கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பத்தினித் தெய்வம்

Page 1


Page 2


Page 3

பத்தினித் தெய்வம்
(நாட்டிய நாடகங்கள்)
அகளங்கன்
வவுனியா கலை
25.06.2008

Page 4
பத்தினித் தெய்வம்
66Ob
எழுதியவர் பதிப்புரிமை
ଗରାଗୀlfil03
முதற்பதிப்பு
அட்டை
அச்சுப்பதிவு
விலை
ISBN
நாட்டிய நாடகம்
: அகளங்கன் (நா.தர்மராஜா)
flotDýrfjLDyrrgrT.B.A(Hons) வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
ஆனி 2008
. மல்ரிவிஷன் அச்சகம் வவுனியா
: ஜெய்னிகா அச்சகம் வவுனியா
100/=
: 978-955 - 8715 - 50 - 5
! a -

O.
O2.
O3.
O4.
O5.
O6.
O7.
பொருளடக்கம்
வாழ்த்துக்கள்
திருமதி சூரியயாழினி
அணிந்துரையும் வெளியீட்டுரையும்
முன்னுரை
பத்தினித் தெய்வம்
கற்பின் கனலி
அகளங்கனின் நூல்கள்
as OA.
- 5
- 18
- 27
- 34
- 64.
78 -سه

Page 5
Gamōgun
வானுயர வாழ்த்துகிறேன்
வண்ணக் கவிதைகளை வடித்துத் தந்தவன் தான் எண்ணற்ற பேச்சுக்களை இனிமையாய்ப் பேசியவன் பண்ணிற்கு நிகராகப் பேசும்நற் பண்புடையோன் மண்ணிற்கு ஒருமகனாய் வந்துதித்தான் அகளங்கன்.
பேர்சொல்ல ஆண்பிள்ளை பெண்பிள்ளை ஒன்றோடு ஊர்மெச்சவாழும்உயர்இல்லற வாழ்க்கை கொண்டோன் பார்தந்த புகழுண்டு பரமன்தள் அருளுண்டு ஏர்உண்டோ இதற்குமேல் இனியுண்டோ புகழ்வார்த்தை
ஆனவயது இன்று ஐம்பத்து ஐந்துதான் போனவயது இங்கே பெரிதாகத் தோன்றவில்லை ஞானமது முகத்தில் அரும்பாக வடிகிறது வானுயர வாழ்த்துகிறேன் வரலாறு படைத்திடவே.
சிவநெறிப் புரவலர் சி.ஏ.இராமஸ்வாம

வவுனியா அரச அதிபர்திரு.சி.சண்முகம் அவர்களது
வாழ்த்துச் செய்தி
“தாரணி போற்றும் தமிழ் மொழியே - உன் தாளணி செய்வேன் கவி வழியே’
என்பது அகளங்கனின் தாரக மந்திரம்.
வன்னி மண் தந்த எழுத்தாளர்களுள் வவுனியா திருநாவற் குளத்தைச் சேர்ந்த தமிழ்மணி அகளங்கன் (திரு.நா.தர்மராஜா) அவர்கள் ஒரு சிறப்பிடத்தைப் பெறுகின்றார். இவர் இலக்கியத்தில் பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிக்காட்டியவர். கவிதை, கட்டுரை, நாவல், புராணபடனம், சமயச் சொற்பொழிவு, நாடகம், பட்டிமன்றம், ஆய்வு போன்ற பல் துறை சார்ந்த ஆக்கங்களைப் படைத்து பல நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு தமிழுக்கம், சமயத்திற்கும், இலக்கியத்திற்கும் பெரும்பணி ஆற்றிவருகின்றார். இவர் இதுவரை தமிழ், சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளைச் சார்ந்த 32 நுால் களை ஆக்கம் செயப் து தமிழுல கற்கு அர்ப்பணித்துள்ளார்.
இவரின் அடுத்த படைப்பாக வெளிவரும் இந்த நாட்டிய நாடக நூல் அவருடைய திறமையின் இன்னொரு பரிமாணமாகவும் படைப் பாகவும் வாசகர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இந்த நாடக நூல் தமிழ் இலக்கியத்தின் இரு பழம் காவியங்களான இராமாயணம், சிலப்பதிகாரம்
一5一

Page 6
பத்தினித் தெய்வம் அகளங்கன்
ஆகியவற்றின் காட்சிகளை மையமாக வைத்து அவரால் ஆக்கப்பட்டுப் போட்டிகளில் மேடை ஏற்றப்பட்டு முதலாம் இடங்களைப் பெற்ற இந்த இரு நாடகங்களும் நூலுருவில் கிடைப்பதால் இலக்கிய ஆர்வமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள், வாசகர்கள் ஆகியோருக்கு மிகுந்த பயனைத் தருமென எதிர்பார்க்கின்றேன்.
மேலும் அகளங்கன் அவர்களுக்குப் புகழ்சேர்க்கக் கூடிய மற்றுமொரு வெளியீடான இந்நாட்டிய நாடக நூலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு அவரின் எழுத்தாக்கப்பணி மேன்மேலும் சிறப்புற்று மேலும் பல ஆக்கங்களைச் செய்து இனிய தமிழ்த்தாய்க்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
சி. சண்முகம் அரச அதிபர், வவுனியா.

வவுனியாதைற்கு வயைக் கல்வி0பணிப்பாளரிதிருமதி வி.ஆர்.ஏ.ஒலிமவேல் அவரிகளது
வாழ்த்துரை
வட மாகாண கல்வி பணி பாட்டலுவல் கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இந்த ஆண்டில் நடாத்திய காவியக் கதா நாட்டிய நாடகப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பத்தினித் தெய்வம் நாட்டிய நாடகம் நூல் வடிவு பெறுவதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
சிலப்பதிகார காவியத்தை நாட்டிய நாடகமாக சிறந்த வகையில் நாதர்மராஜா (தமிழ்மணி அகளங்கன்) ஆசிரியர் பத்தினித் தெய்வம் என்ற பெயரில் எழுதியிருந்தார். திருமதி. ஆரியயாழினி வீரசிங்கம் ஆசிரியை மிகச் சிறப்பாக தயாரித்திருந்தார்.
பார்த்தவர்கள் யாவரையும் நெகிழச்செய்து கண்ணிர் மல்கச் செய்த இந் நாட்டிய நாடகத்தின் இசையமைப்பு, பாட்டு, நாட்டியம், பக்கவாத்தியம் ஒப்பனை என அத்தனையும் சிறப்பாக அமைந்திருந்தது. எனது வலயத்தைச் சேர்ந்த வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலய ஆக்கமான இந்நாட்டிய நாடகம் மாகாணமட்டப் போட்டியில் முதலிடம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.
-7-

Page 7
பத்தினித் தெய்வம் அகளங்கன்
இந் நாட்டிய நாடகத்தில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் யாவரையும் வாழ்த்துவதோடு இந் நாட்டிய நாடகம் நூலாக வெளிவருவது பலருக்கும் பயன்படும் என்பதால் இந்நூல் சிறப்புறவும் வாழ்த்துகின்றேன்.
இந் நூலாசிரியர், கவிஞர். எழுத்தாளர். பேச்சாளர். பலநூல்களை எழுதிவெளியிட்டவர். அவரது இந்நூலும் சிறப்புற வெளிவந்து பயன்பட எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வி. ஆர். ஏ. ஒஸ்வேர்ல்ட் வலயக்கல்விப் பணிப்பாளர் வவுனியா தெற்கு

LCGCLGG GGGLLGG TTTTTTTTTTTGGLLLGLMGLLCLLLT
திருமதி.ணன்.மரீதேவி அவர்களது
வாழ்த்துச் செய்தி
தமிழ்மணி அகளங்கனின் படைப்புக்கள் தமிழ் இலக்கியத்தில் பண்முகப்பட்ட பார்வை கொண்டதாகவுள்ளது. சிறுவர், கவிதை, நாடகம், கட்டுரை பல்துறை, ஆய்வு என இவரது படைப்புக்களின் பட்டியல் நீண்டு செல்லும். கணித ஆசானாக இருந்த போதும் எழுத்துத்துறையிலே தன் பெயரை பதித்துக்கொண்ட தமிழ்மணியின் பெயர் கடல் கடந்த நாடுகளிலும் விளங்குகின்றது. இதுவே இவரது இலக்கிய படைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். “அகளாப்கன் கவிதைகள்” “இலக்கிய நாடகங்கள்” என்ற இரண்டு படைப்புகளும், வடக்கு கிழக்கு மாகாணத்தினால் சிறந்த படைப்புகளாக தெரிவு செய்யப்பட்டு பரிசு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. “அன்றில் பறவைகள்” என்ற இவரது படைப்பு தேசிய சாகித்திய விருதும் பெற்றது. கலை இலக்கியத் துறைக்கு பங்காற்றி தன் பெயரை முத்திரையாய்ப் பதிவு செய்த தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு வடக்கு கிழக்கு மாகாணத்தினால் கெளரவ ஆளுநர் விருதும் கிடைக்கப்பெற்றது. இவர் தனது பத்தினித் தெய்வம் (வட மாகாணத்தில் முதற்பரிசு பெற்ற நாடகம்) கற்பின் கனலி தேசிய மட்டத்தில் முதலாவது பரிசு பெற்ற நாடகம்) என்ற இரண்டு நாட்டிய நாடகங்களையும் நூலுருவாக்கம் செய்வது வரவேற்கத்தக்கது. இன்றைய காலத்தில் காவியங்கள் புதிய வியாக்கியானங்களுடன்

Page 8
பத்தினித் தெய்வம் அகளங்கன் அளிக்கை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் பழைய இலக்கியங்களின் மூல உருக்கள் சிதைந்து போகின்ற அபாயம் தோன்றியுள்ளது. பழந்தமிழ்க் காவியங்களில் உணர்த்தப்பட்ட விழுமியங்கள் இதனால் மறைக்கப் படுகின்றது. ஆதலால் மரபுவழிக் கலை வடிவங்கள் இன்று செம்மை சார்ந்ததாக காணப்படவில்லை. இத்தகைய ஆபத்திலிருந்து மரபுவழி நாட்டியங்களை காக்கின்ற பெரும் கைங்கரியத்தை இந் நூலாக்கத்தின் மூலமாக இவர் செய்தவராகின்றார். இவரது இலக்கியப்பணி மென்மேலும் தொடர வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சார்பாக வாழ்த்துகின்றேன்
என். பூரீதேவி
உதவிப் பணிப்பாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களம். கல்வி பண்பாட்டலுவல்கள், விளை. அமைச்சு வடமாகாணம்
திருகோணமலை.
--10 حست

வவுனியாதைற்குக் கல்விவயை உதவிக்கல்வி0 பணிப்பாளர் (அழகியல்) செல்வி.க.கந்தையா அவரிகளது
வாழ்த்துரை
தழிழ்த்தாய் பெற்றுள்ள காப்பியச் செல்வங்களுள் தலைசிறந்தது சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காப்பியம். கண்ணகி மானிடம் பாடிய மகத்துவம் பெற்றது சிலப்பதிகாரம். பெண்ணின் பெருமையைப் போற்றி வளர்த்த காவியம்.
இன்று சிலப்பதிகாரத்திற்கு தெளிவுரைகள் பல வெளிவந்து விட்டன. இருந்தாலும் சேரன் தம்பி இசைத்த காவியத்திற்கு ஒரு படி உயர்ந்து நின்று உரையுடனும் பாட்டுடனும் சிலப்பதிகாரத்தை நாட்டிய நாடகமாகத் தன் கைவண்ணத்தால் அகளங்கன் அவர்கள் ஆக்கியுள்ளார்.
இவரால் ஆக்கப்பட்ட பத்தினித்தெய்வம் நாட்டிய நாடகம் வடமாகாணக் காவியக் கதாநாட்டிய நாடகப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று பலரது பாராட் டையும் பெற்றுக்கொண்டது. இவரது ஆக்கத்தினை நடன ஆசிரியை திருமதி. சூரியயாழினி வீரசிங்கம் அவர்கள் நெறிப்படுத்தி தமிழ்மத்திய மகாவித்தியாலய மாணவர்களால் சிறந்த நாட்டிய நாடகமாக அரங்கேற்றினார். இந் நாட்டிய நாடகம் பலரின் மனதை உருகவைத்ததுடன் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்புபோல் சபையை அடங்கவைத்தது. நடுவர்களின்
-ll -

Page 9
பத்தினித் தெய்வம் அகளங்கன்
தீர்ப்பின்படி மாவட்ட,மாகாண மட்டங்களில் முதலாம் இடத்தைப் பெற்றுப் பணப் பரிசைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அகளங்கன் அவர்களால் ஆக்கப்பட்ட நாட்டிய நாடகம் கருத்தமைந்த படைப்பாகியது.
தமிழ்மணி அகளங்கன் அவர்களால் இதுவரையில் ஆக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் இலக்கியத்தினுாடாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவே அமைந்தவை யாவரும் அறிந்ததே. அந்தவகையில் பத்தினித்தெய்வம் நாட்டிய நாடகத்தை நூல்வடிவில் வெளியிடுவதையிட்டு இவரைப்பாராட்டி மகிழ்வதுடன் அழகியல் இரசனையுள்ள சமூகத்தை உருவாக்கத் தங்கள்பணி தொடர வேண்டுமென வாழ்த்திநிற்கிறேன்.
செல்வி. க.கந்தையா
வலயக்கல்விப் பணிமனை வவுனியா தெற்கு
- 12

