கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீலன் திருச்செல்வத்தின் கட்டுரைகள்

Page 1
ព្រឹត្យភ្លែរ៉ូ
கட்டு
DQafğ5, 9
JEG) ID பன்மைத்துவமும்
இனத்துவ கற்கைகளு
 

亚延强血 ញញ៉ា
fø)[0öốI புவாதம் பல்வகைமையும்
க்கான சர்வதேச நிலையம்
ாழும்பு

Page 2

நீலன் திருச்செல்வத்தின் கட்டுரைகள்

Page 3

நீலன் திருச்செல்வத்தின் கட்டுரைகள்
மனித உரிமைகள்
அரசமைப்புவாதம்
பன்மைத்துவமும் பல்வகைமையும்
இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் கொழும்பு

Page 4
இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் 2, ஹறின்சி ரெறஸ், கொழும்பு 8, இலங்கை
ugüLflsoup (C) 2002 ICES ii
ISBN: 955-580-072-3
Printed by Unie Arts (Pvt.) Ltd No.48 B, Bloemendhal Road, Colombo 13.

(1)
(2)
(3)
(4)
(5)
பொருளடக்கம்
மனித உரிமைகள்: வியன்னா மாநாட்டுக்குப் பின்னர் கொள்கை மற்றும் ஆய்வுகளுக்கான ஒரு நிகழ்ச்சிநிரல்
சிறுபான்மையினரும் அபிவிருத்தியும்
சிறுபான்மையினர் மீதான ஐக்கிய நாடுகள் பணிக்குழு
அரசமைப்புவாதமும் பல்வகைமையும்
தென்னாசியாவில் சகிப்புத்தன்மை, சனநாயகம் மற்றும் மனித உரிமைகள்
33
45
59
93

Page 5

மனித உரிமைகள்: வியன்னா மாநாட்டுக்குப் பின்னர் கொள்கை மற்றும் ஆய்வுக்கான ஒரு நிகழ்ச்சிநிரல்
எமது காலத்தின் ஆன்மாவையும். யதார்த்தங்களையும் உசுப்புதல்
வியன்னா பிரகடனம் மற்றும் செயற்பாட்டு வேலைத்திட்டம் மனித உரிமைகளுக்கான உலக மாநாடு, 25 ஆனி 1993.
மனித உரிமைகள் உணர்மையில் தொடர்ச்சியான அசைவியக்கம் கொண்டவை. அதாவது மனித உரிமைகளுக்கு இரட்டை இயல்புகள் உள்ளன. ஒருபுறம் அவை காலத்துக்கு அப்பாற்பட்ட முழுமையான கட்டளைகளாகவும், அதே நேரம், மறுபுறத்தில் வரலாற்று அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட கணத்தைக் காட்டி நிற்பவையாகவும் உள்ளன.
Աւ: ரோலப் Աւ ரோஸ் - காலி
அறிமுகம்
மனித உரிமைகள், சமூகத்தின் சமகால தேவைகளுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுப்பதற்காக ஆய்வுகள் மற்றும் கொள்கைகளைக் கொண்ட ஒரு நிகழ்ச்சிநிரலை முன்வைப்பதற்கு ஏதேனும் முயற்சிகள் எடுக்கப்படுமாயின் அம்முயற்சிகளின் ஒரு பகுதியாக விளங்கக் கூடிய சில விடயங்களைக் கோடிட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இது பணிகளுக்கு உதவுகின்ற ஓர் ஆவணமே தவிர எவ்விதத்திலும் முழுமையானதன்று. பலருடைய கருத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. மனித உரிமைகள் இயக்கத்தின் எதிர்காலம் குறித்த சமகால வாதப்பிரதிவாதங்களில் பங்கு கொண்டுள்ள பலரும் இதில் பங்கு கொள்கின்றனர்.
மனித உரிமைகள், சனநாயக விழுமியங்கள். பிணக்குகளுக்கான சமாதானரீதியான தீர்வுகள் ஆகியவற்றில் சர்வதேச சமூகத்துக்கு இருக்கக்கூடிய

Page 6
இயலுமை குறித்த உயரிய நம்பிக்கைகள் மற்றும் அதற்கெதிரான ஆழமான கிலேசங்கள் ஆகியவற்றின் பின்னணியில் தான் வியன்னா மாநாடு நடைபெற்றது. கிழக்கு ஐரோப்பா. மத்திய ஐரோப்பா, தென்னாசியாவின் சில பகுதிகள், தென்கிழக்கு ஆசியா, தென்னாபிரிக்கா ஆகியவற்றில் நடந்தேறிய அசாதாரணமான அரசியல் மாற்றங்களில் மனித உரிமைகள் இயக்கம் கொண்டிருந்த பங்கினால் உற்சாகமடைந்த பலர் அங்கிருந்தனர்.
ஜோஸ் சலாகுவட் (Joes Zalaquette) 1992இல் இதனை எமக்கு நினைவுபடுத்தினார். உண்மையிலேயே குறிப்பிடத்தக்க சாதனைகள் இரண்டு. முதலாவது தொடர்ச்சியான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது பல இடங்களில் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. அத்துடன் சுதந்திரமும் அடையப்பட்டது; மனித உரிமை சார்ந்த விழுமியங்கள் தான் எமது காலத்தின் சமூக ஒழுக்கத்தில் மிகவும் பாரிய பிரச்சினை என்பது மக்களின் இதயங்களில் மிகவும் ஆழமாகப் பதிக்கப்பட்டு விட்டது. 'சலாகுவட் இதனை எடுத்துரைத்தது மட்டுமன்றி அதற்குச் சான்றாக சர்வதேசிய பிராந்திய ஒப்பந்தங்கள், கண்காணிப்பு அமைப்புக்கள், சர்வதேசரீதியிலும் மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலும் பணிபுரிகின்ற மனித உரிமை செயற்பாட்டாளர்களை நிறுவன மயப்படுத்தியமை போன்ற பலவற்றை எடுத்துக்காட்டினார். வாண்மையும், நடுநிலைமையும் கொண்ட இத்தகைய செயற்பாட்டாளர்கள் மனித உரிமைகள் என்னும் புலத்தின் தூண்களாக விளங்குகின்றனர் எனவும் சலாகுவட் குறிப்பிட்டார்.
சமகால மானிட சிக்கல்களுக்கான பரிகாரமாக மனித உரிமைகளின் பொருத்தப்பாட்டை பின்வருமாறு விரிவாக எடுத்துரைக்கிறார் கார்டினல் 61 (33503J' (Cardinal Etsegaray:
சுய நம்பிக்கையையும் இழக்கத் தொடங்கி விட்டது. தெளிவற்ற இந்தச் சூழ்நிலையில் மனித உரிமைகள் பற்றி ஈனஸ்வரத்தில் ஒலிக்கும் குரல் வாழத்துடிப்பவர்களின் இயல்பான குரல் தான்: மனித உரிமைகளைப் பற்றுகின்ற மானிடத்தின் கைகள் உயிர்காக கும் மரிதவையை (life buoy) தாவிப் பற்றுகின்றவர்களின் கைகள் தான்.
காணாமற் போதல், சித்திரவதை, நீதி முறைமைக்குப் புறம்பான கொலைகள், (Extra Judicial killings) Uustis JLDT601 (g(up 61.j6i(p60p856i, 360Tub, LD5tb சார்ந்த சகோதரப் படுகொலைகள் உள்ளிட்ட தொடர்ச்சியாக நடைபெறுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து வேறும் பலர் பிரமித்துப் போயுள்ளனர். இப்படுபாதகச் செயல்களை இழைப்பவர்கள் சட்டமும், அரசியலும் தருகின்ற பாதுகாப்புக்குள்ளேயே செயற்படுகின்றனர். இவ்வாறான குற்றங்களுக்கு அரசுகளை வகைகூறச் செய்கின்ற மனித உரிமைக்
2

குழுக்களின் முயற்சிகள் சர்வதேச சமூகத்தின் வெறுப்பையும் , அக்கறையின்மையையும் மென்மேலும் அதிகரிக்கின்றன.
வியன்னா மாநாடு (Vienna Conference) உள்ளார்ந்து காணப்படுகின்ற கெளரவம் மற்றும், மதிப்பிலிருந்து பெறப்படுவதே மனித உரிமைகள் என்னும் சார்புநிலையற்ற கருத்தின் அடிப்படையில் சர்வதேச மனித உரிமைகள் முறைமை மற்றும் பாதுகாப்பு பொறிமுறை பற்றிய ஒரு முழுமையான பகுப்பாய்வை மேற்கொள்ள சிறந்ததொரு வாய்ப்பு எனக் கருதப்படுகின்றது. கடந்த நாற்பது ஆண்டுகால மனித உரிமை பற்றிய முன்னேற்றங்களை மதிப்பீடு செய்வதும் இம்மாநாட்டின் மீது சுமத்தப்பட்டிருந்தது. அண்மையில் மைக்கேல் சிசேர்னி (Michael Cizermy) குறிப்பிட்டதைப் போல மனித உரிமைகள் பற்றிய உலக மாநாட்டை தயார்ப்படுத்துவதே மிகவும் கடினமாகி விட்டது. உத்தியோகரீதியான நான்கு தயார்ப்படுத்தல் கூட்டங்கள் உட்பட பல பிராந்திய மாநாடுகள் நடைபெற்று முடிந்த போதிலும் அவை எதிர்பார்ப்புக்களை தெளிவுபடுத்தவோ, ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கவோ, இறுதிப் பிரகடன வரைவை உருவாக்கவோ தவறி விட்டன. எனவே பொதுச்சபையிடமிருந்தே ’தற்காலிகம்" எனப் பெயரிடப்பட்ட நிகழ்ச்சி நிரலைப் பெற வேண்டியிருந்தது. மாநாட்டை நடாத்துவது சிரமாகவிருந்தது. 12,000 சொற்களுக்கு மேற்பட்ட நிகழ்ச்சித் திட்ட செயற்பாடுகள் பற்றிய இறுதிப் பிரகடனத்தை விவாதிக்கவும், திருத்தவும், அங்கீகரிக்கவும் பெரும்பாலும் இரண்டு வாரங்கள் பிடித்தன.
வியன்னா பிரகடனம் பற்றிய பிரதிபலிப்புகள் பலவிதமாக அமைந்தன. பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியிலும் இப்பிரகடனம் தொடர்பான ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடிந்தமை பற்றி சிலர் நிம்மதி அடைந்தனர். பெண்கள் உரிமைகளை ஒன்றிணைத்தமை, மற்றும் மனித உரிமைகளின் சர்வதேசத்தன்மை மற்றும் பிரிபடாத்தன்மை (indivisibility) ஆகியன மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டமை மாநாட்டின் குறிப்பிடத்தக்க சாதனையாகும். மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துதல் அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பு என்பதையும், ஐக்கிய நாடுகளின் முதன்மை இலக்கு என்பதையும் அத்துடன் அது சர்வதேச சமூகத்தின் சட்டரீதியான அக்கறை என்பதையும் பிரகடனம் மீண்டும் உறுதிப்படுத்தியது. எனினும் மைக்கல் சிசேர்னி கூறியதைப் போன்று மனித உரிமைகள் பற்றிய அழுத்தம் ‘வார்த்தைகளில் மட்டுமே அல்லாது செயலில் இல்லை. குழம்பிப் போயிருக்கும் உலகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மனித உரிமைகள் தயாராக இல்லை. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் (High Commissioner for Human Rights) ஒருவரை நியமிக்கும் தீர்மானம் மிகவும் முக்கியமானதொன்று என்றில்லாவிட்டாலும் கூட ஒரு முன்னேற்றகரமான முயற்சி தான் என்பதை மறுப்பதற்கில்லை.
எனினும் இந்த புறத்தோற்றத்துக்குக் கீழே பல பிரச்சினைகளும் உள்ளன. சர்வதேச மனித உரிமைகள் பற்றிய நியமங்கள் அவற்றின்

Page 7
பிரயோகம். மனித உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச கூட்டுமுயற்சிகளின் பொருத்தப்பாடு தொடர்பான பல ஆழமான கருத்தியல் மற்றும் கலாசார வேறுபாடுகள் இல்லாமலில்லை. பிலாபாரி கெளசிகன் (Bilabhari Kausikan) பின்வருமாறு முறையிடுகின்றார்: மேற்படி பிரகடனமானது "பகட்டான யதார்த்தமற்ற சர்வதேசியத்துக்கும் முடக்கி வைக்கக் கூடிய கலாசார சார்புவாதத்துக்குமிடையில்” ஒரு சமநிலையைப் பேணத் தவறி விட்டது. (பல தென் ஆசிய நாடுகளின் அதிகாரபூர்வ கருத்தினை இக்கூற்று பிரதிபலிக்கின்றது). பிரகடனம் பற்றிய நீண்ட வாதப்பிரதிவாதங்கள் ஒர் இராஜரீக பூசிமெழுகலுக்கு (Diplomatic compromise) வழி வகுத்தனவே தவிர உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியனவாக இருக்கவில்லை. எனக் கூறும் அவர் இதனையும் அழுத்தியுரைக்கிறார்: "ஆசியாவுக்கும் மேற்குலகத்துக்குமிடையில் உண்மையான உரையாடல் எதுவும் நிகழவில்லை. உள்ளங்கள் இணையக்கூடிய நேர்மையான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. வியன்னா மாநாடு சாதித்தது எதுவேனும் இருக்குமெனில் அது இருபக்க மனப்பாங்குகளை மேலும் இறுகச் செய்ததும் மனித உரிமைகள் மீதான மேற்கத்தைய நிலைப்பாடு பற்றி ஆசிய நாடுகள் கொண்டிருக்கும் ஆழ்ந்த கிலேசத்தை இன்னும் அதிகரித்து விட்டதுமாகத் தான் இருக்க முடியும்.”
அபிவிருத்தி என்பது சகலருக்கும் கைமாற்ற முடியாத உரிமை என்பதை மாநாடு மீண்டும் உறுதிப்படுத்திய போதும் அதன் உள்ளடக்கம் என்ன என்பதை விரித்துரைக்கவோ அல்லது நடைமுறையில் அதன் பொருள் என்ன என்பது பற்றியோ தெளிவுபடுத்த மாநாடு தவறி விட்டது. அது மாத்திரமல்லாமல் அரசியல் நிபந்தனைப்பாடுகள் அல்லது மானிடத் தலையீடுகள் தொடர்பான பிரச்சினைக்குரிய விடயங்கள் பற்றிய தீர்க்கமான வரையறைகளையும் அது தரவில்லை. மைக்கல் சிசேர்னி குறிப்பிட்டதைப் போன்று ‘தேசிய இறைமை என்பது வியன்னாவின் தலை மீது அமர்ந்து கொண்டது. இதன் காரணமாக முக்கிய பிரச்சினைகள் மீதான கருத்தொருமிப்பு சாத்தியமற்றுப் போய் விட்டது. சுதேசிகள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் புதிய உத்வேகத்துடன் மீள உறுதி செய்யப்பட்ட போதும் செயற்பாடுகள் பற்றிய வேலைத்திட்டமானது குறிப்பாக ஐக்கிய நாடுகளின் பொறிமுறைகள் மற்றும் செயன்முறைகளை வலுப்படுத்த தவறிவிட்டது.
உலகப் பொதுமைக்கான நழுவிச்செல்லும் தேடல்
அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய கருத்தொருமிப்பை ஏற்படுத்துவதற்காக வியன்னாவில் பாரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த உரிமைகள்
மற்றும் சுதந்திரங்களில் உலகளாவிய பொதுமை குறித்து எவ்வித சந்தேகமும்
4

இல்லை என வியன்னா பிரகடனம் கூறியது. உலகளாவிய பொதுமை குறித்த மேலோட்டமான கருத்தொருமிப்பு ஏமாற்றுவித்தையாகும். இது பற்றி பிலாபாரி கெளசிகன் பின்வருமாறு கூறுகின்றார்: “மனித உரிமைகள் பற்றிய ஆசிய, மேற்கத்தைய கருத்து நிலைகளுக்கிடையிலான இடைவெளியின் அடிப்படையில் எல்லா மனித உரிமைகளின் உலகளாவிய புனைந்துரை (Myth of universality) என்னும் மாயை தீங்கு பயக்கக் கூடியது. இந்த இடைவெளியை உறுதியாக்கினால் அதனை மூடவும் முடியாது. ஒரு தேசத்தின் தனிததுவமான சமூக, பொருளாதார கலாசார, அரசியல் யாதார்த்தங்களைக் கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்படுகின்ற தடை அமுலாக்கமே இவையென அவர் மேலும் கவலை கொள்கிறார். 45 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச பிரகடனத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட கருத்தொருமிப்பு பற்றி இன்று கேள்வி எழுப்பப்படுகின்றது. அதனுடைய தகுதியுடைமை குறித்து பிரச்சினைகள் எழுப்பப்படுகின்றன. 30 பெரும்பாலான உறுப்புரைகளில் அவற்றின் வியாக்கியானம், பிரயோகம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. எல்லாமே தீர்க்கப்பட்டு விட்டன எனக் கூறுவது ஏமாற்றுவது மாத்திரமல்ல பிழையானதும் கூட" எனக் கூறும் கெளசிகன் கருத்தொருமிப்பைத் தொடர்ந்தும் பேண வேண்டுமெனில் பல்வேறு கருத்துநிலைகளுக்கிடையில் தொடர்ந்து விவாதம் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்துகிறார்.
இந்த விமர்சகர்கள் இனப்படுகொலை, கொலை, அடிமைத்தனம் ஆகியவற்றுக்கிடையில் ஒரு தீர்க்கமான வேறுபாட்டைக் கோருகின்றனர். சர்வதேச சட்டத்தின் உலகளாவிய பிரயோகத்தில் இவை தொடர்பான ஒரு கருத்தொருமிப்பு நிலவுவதாக இவர்கள் நம்புகின்றனர். ஆனால் பொருளாதார மற்றும் மீள் விநியோக குறிக்கோள்களை எய்துவதற்கு ஊன்றிய நலன்களின் அதிகாரங்களை உடைப்பதற்கான மரண தண்டனை வழக்குத் தொடுக்காமல் தடுத்து வைத்தல், பத்திரிகைச் சுதந்திரத்தில் கட்டுப்பாடு அல்லது கடுமையான சட்டங்கள் ஆகியனவும் இந்த அடிப்படைச் சட்டங்களின் பகுதியாக இருக்க வேண்டுமா என்பதில் இவர்கள் பிரச்சினைப்படுகின்றனர். அத்துடன் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களைக் கொண்ட பட்டியல்கள் நீண்டு கொண்டு போவதைப் பற்றியும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தேசிய பொருளாதார, சமூக கொள்கையின் சகல அம்சங்களும் அதாவது சம்பளம், வேலை நிபந்தனைகள், தொழிற்சங்கங்கள், வாழ்க்கைத்தரம், ஒய்வும் பொழுதுபோக்கும், நலஉரிமையும் சமூக பாதுகாப்பும், பெண்கள், சிறுவர்களின் உரிமைகள், சூழல் பற்றிய சகல அம்சங்களும் இதில் இடம் பெறுவதாகவும் இவர்கள் குறைபடுகின்றனர். W
இக்கருத்தினை "அங் சான் சு கி" (Aung San Suu Kyi) என்பவர் மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றார். ‘உள்ளார்ந்த கெளரவத்தையும், மனித உரிமைகளின் சமத்துவம் மற்றும் கையளிக்க முடியாத தன்மைகளை அங்கீகரிக்கும் இக்கருத்துக்கள் சுதேசிய விழுமியங்களுக்கு எதிரானது என்று
5

Page 8
கூறுவது பர்மியர்களுக்கு குழப்பத்தை விளைவிக்கின்றது. இக்கருத்துக்கள் சகல மனிதர்களும் நியாய உணர்வுக்கும் மனச் சான்றுக் கும் உரித்துடையவர்கள் எனக் கூறுகின்றன. சர்வதேச சகோதரத்துவத்தை விதந்துரைக்கின்றன. மனித உரிமைகள் மீதான சர்வதேச பிரகடனத்தின் முப்பது உறுப்புரைகளும் முழுமையும் சிறப்பும் பொருந்தியவைகளாகவே காணப்படுகின்றன. இதற்கு எதிராக சிலர் கூறுவதை விளங்கிக் கொள்வது சிரமமாகத் தோன்றுகிறது.
எனினும் டானிலோ ரேக் (Damilo Turk) உலகளாவிய பொதுமை (Universality) என்பது உலகளாவிய ஓரினத்தன்மை ( Uniformity) எனப் பொருள் கொள்ளத் தேவையில்லை என வாதிடுகின்றார். சர்வதேச பிராந்திய மனித உரிமைகளை நடைமுறைப்படுத்தும் உள்ளுர் நீதிமன்றங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தும் அமைப்புக்களுக்கு சுயமாக மதிப்பீடு செய்யும் உரிமை வழங்கப்பட வேண்டுமென அவர் கூறுகிறார். எனினும் முற்றாகத் தடுக்கப்பட வேண்டிய சித்திரவதை, விசாரணையற்ற அல்லது ஒரு தலைப்பட்சமான மரண தண்டனை, காணாமற் போதல், ஒரு தலைப்பட்சமான தடுத்துவைப்பு, கைது செய்தல் போன்றவற்றுக்கு இது பொருத்தமானதல்ல. ஆனால் ஏனைய விடயங்களுக்கு இந்த உரிமையை வழங்கலாம் என்னும் கருத்தையும் அவர் முன் வைக்கிறார். رهٔ மனித உரிமைகள் பற்றிய சர்வதேச நியமங்களும் , உருவாக்கப்படுகின்ற சட்டக் கோவைகளும் மேற்கு நாடுகளின் தனிநபர் ஆளுமையை அடிப்படையாகக் கொண்டனவே தவிர ஆசியாவின் சமூக அடிப்படை மரபுகளைத் தளமாகக் கொண்டவை அல்ல என்னும் வாதமும் முன் வைக் கப்படுகின்றது. அதீதுடன் சட்ட நிறுவனங்களும் , நடைமுறைப்படுத்தும் அமைப்புக்களும், பொறிமுறைகளும் மேற்கத்தைய பகைசார் அணுகுமுறையைக் கைக்கொள்ளுகின்றனவே அல்லாமல், தென்னாசிய மற்றும் கிழக்காசிய மரபுகளின் சமரசம், கருத்தொருமிப்பு என்னும் அடிப்படையிலான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது. வேறு சில புலமையாளர்கள் இத்தகைய விமர்சனங்கள் மிகைப்படுத்தப்பட்டவை எனவும் மேற்கு நாடுகளின் சட்டம் மற்றும் அறிவாண்மை சார்ந்த மரபுகள் தனிநபர் ஆளுமை சார்ந்த அம்சங்களையும் சமூக அடிப்படை சார்ந்த அம்சங்களையும் ஒருங்கே கொண்டுள்ளன எனவும் வாதிடுகின்றனர். கருத்தொருமிப்பு தேடும் அணுகுமுறையில் (ConsensusSeekingapproach) ஒரு தனிநபர் தனது சகல உரிமைகளையும் சமூகத்துக்கு தாரைவார்த்து விட வேண்டும் என்னும் கருத்தையும் அவர்கள் மறுக்கின்றனர். சமூகமும் அரசும் ஒன்றுதான் என்னும் கருத்தை யாஷ் காய் (Yash Ghai) மறுக்கின்றார். சமூகமும் அரசும் இரு வேறு நிறுவனங்கள். சமூகம் என்ற பெயரில் பல அரசுகள் சிவில் உரிமைக் குழுக்களில் சமூக, அரசியல் முனைப்புக்களின் கழுத்தை நெரித்துவிட்டன. அத்துடன் சுதேசிகள், சிறுபான்மையினர், மாற்று அபிவிருத்தி நோக்குகளை ஒரங்கட்டி விடவும்
6

இக்கருத்து பயன்பட்டது. அதே போல தென் பகுதி நாடுகள் ஒரு கலாசார, கருத்தியல் பொதுமையால் இணைக்கப்பட்டுள்ளன என்பதும் அது மேற்கு நாடுகளின் தனிநபர் ஆளுமை மற்றும் அறிவாண்மை மரபுகளுக்கு (Intelectual traditions) முற்றிலும் விரோதமானது என்பதும் கூட தவறானது. ஆசியாவில் இன்னும் கூறப்போனால் கலாசாரப் பொதுமைகளைக் கொண்டுள்ளதாகத் தோன்றும் கிழக்கு மற்றும் தென் கிழக்காசியப் பிராந்தியத்தில் கூட குறிப்பிடத்தக்க பன்மைத்துவமும், கருத்துநிலைகளும் காணப்படுகின்றன.
ஒரு பொதுவான தளம் இல்லாமலிருப்பது சுதேசிய கலாசாரம், விழுமியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மனித உரிமைகள் பற்றிய தெளிவான ஆசியப் பார்வை ஒன்றினை உருவாக்குவதற்கு தடைக்கல்லாக விளங்குகிறது என யாஷ்காய் வாதிடுகின்றார். மனித உரிமைகள் பற்றிய ஆசிய நோக்குகளுக்கும் மேற்கத்தைய நோக்குகளுக்குமிடையில் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் உள்ளன என்பது அவரது கருத்தாகும். மேற்கத்தைய சனநாயகங்களில் ”அரசியல் நிறுவனம் குறித்த வேறுபட்ட பார்வைகள்” (Competing paradigms) இல்லை. எனினும் ஆசியாவில் மனித உரிமைகள் என்பது ‘மாறுநிலைத் தன்மைகளுக்கான உள்ளார்ந்த g56160LD60)uuds (transformative potential) Qa5(T60ii (66f 6Tg5L6ir sig55 TJ) போட்டிக்கும் சிறந்த சமூகம் பற்றிய வேறுபட்ட கருத்துக்களுக்கும் தளமாக அமைந்துள்ளது. இரண்டாவதாக ஆசியாவில் குழுப் படுகொலைகள், வகைதொகையின்றிக் காணாமற் போதல் உட்பட இனக் குழுமங்கள், பெண்கள், சிறுவர்கள், பின்தள்ளப்பட்ட சமூகங்கள் தொடர்பாக பாரதூரமானதும், தொடர்ந்தேர்ச்சியானதுமான மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. இவ்வாறான மோசமான மனித உரிமை மீறல்களின் கதாநாயகன் அரசுதான். ஆனால் சிவில் சமூகத்திலும் பெருமளவான மீறல்கள் உள்ளார்ந்து காணப்படுகின்றன. எனவே இங்கு மனித உரிமைகள் தொடர்பான வித்தியாசமான பிரக்ஞை தேவைப்படுகிறது. குழு உரிமைகளில் அழுத்தமும் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதல் மாற்றுவழிகளைக் காட்டக் கூடிய ஆக்கத்திறன் மிக்க உபாயங்கள் முன்வைக்கப்பட வேண்டியுள்ளன.
எனினும் மனித உரிமைகள் பற்றிய பொதுக் கருத்தை உருவாக்கிப் பேணுவதையும், அதனை அமுல் செய்வதையும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. பனிப்போரின் முடிவுக்குப் பின்னர் பொதுக் கருத்தை உருவாக்குவதில் இரண்டு குறிப்பிடத்தக்க விடயங்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளன. முதலாவதாக உலகப் பொதுமை குறித்து வீராவேசமாக கர்ச்சனை செய்யும் சில மேற்கு நாடுகள் அதற்கான அருகதையை இழந்து நிற்கின்றன. அந்நாடுகளிலேயே இனவாதமும் முளைவிட்டுள்ளன. குடியேற்றம் தொடர்பான அவர்களது கொள் கைகளும் நடைமுறைகளும் பாரபட்சமானவைகளாக உள்ளன. இந்நாடுகளின் தொடர்ச்சியான பொருளாதார வீழ்ச்சி, குற்றங்கள். போதைவஸ்துப் பாவனை, நகர்ப்புற அடிமட்ட
7

Page 9
வர்க்கத்தினரைத் தொடர்ச்சியாக அமுக்கி வைத்திருத்தல் போன்ற அவர்களது சமூக பிரச்சினைகள் காரணமாக இந்நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய போதனைகள் சந்தேகத்துடன் நோக்கப்படுகின்றன. இரண்டாவது. 1990களில் கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் பொருளாதார வெற்றியானது 1990களின் மையநிலை தந்திரோபாய உண்மையாகி விட்டது. அத்துடன் சர்வதேச பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் முதற்றடவையாக யூதகிறிஸ்தவ அறிவாண்மை மரபுகளுக்கு வெளியிலான நாடுகள் முதன்மை நிலையை அடைந்தன. இந்நாடுகள் தமது சொந்த நாகரீகம், மரபுகள், நிறுவனங்கள் பற்றிய சுயசிந்தனைகளுக்கு மென்மேலும் உட்படுகின்றன. இவ்வாறாக மனித உரிமைகள் என்பது தென் பகுதி நாடுகளின் மீது * திணிக்கப்படுகின்ற மேற்கத்தைய உலக மேலாண்மை மற்றும் அறிவாண்மைக்கான ஒரு கருவியாக நோக்கப்படுகின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் மனித உரிமைகளின் மேம்பாடு என்பது புதிதாக கைத்தொழில் மயமான நாடுகளின் பொருளாதார அடித்தளத்தின் மீதான தாக்குதல் எனவும் நோக்கப்படுகின்றது.
மனித உரிமைகள் என்பது ஒவ்வொரு அரசினதும் இறைமைக்கு உட்பட்டதாகவே அமைகிறது என்பது தான் மனித உரிமைகள் பற்றிய அதிகாரபூர்வமான கருத்து. ஆனால் இவ்விடயத்தில் கருத்தொருமைப்பாட்டை உருவாக்கிப் பேணுதல் என்னும் பிரச்சினையானது மனித உரிமை என்பதன் இயல்புகள் என்ன என்னும் அடிப்படைக்கே என்மை இட்டுச் செல்கின்றன. மனித உரிமைகள் பற்றிய கலந்துரையாடல்கள் தென்பகுதி மக்களின் விழுமியங்களுக்கும் நம்பிக்கைகளுக்கும் மிகவும் அந்நியமான வகையில் நடந்தேறுவது தொடருமாயின் மனித உரிமைகளின் உலகப் பொதுமை என்ற கருத்து வலுவிழந்து போய்விடும். ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க மக்களின் நம்பிக்கைகளே அவர்களின் சமூக, சமய வாழ்க்கை முறைமைகளுக்கு அர்த்தமும் வடிவமும் தருகின்றன. மனித உரிமைகள் இந்த நம்பிக்கைகளுடன் இணைக்கப்படின் மனித உரிமைகளுக்கு இருக்கக் கூடிய ஆதரவுத் தளமானது விரிவடையும். இந்து/பெளத்த நீதிமுறைக் கோட்பாடுகளுக்கு அடித்தளமாக 'தர்மம்’ (Dharma) போன்ற எண்ணக்கருக்கள் அமைந்துள்ளன. ஆட்சியாளர்கள் மக்களின் விசுவாசத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்களை மீறக்கூடாது என இக்கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. ஆட்சிமுறை ஒழுங்குகளையும் , சனநாயக வகை கூறல்களையும் முன்னிலைப்படுத்துவதில் மேற்படி கோட்பாடுகளையும் எண்ணக்கருக்களையும் உள்வாங்கிக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இதே போல மனித உரிமைக் கோட்பாடுகளுக்கும் இஸ்லாமிய உலகின் அடித்தளமாக விளங்கக்கூடிய எண்ணக்கருக்கள். நிறுவனங்கள். மொழிசார்ந்த மரபுகள் ஆகியவற்றுக்கும் இடையிலுள்ள தொடர்புகளை முன்னிலைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
8

இவ்வாறான அணுகுமுறை இப் போதுள்ள நியமங்களை குறைப்பதாகாது அல்லது கலாசார தனித்துவம் என்னும் பெயரால் மதிப்பைக் குறைப்பதாகவோ அல்லது ஒதுக்கி வைப்பதாகவோ கருதக் கூடாது. அல்லது ஒரு “கற்பனாரீதியான கடந்த காலத்தில் அல்லது கலாசாரத்துக்குள்’ பாதுகாப்பாக பின்வாங்கிக் கொள்வதாகவும் எண்ண வேண்டியதில்லை. அதே நேரத்தில் ஆசிய, ஆபிரிக்க, சமய, கலாசார மரபுகள் பாரபட்சமான, மனிதாபிமானமற்ற நடைமுறைகளைப் பொறுத்துக் கொள்கின்றன என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. சமயமும், கலாசாரமும் தான் தம்மை அடக்கி ஒடுக்குவதற்கான மூலங்கள் என பெண்கள் கருதுவதாக ராதிகா குமாரசாமி எம்மை எச்சரிக்கிறார். எனவே எமக்கு முன்னுள்ள பணி சிக்கல் தன்மையற்றது எனக் கூறுவதற்கில்லை. ஆனால் சர்வதேச உரிமைகளுக்கு ஆதரவு தேடுகின்ற தளத்தினை நாம் விரிவுபடுத்த வேண்டுமெனில் கலந்துரையாடுகின்ற உரிமையானது மனித உரிமைகள் மற்றும் அதைப் பற்றிய தற்போதைய எண்ணக் கருக்கள், சிந்தனைகளுக்கப் பால் விரிவுபடுத்தப்பட வேண்டும். மனித உரிமைகள் இயக்கத்தின் வெளிப்படையான தோல்விகளில் ஒன்று என்னவெனில் சனநாயகம் மற்றும் பன்மைத்துவ விழுமியங்களுக்கான ஆதரவுத் தளத்தை அதனால் விரிவுபடுத்த முடியாமல் போனமையாகும். ஒரு முழுப் பரம்பரையினரின் சமூக நோக்கானது இன்று இனக் குழும ஒதுக்கல் (ethno-popular exclusion) மற்றும் சகிப்பின்மை (intolerance) என்னும் கருத்தியல்களால் தாக்கம் பெற்றுள்ளது.
சியா சர்தார். அஸ்ஹிஸ் நான்டி, மெரில் வின் டேவிஸ் (Zia Sardar, Ashis Nandy. Merry! Wyn Davies ) gaśG3uusTj SÐ60őT6Od Dulbò g6i6nusTO கூறினர்: “1990 களிலும் எதிர்காலத்திலும் எம் முன்னாலுள்ள சவால் எமது பன்மைத்துவ கடந்த காலத்தை மீட்டெடுத்து அதனூடாக எமது பன்மைத்துவ எதிர்காலத்தைக் கட்டமைப்பதாகும். அதன் மூலம் உலகை நோக்குவதற்கும் எமது கடந்த காலத்தைக் கட்டமைப்பதற்கும் சமமான தகுதியுள்ள பல வழிமுறைகளான வரலாறு, புராணக்கருத்து வரைபுகள் (mythographies) ஆகியவை உருவாக முடியும். அதே போல உலக மக்கள் தமது சகல விதமான பன்மைத்துவத்துடனும் தமது பன்மைத்துவ எதிர்காலத்தை பேணக் கூடியதான பதிலிறுப்புகள், நிகழ்வுகள், கருத்துக்கள் ஆகியவையும் தோன்ற முடியும்.
மனித உரிமைகள், சனநாயகம் மற்றும் அபிவிருத்தி
வியன்னாவில் நடந்த விவாதத்தின் மையப் பொருளாக விளங்கியது மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திக்குமுள்ள தொடர்பு தான். எனினும் பிரகடனம் பரவலான சில முன்மொழிவுகளை மட்டுமே முன்வைத்தது. அபிவிருத்தி
உரிமைக்கான கருத்தியல் மற்றும் கொள்கைப் பிரச்சினைகள், மனித
9

Page 10
உரிமைக்கும் சந்தைக்குமுள்ள தொடர்புகள். அரசியல் நிபந்தனைப்பாடுகள் பற்றிய முரண்பாடான பிரச்சினைகள் பற்றி பிரகடனம் கவனத்திற் கொள்ளவiல்லை. சனநாயகம், அபிவிருத்தி, மனித உரிமைகளுக்கான கெளரவம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை எனவும் பரஸ்பரம் மீள உறுதிப்படுத்தக் கூடியவை எனவும் மீண்டும் வலியுறுத்தப்பட்டன. அத்துடன் அபிவிருத்திக்கான உரிமை என்பது உலகம் தழுவியதும், கையளிக்கப்பட முடியாததுமான உரிமை என்பதையும் அடிப்படையான மனித உரிமைகளின் ஒன்றிணைக்கப்பட்ட பகுதி என்பதையும் கூட பிரகடனம் மீண்டும் வலியுறுத்தியது. அத்துடன் மேலும் சில கோட்பாடுகளையும் பிரகடனம் அழுத்தியுரைத்தது. அதாவது அபிவிருத்தியின் மையமாக மனிதனே இருக்க வேண்டும். சகல மனித உரிமைகளையும் அனுபவிப்பதற்கு அபிவிருத்தி வழிவகுக்க வேண்டும். மனித உரிமைகளை மறுதலிப்பதற்கு அவிருத்தியின்மை ஒரு காரணமாகப் பயன்படுத்தப்படக் கூடாது.
மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திக்குமிடையிலான இந்த தொடர்பு 1986 மார்கழி 4 ஆம் திகதி பொதுச்சபை ஏற்றுக் கொண்ட அபிவிருத்தி உரிமைக்கான ஐ.நா. பிரகடனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப் பிரகடனத்தில் பின்வரும் மையக்கருத்துக்கள் அடங்கியுள்ளன: (1) அபிவிருத்திகளின் மையப்பொருள் மனிதன் என்பதும், அபிவிருத்தி உரிமையின் உயிரோட்டமானது பங்குபற்றுநரும். நன்மையைப் பெறுநரும் மனிதனே என்பதை அங்கீகரித்தல் (2) சகல மனித உரிமைகளும் (சிவில், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள்) பிரிக்க முடியாதவை. ஒன்றில் ஒன்ற தங்கியிருப்பவை, சமமாக நடத்தப்பட வேண்டியவை. உரிமைகளைக் கவனத்திற் கொள்ளத் தவறும் போது அது அபிவிருத்திக்குத் தடையாக அமைகிறது என்பதையும் உணர்ந்து கொள்ளல்.
ஐ.நா பிரகடனத்தின் மிக முக்கியமான புத்தாக்கங்களில் ஒன்று உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்கத் தவறுதலின் விளைவாக எழக் கூடிய அபிவிருத்தித் தடைகளை அகற்றுவதற்கு அரசுகளுக்கு அங்கீகாரம் அளித்தமையாகும். (அ) சர்வதேச மனித உரிமைச் சாசனங்கள் மற்றும் தொடர்புள்ள கருவிகளில் கூறப்பட்டுள்ள சுதந்திரங்களையும் உரிமைகளையும் கருத்திற் கொள்ளவும் மதிக்கவும் வேண்டும். (ஆ) இந்த உரிமைகளை அடைவதற்குத் தடையாக இருக்கக் கூடிய அரசின் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் கொள்கைகளை சீர்திருத்த வேண்டிய தேவையைக் கவனத்தில் கொள்ளுதல். 'உபேந்திரா பாக்ஸி’ (Upendra Baxi) என்பவர் சிவில் சமூகத்திலிருந்தும் அபிவிருத்திக்கான தடைகள் எழ முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிவில் சமூகத்தில் இயங்கும் நிறுவன இனக் குழுமங்கள் சிறுபான்மையினர் மற்றும் பின் தள்ளப்பட்ட சமூகக் குழுக்களின் மனிதத்துவத்தை மீறுகின்றன.
மனித உரிமைகள் பிரிக்க முடியாதவை என்பது சர்வதேசப் பிரகடனங்களில் வலியுறுத்தப்பட்ட போதும் இவ்விடயத்தில், பல
10

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பாரதுTரமான சந்தேகத்தை எழுப்புகின்றன. குறைவிருத்தி நாடுகளும் வெற்றிகரமாக கைத்தொழில் ஆக்கம் பெற்ற பல புதிய நாடுகளும் இதில் அடங்கும். குறை அபிவிருத்தி நாடுகள் தமது பொருளாதார பின்தங்கலின் காரணமாக மனித உரிமைகளை விட பொருளாதார அபிவிருத்தி முக்கியமானது எனக் கூறுகின்றன. மற்ற நாடுகள் தமது பொருளாதார வெற்றிக்கு எதேச்சாதிகாரமான அரசியல் முறைமையே அடிப்படையாக அமைந்தது என்று வாதிடுகின்றன. ஹாய் குறிப்பிடுவது போன்று இந்த மனித உரிமை மாதிரியானது 'சந்தையின் தனித்துவத்திற்கும் சட்டவாட்சிக்குமிடையிலான தொடர்பு பற்றிய பொதுவான விளக்கத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றன.
ஐ நா பிரகடனம் எல்லா நபர்களுக்கும் எல்லாமாக இருக்க முனைகிறது. அது ஏனைய வகைகளான உரிமைகளைக் கொண்டிருக்கவில்லை. பொதுவாகப் பார்க்கும் போது அரசுக்கு எதிரானதொரு சாசனமாகவே இது விளங்குகிறது எனக் கூறும் யாஸிஹாய், ஐ. நா பிரகடனமானது (அ) உள்நாட்டிலிருந்து சர்வதேச செயற்களத்துக்கும் (ஆ) அரசு பொறுப்பு கொண்டிருக்கக் கூடிய தீர்க்கமில்லாத உரிமைகளுக்கு பதிலான அபிவிருத்தி தொடர்பான குறிப்பான உரிமைகள் ஆகியவற்றிலிருந்து கவனத்தை திசை திருப்பி மனித உரிமைகள் பற்றிய சர்வதேச விவாதத்துக்கு ஒரு மாற்றுச் சட்டகத்தை வழங்குகிறது என வாதிடுகிறார். எனினும் எதிர்த்திசையில் செல்லுகின்ற கவலைத்தரக் கூடிய போக்குகளும் காணப்படுகின்றன. இவை மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றின் பிரிக்க முடியாதன்மை பற்றி கேள்வி எழுப்புகின்றன. 1991 மார்கழி 21 ஆம் திகதி நடைபெற்ற ஆறாவது சார்க் உச்சி மாநாடு மனித உரிமைகள் குறுகிய அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகப்படக் கூடியவை அல்ல எனக் கூறியது. மனித உரிமைகள், அபிவிருத்தி ஆகியவற்றுக்கிடையில் பிளவை உருவாக்க முனைந்த பிரகடனமானது ‘உறுதிப்பாடான நிலைமைகளின் கீழ் சகல பிரசைகளுக்குமான அபிவிருத்தி’யின் மூலமாக சகல நபர்களினதும் மனித உரிமைகள் அடையப்படக் கூடியன என எடுத்துரைத்தது. மனித உரிமைக் குழுக்கள் இதனை ஒரு கேடயமாக விளங்கக் கூடிய கூற்று என நோக்கின. அதாவது மனித உரிமைகளை முழுமையாக அனுபவிக்க வேண்டுமெனில் 'அபிவிருத்தி முதலில் அடையப்படி வேண்டும் என்னும் கருத்து தொனிக்கும் ஒரு பாதுகாப்பு கேடயமாக இக்கூற்று அமைந்துள்ளது. s அபிவிருத்திக்கும் மனித உரிமைகளுக்குமான உறவினைத் தேடுகையில் பல நாடுகளில் பின்பற்றப்படும் பொருளாதார மாதிரியானது மனித உரிமைகள் மற்றும் சமூக நீதியை அடைவதற்குப் பொருத்தமானதல்ல என்னும் வாதம் பெரிதும் முன்வைக்கப்படுகிறது. இம்மாதிரிகள் பின்பற்றும் கொள்கை தனியார்துறை விருத்திக்கும் அரச தொழிலாண்மை முயற்சிகளை வர்த்தகமயப்படுத்த, தனியார்மயப்படுத்த முனைவனவாகவும் தென்படுகின்றன. சந்தையில் அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு பொருளாதார மாதிரியும்,
11

Page 11
அந்நிய செலாவணி மீதான கட்டுப்பாட்டுத் தளர்வு, அந்நிய முதலீடுகளை மேம்படுத்தல், மூலதன சந்தை விருத்தி முதலானவற்றின் மீதுள்ள அரச கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கக் கூடியதான சட்ட மற்றும் கொள்கை ஏற்பாடுகளை முன்வைக்க வேண்டியுள்ளன. இத்தகைய கொள்கைகள் சமத்துவமின்மைகளையும் பிராந்திய வேறுபாடுகளையும் அதிகரிக்கும் என இக் கொள்கைக்கு எதிராக வாதிடுவோர் குறிப்பிடுகின்றனர். அது மட்டுமல்லாது நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் ஏழை மக்களின் நன்மைக்கான சமூகநல ஏற்பாடுகளைக் குறைத்துள்ளன. தொழிலாளரை அலைக்கழித்து அவர்களின் பாதுகாப்பைக் குறைத்துள்ளன. கைத்தொழில் பேட்டைகளிலும், சுதந்திர வர்த்தக வலயங்களிலும் எழக் கூடிய சம்பள உயர்வுக் கோரிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக தொழிற்சங்கத்தில் சேரும், தொழிற்சங்க உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பொருளாதார மாதிரியானது தீர்மானம் மேற்கொள்ளுவதை மத்திய மயப்படுத்தியுள்ளதோடு அரசின் எதேச் சாதிகாரத் தன்மையை அதிகரித்துள்ளது. அது மாத்திரமல்லாது முதலீட்டு செயற்றிட்டங்கள், பாரிய விவசாய கைத்தொழில் அல்லது அணைக்கட்டு செயற்றிட்டங்களில் தீர்மானம் மேற்கொள்வதில் அரசுசாரா நிறுவனங்களையும் மக்கள் இயக்கங்களையும் படிப்படியாக அகற்றியுள்ளது. இத்தகைய செயற்றிட்டங்கள் சுதேசிய மக்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதிக்கக் கூடியன. தொழிற்சங்கங்கள், விவசாயிகளின் அமைப்புக்கள், அபிவிருத்திக் குழுக்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மரபுரீதியான கூட்டணியானது சூழல் மற்றும் மனித உரிமைகளில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்களை எதிர்க்க முடியாமல் உள்ளன. ஏனெனில் அதற்குப் பதிலாக வேறு ஓர் அபிவிருத்தி நோக்கினை அவர்களால் முன்வைக்க முடியாத நிலை உள்ளது. ஆகவே இந்த அபிவிருத்திகள் பின்தள்ளப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார உரிமைகளில் மாத்திரமல்லாது அரசியல் மற்றும் பொருளாதார தீர்மானங்களில் பங்கு கொள்ளும் உரிமையையும் ஒன்று சேரும் உரிமையையும் கூட பாதிக்கின்றன என்னும் கருத்து முன்வைக்கப்படுகிறது.
எந்தவொரு அபிவிருத்திச் செயன்முறைக்கும் அடிப்படையாக விளங்குவது வறுமையை நீக்குதலே. ஏழைகள் சக்தியற்றவர்களாகவும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அணிதிரள முடியாதவர்களாகவும் உள்ளனர். எனவே வறுமை பாரிய அளவில் மனித உரிமைகளை மறுப்பதற்குக் காரணமாக உள்ளது. எனவே பல நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ள கட்டமைப்பு மறுசீராக்கற் கொள்கைகள் உள்ளடங்கிய அபிவிருத்தி மாதிரிகள் ஏழைகளினதும் பின்தள்ளப்பட்ட குழுக்களினதும் வறுமையையும், ஒதுக்கி வைத்திருப்பதையும் இன்னும் அதிகரிக்கும் என்பதில் மனித உரிமைக் குழுக்கள் நம்பிக்கை கொண்டுள்ளன.
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்கும் உள்ள தொடர்பில் எழக் கூடிய இன்னுமொரு முக்கிய பிரச்சினை அரசியல் நிபந்தனைப்பாடுகளாகும்.
2

