் வெற்றி பெற அதிக செலவாவது பற்றிய உங்கள் கருத்து யாது?
தேர்தல் பிரசாரங்களை நடத்துவது அதிக செலவு மிக்கதுதான். அது விரும்பிச் செய்யும் ஒரு தியாகம்,
பெண்கள் அரசியலில் ஈடுபடுவது பற்றி உங்களின் கருத்து என்ன?
பெண்களுக்கு எதையும் செய்யக்கூடிய திறமை இருக்கின்றது என்ற உணர்வு எனக்கு எப்போதும் இருக்கின்றது. ஒரு பெண்ணையும் ஆணையும் இதுபோன்ற வேலைகளில் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால் பெண்களே மிகத் திறமைசாலிகள். அவர்கள் ஒழுங்காகவும், திட்டமிட்டும், சரியாகவும் இயங்குவார்கள். பெண்கள் எதையும் திறமையாகச் செய்யக்கூடியவர்கள் என்ற பயம் ஆண்களிடம்
154

இருக்கின்றது (இருந்தபோதும் எமது ஜனாதிபதி அனைத்தையும் குழப்பிக் கொள்கிறார் என்பதையும் நான் சொல்லத்தான் வேண்டும்), அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வருவதை ஆண்கள் விரும்பவில்லை. பெண் ஒருவர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டால் அவருக்கு தகுதி இல்லை என்றும் செல்வாக்கைப் பயன்படுத்தியே அவள் தெரிவாகி இருக்கின்றாள் எனவும் ஆண்கள் பொதுவாக எண்ணுகின்றார்கள். ஒரு பெண் ஆணைவிட அதிக வாக்குகளைப் பெற்றால் அவள் வாக்குப் பெட்டியில் வாக்குகள் திணிக்கப்பட்டிருக்கின்றன என்று நினைக்கின்றார்கள். உங்களின் கீழ் ஓர் ஆண் செயலாளர் பணிபுரிவதாக இருந்தால் மீணடும் பிரச்சினைதானி , இவைகளையெல்லாம் எதிர்த்து முன்னேற வேண்டுமென்பதே எனது எண்ணமாகும். சில ஆண்கள் நான் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதும்கூட நான் பொருத்தமானவள்தான் என்பதை கரு ஜயசூரிய முடிவு செய்திருந்தார்.
அதிகளவிலான பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டுமென்றே நான் நினைக்கின்றேன். ஏனெனில் இன்று பெண்கள் பிரச்சினையைப் பற்றி பேசும் ஆண்கள் எங்கே வாழ்க்கைச் செலவு உயர்வு பற்றிப் பேசுகிறார்கள்? கல்வியைப் பற்றியோ அல்லது கலாசாரச் சீரழிவு பற்றியோ எங்கே பேசுகின்றார்கள்? இந்தப் பிரச்சினைகள் பற்றிப் பெண்கள்தான் பேச வேண்டும். விசேடமாக வாழ்க்கைச் செலவு உயர்வு பற்றித் தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் பேசும். பின்னர் தேர்தல் முடிந்தவுடன் அதைப்பற்றி முற்றாக மறந்து விடுவார்கள், அது தவிர ஒரு தாயாக அல்லது மனைவியாக கணவர் என்ன சம்பளத்தைக் கொண்டு வருகின்றாரோ அவள் அதை வைத்தே சமாளிக்க வேண்டும். குழந்தை பசித்தால் தாயிடமே வருகின்றது. தகப்பனிடம் அல்ல. ஆகவே நிறையப் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு இப்பகுதி அடிப்படைப் பிரச்சினைகளான பொருளாதார, கல்வி, கலாசார விடயங்களில் ஈடுபாடு கொள்ள வேண்டும். நான் தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட ஒரு சாதாரண மாகாணசபை உறுப்பினர்தான். என்னிடம் அதிகமாக குரல் கொடுக்கும் சக்தி இல்லை. ஆனால் நிறையப் பெண்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொண்டால் எமது சக்தியைக் கட்சிக்கு அல்லது அரசாங்கத்திற்கு அல்லது எதிர்க்கட்சிக்கு உணர்த்தலாம். இதனால் எம்மால் நிறைய வேலைகளைச் செய்து முடிக்கலாம். இருந்த போதும் பெண்களாகிய எம்மிடத்தில் பிளவுகள் உள்ளன. நீங்கள் மாமியாரையும் மருமகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். மாமியார் மருமகளைக் கொடுமைப்படுத்துகின்றார். பெண்கள் பரஸ்பரம் ஒருவர் மற்றவர் மீது குறை கூறிக் கொண்டிருக்கின்றனர்.
பெண்களுக்கு 25 சதவீத இடவொதுக்கீடு பற்றிய உங்களின் கருத்து யாது?
இதை ஐக்கிய தேசியக் கட்சிதான் ஏற்படுத்தியது. ஆனால் பெண்கள் முன்வருவதில்லை. கிராமப்புறப் பெண்கள் அரசியல் நடவடிக்கைகளில்
155

