கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நறுந்தமிழ்

Page 1


Page 2


Page 3

நறுந்தமிழ்
- அகளங்கன் -
666flict - 34
2 6ldD55TOT 96.15056AL 6)IDLD N S? WRITERS MOTIVATION CENTRE 罗_浣 30. 64, 5ŪDTDŪ i5, ē6ūDī6,
දී සිංඤ-1 Du ඕසGI[III, ඕගfilකය.
T. P. : 065-2226658, 077-6041503

Page 4
நறுந்தகிழ்
ぐ>
இலக்கியக் கட்டுரைகள்
ぐ>
எழுதியவர் : அகளங்கன் (நா. தர்மராஜா)
பதிப்புரிமை : திருமதி. பூ தர்மராஜா B. A. (Hons)
வெளியீடு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
(பிரியா பிரசுரம் . 34)
முதற்பதிப்பு : 24 - 04 - 2006
அட்டை கணனி வடிவமைப்பு : எம். நிஸாந்தன்
கணனி வடிவமைப்பு : ஜெலிலா காதர் முகையதின்
அச்சுப்பதிப்பு : ஏ.ஜே. ܖ
விலை : 175/-
SBN : 955- 8715 - 34 -4
இந்நூல் வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவையின் ஆதரவுடனும் சீ. ஏ. இராமஸ்வாமி அறக்கட்டளை நிதியத்தின் ஆதரவுடனும் வெளியிடப்படுகிறது.
- 02

பொருளடக்கம்
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
10)
11)
12)
13)
14)
15)
16) 17)
18)
19)
20)
கண்காணா உயிர்நட்பு
ஐவகை உணவு
பக்கம்
வாழ்த்துப்பா 04 அணிந்துரை 05 பதிப்புரை 12 முன்னுரை 14 வாழ்த்துச் செய்தி 17 செந்தமிழும் செம்மொழிச் சீரழிவும் 19 தமிழை வளர்ப்போம் 23 தமிழராய்த் தலை நிமிர்வோம் 29 தமிழ்மொழியின் அடைமொழிகள் 36 தமிழ்மொழியின் திட்பமும், நுட்பமும், ஒட்பமும் 40 பண்டைத் தமிழரின் பண்பாட்டுக் கோலங்கள் 50 தும்மலும் வாழ்த்தும் 60 பண்டைத் தமிழரின் வாழ்க்கைச் சிறப்பு 68 சுவாமி விவேகானந்தரும் தமிழிலக்கியமும் 8 நாடகமே உலகம் 86 காயம் இல்லாத ஆகாயம் 89 போரும் பொதுமக்களும் 100 புறநானூற்றில் அறக்கருத்துக்கள் 107
117
121
03

Page 5
சிவநெறிப் புரவலர் சி. ஏ. இராமஸ்வாமி அவர்களின்
வாழ்த்துர்ரா
வாழ்த்துதல் என்பது
வழிவழி வந்த மரபின் வழியது ஒன்றாம்
வாழ்த்திடு வோர்கள்
வயதின் மூத்தவர், வித்தகராம் எனக் கண்டார்.
தாள்தொழுது இறையை
தருக இவர்க்குயர்வு தான்என வணங்கிடு வேனாய்
ஆழ்த்திய இன்ப
உணர்வினால் இங்கே அகளங்கன் தனை வாழ்த்துகின்றேனே.
சி. ஏ. இராமஸ்வாமி சீ. ஏ. இராமஸ்வாமி அறக்கட்டளை ஸ்தாபகர், OSuj6T6Is, வவுனியா இந்து மாமன்றம்.
04

JubDJögjurfilo அகளுங்கன்
கலாபூஷணம், தமிழ்மணி, இலக்கியச் செல்வர், கலாநிதி முல்லைமணி வே. சுப்பிரமணியம் அவர்கள் அளித்த
அணிந்துரை
தமிழ்மணி அகளங்கன் (நா. தர்மராஜா) அவர்கள், நாடறிந்த எழுத்தாளர், நல்ல கவிஞர், தமிழ் இலக்கியங்களைத் துறைபோகக் கற்றறிந்தவர், சிறந்த இலக்கிய இரசிகர், தலைசிறந்த இலக்கிய ஆய்வாளர், சிந்தனையாளர் என்றெல்லாம் போற்றப்படுபவர்.
சங்க இலக்கியம் தொடக்கம் இக்காலத் திரைப்படப் பாடல்கள் வரை இவருக்குப் பரிச்சயமுண்டு. பழந்தமிழ் இலக்கியச் செய்திகளுடன் சமகால நிகழ்ச்சிகளைப் பொருத்திப் பார்க்கும் இயல்புடையவர். இதனால் இவரது இலக்கியப் பார்வை வித்தியாசமாகவும் புதுமையாகவும் திகழ்வதை அவதானிக்கலாம். ஈழத்தின் இலக்கிய விசையாகத் திகழும் அகளங்கன் அவர்களின் பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பாகத் திகழ்வது நறுந்தமிழ்' என்னும் இந்நூலாகும்.
இலக்கிய இரசனையும் இலக்கியத் திறனாய்வும் இலக்கியத்தைக் கற்பதற்கு உந்து விசையாக அமையும் அணுகுமுறைகளாகும் . இலக் கியத்தை இரசிக்க உறுதுணையாக அமைவது இவரது இலக்கியச் சரம் என்னும் நூல். இவரது ஆய்வுத்திறனுக்கு எடுத்துக்காட்டாக அமைவது வாலி. இந்த நூலைப்படித்த பல்கலைக்கழக மட்டத் தமிழ் அறிஞர்கள் இவரது கூர்மையான ஆய்வுத் திறனைக் கண்டு வியந்து பாராட்டியுள்ளனர்.
05

Page 6
நறுந்தமிழ் அகளங்கன்
தமிழ்மீது கொண்ட ஆழமான பற்று கட்டுரைகள் அனைத்திலும் இழையோடியிருக்கிறது. அதே நேரத்தில் இவரது ஆய்வுநோக்கு ஆங்காங்கு சுடர்விடுவதைக் காணலாம். அகளங்கன் தாம் கற்ற சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம், கந்தபுராணம், தேவாரங்கள், திருவாசகம் முதலான நூல்களிலிருந்து தமிழ்மொழியின் தொன்மையையும், சிறப்பையும் மட்டுமன்றி பழந்தமிழரின் உலகளாவிய சிந்தனைப் போக்கையும் எடுத்துக் காட்டுகின்றார்.
முதல் மூன்று கட்டுரைகளும் இவரது அதீத தமிழ்ப் பற்றையும் இன்றைய நிலையில் தமிழ்மொழி பல்வேறு மட்டங்களிலும் சீரழிக்கப்படுவதையும், தமிழர்களாகிய நாம் தமிழை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும், தமிழ் உயர்தனிச் செம்மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் தமிழைக் காக்க வேண்டும் எனவும் எடுத்துக் கூறுகின்றன. அடுத்த நான்கு கட்டுரைகளும் தமிழ் மொழியின் அடைமொழிகள் பற்றியும் தமிழ் மொழி திட்பமாகவும் நுட்பமாகவும் பயன்படுத்தப்படுவதனையும் பழந்தமிழரின் பண்பாட்டுக் கோலங்கள் பற்றியும், பண்டைத் தமிழரின் வாழ்க்கைச் சிறப்புப் பற்றியும், பல்வேறு இலக்கியங்களிலிருந்து உதாரணங்கள் தந்து விளக்குகின்றன.
தமிழ் எப்படி எப்படியெல்லாம் அடைமொழிகளுடன் சிறப்படைகின்றது என்பதைக் காட்ட செந்தமிழ், தண்டமிழ், வண்டமிழ், தென்தமிழ், திருநெறியதமிழ், தேனார்தமிழ் முதலான பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன.
“நீர்நிலைகளை அவற்றின் அளவுக்கேற்பவும்
பயன்பாட்டிற்கேற்பவும் பல்வேறு பெயர்களால் அழைத்த
நுட்பத்தை அறியும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது”
எனக்கூறும் ஆசிரியர், ஏர்த்தொழிலுக்காக அமைக்கப்பட்டது
ஏரி என்றும், குளிப்பதற்காக அமைக்கப்பட்டதைக் குளம் என்றும், 06

நறுந்தமிழ் m அகளுங்கன்
மலர்கள் நிறைந்த நீர்நிலை பொய்கை என்றும், தோட்டச் செய்கைக்காகத் தோண்டப்பட்டது துரவு என்றும் அழைக்கப்படும் எனத் தமிழின் நுட்பத்தைக் கூறுகின்றார். பல்வேறு விலங்குகளதும், பறவைகளதும் ஒலிகளுக்கு வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்படுவதை விளக்குகின்றார்.
இன்று நாம் மேற்குலகைத் தழுவி நண்பர்களைக் கைகுலுக்கி வரவேற்கிறோம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் அரசன், கபிலர் என்னும் புலவரின் கையைப் பிடித்து அழைத்ததை நினைவுகூர்கிறார். அரசர்கள் தம் பாதுகாப்புக்காக பறவைகளையும் பயன்படுத்தினர். அரசன் அணியும் பூமாலை. ஆடை முதலானவற்றில் விஷம் கலந்திருந்தால் அதனை அரச அன்னத்தின் கண்களுக்கருகில் கொண்டு சென்றால் அன்னத்தின் கண்களிலிருந்து இரத்தம் வடியுமாம். இன்றைய ஜெய்ப்பூர் காலுடன் பொன்னால் கைசெய்து பொருத்திய பொற்கைப் பாண்டியனின் பொற்கையை ஒப்புநோக்குகிறார்.
பண்டைத் தமிழரின் வாழ்க்கைச் சிறப்பைக் கூறுமிடத்து சிலப்பதிகாரச் செய்தியினை மேற்கோள் காட்டுகின்றார் அகளங்கன். ஊடலுடன் இருந்த கோவலனை மகிழ்விப்பதற்காக மாதவி தன்னை அலங்கரித்த விதத்தையும் கூந்தலைக் கழுவிய விதத்தையும் விபரிக்கிறார்.
ஊடற்கோலமொடு இருந்தோன் உவப்ப பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை ஓமா லிகையினும் ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டி என்னும் பாடலடிகள், மாதவி வாசனை கலந்த நீரில்
தன்கூந்தலைக் கழுவியதைக் காட்டுகின்றன. மாதவி அணிந்த
07

Page 7
நறுந்தமிழ் அகளங்கன்
பலவிதமான ஆபரணங்கள் பற்றிப்பார்க்கும் போது, பண்டைத் தமிழரின் வாழ்க்கைச் சிறப்பைக் கண்டு வியப்படைகிறோம். முப்பது விதமான தோற்கருவிகள் இலக்கியத்திலிருந்து எடுத்துக் காட்டப்படுகின்றன.
தமிழ் மக்கள் கணிதத் துறையில் மிக நுட்பமான அறிவைக் கொண்டிருந்தனர் என்பதற்குப் பல உதாரணங்கள் தரப்பட்டுள்ளன. இம்மி, அணு, மும்மி, குணம் என்னும் அளவுகளுக்குரிய விளக்கங்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன. சங்கநிதி, பதுமநிதி என்னும் அளவுகள் தரப்பட்டுள்ளன. பண்டைய அரசர்களின் நால்வகைச் சேனைகளின் பல்வேறு வகைகளும், அவற்றில் இடம்பெறும் தேர் யானை, குதிரை, காலாள் படைகளின் எண்ணிக்கைகளும் இந்த நூலில் இடம்பெறுகின்றன. கால அளவு, தூர அளவு, நில அளவு, பல்வேறு வகையான மாலைகள் பற்றிய விபரங்களையும் இந்த நூலில் காணலாம். இவற்றையெல்லாம் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து அகழ்ந்தெடுத்திருப்பது நூலாசிரியரின் கடும் உழைப்பைக் காட்டுகின்றது.
தும்மலும் வாழ்த்தும், போரும் பொதுமக்களும் புறநானூற்றில் அறக்கருத்துக்கள் என்பன திருக்குறளிலும், சங்க இலக்கியங்களிலும் இடம்பெறும் கருத்துக்களுக்கு விளக்கம் தருகின்றன. திருக்குறளில் இடம்பெறும் காமத்துப்பால் அகத்திணை மரபின் தொடர்ச்சியாகும். தலைவி ஊடியிருப்ப்தையும், அதைத் தீர்ப்பதற்குத் தலைவன் கையாண்ட உபாயத்தையும் நயம்பட விரிப்பது தும்மலும் வாழ்த்தும். முற்காலத்தில் போர் செய்யும் போதுகூட சில தர்ம நெறிகள் கடைப்பிடிக்கப்பட்டன. போரில் ஈடுபடாதவர்களுக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கொள்கை இருந்தது. பாண்டிய மன்னன் ஒருவன் போருக்குச் செல்லும்போது பகைவர் நாட்டுக் குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுமாறு சொல்கிறான்.
08

நறுந்தமிழ் அகளுங்கன்
"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வரைப் பெறாஅ திரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மின்.”
புறம் : 9
சிலப்பதிகாரத்திலும், பெரியபுராணத்திலும் யுத்த தர்மம் எங்ங்ணம் கடைப்பிடிக்கப்பட்டதென ஆசிரியர் விளக்குகின்றார்.
புறநானூற்றில் இடம்பெறும் அறக் கருத்துக்களை ஒரு கட்டுரை விரித்துரைக்கின்றது. நாடகமே உலகம், கண்காணா உயிர் நட்பு என்னும் கட்டுரைகள் தமிழ் இலக்கியத்தில் எப்பொழுதோ சொன்னவற்றை இன்று நாம் புதுமையாகக் கொள்கிறோம் என்கின்றன. நாடகமே உலகம் என மகாகவி ஷேக்ஸ்பியர் கூறியதாகத்தான் நாம் நினைக்கின்றோம். ஆனால் இக்கருத்து புறநானூற்றில் இடம்பெறுகின்றது. ஷேக்ஸ்பியருக்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்பு கூறப்பட்டதை ஆசிரியர் காட்டுகின்றார். சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடும் போது “விழாவிலே நடைபெறும் நாடகத்தில் முறைமுறை ஆடுநர் வந்து போவது போலக் கழியும் இவ்வுலகம்" எனக் கூறியதை ஏனோ நம்மவர்கள் போற்றத் தவறுகின்றனர்.
ஒருவரையொருவர் நேரில் பார்க்காமலே கடிதமூலம் நட்புக் கொள்வோரை இன்று பேனா நண்பர்கள் என்கிறோம். சங்க காலத்திலே வாழ்ந்த ஒரு புலவரும், அரசனும் கடிதம் மூலம் தம் நட்பை வளர்த்திருக்கிறார்கள். பாண்டிநாட்டுப் பிசிராந்தையார் என்னும் புலவர் கோப்பெருஞ் சோழனின் கொடைச் சிறப்பையும், வீரத்தையும், குணநலத்தையும் கவிதையாக்கி மன்னனுக்கு அனுப்பி நட்பை வளர்த்துக் கொண்டார். கோப்பெருஞ் சோழனைக் காணச் சென்ற புலவர் மன்னன் வடக்கிருந்து இறந்து போனதை அறிந்து மனம்
09

Page 8
நறுந்தமிழ் அகளுங்கன்
வருந்தியது மாத்திரமன்றித் தானும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.
'உயிர் கலந்தொன்றிய செயிர்தி நட்பு என இவர்களது நட்பைப் புலவர்கள் போற்றுகின்றனர்.
மேதைகள் எங்கிருந்தாலும் சிலசமயங்களில் ஒரே மாதிரிச் சிந்தித்கிறார்கள் என்பதற்குச் சான்றாக சுவாமி விவேகானந்தரும் தமிழ் இலக்கியமும் என்னும் கட்டுரை திகழ்கின்றது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” “நன்மை செய்யப்பிறந்த நீ நன்மை செய்யாது விட்டாலும் தீமையாவது செய்யாதிரு” என்னும் கருத்துக்கள் புறநானூற்றில் இடம்பெறுகின்றன. இவற்றைத் தமிழில் கற்கும் சந்தர்ப்பம் கிடைக்காத விடத்தும் சுவாமி விவேகானந்தர் இக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
99
உணவை நாம் ஐந்து விதமாக உட்கொள்ளுகின்றோம். நக்குதல், பருகுதல், தின்னுதல், உண்ணுதல், சுவைத்தல் என்பனவே அவை. தேனை நக்குகின்றோம். பாலைப் பருகுகின்றோம், இடைநேரத்தில் நொறுக்குத்தீனி தின்கிறோம். மதிய உணவை வயிறார உண்கிறோம் உணவை உண்டபின் ஐஸ்கிறீம் பழங்கள் போன்றவற்றைச் சுவைக்கின்றோம். ஐவகை உணவு பற்றித் தமிழ் இலக்கியத்திலிருந்து உதாரணம் காட்டி விளக்குகிறது ஐவகை உணவு என்னும் கட்டுரை.
புறநானூற்றின் இருபதாம் பாடல் ஆகாயம் பற்றிய செய்தியைக் கூறுகின்றது. “வறிது நிலை இய காயமும்.” இங்கே ஆகாயம் என்னும் சொல் காயம் என வருகிறது. “வடிவின்றி நிலைபெற்ற ஆகாயமும்’ என இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றனர். ஆகாயம் என்பது உருவம் இல்லாதது. ஆனால் இருப்பது போல் தெரிவது. இதேபோல் கந்தபுராணத்தில் “உருவமில் விசும்பின் தோலை”
என்னும் தொடர் வருகின்றது. கவியரசு வைரமுத்துவும் இதே 10

நறுந்தமிழ் இகளுங்கன் கருத்தைத் திரைப்படப்பாடலில் சொல்கிறார். அவரது பாடலில் "நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை” என்ற அடி இடம் பெறுகிறது.
பூமி உருண்டை வடிவமானது, அது சுழல்கிறது என்னும் உண்மை தமிழ் இலக்கியத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. 'அண்டப் பகுதியின் உண்டைப்பிறக்கம் என்னும் பாடலடியில் உண்டை என்பது பூமியைக் குறிக்கும்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை
என்னும் திருக்குறளில் உலகம் சுழன்றாலும் அது ஏருக்குப் பின்னால்தான் சுழல்கிறது, என்னும் கருத்துப் புலனாகின்றது எனத் திருக்குறளுக்குப் புதிய உரை தருகின்றார் அகளங்கன். இது அவரின் சிந்தனையாற்றலை வெளிப்படுத்துகின்றது. தமிழர்கள் பூமி பற்றியும் ஆகாயம் பற்றியும் விஞ்ஞான ரீதியான விளக்கம் பெற்றிருக்கிறார் என்பதைக் "காயமில்லாத ஆகாயம்' என்னும் கட்டுரை விளக்குகின்றது.
நறுந்தமிழ்க் கட்டுரைகள் அனைத்தும் தமிழ் இலக்கியப் பெருங்கடலில் மூழ்கி எடுத்த விலையில்லாத முத்துக்களைத் தருகின்றன. அகளங்கனின் ஆழ்ந்த அறிவும், ஆய்வுத்திறனும் சிந்தனைச் செழுமையும் இக்கட்டுரைகளில் பளிச்சிடுகின்றன.
படிப்பதற்கும் சிந்திப்பதற்கும், வியந்து போற்றுவதற்கும் நிறையக் கருத்துக்கள் இத்தொகுப்பில் உண்டு. தமிழ் ஆர்வமுடைய அனைவரும் கட்டாயமாகப் படித்துப் பயன்பெறவேண்டிய நூல் இது.
--- முல்லைமணி --
4. காளிகோவில் வீதி. கூமாங்குளம், வவுனியா.
11

Page 9
JyDB9d9 ———————— ——— _ീബർ
புதியுரை
ஒரு மரத்தின் வேரை அறுத்து விட்டு எவ்வளவு பசளையைப் போட்டு நீரை ஊற்றினாலும் அதனால் வளர முடிவதில்லை. அப்படி அது வளர்ந்தாலும் அது ஒரு தற்காலிக வளர்ச்சியே. அம்மரத்தினால் நிலையாக நிலைத்து நிற்க முடிவதில்லை. சிறு மழைக்கும் காற்றுக்கும் அதனால் தாக்குப் பிடிக்க முடியாது. சரிந்து விடுகிறது.
அதுதான் இன்றைய தமிழிலக்கியத்தின் நிலை. வேரறுந்த மரம் போல் வளர்கிறது. அந்த வேர்தான் இலக்கியத்தின் மூலவேர் என்று கருதப்படும் பழந்தமிழ் இலக்கியம். அந்த பழந்தமிழ் இலக்கியத்தை படைப்பவர்களும் படிப்பவர்களும் மிகவும் அருகிக் கொண்டு வருகின்றனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான இணைப்பாளராக இருப்பவன் நான். எமது பல்கலைக்கழகமானது எந்தவொரு இளங்கலை பட்டப்படிப்பைப் படிப்பதாயினும் தமிழை ஒரு கட்டாய பாடமாகக் கற்க வேண்டும் என்பது நிபந்தனை. ஒரு பட்டதாரி தமிழ் அறிவு இல்லாமல் இருக்கக்கூடாது என்பதனை வலியுறுத்துகிறது. ஆனால் அந்நிலை இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இருப்பதாகத்
தெரியவில்லை.
அதனால்தானோ என்னவோ இங்கு பல்கலைக்கழகங்கள் செய்யாத பணியை தமிழறிஞர் அகளங்கன் செய்து வருகின்றார். பழந்தமிழ் இலக்கியம் அவருக்கு கைவந்தகலை. மேடைப் பேச்சு, கட்டுரை, மேடை/வானொலி நாடகங்களினூடாக பழந்தமிழ் இலக்கியத்தினை ஸ்திரப்படுத்தி வருகின்றார். இதற்கு அவர் எழுதிய நூல்களும் சாட்சி பகரும்.
12

நறுந்தமிழ் அகளங்கன்
34 வது நூலாக வெளிவருவது நறுந்தமிழ். இந்நூல் எமது எழுத்தாளர் ஊக் குவிப்பு மையத்தினுTடாக வெளிவருவதில் பெருமைப்படுகின்றேன். ஏலவே அவரின் நான்கு நூல்களை இம்மையம் பதிப்பித்திருந்தது. இன்னும் அந்த தமிழறிஞரின் அரிய பல நூல்கள் இந்த மையத்தினூடாக வெளிவரும். இவை தமிழுக்கு அணி சேர்க்கும்.
தொடரும் எமது இலக்கியப் பணி.
என்றும் அன்புடன், ஒ. கே. குணநாதன்
மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்.
s

Page 10
நறுந்தமிழ் அகளுங்கன்,
முன்னுரை
இருநூறுக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரைகளை பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதியிருக்கிறேன். வெளிவராத கட்டுரைகளாகப் பல கட்டுரைகள் உள்ளன. சிலவே நூல் வடிவம் பெற்றுள்ளன.
'வாலி ஆய்வு தனி நூலாகி இரு பதிப்புக்கள் கண்டது. இப்பொழுது மூன்றாம் பதிப்பு செய்யப்படுகின்றது.
"மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்” ஆய்வு தனி நூலாக வெளிவந்தது.
கவிஞர் ஜின்னாவின் "இரட்டைக் காப்பியங்கள்” ஆய்வு தனி நூலாக வெளிவந்தது.
“பாரதப் போரில் மீறல்கள்” தனிநூலாக வெளிவந்தது.
“இலக்கியத் தேறல்”, “இலக்கியச் சிமிழ்” என்ற தலைப்புக்களில் இரு கட்டுரைத் தொகுப்புக்கள் பன்னிரண்டு. பன்னிரண்டு கட்டுரைகளைக் கொண்டு வெளிவந்தன. இவையிரண்டும் இருபதிப்புக்களைக் கண்டன.
“இலக்கியச் சரம்” என்ற பெயரில் எனது பல கட்டுரைகளைக் கொண்ட பெரியதொரு நூலும் வெளிவந்திருக்கிறது. அந்த வகையில் "நறுந்தமிழ்” என்ற பெயரில் இக்கட்டுரைத் தொகுப்பு பதினைந்து கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகிறது.
சிவநெறிப் புரவலர் சி. ஏ. இராமஸ்வாமி அறக்கட்டளை. யின் உதவியோடும் வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவையின் உதவியோடும் இந்நூல் வெளிவருகின்றது.
14

நறுந்தமிழ் இகளுங்கன்
ஏற்கனவே இவ்வறக்கட்டளையின் வெளியீடாக எனது "திருவெம்பாவை உரை” நூல் வெளிவந்திருக்கிறது.
சிவநெறிப் புரவலர் சி. ஏ. இராமஸ்வாமி அவர்கள் எனது தமிழ் இலக்கியப் பணிக்கு பெரும் உதவி செய்து வருபவர். அவருக்கு என் நன்றிகள்.
வவுனியா மாவட்ட கலாசாரப் பேரவைத் தலைவர், திரு. சி. சண்முகம் (அரச அதிபர்) அவர்களுக்கும் என் நன்றிகள்.
இந் நூலுக்கு சிறந்ததொரு அணிந்துரையை எழுதியிருப்பவர் கலாநிதி முல்லைமணி அவர்கள். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தால் கெளரவக் கலாநிதிப் பட்டமளித்துக் கெளரவிக்கப்பட்டபின் முதன் முதல் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார். அவருக்கும் என் நன்றிகள்.
எனது பல நூல்களை வெளியிட்ட என் நண்பர் பிரபல எழுத்தாளர் ஒ. கே. குணநாதன் தனது எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மூலம் இந்நூலையும் வெளியிடுகிறார். இவர் நன்றிக்கு அப்பாற்பட்டவர்.
எனது நூல்வெளியீடுகளுக்கு ஆதரவு வழங்கிவரும் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்திற்கும், குறிப்பாக அதன் தலைவர் மக்கள்சேவை மாமணி நா. சேனாதிராசா (சமா.நீதி) அவர்களுக்கும் என் நன்றிகள்.
எனது கட்டுரைகளை வெளியிட்ட ப்த்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் எனது பேச்சுக்களை ஒலிபரப்பிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும் என் நன்றிகள்.
என்னை இலக்கியக் கட்டுரைகள் எழுதத் தூண்டிய சிரித்திரன் ஆசிரியர் அமரர் சி. சிவஞான சுந்தரம் அவர்களுக்கும், நண்பர் செ. சண்முகநாதன் அவர்களுக்கும் என்றும் என் நன்றிகள் உரியன. 1S

Page 11
நறுந்தமிழ் அகளுங்கன்
எனது நூலாக்க முயற்சிகளுக்கு ஆணிவேராக இருந்து உதவி வரும் என் தம்பி க. குமாரகுலசிங்கம் அவர்கள் கடந்த ஆண்டில் (2005) என்னை சுவிற்சர்லாந்திற்கு அழைத்து பலவகைச் சிறப்புக்களையும் செய்தார்.
40 நாட்கள் தங்கி சுவிற்சர்லாந்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று சுற்றிப் பார்க்கவும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவும் காரணமாக இருந்தார்.
அவர் தந்த உற்சாகம் இன்னும் பல நூல்களை வெளியிடத் தூண்டுகிறது. அவருக்கும் என் ஆக்கங்களைப் படியெடுத்தும் திருத்தியும், ஆலோசனை வழங்கியும் இரசித்தும் முதல் விமர்சகராக விளங்கும் என் மனைவிக்கும் நான் செய்யக் கூடிய கைம்மாறு இன்னும் இத்தகைய பல நூல்களை வெளியிடுவதுதான்.
வழமைபோல் இந்நூலையும் என் இலக்கிய இரசிகர்கள் ஏற்றுப் போற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் அடுத்த பணியை ஆரம்பிக்கிறேன்.
நன்றி
அன்புடன், அகளங்கன் 90, திருநாவற்குளம்,
வவுனியா 24 - 04 - 2006
16

நறுந்தமிழ் அகளுங்கன்
வவுனியா அரச அதிபர் திரு. சி. சண்முகம் அவர்களது
வாழ்த்துச் செய்தி
"இயல் இசை நாடகங்கள்
இன்பம் தரும் உரைநடைகள்
மயல்மிகு மனத்தை எல்லாம்
மாற்றிநல்ல ஏற்றந்தரும்"
மேலுள்ள கவிதை வரிகள் தமிழ்மணி அகளங்கன் "விண்ணவர்க்கும் அமுதான விந்தைத்தமிழ்” என்ற கவிதையில் மாருதம்' சஞ்சிகையில் தெரிவித்துள்ளவையாகும். அகளங்கன் அவர்கள் குறிப்பிடுவது போல அவரே தமிழ்மொழி சார்ந்த கவிதை மற்றும் கட்டுரைத் தொகுதிகள் பலவற்றை ஆக்கி வெளியிட்டுத் தமிழுக்கு அணி செய்துள்ளார். தமிழ் மக்களின் மனங்களுக்கு ஏற்றந் தந்துள்ளார். அவரின் 31வது நூலாக நறுந்தமிழ் என்ற கட்டுரைத் தொகுதி வெளியிடப்படுவதையிட்டு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழ்மொழிக்கு அணிசெய்து ஆயிரக் கணக்கான நூல்கள் சங்ககாலம் தொடக்கம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஆயிரக்கணக்கான நூல்கள் தமிழ் மொழியை அணி செய்யக் காத்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நல்ல தமிழ் நூலும் தமிழுக்கு அணிகலன்களாக கொள்ளப்பட வேண்டியவை. அகளங்கனின் "நறுந்தமிழில்” தமிழின் சிறப்பு, தமிழரின் சிறப்பு, தமிழ்ப் பண்பாடு, தமிழின் தன்னிகரில்லாப் பெருமை என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனவே "நறுந்தமிழ்’ தமிழ் அன்னைக்குச் சூட்டப்படும் இன்னுமொரு வைரமணியாகும்.
ஆசிரியர் தமிழ்மணி அகளங்கன் அவர்களைத் தமிழ்
கூறும் நல்லுலகம் நன்கு அறியும். அவர் இதுவரை 30 ற்கும்
17