அதாவது அபிவிருத்தி உதவிகளின் தொடர்ச்சியானது ‘நல்லாட்சி, சிவில் அரசியல் உரிமைகளை வழங்குதல் போன்ற அரசியல் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதில் தங்கியுள்ளது.
ஐரோப்பிய பேரவையானது 1991 கார்த்திகை 28 ஆம் திகதியிடப்பட்ட தனது மனித உரிமைகள், சனநாயகம், அபிவிருத்தி மீதான அபிவிருத்தி பேரவை தீர்மானத்தின் படி சமத்துவமான அபிவிருத்தியின் அடிப்படையாக மனித உரிமைகளுக்கான கெளரவம், சட்டவாட்சி, வினைத்திறனும் வகைகூறலும் சனநாயக சட்ட அடிப்படையையும் கொண்ட அரசியல் நிறுவனங்கள் ஆகியவற்றை அழுத்தியுரைத்துள்ளது. அதாவது ஐரோப்பிய சமூகத்துக் கும் அதன் உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளுக்குமிடையிலான உறவு நிலையில் மனித உரிமைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமான அங்கமாகும் என்பதை மீண்டும் அழுத்தியுரைத்துள்ளது. மனித உரிமைகள் பாரதூரமாக மீறப்படும் பொழுது அல்லது சனநாயக செயன்முறைகளில் மோசமான இடையூறுகள் ஏற்படும் பொழுது சமூகமும் உறுப்பு நாடுகளும் பொருத்தமான பதிலைக் காட்டும் எனவும் தீர்மானம் கூறுகிறது. இப்பதில் அந்தரங்கமான அல்லது பகிரங்கமான அரசியல் நடவடிக்கைகள், ஒத்துழைப்பின் உள்ளடக்கம் அல்லது வழிமுறைகளில் மாற்றம் அல்லது தேவையானவிடத்து ஒத்துழைப்பை ரத்து செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும். மனித உரிமைகளுக்கு அப்பால் நல்லாட்சி தொடர்பான பிரச்சினைகளில் தீர்மானம் மேற்கொள்ளல், போதுமான அரசாங்க திறந்த தன்மை, நிதி சார்ந்த வகைகூறல், சட்டவாட்சி, பத்திரிகைச் சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றைக் கெளரவித்தல் ஆகியவை நல்லாட்சியில் உள்ளடங்கும். இராணுவ செலவினம் தொடர்பாகவும் தீர்மானம் கவனத்திற் கொண்டது. மிதமிஞ்சிய இராணுவ செலவினம், அபிவிருத்தி முயற்சிகளுக்கான நிதியை வேறு வழிகளில் திருப்பி விடுவதோடு. மனித உரிமைகள் மறுப்புக்கும், உள்ளக அடக்கு முறைக்கும் பயன்படுத்தப்படுகிறது எனவும் தீர்மானம் அழுத்தியுரைத்தது.
சனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்தலை நோக்கமாகக் கொண்ட அபிவிருத்தி உதவிகளில் இரு கோட்பாடுகள் உள்ளதாக சர்வார் லத்தீவ்' (Sarwar Lateef) என்பவர் குறிப்பிடுகிறார். முதலாவது மனித உரிமைகளும் , சனநாயகமும் தம்மளவில் முழுமையானவையே தவிர வேறு ஒன்றை அடைவதற்கான வழிமுறைகள் அல்ல. ‘மனித உரிமைகளும், சனநாயகமும் அபிவிருத்திக்கு உதவுகின்றன. என்னும் ஒரு வகை வரட்டு வாதத்தை இக்கருத்து முறியடிக்கிறது. இரண்டாவது கோட்பாடு அபிவிருத்திக்கான முழுமையான அணுகுமுறை பற்றி அழுத்தியுரைக்கிறது என லத்தீவ் வாதிடுகிறார். இந்த அடிப்படையில் பார்க்கும் போது மனித உரிமைகள், சனநாயம் மற்றும் நல்லாட்சி ஆகியவை ஒன்றிணைக்கப்பட்ட அபிவிருத்திச் சட்டகம் எனக் கருதப்படுகிறது. எனினும் பேச்சளவில் உள்ளதை ஒரு கொள் கையாக்குவதும் அதனை
13

Page 12
அமுல்படுத்துவதும் மிகவும் சிரமமான விடயங்கள் என்பதை ஒத்துக் கொள்ளும் லத்தீப் நிதிவழங்குவோர் கடந்த காலங்களில் சிக்கலான சமூக உருவாக்கத்துக்கு எடுத்த முயற்சிகள் படுதோல்வியடைந்தன என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிடுகின்றார்.
மனித உரிமைகளையும் உதவிகளையும் தொடர்புபடுத்துவதை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் எதிர்த்து வந்துள்ளன. தமது நாட்டின் இறைமையை அவை மீறுவதாக அதற்குச் காரணம் கூறுகின்றன. இவ்வாறான அரசியல்ரீதியான உதவிகள் தென்னரைக்கோளத்தின் மீது வட வரைக்கோளம் கருவியாக மனித உரிமைகளை மாற்றியமைக்கும் முயற்சி என்று அவை கருதுகின்றன. தமது நாடுகளில் மனித உரிமை நிலைமைகள் பற்றி இந்நாடுகள் முன்வைத்த கருத்துக்களில் ஒரு கலாசார மேலாண்மையும், ஒழுக்க போதனை செய்யும் மனப்பாங்கும் உள்ளார்ந்து நிற்பதாக அவை கூறுகின்றன. ஆனால் மனித உரிமைக் குழுக்கள் இதனை வரவேற்கின்றன. இதன் மூலம் சர்வதேச மனித உரிமை நியமங்களுடன் இந்நாடுகள் இணங்கிச் செல்வதற்கு இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என இவை எதிர்பார்க்கின்றன. மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பில் தேசிய இறைமை ஒரு தடையாக இருக்க முடியாது என்று இவை வாதிடுகின்றன. சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த கருவிகளில் இந்நாடுகள் கையொப்பமிட்டிருப்பதால் அவை தமது மனித உரிமை விடயங்களில் சர்வதேச சமூகத்தின் அக்கறையை அவைகள் தாமாகவே ஏற்றுக் கொண்டுள்ளன என்னும் வாதத்தையும் இவை முன்வைக்கின்றன.
மோசமான மனித உரிமை மீறல்கள் அல்லது கடுமையான மானிட துன்பங்களை மூடிமறைப்பதற்கு இறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது என 1990 இல் பேட்றம் ராம்சரன் (Betram Ramcharan) குறிப்பிட்டார். 1991 இல் இலங்கை சிவில் உரிமை இயக்கத்தின் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகின்றது: "சர்வதேச பொறுப்புடைமை என்னும் எண்ணக்கரு தேசிய இறைமை என்னும் எணர் ணக் கருவை விட மேலானது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதால் நாடுகளின் இறைமை என்னும் கோட்பாடு இன்று செல்லாக்காசாகி விட்டது.
இக் கொள்கையை வினைததிறனுடன் செயற்படுத்த நிதி வழங்குவோர் விரும்பியதால் நம்பிக்கைத்தன்மை, தொடர்ந்தேர்ச்சி என்பவற்றுக்கான தேவை இன்று எழுந்துள்ளது. தென்னரைக்கோள நாடுகள் தமது எல்லைக்குள் அகதிகள், புலம்பெயர் தொழிலாளர், அத்துடன் அந்நாட்டின் பின்தங்கியோர், பாரபட்சமாக அல்லது ஒரு தலைப் பட்சமாக நடத்தப்படாமையை உறுதிப்படுத்துவதற்கு தென்னரைக்கோள நாடுகளுக்கு இருக்கும் ஆற்றலே இங்கு நம்பகத்தன்மை எனக் குறிப்பிடப்படுகிறது. மனித உரிமை விடயங்களில் உள்நாட்டு நடைமுறைகளுக்கும் , சர்வதேச கொள்கைகளுக்கும் வெளிப்படையான வேறுபாடு இருக்குமாயின் நம்பகத்தன்மை என்பது
14

அர்த்தமற்றதாகி விடும். நாடுகளுக்கு தண்டனை வழங்குவதில் தெரிவுகள் இடம் பெறுமாயின் கொள்கை மாறாமையினால் பிரச்சினை எழுகிறது. உதவிகளைத் தற்காலிகமாக தடை செய்யும் அல்லது ரத்து செய்யும் தீர்மானம் மனித உரிமைகள் விடயத்தில் மாத்திரம் தான் தங்கியுள்ளதா அல்லது புவியியல் அரசியல் முக்கியத்துவம், அந்நாட்டின் பொருளாதார மாதிரி அல்லது நிதி வழங்கும் நாட்டின் உள்ளுர் அரசியல் போன்றவை தீர்மானம் மேற்கொள்ளலில் செல்வாக்கு செலுத்துகின்றனவா?
சிலி, ஆர்ஜென்டினா, உருகுவே, பிறேசில், எல்சல்வடோர், உகண்டா, சாட், பிலிப்பைன்ஸ், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பல கிழக்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளில் அண்மைக் காலங்களில் சனநாயகத்தை நோக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனுடன் தொடர்புடைய சவால்களும் தோற்றம் பெற்றுள்ளன. அதாவது மனித உரிமை மீறல்களை ஏற்படுத்தியோருடனான வகை கூறலுடன் இது சம்பந்தப்பட்டுள்ளது. இப்பிரச்சினையானது மாறுபட்ட பரிமாணங்களைக் கொண்டுள்ளன என 'சலாகுவட்டா (Zalaquette) குறிப்பிடுகின்றார். ஒருபுறம் ஒழுக்கம் மறுபுறம் சட்டம்: நீதிக்கும் உண்மைக்குமான தேவை; ஏற்பட்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்தல் மறுபுறம் இவை எதிர்காலத்தில் திரும்பவும் ஏற்படாமல் தடுத்தல். அதுமாத்திரமல்லாது இப்பிரச்சினை அரசியலுடனும் நடைமுறையுடனும் கூட தொடர்புபட்டுள்ளது. அதாவது நாட்டை தொழிற்படும் அலகு என்னும் நிலைக்கு திரும்பவும் கொண்டு வருகின்ற தேவை உள்ளது. கடந்த கால மனித உரிமைகளின் துஷ்பிரயோகம் தொடர்பாக பல்வேறு நாடுகள் சம்பந்தப்பட்டுள்ளன. இவைகளின் அனுபவங்களை மற்ற நாடுகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
(ՑԱ2 உரிமைகள் (Group Rights)
இனவாத வன்முறைகள், உள்நாட்டு ஆயுதப் பிணக்குகள், அவற்றுடன் தொடர்புடைய மனித உரிமை துஷபிரயோகம் ஆகியவற்றை விளங்கிக் கொள்வதற்கு குழு உரிமைகள் என்னும் விடயம் முக்கியமாகிறது. உலகின் பல பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்ச்சியாகவும், பாரதூரமாகவும் மீறப்படுவதற்கு இனக்குழுமப் பிணக்குகள் காரணமாயிருந்துள்ளன. காணாமற் போதல், சித்திரவதை, நீதிமுறைக்கு அப்பாற்பட்ட கொலைகள், ஒருதலைப்பட்ச அல்லது யாரையும் கைது செய்தல் போன்றவை இவற்றில் அடங்கும். வியன்னாவில் நடந்த உலக மாநாடானது சகலவிதமான இனரீதியான வெளிப்பாடுகள், இனவெறுப்பு, அல்லது சகிப்புத்தன்மை இல்லாமை ஆகியவற்றுக்கு எதிராக உறுதியான கொள்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சகல அரசாங்கங்களையும் கேட்டுக் கொண்டது. தேவையெனில் இவற்றுக்கு எதிராகப் போராடுவதற்கு
15

Page 13
பொருத்தமான சட்டவாக்கம் மேற்கொள்ளுமாறும், தேசிய அமைப்புகளை நிறுவுமாறும் கேட்டுக் கொண்டது. இனப்படுகொலை, இன கபளிகரம், அகதிகள், இடம் பெயர்ந்தோர் உருவாக்கம் போன்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மாநாடு தனது அதிருப்தியைத் தெரிவித்தது. இவைகளைக் கண்டித்த அதே நேரத்தில் ‘இக்குற்றங்களை இழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டுமெனவும், இவ்வாறான நடைமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும்” மாநாடு வலியுறுத்தியது.
எத்தகைய பாரபட்சத்துக்கும் ஆளாகாமல் தமது சொந்த கலாசாரம், சமயம் ஆகியவற்றைப் பின்பற்றவும், தமது மொழியைப் பயன்படுத்தவும் சிறுபான்மையினருக்கு உள்ள உரிமை காப்பாற்றப்படவும், மேம்படுத்தப்படவும் வேண்டுமென உலக மாநாடு கவனத்தில் கொண்டது. தேசிய இனக்குழும, சமய, மொழிசார்ந்த சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. பிரகடனத்தின்படி சட்டத்தின் முன்பு சமத்துவத்தை அவர்கள் அனுபவிப்பதை உறுதிப்படுத்துமாறு மாநாடு உறுப்பினர்களை வேண்டியது.
இனக்குழுமங்கள் ஆயுதப் பிணக்கின்போது அல்லது வன்முறையற்ற அரசியல் கிளர்ச்சிகளில் வலியுறுத்தும் சுயநிர்ணயம் என்பது பிரச்சினைக்குரியது. இத்தகைய கோரிக்கைகள் நாடு பிளவுபடுவதற்கு அல்லது சிதைவடைவதற்கு வழி வகுக்கும் என்று அவை எண்ணுவதால் இத்தகைய கோரிக்கையை முளையிலேயே கிள்ளி விடுவதற்கு பாரிய அடக்குமுறைகளைக் கையாள்கின்றன. சுயநிர்ணயம் என்னும் கோட்பாட்டினை, எல்லைகளை மாற்றமுடியாமை, ஆள்புல ஒருமைப்பாடு போன்ற கோட்பாடுகளுடன் இணைப்பதற்கு வியன்னா பிரகடனம் முயன்றது. வியன்னா பிரகடனம் பின்வரும் மூன்று கோட்பாடுகளை முன்வைத்தது. முதலாவது சுயநிர்ணயம் (self-determination) , தமது அரசியல் அந்தஸ்தினை தாமாகவே நிர்ணயித்தல் மற்றும் தமது பொருளாதார, சமூக, கலாசார அபிவிருத்திகளை சுயமாகப் பின்பற்றுதல் ஆகியவற்றுக்கு சகலரும் உரித்துடையோராவர். இரண்டாவது இந்த உரிமையை ஏற்பதானது ஒரு நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டை குலைத்தல், அல்லது அரசியல் ஒருமைப்பாட்டை உடைத்தல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகவோ அல்லது ஊக்குவிப்பதாகவோ கருதப்படக் கூடாது. இதன்படி நாடுகளுக்கிடையில் நட்புறவும் ஒத்துழைப்பும் தொடர்பான சர்வதேச சட்டத்தின் கோட்பாடுகளை உலக மாநாடு மீளவும் உறுதிப்படுத்தியது. மூன்றாவதாக ஆள்புல ஒருமைப்பாடு என்னும் கோட்பாடானது சம உரிமை, சுயநிர்ணயம் என்னும் கோட்பாடுகளைப் பின்பற்றும் நாடுகளுக்கு மாத்திரமே உரித்துடையது. இதன் மூலம் அந்த நாடுகள் தமது ஆள்புலத்தில் வாழும் மக்களை எல்லாவிதமான பாரபட்சமுமில்லாமல் நடத்தும் அரசாங்கத்தைக் கொண்டிருக்கின்றன.
இப்பிரகடனமானது சர்வதேச சட்டம் மற்றும் நடைமுறையையும் சோவியத்யூனியன், யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவியா ஆகிய நாடுகள் உடைந்து சிதறிய பிரச்சினைகளுடன் இணக்கம் காண்பதிலுள்ள
16

சிரமங்களையும் கவனத்திற் கொள்ள முயன்றது. 1991 மார்கழி 16 ஆம் திகதி ஐரோப்பிய சமூகம் 'கிழக்கு ஐரோப்பா மற்றும் சோவியத் யூனியனில் புதிய அரசுகளை அங்கீகரிப்பதற்கான வழிகாட்டல்கள் என்னும் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது. அங்கீகாரத்துக்கு அடிப்படையான பிரமாணங்களை தெளிவுபடுத்துவதில் இப்பிரகடனம் பின்வரும் விடயங்களை அழுத்தியுரைத்தது: முதலாவதாக அரசாங்கம் சனநாயக அடிப்படையில் அமைந்திருத்தல் வேண்டும். இரண்டாவது அது சர்வதேச கடப்பாடுகளை ஏற்க வேண்டும். மூன்றாவது அது சமாதான செயன்முறை மற்றும் இணக்கப் பேச்சு ஆகியவற்றுக்குத் தம்மை அர்ப்பணித்திருக்க வேண்டும். இதன் மூலம் ஒரு விடயம் வெளிப்படுகின்றது. அதாவது மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு என்பது காலனித்துவ முறைக்கு மாத்திரம் வரையறை செய்ய முடியாது. எனினும் இந்த வரையறைக்கு அப்பால் இக்கோட்பாடு ஒரு தெளிவில்லாமலும் முரண்பாடு கொண்டதுமாக இருக்கின்றது என்பதும் கருத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும். அண்மையில் சுயநிர்ணய உரிமை பற்றி ஒரு தெளிவான புதிய கோட்பாடு ‘தோமஸ் பிராங் (Thomas Franck) என்பவரால் முன்வைக்கப்பட்டது: *ஓர் அரசின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அதே நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் வாழும் மக்கள் சமமாக அனுபவிக்க முடியாத சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அதே போல ஒர் அரசின் ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் ஏனைய பிரசேங்களில் வாழும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அனுபவிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த உரிமையைப் பிரயோகிக்க முடியாது.”
இதைப் போன்ற இன்னுமொரு பிரச்சினை தான் சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பான கோட்பாடுகளையும் எண்ணக்கருக்களையும் உருவாக்க வேண்டிய தேவையுடன் தொடர்பானது. இது சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதோடு பிணக்குகளை சமாதானமாகத் தீர்ப்பதில் கூடிய பங்களிப்பையும் செலுத்த முடியும். எனினும் இங்கு வேறு ஒரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இன அடையாளம், இனத்துவ கோரிக்கைகளின் மாறுநிலையையும், இனத்துவக் குழுக்களிடையே ஏற்பட்டு வரும் அதிகார சமநிலை நகர்வுகளையும் கவனத்தில் கொள்ளும் போது அமைப்புரீதியான ஏற்பாடுகள் பலவும் நிலையற்ற தன்மை கொண்டனவாக அமைந்துள்ளன. எனவே புதிய சவால்களுக்கும் கோரிக்கைகளுக்கும் முகம் கொடுப்பதற்காக தொடர்ச்சியாக புதுப்பிக்கவும், புதிதாக நிர்மாணம் செய்யவுமான தேவை உள்ளது.
ஐ.நா. சபை அண்மையில் சிறுபான்மையினர் தொடர்பில் ஒரு பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது. அதன்படி எவ்விதமான வேறுபாடுகளுமின்றி அவர்களின் இனத்துவ கலாசார, மொழிசார் அடையாளங்கள் மதிக்கப்படவும், மேம்படுத்தப்படவும் வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அத்துடன் தமது இருப்பினை அச்சுறுத்தும் அல்லது மனித உரிமைகளையும், அடிப்படைச்
17.

Page 14
சுதந்திரங்களையும் அனுபவிக்கத் தடையாக இருக்கும் எவ்வித செயற்பாடுகளுக்கும் எதிராகத் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு அவர்களுக்கிருக்கக் கூடிய உரிமைகளையும் வலியுறுத்துகிறது. இந்த பிரகடனத்தின்படி தேசிய, பிராந்திய மட்டங்களில் அரசியல் ஏற்பாடுகளில் சிறுபான்மையினர் சுதந்திரமாகப் பங்குபற்றுவதை உறுதிப்படுத்த அரசுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். தமது நாடுகளில் அரசியல், பொருளாதார முன்னேற்றங்களிலும் அபிவிருத்திகளிலும் சிறுபான்மையினர் முழுமையாக பங்குபற்றுவதை உறுதிப்படுத்த தேசிய கொள்கைகளும் திட்டங்களும் அமுல் நடத்தப்பட வேண்டும்.
மக்கள், சிறுபான்மையினர் ஆகிய இரு அம்சங்களுக்கிருக்கும் வேறுபாடு குறித்து தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் உள்ளது. மனித உரிமைகள் பற்றிய நிபுணர்களின் யுனெஸ்கோ கூட்டம் (பாரிஸ், 1990) இவ்விடயம் குறித்து ஆராய்கிறது. ஒரு தனிநபர் கூட்டத்தினர் மக்கள் என்னும் வரையறைக்குள் அடங்க வேண்டுமெனில் பின்வரும் நிபந்தனை பொதுவாகப் பின்பற்றப்படுகிறது. ‘பொது வரலாற்று மரபு, இன அல்லது இனத்துவ அடையாளம், கலாசார ஓரினத்தன்மை. மொழிசார் ஐக்கியம், சமய அல்லது கருத்தியல் ஒருமைப்பாடு, ஆள்புல இணைப்பு மற்றும் பொதுவான பொருளாதார வாழ்வு என்பன அவையாகும்.
ஐ. நா பிரகடனத்தில் உள்ள குழு உரிமைகள் எண்ணக்கருவை மேலும் வரையறை செய்து விளக்குவதற்கும், தனிநபர் உரிமைகளுக்கும், குழு உரிமைகளுக்குமிடையிலான நெருக்கடிகளைத் தணிக்க வேண்டிய தேவையும் இப்போது எழுந்துள்ளது. அபிவிருத்திசார் ஒத்துழைப்பு, சமவாய்ப்பு, சிறுபான்மையினர் பாதுகாப்பு குறிக்கோள்கள் ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்புகளையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பலாத்காரமான இடப்பெயர்வு அல்லது அவர்களது குடித்தொகைச் சமநிலையை மாற்றியமைத்தல் தொடர்பில் சிறுபான்மையினர் மற்றும் சுதேசிகளின் மீதான அபிவிருத்தி உதவியின் தாக்கம் என்ன? சிவில் பிணக்குகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நியாயமான வள ஒதுக்கீடு, புனர்வாழ்வு, மீள்சட்டமைப்பு உட்பட பிரதேச, இனத்துவ சமநிலையின்மைகளைக் கவனத்தில் கொள்ளும் வகையில் இப்பிரச்சினைகளை எவ்வாறு மாற்றியமைக்கலாம்? இவ்விடயத்தில் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் அரசின் பொறிமுறைகளை மீள் மதிப்பீடு செய்யும் தேவை எழுந்துள்ளது. இதில் சகலவிதமான பாரபட்சங்கள் தொடர்பான கமிட்டியும் உட்பட வேண்டியுள்ளது. சிறுபான்மையினர் மீதான ஐ. நா. பிரகடனத்தை அமுல் நடத்துவதற்கான புதிய ஏற்பாடுகளின் தேவையும் எழுந்துள்ளது. சுதேசிய குடிமக்கள் மீதான ஐ.நா செயற்குழு (WGIP-Working Group on Indigenous Populations) 1993 g6) bl b5 g560tg இரண்டாவது கூட்டத்தில் சுதேசிய மக்களின் உரிமைகள் மீதான ஒரு பிரகடனத்தை மேற்கொண்டது. WGIP இன் தலைமை அமைப்பான சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களை
18

தடுக்கும் உப - ஆணைக்குழு, 1994 இல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பதாக இவ்வரைவு தொடர்பாகத் தனது கவனத்தை செலுத்தும்.
ஒரு வரைபை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் சுதேசிய மக்களின் பிரதிநிதிகள் மற்றும் WGIP உப ஆணைக்குழு ஆகியவற்றின் நிபுணர்கள் ஆகியோருக்கு இந்த நகல் வரைபு பல முக்கிய சட்ட, அரசியல் சவால்களை முன்வைத்துள்ளது. சில விடயங்கள் பின்வருமாறு:
மனித உரிமைகள மீதான சர்வதேச சாசனத்தின் முதலாம் உறுப்புரையில் அடிப்படையில் வெளிவாரி சுயநிர்ணம் தொடர்பான உரிமை
பரந்த அதிகாரமும், தொழிற்பாடுகளும் கொண்ட தன்னாட்சி, அல்லது சுயாட்சியை நோக்காகக் கொண்ட "உள்ளக சுயநிர்ணய (Internal self-determination) s foodLD.
நிலம் மற்றம் இயற்கை வளங்கள் தொடர்பான கூட்டான சொத்துரிமைகள் கடந்த கால தவறுகளுக்கான நட்ட ஈடும் மீட்டளிப்பும்
தற்போதைய பல உரிமைகள், சுதந்திரங்கள் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தல்
இவ்விடயங்கள் உள்ளக ஆயுதப்பிணக்குகளில் ஏற்பட்ட மனித உரிமைகள் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக எமது கவனத்தை ஈர்க்கின்றன. இப்பிணக்குகள் சிவில் யுத்தங்களாகவோ அல்லது இனத்துவ, சமய, இனக்குழு சார்ந்த அல்லது கிளர்ச்சி சார்ந்தவைகளாகவோ இருக்கலாம். கொலம்பியா, பேரு, மத்திய அமெரிக்கா, வட அயர்லாந்து, மொசாம்பிக், அங்கோலா, எதியோப்பியா, தென்னாபிரிக்கா, இஸ்ரேலும் அதன் ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலமும், கம்போடியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், முன்னைய யூகோஸ்லாவியா, முன்னைய சோவியத் யூனியனின் பகுதிகள் போன்றவை இப்பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றன. இதன் காரணமாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கும், மனித உரிமைகள் சட்டத்துக்கும் இடையில் அகதிகளையும் உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரையும் பாதுகாப்பதற்காக தொடர்ச்சியான இடைத் தொடர்புகளின் தேவையை வலியுறுத்துகின்றது.
இப்பிரச்சினைகள் அரசாங்க நடைமுறைகளுடன் தொடர்புடையவை எனக் கூறி மனித உரிமை அமைப்புக்கள் இவ்விடயத்தில் வாளாவிருக்க முடியாது என செலாகொட் (Zalequette) அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். எனவே இத்தகைய ஆயுதப் பிணக்குகள் மற்றும் அரசியல் வன்முறை சார்ந்த கடினமான சூழ்நிலைகளில் ஏற்பட்டுள்ள கோட்பாடு மற்றும் நடைமுறை சார்ந்த சவால்கள், இச்சூழ்நிலைகளைச் சமாளிக்கப் பொருத்தமான கருத்துக்களையும், பணியாற்றும் முறைமைகளையும் கண்டறிவதாகும். இவ்விடயத்தில் சகல:
9

Page 15
சர்வதேச சட்ட முறைமைகளையும் ஒன்றாகக் குவித்துவிடல் போதுமானதல்ல. இவ்விடயத்தில் பல சட்டப் பிரச்சினைகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எண்ணக்கரு சார்ந்த இடைவெளிகள் நிரப்பப்பட வேண்டும். அத்துடன் முக்கியமாக இச்சூழ்நிலைகளில் நம்பத்தகுந்த, நடுநிலையான, காத்திரமான வழிகளில் பணியாற்ற அவசியமான முறைகள் உருவாக்கப்பட வேண்டும். வரைவு உருவாக்கத்தில் கடந்த ஏழெட்டு வருடங்களாக இப்பணிக்குழு ஈடுபட்டுள்ளது. ஆனால் இன்னும் தீர்வு காண முடியாத சிக்கலான அரசியல், சட்ட தடைகள் உள்ளன. வரலாற்று ரீதியாக பிற்படுத்தப்பட்ட குழுக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சர்வதேச முயற்சிகளின் பிரச்சினைகளையும் விரக்தியையும் இச்செயன்முறை காட்டி நிற்கின்றது. பாரபட்ச நடைமுறைகள் தொடர்பாக பல ஆய்வுகளும், அறிக்கைகளும் உள்ளன. இந்த உண்மைகள் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்தகால, நிகழ்கால தவறுகளைத் திருத்துவதற்கு அரசியல் விருப்பும் பல இடங்களில் காணப்படுகின்றன. இருந்தும் கூட இந்த வரைபுப் பிரகடனம் இன்னும் முழுமை பெறவில்லை. சர்வதேச ஆண்டினை மற்றும் சுதேசிய பிரச்சினைகள் குறித்து ஒரு தசாப்தத்தை வெறுமனே பிரகடனப்படுத்துவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. இத்தகைய பிரகடனங்கள் அரசாங்கங்களின் கெளரவத்தைக் காப்பாற்றுகின்றனவே தவிர சுதேசிய மக்களின் வாழ்வைக் காப்பாற்றப் போவதில்லை.
பெண்கள் உரிமைகளின் ஒன்றிணைப்பு
வியன்னா பிரகடனத்தின் 18ஆம் உறுப்புரையும் செயற்படு நிகழ்ச்சித் திட்டமும் (1993) தெளிவாகக் குறிப்பிடுகின்றன: பெண்களினதும், பெண் சிறுவர்களினதும் மனித உரிமைகள் சர்வதேச மனித உரிமைகளின் ஒரு இணைந்த பகுதி: அவற்றைப் பிரிக்கவோ, பாராதீனப்படுத்தவோ முடியாது. 36ஆம் உறுப்புரை பெண்கள் சகல மனித உரிமைகளையும் அனுபவிக்க வேண்டுமென விதிக்கிறது. 37ஆம் உறுப்புரை பெண்கள் உரிமைகள் சகலவிதமான ஐ.நா. செயற்பாடுகளிலும் ஒன்றிணைக்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது. இறுதியாக 37ஆம் உறுப்புரை பெண்களுக்கெதிரான விசேட பிரச்சினையான வன்முறை என்பது சர்வதேச மனித உரிமைகளின் முக்கிய பிரச்சினை எனக் கூறுகிறது. வியன்னா பிரகடனமானது சர்வதேச சமூகத்துக்கு ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை வழங்கியுள்ளது. சிறுவர் உரிமைகள் மீதான சமவாயத்துக்கு சர்வதேச அங்கீகாரம், மனித உரிமைகளுக்கான ஆணையாளர். உலக சுதேசிய மக்களுக்கான தசாப்தம், பெண்களுக்கெதிரான வன்முறை மீதான விசேட அறிக்கையாளர் ஆகியவற்றை இப்பிரகடனம் வேண்டி நிற்கிறது.
பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளுடன் ஒன்றிணைக்கும் பிரச்சினை கடந்த சில வருடங்களாகவே ஐ.நா மனித உரிமை நிகழ்ச்சி
20

நிரலில் அடங்கியுள்ளது. பெண்கள் உரிமைகள் என்பவை மனித உரிமைகளினின்றும் உண்மையில் வேறுபட்டவை. தற்போதைய சர்வதேச மனித உரிமைகள் கோட்பாடுகளிலிருந்து பெண்கள் உரிமைகளுக்கான விசேட பகுதி ஒதுக்கப்பட வேண்டுமா என்னும் கேள்விகள் இந்த ஒன்றிணைப்பு முயற்சிகளின் ஆரம்பத்திலேயே எழத் தொடங்கி விட்டன.
பாரபட்சமின்மை என்னும் கோட்பாட்டின் மீது தான் சர்வதேச முறைமையில் பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாக ஆரம்பத்தில் ஒன்றிணைக்கப்பட்டன. இத்தகைய பகுப்பாய்வுக்கு உதாரணமாக விளங்குவது பெண்களுக்கெதிரான சகல பாரபட்ச வடிவங்களையும் நீக்கும் சமவாயம். பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையில் பாரபட்சம் காட்டப்படக் கூடாது என்னும் கோட்பாட்டின் மீதே இச்சமவாயம் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியான உரிமைகள் வழங்கப்படவில்லை. வரலாற்றுத் தவறுகளுக்காக உடன்பாடான பாரபட்சம் போன்ற புதிய சட்ட அணுகுமுறைகள் முயலப்படவுமில்லை. பெண்களும், ஆண்களும் ஒரேவிதமான நிலைமைகளில் அல்லது சூழ்நிலைகளில் இருக்கும்போது அவர்கள் சமத்துவமாக நடாத்தப்பட வேண்டும் என சமவாயம் உறுதிப்படுத்துகிறது. கடத்துதல், பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் மரபுரீதியான செயற்பாடுகளை நீக்குதல் ஆகியவை தொடர்பான விடயங்களில் மட்டுமே பெண்கள் விசேட தேவைகளும், உரிமைகளும் கொண்ட பகுதியினர் என்பது இலேசாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளாக ஒன்றிணைப்பதில் வித்தியாசமான கவனம் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கும் இயக்கம், பெண்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச முறைமைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருத்தல் போன்றவை இத்தகைய விசேட கவனத்துக்குக் காரணமாக இருக்கலாம். பெண்களுக்கெதிரான வன்முறைகளில் பின்வருவன உள்ளடங்குகின்றன: பாலியல் வல்லுறவு, பெண் சிசுவைக் கொலை செய்தல், வீட்டு வன்முறை, பாலியல் தொந்தரவு, கடத்துதல் முதலியவை. இவை மனித உரிமை மீறல்களில் பால்நிலை சார்ந்தவை. இத்தகைய பால்நிலை சார்ந்த தன்மையே பெண்கள் உரிமைகளை விசேட கவனத்திற்கு உள்ளாக்கியுள்ளன. உதாரணமாக மனித உரிமைகளை ஆயுதப் பிணக்கு சூழ்நிலையில் பகுப்பாய்வு செய்யும்போது பெருந்தொகையான பாலியல் பலாத்காரம் மனித உரிமைகளில் இயற்கையாகவே பொருந்துவதில்லை. பெண்ணுரிமைக் குழுக்கள் ஆரம்பத்தில் பாலியல் பலாத்காரத்தை ஒரு சித்திரவதை வடிவமாக ஏற்றுக்கொண்டு மனித உரிமை விடயங்களில் சேர்த்துக்கொள்ளுமாறு வற்புறுத்தின. பால்நிலை சார்ந்த குற்றங்கள் தற்போதுள்ள ஏற்பாடுகளில் ஒரு புதுவித வியாக்கியானத்தை வேண்டி நிற்கின்றன. இந்த வித்தியாசம் காரணமாகத்தான் மனித உரிமை
2.

Page 16
விவாதங்களில் பெண்கள் உரிமைகளை விசேட அம்சமாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரவேண்டியுள்ளது.
பெண்கள் உரிமைகளை மனித உரிமைகளில் ஒன்றிணைப்பதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒருபுறம் பெண்கள் பிரச்சினைகளில் உணர்திறனை ஏற்படுத்தக்கூடிய வகையில் தற்போதைய ஏற்பாடுகளை பொருள் கோடல் செய்தல்: உதாரணமாக பாலியல் வன்முறையை சித்திரவதையாக விளங்குதல். அத்துடன் பெண்கள் பிரச்சினைகளை பெண்கள் உரிமைகளுடன் தனித்துவமாக இனங்காணத்தக்கதாக புதிய ஏற்பாடுகளை உருவாக்குதல். உதாரணமாக பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மரபுரீதியான நடைமுறைகளையும், கடத்துதலையும், வீட்டு வன்முறை முதலியவற்றையும் ஒழித்துக்கட்டுதல். இதற்கு பெண்கள் உரிமைகளை ஆண்களின் உரிமைகளினின்றும் வேறுபடுத்திப் பார்க்கத்தக்கதாக புதிய ஏற்பாடுகள் தேவைப்படுகின்றன. இத்தகைய இரட்டை உபாயங்கள்தான் (அதாவது மனித உரிமைக் கருவிகளை பால்நிலைக்கு ஏற்புடையதாக்குவதும், பால்நிலை சார்ந்த குற்றங்களை மனித உரிமை மீறல்களாக ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கான புதிய ஏற்பாடுகளை உருவாக்குவதும்) எதிர்கால மனித உரிமைச் செயற்பாடுகளில் பெண்களின் உரிமைகளை முக்கியமானதொரு அம்சமாக்கப் போகின்றன.
தற்போதுள்ள ஏற்பாடுகளும் புதிய முனைப்புக்களும்
மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் பல்வேறு மாதிரிக6ைாயும், நுட்பங்களையும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியுள்ளது. ஆலோசனைச் சேவைகள், அமைதியான இராஜதந்திரம், ஆதரவு தேடுதல், உண்மையைத் தெளிவுபடுத்தல், நீதி வழங்குவதற்காக உண்மையை அறிதல் ஆகியவற்றை இம் மாதிரிகள் உள்ளடக்கியுள்ளன. தாமாகவே சமர்ப்பித்த அறிக்கைகளின் மீளாய்வு, கட்டாயமாக அறிக்கைப்படுத்தலும் மீளாய்தலும், தனிப்பட்ட விவாதமாகவும் பொதுவாகவும் ஏற்படக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதில் கூறலைத் தேடுதல். விஜயங்களை மேற்கொள்ளுதல், கண்காணித்தல் ஆகியவை இந் நுட்பங்களில் அடங்கும். மனித உரிமைகள் தொடர்பான இந்த ஐ. நா அணுகுமுறை ஒரு திட்டமிடப்பட்ட முறைமை அல்ல, மாறாக அங்குமிங்குமாக ஏற்பட்ட புத்தாக்கம் மற்றும் மாற்றங்களின் விளைவாகும் (Rodley, Ugägŝ 63).
1993 இல் வியன்னாவில் நடந்த மனித உரிமைகள் மீதான உலக மகாநாடு உலகின் சகல பகுதிகளிலும் தொடரும் மனித உரிமை மீறல்கள் பற்றிய கவலையைத் தெரிவித்ததோடு, சர்வதேச, பிராந்திய மட்டத்தில் தற்போது
22,

இருக்கக்கூடிய மனித உரிமைக் கருவிகளைச் சிறப்பாக அமுல் நடத்த விதந்துரை செய்தது. அத்துடன் விசேட நடைமுறை ஒழுங்குகளை வலுப்படுத்தவும், பல்வேறு அமைப்புக்கள், பொறிமுறைகள், நடைமுறைகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து வினைத்திறனை அதிகரிக்கவும் விதந்துரைத்தது.
தற்போதைய பொறிமுறைகள் மற்றும் சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகள்
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர்
உலக மாநாட்டில் முன்வைக்கப்பட்ட உறுதியான முன்மொழிவுகளில் ஒன்று uD6zing5 0 lf60)LD565535/7607 g.sbst 9 uuf ge,60)60OTuUT6TTst (United Nations High Commissioner for Human Rights) ug56.560)u D (b6 stais (556)st (5ub. Sgs நியமனம் தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்தன: மனித உரிமை நிலையத்தின் பணிப்பாளரது பணிகள் தொடர்பில் உயர் ஆணையாளரின் வகிபங்கு குறித்து நிறுவனரீதியான வினாக்கள் எழுப்பப்பட்டன. இருந்தபோதும் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் பதவி பெரிதும் வரவேற்கப்பட்டது. உண்மையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும். சில சந்தர்ப்பங்களில் உண்மைகளைக் கண்டறிவதற்கும் தமது பதவி நிலையையும் இராணுவத்தினரையும் பயன்படுத்துவதற்கும் உயர் ஆணையாளர் பொறுப்பாக இருப்பார்.
உயர் ஆணையாளரின் பதவிப் பொறுப்புக்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கும்:
• மனித உரிமைகள் காத்திரமாக அனுபவிக்கப்படுதலை மேம்படுத்தல்
• மனித உரிமைகளின் மேம்பாடு பாதுகாப்பு ஆகியவற்றை விருத்தி செய்யும் வகையில் தகுதியுள்ள மனித உரிமை அமைப்புக்களுக்கு
விதந்துரைகளை முன்வைத்தல்
• மனித உரிமை மீறல்களைத் தடுக்கவும், நீக்கவும் முக்கியமான பங்களிப்பை நல்குதல்;
• சர்வதேச ஒத்துழைப்பினை மேம்படுத்தல்
9 மனித உரிமைகள் முறைமையை இணைப்பாக்கம் செய்தலும்
ஒன்றிணைத்தலும்
9 மனித உரிமைகள் விடயத்தில் வினைத்திறன், வினைத்திறனை விருத்தி செய்வதை நோக்காகக் கொண்டு ஐ.நா பொறிமுறையை நியாயப்படுத்தலும், மாற்றியமைத்தலும், வலுப்படுத்தலும்.
23

Page 17
மனிதஉரிமைகள் தொடர்பான நெருக்கடிகளுக்கு பொருத்தமாகத் பதிலிறுப்பதற்கும் மனித உரிமை விருத்திகளைக் கண்காணிப்பதற்கும் தேவையான நெகிழ்ச்சித் தன்மைகளை உயர் ஆணையாளர் கொண்டிருப்பார். ஐ. நா முறைமைக்குள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் பதவியின் தாக்கத்தை வலுப்படுத்துவதற்காக பல விதந்துரைகள் முன் வைக்கப்பட்டன. பின்வருவன அவற்றுட் சிலவாகும்:
பாதுகாப்புச் சபைக்கு கிரமமாக அறிக்கை சமர்ப்பித்தல். இவ்வறிக்கைகள் மாதாந்தம் சமர்ப்பிக்கப்படலாம். மனித உரிமைகள் மீறல்கள் பற்றி குறிப்பாக அவை சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்புக் குக் குந்தகம் விளைவிப் பின் அவை பற்றி பாதுகாப்புச்சபைக்கு அறிவுறுத்த வேண்டும்.
0 மனித உரிமைகள் ஆணைக்குழு, பொருளாதார சமூக சபை, சிறுபான்மையினரைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களைத் தடுத்தல் மீதான உப ஆணைக் குழு, பொதுச்சபையின் மூன்றாவது கமிட்டி ஆகியவற்றிற்கு கிரமமாக அறிக்கை சமர்ப்பித்தல்.
9 ஐ நா சபையின் விசேட உறுப்பு முகவரகங்கள், குழுக்களுக்கு அவர்களது கவனம் தேவைப்படுகின்ற விடயங்கள் பற்றி காலத்துக்குக் காலம் அறிக்கை சமர்ப்பித்தல்.
உயர் ஆணையாளர் ஐ நா முறைமையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துபவராக மட்டுமல்லாது மனித உரிமை விடயங்களில் மிகவும் முக்கியமான நபராக மாறவேண்டியுள்ளது. உயர் ஆணையாளரது அலுவலகம் வலுப்படுத்தப்பட வேண்டும். சில நாடுகளினதும், பிராந்தியங்களினதும் கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் அக் குறிப்பிட்ட பிரதேசங்களில் உள்ள கள நிலைமைகள் பற்றி அறிக்கைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அவசரமான செயற்பாடுகள், தகவல்கள் தேவைப்படுகின்ற நிலைமைகளில் உயர் ஆணையாளர் அலுவலகம் உடனடியாக பதிலிறுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இதனை உயர் ஆணையாளர் தனது முக்கியமான பணியாகக் கொள்ள வேண்டும். அவரது அலுவலகம் ஐ.நா சபையின் சமாதானப் பணிகளின் மையமாக மாறுவதுடன் ஐ. நாவின் சமாதானப் பணிகளில் அவரது அறிவுரையும் கோரப்பட வேண்டும்.
மனித உரிமைகளுக்கான நிலையம்
மனித உரிமைகள் தொடர்பான ஐ. நாவின் பணிகளில் மேற்படி நிலையம் முக்கியமான வகிபங்கினைக் கொண்டுள்ளது. இந் நிலையத்தை வளங்கள்,
24

ஆளணியினரை வழங்கி வலுப்படுத்த வேண்டுமென வியன்னா பிரகடனம் அழுத்திக் கூறியுள்ளது. உயர் ஆணையாளர் நியமனத்தைத் தொடர்ந்து இந் நிலையத்தின் பணிகள் இன்னும் முக்கியத்துவம் பெறலாம். ஓர் அவசர நேரத்தில் உண்மைத் தகவல்களைப் பெறக்கூடியதாகவும் மனித உரிமை விருத்தியினை நீண்டகால அடிப்படையில் கண்காணிக்கக் கூடியதாகவும் இந்நிலையம் தனது ஆற்றலை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.
தற்போது மனித உரிமைகள் முறைமையில் விசேட நடைமுறைகளுக்கான துணை உதவிகளை இந்த நிலையம் வழங்கி வருகிறது. இந்த அடிப்படையில் நிலையமானது தனது விதிக்கப்பட்ட பணிகளுக்கு மேலதிகமான பணிகளைச் செய்து வருகிறது. மனித உரிமைகள் பற்றி அறிக்கைப்படுத்துவதற்கு இதனுடைய ஆளணி போதுமானதல்ல. எனவே தனது முதன்மைப் பணியான துணைச்சேவைகளை வினைத்திறனுடன் வழங்குவதற்கு இந்நிலையம் வலுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் முக்கியமானதொரு தேவையாகும்.
ஆரம்ப காலத்தில் இந்நிலையமானது அரசியல், மற்றும் சிவில் மனித உரிமை விடயங்களிலேயே கவனம் செலுத்தி வந்தது. ஆனால் அண்மைக்காலமாக பெண்கள், சிறுவர்கள், இனத்துவ, மொழிவாரி. சமயரீதியான சிறுபான்மையினர் ஆகியோரின் பிரச்சினைகள் உட்பட பொருளாதார, சமூக விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றது. இவ்விடயங்களில் ஆய்வுகளும், கற்கைகளும் மென்மேலும் பெருகி வருவதால் இந்நிலையமானது சட்டரீதியான அலுவல்களில் மாத்திரம் தனது பணிகளை வரையறை செய்துகொள்ளாது சமூக. பொருளாதார உரிமைகள் தொடர்பான பன்முகப்பட்ட ஆய்வுகளிலும் ஈடுபட வேண்டும்.
மனித உரிமைகள் ஆணைக்குழு
மனித உரிமைகளை மேம்படுத்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான ஐ. நாவின் முக்கியமான நிறுவனமே மனித உரிமைகள் ஆணைக்குழுவாகும். கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் தனது செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு முறைமைகளை உருவாக்கியுள்ளது. பனிக் குழுக்கள், அறிக்கைப்படுத்துவோர். நேரடி தொடர்புகளுக்கான நடைமுறைகள் மற்றும் வன்முறைக்குப் பின்னரான உதவிகள் போன்றவை அவற்றுள் சிலவாகும். அத்துடன் இக் குழுவானது ஏனைய விசேட முகவரகங்கள், பிராந்திய மனித உரிமை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பினைப் பேணி வருகின்றது. அரசுசாரா நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணிபுரிகின்ற ஐ. நா அமைப்பு இதுவேயாகும்.
அடிப்படையில் ஆணைக்குழு ஒர் அரசியல் அமைப்பு. மனித உரிமைகளைக் கண்காணித்தல் என்பது ஒரு குறிக்கோள். நீதிமுறை சார்ந்த
25

