கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவில் ஒத்துழையாமையும் ஏனைய கட்டுரைகளும்

Page 1


Page 2
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை அறிமுகஞ் செய்த ஒரேயொரு தெற்காசிய சனநாயக நாடான இலங்கையில் அரசியலமைப்புப் பரிசோதனைகள் பல இடம்பெற்றபோதிலும் நாட்டில் அரசியல் நிறுவனங்கள் குறித்த ஆழமான அதிருப்தியும், பொருமல்களுமே நிலவுகின்றன.
பகைமை அரசியலை ஒரு கேலிக்குரிய எல்லைவரை இலங்கையின் அரசியல் கட்சிகள் கொண்டு சென்றுவிட்டன. ஒவ்வொரு பிரச்சினையிலும் குடியியல் நிர்வாகம் பிளவுற்று, வரிந்துகட்டிக் கொண்டு நிற்கிறது.
நாட்டின் தீவிர பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைக் கூட்டு அவுனுகுமுறையில் தீர்க்கமுடியாதவாறு நாடு வேலப்பாதையில், கீழ்நோக்கிச் சரிந்து செல்கின்றது. அரசியல் நிறுவனங்களின் சட்டநிலைத்தகவும் தேய்ந்து செல்கின்றது. அரசியல் மற்றும் ஆட்சிச் செயன்முறையைச் சீர்திருத்தி மத்திக்கும் பிராந்தியங்களுக்குமிடையில் அதிகாரப்பகிர்வை நிறுவனப்படுத்துதல் முலமே பல்லினப் பாங்கான குடியியல் நிர்வாகம் ஒன்றினுக்கான அடித்தளத்தை ஸ்தாபிக்க முடியும். இதனை நோக்கமாகக் கொண்டமைந்த கட்டுரைகளே முன்று பகுதிகளாக இந்நூலில் தரப்பட்டுள்ளன.


Page 3

falls) jgangwNGDIOy
ஏனைய கட்டுரைகளும்

Page 4

fall 5gangWNGDIOy
ஏனைய கட்டுரைகளும்
நீலன் திருச்செல்வம்
ICES
COLOMBO
இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம் கொழும்பு

Page 5
முன்அட்டைப்பட ஓவியம்
Oil on canvas, 1990. Vajira Kottegoda. In "The Heritage", p. 77.
Civil Disobedience and Other Essays Neelan Tiruchelvam
Copyright 1997 by International Centre for Ethnic Studies
All rights reserved. No part of this book may be reproduced or utilized in any form or by any means electronic or mechanical including photo copying recording or by any information storage and retrieval
systems, without permission in writing from the publisher
ISBN 955-580-024-3
Published in Sri Lanka by International Centre for Ethnic Studies, Colombo
Type Setting by Unique Graphics Printing by Unie Arts (Pvt) Ltd.

என்னை மிகவும்
ஆழமாக விமர்சிக்கும் நிற்குணன், மித்திானுக்கு இந்நூல் சமர்ப்பணம்

Page 6

பொருளடக்கம்
(AVHØGØ/6ØDV ix
JFLDIDTT6OT LI TIġIJ5TTIIIIID ID6Ofġj5, 9 LIfeoLD35(65b
இலங்கையின் இனத்துவ முரண்பாட்டில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பாத்திரம் 1 இருதலைமுறையினர்க்கிடையிலான முரண்பாடு - இளைஞர் எழுச்சி 31 குடியியல் ஒத்துழையாமை 36 மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எமக்கு ஒரு பிராந்திய அமைப்பு தேவையா? 46 இனத்துவ உரிய பங்குகளும், சமத்துவத்துக்கான கானல் நீர் தேடலும் 71 மனித உரிமைகள் விடயத்தில் ஒரு தேசிய நல்லிணக்கத்தை நோக்கி ! 84
39F_(pID fep36(pID
(e
(e
(
சட்டக் கல்வி 101 சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல்கள் 105 அங்கவீனர் உரிமைகள் 112 பராயமடையும் வயது 118 நீதிமுறைத் தத்துவங்களில் அதிகாரப் பகிர்வு 121 காணி உரித்துப் பதிவு 128 வவுனியாவில் இடம்பெயர்வும், மனித உரிமைப் பிரச்சினைகளும் 134 முஸ்லீம்களின் உரிமைகள் 141 மக்களின் மதிப்பைப் பெற்ற நீதி பரிபாலனம் 144 மக்கள் தொடர்புச் சாதனங்களும், உல்லாசப் பிரயாணமும் 150
vii

Page 7
(
சங்க உறுப்பினர் கல்வி 154
சட்டமும், தனியார் மயமும் 160
கட்டிடக் கலைஞரின் செயல் நிறைவேற்றத்தைப் பிரமாணப்படுத்துதல் 166 தெற்காசியாவில் ஆட்சிச் செயன்முறையில் தீவிர நெருக்கடி 171
தெற்கு அபிவிருத்தி 175
அரசியல் வாழ்க்கை வரலாறுகள்
()
ஜே. ஆர். ஜெயவர்த்தனவும், அதிகரித்த அவலங்களின் காலப்பகுதியும் 183 பூரீமாவோ ஆர். டீ. பண்டாரநாயக்க - குடியியல் உரிமைகள் நீக்கம் 191 பீட்டர் கெனமன் - மனம் வருந்தாத பொதுவுடமைவாதி 199
சைமன் காசிச் செட்டி - கற்றுணர்ந்த பேரறிஞர் 204 ஐவர் ஜென்னிங்ஸ் - சட்டமும் அரசியலமைப்பும் 210

முன்னுரை
இலங்கை தெற்காசியாவிலேயே மிகவும் பழைமை வாய்ந்த சனநாயக நாடாக விளங்குகின்றது. சர்வசன வாக்குரிமை 1931 இல் அறிமுகஞ் செய்யப்பட்டது. அரசியல் அதிகாரம் காலத்துக்குக் காலம் இரு பிரதான அரசியற் கட்சிகளிடையே கைமாறி வந்துள்ளது. பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் போன்ற பிரதிநிதித்துவ நிறுவனங்களுக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை அறிமுகஞ் செய்த ஒரேயொரு தெற்காசிய சனநாயக நாடாகவும் இலங்கை விளங்குகின்றது. சட்டமன்றத்தின் வாழ்வில் பாரிய பிரச் சரினைகள் இடம் பெற் றாலும் பாதிப் புறாத நிறைவேற்றுத்துறை ஒன்றை உறுதி செய்யும் ரீதியில் அது இரண்டாவது குடியரசு அரசியலமைப்பின் கீழ் ஒரு டி கோல் பாணியிலான நிறைவேற்று சனாதிபதி முறையை ஏற்படுத்திக் கொண்டது. இத்தகைய தேர்தல் தொகுதி மற்றும் அரசியலமைப்புப் பரிசோதனைகள் இடம்பெற்ற போதிலும் நாட்டில் அரசியல் நிறுவனங்கள் குறித்த ஆழமான அதிருப்தியும், பொருமல்களும் நிலவுகின்றன.
பகைமை அரசியலை ஒரு கேலிக்குரிய எல்லைவரை கொண்டு சென்றமைக்காக இலங்கையின் அரசியல் கட்சிகளைப் பலர் விமர்சிக்கின்றனர். உருக்குக் கூட்டுத்தாபனத்தின் தனியார் மயமாக இருக்கலாம். ஒரு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியின் நியமனமாக இருக்கலாம் அல்லது ஒரு மாநகர சபைக் கேள்வி மனு வழங்கலாக இருக்கலாம். ஒவ்வொரு பிரச்சினையிலும் குடியியல் நிர்வாகம் பிளவுற்று, வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் நிலையே உள்ளது.
ஐயத்துக்கு இடமின்றி ஒரு பிரதிநிதித்துவ சனநாயகத்தில் நிர்வாகத் துஷ் பிரயோகம் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தோலுரித்துக் காட்டுவதற்கு ஒரு துடிப்பானதும், சில வேளைகளில் மனக்கசப்புகளைக் கொட்டித் தீர்ப்பவையுமான பொது விவாதங்கள் அவசியமெனச் சிலர்
iX

Page 8
வாதிடக் கூடும். ஆயினும் இடைவிடாத வாதப்பிரதிவாதக் கூச்சலுக்கு அப்பாற்பட்ட ஒரு பொதுவான அரசியல், பொருளாதார இலட்சிய நோக்கு இல்லையென்றே கூறத் தோன்றுகிறது. நாட்டின் அபிவிருத்தியின் கழுத்தை நெரிக்கும் தீவிர பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைக் கூட்டு அணுகுமுறையில் தீர்ப்பதற்கான திடசித்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாதவாறு அவலப் பாதையில் நாடு கீழ்நோக்கிச் சரிந்து செல்கையில் அரசியல் நிறுவனங்களின் சட்ட நிலைத்தகவும் தேய்ந்து செல்லுகின்றது.
சமகால அரசியலின் தன்மை குறித்துப் பொதுமக்களின் பிரமை அகன்றுள்ளமையை, பாராளுமன்றச் செயன்முறையில் அவர்களின் அக்கறையின்மை புலப்படுத்தி நிற்கிறது. 40 நாட்களுக்கு மேல் நீடித்த சமீபத்திய, வரவு-செலவுத் திட்ட விவாதம் எவரையும் கவர்ந்ததாகத் தெரியவில்லை. அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி ஆசனங்கள் காலியாகவிருந்ததோடு, கூட்ட நடப்பெண் குறித்துக் கேள்வி எழுப்புவதில்லையென இரு சாராரும் சம்மதித்திருக்காவிடில் சபையின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றிருக்க மாட் டா என்பதும் உண்மையாகும். சபை உறுப்பினர் அநேகரின் பேச்சு வரவுசெலவு முன்மதிப்பீட்டு விடயங்களோடு தொடர்பற்றவையாக இருந்தன. அவை தேர்தல் தொகுதிப் பிரச்சினைகள் சார்ந்தவையாகவும், அரசியல் எதிரிகளைச் சாடி ஆதிக்கஞ் செய்பவையாகவுமே இருந்தன. பாராளுமன்ற உரைகளின் புத்திஜீவி உள்ளடக்கம் தீவிரமாகத் தரம் குறைந்து செல்கின்றது. ஒரு பிரச்சினையை ஆழமாக ஆய்வு செய்யும் சட்டமன்ற உறுப்பினர் ஒரு சிலரே. நீதி மீதான சட்டமன்றக் கட்டுப்பாடும், நிறைவேற்று நடவடிக்கையை நுண்ணாய்வு செய்தலும் பாராளுமன்ற வடிவிலான அரசாங்கத்தின் வாழ்வாதாரமான அம்சங்களாகும். ஆயினும், நடைமுறையில் சபையில் இடம்பெறும் விவாதங்கள் வரவு-செலவுச் செயன் முறையிலோ, அரசுச் செயற்பாட்டிலோ எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.

பாராளுமன்றக் குழு முறைமை குறித்தும் இதேவிதமான கரிசனைக் கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. நியமனங்கள் குறித்த தெரிவுக் குழு வெளிநாட்டுத் தூதுவர்கள், அமைச்சுச் செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்களின் ஆசனத் தவிசாளர்கள் உட்பட்ட உயர் நியமனங்களை மீளாய்வு செய்ய வேண்டுமென்னும் எதிர்பார்ப்பு உள்ளது. ஆயினும் மீளாய்வுச் செயன் முறை ஆமை வேகத்தில் செல்லும் ஒன்றாகவே உள்ளது. 1994 இல் இடம் பெற்ற நியமனங்களைக் குழு இன்னமும் மீளாய்வுச் செயன்முறைக்கு உட்படுத்தாத நிலையிலேயே உள்ளது. தெரிவுக்குழுச் செயன்முறையில் பொதுமக்கள் பிரதிநிதித்துவம், மற்றும் பங்கேற்பு குறித்த நிலையியற் கட்டளைகளுக்கான திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் எந்தக் குழுவும் அவற்றை இதுவரையில் துணைக்கழைக்கவில்லை. பாராளுமன்றம் இலங்கைச் சமுதாயத்தைப் பாதிக்கும் வாழ்வாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் தொடர்ச்சியாக அக்கறை கொண்டு துடிப்பாகச் செயற்படும் பயனுறுதி வாய்ந்த நிறுவனமாக விளங்குவதை உறுதிப்படுத்துவது எதிர்க்கட்சியின் பிரதான பொறுப்பாகும். சட்டவாக்கம், நிறைவேற்று நடவடிக்கையின் நுண்ணாய்வு என்பவற்றில் பாராளுமன்றம் பயனுறுதிமிக்க பாத்திரத்தை வகிக்கத் தவறியுள்ளமை இலங்கையின் அரசியற் கட்சிகள் அனைத்துக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மலையளவு பாரிய குற்றப்பத்திரமாகும்.
பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் அடி மட்டமாகிய பிரதேச சபைகளில் (கிராமிய மட்டத்திலான உள்ளூர் அதிகார சபைகள்) கட்சி முறைமை ஆளும் கட்சியையும் பிரதான எதிர்க்கட்சியையும் இரு தெரிவான பகைமையுணர்ச்சி கொண்ட கோஷ்டிகளாகப் பயனுறுதியுள்ள வகையில் பிரித்தமைக்கின்றது. பிரதேச சபைகள் பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்ட விவாத அரங்குகளாக விளங்குவதோடு, கிராமியத் தெருக்களைத் திருத்துதல், குப்பை கூளங்களை அகற்றுதல், சிறு குளங்களைத் திருத்துதல் போன்ற வேலைகளை உதாசீனஞ்
xi

Page 9
செய்து, தேசிய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளிலேயே கூடுதல் கவனஞ் செலுத்த விரும்பும் போக்கே நிலவுகின்றது. அதிகார சபைகள் மூலவளங்கள் போதாமையினாலும் பெரிதும் பாதிப்புற்றுள்ளன. இதனால் வரியிறுப்பாளருக்கு முறையான சேவைகளை வழங்க முடியாத நிலையிலுள்ளன.
இக் கரிசனைக் கவலைகள் காரணமாக பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சி முறைகளில் ஆழமான அனைத்து மடங்கும் சீர்திருத்தம் ஒன்று அவசியம் என்னும் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. நிறைவேற்றுக் கருமங்களைப் புரிவதில் அரசியல் கட்சிகளிடையே அதிகாரப் பகிர்வு இடம்பெறக் கூடிய வகையில் சீர்திருத்தங்கள் வேண்டுமென்பது ஒரு புதிதுபுனைதல் நிறைந்த பிரேரணையாகும். இது பயனைப் பொறுத்த வரையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் சட்டமன்றத்தில் மட்டுமன்றி நிறைவேற்று மட்டத்திலும் இடம்பெறுவதைக் குறிப்பதாகும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் சட்டமன்ற அல்லது உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதித்துவத்திற்கு விகிதாசாரமான முறையில் அரசியல் நிறைவேற்றுத் துறையிலும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளும். இது பயனைப் பொறுத்த வரையில் வெஸ்ட் மினிஸ்டர் எதிராளி ஆட்சிச் செயன் முறை மாதிரியிலிருந்து அரசியற் கட்சிகள் நிர்ப்பந்தம் காரணமாக ஒன்றாகச் சேர்ந்து பணியாற்றும் மாதிரிக்கு மாறிச் செல்வதைக் குறிக்கும்.
சட்டமன்ற மட்டத்திலான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் தேர்தல் தொகுதி அலகின் அரசியல் மற்றும் சமூகப் பல்புடைத்தன்மை சட்ட மன்றத்தின் அல்லது சபையின் உள்ளடக்கத்தில் பிரதிபலிப்பதை உறுதிசெய்துள்ளது. ஆயினும் பிராந்திய மற்றும் உள்ளூராட்சி அதிகார சபை மட்டங்களில் சட்டவாக்க நிகழ்ச்சி நிரல் வரைவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிற் பலர் ஆக்கபூர்வமான பங்களிப்பு எதையும் நல்குவதற்கான விதிமுறையான பாத்திரமோ, சந்தர்ப்பமோ அற்றவர்களாக விளங்குகின்றனர். இதன் பிரகாரம், விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அர்த்தமுள்ளதாக மிளிர
Χii

வேண்டுமெனில் அது சட்டவாக்க மற்றும் நிறைவேற்றுச் கருமப்பாடுகளைத் தழுவி நிற்றல் அவசியம்.
மிகவும் உயர்ந்த போட்டித் தகவுள்ள தேர்தல் தொகுதி முறைமையினால் உருவாக்கப்பட்டுள்ள இலங்கை அரசியல் கலாசாரம் பிரதிநிதித்துவ நிறுவனங்களின் கட்டமைப்பில் இத்தகைய குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு எவ்வளவு தூரம் இடமளித்துச் செயற்படும் என்பது தெளிவற்றதாக உள்ளது.
இலங்கையில் ஆட்சிச் செயல் முறையிலும், அரசியலிலும் ஆழமான, அனைத்து மடங்கும் சீர்திருத்தங்களைக் கோரி நிற்பவை இக் கரிசனைக் கவலைகளும், ஈடுபாடுகளுமே. அரசரின் தன் மை யை மாற் றரி, மத் தரிக் கும் பிராந்தியங்களுக்குமிடையில் அதிகாரப் பகிர்வை நிறுவனப்படுத்துதல் மூலம் பல்லினப் பாங்கான குடியியல் நிர்வாகம் ஒன்றின் அடித்தளங்களைத் தாபிப்பதே முதல் தேவையாகும்.
தனிநபர்களின் அடிப்படை உரிமைகளை விஸ்தரித்து, மட்டுப்பாடுகளை நியாய விளக்கத்துக்கு உட்படுத்தி, இவ்வுரிமைகளின் நடைமுறைப்படுத்தலை சனநாயகப் படுத்துதல் இரண்டாவது தேவையாகும்.
நிறைவேற்றுத்துறைக்கும், சட்ட மன்றத்துக்கும் இடையிலான உறவை மீள வரைவிலக்கணப்படுத்தி, நிறைவேற்று சனாதிபதிப் பதவியினதும், பாராளுமன்றத்தினதும் சீர்திருத்தத்தினூடாக, நிறைவேற்று அதிகாரப் பிரயோகத்துக்கான மேலும் பயனுறுதியுள்ள வகைப்பொறுப்பை உறுதி செய்வது மூன்றாவது தேவையாகும்.
நான்காவதாக, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை நிறைவேற்றுத்துறை மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் தர்க்கத்தை உள்ளூராட்சி மற்றும் பிராந்திய அரசு மட்டங்களுக்கும் இயலுமாயின் தேசிய மட்டத்துக்கும் விஸ்தரித்தல் வேண்டும்.
xiii

Page 10
இக்கட்டுரைகளின் நோக்கம் அரசியல் மற்றும் ஆட்சிச் செயன்முறையைச் சீர்திருத்துவதில் குடியியல் சமூகத்தின் தொடர் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும். முதலாவது பகுதி மனித உரிமைகளை முன்னேற்றுதல், மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு நீதியானதும், சமாதானமானதுமான ஒரு தீர்வை முன்னெடுத்தல் அரசு சாரா நிறுவனங்களின் பாத்திரத்தைப் பகுப்பாராய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றது. அது, சமத்துவம் மற்றும் அரசியல் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் ஒரு சக்திமிக்க ஆயுதமாகிய அஹிம்சை முறையியல் குறித்தும் கவனஞ் செலுத்துகின்றது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பிராந்திய ஏற்பாடுகளை முன்னேற்றுவதில் சிவில் சமூக முன் முயற்சிகள் முக்கியமானவையாக இருந்துள்ளன. இத்தகைய ஏற்பாடுகள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், ஆபிரிக்காவிலும் பயனுறுதி மிக்கவையாக இருந்துள்ளன. ஆயினும், ஆசிய பசுபிக் பிராந்திய அரசுகள் பல மனித உரிமைப் பிரச்சினைகளில் நொண்டிச் சாக்கு மற்றும் எதிர்மறை நிலைகளை எடுத்தமையால் இப்பிராந்தியம் இவ்விடயத்தில் பின்தங்கியுள்ளது.
இரண்டாவது பகுதி நீதிமுறைசார் சீர்திருத்தம், காணி உரித்துப் பதிவு, அங்கவீனர் உரிமைகள், அவசரகால நிலை, இடம்பெயர்ந்தோர் அவலங்கள், சட்டம் மற்றும் பொருளாதார அம்சங்களைக் கையாளும் பல பாராளுமன்ற விவாதங்கள் குறித்ததாகும். அவை சட்ட, நிறுவன மற்றும் பொருளாதார சீர்திருத்தம் குறித்த நிகழ்ச்சிநிரல், மற்றும் எமது சமுதாயம் எதிர்நோக்கும் அவசர சமூக மற்றும் தார்மீகப் பிரச்சினைகள் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன. சட்டம், அரசியல் மற்றும் ஆட்சிச் செயன்முறை குறித்த எந்த ஆய்வுமே சட்டவாக்கம் மற்றும் ஆட்சிச் செயன் முறையில் ஈடுபட்டிருந்த பிரதான அரசியல் பாத்திரங்களின் மதிப்பீடு ஒன்று இன்றிப் பூரணமாகாது. ஒரு தமிழ்க் கல்விமான், ஓர் அரசியலமைப்புக் கோட்பாட்டாளர் என இரு புத்திஜீவிகள், மற்றும் பிரதான
Χίν

கட்சிகளின் தலைவர்களாக விளங்கிய மூன்று அரசியல் தலைவர்கள் ஆகியோரின் வரலாறுகள் சட்டம் மற்றும் சமூக மாற்றம் குறித்த பரந்த பார்வையை வழங்கும் பல கணிகளாக உள்ளன.
மொழிபெயர்ப்புகளில் உதவிய எஸ். அன்ரனி நோபேட், லோறன்ஸ் வெளியீட்டின் சகல அம்சங்களிலும் மேற்பார்வை, வழிகாட்டல் வழங்கிய திரு.பி. தம்பிராசா அவசரத்தில் திரட்டிய கருத்துக்களைத் திருத்தி, தட்டச்சுவேலைகளை நிறைவேற்றிய மெளசில் மற்றும் சண்முகம், நீண்ட நாட்களாக மறக்கப்பட்டு விட்ட கட்டுரைகள், வரைபுகளைத் தேடி எடுத்து உதவிய குந்தவி, சஞ்ஜீதா என்போருக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். சித்தி திருச்செல்வம் எனது கட்டுரை உள்ளடக்கங்களைத் திருத்தி, எனது எண்ணங்கள், சிந்தனை வெளிப்பாட்டில் சிறப்பினை ஏற்படுத்தியவர். இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையத்தில் பணிபுரியும் எனது சகபாடிகள், பிரத்தியேகமாக நிலையப் பணிப்பாளர் ராதிகா குமாரசுவாமி மற்றும் சட்டமும், சமூகமும் நம்பிக்கைப் பொறுப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்போரின் கருணையும், ஆதரவும் எனது பணிக்கு இவர்கள் உருவாக்கிய உயிர்த்துடிப்புமிக்க ஆக்கபூர்வ புத்திஜீவிச் சூழலும் என்றும் என் நன்றிக்குரியன.
வவுனியா அகதி முகாம்களுக்கு விஜயம் செய்த போது என்னுடன் சேர்ந்து கொண்ட ரமணி முத்துவேட்கம அவர்கள் இடம் பெயர்தல் பற்றிய கட்டுரை ஆய்வில் உதவியமைக்கும் எனது நன்றிகள். இந்நூலின் அட்டைப் படத்தில் தனது ஒவியத்தை இடம்பெறச் செய்வதற்கு அனுமதி தந்த வஜிரா கோத்தாகொட அவர்களுக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
666f 1997 நீலன் திருச்செல்வம்
XV

Page 11

சமமான பாதுகாப்பும் மனித உரிமைகளும்

Page 12

இலங்கையின் இனத்துவ முரண்பாட்டில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பாத்திரம்
இந்திய உப- கண்டத்தின் சமீபகால வரலாற்றில் இனத்துவ வன்செயல் மேலும் அதிக அளவில் பொதுவாக இடம்பெறும் ஒன்றாகியுள்ளது. பாகிஸ்தானின் பாதான்-பிஹாரி மோதல்கள் தொடங்கி புதுடில்லியின் சீக்கிய எதிர்ப்புக் கலவரங்கள் வரை, குஜராத்தின் ஒதுக்கீடுகளுக்கெதிரான சர்ச்சையிலிருந்து இலங்கையின் சிங்கள-தமிழ் முரண்பாடு வரையில், இனவாத வன்செயல் சொத்துக்களுக்கும், மனித உயிர்களுக்கும் பெருமளவிலான அழிவை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் பெளதீக ரீதியிலான அழிவை விட வன்செயல்களின் பின்னர் எஞ்சியிருக்கும் உணர்வு ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஏற்படும் வடுக்களே மேலும் நாசகரமானவை. கும்பல் வன்செயல் சக்திகளால் கட்டவிழ்த்து விடப்படும் கொடூரம், பயங்கரம் மற்றும் துன்ப துயரங்கள் காரணமாக ஒரு பல்லின சமுதாயத்தில் இருக்கும் ஒரு மையுணர்வு சிதறடிக்கப்பட்டு விடுகின்றது.
தென்-கிழக்காசியாவில் இனத்துவ முரண்பாடு சில, மிகவும் பாரதூரமான, தொடரும் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாயிருந்துள்ளது. இப் பாரதூரமான மீறல்களில் அனேகமானவை ஆட்கள் காணாமற் போதல், சித்திரவதை, மற்றும் நீதிமுறை dF frg Ti; கொலை களோடு தொடர்புற்றவையாகும். எதேச்சையான, வரம்புமீறிய கைதுகள் தொடரும் இனத்துவ முரண்பாடுகளின் காரணமாகவே இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது.

Page 13
அாரிதான மூலவளங் களையும் , பொருளாதார வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் போட்டி இனம், சாதி, கோத்திரம், மதம் மற்றும் மொழி என்பவற்றின் அடிப்படையில் ஏற்படும் கூரிய பிளவுகள் கொணரும் பகைமைக்குத் தீனிபோடுகின்றது. பலவீனமான அரசியல் நிறுவனங்கள், அதிகாரம் மற்றும் மூலவளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் குறித்து இனத்துவ மற்றும் மதக் குழுக்கள் விடுத்த கோரிக்கைகளைப் போதியளவு ஏற்று அங்கீகரிக்கத் தவறிவிட்டன. சிறுபான்மை இனக்குழுக்களின் மொழி மற்றும் கலாசார மரபுகளைத் தாரைவார்க்கும் முறையில் தேசிய இணைப்பை முன்னேற்றும் கொள்கைகள் முன்வைக்கப் பட்டதால் அவற்றினிடையே பதற்ற நிலை மேலும் அதிகரித்துள்ளது.
இனத்துவ அதிருப்தி பிரிவினைவாத இயக்கங்களாகப் பரிணமிக்கத் தொடங்கியது. இந்நடவடிக்கைகள் அரசின் அடக்குமுறை எதிர்விளைவுகளை ஏற்படுத்தின. இதனால் சமூக நீதிக்கும், மனித உரிமைகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருப்பதும், உள்நாட்டு முரண்பாடுகள் காரணமாக அகதிகள் நாட்டை விட்டுத் தப்பியோடுவதும் இப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
இனத்துவப் பிரச்சினைகள்
சமீப வருடங்களில் இனத்துவப் பிரச்சினைகளின் உலகளாவிய தன்மை, அவற்றின் சிக்கல் தன்மை மற்றும் அவற்றைக் கையாளத் தேவையான உத்திகள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளை வகுத்தமைப்பதற்குக் கூட்டு நடவடிக்கையின் தேவை என்பவை குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வளர்ச்சியடைந்து வருகின்றது. பல்லினத் தேசங்கள் பலவற்றில் அதிகாரப் பகிர்வு குறித்த சமஷ்டி வடிவங்கள் அரசியலமைப்பு விதிகளிலும், மற்றும் அரசியல் ஏற்பாடுகளிலும் இடம்பெற்றுள்ளன. இவ்வரசியலமைப்பு மாதிரிகளின்
2

அபிவிருத்தியில் ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி முறைகளினிடையிலும், மத்திப்படுத்திய மற்றும் பரவலாக்கிய வடிவங்களினிடையிலும் முரண்பாடுகள் தொடர்ச்சியாக இருந்து வந்துள்ளன. உதாரணமாக, இந்தியாவில் சமஷ்டிக் குடியியல் நிர்வாகம் மொழிவாரியான மாநிலப் பிரிவுகளின் அடிப்படையில் இடம்பெற்றிருக்கையில், மலேசியாவில் உள்ளூராட்சியாளரால் தலைமை வகித்து நடாத்தப்படுவதும், விசேட சலுகைகள் வழங்கப்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கியதுமான மாநிலங்களின் சமஷ்டி ஒன்றுள்ளது. நைஜீரியாவில் முன்னர் இடம்பெற்றிருந்த மாதிரியமைப்பு மாநிலங்களின் எல்லை நிர்ணயத்தில் சில குறிப்பிட்ட பிராந்திய மற்றும் கோத்திரக் குழுக்களோடு பொதுப் பிரதேசங்களைக் கொண்டிருந்தது. அதிகாரப் பகிர்வு குறித்த சமஷ்டி அல்லது சமஷ்டி-மருவிய மாதிரிகள் பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், இலங்கை போன்ற பூசல்கள் நிறைந்த சமுதாயங்கள் விடயத்தில் இயைபு முக்கியத்துவம், வாய்ந்தவையாகும். இத்தேசங்கள் ஒன்றில் சமீபத்தில் புதிய அரசியலமைப்புகளை உருவாக்கியுள்ளன, அல்லது தமது தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தை மீள வடிவமைக்கும் கட்டத்தில் இருக்கின்றன. இச் சமூகங்களினுள் இருக்கும் பல்வேறு இனத்துவ, கோத்திர மற்றும் பிராந்தியக் குழுக்கள் ஒவ்வொன்றும் சமஷ்டியமைப்புக் குறித்த தனது சொந்தக் காட்சி விளக்கங்களைக் கொண்டுள்ளது. இது சமஷ்டி அல்லது கூட்டவை ஆட்சி முறைமைகளினுள் முரண்பாடுகள் மற்றும் பதற்றங்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளது.
இச் சமூகங்களின் சமஷ்டிப் பண்பை வலுப்படுத்துமுகமாக அவை ஒவ்வொன்றினுள்ளும் கட்டமைப்புகளை மீள் ஒழுங்கு செய்தல் குறித்த விவாதங்கள், தோன்றி வளர்ச்சியுற்று வருகின்றன. இம் முயற்சிகள் கல்வி, கலாசாரக் கொள்கை, பொலிஸ் த த் துவங்கள், மூலவளங்களைத் திரட்டி உபயோகித்தலும், அவற்றின் மீள் விநியோகமும், அவசரகால மற்றும் எஞ்சியிருக்கும் தத்துவங்கள் போன்ற விடயங்களில் மத்திய - மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகளை மீள்
3

Page 14
வரைவிலக்கணப்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தி நிற்கின்றன. இத்தகைய முயற்சிகள் இனத்துவக் குழுக்களிடையே ஒப்புரவான அதிகாரப் பகிர்வு குறித்த அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கவனத்தை ஈர்க்கின்றன. இப் பிரச்சினைகளைத் துணிச்சலோடு தீர்க்கத் தவறியமை போர்க்கொடி தூக்கிய இனத்துவ மற்றும் உப-தேசியக் குழுக்களின் பிரிவினைவாதக் கோரிக்கைகளை மேலும் தீவிரமாக்கியுள்ளன.
இனத்துவ சிறுபான்மையினரால் ஆயுதப் போராட்டத்தின் போது அல்லது அஹிம்சை அரசியல் போராட்டத்தின் போது எப்பொழுதும் நாடப்படும் சுயநிர்ணய உரிமை பிரச்சினைகளைக் கொணர்ந்துள்ளது. இத்தகைய கோரிக்கைகள் எழும்போது தேச அரசுகள் குறிப்பிடத்தக்க அளவு எதிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, இனத்துவக் கோரிக்கைகளை அடக்குவதற்குத் தீவிர அடக்குமுறை நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றன. இத்தகைய இனத்துவக் கோரிக்கைகள் தேசியப் பிரிவினைக்கு இட்டுச் செல்லும் என்னும் காட்சி விளக்கத்தை அவை கொண்டுள்ளன.
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வைக் கொணரும் முன்னுரிமைக் கொள்கைகள் காரணமாகவும் இனத்துவ முரண்பாடுகள் எழுகின்றன. இக்கொள்கைகள் உரிமைகள் பறிபோவது குறித்த போட்டியான காட்சி விளக்கங்களின் அடிப்படையில் அமைவதால் அவை சமூக நீதி குறித்த எதிரிடையான எண்ணங்களைத் தோற்றுவிக்கின்றன. சிக்கல் நிறைந்ததும், அதிகாரப் படிமுறைச் சமூகக் கட்டமைப்புக் கொண்டதுமான இந்தியாவில் பலவீனமான, இலகுவில் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய சிறுபான்மையோர் மற்றும் கோத்திரக் குழுக்கள் விடயத்தில் முன்னுரிமையென்னும் அரசியலமைப்பு பணிப்பாணைக் கொள்கை உள்ளது. கொள்கை வகுப்போரும், நீதிபதிகளும் இத்தகைய கொள்கைகளின் அரசியலமைப்பு ரீதியான வரை வெல்லைகளை நிர்ணயிப்பதற்கும், வரலாற்று ரீதியாக
4.

ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மற்றும் கோத்திரக் குழுக்களின் நலன்களையும், பொருளாதார ரீதியில் அனுகூல மற்றோரின் நலன்களையும் சமப்படுத்துவதற்கும் குழப்பம் நிறைந்த சிக்கலான பிரச்சினைகளோடு மல்லுக்கட்ட வேண்டி இருந்துள்ளது. மலேசியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை (1971) போன்ற அரசியற் குரலும், ஆதிக்கமும் உள்ள பெரும்பான்மைக்குச் சாதகமாகச் செயற்படுத்தப்படும் முன்னுரிமைக் கொள்கைகள், விகிதாசார அடிப்படையிலமைந்த முன்னுரிமைக் கொள்கைகளின் சட்டநிலைத் தகவு வரை வெல்லைகள் குறித்த குணாம்சரீதியில் வேறுபாடுள்ள சமூக பொருளாதாரப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன.
சர்வதேச சமூகம் சிறுபான்மையோர் பாதுகாப்புக் குறித்த கோட்பாடுகளையும், எண்ணக்கருக்களையும் அபிவிருத்தி செய்தலுக்கு மிகவுயர்ந்த முன்னுரிமை அளித்தல் வேண்டும். இவை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெறுவதோடு முரண்பாடுகளைச் சமாதான வழிகளில் தீர்ப்பதற்குத் தமது பங்களிப்பை நல்கவும் வேண்டும். ஆயினும் இனத்துவ தனித்துவத்தின் பரிணாம மற்றும் மாற்றமுறும் தன்மையையும், இனத்துவக் கோரிக்கைகளின் உள்ளடக்கத்தையும், இனத்துவக் குழுக்களிடையே இடம் மாறும் அதிகாரச் சமநிலையையும் வைத்து நோக்குகையில் அநேகமான கட்டமைப்பு ஏற்பாடுகள் நீரோட்டம் போன்றும், தற்காலிகமானவையாகவுமே அமையும். இவ்வாறாக, புதிய இனத்துவச் சவால் களுக்கும் , கோரிக்கைகளுக்கும் இயைபுறச் செயற்பட வேண்டுமெனில் இவ்வேற்பாடுகள் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்பட்டு, புனர்நிர்மாணம் செய்யப்படல் வேண்டும்.
இனத்துவ முரண்பாடுகள் ஒரு சமூகத்தின் மனித உரிமைக் கொள்கைகள் சட்டகத்தினுள் தீர்க்கப்பட வேண்டிய மனித உரிமைகள், மற்றும் சமூக நீதி போன்ற அடிப்படை விடயங்களுக்கும் எமது கவனத்தைக் கோரி நிற்கின்றன.
பல்வேறு மக்கட் பிரிவினரைக் கொண்ட இலங்கையின் சனத்தொகை 19 மில்லியன் ஆகும். 74 வீதமானோர்
5

Page 15
சிங்களவராகவும், 18 வீதமானோர் தமிழராகவும், 7.6 வீதமானோர் முஸ்லீம்களாகவும் உள்ளனர். தமிழருள் 12 வீதமானோர் இலங்கையராகவும் 6 வீதமானோர் சமீபத்தில் குடியேறிய பெருந்தோட்டத் தமிழராகவும் விளங்குகின்றனர்.
இலங்கையில் கூட்டு வன்செயல்
நவீன இலங்கையின் வேதனை நிறைந்த வரலாற்றில் இரக்கமற்ற கொடுரம் நிறைந்த வாரம் ஒன்றுக்குப் பின்னர் அனேகமாகப் பதின்மூன்று வருடங்கள் கழிந்து விட்டன. 1958, 1977, 1981, 1983 ஆம் வருடங்களில் இலங்கைத் தமிழர்கள் கூட்டு வன்செயலின் கொடூரங்களுக்கு முகங்கொடுத்தனர். ஆயினும் அதன் கடூரம், கொடூரம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறை குறித்து 1983 வன்செயல் குணாம்ச ரீதியில் வேறுபட்டதாகும். இலங்கையில் பலியானோர், உயிர் பிழைத்தோர் இருபாலாரினதும் நினைவுத் தடங்களில் ஆழமாகப் பதிந்து விட்ட வேறோர் நிகழ்ச்சி இல்லையென்றே கூறலாம். இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த இந்தத் துயரம் மற்றும் அதிர்ச்சி வடுவை அகற்றுவதற்கு காலமோ அல்லது புலப்பெயர்வுகளோ உதவவில்லை.
மரணமடைந்தோரின் முழுத்தொகை சுமார் 400 என்று அதிகார பூர்வமான அறிக்கைகள் கூறிய போதிலும், தலைநகரில் காடையர் கூட்டங்களின் தாக்குதல் காரணமாக ஈவிரக்கமின்றிக் கொலை செய்யப்பட்ட பாதுகாப்பற்ற மக்களின் தொகை 2,000 க்கும் 3,000 க்கும் இடைப்பட்டதாகும். பலர் அடித்து அல்லது வெட்டிக் கொல்லப்பட்டனர். பலர் தீமூட்டி உயிரோடு எரிக்கப்பட்டனர். பல ஆயிரக்கணக்கான வீடுகளும் கட்டிடங்களும் ஒன்றில் தீவைத்துக் கொளுத்தப்பட்டன அல்லது வேறு வழிகளில் நாசமாக்கப்பட்டன. கொழும்பு மாநகரினுள், மாநகரின் தமிழர் சனத்தொகையில் அரைவாசிப் பேருக்கு மேலானோராகிய சுமார் 100,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேறினர். இவர்கள் தமது அயலுக்கோ அல்லது வேலைத்தலங்களுக்கோ என்றுமே மீளவில்லை. 175,000
6

அகதிகளும், இடம் பெயர்ந்தோரும் நாட்டை விட்டு ஓடியதாக
மதிப்பிடப்பட்டுள்ளது. உறவினர் ஒரு வரைப் பறிகொடுக்காத, அல்லது குடும்ப அங்கத்தினர் இடம் பெயராத ஒரு குடும்பத்தைக் காணல் அரிது. அனேகமாக ஒவ்வொருவரும் உடல் ரீதியாகவோ, உடைமைகள் இழப்பு விடயத்திலோ பெரிதும் பாதிக் கப்பட்டனர். மீண்டும் மீண்டும் வன்செயல்களுக்குப் பலியான ஒரு பெண்மணி தமது தமிழ் அடையாளம் குறித்துப் பின்வருமாறு கூறினார், "தமிழராக இருப்பதென்பதன் கருத்து பீதியுடன் வாழ்வது என்பதாகும்.”
பல பார்வையாளர்களைப் பிரத்தியேகமாகச் சஞ்சலம் கொள்ள வைத்தது வன்செயலின் திட்டமிட்ட, ஒழுங்கு முறைமையான தன்மையாகும். தறிகெட்டுச் செயற்பட்ட சிங்களக் காடையர் கூட்டத்தினருக்குத் தமிழர்களின் வீடுகள் மற்றும் வியாபார ஸ்தலங்களின் அமைவிடம் குறித்த சரியான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. இக் காடையர் தலைவர்கள் கையில் வாக்காளர் நிரல்கள் மற்றும் தமிழருக்குச் சொந்தமான வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளின் விபரமான முகவரிகள் இருந்தன. வியாபார, தொழில் முயற்சி மற்றும் உயர் வாழ்க்கைத் தொழில் துறைகளைச் சேர்ந்தோர் பிரத்தியேகமாகக் குறிவைக்கப்பட்டனர். தமிழர்களின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பதே நோக்கம் போலத் தோன்றியது. இருபது தைக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் உள்ளடங்கலாக, ஏறக்குறைய நூறு கைத்தொழிற் பொறிக் கோப்புகள் பாரதூரமாகச் சேதப்படுத்தப்பட்டன அல்லது முற்றாக நாசமாக்கப்பட்டன. கைத்தொழிற் புனர்நிர்மாணத்தின் ஆகுசெலவு 200 கோடி ரூபா ஆகுமென மதிப்பிடப்பட்டது. இது கட்டற்ற வன்செயலின் போது அழிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான கடைகள் மற்றும் சிறு வர்த்தக நிலையங்களை உள்ளடக்கவில்லை.
வன்செயலுக்கு அரசு காட்டிய மறைமுக ஆதரவும் அதேயளவு சஞ்சலத்தை ஏற்படுத்துவதாகும். 1983 ஆடி 23 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் மறைந்திருந்து தாக்கிக் கொன்ற பதின்மூன்று படை வீரர்களின் மரணச் சடங்கை அரசு
7

Page 16
தவறாகக் கையாண்டது மட்டுமன்றி அடுத்த நாள் உணர்வுகளைப் பற்றியெரியச் செய்யும் செய்திகள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துத் தலையங்கங்களாக வருவதையும் அனுமதித்தது. இதற்கு நேர்மாறாகப் பாதுகாப்புப் படையினர் திருநெல்வேலியிலும், கந்தர்மடத்திலும் நிகழ்த்திய 50 முதல் 70 வரையிலான பொதுமக்களைப் பலிகொண்ட பழிவாங்கும் வன்செயல் பொதுசனத் தொடர்பு சாதனங்களால் மூடி மறைக்கப்பட்டது. தீவைப்போர், கொள்ளையிடுவோருக்கு இராணுவ ஆளணியினர் ஊக்கமளித்தது மட்டுமன்றி, சில சந்தர்ப்பங்களில் கொள்ளை நடவடிக்கைகளில் பங்கு கொண்டதாகவும் சார்த்துதல்கள் இடம்பெற்றுள்ளன. இராணுவமோ, பொலிஸோ வன்செயலைத் தடுப்பதற்கோ அல்லது தவறாளிகளைக் கைது செய்யவோ எந்தவித அர்த்தமுள்ள நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அனேகமாக இரண்டு நாட்கள் வரை எதுவித ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சனாதிபதியோ அல்லது சிரேஷ்ட அமைச்சர் எவருமோ அமைதி, ஒழுங்கு பேணும்படியும், கட்டுபாட்டோடு நடந்து கொள்ளும்படியும் பொதுமக்களுக்கு எவ்விதப் பகிரங்க வேண்டுகோளையும் விடுக்கவில்லை. அரசினுள்ளும், ஆளும் கட்சியினுள்ளும் உள்ளவர்கள் வன்செயலை வழிநடத்தியதாக அல்லது இரத்தக் களரியை ஊக்குவித்ததாகப் பரவலான ஒரு நம்பிக்கை நிலவியது. வன்செயலின் காரணங்களை விசாரிப்பதற்கோ, இவ்விதக் குற்றப் பொறுப்புகளிலிருந்து அரசை விடுவிப்பதற்கோ எவ்வித விசாரணை ஆணைக்குழுவும், எக்காலத்திலும் நியமிக்கப்படவில்லை.
குழப்பங்கள் இடம்பெற்று நான்கு நாட்களின் பின்னர் அரசியல் தலைவர்கள் மெளனம் கலைந்து பேசிய போது அரசும், பெரும்பான்மை சிங்கள சமூகமும் ஒன்றே என்று கூறினர். சனாதிபதி ஜூனியஸ் ரிச்சார்ட் ஜயவர்தன குழப்பங்கள் நகர்ப்புறத்துக் கலகக் கும்பலின் முயற்சியின் விளைவு அல்லவென்றும், மாறாக அது சிங்கள மக்களின் ஒரு வெகுஜன இயக்கமென்றும் கூறினார். சிங்கள மக்களின்
8

இயற்கையான விருப்புக்கள், மற்றும் வேண்டுகோள்களை நிறைவேற்றி அவர்களைச் சாந்தப்படுத்த வேண்டிய அரசியல் தேவை இருந்ததென்றும் கூறினார். அதே போன்று, தொலைக்காட்சியில் உரையாற்றிய தேசிய பந்தோபஸ்து அமைச்சர் லலித் அத்துலத்முதலி உட்படச் சிரேஷ்ட அமைச்சரவை அங்கத்தினர் எவருமே இப் பயங்கரமான ஆத்திரமூட்டல் நிகழ்ச்சியில் பலியானவர்கள் குறித்து எதுவித இரக்க வார்த்தையையும் பேசவில்லை. எந்த அமைச்சரும், துயருற்றவர்களோடு ஒரு சில நிமிடங்களேனும் கவலையைப் பகிர்ந்து கொள்ளுவதற்கு எந்த அகதிமுகாமுக்கும் செல்லவில்லை. இந்த முறை சனாதிபதியின் நடத்தை, 1981 கலகங்களின் பின்னர் சமாதானப்படுத்தும் விதத்தில் அவர் நடந்து கொண்டதிலிருந்து முழுக்க முழுக்க நேர்மாறான ஒன்றாகவிருந்தது. அவர் அந்த சந்தர்ப்பத்தில், “எனது கட்சி அங்கத்தவர்கள் சிலர் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் வன்செயல்களை ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பேசியதற்காகவும், இதன் விளைவாகக் கொலைகள், கற்பழிப்பு மற்றும் தீவைப்பு சம்பவங்கள் இடம்பெற்றமைக்காகவும் மனம் வருந்துகிறேன்.” என்று கூறியதாகச் சொல்லப்பட்டது. சனாதிபதி மேலும், தமது கட்சி அங்கத்தவர்கள் தொடர்ந்தும் இனத்துவ வன்செயலுக்கும், சாதி, இனக்குருட்டுத் தனத்துக்கும் ஊக்கமளித்தால் தான் பதவியை ராஜினாமாச் செய்யப் போவதாகவும் கூறினார்.
அனைவரையும் பெருமளவுக்குத் திகிலடையச் செய்த நிகழ்ச்சி 1983 ஆடி 25 ஆம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம் பெற்றது. சிறைக் காவலரின் ஒத்தாசையோடு முப்பத்தொன்பது தமிழ்த் தடுப்புக் காவல் கைதிகளை, சக கைதிகள் பொல்லுகள், குழாய்கள், மற்றும் இரும்புத் தடிகள் கொண்டு தாக்கியும் வெட்டியும் கொன்றனர். அரசாங்கம் ஒரு வழமையான நீதிவான் விசாரணையை நடத்தியது. ஆயினும் இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக் கை எடுக் கும் எந்த வித முயற் சரியும் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டு தினங்கள் கழித்து மேலும் அதிகமான தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர்.
9

Page 17
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு இன்னமும் நிவாரணம் வழங்கவில்லை. அவர்கள் எடுத்த சட்ட நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லையென்று
அரசு வாதாடியது.
1983 இனக் கலவரங்களின் காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்துப் பல புலமையாளர்கள் எழுதியுள்ளனர். பிரித்தானிய மானுட நாகரீகவியலாளர் ஸ்பென்சர் அதை "கூட்டு ஆன்மாவின் பயங்கர இரவு” என வர்ணித்துள்ளார். இயற்கை எழிலுக்கும், அதன் மக்களின் இன்முகம், விருந்தோம்பல் என்பனவற்றுக்கும் உலகப்புகழ் எய்திய இத்தீவுச் சமூகம் இத்தகைய கூட்டுக் காட்டுமிராண்டித்தனம் மற்றும் மனிதத் தன்மையற்ற செயல்களில் இறங்கியது எவ்வாறு? தேசிய வாதம் குறித்த சிந்தனைகளில் தமிழர்களுக்கும் , சிங்களவர்களுக்கும் இடையில் நிலவிய முரண்பாடான தன்மைகள் இந் நெருக்கடிக்கு வித் திட்டதாகச் சிலர் கூறியுள்ளனர். இரு திறத்தினரதும் தேசிய வாதம் குறித்த கருத்துக்கள் ஒத்துப் போகாதவையும், பகைமையுணர்ச்சி கொண் டவையுமாகும் . 1983 இன வண் செயலுக்கு மூலகாரணங்களைத் தேடும் வேறு சிலர் தமிழரைப் பேய்க் கணங்களாகச் சித்தரித்த வரலாற்று ரீதியான கற்பனைக் கதைகளை உதாரணங் காட்டியுள்ளனர். பொது மக்களின் நம் பிக் கையில் "புலிகள் எங்கும் நிறைந்துள்ள பிசாசுக்கணங்களின் அமானுஷ்ய, ஈவிரக்கமற்ற தன்மை மற்றும் தந்திரம் என்பவை நிறைந்தோர் ஆவர்” என்று ஸ்பென்சர் குறிப்பிடுகின்றார். இதனால் சாதாரணத் தமிழ்க் குடிமக்களும் இத்தகையோரே என்ற சிந்தனை எழுந்ததென்றும் அவர் கூறுகின்றார். கர்ண பரம்பரைக் கட்டுக்கதைகள், வோல்டேர் கூறியது போன்று, "நடக்க முடியாதவற்றை ஒருவர் நம்பத் தொடங்கினால் எத்தகைய கொடூரத்தையும் புரியத் தயங்க மாட்டார்”, என்பதை எமக்கு நினைவூட்டுகின்றன. வேறு சிலர் பெரும்பான்மை சமூகத்தின் கோட்பாட்டைச் சிரமேல் ஏற்று, ஒற்றையாட்சி அமைப்பைத் தீவிரமாகப் பலப்படுத்தும் அதிகாரத்துவவாத அரசியற் கட்டமைப்புகளை
10

வன்செயல் போக்குகளுக்கான காரணமாகக் கூறுகின்றனர். 1981 இல் இடம்பெற்ற, பாராளுமன்றத்தின் ஆயுளை நீடித்த பொதுசன வாக்கெடுப்பு அரசியல் பகைமையுணர்வு மற்றும் சகிப்பின்மை போன்ற சூழல்களை மேலும் மோசமாக்கியது.
1983 இன் துயர நிகழ்வுகள் தமிழ்ச் சமூகத்தின் அரசியலில் பாரதூரமான மாற்றங்களை ஏற்படுத்தி அதன் போராட்ட முறைகளையும் மாற்றியமைத்தது. அரசியலமைப்பு ரீதியான எதிர்ப்புப் போராட்டங்களில் நம்பிக்கை வைத்திருந்த அரசியல் தலைவர்கள் ஒரந்தள்ளப்பட்டு, தமிழ்ப் போராளித் தன்மை மேலோங்கியது. அடக்கு முறையாளன் தொடர்ச்சியாகக் கையாளும் வன்செயலோடு ஒப்பிடும்போது அதை எதிர்த்துக் கிளர்ந்தெழுவோரின் வன்முறை ஒரு வித்தியாசமான தார்மீக அடிப்படையைக் கொண்டதெனச் சிலர் விவாதித்தனர். இது ஒரு ஆபத்தான கோட்பாடாக இருந்தது. ஏனெனில் பலியாகுவோரின் வன்செயல் விரைவில் அவர்களையே பலிகொள் ளத் தொடங் கியது. ஆரம் பத் தில் அடக் குமுறையாளாரின் குணாம் சமாக விளங் கிய இனக்குருட்டுத்தன்மை மற்றும் சகிப்பின்மை என்னும் பிசாசுக் குணங்கள் போராளிகளைப் பற்றி ஆட்டுவிக்கத் தொடங்கின. இம்மாற்றங்கள் சகோதரத் தமிழர், சிங்களவரல்லாத முஸ்லீம்கள் குறித்த வன்செயல்கள் மற்றும் காத்தான்குடிப் பள்ளிவாசல், வெலிக்கந்த, மெதிரிகிரிய தாக்குதல்கள் மற்றும் மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களிலிருந்து முஸ்லீம்கள் பலாத் காரமாக வெளியேற்றப்பட்டமை என்பவற்றில் வெளிப்பட்டன.
ஒரு தசாப்தம் முடிவடைந்த பின்னர், அடிப்படைப் பிரச்சினைகள் தீர்வு காணப்படாத நிலையிலும், ஓரளவுக்கு மேலும் சிக்கலுற்ற நிலையிலும் காணப்படுகின்றன. 1993 இல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உதவி வழங்கும் நாடுகள் அமைப்பில் உரை நிகழ்த்துகையில் “வேறு நாடுகளின் அனுபவத்திலிருந்து எண்ணிறந்த பாடங்களை வரலாறு எமக்குப் போதிக்கின்றது. ஒரு சிறுபான்மையின்
11