Page 12
நறுந்தமிழ் அகளுங்கன்
மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றுள் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், பாமாலை, உரைநடை, விளக்கவுரை என்பன அடங்கும். இதைவிட அவர் ஒரு சிறந்த சொற்பொழிவாளர், சைவம், தமிழ், இலக்கியம், சரித்திரம், வாழ்க்கை வரலாறு போன்ற விடயங்களையிட்டு அவர் பேசும் போது கேட்பவருக்கு ஆவலைத் தூண்டக் கூடிய விதத்தில் விடயச் செறிவுடன் சிறந்த கருத்துக்களை எடுத்துக்கூறி கேட்பவரை கவரும் ஆற்றல் அவருடைய பேச்சில் உண்டு.
தனது ஆசிரியர் கடமைக்கு மேலதிகமாக தமிழ் மொழிக்காகத் தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் “அகளங்கன்” திரு. நா. தர்மராஜா அவர்களுக்கு கவிமாமணி, காவியமாமணி, தமிழ்மணி, பல்கலை எழில், வாகீச கலாநிதி, தமிழ் அறிஞர், சிவனருட் செல்வர், திருநெறிய தமிழ்வேந்தர் என பத்துக்கும் மேற்பட்ட பட்டங்கள் பல்வேறு சமய, கலாசார மொழி அமைப்புக்களால் இதுவரை வழங்கப்பட்டுள்ளதோடு, இவருடைய ஆக்கங்களுக்கு ஆளுநர் விருது மற்றும் சாகித்திய மண்டல விருது என்பவையும் வழங்கப்பட்டுள்ளன. இவரைப் பற்றி மேலும் கூறிப் பொற்குடத்திற்கு பொட்டு இடவேண்டிய தேவையில்லை.
இவரின் தமிழ்ப் பணியும், சைவப் பணியும் தொடர எனது நல்வாழ்த்துக்கள். இவரால் வெளியிடப்படும் "நறுந்தமிழ்” எனும் கட்டுரைத் தொகுப்பு இவருடைய ஆழமான அறிவுக்கும், ஆற்றலுக்கும், அனுபவத்திற்கும் இன்னுமொரு எடுத்துக்காட்டாக அமைந்து தமிழ் நலன் விரும்பிகளுக்கும் வாசகர்களுக்கும் நறுமணம் வீச வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
சி. சண்முகம், வவுனியா அரச அதிபரும் மாவட்டக் கலாசாரப் பேரவைத் தலைவரும் மாவட்டச் செயலகம், வவுனியா. 15-04-2006
18

நறுந்தமிழ் அகளுங்கன்
1. செந்குமிழம் செம்மொழிச் சீரழிவும்
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி” எனப் போற்றப்படும் தமிழ் மக்களது பெருமைக்குரிய மொழி தமிழ்மொழியாகும்.
"திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் மண்ணோடும் உடுக்களோடும், மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழ்” என பாவேந்தர் பாரதிதாசனால் போற்றப்பட்ட தமிழ் மொழியே எங்கள் தாய்மொழியாகும்.
ஆதி சிவனால் தோற்றுவிக்கப்பட்டு அகத்தியனால் இலக்கணம் செய்யப்பட்ட அன்னை தமிழ் மொழியின் அருமையும் பெருமையும் அளவிட்டுச் சொல்ல முடியாதன.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என மகாகவி பாரதியாரால் போற்றிப் புகழப்பட்ட தமிழ்மொழிக்கு நிகரான மொழி உலகில் எவ்விடத்தும் இல்லை என்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிபாகும்.
“கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்” என பல மொழிகளுக்குத் தாய்மொழியாக இருந்தும் தன் தனித்துவத்தை இழக்காத சிறந்த மொழியாக விளங்குவது நம் தமிழ்மொழி.
கம்பனை, வள்ளுவனை, இளங்கோவை உலகமகா கவிஞர்களாக உலகுக்குத் தந்த மொழி எங்கள் மொழி, சங்கச் சான்றோர்களை, சமயப் புலவர்களை, முத்தமிழ் வித்தகர்களை இவ்வுலகுக்கு வழங்கிய மொழி எங்கள் தமிழ்மொழி.
19

Page 13
நறுந்தமிழ் அகளுங்கன்
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தனக்கென வகுக்கப்பட்ட தனித்துவமான இலக்கணத்தின் அடிப்படையில் இலக்கியங்களை படைத்தும், படைக்கப்பட்ட இலக்கியங்களுக்கு இலக்கணங்களை வகுத்தும் சீரிய சிறப்புமிக்க மொழியாக விளங்குவது நம் தமிழ்மொழி.
பேச்சு வழக்கிலே பிரதேசத்திற்குப் பிரதேசம் ஒலி வேறுபாடுகளோடும், சில மாற்றங்களோடும், தமிழ்மொழி பயன்படுத்தப்பட்டிருந்தாலும், எழுத்து மொழியைப் பொறுத்தவரையில் செந்தமிழ் மொழியாகவே முற்காலத்தில் விளங்கியது. வேற்றுமொழிக் கலப்பில்லாமல் செம்மொழியாக விளங்கிய தமிழ் மொழியை எல்லா மொழிகளையும் விட சிறந்த உயர் தனிச்செம்மொழி என உலகம் போற்றியது.
முழுக்க முழுக்கத் தனது சொற்களை மட்டுமே கொண்டு இயங்கக்கூடிய மொழியையே வளம்மிக்க மொழி என்றும், செம்மொழி என்றும் உலகம் வழங்குகின்றது.
வானம் அளந்தது அனைத்தும் அறிந்திடும் வண்மொழியாக விளங்கிய உயர் தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியில், முதலில் ஆரிய மொழிக்கலப்பு ஏற்பட்டது. அதனால் பல அரிய தமிழ்ச் சொற்கள் வழக்கிழந்து போயின.
உருது, அறபு, போர்த்துக்கல், ஒல்லாந்து, ஆங்கிலம், பிரஞ்சு எனப் பல்வேறு மொழிகளும் பல்வேறு காலகட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மொழியில் கலந்து தமிழ்மொழியின் தூய்மையைக் கெடுத்து விட்டன.
நல்ல பல சொற்கள் வழக்கிழந்துபோக, அர்த்தமற்ற சொற்கள் எல்லாம் அவ்விடங்களைப் பிடித்துக் கொண்டன.
"தமிழ் மொழியால் தனித்தியங்க முடியாது” என்றும், "மெல்லத் தமிழ் இனிச்சாகும்” என்றும் பலர் வெறும் வாய் 20

நறுந்தமிழ் அகளங்கன்
மென்ற காலத்தில் மறைமலை அடிகளார், பருதிமால்கலைஞர், திரு. வி. க., தேவநேயப் பாவாணர் போன்ற பலர் தமிழ்மொழி தனித்தியங்கும் ஆற்றல் படைத்தது என்பதை தமது பேச்சுக்கள் மூலமும், எழுத்துக்கள் மூலமும் நிறுவினர்.
இன்று அரிய போராட்டங்களுக்குப் பின்பு இந்திய தேசம் தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி என ஒத்துக்கொண்டுள்ளது.
இருப்பினும் இன்றைய இளைஞர்கள் யுவதிகளின் வாய்களில் அரைகுறைத் தமிழே ஒலிக்கின்றது. ஆங்கில மொழி அவர்களின் வாய்களில் கோர தாண்டவம் புரிகின்றது.
ஒரு வாக்கியத்தின் முக்காற் பகுதிக்குமேல் ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்துகின்ற அருவருக்கத் தக்க நிலை தோன்றியிருக்கிறது.
அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் எவ்வளவுதான் முயன்றாலும் பாவனையிலே கலப்பு ஏற்படும்பொழுது மொழியின் தூய்மையைக் காப்பாற்றுவது மிகவும் கடினமானது.
தமிழர்கள் தமிழ்ப்பற்றோடு நம் தாய் மொழியாம் தமிழ் மொழியைக் காப்பாற்றுவதற்கு வீறு கொண்டு எழுந்து எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என ஒரு புரட்சியைத் தொடங்கினாலேயன்றி நம் தமிழ் மொழியைக் காப்பது அரிதிலும் அரிது.
பொதுவாக ஒரு மொழியைச் செம்மொழி என்று சொல்வதானால் அம்மொழிக்குப் பல தகுதிகள் இருக்க வேண்டும்
1. தொன்மை, 2. தனித்தன்மை 3. பொதுமைப்பண்பு 4. நடுவு நிலைமை 5. தாய்த்தன்மை 6. பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு,
7. பிறமொழித் தாக்கமில்லாத தன்மை,
21

Page 14
நறுந்தமிழ் அகளங்கன்
8. இலக்கியவளம் 9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தன்மை வெளிப்பாடு 11. மொழிக் கோட்பாடு, என்பன முக்கியமான தகுதிகள் என்பர் அறிஞர்.
இந்தப் பதினொரு தகுதிப் பாடுகளும், தமிழ்மொழிக்கு மட்டுமே உள்ளன என்று பூரிக்கிறார்கள் தமிழறிஞர்கள். சமஸ்கிருதத்திற்கு, இதில் ஏழு தகுதிப்பாடுகளும், இலத்தீன், கிரேக்க மொழிகளுக்கு எட்டுத் தகுதிப்பாடுகளும் மாத்திரமே பொருந்துகின்றன என்பது மொழியியல் வல்லுனர் கருத்தாகும்.
தமிழ்மொழி செம்மொழியாக உலகப் பல்கலைக்கழகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டால் தனியாக தமிழ்த்துறை பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்தப்படும். அந்தந்த நாட்டு அரசுகள் தமிழ் ஆராய்ச்சிக்கும், தமிழரின் கலை பண்பாட்டு வளர்ச்சிக்கும் உதவிகள் புரியும்.
இத்தகைய வாய்ப்பு தமிழுக்குக் கிடைத்திருப்பதையிட்டு மனம் மகிழ்ச்சி அடைந்தால் மட்டும் போதாது.
தமிழர்களாகிய நாம், இத்தரணியின் மூத்த குடிமக்களாகிய நாம், இன்று உயர்தனிச் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தமிழ்மொழியைக் காப்பதாக உறுதி பூண வேண்டும்.
தமிழ் வாழ்க! தமிழாலே இத்தரணி வாழ்க!!
O
22

நறுந்தமிழ் அகளுங்கன்
2. குமிழை வளர்ப்போம்
"தமிழ்”, “தமிழ்” என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறோம். தமிழுக்காக உயிரையும் கொடுப்போம் என்று உணர்ச்சிக் குரலாக உரிமைக் குரல் எழுப்புகிறோம்.
ஆனால் எங்களில் பலர் தமிழில் கையெழுத்துக்கூட வைப்பதில்லை. கையெழுத்து வைக்கக்கூட பெறுமதியில்லாத மொழியா தமிழ்மொழி.
தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களில் கூட தமிழில் கையெழுத்து வைப்போரைக் காண்பதரிது. தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்ற பட்டதாரிகள் கூட தமிழில் கையெழுத்திடுவதில்லை.
தமிழ்ப் பேராசிரியர்களில் கூட தமிழில் கையெழுத்திடுவோர் நம் நாட்டில் மிக அருமை என்றே சொல்லலாம். இந்த லட்சணத்தில் மாணவர்களைக் குறைகூறி என்ன பயன்.
பாடசாலைகளில் தமிழில் கையெழுத்திடும் மாணவனைக் காண்பது மிகமிக அரிதாகி விட்டது. கையெழுத்து என்றால் அது ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டுமென்ற அறியாமைப் புத்தி, அடிமைப் புத்தியாய் எங்களில் ஊறிவிட்டது.
எவ்வளவு இழப்புக்களை, எத்தனை விதமான போராட்டங்களை, இரத்தச் சேறுகளைக் கண்ட பின்னும் இன்னும் இவ் இழிநிலை என்றால் எம்மக்களுக்கு என்ன நடந்தது. தமிழினம் என்ன எருமை மாட்டிலிருந்து கூர்ப்படைந்த இனமா என்றுதான் கோபத்தோடு எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.
23

Page 15
நறுந்தமிழ் அகளுங்கன்
தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இன்று இருக்கின்றோம் என்பதைக் கட்டாயம் தமிழர் யாவரும் சிந்தித்தேயாக வேண்டும்.
முற்காலத்தில் தமிழ் வளர்த்த பெரியோரை எவ்வகையில் மன்னர்கள் ஆதரித்தார்கள் கெளரவித்தார்கள் என்பதைப் பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது. தமிழைப் புலவர்கள் வளர்க்க புலவர்களைப் புரவலர்கள் பாதுகாத்துப் பரிசளித்துக் கெளரவித்தனர்.
சங்க கர்லம் என்று இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் குறிக்கப்படும் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள காலத்தில் வாழ்ந்த புலவர்களைச் "செந்நாப் புலவர்” என்று அழைத்தனர்.
சங்க காலப் புலவர்களிலே மிகப்பெருஞ் சிறப்புப் பெற்ற புலவரான கபிலர், பாரிவள்ளலைப் புகழ்ந்து பாடிய பாடலொன்றில் “பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப்புலவர்” என்று பாடுகின்றார்.
செந்நாப் புலவர்களாகிய சங்கப் புலவர்கள் அக்காலத்தில் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். போற்றப்பட்டார்கள்.
அரசர்களின் சபைகளில் அரசர்களுக்கு அறிவுரை வழங்குபவர்களாக அவர்களே விளங்கினர். அதியமானின் சபையில் ஒளவையாரும் பாரியின் சபையில் கபிலரும் பெருமதிப்புப் பெற்றிருந்ததைப் புறநானூறு என்னும் சங்க இலக்கியம் காட்டுகிறது.
புலவர்களை அரசர்கள் ஆதரித்த விதத்தை இன்று நினைத்தால் ஆச்சரியம் மிகுகிறது. சங்ககாலப் புறத்திணை நூலாகிய பதிற்றுப் பத்து என்ற நூலைப் பாடிய புலவர்களுக்குச் சேரநாட்டு மன்னர்கள் வழங்கிய பரிசுகள் பற்றிய விபரங்கள் பிரமிப்பை ஊட்டுகின்றன.
24

நறுந்தமிழ் அகளுங்கன் சேரமன்னர்கள் பத்துப்பேரின்மேல் பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாடல்களின் தொகுப்பே இப் பதிற்றுப்பத்து நூலாகும்.
இப்போது இந்நூலில் முதற்பத்தும், இறுதிப் பத்தும் தவிர்ந்த ஏனைய எட்டுப் பத்துக்களே தான் எஞ்சியிருக்கின்றன. இரண்டாம் பத்தைப் பாடிய குமட்டூர்க் கண்ணனார், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனிடம் உம்பற் காட்டு ஐஞ்ஞாறுார் பிரமதாயமும், முப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு, தென்னாட்டுள் வருவதனிற் பாதியும் பரிசாகப் பெற்றார். (பிரம தாயம் - அந்தணர்களுக்குக் கொடுக்கும் இறையிலி நிலம்)
மூன்றாம் பத்தைப் பாடிய பாலைக் கெளதமனார், இமயவரம்பனின் தம்பி பல்யானைச் செல்புகழ்க் குட்டுவன் மூலம் சுவர்க்கத்தையே பெற்றார்.
நான்காம் பத்தைப் பாடிய காப்பியற்றுக் காப்பியனார், களங்காய்க் கண்ணி நார் முடிச்சேரல் என்ற அரசனிடம் நாற்பது இலட்சம் பொன்னும், அவன் அரசாண்ட இராச்சியத்தில் பாதியும் பரிசாகப் பெற்றார்.
ஐந்தாம் பத்தைப் பாடிய பரணர், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனிடம் உம்பற்காட்டு வாரியையும், அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசாகப் பெற்றார்.
ஆறாம் பத்தைப் பாடிய காக்கைப் பாடினியார் நச்செள்ளையார், சேரலாதனிடம், அணிகலன் செய்யத் துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசும் பரிசாகப் பெற்றார்.
ஏழாம் பத்தைப் பாடிய கபிலர், செல்வக் கடுங்கோ வாழியாதனிடம், நூறாயிரம் பொற்காசும், நன்றா என்ற குன்றின்மேல் ஏறிநின்று கண்ணில் கண்ட நிலமனைத்தும் பரிசாகப் பெற்றார்.
25

Page 16
நறுந்தமிழ் அகளுங்கன்
எட்டாம் பத்தைப் பாடிய அரிசில் கிழார், தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் அரசனிடம், அவனது சிம்மாசனத்தையே பரிசாகப் பெற்றார்.
ஒன்பதாம் பத்தைப் பாடிய பெருங்குன்றுார்க் கிழார், இளஞ்சேரல் இரும்பொறையிடம், முப்பத்திரண்டாயிரம் பொற்காசும், ஊரும், மனைவளமும் பிறவும் பரிசாகப் பெற்றார்.
பாரி, முப்பத்தாறு ஊர்களைப் புலவர்களுக்கும், பாணர்களுக்கும் பரிசாகக் கொடுத்தான். குமணன் பெருந்தலைச் சாத்தனார் என்ற தமிழ்ப் புலவருக்குத் தன் தலையையே பரிசாகக் கொடுத்தான்.
இப்படியெல்லாம் புலவர்களைச் சங்ககால மன்னர்கள் மதித்தார்கள். போற்றினார்கள். தமிழ்ப் புலவர்கள் மூலம் தமிழை அவர்கள் வளர்த்தார்கள்.
பிற்காலத்தில் குறிப்பாக சோழர் காலத்தில் பெரும் புலவர்களைச் சோழர்கள் பெரிதும் ஆதரித்தார்கள். பட்டங்கள் வழங்கிக் கெளரவித்தார்கள்.
மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி, ஈட்டி எழுபது முதலான நூல்களைப் பாடி கவிராட்சதன் எனப் பாராட்டப்பட்ட ஒட்டக் கூத்தருக்கும், கலிங்கத்துப் பரணியைப் பாடிய சயங்கொண்டாருக்கும், இராமாயணத்தைப் பாடிய கம்பருக்கும் “கவிச்சக்கரவர்த்தி” என்ற விருது வழங்கிக் கெளரவித்தார்கள்.
கலிங்கத்துப் பரணி என்ற நூலைச் சயங்கொண்டார் பாடிக் கொண்டிருக்கும் போது, அவரது ஒவ்வொரு கண்ணிக்கும் (பாடல்) ஒவ்வொரு பொற்தேங்காயைப் பரிசளித்தான் குலோத்துங்கன் என்பார் பூரணலிங்கம் பிள்ளை.
26

குறுந்தமிழ் அகளங்கன்
முரசு கடிேலில்ே படுத்துக் கிடந்து, மரண தண்டனைக்குரிய பெருங்குற்றத்தைச் செய்திருந்த மோசிகீரனார் என்ற புலவரை மன்னித்து, அவரின் களைப்பைப் போக்கி நித்திரைக்குத் துணை செய்ய, தகடுரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னன் தன் கையில் கவரி கொண்டு வீசினான் என்ற செய்தி, சங்க காலத்தில் புலவர்களுக்கு மன்னர்கள் கொடுத்த பெரும் மதிப்பைத் துல்லியமாகக் காட்டுகின்றது.
நீண்ட நாட்கள் நோயின்றி உயிர்வாழச் செய்யவல்ல அரிய நெல்லிக்கனியொன்றைப் பெரு முயற்சியால் பெற்று வந்த அதியமான், அந்நெல்லிக்கனியை ஒளவையாருக்குக் கொடுத்துத் தமிழை வளர்த்தான்.
சோழர் காலத்தில் சேக்கிழார் பெருமான் பெரியபுராணம் பாடியதைக் கெளரவிப்பதற்காக அநபாய சோழன், அவரைப் பட்டத்து யானையின் அம்பாரியில் தன் அருகில் இருத்தி, அவரின் வியர்வை போக இரு கைகளிலும் கவரி கொண்டு வீசி, வீதி உலா வந்தான் என்ற செய்தி புலவருக்கு மன்னர் செய்த மரியாதையின் உச்சம் என்றே குறிப்பிடலாம்.
மன்னர்கள் மட்டுமன்றி வள்ளல்கள் பலரும் பெரும் புலவர்களை ஆதரித்திருக்கிறார்கள். கம்பனைச் சடையப்ப வள்ளலும், பிற்காலத்தில் சீறாப் புராணம் என்ற இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் பாடிய உமறுப் புலவரை சீதக்காதியும் ஆதரித்த தகவல்கள் உண்டு.
புகழேந்திப் புலவரை சந்திரன் சுவர்க்கி என்ற மன்னனும், வில்லிபுத்தூராழ்வாரை வக்க பாகை வரபதி ஆட்கொண்டான் என்ற மன்னனும் ஆதரித்ததாக அவர்கள் பாடல்கள் சான்று பகர்கின்றன.
27

Page 17
நறுந்தமிழ் அகளங்கன்
பாவம் பாரதி. நமக்குச் சற்றுமுன் வாழ்ந்த மகாகவி அவன். பாரதியின் வறுமை மிகவும் கொடுமையானது. பாடு பொருள்களைப் பலவாகக் கொண்ட பாரதிக்கு வாழ்க்கைக்குத் தேவையான பொருள் மிகக் குறைவாகவே இருந்தது.
அவனை ஆதரிக்கப் பலரும் அஞ்சினர். அவனது மரணச் சடங்கில் கூட பதின்நான்குபேர் மட்டுமே கலந்து கொண்டதாக அறியும் போது ப்ாரதி காலத்து நிலை எப்படி இருந்தது என்பது புலனாகின்றது.
கவியரசு வைரமுத்து மிகவும் வேதனையோடு சொன்னான். “பாரதியின் பிணத்தில் மொய்த்த இலையான்களின் எண்ணிக்கையளவுக்குக்கூட மரணச் சடங்கிற்கு மக்கள் வரவில்லை” என்று.
நாட்டுக்கு நல்லதைச் சொல்லும், தமிழ் வளர்க்கும் புலவர்களின் நிலை இதுதான். தமிழை வளர்க்க இன்று தமிழர்கள் பலர் தயாராக இல்லை.
மொழியையும், மொழியினுடாகத் தெரியவரும் பண்பாட்டு விழுமியங்களையும் கைவிட்டு விட்டால் எமது தனித்துவத்துக்குரிய அடையாளங்களே அழிந்து விடுமல்லவா.
மொழி வெறும் தொடர்பு ஊடகம் அல்ல. அதனைத் தாண்டி அதன் பயன்பாடு அதிகம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
எனவே தமிழர்களே! தமிழை வளர்ப்போம். தன்மானம் காப்போம். தருணம் இதே. வாழ்க தமிழ் வளர்க தமிழ்க்கலைகள், ஓங்குக எம் உயர் பண்பாடு.
C
28

D55urg அகளுங்கன்
3. குமிழராய்த் குலை நிமிர்வோம்
"தமிழே மிகவும் பண்பட்ட மொழி, தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி” என்றார் மாக்ஸ் முல்லர்.
“ஆற்றல் மிக்கதாகவும், சொல்ல வந்த பல கருத்துக்களைச் சில சொற்களால் தெளிவுறப் புலப்படுத்த வல்லதாகவும், தமிழ் மொழிபோல் வேறு எம்மொழியும் இல்லை” என்றார் பெர்கில் என்ற பாதிரியார்.
"உலக அறிவை உணர்த்தும் சிறப்பில் திருக்குறளுக்கு இணையாக இலக்கிய உலகில் வேறு எதுவும் இல்லை” என்றார் டாக்டர் அல்பர்ட் சுவைட்சர்.
"தமிழ் மொழியில் அமைந்த அகத்துறை இலக்கியங்கள் போல் உலகிலுள்ள வேறு எந்த மொழியிலும் இல்லை” என்று பெஸ்கிப் பாதிரியார் (வீரமாமுனிவர்), கால்டு வெல் போப் முதலியோர் வியந்து போற்றினார்கள்.
தமிழ் மொழியில் உள்ள தொல்காப்பியம் என்னும் மிகப் பழமை வாய்ந்த இலக்கண நூலில் சொல்லப்பட்ட பொருள் இலக்கணம்போல, வேறு எந்த மொழியிலும் இல்லை என்று அறிஞர்கள் வியக்கின்றனர்.
தமிழ் மொழியிலேதான் பல சமயக் கருத்துக்கள் பேரிலக்கியங்களாகப் பாடப்பட்டுள்ளன.
சமணக் கருத்துக்களை விளக்கும் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி முதலியனவும், பெளத்தக் கருத்துக்களை விளக்கும் மணிமேகலை முதலியனவும்,
29

Page 18
நறுந்தமிழ்_ அகளுங்கன்
சைவ சமயக் கருத்துக்களை விளக்கும் கந்தபுராணம், பெரியபுராணம் முதலியனவும், வைணவ சமயக் கருத்துக்களை விளக்கும் கம்பராமாயணம் முதலியனவும்,
கிறிஸ்தவ சமயக் கருத்துக்களைக் கொண்ட தேம்பாவணி முதலியனவும், இஸ்லாமியக் கருத்துக்களைக் கொண்ட சீறாப்புராணமும் பிறவும், தமிழ் மொழியிலே பேரிலக்கியங்களாகப் பாடப்பட்டுள்ளதைப் பார்த்து பெருமைப்படாத தமிழர் யார் இருக்கிறார்கள்.
சிறந்த பக்திப் பாடல்களைத் தன்னகத்தே கொண்ட தமிழ் மொழியைப் பக்தியின் மொழி என்று பரவசத்தோடு பாராட்டினார் ஈழத்துத் தனிநாயகம் அடிகளார்.
இத்தகைய சிறந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நாங்கள், பெரும்புலவர்களையும், சிறந்த இலக்கியங்களையும் கொண்ட உயர்தனிச் செம்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் நாங்கள்.
மனித இனம் முதலில் தோன்றிய குமரிக் கண்டத்தில் (லெமூரியாக் கண்டம்) தோன்றி வளர்ந்த மூத்த பழங்குடியினர் நாங்கள்.
கி. மு. 10ல் சாலமன் என்ற மன்னனுக்குக் கப்பல்கள் மூலம் மயில்த்தோகை, யானைத்தந்தம், சந்தனம், வாசனைத் திரவியம், முதலியவற்றை நட்புமுறையில் அனுப்பி வைத்தவர்கள் நாங்கள்.
கி.மு. 5 இற்கு முன்பே அரிசி, மயில், சந்தனம் முதலானவற்றை பபிலேனியா, பிலிப்பைன்ஸ், சீனா, கிரேக்கம், இந்தோனேசியா முதலான நாடுகளுக்கு அனுப்பி வாணிபஞ் செய்தவர்கள் நாங்கள் என்று பிளினி (கி. பி. 24-79), மெகஸ்தனிஸ் (கி.மு. 3). தொலமி (கி.பி. 150) முதலானவர்களின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
30

நறுந்தமிழ் அகளங்கன்
கிறிஸ்துவுக்கு முன்பே சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து, உலகிலேயே ஒரு மொழியின் வளர்ச்சிக்கும், இலக்கியத்தின் வளர்ச்சிக்குமென முதன் முதல் ஓர் அமைப்பு மூலம் செயற்பட்டவர்கள் தமிழர்களாகிய நாங்கள்.
13ம் லூயி என்ற பிரஞ்சுப் பேரரசன் தன் மொழியைப் பாதுகாக்க 1525ம் ஆண்டு பிரஞ்சுக் கலைக்கழகத்தை pilg8)6OTT6 (Royal Acadamy of the French) 6T6örust 6 goorbq. அறிஞர்.
கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் அமைக்கப்பட்ட முதல், இடை, கடை என்றழைக்கப்படும் முச்சங்கங்களும் தமிழ் மொழியை வளர்ப்பதற்காக அமைக்கப்பட்டதை நினைத்துப் பார்க்கும்போது தமிழ் மொழியை வளர்ப்பதில் தமிழ்ப் புலவர்களும், அரசர்களும் காட்டிய அக்கறை எம்மை வியப்படைய வைக்கிறது.
ஒரு நாட்டின் பிரஜைக்கு அந்த நாட்டின் எப்பகுதியிலும் வாழ்வதற்கு உரிமையுண்டு. மனித உரிமை என்ற வரையறையில்
இதுவும் ஒன்று.
எமது சங்க காலப் புலவரான கணியன் பூங்குன்றனாரோ இதைவிட ஒரு படி மேலே சென்று இப்பூமியில் பிறந்த மனிதன் ஒருவனுக்கு இப்பூமியின் எப்பாகத்திலும் வாழும் உரிமை உண்டு என உலகளாவிய மனித உரிமையை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறார்.
அத்தோடு மனிதர்கள் யாவரும் உறவினர்கள் என ஏற்றத் தாழ்வற்ற மானிட நேயத்தைப் போற்றி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியிருக்கிறார்.
இன்னோரன்ன பழம் பெருமைகள் பலவற்றைக் கொண்ட எமது தமிழ் மொழியிலே, உலகுக்கே பண்பாட்டையும், மனித நேயத்தையும் அறிவையும் புகட்டக் கூடிய சிறந்த 31