Page 18
அணுகுமுறை போன்றவற்றை முக்கியமாகக் கொண்டிருந்தாலும் கூட ஆணைக்குழு நாடுகளின் நலன்களிலேயே முதன்மையாக அக்கறை கொண்டுள்ளது. அது அடிப்படையில் தேசங்களுக்கானதொரு மன்றம். எனினும் வேறு நிபுணர்கள் தொழிலாண்மைக் குழுக்கள் போன்றவற்றின் முறையீடுகளுக்கும் செவிசாய்க்கலாம். ஆணைக்குழுவின் அரசியல் தன்மை காரணமாக எந்தவொரு மனித உரிமை விடயம் தொடர்பாகவும் அது மிகவும் மெதுவாகவும் சிறப்பில்லாமலும், பேரம் பேசுவது போலவுமே பதிலிறுக்கின்றது. எனினும் ஐ. நா முறைமைக்குள் இதுவே மனித உரிமைப் பாதுகாப்பில் மிகவும் முக்கியமானதொரு அமைப்பாகும்.
பிராந்திய மக்களிடையே ஆணைக்குழுவை நெருக்கமாக்குவதற்கும் அதன் செயற்பாடுகளை வலுப் படுத்துவதற்குமே ஆணைக் குழு நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. தனது வருடாந்த கூட்டத்தொடருக்குப் புறம்பாக பிராந்திய விடயங்கள் தொடர்பாக ஆணைக்குழு பிராந்திய கூட்டத்தொடர்களை நடாத்த வேண்டுமென முன்மொழியப்பட்டது. ஐ. நா வின் பொருளாதார சமூக ஆணைக்குழுவின் பிராந்திய தலைமையகங்களில் இத்தொடர்கள் நடத்தப்படலாம். பிராந்திய மனித உரிமைக் குழுக்களுடன் மேலும் அதிகமாக ஆணைக்குழு ஒத்துழைக்க (Մ)ւգեւյլb.
அத்துடன் ஆணைக்குழு தனது பணிகளை நிபுணர்கள் விசாரணை ஆணைக்குழுவுக்குக் கையளிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டது. சர்வதேச சங்கத்தின் (Leaue of Nations) கீழ் இவ்வாறான விசாரணைக் குழுக்கள் இருந்தன. மிக முக்கியமான சில விடயங்களில் இத்தகைய நிபுணத்துவ விசாரணை ஆணைக் குழுவின் புறவயத் தனி மை யையும் , தொழில்வாண்மையையும் மேம்படுத்த முடியும். ஆணைக்குழுவின் நீதிமுறை சார்ந்த அமசத்தை இன்னும் நியாயமானதாக்கி, அத்துடன் அரசியல் பேரம் பேசலை அகற்ற இது அவசியம். மனித உரிமை முயற்சிகளுக்கு இது சிறந்த பங்களிப்பாக அமையும்.
இறுதியாக, ஆணைக்குழுவின் சேவைகள் பற்றிக் குறிப்பிட வேண்டும். அதன் செயற்பாடுகள் திட்ட வட்டமானதாக இருப்பதில்லை. அவற்றை ஒழுங்குபடுத்தவும் பொது மக்களுக்கு ஆணைக்குழுவின் செயற்படு முறைகள் பற்றி அறிவுட்டவும் ஒரு கையேடு தயாரிக்கப்பட வேண்டுமென கூறப்பட்டது. தற்போது இத்தகைய கையேடு ஒன்றில்லை. தனிநபர்களும் நிறுவனங்களும் ஆணைக்குழுவின் செயற்படு முறைகள் பற்றித் தாமே ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. எனவே இவ்விடயத்தில் ஒரு நல்ல கையேட்டைத் தயாரிக்க முடியுமானால் அது சிறந்த பங்களிப்பாக இருக்கும்.
நிகழ்ச்சிநிரல், நிறுவன விடயங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்படு முறைகள் பற்றிக் கலந்துரையாடுவதற்காக பத்து நாள் பணிக்குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென மனித உரிமை ஆணைக்குழுவின் ஐம்பதாவது கூட்டத்தொடரில் தீர்மானிக்கப்பட்டது. மனித
26

உரிமை விடயங்களில் ஏனைய அமைப்புக்கள் முன்வைத்துள்ள விதந்துரைகளையும் ஆராய் நீது ஆணைக் குழு சீர்திருத்தம் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆணைக்குழுவை மென்மேலும் வினைத்திறன் கொண்டதாக உருவாக்க முடியும்.
விசேட செயற்படு முறைகளும் பணிக்குழுக்களும்
விசேட அறிக்கையாளர்கள் மற்றும் பணிக்குழுக்களைக் கொண்டு, தொனிப்பொருட்களையும், குற்றச்சாட்டுக்களையும் ஆய்வு செய்யும் விசேட செயற்படு முறைமை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புறவயமான அம்சமாகும். இத்தகைய பணிகளின் பரப்பெல்லை இன்று விரிவடைந்திருப்பதன் காரணமாக இந்த விசேட செயற்படுமுறைகள் இன்று கூடிய முக்கியத்துவம் பெற்றுள்ளன. தற்போது விசேட அறிக்கையாளர்களும், பணிக்குழுக்களும் தமது பணிகளை மனித உரிமைகள் நிலையத்தின் உதவியுடன் தாமே திட்டமிடுகின்றனர். தமது அறிக்கைகளை ஆணைக்குழுவுக்கு அல்லது உப ஆணைக்குழுவுக்கு அல்லது வேறேதேனும் பொருத்தமான அமைப்புக்கு சமர்ப்பிக்கின்றனர். ஐ. நா வின் மனித உரிமைகள் செயன்முறைக்கு இந்தப் பொறிமுறைகள் இன்று மிகவும் அடிப்படையாக உள்ளன. எனினும் நிபுணர்களுக்கும் மனித உரிமை நிலையத்துக்கும் நேரமிருந்தால் மாத்திரமே இவற்றினை மேற்கொள்ளும் நிலைமைக்கு அவை இன்று தள்ளப்பட்டுள்ளன.
இந்த செயற்படு முறைகள் முக்கியமானவை. ஆனால் அவற்றைச் சீர்திருத்த பெரிதாக ஒன்றும் செய்யப்படவில்லை. எனினும் அவற்றை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்குப் பின்வரும் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
• அறிக்கையாளர்கள், பணிக்குழுக்களுக்கிடையே இரட்டைத் தன்மையைத் தளர்த்தக் கூடிய கலந்துரையாடலுக்கு வழிவகுத்தல்.
9 விசேட செயற்படு முறைமை எவ்வாறு நடைபெறுகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்குவதற்கு மனித உரிமைகள் நிலையம் ஒரு கைந்நூலை வெளியிட வேண்டும். இதில் அவர்களுக்கு கிடைக்கக் கூடிய சேவைகள் பற்றிய விபரங்கள் இருக்க வேண்டும்.
• அறிக்கையாளர்கள் மற்றும் பணிக்குழுக்களின் அறிக்கைகள் ஆணைக்குழுவின் விசேட முறைசார்ந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். மனித உரிமை ஆணைக்குழுவின் தொடர்களின் போது கூட்டங்கள் உட்பட கூடியளவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கங்கள் மற்றும் அரசுசாரா நிறுவனங்களுடன் கூடியளவான கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும்.
27

Page 19
9 உலகின் சில பிரச்சினைக்குரிய இடங்களில் விசேட செயற்படு முறைகளை மேற்கொள்ளும் வகையில் கள விஜயங்கள், கள கண்காணிப்புக்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
9 விசேட செயற்படுமுறைகளின் கண்டுபிடிப்புக்கள், விதந்துரைகளுக்கு
கூடியளவு ஊடக முக்கியத்துவம் தரப்படல் வேண்டும்.
9 விசேட செயற்படுமுறைகளில் அரசுசாரா நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது. எனவே அவர்களுடன் கூடியளவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். அபிவிருத்தி நாடுகளின் அரசுசாரா நிறுவனங்களுடன் கூடிய கலந்தாலோசனை செய்யும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
பல்வேறு பணிகளுக்கு உதவி செய்யக் கூடியதாக மனித உரிமை நிலையத்துக்கு நிதி வள முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆளணி, தொழில்நுட்பவியல் தொடர்பான வளங்கள் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
சர்வதேச சமவாயங்கள்
ஐ. நா. வின் உள்ளக பொறிமுறைகளுக்கு மனித உரிமைகள் மீதான மனித உரிமைச் சமவாயங்கள் மேலதிக துணைகளை வழங்குகின்றன. எனினும் சாசனங்களை உருவாக்கும் இந்த அமைப்புகளும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. முதலாவதாக ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் பொழுது உறுப்பு நாடுகள் ஒரு தொகையான இட ஒதுக்கீடுகளை ஏற்படுத்துகின்றன. அவர்களது ஒதுக்கீடுகள் சமவாயத்தின் அடித்தளத்தையே ஆட்டங் காணச் செய்து விடுகின்றன. இரண்டாவதாக சமவாயங்களை நடைமுறைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களுக்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதில் அரசாங்கங்கள் பாரிய தாமதத்தைக் காட்டுகின்றன. அதன் மூலம் சமவாயங்களின் பணிகள் தடைப்படுகின்றன. மூன்றாவதாக குழுக்களின் செயற்பாடுகளுக்கு மிகக் குறைந்த அளவான வளங்களே கிடைக்கின்றன. அதன் காரணமாக மிகக் குறைந்த வினைத்திறன் மட்டங்களிலேயே செயற்பட வேண்டியுள்ளது.
இவ்வாறான சிரமங்கள் இருந்த போதும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் அமைப்புகள் புதிய விடயங்களை முன்வைத்துள்ளன. உதாரணமாக, மனித உரிமைகள் குழு மூன்று மாதங்களுக்குள் அவசர அறிக்கைகளை அரசுகள் சமர்ப்பிக்க வேண்டுமென புதிய நடைமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் சில சந்தர்ப்பங்களில் தகவல்களைத் திரட்டுவதற்காக குழுவின் அங்கத்தவர்களை அரசாங்கங்கள் அழைக்க
28

வேண்டும் எனக் கோருவதற்கும் எண்ணியுள்ளது. இது சமவாயத்தின் கீழ் தமது தொழிற்பாடுகளை மேற்கொள்ள குழுவினர்க்கு மிகவும் உதவியாக இருக்கும். மாற்று அணுகுமுறைகள் இல்லாத சந்தர்ப்பங்களிலேயே இந்த ஏற்பாடு தேவையாக இருக்கும். அத்துடன் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல் தொடர்பாக மனித உரிமைகள் குழு, இனப்பாகுபாடுகளை நீக்குதல் தொடர்பான குழு, சிறுவர் உரிமைகள் மீதான குழு போன்ற பல்வேறு அமைப்புகள் கொள்கைகளையும் முன்வைத்துள்ளன. இத்தகைய புத்தாக்கங்கள் இந்த அமைப்புகள் தமது பணிகளைப் பூர்த்தி செய்ய முக்கியமானவைகளாகும்.
இந்த அமைப்புகளுக்கு வேறு பல பரிந்துரைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று பிராந்திய மற்றும் உப பிராந்திய நிபுனத்துவ அமைப்புகளை ஸ்தாபிப்பதாகும். இவை மனித உரிமைகள் தொடர்பான சகல ஐ நா சமவாயங்களின் கீழ் அறிக்கைகளை ஆய்வு செய்து அவை தொடர்பாக தமது அவதானங்களை முன்வைப்பதற்குப் பொறுப்பாக இருக்கும். இந்த அவதானங்கள் பின்னர் மேற்பார்வை அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தச் செயன்முறையில் ஒரு நிபுணத்துவ உள்ளிட்டை கொண்டிருத்தலானது இச் செயன்முறையின் நடுநிலைத் தன்மையையும், புறவயத்தன்மையையும் மென்மேலும் வலுப்படுத்தும் அதேநேரத்தில் மேற்பார்வை அமைப்புகள் அரசுகளின் அறிக்கைகள் தொடர்பாக காத்திரமாக செயற்படுவதில்லை என்னும் விமர்சனத்துக்கும் முகம் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
முறைமையின் தோல்விகள்
மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் அண்மைக் காலங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பல பிரச்சினைகள் இன்னமும் உள்ளன. அவை மனித உரிமைகளை வினைத்திறனுடன் அமுல்படுத்துவதைத் தடைசெய்கின்றன.
ஐ. நா முறைமைக்குள் சில அமைப்புகளைத் தவிர ஏனையவற்றில் அரசியல் அபிலாஷைகளே மேம்பட்டு நிற்கின்றன. மனித உரிமைகளின் ஏற்பாடுகளை பிரக்ஞை பூர்வமாக அமுல்படுத்துவதை விட தேசிய நலன்களே மேலோங்கி நிற்கின்றன. இந்த நிலைமையை 'டனிலோ ரேர்க் (Dmilo Turk) என்பவர் 'குற்ற உணர்வின் சமமான பரம்பல்' எனக் கூறுகின்றார். இவ்வாறு மனித உரிமைகளைத் தேசிய நலன்களுடன் சமப்படுத்தும் முயற்சியினால் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நபர்கள் தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. பிணக்குத் தீர்வை நோக்கி முன்செல்லுதல் மற்றும் தேசிய நலன்கள் தொடர்பான விடயங்களை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களுடன் சமப்படுத்த முயலும் போது மனித
29

Page 20
உரிமைகளைப் பூரணமாக அமுல்படுத்துவதற்கு அவசியமான நம்பக் கூடிய நீதிமுறைச் செயற்பாடுகளை அது தடை செய்கிறது.
மனித உரிமை விடயங்களில் ஐ.நாவால் அவசர சூழ்நிலைகளில் செயற்பட முடியாமலுள்ளது. இதுவும் முக்கியமான ஓர் ஒதுக்கப்பட்ட பகுதியாகும். அது மாத்திரமல்லாது சர்வதேச சமூகம் காலமறிந்து தலையீடு செய்வதற்கு உதவியாக நேரத்துடன் எச்சரிக்கை செய்யக் கூடிய ஒரு பொறிமுறை இல்லை. ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் அண்மைக் காலத்தில் பொறிமுறையிலுள்ள இடைவெளியைக் குறைக்க முயன்றுள்ளார் எனினும் அவசரமான நடவடிக்கைகளை வெற்றிகரமாக்க வேண்டுமெனில் சர்வதேச வளங்களைத் திரட்டுவதற்கு இன்னும் அதிகமான ஒழுங்கு முறையான செயன்முறை அவசியமாகும்.
மனித உரிமைகள் தலையீட்டினைக் கோருகின்ற இன்னுமொரு ஐ. நா செயற்பாட்டுக்கும் இந்த அவசரகால சூழ்நிலை பொருத்தமானது. அது ஐ.நா சமாதானத்தை நிலைநிறுத்தும் செயற்பாடாகும். "சமாதானத்தை flood6 sing:256)ub LD60f2, 2 foldas.(6plb'' (Peacekeeping and Human Rights) என்னும் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையானது இந்த விடயத்தைத் தொடக்கி வைத்துள்ளது. சமாதானத்தை நிலைநிறுத்துவதில் மனித உரிமை நடைமுறைப்படுத்தலுக்கான 15 விடய நிகழ்ச்சித்திட்டத்தை இந்த அறிக்கை முன்வைக்கிறது. இந்த 15 விடயங்களும் மிகவும் முக்கியமான விடயங்களைச் சுட்டி நிற்கின்றன. மனித உரிமைகள் எந்தளவுக்கு மீறப்பட்டுள்ளன என்பதை அரசுசாரா நிறுவனங்கள் ஊடாக தெரிந்து கொள்ளல் ஐ. நாவின் நேரடியான தலையீட்டுக்கு முன்னர் அவசியமானது. பிணக்குகளில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் பிரவேசத்தைத் தடை செய்யக் கூடாது என்பதற்காக, நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச ஆளணியினர் மெளனமாக இருக்கக் கூடாது. எத்தகைய அரசியல் செயற்பாடுகளும் எதிர்காலத்தில் மனித உரிமைகளையும் மனித உரிமை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாகவும் அங்கீகரிப்பதாகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய அரசியல் ஏற்பாடுகளின் ஆழ அகலங்கள் பற்றி மனித உரிமை தொடர்பான செயற்பாட்டாளர்களும், ஆய்வாளர்களும் அறிவுறுத்த வேண்டும். சமாதானத்தை நிலைநிறுத்தும் நடவடிக்கைகளின் போது நிறுவனங்களைக் கட்டமைக்கும் விடயத்தில் மனித உரிமைகள் தொடர்பான உணர்திறனை கட்டி எழுப்புதல் வேண்டும். புனர்நிர்மாணப் பணிகளின் போது மனித உரிமைக் கல்வியும் ஓர் அம்சமாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இறுதியாக மனித உரிமைகளை மீறும் தரப்பினரை தண்டித்தலில் சர்வதேச கவனம் முனைப்பாக்கப்பட வேண்டும். யுத்தக் குற்றவாளிகளை நீதியின் முன் நிலைநிறுத்துவதற்காக விசேட மன்றங்களை சர்வதேச மன்னிப்புச் சபையும் ஏனையவையும் நிறுவுதல் வேண்டும். சமாதானத்தை நிலைநிறுத்தும் பல நடவடிக்கைகள் மனிதாபிமான விடயங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. எனவே மனித உரிமைகள் இந்த செயற்பாடுகளுடன்
30

ஒன்றிணைக்கப்படாவிட்டால் இந்த நடவடிக்கைகளுக்குத் தோற்றுவாயாக அமைந்த அம்சங்கள் சரியாக வளங்கிக் கொள்ளப்படமாட்டாது. சமாதானம் தொடர்பான களச் செயற்பாடுகளில் மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் முக்கியமாக ஈடுபடல் அவசியம்.
மனித உரிமை முனைப்புக்களின் தோல்விக்கு பிரதான காரணம் உலகளாவிய மனித உரிமை கலாசாரம் என ஒன்று இல்லாமையாகும். ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் மனித உரிமைகள் மீதான சர்வதேச பிரகடனம் ஆகியவை உலகக் கலாசார வடிவமாகத் தோன்றினும் அது உண்மையல்ல. ஓர் உலகளாவிய மனித உரிமைக் கலாசாரமின்மைக்கு இரு காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது அது மேற்கத்திய நாடுகளின் எண்ணக்கரு என்பதாகும். அடுத்தது அது அரசியல் சார்ந்த உலகத்தில் ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதாகும. இந்த நம்பிக்கைக்கு ஐ நா முறைமையின் இயல்பும் அமைப்பும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளன. இவ்வாறான புலக்காட்சி பல்வேறு பகுதிகளிலும் கலாசார பரிமாணங்களுக்கு மனித உரிமைகளை ஏற்புடைத்தாக்குவது முக்கியமாகும். அத்துடன் புறவயமான நீதிச் செயன்முறைகளை அரசியலை விட வலுவூட்ட வேண்டும். மனித உரிமைகளுக்கு ஒரு நடுநிலைத் தன்மையையும் அரசியல் களேபரங்களில் இருந்து அவற்றை வேறுபடுத்திக் காட்டக் கூடிய பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் உண்மையான உலகம் தழுவிய மனித உரிமைகள் கலாசாரத்தை உருவாக்க வேண்டுமெனில் இச் செயற்பாடுகளை மேற்கொள்வது மிக மிக முக்கியமானதாகும்.
பொது விதந்துரைகள்
அண்மைக் காலங்களில் ஐ. நா முறைமைக்குள் மனித உரிமைகளை வலுப்படுத்தல் தொடர்பாக பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதலாவது உலக மனித உரிமைகளின் நிலைமைகள் பற்றிய அறிக்கையாகும். இது கிரமமாக வெளிவருகின்ற பிரசுரமாகும். இந்த அறிக்கையானது ஐ நா உறுப்பு நாடுகள் யாவற்றினதும் மனித உரிமை நிலைமைகளைப் பற்றி எடுத்துரைக்கின்றது. இத்தகைய அறிக்கையானது
ஒவ்வொரு நாட்டிலும் மனித உரிமை அபிவிருத்திகள் பற்றி ஒரு முழுமையான கண்காணிப்பை மேற்கொள்கின்றது. அத்துடன் சர்வதேச மனித உரிமைச் செயற்பாடுகளுக்கு ஓர் ஆய்வு அடிப்படையை வழங்குகிறது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் உலக அபிவிருத்தி அறிக்கை போன்று சர்வதேச பிராந்திய தேசிய மட்டங்களில் மனித உரிமை நிலைமைகளை அபிவிருத்தி செய்வதற்கு முயலும் நபர்களுக்கு இது ஒரு முதன்மை மூலமாக
31

Page 21
விளங்கும். தற்போது இவ்வாறான ஒவ்வொரு நாட்டையும் கண்காணிக்கும் அம்சம் ஐ. நா முறைமையில் இல்லை.
மனித உரிமை நிலையத்தோடு தொடர்புடையதாக மனித உரிமைகளுக்கான ஆய்வு மற்றும் பயிற்சி நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்பது இன்னும் ஒரு முன்மொழிவாகும். மனித உரிமைகள் புலத்தில் ஆழமான ஆய்வும் பயிற்சியும் அவசியம் என இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இன்று மனித உரிமைகள் என்பது ஒரு சட்டம் சார்ந்த புலம் என்னும் கருத்தில் இருந்து விடுபட்டு அது வறுமை, அபிவிருத்தி, பெண்கள் உரிமை, சிறுவர் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கின்ற நிலைமையில் இது மேலும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. மனித உரிமைகள் தலையீட்டினை விதந்துரைப்பதற்கு முன்பதாக இந்த அம்சங்கள் கூடிய ஆய்வுகளை வேண்டி நிற்கின்றன. இந்த நிறுவனத்தின் பயிற்சிக் கூறானது மனித உரிமைகள் செயற்பாடுகளின் அறிவூட்டல் தொடர்பான தேசிய உட்கட்டமைப்புகளை வலுப்படுத்த உதவும். குறிப்பாகச் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான அமைப்புகளுக்கு இது பொருத்தமானது. இந்த நிலைமையானது மனித உரிமைகள் பற்றிய ஆய்வுகளை மாத்திரம் இணைப்பாக்கம் செய்யாது உலகளாவிய ரீதியில் பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயன்படுத்தவதற்கான பாடவிதானங்களின் சாதனங்களையும் விருத்தி செய்யும். அத்துடன் மனித உரிமைகள் பற்றிய ஆய்வுகள் செயற்பாடுகளின் மையமாகவும் அமையும். தற்போது இத்தகைய பண்புகள் கொண்ட ஓர் ஆய்வு அமைப்பு இல்லை. மனித உரிமைகள் நிலையத்தின் ஒரு பகுதியாக இது அமையப் போவதால் ஐ. நாவின் மனித உரிமைகள் செயற்பாடுகளில் முக்கிய வகிபங்கு கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த நிறுவனத்துக்கு ஒரு முக்கியமான சேவை கிடைக்க வழியேற்படும்.
32

2
சிறுபான்மையினரும் அபிவிருத்தியும்
இன்றைய செயலமர்வில் சிறுபான்மையினர் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களைச் சுருக்கமாக வகுத் துரைப் பதற்கு எனக் கு வாய்ப்பளித்தமைக்காக நான் எம்.ஆர்.ஜிக்கு (MRG) நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பாக மனசஞ்சலம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளின் பின்னணியில் இந்த எடுத்துரைப்பு சமர்ப்பிக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் கடைசி வருடத்தில் சிக்கல்கள் நிரம்பிய போல்கன் தீபகற்பத்தில் கொசாவோவில் நடந்த இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்பை எம்மால் தடுக்க முடியவில்லை. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இத்தகைய செயலில் ஈடுபட்ட நாடானது ஐரோப்பிய பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறுபான்மையினர் பாதுகாப்பு மீதான சமவாயத்தில் மிக அணி மையில் கையொப்பமிட்டது. இந்தோனேசியாவில் அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது வாழ்க்கை தரத்தை சீரழித்ததோடு மட்டும் நின்றுவிடாது சமய, இனத்துவ சிறுபான்மையினர் மீது முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு வன்முறையை கவிழ்த்துவிட்டுள்ளது. இந்தோனேசியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு சிறுபான்மையினர் நேரடியாகப் பலியாகியுள்ளனர். சிறுபான்மையினருக்கும் அபிவிருத்திக்கும் இடையிலான சிக்கலான உறவினை இது மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் இனவாத அமைப்புகள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைக்கு தூபமிட்டுள்ளன என குற்றம் சுமத்தப்படுகிறது. இது இந்தியாவின் சமயச் சார்பின்மை என்னும் அடித்தளத்தையே ஆட்டங் காணச் செய்துள்ளது. தலித்துகள் (Dalits) பற்றி சர்வதேச ரீதியிலான அக்கறை ஏற்பட்டுள்ளபோதும் அவர்கள் கொடுமையாகவும் கீழ்த்தரமாகவும் நடத்தப்படுவது இன்னும் நிறுத்தப்படவில்லை.
இந்தப் பின்னணியில் தான் சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பான சட்டம் மற்றும் நிறுவன ஏற்பாடுகள் குறித்தும், ஏற்பாடுகளின் போதுமான தன்மை குறித்தும் நாங்கள் மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டி இருக்கின்றது. மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு விடயங்கள் பொருளாதார அபிவிருத்தி எனும் கருத்துக்கு கீழ்பட்டவைகளே என்னும் எடுகோளை நாம் இந்த எடுத்துரைப்பில் மீள் பரிசோதனை செய்ய முயற்சி, செய்வோம். அத்துடன் தனியார் துறை அபிவிருத்தியா அல்லது நிலைபேண்
33

Page 22
அபிவிருத்தியா முக்கியமானது என்னும் இரு கருத்துக்களுக்கு இடையிலான முரண்பாடு குறித்தும் நாம் மீளாய்வு செய்வோம். இதனைத் தொடர்ந்து அபிவிருத்தி ஒத்துழைப்பு என்னும் அடிப்படையில் சிறுபான்மையினர் பாதுகாப்பு பிரச்சினைகள் பற்றி ஆராய்வதோடு சிறுபான்மையினர்களின் பாதுகாப்பை மேம்படுத்த நிதிவழங்குவோர் எடுக்கக் கூடிய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வோம்.
இவ்வாறான ஆய்வினை மேற்கொள்வதற்கு முன்பாக நாம் பிராந்திய சூழல் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். பிராந்திய சட்டகத்துக்குள் சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படலாம். தென்னாசியப் பிராந்தியமானது புவியியல், அரசியல் மற்றும் சமூக பொருளாதார பன்மைத்துவம் தொடர்பாக அசாதாரணமான பண்புகளைக் கொண்டு விளங்குகிறது. இந்த பிராந்தியத்தின் ஒரு பகுதியில் தொடர்ச்சியான தீவுகளைக் கொண்ட, சனத்தொகை குறைந்த மாலைத்தீவு காணப்படுகிறது. இங்கு ஒரு கட்சிக் குடியரசு அரசாங்கம் நிலவுகிறது. பூட்டானும் நேபாளமும் நிலம் சூழ்ந்த அரை மானிய முறை நாடுகளாகும். பூட்டானில் முடியாட்சி நிலவுகிறது. நேபாளத்தில் அண்மையில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றம் நடந்தேறியது. இதன்மூலம் யாப்புவழி மன்னரைத் தலமையகமாகக் கொண்ட பல்கட்சி அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளது. இன்னொரு பகுதியில் பாகிஸ்தானும் பங்களாதேஷம் இருக்கின்றன. இவை இரண்டுமே சிவில் யுத்தத்தின் மூலம் இரத்தம் சிந்திய பிரிவினையால் உருவாக்கப்பட்டவை. இவ்விரு நாடுகளிலுமே சனநாயகரீதியாக நிறுவப்பட்ட அரசாங்கங்கள் ஒழிக்கப்பட்டு ஏதேச்சாதிகாரமான இராணுவ அரசாங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. தென்னாசியப் பிராந்தியத்தின் மத்தியில் இந்தியா அமைந்துள்ளது. இந்தியா சமஷ்டி அரசாங்கத்தைக் கொண்டுள்ளது. அத்துடன் பலமான கைத்தொழில் மற்றும் தொழின் முறையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவ பாரம்பரிய நீண்ட மரபுரிமையையும் கொண்டுள்ளது. இறுதியாக இலங்கையைப் பார்ப்போமானால், அது மிதமிஞ்சிய வன்முறைக்கும் ஆயுதக் கிளர்ச்சிகளுக்கும் நிலைக்களனாக மாறியுள்ளதோடு இன்று, சமுதாயம் இராணுவமயப்படுத்தப்படும் நிலை தோன்றியுள்ளது.
பாரிய பொருளாதார, குடித்தொகை அழுத்தங்கள் காரணமாக அரசியல் உறுதிப்பாட்டை பேணுதலும் நிறுவனங்களைக் கட்டியெழுப்புதலும் மேலும் பல பிரச்சினைகளும் தோன்றியுள்ளன. உலக வருமானத்தில் தென்னாசிய பிராந்தியம் 2 சத வீதத்தை மாத்திரம் கொண்டிருப்பதுடன் உலக சனத்தெகையில் 22 சத வீதத்தையும் கொண்டுள்ளது. இப்பிராந்தியத்தின் சனத்தொகையில் சரிபாதி பேர் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர் என நம்பப்படுகிறது. வருடாந்தம் இப்பிராந்திய சனத்தெகை 25 மில்லியனாக அதிகரிக்கிறது. OECD நாடுகளின் சனத்தொகை வளர்ச்சியோடு ஒப்பிடும் போது இது 5 சத வீதம் அதிகமாகும்.
34

இவ்வாறான பன்மைத்துவமும் சிக்கல்தன்மையும் நிறைந்திருந்த போதும் இப்பிராந்தியத்தில் தேர்தல்கள் ஒழுங்காக நடைபெறுவதுடன் பிரதிநிதித்துவ நிறுவனங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகளும் சனநாயகச் சுதந்திரங்களும் பாதுகாக்கப்படுகின்றன. எனவே இப்பிராந்தியமானது யாப்பு முறை ஆய்வு, நிறுவன மீள் மதிப்பீடு மற்றும் புத்தாக்கம் ஆகியவை தொடர்பில் முக்கியம் பெற்று விளங்குகிறது. யாப்பு வாதம் மனித உரிமைகள், சனநாயகம் ஆகியவை தொடர்பான பிரச்சினைகள் அரசியல் மற்றும் அறிவு சார்ந்த விவாதங்களில் மையநிலையை வகிக்கின்றன. அண்மையில் நேபாளம் மக்களின் இறைமை பல்கட்சி அரசாங்கம் மற்றும் அடிப்படை உரிமைகளைக் கொண்ட புதிய யாப்பினை அண்மையில் ஏற்றுக் கொண்டது. பங்களாதேஷ் பாராளுமன்ற அரசாங்கமா அல்லது சனாதிபதி அரசாங்கமா என்னும் ஆட்சி வடிவம் குறித்து விவாதத்தில் அண்மைக் காலம் வரை ஈடுபட்டு வந்தது. இப்போது பாராளுமன்ற அதிகாரமே சிறந்தது என அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் மதச்சார்பின்மை சமஷ்டி அரசாங்கம் என்னும் அதன் அடித்தளம் இன்று மறுமலர்ச்சி மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் வெஸ்ட்மினிஸ்ரர் அடிப்படையிலான யாப்பு முறைமைக்கும் மிகவும் மத்திய மையப்படுத்தப்பட்ட சனாதிபதி முறைமைக்கும் இடையில் காணப்படுகின்ற முரண்பாடுகளை இணங்கச் செய்வதில் போராடிக் கொண்டு இருக்கிறது. இலங்கையானது சிறுபான்மையின மற்றும் அரசியல் மாற்றுக் கருத்தினர் ஆகியோருக்கு எதிரான தொடர்ச்சியான பாரிய மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பான முறைப்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டி இருப்பதால் இன்று தன்னுடைய உரிமைகள் மனுவை மீள் நிர்மாணம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
இப்போது நாங்கள் காத்மண்டுவில் இருப்பதன் காரணமாக நேபாளத்தின் அசாதாரணமான பன்மைத்துவம் பற்றியும் நேபாள அரசியல் யாப்பு எவ்வாறு இந்த பன்மைத்துவத்தை ஏற்றுக் கொண்டுள்ளது என்பது பற்றியும் சில குறிப்புகளை முன்வைப்பது பொருத்தம் என நினைக்கின்றேன் நேபாள அரசியல் அமைப்பின் நாலாம் உறுப்புரை நேபாளமானது ஒரு பல்லின பன்மொழி, சனநாயக, சுதந்திர, பிரிக்க முடியாத, இறைமையுள்ள, இந்து, மற்றும் யாப்புமுறை முடியாட்சியைக் கொண்ட ராஜ்ஜியம் எனக் குறிப்பிடுகிறது. இந்த மூலங்களில் சிலவற்றை நாம் பிரித்து பார்க்கும் தேவை உள்ளது.
உறுப்புரை 2, நேபாள மக்கள் எத்தகைய வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் அவர்கள ஒன்று சேர்ந்து நேபாள தேசத்தை
35

Page 23
அமைக்கிறார்கள் என வலியுத்துகிறது அதே நேரத்தில் 4 ஆம் உறுப்புரை நேபாளத்தின் பன்மைத்துவத்தை அங்கீகரிக்கிறது. 2 ஆம் உறுப்புரைக்கும் 4 ஆம் உறுப்புரைக்கும் இடையில் முரண்பாடுள்ளதா? 4 ஆம் உறுப்புரையான நேபாள மக்கள் பொது அபிலாஷைகளைக் கொண்டிருப்பதோடு ”பொது விசுவாசத்தையும” கொண்டிருக்கிறார்கள் எனக் கூறுகிறது.
அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு குறிப்புரையில் அதன் ஆசிரியர் 2 ஆம் உறுப்புரை நேபாள மக்கள் சுதந்திரம் மற்றும் ஒன்றிணைப்பு ஆகியவற்றுக்கான தமது பொது விசுவாசத்தின் மூலம் நேபாள தேசத்தை அமைத்துள்ளனர் என்பதைக் கூறுவதற்காக ஆக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்.
இந்து இராஜ்ஜியம் என்னும் வார்த்தைகள் ”பல்லினம்’ ‘பன்மொழி” ஆகியவற்றுடனும் மத உரிமையை அங்கீகரிக்கின்ற பத்தொன்பதாம் உறுப்புரையுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும் என விமர்சகர்கள் வாதிடுகின்றனர். "நேபாளமானது ஒரு மதச்சார்பான அரசு அல்ல. இந்து அரசன் தர்ம சாத்திரங்களை நிர்வகிக்கின்ற கடவுளுக்கு வகை சொல்கின்ற ஓர் அங்கிலிக்கன் அரச தலைவரும் அல்ல” என அவர்கள் மேலும் வாதிடுகின்றனர். இந்து அரசன் ஓர் அரச முறை சார்ந்த அரசன். அவர் அரச யாப்பின் மேலாண்மையை ஏற்றுக் கொள்வதோடு சனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் அறிவுரையின் படியே நடக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகிறார். இந்து ராஜ்ஜியம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது வரலாற்று ரீதியாக நேபாளம் ஓர் இந்து ராஜ்ஜியமாக இருந்தது என்னும் தொடர்ச்சியை வலியுறுத்துவதற்காகவே ஆகும். இந்து விழுமியங்களைத் திணிப்பதற்கு எந்த விதமான ஆர்வமும் இல்லை என விமர்சகர்கள் கூறுகின்றனர். நாட்டின் மதச்சார்பின்மை தொடர்பாக எந்தவொரு இறையுணர்வும் இங்கு இல்லை. இந்து இராச்சியம் எனப்படுவது இந்து வழியிலான மதச்சார்பின்மையையே குறித்து நிற்கிறது. இந்து இராச்சியம் என்னும் வரலாற்று ரீதியான தொடர்ச்சி நிலைக்குள் பன்மைத்துவம் என்பதனைப் பற்றிப்பிடித்து மேம்படுத்துகின்ற சிக்கலான முயற்சியே இதுவாகும். யாப்பானது ஆட்சி விடயங்களில் கடவுள் கோட்பாட்டினை நீக்கியுள்ளதோடு மத அடிப்படையில் எவ்வித பாகுபாடும் காட்டப்பட மாட்டாது என்பதனையும் உறுதிப்படுத்துகிறது. எந்தவித பதவி நிலைக்கும் சமய அறிவு வேண்டப்படுவதில்லை. அத்துடன் யாப்புமுறையின் கீழ் சட்டத்தின் தகுதியுடைமையானது அவை எந்த அளவுக்கு சமய கோட்பாடுகளுடன் இணைந்துள்ளன என்ற அடிப்படையில் அளவீடு செய்யப்படுவதுமில்லை. இவ்வாறாக அரசியல் யாப்பு விமர்சகர்கள் நேபாள யாப்பு பற்றி கூறுகின்றனர்.
இந்த வகையில் நேபாள யாப்பின் 27ஆம் உறுப்புரையை கவனிப்பதும் பொருத்தமானதாக இருக்கும் 27ஆம் உறுப்புரை பின்வருமாறு குறிப்பிடுகிறது: இந்த யாப்பில் "மாட்சிமை தங்கிய எனும் சொற்கள் தற்போது ஆட்சி செய்கின்ற பேரரசரும் ஆரிய கலாசாரத்தையும் இந்து சமயத்தையும் பன்பற்றியவருமான
36

பரித்துவி நாராயணன் ஷாவின் வழிவந்த மாட்சிமை தங்கிய அரசரைக் குறிக்கும்.” உறுப்புரை 27(2) "மாட்சிமை தங்கிய அரசர் நேபாளியத் தேசியம் மற்றும் நேபாளிய மக்களின் ஐக்கியம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார். இது அரச யாப் பின் தோற்றுவாயுடனும் மூன்றாம் உறுப்புரையுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டும். இவை அரசனிடம் இருந்து மக்களுக்கு இறைமையானது மாற்றப்பட்டுள்ளது எனக் கூறுகின்றன. சிறுசிறு ராச்சியங்களை ஒன்றாக இணைத்து ஒரு நவீன தேசமாக இன்று மாற்றம் பெற்றுள்ள நேபாளத்தை உருவாக்கியவர் முதலாவது அரசரான பிருத்துவி நாராயணனே ஆவர்.” மரபுகள், வழக்கங்கள், சமயம் மற்றும் இந்து தர்ம சாஸ்திர விழுமியங்கள் ஆகியவற்றில் நிலை கொண்டுள்ள நியமங்கள் மற்றும் விழுமியங்கள் மீது இம் முடியாட்சியின் சட்ட ரீதியான தன்மையையும் தொடர்ச்சியையும் நிலைப்படுத்துவது மிகவும் இயற்கையானதே’ என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். மன்னர் பிரேந்திரா தனது முடிசூட்டு உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
நேபாளத்தின் முடியாட்சி நினைவறியாக் காலத்தில் இருந்து தொடர்ந்து வந்துள்ளது. . . சமுக மற்றும் சமய கலாசார அம்சங்கள், பல்வேறு பரிமாணங்கள் உள்ள பல்வேறு இராச்சியங்கள் ஆகிய பன்மைத்துவங்களில் இருந்து ஒரு புதிய தேசம் தோன்றியது. இந்த சிம்மாசனமானது நாட்டின் இறைமை, ஒன்றிணைப்பு, சுதந்திரம், மரபு மற்றும் கலாசாரத்தை அடையாளப்படுத்துகிறது. எமது முடிசூடல் ஆகம விதிகளின் படி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் அரசன் பிருத்வி நாராயணன் ஷா (King PritwiNarayan Shah) 1969 ஆம் ஆண்டு நேபாளம் ”எல்லாவித மலர்களும் பூத்துக் குலுங்கும் ஒரு நந்தவனம்” என வலியுறுத்திப் பிரகடனப்படுத்தினார். அது மாத்திரம் அல்லாது நீதியானது மத நூல்கள் மற்றும் இந்து மரபுகள்” ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது பற்றி உறுப்புரை 19, பின்வருமாறு கூறுகிறது:
(1) ஒவ்வொரு நபரும் புராதன காலத்திலிருந்து தனக்கு கையளிக்கப்பட்ட தனது சமயத்தை மரபுரீதியான நடைமுறைகளுக்கு மதிப்பளித்து பின்பற்றும் சுதந்திரத்தைக் கொண்டுள்ளார். அதேநேரத்தில் எந்தவொரு நபருக்கும் இன்னொரு நபரை ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மதமாற்றம் செய்யும் உரிமை கிடையாது.
(2) ஒவ்வொரு சமயத்துக்கும் தனது சுதந்திரமான இருப்புக்கும் அதன் அடிப்படையில் தமது சமய இடங்களையும் நிதிகளையும் பாதுகாப்பதற்கும் முகாமை செய்வதற்கும் உரிமை உள்ளது.
37

Page 24
19 ஆம் உறுப்புரையும் அடிப்படை உரிமைகள் மீதான அத்தியாயமும் உண்மையில் ஆழமான மதச்சார்பற்ற தன்மையையே காட்டுகின்றன. தவிர, ஒரு ஸ்தாபிக்கப்பட்ட மத ஸ்தாபனத்தை வெறுமனே தடை செய்யவில்லை. அரசியல் யாப்பு ரீதியாக அரசாங்கமானது ஒரு சமயத்துக்கு சேவை செய்ய தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. அத்துடன் சமயத்தில் அரசாங்க தலையீட்டையும் தடை செய்ய வேண்டும்.
I
புகழ்பெற்ற மனித உரிமைகள் அறிஞரும் செயற்பாட்டாளருமான “போல் சீக்காட் (Paul Seighart) ஒரு முறை பின்வருமாறு குறிப்பிட்டார். அதாவது அரசியலில் உள்ள மிக முக்கியமான வேதாந்தம் என்னவெனில் “முட்டையை உடைக்காமல் அதனைப் பொரிக்க முடியாது” என்பதாகும். பொருளாதார அபிவிருத்தியைப் பொறுத்தவரையில் இதன் பொருள் என்னவெனில் பிரசைகளின் மனித உரிமைகளை தற்காலிகமாகவேனும் மீறாமல் நன்மைகளை உருவாக்க முடியாது என்பதாகும். இந்தக் கருத்தின் காரணமாக மனித உரிமைகளும் சனநாயகமும் அபிவிருத்தித் தேவைகளுக்கு முன்னால் முக்கியமானவை அல்ல என தென்கிழக்கு ஆசியாவில் பலரை வாதிட வைத்துள்ளது. புதிதாகக் கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகள் இதற்கு உதாரணமாகக் காட்டப்படுகின்றன எனினும் இந்த நாடுகளில் சிங்கப்பூரும் ஹொங்கொங்கும் சிறிய நகர அரசுகளாகும். இவற்றின் அனுபவங்களில் இருந்து பொதுமைப்படுத்தல்களை ஏற்படுத்துவது மிகவும் சிரமமானது. மாக்கோஸ் வீழ்ச்சி, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் ராணுவ அரசாங்கங்கள் போன்றவை ஏற்பட்ட பின்னர் இந்த வாதம் அடிப்பட்டுப் போய்விட்டது. ஆட்சி அதிகாரம், அரசியல் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை நியாயப்படுத்தவே இந்த வாதம் முன் வைக்கப்படுகிறது. மனித உரிமைகளை மேம்படுத்துவது அபிவிருத்திகளின் பிரிக்க முடியாத பகுதி என்பது இன்று பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை இந்த அபிவிருத்தித் தசாப்தத்தின் முக்கிய அடைவுகளில் ஒன்றாகும். அதாவது தனிமனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பது பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துமே தவிர அதற்குத் தடையாக அமைய மாட்டாது. மனித உரிமைகளும் அபிவிருத்தியும் ஒன்றில் ஒன்று தங்கி இருக்கின்றன என்னும் கருத்தினை 1986 ஆம் ஆண்டு மார்கழி 4 ஆம் திகதி பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்திக்கான உரிமை மீதான ஐ.நா பிரகடனம் உள்ளடக்கியுள்ளது. இந்தப் பிரகடனத்தில் உள்ள முக்கிய கருத்துக்கள் பின்வருவனவற்றை அடக்கியுள்ளன. (1) அபிவிருத்தியில் மனிதனே மைய நிலையைக் கொண்டிருக்கின்றான் என்பதும் அபிவிருத்திக்கான உரிமையில் அவன் ஆர்வத்துடன் பங்கெடுப்பதோடு அதன் நன்மைகளை அனுபவிப்பவனாகவும்
38

இருக்கின்றான் என்பதை அங்கீகரித்தல், (2) சகல மனித உரிமைகளும் (சிவில், பொருளாதார, சமூக, கலாசார) பிரிக்க முடியாதவை, ஒன்றில் ஒன்று தங்கியிருப்பவை, சமத்துவமானது என்பதை ஏற்றுக் கொள்ளல், (3) சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை ஏற்றுக் கொள்ளா விடின் அது அபிவிருத்திக்கு தடையாக அமைகிறது என்பதனை ஏற்றல்.
ஐ.நா பிரகடனத்தில் மிக முக்கியமான புத்தாக்கங்களில் ஒன்று மனித உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிப்பதற்கு தவறுவதினால் ஏற்படக் கூடிய அபிவிருத்திக்கான "தடைகளை” அகற்றுவதற்கு அரசுகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரம் ஆகும். இதன் பொருள் என்னவெனில் (அ) அரசானது சர்வதேச மனித உரிமைச் சாசனங்களிலும் சம்பந்தப்பட்ட கருவிகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ள உரிமைகளையும் சுதந்திரங்களையும் மதிக்க வேண்டும். (ஆ) இந்த உரிமைகளைப் பெறுவதற்கு தடையாக இருக்கக் கூடிய அரச அமைப்புக்கள் நிறுவனங்கள் கொள்கைகள் ஆகியவற்றைச் சீர்திருத்துவதற்கான தேவைக்கு அரசுகள் முகம் கொடுக்க வேண்டும். அபிவிருத்திக்கான தடைகள் சிவில் சமூகத்தில் இருந்து எழக்கூடும் என ’உபேந்திரா பாக்ஷி (Upendra Baxi) சுட்டிக் காட்டி உள்ளார்.
சுதேசிய குழுமங்கள் சிறுபான்மையின மற்றும் பின்தங்கிய சமூகக் குழுக்களின் மனிதத்துவம் சிவில் சமூகத்தில் இயங்குகின்ற நிறுவனங்களினாலும் நடை முறைகளினாலும் பெரிதும் மீறப்படுகின்றன. இவ்வாறான மீறல்களைச் செய்வோர் அரசின் முகவர்கள் மாத்திரமல்ல ஆனால் சமூக அந்தஸ்த்தையும் பொருளாதார வல்லமையையும் கொண்டிருப்போரேயாவர். ‘பாக்ஷி மேலும் கூறுகிறார்: “மனித உரிமைகளின் தடைகளும் அவற்றை அகற்ற வேண்டும் என்ற அவாவும் சாகாவரம் பெற்ற மனித உரிமை மீறல்களைச் செய்வோர் மீது எமது கவனத்தைத் திருப்புகின்றது. இந்த இராட்சதர்கள் அரசுகளில் மாத்திரம் இருப்பதில்லை ஆனால் சமூக உருவாக்கத்தின் அடிநாதமாக விளங்கும் மனித கூட்டத்தினரிடையேயும் உள்ளனர்”.
V
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான வன்முறைப் பிணக்குகளில் பெரும்பாலானவை இனத்துவக் காரணங்களினால் ஏற்பட்டவை. இந்திய துணைக்கண்டம் இந்தியா பாகிஸ்தான் எனவும் பின்னர் பங்களாதேஷ் எனவும் பிரிந்தமை ஒரு கொடுமையான சிவில் யுத்தத்தின் விளைவாகும். நைஜீரியாவில் நடந்த பயாப்பிரா யுத்தமும், ருவாண்டாவிலும் புரூண்டியிலும் ஹட்டு (Hutu), மற்றும் ருட்சி (Tutsi) இனக்குழுமங்களுக்கு இடையே நடந்த பிணக்குகளும் இனத்துவ பிணக்குகளுக்கு இருக்கக்கூடிய சிதைந்துபோகும்
39