Page 18
பிரச்சினைகளை அடக்கு முறையை ஏவிவிடுவதன் மூலமோ பெரும்பான்மை இனத்தவரின் உணர்ச்சிகளை மதிக்காமல் இஷ்டப்படி செயற்படுவதன் மூலமோ தீர்க்க முடியாது என்பதே இப்பாடங்களாகும். ஒரு கெளரவமான தீர்வுக்கு ஒரு அங்கீகாரம் பெற்ற நல்லிணக்கம் அவசியம். ஆகவே இத்தகைய ஒரு நல்லிணக்கத்தின் அடிப்படையிலான ஒரு சமாதானத் தீர்வுக்கான முயற்சிகளை நாம் தளர்த்தப் போவதில்லை." என்று கூறினார். ஆயினும் இதுவரையில் இலங்கை அரசியல் தலைமை இத்தகைய ஒரு நல்லிணக்கத்தை எட்டுவதற்கான அரசியல் சாணக்கியத்தையோ, கொள்கை உறுதியையோ அல்லது அவசர உணர்வையோ வெளிப்படுத்தவில்லை.
ஆரம்ப அபாயச் சங்குகள்
பிரிட்டன் இலங்கைக்கு 1948 இல் அரசியல் அதிகாரத்தைக் கைமாற்றிய வேளையில் இடம்பெற்ற அரசியலமைப்பு ஏற்பாடுகள் குறித்து இலங்கையின் இனத் துவச் சிறுபான்மையினர் மகிழ்ச்சியுறாத போதிலும், ஒரு பல்லினச் சமூகத்தைத் தாபிப்பதில் இந்த ஏற்பாடுகள் பெருமளவில் தோல்வி கண்டன என்பதோடு பெரும்பான்மையினத்தின் ஆட்சியைத் தொடர்ந்து விரைவிலேயே பாரபட்ச ரீதியிலான சட்டவாக்க நடவடிக்கைகள் இடம்பெறுமென்றும் எவரும் எதிர்பார்க்கவில்லை. இத்தகைய முதலாவது நடவடிக்கை குடியுரிமைச் சட்டங்கள் குறித்ததாகும். இச் சட்டங்கள் பயனுறுதியுள்ள வகையில் , சமீபத் திய இந்திய வம்சாவளியினரான பெருந்தோட்டத் தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறித்தன. இச் சட்டம் பாரபட்சமுள்ள குடியுரிமைச் சட்டங்களை எதிர்த்துப் போராடுவதற்கென இனத்துவ அடிப்படையிலான தமிழ்க் கட்சிகள் உருவாகுவதற்கு வழி சமைத்தது. அவை தேசிய மொழிகள் அந்தஸ்தில் சமத்துவத்தையும் ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பை உருவாக்குவதையும் வலியுறுத்தின.
இனத் துவ சனசமூகங்கள் பரிளவுண் டு மேலும் எதிர்த்துருவங்களாகிக் கொண்டிருந்தன. அரசியல்
12

உரையாடல் என்பது வேறுபாடுகளையும், உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் ஏற்படுத்தும் ஒன்றாகிக் கொண்டிருந்தது. 1956 பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அரசியல் மற்றும் இனத்துவ ரீதியிலான துருவப்படுத்தல் அதிகரித்தது. தேர்தலில் பூரீலங்கா சுதந்திரக் கட்சி வடகிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பாரிய பெரும்பான்மையோடு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. இக்கட்சியின் வெற்றி சிங்கள பெளத்த தேசியவாத சக்திகளின் மீள்முனைப்பைக் குறித்ததோடு, வட-கிழக்கில் சமஷ்டிக் கட்சியின் வெற்றி ஒரு புதிய வடிவிலான தமிழ்மொழிசார் தேசிய வாதத்தின் பரிணமிப்பைக் குறித்தது. துரதிருஷ்டவசமாக, 1950 களின் நடுப்பகுதி நிகழ்வுகள் காரணமாக ஒரு விதமான தேசியவாதத்தை வலியுறுத்துவது, மற்றதை மறுப்பதாக அர்த்தம் கொள்ளப்பட்டது.
வியாபிக்கும் முரண்பாடு மற்றும் இடம்பெறக் கூடிய வன்செயல் குறித்த இரு முக்கிய எச்சரிக்கைகள் கிடைத்தன. ஒன்று, கேம்பிரிட்ஜ் கழகக் கல்வியியலாளரும் இலங்கைக் காணி ஆணைக்குழுவின் முன்னைநாள் அங்கத்தவருமான பேர்ட்ரம் பாமர் அவர்களின் தனியாக்கமாகிய "இலங்கை: ஒரு பிளவுற்ற தேசம்” (லண்டன் - 1963) என்பதாகும். இதில் ஆசிரியர் முரண்பாட்டின் வளர்ச்சியுறும் சிக்கல்களையும், ஒரு விரைவான தீர்வுக்கான தேவையையும் வலியுறுத்தியிருந்தார். இரண்டாவது முக்கியமான ஆரம்பகால எச்சரிக்கை வந்தது முன்னணி இடதுசாரி அரசியல் வாதியான கொல்வின் ஆர்.டி. சில்வா அவர்களிடமிருந்தாகும். அரச கரும மொழிகள் சட்டம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வெச்சரிக்கையை அவர் விடுத்தார். பெரும்பான்மை சமூகத்தின் அரசகரும மொழியை மொழிவாரியான சிறுபான்மை இனத்தின் மீது திணிக்கும் முயற்சி அபாயகரமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்துமென்று அவர் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: "இரு மொழிகள் ஒரு தேசம்; ஒரு மொழி இரு தேசங்கள்”. மொழிப் பிரச்சினையைச் சிறுபான்மையோருக்குத் திருப்தியான
13

Page 19
முறையில் தீர்க்கத் தவறினால் அது இறுதியில் ஒரு பிரிவினை இயக்கத்துக்கு வழிகோலுமென்று அவர் ஆரூடம் கூறினார்.
ஆயினும், இவ்வாரம்பகால அபாய அறிவிப்புகள் செவிடன் காதில் ஊதிய சங்கு ஆயின. அந்த வேளையில் இவ்வெச்சரிக்கையை ஏற்று அதற்கிணங்க அர்த்தமுள்ள வகையில் செயற்படக் கூடிய அரச சார்பற்ற நிறுவனம் எதுவும் இருக்கவில்லை. உயர் வாழ்க்கைத் தொழில் அமைப்புகளும், மதக் குழுக்களும் கூட பெரும்பான்மை இன உணர்ச்சிப் பிரவாகத்துக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க மனதற்றோராய் இருந்தனர்.
சமஷ்டிக் கட்சி, பாராளுமன்றத்துக்கு வெளியில் இடம்பெற்ற சத்தியாக்கிரகம் உட்பட பாரபட்சம் நிறைந்த மொழிச் சட்டவாக்கத்துக்கு எதிராக அஹிம்சை வழியிலான போராட்டங்களைத் தொடர்ந்தது. அஹிம்சை வழியிலான இந்த மறுப்பு இயக்கங்களின் போது அமைதியான சத்தியாக்கிரகிகளுக்கு எதிராகக் காடையர் கும்பலின் வன்செயல் ஏவிவிடப்பட்டது. இது படிப்படியாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தமிழ்ச் சமூகத்துக்கு எதிரான கூட்டு வன்செயல் நிகழ்வுகளாக மாற்றமுற்றன. அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுச் செய்தித் தணிக்கையும் கொண்டு வரப்பட்டது. இதன் விளைவாகத் தமிழ் மக்களுக்கெதிராக முடுக்கிவிடப்பட்ட வன்செயலின் அளவு மற்றும் உக்கிரம் குறித்த எவ்விதத் தகவலும் வெளிவரவில்லை. மேலும், பிரத்தியேகமாக பொலிசார் தலையிடத் தவறிய 1958 இன் முதல் வன்செயல் நிகழ்வுகள் குறித்து விசாரிப்பதற்கு விசாரணை ஆணைக்குழு எதுவும் நியமிக்கப்படவில்லை. இது விடயத்தில், புகழ்பெற்ற இலங்கைப் பத்திரிகையாளரான தார்சி விட்டாச்சியின் வெளியீடாகிய “58 அவசரகால நிலை” ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்நூல் நடைமுறை நிகழ்வுகள் குறித்து மட்டுமன்றி, சமூகங்களுக்கிடையில் சீரழிவுற்றுவரும் இனத்துவ உறவுகள் குறித்தும் தகவல்களைத் தரும் ஒரு கருவூலமாகும்.
14

உள்ளூர்ப் பிரதி விளைவுகள்
வியாபிக்கும் முரண்பாட்டுக்கும் வன்செயல் நிகழ்வுக்கும் ஆரம்பப் பிரதிவிளைவாக குடியியல் சமுக நிறுவனங்கள் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளை ஒழுங்கு செய்வதில் ஈடுபட்டன. சில சந்தர்ப்பங்களில் உள்ளூர் நிவாரணப் பணி அமைப்புகள் மதக் குழுக்களோடு சேர்ந்து உள்ளூரில் இடம்பெயர்ந்தோருக்கு ஏற்படுத்தப்பட்ட அகதி முகாம்களில் தங்கியுள்ளோருக்கு உணவு மற்றும் வேறு அத்தியாவசியப் பொருட்களை வழங்கின. 1958 இலும் மீண்டும் 1977 இலும் இடம்பெற்ற வன்செயல்கள் இலங்கையின் தெற்கிலிருந்து மக்கள் வடக்கு-கிழக்கை நோக்கிப் புலம்பெயர வைத்தன. இத்தடுக்க முடியாத நிகழ்வு மீள்-குடியேற்றப் பிரச்சினைகளை ஏற்படுத்தின. இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவுமாறும், பிள்ளைகளின் கல்வி மற்றும் உடல் உழைப்பாளர்களுக்கான மீள் வேலைவாய்ப்பு விடயத்திலும் உதவிபுரியுமாறும் நிவாரணப் பணி அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 1956 மற்றும் 1977 வன்செயல்களுக்குப் பின்னர் உதவி வழங்கிய முகவர் நிலையங்களுள் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கமும் ஒன்றாகும். ஆயினும் அதன் தலையீடு உடனடி மனிதாபிமானச் சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்பட்டதாக இருந்தது. செஞ்சிலுவைச் சங்கம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்குக் கணிசமான அளவு வெளிநாட்டு உதவியையும் பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவிருந்தது.
இலங்கையில் 1970 களின் ஆரம்பத்தில் பல முக்கிய அரசு சார்பற்ற நிறுவனங்கள் தாபிக்கப்பட்டன. இவை படிப்படியாக இனத்துவ முரண்பாடு மற்றும் அதன் விளைவான வன்செயல்கள் தொடர்பிலான மனித உரிமை, அரசியல் மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துச் செயற்படும் இயலுமையைப் பெற்றுக்கொண்டன. குடியியல் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாத்து முன்னெடுக்கும் நோக்கத்தோடு 1971 இல் உருவாக்கப்பட்ட குடியியல் உரிமைகள் இயக்கம் (சிஆர்எம்) இக்காலகட்டத்தில்
15

Page 20
நிகழ்ந்த முக்கியம் வாய்ந்த குடியியல் சமூக முன்முயற்சியாகும். அது தனது சுதந்திரத்தையும், பக்கச் சார்பின்மையையும் வன்செயலைத் தடுக்கும் நோக்கத்தை ஈட்டுவதற்கும் பதிலாக உண்மையில் சட்டமின்மை மற்றும் வன்செயல் அதிகரிக்கும் ஒரு சூழ்நிலையையே உருவாக்கும். அரசியற் கருத்து வேறுபாட்டாளர் மற்றும் சிறுபான்மையினர் மீதான மனித உரிமை மீறல்கள், கொடூரமாக நடத்துதல், சித்திரவதை மற்றும் தடுப்புக் காவலில் மரணம், எதேச்சையான கைது, காலவரையறையற்ற தடுப்புக் காவல், இத்தகைய மனித உரிமை மீறல் கள் சம்பவிப்பதற்கு வழிவகுத் த அவசரகாலநிலைப் பிரமாணங்கள், கட்டாயப்படுத்திப் பெற்றுக் கொள்ளப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களின் செல்லுபடியாகுந் தன்மை என்பவை குறித்துத் தகவல்களைத் திரட்டி அறிக்கைகளைத் தயாரித்துள்ளது.
சிறுபான் மையோருக்கும் , அவர் களது அரசியற் பிரதிநிதிகளுக்கும், அரசியற் கட்சிகளுக்கும் எதிராக இராணுவமும், பொலிசும் நிகழ்த்தியதாக சார்த்தப்படும் வன்செயல் நிகழ்வுகள் குறித்து ஆவணப்படுத்தியதோடு சட்டத்தையும், ஒழுங்கையும் பேணுவதற்குப் பயனுறுதியுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசைத் தூண்டியது.
பெருந்தோட்டத் தமிழருக்கெதிரான வகுப்புவாத வன்செயல் நிகழ்வுகளைப் பதிவிலிட்டதோடு, குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கும், பாதிப்புற்றோருக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் பயனுறுதியுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசைத் தூண்டியது. பெருந்தோட்டத் தமிழர்களுக்குப் பிரஜா உரிமை மற்றும் வாக்குரிமையை வழங்குமாறும், அவர்களின் கல்வி வசதிகளை அதிகரிக்குமாறும் ஒரு சீஆர்எம் மகஜர் மேலும் விதந்துரைப்புச் செய்தது. -
சாதி, இனப் பாகுபாடுகளை ஒழித்தல் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்புக் குறித்த விருப்பத் தெரிவு ஒப்பந்த வரைவு போன் ற சர் வதேச உடன் படிக் கைகளை
16

நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்துக்கு ஊக்கமளித்தது. மேலும் தனிமனிதர் உரிமைகளை மேலும் பயனுறுதியுள்ள வகையில் பாதுகாப்பது உள்நாட்டில் மேலும் சிறந்த இனத்துவ உறவுகளுக்கு இட்டுச் செல்லும் என எதிர்பார்த்து, வேறு இருபத்து மூன்று சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளை ஏற்றுக் கையொப்பமிடுமாறு சீஆர்எம் அரசாங்கத்தைத் தூண்டியது.
1983 ஆடியில் இடம்பெற்ற கூட்டு வன்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, வெலிக்கடைச் சிறைச்சாலைக் கைதிகள் மற்றும் தடுப்புக் காவல் கைதிகளின் படுகொலை உட்பட வண் செயலுக்கு அரசும் உடந்தையாக இருந்ததை அம்பலப்படுத்தியது. மேலும் இச் சிறைப்படுகொலையில் பலியா கியோரின் குடும்பங்களின் சார்பில் சீஆர்எம் வழக்குகளைத் தாக்கல் செய்தது.
1977, 1993 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறைகளில் தலையீடு செய்தது. இது தனிமனித மற்றும் சிறுபான்மையோர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு ஆகும். முரண்பாட்டின் தீர்வுக்கு அரசியற் பேச்சுவார்த்தைகளை ஊக்கப்படுத் தியதோடு, இதில் சம்பந்தமுள்ள இரு சாராரிடையிலும் பகைமைச் செயல் நிறுத்தம் ஏற்பட வேண்டுமென்றும் வேண்டியது. இம் முரண்பாட்டுக்குத் தீர்வு காண்பதில் இரு சாராரும் ஐக்கிய நாடுகள் அமைப்போடு ஒத்துழைக்க வேண்டுமென்றும் அது வேண்டியது.
சீஆர்எம் மனித உரிமை மீறல்களைத் தொடர்ச்சியாக அவதானிக்கவும், ஆவணப்படுத்தவும், அதிகரித்த ஆழமான பிளவுகள் மற்றும் எரிச்சல் மனக்கசப்பு நிறைந்த சூழ்நிலையில் தனது தார்மீக அதிகாரத்தைத் தொடர்ந்து பேணிக்கொள்ளவும் இயலுமை கொண்டிருந்த காரணத்தால் இனத்துவ முரண்பாடுகள் குறித்துப் பயனுறுதியுள்ள வகையிலும், நேர காலத் தோடும் எச்சரிக் கைகளை விடுக்கவும் , நடவடிக்கைகளை எடுக்கக் கூடியதாகவுமிருந்தது.
17

Page 21
உரிமைகள் மற்றும் சனநாயக விழுமியங்கள் குறித்த விடயங்களில் கவனத்தைச் செறிவாக்கியும், பயனுறுதியுள்ள வகையில் பேணியும் வந்துள்ளதோடு, கரிசனைக்குரிய இவ்விடயங்களை அரசியலமைப்பு மற்றும் சட்டச் சீர் திருத்தங்களோடு இணைக்கவும் முயன்று வந்துள்ளது ஆயினும் நாடெங்கும் இடம்பெறும் தொடர் சுற்றான வன்செயல்கள், அரசுக்கு வழங்கப்பட்டுள்ள குற்றப் பொறுப்பின்மை மற்றும் மனித உரிமை மீறல்கள் விடயத்தில் வகைப்பொறுப்பின்மை, மற்றும் பிரத்தியேகமாக அடிமட்டத்தில் செயற்படும் மனித உரிமைப் பாதுகாப்புச் செயற்பாட்டாளர் மீதான தாக்குதல்கள் என்பவை காரணமாக சீஆர்.எம் விரக்தி நிலையிலுள்ளது. இலங்கையின் இனத்துவ முரண்பாட்டுக்கான தீர்வு விடயத்தில் சர்வதேச நியமங்களையும், ஒப்பீட்டு அனுபவங்களின் செழுமையையும் பிரயோகிக்கும் வகையில் சீஆர்எம் பயனுள்ள பங்களிப்பை நல்கியுள்ளது. (1990 மார்கழி 10 ஆம் திகதி சீஆர்எம் மனித உரிமைகளுக்கான கார்ட்டர்-மெனில் கெளரவ விருதைப் பெற்றுக் கொண்டது.)
இனங்களுக்கிடையிலான நீதி, மற்றும் சமத்துவத்துக்கான இயக்கம் (மேர்ஜ்) 1997 இன வன்செயல்களை அடுத்து இனத்துவக் குழுக்களிடையே செளஜன்ய உறவை அபிவிருத்தி செய்வதற்கென நிறுவப்பட்ட மேலுமொரு அரசு சார்பற்ற நிறுவனமாகும். பல்வேறு இனத்துவக் குழுக்களைச் சேர்ந்தோர் மேர் ஜில் அங்கத்துவம் வகிக்கின்றனர். நாடுபரந்த ரீதியில் அதற்குக் கிளைகள் உண்டு. 1988 வரை அதற்கு யாழ்ப்பாணத்தில் தீவிர செயற்பாடுமிக்க கிளை ஒன்றும் இருந்தது. மேர்ஜ் தாபிதம் பெற்ற நாட் தொடக்கம் மோசமடையும் இனத்துவ உறவுகளை அவதானித்து வந்துள்ளதோடு, தமிழ்மக்களின் தனிமனித மற்றும் கூட்டு உரிமைகளைப் பாதுகாக்க பயனுறுதியுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையையும் உணர்ந்துள்ளது. அது 1981 மற்றும் 1983 இன வன்செயல்களின் போது பல உண்மை நிகழ்வறியும் முயற்சிகளை மேற்கொண்டு நிகழ்வுகள் குறித்த அறிக்கைகளைத் தயாரித்ததோடு, புறநிலையதார்த்த
18

வகையிலான, பாரபட்சமற்ற தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்தது. சமத்துவம் மற்றும் சமமான வாய்ப்புகள் என்பவற்றின் திண்ணிய அடிப்படையிலமைந்து விளங்கும் ஒரு பல்லினப் பாங்கான இலங்கைச் சமுதாயம் என்னும் எண்ணக் கருவை அது பரப்பியது. அது சமீபத்தில் இந்த யதார்த்த நிலையை அங்கீகரிப்பதும், சகல இனத்துவக் குழுக்களினதும் சமூக, கலாசார மற்றும் அரசியல் அபிலாஷைகளுக்கு இடமளிக்கக் கூடியதுமான அரசியல் கட்டமைப்புக்கள் வேண்டுமென்று அறைகூவல் விடுத்துள்ளது. இந்நோக்கங்களைக் கருத்திற் கொண் டு மேர் ஜ் பின் வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுழைக்கின்றது:
9 இனத்துவ முரண்பாடு மற்றும் அதன் தீர்வுகள் குறித்த நிகழ்வுகளில் சமநிலை அறிக்கையிடுதலை உறுதி செய்யும் விதத்தில் தமிழிலும், சிங்களத்திலும் இரு செய்திப் பத்திரிகைகளை வெளியிட்டு வருகின்றது.
யாழ்ப்பாணத்துக்குச் சமாதான யாத்திரைகளை ஒழுங்கு செய்வது உட்பட, கலாசார நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் கல்வியூட்டல் நிகழ்ச்சித் திட்டமொன்றில் ஈடுபட்டுழைத்து வருகின்றது.
0 தடுப்புக் காவல் கைதிகளுக்குச் சட்ட உதவிகளை வழங்கியதோடு, 3,000 க்கு மேற்பட்ட இத்தகைய விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தது.
0 சமஷ்டி வடிவிலான அதிகாரப் பகிர்வு, மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்குப் பயனுறுதியுள்ள பாதுகாப்பு என்பவற்றின் அடிப்படையிலமைந்த மாதிரி அரசியலமைப்பு ஒன்றை வடிவமைத்தது. இவ் வரைபில் இடம்பெறும் சில எண்ணக்கருக்களையும், யோசனைகளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு ஆதரவு கோரி நிற்கின்றது.
இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையம் சர்வதேச பணிப்பாணையையும், சர்வதேச பணிப்பாளர் சபையையும்
19

Page 22
கொண்டு விளங்கும் ஒரு அரச சார்பற்ற நிறுவனமாகும். அதுவும் உள்நாட்டு முரண்பாட்டுப் பிரச்சினைகளில் ஆக்கபூர்வமான, குறிப்பிடத்தக்க அளவு முக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளது. 1982 இல் தாபிக்கப்பட்ட இவ்வமைப்புக்கு கொழும்பிலும் பேராதனையிலுமாக இரு அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு கிளையும் தனது தனித்துவமான கருத்திட்டங்களை அபிவிருத்தி செய்து வருவதோடு, நிதி ஆதாரங்களையும் தேடிக் கொள்கின்றது. இடம்பெற்று வரும் சமாதான முயற்சிகள் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தச் செயன்முறை குறித்த ஒரு முக்கிய குடியியல் சமுதாய வளமாக இந்நிலையம் கருதப்படுகின்றது. அது இனத்துவ முரண்பாட்டோடு வாழ்வாதாரமான பிணைப்புக் கொண்ட அதிகாரப் பகிர்வு மற்றும் இரு மொழி அங்கீகாரம் என்னும் இரு பிரதான கொள்கை விடயப்பரப்புகளின் அபிவிருத்திக்குத் துடிப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றது.
1982 தொடக்கம் 1987 வரை, இலங்கையின் பொதுசன அபிப்பிராயப் பிரவாகத்துக்கு எதிராக, இந் நிலையம் ஒரு பல்லினச் சமூகத்தை உருவாக்கும் தேவை குறித்தும், இனத்துவ முரண்பாட்டைக் குறைக்கும் கட்டமைப்பு ஏற்பாடுகளையும், கொள்கைகளையும் நடைமுறைக்கிட வேண்டிய தேவை குறித்தும் வலியுறுத்தியது. 1983 கலவரங்களின் போது உயிரிழந்தோர் மற்றும் உயிர் பிழைத்தோர் குறித்த ஆய்வுகளை நடாத்தி, தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்குக் கல்வியை எ வி வாறு பயன் படுத் தலாம் என் பது குறித் த விதந்துரைப்புகளைச் செய்தது. இலங்கை-இந்திய ஒப்பந்தம் இலங்கை ஒரு பன்மைத்துவ, பல்லினப்பாங்கான பல மதங்களைக் கொண்ட ஒரு சமுதாயம் என்பதை அங்கீகரித்தமை இந் நிலையத்தின் பணியைப் பொறுத்த வரையில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையம் விழுமியங்களை உருவாக்கும் செயன்முறைக்குக் கவனஞ் செலுத்துவதும், பல்லினப்பாங்கு இனத்துவ சகிப்புத்தன்மை மற்றும் மத செளஜன்யம் என்பவற்றை
20

மதிப்பதுமான ஒரு செயல்துடிப்புள்ள வெகுசன தொடர்புச் சாதன நிகழ்ச்சித் திட்டத்தையும் அமுல்படுத்தி வருகின்றது. இது இனத்துவத் துயர் முறையீடுகளுக்கு ஒரு பிரதிவிளைவாகவும், சனநாயக கப் பங்கேற்றலைச் சக்திப்படுத்தும் முகமாகவும் இலங்கை முழுவதும் மாகாண சபைகளை ஏற்படுத்துவதற்கு ஊக்கமளித்து வந்துள்ளது.
1987 முதல் இலங்கை ஓர் இரு மொழிச் சமுதாயமாகவும், சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழி அந்தஸ்தைக் கொண்டும் விளங்குகின்றன. அரசாங்கத்தின் மொழிக் கொள்கையை அமுல்படுத்துவதற்கு ஓர் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவைத் தாபிக்கும் விடயத்தில் சட்டவாக்கத்தை வரைவதிலும் இந்நிலையம் பயனுறுதியுள்ள பங்களிப்பைச் செய்துள்ளது.
சர்வதேச பிரதிவிளைவுகள்
இலங்கையின் இனத்துவ முரண்பாட்டில் சர்வதேச சமூகம் அதிகரித்து வரும் கரிசனையை வெளிக்காட்டி வருவதோடு நேரடியாகச் சம்பந்தமுற்றும் வருகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழு (ஐ.சீ.ஆர்.சீ) யுத்தத்தினால் பாதிப்புற்ற பிரதேசங்களுக்குப் பிரத்தியேக மனிதாபிமான் உதவிகளை வழங்கி வருகிறது. அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையாளர் (யூ.என்.எச்.சீ.ஆர்) உள்நாட்டில் இடம் பெயர்ந்தோருக்கான ஓர் அவசரகால உதவி நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைக் கிட்டுள்ளார். காணாமற் போவோர் குறித்த ஐ.நா. செயற்பாட்டுக் குழு இலங்கைக்கு இரு தடவைகள் விஜயஞ் செய்ததோடு, அறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதி உள்நாட்டில் இடம் பெயர்ந்தோர் நிலைமைகள் குறித்து அறிக்கையிடுவதற்காக 1993 இல் இங்கு வருகை தந்தார். மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவதிலும், சிறுபான்மையின் மனக்குறைகளை விசாரணை செய்வதிலும் முரண்பாட்டுக்கான ஒரு தீர்வுக்கு ஊக்கமளிப்பதிலும், மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவதிலும் சர்வதேச
21

Page 23
அரசு சார்பற்ற நிறுவனங்களும் துடிப்பாகச் செயலாற்றி வந்துள்ளன.
அவசரகாலச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்புச் சட்டவாக்கத்தின் அனைத்துமடங்கும் மீள்பார்வை, சித்திரவதை, ஆட்கள் காணாமற் போதல், நீதிமுறைசாராக் கொலைகள், மற்றும் எதேச்சையான கைதுகள் போன்ற நிகழ்வுகளை அறிக்கையிடுதல் என்பவற்றில் குறிப்பாகச் சர்வதேச மன்னிப்புச் சபையின் பணி முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருந்துள்ளது. அதே போன்று சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு, லோ ஏசியா, மற்றும் ஏசியா வோச் போன்ற அமைப்புகள் இனத்துவ முரண்பாட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை செய்து வெளியிட்ட அறிக்கைகள் உலகின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்துள்ளன. இந்த ஆவணங்கள் பாரிஸில் வருடாந்தக் கூட்டங்களை நடாத்தும் உதவி வழங்கும் நாடுகள் கூட்டுதவிக் குழுமத்துக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், பாரபட்சத்தைத் தடுத்து சிறுபான்மையோரைப் பாதுகாப்பதற்கான உப-குழுவுக்கும் உதவிகரமாக இருந்துள்ளன. மெட்சீன் சோன்ஸ் புரொன்டீயர்ஸ் அமைப்பு வடக்குக் கிழக்கிற்கு மருத்துவ நிவாரண உதவிகளை வழங்குவதோடு, யுத்தத்தாற் பாதிப்புற்ற பிரதேசங்களுக்கு ஆகக்குறைந்த அளவிலான வைத்திய சேவைகளேனும் கிடைப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏறக்குறைய இரு தசாப்த காலமாக இவ்வமைப்புகள் தலையிட்டிருக்காவிடில் இலங்கையில் மனிதாபிமான நெருக்கடியும், அதன் உடன் நிகழ்வாகிய தீவிர, தொடர் மனித உரிமை மீறல்களும் இதைவிட மோசமான விளைவுகளைக் கொணர்ந்திருக்கும். பலவருட காலமாக இலங்கையின் உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் தடுப்புக்காவல் கைதிகளின் நிலைமைகளை அவதானிப்புச் செய்வதற்கும், மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஐ.சீ.ஆர்.சீ யின் உதவியை நாடுமாறு இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி வந்துள்ளன. ஐ.சீ.ஆர்.சீ. இலங்கையிலிருப்பது இலங்கையில் ஒரு சிவில் யுத்தம் இடம்பெறுகின்றது என்னும் அபிப்பிராயத்தை
22

ஏற்படுத்துமென்ற அளவுமீறிய சட்டவாதப் போக்கை எடுத்த இலங்கை அரசு இப் பிரேரணையை எதிர்த்தது. இவ் வெதிர்ப்பைப் பொருட்படுத்தாது 1987 இல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு "பாதிப்புற்ற சகல கட்சியினருக்கும் உதவி மற்றும் பாதுகாப்பை வழங்குவது உட்பட, மனிதாபிமான நியமங்களைப் பாதுகாக்கும் அதன் கருமப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஐ.சீ.ஆர்.சீ. அமைப்புக்கு உதவும் விதத்தில் அதன் சேவை விருப்பறிவிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை வேண்டிக் கொள்ளும்" தீர்மானத்தை நிறைவேற்றியது.
1989க்குப் பின்னரே கொழும்பில் ஒரு அலுவலகத்தைத் திறக்குமாறு ஐ.சீ.ஆர்.சீ க்கு விதி முறையான அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பொழுது அதற்கு மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, அனுராதபுரம், கண்டி, மன்னார், திருகோணமலை மற்றும் வவுனியாவிலும் அலுவலகங்கள் உள்ளன. ஐ.சீ.ஆர்.சீ. ஈடுபட்டுள்ள எண் ணிறந்த நடவடிக்கைகளுள் பின்வருவனவும் அடங்கும்:
அது சிறைச்சாலை, தடுப்புக் காவல் முகாம்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்கள் உள்ளடங்கலாக நாடு முழுவதிலுமுள்ள தடுப்புக் காவல் கைதிகளைச் சென்று பார்வையிட்டுள்ளது. 1993 இல் ஐ.சீ.ஆர்.சீ. 483 தடுப்புக் காவல் நிலையங்களைப் பார்வையிட்டது. தூதுப் பிரதிநிதிகள் தடுப்புக் காவல் கைதிகளின் உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகள் குறித்து விசாரணைகளை நடத்தினர். தேவையேற்பட்ட போது, விடுதலை பெற்ற தடுப்புக்காவல் கைதிகளோடு அவர்களின் வீடு வரை சென்றனர். எல்.ாரீயின் பாதுகாப்பிலுள்ள கைதிகளையும் சந்திப்பதற்கு ஐ.சீ.ஆர்.சீ. அனுமதி வேண்டிப் பெற்றுக் கொண்டது. ஆயினும் ஐ.சீ.ஆர்.சீ. பணிப்பாணையின் பிரகாரம் இரகசிய அறிக்கைகளை அது அரசாங்கத்துக்கு மட்டுமே சமர்ப்பிக்க முடியும். அவை உள்ளூர் மனித உரிமைகள் சமூகத்துக்குக் கிடைப்பதில்லை. பிரத் தியேகமாக நாட்டின் வட-கிழக்கு நிலைமை தொடர்பாகவும், கொழும்பிலும் காணமற் போவோரைத்
23

Page 24
தேடுவதில் ஐ.சீ.ஆர்.சீ துடிப்பாகச் செயலாற்றி வந்துள்ளது. இவ்வமைப்பு தடுப்புக் காவலிலுள்ளோர் பதிவேடு ஒன்றைப் பேணி வருகிறது.
அது இடம்பெயர்ந்தோர் உட்பட, யுத்தப் பிராந்தியத்திலுள்ள சிவிலியன் மக்கட் தொகையினரைத் தொடர்ச்சியாக அவதானிப்புக்கு உள்ளாக்குவதன் மூலம் அவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க உதவியுள்ளது. இந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை நிலைமைகள் குறித்து உடனடியாக ஐ.சீ.ஆர்.சீ. தூதுப் பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களை வடக்கிற்கு எடுத்துச் செல்லும் கடற் கப்பல்களுக்கும், தெருவிற் செல்லும் வாகனத் தொடரணிகளுக்கும் பாதுகாப்பை அது உறுதி செய்தது. 1993 இல் வடக்கிலுள்ள இலங்கையருக்குக் கொழும்பு வழங்கும் சராசரி 9,500 தொன் மாதாந்த உணவுப் பொருட்களை ஐ.சீ.ஆர்.சீ. கப்பல் மூலமும், லொரிகள் மூலமும் எடுத்துச் சென்றது. யாழ்ப்பாண வைத்தியசாலைக்குத் தேவையான வைத்திய உதவிப் பொருட்களையும் அது எடுத்துச் சென்றது.
யாழ்ப்பாணப் போதனா வைத்திய சாலைக்குத் தொடர்ச்சியான பாதுகாப்பை வழங்கியதோடு, சண்டை இடம்பெறும் பட்சத்தில் நோயாளிகளுக்கும், யுத்தத்தில் காயமுற்றோருக்கும் வைத்திய உதவி கிடைக்கக் கூடிய விதத்திலும், வைத்தியசாலைப் பிரதேசத்துக்குச் சண்டை பரவாமல் தடுக்கும் விதத்திலும் வைத்தியசாலையைச் சுற்றிவர ஒரு பாதுகாப்பு வலயத்தைத் தொடர் அவதானிப்புச் செய்து வந்துள்ளது. வைத்தியசாலையில் போதிய மருந்து மற்றும் வேறு வைத்திய உதவிப் பொருட்கள் களஞ்சியப்படுத்தலையும் அது உறுதி செய்தது.
அது அரசாங்கத்துக்கும், எல்.ரீ.ரீ.ஈ க்குமிடையில் இரகசியத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதில் உதவும் முக்கிய இடைத் தரகராகவும் செயற்பட்டுள்ளது. இந்த நடுநிலைப் பாத்திரம் அரசுக்கும், எல்.ரீ.ரீ.ஈ க்குமிடையில் ஆரம்பத்
24

தொடர்புகளை ஏற்படுத்தவும், முரண்பாட்டைத் தீர்ப்பதற்கான சமாதானப் பேச்சு வார்த்தைகளின் நெறிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமாக விளங்கியது. அது தனது வழமையான, மனிதாபிமானச் செயற்பாட்டுப் பணிப்பாணை வரம்பை மீறுகின்றதென்னும் சார்த்துதல் எழாதவாறு மிகவும் கவனமாகச் செயலாற்றியது.
இலங்கையின் இனத்துவ முரண்பாட்டில் யூ.என்.எச்.சீ.ஆர். வகித்த பாத்திரம் ஐ.சீ.ஆர்.சீ யினதை விடச் சிக்கலானதும், சர்ச்சைக்குரியதுமாகும். பாரம்பரியமான யூ.என்.எச்.சீ.ஆர் பணிப்பாணை தமது சொந்த நாடுகளை விட்டு வெளியேறிய அகதிகளின் நலன்கள் குறித்ததாகும். ஆயினும் இலங்கையில் அது உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தேவைகள் குறித்துக் கவனஞ் செலுத்தும் ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை அபிவிருத்தி செய்யக் கூடியதாகவிருந்தது. இந்நிகழ்ச்சித் திட்டம் 1990 இல் மன்னார் மாவட்டத்தில் அகதிகள், இடம்பெயர்ந்தோர் மற்றும் யுத்தத்தால் பாதிப்புற்றோருக்கு அவசர உதவிகள் வழங்குவதற்கென ஆரம்பிக்கப்பட்டது. அந்நேரத்தில் இலங்கையில் யூ.என்.எச்.சீ.ஆரின் வதிவுப் பிரதிநிதியாக இருந்த பில் கிளாரென்ஸ் அவர்கள் "வட-இலங்கையில் அந்நேரத்தில் உள்ளபடி நிலைமை மிகவும் சிக்கலானதென்றும், அது மற்றவர் மீது சுமத்திய சாதாரண மனிதாபிமானக் கடப்பாடு பெருமளவிலான பொது அறிவுப் பிரயோகத்தை வேண்டி நின்றதென்றும்" கூறினார். இதன் இறுதி விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டம் யூ.என்.எச்.சீஆர் சம்பந்தப்படுவதற்கு எதிராக எழக்கூடிய சில நிறுவன ரீதியான உளத் தடைகளை அகற்றியதோடு, யுத்தப் பிரதேசங்களில் குறிப்பிடத்தக் களவு பாதுகாப்புக்கும் வழிசெய்தது.
யூ.என்.எச்.சீ.ஆர். முன் முயற்சிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியதாக இருந்தது:
அது மன்னார் தீவில், பேசாலையில் இடம்பெயர்ந்தோருக்கு இருப்பிடம், உணவு மற்றும் மருத்துவ உதவிகள் போன்ற
25

Page 25
அடிப்படைத் தேவைகளை வழங்கும் ஒரு திறந்த நிவாரண நிலையத்தை அமைத்தது. விரும்பியவாறு அவர்கள் இந்நிலையத்துக்கு வந்து போகக் கூடிய நிலை இருந்தது.
அது தென்னிந்தியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட அகதிகளுக்கான புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டமொன்றை அமுல்படுத்தியது. திருப்பியனுப்பப்படுவது அகதிகளின் சொந்த விருப்பின் பேரில் இடம்பெற்றதா என்பது குறித்து தகவல் பெறுவது யூ.என்.எச்.சீ.ஆருக்கு எப்பொழுதுமே இலகுவான காரியமாக இல்லாதிருந்தமையால் இந்நிகழ்ச்சித் திட்டம் திருப்பியனுப்புதல் சுயவிருப்பத்தின் பேரில் இடம்பெறுவது குறித்த பலவிதமான சந்தேகங்களை எழுப்பியது.
அது இலங்கைக்குத் திரும்பி வருவோருக்கான வரவேற்பு நிலையங்கள், இடையில் தங்கு நிலையங்கள் மற்றும் இடையில் தங்கும் முகாம்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்தது. அத்தோடு யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கைக்கான பாதுகாப்பான பிரயாணப் பாதையைத் திறக்குமாறு எல்.ரீ.ரீ.ஈ யுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முயன்ற போதிலும் இதில் வெற்றிகிட்டவில்லை.
யூ.என்.எச்.சீஆர் இலங்கையில் ஆற்றிய பணி அரசாங்கங்களுக் கிடையிலான ஓர் அமைப்பு மனிதாபிமானக் கடப்பாடுகளின் தூண்டுதலால், ஏனைய மனிதாபிமான அமைப்புகள் நிறைவேற்றுவதற்கு மனதின்றி அல்லது இயலாமை கொண் டிருந்த நிவார ண க் கரு மங் களையும் , பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்ட ஓர் ஆர்வமூட்டும், நிகழ்வு ஆய்வுக்குரிய விடயமாகும். இலங்கையில் அதன் பணி அடிக்கடி அதன் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டுக் கருமங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியதோடு, அதன் செயற்பாட்டினால் புகலிடம் தேடுவதற்கான அடிப்படை உரிமையைப் பாதுகாக் கும் அதன் கடப் பாடு பாதிப்புறுகின்றதென்னும் விமர்சனங்களும் எழுந்தன. இம் முகவர் நிலையத்தின் ஏனைய நிகழ்ச்சிகளுக்குப் போதிய
26

நிதிவசதிகள் இல்லாத நேரத்தில் அது தன் பணிப்பாணைக்குப் புறம்பான கருமங்களில் ஈடுபடுகின்றதென்னும் விமர்சனமும் எழுந்தது. மெட்சீன் சோன் புரொன்டீயர்ஸ், குழந்தைகளைப் பாதுகாக்கும் நிதியம், கெயார், ஒக்ஸ்பாம், மற்றும் குவேக்கர் சமாதான சேவைகள் உள்ளடங்கலாகப் பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் அத்தியாவசிய நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. ஆயினும் யூ.என்.எச்.சீ.ஆர். கருமங்களை நிறைவேற்றுவதற்கான நிறுவன இயலுமை அவற்றுக்கு இருக்கவில்லை. ஒரு ஐ.நா. முகவர் நிலையம் மாத்திரமே இராணுவத்துடனும், அரசாங்கத்துடனும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ. யுடனும் ஏற்படுத்திப் பேணக்கூடிய உறவுகளை இந்த அரசு சார்பற்ற நிறுவனங்களால் ஏற்படுத்திப் பேண முடியவில்லை.
இனத்துவ முரண்பாட்டு விளைவுகளின் பிரதிபலனாக ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணப்படுத்துகை மனித உரிமை அமைப்புகளினதும், அரசு சார்பற்ற நிறுவனங்களிதும் முக்கிய பணி ஆயிற்று. இலங்கையில் பிரத்தியேகமாக யுத்தப் பிரதேசங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆவணப்படுத்துகையின் தரம் வழக்கத்தை விட உயர்வானதாக இருந்தது. சீ.ஆர்.எம்., மேர்ஜ் மற்றும் சட்டமும் சமூகமும் நம்பிக்கைப் பொறுப்பு அமைப்பு போன்ற உள்ளூர் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தமது மனித உரிமை அறிக்கைகளின் செம்மை, மற்றும் யதார்த்த நிலைப் பிரதிபலிப்பு என்பவற்றை உறுதிசெய்வதற்குப் பெரு முயற்சி எடுத்தன. 1993 முதல் இவ்வமைப்புகள் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள், சமூக-பொருளாதார உரிமைகள், சிறுபான்மையோர் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் தழுவிய கரிசனை விடயங்கள் குறித்த மனித உரிமைகளின் வருடாந்த அந்தஸ்து அறிக்கை ஒன்றை உருவாக்குவதற்கு ஒத்தழைப்பு நல்கியுள்ளன. உள்ளூர் அரசு சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கைகள் சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச சட்ட வல்லுநர் ஆணைக்குழு மற்றும் ஏசியா வோச் போன்ற சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்கள் காலத்துக்குக் காலம் மேற்கொண்ட நிகழ்வுண்மை தேடும் பணிகளில் பெருமளவு உதவியாக இருந்துள்ளன.
27

Page 26
அதே போன்று காணாமற் போவோர் குறித்த ஐ.நா. செயற்பாட்டுக் குழுவும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகளின் அறிக்கையிலிருந்து விடயங்களை அடிக்கடி எடுத்தாண்டுள்ளது.
(pla66)
இலங்கையின் இனத்துவ முரண்பாடு ஆசியாவிலேயே மிகவும் நீண்ட காலமாக நிலவி வருவதும், சிக்கல் மிக்கதுமான ஒன்றாகும். சமாதானம், நல்லிணக்கம் குறித்த நம்பிக்கையை மரணம், இடம்பெயர்வு மற்றும் அழிவின் அவலங்கள் அடிக்கடி சிதறடித்துள்ளன. பாரம்பரிய அவநம்பிக்கையை வெற்றி கொள்வதற்கு ஆன்ம தயாளம் மற்றும் அரசியல் ரீதியான ஆக்கபூர்வ சிந்தனை என்பவற்றைத் திரட்டிப் பிரயோகிப்பதில் இரு சாராருமே தோல்வி கண்டுள்ளனர். இப் பகைமையின் விளைவுகளுக்குப் பயனுறுதிமிக்க விதத்தில் பிரதிவிளைவைக் காண்பிப்பதில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளன.
முரண்பாட்டினால் பாதிப்புறும் குடிமக்கள் தேவைகளை நிறைவேற்றுவதில் உள்ளூர் மற்றும் சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களும் அரசாங்கங்களுக்குக் கிடையிலான அமைப்புகளும் எவ்வாறு ஒன்றோடொன்று இயைபாகப் பணிபுரியலாம் என்பதற்கு இலங்கை ஒரு முக்கியமான நிகழ்வு ஆய்வு உதாரணமாக விளங்குகின்றது. நிவாரண நடவடிக்கைகளைக் கூட்டிணைப்பதிலும், தகவலையும் வளங்களையும் பகிர்ந்து கொள்வதிலும், நிவாரண முயற்சி முகாமைத்துவத்தில் இயன்றளவு அதிக அளவில் சுதந்திரத்தைப் பேணுவதிலும் உணர்வு பூர் வமான முயற் சரிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் இப்பணிகள் மிகவும் சிக்கல் மிக்கவையாகவே இருந்துள்ளன. இதன் விளைவாகப் பல சர்வதேச மற்றும் உள்ளூர் நிவாரண முகவர் நிலையங்கள் பக்கச் சார்பு குறித்த குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டதோடு, பயமுறுத்தல்கள் மற்றும் வெளிப்படையான பகைமையுணர்ச்சி வெளிப்பாடுகளையும் சந்திக்க வேண்டியிருந்துள்ளது.
28

இந்த அரசு சார்பற்ற நிறுவனங்கள் குறித்த அரசின் மனோபாவம் தெளிவற்ற ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு புறத்தில் அரசு உணவு, மருந்து வகைகள் விநியோகம், மற்றும் வழமையான அரசாங்கக் கருமங்களான அஞ்சல் விநியோகம் மற்றும் பரீட்சை வினாப்பத்திரங்களின் விநியோகம் என்பவற்றை அரசு கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசங்களில் மேற்கொள்வதற்குச் சர்வதேச நிவாரண முகவர் நிலையங்களில் தங்கியிருந்துள்ளது. சர்வதேச சமூகம் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளில் சம்பந்தமுற்றுப் பெருமளவில் இலங்கையில் பணியாற்றியுள்ளதென்று அரசாங்கப் பேச்சாளர்கள் குறிப்பிடுகின்றனர். மறுபுறத்தில் அரசாங்கம் இலங்கையிற் செயற்படும் நிவாரணப்பணி முகவர் நிலையங்களோ அல்லது சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனங்களோ அதன் மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்களை விமர்சிப்பது குறித்துப் பெருமளவிலான எதிர்ப்புணர்வைக் காட்டுகின்றது. சில சந்தர்ப்பங்களில் மாற்றீடான அபிவிருத்தி இலட்சியத் தரிசனங்களுக்காக வாதாடும் மனித உரிமைக் குழுக்கள், சமாதானச் செயற்பாட்டாளர் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் இதே போன்ற பகைமைப் போக்கை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எந்தவிதத்திலும் குறை கூறமுடியாத மனிதாபிமான நடவடிக்கைச் சான்றிதழ்பெற்ற சர்வதேச நிவாரணப்பணி முகவர் நிலையங்கள் கூட மக்கள் தொடர்பு சாதனங்களினதும், தீவிரவாத அரசியற் குழுக்களினதும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இம் மட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தொடர்ந்தும் அவசரமான மனிதாபிமானத் தேவைகளுக்கும், மனித உரிமைக் கரிசனை விடயங்களுக்கும் தமது பிரதி விளைவைக் காட்டி வந்துள்ளன. அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகள் யதார்த்த நிலைகளுக்கு அமைவாகத் தமது பாரம்பரியப் பணிப்பாணைகளை மாற்றியமைக்க அல்லது விஸ்தரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன.
இலங்கை விவகாரம் ஒரு புறத்தில் முரண்பாட்டின் மனிதாபிமான மற்றும் மனித உரிமை அம்சங்களுக்கும்,
29

Page 27
மறுபுறத்தில் அதன் அரசியல் அம்சங்களுக்குமிடையில் வேறுபடுத்திப் பார்ப்பதற்கான ஒரு முயற்சியையும் காண்பிக்கின்றது. சர்வதேச சமூகம் மனிதாபிமான நிவாரணம், இடம்பெயர்வு, மனித உரிமைகள் மற்றும் புனர்நிர்மாணம் போன்ற பிரச்சினைகளில் தலையீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அரசாங்கத்துக்கும் எல்.ரீ.ரீ.ஈ. க்குமிடையில் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்தவோ, நிலையான அரசியல் தீர்வு குறித்த விடயங்களைக் கையாளவோ அதற்கு அனுமதி இல்லை. உறுதியைப் புதுப்பித்து, புதிய சவால்கள், கோரிக்கைகளைச் சந்திப்பதில் உபாயத்தை மீள்மதிப்பீடு செய்து கொள்ள வேண்டிய நிலையிலுள்ள இலங்கைச் சமுதாயத்தின் முக்கியமான->ஆக்கக் கூறாக அரசு சார்பபற்ற நிறுவனங்கள் விளங்குகின்றன. அரசு சார் பற்ற நிறுவனங்களின் தொடர்ச்சியான ஈடுபாடு இலங்கையில் மானிடத் துயரைப் போக்குவதற்கும், சமாதான, நல்லிணக்கச் செயன் முறைக்கும் வாழ்வாதாரமான முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது.
30

இரு தலைமுறையினருக்கிடையிலான முரண்பாடு இளைஞர் எழுச்சி
சர்வோதய சட்ட உதவிச் சேவைகள் அமைப்பு இளம் சட்ட உதவி சட்டவறிஞரும், மனித உரிமைகளைப் பாதுகாக்கப் போராடியவருமான காஞ்சன அபயபாலவை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகின்றது. தென்பகுதி இளைஞர் எழுச்சிக்கு அரசின் பிரதிவிளைவைக் குறித்த இருண்ட நாட்களின் போது அவரின் உயிர் பறிக்கப்பட்டது. சர்வோதய இயக்கம் மனித உரிமைகள் தொடர்பிலான ஒரு தொடரான சொற்பொழிவுகளில் ஆறாவதோடு இந்த வாரம் அவரின் மரணத்தை நினைவு கூர்ந்தது.
அபயபாலவின் வாழ்வும், அதன் சோகமான முடிவும் அரசுக்கெதிரான வன்முறைப் போராட்டத்தில் எழுபதுகளின் ஆரம்பத்திலும், எண்பதுகளின் பிற்பகுதியிலும் ஈடுபட்ட அரசு எதிர்ப்பு இயக்கங்கள் குறித்துச் சிந்திக்குமாறு எம்மைத் தூண்டுகின்றது. இவ்வியக்கங்கள் தெளிவாகவே இளைஞர் அமைதியின்மையின் வெளிப்பாடாக அமைந்ததோடு, இலங்கையில் சனநாயக அரசியலின் தன்மை குறித்து அவர்கள் தீவிரமாக நம்பிக்கையிழந்தமையையும், வறுமை, சமத்துவமின்மை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதில் அரசு பிரத்தியட்சமாகத் தோல்வியடைந்ததையும், சுட்டி நின்றன. தற்போதைய பொருளாதார, மற்றும் அரசியல் அதிகாரக் கட்டமைப்புக்கள் உடைத்து நொருக்கப்பட வேண்டுமெனக் கோரும் அதிதீவிர சமூக நம்பிக்கைக் காட்சியொன்று இவ்வியக்கத்தில் இணைந்தோருக்கு உணர்ச்சி வேகத்தை ஊட்டியது. ஆயினும் கொண்டு வரப்பட வேண்டிய நிறுவன மாற்றீடுகள் குறித்து எவ்வித சிந்தனையும் இருக்கவில்லை. அது இலங்கைத் தீவின் குழப்பங்கள்,
31