Page 19
குறுந்தமிழ் அகளங்கன்
கருத்துக்களைக் கொண்ட இலக்கியக் கருவூலங்கள் மிகுந்து கிடக்கின்றன. இவைகளையெல்லாம் அழிய விடலாமா.
தமிழ் மொழி அழிந்து போனால் எமது காவியங்கள் அழிந்து போகும். பிரபந்தங்கள் அழிந்து போகும். புராண, இதிகாசங்கள், பக்திப் பனுவல்கள், அறம் கூறும் பாடல்கள், புறம் கூறும் பாடல்கள், அகம் கூறும் பாடல்கள் யாவுமே அழிந்து போகும். நமது பண்பாட்டு விழுமியங்கள் யாவும் மண்ணோடு மண்ணாகி விடும்.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மூத்த மொழிகளான சமஸ்கிருதம், இலத்தீன் ஆகிய மொழிகள் பேச்சு வழக்கிழந்தும், திரிபுபட்டும் இருக்க அவற்றிற்கு முன் தோன்றிய மூத்த மொழியாகிய நம் தமிழ்மொழி இன்றும் இலக்கிய, இலக்கணச் செழுமைமிக்க மொழியாக, அன்றாடம் பாவனையில் இருக்கிறதே இது எப்படிச் சாத்தியமாயிற்று.
எமது முன்னோர் மொழியைப் பாதுகாத்தனர். மொழியை வளர்த்தனர். மொழி அழிந்தால் மொழிவழி இனமே அழிந்து போகும் என்பதை உணர்ந்து மொழியைக் காத்தனர்.
மொழி என்பது வெறும் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல. அதுவே நாகரிகத்தையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும் வளர்க்கிறது. சிந்தனையையும் அதன் வெளிப்பாட்டையும் வளர்க்கிறது.
மனித குலத்தின், மானுடத்தின் உச்சக் கட்ட வளர்ச்சி மொழிவழியாகப் பெறப்படும் உயர்ந்த பண்பாட்டிலேயே தங்கியுள்ளது என்பதை எவரும் மறக்க முடியாது.
எனவே தமிழர்கள், தாங்கள் வாழுகின்ற இடங்களிலெல்லாம் தமிழை வளர்க்கும் பணியைச் செவ்வனே செய்ய வேண்டும்.
32

நறுந்தமிழ் அகளங்கன்
பல்வேறு நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்கள் அவ்வந்நாட்டு மொழிகளை அரச தேவைக்காகவும், தொடர்புச் சுகத்திற்காகவும், கல்விக்காகவும் கற்றாலும், தாய்மொழியாகிய தமிழ்மொழியைக் கட்டாயம் வீட்டு மொழியாக்கிக் கொள்ள வேண்டும்.
வீடுகளிலே குழந்தைகளுக்குத் தமிழறிவூட்டி, தமிழைப் பேசப் பழக்கி, எழுதப்பழக்கி வைத்தால் அவர்கள் தமிழ் இலக்கியங்களைக் கற்று எமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்வார்கள்.
அதன்மூலம் தம் உலகியல் வாழ்க்கையையும், ஆன்மீக வாழ்க்கையையும் செம்மைப்படுத்திக் கொள்வார்கள்.
அறிஞர் மட்டத்திலே எவ்வளவுதான் ஆராய்ந்தாலும், மொழியானது அன்றாடப் பாவனையில் இல்லாது போனால், அது பிரேத பரிசோதனைக்குத்தான் ஒப்பாகும்.
மொழியின் நிலைப்பு என்பது அதனைப் பயன்படுத்துவோரிலேயே தங்கியிருக்கிறது. சமஸ்கிருத மொழி மிகச் சிறந்த இலக்கியங்களை, இதிகாசங்களை, இலக்கணங்களையெல்லாம் கொண்டிருந்த போதிலும், இன்று பேச்சு வழக்கிழந்துபோய் மந்திரங்களோடு மட்டும் நிற்கிறது.
இத்தகைய "ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்து” சிதைந்து போகும் நிலை தமிழ்மொழிக்கு வரலாமா? இதனை யாவரும் சிந்திக்க வேண்டும்.
“எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும்
வாழியவே” என்று தமிழ் மொழி வாழ்த்தைப் பாடினால் மட்டும்
தமிழ்மொழி வளர்ந்து விடாது. வாழ்ந்து விடாது. எமது அன்றாடப்
பாவனையில் தமிழை வைத்திருந்தால் மட்டுமேதான் தமிழ் வாழும்
33

Page 20
நறுந்தமிழ் அகளங்கன்
பிள்ளைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களை வைக்கும் வழக்கம் இங்கே இலங்கையில் வடக்குக் கிழக்கு மாகாணத்திலேயே குறைந்து விட்டதே.
தாய், தந்தையரை மம்மி, டடி, மம், டட் என அழைக்கின்ற மகாகேவலம் எங்கள் மாவீரர்கள் இரத்தஞ் சிந்திய செந்தமிழ்ப் பூமியிலும் இன்று அதிகமாகி வருகின்றதே. "மம்மி” என்ற சொல் பழம் பிணத்தைக் குறிக்கும் சொல் என்பது எத்தனிை பேருக்குத் தெரியும்.
தமிழிலே கையெழுத்து வைக்கின்ற தமிழர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணினால் விரல்கள்தான் மிஞ்சும் நிலை இங்கேயே இருக்கிறதே.
ஆயிரக் கணக்கானவர்களைப் பலி கொடுத்தும், கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தும், இடம்விட்டு இடம் பெயர்ந்தும், நாடுவிட்டு நாடு சென்று அகதியாகியும், சொந்த நாட்டிலே, சொந்தப் பிரதேசத்திலே, சொந்தக் கிராமத்திலேயே அகதி வாழ்க்கை வாழும் நிலையைடைந்தும், இன்னும் எதற்காக நாம் இவற்றையெல்லாம் இழந்தோம் என்பதை அறியாதவர்களாக இங்கேயே பலர் இருக்கிறார்களே.
எதையும் தாய்மொழியில் கற்றால்தான் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் குழந்தைகளிடம் பெருகுகிறது என்பது உலகம் முழுவதும் மழலைக்கல்வி அறிஞர்கள் வலியுறுத்தும்
d 60560)LD.
இருப்பினும் எங்கள் பகுதிகளிலேயே பாலர்களை &Ffï6)(353 ü UITLöfsT606085615ë (35 (International Schools) ஆங்கிலத்தில் படிக்க அனுப்புகின்ற தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுகிறதே.
34

நறுந்தமிழ் அகளுங்கன்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் கூறிய புறநானூற்றுப் பாடல் வரி, உலக சகோதரத்துவத்தை உறுதிப்படுத்தும் உண்மை வரியாகட்டும் பெயரளவிலே தமிழராக வாழாமல் வாழ்வளவிலே தமிழராக வாழ வேண்டும்.
தமிழைத் தமிழர்கள் மதித்துத் தம் அன்றாடப் பாவனையில் வைத்திருந்தால் உலகம் முழுவதும் தமிழ் ஒலிக்கும். இங்கே நாம் இழந்த உயிர்களின் பெறுமதிக்கு அது ஒன்றே கைம்மாறாகும். அதுவே அஞ்சலியுமாகும்.
எங்களுக்காக உயிர் நீத்தவர்களின் ஆன்ம சாந்திக்கும் அதுவே வழியுமாகும். எனவே தமிழை வளர்ப்போம். தமிழராய்த் தலைநிமிர்வோம்.
Co
35

Page 21
நறுந்தமிழ் அகளுங்கன்
4. குமிழ் மொழியின் அடைமொழிகள்
“கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி” என்பது தமிழ்க்குடியின் தொன்மைக்குச் சான்று பகரும் வாக்கியம்.
"திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும். மண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம்.” எனப் பாரதி தாசன் பெருமைப்பட்டுக் கொள்கின்றார்.
எமது தாய்மொழி தமிழ். எம் தாய் மொழியாம் தமிழ்மொழியின் தாய்மொழியும் தமிழ்தான். அதன் தாய்மொழியும் தமிழ்தான். அதன் தாய் மொழியும். என சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழ் என்றால் இனிமை என்று பொருள் என்பர் சிலர். தமிழ் என்றால் அழகு என்று பொருள் என்பர் சிலர். தமிழ் என்றால் அமுது என்பார் பாரதிதாசன். “தமிழுக்கும் அமுதென்று பேர்” என அவர் பாடினார்.
தமிழ், தமிழ், தமிழ். என வேகமாக உச்சரித்தால் அது அமிழ்து, அமிழ்து, அமிழ்து என ஆகும் நுட்பத்தை உச்சரித்துப் பார்த்து உணருங்கள்.
“எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே." எனப் பாரதி தமிழை உரிமை உணர்வோடு வாழ்த்திப்பாடினான்.
"செந்தமிழ்” என்ற சொல்லே தமிழுக்கு வாய்த்த முதல் அடைமொழியாகும். செந்தமிழ் என்ற சொல் தொல்காப்பியத்தில் மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ளது.
36

நறுந்தமிழ் a. அகளங்கன்
نگ
செந்தமிழ் த்து செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்!
என்பவையே அவை. செந்தமிழ் என்ற சொற்பிரயோகம் வந்த அளவிலேயே தமிழில் கலப்பு ஏற்பட்டு விட்டது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது.
தமிழின் அடைமொழிகளில் செம்மை என்ற பண்பு சேர்ந்தது போல தண்மை என்ற பண்பும் சேர்ந்து சங்க இலக்கியத்தில் தமிழுக்குப் பெருமை சேர்த்தது.
"தள்ளாப் பொருளியல் பில் தண்டமிழ் ஆய்வந்திலார்” “தண்டமிழ் வேலித் தமிழ் நாட்டகம்” எனப் பரிபாட்டிலும் "தண்டமிழ் செறித்து’ எனப் பதிற்றுப் பத்திலும் “மண்டினி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்.” “தண்டமிழ் பொதுவெனப் பொறா அன்.” “தண்டமிழ் வரைப்பகம் கொண்டியாக."
எனப் புறநானூற்றிலும் தண்டமிழ் என்ற சொற்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. சங்க இலக்கிய நூலான பரிபாடலில் மாண்டமிழ் என்பதும் முத்தமிழ் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தெரிமாண்ட தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்” என்பது பரிபாடல் வரி.
ஐம்பெருங் காப்பியத்துள் பெரிதும் சிறப்புப் பெற்ற சிலப்பதிகாரத்தில் “வண்மை” தமிழ் மொழிக்கு அடைமொழி. யாயிற்று. அத்தோடு வேறுபல அடைமொழிகளையும் இளங்கோ அடிகள் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார்.
sy
“வண்டமிழ் மறையோர்க்கு வானுறை கொடுத்த.
"தென்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த.”
“அருந்தமிழ் ஆற்றல் தெரியாது மலைந்த.”
"குடக்கோ முனிசேரன் தண்டாவுரை முத்தமிழ்.”
37

Page 22
நறுந்தமிழ் அகளங்கன்
என வண்டமிழ், தென்தமிழ், அருந்தமிழ், முத்தமிழ் ஆகிய சொற்களை அருமையாகப் பயன்படுத்தியுள்ளார் இளங்கோ அடிகள், தென்தமிழ் என்பது இனிமையான தமிழ் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
பின்னால் தேவார முதலிகளில் முக்கியமானவராகப் போற்றப்படும் திருஞான சம்பந்தர், தமிழ் மொழிக்குப் பல அடைமொழிகளைக் கொடுத்துப் பாடல் பாடினார். அவை புதுப்புது அடைமொழிகளாக மிளிர்ந்தன.
ஆரா அருந்தமிழ், இசைமலிதமிழ், இன்புறுந்தமிழ், இன்றமிழ், உருவாகும் ஒண்டமிழ், உரையார் தமிழ், ஏரினார் தமிழ், ஒண்டமிழ், ஒளிர்பூந்தமிழ், கலைமலிதமிழ், கலை வளர்தமிழ், குலமார் தமிழ், குற்றமில் செந்தமிழ், குன்றாத்தமிழ், சங்கமலி செந்தமிழ், சொல்லார் தமிழ், ஞாலம் மிக்க தண்டமிழ், ஞானத்தமிழ், தகைமலி தண்டமிழ், சந்தநிறை தண்டமிழ், சந்தமார் தமிழ், சந்தமார்ந்தழகாய தண்டமிழ், சந்தமாலைத்தமிழ், சந்தமின்றமிழ், சந்துலாந்தமிழ், சீர்மிகுந்த தமிழ், சீரின் மலிசெந்தமிழ், செந்தண்டமிழ், செறிவண்டமிழ், தவமல்கு தமிழ், தன்னார்வம் செய்தமிழ், திருநெறிய தமிழ், துளங்கில் தமிழ்,
தேனேரார் தமிழ், நல்லவாய இன்றமிழ், நலங்கொள்தமிழ், நற்றமிழ், நிகரில்லன தமிழ், படமலிதமிழ், பண்ணிய தமிழ், பண்ணாருந் தமிழ், பந்தமார் தமிழ், பரவார் தமிழ், பரவிய தமிழ், பலமிகு தமிழ், பாரினார் தமிழ், புகழ்நின்ற தமிழ், பேரியல் இன்தமிழ், மருவிய தமிழ், மறையிலங்கு தமிழ், மறைவளரும் தமிழ், முடிவில் இன்தமிழ், முத்தமிழ், வளமார் தமிழ், விலையுடை அருந்தமிழ் என்பன சம்பந்தப் பெருமான் தமிழ் மொழிக்குக் கொடுத்த அடைமொழிகள்.
தம்மைத் தமிழ் ஞானசம்பந்தர் என்றும், நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன் என்றும் குறிப்பிட்ட அவரே தான் தமிழ்
8

நறுந்குமிழ் அகளங்கன்
மொழிக்கு அதிகூடிய அடைமொழிகளைக் கொடுத்த முதல்வர் எனப் போற்றத் தகுந்தவராகின்றார்.
வண்ணச் சரபந் தண்டபாணி அடிகளார் "தன்னேரில்லாத் தமிழ்” என்றார். தமிழ் விடுதூதார் “இருந்தமிழ்” என்றார். கவிச்சக்கரவர்த்தி கம்பனோ “என்றுமுளதென்தமிழ் என்றார்.
சேக்கிழார் சுவாமிகள் “ஞாலமளந்த மேன்மைத் தமிழ்", "ஏழிசை இன்றமிழ்", "ஒண்தீந்தமிழ்”, “சீர்மன்னு செந்தமிழ்", “செஞ்சொற்தமிழ்", "தண்ணார் தமிழ்”, “திந்தமிழ்", "துய்ய தமிழ்", “தூய தமிழ்”, “தெய்வத்தமிழ்”, “தென்னன் தமிழ்”, “தேக்குறு
தமிழ்", "தேமருதமிழ்”, “நல்லிசைத் தமிழ்;
499
“பண்பட்ட செந்தமிழ்”, “பூந்தமிழ்”, “பொய்யாத் தமிழ்", “மூவாத்தமிழ்”, “மேன்மைத்தமிழ்”, “வியன்தமிழ்”, என்றெல்லாம் தமிழைப் பல அடைமொழி கொண்டழைத்துச் சிறப்பித்தார்.
பாரதியார், "தேமதுரத் தமிழ்” என்றார். பாரதிதாசன் “பொங்கு தமிழ்” என்ற சொல்லைப் பயன்படுத்தினார். இன்று பொங்கு தமிழ் என்பது யாவருமறிந்த ஒன்றாயிற்று.
இன்னும் பல அருந்தமிழ்ப் புலவர்கள் அழகிய அடைமொழிகளைத் தமிழ்மொழிக்குப் பொருத்தி அழகு பார்த்தனர்.
இன்றோ தமிழை இவ்வகையில் போற்றுவாரில்லை. தமிழில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன என்று அறியாத தமிழர் (தமிலர்) பலர் இன்று தமிழ் படித்தவர்களாகப் போற்றப்படுகின்ற பரிதாப நிலையில் வாழ்கின்றோம்.
தாயே தமிழே உன்னைக் காக்கும் பணி தெய்வீகப் பணி. புண்ணியப் பணி என்று போற்றித் தமிழ் மொழியை வளர்த்துக் காப்போம்.
Co
39

Page 23
DD55td அகளங்கன்
5. குமிழ் மொழியின்
திடீயமும், நுடீயமும், ஒடீயமும்
"தமிழ் என்றால் இனிமை என்று பொருள்" என்பர் அறிஞர். "தமிழுக்கு அமுதென்று பேர்’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். தமிழ் என்றால் அன்பு என்றும், அழகு என்றும் பொருள் கொள்ளலாம் என்பர் இன்னுஞ் சிலர்.
தமிழ் என்பது தனிமைப் பொருள் குறித்த தமி’ என்னும் வினையடி கொண்ட சொல் என்றும் தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். தமியன், தமியள் என்ற சொற்கள் தனித்தவன், தனித்தவள் என்று"பொருள் கொள்வதை உற்று நோக்கும்போது இது தெற்றென தெளிவாகும், எனவே தமிழ் என்பது தனித்ததொரு செம்மொழி என்பர் அறிஞர்.
தமி’ என்பது "தனக்கு ஒப்பில்லாத" என்று பொருள் கொள்ளும் வகையிலும் அமைந்து விடுகிறது, அந்த வகையில் பார்க்கும் போது, தமிழ் என்பது தனக்கு ஒப்பில்லாத மொழி என்ற பொருளில் அமைந்த சொல்லாகும் என்பர் இன்னும் சில தமிழ் அறிஞர்.
தமிழ் என்ற சொல்லில் ‘ழ’ கரம் தமிழுக்கே உரிய சிறப்பெழுத்தாகும். மலையாளம், அறபு ஆகிய மொழிகளிலும் ழ கரம் உண்டு என்பர். இருப்பினும் 'ழ' கரம் அறபு மொழியில், தமிழ் மொழியில் ழ கரம் ஒலிப்பது போல ஒலிப்பதில்லை.
மலையாளம், தமிழ்த்தாய் ஈன்றெடுத்த குழந்தை என்பதால், மலையாளத்தில் ழ கரம் ஓரளவுக்குத் தமிழில்
ஒலிக்கப்படுவது போலவே ஒலிக்கப்படுகிறது என்பர்.
40 ኣ

நறந்தமிழ் அகளங்கன்
ஆக, தமிழிலுள்ள சிறப்பெழுத்தான ‘ழ’ கரத்தைக் கொண்ட தமிழ் என்ற சொல்லே தனித்துவமிக்கதாக விளங்குவதைக் காணலாம். தமிழ் என்ற சொல்லில் வல்லினமும் மெல்லினமும் இடையினமும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். வேறு மொழிகளில் இத்தகைய சிறப்பைக்
காணமுடியாது.
தமிழரின் பாரம்பரிய வாத்தியக் கருவிகளில் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவிகளின் பெயர்கள் 'ழ'கரத்தில் இருப்பதைப் பார்த்து வியந்து நிற்கிறோம்.
முழவு, குழல், யாழ் என்பன முறையே தோல் துளை, நரம்புக் கருவிகள் என்பது யாவரும் அறிந்ததே. இந்த மூன்று பெயர்களிலும் தமிழின் சிறப்பெழுத்தான 'ழ'கரம் இருப்பதால் இக் கருவிகள் தமிழருக்கே சொந்தமான பாரம்பரிய இசைக்கருவிகள் என்று உறுதிபடக் கூறி உவகையடைகின்றோம்.
தமிழிலே ஒரெழுத்தே சொல்லாகவும். வாக்கியமாகவும் வருகின்ற அழகையும் வளத்தையும் கண்டு வியக்காதவர்கள் இல்லை. ஆ(பசு)ஈ, காசோலை), கை, குழுமி), தீ, நா, நீ, பா, பூ, பை, மா (குதிரை) முதலான பெயர்ச்சொற்கள் ஓரெழுத்துச் சொற்களே.
கா (காப்பாற்று), தா, போ, வா, வை, ஈ (கொடு) முதலான வினைச் சொற்கள் ஓரெழுத்தைக் கொண்ட சொற்களாகவும், ஒரெழுத்தில் அமைந்த வாக்கியங்களாகவும் விளங்குவதைப் பார்த்து வியக்காத மொழியியல் அறிஞர்கள் இல்லை எனலாம். இவற்றை "ஒரெழுத் தொரு மொழி” என இலக்கணகாரர் கூறினும் வினைச்சொற்களை "ஒரெழுத்தொரு வாக்கியம்” எனவும் அழைக்கலாம்.
41

Page 24
குறுந்தமிழ் அகளங்கன்
காரணப் பெயர்:
நாய் என்ற பெயரை நா தொங்குகின்ற மிருகத்திற்கு வைத்தனர். பன்றி என்ற பெயரை பல் அதிகம் கொண்ட மிருகத்திற்கு வைத்தனர். அதிகமான பற்களைக் கொண்ட மிருகம் பன்றி, 44 பற்கள் பன்றிக்கு உண்டு என்கிறார்கள்.
புல்லைத் தின்னாத மிருகத்திற்கு புலி (புல் இலி) என்றும், மார்பினால் ஊர்ந்து செல்லும் பாம்புக்கு உரகம் (மார்பு) என்றும், அளக்க முடியாத நீரைக் கொண்ட நீர் நிலையை அளக்கள் (கடல்) என்றும் அழைத்தனர்.
தம் பின்னால் பிறந்தவனை தம்பின் என்று அழைத்தனர். அது பின்பு தம்பி ஆயிற்று. மூத்தவனை அண்ணா என்று அழைத்தனர். அண்ணா என்பது மூத்த, மேலே, உயர்ந்த முதலான பொருள்களைத் தரும் சொல்.
அண்ணம் என்பது மேலேயுள்ளது என்பதைக் குறிக்கும். அண்ணாந்து என்பது மேலே என்பதைக் குறிக்கும். எனவே, அண்ணன் என்றால் மேலேயுள்ளவன் என்று பொருள்.
இப்படியெல்லாம் காரணப் பெயர் வைத்த சிறப்பை விட, இன்னொரு நுட்பமான சிறப்பை இங்கு பார்ப்போம்.
நீர் நிலைகள்:
நீர் நிலைகளை அவற்றின் அளவுக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு ஏற்பவும் பல்வேறு பெயர்களால் அழைத்த நுட்பத்தை அறியும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
குளம், ஏரி, ஊருணி, பொய்கை, சுனை, மடு, கேணி, மோட்டை, அள்ளல், கிணறு, துரவு, தடாகம், கயம் ,மடை, சமுத்திரம், ஓடை, அளக்கர், அகழி, அசம்பு, குண்டு எனப்பல பெயர்களை நீர்நிலைகளுக்கு இட்டனர்.
42

நறுந்தமிழ் இகளுங்கன்
ஏர்த் தொழிலுக்காக (பயிர்ச்செய்கை, விவசாயம்) அமைக்கப்பட்டதை ஏரி என்றும், குளிப்பதற்காக அமைக்கப்பட்டதை குளம் என்றும், ஊரவர் உண்ணுவதற்காக (சுத்தமான குடிநீர்த் தேவைக்காக) அமைக்கப்பட்டதை ஊருணி என்றும்,
அரண்மனை மதிலின் வெளிப்புறத்தில், ஆழமாக அகழ்ந்து உருவாக்கப்பட்டு நீர் நிரம்பியதாக இருக்கும் வண்ணம் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டதை அகழி என்றும், சிறிதளவு நீருள்ள பள்ளத்தை சுனை என்றும், சேறு பொருந்திய நீர்ப்பள்ளத்தை அள்ளல் என்றும், மலர்கள் நிறைந்த நீர்நிலையை பொய்கை என்றும்,
அதைவிடச் சற்று விசாலமானதை (தடம் - விசாலம்) தடாகம் என்றும், தோட்டஞ் செய்வதற்காகத் தோண்டப்பட்டதைத் துரவு என்றும், ஆலயத்தில் அமைக்கப்படுவதைக் கேணி என்றும், ஆழமாக வெட்டிக் கட்டி பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுவதை கிணறு என்றும், அளக்க முடியாத நீர்நிலையை (கடல்) அளக்கள் என்றும் நுட்பமான வேறுபாடு விளங்கப் பெயர் வைத்து அழைத்தனர்.
ԱնվalTմ
பூவின் பல்வேறு நிலைகளைத் தமிழர் பெயரிட்டு அழைத்த நுட்பத்தை முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பின்வருமாறு அழகாக எடுத்து விளக்கியுள்ளார்.
அரும்பும் பருவம் அரும்பு, மொக்கு விடும் பருவம் மொட்டு. முகிழ்க்கும் பருவம் முகை, மலரும் பருவம் மலர். மலர்ந்த பருவம் அலர். வாடும் பருவம் வீ. வதங்கும் பருவம் செம்மல்.
சொல்நுட்பம்:
இத்தகைய பல நுட்பங்களைக் கொண்டது நம்
தமிழ்மொழி. உரைத்தல், அறைதல், கூறுதல், செப்புதல்,
43

Page 25
நறுந்தமிழ் அகளங்கன்
இயம்புதல், பிதற்றுதல், விளக்குதல், விள்ளுதல், கழறுதல், உளறுதல், புகலுதல், சொல்லுதல், பறைதல், ஏசுதல், பேசுதல், கதைத்தல், அளவளாவுதல், பகருதல், மிழற்றுதல், பன்னுதல், அகவுதல், அலம்புதல், மொழிதல், விளம்புதல், அரற்றுதல், சாற்றுதல், முதலான நாற்பதிற்கும் (40) மேற்பட்ட சொற்கள் நுட்பமான வேறுபாடு கொண்ட சொற்களாக விளங்கியிருக்கின்றன.
இன்று இவற்றில் பல சொற்கள் ஒரே கருத்தை உணர்த்துவனவாக இருக்கின்றன. இது மொழியின் தேய்வையே காட்டுகின்றது.
உரைத்தல் என்பது விளக்கமாகச் சொல்லுதல், அறைதல் என்பது யாவரும் அறியும்படி பகிரங்கப்படுத்தல். கூறுதல் என்பது பல கூறுகளாகப் பகுத்துச் சொல்லுதல், செப்புதல் என்பது தெளிவாகச் சொல்லுதல். பன்னுதல் என்பது மீண்டும் மீண்டும் ஒன்றையே ச்ொல்லுதல்.
அளவளாவுதல் என்பது கலந்து மகிழ்ந்து பேசுதல். விளம்புதல் என்பது விளக்கமாகச் சொல்லுதல். விள்ளுதல் என்பது மெதுமெதுவாக விடயத்தைச் சொல்லுதல், கதைத்தல் என்பது கதைகளைச் சொல்லுதல், கழறுதல் என்பது உறுதியாகச் சொல்லுதல் என நுட்பமான பொருள் வேறுபாடுகளை மேற்குறித்த சொற்கள் உணர்த்தின.
யாயும் ஞாயும்:
இவை மட்டுமன்றி எது ஒன்றையும் துல்லியமாகக் குறிப்பிட தமிழ் மொழியில் சொல் உண்டு. இன்று தாய் என்ற சொல்லை தன்மை, முன்னிலை, படர்க்கை என மூவிடங்களிலும் பயன்படுத்தும்போது, என்னுடைய தாய், உன்னுடைய தாய், அவனுடையதாய் என்றுதான் சொல்கிறோம்.
44

BUStrill அகளுங்கன்
ஆனால் முற்காலத்தில் சுருக்கமாக யாய் என்று தன்னுடைய தாயையும் (தன்மை), ஞாய் என்று உன்னுடைய தாயையும் (முன்னிலை) தாய் என்று அவனுடைய தாயையும் (படர்க்கை) குறித்தனர்.
இதேபோல எந்தை, நுந்தை, தந்தை, எங்கை, நுங்கை, தங்கை, எம்பி, நும்பி, தம்பி முதலான சொற்கள் பொருளுணர்த்திய நுட்பம் இன்று தமிழ் மொழியில் பாவனையில் இல்லை.
பட்டினம் - பட்டணம் - பட்டிக்காடு:
கடல் சார்ந்த நெய்தல் நில நகரத்தைப் பட்டினம் என்றும், கடலில்லா மருதநில நகரத்தைப் பட்டணம் என்றும், காடுசார்ந்த பசுமாட்டுப் பட்டிகளைத் தன்னகத்தே கொண்ட முல்லை நிலத்தை பட்டிக்காடு என்றும் நுட்பமாக அழைத்ததை இன்று நினைத்து தமிழின் வளத்திலே மயங்கிப் பூரித்துப் போகிறோம்.
பட்டிகள் பொருந்திய காடாக இருந்த முல்லை நிலம், பட்டிக்காடாகக் கருதப்பட்டது. அது நாகரிக வளர்ச்சி குன்றி இருந்த காரணத்தால், இன்று நாகரிக வளர்ச்சி குறைந்த கிராமங்கள் எல்லாம் பட்டிக்காடு' என்று அழைக்கப்படுகின்றன.
ஒலி வேறுபாடு:
மிருகங்கள், பறவைகளின் ஒலிகளை வேறுபடுத்தி, மயில் அகவும், கிளிபேசும், குயில் கூவும், சிங்கம் கர்ச்சிக்கும், புலி உறுமும், பூனை சீறும், வண்டுகள் ரீங்காரம் செய்யும், என்றெல்லாம் மரபுச் சொற்களை வகுத்த தமிழ்ப் புலவர்கள், வாத்தியக் கருவிகளிலிருந்து வரும் ஒலிகளையும் வேறுபடுத்திப் பெயரிட்டு அழைத்தனர்.
45

Page 26
J5DJÚ55 அகளங்கன்
"குழல் அகவ யாழ் முரல
முழவு அதிர முரசு இயம்ப
விழவு அறா இயல் ஆவணத்து”.
எனச் சங்க காலத்துப் பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பட்டினப்பாலை குழலின் ஒலியை அகவல் என்றும், யாழின் ஒலியை முரல்தல் என்றும், முழவின் ஒலியை அதிர்தல் என்றும், முரசின் ஒலியை இயம்பல் என்றும் நுட்பமாகக் குறிப்பிடுகின்றது.
கம்பன் தனது இராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் கைகேயி சூழ்வினைப் படலத்தில்,
“வங்கி யம்பல தேன் விளம்பின
வாணி முந்தின பாணியின் பங்கி அம்பரம் எங்கும் விம்மின
பம்பை பம்பின, பல்வகைப் பொங்கு இயம் பலவும் கறங்கின
நூபுரங்கள் புலம்ப வெண் சங்கு இயம்பின கொம்பு அலம்பின
சாம கீதம் நிரந்தவே”
(அயோ, கைசூழ். 1554)
விளம்பின, முந்தின, விம்மின, பம்பின, கறங்கின புலம்ப, இயம்பின, அலம்பின, நிரந்த எனப் பல்வேறு ஒலிவேறுபாடுகளைக் குறிப்பிடுவதையும் படித்து மகிழாதார் இல்லை.
இதுமட்டுமன்றி கம்பன் பாலகாண்டத்தில் நாட்டுப் படலத்தில் சில ஒசைகளை நுட்பமாகப் பின்வருமாறு அழகாகக் காட்டுகின்றான்.
46