Page 25
ஆற்றலைக் காட்டிநிற்கும் ஏனைய உதாரணங்களாகும். மேற்கு ஆசியாவில் ஈரானிய, ஈராக்கிய மற்றும் துருக்கிய குர்திஷ இனத்தவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தவும் ஒரு தாயகத்தைப் பெறுவதற்காகவும் தொடர்ந்தும் போராடுகின்றனர். லெபனானில் சமய-அரசியல் சார்ந்த இனத்துவ சண்டைகள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளன. அத்துடன் இவை இஸ்ரேலிய-அராபிய பிணக்குடனும் தொடர்பு பட்டுள்ளன. பாஸ்க் மற்றும் கட்டலன் (Basque and Catalan) பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்களது தன்னாட்சிப் போராட்டத்திற்கு ஸ்பானிய அரசாங்கங்கள் தொடர்ந்தும் முகங்கொடுத்து வருகின்றன. அதேநேரத்தில் பிலமிஷ் மற்றும் வல்லூன் (Flemish and Waloon) பிணக்குகள் பெல்ஜியத்தின் மொழி சார்ந்த மற்றும் இனத்துவ அரசியலின் மையமாக இருக்கின்றன. கொசோவோ பிராந்தியத்திலுள்ள அல்பேனியர்கள் யூகோசெலாவியாவில் கிளர்ச்சிக்கான அச்சுறுத்தலை விடுத்துள்ளனர். அதேநேரத்தில் வட அயர்லாந்தில் கத்தோலிக்கர்களும் புரட்டஸ்தாந்தினரும் இரத்தம் சிந்திக்கொண்டு இருக்கின்றனர்.
இந்திய உபகண்டத்தின் அண்மைக்கால வரலாற்றில் இனத்துவ வன்முறை சாதாரண விடயமாகப் போய்விட்டது. பாகிஸ்தானில் பதான் - பிகாரி (Pathan - Bihari) மோதல்கள், புதுடில்லியில் சீக்கிய விரோத குழப்பங்கள், குஜராத்தில் ஒதுக்கீடுகளுக்கு எதிரான கிளர்ச்சிகள், இலங்கையில் சிங்கள-தமிழ் பிணக்குகள் ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்ட இன வன்முறைகளின் காரணமாக சொத்தழிவும், மனித உரிமை மீறல்களும் ஏற்பட்டுள்ளன. இத்தகைய கிளர்ச்சிகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள மன எழுச்சி சார்ந்த மற்றும் உளவியல் சார்ந்த வடுக்கள் பெளதிகரீதியான அழிவுகளைவிட மிகவும் பாரதூரமானவை. இவ் வன்முறைகளின்போது வெறியர்களினால் ஏற்படுத்தப்பட்ட கொடுமைகள், பயங்கரம், வேதனைகள் காரணமாக ஒரு பன்மைத்துவ சமூகத்தில் இருக்கவேண்டிய சமூக உணர்வானது சுக்குநூறாகிப் போய்விட்டது.
அரிதான வளங்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கான போட்டிகள், இனம் , சாதி, குழுமம் , சமயம் மற்றும் மொழி ஆகியவற்றுக்கிடையில் இருக்கக்கூடிய பிளவுகள் என்னும் நெருப்புக்கு எண்ணெய் வார்த்துள்ளன. உறுதியற்ற அரசியல் நிறுவனங்கள் ஒதுக்கப்பட்ட இனத்துவ மற்றும் சமயக் குழுக்களின் அதிகாரம் மற்றும் வளங்களைப் பங்கிடும் கோரிக்கைகளுக்குப் போதுமான அளவில் செவிசாய்க்கத் தவறிவிட்டன. தேசிய இசைவாக்கத்தை மேம்படுத்தும் கொள்கைகள் சிறுபான்மைக் குழுக்களின் மொழி மற்றும் கலாசார மரபுகளைத் தாரை வார்த்துள்ளன. இனத்துவ அதிருப்தியானது பிரிவினைவாத இயக்கங்களாக வளர்ச்சிபெற்றன. இதனை அரசுகள் அடக்கி ஒடுக்க முயன்றன. இதன் காரணமாக சமூக நீதி மற்றும் மனித உரிமைகளுக்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. உள்ளகப் பிணக்குகள் காரணமாக ஏற்பட்ட அகதிகளின்
40

வெளியேற்றமானது பிராந்திய மற்றும் சர்வதேச சமாதானம், உறுதிப்பாடு ஆகியவற்றில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக இனத்துவப் பிரச்சினைகளின் உலகளாவிய தன்மை மற்றும் சிக்கல்கள் பற்றியும் இனத்துவ பிணக்குகளை முகாமை செய்வதற்கு அவசியமான உபாயங்கள் வேலைத்திட்டங்கள் ஆகியவை தொடர்பாக ஒன்றுபட்டு முயற்சிகள் எடுக்கவேண்டியதன் அவசியம் பற்றியும் ஒரு பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பல்லின அரசுகள் தமது அரசியல் யாப்பு அரசியல் முறைகளில் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பங்கீடுகளை ஒன்றிணைத்துள்ளன. இந்த அரசியல் யாப்பு சார்ந்த பரிணாமங்களில் மத்தியமயப்படுத்தப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட வடிவங்களுக்கு இடையிலும், ஒற்றையாட்சி சமஷ்டி வடிவங்களுக்கு இடையிலும் தொடர்ச்சியான பிணக்குகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவில் சமஷ்டி அமைப்பு மொழிவாரி மாநிலங்களை உருவாக்கியுள்ளது. மலேசியாவில் உள்ளுர் ஆட்சியாளர்களின் தலைமையைக் கொண்ட அரசுகளின் கூட்டமைப்பும் விசேட சலுகைகளைக் கொண்ட புதிய பிராந்திய அரசுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னைய நைஜீரிய மாதிரி வித்தியாசமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்கு சமஷ்டி தொடர்பாக பல்வேறு பிராந்திய இனத்துவக் குழுமங்கள் வித்தியாசமான கருத்துக்களைக் கொணடுள்ளன. இந்தக் கருத்துக்கள் இந்தச் சமூகங்களில் சமஷடியை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படக்கூடிய பிணக்குகளுக்கும் நெருக்கடிகளுக்கும் அடிப்படையாக அமைந்துள்ளன. இந்த சமூகங்களின் சமஷ்டி அமைப்பினை வலுப்படுத்தக்கூடிய அமைப்பு ரீதியான சீரமைப்புக்கள் குறித்து வாதங்கள் எழுந்தவாறு உள்ளன. கல்வி, கலாசாரக் கொள்கைகள், பொலிஸ் அதிகாரங்கள், வளங்களைத் திரட்டலும் பங்கிடுதலும், அவசரகால அதிகாரங்கள் ஆகியவை பற்றிய மத்திய மாநில உறவுகளை மீள் வரையறைக்கு உட்படுத்தவேண்டிய தேவை குறித்ததாக இம் முயற்சிகள் அமைந்துள்ளன. இனத்துவக் குழுக்களுக்கிடையில் நியாயமான அதிகாரப் பகிர்வு தொடர்பான அடிப்படை விடயங்கள் குறித்ததாக இம் முயற்சிகள் அமைந்துள்ளன. இப் பிரச்சினைகளை உறுதியுடன் அணுகத் தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட இனத்துவ மற்றும் உபதேசியக் குழுக்களின் பிரிவினைவாதக் கோரிக்கைகள் வலுப்பெற்றுவிடும். பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் இலங்கை போன்ற பிரச்சினைகள் நிரம்பிய சமூகங்களுக்கு சமஷ்டி மற்றும் அரை சமஷ்டி அதிகாரப் பங்கீட்டு மாதிரிகள் பொருத்தமானவையாக விளங்குகின்றன. இந்நாடுகள் அண்மையில் புதிய யாப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளன அல்லது தமது யாப்புக்களை மீள வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இனத்துவ பிணக்குகளில் இன்னொரு முக்கிய அம்சம் கல்வி, தொழில் வாயப்ப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புக்களில் இருக்கக் கூடிய
4f

Page 26
சமத்துவமின்மைகள் தொடர்பாக எடுக்கப்படுகின்ற முன்னுரிமைக் கொள்கையாகும். இக் கொள்கைகள் பெரும்பாலும் மறுத்தல் தொடர்பான பல்வேறு கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. மறுபுறத்தில் இக்கருத்துக்கள் சமூக நீதி தொடர்பான எதிரும் புதிருமான கருத்துக்களைத் தோற்றுவிக்கின்றன. இந்திய நாடு மிகவும் சிக்கலானதும் படிமுறை அமைப்பைக் கொண்டதுமான சமூகங்களைக் கொண்டிருந்தபோதும் பலவீனமான சிறுபான்மையினர் மற்றும் இனக் குழுமங்களுக்கு சாதகமான முன்னுரிமைக் கொள்கைகளை யாப்பு ரீதியாகப் பின்பற்றி வருகிறது. கொள்கையை உருவாக்குபவர்களும், நீதிபதிகளும் இக் கொள்கைகளுக்கு யாப்புரீதியான வரையறைகளைக் கொடுத்து சிக்கல் தன்மைகளை விளங்கிக்கொள்ள வேண்டும். இக் கொள்கைகள் வரலாற்றுரீதியாக அமுக்கப்பட்ட சாதியினர் மற்றும் குழுவினர்க்கும் பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கும் இடையிலான நலன்களில் ஒரு சமநிலையைத் தேட முற்படுகின்றன. மலேசியாவில் உள்ளது போன்று அரசியல்ரீதியாக வல்லமை கொண்ட பெரும்பான்மையினருக்கு சாதகமான முன்னுரிமைக் கொள்கைகள் பண்புரீதியாக வித்தியாசமான சமூக அரசியற் கொள்கைகளை முன்வைக்கின்றன. இங்கு விகிதாசார அடிப்படையிலான முன்னுரிமைக் கொள்கைகளின் சட்டரீதியான எல்லைகள் கேள்விக்கு உரியவைகளாக விளங்குகின்றன. இனத்துவப் பிணக்குகள் மனித உரிமைகள் சமூக நீதி மற்றும் யாப்புமுறை சார்ந்த, சட்டம் சார்ந்த மீள்நிலைப்படுத்தல் தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளை எழுப்புகின்றன. ஆசிய, ஆபிரிக்க பன்மைத்துவ சமூகங்களின் மேன்முறையீட்டு நீதி முறைமையானது சட்டம் மற்றும் அரசியல் பண்மைத்துவம் தொடர்பான விழுமியங்களைப் பற்றிப் பிடித்து இத்தகைய இனத்துவ நெருக்கடிகளை முகாமை செய்யுமாறு கோருகின்றன. நீதிமன்றங்களானவை சமத்துவம், பங்கீட்டு நீதி மற்றும் சமயச்சார்பின்மை (Secularism) தொடர்பான பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் அரசியல் மற்றும் கருத்தியல் சார்ந்த சூழ்நிலைகளின் உருவாக்கத்தில் தமது சொந்த சட்டபூர்வத் தன்மையைப் பேணப் போராடுகின்றன. சுய வரையறைகள் மற்றும் வியாக்கியானங்கள் தொடர்பான காலனித்துவ மரபுகளின் இறுக்கம் காரணமாக இச் சமூகங்களில் உள்ள உயர்நிலை நீதிமன்றங்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு அர்த்தத்துடன் முகங் கொடுக்கின்ற ஆற்றல் இல்லாதவைகளாக இருக்கின்றன. பன்மைத்துவ சமூகங்களின் நெருக்கடிகள் எப்பொழுதும் தாமதப்படுத்துகின்றதும், திறமையற்றதுமான நீதிமுறைச் செயற்பாடு நீதிமன்றப் பதிவேடுகளில் ஏற்பட்ட அளவுக்கதிகமான அதிகரிப்பு என்பவற்றினால் நீதிமுறை நிர்வாகம் செயலிழத்தலுடன் தொடர்பாகவே காணப்படுகின்றன.
சோசலிச சமூகங்களிலுள்ள நீதிமன்றங்கள் தொடர்ச்சியான அழுத்தங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. இந் நாடுகளில் அரசியல் கட்சிக்கு முதன்மை வழங்கப்படுவதோடு அரசியல் மற்றும், பணித்துறை செயன்முறை
42

காரணமாக நீதித்துறை சார்ந்த அதிகாரிகளின் அதிகாரங்களைக் குறைத்தே மதிப்பிடுகின்றன. இனத்துவ பிணக்குகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு விசேட செயன்முறைகளும் பொறிமுறைகளும் அவசியம் என்பதை அண்மைக்காலமாக சர்வதேச சமூகம் உணர ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் இந்த நெருக்கடிக்கு பதிலிறுக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் ஐரோப்பிய சமூகம் ஐக்கிய நாடுகளை முந்திவிட்டது.
V
இறுதியாக இனத்துவப் பிணக்குகளானது மனித உரிமைகள் மற்றும் சமூகநீதி தொடர்பான அடிப்படைப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றதுடன் அவைகளை அபிவிருத்தி சார்ந்த ஒத்துழைப்பு சட்டகத்துக்குள் வைத்தே அறிமுகம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. முதலாவதாக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்கும்போது சிறுபான்மையினர் பங்கெடுக்கக்கூடியதாக தேசிய, பிராந்திய மட்டங்களில் அரசியல் ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இந்நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் சிறுபான்மையினர் முழுமையாகப் பங்கேற்கக்கூடிய விதத்தில் தேசிய கொள்கைகளும் நிகழ்சித் திட்டங்களும் திட்டமிடப்பட்டு அமுலாக்கப்பட வேண்டும். இனத்துவக் குழுமங்கள் மற்றும் சுதேசிய மக்களின் நலன்களைப் பாரதூரமாகப் பாதிக்கக் கூடியவகையில் அவர்களின் மரபுரீதியான வாழ்விடங்களில் இருந்து பலாத்காரமாக இடம் பெயர்க்காதவாறும் அல்லது அவர்கள் பரவலாக வாழ்கின்ற பிராந்தியங்களில் அவர்களுடைய குடித்தொகையைச் சிதைக்காதவாறும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை மீளாய்வு செய்யும் பொழுது உறுதிப்படுத்திக்கொளள வேண்டும். அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கான உதவிகள் சிவில் யுத்தங்கள் மற்றும் உள்நாட்டுப் பிணக்குகள் ஆகியவற்றினால் ஏற்பட்ட மனக் காயங்களை ஆற்றக்கூடியதாக அமைய வேண்டும். இந்த உதவிகள் புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணம் ஆகியவற்றை உள்ளடக்க வேண்டும். அத்துடன் இன வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனவெழுச்சி மற்றும் உளவியல் உதவிகளை வழங்கக்கூடிய செயற்திட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள், பிராந்திய சமநிலை இன்மை தொடர்பான விடயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். அத்துடன் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்களுக்குப் போதுமான உதவிகள் கிடைப்பது உட்றுதிப்படுத்தப்பட வேண்டும்.
இரண்டாவதாக அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் சிறுபான்மையினரைத் தொடர்புபடுத்துகின்ற பிணக்குகளின் அடிப்படைக் காரணிகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். இனத்துவ, சமயப் பிணக்குகளுக்கு அடிப்படையான பொருளாதார, சமூக, கருத்தியல் காரணிகளை ஆய்வு
43

Page 27
செய்யும் செயற்றிட்டங்களும் பல்லின சமூகங்களின் பரஸ்பர கெளரவம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தக்கூடிய கல்வி நிகழ்ச்சித் திட்டங்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும். பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்களும் சமூகத்திற்கான ஊடக நிகழ்ச்சித் திட்டங்களும் மேம்படுத்தப்பட வேண்டும். இத்தகைய நிகழ்ச்சித் திட்டங்கள் தகவல் பரிமாற்றம் தொழில்நுட்ப உதவி, யாப்புச் சீர்திருத்தம் சிறுபான்மையினரின் உரிமையும் அதிகாரத்தையும் நடைமுறைப்படுத்தக்கூடிய புதிய நிறுவனங்களை கட்டி எழுப்புதல் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேணி டும் . இவைகள் சிறுபான் மைக் குழுக்களின் அரசியல் அபிலாசைகளையும், சமூக பொருளாதாரத் தேவைகளையும் ஈடு செய்யக்கூடியவையாக அமையும். இத்தகைய நிகழ்ச்சித் திட்டங்கள் நீதித்துறை போன்ற முறைசார்ந்த நிறுவனங்களை வலுப்படுத்தவும் உதவும். அத்துடன் சிவில் சமூகங்கள் குழு உரிமைகள் மற்றும் ஆவண துஷ்பிரயோகம் தொடர்பாக இன்றும் காத்திரமாக வாதாடுவதற்கு அவை வலுவூட்டும். அத்துடன் இனங்களுக்கிடையிலான நீதி மற்றும் சமத்துவம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அவசியமான தகவல்களை பரப்பவும் முடியும்.
மூன்றாவதாக தேசிய மட்டத்தில் பிணக்குகளுக்கான தீர்வைக் கொண்டுவர உள்ளுர் அரசியல் செயன்முறைகளை வலுப்படுத்த வேண்டும். இன்று இத்தகைய உள்ளுர் செயன்முறைகள் வலுவிழந்து விட்டதாகத் தோன்றுகிறது. பிரச்சினைப்படும் குழுக்களிடையே அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றை ஆக்கபழர்வமான முறையில் தீர்வு காணத்தக்கதாக வசதிப்படுத்தக் கூடியதான நிலையில் சர்வதேச சமூகம் இருக்க வேண்டும். நான்காவதாக பன்மைத்துவம் தொடர்பான ஒரு கொள்கையை மேற்கொள்ள அரசுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். இத்தகைய கொள்கைகள் சமசந்தர்ப்பத்தை மேம்படுத்துவதோடு இனத்துவம் மற்றும் பால்நிலை தொடர்பான பாரபட்சங்களுக்கு ஒரு முடிவுகாண உதவுகின்றன. இக் கொள்கைகள் சிறுபான்மையினருக்கும் வரலாற்றுரீதியாகப் பிற்படுத்தப்பட்ட குழுவினருக்கும் தொழில் வாய்ப்பு, கல்வி, கடன்வசதி மற்றும் வளங்களைப் பெற்றுக் கொள்ளல் தொடரபான வாய்ப்புக்களை மேம்படுத்தக்கூடியதாக அமைய வேண்டும். அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான பங்காளிகள் தமது சொந்த நிறுவனங்கள் மற்றும் தமது பணியாளர்கள் தொடர்பாக சமவாய்ப்பு மற்றும் பன்மைத்துவக் கொள்கைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும். தமது சமவாய்ப்புக் கொள்கைகள் தமது பணியாளரின் பன்மைத்துவம் போன்றவற்றையும் சமூகத்தின் பன்மைத்துவத்தை வேலைத்தளங்களில் நடைமுறைப்படுத்துவதில் இருக்கக் கூடிய தடைகளைப் பற்றியும் வெளிப்படுத்துவதற்கு இவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
44

3
சிறுபான்மையினர் மீதான ஐக்கிய நாடுகள் பணிக்குழு
சிறுபான்மையினரின் பாதுகாப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மனித உரிமைகள் மீதான சர்வதேச பிரகடனம் விவாதிக்கப்பட்ட போது சிறுபான்மையினரின் தலைவிதி குறித்து ஐ நா அமையம் வாழாவிருத்தல் கூடாது எனச் சுட்டிக் காட்டப்பட்டது. மனித உரிமைகள் மீதான ஆணைக் குழுவும் சிறுபான்மையினர் மீதான பாரபட்சங்களைத் தடுக்கும் உப ஆணைக்குழுவும் பொதுச்சபையில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களைக் காத்திரமாக முன்னெடுக்கக் கூடவில்லை.
எனினும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பாக அண்மைக் காலங்களில் பிராந்திய சர்வதேச ரீதியாக குறிப்பிடத்தக்க அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டு பொதுச்சபையானது தேசிய இனத்துவ சமய மற்றும் மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது. 1992 யூலை 10 ஆம் திகதி ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு மீதான கெல்சிங்கி உச்சி மாநாட்டில் பங்குபற்றிய அரசுகள் தேசிய சிறுபான்மையினருக்கான ஓர் உயர் ஸ்தானிகரை (High Commissioner, of National Minorities) நியமிக்கத் தீர்மானித்தன. இந்தப் பதவியானது ஆரம்ப கட்டங்களிலேயே “பிணக்குகளைத் தடுப்பதற்கான ஒரு கருவியாக” செயற்படும் என எதிர்பார்த்தனர். 1995 இல் ஐரோப்பியப் பேரவை சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான ஐரோப்பிய மனித உரிமைச் சட்டவாக்கத்தில் உள்ள அதிகாரமின்மையை திருத்தி அமைத்தது. இதனை நிறைவேற்றுவதற்காக 1995 ஆம் ஆண்டு தேசிய சிறுபான்மையினர் மீதான சட்டக சமவாயத்தை (Framework Convention) ஏற்றுக்கொண்டது. சட்டக சமவாயமானது ஒரு தனித்துவமான மனித உரிமைகள் சட்டவாக்கம் எனக் கூறப்படுகின்றது. இது சிறுபான்மையினரின் பாதுகாப்புத் தொடர்பான கோட்பாடுகளை முன்வைக்கிறது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளைத் தெரிவு செய்யும் உரிமையை அரசுகளிடமே விட்டுவிடுகிறது. மனித உரிமைகள் தொடர்பான இத்தகைய விருத்திக்கு பல காரணங்கள் உள்ளன. யூகோசெலாவியாவின் உடைவு, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உதித்த இனத்துவ - தேசியவாதமும் (ethno-nationalism)
45

Page 28
இக் காரணிகளில் முக்கியமானவை. இவை சர்வதேசப் பிராந்திய மனித உரிமைச் செயற்பாடுகளில் சிறுபான்மையினரின் பாதுகாப்புப் பிரச்சினைகளுக்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.
பணிக்குழுவை ஸ்தாபித்தல்
சிறுபான்மையினர் மீதான ஐக்கிய நாடுகள் பணிக்குழுவை (UN Working Group) ஸ்தாபிப்பதில் ஐ. நா. உப ஆணைக்குழுவின் நோர்வே உறுப்பினர் மிக முக்கியமான பணியை மேற்கொண்டார். நோர்வே சுதேசிய மக்கள் மீதான ஐ நா பணிக்குழுவை ஸ்தாபிப்பதிலும் இதேபோன்று முக்கிய பங்காற்றியது. இக்குழுவின் முதலாவது தலைவரான “அஸ்போண் அய்ட் (Asbjorn Eide) இக் குழுவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். ஐ. நா. பிரகடனத்தை அமுல்படுத்துவது தொடர்பான உப ஆணைக்குழு உறுப்பினருடனும் வெளிவாரி நிபுணர்களுடனும் இவர் மூன்று வருட ஆய்வை மேற்கொண்டார். அத்துடன் 1993 ஆம் ஆண்டு உப ஆணைக்குழுக் கூட்டத்தில் இவர் ஒரு தொகுதி விதந்துரைகளைச் சமர்ப்பித்தார். இவை சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளை சமாதானமாகவும் ஆக்கபூர்வமாகவும் தீர்ப்பதற்கான வழிமுறைகளை முன்வைத்தன.
இவற்றில் ஒரு விதந்துரை பணிக்குழுவின் ஸ்தாபிதம் தொடர்பானது. மனித உரிமைகள் மீதான ஆணைக்குழு சிறுபான்மையினர் விடயங்கள் மீதான ஒரு பணிக்குழுவை அமைக்க வேண்டுமென இவர் வாதிட்டார். இதன் மூலம் அரசாங்கங்கள் மற்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளுக்கு பிரவேசம் கிடைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். உலகின் பல்வேறு பாகங்களிலும் இருக்கக்கூடிய சூழ்நிலைகளைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளவும் 1992 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் மீதான பிரகடனத்தை அமுல் நடத்துவதற்கு குறிப்பான வழிகாட்டல்களை விருத்தி செய்யவும் இக் குழுவினருக்கு விதிக்கப்பட்டது. எனவே சகல ஐ. நா செயற்பாடுகளுக்கும் குவிமையமாக விளங்க வேண்டியது ஆணைக்குழுவும் அதனுடைய பணிக்குழுவும் ஆகும். சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலமாக சிறுபான்மையினருக்கும் அரசாங்கங்களுக்கும் இடையில் தொடர்பாடல்களை ஊக்குவிக்க முடியும். அத்துடன் பிணக்குகள் தீர்வுக்கு அல்லது பிணக்குகளைச் சமாதான வழியில் திசைதிருப்புவதற்கு வாய்ப்பு அளிக்கவும் முடியும்.
இந்த விதந்துரைகளின் விளைவாக 1994இல் மனித உரிமைகள் மீதான ஆணைக்குழு சிறுபான்மையினர் தொடர்பான ஒரு புதிய ஐ நா பணிக்குழுவை ஸ்தாபிக்கத் தீர்மானித்தது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள உப ஆணைக்குழுவில் இருந்து நியமிக்கப்பட்ட ஐந்து அங்கத்தவர்களை உள்ளடக்கியதாக இந்தப் பணிக்குழு அமையும். இது பின்வரும் பணிகளைக் கொண்டிருக்கும்:
46

(அ) தேசிய, இனத்துவ சமய, மொழிவாரி சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த நபர்களின் உரிமை மீதான ஐ.நா. பிரகடனத்தின் மேம்பாட்டினையும் நடைமுறை அடைவையும் மீளாய்வு செய்தல்.
(ஆ) சிறுபான்மை இனங்களுக்கும் மற்றும் அரசாங்கத்துக்கும் இடையிலான பரஸ்பர விளக்கத்தின் மேம்பாடு உள்ளிட்ட சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வினை ஆய்வு செய்தல்.
(இ) தேசிய இனத்துவ சமய மற்றும் மொழிவாரிச் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த இனங்களின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவுமான பொருத்தமான ஏற்பாடுகளை விதந்துரை செய்தல்.
பணிக்குழுவின் வகிபங்கு
பணிக்குழுவின் முதலாவது கூட்டம் 1995 ஆகஸ்ட் 25 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெற்றது. தனது ஆரம்ப உரையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஜோஸ் அயாலா லாசோ (Jose Ayala LaSSo) அவர்கள் இப்பணிக் குழுவானது "சிறுபான்மையினர் தொடர்பாக திட்டவட்டமான, ஆக்கபூர்வமான சமாதானத் தீர்வுகளை’ முன்வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். சிறுபான்மையினரின் உரிமைகளைக் காத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமெனில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் பணிக்குழுவுக்கும் இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு இருக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். சிறுபான்மையினரின் நிலைமைகள், பிரச்சினைகள் தொடர்பாக மாத்திரமல்லாது தீர்வுகளுக்கான ஆக்கபூர்வமான முன்மொழிவுகளையும் முன்வைக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி பணிக்குழுவின் பல உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனவே அரசாங்கமும் சிறுபான்மையினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட பணிக்குழு ஏற்பாடு செய்ய வேண்டுமென அவர்கள் கூறினர்.
பணிக்குழு தனது குறிக்கோள்களை அடைவதில் படிப்படியான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டுமென ஓர் அவதானி குறிப்பிட்டார் இந்தப் படிகள் பின்வருமாறு:
(அ) தேசிய சட்டங்களைக் கவனத்திற் கொள்ளல்.
(ஆ) நம்பிக்கையைக் கட்டி எழுப்புவதற்கான நடைமுறை ஏற்பாடுகள். (இ) பிரகடனத்திலுள்ள சம்பந்தப்பட்ட உரிமைகளை மேம்படுத்தல்.
47

Page 29
சிறுபான்மையினர் பற்றிய விளக்கத்தையும் சகிப்புத் தன்மையையும் ஏற்றுக் கொள்ளலையும் மேம்படுத்துவதற்கு பல நாடுகளினதும் அனுபவங்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். சிறுபான்மையினரைச் சகித்துக் கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டுமென இன்னுமொரு உறுப்பினர் குறிப்பிட்டார். கலாசார பன் மைத்துவத்தை மேம்படுத்தக் கூடிய விழுமியங்களையும், நிறுவனங்களையும் வலுப்படுத்துதல் மற்றும் ஒரு பல்லின கலாசார சமூகம் என்னும் ஒரு பரந்த சட்டகத்தின் பின்னணியிலேயே சிறுபான்மையினர் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும். இவ்விடயத்தில் பணிக்குழு பின்வருவன தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும்:
(அ) தேசிய சட்டவாக்கம் பற்றிய பகுப்பாய்வு
(ஆ) சிறுபான்மையினரின் கலாசாரம் மொழி மற்றும் ஏனைய பண்புக் கூறுகளைப் பேணுவதில் சர்வதேசிய, சமூக மட்டங்களில் கல்வியின் வகிபங்கு
(இ) ஊடகத்துக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பான
பிரச்சினைகளுக்கும் உள்ள தொடர்புகள்.
பணிக்குழுவானது ஐ. நா பிரகடனத்திலுள்ள சிறுபான்மையினர் தொடர்பான உரிமைகளுக்கு கூடிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என நோர்டிக் நாடுகள் வாதாடின. அத்துடன் இவ் உரிமைகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பாக இக்குழு ஒரு கண்காணிப்பு அமைப்பாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.
தலைவர் -அறிக் கையாளர், பணிக் குழுவின் வகிபங்கினைப் பிரகடனத்தின் 7ஆம் உறுப்புரையின் அடிப்படையில் வைத்தே நோக்கப்பட வேண்டும் என முடிவு செய்தனர். “தற்போதைய பிரகடனத்திலுள்ள உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் மேம்படுத்தவும் அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்” என இந்த உறுப்புரை குறிப்பிடுகிறது. இந்தப் பணிக்குழுவானது திட்டவட்டமாவும் குறிப்பாகவும் சமர்ப்பிக்கப்பட்ட உண்மையாக தகவலின் அடிப்படையில் கலந்துரையாடலையும் பரஸ்பர விளக்கத்தையும் மேம்படுத்தக்கூடிய ஒரு மன்றமாக இது விளங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். சிறுபான்மையினரின் உண்மையான அனுபவங்கள், அவர்களை ஆக்கபூர்வமான குழுக்களாக ஏற்றுக்கொள்வதற்கான கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் வழங்க வேண்டும். அகதிகள், தஞ்சம் கோருவோர், புலம்பெயர் தொழிலாளர் போன்றோரின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க
48

அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஐ. நா. வின் ஏனைய நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் பணிகளுடன் பணிக்குழுவின் பணிகளும் மேற்படிதலைக் (Overlap) கொண்டிருக்கக் கூடாது என்பது மிக முக்கியமானது.
குழுவின் பணியாற்று முறைமைகள்
பணிக்குழுவின் முதலாவது கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்ட அடிப்படைப் பிரச்சினை பங்குபற்றல் தொடர்பானதாகும். பங்குபற்றலானது பொருளாதார சமூக சபையுடன் தொடர்பு கொண்டுள்ள அரசுசாரா நிறுவனங்களுடன் வரையறுக் கப்பட்டிருக்க வேணி டுமா அல்லது சகல அரசு சாரா நிறுவனங்களுடன் வரையறை இல்லாமல் இருக்க வேண்டுமா? சுதேசிய மக்கள் மீதான பணிக்குழு இவ்வாறான வரையறையற்ற பங்குபற்றலைக் கொண்டுள்ளது. இந்த நடைமுறை அக்குழுவின் வினைத்திறனைக் குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக கருத்துரைத்த " Li6T6) &ngoiLj6) (Douglas Sanders) 6T6 U6 lij "(pg5) g5L606 unds சுதேசிய மக்கள் ஐ. நா. வுடன் குறிப்பான தொடர்பினைக் கொண்டுள்ளனர். அவர்கள் இன்று தமக்கென ஒரு சர்வதேச சமூகத்தைக் கொண்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டார். சுதேசிய மக்கள் தொடர்பான பணிக்குழுவின் செயற்பாடுகளில் அரசுசாரா நிறுவனங்கள் செல்வாக்குச் செலுத்தக்கூடியதாக உள்ளன. அவர்களுடைய பங்களிப்பானது துன்பத்துக்குள்ளான குழுவினர் தாமே நேரடியாக ஐ. நா. வுடன் தொடர்பு கொள்ளவும் தமது அனுபவங்கள் குறித்து சாட்சியமளிக்கவும் வழி வகுத்தது. சகல அரசுசாரா நிறுவனங்களையும் வரையறையின்றிப் பங்குபற்றச் செய்வதன் மூலம் தகவல் பரிமாற்றம் ஊக்குவிக்கப்படும், குறிப்பாக உள்ளுர் மட்டத்தில் இனத்துவ சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பான தகவல்களைப் பெறமுடியும். எனவே பணிக்குழுக் கூடடங்களில் கூடியளவு பரந்த பங்குபற்றலை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து பணிக்குழு உறுப்பினர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
இரண்டாவது வகையான பங்குபற்றுதல் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இது இனத்துவப் பிரச்சினைகள் பற்றிய அனுபவம் உள்ள ஆய்வாளர்களைப் பங்கு கொள்ளச் செய்வதற்காகும். சிறுபான்மையினரின் பிரச்சினைகளைப் பற்றியும் அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் இவர்களால் ஒர் ஆழ்ந்த அடிப்படையை வழங்க முடியும். பணிக்குழுக் கூட்டங்களில் நான்கு வகையினரின் பங்குபற்றல் பற்றி தலைவர். அறிக்கையாளர் சுருக்கமாகக் குறிப்பிட்டார். “முதலாவது அரசாங்கப் பிரதிநிதிகள் - இவர்கள் பிரகடனத்தின் கோட்பாடுகளை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல்களை பணிக்குழுவுக்கு வழங்க முடியும். இவ்விடயங்களில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது குழுவின் பணிகளில் ஒன்று. இரண்டாவது ஐக்கிய நாடுகள் சபையும் அதன் பிராந்திய அமைப்புக்களும்
49

Page 30
முகவர்களும் தமது செயற்பாடுகள் பற்றிய தகவல்களை வழங்க முடியும். மூன்றாவது சிறுபான்மையினர் பிரச்சினைகளில் சர்வதேசிய, தேசிய அரசுசாரா நிறுவனங்கள் இறுதியாக சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் கல்வி நிலையங்களைச் சேர்ந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும். இவர்கள் தம்மால் ஆய்வு செய்யப்படும் பிரச்சினைகள் குறித்த விஞ்ஞான பூர்வமான அடிப்படையை வழங்க முடியும்”. சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் எழுத்து மூலமான அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு அவதானிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும், யுனெஸ்கோவும் சிறுபான்மையினர் தொடர்பாக தாம் தொகுத்து வைத்துள்ள விபரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒத்துக்கொண்டனர். செயலாளர் நாயகம், மனித உரிமைகள் ஆணைக்குழு, உப ஆணைக்குழுவின் விசேட அறிக்கையாளர் ஆகியோரின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி தலைவர்- அறிக் கையாளர் குறிப்பிட்டார். சிறுபான்மையினர் பிரச்சினைகள் பற்றி குறிப்பான ஆய்வுகளே மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதினால் ஐ. நா. வின் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு நிறுவனங்கள் அல்லது ஐ. நா. பல்கலைக்கழகம் ஆகியவற்றை ஆய்வில் ஈடுபடுத்த முடியும் எனப் பணிக்குழு ஒத்துக்கொண்டது.
ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் நடைமுறைச் செயலாக்கமும் மேம்பாடும்
ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் அமுலாக்கத்தினை மேம்படுத்துவதே பணிக்குழுவின் பிரதான பணியாகும். இவ்விடயத்தில் காலத்துக்குக் காலம் அரசுகள் ஏற்றுக்கொண்ட குறிப்பான கடமைகளையும் அது கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். இதில் சர்வதேச சங்கம் உட்பட அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டவையும் அடங்கும். 1995 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் பாரிஸ் நகரத்தில் நடந்த பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறுதித்தன்மை ஒப்பந்தத்தின் (Stability Pact) பின்னணியில் ஐரோப்பாவில் பல அரசுகள் ஏற்றுக்கொண்ட பல்வேறு இருவழி ஒப்பந்தங்களும் அடங்கும். சிறுபான்மை இனங்கள் தொடர்பாக அரசுகளின் சர்வதேசக் கடப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதைய பிரகடனத்தில் எதுவும் தடையாக இருக்கக் கூடாது என ஐ. நா. பிரகடனத்தின் 8 ஆவது உறுப்புரை கூறுகிறது. குறிப்பாக அரசுகள் தாம் பங்காளிகளாக உள்ள சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் ஒப்பந்தங்களில் தமக்குரிய கடப்பாடுகளையும் உறுதிப்பாடுகளையும் விசுவாசத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
50

ஐ. நா. பிரகடனத்தை மேம்படுத்தவும், நடைமுறையில் செயலாக்கவும் மேற்கொள்ள வேண்டிய முதலாவது படி அரசுகளின் யாப்புக்களையும், சட்டவாக்கங்களையும் மீளாய்வு செய்வதாகும். இவ்விடயத்தில் தேசிய இனத்துவ சிறுபான்மையினரின் உரிமைகளைச் சுதந்திரமாகப் பாதுகாக்க அவற்றில் உள்ள ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். 1995ஆம் ஆண்டு நடந்த பணிக்குழுவின் முதலாவது தொடரில் மசிடோனிய யூகோசெலாவிய குடியரசு ‘சர்வதேச நியமங்கள் மற்றும் தராதரங்களின் அடிப்படையில் சகல உரிமைகளும் யாப்பிலும் ஏனைய சட்டங்களிலும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறியது. அதேபோல தேசிய சிறுபான்மையினரின் பாதுகாப்புக்கான ஐரோப்பிய சட்டக சமவாயத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் “தேசிய சட்டவாக்கத்தில் அதன் நியமங்களை உள்ளிர்த்துக் கொண்டதாகவும்” ஸ்லோவாக்கியா (Slovakia) கூறியது: இரண்டாவதாக அரசாங்கங்களும் அரசுசாரா நிறுவனங்களும் தமது நாட்டிலுள்ள தேசிய இனத்துவ சிறுபான்மையினரின் நிலைமை குறித்து ஒழுங்காக அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். இவர்களின் புவியியல் பரம் பல் , எண்ணிக் கைரீதியான பருமனி , வரலாறு, நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகள், அவர்களது அடையாளத்தையும் பண்புக் கூறுகளையும் உரிமைகளையும் பாதுகாக்க எடுக்கப்பட்ட ஏற்பாடுகள் குறித்து இவ் அறிக்கையில் கூறப்பட வேண்டும்.
ஒஸ்திரிய சிறுபான்மைக் குழுக்களின் திட்டவட்டமான நிலைமை மற்றும் அவர்களது பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் பற்றி “ஒஸ்திரியாவின் இனத்துவ குழுக்களின் நிலைமை பற்றிய சமஷ்டி அரசாங்கத்தின் பொது அறிக்கை” பற்றி குறிப்பிட்டுள்ளது. மூன்றாவதாக பணிக்குழு விசேட ஏற்பாடுகள் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள முடியும். இதில் வரலாற்றுரீதியாக பின்தங்கிய அல்லது ஒதுக்கப்பட்ட தேசிய அல்லது இனத்துவ சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட உடன்பாடான நடவடிக்கைகளையும் இதில் உள்ளடக்கலாம். இத்தகைய ஆய்வானது உடன்பாடான செயற்பாடுகளின் சட்டரீதியான வரையறைகள் மற்றும் அவற்றின் பொருத்தமான தன்மை குறித்து இனங்காணுவதற்கு பணிக்குழுவுக்கு வசதி ஏற்படும். இவ்விடயம் தொடர்பாக பிரகடனத்தின் 8.3 ஆம் உறுப்புரை பின்வருமாறு கூறுகிறது: "தற்போதய பிரகடனத்தில் உரிமைகளை அனுபவிப்பதை உறுதிப்படுத்த அரசுகள் மேற்கொண்ட ஏற்பாடுகள் மனித உரிமைகள் மீதான சர்வதேசப் பிரகடனத்தின் சமத்துவ கோட்பாட்டுக்கு முரனானது என எத்தகைய சந்தர்ப்பத்திலும் கருதப்படக் கூடாது.”
நான்காவது ஐ. நா. பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படிை எண்ணக்கருக்களையும் கருத்துக்களையும் தெளிவுபடுத்தக்கூடிய வண்ணம் ஆய்வுகளை மேற்கொள்ள அறிஞர்களையும், நிபுணர்களையும் அமர்த்துவதற்கு பணிக்குழுவால் முடியும். அத்தகைய ஆய்வுகள் வாழ்வதற்கான உரிமை, அடையாளத்துக்கான உரிமை (கலாசாரம், மொழி, சமயம் உட்பட)
51

Page 31
கல்விக்கான உரிமை, பங்குபற்றலுக்கான உரிமை, கூடுவதற்கான உரிமை, தமது சமூகத்தின் உறுப்பினர்களுடன் எல்லைதாண்டிய தொடர்புகளைக் கொண்டிருக்கும் உரிமை, தனிப்பட்ட உரிமைகளும் பிறருடன் சேர்ந்து அனுபவிக்கும் உரிமைகள் அவற்றுக் கிடையிலான தொடர்புகள் போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய ஆய்வுகள் பிரகடனத்தின் குறிப்பான உறுப்புரைகள் பற்றி குறிப்புரைகளை வெளிப்படுத்தவும் பிரகடனத்தின் ஏற்பாடுகளை விளக்குகின்ற கையேடு ஒன்றினைத் தயாரிக்கவும் பணிக்குழுவுக்கு உதவியாக அமையும். தேசிய இனத்துவ, சமய, மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான ஒரு விரிவான சமவாயத்தைத் தயாரிக்குமாறும் அது தொடர்பான நியமங்களை உருவாக்கும் செயற்றிட்டத்தை மேற்கொள்ளுமாறும் ஒரு பங்குபற்றுனர் வேண்டினார். இந்தக் கருத்துப் பற்றி பணிக்குழுவின் உறுப்பினரோ அல்லது அவதானிப்பாளரோ எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை.
சிறுபான்மையினர் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வுகள் பற்றிய பரிசீலனை
பணிக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியமான பணிகளில் ஒன்று சிறுபான்மையினர் தொடர்பான, சிறுபான்மையினருக்குள்ளும், அவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பரஸ்பரம் விளங்கிக்கொள்ளல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஏற்கத்தக்கதான தீர்வுகளைப் பரிசீலித்தலாகும். இதில் தொனிப்பொருள் சார்ந்த பிரச்சினைகளும் சிறுபான்மையினரின் திட்டவட்டமான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு முன்மொழிவுகள் ஆகியனவும் அடங்கும். பணிக் குழுவின் தலைவரான “அஸ் போர்ணி அயட்' சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பான ஒரு முழுமையான அறிக்கையை ஐ. நா. உதவி ஆணைக்குழுவுக்கு (UNSub Commission) சமர்ப்பித்துள்ளார். இவ்விதந்துரைகள் ஐ. நா. வின் விசேட முகவரகங்களும் ஏனைய அமைப்புக்களும் மற்றும் அரசுசாரா நிறுவனங்களும் சர்வதேசிய தேசிய பிராந்திய மட்டங்களில் எடுக்கக்கூடிய ஏற்பாடுகள் பற்றி இவ்விதந்துரைகள் குறிப்பிடுகின்றன. இந்த ஏற்பாடுகளை அமுல் நடத்துவதில் ஒரு நடைமுறை ரீதியான அர்ப்பணிப்பினை வழங்குமாறு பணிக்குழுவானது அரசாங்கங்களை ஊக்குவிக்க முடியும். அரசுசாரா நிறுவனங்களும் சிறுபான்மைக் குழுக்களும் இந்த விதந்துரைகளை அரசாங்கங்களுடன் ஒரு தொடர்ச்சியான கலந்துரையாடலை மேற்கொள்ள ஒரு சட்டமாகவும் தேசிய சட்டங்கள் கொள்கைகள் நடைமுறைகள் ஆகியவற்றை கணிப்பீடு செய்ய ஒரு அடித்தளமாகவும் கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படலாம்.
அஸ்போர்ண் அயட் அவர்களுடைய விதந்துரைகள் இரண்டு பரந்த ஊகங்களை அடித்தளமாகக் கொண்டுள்ளன. முதலாவது சகலவிதமான
S2

இனரீதியான பாரபட்சங்களை அகற்றும் சர்வதேச சமவாயம் மற்றும் தேசிய இனத்துவ, சமய, மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான பிரகடனம் ஆகியவற்றில் உள்ள ஏற்பாடுகள் “சமாதான சகவாழ்வுக்கும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்புக்கும் தேவையான ஆகக் குறைந்த விதிகளைக் கொண்டிருக்கின்றன’ என்பதை ஏற்றுக்கொள்ளல். இரண்டாவது, அரசுகள் சமத்துவத்துக்கான அர்ப்பணிப்பையும் இனத்துவக் குழுக்களின் அடையாளம், விழுமியங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் தமக்குள்ள கடப்பாடு ஆகிய இரண்டுக்குமிடையில் இணக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அஸ்போண் அயட் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: ‘பல்லின சமூகங்களில் மனித உரிமைகளின் அடிப்படையிலான அணுகுமுறை பொது பரப்பிலும் (Domain) சமத்துவத்தை உறுதிப்படுத்தல் மற்றும் வேறுபட்ட பரப்புக்களில் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ளல் ஆகிய இரண்டு பரப்புக்களிலும் எடுக்கப்படும் முயற்சிகளை ஒன்றிணைக்க வேண்டும்.
இந்த எடுகோள்கள் சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பாக இரண்டு தெளிவான அணுகுமுறைகளுக்கு அழுத்தம் தருகின்றன. இவற்றில் முதலாவது பன்மைத்துவத்தை மேம்படுத்தல் மற்றும் சமூகத்தின் பன்மைத்துவ இயல்பை வலுப்படுத்தல் ஆகிய கொள்கைகள் தொடர்பானது. இவை தமது சொந்த மொழியில் கல்வியைப் பெறும் உரிமை, தமது வரலாறு, கலாசாரம் ஆகியவை பற்றிய கல்வியைப் பெறும் உரிமை, அவர்களது கலாசார வாழ்க்கையில் தமது சொந்த ஊடகம் மூலமாகவும் ஏனைய தொடர்பாடல் சாதனங்கள் ஊடாகவும் பங்குகொள்ளும் உரிமை ஆகிய கல்விக் கொள்கைகளை அங்கீகரிக்கிறது. சகல அரசுகளிலும் உள்ள கலைத் திட்டங்கள், மனித உரிமைகளை மதித்தல் உள்ளிட்ட பொறுத்துக்கொள்ளல், ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அது மாத்திரமல்லாது இனத்துவக் குழுக்களின் இருப்பு மற்றும் அடையாளம் ஆகியவற்றை அச்சுறுத்தக்கூடிய சகலவிதமான இனத்துவ மற்றும் சமய பொறுமையின்மை மற்றும் பாரபட்ச நடைமுறைகள் ஆகியவற்றை அரச கொள்கைகள் தடைசெய்ய வேண்டும். “அஸ்போர்ண் அயட் குறிப்பிட்டது போன்று ‘இன சுத்திகரிப்பு நடைமுறைகள் சட்டவிரோதமாக்கப்பட வேண்டும், அத்துடன் எந்தச் சந்தர்ப்பங்களிலும் அவை அனுமதிக்கப்படக்கூடாது.”
இரண்டாவது அணுகுமுறையானது ஆழ்புல உப பிரிவுகளுடன் சட்டவாக்கம் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய அமைப்புரீதியான ஏற்பாடுகளில் அழுத்தம் தருகிறது. ஒரு தேசத்தின் உள்ளுராட்சி வடிவங்களும் இதில் அடங்கும். அதிகாரப் பரவலாக்கல் வடிவங்கள் என்பது உள்ளுராட்சி, பிராந்திய சுயாட்சி, அரை சமஷ்டி, மற்றும் சமஷ்டி ஏற்பாடுகள், கூட்டாட்சி (Confederation) முதல் இறைமை கொண்ட அமைப்புக் களாகவும் இருக்கலாம். பணிக் குழுவின் முதலாவது கூட்டத்தொடரில் சமஷ்டிவாதம், பிரதேசவாதம் போன்ற அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் சிறுபான்மை இனங்களுக்கு இடையிலும், அவற்றுக்கும்
53

