கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தணிகாசலம்பிள்ளையின் கட்டுரைகள்

Page 1

編 研 8 Gä 伯以
O
36

Page 2

கலாநிதி ச. நா. தணிகாசலம்பிள்ளையின் கட்டுரைகள்

Page 3
நூலின் பெயர் : தணிகாசலம்பிள்ளையின் கட்டுரைகள்
ஆசிரியர் கலாநிதி ச.நா. தணிகாசலம்பிள்ளை முதலாம் பதிப்பு : 2009
பதிப்புரிமை ஆசிரியருக்கு
அச்சகம் கிறிப்ஸ்
விலை ரூ. 300.00
Title of the Book : Essays of Thanikasalampillai
Author : Dr.S.N.Thanikasaiampillai
First Edition : 2009
ISBN : 978-955-5O250-1-0
Copyright : To the author
Printers : KRIBS
Price : RS. 300.00

அணிந்துரை
இந்நூலாசிரியர் கலாநிதி ச.நா. தணிகாசலம் அவர்கள் கல்வித் துறையில் மிக நீண்ட காலம் பணிபுரிந்து இளைப்பாறிய பின்னர் தற்போது கல்வி அமைச்சில் ஆலோசகராகப் பணிபுரிந்து வருபவர். அதன் காரணமாக கடந்த நான்கு தசாப்த காலத்தில் இலங்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களில் கூடிய பரீட்சயம் பெற்றவர். அத்துடன் கல்வியியலின் பல்வேறு பரிமாணங்களைக் கற்றறிந்து உயர் பட்டங்களைப் பெற்றதோடு அத்துறையில் ஆய்வாளராகவும் பல்கலைக்கழக நிலையில் வருகை தரு விரிவுரையாளராகவும் விளங்கியவர். இப்பின்புலத்தில் அவர் எழுதிய வெளியிட்ட பல்வேறு கல்வியியல் மற்றும் பிறதுறை சார்ந்த கட்டுரைகளை ஒருமுகப்படுத்தி இந்நூலில் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
தொழில் ரீதியாக நூலாசிரியர் கல்வித்துறை சார்ந்தவராயினும் தமிழ்மகன் என்ற முறையிலும் தமிழ் மொழி, இலக்கியத்தை உயர்கல்வி நிலையில் கற்றவர் என்ற முறையிலும் நூலின் முற்பகுதியில் பல தமிழியல் கட்டுரைகளையும் அவர் உள்ளடக்கி யுள்ளார். தமிழிசை மற்றும் நாட்டுக்கூத்து ஆகிய துறைகளில் நூலாசிரியரின் ஈடுபாட்டையும் அனுபவத்தையும் காட்டும் பல கட்டுரைகள் நூலில் உள்ளடக்கி உள்ளன.
நூலாசிரியர் தொழில்ரீதியாகவும் கற்கைநெறி ரீதியாகவும் கல்வி முகாமைத்துவத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதன் காரணமாக, நூலில் காணப்படும் ஏனைய பல கட்டுரைகளில்

Page 4
இவ்வம்சத்தைக் காணமுடிகின்றது. நூலாசிரியர் ஏற்கனவே கல்வி முகாமைத்துவம் தொடர்பாக மற்றொரு நூலையும் வெளியிட் டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி முகாமைத்துவத்துடன் கல்விச் செயற்பாட்டினூடாக மனித விழுமியங்களுக்கு அளிக்கப் படவேண்டிய முக்கியத்துவம் பற்றியும் நூலாசிரியர் தமது கட்டுரைகளில் ஆராய்ந்துள்ளார்.
கல்வி முகாமைத்துவம், மனித விழுமியங்கள் என்னும் இவ்விரு அம்சங்களும் இன்றைய கல்விச் செயற்பாட்டிலும் கல்விச் சீர்திருத்தங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள். ஒரு புறம் கல்வி முறை வினைத்திறனுடன் அமைய சிறந்த முறையில் கல்வி முகாமைத்துவம் செயற்படவேண்டியுள்ளது; மறுபுறம் கல்விமுறையின் தராதர மேம்பாட்டுக்கு, மனித விழுமிய வளர்ச்சியை உள்ளடக்கிய சமச்சீரான கல்வி தேவைப் படுகின்றது. இவ்விருதரப்பட்ட முக்கியத்துவத்தைக் கருதியே கலாநிதி தணிகாசலம்பிள்ளை இவ்விரு அம்சத்துக்கும் தமது தொகுப்பு நூலில் பிரதான இடத்தை அளித்துள்ளார் எனக் கொள்ள முடியும்.
தமிழில் கல்வியியல் நூல்களின் பற்றாக்குறை நிலவும் இந்நாளில் கல்வியியல் மாணவர்கள் படித்துப் பயன்பெற இக்கட்டுரைத் தொகுப்பு உதவும் என்பது எமது நம்பிக்கை.
பேராசிரியர். சோ. சந்திரசேகரன் கல்விப்பீடம்
கொழும்புப் பல்கலைக்கழகம்

வாழ்த்துரை
கல்விச் சமூகம் நன்கு அறிந்த கலாநிதி தணிகாசலம்பிள்ளை 1965 முதல் 1998 வரை - மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அவ்வப் போது பத்திரிகைகளுக்காக எழுதிய பத்தொன்பது கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.
இக்கட்டுரைத் தொகுப்பில் கலாநிதியால் காணப்பட்ட நேர்முகமும் அவரைக் கண்ட செவ்வியும் கட்டுரை வடிவில் இடம்பெற்றுள்ளன.
அறிஞர்களும் ஆசிரியர்களும் காலவரையின்றி தொடர்ந்து வாசிப்பவர்கள்; சிந்திப்பவர்கள். அவர்கள் அறிந்து தெரிந்து கொண்டவற்றை பிறர் அறிந்திடவும் தெரிந்து கொள்ளவும் பல்வேறு வடிவங்களையும் பல்வேறு சாதனங்களையும் பயன்படுத்துவர். அந்த வகையில் கல்வித்துறையில் ஆசிரியராக, அதிபராக, பணிப்பாளராக படிப்படியாக உயர்ந்து பல பதவிகளை வகித்து, அகவை அறுபதைக் கடந்து அறிவு அனுபவம் காரணமாக ஆலோசகராகக் கடமையாற்றும் கலாநிதி தணிகாசலம்பிள்ளை பொதுவாகப் பல தலைப்புக்களிலும் குறிப்பாக கல்வி தொடர்பான விடயங்களிலும் எழுதியவற்றின் தொகுப்பு இது.
கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களத்தோர் பயன்படுத்தும், கல்வி நிர்வாகக் கட்டமைப்பு, கற்றல் கற்பித்தல், அனைவருக்கும் கல்வி, இடைநிலைக் கல்வி பற்றிய விடயங்கள் தொடர்பான
கட்டுரைகள் பயன் நிறைந்தவையாகும்.

Page 5
கல்வித் துறையில் முன்னணியில்திகழ்ந்த வடகிழக்கு முகம் கோடுக்கும் விடயங்களும், காலக் சூழலால் நேரமில்லாத மாணவர்களையும் சில கட்டுரைகளில் காணக்கூடியதாக உள்ளது.
நமது மண்ணுக்குப் பெருமை சேர்த்த நல்லதம்பிப் புலவர், கதாபிரசங்கங்களால் கடல் கடந்த நாடுகளிலும் புகழ்பெற்ற 'மணிஐயர்' போன்றவர்களையும் நினைவில் நிறுத்தத்தக்க வகையில் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு சிகிச்சை முறைகள் நடைமுறையில் கையாடப் பட்டாலும் 'ராஜ வைத்தியம் என யாழ்ப்பாணத்தில் அறியப் பட்ட சிகிச்சை முறை பற்றி அரிய தகவல்களும் கட்டுரையில் காணப்படுகின்றது.
சுருக்கமாக எழுதப்பட்ட தமிழிசை வரலாறு விரிவாக எழுதப் படவேண்டிய விடயமென்பது எனது கருத்து.
திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றால் ஒரம் கட்டப் பட்ட வட்டக்களரி, நாட்டுக்கூத்து தொடர்பான விடயங்களும் கட்டுரைகளில் அடக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் பொதுவாக எல்லோரும் படித்துப் பயன் பெறக்கூடிய கட்டுரைத் தொகுப்பாக இந்நூல் ஆக்கப் பெற்றுள்ளது.
கலாநிதி தணிகாசலம்பிள்ளைக்கு நல்வாழ்த்துக்கள்.
உடுவை எஸ். தில்லைநடராசா

முகவுரை
l 966ஆம் ஆண்டு தைமாதம் வெள்ளவத்தை நாவலர் மண்டபத் தில் (தமிழ் பல்கலைக்கழக இயக்கம்) நடாத்திய வெளிவாரி வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு விரிவுரையாற்ற நியமிக்கப் பட்டேன். இச்சந்தர்ப்பத்தை அளித்தவர் அமரர் பொன் இராஜ கோபால் (முன்னாள் வீரகேசரி, தினக்குரல் பிரதம ஆசிரியர்) அவர்கள். அன்னார் எனது எண்ணங்களையும் கருத்துக்களையும் கண்டறிந்து பத்திரிகைக்கு எழுதும்படி ஆர்வப்படுத்தினார். அதன் விளைவாகப் பல கட்டுரைகள் வீரகேசரியில் வெளிவந்தன. அதுபோல தினக்குரலிலும் வெளிவந்தன. அவரது தூண்டுதலே இக்கட்டுரைத் தொகுப்பிற்குக் காரணம். அவருக்கு எனது நன்றிகள்.
ஒரிரு இலக்கிய, வரலாற்று, மொழியியல் கட்டுரைகளை இந்நூல் கொண்டிருந்தாலும் கூடுதலாகக் கல்வியியற் கட்டுரை களையே இப்புத்தகம் கொண்டுள்ளது. காரணம் எனது வாண்மை ரீதியாக கற்றுத் தேர்ந்தவற்றையும், பட்டறிந்தவற்றையும் வெளிப் படுத்தவேண்டும் என்ற ஆவல் எனது மனதில் அவ்வப்போது தோன்றியமையாகும்.
இவற்றுடன் 90களின் பின்பு யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றுவரை வருகை விரிவுரையாளராக கல்வியியற்துறையில் ஆற்றி வருவதுமாகும். அத்துடன் மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் முதுமாணி பட்டப் படிப்பு படிக்கும் மாணவர் உட்பட உயர் பட்டம் படிக்கும் மாணவர்களின் ஆய்வு நூல்களை மதிப்பீடு செய்து வருவதுமாகும்.

Page 6
இவற்றைத் தொகுத்து ஆவணப்படுத்த உதவியவர் எனது மூதத புதல்வி திருமதி நரேந்திரன் சுகந்தி (அவுஸ்ரேலியா) அவர்கள். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் கொழும்பில் விடுமுறைக்கு வரும்பொழுது அங்கொன்று இங்கொன்றாக இருந்த கட்டுரைகளைத் தேடி எடுத்துத் தொகுத்து வைத்தார். அவருக்கு எனது எனது நன்றிகள். கூடுதலான கட்டுரைகள் யாழ் இடப்பெயர்வால் தவறிவிட்டன. -
இந்நூலை வெளியிட்டு ஆவணப்படுத்த சந்தர்ப்பம் உருவாக்கித் தந்த இறைவனை வணங்கி நிற்கின்றேன்.
நன்றி.
கலாநிதி. ச. நா. தணிகாசலம்பிள்ளை 33, உருத்திரா மாவத்தை லான்ட்மார்க் கோட்டம்
வெள்ளவத்தை
கொழும்பு - 06

பொருளடக்கம்.
மக்கள் மனங்கவரும் தமிழிசையின் வரலாறு . II
உன் கண்ணொத்த குவளையைக் காட்டுகிறேன். . 17
முது தமிழ்ப் புலவர் நல்லதம்பிப் பாவலர் . 22
வட்டக்களரியில் நின்றாடினால். . 25
ஏனிந்த வெறுப்பு? நாட்டுக்கூத்து மரபு - சர்ச்சை . 31
சங்கிலியன் மருத்துவ பரம்பரையில். . 37
வட்டு. விசாலாட்சி சமேத காசி விசுவநாத . . 43
தமிழ்ப் பாடநெறி கற்றல், கற்பித்தலில் . 47
மனித விழுமிய மேம்பாட்டுக்கல்வி . 53
"தற்கால கல்வி நிர்வாகக் கட்டமைப்பின் . 71
இடைக்கால நிர்வாகத்தின்போது . 8
"அனைவருக்கும் கல்வி' என்ற கோட்பாடு . 97 பள்ளிக்கூடங்கள் பயன் தரு விருட்சங்களாக . 105
மாணவர்களுக்கு நேரமில்லை! . 109
'நீங்கள் எங்கு போகிறீர்கள் என்பது . " . II6
இடைநிலைக்கல்வி, உயர் கல்வி என்பனவ. . 22
மனிதனுக்கு கல்வியும், சுகநலனும் . 30
கல்வி நிர்வாகக் கட்டமைப்பு மாற்றம் . 138
கல்வியும் அதன் முக்கியத்துவமும் . 143

Page 7

மக்கள் மனங்கவரும் தமிழிசையின் வரலாறு
தமிழகம் வளர்த்துத் தந்த கலைச் செல்வங்களில் இசைச் செல்வமும் ஒன்றாகும். இவ் இசைச் செல்வம் வேறு நாடுகளில் பரவி அந்நாடுகளைப் பண் பாட்டில் முன்னேற உதவியுள்ளது. இத்தகைய இசையை இன்னதுதான் என்று கூறமுடியாது. இருந்தும் இசை வாணர்களும் கலைஞர்களும் ஒவ்வோர் உள்ளத்தையும் தன்பால் உருக்கும் மொழிதான் இசை என்கின்றனர். சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் 'இசையாவது நரப்படைவால் உரக்கப் பட்ட பதினோராயிரத்துத் தொள்ளா யிரத்துத் தொண்ணுாற்றொன்றாகிய ஆதிசைகள்' என்கிறார்.
பாணர்கள்
இத்தகைய இசை சங்க காலத்திலேயே இருந்தது என அக்கால இலக்கியங்களைக்கொண்டு துணியலாம். இசையைப் பாடுபவர்
களாக பாணர்கள் பாணினிகள் இருந்தனர்; பாணர்கள் மூன்று
11

Page 8
வகைப்பட்டிருந்தனர். அவர்களில் யாழ் வாசிப்பவர் யாழ்ப் பாணர் என்றும் சங்கீதம் பாடுவோர் இசைப்பாணர் என்றும் பிச்சை ஏற்றுப் பிழைப்போர் மண்மைப் பாணர் என்றும் இருந்தனர். இவர்களில் யாழ்ப்பாணர் யாழின் பெருமைக்கும் சிறுமைக்கும் ஏற்ப பெரும்பாணர், சிறுபாணர் என வகுக்கப்பட்டிருந்தனர். அவர்களை ஆற்றுப்படுத்த பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை என்ற இலக்கியங்கள் எழுந்தமையும் நாம் காண முடிகின்றது. இப்பாணர்கள் மருதநிலத்தலைவன் தலைவிக் கிடையில் ஏற்பட்ட ஊடலை நீக்க தூதாக அனுப்பப்பட்டதையும்
காணலாம்.
பழந்தமிழர் இசை
அதுமட்டுமல்லாமல் சங்க கால அகத்திணை மரபில் இசைச் செல்வம் முக்கியம் பெற்று விளங்கியதையும் காணலாம். அதாவது மருத நிலத் தலைவன் ஓய்வு நேரங்களில் தனது காலத்தைப் போக்குவதற்கு ஆடல், பாடல், இசைக் கருவிகள் ஒலித்தலில் சிறந்து விளங்கியவர்களாகி பாணர் வீட்டிற்குச் செல்வதும் அவ்விசைச் செல்வத்தைப் பெற்று மீள்வதும் வழக்காகும். இவ்வாறு சென்றவன் சில காலத்தின் பின்பு இசைச் செல்வத்தை அளிப்பவர்களுடன் கூடி வாழும் வழக்கம் இருந்தது. இவ்வாறாகச் சங்க கால சமுதாய அமைப்பில் இசைச் செல்வம் இன்பம் ஊட்டிய செல்வமாக இருந்ததைக் காணமுடிகின்றது.
அதை அடுத்து பழந்தமிழக இசை பற்றி சிலப்பதிகாரம் என்ற நூலில் அறிய முடிகின்றது. இந்நூல் இசையின் இலக்கணத்தைக் கூட அறியத் துணைசெய்யும் எனலாம். இசை ஆசிரியனின் அமைதி, யாழ். ஆசிரியனின் அமைதி, குழல் வகை, இசைத் தொழில் வகை, இசைப்பா வகை ஆகியன பற்றிக்கூறுகின்றது.
பக்திப் பாடல்கள்
இதை அடுத்து பல்லவர் காலத்தைப் பொறுத்த மட்டில் இசையின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்தில் வைதீக
சமயத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டதற்கிணங்க இசையிலும்
12

மறுமலர்ச்சி ஏற்பட்டது. சைவசமயத்திற்குப் புத்துயிர் அளிக்க நாயன்மார்கள் தோன்றினர். அவர்கள் இல்லங்கள் தோறும் சென்று பழகு தமிழில் பாவினங்களை இயற்றி இசையுடன் பாடி பக்தி
வெள்ளத்தை கரைபுரண்டோடச் செய்தனர்.
முதலாம் மகேந்திரவர்மன்
பல்லவ அரசைப் பொறுத்த மட்டில் அக்காலம் பிற கலை களைப் போல் இசைக் கலையும் சிறப்புற்ற காலமாகும். மன்னர்கள் இசைக் கலையை ஆதரித்தது மட்டுமன்றி அதன் வளர்ச்சிக்கும் தொண்டாற்றினர். இவ்வாறு தொண்டாற்றியவர் களில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவான். இவன் இசைக்கலைக்கு ஆற்றிய தொண்டால் 'ஸங்கீர்ண ஜாதி” என்ற புகழும் பெற்றான். இவ்விருதுப் பெயர் அவன் இசையில் இரு வகைத் தாளத்தை உருவாக்கினான் என்பதைக் காட்டும். இத்துடன் அவன் கொண்ட மற்றொரு விருதுப் பெய ராகிய 'ப்ரகள் பிரவிருத்த மாத்ரஹ்' என்பதுதான்மாத்திரைகளை ஒரு புது முறையில் வகுத்தானென்பதைப் புலப்படுத்துகின்றது.
மகேந்திரவர்மனைப் போலவே இசைக்கலையை ஆதரித்த இன்னோர் மன்னன். இரண்டாம் நரசிம்மன். இதற்கு அவன் கொண்ட பூரீவாத்ய வித்யாதாக', 'ஆத்தோத்தய', 'பூறfவீணாநாத் போன்ற விருதுகள் சான்று.
இவை எவ்வகை வாத்தியங்கள் வாசிப்பால் நரசிம்மன்
வல்லுநரினைக் காட்டும்.
நந்திக்கலம்பகத்தில்
இதை அடுத்த நந்திவர்மன் காலத்தில் அவனின் இசையைப் பேணி வளர்க்கும் கலையுள்ளத்தை நந்திக்கலம்பகம் என்ற நூலில் காண முடிகின்றது. இந்நூலாசிரியர் பாடன் என்ற பாத்திரத்தைப் படைத்து அவனது குரலைத் தலைவி புகழ்வதாகப் பாடல்
பாடியுள்ளார்.

Page 9
இக்காலக் கோயில்களின் கோபுரங்களிலும், மண்டபங்களி லும், சுவர்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ள இசைக் கருவிகளின் உருவங்களும், உட்கார்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ வாசிக்கும் இசைவாணர்களின் உருவங்களும் கவனிக்கத்தக்கவை. ஹம்பே, மதுரை, அழகர் கோயில், திருநெல்வேலி, ஆழ்வார் திருநகரி, சுசீந்திரம் முதலிய இடங்களி லுள்ள கோயில்களில் காணப்படும் இசைத்தூண்கள் சிறந்த சிறப்பு
வேலைப்பாடுகள் உள்ளனவாக இருக்கின்றன.
சோழர்காலம்
சோழர் காலத்தைப் பொறுத்தமட்டில் கலைகளின் தாயகமான கட்டிடங்களைக் கொண்ட கோயில்களில் ஏனைய கலைகள் வளர்ச்சியுற்றதைப் போல இசைக்கலையும் வளர்ச்சியடைந்தது. குறிப்பாக இராஜராஜசோழன் காலம் குறிப்பிடற்பாலது. இவன் தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் தேவாரத் திருப்பதிகங் களை இசைக்கவும், உடுக்கு, கொட்டிமத்தளம் வாசித்தற்கும், நடன மாதர் இசை பாடுவதற்கும் இசைக் கருவியாளர்களுமாக ஐந்நூற்றுக்கு மேற்பட்டவர்களை நியமித்து இசை நாடகங்களை வளர்த்தானென்று தஞ்சைக் கோயில்களிலுள்ள கல்வெட்டுகளால்
அறிய முடிகின்றது.
சந்தப்பாடல்
நாயக்கர் காலத்தைப் பொறுத்த மட்டில் பல்லவர் காலத்தில் நாயன் மார்களும், ஆழ்வார்களும் இசையின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியது போன்று இக்கால அடியார்களும் தொண்டாற்றி யுள்ளனர். குறிப்பாகக் குறிப்பிடக்கூடியவர் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த அருணகிரிநாதராவர். இவர் சந்த இசை மூலம் இறைவனைத் தலங்கள் தோறும் பாடி இசையை
வளர்த்தார்.
இவர் இயற்றிய திருப்புகழ் பாடல்கள் முப்பத்தைந்து சூளா தாளங்களுக்கும் கதி பேதத்தினால் வரும் நூற்றுஎழுபத்தைந்து
14

தாளங்களுக்கும், நூற்றெட்டு தாளங்களில் சிலவற்றிற்கும், சங்கர்ண தாளங்களில் சிலவற்றிற்கும் சிறந்த இலக்கியங்களாக விளங்குகின்றன.
கூட்டுப்பிரார்த்தனை
நாயக்கர் கால மன்னர்களைப் பொறுத்தமட்டில் இசைக்குத் தொண்டாற்றியவர்களில் குறிப்பிடக்கூடியவன் கிருஷ்ண தேவராயன் ஆவன். இவன் சிறந்த இசை வல்லுநன் என்பதை கிருஷ்ணபுரத்து லிங்காயத்துக் கல்வெட்டு விபரித்துக் கூறும். இக்காலத்தில் தமிழகத்துடன் தொடர்பு கொண்ட போர்த்துக் கேயரும் இதுபற்றிக் கூறுவர். இக்காலத்தில் இசை பல புதிய மாற்றங்களைக் கொண்டு வளர்ச்சி பெற்றது. இசையில் கூட்டுப் பிரார்த்தனை போன்ற புது அம்சம் புகுந்து பஜனை முக்கியம் பெற்றது மட்டுமல்லாமல் இக்காலம் இசை வரலாற்றைப் பொறுத்த மட்டில் சிறப்புற்ற காலமாகவும் விளங்குகின்றது. ஏனெனில் பதின்மூன்றாம் நூற்றாண்டுவரை இந்தியா முழுவதும் ஒரு வகைப்பட்ட இசை முறையாகக் காணப்பட்ட இசை முறை யானது கர்நாடக, இந்துஸ்தானி இசை முறையாகப் பிரிவு பெறு கின்றது. வடநாட்டைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் வருகையால் அப்பகுதியில் நிலவிய இசைமுறை பாரசீக, அராபிய இசைகளின் புதிய செல்வாக்கினால் இந்துஸ்தானி இசையாக மாற்றம் அடைகின்றது. ஆனால் தென் இந்தியாவைப் பொறுத்த மட்டில் அதே பழைய இசை முறை அந்நியர் பாதிப்பில்லாது தொடர்ந்து வளர்ச்சி பெற்று கர்நாடக இசையெனப் பெயர் பெற்றது. இதனால் வடநாட்டு இசை இந்துஸ்தான் இசையென்றும் தென்னாட்டு இசை கர்நாடக இசை எனவும் பெயர் பெற்றது. இவ்வாறாகப் பழைய இசை முறையைப் பொன்னைப் போல போற்றிப் பாதுகாத்துத் தமிழகத்துக்கு அளித்த பெருமை விஜயநகரப் பேரரசைச் சார்ந்ததாகும்.
அண்ணாமலை பல்கலைக்கழகம்
இன்று இசை வளர்ச்சிக்கு தமிழகத்தில் பெரும் தொண்டாற்றி வரும் இசைக் கோயிலில் குறிப்பிடக்கூடியது அண்ணாமலைப்
15

Page 10
பல்கலைக்கழகமாகும். ஆனால் இதுபோன்ற பல்கலைக்கழகம் எம் ஈழத்தில் இருந்தும் எமது இசை போன்ற கலைச் செல்வங் களை வளர்ப்பதற்கான துறைகள் ஆரம்பிக்கப்படாமை பெரும் குறைபாடாகும். இன்று தமிழகத்திலும் ஈழத்திலும் சிறந்த நாகசுர, தவில், வயலின் வித்துவான்கள் தோன்றி இசையை வளர்த்து வருவதையும் காணமுடிகின்றது.
வீரகேசரி
01.09. 1965
16

உன் கண்ணொத்த குவளையைக் காட்டுகிறேன் வா!
திருக்கோவையாரில் தோழியின் மதிநுட்பம்
தமிழ் இலக்கிய வரலாற்றில் பல்லவர் காலத்தில் எழுந்த பக்தி பனுவல்களில் மணிவாசகனார் படைத்துத் தந்த திருக் கோவையார் தனிச்சிறப்புடையதாகும். இந்நூலின் கண் அவர் அகப்பொரு ளுக்குத்தூய்மை அளித்து, தெய்வ மணம் புகுத்தியுள்ளார். இவ்வாறான மணம் வீசச் செய்வதற்கு அவர் கையாண்ட பாத்திரங்களில் சிறப்பிடம் வகிப்பவை தலைவன், தலைவி, தோழி என்பவை. அவர் ஒப்பற்றவராகிய, அவ்விறை வனை அடைய ஏங்கி நின்ற தன்னைத் தலைவியாகவும், தான் இறைவனை அடைய, துணைசெய்து நின்ற திரு வருளைத் தோழியாகவும் படைத்துள்
GINTI.
இவர்களுள் தோழியானவள் சிறு வயது முதல் தலைவியுடன் வாழ்ந்து, அவளின் நன்மை தீமையில் பங்கு கொண்டு, அவளது

Page 11
துன்பம் தீரத் துணையாய் நிற்பவள். இத்தகையவள் தான் விரும்பும் தலைமகளுக்கும், தலைமகள் விரும்பும் தலை மகனுக்கும் கெடுதியும், துன்பமும் நேராதபடி தடுக்கும் பொறுப்புடையவள். இத்தகைய தோழியின் பொறுப்புக்கு சவால் விடுவதாக அமைந்து விடுகின்றது. தலைவனது ஆற்றாமையும், தலைவி தலைவனை அடைய ஏங்கும் தவிப்பும் அத்தகைய சவாலுக்குக் கைகொடுத்துதவுகின்றது அவளின் மதிநுட்பம். தன் மதிநுட்பத்திறத்தாலேயே தலைவன் தலைவியிடையே எழுந்த அன்பென்னும் காதல் உணர்வை ஒருங்கிணைக்கும் பாலமாக
விளங்கி உடன் போக வைத்துவிடுகின்றாள்.
இரவுக்குறி விருப்பு
தற்செயலாக எதிர்ப்பட்டு காதல் கொண்ட இரு உள்ளங்கள் பகற் காலத்தில் பகற்குறியொழுக்கஞ் செய்யலாயினர். இவற்றைக் கண்ணுற்ற தோழி மேலும் தலைவன் இக்களவொழுக்கத்தை நீடியாது இருக்க தலைவன் உடனே தலைவியை மணப்பதே முறையென அறிகிறாள். ஆனால் தலைவனோ மணந்து கொள்ள விருப்பம் இல்லாது களவொழுக்கத்தையே நாடுகின்றான். இவ்வாறான நிலையை அறிந்த தோழி இக்களவொழுக்கம் பிறருக்கு புலப்பட்டு பழிச்சொல்லாகப் பரவுமே எனப் பயந்து தடுக்க முனைகிறாள். ஆனால் தலைவனோ மணம் முடியாது களவு முயற்சியிலேயே நின்று இரவுக் குறியில் சந்திக்குமாறு அவளை இரந்து வேண்டுகிறான். இரந்து வேண்டிய போதும் தோழியானவள் தலைவன் இரவில் குறியிடம் வந்து செல்லும் அருமையையும் தலைவியை குறியிடம் சேர்க்கும் அருமையை யும் நினைந்து தலைவனின் இரவுக்குறி விருப்பத்தை கூடிய மட்டும் தவிர்ப்பதற்கு எண்ணுகிறாள்.
எந்தமர நிழல்
மறுத்துரைக்க எண்ணியவள் பணிப்பெண்ணாகையால்
நேரடியாக எடுத்துரைக்க முடியாதவளாகவும் இருக்கிறாள்.
ஆனால் தலைவனோ மாலை விருந்தினனாக தலைவியின்

வீட்டிற்கு வருவதாகக் கூறுகிறான். இதற்கு தோழி தான் உடன் படாதவள் என்பதைக் காட்டுவதற்காக ‘எங்கள் ஊர் ஏற்றிழி வுடைத்து ஆதலால் உன் சிந்தைக்கும் ஏறற்கரிது’ என்று அவன்பால் அன்பிருப்பது போல பாவித்து வழியருமை கூறி மறுக்கிறாள். ஆனால் தலைவனோ அவ்விராக்குறிக் களவிலேயே நெஞ்சம் தோய்ந்து தன் பெருமையையும் மறந்து தன் ஆற்றாமையைக் கூறி மீண்டும் மீண்டும் இரந்து வேண்டுகிறான். இதைக் கண்ட தோழி இனியும் மறுப்பதில் பயனில்லையென அறிந்து இரவுக் குறியிடத்திற்கு இசைகின்றாள். எண்ணியவள் தலைவனிடம் 'உங்கள் ஊரவர் எப்பூவை அணிந்து, எச்சாந்தை அணிந்து, எந்த மர நிழலின் கீழ் விளையாடுவர்' எனக் கேட்டு விடுகின்றாள். அவ்வாறு தோழி கேட்பதன் உள்ளெண்ணத்தை உணர்ந்த தலைவனும் கேள்வியையே தோழியிடம் திருப்பிக் கேட்டு விடுகிறான். இவ்வாறு தலைவன் தாமாகவே கேட்கும் நிலையை எதிர்பார்த்திருந்த தோழி, "யாம் சந்தனச் சாந்தணிந்து வேங்கைப் பொழிலின் கண் விளையாடுவோம், நீர் அவ்விடம் வந்து உம் வரவை யாம் அறிய பொழிலில் துயிலும் மயிலை துயில் எழுப்புவீராக’ என மறைமுகமாக குறியிடத்தை கூறி விடுகின்றாள்.
எப்படிச் சொல்வது
தலைவனுக்கு குறியிடம் கூறிய தோழிக்கு அதை தலைவககும தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு ஏற்படுகின்றது. இருந்தும் இதைத் தலைவியிடம் நேரடியாகக் கூறினால் அவள் சில வேளை யில் மறுக்கவும் கூடும் என எண்ணுகிறாள். எண்ணியவள் தன் மதித்திறமையால் 'யாரோ ஒருவன் ஆண் நண்டு தன் பெட்டை யினோடு பயிலுவதைக் கண்டு, நெடுநேரம் அதை உற்று நோக்கி நெஞ்சழிந்து போயினான். அவ்வாறானவன் இரவு எவ்வாறு தூங்குவானோ’ எனக் கூறினாள். இதைக் கேட்ட தலைவி தன் காதலன் என்ன செய்வானோ என்று தோழியிடம் பரிந்து கேட்க அவன் இரவு வருகிறான் என்கிறானே அதற்கென்ன செய்வது என்று கேட்டாள். அதற்கு தலைவி கொடிய வழியால் தன் காதலனை வரச்செய்தல் நியாயமாகுமோ என்று வழியருமை கூறி
19

Page 12
மறுத்தாள். எனினும் தோழி தன் மதிநுட்பத்தால் தலைவியை இசைவித்து தான் தலைவனுக்கு அளித்த வாக்கை காப்பாற்று கிறாள். பின்னும் தலைவி இசைந்தமையை தலைவனிடம் நேரடியாகக் கூறாது 'ஒலிக்கும் சிலம்பா உனக்காகப் பெருந் துன்பமடைந்தேன்’ என்று கூறி தலைவன் கருதியது முடிந்தது என்று உணர வைக்கின்றாள்.
அடுத்து தலைவன் இரவுக்குறிக்கு வந்திருப்பதை தலைவிக்கு அறிவிக்க வேண்டியுள்ளது. இதையோ வீட்டில் வெளிப்படை யாகக் கூற முடியாத நிலை. ஆதலால் 'இவ்வீட்டின் கண் ஓரின்பம் வந்து பொருந்து மென்று ஆண்மயில்கள் பெண் மயில்களுக்கு கூறுவது போல மயில்கள் இடைவிடாது ஆரவாரிக்கின்றன’’ என்று கூறுவதன் மூலம் தலைவன் வந்துள்ளான் என்பதை தலைவியை உணரவைக்கின்றாள். உணர வைத்தபின் எவ்வாறு தாயின் துயில் அறிந்து தலைவியை அழைத்துச் செல்வது என எண்ணினாள். எண்ணியவள் "ஐயோ! யாம் விளையாடும் பொழிலில் உள்ள ஊஞ்சலை யானை கட்டவிழ்க்கிறதே என்ன செய்வது” என்று குமுறி நடிக்கின்றாள். ஆனால் தாயோ பதிலளிக் காமல் தொடர்ந்துறங்குவதைக் கண்ட தோழி தலைவியை 'உன் கண்ணொத்த குவளையைக் காட்டுகின்றேன் வாவென்று’ கூறி குறியிடத்துக்கு அழைத்துச் செல்கின்றாள், அங்கு தலைவியை விட்டு 'உன் குழற்கு சந்தனத்தழைகொண்டு வருகின்றேன் நின்று கொள்’ என்று கூறி இருவரையும் வைத்துப் பிரிகின்றாள்.
மணப்பதே பரிகாரம்
தலைவனோ மீண்டும் மீண்டும் இரவுக் குறிக்கே விரும்பு வதைக் கண்ட தோழி அதை விலக்கி மணம் முடித்துவைக்க எண்ணுகின்றாள். அதைத் தலைவனிடம் நேரடியாகக் கூற முடியாதபடியால் 'நீ அச்சமிகு பாதை வழியே வந்து போதலால் உனக்கிடையூறு வருமென்னும் ஏக்கத்தால் உன் அன்புக்குரியாள் அழுதிரங்குகிறாள்' என்று கூறி அதற்கு பரிகாரம் மணப்பதே என மறைமுகமாக வற்புறுத்தி விடுகிறாள். இவ்வாறு மறுத்தும் தலைவன் இரவுக் குறிக்கே விரும்புதலைக் கண்ட தோழி தன்
20

அறிவாற்றலால் மூங்கிலில் தோன்றிய தீகற்பச் சோலையைப் பற்றுவது போன்ற மலை நாடனே என்று அவனைப் புகழும் அதே நேரத்தில் இங்கு தோன்றிய பழிச்சொல் உன்னூரிலும் பரவினால் உன் பெருமைக்கே இழுக்கென்று அவனை உணர வைத்து தலைவன் இரவுக் குறிக்கு வருதலை நிறுத்தி விடுகின்றாள்.
இவ்வாறு தோழி தலைவன் வரவு விலக்கிய பினனர் தலைவி யின் உயிர்துடித்துதவிக்கிறது.
இத்தவிப்பைக் கண்ட தோழிமணஞ்செய்து வைக்கலாமோ என எண்ணுகின்றாள். ஆனால் தலைவியின் தாய் தந்தையரோ தலைவனுக்கு தலைவியை மணம் முடித்து வைக்க இசையார் என அறிந்தவள், உடன் போக்குதலே செய்யக்கூடியது என்று துணிகிறாள். துணிந்தவள் தலைவனிடமும் தன் அறிவாற்றலால் கூறி விடுகின்றாள். தலைவனைச் செய்ய விரும்ப மாட்டார்கள். அயலவரோ தலைவிக்கு மணம் பேசி வருகின்றனர். இவ்வாறான நிலையில் நீ செய்யக்கூடியதைச் செய் என்று கூறி அதற்கு வழி உடன் போக்கே என்பதையும் தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள். உடன் போக்கே என்பதை அவன் அறிவதற்கு அவள் என்னிடம் பூவையை பொற்பந்தை, பாவையை, பைங்கிளியைத் தந்தாள் அவள் கருத்து என்னவோ தெரியாது என்று கூறி அறிய வைக்கின்றாள்.
ஆனால் தலைவனோ வழியருமை கூறி உடன் கொண்டு போக மறுக்கின்றான். அதை அறிந்த தோழி தலைவிக்கு உன்னோடு வந்தால் வெய்யசுரமும் குளிர்ந்து மருதநிலம் போலாகும் என்று உடன் போக்குக்கு தலைவனை வற்புறுத்துகிறாள்.
21

Page 13
முது தமிழ்ப் புலவர் நல்லதம்பிப் பாவலர்
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈழ நாட்டில் பூதந்தேவனார் தொடக்கம் இன்றுவரை பலர் தொண்டாற்றியுள் ளனர். அவர்களுள் குழந்தைகளுக்காக குழந்தையாய் நின்று குழந்தை இலக்கியம் படைத்தவர் நல்லதம்பிப் பாவலர். இவர் 13.9.1896 ல் பிறந்து 8.5.1951 வரை வாழ்ந்தவர்.
வட்டுக்கோட்டையில் பிறந்தாலும் பிறந்த ஊரை விட்டு கொழும்பு மாநகரிலே சஹிராக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராக இருந்து தமிழ்த் தொண்டாற்றியவர். முஸ்லிம் மக்களிடையே தமிழார்வத்தை வளர்த்தது மட்டுமல்லாமல், அக்காலத்தில் ஆங்கில நாகரீகத்தில் திளைத்த கொழும்புத் தமிழரிடையே தமிழ் உணர்ச்சியை ஊட்டியவர். இலங்கையிலே இஸ்லாமிய இலக்கியங்களைப் பற்றியும் அவற்றின் தத்துவங் களைப் பற்றியும் அறிந்த தமிழ் மகன்.
இவர் ஈழத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் சென்று விரிவுரைகள் ஆற்றி வந்தார். அவருடைய புலமைத் திறனைக் கண்டதென்இந்திய திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முது தமிழ்ப் புலவர்' என்னும் பட்டத்தை வழங்கினர். இவர்
22

இலங்கையின் சுதந்திர விழாவை முன்னிட்டு நடைபெற்ற மரதன் ஒட்டக் கவிதைப் போட்டியில் 'மணித்தாய் நாடும் மரதனோட் டமும்' என்னும் கவிதை புனைந்து முதற் பரிசு பெற்றவர். அவற்றில் ஒரு கவிதையின் பகுதியை நோக்கலாம்.
"முதிய பெண்டிரினைய பெண்டிர் முறை குனிந்து தாள்களை முன் முடக்கி நன்கிருந்து முழவு சூழ்ந்தடித்தடித் திதயமொன்றுவுரிமையெம் மிலங்கை யன்னை யெய்தினாள்"
இதே போன்றே புலவர் இயற்கை நிகழ்ச்சிகளையும், சமுதாய நடைமுறைகளையும் பார்த்து பல கவிதைகளைப் பழகு தமிழில் இளம் சிறார்கள் படித்துப் படித்து இன்புறும் வகையில் பாடி யுள்ளார்.
மழைக் காலத்தில் பாடசாலைகள் அரை நேரத்துடன் அல்லது விடுமுறையாக விடுதல் வழக்காக இருந்தது. இவ்வாறாக மழை யின் காரணமாகப் பாடசாலை மூடுதல் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி யைக் கொடுப்பதாகும். இதனை உணர்ந்து போலும் பாவலர் அவர்கள்
“மழையினாற் பள்ளி விடுதலையென மகிழ்ச்சி கொள்ளுகிறாய் வருட முழுதுமிது போலிருக்க மனமுங் கொள்ளுகிறாய்? என்று கூறுகின்றார். இருந்தும் குழந்தைகள் மகிழ்ச்சி கொண்டா லும் அக்காலத்தை உரிய முறையில் பயன்படுத்தாமல் வீணாக்கு வதைக் கண்டு மனம் பொறுக்காமலும், அதுவே மனதை ஒருமைப்படுத்தி அமைதியாகப் படிக்கச் சிறந்த காலம் என்பதை யும் அறிவுறுத்து வதற்காக,
“செழுமை மேவும் அறிவினோடு திகழவேண்டுமென்றே, சிரத்தையோடு படிக்க வீது சிறந்த காலமன்றே" என்று கூறிவிடுகின்றார்.
23

Page 14
தனக்கு முற்பட்ட பல இலக்கியங்களைப் படித்து முது தமிழர் அவ் இலக்கியங்களைப் படைத்த புலவர்களை போற்றாது விடவில்லை. அவர்களுள் பாரதியைப் பின்வருமாறு பாடி யுள்ளார்.
“பாரதியென்றொரு தாமரை பூத்தது பாரதநாடெனும் வாவியிலே - அதன் சீரிதழாயிரஞ் செங்கதிர் போலொளி செய்து விளங்குது பூமியிலே” இவ்வாறு பல சிறப்புறு கவிதைகளைப் படைத்த முது தமிழ்ப் புலவர் நல்லதம்பிப் பாவலர் நீண்டகாலம் வாழாமை தமிழ்
மக்களுக்கு பேரிழப்பாகும்.
வீரகேசரி
08.05. 1966
24

நாட்டுக்கூத்து மரபுச் சர்ச்சை:
வட்டக்களரியில் நின்றாடினால்.
நிTட்டு மக்களின் கலைப் பொக்கிஷ மாகிய நாட்டுக்கூத்து ஆரம்பத்தில் படித்த மக்களால் போற்றப்பட்டுப் பின்னர் அவர்கள் போற்றாது விட, படியாத பாமர மக்களால் போற்றப் பட்டு வந்தது. இக்காலத்தில் அது தன் வடிவுடன் திகழ்ந்து வந்தாலும் முழு வடிவுடன் போற்றப்பட்டு வந்தது எனக் கூற முடியாது. இதனால் அது தன் சிறப்பையே இழந்து மக்களிடம் மதிப்பற்றுக் கிடந்தது.
இவ்வாறான பண்டைச் செல்வத்திற்கு புது மெருகூட்டி புதுச் சிறப்பளித்துக்கொண்டிருக்கும் பெருமை மீண்டும் படித்தவர் களையே சாரும். இன்னும் பத்திரிகைகளில் விவாதித்து எழுதக் கூடிய அளவிற்கு நாட்டுக்கூத்தை உயிர் ஊட்டி வளர்த்துவரும் பெருமை இவர்களையே சாரும். ஏன், இத்தகைய புதுமுறையைப் புகுத்தி நாட்டுக்கூத்தைப் புதுவடிவில் மேடையேற்றியிராவிடின் திரு.க. லிங்கன், திரு. வடிவேலு போன்றவர்கள் கூட நாட்டுக் கூத்து பற்றி இவ்வளவு அக்கறை காட்டி எழுதியிருப்பார்களோ என்பது சந்தேகத்திற்கிடமானது.
25