நறுந்தமிழ் அகளங்கன்
"ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலைபாய் அமலை ஆலைச் சாறுபாய் ஒதை வேலைச் சங்கின்வாய் பொங்கும் ஓசை ஏறுபாய் தமரம் நீரில் எருமைபாய் துழனி இன்ன மாறுமாறு ஆகித் தம்மின் மயங்குமாம் மருத வேலி.”
(பால.காட் 1)
அரவம், அமலை, ஓதை, ஓசை, தமரம், துழனி என ஓசை வேறுபாடுகளைக் காட்டி, பெயரிட்டு அழைத்த அழகு தமிழ் மொழியின் சொல்வளத்தைக் காட்டுகிறது.
பெரிய புராணத்தைப் பாடிய சேக்கிழார் பெருமானும் இத்தகைய நுட்பத்தைத் தனது பாடல்களிலே காட்டியுள்ளார்.
"ஆலை பாய்பவர் ஆர்ப்புறும் ஒலமும் சோலை வாய்வண்டு இரைத்துஎழு சும்மையும் ஞாலம் ஓங்கிய நான்மறை ஒதையும் வேலை ஒசையின் மிக்கு விரவுமால்.”
(பெரி.திருநாட்டுச் சிறப்பு - 68)
ஒலம், சும்மை, ஒதை, ஓசை என ஒலி வேறுபாடுகளைப் பாடி, ஆரவாரச் சத்தத்தை ஒலம் என்றும், வண்டினம் இரைச்சலோடு எழுகின்ற ஒலியை சும்மை என்றும், வேத முழக்கத்தை ஒதை என்றும் நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார் சேக்கிழார் பெருமான்.
வாழ்த்துதல் - வழுத்துதல்:
இது மட்டுமன்றி மக்களை வாழ்த்துவதை வாழ்த்துதல் என்றும், தெய்வத்தை வாழ்த்துவதை வழுத்துதல் என்றும் கூட நுட்பமான வேறுபாட்டைத் தமிழ்ப் புலவர்கள் கையாண்டு, தமிழ் மொழியின் வளத்தை எடுத்துக் காட்டினர்.
47

Page 27
அகளங்கன்
உப்பும் தப்பும்:
“உப்பில் லாப் பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழியைச் சொல்லுகிறோமே, இதன் நுட்பத்தை அறிந்து கொண்டா சொல்கிறோம். தேன், பால் முதலியவற்றிலும், பழவகைகளிலும் உப்பு இல்லை என்று குறைகூறி அவற்றைக் குப்பையிலே கொட்டுகிறோமா? விரும்பிக் குடிக்கிறோமே. உண்கிறோமே.
உண்மையில் உப்பு என்று ஒரு சுவையே இல்லை. உவர்ப்பு என்பதைத்தான் உப்பு என்று இன்று அழைக்கின்றோம். உப்பு என்பதை ஒரு குறித்த சுவையாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் உப்பு என்பது சுவை என்ற பொருளை மட்டுமே குறிக்கிறது. u
புளிப்பு, இனிப்பு, உறைப்பு (கார்ப்பு-காரம்), கசப்பு. துவர்ப்பு, உவர்ப்பு (கரிப்பு) என்று சொல்லப்படுகின்ற அறுவகைச் சுவைகளையும் குறிக்கும் சொற்கள் யாவற்றிலும் உப்பு என்ற ஒலி(ப்பு) இருப்பதை அவதானிக்கலாம்.
உதாரணமாக புளிப்பு என்றால் புளி ஆகிய சுவை என்றே பொருள் கொள்ள வேண்டும். எனவே "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்ற பழமொழி “சுவையில்லாத பண்டம் குப்பையிலே’ என்ற பொருளையே தருகிறது. பண்டம் என்பது பொதுவாக உண்ணும் பொருளைக் குறிக்கிறது. தின்பண்டம் என்ற சொல்லை நோக்க இது விளங்கும்.
இருப்பினும் திருவள்ளுவரின் காலத்திலேயே உவர்ப்பு என்ற சொல் உப்பாக மருவி விட்டதனால் உப்பு என்பது ஒரு சுவையைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது.
"உப்பமைந் தற்றால் புலவி அது சிறிது மிக்கற்றால் நீள விடல்" (குறள் 1302)
48

நறுந்தமிழ் அகளங்கன்
இக்குறளில், ஊடல் என்பது உணவுக்கு உப்பைப் போன்றது என்ற பொருளில் வருவது கவனிக்கத்தக்கது.
தரித்திரோம் - செல்வோம்:
வறுமை, செல்வம் ஆகியவை இரண்டுமே மனிதனுக்கு நிரந்தரமானவை அல்ல என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தும் தத்துவ நோக்கில் வறுமையைத் தரித்திரம் (தரித்துஇரம்-தங்கி இருக்க மாட்டோம்) என்றும், செல்வத்தை செல்வம் (செல்வோம்) என்றும் பயன்படுத்திய சொல் நுட்பத்தை யார்தான் வியக்க மாட்டார். யார்தான் இரசிக்க மாட்டார்.
இத்தகைய நுட்பத்தை உலகிலுள்ள வேறெந்த மொழியிலும் காணவே முடியாது. இப்படிப் பல நுட்பங்களை எடுத்துக் காட்டலாம். விரிவஞ்சி விட்டு விட்டோம். இத்தகைய சிறப்பு தமிழ் மொழிக்கே உரிய பெருஞ் சிறப்பாகும். தமிழ் மொழியின் நுட்பமும், திட்பமும் (உறுதி), ஒட்பமும் (அழகு) புலவர்களாலே போற்றப்பட்டது. போற்றப்படுகிறது. நாமும் போற்றுவோம்.
உயர்தனிச் செம்மொழியே ஓங்குக தமிழ் மொழியே.
O
49

Page 28
நறுந்தமிழ் அகளுங்கன்
6. பண்டைத் குமிழரின் பண்பாடீடுக்
கோலங்கள்
கைகொடுத்தல்
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கைகொடுத்து வரவேற்றல் இன்று உலகம் முழுவதும் பரவி விட்டது எனலாம்.
ஆண் பெண் என்ற பால் வேறுபாடு இல்லாமல் இவ்வழக்கம் கீழைத்தேசத்திலும் வெகுவேகமாகப் பரவி வருகிறது.
இவ்வழக்கம் ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் எங்கள் நாடுகளுக்குப் பரவியது என்று பொதுவாகச் சொல்லிக் கொள்கிறோம்.
“உங்களுக்குத் தெரியுமா” என்ற புத்தகத்தில் கைகொடுக்கும் பழக்கம் எப்படித் தோன்றியது என்றொரு சுவாரசியமான செய்தியைப் படித்தேன். அச்செய்தியை அப்படியே இங்கு தருகிறேன். அறிந்து கொள்ளுங்கள்.
“பழங்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் தெருக்களுக்கு வெளிச்சம் இருக்கவில்லை. கள்வர் இருண்ட தெருவோரங்களில் பதுங்கியிருந்தார்கள்.
ஆகவே, வழிப் போக்கள் தம்மைப் பாதுகாக்கும் பொருட்டு வாள் கொண்டு சென்றனர். இரண்டு பேர் சந்தித்தபோது, தம்மிடம் ஆயுதம் இல்லை என்றும், தாம் நண்பர்கள் என்றும் அறிவிப்பதற்காக அவர்கள் ஆயுதம் பிடிக்கும் கைகளை நீட்டினர்.
50

நறுந்தமிழ் அகளங்கன்
மற்றவர் கையைப் பிடித்து அவரிடம் ஆயுதம் இல்லை என்றும் அவரால் ஆபத்து நேராதென்றும் அறிந்தனர்.”
இப்படியாக கைகொடுக்கும் வழக்கம் ஏற்பட்டு பரவியது என அந்தப் புத்தகத்தில் ஒரு செய்தி உண்டு.
இந்தக் கைகொடுக்கும் பழக்கம், இத்தோடு கைகுலுக்கும் பழக்கமாகவும் மாறியதோடு, இன்ப துன்ப உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதற்கென சில வித்தியாசமான முறைகளையும் கொண்டுள்ளதை இன்று காண்கிறோம்.
கைகொடுக்கும் பழக்கம் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழரிடையே இருந்திருக்கிறது என்று நான் சொன்னால் உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
சங்க இலக்கியத் தொகை நூல்கள் எட்டினுள் புறநானூறு மிகவும் புகழ் பெற்றது. புறநானூறு நூலில் கபிலர் பாடிய பாடலொன்று என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற அரசனைக் காண்பதற்காக கபிலர் வந்தபோது, அவ்வரசன் கபிலரின் கையைப் பிடித்து வரவேற்று அழைத்துச் சென்றான்.
கபிலரின் கை மிக மென்மையாக இருந்ததைக் கண்டு “உங்களது கை மிக மென்மையாக இருக்கிறதே" என்று வியந்து
கூறினான்.
அதற்குக் கபிலர் தனது கையின் மென்மைக்கும், அரசனது கையின் வன்மைக்கும் காரணம் கூறுகிறார். புறநானூற்றில் பதின்நான்காவது பாடலில் வருகிறது இச் செய்தி. யானையை அடக்கிச் செலுத்தி பகை அரண்களை அழிப்பதாலும், குதிரையின் கடிவாளத்தை இழுத்து அதனைக்
5

Page 29
நறுந்தமிழ் அகளங்கன்
கட்டுப்படுத்திப்போர் செய்வதாலும், வில்லேந்திப் போர் செய்வதாலும், அத்தோடு,
பரிசிலர்க்கு அருங்கலன் நல்கவும் குரிசில் வலிய வாகும் நின் தாள் தோய் தடக்கை
அதாவது பரிசுபெற வருவோர்க்கு அரிய ஆபரணங்களை அள்ளி அள்ளிக் கொடுப்பதாலும் உன் விசாலமான கைகள் மிகவும் வலிமையானவையாக இருக்கின்றன.
ஆனால் எனது கைகளும், என்போன்று உன்னைப் பாடுகின்றவர்களது கைகளும், கறிசோறு உண்ணப் பயன்படுகின்ற கைகளாதலால் மிகவும் மென்மையாக இருக்கின்றன.
கறிசோறு உண்டு வருந்து தொழிலல்லது பிறிது தொழிலறியா வாகலின் நன்றும் மெல்லிய பெரும. நிற் பாடுநர் கையே.
என்கிறார் கபிலர். மன்னன் புலவருக்குக் கைகொடுத்து அழைத்துச் சென்ற இச்சம்பவம் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சம்பவம்.
கையின் மென்மை, வன்மை பற்றிய செய்தி இப்பாடலில் வருவதால் உள்ளங்கைகளையே தடவிப் பார்த்தனர் எனக் கொள்ளலாம். அதாவது இன்றுபோல் கைகொடுத்தனர் எனலாம் அல்லவா.
சுடுதண்ணிப் போத்தல்:
சூடான நீரை, அதாவது வெந்நீரைச் சூடு குறையாமல் சூடாக அப்படியே வைத்திருக்கும் பாத்திரத்தை இன்று யாவரும் அறிவர்.
52

நறுந்தமிழ் - அகளுங்கன்
இப்பாத்திரத்தைச் சுடுதண்ணிப் போத்தல் என்று தமிழும் ஆங்கிலமும் கலந்த சொல் லால் இன்று அழைக்கின்றோம். சுடுதண்ணி என்ற சொல்லே பிழையானது.
தண்ணிர் என்றால் குளிர்ந்த நீர் என்று பொருள். ஆனால் நாங்கள் தண்ணிர் என்ற சொல்லை நீர் என்ற அர்த்தத்தில்தான் இன்று பயன்படுத்துகிறோம்.
சுடுதண்ணிப் போத்தல் என்பது பேச்சு வழக்காகப் பரவி விட்டது. சரி, அதுவல்ல நான் சொல்ல வந்த விடயம்.
இப்பாத்திரத்தை இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தமிழரும் பயன்படுத்தினார்கள் என்பது தான் நான் சொல்ல வந்த விடயம்.
அப்பொழுது அப்பாத்திரத்திற்குப் பெயர் சேமச்செப்பு என இருந்திருக்கிறது.
குறுந்தொகை என்னும் சங்க இலக்கிய நூலிலே இது பற்றிய ஒரு பாடல் வருகிறது.
கணவன் பொருள் தேடப் பிரிந்து சென்றான். கடைப்பெயல் வாடைக் காலம் தொடங்க வந்து விடுவதாக அவன் உறுதியளித்துச் சென்றிருந்தான்.
A கணவன் வந்து விடுவான் வந்து விடுவான் என்று
வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள் மனைவி. அவனோ வந்து சேரவில்லை.
கடைப்பெயல் வாடை தொடங்கி விட்டால் அவன் நிச்சயம் வந்து விடுவான் என்பது அவளுக்குத் தெரியும்.
ஆனால் கடைப்பெயல் வாடை எப்பொழுது தொடங்கும் என்பது அவ்விளம் பெண்ணுக்குத் தெரியாது. யாரைக் கேட்பது. S3

Page 30
நறுந்தமிழ் அகளங்கன்
அந்த நேரத்தில் ஒரு துறவி அவளது வீட்டருகே வருகிறார். அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என நினைக்கிறாள்.
முதலில் துறவிக்கு நல்ல அமுது கிடைக்கவும், அவரது சேமச் செப்பில் வெந்நீர் கிடைக்கவும் வாழ்த்திவிட்டுக் கேட்கிறாள்.
ஆசு இல் தெருவின் ஆசுஇல் வியன்கடை செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது ஓர் இல் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்பத் தண்ணிர் சேமச் செப்பில் பெறீஇயரோ - நீயே மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை எக்கால் வருவது? என்றீர் அக்கால் வருவர் எம் காதலோரே
(குறுந்தொகை 277)
ஓரிற் பிச்சையார் என்ற புலவர் இந்தப் பாடலைப் பாடி இருக்கிறார். “வெப்பத் தண்ணிர் சேமச் செப்பில் பெறீஇயரோ” என்ற வரிகள் முற்காலத்தில் வெப்ப நீரை வெப்பம் குறையாமல் பாதுகாக்கும் பாத்திரம் இருந்தது என்பதையும், அதற்குப் பெயர் சேமச்செப்பு என்பதையும் தருகின்றன.
அரசர்களின் பாதுகாப்பு:
பண்டைக் காலத்தில் அரசர்களின் பாதுகாப்புப் பிரிவில் பறவைகளும் விலங்குகளும் பணியாற்றின என்றால் நம்புவீர்களா?
அரசன் அணியும் மாலை, ஆபரணங்கள், சந்தனம், ஆடை
என்பவற்றில் விஷம் கலந்து இருந்தால் அதை அறிந்து
கொள்வதற்காக அரச அன்னம், சக்கரவாளப் பறவை
என்பவற்றை அரசர்கள் அரண்மனையிலே வளர்த்து வந்தனர்.
54

நறுந்தமிழ் ட அகளுங்கன்
அரச அன்னம் என்பது கால்கள் செந்நிறம் கொண்ட வெள்ளை நிற அன்னம். நளனுக்கும் தமயந்திக்கும் இடையே தூது சென்ற அன்னம் அரச அன்னம் என்பார் புகழேந்திப் புலவர்.
பூமாலை, சந்தனம், ஆபரணங்கள், ஆடை என்பவற்றை அரச அன்னத்தின் கண்களுக்கருகில் கொண்டு சென்றால் அரச அன்னத்தின் கண்களிலிருந்து இரத்தம் வடியும்.
இவற்றை சக்கரவாளப் பறவையின் முகத்தருகே கொண்டு சென்றால் அதன் முகம் கடுக்கும். அதாவது முகம் சுளிக்கும். வெறுப்பினால் அதன் முகம் சிவக்கும்.
தண்ணிரிலும், சாப்பாட்டிலும் நஞ்சு கலந்திருக்கின்றதா என்பதை கருங்குரங்குக்கு அவற்றை வைத்துப் பரிசோதித்துப் பார்த்தனர். தண்ணில் அல்லது உணவில் நஞ்சு கலந்திருப்பின் கருங்குரங்கு உண்ணாது முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ளும்.
இந்தச் செய்தியை திருத்தக்க தேவர் பாடிய ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் காண்கிறோம்.
சீவகனை எப்படி எதிரிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை நந்தட்டன், பதுமுகனுக்குச் சொல்வதாக அமைந்த பாடலில் தான் இத்தகவல் காணப்படுகின்றது.
வண்ணப் பூமாலை சாந்தம்
வாலணி கலன்கள் ஆடை
கண்முகத்து உறுத்தித் தூய்மை
கண்டலாற் கொள்ள வேண்டா
அண்ணலம் புள்ளே டெல்லா
ஆயிரம் பேடைச் சேவல்
55

Page 31
Jb DJÖ3d அகளுங்கன்
உண்ணுநீர் அமிழ்தம் காக்க
யூகமோ டாய்க என்றான்
(சீவக சிந். 1893)
முற்காலத்தில் அரசர்களின் மெய்ப்பாது காவலர்களாக பறவைகள் விலங்குகள் என்பனவும் இருந்திருக்கின்றன என்பது ஆச்சரியமான செய்தி தானே.
பொற்கைப் பாண்டியன் :
எங்கள் பகுதிகளில் பொறிவெடிகள், கண்ணிவெடிகளினால் கால்களை இழந்தவர்களுக்கு ஜெய்ப்பூர்க் கால் பொருத்துவது யாவரும் அறிந்த செய்திதான்.
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இத்தகைய வழக்கம் இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா?
சிலப்பதிகாரக் காவியத்திலே வருகிறது இந்தச் செய்தி. மதுரையை எரித்த கண்ணகியிடம் மதுரா பதித் தெய்வம் பாண்டியர்களின் நீதி நெறிமுறைபற்றி விரிவாகக் கூறுகிறது.
ஒரு கணவன் மனைவியைப் பிரிந்து யாத்திரை சென்றான். தனித்திருக்கப் பயந்த அவளிடம் “எமது மன்னனின் ஆட்சியில் தவறேதும் ஏற்படாது அரசனின் காவலைவிடச் சிறந்த காவல் என்ன இருக்கிறது” என ஆறுதல் சொல்லிச் சென்றான்.
நகர்க் காவலுக்கு மாறுவேடத்தில் வந்த மன்னன் அதனைக் கேட்டு மகிழ்ந்து இரவு தோறும் நகர்க் காவலுக்குச் செல்லும்போது அவ்வீட்டின் காவலில் விசேட கவனம் செலுத்தினான்.
ஓர் இரவு வீட்டுக்குள்ளே ஆண் குரல் கேட்டது. அது அவளின் கணவனது குரல் என்பதை அறியாத அரசன் அவசரத்தில் அவ்வீட்டுக் கதவைத் தட்டினான்.
56

DUBзrd ۔۔۔۔ அகளங்கன்
உள்ளே வந்த குரல் அவளது கணவனின் குரல்தான் என்பதை ஒரு கணத்தில் அறிந்து கொண்டு அரசன் தடுமாறினான்.
இரவு நேரத்தில் கதவு தட்டப்பட்டதால் கணவன் தன் மனைவியின் கற்பில் சந்தேகப்பட்டு விடுவானோ என அஞ்சினான் அரசன்.
உடனே அயல்வீட்டுக் கதவுகளையும் விரைவாகத் தட்டியபடி ஓடி மறைந்து விட்டான்.
வீட்டுக்காரர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது யாரையும் காணாததால், கள்வன்தான் கதவைத் தட்டியிருக்க வேண்டும் என முடிவு கட்டி காலையிலே மன்னனிடம் சென்றனர்.
மன்னனிடம் முறையிட்டனர். கதவைத் தட்டிய கள்வனை என்ன செய்ய வேண்டும் என்று மன்னன் மக்களிடம் கேட்டான்.
கதவைத் தட்டிய கையை வெட்ட வேண்டும் என்று தீர்ப்புக் கூறினர். உடனே மன்னன் தன் உடை வாளினால் தன்கையைத் தானே வெட்டினான்.
மன்னன்தான் நகர்காவலின்போது தங்கள் கதவுகளைத் தட்டினான் என்பதை அறிந்த மக்கள் பெரும் துயர் உற்றனர்.
கொற்கையை தலை நகராகக் கொண்டு ஆட்சி புரிந்த பாண்டிய மன்னனின் நீதி நெறிமுறையையும் ஆட்சிச் சிறப்பையும் மதுராபதித் தெய்வம் பின்வருமாறு கூறுகிறது.
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவுக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
அரைச வேலி அல்லது யாவதும்
புரைதீர் வேலி இல்லென மொழிந்து
57

Page 32
நறுந்தமிழ் அகளங்கன்
மன்றத்து இருத்திச் சென்றீர், அவ்வழி இன்றவ் வேலி காவாதோ, எனச் செவிச் சூட்டு ஆணியின் புகையழல் பொத்தி நெஞ்சம் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று வச்சிரத் தடக்கை அமரர் கோமான் உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து இறைக்குடி. (சிலப் - கட்டுரைகாதை)
என வரும் செய்தியை நல்லதொரு கதையாகச் சொல்லும் வழக்கம் உண்டு.
தனது கையை வெட்டிய பாண்டிய மன்னன், பின்பு பொன்னாலே கைசெய்து பொருத்திக் கொண்டான். அதனால் கொற்கைப் பாண்டியன் பொற்கைப் பாண்டியனானான் என்கிறார்கள் பிற்காலப் புலவர்கள்.
கம்பரும் பொற்கைப் பாண்டியனும்:
கவிச்சக்கரவர்த்தி கம்பன் தனது மனைவியோடு தனது வீட்டினுள்ளே உல்லாசமாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தான். கதவு சாத்தப்பட்டிருந்தது. திடீரெனக் கதவில் யாரோ தட்டுவதுபோலச் சத்தம் கேட்டது. கம்பன் எழுந்து சென்று பார்த்தான் யாருமில்லை.
தென்றல்தான் கதவிலே தட்டியது, மோதியது என்று தெரிந்து கொண்ட கம்பனுக்கு தென்றல் மேல் கோபம் வந்தது.
தென்றலைப் பார்த்து கம்பன் சொன்னான். "ஏற்கனவே பாண்டிய மன்னன், கொற்கைப் பாண்டியன், வீட்டுக்கதவைத் தட்டி பொற்கையன் ஆகியிருக்கிறான். அந்தக் கதை
போதாதென்றா நீ வந்து கதவைத் தட்டினாய்’ என்று.
58

நரந்தமிழ் அகளங்கன்
கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான் பொற்கையான் ஆனகதை போதாதோ - நற்கமல மன்றலே வாரி மணிவா சலையசைக்கத் தென்றலே ஏன்வந்தாய் செப்பு.
(கம்பன் தனி - 10)
இன்றைய ஜெய்ப்பூர்க்கால் போல பொற்கையாகத் தன்வசதிக் கேற்பச் செய்து பொருத்தியிருக்கிறான் பாண்டிய மன்னன் என்று இச்செய்தி மூலம் அறிய முடிகிறது.
அதுமட்டுமன்றி பக்கத்து வீட்டுக்கதவுகளையும் மன்னன் தட்டிச் சென்றதால், தொடர் வீடுகள் நெருக்கமாக அக்காலத்தில் அமைக்கப் பட்டிருந்தன எனவும் அறிய முடிகிறது.
சிலப்பதிகாரத்தில் இச்செய்தி பாடப்பட்டுள்ளதால்,
சிலப்பதிகாரக் காலத்திற்கு முந்தியதாக இவ் வழக்கம் இருந்திருக்க வேண்டுமல்லவா.
CD
59

Page 33
நறுந்தமிழ் அகளுங்கன்
7. தும்மலும் வாழ்த்தும்
உலகிலுள்ள அதிகூடிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட பொது நூல் என்ற சிறப்புக்குரிய நூல் திருக்குறள்.
பேராசிரியர் வி. செல்வநாயகம், அவர்களின் தமிழிலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பில் சங்க மருவிய காலத்தில் இந்நூல் எழுந்ததாகக் கருதப்படுகின்றது.
சங்க மருவிய காலம் என்பதை களப்பிரர் காலம், இருண்ட காலம், அறநெறிக் காலம் என்றெல்லாம் பலவாறாக அழைக்கின்றனர்.
அறக்கருத்துக்களை முதன்மைப்படுத்திய நூல்களையே அதிகமாகக் கொண்ட காலம் இக்காலம் என்பதால் இக்காலம் அறநெறிக் காலமாயிற்று என்பர்.
இக்காலத்தில் எழுந்த அறநூல்களில் மிகவும் சிறப்புப் பெற்றவை திருக்குறளும், நாலடியாரும் ஆகும். "நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி” என்று நாலடியாரையும் திருக்குறளையும் தமிழர் போற்றினர்.
திருக்குறளை அறநூலாகப் போற்றுபவர்களே அதிகம்.
திருக்குறளிலே கருத்துச் சிறப்பைப் போற்றுபவர்களில் மிகச் சிலரே இலக்கியச் சுவையைப் போற்றுகிறார்கள்.
திருவள்ளுவர் தனது கருத்துக்களை அற்புதமான இலக்கியமாகப் படைத்துள்ளார். தனது கவித்துவத்தால் தனது கருத்துக்களை நிலைநிறுத்தியுள்ளார்.
60

நறுந்தமிழ் இகளுங்கன்
அவரது உவமானங்கள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள், சொல்லாட்சிகள், அணிகள் என பலவற்றை இலக்கிய நயமறியத் தெரிந்தவர்கள் இரசிப்பதுண்டு.
திருக்குறளில் இருபத்தைந்து அதிகாரங்கள் காமத்துப்பாலாக இனிக்கின்றன. இலக்கிய நயம் நாடும் இளைஞர்களுக்கு இவை பெருவிருந்து படைக்கவல்லன.
பண்டைய இலக்கிய வாதிகள் முதல் இன்றைய இளம் திரைப்படப் பாடலாசிரியர்கள் வரை யாவருக்கும், காதலைப் பாடுவதற்கு திருக்குறளே பெரிதும் கைகொடுத்துள்ளது.
குறிப்பாக கவியரசு கண்ணதாசன் திருக்குறளின் காமத்துப் பாலிலுள்ள கருத்துக்களைத் தனது பல பாடல்களிலே புகுத்தி பெருவெற்றி கண்டுள்ளார்.
இங்கே திருக்குறளின் காமத்துப் பாலில் வருகின்ற நளினமான நகைச்சுவைகள் சிலவற்றைக் காண்போம்.
இலக்கிய இன்பம் மிகுந்த நகைச்சுவைகளை அறிந்து இரசிப்பது இதயத்துக்கு இன்பமளிக்கவல்லது தானே.
தும்மலும் வாழ்த்தும்
ஓர் இனிய மாலைப் பொழுது. இளங்காதலர்கள், இன்பம் அனுபவிக்க விரும்பிய உணர்வுகள் நிரம்பிய இளவயது உடல்கள்.
இரண்டு உடல்களும் விலகியே இருக்கின்றன. இருவரும் வாய்மூடி மெளனித்திருக்கிறார்கள். அவர்களுக்கிடையே
DGIL6)Tib.
பொய்க் கோபம் எனப் பொருள் கொண்ட அவ்வூடல் திருவது எப்போது. ஊடல் உணவுக்கு உப்பைப் போன்றது.
61

Page 34
நறுந்தமிழ அகளங்கன்
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே. அதேவேளை உப்பு அதிகம் இருந்தாலும் அப்பண்டம் குப்பையிலே தான்.
ஊடலை நீள விட இருவருக்குமே விருப்பமில்லை. இருப்பினும் யார் முதலில் பேசுவது என்பது தான் பிரச்சினை.
நீளுகின்ற ஊடலை நிறுத்துவதற்கு யாரோ ஒருவள் பேசியாக வேண்டுமே. பெரிய பெரிய உலக மகா யுத்தங்களையெல்லாம் பேசித் தீர்த்திருக்கலாம் என்றுதானே பெரியவர்கள் சொல்கிறார்கள்.
இது என்ன தீராப் பகையா. சிறு ஊடல். பொய்க்கோபம். நான் ஏன் முதல் கதைக்க வேண்டும். அவளே தொடங்கட்டுமே என்ற தன்முனைப்பு. அகம்பாவம், தற்பெருமை அவனுக்கு.
தான் முதலில் கதைத்து விட்டால், தான் அவளிடம் தோற்றதாக ஆகிவிடும் என்பது அவனது எண்ணம்,
அவள் அப்படிப் பட்டவளல்லள். அப்படியென்றால் அவளே முதலில் கதைக்கலாமே. தனது காதலனிடம் தோற்பதில் அவளுக்கு எந்த அவமானமும் இல்லை. மனக்குறையும் இல்லை. ஆனாலும் அவள் தானாக வலிந்து கதைக்கத் தயாராக இல்லை. ஏனெனில் அவள் தமிழிலக்கியம் கற்றவள். காதலனை விட அவளுக்கு தமிழிலக்கிய அறிவு அதிகம் இருந்தது.
வேறு எந்தப் போட்டியாக இருந்தாலும் தோற்றவர் தோற்றவர்தான். வென்றவர் வென்றவர் தான்.
ஆனால் காதல், காமம் என்ற உணர்வுகளோடு சம்பந்தப்பட்ட போட்டிகளில் இந்த நியதி மிகவும் வித்தியாசமானது.
காமம், இருவருக்கும் வெற்றிதரும் போர் என்பார்கள். காதலில் குறிப்பாக ஊடலில் தோற்றவரே வென்றவர் ஆவார்
62