வவுனியா தமிழுமத்திய மகாவித்தியாயை அதிபர் திரு.சி.இகைாநாதன் அவரிகளது
வாழ்த்துரை
எனது பாடசாலையின் பழைய மாணவரும். சிரேஷ்ட ஆசிரியரும் பகுதித் தலைவர்களுள் ஒருவரும் எல்லாவற்றுக்கும் மேலாக ஆய்ந்தறிந்து அடங்கிய தமிழ்ச் சான்றோனுமான தமிழ்மணி அகளங்கன் (நா. தர்மராஜா) அவர்கள் எழுதி வெளியிடும் “பத்தினித் தெய்வம்’ நாட்டிய நாடகநூலுக்கு வாழ்த்துரை வழங்குவதையிட்டு மட்டில்லா மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.
ஓர் இனத்தின் பெருமையும் பண்பாடும் வரலாறும் அவ்வினத்தின் மரபு இலக்கியங்களுள் புதையுண்டு கிடந்து ஆவணப்படுத்துகின்றன. இதனாற்றான் 20ம் நூற்றாண்டின்
இணையில்லாக் கவிஞன் பாரதி “. கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும். சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும். ’ என எமது வரலாற்றுப் பெருமைகளை
அடுக்கிச்செல்கின்றான். இந்த வகையில் இவர்கள் இருவரின் காவியங்களில் இருந்து தமிழ்மணி அகளங்கன் இரு உச்சக் காட்சிகளை எடுத்துத் தன் கைவண் ணத்தாலும் புலமைத்திறனாலும் “கங்குலும் பகல்பட வந்தான்”, *பத்தினித்தெய்வம்” என இரு நாட்டிய நாடகங்களாக எழுதி இப்பொழுது நூலுருவாக வெளிக்கொணர்ந்துள்ளார். இவ் இரு நாட்டிய நாடகங்களும் கல்வியமைச்சினால் பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்பட்ட நாட்டிய நாடகப் போட்டிகளில் காண்டியம் செய்யப்பட்ட வலய, மாவட்ட,
-3

Page 10
பத்தினித் தெய்வம் அகளங்கன் மாகாண மட்டங்களில் முதலாம் இடத்தைப் பெற்று எமக்கும் எமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்துத் தந்தவை என்பதனை அதிபர் என்ற முறையில் பெருமிதத்துடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.
*கங்குலும் பகல்பட வந்தான்” என்ற நாட்டிய நாடகம் (கற்பின் கனலி) 2007ம் ஆண்டிற்கான தமிழ்மொழித் திறன் போட்டியில் தேசியமட்டத்தில் முதலிடம் பெற்று எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
தன்னுடையபாடசாலைக் கடமைகளுக்கு மத்தியில் காலத்தின் தேவைகருதிய எழுத்துப்பணியாலும் முத்திரை பதித்து விளங்கும் தமிழ்மணி அகளங்கனின் ஆக்கபூர்வமான இப்பணிகள் என்றென்றும் தொடர்ந்து நிலைத்துப் பயனுதவ வேண்டுமென்று எல்லாம் வல்ல வித்தியாவிநாயகரின் பாதம் பணிந்து வாழ்த்தியமைகின்றேன்.
சி. உலகநாதன்
அதிபர் வ/வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் வவுனியா.
- 4 -

பத்தினித் தெய்வம் (ருாஉழய நாடகம்)
நாட்டியக் கலாரத்னா
திருமதிசூரியயாழினி வீரசிங்கம்
தமிழ்மணி அகளங்கன் ஐயா அவர்களால் எழுதப்பட்ட இந்த நாட்டிய நாடகம் மிகவும் உயிர்த்துடிப்புள்ள கதையம்சத்தினைக் கொண்டுள்ளது. காவிய கதாநாட்டிய நாடகப் போட்டி நிமித்தம் இது எழுதப்பட்டது. குறைந்த காலப்பகுதியில் இந்நாட்டிய நாடகம் தயாரிக்கப்பட்டது. இவருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
திருமதி தேவமனோஹரி நாகேஸ்வரனாலும் திருமதி.பேபிஜோசப் பின் கருணாகரன் அவர் களாலும் இசையமைக்கப் பட்டது. இவர்களிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். நாட்டியஅமைப்பு மிகவும் இலகுவாகப் போடக்கூடிய விதத்தில் இதன் அமைப்பு காணப்பட்டது. இந்நாட்டிய நாடகத்தை பழக்கும் போது தமிழ்மணி அகளங்கன் ஐயா அடிக்கடி வந்து பார்த்து திருத்தங்களை மேற்கொண்டார். அவருடன் திருபூரீ.கணேசன் ஐயா அவர்கள் திரு.கதிர்காமசேகரன் ஆசிரியர் அவர்களும் கூட வந்து கதையம்சம் சீராக உணர்வுகளுடன் செல்கின்றதா எனப் பார்த்து தமது கருத்துக்களை கூறியமை இந்நாட்டிய நாடகம் உயர்வு பெற காரணமாக இருந்தது.
பாடகரான திருமதி.பேபி ஜோசப்பின் கருணாகரன் அவர்கள் வேறுபாடசாலை ஆசிரியராக இருந்தாலும் ー15ー

Page 11
பத்தினித் தெய்வம் அகளங்கன் (நெளுக்குளம் கலைமகள்) எம்மோடு மிகவும் நெருக்கமாக உறவாடி, கூப்பிட்ட நேரமெல்லாம் ஒத்திகை பார்க்க வந்ததை மறக்க முடியாது. இதே போல் அணிசேர் கலைஞர்களான எமது பாடசாலை ஆசிரியர் திருமதி. ம. கனகரட்ணம் அவர்கள் மிருதங்க வித்துவான் க. கனகேஸ்வரன் அவர்கள், தவில் வித்துவான் ரூபன், நாதஸ்வர வித்துவான் பாபு அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இவர்களது ஒத்துழைப்பும் எமக்கு பூரணமாக கிடைத்தது. அதேபோல் எமது பாடசாலை மாணவியான செல்வி. புவியாழினி புஸ்பராசா அவர்களும், கூடஇருந்து உதவி புரிந்தமைக்கு எமது நன்றிகள்.
இதில் பங்குபற்றிய எல்லா மாணவிகளும் தமது பாத்திரப் படைப்பை உணர்ந்து மிகவும் சிறப்பாக ஆற்றல்களை வெளிப்படுத்தினார்கள். எந்நேரமானாலும் கூப்பிட்ட உடன் வந்து பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.
எமது தமிழ்மன்றப் பொறுப்பாசிரியை திருமதி. த. வசநீதகலா அவர்களும் எமக்கு வேண்டிய சகல ஒத்துழைப்பையும் தந்தமைக்கு எமது நன்றிகள்.
சகல பாதி திரங்களுக் குமான ஒப்பனை அலங்காரங்களை மிகவும் கச்சிதமாக செய்த செல்வி. கமலா கிருஷ்ணதாஸ், திருமதி. காமதேனு புவனேந்திரன், அருந்தவநாயகம் சுயேந்திரா, நாகராஜா செந்தூர்செல்வன் ஆகியோருக்கும் என் நன்றிகள்.
இவற்றை விட எல்லாம் உங்களுடைய விருப்பப்படி செய்யுங்கள் என பூரண சுதந்திரம் தந்த மதிப்பிற்குரிய எமது அதிபர் திரு. சி. உலகநாதன் ஐயா அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். அதிபர்
ー16ー

பத்தினித் தெய்வம் அகளங்கன்
அவர்கள் சகலவசதிகளையும் செய்து தந்தமையும் எமது வெற்றிக்கு முழுக்காரணமாகும்.
அனேக ரசிகர்கள் இலக்கியவாதிகள் பெரியோர்களால் பாராட்டப்பட்ட இந்த நாட்டிய நாடகங்களிற்கு ஒத்துழைப்புத் தந்த சகலருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எல்லோர் மனதிலும் முத்திரைபதித்த கண்ணகிக்கும், சீதைக்கும் . (யோ, றெபேக்கா தர்சினி) இராவணனுக்கும் (கு. வித்தியா) எனது பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.
2007ம் ஆண்டுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிக்காக நான் தயாரித்த “கங்குலும் பகல்பட வந்தாள்” என்ற 20 நிமிட நாட்டிய நாடகம் வலய, மாவட்ட, மாகாண மட்டப் போட்டிகளில் முதலிடங்களைப் பெற்று தேசிய மட்டத்திலும் முதலாமிடத்தைப் பெற்றது. இந் நாட்டிய நாடகத்தையும் தமிழ் மணி ஐயா அவர்களே எழுதித் தந்தார். அந்த நாட்டிய நாடகம் கற்பின் கனலி என்ற பெயரில் இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.
- 17

Page 12
அணிந்துறையும் வெளியீழ்டுரையும் கலாநிதி கந்தையா ரீகணேசன்
தமிழ்மணி அகளங்கன் அவர்களின் 33 வது நூலாகவும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 18 வது நூலாகவும் வெளிவருகிறது. “பத்தினித் தெய்வம்” எனும் நாட்டிய நாடக நூல். ஏற்கனவே கவிதைகள், சிறுகதைகள், நாவல், நாடகம், விமர்சனத் தொகுப்புக்கள் பாடல் இறுவட்டுக்கள், நாடகக் கட்டுரைத் தொகுப்புக்கள் என பல நூல்களை வட்டம் வெளியிட்ட போதும் இந்த பதினோராவது ஆண்டில் நாம் வெளியிடும் நாட்டிய நாடக நூல் “பத்தினித் தெய்வம்”.
பல்வேறு மேடைகளில் போட்டிகளில் களம் பல கண்டு வெற்றி பல பெற்று இன்று அச்சில் ஏறுவது கண்டு பரவசமடையாமல் இருக்க முடியவில்லை. இந்த நாட்டிய நாடகத்தினை பல்வேறு அரங்க நிலைகளில் கண்டு இரசிக்கும் சந்தர்ப்பம் கிட்டியிருந்தது. வலய மட்டத்தில் சமன் செய்து சீர்தூக்கும் நடுவர்களால் 2 இடத்தைப் பெற்ற இந்த நாட்டிய நாடகம் பின்னர் மாவட்டமட்டத்திலும் மாகாணமட்டத்திலும் 1" இடங்களைப் பெற்று தனது தகுதியைப் பறைசாற்றியிருந்தது.
இந்த எழுத்துருவுக்கு நாட்டிய வரைபும் Cho
reography நட்டுவாங்கமும் செய்தவர் நாட்டிய கலைமணி
திருமதி. சூரிய யாழினி வீரசிங்கம் அவர்கள். நாடக மாந்தர்களாக
நாட்டியமாடியவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய -8-

பத்தினித் தெய்வம் அகளங்கன்
மாணவர்கள். மிகுந்த துடிப்புடன் நடிப்புடனும் பாவத்துடனும் தாள லய சுருதி சுத்தத்துடனும் மேடையேறியது. இந்த நாட்டிய நாடகம், பத்தினித் தெய்வம் / பத்தினி தெய்யோ என இலங்கைநாட்டு மக்கள் எல்லாராலும் போற்றப்படும் கண்ணகியின் வரலாற்றை தமது எழில் மிகு தமிழால் வளம் படுத்தி நாடகச்சிறப்புடன் காட்சிப்படுத்தி பாத்திர உருவாக்கம் செவ்வனே செய்து ஒரு முழுமை மிகு படைப்பைத் தந்துள்ளார் காவியமாமணி அகளங்கன் அவர்கள்
ஐந்து பெரும் காப்பியமாம் அணிகலன்கள் பூ ணடு அழ கொழுக எழுந்தருளும் அற்புதப் பேரழகே!
என தமிழை வர்ணிக்கும் கவிஞர் கண்ணகி, மாதவி, அழகு வர்ணனைகளையும் விட்டு வைக்கவில்லை. கண்ணகி பிறப்பைக் கூறும் போது இப்படிச் சொல்கிறது
பாடல்.
சோழ வளநாடு சோறுடைத்து - என்றும் சுந்தரத் தமிழ்மொழியாம் சொத்துடைத்து நாளும் பெருகும் இன்ப நலமுடைத்து - இந்த நானிலத்தில் அழியாப் புகழுடைத்து.
கண்ணகியை, தாலாட்டுப் பாடலில்.
கண்ணே கண்ணகியே கற்பகமே கண்ணுறங்கு பொன்னே புதுமலரே 鸟 ச்சரமே கண்ணுறங்கு
ー選9ー

Page 13
பத்தினித் தெய்வம் அகளங்கன்
பெண்ணமுதாய் வந்து பிறந்தபெரும் பேரழகே உண்ணத் திகட்டாத உத்தமத்தேன் பாகே!
எங்கள் குலம் விளங்க இங்குவந்த தேவதையே! திங்களே குளிர்ந்தஇளந் தென்றலே கண்ணுறங்கு
மாதவி பற்றிய வர்ணனையில்
பருவம் ஐந்து தொடங்கிய போது பரதம் பயிலத் தொடங்கினாள் மாது. இணையிலா அழகும் ஈடிலாத் திறமும் இணையவே மாதவி எழிலாய் ஜொலித்தாள்
எனப் பாடுகின்றார்
‘விடுதல்அறியா விருப்பினன்' ஆகி மாதவி மனையில் கிடந்தான்
கோவலன் ஆனால் கண்ணகியோ
“வருவார் வருவார் என வழிபார்த்து வார்குழல் சோர்ந்திட கண்ணகி இருந்தான்”
பின்னர் மாதவி - கோவலன் ஊடலில் விளைந்த காதையை கவிஞர் இப்படிப் பாடுகிறார்.
கங்கையைச் சோழன் கூடிய தாலே காவிரி ஊடல் கொள்வதே இல்லை காவிரிப் பெண்ணின் கற்பே கற்பென கோவலன் புகழ்ந்தான் கானல் வரியில். ஊடல் வினையாய் முடிந்து மாதவியைப் பிரிந்தான் கோவலன்.
“ஆடலில் பாடலில் மட்டுமா வல்லவள். நடிப்பிலும் வல்லவள் என்றே ஏசினான்” பின்னர் கண்ணகி வீடு செல்கிறான். அங்கு அவளிருந்த கோலத்தை இப்படி பாடுகின்றார்.
ー20ー

பத்தினித் தெய்வம் அகளங்கன்
“உள்ளம் குலைந்து உருவும் குலைந்து
ஒளியும் இழந்த மேனியள் ஆக” எனப்பாடும் கவிஞர், ஊடலில் வாடிய பாண்டிமாதேவியின் நிலையை உரைக்கும் போது, இப்படிக் கூறுவார்.
“மன்னனாம் தென்னவன் பெண்களை ரசிப்பதாய் தென்னவன் தேவியோ ஊடலில் வாடினாள்” ஊடலில் ஊடாடிய மன்னவன் தனது நீதி நெறியில் ஈடாடி கோவலன் தன்னைக் கொன்று, தனது சிம்மாசனத்துக்கு இழுக்குத் தேடினான். கணவனை இழந்த கண்ணகி நீதி கேட்டு மன்றுக்கு விரைவதைப் பாடுகிறார் இப்படி “நீர்வழியும் கண்ணோடு கண்ணகி நடந்தாள் நிரை நிரையாய் வந்தவர்கள் பழிமொழி பகர்ந்தார்” ஈற்றில்
“கற்புக் கனலால் மதுரையை எரித்த கண்ணகிப் பெண்ணைக் கடவுளாய்க் கொண்டு
சேரன் சிலையில் வடித்து வணங்க தேசங்கள் எங்கும் வணக்கம் தொடர்ந்தது”
இவ்வாறு தனது எளிமைமிகு தமிழுடன் இளங்கோவடிகளின் தமிழையும் கலந்து பழஞ்சுவை குன்றாது நாட்டிய நாடகமாய் கூடி ஆடக் கொடுத்து வைத்தது பத்தினித் தெய்வம்.
சீர்மிகு சிறப்புடன் கூடிய மாணவர் குழாம் பொருத்தமான
பாத்திரத்தெளிவுடன் கண்ணகி கதையை நாட்டியத்தில்
எடுத்துரைத்தது. தலைவிரி கோலமாக ஆடிய கண்ணகி
பருவ வயதினளாயப் பூம் பந்தாடிய காட்சியும்
இயல்புடையதாய் இரசிப்புக்கு உரியதாய் அமைந்தது. மாணவர்க்கு எம் பாராட்டுக்கள்.
ー21ー