Page 15
புதிய முறையில் போற்ற வேண்டும்
ஒரு சமுதாயம் தனது பழைய பண்பாட்டை உடையதாக இருந்தாலும் அச்சமுதாயம் தான் வளர்ந்து வரும் நிலைக்கேற்பத் தனது பழைய பண்பாட்டைப் புதிய முறையில் போற்றிவர வேண்டும். இவ்வாறு புதியன புகுத்திப் போற்றாதுவிடின் நாம் நமது பண்பாட்டைத் தற்கால நிலைக்கேற்ப அனுபவிக்கின் றோமா என்னும் கேள்விக்கு விடையளிக்க முடியுமா? எனவே பழைய நாட்டுக்கூத்தில் சமுதாய வளர்ச்சிக்கேற்ப அதில் உள்ள பழைய முறைகளை மாற்றிச் சில புதிய முறைகளைப் புகுத்திய வுடன் அது நாட்டுக்கூத்து அல்லாமல் போய்விடாது. இன்னும் மக்களுக்காக நாட்டுக் கூத்தே ஒழிய நாட்டுக்கூத்துக்காக மக்கள் அல்ல என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். இதனா லேயே நாட்டுக் கூத்து ஆடிவந்த முறைகளில் தாம் விரும்பாத சில ஒழுக்கம் இருந்தமையால் அதைப் போற்றாது விட்டனர். ஆனால் இன்று தம் மனப்பாங்குக்கேற்ப நாட்டுக்கூத்து அமைந்து அரங்கேறுவதனால் தான் அதைப் போற்றி ரசித்து வருகின்றனர்.
கால வளர்ச்சியை கவனிக்கவேண்டும்
சென்ற வார வீரகேசரியில் 'நாட்டுக்கூத்துப் பற்றி திரு. வடிவேலு" எழுதிய கட்டுரையில், அதற்கு முன்பு இவ்விடயம் பற்றி எழுதிய திரு. சித்திரபுத்திரன் அவர்கள் நாடகத்தின் அமைப்பையும், தன்மையையும் அறியாத காரணத்தினால் தான். நாட்டுக்கூத்து ஒரு முக அரங்கில் ஆடுவதை வரவேற்றும், நடிகர்கள் சபையோர்க்குப் பின் பக்கத்தைக் காட்டி ஆடுவது தவறென்றும் எழுதியிருந்தார் எனக் கருதி, நாடகத்தின் அமைப்பையும், தன்மையையும் விரிவாக எழுதியிருந்தார். ஆனால், அவ்வமைப்பையும், தன்மையையும் அறிந்த அவர் அதன் தன்மை, அமைப்புக்கேற்ப ஆடியும் பார்த்திருப்பாராகில் நாட்டுக்கூத்தில் புது முறை புகுத்தப்படுவதை வரவேற்றிருப் பாரென நம்புகின்றோம். மாலை 7 மணிக்கு ஆரம்பித்தால் காலை ஏழு மணிக்கு முடியும் நாட்டுக்கூத்தை, அதாவது 12 மணித்தி யாலங்கள் ஆடப்பட்டு வந்த நாட்டுக் கூத்தை 3 மணித்தியாலங்கள் கொண்டதாகச் சுருக்க வேண்டிய நிர்ப்பந்தம் காலத்தின்
26

வளர்ச்சியினாலும், சமுதாய மாறுதலினாலும் ஏற்பட்டது. இன்று இக்குறுகிய நேரத்தில் மேடை ஏற்றப்படும் நாட்டுக்கூத்தே மக்கள்; மத்தியில் மதிப்பை ஈட்டியுள்ளது. உண்மையில் 'தர்ம புத்திர நாடகம் ‘கர்ணன் நாடகம் (கர்ணன் போர்) போன்ற நாடகங்கள் முழு இரவு நடித்ததிலும் குறிப்பிட்ட நேரத்தில் நடித்த பொழுதே சிறப்புற்று உண்மையான நாட்டுக்கூத்தைப் பிரதி பலித்தன எனலாம். இந்நாடகங்களில் தர்மன், வீமன், அர்ச்சுனன், துரியோதனன், கர்ணன், சகுனி போன்றோர் முக்கிய பாத்திரங் களாக விளங்குவர். உண்மையில் இப்பாத்திரங்களை ஏற்று நடிப்போர் தொடர்ந்து 12 மணித்தியாலம் தம் பாத்திர அமைதிக்குப் பங்கம் விளைக்காமல் நாட்டுக்கூத்துக்கு வழுவேற் படுத்தாமல் நடிக்க முடியுமா? அவ்வாறு நடித்தாலும் தாளக் கட்டுக்களை அவதானித்து, பாடல்களைத் தொண்டை அடைக் காமல் தொடர்ந்து பாடமுடியுமா, அவ்வாறு தான் ஐயோ! நாட்டுக் கூத்து எம் பழைய பொக்கிஷம், அதில் மாற்றம் வேண்டாமென்ற நிர்ப்பந்தத்திற்கிணங்க முழு இரவு ஆடினாலும் நடிகர்களிடம் ஆரம்பத்தில் நடித்தபோது இருந்த பாவனையையும், தாளக் கட்டுப்படி ஆடிப் பாடியதையும் முடிவில் காண முடியுமா? இதற்கு மாறாக நடிகர்கள் மனதில் எப்ப இந்தச் சனியன் முடியும் எமக்கு ஆறுதல் ஏற்பட என்ற உணர்வே காணப்படும். ஏன் 'அண்ணன் ஏதடா? தம்பி ஏதடா இவ் அவசரமான உலகத்திலே’ என்று தம் நேரத்தை பொன்னாகக் கருதும் இரசிகர்களால் கூட நாடகத்தை பொறுமையுடன் இருந்து இரசிக்கமுடியுமா? இதனால் தான் நாட்டுக்கூத்தை இரசிகர்களைத் திருப்திப்படுத்தவும் நாட்டுக் கூத்தை உரியதாள வகையுடன் பாத்திர குணச்சிறப்புடன் திகழச் செய்யவும் வேண்டும்ாயின் அந்த சுருக்கு 4 அல்லது 3 மணித்தியாலங்களாக நடிக்க வேண்டும். அப்பொழுது தான் நாட்டுக் கூத்து இரவு முழுவதும் வட்டக்களரியில் கேலிக் கூத்தாக்கப்படுவதற்குப் பதில் நாடக விழாக்களில் நவீன நாடகங் களுடன் போட்டியிட்டு தன் சிறப்பைக் காட்டி நிற்க முடியும்.
பழைய காலத்து மக்களின் உடல் நிலைக்கேற்ப பழைய நாட்டுக்கூத்து உகந்ததாய் காணப்பட்டது. அக்காலத்தில் தற்போது மூவர் பிடித்து தூக்கி தலையில் வைக்க முடியாத மரத்தால் பல
27

Page 16
வேலைப்பாடுகளுடன் செய்த முடியைத் தூக்கிவைத்து ஆடினர். இத்துடன் பெரும் பாரம் பொருந்திய வில், வாள், தெண்டு முதலியனவற்றையும் இவற்றுடன்தூக்கி ஆடினர். இது மட்டுமா அவர்கள் ஒரு மைல் தூரத்திற்கு கத்திப் பாடக் கூடியவர்களாயும் இருந்தார்கள். ஆனால் தற்காலத்தவர்களால் இவ்வாறு முடியுமா? இதனாலேயே பழைய நாட்டுக் கூத்தை பேணும்போது முன்புள்ள வர்கள் அணிந்த மரமுடிக்குப் பதிலாக கடதாசி மட்டையாலான முடியும், பாரப்பட்ட மரவில், வாள், தெண்டுக்குப் பதிலாக பாரம் குறைந்த மென்மையான பொருட்களாலான வில், வாள், தெண்டு என்பன பாவித்து வருகின்றனர். இங்கு நாட்டுக்கூத்தின் பழைய அம்சங்கள் மாற்றப்படவில்லை. ஆனால் அவை நம் புதிய நிலைக்
கேற்ப மாறிக் கொண்டதைக் காண முடிகின்றது.
அடுத்து நாட்டுக்கூத்து வட்டக்களரியில் அல்லாமல் ஒரு முக அரங்கில் ஆடி வருதலும் உகந்ததல்ல என்ற கருத்தும் வெளியாகி யுள்ளது. நாட்டுக்கூத்து உண்மையில் பழைய காலத்தில் வட்டக் களரியிலேயே ஆடப்பட்டு வந்தது. வட்டக் களரி ஆட்டம் என்னும் பொழுது சபைக்கு நடிகர்கள் வரவு வந்ததும் தம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் வட்டமாக நின்று ஒருவருக்குப் பக்கத்தில் ஒருவராக நின்று ஆடி வருவர். அப்பொழுது நடிகர்கள் தத்தம் பக்கத்தில் உள்ளவர்களின் கால்களில் உளக்க வேண்டி ஏற்படும். இதனால் உளக்கு வாங்குபவர்தாளக் கட்டுக்கேற்ப கால் மிதித்து ஆடமுடியாமல் திண்டாட வேண்டி ஏற்படும். இது மட்டு மல்லாமல் வட்டமாக நடிகர்கள் ஆடிவரும் பொழுது ஒரு நடிகருக்கு முன்னுக்கு இருப்பவர்களில் ஒரு பகுதியினர் மீது (பெண்கள் மீது) கவர்ச்சி ஏற்பட்டு விட்டால் அந்தப் பக்கத்திற்கு மிக விரைவாக மீண்டும் மீண்டும் வரவேண்டுமென்று ஆசை ஏற்பட்டு விட்டால் தம் தாளம் ஆட்டங்களையும் மறந்து அந்த இடத்திற்கு விரைவாக வந்து அவற்றை விட்டு அகலாமலும் இருக்கலாம். உண்மையில் நடிகர்கள் இதனால் வட்டக்களரியில் ஒப்பு விளையாடுவது போலவே ஒடி ஆடித்திரிய வேண்டிய நிலை ஏற்படும் ஆனால் ஒரே முகமேடையில் நாட்டுக்கூத்து அமையுமாயின் ஒவ்வொரு நடிகனும் எல்லோரும் தம்மையே
28

உற்று நோக்குவர் என்ற நினைப்பில் தன் பாத்திர உணர்வுக்கு ஏற்ப முகபாவனையுடன் சிறப்புற நடிக்க முடியும். இது மட்டு மல்லாமல் ஒரே முகமேடையில் நின்று நேராக நடிக்கும் பொழுது நடிகர்கள் எல்லாரும் ஒரே நேரத்தில் ஒரேகாலைத் தாளத்திற்கேற்ப மிதிக்கின்றார்களா? ஒரே நேரத்தில் ஒரே பக்கமாகத் திரும்பு கின்றார்களா? ஒரே நேரத்தில் தாளத்திற்கேற்ப தீர்மானம் தீர்க்கின்
றார்களா எனப் பார்க்க முடியும்.
அடுத்து நாட்டுக்கூத்தில் பின் பக்கம் காட்டாது ஆடப்படு வதற்கு இவ்வொரேமுக மேடையில் தான் முடியும். இது நாட்டுக்கூத்துக்கு வேண்டியது என்றும் கூறலாம். ஏனெனில் இரு வீரர்கள் உதாரணமாக அருச்சுனனும், கர்ணனும் போரிடுகையில் அருச்சுனன், கர்ணனுக்கு முதுகு காட்டுதல் அல்லது கன்னன் அருச்சுனனுக்கு முதுகு காட்டுதல் வீரமாகுமா? இது வீர பரம்பரைக்கே இழுக்கன்றோ, ஆனால் ஒரே முகமேடையில் ஆயின் இருவரும் ஒருவர்க்கொருவர் முதுகு காட்டாமல் நேராக நின்று போராட முடியுமன்றோ!
அடுத்து ஆட்டத்துக்கும். பாட்டுக்கும் தான் முதலிடம் கொடுத்து நடிக்க வேண்டுமே தவிர முகபாவங்களுக்கு முக்கியத் துவம் கொடுக்க முடியாது என்றும் கூறப்பட்டது. அவ்வாறாயின் உதாரணமாக வீமனுக்கும். துச்சாதனனுக்கும் நடக்கும் போரில் வீமன் வீரத்துக்குரிய பாட்டைப் பாடிக் கொண்டும் அதற்குரிய தாளத்தின்படி ஆடிக் கொண்டும் முகத்தால் கோபக்கனல் பறப்பதற்குப்பதிலாக கண்ணிர் விட்டு அழுது கொண்டு நடித்தால் உண்மையான நாட்டுக்கூத்தாகுமா? ஆகவே ஆட்டத்துக்கும் பாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் முக பாவத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து நடித்தால் தான் நாட்டுக் கூத்து நாட்டுக்கூத்தாகும்.
நாட்டுக் கூத்தில் பெண் பாத்திரத்திற்கு ஆண் நடிக்கும் நிலை மாறி பெண்களே ஏற்று நடிக்கும் காலம் தற்காலம். இதனாலும் நாட்டுக் கூத்தில் இவர்களுக்கு கூத்தாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் தற்போது நாட்டுக்கூத்தில் ஏற்பட்ட இம்மாற்றம் சமுதாய மாற்றத்தை அனுசரித்து எழுந்த மாற்றம். இதனால்
29

Page 17
நாட்டுக்கூத்தின் பெண் பாத்திரம் தன் பாத்திர குணச் சிறப்புக் கேற்ப நடிக்கப்படும் நிலையைப் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு முன்போ பெண் பாத்திரம் தாங்கிய ஆண் மற்றைய ஆண் நடிகர் களைப் போல தன் பெண்மையை விட்டு துள்ளி நடித்ததைக் காண முடிந்தது. ஆனால் தற்போது நவீன நாட்டுக் கூத்து என்று சொல்லப்படும் நாட்டுக்கூத்தில் பெண் பாத்திரத்தை பெண்களே ஏற்று நடிப்பதால் நாட்டுக்கூத்தில் பெண் பாத்திரங்கள் ஆண் பாத்திரங்களாகாமல் காப்பாற்றப்பட்டுள்ளன.
தற்பொழுது நாட்டுக்கூத்தில் மத்தளம் மெதுவாக அடிக்கப் படுவதையும் காணலாம். இத்தகைய மாற்றம் ஏன் ஏற்படுத்தப் பட்டதெனில் முன்பு இறுக்கி அடிக்கப்படும் பொழுது உண்மை யில் நடிகர்கள் பாடும் பாட்டை முறையாக கேட்டு, கதையையே உணரமுடியாத நிலையிருந்தது. ஆனால் தற்போதைய மாற்றத் தால் பாட்டின் பொருளை உரிய முறையில் விளங்குவதுடன் கதையையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.
ஆகவே சமுதாய, சூழ்நிலை மாற்றத்திற்கேற்ப மாறாமல், தற்கால மக்களால் வரவேற்கப்படாது இருந்த நாட்டுக்கூத்தில் சிறு மாற்றங்களைப் புகுத்தி பழைய பண்புடன் திகழும் 'கிராம, நகர மக்கள் என்ற இருபாலாரது புகழையும் ஈட்டி வைத்திருக்கும் பழைய நாட்டுக்கூத்து தன் எதிர்காலத்திற்கேற்ப மாற்றம் பெற்று பழைய நாட்டுக்கூத்தாக திகழும் என்பது எம் அழியா நம்பிக்கை.
வீரகேசரி
30.08.1966
30

ஏனிந்த வெறுப்பு? நாட்டுக்கூத்து மரபு - சர்ச்சை
ம் மாதம் 13-9-66 ல் வெளியான வீரகேசரியில் 30-8-66 ல் நான் எழுதிய நாட்டுக்கூத்து கட்டுரை பற்றி திரு. கலிங்கன் நடத்திய ஆராய்வைக் கண் டேன். அவற்றைக் கண்டதும் அவரது ஆராய்வுக்கு அடிப்படைக் காரணத்தை அவரது கட்டுரைகள் மூலமாகவே அறிந்து கொண்டேன்.
1. அவர் கட்டிக்காத்து வரும் நாட்டுக்கூத்து புதிய முறை நாட்டுக் கூத்துடன் ஒரே மேடையில் போட்டியிட்டு பரிசு கிடைக்
காமல் விட்டமை.
2. பல்கலைக்கழகத்தின் மீதும் பல்கலைக்கழகத்தார் மீதும்
அவருக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு வித வெறுப்பு.
முதலாம் காரணத்திற்கு அவர் முதல் எழுதிய கட்டுரையில் (317-66 எழுதியது) 'பிரதேசக்கலைகளை வளர்க்க நினைக்கும் எவரும் இந்தப் புண்ணிய கைங்கரியத்தைச் செய்ய முன்வர மாட்டார்கள். அப்படி மாற்றியமைக்க நினைத்தால் நகர்ப் புறங்களிலே நடைபெறும், போட்டிகளில் பரிசு பெறுவதற்கு மாத்திரம் இவை பயன்படலாமே தவிர கிராமப்புறங்களில் இவை சாத்தியமாகாது என்றும் அதே கட்டுரையின் அடியில் எதையும்
31

Page 18
மட்டந்தட்ட நினைப்பது மதியுடமையாகாது. ஒவ்வொரு தனிப் பட்ட வகையை வளர்க்க வேண்டுமென்று நினைப்பவர் அந்தத் தனிப்பட்ட வகை மாத்திரம் போட்டியை ஏற்படுத்திப் பரிசு வழங்கினால் பாராட்டக்கூடியதாக இருக்கும் என்றும் இதே போலவே எனது கட்டுரை பற்றி அவர் எழுதிய இரண்டாம் கட்டுரையிலும் (13-9-66) இது போல் தான் நவீன வசதிக்கும் இலகுத் தன்மைக்குமாகச் சிலர் நாட்டுக்கூத்தை நவீன வகைப் படுத்தலாமே தவிர அந்த நவீன வகைதான் நாட்டுக்கூத்து என்று பிறருக்கு அறிமுகஞ் செய்வதுடன் பரிசில்களும் வழங்க நினைப்பது இயல்பான நாட்டுக்கூத்தைக் கட்டிக் காத்து வரும் இயற்கைக் கலைஞர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த காரணம் பல்கலைக்கழகத்தார் மீது ஏற்பட்ட வெறுப்பு அவரது எழுத்தில் இருந்தே அவருக்கு ஏற்பட்ட வெறுப்பை புகையிரத வாகனங்களிலும், பூங்காவனங்களிலும் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் பற்றி பல விதமான பேச்சுக்கள் உலவு வதையும் மக்கள் அறியாமலில்லை என்று கூறுவதன் மூலம் அறிய முடிகின்றது. இவருக்கு அத்தகைய வெறுப்பு ஏற்பட ஏனோ காரணம் தெரியவில்லை?
நான் எனது கட்டுரையில் முதலில் தெரிவித்த கருத்தை அதாவது முடியாத பாமர மக்கள் வசப்பட்டு மதிப்பிழந்து கிடந்த நாட்டுக் கூத்து தற்போது படித்தவர்களால் போற்றப்பட்டு வருகின்றது என்பதை மறுத்து கிராமப்புறங்களில் அவை என்றும் மங்கும் நிலையை அடைந்திருக்கவில்லையென்று கூறியிருந்தார். ஆனால் இந்நாடக ஏடுகளை வைத்து அவற்றின் தரத்தை அறியாமல் பாட்டை சரிவரப் படித்து பாத்திரக் குணச்சிறப்பிற்கு ஏற்ப ஆடாமல் அவற்றை சிறப்பிழக்கச் செய்யும் நிலை இலங்கையில் நாட்டுக்கூத்து ஆடப்படும் கிராமப்புறங்கள் சிலவற்றில் காணப் பட்டது. காணப்பட்டும் வருகின்றது. இதனாலேயே அத்தகைய நாடகங்களை எல்லாம் எடுத்து சுருக்கி தயாரித்து அதை நாட்டுக் கூத்து என்றால் என்னென்று தெரியாத மக்களுக்கெல்லாம் தெரியப்படுத்தியும் நாட்டுக்கூத்து ஒரு மதிப்பற்ற கூத்து என்று
32

கருதியவர்களையெல்லாம் ஏற்கச் செய்தும், அதை மதிப்பான கூத்து என்று கருதியவர்களை யெல்லாம் மதிப்பான கூத்து என்று ஏற்கச் செய்தும், அதை மதிப்பான நிலையில் சிறப்புறச் செய்தும் வருகின்றனர் பல்கலைக்கழகத்தார். இத்தகைய நாடகங்கள் கடந்த 4 வருடங்களாகக் கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் மேடையேற்றி சிறப்புறச் செய்தமையை நான் கூறத் தேவையில்லை. வாசகர் களாகிய நீங்களே பத்திரிகை மூலம் அறிந்திருப்பீர்கள். இது மட்டுமல்லாமல் அவர் குறிப்பிட்டிருந்தார்: நாட்டுக்கூத்து கிராமப் புறங்களில் என்றும் மங்கும் நிலையடைந்திருக்கவில்லை யென்று. ஆனால் இலங்கையின் எல்லாப் பகுதிகளுக்கும் அவர் சென்று நாட்டுக்கூத்து முன்பு என்னவாறு இருந்தது தற்போது என்னவாறு அவ்விடத்தில் இருக்கின்றது என அறிந்துபார்த்தால் தெரியும். உதாரணமாக யாழ்ப்பாணம், மன்னார், சிலாபப் பகுதிகளில் அதுவும் யாழ்ப்பாணத்தில் நாட்டுக்கூத்து முற்றாகவே மங்கி அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், சில கிராமங்களில் மங்கி அழிந்து மீண்டும் படித்தவர்களால் பேணப் பட்டு வருகிறது. உதாரணமாக, வட்டக்களரிக்கு பேர்போன
வட்டுக்கோட்டையில்.
இன்னும் நான் எனது கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் பழைய பண்பாட்டை உடையதாக இருந்தாலும் அச்சமுதாயம் தான் வளர்ந்து வரும் நிலைக்கேற்ப தன் பண்பாட்டை புதிய முறையில் போற்றி வரவேண்டும் என்பதை மறுத்துரைத்த திரு. கலிங்கன் ஓரிடத்தில் மாறுதல் காலப் போக்கில் நிகழ வேண்டியது என்பது மறுக்க முடியாதது தான் என்று கூறுவதன் மூலம் நான்கூறுவதை ஏற்றுக்கொண்டு, ஆனால் அதை முற்றாக ஏற்க மனமில்லாமல் வேண்டுமென்ற மனப் பாங்குடன் கிளாரினட் இசை கலந்து நாட்டுக்கூத்தை மேல் நாட்டுக்கூத்தாக விளம்பரம் செய்வது வெறுக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், உண்மையில் தற்போது எமது பழைய இசைக் கருவிகளான முரசு, சங்கு, உடுக்கு என்பனவற்றின் இசை கலந்து நாட்டுக் கூத்தை அறிமுகம் செய்கின்றார்களேயொழிய அவர் கற்பனை செய்யுமளவிற்கு கிளாரினட் இசை கலந்து
33

Page 19
நாட்டுக்கூத்தை விளம்பரம் செய்து சந்தியில் விற்க முனைய வில்லை.
அடுத்து நான் எனது கட்டுரையில் 'தொடர்ந்து நாட்டுக்கூத்து 12 மணித்தியாலம் இடம் பெறுவதால் நடிகர்கள் பாத்திர அமைதிக்குப் பங்கம் விளைக்காது, நாட்டுக்கூத்துக்கு வடுவேற் படாது நடிக்க முடியாதென்றும், தொண்டை அடைக்காது அதாவது இசை அமைதியில் மாற்றமின்றித் தெளிவாகப் பாட முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தேன். இவற்றில் எல்லா வற்றையும் ஏற்றுக்கொண்ட அவர் தொண்டை அடைக்காமல் பாட முடியாது என்பதை மட்டும் மறுத்து தொண்டையைப் பழக்கிக் கொள்வதன் மூலம் பாட முடியும் என்கிறார். ஆனால் அவ்வாறாயின் கிராமப் புறங்களில் இளமை தொட்டு முதுமை வரை நாட்டுக் கூத்தை ஆடுபவர்கள் தம் தொண்டையைப் பழக்கிக்கொண்டு நாடகம் தொடங்கி முதல் 2, 3 மணித்தி யாலத்திற்கு இசை அமைதியுடன் பாடி விட்டுப் பின்பு கழுதை போல் கத்திப் படிக்கும் பாட்டையும் தெளிவாகப் படிக்காது நாடகத்தின் தரத்தை ஏன் குறைக்கின்றார்களோ தெரியவில்லை.
அடுத்து வட்டக்களரியில் காலில் உளக்குதல் தற்செயலாக ஏற்படும் ஒன்று என்று குறிப்பிட்டார். எனக்கும் வட்டக்களரியில் நடைபெற்ற ஒரு முறையல்ல ஐம்பது முறைக்கு மேல் மேடை யேற்றப்பட்ட நாடகங்களைப் பார்த்த அனுபவம் உண்டு. அங்கு பஞ்ச பாண்டவரும், துரியோதனாதியாரும் வருகின்றார்கள் என்றால் வந்ததும் துரியோதனாதியார் வட்டத்தின் வளைவுக் கேற்ப ஒரு பக்கத்திலும், பஞ்ச பாண்டவர்கள் இன்னொரு பக்கத்திலும் சபையினரை நோக்கி வளைந்து நிற்பர். இவ்வாறு நிற்கும் பொழுது விதுரன் இரு பகுதியினரையும் நோக்கி ஏதாவது கூறுகின்றான் என்றால் அதற்கு இரு பகுதியினரும் தாளம் போட்டு ஆடுவர். முதலில் எல்லாரும் வலக்காலைத்தூக்கி வலதுபக்கத்தில் வைத்து, பின்பும் அதே காலை வலப் பக்கமாக வைப்பர். இவ்வாறு வைத்து வரும் பொழுது இடது கால் வலப் பக்கமாக வலக் கால் இருந்த இடங்களில் வைக்கப்பட்டு வந்து இறுதியாக வலது காலுடன் கூட்டாகச் சேர்த்து வைக்கப்படும். பின்பு தாளம் தீர்ந்து அதே தாளம் அடிக்க ஆரம்பித்ததும் இடதுபக்கத்துக்கு
34

இடதுகால் வைக்கப்பட்டு வரும். இவ்வாறு ஒரே நேரத்தில் பலர் நின்று கால்களைத் தூக்கி வைக்கும் பொழுது பல முறை பக்கங் களில் நிற்பவர்களின் கால்களுக்கு மேல்கால் உளக்கித் தாளத்தை முறிப்பதைப் பல முறை காண முடியும்.
அடுத்துக் கூறப்பட்டிருந்தது “பெண்ணைப் பார்ப்பதும் பேசி முடிப்பதும் வீட்டில் நடக்கவேண்டிய விமரிசையான சம்பவங்கள்’ என்று. அவ்வாறாயின் ஏன் முதல் எழுதிய கட்டுரை யில் (31-7-66-ல்) விவசாயத் தொழிலில் ஒய்வு நேரங் கண்டு உடற் பயிற்சிக்கும் பொருந்தக்கூடிய விதத்திலே ஆட்டங்கள் அமைந்த நாட்டுக்கூத்து முறையைவிட்டு நவீன முறையைக் கையாள்வது சரியென்று கொள்ளமாட்டார்கள். நாட்டுக் கூத்தில் நன்றாக ஆடும் ஆடவனையே காதலிக்கும் அளவுக்கு கிராமப்புறப் பெண்கள் இருக்கிறார்களென்றால் இந்த மாற்றம் அவர்களை எவ்வளவு தூரம் பாதிக்குமென்பதை நாம் உணரலாம்' என்று பெண், ஆணைப் பார்ப்பதுவும் பேசி முடிப்பதையும் வீட்டில் நடக்க வேண்டிய விமரிசையான சம்பவமாகக் கொள்ளாது குறிப்பிட்டு, புதிய மாற்றத்தால் பெண்கள் காதல் கொள்ள முடியாது. தவிக்கின்றார்களே என்று அவர்கள் மீது ஏனோ பச்சாத்தாபப் படுகின்றார் திரு. கலிங்கன் தெரியவில்லை. அவர் விளக்கப்படி முன்பே கிராமங்களில் அமைந்த வட்டக் களரி முறையில் நடிகர்களைக் கவரப் பெண்கள் இருக்கிறார்கள். அதற்குச் சந்தர்ப்பம் உண்டு. ஆதலால் நடிகனும் தன்னைக் கவருபவர் களின் பக்கம் விரைவாக ஓடிவந்து நின்று ஆடலாம் என்பதை மறை முகமாக ஏற்றுக்கொண்டு அத்தகைய நிலைக்கு இரு புதிய முறையில் அமையும் நாட்டுக்கூத்து இடமளிக்காத காரணத்தி னால் அவர்களை, அதாவது கிராமப்புறப் பெண்களை எவ்வளவு தூரம் பாதிக்கும் எனப் பெண்கள் பற்றி எழுதிவிட்டு, அவ் வட்டக் களரி அத்தகைய செயலுக்கு இடமளிக்கலாம் என்று நான் கூறியதை ஏற்க மறுப்பதன் அர்த்தம் புரியவில்லை.
அடுத்து வட்டக்களரியில் நடிகர்கள் தாளத்திற்குச் சரியாகத் தாளம் தீர்க்கிறார்களா என்பதை எல்லாரும் ஒரே நேரத்தில் பார்க்க
முடியாது என்று கூறியது பற்றி அர்த்தம் கேட்டிருந்தார் திரு. கலிங்கன். ஆனால் அவருக்குத் தெரியலாம் ஒரு நிகழ்ச்சியை
35

Page 20
ஒருவர் பார்ப்பதிலும், பலபேரும் ஒரே நேரத்தில் பார்க்கும் பொழுது முறையாக அவதானிக்கலாம் என்பதை, வட்டக் களரியில் ஒரு சில தாளங்களுக்கு நடிகர்கள் ஆடும் பொழுது ஒரு பகுதியினர் மட்டும்தான் காணக்கூடியதாக இருக்கின்றது. அத்தகைய ஆட்டமுறையையும் அதற்கேற்ற முக பாவங்களையும் மற்றப் பகுதியினர் பார்க்க முடியாது போகின்றது. ஆனால் இத்தகைய நிலைக்கு ஒரே முக மேடை இடமளிக்காது, எல்லாரை யும் ஒரே நேரத்தில் ஆட்டத்தையும் அதற்கேற்ற முகபாவங் களையும் பார்ப்பதற்கு இடமளிக்கும். இதை திரு. சித்திர புத்திரனும் தமது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்துப் போர் நிகழும் கட்டத்தில் 'ஒருவரைத் தொடர்ந்து ஒருவர் போகும் நிலை ஏற்படும் என்றும் புறமுதுகு காட்டுவது வீரத்திற்கு இழுக்கென்றும் நான் குறிப்பிட்டதாகக் கூறியிருந்தார். ஆனால் நான் இரு வீரர்கள் உதாரணமாக அருச்சுனனும் கர்ணனும் போரிடுகையில் அருச்சுனன் கர்ணனுக்கு முதுகு காட்டுதல் அல்லது கர்ணன் அருச்சுனனுக்கு முது காட்டுதல் வீரமாகுமா? இது வீரப் பரம்பரைக்கே இழுக்கன்றோ' என்று புறமுதுகு காட்டுதல் வீரத்திற்கு இழுக்கென்று மட்டுமே குறிப்பிட்டிருந்தேன். ஆனால் திரு. கலிங்கன் நான் குறிப்பிடாத போர் நிகழும் கட்டத்தில் ஒருவரைத் தொடர்ந்தும் ஒருவர் போகும் நிலை ஏற்படும் என்பதைத் தானாக எடுத்துக்கூறியுள்ளனர்.
ஆகவே நாட்டுக்கூத்து சமுதாய, சூழ்நிலை மாறுதலுக்கு ஏற்ப புதுப்புது அம்சங்களைப் பெற்று இயற்கையாகக் கட்டிக் காத்து வரும் கலைஞர்களிடம் மட்டும் அல்லாமல் சிறப்புறக் கட்டிக் காத்துவரும், கட்டிக்காக்க முனையும் அனைவரினது சொத்தா கவும் திகழ வேண்டும் அப்பொழுதுதான் அண்மையில் மன்னார் மாநாட்டில் சிறப்பிடத்தைப் பெற்றுப் பெரும் புகழ் ஈட்டியது போலப் பல இடங்களில் தன் புகழை ஈட்டிச் சிறப்புடன் விளங்க (Մ)ւգպւb. −
வீரகேசரி
29.09. 1966
R K

சங்கிலியன் மருத்துவ பரம்பரையில் நிலைத்து நிற்கும் ராஜவைத்தியம்
ட்ெடுக்கோட்டை சிவன் கோவிலடி யைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வைத்திய சித்த மரபைச் சார்ந்தவர் இன்றும் வாழ்ந்து வருகின்றார். 1913ஆம் ஆண்டு பங்குனி மாதம் 17 ஆம் திகதி பிறந்த இவரது தந்தை வைத்தியர் அப்பா கந்தையா இவரது அருமைச் சகோதரர். வைத்திய கலாநிதி இராசவைத்தியர் அ.க. குமாரசாமி.
டாக்டர் அ.க. காசிப்பிள்ளை அவர்களை அவர்களது இல்லத்தில் கடந்த ஆடி மாதம் நேர்முகம் கண்டோம். 25 அறைகளைக் கொண்ட அவரது இல்லம் பெரிய மாளிகையாகக் காட்சி தருகிறது. தனது வீட்டு தெற்கு விறாந்தையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கிறார். முகத்திலேயே சித்தத்தின் சித்தியும் தியானத்தின் ஒளியும் வீச நெற்றியின் நடுப்பிங்கைகலையில் அரைத்து குழம்பாக்கிய சந்தனப் பொட்டு அத்துடன் கைகளிலும் மார்பிலும் சந்தனக்கீறு குறியாகக் காட்சி அளிக்கின்றது. தலை நரைத்திருந்தாலும் மயிர் உதிராது அலை அலை போல் சீவிய கேசம் அழகை ஊட்டுகின்றது. உடல் ரீதியாக உளரீதியாக வாழ்க்கைக்கு உரம் அமைத்துக் கொண்ட வைத்தியக் கலாநிதியின்
குரல் இளமையில் ஒலித்த மாதிரி ஒலிக்கிறது.
37

Page 21
அவர்களிடம் வைத்திய சித்த மகத்துவம் அவர்களது பாரம்பரிய வைத்திய முறைகள் பற்றி கேட்டோம். தங்களது பரம்பரை பற்றி கூறும் பொழுது தாங்கள் சங்கிலியனது அடியொற்றிகள் என்றும் ராஜேந்திர முதலி, தெய்வேந்திர முதலி, விஸ்வேந்திர முதலி ஆகிய முதலி மூவர்களில் தாங்கள் தெய்வேந்திர முதலியின் வாரிசுகள் என்றும் பதிலிறுத்தார். தெய்வேந்திர முதலியின் மூத்தப்பா - காளியப்பா கணபதி அப்பா - அப்பா - கந்தையா -
காசிப்பிள்ளை என விரித்து அடுக்கினார்.
این جبر مبنان
s 爵
இராசவைத்தியர் வைத்திய கலாநிதி 3 tilă கநதையா அ.க. குமாரசாமி அ.க.காசிப்பிள்ளை
இவரின் பேரனார் சித்த வைத்திய மேதை க. அப்பா அவர்கள் 105 அகவை பூதலத்தில் வாழ்ந்த புனிதனார். அவரது மகனார் அப்பா கந்தையா 87 வயது வரை வாழ்ந்துள்ளார். தற்பொழுது வைத்திய கலாநிதி அவர்கள் 84 வயதில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார். தங்களது சித்த வைத்தியத்தின் பாரம்பரியமும் மகிமையும் தான் தாங்கள் நீண்ட காலம் வாழும் இரகசியம் என்றார். குரல் நடுக்க மேதும் இன்றி கணிரென பதிலிறுத்தார்.
தங்களது நல்லூர் சங்கிலி இராசதானி பற்றிக்கூறும் பொழுது சட்டநாதர் கோவிலைச் சூழ்ந்த 1000 ம் பரப்பு தெய்வேந்திர முதலிக்கு உரியதென்றும் இரண்டு மூன்று சகாப்தங்களுக்கு முன்பு வழக்கில் உரிமை நிலை நிறுத்தப்பட்டது எனக்கூறினார். நாங்கள் தெய்வேந்திர முதலி சித்த வைத்திய ஏடு 132 தற்போது உள்ளன என்றும் அதனை பொன்னேபோல பாதுகாத்து வருவ தாகவும் கூறினார். சித்த மருத்துவத்தின் சிறப்பை அந்த ஏடுகளே பிரதிபலிக்கின்றன என்றார்.
38
 

சித்த மருத்துவத்தின் இரகசியமும் சிறப்பும் பற்றி கேட்ட பொழுது அது நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பொழுது எந்தவித பக்க விளைவும் ஏற்படுத்தாத ஒன்று என பதிலளித்தார். குறிப்பிட்ட காலத்தில் 15 நாள்களோ மூன்று மாதங்களோ என வைத்தியம் குறிப்பிட்டு அறவே நோய் குணப்படுத்தலாம் என்றார்.
சித்த மருத்துவத் தோற்றம் பற்றிக் கேட்டபொழுது ஐம் பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. பொறி ஐந்தாகிய காது, மூக்கு, கண், வாய், உடலுடன், புலன் ஐந்தாகிய சப்தம் ஸ்கந்தம், ருபம், ரசம், பரிசம், கரணம் நான்காகிய மனம், புத்தி, சித்தி, அகங்காரம் ஆகிய வற்றுடன் தொடர்புடையதென்றார்.
நோய்களை இவற்றுடன் தொடர்புபடுத்திய வைத்தியக் கலாநிதி வாதம் - காற்றுடனும், பித்தம் சூட்டுடனும், சிலேட்டுமம் நீருடனும், சூரியன் வாத நாடி என்றும் சந்திரனை மந்த நாடியுடனும் தொடர்பு படுத்தினார்.
சித்த மருந்து, மூலிகை பற்றிக் கூறுகையில் மூலிகையைக் கண்டு பிடித்தவர்கள் 18 சித்தர்கள் என்றும், வைத்திய முறை பற்றி குறிப்பிடுகையில் அகத்தியர்கள் நான்கு பேர் மகா நிபுணர்களாய் வாழ்ந்து விளக்கமளித்துள்ளார்கள் என்றார். சித்த வைத்தியத் திற்கும் உளத்திற்கும் தொடர்புண்டா என்று கேட்ட பொழுது சித்தத்துள் தித்திக்கும் தேன் உளம் என்று உளத்தை தொடர்பு படுத்தி யோகமும் சித்தமும் பற்றி விளக்கம் அளித்து அவகாசம் கைதரவில்லை பிறப்பிலிருந்தே சைவ உணவு. 35 வயதிலிருந்து யோகாசனப் பயிற்சியை ஆரம்பித்தவர் தற்பொழுது இறைவனை நினைத்து செய்யும் தியானத்திலேயே முழுப்பொழுதையும் கழிக்கின்றார்.
மனிதனுக்கு நோய் உண்டாவதன் அடிப்படைக் காரணம் காற்று, நெருப்பு, தண்ணிர் என்று வலியுறுத்தியவர் சித்த வைத்தியக் குழிகைக்களில் சரவராஜன் குழிகை எல்லா நோயை யும் தீர்க்க வல்லது என்றார். இந்தியாவில் அதனை சர்ப்பராஜக்
39

Page 22
குழிசை என்கின்றனர். அது பிழையானதென்று சிரித்தார். தைலத்தில் பார்வதியார் தைலம் குறிப்பிடக்கூடியதாம்.
தங்கச் செந்தூரம் பற்றிக் கூறும் பொழுது அதனை ஒருவர் சாப்பிட்டு வந்தால் 40 ஆண்டுகள் நோய் நொடி இன்றி வாழலாம் என்றார். மடக்குத் திராவகம் தங்கச் செந்தூரம் என்றார். அதனை சாப்பிடும் பொழுது முதலில் 10 இறாத்தல் நிறை குறைத்து பின்பு 20 இறாத்தல் நிறையைக் கூட்டுமாம். அது நிலையாக இருந்து அதாவது உடலில் 10 இறாத்தல் கூடி உடம்பை இறுக்கும் என்றார்.
மனநோய் (பைத்தியம்) பற்றிக் கேட்டோம். இந்நோயைக் குணப்படுத்தியதால்தான் தங்கள் பரம்பரையே பேர் பெற்ற தென்றார் இவர்களுக்கு கலிங்கம் தயாரிக்கும் எண்ணெயால் குணப்படுத்த முடியும். குறிப்பிட்ட காலத்தில் நோயை அறவே இல்லாது குணப்படுத்தி எங்கள் பரம்பரை வெற்றி கண்டுள்ளது.
இவர்களது பரம்பரை வீடுகளில் சுமார் 1/2 மைலுக்கு மருந்து மணம் வீசும். இவர்கள் மருந்து தயாரிக்கும் முறை பரம்பரை பரம்பரையாக பழகி வந்த முறையாகும் கற்றுத் தேறவில்லை. 'அப்பா, பாட்டனார், அண்ணனார் நாங்கள் நேரடியாக பார்த்துப் பழகிக் கொண்டோம். ஏட்டில் கூறியவற்றுடன் நாம் அனுபவம் கொண்டு பரீட்சித்துப் பார்ப்பதுண்டு. ஒரு முறை மருந்து தயாரிக்கும் பொழுது உரலில் இடிப்பித்தோம். இடிக்க இடிக்க கட்டியாக இறுகி வந்ததே ஒழிய பொடியாகவில்லை. அலுத்துப் போய் நீரை ஊற்றிச் சென்றோம். பல மணி நேரம் கழித்து வந்து பார்த்தபொழுது அது சரியாக பூத்து நீத்து இருந்தது' என்றார்.
மூன்று இலைகளைக் குறிப்பிட்டு கூறினார். துளசியில் ஆனைத் துளசியும், மருதோன்றி இலையும் திருநீற்றுப் பச்சையும் முக்கிய மானவை என்கிறார். சித்த மருந்தில் கரணி மருந்து கைகண்ட மருந்தென்றார்.
தங்க செந்தூரத்திற்கு ஆயுளைக் கூட்டும் சக்தி உண்டு. அத்துடன் ஜீவநாராயண செந்தூரம் கானமேக நாராயண செந்தூரம் பேர் பெற்றவை என்கிறார்.
40

சிறுநீரகத்தில் கல்லுண்டாதல் பற்றிக், கேட்டோம். "இது நீரினால் உண்டாகும் நோய். எமது மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சை இல்லை. இக்கல்லை நீக்க கைகண்ட மருந்துண்டு. நீர்மூழ்கி வேரை இடித்து அவித்து எமது மருந்தைச் சேர்த்து தண்ணிரைக் குடித்தால் கல்லுக் கரைந்து போகும். இதற்கு நாங்கள் நண்டுக்கல் பஸ்பம் தயாரித்துக் கொடுப்பதுண்டு. முத்துச்சிப்பி பஸ்பமும் வேறு நோய்களுக்கு தயாரிப்பதுண்டு’ என்றார்.
அவரது வாழ்க்கை பற்றிக் கேட்டோம். தாம் திருமணம் முடிப்பதில்லையென்று தனது வாழ்க்கையை ஆன்மீகத்துடனும் யோகாசனத்துடனும் இணைப்படுத்தி இருந்ததாகவும் தனது தமயனார்க்கு குழந்தை இல்லாததனாலும் பரம்பரையாக சித்த மருத்துவத்தை கையளிக்க சந்ததி அவசியம் என்று ஊரவர்கள், உறவினர்கள் வேண்டியதன் பேரில் 50 வயதில் திருமணம் முடித்ததாகவும் பிள்ளைகளில் ஐவர் பெண்கள் என்றும் ஒரே ஒருவரே ஆண் என்றும் அவர் இராச வைத்திய விடுதியில் தனியாக வைத்தியம் செய்து வருவதாகவும் தான் தனது இல்லத்திலேயே தொடர்ந்து வைத்தியம் செய்து வருகின்றதாகவும் கூறினார்.
தாங்கள் பரம்பரை பரம்பரையாக செய்து அதனால்தான் மகனிடம் அதாவது 30 வயதான சுமந்திரனிடமே முழுவதும் ஒப்படைத்துள்ளேன் என்றும் அவரை அழைத்து அறிமுக மாக்கினார்.
சன்னிரோகம் (கோமா) பற்றிக் கேட்டபொழுது அவர்
கூறியதாவது:
'பின்னே தலை நடுக்கம் அதில் மீறிய காச்சல் விழி மருட்டல் சொன்னோம் மொழி தடுமாறலும் வன்முற்றுப் பார்த்து மூடு பிடவை பாய் கீறுதலும் மருவுதலும் சாந்தி மாருமாம் ஏந்திழையே’
என்று பாடிக்காட்டினார்.
தனது ஊரவர்கள், சமூகத்திற்கு பணம் இன்றி சேவை
செய்ததாகவும் அரசாங்கம் 25 சத முத்திரை ஒட்டி வைத்தியம்
செய்த காலத்திலும் தாம் இலவசமாக வைத்தியம் செய்ததாகக்
குறிப்பிட்டார்.
4.