நறுந்தமிழ் அகளுங்கன்
என்பது மரபு. திருவள்ளுவர் இதனை மிகவும் அழகாகச் சொல்கிறார்.
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும்.
(குறள் 1327)
எனவே, காதலி, தான் முதலில் கதைத்தால், தான் வென்றவளாகி விடுவாள். தன் காதலன் தோற்றவன் ஆகிவிடுவான் என்பதை உணர்ந்து வெற்றியைத் தன் காதலனுக்குக் கொடுப்பதற்காக மெளனமாகக் காத்திருந்தாள்.
தன் காதலன் தன்னிடம் தோற்கக் கூடாது. தன்னிடம் மட்டுமல்ல யாரிடமும் தோற்கக்கூடாது என்ற உயரிய எண்ணம் கொண்டவள் அவள்.
இந்த நுட்பம் அறியாத காதலன் எப்படியாவது காதலியை முதலில் கதைக்கச் செய்ய வேண்டும் என்று யோசித்து அவளின் மெளனத்தைக் கலைக்க வழிகண்டு பிடித்தான்.
ஒருவர் தும்மினால் பக்கத்திலுள்ளவர் உடனடியாக நூறு, நூறு என்று சொல்வது நெடுங்கால வழக்கம்.
தும்மிய உடனே நூறாண்டு வாழ்க என்று வாழ்த்துவது மரபு. அதைத்தான் சுருக்கமாக நூறு என்று குறிப்பிடுவார்கள்.
இன்றும் கிராமங்களில், யாராவது தும்மினால் உடனே அருகில் இருப்பவர் நூறு என்று சொல்லுகின்ற வழக்கம் உண்டு.
காதலன் திடீரெனத் தும்மினான். காதலி ஊடல் மறந்து நூறு எனச்சொல்லி வாழ்த்தி விட்டாள். திருவள்ளுவர் இந்தக் காட்சியை மிகவும் நகைச்சுவையாக ஒரு சொற்சித்திரமாக
அற்புதமாகத் தீட்டியிருக்கிறார்.
63

Page 35
நறுந்தமிழ் அகளங்கன்
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து (குறள் 1312)
காதலி, தன் காதலன் தமது ஊடலைப் போக்கி தன்னை முதலில் கதைக்கச் செய்வதற்காகச் செய்த தந்திரத்தைத் தன் தோழியிடம் சொல்வதாக இக்குறளை அமைத்தார், வள்ளுவப் பெருந்தகை.
தமிழர்களின் பாரம்பரியமான ஒரு பண்பாட்டுக் கோலத்தை வள்ளுவர் இக்குறள் மூலம் அருமையாகக் காட்டியிருக்கிறார்.
தும்மல் உயிராபத்து விளைவிக்கின்ற ஒரு நோயல்ல. இருப்பினும் உடனடியாக வாழ்த்துகின்ற பண்பு இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலவி வருகின்ற அற்புதமான பண்பல்லவா.
தும்மலும் நினைப்பும்:
மெளனம் கலைந்து வாழ்த்திய காதலி தானே ஊடலில்
தோற்றவள். இது காதலனின் கணக்கு. ஆனால் ஊடலில் தோற்றவர்தானே வென்றவர். இது காதலியின் கணக்கு.
காதலிக்கு வெற்றியில் விருப்பமில்லை. அதுவும் காதலனைத் தோற்கடித்துப் பெறுகின்ற வெற்றி ஒரு வெற்றியா. அது மகிழ்ச்சி தருமா.
அவள் மகிழ்ச்சியடையவில்லை. அழத் தொடங்கி
விட்டாள். அவளது அழுகைக்குக் காரணம் தலைவன் அதாவது காதலன் தோற்றுவிட்டானே என்பதுதான்.
அதுவும் காதலன் தன்னிடம் தோற்றுவிட்டானே என்பதற்காக அல்ல, தன்னிடம் அவன் தோற்றால் அது தங்களது பிரச்சினை. அயலார் தலையிட முடியாத பிரச்சினை.
64

நறுந்தமிழ் அகளுங்கன்
ஆனால் தனது காதலன் தோற்றது தன்னிடமில்லை. இன்னொரு பெண் ணிடம் என்று உணர்ந்துதான் அழத்தொடங்கினாள்.
இது என்ன புதுக்குழப்பம் என்று நினைக்கிறீர்களா? எந்தப் பெண்ணிடம் அவன் தோற்றான் என்று அறிய ஆசைப்படுகிறீர்களா?
எனக்குத் தெரியாது. ஏன் அவனது காதலிக்கே தெரியாதே. ஆனால் அவன் யாரோ ஒரு பெண்ணிடம் தோற்றுவிட்டான் என்பது மட்டும் அவளுக்குத் தெரியும்.
அதுவும் ஊகம்தான். அப்படி இருக்கக்கூடாது. இருக்கவே கூடாது என்ற ஏக்கத்தில் அழுதவள், அவனைப் பார்த்துக் கேட்டாள். "யார் உம்மை நினைத்ததால் தும்மினி” என்று.
திடீரென யாராவது தும்மினால், நோயில்லாமலே தும்மினால், யாரோ மிக நெருக்கமானவர் ஆழமாக நினைக்கிறார் என்று சொல்வது இன்றுமுள்ள வழக்கம்.
மிகவும் அன்பு பொருந்தியவர்கள் எம்மை நினைத்தால் அல்லது எம்மைப்பற்றிக் கதைத்தால் எமக்குத் தும்மல் வரும் என்பது எமது பண்டைய கோட்பாடு, நம்பிக்கை.
சாப்பிடும்போது திடீரெனப் பிரக்கேறினால், உடனே தலையில் தட்டிவிட்டு “யாரோ நினைக்கிறார்கள்” என்று அருகிலிருப்பவள் சொல்கின்ற வழக்கம் கிராமங்களில் இன்றும் உண்டு.
தனது காதலன் தன்னைக் கதைக்கச் செய்வதற்காகத்தான் தும்மினான் என்று தெரிந்திருந்தும், பெண்ணுக்கே உரிய சந்தேகப் புத்தி அவளை விட்டுப் போகவில்லை.
65

Page 36
நறுந்தமிழ் அகவுங்கன்
யாரோ உம்மை ஆழமாக நினைக்கிறார்கள். அப்படி நினைப்பதாயின் அது ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும்.
அவள் அப்படி ஆழமாக நினைப்பதற்கு என்ன காரணம். “நீர் அவளிடம் தோற்றுவிட்டீரோ” “எனது காதலன் தும்மும் அளவிற்கு இன்னொரு பெண் அவனை நினைக்கிறாளே” என அழுத அவள் அவனிடம் உண்மையை அறிவதற்காகக் (885'LT6ft.
“யார் நினைத்ததால் தும்மினிர்” “கடவுளே எந்தப் பெண்ணும் என் காதலனை நினைத்திருக்கக்கூடாது' என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டு அவனிடம் அக்கேள்வியைக் கேட்டாள் அவள். *
வள்ளுவரின் அற்புதமான அத்திருக்குறளை இப்போது பாருங்கள்.
வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யார்உள்ளித் தும்மினிர் என்று (குறள் 1371)
இன்றைய நிலையில் இக்காட்சி நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் காதலியின் ஆழமான அன்பைக் காட்டுகின்ற ஒரு காட்சி இது.
தும்முவதற்குக் காரணம் யாரோ அன்பு பொருந்தியவர் ஆழமாக நினைப்பதுதான் என்ற உளவியற் கருத்து சரியா பிழையா என்பதை விட, தமிழரின் பாரம்பரிய பண்பாட்டுக் கோலமாக இது விளங்கியிருக்கின்றது என்பதுதான் எமக்குத் தெரியவேண்டியது.
தும்மலை மறைத்தல்
இதே போன்ற இன்னொரு காட்சி. காதலனும் காதலியும் தனித்து இருக்கின்றனர். காதலனுக்கு தும்மல் வந்து விட்டது.
66

Susuri அகளங்கன்
காதலனுக்குத் தும்மவிருப்பமில்லை. தும்மினால் நிச்சயமாக அழுவாள். "யார் நினைத்ததால் தும்மினி” என்று கேட்பாள். என்றெல்லாம் அவனுக்குத் தெரியும்.
தும்மலையும் காதலையும் மறைக்க முடியாது என்று சொல்வார்கள். அவனும் தும்மலை மறைக்கப் பார்த்தான். தும்மலை மறைக்க முடியுமா. தும்மல் வந்தால் தும்மாமல் இருக்க முடியுமா. எவ்வளவோ முயன்றான். அவன் தும்மாமல், தும்மலை மறைக்க முயல்வதை அறிந்தாள் அவனது காதலி.
அழத் தொடங்கிவிட்டாள். “உம் மேலே அன்பு கொண்டவர். உம்மை நினைப்பதை நான் அறிந்து கொள்ளக்கூடாது என்றுதானே தும்மலை மறைத்தீர்” என்று சொல்லி அழுதாளாம் அவள்.
தும்மச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று (குறள் 1318) அவன் தும்மலை மறைத்தது குற்றத்தை ஒப்புக் கொண்டது போல ஆகிவிட்டது. இது அவள் நிலைப்பாடு.
தும்மல் வந்தால் என்ன செய்வது. தும்மினாலும் குற்றம். தும்மாமல் மறைத்தாலும் குற்றம்.
திருக்குறளிலே எமது பண்பாட்டுக் கோலத்தோடு ஒட்டிய அற்புதமான செய்திகள் பல சொல்லப்பட்டுள்ளன.
மேலோட்டமாகப் பார்த்தால் இன்றைய நிலையில் இவையெல்லாம் நகைச்சுவைகள்தான். ஆனால் காதலன் காதலியரிடையேயான ஆழமான அன்பைப் புலப்படுத்த வள்ளுவன் கையாண்ட யுக்திகளே தான் இவை.
திருக்குறளிலே இத்தகைய காட்சிகள் இன்னும் பலவுண்டு. நயக்கத் தெரிந்தவர்கள் நயக்கலாம்.
Co
67

Page 37
நறுந்தமிழ்ட அகளங்கன்
8. பண்டைத்குமிழரின் வாழ்க்கைச் சிறப்பு
தமக்குக் கிடைத்த நூல்களை ஆராய்ந்து காலப்பகுப்புச் செய்த தமிழறிஞர்கள் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை எக்காலத்துள் அடக்குவதெனப் பெருஞ் சிரமப்பட்டுள்ளனர்.
சேரன் செங்குட்டுவன் காலத்தில் சிலப்பதிகாரம் பாடப்பட்டது என்பதைக் கொண்டு சங்க காலத்திலும், அதை மறுத்து சங்க மருவிய காலத்தில் இந்நூல் எழுந்ததாகவும் பல்வேறு கருத்துக்களையும் அக் கருத்துக்களுக்குரிய ஆதாரங்களையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய இரண்டில், சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக வரும் மணிமேகலையை சாத்தனார் சிலப்பதிகாரத்தின் பின் பாடினார் என்றும், சாத்தனார் மணிமேகலையை பாடிய பின்தான் இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் பாடினார் என்றும் இரு கருத்துக்கள் அறிஞர் மத்தியில் உண்டு.
இளங்கோ அடிகளும், சாத்தனாரும் ஒரே காலத்தவர், ஒன்றாகச் சந்தித்தவர்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்தில் வரும் பதிகம் சான்று எனச் சான்றாதாரம் காட்டுவது சுலபம்.
சாத்தனாரே, இளங்கோவடிகளுக்கு சிலப்பதிகாரக் கதையைக் கூறி அவரைப் பாடத்துாண்டினார் என்பது பதிகம் தரும் செய்தி.
68

pDisgadg அகளுங்கன்
எது எப்படி இருப்பினும், பேராசிரியர் வி. செல்வநாயகம், சிலப்பதிகாரம் மணிமேகலை என்பவற்றை சங்கமருவிய காலத்து நூல்கள் என வரையறுத்துள்ளதைக் கொண்டு கி. பி. 400 - 600 இடைப்பட்ட காலத்து நூல் இது எனக்கொண்டாலும் இற்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முந்திய நூல் இது என்பதற்கு ஐயமில்லை.
ஆபரணங்கள்:
சிலப்பதிகாரத்தில் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றிய பல தகவல்களை இளங்கோ அடிகள் தெரிவித்திருக்கிறார்.
தமிழரின் சிறப்பையும், தமிழரின் வாழ்க்கை முறையையும், தமிழ் நாட்டின் சிறப்பையும், முதன் முதல் காவியத்தில் பாடியவர் இளங்கோ அடிகள் தான் என்று, பேராசிரியர் வி. செல்வநாயகத்தின் ஆராய்ச்சி அடிப்படையில் கூறலாம்.
சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி, பூம்புகார்க் கடற்கரையில் இந்திர விழாவின்போது பதினொரு வகையான ஆடல்களை ஆடிவிட்டு வந்து, ஊடலோடு இருந்த கோவலனை மகிழ்விப்பதற்காகத் தன்னை அலங்காரம் செய்கிறாள்.
நாட்டியம் ஆடுவதற்காக அணிந்த ஆபரணங்களை நீக்கி, இயல்பான வழமையான ஆபரணங்களை அவள் அணிந்து தன்னை அழகுபடுத்தி கோவலனை மகிழ்வித்தாள்.
அவள் அணிந்த ஆபரணங்களை இளங்கோ அடிகள் கடல் ஆடுகாதை என்ற பகுதியில் அழகாகச் சித்திரித்துக் காட்டுகிறார்.
69

Page 38
நறுந்தமிழ் அகளங்கன்
முதலில் தனது தலையை நன்றாக வாசனைத் திரவியங்களால் கழுவினாள், இதனை இளங்கோ அடிகள் குறிப்பிடும்போது,
ஊடற் கோலமோடு இருந்தோன் உவப்ப பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத்து இருவகை ஓமாலிகை யினும் ஊறின நல்நீர் உரைத்த நெய்வாசம் நாறு இருங் கூந்தல் நலம்பெற ஆட்டி.
என மாதவி தனது கூந்தலை எந்த வகையான வாசனைத் திரவியங்கள் கலந்த நீரினால் கழுவினாள் எனக் காட்டுகிறார் இளங்கோ. V
இதிலே பத்து வகையான துவர், ஐந்து வகையான விரை, முப்பத்து இருவகையான ஓமாலிகை என்பவற்றை நீரில் ஊறப்போட்டு நீரிற்கு வாசனையூட்டப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.
பூவந்தி, திரிபலை, புணர் கருங்காலி, நாவல் முதலியவற்றின் காய்ந்த விறகுகள் துவர் எனப்பட்டன. இங்கு பத்து வகையான துவர்களில் சிலவற்றையே குறிப்பிட்டுள்ளேன்.
ஐந்து வகையான விரைகள் என்பன கொட்டம், துருக்கம், தகரம், அகில், ஆரம் ஆகியவை என்பர். இவை விதைகள் மூலமான வாசனைத் திரவியங்கள். இவற்றையும் நீரில் ஊறவைத்து நீருக்கு வாசனையூட்டுவார்கள்.
இதேபோல முப்பத்து இரண்டு வகையான ஓமாலிகைகள் பற்றியும் குறிப்புள்ளது.
70

நறுந்தமிழ் அகளங்கன்
1. இலவங்கம் 2. பச்சிலை 3. கச்சோலம்
ஏலம் 5. நாகணம் 6. QET"b . நாகம் 8. மதாவரிசி 9. தக்கோலம் 10. நன்னாரி 11. வெண்கோட்டம் 12. கத்துரி 13. வேரி 14. இலாமிச்சம் 15. கண்டில் 16. வெண்ணெய் 17. கடுநெல்லி 18. தான்றி 19. துத்தம் 20. வண்ணக்கச்சோலம் 21. மரேணுகம் 22. புன்னைநறுந்தாது 23. புலியுகிர் பூஞ்சரண் 24. சயிலேகம் 25. தமாலம் 26. பெருவகுளம் 27. பதுமுகம் 28. நுண்ணேலம் 29. பைங்கொடுவேரி 30. கதிர்நகை 31. LDT - 32. புனுகு
இவற்றை ஓமாலிகைகள் என்பர். இப்படி 10 துவர் 5 விரை 32 வகை ஓமாலிகைகளையும் போட்டு ஊறவைத்த வாசனை நீரில் தன் தலையைக் கழுவினாளாம் மாதவி.
அதன்பின் அகிற்புகையால் உலர்த்திய கூந்தலை ஐந்து வகையாகப் பிரித்து கஸ்தூரிக் கழிபூசி அலங்காரம் பண்ணினாள் எனச்சொல்லி, என்னென்ன ஆபரணங்களை அணிந்தாள் என்று பட்டியலிடுகிறார் இளங்கோ.
புகையின் புலர்த்திய பூமென் கூந்தலை வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி, அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி நலத்தகு மெல்விரல் நல்அணி செறிஇப் பரியகம், நூபுரம், பாடகம், சதங்கை, அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து, குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்து, பிறங்கிய முத்தரை முப்பத்து இரு காழ்
71

Page 39
நறுந்தமிழ் அகளுங்கன்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ காமர் கண்டிகை தன்னோடு பின்னிய தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து மத்தக மணியொடு வயிரம் கட்டிய சித்திரச் சூடகம், செம்பொன் கைவளை, பரியகம், வால்வளை, பவழப் பல்வளை அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம், கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம், வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி, காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து, சங்கிலி நுண்தொடர், பூண்ஞாண், புனைவினை, அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து, கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து - ஆங்கு இந்திர நீலத்து இடை இடை திரண்ட சந்திர பாணி தகைபெறு கடிப்பு இணை அம்காது அகவயின் அழகுற அணிந்து, தெய்வ உத்தியொடு, செழுநீர் வலம்புரி, தொய்யகம், புல்லகம், தொடர்ந்த தலைக்கு அணி, மைஈர் ஒதிக்கு மாண்புற அணிந்து கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்.
செம்பஞ்சுக் குழம்பு பூசிய அழகிய சிவந்த சிறிய பாதங்களில் இருக்கும் அழகு விளங்கும் மெல்லிய விரலில் நல்ல கணையாழியை அணிந்தது முதல், கரிதாகி நீண்ட கூந்தலுக்கு ஆபரணங்களை அணிந்தது வரையிலே பாதாதி கேசமாகச் சொல்லப்பட்டுள்ளது.
72

upsid. அகளுங்கன்
இவை மாதவி கோவலனோடு மகிழ்ச்சியாக இருப்பதற்காக, அவனை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக தன்னை அழகுபடுத்த அணிந்து கொண்ட அணிகலன்களே.
இன்று இவ்வளவு ஆபரணங்களை எவரும் அணிவதில்லை என்றே சொல்லலாம். 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ப் பெண்களின் ஆபரணங்கள் இவை என்று அறியும்போது ஆச்சரியமாக இல்லையா.
தோற்கருவிகள்:
முற்காலத்தில் இருந்த இசைக் கருவிகள் பற்றிய தகவல்களை அறியும்போது இன்னும் வியப்பாக இருக்கிறது. இங்கே தோற்கருவிகள் சம்பந்தமான தகவலைப் பட்டியல் இடுகிறேன்.
1. பேரிகை 11. jigഞ്ഞb 21. தகுணிச்சம் 2. LLělb 12. முரசு 22. விரியேறு 3. உடுக்கை 13. கண்விடுதூம்பு 23. UTBb 4. தடாரி 14. நிசாளம் 24. 2)_UTäk35b 5. சுந்தரி 15. துடுமை 25. கணப்பறை 6. முழவு 16. சிறுபறை 26. தமருகம் 7. சந்திரவளையம் 17. திமிலை 27. g560örg)68) D 8. மொந்தை 18. குடமுழா 28. நாழிகைப்பறை 9. மத்தளம் 19. தக்கை 29. துடி 10. சல்லிகை 20. அடக்கம் 30. பெரும்பறை
என 30 தோற்கருவிகள் பற்றிய செய்திகளை இலக்கியங்களிலே காணுகிறோம்.
கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில் பிரம்மாஸ்திரப் படலத்தில், இராவணனின் ஒப்புயர்வில்லா வீர மைந்தனான இந்திரஜித் போருக்குப் போகும் போது ஒலித்த போர்ப்பறைகள் பற்றிக் கம்பன் பின்வருமாறு பாடுகிறான்.
73

Page 40
நறுந்தமிழ் அகளுங்கன்
கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி, கொட்டி, பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம், தூரி, கம்பலி உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை, அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே.
(கம்-யுத்-பிரம்-5)
மேலே கம்பன் சொல்லிய வாத்தியக் கருவிகள், போருக்குப் போகும்போது முழக்கப்படுகின்ற வாத்தியக் கருவிகள் என்பது கவனிக்கத்தக்கது.
சுவாமி விபுலானந்தர் தனது இசைத் தமிழ் என்ற கட்டுரை ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“முழவு என்னும் சொல் தோற்கருவிகளுக்கு ஒரு பொதுப் பெயர். தோற்கருவிகள் எல்லாம் அகமுழவு, அகப்புறமுழவு, புறமுழவு, புறப்புற முழவு, பண்ணமை முழவு, நாண்முழவு, காலை முழவு, என ஏழு வகைப்படும்.
கரடி கத்தினாற் போலும் ஒசையினையுடைய கருவி கரடிகையெனவும், சல்லென்ற ஒசையினை உடைய கருவி சல்லிகை எனவும் வழங்கப்பட்டதென்பர். இசைமரபிலே தன்னுமை யென்னும் மத்தளமானது தோற்கருவிகளிலே சிறப்புப் பெற்றது.”
என்று குறிப்பிடுகிறார், கந்தபுராணத்திலும் பல இடங்களில் பல்வேறு வாத்தியக் கருவிகள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.
கந்த புராணத்தில்:
கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில், சூரபன்மன் முருகப் பெருமானுடன் போர்புரிய வரும்போது அவனோடு ஒலித்துக் கொண்டு சென்ற வாத்தியக் கருவிகள் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
74

Bibeside அகளுங்கன்
நேரியம் பரியதோர் நிசாளஞ், சல்லிகை பேரியம் பணைவயிர் பிறங்கு தண்ணுமை, துாரியம், காகளந், துடிமு தற்படு சீரியம் பலவுட னியம்பிச் சென்றவே.
(கந்.யுத்.கா. சூ.வதை 32)
இத்தகைய பல்வேறு வகையான வாத்தியக் கருவிகளைத் தமிழர்கள் பயன்படுத்தினர். இராமாயணம், கந்தபுராணம் என்பவை வடமொழி இதிகாசபுராணங்களாக இருந்தாலும், தமிழில் தமிழ்ப் பண்புக்கேற்பப் பாடப்பட்டவை என்பது பலரும் ஒப்புக் கொண்ட ஒன்று.
இம்மியளவு:
தமிழர்கள் கணிதத் துறையில் மிக நுட்பமான அறிவைக் கொண்டிருந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
இன்றைக்கும் மிக மிகச் சிறிய ஒரு பகுதியைக் குறிப்பிடுவதற்கு இம்மியளவு என்று குறிப்பிடுவது வழக்கம்.
துரியோதனன் பாண்டவர்க்கு “இம்மியளவு நிலம்கூடக் கொடுக்க மாட்டேன்” என்று மறுத்ததாகக் கிராமங்களில் சொல்லுவார்கள்.
ஊசிமுனை நிலம், ஈ இருக்கும் இடம் என்றெல்லாம் இதனைப் பலரும் பலவாறாகக் குறிப்பிடுவர்.
இம்மியளவு என்றால் எவ்வளவு என்று முற்காலத்தில் கணக்கு வைத்திருக்கிறார்கள். டாக்டர். மு. வரதராஜன் தனது "இலக்கிய வரலாறு' நூலில் இத்தகவலைத் தந்துள்ளார்.
75

Page 41
UBIJSurig
அகளங்கன் 古x十一 இம்மி x-- x-- அணு X -- X -- X -- cupibus x-- x-- x-뉴 X-- "
கம்பராமாயணத்தில், பிரகலாதன் தனது தந்தையாகிய இரணியன், மகாவிஷ்ணு எங்கே இருக்கிறார் என்று கேட்க, மகாவிஷ்ணு எங்கும் நிறைந்தவர் என அவரது பெருமையையும், நுண்மையையும் குறிப்பிடுவான்.
சாணினும் உளன், ஒர்தன்மை
அணுவினைச் சதகூ றிட்ட கோணினும் உளன், மாமேருக்
குன்றினும் உளன், இந்நின்ற தூணினும் உளன், நிசொன்ன
சொல்லினும் உளன், இத்தன்மை காணுதி விரைவின் என்றான்
நன்றுஎனக் கனகன் சொன்னான்
(கம்.இரா 6312)
அணுவினை நூறாகப் பிரித்தால் அதற்குப் பெயர் கோண் என்கிறான் கம்பன், ಅಲ್ಪೊರುಳ್ಗು l
wrm enman æm X mm. கோண் என்பது 320 7 7 100 பகுதியாகும். வெள்ளம்:
பரிபாடலில் நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம், கமலம், வெள்ளம் என்ற பேரெண்கள் பற்றிப் பாடப்பட்டுள்ளது.
76

நறுந்தமிழ் அகளுங்கன்
இருப்பினும் உரையாசிரியர்கள் மாறுபட்ட அளவுகளையே தருகிறார்கள்.
நெய்தல் an 1000
குவளை 1OOOOOO
ஆம்பல் - . 1000000000
சங்கம் 1 OOOOOOOOOOOO கமலம் i 1000000000000000 வெள்ளம் 1000000000000000000
என இதனைச் சிலர் வரையறுக்கிறார்கள். இங்கே சங்கநிதி, பதுமநிதி என்பவை இங்கு குறிப்பிடப்படும் சங்கம், கமலம் என்பவையே என்பது மனங்கொள்ளத்தக்கது.
இன்றைக்கும் வெள்ளம் என்ற சொல் சனக்கூட்டத்தின் மிகுதியைக் குறிப்பிடப் பயன்படுகிறது. ஆனால் அது வேறு அர்த்தத்தில் தான் பயன்படுகிறது.
தங்கு தடையின்றிப் பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளம் என்ற வகையில் பெருந்தொகை மக்களைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.
ஆனால் வெள்ளம் என்ற அளவு முன்பு எப்படி வரையறுக்கப்பட்டது என்பது மேலே காட்டப்பட்டுள்ளது.
இதேபோல சமுத்திரம் என்ற சொல்லும், இன்று கடல் என்ற பொருளில் தான் பயன்படுகின்றது. சனசமுத்திரம்' என்று பலரும் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் சமுத்திரம் என்பதும் ஒரு அளவு வரையறைக்கு உட்பட்டது என்பதை அறியும் போது ஆச்சரியமாக இருக்கிறது.
77

Page 42
நறுந்தமிழ் அகளங்கன்
தேர் U6060 குதிரை காலாள் பெயர்
1 1. 3 5 பந்தி
3 3 9 15 சேனாமுகம் 9 9 27 45 குமுதம்
27 27 81 135 கணகம்
81 8 243 405 வாகினி 243 243 729 1215 புலுதம்
729 729 21.87 3645 சமுத்திரம் 21.87 21.87 656 10935 சமாக்கியம் 2 1870 21870 65610 109350 அக்குரோணி
இங்கு சமுத்திரம்' என்ற அளவு குறிப்பிடப்பட்டுள்ளதை அறியலாம். பந்தி, அக்குரோணி, என்பவை பற்றிய தகவலும்
இங்கு உண்டு.
கால அளவு:
பண்டைத்
கண்ணிமை கைநொடி மாத்திரை ©ኴCUă 2 உயிர் 12 சணிகம் 60 வினாடி 60 நாழிகை 3/4 நாழிகை 2 முகூர்த்தம் 4 &ITLDib 2 பொழுது 15 நாள் 2 useBlb
தமிழரின் கால அளவு மிக
மிக நுட்பமானது.
நொடி LDT.g5560) குரு உயிர் சணிகம் வினாடி நாழிகை ஓரை முகூர்த்தம் &FTLDub பொழுது நாள் பக்கம் LDTg5b
78

நறுந்தமிழ் அகளுங்கன்
6 LDTg5th -- 1 9JJ60Tib
2 அயனம் 1 ஆண்டு
60 ஆண்டு 1 வட்டம்
துார அளவு:
தமிழரின் துTர அளவுகளும் மிகவும் ஆச்சரியமானவையே.
நான்கு முழம் 1 கோல் 500 கோல் 1 கூப்பிடு 4 கூப்பிடு 1 காதம் 1 காதம் a- 10 மைல் 1 யோசனை 8 1/2 மைல்
என்று கணக்கிடுகின்றனர்.
கூப்பிடு தூரம் என்பது கூப்பிட்டால் கேட்கக்கூடிய தூரம் தானா? கணக்குப் போட்டுப் பாருங்கள்
செம்மனச் செல்விக்கு வைகைக் கரையில் அளந்து விடப்பட்ட பகுதி கோலறை என்பர். கோலால் அளந்து வரையறை செய்து விடப்பட்டதால் கோலறை என்றாயிற்று.
கோலால் அளந்து வரையறுக்கப்பட்டதால் கோலறை. எத்தனை கோல் அளவு அவருக்கு விடப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. நில அளவு:
நிலத்தை அளந்து நுட்பமான பாகுபாட்டைச செய்தனர் தமிழர். அந்த நிலப்பாகுபாட்டைப் பார்ப்போம்.
மா, க் இரு மா -க் g(5 ' 20 (5 10 மாகாணி -- காணி -- , அரைமா, --
16 80
79

Page 43
நறுந்தமிழ் அகளங்கன்
காணி நிலம் வேண்டும் என்று மகாகவி பாரதி பாடியது இந்த 1/80 அளவையல்ல. அவ்வளவிற்குள் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள் நடமுடியாது. மாளிகை கட்ட முடியாது.
காணி என்பது உறுதியுள்ள, உரிமையுள்ள மூதாதையரின் நிலம் என்பதாகும். அந்நிலம் பரம்பரை உரிமை மூலம் வரும்போது அதற்குக் காணி நிலம் என்று பெயர்.
தமிழர்களின் பணி டைக் கால வாழ்க்கையை இலக்கியங்கள் மூலம் அறியும் போது ஆச்சரியமானதாக S6)6O)6)u IIT.
மாலைகள்:
தமிழர் மாலைகளிலே அதிகம் விருப்பம் உள்ளவர்கள், பலவகையாக மலர்களை, இலைகளைத் தொடுத்து மாலைகளைக் கட்டி அணிந்தனர். அவற்றில் சிலவற்றைப் பாருங்கள்.
பிணையல் - பிணைத்துக் கட்டப்படுவது
தொடையல் - தொடுத்துக் கட்டப்படுவது
D606) - இணைத்துக் கட்டப்படுவது
தார் - ஆண்கள் அணிவது
இண்டை - சுருக்கிக் கட்டப்படுவது
கண்ணி - தண்டிற் கட்டப்படுவது
கோவை - கோர்த்துக் கட்டப்படுவது
மஞ்சரி - ஒரே வகையான பூங்கொத்துக்களால்
கட்டப்படுவது
கதம்பம் - பலவகையான பூங்கொத்துக்களால்
கட்டப்படுவது
மற்றும் அலங்கல், கோதை, தாமம் எனப்பல வகையான மாலைகளைத் தமிழர் அணிந்தனர்.
Co
80