Page 14
பத்தினித் தெய்வம் அகளங்கன்
பாடல்களைப் பாடிய திருமதி. பேபி யோசப்பின் கருணாகரன் பாவம் உணர்ந்து நாடகச் சுவை குன்றாது நாட்டியத்துடன் ஒன்றியமை கவனிப்புக்குரியது. திருமதி. மனோரஞ்சிதம் கனகரட்ணம் அவர்களின் கைவண்ணத்தில் இழையோடியது வயலின் இசை, துள்ளி ஓடும். பாயும்அருவி போல நாடகம் பாய்ந்து எழுந்து பரந்து செல்லும் போது தாளம் தவறாது நட்டுவாங்கம் செய்ய உதவியாய் / வசதியாய் லயம் பிசகாத மிருதங்க வாசிப்பு இசைச்செல்வர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களுக்கு கைவந்த கலை.
இவ்வாறு எல்லாச் சுவைகளின் சங்கமமாக வாய்க்கப் பெற்ற “பத்தினித் தெய்வம்’ படையல் எல்லோருக்கும் காலந்தோறும் விருந்தளிப்பதாய் அச்சில் வெளிவருவது; அதுவும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட வெளியீடாக வெளிவருவது மிகப்பெரிய மகிழ்வுக்குரிய விடயம்.
கண்ணகி கோவலன் கதை வில்லுப்பாட்டாகவும், கதாப்பிரசங்கமாகவும், கோவலன் கூத்தாகவும், நாட்டார் கதையாகவும், பல்வேறு வடிவங்களை எடுத்தமை வரலாறு கண்ட உண்மை. பத்தினி தெய்யோ வழிபாட்டு மரபு பற்றி வரலாற்றாய்வாளர் கணநாத் ஒபயசேகர எழுதிய Pathini Cult எனும் ஆய்வும் இந்த இடத்தில் மனங்கொள்ளத்தக்கது.
இவ்வாறு இனி வரும் காலங்களிலும் அள்ள அள்ளச் சுவைகுன்றாத அமுதசுரபியாக பத்தினித் தெய்வத்தின் கதை
ー22ー

பத்தினித் தெய்வம் அகளங்கன்
மிளிரும் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த தொடர்ச்சியில் தமிழ் மணி அகளங்கன் அவர்களின் இந்தப்படைப்பும் வரலாற்றில் ஒரு தடமாக அமையும் என்பது வெள்ளிடைமலை.
இந்த இடத்தில் பல்வேறு நாட்டிய நாடகங்களை எழுதி பெருமை சேர்த்த யாழ்ப்பாணம் பிரம்மழரீ ந.வீரமணி ஐயர் நினைவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மணி அகளங்கன் அவர்கள் எழுதிய “கங்குலும் பகல்பட வந்தான்” எனும் மற்றொரு நாட்டிய நாடகம் பத்தினித் தெய்வம் எனும் இந்நூலுடன் இணைந்து வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது.
இராமாயணத்தில் வருகின்ற சீதையின் அசோக வனக் காட்சி நாட்டிய நாடகத்தில் கதைச் சூழ்வாக (Plot) அமைகிறது. சீதை சிறையிருந்த கோலம் அனுமனை மட்டுமல்லாது எம்மையும் வாட்டுகின்றது. அரக்கியர் அவரைப் படுத்தும் பாடு எம் நெஞ்சையெல்லாம் துயரம் ஆழ வைக்கின்றது. ஆயினும் இராவணனின் தம்பி விபீடணனின் மகள் திரிசடையின் ஆறுதல் ஒன்றுதான் அவருக்கு நம்பிக்கை ஊட்டுகின்றது.
ஆனால் அந்தோ! அட்டகாசமாக வரும் இராவணனின் அழுத்தமும் கெஞ்சலும் பின்னர் கொன்றிடுவேன். எனும் அகங்கார வெறியும் சீதையைத் திக்கு முக்காட வைக்கிறது.
- 23

Page 15
பத்தினித் தெய்வம் அகளங்கன்
“மானினைத் தேடி வரும் புலியினைக் கண்ட மானிளம் பிணையென சீதை பயங் கொண்டாள்
காமுகன் இராவணன் சீதையினை நாடிக் கங்குலும் பகல்பட அசோக வனம் வந்தான்.”
இவ்வாறு பாடுகின்றார் தமிழ்மணி அகளங்கன்.
இவ்வளவு இக்கட்டுகளுக்கு மத்தியிலும் துணிந்த மனதோடு துரும்பொன்றை எடுத்து தூக்கிப் போட்டாள் துட்டனாம் இராவணன் முன், தொடர்ந்து இப்படிக் கூறுவாள்.
‘குலமாதர் கற்புநெறி வழுவார் என்றார் குணமுனது சிந்தையிலே இலையோ பாவி உலகமெலாம் அரசாளும் உன்னைக் கொல்ல ஒரு வீரன் இராம பிரான் வருவான் நீ காண்டி’
மீண்டும் மீண்டும் அர்த்தமற்ற வார்த்தைகளை உதிர்த்து அரக்கியரிடம் ஆணை பிறப்பித்து அசோக வனம் விட்டு நீங்கினான் இராவணன். அவன் ஆணையை ஏற்று “கொன்று குவிப்போம் கொன்று குவிப்போம்” எனத் துள்ளிய அரக்கியரை தன் மாயத்தால் மயக்கி சீதையைக் காண வருகிறான் அனுமன். நாட்டிய நாடகத்தின் முடிவையும் மாருதியின் வரவு சுட்டி நிற்கின்றது.
பல்வேறு சிறு நாடகங்களை ஒருங்கே கொண்டுள்ள
இராமாயண காப்பியத்தில் அசோக வனக் காட்சி ஒரு முக்கியத் திருப்புமுனை ஆகும்.
-24

பத்தினித் தெய்வம் அகளங்கன் இராமனிட மிருந்து இராவணனால் சீதை பிரிக்கப்பட்டதிலிருந்து சீதையை அனுமன் ஊடாகக் காண்கின்ற கட்டம் அசோக வனக் காட்சி. அங்கு தான் இராவணனின் முடிவுக்கு கட்டியம் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது சீதையின் துயருக்கும் ஒரு முடிவு கிட்டும் என நம்பிக்கையும் ஊட்டப்படுகிறது.
இக் காட்சித் துண்டை மிகவும் கச் சிதமாகவும் கவித்துவமாகவும் நாடக சுவையுடனும் எழுத்தில் வடித்துள்ளார் தமிழ்மணி அகளங்கன் அவர்கள்.
இந்த இலக்கிய நாட்டிய நாடக எழுத்துருவை தாளம்,லயம்,சுருதி பிசகாது பாத்திரத் தெரிவு மற்றும் ஒப்பனை சிறப்புக்களோடு அரங்கில் கொண்டு வருகிறார் திருமதி.வீ.ஆரியயாழினி அவர்கள்.
இராவணன் வரவுக் காட்சியையும் சீதையின் அசோகவனக் காட்சியையும் ஒரே நேரத்தில் மேடையில் சங்கமிக்கச் செய்ததில்ஒரு பெரும் அரங்கத்தாக்கத்தை ஏற்படுத்துவது இரசிப்புக்குரியதாக இருந்தது. அதே போல இராவணனும் சீதையும் சம்வாதம் புரிகையில் ஒரு புறம் அனுமனின் பிரதிபலிப்புக்களும் மறுபுறம்அரக்கியர்களின் இராவணனுக்கு ஒத்திசைவான ஆட்டங்களும் நாட்டிய நாடகத்தைக் காவியப்பண்புடையதாகவும் ஆக்குகின்றது.
இதன் சுவை குன்றாது குரல் இசைத்த பாடகர்களும் இசையமைப்பாளர்களும் பாராட்டுக்குரியவர்கள். முக்கியமாக சீதையின் வெகுண்டெழுந்த கனல் கக்கும் நடிப்புக்கு உரம் சேர்த்த மிருதங்கக் கலைஞர் கனகேஸ்வரனின் லயம் பிசகாத அதிர்வுகள் நாடகத்தின் சுவையை மெருகூட்டியது என்றால் மிகையாகாது.
ー25ー

Page 16
பத்தினித் தெய்வம் அகளங்கன்
எமது வவுனியா கலை இலக்கிய வட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு கலை இலக்கிய நிகழ்வுகளை நடாத்திவருகிறது.நூல்வெளியீடுகள், விமர்சன அரங்குகள், எழுத்தாளர் கலைஞர் சந்திப்பும் வரவேற்பும், நடன நாடக அரங்கேற்றங்கள், விமர்சனங்கள், கருத்தரங்குகள், கருத்தாடல் நிகழ்வுகள், பட்டிமண்டபங்கள், கவியரங்குகள், ஆய்வுக் கருத்தரங்குகள், கலைஞர் எழுத்தாளர் கெளரவம், திரைப்பட விமர்சனம் என கலை இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தவும், விழிப்புணர்வை உருவாக்கவும் பல பணிகளைச் செய்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் தலைமை ஏற்று ஆக்கமும் ஊக்கமும் தந்து வழி நடத்துபவர் தமிழ்மணி அகளங்கன். அவர்களின் பல்வேறு நூல் வெளியீட்டுப் பணிகளில் நாமும் இணைந்து ஒரு நாட்டிய நாடக நூலை வெளியிடுவதில் பெருமை அடைகின்றோம்.
கந்தையா பூரீகணேசன் தலைவர் ஆங்கிலமொழி கற்பித்தல் துறை. யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்
வவுனியா.
செயலாளர், கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் வவுனியா
ー26ー

முன்னுரை
அகில இலங்கைத் தமிழ்த்திறன் போட்டிகள் நடைபெறுமா நடைபெறாதா என்ற சந்தேகத்தில் இருந்த நேரத்தில் (2007) வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச் சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் காவியக் கதாநாட்டிய நாடகப் போட்டியை பாடசாலை மாணவர்களுக்கிடையே நடாத்துவதற்கான சுற்றுநிரூபத்தை அனுப்பியிருந்தது.
மிகக் குறுகிய கால அவகாசத்தில் அப் போட்டி நடாத்தப்பட இருந்ததைப் பார்த்து எமது பாடசாலை (வ/ வ.தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) நாட்டிய ஆசிரியை திருமதிசூரியயாழினி வீரசிங்கம் அவர்கள் அதிர்ச்சியடைந்தார். என்னிடம் அந்தச் சுற்று நிரூபத்தைக் காட்டி நாட்டிய நாடகமொன்றை அவசரமாக எழுதித்தர முடியுமா என்று கேட்டார்.
தமிழ்த் திறன் போட்டிகளுக்காக என்னிடம் பல நாட்டிய நாடகங்களைப் பெற்றுத் தயாரித்தவர் அவர். அது மட்டுமல்லாமல் எனது வேறு பல நாட்டிய நாடகங்களையும் தயாரித்து பல மேடைகளில் அரங்கேற்றி புகழ்பெற்றவர் அவர். எனது பல நாட்டியப் பாடல்களுக்கு நாட்டியம் அமைத்தவர் அவர். தனது பட்டப்படிப்பின் ஆய்விற்காக எனது நாட்டியப்பாடல்கள் சம்பந்தமாக ஆராய்ந்து கட்டுரை சமர்ப்பித்தவர் அவர். தனது மாணவிகள் பலரது நாட்டிய
- 27

Page 17
பத்தினித் தெய்வம் அகளங்கன் அரங்கேற்றங்களின் போதும் எனது பாடல்களையும் சிறப்பாக பயன்படுத்தியவர் அவர்.
சமூக சமய,மட்டங்களில் பல பட்டங்களையும் பெற்றதோடு ஜப்பானிய அரசின் கலைத்துறைக்கான அதிஉயர் விருதான “புங்கா” என்ற விருதையும் பெற்றவர்அவர்.
அவசரமாக அவருக்கு ஒரு நாட்டிய நாடகத்தினை எழுதிக் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒப்புக் கொண்டேன். பல்வேறு பணிகளுக்குள்ளே அமைதியான பொழுதை ஒதுக்கி நாட்டிய நாடகம் எழுத அவகாசம் கிட்டவில்லை. அதனால் இரண்டு நாட்கள் சொந்த விடுமுறையில் வீட்டில் இருந்து இந்த நாட்டிய நாடகத்தை எழுதிப் பிரதியெடுத்தேன்.
சிலப்பதிகாரம் எனக்குப் பிடித்த ஒரு காப்பியம். சிலப் பதிகார ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றை எழுதியிருக்கிறேன். சிலப்பதிகாரம் பற்றி பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.
சிலம்பு பிறந்தது என்ற எனது மிகவும் வித்தியாசமான வானொலி நாடகம் பிரான்ஸ் தமிழ் ஒலி நிறுவனம் தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து தேசிய ரீதியில் நடாத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த வானொலி நாடகப் போட்டி (1998)இல் இரண்டாம் பரிசு (ரூபா 30,000) பெற்றது.
- 28