Page 23
நோயை அறியும் முறையில் முன்பு நாடி பிடித்து நோய் அறியும் முறை இருந்தது என்றும் வாதம், பித்தம், சிலெட்டுமம் ஆகிய நோயை அறிய மூன்று வெவ்வேறு நரம்புகள் உண்டு என்றும் ஆனால் தாங்கள் ஒரே நரம்பில் 3 நோயையும் கண்டுபிடிக்கும் ஆற்றல் படைத்தவர்கள் என்றும் இதனை பரம்பரை மூலமே பெறமுடிந்த தென்றும் தனக்கு வயது போன படியால் நாடி பிடிக்காது ஆட்களிடம் நோயை கேட்டறிந்தே வைத்தியம்
செய்வதாகவும் கூறினார்.
தனது மகன் தன்னிடம் நேரடியாக அனுபவம் பெறுவதாகவும் தனக்கு வருத்தம் வந்தால் தனது மருந்தையே குடிப்பதாகவும் கூறுகின்றார். தனது ஒரே ஒரு சகோதரரான இராஜவைத்தியர் வைத்திய கலாநிதி அ.க. குமாரசாமி அவர்கள் 1979 ஆம் ஆண்டு காலமானார் என்றும் அவரது அயராத முயற்சியாலேயே யாழ்ப்பாணத்தில் இரண்டு ஆயுள்வேதக் கல்லூரிகள் நிறுவப் பட்டதென்றும் அவற்றில் அவர் தலைவராகவும் விரிவுரை யாளராகவும் கடமையாற்றினார் என்றும் குறிப்பிட்டார்.
வீரகேசரி - வார வெளியீடு
03.1. 1996
42

வட்டு. விசாலாட்சி சமேத காசி விசுவநாத சிவன் தேவஸ்தான இரதோற்சவம்
இலங்கையின் வடபுலத்தில் பழமை வாய்ந்த சிவத்தலங்களில் ஒன்றான வட்டுக் கோட்டை சிவன் கோவிலடியில் காசி விசுவநாத சிவன் தேவஸ்தானம் விளங்குகின்றது. இதனை வட்டு வீரபத்திர சிவன் கோவில் என்றும் அழைப்பர். இக் கோவிலின் தோற்றம் யாழ்ப்பாண அரசபரம்பரை சங்கிலியன் வழி வந்த தெய்வேந்திர முதலியின் வம்சத்துடன் தொடர்புபட்டது. கோவி லின் பரிபாலனம் இராஜ வைத்தியரின் சகோதரர் வைத்தியக் கலாநிதியினால் நடத்தப்பட்டு வருகின்றது.
தேவஸ்தானத்திலே மூல மூர்த்திக்குரிய கர்ப்பக்கிரகத்தில் காசி யிலிருந்து பெறப்பட்ட லிங்கப் பெருமானார் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அம்மன் பிரதிஷ்டை செய்ய வேண்டிய இடத்தில் அருமையான உமையம்மையாரின் (விசாலாட்சித் தாயார்) விக்கிரகம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் விசாலாட்சி சமேத காசி விசுவநாத சிவன் தேவஸ்தானம் என அழைக்கப்படுகின்றது.
வைரக்கல்லினாற் சேவையில் கட்டப்பட்டு முன்பு தெய்வேந் திர முதலியின் பரம்பரையில் உதித்த காளியப்பாவால் 16 ஆம்
43

Page 24
நூற்றாண்டளவில் யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூரிலிருந்து வீரபத்திரப் பெருமானாரின் திருவிக்கிரகம் கொண்டு வரப் பட்டது. இத்திரு விக்கிரகத்தினை வட்டுக்கோட்டையில் வைத்துப் பூசை செய்த தலமாக விளங்கிய காரணத்தினாலும் பின்பு அங்கு சிவத்தலமாக லிங்க வழிபாடு நடைபெற்றதாலும் வட்டு வீரபத்திர சிவன் என்று அழைக்கப்படுகின்றது.
மூலமூர்த்தியாக லிங்கப் பெருமானும் அர்த்த மண்டபத்தில் தாமிர விக்கிரகங்களாய நந்தி, பலி பீடம், தர்சனக் கண்ணாடி என்பன உண்டு மகா மண்டபத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சந்திர சேகரர், பத்திரகாளிசமேத வீரபத்திரப் பெருமானார், சோமாஸ்கந்தர் வைரவப் பெருமானார், மாணிக்கவாசக சுவாமிகள், சண்டேசுரர் என்போரின் திருவுருவங்கள் தாமிரத் தினாலே உருவாக்கப்பட்டுப் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன.
மூலமண்டபத்திற்கு முன்பாக வலது பக்கத்தில் நடேசர் மண்ட பத்தில் நடேசப் பெருமானார் சிவகாமித் தாயாரோடு வீற்றிருக் கின்றார்.
யாழ்ப்பாணத்தில் கதாப்பிரசங்கத்தை மணிஐயர் இயற்றி வந்த காலத்தில் இத்தலத்திற்கு ஒருமுறை வருகை தந்து திரு
44
 

உருவங்களை அவதானித்து விட்டு இந்தியாவிலும், இலங்கை யிலும் இந்த நடேசர் உருவம் போன்ற அழகிய அமைவை தான் எங்கும் பார்த்தில்லை என்று பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
1927 ஆம் ஆண்டு வார்க்கப்பட்டு 1929 ஆம் ஆண்டு நடேசப் பெருமானின் பிரதிட்சை நடைபெற்றது. இக்காலத்திலிருந்தே கொடியேற்ற விழாவுந் தொடங்கியது. இவ்விழாவின் 11ஆம் நாள் ஆனி உத்தரத்தன்று நடேசர் அபிஷேகம் நடைபெற்று ஆருர்த்தா தரிசனத்துடன் நடேசர் வலமும், நடேசர் உலாவுடன் பக்தர்களின் நடனமும் இணைந்து நடைபெறல் கண்கொள்ளா பக்தி வயக் காட்சியாகும். பண்டு தொட்டு ஆடற்கலையாம் கூத்துக்கலையில் தனி மரபைப் பேணிக் காக்கும் வட்டுக்கோட்டை 'சூரன் ஆட்டம், நடேசர் ஆட்டம்' ஆன்மாத் தொடர்பை பார்ப்போருக்கு வெளிப் படுத்தும்.
இவ்வாலயத்தின் கொடி மரம் 1932 ஆம் ஆண்டு இராச வைத்தியர் அ. க. குமாரசுவாமி அவர்களால் தாமிரத்தினாலே செய்விக்கப்பட்டது. இவ் வேலை இரவு, பகலாய் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இடப வாகனத்தில் சிவபெருமான் உமாதேவிபாகராய் தோற்றம் அளித்தார். அவரது தோற்றத்தைக் கண்ணுற்ற ஆசாரிமார் கண்டதும் ஓடினர். உடனே 'யாம் உங்கள் வேலையை கவனித்து வரவே வந்தோம் நீங்கள் பயந்து ஓடி வந்து விட்டீர்கள் ஒன்றுக்கும் பயப்படாது வேலையைச் செய்யுங்கள்’ என அசரீரியாகக் குரல் ஒலித்தது. அதைச் செவிமடுத்ததும் திரும்பவும் ஆசாரிமார் வந்து இறைவனது மேற்பார்வையில் கொடிமரத் தம்ப வேலை இனிது முடித்தனர். இறைவனது மேற்பார்வையில் நடைபெற்ற கொடிமரத்தம்பம் ஆனபடியால் மிக மிக அற்புதமாகவும் அழகாகவும் இன்றும் விளங்குகின்றது.
இக்கோவிலின் தர்மகர்த்தாவும் பரிபாலகருமாக இருப்பவர் வைத்திய கலாநிதி க. காசிப்பிள்ளை. இவர் காலம் சென்ற இராஜவைத்தியர் அ. க. குமாரசுவாமி அவர்களின் சகோதரர் ஆவார். இவர் 88 வயதுடையவராய் இன்றும் தனது அறையில் சிவத்தலத்தின் பரிபாலனம் பற்றி சிந்தித்த வண்ணமுள்ளார். அவரது ஏகபுதல்வன் வைத்திய கலாநிதி கா. சுமந்திரன் (சிவா) கோவில் விடயங்களைக் கவனித்து வருகின்றார்.
வைத்திய கலாநிதி க. காசிப்பிள்ளை சிவனின் அருளும் பெற்றவர். இவர் 45 வயது வரை விவாகத்தை விரும்பாது
45

Page 25
வாழ்ந்தவர். அக் காலத்தில் அவருக்கு அண்மையில் ஓர் ஒளி தெரிந்தது. அவர் பயம் கொள்ள 'ஏன் பயம் கொண்டீர், யான் இருக்கின்றேன்’ என ஒரு சொற் கேட்டது அவரின் தோளிலே பெருமானார் ஏறி மறைந்தார். அந்நிகழ்வின் பின்பே தான் மணம் முடிக்க சம்மதித்ததாகக் கூறுவர்.
பொதுவாக இவ்வாலயத்தின் விக்கிரகங்கள் யாவும் இந்தியாவில் இருந்தே கொண்டு வரப்பட்டன. பிராமணர் ஒருவர் ஐந்து லிங்கங்களை இந்தியாவிலிருந்து கொண்டு வந்து கொடுத் தார். அவரே லிங்கங்களுக்குரிய ஆவுடையார் வட மேற்குப் பக்கத் திலும், விக்னேஸ்வரப் பெருமான் கோயிலின் தென்மேற்குப் பக்கத்திலும் திகழ்கின்றன. சனீஸ்வரப் பெருமான் கோயிலின் வடபக்கமாகச் சுப்பிரமணிய கோயிலுக்கு அண்மையில் கட்டப் பட்டுள்ளது.
கோமுகையினை அடுத்து சண்டேசுரர் ஆலயமும் நந்தி பலி பீடங்களும் கட்டப்பட்டுள்ளன. இக்கோயிலின் சிலைகள் தங்கத்தினால் சமைக்க வேண்டுமென வைத்திய கலாநிதி பெரிதும் விரும்பி வந்துள்ளார். ஒரு நாள் சந்நியாசியார் வந்து அவரைத் தன்னோடு சுட்டிச் சென்று 2-1/2 மைல் நீளமான கற்பாறை ஒன்றைக் காட்டினாராம் காட்டிய பொழுது அக்கற் பாறை தங்கமாகப் பிரகாசித்ததாம் இந்த வித்தையை உன்னாலும் செய்ய முடியும். உனக்கு தங்கம் வேண்டுமா? என்னை வேண்டுமா? எனக் கேட்டாராம். இவர் ஒன்றும் பேசாதிருந் தாராம். திரும்ப அவரை அழைத்து வந்து பழைய இடத்தில் விட்டாராம். காசிப் பிள்ளையின் தந்தையார் கந்தையா அவர்களும் தங்க உலோகங்களை மாற்றும் வித்தையினை அவை அடங்கிய கதையினை முன்பு கூறி வந்துள்ளார்.
சமீபத்தில் ஏற்பட்ட இடப்பெயர்விற்குப் பின் மீண்டும் ஆனி மகோற்சவம் 1996 இலும் இரண்டாம் முறையாக 1997 இலும், மூன்றாம் முறையாக 1998 இலும் நடைபெற்று வருகின்றது. இம்முறை 1.7.1998ல் தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானின் அருளே மீண்டும் வந்து ஆடுவது என அடியார்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிகின்றனர்.
வீரகேசரி
46

தமிழ்ப் பாடநெறி கற்றல், கற்பித்தலில் ஏற்படும் பிரச்சினைகள்
கில்வியில் மொழி இருக்கும் இடம் மிகவும் முக்கியமானதொன்றாகும். மொழி இன்றி ஏனைய பாடங்களைக் கற்பிக்க முடியாது. எத்துறையிலும் மொழிக்கு இடம் உண்டு ஆனபடியாற் றான் மொழியானது கல்வியின் பிரதான கருவியாகவும், அத்துடன் கல்வியைப்
பரப்பும் ஊடகமாகவும் உள்ளது.
இந்த முறையில் பிள்ளையின் ஆரம்பக் கல்வி நிலையில் இருந்து மொழியானது ஏதோ ஒரு வகையில் அவர்களது நேரத்தை ஆக்கிர மித்துக் கொண்டுள்ளது, இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மொழியானது பிள்ளைகளால் திறம்பட கற்கப் பட்டாற்றான் அவர்கள் கல்வியில் மேல்நிலையை அடையலாம். இன்று பாடசாலைகளில் மொழிக் கல்வி கற்றல், கற்பித்தல் முறைகள் மிகவும் பின் தங்கிய நிலையை அடைந்துள்ளமை கவலைக்குரியது. தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண் டுள்ள மாணவர்கள் தமிழ் மொழியை முறையாக எழுத, வாசிக்க, பேசுவதில் மிகவும் பின்தங்கிய தோர் நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர். இத்தகையதோர்நிலை தொடர்ந்தும் நிலவுமானால் தமிழ் கல்வி வளர்ச்சி குன்றியதோர் நிலையை அடையும். எனவே
47

Page 26
மொழிக் கல்வியை வளர்த்தெடுத்துச் செல்வதில் கல்விசார்
நிறுவனங்கள் யாவும் முன்வரவேண்டும்.
இன்று தமிழ் மொழிப் பாடநெறி எதிர்நோக்குகின்ற பிரச்சினை களை நாம் கற்றல், கற்பித்தல் என்பவற்றில் இனங்கான முடிகிறது. அவற்றை ஆரம்ப பிரிவு, இடைநிலைப்பிரிவு, சிரேஷ்ட பிரிவுகளில் தனித்தனியாக எடுத்து நோக்கலாம்.
முதலில் நாம் ஆரம்பப் பிரிவில் பார்ப்போமானால் தாய்மொழிக் கல்வியில் மிகவும் கவனம் எடுத்துக் கற்பிக்கப்பட வேண்டியதோர் பருவம் இப்பருவம். இப்பருவமே மாணவர் கற்றலில் அடி அத்திவாரமாகும். எனவே இப்பருவத்தில் அவதானிக்கப்படவேண்டிய மொழிக் கல்வி மிகவும் முக்கிய மானது. ஆரம்பப் பிரிவில் உறுப்பெழுத்தில்லை, சொற்பிழை, வாக்கிய அசைவு இன்மை, கருத்தமைய எழுதவோ, வாசித்தலோ இன்மை, கிரகிக்கும் ஆற்றல் இன்மை, போன்ற குறைபாடு களைப் பெரும்பாலும் காணக்கூடியதாக உள்ளது. இக்குறைபாடு களுக்கு பல காரணங்கள் உண்டு. ஆரம்பப்பிரிவில் இன்று தமிழ் மொழியைக் கற்பிக்கப் போதிய ஆசிரியர்களின்மை, பயிற்றப் பட்ட தமிழ் ஆசிரியர்கள் இல்லாமை, அத்துடன் பெரும்பாலும் பயிற்சி பெறாத ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் நிலை காணப் படுகிறது. முன்னைய காலங்களில் பண்டிதர்களும் தமிழ்ப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் கற்பித்து வந்த இடத்தை நிரப்பு வதற்குத் தகுந்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறு தற்போதைய வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஆரம்பப் பிரிவில் அதிகமாகக் காணப்படுவதால் ஆசிரியர் மொழிக் கல்வியில் தனிப்பட்ட கவனம் எடுக்க முடியாமல் இருக்கின்றது. ஆசிரியர்களில் அனேகமானவர்கள் திருத்தங்களை அவ்வளவு முக்கியமாகக் கருதுவதில்லை.
இடைநிலைப் பிரிவை எடுத்து நோக்கில் ஆரம்பப் பிரிவில் காணப்படும் அநேக குறைபாடுகள் தொடர்ந்து காணப்படுவ துடன் கருத்தமைய வாக்கியம் அமைக்க முடியாமை, பந்தி பிரித்து எழுதப் பொருத்தமான குறியீடுகளைப் பயன்படுத்தத்
48

தெரியாமை, கட்டுரை, கடிதம் என்பனவற்றைச் சரியான முறை யில் எழுதத் தெரியாமை போன்ற குறைபாடுகளை நோக்கலாம் மாணவர் மத்தியில் வாசிப்புப் பழக்கம் அருகி வருகின்றது. 'வாசித்தல் மனிதனைப் பூரண மனிதனாக்குகிறது’ என்பதற் கமைய பத்திரிகைகள், சஞ்சிகைகள், சிறுகதைகள், நாவல்கள், கதைகள் என்பவற்றை வாசித்தும் அறிவை நெருங்கிக் கொள்ள வேண்டும்.
இத்தகைய ஆர்வம் மாணவரிடம் மிகக் குறைவு.
மேலும் ஆசிரியர்கள் மொழி கற்பிப்பதில் பாரம்பரிய முறையில் கற்பிப்பது குறைவு. இசையோடு கருத்துப்பட பாடல் களைப் படித்துக் கொள்ளும் முறை, பாடல்களை கருத்துப்பட கொண்டு சுட்டிக்காட்டும் முறை, மனனம் செய்யும் முறை போன்றவற்றில் இன்று அதிகளவாய் கவனம் செலுத்தாமை அத்துடன் பாடவிடயத்திற்கேற்ற துணை நூல்களைக் கற்பிக் காமை. உ-ம் ஆண்டு 9 இல் பண்டிதமணி கணபதிப் பிள்ளை அவர் களின் பாடத்தைக் கற்பிக்கும் போது துணை நூல்கள் அவசியம் தேவைப்படுகின்றன. இலக்கணம் கற்பிக்கும்போது நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் ஆசிரியர் களால் பயன்படுத்தப்படுவது குறைவு. சூத்திரங்களை மனனம் செய்விக்கும் பழக்கமின்மை இவை போன்ற குறைபாடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
சிரேஷ்ட பிரிவிலும் ஆரம்ப இடைநிலைப் பிரிவிலும் காணப் பட்ட குறைபாடுகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன இப் பிரிவில் கற்பிக்க போதிய மொழியாசிரியர்களின்மை, இலக் கணத்தைத் திறம்படக் கற்பிக்கக்கூடிய ஆசிரியர் பற்றாக்குறை என்பன காணப்படுகிறது.
மேலும் மாணவர்கள் மத்தியில் தற்போது மொழிப் பாட நெறியை விரும்பிக் கற்கின்ற சூழ்நிலை அருகி வருகின்றது. வகுப்பில் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் குறைவடைந்து வருகின் றனர். காரணம் நவீன கலைத்திட்ட அமைப்பாகும். அத்துடன் மொழிக்கல்வியைப் போதிப்பதில் இன்று பெற்றோரது பங்களிப்பும் குறைவடைந்து வருகின்ற நிலையைக் காணலாம்.
49

Page 27
* இவற்றுடன் கலைத்திட்டக் குறையே நம் மொழிக் கல்வியில்
காணப்படும் பிரச்சினைகளுள் ஒரு காரணமாகும். மேலைத்தேய
கலைத்திட்ட அமைப்புப் பாடநூல் அமைப்பு முறையை எமது
தாய்மொழியில் புகுத்தியமை. அத்துடன் சிக்கன மொழி
அமைப்பு முறையைப் பின்பற்றும்படி திணித்தமை, கலைத்
திட்ட அமைப்பை அடிக்கடி மாற்றியமை போன்றவையாகும்.
இவ்வாறாக, தமிழ்மொழி கற்றல் - கற்பித்தலில் பல
பிரச்சினைகள் காணப்படுகின்றன; இவற்றிற்கு நாம் பின்வரும்
நம்பிக்கைகளின் வழிமுறைகளில் தீர்வு காணலாம்,
l.
50
ஆண்டு ஒன்றில் பழைய முறையில் மண்ணில் விரலால் எழுதும் முறை அறிமுகமாக்கப்பட்டு தசைநார்ப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
ஆரம்ப பிரிவில் தினமும் உறுப்பெழுத்து, சொல்வதெழுதல், வாசித்தல் பயிற்சிகள் கொடுக்கப்பட வேண்டும். நன்னூலில் ஒலிகளின் பிறப்பிடம் எனும் பகுதியில் உதடு, நா, அண்ணம், பல் என்பவற்றின் மூலம் உச்சரிப்பு முறை கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப மாணவருக்கு பேச்சுப் பயிற்சி உச்சரிப்புத் திருத்தத்திற்கூடாக, எழுத்துப் பிழைகளைத் திருத்தும் வழியாக சொல்வதெழுதலைப் பயன்படுத்த வேண்டும்.
ஆரம்ப வகுப்பில் பாட்டுப் பாடல், கதை சொல்லல், நடித்துக் காட்டல் போன்றவற்றால் மாணவரைப் படிப்பில் ஈடுபட வைக்கும் பாட்டுகளைப் பாடிக்காட்டி அவ்வாறே பாடலைப் படிப்பதன் மூலம் வழிகாட்டலாம். அத்துடன் சொல் அட்டைகளைப் பயன்படுத்தலாம். இந்த வழி மூலம் பிள்ளைகள் கூடிய ஈடுபாட்டைக் கொள்வார். இடைநிலை மட்டத்தில் கட்டுரை, கடிதம் எழுதும் பயிற்சியை செயற் திட்ட முறையின் அடிப்படையில் கொடுக்கலாம். மேல் வகுப்பில் கலந்துரையாடல், விவாதங்கள், பேச்சுத்திறன் மூலம் மொழியை வளர்க்க முயற்சிக்கலாம்.
மொழியாசிரியர் மாணவர் மத்தியில் வாசிக்கும் பழக்க வழக்கத்தை ஏற்படுத்துதல் வேண்டும். சிறுகதை, நாவல்,

10.
1l.
கவிதை, கட்டுரைகள் போன்றவற்றை வாசிப்பதால் மாணவர்தம் மொழி அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
கலைத்திட்டத்தில் இலக்கணம் வேறாகவும், இலக்கியம் வேறாகவும் இடம் பெறவேண்டும். இலக்கண மரபுவிதி ரீதியாக ஒழுங்கான முறையில் செயற்படும் மனப்பயிற்சியை மொழிக் கல்வி மூலம் கொடுக்கலாம். காரணகாரியத் தொடர்பில் விதிப்படி கொடுக்கப்படும் மொழிப் பயிற்சி மூலம் மனப்பயிற்சியை ஏற்படுத்தலாம்.
பழைய பண்டிதர் வகுப்புகள், பாலபண்டிதர் வகுப்புகள், வித்துவான் வகுப்புகள், சைவப் புலவர் பயிற்சி நெறி
வகுப்புகள் என்பவற்றை ஏற்படுத்த வேண்டும்.
பெற்றோர் மொழிக் கல்வியில் வீட்டில் கவனம் எடுத்தல் வேண்டும்.
வகுப்பு மாணவர்களின் தொகை ஆகக்கூடியது 30ஆக்கப்படல் வேண்டும்.
கூடுதலாகப் பயிற்சிக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு ஆசிரியர் களுக்கு தமிழ் கற்பித்தல் பயிற்சி வகுப்புகள் பகுதி நேரமாக நடாத்தப்படல் வேண்டும்.
சேவைக் காலப் பயிற்சிகள் சகல கல்வி நிர்வாக நிறுவனங் களிலும் அதாவது பாடசாலை மட்டம், கொத்தணி மட்டம், கோட்ட மட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஆலோசனையில் இப்பயிற்சி நெறிகள் சமகாலத்தில் வேகமாகவும், துரிதமா கவும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தமிழ் நெறியை விசேடமாகக் கற்பிக்க பயிற்சி கொடுக்க வேண்டும். இப் பயிற்சி நெறிக்கு பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பீடம் பல்கலைக்கழக கல்வித்துறைப்பீடம் கல்வித் திணைக்கள தமிழ்மொழிப் பிரிவு, பண்டிதர்கள், வித்துவான்கள், தமிழ் மொழியில் விசேட பட்டம் பெற்றோர் போன்றவர்களின் உதவியைப் பெற்று திட்டமான முறையில் நடைமுறைப் படுத்தவேண்டும்.
51

Page 28
l2.
பாடசாலைகளின் வகுப்பு ரீதியான தமிழ் மன்றங்களை உருவாக்கி அம்மன்றங்கள் மூலம் தமிழ்த்தினப் போட்டி களை தவணை ரீதியாக நடாத்தலாம். தமிழ் மொழிப் போட்டிகள் இலக்கணத்தில் இலக்கியம் சம்பந்தமாக நடாத்தப்படலாம். உதாரணமாக பட்டிமன்றம், விவாத அரங்கு, கவிதை, சிறுகதை ஆக்கம் என்பவற்றை மாணவ ரைக் கொண்டு எழுதி நடாத்துவதன் மூலம் அவர்களின் எழுத்தாற்றல், பேச்சாற்றல் என்பவற்றை வளர்த்தெடுக்க முடியும். மேலும் தமிழ் அறிஞர் புலவர்களது நினைவு தினங் களைக் கொண்டாடுதல், அத்தினங்களில் கல்விமான்கள்
அறிஞர்களை அழைத்து மேடைப் பேச்சுக்கள், கலை
நிகழ்ச்சிகளை உருவாக்கலாம். அதற்கேற்ற வசதிகளையும், வளங்களையும் பாடசாலைகள் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
இவ்வாறாக மேற்கூறிய வழி முறைகளை நாம் கையாளு
வதுடன் மொழிக் கல்விக்கான கலைத்திட்ட அமைப்பை ஏற்ற முறையில் நவீனமயப்படுத்தினால் மொழிக் கல்வி, கற்றல் கற்பித்தலில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு
காணலாம்.
52
ஈழநாதம்
6.04.1991

மனித விழுமிய மேம்பாட்டுக்கல்வி
கிலாநிதி. நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் வட்டுக்கோட்டையைப் பிறப் பிடமாகக் கொண்டவர். ஆசிரியராகப் பணியில் அமர்ந்து இன்று மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக உயர்ந்து இருப்பவர். கல்வியியற் துறை யில் கலாநிதிப் பட்டத்தை யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்ட இவரின் கல்வியியற் சிந்தனைகள் விஸ்தாரமானவை. கல்வி யியல் சார்ந்த சில நூல்களையும் பல கட்டுரைகளையும் எழுதித் தனது கல்விச் சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார். இவர் ஓர் நாடகக் கலைஞர் என்பதும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய தாகும். - தினக்குரல்
மனிதனின் தோற்றத்துடன் அவனது விழுமியமும் ஆரம்பிக்
கின்றது.
தோற்றத்திற்கு ஆதிமூலமான கருவறையில் தாயினால்
விழுமியம் விதைக்கப்படுகின்றது.
'சட்டியில் இருந்தால்
53

Page 29
அகப்பையில் வரும்’ கந்தசஷ்டி விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை வரும் என்ற நம்பிக்கை. அகப்பை என்பது கருப்பையைக் குறித்து நின்றது. இத்தகைய எண்ணக்கரு இன்று மானிட உயிரியலாளரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகிவிட்டது.
தாயின் வாழ்க்கைமுறை இக்காலத்தில் யாவராலும் கவனிக்கப் படவேண்டியது. அவளும் அதன் பெறுமானத்தை உணர்ந்து பக்குவமாக தனது கருவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவள் தன்னை உளவியல் நிலையில் எத்தகைய தாக்கத்துக்கும் ஆளாக்காமல் ஆனந்தத்திற்கு முன்னாக்க வேண்டும். ஆனந்தம் பரமானந்தம் என வாழ வேண்டும். நல்ல சிந்தனையுடன் கணவனை தெய்வமாகக் கொண்டு. மூத்தோருக்குப் பணிந்து, நல்ல இசைகேட்டு, இறை ஆன்மா தொடர்பான கதைகளை, மனித விழுமியத்துடன் இணைந்த இதிகாச, புராண, மகாபாரதம் போன்ற கதைகளை வாசித்து, கேட்டு விழுமியங்களை உள்வாங்க வேண்டும். நல்லோருடன் உறவாடி, தெய்வீக, ஆன்மீகப் பண்பு களுடன் வாழ்ந்துகாட்டி அக்காலத்தில் மனித விழுமியம் மிளிர வேண்டும். இதனை 'மனித விழுமியம் விதைக்கப்படும்,
கருவறைக் காலம் என அழைக்கலாம்.
இம்மேம்பாட்டுக் காலம் பூரீ சத்திய பகவான் அருளுடன் ஒளி விடுகின்றது. உலகத்தில் சமூகத்தில் நிலவும் சீரற்ற தன்மைக்கு இம்மேம்பாடு காணலாம் என்பதைக் காட்டியுள்ளார்.
இந்நிகழ்வு ஓர் சுறுசுறுப்பான நிகழ்வாகும். இன்றைய நிலையில் மனிதனுக்கு ஒரு தேவையும், அதனை உணர்ந்து மேம்படுத்த வேண்டிய காலமாகவுள்ளது.
காலத்துக்குக் காலம் பல்வேறு கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுக மாக்கி அமுல் நடத்தப்பட்டபோதும் மனித விழுமியத்தை மேம்படுத்தும் கல்வியாகக் காணப்படவில்லை. பல தசாப்தங் களாகக் கல்வி வெளியீடு மனித விழுமியத்தை வெளிப்படுத்தத் தவறிவிடுகின்றது. கல்வி பட்டங்களை அடிப்படையாகவும், தொழிலை நோக்காகக் கொண்டதாகவுமே காணப்படுகின்றது. சமூகத்திற்கு விழுமியக் கையளிப்பு இல்லாமலேயே உள்ளது.
54

காலனித்துவ அடிப்படைக்கல்வி காரணகாரிய, விஞ்ஞான நோக்குடன் முன்னேற்ற அடிப்படையாக அமைந்தது மறுக்க முடியாதது. அவை எழுதுவினைஞரை உருவாக்கி (Clerk - making Education) கல்வியாக அமைந்ததே அல்லாமல் சமூகத்திற்குத் தேவையான மனித உருவாக்கக் கல்வியாக (Man making Education) அமையவில்லை. மனிதனிடம் உள்ளே பொதிந்திருக்கும் விழுமியத்தை மேம்படுத்தக் கூடியதாக அமையவில்லை. முழுமையான அபிவிருத்தியை (Total Development) ஏற்படுத்த வேண்டும்.
போட்டிப் பரீட்சையை மையமாகக் கொண்டு தொழிலைப் பெறும் நோக்குக் கல்வியாக விளங்கியது. இவற்றின் விளைவு சமூகத்தில் கவலையையும், மனத்தாங்கலையும், பொறாமை யையும், போட்டியையும், கீழ்ப்படியாமையையும், அதர்மத்தை
யும் விளைத்துள்ளது.
இவற்றை உணர்ந்து 1969இல் அவதானித்த சுவாமி பூரீசத்ய சாயி பாபா அவர்கள் 'கல்வியின் முடிவு நல்ல குணாதிசயங்களாக (The end of education is Charactor) egyGoldu GG16öTG) lib 616öIp LDGof5 விழுமிய மேம்பாட்டுக் கல்வியை அடிப்படையாக்கினார். அறிமுக மாக்கினார்.
மனித விழுமிய அபிவிருத்திச் செயற்பாட்டில் பின்வரும் நிலை முக்கியமாகின்றது. முதலாவது பெற்றோர் சூழல் - முன்பு காட்டிய கருவறைக்காலம். இரண்டாவது பெற்றோர் குழந்தை தொடர்பு, குழந்தையை வளர்த்தெடுக்கும் சூழல், இளமை மிக மிகப் பிரதானம். வாழ்வின் முதற் கவிவுக்காலம் மனதில் பதிபவை அகலாது. குழந்தை சூழலை அவதானித்து தன் விழுமியத்தை ஆக்கிக் கொள்ளும் காலம். சில சந்தர்ப்பங்களில் குழந்தைகள் தாம் பெற்றுக்கொண்ட விழுமியங்களை பெற்றோர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காலம்.
மூன்றாம் நிலை பெற்றோர், ஆசிரியர், மாணவர் தொடர்பு நிலை. இவர்கள் மூவரும் விழுமியங்களில் பங்கு கொள்
கின்றார்கள்.
55

Page 30
நான்காம் நிலை சமூகச் செயற்பாடு இதில் சமூகவியலாளர், குழந்தைகள், பெற்றோர்கள் பங்கு கொள்வார்கள். தற்பொழுது ஒலி, ஒளி நாடாக்கள் மூலம் தொடர்பாடல் முக்கியமாகின்றது.
மூன்று விதமான உள்ளுணர்வுகள் மனிதனிடம் உருவா கின்றன. 1. உள்ளுணர்வு உடல் ரீதியாக - இவை மிருகங்களிடம் 2. உள்ளுணர்வு உளரீதியாக - இவை மனிதனிடம் 3. உள்ளுணர்வு ஆத்மீகரீதியாக - இவை மனித வெளிப்பாடாக
ஆத்மீகமும் ஆத்மீகச் செயற்பாடும் அதனை நடைமுறைப் படுத்தலும் பெரும் அறிதன்மையை உண்டாக்கும்.
முக்கியமாக தியானவழி சோதியின் உள்ளொளியைக்காட்டி, பெருக்கி மனதை ஒரு நிலைப்படுத்தும். ஒரு நிலைப்படுத்தல் உள்ளத்தில் அமைதியை உண்டாக்கி கற்றலை மனதில் பதிய வைக்கும். மாணவர்களை உள்ளீர்ந்து இழுக்கும் மனித விழுமியங்
களைக் கையளிக்கும்.
மனித விழுமியச் செயற்பாட்டில் முக்கிய தன்மை அமைதி யான கற்பித்தல் (Silent teaching). கற்பிப்பது அமைதியாக, ஆழமாக இருக்க வேண்டும். அமைதியாக மெதுவாக கற்பிக்கும் பொழுதுதான் விடயங்களை மாணவர் மனதில் பதியக்கூடியதாக கற்பிக்க முடியும்.
மனித விழுமியங்கள் பெற்றுத் திரட்டிக் கையளிக்கப்பட வேண்டும். ஆசிரியரால் தேடித்தேடிப் பெற்றுத் திரட்டிக் கையளிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்லும் சொல் இனிமையாக வேண்டும். அவனது பாவனை சிந்தனை சமூகத்தை தொடவேண்டும்.
ஆசிரியர் மாணவர்களிடத்து சுயநலமற்ற அன்பு கொள்ள வேண்டும். (Selfess Love) சுயநலமற்ற அன்பு உயர்ந்த பண்புகள் மற்றவர்களை மாற்றும் சாதனம். பள்ளிக்கூடங்கள் ஊடாக உலகில் எவ்வாறு வாழ்வதென்பது கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.
56

வாழ்க்கை என்பது பிரச்சினையற்றதல்ல. பிரச்சினையற்று வாழ்ந்து விட முடியாது. பிரச்சினைகளை எதிர்நோக்க, எதிர் கொள்ள குணநலனுடன் கூடிய உயர்ந்த வாழ்க்கை அமையும். யாவருக்கும் குணநல வாழ்க்கை மிக உயர்ந்த வாழ்க்கையாக அமைந்து யாவரும் போற்றும், மதிக்கும் மாண்புமிகு வாழ்க்கை யைக் கொடுக்கும். அத்தகைய ஆசிரியம் என்ற பெயரைப் பாதுகாத்து வாழும் வாழ்க்கை மிக மிக முக்கியம்.
எங்கள் உலகத்தில் மிக உயர்ந்த சந்தோஷமான வாழ்க்கையை வாழ்பவை எவை? (1) மிருகங்கள், பறவைகள்; (2) குழந்தைகள் இவையே சந்தோஷமாக வாழ்பவையாகும். குழந்தைகளே மிகவும் சந்தோஷமாக வாழும் கூட்டமாகும்.
இன்று உலகம் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றது. பொருளாதார, சமூக, கலாசார, சூழல், சக்தி, குடும்ப, உணர்வு, உடலியல், கல்வி ஆகியவற்றில் சிக்கல்கள் தோன்றியுள்ளன.
கல்வியின் முதலும் முக்கியமானதும் கல்விப் பெறுமானங்கள், விழுமியங்கள் ஆகியவற்றை விளங்கிக் கொள்ளவேண்டும்.
மனித இயல்பு என்பது என்ன? வாழ்க்கை என்பது அன்புடன் ஆரம்பிக்கின்றது. இயற்கை அழகைக் கொடுத்து தனது கவர்ச்சியால் அது அன்பை அள்ளிக் கொடுக்கின்றது. மனிதனிடம் அன்பு ஊற்றெடுக்கின்றது. வாழ்க்கையும் அன்புடனேயே ஆரம்பிக்கின்றது. மாணவர்களில் நல்லவர்கள் யார் என்றால் ஆரம்ப கீழ்ப்பிரிவு மாணவர்களே. அந்த இளம் பிஞ்சுகள் கவலை இன்றி வஞ்சகம் இல்லாமல் உள்ளார்கள்.
குழந்தைகளிடம் இருந்து நாம் நிறையக் கற்கலாம். அவர்கள் சுயநலமற்று நடப்பார்கள். பிறந்ததும் குழந்தை காரணமின்றி அழும். சிறிது காலம் சென்றதும், ஏனைய குழந்தைகள் அழுவதைப் பார்த்து அழும். இரண்டு வயதானதும் குழந்தைகள் மற்றவர்களுக்கு உதவுவார்கள். சுயநலமற்று தொண்டு செய்வார்கள். கள்ளங்கபடமற்ற உள்ளம்.
மனித இயற்கை மற்றவர்களிடம் அன்பு செலுத்துதல். மனித விழுமியக் கல்வியில் ஐந்து அம்சங்கள் உண்டு. அவை சுருக்கமாகக் குறிப்பிடப்படுகின்றது.
57

Page 31
ா சத்தியம் (உண்மை) - இவை மனிதனின் சிந்தனை
களூடாகப் பெறப்படுவது.
ா தர்மம் - உண்மை நடத்தை - நன்நடத்தைகளால் தர்மத்திற்கு
அஞ்சி நடப்பது.
ா சாந்தி - சமாதானம் - அமைதியான தன்மை.
ா பிரேமம் - அன்பு - மற்றவர்களிடத்து அன்பு
செலுத்துவது.
ா அகிம்சை - பலாத்காரம் இன்றி அமைதி
யான வாழ்க்கை.
கல்வி மூன்று வகைக்கு உட்பட்டது
(1) H - Head g560) Gav
(2) H - Heart இருதயம்
(3) H - Hand 605,
தலை (Head) சிந்திக்கின்றது. அது தான் சத்தியம், உண்மை இவை மனித சிந்தனைகள் ஊடாகப் பெறப்படுகின்றன.
தலை நினைப்பதை கை (Hand) செய்கின்றது. நடத்தை (Action) உண்மை நடத்தை. இந்நடத்தை தர்மத்திற்கு அஞ்சி நடக்க வேண்டும். இதுவே நடத்தையாகும்.
இவை இரண்டும் இருதயத்தில் இருந்து ஊற்றெடுத்து நடக்கின்றது. இருதயம் அன்புக்குரியது. அன்பைச் சொரிந்தால் சாந்தி, சமாதானம், அமைதியான தன்மை உண்டாகும். அன்பு
மற்றவர்களிடத்து செலுத்தப் பட வேண்டும்.
அப்பொழுதுதான் வாழ்க்கை பலாத்காரமின்றி முராண்டாக இல்லாமல் அமைதியான அகிம்சை வாழ்க்கையாக மாறும்.
இவையெல்லாம் எழுத்தில் இருந்து சொல் உருவாகி, சொல்
லில் இருந்து வசனமாகி வசனத்தில் இருந்து பந்தி உருவாவது போன்றது.
58

தலையில் உருவாகும் எண்ணங்கள், இருதயத்தால் அனுமதிக் கப்பட்டு, கைகளால் செயற்படுத்தப்படுகின்றது. (The ideas enumarating from the Head, heart has approved, The hand should Carry out)
மனித இயற்கை என்பது என்ன? வாழ்க்கை அன்புடன் ஆரம்பிக்கப்படுகின்றது. மனிதனே அன்பு, இயற்கையே அன்பு. வாழ்க்கை அன்புடன் தான் ஆரம்பிக்கின்றது. அந்த அடிப்படை யில் குழந்தைகள் ஆரம்பப் பிரிவில் கற்கும் வாழ்க்கை ஆனந்த LDFTGOlg.
ஆன்மீகக் கல்விஅற்புதமானது. இக்கல்வி மனித மேம்பாட்டுக் கல்விக்கு அடிப்படையானது. இதனை அடைவதற்கு பல நேரடி முறைகள் உள. கதைகள் கூறுவது எமது பழைய பாரத, இராமா யண, நாயன்மார்களது சமயப் பெரியோர்களது ஆத்மீகத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய ஆன்மீகக்கல்வி அற்புத மானது. இக்கல்வி மனித மேம்பாட்டுக் கல்விக்கு அடிப்படை யானது. இதனை அடைவதற்குப் பல நேரடி முறைகள் உள. கதைகள் கூறுவது எமது பழைய பாரத, இராமாயண, நாயன் மார்களது சமயப் பெரியோர்களது, ஆத்மீகத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய கதைகளைக் கூறுவது. (Story Teling) அடுத்து பாடல்களை குழுவாகப் பாடவைப்பது. (Group Singing) ஆத்மீகத்தையும், மனித விழுமியத்தை வளர்க்கக்கூடிய பாடல் களைப் பாடவைப்பது. குழுவாகச் சேர்ந்து பாடும் பொழுது நல்ல கூட்டுணர்வு ஏற்படும்.
மெதுவான தியானம் இருத்தல் (Light Meditation) காலையில் இறைவனை நினைத்து துதிப்பாடல் பாடிய பின்பு மெதுவாக நிலத்தில் இருந்து சப்பாணி கொட்டி இறைவனை நினைத்துத் தியானித்தல். இத்தியானம் மனதை வேறு சிந்தனைக்கு இட மளியாது ஒருநிலைப்படுத்தி மன ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்கும். நல்ல மன ஒருமைப்பாடே மன அடக்கத்திற்கும்,
கற்கைக்கும் நல்வழி சமைக்கும்.
59