Page 28
துன்பங்கள் நிறைந்த வரலாற்றில் இரத்தச் சுவடுகள் பதித்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் உயிர்த்தியாகம் செய்ததையும், ஒரு கனவு பயங்கர யதார்த்தமாக மாறியதையும் குறித்து நிற்கிறது. வட - கிழக்கில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தம் போராளிகள், குடிமக்கள் இருபாலாரையும் கொன்று குவித்து வருவதோடு, எண்ணற்றோரை அங்கவீன ராக்கியும், இடம்பெயரச் செய்துமுள்ளது.
தெற்கில் இடம்பெற்ற அரசு விரோத இயக்கங்களுக்கும், வடக்கு கிழக்கில் இடம்பெற்ற எழுச்சிக்குமிடையில் பல ஒற்றுமைகள் நிலவின. இரண்டுமே அரசு அதிகாரத்துக்கும், சமூக மட்டத்தில் மரபுவழி அதிகாரச் சின்னங்களுக்கும் சவால் விட்ட இளைஞர் இயக்கங்களாகும். ஆதிக்க சனநாயகப் பேச்சு, போட்டித்தகவு அரசியலின் தன்மை என்பவை குறித்து இருபாலாருமே நம்பிக்கையிழந்து வெறுப்புற்ற நிலையிலிருந்தனர். அரசியல் யாப்பினுரடாக தீவிர அரசியல், மற்றும் சமூக-பொருளாதார மாற்றங்கள் ஏற்படும் என்னும் வாதத்தை அவர்கள் தெளிவாகவே நம்பவில்லை. ஆயினும் இந்த இடத்தில் ஒற்றுமைகள் முடிவுறுகின்றன. போராட்டத்தின் புறநிலை நிதர் சன நிலைமைகள், தத் துவார்த்தம் , தலைமைத்துவம், ஸ்தாபனக் கட்டமைப்பு மற்றும் இராணுவ வல்லமை என்பவற்றில் தெளிவாகவே வேறுபாடுகள் இருந்தன. எது எப்படியாயினும், இவ்வரச விரோத இயக்கங்களின் பரிணாமத்திலிருந்து எவராவது பாடங்களைப் படித்துக் கொண்டனரா என்பது காரியத் தொடர்புள்ள ஒரு கேள்வியாகும். மாறி மாறியேற்படும் இக் கொடு ர வன்செயல்களிலிருந்து தெற்கும், வடக்குக் கிழக்கும் எப்பொழுதாவது தப்பிக்கொள்ள முடியுமா?
இளைஞர்களின் சமூக அதிருப்தி மற்றும் அமைதியின்மைக்கான காரணங்கள் குறித்து ஆராயவும், அறிக்கை சமர்ப்பிக்கவுமென 1990 இல் ஒரு இளைஞர் ஆணைக்குழு அமைக்கப்பட்டது. "விழுமியங்களின் நெருக்கடி" இளைஞர் அமைதியின்மைக்குப்
32

பெருமளவில் வித்திட்டது என ஆணைக்குழு கூறியது. அவசரத் தேவை இறந்த காலத்துக்குப் பூரணமாகப் புத்துயிரளிப்பதோ, அல்லது "மேற்குலகைப் பூரணமாகப் பிரதி செய்வதோ’ அன்று. மாறாக எமது அதியுன்னத மானிடவியல் பாரம்பரியங்களை மறுமலர்ச்சியுறச் செய்வதே அவசரத் தேவையாகும். சிங்களம் அல்லது தமிழ் மொழியை மாத்திரம் பேசும் இளைஞர்களுக்குச் சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவதையும், அவர்களுக்கெதிரான ஊறிப்பரவும் பாரபட்சத்தையும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.
மனித வளத் தேவைகள் குறித்த முன் கணிப்பீடுகள், மற்றும் கிராமப்புறங்களுக்கான வளங்களின் குறிப்பிடத்தகு மீள்ஒதுக்கீடுகள் விடயத்தில் கல்வி முறைமைகளில் தீவிர மீள் கட்டமைப்புச் செய்யப்படல் வேண்டுமெனவும் ஆணைக்குழு வேண்டிக் கொண்டது. ஆணைக்குழுவின் மிக முக்கியமான விதந்துரைப்புகளிலொன்று இளைஞர்கள் ஒரு தனியான அரசியல் வகைப்பிரிவு என்பதை ஏற்றுக்கொண்டு இவ்வகைப் பிரிவின் அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் என்பதாகும். இளைஞர் மனங்களில் சனநாயகச் செயன்முறை குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துவதும், தீர்மானமெடுக்கும் செயன் முறையில் அவர்கள் பங்குதாரராவதை உறுதிப்படுத்துவதுமே இதன் குறிக்கோளாக இருந்தது.
30-40 வீதமான அபேட்சகர்களாக 18-35 வயதுடையோரை பெயர் குறிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு ஊக்கமளிப்பதன் மூலம் இளைஞரின் அரசியல் பிரதிநிதித்துவம் ஈட்டப்பட இருந்தது. அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்பு, பதவியுயர்வு, இடமாற்றங்கள், மற்றும் பதவிநீக்கங்கள் விடயத்தில் அரசியல் தலையீடு இருத்தல் ஆகாது என்பது இன்னுமொரு முக்கிய விதந்துரைப்பாக இருந்தது. இன சமத்துவத்துக்குக் கவனஞ் செலுத்தி, போட்டிப் பரீட்சைகளின் அடிப்படையிலும், அரசியல் தலையீடற்றதும், திறமையடிப்படையிலுமான முறைமைக்கு மீளுவதற்கான தேவை குறித்தும் ஆணைக்குழு வலியுறுத்தியது.
33

Page 29
ஆணைக்குழுவின் விதந்துரைப்புகளை நடைமுறைப்படுத்தும் நோக்கில் சில மிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேச சபைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் 40 வீதமான வேட்பாளர்கள் இளைஞர்களாக அமையக் கூடியதை உறுதிப்படுத்துமுகமாக உள்ளூராட்சி சபைகள் தேர்தல் சட்டம் திருத்தப்பட்டது. ஆயினும், இக்கோட்பாடு இதுவரையில் மாகாண சபைகள், மற்றும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ விடயத்துக்கு விஸ்தரிக்கப்படவில்லை.
பிரேமதாச நிர்வாகம் அரசுத்துறை நியமனங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினரின் விதந்துரைப்பின் அவசியத்தை நீக்கியது. ஆயினும் இச்சீர்திருத்தம் நீண்டநாள் நிலைக்கவில்லை. அரசுத்துறைக்கான ஆட்சேர்ப்புகள் மீண்டும், பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டு, அதன் தாக்கத்தைப் பொறுத்த வரையில் பாரபட்சமிக்க ஒன்றாக மாறியுள்ளது. இளைஞர் ஆணைக்குழுவின் அறிக்கையின் விளைவாகவே தேசிய கல்வி ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. எனினும் கல்வி முறைமையில் குறிப்பிடத்தகு மாற்றமெதுவும் ஏற்படவில்லை.
இளைஞர் அந்நியப்படுத்தப்படல், அரசியலின் சுபாவத்தில் அதிருப்தி, சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுதல் மற்றும் கல்வி முறைமையின் போதாத தன்மை என்பவை மேலோங்கியுள்ளன. இளைஞர் ஆணைக்குழு அறிக்கை நூல் நிலையங்களில் தூசு பிடிக்கும் நிலையும், அந்நியப்படுதல், சமூக, பொருளாதாரத் துறைகளில் ஒதுக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்குப் பரிகாரந்தேடும் ஒழுங்கு முறைமையான முயற்சிகள் எடுக்கப்படாத நிலையுமே காணப்படுகின்றன. தென்பகுதிக் கலகத்தினால் பாரதூரமாகப் பாதிப்புற்ற பிரதேசங்கள் குறித்து ஒன்றிணைக்கப்பட்ட அணுகுமுறையைக் கையாளுமாறு தென்மாகாண அபிவிருத்தி அதிகார சபைக்குப் பணிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வதிகாரசபை அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளைப் பாதிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், தென்பகுதியில் வறுமை மற்றும் வேலையின்மைப்
34

பிரச்சினைகள் மீது அதன் தாக்கத்தை இப்பொழுதே மதிப்பிடுதல் இயலாது. வட கிழக்கைப் போன்றே இங்கும், நாமனைவரும் கூட்டாக, தலைமுறைகளிடையிலான முரண்பாட்டின் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சாத்தியக்கூறு தென்படவில்லை.
காஞ்சன அபேபால நினைவுப் பேருரை: 30.08.96 இல் நிகழ்த்தப்பட்டது.
35

Page 30
குடியியல்சார் ஒத்துழையாமை
இவ்வருட மகாத்மா காந்தி நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு இலங்கை இந்திய சமாஜம் எனக்கு விடுத்த அழைப்பை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது ஒரு தனிப்பட்ட காரணம். இச் சமாஜத்தின் தவிசாளர் 30 வருடங்களுக்கு மேலாக எனது நண்பர். அவரது வேண்டுகோளைச் சாதாரணமாக என்னால் இலகுவில் தட்டிக்கழிக்க முடியாது. இரண்டாவது காரணம், பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள நாம் காலத்துக்குக் காலம் சமுக, மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கொணரக் கூடிய எண்ணங்களின் சக்தி குறித்த எமது விசுவாசத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
ஒவ்வொரு குழந்தையின் கண்ணிரையும் துடைப்பதே தமது கனவென்று மகாத்மா காந்தி கூறினார். மனிதரின் துயரத்தைத் துடைப்பதில் ஒரு பங்களிப்பை ஆற்ற முயலும் மிதமான குறிக்கோளைக் கொண்டவர்கள் கூட எமது விசுவாசத்தைத் தொடர்ச்சியாகப் புதுப்பிக்க வேண்டியோராயுள்ளோம். விரக்தி நிலைக்கு இடம் கொடாதிருப்பதற்கு இது முக்கியமானதாகும். கொடூரமும், துயரங்களும் பாரிய அளவில் நிலவும் ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்வதால் அரசியல் கையாலாகாத்தனம், மற்றும் விரக்தி நிலையுணர்வுக்கு எதிராக நிலையாகப் போராட வேண்டியுள்ளது. உபகண்டத்தின் இவ்வுன்னத புத்திரனின் முக்கிய வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்தும், நூல்களிலிருந்தும் மீளவும் கற்றுக்கொள்ளுவதற்கான சந்தர்ப்பம் இந்நிகழ்வுத் தொடர்பில் உண்மையிலேயே பிரத்தியேக அர்த்தமும், முக்கியத்துவமும் பெறுகின்றது.
36

நியூயோர்க் போஸ்ட் பத் திரிகைக்கு இருபதுகளின் ஆரம்பத்திலிருந்து எழுதிவந்த லூயி பிஷ்கர் அவர்கள் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த மகாத்மா காந்தி சரிதையை எழுதினார். 14 வருடங்கள் ரஷ்யாவில் வாழ்ந்த திரு. பிஷ்கர் சோவியத் விவகாரங்களில் மிகவும் அறிவாற்றல் வாய்ந்த ஒரு செய்தி நிருபராவர். மகாத்மா காந்தியின் வாழ்க்கை குறித்த அவரது நூல் "அவரின் மகோன்னத முக்கியத்துவம் வாய்ந்ததும், முதிர்ச்சி பெற்றதுமான ஒரு படைப்பாகும்.” காந்தியின் முன்னிலையில் நிற்கையில் தமது உணர்வு மரியாதை கலந்த பயமாக இருக்கவில்லையென்று பிஷ்கர் கூறுகின்றார். "மிகவும் இனிமையான, அமைதியுள்ள, விதிமுறையற்ற, பரபரப்பில்லாத, மகிழ்ச்சியான, மதிமிக்க, பெரிதும் நாகரீகமடைந்த ஒரு மனிதனின் முன்பாக நிற்பதாக உணர்ந்தேன். இந்த ஆளுமையின் அற்புதத்தையும் நான் உணர்ந்தேன். பிளவுபட்டிருந்த ஒரு தேசத்தின் தூரப் பிரதேசங்களுக்கும், அத்தோடு பிரிவுகளால் அல்லற்பட்ட ஓர் உலகின் ஒவ்வொரு முலைக்கும் காந்தியின் செல்வாக்கு கதிர் வீசியது முழுக்க முழுக்க இவ் வாளுமையின் உந்துசக்தியாலேயே ஆகும். இதை அவர் தம் எழுத்து மூலமாகச் சாதிக்கவில்லை. ஏனெனில், மக்கள் மேல் அவர் கொண்டிருந்த கட்டுப்பாட்டின் மூலகங்கள் இவை அல்ல. அவர் மக்களை ஆகர்ஷித்தது நேரடித் தொடர்பாலும், நடவடிக்கையாலும், உதாரணத்தினாலும், மற்றும் சில எளிமையான, சகலராலும் எள்ளி நிராகரிக்கப்பட்ட கோட்பாடுகளின் மீதான விசுவாசத்தினாலுமேயாகும். இவை அஹிம்சை, சத்தியம், மற்றும் முடிவை விட அதை அடையும் வழிதுறைகளை உயர்வாக மதிக்கும் கொள்கை என்பனவாகும்.”
சமீபகால வரலாற்றில் நாயகர்களெனப் பிரசித்தமாகிய சேர்ச்சில், ரூஸ்வெல்ட், லோயிட் ஜோர்ஜ், ஸ்டாலின், லெனின், ஹிட்லர், வூட்ரோ வில்ஸன், கெய்சர், லிங்கன், நெப்போலியன், மட்டேர்நிச், கார்ல் மாக்ஸ் என்போருக்கு நேர் எதிராக விளங்கியவர் மகாத்மா காந்தியெனக் கூறும் அவர் "தனிமனிதர்களின் மனச்சாட்சியைப் பலமாக உலுப்பிய
37

Page 31
காந்தி போன்ற மனிதர்களைத் தேடுவதற்கு ஒருவர் வரலாற்றில் பல நூற்றாண்டுகள் பின் செல்லுதல் வேண்டும்.” என்று கூறினார்.
இன்றைய உரையில் நாம் குடியியல் சார் ஒத்துழையாமைக்கு காந்தியின் பங்களிப்பைப் பரிசீலனை செய்வோம். அதாவது"ஒரு சட்டம் அல்லது கட்டளையின் உள்ளடக்கம் அல்லது மூலம் காரணமாக அதை வெளிப்படையாக, வேண்டுமென்று அஹிம்சை வழிகளின் மூலம் மீறுதல்.” குடியியல் கீழ்ப்படியாமை குறித்த காந்தியின் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளின் புத்திஜீவி மூலங்கள் எவை? தென்னாபிரிக்காவிலும், இந்தியாவிலும் நிகழ்ந்த சத்தியாக்கிரக இயக் கங் களில் இவ் வெண் ணங் கள் எ வி வாறு வெளிப்பாடடைந்தன? உலகின் ஏனைய பகுதிகளிலான அரசியல் நிகழ்ச்சிகளில் அவற்றின் தாக்கம் எத்தகையது? அநீதிக்கு எதிரான அஹிம்சை முறையிலான எதிர்ப்புப் போராட்டம் மிகப் பயனுறுதி வாய்ந்ததென்பதையும், தேசிய விடுதலைப் போராட்டத்தில் அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்பதையும் செய்து காட்டியதே காந்தி நவீன காலத்து அரசியல் உரையாடலுக்கு வழங்கிய மாபெரும் பங்களிப்பாகும். ஆகவே பலாத்காரம் நிறைந்த இலங்கை அரசியல் வரலாற்றில் 1927 க்கும் 1958 க்கும் இடைப்பட்ட காலத்தில் குடியியல் கீழ்ப்படிவின்மை குறித்த காந்தீய வழிமுறைகளைக் கைக்கொண்ட இரு முக்கியமான நிகழ்ச்சிகள் இடம்பெற்றனவென்று நாம் முடிவு செய்யலாம். முதலாவது கட்டம் இந்தியத் தேசியத் தலைவர்கள் சுயராச்சியம் கேட்டுத் தேர்தல்களைப் பகிஷ்கரித்த வேளையில் யாழ்ப்பாணத்து இளைஞர்களும் இதன் மூலம் உணர்வு ஊக்கம் பெற்ற காலகட்டமாகும். ஆயினும் தென்னிலங்கையில் ஒரு சமமான இலட்சியப் பார்வையுள்ள மாணவர் இயக்கம் அவ்வேளையில் இல்லாத காரணத்தால் இப் போராட்டம் பரவவில்லை. மேலும், தென்னிலங்கையில் அனேகமானோர் பகிஷ்கரிப்புக்கான காரணங்களைப் பூரணமாக அறிந்து கொள்ளாததோடு, இனத்துவப் பிரதிநிதித்துவம் குறித்த
38

கருத்து மோதல்களோடு தொடர்புற்ற ஒன்றாகவே அதை நோக்கத் தலைப்பட்டனர். அது வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமைக் கொள்கை மற்றும் புதிய அரசியல் திட்டம் என்பனவற்றின் கீழ் இடம்பெற்ற முதல் தேர்தலாகவும் அமைந்தமையால் வேட்பாளர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் இரு சாராருமே இப்பாரிய மாற்றம் கொண்டுவந்த அரசியல் வாய்ப்புக்களைப் பற்றிக்கொள்ள ஆவலாயிருந்தனர்.
இந்தியாவைப் போலன்றி, இலங்கையின் சுதந்திரப் போராட் டத் தின் போது நாட் டின் பல் வேறு பிராந்தியங்களையும் இணைத்த, சுதந்திரத்துக்கான அஹிம்சைப் போராட்ட அரசியல் பாரம்பரியம் இல்லாது போயிற்று. அரசியல் திட்டச் சீர்திருத்தத்துக்கான இயக்கம் சலுகை பெற்ற சட்டவறிஞர்கள் மற்றும் தொழிற் பிரமுகர்கள் குழுவொன்றுக்கு மாத்திரம் முதன்மையாக மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்கியது. குடியேற்றவாத ஆட்சியாளர்களோடு ஆக்கபூர்வ ஒத்துழைப்பு வழிமுறைகளே அவர்களுக்குப் பரிச்சயமானதாக இருந்தது. பொதுமக்கள் கிளர்ச்சி ஆர்வம் என்பது அவர்களுக்கு அத்துணை பரிச்சயமான ஒன்றாக இருக்கவில்லை. ஒரு படிப்படியான அணுகுமுறையின் பயனுறுதியில் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். இது படிப்படியாக அரசியல் அதிகாரம் உள்ளூர்த் தலைவர்களின் கைகளுக்கு மாறுவதை வலியுறுத்தியது. இக்குழு பிரித்தானிய தாபன அமைப்போடு வாணிப மற்றும் உயர்வாழ்க்கைத் தொழில் இணைப்புக் களைக் கொண்டிருந்ததோடு குடியேற்றவாதக் கடந்த காலத் துடனான உறவை அவசரப்பட்டு முறித்துக் கொள்வதை விரும்பவில்லை. ஆகவே இலங்கையின் சுதந்திரத்துக்கான இயக்கத்தின் அரசியல் கலாசாரத்தில் குடியியல் கீழ்ப்படிவின்மை என்பது ஒரு பகுதியாக இருக்கவில்லை.
மொழிக் கிளர்ச்சிகளைப் பொறுத்த வரையில் (56-57) சக்தியாக்கிரக இயக்கம் வெற்றிபெற்றது போலத் தோன்றியது. இனத்துவ நல்லிணக்கத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கக்
39

Page 32
கூடிய ஓர் ஒப்பந்தம் உருவாகியது. இதன் மூலம் குறிப்பிடத்தகுந்த அனுகூலங்களை எட்டியதாகத் தமிழர் நம்பினர். ஒப்பந்தம் ஒரு தலைப்பட்சமாக ரத்துச் செய்யப்பட்ட போது அவர்களின் ஆரம்பகால நம்பிக்கைகள் பாழாயின. இரு இனங்களும் பொதுவான ஆட்சியாளரின் கீழிருந்த காலனித்துவ வாதக் காலப்பகுதி போலன்றி, காலனித்துவ வாதத்துக்குப் பிந்திய காலகட்டத்தில் இனத்துவ உணர்வு உயர்நிலையில் விளங்கியதோடு, இனத்துவ நீதி குறித்த அஹிம்சைப் போராட்ட இயக்கங்கள் பயமுறுத்துபவையாகத் தோன்றின. இனத்துவப் பாதிப்புகள் குறித்து முறையிடுவதே குழுத்தனித்துவத்தின் ஆக்கிரமிப்பு வெளிப்பாடு எனவும், அது அரசியல் பெரும்பான்மைக்கு விடுக்கப்படும் சவால் எனவும் அர்த்தம் கொள்ளப்பட்டது. ஒரே விதமான அரசியல் குறிக்கோள்களுக்காக இரு இனக் கூட்டணிகள் இணைந்து பணியாற்றியிருப்பின் இந்த மனப்பான்மைகளின் ஆக்கிரமிப்புத் தன்மை கடூரம் குறைந்ததாக இருந்திருக்கும். ஆயினும் இலங்கையில் 1931 இல் தேர்தல்களைப் பகிஷ்கரிக்கும் இயக்கத்தின் போதோ, அல்லது 1956 - 58 மொழிக் கருத்து மோதல்களின் போதோ இது சாத்தியப்படவில்லை. இவ்விரு இயக்கங்களுமே தமிழ்ப் புத்திஜீவிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்கியதோடு, இரு சமூகங்களும் மேலும் பிரிந்து செல்வதற்கே வழிவகுத்தன.
ஐம்பதுகளில் இடம்பெற்ற குடியியல் ஒத்தழையாமை இயக்கம் நீதிகோரி நடத்தும் ஒரு போராட்டமாகவன்றி, சாதிப் பகைமையின் வெளிப்பாடாகவே நோக்கப்பட்டது. இதன் பின்னர் இடம் பெற்ற சாதிச் சகிப்பின்மை, வன்செயல் மற்றும் குழப்பங்கள் போராட்டத்தின் தார்மீகக் குறிக்கோள்களை மறைத்து விட்டன. ஒத்துழையாமை இயக்கத்தின் தோல்விக்கு வழிவகுத்த இன்னுமொரு அம்சம் அதன் ஒழுங்கமைப்பு முறையாகும். இவ்வியக்கத்தின் தலைவராகிய செல்வநாயகம் காந்தியின் எளிமை, இலட்சிய நோக்கு மற்றும் நேர்மை என்பவற்றை ஒன்றிணைப்பவராக விளங்கினார். ஆயினும்
40

அரசியல் ஸ்தாபன மயப்படுத்தலுக்கான காந்தியின் இயலுமை அவரிடம் இருக்கவில்லை. காந்தியின் இயக்கத்தில் பெரிதும் உணரக் கூடியதாகவிருந்த பலம் வாய்ந்த தத்துவார்த்த, தார்மீக அடிப்படையும் இருக்கவில்லை. காலிமுகத் திடலில் இடம்பெற்ற சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர்ந்த தொண்டர்கள் காடையர் பலாத் காரத் தின் முன் பாக ஒழுங்கு, கட்டுப்பாட்டோடு நடந்து கொண்ட போதிலும், தேசத்தின் மனச் சாட்சி மீது இந்நிகழ்வின் தாக்கம் மிகவும் குறைவானதாகவே இருந்தது. பெரும்பான்மை இனத்தின் அனுதாப ஆதரவைத் திரட்டும் எவ்வித அர்த்தமுள்ள முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதோடு, தீவின் வேறு பிரதேசங்களில் ஒரு சமகால இயக்கம் முன்னெடுக்கப் படவில்லை. இவ்வுதாசீனப் போக்கு சர்வதேச மற்றும் உள்ளூர்ப் பத்திரிகைகளில் இவ்வியக்கம் செய்தி முக்கியத்துவம் பெறாமைக்கும், பொதுசன அபிப்பிராயத்தில் மாற்றம் ஏற்படாமைக்கும் ஏதுவாயிற் று. இதன் விளைவாக செல்வநாயகமும், அவரின் ஆதரவாளர்களும் அஹிம்சாவாத வீரத் தின் துTது வர் களாக வன் றி, குழு வாத அரசியல்வாதிகளாகவே தென்னிலங்கையில் மதிக்கப்பட்டனர். குடியியல் ஒத்துழையாமை, இயக்கத்தின் உள்ளும் வெளியிலுமிருந்த சக்திகளினாலேயே தோல்வியுற்றது. இவ்வழிமுறைகளை நிராகரித்தமை பின்னர் இலங்கையை அழிவுகள் மற்றும் குழப்பங்களுக்கு இட்டுச் செல்ல இருந்தது.
இறுதியாக, காந்தியின் குடியியல் ஒத்துழையாமை மற்றும் சத்தியாக்கிரகம் குறித்த எண்ணக்கரு 20 ஆம் நூற்றாண்டு அரசியலில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது நாம் கூட்டு மாற்றங்களை ஏற்படுத்துவதில் அ ஹரிம் சா வாத செயல் நுட் பங்கள் தொடர்ந்தும் கொண்டிருக்கும் நிகழ்வுத் தொடர்பு மற்றும் பயனுறுதி குறித்த பொதுவான முடிவுகளுக்கு வர முயலுவோம். முதலாவதாக, பலம் வாய்ந்த உபாயம் மற்றும் மதிநுட்பத் தந்திரோபாயங்கள், வழிமுறைகள், விட்டுக்கொடாத தொடர் நடவடிக்கை மற்றும் அஹிம்சை, ஒழுக்காறு என்பன நிறைந்து
41

Page 33
விளங்கும் இடங்களில் அஹிம்சாவாத செயல்நுட்பங்கள் பயனுறுதி மிக்கவையாக இருந்துள்ளன. இரண்டாவதாக வெற்றிகரமான அஹிம்சை நடவடிக்கை எதிரி தனது அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளுவதற்கும், எதிர்ப்புப் போராளிகளின் கோரிக்கைகளில் சிலவற்றையாவது வழங்க முடிவு செய்வதற்கும் இட்டுச் செல்லும். மூன்றாவதாக, அஹிம்சைப் போராட்டம் எதிரியின் சக்தி மூலங்கள் கரைந்து போவதற்கும், முழு ஆட்சி முறைமையும் பொலபொலத்துச் சரிந்து விழுவதற்கும் காரணமாக இருந்துள்ளது. உதாரணமாக இது ஜேர்மன் சனநாயகக் குடியரசிலும், 1989 இல் செக்கோஸ்லாவாக்கியாவிலும் நிகழ்ந்தது. அஹிம்சாவாத நடவடிக்கை எப்பொழுதும் சமாதான வாதத்தை ஆதரிக்கும் ஒழுக்கவியல் மற்றும் மத நம்பிக்கை முறைமைகளோடு இணைக்கப்பட்ட ஒன்றல்ல. அஹிம்சாவாத நடவடிக்கைச் செயல் நுட்பங்கள் நம்பிக்கை முறைமைகளோடு, ஆழமான தீவிர இணைப்புப் பெற்று விளங்கிய இரு பிரத்தியட்ச உதாரணங்கள் இந்திய சுதந்திரப் போராட்டமும், அமெரிக்க ஐக்கிய இராச்சியத்தின் குடியியல் உரிமைகள் இயக்கமுமாகும். நான்காவதாக, அஹிம்சை நடவடிக்கை பல சந்தர்ப்பங்களிலும், வேறு நிலைமைகளின் கீழ் வன்செயலைக் கைக்கொள்ள விரும்பிய குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வன்செயல் பயனுறுதியற் றதாகவும் , யதார் த த நிலைக் குப் பொருந்தாததாகவுமிருந்த வேளைகளில் நடைமுறைத் தேவைகளின் காரணமாக இத் தெரிவு இடம்பெற்றது.
1970 களிலும், 80 களிலும், தென்னாபிரிக்காவில் எதிர்ப்புப் போராட்ட உத்வேகக் கோஷங்கள் ஆயுதப்போர் குறித்ததாக இருந்த போதிலும், அஹிம்சைப் போராட்டமும் அங்கு கைக்கொள்ளப்பட்டது. அது பாடசாலைப் பகிஷ்கரிப்புகள், வாடகைப் போராட்டம், மற்றும் மரண வீட்டு ஆர்ப்பாட்டங்கள் என்பனவற்றின் வடிவத்தை எடுத்தது. ஐந்தாவதாக, அஹிம்சை நடவடிக்கை சனநாயக ஆட்சிக் குழுக்களுக்கு எதிராக மாத்திரமன்றி அடக்குமுறை முறைமைகளுக்கும், தீவிர சர் வாதிகாரங்களுக்கும் எதிராகவும் பயனுறுதி
42

மிக்கதாயிருந்துள்ளது. உதாரணமாக, இராணுவச் சட்டத்தின் கெடுபிடி நிலைமைகளின் கீழும் மக்கள் எவ்வாறு அஹிம்சாவாத எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்தலாம் என்பதற்கு போலந்து மக்களின் வெற்றிகரமான ஒருமைப்பாட்டுப் போராட்டத்தைக் கூறலாம். 1989 மற்றும் 1990 இல் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய ஆட்சிக் குழுக்கள் வீழ்ச்சியடைவதற்கு அஹிம்சைப் போராட்டங்கள் பெரும் பங்களிப்பு வழங்கின. சர்வாதிகார மார்க்கோஸ் ஆட்சிக் கும்பலை வீழ்த்துவதற்கு மக்கள் சக்தி வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்டது. இறுதியாக அஹிம்சை நடவடிக்கை பயனுறுதி மிக்கதாய் அமைவதற்குப் பெருமளவு காலம் எடுக்கும் என்ற நம்பிக்கையும் பிழையானதாகும். 1991 ஆவணியில் சோவியத் யூனியன் சதிப்புரட்சியில் இடம்பெற்றது போன்று ஒத்துழையாமை, எதிர்ப்பு நடவடிக்கைகள் சில தினங்களில் அல்லது சில வாரங்களில் வெற்றியைக் கொணர்ந்துள்ளன.
இப்பொழுது நான் தொடங்கிய ஆரம்பக் கருப்பொருளுக்குத் திரும்ப வேண்டும். விமோசன வேதனை குறித்த காந்தீயச் செய்தி எமது சமுதாயத்தில் உரிமைகள் இழந்து, சுயமதிப்பிழந்து வேதனையுறுவோர் விடயத்தில் அர்த்தமுள்ள, நிகழ்வுத் தொடர்புள்ள ஒன்றாகுமா? மனித ஆன்மாவின் உயிர்த் துடிப்பு மீதான எமது விசுவாசத்தை நாம் புதுப்பித்துக் கொள்ளுதல் வேண்டும். வன்செயலில் ஈடுபடாமல் எமது தார்மீகக் குமுறலை வெளிப்படுத்தும் எமது இயலுமையை நாம் மீண்டும் கண்டு பிடித்தல் வேண்டும். கடந்த வாரம் நான் தாண்டிக்குளத்தில் இடம்பெயர்ந்தோரின் வேதனையையும் விரக்தியையும் கண்ணுற்றேன். இவர்கள் மனிதாபிமான விளைவுகளுக்குத் துளியும் மதிப்பின்றி, இரு தரப்பினரும் கொண்டு நடாத்தும் கொடிய, இரக்கமற்ற யுத்தத்தின் அவலப் பலியாடுகள் ஆவர். கடந்த சில மாதங்களுள் 4 அல்லது 5 தடவைகள் இடம்பெயர்ந்த சிறுவர்களை நான் கண்டேன். மனமொடிந்து, நம்பிக்கையிழந்து காட்சியளித்த அவர்களின் கண்களில் வார்த்தைகளாற் கூற முடியாத சோகம் குடிகொண்டிருந்தது. உடலாலும், உள்ளத்தாலும்
43

Page 34
களைத்துப் போன வயது வந்தோரைக் கண்டேன். தமது
கவலைக்குரிய நிலைகுறித்து ஆத்திரத்தை வெளியிடுவதற்குக் கூட அவர்களிடத்தில் தெம்பில்லை.
இடம்பெயர்ந்தோரின் தலைவிதியையும், அடிப்படை உரிமைகள் மறுக் கப் பட்ட சகல சமூகங் களையும் சேர்ந்த எண்ணிக்கையற்றோரையும் நினைவுகூருகையில் நான் காந்தியின் அஹிம்சை நற்செய்தியின் முக்கியம் வாய்ந்த சீடனாகிய மார்ட்டின் லூதர் கிங் கூறிய வார்த்தைகளை நினைவுகூருதல் வேண்டும்.
"எதிர்காலம் குறித்த விரக்தி உணர்வு என்னிடம் இல்லை. எமது நோக்கங்கள் தற்பொழுது தவறாக விளங்கிக் கொள்ளப்பட்டாலும், பர்மிங்ஹாமில் எமது போராட்டத்தின் விளைவு குறித்து எனக்கு எவ்வித அச்சமும் கிடையாது. பர்மிங்ஹாமில் மாத்திரமன்றி, தேசம் முழுவதிலும் எமது விடுதலை இலட்சியத்தை நாம் அடைந்தே திருவோம். ஏனெனில் அமெரிக்காவின் இலட்சியம் சுதந்திரமாகும். வரலாற்றின் பக்கங்களில் ஜெபர்சனின் பேனா சுதந்திரப் பிரகடனத்தைப் பதிக்கு முன்னர், நாம் இங்கே இருந்தோம். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக எம் முதாதையர் இந்நாட்டில் துயருற்று உழைத்தனர். இரு நூற்றாண்டு காலமும் அப்பட்டமான அநீதியையும், வெட்கித் தலைகுனிய வைக்கும் அவமானங்களையும் அனுபவித்தனர். வார்த்தைகளில் வடிக்க முடியாத அடிமைத் தனத்தின் கொடூரங்கள் எம்மைத் தடுத்து நிறுத்தாதபோது, தற்போது நாம் சந்திக்கும் எதிர்ப்பு நிச்சயமாகவே தோல்வியடையும். எமது தேசத்தின் புனித மரபுக் கொடையுரிமையும், இறைவனின் நித்தியத் திருவுளமும் எமது கோரிக்கைகளில் எதிரொலிப்பதால் நாம் எமது சுதந்திரத்தை G6/67GaGa Gustab.”

"நாம் வாழ்வின் நடு இரவுப் பொழுதில் நிற்கின்றோம். நாம் எப்பொழுதும் ஒரு புதிய காலைப்பொழுதின் நுழைவாயிலில் நிற்கின்றோம்.” என அவர் மேலும் கூறினார்.
மகாத்மா காந்தி நினைவுப் பேருரை 18.10.96 இல் நிகழ்த்தப்பட்டது.
45

Page 35
மனித உரிமைகளைப்
பாதுகாப்பதற்கு எமக்கு ஒரு பிராந்திய அமைப்பு தேவையா?
வியன்னா மாநாடு மனித உரிமைகள் இயக்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் மேலும் பிரத்தியேகமாக ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்தில் மனித உரிமைகளைப் பாதுகாத்து முன்னெடுத்தல் மற்றும் பிராந்திய, உப-பிராந்திய மனித உரிமைகள் செயன்முறைமைகள் குறித்த ஒரு சமகால மதிப்பீட்டைச் செய்வதற்கான முக்கியமான பின்னணியை வழங்கி நிற்கிறது.
வியன்னா மாநாடு உரிமைகள், தனி மனிதர்களின் இயல் போடொட் டிய விழுப்பம் மற்றும் மதிப் பு என் பவற் றரிலிருந்து பரிறந்த ஒரு முறை சாரா எண்ணக்கருவியலின் அடிப்படையிலான "சர்வதேச மனித உரிமைகள் முறைமை என்பதன் அனைத்து மடங்கும் பகுப்பாராய்வு” ஒன்றைச் செய்வதற்கான ஒப்புவமையற்ற ஒரு சந்தர்ப்பமென எண்ணப்பட்டது. அதன் பணிப்பாணை கடந்த 45 வருட காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யுமாறும் அதைக் கோரியது.
வியன்னாப் பிரகடனம் பலரைப் பலவிதமாகக் கருத்து வெளியிட வைத்தது. இழுத்தடிப்புக்கள், குத்துவெட்டுக்கள் நடுவே பிரகடனம் குறித்த ஒரு கருத்தொருமிப்புச் சாத்தியம் ஏற்பட்டமையால் சிலர் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பெண்களின் உரிமைகளை ஒருங்கிணைத்ததால், மனித உரிமைகளின் உலகளாவிய தன்மை, அவற்றின் பிரிக்கவொண்ணா இயல்பு என்பவற்றை மீள் உறுதிப்படுத்துதல்
46

போன்ற குறிப்பிடத்தகு சாதனைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. மனித உரிமைகளைப் பாதுகாத்தலும், முன்னெடுத்தலும் அரசாங்கங்களின் பிரதான பொறுப்பென்றும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பிரதான குறிக்கோளென்றும், சர்வதேச சமூகத்தின் சட்ட நிலைத்தகவுடைய கரிசனை விடயமென்றும் பிரகடனம் மேலும் உறுதிப்படுத்தியது. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் ஒருவரை நியமிப்பதற்கான முடிவு ஒரு சிறிய, ஆயினும் முக்கியமான முன்னேற்ற நடவடிக்கையாகக் கருதப்பட்டது.
அபிவிருத்திக்கான உரிமை அனைவருக்குமுரியதும், பாராதீனப் படுத்த முடியாத ஒன்றுமாகுமென்று வியன்னாப் பிரகடனம் மீள் அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும், அதன் உள்ளடக்கத்தை விரிவாகக் கூறவோ நடைமுறையில் அபிவிருத்திக்கான உரிமையெனில் என்ன என்று தெளிவுபடுத்தவோ இல்லை. அரசியல் வரையறைகள், நிபந்தனைகள், மற்றும் மனிதாபிமானத் தலையீடுகள் குறித்த வாதுக்குரிய பிரச்சினைகள் சம்பந்தமாகவும் எந்த விதமான தெளிவான தீர்மானமும் இருக்கவில்லை. சுதேச மக்களினதும், சிறுவர்களினதும் உரிமைகள் புதிய உத்வேகத்தோடு மீளவலியுறுத்தப்பட்டதோடு, நடவடிக்கை நிகழ்ச்சித் திட்டம் ஐ.நா. செயன்முறைமைகளையும், நடவடிக்கைகளையும் பலப்படுத்துவதற்கான குறிப்புகளையும் உள்ளடக்கியிருந்தது.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவைப் பொறுத்த வரையில் பிராந்திய மனித உரிமை அமைப்புகள் உள்ள போதிலும் ஆசியாவுக்கு இத்தகைய மனித உரிமை அமைப்பு ஒன்று இல்லை. ஐரோப்பிய மன்றத்தின் 25 உறுப்பினர்கள் மனித உரிமைகள் குறித்த ஐரோப்பிய உடன்படிக்கையில் பங்காளிகளாகவுள்ளனர். ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுக்கான அமைப்பின் (OSCE) சட்டகத்துள் வரும் 53 நாடுகள் முரண்பாடுகளைத் தவிர்த்தல் , மற்றும் முரண்பாடுகளைத் தீர்க்கும் செயன்முறைமைகளைத் தாபித்தல் உள்ளிட்ட மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையோர்
47

Page 36
பாதுகாப்புக் குறித்த முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். 1993 பங்குனி 29 ஆம் திகதி முதல் 1993 சித்திரை 2 ஆம் திகதி வரை பாங்கொக் நகரில் இடம்பெற்ற ஐ.நா. உலக மாநாட்டின் ஆசிய பிராந்தியக் கூட்டத்தில், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான பிராந்திய அமைப்பொன்றைத் தாபிக்கும் முயற்சிகள் குறித்து சிறிது வேகம் ஏற்பட்டது. இக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரகடனம் ஆசியாவின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்குப் பிராந்திய ஏற்பாடுகளைத் தாபிக்கும் சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய வேண்டுமென்று மீள வலியுறுத்தியது.
1993 பங்குனி 27 ஆம் திகதிய பாங்கொக் அரசு சார்பற்ற நிறுவனங்கள் பிரகடனமும் இக் கருத்தோட்டத்துக்கு அவதானத்தோடு கூடிய ஆதரவை வழாங்கியிருந்தது. இத்தகைய நடவடிக்கைகள் தற்போது நடைமுறையிலிருக்கும் சர்வதேச மனித உரிமை ஏற்பாடுகளைத் தயக்கமின்றி நடைமுறைப்படுத்துவதைத் தடுத்தல் ஆகா தென்றும், தனிநபர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் தற்போது நடைமுறையிலுள்ள சர்வதேசச் செயல் முறைமைகளையும், செயன் முறைகளையும் நாடி உதவிபெறும் உரிமையை இல்லாமற் செய்யக் கூடாதெனவும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் தமது ஆதரவுக்கு நிபந்தனை விதித்துள்ளன. மனித உரிமைகள் குறித்த பிராந்திய ஆணைக்குழுவொன்றுக்கு அனைத்துமடங்கும் விசாரணை மற்றும் நீதி காணல் தத்துவங்கள் இருத்தல் வேண்டுமென்று அவை மேலும் விதந்துரைத்துள்ளன.
மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 1996/64 தீர்மானத்தில், மனித உரிமைகளைப் பாதுகாத்து முன்னெடுப்பதில் பிராந்திய அமைப்புகள் ஓர் அடிப்படையான பாத்திரத்தை வகிப்பதாகவும், அவை உலகளாவிய மனித உரிமை நியமங்களையும் அவற்றின் பாதுகாப்பையும் பலப்படுத்துதல் வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. "ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான ஏற்பாடு எதுவும் பிராந்தியத்தில் நிலவும் தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் நிலைமைகளின்
48

அடிப்படையிலேயே அமைதல் வேண்டுமென்ற காத்மண்டுவில் இடம்பெற்ற கூட்டத்தின் முடிவுகளையும் தீர்மானம் கவனத்திற் கொண்டது.
ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பிராந்திய அமைப்பொன்றை அல் லது பிராந்திய செயன் முறைமை யொன் றை ஏற்றுக் கொள்ளும் விடயத் தில் பல காரணிகள் மட்டுப் படுத் துபவையாக உள் ளன. முதலாவதாக, பிராந்தியத்தின் எண்ணக்கருவாக்கம் மற்றும் புவியியல் வரைவிலக்கணம் குறித்துத் துல்லியமான கருத்து இல்லை. இரண்டாவதாக அரசியல், பொருளாதார மற்றும் சட்ட ஒருங்கிணைப்புச் செயன்முறைகளும், மனித உரிமைச் செயற்பாடுகள் இணைப்புப் பெறக் கூடிய நிறுவனரீதியான சட்டகமும் இல்லாதிருக்கின்றன. மூன்றாவதாக, ஆசிய பசுபிக் பிராந்தியம் அசாதாரணமான புவியியல், அரசியல் தத்துவார்த்த மற்றும் பொருளாதாரப் பல்லினப் பாங்கான குணாம்சங்கள் நிறைந்த ஒன்றாகும். பொதுவான அம்சங்களை விட, வேறுபாடுகளே அதிகம் போலத் தோன்றுகின்றது. நான்காவதாக சில அம்சங்களிலாவது ஒருமைப்பாடு கொண்ட சட்ட வரலாற்றின் அடிப்படையிலமைந்த பொதுவான ஒரு சட்டப் பண்பாடு இல்லாதிருப்பது. நேபாளம், தாய்லாந்து, பிஜி மற்றும் ஜோர்தான் போன்ற வேறுபாடற்ற சட்ட முறைமைகள் நிலவும் தேசங்களில் சட்டச் சிந்தனைப் பாரம்பரியங்களும், நீதிநெறி உரை செய்தல்களும் மிகவும் மோசமானவையாகும். இந்த வித்தியாசங்கள் பொதுச் சட்ட மற்றும் குடியியல் சட்டப் பாரம்பரியங்களுக்கிடையிலுள்ள வேறுபாடுகள் போன்று மிகவும் கூர்மையானவையாகும். மேலும் 1995 இல் ஆசிய பசுபிக் பிராந்திய மனித உரிமைகள் நிலையம் "பிராந்திய செயன்முறைமை ஒன்றைத் தாபிக்கும் சாத்தியப்பாடு சம்பந்தமான எந்தக் கலந்துரையாடலும் பிராந்தியத்தின் பல நாடுகளில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதையும், மனித உரிமை ஒப்பந்தங்கள் மிகக் குறைந்த அளவிலேயே ஏற்றங்கீகரிக்கப்படுவதையும், ஏற்றங்கீகரித்த பின்னர் கடப்பாடுகளை நிறைவேற்றாமையையும், மனித உரிமைகளின் சர்வ வியாபகத் தன்மைக்கெதிராக சில அரசுகளின் பிரத்தியட்சமான தனிநபர்கள் மனித உரிமைகள்
49

Page 37
சம்பந்தமாக ஒரு பண்பாட்டுத் தொடர்பியலைப் பிரபலப்படுத்தும் போக்குக் குறித்தும் கவனத்திற் கொள்ள வேண்டுமென்று" அபாய அறிவிப்புச் செய்தது.
இத்தடைகள் இருந்தபோதிலும் ஆசிய பசுபிக் பிராந்தியம் சர்வதேச மனித உரிமைகள் அரங்கிலும், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் அமெரிக்க தேசங்களிலும் சுமார் ஐந்து தசாப்தங்களாக இடம்பெற்ற மனித உரிமைகள் சட்டவியல் அபிவிருத்திகளையும் நோக்கும் ஒப்புவமையற்ற ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளது. இத்தகைய ஒரு செயற்பாடு புத் தி ஜீவரி மற்றும் மதப் பாரம் பாரியங் களோடு பின்னிப்பிணைந்தவையும் மற்றும் மனித உரிமைகள், மனிதாபிமான விழுமியங்களுக்கு ஆதரவு நல்கும் ஆசிய பசுபிக் குறித்த உலக நோக்குகளோடு இணைந்தவையுமான எண்ணக்கருக்கள் மற்றும் விழுமியங்களிலிருந்து இப்பிராந்தியம் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளவும் உதவும். ஒரு பிராந்திய ஏற்பாடு, மனித உரிமைகள் நியமங்கள் மற்றும் வரன்முறைகளின் மேலும் பயனுறுதியுள்ள அமுலாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தலுக்கு இட்டுச் செல்வதாயமையும். ஒரு பிராந்தியச் செயன்முறைமை தற்போதுள்ள சர்வதேச செயன்முறைகள் மற்றும் நடவடிக்கை முறைகளோடு ஒப்பிடுகையில் ஆகுசெலவு குறைவான, மேலும் இலகுவாகக் கிடைக்கும், கூடிய பயனுறுதிமிக்க பரிகாரத்தை வழங்குதல் கூடும். அவை சில உள்ளூர் நியாயாதிக்கங்களின் நடவடிக்கை முறை மற்றும் நிறுவன ரீதியான பலவீனங்கள் மற்றும் குறைபாடுகளைக் களையவும், மனித உரிமைகள் சட்டவியலில் துறைத்தேர்ச்சி, மற்றும் அனுபவக் குறைவினால் ஏற்படும் தாக்கங்களைப் போக்கவும் உதவும். ஆகவே ஆசிய பசுபிக் பிராந்தியம், பிராந்தியத்தினுள் வாழும் புலமையாளர், சட்டவறிஞர், மற்றும் குடியியல் சமூகப் பிரதிநிதிகளின் உதவியோடு, அரசுப் பிரதிநிதிகளால் வரையப்படும் ஓர் ஆவணத்தின் தார்மீக சட்ட நிலைத்தகவின் மூலம் மனித உரிமைகளின் எல்லைகளை விஸ்தரிக்கும் ஒரு சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளது.
50

மனித உரிமைகளும் தற்போதுள்ள உப-பிராந்திய ஏற்பாடுகளும்
இந் நிகழ்வுத் தொடர்பில் தான் மனித உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உப-பிராந்திய ஏற்பாடுகளின் இயலுமையை வலுப்படுத்துதல் ஒரு பிராந்திய அமைப்பு மற்றும் செயன்முறைமையை அபிவிருத்தி செய்யும் செயன்முறையில் ஒரு முக்கியமான, குறிப்பிடத்தகு படியாகின்றது.
ஏழு அங்கத்துவ நாடுகளைக் கொண்ட தென்கிழக்காசிய தேசங்களின் சங்கம் (ஆசியான்) (புருனை தாருஸ்ஸலாம், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் வியட்நாம்) மூன்று அவதானிப்பு நாடுகளையும் (கம்போடியா, லாவோஸ் மற்றும் மியன்மார்) கொண்டுள்ளது. இது ஒரு செல்வாக்குமிக்க, முக்கியமான பிராந்தியக் கருத்தவையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அது பிரதானமாக வாணிப மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளில் கருத்தைச் செலுத்தியுள்ளது. தென் கிழக் காசியப் பிராந்தியத் தினுள் பொருளாதார அபிவிருத்தியை விரைவுபடுத்துவதற்கே அது ஆரம்பத்தில் தாபிக்கப்பட்டது. சகல தேசங்களினதும் சுதந்திரம் மற்றும் இறைமை குறித்த பரஸ்பர மரியாதை, ஒரு தேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் வேறொரு தேசம் தலையிடாமை, சமாதான வழிகளில் பிணக்குளைத் தீர்த்துக் கொள்ளல் போன்ற கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட, தென் கிழக்காசியாவில் செளயன்யத்துக்கும், கூட்டுறவுக்குமான ஒப்பந்தம் கைச்சாத்தாகியவுடன் ஆசியான் அமைப்புக்கு மேலும் வெளிப்படையான பாதுகாப்புக் கிடைத்தது. ஆசியான் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்களிலும், அமைச்சர்கள் கூட்டத்துக்குப் பின்னர் இடம்பெறும் மாநாட்டிலும் (பீ.எம்.சி) உரையாடற் பங்காளிகளோடு கலந்துரையாடல்கள் மூலமும் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படுகின்றது. பாது காப் பு வரிட யங் களில் உரையாடலுக் கும் , ஒத்துழைப்புக்குமான ஒரு மார்க்கமாக "ஆசியான் பிராந்தியக்
51

Page 38
கருத்தவை” ஒன்றை ஏற்படுத்துதல் வேண்டுமென்று 1993 ஆடியில் ஆசியான் பி.எம்.சி. இல் தீர்மானிக்கப்பட்டது. இக் கருத்தவை தற்போதுள்ள ஆறு ஆசியான் நாடுகளையும், தற்போதுள்ள அவற்றின் உரையாடற் பங்காளிகளையும் (அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, யப்பான், அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள் மற்றும் கனடா) மற்றும் ரூஷியா, சீனா, வியட்நாம், லாவோஸ், பாப்புவா நியூகினி என்பவற்றையும் உள்ளடக்குகின்றது.
ஆசியான் பாராளுமன்றங்களின் அமைப்பு (ஏ.ஐ.பீ.ஓ) 1993 இல் தென் கிழக்காசியாவில் மனித உரிமைகள் குறித்த ஒரு பிரகடனத்தை வெளியிட்டது. ஆசியான் பாராளுமன்றங்களின் அமைப்பு 1997 இல் உருவாக்கப்பட்டது. அது ஆசியான் அங்கத்துவ நாடுகளின் சட்டவாக்க நிறுவனங்களை உள்ளடக்குகின்றது. 1992 இல் ஆசியான் பாராளுமன்றங்கள் அமைப்பின் 13 வது பொதுப் பேரவை ஆசியானில் மனித உரிமைகளுக்கான பிராந்திய வழிகாட்டல்கள் குறித்த ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது. இதன் பின்னர் மனித உரிமைகள் குறித்த ஒரு வரைவுப் பிரகடனம் ஏ.ஐ.பீ.ஓ. வின் செயற்குழுவினால் தயாரிக்கப்பட்டு, கோலாலம்பூரில் இடம் பெற்ற 14 ஆவது பொதுப் பேரவையில் அங்கீகரிக்கப்பட்டது. 1993 இலும் 1994 இலும், ஆசியான் உப பிராந்தியத்தில் பொருத்தமான மனித உரிமைகள் செயன்முறைமை ஒன்றைத் தாபிப்பது குறித்த சாத்தியத் தகவை ஆராயும் நோக்கத்தோடு ஸ்ட்ராஸ்பேர்க்கில் நிபுணர்கள் குழுக் கூட்டங்கள் இடம்பெற்றன. முதலாவது தயாரிப்புக் கூட்டம் 1995 ஆடி மாதத்தில் மணிலாவில் இடம்பெற்றது. அதன் பின்னர் இந்தோனேசியா தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பிலிப்பைன்ஸ் ஆதரவுடன் இரண்டாவது தயாரிப்புக் கூட்டம் 1995 மார்கழியில் இடம்பெற்றது. மூன்றாவது, நாலாவது கூட்டங்கள் முறையே பாங் கொக்கிலும், ஜகார்த்தாவிலும் இடம்பெற்றன. ஐந்தாவது தயாரிப்புக் கூட்டம் கோலாலம்பூரில் 1996 ஆவணி 21, 22 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. அடுத்த படியாக ஆசியான் தேசங்களின்
52

அரசுகளிடையே பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்யுமுன்னர் சிங்கப்பூரில் இன்னுமொரு கூட்டத்தை வைப்பதாக இருந்தது. உபாயம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான நிறுவகங்களின் ஆசியான் வலைப்பின்னல் பல்வேறு பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு ஆண்டுதோறும் கூட்டங்களை நடாத்தி வருகின்றது. வேறு விடயங்களோடு மனித உரிமைகளைப் பாதுகாத்து, முன்னெடுக்கும் நோக்கில் ஓர் உபபிராந்திய மனித உரிமைகள் அமைப்பை, அபிவிருத்தி செய்யும் செயன்முறையை இலகுபடுத்தும் வகையில் மணிலாவில் 1994 தை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் ஒரு கலந்துரையாடற் கூட்டம் இடம்பெற்றது. இந்த முன் முயற்சி மனித உரிமைகள் சம்பந்தமாக முறையான ஓர் அமைப்பை ஏற்படுத்தும் சங்கத் தின் முடிவை நிறைவாக்கும் விதத் தில் எடுக்கப்பட்டதாகும். இத் தீர்மானம் 1993 ஆடியில் சிங்கப்பூரில் இடம்பெற்ற 26 ஆவது ஆசியான் அமைச்சர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இக் கூட்டத்தில் மனித உரிமைகள் ஒரு நிகழ்ச்சி நிரல் விடயமாக உள்ளடக்கப்பட்டதோடு, கூட்டறிக்கையின் பல பந்திகள் மனித உரிமைகள் குறித்துப் பிரஸ்தாபித்தன. ஆசியான் அரசாங்கங்கள் வியன்னாப் பிரகடனத்துக்கும், நடவடிக்கை நிகழ்ச்சித் திட்டத்துக்குமான தமது அர்ப்பணப் பொறுப்புணர்வைப் பிரகடனஞ் செய்ததோடு, மனித உரிமைகள் குறித்த பொருத்தமான பிராந்தியச் செயன்முறைமையொன்றை ஆய்வது குறித்தும் சம்மதம் தெரிவித்தன.
தெற்குப் பசுபிக் கருத்தவை ஒரு பொருளாதார மற்றும் சமூகக் கரிசனையைக் கொண்டுள்ளது. அதன் கவனம் சில சந்தர்ப்பங்களில் பிராந்தியத்தில் அணு ஆயுதப் பரிசோதனை போன்ற குறித்துரைத்த பாதுகாப்புப் பிரச்சினைகள் மீதும் திரும்பியுள்ளது. “தெற்குப் பசுபிக் கருத்தவை பொதுச்சபையில் ஒரு பார்வையாளராகக் கால ஓட்டத்தில் ஐ.நா வுடனான தனது உறவை விதிமுறைப்படுத்தும் விடயங் குறித்து இதுவரை தீர்வு காணப்படாத கலந்துரையாடல்கள் சமீபத்தில் இடம்பெற்றன” வென்று ஒரு கருத்துரையாளர் சுட்டிக் காட்டியுள்ளார். தெற்குப் பசுபிக் கருத்தவையோடு இணைந்து லோஏஷியா அமைப்பு பசுபிக் சாசனம் ஒன்றை வரைவதில்
53