Dši V அகளுங்கன்
9. சுவாமி விவேகானந்குரும்
குமிழிலக்கியமும்
LDIbntegrap
பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமைச் óf (C5b, S9|(56TPT6AD6007ğF GIFT6ð686ög56őT (Orator by divine Right) 35gbJü filJ360öfL LDITC 535b (The cyclonie Hindu) 676öTGp36ö60Tub ஆங்கிலேயரால் போற்றப்பட்டவருமான வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள், அமெரிக்காவிலுள்ள சிக்காக்கோ மாநகரில் சர்வமத மகாசபைக் கூட்டத்தில் உரையாற்றிப் புகழ் பெற்று நூறு ஆண்டுகள் நிறைவெய்திவிட்டன.
1893ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ந் திகதி காலை 10 மணிக்குச் சிக்காக்கோ நகரிலுள்ள "கொலம்பியன்ஹோல்” என்ற மணி டபத்தில், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் சர்வமத மகாசபைக் கூட்டம் ஆரம்பமாகியது.
முப்பது வயதே முடிந்திருந்த (1863-1-12) கட்டழகுத் தோற்றங்கொண்ட காளை சுவாமி விவேகானந்தர் இந்துக்களின் பிரதிநிதியாக அக்கூட்டத்தில் பேச அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த மகாசபையிலேயே இளந்துறவியாக விளங்கிய சுவாமியவர்கள், தனது ஆரம்ப வணக்க விளிப்பு வார்த்தைகளாலேயே அவையோரை மட்டுமன்றி அகிலத்தையே கவர்ந்து கொண்டார் என்றால் அது மிகையாகாது.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுப்
81

Page 44
நறுந்தமிழ் அகளுங்கன்
புலவர் கணியன் பூங்குன்றனாரின் புதுமைமிகு வரிகள் சுவாமி விவேகானந்தருக்குத் தெரிந்திருக்கக் கூடுமோ என்று நினைக்கும் வகையில் அவரது பேச்சு ஆரம்பமாகியது.
dLDT.g.d5(36T dipT635(36T (Ladies and Gentlemen) என்றே ஏனைய பேச்சாளர்கள் எல்லாம் சபையை விளித்துப் பேச்சைத் தொடங்கச் சுவாமி விவேகானந்தர் மட்டும் அன்புச் (35|Tg5J585(36T1 g (35|Tg5flas(86T (Dear Brothers! and Sisters!) என்று விளித்துப் பேச்சை ஆரம்பித்தார்.
மனிதர்கள் எல்லோரையும் உறவினர்கள் (கேளிர்) ஆக, அதுவும் பூமித்தாயின் பிள்ளைகள் என்பதால் சகோதரர்கள் ஆகக் கருதிய மனிதநேய வெளிப்பாட்டு விளிப்பு வாக்கியம், அத்தனை உள்ளங்களையும் காந்தம்போல் கவர்ந்துவிட, சபை விழிப்புக் கொண்டு அந்த மனிதப் புனிதரை மரியாதையோடு நோக்கியது.
"யாவரும் கேளிர் என்பது தமிழர்களது புறநானூற்று வாக்கியமாக இருந்தாலும், யாவரும் உறவினரே (கேளிர் - உறவினர்) என்ற கருத்து சுவாமி விவேகானந்தர் மூலம் வெளிப்படுத்தப்பட்டதால் அது இந்தியர்களின் மனித நேயக்கருத்தாக, இந்துக்களின் சமய சமரசக் கருத்தாகவே அப்போது மதிக்கப்பட்டது.
சுவாமி விவேகானந்தரை அமெரிக் காவிற்கு அனுப்புவதில் தென்னாட்டுத் தமிழக மாணவர்களே அதிகம் அக்கறை காட்டிப் பணஞ்சேகரித்தார்கள் என்ற செய்தி தமிழர்களுக்கெல்லாம் என்றும் பெருமை சேர்க்கும் ஒரு செய்தியாகும்.
சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்று வரியை சுவாமி விவேகானந்தர் அறிந்தோ அறியாமலோ பயன்படுத்தியதுபோல,
82

நறுந்தமிழ் அகளங்கன்
இன்னொரு வாக்கியத்தையும் அவர் தமது போதனைகளில் ஒன்றாகக் கொண்டு வலியுறுத்தினார்.
‘நன்மை செய்யப் பிறந்த நீ. நன்மை செய்யாது விட்டாலும், தீமையாவது செய்யாதிரு” என்பதே அந்தப் போதனையாகும்.
புறநானூற்றில் நரிவெரூஉத்தலையார் பாடிய பாடல் ஒன்றில் இதே கருத்து சொல்லப்பட்டிருக்கின்றது. அப்பாடலே இது.
பல்சான் றிரே! பல்சான் றிரே! கயல்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றிரே! கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை இரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஒம்புமின்; அதுதான் எல்லாரு முவப்பது. அன்றியும் நல்லாற்றுப் படுஉ நெறியுமா ரதுவே. (புறம் 195)
பலவாக அமைந்த குணங்களையுடையவர்களே! எனவிளித்து, கயல்மீனின் முள்ளைப் போன்ற வெண்மை நிறம் பொருந்திய நரைமயிர்களையும், சுருங்கிய உடலையும் கொண்ட பயனில்லாத மூப்பைப் பெற்றுக் கொண்டவர்களே.
மழுவாகிய கூரிய படைக்கலத்தைக் கொண்ட, மிகவும் வல்லமை படைத்த இயமனானவன் வந்து கவர்ந்து கொண்டு செல்லும் காலத்தில், வாழ்க்கையை வீணாகக் கழித்து
விட்டதற்காக வருந்துவீர்கள். என்றுகூறி
நல்ல காரியங்களைச் செய்யாது விட்டாலும், தீய காரியங்களையாவது செய்யாது தவிர்த்துக் கொள்ளுங்கள். 83

Page 45
நறுந்தமிழ் அகளுங்கன்
அதுவே எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது. அது மட்டுமன்றி நல்வழியில் செல்லும் ஒழுக்கமும் அதுவேயாகும். என்கிறார்.
நல்லது செய்ய வேண்டியது முக்கியம் நல்லவற்றைச் செய்யாது விட்டாலும் தீயவையாவது செய்யாதிருக்கலாமே. என்ற இக்கருத்து சுவாமி விவேகானந்தரின் போதனைக்குள் புகுந்து விட்டது.
சுவாமி விவேகானந்தரின் போதனைகளுக்குள் தமிழர்களின் புறநானூற்றுக் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளதைக் கண்டு தமிழர்கள் புளகாங்கிதமடையலாம்.
தேவாரம்:
தங்கள் தங்கள் ' சமயங்களே உயர்ந்த சிறந்த சமயங்கள் எனப் பிடிவாதமாக நம்பிப் பேசி வந்த மேலைத்தேயச் சமயவாதிகளின் அறியாமையை விளக்க அருமையான கதை ஒன்றை சுவாமி விவேகானந்தர் அடிக்கடி சொல்லிக் காட்டுவார்.
கடல்த் தவளை ஒன்று கிணற்றுக்குள் வந்து விழுந்து விட்டதாம். கிணற்றுத் தவளைகள் கடல்த் தவளையிடம் அதனுடைய இருப்பிடம் பற்றி விசாரித்தன.
கடல்த்தவளை தனது இருப்பிடமாகிய கடல்பற்றி எவ்வளவோ விளக்கிக் கூறியும், கடல் கிணற்றை விடப் பெரியதாக இருக்கவே முடியாது எனக் கிணற்றுத் தவளைகள் பிடிவாதமாக மறுத்தனவாம்.
இப்படித்தான் பல சமயவாதிகள் கிணற்றுத்
தவளைகளாக, தங்கள் சமயத்தைப் பற்றி மட்டுமே அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் ஏனைய சமயங்களைப் பற்றி அறியாததால்
தங்கள் சமயமே உயர்ந்த சமயம், சிறந்த சமயம் என்று
84

நறுந்தமிழ் அகளுங்கன்
வாதிடுகிறார்கள் என அமெரிக்காவின் சிக்காக்கோ நகர சர்வமத மகாசபைக் கூட்டத்திலும் மற்றும் இடங்களிலும் பேசியிருக்கிறார்.
சுவாமி விவேகானந்தரின் கிணற்றுத் தவளை உவமானம் தமிழர்களால் பல ஆண்டுகளாகக் கையாளப்பட்டு வந்துள்ளது.
திருநாவுக்கரசு சவாமிகள் தனது தேவாரம் ஒன்றில் தவளைக் குப் பதிலாக ஆமையை உவமையாக்கி சிவபெருமானின் பெருமையை விபரித்துள்ளார்.
கூவல் ஆமை குரைகடல் ஆமையை “கூவலோடு ஒக்குமோ கடல் என்றல்போல் பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால் தேவதேவன் சிவன் பெருந் தன்மையே.
(ஆதி புராணத் திருக் குறுந்தொகை-05)
சுவாமி விவேகானந்தள் இத்தேவாரத்தைப் படித்திருப்பாரா என்பது தெரியாது. இருப்பினும் அவருக்கு முன்பே திருநாவுக்கரசர் இக்கருத்தை விதைத்து விட்டார் என்பது 2_60ö60)LD.
இருப்பினும் சுவாமி விவேகானந்தரின் கிணற்றுத் தவளை உவமை உலகளாவிய சிறப்பைப் பெற்றது நமக்கும் பெருமையே.
உலகம் முழுவதையும் தன் தெய்வீக சக்தியால் கவர்ந்து, சமய சமரசத்தைப் போதித்த சுவாமி விவேகானந்தரின் புகழும் அவரது போதனைகளும் என்றும் நிலைத்து வாழட்டும்.
O
85

Page 46
நறுந்தமிழ் அகனங்கன்
10. நாடகமே உலகம்
தமிழரிடையே காணப்படும் பெருங்குறைபாடுகளில் ஒன்று தமது இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களை, வாழ்க்கை நெறிகளை அறியாது, அறிய முயலாது, அறிந்தாலும் அதனைப் போற்றாது, வெளிநாட்டு இலக்கியங்களில் உள்ள சிறப்புக்களையே பெரிதுபடுத்திப் பேசுவதும், எழுதுவதும், உதாரணங் காட்டுவதுமாகும்.
தமிழ் இலக்கியத்தில் இல்லாத ஒன்றை வேற்றுமொழி இலக்கியத்திலிருந்து எடுத்துக்கொள்வதை நாம் வரவேற்க வேண்டியது நம் கடமை.
ஆனால் அதே வேளை, எமது இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ளவற்றை எமது இலக்கியங்களுக்குப் பின் எழுந்த வேற்றுமொழி இலக்கியங்கள் கூறியிருந்தாலும், வேற்றுமொழிக் கவிஞரின் பெயரையும் இலக்கியத்தின் பெயரையும் பாராட்டி, விடயத்தை எடுத்துக்கூறிப் பெரிதுபடுத்தி விடுவது, எமது இலக்கியத்தையும் எமது புலவர்களையும் அவமதிக்கும் ஒரு செயலாகும்.
உதாரணமாக "நாடகமே உலகம். நாமெல்லோரும் நடிகர்கள்” என்று ஓர் அற்புதமான தத்துவத்தை மகாகவி சேக்ஸ்பியர் என்ற ஆங்கிலப் புலவன், நாடகாசிரியன் கூறினான் என்று சொல்லி சேக்ஸ்பியரைப் போற்றுகிறோம்.
ஆனால் இதே தத்துவத்தை சேக்ஸ்பியருக்கு 1000
ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த சங்க காலத் தமிழ்ப் புலவர் ஒருவர்
சொல்லியிருக்கிறார் என்பதை நாம் எடுத்துச் சொல்வதில்லை.
86

நறுந்தமிழ் அகளங்கன்
பலருக்கு இது தெரியாது. தெரிந்த சிலரும் இதை உலகுக்கு உரத்துக் கூறத் தயங்குகிறார்கள்.
ஆங்கில இலக்கியத்திலிருந்து எடுத்துக்கூறி, ஆங்கிலப் புலவனைப் பாராட்டிப் போற்றினால், தம்மை ஆங்கில இலக்கியம் அறிந்த கல்விமான் என்று உலகம் போற்றும் என்பது பலரின் அபிப்பிராயம். ஆதங்கம்.
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முது கண்ணன் சாத்தனார் என்ற புலவர் பாடும்போது, “விழாவிலே நடைபெறும் நாடகத்தில் முறை முறை ஆடுநர் வந்து போவது போலக் கழியும் இவ்வுலகம்” என்று இவ்வுலகின் இயல்பைத் தெளிவுறுத்துகிறார்.
சிறுமனை வாழ்க்கையி னொரீஇ வருநர்க்கு உதவியாற்று நண்பிற் பண்புடை ஊழிற் றாகநின் செய்கை, விழவிற் கோடியர் நீர்மைபோல முறை முறை ஆடுநர் கழியுமிவ் வுலகத்துக் கூடிய நகைப்புற னாகநின் சுற்றம் இசைப்புற னாகநீ ஓம்பிய பொருளே.
(புறம் 29)
புறநானூற்றிலே இப்பாடல் இடம்பெற்றுள்ளது. "நாடகமே உலகம். நாமெல்லோரும் நடிகர்கள்” என்ற கருத்து இப்பாடலில் இருப்பதை அவதானிக்கலாம்.
எமது இலக்கியங்களிலுள்ள சிறந்தவற்றை எடுத்து நாம்
மேற்கோள் காட்டினால் தான் எமது தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் உலக அரங்கில் ஏற்றம் பெறும்.
87

Page 47
நறுந்தமிழ் அகளங்கன்
தமிழ் அறிஞர்கள் தங்களை ஆங்கிலம் படித்தவன் என்று காட்டிக்கொள்ள முயற்சித்துச் செய்யும் இத்தகைய இருட்டடிப்புக்களால் தமிழ் மொழியின் முன்னேற்றம் பெரிதும் தடைப்படுகிறது.
இனிமேலாவது தமிழிலக்கியங்களிலுள்ள உயர்ந்த கருத்துக்களை வெளிக்கொணர்ந்து, தெருவெல்லாம் மட்டுமல்ல, தேசமெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்ய தமிழர்களாகிய நாம் முயல்வோம்.
88

நறுந்தமிழ் அகளுங்கன்
11. காயம் இல்லாகு ஆகாயம்
பழந்தமிழ் இலக்கியங்களிலே சொல்லப்பட்டுள்ள சில செய்திகளைப் பார்க்கும்போது அவை ஆச்சரியமூட்டுபவையாக இருக்கின்றன.
பெரும் புலவர்கள் சொல்லும் அத்தகைய செய்திகளை வெறும் கற்பனைகள் தானே என்று ஒதுக்கிவிடவும் முடியவில்லை.
சில கற்பனைகள் சுவாரஸ்யமானவையாக இருப்பதோடு மட்டுமன்றி சிலவற்றைச் சிந்திக்கவும், வியக்கவும் வைத்து விடுகின்றன.
சில செய்திகள் விஞ்ஞான முடிவுகளோடு ஒத்துப் போபவையாகவும், விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்குத் தூண்டுகோலாக இருக்கக் கூடியவையாகவும் கூட இருக்கின்றன.
தேரும் அம்பும்:
கச்சியப்ப சிவாச்சாரியாரால் பாடப்பட்ட கந்தபுராணம்
தமிழிலக்கிய வானில் பேரொளி வீசும் பெரு நட்சத்திரங்களில் ஒன்று என்று கொள்ளலாம்.
சைவசமய இலக்கியம்தானே என, சமய இலக்கியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இதனை அடக்கி விடுவது அறிவுக்குப் பொருத்தமானதல்ல.
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட (10,345 பாடல்கள்)
பாடல்களைக் கொண்ட ஒரு பெரு நூலை, மாக்கதையை.
பேரிலக்கியத்தைப் படிக்காமல் விட்டு விட்டு, தமிழறிஞன் நான் 89

Page 48
நறுந்தமிழ் அகளங்கன்
என்று யாராவது மார் தட்டினால் அவர் மார்புக்கும் அவர் கைக்குமே சேதம். அதனால் யாருக்கும் ஆகப்போவது ஒன்றுமில்லை.
எந்தச் சமய இலக்கியமாக இருந்தாலும, தமிழ் இலக்கியம் என்ற வகையில் படித்துச் சுவைப்பது தவறாகாது.
தமிழிலக்கியத்தில் சமயச் சார்பில்லாத எந்தப் பேரிலக்கியத்தையும், காப்பியத்தையும், பிரபந்தத்தையும் காணவே முடியாது, என்று உறுதியாகக் கூறுமளவுக்கு சமயச் சார்பான நூல்களே கோலோச்சுகின்றன.
புராண நன்னாயகம் என்று போற்றப்படுகின்ற கந்தபுராணத்தில் முருகப் பெருமானுக்கும் சூரபன்மனுக்கும் யுத்தம் நடைபெறுகின்றது.
முருகப் பெருமான் ஏறி இருக்கின்ற தேரை வாயு பகவான் செலுத்துகிறான். முருகப் பெருமான் அம்புகளை மிக வேகமாகச் செலுத்துகிறார். வாயு பகவான் தேரை மிக வேகமாக செலுத்துகிறான்.
முருகப் பெருமானின் கைதான் விரைவாக இயங்குகின்றதோ, அல்லது வாயுபகவான் தான் விரைவாகத் தேர் செலுத்துகிறானோ, எவரது வேகம் மிகுந்த வேகமோ எனப் பக்கத்திலுள்ள தேவர்கள் சந்தேகித்து கதைத்துக் கொள்கிறார்களாம்.
"செவ்வேள் கை விசையோ நெடுங் கால் விசை தானோ. எவ்விசையோ விசை என்றனர் வானோர்” என்கிறார் கச்சியப்பர். (கால்-வாயுபகவான்)
இப்படித் தேவர்கள் வியந்து போய்ச் சந்தேகப்பட்டுக் கதைப்பதற்கு என்ன காரணம் என்று தெரிந்தால் ஆச்சரியமாக இருக்கும்.
90

BDü3ıd: 9aagad
வாயுபகவானால் செலுத்தப்படுகின்ற தேரில் இருந்து கொண்டு முருகப் பெருமான் அசுரர்கள் மேல் அம்புகளைச் செலுத்துகின்றார். அவ்வம்புகள் மிகுந்த வேகத்துடன் செல்கின்றன.
அதேபோல முருகப் பெருமான் இருக்கின்ற தேரை வாயுபகவான் மிகவேகமாகச் செலுத்துகிறான். தேர் மிக விரைவாக ஓடுகிறது.
என்ன ஆச்சரியம் என்றால் முருகப் பெருமானால் மிகுந்த வேகமாகச் செலுத்தப்படுகின்ற அம்புகளை, முருகப் பெருமான் இருக்கின்ற தேர் முந்திக் கொண்டு சென்று விடுகின்றதாம். அவ்வளவு வேகமாக வாயு பகவான் தேர் செலுத்துகிறானாம்.
ஒன்னலர் மீதில் உயிர்க்கு உயிரானோன் மின்என வீசிய வெஞ்சர மாரி பின்னுற முந்து பெயர்ந்திடு மென்றால் அன்னவன் தேர்விரைவு ஆர்கணிக் கின்றார் .
(கந்.யுத்.சூர.வதை 120)
முருகப் பெருமானால் செலுத்தப்பட்ட கொடிய அம்புமழை பின்னுற, அவற்றை முந்திக்கொண்டு செல்கின்றதாம் தேர்.
இதுதான் இப்பாடலின் சுருக்கமான பொருள். இது சாத்தியமா. அதீதமான கற்பனையா. தொடர்பு வேகம் பற்றிய விஞ்ஞானக் கோட்பாட்டாளர்கள் இதனை ஆராய்ந்து பார்க்கட்டும், என விட்டு விட்டு இன்னொரு காட்சிக்குச் செல்வோம்.
அம்பும் - இரத்தமும்
கம்பராமாயணம் பற்றி புதிதாக எதுவும் சொல்லிப் பெருமைப்படுத்த வேண்டிய தேவை கம்பராமாயணத்திற் கில்லை.
91

Page 49
நறுந்தமிழ் இகளுங்கன்
கம்பன் கற்பனையின் சிகரத்தைத் தொட்டவன்.
கம்பராமாயணம் உலக மகா காவியங்களுள் தலையாயவற்றில்
ஒன்று என்பது பலரும் முடிவு கட்டிய விடயம்.
கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் திருவடி சூட்டு படலத்தில் ஒரு பாடலின் கருத்து -செய்தி என்னை வியப்பிலாழ்த்தியது.
இராமன் இலக்குவனோடும் சீதையோடும் கானகம் சென்று சித்திரகூடம் என்னும் இடத்தில் இருக்கிறான்.
பரதன் தாயருடனும் சேனைகளுடனும் இராமனைச்
சந்தித்து அரசை ஏற்குமாறு இராமனை வற்புறுத்துவதற்காக வருகிறான்.
பரதன் வரும் நோக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட இலக்குவன்’யுத்த சன்னத்தனாய் கோபாவேசம் கொள்கிறான்.
இராமனிடம் தனது வீரத்தையும் வலிமையையும் கூறி, பரதனையும் அவனோடு வரும் சேனையையும் கொல்வேன் எனக் குமுறுகிறான்.
தனது வல்லமையைப் பற்றி இலக்குவன் கூறும்போது தனது அம்பின் வேகம் பற்றி ஒரு செய்தியைச் சொல்கிறான்.
தான் செலுத்துகின்ற அம்புகள் எதிரிகளது ஆயுதங்களையும், கைகளையும் கவசம் பொருந்திய மார்பையும் உயிரோடு ஊடுருவிச் செல்வனவாம்.
கருவியும் கைகளும் கவச மார்பமும்
உருவின உயிரினோடு உதிரந் தோய்வில
திரிவன சுடர்க்கணை திசைக்கை யானைகள்
வெருவரச் செய்வன காண்டி வீரநீ.
(கம்-அயோ-திருவடி சூ-பட 32)
92

நறுந்தமிழ் அகளங்கன்
இப்பாடலில் என்னை வியக்கவும், நயக்கவும், ஆச்சரியப்படவும், வைத்த செய்தி என்னவென்றால், இலக்குவன் சொல்கிறான்.
எதிரிகளது கைகளையும், கவசம் அணியப்பெற்ற மார்புகளையும், தனது அம்பு ஊடுருவிச் செல்லுமாம்.
பிரகாசம் மிக்க தனது அம்பு மார்பை, கையை ஊடுருவிச் செல்லும் போது, இரத்தம் படாமல் வெளியேறிவிடுமாம்.
இது சாத்தியமா இல்லையா என்பது ஆய்வுக்குரியது. பிரகாசம் மிக்க தனது அம்பு விடும்போதிருந்த பிரகாசம் குறையாமல் உடலை ஊடுருவி இரத்தம் படாமல் வெளியேறிவிடும் என்று இலக்குவன் குறிப்பிடுவது ஆராய்ச்சிக்குரியது. இருப்பினும் நயமானது.
வானமும் சங்கப் புலவரும்:
வானம் பற்றிய ஆய்வுகளைப் பல ஆண்டுகளாகப் பலரும் மேற்கொண்டு வருகின்றனர். வானம் என்றால் என்ன, என்ற கூற்றுக்கு இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியம் பதில் கூறியிருக்கிறது என்றால் ஆச்சரியமில்லையா.
சங்க கால இலக்கியமாகப் போற்றப்படும் புறநானூறு நூலில் இருபதாம் பாடலில், சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற மன்னனை குறுங்கோழியூர் கிழார் பாடுகிறார்.
அவனது பெருமை அளவிடற்கரியது எனக்கூறி, அளவிடற்கரியனவாகச் சொல்லப்படுபவைகளையெல்லாம் அளவிட்டு விடலாம். ஆனால் நின்பெருமை அளவிடற்கரியது
எனக்கூறி சிலவற்றைப் பட்டியலிடுகிறார்.
93

Page 50
, upugat அகளுங்கன்
பெரிய கடலின் ஆழமும், அகன்ற உலகத்தின் பரப்பும், காற்று இயங்கும் திசையும், ஆகாயமும் என்று சொல்லப்படுபவற்றை அளந்தறிந்தாலும் அறியலாம். ஆனால் நீயோ அளவிடற்கரிய பெருமை மிக்கவன் என்கிறார் புலவர்.
இரு முந்நீர்க் குட்டமும் வியன் ஞாலத்து அகலமும் வளி வழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும், என்றாங்கு அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை
(புறம் 20)
இப்பாடலில் வானத்தை காயம் என்ற சொல்லால் புலவர் குறிப்பிடுகின்றார். நாம் ஆகாயம் என்பதையே இவர் காயம் என்கிறார்.
ஆகாயத்திற்கு அவர் கொடுத்த விளக்கம் என்னைப் பிரமிக்க வைக்கிறது. “வறிது நிலை இய காயமும்” என்று அவர் குறிப்பிடுவதன் பொருள்தான் என்ன.
“வடிவின்றி நிலை பெற்ற ஆகாயமும்” என்று இதற்கு உரையாசிரியர்கள் பொருள் கொள்கின்றனர்.
ஆகாயம் என்பது ஒன்றுமே இல்லாதது. உருவம் இல்லாதது. ஆனால் இருப்பது போல் தெரிவது என்பது இதன் பொருள்.
காயம் என்றால் உடம்பு, உருவம் என்று கொள்ளலாம். காயம் இல்லாதது ஆகாயம் என்னலாமோ. காயத்தின் முன் ஆ சேர எதிர்ப்பொருள் வருகிறதா. அதற்கு இலக்கண விதியில்லையே.
94

நறுந்தமிழ் அகளுங்கன்
காயம் என்பதன் எதிர்ச்சொல் அகாயம் என்றிருந்து பின்னால் ஆகாயமாகியிருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது.
எப்படி இருப்பினும் ஆகாயம் என்பது ஒன்றுமே இல்லாதது. ஆனால் இருப்பது போல நிலைபெற்றிருப்பது என்ற கருத்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புலவர்களிடம் இருந்திருக்கிறது என்பதை நினைக்க ஆச்சரியமாக இல்லையா.
வானமும் - கந்தபுராணமும்:
கந்த புராணத்தில் தட்ச காண்டத்தில், வானம் பற்றிய ஒரு செய்தியை கச்சியப்ப சிவாச்சாரியார் அழகாகச் சொல்லியிருக்கிறார்.
தக்கனுக்கு அவனது தந்தையாகிய பிரமதேவர் சிவபெருமானே முழுமுதற் பரம்பொருள் என உபதேசிக்கின்ற உபதேசப் படலத்தில் வருகிறது இந்தச் செய்தி.
பரசிவன் உணர்ச்சி இன்றிப்
பல்லுயிர்த் தொகையும் என்றும் விரவிய துயர்க்கு ஈறெய்தி
வீடுபேறு அடைதும் என்றல் உருவம்இல் விசும்பின் தோலை
உரித்து உடுப்பதற்கு ஒப்பென்றே பெருமறை இயம்பிற்று என்னில்
பின்னுமோர் சான்றும் உண்டோ.
(கந்தட்-உபதேச -25)
“சிவபெருமான் பற்றிய உணர்ச்சி இல்லாமல் பல
உயிர்த்தொகையும், என்றும் பரந்த துன்பத்துக்கு முடிவு பெற்று
வீடுபேறு அடையும் என்று கூறுவது எதற்கு ஒப்பாகும் என்றால்,
உருவமில்லாத ஆகாயத்தின் (விசும்பு - ஆகாயம்) தோலை 95

Page 51
நறுந்தமிழ் அகளுங்கன்
உரித்து உடுப்பதற்கு ஒப்பாகும் என்றே பெரிய வேதமே சொல்லியுள்ளது என்றால் பின்னும் ஓர் சான்றும் வேண்டுமோ” என்பது இதன் பொருள்.
வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதாக, கச்சியப்பர் இக்கருத்தைச் சொன்னாலும் வேதத்தில் இக்கருத்து உண்டா என அறிய முடியவில்லை.
"வானம் உருவமில்லாதது. அதன் தோலை உரித்து உடுப்பது முடியாத காரியம். அதே போன்றதுதான் சிவபெருமான் பற்றிய உணர்ச்சியின்றி துன்பங்களுக்கு முடிவு பெற்று வீடுபேறெயதுதல்”, என்று கச்சியப்பர் சொல்லுவதில் வானம் பற்றிய செய்தி என்னை வியக்க வைக்கிறது.
வானம் என்பது உருவம் இல்லாதது என்ற சிலரின் கொள்கையையே சங்கப் புலவரும் "வறிது நிலைஇய காயமும்" என்றார்.
வானமும் வைரமுத்துவும்:
கவியரசு வைரமுத்து தற்காலப் புலவர் வரிசையில் எண்ணத் தகுந்த இடத்தைப் பிடித்திருப்பவர். அவரது திரைப்படப் பாடலொன்றின் சில வரிகளை இங்கே பார்ப்போம்.
வண்ண்ம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ! விண்ணிலே பாதையில்லை உன்னைத் தொட ஏணியில்லை
கண்டு வந்து சொல்வதற்குக் காற்றுக்கும் ஞானமில்லை நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை.
96