பத்தினித் தெய்வம் அகளங்கன்
குற்றஞ் செய்யாத பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுக் கொல்லப்படுவதையும், காணாமல் போகின்ற சிலர் தலைவேறு உடல்வேறாகக் கிடப்பதையும் அறிந்து மிகுந்த வேதனையோடு இருக்கின்ற இந்த நேரத்தில் அந்த வேதனையை சிலப்பதிகார நாட்டிய நாடகம் மூலமாகப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.
களவெடுக்காத கோவலன் கள்வனாக, களவெடுத் தவனாலே குற்றஞ் சாட்டப்பட்டு, நீதிவிசாரணையின்றி ஊர் க் காப்பாளராலே கொடுமையாக தலை வேறு உடல்வேறாக வெட்டி வீழ்த்தப்பட்டதையும், கண்ணகி அதனைக் கேள்விப்பட்டு கதறித் துடித்து அழுது அரற்றியதையும், பின் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டு வழக்குரைத்து பாண்டியனின் தலைநகராகிய மதுரையையே நெருப்பினால் எரித்து அழித்ததையும் ஒப்பிட்டு நினைவுகூர இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.
கண்ணகியால் அழமுடிந்தது நீதி கேட்க முடிந்தது அநியாயக்காரர்களை எரித்து அழிக்க முடிந்தது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றம் ஆகியது. ஒரு நம்பிக்கையில் ஒடுகின்ற எங்கள் வாழ்க்கைக்கு விடிவு பிறந்தேயாக வேண்டும்.
இந்த நாட்டிய நாடகத்திற்கு திருமதி.ஆரிய யாழினி காட்சி
பிரித்து நாட்டியம் அமைத்தார். திருமதி. தேவிமனோகரி
நாகேஸ்பரன் அவர்கள் அருமையாக இசையமைத்தார் திருமதி.
மனோரஞ்சினி கனகரட்ணம் அவர்கள் சிறப்பாக வயலின்இசை ー29ー

Page 18
பத்தினித் தெய்வம் அகளங்கன் வழங்கினார். இவர்கள் எமது பாடசாலை ஆசிரியர்கள் இவர்களுக்கு எனது நன்றிகள்.
திருமதி.பேபி யோசப்பின் கருணாகரன் அவர்கள் மிகச்சிறப்பாகப் பாடினார். இவர் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய இசை ஆசிரியர். இவருக்குத் துணையாக செல்வி. புவியாழினியும் பாடலிசைத்தார். மிருதங்க வித்துவான் திரு. க. கனகேஸ்வரன் அவர்கள் நல்ல மிருதங்க இசை வழங்கினார். எமது பாடசாலை மாணவர்கள் அற்புதமாக ஆடினர். இவர்கள் யாவருக்கும் எமது நன்றிகள்.
*பத்தினித் தெய்வம்” எனும் இந்நாட்டிய நாடகம் 66buj,LDIT6j L., Dt. L ë 5606Të 5Libg LDIT85T600 LDL"L'u போட்டியில் முதலிடம் பெற்றது. ஐந்து தடவைகள் மேடை ஏறிய பின் இப்பொழுது நூலாகவும் வெளிவருகின்றது.
இதைத் தயாரித்து ஒத்திகை பார்த்த போது இரண்டு மணித்தியாலங்களைக் கடந்து அற்புதமாக அமைந்திருந்தது. போட்டி விதிப்படி ஒரு மணித்தியால அளவிற்குள் சுருக்கி எடுக்க பெரும்பாடு படவேண்டியதாயிற்று. வேகத்தாலும் சில நுட்பங்களாலும் சுருக்கப்பட்டது. பாத்திரங்களும் விதிமுறைகளுக்கேற்பக் குறைக்கப்பட்டன.
ஒத் திகையில் உடனிருந்து ஒத் துழைத்த திருமதி.வசந்தகலா தர்மரட்ணம் ஆசிரியை (தமிழ் மன்ற பெறுப்பாசிரியர்) ஆலோசனை வழங்கிய திரு.கந்தையா பூரீகணேசன் அவர்கள் திரு.ஐ.கதிர்காமசேகரன் ஆசிரியர்
ஆகியோருக்கும் நன்றிகள்.
3O

பத்தினித் தெய்வம் அகளங்கன்
நாட்டிய நாடகப் புத்தகங்கள் வெளிவருவது மிகமிகக் குறைவு. மறைந்த இயலிசை வாரிதி வீரமணி ஐயர் அவர்களின் நாட்டிய நாடக நூல் ஒன்றே கடந்த இருபதாண்டுகாலத்தில் வெளிவந்த நூல் என்றே நினைக்கிறேன். அவர் கவிதை இசை நாட்டியம் என மூன்று துறைகளிலும் வித்தகர். அவருக்கு அது சாத்தியமாயிற்று.
நாட்டிய நாடகத் தேவையை அறிந்து வெளியிடப்படும் இந்நூலை ஆதாரமாகக் கொண்டு நாட்டிய ஆசிரியர்கள் தங்கள் கற்பனை கலந்து மேடைக்கேற்ப சிறப்பாகத் தயாரித்துக் கொள்ளலாம்.
இப்போட்டியை நடாத்தியதோடு வாழ்த்துரைகளையும் வழங்கிய வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி.என்.பூரீதேவி அவர்கள், இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கிய வவுனியா அரச அதிபர் திரு.சி.சண்முகம் அவர்கள், வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.வி.ஆர்.ஏ ஒஸ்வேல்ட் அவர்கள், வவுனியா தெற்கு வலய அழகியல் உதவிக் கல்விப்பணிப்பாளர் செல்வி. க. கந்தையா அவர்கள் யாவருக்கும் என் நன்றிகள்.
எமக்கு சகலவகையிலும் ஒத்துழைப்பு வழங்கி பரிசில்களையும், பாராட்டுக்களையும் வழங்கி வாழ்த்துரையும் தந்த எமது பாடசாலை அதிபர் என் மதிப்புக்குரிய திரு.சி.உலகநாதன் அவர்களுக்கும், என் நன்றிகள்.
- 3 -

Page 19
பத்தினித் தெய்வம் அகளங்கன் எனது பல நூல்களை வெளியிட்ட நண்பர் ஓ.கே.குணநாதன் இந்நூல்வெளியீட்டிற்கும் ஆலோசனை வழங்கினார்.அவருக்கும், இந்நாட்டிய நாடகம் பற்றிய தனது எண்ணத்தையும் சேர்த்து அணிந்துரையும் வெளியீட்டுரையும் வழங்கி, வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பதினெட்டாவது (18) நூலாக வெளியிடும் என் அன்புக்கும் மதிப்பிற்கும் நட்பிற்கும் உரிய கலாநிதி.கந்தையா யூரீகணேசன் அவர்களுக்கு என் நன்றிகள்.
கற்பின் கனலி என்ற நாட்டிய நாடகம் 2007 தமிழ்த்தினப் போட்டிக்கு கங்குலும் பகல்பட வந்தான் என்ற தலைப்பில் எழுதப்பட்டது.
இது வலய, மாவட்ட, மாகாண மட்டப்போட்டிகளில் முதலிடம் பெற்று, தேசியமட்டப் போட்டியிலும் முதலிடம் பெற்றது. வயலின் இசையை ஆரம்பப் போட்டிகளில் கலாபூஷணம் திருமதி. விமலலோஜினி கனகேஸ்வரன் வழங்கினார். அவருக்கும் என் நன்றிகள். ஏனையோர் “பத்தினித் தெய்வம்” குழுவினரே.
பத்தினித்தெய்வம் நாட்டிய நாடகம் அச்சிடும் வேளையில், “கற்பின் கனலி” யையும் சேர்த்துக்கொள்ள விரும் பினேன். அதனால் இரண்டையும் சேர்த்து நூலாக்கியுள்ளேன்.
வழமைபோல இந்நூல் வெளியீட்டிலும் எனக்கு உறுதுணையாக இருந்து என்னை ஊக்குவித்த என் தம்பி - 32

பத்தினித் தெய்வம் அகளங்கன்
க.குமாரகுலசிங்கம் அவர்களுக்கும், இந்நாட்டிய நாடக
எழுத்தாக்கத்திற்கு சகலவகையிலும் உற்சாகந்தந்த என் இல்லாளின் இனிய அன்புக்கும் நன்றிகள்.
உங்கள் ஆதரவில் இந்நூலும் என் பணியும் சிறக்கும்.
நன்றி.
இங்ங்ணம் உங்கள் அன்பு 90. திருநாவற்குளம், வவுனியா.
10.06.2008
அகளங்கன்
-33 -

Page 20
பத்தினித் தெய்வம்
(நாட்டிய நாடகம்)
கதை : சிலப்பதிகாரம் நேரம் : 1 மணித்தியாலம்
நாட்டியநாடக எழுத்துருவாக்கம் அகளங்கண்
ー34ー

பத்தினித் தெய்வம் (நாட்டிய நாடகம்) காட்சி 1 காப்பு இராகம் : நாட்டை விருத்தம்
வேழ முகமும் விளங்கு செந்தூரமும் பேழை வயிறும் பெருங்கோடும் - ஊழகல நாளும் அடியார் நயந்துகை கூப்புகின்ற தாளும் தருமென்றும் காப்பு.
தமிழ் இராகம் :- நாட்டை தாளம் :- ஆதி கல்தோன்றி மண்தோன்றா முன்தோன்று தமிழே கனியமுதே! கவிமுகிலே! கண்ணே! என்உயிரே! சொல்தோன்றி சுவைதோன்று முன்தோன்றும் உணர்வே! சொலஇனிதே சுகம்பெரிதே சுந்தரச்செந் தமிழே
ஐந்து பெரும் காப்பியமாம் அணி கலன்கள் பூண்டு அழ கொழுக எழுந்தருளும் அற்புதப் பே ரழகே!
காதிலனி குண்டலமும் கைவளையா பதியும் தீதில்மணி மேகலைகொள் சின்னஇடை யோடும்

Page 21
பத்தினித் தெய்வம் அகளங்கன்
மார்பிலொளி வீசுமணி யானசிந்தா மணியும் காலிலனி யாகுசிலம் பாகும் அணியோடும்
காட்சி தரும் தேவதையே
கன்னித் தமிழ்த் தாயே! - உன்
மாட்சிமையை எண்ணி மனம்
மகிழ்கின்றோம் நாமே. கதை கூறுபவர்
கண்ணகி பிறப்பு
இராகம் :- ப்ருந்தாவனி தாளம் :- ஆதி சோழ வளநாடு சோறுடைத்து - என்றும் சுந்தரத் தமிழ்மொழியாம் சொத்துடைத்து நாளும் பெருகும் இன்ப நலமுடைத்து - இந்த நானிலத்தில் அழியாப் புகழுடைத்து.
காவிரிப்பூம் பட்டினத்துப் பூம்புகாரின் கனவானாம் தனவானாம் மாநாய்க்கன் தேவி மணிவயிறு வாய்த்திடவே தெய்வமொன்று கண்ணகியாய்த் தோன்றியதே.
(தாலாட்டு :- கண்ணகியின் தாய் தந்தையர்) இராகம் :- நீலாம்பரி தாளம் :- ஆதி ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ கண்ணே கண்ணகியே கற்பகமே கண்ணுறங்கு பொன்னே! புதுமலரே! பூச்சரமே கண்ணுறங்கு! எங்கள் குலம்விளங்க இங்குவந்த தேவதையே! திங்கள் குளிர்நிலவே! தென்றலே! கண்ணுறங்கு!
-36

பத்தினித் தெய்வம் அகளங்கன்
காட்சி :-02 கண்ணகி வளர்ந்து தன் தோழியரோடு சந்தோசமாக ஆடிப்பாடி பந்தடித்து விளையாடுதல் இராகம் :-மோகனம் தாளம்:-ஆதி
தஸ்ாதஸ்ா, தஸ்ா, தஸ்ா, தரீஸ்தபக கபதஸ்ா, ஸ்க்ரிக்ா, த்ரீஸ்ரீ, த்ரீஸ்தபக கபதஸ்ா, கல்வியோ டொழுக்கமும் கலந்து சிறக்க கவலையில் லாமல்தன் தோழிய ரோடு
பல்வித மாகவும் கூடியே ஆடி பருவ வயதினை அடைந்தாள் கண்ணகி
கோவலன் பிறப்பும் வருகையும் இராகம் :- மத்தியமாவதி தாளம்:- ஆதி
மாசாத்து வானெனும் மாபெரும் வணிகன். மகனாய்க் கோவலன் வந்து பிறந்தான். தேசத்து ளார்புகழ் தீந்தமிழ்க் கலைகள் தினமும் பயின்றவன் சிறந்து வளர்ந்தான்
ஜதி தாம்த தகஜொனு தீம்த தகஜொணு தோம்த தகஜொனு நாம்த தகஜொணு தாம்த ஜொணுதக தீம்த கிடதக தாம்தகிடதக தீம்தகிடதக தோம்தகிடதக நாம்தகிடதக
தகதாம் ஜொணுதகதாம் திமிதகதாம் தகதாம் ஜொனுதகதாம் திமிதகதாம்
தகதாம் தகதாம் தகதாம் தகதாம்
தகதாம் தகதாம் தக்கிடதக தரிகிடதொம்
- 37

Page 22
பத்தினித் தெய்வம் அகளங்கள் காட்சி :- 03 கோவலன் கண்ணகி திருமணம் (தோழிகள் மாலைகட்டி, கும்பம் வைத்து, தோரணம் கட்டி, விளக்கேற்றி, கண்ணகியை மணப்பெண்ணாக அலங்காரஞ் செய்தல்)
இராகம் :- மலையமாருதம். தாளம் :- ஆதி. மாசாத்து வானும் மாநாய்க்கன் தானும் நேசமாய்த் திருமணம் பேசி மகிழ்ந்தார்.
கோவலன் கண்ணகி திருமணம் மிகுந்த கோலா கலமாய் நடந்து முடிந்தது.
மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்தனர் யாவரும் மகிழ்ந்தார்.
எழுநிலை மாடத்து இடைநிலத் தவரை இருத்தினர் பெற்றோர் இணைந்தனர் அவரே.
இராசம் :- மாண்டு தாளம்:- ஆதி
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ாஸ்ா ஸ்ரிஸ்நிதாபத // நிஸ்ாநித பதபமாபதபமகா// தததததாதநீத பதபமகாமதபரி // கமத நீஸ்நித கமதநி ஸ்நிதப மகரிஸ I
கோவலனும் கண்ணகியும் ஆடிப்பாடி மகிழ்தல்
பாம்புகள் இரண்டு பிணைவது போல பாவையும் அவனும் இணைந்தனர் அன்பால் இன்றோ டுலகம் முடிந்து போனாலும் இருக்கும் பொழுதே நிஜமென இணைந்தார்.
- 38