Page 32
நல்ல கற்கைக்கும் மனித விழுமிய மேம்பாட்டுக்கும் குழுச் செயற்பாடு மிக மிக அவசியம். குழுவாக இயங்கும் பொழுது பகைமை, பொறாமையை மறந்து ஒருவர், மற்றவர்மீது அன்புகாட்டி, ஆதரவு செலுத்தி வாழ வழிகாட்டும் விழுமிய அடிப்படையில் முழுநேரமும் மற்றவர்களுடன் தொடர்பாட வழிவகுக்கும்.
தினமும் வழிபடவேண்டும். நல்ல எடுத்துக்காட்டு வசனங்கள், பாடல்கள் தினமும் படிக்க வேண்டும். அவற்றை மனனம் செய்து கூறவேண்டும். அதன் கருத்துக்கள் மனித விழுமிய முத்துக்கள். உதாரணமாக ஒளவையாரின் நன்னெறிப் பாடல்கள். இவைகள் யாவற்றையும் சேர்த்து பொருத்தமான, கலைத்திட்டமாக்க வேண்டும். அவற்றை நாம் வற்புறுத்தி வருவோமாயின் அவை எப்பொழுதும் மறக்கப்படமாட்டாது. மனதைவிட்டு அகலாது.
நாம் கதைக்கும் விதம், விழுமியத்தின் மிக அடிப்படையான தாகும். இதயத்தில் இருந்து அன்பை அடிப்படையாகக் கொண்டு ஊற்றெடுத்த இனிய சொற்களால் கதைக்க வேண்டும் (Way you talk)
நல்லவற்றைச் சிந்திக்க வேண்டும். சிந்திக்கும் விதம் மிகமிக அவசியம். மற்றவர்களின் மனம் புண்படாத விதத்தில். கவலையை ஏற்படுத்தாத விதத்தில் சிந்திக்க வேண்டும் தீமையானவற்றை சிந்திக்கக்கூடாது. கெடுதி ஏற்படக் கனவிலும் sløOGOTä559an, sg. (Way you think)
நாம் பார்க்கும் விதமும் முக்கியமானது. நாம் மற்றவற்றைப் பார்க்கும் விதம், முறை மிக, மிகப் பிரதானம். நல்ல எண்ணத்துடன் பார்க்க வேண்டும். கெட்ட எண்ணங்களுடன் LJ ITIñáš35śgon Lng J. (Way you See)
ஒன்றை நினைத்து வ்ேறொன்றைச் சொல்லி, வேறொன்றைச் செய்யக்கூடாது. ஒன்றையே நினைத்து ஒன்றையே சொல்லி 665/60p Gu Gaj tiu Ga 165TGLib (Thing one thing, Say one thing, Do one thing)
60

நல்லமுறையில் மற்றவர்களை நடாத்த வேண்டும். அன்பாக, ஆதரவாக நடாத்த வேண்டும் 1940 ஆம் ஆண்டு மகாத்மாகாந்தி அவர்கள் இருக்கும் பொழுதே சத்தியசாயிசுவாமி அவர்கள் மனித விழுமியக் கல்வி பற்றிக் கூறினார். விழுமியங்கள் மாற்ற மடையும். உலகில் நல்ல விழுமியங்கள் தொடர்ந்து நிலை பெறும். உலகம் மாறும். ஆனால் உண்மை மாறாது. உள்ளம்
எங்களுடனேயே இருக்கும். எங்களுடனேயே வரும்.
கடவுளே உண்மை; உண்மையே கடவுள். இவை இரண்டு டனும் நாம் போகவேண்டும். உண்மையும், அன்பும் ஒன்று. இரண்டையும் பிரிக்க முடியாது. இவை இரண்டுடனும் இணைந்து கண்டுபிடிக்க வேண்டும். உயர்ந்த உணர்வுடன் எண்ணங்கள் இணைய வேண்டும். அவையே வீடு. நாம் கடவுள் நிலைக்கு வருகின்றோம். எங்களுடன் விருப்பங்கள் பிறக்கின்றன. உங்களுக்கு உந்துதல் இருந்தால் நீங்கள் அந்த எதனையும் செய்யலாம். இணையும் மூலம் நீங்கள் எந்த அற்புதத்தையும் செய்யலாம். அப்பொழுது தான் அவர்கள்
உண்மையைக் கண்டுபிடிக்க முனைவார்கள்.
அவையே நடைமுறையாக மாறுகின்றன. நாங்கள் இறைவனின் தொண்டர்கள். பக்தர்கள். எங்கள் நினைவுக்கும், வாழ்வுக்கும் இணைவுக்கும் காற்றைச் சுவாசிப்பதற்கும் (பிராணயாமத்திற்கும்) தொடர்புண்டு. நாங்கள் சுவாசத்தை கட்டுப்படுத்தவேண்டும். ஆழமாகச் சுவாசிக்கும் பொழுது உங்கள் சிந்தனை (யோசனை) கட்டுப்படுத்தப்படும். நீங்கள் அமைதி காண்பீர்கள். அமைதியாகச் சுவாசிக்கப் பழகுங்கள். அது உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரும். எங்கள் வாழ்க்கை நாம் சுவாசிக்கும் நிலையிலேயே தங்கியுள்ளது. (Our life is depending on Breath) அதற்கு தியானம் உதவுகின்றது. பயனுள்ளதாக உதவும். தியானத்தின் பயன் நல் நடத்தைகளை வளர்க்கின்றது.
நாங்கள் தியானம் செய்யப் பழகுவோமாக இருந்தால்
கூடுதலாக பயனை அடைவோம். எங்கள் இயற்கை உண்மையாக
61

Page 33
வாழுதலாகும். நாங்கள் எங்கள் மனதைக் கட்டுப்படுத்தப் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு தியானம் வழிகாட்டும். நல் நடத்தைக்கு மனதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
அவற்றை எவ்வாறு செய்யலாம்? நாங்கள் பெறும் தகவலைப் பொறுத்தது. தகவல்களைச் சரியாக பெற்றுக் கொள்ள வேண்டும். நல்லனவற்றைப் பார்த்து நல்லவற்றைச் செய்ய வேண்டும்.
கண்கள் நல்லவற்றையே பார்க்க வேண்டும்.
காதுக்குள் சத்தம் நுழைந்ததும், குறைந்த மன ஒருமைப்பாடு, பின்பு சிந்திக்க, சிந்திக்க கூடுதலான மன ஒருமைப்பாடு ஏற்படும். ஒரு நாளும் கோபப்படக்கூடாது. உடல் நல்நடத்தைக்கு ஆளாக்கப்பட வேண்டும். கோபத்திற்கு ஆளாகி துர்நடத்தைக்கு ஆளாகக் கூடாது. நாங்கள் உணர்வுக்கு ஆளாகும் பொழுது எங்கள் நிலையை இழக்கின்றோம்.
கல்வியின் முக்கிய குறிக்கோள் நல்நடத்தையாகும். (Aim of Education is good Conduct) 9 u 2.631 iGyub egy (Up Ié19) g)(5ég5ub சிந்தனையும் எமது ஞாபகமாகும். கூடாத சிந்தனைகள், கூடாத விளக்கங்கள் ஆகியவை எங்கள் ஞாபகத்திற்கு ஏற்படுத்திக் கொள்ளும் விளைவுகளின் பலனாகும். உயர்ந்த கூடுதலான உணர்வுகளில் கூடுதலான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம். கடந்தகால அனுபவங்களில் கூடுதலான உணர்வுகளைப் பெறுகின்றோம். உணர்வுகள் மனிதனின் எதிரிகள் ஆகின்றன.
உள்ளத்தில் அமைதி இல்லாவிட்டால் கோபம், தாக்கம், விரக்தி, காழ்ப்பு, பொறாமை, போட்டி, சந்தேகம் என்பன உருவாகும். அன்பு எங்கள் இயற்கையின் ஒரு பகுதியாகும். இறைவனும் அந்த மாதிரியே வித்தியாசம் எதுவும் இல்லை. நாங்கள் சத்தியசாயியின் ஒரு பகுதியாக உள்ளோம். அன்புடன் இணைந்துள்ளோம். எங்கள் முழுச் செயற்பாடும் சேவையுடன் இணைந்ததாகும். அன்பைத் தாவரத்துடன் ஒப்பிடலாம். கூடுத லான பூக்கள் ஒளியுடன் இணைந்து பிரகாசிக்கின்றது. ஒளியில்லா விட்டால் பூக்களே இல்லை. ஆதலால் அன்பு இல்லாமல் நல்ல நடத்தை இல்லை. அன்பே நல்ல நடத்தைக்கு அடிப்படையானது (Love is the basis for right Conduct).
62

நாங்கள் நல்ல, சரியான சூழலை உருவாக்க வேண்டும். இத்தகைய சூழலை கவின் நிலையை எங்கள் மாணவருக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இதுவே மனித விழுமிய
அடிப்படைக் கல்வியாகும்.
நாங்கள் தண்ணிர் வீணாகுவதைப் போக்க வேண்டும். இயற்கையுடன் இணைந்த அன்பு எங்கள் இதயத்தை நிரப்ப G36) 16öTG) lib. (Fil Our heart With right Conduct) g)5uj Gog5 gy6öIL/L–6öt இணைத்துக் கொள்ளவேண்டும். முழு உடலும் அன்பாக வேண்டும். ஆத்மீகம் அதில் பல்கிப் பெருக வேண்டும். அதுவே மனித விழுமியக் கல்வியின் உயர்ந்த நிலையாகும்.
அறிவு (Knowledge) என்பது என்ன? அது ஆத்மீக வழியால் ஏற்பட்ட அமைதியின் வெளிப்பாடாகும். அன்பை அடிப்படை யாகக் கொண்டது. அறிவு கருணையின் வடிவம். ஒளியைக் காட்டி
வழியைக் காட்டுவது. அதுவே விழுமியம்.
விளக்கம் குறிக்கோள் விஞ்ஞான நோக்கு
கண்களில் S.
நிறைந்தவை விடயங்கள் தர்க்கரீதியானது
பார்வை கொண்ட சிந்தனை உளம் வெளிப்படுத்தப்படுவது
ஆத்மீகப்பார்வை ஆத்மீகம் முடிவாக்குவது
அறிவின் உள்ளடக்கம்
1. Injuction
2. Ilumination
3. Communal Confirmation
விஞ்ஞானமும் ஆத்மீகமும் தவறுகள் (Errors) தீர்க்கமான
உண்மைகளால் போக்கப்பட வேண்டியவை. திடமான உண்மை
களுடன் தொடர்புடையவை. முடிவான உண்மைகளுடன்
இணைந்தவை. தவறுகள். பிழையான அபிப்பிராயங்களை
வளர்க்கக் கூடியவை. திரும்பத் திரும்ப நடைமுறையாக்கும்.
63

Page 34
மனித விழுமியக் கல்வியின் குறிக்கோள்தான் என்ன? எல்லா விதமான அபிவிருத்தியின் உள்ளடக்கத்தை மதிப்பிடக்கூடியது. அது பள்ளிக்கூடத்தின் கருத்திட்டத்தை கண்டறியக்கூடியது. அவை ஆசிரியரின் தரத்தாலும், ஆளுமையாலும் வளர்க்கப்படக் கூடியது. உண்மையிலேயே மனித விழுமியக் கல்வியானது அது ஓர் கற்றல் கற்பித்தல் செயற்பாடாகும். இம்மனித விழுமிய மேம்பாட்டுக் கல்வியானது பாடசாலை முகாமைத்துவத்திற்கு வழிகாட்டுவது. இக்கல்வியே ஆசிரியர் மாணவர்களது உறவு முறைக்கு வழிகாட்டுவதும் வளர்ப்பதுமாகும். இக்கல்வியூ டாகவே சமூகத்துடன் ஒரு நல்ல உறவுமுறையை உருவாக்கி, வளர்த்துக் கொள்ளலாம்.
இன்று கல்வி ரீதியான அடைவுகள் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லை. பள்ளிக்கூடங்கள் அரசியல், நிர்வாகத் தலையீட்டுக்கும், குடும்பச் செல்வ செல்வாக்கிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. இதன் விளைவுகள் நல் மாணாக்களையும், கூடாத மாணாக்கர் களையும் உருவாக்குகின்றது. மிகத்திறன் மாணவர்களுடன் பெற்றோரின் தரமும், குணநலனும் இணைந்து விடுகின்றது. நல்ல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் மனம் விட்டு கதைப்பார்கள், விளையாடுவார்கள், முரண்படாது இணைந்து கொள்வார்கள். அன்பாக பிணைந்து கொள்வார்கள். கதைக்காமல் புறம்பாடுவது இடைவெளியைக் கூட்டும். பெற்றோர்களது கவனம் குழந்தைகளில் மிகமிக அவசியம். பல்வேறு விதமான செயற்பாடுகளை, நடவடிக்கைகளை குழந்தைகளிடம் இடம் பெற வைப்பது அவர்களது அனுபவத்தைக் கூட்டும். அவர்களது புதிய திறனை தோண்டித் தோண்டி வளர்த்தெடுக்கும். புதிய திறனை வளர்த்தெடுக்க நேரடி கற்பித்தல் மிகமிக அவசியம்.
நல்ல குழந்தைகளுடன் பெற்றோரின் நற்குணாதிசயங்களும் இணைந்து விடுகிறது. அங்கு பெற்றோரின் அதிகாரம் குழந்தை யிடம் மதிக்கப்படுகின்றது. குழந்தைகள் முன் பெற்றோர்கள் நல்ல உதாரண புருஷர்களாக நடந்து காட்ட வேண்டும். சரியானதையும் பிழையானதையும் சுட்டிக்காட்டி அவற்றின்
64

வித்தியாசத்தைக் கற்பிக்க வேண்டும். கூறிக் கொள்ளவேண்டும். அன்புக் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டும். குழந்தைகள் ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக சிந்தித்து செய்ய வைக்க வேண்டும்.
கேட்டு நடக்கும், பார்த்து நடக்கும் குழந்தைகளிடம் பின்வரும் பண்புகள் வெளிப்படும். அங்கு வீட்டுச் சட்டங்கள் கிடையாது. குழந்தைகளது செயற்பாடுகளை வழிநடாத்த வேண்டியதில்லை. பழக்க வழக்கங்கள் சீராகும். நாம் சந்தோஷமாக இருந்தால் குடும்பமும் சந்தோஷமானதாக இருக்கும்.
தினக்குரல்
26.12.1998
65

Page 35
The Value of Education
Education is definitely the most important thing in the world today. It is the gate way to knowledge and understanding. The entire world has become a global village because of education. Advancement in Science and technology has revolutionised human life. Thus the value of education is immeasurable. People without education are as bad as people dead. To be living one must have eduction.
What is education? Learning to read and write and to do some additions and subtractions is not education. That is the acquisition of literacy and numeracy. Of Course, to acquire a Sound base in education, one must learn to read and write and manipulate with numbers. People must keep themselves be informed of what is happening in their immediate environment. In a broader way, they must know what is happening in their neighborhood. It does not take more than a couple of days to go round the World. From our sitting room we can see the entire world our earth from satellite pictures. The world has become so close and small, it is globalizied all because of advances in education. Literacy and numeracy are important in our daily life. That is for transacting day to day activities. To read newspapers and other
66

materials to keep ourselves updated in our knowledge of day to day life, we need to know to read, Education is more than that. It is man making, character formation and nation building. That is the real value in education.
Education is composed of three components. They are - knowledge, skills and behaviour. Only when these three are developed in a person, we call him educated. Knowledge and skills is half baked and cannot do anything useful. Hence for life, knowledge and skills are essential. knowledge and skills are qualities that give distinction eminence and prominence and an identity in the midst of others. People with wide knowledge and rare skills are highly recognised and they secure good jobs and lead a comfortable life in Society.
Properly planned education must be able to provide wide knowledge, rare skills and good behaviour, Fine behaviour development is an important aspect of education. Fine behaviour patterns make a man a man, Good and socially accepted behaviour is the hallmark of education. Education must teach people to live and let live. What we therefore need is man making education, character forming education and nation building education. When education enables us to acquire them, then the real value of education would be achieved.
57

Page 36
Promotive Post in the Educational
Administrative Structure
Promotive post is a post which is promoted from the existing post to the other level, grade, or class, in order to utilize the Special strategies of the staff officers who are working. When an officer is offered this promotive post, he is encouraged and his inner potential and increased personality are brought forward towards the institution.
One's own benefit will not be lost if the promotive post is promoted in the right manner. The officer who is promoted in such a way will be recognized at the institution. He would work with great enthusiasm, devotion dedication and also assists the institution for its best.
Thus, the promotive post is given to parallel officer, or an equally qualified officer by the interview board on Criteria basis. To meet the Criteria basis, it needs bio-data. Bio-data shows its background and progress of the officer,
Bio-data would comprise academic qualifications, professional qualifications, particulars of previous service, extra Curricular activities, and the seniority. Educational qualifications, schools where educated, university underwent, subjects selected for post graduate diploma in education, and researches made for all would determine the Correct position of an officer,
68

Particulars of service would stand for professional experience in different regions including difficult areas, and promotion from the first appointment. These factors are the criteria on which the promotion is
aCCounted based.
If this procedure is not taken into consideration in the promotive post and room is left for political influence, and some other shortcuts, one is simply hurt and made disinterested in his duties. As such the institution loses its real and essential Service, and Confusion OCCures in the administrative line. Yet, its function and programs towards the goal cannot be fulfilled. Professional jealousy and competitive mannerism would be highlighted among the officers, The officer who really deserves to be promoted would be ignored and discarded. Such situations are very common in Schools. This results the improper place of the officer who really deserves. Subsequently, administrative performances too, are disturbed.
The administrative staff officers are given promotive posts without any criteria basis, so that the vacancies of staff posts remain unfilled in the institutions of education as a long standing matter. Promotive posts which are made without criteria basis by administrative staff officers, the activities become a question mark. Senior officers and professionally promoted officers are pushed underjuniors. This situation would not only affect their career, but affect the institution as well.
In western Countries such matters are clearly done to intimate the criteria basis in Computering and promoted to a promotive post. The vacancies are filled, then and there. When the approach fails the institution of education is disturbed. The vacancies in our institution of education remain unfilled with the officers qualified in SLEAS-Class III, and III, and SriLanka Principal Service-Class I, II, and III. Meanwhile, the same vacancies are covered by temporary appointments in lieu of SLEAS and SLPS. This situation remains Constant for ever, This position should be eradicated. Promotions should be effected in reality.
69

Page 37
As the Ministry of Education misses to fill up the vacancies at once
with suitable officers, an adverse situation is Created. Further, administrative staff officers and deputy director for divines are appointed on their own desire and undesired, and the responsibilities are handed over to them miserably.
All the Ministries of Education and Departments of Education are for the public. They do not belong to any individual. They are not the institutions to install one's own desire or will or pleasure. Therefore, the promotive post should be offered on general criteria basis and general motives.
70

"தற்கால கல்வி நிர்வாகக் கட்டமைப்பின் சீரற்ற நிலை மாணவர்களின் கல்வியில் ஏற்படுத்தும் பெரும் பாதிப்பு!”
யTழ்ப்பாணம் கந்தரோடை ஸ்கந்த வரோதயாக் கல்லூரியின் புகழ்பூத்த முதல்வரும் பேரறிஞருமாகிய அமரர் வி. சிவசுப்பிரமணியம் அவர்களின் நினைவு தினத்தையொட்டிய நினைவுப் பேருரை. அண்மையில் அக்கல்லூரியில் நடை பெற்றது.
இந்நினைவுப்பேருரையை வடமாநில மேலதிகக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.என்.தணிகாசலம்பிள்ளை அவர்கள் ஆற்றினார். 'கல்வி நிர்வாகக்கட்டமைப்பும் முன்னாள் முதல்வர் களின் முகாமிப்பும். என்ற தலைப்பில் அவர் ஆற்றிய இப் பேருரையில் அக்காலகல்வி நிர்வாகத்தின் சிறப்புகள் பற்றியும் இக்கால கல்வி நிர்வாகச் சீர்குலைவுகள் பற்றியும் எடுத்து விளக்கினார். அவர் தமது பேருரையில் கூறியதாவது:
அமரர் வி. சிவசுப்பிரமணியம் ஆசிரியராக, உப அதிபராக, அதிபராக இப்பள்ளிக்கூடத்தில் நாற்பத்தொரு வருடங்கள் பணி ஆற்றியுள்ளார். அவர் இப்பாடசாலையின் சுற்றம், சூழல், பாடசாலைப் பின்னணிகளை அறிந்து இதன் வளர்ச்சிக்கு அயராது
71

Page 38
உழைத்தார். அவர் மாணவர்களை நற்குணமுடைய ஒழுக்க சீலர்கள் ஆக்கினார். தமது இறையுணர்வை, உண்மை வாழ்க்கையை, நேர்மையை, காருண்யத்தை, கடமையை, கட்டுப்பாட்டை, மாணவர்களிடமும் வளர்த்து பெருமை பெற்ற முதல்வர்களில் முதல்வராக அவர் திகழ்ந்தார்.
கல்விக்கட்டமைப்பில் நிர்வாக செயற்பாடு
அக்காலத்தில் கல்விக் கட்டமைப்பில் நிர்வாகச் செயற் பாட்டிற்கு இரண்டு நிறுவனங்கள் இருந்தன. ஒன்று கல்வி நிறுவனம் மற்றொன்று கல்வி நிர்வாக நிறுவனம். இவை இரண்டும் இறுக்கமான தன்னதிகாரம், தற்சுதந்திரம் (Autonomy) கொண்டு விளங்கின. நல்ல கல்வி அபிவிருத்திக்கு இறுக்கமான கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் பங்கு கொண்ட கல்வி ஆளணி யினர்களும் நிறுவனம் பண்புத்தரமுடையதாக விளங்கியது போல் விளங்கினர். குறைந்த நிறுவனங்கள், குறைந்த ஆளணியினர், கூடிய பயன்பாடு, காலதாமதமற்ற உடனடித் தீர்மானம், உடனடிச் செயற்பாடுகள் மிளிர்ந்தன. கல்வி நிறுவனங்கள், கல்வி நிர்வாக நிறுவனங்களில் தேவையற்ற தலையீடு இருக்கவில்லை.
அப்போது கல்வி நிறுவன, கல்வி நிர்வாக நிறுவன அதிகாரங் களை மையப்படுத்தப்பட்டே இருந்தன. ஒரே ஒரு மேலாண்மை படைத்த நிறுவனமாக மத்திய கல்வி அமைச்சும், அவ் அதிகாரங்களை அமுல்படுத்தும் முகவர் நிறுவனமாக மாவட்ட கல்வி நிர்வாக நிறுவனமும் இருந்தது. அதேபோல அக்கால பெரிய கல்லூரிகள், சர்வ அதிகாரம் கொண்ட கல்வி நிர்வாக நிறுவனங்களின் தலையீடு, அதிகாரப் பிரயோகம் அற்ற பூரண தன்னதிகாரம் கொண்டவையாக விளங்கின. இந்த இரண்டு நிறுவனங்களும் தரரீதியான அதிகாரத்தன்மை கொண்டவையாக விளங்கின. குறைந்த மட்டத்தில் இருந்த கல்வி நிறுவனங்கள் அதிகாரத்தை அடிநிலைக்கு பரவலாக்கி பன்முகப் படுத்தி பணிக்கையளிப்புச் செய்தன. தற்போதைய மாகாண கல்வி நிர்வாகம் போல் "பன்முகப்படுத்தல்' என்ற போர்வையில்
ஒருமுகப் படுத்தலைக் கொண்டிருக்கவில்லை.
72

1940 - 1960 ஆண்டு வரை அதிபர்களது முகாமைத்துவம் முகாமைத்துவ சபைக்கு (Board of Management) உட்பட்டதாக விளங்கியது. முகாமையாளர் இறுக்கமானவர். சபையின் தலைவர் சர்வ அதிகாரம் கொண்டவர். ஆசிரிய நியமனம், இடமாற்றம், பதவியில் நீக்குதல், ஒழுக்காற்று நடவடிக்கை யாவும் இவரது நேரடி கண்காணிப்பு அதிகாரத்தினுள் அடங்கும். அதேபோல இவர் பாடசாலை நிறுவனத்தினுள் சர்வ வல்லாண்மை படைத்த ஒருவராக விளங்கினார். சபையின் தலைவர்கள் கடமையில் ஆர்வமின்மை, பொறுப்பின்மை கொண்ட ஆசிரியர்களைத் தண்டிக்கக்கூடியவர்களாக, அதேபோல பாடத்தில் விடய ஞானம், ஆழமான அகலமான அறிவு கொண்ட ஆசிரியர்களைத் தேடிப் பிடித்துத் தங்கள் பள்ளிக்கூடங்களில் நிறுத்தி பள்ளிக்கூட மேம்பாட்டை விருத்தி செய்தனர்.
அவர்கள் அதிபரின் நிர்வாக நடவடிக்கைக்கு மதிப்பளித்து, பயந்து நடந்து கொண்டார்கள். அதிபரைப்போல ஆசிரியர்கள் தங்களையும் வளர்த்துக் கொண்டார்கள். ஆசிரியருக்கும், அதிபருக்கும் எந்த வித தலையீடும். தலையிடியும் இல்லை. அரசியல் அதிகாரத்திற்கு பயப்படாமல் அதிபர் நடந்து கொண்டார். அதிபர்களது பரந்த அறிவை, அனுபவத்தை சமூகம் ஏற்றுக்கொண்டது. சேவை மனப்பாங்கு, அர்ப்பணிக்கும் திறன், நிறுவன ஆர்வம், பொறுப்பான தலை நிமிர்ந்த தலைமைத்துவம் கொண்டர்களாக அக்கால முதல்வர்கள் விளங்கினர்.
பள்ளிக்கூடங்களில் முகாமைத்துவம் மேற்கொண்ட முதல்வர் களது கற்பித்தல் முன்மாதிரிக் கற்பித்தலாகக் காணப்பட்டது. தாங்களும் சில பாடங்களை படிப்பித்தார்கள். அவரைப்பின்பற்றி ஆசிரியர்களும் மணி அடித்ததும் நேரம் தவறாது வகுப்பறைக்குச் சென்றனர்.
படிப்படியான படிநிலை அனுபவம் உள்ளவர்கள் அதுவும் முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களே அன்று அதிபர் பதவிக்கு அமர்த்தப்பட்டார்கள். பள்ளிக்கூட அதிபர், தான் பதவி வகித்த காலத்தில் தனது ஆசிரியர் குழாமில் தனக்குப் பின் அதிபராக வாரிசு யார் என வளர்தெடுத்தார்கள். அவர்களைத் தமது அனுபவம் மூலம் பயிற்றுவித்தார்கள்.
73

Page 39
அரசியல் செல்வாக்கு, தலையீடு இல்லை
இக்காலத்தைப்போல் அக்கால முதல்வர்களுக்கு நியமனத் திற்கு பரீட்சை தகுதியாக அல்லது அளவுகோலாக இருக்க வில்லை. இந்நிறுவனம் தனக்கென தலைவரை வளர்த்தெடுத்தது. இவ் வளர்த்தெடுப்பிற்கு அரசியல், நிர்வாகச் செல்வாக்கு இருக்கவில்லை. பாடசாலை தனது தலைவனுக்குரிய பயிற்சிக்
களமாக்கப்பட்டது.
அக்கால கல்வி நிறுவனங்கள் நிறுவன மயமாக்கப்பட்டு கட்டமைப்பும், கட்டுக்கோப்பும் உடையதாகக் காணப்பட்டன. அதனை மேற்பார்வை செய்ய மாவட்டங்களுக்கு ஒரே ஒரு கட்டமைப்பும், கட்டுக்கோப்பும் கொண்ட கல்வி நிர்வாக நிறுவனம் காணப்பட்டது. கல்வி நிறுவனமும் தரமுடையதாய், கல்வி நிர்வாக நிறுவனமும் தரமுடையதாகக் காணப்பட்டன.
இந்நிறுவனங்களில் உள்ள ஆளணியினர்களும் பண்புத்தர விருத்தி (Qualitative) உடையவர்களாய் காணப்பட்டனர்.
கற்றல், கற்பித்தல் கருமத்தொடர்நடைபெறும் பாடசாலையில் துறை போக கற்று விடய அறிவும் பட்டறிவும் கொண்ட ஆசிரியர்கள் காணப்பட்டார்கள். அவர்களை அவர்களே மேற்பார்வை செய்தார்கள். தற்போதைய கல்வி நிர்வாக முறை யில் உள்ளது போன்று அப்போது கற்பித்தலை மேற்பார்வை செய்ய தொகை கூடிய நிர்வாக நிறுவனங்களும், கூடுதலான தொகை கொண்ட ஆசிரியர்களும் மேற்பார்வைக்கு இருக்க வில்லை. மேற்பார்வையை மேற்கொள்ள ஒரே ஒரு பரிசோதகர் (Inspector of Schools) LDL" (6) (8LD g)(1555Ti.
பண்புத்தர விருத்தி கொண்ட அதிபர்கள்
பாடசாலை அதிபர்கள் நல்ல பண்புத்தர விருத்தி கொண்ட வர் களாகக் காணப்பட்டனர். அவர்கள் ஆசிரியர்களிடம் ஆழமான, அகலமான அறிவை ஏற்படுத்தி அவற்றினுடாக மாணவர் களிடத்து கல்வி அறிவைக் காணத்துடித்தார்கள். வெற்றியும் கண்டார்கள். அக்கால முதல்வர்களின் முகாமைத்துவத்தில் ஒவ்வொரு மாணவனும் ஆங்கில, தமிழ் மொழி அறிவுடன் விடய
74

அறிவும் கொண்டு விளங்கினர். பாடசாலைக்கு பெரிய, பெரிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று தேடி அலைந்து திரிவதைவிட மொழி அறிவும், விடய அறிவும் கொண்ட ஆற்றல் திறன் படைத்த ஆசிரியர்களைத் தேடிக் கண்டுபிடித்து, அழைத்து வந்து கற்பிக்க வைத்தனர். தற்போதைய முதல்வர்கள் அத்தகைய ஆசிரியர் களைக் கண்டுபிடித்தாலும் அவர்களை தங்கள் பாடசாலைக்கு அழைத்துவர பல்வேறு பணிப்பாளர்களின் பணிமனைக்கு பல நாட்கள் படி ஏறியும் கொண்டுவர முடியாத துர்ப்பாக்கிய நிலையும் சிலவேளைகளில் ஏற்படுவதுண்டு.
முன்னை நாள் முதல்வர்கள் கொட்டில்களில் வகுப்புகள் இருந்தாலும், மாணவர்கள் நிலத்தில் அமர்ந்து திண்ணைப் பள்ளிபோல் படித்தாலும் அவர்களுக்கு தரமான கற்பித்தலை ஊட்ட துடியாய்த் துடித்தனர். ஒரு கிராமத்தில் ஒரு பெரிய பள்ளிக்கூடத்தை அமைத்து அதற்கு சகல வசதிகளையும் பெற்று5 மைல், 7மைல் சுற்றாடல் கிராம மாணவர்களை உள்வாங்கக்கூடிய தேவையை நிறைவு செய்யும் கல்வியை அவர்கள் அளித்தனர். மாணவர்கள் நடந்து சென்றோ மாட்டு வண்டியில் அல்லது துவிச்சக்கர வண்டியில் சென்றோ, கல்வியைப் பெற்றுக் கொண்டனர். ஆசிரியர்களும் அவ்வாறு சென்று கற்பித்து வந்தனர்.
கிராமத்தில் ஒரே ஒரு பெரிய பள்ளிக்கூடத்தை அமைத்து நடத்திய அம்முதல்வர்களை மக்கள் மரியாதை கொடுத்து மதித்துப் போற்றினர். தற்பொழுதுள்ள மகாவித்தியாலங்கள், மத்திய கல்லூரிகள் யாவும் உயர் படிப்பிற்கு தயார் பண்ணி அனுப்பும் (FEEDER SCHOOLS) பள்ளிக் கூடங்களாகவே இயங்கு கின்றன. இப்பள்ளிக்கூடங்களில் உயர் கல்விக்கேற்ற விஞ்ஞான ஆய்வுக்கூடம், தொழிற்கூடம், விசேட பட்டதாரி ஆசிரியர்கள் இன்றி இவை வளப்படுத்தல் இல்லாத நிலையில் உள்ளன.
எமது ஸ்கந்தா கல்லூரி நாம் படித்த காலத்தில் முன்னைய முதல்வர்களின் முகாமையில் பெரிய பள்ளிக்கூடமாக சகலதுறை போன ஆசிரியத் தெய்வங்களையும் கொண்டு விளங்கியது. அக்காலத்தில் இக்கல்லூரியில் பல்துறை வளர்ச்சி காணப்பட்டது. அப்போது இக் கல்லூரி பெளதீக ஆய்வுகூடம், இரசாயன,
5

Page 40
உயிரியல், தாவரவியல், மனைவியல், தொழிற்கூட ஆய்வு கூடங்கள், அதற்குரிய உபகரணங்களுடன், மாணவர்களது செய்முறைக் கற்றல் தேவையை நிறைவு செய்தது. மாணவர்கள் செய்முறைகளைச் செய்து நிறையக் கற்றனர்.
அப்போது இக்கல்லூரியில் ஒவ்வோர் துறைக்கும் ஒருவர், இருவர் அல்ல பல்வேறு புலவர்கள், பண்டிதர்கள், அறிஞர்களைக் கண்டோம். தத்தம் துறையில் ஆழமாகவும், அகலமாகவும் கற்றுத்தேறி, நாள் தோறும் கற்றுக் கற்று கற்பிக்கும் ஆசிரிய மணிகளை அன்று இங்கு கண்டோம். ஒவ்வோர் துறையிலும் அந்தந்தப் பாடங்களை கூறு கூறாக்கி கற்பித்த, கற்பிக்க வைத்த
முகாமையைக் கண்டோம்.
உதாரணமாக ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் நாம் படித்த பொழுது, தமிழ் மொழியாகிய தமிழ் பாடத்துறையை உயர் வகுப்பில் இலக்கணத்தை பண்டிதர் வ. நடராசாவும், தமிழ் இலக்கிய வரலாற்றையும், திருவாசகமாகிய பாடப் புத்தகத்தை வித்துவான் ஆறுமுகம் அவர்களும், கிருஷ்ணன் தூது, திருக்குறள் புத்தகத்தை விசுவநாதக் குருக்கள் ஐயா அவர்களும், விசேட தமிழ் பாடத்தை திரு. பாலசுந்தரக் குருக்கள் ஐயா அவர்களும் ஒற்றுமை யாக இணைந்து கற்பித்து பல்கலைக்கழகத் தேர்வில் சித்தி யெய்தக்கூடிய முறையில் ஒவ்வோர்துறையையும் அலகு அலகாக கற்பித்த, கற்க வைத்த மதிநுட்பம், முகாமை முன்னாள் முதல்வர் களிடம் காணப்பட்டது தங்கள் முகாமைத்துவத்தில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.
அக்கால முகாமிப்பில் 5 மைல், 7மைல் சுற்றாடலில் ஒரு பெரிய பாடசாலை அமைக்கப்பட்ட நிலைமாறி 80கள் 90களில் ஒரு பெரிய பள்ளிக்கூடத்திற்குப் பதிலாக அப்பகுதியில் 7 பாடசாலைகள் தோற்றம் பெற்று 7 பெரிய முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர். அக்காலத்தில் ஒவ்வோர் துறைக்கும் 30,40 மாணவர்கள் கற்பிக்கப்பட்டதற்குப் பதிலாக தற்போது 3 அல்லது 4 அல்லது பத்து மாணவர்களுடன் கற்றல், கற்பித்தல் நடைபெறுகின்றது. இந்த வள வீண்விரயத்தை கருத்தில் கொண்ட புதிய கல்விச் சீர்திருத்த அறிமுக அறிஞர்கள் 5 மைல்
76

சுற்றாடல்களில் உள்ள பாடசாலைகளை முன்னைய முறை முகாமிப்பின் சிறப்பை அறிந்து திரும்பவும் ஒன்றிணைக்கும் அதாவது மீள் வியூகம் (RATIONALISATION) என்ற செயற்பாட்டை செயற்படுத்துகின்றனர்.
தற்காலத்தில் துரதிஷ்டவசமாக புதிய கல்விச் சீர்திருத்ததத்தில் உலக வங்கி அறிவுறுத்தல் என்ற செயற்பாட்டில் கல்வி நிர்வாக நிறுவனங்களுக்கென ஆசிரியர்களைப் பள்ளிக்கூடங்களில் இருந்து இழுத்தெடுத்து அவர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர், பிரதி கல்விப் பணிப்பாளர், வலயக்கல்விப் பணிப்பாளர், சேவைக்காலப் பயிற்சி ஆலோசகர்கள், திட்டமிடல், முகாமைத் துவம், கல்வி அபிவிருத்தி அலுவல்கள் என நிர்வாகக் கலாசாரத் திற்கு உட்படுத்தப்பட்டனர். கற்பித்தல் காலத்தில் மாணவர் களுக்கு சிறப்பாக கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் நிர்வாக நிறுவன களத்தில் 'சோம்பேறிகள்’ ஆக்கப்பட்டார்கள். இவ்வாறு
ஆசிரியர் வளம் வீணடிக்கப்பட்டது.
தனியார் கல்வி நிலையங்களை மாணவர்கள் நாடும் நிலை
தங்கள் தங்கள் ஊரில் பெரிய பாடசாலை வேண்டுமென்று உருவாக்கியவர்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வகையில் பள்ளிக்கூடங்களை மீள் உருவாக்கம் செய்ய மறுத்தனர். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்செயற்பாடு நடைபெறமுடியாது போய்விட்டது. இத்தகைய செயற்பாட்டில் இன்று பாடசாலைக் கல்வி பெயரளவினதாக ஆகியுள்ளதுடன் தனியார் கல்வி நிலையங்களை நாடி மாணவர்கள் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெற்றோர்கள் பாடசாலைகளில் நம்பிக்கை இழந்தவர்களாய் தங்கள் பிள்ளைகளைத் தனியார் கல்வி நிறுவன முகாமையாளரது முகாமைப்பிலும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர் களது திறனிலும் மதிப்பு வைப்பவர்களாக காணப்படுகின்றனர்.
ஸ்கந்தவரோதயாக் கல்லூரி இக்கிராமத்தின் பெரிய சொத்து. சைவமும், தமிழும் வளர்க்க ஆரம்பிக்கப்பட்ட பெரிய நிறுவனம்.
77

Page 41
அன்று பாடசாலை நிர்வாகத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. பாடசாலை நிறுவனங்களே பெருகிக் காணப்பட்டன. அவற்றை மேற்பார்வை செய்ய ஒரே ஒரு நிறுவனமே (மாநிலக் கல்விப் பணிப்பாளர்) இருந்தது. ஆனால் இன்று அந்த ஒரு நிறுவனம் செய்த வேலையை யாழ். மாவட்டத்தில் ஆறு கல்வி
நிர்வாக நிறுவனங்கள் செய்கின்றன.
கற்றல் கற்பித்தல் நடைபெறும் கருமத்தொடர் உள்ள கல்வி நிறுவனத்தில் அனுபவமான ஆளணி தேவையாகும். பள்ளிக் கூடம் நடத்த நல்ல அதிபர்கள் இல்லாத நிலையில் அவர்கள் எல்லாம் கல்வி நிர்வாக நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கோட்டக்கல்வி அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம், மேலதிக மாகாணக் கல்வி அலுவலகம், மாகாணக்கல்வி திணைக்களம், மாகாண கல்வி அமைச்சு ஆகியவை ஆசிரியர்கள், அதிபர்களால் நிரம்பி வழிகின்றன. முன்பு எந்த ஆசிரியரும் கல்வி நிர்வாக வேலைகளை செய்ய மாற்றப்படவில்லை. இந்த அலுவலகங் களில் உள்ள வேலைகளை எழுதுவினைஞர்கள் அல்லது கல்வி அலுவலர்கள் ஆற்றினார்கள். அலுவலக வேலையை யாரும் செய்யலாம். ஆனால் வகுப்பறையில் கற்பிக்க வேண்டிய வேலையை ஆசிரியரால் மட்டுமே ஆற்ற முடியும். ஏனையவர் களால் ஆற்ற முடியாது.
இன்று கல்வி நிர்வாக நிறுவனங்களில் பாடசாலையை மேற்பார்வை செய்ய கூடுதலான ஆளணியினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அதே நேரத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் எந்தவித மேற்பார்வை ஆளணியினரும் இல்லாது இன்று கற்பித்தல் நடைபெறுகின்றது. கூடுதலான ஆளணி வளம் தேவைப்படுவது மட்டும் அல்லாது வள வீண்விரயம் நடைபெறு கின்றது.
கல்வி நிர்வாக நிறுவனத்தில் நிர்வாக நிறைவேற்றுக்கடமை
குறைவாகவே நிறைவேற்றப்படுகின்றது. அன்று ஒரே ஒரு நிறுவனம் நல்ல அனுபவமான ஆளணியினரைக் கொண்டி
ருந்தது. அவர்கள் யாவரும் ஒரே இடத்தில் இருந்து நிர்வாகச்
78

சிக்கல்கள் ஏற்படும் பொழுது கருத்துப் பரிமாறி தீர்த்துக் கொண்டனர். இன்று அவர்கள் பகிரப்பட்டுள்ளனர்.
உண்மையில் ஆசிரியர்கள் கற்பிக்கக்கூடிய அமைதியான உள நிலையில் இல்லை. அவர்கள் நிர்வாக நிறுவனங்களில் தூங்கி வழிகின்றனர். அலைகின்றனர். அவமானப்படுகின்றனர். அலுவலர்களது வீட்டிற்கு அடிக்கடி ஞாபகமூட்ட ஒடித்திரிய வேண்டியவராகின்றனர்.
முன்னைய முகாமிப்பில் ஆசிரியர்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன. அவர்கள் அதிபர்களால் அரவணைக்கப்பட்டனர். தமது சொந்தக் கிராமத்தில் கற்பித்தனர். தாம் படித்த ஊர்ப் பள்ளிக்கூடத்தில் சேவை செய்தனர். கல்வி நிர்வாகக் கட்டமைப்பு குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. பழிவாங்கவில்லை. அன்று அதிபர் செல்வாக்கானவர். அவர் கடிதம் அனுப்பினாலோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டாலோ பிரச்சினை தீர்ந்துவிடும் முழுப் பிரச்சினையை யும் அதிபரே தீர்த்து வைத்தார்.
இன்றைய பள்ளிக்கூட ஆசிரியர், அதிபர், பெற்றோர், மாணவர் பிரச்சினைகள் யாவும் உடனுக்குடன் தீர்க்கப்படாமல் பல நிர்வாகப் படிமுறைகளைத் தாண்டி பல மைல் தூரத்தில் உள்ள மையப்படுத்தப்பட்ட நிறுவனத்தினாலேயே தீர்க்கப்படுகிறது. பன்முகப்படுத்தல், பரவலாக்கல், அதிகாரக் கையளிப்பு, அதிகாரப்பகிர்வு என்ற நிர்வாகச் சொற்கள் அர்த்தம் பெறவே மாகாண நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. இந்த அர்த்தம் "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாய்' முடிந்தது.
பன்முகப்படுத்தல் என்ற போர்வையில் மாகாண நிர்வாகம் முழு அதிகாரத்தையும் மையப்படுத்திவிட்டது. மாகாணக்கல்வி நிர்வாகக் கட்டமைப்பு எட்டு மாவட்ட கல்வித் திணைக்களங் களை நீக்கி அவற்றை பணிமனையாக்கி ஒரேயொரு மாகாண கல்வித்திணைக்களமாக்கி விட்டது.
முன்பு இருந்த அண்மித்த செயற்பாடு (Close Activity), அண்மித்த மேற்பார்வை (Close Supervision) என்ற நிலையைப் போக்கி
79