Page 39
முன்முயற்சி எடுத்துக்கொண்ட போதிலும், அது மேலும் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
தெற்காசியப் பிராந்திய ஒத்துழைப்புச் சங்கம் (சார்க்) 1981 இல் ஏற்பட்ட ஒரு பிராந்திய அமைப்பாகும். அது பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இணைப்பதாகும். 1981 இல் இலங்கையின் வெளிநாட்டமைச்சர் ஏ.சீ.எஸ். ஹமீது தெற் கா சரியா வில் பிராந்தியக் கூட்டுறவுக் கான நியாயவிளக்கத்தைப் பின்வருமாறு தெளிவுபடுத்தினார்:
“பெருமளவிலான பொதுத்தன்மையே எமக்கு(ம்) நிலைத்தகவை வழங்குகின்றது. புவியியல் ரீதியாக எமது பிராந்தியம் தெளிவாக வரையறுக்கப்படக் கூடியதாகும். வரலாற்று ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் ஒரே தன்மையான அல்லது ஒன்றான மரபுரிமை எமக்குள்ளது. உலகின் முக்கியமான மதங்கள் எமது பிராந்தியத்தில் சக ஜீவனம் செய்கின்றன. கூட்டுச் சேராமை எமது தேசங்களின் வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு பொதுவான அம்சமாகவுள்ளது. எமது கலை, கட்டிடக்கலை, இலக்கியம் மற்றும் சங்கீதம் அனைத்தும் குறிப்பிடத்தக்களவு ஒத்த தன்மைகளைக் கொண்டவை. வடிகட்டிய, உள்ளூர் வடிவத்தில் மக்களின் மேதாவிலாசத்தைப் பறைசாற்றும் எமது பிராந்தியத்தின் கர்ணபரம்பரைக் கதைகள் ஒரே வேர்களைக் கொண்டவை. நாம் அபிவிருத்தியிற் பல்வேறு கட்டங்களில் இருந்தாலும் எமது அபிவிருத்தித் தேவைகளும், எமது அபிவிருத்தி உத்திகளும் பல பொது அம்சங்களைக் கொண்டுள்ளன.”
சார்க், தெற்காசிய முன்னுரிமை வாணிப ஏற்பாடு (சாப்டா) மற்றும் தெற்காசிய சுதந்திர வர்த்தக ஏற்பாடு (சாவ்டா) என்பவற்றைத் தாபிக்கும் பிரத்தியேக வலியுறுத்தலோடு, பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து ஒரு பரந்த வீச்சான ஒத்துழைப்பு விடயப் பரப்புகளின் மீது கவனஞ் செலுத்தியுள்ளது. சார்க், ஒன்றிணைந்த நடவடிக்கை நிகழ்ச்சித்திட்ட நடைமுறைப்படுத்தல் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கெனப் பல தொழில்நுட்பக் குழுக்களையும்
54

தாபித்தது. இந் நிகழ்ச்சித்திட்டம் விவசாயம், தொடர்பாடல் கல்வியும் கலாசாரமும், சூழலும் வளிமண்டலவியலும் சுகாதாரம் சனத்தொகை நடவடிக்கைகளும் குழந்தை நலனோம்பலும், போதைவஸ்து கடத்தலும், துஷ்பிரயோகமும், கிராமிய அபிவிருத்தி, விஞ்ஞானமும் உயர் தொழில்நுட்பமும் உல்லாசப் பிரயாணம், போக்குவரத்து மற்றும் அபிவிருத்தியில் பெண்கள் என்னும் விடயங்களை உள்ளடக்குகின்றது. இரு தரப்புப் பிணக்குகள் சார் க் கின் அபிவிருத்தியை கட்டுப் படுத்தியுள்ள போதிலும் , பிரத் தியேகமாகப் பெண்குழந்தையின் உரிமை உள்ளிட்ட சிறுவர் உரிமைகள் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடியதாக இருந்துள்ளது. தென்கிழக்காசியச் சிறுவர் குறித்த மூன்றாவது சார்க் அமைச்சர்கள் மாநாடு ராவல்பிண்டி தீர்மானத்தை அங்கீகரித்தது. பெண் குழந்தை குறித்த சார்க் தசாப்தம் பிரகடனஞ் செய்யப்பட்டதோடு ஒரு நடவடிக்கைத் திட்டமும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார உரிமைகளைப் பொறுத்த வரையில் வறுமை ஒழிப்புப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, ஒரு செயற் றரிட் டத் தை அ பரிவரிரு த் தி செய்வதற்காக ஆணைக்குழுவொன்றும் தாபிக்கப்பட்டுள்ளது. மக்களுடனான மக்களின் தொடர்புகளை முன்னேற்றுவது சார் க் செயன்முறையின் ஒரு முக்கிய அம்சமாக இருந்துள்ளது. இச் செயன்முறையின் விளைவாகத் தென்கிழக்காசியாவின் கட்டிடக் கலைஞர்கள், கழகக் கல்வியாளர், சத்திர சிகிச்சையாளர்கள், சட்டவறிஞர்கள், கணக்காளர்கள் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரோடு டொருவர் இணைப்புப் பெற்றுள்ளனர். சார்க் செயலகத்தின் வெளிப்படையான அங்கீகாரம் பெற்ற அமைப்புகளுள் ஒன்று சார்க்லோ ஆகும். இது சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம், மற்றும் மனித உரிமைகளை முன் னெடுத் துப் பாது காத் த ல் சம் பந்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காணக் கூடிய சாத்திய வளம் கொண்ட சட்டவறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் ஒரு அமைப்பாகும். ஐந்தாவது சார்க்லோ வருடாந்த மாநாடும், அங்கத்துவ நாடுகளின் பிரதம நீதியரசர்களின் மாநாடும் 1996 மார்கழி 28 ஆம் திகதி டாக்காவில் இடம்பெற்றன.
55

Page 40
வளைகுடாக் கூட்டுறவு மன்றம் (ஜீ.சீ.சீ) அதன் அங்கத்துவ அரசுகளிடையே பொருளாதார, சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகத் தாபிக்கப்பட்டது. 1991 இல் வளைகுடா யுத்தத்தைத் தொடர்ந்து இச் செயன்முறை குறிப்பிடத்தக்க அளவு விரைவுபடுத்தப்பட்டது. ஜீ.சீ.சீ. ஒரு பிராந்திய சமாதானப் படையைத் தாபிக்கும் டமாஸ்கஸ் பிரகடனத்தையும் வெளியிட்டது. எனினும் இப்பிரகடனம் இனித்தான் அமுல்படுத்தப்பட வேண்டியுள்ளது.
இஸ்லாமிய மாநாட்டு அமைப்பும், (ஒ.ஐ.சீ.) அரபு லீக்கும் ஐ.நா. பொதுச் சபைப் பணிகளில் பங்குபற்றுவதோடு, சமாதானம் மற்றும் பாதுகாப்பு விடயங்களில் பாதுகாப்புச் சபையோடு நெருக்கமாகச் செயலாற்றியுள்ளன. ஒ.ஐ.சீ. யும் அரபு லீக்கும் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த அங்கத்தினர்களைக் கொண்டுள்ளன. ஒ.ஐ.சீ.யைப் பொறுத்த வரையில் அது முழு இஸ்லாமிய உலகையும் பிரதிநிதித்துவம் செய்கின்றது. அரபு லீக் வட ஆபிரிக்கா, அரேபியக் குடாநாடு மற்றும் கிழக்கு மத்திய தரைக்கட்ஸ் பிரதேசம் என்பவற்றை உள்ளடக்குகின்றது. ஒஐ.சீ. வேறு விடயங்களோடு நீதியின் அடிப்படையிலான சர்வதேச சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றுக்குத் தேவையான ஆதரவு நடவடிக் கைகளை எடுப் ப ைதயும் நோக்கமாகக் கொண்டியங்குகின்றது. அரபு லீக் தனது அரசியற் குழு, கூட்டுப் பாதுகாப்பு மன்றம் மற்றும் நிரந்தர ஆணைக்குழு என்பன மூலம் இதே விதமான பாதுகாப்புப் பிரச்சினைகளிற் கவனஞ் செலுத்தி வருகின்றது.
இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு இஸ்லாத்தில் மனித உரிமைகள் குறித்த கெய்ரோப் பிரகடனத்தை 1990 ஆவணி 5 ஆம் திகதி அங்கீகரித்தது. வெளிநாட்டமைச்சர்களின் இருபத்தோராவது மாநாடு, (சமாதானம், நீதி மற்றும் முன்னேற்றத்துக்கான இஸ்லாமிய ஐக்கியம் மற்றும் ஒத்துழைப்புக்கான அமர்வு) 1999 இல் சித்திரை 25 தொடக்கம் 29 வரை பாகிஸ்தானில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் வியன்னா மாநாட்டில் இஸ்லாமிய
56

நாடுகளைச் சேர்த்துக் கொள்வதற்கு கெய்ரோப் பிரகடனக் கோட் பாடுகளை அடிப் படையாகக் கொள்வதை மீளவுறுதிப்படுத்தும் ஒரு தீர்மானத்தை எடுத்தது.
இஸ்லாத்தில் மனித உரிமைகள் குறித்த கெய்ரோப் பிரகடனம் பின்வரும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். "இஸ்லாத்தில் அடிப்படை உரிமைகளும், சகலருக்கும் சுதந்திரமும் இஸ்லாமிய மதத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். கோட்பாடு என்ற வகையில் அவற்றை முற்றாகவோ அல்லது ஒரு பகுதியையோ இடைநிறுத்தி வைக்கவோ, மீறவோ அல்லது உதாசீனஞ் செய்யவோ எவருக்கும் உரிமையில்லை” அடிப்படை மனித விழுப்பம் குறித்து மனிதர்கள் சமமானவர்கள். இனம், நிறம், மொழி, பால், மதநம்பிக்கை, அரசியல் சார்பு அல்லது வேறு கணிப்புகளின் அடிப்படையில் எவ்வித பாரபட்சமும் இழைக்கப்படலாகாது (உறுப்புரை 1) எனவும், மனித கெளரவத்தைப் பொறுத்த வரையில் பெண் ஆணுக்கு சமமானவள் (உறுப்புரை 6) எனவும் பிரகடனம் மேலும் உறுதிப்படுத்துகின்றது. பிரகடனம் அத்தோடு உயிருக்கான உரிமை (உறுப்புரை 2), ஒருவரின் நற்பெயர் மற்றும் மதிப்பு என்பவை பாராதீனப்படுத்த முடியாமை (உறுப்புரை 4), நடமாட்ட சுதந்திரம் (உறுப்புரை 12), தனிச் சொத்துக்கான உரிமை (உறுப்புரை 15), மதத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, அந்தரங்கம் பேணுவதற்கான உரிமை (உறுப்புரை 18), சட்டத்தின் முன் சமத்துவம் (உறுப் புரை 19) மற்றும் எழுந்த மானக் கைது நடவடிக்கைகளிலிருந்து சுதந்திரம் (உறுப்புரை 20) என்பவற்றையும் உறுதிப்படுத்துகின்றது. பிரகடனம் மேலும் பின்வருமாறு கூறுகின்றது." இந்தப் பிரகடனத்தின் உறுப் புரைகள் எதனையும் விளக்குதல் அல்லது தெளிவுபடுத்தலுக்கு உசாவ வேண்டிய ஒரேயொரு மூலம் இஸ்லாமிய ஷாரியா ஆகும்.” ஆயினும் ஜெனீவாவிலுள்ள சர்வதேச நடுவர்கள் ஆணைக்குழு சிறிது கவனமாக கருத்துக் கூறியதோடு பிரகடனம் "சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அடிப்படையாக விளங்கும் கலாசாரங்களுக்கு
57

Page 41
இடையிலான கருத்தொருமிப்பைப் பாரதூரமாகப் பயமுறுத்துகின்றது எனவும், (மற்றும்) சில குறிப்பிட்ட அத்தியாவசிய ஏற்பாடுகள் பல முஸ்லீம் தேசங்களிலுள்ள சட்ட நியமங்களுக்குக் குறைவானவை என்றும்” கூறியுள்ளது. ஆயினும் 1993 இல் இடம்பெற்ற வெளிநாட்டு அமைச்சர்களின் இஸ்லாமிய மாநாட்டுக் கராச்சித் தீர்மானம் மனித உரிமைகள் நியமங்கள் மற்றும் உடன்பாடுகளைப் பிரயோகிப்பதில் அனைவருக்கும் பொருந்தும் தன்மை, யதார்த்த நோக்கு மற்றும் பாரபட்சமின்மை என்பவை கடைப்பிடிக்கப்பட வேண்டிய தேவைகுறித்து மீள வலியுறுத்தியுள்ளது. மேலும் தீர்மானம், பொருளாதார, சமூக, கலாசார, குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் ஒன்றிலொன் று தங்கியிருப்பதையும், அவற்றின் பிரிக்க முடியாத் தன்மையையும், சகல வகைப்பிரிவுகளையும் சேர்ந்த மனித உரிமைகளுக்குச் சமமான அழுத்தம் கொடுத்தல் வேண்டுமென்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
1970 இல் மனித உரிமைகள் குறித்த அரபுச் சாசனம் ஒன்றை வரையுமாறு அரபுச் சங்கத்தின் மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பலனாக 1994 புரட்டாதியில் அரபு அரசுகளின் சங்கம் மனித உரிமைகள் குறித்த அரபு சாசனத்தை அங்கீகரித்தது. இச் சாசனத்தில் 43 உறுப்புரைகள் இடம் பெற்றிருக்கின்றன. அரபு சங்கத்தின் அங்கத்தவர்களான 22 அரசுகளின் கையொப்பம் நாடிப் பெற்றுக்கொள்ளப்பட்டது. சாசனம் உலக மனித உரிமைகள் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ள பல தனிமனிதர் உரிமைகளைப் பொதுவாகத் தழுவி நிற்கின்றது. அது ஆண்களுக்கும், பெண்களுக்குமிடையில் பாரபட்சமின்மை உரிமையையும், கூட்டுச் சுயநிர்ணய உரிமையையும் உறுதிப்படுத்துகின்றது. இச் சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள சில அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகள் குற்றஞ் சாட்டப் பட்டவரின் உரிமைகளைப் பாதுகாப்பதோடு தொடர்புற்றவையாகும். இவை நிரபராதி என்னும் ஊகம், பாதுகாப்பு உரிமைகளுக்கான உத்தரவாதம், குற்றவியல் சட்டம் கடந்த காலத்தை
58

உள்ளடக்காமை, மற்றும் சித்திரவதை, மனிதத்தன்மையற்ற முறையிலும், இழிவாகவும் நடத்துதல் என்பவற்றுக்குப் பூரண தடை என்பவற்றை உள்ளடக்கியுள்ளன. தமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வரும் உரிமை, அரசியல் புகலிடம் கோரும் உரிமை மற்றும் விசாரணைக்கான உரிமை என்பவை எவ்வகையிலும் குறைக்கப்பட முடியாத உரிமைகளென்று சாசனம் மேலும் ஏற்பாடு செய்கின்றது. சாசனம் எதிர்நோக்கும் அவதானிப்புக் குழு அரபு சங்கத்தினால் நியமிக்கப்படும் 7 நிபுணர்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் நிபுணர்கள் குழுவாகும். அரசுகளால் காலத்துக்குக் காலம் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை மூன்று வருடத்துக்கு ஒருமுறை பரிசீலிக்கும் பணிப்பாணையைக் குழு கொண்டுள்ளது. இக் குழு 1968 இல் தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் குறித்த நிரந்தர அரபுச் சங்க ஆணைக்குழுவுக்கு அறிக்கையிடும்.
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சில மனித உரிமைகளைத் தவிர்த்தமைக்காகவும், அவசரகால நிலைமைகளின் கீழ் அரசுகள் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளைப் பாரதூரமாகக் குறைக்கும் தத்துவத்தைக் கொண்டிருப்பதற்காகவும் ஒரு கருத்துரையாளர் சாசனத்தை விமர்சித்துள்ளார். ஒரு பொது அவசரகால நிலை ஏற்பட்டு, தேசத்தின் வாழ்க்கையை அது பயமுறுத்துகையில், எடுக்கப்படும் நடவடிக்கைகளின் அளவு "முழுக்க முழுக்கச் சூழ்நிலைகளால் வேண்டப்படுவதாக இருந்தால் மட்டுமே உரிமைக் குறைப்பு இடம்பெறலாம்." "தேசிய மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பு, அல்லது பொது ஒழுங்கு அல்லது பொதுச் செளக்கியம் அல்லது தார்மீக ஒழுக்க நெறிகள் அல்லது மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றைப் பாதுகாக்க அவசியப்படும்" மட்டுப் பாடுகளையும் சாசனம் அனுமதிக்கின்றது. அவதானிப்புக் குழுவின் நிறைதகவையும் அவர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளனர். சாசனத்தின் 3 ஆம் உறுப்புரை ஒரு முக்கியமான ஏற்பாட்டைச் செய்கின்றது. அது அரசுகள், சாசனம் குறிப்பிட்ட உரிமைகள் மற்றும் கடப்பாடுகளை அங்கீகரிக்கவில்லை என்னும் காரணத்தின் நிமித்தம்
59

Page 42
முரண்பாடுகள் மற்றும் உள்ளூர்ச் சட்ட விதிகள் குறித்த கடப்பாடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது எனக் கூறுகின்றது. இதன் கருத்து அரசுகள் தாம் கையொப்பமிட்ட சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளை அல்லது சாசனத்தினால் அங்கீகரிக்கப்பட்டவற்றை விடக் கூடுதலான உரிமைகளை வழங்கும் உள்ளூர் ச் சட்டங்களை உதாசீனப்படுத்த முடியாது என்பதாகும். அரபு மனித உரிமைகள் நிபுணர்கள் குழு "சாசனத்திலுள்ள சில குறைபாடுகளுக்குப் பரிகாரம்” காண முடியுமென்று சில கருத்துரையாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள். “பிரத்தியேகமாக, பல அரபு நாடுகள் பிரதான சர்வதேச மனித உரிமைகள் உடன்பாடுகளில் கையொப்பமிட்டிருப்பதால் முழு சாசன ஏற்பாடுகளைச் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தினடிப்படையில் உரை பெயர்க்கலாம்.” என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர்.
மனித உரிமைகள் குறித்த பிராந்திய , உப பிராந்திய ஒத்துழைப்பை இலகுபடுத்துவதில் அரசு சார்பற்ற நிறுவனங்களின் பாத்திரம்
மனித உரிமைகள் பிராந்திய மன்றம் ஆசியான் நாடுகளினதும் அரசாங்கங்களினதும் மனித உரிமைகள் குறித்த பிரகடனம் ஒன்றை வரைந்தது. பாங்கொக்கிலிருந்து இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகள் குறித்த ஆசியப் பிரகடனம் ஒன்றை வரைந்துள்ளதோடு, ஒரு ஆசிய மனித உரிமைகள் சாசனத்தை இறுதியாக்கும் செயன் முறையில் ஈடுபட்டுள்ளது. இக் கருத்திட்டம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினதும் (ஏ.எச்.ஆர்.சீ) சீ.சீ.ஏ யின் சர்வதேச விவகாரங்கள் பிரிவினதும் கூட்டு முன் முயற்சியாகும். 1994 இல் ஆரம்பக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதோடு, கலந்துரையாடல்களின் விதந்துரைப்பின் பேரில் 100 க்கு மேற்பட்ட அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஒரு கேள்விக்கொத்தை நிரப்பின. சாசனத்தின் நோக்கம் "மனித உரிமைகள்
60

எண்ணக்கரு குறித்த சில அடிப்படைப் பிரச்சினைகளையும், மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துதல் குறித்த பிரச்சினைகளையும் தீர்ப்பதாகும். “1994 இல் ஆசிய சாசனத்தின் வரைபு ஒன்று” ஒரு கல்விசார் ஆவணமாகவும், ஆசியாவில் மனித உரிமைகளைப் பாதுகாத்து முன்னெடுக்கும் முகமாக ஒருமைப்பாட்டு நடவடிக்கையை அபிவிருத்தி செய்யும் ஒரு அடிப்படையாகவும்” வெளியிடப்பட்டது. வரைபில் உள்ளடக்கம் பெற்ற எண்ணக்கருக்கள், யோசனைகளை மேலும் புடம் போடும் பொருட்டு 1996 தை 29 ஆம் திகதி முதல் மாசி 1 ஆம் திகதி வரை ஹொங்கொங், கெளலுரனில், மனித உரிமை சாசன வரைபு குறித்த கிழக்காசிய கலந்தாலோசனையொன்று இடம்பெற்றது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு இச்சாசனத்தை இறுதியாக்குவதற்கு முன்னுரிமையளித்துள்ளது.
வரை புச் சாசனம் பரின் வரும் வரிட யங் களை உறுதிப்படுத்துகின்றது. "மனித உரிமைகள் சகல கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியங்களையும் உள்ளடக்கும் விதத்தில் உலகளாவியவை. இந்த மனித உரிமைகளின் உலகளாவிய தன்மை பிரத்தியேகமாக கடந்த கால வரலாற்றின் அனுபவத்தில் நிலைமாற்றமின்றித் தீங்கிழைக்கப்பட்டு உதாசீனஞ் செய்யப்பட்ட குழுக்களான பெண்கள், சிறுவர், சிறுபான்மையினர், சுதேச மக்கள், தொழிலாளர், விவசாயிகள், வேலையற்றோர், அகதிகள், இடம் பெயர்ந்தோர், அங்கவீனர் மற்றும் மூப்படைந்தோர் என் போருக்கான விசேட வலியுறுத்தலோடு, மனித வர்க்கம் முழுவதுக்குமான பாதுகாப்பு அடிப்படையை வழங்குகிறது. கடந்த கால வரலாற்றின் பல ஒடுக்குமுறை வடிவங்களின் அடிப்படையிலானவையும், மனித வர்க்கத்தின் மனிதாபிமானத்தின் மீது கட்டியெழுப்பப்படும் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளை மறுப்பவையும், பாரதூரமாகக் குறைப்பவையுமான கலாசார, பாரம்பரிய அம்சங்களை நிலைமாற்றமின்றி எதிர்த்துப் போராடவும், ஒழித்துக் கட்டவும் வேண்டும். சாசன வரபு, குடியியல், அரசியல் மற்றும் சமூக-பொருளாதார உரிமைகளை மீளவுறுதி செய்வதோடு, பெண்களின் உரிமைகள், சிறுவர்
61

Page 43
உரிமைகள், சுதேச உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சமூகங்களின் உரிமைகள், மூப்படைந்தோர் உரிமைகள், அங்கவீனர் உரிமைகள், விவசாயிகள் மற்றும் மீனவர் உரிமைகள், எச்.ஐ.வீ/ எயிட்ஸ் பாதிப்புற்றோரின் உரிமைகள், கைதிகளினதும் அரசியல் கைதிகளினதும் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளைக் காப்பாற்றுவதற்குப் போராடுவோரின் உரிமைகள் என்பவை குறித்த அத்தியாயங்களையும் கொண்டுள்ளது. பரிகாரங்கள் குறித்த அத்தியாயம் சமூக, அரசியல் பரிகாரங்களோடு சட்ட ரீதியான பரிகாரங்களையும் வலியுறுத்துகின்றது. வரைபு மேலும் பின்வருவனவற்றையும் கூறுகின்றது. "ஆசியாவின் மனித உரிமைகளை முன்னெடுத்துப் பாதுகாப்பதற்குப் பிராந்திய செயன் முறைமைகள் அபிவிருத்தி செய்யப்படுதல் வேண்டும். இப் பிராந்தியச் செயன் முறைமைகள் உபபிராந்தியச் செயன்முறைமைகளை உள்ளடக்குதல் வேண்டும். இத்தகைய செயன் முறைமைகளைத் தாபிப் பதிலும் முன்னெடுப்பதிலும் பிராந்திய மக்கள் அமைப்புகளும், அரசு சார்பற்ற நிறுவனங்களும் முன் முயற்சி எடுத்தல் வேண்டும். இத்தகைய ஒரு நோக்கத்தை ஈட்டுவதற்கான தொழில்நுட்ப விடயங்களைக் கையாளுவதில் நிபுணர்கள் பெரிதும் உதவலாம்"
1995 மார்கழியில் பிரீட்ரிச் நோமன் ஸ்டிப்டுங் அமைப்பு தெற்காசியாவில் மனித உரிமைகள் மற்றும் மோதல் தீர்வுக்கான ஐரோப்பிய மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் அனுசரணையோடு ஸ்ட்ராஸ்போர்க்கில் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தது. ஸ்டராஸ்போர்க் மாநாட்டின் குறிக்கோள் தெற்காசியாவில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மோதல் களைக் கையாளுவதற்குப் பொருத்தமான அமைப்புகளையும், செயன் முறைமைகளையும் தாபிப்பதற்கான அடிப்படை நிலைமைகளை உருவரைக் குறிப்புச் செய்வதாகும். மாநாடு ஒர் அறிக்கையை விடுத்ததோடு தெற்காசியாவில் மனித உரிமைகளையும், சுயகெளரவ விழுப்பத்தையும் முன்னேற்றுவதற்குப் பிராந்திய மற்றும் பலதரப்பு முன் முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.
தெற்காசிய நிகழ்வுத் தொடர்பில், சார்க் நாடுகளைச் சேர்ந்த அரசு - சார்பற்ற நிறுவனங்கள் நேபாளம், பங்களாதேஷ்,
62

இலங்கை மற்றும் பாகிஸ்தானில் முறையே அவற்றின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் உதவியோடு தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. இலங்கையின் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கைப் பொறுப்பு அமைப்பு தெற்காசியப் பிராந்தியத்துக்கான ஒரு மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கும் நோக்கில் 1992 இல் ஒரு பிராந்தியக் கலந்துரையாடலை ஒழுங்கு செய்தது. இக் கலந்துரையாடல் மூன்று பரந்த குறிக்கோள்களைக் கொண்டிருந்தது.
(அ) குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள், குழு மற்றும் பாற் பிரிவினை உரிமைகள் போன்ற துறைகளில் தெற்காசிய அனுபவங்களை மீள் மதிப்பீடு செய்தல்.
(ஆ) இத் தசாப்தத்தில் முன்னுரிமை பெற வேண்டிய நடவடிக்கைகளின் நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தெளிவாக வரையறுத்துக் கூறுதல்.
(இ) பிராந்தியத்தில் மனித உரிமைகளைப் பாதுகாத்து முன்னெடுக்கக் கூடிய வலைப்பின்னல் அமைப்புகளைத் தெற்காசியா முழுவதும் ஏற்படுத்துதல்.
தற்போதுள்ள உப பிராந்திய ஏற்பாடுகளில் மனித உரிமைகள் இயலுமைகளை வலுப்படுத்துதல்
ஆசியான், சார்க் மற்றும் எஸ்.பி.எப். (தென் பசுபிக் கருத்தவை) போன்ற பல உப பிராந்திய அமைப்புகளில், இத் தாபனங்களின் குறிக் கோள்களில் மனித உரிமைகள் தெளிவாக, வெளிப்படையாக இடம்பெறவில்லை. இக் காரணத்தால் ஆசியான் அரசுத் தலைவர்களினதும், சார்க் அரசுத் தலைவர்களினதும் மற்றும் தென் பசுபிக் கருத்தவைத் தலைவர்களினதும் வருடாந்த கூட்ட நிகழ்ச்சி நிரல்களில் மனித உரிமைக் கரிசனைகள் இடம்பெறுவதில்லை. சமீபத்தில் இடம்பெற்ற ஆசியான் அமைச்சர்கள் கூட்டத்திற்குப் பின்னர் இடம்பெற்ற மாநாட்டிலோ அல்லது ஆசியான் பிராந்தியக் 63

Page 44
கருத்த வைக் கூட்டத்திலோ இப் பிரச்சினைகள் வெளிப்படையாக ஆராயப்படவில்லை. மனித உரிமைப் பிரச்சினைகளில் ஒத்துழைத்தல் குறித்த புத்திஜீவிகள் செயலூக்கம் பிறந்தது பாராளுமன்ற அங்கத்தினர், கழகக்கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் வாழ்க்கைத் தொழிற் குழுக்களிடமிருந்தாகும். ஆசியான் அமைப்பினுள்ளே மனித உரிமைப் பிரச்சினைகளுக்குக் கவனஞ் செலுத்த வேண்டுமென்ற முன் முயற்சி ஆசியான் பாராளுமன்றங்களின் அமைப்பு மற்றும் உபாய ஆய்வுகளுக்கான ஆசியான் நிறுவனங்களின் வலைப்பின்னல் ஆகியவற்றிலிருந்து வந்துள்ளது.
அதே போன்று தென் பசுபிக் கருத்தவைக்கான ஒரு மனித உரிமைகள் சாசனத்தை வரையும் முன் முயற்சியின் பரின் ன னரியில் Ꮳ Ꮆu rᎢ ஏ சரியா இருந்துள்ளது. அரசுகளுக்கிடையிலான சட்டகத்துக்கு வெளியே, பல அரசு சார்பற்ற நிறுவனங்கள் மனித உரிமைகள் பிர்ச்சினைகளில் பிராந்திய மற்றும் உப பிராந்திய ஒத்துழைப்புக்காகக் கணிசமான அளவு முயற்சி எடுத்துள்ளன.
மனித உரிமைகளைப் பாதுகாத்து முன்னெடுத்தல், இவ்வமைப்புகள் அனைத்தினதும் அபிவிருத்தி, சூழல், சமாதான மற்றும் பாதுகாப்புக் கரிசனைகளின் பிரிக்க முடியாத பகுதியாகவுள்ளது. ஆசியான் தாபிக்கப்பட்ட பொழுது. 1967 இல் கையொப்பமிடப்பட்ட பாங்கொக் பிரகடனம் அதன் இலட்சியம் பொருளாதார ஒத்துழைப்பையும், பிராந்திய மக்களின் நலன்களையும் முன்னேற்றுவதாகும் எனக் குறிப்பிட்டது. மூன்று ஒன்றோடொன்று தொடர்புற்ற குறிக்கோள்களும் பின்வருமாறு: கூட்டுறவு நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் பிராந்தியத்தின் பொருளாதார, சமூக, மற்றும் கலாசார அபிவிருத்தியை முன்னேற்றுதல்; பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ் திர த் தன் மை யைப் பாது காத் த ல் : மற்றும் பிராந்தியங்களுக்கிடையிலான பிணக்குகளைத் தீர்க்கும் ஒரு கருத்தவையாகப் பயன்படுத்தல். 1995 இல் பாங்கொக்கில்
64

இடம்பெற்ற 5 ஆவது ஆசியான் உச்சி மாநாட்டில் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் சமூக அபிவிருத்தி, சமூக நீதி மற்றும் வறுமை ஒழிப்பு என்பவையும் வலியுறுத்தப்பட்டன. எழுத்தறிவின்மையை அறவே ஒழிப்பது, பெண்களின் ஒப்புரவான பயனுறுதிமிக்க பங்கேற்பு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் குடும்பத்தைச் சக்திமிக்கதாக்குதல் என்பவற்றையும் உச்சி மாநாடு வலியுறுத்தியது. ஆசியானின் இயைபுற்ற நடவடிக்கைகளில் அரசு சார்பற்ற நிறுவனங்களோடு நெருக்கமாகப் பணியாற்ற வேண்டிய முக்கியத்துவத்தையும் உச்சி மாநாடு மீள வலியுறுத்தியது.
இதே போன்று சார்க் அமைப்பினுள் பெண் குழந்தை மற்றும் அபிவிருத்தியில் பெண்கள் குறித்த தொழில்நுட்பக் குழுக்களும், வறுமை ஒழிப்பு ஆணைக் குழுவும் சிறுபிள்ளையின் உரிமைகள், பாற்பிரிவினை சமத்துவம், அபிவிருத்திக்கான உரிமை, சமுக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் சம்பந்தமான பிரச்சினைகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தென் பசுபிக் பிராந்திய மக்களின் சமூக, பொருளாதார நலன்களை மேம்படுத்தும் நோக்கில் பதினைந்து அங்கத்துவ நாடுகளிடையே ஒத்துழைப்பை இலகுபடுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டு 1971 இல் தென் பசுபிக் கருத்தவை தாபிக்கப்பட்டது. குறிப்பாக இக் கருத்தவை பொருளாதார அபிவிருத்தி, போக்குவரத்து, உல்லாசப் பயணம் மற்றும் தொடர்புள்ள விடயங்களில் ஒத்துழைப்பை இலகுபடுத்த விழைகின்றது.
மார்ஷல் தீவுகளில் இடம்பெற்ற தென்பசுபிக் கருத்தவை உச்சி மாநாடும் குளிர்சாதன வாயு வெளியேற்றங்களைக் குறைப்பதற்கான, சட்டரீதியாகக் கட்டுப்படுத்தும் இலக்குகளை அங்கீகரிப்பது உள்ளடங்கலாக ஒரு பரந்த வீச்சிலான சூழல் மற்றும் நிலைத் தகவுள்ள அபிவிருத் திப் பிரச்சினைகளுக்குக் கவனஞ் செலுத்தியது.
இந்த உப பிராந்திய ஏற்பாடுகளின் பணிப்பாணைகள் வழங்கும் சட்டகங்களினுள் உப-பிராந்தியத்துக்கு இயைபுடைய
65

Page 45
குறித்துரைத்த மனித உரிமைக் கரிசனை விடயங்களுக்கு முறைமைாரீதியாகத் தீர்வு காணப்படல் முடியும் . இவ்வேற்பாடுகள் ஒவ்வொன்றும் ஐ.நா. மனித உரிமைகள் நிலையத்திலிருந்து கிடைக்கக் கூடிய உதவியோடு தாம் ஒரு
மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலை எவ்வாறு முறையே தமது பணிப்பாணைகள் மற்றும் குறிக்கோள்களோடு இணைப்பது என்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டிய தேவை உள்ளது.
மனித உரிமைகளைப் பாதுகாத்து, முன்னெடுத்தலை மேலும் பலப்படுத்துவதற்கு ஒ.ஐ.சீ யும் அரபுச் சங்கமும் கெய்ரோப் பிரகடனத்தையும், அரபுச் சாசனத்தையும் தொடர்ந்து அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. காத்மண்டுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட படிப்படியான பரிணாம வளர்ச்சி அணுகுமுறைப் பிரகாரம், இயலுமைகளை. வலுப்படுத் தி, ஒத்துழைப்பை இலகுபடுத்தும் சில திட்டவட்டமான நடவடிக்கைகள் குறித்து நாம் பரிசீலனை செய்யலாம்.
ஒவ்வொரு உப-பிராந்தியமும் மனித உரிமைகளை முன்னெடுப்பதற்காக ஒரு கருத்தவையைத் தாபிப்பது குறித்துச் சிந்திக்கலாம். கருத்தவை மனித உரிமைகளை முன்னெடுப்பது குறித்த தகவல்கள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ளுதல் குறித்த ஏற்பாடுகளைச் செய்யலாம். தற்போதுள்ள சர்வதேசிய மற்றும் பிராந்திய மனித உரிமை அமைப்புகள், முறையீட்டுச் செயன் முறைமை, நாடுகளின் அரசியலமைப்புகள், தேசிய நிறுவனங்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்த முக்கியமான நீதிமுறை சார் தீர்ப்புகள் என்பவை குறித்தும் கருத்தவை தகவல்களை வழங்கலாம். கருத்தவை மேலும் பிராந்திய மற்றும் உப-பிராந்திய ஒத்துழைப்பை முன்னேற்றும் வகையில் உதவக் கூடிய, இயைபுள்ள குடியியல் சமூக முன்முயற்சிகள் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யலாம்.
மனித உரிமைகளைப் பாதுகாத்து முன்னெடுக்கும் விடயத்தில் ஆழமான கலந்தாலோசனை, சிந்தனை மற்றும் விவாதம்
66

என்பனவற்றுக்காக மனித உரிமைகள் கொள்கை ஆய்வு நிறுவகம் ஒன்றையும் தாபிக்கலாம். சர்வதேச மனித உரிமைகள் குறித்த கலாசாரங்களுக் கிடையிலான கருத்தொருமிப்பு எவ்வாறு பிராந்தியத்திலும், உபபிராந்தியங்களிலும் நிலவும் நிலைமைகள், தேவைகள் மற்றும் முன்னுரிமைகளோடு இணைக்கப்படலாம் என்பது குறித்து இந்த நிறுவகம் கவனஞ் செலுத்தலாம். இத்தகைய ஒரு நிறுவகம் மத மற்றும் புத்திஜீவிப் பாரம்பரியங்களையும், பிராந்திய விவகாரங்கள் குறித்த உலக அபிப்பிராயங்களையும், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விழுமியங்களுக்கு ஆதரவான எண்ணக் கருக்கள், விழுமியங்கள் மற்றும் அணுகுமுறைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு பரிசீலனை செய்யலாம். தற்போதுள்ள மனித உரிமைகள் சட்டவியல் ஆசியாவிலும், பசுபிக் பிராந்தியத்திலுமுள்ள பெரும்பான்மையினரான மக்களுக்குப் புரியாத மொழி, மரபு நடை மற்றும் சொல்லாடலிலேயே காணப்படுகின்றது. ஆசிய பசுபிக் பிராந்தியம் தற்போதுள்ள மனித உரிமைகள் குறித்த உரையாடலைக் குறிப்பிடத்தக்க அளவு மேலும் செழுமைப்படுத்த முடியும் என்பதை இனங் கண்டு அங்கீகரிப்பது புத்திஜீவிகள் முன்னுள்ள வாழ்வாதாரமான முக்கியத்துவம் வாய்ந்த சவாலாகும். பிராந்திய மற்றும் உபபிராந்திய மக்களின் அன்றாட அனுபவங்கள் மற்றும் தேவைகளை ஒட்டி இவ்வுரையாடலை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதை நிறுவகம் மேலும் உறுதிப்படுத்தலாம். நிறுவகம் தற்போதுள்ள கழகக்கல்வி, மற்றும் ஆய்வு நிறுவனங் களுடன் நெருங் கி ஒத் துழைத் துப் பணியாற்றுவதோடு, மனித உரிமைப் பிரச்சினைகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்த கருத்தொருமிப்பை ஈட்டுவதில் கொள்கை வகுப்போருடன் ஒத்துழைக்கலாம். நிறுவகம் சர்வதேச நியமங் குறிக்கும் கருமப்பாடுகளை அவதானிப்புச் செய்வதோடு, ஒரு பிராந்திய/உப பிராந்திய காட்சிக் கோலத்தின், அபிவிருத்திச் செயன்முறையைக் கூட்டிணைப்புச் செய்யும் முயற்சிகளிலும் ஈடுபடலாம். மனித உரிமைகள், நிலைத்தகவுள்ள அபிவிருத்தி, சமாதானம், பாதுகாப்பு மற்றும்
67

Page 46
ஆட்சிமுறை என்பவற்றுக்கு இடையிலான உறவுகள் குறித்தும் நிறுவகம் மேலும் தெளிவுபடுத்தலாம்.
பிராந்தியம் மற்றும் உப-பிராந்தியத்தினுள் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் கூட்டிணைக்கும் அரசாங்கங்களுக்கு இடையிலான கருப்பொருள்சார் குழுக்களை அமைத்தல் முக்கியமானதாகும். இக் கருப்பொருட்கள் சிறுவர் உரிமை, பெண்களுக்கெதிரான வன்செயல், இடப்பெயர்வு மற்றும் அகதிகள் பிரச்சினைகளை உள்ளடக்கலாம். 1992 இல் சிறுவர் உரிமைகள் குறித்துப் பிராந்தியத்திலுள்ள நாடுகளின் ஆதரவைத் திரட்டி ஆற்றுப்படுத்தவென சிறுவர் உரிமை ஆசியா நெற் அமைப்பு தாபிக்கப்பட்டது அவர்கள் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தியதோடு, சிறுவர் உரிமைகள் குறித்த, கொள்கைகள் மற்றும் அபிவிருத்திகளைக் கண்காணித்துள்ளனர். அவர்கள் பொதுமக்கள் கல்வியூட்டல் நிகழ்ச்சித் திட்டங்களுக்கான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் போன்ற ஊக்குவிப்புச் சாதனங்களையும் தயாரித்துள்ளனர். இது அரசாங்கங்களுக்கிடையிலான மட்டத்திலும், உப பிராந்திய மட்டத்திலும் மீண்டும், மீண்டும் இடம்பெறக் கூடிய ஒரு மாதிரியாகும். இதே போன்று தெற்காசியாவில் அகதிகள், புலம்பெயர்ந்தோர், மற்றும் நாடற்றோர் குறித்து 1996 கார்த்திகை 18-22 திகதிகளில் காத்மண்டுவில் இடம்பெற்ற மாநாட்டில் பங்குபற்றியோர் இவர்களின் பாதுகாப்பில் கவனஞ் செலுத்துவதற்கு நிறுவனரீதியான ஏற்பாடுகளின் அவசியங்குறித்து விதந்துரைத்தனர்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் தொடர்பான புதிதாய்ப் பரிணமிக்கும் எண்ணக்கருக்கள் மற்றும் சட்டவியல் குறித்து நீதிபதிகளும், சட்டவறிஞர்களும் அறிந்து கொள்ளும் விதத்தில் மனித உரிமைக் கல்வி தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை அபிவிருத்தி செய்தல் வேண்டும். இந்நிகழ்ச்சித் திட்டங்களை சார்க்லோ மற்றும் ஆசியான் பாராளுமன்றங்களின் அமைப்பு போன்ற தற்போதுள்ள உப-பிராந்திய ஏற்பாடுகள் ஏற்று நடாத்தலாம். சார்க்லோ அமைப்பின் வருடாந்தக் கூட்டத்தின் 68

போது பிராந்தியப் பிரதம நீதியரசர்களின் மாநாடும் இடம்பெறுகின்றது. சர்வதேச மனித உரிமை நியமங்களை உள்நாட்டில் கூட்டிணைப்புச் செய்வது மற்றும் உள்நாட்டு அடிப்படை உரிமைகள் சட்டவியல் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளுக்கும், தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் இடையில் உரையாடலை ஊக்கப்படுத்துதல் வேண்டும். தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில், பிராந்தியத்திலுள்ள வேறு நாடுகளில் மனித உரிமைகள் கோட்பாட்டு அபிவிருத்திகள் குறித்து ஆழ்ந்த அக்கறை காட்டப்படுவதோடு, தமது சட்டவாதங்கள் மற்றும் நீதித்தீர்ப்புகளில் இம் முன்னிகழ்வுகளை உதாரணம் காட்டுவதற்கான விருப்பும் அதிகரித்து வருகின்றது.
பிராந்தியத்தினுள் மனித உரிமைகளை முன்னெடுத்துப் பாதுகாப்பதற்கான தேசிய நிறுவனங்களைத் தாபிக்கும் வெற்றிகரமான அனுபவங்கள் குறித்த நிகழ்வு ஆய்வுகளை நடாத்துதல். சர்வதேச மனித உரிமை நியமங்களை மேலும் பயனுறுதியுள்ள விதத்தில் நடைமுறைப்படுத்தும் நோக்கில், குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை, சமூக, கலாசார மற்றும் பொருளாதார உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை, சிறுவர் உரிமைகள் , குறித் த உடன் படிக் கை, மற்றும் பெண் களுக்கெதிரான சகல வடிவங் களிலுமான பாரபட்சங்களை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை என்பனவற்றை அடக்கும் கைநூல்களைத் தயாரிப்பதற்கு உப-பிராந்திய ஏற்பாடுகள் ஒரு நிபுணர்கள் குழுவை அமைக்கலாம். இக் கைநூல்கள் இவ்வுடன்படிக்கையிலுள்ள அடிப்படைக் கோட்பாடுகளையும், ஏற்பாடுகளையும் தெளிவுபடுத்த முயல்வதோடு, உப-பிராந்தியத்தினுள் நிலவும் நிலைமைகள் மற்றும் பிரச்சினைகளோடு அவை இயைபு கொண்டவை என்பதைக் காட்டும் விளக்கக் குறிப்புகளும் இடம்பெறுதல் வேண்டும். கைநூல் உள்ளூர் மொழிகளில் பெயர்க்கப்பட்டு, விதிமுறையான கல்வி முறைமையிலும், தொழிலாளர் மற்றும் வளர்ந்தோர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களிலும் உபயோகிக் கப்படுதல் வேண்டும் .
69

Page 47
அபிவிருத்திக்கான உரிமை குறித்த ஐ.நா. பிரகடனம், மற்றும் சிறுபான்மையோர் குறித்த ஐ.நா. பிரகடனம் என்பவற்றிலுள்ள கோட்பாடுகள் மற்றும் எண்ணக்கருக்களை மேலும் விஸ்தரித்து, அபிவிருத்தி செய்வது மேலும் உதவிகரமான ஒரு நடவடிக்கையாக இருக்கும்.
அனைத்தும் அடங்கும் தேசிய மனித உரிமைகள் திட்டங்களை அபிவிருத்தி செய்யவும், தனிமனித மற்றும் குழு உரிமைகள் மீது சட்டங்கள் மற்றும் கொள்கைகளின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யவும் தேசிய நிறுவனங்களுக்குள்ள இயலுமையை வலுப்படுத்துதல். அங்கத்துவ அரசுகள் சர்வதேச மனித உரிமைகள் உடன்படிக்கைகளில் கையொப்பமிடுவதையும், அறிக்கையிடுவதில் கடப்பாடுகளோடு மேலும் பயனுறுதியுள்ள வகையில் இணங்கியொழுகுவதையும் உள்ளூர்ச் சட்டங்களும், சொற்களும் சர்வதேசக் கடப்பாடுகளோடு இசைவாக இருப்பதையும் ஊக்குவிக்கும் பொருட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவொன்றை அமைத்தல்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 21 ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகள் இயக்கத்திற்கு ஏற்படும் சவால்களுக்கு நாம் முகம் கொடுக்கையில் ஐ.நா. வின் முன்னாள் செயலாளர் நாயகம் பூத்ரஸ் பூத்ரஸ் காலி அவர்களின் பின்வரும் கூற்றை மனதில் இருத்துதல் வேண்டும். “சாராம்சத்தில் மனித உரிமைகள் தொடர்ச்சியான இயக்கத்துக்கு உட்பட்டவை. இதன் பொருள் மனித உரிமைகள் இரட்டைத் தன்மை கொண்டவை என்பதாகும். அவை காலவரையறையற்ற பூரணமான தடைக் கற்களைத் தாண்டுதல் வேண்டும். அத்தோடு அதே வேளையில் வரலாற்றின் அபிவிருத்தியில் ஒரு கணத்தைப் பிரதிபலிக்கவும் வேண்டும்.”
அம்மான்,ஜோர்தானில் ஆசியபசுபிக் மாநாட்டில் 07.01.97 இல் ஆற்றிய உரை,
70

இனத்துவ உரிய பங்குகளும், சமத்துவத்துக்கான கானல் நீர் தேடலும் -
புள்ளிவிபரங்கள்
1990 ஆம் ஆண்டின் அரசுத்துறை மற்றும் யாக்கத்துறைப் பணிகொள்ளல் குறித்த தொகை மதிப்பு, அரசு மற்றும் யாக்கத் துறைகளில் பணியாற்றும் சிறுபான்மை இனத்துவக் குழுக்களின் விகிதாசாரம் பொதுவான மக்கள் தொகையில் அவர்களின் விகிதாசாரத்தை விட மிகவும் குறைவாக உள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது.
தேசிய மட்டத்தில் சிங்களவர் சனத்தொகையின் 73.9% ஆகவிருந்த போதிலும் அவர்கள் அரசு சேவையில் 91.2% ஆகவுள்ளனர். இலங்கைத் தமிழர்கள் பொதுவான சனத்தொகையில் 12.7% ஆகவிருப்பினும் அரச சேவைகளிற் பணியாற்றுவோருள் அவர்கள் 5.9% ஆக மாத்திரமே உள்ளனர். மலைநாட்டுத் தமிழர்கள் சனத்தொகையில் 5.5% ஆகவிருந்த போதிலும் அரசுத்துறைகளில் அவர்களின் விகிதாசாரம் 0.1% ஆகவே உள்ளது. முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பொதுவான சனத்தொகையில் 7% ஆகவிருந்த போதிலும் அரசுத் துறைகளில் அவர்கள் 2% ஆக மாத்திரமே உள்ளனர்.
மாகாண மட்டத்தில் நிலைமை இதைவிடச் சிறிது முன்னேற்றகரமாகவிருந்த போதிலும், சனத்தொகையில் அவர்களின் விகிதாசாரத்துக்கு ஏற்றவகையில் மாகாண சேவைகளில் அவர்கள் இடம்பெறாத நிலையே உள்ளது. மாகாண சேவைகளில் 87.7% சிங்களவர்களும், 7.1% இலங்கைத்
71

Page 48
தமிழர்களும் 0.2% மலைநாட்டுத் தமிழர்களும், 4.6 முஸ்லீம்களும் இடம்பெற்றுள்ளர். மாகாண மட்டத்தில் சனத்தொகை விகிதாசாரத்துக்கும் மாகாண சேவைகளில் பணியாற்றும் சிறுபான்மையினத்தோர் விகிதாசாரத்துக்கும் இடையில் இசைவுத் தொடர்புள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்கு இப் பெறுமானங்கள் மாகாண மட்டத்தில் நிர்ணயிக்கப்படுதல் வேண்டும். உதாரணமாக, கிழக்கு மாகாணம், மேற்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்துக்குரிய புள்ளிவிபரங்கள், தென் மாகாண மற்றும் வட மத்திய மாகாணப் புள்ளிவிபரங்களை விடப் பூரணமாக வேறுபடலாம். ஆயினும், குடிசன மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு விபரங்களைத் தனித்தனியாகப் பிரித்து வழங்குவதில்லையென்பதால் மாகாண மட்டத்தில் ஆளணியினர் பரம்பல் ஒப்புரவாக உள்ளதா என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது.
அரசு கலப்புச் சேவைகளில் சிறுபான்மையினருக்கு இன்னமும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. அரசு கலப்புச் சேவைகளில் சிங்களவர் 88.1% ஆகவும், இலங்கைத் தமிழர்கள் 8.2% ஆகவும், மலைநாட்டுத் தமிழர் 0.5% ஆகவும், முஸ்லீம்கள் 0.4% ஆகவும் உள்ளனர்.
கால ஓட்டத்தில் இலங்கைத் தமிழ் சிறுபான்மை இனம், மற்றும் முஸ்லீம் சமூகத்தின் குறைவுப் பிரதிநிதித்துவப் போக்கு மேலும் மோசமாகியுள்ளது. இவ்வாறு நிலைமை மோசமடைதல் கொள்கை வகுப்போருக்குப் பாரதூரமான கவலையளிக்கும் ஒரு விடயமாக இருத்தல் வேண்டும். 1985 ஆம் ஆண்டின் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரங்களோடு, அரசுத் துறைகளில் இனத்துவக் குழுக்களின் பரம்பலை ஒப்பிட்டு நோக்கினால் 1985 இல் அரசுத் துறைகளில் 85.64% ஆகவிருந்த சிங்களவர் 1990 இல் 91.2% ஆகியிருப்பதைக் காணலாம். 1985 இல் அரசாங்க சேவையில் 9.9% ஆகவிருந்த இலங்கைத் தமிழர்கள் 1990 இல் 5.9% ஆகவிருப்பதை, அதாவது 5 வருடத்தில் 4% வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காணலாம். 1985 இல் அரசுத்துறைச் சேவைகளில் 0.15% ஆகவிருந்த இந்தியத் தமிழர்கள் 1990 இலும் 0.15% ஆகவே இருப்பதையும், 1985 இல் அரசாங்க சேவையில் 3.4%
72