பத்தினித் தெய்வம் அகளங்கன் கோவலன் புகழ்ச்சி இராகம் :-மாண்டு தாளம் :- ஆதி மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே தேனே! அரும்பெறல்ப் பாவாய் ஆருயிர் மருந்தே! பெருங்குடி வணிகன் பெருமட மயிலே! மலையிடைப் பிறவா மணியே என்கோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? யாழிடைப் பிறவா இசையே என்கோ? ஏழிசைத் தமிழே எழிலே என்கோ?
காட்சி 04 கதைகூறுபவர் :- மாதவி வருகை இராகம் :- வசந்தா தாளம் :- ஆதி
இந்திர சபையிலே நிகழ்ந்ததோர் நிகழவிலே சுந்தரி ஊர்வசி பரதம் பிழைத்தாள். அகத்தியர் சாபத்தால் அவனியில் பிறந்தாள், அழகியாம் ஊர்வசி மாதவி ஆனாள்.
மாதவி மரபில் கணிகையர் குலத்தில் மாநகர் பூம்புகார் எனும்பதி தன்னில் சித்ரா பதியெனும் கணிகையின் வயிற்றில் சிறந்ததோர் முத்தென மாதவி பிறந்தாள்.
மாதவி பரதம் பயிலத் தொடங்குதல் (காவடிச் சிந்து மெட்டு.) பருவம் ஐந்து தொடங்கிய போது பரதம் பயிலத் தொடங்கினாள் மாது. தகிட, தகிட, தகிட, தகிட, தகதிமி.
-39

Page 23
பத்தினித் தெய்வம் அகளங்கன் தகிட, தகிட, தகிட, தகிட, தகதிமி. தெய், ஹத், தெய், ஹி,l தெய், ஹத், தெய், ஹி./ தெய், ஹத், தெய், ஹி தெய், ஹத்ப் தெய், ஹி, தெய், ஹத், தெய், ஹி, தெய், ஹத்,தெய்,ஹி,//
தா, தெய், தெய், த, தித், தெய், தெய், த, தா, தெய், தெய், த, தித், தெய், தெய், தகதிமி த,க,த,திங்,கிணதொம், த.க,த,திங்,கிண,தொம், த.க,த,திங்,கிண,தொம்,
மாதவி வளர்ந்து பரதமாடுதல் தில்லானா. இராகம் :- பரஸ் தாளம் :- ஆதி
பல்லவி தனம் தனத்த திரனா நாத்ரு தானி தொம்த தீரனாதிரு
அனுபல்லவி தனம்த னத்ததீம் திரனதீம் ததிம் தீம் தீரன திரனா திரனா ததீம் தீம்ததிம் உதனதீம்ததிம் தித்லாம் கிடதக ஜொனுதக ஜொனுதக ஜொனு தக ஜொனு தக ஜொனுதக
- 40

பத்தினித் தெய்வம் அகளங்கன் இராகம்:-சாரங்கா தாளம்:-ஆதி இணையிலா அழகும் ஈடிலாத் திறமும் இணையவே மாதவி எழிலாய் ஜொலித்தாள். பன்னிரண் டாண்டினுள் பயின்று முடித்து பார்புகழ் சோழன் சபையினை அடைந்தாள்.
காட்சி 05 சோழனின் சபையில் மாதவியின் நடன அரங்கேற்றம் இராகம்:-யமன் கல்யாணி தாளம்:-ஆதி
சோழன் சபையிலே அரங்கேறி ஆடினாள் சுந்தர நெடும்பசுந் தோகை மயிலாய். வாழ்விலே காணா அதிசயம் என்றே வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினர் யாவரும்.
மாதவி தலைக்கோலி என்ற பட்டமும் பச்சை மாலையும் பெறுதல் இராகம்:-பைரவி தாளம்:-திஸ்ரநடை தலைக்கோலி என்னும் பட்டமும் பெற்றாள் தகைமைசேர் பச்சை மாலையும் பெற்றாள். ஆயிரத்தெட்டு களஞ்சு பொன் பெற்றாள் ஆரிலும் இவள்முதல் என்றே புகழ்ந்தார்.
பச்சை மாலையை, விற்பதற்கு மாதவியின் தாய் (சித்ராபதி) வசந்தமாலையிடம் (கூனி) கொடுத்து விடுதல்
இராகம்:-கேதாரகெளளை விருத்தம் கணிகையர் குலத்தின் வழக்கென மாலையை காளையர் திரிதரு வீதியில் விற்றிட கூனியாம் வசந்த மாலைகைக் கொடுத்து கூவியே விலைக்கு விற்றிடப் பணித்தாள்.
- 41 -

Page 24
பத்தினித் தெய்வம் அகளங்கன் வசந்தமாலை, மாலையைக் கையில் கொண்டு திரிந்து விற்றல் இராகம்:-காபி தாளம்:-ஆதி வசந்தமாலை ஆயிரத் தெட்டு களஞ்சுபொன் கொடுத்து ஆர்வாங் கிடினும் மாதவி அவர்க்கே.
வீதியில் வந்த கோவலன் பொன் கொடுத்து மாலையை வாங்குதல் இன்றே தருவேன் என்றே கூறி இன்முகத் தோடு வந்தான் கோவலன். ஆயிரத் தெட்டு களஞ்சுபொன் கொடுத்து போயினான் கோவலன் மாதவி மனைக்கு. விடுதல் அறியா விருப்பினன் ஆகி வீழ்ந்து கிடந்தனன் மாதவி மனையில்.
காட்சி 06
இராகம்:-கெளளை தாளம்:-ஆதி
மாதவியும் கோவலனும் மகிழ்ச்சியாக ஆடிப்பாடுதல் ஸஸகா கமபம பாபாபா;/பாபநீ, நிஸ்க்ரி ஸ்ாஸ்க்ா,// ஸ்ஸ்கா கமபம க்ாரிஸ்ாl ஸ்ாநிபாம காமரிஸ 6m)85LD 85LDLu LDp5 Lug56ü(T// பூத்துக் குலுங்கும் புதுமலரே வா - இன்பம் காத்திருக்குது என்னை எண்ணி ஏற்றுக் கொள்ள வா! வா! காற்று வீசுமி. தென்றலிலே சேர்ந்து கூடி நாம் மகிழ்ந்து காமன் ரதி போல நாம் இன்பமாக வாழ்ந்திடுவோம்.
- 42

பத்தினித் தெய்வம் அகளங்கன்
காட்சி 07 கண்ணகி, கோவலன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள் இராகம்:-வசந்தபைரவி தாளம்:-ஆதி
வருவார் வருவார் எனவழி பார்த்து வார்குழல் சோர்ந்திட கண்ணகி இருந்தாள். மாதவி மனையில் கோவலன் இருப்பதை கண்ணகி அறிந்து கவலையோ டிருந்தாள். (கண்ணகி உணவு உண்ணாது,நித்திரை கொள்ளாது கவலையோடு இருத்தல் - காட்சி)
வசந்த மாலை, கண்ணகியிடம் சென்று கோவலன் கூறிய தாகக் கூறி, பொன் பொருள் முதலியவற்றை அபகரித்துச் செல்லுதல் இராகம்:-வசந்தபைரவி தாளம்:- ஆதி கண்ணகி வீட்டுச் செல்வங்கள் யாவும் கரைந்தன கோவலன் செய்கையி னாலே
குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைந்தது. குங்குமம் மங்கல அணிகளே மிஞ்சின.
வருவார் வருவார் எனவழி பார்த்து வார்குழல் சோர்ந்திட கண்ணகி இருந்தாள்.
கதை கூறுபவர் கோவலன் தாய்தந்தை கோபமாய் வந்தனர். கண்ணகி அவர்களைச் சாந்தப் படுத்தினாள். கணவன் மகிழ்ச்சியே தனதெனத் தனியாய் கணவன் வருகைக்காய் காத்திருந் தாளே.
- 43

Page 25
பத்தினித் தெய்வம் அகளங்கன் காட்சி:-08 இந்திர விழாவில் மாதவி நாட்டியம் ஆடுதல் கதை கூறுபவர் இராகம்:- வசந்தா தாளம்:- ஆதி இந்திர விழாவெனும் இணையிலா விழாவினைச் சுந்தர விழாவாய்ச் சோழன் எடுத்தனன். மாதவி நாட்டியம் மாண்புற ஆடினாள், மாதவி நாட்டியம் மாண்புற ஆடினாள்.
மாதவியின் 11வகை நடனம் 1. கொடுகொட்டி, முப்புரம் எரித்தது. - சிவபெருமான். 2. பாண்டரங்கம், முப்புரம் எரித்தது. - சிவபெருமானி.
அல்லியத் தொகுதி, யானையின் கொம்பை முறித்தது. - கிருஷ்ணன். மல்லாடல்,மல்லர்களை அழித்தது. - கிருஷ்ணன். துடி, சூரனை வதைத்தது. - முருகன். குடை, ஆரனை வதைத்தது. - முருகன். குடம்,வாணாசுர வதம். - கிருஷ்ணன். பேடாடல், அலியாக ஆடியது. - மன்மதன். . மரக்கால்,அசுரர்களை அழித்தது. - துர்க்கை. 10. கொல்லிப்பாவை,அசுரர்களை அழகால் மயக்கியது.
- இலக்குமி. 11. கடையம், விவசாயப் பெண்ணாக ஆடியது
- இந்திராணி.
இராகம்:-ஹம்சத்வனி தாளம்:-ஆதி
முப்புரம் எரித்தது. தகதகிட
தகதகிட தகதகிட தத்தாம்.
கொடு கொட்டி, பாண்ட ரங்கம்.
தகதகிட தகதகிட தகதகிட தத்தாம்.
- էկ -

பத்தினித் தெய்வம் அகளங்கன்
முப்புரம் எரித்தது. கொடு கொட்டி பாண்டுரங்கம். தகதகிட தகதகிட தகதகிட தத்தாம். யானையின்கொம்பைமுறித்தது அல்லியத் தொகுதி. தத்தரிகிட தகதரிகிட தத்தரிகிட தத்தாம். மல்லர்களை அழித்தது மல்லாடல் மல்லாடல். ஆரனை வதைத்தது, துடியாடல், துடியாடல். குடை, குடம், பேடாடல், மரக்கால் கொல்லிப் பாவை, கடையக் கூத்தென. கோதை மாதவி ஆடினாள் ஆடினாள். கபநீப கபநீப கபநீஸ் ரீ, க்க்ரிஸ் ரிஸ்ரிஸ்நீ பகபநி ஸ்ா,
காட்சி 09 கோவலன் ஊடலோடு இருத்தல் மாதவி ஊடலைப்
போக்கிச் சமாதானம் செய்தல் இராகம்:-கானடா தாளம் :- ஆதி ஊடற் கோலமோ டிருந்த கோவலனின் ஊடலை நீக்கிட மாதவி நினைத்தாள். ஆடற் கோலத்தை அகற்றிய மாதவி அழகாய்த் தன்னை அலங்காரஞ் செய்தாள்.
வாசநல் நீரினால் கூந்தலைக் கழுவி வகைவகை யாய்முடி அலங்காரஞ் செய்தாள். காதணி கழுத்தணி கையணி காலணி மாதவி பலவகை அணிகளை அணிந்தாள்.
கோவலன் மகிழ்ந்தான். குதூகலம் கொண்டான்.
கோபம் ஆறினான் கோதையும் மகிழ்ந்தாள்.
கடல்விளை யாட்டுக் காணல் விரும்பிக்
கணவனை அழைத்து கடற்கரை சென்றாள்.
- 45

Page 26
பத்தினித் தெய்வம் அகளங்கன் மாதவி முடுபல்லக்கிலும்,கோவலன் கோவேறு கழுதையிலும் ஏறி கடற்கரைக்குச் செல்கின்றனர்
காட்சி 10 இராகம்:-மத்தியமாவதி தாளம்:-ஆதி யாழிசை வல்ல கோவலன் அவளை மகிழ்ச்சிப் படுத்த யாழினை மீட்டினான். கடற்கரைக் காதற் காட்சிகள் தன்னைக் கானல் வரியாய்க் கோவலன் இசைத்தான். இராகம்:-மாயாமாளவகெளளை தாளம்:-ஆதி கோவலன்
திங்கள் மாலை வெண் குடையான்
சென்னி செங்கோல் அது ஒச்சி கங்கை தன்னைப் புணர்ந் தாலும்
புலவாய் வாழி காவேரி கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவா தொழிதல் கயற் கண்ணாய் மங்கை மாதர் பெருங்கற் பென்றே அறிந்தேன் வாழி காவேரி!
கோவலனின் பாடலிலே வேறோர் குறிப்புக் கண்டு மாதவி கோபப்படல் மன்னும் மாலை வெண் குடையான்
வளையாச் செங்கோல் அது ஒச்சி கன்னி தன்னைப் புணர்ந் தாலும்
புலவாய் வாழி காவேரி! கன்னி தன்னைப் புணர்ந் தாலும்
புலவா தொழிதல் கயற் கண்ணாய் மன்னும் மாதர் பெருங்கற் பென்று
அறிந்தேன் வாழி காவேரி!
- 46

பத்தினித் தெய்வம் அகளங்கன் கோவலனின் பாடலிலே வேறோர் குறிப்புக் கண்டு மாதவி கோபப்படுதல் இராகம் :-சண்முகப்பிரியா தாளம்:-ஆதி மாதவி. கோவலன்தன் பாடலிலே வேறோர் குறிப்புக் கொண்டுள்ளான் எனநினைத்தாள் மாதவியாள். கோபத்தால் உடனடியாய் யாழை வாங்கிக் குறிப்பொன்று கொண்டாள்போல் பாடி னாளே.
இராகம்:-மாயாமாளவகெளளை தாளம்:-ஆதி
மருங்கு வண்டு சிறந் தார்ப்ப
மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்க யற்கண் விழித் தொல்கி
நடந்தாய் வாழி காவேரி கருங்க யற்கண் விழித் தொல்கி
நடந்த எல்லாம் நின் கணவன் திருந்து செங்கோல் வளை யாமை
அறிந்தேன் வாழி காவேரி
மாதவியின் பாடலில் வேறோர் குறிப்புக் கண்டு கோவலன் கோபப்படல் பூவர் சோலை மயில் ஆல
புரிந்து குயில்கள் இசை பாட காமர் மாலை அரு கசைய
நடந்தாய் வாழி காவேரி காமர் மாலை அரு கசைய
நடந்த எல்லாம் நின் கணவன் நாம வேலின் திறம் கண்டே
அறிந்தேன் வாழி காவேரி
ー47ー