Page 42
அதனைச் செய்யவே மாகாண நிர்வாகம் என்று ஏற்படுத்தி, எட்டு மாவட்ட திணைக்களங்கள் அதிகாரங்களையும் திருகோணமலை யில் ஒரேயொரு மாகாண கல்வித் திணைக்களம் கொண்டு விளங்குகின்றது. இதனாலேயே அங்கு வேலைப்பளு கூடி யுள்ளது. 'கப்பல் எப்ப வரும், எப்ப வரும்’ என காத்திருக்க வேண்டியுள்ளது. சகல செயற்பாட்டிற்கும் மைய நிலையத்தில் இருந்து கட்டளை எடுக்க வேண்டியுள்ளது. இத்தகைய கல்வி நிர்வாகக் கட்டமைப்பு கல்வி அபிவிருத்திக்கு அவசியம் தானா?
ஆசிரிய பயிற்சியும் பயிற்சிக்கல்லூரியின் வதிவிடப் பயிற்சியை விட்டு அதாவது ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் அளிப்பதை விட்டு திணைக்கள அலுவலர்களால் நடத்தப்படுகின்றது. ஆசிரிய பயிற்சி நிறுவனம் ஓர் உயர்ந்த பீடம். அங்கு பண்டிதமணிபோன்று துறை போகக் கற்ற பேரறிஞர்களே ஆசிரியர்களைப் பயிற்றுவித் தனர். இன்று அத்தகைய துறை போகத் கற்றவர்களைக் கலாசாலை கொண்டிருக்க வில்லை. அத்துடன் இப்பயிற்சி நெறியினை கல்வி நிர்வாக அலுவலர்கள் பொறுப்பேற்று பயிற்சியும் அளிக்கின் றனர். அவர்கள் அத்துறையில் அனுபவம், ஆற்றல் பெறா விட்டாலும் அவர்களது “பதவிவழி’ எல்லாவற்றையும் "கவர்' பண்ணிவிடும் என்று நம்புகின்றனர்.
சில பயிற்சிகள் மாவட்ட ஆசிரியர்களுக்கு கிடைக்காமல் தேசிய மாகாண மட்டத்திலேயே முடிவடைந்துவிடும். இதற்குத் தற்போதைய சூழ்நிலை வாய்ப்பாக உள்ளது. இங்குள்ள எந்த ஆசிரியரும் அங்கு விருப்புடன் பயிற்சிக்குச் செல்லத் தயாராக இல்லை. அதேபோல அங்குள்ள பயிற்சியாளர்கள் இங்கு வந்து விருப்புடன் பயிற்சி அளிக்கத் தயாராக இல்லை. இதனால் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்களே.
வீரகேசரி
O8.01.2OO
1 O.O. 2001
80

இடைக்கால நிர்வாகத்தின்போது வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி நிர்வாகத்தில் கருத்திற்கொள்ள வேண்டியவை
இடைக்கால நிர்வாக அலகு ஒன்றை நிறுவுவது பற்றி இழுபறி நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், வடக்கு - கிழக்கு மாகாணக் கல்வி நிர்வாகம் காலத்தின் தேவைகளுக்கேற்ப முன்னெடுக்கப் படுதல் அத்தியாவசியமானது.
இதனை கட்டுரையாளர் கலாநிதி ச.நா. தணிகாசலம்பிள்ளை
வலியுறுத்துகின்றார்.
தேவையும் அறிமுகமும்:
வடக்கு - கிழக்கின் பிரச்சினை ஒய்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இடைக்கால நிர்வாகம் அமைய வேண்டிய கோரிக்கை எழுந்தமைக்கு கல்வியும் அதைப் பாதித்த தரப்படுத்தல் நிகழ்வுமே காரணமாகும். எனவே கல்வியும், கல்வி நிர்வாகமும் இடைக்கால நிர்வாகத்தில் கருத்திற்கொள்ள வேண்டிய நாம் ஆழமாக சிந்தித்து முன்னெடுக்க வேண்டிய அம்சங்களாகும்.
8

Page 43
இன்றைய நிலை:
இரண்டு தசாப்தங்களாக நடைபெற்ற போரின் போது எமது கல்வி திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டுள்ளது. கல்வி, நிர்வாகக் கட்டமைப்பு உறுதிப்பாடற்றதாக்கப்பட்டுள்ளது. நாங்கள் கல்வியைப் பொறுப் பெடுக்காது எமது தலைவிதியை வேறு ஒருவர் நிர்ணயிக்கும் நிலை மாறவேண்டும். எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி எமது சொத்து. யாழ்ப்பாணக் கல்வி இலங்கையில் மட்டுமல்லாமல் சர்வதேசத்திலும் பெருமையுடன் பேசப்பட்டு புகழ்பாடியது. அதனை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு. எம்மைப் பொறுத்தமட்டில் பழைமையை இழந்தது மட்டுமல்லாமல் புதிய போக்கைக் கூட அரைகுறையாக சேர்த்துக்கொண்டு குழப்ப சூழ்நிலையே இன்று நிலவுகின்றது.
இன்றைய தேவை:
கல்வியில் தற்சுதந்திரம், தன்னாதிக்கம் மிக மிக இன்றியமை யாதது. எமது சூழல், பண்பாடு, பாரம்பரியம், விழுமியக்கல்வி, வெளிப்படக்கூடிய கல்வித்திட்டமிடல் மேற்பார்வை ஒழுங்கு, கல்வி நிர்வாகக் கட்டமைப்பு ஆகியன அவசியமாகும்.
போரின் தாக்கம்:
பொதுவாக நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உற்று நோக்கும் பொழுது போரும், இடப்பெயர்வும், புலப்பெயர்வும் எமது கல்வியில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. கல்வியைச் சிதைத்தால் தமிழர் வாழ்க்கையைச் சிதைக்கலாம் என்று கருதிச் செயற்பட்டனர். இளைய தலைமுறையிடையே நடத்தைக்கோலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வாழ்க்கை முறைகள் உற்று நோக்கப்பட வேண்டியவை. சமூக, கலாசார, விழுமியங்களில் ஏற்பட்டுள்ள சரிவு மாணவர் உலகத்தைப் பாதித்துள்ளது. குழு மோதல்கள், தெருக்களில் உலாவுதல், மூத்தோரை, ஆசிரியரை, பெற்றோரை மதியாது பணிவின்றி நடத்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
82

பாடங்களின் தரவீழ்ச்சி:
எமது உயிராம் தமிழ் மொழி, கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் எமது பிள்ளைகளின் அடைவு மட்டங்களில் அண்மைக் காலங்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கற்பிக்கும் ஆசிரியரிடமும் கற்பிக்கும் நுட்பங்கள், உத்திகள், பாட அறிவு, பாட விடயங்கள் ஆகியவற்றில் தர வீழ்ச்சியை ஏற்படுத்தி மாணவர்களை உயர்த்த முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுள்ளன. ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் விடயத்தை ஆழமாக அகலமாக கற்கும் கற்பித்தல் நிலையில்லாமல் பரீட்சையை மட்டும் மையமாக வைத்து வியாபார நோக்குடன் செயல்படும் துர்ப்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.
பாடசாலை மேற்பார்வையும் கட்டமைப்பும்:
எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் கற்றல், கற்பித்தல் நடைபெறும் களமாகிய பாடசாலைக் கட்டமைப்பு, நிறுவன நிலை அல்லது மேற்பார்வை செய்யும் கல்வி, நிர்வாக நிறுவனங்களின் கட்டமைப்பு உறுதியற்றதாக மனித வளம், பெளதீக வளம், போதியதாக இல்லாமல் மேற்பார்வை ஆளணி யினர் கூடுதலாகக் கொண்ட மேற்பார்வை நிறுவனங்களைத் தோற்றுவித்துள்ளது. நல்ல அனுபவம், திறம், அறிவு, ஆற்றல், மனப்பாங்கு கொண்டு விளங்கிய ஆசிரியர்கள். அதிபர்கள், மேற்பார்வைச் செயற்பாட்டிற்கு பாடசாலையிலிருந்து பறித்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களது மேற்காட்டிய அடைவை மாணவர்கள் பெற முடியாமல் அறிவு, திறன், ஆற்றல், மனப்பாங்கு குறைந்தவர் களிடம் மாணவச் செல்வங்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எமது பழைய காலம் ஆசிரியத்துவம் மலர்ந்து ஆசிரியர் கல்வி வாண்மை விருத்தியை மரபு ரீதியான ஆசிரியரிடம் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் பொறுப்பேற்றி ருந்தது. தற்போது இவற்றுக்கு மாறாக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் தரமான விரிவுரையாளர்களையும், தரமான அதிபர்களையும் பெற்றிராமை எமது மாணவர் பரம்பரையின்
83

Page 44
எதிர்காலத்தில் சிக்கல்களைத் தோற்றுவித்துக் கொண்டிருக் கின்றது.
நிர்வாகச் செல்வாக்கும் தாக்கமும்:
இவற்றுக்கு அடிப்படைக் காரணம் வடக்கு கிழக்கில் பொதுவாக கல்வி நிர்வாகத்தை வழி நடாத்திய அரசியல் தலைமைத்துவமற்ற அதிகாரிகளுக்குள் தலைமைத்துவம் மேலோங்கி நின்றமையும் ஒரு காரணமாகும். அடி நிலை மட்டத்தை சிந்தியாது கல்வி மேம்பாட்டிற்கு பூச்சாண்டி காட்டிப் பயமுறுத்தி நிர்வாகம் செய்யும் நிலை காணப்பட்டு வந்துள்ளது. நல்ல குளிர் நிலை சுகபோகம் கொண்டு நிர்வாகம் செய்யும் நிலையாகக் காணப்படுவதுடன், நிர்வாகத்தைப் பரவலாக்காமல் மையப்படுத்தி மாவட்டங்களுக்கு தன்னாதிக்கம், தற்சுதந்திரம் கொடுக்காது எல்லாவற்றையும் மையப்படுத்தி நிர்வாகம் செய்து உண்மை நிலையையும் அபிவிருத்தியைச் சுட்டிக் காட்டியவர் களைப் புறந்தள்ளிய நிலை மேலோங்கியது. கடந்த 10, 15 வருடங்களாக நடைபெற்ற நிர்வாகம் பற்றி விசாரித்து உண்மை நிலையை மக்களுக்கு வெளிக்கொண்டு வரும் ஓர் ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும்.
பாடசாலைக் கட்டமைப்பும் கற்பித்தல் முக்கியத்துவமும்:
பாடசாலை மேற்பார்வை நிறுவனங்களின் கட்டமைப்பில் அமைப்பு ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் மாற்றங்கள் வேண்டும். கற்றல், கற்பித்தல் நடைபெறும் பிரதான களமாக்க கருத்தூண்டப்பட வேண்டும். இதனை பெளதீக ரீதியாகவும், மனிதவள ரீதியாகவும் வளப்படுத்த வேண்டும். கல்வித்துறையில் பணியாற்றப் புறப்பட்ட அனைவரையும் வெண்கட்டி பிடித்து கற்பிக்கும் திறன் படைக்கச் செய்ய வேண்டும். அனைவரும் கற்பிப்போம். அனைவரையும் பாடசாலைக்கு அனுப்புவோம். அனைவரும் எம்மை அர்ப்பணிப்போம் என்ற மனப் பாங்குடன் செயற்பட்டால் வடக்கு கிழக்கில் நிலவும் ஆசிரியர் பற்றாக் குறைக்கு அரசு நியமனம் தரும் வரை தீர்வு காணலாம்.
84

முன்னைய காலத்திலிருந்த ஒரேயொரு மேற்பார்வை நிறுவனத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏனைய மேற்பார்வை நிறுவனங்களிலுள்ள பெளதீக வளங்களையும், மனித வளங்களை யும் வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் களத்திற்குப் பயன்படுத்தும் திட்டம் முன்வைக்கப்படவேண்டும்.
முன்னைய ஆசிரியர்களின் நிலை:
முன்பு பாடசாலை ஆசிரியர்கள் குருசிஷ்ய பாரம்பரிய முறையில் தங்கள் மாணவர்களைப் பொறுப்பேற்றார்கள். இம் மாணவர்கள் நலனுக்காக தங்களை அர்ப்பணித்தார்கள். சேவை மனப்பான்மையுடன் கற்பித்தார்கள். ஆசிரியர்களை மாணவர்கள் தெய்வமாகப் போற்றினார்கள். மாணவர்களால் ஆசிரியர்கள் பெருமை பெற்றார்கள். நிமிர்ந்து நின்றார்கள். ஆசிரியர்களால் மாணவர்கள் உயர்த்தப்பட்டார்கள். இன்று பாடசாலை மாணவர்களை ஆசிரியர்கள் முழுதாக பொறுப்பேற்க வில்லை. பொறுப்பில் தனியார் கல்வி நிலையமும் இணைந்து நிற்கின்றது. இதனால் மாணவர்களது கற்றல்நேரம் வீணடிக்கப் படுகின்றது.
கற்றல் நிலை (Learning stage) பல வகை மாணவர் ஒரு நிலையில் கூடிக் கற்காததனால், கற்பிக்கும் இடமெல்லாம் ஓடி அலைகிறான். இதனால் அவனது உடலுக்கு உறுதி தரும் விளையாட்டு, உடற்பயிற்சி அற்று வாழும் நிலை உருவாகியுள்ளது. அதேபோல் அழகியல் கற்கைக்கு, உயர்வுக்கு இடமில்லாமல் அலைகின்றான். உள வளம், உடலுறுதி நிலை பாதிக்கப்படுகின்றது. இது மாணவன் தனது முழுமையான வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்ய தடையாகின்றது.
மேற்காட்டிய நிலை மாற்றப்பட வேண்டும். க.பொ.த உயர்தரக் கற்கைக்கு சிறிது காலம் தனியார் கல்வி நிலையக்கற்கை அனுமதிக்கப்பட்டாலும், தரம் ஒன்றிலிருந்து தரம் பதினொன்று வரை தனியார் கல்வி நிலையத்தில் மாணவர்கள் கற்கச் செல்வது தடுக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாகின்றபோது மாணவர்களை நிச்சயமாக ஆசிரியர்கள் பொறுப்பேற்றேயாக
85

Page 45
வேண்டியிருக்கும். இவர்கள் தற்போதுள்ள மாதிரி தங்கள் பொறுப்பைத்தட்டிக் கழிக்க முடியாது. ஆசிரியர்கள் கற்பித்தலில் முழுப் பொறுப்புடனும், அதிகாரத்துடனும் செயல்படும் சூழ்நிலை உருவாகியே தீரும். எமது வடக்கு-கிழக்கில் வன்னி மாவட்டம் மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலை, யாழ்ப்பாணத்திலுள்ள கிராமப்பாடசாலை ஆசிரியர்கள் பாராட்டப்படவேண்டும். மாணவர்கள் நல்ல சித்தியுடன் நல்ல விழுமியம் உடையவர்களாகக் காணப்படுகின்றார்கள். இதற்கு அவ்வாசிரியர்களும், பாடசாலையும் தனியாக அவர்களைப் பொறுப்பேற்கின்றமையே காரணமாகும்.
பாடசாலையின் உள்ளக மேற்பார்வை:
பாடசாலை மேற்பார்வை நிறுவன நிலையிலான உள்ளக மேற்பார்வையாக்கப்படலாம். இது அர்த்தமானது, தொடர்ச்சி யானது ஆசிரியர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு சக பாடிகளாக இணைந்து மேற்பார்வைச் செயற்பாட்டில் செயலாற்றலாம். இவ்வாறு செய்வதன் மூலம் வெளிநிலை மேற்பார்வைக்கு தற்போது செயலாற்றப்பட்டவர்கள் பாடசாலைகளில் இணைக்கப்படலாம். ஆசிரியர் பற்றாக்குறை, அதுவும் அனுபவமான ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைகளிலிருந்து பறித்தெடுக்கப்பட்ட நிலையை ஈடு செய்யலாம். நடைமுறையில் கூடுதலான ஆளணியினர்களை மேற்பார்வை கல்வி நிர்வாக நிறுவனங்களில் நிறுத்திய (Paper Appointment) கடதாசி நியமனத்தைப் போக்கி திறமையான ஆசிரியர்களை, அலுவலர் களை, ஆசிரியர், அதிபர்கள் ஆக்கலாம். இதனை இப்பதவிகளில் உள்ளவர்கள்தாங்களே இணைந்து வெறுமனே கடதாசி நியமனம் வகிப்பதை விட பாடசாலைகளில் சென்று எம் வடக்கு, கிழக்கு மாணவச் செல்வங்களுக்கு உதவுவோம் என மாறவேண்டும். ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்குவோம் என்று முன் வந்தால் அது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
கல்வி நிர்வாகமும், மறு சீரமைப்பும்:
எமது கல்வி நிர்வாகக் கட்டமைப்பும், ஆளணிப்படுத்தலும் மறு சீரமைக்கப்பட வேண்டும். இத்தகைய பொறுப்பு,
86

அனுபவம் வாய்ந்த கல்வி வாண்மைக்குட்பட்ட நிர்வாகக்குழு ஒன்றிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்கள் வடக்குகிழக்கு கல்வி, நிர்வாக அமைப்பு, ஆரம்பத்திலிருந்து இலங்கை கல்வி நிர்வாக சேவையை சேர்ந்தவர்கள் செயலாளர்களாக இருந்த காலங்களிலும், இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்தவர்கள் செயலாளர்களாக இருந்த காலங்களையும் ஒப்பிட்டு எக் கட்டங்களில் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், பெற் றோர்கள் பாடசாலைகளுக்கு இடையே சுமுக உறவு நிலவியது என்பது ஆராயப்பட வேண்டும்.
இது கல்வி ரீதியான நிர்வாகம் என்பதையும் கோவைகளையும் சட்ட திட்டங்களையும் மட்டும் பேணி ஆசிரியர், அதிபர், மாணவர்கள், பெற்றோர்களது மனநிலை, கல்வி மனப்பாங்கு களைக் கருத்திற் கொண்டு ஊக்குவிக்கும் நிர்வாக முறைமை உருவாக்க வேண்டும். எமக்குத்தேவைப்படுவது கல்வி ரீதியான நிர்வாகமே (Acadamical Administration) தவிர நிர்வாக ரீதியான (Administrative administration) நிர்வாகம் அல்ல என்பதைக் கருத்திற் கொண்டு பொருத்தமானவர்கள் பொருத்தமான இடத்தில் நியமிக்கப்படவேண்டும். கல்விச் செயலாளர் தெரிவு, மாகாண கல்விப்பணிப்பாளர் தெரிவு, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவு ஆகியவற்றில் கல்வி நிறுவனம், நிர்வாக நிறுவனம் என்பதைக்கருத்திற் கொண்டு அதற்குரிய பிரமாண அடிப்படை யில் ஒரு நேர்முகத்தேர்வுக்குழுவினால் தெரிவு செய்யப்படுவது பொருத்தமாக அமையும். இதே போலவே கல்விக்குழு இயங்கும் மேலதிக மாகாண கல்விப்பணிப்ப்ாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவுகளும் செயலாளர் விருப்பத்திற்கு அவரது பேனாவால் செய்யப்படாது விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகக் குழுவால் பிரமாண அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆசிரியர் வளப்பகிர்வும் ஆசிரியர் பயிற்சியும்:
கல்வி நிர்வாகத்தில் கல்வி நிறுவனங்களாய் பாடசாலைகள்
எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளானவை, ஆசிரியர் வளப் பகிர்வும், ஆசிரியர் பயிற்சியும் ஆகும். எங்கள் மாகாணத்திலுள்ள
87

Page 46
முக்கிய பிரச்சினை ஆசிரியர் வளப்பகிர்வை உரிய முறையில் பகிர்ந்து அளிக்காமையாகும். இந்நிலையுடன் சேர்ந்து ஆசிரியர் பற்றாக் குறையும் மாணவர் கற்றலில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சில மாவட்டங்களில் கூடிய ஆசிரியர்களும் சில மாவட்டங்களில் குறைந்த ஆசிரியர்களும் உள்ளனர். இதனை அகற்றுவதற்கு முன்பு அகில இலங்கை ஆசிரியர் சேவையாக்கப் பட்டது போல, ஆசிரியர் சேவை வடக்கு - கிழக்கு சேவையாக்கப் பட வேண்டும். முன்பு ஆசிரியர் சேவைக்கு உட்பட்டவர்கள் இலங்கையின் எப்பகுதியிலும் கடமையாற்ற வேண்டுமென் றிருந்தது. வடபகுதி ஆசிரியர்கள் தென்பகுதியில் 07 வருடங்ஸ் கடமையாற்றிய பின்பே சொந்த மாவட்டத்திற்கு இடமாற்றப் பட்டார்கள். அதே மாதிரி குறிப்பிட்ட காலம் எங்கு வெற்றிடம் உண்டோ அப்பகுதி, அப்பாடசாலை வெற்றிடமாக விளம்பரப் படுத்தப்பட்டு பாடசாலை மட்ட நியமனம் (School Based Appointment) விண்ணப்பம் கோரப்படவேண்டும். அங்கு ஆசிரியர்கள் குறிப்பிட்ட காலம் சேவையாற்ற வேண்டுமென நியமனப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு நகரப்பகுதியில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கிராமப் பகுதிகளுக்கு நகர்த்தப்பட வேண்டும். இச்செயற்பாட்டில் கண்டிப்பாக அரசியல் நிர்வாக, செல்வாக்கு இல்லாமல் பிரமாண அடிப்படையில் இவ்வாசிரியர் வளப்பகிர்வு மாணவர் கல்விச் சேவையை அடிப்படை யாகக் கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.
கல்வி அலுவலர், அதிபர்கள் பகிர்வு:
இதேபோல் கல்வி அலுவலர், அதிபர்களும் இடமாற்றம், பகிர்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். முன்பு கல்வி அலுவலர்கள் இலங்கையின் எப்பகுதிக்கும் மாற்றப்பட்டார்கள். தற்போது குறிப்பிட்ட மாவட்டங்களையே கருத்திற் கொண்ட வர்களாக அதிகாரிகள் உள்ளனர். ஆனால் இவர்கள் ஆசிரியர்களை தூர இடங்களுக்குச் சென்று சேவையாற்ற வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். அவர்களுக்கு முன்மாதிரியாக தங்கள் தூர இடங்களில் சென்று சேவையாற்ற முன்வராதபடியால் வடக்குகிழக்கு கஷ்டமான வன்னி மாவட்டங்களில் தகுந்த கல்வி அலுவலர், அதிபர்கள், ஆசிரியர்களை நியமிக்க முடியாதுள்ளது.
88

கல்வி அலுவலர் சேவையும் சிறப்புத்தேர்ச்சியும்:
இந்தக் கல்வி அலுவலர்கள் கடந்த காலங்களில் ஒரு சேவை யிலிருந்து இன்னொரு சேவைக்கு மாறிக்கொள்ளும் நிலை காணப் பட்டது. அந்நிலையை நிறுத்துவதன் மூலம் அந்தந்தச் சேவையை சிறப்புடைய தாக்க முடியும். கல்வி வெளியீட்டுத் திணைக் களத்தில் நூல் எழுத நியமிக்கப்பட்டவர்கள், விசேட கல்வி அதிகாரிகள், விஞ்ஞான தொழில்நுட்ப அலுவலர்கள் பணிப் பாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆசிரியர் பயிற்சி கலாசாலை யில் விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டார்கள். அதிபர்கள் கல்வி நிர்வாகத்துறைக்கு மாறிக் கொண்டமையால் அந்தந்ததுறை பாதிக்கப்பட்டதுடன், பொது நிர்வாகத்துறையிலும் அனுபவ மற்று கல்வி நிர்வாகத்தைச் சிக்கலாக்கிய தன்மை காணப்பட்டு வந்தது. ஆதலால் எத்துறையில் சேர்க்கப்பட்டார்களோ அவர் களால் அத்துறையை வளர்த்தெடுக்கப்பட பயன்பட வேண்டும்.
மாறிக்கொள்ள இடமளிக்கக்கூடாது.
மரபு வழி வதிவிட ஆசிரியர் பயிற்சி:
ஆசிரியர் பயிற்சியைப் பொறுத்த மட்டில் எல்லா ஆசிரியர் பயிற்சியும் (ஆசிரியர் தொழிலுக்கு முன்பும், ஆசிரியர் தொழிலின் போதும்) மரபு வழியிலான வதிவிடப் பயிற்சியளிக்கப்பட வேண்டும். தற்போதைய கல்வியியல் கல்லூரி ஆசிரியருடைய பயிற்சிக்கு அமையவும், முன்னைய02 வருட உள்ளக பயிற்சிக்கு அமையவும் ஆசிரியர்கள் பயிற்சி பெறக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். அதேபோல் தொலைக்கல்வி போன்ற பயிற்சி நெறிகள் நீக்கப்பட வேண்டும். (Distance Education) ஆசிரியர்கள் கற்றுக்கற்று கற்பிப்பதால் இரு நிலையிலும் (கற்றவையிலும் கற்பித்தலிலும்) விருத்தி காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் வாண்மை விருத்தியையும், கல்வி விருத்தியையும் முழுநேரமாகக் கொள்ள வேண்டும். ஆசிரியர் கற்பித்தலில் தர விருத்தியையும், மாணவரது கல்வி உயர்வையும் தற்போது செயற்படும் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை, கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள், மாகாணக் கல்வி நிர்வாகத்தின் கீழ் அமைய
வேண்டும். இவ்வாறு அமைவதன் ஊடாக மேற்காட்டிய
89

Page 47
பிரமாண அடிப்படையில் அதிபர், விரிவுரையாளர்கள், பீடாதிபதி நியமனங்கள் நேர்முகத் தேர்வுக் குழுவினால் தெரிவு செய்யப் பட்டு நியமிக்க வேண்டும். இவ்விரு நியமனங்களிலுள்ள அதிபர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் முழு நேரப் பயிற்சிக்கு உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் பயிற்சி பெறும்
நிலை உருவாக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியும், கல்வியியல் கல்லூரியும்:-
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கல்வியியல் கல்லூரிகள், அமைவிடங்கள், செயற்பாடுகள் கருத்திற் கொள்ளப்பட வேண் டும். திட்டமிட்டு மூடப்பட்ட ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள் (கொழும்புத்துறை, நல்லூர், திருநெல்வேலி) மீண்டும் அதே இடங்களில் திறக்கப்படுவதுடன், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பழைய இடத்திற்கு மாற்றப்பட வேண்டும். மேலும் வன்னிப் பிராந்தியத்தில் மன்னார், முல்லைத் தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சிப்பதற்காக தனியான பயிற்சி நிறுவனம் பெருந்தொகை நிதி ஒதுக்கீட்டில் வன்னி மாவட்டத்தின் மத்தியில் அமைய வேண்டும். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அங்குள்ள ஆசிரியர்களது பயிற்சித் தேவையை நிறைவேற்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், கல்வியியல் கல்லூரிகள் புதிதாக அங்கு நிறுவப்படவேண்டும்.
சேவையின்போது ஆசிரியர் பயிற்சி
சேவையிலுள்ள ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க, புதிதாக உருவாக்கப்படவுள்ள ஆசிரிய மைய நிலையங்களது செயற்பாடும் வினைதிறனும், விளைதிறனும் உடையதாக அமைத்துக் கொள்ளப் படவேண்டும். முன்பு நான் சுட்டிக் காட்டியது போல் ஆசிரிய மைய நிலைய முகாமையாளர்கள் பிரமாண அடிப்படை யில் கல்வி வாண்மை விருத்திக்கும் முன்னுரிமையளித்து தேர்வுக் குழுவால் நியமிக்கப்படுவதுடன், அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் யாவும் வதிவிடப் பயிற்சியாக (சிறிது காலமாக இருந்தாலும்) அளிக்கப்படவேண்டும்.
90

மொழிவள நிலையங்கள்:-
ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆசிரியர் மொழிவள நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக ஆங்கில மொழிவள நிலையம் வெளிநாட்டு உதவியுடன் விருத்தியாக்கப் படவேண்டும். ஆங்கில ஆசிரியர்களது கற்பித்தல் தரம் மேம்பாடு காணப்படவேண்டும். இது அவசரமான செயல்பாடாக அமைய வேண்டும். கொழும்பிலும், கண்டியிலும் அமைக்கப்படவுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் (British Council) யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு. திருகோணமலை ஆகிய இடங்களில் உருவாக்கப் படவேண்டும். ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி விருத்திக்கு 03 மாத அல்லது 06 மாத வதிவிடப்பயிற்சி ஆங்கில வள நிலையத்தினால் அளிக்கப்படவேண்டும்.
பயிற்சியினை அளிப்பதற்கு வெளிநாட்டு ஆங்கில ஆசிரியர்க ளைத் தருவிக்கலாம். எமது மாகாணத்திற்கு வேறு மாகாணங்களி லுள்ள ஒய்வுபெற்ற ஆங்கில விரிவுரையாளர்கள், ஆங்கில ஆசிரியர்களைப் பயன்படுத்தலாம். அல்லது எங்கள் மாகாணத் தைவிட்டு புலம் பெயர்ந்த கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்ரேலியா போன்ற இடங்களிலுள்ள ஆங்கில ஆசிரியர்க ளைக் குறுகிய காலத்திற்கு பயிற்சியளிக்க உதவ அழைக்கலாம். இவர்களைக் கொண்டு புதிதாக நியமிக்கப்படும் ஆங்கில ஆசிரியர்களுக்கும் வதிவிடப் பயிற்சிகள் வழங்கலாம்.
தமிழ் மொழிக் கற்கை;- *
எங்கள் தாய் மொழியாம் தமிழ் மொழிக் கற்கையும், கற்பித்தலும் தரத்தில் அருகிவரும் நிலை காணப்படுகின்றது. இதனை விருத்தி செய்ய தமிழ் மொழி வள நிலையத்திலும் கூடிய கவனம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடைய முதுசொத்தாகிய ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தின் செயற்பாட்டை வடக்கு கிழக்கு முழுமைக்கும் விரிவாக்க வேண்டும். இலக்கண, இலக்கிய பாட கற்பித்தலில் கூடிய கவன மெடுக்க வேண்டும். பழைய கலைத்திட்டத்துடன் சேர்ந்த புதிய கலைத்திட்ட விருத்திக்கேற்ப துரித விருத்திக்காய கலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். மொழியில் எமது தமிழ்மொழியின்
91

Page 48
தர வீழ்ச்சியைக் காப்பாற்றி, புதிய விருத்திக்கு வழிவகுக்க வேண்டும். இதற்குத் தமிழ் மொழியில் விசேட பயிற்சிபெற்ற ஆசிரியர்களின் தேவை மிக அவசியம்.
கலைத்திட்டமும், மாகாண கல்வி நிறுவகமும்:-
கலைத்திட்ட உருவாக்கம், அமுலாக்கம் ஆகியவற்றுக்கு தேசிய கல்வி நிறுவகம் உருவாக்கப்பட்டதுபோல் எமது வடக்கு கிழக்கு மாகாணத்திற்கும் ஒரு மாகாண கல்வி நிறுவகம் அமைக்கப்பட வேண்டும். இந்நோக்கம் மத்திய அரசின் எந்தவித கட்டுப்பாடும், தலையீடும் இல்லாமல் தனித்துவமான சுதந்திரத்துடன் மாகாண கல்வி நிறுவகமாக இயங்கவேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக தேசிய கல்வி நிறுவகத்தினால் தமிழ்மொழிக் கல்விக்கான நிர்வாக அலகு கலைத்திட்டத்தில் விசேட கவனம், ஆளணிப்படுத்தல் இல்லாத குறைகள் நீக்கப்படவேண்டும். அங்கு கடமையாற்றிய அநுபவம் வாய்ந்த தமிழ்மொழி உத்தியோகத்தர்கள் இந்நிறுவகத் தில் நியமிக்கப்படலாம். அவர்களது ஆலோசனைகள் பெறப்பட லாம். அவர்களது சேவையும், அர்ப்பணிப்பும் இந்நிறுவகத்திற்கு அவசியம்.
மாகாண சூழலும், கலைத் திட்டமும்:-
எங்கள், சூழலுக்கேற்ப உடல்வள விருத்தி கருத்தில் கொள்ளப் படவேண்டும். எங்கள் மாகாணச் சூழலுக்கேற்ப மத ஆத்மீகக் கட்டுப்பாட்டிற்கிணங்க கலைத்திட்டமும் உருவாக்கப்பட வேண்டும். தரம் ஒன்றிலிருந்து யோகாசனம், உடற்பயிற்சி, தியானம் என்பன கட்டாயமாக்கப்படவேண்டும். மத வழிபாடு வீட்டிலும், பாடசாலையிலும் காலையும், மாலையும் கட்டாயம் ஆக்கப்படவேண்டும். ஞாயிறு அல்லது வெள்ளிக்கிழமைகளில் தம்ம பாடசாலை இயங்குவது போன்று சமயப் பாடசாலைகளை மாணவர்களுக்குக் கட்டாயப்படுத்தலாம்.
ஆயுள்வேத மூலிகையும், உடல்நலக் கல்வியும்:-
அதேபோல் இளம் வயதிலிருந்து ஆயுள்வேத மூலிகைப் பயன் பாட்டை எமது மாணவர் சமுதாயம் அறிந்திருக்கவேண்டும்.
92

ஒவ்வொரு மாணவர்களும் தத்தமது வீட்டில் தோட்டம், மூலிகைத் தோட்டம் பேணவேண்டும். தற்போது பயன்படுகின்ற இரசாயன பசளையின்றி இயற்கைப் பசளையின் பயன்பாட்டைக் கற்றுக்கொடுத்து இவ்வுற்பத்தியில் விருத்தியாக்குவதற்கு கற்றுக் கொடுக்கவேண்டும். உடல்நலம், சுகாதாரம் நலம் ஆகியவற்றுக் குரிய பழக்க வழக்கங்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் கற்றுக் கொடுக்கப்படவேண்டும். அத்துடன் முதலுதவிச் சிகிச்சை முறை களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். -
மாவட்டமும், நிர்வாக நிதி அதிகாரமும்:-
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிர்வாக நிதி அதிகாரம் கல்வி நிர்வாக நிறுவகங்களைப் பொறுத்தமட்டில் முன்னைய நிலை மீள உருவாக்கப்படவேண்டும். 1996ம் ஆண்டின் பின்னர் மாவட்ட நிதி நிர்வாக அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணத்தில் இலங்கை நிர்வாக சேவைச் செயலர்கள் மாவட்டங்களிலிருந்து பிரித் தெடுத்து மையப்படுத்திக் கொண்டார்கள். இதனால் மாவட்டங் களில் அடி நிலையிலுள்ள அதிபர்கள், ஆசிரியர், மாணவரது சேவையைப் பெறமுடியாது போனது. 08 மாவட்ட கல்விப் பணிப்பாளர்களது அதிகாரத்தை ஒரேயொரு மாகாண கல்விப் பணிப்பாளரும் செயலாளரும் எடுத்துக்கொண்டார்கள். இதனால் மாவட்ட உள்ளக கட்டமைப்பிற்கு அதன் செயல்பாடு சிக்கலா கியது. இச்செயல்பாட்டால் பாடசாலைக்கு அல்லது அலுவலகத் திற்கு வேண்டிய ஆளணிப்படுத்தலில் உடன் தீர்மானமெடுக்க முடியாத நிலை உருவாகியிருந்தது. ஆசிரியர்கள், அதிபர்கள் தங்களது அறிவை விருத்தியாக்குவதற்கு, மத்திய அமைச்சின் செயலமர்வுகளில், கலந்துரையாடல்களில் பங்கு பற்றிப் பணம் பெறுவதில் கஸ்டம் ஏற்பட்டது.இதனால் அவர்கள் பங்குபற்றாது விட்டனர். பங்குபற்றாது விட்டமை எமது மாகாண மாணவர் களது அறிவுத் திறனுடன் இணையாது போட்டிப் பரீட்சையில் குறைந்த புள்ளிகளைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளியது. குறைந்த புள்ளி பெற்றமையால் எமது பல்கலைக்கழகத் தெரிவுக்கு, முன்பிருந்த திறமை அடிப்படையில் தெரிவு செய்யும் நிலை வேண்டாமென்று மாவட்ட அடிப்படையில் தெரிவு
93

Page 49
செய்யும்படி இரந்து கேட்கவேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இந்நிலை மாற்றப்பட வேண்டும். 08 மாவட்டங்களது கல்விப் பணிப்பாளர்களின் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் பங்கீடு செய்யப் படவேண்டும். அதிகாரமற்று நிறுவப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மகாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப் பாணம் போன்ற இடங்களில் உருவாக்கப்பட்ட மேலதிக மாகாண கல்விப் பணிமனை (மேலதிகம்) ஒழிக்கப்பட வேண்டும். இப்பணிமனை உருவாக்கம் நிதிநிலை, கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களது ஆற்றல், அநுபவம், அறிவு ஆகியவற்றை முடக்கிவிட திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். இந்நிறுவனம் ஒழிக்கப்படவேண்டும். அவற்றுக்கு நிதி நிர்வாக தொழில்நுட்ப அதிகாரம் அளிக்கப்படவேண்டும். மாகாண நிறுவனம் ஒரு இயைபாக்கம் செய்யும், வழிகாட்டும் ஆலோசனை நிறுவனமாக இயங்கலாம். சாதாரணமாகச் செய்யும் நடைமுறை வேலைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம், பாடசாலைகளில் நியமனம், இடமாற்றம் என்பனவற்றில் அவை அதிகாரத்துடன் விளங்குமாக இருந்தால் அதன் கற்றல், கற்பித்தல் மேம்படும்
என்பது திண்ணம்.
ஒரு மாகாணக் கல்விப் பணிப்பாளரால் கல்விமேம்பாட்டில் ஏற்பட்ட தாக்கம்:-
பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு தனது நண்பரை, உறவினரை, ஊரவரை மாகாண கல்விப் பணிப்பாளர் ஆக்கியது. மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஒய்வுபெற்றும், தனது முன்னைய பதவி நிலையிலும் குறைந்த பதவியில் கல்வி அமைச்சில் கடமையாற்றி வருகின்றார். அதன் நோக்கம் தான் என்ன? இவர் தான், தனது பதவிக் காலத்தில் நல்ல இளம் தலைமுறையினரின் அனுபவம், ஆற்றல், வாண்மை விருத்தி, கல்வி விருத்தி கொண்ட இலங்கை நிர்வாகசேவை உத்தியோகத்தர்களை வைத்து, மாகாண சபை கல்வி நிர்வாகத்திலிருந்து அகற்றிக்கொள்ளக் காரணமாக இருந்தவர். தனது திணைக்களத்திலிருந்து திரு. க. சுப்பிரமணியம், திரு. சிவகுமாரன், திருமதி. சிறிஸ்கந்தராசா, ஜனாப் முகமத்
94

தம்பி, திரு. வரத சீலன், கலாநிதி. நா. தணிகாலசம், திரு. மனோகரன், ஜனாத் சகாப்தீன் ஆகியோரை மனவிரக்தியால் வெளியேற வைத்தவர். இதனால் மாகாண கல்வி நிர்வாகத்தில் பெரிய தொய்வும், இடைவெளியும் ஏற்பட்டன. இவர் தனிப் பட்ட விருப்பு வெறுப்புடன் சேர்ந்து மனித வளங்களை வீணடித்தவர். மனிதவளங்கள் விலகிக் போகக் காரணமாக இருந்தவர். மாவட்டங்களுக்கு வாகனங்களைக் கொடுக்காது, வேண்டிய தொலைபேசிக் கட்டணங்களை வழங்காது, வாகனங் களுக்கு வேண்டி எரிபொருள் நிதி ஒதுக்கீடு அளிக்காது, வலயங் களுக்கு வேண்டிய ஆளணிகளைக் கொடுக்காது, சகல நிர்வாகச் செயற்பாடுகளையும் மையப்படுத்திய பெருமை இவரைச் சாரும்.
நிதிச் செயற்பாடும், கணக்குப் பரிசோதனையும்:-
பாடசாலை நிதிச் செயற்பாட்டை பரிசீலிக்க நல்ல கணக்குப் பரிசீலனை திணைக்களம் அந்தந்த மாவட்டங்களில் உருவாக்கப் படவேண்டும். அரசாங்க நிதி உதவி, அரச சார்பற்ற நிறுவனங்கள் அளிக்கும் நிதியுதவி, பெற்றோர்கள் பழைய மாணவர் சங்கம், வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் நிதி யாவும் எவ்வாறு செலவு செய்யப்பட்டன, அவற்றின் மூலம் எவ்வாறு வசதியாக வாழ வைக்க உதவின என்பன ஆராயப்படவேண்டும். இத்தகைய கணக்கு பரிசோதனை மூலம் உண்மைகள் வெளிவரவேண்டும். ஒரு பாண்துண்டு கூட தன் பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்க வழியில்லாத பெற்றோரிடம் கஸ்டப்படுத்தி வாங்கி, சேகரித்த பணங்கள் அதிபர்களால் உண்மையாகச் செலவு செய்யப் பட்டனவா? என்பது கண்டறியப்படவேண்டும். ஊழல்கள்
ஒழிக்கப்படவேண்டும்.
காலத்தின் தேவைக்கேற்ற கல்வி:-
சர்வதேசத்திற்கு பொருத்தப்பாடு உள்ளவர்களாக, தனக்கும் பொருத்தப்பாடுள்ளவர்களாக எமது இளம் தலைமுறையை உருவாக்க கணனிக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி, ஆங்கிலக் கல்வி மிகமிக அவசியம். இக்கணனியை போதிக்க ஆசிரியர் களுக்கு கணனிப் பயிற்சியளிக்கப்படவேண்டும். அவர்கள்
95