Page 86
பங்கெடுத்துக் கொள்ள விரும்பினாலும் தேர்தலில் வேட்பாளராக நிற்க அவர்கள் விரும்புவதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் நான் கொழும்பு கிழக்கில் போட்டியிடுகின்றேன். கொழும்பு கிழக்கில் 43 அமைப்புக்கள் இருக்கின்றன. ஒவ்வொரு சாவடிக்கும் 43 அமைப்பாளர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு சாவடிக்கும் ஒரு இளைஞர் முன்னணியும் பெண்கள் முன்னணியும் பிரதான கிளையும் இருக்கின்றது. இந்த ஒவ்வொரு கிளைகளுக்கும் 8 அலுவலர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒன்று கூடி கொழும்பு கிழக்கு பலமண்டலயவைக் கட்டியெழுப்புகின்றனர். ஐக்கிய தேசியக் கட்சி நிறையப் பெண்களை முன்னணிக்குக் கொண்டு வருவதற்காக ஊக்கப்படுத்துகின்றது. ஆனால் தேர்தல் வரும்போது பெண்களிடத்தில் நிதிவசதி இல்லாமல் இருப்பதுதான் முக்கியப் பிரச்சினை. அவர்கள் கணவன்மாரில் தங்கியிருப்பது இரண்டாவது பிரச்சினை. எல்லோருக்கும் என்னைப் போல் வீட்டின் உதவியைப் பெற முடியாதுள்ளதுடன் அவர்கள் தமது கணவன் மாரின் வேலைகளில் உதவி செய்யவும் வேண்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பெண்கள் அமைப்பு நிதியம் ஒன்றை உருவாக்கி செயற்படுத்தி வருகின்றது. ஆகவே தேர்தலில் பெண்கள் போட்டியிட முன்வந்தால் எம்மால் நிதியுதவி செய்யலாம். ஆகவே அடுத்த மாகாண சபைத் தேர்தலில் எம்மால் சில வழிகளில் உதவக் கூடியதாக இருக்கலாம். ஆனால் பாராளுமன்றத் தேர்தலில் எம்மால் உதவ முடியாது. இன்றைய நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மூன்று அல்லது நான்கு மில்லியன் ரூபா அவசியம். எப்படி இருந்தாலும் 75 சத வீதம் ஆண்களுக்கும் 25 சத வீதம் பெண்களுக்கும் ஒதுக்கியிருப்பதையிட்டு நான் கவலைப்படுகின்றேன். ஏனெனில் இன்று இலங்கையில் ஆண்களை விடப் பெண்களே அதிகமாக இருக்கின்றனர்.
ரேணுகா ஹேரத்தைத் தவிர பாராளுமன்றத்தில் இன்று அங்கம் வகிக்கும் அநேகப் பெண்களின் தந்தை அல்லது கணவர் அரசியலில் இருக்கின்றனர். ஏன் ஒரு பெண் அரசியல் பின்புலத்துடன் வரவேண்டும். அரசியல்வாதிகளுடன் நெருங்கிய உறவுமுறைத் தொடர்பு அற்ற ஒரே ஒரு பெண் நான்தான். ஆண் அரசியல்வாதிகள் என்ன சொல்கின்றார்கள்? நாங்கள் பாரசூட்டிலிருந்து குதித்து வந்திருக்கின்றோம் எனக் கூறுகின்றனர். ஏன் அவருக்காக வேலை செய்ய வேண்டும்? ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கேட்கின்றனர். கட்சியில் ஒரு குறிப்பிட்ட அந்தஸ்த்தை அடைந்து விட்டால் நீங்கள் தப்பித்தீர்கள். இல்லாவிட்டால் அவ்வளவுதான். யாராவது ஒருவர் சிறப்பாகச் செயற்படுவதை அவர்கள் கண்ணுற்றால் உதாரணத்திற்கு நான் நன்றாகப் பேசுவதாக மக்கள் கூறினால் அல்லது வேறு ஏதாவது என்னைப்பற்றி நல்லவிதமாகப் பேசினால் இவளை ஆரம்பத்திலேயே வெட் டிவிட வேண்டும் என அவர்கள் நினைப் பார்கள். உங்களை வெட்டிவிடுவதற்காக உங்களுக்கு மேலாக எப்போதும் ஒருவர் இருந்து கொண்டே இருப்பார். விசேடமாக, பெண்களை ஒரம் கட்டுவதற்கு.
156