நறுந்தமிழ் அகளுங்கன்
வானம் நீலநிறமாகத் தெரிகிறது. நீலநிறத்தைப் பிரித்து எடுத்து விட்டால் ஒன்றுமே தெரியாது என்பது வைரமுத்துவின் கருத்து.
ஒன்றுமில்லாத ஆகாயம், உருவம் இல்லாத ஆகாயம் என்று முன்னோர் சொன்னாலும், நீலநிறம் ஏதோ இருப்பது போன்ற ஒரு பிரமையை உண்டு பண்ணுகிறதல்லவா.
அந்த நீலத்தைப் பிரித்து எடுத்து விட்டால், ஒன்றுமே தெரியாது என்பது வைரமுத்துவின் கருத்து.
வானம் ஏன் நீலமாக இருக்கிறது. அது ஒளி முறிவினால் ஏற்படும் விளைவு. ஒளியில் ஏழு நிறங்கள் உள்ளன. இந்நிறங்களை வானவில்லில் காணலாம்.
இவ்வேழு நிறங்களும் மாறுபட்ட அலை நீளங்களையும் சக்திகளையும், ஊடுருவும் தன்மைகளையும், முறிவுக் குணகங்களையும் கொண்டன.
வளியில் உள்ள துணிக்கைகளில் அதிக அளவு முறிவடைந்து செல்லும் ஆற்றல் நீலநிறத்திற்கே உண்டு. இதனால் நீலநிறம் முறிவடைந்து அதிக தூரம் செல்கின்றது. எனவே வானம் நீலநிறமாகத் தோன்றுகிறது என்பது வானம் நீலநிறமாக இருப்பதற்கான விஞ்ஞான விளக்கம். (நன்றி : ஆசிரியர் திரு ஏ. எஸ். பரந்தாமன் B.Sc. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்)
வைரமுத்து தற்கால விஞ்ஞான, கணனி யுகத்தைச் சேர்ந்தவர். அவர் சொல்வது ஆச்சரியமில்லை. ஆனால் சங்கப் புலவரும், கச்சியப்பரும் கூறியது ஆச்சரியந்தானே.
97

Page 52
நறுந்தமிழ் அகளங்கன்
உலகமும் வள்ளுவரும்:
வானியல் சம்பந்தமான அறிவு மட்டுமல்ல பூமி சம்பந்தமான அறிவும் பண்டைத் தமிழருக்கு நிறையவே இருந்திருக்கிறது.
பூமியை உருண்டை என்று மாணிக்கவாசகள் பாடுகிறார். "அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” என பூமியைக் குறிப்பிடுகிறார், மாணிக்கவாசகர். இது திருவண்டப் பகுதியின் முதலடியாக வருகின்றது.
உண்டை என்பது உருண்டை என்பதன் திரிபு. முற்காலத்தில் உருண்டையை உண்டை என்றே செய்யுள்களில் குறிப்பிட்டுள்ளனர்.
கம்பன் இராமாயணத்தில் "கூனி கூன் போக உண்டை தெறித்த போதிருந்த தன்றிச் சினஉண்மை தெரிந்ததில்லை” என இராமனின் பேராற்றலை இராவணன் வியப்பதாகப் பாடுகிறான்.
பூமி உருண்டை என்பது மட்டுமல்ல, பூமி சுழலுகின்றது என்பதைக் கூட பண்டைத் தமிழர் தெரிந்து வைத்திருந்தனர்.
இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட திருவள்ளுவர், பூமி சுழல்வதாகத் தமது திருக்குறளிலே உறுதியாகக் கூறுகிறார்.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்; அதனால் உழந்தும் உழவே தலை.
(குறள் 1031)
உழந்தும் என்பது உழன்றும் என்பதன் போலி. எவ்வளவு துன்பப்பட்டாலும் உழவே தலையாய தொழில் என்பது இதன்பொருள். இக்கருத்தை வலியுறுத்தும் வள்ளுவர், உலகம்
98

நறுந்தமிழ் அகளுங்கன்
சுழல்கின்றது. ஏரின்பின்னால் சுழல்கின்றது என்கிறார்.
உலகம் சுழன்றாலும் அது ஏருக்குப் பின்னால்தான் சுழல்கிறது. அதனால் எவ்வளவு துன்பப்பட்டாலும் உழவே தலையாய தொழில் என்று பொருள் கொள்வது எப்படித் தவறாக (Մ)IԳեւյլն.
இங்கு உலகம் சுழல்கின்றது என்று நேரடிப் பொருள் கொள்வது பிழையாகாது. உலகம் என்பதை ஆகு பெயராகக் கொள்ளத் தேவையில்லை.
இதனை ஆய்வுக்கு உட்படுத்த இது சமயமில்லை. விரிவஞ்சி விட்டு விடுவோம்.
உலகு என்ற பெயரே உலவுவதால்தான் வந்தது என்று சில அறிஞர் கருதுகின்றனர். (உலவுதல் - அசைதல்)
தமிழர்கள் பூமி பற்றியும் ஆகாயம் பற்றியும் பல தகவல்களை அறிந்தே இருந்திருக்கின்றனர் எனப் பல ஆதாரங்களைப் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து காட்டலாம்.
O

Page 53
நறுந்தமிழ் அகளங்கன்
12. யோரும் பொதுமக்களும்
உலகில் உயிரினங்கள் தோன்றிய காலம் முதலே அவற்றுக்கிடையே போட்டியும் போரும், கொலைகளும் தோன்றிவிட்டன என்று சொல்லலாம்.
ஒன்றுக்கொன்று உணவாகும் உயிரினங்களில், கொலை என்பது உணவுப் பிரச்சனையான படைப்பின் இரகசியமாகவே கருதப்பட வேண்டியது.
தங்கள் வாழ்க்கை நெறிக்கு இடையூறாக இருக்கும் வேறு உயிரினங்களோடு எதிர்த்துப் போரிடுவதும், முடியாத கட்டத்தில் அஞ்சி ஒடி ஒளிந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதும், எல்லா உயிரினங்களிலும் காணப்படுகின்ற பொதுத்தன்மையாகும்.
தங்களையும், தங்கள் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக அனேகமான உயிரினங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
ஆறறிவு படைத்தவனாக, பகுத்தறிவுள்ளவனாக, உயிரினங்களிலே உயர்ந்த உயிரினமாக, பண்பாடு, நாகரிகம் மிக்கவனாகத் தன்னைச் சொல்லிக் கொள்ளும் மனிதனும் கூடப் போராட்டக் குணத்திலிருந்து மாறுபட்டவனல்லன்.
போட்டி பொறாமைகளினாலும், உடைமைகளைப்
பாதுகாப்பதற்காகவும், பறிப்பதற்காகவும், தனிமனிதப் போராட்டங்கள், மனிதனது ஆரம்பகால நிலையில் ஏற்பட்டன.
100

Siguri . அகளங்கன்
இந்நிலை இன்னும் விரிவடைந்து, அதிகாரங் கொண்ட தலைமைப் பதவியைப் பெறுவதற்காகவும், பெற்ற தலைமைப் பதவியைக் காப்பதற்காகவும், போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படி வளர்ந்த போரானது மன்னர்களிடையே நடைபெறுவதற்கு முற்காலத்தில் பல காரணங்கள் இருந்தன.
தானே தலைசிறந்த வீரன், தன் அரசே தலைசிறந்த அரசு என்பதை நிரூபிக்கவும், தன் நாட்டை விஸ்தரிக்கவும், தன் நாட்டு மக்களின் வாழ்க்கையின் மேம்பாட்டுக்காக, அருகிலுள்ள நாட்டு வளங்களைக் கவர்ந்து கொள்ளவும், பேரரசை நிறுவவும், எனப் பல வகையான காரணங்களினால் யுத்தங்கள் ஏற்பட்டன.
சமயச் சண்டை, சாதிச் சண்டையோடு, தன்மானச் சண்டை, அறத்தைக் காக்கும்போர், அரசுரிமைப் போர், திருமணக் காரணங்கள், அஸ்வமேத யாகம், இராசசூய யாகம் முதலான யாகங்கள் செய்வதற்காக ஏற்பட்ட போர் எனப்பல வகையான போர்கள் இடம்பெறத் தொடங்கின.
நாடு பிடிக்கும் யுத்தம்
சிலப்பதிகாரத்தில் பாண்டியன் ஒருவன் செய்த யுத்தம் பற்றிய குறிப்பு ஒன்றில், தமிழர் வாழ்ந்த பெருநிலப்பரப்புக்கள் கடல் கோளினால் அழிந்து போனதால், தமிழர்கள் வாழ்வதற்குரிய நிலப்பரப்புக் குறுகி விட்டதைக் கண்டு வடிவலம்பநின்ற பாண்டியன் என்பான் வடதிசைக்குப் படைகொண்டு சென்று கங்கை நதி, இமயமலை முதலான பிரதேசம் வரை வெற்றி கொண்டு தன் ஆட்சிப் பரப்பை விஸ்தரித்தான் என்று காணப்படுகின்றது.
0.

Page 54
நறுந்தமிழ் அகளங்கன்
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி
(சிலப்பதிகாரம் காடுகாண் காதை)
“பட்றுளி ஆற்றையும், பல மலைத் தொடர்களைக் கொண்ட குமரிமலைப் பிரதேசத்தையும் கொடிய கடலானது கவர்ந்து கொண்டது” என இங்கு சொல்லப்பட்ட பொருளிைக் கூர்ந்து நோக்கின். கடலுக்குள்ளே அமிழ்ந்துபோன லெமூரியாக் கண்டம் எனப்படும் குமரிக் கண்டமே அது என்பது தெளிவாகின்றது. "இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்பப்" பல மன்னர்கள் போர் செய்ததாகப் புறநானூறு கூறுகிறது.
போர் என்ற சொல் பொரு என்ற உவமை உருபிலிருந்து பிறந்த ஒரு சொல்லாகும். சமனான இரு வீரர்கள் அல்லது சமமான வலிமை கொண்ட இரு படைகள் செய்த யுத்தமே போர் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டது.
அமர், சமர், யுத்தம், செரு முதலான சொற்களும் இப்பொழுது போர் என்ற சொல்லுக்குரிய மாற்றுச் சொற்களாகவே பயன்படுத்தப்படுகின்றன. சண்டை, கலகம் முதலானவை இச் சொற்களுக்கு ஒப்பாக மாட்டா.
குருசேத்திரம்
முற்காலத்தில் போருக்கெனச் சில தர்மங்கள் வரையறுக்கப்பட்டிருந்தன. யுத்த தர்மம்' என்றும், “போர்த்தர்மம்" என்றும் அவை அழைக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமான ஒன்று, போரிலே ஈடுபடாதவர்களுக்கு எந்தத் துன்பமும் ஏற்படக் கூடாது என்பதே.
102

நறுந்தமிழ் அகளுங்கன்
கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் அரசுரிமை காரணமாக எழுந்த பகை பெரும் பகையாகி, மகாபாரதப் போராக முடிவுற்றது. இரு தரப்பினரும் பொதுமக்கள் மேல் அக்கறை உள்ளவர்களாக இருந்த காரணத்தினால் யுத்தத்தில் ஈடுபடாதவர்களுக்குத் துன்பம் ஏற்படாத வகையில் போர் செய்யத் தீர்மானித்தனர்.
அஸ்தினாபுர அரசின் புகழ்பெற்ற ஒரு அரசனாகிய குரு என்பவன் முற்காலத்தில் யாகம் செய்த இடம் என்பதால் குருசேத்திரம் எனப் பெயர் பெற்ற பரந்த நிலப்பரப்பை யுத்த களமாக அவர்கள் தீர்மானித்தனர்.
இடங்குறித்துச் செய்யப்பட்ட போர் என்பதனால் இப்போரைத் தும்பைப்போர் என்று இலக்கியங்கள் பேசுகின்றன.
இந்த யுத்தத்திலே, பங்கு கொள்ளாத எவருக்கும் எந்தவிதத் துன்பமும் ஏற்படவில்லை. எவரது சொத்துக்களும் நாசமாக்கப்படவுமில்லை.
பொது மக்களுக்குத் துன்பம் ஏற்படாமல் யுத்தத்தைச் செய்வது எவ்வளவு முக்கியமானது என்பதனை மகாபாரத யுத்தம் எமக்கு எடுத்துக் காட்டுகிறது.
பாண்டியனின் யுத்த தள்மம்
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவன் போருக்குச் செல்லும் பொழுது எதிரிநாட்டுக் குடிமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி கூறிவிட்டே போருக்குச் சென்றதாகப் புறநானூற்றில் நெட்டிமையார் என்ற சங்கச் சான்றோர் புகழ்ந்து பாடுகின்றார்.
103

Page 55
Bigard அகளுங்கன்
ஆவு மானியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ திரும் எம்மம்பு கடிவிடுது நும்மரண், சேர்மினென அறத்தாறு நுவலும் பூட்கை மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ வாழிய குடுமி. (புறம் 9)
பசு, பசுவின் இயல்பு கொண்ட பிராமணர்கள், பெண்கள், நோயாளிகள், பிள்ளைப் பேறடையாதவர்கள் ஆகியோரைப் பாதுகாப்பிடத்திற்குச் சென்று சேரும்படி கூறி யுத்தம் செய்கின்ற யுத்த தர்மம் கொண்டவன் இவன் என இப்புலவர் பாராட்டுகிறார்.
கண்ணகியும் மதுரையும்
கள்வன் என்று பொய்க்குற்றம் சுமத்தப்பட்டுப் பாண்டியன் நெடுஞ்செழியனால் கோவலன் கொல்லப்பட, அதனைக் கேட்டுக் கொதித்தெழுந்த கண்ணகி, பாண்டியனின் அரச சபைக்குச் சென்று தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை நிரூபித்து, மதுரையைத் தீக்கிரையாக்குகின்றாள். தன் கற்புத் தீயினால் மதுரையை எரிக்கும் போது கண்ணகி தீக்கடவுளிடம்,
"பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க”
என்று கூறுவதாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்திலே கூறுகின்றார். பிராமணர்கள், அற ஒழுக்கத்தில் ஈடுபட்டோர். பசு, பத்தினிப் பெண்கள், வயது முதிர்ந்தோர், சிறுபிள்ளைகள் என்போரைத் தவிர்த்துத், தீயவர் பக்கமே சென்று அழிக்கும்படி தீக்கடவுளுக்குக் கண்ணகி கட்டளை இடுவதை இங்கே காணலாம்.
104

M2 அகளுங்கன்
பெரிய புராணத்தில் யுத்த தர்மம்
பெரிய புராணம், சேக்கிழார் சுவாமிகளால் பாடப்பட்ட அற்புதமான ஒரு பேரிலக்கியம். இந்நூலில் புகழ்ச்சோழநாயனார் எனும் பெயர் கொண்ட சோழனுக்கும், அவனுக்குத் திறை கொடுக்க மறுத்த அதிகன் என்ற சிற்றரசனுக்குமிடையே இடம்பெற்ற போரை இங்கு காண்போம்.
தனக்குத் திறை கொடுக்க மறுத்த, இயற்கை மலையரண் பொருந்திய சிற்றரசனாகிய அதிகனைவென்று வரும்படி தனது மந்திரி சேனாதிபதி முதலானவர்களை புகழ்ச்சோழன் அனுப்பி வைத்தான்.
கொடிய அந்த யுத்தத்தில் புகழ்ச்சோழனின் சேனை வெற்றி வாகை சூடியது. அதிகனின் நாட்டுச் செல்வங்களைக் கவர்ந்து கொண்டு வந்து புகழ்ச்சோழ மன்னனுக்குக் கொடுத்ததோடு, கொல்லப்பட்ட பல வீரர்களின் தலைகளை. யும் கொண்டு வந்து மன்னனுக்குக் காட்டினார்கள்.
அப்படிக் காட்டப்பட்ட தலைகளிலே சடாமுடி கொண்ட சிவனடியாரின் தலை ஒன்றைக் கண்டான் புகழ்ச் சோழன்.
யுத்தத்தில் ஈடுபடாத சிவனடியாரை தனது சேனைகள் கொன்றன எனப் பெருங்கவலை கொண்ட சோழன். இத்தகைய தவறுக்கு தானே மூலகாரணம் எனச் சொல்லி, அச் சிவனடியாருக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்குப் பரிகாரம் காணமுடியாத காரணத்தினால், அத்தலையை ஓர் தங்கத் தட்டில் ஏந்தியபடி, தீயிலே புகுந்து இறந்தான், எனச் சேக்கிழார் பெருமான் கூறுகிறார்.
யுத்தத்தில் ஈடுபடாத ஒருவன் கொல்லப்படுவது எவ்வளவு கொடுமையானது என்பதை அவ்வரசன் நன்கு
அறிந்திருந்தான்.
105

Page 56
நறற்குமி அகளுங்கன்
இக்காலத்தில் உலகம் முழுவதிலும் மூலைமுடுக்கெல்லாம் யுத்தம் நடைபெறுகிறது. யுத்தத்திலே ஈடுபடுகின்ற வீரர்களைத் தவிர ஏனையோரே அதிகம் கொல்லப்படுகின்றார்கள். பாதிக்கப்படுகின்றார்கள். சொத்துக்கள் அழிக்கப்படுகின்றன.
அணுக்குண்டுகளும் ஏனைய விஞ்ஞான சாதனைகளான அழிப்புக் கருவிகளும், ஆறறிவுள்ளவன், பகுத்தறிவுள்ளவன் என்றெல்லாம் தன்னைப் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் மனிதனின் மானுடப் பண்பின் முதுகெலும்பையே முறித்து விட்டன.
கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்த்து புதியதோர் உலகம் செய்ய, புதிய தலைமுறையாவது புறப்பட்டே ஆக வேண்டும்.
Co
106

நறுந்தமிழ் அகளங்கன்
13. புறநானூற்றில் அறக்கருத்துக்கள்
தமிழிலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்படுவது சங்ககாலமே என்பர் தமிழ்ப் பேரறிஞர்.
சங்க இலக்கிய நூல்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் வரை பழைமையானவை என்பது பொதுவான முடிவு.
பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களை அடியொற்றி சங்க காலத்தை கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுக்காலம் என்று வரையறுக்கிறார்.
கிறிஸ்துவிற்குப் பின்புதான் தமிழ்ப் புலவர்கள் பாடல்கள் பாடினார்கள் என்றோ, அல்லது கிறிஸ்துவிற்குப் பின்பு வாழ்ந்த புலவர்கள் பாடிய பாடல்கள் மட்டும் தான் இன்று கிடைத்துள்ளன என்றோ உறுதியாகச் சொல்ல முடியாது.
தமிழர்கள் இலை, குழைகளை ஆடைகளாக்கி உடுத்த காலப்பாடல்களும் சங்க இலக்கியங்களில் உண்டு.
குறிப்பாக அகநானுற்றில் ஏழாம் பாடலில் ஒரு பெண் உடுத்த ஆடையைப் பற்றிக் கயமனார் என்ற சங்கப் புலவர் பாடும்போது "ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல்” என்கிறார்.
இதற்குப் புலியூர்க் கேசிகன் எழுதிய உரையில் "தழைத்த அசோகின் தளிரினால் அமைந்த தழையாடையினை அணிந்தவள். அதனால் மாட்சி பெற்று விளங்குகின்ற'அல்குல் தேரினை உடையவள்" என விரிவாக எழுதியுள்ளார்.
- 107

Page 57
நறுந்தமிழ் அகளங்கன்
சங்க காலப் புலவர் ஒருவர். அறுவை வாணிகன் சாத்தனார் எனப்பெயர் பெறுகிறார். அறுவை வாணிகம் என்பது புடைவை வியாபாரத்தைக் குறிக்கிறது. நீட்டாக நெய்து விட்டு அறுத்து அறுத்து விற்பதால் அறுவை வாணிகம் என இது பெயர் பெற்றது.
இதே போல் துணித்துத் துணித்து (துணித்தல் வெட்டுதல்) விற்பதால் துணி எனவும் வெட்டி, வெட்டி, விற்பதால் ‘வெட்டி' எனவும் பெயர் பெற்றது. வெட்டியே, "வேட்டி' என இன்று வழங்குகின்றது.
துணித்தல் , வெட்டுதல் , அறுத்தல் என்ற செயற்பாடுகளுக்கு உட்படுவதால் துணி, வேட்டி, அறுவை என்ற பெயர்களை, நெய்து வெட்டப்படுகின்ற துண்டுகள் பெறுகின்றன.
தோளில் போடப்படுகின்ற சால்வை என இன்று அழைக்கப்படுவதை, தமிழ் நாட்டில் 'துண்டு’ என்றே அழைக்கிறார்கள். துண்டு என்பதும் துண்டாடப்பட்டு பெறப்படுவது என்ற பொருளிலேயே அமைந்தது.
கூறை என்பது கூறுபோட்டு விற்கப்படுவது. இன்று இதன் பொருளும் மாறிவிட்டது.
இங்கே வருத்தத்துக்குரிய விடயம் என்னவென்றால் வெட்டி விற்கப்படுவது வேஸ்ட்டி ஆகியதே. பூவைக் கொண்டு செய்வது பூசெய். அது பூசையாக மருவி வழங்க நாம் வீணாக பூஜை என ஆரியச் சொல்லாக்கியது போல, வெட்டி என்பது வேட்டியாக மருவி வழங்க நாம் வீணாக வேஸ்டி என ஆரியச் சொல்லாக்கி விட்டோம்.
புறநானூறு என்ற சங்க இலக்கிய நூலின் ஒன்பதாம் பாடலில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் என்ற புலவர் வாழ்த்திப் பாடும்போது.
108

Begri அகளுங்கன்
முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.
எனப் பாடுகிறார். இவ்வரிகள் பற்றி ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தனது விளக்கவுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“பாண்டியன் நெடியோன் காலத்திருந்த பட்றுளியாற்றை நெட்டிமையார் எடுத்தோதி, அதன் மணலினும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துவதால் அப்பட்றுளியாறு நெட்டிமையார் காலத்தும் உளதாதல் பெறப்படும். படவே இவரும் இவராற் பாடப்பெற்ற பாண்டியனும் கடல்கோட் காலத்துக்கு முற்பட்டவர் என்பது விளக்கமாம்” என்கிறார். -
“பட்றுளி ஆற்று மணலின் எண்ணிக்கையை விட அதிக காலம் வாழ்வாய்” என்று வாழ்த்தியதாகக் கருதினாலும் கூட, கடல்கோட்கு உட்பட்டு அழிந்துபோன ஒன்றை வாழ்த்துப் பாடலில் உவமையாக்கி ஒப்பிட்டு ஒரு புலவர் பாடுவாரா என்பது சந்தேகமே.
பன்மலை அடுக் கத்துப் ப.நுளி ஆற்றுடன் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்வதற்கு முற்பட்ட பாடல் இதுவாயின், சுவாமி விபுலானந்தரின் மாணவராகிய வெள்ளை வாரணனார் குறிப்பிடுவது போல சங்க காலம் என்பது கி. மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது தானோ என்ற எண்ணமே உள்ளத்தில் தோன்றுகின்றது.
சங்க இலக்கிய நூல்களெனப் பாட்டு நூல்கள் பத்தையும் (பத்துப்பாட்டு) தொகை நூல்கள் எட்டையும் (எட்டுத்தொகை) பேராசிரியர் வி. செல்வநாயகம் அவர்கள் வரையறுத்துள்ளார்.
தொகை நூல்கள் எட்டினுள் புறநானூறு மிகவும் விசேடமானது. புறநானூற்றுப் பாடல்களில் மன்னர்களின் 109

Page 58
DDuag அகளங்கன்
விரத்தையும், கொடைப் பண்பையும், மட்டும்தான் பெரிதும் எடுத்து ஆராய்ந்துள்ளனர்.
புறநானூற்றில் அரிய வாழ்க்கைத் தத்துவங்களும் அடங்கியுள்ளன என்பதை ஆராயப் வோர் குறைவு. அறக்கருத்துக்களாக, ஆன்மீகக் கருத்துக்களாக அரிய தத்துவங்கள், பல புலவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவர் வாழ்க்கை நிலையாமையை மிக அழகாக ஒப்பீடு மூலம் எடுத்துக் காட்டி, இவ்வுலகத்தின் இயல்பை உணர்ந்து கொண்டோரே இவ்வுலகின் இனிமையை அல்லது இவ்வுலக வாழ்வின் மூலம் காணக்கூடிய இனிமையைக் கண்டு கொள்வார்கள் என்று தத்துவமுரைக்கிறார்.
ஒரில் நெய்தல் கறங்க, ஒரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர் பைதல் உண்களின் பணிவார்பு உறைப்பப் படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன் இன்னா தம்ம இவ் வுலகம் இனிய காண்கிதன் இயல்பு உணர்ந்தோரே.
(புறம் 194)
இப்பாடலின் பொருள் வெளிப்படையானது. இருப்பினும் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஒரு வீட்டில் நெய்தற் பறையாகிய மரணப்பறை ஒலிக்க, ஒரு வீட்டில் மகிழ்ச்சியைத் தரும் மணமுரசு பேரொலி எழுப்ப, காதலரோடு கூடிய மகளிர் பூவையும், ஆபரணங்களையும் அணியக், காதலரைப் பிரிந்த பெண்களது துன்பத்தையுடைய கண்களில் நீர் நிரம்பி வழிய, இத்தகைய மாறுபட்ட
110

நறுந்தமிழ் . அகளங்கன்
நிலைமைகளைப் படைத்தவன் நிச்சயமாகப் பண்பில்லாதவனே. இவ்வுலகம் மிகவும் கொடியது. இவ்வுலகத்தின் இயல்பை உணர்ந்து கொண்டோரே வாழ்க்கையின் மூலம் இனிமையைக் காண்பவர் ஆவார்.
இப்பாடலின் பொருள் தமிழர்களுக்கு மட்டுமன்றி மனிதர் யாவருக்கும் தேவையானதே.
இத்தகைய இயல்பு கொண்ட உலகில் தான் எத்தனை சண்டைகள், சச்சரவுகள், போட்டிகள், பொறாமைகள்.
இதே போல கணியன் பூங்குன்றனார் பாடிய பாடலொன்றும் மிக விசேடமானது. கணக்கு என்ற சொல் முற்காலத்தில் இலக்கியத்தைக் குறித்தது.
பதின் எண் கீழ்க் கணக்கு என்பதிலுள்ள கணக்கு இலக்கியத்தையே குறித்தது. அதனால் கணியன் என்பது இலக் கியக் காரணி என்ற பொருளில் இவருக்கு அடைமொழியாகிற்று ‘என்பர் சிலர்.
இருப்பினும் இவர் பாடிய கீழ்வரும் பாடற் கருத்தை நோக்குகையில் இவர் சோதிடர் என்பதால் கணியன் என அழைக்கப்பட்டார் என உறுதியாகக் கூறலாம்.
கம்பன் இராமாயணத்தில் சோதிடர்களை “கணித மாக்கள் என்றே குறிப்பிடுகின்றான். இவரது பாடலை முதலில் பார்ப்போம்.
யாதும் ஊரே யாவருங் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன.
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
11

Page 59
நறுந்தமிழ் அகளங்கன்
இன்னாது என்றலும் இலமே. மின்னொடு வானந் தண்துளி தலைஇ யானாது கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியிற் தெளிந்தனம் ஆகலின், மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
(புறம் - 192)
இப்பாடலின் பொருளை பின்வரும் வகையில் சுருக்கமாகப் பார்ப்போம்.
எந்த ஊரும் எமக்குச் சொந்த ஊரே. எல்லோரும் உறவினரே. தீமையும், நன்மையும் பிறர்தர வருவதில்லை. அவை நாம் செய்த வினைகளுக்கு ஏற்ப தாமாகவே வந்து பொருந்துகின்றன.
அவற்றைப் போன்றவையே துன்பப்படுவதும், அத்துன்பத்திலிருந்து விடுபடுவதும் ஆகும். இறந்துபோவது புதியதொரு நிகழ்ச்சியன்று. வாழ்தல் இனிதென்று மகிழ்ந்திருப்பதும் இல்லை. வெறுப்பு வந்த நேரத்தில் இன்னாது என்று சொல்வதும் இல்லை. ー、
மின்னலுடன் பொருந்திய வானம் குளிர்ந்த நீர்த்துளிகளைப் பெய்த காரணத்தால் அந்நீர்த் துளிகள் கல்லோடு மேதி ஒலித்து பெரும் ஆறாக ஓடும்.
அந்த ஆற்று நீரின் வழியே போகும் தெப்பம் போல அரிய உயிர் ஊழ் வினையின் வழியே செல்லும் என்பதை திறமை மிக்கோர் செய்த நூல்வழி காட்டிய காட்சியினால் கண்டு தெளிவடைந்தோம்.
112.