Page 50
மாணவர்களுக்கு தாம் பெற்ற பயிற்சி மூலம் கணனிக் கல்வியை போதிக்க வெளிநாட்டில் சென்று கற்றுத்தேர்ந்த கணனிக் கல்வி விற்பன்னர்கள் நம் நாட்டை நாடி வரவேண்டும். தங்களை அர்ப்பணித்து தாயகப் பற்றுடன் எங்கள் மாணவர்களுக்கு கல்வியளிக்க வழிவகை காணவேண்டும்.
வாசிப்புப் பழக்கமும், அறிவுத் தேடலும்:-
தனியார் கல்வி நிலையம் ஒழிக்கப்பட்டு பழைய நிலை போல் மாணவர்கள் 02 நேரமும் பாடசாலைக் கற்கைக்கும், வதிவிடக் கற்கைக்கும் (சில பாடசாலைகளில் மட்டும்) உட்படுத்தப்படுவ தனால் வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டி அறிவுத் தேடலை கூட்ட முடியும். அறிவு ஆழமாகவும், அகலமாகவும் விதைக்கப்பட வேண்டும். சமகால தேவைக்கேற்ப எம் மாகாண மாணவர்கள் தம்மை வளர்த்துக்கொள்ளவேண்டும். அவர்கள் இன்ரநெற், கல்விசார் ஈமெயில் ஊடாக ஏனைய நாடுகளில் உடனுக்குடன் வெளிப்படுத்தப்படும் விடயங்களை தங்கள் தங்கள் பாடப் புலன்களில் பெற்றுக்கொள்ளலாம்.
நிர்வாகச் செயற்பாடும், கணனிப் பயன்பாடும்:-
மாகாணக் கல்வி நிர்வாகத்தில் மேல்நிலையிலிருந்து அடிநிலை வரை கல்வி முகாமைத்துத் தகவல் முறைமை விருத்தியாக்கப் படவேண்டும். மாகாண நிர்வாகம் எந்த பாடசாலை விபரத்தினை யும், தகவல் தரவுகளையும், ஈ-மெயில் ஊடாக உடன் பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். இதனால் நிர்வாக அலுவல கங்களில் மேசையில், அலுமாரியிலும் கோவைகளை அடுக்கி வைத்து, குவித்து வைத்து நிர்வாகத்தை காலதாமதமாக்கும் மரபுவழி நிர்வாகமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு ஆசிரியர், அதிபர், பெற்றோர், அலுவலர்கள் யாவரது சகல நிர்வாக விடயங்களுக்கும் உடன் தீர்வு காண்பதுடன், அவர் உரிய காலத்தில் ஓய்வு ஊதியம் பெறுவதை உறுதி செய்யவும் முடியும்.
தமிழ் உலகம்
செப்டம்பர், ஒக்டோபர், நவம்பர்-2004
96

"அனைவருக்கும் கல்வி’ என்ற கோட்பாடு எந்தளவிற்கு அடிமட்டம் வரை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
திட்டமிடல் என்பது “குறிப்பிட்ட ஒரு விடயம் செய்யப்படுவதை அல்லது அடையப்படுவதை விளக்கும் ஒரு செயன்முறை அல்லது நடைமுறையா கும்.' இந்த அடிப்படையில் வடக்குகிழக்கு மாகாண கற்றல், கற்பித்தல் கருமத் தொடர் அதன் மூலம் அடையப் படும் மாணவனை சமூகத்திற்கு பொருத்தப்பாடுள்ள மனிதனாகக் கைய ளித்தல் என்ற அடைவு எந்தளவிற்கு அத்துடன் 'அனைவருக்கும் கல்வி' என்ற கோட்பாடு அடிமட்டத்திற்கு எந்தளவிற்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளது?
இவற்றைப்பெற்றுக் கொடுக்க நியம முறைக்குட்பட்ட கல்வி நிறுவனங்கள் இவற்றுடன் தனியார் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றுடன் பள்ளிக்கூடங்களுக்கு உதவும் வசதிகளை
வழங்க மேலாண்மை (Hierachey) நிறுவனங்களும் உள. இவைகள்
97

Page 51
யாவும் மேலே நோக்கிய குறிக்கோள்களையும், இலக்குகளையும் அடையச் சிறந்த வழிமுறைகளை உருவாக்கிச் செயற்படுகின் றனவா? என்பதைப் பகுப்பாய்வு ரீதியாக நோக்க வேண்டி யுள்ளது. இந்நிறுவனங்கள் தேவையான மனித வளங்களை, பெளதீக வளங்களைப் பெற்றுள்ளனவா? அவற்றில் இருந்து உச்சப்பயன்பாட்டைப் பெற்று பயன்தரு நிறுவனமாக இயங்கு கின்றனவா? நிறுவன ஆளணியினர் தூண்டப்படுகின்றார்களா? ஊக்குவிக்கப்படுகின்றார்களா? அர்ப்பணிப்பு, ஆர்வத்துடன் செயற்படுகின்றார்களா? என்பனவற்றை ஆய்தல் அவசியமாகும்.
பாரம்பரிய கற்றல், கற்பித்தல் முறையான, முறைமை சாரா முறைமையில் முறைகளைப் போக்கி, முறைமைக் கல்வியில் மட்டும் வைத்துள்ள செயற்பாட்டு நம்பிக்கை எந்தளவிற்கு கல்வியில் வெளியீட்டை அளித்துள்ளது? நவீன கல்வி ரீதியான மேற்பார்வை, ஆய்வுகள், பயிற்சி முறைகள் எந்தளவிற்கு அடிமட்டநிலையில் கல்வியை வளர்க்க உதவியுள்ளன. பொதுவான மனித விழுமியங்கள், கல்விப் பெறுமானங்களை
எந்தளவிற்கு வளர்த்துள்ளன?
இவ்வினாக்களின் அடிப்படையில் திட்டமிடல் நோக்குடன் நிறுவனங்களின் உண்மையான குறிக்கோள் தொகுதியொன்றை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்குக் கூடுமான அளவு திறமை யானதும், வேண்டியதும், எமது மாகாணத்திற்குப் பொருத்த மானது மான வழிமுறைகளைக் காண உதவவேண்டும். நாம் எதை அடைய வேண்டும்? எவ்வாறு அடையவேண்டும்? இதுவே திட்டமிடலின் ஆதாரம். "நீங்கள் எங்கே போகிறீர்கள் என்பது உங்களுக்குச் சரியாகத் தெரியாவிட்டால், சிக்கலான பாதைகளில் நீங்கள் இலகுவாக தொலைந்து போவீர்கள்’’ என்பது திட்டமிடலின் அடிப்படைக் கருத்து.
திட்டமிடலின் முக்கியமான பிரச்சினைகள்
1. உறுதிப்பாடான நிறுவனக் கட்டமைப்பு இன்மையும், ஆளணிப்படுத்தல் முறையாக இன்மையும் இவற்றின் அடிப்படையில்.
98

2.
(அ)
(ஆ)
(இ)
(FF)
(அ)
(ஆ)
இருக்கும் கல்வி ஆளணியினர் தொகைக்கேற்ப கல்வி நிர்வாக மேற்பார்வை நிறுவனங்களின் அளவைக் குறைக்கலாமா? தேசிய மட்டக்கல்வி நிர்வாக வலய முறைமையுடன் எம்மை ஈடுபடுத்த வேண்டுமா? அல்லது எங்களுக் கேற்ற முறையை உருவாக்குவதா? கல்வி நிர்வாக மாவட்டங்கள், கோட்டங்கள், நிர்வாக மாவட்டங்களுக்கு ஒத்ததாக இருப்பதா அல்லது கோட்டங்களை (அதாவது தொகையில் குறைந்த பள்ளிக் கூடங்கள் கொண்ட கோட்டங்களை கொத்தணி முறைக்குட்படுத்தி நிர்வகிப்பதா இல்லையா? இவற்றில் அரசியல் தலையீடு வருவது தவிர்க்க முடியாதா? அதனைக் கருத்தில் கொள்ளாமல் விடுவதா?) பள்ளிக்கூடங்களில் நல்லவை கற்றல், கற்பித்தல் கருமத் தொடர் நடைபெற அவற்றுக்கு தலையீடின்றி, தற்சுதந்திரம், தன்னதிகாரம் கொண்டு இயங்க வழி அமைப்பதா?
தகவல்கள், தரவுகள் முறைமையும் பகுப்பாய்வின்மையும்!
பள்ளிக்கூடம் முதல் கல்வி அமைச்சுவரை தகவல்கள், தரவுகள் முறைமையை வினைத்திறமையுடையதாக வும், உகந்த தீர்மானம் மேற்கொள்வதற்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதற்கும் வேண்டியவர் களாக உள்ளோம்.
இம்முறைமையில் எங்கள் முறைமை குறைவுடையது. காரணம் இத்துறையில் ஈடுபடுத்தப்படும் திட்ட அலுவலர்கள் ஆசிரிய சேவையில் இருந்தே நியமிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களுக்குப் போதிய பயிற்சியும்,
பொறுப்பும் அளிக்கப்படவில்லை. அவர்கள் ஊக்குவிக்
(g))
கப்பட்டுத் திட்டமிடல் சேவைக்கு உள்ளீர்க்கப்படல் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். w
இவர்களை மேற்பார்வை செய்பவர்கள் வழி நடத்து பவர்கள் திட்டமிடல் முறையில் அறிவு, பயிற்சி இல்லாதவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்களுக்கு
99

Page 52
3.
100
உள்ளூர், வெளியூர் பயிற்சி அளிக்க வழி காணப்பட வேண்டும். (ஈ) அதிபர்கள், ஆசிரியர்கள் இதன் பெறுமானத்தை விளங் காமல் உள்ளனர். சிலவேளைகளில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள், தரவுகளை அளித்து விடுகின் றனர். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தகவல்கள் கோருவதும், அவர்கள் வழங்குவதும் குழப்பத்தை உண்டு பண்ணுகின்றது. இதனால், வெற்றிகரமாகக் குறிக்கோள்களை அடைய முடியாதுள்ளது. இதனால், உருவாக்கப்படும் செயல் திட்டங்கள் குறித்த இலக்கை அடைய முடியாமற் போய் விடுகின்றது.
கணனிமுறையும் வலைப்பின்னல் முறையும் (அ) சர்வதேச ரீதியாக, உள்நாட்டு ரீதியாக இம்முறைக்கு
அப்பாற்பட்டுள்ளோம். (ஆ) இவற்றை விருத்தியாக்க எந்தெந்த முறையில் ஆக்க
நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.
தரவுகள், தகவல்கள், பகுப்பாய்வும் அவற்றினூடாக நல்ல தீர்மானம் மேற்கொள்ளலும், திட்டமிடலுக்கு உதவலும். (அ) நம்பகமான, உண்மையான தகவல், தரவுகளைப்
பேணல்
(ஆ) ஏதாவது மாற்றம் ஏற்படின் அவற்றை உடனுக்குடன்
அறியத் தரும் நிலை உருவாக்கல். (இ) தரவுகள், தகவல்கள் எல்லா மட்டங்களிலும் ஒரு தொடர்பை உள்ளக வலைப்பின்னல் முறை மூலம் உருவாக்கல். (ஈ) பள்ளிக்கூடங்கள், கோட்டங்கள், மாவட்டங்கள், அமைச்சு மட்டங்கள் யாவும் ஒன்றுக்கொன்றுடன் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி தொடர்பு கொள்ளக் கூடிய சூழலை உருவாக்கல்.
நிறுவனப் பகுப்பாய்வும் மீள் உருவாக்கமும்
(அ) நிறுவனத்தளக்கோலம், இடஅமைவு, பெளதீகச்சூழல், கட்டிட நிலை (அமைந்துள்ளவை, அமையப்போவது)

மனித வளநிலை, பெளதீக வளநிலை, பற்றிய பகுப்பாய்வு. (ஆ) எல்லா நிறுவனங்களுக்கமைய நில அளவு, கட்டிடங்கள், பெளதீகச் சூழல் பற்றிய படவரைவைப் பேணல், இப்பிரச்சினைகளில் தங்களின் அவதானிப்பையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம்.
பழைய முறையா? புதிய முறையா? பழைமையுடன் புதிய நல்ல அம்சங்களைச் சேர்ப்பதா?
திண்ணைப் பள்ளி முறையில் நல்ல குரு, சிஷ்ய பரம்பரை கற்றல், கற்பித்தல் முறை கேள்வி வழியான, மனனரீதியான கற்றல், நல்ல மனித விழுமியக் கையளிப்பு ஆழ்ந்த அகலமான பாடப்புல அறிவு, கிராம நகர வேறுபாடின்றி கிராமத்திலும் கட்டமைப்புள்ள நிறுவனக் கல்வி என்பன இருந்தன.
1950 களுக்கு முன்பு
இலவசக் கல்வியின் அடிப்படையில் கிராம தொகுதிகளுக்கு ஒர் மத்திய மகாவித்தியாலயம், நகர மோகம் குறைந்த அந்தந்தக் கிராமத் தொகுதிகளில் நல்ல கல்வியும் அமைந்தபடியால் அமைதியான ஆழமான கல்வி அமைந்தது.
1960 களுக்கு முன்பு
பள்ளிக்கூடங்கள் சுவீகரிக்கப்படு முன்பு தற்சுதந்திரம், தன்னதிகாரம் கொண்ட நிறுவனமாக இருந்தன. அரசியல் ரீதியாகவோ நிர்வாக ரீதியாகவோ தலையீடு இருக்கவில்லை. அதிபர் சர்வ அதிகாரம் படைத்தவர். ஆசிரிய நியமனம், ஆசிரிய மாற்றத்தில் அதிபருக்கு பூரண அதிகாரம், கல்வி மேற்பார்வை, ஆலோசனை வழங்க வெளி மேற்பார்வையாளர்கள் இல்லை. நிறுவன நிலையில் அதிபர், ஆசிரியர்கள் தம் பள்ளிக்கூடப் பிரச்சினைகளுக்கேற்ற செயற்பாடும், தீர்வும் அமைந்தன. கல்வித் திணைக்களத்தில் இருந்து ஒரே ஒரு உத்தியோகத்தர் வருடாந்த விபரத்திரட்டு திரட்ட வருகை தருவார். ஆசிரிய பயிற்சிக்கு மரபு ரீதியான இரு வருட வதிவிட பயிற்சி நல்ல
101

Page 53
கற்பித்தல் நுட்பம், கற்பித்தல் உத்திகள் வளர்க்கப்பட்டு கையளிக் கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் ஆழ்ந்த அறிவுத்தளம் படைத்து, அனுபவம் பெற்றிருந்தார்; சமூகம் அவரை ஏற்றிருந்தது.
1970 முதல் 1980 வரை
பள்ளிக்கூடங்கள் சுவீகரிக்கப்பட்டமை அவற்றின் தற்செயற் பாட்டில் பாரியதாக்கத்தை ஏற்படுத்தியது. ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் மூடப்பட்டமை, அதிபர்கள் அரசியல் செல்வாக் குடனும், போட்டிப் பரீட்சை மூலமும் நியமிக்கப்பட்டமை ஆசிரிய, அதிபர்கள் நிலையில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது மட்டும் அல்லாமல் நிறுவனச் செயற்பாட்டிலும் சிக்கல்களை உருவாக்கியது. இதனால் கூடுதலான கல்வி மேற்பார்வை செய்ய வேண்டிய தேவையை உருவாக்கியது.
1980 களின் பின்பு
1980 ஐ அடுத்து வந்த பத்து ஆண்டுகளில் உள்ள பிரச்சினைகள் புதியதொரு திசை திருப்பத்தையும் தொகுப்பமைப்பையும் வேண்டி நின்றன. 1981 ஆம் ஆண்டின் வெள்ளை அறிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஜனவரி முதல் கல்வி முகாமைத்துவக் கலாசாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. கூடுத லான கல்வி நிர்வாக நிறுவனங்களும், கல்வி மேற்பார்வை ஆளணியினர்களும், தோற்றுவிக்கப்பட்டனர். நல்ல அனுபவம் அறிவு, ஆற்றல்திறன் படைத்த ஆசிரியர்கள், அதிபர்கள் நிர்வாகச் செயற்பாட்டிற்குப் பள்ளிக்கூடங்களில் இருந்து பறித்தெடுக்கப் பட்டார்கள். அதிகாரச் செயற்பாடு கல்வி நிர்வாகங்களை நோக்கிய படை எடுக்க கவர்ச்சியாக்கியது பள்ளிக்கூடங்கள். கற்பித்தல் கருமத் தொடர்நிலையில் இருந்து அனுபவம், ஆற்றல் உள்ள மனித வளமற்றுக் காணப்படும் நிலைக்கு மாறியது.
ஆசிரியர்கள் முறையாகப் பயிற்றப்படாமல், அர்ப்பணிப்பு இல்லாமல் வியாபார நோக்குடன் கல்வியை அணுக இடம் அளித்தது. ஆர்வம் கொண்டு கூடுதலான விடயங்களைத் தேடி விரிவுரைச் செயற்பாட்டில் கற்பித்தல் தொடரப்பட்டது. தனியார் கல்வி நிலையம் பரீட்சைத் தேவையை நிறைவேற்றுவதாகவும்
O2

பணம் சம்பாதிக்கும் களமாகவும் மாறியது. கல்வி விலை பேசி காசுக்காக விற்கப்பட்டது பள்ளிக்கூட ஆசிரியர்கள் தமது வகுப்பு மாணவர்களை பொறுப்பேற்பதிலிருந்து விலகிக்கொண்டனர் மாணவர்கள் கல்விக்காக இரண்டு நிறுவனங்களில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உடல் உறுதி. உளவளச் செயற் பாட்டிற்கு நேரமில்லாது அங்குமிங்கும் அலைகின்றனர் அவர் களுக்கு கற்றல் செயற்பாட்டிற்கு நேரமில்லை. தங்கள் நேரத்தைக் கூடுதலாக கற்பித்தல் நடைபெறும் கருமத் தொடரிலேயே செலவழிக்கின்றனர்.
1990 இன் பின்பு
கல்வி நிர்வாக நிறுவனங்களின் தலைமை நிறுவனமாக அமையும் கல்வி அமைச்சுத் தொடக்கம் பள்ளிக்கூடம் வரை உள்ள நிறுவனக் கட்டமைப்பை உறுதிப்பாடானதாக்கும் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் நோக்கப்படுகின்றன கல்வி அமைச்சு நிறுவனம் திட்டமிடல் பிரிவு. கல்வி அபிவிருத்திப் பிரிவு, கல்வி ஆய்வுப் பயிற்சிப் பிரிவு, ஆரம்பக் கல்விப் பிரிவு கல்வி மேற்பார்வை, மதிப்பீட்டுப் பிரிவுகள் என்பன நிறுவப்பட்டு அனுபவமும், தேர்ச்சியும் உள்ள ஆளணியினர்களால் ஆளணிப்படுத்தப்பட்டுள்ளன. இவை
மாவட்ட மட்டத்துக்கு விரிவாக்கப்பட உள்ளன.
1990களுக்குப் பின்பு வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தோன்றிய அமைதியற்ற தன்மை கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியது. தேசிய ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட கொத்தணிமுறை, கோட்டக் கல்வி முறை ஒழிக்கப்பட்டு, வலய முறை அறிமுக மாக்கப் பட்டது. எமது மாகாணத்தைப் பொறுத்த மட்டில் அவற்றிற்கு போதிய ஆளணிப் பற்றாக்குறை உள்ளதால் அம்முறையும் செயற்படுத்தப் படாமல் உள்ளது.
1996 இன் முற்பகுதியில் கல்விச் செயலாளராகப் பதவி ஏற்ற சுந்தரம் டிவகலாலா நிறுவன நிலையிலும், அவற்றின் செயற் பாட்டிலும் புதிய மாற்றத்தை உருவாக்கினார். பொது நிர்வாகத்தில், திட்டமிடலில் அவர் பெற்ற அனுபவம் கல்வி
103

Page 54
நிறுவன, கல்வி நிர்வாக நிறுவனங்களை பகுப்பாய்வு செய்யத் தூண்டி புதிய பரிமாணத்தை உருவாக்கியது.
கல்வி நிர்வாக நிறுவனங்களின் தலைமை நிறுவனமாக அமையும் கல்வி அமைச்சு தொடக்கம் பள்ளிக்கூடம் வரை உள்ள நிறுவனக் கட்டமைப்பை உறுதிப்பாடானதாக்கும் அடிப்படை யில் அவரது ஆலோசனையில் பல்வேறு நடவடிக்கைகள் நோக்கப்பட்டன. கல்விஅமைச்சு, நிறுவனம் திட்டமிடல் பிரிவு, கல்வி அபிவிருத்திப் பிரிவு, கல்வி ஆய்வும் பயிற்சியும் பிரிவு, ஆரம்பக் கல்விப் பிரிவு, கல்வி மேற்பார்வை, மதிப்பீட்டுப் பிரிவுகள் என்பன நிறுவப்பட்டு அனுபவமும், தேர்ச்சியும் உள்ள ஆளணியினர்களால் ஆளணிப்படுத்தப்பட்டன. இவை மாவட்ட
மட்டத்துக்கு விரிவாக்கப்பட்டன.
«Swissers»
தினக்குரல்
19.02.200
104

பள்ளிக்கூடங்கள் பயன் தரு விருட்சங்களாக மாற்றமடைய வேண்டும்
கில் வித்துறை இன்று பரவலாக்கப் பட்டு நிறுவன ரீதியான செயற்பாடு அதிகரித்த வேளையில் கல்வி நிறுவனக் கட்டமைப்பு, கல்வி முகாமை பற்றி அறிய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இத்தகைய தேவை கல்வித்துறையைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் அதனுடன் தொடர்புடைய பொது மக்களுக்கும் எழுந்துள்ளது.
கல்வித்துறையில் கல்வி நிர்வாகத்தை வழிப்படுத்தும் பொறுப்பு கல்வி நிறுவனங்களைச் சார்ந்ததாகும். இது கல்வி நிறுவனங்கள் கல்வி நிர்வாக நிறுவனங்கள் என இருவகைப்படும் கல்வி நிறுவனங்கள் கற்றல், கற்பித்தல் நிகழும் மாணவர்களும் ஆசிரியர்களும் செயற்படும் இடத்தைக் குறிப்பதாகும், தொழில்நுட்பக் கல்லூரிகள் போன்ற நிறுவனங்களைக் குறித்து நிற்கும். கல்வி நிர்வாக நிறுவனங்கள் என்பவை இக்கற்றல், கற்பித்தல் ஒழுங்காக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், மேற்பார்வை செய்யவும், வழிப்படுத்தவும், வசதிகள் வாய்ப்புக் களை அளிப்பதற்குமாக உருவாக்கப்பட்ட கல்வி நிர்வாக நிறுவனங்கள் ஆகும். அவை கல்வி அமைச்சு, நிறுவனங்கள்
105

Page 55
ஆகும். அவை கல்வி அமைச்சு, மாகாண அமைச்சு, கல்வித் திணைக்களம் கோட்டக்கல்வி அலுவலகம், கொத்தணி அலுவலகம், பாடசாலை அலுவலகம் போன்ற நிறுவனங்களைக் குறிக்கும்.
இந்நிலையங்கள் கல்வியை முகாமை செய்வதற்கும் பல்வேறு நிலையில் செயற்படுகின்றன. இவற்றை ஏற்படுத்தியதன் நோக்கம் கல்வியை நிறுவன ரீதியாக விரிவாக்கி, பன்முகப் படுத்தி பரவலாக்கி அதிகாரத்தையும் மேற்பார்வையையும் அடிநிலைக்கு எடுத்துச் செல்வதாகும். இத்தகைய அடிநிலை நிறுவனங்களைக் கூடுதலாக ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் தாம் வாழும் தங்கள், தங்கள் அடி நிலை கல்வி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தொண்டுக் கல்விப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அவற்றில் தன்னுணர்வுடன் பங்கு கொண்டு திட்டம் தீட்டி அபிவிருத்தி காண்பதற்காகவே ஆகும். இந்நிறுவனங்கள் அண்மித்த மேற்பார்வை (Close supervision) அண்மித்த நடவடிக்கை (Close Activity) ஆகியவற்றை ஏற்படுத்த வழி வகுக்கும் இந் நிறுவனங்களை ஏற்படுத்தியதன் மூலம் கால தாமதத்தைப் போக்கி, உடன் தீர்மானம், உடன் நடவடிக்கை மூலம் அபிவிருத்தி காண முடியும் என்று நம்பப்படுகின்றது.
இத்தகைய பல்வேறு அடிநிலை நிறுவன அமைப்புக்கள் நவீன முகாமைத்துவப்பண்புடன் கூடியவகையில் அடிமட்டத்தில் இருந்து மேல் நோக்கும் (Botom to top) நிர்வாகத்தன்மைக்கு வழி வகுக்கும். இந்நிறுவனங்கள் தன்னதிகாரம், தற்சுதந்திரம் கொண்டதாக அமைய வேண்டும், விடயங்களுக்குப் பொறுப் பேற்க வேண்டும். இவ் அடிப்படையில் தான் சமூகம் என்ற நிறுவனத்தை பாடசாலை வளர்ச்சியில் பங்கு கொள்வதற்காகப் பாடசாலைச் சபையை அமைத்து பாடசாலை வளர்ச்சியைப் பொறுப்பேற்கும் நிலையை ஏற்படுத்த கல்வி நிர்வாகத்தினர் பாடசாலைச்சபைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
கல்வி நிர்வாகம் ஒவ்வொரு நிலையிலும் நிறுவன ரீதியான கட்டமைப்பை உடையது. இக்கட்டமைப்பு நிறுவன பதவி ஆளணியினர் நிலை, அதிகாரம், பொறுப்பு ஆகியவனவற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
106

அத்துடன் நிறுவனக் கட்டமைப்பு வழிக்கோட்டு நிர்வாகத் தன்மை நிலையைக்காட்டி நிற்கும். அதி உயர்நிலை, உச்ச அதிகாரம், உதவி ஆளணியினர், வெவ்வேறு பிரிவுகள் கிளைகள் ஆகியவற்றை தெளிவுபடுத்தும்.
இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பின் அடிப்படையில் தான் கல்வி முகாமைத்துவம் நடைபெற வேண்டுமென்று எதிர் பார்க்கப்படுகின்றது. ஏனைய நிறுவனங்கள் அளவான வளங் களைக் கொண்டு கூடுதலான பயனைப் பெறுவது போல கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களிலும் இருக்கும் மனித வளங்கள், பெளதீக வளங்களைக் கொண்டு கூடுதலான உச்ச பயனைப் பெற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பள்ளிக்கூடங்கள் பயன் தரு நிறுவனமாக மாற்றமடைய வேண்டுமென கருதப்படு கின்றது.
1984ஆம் ஆண்டு எமது நாட்டில் சகல கல்வி நிறுவனங்களுக்கும் முகாமைத்துவக் கலாசாரம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் நிறுவன முகாமையாளர்கள் (பள்ளிக்கூட முகாமைத் துவக் குழுவினர்) முகாமைத்துவ உத்திகள், நுட்பங்களைப் பயன் படுத்தி கூடிய பயனை ஈட்டமுடியும். கல்வி நிலையில் நிறுவன மானது சிறந்த உள்ளீட்டைப் பெற்று, செயற்பாடுகள் சிறப்பாக அமைந்து வெளியீடு பயனுடையதாக அமைய முடியும். நிறுவன மானது வினைத்திறனுடையதாக மாற்றமடைய முடியும்.
இக்குறிக்கோளை அடைய வேண்டுமாயின் பள்ளிக்கூடங்களை முகாமை செய்யும் அதிபர்கள், கல்வி நிர்வாக நிறுவனங்களை முகாமை செய்யும் கல்வி அலுவலர்கள், கல்வித்திணைக்களங்கள், கோட்டங்களை முகாமை செய்யும் கல்விப்பணிப்பாளர்கள் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் முகாமைத்துவத் திறன், உத்தி, நுட்பங்களைப் பெறவேண்டுமா யின் நிறுவனக் கட்டமைப்பை சரியாக விளங்கி கல்வி முகாமைத்
துவம் செய்ய வேண்டுமென்ற கருத்து வற்புறுத்தப்படுகின்றது.
இவர்கள் வளமுகாமைத்துவம், நேர முகாமைத்துவம், நிறுவன முகாமைத்துவம், பதிவேட்டு முகாமைத்துவம், ஆளணி
07

Page 56
முகாமைத்துவம், சுயமுகாமைத்துவம் போன்ற முகாமைத்துவத் திறனைப் பெறவேண்டும். நிறுவனக் கட்டமைப்பை பொறுப் பானவர்கள் சரியாக விளங்கி, மற்றவர்களுக்கும் அறிய வைத்து. அவற்றின் செயற்பாட்டை துரிதமாக்க வேண்டும். எல்லா வளங்களிலும் சிறப்பான, பெறுமானமான மனிதவளத்தின் பயன் பாடு, அருமையை அறிந்து அவர்களை ஊக்குவித்து, ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து கூடிய பயனைப் பெறவேண்டும்.
இந்த நோக்கின் அடிப்படையில் தான் தற்பொழுது மைய நிலையில் குவித்து வைக்கப்பட்ட கல்வி நிர்வாக அதிகாரம் வழிக் கோட்டு நிர்வாகம் ஊடாக மாகாண அமைச்சு கல்வித் திணைக் களம், கோட்டக்கல்வி அலுவலகம், கொத்தணி அலுவலகம், பாடசாலை அலுவலகங்களுக்கு பகிர்ந்து, பரவலாக்கப் படுகின்றது. ஒவ்வோர் அரசாங்க அதிபர் பிரிவின் கோட்டக்கல்வி அலுவலகம் நிர்வாக அதிகாரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பேற் படுத்தப்படுகின்றது.
எத்தகைய பல்வேறு நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் அந்நிறுவன ஆளணியினர்க்கு நிறுவனத்தில் ஆர்வமும் நிறுவன உணர்வும் நிறுவனக் கட்டமைப்பு பற்றிய விளக்கமும் அவசியம். அத்துடன் இந்நிறுவனங்களுக்கு அவசியமான ஆளணியினர் (மனித வளங்கள்) பெளதீக வளம் ஆகியவற்றை தேவையான
அளவு அளிக்கு மட்டும் கல்வி விருத்தியைக் காண முடியாது.
வீரகேசரி - வார வெளியீடு
O.O.5.1994
O8

நேர்காணல்:
மாணவர்களுக்கு நேரமில்லை!
சின்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி யில் தனது உயர் கல்வியை முடித்துக் கொண்டு 1966 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகப் பட்டதாரியாக வெளி யேறி ஆசிரியராக, விரிவுரையாளராக, அதிபராக, வட்டாரக் கல்வி அதிகாரி யாக, கல்வி அதிகாரியாக, உதவிக் கல்விப் பணிப்பாளராக தனது கல்விச் சேவையில் மிக விரைவாக உயர்ந்து 1993 ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்ட கல்விப் பணிப்பாளராக நியமனம் பெறும் திரு. நா. தணிகாசலம்பிள்ளையை கொழும்பிலுள்ள பிரபல விருந்தினர் விடுதியொன்றில் சந்தித்தேன்.
அமைதியாகவும் உற்சாகமாகவும் உரையாடிய அவர் தனது கல்விச் சேவைகள் பற்றி பின்வருமாறு கூறினார்.
1966ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பு நாவலர் கழகத்தில் விரிவுரையாளராக சில மாதங்கள் கடமையாற்றிய பின்னர் டிக்வெல்லையின் மின்ஹாத் மகாவித்தியாலயத்தில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தேன்.
109

Page 57
1977 ஜனவரி மாதம் முதல் பூநகரி மகாவித்தியாலய அதிபராக நியமனம் பெற்று ஒருவருடத்தின் பின் 1978 இல் குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டேன். அங்கு கடமையேற்ற பின்பு தான் எனது கல்வி சேவையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டது. அப் பாடசாலை வளர்ச்சியில் பல வழிகளிலும் எனது பங்களிப்பை வழங்கி வந்ததுடன் எனது கல்வி டிப்ளோமா, எம்.ஏ. பரீட்சைகள் இரண்டையும் அங்கிருந்த பொதே எழுதி சித்தியடைந்தேன்.
1984 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி வட்டாரக்கல்வி அதிகாரியாக கடமையாற்றியதுடன் 1987 தொடக்கம் 1989 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி கல்வித் திணைக் களத்தில் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்து பின் 1989 இல் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பட்டம் பெற்றேன்.
1990 ஆம் ஆண்டு யாழ். கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப்பணிப்பாளராகவும் பாடசாலை முகாமைத்துவ ஆலோசக ராகவும் பதவியுயர்வுடன் நியமனம் பெற்ற நான் யாழ். மாவட்டத் தின் அதிபர்கள், துணை அதிபர்கள், கொத்தணி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், பாட இணைப்பாளர்கள் ஆகியோருக்கு மூன்று வருட காலமாக பயிற்சி அளித்தமையை எனது கல்விச் சேவையின் உச்சக்கட்டமான பெறும்பேறாகக் கருதுகிறேன். இதனால் பாடசாலை நிறுவனக் கட்டமைப்புக்கும் செயற் பாட்டின் மேம்பாட்டுக்கும் உதவியமை பற்றி உண்மையிலேயே நான் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றேன்.
1992 ஏப்ரல் தொடக்கம் யாழ். மாவட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றதுடன் யாழ். பல்கலைக் கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக (கல்வி, நிர்வாகம்) பணிபுரிந்து பின்னர் 1-5-1993இல் இருந்து முல்லைத்தீவுக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளேன்.
கேள்வி : கல்வித்தரம் இன்று குன்றி வருவதாகக் கூறப்படுவது
பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் : பொதுவாக, இன்று கல்வித்தரம் குன்றிவிட்டது
என்று கூற முடியாது. ஆனால் சகல மாணவர்களின்
10

கேள்வி :
கேள்வி :
கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்று சொல்வதுதான் பொருத்தமாகவிருக்கும் என நான் எண்ணுகின்றேன். குறிப்பாக, வசதி, வாய்ப்புகள் குறைந்த பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது. இவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது ஆசிரியர் களின் செயற்பாட்டிலும் பெற்றோர்களின் ஒத்துழைப்பிலும் மாணவர்களின் ஊக்கத்திலுமே தங்கியுள்ளது. ஆசிரியர்கள் தாமாகவே ஆர்வங் கொண்டு அர்ப்பணிப்புணர்வுடன் கடமையாற்ற முன்வராதவரை இந்தக் கேள்விக்கு என்றுமே விடை
காண முடியாத நிலை தொடர்ந்து கொண்டிருக்கும்
என்பதே எனது அழுத்தமான கருத்தாகும்.
கல்வி நிர்வாகம் எந்த விதத்தில் பாடசாலை அபிவிருத்திக்கு உதவ முடியும் என எண்ணுகிறீர்கள்?
நிர்வாகிகளின் மனப்பாங்கில் முதலில் மாற்றம் ஏற்படுவதே மிக முக்கிய அம்சமாகும். ஆசிரியர்
களைப் போலவே நிர்வாகிகளும் கல்வி வளர்ச்சியில்
ஆர்வமும் அக்கறையும் கொள்வதுடன் இதற்காகத் தம்மை அர்ப்பணிக்கவும் தயாராகவிருக்கவேண்டும். நிர்வாகிகள் அதிகாரம் செலுத்துவதில் மட்டுமே நம்பிக்கை வைக்காது ஆசிரியர், மாணவர்களின் பிரச்சினைகளை இனம் கண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதுடன், அவர்களை ஊக்குவிக்க வும் வேண்டும். அத்துடன் அதிபர், ஆசிரியர்களும் நிர்வாகிகளும் பெற்றோரை பாடசாலைகளுக்கு அழைத்து, மாணவர்களின் கல்வி நிலை பற்றி ஆராய்ந்து அதற்கேற்ற தொடர் நடவடிக்கைகளை மேற்கொள் வதுடன் பின்னூட்டலும் (Feed Back
செய்யப்பட வேண்டும்.
தனியார் கல்வி நிலையங்கள் பற்றி (ரியூட்டரிகள்) என்ன கூறவிரும்புகிறீர்கள்?
111

Page 58
கேள்வி :
பதில்
12
தனியார் கல்வி நிலையங்கள், வர்த்தக நிலையங் களாக, வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கிவருகின்றன. பாடசாலையில் பெறும் கல்வியை வீட்டிலே தாய் தந்தையருடன் சேர்ந்து சாப்பிடுவதற்கும், ரியூட்டரிக் கல்வியை விடுதிகளில் (ஹோட்டல்கள்) உண்பதற்கும் உதாரண மாகக் கூறலாம். தவிர, மாணவர்கள் இரண்டு நிறுவனங்களில் தங்கள் கல்வியைப் பெறுவதில் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் அவர்களின் நேரமும் மனித வளமும் வீணடிக்கப்படுகின்றது. மாணவர்கள் சுயமாகக் கற்பதற்கும் சிந்திப்பதற்கும் அவகாசம் போதாமல் இருப்பதுடன் படிக்கும் பாடங்களை மீண்டும் திருப்பிப் பார்க்கவே நேரம் இல்லாமல் போய் விடுகிறது. மாணவர்கள் கல்வி கற்பதற்கு உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தகுதி பெற்றிருக்க வேண்டும். என்ற உண்மையையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இன்றைய கல்வி நிலை மாணவர்களையும், ஆசிரியர் களையும் பொறி முறைக்கு உட்படுத்தி, பெறுபேறு களைத் தயாரித்து வெளித்தள்ளுவது போன்று அமைந்திருக்கிறதே தவிர, அவர்களை சமூக வளர்ச்சிக்கு உரியவர்களாகவோ, மனித மேம் பாட்டுக்கு உரியவர்களாகவோ அமையவிடாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நிலை முற்றாக மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
தாங்கள் கல்வி கற்ற காலத்தில் கல்வியின் தரம் மிக உயர்ந்திருந்ததாக பல பெரியார்கள் கூறுகின்றார் களே. அது உண்மைதானா?
இதில் உண்மை இருப்பதாகவே நானும் கருதுகி றேன். அன்றைய ஆசிரியர் அறிவுத்தளம் உள்ளவர் களாகவும், பயிற்சி பெற்றவர்களாகவும் இருந்த துடன் அர்ப்பணிப்பு உணர்வுடனே எங்களை எல்லாம் கற்பித்தார்கள்.

கேள்வி :
கல்வியில் ஆரம்பக் கல்வியே அத்திவாரமாக அமைய வேண்டியது அவசியமாகும். இதனால் ஆரம்பக் கல்வியில் அன்று அதிக அக்கறை காட்டினார்கள். இன்று ஆரம்பக் கல்வியை போதிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறையாக இருப்பதுடன் ஆரம்ப ஆசிரியர் களாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் கூட தம்மை இனங்காட்டவே கூச்சப்படுவதும் இன்று கல்வி நிலைகுன்றி வருவதற்கு அல்லது முன்பு போல் இல்லாமைக்கான காரணம் என்பதை நிச்சயமாகக்
கூறலாம்.
இன்றைய மாணவர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடுகள் தளர்ந்து வருவதாக பலரும் பலவிதமாகக் கூறினா
லும் இதன் உண்மை நிலை என்ன?
மாணவர்களை மட்டுமே நாம் இதில் குறை கூற முடியாது. சமூகமே இதற்கான முழுப் பொறுப்பை யும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கல்வியில் ஒழுக்கம் என்பது, மதிப்பளித்தல் பணிவு, பாரம்பரிய பண்பாட்டு நெறிகளை மதித்துப் பேணுவதிலேயே தங்கியுள்ளது. குருவை மதித்தல், கல்வியை தெய்வீகமாகப் போற்றுதல், பழக்க வழக்கங்களை நியமமாகப் பேணுதல் என்பவற்றி லிருந்தே ஒழுக்கம் பெறப்படுகின்றது. இவற்றைப் பேணாது வேண்டத்தகாத பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி, அவற்றிலிருந்து விடுபட முடியாத ஒரு சூழலில் அவர்கள் வாழ்வதும், மாணவர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட பெறுபேறுகளை அவர்களிட மிருந்து பெற்றார் எதிர்பார்ப்பதும், பெற்றாரின் அன்பு, அரவணைப்பு இன்மையால் பிள்ளைகளுக்கு ஏற்படும் விரக்தியும் வெறுப்புணர்வும் மனத் தாங்கலுமே இதற்கான காரணங்களாகும்.
3.

Page 59
கேள்வி :
கேள்வி :
114
நாட்டின் சகல பிரதேசங்களிலும் கல்வியில் சம வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம். கல்வியை நிர்வகிப்பவர்கள் கொள்கையளவில் இதைக் கூறி வந்தாலும் நடைமுறையில் இது பூச்சியமாகவே இருக்கிறது. இதற்கான திட்டங்களை வகுப்பவர்கள் அதைச் செயற்படுத்துபவர்கள் ஆகியோரின் பிள்ளைகள் கூட மிக வசதியான பாடசாலை களிலேயே கல்வி கற்கின்றனர். இதனால் அவர்களின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் அப்பாடசாலை களை மையமாக வைத்தே உருவாக்கப்படுகின்றன. உண்மையில் கல்வி அபிவிருத்தி என்பது வசதி வாய்ப்புக்கள் மிகக் குறைந்த பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் ஆரம்பித்தே கட்டியெழுப்பப்பட வேண்டும்.
1966 ஆம் ஆண்டில் பட்டதாரியாக வெளியேறிய
நீங்கள் அந்த நேரத்தில் ஆசிரிய தொழிலை விரும்பி
யதன் காரணம் என்ன?
ஐந்து வயதிலே எனது தந்தையை இழந்த நான் எமதுரைச் சேர்ந்த (வட்டுக்கோட்டை) செல்லையா ஆசிரியரின் அன்பு ஆதரவினாலேயே படித்துப் பட்டம் பெற்றேன். அதனாலே தான் இன்று கல்விப் பணிப்பாளர் என்ற மிக உயர்ந்த பதவியில் நான் இருக்கின்றேன். அதனால் எனக்கு வாழ்வளித்த தெய்வமென போற்றி தினமும் அவரை மனதில் நிறுத்தி வணங்கி வருகிறேன். அவர் மீது கொண்ட பற்று பாசங் காரணமாகவும் இயல்பாகவே ஆசிரியத் தொழிலில் எனக்கிருந்த ஆர்வம் காரணமாகவுமே இப்புனித பணியை மிக விரும்பி ஏற்றுக் கொண்டேன்.
இறுதியாக கல்விப்பணிப்பாளர் நியமனம் பெறு வதற்கு முன்பே கலாநிதி பட்டப் படிப்பை நீங்கள் தொடர்வதாக அறிகிறேன். அது உண்மைதானா?