Page 32
அரசாங்கங்களுக்கும் இடையிலும் ஏற்றுக்கொள்ளும் தன்மையை உருவாக்க சாத்தியமான பங்களிப்பைச் செய்யலாம். சமஷ்டிவாதமானது சிறுபான்மையினரின் அபிலாஷைகளுக்கு வடிகாலாக அமைகிறது. அத்துடன் அவர்களது இருப்பையும் அடையாள உரிமையையும் தேசிய விவகாரங்களில் பங்குபற்றும் உரிமையையும் உத்தரவாதப்படுத்துகிறது.
பணிக்குழுவின் முதலாவது தொடர் சிறுபான்மையினர் நிலமைகள் தொடர்பான தொனிப்பொருள் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து திட்டவட்டமான விடயங்களை நோக்க அவதானிகள் மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும் என சுட்டிக் காட்டியது. இந்தக் கலந்துரையாடல்களில் சிறுபான்மையினர் தொடர்பான நான்கு திட்டவட்டமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அவற்றில் யப்பானில் உள்ள கொரிய சிறுபான்மையினர். வட ஆபிரிக்காவிலுள்ள பெர்பெர் (Berber) சிறுபான்மையினர். அல்ஜீரியாவிலிருந்து வந்த அராபிய தஞ்சம் கோருவோர், இஸ்ரேலிலுள்ள அராபிய பலஸ்தீன சிறுபான்மையினர் ஆகியோரது பிரச்சினைகளும் அடங்கும். கொரிய சிறுபான்மையினர் தொடர்பாக கொரிய பங்குபற்றுனர் ஒருவர் தலையீடு செய்தபோதும் ஏனைய விடயங்களில் சிறுபான் மையமைப் பினரே பிரச்சினைகளை முன் வைத்தனர். இச்சிறுபான்மையினர் முகம் கொடுக்கும் பாரபட்சமான நடைமுறையைப் பற்றிய விளக்கமும், சமத்துவம், பாரபட்சமின்மை மற்றும் அவர்களது தனிநபர் குழு உரிமைகள் அடிப்படையில் அவர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
திட்டவட்டமான தகவலின் அவசியம் பற்றி ஏற்றுக்கொண்ட பங்களாதேஷ், சீனா, ஈரான் ஆகிய நாடுகள் பணிக்குழுவானது "(p60puiGS35(subdisassroot (b. LD6iplomas” (Forum for Complaints) DITOj6,605 பற்றியும் எச்சரித்தன. இச்செயற்பாடு பணிக்குழுவின் பணிகளில் ஒன்றல்ல எனவும் அவ்வாறு அதனை ஒரு பணியாகக் கருதினால் அது ஆணைக்குழு மற்றும் உப ஆணைக்குழுவின் பணிகளில் தலையீடு செய்வதாகும் எனவும் வாதிக்கப்பட்டது. சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தொடர்பாக அரசுகளின் கொள்கைகள் நடைமுறைகள் பற்றிக் கடுமையான விமர்சனங்களையும் மறுப்புரைகளையும் முன்வைக்கும்போது அது அரசுகளின் ஆத்திரமான தலையீடுகளை அதிகரிக்கும் எனவும் தாய்ச் சங்கங்களிடமிருந்து அழுத்தங்களைக் கொண்டு வரும் எனவும் தெளிவு படுத்தப்பட்டது. எனவே பணிக்குழுவானது சிறுபான்மைக் குழுக்களிடம் இருந்தும் அதேநேரம் அரசாங்கங்களிடம் இருந்தும் சிறுபான்மை மக்களைப் பற்றிய திட்டவட்டமான, உண்மையான, குறிப்பான தகவல்களைப் பெறுவது முக்கியமானதாகும். வழங்கப்படுகின்ற ஆவணங்களும் மேற்கொள்ளப்படுகின்ற தலையீடுகளும் அரசாங்கங்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையில் ஓர் ஆக்கபூர்வமான கலந்துரையாடலை வசதிப்படுத்தக்கூடியதாக அமைய வேண்டும். சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை அணுகுவதற்கு முனைப்பான ஆனால் அரசியல் மயமாக்கம் இல்லாத ஒரு மன்றத்தை
54

உருவாகி குவதே இதனி குறிக் கோளாக இருக்க வேணி டும் . சிறுபான்மையினரும் சம்பந்தப்பட்ட அரசாங்கங்களும் இந்தப் பணிக்குழுவானது நம்பிக்கையைக் கட்டி எழுப்பவும் பரஸ்பர விளக்கத்தை மேம்படுத்தவுமான ஒரு சட்டரீதியான அமைப்பு என்பதை ஏற்றுக் காள்ளும் பட்சத்தில் பணிக்குழுவானது உண்மை அறியும் குழுக்களை அங்கு அனுப்ப முடியும் அல்லது குறிப்பான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். உண்மை அறியச் செல்லும் குழுவினர் தீர்வுகளை விதந்துரைக்கும் நோக்கில் பல்பரிமாணம் கொண்ட முழுமையான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்க முடியும்.
இம் முதலாவது கூட்டத்தொடரானது வெறுமனே விமர்சனங்களை முன்வைப்பதைவிட உடன்பாடான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்டது. சர்வதேச தொழிலாளர் அமயம், யுனெஸ்கோ, U.N.H.C.R. மற்றும் ஐ. நா. மனித உரிமை நிலையம் ஆகியவை சிறுபான்மையினப் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுவதற்கு அவசியமான தொழில் நுட்ப உதவியை வழங்கக்கூடியவை என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. உதாரணமாக யுனெஸ் கோவானது சிறுபான்மையினரது கலாசார செயற்பாடுகள் மற்றும் அவர்களது வெளிப்படையான அல்லது உட்கிடையான மரபுகளை மேம்படுத்திக் கொள்ளும் அவர் களது வளர்ச் சிக் குரிய ஆற்றலை மீள உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அதேபோன்று சிறுபான்மையினரின் பலாத்கார இடம்பெயர்வு பிரச்சினைகளின் தீர்வுக்கு அகதிகளுக்கு ஐ. நா. உயர் ஸ்தானிகர் உதவிகளை வழங்க முடியும். அரசுகளும் கூட பெரும்பான்மை, சிறுபான்மை கலந்துரையாடலுக்கும் பிணக்குத் தீர்வுக்கான இணக்கப்பாட்டிற்கும் உதவக்கூடிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஊக்குவிக்கப்படலாம். சிறுபான்மையினர் ஆணைக்குழுக்கள், இன உறவுகள் மீதான ஆணைக்குழுக்கள் அல்லது பாரபட்சங்களை நீக்குதல் அல்லது இனப் பாரபட்சத்திற்கு எதிரான விசேட ஒம்புட்ஸ்மன் ஆகிய ஏற்பாடுகளை இது உள்ளடக்கலாம்.
மேற்குறித்த பணிகளை மேற்கொள்ளும் முகமாக பணிக்குழு பின்வருவனவற்றைச் செய்தது:
(அ) ஒப்பந்தக் கடப்பாடுகளின் கீழ் வழங்கப்பட்ட தகவலில் இருந்து
பொருத்தமான பகுதியை தருமாறு கோரியது.
(ஆ) தமது சிறுபான்மையினர் தொடர்பான சட்டவாக்கம் மற்றும் கொள்கை தொடர்பாக தகவல்களை வழங்குமாறு அரசாங்கங்களைக் கோரியது.
(இ) தாம் கவனம் செலுத்திய பிரச்சினைகள் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தொடர்பான தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு பல்வேறு அமைப்புக்களையும் விசேட முகவரகங்களையும் பிராந்திய அமைப்புக்களையும் குறிப்பாக
SS

Page 33
ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான நிறுவனம், தேசிய சிறுபான்மையினருக்கான உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் இருந்து பொருத்தமான தகவல்களைக் கோரியது.
(ஈ) பணிக்குழுவின் பணிகளை அமுல் படுத்துவதில் எவ்வாறு நாம் - பங்களிப்புச் செய்ய முடியும் என்ற தகவலை சர்வதேச மற்றும் தேசிய அரசுசாரா நிறுவனங்களிடம் இருந்து கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
(உ) சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பாக தமது விபரக் கோவையைப் புதுப்பிக்குமாறு மனித உரிமைகளுக்கான நிலையத்தைக் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
முடிவுரை
தேசிய, இனத்துவ, சமய, மொழிசார் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான சகல ஐ. நா. செயற்பாடுகளுக்கும், சிறுபான்மையினர் மீதான பணிக்குழுவின் ஸ்தாபிதம் ஒரு குவிமையத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிமைத்தனம் தொடர்பான பணிக்குழுவே உப ஆணைக்குழுவினால் ஸ்தாபிக்கப்பட்ட பணிக்குழுக்களில் மிகவும் பழமையானது. இந்தப் பணிக்குழு பல விமர்சனங்களுக்கு உட்பட வேண்டியிருந்தது. பரந்த குறிக்கோள், கூட்டத்தொடர்களை ஆயத்தமில்லாமல் நடாத்துதல், தலைமைத்துவத்தில் தொடர்ச்சியின்மை, செயலகத்திலிருந்து ஆதரவு கிடைக்காமை போன்ற பல்வேறு விடயங்கள் விமர்சனத்துக்கு அடித்தளமாக அமைந்தன. விதந்துரைகளில் போதுமான தொடர்ச்சியை அது பேணவில்லை எனவும் குறை கூறப்பட்டது. மறுபுறத்தில் சுதேசிய மக்கள் மீதான பணிக்குழு தனது நிகழ்ச்சித் திட்டங்களை நன்கு கட்டமைத்ததுடன் செயலகத்தின் ஆதரவையும் போதுமான அளவுக்குப் பெற்றுக்கொண்டதால் வெற்றிகரமாக தனது பணிகளை நிறைவேற்றியது. ஐ. நா. அமையத்துக்குள் சுதேசிய மக்களுக்கான ஒரு மத்திய கொள்கை அமைப்பாகவும், அரங்காகவும் இந்த பணிக்குழு மாறியுள்ளது என அண்மைக் கால மதிப்பீடு சுட்டிக் காட்டுகிறது. சிறுபான்மையினர் மீதான பணிக்குழு பற்றி பூரணமான ஒரு மதிப்பீட்டினைச் செய்வதற்கு இது தருணமல்ல, எனினும் இக்குழு பற்றி பரந்த முடிவுகளை மேற்கொள்ள முடியும்.
முதலாவதாக சிறுபான்மையினரின் பாதுகாப்புப் பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்தப்படும் போது தேசங்கள் வரலாற்றுரீதியான அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. சிறுபான்மையினரின் கோரிக்கைகள் ஆக்ரோஷத்துடன் முன்வைக்கப்படும்போது சர்வதேச முறைமையின் அடித்தளமே ஆட்டம் காணுகிறது என அவை அச்சமுறுகின்றன. ஆனால்
56

இனத்துவ தேசியவாதத்தின் வளர்ச்சியும் இனப் பிணக்குகளுடன் தொடர்புடையதான பாரதூரமான மனித உரிமை மீறல்களும், தேசியவாதமும், இனத்துவவாதமும் மனித உரிமைகளுக்கு விட்டிருக்கும் சவால்களுக்கு sy foul (gp60p60)LD (Inter-governmental system) g6tgojLb flyi605ul6t பதிலிறுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஐ. நா. பணிக்குழு சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு சாதகமான ஆக்கபூர்வமான தீர்வுகளுக்கான வழிவகைகளை ஆராய வேண்டும். அதேநேரத்தில் தனது உறுப்பினர்கள் தமது இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய எத்தகைய முனைப்புக்களையும் மிகக் கவனமாக நோக்குவார்கள் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக ஐ. நா. பணிக்குழு ஐ. நா. பிரகடனத்தின் அமுலாக்கம் தொடர்பாக முதலில் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் பிரகடனத்தில் அடங்கியுள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பான எண்ணக்கருக்கள், கருத்துக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தவும் விளக்கமளிக்கவும் வேண்டும். பணிக்குழுவானது பதவியிலிருக்கும் 3 ஆண்டு காலத்தில் ஒரு சமவாயத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபடும் என எதிர்பார்க்க முடியாதெனினும் அது கண்காணிப்புத் தொழிற்பாடுகளை விருத்திசெய்ய முடியும். பிரகடனத்தில் அடங்கியுள்ள தராதரங்களுடன் இணக்கம் கொண்டுள்ளனவா என யாப்புக்கள், சட்டவாக்கங்கள் சிறுபான்மையினர் தொடர்பான கொள்கைகள், நடைமுறைகள் ஆகியவற்றை மீளாய்வு செய்வதன் மூலம் இது சாத்தியமாகும்.
மூன்றாவதாக திட்டவட்டமாக சிறுபான்மையினர் நிலைமைகளைப் பற்றியும், தீர்வுகளை வடிவமைப்பது பற்றியும் தகவல்களைப் பெறுவதில் கூடிய அழுத்தம் இருப்பினும் கடுமையான இனத்துவ பிணக்குகளில் தீவிரமாக தலையீடு செய்யுமென எதிர்பார்க்க முடியாது. அரசாங்கங்களுக்கும் சம்பந்தப்பட்ட சிறுபான்மையினருக்கும் இடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடலை ஊக்குவிப்பதன் மூலம் இப்பணிக்குழுவானது படிப்படியாக நம்பகத்தன்மையையும் சட்டபூர்வத் தன்மையையும் அடைய முயற்சி செய்யுமென எதிர்பார்க்கலாம்.
நான்காவதாக சிறுபான்மையினரின் பாதுகாப்புத் தொடர்பான தொனிப் பொருள்களையும் எண்ணக்கருக்களையும் விருத்தி செய்வதற்கு இப்பணிக்குழு முக்கியமான குவிமையமாக அமையலாம். இது பிணக்குகளை சமாதானமாகத் தீர்ப்பதற்கு பங்களிப்புச் செய்யும் . அத்துடன் சிறுபான்மையினருக்கும் பெரும்பான்மையினருக்கும் இடையில் நியாயமான அதிகாரச் சமநிலையை உறுதிப்படுத்தக்கூடியதான பன்மைத்துவம், இனத்துவப் பல்வகைமை மற்றும் அமைப்புரீதியான ஏற்பாடுகளை மேம்படுத்தும் கொள்கைகளைக் கொண்டிருக்கும். இனத்துவ அடையாளம் மற்றும் இனத்துவ கோரிக்கைகளின் உள்ளடக்கம் ஆகியவை மாறுகின்ற தன்மையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது புதிய சவால்களுக்கு
57:

Page 34
முகம் கொடுக்கக்கூடியதாக இந்தக் கொள்கைகளையும், ஏற்பாடுகளையும் புதுப்பிக்கவும் மீளமைக்கவும் வேண்டிய தேவை உள்ளது என்பது வலியுறுத்தப்பட வேண்டும். இப்பணிக்குழு சிறுபான்மையினரின் நிலையையும் அரசுகளின் உறுதிப்பாட்டையும் மேம்படுத்த வேண்டுமெனில் சிறுபான்மையினரின் நிலைமை பற்றிய சிக்கல் தன்மை மற்றும் குறிப்பான தன்மை பற்றிய உணர்திறன் வேண்டப்படுகிறது.
58

4
அரசமைப்புவாதமும் பல்வகைமையும்
பரமநாதன் நவரட்னராஜா 1908 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 16 ஆம் திகதி பருத்தித்துறையில் உள்ள புலோலியில் பிறந்தார். தனது குடும்பத்தின்மீது அளவற்ற பாசம் வைத்திருந்த அவர் தனது தந்தை பயன்படுத்திய தட்டச்சுப்பொறியை தனது அலுவலகத்தில் வைத்து கவனமாகப் பாதுகாத்து வந்தார். இந்த தட்டச்சுப் பொறியானது சிவில் வழக்குகளில் மாத்திரமல்லாது இந்நாட்டின் அரசியல் வரலாற்றிலும் மிக முக்கியமான பங்கினை ஆற்றியது. விளக்க முடியாத காரணங்கள் இருந்தபோதும் மிகத் திறமைமிக்க கணிதவியலாளர்களை புலோலி உருவாக்கியுள்ளது. நவரட்னராஜா ஒரு சாதாரண மாணவனாக இருந்துவிடவில்லை. தனது இடைநிலைக் கல்வியைப் பெற்றுக்கொண்ட புனித பெனடிற் கல்லூரியில் பல பரிசுகளையும் வெகுமதிகளையும் மிக இலகுவாகப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பல்கலைக்கழக கல்லூரியில் அனுமதி பெற்றார். இருபதுகளின் பிற்பகுதியில் இக் கல்லூரியே இலண்டன் பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு மாணவரைத் தயார் செய்தது. நவரட்னராஜா விஞ்ஞான இளமாணிப் பட்டத்தைப் பயின்று முதலாம் வகுப்பில் சித்தி பெற்றார். புலமைப்பரிசில் பெற்று கணிதம் பயில்வதற்காக 1929 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றார். அவர் சிட்னி சசெக்ஸ் கல்லூரியில் (Sydney Sussex College) சேர்ந்தார். இக்கல்லூரி 16 ஆம் நூற்றாண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றில் இக்கல்லூரியானது அசாதாரணமான தொடர்பினைக் கொண்டதாக விளங்கியது. ஒலிவர் குரொம்வெல் (Oliver Cromwell) இக்கல்லூரியின் உறுப்பினராக இருந்தார். “மூன்று நூற்றாண்டுகள் பயணம் செய்த பின்னர் அவரது தலை இறுதியாக அவரது பழைய கல்லூரியிலேயே ஓர் அமைதியான இடத்தைப் பெற்றுக்கொண்டது”. பல்கலைக்கழகக் கல்லூரியைப்போல கேம்பிரிட்ஜில்
இது கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களது இறுதிப் பகிரங்கச் சொற்பொழிவு. பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 1999 ஆடி மாதம் 27 ஆம் திகதி நீலன் திருச்செல்வம் ஆற்றிய (5ஆவது) பி. நவரெட்னராஜாவின் நினைவுச் சொற்பொழிவு இதுவாகும்.
59

Page 35
அவரது வாழ்க்கை அமையவில்லை. ஒருமுறை அவர் கல்லூரியின் இரண்டு டெனிஸ் மட்டைகளுடன் ரெனிஸ் மைதானத்துக்குச் சென்றார். அத்தருணத்தில் சில சிறந்த விளையாட்டு வீரர்கள் அவரைத் தம்முடன் விளையாட வருமாறு சவால் விட்டனர். நவாவுக்கு அவ்வளவாக ரெனிஸ் திறமைகள் இல்லாவிட்டாலும் கூட அவர் சவாலை ஏற்றுக்கொண்டார். ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
இக்காலகட்டத்தில் தான் நவரட்னராஜா சட்டம் பயில்வதற்கு முடிவு செய்து மிடில்ரெம்பிளில் சேர்ந்தார். 1934 இல் அவர் சட்டத்தரணிகள் சங்கத்தில் சேருமாறு அழைக்கப்பட்டார். நாட்டுக்குத் திரும்பிய நவரட்னராஜா அக் காலகட்டத்தில் சட்டத்துறையில் புகழ்பெற்றிருந்த திரு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கியூ. சி. அவர்களுடன் பணி புரிந்தார். சட்டத் தொழிலில் அவரது வேகமான வளர்ச்சி குறித்து பலர் குறிப்பிட்டுள்ளனர். வழக்குத் தொடுப்பதிலும் முறையீடுகள், மன்றாட்டங்களை வரைவதிலும், குறுக்கு விசாரணை செய்வதிலும் சட்ட நுணுக்கங்களை முன்வைப்பதிலும் அவர் அசாதாரண திறமை கொண்டவராக இருந்தார். அறுபதுகளின் பிற்பகுதியில் ஒரு பயிலுனராக அவரின் கீழ் பயிற்சி பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் சிறுவனாக இருந்த பொழுது நாம் ஸ்ரேசன் ரோட்டில் வசித்தோம். அங்கிருந்து கடற்கரை வழியாக சைக்கிளில் சென்று அலெக்ஸ்சான்ரா வீதியில் இருந்த அவரது இல்லத்தில் நெடுநேரத்தை நான் கழித்திருக்கிறேன். இரவு நேரங்களிலேயே அவரது நிபுணத்துவ ஆலோசனைகள் நடைபெற்றன. நவா ஒரு வேட்டியை அணிந்து கொண்டு பெரும்பாலும் வெற்றுடம்புடன் தான் இருப்பார். அரைவாசி எரிந்த யாழ்ப்பாண சுருட்டையும் சப்பிக் கொண்டு இருப்பார். அடிக்கடி அவருக்கு ஆஸ்த்துமா தாக்கம் ஏற்படுவதுண்டு. அப்போதெல்லாம் ஒரு கிளாசில் விஸ்கியை ஊற்றி அதனை முகர்ந்து கொண்டிருப்பார். அதில் மருத்துவ அம்சங்கள் இருப்பதாக மற்றவர்களை நம்பச் செய்திருந்தார். நான்கு கிளாஸ் விஸ்கியை குடித்த பின்னரும்கூட அவரது கூர் மதியில் எந்த தளம்பலும் ஏற்பட்டது இல்லை. அவர் சட்ட நுணுக்கங்கள் பற்றி நீண்டநேரம் கதைப்பது இல்லை. வழக்கின் சாரத்தை மிக இலகுவாக அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவண்ணம் மிகப் பொருத்தமான வழக்காடு உத்தியை வகுப்பதில் அவர் வல்லவராக இருந்தார். எனினும் ஒரு சட்டப் பிரச்சினை குறித்து ஆய்யு செய்ய நேரிடின் அதனை அவர் பூரணமாகச் செய்து முடிப்பார். ஆனால் அவரது உண்மையான பலம் இதுவன்று.
அவர் சிறந்ததொரு வழக்காளி தத்துவார்த்த சட்ட விவாதங்களைவிட சிவில் வழக்குகளில் வெட்டொன்று துண்டு இரண்டு என்னும் வகையில் வாதங்களை முன்வைப்பதில் வல்லவர். சட்ட அறிவு அல்லது சொல்லாட்சி காரணமாக மட்டும் நவரட்னராஜாவின் புகழ் நிலைக்கப் போவதில்லை. தனது கட்சிக்காரரிடம் அவர் மிகவும் அனுதாபத்துடன் நடந்துகொண்டார். அவரது ஜூனியர்கள் அன்புடனும் பக்தியுடனும் அவருடன் பழகினர். அவரது சகபாடிகள்
60

அவரை வியப்புடனும் மதிப்புடனும் நடத்தினர். உரிமைகள் சிவில் பரிகாரங்களுடன் தொடர்புபடாத பட்சத்தில் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்திருந்த ஒரு சில வழக்கறிஞர்களில் அவரும் ஒருவர். அவரது வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது அவரது திருமணமாகும். பருத்தித்துறையைச் சேர்ந்த டாக்டர் சவரிமுத்து சபாபதியின் மகளை அவர் மணந்தார். பேரழகும் கெளரவமும், மாட்சிமையும் கொண்டிருந்த அவர் நவாவின் பலத்தின் ஊற்றாகத் திகழ்ந்தார்.
19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் அரசியல், கல்வி, பொருளாதாரம், கலாசாரம் ஆகிய துறைகளில் சட்டத் தொழிலானது அசாதாரணமான பங்களிப்பை வழங்கியது. இந்நூற்றாண்டுகளில் சட்டவாக்க அமைப்புக்களில் ஈடுபட்டு இருந்தவர்கள் அல்லது சட்டத்துறையில் பயிற்சி பெற்று இருந்தவர்களே ஆதிக்கம் செலுத்தினர். இன்றும்கூட 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 48 பேர் சட்டத்தரணிகளாக உள்ளனர். தேசியவாத இயக்கத்தை உருவாக்க அவர்கள் வழங்கிய பாரிய பங்களிப்பை ஏற்றுக்கொள்ளாத நவீன இலங்கையின் அரசியல், சமூக வரலாறு பூரணமடையாது. 1934 ஆம் ஆண்டு சட்டத்தொழிலில் நுழைந்ததிலிருந்து 1994 ஆம் ஆண்டு எதிர்பாராமல் மரணமடைந்தது வரை தம்மை முழுமையாக சட்டப்பணிகளுக்கே அர்ப்பணித்திருந்தார். பண்டாரநாயக்கா மன்றம் மற்றும் இந்து கல்விச் சங்கங்கள் உட்பட்ட பல்வேறு கம்பனிகளிலும் நம்பிக்கை நிதியங்களிலும் அவர் பணிப்பாளராகக் கடமையாற்றினார். ஆனால் இச் செயற்பாடுகள் அவரது சட்டப் பணிகளின் மையமாக அமையவில்லை. அவரது ஈடுபாடுகளின் அக மையமாகவும் இவை அமையவில்லை. எனினும் அவர் தமது தொழில் வாழ்க்கை முறையிலிருந்து விலகிய ஒரு முக்கிய நிகழ்வு அவருக்கு உள்ளது. அதுவே பின்னர் பண்டாரநாயக்கா செல்வநாயகம் ஒப்பந்தம் எனப் பெயர் பெற்ற ஒப்பந்தத்துக்கு அடிப்படையான பேச்சுவார்த்தைகளில் இவர் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
பண்டாரநாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தமே இந்நாட்டில் இனப் பிணக்குகளின் தீர்வுக்காக ஓர் அரசியல் சட்டகத்தை விருத்தி செய்வதற்காக திரு பண்டாரநாயக்கா மேற்கொண்ட மிக முக்கியமான நிகழ்ச்சி என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. இவ்வுடன்படிக்கையின் உள்ளடக்கத்தை மாத்திரமல்லாது, அவ் ஒப்பந்தத்துக்கு வழி வகுத்த பல்வேறு சூழ்நிலைகள் பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது. 1956 இல் சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து 1956 ஆவணி 19 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற நான்காவது வருடாந்த மகாநாட்டில் தமிழரசுக் கட்சியானது தனது குறிக்கோள்களை அடைய நேரடிச் செயற்பாடுகளையும் சாத்வீகப் போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்லப்போவதாகவும் சூழுரைத்தது. பின்வரும் குறிக்கோள்கள் அவற்றில் அடங்கும்.
(அ) தமிழுக்கு உத்தியோக மொழி அந்தஸ்த்து வழங்குவதுடன் மொழிசார்
சமத்துவத்தைத் தேடல்
61

Page 36
(ஆ) தமிழ் மொழிவாரி அலகினைக் கொண்ட ஒரு சமஷ்டி யாப்பினை
நிறுவுதல்.
(இ) பிரசாவுரிமைச் சட்டங்களைக் கைவிடுவதுடன் சகல நாடில்லாப்
பிரசைகளுக்கும் பிரசாவுரிமையை வழங்குதல்.
(ஈ) குடியேற்றத் திட்டத்தினை உடனடியாகக் கைவிடுதல். இத் தீர்மானமானது 1957 ஆவணி 20 ஆம் திகதி முதல் ஒரு சத்தியாக்கிரக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறியது.
1957 ஆம் ஆண்டு சித்திரை 25 ஆம் திகதி திரு பண்டாரநாயக்கா அவர்கள் தமிழுக்கு பிராந்திய மொழி அந்தஸ்த்தை வழங்கவிருப்பதாகவும் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பிராந்திய சபைகளை அமைக்கப் போவதாகவும் கூறிய அவர் தமிழரசுக் கட்சியுடன் கலந்து பேசுவதற்கு தனக்கிருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.
இவ்விடயத்தில் நவரட்னராஜா மிக முக்கியமான பங்களிப்பினைச் செய்தார். S.W.R.D பண்டாரநாயக்கா மற்றும் S.J.V. செல்வநாயகம் ஆகியோர் தன்மீது கொண்டிருந்த விசுவாசத்தைத் தக்கவைத்துக்கொண்டார். பண்டாரநாயக்காவும் செல்வநாயகமும் எமது சமகால வரலாற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தினை ஏற்படுத்தியோர் என்பதை நாம் அறிவோம்.
1957 ஆம் ஆண்டு ஆனி 27 ஆம் திகதி பிரதம மந்திரி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் திரு செல்வநாயகத்தின் தலைமையில் தமிழரசுக் கட்சியின் தூதுக் குழுவினர் பங்குபற்றினர். ஆனி 13 ஆம் திகதி அளவிலேயே திரு பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியுடனான வட்டமேசை மாநாட்டின் பயன்பாடு பற்றி தமது சந்தேகத்தை வெளிப்படுத்தினார். கலந்துரையாடுவதற்கான அடிப்படைகள் எதுவுமில்லையென அவர் குறிப்பிட்டார். அதன் பிறகு பல கூட்டங்கள் நடந்தன. அதன் விளைவாக 1957 ஆம் ஆண்டு ஆடி 25 ஆம் திகதி நள்ளிரவில் ஓர் உடன்படிக்கை எய்தப்பட்டது. இது ஒரு அசாதாரணமான நிகழ்வாகும். இரு தலைவர்களும் கொண்டிருந்த கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது ஒரு மாதத்துக்கும் குறைவாக நடந்த பேச்சுவார்த்தையில் இவ்வாறான ஓர் உடன்படிக்கை எய்தப்பட்டது சாதாரணமான ஒரு விடயமல்ல. இந்த அரசியல் நாடகத்தில் அலெக்ஸ்சான்ரா ரோட்டில் இருந்த சின்னஞ்சிறு தட்டச்சுப் பொறியும் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்திருக்கும் என நாம் ஊகிக்கலாம். உடன்படிக்கையைத் தயாரிக்கும் பணி நவாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் பண்டாரநாயக்கா தனது சொந்தக் கையெழுத்தில் சில மாற்றங்களைச் செய்தார். இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கம் பற்றியும் அது கைவிடப்பட்டது தொடர்பாகவும் வேறு இடத்தில் குறிப்பிட்டுள்ளேன். தற்போது நான் எடுத்துக்கொண்ட விடயமான யாப்புவாதமும் பன்மைத்துவமும் என்னும் தலைப்பில் ஒரு பல்லின சமூகத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில் நவா கொண்டிருந்த தொடர்ச்சியான ஈடுபாடு குறித்து சில விடயங்களைக் கூற விரும்புகிறேன்.
62

அரசியல் யாப்பினை உருவாக்குதல் மற்றும் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் ஆகியவை இன்றைய எமது அரசியலில் முக்கியத்துவத்தினைக் கொண்டிருப்பது போன்று எமது அண்மைக்கால வரலாற்றில் எப்போதுமே? நிகழ்ந்தது இல்லை. கிழக்கு ஐரோப்பாவில் நடந்த பாரிய மாற்றங்கள் தமது அரசையும் அரச நிறுவனங்களையும் மீளமைக்க வேண்டிய கட்டாயத்தை இந்நாடுகளுக்கு ஏற்படுத்தியுள்ளன. இந்த மீள்நிர்மாணத்தின் முக்கிய அம்சங்களாக பல்கட்சி முறைமையை (multi-party System) நிறுவன மயப்படுத்தல் , போட்டித் தன்மையான தேர்தல் செயன் முறை, நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமைகள் மனு, சுதந்திரமான நீதிமுறை ஆகியவை விளங்குகின்றன. கங்கேரியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்துக்கு அரசியல் அதிகாரத்தை மாற்ற முன்னர் அரசியல் யாப்பானது ஓரளவு முற்று முழுதாகவே மாற்றி எழுதப்பட்டது.
செக்கோசெலாவாக்கியா கூட்டமைப்பில் இவ்வாறான அரசியல் யாப்பு மாற்றம் மிகவும் சிக்கலானதாகக் காணப்பட்டது. செக் (Czech) மேலாண்மைக்கெதிரான ஸ்லோவாக்கிய எதிர்ப்புணர்வை மீண்டும் கிளறிவிட்டது. அதன் காரணமாக கூட்டமைப்பு சிதறியது. யுகோஸ்லாவியாவில் மரபுரீதியான சமஷடி அமைப்பினைக் காப்பாற்றுவதற்கு உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை காலம் கடந்து எடுக்கப்பட்டதனால் கூட்டாட்சியைக் காப்பாற்ற முடியவில்லை. சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதன் காரணமாக தனித்தனிக் குடியரசுகளின் அரசியல் யாப்புக்களை உருவாக்கியோருக்கு பல்வேறுவிதமான பிரச்சினைகள் ஏற்பட்டன. தென்னாபிரிக்காவில் மிகவும் சிக்கலானதும் ஆபத்தானதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு நூற்றாண்டு காலமாக விரோதம் பாராட்டிய கறுப்பினத் தேசியவாதத்துக்கும் ஆபிரிக்கான் தேசியவாதத்துக்கும் (Afrikaan Nationalism) இடையில் இணக்கம் காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தென்னாபிரிக்காவில் கறுப்பினப் பெரும்பான்மை ஆட்சியை ஏற்படுத்தும் கடுமையான சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அதேநேரத்தில் சட்டவாட்சியை மேம்படுத்தும் இனத்துவ சமத்துவம், மனித உரிமைகளின் உலகம் தழுவிய கோட்பாடுகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் அரசியல் நிறுவனங்களையும் ஸ்தாபிக்க வேண்டியிருந்தது.
கனடா போன்று நன்கு ஸ்தாபிக்கப்பட்ட சனநாயகங்களிலும்கூட. தேசத்தின் எதிர்காலமானது அரசியல் யாப்பு சீர்திருத்தங்களில் தங்கியுள்ளது. LỚë G36da du6i luņas 60) (Meech Lake Accord), JFT G6MosTu bat5 T உடன்படிக்கை (Charlotte town Accord) ஆகியவை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கனடாவானது தம்மை ஒரு தனியான சமூகமாக அடையாளம் காட்டும்படி கோரும் கியூபெக்கின் அபிலாசைகளுக்கு இடம் கொடுக்கவும் தமது பொது அடையாளத்துக்காகவும், குழு உரிமைகளுக்காகவும்
63

Page 37
ஆக்ரோசமாகக் குரல் எழுப்பும் சுதேசிய கனேடியர்களின் கருத்துரைகளுக்கு மதிப்பளிக்கவும் பொதுமக்களுடன் பல்வேறு கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டியிருந்தது. பிரிட்டனும் தனது அரசியல் யாப்புத் தனிமையில் இருந்து விலகிச்செல்ல வேண்டியிருந்தது. ஐரோப்பிய யூனியனுடன் ஏற்கத்தக்கதான ஓர் உரிமைகள் மனு உட்பட பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன் ஸ்கொட்டிஷ் (Scottish), வெல்ஷ் (Welsh) நாடாளுமன்றங்களையும் ஸ்தாபிப்பதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது.
கடந்த தசாப்தத்தில் கிழக்கு, மத்திய ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அரசியல் யாப்பினை உருவாக்கும் பணிகள் முடிவடைந்தன. இந்தப் பிரதேசமே யாப்புப் பரிசோதனை செய்யும் ஒரு பிரதான ஆய்வு கூடமாக மாற வேண்டியிருந்தது. பெலாரஸ் (Belarus), பல்கேரியா, எஸ்ரோனியா (Estonia) கஸகஸ்தான் (Kazakhstan), கிர்கிஸ்தான் (Kirghizstan) லித்துவேனியா (Lithuania), றுமேனியா, ரஷியா மற்றும் சிலோவாக்கியா ஆகியவை முழுக்க முழுக்க புதிதாக வரையப்பட்ட அரசியல் யாப்புக்களை ஏற்றுக்கொண்டன. போலாந்து, அல்பேனியா ஆகியவை தற்காலிக யாப்புக்களை உருவாக்கின. ஆர்மீனியாவும் உக்ரெயினும் தமது அரசியல் யாப்பு உருவாக்கும் செயன்முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டன.
இந்த உதாரணங்கள் இரு முரண்பாடான செல்நெறிகளைக் காட்டிநிற்கின்றன. முதலாவது செல்நெறி நவீன அரசியல் யாப்புக்கள் மக்களின் இறைமையை உறுதிப்படுத்துகின்ற ஆற்றல் கொண்டவை என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பின்தங்கிய குழுக்களையும் தனிநபர்களையும் இவற்றால் வலுவூட்ட முடியும் என்பதிலும் நிறுவனங்களை சனநாயக வகை கூறலுக்கு ஆற்றுப்படுத்த முடியும் என்பதிலும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு யாப்புவாதம் மீதான நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும் யாப்பு ஏற்பாடுகளின் திறமை குறித்து நம்பிக்கையினங்களும் சமமாகவே உள்ளன. இனத்துவ சகோதரப் படுகொலை, அரசியல் வன்முறை, மதவெறி அரசியல், தேர்தல் செயன்முறைகளில் தில்லுமுல்லுகள் செய்தல் போன்றவற்றை யாப்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு தடுக்க முடியும் என்பது தொடர்பான சந்தேகங்களும் பலமாக எழுப்பப்படுகின்றன. இந்தச் சந்தேகங்கள் காரணமாகவே யாப்பு எற்பாடுகள் நிரந்தரமற்றவை எனவும், தீர்க்கமற்றவை எனவும் கூறப்படுகின்றன. புதிய சிக்கல்களையும் யதார்த்தங்களையும் சமாளிப்பதற்காக யாப்புக்கள் திரும்பவும் திரும்பவும் மாற்றியமைக்கப்படவும் மீள்நிர்மானம் செய்யப்படவும் வேண்டியுள்ளன. இவ்வாறு அரசியல் யாப்பு, வாதத்தின் நியம அதிகாரம் குறித்த ஆழமான நம்பிக்கைக்கும் அதே நேரத்தில் பல சமூகங்களில் மனித உரிமைகளையும் சனநாயக விழுமியங்களையும் காப்பாற்றுவதிலும் யாப்பு வாதத்தின் தோல்வியினால் ஏற்பட்ட ஆழமான சந்தேகத்திற்கும் இடையில் இணக்கம் காணவேண்டி இருப்பதே யாப்பு வாதத்தின் நெருக்கடி எனலாம். இவ்விடயத்தில் குறிப்பிட வேண்டிய இன்னுமொரு விடயம் யாப்புக் கோட்பாட்டுக்கும் அரசியல் யாப்பு. நடைமுறைக்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுவதேயாகும்.
64

எனது உரையில் நான் பின்வரும் விடயங்களை மேற்கொள்ள விரும்புகிறேன்:
(அ) நவீன அரசியல் யாப்புக்களின் முக்கியமான அம்சங்களையும் அதனுடைய முரண்பாடுகளையும் பற்றி அதாவது எதிர்கால சமூகத்தை ஒரு புறமும் மறுபுறம் முன்னேற்றத்தின் கருவியாக இருக்கின்ற அந்த முரண்பாட்டைப் பற்றி கலந்துரையாடல்.
(ஆ) நவீன அரசியல் யாப்புக்கள் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்ள
எவ்வாறு முயன்றுள்ளன என்பதை ஆய்வு செய்தல்.
(இ) யாப்பு வாதத்திற்கும் பன்மைத்துவத்திற்கும் இடையிலான உறவுநிலை
பற்றி சில முடிவுகளை முன்வைத்தல்.
ஜேர்மனிய அரசியல் யாப்பு அறிஞரான 'வூல்றிச் கே. பெரஸ் (UIrich. K. Preuss) என்பவர் ஒரு நவீன அரசியல் யாப்பு பின்வரும் முக்கியமான அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டுமென வாதிடுகிறார். முதலாவதாக “உண்மை என்பதைத் தானே காட்டி நிற்கின்ற” அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் உரிமைகளைக் கொண்ட ஒரு பட்டியலைக் கொண்டிருக்க வேண்டும். இதனை சட்டத்தை உருவாக்குபவர்கள் மதிக்க வேண்டும். ஒரு யாப்பு என்பது அடிப்படையான ஆவணம். ஏனெனில் அது கோவையாக்கப்பட்ட உண்மையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இரண்டாவதாக அது கட்டளையிடும் பண்பைக் கொண்டிருக்க வேண்டும். யாப்பு நியமங்களுடன் ஒத்துப் போகாத சமூக யதார்த்தங்கள் தமது தகுதியுடைமையை அதன் காரணமாக இழந்து விடுகின்றன. எனினும் அதைவிட முக்கியமானது என்னவெனில் ஒரு யாப்பானது யதார்த்தத்தை மாற்றுவதற்கான ஓர் அழைப்பாகவும் அமைந்து விடுகிறது. ‘பெரஸ் குறிப்பீட்டதைப்போன்று “(அ) யாப்பானது இவ்வாறாக ஓர் அறிவார்ந்த சமூகத்தை நிர்மாணிக்கும் ஒரு சட்ட வரைபாகி விடுகிறது. சமூக நிலைமைகளைப் பிரதிபலிப்பதற்குப் பதிலாக அவற்றை அது தனது பிரதிமையின் அடிப்படையில் மாற்றியமைக்கிறது”. அரசியல் யாப்பின் இந்தக் கட்டளையிடுகிற அதிகாரம் குறித்து பல அண்மைக்கால உதாரணங்கள் உள்ளன. கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் யாப்புச் சீர்திருத்தம் காரணமாக பல்கட்சி சனநாயகம், போட்டித் தன்மையுள்ள தேர்தல் முறைகள், அடிப்படை உரிமைகள், சுதந்திரமான நீதிமுறை ஆகியவை நிறுவனப்படுத்தப்பட்டுள்ளன. மூன்றாவதாக அது உண்மையின் அடித்தளமாகவும் கட்டளையிடும் பண்பையும் கொண்டிருக்கிற காரணத்தால் அதனை ஒரு தனியான ஆவணமாகக் கோவைப்படுத்த வேண்டியுள்ளது. பென்சில்வேனியா மானிலத்தில் யாப்பைப் பற்றிக் குறிப்பிட்ட ‘தோமஸ் பெய்ன் (Thomas Paine) அதனை அரசின் “அரசியல் பைபிள்” (Political Bible of the state) 6T60Tds (gift SLITj. uT(60U upfu S6i.6) TDT60T உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் பிரெஞ்சுப் புரட்சியின் போதும்
65

Page 38
முன்வைக்கப்பட்டன. அப்போது யாப்பானது “மனித இனத்தின் வினா விடை br6üc” (Catechism ofthe human race) 616076 b “at5TGloggß6ÖT (36ng5Ta5LDLic” (Gospeh of the times) எனவும் குறிப்பிடப்பட்டது. யாப்பானது “மீட்சிக்கான சமயக் கோட்பாடுகளின் மதசார்பற்ற பிரதிமை ஆகும்” என ‘பெரஸ் குறிப்பிட்டார். ! மக்களுடைய இறைமை என்னும் கருத்தையும் நவீன யாப்பு வாதத்தையும் தொடர்புபடுத்துகின்ற இன்னுமொரு முரண்பாடு உள்ளது. அதாவது ஒரு புறத்தில் சகல அதிகாரங்களும் மக்களிடம் இருந்தே பிறக்கின்றன. எனினும் ஒரு யாப்பானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மன்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாகவே "பெரஸ்" பின்வரும் கேள்வியை எழுப்பினார்: “யாப்பினை உருவாக்கியவர்கள் மக்களின் இறைமை எனும் கோட்பாட்டினை முன்வைத்த அதே நேரத்தில் எதிர்காலப் பரம்பரையினர் தமது விருப்பத்தை நிலைநாட்ட யாப்பின் மூலமாகக் கட்டுப்பாடுகளை விதித்தனர். இவ்விரண்டுக்குமிடையில் நாம் எவ்வாறு இணக்கம் காண்பது?’ அரசியல் யாப்புக்கள் சாகாவரம் பெற்றவை எனும் கருத்து 1669 ஆம் ஆண்டு கரோலினாவின் அடிப்படை யாப்பில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டது. “இந்த அடிப்படை யாப்புக்கள் என்றுமே கரோலினா அரசாங்கத்தின் புனிதம் நிறைந்த மாற்றமுடியாத வடிவமாக இருக்கும்”. இந்த முரண்பாடான கருத்துப் பற்றி 1793 ஆம் ஆண்டு தேசிய மாநாட்டினால் வரையப்பட்ட பிரெஞ்சு அரசியல் யாப்பின் 27 ஆம் உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது: “யாப்பினை மீளாய்வு செய்கிற, சீர்திருத்துகின்ற, மாற்றுகின்ற உரிமையை மக்கள் எப்போதும் கொண்டுள்ளனர். ஒரு பரம்பரையினர் தமது சட்டத்துக்கு எதிர்கால பரம்பரையினரை அடிமைப்படுத்த முடியாது’.
அரசியல் யாப்பின் புனிதத்துவமும் அதில் அடங்கியுள்ள உரிமைகளும் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்குவதுடன் தொடர்புபட்டுள்ளன. ஒரு யாப்பானது முன்னேற்றத்துக்கு தடையாக இருக்க முடியாது. முன்னேற்றம் தொடர்ச்சியாக ஏற்படுவதற்கு அது என்றுமே ஒரு கருவியாகத் திகழவேண்டும். அது “வித்தியாசமான வரையறையற்ற பெருந்தொகையான வாய்ப்புக்களைத் திறந்து விடுகிறது’. ஒரு புறத்தில் யாப்பானது நடைமுறையில் மாற்றத்துக்கான சகல வழிமுறைகளையும் மூடிவிடுகிறது. சமூக உருமாற்றத்தையும் அது எடுக்கக்கூடிய பல்வேறு வடிவங்களையும் மாற்ற முடியாதவாறு இறுக்கத்தைப் பெற்றுக்கொள்கிறது. பின்னர் அது தனது சட்டபூர்வத் தன்மையில் தேய்ந்து செல்லத் தொடங்குகிறது. மாற்றத்தின் விளைவாக ஏற்படும் நன்மைகளை ஒரு சமூகம் அனுபவிப்பதை ஒரு யாப்பானது அனுமதிக்காது விட்டால் அது யாப்பு வாதத்துக்கும் முன்னேற்றத்துக்கும் இடையிலான தொடர்பினைத் துண்டித்து விடுகிறது. முன்னேற்றம் என்பது ஒரு ஒழுக்கரீதியான கருத்து. அது விருத்தியடைவது தொடர்பாக மனித இயல்பு கொண்டுள்ள ஆற்றலுடன் சம்பந்தப்பட்டது. அந்த ஆற்றலை தடுக்கின்ற எந்தவொரு யாப்பும் தனது
66

கட்டளையிடும் பண்பை இழந்துவிடுகிறது. இந்தப் பண்புதான் நவீன யாப்பின் அடிப்படையான மூலங்களில் ஒன்று.
1884 இல் ‘ஜேம்ஸ் பிறைஸ் (James Bryce) என்பவர் யாப்பு சீர்திருத்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு நெகிழ்ச்சியான, நெகிழ்ச்சியற்ற யாப்புக்களுக்கிடையில் வேறுபாடுகளை முன்வைத்தார். கே. சி. வியாரே' (K.C. Wheare) என்பவர் யாப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்பது அவற்றினைத் திருத்தம் செய்வதற்கான விசேட நடைமுறைகளில் தங்கியிருக்கக் கூடாது எனவும், நடைமுறையில் இவை இலகுவாக அல்லது அடிக்கடி மாற்றப்படக்கூடியதா என்பதில்தான் தங்கியிருக்க வேண்டும் எனக் கூறுகிறார். எனவே மாற்றங்களைத் தடுக்கும் சட்ட ஏற்பாடுகளில் மட்டும் நாம் கவனம் செலுத்திக் கொண்டு இருக்க முடியாது. அவை சட்டமாக்கப்பட்ட சூழ்நிலைகள் பற்றியும் சீர்திருத்தங்கள் தொடர்பான யாப்பு நடைமுறை பற்றியும் நாம் கவனிக்க வேண்டும்.
இலங்கையில் இரண்டாம் குடியரசு யாப்பானது பாராளுமன்றத்தின் தெரிவுக் குழுவினால் வரையப்பட்டு 2/3 பெரும் பாண்மையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1978-1988 க்கு இடையில் இந்த யாப்பானது 16 முறை திருத்தப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 1982 இல் ஒரு கருத்துக் கணிப்பினால் நீடிக்கப்பட்டது. எனவே விகிதாசாரப் பிரதிநிதித்துவம் 1988 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. 1988 இல் இருந்து இன்றுவரை எந்தவொரு அரசாங்கமும் 2/3 பெரும்பான்மையைப் பெறவில்லை. எனவே யாப்புக்கான சீர்திருத்தமும் சாத்தியமாகவில்லை.
யாப்பினை உருவாக்கியோரின் சட்டபூர்வ தன்மையைப் பற்றி நாம் சிந்திப்போமானால் . அடைய முடியாத ஒரு விசேட சட்டவாக்கப் பெரும்பான்மை அல்லது அத்தகைய விசேட பெரும்பான்மையுடன் மக்களின் கருத்துக் கணிப்புடன் இணைந்த ஒரு முறையின் மூலமாக எதிர்கால சந்ததியினர் யாப்பின் உள்ளடக்கத்தை மாற்றுவதைக் கட்டுப்படுத்தும் யாப்பினை உருவாக்குபவர்கள். எத்தகைய சூழ்நிலையில் அந்த யாப்புச் சட்டமாக்கப்பட்டது என்பதையும் நாம் கருத்திற் கொள்ள வேண்டும். யாப்பு சீர்திருத்தத்துக்கான முறைசார்ந்த நடைமுறைகளின் சட்டபூர்வத் தன்மையைப் பற்றி நாம் ஆய்வு செய்யும் பொழுது யாப்பு வரையும் செயன்முறையை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். இரண்டாவது குடியரசு யாப்பு ஒரு கருவிசார்ந்த யாப்பாகும். கருத்தொருமிப்புச் செயன்முறை மூலம் அது சட்டமாக்கப்படவில்லை. யாப்பு உருவாக்கும் செயன்முறையில் இருந்து பிரதான எதிர்க் கட்சி விலகிக் கொண்டது. கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் சிறுபான்மை சமூகங்கள் யாப்பு உருவாக்கும் செயன்முறையில் கலந்து கொள்ளவில்லை. ஆளும் கட்சி 4/5 பெரும்பான்மையைக் கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பெரும்பான்மையானது கூடிய வாக்கு பெறுபவர் தெரிவு செய்யப்படுகின்ற முறையில் பெறப்பட்ட பெரும்பான்மையாகும். விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் அந்த பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டிருப்பின்
67