நறுந்தமிழ் அகளங்கன் ஆதலால் மாட்சிமை பொருந்திய பெரியோரைப் பார்த்து
வியந்து புகழ்வதும் இல்லை. அப்படிப் புகழ்ந்தாலும் சிறியோரை இகழ்வதே இல்லை.
வாழ்க்கையில் ஊழின் (விதி) பங்கு என்ன என்பதை இப்பாடலின் மூலம் கணியன் பூங்குன்றனார் அருமையாக விளக்கியிருக்கிறார்.
ஒரு வகையில் பார்த்தால் இப்பாடல் விரக்தியின் குரலாக ஒலித்தாலும், வாழ்க்கை பற்றிய தத்துவத்தைத் தகுந்த உவமானம் மூலம் விளக்கி அறிவுபூட்டும் பாடலாகவும் திகழ்கின்றது.
இதே போல் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாடிய பாடலொன்றும் மிகச் சிறப்பானது.
சங்க காலத்தில் மன்னர்களும், புலவர்களாக இருந்தார்கள். சிறந்த கருத்துக்களைப் பாடியிருக்கிறார்கள் என்பதற்கு இப்பாடலும் ஒரு சான்று.
கல்வியின் பெருமையையும், கல்வியால் சாதி ஏற்றத் தாழ்வைப் போக்கலாம் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டு அவர் பாடிய அந்த அற்புதமான பாடலையும் பார்ப்போம்.
உற்றுழ் உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே. பிறப்போர் அன்ன உடன்வயிற் றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனந்திரியும். ஒருகுடிப் பிறந்த பல்லோர் உள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசுஞ் செல்லும். வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
13

Page 60
நறுந்தமிழ் அகளங்கன்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே
(புறம் 183)
இதன் பொருளையும் சுருக்கமாகக் காண்போம்.
ஆசிரியருக்கு ஒரு துன்பம் நேர்ந்த போது அதனைத் தீர்ப்பதற்கு உதவி செய்தும், மிகுந்த பொருளைத் தட்சணையாகக் கொடுத்தும், ஆசிரியருக்குப் பணிந்து வழிபாடு செய்கின்ற நிலையை வெறுக்காது கல்வி கற்பது நல்லது.
அதற்குக் காரணம் என்னவென்றால் பிறப்பு ஒரு தன்ழிையாகிய ஒரு தாய் வயிற்றுப் பிறந்தோருள்ளும், கல்வியின் சிறப்பினால் தாயின் மனமும் மாறுபட்டு, கல்வி கற்ற மகனிடத்திலேயே அதிக அன்பு செலுத்தும்.
ஒரு குலத்திலே பிறந்த பல்லோருள்ளும், மூத்தவனை வருகவென்று அழைக்காது, அவர்களுக்குள் அறிவுள்ளவனின் வீட்டு வழிதேடி அரசனும் செல்வான்.
வேறுபாடு தெரிந்த நான்கு வகைக்குலத்துள்ளும், கீழ்க் குலத்தைச் சேர்ந்த ஒருவன் கற்றிருந்தால், மேற்குலத்தான் ஒருவனும் அவனிடம் சென்று வழிபடும் நிலையை அடைவான்.
இப்பாடல்களில் மட்டுமன்றி இன்னும் பல பாடல்களிலும் அரிய தத்துவங்கள் பல பொதிந்து கிடக்கின்றன.
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற புலவர் பாடும் போது,
LL LLLL LLLLL LLLLLLYLLLL LLLLLLLLYLLLLLLLL LLLLL LLLLLLLவிழவிற் கோடியர் நீர்மை போல முறை முறை ஆடுநர் கழியுமிவ் வுலகத்து
114

Sgrid aw அகளுங்கன்
என ஒரு பகுதியைப் பாடுகின்றார். இதற்குரிய பழைய உரையில் “விழவின் கண் ஆடும் கூத்தரது வேறுபட்ட கோலம் போல அடைவடைவே தோன்றி இயங்கி இறந்து போகின்ற இவ்வுலகத்தின் கண்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் விளக்க உரை எழுதுகையில் “கோடியர் நீர்மை - கூத்தருடைய வேறுபட்ட கோலம். கூத்தரது கோலம் தோன்றி நின்றிலங்கி மறைவது உலகம் தோன்றி நின்று மறைவதற்கு உவமையாயிற்று” என்று குறிப்பிடுகின்றார்.
இதன் பொருளே ஆங்கில நாடக ஆசிரியரான சேக்ஸ்பியர் பிற்காலத்தில் கூறிய “நாடகமே உலகம்” என்ற கூற்று. என்பது மனங்கொள்ளத்தக்கது.
கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பாடிய பாடலொன்று, உலகம் இருப்பதற்கு நல்லதோர் காரணத்தைக் கூறுகிறது. புறநானூற்றில் வரும் அப்பாடலையும் பார்ப்போம்.
உண்டா லம்ம இவ்வுலகம் ”இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே. முனிவிலர் துஞ்சலும் இலர். பிறர் அஞ்சுவ தஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குநர். பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர், அன்ன மாட்சி அனைய ராகித் தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுந ருண்மை யானே.
(B 182)
தேவாமிர்தம் கிடைத்தாலும் இனியது எனத் தனித்துண்ணாது. பகுத்துண்ணும் பண்புள்ளவர் இன்னும்
115

Page 61
நறுந்தமி அதளங்கன்
இருக்கிறார்கள். கோபமில்லாதவர்கள். சோம்பலில்லாதவர்கள்.
பிறர் அஞ்சத் தகும் அவமானத்திற்குத் தாமும் அஞ்சி, புகழ் எனின் உயிரையும் கொடுப்பவர்கள்.
பழி எனின், அதனால் உலகம் முழுவதும் பெறினும் கொள்ளாதவர்கள். சோர்வில்லாதவர்கள் என அத்தகைய மாட்சி பொருந்தியவராகி தமக்கென முயலாது பிறர்க்கென முயல்கின்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதால் தான் உலகம் இயங்குகின்றது. என்கிறார் இவ்வரசப் புலவர்
நல்லவர்களுக்காக, உலகம் அழியாது இருக்கின்றது. அழியாத இவ்வுலகத்தில் கெட்டவர்களும் வாழ்கின்றார்கள் என்ற பொருளில் இப்பாடல் அமைந்துள்ளது.
இப்பாடலின் அடிப்படையிலே தான் ஒளவையாரும் ஒரு பாட்டைப் பாடியிருக்கிறார்.
நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழிஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.
(மூதுரை -10)
நல்லவர் ஒருவர் இருந்தாலும், இவ்வுலகம் அவருக்காக இயங்க வேண்டும். அதற்கு மழை பெய்ய வேண்டும். அம்மழை புல் போன்ற அற்பர்களுக்கும் பயன்படும் என்கிறார் ஒளவையார்.
சங்க காலப் புலவர்கள் தமிழ்ச் சமூகத்தின் உயர்வுக்காகக் கூறிய சிறந்த கருத்துக்கள் இன்று உலகம் முழுமைக்கும் அவசியமாகின்றது. இக்கருத்துக்களைப் படித்துப் பயன்பெற வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
KD
116

நறந்தமிழ் அகளுங்கன்
14. கண் கானா உயிர் நடீபு
சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பேனா நண்பர்கள் என்ற பகுதி இடம்பெறுவது, இன்று சகஜமாகி விட்ட ஒன்று.
ஒருவரை ஒருவர் காணாமலேயே கடிதம் மூலமாகத் தொடர்பு கொண்டு நட்புப் பூணும் வழக்கம் இன்று உலகில் மலிந்து விட்டதொன்று தான்.
பேனாவின் துணையோடு தொடங்கும் நட்பு, போக்குவரத்து வசதிகள் நிறைந்த இன்றைய காலத்தில், நேரடியாகச் சந்திக்கும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி விடுவதைக் காண்கிறோம்.
இன்று அநேகமான பேனா நண்பர்கள், ஆணும், பெண்ணும், பெண்ணும் ஆணுமாக எதிர்ப்பால்த் தொடர்புடையவர்களாக இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
இத்தகைய தொடர்புகள் சில இடங்களில் காதலாக மலர்ந்து, கல்யாணமாக முடிவதையுங்கூட காணக் கூடியதாக இருக்கின்றது.
பேனா நட்பு தமிழ் இலக்கியத்தில் சங்க காலத்திலேயே, அதாவது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட மாட்டீர்களா.
ஒரு கவியரசரும், ஒரு புவியரசரும் பேனா நட்பைப் பெரு நட்பாக வளர்த்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உயிரையே கொடுக்குமளவுக்கு உயர்ந்த நட்பாக உயிர்நட்பாக அந்த நட்பை வளர்த்திருக்கிறார்கள்.
117

Page 62
, Bidd அகளங்கன்
பாண்டிய நாட்டிலேயுள்ள பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஒரு புலவர் பிசிராந்தையார் என அழைக்கப்பட்டார்.
ஆதன் என்பவரின் தந்தையாரான இவரை ஆதன் தந்தையார் என்று அழைத்தனர். அப்பெயர் மருவி ஆந்தையார் என்று ஆகியது. பிசிர் என்ற என்ற ஊர்ப்பெயரோடு அவர் பெயர் பிசிர் ஆந்தையார் ஆகியது.
அப்பெரும் புலவர் சோழ அரசனான கோப்பெருஞ் சோழனின் கொடைச் சிறப்பையும், குணநலத்தையும், வீரத்தையுங் கேள்விப்பட்டு, அவனையே தனது நண்பனாக மனத்தில் வரித்து, தனது கவிதைகளில் எல்லாம் அவனது புகழைப்பாடி அக்கவிதைகளை அவனுக்கு அனுப்பி வைத்தார்.
கோப்பெருஞ் சோழன் தமிழையும், தமிழ்ப் புலவர்களையும் போற்றும் நற்பண்பு கொண்டவனாக இருந்ததால் பிசிராந்தையாரின் பாடல்களில் மனத்தைப் பறிகொடுத்து அவரோடு உயிருக்குயிரான நண்பனாக இருந்து வந்தான்.
"உயிர் கலந் தொன்றிய செயிர்தீர் நட்பு"
என்று இவர்களது நட்பைப் புலவர்கள் போற்றுகின்றனர்.
சோழநாட்டில் ஏற்பட்ட ஒரு கலகத்தினால் மனமுடைந்த கோப்பெருஞ் சோழன், மானங்காக்கும் நோக்கத்தில் வடக்கிருந்து உணவை நீத்து உயிர்துறக்க முனைந்தான்.
முற்காலத்தில் தமிழ் அரசர்கள் தமது தன்மானத்தை இழக்குஞ் சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதன் பின் உயிர் வாழ விரும்பார்கள். அதனால் அவர்கள் ஓரிடத்தில் வடக்குத் திசையை நோக்கியபடி அமர்ந்து உண்ணாவிரதம் நோற்று உயிர் துறந்து புகழ் பெறுவார்கள். இதனையே வடக்கிருத்தல் என்று இலக்கியம் பேசுகிறது.
18

நறுந்தமிழ் அகளுங்கன்
சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும், கரிகாற்சோழனுக்கும் இடையே வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் நடந்த கடுமையான யுத்தத்தில் கரிகாற்சோழன் வெற்றி பெற்றான்.
கரிகாற்சோழன் எறிந்த ஈட்டி, சேரமான் பெருஞ்சேர. லாதனின் மார்பில் குத்தி ஆழமாக ஊடுருவிச் சென்று முதுகிலும் புண்ணை ஏற்படுத்தியது.
முதுகுப் புண்ணுக்கு மருந்திட்டு வாழும் வாழ்வு, தமிழ் அரசருக்கு அவமானமான வாழ்வு என்று கூறிச் சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தான்.
போரில் வென்ற சோழனிலும். தோற்று அவமானம்
பொறாமல் வடக்கிருந்து இறந்த பெருஞ்சேரலாதனே பெரிதும்
போற்றப்பட்டான். வடக்கிருந்து உயிர் நீத்தலுக்கு இது ஒரு உதாரணம்.
கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்த இறுதிக் காலத்தில் தனது உயிர் நண்பரான பிசிராந்தையாரை நேரில் காணப்பெரும் ஆவலுற்றான்.
நண்பர்கள் இருவரும் ^ ஒத்த உணர்வினராதலால் பிசிராந்தையாரும், கோப்பெருஞ் சோழனைக் காணவேண்டுமென்ற உள்ளுணர்வின் உந்துதலால் சோழநாடு நோக்கிச் சென்றார்.
சோழனை நேரில் கண்டு அளவளாவி மகிழ ஆவலுற்றுச் சோழநாட்டுக்கு வந்தார் பிசிராந்தையார். சோழன் வடக்கிருத்தலைக் கேள்விப்பட்டு அந்த இடத்திற்கு விரைந்து சென்றார். ஆனால் அவரது துர்அதிஸ்டம் கோப்பெருஞ்சோழன் இறந்து விட்டான். நடுகல்லும் நடப்பட்டு விட்டது.
கோப்பெருஞ் சோழன் இறக்கும்போது, தனது நண்பர் பிசிராந்தையார் தன்னைக் காண வருவார் என்றும், தனது பிரிவை
19

Page 63
Burg அகளுங்கன்
அவர் ஆற்றி உயிர் சுமக்க மாட்டாரென்றும், அதனால் அவருக்கும் தனக்குப் பக்கத்தில் இடம் ஒதுக்கி வைக்கும்படியும் கூறியிருந்தான்.
தனது நண்பனான சோழன் இறந்ததைக்கேட்ட பிசிராந்தையார், மிகவும் மனம் வருந்தினார். சோழன் வடக்கிருந்து நடுகல்லாகிய இடத்தினருகில் தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார்.
பேனா நட்பில் இதுபோன்ற ஒரு உயர் நட்பை, உயிர் நட்பை எங்கும் எக்காலத்திலும் நினைத்துக்கூடப் பார்க்க (Մ91ջեւ IT5l.
நேரிலே ஒரு தடவை கூடச்சந்திக்காத இருவரின் நட்பும், உயிரோடு ஒன்றிவிட்ட நிலையைக் கண்டு உள்ளம் பூரிக்கவில்லையா.
C
120

நறுந்தமிழ் அகளங்கன்
15. ageu606, 2006
தமிழர் ஐந்து வகையான உணவுகளை உண்டனர். அல்லது தமிழர் தம் உணவை ஐந்து வகையாக உண்டனர்.
இப்படிச் சொல்லும்போது சிலவேளை உங்களுக்குக் குழப்பமாகவும் இருக்கும்.
தமிழிலே நுட்பமான கருத்து வேறுபாடு கொண்ட சொற்கள் பல உண்டு. இது பலரும் எடுத்துக் காட்டிய ஒன்றுதான்.
பிஞ்சு, காய், முத்தல், செம்பழம், பழம், கனி அழுகல் என பலசொற்களால் பல பருவங்களைத் தமிழில் சொல்கிறோம்.
இதைவிடவும் பச்சைப் பிஞ்சு, வெம்பல் என்றும் சில சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
இப்படித்தான் உண்ணுவதையும், உணவையும் ஐந்து வகையாகத் தமிழிலே பிரித்து வைத்துள்ளனர்.
சுவையை, இனிப்பு, உறைப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என ஆறு வகையாகச் சொல்லி ஐந்து வகையான அறுசுவை உணவு என்று இலக்கியங்களிலே சொல்லியிருக்கிறார்கள்.
கச்சியப்பர் தனது கந்தபுராணத்தில் சூரபன்மன் கடைசியாக உண்ட உணவு பற்றிக் குறிப்பிடும்போது,
துன்னும் ஐவகை உணவுடன் அறுசுவை தொடர்ந்த அன்னம் உண்டனன் நஞ்சுகொல் மருந்துகொல் அதுவே.
(கந்-சூரபன் -16)
121

Page 64
JODY அகளங்கன்
என்று குறிப்பிடுகிறார். ஐந்து வகையாக உண்ணப் படுகின்ற அறுசுவை உணவை உண்டானாம்.
அதன்பின் அவன் உணவுண்ணாததால் அவ்வுணவு அவனுக்கு நஞ்சாக இருந்ததோ அல்லது அவன் சேவலும் மயிலுமாக மாறி நித்தியப் பெருவாழ்வு பெற்றதால் தேவாமிர்தமாக இருந்ததோ தெரியாது என்கிறார் கச்சியப்பர்.
ஐந்து வகை உணவுகளையும் எப்படி உண்ணுவது என்றும், உண்ணும் முறைக்கு என்ன பெயர் என்றும் குறிப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்கிறார்கள்.
கம்பன் கூற்று
நக்குதல், பருகுதல், தின்னுதல், உண்ணுதல், சுவைத்தல் என்பவையே அந்த ஐந்து வகை.
தேனை நக்கித்தான் உண்ணுகிறோம். தேனைக் குடிக்கவோ சாப்பிடவோ முடியாது. இன்று நக்குதல் என்ற சொல் கேவலமான சொல்லாக மாறிவிட்டது.
நாய் நக்கிச் சாப்பிடுவதால் இந்தப் பொருள் மாறுபாடு வந்திருக்கலாம். "நக்க வெளிக்கிட்ட நாய்க்குச் செக்கென்ன சிவலிங்க மென்ன” என்றொரு பழமொழியுண்டு.
மானங்கெட்டு வயிறு வளர்க்க உண்பவனுக்கு, எந்த இடத்தில் உண்கிறோம் என்ற வேறுபாடில்லை, என்ற கருத்தில் இந்த அற்புதமான பழமொழியை அமைத்திருக்கிறார்கள்.
“வீடு வீடா நக்கித் திரிஞ்சவன்' என்று ஒருவனைப் பார்த்துச் சொன்னால் அது அவனுக்கு மிக மிகக் கேவலமாக இருக்கும்.
அதனால் இன்று நக்குதல் என்ற சொல் ஒரு கெளரவக்
குறைவான சொல்லாக ஆகிவிட்டது.
122

JBDü3ıdg அகளங்கன்
பருகுதல் என்றால் குடித்தல் என்று பொருள். திரவ உணவை குடிப்போம். அதாவது பருகுவோம்.
இலங்கையில் நாம் திரவ உணவு உட்கொள்வதை குடித்தல் என்றுதான் சொல்கிறோம். ஆனால் இந்தியத் தமிழர்கள் இதைத் தவறாக சாப்பிடுதல் என்பார்கள். “காப்பி சாப்பிட்டீங்களா" என்று கேட்பார்கள்.
கையில் ஊற்றி அல்லது தட்டையான பாத்திரத்தில் ஊற்றி, நக்கித்தான் தேன் குடிக்கிறோம். தேனை நாம் உண்பதில்லை.
உண்ணுதல் என்பது ஆற அமர இருந்து சாப்பிடுவதைக் குறித்த சொல்.
மதிய உணவு அல்லது விருந்து உணவை ஆறுதலாக இருந்து உண்ணுகிறோம். எனவே உண்ணுதல் என்பது வயிறாரச் சாப்பிடுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிற ஒரு சொல்.
தின்னுதல் என்ற சொல் இன்று கெளரவக் குறைவான சொல்லாக ஆகிவிட்டது. ஆனால் திண்ணுதல் என்பது “நொறுக்குத்தீனி தின்னுதல்” என்று சொல்லும் வாக்கியத்தில் தனது பொருளைக் கொண்டுள்ளது.
வயிறு நிறைய உண்ணுவது போல அல்லாமல், எதையாவது இடைநேரத்தில் கடித்துத் தின்னுதல். கடலை கொறித்துத் தின்னுதல். கோழி ஓயாது கொத்தித் தின்னும். ஆடு ஓயாது தின்னும். ஆடு தின்னாப் பாலை என்பது ஒரு மரத்தின் பெயர்.
தின்னுதலையும் உண்ணுதலையும் தமிழர்கள் வேறுபடுத்திப் பார்த்து தனிச்சொற்களையும் வைத்துள்ளனர்.
99 GG
“நக்க வழியில்லாதவன்”, “நக்கித்திரிந்தவன்” என்பது
123

Page 65
நறறிந்தமிழ் அகளங்கன்
போல "தின்ன வழியில்லாமற் திரிந்தவன்” என்பதும் கேவலமான வார்த்தைப் பிரயோகமே.
ஓயாமல் தின்பவனுக்கு உடம்பு கொழுத்துப் போகும் என்பதனை "திண்டு கொழுத்தவன்” என்ற வாக்கியத்தால் விளக்கினர்.
“கணிடது கற்கப் பணி டிதனாவான்’ என்ற வாக்கியத்தோடு சேர்த்து ‘கண்டது தின்ன வண்டியனாவான்” என்பார்கள் கிராமத்தவர்கள்.
கண்டதெல்லாம் தின்றால் வயிறு பெரிதாகும் என்பது இதன்பொருள்.
சுவைத்தல் என்பது இவ்வரிசையில் ஐந்தாவது வகை. சாப்பாட்டுக்குப்பின் இனிப்புப் பண்டங்கள் உண்பதை சுவைத்தல் என்று குறிப்பிட்டனர்.
இன்று ஐஸ்கிறிம் சாப்பிடுவதை இந்த வகையில் குறிப்பிடலாம் போல் தெரிகிறது.
இதை விடவும் வெற்றிலை சாப்பிடுவதை "தாம்பூலம் தரித்தல்” என்றும் வெற்றிலை போடுதல் என்றும் குறிப்பிட்டனர். அப்படிப் பார்க்கும்போது அறுவகை உணவு என்றே சொல்லலாம் போல் தெரிகிறது.
இருப்பினும் வெற்றிலை யாவருக்கும் உரியதல்ல என்பதால் ஐந்து வகை மட்டுமே சொல்லப்பட்டிருக்கலாம் என எண்ணுகின்றேன்.
*கும்பகர்ணன் நித்திரையாகக் கிடக்கிறான். யுத்தம் தொடங்கி விட்டது, முதல் நாள் இராவணன் இராமனோடு போருக்குப் போய் தோற்று அவமானத்தோடு திரும்பி வந்து விட்டான்.
124

நறுந்தமிழட இகளுங்கன்
கும்பகர்ணனை எழுப்பி அவனைப் போருக்கனுப்ப நினைக்கிறான் இராவணன். வீரர்கள் சென்று கும்பகர்ணனை எழுப்புகிறார்கள்.
பெரிய கரிய மலை போன்ற தோற்றங்கொண்ட கும்பகர்ணனை எழுப்புவதற்கு அவர்கள் பட்டபாடு பெரும்பாடு.
கம் பராமாயணத்தில் அருமையாகக் கம்பன் இக்காட்சியைக் காட்டியுள்ளான்.
நித்திரை விட்டெழுந்த கும்பகர்ணனுக்குச் சாப்பாடு கொடுக்கிறார்கள். என்ன கொடுத்தார்கள், எவ்வகையாக அவன் உண்டான் என்பதை இங்கு பார்ப்போம்.
ஆறு நூறு சகடத்து அடிசிலும், நூறு நூறு குடங்களும் நுங்கினான். ஏறு கின்ற பசியை எழுப்பினான் சிறு கின்ற முகத்திரு செங்கணான்.
(கம்-யுத் 7331)
அறுநூறு வண்டில் சோறும், பத்தாயிரங் குடங் கள்ளும் குடித்தானாம் கும்பகர்ணன்.
ஆறுநூறு = அறுநூறு, நூறு நூறு = பத்தாயிரம், அறுநூறு வண்டில் சோற்றையும் வாயில் போட்டு பத்தாயிரங் குடங் கள்ளையும் வாயில் மாறி மாறி ஊற்றிக் குடித்தானாம் அவன்.
நுங்கினான் என்றால் குடித்தான் என்று பொருள். சோறு சாப்பிடவில்லை. அதையும் கள்ளோடு கரைசலாகக் குடித்தான். அதாவது பருகினான்.
ஏன் இப்படிச் செய்தான் தெரியுமா. பசியை எழுப்புவதற்காகத்தான் அந்த வேலை
125

Page 66
நறுந்தமி ஆகளுங்கன்
இன்று மேலைத்தேயத்தோர் பசியை எழுப்புவதற்காக சிலவகை மதுபானங்களைக் குடிப்பதைப்போல கும்பகர்ணனும் ஏறுகின்ற பசியை மேலும் எழுப்ப இப்படிச் செய்தானாம்.
சரி, அறுநூறு வண்டில் சோற்றையும் பத்தாயிரங் குடம் கள்ளையும் சேர்த்துக் குடித்த பின் என்ன செய்தான் என்று பார்ப்போம்.
எருமை ஏற்றை ஓர் ஈரறு நூற்றையும் அருமை இன்றியே தின்று இறை ஆறினான். பெருமை ஏற்றது கோடும் என்றே - பிறங்கு உருமை ஏற்றைப் பிசைந்து எரி ஊதுவான்.
(дѣub-uцф 7332)
புகை பிடிக்கும் பழக்கம் கும்ப கர்ணனுக்கு இருந்தது. நெருப்புக் கொள்ளியை அவன் எடுப்பதில்லை. இடி ஏற்றைப் பிடித்துப் பிசைந்து நெருப்புண் டாக்கி பற்றவைத்துப் புகைப்பானாம்.
வாயில் சுருட்டை அல்லது பீடி, சிகரட் எதையாவது வைத்துக் கொண்டு நெருப்புக்கொள்ளி, நெருப்புப் பெட்டி அல்லது லைற்றர் மூலம் பற்றவைத்துப் புகை பிடிப்பதை நாம் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் கும்பகர்ணனோ இடியை பிசைந்து சுருட்டுப் பற்றவைப்பவனாம். அத்தகைய வலிமை படைத்த அவன் என்ன செய்தான் பார்ப்போம்.
ஆயிரத்தி இருநூறு எருமைக் கடாக்களைப் பிடித்துக் கடித்துத் தின்றானாம். சாப்பிடுவதற்கு முன் அப்பளத்தைக் கடித்துத் தின்பது போலத் தின்றானாம். தின்று விட்டு சிறிது நேரம் பொறுத்திருந்தானாம் இனி ஆறுதலாகச் சாப்பிடுவோம் 6T60TO.
126

Distrf அகளங்கன்
கும்பகர்ணன் குடித்ததையும், தின்றதையும் கூறிய கம்பன், சாப்பிட்டதைப் பற்றிச் சொல்லவே இல்லை. எங்கள் ஊகத்துக்கே விட்டு விட்டான்.
திருவள்ளுவர்
தின்னுதல் என்ற சொல்லைத் திருவள்ளுவர் அருமையாகப் பயன்படுத்தியுள்ளார்.
தலைவனைப் பிரிந்த தலைவி துயரில் வாடுகிறாள். அவளது நெஞ்சம் தலைவனிடம் சென்று திரும்புகிறது.
அடிக்கடி அவள் நெஞ்சம் தலைவனிடம் சென்று திரும்ப அவளுக்கு தன் காதலனை தலைவனைக் காண வேண்டுமென்ற ஆசை பெருகுகிறது.
அதனால் அவள் தனது நெஞ்சுக்குச் சொல்கிறாள் “நெஞ்சே நீ, என் காதலனிடம் செல்லும் போது என் கண்களையும் கொண்டுபோ. இவை அவரைக் காணவேண்டு. மென்று என்னைக் கொஞ்சங் கொஞ்சமாகத் தின்கின்றன”.
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவைஎன்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று
(திரு-1244)
தின்னுதல் என்ற சொல்லின் பொருள் எவ்வளவு அருமையாக இக்குறளில் வருகிறது பாருங்கள்.
தமிழ்ச் சொற்கள் எவ்வளவு நுட்பமான பொருள்
கொண்ட சொற்கள் என்பதையும், இலக்கியங்களில் அவை
எவ்வளவு சிறந்த பொருளைத் தந்துள்ளன என்பதையும் அறிய
அறிய ஆவல் பெருகுகிறதல்லவா. படியுங்கள். சுவையுங்கள். பயன்பெறுங்கள்.
C)
127

Page 67
நறுந்தமிழ் அகளுங்கன்
அகளங்கனின் நூல்கள்
1) 2) 3) 4)
5) 6) 7)
8) 9)
10) 11) 2) 13)
14) 15) 16)
17) 18) 19) 20) 21) 22) 23) 24) 25) 26) 27) 28) 29) 30) 31)
岁令 G兹
“செல்” “வா” என்று ஆணையிடாய் (கவிதை) “சேரர் வழியில் வீரர் காவியம்" (குறுங்காவியம்) “சமவெளி மலைகள்” (அகளங்கன், சு. முரளிதரன் கவிதைகள்) “வாலி” (ஆய்வுநூல் - இரு பதிப்புக்கள்) (அகில இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு 1987)
"இலக்கியத் தேறல்" (கட்டுரைகள்)
“நளவெண்பா' (கதை) “அன்றில் பறவைகள்” (நாடகங்கள்) (தேசிய சாகித்திய மண்டலப் பரிசு 1992)
“முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர்’ (வரலாறு) "இலக்கியச் சிமிழ்” (கட்டுரைகள் இருபதிப்புகள்) “தென்றலும் தெம்மாங்கும்’ (கவிதைகள்) “பன்னிரு திருமுறை அறிமுகம்” (சமயம்) “மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள்” (ஆய்வு) "இலக்கிய நாடகங்கள்” (நாடகங்கள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு - 1994, கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசு 1994) "ஆத்திசூடி” (விளக்கவுரை) “கொன்றை வேந்தன்” (விளக்கவுரை) “அகளங்கன் கவிதைகள்’ (கவிதைகள்) (வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு 1996) வாக்குண்டாம் - விளக்கவுரை (மூதுரை) “சிவபுராணம்” (பொருளுரை) “செந்தமிழும் நாப்பழக்கம்” (பேச்சுக்கள்) "நாமறிந்த நாவலர்” (சிறுகுறிப்புகள்) “நல்வழி” (பொழிப்புரை - விளக்கவுரை) “இசைப்பாமாலை” (இசைப்பாடல்கள்) “கவிஞர் ஜின்னாஹற்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு "இலக்கியச் சரம் (கட்டுரைகள்) “வெற்றி வேற்கை" - உரை (நறுந்தொகை) "கூவாத குயில்கள்” (நாடகம்) "திருவெம்பாவை’ (உரை - சமயம்) “பாரதப் போரில் மீறல்கள்” (கட்டுரை) “சுட்டிக் குருவிகள்” (மழலைப் பாடல்கள்) “சின்னச் சிட்டுக்கள்” (சிறுவர் பாடல்கள்) "நறுந்தமிழ்” (கட்டுரைகள்)
128


Page 68


Page 69
தமிழ் கூறும் நல்லுலகம் நன் இதுவரை 30 ற்கு வெளியிட்டுள்ளார்.கதைக
Ebi LC55.gs Giri.LITTLIDIT oso STS) se
(Lists.
5685 sy, Ro is
*
SYNSSTATS
 

கன் அவர்களைத் கு அறியும். நூல்களை ட்டுரைகள் ஆய்வு 506,260,560L.
ம்.இதைவிட வம்தமிழ், Ab GNU END அவர் பேகம்போது
டக்கூடிய விதத்தில்
Ellis E.63)6 Eblĥ 3agibnbiaŭ
Dēloģistrs oli soijöö
i BT.jLDJTg
ILDGOS, 6Anյ5:Բ.
ই
bobfu FlföGolf fisi
seõppissis
S) el sijisibis,
is do si
šolės sunrigSi Sususእሾህ፴ ésgTS Sk§ኒ ኣርsር
iš sisirsang sung sensus sss Insubsistö