பதில் : "கல்வி என்பது கருவறையில் இருந்து கல்லறை வரை கற்கப்படவேண்டியது' என்று ஒரு கல்வியியலாளர்
கூறியது எனது நினைவுக்கு வருகிறது.
நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கலாநிதி பட்டப் படிப்பை மேற்கொண்டு வருவது உண்மையே. கற்பதிலும் கற்பிப்பதிலும் எனக்குள்ள விருப்பும் ஈடுபாடுமே இதற்கான காரணமாகும். ஆசிரியர்கள் மட்டுமன்றி நிர்வாகிகளும் கற்றுக் கற்பிப்பதே கல்வித் துறைக்கு செய்யும் மகத்தான சேவையாகும்
என்றார்.
வீரகேசரி - வார வெளியீடு
09.05.1993
15

Page 60
'நீங்கள் எங்கு போகிறீர்கள் என்பது உங்களுக்குச் சரியாக தெரிந்திருக்க வேண்டும்"
“கல்வி விழுமியங்கள், கல்விப் பெறுமானம், மனித விழுமியங்கள், பணிவு ஆகியன கல்வித் துறையில் பேணப்படாமல் வந்துள்ளன. கல்வி யைக் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் இப்பண்புகள் மிக அவசியம். பெற் றோர், மாணவர், ஆசிரியர்கள் மற்றும் கல்விமான்களுடைய ஒத்துழைப்பு இருந்தால்தான் வாழ்க்கையில் இப் பண்புகளை வளர்த்துக் கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும்’ என்று கூறு கிறார் டாக்டர். தணிகாசலம்பிள்ளை.
வடக்கு கிழக்கு மாகாணக் கல்விஅமைச்சின் திட்டமிடல் பிரிவு கல்விப் பணிப்பாளராக இருக்கும் கலாநிதி தணிகாசலம்பிள்ளை கல்வி அபிவிருத்தி குறித்த தமது கருத்துக்களை அனுபவங்களை தினக்குரல் வாசகர்களுக்காக கூறியபோதே மேற்கண்ட கருத்தையும் அடிக்கோட்டு கூறியிருந்தார்.
'நீங்கள் எங்கு போகிறீர்கள் என்பது உங்களுக்குச் சரியாகத் தெரியாவிட்டால் சிக்கலான பாதையில் நீங்கள் இலகுவாகத்
16

தொலைந்து போவீர்கள்' என்று கூறும் கலாநிதி தணிகாசலம் பிள்ளை கல்வித்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். வட பிரதேச கிராமப் பாடசாலைகளின் மேம்பாடு தொடர்பான பிரச்சினைகள் பற்றிய ஆராய்ச்சிக்கே யாழ்ப்பாணப் பல்கலைக்
கழகம் கலாநிதிப் பட்டம் வழங்கியது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1965 பி.ஏ. பட்டதாரியாக வெளியேறிய இவர் உதவி ஆசிரியராகி, அதிபராகி பின்னர் வட்டாரக் கல்வி அதிகாரியாகி, கல்வி அதிகாரியாகி பின்னர் உதவிக் கல்விப் பணிப்பாளராகி, மாவட்டக் கல்விப் பணிப்
பாளராகி, பல பதவி உயர்வுகளைப் பெற்றார்.
வட்டுக்கோட்டை கிழக்கை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ். அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆரம்ப கல்வியையும், வட்டுக் கோட்டை இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை யும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் உயர்தரக் கல்வியை யும் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியானார். கொழும்பு தமிழ் பல்கலைக்கழகம், யாழ் தொழில்நுட்பக் கல்லூரி, திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பகுதிநேர விரிவுரையாளராகவும், சில காலம் பணிபுரிந்துள்ளார். கலாநிதி தணிகாசலம் பிள்ளை தொடர்ந்து கூறுகையில்:
கல்வி கற்பதற்கு மாணவர்கள் இரண்டு நிறுவனங்களில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. ஒன்று பாடசாலை என்ற ஒழுங்கு முறையான கல்வி நிறுவனம். இரண்டு தனியார்கல்வி நிறுவனம்.
பாடசாலைகள் என்ற ஒழுங்கான கல்வி நிறுவனத்தை கற்றல், கற்பித்தல் என்ற காரணத்துக்காக அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. பாடசாலைகளில், கற்றல், கற்பித்தல் வசதிகளை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சு தொடக்கம் பாடசாலை வரை பல்வேறு ஆளணி
யினரைக் கொண்டுள்ளன.
பாடசாலைகளில் போதிக்கப்படும் கல்வியில் நம்பிக்கை யிழந்த நிலையில் தான் மாணவர்தனியார் கல்வி நிறுவனங்களான டியூடரிகளை நாடுகின்றனர். இந்த நிலையில் பாடசாலைக்
117

Page 61
கல்வியில் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது மிக முக்கியம்.
இதற்கு ஆசிரியர்கள் தமது மாணவர்கள் என்று அம் மாணவர்களைப் பூரணமாகப் பொறுப்பேற்க வேண்டும். அம்மாணவர்கள் பாடசாலைகளைத் தவிர வேறு தனியார் கல்வி நிறுவனங்களை நாடிச் செல்ல முடியாத அளவுக்கு ஆசிரியர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவனைப் பொறுப்பேற்பது என்றால் மாணவனுடைய பரீட்சைத் தேவை களை நிறைவேற்றக்கூடியதாக விடங்களைக் கற்றறிந்து கொள்ள வேண்டும். கடந்த கால வினாக்களை நன்றாக அறிந்து அவற்றுக் கேதுவாக விஷயங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கற்பித்தலில் மாணவர்க்காக தன்னை ஆசிரியர் அர்ப்பணிக்க வேண்டும்.
கற்றல் நிலைகள் நான்கு உள்ளன. மாணவர்கள் அவற்றைக் கடைப்பிடித்தால் இலகுவாகப் பரீட்சைகளில் சித்தி அடையலாம்
ஒன்று : ஆசிரியர் விஷயத்தை கற்பிக்கும் முன்பு மாணவன் தன்னுடைய புத்தகங்களிலிருந்து வாசித்துக் கொள்ளுதல்.
இரண்டு : ஆசிரியர் கற்பிக்கும்போது அவதானித்துக் கொள்ளல்.
மூன்று : மாணவர் வீடு சென்று அதே விஷயத்தைத் திரும்ப
பூரணமாக விளங்கிக் கற்றுக்கொள்ளுதல்.
நான்கு : ஆசிரியர்கள் பாடங்களை மீட்கும் நோக்குடன் மீளக் கற்பிக்கின்றபோது மாணவர்கள் அதனை மனதில் பதித்துக் கொள்ளுதல்.
இந்த நிலையை ஆசிரியரும், மாணவரும் ஒழுங்காகச் செய்வதாக இருந்தால் கற்றலிலும், கற்பித்தலிலும் பின்னடைவு ஏற்படாது. இந்த நான்கு நிலை கற்பித்தலும் இல்லாததால் தான் மாணவர்கள் சரியான கல்வி நிறுவனங்களை நாடிச் செல் கின்றனர். ஆசிரியர் தனது ஆர்வத்தைத் தூண்டி விடயங்களைக் கற்பித்து தன்னை அறிய வைக்கின்றார் என்று மாணவன் உணர்ந்து
18

ஏற்றுக்கொள்வானானால் அவன் பாடசாலையைத் தவிர்ந்த வேறு
இடத்தை நாடமாட்டான்.
கல்வி விருத்திக்குப் பாடசாலைகளின் தற்சுதந்திரம் மற்றும் தன்னதிகாரம் கட்டாயம் பேணப்பட வேண்டும் என்று அடித்துக் கூறும் கலாநிதி தணிகாசலம்பிள்ளை இது பற்றி மேலும் விவரிக்கையில்:
“பாடசாலை நிர்வாகத்தில் எத்தகைய தலையீடும் இருக்கக் கூடாது. விசேடமாக அரசியல் மற்றும் நிர்வாகத் தலையீடுகள்
இருக்கக்கூடாது' என்றார்.
'1960 களுக்கு முன்பும் 1970 களிலும் பாடசாலைகளில்
தற்சுதந்திரம் காணப்பட்டது. அதிபர் சர்வ அதிகாரம் உடைய வராக இருந்தார். அவர் நல்ல உள்ளகக் கட்டமைப்பை கொண் டிருந்தார். அதன் மூலம் உள்ளக மேற்பார்வை நிறுவன நிலையில் நடைபெற்றது. ஆசிரியர்களை நியமனம் செய்வது இடமாற்றம் செய்வது ஆகியன 1960களின் முன்பு அதிபரது கையில் இருந்தன. இதனால் ஆசிரியர்கள் அதிபரில் தங்கியிருக்க வேண்டியநிலை ஏற்பட்டது. இது அதிபரின் எதிர்பார்ப்புக்கேற்ப ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட்டனர்.
தற்போது பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல அவற்றை மேற் பார்வை செய்யும் கல்வி நிர்வாக நிறுவனங்களிலும் நிர்வாக நிறுவனங்கள் எண்ணிக்கையில் கூடியுள்ளன. நிர்வாகக் கல்வி மேற்பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர். ஆனால் தர ரீதியான கற்றல் கற்பித்தல் இல்லாதுள்ளது.
கற்றல், கற்பித்தல் தரம் வீழ்ச்சியடைந்ததற்குக்கூட இதுதான் காரணம் ஏனென்றால் நல்ல ஆற்றல், திறன், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இன்று கல்விப் மேற்பார்வையாளர்களாக கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்காலப் பயிற்சி ஆலோசகர்கள் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் சேவைகளை பாடசாலைகள் இழந்துவிட்டன. இதனால் பாடசாலைகளில் கற்பித்தலுக்குத் தேவையான ஆசிரிய வளம் கிடையாது. ஆசிரிய வளமின்மைதான் இன்றைய
119

Page 62
பிரச்சினை ஆசிரிய வளம் இல்லாத நிலையில் யாரை இவர்கள்
மேற்பார்வை செய்வது என்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது.'
அனுபவமான ஆசிரியர்களை இழந்து. அனுபவமற்ற ஆசிரியர் களின் கற்பித்தல், கற்றலுக்கு மாணவர்கள் தங்கியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல முறையில் கற்றல், கற்பித்தல் நடைபெறாமல் மேற்பார்வையும், நிர்வாகச் செயற் பாடும் எதற்கு?
இப்போது ஆசிரிய நியமனம் நடைபெறுகிறது. பயிற்சி வழங்காமலேயே ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். அவர் களும், மாணவர்களுக்கு போதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் இதுவும் கல்வி விருத்தியை வெகுவாகப் பாதித்துவிட்டன.
ஆசிரியர் பயிற்சி முன்னைய மரபு ரீதியான வதிவிடப் பயிற்சியாக அமைய வேண்டும். அதுவும் ஆசிரியராக வகுப்பறைக்குள் நுழைவதற்கு முன்பே பயிற்சி வழங்கப்பட்டாக வேண்டும். கற்பிப்பதற்கு விட்ட பின்னர் இடம் பெறும் உள்ளப் பயிற்சியாக அது இருக்கக்கூடாது. நல்லூர், கொழும்புத்துறை, பலாலி, திருநெல்வேலி அட்டாளச்சேனை, மட்டக்களப்பு ஆகிய தமிழ் இடங்களிலிருந்து ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் திட்டமிடப்பட்டு மூடப்பட்டன. இதனால் ஏற்பட்ட பின்னடைவு கல்விச் செயற்பாட்டில் ஆரம்பக் கல்வி விருத்தியில் இடர் பாட்டைத் தோற்றுவித்துள்ளது.
1980 இற்கு முன்பு நாட்டில் மாவட்டம் தோறும் ஒரு கல்வி அலுவலகம், நாட்டிற்கு ஒரு கல்வி அமைச்சு அலுவலகம், இருந்தன. நிர்வாகச் செயற்பாடு சீராக இருந்தது. இன்று. 9
கல்வித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஏனைய காரணிகளாக பின்வருவனவற்றையும் கூறலாம். கல்வித்துறையில் ஆளணியினர் பெறும் அனுபவத்தை வளர்த்தெடுக்கவேண்டும். பாடநூல் வெளியீட்டுத் திணைக்களம். ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி. விசேட பதவி கல்வி அலுவலர்களை அந்தந்தத் துறை களில் சிறப்பு அனுபவம் பெற்று அங்கேயே உயர் பதவிகளைப் பெற இடமளிக்க படவேண்டும். அப்படி இடங்கொடாமல்
20

கல்வித்திணைக்களம் கல்வி நிர்வாகச் செயற்பாட்டில் புக அவர்களுக்கு இடமளித்தமையும் கல்வி விருத்தியில் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.
கல்வி நிர்வாக நிறுவனங்கள் கல்வி ரீதியான வாண்மை ரீதியான மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தவறிவிடுகின்றன. கல்வி நிர்வாக நிறுவனம் அதற்குரிய கணிப்பு கொடுப்பது இல்லை. கல்வி நிர்வாக நிறுவனத்திலேயே இந்த நிலையாயின் வேறு எங்கே கல்விக்கு இடம் ?. இவ்வாறு கவலை தெரிவித்தார். கலாநிதி தணிகாசலம்பிள்ளை.
தற்போது ஆசிரிய சேவையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர்கள் ஆசிரிய சேவை முதலாம் வகுப்பில் உள்ளீர்க்கப் பட்டு இடமளித்திருப்பது வரவேற்கக்கூடியது என்று பாராட்டிய அவர் இந்த வாய்ப்பு இலங்கைக் கல்வி நிர்வாக சேவையில்
உள்ளவர்களுக்கம் வமங்கப் படவேண்டும்.’’ என்றார்.
ளுககு Մ) ற
பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் விரிவுரையாளர்கள் இத்தகைய கலாநிதி, முதுமாணிப்பட்டங்களைப் பெறும்போது அவர்களுக்கு விசேட பதவி, சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் ஆரம்பக் கல்வி, கல்வி நிர்வாக சேவையில் கடமையாற்றும் ஆளணியினரைக் கருத்திற்கொள்ளாது கொள்கை வகுப்போர், திட்டமிடுவோர் செயலாற்றுவது வருந்தத்தக்கது. எத்தகைய பதவி உயர்வும் கொள்கை மற்றும் பிரமாண அடிப்படையிலேயே வழங்கப்படவேண்டும். அதனை விடுத்து அரசியல் நிர்வாகச் செல்வாக்கில் பதவி உயர்வுகள் வழங்கப்படுவது கல்வியைப் பாழாக்கிவிடும்.’’ என்றும் தற்போதைய கல்விச் சீர்கேடுகளைக் கடிந்து கொண்டார் கல்வியியல்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற தணிகாசலம்பிள்ளை.
--Haywoo
ஞாயிறு தினக்குரல்
21.12.1997
121

Page 63
இடைநிலைக்கல்வி, உயர் கல்வி
என்பனவற்றிற்கு அடி அத்திவாரம் ஆரம்பக்கல்வி
ரம்பக்கல்வி என்னும் பதம் குறிப்பது யாதெனில், ஐந்து வயது பூர்த்தி யடைந்த பிள்ளைகள் ஆண்டு ஒன்று தொடக்கம், ஆண்டு ஐந்து வரை பாடசாலையில் பெற்றுக் கொள்கின்ற கல்வியாகும். குழந்தையின் மனதில் கல்வி பற்றிய அறிவு (முதற்பதிவு) ஆரம்பக் கல்வியிலேயே ஊட்டப்படு கின்றது.
'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து’ என்று ஒளவைப் பிராட்டியார் வலியுறுத்தி உள்ளார். குழந்தையின் மனதில் இளமையில் படிக்கின்ற விடயங்கள் நன்கு பதிந்துவிடும். நல்ல பயிற்சி பெற்ற ஆசிரியர்களே ஆரம்பக்கல்வியை வழங்கு வதற்குப் பொருத்தமானவர்கள்’ எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்பனதற்கிணங்க ஆரம்பக் கல்வி அமைதல் வேண்டும் குழந்தையின் இரண்டு கண்களாக எண்ணும், எழுத்தும் உள்ளன எனவே இவற்றில் திறனும் ஆற்றலும் விருத்தியுற ஆரம்பக் கல்வி அவசியமானதொன்றாகும்.
குழந்தைகளின் சூழல் நிலைமைகள், உடல் வளர்ச்சி, உள
வளர்ச்சி மனப்பாங்கு வளர்ச்சி என்பன ஆரம்பக்கல்வியில்
122

கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவையாகும் இந்த வகையில் குழந்தையின் பெற்றோர்களால் பாதுகாவலர்களால் முக்கியத்துவம் பெறும் ஆரம்பக் கல்வி அதற்குப் பொருத்தமான கல்வி நிறுவனங்களின் மூலம் ஊட்டப்படுதல் வேண்டும் தாய் தந்தையர் தமது குழந்தைகளுக்குச் செய்யும் தலையாய பணி ஆரம்பக்கல்வியை ஒழுங்குற அமைத்து ஊட்டும் சிறந்த பள்ளிக்கூடத்தைத் தெரிவு செய்து கல்வி வழங்குதலாகும்.
இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்பனவற்றுக்கு அடி அத்தி வாரமாக எவ்வளவிற்கு ஆரம்பக்கல்வி விளங்குகிறதோ, அதே போல, ஆரம்பக்கல்விக்கு அடி அத்திவாரமாக பாடசாலைக்கு முந்திய பாலர் கல்வி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
இக்கல்வியின் பெறுமானம் இதனை வழங்குபவர்களால் உணரப்படுவதில்லை. இதனைத் தேவை அறிந்து, ஊட்டாமல் வெறுமனே ஒரு நாகரிக பாணியில் பிள்ளையை இந்நிலையங் களுக்கு அனுப்பி விட்டால் மட்டும் போதும் என நினைக் கின்றனர்.
இக்கல்வி பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் மாணவனுக்கு கல்விக் கதவைத் திறப்பதாக அமையவேண்டும்.
ஆண்டு ஒன்றில் கல்விக்கு அத்திவாரம் இடுவதாக, கல்வியைத் தொடர வழிகாட்டுவதாக இருத்தல் வேண்டும். இதனைக் கருத்தில் கொள்ளுதல் அவசியமானதெனலாம். நாட்டின் எதிர்காலக் கல்வி வளர்ச்சியை நிர்ணயிக்கும் பாரிய பொறுப்பு இன்று வளர்ந்துவரும் சிறார்களிலேயே தங்கியுள்ளது எனவே, ஆரம்பக்கல்வியானது சிறப்பாக வழங்கப்படுதல் வேண்டும் என்று போதனைகளில் கூறி வந்தாலும் கூட இவற்றை நடைமுறைப்படுத்தும் அளவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
ஆரம்பக்கல்விக்குப் போதிய ஆசிரியர்கள் இல்லை. எப்போதுமே ஆரம்பக்கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்குப்
பற்றாக்குறை நிலவிவருகின்றது. அதிலும் பயிற்சிபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர்.
123

Page 64
ஆரம்பக்கல்விக்காக ஆசிரியர்களாகத் தெரிவு செய்யப் படுவார்கள் தமது பயிற்சி நெறிகளைக் காலவோட்டத்தில் மாற்றிவிடுகின்றனர். இவர்கள் இக்கல்விக்கான பயிற்சியை விடுத்து, கணிதம், விஞ்ஞானம், வர்த்தகம், ஆங்கிலம், தமிழ், மனைவியல் விவசாயம் போன்ற பாடங்களுக்கான விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்களாக மாற்றிக் கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். -
ஆரம்ப கல்வி ஆசிரியர்களாக நியமனம் பெறுபவர்கள், அதற்கான பயிற்சியை முடித்துக்கொள்வதற்குப் பதிலாக, பட்டதாரிப் படிப்பை முடித்துப் பட்டதாரி ஆசிரியர்களாக
மாறிவிடுகின்றமையும் காணலாம்.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வரை இவ் ஆசிரியர்களது பயிற்சியானது இரண்டு வருடக்கட்டாயப் பயிற்சியாக, கற்றலில் மட்டும் ஆசிரியன் ஈடுபடக்கூடியதாக இருந்தது. ஆனால் இன்று ஆசிரியன் கற்பித்தற் செயற்பாட்டுடன் கற்றலிலும் ஈடுபட வேண்டியவனவாக உள்ளான். இது ஒரு பாரிய சுமையாக அமைவதுடன் பயிற்சி நிறைவானதாக அமையாமலும் காணப்படுகின்றது. தேசிய கல்வி நிறுவனம். தொலைக்கல்விப் பிரிவு, ஆசிரியர் பிரிவு. ஆரம்பப் பிரிவு, என்பனவற்றைப் பொறுப்பேற்றாலும் மொடியூல்ஸ் ஊடாகப் பயிற்சி அளிக்கப் பட்டாலும் நேருக்கு நேராக பயிற்சி அளிக்கப்படாத நிலை காணப்படுகின்றது. மைய நிலையில் செயற்படுபவர்கள் பயிற்சி பெறும் ஆசிரியரை நாடி அல்லது பயிற்சி வழங்கப்படும் இடத்தினை நாடி வருகை தந்து பயிற்சி நெறியை மேற்பார்வை செய்வதிலும் கண்காணிப்பதிலும் சில இடர்பாடுகள் நிலவுவதும்
காணக்கூடியதாக உள்ளது.
ஆரம்பக்கல்வியை வழங்கும் ஆரம்பப்பாடசாலைகளில் பெரும்பாலானவை கிராமங்களிலேயே உள்ளன இப் பாடசாலை களே கிராம அபிவிருத்திக்கும் அதனுரடாக நாட்டின் அபிவிருத்திக்கும் வழிகாட்டியாக அமைவனவாகும். இருந்த போதும் கிராமப் பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர்களைப் பகிர்ந்தளிப்பதிலோ, அல்லது அவர்களை அனுப்பவதிலோ
24

தோல்வியே கண்டுள்ளது. ஆரம்பக்கல்விக்குரிய ஆசிரியர்களைப் பகிர்ந்தளிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. பின்தங்கிய கிராமப்புறங்களுக்குச் சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர் களுக்குத் தேவையான பெளதிக, பண்பாட்டு அம்சங்கள் பொருத்தமற்றனவாக இருப்பதனாலும் இவ் ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
இன்று ஆரம்ப ஆசிரியர் தொழிலில் பெரும்பான்மையோர் பெண் களாகவே காணப்படுகின்றனர். எனவே, இந்த பெண் ஆசிரியர்களையே நம்பியிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வியை ஊட்டுவதற்குப் பெண்களே பொருத்தமானவர்கள் என்றாலும் நடைமுறையில் இவர்களது சேவைகளைப் பூரணமாகப் பெற முடியாத அவல நிலையும் உள்ளது. பெண் ஆசிரியர்களைப் பொறுத்தவரை ஆசிரிய நியமனம் பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் திருமண வாழ்க்கைக்கு உட்படுகின்றனர். இதனையடுத்துத் தமது குழந்தை களைப் பெற்று வளர்ப்பதற்காக மகப்பேற்று லீவைப் பெற்று வீட்டில் தங்கிவிடுவது மட்டுமன்றி வீட்டுக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளுக்கு இடமாற்றம் கோரி குறித்த பாடசாலையி லிருந்து வெளியேறியும் விடுகின்றனர். இத்தகைய நிலையில் ஆசிரியர்கள் ஆசிரியவாண்மை விருத்தியை அடைவதில் தவறி விடுகின்றனர். எனலாம். இதன் காரணமாக ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்ந்தும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் குழந்தைகள் கல்வி பயிலும் நிறுவனங்கள் நாடு முழுவதிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இப்பாலர் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களில் பலர் இதற்கெனப் பயிற்றப்படாமலும் நியம விதிகளுக்குட்படுத்தப்பட்டு ஒழுங்குப்படுத்தப்படாமலும் கல்வி வழங்குவதைக் காணலாம். அதிகமான கிராமப்பகுதிகளில் எழுந்தமானமாக அல்லது தன்னிச்சையாக இயங்கிவருகின்ற பாலர் கல்விப் பாடசாலைகளைத் தொட்டம் தொட்டமாக
125

Page 65
ஆங்காங்கே காணலாம். இவற்றின் செயற்பாடுகளை பற்றி இனங்கண்டு கொள்ள முடியாத பெற்றார்கள் இந்நிலையங் களுக்குப் பிள்ளைகளை அனுப்புவதால் ஏற்படுகின்ற தாக்கங் களை பின்பு பாடசாலையில் ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்கள்
மத்தியில் காணலாம்.
ஆரம்பக்கல்வியை அடுத்து மாணவர்கள் இடைநிலைக் கல்வியைப் பெற ஆரம்பிக்கின்றனர்.
ஆரம்பக்கல்வியின் இறுதியாண்டாகிய ஐந்தாம் ஆண்டில் நடைபெறுகின்ற புலமைப்பரிசில் பரீட்சை இன்று பாடசாலை கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வருவதால், அவ்வகுப்பில் கல்வி பயிலும் மாணவர்கள் மொழிக் கல்வியிலும் கணிதத்திலும் கூடிய கவனம் செலுத்த வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இவ் வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைக் கல்வியை வழங்கப் போதுமான ஆசிரியர்கள் நாடு பூராவும் சமனாகக் காணப்படவில்லை. பயிற்சி பெற்ற ஆசிரியர்களை ஐந்தாம் ஆண்டில் மட்டும் கல்வி கற்பிப்பதற்கு அனுமதிக்கும் போது அந்த வகுப்பில் அதற்குரிய போதிய கல்வி வளர்ச்சி அடையாத மாணவர்கள் பலர் இருக்கின்றமை கண்கூடு. எனவே பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆண்டு ஒன்று தொடக்கம் கல்வியை வழங்காத நிலைமைகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, அல்லது அவர்களின் அடி அத்திவாரத்துக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
முற்காலங்களில் ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் ஆசிரியத்துவத்துக் கான நடை, உடை, பாவனைகளுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள். ஆண் ஆசிரியர்கள் நாஷனல், வேட்டி அணிந்து சால்வை போட்டுக் கொண்டு பாடசாலை வகுப்பறைகளில் நுழையும் போது அந்தத் தோற்றத்தையுடைய ஆசிரியம் ஆரம்பக் கல்வியை வெளிப்படுத்தியது. பெண் ஆசிரியைகள் சேலை உடுத்தி, கொண்டை போட்டு குழந்தைகளின் மனதைக் கவரும் வகையில் தோற்றமளித்தனர். இத்தகைய நிலைகள் அவர்களைத் தொழிலுக்காக அர்ப்பணிக்கவும், ஆர்வத்தைத் தூண்டவும் வைத்தது. தற்போதைய ஆசிரிய தொழிலில் ஈடுபடும்
126

ஆசிரியர்களிடையே இத்தகைய நடையுடை பாவனைகளைக் காண்பது அரிதாகவே உள்ளது ஆசிரியர்கள் இத்தகைய தோற்றங் களுக்குத் தங்களைத் தயாராக்க விரும்பும் தன்மை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
இலங்கையில் சுமார் 10,000 பாடசாலைகளில் 4,000 பாடசாலை கள் பொருளாதார சமூக கலாசார அம்சங்களில் நலிந்து மெலிந்து காணப்படுகின்றன.
இவையே நாட்டின் நலிவுற்ற சுற்றாடல்களை நேரடியாக அபிவிருத்தியின் பால் கொண்டுவரும் நிலையங்களாக அமை கின்றன. ஆனால் கிராம ஆரம்பப் பாடசாலைகளில் போதுமான அளவு பணிகள் ஆற்றப்படுவதில்லை. நாட்டின் அடிநிலையில் வாழும் வாய்ப்புக்கள் வசதிகள் குறைந்த பிரதேசங்களில் சமமான கல்வி அளிக்கப்பட்டு கிராமங்களில் இருந்து மருத்துவத்துறை, பொறியியல் துறை, கணக்கியல் துறை போன்ற துறைகளுக்கு மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று கொள்கையளவில் கூறப்பட்டு வருகின்றதே தவிர, அந்த இலக்கை அடைவதற்கான ஆசிரிய வளங்கள் அருகியே காணப் படுகின்றது.
எனவே இத்தகைய பாடசாலைகளில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் ஆரம்பக்கல்வியை வழங்கும்போது, நியமக் கலைத்திட்டத்துடன் மட்டும் நின்று கற்பிக்காது, நியமமில்லா கலைத் திட்டத்தை மாற்றிக் கற்பிப்பதும் அவசியமாகும்.
உதாரணமாக, ஆரம்பக்கல்விக் கலைத்திட்ட அமுலாக்கத்தின் போது அச்சமூகத்தின் இயல்பிற்கு தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை களை உத்திகளை மேற்கொள்ள வேண்டும் அத்துடன் அப் பாடசாலையைச் சூழ்ந்த பகுதிகளில் கடமையாற்றும் கிராம சேவையாளர் சுகாதார பரிசோதகர் தாதிமார் விவசாய விசாலிப்பு உத்தியோத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் ஆகியோரது சேவையை ஆரம்பக் கல்வி கற்பித்தலுடன் ஒன்றிணைக்க வேண்டும். பாடசாலை நிலை பெற்றுள்ள சமூகமேம்பாட்டிற்கு, ஒழுக்க விருத்திக்கு அவர்களது பணியும் பாடசாலையினுள் உள் வாங்கப்படவேண்டும்.
127

Page 66
ஆண்டு ஒன்று தொடக்கமே கட்டாயமாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நிறுத்துதல் வேண்டும் இக்கருத்தை வலியுறுத்து வதாக இலங்கைக்கு ஆசிரிய ஊக்குவிப்பு சம்பந்தமாக வருகை தந்த றிச்சாட் நவரோ என்பவர் 1991 ஆம் ஆண்டு ஆரம்பக்கல்வி பற்றித் தெரிவித்த கருத்தை முன்வைக்கிறேன்.
ஆரம்பக்கல்வி பற்றி நான் அவதானித்தபொழுது ஆச்சரியம யடைந்தது என்னவெனில் இலங்கையில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 3 வரையான முதல் மூன்று வருடங்களில் அடிப்படைக் கல்வியை அளிப்பதில் ஆகக் குறைந்த கவனம் எடுக்கப்படுகிறது. கூடுதலான வள ஒதுக்கீடும் அவதானமும் ஆண்டு 4, 5 ஆகிய வற்றிலேயே நடைபெறுகின்றது. இங்கேயே ஆரம்பப் பயிற்சி ஆசிரியர்கள் கூடுதலாக ஈடுபடுத்தப்படுகின்றார்கள். ஆண்டு ஐந்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் குழந்தை சித்தியடைய வேண்டும் என்பதற்காக அடி அத்திவார வகுப்புக்களில் நன்றாகக் கல்வி கற்பிக்கப்படுவதில்லை அதிபரானவர் தமது ஆரம்பப் பாடசாலையில் தள அத்திவாரம் இடுவதை 1 ஆம் ஆண்டிலேயே கூடிய கவனம் செலுத்தவேண்டும் அதற்கான நல்ல பயிற்சி பெற்ற ஆசிரியர்களை ஆண்டு 1 தொடக்கமே கற்பிக்க விடவேண்டும்.
இத்தகைய கருத்து முதல் மூன்று ஆண்டுகளில் நல்ல பயிற்சி பெற்ற ஆரம்ப ஆசிரியர்களால் மாணவர்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. ஆரம்பப் பாடசாலை களில் பிரதானமாக வாய்ப்பு, வசதிகள் குறைந்த பிரதேசங்களி லுள்ள பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் கருமத் தொடருக்குத் தேவையான அடிப்படை வளங்கள் குறைவாகவே உள்ளன. ஆசிரியர் வளம் இடவசதிகள் கற்றல் துணைச் சாதனங்கள், நூல் நிலைய வசதிகள் என்பவற்றுடன் பெற்றோரின் ஊக்கம் என்பதும் மாணவர்களுக்குக் கல்வி கற்றலுக்கு அவசியமானவையாகும்.
பெற்றோர்களின் பின்னூட்டலில் தான் மாணவர்களின் ஆர்வமும் முன்னேற்றமும் மேலும் உயர்த்தப்படுகின்றன. மொன்றிசொறி அமைப்புக்கள் (பாலர் கல்வி நிலையங்கள்) எல்லாம் சீராக்கப்பட்டு பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களின் நடத்தைக் கோலங்கள் வளப்படுத்தப்படவேண்டும். 'பிள்ளை
யினிடத்து யாதேனும் பாடத்தில் குறைபாடு காணப்படின்
128

இதற்கான அடிப்படைக் காரணமாக மொழி யைக் குறிப்பிட லாம்’ எனவே மொழிக்கல்வியானது ஆரம்பக்கல்வியில்
முக்கியத்துவம் பெறுதல் வேண்டும்.
அடுத்த ஆண்டுக்கான பிரவேசத் திறன் இல்லாமல் அதாவது ஆகக் குறைந்த தேர்ச்சி மட்டத்தை அடையாமல் மாணவன்
வகுப்பேற்றப்படும் போது மேலும் சுமை கூடுகின்றது.
எனவே இத்தகைய நிலையிலிருந்து மாணவர்களைத் தரமுயர்த்துவதற்கு சம்பிரதாயபூர்வமாக இடம்பெறும் கற்பித்தல் செயற்பாடு களுக்கும் மேலதிகமாக விசேடமான கற்பித்தல் தொடரான பரிகார கற்பித்தல் இடம் பெறுதல் வேண்டும். இது சிறப்பாகப் பின்னிற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். மாணவனின் உள்ளார்ந்த கற்றலுக்குத் தடையாக உள்ளனவற்றைக் கண்டறிந்து ஊக்குவித்தலில் ஆசிரியருக்கு மட்டுமன்றிப் பெற்றோர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. கிராம புவியியல் அமைவுரீதியாக நோக்கின் 100 மாணவர்களுக்குக் குறைந்த சிறிய பாடசாலைகளாயினும் அவற்றை இயக்க வேண்டிய பாரிய பொறுப்பு ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் உண்டு. அரசு கொள்கையளவில் ஆரம்பக்கல்வி பற்றிக் கூறினா லும் நடைமுறையில் அவ்இலக்கை அடைய முடியாதுள்ளது.
ஆரம்பக் கல்வியின் முக்கியமான பிரச்சினை தமிழ் ஆசிரியர் களை தொன்று தொட்டு பயிற்றுவித்த ஆசிரிய பயிற்சிக்
கலாசாலைகள் மூடப்பட்டமையையும் குறிப்பிடலாம்.
யாழ். மாவட்டத்தில் கொழும்புத்துறை, நல்லூர், திருநெல்வேலி போன்ற இடங்களில் இயங்கி வந்த ஆரம்ப ஆசிரியர்களைப் பயிற்று வித்த ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள் மூடப்பட்டன. இதனால் கூடுதலான ஆசிரியர்கள் வெளியேறிய தொகை மட்டுப்படுத்தப்பட்ட நிலையும் ஆரம்பக்கல்வியில் கூடுதலான பிரச்சினையைத் தோற்றுவித்தது.
வீரகேசரி
O1.08.1993
129

Page 67
மனிதனுக்கு கல்வியும், சுகநலனும் தொழிலும் வாழக்கற்றுக் கொடுக்கின்றன
D க்கள் உயிர் வாழ்க்கைக்கு உணவு அவசியமாவது போல சுகநலனும் அவசியமாகும். கிராம மேம்பாட்டுக்கு கல்வியும் அவசியமாகும். கிராம மேம்பாட்டுக்கு கல்வியும் உடல் நலனும், உள நலனும் உறுதுணையாக
அமைகின்றன.
கிராம மக்களுக்கு முறைமை, முறைமையற்ற கல்வியூடாக நலக் கல்வியை ஊட்டலாம். மக்களையும், கிராமத்தையும் சுகநலன் கட்டிக் காக்கின்றது. நலம் பற்றிய அறிவைக் கொண்டிருக்க வேண்டியவர்கள் கிராமத்தவர்கள். முறைமைக் கல்வி மூலம் நல அறிவைக் கொண்டிராத மக்களுக்கு நலம் பற்றிய அறிவு கிராமக் கல்விக் களம் மூலம் அளிக்கப்படவேண்டும்.
நலம் உடல் வள சமூக நன்மைகளைக் குறிக்கும். அது மக்களுக்கு நலத்தை அளிக்கும். நலம் என்பது பிணி இல்லாது மக்கள் வாழ்வது. பிணி இன்றி வாழும் அறிவைக் கல்வி ஊடாகக் கிராமமக்களுக்கு ஊட்ட வேண்டும். உடல் உறுதி பெற்று வாழ உணவு ஊட்டத்தை அளிக்கின்றது. உடை, உடலைப் பாதுகாக்
கின்றது.
130

உறையுள் (வீடு) உடல் பாதுகாப்பாக வாழவும், பேணவும் புகலிடம் அளிக்கின்றது. இவற்றுடன் உடல் வளர ஒய்வு தேவை. ஓய்வை ஆறுதலும் நித்திரையும் அளிக்கின்றன. இவை இரண்டும் உடலை வளர்க்கும் முக்கியமான அம்சங்களாக இளமையில் அமைகின்றன. உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து, திருப்தியுற உடல் வாழ விவாகம் அவசியமாகின்றது.
உள்ளம் உடலின் முதன்மை உறுப்பு; உள்ளம் வளமடைய அன்பும் பாசமும் வளர வேண்டும். மனிதன் மற்ற உள்ளங்களில் அன்பை அள்ளிச் சொரிய வேண்டும். அன்பு பெருகும் பொழுது போட்டி, பொறாமை அற்று பாசம் வளரும். அன்பே கடவுள் அன்பே வாழ்க்கையாகின்றது. அன்பு சொரியப்படும் பொழுது உடலானது தன்னை அறியாமல் அதன் உறுப்புகள் சுரப்பிகளைச்
சுரந்து உடலை வளர்க்கின்றன. அதனை அழகுபடுத்துகின்றன.
உள்ளம் தான் பெற்ற அறிவினுரடாகப் பாதுகாப்புப் பற்றி எண்ணுகின்றது. பாதுகாப்பைத் தேடிக் கொடுக்கின்றது. பாதுகாப்பைத் தேடிக் கொடுக்கும் உள்ளம் கணிப்பையும் நாடி நிற்கின்றது. மற்றவர்கள் தன்னைக் கணிக்க வேண்டும் என்று விரும்புகின்றது. கணித்து கணிப்பளிக்கும் பொழுது மனித உள்ளம் ஊக்குவிக்கப்படுகின்றது. ஊக்குவிக்கப்பட்ட உள்ளம் நல்ல செயற்பாட்டுடன் நல்ல வெளிப்பாட்டை அளித்து நிற்கும். இதனால் மற்றவர்கள் நல்ல பலன் பெறக்கூடியதாக இருக்கும்.
உள்ளம் ஏற்றுக்கொள்ளல் தன்மை படைத்ததாக அமைய வேண்டும். "ஏற்றுக்கொள்ளல்" என்பது நிறைவு காண்பதாகும். தமிழில் 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என அழகாகச் சொல்லியுள்ளனர். எதையும் உள்ளம் நிறைவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். தோல்வியையும் வெற்றியையும் தாக்கத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர மதித்து ஏற்றுக் கொள்ளும் உளநிலை மனித உள்ளங்களுக்கு வேண்டும். இதுவே மனித உள்ளம் பாதிப்படையாமல் பிணி இல்லாது வாழ்வதற்கு ஏற்ற நிலையாகும்.
31

Page 68
நலத்தை நிர்ணயிக்கும் அடுத்த காரணி "சமுதாய நன்னிலை’ சமுதாய நன்னிலையைக் கல்வி, தொழில், சமுதாய உயர்வு ஆகியவை நிர்ணயிக்கின்றன. கல்வியூடாகக் கற்றவர்கள் நன்மை. தீமையை நன்கு பகுத்தாராய்ந்து சமுதாய நன்மைக்கு வேண்டிய அம்சங்களை அறிந்து வாழக் கற்றுக் கொள்கின்றனர்.
எவன் ஒருவன் நல்ல கல்வியைப் பெற்றுக்கொள்கின்றானோ அவன் தன்னுடைய தரத்தையும், வாழ்க்கை முறையையும் மேம்படுத்திக் கொள்வான். அவன் தன்னுடைய ஆளுமையை மேம்படுத்தித் தான் பெற்றுக்கொண்ட அறிவின் உச்சப் பயன் பாட்டைப் பெற்று தன் அளவையும் காட்டிக் கொண்டு கற்றபடி நடந்து கொள்ள முடியும். கல்வியே வாழ்வதற்கு வேண்டிய தொழிலையும் தேடிக் கொடுக்கும்.
தொழிலுக்கு அடிப்படையாக அமைவது கல்வியே தற் காலத்தில் தொழிலை மையமாகக் கொண்ட கல்வியையே மனிதன் நாடுகின்றான். தொழில்நுட்பம், மருத்துவம், பொறி யியல், முகாமைத்துவம், கணனி முறைக்குட்பட்ட பாட நெறியைக் கற்பதற்கு கல்வி வழிகாட்டுவது மட்டும் அல்லாமல் உயர்ந்த தொழிலையும் வருவாயுடன் கூடிய தொழிலையும் அளித்து விடுகின்றது. கல்வியும், தொழிலும் சேர்ந்து சமுதாய உயர்வை அளிக்கின்றன. நல்ல கல்வியையும் நல்ல தொழிலையும் உடையவன் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தைப் பெறுகின்றான். மனிதனுக்குக் கல்வியும் தொழிலும் தற்துணிவைக் கொடுக் கின்றன. தன்னிலேயே அவன் தன்னைத் தங்கியிருக்கும் நிலைமையை அளிக்கின்றது. வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கல்வியும் செல்வமும் உதவுகின்றன.
மனிதன் தன் வாழ்க்கையில் தேட முடியாத அரும் பெரும் சொத்து நலம். கிராமத்தில் நலன் அமைந்துவிட்டால் அவர்களது அமைதியான பண்பாடான வாழ்க்கைக்கு நலம் ஒளியூட்டும். இத்தகைய நலத்தை வாழ்க்கையில் ஒவ்வொருவனும் பெற்றுக் கொள்ள வேண்டும். மாணவன் இளமையில் நலத்துடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும். ஆசிரியன் வாழும் வழியைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
132

கிராம வாழ்க்கையில் பல தரப்பட்ட நலச்சிக்கல்களை மக்கள் எதிர்நோக்குவது வழக்கம். இது மாணவர்களைக் கருத்தூன்றிக் கற்று மனப்பதிவு கொண்டு கற்க முடியாத நிலையைத் தோற்று விக்கும். அத்துடன் நிச்சயமற்ற தன்மை, சூழல், நலப்பாதிப்பு, நெருப்புக் காய்ச்சல், மலேரியா, செங்கண்மாரி, வயிற்றோட்டம், புழுவியாதிகள் போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தி விடும். இவற்றுடன் உயர் இரத்த அழுத்தம், இதயப்பிணி, சயரோகம், குடற்புண், தொய்வு போன்ற தொற்றாத பிணிகளையும் ஏற்படுத்தி விடும். அத்துடன் பல்முரசுப் பிணி, சத்துணவின்மை போன்ற பிணிகளும் கிராம மாணவர்களின் கல்வியைப் பாதித்து விடுகின்றன. இச்சிக்கல் கிராமக்கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
நாட்டின் மக்கள் தொகையில் 25% ஆரம்பப்பள்ளி மாணவர்கள். கிராம ஆரம்பப் பள்ளிகளில் 50% பள்ளிகளில் மலசலக்கூடம் நல்ல குடிநீர் வசதி இல்லை. 30% மாணவர் சத்துணவில்லாமற் பாதிக்கப் பட்டுள்ளனர். 65% மாணவர் பல்முரசு தோற்பிணிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆதலால் கிராமப்பள்ளிகள் நலத்தைப் பேணுவதில் பொறுப் பேற்க வேண்டும். இப்பள்ளிகள் சூழலுக்கேற்ற நலத்தைப் பேணக்கூடியதாக செயற்படவேண்டும். சூழலை உருவாக்க கிராம ஆரம்பப்பள்ளிகள் முக்கிய பங்கினை ஏற்கவேண்டும். பள்ளிநலம் என்பது ஒரு கூட்டு முயற்சியாகும். மாணவர்கள் மையமாக வைத்து ஆசிரியர் பெற்றோர் நலப்பகுதியினர் ஒத்துழைக்க வேண்டும். மாணவனுக்கு சுகத்தை அளிப்பதில் யாவரும் சமாந்தரநிலையில் கூட்டாகப் பொறுப்பேற்று செயற்படவேண்டும்.
கிராமப்பள்ளிகளில் அடிப்படை நல விழிப்புணர்ச்சி குறைவாக உள்ளது. நலத்திற்குப் பாதகமான பழக்க வழக்கங்களையே அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக வயிற்றோட்டம் ஏற்படும்போது இளநீர், ஜீவனி போன்ற நீராகாரம் கொடுக்கா தோர் பலர். விசர்நாய் கடித்தால் சவர்க்காரத்தால் கழுவுதல் 50% தடையை ஏற்படுத்தும் என்ற முதலுதவி தெரியாதோர் பலர்.
133