Page 39
அத்தகைய அபரிதமான பெரும்பான்மையைக் கொண்டிருக்க முடியாது. இந்த சூழ்நிலையில் தாமே உட்பட முடியாத ஒரு யாப்பு சீர்திருத்த நடைமுறைக்கு எதிர்கால சந்ததியினர் உட்பட வேண்டும் என விதிப்பது சட்டபூர்வமானதா? இரண்டாம் குடியரசு யாப்பினை வரைந்தோர் இந்தச் சட்டப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளனர். இந்த வாதமானது யாப்பானது மக்களின் கருத்துக் கணிப்பு மூலம் திருத்தப்பட முடியும் என்னும் உள்ளார்ந்த ஏற்பாட்டுக்கு கூடிய வலுவைத் தருகிறது. சீர்திருத்த நடைமுறையைத் தீர்மானிப்பதில் உள்ள பலவீனம், நடைமுறையில் அந்த யாப்பு ஏற்றுக்கொண்ட அசாதாரணமான இறுக்கம், இதன் விளைவாக முன்னேற்றத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகள் ஆகியவை யாப்புத் திருத்த நடைமுறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள புனிதத் தன்மை குறித்து மீண்டும் எம்மைச் சிந்திக்கச் செய்கிறது. இது இலங்கைக்கு மாத்திரம் உரிய ஒரு பிரச்சினை அல்ல. இது பற்றி றெட் லுட்விக்கோவ்ஸ்கி" (Redd Ludwikowski) பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “யாப்பினை மாற்றுவதற்கு ஒரு விசேட பெரும்பான்மையின் தேவை இருக்கிற காரணத்தினால் ஹங்கேரி, போலந்து, செக் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய குடியரசுகளில் யாப்புச் சீர்திருத்த நடைமுறையானது அசையாமல் நின்றுவிட்டது. அரசியல் பன்மைத்துவம் என்னும் பொறிமுறையோடு இணைவதற்கு அனுபவமில்லாத முதிர்ச்சியற்ற ஒரு நாடு இவ்வாறு துண்டாடப்பட்டிருப்பதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இதே நிலைமை ஏனைய புதிய சனநாயகக் குடியரசுகளிலும் ஏற்படக் கூடும்”.
அரசியல் யாப்புத் திட்டங்களில் சிறுபான்மையினரை அங்கீகரித்து ஏற்றுக் கொள்வதற்கான அனுகுமுறைகள்
அரசியல் யாப்பு ஊடாக பல்லின சமூகங்களின் யாப்பு அடிப்படைகளை ஸ்தாபிக்கும் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு நாம் பல்வேறு மாற்று அணுகுமுறைகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியுள்ளது.
(அ) இனத்துவ அடிப்படையில் அரசினை தீவிரமாக மறு கட்டமைப்புச்
செய்தல்
இதில் மிகவும் தீவிரமான அணுகுமுறை என்பது இனத்துவக் குழுக்கள் மற்றும் சிறுபான்மையினரின் மிகவும் அதிகபட்சமான கோரிக்கைகளுக்கு ஆரம்பத்திலேயே விட்டுக் கொடுப்பதாகும். அதாவது புதிய யாப்பு ஏற்பாடுகளில் அவர்களது தொடர்பையும் பங்குபற்றலையும் உறுதிப்படுத்தும்
68

முகமாக அவர்கள் தமது பொது அடையாளத்தை முன் வைக்க இடமளிப்பதாகும். 1994 ஆம் ஆண்டில் எதியோப்பிய யாப்பு உருவாக்கத்தில் உதாரணமாக இந்த அணுகுமுறையே கையாளப்பட்டது. அதாவது இறைமை என்பது மக்களை ஒரே தொகுதியினராக கொண்டிருப்பதில் மட்டும் இருக்கவில்லை. அவர்களுக்குள் உள்ள பல்தேசியங்கள், பல தேசங்கள், பல மக்கள் கூட்டங்கள் ஆகியவற்றிலேயே உள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் அது அரசியல் தன்னாதிக்கத்தையும் பிரிந்து செல்லும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொண்டது. யாப்பின் முன்னுரை பின்வருமாறு குறிப்பிடுகிறது:
எதியோப்பியாவின் தேசங்கள். தேகியங்கள் மற்றும் மக்களாகிய நாங்கள் . எமது சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் (அத்துடன்) எமது பொதுவான எதிர்காலம் வரலாற்றுரீதியாக நியாயமற்று இருந்த உறவுகளைத் திருத்தியமைப்பதன் முலமுமே உயர்வடையும் எனபதைப் பூரணமாக ஏற்றுக்கொண்டு . , இந்த யாப்பினை எமது (தெரிவு செய்யப்பட்ட) பிரதிநிதிகளின் முலமாக ஏற்றுக் கொண்டோம்.
இந்த யாப்பானது ஒரு கூட்டாட்சியை அமைக்கிறது. அதில் “சகல இறைமை அதிகாரமும்” “மக்களில்” தங்கியிருக்கவில்லை. ஆனால் பன்முகப்பட்ட “தேவைகள், தேசியங்கள் மற்றும் மக்கள் கூட்டங்களில்” தங்கியுள்ளது. இவைகள் தனித்தனியான இனத்துவ அரசுகளாக (யாப்பினால்) ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பிடத்தக்க தன்னாட்சியையும் “பிரிந்து செல்லும் உரிமை உட்பட நிபந்தனையற்ற சுயநிர்ணய உரிமையையும்” கொண்டுள்ளன. அத்துடன் எந்தவொரு சிறுபான்மைக் குழுவும் (மக்கள் கூட்டங்கள்) விரும்பினால் (அக்குழுவுக்கு தனியான மொழியும் கலாசாரமும் ஆட்சி எல்லையும் இருப்பின்) “பிரிந்து” சென்று கூட்டாட்சிக்குள் தனது சொந்த அரசினை அமைத்துக்கொள்ள முடியும். எதியோப்பியாவின் யாப்புப் பரிசோதனை போன்று முன்பு எப்பொழுதும் நடைபெறவில்லை எனக் குறிப்பிடும் 'ஜேம்ஸ் போல்' (James Paul) “அது ஆபிரிக்காவின் பல்லின பிளவுபட்ட சமூகங்களை யாப்புரீதியாக ஒழுங்கு படுத்துவதற்கு (தற்போதய மரபுரீதியான அரசியல் ஞானத்தை) வெளிப்படையாகவே சவால் விடுகிறது”. இந்த யாப்பானது மாற்றுநிலை அரசாங்கத்தின் பட்டயத்தைப் பின்பற்றுகிறது. அப்பட்டயமானது “இனத்துவம் என்பது எதியோப்பியாவிலும் கூட அரசியலின் இயற்கை அடிப்படையாக அமைந்திருக்கிறது. அத்துடன் அரசினை மீளமைப்பதற்கு இந்த ஓர் அடித்தளம் மட்டுமே உள்ளது’. பல எதியோப்பியர்கள் “தமது புதிய யாப்பில் பொதிந்துள்ள ஞானம் பற்றியும் அதன் சட்டபூர்வத் தன்மை பற்றியும்” தொடர்ந்தும் பிரச்சினைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என “போல்' (Paul) மேலும் குறிப்பிடுகிறார். அம்காரா (Amhara) ஒரோமோ (Oromo) மற்றும் ஏனைய இனத்துவக்
69

Page 40
குழுக்களைச் சார்ந்த அரசியல் அறிவாளர்கள் இம் முறையில் இருந்து வெளியேறினர்.
எனினும் ‘போல் பின்வருவனவற்றையும் சுட்டிக் காட்டுகின்றார். அதாவது வன்முறையையும் துஷ்பிரயோகங்களையும் கொண்டிருந்த 1992 ஆம் ஆண்டு தேர்தல்களின் முடிவு ஒரு கட்சி அரசினால் உருவாக்கப்பட்டது. (பன்மைத்துவ, இனத்துவ அரசியலை மேம்படுத்துவதன் மூலம் கட்டமைக்கப்பட்ட ஒரு இனத்துவ கூட்டமைப்பின் ஒற்றுமையைப் பேணுவதற்கு) ஒரு கட்சி அரசு வேண்டப்படுவது மிகவும் நகைப்புக்குரிய விடயமாகும். எதியோப்பியர்களின் அச்சமும் அபிலாஷைகளும் அரசுகளின் உருவாக்க வரலாற்றில் வேரூன்றி நிற்கின்றன. சகல எதியோப்பியர்களும் வெளிப்படையான இனத்துவ அரசியல் முறைக்குள் சென்றுவிடவே விரும்புகின்றனர். இந்த முறைமையானது நவீன அரசின் உருவாக்கத்துக்கு முன்பே நீண்டகாலமாக நிலவியிருந்தது.
யாப் பானது உணி மையான இனத் துவ இறை மையைக் கோட்பாட்டளவில் உறுதிப்படுத்தியும் கூட உண்மையான இறைமை சமஷ்டி அரசாங்கத்திலே இருக்கக் கூடியதாகத்தான் அதிகாரப் பங்கீட்டு ஏற்பாடுகள் அமைந்துள்ளன. சமஷ்டி அரசாங்கமே பாரிய இறைமை அதிகாரத்தையும் அரசாங்கம் செயற்படுவதற்கான பொருளாதார, மனித வளங்களையும் கொண்டுள்ளது. பெரிய அரசுகளான உரோமியா, அம்காரா, சோமாலி, மற்றும் அபார் ஆகியவற்றுக்கு இனத்துவ ஓரினத்தன்மை என்னும் ஊகங்கள் பொருத்தமற்றவை ஆகும். இந்த அரசுகள் வரலாற்று, பிராந்திய, சமய, மரபுரிமை மற்றும் ஏனைய நம்பிக்கைகளின் அடிப்படையில் பிளவு பட்டுள்ளன. மனித உரிமைகளையும் சட்டவாட்சியையும் மேம்படுத்துவதில் சமஷ்டி அரசாங்கத்தின் வரலாறு “கறை படிந்துள்ளது” என ‘போல் குறிப்பிடுகிறார். சட்டவிரோத தடுத்துவைத்தல் , தொந்தரவு, ஒருதலைப்பட்சமாக ஊடகவியலாளர் மீது வழக்குத் தொடுத்தல் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இது மாத்திரமல்லாது அரசாங்கத்தின் முக்கிய அம்சமான பொலிஸ், இராணுவம் ஆகியவை வட பிரதேசத்தில் வாழும் சிறுபான்மையினரான ‘ரைகிறியன்ஸ் (Tigreams) என்னும் சிறுபான்மையினரின் ஆதிக்கத்தைக் கொண்டுள்ளது. எதியோப்பியாவிலுள்ள தெளிவான சவால் என்னவெனில் பல்வேறு இனக் குழுமங்களில் இருந்து காத்திரமான நியமனங்களை மேற்கொள்ளுதல் அத்துடன் ராணுவமானது சட்டவாட்சியையும் ஏனைய யாப்பு விழுமியங்களையும் மேம்படுத்துவதை உறுதி செய்வதும் ஆகும்.
(93) afin. L'L2606XXsib5 éPiaggb(p6op (The Consociational Approach)
கூட்டிணைவு வாதத்தில் "ஆரென்ட் லிஜ்பாட் (Arend Lijphart) ஒரு மகத தான கோட்பாட்டாளர், பல்லின சமூகங்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக
70

அவர் அதனை முன்வைக்கிறார். அவர் நான்கு கோட்பாடுகளின் அடிப்படையில் கூட்டிணைவு சனநாயகத்தை வரையறை செய்கிறார். இக் கோட்பாடுகள் வெஸ்ட் மினிஸ்டர் மாதிரி மற்றும் பெரும்பான்மைக் கோட்பாடு ஆகியவற்றில் இருந்து விலகிச் செல்கின்றன. அவை கூட்டு, பரஸ்பர ரத்து (Veto) அதிகாரம், விகிதாசாரம் மற்றும் தன்னாட்சி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. எனினும் இங்கு குறிப்பிடப்பட்ட எந்தக் கோட்பாடேனும் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு “எதிர்க் கட்சியில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்கள் ஒத்துழைக்க வேண்டுமே தவிர போட்டியிடக் கூடாது” என அவர் குறிப்பிடுகிறார். தென்னாபிரிக்க தற்காலிக யாப்பு தென்னாபிரிக்காவில் இனத்துவ பன்மைத்துவ பிரச்சினைகளுக்கு கூட்டிணைவு கோட்பாடுகள் ஒரு முடிவான தீர்மானத்தை வழங்க முடியுமா என்பது தொடர்பான ஒரு சிறந்த விடய ஆய்வினை வழங்குகிறது. “யாப்புவாதம் தென்னாபிரிக்காவில் முதலாவது பிரதான அம்சம் என்றால் கூட்டிணைவு வாதம் இரண்டாவது gb(95Lô” 61601 “ gọT6ổi 6IỨì8 (36ò6ới” (Jan-Erik Lame), “ (ụp(3.J” (Murray) ஆகியோர் குறிப்பிடுகின்றனர். இடைக்கால யாப்பின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய ஐக்கியத்துக்கான அரசாங்கம் ஒரு குறிப்பிடத்தக்க சிந்தனை மாற்றம் எனலாம். இந்த முறையில் சட்டவாக்கத்திலும் நிருவாகத்திலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் யாப்புரீதியாக முன்வைக்கப்பட்ட கூட்டமைப்பு என அழைக்கப்பட்டது. முதலாவது தேர்தலுக்குப் பின்னர் முதல் ஐந்து வருடங்களுக்கு அமைக்கப்பட்ட அமைச்சரவை சனாதிபதி, இரண்டு பணி நிறைவேற்று துணை சனாதிபதிகள், இருபத்தேழு அமைச்சர்கள் கொண்டதாக அமைந்தது. துணை சனாதிபதிகள் இருவரும் முதலாவது, இரண்டாவது பெரும்பான்மைக் கட்சிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். சட்டவாக்கத்தில் 5 சத வீதப் பிரதிநிதித்துவததைக் கொண்டிருக்கும் கட்சிகள் அமைச்சரவைப் பதவிகளுக்குத் தகுதியுடையவை. ஒரு அமைச்சரை நியமிக்க முன் சனாதிபதியானவர் துணை சனாதிபதிகளையும், கட்சித் தலைவர்களையும் ஆலோசிக்க வேண்டும். இடைக்கால யாப்பின் 89 (2) ஆம் உறுப்புரை பின்வருமாறு குறிப்பிட்டது: “அமைச்சரவையானது தேசிய ஐக்கிய அரசாங்கம் எனும் கருத்தின் அடிப்படையான கருத்தொருமிப்பைத் தேடும் முறையிலும் ஒரு வினைத்திறன் மிக்க அரசாங்கத்தின் தேவை கருதியும் நடந்துகொள்ள வேண்டும்”. இதே விகிதாசாரம் மற்றும் கூட்டமைப்புக் கோட்பாடுகள் 9 மாகாணங்களிலும் நிருவாக சபைகளை அமைப்பதில் பின்பற்றப்பட்டன. வினைத் திறன் மிக்க அரசாங்கம் என்பது வெளிப்படையான உடன்பாடின்மையை தடுக்க வேண்டும். இதன்மூலம் அமைச்சர்கள் பொதுவாக தமது வேறுபாடுகள் பற்றி வெளிப்படையாக விவாதிக்க மாட்டார்கள். எனினும் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு நடக்கலாம். "ஜோண் ஜே. வொன் ரொண்டர் (John J. VonTonder) பின்வருமாறு கூறுகிறார்: தென்னாபிரிக்க நிலமையானது ‘லிஜ்பாட் என்பவரின் கருத்தோடு பூரணமாகப் பொருந்தாவிட்டாலும் “பல்வேறு
71

Page 41
நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அது உயிர் வாழ்வதோடு ஒப்பீட்டளவில் வினைத்திறன் மிக்க ஆட்சியும் நடைபெறுகிறது”. எனினும் கூட்டிணைவு யாப்பு அமைப்புக்களின் வினைத்திறன் குறித்து ‘கியோவானி சர்தோரி' என்பவர் (Giovanni Sartor) சந்தேகத்தை எழுப்புகிறார். அவர் கூட்டிணைவு சனநாயகத்தில் ஒத்துழைப்பே முக்கியமானது என்னும் லிஜ்பாட்டின்' வாதத்தினை முன்வைக்கிறார். விகிதாசாரப் பிரதிநிதித்துவம் கூட்டு அரசாங்கங்களுக்கு உதவியாக இருந்தபோதும் சமூகங்கள் ஒற்றுமையாக இருப்பதில் குழப்ப நிலைமை ஏற்படலாம் எனக் கூறினார். கூட்டிணைவு மாதிரிக்கான இன்னுமொரு உதாரணம் இலங்கையில் அண்மையில் முயற்சி எடுக்கப்பட்ட வரைவு யாப்பாகும். அதில் பிராந்திய சபைகளில் மந்திரிசபை உருவாக்கத்திலும் நிருவாகக்குழு முறைமையிலும் கூட்டிணைவு முறையை முன்வைத்தது.
முதலாவது, இரண்டாவது குடியரசு யாப்புக்களில் கூட்டிணைவுக் கோட்பாடுகளை உள்ளிர்ப்பதற்குக் காத்திரமான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை எனினும் தற்போதய யாப்பு உருவாக்கத்தில் பிரதிநிதித்துவ சனநாயக நிறுவனங்கள் மிதமிஞ்சிய அளவான கட்சி அரசியலினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய அக்கறை ஏற்பட்டுள்ளது. தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் வெஸ்ட் மினிஸ்டர் சனநாயக மாதிரியானது பகைமை அரசியலை ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு சிறு சிஷயத்திலும் குறுகிய அரசியல் பிரிவினைவாதமே மேலோங்கி நிற்கிறது. பொதுவான அரசியல் பொருளாதார இலக்குகளில்கூட ஆகக்குறைந்த கருத்தொருமிப்பை உருவாக்குவதில் நாம் தோல்வி அடைந்துள்ளோம். அதன் காரணமாக முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்கின்ற எமது இயலுமை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மாகாணசபைகளில் வளப்பங்கீடு, அபிவிருத்தி முன்னுரிமைகளைத் தீர்மானித்தல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தீவிர கட்சிப் பகைமையானது இச்சபைகளின் வினைத்திறனைக் குறைத்துவிட்டது. எனவே இவை அபிவிருத்திக்கான ஊக்கிகளாகச் செயற்பட முடியவில்லை. அது மாத்திரமல்லாது இந்தப் பிரதேசங்களில் உள்ள சிறுபான்மையினர் ஆளும் கட்சியுடன் கூட்டு வைத்திருந்தால் தவிர மற்றப்படி அபிவிருத்தியின் நன்மைகளில் இருந்து ஒதுக்கப்பட்டுவிடுவர்.
இவற்றின் காரணமாகவே யாப்பு வரையில் ஈடுபட்டுள்ளோர் வெஸ்ற்மினிஸ்ரர் மாதிரியில் இருந்து ஒரு முக்கியமான விடயத்தில் விலகிச்செல்ல உடன்பட்டுள்ளனர். பிரதேச அரசியல் நிருவாகத்திலும் கூட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனும் கருத்து அவர்களால் முன்மொழியப்பட்டது. அதாவது சபையில் பெரும்பான்மையுள்ள கட்சியின் தலைவரை முதன் மந்திரியாக்கி ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் கோருவார். எனினும் மந்திரிகள் சபையின் ஏனைய வெற்றிடங்கள் பிரதிநிதித்துவ அடிப்படையிலே பகிரப்படும். தாம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் மந்திரிப் பதவிகளைப் பெற
72

உரித்துள்ளவையாக இருக்கும். மந்திரி சபையில் உள்ள வெற்றிடங்கள் தீர்மானிக்கப்பட்டு அவை ஒவ்வொரு கட்சிக்கும் விகிதாசாரப்படி வழங்கப்பட்ட பின்னர் கட்சித் தலைவர் தனது விருப்பப்படி நியமிக்க முடியும். முதன் மந்திரி மந்திரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய அமைச்சைத் தீர்மானிப்பார். எனினும் அவர் சம்பந்தப்பட்ட அரசியற் கட்சித் தலைவருடன் கலந்து பேசிய பின்னரே தீர்மானம் மேற்கொள்ள முடியும். இதற்கு மேலதிகமாக அமைச்சர் அமைக்கும் நிருவாக சபையில் சபையின் சகல அரசியற் கட்சிகளும் பங்குகொள்ளும். இதன்படி சபையின் ஒவ்வொரு அங்கத்தவரும் ஆகக் குறைந்தது ஒரு நிருவாகக் குழுவிலேனும் அங்கத்துவம் பெறுவார். இதன்மூலம் நிருவாக அதிகாரத்தை அவர் பகிர்ந்து கொள்வதோடு பொருத்தமான சந்தர்ப்பங்களில் சட்ட முன்மொழிவுகளையும் சபைக்கு சமர்ப்பிக்க முடியும். நிருவாகக் குழுக்கள் பெரும்பான்மை வாக்கு எனும் அடிப்படையில் இல்லாமல் நட்பு ரீதியாகவே தீர்மானங்களை மேற்கொள்ளும். இவ்வளவு காலமாக மோதலுக்கும் போட்டிக்கும் உட்பட்டிருந்த ஓர் அரசியற் கலாசாரத்தில் இத்தகையதொரு கூட்டிணைவு ஏற்பாடு செய்யப்பட முடியுமா என்பது பற்றி சந்தேகங்கள் எழுவது இயல்பானதாகும். "எதிர்க் கட்சிகளிலுள்ள அரசியல் வாதிகள் ஒத்துழைக்க வேண்டுமே தவிர போட்டியிடக்கூடாது” என்றால் மாத்திரமே இக்கோட்பாடுகள் இயங்க முடியும் என லிஜ்பாட் குறிப்பிடுகிறார். எனினும் இந்த ஏற்பாடானது தமது பிராந்தியத்தை ஒன்றிணைத்து முன்னேற்ற அரசியற் கட்சிகளை வலியுறுத்தக்கூடியது. தீர்மானம் மேற்கொள்வதில் பன்மைத்துவம் மூலமாக விட்டுக் கொடுப்பதில் அழுத்தம் ஏற்படின் சிறுபான்மை பெரும்பான்மை எனும் கருத்து முக்கியத்துவமிழந்து போய்விடும் என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அரசியல் வாதிகள் மத்தியில் ஓர் அரசியல் இணக்கத்தை உருவாக்க வேண்டும் என இக் கோட்பாடு முயல்கிறது. அதாவது ஒரு நாடு இனத்துவ, சமய, மொழிசார் பிரிவினைகளைக் கொண்டு இருக்கும்போது அபிவிருத்தி முயற்சிகளில் அது வெற்றி-தோல்வி எனும் கருத்தினை முன்வைக்க முடியாது. அத்துடன் இந்த ஏற்பாடானது அரசியல் மற்றும் இனத்துவ சிறுபான்மையினர் தமது பிரதேசத்தின் அரசியல் நிருவாகத்தில் பிரதிநிதித்துவமத்தைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்படும். இதன் போதும் பல பிரதேசங்களில் பல்லின அரசாங்கங்கள் அமைக்கப்படும்.
இத்தகைய கூட்டிணைவு ஏற்பாடுகள் வெற்றிகரமாக இயங்கக்கூடியதொரு சூழ்நிலை இலங்கையில் நிலவுகிறதா? என்பது பற்றி சந்தேகங்கள் உள்ளன. முதலாவதாக இலங்கையில் உள்ள சமூகப் பிளவுகள் தீவிரமானவை. பெரும்பாலான சிங்களவர்களும் தமிழர்களும் மொழியாலும் சமயத்தாலும் வேறுபட்டுள்ளனர். தோட்டங்களில் வாழும் தமிழர்களைப் பொறுத்தமட்டில் அங்கு இனத்துவத்துடன் வர்க்க பேதமும் இணைந்துள்ளது. பெரும்பாலான தோட்டப்புறத் தமிழர்களுக்கு அண்மைக்காலம் வரை பிரசா உரிமை மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் சமூக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்குரிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றனர்.
73

Page 42
இரண்டாவதாக இனத்துவக் குழுக்களுக்கு மேலானதாக சென்று “மிதவாத நிலைகளையும் மனப்பாங்குகளையும்” ஏற்படுத்தக்கூடிய பாரிய அரசியல் நம்பிக்கை இங்கு இல்லை. பிரதான அரசியற் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியிலும் மக்கள் முன்னணியிலும் தமிழர்களும் சிங்களவர்களும் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் தமது பிராந்திய இனத்துவ கட்சிகளையே ஆதரிக்கின்றன. இவ்வாறான அரசியல் இணைவுகளின் துண்டாடல் தன்மையானது அண்மைக்காலமாக ஓரளவு தணிக்கப்படுகின்ற நிலை தோன்றியுள்ளது. சில பிராந்திய இனத்துவக் கட்சிகள் ஆளும் கட்சியுடன் ஒரு நெகிழ்ச்சியான கூட்டினை அண்மைக்காலத்தில் ஏற்படுத்தியுள்ளன.
மூன்றாவதாக தென்னிலங்கையில் 90 சத வீதமான வாக்குகளைப் பெற்றுள்ள பிரதான அரசியற் கட்சிகளுக்கு இடையில் மிகத் தீவிரமான எதிர்ப்புணர்வும் பகைமையும் காணப்படுகின்றன. சில வேளைகளில் இது இனத்துவ எதிர்ப்புணர்வு போல தீவிரம் அடைகிறது. நான்காவதாக அரசியல் அதிகாரம் மாறுகிறபோதும் அதற்குப் பின்னரும் ஆங்கிலம் கற்ற அரசியல் வாதிகளுக்கு மத்தியில் ஒத்துழைப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. எனினும் அரசியல் தலைமைத்துவத்தின் சமூகக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இத்தகைய தொடர்புகளும் இணைப்புக்களும் பலவீனம் அடைந்துள்ளன.
இத்தகைய புதிய நிறுவன ஏற்பாடுகள் மிகவும் சிக்கலானதும் கருத்தொருமிப்பைத் தேடும் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளையும் கொண்டிருப்பதால் ஏற்கனவே விருத்தியடைந்த நிறுவனங்களின் வினைத்திறன் பலவீனப்படுத்தப்படக்கூடும் எனும் கருத்தும் உள்ளது. எனினும் கூட்டிணைவுக் கோட்பாடுகளின் மீதான அர்ப்பணிப்பு தீவிரமானது எனின் இவைகள் தேசிய மட்டத்திலுள்ள அமைப்புக்களுக்கும் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறைகளுக்கும் விஸ்த்தரிக்கப்பட வேண்டும் எனும் வாதம் முன்வைக்கப்படுகிறது. இரண்டாம் மட்ட தலைமைத்துவத்துக்கு வினைத்திறன் மிக்க ஆட்சிக்கான இயலுமையைக் கட்டியெழுப்பாது அதிகாரம் பகிரப்பட்ட நிறுவனங்களை தீவிரமான அரசியல் பரிசோதனைக்குரிய களமாகக் கொள்வது பற்றி எதிர்ப்பும் உள்ளது.
(இ) இனத் துவப் பிணக்குகளின் முகாமைத் துவத் துக் கான
கட்டமைப்பு ஏற்பாடுகள்
பல்லின, இனத்துவ அரசுகள் தமது அரசியல் யாப்பு மற்றும் அரசியல்
முறைகளில் அதிகாரப் பரவலாக்கும் சமஷ்டி வடிவங்களை ஏற்றுக்
கொண்டுள்ளன. இவ்வாறு அரசியல் யாப்பு மாதிரிகளை உருவாக்கும்போது
174

ஒற்றையாட்சி முறைக்கும் சமஷ்டி ஆட்சிக்கும் இடையில் மத்தியப்படுத்தப்பட்ட பரவலாக்கப்பட்ட வடிவங்களுக்கு இடையிலும் தொடர்ச்சியான பிணக்குகள் இருந்து வந்துள்ளன. இந்தியாவில் சமஷ்டி அமைப்பானது மொழிவாரி மாநிலப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டது. மலேசியாவில் விசேட சலுகைகளைக் கொண்ட புதிய ஆள்புலங்களை உள்ளடக்கி, உள்ளுர் ஆட்சியாளர்களின் தலைமையில் மாநிலங்களின் கூட்டாட்சி (Federation of States) உருவாக்கப்பட்டுள்ளது. முன்னைய நைஜீரிய மாதிரி மிகவும் வித்தியாசமானது. இங்கு மாநிலங்களை எல்லைப்படுத்தும்போது சில பிராந்திய மற்றும் இனக் குழுக்கள் மேற்படிவதைக் காணலாம். பல்வேறு இனத்துவ, பிரதேசக் குழுக்கள் சமஷ்டி வாதம் பற்றிய பல்வேறு பார்வைகளைக் கொண்டுள்ளன. இந்த சமூகங்களின் சமஷ்டிவாதத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது இத்தகைய பார்வைகள் அங்கு பிணக்குகளையும் நெருக்கடிகளையும் உருவாக்குகின்றன. இந்த சமூகங்களில் அவர்களது அரசியலின் மீள் ஏற்பாடுகள் குறித்து பல வாதப் பிரதி வாதங்கள் எழுந்தவணணம் உள்ளன. இம் முயற்சிகள் கல்வி, கலாசார கொள்கைகள், வளங்களைத் திரட்டலும் பங்கிடுதலும், அவசரகால மற்றும் எஞ்சி நிற்கும் அதிகாரங்கள் தொடர்பாக மத்திய மாநில உறவுகளை மீளவும் வரையறை செய்வதற்காக வழிப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய முயற்சிகளும் பிரச்சினைகளும் இனத்துவக் குழுக்களிடையே நியாயமாக அதிகாரத்தைப் பகிர்வது தொடர்பாக அடிப்படைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளன. இப்பிரச்சினைகளைத் துணிவுடன் அணுகத் தவறியதன் காரணமாக பிரிவினைக் கோரிக்கைகள் இனத்துவ மற்றும் துணைத்தேசியக் குழுக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுக்கு சமஷ்டி மற்றும் அரை சமஷ்டி மாதிரியிலான அதிகாரப் பரவலாக்கம் பொருத்தமானது. இந்நாடுகள் அண்மைக்காலத்தில் புதிய யாப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளன அல்லது தமது தற்போதைய யாப்பு முறைகளை மீள வடிவமைக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
ஒற்றையாட்சி முறைமைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் சாத்தியப்படுமா என்பது குறித்து இலங்கையிலும் தென்னாபிரிக்காவிலும் விவாதங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அத்துடன் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் அரசியலமைப்பு ஒற்றை ஆட்சியாகவோ அல்லது சமஷ்டியாகவோ மாறுவதற்கு காரணமாக இருந்ததா என்பதும் இந்த விவாதத்தின் ஒரு பகுதியாகும். ரொன் வாட்ஸ் (Ron Watts) புதிய தென்னாபிரிக்க யாப்பு பற்றி பின்வருமாறு கூறுகிறார்: “இந்த யாப்பானது ஒரு சமஷ்டி அமைப்புக்குள்ள பல்வேறு பண்புக்கூறுகளையும் கொண்டுள்ளது. எனினும் யாப்புமுறை சார்ந்த பிரதேசமயமாக்கலுடன் கூடிய ஓர் ஒற்றையாட்சி முறைக்கு உரிய அம்சங்களையும் கொண்டுள்ளன.
இந்த அம்சங்கள் தேசிய, மாகாண அரசாங்கங்களுக்கு இடையில் அதிகாரங்களைப் பகிர்தல் மற்றும் நிதிவளங்களைப் பங்கீடு செய்தல்
75

Page 43
தொடர்பானவையாகும். முன்னர் இடைக்கால யாப்பின் கீழ் மாகாணங்களுக்கு எந்தப் புலத்திலும் விசேட பரிபாலன உரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை. அவைகளுக்கு சம அதிகாரங்களே வழங்கப்பட்டிருந்தன. அதிலும்கூட பிணக்குகள் ஏற்படும்போது தேசிய அதிகாரமே மேலோங்கும். இதிலுள்ள அசாதாரணமான அம்சம் என்னவெனில், சம அதிகாரப் பரிபாலனப் பரப்புக்களில் தேசிய சட்டவாக்கம் முழுமையாக முன்னிலையாகச் செயற்பட நீதி பரிபாலன எல்லைகளை ஸ்தாபிக்க வேண்டும். எனினும் 1994 ஆம் ஆண்டுத் திருத்தங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன என ‘ரொன் வாட்ஸ்" ஏற்றுக்கொள்கிறார். இந்தத் திருத்தங்களின் விளைவாக மாகாணங்களின் தலைமைகளை சம அதிகாரம் எனக் குறிப்பிடுவது நிறுத்தப்பட்டது. தற்போது அவை அவற்றுக்கே உரியவை என்னும் கருத்து ஏற்பட்டுள்ளது. எனினும் இது தவறான வியாக்கியானத்தை வழங்குகிறது. எவ்வாறெனில் அதிகாரம் பரவலாக்கப்பட்ட சூழ்நிலையிலும் கூட பாராளுமன்றமானது சில குறிப்பிட்ட நிபந்தனையின்கீழ் தனது சட்டவாக்கத் தன்மையைத் தக்கவைத்துள்ளது. இதன் காரணமாக மாகாணங்களுக்கு விசேட சட்டவாக்க அந்தஸ்த்து இருந்தபோதிலும் அவை சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் எல்லாவற்றுக்கும் மேலான தேசிய சட்டவாக்க அதிகாரம் காரணமாக கட்டுப்படுத்தப்படுகின்றன. “ரொன் வாட்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “எனினும் திருத்தப்பட்ட ஏற்பாடுகள் மாகாணங்களுக்கு விசேட சட்டவாக்க அதிகாரங்களை வழங்குகின்ற காரணத்தினால் அது சமஷ்டி வாதத்தைக் காட்டி நிற்கின்றது”.
இலங்கையில் கலாநிதி கொல்வின் ஆர். டி சில்வா முதலாவது குடியரசு யாப்பில் ஒற்றையாட்சி எனும் எண்ணக்கருவை அறிமுகம் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார் (இரண்டாவது குடியரசு யாப்பில் இவ்வாறில்லை). அவர் இதனை ஓர் அறிவு சார்ந்த புனைவாகவே நோக்கினார். பின்வந்த காலத்தில் இந்தக் கருத்தானது சட்ட அமைப்புக்குள் ஆழமாக வேரூன்றி விடலாம் எனவும், அதன் காரணமாக புதுமையான யாப்புப் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தடை ஏற்பட்டுவிடும் எனவும் அச்சம் கொண்டிருந்தார். ஒரு கற்பனையான அலுமாரிக்குள் பூட்டி வைக்கப்பட்டுள்ள ஓர் இலட்சிய ஒற்றையாட்சி யாப்பு என ஒன்றில்லை என கலாநிதி சில்வா வாதாடினார். ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி யாப்பு ஏற்பாடுகள் ஒரு தொடர்பத்தின் (continuum) பகுதிகளே அன்றி வெவ்வேறானவை அல்ல என அவர் கூறினார். இதில் ஒற்றையாட்சி முறை என்பது விரிவாக்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் வடிவங்கள் மற்றும் அரை சமஷ்டி ஏற்பாடுகளுடன் பொருந்துகிறது என அவர் கூறினார். கட்டமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதிலுள்ள மிக முக்கியமான பிரச்சினை என்னவெனில் மத்திய-பிராந்திய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நீதிமன்றங்கள் கொண்டுள்ள பங்கேயாகும்.
நீதிமன்றங்கள் என்பவை பன்மைத்துவ விழுமியங்களினதும் சிறுபான்மையினரதும் பாதுகாவலர்கள் எனக் கூறப்பட்ட போதிலும்
76

இலங்கையைப் பொறுத்தமட்டில் நீதித்துறையின் பங்கு மிகவும் சிக்கலானது. சுதந்திரம் அடைந்த பின்னர் சில வருடங்கள் கழித்து இந்திய வம்சாவழியினரான தோட்டப்புற தமிழர்களுக்கு பிரசா உரிமையை மறுத்தது பற்றிய யாப்புநிலை தொடர்பாக தீர்ப்பு வழங்குமாறு நீதிமன்றங்களிடம் கேட்கப்பட்டது. சோல்பரி யாப்பின் (Soulbury Constitution) முக்கிய அம்சமான 29 ஆம் பிரிவு சமத்துவ பாதுகாப்பு மற்றும் பாரபட்சமின்மை மீதான உத்தரவாதங்களை அளித்தது. உயர் நீதிமன்றமும் பிரிவி கவுன்சிலும் (Privy Council) குறைகூறப்பட்ட பிரசா உரிமைச் சட்டத்தின் சமூக அரசியல் விளைவுகளைப் பற்றியோ அல்லது அச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கங்கள் பற்றியோ ஆராயத் தவறிவிட்டன. எனவே ஓர் அரசியல் யாப்பின் குறிக்கோள் மற்றும் நோக்கங்கள் என்னும் பரந்ததொரு அடிப்படையில் யாப்பு பிரச்சினைகள் தொடர்பாக ஒரு தீர்வினை அவைகளால் எட்ட முடியவில்லை. அதேபோன்று 1950 களின் மத்திய பகுதியில் அரசகரும மொழிச் &L-gs605 (Official Language legislation) (b g5 5p sely frt stiles Gilguuj எதிர்த்தபோது நீதிமன்றமானது வழக்கிலிருந்த யாப்பு சார்ந்த விடயத்தை தவிர்த்து விட்டது. மாறாக ஒரு அரசாங்க ஊழியருக்கு சட்டரீதியாக ஒப்பந்தம் செய்யும் உரிமையில்லை என்ற அடிப்படையில் வழக்குத் தீர்க்கப்பட்டது. இந்தத் தீர்வுகளில் இருந்து பிரிவு 29 “இனத்துவ உரிமைகளைப் பொறுத்தமட்டில் பரிதாபத்துக்குரிய வினைத்திறன் இல்லாத காவற்காரன் என்ற நிலைக்கு” தாழ்ந்து விட்டது.
இரண்டாவது குடியரசு யாப்பின்படி உயர் நீதிமன்றத்துக்கு யாப்பு முறை நியாயாதிக்கம் வழங்கப்பட்டது. அத்துடன் "அடிப்படை உரிமைகளின் பாதுகாவலனும் உத்தரவாதியும்” எனும் அந்தஸ்த்தும் வழங்கப்பட்டது. குழுக்களுக்கிடையிலான சமத்துவம் தொடர்பான யாப்பு முக்கியத்துவம் கொண்ட பல்கலைக்கழக அனுமதி சம்பந்தமான வழக்கு ஒன்றை இங்கு குறிப்பிடலாம். இதன்படி பல்கலைக்கழக அனுமதியில் மாவட்டங்கள் மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரதேசங்கள் சாதகமான அடிப்படையைக் கொண்டிருந்தன. இதன்படி 30 சத விதமான அனுமதிகள் மாத்திரமே திறமை அடிப்படையில் வழங்கப்பட்டன. இந்த முறையானது வட பகுதியில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர் தொகையை மோசமாகப் பாதித்தது. எனினும் உயர் நீதிமன்றம் இந்த அனுமதி முறையை பிரதேச வேறுபாடுகளை நீக்கும் அரசாங்கக் கொள்கை எனும் கோட்பாட்டின் அடிப்படையில் ஏற்றுக்கொண்டது. இங்கு குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில் சமத்துவம் எனும் கோட்பாட்டுக்கு விதிவிலக்குகளை சட்டத்தின் மூலமாக மட்டுமே கொண்டுவர முடியுமென விதித்திருந்த போதிலும் உயர் நீதிமன்றமானது அத்தகைய விதிவிலக்குகளை அரச கொள்கையை நடைமுறைப்படுத்தும் நிருவாக செயற்பாடு மூலமாகவும் அனுமதித்து விட்டது என்பதாகும். கடந்த நான்கு தசாப்தங்களாக யாப்பு தொடர்பான நீதி பரிபாலன வரலாறானது நீதி முறைமையின் அதியுயர் மட்டத்தில் சிறுபான்மையினர்களின்
77

Page 44
நன்மைகளையும் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய நீதிமுறை சார்ந்த எண்ணக்கருக்களையும் பகுப்பாய்வு நுட்பங்களையும் உருவாக்க தயக்கம் காணப்படுகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. பன்மைத்துவ பிரச்சினைகளைக் காத்திரமாகக் கையாள்வதற்கு எமது நீதிமுறை தவறியதன் காரணமாகவே சாதாரணமாகத் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பல விடயங்கள் இன்று பூதாகரமாகி விட்டன.
நீதித்துறையின் இந்த இரட்டைத்தன்மை 13 ஆவது திருத்தம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பிளவு பட்டபொழுது நன்றாகப் பிரதிபலித்தது. ஐந்து நீதிபதிகள் திருத்தத்தின் யாப்புத்தன்மையை ஏற்றுக்கொள்ள நான்கு பேர் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை அது மீறுகிறது எனத் தீர்ப்பளித்தனர். யாப்புப் பிரச்சினைகள் தொடர்பான விசாரணைகளின் நீதிசார் அணுகுமுறை தொடர்பாகவும் கூர்மையான வேறுபாடுகள் உள்ளன. பெரும்பாலான தீர்வுகள் நீதித்துறையானது தாராண்மைப் பார் வைகொண்ட பாரதூரமான உணர்ச்சி நிரம்பிய விடயத்தைக்கூட புறவயமாகவும் நடுநிலையாகவும் அணுகக்கூடிய அமைப்பு எனும் கருத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. சமகால யாப்பு முறை சார்ந்த கருத்துக்களின் அடிப்படையில் ஒற்றையாட்சி எனும் வரைவிலக்கணம் தொடர்பாக நடுநிலைக் கோட்பாடுகளை முன்வைக்கவே பெரும்பான்மைத் தீர்ப்பு முயன்றது. அத்துடன் முன்மொழியப்பட்ட யாப்புத் திருத்தத்தை மதிப்பீடு செய்ய அந்தக் கோட்பாடுகளைப் பயன்படுத்த முயற்சி செய்தது. மறு புறத்தில் ஏனைய நீதிபதிகளுடைய அணுகுமுறையானது இனத்துவம் தொடர்பாக வரலாற்று ரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் பொதுவாகக் காணப்படுகின்ற உணர்வு நிலையையே அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இந்தத் தீர்ப்புகள் இரண்டு கருத்து நிலைகளை இணைத்தன. ஒன்று இறைமை உள்ள அரசு தொடர்பான மிகவும் உடன்பாடான எண்ணக்கரு மற்றயது சிங்கள-பெளத்த நிலையோடு பிரிக்க முடியாதவாறு தொடர்புடைய மேலாதிக்கமுள்ள பெரும்பான்மையினரின் கருத்தியலை அடிப்படையாகக் கொண்ட இலங்கை அரசு என்னும் எண்ணக்கரு. அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளில் உருவாகும் பிணக்குகளைத் தீர்ப்பதில் இத்தகைய கூர்மையான வேறுபாடுள்ள அணுகுமுறைகளானவை யாப்பு சட்டத்தரணிகளைப் பின்வரும் வாதத்தை முன்வைக்கத் தூண்டியுள்ளது. அதாவது இலங்கையின் பல்லின சமூக சூழ்நிலையில் இனத்துவப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு குறிப்பாக அடிப்படையான அமைப்பு ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நீதித்துறை சிறந்ததொரு மன்றம் அல்ல என்பதே அந்த வாதமாகும்.
1989 இல் பயணிகள் போக்குவரத்துச் சேவை தொடர்பாக வடக்குகிழக்கு மாகாணசபை நிறைவேற்றிய சட்டத்துக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுத்தமை ஆரம்ப காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையாகும். 1999 ஆம் ஆண்டு ஆனி 7 ஆம் திகதி வடக்கு-கிழக்கு மாகாணசபை வட பிராந்தியப்
78

போக்குவரத்துச்சபை மற்றும் கிழக்குப் பிராந்திய போக்குவரத்துச்சபை ஆகிய இரண்டு பொதுப் போக்குவரத்துச் சேவை அமைப்புக்களின் சொத்துக்கள், பொறுப்புக்கள், ஒப்பந்தங்கள், கடப்பாடுகள் ஆகியவற்றை சபைக்கு மாற்றும் முகமாக சட்டத்தை நிறைவேற்றியது. அத்துடன் போக்குவரத்துச் சேவைக்கு பொறுப்பான தேசிய அமைச்சருடைய கடமைகளையும் அதிகாரங்களையும் போக்குவரத்துக்குப் பொறுப்பான மாகாண அமைச்சருக்கு மாற்றுவதற்கு எத்தனித்தது. இதனை யாப்பின் உறுப்புரை 154 H (2) இன் கீழ் ஆளுனர் அனுமதிக்க மறுத்து அதனை மீளாய்வுக்கு திருப்பி அனுப்பினார். மாகாண சபையானது 154H(3) இன் கீழ் அதனுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் அனுமதிக்கு மீண்டும் சமர்ப்பித்தது. இது 154H(4) இன் படி அதனுடைய யாப்புப் பொருத்தப்பாடு தொடர்பாக ஒரு தீர்மானத்தைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தின்படி மாகாண சபையின் சட்டங்களை ஆளுநர் அல்லது சனாதிபதி இரத்துச்செய்ய முடியாது. அவற்றின் சட்டபூர்வத் தன்மையைத் தீர்மானிப்பதற்கு உயர் நீதிமன்றத்திடம் மாத்திரமே சமர்ப்பிக்க (փlգեւյլb.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது மாகாணப் பட்டியலின்கீழ் பாதைப் போக்குவரத்து சேவைகளை வழங்க மாகாண சபைகளுக்கு அதிகாரம் இருப்பினும் அச்சேவைகளை வழங்க மத்திய அரசாங்கத்துக்கு இருக்கும் உரிமைகளைத் தடைசெய்ய முடியாது எனக் குறிப்பிட்டது நீதிமன்றமானது ஒதுக்கப்பட்ட பட்டியலை அடிப்படையாகக் கொண்டு மத்திய அரசாங்கத்துக்கு பயணிகளையும் பொருட்களையும் நிலத்தின் வழியாக போக்குவரத்து செய்யும் உரிமை உண்டு எனக் கூறியது. மாகாண சபைகளுக்கு தம்முடைய போக்குவரத்துச் சேவைகளை மாகாணத்துக்குள் ஒழுங்குபடுத்தும் உரிமை இருந்தபோதும் அவற்றை வழங்குவதற்கு மத்திய அரசாங்கத்துக்கு இருக்கும் உரிமையை அவை தடைசெய்ய முடியாது. சுவீகரிக்கும் அதிகாரம் தொடர்பாக கவனம் செலுத்திய நீதிமன்றம் சொத்துக்களைச் சுவீகரிப்பதும் மீளளிப்பதும் பொதுப் பட்டியல் விடயமாகும் எனக் குறிப்பிட்டது. காணி, வாகனங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றைச் சுவீகரிக்கும் உரிமை இருந்தாலும் முழு வியாபார முயற்சிகளையும் சுவீகரிக்கும் உரிமை மாகாண சபைகளுக்கு இல்லை. இந்தத் தீர்ப்பில் குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில் மத்தியமாகாணப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு செயன்முறையை விருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து நீதிபதி 'மார்க் பெர்னாண்டோ" வலியுறுத்திக் கூறியமையாகும். பொதுப் பட்டியல் தொடர்பான விடயங்களில் மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் கலந்துரையாடுவது அவசியம் எனவும் அவ்வாறான கலந்துரையாடல் மூலமே பிரச்சினைகள் பெருகுவதைத் தடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். வெவ்வேறு பட்டியல்களிலுள்ள தெளிவின்மைகளையும், குறைபாடுகளையும் தீர்க்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க விவசாய
79