ஆகவிருந்த இலங்கை முஸ்லீம்கள் 1990 இல் 2.0% ஆக வீழ்ச்சியடைந்ததையும் காணலாம்.
அரசுத் துறையில் வேலைவாய்ப்பு மட்டத்தையும், இனத்துவப் பிரதிநிதித்துவத்தையும் பகுப்பா ராய்வு செய்வதும் முக்கியமானதாகும். இந்தியத் தமிழ் சமூகத்துக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். 1990 ஆம் ஆண்டு புள்ளி விபரங்கள் இந்த சமூகத்தின் 207 அங்கத்தவர்கள் அரசுத்துறையில் பணி செய்ததைத் தெளிவாகக் காட்டுகின்றன. இவர்களுள் பாரிய பெரும்பான்மையினர் சிறுபதவியினர் மற்றும் தெரிவு செய்யாத தொழில் ஈடுபாடுகள் வகைப்பிரிவினர் ஆவர். ஆகவே முழு அரசுத் துறையில் மட்டுமன்றி, பல்வேறு மட்டங்களிலும் இனத்துவப் பிரதிநிதித்துவம் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
பிரதிநிதித்துவ முறையிலமைந்த ஓர் அரசாங்க சேவைக்கான தேவை
ஒரு தேசத்தின் அரசாங்க சேவை அதன் மக்கள் அனைவருக்குமான ஒரு சேவையாக மதிக்கப்படுதல் வேண்டும். அரசு பாரபட்சம் மற்றும் காழ்ப்புணர்வுடன் செயற்படுகிறது என்னும் சார்த்துதல்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு ஒரு பிரதிநிதித்துவப் பொதுச் சேவை இருத்தல் முக்கியமானதாகும்.
ஒரு சமநிலைப்படுத்தப்பட்ட அரசுக் கட்டமைப்பு அரசுத் துறையினுள் இனத்துவப் புரிந்துணர்வையும், ஒத்துழைப்பையும் உறுதி செய்வதாக அமையும். அரசு சேவைகளிலுள்ளோர் வேறு இனத்துவக் குழுக்களைச் சேர்ந்த தமது சமநிலையாளருடன், தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டிருக்கக் கூடியதாகப் பல்லினத்தன்மை கொண்ட இலங்கையை அரசு பிரதிநிதித்துவம் செய்தல் வேண்டும். அரசு கட்டமைப்பில் பணியாற்றும் ஆளணியினர் சிறுபான்மையினங்களின் கோரிக்கைகள், மற்றும் விசனங்களுக்கு மதிப்பளிப்பதை இது உறுதி செய்யும்.
73

Page 49
அரச கரும மொழி ஆணைக்குழு போன்ற ஆணைக்குழுக்கள் இரு அரசகரும மொழிகளிலும் ஆட்சி முறையைக் கொண்டு நடாத்துவதற்குத் தேவையான நிர்வாக அகநிலையமைவுகள் இல்லையென்பதை நீண்டகாலமாகச் சுட்டிக் காட்டியுள்ளன. தட்டச்சுப்பொறிகள், வேறு வசதிகள் மற்றும் ஆளணியினர் இன்மை அரசியல் திட்டத்தின் முக்கியமான ஏற்பாடுகளை நடைமுறைப் படுத்துவதற்கு அரசு இயலாத நிலையில் இருப்பதற்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. அரசுக் கட்டமைப்பினுள் சிறுபான்மை இனத்தவரைப் பணிக்கு அமர்த்துதல் அரசியல் திட்டத்தின் அரச கரும மொழிகள் அதிகாரத்தின் ஏவல் அறிவுறுத்தல்களுக்கு ஓரளவுக்காயினும் இணங்கியொழுகுவதை உறுதிப்படுத்தும்.
அரசியல் திட்டத்திலுள்ள அரசுக் கொள்கைகளை வழிநடத்தும் கோட்பாடுகளும் பொதுச்சேவையில் ஒப்புரவை ஈட்டுவதற்கான ஒரு சட்டகத்தை வழங்குகின்றன. “பொதுநலனுக்கு மிகச் சிறந்த முறையில் சேவையாற்றுவதற்காகச் சகல குடிமக்களிடையிலும் சமுகத்தின் சகல பொருளாதார மூலவளங்களையும், சமூக உற்பத்தியையும் ஒப்புரவான முறையில் பகிர்ந்தளித்தலை அவை வேண்டி நிற்கின்றன. (உறுப்புரை 27.2.உ) வழிநடத்தற் கோட்பாடுகள் மேலும் கூறுவதாவது, "இனக் கூட்டத்தினர், மதக் கூட்டத்தினர் மொழிக் கூட்டத்தினர் என்போரும் ஏனைய கூட்டத்தினரும் உட்பட இலங்கையிலுள்ள எல்லாப் பிரிவினரான மக்களிடையிலும் ஒத்துழைப்பையும், பரஸ்பர நம்பிக்கையையும் வளர்ப்பதன் மூலம் அரசானது தேசிய ஐக்கியத்தைப் பலப்படுத்துதல் வேண்டுமென்பதோடு, ஒரங்கட்டலையும், பட்ச பாதத்தையும் நீக்குவதற்கென போதித்தல், கல்வியூட்டல் மற்றும் தகவல் வழங்கல் ஆகிய துறைகளில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்தலும் வேண்டும்.”
இலங்கையில் சிறுபான்மையினருக்கெதிராகப் பாரபட்சங்கள் இழைக்கப்படுகின்றனவென்று சர்வதேச மக்களிடையே உணர்வு ஏற்படுதல் குறித்து அரசு கவலை கொள்கின்றது. இங்கு
74

தரப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள் பாரபட்சம் குறித்த ஊகத்தை ஏற்படுத்துவதோடு, வெளிநாடுகளிலிருந்து அவதானிப்புச் செய்வோரில் அனேகமானோர் அவற்றைப் பாரபட்சத்துக்கான சாட்சியங்களாகவே எடுத்துக்கொள்வர். ஆகவே பாரபட்சமான நடைமுறைகள் உள்ளனவென்ற சார்த்துதல்களுக்கு அரசு இடமளியாதிருப்பது தேசிய நலனைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகும்.
உலகம் முழுவதும் உள்ள பலநாடுகளில் சகல மட்டங்களிலும் சிறுபான்மையினர் பிரதிநிதித்துவப்படுத்தலை உறுதி செய்யும் முகமாகப் பல்வேறு நடைமுறைகள் சட்டவாக்க முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் சீர்செய் சட்ட நடவடிக்கை நிகழ்ச்சித்திட்டம் உள்ளது. இது அரசியல் திட்டத்தின் சமமான பாதுகாப்பு வாசகத்தின் உரை பெயர்ப்பாக மதிப்பிடப்படுகின்றது. இந்தியாவில், அரசியல் திட்டம் அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதி மக்களுக்கு ஒதுக்கீடுகள் குறித்த ஏற்பாட்டைக் கொண்டிருக்கின்றது. எந்தச் சமுதாயத்திலும் சமத்துவம் என நாம் கருதுவதை ஈட்டுவதற்கான இம்முயற்சிகள் சிறுபான்மையினர் அதிருப்தியைப் போக்குவதற்குப் பல்வேறு தேசங்கள் எடுத்த முயற்சி குறித்த உதாரணங்களாகும். மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்களின் நிமித்தம் எழும் இனத்துவ உரிய பங்குகளுக்கான கோாரிக் கையை அரசரினர் சகல செயற்பாட்டுத்துறைகளிலும் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியென்ற வகையிலேயே நோக்குதல் வேண்டும்.
பொதுமக்களுக்கும் அரசுத் துறைக்குமிடையில் இடம்பெறும் பரஸ்பர தொடர்புச் செயற்பாட்டின் தரம் அன்றாட வாழ்வுச் செயன்முறையில் முக்கியமான ஒரு பகுதியாகும். தமிழ் பேசும் மக்களுடன் அவர்களது சொந்த மொழியில் தொடர்பாடல் செய்யக்கூடிய அதிகாரிகள் இருப்பது அவர்கள் அரசை மதிப்பதற்குத் தேவையான ஒரு முக்கியமான அம்சமாகும். அரசோடு தமது சொந்த மொழியில் தொடர்பு
75

Page 50
கொள்ள முடியா திருப்பது, அவர்களின் கடிதங்கள் முதலியவற்றுக்குப் பதில் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் முதலியன பிரிவுநிலைக்கு இட்டுச்செல்லும் அம்சங்களாகும். இது விரக்திக்கும், ஆழமான மனவேதனைக்கும் இட்டுச்செல்லும் விடயமாகும். மேலும் ஏற்படக்கூடிய அமைதியின்மையைத் தடுப்பதாயின் அரசுத்துறையில் சிறுபான்மையினங்கள் சனத் தொகையில் கொண்டுள்ள விகிதாசாரத்துக்கு ஏற்றவகையில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள வகை செய்யும் மாற்றமற்ற கொள்கையை அரசு கடைப்பிடித்தல் வேண்டும்.
கடந்தகால வரலாறும் உயர் நீதிமன்றமும்
இனத்துவ உரிய பங்குகளை நடைமுறைப்படுத்தும் தீர்மானத் தை எடுப் பதற்கு இதற்கு முன் பே முயற்சியெடுக்கப்பட்டது. 1990 மார்ச் 9 ஆம் திகதிய பொது நிருவாகச் சுற்றறிக்கை இல 15/90) தேசிய மட்டத்தில் ஆட்சேர்ப்பும், பதவி உயர்வும் தேசிய இனத்துவ விகிதாசாரப்படியும், மாகாண மட்டத்தில் மாகாண இனத்துவ விகிதாசாரப்படியும், மாவட்ட மட்டத்தில் மாவட்ட இனத்துவ விகிதாசாரப்படியும் அமைதல் வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது. (பந்தி 2:எ) இச் சுற்றறிக்கையில் நடைமுறைப் படுத் துவோரு க் கான வரிபரமான வழிகாட்டல்களும் அடங்கியுள்ளன.
இந்த இனத்துவ விகிதாசாரங்களை நடைமுறைப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் பொதுநிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் மற்றும் நிதியமைச் சின் செயலாளர் என் போர் இத்தகைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு திட்டத்தை அபிவிருத்தி செய்தல் வேண்டுமெனவும் சுற்றறிக்கை கூறியது. (பந்தி .23)
ஆயினும் இச்சுற்றறிக்கையை இரத்துச் செய்ய வேண்டுமென்று ராமுப்பிள்ளை என்னும் மனுதாரர் பொதுநிர்வாக அமைச்சர்
76

பெஸ்டஸ் பெரேரா அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். சுங்கத்திணைக்களத்தில் கண்காணிப்பாளராகவிருந்த ராமுப்பிள்ளை சுங்கத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். இனத்துவ உரிய பங்குகள் கோட்பாடு நடைமுறைப் படுத்தப்பட்டால் தனக்குப் பதவி உயர்வு கிட்டாதென்பதும், திறமை மட்டும் அளவுகோலாகக் கணிக்கப்படில் தமக்குப் _1 g5 of உயர் வு கிடைக் குமென் பதும் அவரது சார்த்துதலாகவிருந்தது. இனத்துவ உரிய பங்குகள் குறித்த சுற்றறிக்கை ஏற்பாடுகள் அரசியல் திட்டத்தின் 12 ஆம் உறுப்பின் சமத்துவ ஏற்பாடுகளை மீறுவனவாகுமென்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிரதான பெரும்பான்மைத் தீர்ப்பு ஆட்சேர்ப்பின் பின்னர் நபர்கள் ஒரு பொதுவான நீரோட்டத்தினுள் “களரிப்படுத்தப்படுகிறார்கள்” என்றும் அதன் பின்னர் பதவி உயர்வு திறமை அடிப்படையிலேயே இடம்பெறல் வேண்டுமென்றும் அபிப்பிராயம் தெரிவித்தது. ஆட்சேர்ப்பு விடயத்திலும் இதே கோட்பாடு பொருந்துமா என்பது குறித்துப் பெரும்பான்மை எதுவுமே கூறவில்லை.
ஆட்சேர்ப்பைச் சுற்றறிக்கை 1540 க்கு எதிரான தனது நியாயத் தீர்ப்பின் வரை வெல்லையிலிருந்து உயர்நீதிமன்றம் வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாக வாதிட இடமுண்டு. கல்வி நிறுவனங்களுக்கான அனுமதியின் போது அல்லது பொதுச் சேவைக்கான ஆட்சேர்ப்பின் போது அரசு எந்த மூலத்திலிருந்து எடுப்பது என்பது குறித்துச் சுதந்திரமாகத் தீர்மானிக்கலாமென்று நியாயத்தீர்ப்பு தெளிவாகக் கூறுகின்றது. இத்தகைய நோக்கங்களுக்கு அரசு அனைத்து மடங்கிய தேவை, தேசத்தின் நலன்கள் மற்றும் கொள்கை என்பனவற்றைக் கருத்திற் கொள்ள முடியும். தேர்வு இடம்பெற்ற பின்னரே ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டோர் ஒரு பொதுவான வகுப்பினர் ஆகின்றனர்.
வழக்கின் தீர்ப்போடு ஒருப்படும் நீதியரசர் பெர்னாண்டோ "பாரதூரமான, நீண்டகால, ஊறிப்பரவும் தன்மை கொண்ட
77

Page 51
குறைவான பிரதிநிதித்துவம்” இருந்தால் மாத்திரமே சாதிய முன்னுரிமை அல்லது இனத்துவ உரிய பங்கு ஏற்படுத்தப்படலா மென்று கூறினார். மேலும் "சமத்துவமற்றோரிடையே’ இனத்துவ உரிய பங்குகளுக்குப் பதிலாக குறைகளையும் சட்ட நடவடிக்கை நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப் படுத்தலாமென்றும், அரசு நிவாரண நடவடிக்கையை நன்கு பரிசீலிக்குமெனவும் கூறினார்.
உயர் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு விடயத்திலும் இனத்துவ உரிய பங்குகளுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கக் கூடுமென்னும் கவலையைச் சட்டமா அதிபர் வெளியிட்டதோடு, அரசாங்கம் பொது நிருவாகச் சுற்றறிக்கை 15/90 ஐ நடைமுறைப்படுத்தக் கூடாதென்று சிபாரிசு வழங்கினார். ஆயினும், இச் சிபாரிசு குறித்து அரசாங்கம் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.
பொது நிர்வாக, பெருந்தோட்டக் கைத்தொழில்கள், மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் திரு. ரத்னசிரி விக்கிரமநாயக்க அரசுத் துறைக்கு ஆட்சேர்ப்புகள் பொது நிர்வாகச் சுற்றறிக்கை 15/90 இல் குறிப்பிட்டுள்ளவாறே இனத்துவ உரிய பங்குகளின் அடிப்படையிலே தொடர்ந்தும் செய்யப்படுவதே அரசின் கொள்கையென்று பாராளுமன்றத்தில் கூறினார். ஆகவே இக் கொள்கைகள் குறித்து அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் நல்லிணக்கம் உள்ளது. இக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் சட்டரீதியான தடங்கல் ஏதாவது இருப்பின், சட்டம் அதன் பிரகாரம் திருத்தப்படுதல் வேண்டும். இனத்துவ விவகாரங்கள், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் திட்டம் அமுலாக்கல் குறித்த கலந்தாலோசனைக் குழுவின் விதந்துரைப்பும் இதுவாகவே இருந்தது.
எதிர்கால நடவடிக்கை
அரசாங்கம் ஆட்சேர்ப்பு விடயத்தில் பொது நிர்வாகச் சுற்றறிக்கை இல. 1540 ஐத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துதல்
78

வேண்டும். இச்சுற்றறிக்கையைச் சட்டரீதியாக எவரும் கேள்விக்கு உட்படுத்தினால் அவற்றை எதிர்க்க வேண்டுமென்று சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படல் வேண்டும். அரசுத் துறையில் தமிழர், மற்றும் முஸ்லீம்கள் ஊறிப்பரவும் முறையில் பாரதூரமாகக் குறைவான அளவில் பிரதிநிதித்துவம் பெற்றிருப்பதைக் காட்டுவதற்கு, அடிப்படை உரிமைகள் வழக்குரைப்பில் விசேட நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்களின் சேவையை அரசு பெற்றுக் கொண்டு, ஒரு நீதிமன்ற உதவி மதியுரையைத் தயாரித்தல் வேண்டும். குறைந்த பிரதிநிதித்துவம் குறித்த கிடைக்கக் கூடிய தகவல்கள் நீதிமன்றங்கள் முன் வைக்கப்படாமை குறித்து உண்மையான கவலை நிலவுகின்றது.
எது ஆட்சேர்ப்பு, எது ஆட்சேர்ப்பு இல்லை என்பது குறித்துத் தெளிவான கொள்கையொன்று இருப்பது அவசியம். நிர்வாக சேவைக்கு அல்லது வெளிநாட்டுச் சேவைக்கு வரைவுள்ள போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் சேர்த்துக்கொள்ளுவது ஆட்சேர்ப்பா அல்லது பதவி உயர்வா என்பது குறித்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. இத்தகைய ஆட் சேர்ப்பு உண்மையில் "பதவி உயர்வு " என்ற அடிப்படையிலேயே இதுவரை அரசாங்கம் செயற்பட்டு வந்துள்ளது. இவ்வாறு உரை செய்வதை ஏனையோர் குறை கூறியுள்ளனர். பதவி உயர்வுகளிலிருந்து ஆட்சேர்ப்பைப் பிரித்தறியக் கூடிய, பகுத்தறிவுசார் அடிப்படை ஒன்று இருப்பது முக்கியமாகும்.
தற்போதைய கொள்கை அமுல் நடாத்தப்படும் அதே வேளையில் பொது நிர்வாகச் சுற்றறிக்கை இல. 15/90 ஐ ஒரு குறை களையும் சட்ட நடவடிக்கைக் கொள்கையாக மாற்றி உயர்நீதிமன்றம் உரைக்கும் அளவுகோல்களைத் திருப்தி செய்யக் கூடிய வகையில் மீளவமைப்பது குறித்தும் சிந்தித்தல் வேண்டும். அரசாங்கத்துக்கு இவ்விடயத்தில் நிபுணர்களின் உதவி தேவைப்படலாம். அத்தோடு குறை களைதல் சட்ட நடவடிக்கை நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ள இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா இராச்சியங்கள் என்பனவற்றின் அனுபவத்தையும் ஆய்வு செய்யலாம்.
79

Page 52
அரசியல் திட்டத் தெரிவுக்குழு இனத்துவ உரிய பங்குகள் மற்றும் குறை களைதல் சட்ட நடவடிக்கை நிகழ்ச்சித்திட்டங்கள் அரசியல் திட்டத்துக்கு முரண்படாத வகையில் அமையும் வண்ணம் அடிப்படை உரிமைகள் அதிகாரம் திருத்தப்படல் வேண்டுமென்று விதந்துரைப்புச் செய்துள்ளது. 11 ஆம் உறுப்புரைக்குப் பின்வரும் திருத்தங்கள் செய்வதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
(1) உறுப்புரை 11 (1) ஆட்கள் அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள். அத்தோடு சட்டத்தின் சமமான பாதுகாப்புக்கு உரியவர்கள்.
(2) எந்தப் பிரசைக்கு எதிராகவும் இனம், மதம், மொழி, சாதி , பால், அரசியல் அல்லது வேறு அபிப்பிராயங்கள், பிறப்பிடம் அல்லது அத்தகைய எந்த ஒரு காரணத்தின் அடிப்படையிலும் பாரபட்சம் இழைக்கப்படலாகாது.
(4) தேவையானவிடத்து சாதி, பால், வயது, உள மற்றும் உடல் பாதிப் புக்கு உள்ளானோர் என் போர் உள்ளடங்கலாகச் சலுகை குறைந்த அல்லது அனுகூலமற்ற தனிநபர்கள் மற்றும் குழுக்கள் விடயத்தில் பாதுகாப்பு அல்லது முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஒரே நோக்கத்தோடு, சட்டம், கீழ்நிலைச் சட்டவாக்கம் அல்லது நிறைவேற்று நடவடிக்கை என்பவற்றால் எடுக்கப்படும் பிரத்தியேக நடவடிக்கை எதையும் இவ்வுறுப்புரையினுள்ள எதுவும் தடை செய்யாது.”
இலங்கைப் பொதுச் சேவைகளில் பணி கொள்ளல் மிகவும் போட் டி நிறைந்த ஒன்றாகவுள்ளது. பெருந்தோட்டப் பகுதி இளைஞருக்குக் கல்வி வசதிகள் இன்மை காரணமாக அவர்கள் பாரதூரமான அனுகூலமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, கீழே தரப்பட்டுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளவாறு இந்தச் சமூகம் பொதுச் சேவைகளில் மிகவும் அப்பட்டமான குறைவுப் பிரதிதிநித்துவ நிலைக்குச் சென்றுள்ளது.
80

இனத்துவக் சனத்தொகை அரசு சேவைகளில் Df85f M அரசு கலப்பு குழு விகிதாசாரம் பணியாற்றுவோர் (samalsafai சேவைகளில்
விகிதாசாரம் பணியாற்றுவோர் பணியாற்றுவோர்
விகிதாசாரம் விகிதாசாரம்
சிங்களவர் 73.9 912 87.7 88.
இலங்கைத்
தமிழர் 12.7 5.9 71 8.2 மலைநாட்டுத்
தமிழர் 5.5 0. 0.2 0.5 (3y (TGG as i'r 70 2.0 4.6 3.2 ஏனையோர் 0.9 0.8 0.4 1.1
மூலம்; அரசுத்துறை மற்றும் கூட்டுத்தாபனத்துறையில் பணிகொள்ளல் தொகை மதிப்பு -1990. குடிசனத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், 1992.
பொதுச் சேவைகளில் மலைநாட்டுத் தமிழரைப் பணிக்கமர்த்தல் குறித்த இன்னுமொரு முக்கிய காரணி தற்பொழுது அவர்களுள் மிகச் சொற்பமானவர்களே சிரேஷ்ட பதவிகளில் இருப்பதாகும். அவர்களுட் பாரிய பெரும்பான்மையானோர் கீழ்நிலைத் தரங்களிலேயே உள்ளனர்.
பொதுச் சேவையில் மலைநாட்டுத் தமிழரின் குறைவுப் பிரதிநிதித்துவம் அனுகூலமற்ற நிலைமையைத் தொடரவைக்கும் நச்சுவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
1985 ஆம் ஆண்டின் பொதுத்துறை மற்றும் யாக்கத்துறைத் தொகை மதிப்பு விபரங்களின் பிரகாரம் யாக்கத் துறையில் பெளத்தர்கள் 79 வீதமும், இந்துக்கள் 8.5 வீதமும், ரோமன் கத்தோலிக்கர்கள் 7.6 வீதமும் இஸ்லாமியர் 2.9 வீதமும் இருந்துள்ளனர்.
ஆண்களின் பரம்பல் இத்தகைய ஒரு மதரீதியான
புள்ளிவிபரத்தையே காட்டுகிறது. ஆயினும் பெண்களைப்
பொறுத்த வரையில் ஒரு வித்தியாசமான பரம்பல்
இருந்துள்ளது. கூடுதலான முஸ்லீம் பெண்மணிகள் வீட்டினுள் 81

Page 53
வசிப்போராயிருப்பதால் 1.3 வீதமான வேலை செய்யும் பெண்கள் இஸ்லாமியராக இருப்பதோடு, யாக்கத் துறையில் பணியாற்றுவோரில் அவர்களே மிகக் குறைந்த தொகையினராகவும் உள்ளனர்.
இனத்துவக் குழு
கீழே தரப்பட்டுள்ள அட்டவணை இனத்துவக் குழு, மற்றும் பால் ரீதியில் பணியாளரின் பரம்பலைக் காட்டுகின்றது.
பொதுத் துறையைச் சேர்ந்த மொத்தப் பணியாளருள் 86 வீதமானோர் சிங்களவராகவும், சுமார் 10 வீதமானோர் இலங்கைத் தமிழராகவும், சோனகர் 4 வீதத்தைவிடச் சிறிது குறைவானோராகவும் இருத்தலை அவதானிக்கலாம்.
இனத்துவக் குழுக்கள் மற்றும் பால் ரீதியில் பொதுத்துறை ஊழியர்களின் பரம்பல்
இனத்துவக் குழு மொத்தம் ஆண் பெண்
தொகை X தொகை X தொகை A.
மொத்தப் பணியாளர் 406,359 100.00 260,576 100.00 145,783 100.00 சிங்களவர் 348,014 85.64 220,533 84.63 127,481 8.45 இலங்கைத் தமிழர் 402ᎥᏭ 9.90 27,069 10.39 13,150 9.02 இந்தியத் தமிழர் 627 0.5 425 0.6 202 0.14 சோனகர் 13970 3.44 9,971 8.83 3,999 2,74 பறங்கியர் 709 0.17 513 0.20 96 0.3 மலாயர்கள் 1,009 0.25 73 0.28 ጶ278 0.9 ஏனையோர் 1,811 0.45 1334 0.51 477 0.33
82

இனத்துவக்குழு மற்றும் பால் ரீதியில் யாக்கத்துறைப் பணியாளரின் பரம்பல்
இனத்துவக் குழு மொத்தம் ஆண் Gusir
தொகை W தொகை A. தொகை X
மொத்தப் பணியாளர் 322,617 100.00 277517 ... 100.00 45,000 100.00 சிங்களவர் 275,980 85.54 230,780 85.32 39,200 8წ.,92
இலங்கைத் தமிழர் 30,266 ᏭᏕ8 26,166 9.43 400 9.09 இந்தியத் தமிழர் 4,019 1.25 3,357 1.21 622 1.47 சோனகர் 7,570 2.35 793 2.59 377 0.84
பறங்கியர் 180 0.87 932 0.34 248 0.33 மலாயர்கள் 1238 0.38 1,019 0.37 219 0.49
ஏனையோர் 2364 0.73 2070 0.ሽ5 294 0.65
தேசிய நல்லிணக்கம் மற்றும் இனத்துவ விவகாரங்களுக்கான பாராளுமன்றக் குழுவுக்கு 11.09.96 இல் சமர்ப்பிக்கப்பட்ட மகஜர், சட்டப் பகுப்பாராய்வு மற்றும் புள்ளிவிபரத்தகவல்களைத்திரட்டல் என்பவற்றில் பெருந்தன்மையோடுஉதவிய கலாநிதி. ராதிகா குமாரசுவாமி மற்றும் திரு.எம். மாணிக்கம் ஆகியோருக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. -
83

Page 54
மனித உரிமைகள் விடயத்தில் ஒரு தேசிய நல்லிணக்கத்தை நோக்கி
இந்தச் சட்ட மூலம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும் . திரு. மகிந்த சமரசிங்க அவர்கள் சுட்டிக்காட்டியவாறு 1993, 1994 இன் அனேகமான காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் மனித உரிமைகள் ஆணைக்குழுவொன்றைத் தாபிப்பதற்கான சட்ட முலத்தின் ஏழு வித்தியாசமான வரைபுகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கை அந்தநேரத்தில் எவ்வித பயனையும் தரவில்லையெனினும் , அக் கலந்துரையாடல்களில் இடம்பெற்ற ஆணைக்குழு அதன் எண்ணக் கருக்களைப் பொறுத்தவரையில் மிகவும் துணிகரமான ஒன்றாகவிருந்தது. அந்நடவடிக்கையின் பகுதியாகவிருந்த பல எண்ணக்கருக்களும், யோசனைகளும் தற்போதைய சட்டவாக்கத்தின் பயன்மிக்க பகுதியாக அமைந்திருக்கக் கூடும்.
கெளரவ. அமைச்சர் அவர்கள் இந்நாட்டில் அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவது குறித்த சில பரந்த அடிப்படையிலான கோட்பாடுகளையும் , எண்ணக் கருக்களையும் பற்றிக் குறிப்பிட்டார். தற்போதைய சட்ட மூலத்தோடு இயைபுடைய இப் பரந்த அடிப்படையிலான பிரச்சினைகள் சிலவற்றை இவ்விவாதத்தில் குறிப்பிடுவது பொருத்தமானதென எண்ணுகிறேன்.

தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுக்களின் கட்டமைப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து வழிகாட்டல் வழங்கும் இரு ஆவணங்கள் உள்ளன. முதலாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் 1992 பங்குனியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, “தேசிய நிறுவனங்களின் அந்தஸ்து குறித்த கோட்பாடுகள்” என அழைக்கப்படும் ஆவணம் ஆகும். இரண்டாவது தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் குறித்த சர்வதேச நியமங்களை உரைப்பதும், சர்வதேச மன்னிப்புச் சபையினால் விடுக்கப்பட்டதுமான ஆவணமாகும். இவ்விரு ஆவணங்களும் மனித உரிமை ஆணைக்குழுக்களின் பணிப்பாணை, அங்கத்துவம், மற்றும் முறையியல் குறித்த சில ஆகக்குறைந்த கோட்பாடுகளையும், நியமங்களையும் கொண்டுள்ளன. கெளரவ. அமைச்சர் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டவாறு, தற்போது சபையின் முன்னுள்ள இச்சட்ட மூலம் சம்பந்தமாக அவரை மன்னிப்புச் சபை, குடியியல் உரிமைகள் இயக்கம், மற்றும் கொழும்புப் பல்கலைக் கழகக் கல்விமான்கள் குழு போன்றவற்றின் தூதுப் பிரதிநிதிகள் சந்தித்துக் கருத்துச் சமர்ப்பணம் செய்துள்ளனர்.
மன்னிப்புச் சபை ஆவணத்தில் இடம்பெற்றுள்ள இரு விடயங்கள் இக் கட்டத்தில் வலியுறுத்தப்படல் வேண்டும். முதலாவது மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் தண்டனைப் பயமின்றி அவ்வாறு செயற்படுவதைத் தடுப்பதை உறுதிப்படுத்தும் விதத்திலும், இவ்வாறு மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் அதற்குப் பூரண வகைப் பொறுப்பு வாய்ந்தோராகும் வகையிலும், இம்முன்முயற்சியோடு தீர்மானகரமான அரசாங்கக் கொள்கையும் உடன் அமைதல் வேண்டும். இப்பொழுது கடந்த காலத்தில் காணாமற் போனோர் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு மூன்று உண்மை மற்றும் நீதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. கிளிவெட்டியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நீதிமுறைக்குப் புறம்பான கொலைகள் குறித்த சமீபத்திய சார்த்துதல்கள் குறித்தும் வெலிக்கடையில் பல தடுப்புக் காவல் கைதிகள்
85

Page 55
மீது தாக்குதல் இடம்பெற்றதாகக் குறிப்பிடும் விசனமூட்டும் அறிக்கைகள் குறித்தும் இதே விதமான திடசித்தத்தோடு அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். தற்போதுள்ள பாதுகாப்புச் சட்டவாக்கம், மற்றும் அடிப்படை உரிமைகள் மனுக்கள் மற்றும் ஆட்கொணர்வு விண்ணப் பங்கள் போன்ற சட்டப் பரிகாரங்களை மனித உரிமைகள் பாதுகாப்புக்கான மேலும் பயனுறுதியுள்ள கருவிகளாக ஆக்கும் நோக்கில் சமகாலத்தில் மீள்பார்வை செய்தல் இரண்டாவது பரந்த அக்கறைக் கரிசனை விடயமாகும்.
இன்னுமொரு விடயமும் உள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் மற்றும் தற்போதுள்ள மனித உரிமைகள் பணிக்குழு மற்றும் இலங்கை மன்றத்தினால் தாபிக்கப்பட்ட பாரபட்சங்களை ஒழிப்பதற்கும், மனித உரிமைகளை அவதானிப் புச் செய்வதற்குமான ஆணைக் குழு போன்றவற்றுக் குமிடையிலான உறவு குறித்ததே இவ்விடயமாகும். தற்போதுள்ள இவ்வமைப்புகளின் தத்துவங்களையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அனைத்துமடங்கிய ஒரு நிறுவனத்தைப் பரிணமிக்க வைப்பதே இம் முயற்சியாகுமென்று கெளரவ. அமைச்சர் குறிப்பிட்டார். ஒரு நிறுவனத்தை உருவாக்குவதன் மூலம் அல்லது ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதன் மூலம் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதே சட்ட மற்றும் நிறுவனச் சீர்திருத்த முயற்சிகளின் பாடங்களில் ஒன்றாகும். பொறுப்பாக வழங்கப்பட்ட தத்துவங்கள், பொறுப்புகளை நிறைவேற்றுவதை உறுதி செய்யக்கூடிய, இலட்சிய தரிசனம், அர்ப்பணப் பொறுப்புணர்வு மற்றும் நிர்வாக மனோ உறுதி வாய்ந்த நபர்களை இந்நிறுவனங்களுக்கு நியமிப்பதே உண்மையான சவால் நிறைந்த விடயமாகும்.
தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பயனுறுதிமிக்க கருமப்பாட்டுக்கு இயைபுள்ள பல காரணிகளை இங்கு இனங்காண விரும்புகின்றேன். ஐ.நா. மனித உரிமைகள்
86

நிலையமும் இவற்றை வலியுறுத்தியுள்ளது. முதலாவது, ஆணைக்குழுவின் சுதந்திரமான இயக்கப்பாடு குறித்த பிரச்சினையாகும். இச்சுதந்திரம் சட்ட மற்றும் செயற்பாட்டுத் தன்னாதிக்கத்தின் மூலமும், நிதித் தன்னாதிக்கத்தின் மூலமும், பதவி நியமன மற்றும் பதவி நீக்க நடவடிக்கை முறைகள் மூலமும், ஆணைக்குழுவின் உறுப்பாண்மை மூலமும் உறுதி செய்யப்படுதல் வேண்டும். மனித உரிமைகளைப் பாதுகாத்து முன்னெடுப்பதில் நிரூபிக்கப்பட்ட துறைத்தேர்ச்சியும், திறமையும் கொண் டோரை அங்கத் தவராக நியமிப் பதை உறுதிப் படுத் துவதன் மூலம் நியமனத் துக் கான அளவுகோல்களைப் பலப்படுத்துதல் அவசியமென இப் பொழுது இவ் விடயம் குறித்து ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது விடயம் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்படும் நியாயாதிக்கமும், வழங்கப்படும் தத்துவங்களுமாகும். அரசு அல்லாத நபர்களால் புரியப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த முறையீடுகளை விசாரணை செய்வதற்கு 12 (b) உறுப்புரையின் கீழ் ஆணைக்குழுவுக்குள்ள தத்துவங்கள் குறித்து இச்சட்ட மூலம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள மன்னிப்புச் சபையும், வேறு அமைப்புகளும் விசனந் தெரிவித்துள்ளன. இது எண்ணக்கரு ரீதியானதும், நடைமுறை ரீதியானதுமான பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றது. மனித உரிமை மீறல்கள் எண்ணக்கரு ரீதியாக சாதாரணக் குற்றங்களிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அவை முதனிலையாக அரசினாலும், அரசு நடவடிக்கையினாலும் ஏற்படும் மீறல்கள் குறித்தவையாக இருத்தல் வேண்டும். ஆயுதந்தாங்கிய எதிரணிக் குழுக்கள், அரசுகளுக்கு ஈடாகக் கூறப்பட முடியுமெனில் அவர்களால் இடம்பெறும் மீறல்களும் மனித உரிமை மீறல்களே. பிலிப்பைன்ஸில் அவர்கள் இதே தவறை இழைத்ததோடு, அரசு அல்லாத நபர்களினால் ஏற்படும் மனித உரிமை மீறல்களை விசாரணை செய்வதற்குத் தமது மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குத் தத்துவம் வழங்கினார்கள். இது
87

Page 56
பிலிப்பைன்ஸ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணி குறித்துப் பாரதூரமான திரிபுகள், குழப்பங்களை ஏற்படுத்தியதோடு இறுதியில் அதன் பயனுறுதியையும், வினைத்திறனையும் இல்லாமற் செய்தது. ஆணைக்குழுவுக்கு முறைமைத் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்யவும், பொதுமக்கள் முறைகேள் அமர்வு வைப்பதற்கும், உண்மையைத் தேடும் பணிகளை நடாத்துவதற்கும், தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்கும், மற்றும் மனித உரிமைகளின் நிலைமை குறித்து வருடாந்த, அல்லது காலத்துக்குக் காலம் விடுக்கப்படும் அறிக்கைகளை வெளியிடுவதற்கான அதிகாரம் இருத்தல் வேண்டும்.
இவ்வமைப்பிலிருந்து உதவி பெறக் கூடியதாயிருத்தல் மூன்றாவது பிரச்சினையாகும். இந்நிறுவனங் குறித்து மக்கள் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். இந்நிறுவனத்தை நாடி மக்கள்செல்லக் கூடியதாகவிருத்தல் வேண்டும். இவ்வாணைக் குழுவின் உறுப்பாண்மையில் குடியியல் சமூகத்தின் சகல பிரிவுகளும் பிரதிநிதித்துவம் பெற்றிருத்தல் வேண்டும். எனவே, பிராந்திய உப-ஆணைக்குழுக்கள், பிராந்திய அலுவலகங்கள் ஏற்படுத்தப்படல் வேண்டுமென்ற இச்சபையின் ஏனைய உறுப்பினர்களின் விதந்துரையை நான் வரவேற்கின்றேன். ஒரு விசாரணையின் பகுதியாக அமையும் ஆவணங்கள் மற்றும் தகவல்கள் என்பன பாதிப்புற்றவருக்குக் கிடைக்கக் கூடியதாக விருத்தல் வேண்டும். அவர்கள். ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளிக்கக் கூடியதாகப் பிரயாண மற்றும் ஏனைய வசதிகள் உட்படச் சகல உதவிகளும் வழங்கப்படுதல் அவசியம்.
நாலாவது விடயம் ஒத்துழைப்புக்கான தேவையாகும். ஆணைக்குழு அரசுகளுக்கிடையிலான அமைப்புகள், இந்தியத் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, அல்லது கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற ஏனைய நாடுகளின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுக்களோடும், உரிமை, பாதுகாப்பு முன்னெடுப்போடு நேரடி ஈடுபாடு கொண்ட
88

அரசு சார்பற்ற அமைப்புகளோடும் ஒத்துழைப்பு உறவுகளை அபிவிருத்தி செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
ஐந்தாவதாக வேண்டப்படுவது செயற்பாட்டு வினைத்திறன் ஆகும். இது போதிய நிதி வசதிகளையும், பாரபட்சமற்ற, வினைத்திறனுள்ள உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புச் சய்யும் இயலுமையையும் உள்ளடக்குகின்றது. செயற்பாட்டு னைத்திறனை இயன்ற அளவு அதிகரித்துக் கொள்ளுவதற்கு ணைக்குழு தனது சொந்தச் செயற்பாட்டு நடவடிக்கை றைகளையும், விதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
றுதியாக, வகைப் பொறுப்பைப் பொறுத்த வரையில்,
ணைக்குழு தனது பணிப்பாணை மற்றும் இலட்சியங்களோடு
ாடர்புற்ற அறிக்கையிடும் கடப்பாடுகளை அபிவிருத்தி செய்து கொள்ளல் வேண்டும்.
சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு 29 ஆம் பிரிவுக்கமைய விடுக்கப்படும் வருடாந்த அறிக்கைக்கு மேலதிகமாக அது தன்து செயல் நிறைவேற்றம், பதிவேடுகள், மற்றும் வெளியக, உள்ளக மதிப்பீடுகள் குறித்துப் பொதுமக்கள் நுண்ணாய்வுக்கு உப்படக் கூடியதாயிருத்தல் வேண்டும்.
விரும்புகின்றேன். முதலாவதாக இச்சட்டவாக்கத்தின் குவிவு மையம், சட்ட மூலத்தின் (vi) ஆம் பகுதியில் தரப்பட்டுள்ளவாறு தடுப்புக் காவலிலுள்ளோரின் நிலையைப் பரீட்சித்தல், தடுப்புக் காவல் நிலையங்களுள் பிரவேசித்தல், பொலிஸ் நிலையம்
ငွှီးနှီ#; கூறி எனது உரையை முடிக்க
சிறை என்பவற்றுள் பிரவேசித்தல் போன்ற ஆணைக்குழுவின் தத்துவங்களைப் பற்றிக் கூறுகின்றது. ஆணைக்குழுவின் பயனுறுதியின் ஒரு முக்கியமான அம்சம் இதுவாகும்.
இவ்வாணைக்குழுவின் தத்துவங்களைப் பற்றிக் குறிப்பிட்டேன். இத்தத்துவங்கள் குறித்து இரு அவதானிப்புகளைச் செய்தல் வேண்டும். முதலாவது, தடுப்புக்காவல் நிலையம், தடுப்புக்
89

Page 57
காவல் நிலைமைகள் குறித்துப் பரீட்சிப்பதற்காக ஆணைக்குழுவுக்குள்ள தத்துவங்கள். இரண்டாவது, அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளனவென்று ஆணைக்குழு முடிவு செய் கையில் விதந் துரைப் புகள் செய்வதற்கு ஆணைக்குழுவுக்குள்ள தத்துவம். 14 ஆம் உறுப்புரை (3) ஆம் (4) ஆம் பந்திகளுக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். மீறல்களைத் தடுப்பதற்கும், அவற்றுக்குப் பரிகாரம் காண்பதற்கும், பிழையொன்று திருத்தப்படல் வேண்டுமென் விதந்துரைப்பதற்கும், மற்றும் இது தொடர்பு விளைவுகளா ஒரு வீச்சான விதந்துரைப்புக்களைச் செய்வதற்கு ஆணைக்குழுவுக்கு முடியும். எனினும் இவ்விதந்துரைப்புக பிணிக்கும் இயல்புடையனவன்று. இவ்விதந்துரைப்புத் தத்துவத்தை ஆணைக்குழுவை அவமதிப்பதற்கெதிரா தத்துவங்களோடு இணைப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். இதனால் எழுந் த மானமாக ஆணைக் குழுவின் விதந்துரைப்புகளை உதாசீனஞ் செய்வோர் ஆணைக்கு அவ மதிப் பு நியாயா திக் கத் துக் கு உட் படுவுது உறுதிப்படுத்தப்படும். அரச கரும மொழிகள் ஆணைக் சட்டத்தில் இதையொத்த ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ள.
இறுதியாக, திரு. மகிந்த சமரசிங்க அவர்கள் சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உடன்பாட்டு உறுப்புரையின் கீழான இரு விருப்புத் தெரிவு ஒப்பந்த வரைவுகளுச் s ஜெனீவா உடன்படிக்கையின் கீழான மேலதிக ஒப்புந் வரைவுகளுக்கும் நாம் கையொப்பமிட வேண்டிய அவசியங்குறித்துப் பேசினார். 10 ஆம் உறுப்புரையின் கீழான ஆணைக்குழுவின் தத்துவங்களிலொன்று மனித உரிமைத்துறை குறித்த சர்வதேச ஏற்பாடுகள் குறித்து ஆணைக்குழு அரசாங்கத்துக்கு விதந்துரைப்புச் செய்வதும், இத்தகைய ஏற்பாடுகளுக்கு அரசு அமைந்து நடப்பதற்கு விதந்துரைப்புச் செய்வதுமாகுமென்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இக்குறிப்பிட்ட விதந்துரைப்புக்குப் பாரதூரமான கவனஞ் செலுத்தப்படல் வேண்டுமென்று நான் வலியுறுத்திக் கூறவிரும்புகின்றேன்.
90
 
 
 
 
 
 
 
 

பயனுறுதி மிக்க மனித உரிமைகள் அமுலாக்கச் செயன் முறைமை ஒன்றைத் தாபிப்பதன் முலம் ஆட்சி முறையின் தரத்தைச் சீர்செய்து மனித உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஓர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைத் தாபிக்கும் நோக்கத்தோடும் மாண்பு மிகு பேராசிரியரும், நீதி மற்றும் அரசியல் விவகார அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமாகிய ஆஎல். பீரிஸ் அவர்களால் 22.02.96 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
விவாதத்தில் பங்கு பற்றியோர்: திரு. மகிந்த சமரசிங்க, திரு.வாசுதேவ நாணயக்கார, திரு.ஜே.ஏ.ஈ. அமரதுங்க, திரு.சீவி குணரத்ன, திரு டீ.எச்.என். ஐயமஹ, திரு. லக்ஷ்மன் கதிர்காமர், திரு ஆர்.ஜே.ஜி.டி. மெல், திரு பீபி தேவராஜ், திரு.எஸ். சிவதாசன், திரு. நிஹால் கலப்பதி, மற்றும் அல்ஹாஜ் எம்.எச். மொஹமட்.
II
இத்திருத்தங்களை இச்சபைக்குச் சமர்ப்பித்த நிலையியற் குழு "அ" வின் கூட்டங்களுக்குத் தலைமை வகித்தமைக்காக நான் தங்களைப் பாராட்டுதல் வேண்டும். அதேவேளையில் நிலையியற் குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாமற் போனது குறித்த எனது தனிப்பட்ட ஏமாற்றத்தையும் நான் இங்கு பிரஸ்தாபித்தல் வேண்டும். பங்குனி 6 ஆம் திகதி நிலையியற்குழு "அ" வின் மேலதிக அங்கத்தவராக நானும் அனுமதிக்கப்பட்டுள்ளேனென்று சபாநாயகர் அவர்கள் அறிவித்த வேளையில் நானும் சபையில் பிரசன்னமாயிருந்தேன். ஆயினும், அன்று ஒரு மணித்தியாலத்தினுள் காலை 10 மணிக்கு குழு கூடவுள்ளது என்னும் விடயம் எனக்கு அறிவிக்கப்படவில்லை. எனவே குழுவின் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாமை குறித்து நான் பெரும் ஏமாற்றமடைந்தேன். எப்படியாயினும் குழுவை அதன் பணிகுறித்து நான் பாராட்டுகிறேன்.
9

Page 58
நிலையியற்குழுவின் அறிக்கை பல முக்கிய திருத்தங்கள் குறித்துப் பேசுகின்றது. விதந்துரைக்கப்பட்ட முக்கியம் கூடிய சில திருத்தங்கள் குறித்து நான் பேச விரும்புகிறேன். முதலாவது பிரச்சினை நியமனச் செயன்முறை குறித்ததாகும். அமைப்பு விதிகள் மன்றம் தாபிக் கப்படும் வரை சபாநாயகரையும் , எதிர் க் கட் சித் தலைவரையும் கலந்தாலோசனை செய்தல் வேண்டும். அவர்களைக் கலந்தாலோசிப்பது அவர்களின் சொந்த அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்ள மாத்திரமன்றி, அமைப்புவிதிகள் மன்றத்தில் வேறு நிலைமைகளின் கீழ் இடம்பெற்றிருக்கக்கூடிய அரசியல் கட்சிகளின் அபிப் பிராயங்களும் அவர்களினுடாக முன்வைக்கப்படுதல் வேண்டும் என்பதற்காகவும் ஆகும். எனவே இக்கலந்தாலோசனை வெறுமனே விதிமுறை சார்ந்த ஒன்றாக இல்லாது உண்மையான ஒரு நடவடிக்கையாக அமைதல் வேண்டும்.
இரண்டாவது விடயம், ஆணைக்குழுவின் அங்கத்துவத்தில் பன்மைத்தன்மை, பல்வேறு வித்தியாசமான நலன்களின் பிரதிநிதித்துவம் என்பன இருத்தல் வேண்டும் . இப்பிரிவுத்தன்மை இனத்துவ விடயத்தில் மட்டுமன்றி பால் பிரிவினை, வித்தியாசமான துறைகள் மற்றும் குடியியல் சமூகத் தின் பல்வேறு நலன் கள் என்பவற்றுக்கு ஆணைக்குழுவின் அங்கத்துவத்தில் இடமளித்தல் வேண்டும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஆணைக்குழு அங்கத்தினருக்குத் தொடர்ச்சியான அர்ப்பணிப்புப் பொறுப்புணர்வு இருத்தல் வேண்டும். வேறு பாராளுமன்ற உறுப்பினர்களோடு சேர்ந்து நானும் மனித உரிமைகள் பணிக்குழுவின் மதியுரைக் குழுவில் ஓர் அங்கத்தவராக இருந்தேன். மனித உரிமைகள் பணிக்குழுவின் பல அங்கத்தவர்கள், சில வேளைகளில், தொடர்ச்சியாகப் பல மாதங்களுக்கு பணிக் குழுவின் கூட்டங்களுக்குச் சமூகமளிக்காமல் இருப்ப்தைக் கண்டு எனக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஆகவே இந்தப் பணிக்கு நேரமுள்ளோர் மற்றும் அர்ப் பணப் பொறுப்புணர்வு உள்ளோரே தேவையென்று நான் நினைக்கின்றேன்.
92

தார்மீக மற்றும் புத்திஜீவி இலட்சியத் தரிசனத்தை ஒன்றிணைக்கக் கூடியவரும், ஒரு பயனுள்ள ஸ்தாபனத்தை முகாமைத் துவம் செய்யக் கூடிய முகாமைத் துவ, துறைத் தேர்ச்சியுடைய வருமான ஒரு வரை ஆசனத்
தவிசாளராகத் தெரிவு செய்வதிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வெற்றி தங்கியுள்ளது. இச் சிக்கலான நடவடிக்கையில் வெற்றி காண்பதற்கு அவரிடம் சக்தியும், மனோதிடமும், இலட்சியத் தெளிவும் இருத்தல் வேண்டும்.
கெளரவ. ரவூப் ஹக்கீம் அவர்கள் ஆணைக்குழுவின் நியாயாதிக்கம் குறித்தும் , அரசு அல்லாதோரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், விசேடமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படக் கூடிய விடயங்கள் குறித்தும் இங்கு குறிப்பிட்டார். அரசு அல்லாத நபர்கள் குறித்த இவ்விடயம் மிகவும் சிக்கலான எண்ணக்கரு மற்றும் நடைமுறைப் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. மனித உரிமைச் சட்டவியலில் மனித உரிமை மீறல்களுக்கும், வேறு குற்றவியல் செய்கைகளுக்கும் இடையில் வேறுபாட்டை அறிந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது. வன்செயல் குற்றங்களுக்குப் பலியாவோருக்கு நட்ட ஈடு வழங்கும் ஒரு நிதி அமைப்பாக மனித உரிமைகள் ஆணைக் குழு தொழிற் பட முடியாது. இவ்வாறு பலியாகியோருக்கு நட்ட ஈடு வழங்குவதற்கு அரசாங்கம் சட்டவாக்கம் கொண்டு வந்தால் அத்தகைய ஒரு
நடவடிக்கையை நாம் ஆதரிப்போம். ஆயினும் ஆணைக்குழு அத்தகைய ஒரு செயன்முறைமைக்கான பதிலீடு ஆக (ւpւգ-աf75].
ஐக்கிய நாடுகள் சபை குறித்தும், இந் நடவடிக்கையில் ஈடுபாடு காட்டிய வேறு ஐ.நா. அமைப்புகள் குறித்தும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் நிலையம் "தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் கைநூல்" என அழைக்கப்படும் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வரைவிலக்கணத்தின் பிரகாரம் அரசு எதிர்ப்புப் போராட்டக் குழுக்கள் தேசியச் சட்டத்துக்கு வெளியே செயற்படும்
93

Page 59
காரணத்தால் இத்தகைய குழுக்களுக்கும், அவற்றோடு தொடர்புற்ற தனிநபர்களுக்கு எதிராகச் செய்யப்படும் சார்த்துதல்கள் வெளிப்படையாக கேள்விக்குள்ளாக்கப்படுவதோ அல்லது மறுக்கப்படுவதோ சாத்தியமில்லை. இதன் பிரகாரம், தேசிய நிறுவனமொன்று இச் சூழ்நிலைகளின் கீழ் ஒருபக்கச் சார்பற்ற விசாரணையை நடாத்துவது அனேகமாக இயலாத காரியமாகும். இவ்வாணைக்குழுவின் தத்துவங்கள் இணக்கம் மற்றும் இடைநின்று இணக்குதல் குறித்தவையாக இருப்பதால் இந் நடவடிக்கை முறைகள் எவ்வாறு ஆட்சி எதிர்ப்புப் போராட்டக் குழுக்களுக்கு எதிரான சார்த்துதல்களில் பொருந்தும் என்பது எனக்கு விளங்கவில்லை.
ஸ்தாபன அமைப்புள்ள குழுக்களால் புரியப்படும் வன்செயல் நடவடிக்கைகளை இத்தகைய ஓர் ஆணைக்குழு கையாள்வதை விட அவற்றைக் குற்றவியல் நீதி முறைமையின் கீழ் கையாளுவதே மேலும் பொருத்தமானதென ஐ.நா. மனித உரிமைகள் நிலையம் எண்ணுகின்றது. எமது குற்றவியல் நீதி முறைமையினுள்ளும், தெற்கு மற்றும் வட கிழக்கு ஆட்சி எதிர்ப்புக் கலகங்களின் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீறியதாகக் குற்றஞ் சாட்டப்பட்டோர் விடயத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. அவர்களுக்கெதிரான குற்றத்தாக்கல் எதுவுமின்றி, நூற்றுக்கணக்கான கைதிகள் வருடக்கணக்காகச் சிறைகளில் வாடுகின்றனர். சிறைக் கூடங்களில் இன்று அமைதியின்மை நிலவுகின்றது. தொடர்ச்சியான தடுப்புக் காவலின் துயர்வதைகளிலிருந்து தப்புவதற்காக அவர்கள் பாரதூரம் குறைந்த குற்றச் சாட்டுதலாகிய அரசாங்கத்துக்குத் தகவல் கொடுக்கத் தவறியமைக்குத் தாம் குற்றவாளிகளென வாதாடுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இவ் விடயம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இன்னுமொரு நியாயாதிக்கத்தை வழங்குதல் அதன் பயனுறுதியையும் நம்புதகவையும் பாரதூரமாகப் பாதிக்கும்.
ஆகவே, நான் அறிய விரும்பும் அடுத்த விடயம் இதுவாகும். இந்த மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஏதாவது அதிகாரம்
94