Page 27
பத்தினித் தெய்வம் அகளங்கன் மாதவியின் பாடலில் வேறோர் குறிப்புக் கண்டு கோவலன்
மாதவியைப் பிரிதல் 6Jrrasb:-elLITGOT கோவலன்.
விருத்தம்
ஆடவன் ஒருவனை உள்ளத்தில் வைத்து அவனை அடைய வழி தெரியாது தாங்கா விரக வேதனை யோடு ஏங்குவ தாக உட்பொருள் வைத்து பாடினாய் மாதவி பாவிநீ உன்னைப் பிரிந்தேன் இன்றே பிரிந்தே செல்வேன்.
மாதவி கோவலனைப் பிரிந்து வீடு சென்று கவலையோடு
இருத்தல். வசந்த மாலையைத் தூது விடுதல்
இராகம்:-சஹானா தாளம்:-ஆதி
DMT 5Gf.
சென்றவர் வருவார் என்றிருந் தேனே.
சென்றவர் வரவில்லை. தீயினில் வேகின்றேன்.
சென்றுவா தோழியே சென்றென் துணைவரைக்
கண்டென் மனநிலை கூறி அழைத்துவா.
வசந்த மாலை சென்று கோவலனிடம் மாதவியின்
மனநிலை கூறல் இராகம்:-ஸ்ாவேரி தாளம்:-ஆதி வசந்தமாலை. ஐயா கோவலரே என்னருமை மாதவி உள்ளம் உருகியே உணர்வெல் லாமிழந்து வருவீ ரெனநினைந்து வாடியே வதங்கி வருந்துகி றாள்ஐயா வாரும் அங்கே
- 48

பத்தினித் தெய்வம் அகளங்கன் இராகம்:-சிவரஞ்சனி தாளம்:-ஆதி கோவலன்.
கணிகையர் குலத்தவள் கைகாரி அவள். ஆடல் பாடலில் மட்டுமா வல்லவள். நடிப்பிலும் வல்லவள், பாதகி அவளாம். அன்றே வெறுத்தேன், என்றுநீ சொல்வாய்.
(வசந்தமாலை கவலையுடன் செல்லல்) காட்சி 11 (கோவலன் கண்ணகியின் வீடு செல்லல்) இராகம்:-ஹம்சானந்தி தாளம்:-ஆதி உள்ளம் குலைந்து உருவும் குலைந்து ஒளியும் இழந்த மேனியள் ஆகக்
கண்ணகி இருந்த கோலத்தைக் கண்டே கலங்கினான் கோவலன் கடுந்துயர் கொண்டான்.
இராகம்:-சஹானா தாளம்:-ஆதி கோவலன். கண்ணே மணியே! கண்ணகியே நீயும்
நொந்தாய் நானும் துயரினில் வீழ்ந்தேன்
தந்திரக் குணமே தன்குணம் ஆகிய சுந்தரி யோடுடன் கூடிய தாலே இந்திரச் செல்வம் எல்லாம் இழந்தேன் நொந்தேன் துயர நெருப்பினில் வெந்தேன்
சலம்புணர் கொள்கைச் சலதியோ டாடிக் குலந்தரு வான்பொருட் குன்றம் தொலைத்தேன்.
- 49

Page 28
பத்தினித் தெய்வம் அகளங்கன் கண்ணகி தேற்றுதல் இராகம்:-தன்யாசி தாளம்:-ஆதி என்னருந் தலைவனே கலங்கிட வேண்டாம் இன்னமும் என்னிடம் இருக்கிற தொருபொருள். சிலம்புள கொள்க! சிலம்புள கொள்க! சிறியேன் மகிழ்ந்தே கொடுக்கிறேன் கொள்க!
கோவலன் சிலம்பைக் கண்ணகியிடம் பெறல் இராகம்:-கதன குதூகலம் தாளம்:-ஆதி கோவலன். சிலம்பே முதலாய் வாணிபஞ் செய்வேன். இழந்த பொருளெலாம் ஈட்டிடு வேன்நான். எழுந்திடு கண்ணே இன்றே புறப்படு ஈட்டிடு வோம்பொருள் வாழ்ந்திடு வோம்நாம்.
கோவலனும் கண்ணகியும் மதுரையை நோக்கி நடந்து செல்லல்
ஸாரி மாகரிஸ் ரீமதா, காப ஸாநித கபஸ்ா, கதைகூறுபவர். இராகம்.-கதனகுதூகலம் தாளம்:-ஆதி மதுரையை நோக்கி இருவரும் நடந்தனர். வழியினில் கவுந்தி அடிகளைக் கண்டனர். இருவரும் அவரை வணங்கி மகிழ்ந்தனர். இனிதே அவருடன் மதுரையை அடைந்தனர்.
இடைக்குலப் பெண்ணாம் மாதுரி வீட்டினுள்
அடைக்கலம் இவரென கொடுத்தார் கவுந்தி.
மாதுரி மகளாம் ஐயையும் கண்ணகி
தோழியென் றிருந்தாள் துயரம் தீர்ந்தாள்.
-50

பத்தினித் தெய்வம் அகளங்கன் காட்சி 12 மதுரையின் அரச வீதியில் கோவலன் சிலம்பை விற்கக் காத்திருத்தல் பொற்கொல்லன் வருதல்
இராகம்:-பாகழனி தாளம்:-ஆதி
மதுரையின் அரச வீதியில் தனியே விதியின் இழுப்பினால் விரைந்தான் கோவலன்.
கண்ணகி அணிமணிக் காற்சிலம் பொன்றைக் கண்போல் காத்தவன் விற்றிடச் சென்றான்.
இராகம்:-தேஷ் தாளம்:-ஆதி தென்னவன் கோப்பெருந் தேவியின் சிலம்பினைக் கன்னமிட் டவனாம் கயவன்பொற் கொல்லன்
கோவலன் கையினில் இருந்தபொற் சிலம்பினை வாங்கியே பார்த்தான். வாய்பிளந் திட்டான்.
பாண்டிமா தேவியின் காற்சிலம் பென்றே காண்டிடும் அழகிய சிலம்பினைக் கண்டான்
புதியவன் இவனைக் கள்வனாய் ஆக்கிடப் புதியதோர் திட்டம் வகுத்தான் அவனே.
இராகம்:-பிலஹரி தாளம்:-ஆதி
பொற்கொல்லன்.
அரசிக்குப் பொருந்தும். அறிந்துநான் வருவேன். இருப்பாய் இங்கே. விரைந்து நான் வருவேன்.
ー51ー

Page 29
பத்தினித் தெய்வம் அகளங்கன் காட்சி 13 பாண்டியன் நெடுஞ்செழியனின் அரசசபையில் நாட்டியம் நடைபெறுகிறது கூற்று
நல்லெழில் இளமை வாய்க்கவே பெற்ற நாடக மயில்கள் நாட்டியம் ஆடினர். நடனம் இராகம்:-கல்யாணி தாளம்:-ஆதி மன்னனாம் தென்னவன் பெண்களை ரசிப்பதாய் தென்னவன் தேவியோ ஊடலில் வாடினாள். தலையிடிப் பதுவாய்ச் சாட்டினைச் சொல்லி சபையைவிட் டெழுந்துதன் இருப்பிடம் சேர்ந்தாள்
மன்னவன் தொடர்ந்தான், ஊடலைத் தீர்க்கும் மார்க்கம் தேடியே விரைந்து பின் சென்றான். சிலம்பைத் திருடிய கள்வனாம் கயவன் தேடிவந் தடைந்தான் மன்னனைப் பணிந்தான்.
இராகம்:-பிலஹரி தாளம்:-ஆதி பொற்கொல்லன். பணிந்தேன் அரசே! பணிந்தேன் அரசே! சிலம்பைத் திருடிய கள்வனைப் பார்த்தேன். கையும் களவுமாய் என்னிடம் சிக்கினான். காலடி பணிந்தேன், காவலில் உள்ளான்.
&grasb:-ellmoort தாளம்:-ஆதி அரசன். காவலரே வந்திடுவீர்! கள்வனைக் கண்டிடுவீர்! கள்வன் கையிலெம் சிலம்பு இருந்தால் கொன்றுஅச் சிலம்பைக் கொணர்ந்து தந்திடுவீர் இக்கணமே சென்றிடுவீர் விரைவாய் வந்திடுவீர்
-52 -

பத்தினித் தெய்வம் அகளங்கன் பொற்கொல்லனோடு ஊர்காப்பாளரும் செல்லுதல் இராகம்:-கதனகுதூகலம் தாளம்:-ஆதி ஊர்காப் பாளரும் பொற்கொல்ல னோடு உடன்வந்து கண்டார் கோவலன் தன்னை.
பாண்டிமா தேவியின் காற்சிலம் பென்றே வேண்டிய ஆதா ரங்கள் மொழிந்திட
ஊர்காப் பாளரில் இளையோன் ஒருவன் உருவிய வாளால் உருட்டினான் தலையை
(கோவலன் துவண்டு விழுந்து துடித்து இறத்தல்) காட்சி 14 கோவலன் கள்வன் என்ற பழியோடு கொலை செய்யப் பட்டான் என்ற செய்தியை கண்ணகி கேட்டல் இராகம்:-ஹம்ஸானந்தி தாளம்:-ஆதி காவலன் தேவியின் காற்சிலம் பதனைக் கோவலன் கவர்ந்தான் என்பத னாலே
பாண்டியன் ஆணையின் படியே கோவலன் பாதக ராலே படுகொலை யானான்,
என்றஅச் செய்தியைக் கேட்டாள் கண்ணகி என்செய் வேனென ஏங்கினாள் நடுங்கினாள்.
இராகம்-ஹம்ஸானந்தி தாளம்:-ஆதி
ஐயகோ! . ஐயையோ! என் ஆருயிரே! என் நாதனே! நாயகனே! என் ஆருயிரே!
-53 -

Page 30
பத்தினித் தெய்வம் அகளங்கன் கண்ணகியின் சோகநிலை இராகம்:-ஹம்ஸானந்தி தாளம்:-ஆதி கூரம்பு பட்டதோர் தோகை மயிலெனவே கூந்தல் புரளக் குற்றுயிராய்த் தான் வீழ்ந்தாள். எழுந்தாள் பதைத்தாள், ஏங்கித் துயரத்தால் அழுதாள் தொழுதாள். அரற்றினாள். அல்லலுற்றாள்.
இராகம்:-அடானா தாளம்:-ஆதி கண்ணகி கோபத்துடன் சூரியனைப் பார்த்துக் கேட்டல் தத்தரிகிட தகதரிகிட தத்தரிகிட தத்தாம். தத்தரிகிட தகதரிகிட தத்தரிகிட தத்தாம். மானமும் ரோசமும் கோபமும் ப்ொங்க வானத்தைப் பார்த்து வலிமையாய்க் கூச்சலிட்டாள்.
ஆரியனே நீயறியா உண்மையிலைச் சொல்வாய் என் கணவன் கள்வனா? என்கணவன் கள்வனா?
ஆரியன் கூற்று கள்வன் அல்லன். கள்வன் அல்லன். பழிசொன்ன இவ்வூர், பாழ் நெருப்பில் எரியும்.
காட்சி 15 கண்ணகி கணவனின் உடலை நோக்கி விரைவாக நடத்தல் இராகம்-வசந்தபைரவி தாளம்:-ஆதி
நீர்வழியும் கண்ணோடு கண்ணகி நடந்தாள் நிரைநிரையாய் வந்தவர்கள் பழிமொழி பகர்ந்தார்.
வெட்டுண்ட தலையோடு வீழ்ந்திட்ட சடலம்
வெறுந்தரையில் கிடப்பதனை விழிகொண்டு பார்த்தாள்.
- 54 -

பத்தினித் தெய்வம் அகளங்கன்
கணவனின் உடல்கண்டு கலங்கியே அழுதாள் கண்பொத்தி மண்மீது காலிடறி வீழ்ந்தாள்.
எழுந்தாள். இருந்தாள். என்செய்வேன் என்றே அழுதாள். தொழுதாள். அரற்றினாள் அன்பரே!
என்னைத் தவிக்கவிட்டு எங்குநீர் சென்றிரோ, மண்ணைத் தழுவி மடிந்திரே!உம்முடலம்
பொன்போல என்று பூரித் திருந்தேனே மண்மேலே புழுதிபட்டு மங்கியதே அழகெல்லாம்.
6JTsb:-el-Irgom தாளம்:-ஆதி தத்தோம்த தத்தோம்த தத்தோம்த தத்தாம் தத்தோம்த தத்தோம்த தத்தோம்த தத்தாம்
கள்வனென்று கூறிக் கழுத்தறுத்த கயவர்களைக் .
கொல்வேன் எரியூட்டி இந்நகரை அழிப்பேன்.
என்றே புறப்பட்டாள் எரிநெருப்புக் காற்றோடு ஒன்றாய் எழுந்ததென உருக்கொண்டு சென்றாள்.
காட்சி 16 கண்ணகி பாண்டிய மன்னனின் அரண்மனை வாசலை அடைதல் இராகம்:-அடானா தாளம்:-ஆதி
கண்ணகி
வாயில்காப் போனே! வாயில்காப் போனே!
- S5 -

Page 31
பத்தினித் தெய்வம் அகளங்கன்
பொறியற்ற மன்னனாய் நெறியற்ற கோலனாய் அறிவற்ற முறையிலே அரசாட்சி செய்திடும் பாண்டியன் அரண்மனை வாசலைக் காக்கின்ற
வாயில்காப் போனே! வாயில்காப் போனே! இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையளாய்
கணவனை இழந்தவள் காணவந் தாளென்று மன்னனை நாடியென் வருகைசொல் வாயே!
இராகம்:-ஹம்சத்வனி தாளம்:-ஆதி வாயிற் காவலன் (காவலன் உள்ளே சென்று)
அரசன்.
வாழ்களம் மன்னா! வாழ்கனம் மன்னா! பழியின்றிப் புகழொடு வாழ்களம் மன்னா! பத்திர காளியாய் கையில் சிலம்புடன் பாவை ஒருத்திநம் வாசலில் நிற்கிறாளர். பொற்றொழிற் சிலம்பொன்று ஏந்திய கையளாய் கொற்றவை போன்றவள் கொழுநனை இழந்தாள்.
அழைத்துவா அவளை ஆரென்று பார்ப்போம். இழைத்ததார் கொடுமை என்னென்று கேட்போம்.
ー56ー