Page 45
சேவைகள் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதா 1992 ஆம் ஆண்டு எதிர்க்கப்பட்டது. விவசாய சேவை ஒரு பகிரப்பட்ட விடயம் என அதற்குக் காரணம் கூறப்பட்டது. மாகாணப் பட்டியலில் “விவசாய விரிவாக்கம் மாகாணத் தேவைக்கான மேம்பாடும் கல்வியும் விவசாய சேவைகள் உள்ளடங்கிய விவசாயம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறத்தில் இம் மசோதாவை பொதுப் பட்டியலுடன் பொருத்திப் பார்க்க வேண்டுமென அரசாங்கம் கூறியது. இந்தப் பட்டியலில் “விவசாயம் தொடர்பான கைத்தொழில்களை ஸ்தாபித்தலும் மேம்படுத்தலும், பண்ணைகளை ஸ்தாபித்தலும் பேணுதலும் மற்றும் தனியார் நாற்று மேடைகளை மேற்பார்வை செய்தலும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மசோதாவானது குறிப்பாக குத்தகை விவசாயிகளின் வெளியேற்றம், நெற்காணிகளையும் குத்தகை உரிமைகளையும் விற்றல், பிரச்சினைக்குரிய காணிகளில் செய்கைபண்ணுதல், மீளாய்வு சபையை ஸ்தாபித்தல், விவசாய சேவைகள் கமிட்டியின் விதிகள் மற்றும் விவசாய நிறுவனத்தை ஸ்தாபித்தல் ஆகியவற்றைக் குறிப்பாக ஒழுங்குபடுத்த முயன்றது. உயர் நீதிமன்றம் அரசினதும் முறையீட்டாரினதும் சமர்ப்பணங்களை நிராகரித்தது. இந்த மசோதாவானது உண்மையில் ஒதுக்கப்பட்ட விடயங்கள் பட்டியலுக்கு (ReservedList) சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் கூறியது. ஏனெனில் அது குத்தகை விவசாயிகளின் மேன்முறையீட்டு உரிமைகள் பிரச்சினைத் தீர்வுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டுள்ளது என நீதிமன்றம் விளக்கியது. இங்கும்கூட அரசினைவிட நீதிமன்றம் கூடிய தீவிரமான நிலைமையை எடுக்க விரும்புகிறது, அதாவது தெளிவாகப் பகிரப்பட்ட ஒரு விடயத்தில் மத்திய அரசாங்கத்தின் சட்டவாக்க உரிமையை மேம்படுத்திக் காட்டவே நீதிமன்றம் முயன்றது.
அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை பலவீனப்படுத்தும் கவலைக்குரிய முயற்சி 1990 ஆம் ஆண்டில் நடந்தது. இதன்படி 1990 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க மாகாண சபைகள் (திருத்த) சட்டத்துக்கு மாகாண சபையைக் கலைக்க ஒரு சாதாரண திருத்தம் கொண்டுவரப்பட்டது. மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரம் 154 (B) (8) (C) பிரிவில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆளுநர் மாகாணசபையைக் கலைக்க முடியும். இதற்கான அறிவுரை முதன் மந்திரியால் அவருக்கு வழங்கப்பட வேண்டும். யாப்பின்படி நிருவாகத்தைக் கொண்டுநடாத்த முடியாத பட்சத்தில் ஒரு மாகாணத்தின் நிருவாகத்தை ஒரு பிரகடனத்தின் மூலம் சனாதிபதி ஏற்றுக்கொள்ள பிரிவு 154 (L) இடமளிக்கிறது. வடக்கு-கிழக்கு மாகாண சபையானது ஒரு நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருந்தது. அதாவது மாகாண சபையின் உறுப்பினர்கள் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியிருந்தனர். அரசாங்கம் ஒரு திருத்தத்தை அறிமுகம் செய்தது. இதன்படி ஒரு மாகாண சபையின் அரைவாசிக்கு மேற்பட்ட உறுப்பினர் தமது சத்தியப் பிரமாணத்துக்கு எதிராக நடந்தால் அல்லது மாகாணசபை செயற்படத் தவறினால் திருத்தத்தின்படி ஆளுநர் சனாதிபதிக்கு அறிவிக்க
80

வேண்டும். இந்த இரு நிகழ்வுகளில் ஒன்றேனும் நடைபெறும் பட்சத்தில் ஆளுநர் அதுபற்றி சனாதிபதிக்கு அறிவித்த தினத்திலிருந்து மாகாணசபை கலைக்கப்படும். ஆளுநரின் ஒரு அறிக்கையின்மீது மாகாண சபையையே கலைக்கும் அதிகாரம் சனாதிபதிக்கு வழங்கப்படின் 13 ஆம் திருத்தத்தின்படி எதிர்பார்க்கப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் என்னும் திட்டமே பாரதூரமான தாக்கத்துக்கு உள்ளாகி விட்டது. எத்தகைய எதிர்பாராத பிரச்சினை ஏற்பட்டபோதும் கூட அரசானது யாப்புத் திருத்தமல்லாது இத்தகைய திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கக் கூடாது என்பது தெளிவானது எனினும்கூட இத்திருத்தத்தின் தகுதியுடைமையை உயர் நீதிமன்றம் அங்கீகரித்தது. உண்மையில் இத் திருத்தமானது மாகாண சபைகளைக் கலைத்தல் தொடர்பாக சனாதிபதியின் அதிகாரங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது.
பிரேமச்சந்திரா எதிர் மொண்ரேகு ஜயவிக்ரம மற்றும் இன்னொருவர (மாகாண ஆளுநர் வழக்கு) வழக்கில் யாப்பின் 154 (E) (4) உறுப்புரையின் கீழ் முதன் மந்திரியை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரம் தொடர்பாக அவருக்கு இருக்கக்கூடிய தற்றுணிவு பற்றி வியாக்கியானம் செய்யுமாறு உயர் நீதிமன்றம் கேட்கப்பட்டது. யர்ப்பு பின்வருமாறு கூறுகிறது: “சபையின் அங்கத்தவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற ஓர் உறுப்பினரை ஆளுநர் தன் அபிப்பிராயப்படி முதன் மந்திரியாக நியமிக்கலாம்; மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் ஓர் அரசியற் கட்சியைச் சார்ந்திருக்கும் பட்சத்தில் ஆளுநர் அக்கட்சியின் தலைவரை முதன் மந்திரியாக நியமிப்பார்”. 1993 ஆம் ஆண்டு வைகாசி 17 இல் நடந்த வட மேல், தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி (UNP), சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி (DUNF), மற்றும் பொதுசன எக்சத் பெரமுன (PEP) ஆகிய மூன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சிகள் தேர்தலிற் போட்டியிட்டன. ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. வட மேல் மாகாணத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி 25 ஆசனங்களை வென்றது. பொதுசன எக்சத் பெரமுன 18 ஆசனங்களையும், சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 6 ஆசனங்களையும் வென்றன. இரு மாகாணங்களின் ஆளுநர்களும் (வடமேல் மாகாண ஆளுநர் மொண்டேகு ஜெயவிக்ரம, தென் மாகாண ஆளுநர் எம்.ஏ பாக்கீர் மார்க்கார்) யாப்பின் 154 (F) உறுப்புரையின் கீழ் முதன் மந்திரிகளை நியமிக்குமாறு கேட்கப்பட்டனர். வடமேல் மாகாணத்திலும் தென்மாகாணத்திலும் நியமனத்திற்காகப் போட்டிக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. வடமேல் மாகாணத்தில் சனநாயக ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ஜி. எம் பிரேமச்சந்திரவும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த காமினி ஜெயவிக்ரம பெரேராவும் போட்டியிட்டனர். தென் மாகாணத்தில் பொதுசன எக்சத் பெரமுனவைச் சேர்ந்த ஏ. ஜீ. எச். தொடங்கொடவும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த எம். எல. அமரசிறியும் போட்டியிட்டனர். 1993 ஆம் ஆண்டு
81

Page 46
வைகாசி 21 ஆம் திகதி வடமேல் மாகாண ஆளுநரும் தென் மாகாண ஆளுநரும் ஐக்கிய தேசியக் கட்சி அபேட்சகர்களை முதன் மந்திரிகளாக நியமித்தனர். இந்த நியமனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எதிர்க்கப்பட்டன. இது தொடர்பாக யாப்பு வியாக்கியானம் பற்றிய பல்வேறு பிரச்சினைகள் 125 ஆம் உறுப்புரையின் கீழ் உயர் நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கான சரியான உசாவல்கள் இல்லையென நீதிமன்றம் குறிப்பிட்டபோதிலும் இவ்விடயம் தொடர்பாக ஆளுநரின் தற்றுணிபு பற்றிய வியாக்கியானங்களுக்குப் பல வழிகாட்டல்களை முன்வைத்தது. நீதிமன்றம் பின்வருமாறு விடயங்களைச் சுட்டிக்காட்டியது.
(அ)
(ஆ)
(g)
(ዙ)
சபையின் பெரும்பாலானோரது நம்பிக்கையைப் பெற்ற நபரை முதன் மந்திரியாகத் தெரிவு செய்யும் ஆளுநரின் தற்றுணிபு அம் மாகாணத்தின் மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டுமே அல்லாது வேறு எவ்விதமான தனிப்பட்ட அல்லது அரசியல் நோக்கங்களையும் கொண்டிருக்கக் கூடாது.
மாகாண ஆளுநருக்கு 145 (1) உறுப்புரையின் கீழ் (ஏற்பாடு தவிர்ந்த) வழங்கப்பட்டுள்ள அதிகாரம் அவருடைய அகவயமான மதிப்பீடு அல்லது கருத்தினைச் சார்ந்ததாக இருக்க முடியாது. மாறாக அது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிசார் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படக் கூடியது. மேன்முறையீட்டு நீதிமன்றமானது தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு கட்டளையிடவும் நியமனத்தை மறு பரிசீலனை செய்யவும் அதிகாரமுடையது. அவ்வாறு சீர்தூக்கிப் பார்க்கும்போது அந்நியமனம் நியாயமற்றதா அல்லது தவறான நம்பிக்கையின் கீழ் செய்யப்பட்டதா அல்லது பொருத்தமான சான்றுகள் இல்லாமல் அல்லது பொருத்தமற்ற விடயங்களைக் கருத்திற்கொண்டு அல்லது சான்றுகள் இல்லாமல் செய்யப்பட்டதா எனபதைக் கவனிக்க வேண்டும்.
ஆளுநரின் முதன் மந்திரித் தெரிவானது அரசியற் காரணிகளைக் கருத்திற் கொள்ள வேண்டியிருக்கலாம். எனினும் அது முழுக்கவும் அரசியற் தன்மை கொண்ட செயற்பாடு அல்ல. அது அம் மாகாணத்திலுள்ள மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரம் மற்றும் சட்ட உரிமைகளைத் தீர்மானிப்பதோடு தொடர்புள்ளது. முதன் மந்திரியின் நியமனம் நீதிக்கு உட்பட்டதே. அதனை நீதிமுறைக்கு உட்படுத்த முடியாதவாறு தடுக்கக்கூடிய சுயமாக விதித்துக்கொண்ட விதிகளோ அல்லது நீதிசார் தடைகளோ இல்லை.
ஆளுநரின் தீர்மானம் யாப்பு அதிகாரத்தோடும் ஓர் ஆளுநரின் கடமையோடும் சம்பந்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக மாகாண சபை
82

அங்கத்தவர்களது அத்தகைய அதிகாரத்தைச் சரியான முறையில் பிரயோகிக்கும் யாப்பு உரிமையோடு தொடர்புடையது.
ஆளுநர் ஆலோசனை மீதோ (அல்லது தனது சொந்த தற்றுணிவின் மீதோ) மேற்கொள்ளும் நடவடிக்கை ஒரு நீதிசார் பிரச்சினையாகும் என்பது பற்றியும் நீதிமன்றம் ஆய்வு செய்தது. உறுப்புரை 154 (F) (2) உறுப்புரையானது ஆளுநர் செய்த எதனதும் தகுதியுடைமை பற்றி கேள்விக்குட்படுத்தக் கூடாது. அதன் அனுமானம் என்னவெனில் அவர் தனது சொந்த தற்றுணிவின்படி நடந்திருக்க மாட்டார் என்பதாகும். “ஆளுனரின் தற்றுணிவு சனாதிபதியின் அறிவுறுத்தலின் படியே அமையும்” என அது மேலும் கூறுகிறது. 154 (F) (2) வின் ஏற்பாடு 154 (F) (4) இன் கீழ் மேற்கொள்ளப்பட்ட முதன் மந்திரியின் நியமனத்துக்கு பொருத்தமானது அல்ல. ஆளுநரின் தற்றுணிவு தொடர்பான நடைமுறையின்மீது இந்த நீதிசார் விமர்சனம் என்னும் கோட்பாடுகளை விருத்தி செய்யும்போது யாப்பு சார்ந்த விசாரணையில் சில அடிப்பைைடக் கோட்பாடுகளை மீண்டும் வலியுறுத்தியது. நீதிமன்றம் பின்வருமாறு கூறியது: “யாப்பும் அரசாங்க முறைமையும் சட்டவாட்சியின்மீது கட்டப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் ஏற்படும் தேய்வினைத் தடுப்பதே ஒரு சுதந்திரமான நீதித்துறையின் முதன்மையான பணியாகும்”. எனவே இந்த விடயத்தில் நீதிமன்றமானது முன்னர் கடைப்பிடித்த நிதிசார்ந்த செல்நெறியில் இருந்து குறிப்பிடத்தக்களவு விலகி யாப்பின் மேலாண்மையை வலியுறுத்தியது. அத்துடன் அதிகாரப் பரவலாக்கல் அதிகாரத்தை வியாக்கியானம் செய்யும் தேவையானது மாகாண சபைகள் என்பவை இலங்கையின் பிரதிநிதித்துவ சனநாயகத்தில் ஓர் ஒன்றிணைந்த பகுதி என்பதை மீணி டும் வலியுறுத்துவதாகும்.
ஐந்து மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டபோது புதிய திகதிகளை நிர்ணயிப்பதற்கு தேர்தல் ஆணையாளருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தின் யாப்பு பூர்வத்தன்மையை ஆய்வு செய்தபோது உயர் நீதிமன்றமானது யாப்பின் 4 (1) உறுப்புரையின்படி வாக்களிக்கும் உரிமை மாகாண சபைத் தேர்தல்களுக்கும உட்படுத்த வேண்டும் எனக் கூறியது. உறுப்புரை 154 (E) 5 வருடங்கள் முடிந்த பின்னர் மாகாண சபையானது தானாகவே கலைந்துவிடும் எனக் கூறியபோதும் “பராமரிப்பு நிருவாகத்துக்கான ஏற்பாடுகள்’ எதுவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியது. எனவே நீதிமன்றம் பின்வருமாறு தீர்மானித்தது: “யாப்பின்படி தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்தப்படாமல் விடுதல் அதிகாரப் பரவலாக்கலின் மதிப்பைக் குறைப்பதாகும்”.
மகிந்தசோம எதிர் மைத்திரிபால சேனாநாயக்க மற்றும் ஏனையோர வழக்கில் 154(B)(8) (c) உறுப்புரையின் கீழ் மாகாண சபையைக் கலைக்கும் ஆளுநரின் அதிகாரம் பற்றித் தீர்மானிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கூறப்பட்டது. அதாவது வடமேல் மாகாணத்திலும் சப்பிரகமுவா
83.

Page 47
மாகாணத்திலும் நிருவாக ஊழல் உள்ளது என பொதுமக்கள் முறைப்பாடு செய்தல் மற்றும் இது தொடர்பான தகவல்களைத் தாமே பெறுதல் எனும் அடிப்படையில் ஆளுநருக்கு சபையைக் கலைக்கும் அதிகாரம் உண்டா என்பதே இங்கிருந்த பிரச்சினை. இச்சபைகளின் ஆளுநர்கள் சபைகள் கலைக்கப்பட வேண்டுமா எனத் தத்தமது முதன் மந்திரிகளிடம் ஆலோசனை கோரியிருந்தனர். இம் முதன் மந்திரிகளுக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தது. அவர்கள் கலைக்க வேண்டாம் எனக் கூறினர். அதன் பின்னர் ஆளுநர்கள் சனாதிபதியின் ஆலோசனையைக் கோரினர். சனாதிபதியானவர் தனது 1996 ஆம் ஆண்டு தை 2 ஆம் திகதியிட்ட கட்டளையின்படி சபைகளைக் கலைக்குமாறு அறிவுறுத்தினார். இதன்படி 1996 ஆம் ஆண்டு தை 3 ஆம் திகதியிட்ட வர்த்தமானிப் பிரகடனத்தின்படி இரண்டு சபைகளையும் கலைத்தனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு முன்னர் இருந்த பிரதான பிரச்சினை ஆளுநர் தன்னுடைய தற்றுணிவின்படி சபையைக் கலைக்க முடியுமா அல்லது அவர் முதன் மந்திரியின் அறிவுரைக்குக் கட்டுப்படுவாரா என்பதுதான் (அதாவது மந்திரிசபையினர் சபையின் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் வரைக்கும் 154 (B) (8) (d) உறுப்புரையின்படி ஆளுநர் மந்திரியின் அறிவுரைப்படியே தனது அதிகாரங்களை நிலைநாட்ட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது பந்தி (c) யின் கீழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களுக்கும் ஏற்புடையதே. அதாவது (அவர் முதன் மந்திரியின் அறிவுரையின்படியே செயற்பட வேண்டும்.) ஆளுநர் யாப்பின் ஏற்பாடுகளை நிலைநாட்டுவதற்கு கடமைப்பட்டிருக்கின்ற காரணத்தினால் அவர் உறுப்புரை 154 (B) (8) (d) இன்படி செயற்பட வேண்டியது கட்டாயமாகும் என நீதிமன்றம் கூறியது. மாகாண சபையைக் கலைப்பதற்கு சனாதிபதிக்குள்ள அதிகாரம் குறித்து யாப்பில் குறிப்பான ஏற்பாடு எதுவும் இல்லை. எனவே ஆளுநர்கள் சனாதிபதியிடம் அறிவுரை கேட்டதன் காரணமாகவும் சனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் சபையைக் கலைத்ததன் காரணமாகவும் 154 (B) (8) (C) உறுப்புரைகளுக்கு எதிராக நடந்துள்ளார். இதன்படி சபைகளைக் கலைத்தமை செல்லுபடியற்றது என சபை தீர்மானித்தது.
பி சி கருணாதிலக்க மற்றும் ஒலிவர் எதிர் தேர்தல் ஆணையாளர மற்றும் ஏனையோர் வழக்கில் உயர் நீதிமன்றமானது ஐந்து மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தத் தவறிய யாப்புபூர்வத் தன்மை குறித்து தீர்ப்பளிக்குமாறு கோரப்பட்டது. இந்த சபைகளின் பதவிக்காலம் 1998 ஆம் ஆண்டு ஆனியில் முடிவடைந்தது. தேர்தல் ஆணையாளரினால் இச் சபைகளுக்குத் தேர்தல் நடத்தும் முடிவு பிரசுரிக்கப்பட்டு ஒவ்வொரு சபைக்கும் நியமனப் பத்திரங்கள் கோரப்பட்டு குறிப்பிட்ட திகதிக்குள் நியமன செயன்முறையும் பூர்த்தி செய்யப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆடி 15 ஆம் திகதி சட்ட ஏற்பாடுகளின்படி 1998 ஆம் ஆண்டு ஆவணி 28 ஆம் திகதி
84

தேர்தல் தினமாக தேர்தல் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஆவணி 4 ஆம் திகதி சனாதிபதி பொதுசன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினார். அத்துடன் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட தினம் செல்லுபடியற்றது எனவும் ஓர் அவசரகால விதியைப் பிறப்பித்தார். இவ்வாறு தேர்தல் நடத்தப்படாமல் விடுபட்டமை சட்டத்தின் முன் அனைவரும் சமம், சகலருக்கும் சட்டத்தின் சமத்துவமான பாதுகாப்பு, பேச்சு, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகிய தமது அடிப்படை உரிமைகளை மீறுகிறது என முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வாதங்கள் நடந்தபோது வடமேல் மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைந்து அதற்கான தேர்தல் திகதியும் நிர்ணயிக்கப்பட்டது.
எனவே “மேற்படி 5 மாகாணங்களிலும் பிரசைகள் தமது வாக்களிக்கும் உரிமையைப் பொறுத்தமட்டில் வடமேல் மாகாணத்தில் வாழும் பிரசைகளைவிட சாதகமற்ற முறையில் நடத்தப்பட்டனர்” என நீதிமன்றம் தீர்மானித்தது. அத்துடன் யாப்பின் 14 (1) (A) உறுப்புரையின் கீழ் வாக்களிக்கும் உரிமையானது பேச்சு, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் ஒரு வடிவம் எனவும் நீதிமன்றம் கூறியது. எனவே யாப்பில் 12(1), 14 (2) ஆகிய உறுப்புரைகளை அவசரகால விதி மீறிவிட்டது எனத் தீர்மானித்தது. ஆனால் சனாதிபதியின் அவசரகாலத் தீர்மானத்தின் தகுதி உடைமை பற்றி எவ்விதமான கருத்தையும் வெளியிடவில்லை. அத்துடன் நீதிமன்றமானது யாப்பின் XVI A அதிகாரமும் குறிப்பாக 154 (A) உறுப்புரையும் “தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகளின் தொடர்ச்சியான இருப்பை” ஆழ்ந்து கவனிக்க வேண்டும் எனவும் கூறியது. எனவே நீதிமன்றமானது மாகாண சபைகள் சட்டத்தின் பிரிவு 22.6 க்கு பொருள் விளக்கம் தரவில்லை. அவ்வாறு தந்திருப்பின் அதன்படி தேர்தல் இருந்திருக்க முடியாது. எனவே தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையும் இருந்திருக்க முடியாது.
வழக்குச் சட்டம் பற்றிய எமது மீளாய்வு பின்வரும் முடிவுகளுக்கு இட்டுச் செல்கிறது:
(அ) பிரசா உரிமை மற்றும் மொழி உரிமை ஆகியவற்றின் மீதான பாரபட்சமான சட்டவாக்கம் குறித்த யாப்பு வழக்குத் தீர்வில் இலங்கை நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்படும் எச்சரிக் கையான அணுகுமுறையானது சிறுபான்மையினரின் உரிமைகளை அமுல்படுத்துவதற்கு நீதிமன்றங்கள் சிறந்தவொரு மன்றம் அல்ல எனும் முடிவுக்கு விமர்சகர்களை வரச் செய்துள்ளது. 13 ஆம் திருத்தத்தின் மீதான யாப்பு பூர்வத் தன்மை தொடர்பான பிளவுபட்ட தீர்ப்பும், உடன்பட முடியாத நீதிபதிகளின் யாப்பு வழக்குத் தீர்வில் நடுநிலைக் கோட்பாடுகளைக் கைவிட்டமையும் இந்த அபிப்பிராயத்தை மீள வலியுறுத்தியுள்ளன.
8S

Page 48
(ஆ) மாகாண சபைகளின் சட்டவாக்கத் தகைமையின் எல்லைகள் குறித்த விடயங்கள் மத்திய அரசாங்கத்துக்குச் சார்பாகவே தீர்மானிக்கப்பட்டுள்ளன. நீதவான்களின் நியாயப்படுத்தலானது மத்தய அரசாங்கத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையில் நடுநிலையான பிரச்சினையைத் தீர்ப்போர் எனும் அவர்களது வகிபங்கிற்குப் பொருத்தமில்லாதது போலத் தோன்றுகிறது. வடக்கு கிழக்கு மாகாண சபையினை தகுதியிழக்கச் செய்யும் சட்டத்தின் மீதான தீர்ப்பும் மாகாண சபையின் கலைப்பும் மாகாணத்தின் தன்னாதிக்கத்துக்கு இருந்த முக்கியமானதொரு யாப்பு பாதுகாப்பைப் பலவீனப்படுத்துகிறது.
(இ) அண்மைக் காலமாக இதற்கெதிரான ஒரு போக்குத் தென்படுகிறது. நீதிமன்றமானது மாகாண சபைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு சட்ட மூலங்களை நாடியுள்ளது. வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதும் மாகாண சபைகளுக்கு கிரமமாக தேர்தல் நடத்துவதும் முதன் மந்திரியை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தைக் குறைப்பதும் மாகாண சபைகளைக் கலைப்பதும் இந்த தொடர்ச்சியுடன் சம்பந்தப்பட்டுள்ளன. முதலாவதாக நீதிமன்றம் என்பது சட்டவாட்சியின் உத்தரவாதி எனும் எண்ணக்கரு அதாவது யாப்பின் மேலாண்மை தொடர்பானது. இரண்டாவதாக நீதிமன்றமானது பிரதிநிதித்துவ சனநாயகத்தின் கருத்தியலான பாதுகாவலன் என்பது. இதில் மாகாண சபைகளுக்கான அரசியல் பிரவேச உரிமையும் பங்குபற்றும் உரிமையும் அடங்கும்.
(ஈ) சமத் துவத்துக்கான தேடலும், உரிமைகள் பற்றிய
கலந்துரையாடலுக்கான வரையறைகளும்
கல்வி, தொழில்வாய்ப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புக்களில் சமமின்மை பற்றிய முன்னுரிமைக் கொள்கைகள் என்பது இனத்துவப் பிணக்கின் இன்னுமொரு முக்கியமான அம்சமாகும். இக் கொள்கைகள் பொதுவாக தடைகள் தொடர்பான வித்தியாசமான பார்வைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் காரணமாக சமூக நீதி பற்றிய எதிரும் புதிருமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியா மிகவும் சிக்கலானதும் படிமுறை அமைப்பைக் கொண்டதுமான ஒரு நாடாகும். இங்கு பலவீனமான சிறுமான்மையினர் மற்றும் இனத்துவக் குழுவினர் தொடர்பாக முன்னுரிமைக் கொள்கை அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. கொள்கை வகுப்போரும் நீதவான்களும் இக் கொள்கைகளின் யாப்பு எல்லைகளை வரையறை செய்யும்போது அதில் உள்ள சிக்கல் தன்மைகளை விளங்கிக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் வரலாற்று ரீதியாக அமுக்கி வைக்கப்பட்ட
86

சாதியினர் மற்றும் இனத்துவக் குழுவினர் ஆகியோரின் நலன்களையும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினரின் நலன்களையும் சமநிலைப்படுத்துவது முக்கியமானது. மலேசியாவிலுள்ள புதிய பொருளாதாரக் கொள்கையைப் போல அரசியல் மேலாதிக்கமுள்ள பெரும்பான்மையினருக்கு சாதகமான முன்னுரிமைக் கொள்கைகள் வேறொரு வித்தியாசமான சமூக பொருளாதாரப் பிரச்சினையை அதாவது விகிதாசாரத்தில் தங்கியுள்ள முன்னுரிமைக் கொள்கைகளின் சட்டரீதியான எல்லைகள் பற்றிய பிரச்சினைகளை முன்வைக்கின்றன. எந்தவொரு உரிமைகள் மனுவிலும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது அடிப்படைக் கூறாக விளங்க வேண்டும். அத்தகைய பாதுகாப்பானது முதலில் சிறுபான்மையினரின் அடையாளம் அல்லது இருப்பு ஆகியவை அச்சுறுத்தப்படும்போது அத்தகைய செயற்பாடுகளில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களுக்கு உறுதிப்பாட்டினை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும். இத்தகைய செயற்பாடுகள் குறிப்பிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான இன வன்முறையாகவோ அல்லது இனப் படுகொலையாகவோ இருக்கலாம் அல்லது சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களின் குடித்தொகை அமைப்பை மாற்றக் கூடியதாக அரச உதவியுடனான குடியேற்றமாகவோ குடியேற்றம் உள்ளிட்ட உள்ளிர்ப்புக் கொள்கைகளாகவோ இருக்கலாம். சிறுபான்மையினரின் மொழிவாரி, கலாசார, கல்வி உரிமைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் கூடியதாக அரசுகளுக்கு விதிக்கப்பட வேண்டும். இந்த விவாதத்தின் மையமாக விளங்குவது தனிநபர் உரிமைகளின் பாதுகாப்பையும், குழு உரிமைகளின் பாதுகாப்பையும் இணக்கமுறச் செய்தல் ஆகும். அண்மைக் காலங்களில் சிறுபான்மையினரின் பாதுகாப்புத் தொடர்பாக குறிப்பிடத்தக்க சர்வதேசிய, பிராந்திய விருத்திகள் ஏற்பட்டுள்ளன. 1992 ஆம் ஆண்டில் பொதுச்சபையானது தேசிய இனத்துவ சமய மொழிவாரி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நபர்களின் உரிமை மீதான பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது. 1992 ஆம் ஆண்டு ஆடி 10 ஆம் திகதி கெல்சிங்கியில் நடந்த ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புத் தொடர்பான உச்சி மாந்ாட்டில் பங்குபற்றிய அரசுகள் ஆரம்பக் கட்டத்திலேயே “பிணக்குகளைத் தடுக்கும் கருவி” ஆக ஒரு தேசிய சிறுபான்மையினருக்கான உயர் ஸ்தானிகரை நியமிக்க வேண்டும் எனத் தீர்மானித்தன.
1995 ஆம் ஆண்டில் ஐரோப்பியப் பேரவையானது ஐரோப்பிய மனித உரிமைச் சட்டவாக்கத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்போடு நேரடியாகத் தொடர்புள்ள அதிகாரமின்மையை நிவர்த்தி செய்தது. அதற்காக 1995 ஆம் ஆண்டு தேசிய சிறுபான்மையினர் மீதான சட்டக சமவாயத்தை ஏற்றுக்கொண்டது. மனித உரிமைகள் தொடர்பான சட்டவாக்கத்தில் இந்த சட்டக சமவாயம் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதப்படுகிறது. இந்த சமவாயத்தில் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் கோட்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை அமுல்படுத்துவதில் என்ன வழிகளைத்
87

Page 49
தெரிவுசெய்ய வேண்டும் என்பதை அரசாங்கத் தரப்பிற்கு விட்டுவிடுகிறது. இத்தகைய விருத்திகளுக்கு யூகோஸ்லாவியாவின் சிதறல் மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பாவில் இனத்துவத் தேசியவாதத்தின் மறுமலர்ச்சி ஆகியவையும் ஓரளவுக்குக் காரணமாகின. எனினும் இவை சர்வதேசிய பிராந்திய மனித உரிமை நிகழ்வுகளில் சிறுபான்மை இனப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக வழங்கப்படுகின்ற முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகின்றன.
தேசிய, இனத்துவ, சமய மொழிசார் சிறுபான்மையினைச் சேர்ந்த நபர்களின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் பிரகடனம் ஏனையவை இருக்கத்தக்கதாக சிறுபான்மையினரின் இருப்பையும், அவர்களது பிரதேசத்தில் இனத்துவ, கலாசார, சமய, மொழிவாரி அடையாளத்தைப் பாதுகாக்கவும் அரசுக்கு விதித்துள்ளது. அத்துடன் அவர்களது அடையாளத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது. அத்துடன் தனியிடத்திலும் பொதுவிடங்களிலும் சுதந்திரமாகவும் எதுவித தலையீடும் இல்லாமலும், அல்லது எதுவித பாரபட்சமும் காட்டப்படாமலும் தனது கலாசாரம், தனது சமயம், தனது மொழியைப் பேண, பாதுகாக்க, பின்பற்ற சிறுபான்மையினருக்குள்ள உரிமையை அரசுகள் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் தமது சங்கங்களை அமைப்பதற்கு இருக்கும் உரிமையையும் தனது கலாசார, சமய, சமூக, பொருளாதார மற்றும் பொது வாழ்வில் சுதந்திரமாகப் பங்குபற்றும் உரிமையையும் பிரகடனம் அங்கீகரிக்கிறது. அத்துடன் தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்திலும் அபிவிருத்தியிலும் முழுமையாகப் பங்கேற்க அரசு இவர்களுக்கு வசதி செய்ய வேண்டும் எனவும் பிரகடனம் விதிக்கிறது.
அடிப்படை உரிமைகளை அமுல் நடத்துதலானது யாப்புவாதம் பற்றிய உரையாடலில் செழுமைப்படுத்தப்பட வேண்டிய இன்னுமொரு விடயமாகும். அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பவற்றின் சொல்லாட்சியானது அரசியற்கலை (Statist) மற்றும் தனிநபர்வாத எண்ணக்கருக்களில் தங்கியுள்ளது. தென்னாசியாவுக்குள் மக்களின் சமூக, சமய அனுபவங்களுக்கு உள்ளடக்கமும் அர்த்தமும் தந்துள்ள நம்பிக்கை முறைகளுடன் அடிப்படை உரிமைகள் இணைக்கப்படுமாயின் அவற்றுக்கான ஆதரவுத் தளத்தை விரிவுபடுத்த முடியும். இவைகள் பிணக்குத் தீர்வுகளுக்கான நீதிமுறையின் சுதேசிய, கலாசார, சமய மரபுகள் மற்றும் கருத்தொருமிப்பு அணுகு முறைகளாகும்.
குடும்பங்களில் திரும்பிச் செய்கின்ற கடப்பாடுகள் உள்ளன. இவை சிறுவர்களின் உரிமை, முதியோர்களின் தேவைகள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு உதவுகின்ற மனப்பாங்குகளையும் விழுமியங்களையும் உருவாக்குகின்றன. இத்தகைய அணுகுமுறையானது சட்டத்தில் உள்ளதைவிட மிகவும் காத்திரமான சமூக உரிமைகளைப் பாதுகாக்கின்றன. சட்டமானது இவற்றை அரசுக்கு எதிரான தனிநபரின் கோரிக்கைகள் என்ற அடிப்படையிலேயே நோக்குகின்றன. இந்து-பெளத்த நீதிக் கோட்பாட்டின்
88

மையக் கருத்துக்களான 'தர்மம்' போன்ற எண்ணக்கருக்கள் மக்களின் அன்பையும் விசுவாசத்தையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனில் ஆட்சியாளர்கள் மீறக்கூடாத எல்லைகள் குறித்து விளக்குகின்றன.
இக்கோட்பாடானது தமிழ் மற்றும் சிங்கள பெளத்த மரபுகளில் உவந்தேற்றுக் கொள்ளப்படும் சிலப்பதிகாரத்தில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் வீர காவியத்தின் நாயகியான கண்ணகி இலங்கையின் நான்கு காவற் தெய்வங்களில் ஒன்றாக உருமாற்றம் பெறுகிறாள். சிலப்பதிகாரத்துக்கான விளக்கக் குறிப்புகளில் இலங்கையின் கஜபாகு மன்னன் இலங்கையில் பத்தினிக்குக் கோவில் கட்டியதோடு அவள் நினைவாக வருடாந்த விழாவினையும் பிரகடனப்படுத்தினான் எனக் கூறப்பட்டுள்ளது. சமண முனிவரான இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்துக்கு பல்வேறு விளக்கவுரைகள் உள்ளன. இக்காவியத்தின் நாயகனான கோவலன் அரசியின் காற்சிலம் பைத் திருடியதாக அரண்மனைப் பொற் கொல்லனால் அநியாயமாகக் குற்றம் சாட்டப்படுகிறான். அரசியைச் சமாதானப்படுத்தும் நோக்குடன் அரசன் வழக்கை விசாரிக்காமல் நீதியை மீறி கோவலனை சிரச்சேதம் செய்யுமாறு ஆணையிடுகிறான். ஆத்திரமுற்ற கண்ணகி அரச சபைக்கு வந்து அரசனைக் கொலைகாரன் எனக் குற்றம் சுமத்தி தனது சிலம்பை உடைத்து தனது குற்றத்தை நிரூபிக்கிறாள். கண்ணகியின் காற் சிலம்பினுள் பவளமும் அரசியின் சிலம்பில் முத்தும் பதிக்கப்பட்டிருந்தன. அரசன் குற்றத்தை ஏற்று உயிர் துறக்க அரசியும் அவனுடன் மரணத்தில் இணைகிறாள். கண்ணகி மதுரையைச் சபித்து தனது இடது முலையை அறுத்தெறிகிறாள். மதுரை பற்றி எரிகிறது. எனவே இந்த வீர காவியமானது அரசன் ஒரு பாதுகாவலன் எனும் கருத்தை வலியுறுத்துகிறது. இதன்படி நீதி பிழைத்தால் அரசனும்கூட தப்பிக்க முடியாது. அவனது குடிமக்களில் மிகவும் எளியோரும்கூட அவனைக் கேள்வி கேட்க முடியும்.
பாணி டியன் நெடுஞ்செழியன் தான் நீதி பிழைத்ததை ஒத்துக்கொள்கிறான். அவன் பின்வருமாறு புலம்புகிறான்.
பொன்செய் கொல்லன் றண்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் மண்பதை காக்கும் தென் புலங்காவல் என் முதற் பிழைத்தது கெடுக வென் னாயுளென மன்னவன் மயங்கி விழ்ந் தணனே
அரசனும் சட்டவாட்சியும் என்ற இதே கருத்து மணிமேகலையிலும் போற்றப்படுகிறது. அங்கு பின்வருமாறு கூறப்படுகின்றது.
கோனிலை திரிந்திடின் கோனிலை திரியும் கோனிலை திரிந்திடின் மாரிவறங் கூறும்
89

Page 50
மாரிவறங் கூறின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்னாள் வேந்தன் .
தன்னுயிர் - என்னும் தகுதியின்றாகும்
(ഥങ്ങിഥക്കുഖ)
மேற்படி உதாரணங்கள் அரசனுக்கும் அவனது குடிமக்களுக்கும் இடையிலுள்ள நெருக்கமான பிணைப்பை வலியுறுத்துகின்றன. அதுமட்டுமல்லாது சட்டவாட்சி (rule oflaw) என்பது மண்ணுலகத்துக்கு மட்டுமல்லாது, பிரபஞ்ச ஒழுங்கிற்கும் முக்கியமானது எனவும் குறிப்பிடப்படுகிறது.
IV
முடிவுரை
இனத்துவப் பிணக்கானது மனித உரிமைகள், சமூக நீதி, யாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பற்றிய அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைக்கிறது. இனத்துவப் பிரச்சினைகளின் உலகளாவிய தன்மை மற்றும் சிக்கற் தன்மை பற்றிய விளக்கம் வளர்ந்து வருவதன் காரணமாக பிணக்குகளை முகாமைத்துவம் செய்வதற்கு பொருத்தமான உபாயங்கள், வேலைத் திட்டங்கள், அமைப்புக்கள் பற்றிய கூட்டுச் செயற்பாடுகளில் அழுத்தம் தரப்படுகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பெறவும் பன்மைத்துவ பல்லின சமூகங்களுக்கான அடிப்படைகளை வழங்கவும் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யாப்பு சார்ந்த அனுபவமானது பின்வரும் பரந்த முடிவுகளுக்கு எம்மை இட்டுச்செல்கிறது.
முதலாவதாக யாப்புவாதம் மற்றும் சர்வதேச மனித உரிமைகளின் நீதிமுறை பற்றிய உரையாடலானது பல சவால்களுக்கு ஆக்கபூர்வமாகப் பதிலிறுக்க வேண்டியுள்ளது. இச் சவால்கள் தேசத்தை மாத்திரமல்ல யாப்பு முறைமையின் அடிப்படைகளையே தகர்க்கின்றன. இவ்விடயங்கள் தேசம் மற்றும் தேசிய இறைமை பற்றிய எண்ணக்கருக்களை மீள் மதிப்பீடு செய்ய வற்புறுத்துகின்றன. 'ஜேம்ஸ் ரீயூலி (James Tully) என்பவர் ‘சுதந்திர தேசத்தின் நியாயமானது முதன்மைநிலை கொண்டிருப்பதாகவும் அதன் காரணமாக சம கால யாப்புவாதம் பற்றிய அடிப்படை எண்ணக்கருக்களை அதற்கு உடன்பாடான முறையில் வரையறுக்க வேண்டும் எனவும் கூறுகிறார். மக்கள், மக்களின் இறைமை, பிரசாவுரிமை, ஐக்கியம், சமத்துவம், அங்கீகாரம், சனநாயகம் ஆகிய எண்ணக்கருக்கள் ஒரு மத்திய மயப்படுத்தப்பட்ட தனித்துவமான சட்ட முறைமையையும் அரசியல் நிறுவனங்களையும் கொண்டுள்ள தேசத்தின் ஓரினத் தன்மையை வலியுறுத்துகின்றன. அரசியற் பாடப் புத்தகங்களில் ஆழ்ந்து போயுள்ள ஒற்றையாட்சி முறைமை என்பது ஒரு பல்லின சமூகத்தில் ஓரின அரசினை வற்புறுத்துகின்ற அறிவுபூர்வமற்ற
90

முரண்பாடுகளுக்கே வழிவகுக்கின்றது. அரசு என்பதன் வரைவிலக்கணமானது நாட்டின் இனத்துவப் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்க வேண்டும். அத்துடன் அரசு என்பது இனரீதியாகவும் தெளிவான பிராந்தியங்களை அல்லது பல தெளிவான தேசிய இனங்களைக் கொண்டுள்ள ஒரு மொத்தத் திரட்சி என்பது ஏற்றுக்கொள்ளப்படவும் வேண்டும்.
பல ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் யாப்பு வாதமானது மிகவும் நலிந்தும் உறுதியற்றும் காணப்படுகின்றது. குறிப்பாக தென்னாசியாவில் தேசத்தின் இயல்பை மீள் வரையறைப்படுத்துதல் பல்வேறு இனத்துவ சாதிக் குழுக்களிடையிலான உறவுநிலை தொடர்பாக பாரிய எழுச்சி காணப்படுகிறது. அரசியல் அதிகார மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை குழுக்களுக்கிடையிலான நெருக்கடி தீர்வுக்கான சட்டகத்தைத் தருகிறது. இச் சட்டகமானது தொடர்ந்திருக்க முடியவில்லை. அத்துடன் இந்த அரசியற் கட்டுமானத்தின் மூலமாக இருந்த பல எண்ணக்கருக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் சமயம், இனத்துவம், சாதி ஆகியவற்றால் பிரிந்திருக்கும் பல்வேறு சமூகங்களின் சமநிலையானது சமஷ்டி, மதச்சார்பின்மை, உடன்பாடான சமத்துவம் (affirmative equality) முதலான எண்ணக்கருக்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்விடயங்கள் தொடர்பான அரசியற் கருத்தொருமிப்பு சீக்கிரமே தேய்ந்துபோய்விட்டது. மாற்று ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால் சமூகக் கிளர்ச்சிகள் ஏற்படுத்தப்பட்டன. மதச்சார்பின்மைக் கொள்கைகள் தொடர்பான அரசின் அர்ப்பணிப்பையும் மறுமலர்ச்சி மற்றும் அடிப்படைவாத சக்திகள் கொச்சைப்படுத்துகின்றன. பல்வேறு மதப் பிரச்சினைக்கு மத்தியில் அரசின் நடுநிலை பற்றி கேள்வி எழுப்பப்படுகிறது. மாறாக எழுச்சி கொண்டுள்ள பெரும்பான்மையினரின் மத நம்பிக்கைகள், நிறுவனங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. இப்பிரச்சினைகளுக்கு இறுதியான முடிவு என்று எதுவுமில்லை என்பது இன்று வெகுவாக உணரப்படுகிறது. இனங்கள், குழுக்களுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்ப்பதற்கு தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படுகின்ற, மீள் நிர்மாணம் செய்யப்படுகின்ற சமூக ஏற்பாடுகள் அவசியம் என்பது உணரப்படுகிறது. இது பற்றி ‘ஜேம்ஸ் ரீயூலி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “ஒரு யாப்பு என்பது முடிவுற்ற ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளுமாகும். இவை கடந்த காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களல்ல; மாறாக காலத்துக்குக் காலம் கலாசாரங்களுக்கு இடையிலான உரையாடல்களால் உருவாக்கப்பட்டவை. ஓர் இலட்சிய பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை அல்லது தாராண்மைவாத, தேசியவாத யாப்புவாதத்துக்கான ஓர் வியப்புக்குரிய சமூக ஒற்றுமை’.
மூன்றாவதாக யாப்பு வழங்கும் உறுதிமொழிக்கும் நடைமுறைக்கும் உள்ள வேற்றுமை மிகவும் தெளிவாகத் தெரிவது இந்து சிறுபான்மையின பாதுகாப்பு விடயத்தில்தான். சிறுபான்மையின பாதுகாப்பு ஏற்பாடுகள் யாப்பில்
9世。

Page 51
தெட்டத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும்கூட அவை உண்மையில் காத்திரமாக அமுலாக்கப்படவில்லை. இலங்கையில் மொழி உரிமை தொடர்பாக யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் உண்மையில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. இவை கடந்த இருபது ஆண்டுகளாக யாப்பின் பகுதிகளாக உள்ளன. இந்தியாவிலும்கூட மதச்சார்பின்மை, சம அந்தஸ்த்து, சமவாய்ப்பு, தனிநபரின் கெளரவத்தைப் பாதுகாத்தல் முதலிய அடிப்படை யாப்பு விழுமியங்களை நடைமுறைப்படுத்தத் தவறியதன் காரணமாக இனப்படுகொலை, கூட்டு வன்முறை போன்றவை பாரதூரமாக அதிகரித்துள்ளன. நெருக்கடி நிலைமைகளின்போது சட்டவாட்சி சிதைந்து போவதுதான் இனத்துவ சிறுபான்மையினரின் அடிப்படை மனத்தாங்கல்களில் ஒன்றாக உள்ளது. கூட்டு வன்முறையினால் சிறுபான்மையினர் பாதிக்கப்படும்போது சட்டத்தின் அரவணைப்பு அவர்களைத் தழுவத் தவறிவிடுகிறது. எனவே யாப்புவாதம் மாத்திரம் இனத்துவப் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஒரு சஞ்சீவியாகிவிட மாட்டாது. யாப்பு நியமங்கள், அமைப்புக்கள், செயன்முறைகள் ஆகியவற்றுடன் யாப்பு நடைமுறைகள் பொருத்துமுறுவதை உறுதிப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டால் மாத்திரமே இது சாத்தியப்படும்.
நான்காவதாக, இத்தகைய சூழ்நிலைகளில்தான் விழுமியங்களை உருவாக்குவதில் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. தென்னாசியாவில் பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளுடனான ஆக்கபூர்வமான இடைவினையாற்றுதலில் மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் சமூக செயற்பாட்டு அமைப்புக்களுடாக பொதுமக்கள் பங்குபற்றுகின்றனர். இந்த இடைத்தொடர்புகளானது யாப்பு நிகழ்வுகள் மற்றும் யாப்பு உரையாடலின் தன்மைக்கு புதிய அர்த்தங்களைக கற்பித்துள்ளன. இந்தியாவில் ஓரளவு இந்தச் செயன்முறையின் காரணமாகவே அடிப்படை உரிமைகளை நடை முறைப்படுத்துவதில் சமூக-பொருளாதார உரிம்ைகளுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. எனவே யாப்பில் புத்தாக்கத்தைக் கொண்டு வருவது சட்ட அறிஞர்கள் அல்லது கட்சித் தலைவர்களின் தனியுரிமை என்னும் கருத்து இன்று மதிப்பிழந்துவிட்டது. யாப்புசார் நீதிமுறையின் பரிமாணங்களை விஸ்தரிப்பதிலும், இனத்துவம் முன்வைக்கும் அறைகூவல்களுக்குத் பதிலிறுப்பதிலும் சிவில் சமூகத்தின் சகல அங்கங்களும் பங்குபற்ற முடியும்.
92