உள்ளதா என்னும் வினாவைப் பலர் எழுப்புகின்றனர். ஆணைக்குழுவுக்கு விதந்துரைப்புக்களைச் செய்யும் தத்துவம் உள்ளது. ஓர் அதிகார சபைக்கு இவ் விதந்துரைப்புகள் செய்யப்பட்டு அது அவற்றை அலட்சியம் செய்தால் ஆணைக்குழுவுக்குள்ள ஒரே ஒரு தத்துவம் சனாதிபதிக்கு ஓர் அறிக்கை அனுப்புவதாகும். இது மிகவும் பயனுறுதியற்ற ஒரு ஏற்பாடாகும் என்பதை மரியாதையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரச கரும மொழிகள் ஆணைக் குழுவில் ஒரு சமாந்தர ஏற்பாடு உள்ளது. அரசகரும மொழிகள் ஆணைச் சட்டத்தில் மொழி உரிமைகள் மீறப்பட்டு, ஆணைக்குழுவினால் அரச திணைக்களத்துக்குச் செய்யப்படும் விதந்துரைப்புகள் அலட்சியம் செய்யப்படும் பட்சத்தில், பாதிக் கப்பட்ட நபரும் , ஆணைக் குழுவும் மேல் நீதிமன்றத்துக்கோ அல்லது உயர் நீதிமன்றத்துக்கோ மேன் முறையீடு செய்வதன் மூலம் ஆணைக்குழுவின் விதந்துரைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமென்ற நீதிமன்ற ஆணையைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கும் நீதிமுறைப் பரிகாரம் உள்ளது. நாம் 15 (3) ஆம் வாசகத்துக்கு ஒரு திருத்தம் கொண்டு வருவதற்கான அறிவித் தலைச் செய்துள்ளோம். இதன் பிரகாரம் ஆணைக்குழுவின் விதந்துரைப்புகளின் பிரகாரம் இணங்கியொழுகாத காரணத்தால் அதிருப்தியுறும் ஒருவர் மேல் நீதிமன்றங்கள் மூலமாக இந் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு கட்டளையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
திரு. ஹமீட் அவர்கள் மிகவும் முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிட்டார். ஆணைக்குழுவுக்கு விண்ணப்பங்களைச் செய்வோர் அதே நேரத்தில் அரசியலமைப்புச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் உயர் நீதிமன்றத்துக்குச் செல்வதும் பயனுறுதியுள்ள முறையில் தடை செய்யப்படுகின்றது. ஒரு மாதகாலம் முடிவடைந்த பின்னர் எந்த பயனுறுதியுள்ள நீதிமுறைப் பரிகாரமும் அவர்களுக்கு கிடைக்காமல் போகின்றது. அரசகரும மொழிகள் சட்டம் இந்த அம்சத்தை மிகவும் கரிசனையோடு ஆராய்ந்தது. அரச கரும மொழிகள் 95

Page 60
ஆணைக்குழுச் சட்டத்தின் 24 ஆம் பிரிவை நோக்குமாறு நான் அரசாங்கத்தை வேண்டிக் கொள்ளுகிறேன். ஆணைக்குழுவுக்கு ஒருவர் செய்த முறைப்பாடு குறித்த விளைவு சம்பந்தமாக ஒரு மாத காலத்துள் ஒருவர் அதிருப்தியுற்றால் அவர் இன்னமும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று பொருத்தமான பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல் இயலும். இது மிகவும் கவனமாகச் செய்யப்பட்ட ஓர் ஏற்பாடாகும் . மனித உரிமைகள் ஆணைக் குழுச் சட்டத்தினுள்ளும் இந்த ஏற்பாடு கொண்டு வரப்படுதல் வேண்டுமென்று நான் வேண்டிக் கொள்கின்றேன்.
நான் எடுத்துக் கூற விரும்பும் கடைசி விடயம் கெளரவ. ரவூப் ஹக்கீம் அவர்களின் அவதானிப்புரைகள் குறித்ததாகும். இது சட்டத்தின் 37 ஆம் பிரிவில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தடுத்து வைப்பவர் அவர் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து அல்லது எந்த இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் அல்லது விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து ஆணைக்குழுவுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டிய தேவை சம்பந்தமானதாகும். இதன் மூலம் ஆணைக்குழு இவ்விடயத்தை உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் கைதாகித் தடுப்புக் காவலின் கீழ் இருப்போர் விடயத்தில் மனிதாபிமானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகச் சில கட்டளைகளை அதிமேதகு. சனாதிபதியவர்கள் பிறப்பித்துள்ளார். ஆயினும் இக் கட்டளைகள் பரவலான முறையில் உதாசீனம் செய்யப்படுவதை மனித உரிமைகள் பணிக்குழுவின் மதியுரைக் குழு அங்கத்தினர் அறிவர். அலரி மாளிகையின் அயலிலுள்ள பொலிஸ் நிலையங்கள் கூட இக் கட்டளைகளோடு இணங் கி யொழுகுவதில் லை. இந்நிலைமைகளின் கீழ் மனித உரிமைகள் பணிக்குழு எவ்வளவுதான் சீரிய முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவை பயனளிப்பதில்லை. ஆகவே, வேண்டுமென்றே, கைதாகும் எவர் குறித்தும், ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டிய விடயத்தில் உதாசீனமாக இருக்கும் அல்லது கடமையில் தவறும் எவரும் 27 (3) ஆம் வாசகத்தின் கீழ் 96

தண்ட ஏற்பாடுகளுக்கு ஆளாக வேண்டும் எனக் கூறும் விதத்தில் 27 (3) ஆம் வாசகம் திருத்தப்படல் வேண்டுமென்று மிகத் தீவிரமாக வலியுறுத்த விரும்புகிறேன். வேறு விதமாகக் கூறுவதாயின், ஆணைக்குழு அத்தகைய ஒருவரை நீதிவான் நீதிமன்றம் ஒன்றில் சுருக்க வழக்கு விசாரணை ஒன்றுக்கு உட்படுத்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தின் கடப்பா டொன்றை வேண்டுமென்றே மீறியமைக்குக் குற்றமிழைத்தவராகக் காணப்பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்கக் கூடியதாயிருத்தல் வேண்டும். இத்தகைய ஏற்பாடொன்று இல்லாதவிடத்து இக்காப்பு ஒழுங்குகள் அனைத்தும், பயனுறுதி யற்றவையாகவும், பரந்த அளவில் உதாசீனம் செய்யப்படுபவையாகவுமே இருக்கும்.
இன்னுமொரு விடயத்தைக் கூற வேண்டும். ஆணைக்குழு பல்வேறு மாகாணங்களில் தொழிற்படக் கூடிய விதத்தில் உப-குழுக்கள் அமைக்கப்படல் வேண்டுமென்று திரு. மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார். எட்டு அல்லது ஒன்பது மாகாணங்கள் இருந்த போதிலும் ஆணைக்குழுவில் 5 அங்கத்தவர்களே உள்ளனர். ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், உபஆணைக்குழுக்களில் பணியாற்றுமாறு மற்றவர்களை வற்புறுத்தக் கூடிய நிலை இல்லாத வரையில் இது நடைமுறைச் சாத்தியமான ஓர் ஏற்பாடாக இராது. இந்த அவதானிப்புரைகளைக் கூறி, மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டமூலம் பலப்படுத்தப்படல் வேண்டுமென்றும், அதற்குப் பயனுறுதியுள்ள அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்றும், இதன் கருமப்பாடு குறித்து இச் சட்டத்தின் ஏற்பாடுகளில் கூறப்பட்டுள்ள மெச்சுதற்குரிய குறிக்கோள்கள் அர்த்தமுள்ள வகையில் நிறைவேறுதல் வேண்டுமென்றும் கோரி எனது பேச்சை முடித்துக் கொள்ளுகின்றேன்.
விவாதத்தில் பங்கு பற்றியோர்: திரு.ஏ.சீ.எஸ். ஹமீட், திரு. ரவூப் ஹக்கீம், திரு.டீ.எச்.என். ஆயமஹ, வைத்திய கலாநிதி, ராஜித சேனாரத்ன, திரு. வாசுதேவ நாணயக்கார, திரு. லக்ஷ்மன் கதிர்காமர், அனுர பிரிய தர்ஷன யாப்பா, திரு. மகிந்த ராஜபக்ஷ, திரு.பீ.பீ தேவராஜ், திரு.ஆர்.ஜே.ஆத. மெல், மற்றும் திரு. மகிந்த சமரசிங்க.
97

Page 61

சட்டமும் சமூகமும்

Page 62

சட்டக் கல்வி
சட்டக் கல்வியை வழங்குவதற்கு ஒரு நிரந்தர நிறுவனம் அவசியம் என்னும் கோரிக்கையின் பிரதிவிளைவாக சட்டக் கல்விக்கான மன்றம் 1874 இலேயே தாபிக்கப்பெற்ற போதிலும், சட்டக் கல்வி மன்றக் கட்டளைச் சட்டம் 1900 இலேயே நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் இலங்கைச் சட்டக் கல்லூரி தாபிக்கப்பட்டுப் புதுக்கடை நீதி மன்றத்துக்கு அருகில் ஒரு நிரந்தரமான கட்டிடத்தில் அமைவிடம் பெற்றது. ஆயினும் சட்டக் கல்லூரியில் வழங்கப்பட்ட உயர் வாழ்க்கைத் தொழிற் கல்வியின் முழுமைத் தன்மை குறித்தும் மனன முறைக் கற்றலை வலியுறுத்தும் அதன் பரீட்சை முறைமை குறித்தும் தொடர்ச்சியான விசனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளன.
மாணவருக்கு நடைமுறைப் பயிற்சி வழங்குவதில் பெருமளவுக்கு நீதியரசர் மார்க் பெர்னாண்டோ அவர்களின் முன்முயற்சி காரணமாகச் சமீபத்தில் சில சீர்ப்படுத்தல்கள் இடம்பெற்ற போதிலும், நீண்ட நேர வாசிப்பு அல்லது தயாரிப்பு போன்ற மேலும் கடுமையான தேவைகளைக் கொண்ட பரீட்சை குறித்த புதிது புனைதல்களுக்கு அனைத்து மாணவர்களினதும் பிரதி விளைவு எதிர்மறையானதாகவே இருந்துள்ளது. பரீட்சையில் தோல்வியடைவோரின் உயர்வான விகிதாசாரம், மற்றும் பயனுறுதிமிக்க மேற்பார்வையின்மை குறித்த அதிருப்தி 1923 இல் சேர். அன்டன் பேர்ட்ரம் அவர்களால் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. ஒரு தனியான சட்டப் பீடத்தை அமைக்கும் முயற்சிகளைச் சட்டக் கல்விக்கான மன்றம் ஊக்குவிக்கவில்லை. இது பின்னர் 1947 இல் ஒரு சட்டத் திணைக்களமாகத் தாபிக்கப்பட்டது.
நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய பிரமாணங்கள் இரு
பரந்த குறிக்கோள்களைக் கொண்டுள்ளன. முதலாவதாக, 101

Page 63
சட்டக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிக்கும் பரீட்சைகளை வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றன. இரண்டாவதாக, அவை மாணவர் மீது விதிக்கப்படும் கட்டணங்களை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடுகளையும் வழங்குகின்றன.
இக் குறித்துரைத்த திருத்தங்களைக் கவனத்திற் கொள்ளும் முன்பாக, கழகக்கல்வி மற்றும் உயர் வாழ்க்கைத் தொழில் சட்டக் கல்வியெனக் காலத் துக்குக் கொவ் வாத இருபுடைத்தன்மை உள்ளதைக் சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும். இவ்விடயத்தில் மீள்பார்வை தேவையாகும். மருத்துவம், பொறியியல் மற்றும் கட்டிடக்கலை போன்ற உயர் வாழ்க்கைத் தொழிற்றுறைகளில் இத்தகைய வேறுபாடு எதுவுமில்லை. சட்டத்துறையிற் கூட அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் உயர் வாழ்க்கைத் தொழில் சட்டக் கல்வியை வழங்குவதற்கான தனியான நிறுவனங்கள் இல்லை. உயர் வாழ்க்கைத் தொழில் அமைப்புகள் உயர்வாழ்க்கைத் தொழில் சான்றிதழ் வழங்கும் இறுதிப் பொறுப்பைக் கொண்டிருந்த போதிலும், இருவகையான சட்டக் கல்விகளைத் தொடருவதற்கு எவ்வித நியாயமும் இருக்க முடியாது.
இரண்டாவதாக ஐக்கிய இராச்சியங்களிற் கூட இவ்வுயர் வாழ்க்கைத் தொழிலுக்கு ஒருவரை அனுமதிப்பது தொடர்பான விதிகள் மாற்றப்பட்டுள்ளன. புதிதாக அனுமதி பெறுபவர்கள் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களாக அல்லது வேறு ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றவர்களாக இருத்தல் அவசியம். உயர்வாழ்க்கைச் சட்டத்தொழிலின் தரத்தையும், மதிப்பையும் மேம்படுத்துவதே இம்மாற்றத்தின் நோக்கமாகும். இலங்கைச் சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது ஓர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாக இருப்பதை உறுதி செய்யும் விடயத்தை நாம் சீர்தூக்கிப் பார்ப்பது மிக முக்கியமானதாகும். இது அனுமதி குறித்த நெருக்கடிகளைத் தளர்த்துவதோடு, சட்டக் கல்வியின் அனைத்துமடங்கிய மேம்பாட்டுக்கும் இட்டுச் செல்வதாக
102

அமையும். தலைசிறந்த கல்விமான் நீதியரசர் அமரசிங்க அவர்களின் தலைமையில் இயங்கும் சட்ட ஆணைக்குழு இப் பிரேரணைக்கும் சட்டக் கல்விச் சீர்திருத்தம் குறித்த ஏனைய அம்சங்களுக்கும் உடனடிக் கவனஞ் செலுத்த வேண்டுமென்று அமைச்சருக்கு நான் தீவிர பரிந்துரை வழங்குகிறேன். மூன்றாவதாக, சட்டக் கல்லூரியின் பெளதீக வசதிகள் ஆழமான கவலைக்குரிய நிலையிலுள்ளன. நான் இவ்விடயம் குறித்துச் சட்டக் கல்லூரி அதிபருடன் கலந்துரையாடியுள்ளேன். வழமையான நடைமுறைப் பேனல்களைக் கூடச் செய்ய முடியாத அளவுக்கு நிதி மட்டுப்பாடுகள் உள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இச் சூழ்நிலையில் சட்டக்கல்லூரி விரிவுரையாளர்களுக்கு நியாயமான கொடுப்பனவுகளைச் செய்வதற்கும், நிறுவனத்தைப் பேணுவதற்கும் தேவைப்படும் போதிய மூலவளங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதே வேளையில் மாணவர்களின் நிதிச் சுமையை அதிகரிக்காமலும் இருக்க வேண்டியுள்ளது. கல்லூரி முழுக்க முழுக்க அல்லது பெருமளவுக்கு மாணவர் கட்டணங்களில் தங்கியிருப்பது சாத்தியமான தெரிவாக அமையாது என்பதால், மன்றம் சட்டக்கல்விக்கு நிதியளிப்பது சம்பந்தமாக மாற்று வழிகளைப் பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
அரசியல் திட்ட விவகார அமைச்சர் அவர்கள் சட்டப் பேராசிரியராக இருந்த காலத்திலும், பேராசிரியர் சாவித்திரி குணசேகர மற்றும் பீடத் தலைவர் ஷாரியா டி சொய்சா என்போர் பணிசெய்யும் இந்நாட்களிலும் பல்கலைக்கழகச் சட்ட பீடம் பாடவிதானத்திலும் மற்றும் கற்பித்தல், பரீட்சித்தல் முறைகளிலும் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பல புதிய அங்கத்தினர்கள் பதவியினருள் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பல பிரச்சினைகள் இருந்த போதிலும் சட்டபீடம், சட்டக் கல்வியைப் பரவசமூட்டும் வகையில் வழங்கும் நிலையமாக அபிவிருத்தியடையக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. துரதிருஷ்டவசமாகச் சட்டக்கல்லூரி பின் தங்கியுள்ளது. இந் நிறுவனங்களிலிருந்து தகைமை பெற்று வெளியேறுவோரு க்கு இடையிலான இடைவெளியும் அதிகரிக்கவே செய்யும்.
103

Page 64
சட்டக்கல்லுரரிக் கட்டணங்கள், அனுமதி பதவியினர் ஊதியம், அனுமதிப் பரீட்சை எழுதுவதற்கான தகுதிகள், கட்டணங்கள், அனுமதியைப் பின் போடல், மற்றும் சட்டக் கல்லுரா? மாணவரல்லாதோர் விரிவுரைகளுக்குச் சமுகமளிக்க வகை செய்யும் விசேட வசதிகள் போன்ற விடயங்களைக் குறித்த விதிகளைத் திருத்தும் நோக்கில் மாண்புமிகு பேராசிரியரும், நீதி மற்றும் அரசியல் விவகார அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமாகிய ஜூஎல், பீரிஸ் அவர்களால் 70.70.96 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
விவாதத்தில் பங்கு பற்றியோர்: திரு.டீ.எச்.என். ஐயமஹ, திரு.
சூரிய பீரேக்கவ, திரு . சரத் கோங்கஹாகே, திரு எம்.எம். சுஹைர் மற்றும் திரு. டிரோன் பெர்னாண்டோ.
104

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்கள்
குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே! தேர்தல்கள் ஆணையாளரின் வேதனத்தை அதிகரிப்பது குறித்த விடயம் சம்பந்தமாக ஆராய்வதற்காக இங்கு கூடியுள்ளோாம். இது இந்த நாட்டில் தேர்தல்கள் நடைபெறுவது சம்பந்தமான பாரிய பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாடும் ஒரு சந்தர்ப்பத்தை எமக்கு வழங்குகின்றது. ஐயா, 1988 இலும், 1989 இலும் இடம்பெற்ற கடந்த பாராளுமன்ற மற்றும் சனாதிபதித் தேர்தல்களுக்கான அறிக்கையைத் தேர்தல்கள் ஆணையாளர் சமர்ப்பித்த பின்னர், எமது தேர்தல்கள் சட்டம் தொடர்பிலான பல சீர்திருத்தங்கள் குறித்துப் பரிசீலனை செய்வதற்கென ஒரு தெரிவுக்குழு அமைக்கப்பட்டது. இச்சீர்திருத்தங்களுள் ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட, தேர்தல் ஆணைக்குழு மூன்று அங்கத்தினர் கொண்ட ஓர் அமைப் பாகப் பெரிதாக்கப்படுதல் வேண்டுமென்ற பிரேரணையும் அடங்கியிருந்தது. வேறு பல விடயங்களும் இக் குழுவினால் ஆராயப்படவிருந்தன. ஆயினும் துரதிருஷ்டவசமாகப் பாராளுமன்றம், திகதி குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட போது இக்குழுவின் வேலைகள் நின்று போயின. இச் சபை மீண்டும் இந்த வேலையை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
ஐயா, தாங்கள் அறிந்தவாறே, எமது அரசியலமைப்புச்
சட்டத்தின் உறுப்புரை 4 (e), 93 ஆம் உறுப்புரையோடு
சேர்ந்து வாக்குரிமை இறைமையின் பிரயோகத்துக்கு
முக்கியமானது என்பதையும், சுதந்திரம், நீதி மற்றும் சமத்துவம்
கொண்ட தேர்தல் எமது அடிப்படைச் சனநாயக உரிமைகளுள்
ஒன்று என்பதையும் கூறி நிற்கின்றது. ஏனைய சகல குடியியல்
105

Page 65
மற்றும் அர சரியல் உாரிமைகளும் இதனோடு இணைந்தவையாகும். குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே! தாங்கள் பல சர்வதேச தேர்தல் அவதானிப்புத் தூதுக் குழுக்களில் பணியாற்றியுள்ளிர்கள். ஒரு தேர்தலின் சுதந்திரமான, நியாயபூர்வமான தன்மையைத் தீர்மானிக்கும் அளவுகோல், தேர்தல் தொகுதியின் அரசியல் வேணவாவின் உண்மையான வெளிப்பாடு இடம்பெற்றுள்ளதா என்பதாகும். இது சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் நியாயபூர்வமான தன்மையை மதிப்பீடு செய்யும் தேர்தல் அவதானிப்புக் குழுவொன்றுக்கான வழிகாட்டல்களையும் வழங்குகின்றது.
எமது அரசியலமைப்பின் கீழ் தேர்தல் ஆணையாளரின் தத்துவங்கள், பொறுப்புகள், மற்றும் நியமனம் என்பவற்றைக் குறிப்பிடும் இரு ஏற்பாடுகள் உள்ளன. உறுப்புரைகள் 103 மற்றும் 104 என்பவையே இவ்வேற்பாடுகளாகும். இந்திய அரசியலமைப்பிலும் இதற்குச் சமாந்தரமான ஏற்பாடு ஒன்று உள்ளது. அது தேர்தல் கள் ஆணையாளருக்குப் பணிப்பாணையும், நாட்டின் தேர்தல் சட்டங்களை மேற்பார்வை செய்து, நிர்வாகஞ் செய்யும் அரசியலமைப்பு ரீதியான கடப்பாடும் உண்டென்று கூறுகின்றது. வாக்குரிமையாகிய எமது அடிப்படைச் சனநாயக உரிமையின் பாதுகாவலனும், மற்றும் இவ்வுரிமைகளோடு தொடர்புற்ற வேறு சனநாயக விழுமியங்களின் பாதுகாவலனுமாகிய தேர்தல்கள் ஆணையாளரின், பொறுப்புக்களின் இப்பரந்த கூறு, இப்பரந்த ஏற்பாடுகளில் கூறப்பட்டுள்ளது. துரதிருஷ்டவசமாக எமது அரசியலமைப்பில் இத்தகைய ஒரு சமாந்தரமான ஏற்பாடு இல்லை. இந்தியத் தேர்தல் ஆணையாளர் தேர்தல் பிரசார இயக்கத்தின் போது ஓரளவு நியாயபூர்வத் தன்மையை உறுதிப் படுத் துவதற்கு இப் பரந்த ஏற்பாடுகளை உபயோகித்துள்ளார். தேர்தல் செலவினங்கள் குறித்த வரையறைகள், தேர்தல் ஆதரவு தேடும் இயக்கத்தின் போது அரசு உத்தியோகத் தர்களும், அமைச்சர்களும் அரசு வசதிகளைத் துஷ்பிரயோகம் செய்யா திருப்பதை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்களை உதாரணமாகக்
106

குறிப்பிடலாம். அவர் துணைக்கழைத்து உபயோகித்த இத்தத்துவங்கள் தேர்தல் சட்டத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. ஆயினும் அவர் இப் பரந்த பணிப்பாணையை உபயோகித்து இத்தத்துவங்களைப் பிரயோகித்தார். முக்கியமான ஒரு தீர்மானமாக, ஜம்முவிலும், காஷ்மீரிலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை நடத்துவது இயலாத காரியமென இந்தியத் தேர்தல் ஆணைக்குழு முடிவெடுத்தது. இதன் மூலம் இத்தகைய தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமற்ற சூழல்களென ஆணையாளர் உணர்ந்த நிலைமைகளின் கீழ் தேர்தல் இடம்பெறுவது தடுக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக இந்த நாட்டில் இதையொத்த நிலைமைகள் தோன்றிய போது தேர்தல் ஆணையாளர் எதுவும் செய்ய முடியாமற் போயிற்று.
நான் பிரத்தியேகமாக 1988 இல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்களையும், 1994 இல் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களையும், 1994 ஆவணியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல்களையும் குறிப்பிட விரும்புகிறேன். இத்தேர்தல்களின் போது இடம்பெற்ற பெரிய அளவிலான ஒழுங்கீனங்கள் குறித்து வெளியிடப்பட்ட பல தனிப்பட்ட அறிக்கைகள் உள்ளன. இத் தேர்தல்கள் சம்பந்தமாகச் சஞ்சலமேற்படுத்தக் கூடிய விடயங்களை வெளிக்கொணரும் பல்வேறு விசாரணைகள் முடிவுக்காகக் காத்திருக்கின்றன. பிரதித் தவிசாளர் அவர்களே, தேர்தல் இடாப்புகள் மீள்பார்வை மற்றும் திருத்தம் செய்யப்படாத ஒரு மாவட்டத்தில் தேர்தல் பிரசார வேலை எதுவுமே சாத்தியமற்ற ஒரு நேரத்தில், மக்கள் செல்லமுடியாத அளவுக்குப் பலப்படுத்தப்பட்டு இறுதியில் முழு வாக்காளர் தொகையில் 2 வீதமானோர் மாத்திரமே வாக்களிக்கக் கூடியதாக இருந்த வாக்களிப்பு நிலையங்களில் நடந்து முடிந்த தேர்தல் எவ்வாறு சுதந்திரமான, நியாயமான தேர்தல் எனக் கருதப்பட முடியும் என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு விளங்கவில்லை.
நாட்டின் ஒரு பகுதியில் தேர்தல் செயன்முறைகள் இவ்வாறு ஆழமாக சீர்கேடுற்று இருக்கும்போது தேர்தல் செயன்முறையில்
107

Page 66
நியாயபூர்வத் தன்மை உள்ளதென நாம் திருப்தி கொள்ள முடியாது. எனவே நாம் பூரணமற்ற தேர்தல் நிலைமைகளைக் கவனத்திற்கெடுப்பதோடு, சில வேளைகளில் போலியான நடவடிக்கையொன்றை எடுப்பதை விட நாட்டின் ஒரு பகுதியில் தேர்தலை நடத்தாது விடுதல் பொருத்தமான தென்பதைச் சட்டம் அங்கீகரித்தல் வேண்டும்.
அடுத்த படியாக நான் கூறவிரும்பும் விடயம் தேர்தல் ஆணையாளரின் பணி குறித்த எமது மதிப்பீடு நியாயமானதாகவும், சமநிலைப்படுத்தப்பட்ட ஒன்றாகவும் இருத்தல் வேண்டும் என்பதாகும். 1994 இல் அவர் ஒரு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களையும், இன்னொரு மாகாணத்தில் மாகாணசபைத் தேர்தலையும், நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல்களையும், சனாதிபதித் தேர்தலையும் நடாத்த வேண்டி ஏற்பட்டது. ஆயினும் 1994 க்கான தேர்தல் ஆணையாளரின் வருடாந்த அறிக்கை 1995 தை மாதத்தில் அச்சிடுவதற்குத் தயாராகவிருந்தது. இது உயர்ந்த தரத்திலான உயர் வாழ்க்கைத் தொழில் வினைத்திறனைக் காட்டுகிறது. ஆணையாளரால் வெளியிடப்பெற்ற அறிக்கைகளில், நிர்வாக அறிக்கையோடு இணைக்கப்பட்டுள்ள புள்ளிவிபரவியல் அறிக்கையை நோக்குகையில் அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் மாணாக்கருக்கும் பயன்தரக் கூடிய பெருமளவிலான தகவல்கள் உள்ளதைக் காண்கிறோம். உதாரணமாகப் பொது மக்கள் வாக்கெடுப்பு, பாராளுமன்ற மற்றும் சனாதிபதி தேர்தல்கள் குறித்துக் காலத்துக்குக் காலம் தேர்தல்கள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அறிக்கைகளிலும் இத்தகைய தகவல்கள் அடங்கியுள்ளன.
தேர்தல்கள் ஆணையாளர் சமீபத்தில் எடுத்த ஒரு நடவடிக்கையும் பாராட்டுக்குரியது. அவர் தெற்காசியாவின் ஏனைய பகுதிகளிலுள்ள தேர்தல் ஆணையாளர்களோடு நல்லுறவுகளை ஏற்படுத்தியதோடு, 1994 இல் தற்போதைய ஆணையாளர் முதல் தடவையாக இப் பிராந்தியத்திலுள்ள சகல தேர்தல் ஆணையாளர்களினதும் கூட்டத்தைக் கூட்டியதால் தேர்தல்களை நடத்துவது, மற்றும் நிர்வாகம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது.
108

தேர்தல் இடாப்புக்களைத் திருத்துவது குறித்தும் சில விடயங்களைக் கூற விரும்புகின்றேன். தேர்தல் இடாப்புகளைத் திருத்தும் நடவடிக்கை முறைகளில் குறிப்பிடத்தக்க அளவிலான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. வெளிக்களப் பெயர்ப் பதிவுகளைச் செய்யும் போது அரசியற் கட்சிகள் தமது பிரதிநிதிகளைப் பெயர் குறிப்பதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் உள்ளன. ஆயினும் உண்மையில் அரசியல் கட்சிகள் இச் செயன் முறையில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. இவ்விடயத்தில் திருத்த நடவடிக்கை அவசியமாகும். துரதிருஷ்டவசமாக தேர்தல் இடாப்புகள் எல்லா நேரங்களிலும் மும்மொழிகளிலும் கிடைப்பதில்லை என்பதும் தாங்கள் அறிந்ததேயாகும். குறிப்பாகக் கடந்த பாராளுமன்றத் தேர்தல்களின் போது தமிழ்மொழியில் தேர்தல் இடாப்புகள் கிடைக்காமை குறித்து தேர்தல் ஆணையாளர் மீது குறை கூறப்பட்டது. தேர்தல் பொழிப்புகள் குறித்த பெருமளவிலான கேள்வியையும் தேர்தல்கள் ஆணையாளர் சமாளிக்க வேண்டியுள்ளது. குடியிருப்பாளர் பதிவேடுகள் இல் லா த விடத்து தமது வதிவிடத் தை நிரூபிக்க வேண் டியுள்ளோர் தேர்தல் இடாப்புகளிலிருந்து பொழிப்புகளைக் கேட்கின்றனர். 1994 இல் இத்தகைய பொழிப்புகளுக்காக 25,000 விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. இது வெளிப்படையாகவே திணைக்களத்தின் வளங்கள் மீது பெரும் அழுத்தங்களை ஏற்படுத்துகின்றது. ஆணையாளர் சுட்டிக்காட்டியவாறே, இது இடாப்புகள் பேணலில் சில துஷ்பிரயோகங்களுக்கும் இட்டுச் செல்லக் கூடும்
அரசியல் கட்சிகளுக்கான அங்கீகார நடவடிக்கை முறைகள் குறித்தும் நாம் ஆராய வேண்டும். தாங்கள் அறிந்தவாறு, வேறு நாடுகளில் அரசியல் கட்சிகள் காலத்துக்குக் காலம் இடம்பெறும் கூட்டங்களை ஒழுங்கான முறையில் நடத்த வேண்டுமென்றும், உத்தியோகத்தர் தெரிவுகள் ஒழுங்கான முறையில் இடம்பெற வேண்டுமென்றும், கணக்குக் கூற்றுக்கள் கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டுமென்றும், இக்கணக்குகள்
109

Page 67
சமர்ப்பிக்கப்படுதல் வேண்டுமென்றும் கட்டாயப்படுத்தும் சட்டமொன்று உள்ளது. இதனால் அரசியற் கட்சிகள் செயற்படக் கூடிய ஒரு சட்டரீதியான சட்டகம் ஏற்பட ஏதுவாகின்றது. இதை நாம் ஆராய்தல் வேண்டும். அரசியல் கட்சிகளுக்கான நிதியளிப்பு விடயத்தையும் நாம் ஆராய்தல் வேண்டும். தேர்தல்களின் போதான அவற்றின் செயல்நிறைவேற்று அடிப்படையில் அரசியல் கட்சிகள் அரசு மூலவளங்களையும் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு முறைமையை நாம் ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். தற்போது பாராளுமன்றத் தேர்தலின் போது அதற்கு முந்திய தேர்தலில் அவை பெற்றுக் கொண்ட வாக்குகளின் தொகையின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு ஒரு மிகச் சிறிய பங்களிப்புச் செய்யப்படுகின்றது. நாங்கள் அறிந்தவாறே, ஜேர்மனி போன்ற தேசங்களில் அரசியல் கட்சிகளுக்கும், தேர்தல்களுக்கும் நிதியளிக்கும் விடயத்தில் இச் சட்டத்தில் மேலும் தாராளமான ஏற்பாடுகள் உள்ளன. தேர்தல் மனுக்கள் மூலம் தேர்தல் முடிவைக் கேள்விக்குட்படுத்தும் சட்டமும், நடவடிக்கை முறைகளும் உள்ளன. பிரதிச் சபாநாயகர் அவர்களே, தேர்தல் முடிவு ஆட்சேபனைச் சட்ட நடவடிக்கைகளில் உங்கள் கட்சியும் சம்பந்தமுற்றிருந்ததால் நீங்களும் இது குறித்து அறிவீர்கள்.
நாம் ஒரு வகையான தேர்தல் முறைமையிலிருந்து ஒரு விகிதாசாரத் தேர்தல் முறைமைக்கு மாறியுள்ளோம் என்பதை இச்சட்டங்கள் போதியளவு கவனத்திற் கொள்வதில்லை. சிறிது மாற்றமுற்ற வடிவிலாவது விகிதாசாரத் தேர்தல் முறைமை தொடரக் கூடிய சாத்தியம் இருப்பதால் சட்டங்களும் நடவடிக்கை முறைகளும் மீள்பரிசீலனைக்கு உட்படுதல் வேண்டும்.
கெளரவ. எதிர்கட்சித் தலைவர் அவர்கள் பொது நலவாய நாடுகள் பாராளுமன்றக் கூட்டத்தின் போது தேர்தல்களின் போது சர்வதேசக் கண்காணிப்பாளர்களின் பாத்திரம் குறித்து ஒரு முக்கியமான கட்டுரையை எழுதினார். இதை இந்தச் சபையின் உறுப்பினர்கள் படிக்க வேண்டுமென்று நான்
110

விரும்புகின்றேன். நாம் காலத்துக்குக் காலம் இத்தகைய அவதானிப்பாளர்களைத் தேர்தலின் போது இந்நாட்டுக்கு அழைத்துள்ளோம். ஆகவே தேர்தல்கள் குறித்த சட்டங்கள் மற்றும் நடவடிக்கை முறைகளின் பூரணமான ஒரு மீள்பார்வையின் போது இந்த விடயமும் மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும்.
4 барбылып:F 1996
111

Page 68
அங்கவீனர் உரிமைகள்
வலது குறைந்தோருக்கு சம உரிமைகளை மறுப்பது தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையாகும். 1982 இல் ஐக்கிய நாடுகள் அமைப்பு வலது குறைந்தோர் குறித்த ஓர் உலக நடவடிக்கை நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்டது. இதற்கு மேலதிகமாக, பொதுச்சபை 1983-1992 வரையிலான வலது குறைந்தோருக்கான ஓர் ஐ.நா. தசாப்தத்தையும் பிரகடனம் செய்தது. ஐ.நா. நிகழ்ச்சித்திட்டம் வலது குறைந்த தன்மையைத் தடுப்பதையும், வலது குறைந்தோரின் பூரண சாத்திய வளத்தை பெற்றுக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒர் உலகளாவிய வலது குறைந்தோர் உபாய திட்டத்தை உருவரைக் குறிப்பாக வெளியிட்டது. அது சகல மனிதருக்கும் சமத்துவ வாய்ப்புகளுக்கான உரிமையைச் சிறப்பான முறையில் அங்கீகரிக்கின்றது. ஐரோப்பிய சமூகமும், ஐரோப்பிய மன்றமும் இதையொத்த விதந்துரைப்புக்களைச் செய்துள்ளதோடு, அமெரிக்க ஐக்கிய இராச்சியங்கள், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல தேசங்கள் வலது குறைந்தோருக்கெதிரான பாரபட்சங்களைத் தடைசெய்யும் சட்டவாக்கங்களைக் கொணர்ந்துள்ளன.
சமத்துவமான மனித உரிமைக் கோட்பாடுகள் குறித்துக் காட்டப்படும் முக்கியத்துவத்தில் ஒரு விந்தைப் போக்கு காணப்படுவதாகக் கல்விமான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பெண்களுக்கும், இனத்துவச் சிறுபான்மையினருக்குமான சமத்துவ உரிமைகள் விடயம் முற்போக்கான அங்கீகாரத்தைப் பெற்று வருகின்ற போதிலும், இதற்கு நேர்மாறாக வலது குறைந்தோருக்கான சமத்துவக் கோட்பாட்டுச் சட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அங்கீகாரத்தையே பெற்றுள்ளது. எந்த ஒரு நபருக்கெதிராகவும், இனம், மதம், சாதி, பால், அரசியல்
12

அபிப்பிராயம், பிறப்பிடம் அல்லது அத்தகைய வேறு எந்த அடிப்படையிலும் பாரபட்சம் இழைக்கப்படல் ஆகாதென இலங்கை அரசியல் திட்டம் 12 (2) ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, இவ்வாசகத்தில் வலது குறைந்த நபர்கள் எனப்படுவோர் ஒரு தனி வகைப் பிரிவாக அழுத் தந் திருத்தமாக அங்கீகரிக் கப்படவில்லை. பாரபட்சத்துக்கெதிராக நிவாரணம் தேடும்போது "வேறு எந்த அடிப்படையிலும்” என்னும் பொதுவான மொழிப் பிரயோகத்தை நாடவேண்டியுள்ளது. மறுபுறத்தில், உறுப்புரை 12 (4) வலது குறைந்தோரைப், பாதுகாப்பு வழங்குவதற்காகத் திருத்த நடவடிக்கை நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்த வேண்டிய வகைப் பிரிவினராகத் துலக்கமாக ஏற்றுக் கொள்கின்றது. எனினும் வலது குறைந்தோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டமூலத்தின் 23 (1) ஆம் பிரிவு ஏதாவது பணிக்கு அல்லது பதவிக்கு அமர்த்தும் விடயத்தில் அல்லது ஒரு கல்வி நிறுவனத்துக்கான அனுமதி விடயத்தில் வலது குறைந்த நபர்களுக்கு எதிராக, அவர்களது வலது குறைந்த காரணத்தின் நிமித்தம் பாகுபாடு இழைக்கப்படுதல் ஆகாதெனக் கூறுகின்றது. வலது குறைந்த நபர் எவரும் ஒரு கட்டிடத்துள் அல்லது வேறு இடம் ஒன்றுள் பிரவேசிக்கும் அல்லது அதை உபயோகிக்கும் விடயத்தில் பொறுப்பு மட்டுப்பாடு அல்லது நிபந்தனைக்கு உட்படுத்தப்படல் ஆகாதென 23 (2) ஆம் பிரிவு மேலும் கூறுகின்றது. 23 ஆம் பிரிவு மீறப்படும் ஒரு சந்தர்ப்பத்தில் நிவாரணமளிப்பதற்கும், நீதியானதும் ஒப்புரவானதுமான பணிப்புகளை விடுப்பதற்கும் மேல் நீதிமன்றத்துக்குத் தத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
சட்ட மூலத்தின் பூர்வாங்க வாசகம் அது இரு பரந்த குறிக்கோள்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது. வலது குறைந்தோரின் புனர்வாழ்வு, மற்றும் நிவாரணம் குறித்த தேசிய கொள்கைக்குச் சட்டப் பயனுறுதி வழங்குவது முதலாவது குறிக்கோளாகும். இரண்டாவது, வலது குறைந்தோருக்கான தேசிய மன்றத்தைத் தாபிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகும். முக்கியமான பிரச்சினை 37
113

Page 69
ஆம் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள வலது குறைந்தோருக்கான இலக்கணமாகும். அது வலது குறைந்த ஒருவர் "பிறப்பினால் அல்லது வேறு காரணத்தால் தனது உடல் அல்லது உள இயலுமைகளில் ஏதாவது குறைபாடு காரணமாகத் தனது வாழ்க்கைத் தேவைகளைத் தானே பூரணமாக அல்லது பகுதியாகப் பெற்றுக்கொள்ள முடியாத ஒருவர்” எனக் கூறுகிறது.
பாரபட்ச மனப்பாங்குகள், நடைமுறைகளைத் தொடர்ந்து வைத்திருப்பதில் மொழி ஆற்றும் பங்கு குறித்து, வலது குறைந்தோர் அதிகளவு உணரத் தலைப்படுவதால் நாம் உபயோகிக்கும் மொழிப்பதங்கள் முக்கியமானவையாகும். வரலாற்று ரீதியாக உடல் அல்லது உள ரீதியான ஊறு உள்ளவரைக் குறிப்பதான handicapped என்னும் பதம், கையில் தொப்பி வைத்திருப்போர் அல்லது இரப்போர் என்னும் கருத்துத் தொடர்புகளைக் கொணருவதாக உள்ளது. இத்தகைய ஒரு பதம் குறைபாடு நிரந்தரமானதென்றும், வலது குறைந் தோர் வாழ் க் கை முழுவதும் பரிறாரில் தங்கியிருப்பரென்றும் உட்கிடையாகக் கூறி நிற்கின்றது. இத்தகைய மனப்பான்மைகளை இனி மேலும் அங்கீகரிக்க முடியாது. இதன் பிரகாரம், 1981 இல் வலது குறைந்தோர் சர்வதேசியமானது ஊறுபாட்டுக்கும், வலது குறைந்த தன்மைக்குமிடையில் வேறுபாடு காண்பதற்கு முயற்சி எடுத்தது. இவ்விலக்கணத்தின் பிரகாரம் ஊறுபாடு என்பது "ஒரு தனிநபரின் உடல், உள அல்லது, உணர்வு ஊறுபாட்டின் காரணமாக ஏற்படும் கருமங்களிலான மட்டுப்பாடு” ஆகும். மறுபுறத்தில் வலது குறைந்த தன்மையென்பது "உடல் அல்லது சமுதாயத் தடைகளின் காரணமாக சமூகத்தின் சாதாரண வாழ்வில், மற்றையோருடன் சமத்துவமான மட்டத்தில் பங்குகொள்ளும் சந்தர்ப்பங்கள் இல்லாமை அல்லது அவற்றின் மட்டுப்பாடு" ஆகும்.
இவ்வாறாக, வலது குறைந்தோர் என்னும் பதம், காரணம் எதுவாக இருந்தாலும் சமூக மட்டுப்பாட்டின் காரணமாக
114

வலது குறைந்த தன்மையைக் கொண்டுள்ள ஊறுபட்ட அனைவரையும் குறிப்பது போலத் தோன்றுகிறது. அவர்கள் பிரவேசிக்க முடியாத கட்டிடங்கள், அவர்களோடு சைகை மொழியில் உரையாட இயலாத அரச அலுவலர்கள் அல்லது பொதுமக்கள் அல்லது வாசிப்புப் பொருட்கள் கிடையாமை என்பவை சமூக மட்டுப்பாடு களைக் கொணரக் கூடும். இது விடயத்தில் கொலின் பார்ன்ஸ் அவர்களின் "பிரித்தானியாவில் வலது குறைந்தோரும், பாரபட்சமும்; பாரபட்சத்துக்கெதிரான சட்டவாக்கத்தின் தேவை - 1991” என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. ஆயினும் சட்டவாக்கம் வலது குறைந்தோருக்கெதிரான தனிப்பட்ட பாரபட்ச நடவடிக்கைகளை மட்டுமன்றி எமது சமுதாயத் தில் வேரோ டிப் போயிருக்கும் நிறுவன மயமாக்கப்பட்ட பாரபட்சங்களையும் களைவதற்கு முயலுதல் வேண்டும். இத்தகைய பாரபட்சங்கள் ஊறிப்பரவுபவையாகவும், அனைத்து மடங்குபவையுமாக மாத்திரமன்றி, வரலாற்றாலும், கலாசாரத் தினாலும் ஆதாரிக் கப் படுபவையாகவும் விளங்குகின்றன. அவை பாரபட்சம், மற்றும் சகிப்புத் தன்மையின்மை என்பவற்றின் தீவிர வடிவத்தைக் கொண்டிருப்பதோடு, கல்வி முறைமையின் ஒழுங்கமைப்பு மற்றும் தொழிற் சந்தைச் செயற்பாடு என்பவற்றில் பிரதிபலிப்பது போன்று ஒளிவு மறைவான உள்ளக் கிடக்கைகள் என்பவற்றையும் கொண்டு விளங்குகின்றன.
1956 இல் விதிமுறையாகத் தாபிக்கப்பட்ட சமூக சேவைகள் திணைக்களம் அங்கவீனர்களுக்குச் சேவையாற்றும் ஒரு தனியான அலகைக் கொண்டுள்ளது. வலது குறைந்தோரைப் பதிவு செய்தல், பயிற்சி, பணிக்கமர்த்துதல், ஊக்குவித்தல், அரசு சார்பற்ற நிறுவனங்களைக் கூட்டிணைப்புச் செய்தல் மற்றும் வலது குறைந்தோர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல் என்பவை இத் திணைக்களத்தின் பிரதான நடவடிக்கைகளாகும். முன்னர் சமூக சேவைகள் திணைக்களத்தில் பணியாற்றிய ஜே.வீ. தம்பர் 1980 க்கு முன்னர் 500,000 வலது குறைந்தோர் இருந்ததாக மதிப்பிட்டுள்ளார். வட-கிழக்கில் இடம்பெற்றுவரும்
115

Page 70
உள்நாட்டு யுத்தம் நிரந்தரமாக அங்கவீனமுற்றோர் மற்றும் இயலாதோராக்கப்பட்டோர் தொகைக்கு கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. ஏறத்தாழ பத்து லட்சம் வலது குறைந்தோர் இருப்பதாகத் தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. விழி, செவிப்புலன் அற்றோர், மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் பிரச்சினைகளைக் கையாளுவதற்கு அரசு சார்பற்ற நிறுவனங்கள் இருந்த போதிலும், சகல வலது குறைந்த நபர்களுக்கும் பொறுப்பான ஒரு தலைமைத் தாபனம் இல்லை. இவ்வகையில், வலது குறைந்தோருக்கான ஒரு தேசிய மன்றத்தை உருவாக்குவதற்கான தீர்மானம் வரவேற்கக் கூடியதாகும். உத்தியோகபூர்வ மட்டத்தில் இத்தகைய ஒரு மன்றம் திணைக்களங்களுக்கிடையிலான கூட்டிணைப்பை இலகுவாக்கும் அதேவேளையில் , அதிகாரிகளுக்கும் அரசு-சார்பற்ற நிறுவனங்களுக்கும் இடையிலான உரையாடலில் குவிய மையமாகவும் திகழுதல் வேண்டும். 31-34 ஆம் பிரிவுகளில் காணப்படும் மேற்பார்வைத் தத்துவங்கள் தமது சுதந்திரத்தில் அரசுத் தலையீட்டை வெறுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களைக் கிலேசத்துக்கு உள்ளாக்கும் தன் மை கொண் டவை. அமைச்சர் இவ்வேற்பாடுகளை மீள்பரிசீலனை செய்யும் அவசியம் உள்ளது, அன்றேல் இத்தத்துவங்கள் விதிக்கட்டற்ற வகையிலும், தன்னிச்சையாகவும் பிரயோகிக்கப்படும் காலத்து நிவாரணம் வழங்கும் தேவை எழக்கூடும்.
வலது குறைந்தோருக்கான சமத்துவம் என்னும் தேடலில் இச்சட்டவாக்கம் ஒரு முக்கியமான மைல்கல் ஆகும். அது இத்தகைய வலது குறைந்தோரைத் தேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வினுள் ஒருங்கிணைப்பதற்கான உத்வேகத்தை வழங்குமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
இலங்கையில் அங்கவீனர்களின் உரிமைகளை முன்னெடுத்துப் பாதுகாப்பதற்கும் அத் தோடு தொடர் புற்ற மற்றும் இடைநேர்விளைவான விடயங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் ஓர் அங்கவீனர்களுக்கான தேசியக் குழுவைத்
116

தாபிக்கும் ஏற்பாடுகளைச் செய்யும் நோக்கில் மாண்புமிகு. சுகாதார, நெடுஞ்சாலைகள் மற்றும் சமுக சேவைகள் அமைச்சர் ஏ.ஏச்.எம். பெளசி அவர்களால் 23.08.1996 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
விவாதத்தில் பங்குபற்றியோர்: திரு ஏ.சீ.எஸ்.ஹமீட், திரு.எஸ். சதாசிவம், திரு. வாசுதேவ நாணயக்கார, திரு .யு.எல்.எம். மொஹிதீன், திரு. வஜிரா அபேவர்தன, திரு.எஸ். சிதாசன், திரு.சீவி குணரத்ன, திரு. அசோகா வீரசிங்க டி சில்வா, திரு மதி. பவித்திரா வன்னியாராச்சி, கலாநிதி. ஜலயத் ஜயவர்தன.
117

Page 71
பராயமடையும் வயது
கெளரவ. அமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியது போன்று இத் திருத்தத்தின் நோக்கம் குடியியல் நடவடிக்கை முறைக் கோவையில் ஒப்பீட்டளவில் எளிமையான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். அதாவது அதைப் பராயமடையும் வயதுக்கட்டளைச் சட்டத்தோடு இணக்கப்படுத்துவதற்கும் பராயமடையும் வயதாகிய 21 வருடங்களுக்கு 18 வருடங்களெனப் பதிலீடு செய்வதற்குமாகும். சாதாரணமாக இது மிகவும் எளிமையான ஒரு விடயமாக இருந்திருக்கும். ஆயினும், எமது சட்டங்களின் சிக்கல் தன்மையைக் கருத்திற் கொண்டு, ஆழமான மரியாதை உணர்வோடு ஒரிரு வினாக்களை எழுப்பலாமென எண்ணுகிறேன்.
இலங்கைச் சட்டங்களின் முறைமை போன்ற சிக்கலான முறைமை வேறு எந்த நாட்டிலும் இல்லை. இது தாங்கள் அறிந்ததே. ஜென்னிங்ஸ் அவர்களும், தம்பையாவும் சுட்டிக்காட்டியவாறு அது ஐந்து சட்ட முறைமைகளின் கலவை அல்லது குழப்பம் ஆகும். அவற்றுள் இரண்டு மேற்கத்திய ரோமன் டச்சு மற்றும் ஆங்கில முறைமைகள், மூன்று திரு. அஸ்வர் அவர்கள் சுட்டிக்காட்டியது போன்று, கீழைத்தேய இந்து, கண்டிய மற்றும் இஸ்லாமிய முறைமைகள் ஆகும். ரோமன் சட்டத்தின் கீழும், ரோமன் டச்சுச் சட்டத்தின் கீழும் 25 வயது பூர்த்தியடைந்த இருபாலாரும் பராயமடைந்தோ ரெனக் கருதப்பட்டனர். ஆயினும் இவ்வேற்பாடு நியதிச் சட்டத்தினால் மாற்றமுற்று, 1865 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கப் பராய வயதுக் சட்டளைச் சட்டம் பராய வயது 21 வருடங்கள் எனக் குறித்தது. இந்த வயதுக்கு முன்னராக எவருமே, நாட்டின் வேறு எந்தச் சட்டமோ, வழக்கமோ இருந்த போதிலும், பராயமடைந்தவராகக் கருதப்பட மாட்டார் என அது மேலும் தெரிவித்தது. ஆயினும் இச் சட்டத்துக்கான ஒரு ஏற்பாடு, இதில் 118