பத்தினித் தெய்வம் அகளங்கன் காட்சி 17 கண்ணகி பாண்டியன் சபைக்குச் செல்லல் இராகம்:-அடானா தாளம்:-ஆதி தக்கன் யாகம் அழித்திடச் சென்ற பத்திர காளியாய்ப் பயங்கரம் விளங்க,
சண்டன் முண்டன் அசுரரை அழித்த சாமுண்டி போலச் சகலரும் நடுங்க,
கண்ணகி வந்தாள் பாண்டியன் சபைக்கு கண்டவர் யாவரும் கலங்கி ஒடுங்க.
தகதகிட தகதகிட தகதகிட தத்தாம் தகதகிட தகதகிட தகதகிட தத்தாம் தகதகிட தகதகிட தகதகிட தத்தாம்
இராகம்:-சஹானா தாளம்:- ஆதி மன்னன்: பெண்ணே யார் நீ!
நீயார் பெண்ணே!
6JTasb:-ellment தாளம்:-கண்டச் சாபு கண்ணகி.
யார் என்றா கேட்கிறாய்
சொல்வேன் கேளாய்,
புறாவிற்காய் தன் உடலை அரிந்தானே சோழன் அறிந்தாயா அவன் கதையை 96). Tu T 5560)u.
ー57ー

Page 32
பத்தினித் தெய்வம் அகளங்கன்
பசுவிற்காய் தன்மகனைப் பலியிட்டான் சோழன் படித்தாயா கேட்டாயா பாண்டியனே பாவி!
தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தத்தாம். தகதரிகிட தகதரிகிட தகதரிகிட தத்தாம். தோடீங்கு தகடீங்கு தகடிங்கு ததிங்கிணதொம்.
இராகம்:-அடானா தாளம்:-கண்டச்சாபு கண்ணகி.
நீதி நெறிதவறா ஆட்சியினால்
புகழ் நிலைத்த
சோழ நாடே என் நாடு. பூம்புகார் என் நகரம். பெருங் குடி வாணிகன் மாசாத்துவன் என் மாமன். ஊழ்வினை வசத்தால் உன்நகர் வந்து என்காற் சிலம்பினை விற்றிட முயன்று உன்னால் படுகொலைக்கு ஆளாகிப் போன கோவலன் மனைவி கண்ணகி என்பெயர்.
حب۔ 58 مس۔

பத்தினித் தெய்வம் அகளங்கன் தேரா மன்னா! செப்புவ தறிவாய்! ஆராய் வின்றிஎன் அன்பனைக் கொன்றாய். ஊரார் பழிக்கும் உன் கொடுங்கோல் ஆட்சி. பாராய் எந்தன் இக் கோலம் உன்னைப் பழிவாங் கிடவே வந்தேன்நான் கண்ணகி.
இராகம்:-அடானா தாளம்:-ஆதி மன்னன்:
கள்வனைக் கொல்லுதல் குற்றமா பெண்ணே காரணம் இல்லாமல் கொல்வோமா வீணே. கண்ணகி
தேடிங்கு தகடிங்கு தேடிங்கு தத்தாம் என்காற் சிலம்பை விற்றிட வந்த என்கண வனையா கள்வன் என்றாய். மன்னன்:
தகதகிட தகதகிட தகதகிட தத்தாம் தேவியின் சிலம்பைத் திருடிய கள்வன் உன் கணவன் என்று அறிந்திடு பெண்ணே. கண்ணகி:
ஜேக்குணாங்கு தகக்குணாங்கு ஜேக்குணாங்கு என்காற் சிலம்பின் உள்ளீடு பரல்கள் மாணிக்கக் கற்கள் ஆகும் மன்னா மன்னன்:
நல்லது பெண்ணே எங்கள் சிலம்பின் உள்ளிடு பரல்கள் முத்துக்களாகும். ஏவலனே சென்று எடுத்துநீ வருவாய் கோவலன் கையில் இருந்த சிலம்பை (ஏவலன் கொண்டுவர கண்ணகி அதை எடுத்தல்)
-59 -

Page 33
பத்தினித் தெய்வம் அகளங்கன் கண்ணகி:
மன்னா இதோபார் என்காற் சிலம்பை (கண்ணகி சிலம்பை உடைத்தல்) த்றுகுடுதத் த்றுகுடுதத் த்றுகுடுதத் த்றுகுடுதத் த்றுகுடுதத் த்றுகுடுதத்
த்றுகுடுதத் தாம்,
(மாணிக்கக் கற்கள் சிதறி மன்னன் முகத்திலும் படுதல்) இராகம்:-சஹானா தாளம்:-ஆதி மன்னன்:
மதிகெட்டு அழிந்தேன். மதிகெட்டு அழிந்தேன். பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்டு மதிகெட்டு அழிந்தேன். மதிகெட்டு அழிந்தேன்.
நானோ அரசன்; நானே கள்வன். என்முதல் பிழைத்தது கெடுகளன் ஆயுள்.
மன்னன் வீழ்ந்து உயிர் துறத்தல்
இராகம்:-சஹானா தாம்:- ஆதி அரசி கணவனை இழந்தபின் வாழ்வது வாழ்வா
காலடி தொடர்வேன் கணவனை அடைவேன்.
பாண்டிமா தேவி வீழ்ந்து உயிர் துறத்தல் (கண்ணகி அகோரமாக ஆடுதல்)
தோடிங்கு தகடிங்கு தகடிங்கு தத்தாம் தோடிங்கு தகடிங்கு தோடிங்கு தத்தாம்
-60 -

பத்தினித் தெய்வம் இராகம்:- அடானா
பார்ப்பார் அறவோர் பசு பத்தினிப் பெண்டிர் மூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டு தீத்திறத்தார் பக்கமே தீயே நீ சேர்க. தீயவர் தம்மைத் தியே நீ எரிப்பாய்.
தக தக தக தக தக தக தக தக தக தக தக தக தக தக தக தக
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
த்றுதக த்றுதக த்றுதக
த்றுதக
தொம் தொம் தொம் தொம்
தொம் தொம் தொம் தொம்
த்றுதக த்றுதக த்றுதக த்றுதக
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
அகளங்கன் தாளம்:-ஆதி
தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதக தகதக
தொம் தொம் தொம் தொம்
தொம் தொம் தொம் தொம்
த்றுதக த்றுதக
த்றுதக த்றுதக
த்றுதக த்றுதக
த்றுதக தத்தரிகிடதொம் (கண்ணகி சிலையாய் மாறுதல்)
حد 6 حسب

Page 34
பத்தினித் தெய்வம் அகளங்கன்
இராகம்:-மத்தியமாவதி தாளம்:-ஆதி பத்தினித் தெய்வமாய்ப் பாரோர் ஏத்த உத்தமி கண்ணகி உயர்ந்தாள் தெய்வமாய். கற்புடைப் பெண்டிர் கடவுளாய் ஆதல் ஏற்புடைத் தாமே நாமும் வணங்குவோம்.
இராகம்:-மத்தியமாவதி தாளம்-ஆதி
வாழ்த்து நீதி நெறியில் நிலைத்து இவ்வுலகு சோதியாய் மிளிர்ந்து சுகம்பெற்று வாழ்க! கற்புடை மாதரைப் போற்றியில் வுலகு பொற்புடன் வாழ்க பொலிவுடன் வாழ்க.
மங்களம்
நீதி நெறி ஆட்சிசெய்வோர் யாவருக்கும் மங்களம். நித்தம் இறை பக்திசெய்வோர் யாவருக்கும் மங்களம். ஆதி தமிழ்க் கற்புநெறி காப்ப வர்க்கு மங்களம். அத்தனையும் உத்தமமாய் அகிலம் வாழ மங்களம்.
மங்களம் மங்களம் மங்களம்
-62

பத்தினித் தெய்வம்
அகளங்கன்
பத்தினித் தெய்வம் (காவிய கதா நாட்டிய நாடகம்) பாத்திரம் ஏற்றோர்
வவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள்
கண்ணகி. செல்வி.
தர்சினி கோவலன்: செல்வி. மாதவி: செல்வி. பாண்டியன் நெடுஞசெழியன்:
செல்வி. பாண்டிமா தேவி. செல்வி.
பொற்கொல்லன்: வசந்த மாலை: கண்ணகியின் தோழியர்:
செல்வி.
யோகநாதன் றெபேக்கா
யோதாஸன் வைஸ்ரபி. செல்வராஜா ஜீவிதா
ஈஸ்வரன் நித்திலா. செல்வமோகன் ஜான்சி.
செல்வன். சிவசாந்தன் சிவராசா. செல்வி.திருக்கேதீஸ்வரன் சைனுகா.
சண்முகநாதன் ரேகா,
செலவி-ரவிச்சந்திரன் சயந்தினி.
மாதவி(சிறுமி):
ஐயர்:
காவலாளி: கோவலனின் தோழன்:
வீரசிங்கம் ஜதுசாலினி. செல்வி. செல்வி. குமாரகுலசிங்கம் வித்தியா
விஜியசிங்கம் ராதிகா
செல்வி. இராசரெத்தினம் நிரோஜினி
கதை கூறுபவர்;
செல்வி.
சிவஞானம் சோபிகா.
செல்வன்.விஸ்வலிங்கம் அருண்நாத்
ー63ー

Page 35
கற்பின் கனலி
(நாட்டிய நாடகம்)
கதை கம்பராமாயணம்
நேரம்
20 நிமிடம்
நாட்டிய நாடக எழுத்துருவாக்கம்
அகளங்கன்
-64

கற்பின் கனலி
(நாட்டிய நாடகம்)
(அசோக வனத்தில் தன்னால் சிறைவைக்கப்பட்டிருந்த சீதையைக் காண இராவணன் வருகின்ற சந்தர்ப்பம் கம்பராமாயணப்படி நாட்டிய நாடகமாக்கப்பட்டுள்ளது)
விருத்தம்
8T இராகம்:-நாட்டை
யானை முகத்தோனே ஞானம் அளிப்போனே பானை வயிற்றுப் பழம்பொருளே - மானமிகு சீதை கற்புநிலை சிதையாமல் சொல்லுகின்ற காதைக்கு நீஎன்றுங் காப்பு.
காட்சி 1
2 60ggöğ : இராகம்:- ஹிந்தோளம் தாளம்:- ஆதி
மாரீச மானேவி இராமனைப் பிரித்து மைத்துனன் இலக்குவனின் காவலைக் கெடுத்து தாரணி சடாமுடிகொள் சாமியென வேடம் தாங்கிவந்த இராவணன் சீதையைக் கவர்ந்தான்
புட்பக விமானமதில் சீதைதனை ஏற்றி
போர்செய்த சடாயுவை வெட்டியே வீழ்த்தி
உட்புக வெயிலறியா அசோகவனந் தன்னில்
உத்தமியாம் சீதையை சிறையிலே வைத்தான்.
- 65

Page 36
பத்தினித் தெய்வம் அகளங்கன் அசோக வனத்தில் சீதை துயருடன் இருத்தல். இராகம்:-கானடா தாளம்:- ஆதி இராமனை நினைந்தழுது உடல்நணையச் சீதை இனியென்ன நடக்குமோ எனஅஞ்சி இருந்தாள். வராமலே போவானோ வருவானோ என்றே வனிதையவள் துயர்பெருகத் தனிமையில் இருந்தாளர்.
அசோகவனச் சிறையினிலே அநாதையாய்ச் சீதை அழுதழுது உடல்நனைய பெருமூச்சு வெப்பம் சோகவன மானஅவள் ஈரத்தைப் போக்க சுற்றிவரும் அரக்கியர்கள் வருத்தத் தனியிருந்தாள்.
(அரக்கியர் சீதையைத் துன்புறுத்துதல்.பின் நித்திரை செய்தல்)
காட்சி 2 இராகம்:-சாரங்கா தாளம்:- ஆதி அரக்கியர்கள் நித்திரையில் ஆழ்ந்திருந்த நேரம் அருகுவந்தாள் திரிசடை, அன்போடு சீதை இருகரங்கள் பற்றிஅவள் இன்னலைப் போக்கும் அருமருந்தாய் நல்வார்த்தை ஆறுதல் தந்தாள்.
சீதை:- முனிவனொடு இராகவன் மிதிலைக்கு வந்த முந்தைநாள் என்கண்கள் இடந்துடித் தனவாம் இப்போதும் என்கண்கள் இடந்துடிக் கின்ற என்னதான் நிகழுமோ எனக்கதைச் சொல்வாய்.
ー66ー

பத்தினித் தெய்வம் அகளிங்கன் இராகம்:-ஸாவேரி தாளம்:-ஆதி
Af6OL
நல்லதே நடக்கும் இனி நல்லதே நடக்கும் நன்னிமித்தம் இதுவாகும் நாயகன் வருவான் நான்கண்ட கனவொன்று சொல்கிறேன் கேளாய் நற்கனவு அதன்பலன் நடைபெறும் பாராய்
அரக்கர்குலம் அழிவெய்தும் அஞ்சாதே பெண்ணே. ஆணழகன் இராமன்உனை மீட்டிடவந் திடுவான். இரக்கமிலா அரக்கர்குலம் இவ்வுலகில் இனியும். இருக்காது துயர்நீங்கி நம்பிக்கை கொள்வாய்.
காட்சி 8 அரக்கியர் விழித்தெழுந்து வருத்துதல் இராகம்:-ஆனந்த பைரவி தாளம்:-ஆதி
(அனுமான் மறைந்திருந்து சீதையைக் காணுதல்) மைதிலியைத் தேடிவந்த மாருதியும் அந்த மைநிற அரக்கியர்கள் குரலோசை கேட்டு பையவே சென்றங்கு மறைந்திருந்து பார்த்தான் பாதகிகள் மத்தியிலே பத்தினியைக் கண்டான்.
இராவணன் வரவு இராகம்:-பைரவி தாளம்:- ஆதி பத்துத் தலைகளில் பத்து முடிகளும் பத்துக் கதிரவர் என ஜொலிக்க சுற்றும் அழகிகள் சுந்தர வனிதையர் தோகை மயில்என நடை நடக்க.
- 67