தென்னாசியாவில் சகிப்புத்தன்மை, சனநாயகம் மற்றும் மனித உரிமைகள
தென்னாசியா கடந்த சில வருடங்களாக மாபெரும் அரசியல் மாற்றங்களைக் கணி டுவிட்டது. பாகிஸ்தானில் சனாதிபதி வரியா-உல்-ஹக் கின், படுகொலையைத் தொடர்ந்து போட்டி முறையான தேர்தல் செயன்முறைகளின் கீழான சனநாயகத் தேர்தல்கள் 1988 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்டு மக்கள், அரசாங்கம் நிறுவப்பட்டது. பங்களாதேஷில் சனநாயகத்துக்குச் சார்பான, இயக்கங்கள் காரணமாக இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டு அதனுடைய அனுசரணையுடன் நியாயபூர்வமான தேர்தல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்தல்கள் காரணமாக இராணுவ அரசு நீக்கப்பட்டு அதனிடத்தில் சனநாயக அரசாங்கம் நிறுவப்பட்டது. அத்துடன் பங்களாதேஷில் பாராளுமன்ற அரசாங்கம் அமைய வழி ஏற்பட்டது. நேபாளமும் இவ்வாறானதொரு அரசியல் மாற்றத்துக்கு உள்ளானது. அங்கு ஒரு யாப்பு முடியாட்சியின்கீழ் பல் கட்சி அரசு அமைக்கப்பட்டது. தென்னாசியாவின் மத்தியில் இந்தியாவானது பிரதிநிதித்துவ நிறுவனங்களின் நீண்டகால மரபைக் கொண்டதொரு சமஷ்டி அரசாக நிலைத்துள்ளதுடன் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்ற சமய அடிப்படைவாதம் மற்றும் பிரிவினைவாத சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. இலங்கையும்கூட பல்கட்சித் தேர்தல்களைத் தொடர்ந்து நடத்தி பிரதான அரசியற் கட்சிகளிடையே அதிகாரம் கைமாற வழிவகுத்துள்ளது. இடையில் இரு ஆயுதக் கிளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் சமூகம் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. எனவே தென்னாசிய சமூகமானது அசாதாரணமான புவியியல், அரசியல், சமூக பொருளாதார பன்மைத்துவத்தைக் கொண்டுள்ளது. இவ்வாறான பன்மைத்துவமும், சிக்கலான தன்மையையும் கொண்டிருந்த போதும் கூட அதன் மக்கள் ஒழுங்கான தேர்தல்கள், பிரதிநிதித்துவ நிறுவனங்கள், அடிப்படை உரிமைகள், சனநாயக சுதந்திரங்கள் ஆகியவற்றுக்குக் கருத்தியல் ரீதியாகத் தம்மை அர்ப்பணித்துள்ளனர். எனவே யாப்பு பரிசோதனைகள், நிறுவன மீள் மதிப்பீடு மற்றும் புத்துயிர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பிராந்தியம் முக்கியத்துவம் பெறுகிறது. இப்பிராந்தியத்தின் அரசியல் மற்றும் அறிவார்ந்த செயற்பாடுகளில் யாப்புவாதம், சனநாயக மாறுநிலை, அரசியல் வகைகூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவை மையநிலையைக் கொண்டுள்ளன. நேபாளம் மக்களின் இறைமை, பல்கட்சி அரசு, நடைமுறைப்படுத்தக்கூடிய
93

Page 52
அடிப்படை உரிமை என்னும் பின்னணியில் புதியதொரு அரசியல் யாப்பினை ஏற்றுக்கொண்டுள்ளது. பங்களாதேஷ் தனது அரசியல் அதிகாரத்தை சனாதிபதியிடமிருந்து பாராளுமன்றத்துக்கு மாற்றிக்கொண்டுவிட்டது. எனினும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகியவற்றுக்கிடையிலான சனநாயக வடிவம் பற்றிய அக்கறையானது தேய்ந்து வருகிறது. இந்தியாவில் மதச்சார்பின்மை’ மற்றும் சமஷ்டி வடிவமானது மறுமலர்ச்சியாளர்கள் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களின் அறைகூவல்களுக்கு முகம் கொடுத்துள்ளது. பாகிஸ்தான் வெஸ்ட் மினிஸ்டர் மாதிரியிலான அரசியல் யாப்புக்கும், மத்தியப்படுத்தப்பட்ட சனாதிபதி முறைமைக்குமிடையில் இணக்கம் காண்பதற்கு சிரமப்படுகிறது. இலங்கையின் புதிய யாப்பு பரிசோதனையின் மத்தியில் உள்ளது. தற்போதய யாப்பு நீக்கப்பட்டு புதியதொரு யாப்பு உருவாக்கப்பட வேண்டிய நிலைமை பரிசீலிக்கப்படுகிறது. இம் முயற்சியானது ஒரு சமஷ்டி வடிவிலான அதிகாரப் பரவலாக்கத்தை நிறுவன மயப்படுத்தவும் திரும்பவும் பாராளுமன்ற முறைமைக்கு மாற்றவும் தற்போதய உரிமைகள் மனுவையும், சனநாயகப் பரிகாரங்களையும் வலுப்படுத்த வேண்டியுள்ளது.
சனநாயக மாறுநிலை செயண் முறை, அரசியல் சனநாயக வகைகூறலுக்கான அமைப்புக்களை வகைப்படுத்தல் ஆகியவற்றில் சட்டத்தரணிகளுக்குள்ள வகிபங்கினை ஆய்வு செய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். தேர்தல் செயன்முறைகளின் கண்ணியத்தை உறுதிப்படுத்தல், வாக்குச்சீட்டின் புனிதத்துவத்தைக் காப்பாற்றுதல் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் சட்டவாண்மைத் தொழிலின் பங்கு பற்றி இக்கட்டுரை ஆய்வு செய்யும். சனநாயக முறையான ஆட்சி தேர்தற் தொகுதியின் விருப்பிலிருந்தே தனது சட்டபூர்வத் தன்மையைப் பெறுகிறது. தேர்தற் சட்டங்களும் நடைமுறைகளும் மறுபுறத்தில் தேர்தல் என்பது மக்களின் விருப்பத்தின் உண்மையான கருத்து வெளிப்பாடு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பல நாடுகளில் சனநாயகம் என்பது காலத்துக்குக் காலம் நடைபெறுகின்ற தேர்தல்களில் பங்குபற்றும் வாய்ப்புடன் நின்றுவிடுகின்றது. தேசிய தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையில் மக்கள் பங்குகொள்ள இந்நாடுகளில் ஒரு சில அமைப்புக்களே உள்ளன. எனவே இக் கட்டுரையானது சட்டவாக்கச் செயன்முறையில் பொதுமக்கள் ஈடுபடுவதிலுள்ள பிரச்சினைகள், சவால்கள் ஆகியவற்றையும், சீர்கேடான நிருவாகத்தை மீளாய்வு செய்வதையும் ஆய்வு செய்கிறது. அரசியற் பன்மைத்துவத்தை அதாவது சிவில் சமூகத்தையும் அரசுக்கு வெளியே சேர்ந்து வாழ்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் சட்டத்தரணிகளின் பங்கு பற்றி ஆய்வு செய்வோம்.
தேர்தல் செயன்முறையின் கெளரவம்
‘சார்க் அரசுசாரா அவதானிகள் குழு குறிப்பிட்டது போன்று தேர்தல்கள்தான் மிகவும் வெளிப்படையான, அடையாளமான அரசியற் பங்குபற்றலாகும்.
94

காத்திரமான பங்குபற்றலை அடைய வேண்டுமெனில் காலக்கிரமமாக நேர்மையும், நியாயமும், சுதந்திரமும் கொண்ட தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். வாக்களிக்கும் உரிமையானது மக்களின் இறைமையினது ஒன்றிணைக்கப்பட்ட கூறும், அடிப்படை மனித உரிமையுமாகும். அதன்மீதுதான் ஏனைய சிவில், அரசியல் உரிமைகள் தங்கியுள்ளன என சில ஆசிய யாப்புக்கள் கூறுகின்றன. சில அரசியல் விமர்சகர்களும்கூட இதனை வலியுறுத்துகின்றனர்.
நேர்மையான, சுதந்திரமான தேர்தல்களை மதிப்பீடு செய்யும் பிரமாணம் உள்ளடக்கமும் நடைமுறையுமாகும். வாக்களித்தல், எண்ணுதல், பெறுபேறுகளை வெளியிடுதல் ஆகியவைகளே நடைமுறைகளாகும். தேர்தல் நடக்கும் சூழல், நியமனம் தாக்கல் செய்யப்பட்ட முறை, தேர்தற் பிரசாரம் நடத்தப்பட்ட முறை, வாக்களிக்கும் தகைமையை நிர்ணயித்தல் மற்றும் தேர்தல் நிருவாகம் ஆகியவையே தேர்தல் உள்ளடக்கமாகும். தேர்தல் நடத்தப்படும் முறை மற்றும் அது நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான சட்ட முறைமையை உருவாக்குவதில் சட்டவாண்மையினர் பெரிதும் பணியாற்றியுள்ளனர்.
தென்னாசிய சூழ்நிலையில் மிகவும் முக்கியமான விடயம் தேர்தலை நடாத்தும் அரசாங்கம் அதனை ஒருநிலை நின்று தவறாது நியாயமாக நடத்துகிறதா என்பதை உறுதிப்படுத்துவதாகும். எதேச்சாதிகார அல்லது இராணுவ ஆட்சி முறையிலிருந்து, பங்குபற்றும் சனநாயக முறைக்கு மாறுகின்ற அரசுகளில் இது மிகவும் முக்கியமான விடயமாகும். பங்களாதேஷில் சனநாயக இயக்கங்கள் ஓர் இடைக்கால அரசை நிறுவுவதில் வெற்றி பெற்றன. முன்னாள் பிரதம நீதிபதியைத் தலைவராகக் கொண்டமைந்த இந்த அரசாங்கத்தில் நடுநிலையான அரச ஊழியர்கள் அங்கம் வகித்தனர். இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு தேர்தலை நடத்துவதும் சர்வதேச, உள்ளுர் அவதானிகள் தேர்தல் செயன்முறையை அவதானிப்பதற்கு அவர்களை அழைப்பதுமாகும். இதேபோல நேபாளத்தில் பிரதம மந்திரி கே. பட்டாறையின் (K. Bhattarai) தலைமையில் அமைந்த இடைக்கால அரசாங்கத்தில் நேபாளிக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுதந்திரக் குழுக்கள் அங்கத்துவம் வகித்தன. இந்த இடைக்கால அரசாங்கமானது புதியதொரு யாப்பு உருவாக்கப்பட்டதையும், பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டதையும் மேற்பார்வை செய்தது. பாகிஸ்தானில் மொயின் குறேசியின்’ (Moin Qureshi) காபந்து அரசாங்கம் பொதுவாக பலரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நடந்து கொண்டது. தேர்தலை நடத்துவதற்கு அவரால் செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்து முறைப்பாடுகள் எழவில்லை. சகல தேர்தல்களையும் காபந்து அரசாங்கமும் பிரதான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மேற்பார்வை செய்ய வேண்டும் என்பது எந்த அளவுக்கு சட்டரீதியானது என்பதில் பிரச்சினைகள் எனவே செய்கின்றன. இன்று பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு இதுவே காரணமாகும்.
95

Page 53
அங்கு எதிர்க்கட்சிகள் பல்கட்சி காபந்து அரசாங்கத்தின் தலைமையின் கீழ் தேர்தல்கள் நடைபெற வேண்டுமெனக் கோருகின்றன. தேர்தல்களின் நயாயபூர்வத் தன்மை குறித்த வேறு அம்சங்கள் சிலவும் உள்ளன: (அ) திருத்தியமைக்கப்பட்ட தேர்தல் இடாப்பு. இதன்மூலம் பலமுறை வாக்களிப்பதைத் தடுக்க முடிவதோடு தகுதியுள்ள வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பதையும் தவிர்க்க முடியும். வன்முறை, பயமுறுத்தல், தேவையற்ற செல்வாக்கு, லஞ்சம் ஆகியவையும் காலங்காமாக தேர்தல்களைச் சிறுமைப்படுத்தி வந்துள்ளன. அரசியற் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் சட்டவரம்புக்குள் சுதந்திரமாகக் கூட்டங்களை நடாத்தவும், தேர்தல் பிரசுரங்களை விநியோகிக்கவும், பிரசாரம் செய்யவும் வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இலத்திரனியல் ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சமத்துவம் குறித்து ஏற்கனவே விவாதம் எழுந்துள்ளது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அரச ஊடகம் அரசுக்கு கூடிய அனுகூலங்களை வழங்கக் கூடாது என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். பொதுப் போக்குவரத்து, அரச வாகனங்கள், உலங்கு வானூர்திகள், பொது மைதானம் முதலியவற்றைப் பயன்படுத்துவதில் சமத்துவம் பேணப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் குரல் எழுப்பப்பட்டுள்ளது. தேர்தற் கூட்டங்களையும் நடைமுறைகளையும் அமுலபடுத்துவதில் தேர்தல் ஆணையாளர், பொலிஸ் மற்றும் அதிகாரக் கட்டமைப்பு நடுநிலையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
தென்னாசியாவின் சட்டத் தொழிலில் முக்கியமான அபிவிருத்தியில் ஒன்று தென்னாசியாவில் தேர்தல்களை அவதானிப்பதில் சிவில் சமூக நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பாகும். கடந்த ஆறு வருடங்களில் CIRC அரசுசாரா நிறுவனங்களின் குழுக்கள் 1988, 1990 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் தேர்தல்களையும், 1988 ஆம் ஆண்டு இலங்கை சனாதிபதித் தேர்தலையும், 1991 ஆம் ஆண்டு பங்களாதேஷ் தேர்தலையும், 1991 ஆம் ஆண்டு நேபாள பாராளுமன்றத் தேர்தலையும், 1991 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தலையும் அவதானித்துள்ளன. இதில் எதிர்பாராத விளைவு என்னவெனில் அரசாங்கங்கள் தேர்தற் கண்காணிப்பு முயற்சிகளை மத்தியமாக்கி விடுகின்றன. குறிப்பாக இலங்கையிலும் நேபாளத்திலும் இது நடந்தேறியது. இந்நாடுகளில் அரசாங்கமும் தேர்தல் ஆணையாளரும் சர்வதேச கண்காணிப்பாளர் குழுக்களை அமைத்துள்ளதுடன் அவர்கள் தேர்தல்களைக் கண்காணிப்பதற்கு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். தேர்தலை நடத்தும் அதிகார சபையே அவதானிப்புக்களை இணைப்பாக்கம் செய்யவும் அதனுடைய நியாயத்தன்மையை மதிப்பீடு செய்யவும் அமைக்கப்படுதல் பிரச்சினைக்குரிய விடயமாகும். பிராந்திய சர்வதேசிய அவதானிப்பு நடவடிக்கைகள் அவை சுதந்திரமான அரசாங்கம் சார்ந்த அல்லது அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்புக்களால் அரசினது வளங்களையும் வசதிகளையும் பயன்படுத்தப்படாமல் செய்யும்போதே
96

நம்பக்கூடியதாக இருக்கும். இந்த செயற்பாடுகள் தேர்தற் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான சீர்திருத்தங்கள் மீது கவனத்தை ஈர்த்துள்ளன. உதாரணமாக கடந்த தேர்தலுக்கு முன்னரான பாகிஸ்தானிய இடைக்கால அரசாங்கம் தேர்தல் தகைமையீனம் எனும் புதியதொரு எண்ணக்கருவை அறிமுகம் செய்தது. தமது வங்கிக் கடன் விபரங்களைக் காட்டத் தவறுகின்ற தனிநபர்கள் தேர்தலில் போட்டியிடுவது தகைமையீனமாகக் கருதப்படும். இந்தியத் தேர்தல் ஆணையாளர் இதேபோல இனவாதக் கட்சிகளைத் தேர்தற் செயன்முறைகளில் இருந்து தடைசெய்துள்ளார். அதேபோல முதன் மந்திரிகளும் ஏனைய அதிகாரம் மிக்கவர்களும் அரச வசதிகளைப் பயன்படுத்துவதில் நியாயமற்ற தேர்தல் அனுகூலங்களை அனுபவிக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதிநிதித்துவத்துக்கு அப்பால் பங்குபற்றுதல்
பெரும்பாலான தென்னாசிய நாடுகளில் சட்டச் சீர்திருத்த செயன்முறையானது அரசுசாரா நிறுவனங்களும் தொழில்வாண்மை அமைப்புக்களும் ஏனைய அக்கறையுள்ள பொதுமக்களும் சட்டவாக்க செயன்முறையில் தொடர்ச்சியாகப் பங்குபற்ற வாய்ப்பளிக்கவில்லை. எனினும் சட்ட ஆணைக் குழு அமைக்கப்பட்டது ஒரு புத்தாக்கம் ஆகும். இந்த ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்ற நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் சட்டத்தின் பல கிளைகளையும் ஆய்வு செய்து சீர்திருத்தத்துக்கான விதந்துரைகளை முன்வைக்கின்றனர். இலங்கையில் சட்ட ஆணைக்குழுவானது ஒரு சுதந்திரமான அமைப்பாகும். இவ் ஆணைக்குழு பாராளுமன்றத்துக்கு நேரடியாகவே விதந்துரைகளை முன்வைக்க முடியும். இந்தச் செயன்முறையில் ஆணைக் குழுவானது பொதுமக்களுடனும் ஆர்வமுள்ள குழுக்கள், தனிநபர்களுடனும் பரந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. சட்ட ஆணைக்குழுவில் ஆரம்பத்தில் பகுதிநேர நபர்களே பணியாற்றினர். இவர்களால் சீர்திருத்தத்துக்கு மிகவும் அவசியமான நிலை பேண்தகு உள்ளிட்டை வழங்க முடியவில்லை. அத்துடன் ஆணைக்குழுவிற்கு ஆய்வாளர்களின் உதவியும் கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்திருப்பின் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் பற்றி பல்துறை ஆய்வுகளை மேற்கொண்டிருக்க முடியும். தெரிவுக்குழுக்களை அமைக்க தென்னாசிய சட்டசபைகளில் உள்ள ஏற்பாடுகள் காத்திரமானவை என நிரூபிக்கப்படவில்லை. இக்குழுக்களுக்கு சீர்திருத்த முன்மொழிவுகளை ஆராயவும் அவற்றின் நன்மை குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடவும் இவைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான தென்னாசிய சட்டசபைகளுக்கு பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு அவற்றின்
97

Page 54
நிலையியற் கட்டளைகள் அனுமதிப்பதில்லை. அக்கறையுள்ள அரசுசாரா நிறுவனங்களும் கல்விசார்ந்த மற்றும் தொழில் சார்ந்த குழுக்களும் சட்டவாக்கச் செயன்முறையில் தடையிட்டு அவற்றின் முன் ஒரு தொகையான அபிப்பிராயங்களை முன்வைக்கவும் கூடியதாக தலையீடு செய்வதற்கு அவை போதுமான அளவு ஒழுங்கு படுத்தப்பட்டு இருக்கவில்லை. பாராளுமன்ற நடைமுறைகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு அவசரமான தேவை உள்ளது. இச்செயன்முறைகள் அறிவுபூர்வமானதாகவும் எளிமையானதாகவும் இருக்க வேண்டும். சட்டவாக்க முன்மொழிவுகளின் அடிப்படையான சட்ட வரைபுகள், அறிக்கைகள் மற்றும் செயற்படு பத்திரங்கள் தொடர்பாக மக்களுக்கு அறியத்தருதல் வேண்டும். பதிவு செய்யப்பட்ட அரசுசாரா நிறுவனங்களும் ஏனைய குழுக்களும் சட்டவாக்கக் குழுக்களுக்கு எழுத்து மூலமான அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் அத்துடன் அவை சகலருக்கும் தெரிந்திருப்பதை உறுதிப்படுத்தவும் கூடியதான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சட்டசபைகளின் நிலையியற் குழுக்களும் திருத்தப்பட வேண்டும். இத்திருத்தமானது அக்கறையுள்ள குழுவினர் சட்டவாக்கக் குழுக்களுக்கு வாய்மொழி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் அத்தகைய அறிக்கைகள் பரவலாக பிரசித்தம் அடையவும் இந்தத் திருத்தங்கள் உதவி செய்ய வேண்டும். சட்டவாக்க நடைமுறைகளுக்கு பிரவேசிக்கக்கூடியதாக இலத்திரனியல் ஊடகங்களுக்கு வசதிகள் செய்யப்பட வேண்டும். பிரதிநிதித்துவ நிறுவனங்களில் சனநாயக வகைக் கூறல் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றல் ஆகியவற்றில் தொடர்புடைய இன்னொரு விடயம் அரசுசாரா நிறுவனங்கள் குறித்த சட்டம் மற்றும் கொள்கைச் சட்டகம் ஆகும். அரசுசாரா நிறுவனங்கள் குறித்த பல தென்னாசிய நாடுகள் கவனமும் கட்டுப்பாடும் கூடிய அணுகுமுறைகளை மேற்கொண்டுள்ளன. அரசுசாரா நிறுவனங்கள் பொதுவாக சந்தேகக் கண் கொண்டே நோக்கப்படுகினறன. இதன் காரணமாக அவற்றின் பதிவு, இயக்கம், நிதி நடவடிக்கைகள் தொடர்பாக மிகவும் கட்டுப்பாடான சட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பங்களாதேஷ், இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் அத்தகைய வரையறுக்கப்பட்ட சட்டவாக்கங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் அரசுசாரா நிறுவனங்கள் மீதான சனாதிபதி ஆணைக்குழு ஒரு முழுமையான திட்டத்தை விதந்துரைத்துள்ளது. இதன்படி நிறுவனங்களின் பதிவும் நிதிசார் அறிக்கைப்படுத்தலும் மிகவும் முக்கியமானது. மனித உரிமை அமைப்புக்கள், சூழல் குழுக்கள் மற்றும் மாற்று அபிவிருத்தி இலக்குகளை முன்மொழியும் சூழற் குழுக் களும் அரசின் அச்சுறுத்தலுக்கும் பல விதமான தொல்லைகளுக்கும் ஆளாகியுள்ளன. அரசுசாரா நிறுவனங்களின் சட்டம் மற்றும் யாப்புக் கட்டமைப்புகள் வலுவூட்டப்படல் வேண்டும். அரசின் தலையீடு இல்லாமல் அவை சுதந்திரமாக இயங்கவும் பணியாளரை நியமித்துக் கொள்ளவும் உள்வாரி, வெளிவாரி நிதியிட்டத்தைப் பெறவும் இந்த வலுவூட்டல் 'ஐக்கியமானது. இலங்கையைப் போன்ற நாடுகளில் சனநாயகம், யாப்பு
98

முறைமை ஆகியவை தொடர்பாக இலங்கை மக்கள் அக்கறை கொண்டுள்ளனர். அரசின் கிரமமான மீறல்கள் இதனைத் தடை செய்யவில்லை. தென்னாசியாவில் நகர மத்திய வகுப்பினர் வளம்மிக்க கூட்டு வாழ்க்கை வாழ்கின்றனர்.
இது ஏதேச்சாதிகாரமான அதிகாரத்துக்கு எதிரான ஓர் உறுதியான எதிர்ப்பினைக் கட்டியெழுப்பியுள்ளது. இந்த சங்கங்கள் பல்லினத் தன்மை கொண்டவை. அவை அரசியல் ரீதியான கருத்து முரண்பாட்டுக்கும் கூடிய அளவில் சிதறியமைந்துள்ள சிவில் உரிமை இயக்கத்துக்கும் ஓர் அடித்தளத்தை அமைத்துள்ளன. இவ்வாறான அரசுக்கு எதிரான இயக்கங்களும் சமூக இயக்கங்களும் சூழல் சார்ந்த, அபிவிருத்தி சார்ந்த மற்றும் மனித பிரச்சினைகளில் கிராமிய சமூகங்களை வெற்றிகரமாக ஒன்று திரட்டியுள்ளன. எனவே சனநாயக அபிவிருத்திக்கு ஒரு சுதந்திரமான சிவில் சமூகம் தோற்றம் பெறுவது மிகவும் முககியமானது. தொழில்சார் நல உரிமைச் சங்கங்கள், அபிவிருத்தி மற்றும் சூழலியல் அமைப்புக்கள் ஆகியவற்றை வரையறை செய்வதிலும் பாதுகாப்பதிலும் சட்டத்தரணிகள் மிகவும் முக்கியமான பங்கினை வகிக்கின்றனர்.
திறந்த தன்மை மற்றும் வகைகூறல் பிரச்சினைகள
நிறுவனமயப் படுத்தப்பட்டுள்ள பல்கட்சி முறைமையானது தேர்தல் செயன்முறையின் கெளரவத்தைக் காப்பாற்றுகிறதுடன் சட்டவாக்கச் செயன்முறையில் பொதுமக்கள் பங்குபற்றுவதை மேலும் வலுப்படுத்துகின்றது. எனினும் சனநாயக அபிவிருத்தியானது வகைகூறலின் இன்னும் காத்திரமான வடிவங்களை எதிர்பார்க்கின்றது. அரசியல் அதிகாரத்தின் பரவலான துஷ்பிரயோகம், ஊழல் மலிந்த நிர்வாகம் ஆகியனவற்றினைத் தடுப்பதற்கும் நிர்வாகத்தை திருத்துவதற்கும் புதிய சட்டங்களும், புதிய நிறுவனங்களும் தேவைப்படுகின்றன. இலங்கையில் ஊழல் சட்டம் (Bribery Act) சட்டப் புத்தகத்தில் நான்கு தசாப்பதங்களாக நிலைத்துள்ளது. எட்டு முறை திருத்தப்பட்டுள்ளது.
ஊழலானது அரசாங்க நிறுவனங்களின் மீதுள்ள பொதுமக்கள் நம்பிக்கையை படிப்படியாக அழிக்கிறது. பெரிய அளவில் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படும் போது அல்லது செய்பவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென்பதால் சனநாயக அமைப்புகள் மீது மக்களின் சந்தேகம் அதிகரிக்கிறது. மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலைமைகளில் அதிகார துஷ்பிரயோகமும் தனிநபர்களின் செல்வச் செழிப்பும் அருகருகே இருக்கும் போது அரசியல் முறைமையின் சட்டபூர்வத் தன்மை சிதைவடையத் தொடங்குகின்றது. சந்தைக்கும் தனியார் துறை அபிவிருத்திக்கும் முதன்மை தருகின்ற பொருளாதார அபிவிருத்தி மாதிரியானது உண்மையில் பேராசையை
99.

Page 55
அடிப்படையாகக் கொண்டதாகும். பாரிய தனியார் நிறுவனங்களுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் புரிந்துணர்வு இல்லாமல் பெரிய அளவிலான ஊழல் சாத்தியப்பட மாட்டாது. வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களினால் பாரிய தொகை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இலஞ்சமாகக் கொடுக்கப்படுகிறது. இலஞ்சம் என்பது மூன்றாம் உலக நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ள மேலதிகமான செலவினம் என கம்பனிகளும் நிபுணர்களும் எண்ணுகின்றனர்.
நாம் சீர்திருத்தங்களை மேற்கொள்ள எண்ணும் போது ஊழலை வெற்றிகரமாக ஒழித்துக் கட்டிய நாடுகளின் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றி சீர்திருத்தக் கடமைப்பட்டுள்ளோம். மிகவும் மேன்மை பொருந்திய மற்றும் கடினமான சட்டங்கள் மாத்திரம் ஊழலை ஒழிக்கப் போதுமானவை அல்ல என்பது இந்நாடுகளின் சிறந்த நடைமுறைகள் நமக்கு உணர்த்தும். இச்சட்டத்துக்கு சாதகமாக வேறு பல நீண்டகால, குறுங்கால ஏற்பாடுகளும் அவசியமானவை. இத்தகைய ஏற்பாடுகளில் முதன்மையானது கொள்வனவு மற்றும் ஒப்பந்தம் செய்ய நியமங்கள் ஆகியவை தொடர்பான சட்டங்களையும் நடைமுறைகளையும் மீளாய்வு செய்வதும் சீர்திருத்துவதுமாகும். நிதியிட்டம் செய்கின்ற நடைமுறைகள் மற்றும் கணக்காய்வு தேவைகள் தொடர்பாகவும் இந்த மீளாய்வு அவசியமானது. இந்த கொள்வனவு நடைமுறைகள் கூடுமானவரை தனியார் கம்பனிகள், பொதுக் கூட்டுத்தாபனங்கள் மற்றும தனியார் மயப்படுத்தப்பட்ட தொழிலாண்மை முயற்சிகள ஆகியவற்றிலும் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். திறந்த தன்மை, நியாயமான போட்டியை மேம்படுத்தல், குறிக்கோளை வெளிப்படுத்தல், நியாயமான தெரிவு, பிரமாணங்கள் மற்றும் பிரச்சினைத் தீர்வுக்கான பொறிமுறைகள் என்பவற்றின் அடிப்படையில் இந்தச் செயற்படுமுறைகள் மதிப்பிடப்பட வேண்டும். அத்துடன் சிவில் சேவை சீர்திருத்தம் தொடர்பான பிரச்சினைகளையும் நாம் கவனிக்க வேண்டும். இதன் மூலம் பணித்துறையின் வாண்மை, பண வருமானம், ஒழுக்க நியமங்கள், ஊக்கம் மற்றும் வகைகூறலை மேம்படுத்த முடியும். ஊழல் செய்யும் கூட்டுத்தாபனங்கள், கம்பனிகள் பற்றிய விபரங்களைப் பரிமாறிக் கொள்ள நிதி வழங்குநர்களும், நிதியைப் பெறும் நிறுவனங்களும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இத்தகைய நிறுவனங்களைப் பற்றிய விபரங்களைக் கொண்ட ஒரு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். இது ஊழலில் ஈடுபட நினைக்கும் கம்பனிகளுக்கு ஒரு பாடமாகவும் ஏனையவற்றுக்கு ஒரு தடையாகவும் அமையும். பொறியியலாளர், கட்டிடக் கலைஞர்கள், கணக்காளர்கள், சட்டத்தரணிகள் முதலான உயர் தொழில்களின் வாண்மை நியமங்களையும், ஒழுக்க தராதரங்களையும் திரும்பவும் திருத்தியமைக்க வேண்டும். இது ஊழல் நடவடிக்கைகளைத் தடுப்பதோடு நலன் முரண்பாடுகள் வரக்கூடிய சந்தர்ப்பத்தில் அவற்றைத் தடுத்துக் கொள்ளவும் முடியும். ‘சர்வதேச வெளிப்படைத்தன்மை (Transparency International) போன்ற சர்வதேசக் கண்காணிப்பு அமைப்புக்களுடன் நீதி அமைச்சர் தொடர்பு கொள்ளுதல் வேண்டும். இதைப் போன்ற கண்காணிப்பு அமைப்புகள்
00

தோன்றுவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் விடயங்களைத் தெரிந்து வைத்திருப்பதே அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கு எதிரான இறுதிப் பாதுகாப்பாகும்.
ஊழல் குற்றச்சாட்டுக்களின் விசாரணை அதிகார துஷ்பிரயோகம் பற்றிய புலனாய்வு ஆகியவை தொடர்பான அண்மைக்கால வரலாற்றில் நாம் சில எதிர்பார்க்கக் கூடிய சூழல் வட்டங்களைப் பார்த்துள்ளோம். 1970களின் ஆரம்பத்தில் இலஞ்சச் சட்டம் மிகவும் ஆர்வத்துடனும் உத்வேகத்துடனும் அமுல் செய்யப்பட்டதைப் பார்த்தோம். எனினும் உடனடியாகவே நடைமுறை வரம்பு மீறல்கள் பற்றி மக்கள் விளங்கிக் கொண்டனர். இதன் காரணமாக நீதி முறைச் செயன்முறையின் கண்ணியத்தில் மக்கள் நம்பிக்கை இழந்தனர். இக்கால கட்டத்தில், இலஞ்சம், வெளிநாட்டு செலாவணி மோசடி முதலான விசேட வழக்குகளில் சாதாரணமாக சாட்சியமளித்தல் மற்றும் செயற்பாட்டு முறைகளிலிருந்து விலகிச் செல்லும் போது நீதிமுறை பற்றிய பொதுவான பார்வையில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது. அத்துடன் நீதிமுறைச் செயன்முறையில் நியாயம் மற்றும் நேர்மையில் குறித்த பொதுமக்களின் புலக்காட்சியை அது பாதிக்கிறது. 1970களின் பிற்பகுதியில் விசாரணைச் சட்டத்தின் மீதான விசேட சனாதிபதி ஆணைக்குழு அதிகார துஷ்பிரயோகம் குறித்து மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்ட போது இதே போன்று பொதுமக்கள் அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்பட்டது. மக்களின் அக்கறையானது தெரிவு செய்யப்படட அதிகாரிகளின் வகைகூறல் பிரச்சினைகளிலிருந்து வெகுவேகமாக செயற்படுமுறைகளின் நியாயம் பற்றிய பிரச்சினைகளுக்கு மாறியது.
நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வினைத்திறன் மிக்க நிறுவனத்தை உருவாக்கும் இலக்கானது எமது நாட்டில் கடந்த பல தசாப்தங்களாக அடையப்படவே இல்லை. ஐம்பதுகளின் மத்திய பகுதியிலிருந்து இலங்கையின் பொதுச் சட்டம் குறித்து ஆய்வு செய்வோர் குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்) என்னும் பதவியை மிகவும் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளனர். இப் பதவியானது நியாயமற்ற நிர்வாக செயற்பாடுகளுக்கு எதிரான பொதுமக்களின் முறைப்பாடுகளைப் பெறவும் விசாரிக்கவும் 1809 இல் சுவீடனில் முதன்முதலாக அமைக்கப்பட்டது. 1909இல் பின்லாந்திலும், பின்னர் நியூசிலாந்து, நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகளிலும் இப்பதவி பொருத்தமான மாற்றங்களுடன் ஏற்படுத்தப்படடது. இத்தகைய நிறுவன புத்தாக்கத்தை பல வருடங்களாக எதிர்த்து வந்த ஐக்கிய இராச்சியமும் கூட 1967 இல் நிர்வாகத்துக்கான பராளுமன்ற ஆணையாளர் பதவியையும், 1974 இல் உள்ளுர் நிர்வாகத்துக்கான ஆணையாளர் பதவியையையும் ஏற்படுத்தியது. சீர்கேடான நிர்வாகத்தினால் விளையும் அநீதிகளுக்குப் பரிகாரம் காணவே இப்பதவிகள் ஏற்படுத்தப்பட்டன. எனினும் ஒம்புட்ஸ்மன் பதவியின் செயற்பாடு குறித்து எண்ணக்கரு சார்ந்த வேறுபாடு பிரிட்டனுக்கும் ஸ்கென்டிநேவியாவுக்கும் இடையில் உள்ளது. ஸ்கென்டிநேவிய
101

Page 56
மாதிரியில் இப்பதவியானது தற்போதுள்ள அரசியல் மற்றும் நிர்வாக அமைப்புக்களிலிருந்து சுதந்திரமாக இயங்குகிறது. ஆனால் பிரித்தானியாவில் இது பாராளுமன்றத்தின் ஒரு துணை அம்சமாகும். இப்பதவி குறித்த இலங்கையின் அனுபவமானது இவை இரண்டுக்கும் இடைப்படடது.
இலங்கையில் நிர்வாகச் சீர்கேட்டுக்கு எதிராக ஒரு சுதந்திரமான, நடுநிலையான, முறைசாராத ஒரு கண்காணிப்பு அமைப்பையே மக்கள் இப்பதவிநிலை மூலம் எதிர்பார்த்தனர். எனினும் 1981 இல் அமைக்கப்பட்ட இப்பதவியானது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமற் போனமைக்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, இப்பதவியானது தனிநபர் ஆளுமையை அடிப்படையாகக் கொண்டது. இப்பதவியை வகிக்கும் நபர் ஆளுமை, தொலைநோக்கு, நீதி, நியாயம் குறித்த விழுமியங்களின் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இப்பதவிக்கான நபரைத் தெரிவு செய்வதிலும் அதற்கான நிதி மற்றும் மனித வளங்களை வழங்குவதிலும் அரசாங்கம் அவ்வளவாகக் கரிசனை காட்டவில்லை. இரண்டாவதாக இப்பதவியைப் பற்றிய விளக்கமும் நம்பிக்கையும் பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவானது. இப்பதவியைப் பற்றி மக்களுக்கு அறிவுட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன் இப்பதவியைப் பற்றித் தெரிந்து வைத்துள்ளவர்கள் எதிர்மறையான அபிப்பிராயத்தையே கொண்டுள்ளனர். இது அடிப்படை உரிமைகள் விடயத்தில் மிகவும் பொருத்தமானது. ஏனெனில் கடந்த பல வருடங்களாக ஒம்புட்ஸ்மன் அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பான எந்தவொரு முறையீட்டையும் பெறவில்லை. மூன்றாவதாக ஒம்புட்ஸ்மன் பாராளுமன்ற - சனாதிபதி தொடர்பில் ஒரு தெளிவற்ற நிலையையே கொண்டுள்ளார். அவரது நியமனம் சனாதிபதியால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அவர் பாராளுமன்றத்துக்கே பொறுப்புள்ளவராக உள்ளார். இச்சட்டம் இப்போது திருத்தப்படுகிறது. இதன்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மனுக்கள் குழு ஆகியவற்றுடன் இவர் நெருக்கமான தொடர்புள்ளவராக இருப்பார். ஆனால் இந்த தொடர்பு யாதார்த்தமானதல்ல. ஐக்கிய இராச்சிய பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு ஒம்புட்ஸ்மன் விடயமாக வழங்கியுள்ளதைப் போன்ற ஒரு சட்ட ஏற்பாட்டினை பொதுமனுக்கள் குழு வழங்கவில்லை. இதனால் பாராளுமன்றத்துக்குள்ள அதிகாரம் ஒம்புட்ஸ்மனுக்கு சக்தி அளிப்பதற்கு ஏற்ற வண்ணம் அவருக்கு விரிவுபடுத்தப்படவில்லை. அத்துடன் பாராளுமன்ற ஆணையாளரின் அறிக்கைகள் மற்றும் விதந்துரைகளுக்கு சட்டவாக்க ஈடுபாடு அவ்வளவாக இல்லை. இங்கு இன்னுமொரு விடயமும் குறிப்பிடத்தக்கது. அதாவது ஒவ்வொரு வருடமும் ஒம்புட்ஸ்மன் சனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் தனது பணிகள் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தெளிவாக குறிப்பிடப்பட்டிருப்பினும் இது வரை அத்தகைய இரண்டு அறிக்கைகள் மாத்திரமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. நான்காவதாக ஒம்புட்ஸ்மனின் நீதி பரிபாலனம் மற்றும் அதிகாரம் குறித்த ஒரு முக்கியமான அம்சம் நியாயமற்ற,
102

பாரபட்சமான, அடக்குமுறையான நிர்வாக நடைமுறைகள் பற்றியதாகும். இத்தகைய நடைமுறைகளை மீளாய்வு செய்வதில் இதுவரை ஒம்புட்ஸ்மன் அலுவலகம் குறிப்பிடத்தக்க தாக்கம் எதனையும் ஏற்படுத்தி விடவில்லை. சுவீடனில் ஒம்புட்ஸ்மனின் பணிகள் காரணமாக குற்றக் கோவை முறைமை சீர்திருத்தப்பட்டது. நியூசிலாந்தில் ஒம்புட்ஸ்மனின் விதந்துரை காரணமாகவே நிர்வாக முறைமையின் சீர்திருத்தத்தில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டது.
முடிவுரை
சனநாயம் தொடர்பாக தென்னாசியாவின் ஒவ்வொரு நாடும் வித்தியாசமான அனுபவங்களைக் கொண்டிருந்த போதிலும் இந்நாடுகளின் பொதுவான அனுபவங்கள் குறித்து சில பொதுவான பார்வைகளை முன்வைக்க முடியும். முதலாவதாக தென்னாசியாவில் கட்சிமுறை, பணித்துறை, நீதிமுறை, பத்திரிகை ஆகிய நிறுவனங்களின் பலமும், உயிரோட்டமும் ஓரளவு சர்வ சனவாக்குரிமை மற்றும் போட்டித்தன்மை கொண்ட அரசியல் செயன்முறை தொடர்பான எமது நீண்ட கால அனுபவம் காரணமாக ஏற்பட்டதாகும். இத்தகைய அரசியல் சனநாயக மரபானது சட்ட யாப்பு முறைமையை, கிளர்ச்சிகள், சதிகள், யாப்பு விழுமியங்களைக் கொச்சைப்படுத்தல் மற்றும் ஆட்சியாளர்களின் நிறுவனங்களிடமிருந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கு உதவியுள்ளது. எனினும் பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளும் இதிலிருந்து விதிவிலக்கானவை. இந்நாடுகளில் யாப்பு முறையின் தொடர்ச்சியானது இராணுவத்தின் பலாத்காரமான அதிகாரப் பறிப்பால் தடைப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. எனினும் இந்த நாடுகளிலும் கூட ஏதேச்சாதிகாரமான ஆட்சிக் காலத்துக்கு முன்னர் கட்டி எழுப்பப்பட்ட நிறுவன மரபுகளும், சட்ட, பணித்துறை கலாசாரமும் ஒரளவேனும் பேணப்பட்டதால் இன்று திரும்பவும் எதேச்சாதிகார அதிகாரத்திலிருந்து மாறுவதற்கு உதவியாக உள்ளது. ஒப்பீடடளவில் சனநாயக கலாசாரம் என்பது ஆபிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மற்றும் லத்தின் அமெரிக்க நாடுகளின் சில பகுதிகளில் மிகவும் பலவீனமாக உள்ளது.
இரண்டாவதாக, அரசியல் நிறுவனங்கள் மற்றும் செயன்முறைகள் பற்றி தென்னாசியாவில் ஒரு பாரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இங்கு காணப்படுகின்ற பல்வேறு சமய இனத்துவ, இனக் குழும, சாதிக் குழுக்களுக்கிடையே தொடர்புகளையும் மற்றும் அரசின் இயல்பையும் மீளவும் வரையறை செய்ய தொடர்ச்சியான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியல் அமைப்பும், அதிகார மாற்றமும் குழுக்களுக்கிடையிலான நெருக்கடிகளைக் குறைப்பதற்கு ஒரு சட்டகத்தை வழங்கியுள்ளது. எனினும் இச்சட்டகம் இன்று பொருத்தமற்றவைகளாகத் தோன்றுகின்றன. இச் சட்டகத்தின் மையக் குவிவாகவிருந்த எண்ணக்கருக்கள் இன்று நிராகரிக்கப்பட்டு
103

Page 57
விட்டன. இந்நிலையில் மதம், இனத்துவம், சாதி ஆகியவற்றால் வேறுபடுத்தப்பட்டிருந்த பல்வேறு சமூகங்களின் சமநிலையானது சமஷ்டி, மதச்சார்பின்மை மற்றும் உடன்பாடான சமத்துவம் ஆகியவற்றால் பேணப்பட்டது. எனினும் இந்த விடயங்களிலிருந்த அரசியல் கருத்தொருமிப்பு மாற்று ஏற்பாடுகளைக் காண முடியாததன் காரணமாக சீக்கிரமே சிதையத் தொடங்கி விட்டது. இதனால் சமூகக் கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. மறுமலர்ச்சியாளர்களும், அடிப்படைவாதிகளும் மதச்சார்பின்மை மீதான அரசின அர்ப்பணிப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. சமவாயங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், போட்டிகளுக்கு அரசு நடுநிலை வகித்து தீர்ப்பாளராகச் செயற்பட வேண்டும் என்ற கருத்து இன்று ஏற்கப்படுவதில்லை. மாறாக எழுச்சியுறுகின்ற பெரும்பான்மையினரின் சமய நம்பிக்கைகள் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகியனவற்றுக்கு சார்பாகவே அரசு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முற்று முழுதான தீர்வு இல்லை என்பது இன்று பெரிதும் உணரப்படுகிறது. இனங்களுக்கிடையில் மற்றும் குழுக்களுக்கிடையில் ஏற்படக்கூடிய பிணக்குகளுக்கு தீர்வு காண சமூகம் சார்ந்த ஏற்பாடுகளை திரும்பவும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவை நிரந்தரமாகவே உள்ளது. தென்கிழக்கு ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் குழுக்களுக்கிடையில் உள்ள அடிப்படை உறவுகள் மற்றும் அரசின் இயல்பு பற்றிய மீள் மதிப்பீடு நடந்த வண்ணம் உள்ளது. லத்தீன் அமெரிக்கா, கிழக்காசியா மற்றும் (தென்னாபிரிக்கா தவிர்ந்த) ஆபிரிக்காவில் யாப்பு மற்றும் சனநாயக மீள் நிர்மாண செயன்முறையில் குழுக்களுக்கிடையிலான பிணக்குகள் மிகவும் முக்கியமான இடம் வகிக்கின்றது எனக் கூறுவதற்கில்லை.
யாப்பு முறையையும் அது தொடர்பான வாதப்பிரதிவாதங்களையும் மீள் வரையறை செய்வதற்கு மக்கள் பங்கு பற்றலை இன்னும் விரிவாக்கும் தேவை உள்ளது. இதனை ஊடகவியலாளர், சட்டத்தரணிகள் ஆகியோருடன் ஆக்கபூர்வமான இடைத்தொடர்புகளைக் கொண்டுள்ள மனித உரிமைக் குழுக்கள், சமூக செயற்பாட்டு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாகவே சாதிக்க முடியும். இந்தியாவில் அடிப்படை உரிமைகளை அமுல்படுத்துவதில் சமூகபொருளாதார உரிமைகளை அழுத்திக் கூறுவது ஓரளவுக்கு இந்த செயன்முறையின் விளைவு என்றே கூறலாம். எனவே யாப்பு தொடர்பான புதிய கருத்துக்களும் புத்தாக்கங்களும் சட்ட அறிஞர்கள் அல்லது கட்சித் தலைவர்களின் தனியுரிமை என்பது இன்று ஏற்றுக் கொள்ளக் கூடிய் கருத்துக்கள் அல்ல. அடிப்படை உரிமைகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்வதற்கு சமூகத்தில் உள்ள சகல உறுப்பினர்களும் பங்களிக்க முடியும். சனநாயகத்தின் சட்டபூர்வத் தன்மையை விரிவாக்குவதில் சமூகத்தின் ஈடுபாடு ஏனைய ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் அவ்வளவு தெளிவாகத் தெரிவதில்லை.
104

தென்னாசியாவில் சட்டவாண்மைத் தொழிலுக்கு (Legal profession) மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. ஒரு புறம் மீள் உயிர்ப்படைந்த ஒரு சிவில் சமூகத்தின் சவால்கள் , மறுபுறம் இனத்துவ சமயச் சார் புள்ள படுபாதகங்களினால் சமூகமே சிதறுகின்ற செயண் முறை. இவை இரண்டுக் குமிடையில் இணக்கம் கண்டு ஒரு நவீன தேசத்தை உருவாக்குகின்ற பொறுப்பு சட்டவாண்மைத் தொழிலின் மீது சுமத்தப்பட்டது. இந்த வாய்ப்பினை அது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
(pடுடு(Qடு
105

Page 58


Page 59
PRINTED BY UNIE ARTS (PVT)

ISBN: 955-580-072-3
TD., COLOMBO 13. TEL: 330195.