அடங்கியிருக்கும் எதுவுமே 21 வயதுக்குக் குறைந்த ஒருவர் சட்டச் செயற்பாட்டின் மூலம் பராயம் அடைவதைத் தடுக்காது எனவும் கூறுகிறது.
1967 இல் உயர் நீதி மன்றத்தின் முழு எண்ணிக்கையினரான நீதிபதிகள் இவ்வேற்பாடு குறித்து ஆராய்ந்து, பராயமடையும் வயதை 21 ஆகவன்றி வேறொன்றாக நிச்சயிக்கும் உள்ளூர் சட்டத்தை அல்லது வழக்கத்தை இல்லாமற் செய்வதே நோக்கமெனத் தோன்றுகிறது எனக் கூறினர். ஆயினும் வேறு ஒரு நிகழ்வு காரணமாக ஒருவர் பராயமடையும் எந்த விதி இருந்தாலும் அது ஒழிக்கப்பட்டது. வேறு விதமாகக் கூறுவதெனில், கெளரவ. அமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டியவாறு, ஒரு திருமணத்தின் மூலம் அல்லது வயது நிறைவளிப்புக் (வீனியா அயிட்டாட்டிஸ்) கடிதமொன்றை வழங்குதல் மூலம் பராயமடைதல் குறித்த ரோமன் டச்சுச் சட்டம் பராய வயதுக் கட்டளைச் சட்டத் தில் பாதுகாக்கப்பட்டது.
குடியியல் நடவடிக்கை முறைக்கோவை 502 ஆம் பிரிவிலும் பராய வயதை விரைவுபடுத்த இடமளிக்கும் ரோமன் டச்சுச் சட்டத்துக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நான், பராய வயதை விரைவுபடுத்தும் நோக்கில் வழங்கப்படும் வயது நிறைவளிப்புக் கடிதம் குறித்த கோட்பாடுகள் சமகால யதார்த்த நிலைமைகளை வைத்து நோக்கும் போது பொருத்தமானவையா என்று கெளரவ அமைச்சரை வினாவ விரும்புகின்றேன். வயது நிறைவளிப்பு என்பது பெரும்பாலும் மன்னரால் அளிக்கப்படும் ஒரு கொடையாகும். பராய அந்தஸ்தை நியாயப்படுத்தும் சூழ்நிலைகள் இருப்பதாக ஒருவர் மன்னருக்குக் கடிதம் எழுதினால், இந் நிலைமைகள் குறித்து மன்னர் திருப்தியுற்றால் இக் கடிதங்களை வழங்கலாம். தென்னாபிரிக்காவில் இவ் விடயத்தை ஒரு சுதந்திரமான நீதிமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தி வயது நிறைவளிப்புக் கடிதம் வழங்குவது குறித்து விதந்துரைப்பதே நடைமுறையாக
119

Page 72
இருந்தது. இப்பொழுது தென்னாபிரிக்க நீதிமன்றங்கள் 20 வயதுக்குக் குறைந்த ஆணின், அல்லது 18 வயதுக்குக் குறைந்த பெண்ணின் விடயத்தில் தாம் எத்தகைய விதந்துரைப்பையும் செய்யப் போவதில் லையென அறிவித்துள்ளன. இத்தகைய சட்டக் கோட்பாடுகள் இலங்கையிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வயது நிறைவளிப்புக் கடிதங்கள் வழங்குவது குறித்த ரோமன் டச்சுச் சட்டக் கோட்பாடுகள் விருப்பாவணக் கட்டளைச் சட்டத்தின் 3 ஆம், 4 ஆம் பிரிவுகளிலும் இடம்பெற்றுள்ளன. சனாதிபதி அல்லது இதற்கு முன்னர் தேசாதிபதி பராயமடையாத ஒருவர் விண்ணப்பிக்கும் போது வயது நிறைவளிப்புக் கடிதம் வழங்குவது உள்ளூர் நடவடிக்கை முறையும், நடைமுறையுமாகு மென்று அவை தெளிவுபடுத்தின. இலங்கையின் நடைமுறை அதை நீதிமன்றமொன்றுக்கு ஆற்றுப்படுத்தி அதன் விதந்துரைப்பைப் பெறுவதா என்பது தெளிவாகவில்லை. ஆகவே, பராய வயது இப்பொழுது 18 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாலும், 18 வயதுக்கும் குறைந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பராயத்தை விரைவுபடுத்தும் சாத் தியக் கூறு இல் லா மையாலும் , பராயத் தை விரைவுபடுத்துவது தொடர்பான வயது நிறைவளிப்புக் கடிதங்கள் சம்பந்தமான பிரிவைத் திருத்துவது அல்லது நீக்கி விடுவது குறித்துப் பாரதூரமாகச் சிந்திக்குமாறு கெளரவ. அமைச்சர் அவர்களுக்குத் தீவிரமாக விதந்துரைக்க விரும்புகின்றேன். விருப்பாவணக் கட்டளைச் சட்டத்தின் 3ஆம், 4ஆம் பிரிவுகளுக்கும் நேரொத்த மாற்றங்கள் அவசியமா என்பது குறித்துச் சட்ட ஆணைக்குழுவுடன் கலந்தாலோசனை செய்யுமாறு கெளரவ. அமைச்சர் அவர்களை மரியாதை விநயமாக வேண்டிக் கொள்ளுகின்றேன்.
21 Sbsf 1996
120

நீதிமுறைத் தத்துவங்களில் அதிகாரப் பகிர்வு
திரு. சொக்ஸி அவர்கள் தமது தெளிவான சமர்ப்பணத்தில் குறிப்பிட்டது போன்று 1833 ஆம் ஆண்டின் கோல்புரூக் e கமரூன் சீர்திருத்தங்களின் விளைவாகவே தற்போதைய நீதிமன்ற முறைமை ஆரம்பத்தில் ஏற்படுத்தப்பட்டது. இச் சீர்திருத்தங்கள் மூன்று முக்கிய இலக்குகளை ஈட்ட உதவுமென்று எதிர்பார்க்கப்பட்டது. செலவற்ற, விரைவான மற்றும் அனைவருக்கும் எட்டக் கூடிய நீதி முறைமையே அதுவாகும். துரதிருஷ்டவசமாக, ஒன்றரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக, இவ்விலக்குகள் இன்னமும் எட்டப்படாதவையாகவே இருக்கின்றன. பொதுவான நீதி நிர்வாகத்தில் மாத்திரமன்றி எமது முறைமையினுள் வாணிபப் பிணக்குகள் குறித்து நீதி முடிவு செய்யப்படும் விடயத்திலும் ஏற்பட்டிருக்கும் பாரதூரமான அதிருப்திகளைப் போக்கும் நோக்கத்தோடு தற்போதைய சட்ட மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நீதிமுறைச் சீர்திருத்தம் குறித்து இரு மாற்று அணுகுமுறைகள் உண்டு. ஒன்று, சட்டத்தின் தாமதங்கள் மற்றும் சட்டக் கலாசாரம் குறித்து வணசுந்தர குழு செய்ய முயன்றது போன்று முழு நீதி நெறி முறைமையையும் நோக்குதல் ஆகும். நீதிமன்றக் கட்டமைப்பு மற்றும் நடவடிக்கை முறைச் சட்டங்களின் குறைபாடுகளை ஆராய்வதும், நீதிமன்றப் பதிவேடுகளைப் பேணுதல் மற்றும் நீதிபதிகள், சட்டவறிஞர்கள், வழக்காடுவோர் மனப்பாங்குகள் உள்ளிட்ட நிர்வாகச் சீர்கேட்டுப் பிரச்சினையை ஆராய்வதும் ஆகும். இவை வணசுந்தர குழுவினால் ஆய்வு செய்யப்பட்ட மூன்று பரந்த விடயப் பரப்புகள் ஆகும். வணசுந்தர குழுவின் பல விதந்துரைப்புகள் 1988 ஆம் ஆண்டின் 79 ஆம் இலக்க
121

Page 73
குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவைத் திருத்தச் சட்டத்தில் இடம்பெற்றன.
தற்போதைய சட்ட மூலத்தில் எதிர்நோக்கப்படுவது போன்று, மற்றைய அணுகுமுறை, தேசியப் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த, குறிப்பிட்ட சட்ட விடயப் பரப்பில் வினைத்திறன் மற்றும் பயனுறுதி வாய்ந்த தனியொதுக்க நிலையமொன்றை முயன்று தாபிப்பதாகும். இதனால் ஓர் அணுகுமுறை நீதிநெறி முறைமை குறித்த பாரிய பிரச்சினைகளைத் தீர்க்க முயலுகையில், மற்றது வாணிபப் பிணக்குகளைப் பயனுறுதிமிக்க வகையில் தீர்த்து வைக்க முயல்கின்றது. ஒரு வகையில், தற்போதைய சட்ட மூலம் இரண்டாவது அணுகுமுறையைக் கொண்டதாகும். இரண்டாவது அணுகுமுறையின் கஷ்டங்கள் அது நீதிமன்ற முறைமையின் அகநிலையமைவுகளைச் சார்ந்து நிற்க வேண்டியிருப்பதும், நீதிமன்றப் பதிவேடுகளைப் பேணுதல், தகவலைக் களஞ்சியப்படுத்தி மீளப்பெற்றுக் கொள்ளல், நீதிமன்ற நிர்வாக முறைமை போன்றவற்றைச் சார்ந்திருக்க வேண்டியிருப்பது என்பதையும், பயனுறுதிமிக்க தனியொதுக்க நிலையமொன்றைத் தாபிக்க முயலுவது, வினைத்திறனின்மை என்னும் சமுத்திரத்தில் பயனுறுதியென்னும் தீவை அமைப்பதற்கு நிகராகும் என்பதையும் கெளரவ. அமைச்சர் அவர்கள் இலகுவில் இனங்கண்டுகொள்ள முடியும்.
இந் நீதிமன்றங்களின் உண்மையான செயற்பாட்டி' இந்நிலைமைகள் பல பிரச்சினைகளை உருவாக்கும். வோ,
பேச்சாளர்கள் சுட்டிக்காட்டியது போன்று வாணிட . பிணக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் குறித்த அதிருப்தி, அதிகரித்துவரும் சட்டத் துறை விசேடத்துவ விடயப் பரப்பில், கம்பனிச் சட்டம், வாணிபச் சட்டம் மற்றும் புத்திஜீவிகள் சொத்துச் சட்டம் போன்ற விடயப் பரப்புகளில் எழும் சிக்கலான பிரச்சினைகளைக் கையாளும் உயர்வாழ்க்கைத் தொழில் அனுபவமும், இயலுமையும் கொண்ட நீதிபதிகள் இல்லாமையால் எழுவதாகும். ஆகவே, துரதிருஷ்டவசமாக
122

நாம் பல, ஒன்றுக்கொன்று முரணான தீர்ப்புகளைக் காண்கிறோம். சில கட்டளைகள் வாணிபச் சட்டத்தின் சில அடிப் படைக் கோட் பாடுகளையே உதாசீன ஞ் செய்பவையாகவும் வழக்காடுவோரான வெளிநாட்டவருக்கும், இலங்கையருக்கும் தாமதங்களையும், அதிருப்தியையும் ஏற்படுத்துபவையாகவும் உள்ளன. ஆகவே, விசேட அனுபவம், அல்லது வாணிபச் சட்டத்தில் துறைத் தேர்ச்சியுள்ள நீதிபதிகள் அவற்றை மேலும் அபிவிருத்தி செய்யக்கூடிய ஒரு நீதிமன்றத்தை முன்னெடுக்கக் கூடிய யோசனை நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட வேறு பல நியா யா தரிக் கங் களில் ஏற் றுக் கொள் ளப் பட் டும் நடைமுறைக்கிடப்பட்டும் உள்ளது.
பொதுவாக ஒருவர் குடியியல் வழக்காடலிலும், வாணிப வழக்காடலிலும் எதிர்கொள்ளும் கஷ்டம், ஒரு வழக்கிலுள்ள பிரச்சினைகளுக்குப் பூரணமான நீதித் தீர்வு கிடைக்கும் வரையில் நிலவும் நிலையைப் பாதுகாப்பதற்கு வழக்கின் கட்சியினர் எப்பொழுதும் தடைசெய் கட்டளைகளையும், இடைக்காலத் தடையுத்தரவுகளையும் பெற்றுக் கொள்வது குறித்து முயற்சி செய்வதாகும். உண்மையைக் கூறுவதாயின் வழக்காடுவோர் சிலருக்கு, அவர்கள் வழக்கில் நாடும் இறுதி முடிவைவிட இடைக்கால நிவாரணமே கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். தடை செய் கட்டளைகளை விடுப்பதற்கும், அவற்றுக்கெதிராக விண்ணப்பிப்பதற்கும், தடைசெய் கட்டளைகளை விலக்குதல் போன்ற விடயங்களுக்கும் நீதித்துறையின் பெருமளவு நேரம் செலவாகின்றது.
1971 ஆம் ஆண்டின் உரை செய்தல் திருத்தக் கட்டளைச் சட்டம் அல்லது சட்டத்தின் செயற்பாடு காரணமாக மேலும் ஒரு குழப்பம் ஏற்படுகின்றது. இதன் நோக்கம் அரசுக்கு அல்லது அரசு உத்தியோகத்தர்களுக்கு எதிராகத் தடைசெய் கட்டளைகளும், தடை உத்தரவுகளும் பிறப்பிக்கப்படுவதை மட்டுப்படுத்துவதாகும். சட்டத்தின் இவ்விடயப்பரப்பு இன்னமும் பெருமளவுக்கு நிச்சயமற்ற ஒன்றாகவே இருப்பதோடு,
123

Page 74
பிரத்தியேகமாக வேகம் மற்றும் விரைவு மிகவும் முக்கியத்துவம் பெறும் வாணிபக் கொடுக்கல் வாங்கல்கள் விடயத்தில் பெருமளவு குழப்பநிலையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆகவே இவ் விடயங்கள் நிலை மாற்றமின் றியும் , தடைக்கட்டளைகள், உத்தரவுகள் சாதிக்க வேண்டிய கோட்பாடுகள் மற்றும் கொள் கை நோ க்குகள் என்பவற்றுக்கமைவாகவும் நீதித்தீர்ப்புப் பெறும் வகையில், தடையுத்தரவுகள் மற்றும் தடை செய் கட்டளைகள் குறித்த தற்போதுள்ள சட்டத்தை, உரை செய்தல் திருத்தக் கட்டளைச் சட்டத்தோடு, மீள்பார்வைக்கு உட்படுத்துமாறு கெளரவ. அமைச்சர் அவர்களை நான் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ளுகின்றேன்.
திரு. சொக்ஸி அவர்கள் குறிப்பிட்ட அட்டவணை சம்பந்தமாக இன்று கேள்வி மனுக் கோரல்களும், பொதுச் சம்பாத்தியத் தீர்மானங்களும் ஒரு முக்கியமான வழக்காடல் விடயப் பரப்பாகவுள்ளது. வழக்காடுவோர் பலர் சமமான பாதுகாப்பு வாசகத்தின் கீழான மீயுயர் நீதிமன்றத்தின் அடிப்படை உரிமைகள் நியாயாதிக்கத்தை உபயோகிப்பதன் மூலம் கேள்வி மனுக்கோரல்கள் விடயத்தில் பொது அதிகார சபைகளின் கட்டளைகளைக் கேள்விக்குரியதாக்க முயலுகின்றனர். வேறு மாற்றுப் பரிகாரம் இல்லாத காரணத்தால் இவ் வழக்குகளிற் பல மீயுயர் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்படுகின்றன. இது, மறுபடியும் வாணிப நீதிமன்றமொன்றுக்கு முறையாக ஒப்படைக்கப்பட வேண்டிய ஒரு விடயப் பரப்பாகும்.
அமெரிக்க, ஐக்கிய இராச்சியங்களில் பொது ஒப்பந்தங்களை, அரசு ஒப்பந்தங்களை வழங்குதல் குறித்த நியாயாதிக்கம் கொண்ட விசேட நியாய சபைகளே கையாளுகின்றன. இந்தியாவில் இன்னும் இந்திய அரசினாற் செய்யப்பட்ட தொலைத் தொடர்பு ஒப்பந்த வழங்கல்கள் குறித்து பெருமளவிலான குழப்பநிலை நிலவுவதாகக் கூறப்படுகின்றது. இவை அனைத்தும் இந்திய மீயுயர் நீதிமன்றத்திலோ அல்லது பல்வேறு மேல் நீதிமன்றங்களிலோ கேள்விக்கு உட்படுத்தப்பட்டதால், பல்வேறு ஒன்றுக்கொன்று முரணான 124

கட்டளைகள் விடுக்கப் பெற்று, அரசு இவற்றை நடைமுறைப்படுத்துவதில் பெரும் தாமதங்கள் விளைந்துள்ளன. இவ்வகைப் பிரிவிலான பிணக்குகள் குறித்த நியாயாதிக்கத்தை வாணிப மேல் நீதிமன்றத்துக்கு வழங்கும் வகையில் இவை வெளிப்படையாக அட்டவணை 1 இல் சேர்க்கப்படும் சாத்தியம் குறித்து, குறித்துரைத்த வகையில் ஆய்வு செய்ய வேண்டுமென்று நான் கெளரவ. அமைச்சர் அவர்களை மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ளுகிறேன்.
நீதிமுறைச் சீர்திருத்தம் குறித்து நாம் சிந்திக்கையில் நீதிச் சேவைக்குள் சேர்க்கப்படுவோரின் தரத்தைச் சீர்திருத்துதல் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு விடயமாகும். இது நீதிபதிகளின் ஊதியக் கொடுப்பனவு விடயத்துக்கு இட்டுச் செல்லுகின்றது. வீடு, போக்குவரத்து, தொடர் பயிற்சிக்கான சந்தர்ப்பங்கள், வாழ்க்கைப் பணி முன்னேற்றம் போன்ற வசதிகளும் அதேயளவு முக்கியத்துவம்கொண்டவையாகும். நீதிநெறிப் பயிற்சி நிறுவகம் இவ்வகையில் ஒரு முக்கிய பணியை ஆற்ற (ւՔւգ-պւD.
நீதி நிர்வாகத்தில் ஊழல்களை ஒழிக்க வேண்டிய பாரதூரமான தேவை உள்ளது. நீதி மன்ற அழைப்பாணைகளை வழங்கல், பிணையாகச் செலுத்தப்பட்ட பணத்தை மீளப்பெறல், நீதிமன்றத்தில் நட்டஈட்டுத்தொகையைப் பெற்றுக்கொள்ளல், மேன் முறையீட்டு நீதிமன்றத்துக்கு மேன் முறையீட்டு வழக்குகளைச் சமர்ப்பித்தல், மற்றும் நீதிமன்றப் பதிவேடுகளைப் பார்வையிடல் போன்ற விடயப் பரப்புகளை வணசுந்தர குழு குறிப்பிட்டது. சட்டத் தொழில் புரியும் ஒருவர் என்ற வகையில் கெளரவ. லக்ஸ்மன் கிரியெல்ல அவர்கள் இவ்விடயப் பரப்புகளில் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருப்பதை இனங்காண முடியும். இதற்கு முன் இடம்பெற்ற தமது சமர்ப்பணத்தில் கெளரவ. அமைச்சர் அவர்களும் சாட்சியங்களைப் பதிவு செய்தல், சாட்சியங்களைப் பேணல் போன்றவற்றில் புதிய உயர் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
125

Page 75
நியூசிலாந்திலும் வேறு பல நாடுகளிலும் புதிய உயர் தொழில்நுட்பங்கள் வழக்காடலில் தாமதங்களைப் பெருமளவில் குறைத்துள்ளன. இத்தகைய புதிய உயர் தொழில்நுட்பங்கள் எமது சொந்த நீதிமன்ற முறைமையிற் பயனுறுதியை அதிகரிக்கும் வகையில் எவ்வாறு பிரயோகிக்கப்படலாம் என்பது குறித்து நாம் ஆய்வு செய்தல் வேண்டும்.
வழக்குத் தொடர ல் , வழக்குகளை முடிவுறுத்தல், நீதிமன்றங்களின் பயன்பாடு போன்ற விடயங்களில் மேலும் பயனுறுதி வாய்ந்த நீதித்துறைப் புள்ளி விபரங்களை நாம் திரட்டுதல் வேண்டும். நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வில் 22 நீதிமன்றங்களில் நீதிபதிகள் நாளொன்றுக்கு நீதிமன்ற வளவை இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் பயன்படுத்தவில்லையென்பது வெளியாகியது. எமது நாட்டிலும் நீதிமன்ற வசதிகளின் பயன்பாடு குறித்த இத்தகைய ஓர் ஆய்வு பல விடயங்களை வெளிக்கொணரக் கூடும். நீதிமன்றத்தின், நிர்வாகக் கருமப்பாடுகள் குறித்துக் காலத்துக் காலம் சிந்தித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதிகளைக் கேட்டுக்கொள்ளுதல் மேலும் ஒரு புதிது புனைதலாகவிருக்கும்.
சில நாடுகளில் நீதிமன்றங்களில் நிர்வாகக் கருமப்பாடுகள் குறித்தும், நீதிமன்றப் பதிவேடுகள், காரிய அட்டவணைகள் முகாமைத்துவம் குறித்தும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆண்டறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டுமென்ற சட்டத் தேவைப்பாடு உள்ளது. நீதிமன்றங்களின் செயற்பாடுகளைத் தொடர்ச்சியாக மீள்பார்வை செய்வதற்கும், நீதிமன்ற அலுவல்கள், வேகமாகவும், சிக்கனமாகவும், பயனுறுதிமிக்க வகையிலும் நிகழுவதை முன்னேற்றக் கூடிய வகையிலும் நீதிபதிகள், சட்டவறிஞர்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள், நீதியமைச்சின் பிரதிநிதிகள் மத்தியில் கலந்தாலோசனை ஏற்பாடுகளுக்கான தேவை உள்ளது. இச் சட்டவாக்கத்தை அறிமுகப்படுத்திய கெளரவ. அமைச்சரைப் பாராட்டும் அதே வேளையில் நீதிவழங்கும் நீதிமன்றங்களின் பயனுறுதியைத் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யவும், நீதிமன்றங்களின் பெளதீக,
126

அகநிலைய மை  ைவ மாத் திர மன் றி, நிர்வாக அகநிலையமைவுகளையும் வலுப்படுத்தவும் வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன். வினைத்திறனின்மையென்னும் ஒரு சமுத்திரத்தில் வினைத் திறன் தனியொ துக்க நிலையமொன்றை உருவாக்குவது கஷ்டமாகும். இரண்டாவதாக முதலீட்டாளர்கள் - அவர்கள் வெளிநாட்டாராக இருந்தாலும் சரி, இலங்கையராக இருந்தாலும் சரி - எமது நீதி நிர்வாக முறைமை நியாயமானதும், பயனுறுதிமிக்கதும் என்னும் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்ளக் கூடிய முறையில் உயர் வாழ்க்கைத் தொழில் வல்லுநர் எமது நீதித்துறையிலிருப்பது வாழ்வாதாரமான முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். நீதிபதிகளுக்கு இந்நாட்டில் தொடர்ச்சியான சட்டக் கல்விக்கான வாய்ப்பு வசதிகளைப் பொறுத்தே அவர்கள் தொழில் ஆர்வம் விருத்தியுறும். இந்நாட்டில் நீதியின் தரத்தைப் பலப்படுத்தி, உயர்த்தும் நோக்கில் வாணிபத்துறைச் சட்டவறிஞர்கள் நீதித்துறை நியமனங்களை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கேனும் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். நன்றி
அரசியலமைப்பின் உறுப்புரை 154 மு பிரிவின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட மேல் நீதிமன்றங்கள் சில குறிப்பிட்ட சிவில் வழக்குகளையும், விடயங்களையும் விசாரித்து தீர்ப்பு வழங்கும் நியாயாதிக்கத்தைப் பிரயோகிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் நோக்கில் மாண்புமிகு. பேராசிரியரும், நீதி மற்றும் அரசியல், விவகார அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் அவர்களால் 22.03.1996 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
127

Page 76
காணி உரித்துப் பதிவு
சபாநாயகர் அவர்களே, இது கெளரவ. விவசாய, காணிகள் மற்றும் வனவள அமைச்சர் அவர்கள் அறிமுகஞ் செய்துள்ள மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு சட்ட மூலமாகும். தாங்கள் அறிந்தவாறே, காணிக்கான உரித்தைப் பதிவு செய்யும் இவ்விடயம் 130 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் விவாதத்துக்குட்பட்ட ஒன்றாகும். 1985 இல் நியமிக்கப்பட்ட காணிகள் ஆணைக்குழு தனது முதலாவது இடைக்கால அறிக்கையில் உரித்துப் பதிவு சம்பந்தமாகச் சட்டவாக்கம் கொண்டு வரப்படுதல் வேண்டுமென்று விதந்துரைத்தது. கெளரவ. அமைச்சர் அவர்கள் இச்சட்டவாக்கத்தின் மூலம் கானரி ஆணைக் குழு வரின் வரித ந் துரை ப் பை நடைமுறைப்படுத்தவே விழைந்துள்ளார் என எண்ணுகிறேன். ஆயினும், பல பேச்சாளர்களும், கெளரவ அமைச்சரும் கூறியது போன்று, இவ்விடயம் இந் நாட்டில் நிலவும் காணி ஆட்சி முறைமைகள் குறித்த மிகச் சிக்கலான ஒன்றாகும். குடியேற்றவாத ஆட்சிக்கால நிர்வாகிகளும், சுதந்திரத்துக்குப் பிந்திய காலத்து நிர்வாகிகளும், இக் காணியாட்சி முறைமைகள் குறித்து எழுந்த சொத்துவம், பயன்பாடு மற்றும் வைத்திருத்தல் குறித்த பல பிணக்குகளைத் தீர்ப்பதற்கு முயன்றுள்ளனர்.
காணிச் சட்டவாக்க வரலாற்றில் 1863 ஆம் ஆண்டு ஒரு பிரதான மைல்கல் வருடம் எனலாம். அந்த நேரத்தில் காணி உரித்துப் பதிவு குறித்தும், உறுதிகள் பதிவு குறித்தும் காணிகள் பிரிவிடல் சம்பந்தமாகப் பிரிவிடல் கட்டளைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இறுதியில் காணிகள் உரித்துப் பதிவுக்கென ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருந்ததால் உறுதிகள் பதிவு தற்காலிகமானதாகவே கொள்ளப்பட்டது. ஒரு பரீட்சார்த்த அடிப்படையில் கொழும்பு மாநகரின் இரு பகுதிகளான வெள்ளவத்தையிலும், தெஹிவளையிலும் ஒரு
128

வரி மற்றும் சொத்துவ மதிப்பு ஏடுகள் மதிப்பீட்டாய்வு ஒன்று நடாத்தப்பட்டதைக் கெளரவ அமைச்சர் அவர்கள் அறிவார்கள். இந்த ஆய்வுகளை நடாத்துவதில் பெரும் செலவுகள் ஏற்பட்டதால் இத் திட்டம் கைவிடப்பட்டு, 1863 இல் உரித்துப் பதிவு முறைமை ஒன்றை ஏற்படுத்தும் சட்டவாக்க முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே கடந்த 140 க்கு மேற்பட்ட வருடங்களாக மாற்று முறைமையாகிய உறுதிகளைப் பதிவு செய்யும் முறைமையோடு நாம் கருமமாற்ற வேண்டியதாயிற்று. இந்த நாட்டில் காணிகள் நிர்வாகம் குறித்து பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளும் கஷ்டங்களும் இருப்பதைக் கெளரவ. அமைச்சர் அறிந்துள்ளார். முதலாவதாக, ஒவ்வொரு வருடமும் காணி ஆணையாளரின் வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டுவது போன்று, காணிச் சட்டம் மற்றும் காணி நிர்வாகத்தில் நடைமுறைச் சிக்கல்கள் குறித்த அறிவு பெற்ற அரச ஊழியர்கள் மிகக் குறைவு. கடந்த காலங்களில் அனுபவமும், துறைத் தேர்ச்சியுமுள்ள சில தலைசிறந்த காணி ஆணையாளர்கள் இருந்த காரணத்தால் ஓரளவிலான ஒழுங்கு மற்றும் காணி நிர்வாக முறைமை என்பவற்றை ஏற்படுத்த முடிந்தது. அந்த அதிருஷ்டகரமான நிலைமை இன்றில்லை. தேசிய மட்டத்திலோ அன்றி மாவட்ட மட்டத்திலோ இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய அனுபவமோ, இயலுமையோ உள்ளவர்கள் மிகக் குறைவு.
காணி நிர்வாகம் என்பது ஒரு விசேடத்துவமிக்க துறையாகும். எமது காணிப் பிரச்சினைகள் குறித்த சிக்கல்களை ஆய்வு செய்து விளங்கிக்கொள்வதற்குப் பெருமளவிலான பொறுமை தேவையாகும்.
இச்சட்டவாக்கத்தை 13 ஆவது திருத்தத்தின் கீழான காணி நிர்வாகம் குறித்த அதிகாரப் பகிர்வோடு இணக்கஞ் செய்வதே இரண்டாவது பிரச்சினையாகும். காணி நிர்வாகம் குறித்த பல கருமப்பாடுகள் இன்று அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட கருமப்பாடுகள் ஆகும். காணி நிர்வாகக் கருமப்பாடுகள் அதிகாரப் பகிர்வுசெய்யப்பட்ட பின்னர் தமது பாத்திரம்
129

Page 77
மிகவும் தீவிரமான மாற்றத்துக்கு உட்பட்டிருப்பதாகத் தமது வருடாந்த அறிக்கைகளில் காணி ஆணையாளர் மீண்டும், மீண்டும் சுட்டிக் காட்டியுள்ளார். இச்சட்டவாக்கத்திலும் இத்தத் துவங்கள் அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டதன் விளைவுகள் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படுதல் வேண்டும்.
நான் கூறவிரும்பும் மூன்றாவது விடயம், கெளரவ. அமைச்சர் அவர்கள் இதற்கு முன்னர் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்துக்கு ஒரு திருத்தம் கொண்டு வந்த போது சுட்டிக் காட்டிய, தகைமைபெற்ற நில அளவையாளர்கள் இன்மை குறித்த பிரச்சினையாகும். மாண்பு மிகு எதிர்கட்சித் தலைவர் அவர்களும் இத்தகைய அளவை வேலைகளையும், சொத்துவ வரி மற்றும் மதிப்புப் பதிவேட்டு ஆய்வு வேலைகளையும், காணிப்பதிவு விண்ணப்பங்களைப் பரிசோதிக்கும் வேலைகள், காணி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் சொத்து வரி மற்றும் மதிப்புப் பதிவேட்டாய்வுக்கு எதிர்மாறாக தனிப்பட்ட நில அளவையாளர்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வு வேலைகள் என்பவற்றையும் செய்யக் கூடிய தொழில்நுட்ப ரீதியில் இயலுமை மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள் மிகக் குறைந்த தொகையினரே என்பதை நாம் மறந்துவிடக் கூடாது எனச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இந்த மட்டுப்பாடுகளை வைத்து நோக்குகையில், முக்கியமாக மூன்று பாரிய விடயப் பரப்புகள் குறித்து இச்சட்டவாக்கத்தை மேலும் பூரணமான முறையில் ஆய்வு செய்வதற்கு மிகச் சரியான முறையில் கெளரவ. அமைச்சர் அவர்கள் சம்மதித்துள்ளார்கள். இவை இந்த நாட்டில் நிலவிவரும் காணி ஆட்சி முறைமை, 13 ஆவது திருத்தச் சட்டத்தின் விளைவுகள் மற்றும் இச்சட்டவாக்கத்தின் பூரணமான, பயனுறுதிமிக்க நடைமுறைப்படுத்தலுக்கு அவசியமான நில அளவையாளர்கள் மற்றும் தகைமை பெற்ற நிர்வாகிகள் இன்மை என்பவையாகும். சட்டவறிஞர் சங்கத்தின் தூதுச் சமர்ப் பணங்களில் இச் சட்டமூலத்தைத் துருவி ஆராய்ந்துள்ளனர். இது குழு நிலையில் விபரமாக ஆய்வு
130

செய்யப்படவுள்ளதால் நான் இப்பொழுது இது குறித்து ஆழமாகப் பேசவிரும்பவில்லை. ஆயினும் சட்டவறிஞர்கள் சங்கம் இச்சட்ட மூலம் குறித்து மிகவும் விபரமாகவும், கவனமாகவும் ஆய்வு செய்துள்ளமையால் அவர்களின் விதந்துரைப் புக் களைச் சமர்ப் பிப்பதற்கு அனுமதி கோருகின்றேன். அக்கறைக் கரிசனைக்குரிய பல விடயங்கள் குறித்து அவர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
முதலாவதாக, இந்நாட்டில் காணி வழக்காடல் வரலாற்றில் இரண்டு போட்டியிடும் விடயங்களை நாம் இணக்கப்படுத்த வேண்டி இருந்துள்ளது. முதலாவதாக, காணிகளை நேர்மையாகக் கொள்முதல் செய்தோரின் உரித்தைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. பின்னர் இதைக் கெளரவ. அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டது போன்று, சட்டத்தோடு பரிச்சயமற்ற கிராமவாசிகளை மோசடி செய்வதற்கு முயற்சி செய்வோரால் இடம்பெறும் மோசடிக் கொடுக்கல் வாங்கல்களோடு இணக்கப்படுத்த வேண்டியுள்ளது. முன்னர், குடியேற்றவாத ஆட்சிக் காலத் தில் செய்யப் பட்ட ஆரம்ப காலச் சட்டவாக்கங்களில், இத்தகைய கொடுக்கல் வாங்கல்களைத் தடை செய்யும் மோசடிகள் தடைக் கட்டளைச் சட்டமும் இடம் பெற்றிருந்தது. ஆகவே, இச்சட்டவாக்கத்தை நடைமுறைப்படுத்துகையில் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகள் இடம்பெறுவதைத் தடுக்கும் முகமாக காணிப் பதிவு முறைமையின் செம்மை, விழுப்பம் என்பன பேணப்படுதல் வேண்டும். ஆகவே, காணி உரித்தைப் பதிவு செய்யும் உத்தியோகத்தர்களின் தற்றுணிபுத் தத்துவங்கள், அதிகார மற்றும் கருமப்பாட்டுத் துஷ்பிரயோகங்கள் இடம்பெறாத வகையில், வரைவுபடுத்தப்படல் வேண்டும். அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கரிசனை விடயமாகும். அதனால்தான், காணிப்பிணக்குகள் குறித்து இச்சட்டம் இரு வகையான செயன்முறைமைகளைக் கையாள எண்ணுகிறது. ஒன்று, இப்பிணக்குகளை இணக்க சபைகளுக்கு ஆற்றுப்படுத்துவது. மற்றது இப்பிணக்குகளை நீதிமன்றத்துக்கு ஆற்றுப்படுத்துவது. எமக்கு ஒரு தெரிவு உரிமை இருத்தல்
131

Page 78
வேண்டுமென்று சட்டவறிஞர்கள் சங்கம் கூறுகின்றது. குழப்பம் மற்றும் நிச்சயமின்மை என்பவை ஏற்படுமென்பதால் ஒரே நேரத்தில் இருமுறைமைகளையும் கைக்கொள்ளுதல் இயலாது. கெளரவ. அமைச்சர் அவர்கள் ஆராய வேண்டிய முக்கிய விடயங்களுள் இப் பிணக்குகளை எவ்வாறு தீர்ப்பது என்பதும் அடங்கும். துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும், பயனுறுதி வாய்ந்த நிவாரணம் கிட்டுவதை உறுதிப்படுத்துவதற்கும் காணி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் தற்றுணிபுத் தத்துவங்கள் வரைபுபடுத்தப்படல் வேண்டும்.
நான் கூற விரும்பும் இரண்டாவது பிரதான விடயமும் சட்டவறிஞர் சங்கத்தின் துாதுச் சமர்ப்பணத்தில் இடம்பெற்றுள்ளது. சான்றிதழ்கள் இரண்டு வகுப்புகளைச் சேர்ந்தவை. முதலாவது முதல்தரச் சான்றிதழ். இங்கு ஒருவருக்குப் பூரண உரித்து வழங்கப்படுவதோடு அவர் முழுச் சொத்து உரிமையாளர் என்பது அங்கீகரிக்கப்படுகின்றது. மற்றது இரண்டாந்தரச் சான்றிதழி. இதை ஒருவர் உடைமையாளராகவும், 10 வருடங்களுக்கு மேலாக இடையீடற்ற உடைமையைக் கொண்டவராகவும் விளங்கும் பட்சத்தில் முதலாந்தரச் சான்றிதழாக மாற்றிக் கொள்ளலாம். காணி ஆட்சிப் பிரச்சினைகளில் எழக்கூடிய சிக்கல்கள் மற்றும் பல்வேறு நிலைமைகளை இவ்விரு வகைப்பிரிவைச் சேர்ந்த சான்றிதழ்கள் தீர்த்து வைக்கப் போதாதவையென நான் கருதுகின்றேன். இதைக் கெளரவ. அமைச்சர் அவர்கள் மீள் பரிசீலனை செய்தல் வேண்டும்.
கெளரவ. அமைச்சர் அவர்கள் நடைமுறைக்கிட விரும்புவது மிகவும் மெச்சத்தக்க ஒரு குறிக்கோள் என்பதையும், நாமும் இதை வலயுறுத்துகிறோம் என்பதையும் கூறி எனது பேச்சை நிறைவு செய்ய விரும்புகிறேன். 1919 இல் தாம் எழுதிய ஒரு நூலில் திரு.ஏ.பரி.வீ. ஜெயவர்த்தன அவர்கள் "உரித்துகள் பதிவுக்கான திருப்திகரமான கட்டளைச் சட்டமொன்று செயற்படுத்தப்படுமெனில் அது தமது வளங்களைக் காணி வழக்காடலில் வீண்விரயஞ் செய்து கொண்டிருக்கும் இந்நாட்டு
132

மக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமையுமென்பதை ஒருவர் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும்.”
ஐயா, இது இந்த நாட்டின் முன்னணிச் சட்டவறிஞர் ஒருவரால் 1919 இல் எழுப்பட்ட ஒரு நூலாகும். இது மிகவும் போற்று தற்குரிய ஒரு குறிக்கோளாகும். ஆயினும் இச் சட்ட வாக்கத் தைப் பயனுறு திமிக்க வகையில் நடைமுறைப்படுத்துவதில் பாரதூரமான நடைமுறை மட்டுப்பாடுகள் உள்ளன. இச் சட்டவாக்கம் சம்பந்தமான குறித்துரைத்த திருத்தங்களை ஆராய்வதற்கு கெளரவ. அமைச்சர் அவர்கள் மிகவும் கனிவான முறையில் சம்மதம் தெரிவித்துள்ளார்கள் . இதைக் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துமாறு அவரை நான் வேண்டிக் கொள்ளுகிறேன். முதலாவதாக, ஏதாவது குறிப்பிட்ட இடப்பரப்புக் குறித்து இச் சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் முன்பாகச் சொத்து வரி மற்றும் மதிப்புப் பதிவேட்டாய்வு பூரணப்படுத்தப் படுதலை உறுதி செய்ய வேண்டும். இச் சட்டம் செயற்படக் கூடிய அகநிலையமைவும், அடிப்படையும் அதுவாகும். சொத்துவ வரி மற்றும் மதிப்புப் பதிவேட்டு ஆய்வு பூரணப்படுத்தப்படுதல் வேண்டும். ஆகவே இதைச் சபையின் நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்துமாறு நான் கெளரவ. அமைச்சர் அவர்களை வேண்டிக் கொள்ளுகின்றேன்.
7 வைகாசி 1996

Page 79
வவுனியாவில் இடம்பெயர்வும் மனித உரிமைப் பிரச்சினைகளும்
சமீபத்திய பகை நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து, பெருந்தொகையில் வவுனியாவுக்கு வந்து, முகாம்களில் அடைபட்டிருக்கும் மக்கள் காரணமாக உருவாகிவரும் பாரதூரமான நிலைகுறித்து இச்சபை கொண்டிருக்கும் விசனத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். இச் சபையிலுள்ள ஐ.தே.க., ஜ.ம.வி.மு., இ.தொ.கா மற்றும் ஈ.ம.ஜ.க. விலுள்ள எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களும் எனது கருத்தையே கொண்டுள்ளனர் என்பதையும் தெரிவிக்க விரும்புகின்றேன். யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பும் இடம்பெயர்ந்தோரின் துயர நிலையை "மீண்டும் மீண்டும் நிகழும் வன்செயல்களால் மக்கள் கசக்கிப் பிழியப்படுதல்" என்று வர்ணித்துள்ளது. 22.10.96 இல் மட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோது திடீரென 13, 257 பேர் வடக்கிலிருந்து வவுனியாவுக்குள் பிரவேசித்தது இத்துயர நிலையை மேலும் பல்மடங்காக்கியுள்ளது. அவர்களுக்கு இப்பொழுது 11 நலன்புரி நிலையங்களில் இடமளிக்கப்பட்டுள்ளது. இவர்களுட் பலர் இதற்கு முன்னர் தாண்டிக் குளத்தினுள் வருவதற்கு இயலாத நிலையிலிருந்தனர்.
தாண்டிக் குளத்தினுள் வருவதற்கான மட்டுப்பாடுகளைத் தளர்த்தும் முடிவை நாம் வரவேற்கின்றோம். ஆயினும் இவ்வரு கையால் உருவாகியிருக்கும் பாரதூரமான மனிதாபிமானப் பிரச்சினைக்குப் போதிய உணர்வுபூர்வமான பரிகாரங்கள் காணப்படவில்லை. இவர்கள் வவுனியாவில் 11 முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். போதிய வசதிகள் இல்லாத காரணத்தாலும், மனிதாபிமானம் நிறைந்த
134

உதவிகரமான முறையில் மாற்றிடம் வழங்கப்படாத காரணத்தாலும் சொல்லொணாத் துயருக்கும், சுய-மரியாதை இழப்புக்கும், அவமதிப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.மு. சிவசிதம்பரம் அதிமேதகு சனாதிபதியவர்களுக்கு 06.11.96 திகதியிட்டு ஒரு கடிதத்தை எழுதினார். நானும் சமீபத்தில் தனிப்பட்ட முறையில் நேரில் வவுனியாவுக்குச் சென்றிருந்த காரணத்தால் இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை நேரிற் கண்டு அறிந்து கொள்ளக் கூடியதாயிருந்தது.
இடம் பெயர்ந்தோருக்கு இடமளிக்க வேண்டிய அவசரத் தேவைகளையும், வவுனியாவின் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் தேவைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதே இப்போதுள்ள உடனடிச் சிக்கலாகும். வந்தவர்களுக்கு இடமளிக்க வேண்டிய தேவை காரணமாக வவுனியாவில் ஏழு பாடசாலைகள் மூடப் பட்டு, முகாம் களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் விளைவாக 8,500 பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 2,500 பேர் இந்த வருடம் மார்கழி மாதம் க.பொ.த. (சாத) மற்றும் உ.த. பரீட்சைகளுக்குத் தோற்ற இருப்போராவர்.
ஒரு தேசிய பாடசாலையாகிய வவுனியா தமிழ் மகா வித்தியாலயம் மூடப்பட்டதால் சுமார் 3,000 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாம், பிரத்தியேகமாகப் பொது அரசாங்கப் பரீட்சைகளுக்குத் தயாரிக்கும் மாணவர்களின் கல்வித் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்தல் வேண்டும். அதே நேரத்தில் வவுனியாவில் கல்வி நடவடிக்கைகள் பெருமளவில் பாதிப்புறாத விதத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு மாற்று இடவசதி கிடைப்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும். 100 புகலிடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் , கார்த் திகை இறுதிக் குள் அவை முடிவடையுமென்றும் அறிகின் றேன் . சமீபத்தில் பெருந் தொகையில் ஆட்கள் வந்து சேர முன்பும் இடம்பெயர்ந்தோர் முகாம்களின் நிலைமைகள் காரணமாகவும், பாதுகாப்பு மட்டுப்படுத்தல்கள் காரணமாகவும் பல
135

Page 80
வசதியீனங்கள், விரக்தி நிலை, மனப்பாதிப்பு என்பவற்றை அனுபவித்தனர்.
தாண்டிக்குளத்துக்கு வந்த மக்களுட் பலர் சிறுகாலப்பகுதியுள் பல இடம்பெயர்வுகளை அனுபவித்தோராவர். அவர்கள் முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரிக்கும், பின்னர் சாவகச்சேரியிலிருந்து கிளிநொச்சிக்கும், கிளிநொச்சியிலிருந்து ஓமந்தைக்கும், பின்னர் ஓமந்தையிலிருந்து தாண்டிக் குளத்திற்கும் வந்தோராவர். அவர்கள் தாண்டிக்குளத்தை வந்தடையும் போது அவர்கள் உடல், உள ரீதியாக மிகவும் களைப்புற்றிருப்பதோடு, தமக்கு என்ன கதி காத்திருக்கின்றதோ என்ற அங்க லாய் ப் பும் அவர் களின் நிலையை மோசமாக்குகின்றது. குடியியல் நிர்வாக மூலவளங்களும் இயன்ற அளவுக்கு உபயோகப்படுவதோடு அவை ஈடுகொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. சில அதிகாரிகள் தினமும் 18 மணித்தியாலங்கள் பணியாற்றுகின்றனர்.
இடம்பெயர்ந்தோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுள் ஒன்றைப் பற்றிச் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். முதலாவதாக, வவுனியாக் கூட்டிணைப்பதிகாரி திரு.என். மல்லவராச்சியினால் 26.10.96 இல் விடுக்கப்பட்ட வழிநடத்து கட்டளையின் பிரகாரமே இடம்பெயர்ந்தோர் வகைப்பிரிவு படுத்தப்பட்டு, குறித்துரைத்த நலன்புரி நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்கள் பரந்த அளவில் 5 வகைப் பிரிவுகளுள் அடங்குவர். முதலாவதாக, யாழ்ப்பாணத்துக்குச் செல்ல விரும்பும் இடம் பெயர் ந் தோர் 13.11.96 வரை 6702 பேர் திருகோணமலையிலிருந்து கப்பல் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆயினும் குடிமக்கள் வாழ்வதற்குச் சாதகமான நிலைமைகள் சீரழிந்து வருவதால் இவர்களிடையே யாழ்ப்பாணத்துக்குச் செல்வதற்கான விருப்பமின்மை அதிகரித்து வருகின்றது. இரண்டாவது வகைப் பிரிவினர் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் நிரந்தர வதிவாளர்கள் ஆவர். வைத்திய சிகிச்சை தேவையானோர், விமானப்பயணத்துக்கான
136

உறுதிப்படுத்திய ஏற்பாடுகளைக் கொண்டோர் மற்றும் வவுனியாவிலிருந்து தெற்கே பிரயாணம் செய்ய வேண்டிய அரச ஊழியர் என்போர் மூன்றாவது வகைப் பிரிவினர் ஆவர். நான்காவது வகைப் பிரிவில் வவுனியாவில் தற்காலிக வர்த்தகம் செய்துவிட்டு ஓமந்தைக்கும், கிளிநொச்சிக்கும் திரும்பும் வர்த்தகர்கள் அடங்குகின்றனர். ஐந்தாவது வகைப்பிரிவில் 14 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்கள் சேர்க்கப்படுகின்றனர். இவர்கள் தமது குடும்ப உறவினர்களிடமிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு தீவிர கேள்வி விசாரணைகளுக்கும், தகவல் படிமுறைப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
இவ் வகைப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சேர்ந்தோர் தமக்கேயுரிய பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் எதிர்நோக்குகின்றனர். முதலில், அதிகாரித்துவ தாமதங்கள், விரக்திகள், தாண்டிக்குளத்தில் ஆரம்பக் கட்டத்தில் வகைப் பிரிவுபடுத்தல் செயல்முறைகளில் ஒப்பு ரவின் மை என்பவற்றோடு தொடர்பாடற் கஷ்டங்களும் சேர்ந்து கொள்ளுகின்றன. இப் பணிகளைச் செய்வதற்குக் குறிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆளணியினர் போதாத நிலை உள்ளது. இவர்களுட் பெரும்பான்மையானோர் இடம்பெயர்ந்த மக்களின் மொழி புரியாதவர்கள். இது தான்தோன்றித்தனமான தீர்மானங்களுக்கும், வேறு துஷ்பிரயோகங்களுக்கும் இட்டுச் செல்லுகின்றது. இரண்டாவதாக, இடவசதி போதாத நிலை உள்ளது. போதுமான மலசலசுடங்கள் இல்லாமையால் பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகள் எழுகின்றன. தண்ணிர் மற்றும் அடிப்படைத் தேவைகள் கிடைப்பது மிகவும் அரிதாகவுள்ளது. சில முகாம்களில் தொலைக்காட்சி மற்றும் சில வாசிப்புப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள போதிலும், புத்துணர்ச்சிப் பொழுதுபோக்கு வசதிகள் மிகக் குறைவாகவே உள்ளன. அரச உதவியைப் பொறுத்தவரையில் வவுனியாவில் 48,831 பேரும், வன்னியில் ஒட்டு மொத்தமாக 388,580 பேரும் உலர் உணவு பெறுகின்றனர். எனினும் 1996 பங்குனி மாதம் முதல் வவுனியாவில் 18,433 பேருக்கும், வன்னி முழுவதும்
137

Page 81
200,548 பேருக்கும் உலர் உணவு மறுக்கப்பட்டுள்ளது. இதன் வரிளைவாக இவர் கள் பெருங் கஷ் டத் துக் கு உள்ளாகியிருக்கின்றனர். பெரும் வரட்சி ஏற்பட்டுப் பயிர்கள் விளையாத நிலை இருந்த போதிலும், சமூக சேவைகள் திணைக்களம் வவுனியாவில் 81,503 பேருக்கும், வன்னிப் பிரதேசத்தில் 248.147 பேருக்கும் உதவி வழங்கத் தவறிவிட்டது. மூன்றாவதாக, சிறுவர்களின் நிலை பிரத்தியேகமாகக் கவலைக்குரியதாகவுள்ளது. அவர்கள் உற்சாகமிழந்தவர் களாகவும், நம்பிக்கையற்றவர்களாகவும் காணப்பட்டனர். அவர்களின் கண்களில் சொல் லொணாச் சோகம் குடிகொண்டிருந்தது. இச் சிறுவர்களுக்கு எந்தவிதமான பிரத்தியேக வசதிகளும் இல்லை. நான்காவதாக, இந்த முகாம்களில் செளக்கிய வசதிகள் போதாத நிலை உள்ளது. சில இடம்பெயர் வைத்திய சிகிச்சை நிலையங்கள் தொழிற் பட் டன. ஆயினும் வவுனியா ஆதா ர வைத்தியசாலையிலுள்ள வசதிகள் அதிகரித்துவரும் நோயாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதாதவை. அது 900,000 மக்களைக் கொண்ட 4 மாவட்டங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய நிலையிலுள்ளது. தடுப்புச் செளக்கியத்துக்கான வசதிகள் போதாதவையாகும். அங்கு மனநோய் வைத்தியர், குழந்தை நோயியல் வைத்தியர், கண் வைத்தியர் மற்றும் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் ஆகியோர் இல்லை. வன்னியில் விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு மருந்து வகைகள் அனுப்புவதில் பெரும் தாமதங்கள் நிலவுவதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஏ.ஆர்.வி. ஊசி மருந்து, பாம்புக்கடிக்கு விஷ எதிர்ப்பு மருந்துகள், தொக்ஸைட், நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்துகள் என்பவற்றுக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவுவதாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் பெருங்கவலை தெரிவித்துள்ளனர். வவுனியா வடக்குப் பிரதேசத்தில் தகுதி பெற்ற வைத்திய உத்தியோகத்தர்கள் இல்லை.
இடம் பெயர்ந்த மக்களின் தேவைகளையும், அதன் விளைவாக
வேறு குடிமக்கள் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்களையும் நிவர்த்தி
செய்யும் முகமாக உடனடியான, கூட்டு மனிதாபிமான 138

நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான தேவையை உணர்த்துவதே இவ்வறிக்கையின் நோக்கமாகும். பின்வரும் விடயங்களுக்கு அரசு உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொள்ளுகின்றோம்.
முதலாவதாக, வடக்கிற்கான புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அதிகார சபை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம், அரசாங்க அதிபர், புனர்வாழ்வு அமைச்சு, பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச நிவாரணப்பணி முகவர் நிலையங்கள் ஆகியோருக்கிடையில் நிவாரண நடவடிக் கைகளைக் கூட்டிணைப்புச் செய்வதற்கு அரசாங்கத்தினுள் ஒரு கவனக் குவிப்பு மையத்திற்கான உடனடித் தேவை உள்ளது. இத்தகைய ஒரு செயன்முறைமை அமைப்பு இல்லாமையால் நிவாரணப் பணி முகவர் நிலையங்கள் வழமையான வேண்டுகோள்களுக்குப் பதில்களைப் பெற்றுக் கொள்ளுவதில் பெருங் கஷ்டங்களை எதிர் நோக்குகின்றன. கடிதங்களுக்குப் பதிலளிக்கப் படுவதில்லை என்பதால் நிவாரண நடவடிக்கைகளின் பயனுறுதி குறைவடைகின்றது. இரண்டாவதாக, இடம்பெயர்ந்த மக்களுக்குத் திருப்தியான இடவசதி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஊட்டம் என்பவற்றை உறுதிப்படுத்தும் விடயத்துக்கு மிகவும் உயர்வான முக்கியத்துவம் அளிக்கப்படுதல் வேண்டும். பெண்கள், சிறுவர் மற்றும் முதியோருக்குப் பிரத்தியேக பாதுகாப்பு வழங்கப்படுதல் வேண்டும். மூன்றாவதாக, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களைச் சந்திப்பதற்குப் பூரண சுதந்திரம் இருத்தல் வேண்டும். நான்காவதாக, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் உத்தரவாதமளிக்கப்பட்டதும், எமது அரசியலமைப்புத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதுமான பிரயாணம் செய்யும் சுதந்திரம் மதிக்கப்படுதல் வேண்டும். நிவாரண நிலையங்களென அழைக்கப்படும் பல இடங்கள் முட்கம்பி வேலிகள் போடப்பட்டு, தடுப்புக் காவல் நிலையங்களைப் போலவே காட்சியளிக்கின்றன. பாதுகாப்பு விசாரணைகள் முடிவுற்று, போகலாம் என அனுமதி வழங்கப்பட்ட சுமார் 200 இளைஞர்கள் பிரயாணஞ் செய்ய 139