Page 69
சத்துணவு பற்றிய அறியாமை உணவுப் பழக்கவழக்கம், கெளரவம் என்ற காரணிகளால் ஏற்படுகின்றது. வறிய கிராம மக்கள் ஊட்டச் சத்துள்ள இலை, உணவு, தாவரம், காய்கறி, பழங்கள் எவையெனக் கண்டறிய முடியாதவர்களாகக் காணப்படு கின்றனர். சத்துள்ள தேனை, நெய்யை விற்று மதுவகை குடிப்பதில் இன்பம் காண்கின்றனர்.
பழம், முட்டை, பால் வகையை விற்று பாண் வாங்கி உண்கின்றனர், உடலுக்கு ஊட்டத்தையும் வலுவையும் அளிக்கும் வல்லாரை, பொன்னாங்காணி, தூதுவளை, அகத்தி, மொசுட்டை, தவசி முருங்கை, முடக்கொத்தான், கங்குல் போன்ற இலை வகை, கீரைவகைகளை விரும்பியுண்ணாது இலை, புல், குழைகளை உண்டு வாழும் விலங்குகளான ஆடு, மாடு, மான், மரை, பன்றி இறைச்சிகளை மட்டும் தினமும் விரும்பி உண்பர்.
கல்வி கற்பது நலமாக வாழப்பழகுவதற்கே. இக்கல்வியை முறைமைக் கல்வியூட்டும் பள்ளிகளால் மட்டுமன்றி முறைமை சாரா (Nonformal) நியமமில் (Informal) கல்வியால் கிராம மக்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்பை உருவாக்க வேண்டும். நல்ல பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனைகளைப் பெற்றுக் கொள்ள கிராமச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் இதில் பொறுப்பேற்க வேண்டும். பங்கேற்க வேண்டும். மாணவர் களுக்கு கற்பிப்பது தேர்வில் தேறவைப்பது மட்டும் அல்லாமல் வாழ்வுக்கேற்ப பழக்க வழக்கங்களைக் காட்டிக் கொடுப்பவர் களாக செயற்படவும் வேண்டும் எமது நோய்களில் 70% நோய்கள் எமது பழக்க வழக்கம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. ஆதலால் ஆசிரியர்களே முன்மாதிரியாக நடந்து, போதித்து செயற்படுத்தவேண்டும்.
ஆசிரியர்கள் தமது மாணவர்களதும், கிராமத்தவர்களதும் நல நிலைமைகளை இனம் காணவேண்டும். பள்ளிக்கு மாணவர் வருகை தந்ததும் அவர்களது தலை, பல், நகம், உடை, உடம்பு முதலியவற்றைக் காலையில் பரிசோதனை முறைக்கு உட்படுத்த வேண்டும். மாணவர்களது கண்பார்வை, கேட்டல், மூச்சுத்
தொடர்பு நிலை தோல் நோய்கள் ஆகியவற்றைக் கூர்ந்து
134

அவதானிக்க வேண்டும். வாயை திறப்பித்து பல், முரசு, நாக்கு முதலியவற்றை பரிசீலித்து அவற்றில் வியாதி உண்டா என அவதானிக்க வேண்டும்.
அவனிடமும், பெற்றோரிடமும் தொழுநோய் உண்டா என அறிவதுடன் அவனது சாப்பாட்டு முறையை ஆராய்ந்து அறிய வேண்டும். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் வராத மாணவர் களை அவதானித்துக் காரணத்தைக் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு மாணவர்களாக அவர்களின் சராசரி நிறையை சரிபார்க்கலாம். வளர்ச்சி நிலையை வயதுக்கேற்றதாக அறிய வேண்டும்.
மாணவர்களிடம் வைத்தியக் குறைபாடுகள் காணப்படின் பள்ளிக்கு வைத்தியர்கள் வரும் பொழுது அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருதல் ஆசிரியர்களது பொறுப்பாகும். வைத்தியர் பரிசோதிக்கும் பொழுது பெற்றோரை உடன் இருக்கவைக்க வேண்டும். உதாரணமாக ஆண்டு 1-3 வரை கற்கும் பள்ளி மாணவர்களிடம் பல் முரசு வியாதி கூடுதலாகக் காணப்படும். சிறு குழந்தைகளுக்கு இனிப்பு மாப்பண்டங்களை பெற்றோர்கள் கூடுதலாக வாங்கிக் கொடுப்பதனால் ஏற்படுவதாகும்.
திணைக்களம், பள்ளிகள் அடிப்படை நல வசதிகளை ஏற்படுத்துவதிலும் செயற்படவேண்டும். தினமும் வகுப்பறை, பள்ளிக் கழிவுகள் அகற்றப்பட்டு எரிக்கப்படவேண்டும் அல்லது புதைக்கப்படவேண்டும். கிணறுகள் அடிக்கடி இறைக்கப்பட்டு குளோரின் இட்டு தூய்மையாக்கப்பட வேண்டும். கிணற்றில் இலைகள் உதிர்க்கிவிடாது மூடிப் பாதுகாக்கப்படவேண்டும். கிணற்றில் இருந்து வகுப்பறை வரை நீர் தூய்மையாகப் பருகு வதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
நலப்பழக்க வழக்கங்களில் கைகழுவுதல் வற்புறுத்தப்பட வேண்டும். மலம் கழித்த பின்பும் உணவு உண்பதற்கு முன்பா கவும் சவர்க்காரம் கண்டிப்பாக இட்டுக்கழுவும் பழக்கத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
135

Page 70
மலசல கூட வசதிகளைப் பொறுத்த மட்டில் பள்ளிகளில் ஒழுங்காகப் பேணவேண்டும். துர்நாற்றம் எடுக்காத விதத்தில் மாணவர்கள் அதனை அடிக்கடி கழுவி, துப்பரவாக வைத்திருக்க குறைந்தது சுயசேவைத் திட்டம் ஒன்று அறிமுகமாக்கப்பட வேண்டும்.
மாணவனது பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்படவேண்டும். இது வகுப்பிலும், அவன் பள்ளியை விட்டு வீட்டை அடையும் வரையும், ஏன் விளையாட்டு மைதானத்திலும் கூட அவனது பாதுகாப்பு உத்தரவாதமளிக்கப்பட்டு, பேணப்படவேண்டும் வீதி ஒழுங்கு பள்ளியை விட்டு வரும்போதும் பேணப்பட வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஆசிரியரும் பெற்றோரும் கூட்டாக மாணவனை சமயத்துடன் ஈடுபடுத்தி கீழ்ப்படிவு, மதிப்பளித் தல், பயபக்தி போன்ற குணநலனுக்குட்படுத்தி நல்ல கல்வியைப் பெற உள்ளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். இதுவே ஆசிரியன் கல்விக்கும், மாணவனுக்கும் செய்யும் தலையாய தொண்டாகும்.
பள்ளிக் கல்வியில் சூழல் கல்வியுடன் நலக்கல்வியை இணைத்துக் கற்பிக்கலாம். குறைந்தவிலையில் நிறை உணவைப் பெறவழி கூறலாம். மாணவர்களை உணவுப் பழக்கவழக்கத்திற்கு அடிமையாகிவிடக்கூடாது. கிராம மாணவர்களிடம் புரதக் குறைபாடு மேலோங்கி நிற்கிறது. அதனை நிவர்த்திக்க உழுந்து பயறு கடலை போன்ற தானிய வகைளை பயன்படுத்தும் முறை கள்ை ஆசிரியர்களும் பெற்றோர்களும் நன்குணர்ந்து கொள்ள வேண்டும்.
சமயம், விஞ்ஞானம், கணிதம், தமிழ், சூழல், மனையியல், சங்கீதம் கற்பிக்கும் சகல ஆசிரியர்களும் தத்தம் பாடங்களுடன் நலப்பாடத்தை இணைத்துக் கற்பிக்கலாம். எல்லா பாடங்களும் மாணவனை உயிருடன் கூடிய காலம் வாழ்வதற்கு உதவுவதாக
அமையவேண்டும்.
பள்ளியும், சமூகமும், வீடும் இவ்விடத்தில் இணைந்து நிறுவனங்களாகச் செயற்படவேண்டும். பள்ளி அனுபவம்
136

வீட்டிற்கும் வீட்டு அனுபவம் பள்ளிக்கும் எடுத்துச் செல்ல உதவ வேண்டும். வகுப்பறைச் சுத்தம் பற்றிக் கூறப்படும் பொழுது வீட்டுச்சுத்தம் பற்றியும் கூறப்படி வேண்டும். இறந்தகோழி, பூனை, நாய் என்பன கழிவுப் பொருள்களாக எலுமிச்சை, தோடை, மாதுளை போன்ற பயிர்களிற்கு பசளையாக மாறும் விதத்தில் புதைக்கப்படலாம். இவை வீதியில் நீரோடையில் வெறுமனே வீசுவதால் ஏற்படும் விளைவை மாணவர்க்கு பெற்றோருக்கு வெளிக்காட்டலாம்.
அயலில் விசர்நாய் பலரைக்கடித்தால் என்ன விளைவு உண்டாகி யுள்ளது. சிரங்கு, மலேரியா, நெருப்புக்காய்ச்சல் படிப்பையும், வாழ்க்கையையும் எவ்வாறு பாதித்துள்ளது. இவற்றில் இருந்து தப்ப என்ன செய்யவேண்டும். மாணவன் திருந்த சமூகம் தானாகத் திருந்தும் கண்ட கண்ட இடத்தில் எச்சிலைத்துப்பவிடக் கூடாது. எச்சில் தொட்டு புத்தகம் புரட்டும் பழக்கம் கூடாது. கண்ட இடங்களில் எல்லாம் நீர் அருந்தக்கூடாது. கொதித்து ஆறிய நீரையே பருகவேண்டும். உணவுக்கடைகளில் உணவு பரிமாறும் நிலையை அவதானிக்க வைக்க வேண்டும். கூடிய அளவு சூடான மூடிவைக்கப்பட்ட உணவையே உண்ண ஆலோசனை கூற வேண்டும்.
கிணற்று வாளியில் கைவைத்து முகம் கழுவவிடக்கூடாது. அதனால் தொற்றுக்காவிகள் கிணற்றில் பரவ இடமளியாது போகும். மலசலக்கூடம் பயன்படுத்தும் முறை பற்றிக்கூற வேண்டும். புறம்பான பாத்திரம் பாவித்தல் வற்புறுத்தப்பட வேண்டும். இக்கருத்துக்களை உள்ளடக்கியதாக கல்வி அமைய வேண்டும்.
வீரகேசரி - வார வெளியீடு
10.03.1996
137

Page 71
கல்வி நிர்வாகக் கட்டமைப்பு மாற்றம்
கில்வி அமைச்சர் 1996ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர விரும்புவதாக அறிவித்திருந்தார்.
இக்கல்வி நிர்வாகக் கட்டமைப்பு மாற்றமானது அதி உச்ச அதிகாரம் படைத்த மாகாணக் கல்வி அமைச்சில் இருந்து பாடசாலை மேற்பார்வை கல்வி நிர்வாக நிறுவனம் வரை மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. அமைச்சர் தமது உரையில் இருந்து 'வட்டாரக் கல்வி அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் போது இவற்றை இணைந்து வலயக் கல்வி அலுவலகங்கள் இருக்கும். மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மாகாணகல்வி அமைச்சின் கீழ் இயங்கும்' எனத் தெரிவித்தார்.
இங்கு இதுவரை இருந்து வந்த மாகாணக் கல்வித் திணைக்களம் இல்லாமல்போய் விடுகின்றது. இம்மாகாணக் கல்வித் திணைக் களம் மாகாணக் கல்வி அமைச்சு செய்து வந்த வேலைகளில் ஒரு பகுதியை செய்து வந்தது. இதனால் நிர்வாக வேலைச் செயற் பாட்டில் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் இங்கு கூடுதலான ஆளணியினர் அமர்த்தப்பட்டு கூடுதலான வளவீண்விரயம் ஏற்படுகின்றது. இவ்வள ஆளணி யினரை நேரடியாக மாகாணக் கல்வி அமைச்சின் கீழ்
138

கொண்டுவருவதன் மூலம் கூடிய வள ஆளணியினரைக் கொண்ட ஒரு நிறுவனமாக மாகாணக்கல்வி அமைச்சு மாறுகின்றது. அத்துடன் நேரடியாக அனுமதி அளித்தல், மாவட்டக் கல்வித் திணைக்களங்களுடன் தொடர்பு கொள்ளல் ஆகிய துரித கல்வி நடவடிக்கைகளுக்கு வழி ஏற்படும்.
மாகாணக் கல்வித் திணைக்களம் மாவட்டக் கல்வித் திணைக் களம் செய்து வரும் கல்வி நிர்வாகக் கடமைகளையே அதிகாரப் பரவலாக்கத் திற்குப் பதிலாக ஒரு முகப்படுத்தி செய்து வந்தது. கூடுதலாக இரட்டைப்படுத்தும் வேலைகளையே ஆற்றி வந்தது. உதாரணமாக ஆசிரிய சேவை நீடிப்பு, கோட்டங்களுக்கிடை யேயான ஆசிரிய இடமாற்றம், கல்வி அபிவிருத்திக்கான சேவைக் கால ஆசிரிய ஆலோசனை செயற்பாடுகளை, மேற்பார்வை செய்தல் ஆசிரிய அதிபர்கள் பயிற்சிகளை நடத்தியது.
இச்செயற்பாடு மாவட்டங்களுக்கு முன்பு இருந்த கல்வி நிர்வாகக் கட்டமைப்பில் இடம்பெற்றது போல மாவட்டங் களிடையே ஒப்படைக்கலாம்.
இறுதி அதிகாரத்துடன் அனுமதிக்க வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் மாகாணக் கல்வி அமைச்சில் கல்வி அபிவிருத்திப் பிரிவு ஒன்று ஏற்படுத்தி இலங்கைக் கல்வி நிர்வாக சேவை உத்தியோத்தரான கல்வி மேலதிகச் செயலாளர் கல்விப்
பணிப்பாளரிடம் ஒப்படைக்கலாம்.
முன்னைய கல்வி நிர்வாக செயற்பாட்டில் இருந்து வந்த கோட்டக் கல்வி அலுவலகங்கள் ஒழிக்கப்படுகின்றது. ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கும் இறுதியாக ஒவ்வொரு கோட்டக்கல்வி அலுவலகம் திறக்கப்பட்டு ஆளணி அளிக்கப் படாமல் செயலற்று இருந்தன. கல்வி நிர்வாக அதிகாரம் கோட்டங்களுக்கு பகிரப்பட்டிருந்தது. அதிகாரத்தைப் பெற்றுக் கொண்ட கோட்டங்கள் நிர்வாக ஆளணியினர் எழுதுவினைஞர்கள் இல்லாது அதனைச் செயற்படுத்த முடியாது இடர்ப்பட்டனர். அதேவேளை பிரதேசக் கல்வித் திணைக்களத்தில் கடமைவாய்ந்த நிர்வாக எழுதுவிளைஞர் இல்லாது அதனைச் செயற்படுத்த முடியாது இடர்ப்பட்டனர். அதேவேளை பிரதேசக் கல்வித்
139

Page 72
திணைக்களத்தில் கடமையாற்றி வந்த கூடுதலான ஆற்றல். அனுபவம் வாய்ந்த நிர்வாக வேலைத்திறனும், துரித வேலைச் செயற்பாடும் அற்றுக் காணப்பட்டது.
ஒன்றாக இருந்து பிரதேசக் கல்வித் திணைக்களத்தில் பல்வேறு கடமைக்கூறுகளுக்கும் பொறுப்பாக செயற்பட்ட இலங்கைக் கல்வி நிர்வாக உத்தியோகத்தர்கள் கோட்டங்களிலும் மாவட்டக் கல்விப் பணிமனைகளிலும் துரிதமாகச் செயற்பட்டு வந்த கல்வி நிர்வாக, கல்வி அபிவிருத்தி வேலைகள், மாவட்ட, கோட்டம் கல்வி அலுவலகங்களில் பூரணமான ஆளணி இல்லாது குழப்பமடைந்தது. எந்தவித அபிவிருத்தியுமே செயற்பட முடியாது போய்விட்டது.
வட்டாரக் கல்வி அலுவலகம் 1986 டிசம்பர் வரை கல்வி நிர்வாகச் செயற்பாட்டில் கொத்தணி முறையுடன் இயங்க அனுமதிக்கப் பட்டிருந்தது. இக்கொத்தணி அலுவலகம் நடைமுறையில் இருந்து வந்த வட்டாரக்கல்வி அலுவலகம் கற்றல், கற்பித்தல் அபிவிருத்தி களுக்கு உதவவில்லை என அறிமுகப்படுத்தப்பட்டது. கொத்தணி அலுவலகம் அண்மித்த மேற்பார்வை. (Close Supervision) அண்மித்த நடவடிக்கை (Close Activity) நல்ல வளப் பகிர்வு (Distribution of Resoures) என்ற செயற்பாடுகளுக்கான அறிமுகப் படுத்தப்பட்டது.
ஆனால் இக்கொத்தணி அதிபர் தனது மூலாதாரப் பாடசாலை யின் நிர்வாகச் செயற்பாட்டுடன் தனக்கு ஒப்புவித்த கொத்தணி அங்கத்துவப் பாடசாலைகளின் நிர்வாகக் கடமைகளை மேற்பார்வை செய்ய முடியாது போய்விட்டது. அண்மித்த நடவடிக்கை, சிறந்த வளப்பகிர்வு ஆதியனவும் தோல்வியில் முடிந்தது. நெருங்கிய நடவடிக்கை கொத்தணி அதிபர் சமமான அதிபர்களில் இருவரும் ஒருவர் என்ற நிலையும் அவர் தனது மூலாதாரப் பாடசாலையின் வளர்ச்சியிலே கண்ணுங்கருத்துமாக இருந்தார் என்றும் குறை கூறப்பட்டது. ஏனைய பாடசாலைகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றார் என்னும் வளங்களை ஒருமுகப் படுத்தி மூலாதாரப் பாடசாலைக்கே பெற்றுக் கொள்கின்றார்
என்றும் அதனால் அங்கத்துவப் பாடசாலைகளுக்கு வளங்கள்
140

உரியமுறையில் பகிரப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுக்களால்
கொத்தணிமுறை நீக்கப்பட்டது.
இக்கொத்தணி முறையை நீக்கி உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் தோறும் கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டு, அதற்குப் பாடசாலைப் பொறுப்பு எதுவுமில்லாத நிர்வாகத்திற்கு தனியாகப் பொறுப்பேற்க பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஒருவரை நியமித்தனர். இவ் அலுவலகங்களுக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கு (பிரதேச செயலகத்திற்கு) வழங்கப்பட்டது போன்ற ஆளணிவலு அங்கீகரிக்கப் பட்ட ஆளணி வலு இல்லையென பொதுநிர்வாகத்துறையினால் அளிக்கப்படாததால் அது வெறுமனே கோட்டக் கல்வி அலுவலகமாக இருந்தது. அது இப்பொழுது மூடப்படுகின்றது.
வலயக் கல்வி அலுவலகம்
தற்போது அறிமுகமாக்கப்படும் வலயக் கல்வி அலுவலகம் வட்டாரக் கல்வி அலுவலகங்களை இணைத்து அமைக்கப்பட உள்ளது. இவ்வலயக்கல்வி அலுவலகம் முன்னைய 6,7 கொத்தணிகளை இணைத்து செயற்பட்ட கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு நிகரானதாகலாம். இவ்வலயம் ஆசிரியர்கள் சம்பளம், சுயவிபரக்கோவை பேணல் தவிர்ந்த ஏனைய கல்வி அபிவிருத்திப் பிரிவு, கல்வி நிர்வாகப் பிரிவு. இயங்கும் என்று கூறியுள்ளார். கல்வி அபிவிருத்திப் பிரிவு, பூரண கல்விவள ஆளணியினர்களைக் கொண்டு இருக்குமாயின் எதிர்பார்த்த பலனை அளிக்கும். கல்வி நிர்வாகப்பிரிவு ஆசிரியர்களின் ஏனைய கல்வி நிர்வாகப் பிரச்சினைக்கு அடிநிலையிலேயே முகம் கொடுக்கும்.
இங்கு நிர்வாகத்திற்குப் பொறுப்பான கல்வி நிர்வாக உத்தியோ கஸ்தர்கள் பாடசாலைப் பொறுப்பில் இருந்து விடுபடுகின்றனர். தனியாகக் கல்வி மேற்பார்வையில் ஈடுபட்டு கல்வி நிர்வாகம், கல்வி அபிவிருத்தியில் ஈடுபட வாய்ப்பு உருவாக்கப்படுகின்றது. இவ்வலயக் கல்விப்பணிமனை கூடுதலாகக் கிராமப் புற பின்தங்கிய பாடசாலைகளின் கற்றல், கற்பித்தல் மேற்
14.

Page 73
ப்ார்வையில் கிழமை நாள்களில் மூன்று நாட்கள் பாடசாலை களை மேற்பார்வையில் ஈடுபட வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்தல்
நல்ல பலனை அளிக்கும்.
அதே போல வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன்னைய குறைகூறி ஒழிக்கப்பட்ட வட்டாரக்கல்வி அலுவலக முறை போல் இல்லாமல் புது உருப்பெறவேண்டும். முன்னைய வட்டாரக் கல்வி அலுவலரை கடிதங்களை ஏற்றுக் கையளிக்கும் தபாற் பெட்டி என்று குறை கூறியது போல் இல்லாமல், வலயக் கல்விப் பணிமனைக்கு கற்றல், கற்பித்தல் அபிவிருத்திக்கும் கல்வி நிர்வாக துரித செயற்பாட்டிற்கும் உதவக் கூடியதாக அமைக்கப்பட வேண்டும். இவர்களுக்கு முன்னைய முறையில் 40,70 பாடசாலைகள் ஒப்புவிக்கப்பட்டதுபோல் இல்லாமல் பாடசாலை நெருக்கமாக அமைதல், பரந்து அமைதல் என்ற புவி யியல் அமைப்பை கருத்திற்கொண்டு பாடசாலைத் தொகையை நிர்ணயித்தல் நல்லது. ஆகக்குறைந்தது 20 அல்லது 25 பாடசாலை களுக்கு மேற்படாது இருத்தல் நல்ல வினைத்திறனை அளிக்கும்.
இவ்வட்டாரக் கல்வி அலுவலரும் எந்தவித பாடசாலைக் கடமைகளும் இல்லாதவர் ஆகின்றார். அவர்தனியாக பாடசாலை அபிவிருத்தி, பாடசாலை நிர்வாக மேற்பார்வையில் ஈடுபட முடியும். அதிபர்களில் சமமானவர்களில் ஒருவராக அதிபர் சேவையைச் சாராத கல்வி நிர்வாக உத்தியோகத்தராக இருப்பதால் அதிபர்கள் மீதும் பாடசாலைகள் மீதும் அண்மித்த நிலையில் தனது அதிகாரத்தை ஏற்க வைத்து கடமையைச் செய்ய முடியும். அத்துடன் பாடசாலைகளின் பட்ச பாதகமற்ற முறையில் பாடசாலைகளின் கல்வித் தேவைகளைக் கருத்திற் கொண்டு நம்பகரமான முறையில் வளங்களைப் பகிரமுடியும். பாடசாலை களை அடிக்கடி தரிசிக்க முடியும்.
இப்புதிய கல்வி நிர்வாகக் கட்டமைப்பின் வெற்றி ஆசிரியர் களது அதிபர்களதும் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.
வீரகேசரி - நாளிதழ்
21.03.1995
142

கல்வியும் அதன் முக்கியத்துவமும்
கில்வியானது நுண்மதியாற்றலையும் திறன்களையும் வளர்க்கின்றது. அத்து டன் வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்பு களையும் வளர்க்கவேண்டும். நற்பண்பு களை வளர்ப்பதன் மூலமே வாழ்க்கை யின் குறிக்கோள்களை கல்வியால் பெற்றுக் கொடுக்க முடியும்.
வாழ்க்கைக்கும் கல்விக்கும் நெருங்கிய தொடர்பு காணப் படுகின்றது. வாழ்க்கைக் குறிக்கோள்களை அடையும் வழி கல்வி யாகும். கல்வியே வாழ்க்கை, வாழ்க்கையே கல்வி. இதனையே ஆங்கிலக் கவிவாணர் வில்லியம் வேட்ஸ் வர்த் 'மனிதத் தன்மையினை மனிதர் பெறத் துணையாக விளங்குவது கல்வி' என்று கல்விக்கு வரையறை கண்டார்.
கல்வி என்பது விண்ணில் நின்றும் தோன்றியதன்று. ஏனைய மனித செயல்களிலும் சமுதாய அமைப்புக்களிலுமிருந்து வேறுபட்டு தனியே வளர்ச்சி அடைந்ததுமன்று. அது இயற்கை யுடன் இணைந்து நிகழ்ந்த மனித இனத்தின் நுண்ணறிவுச் செயற்பாடுகளினூடாகத் தோற்றமளித்த ஓர் அமைப்பாகும்.
பெரும்பாலான நாடுகளில் கல்வி சமுதாயத் தோற்றத்துடன் அதனை அடிப்படையாகக்கொண்டே தொடங்கியது, தொடக்க
143

Page 74
காலக் கல்வி முறையானது சமயக்கோட்பாடுகளையும், வழி பாட்டு முறைகளையும் கொண்டதாகவும், பாரம்பரியங்களைப் பேணிப்பாதுகாப்பதாகவும் அமைந்து விளங்கின.
“கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே”
என்பது ஒல்காப் பெருமைத் தொல்காப்பியனார்வாக்கு ஆகும். மக்களுக்குரிய பெருமித வாழ்க்கையைக் கொடுக்கும் நான்கினுள் கல்வியும் ஒன்று. மனித சமுதாயத்தின் மாற்றத்துக்கும் பொருளா தார மேம்பாட்டுக்கும் சமூக அசைவுக்கும் கல்வியே சிறந்த கருவி. ஒருவனது வாழ்க்கையில் படிப்படியாக மாற்றத்தை ஏற்படுத்தி அவனைச் சமூகத்தோடு ஒட்ட வாழவைப்பதும் கல்வியே. இத்தகைய கல்வியின் மேன்மையைப் பற்றிப்பல தத்துவ ஞானிகள் பல்வேறு கருத்துக்களை தத்தம் காலச் சூழலுக்கேற்ப வெளியிட்டுள்ளனர். 'உண்மை, நன்மை, அழகு இம் மூன்றினை யும் உணர்த்தும் கல்வியே கல்வி’ என்றார் கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ, “உடல், உளம், ஆன்மா போன்றவற்றின் இயற்கைத் தன்மைகளை வெளிக்கொணர்ந்து விளக்கம் பெறத்தூண்டுவதே கல்வி' என்றார் காந்தி அடிகள். மேலும் கல்வி பற்றி விளக்க மளித்த காந்தி அடிகள் கல்வியானது மக்களது வாழ்க்கையுடன் இணைந்ததாகவும் அதனை உயர்த்துவதாகவும் அமைய வேண்டும் என்று கருதினார். அத்துடன் குழந்தைகளின் ஆளுமைக் கூறுகளின் சிறந்த பண்புகளை வெளிக்கொணரும் செயல்முறையென்றும் விளக்கமளித்தார். பண்பாடுகளுடன் இலட்சிய வாழ்க்கை வாழ்வதற்கு கல்வியே அடிப்படை என்று தாகூர் விளக்கினார். கல்வியானது குழந்தைக்கு முழுச் சுதந்திரம் என்ற வழியில் அமைய வேண்டும் என்றும், கல்வி ஆன்மீகத் தொடர்புடைய தென்றும் கருதினார். அத்துடன் கல்விக் கொள்கைகளில் இசை, ஓவியம், நடனம் ஆகிய நுண்கலைகளின் முக்கியத்துவம் சிறப்பாக அவரால் வற்புறுத்தப்பட்டது. மனித குலத்தின் மேம்பாட்டிற்கான கருவியாகக் கல்வி செயற்பட வேண்டுமென்பதும் மனிதப்பண்புகளெனப்படும் சிறப்புப் பண்புகளை ஒவ்வொருவரும் பெறச் செய்தல் கல்வியின் இலக்காகத் திகழ்தல் வேண்டுமென்பதும் தாகூரின் கருத்துக் களாகும்.
144

இம்மனித விழுமியங்கள் மேம்பாடடையும் விதத்தில் கல்வி அமையவேண்டும் என்று பூரீ சத்தியசாயி பாபா அவர்கள் கூறு கிறார்கள். 'கல்வி என்பது ஒருவரது நுண்மதியாற்றல்களையும் திறன்களையும் விருத்தி செய்வதோடு மட்டும் நின்று விடாது அவரது உலகநோக்கை விரிவடையச் செய்யவேண்டும். சமூகத் திற்கும் பரந்த உலகத்திற்கும் அவரது பணிகள் பயன்படும் வண்ணம் கல்வி நடவடிக்கைகள் அமைதல் வேண்டும். அறக் கல்வியும் தெய்வீகக் கல்வியும் ஒழுக்கமுள்ள வாழ்க்கையை நோக்கி ஒருவர் செல்வதற்குரிய பயிற்சியைத் தரும்’
ஆத்மீக ரீதியாகக் கல்வியை நோக்கிய சுவாமி விவேகானந்தர் அவர்கள் 'மனிதனிடம் ஏற்கனவே போதித்திருக்கும் முழுமை பெற்ற நிறைவினை (Perfection) மலரச் செய்வது கல்வி யாகும்’ என்றார்.
கல்வி என்பதற்கு ஆங்கில ரீதியாக வரையறுத்தவர்கள் கல்வியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Education என்பதன் வேர்க்கருத்து 'வெளிக்கொணர்தல்' என்பதாகும். கல்வி எனப் படுவது குழந்தைகளிடம் உள்ளமைந்து கிடைக்கும் பல்துறை ஆற்றல்களையும் திறன்களையும் வெளிக்கொணர உதவும் செயல்முறையாகும். உயர்த்துதல் (To Raise) என்று கற்பித்தலுக்குப் பொருள் கொள்வது சிறந்ததாகப்படுகின்றது’
கல்விக்கு விளக்கமளிக்கையில் "கல்வியானது தொடக்க காலம் தொட்டு இன்றுவரை எல்லோராலும் போற்றப்பட்டு வருகின் றது. 'கல்’ என்பதன் வினை அடியாகப் பிறந்தது கல்வி என்பர். 'கல்லி எடு" அல்லது "தோண்டு என்னும் சொல். ஒருவனிடம் மறைந்து கிடக்கும் ஆற்றலைத் தோண்டி வெளிக் கொணர்வதே கல்வியின் இலக்காக அமைதல் வேண்டும்.’
“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தற்கு கற்றனைத் தூறுமறிவு”
என்று வள்ளுவனார் கல்வியின் தேடலை விளக்கியுள்ளார். கல்வி மனிதனிடம் மறைந்து கிடைக்கும் ஆற்றல்களை வெளிக் கொணர்ந்து அவனது வாழ்க்கையை ஒளிபெறச் செய்கிறது.
45

Page 75
கல்வியூடாகவே பண்பாடு வளர்ந்து வருகின்றது. அத்துடன் கல்வியூடாகவே பண்பாடு பண்டு தொட்டுப் பாரம்பரியமாகப் பேணப்பட்டும் வருகின்றது. கல்வியைத் தன் மூச்சாகக் கொண்டு இயங்கி வருவது எமது சமுதாயம். "கேடில் விழுச் செல்வம் கல்வி என்றும், கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்றும் கல்வியை உயர்த்தி மதித்தது தமிழர் பண்பாடு. இம்மை மறுமை ஆகிய இருமைகளிலும் ஏமாப்புடையதாகக் கல்வி கருதப்பட்டது.
இங்கு பாரம்பரியசமுதாயங்கள் கல்வியின் பேறாகிய அறிவுக்கு முதலிடம் கொடுத்த தன்மை காட்டப்படுகின்றது. சமூக மேம்பாடு, கல்வி மேம்பாடு எனலாம்.
கல்வி தற்போது மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றது. 1. முறைமை (Formal)க் கல்வி 2. (up60) puigi (In Formal) 5665 3. (p6opgFIII (Non Formal)di 56ba?
முறைமைக் கல்வி என்பது பள்ளி என்ற ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனத்தில் நடைபெறும் கல்வியையும், முறைமையான கலைத்திட்டத்திற்குட்பட்டுப் பயிலப்படும் கல்வியையும் குறிக்கும். இங்கு கற்றல். கற்பித்தல் முறைமைக்குட்பட்டு நடை பெறும். கல்வி வகைகள் பற்றி பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்கள் குறிப்பிடுகையில் 'முறைசார்ந்த கல்வி என்பது ஆரம்பப் பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரையில் உள்ள கல்வி முறையைக் குறிக்கும், இவ்வாறான கல்வி முறையில் உள்ளடங் கும் ஏனைய முழு நேரத் தொழில் நுட்ப உயர் தொழில் கல்வி நிறுவனங்களும் முறைசார்ந்த கல்வி என்ற பாகுபாட்டில் அடங்கு வனவாகும்."
'முறையில் கல்வி என்பது பள்ளி சாராத அனைத்துப்பட்டறிவுக் கல்வியையும் குறிப்பிடும். அதாவது சமூக அல்லது தனிப்பட்ட வழமை, மரபு ஈர்ந்த சமூகத்தின் குணநலன்களாற் பெறப்படும் கல்வியைக் குறிக்கும். முறையில் கல்வி என்பது ஒவ்வொருவரும் நாள் முழுவதும் தனது சூழல், குடும்பம், அயலவர்கள், நூல் நிலையம், பொதுத் தொடர்பு சாதனங்கள், உளப்பாங்குகள்,
146

வாழ்க்கைமுறை என்பவற்றைக் குறிக்கும். அதாவது வாழ்நாள் முழுவதும் பெறுகின்ற நாளாந்தம் வழங்குகின்ற கல்வியே முறையில் கல்வி என அழைக்கப்படுகின்றது."
முறை சாராக்கல்வி என்பது பள்ளி போன்று ஒழுங்குபடுத்தப் படாத நிறுவனங்கள் மூலம் முறைமைக்குட்படாது பெறப்படும் கல்வியைக் குறிக்கும். "முறைசாராக் கல்வி என்பது நன்கு நிறுவப் பட்டுள்ள முறை சார்ந்த பாடசாலை அமைப்புக்கு அப்பால் இடம்பெறும் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்விச் செயற்பாடுகளைக் கருதுகின்றது. முறைசார்ந்த கல்வியின் ஒரு அங்கமாக அமையாத கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் யாவும் முறைசாராக் கல்வியின் பாற்படும். '
கல்வியை இவ்வாறு வகைப்படுத்தினாலும் கல்வி எங்கும், எப்போதும், எந்நிலையிலும் பெறக்கூடிய ஒன்று என்றும் கூறப் படுகின்றது. "எல்லாருக்கும் வாழ்நாள் முழுவதும் கல்வியாக அமையும் கல்வி முறைமை, முறைமைசாரா முறையில் உள்ளார்ந்த வெளிசார்ந்த ரீதியாக வினைத்திறனைக் கூட்ட இயன்றவரை செயற்படும். தேசிய கல்விமுறையில் கிராம மேம்பாட்டுக்கான கல்வியே அடிப்படையானது. நாட்டின் கல்வி தத்துவ அடிப்படையில் கிராம மேம்பாட்டுக்கல்வி இடம்பெற வேண்டும்' என்று மேற்காட்டிய கருத்து வலியுறுத்தப்படு கின்றது.
வாழ்க்கைக்கு வழிகாட்டும் உண்மைத் தன்மை, தெய்வீகப் பண்புகள் நிறைந்த மேன்மைகள் கொண்ட கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று, கல்வி எல்லோருக்கும், எங்கும், எப்போதும் கிடைக்குமளவிற்குப் பெருக்கெடுத்தோடவல்லது. 'மாந்தர் வள்ளுவன் கூற்று. நாட்டில் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி மக்கள் அனைவரும் கற்றுக்கனிந்து களிப்புறும் கல்வி மானுடரின் பொதுச் சொத்தாகும்."
கல்வியின் முக்கியத்துவம்
கல்வியே வாழ்க்கை; வாழ்க்கையே கல்வி என்ற அடிப்படை
யில் மனித மேம்பாட்டிற்குக் கல்வி பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றது. வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றது; மனிதனை
147

Page 76
வாழ்வாங்கு வாழ வைக்கின்றது. சூழலை நன்கறிந்து அதற்கேற்ற விதத்தில் அவன் தன்னை ஆக்கிக்கொள்ள கல்வி உதவுகின்றது. தொடர்ச்சியான உலக வாழ்க்கையில் நீண்ட ஒர் மரபை பண் பாட்டு விழுமியங்களைக் கல்வியே ஒரு தலைமுறையிலிருந்து இன்னோர் தலைமுறைக்குக் கையளித்து வருகின்றது என்ற அடிப்படையில் கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது.
“சமுதாயத்தில் பண்பாட்டு மரபினைக் கல்வி இளம் தலை முறையினர்க்கு உணர்த்துகின்றது. புதுக்கருத்துக்கள், புத்தாக் கங்கள் (Innovations) ஆகியவற்றின் வளர்ச்சிக்குத் தூண்டுதல் அளிக்கின்றது. தொழில் புரிந்து வாழ்க்கை நடத்தப் பயிற்சி அளிக்கின்றது. சமுதாயத்தில் பிறருடன் பொருந்தி வாழத் துணை செய்கின்றது. பயனுள்ள முறையில் ஓய்வு நேரத்தைக் கழிக்க உதவுகின்றது. அறிவுப் பெருக்கத்திற்கும், ஒழுக்க வளர்ச்சிக்கும் கல்வி உதவுகின்றது. ஆன்மீக உணர்வு முழுமை பெறுவதற்கும் கல்வி துணை செய்கின்றது. மனித இனம் பல்லாண்டு காலம் முயன்று உருவாக்கிய பண்பாட்டை மங்காமல் பாதுகாத்து அதனை மேலும் சிறப்பாக்கக் கல்வி உதவுகின்றது. கல்வி இவ்வாறு முக்கியத்துவம் பெறுவது மட்டுமன்றி பல்வேறுபட்ட அறிவுகளைக் கையளித்து நடத்தை முறைகளை மாற்றியமைத் தலுடன் சூழ்நிலையின்பால் பொருத்தப்பாட்டினைப் பெறவும் உதவுகின்றது. கல்வி ஓர் இலக்கினை அடையவைப்பதனால் முக்கியத்துவம் பெறுகின்றது. குறிக்கோளை உணரவைக்கின்றது. உணர்ந்த குறிக்கோளை அடையும் வழியை கல்வி மூலம் மனிதன் காண்கின்றான். அவற்றைப் பகுப்பாய்வு செய்து நல்லவற்றை யும், தீயவற்றையும் கண்டு கொள்கின்றான். நல்லவற்றைதான் கடைப்பிடிப்பது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் காட்டி நிற்கின்றான்.
கல்வி மனிதனின் அடிப்படை உரிமையாகும். ஒருவன் நல்ல அறிவைப் பெற்று விட்டால் அவனது குடும்பம் அதன் செல்வாக்குக்குட்படுகின்றது. அதுவும் அறிவைப் பெற்ற குடும்பத்தைப் பிரதிபலிப்பதாக மனிதப் பண்பாடு, ஒழுக்கம் அமைந்துவிடும்.
48

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண்விடல்' என்ற வள்ளுவக் குறட்பா கல்வியினால் பெற்ற அறிவு கொண்டு ஆய்வு செய்யாது விட்டால் அதனை அவன் கண்டுவிட முடியாது. அதற்குக் கல்வியே உதவுகின்றது. கல்வி அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது எனக் காட்டுகின்றார். 'கல்வி அறிவை வளர்ப்பது ஆற்றல்களை வளர்ப்பது உணர்ச்சிகளைப் பயன்படுத்துவது மக்கள் வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்வது மனிதனின் சமூக நடத்தையை மாற்றி அமைப்பது மக்களில் உள்ளடங்கியிருக்கும் ஆன்மீகப் பண்புகளைப் படிப்படியாகவும், முழுமையாகவும் வெளிப் படுத்துவதாகும்."சமூகத்தில் உள்ள சாதிவேற்றுமை, உடையவர், இல்லாதவர் என்னும் சீர்கேட்டையும் பெரும்பான்மையோர் வாழ்க்கை வசதியற்றோராயும் சிறுபான்மையோர் வசதியுள்ள வராயும் இருக்கும் சிறுமையினையும் கிராமங்கள் நலிவுற்றுப் போவதையும் கல்வியால் எழுந்த சர்வோதய சமுதாயம் அகற்ற வேண்டும்' எனக் காந்தியடிகள் குறிப்பிடுவதன் மூலம் கல்வியின் முக்கியத்துவம் புலனாகும். 'பல்வேறு கோணங்களில் கல்வியின் முக்கியத்துவம் பற்றிப் பேராசிரியர்கள் ஆராய்ந்து கூறி யுள்ளனர். 'கல்வி என்பது சமுதாயம் அழியாமல் பேணிக் கொள் வதற்கு வேண்டிய கருவியாகும். சமுதாய அனுபவங்கள் கல்வி மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டு, எல்லோரும் பங்கு பெறும் அனுபவங்களாக இருக்கவேண்டும். எனவே கல்வி தனியாள் ஆளுமையை வளர்ப்பதோடு, சமூக வாழ்வையும் தொடர்பு படுத்துவதாக உள்ளது. தனியாள் சிறப்புற சமுதாயம் சிறப்புறும். எனவே கல்வி வாழ்க்கையையும் சமூக முன்னேற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியது. ' சமூக முன்னேற்றமே சமூக நிறுவனங் களின் முக்கிய இலக்கு. அச்சமூகமுன்னேற்றத்தை கல்வி என்ற சாதனமே அளித்து வருகின்ற தன்மையால் கல்வி முக்கியத்துவம் அடைகின்றது.
புது ஊற்று
ஏப்ரல் - ஜூன் 1998
49

Page 77


Page 78
நூலாசிரியர் பற்றி
தற்போது கல்வி அ தொடர்பான கல்வி யாற்றி வரும் கலா நான்கு தசாப்த கா கல்வித்துறையில் இளைப்பாறு முன் கக் (வடகிழக்கு ம இலங்கைக் கல்வி
சேவையில் முதல
பேராதனைப் asis.
பட்டதாரியாகச் சி
ஆ ; jန္တီ ၄၇ကြီး)၉၈၄). தி அவர் எழுதி வெளி
பேராசிரி niini. Ggem
பீடாதிபதி, கல்வி
ISBN 978-955-50250-1-0
|| ||
978 9555"O25O1 O
கொழும்புப் பல்க
 

புமைச்சில் மாகாணம், வலையம் பி வளர்ச்சிக்கான சிறப்பறிஞராகப் பணி நிதி. நா. தணிகாசலம்பிள்ளை அவர்கள் லத்துக்கும் மேலாக இலங்கையின் பல்வேறு மட்டங்களில் பணிபுரிந்தவர். னர் மேலதிகக் கல்விப் பணிப்பாளரா ாகாணம்) கடமையாற்றியவர்.
நிர்வாக ாம் வகுப்பில் உயர் அதிகாரியாகப் தி அவர்கள் இவ்வகையில்
隐
5.
கலைக்கழகத்தில் கலைப்
த்தியெய்திய
னிகாசலம்பிள்ளை கல்வியியல் துறை
ர்பட்டங்களைப் பெற்று கல்வியியலா
கல்விப்பணியைத் தன் வரித்துக் கொண்டவராதலின், அத்துறை
ஆய்வுக் கட்டுரைகளையும் அவர்
ஏற்கனவே கல்விச் சிந்தனைகள், ல்வி நிர்வாகம் ஆகிய நூல்களையும் ரியிட்டுள்ளார்.
சந்திரசேகரன் IL FI LÈ லைக்கழகம்