அரசியலில் வன்முறையை நீங்கள் சந்தித்த அனுபவமுண்டா?
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே மக்கள் வன்முறையை அனுபவிக்கத் தொடங்கினார்கள். 1998 ஆம் ஆண்டு 14 ஆம் திகதி எனது ஆதரவாளர்கள் பொரல்லையில் எனது போஸ்டர்களை ஒட்டச் சென்ற போது கடுமையாகத் தாக்கப்பட்டனர். அதுதான் முதல் தாக்குதல் , எனது போஸ் டர்கள் கிழிக்கப்பட்டதுடன் எனக்கு டெலிபோன் மூலமாக அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. இப்போது எனக்கு எல்லாம் பழக்கமாகி விட்டது. ஏராளமான தொலைபேசி அச்சுறுத்தல கள் எனக்கு வருகின்றன. எதிரிகளும் இருக்கின்றார்கள். தொடர்ந்து முன்னேற வேண்டும். இதைப்பற்றியெல்லாம் நான் பயப்படவில்லை. என்னால் நிறைய சாதிக்க முடியும். நான் மரணத்தைக் கண்டு பயப்படவில்லை. நேரம் வரும்போது நீங்கள் போகத்தான் வேண்டும். நான் பெளத்த மதத்தைச் சேர்ந்தவள். சாய் பாபாவின் பக்தையும் கூட. இவ்விரண்டுமே கர்மா உங்களை வழிநடத்துவதாகக் கூறுகின்றது.
157

Page 87


Page 88
கிஷாலி பின்ரோ ஜயவர்த் வாராந்தம் முக்கிய விடயங்கள் பற் எழுதுகின்ற கிஷாலி அப்பத்தி ஆலோசகராகவும் பணியாற்றுகின்ற நீதிமன்றங்களில் வாதாடுபவர். உ மனித உரிமைகள், சட்டம், ஊடகங் பல சிரேஷ்ட ஆலோசகர் பதவிகை பெண்கள் மற்றும் அரசியற் பங்கே ஆய்வினை மேற்கொண்டு எழுதி ஆண்டுக்கான ‘சமாதான அறிஞர் 6 இயங்கும் விஸ்கொம் (WISCON செய்யப்பட்டவர். தற்போது இலங்6 இடம்பெறும் அரசியலமைப்புச் செ பால்நிலை தொடர்பான ஆய்வில்
சூலனி கொடிக்கார 1993 இல் சட்டத் துறையில் பட்டம் பெற்றவர் உரிமைகள் மற்றும் பெண்கள் உ ஆர்வம் காட்டி வருவதோடு அ விளங்குகின்றார். பெண்களும் ஆட்சி சட்டம் எனும் விடயங்களில் அ இலங்கையில் முஸ்லிம்களின் குடும் மற்றும் பெண்களுடன் தொடர்பான வி அவர் எழுதியுள்ளார்.
ICE
G) (y
s2
COLO
PRINTED BY UNIEARTS (PVT) LTD., COLOMBO

356OT (LLB) (Hons) GasT(publ., றி சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் ரிகையின் ஆசிரியபிட (சட்ட) ார். உரிமைப் பிரச்சினைகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கள் மற்றும் பால்நிலை தொடர்பான ள வகிப்பவர். அவர் இலங்கையில் கற்புப் பற்றி விரிவான முறையில் யும் வருபவர். 2002-2003 ஆம் விருதுக்கு இந்தியா நியூடெல்கியில் MP) அமைப்பினால் விதந்துரை கையிலும் தென் ஆபிரிக்காவிலும் Fயன்முறைகள் பற்றிய ஒப்பீட்டுப்
ஈடுபட்டுள்ளார்.
b கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1. அக்காலம் முதல் அவர் மனித உரிமைகள் பற்றிய விடயங்களில் அத்துறையில் ஆய்வாளராகவும் முறையும், இலங்கையில் முஸ்லிம் ஆய்வுகளைச் செய்து வருகிறார். பச் சட்டம்: கோட்பாடு, நடைமுறை விடயங்கள் பற்றிய நூலொன்றையும்
ISBN: 955-580-082-0
MBO
13, SRI LANKA, TEL: 9401 2330195 2478133,