Page 37
பத்தினித் தெய்வம் அகளங்கள் ஊர்வசி உடைவாள் ஏந்திட மேனகை வெற்றிலை மடித்துக் கொடுத்து வர
செருப்பினைத் தாங்கியே திலோத்தமை சென்றிட தேவ அரம்பையர் சுற்றி வர.
விளக்கினை ஏந்தியே வனிதையர் தொடர்ந்திட வீரகம் பீர நடை நடந்து - குல விளக்கெனும் சீதை துயருடன் இருந்திட்ட ஆழலை அடைந்தனன் இரா வனனே.
(இராவணன் சைகை செய்து பெண்களை அகலச்செய்தல் சீதை பயங்கொள்ளல்)
இராகம்:-மாண்டு தாளம்:-ஆதி மானினைத் தேடிவரும் புலியினைக் கண்ட மானிளம் பிணையெனச் சீதைபயங் கொண்டாள்.
காமுகன் இராவணன் சீதையினை நாடிக் கங்குலும் பகல்பட அசோகவனம் வந்தான்.
இராகம்-வசந்தா தாளம்:-ஆதி
இராவணன் பணிவாக வேண்டுதல் இராவணன். இன்று நாளை என்றென் காலம் இழுபட தின்று உன் நினைவுத் தியெனைக் கொல்ல கொன்று தீர்த்த பின் கூடுதற் கிருத்தியோ குளிரிள மதியமே கோதையே கூறாய்
- 68

பத்தினித் தெய்வம் அகளங்கன் விண்ணளந்த என்கிரத்தி விளங்காத தாலோ விணனென்று இகழ்ந்தோநீ விழிமூடு கின்றாய். கண்ணென்று கருதியே காதல்கொண் டேனே காரிகையே உன்பிரிவால் கடுநரகில் வீழ்ந்தேன்
இராகம்:-ஸகானா தாளம்:-ஆதி உலகமெலாம் எனக்கேவல் செய்கின்ற தறிவாய் உனக்கேவல் நான்செய்வேன் உண்மைஈ தறிவாய் திலகநுதல் வனிதையே தீராய்என் மோகம் தீராத காமத்தால் உன்னடி பணிந்தேன்.
(இராவணன் சீதையின் பாதங்களில் வீழ்ந்து இரத்தல்)துரும்பொன்றை எடுத்து தனக்கும் இராவணனுக்கும் இடையில் போட்டு, துரும்பைப் பார்த்துச் சொல்வது போலச் சீதை சொல்லுதல்.
இராகம்:-கேதார கெளளை தாளம்:-ஆதி துரும்பொன்றை எடுத்திட்ட சீதை அதைத் தூக்கித் துட்டனாம் இராவணன் முன்பதைப் போட்டாள். இரும்பென்ற இதயத்தான் முகம்பாராது அந்தத் துரும்பையே இராவணன் எனப்பார்த்துச் சொன்னாள்.
சீதை. 6JTsb:-el-from தாளம்:-ஆதி குலமாதர் கற்புநெறி வழுவார் என்ற குணமுனது சிந்தையிலே இலையோ பாவி! உலகமெலாம் அரசாளும் உன்னைக் கொல்ல ஒருவீரன் இராமபிரான் வருவான்நீ காண்டி.
ー69ー

Page 38
பத்தினித் தெய்வம் அகளங்கன்
இராகம்:-தன்யாஸி தாளம்:-ஆதி வஞ்சனையால் மான்ஏவி மணாளனைப் பிரித்தாய். தம்பியையும் வேறாக்கித் தனியனைக் கவர்ந்தாய். என்னிடத்தில் காட்டத்தான் உன்வீரம் வலிதோ எதிர்த்துப்பார் இராகவனை எதுவீரம் புரியும்
இராகம்:-அடானா தாளம்:-ஆதி
கொத்துக் கொத்தெனும் பத்துத் தலைகளும் பிய்த்துப் பிய்த்தெறியக் கணைகள் வரும் எத்திக் கிலுமுன்னை இராமன் பகழிகள் சுத்திச் சுத்திவரும் உயிர் அழிக்கும்.
(விருத்தம்) இராமனின் ஆற்றல் தன்னை
இன்னமும் அறியா துள்ள இராவணா சொல்வேன் கேளாய்!
இறையவன் தந்த நாட்கள் இயமனுக் காக வன்றி
இராமனுக் காக அல்ல. இராமனின் அம்புக் கெந்த
இலக்குமே தப்பா தன்றோ.
இராவணன். தாளநடை கொல்லவும் நினைத்தேன் * உன்னைத் தின்னவும் நினைத்தேன் கொல்லவும் மனமில்லை - உன்னைத் தின்னவும் மனமில்லை
ني76Y--

பத்தினித் தெய்வம் அகளங்கன்
கூற்று:- (கோபமும் காமமும் ஒருங்குடன் சேரக் கோமகன்
இராவணன் சீதையைப் பார்த்தான்)
இராகம்:- பெஹாக் தாளம்:- ஆதி என்வீரம் கேட்ட பின்னும்
இராமன்இவ் விடத்தை நாடி எப்படி வருவான் பெண்ணே இன்னும் ஏன் ஏங்குகின்றாய்.
மனிதராம் அவரைக் கொல்லல் மாண்பல்ல என்று விட்டேன். மற்றொரு செய்தி உண்டு உற்றபெண் அமுதே கேளாய்.
எனக்கு உன்னைத் தந்த அந்த இருவர்பால் நன்றி கொண்டேன் இதுவரை அவரைக் கொல்ல எனக்கொரு குரோதம் இல்லை.
அவர்களைக் கொன்றால் நீயும் ஆவிபோய் இறப்பாய் பெண்ணே நீஇறந் திட்டால் பின்னர் நானும்என் உயிரை நீப்பேன்.
ஆதலால் அவரைக் கொல்லும் ஆசையோ எனக்கு இல்லை, உன்மேல் காதலால் விட்டு வைத்தேன் கண்திறந் தென்னைப் பாராய்.
-7-

Page 39
பத்தினித் தெய்வம் அகளங்கன்
சீதை.
இராகம்:-ஹம்சானந்தி தாளம்:-ஆதி
இராமனின் கோபம் இந்த
இலங்கையோ டடங்கு மோதான் ஏழுல கினையும் கொன்றும் தீருமோ என்று எண்ணி கலங்கு கின்றேன்நான் உன்னைக்
கணக்கினில் கொள்ள வில்லை விலங்கெனக் கொடுமை செய்தாய்
வீணனே நீயா வீரன்
இராவணன்.
சீதை.
அயோத்திக்குச் சென்று அங்கே அரசனாம் பரதன் தன்னைக் குலத்தொடும் கொன்று பின்பு
மிதிலைக்குச் செல்வேன் - அங்கு உன்தந்தை முதல்வோர் தம்மை
உருத்தெரி யாமல் கொல்வேன் என்சிந்தை அறியா தென்னை
ஏளனஞ் செய்தல் வேண்டாம்.
விடநாகம் கூட நாதம்
கேட்டுத்தன் செயல் விடுக்கும் அடஉனக் கமைந்த சுற்றம்
அழிவுக்கே வழி வகுத்தார் திடமன தாகச் சொன்னேன்
தியனே தீயில் வேகிச் சடமிது எரிந்தாலும் நான்
சத்தியம் உனை நினைக்கேன்.
-72 -

பத்தினித் தெய்வம் - அகளங்கன்
இராவணன் அரக்கியர்க்குக் கட்டளை இடுதல் இராகம்:- அடானா தாளம்:-ஆதி இந்த இப் பெண்ணை இன்றே
எனக்கிசை வாக்கும் செய்கை உங்களைச் சார்ந்த தாகும்
உடனிவள் மனத்தை மாற்றும்.
அரக்கியர் சீதையை வருத்துதல் அரக்கியர். தாளநடை கொல்லுமின் கொல்லுமின் கொன்று குறைத்துத் தின்னுமின் தின்னுமின் இவளைத் தின்னுமின்.
மெய்யன்பு வைத்தனம் தலைவன்பால் இவள் இணங்காது விட்டால் கொல்லுமின் கொல்லுமின்
இக்கணம் மறுத்தால் உன்னினம் வாழா கொன்று குவிப்போம் கொன்று குவிப்போம்
அனுமான் வருகை, கையுயர்த்தி தன் மாயத்தால் அரக்கியரை மயக்கி நித்திரையாக்குதல்
இராகம்:-சாரங்கா தாளம்:-ஆதி மாருதி இராமனின் தூதன் நான் இராமனின் துாதன் நான் இராமனின் தேவியே துயரினை விடுக.
-73 -

Page 40
பத்தினித் தெய்வம் அகளங்கன்
மங்களம் இராகம்:-மத்தியமாவதி தாளம்:-ஆதி
உத்தமியாம் சீதைக்கும்
இராமனுக்கும் மங்களம் உறுதுணையாய் இருந்ததிரி சடையினுக்கும் மங்களம் வித்தகனாம் மாருதிக்கும்
வீரனுக்கும் மங்களம் விளங்குபுகழ்க் கதைநடனம்
பார்த்தவர்க்கும் மங்களம்.
象 h ● LLLLLLL LLLLL LLLLLLL
-74 -

பத்தினித் தெய்வம் அகளங்கன்
கற்பின் கனலி கலைஞர்கள் 01. கு. வித்தியா இராவணன் 02. யோ. றெபேக்காதர்சினி - சீதை 03. வி. ராதிகா - திரிசடை 04. ப. அபிசாயினி al திலோத்தமை 05. பா. நிவேக்கா ஊர்வசி 06. தே. தயந்தினி ar மேனகை 07. இ. ஜினோசா JLD60)t 08. சி. சிவசாந்தன் அனுமான் 09. செ. ஜென்சி 10. ஈ. நித்திலா - அரக்கிகள் 11. செ. ஜீவிதா 12. யோ. வைஸ்ரபி - 2 - 60j(GBj
*பத்தனித் தெய்வம் ” நாட்டிய நாடகக்
கலைஞர்களோடு வயலின், இசை எழில் இசைச் செல்வர், கலாபூஷணம் விமலலோஜினி கனகேஸ்வரன்.
-75

Page 41
பத்தினித்தெய்வம் நோட்டியநாடகம்) கதையமைப்பு,பாடல் எழுத்துருவாக்கம்: காவிய மாமணி, கவிமாமணி, கவியெழிலி , புராண படன வித் தகர் , புராண படன புகழ் தகை, சிவனருட்செல்வர், தமிழறிஞர், செஞ்சொற்சிலம்பன், வாகீச கலாநிதி தமிழ்மணி கவிஞர் அகளங்கன்.
நாட்டிய அமைப்பு தயாரிப்பு:- நிருத்தியவாணி, பரதகலாவித்தகர், நாட்டியகலாரத்னா, நாட்டிய எழில், நாட்டிய கலைமாணி திருமதிகரியயாழினி வீரசிங்கம்.
இசையமைப்பு:- பாட்டு இசையெழில், இசைக்கலைமணி, இசைக்கலாவித்தகர்திருமதி.தேவி மனோகரி நாகேஸ்பரன்.
இசையமைப்பு உதவி:- பாட்டு இசைக்கலைமணி திருமதி.பேபி யோசப்பின் கருணாகரன்.
பாட்டு:- செல்வி.புவியாழினி புஸ்பராசா (மாணவி கிழக்கு பல்கலைக்கழகம்)
மிருதங்கம்:-
இசைஎழில், இசைச்செல்வர், மிருதங்கவித்துவான்
திரு.கந்தையா கனகேஸ்வரன்.
வயலின்:-
இசைக்கலை மணி மனோரஞ்சினி கனகரட்ணம்
-76 -

தவில்:- திரு. எம். ரூபன்
நாதஸ்வரம்:- திரு. எஸ். ஜெயம்
சிம்பிள்ஸ்:- செல்வி.புவியாழினி புஸ்பராசா
ஒப்பனை- கமலாதேவி கிருஷ்ணதாஸ்
01.
O2.
03.
O5.
. நளவெண்பா - கதை O7.
O8.
காமதேனு புவனேந்திரன் செல்வி.புவியாழினி புஸ்பராசா திரு.அருந்தவநாயகம் சுயேந்திரா திரு.நாகராஜா செந்தூர்ச் செல்வன்.
அகளங்கனின் நால்கள்
“செல்” “வா” என்று ஆணையிடாய் - கவிதை சேரர் வழியில் வீரர் காவியம் - குறுங்காவியம் சமவெளி மலைகள் (அகளங்கன், சு.முரளிதரன் கவிதைகள்) வாலி - ஆய்வுநூல் (மூன்று பதிப்புகள், அகில இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு 1987) இலக்கியத் தேறல் - கட்டுரைகள்
அன்றில் பறவைகள் - நாடகங்கள் (தேசிய சாகித்திய
மண்டலப் பரிசு 1992)
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் - வரலாறு
-- 77 --

Page 42
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
8.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
இலக்கியச் சிமிழ் - கட்டுரைகள் (இரு பதிப்புக்கள்) தென்றலும் தெம்மாங்கும் - கவிதைகள் பன்னிரு திருமுறை அறிமுகம் - சமயம் மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள் - ஆய்வு இலக்கிய நாடகங்கள் - நாடகங்கள் (வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய நூற்பரிசு 1994, கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசு - 1994)
ஆத்திசூடி - விளக்கவுரை கொன்றை வேந்தன் - விளக்கவுரை அகளங்கன் கவிதைகள் - கவிதைகள் (வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய நூற் பரிசு - 1996)
வாக்குண்டாம் (மூதுரை) - விளக்கவுரை
சிவபுராணம் - பொருளுரை செந்தமிழும் நாப்பழக்கம் - பேச்சுக்கள் நாமறிந்த நாவலர் - சிறுகுறிப்புகள் (இரு பதிப்புக்கள்) நல்வழி - பொழிப்புரை, விளக்கவுரை இசைப்பாமாலை - இசைப்பாடல்கள் கவிஞர் ஜின்னாஹ்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு இலக்கியச் சரம் - கட்டுரைகள் வெற்றி வேற்கை (நறுந்தொகை) - உரை கூவாத குயில்கள் - நாடகங்கள் திருவெம்பாவை - உரை (சமயம்) பாரதப் போரில் மீறல்கள் - கட்டுரை சுட்டிக் குருவிகள் - மழலைப் பாடல்கள் சின்னச் சிட்டுக்கள் - சிறுவர் பாடல்கள் நறுந்தமிழ் - கட்டுரைகள் பாரதியாரும் பாஞ்சாலிசபதமும் (ஆய்வு) பத்தினித் தெய்வம் (நாட்டிய நாடகங்கள்)
-78


Page 43

III
8. S. 87
Hill
5.5