Page 82
அனுமதிக்கப்படாமல் புகையிரத நிலைய குட் ஷெட் முகாமில் தடுத் து வைக் கப் பட்டுள்ளனர் . ஐந்தாவதாக, இடம்பெயர்ந்தோரின் தகவல் படிமுறைப்படுத்தலில் பெருமளவு முன்னேற்றம் ஏற்படுதல் வேண்டும். தமிழ் மொழியைப் பேசத் தெரிந்த கூடுதலான உத்தியோகத்தர்கள் தாண்டிக்குளத்துக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். ஆவணங்களை வைத் திருக்கும் ஆட்களுக்கு உதவி செய்வதற்கெனத் தொடர் பிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுதல் வேண்டும். நிவாரண நிலையங்களில் தற்போது இருப் போரில் 90 வீதமானோர் மீது விதிக்கப்பட்டிருக்கும் பிரயாணத் தடைகள் நீக்கப்படும் பட்சத்தில் அவர்கள் உறவினர், நண்பர்களிடம் செல்லமுடியுமென்று எம்மிடம் தூதுப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர். வவுனியாவில் நிரந்தர வதிவற்றோர் தற்காலிகமாகவேனும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் செல்வதைத் தடுப்பதே தற்போதைய கொள்கை போலத் தோன்றுகின்றது. இறுதியாக, அரசாங்கம், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் குறித்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேடப் பிரதிநிதி பிரான்சிஸ் டெங் அவர்களை, 1993 இல் அவர் செய்த விஜயத்தின் பின் தொடர் நடவடிக்கையாக, இங்கு வருவதற்கு அழைப்பு விடுக்க வேண்டும்.
1996 கார்த்திகை 13 ஆம் திகதி உள்ளபடி, ஏற்கெனவே 170 பேர் தமது விரக்திநிலை மற்றும் இல்லாமை காரணமாக மீண்டும் வந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர். வன்னியில் நிலவும் மனிதாபிமானத்துக்குரிய பாரதூரமான நிலைக்கு உடனடிக் கவனஞ் செலுத்துமாறும், நிவாரண நடவடிக்கைகளை எடுக்குமாறும் இப்பாராளுமன்ற சபையின் பல அங்கத் தினர் கள் என் னோடு இணைந்து குரலெழுப்புகின்றனர். இடம்பெயர்ந்தோரின் வேதனை மற்றும் விரக்தியை எமது இலக்கு உணர்வு கொண்ட உடனடி நடவடிக்கை மாத்திரமே போக்க முடியும்.
14 மார்கழி 1996
140

முஸ்லீம்களின் உரிமைகள்
நாம் தற்பொழுது எமது சமுதாயத்தின் சனநாயக, மற்றும் பல்லினத் தன்மையை வலுப்படுத்தும் முகமாக, அரசியல் அமைப்புக்கான ஓர் அனைத்துமடங்கும் சீர்திருத்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆயினும் இவ்வரசியல் அமைப்பு குறித்த முயற்சிக்கும், முறையே 1972, 1978 ஆம் ஆண்டுகளின் முதலாம், இரண்டாம் குடியரசு அரசியல் அமைப்புகளை ஆக்கிய முயற்சிகளுக்குமிடையே தரத்தைப் பொறுத்து வேறுபாடு உள்ளது. 1972 இலும், 1978 இலும் பதவியிலிருந்த அரசாங்கங்கள் 2/3 பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருந்தமையால் இத்தகைய ஒரு முயற்சியை வெற்றிகரமாகப் பூரணப்படுத்த முடிந்தது. எனினும், தற்போதைய அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மை வாக்குப்பலம் இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் அமைப்புச் சீர்திருத்த செயன்முறையில் மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கின்றது.
ஆகவே இம் முயற்சியோடு தொடர்புற்ற தீர்மானகரமான பிரச்சினைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெறுவது மிக முக்கியமானதாகும். மேலும் ஒழுங்குறு சமூகத்தின் தீர்மானகரமான பிரிவினர் அனைவரும் பங்கேற்கும் செயன்முறை ஒன்றினூடாகப் பரிணமிக்கும் ஓர் அரசியல் திட்டம் நின்று நிலைக்கக் கூடிய ஒன்றாகவும் விளங்கும். அதிகாரப் பகிர்வு விடயம் குறித்த 1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சித் தேர்தல் விஞ்ஞாபனமும், மங்கள முனசிங்க குழுவின் இடைக்கால முடிவும் ஓர் உரையாடல் இடம்பெறக்கூடிய சட்டகத்தை வழங்கி நிற்கின்றன.
141

Page 83
இக் கூட்டம் அரசியல் அமைப்புச் சீர்திருத்த முயற்சிப் பிரயோகத்துக்கும், முஸ்லீம்களுக்கு இடையிலான தொடர்பு குறித்த ஒன்றாக விளங்குவதால், முஸ்லீம்களின் பிரச்சினைகள் எவை என்பது குறித்தும், ஒரு புதிய அரசியல் திட்டத்தின் மூலம் அவற்றுக்கு எவ்வாறு தீர்வுகள் எட்டப்படலாம் என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. மீண்டும், மீண்டும் எடுத்துரைக்கப்பட்ட மூன்று பிரச்சினைகள் உள்ளன. பல்லின, பன்மைத்துவச் சமூகம் ஒன்றினுள் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான தேவை குறித்ததே முதலாவது பிரச்சினையாகும். இது கலாசார மொழி, மற்றும் மதத் தனித்துவத்தைக் குறித்து நிற்கின்றது. இந்திய - இலங்கை ஒப்பந்தம் இலங்கை ஒரு பல இனங்கள், பல மதங்கள் கொண்ட ஒரு பன்மைத்துவச் சமூகம் என்பதை அங்கீகரித்தது. ஆவணி 3 ஆம் திகதியப் பிரேரணையும் ஒரு பன்மைத்துவச் சமூகத்துக்கான தத்துவார்த்தக் கடமைப் பொறுப்புணர்வை வலியுறுத்துகின்றது.
இரண்டாவது பிரச்சினை சமத்துவத்துக்கான கோரிக்கையாகும். ஐம்பதுகளின் நடுப்பகுதியில் மொழி பல்வேறு சமூகங்களைப் பகைமை ரீதியில் துருவப்படுத்தி, மக்களைப் பிளவுபடுத்தும் தீவிர காரணிகளுள் ஒன்றாக விளங்கியது. ஆயினும் காலப்போக்கில் தமிழ் மொழியின் அந்தஸ்துக் குறித்து முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டன. 1965 இல் தமிழ்மொழி ஒரு பிராந்திய மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. 1978 இல் தமிழுக்கு தேசிய மொழி அந்தஸ்து கிடைத்தது. அரசியல் திட்டத்துக்கான 13 ஆவது திருத்தம் தமிழை ஓர் அரச கரும மொழியாக அங்கீகரிக்கின்றது. புதிய அரசியல் திட்டமும் இரு அரச கரும மொழிகளிடையே சமத்துவத்தை உறுதிசெய்யுமென நம்புகிறேன். சட்ட, மற்றும் தத்துவார்த்த மட்டங்களில் மொழிச் சமத்துவக் கோரிக்கை குறித்துக் கருத்தொருமிப்பு நிலவிய போதிலும், தமது தெரிவுக்குரிய அரச கருமமொழியில் அரசோடு தொடர்பு கொள்ள விழையும் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்குத் தொல்லையும், விரக்தியும் ஏற்படுத்தும் பாரதூரமான நடைமுறைப்படுத்தல் குறித்த பிரச்சினைகள் உள்ளன. அரச கரும ஆணைக்குழுவுக்கு
142

ஒதுக்கப்பட்டுள்ள மூலவளங்கள் எம்மை விசனத்தில் ஆழ்த்துமளவுக்குப் போதாதவையாகும்.
மூன்றாவது பிரச்சினை அதிகாரப் பகிர்வு குறித்ததாகும். உத் தேச அதிகார ப் பகிர் வு ஆலோசனைகள் இப்பிரச்சினையைப் பாரதூரமாக நோக்கித் தீர்வு காண்பதற்கு முயற்சிப்பதோடு, இது குறித்த விபரமான ஏற்பாடுகள் தெரிவுக் குழுவினுள்ளும், விதிமுறையற்ற கலந்தாலோசனைக் கூட்டங்களிலும் ஆராயப்படுகின்றன. அதிகாரப் பகிர்வு அலகைப் பொறுத்த வரையில் மூன்று சமூகங்களினதும் நலன்களை இணக்கப்படுத்தும் நோக்கில் மாகாண எல்லைகளை மீள வரைதலே முயற்சியாகவுள்ளது. வடகிழக்கினுள் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் குறித்து அரசியற் கட்சிகளிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இப்பிரச்சினை குறித்து ஏற்படும் ஒரு நல்லிணக்கம் அரசியல் செயன்முறையைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றுவதற்கு உதவிகரமாக அமையும்.
ஹோட்டல் ரன்முத்துவில் இடம்பெற்ற கருத்தரங்கில் 07.09.1996 இல் ஆற்றிய உரை,
143

Page 84
மக்களின் மதிப்பைப் பெற்ற நீதி பரிபாலனம்
நீதியமைச்சர் பல விடயங்களில் தமது பெறுமதிமிக்க நேரத்தைக் கோரி நின்ற போதிலும், இரு முக்கியமான பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். முதலாவது, எதிர்கால நோக்கு மற்றும் வரைவெல்லையைப் பொறுத்த வரையில் அவருக்கு முன் பதவியிலிருந்த நீதியமைச்சர்களின் முயற்சிகள் அனைத்தையும் அவரின் சட்டச் சீர்திருத்த நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்கெனவே விஞ்சிவிட்டன. இலஞ்சச் சட்டத் திருத்தம், பாராளுமன்ற முறைகேள் ஆணையாளர் குறித்த சட்டம், கணக்கீட்டு நியமங்கள் குறித்த சட்டம், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டம், புதிய நடுத்தீர்ப்புச் சட்டம், வாணிப உயர் நீதிமன்றம் ஒன்றைத் தாபித்தல் தொடர்பான சட்டம் போன்ற சட்டவாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
இரண்டாவதாக கோல்புரூக் கமரூன் சீர்திருத்தங்கள் காலந்தொட்டு நிர்வாகத்துக்குப் பெருந் தலையிடியைக் கொடுத்த, சவாலாக விளங்கிய, சட்டத்தின் தாமதங்களைத் திருத்துவதற்கான முயற்சிகளாகும். பல குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதோடு, பல பிரபல வழக்கறிஞர்களும், முன்னாள் நீதிபதிகளும் இப்பாரிய பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய நாடுகள் இவ்விடயத்தில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளன. சிங்கப்பூர் மூன்று பிரதான கட்டங்களாகத் தனது நீதித்துறை முறைமையைச் சீர்திருத்தி அமைத்துள்ளது. இரு வருடங்களுக்கும் குறைவான காலகட்டத்தில் விசாரணைக் காகக் காத் திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையை 90 சத வீதத்தால் குறைக்க முடிந்துள்ளது. வழக்குகள் விடயத்தில், காத்திருக்கும் சராசரிக் காலத்தை 5
144

வருடங்களிலிருந்து 4 மாதங்களாகக் குறைத்தனர். பதிவுகளைக் கணணி மயப்படுத்தல், தீர்ப்புக்காகக் காத்திருக்கும் வழக்குகள் குறித்துச் சரியாகவும், பூரணமாகவும் மதிப்பீடு செய்தல், வழக்குகள், மேன்முறையீடுகள் முகாமைத்துவத்தில் திறனை அதிகரித்தல் மற்றும் மேம்படுத்திய பயிற்சி என்பவற்றின் மூலமே இதைச் சாதித்தனர். இங்கிலாந்திலும், வேல்ஸிலும் கூட கணணி மயப்படுத்தல் மற்றும் உயர்நீதி மன்றங்களை உயர் வாழ்க்கைத் தொழில் முறையில் முகாமைத்துவஞ் செய்வதற்கு ஒரு பிரதம நிறைவேற்றுநரை நியமித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இதையொத்த மாற்றங்களைக் கொணர்ந்துள்ளனர். உயர் தொழில்நுட்பங்களை உட்கொணர்ந்ததன் மூலம் புதிய தொழில் முகாமைத்துவ முறைமைகளும் அறிமுகஞ் செய்யப்பட்டன. வாணிப நீதி முறைமை உள்ளடங்கலாக, நீதி பரிபாலன முறைமையில் மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கக் கூடிய மேலுஞ் சிறப்பான ஒரு முறைமை எமக்கு இருத்தல் வேண்டும். இம் முறைமை வழக்குகளை விசாரித்து முடிவுறுத்தும் வீதாசாரங்கள், நீதிபதிகளின் அமர்வு நேரங்கள் மற்றும் நீதிசார் செயன்முறைகளின் ஒப்புரவு மற்றும் நியாயத்தன்மை போன்ற காரணிகளுக்கு கவனஞ் செலுத்துதல் வேண்டும்.
நான் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அமைச்சரிடம் வினவிய ஒரு விடயங் குறித்து இப்பொழுது பிரஸ்தாபிக்க விரும்புகிறேன். இது விசாரணை எதுவுமின்றித் தொடரும் தடுப்புக் காவல்கள் குறித்த விடயமாகும். இக்கால கட்டத்தில் பெரும் பகுதியில் நாம் அவசரகால நிலையின் கீழ் தொடர்ந்து செயற்படுவதால், பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலப் பிரமாணங்களின் கீழான தடுப்புக் காவல் தத்துவங்கள் முக்கியம் பெறுகின்றன. நீதியரசர் அன்டன் சோஸா அவர்களின் தலைமையில் அமைச்சர் ஒரு குழுவை
நியமித்தார். இக் குழுவின் விதந்துரைப்புகள் காரணமாகப்
பல தடுப்புக் காவல் கைதிகளுக்கு நிவாரணங் கிட்டியது. ஆயினும், அதன் பின்னர் நிலைமை தொடர்ந்து மோசமாகியது. முழு நீதி நிர்வாக முறைமை யிலுமே தாம்
மறக்கப்பட்டவர்களென்று தடுப்புக் காவல் கைதிகள்
145

Page 85
விரக்தியுறுவதோடு, சில வேளைகளில் அவர்கள் ஐந்து வருடங்கள் போன்ற நீண்ட காலப் பகுதிகளுக்கு விசாரணையோ, குற்றப் பத்திரிகைத் தாக்கலோ எதுவுமின்றித் தடுப்புக் காவலில் உள்ளனர். இத்தகைய தடுப்புக் காவலும், சிறைவாழ்வும் கொடுமையானதும் மனிதத் தன்மையற்றதும் ஆகும். இது பல உண்ணாவிரதப் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய விசாரணை எதுவுமற்ற சிறைவாழ்க்கை சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கு முற்றிலும் முரணான ஒன்றாகும். களுத்துறை, மகசீன் மற்றும் சமீபத்தில் மட்டக்களப்புச் சிறைச்சாலைகளில் இதற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இப் பிரச்சினையை ஒரு முறைமையான வழியில் தீர்ப்பதற்கெனத் தமது திணைக்களத்தில் ஒரு பிரத்தியேக அலகை ஏற்படுத்துவதன் மூலம் சட்டமா அதிபர் திரு. சரத் சில்வா ஆக்கபூர்வமான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார். களுத்துறைச் சிறைச்சாலையில் 197 தடுப்புக்காவல் கைதிகள் உள்ளனர். இதுவரையில் 16 பேர் தவிர ஏனையோரின் ஆவணங்களை பரிசீலனை செய்து வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதில் இவ்வலகு குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றத்தை எட்டியுள்ளது. ஆயினும் மகசீன் சிறைச்சாலையில் 18 பெண்கள் உட்படப் பெருந்தொகையானோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதிலும் இத்தகைய முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை. இவர்கள் மீது இது வரை எவ்வித குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்படவில்லை.
இரண்டாவதாகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் 200 இற்கும் மேற்பட்ட வழக்குகள் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன. இவ்வழக்குகளின் ஆவணப் பரிசீலனைகள், நிரற்படுத்தல்களில் பெருமளவு தாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்துப் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும். இவ் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதை விரைவுபடுத்துவதற்கு ஒரு தனியான உயர் நீதிமன்றத்தை அமைப்பது ஒரு சாத்தியக்கூறாகும். மூன்றாவது
146 |

பிரச்சினை சட்டமா அதிபர் அவர்களால் விடுதலை செய்யப்படல் வேண்டுமென்று விதந்துரைப்புச் செய்யப்பட்ட போதிலும் பாதுகாப்பு அமைச்சின் உடன்பாட்டைப் பெற்றுக் கொள்ளுவதில் பெருமளவு காலதாமதம் ஏற்பட்டுள்ள பெருந்தொகையானோர் குறித்ததாகும். இவ்விடயத்திலும், நீதியமைச்சுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்குமிடையில் தொடர்பு வேலைகளில் ஈடுபட்டு, அதிகாரித்துவ வாதச் செயல் தடைகளை வெற்றி கொள்ளும் விதத்தில் குழுவொன்று அமைக் கப்படுதல் வேண்டுமென்று ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நான்காவது பிரச்சினை, மிகவும் ஏழைகளும், வட - கிழக்கின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், நீண்டதுார பிரயாணத்தை மேற் கொண்டு வந்து சேருவோருமான தமது குடும்பத்தினரைச் சந்திப்பதில் தடுப்புக் காவல் கைதிகள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்ததாகும். அடிப்படைத் தேவைகளான சவர்க்காரம், பற்பசை, போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளுவதில் தடுப்புக் காவல் கைதிகள் அனுபவிக்கும் கஷ்டங்கள் காரணமாக அவர்களின் விரக்திநிலை இன்னமும் அதிகரிக்கின்றது.
மனித உரிமைகள் குழுவும், இலங்கைச் சிவில் உரிமைகள் இயக்கமும் பெரிதும் கவலை தெரிவித்துள்ள இன்னுமொரு விடயம் தடுப்புக் காவல் நிலையங்களும், அங்குள்ள நிலைமைகளுமாகும். அவசரகால நிலைப் பிரமாணங்களின் பிரகாரம் தடுப்புக் காவற் கைதிகள் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிக்கப்பட்ட தடுப்புக் காவல் நிலையங்களிலேயே வைக்கப்படுதல் வேண்டும். இந்நிலையங்களின் நிரலொன்று வர்த்தமானியிற் பிரசுரிக்கப்படுதல் வேண்டும். ஆயினும் இந்த அவசரகாலநிலைப் பிரமாணத்தை உதாசீனஞ் செய்வதாகவும், பெரும்பாலும் அது குறித்த அசிரத்தை மனப்பான்மையே நிலவுவதாகவும் சிவில் உரிமை இயக்கம் பெருங்கவலை தெரிவித்துள்ளது. அவசரகால நிலைப் பிரமாணங்களின் கீழும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும் தடுத்து வைக்கப்படுவோர் விடயத்தில் ஆகக் குறைந்த நிலைமைகளைக் குறிப்பிடும் சட்ட ஏற்பாடுகளைச்
147

Page 86
செய்வதற்கான தேவை குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பணிக்குழு மற்றும் புதிய தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டுமே தடுப்புக் காவல் கைதிகளின் நலன்களை அவதானிக்கும் தத்துவங்களைக் கொண்டிருப்பதால், சட்டத்தின் மூலம் ஆகக் குறைந்த நியமங்களை உறுதி செய்வது முக்கியமானதாகும்.
இன்னுமொரு பிரச்சினை வடபகுதியில் காணாமற் போவோர் மற்றும் ஆயுதப்படையினரின் தவறான நடத்தை பற்றிய சார்த்துதல்கள் குறித்த ஒன்றாகும். பல பாரதூரமான சம்பவங்கள் அக்கறைக் கவலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, இவ்விடயங் குறித்து அமைச்சர் அவர்களே ஓர் அறிக்கையை விடுத்துள்ளார். சமீபத்தில் மனித உரிமைகள் பணிக்குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து காணாமற் போனோர் எனக் கூறப்படும் 500 பேரின் விபரங்கள் கொண்ட நிரல் ஒன்றைப் பெற்றுள்ளது. இந்நிரல் உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந் நிரலிலுள்ளோரில் இதுவரையில் 200 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப் பட்டுள்ளார்களென்று அறிகிறேன். இவ்விடயத்தைப் பாரதூரமாக நோக்குமாறு நான் கெளரவ. அமைச்சர் அவர்களை வேண்டிக் கொள்ளுகின்றேன். கடந்த காலங்களில் இலங்கை காணாமற் போவோர் விடயத்தில் பெரும் பிரசித்தம் பெற்றிருந்தது. 1991 இல் ஐக்கிய நாடுகள் சபை காணாமற் போவோர் குறித்த செயற்குழு, ஆய்வு செய்யப்பட்ட 54 நாடுகளுள் ஆகக் கூடுதலானோர் காணாமற் போனதாக ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகளில் இலங்கை முதலிடம் வகித்ததாகக் கூறியது. இது சகல இலங்கையர்களினதும் சிவில் உரிமைகளையும், உயிர் வாழ்வதற்கான உரிமையையும் பாதிக்கும் வாழ்வாதாரமான பிரச்சினை என்பதால் ஆட்கள் காணாமற் போகும் இந்நிகழ்ச்சிகள் குறித்து தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு, இவற்றுக்குப் பொறுப்பானோர் தண்டிக்கப்படவும் வேண்டும்.
சட்ட வரைஞர் திணைக்களம் சட்டவாக்கம், துணைநிலைச் சட்டவாக்கம் குறித்த பெருந்தொகையான வேண்டுகோள்களை
148

ஏற்றுச் செயற்படுகின்றது. இவை மும்மொழிகளிலும் வரையப்படவேண்டிய தேவை உள்ளது. ஊதியக் கொடுப்பனவு அளவுத்திட்டங்களும், சேவை நிபந்தனைகளும் கவர்ச்சிகரமாக இல்லாத காரணத்தால் திணைக்களம் பெரிதும் தேர்ச்சியும், அனுபவமும் மிக்க வரைஞர்களை இழந்துவிடும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. இப்போக்கைத் தடுத்து நிறுத்தாவிடின் திணைக்களத்தை முடிவிட வேண்டிய நிலை ஏற்படும். நீதிபதிகள் பயிற்சி நிறுவகமும் முக்கியமான ஒரு நிறுவனமாகும். நீதித் துறை உத்தியோகத் தர்களைப் பயிற்றுவிக்கும் அனைத்துமடங்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றை அமுல் நடத்துவதற்குத் தேவையான போதிய நிதிவளங்களும், தொழில் நுட்ப ஆதரவும் பணிப்பாளருக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
வவுனியாவில் ஓர் உயர் நீதிமன்றத்தைத் தாபிப்பதற்கும், வடக்கில் கைத் தொழில் நீதிமன்றங்களை இயங்கச் செய்வதற்குமான தேவை உள்ளது. நீதி பரிபாலனங் குறித்த அரசகருமக் கொள்கை பயனுறுதியுள்ள வகையில் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இதனால் நீதிகோரி நீதிமன்றம் செல்லும் தமிழர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரும் இடர்களை எதிர்நோக்குகின்றனர்.
22 DITF 1996
149

Page 87
மக்கள் தொடர்புச் சாதனங்களும் உல்லாசப் பிரயாணமும்
எமது சமுதாயம் அரசியற் கழுத்தறுப்புகள், தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் இனத்துவ அவநம்பிக்கை என்னும் சுழல் நீரோட்டத்தில் சிக்கித் திணறுகின்றது. எமது பத்திரிகைத் துறையை மேலோட்டமாக நோக்கும் ஒரு வெளிநாட்டவர் அதிருப்தி மற்றும் பிளவுகளால் எமது சமூக அத்திவாரம் ஆட்டம் காணும் தோற்றத்தைக் காணக் கூடும். நாட்டின் கவனம் பொதுவான அரசியல் மற்றும் பொருளாதார இலட்சியங்கள் மீது குவிந்த ஒன்றாக இல்லை. முடிவற்ற முரண்பாடுகள், சில்லறைத் தகராறுகள், குரோதங்கள் மீது தனிப்பட்ட மற்றும் கூட்டுச் சக்திகள் வீண் விரயம் செய்யப்படுகின்றன. பொதுமக்கள் தொடர்பு சாதனங்கள் எமது சனநாயகத்தின் உயிர்த்துடிப்புக் குறித்துச் சிந்திக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. சமுதாயப் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான முடிவுகளைக் காணக்கூடிய வகையில் பொது மக்கள் உரையாடலின் மட்டத்தை உயர்ந்த நிலையில் வைத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடும் அவற்றுக்குண்டு.
"இலத்திரனியல் ஊடகங்கள் வெறும் வர்த்தக அடிப்படையில் இயங்குவதால் சுதேச கலாசார மற்றும் மத விழுமியங்கள் அரிப்புண்டு செல்வதைத் தடுப்பதற்கென” ஓர் இலங்கை ஒலிபரப்பு அதிகார சபையைத் தாபிக்கும் நோக்கத்தை அமைச்சர் அறிவித்துள்ளார். தகவல் சுதந்திரமாகப் பரவுவதை மட்டுப் படுத்தும் நோ க் கில் இச் சட்டவாக்கம் கொண்டுவரப்படுதல் ஆகாது. புதிய உயர்தொழில் நுட்பங்கள்
பல் ஊடகத் தீர்வுகளை வழங்குவதும், தொலைத் தொடர்பாடல், தகவல் உயர் தொழில் நுட்பம் மற்றும்
150

தொலைக்காட்சி என்பவற்றுக்கிடையிலான வித்தியாசங்கள் மங்கிச் செல்வதுமான ஓர் உயர் தொழில்நுட்பப் புரட்சிக் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம். இதன் பிரகாரம் புதிய சட்டவாக்கம் புதிய உயர் தொழில்நுட்ப மாற்றங்களைக் கவனத்திலெடுப்பதோடு, வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்குவதும் திறந்த, ஒளிவு மறைவற்ற நீதியான முறையில் இடம்பெறுதல் வேண்டும்.
பத்திரிகை மன்றம் அலுப்புத்தட்டும் இன உணர்வு, மற்றும் மத, இனத்துவ, பால் சிறுபான்மையினருக்கு எதிரான குரோதப் பேச்சுக்கள் என்பன குறித்து விழிப்போடிருந்து உரிய தீர்வுகளைக் காணுதல் வேண்டும்.
பல்லினங்களையும், பல மதங்களையும் கொண்ட ஒரு சமூகத்தை மீள் நிர்மாணஞ் செய்வதில் பொதுசன ஊடகங்களின் பாத்திரம் குறித்து எண்ணிறந்த அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இது விடயத்தில் மெச்சுதற்குரிய முன் முயற்சிகளை மேற்கொண்ட பத்திரிகையாளர் பலர் உள்ளனர். இவ்வார இறுதியில் கலாநிதி. சரத் அமுனுகம ஒரு கருத்தரங்கில் பொதுசன ஊடகங்கள், இனத்துவம் மற்றும் மீளிணக்கம் குறித்த பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார். யுத்தத்தின் விளைவுகள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகள் குறித்தும் கூடுதலாக அறிக்கையிட வேண்டிய தேவை உள்ளது.
பொதுமக்கள் பார்வையாளர் வரிசைகள் காலியாகவும், ஆசனங்களில் ஆட்கள் குறைவாகவுமிருக்கும் ஒரு சபையில் உரை நிகழ்த்துவது எவ்வகையிலும் உணர்வூட்டும் ஓர் அனுபவமாக இராது. ஒரு நிறுவனமென்ற வகையில் பாராளுமன்றத்தில் பொதுமக்களுக்கு இருக்கும் அக்கறை விரைவாகக் குறைந்து கொண்டு செல்லுகின்றது. பிரித்தானிய மக்கள் சபை, அவுஸ்திரேலியப் பாராளுமன்றம், மற்றும் அமெரிக்க காங்கிரஸ் அமர்வுகளை நாம் தொலைக்காட்சித் திரைகளில் காணக் கூடியதாயிருப்பது மிகவும் வியப்புக்குரிய
151

Page 88
ஒன்றாகும். ஆயினும் எமது சொந்தப் பாராளுமன்றத்தின் அமர்வுகளை நாம் பார்க்க முடியாது. ஆகவே சபை அமர்வுகளை அறிக்கையிடுவதற்கு வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை நாம் அனுமதிப்பதோடு சில பாராளுமன்றக் குழுக்களின் அமர்வுகளையும் அறிக்கையிட அனுமதிக்க வேண்டும். இது குறித்த வழிகாட்டல்கள் வகுத்தமைக்கப்படல் வேண்டும்.
சுற்றுலாவைப் பொறுத்த வரையில், கொழும்பு வனவிலங்குக் காட்சிச்சாலை கல்வி, உற்சாகப் பொழுதுபோக்கு மற்றும் ஆய்வு குறித்த நோக்கங்களுக்காக வாழும் உயிர் இனங்களின் பிரதிநிதித்துவக் கூட்டம் ஒன்றைப் பேணும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். எனினும், அதன் பேணல் மற்றும் முகாமைத்துவக் கருமங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டதோடு, உயிரினங்கள் வைக்கப்பட்டிருந்த சுகாதாரச் சூழலும் சீரழிந்தது. பல வருடங்களுக்கு முன்னர் இவ் விலங்கு வனம் கொழும்புக்குப் பெருமை சேர்ப்பதாக விளங்கியது. துரதிருஷ்டவசமாக அங்கு சேவையாற்ற விரும்பிய பல இளம் மிருக வைத்தியர்களுக்கு தைரியமளிக்கப்படவில்லை. கொழும்பு மாநகரம் தனது சுற்றுலாக் கவர்ச்சியை விரைவாக இழந்து வருகின்றது. அது வீதிகள் தடை போடப்பட்ட, பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதி தீவிர ஈடுபாடு கொண்ட ஒரு நகரமாக மாறி வருகிறது. இதற்கு நேரெதிராக சிங்கப்பூரை ஒரு பூந்தோட்ட நகரமாக அபிவிருத்தி செய்வதற்குப் பெரு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
உல்லாசப் பயணிகள் தாம் கொழும்பு நகரில் செய்வதற்கு எதுவுமே இல்லையென்று முறையிடுகின்றனர். கொழும்பு நகரை நவீன வசதிகளோடு கூடிய ஒரு முக்கிய கலாசார நிலையமாகக் கட்டியெழுப்புவதற்கு உணர்வு பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இத்தகைய ஒரு பணி குறித்து எந்தவித முறைமையான சிந்தனையோ, திட்டமோ இருப்பதாகத் தெரியவில்லை. சமாதானத்துக்கும், உல்லாசப் பிரயாணிகள் ஊக்குவிப்புக்கும் இடையில் பிரிக்க
152

முடியாத இணைப்பு ஒன்று உள்ளது. இலங்கையை ஒரு கவர்ச்சிகரமான உல்லாசப் பிரயாண நிலையமாக மாற்றுவதற்கு அமைச்சு 20 கோடி ரூபா செலவில் ஒரு கருத்திட்டத்தை அபிவிருத்தி செய்துள்ளது. இந்தப் பணமும், மற்றும் உல்லாசப் பிரயாணக் கைத்தொழிலுக்கு விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கும் வருமானமும் சமாதான முயற்சிகளின் பால் திருப்பப்படல் வேண்டும். இத்தகைய முயற்சிகளில் ஈட்டப்படும் வெற்றிகளினால் உல்லாசப் பிரயாணக் கைத்தொழிலுக்குப் பெரும் நன்மை கிட்டும்.
2 LDT iars 1996
153

Page 89
சங்க உறுப்பினர் கல்வி
புகழ்மிக்க வரலாற்று ஆசிரியரான கிங்ஸ்லி டி சில்வா 1990 ஆம் ஆண்டு கோடை காலத்தில் "மினேர்வா" சஞ்சிகைக்கு எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையில், பர்மா, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய மூன்று தேரவாத பெளத்த சமுதாயங்களிலும் சங்க உறுப்பினர்களின் பயிற்சியை ஒழுங்கமைப்பது பெரிதும் சிக்கலாகவே இருந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கையில் சங்க அங்கத்தினர்களுக்கு மரபு முறையான கற்றல் மற்றும் மேலும் விதிமுறையான கல்வி ஆகிய இரண்டையுமே வழங்கும் பல்லின நிறுவனங்கள் உள்ளன.
கோட்டே காலத்தில் நிலவிய பிரிவென முறைமையில் பெளத்த தர்மம், ஆயுர்வேதம், வரலாறு மற்றும் கீழைத்தேயக் கல்விகளை அளிக்கும் நிலையங்கள் இருந்தன. 1873 மார்கழி வரையிலான குடியேற்றவாத காலகட்டத்தில் பிரிவென முறைமை ஒப்பீட்டளவிலான ஒரு நலிவுற்ற நிலையிலேயே இருந்தது. ஆயினும் 1873 மார்கழியில் வண. ஹிக்கடுவே பூரீ சுமங்கல அவர்கள் ஏழு பொதுநிலையாளர் மற்றும் பிக்குகளோடு வித்தியோதய பிரிவெனவை தாபித்தார். மிகக் குறுகிய காலத்தினுள் வித்தியோதய பிரிவென நாட்டிலுள்ள மிகச் சிறந்த கீழைத்தேயக் கல்வி நிறுவனமாகப் புகழ்பெற்றது. இரண்டு வருடங்களுக்குப் பின்னர், 1875 ஆம் ஆண்டில் வணக்கத்துக்குரிய இரத்மலானை பூரீ தர்மாலோக்க அவர்கள் பேலியாகொடை வித்தியாலங்கார பிரிவெனவைத் தாபித்தார். வித்தியோதய பிரிவென ஒரு சீரான பாடவிதானத்தைக் கைக் கொள்ளுவதில் முன்னோடியாக விளங்கியது. மதகுழுவினருக்குப் பெளத்த தர்மம், ஒழுக்கம், தர்க்கம், செய்யுள் இலக்கணம், சிங்களம், பாளி, சமஸ்கிருதம் போன்றவை
154

போதிக்கப்பட்டன. பொதுநிலை மாணவருக்கு தர்க்கம், வார்த்தையணி இலக்கணம், செய்யுளிலக்கணம், சிங்களம், சமஸ்கிருதம், எண்கணிதம் மற்றும் சுதேச வைத்தியம் என்பவை போதிக்கப்பட்டன.
1887 தொடக்கம் 1913 வரையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெருந்தொகையினரான பிரிவெனாக்கள் தாபிக்கப்பட்டன. 1969 இல் 231 பதிவு பெற்ற பிரிவெனாக்கள் இருந்தன. இவற்றுள் 125 கனிஷ்ட பிரிவெனாக்கள் எனவும், 27 சரிரே ஷ்ட பரிா? வெ ன r க் கள் எனவும் வகைப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் 79 பிரிவெனாக்கள் பல்கலைக்கழகங்களோடு இணைப்புப் பெற்றவையாக விளங்கின. புகழ்பெற்ற கல்விமானும், மதகுருவும், வித்தியோதய பிரிவெனத் தலைவருமாகிய வணக்கத்துக்குரிய களுகொண்ட யாவே பஸ்ஸேக்கார நாக நாயக்க தேரோ 1969 இல் பின்வருமாறு குறிப்பிட்டார். "பிரிவெனாக்கள் தாபிக்கப்பெற்ற காலந்தொட்டே எவ்வித அரசு கட்டுப்பாடுமின்றி, சுயாதிபத்தியம் கொண்டவையாக விளங்கின. ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு மதகுருவாக விளங்கினார். ஆசிரியர்கள் தமது சேவைக்கான எவ்விதமான ஊதியத்தையும் பணமாகவோ அன்றிப் பொருளாகவோ பெற்றுக் கொண் டதில் லை. ஆசாரியர் பெளத் த சீலக் கோட்பாடுகளுக்கமைய வாழ்ந்ததோடு, தமது நேரம், சேவை அனைத்தையும் மதக்கோட்பாட்டைப் பரப்புதல் மற்றும் கல்வி என்பவற்றுக்கே அர்ப்பணித்தனர்.” ஈ. பீ. டெபென்ஹாம் அவர்கள் பிரிவெனாக்களுக்கான வரைவுள்ள அரசு உதவியை ஆரம்பிக்க உதவினார். இவர் அக்காலத்தில் கல்விப் பணிப்பாளராக இருந்தார்.
1947 இல் மாணவர் தொகைக்கேற்ப நிதிக்கொடைகள் வழங்கப்பட்டன. 1958 இல் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று ஏற்பட்டது. இரண்டு பிரிவெனாக்களினதும் வரைவுகளை விசாலமாக்கி பாடவிதானத்தையும், முன்னேற்றகரமான ஆய்வுகள் மற்றும் கீழைத்தேயக் கல்விப் போதனைகளுக்கான
155

Page 90
இயலுமையையும் பலப் படுத்துவதே ஆரம்பகால நோக்கமாகவிருந்தது. ஆயினும் இரு புதிய வளாகங்களையும் உருவாக்கிய மையும், அவை தேசிய பல்கலைக்கழக முறைமைக்குள் பூரணமாக இணைப்புப் பெற்றமையும் இந்நோக்கத்துக்கு குந்தகம் ஏற்படுத்தின. பழைய வித்தியோதய பிரிவெனாவின் நூல்நிலையம், மற்றும் ஏனைய வளங்கள் புதிய பல்கலைக்கழகத்தின் கருவாயமைந்ததோடு அடிப்படை மட்டத்தில் போதனைகளை வழங்கும் ஒரு புதிய வித்தியோதய பிரிவென மீள் - பதிவு பெற்றது. இவ்விரு பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்பெற்றதைப் பலரும் பலவிதமாக நோக்கும் நிலை இருந்தது. பலர் வித்தியோதயவும், வித்தியாலங்காரவும் தமது மரபு ரீதியான கல்வி நிலையங்களென்னும் உயர்தனிக் குணாம்சத்தை இழந்துவிட்டனவென்றும், அனுகூலமான விளைவுகள் எதுவுமே ஏற்படவில்லையென்றும் சிந்திக்கத் தலைப்பட்டனர். நிகழ்வுண்மைகளின் பிரகாரம் பின்னர் வித்தியோதய பூரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமெனவும், வித்தியாலங்கார களனிப் பல்கலைக்கழகமெனவும் மீள் பெயரிடப்பட்டன. இரு பல்கலைக்கழகங்களுமே அதிகமதிகமாக முறைசாராக் குணாம்சத்தை எடுத்ததோடு, துறவுக் கல்வி நிலையங்களென்னும் தமது தனித்தன்மையை இழந்தன.
பெளத்த கல்விகளுக்கான பட்டப்பின்படிப்பு நிலையம் களனிப் பல்கலைக்கழகத்தோடு இணைப்புப் பெற்றுள்ளது. பெளத்த மற்றும் பாளிப் பல்கலைக்கழகம் 1981 இல் கொழும்பில் தாபிக்கப்பட்டது. இது ஒரு கல்வி போதிக்கும் நிறுவனம் அன்று. அது மரபுரீதியான கல்வி நிலையங்களின் மாணவர்களுக்குப் பரீட்சைகளை நடத்தும் ஓர் அமைப்பாகச் செயற்படுகின்றது. இதே வேளையில், கே. எம். டி. சில்வா அவர்கள் சுட்டிக்காட்டியது போன்று. அதிகரித்துவரும் பிக்கு மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக் கோரிக்கையை அரசு பல்கலைக்கழகங்கள் கையாள வேண்டியுள்ளது. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் 1982 இல் கலை, மானிடவியல் மற்றும் சமூக - விஞ்ஞான பீடங்களுக்கு அனுமதி பெற்ற இளம் பிக்குமாரின் தொகை 8.8% ஆகவிருந்தது. 1987 இல் அது 23.7% ஆக அதிகரித்தது.
156

புத்த சிராவக்க தர்ம பீட்டய 1968 இல் அனுராதபுரத்தில் தாபிக்கப்பட்டது. அது பிக்கு மாணவர்களுக்கு நவீன, மற்றும் மரபுக்கல்விக் கலவையொன்றை வழங்கியது. வித்தியோதய மற்றும் வித்தியாலங்கார வைப் போலன்றி, அது எந்தவொரு நிக்காயவுடனும் தொடர்புற்றிருக்கவில்லை. அது நன்கு கருமமாற்றுகிறது என்பதே தனிப்பட்ட கல்விமான்களின் மதிப்பீடாகவிருந்தது. இந்நிலைமைகளை நோக்குமிடத்து, பல்கலைக்கழக அந்தஸ்தை வழங்குவதால் இந்நிறுவனத்தின் சுயாதிபத்தியத்துக்கு அல்லது பயனுறுதிக்கு எவ்வகையிலேனும் குந்தகம் விளைவுமா என்னும் கேள்வியை எமக்குள் எழுப்புவது அவசியமாகின்றது. இச்சட்டத்தின் பிரகாரம் செனேட் மற்றும் மன்றம் என்பவற்றைக் கொண்ட இருபடிக் கட்டமைப்புக்குப் பதிலாக ஒரு முப்படிக் கட்டமைப்பு உருவாகும்.
இக்கட்டமைப்பின் உயர் ஸ்தானத்தில் சியாம் நிக்காயவின் மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்களும், அமரபுர மற்றும் ராமானிய நிக்காயக்களைச் சேர்ந்த மகா நாயக்க தேரர்களும் இடம்பெறும் உத்தரீத்தர சபா இருக்கும். ஆயினும் இவ்வமைப்பின் அங்கத்தினருள் பெரும்பான்மையானோர் அமைச்சரினால் பெயர் குறிக்கப்படும் பிக்குகளாகவும், பெளத்த பொதுநிலையினராகவும் இருப்பர். இத்தகைய நியமன அங்கத்தினர் ஒரு பெரும்பான்மையாக இருக்கும் நிலையை மாற்றும் முகமாக, நியமன அங்கத்தினரின் தெகையை 7 இலிருந்து 4 ஆகக் குறைக்குமாறு நான் ஆலோசனை கூறுகின்றேன். இதற்கென 12 (vi) பிரிவுக்கு ஒரு திருத்தம் அவசியப்படும். மஹோபாத்தியாய அவர்களை நியமனஞ் செய்வது, அகற்றுவது தவிர உத்தரீத்தர சபாவுக்கு வேறு எந்த உண்மையான தத்துவங்களும் கிடையா. இவ்விடயங்களிலும் சபா அமைச்சருக்கு விதந்துரைப்பை மட்டுமே செய்யமுடியும். பல்கலைக்கழகங்களில் நிறைவேற்று ஆட்சி விவகாரத்தில் உண்மையான அதிகாரம் மன்றத்திடமும், சியாம் நிக்காயவின் இரு மதபீடங்களிடமுமே இருக்கும். இந்த மன்றத்தில் அமைச்சர் மூலம் நியமனம் பெற்றாலொழிய, அமரபுர மற்றும் ராமானிய நிக்காயாக்கள் உத்தியோக
157

Page 91
முறையில் பிரதிநிதித்துவம் பெற முடியாது. இச் சூழ் நிலைகளின் கீழ், கட்டமைப்பையும், குறிப்பாக உத்தரீத்தர சபாவுக்கும், மன்றத்துக்குமிடையிலான உறவையும் குறித்து மீள் பரிசீலனை செய்வதற்கு அமைச்சர் விரும்பக்கூடும்.
கூடுதலான பிக் குமார் தற்போது துறவுக் கல்விப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெறுவதற்குப் பதிலாக முறைசாராப் பல்கலைக்கழகங்களில் சேருவதில் அதிக நாட்டம் காண்பிக்கின்றனர். சங்க உறுப்பினர் கல்வியைச் சீர்திருத்துவதற்கான முயற்சியில் போதியளவு அக்கறை காண்பிக்கப்படவில்லை. முறைசாராப் பல்கலைக்கழகங்களில் பிக்குமார் மேலும் விசாலமான பாட விதானத்தைப் பயில்வதன் மூலம், துறவுக்கல்வி நிறுவனங்களில் சாதாரணமாகக் கிடைக்காத சமூக, மற்றும் அரசியல் ஈடுபாட்டுச் செயற்பாட்டுக்கான சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். வழமையான பல்கலைக்கழகங்களில் ஆட்சேர்ப்பு விடயத்தில் பிக்கு மாணவர் அனுமதி ஆச்சரியகரமான முறையில் அதிகரித்துள்ளமை, மற்றும் சமூக விஞ்ஞானங்கள், மானிடவியல் மாணவ அமைப்புகளில் அவர்கள் அநேகமாக காற்பங்கினராயுள்ளமை போன்ற யதார்த்தங்களுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியோராயுள்ளோம். இது, எச். எல். செனிவிரத்ன அவர்கள் தமது ஆய்வில் சுட்டிக்காட்டியவாறு, துறவுக்கல்வியின் குறிக்கோள்கள், மற்றும் பாடவிதானம் என்பவற்றின் மீளாய்வு மற்றும் மீள்மதிப்பீடு என்பவற்றை உத்வேகப்படுத்துதல் வேண்டும். மரபுரீதியான கற்றல் மற்றும் நவீன தேவைகளுக்கான வலியுறுத்தல்கள் என்பவற்றைப் பயனுறுதிமிக்க முறையில் இணக்கப்படுத்த முயன்றுள்ள தாய்லாந்து தேசத்தின் அனுபவத்திலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
பல்கலைக்கழக மட்டத்தில் பிக்குமாரு க்கு உயர் கல்வியை
வழங்கவும், அத்தோடு தொடர்புற்ற, மற்றும் இடைநேர்விளைவான
விடயங்களைக் கையாளுவதற்கும் புத்திசிரா வக்க பிக்கு
பல்கலைக்கழகம் என அழைக்கப்படும் பல்கலைக்கழகமொன்றைத்
த#ட்சித்து, பேணி, நிர்வகிக்கும் நோக்கில் மாண்பு மிகு கல்வி.
158

உயர் கல்வி அமைச்சரும், அரசாங்கப் பிரதம கொறடாவுமான g6?ø5. góljáF/7 vizio பத்திரண அவர்களால் 20.08.96 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
விவாதத்தில் பங்கு பற்றியோர்: திரு. கருணாசேன கொடித்துவக்கு, திரு.ரீ.பீ ஏக்கநாயக்க, திரு ஆர்.எம். ரத்நாயக்க, கலாநிதி விஸ்வ வர்ணபால, திரு .டீ.சரத் பண்டாரநாயக்க, திரு . ஜகத் பாலசூரிய, திரு. சரத் குணவர்தன, பேராசிரியர், ஏ.வீ. சுரவீர திரு. ஜயவர்தன அத்தநாயக்க, திரு. மேர்வின் சில்வா, திரு . நிஹால் கலப்பதி, திரு. சரத் கோங்கஹாகே, திரு. எச்.எம்.ஏ. லொக்குபண்டா, திரு.டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார மற்றும் திரு. பேர்ட்டி பிரேமலால் திசாநாயக்க.
159

Page 92
சட்டமும், தனியார் மயமும்
இச்சட்ட மூலம் பல்வேறு வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளதோடு, தனியார் மயப் படுத் தற் செயன்முறையைத் தலைகீழாக்கும் ஒரு முயற்சியெனவும் கூறப்படுகின்றது. தோல்வியடைந்த தொழில் முயற்சிகளுக்கும், பிழையான தனியார் மயப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் இடையே எண்ணக்கரு ரீதியான வேறுபாட்டைக் காண வேண்டிய அவசியம் உள்ளது. இச்சட்ட மூலம் தோல்வியடைந்த தொழில் முயற்சிகளில் கவனஞ் செலுத்துவது போல் தோன்றுகிறது. இவை வேலையின்மை, கதவடைப்பு, சம்பளங்கள் கொடுபடாமை, மற்றும் தொழிலாளருக்கான நியதிச் சட்ட நிலுவைகள் என்பவற்றைத் தோற்றுவித்துள்ளன. ஆயினும் அரசாங்கம் கட்டாயப்படுத்தி மீளமைப்புச் செய்ய முனையும், தோல்வியடைந்த தொழில் முயற்சிகளை நோக்குகையில் பல்வேறு நோக்கங்களின் சிக்கலான கலவை ஒன்றையே காணமுடிகிறது. இவை லங்கா லோஹ ஹார்ட்வெயார் லிமிட்டெட், கொமேர்ஷல் கொம்பனி பசளைகள் லிமிடெட், மத்தேகம டெக்ஸ்டைல்ஸ் லிமிட்டெட், கஹட்டகஹ சுரங்கங்கள், கந்தளாய் சீனித் தொழிற்சாலை, மற்றும் வெயாங்கொடை புடவை ஆலையின் ஒரு பகுதி மூடப்பட்டமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவ்விவகாரங்கள் ஒவ்வொன்றிலும் தொழில் முயற்சி குறைவாக மதிப்பிடப்பட்டமை; நேர்மையற்ற அழுத்தக் கொள்வனவுகள் இடம்பெற்றமை; பிரதிச் செயல் முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி அரசு நிதி நிறுவனங்கள் மூலம் நிதியளிக்கப்பட்டமை; ஒப்பந்தங்கள் சரியாகக் கட்டமைப்புச் செய்யப்படாமை, மற்றும் முறையான பிரதிச் செயற் கொடுப்பனவு இடம்பெறாமல் பங்குகள் மாற்றப்பட்டமை போன்ற
160

காரணங்களுக்காகத் தனியார் மயச் செயன்முறையில் குறைகள் உள்ளன என்று முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தோடு அனேகமான விவகாரங்களில் உள்ளூர் முதலீட்டாளரிடம் தொழில் முயற்சியை முகாமைத்துவம் செய்வதற்கு வேண்டிய துறைத் தேர்ச்சியோ, அனுபவமோ இருக்கவில்லை என்றும், அவர்கள் சொத்துக்களை விற்று இலாபம் சம்பாதிப்பதிலேயே கருத்தாயிருந்தனரென்றும் முறையீடுகள் செய்யப்படுகின்றன. இத்தகைய விவகாரங்களில் உய்த்தறிந்து முடிவு செய்வதில் பாரதூரமான தவறுகளும், அவசரமான, யோசனையற்ற தனியார் மயச் செயன்முறைகளும் இடம்பெற்றுள்ளன. உண்மையில் சனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கை 43 பகிரங்கத் தொழில் முயற்சிகள் முன்னைய அரசினால் "மோசமான முறையில் திட்டமிடப்பட்டு, நடைமுறைக் கிடப்பட்டு, கேள்விக்குரிய விதத் தில் நிறைவேற்றப்பட்டன” என்று கூறுகின்றது. “கொள்முதல் செய்வோரைத் தீர்மானிப்பதில் ஒளிவு மறைவற்ற தன்மை இருக்கவில்லை என்றும்" உரித்து நீக்கற் குழுவேளைக்கேற்ற முடிவுகளைச் செய்ததென்றும் மேலும் முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மோசடிகளும், பிழையான நடவடிக்கைகளும் இடம்பெற்றனவென்று கூறப்படும் தவறான தனியார் மயப்படுத்தல் நடவடிக்கைகள் பொதுமக்கள் நன்மை கருதி மீள்பார்வைக்கு உட்படுத்தப்படல் வேண்டுமென்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இது எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் ஏற்படாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு அவசியமாகும். ஆயினும் இச்சட்டமூலத்தின் வெளிப்படையான நோக்கம் சனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்ட உடனடியாகத் தவறான முகாமைத்துவத்தை எதிர்நோக்குபவையும், முழுக்க முழுக்கச் செயலிழந்தவையுமான தோல்வியடைந்த தொழில் முயற்சிகளை மீளமைப்பதாகும். இதன் விளைவாகப் பின்வரும் விடயங்கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.
(அ) பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமது வேலையை
இழந்துள்ளனர்.
161

Page 93
(ஆ) ஊ.சே.நி. மற்றும் ஊ.ந.நி. நன்மைகள் கொடுப்பனவு
செய்யப்படாதுள்ளன.
(இ) தொழிற்சாலைகள் சீரழிந்துள்ளன.
(ஈ) தொழில் முயற்சிகள் அரசு நிறுவனங்களுக்குப் பெரிதும்
கடன்பட்டுள்ளன.
இத்தகைய நிலைமைகளின் கீழ், கட்டாய மீளமைப்புக்கும் முகாமைத்துவம், சொத்துடைமை என்பவற்றின் மீள் கையளிப்புக்கும் இரண்டு கட்டங்களில் சட்டம் வகை செய்கின்றது. தவறுகள் நிறைந்த தனியார் மயப்படுத்தல் நடவடிக்கை என்பது எண்ணக்கரு ரீதியாகத் தோல்வியடைந்த தொழில் முயற்சிகளின் கட்டாய மீளமைப்பு என்பதிலிருந்து பிரித்துப் பார்க்கப்படுதல் வேண்டும். நிதி நெருக்கடியிற் சிக்கியுள்ள ஒரு தொழில் முயற்சி விடயத்தில் நாம் நொடிப்புச் சட்டக் கோட்பாடுகளைப் பிரயோகித்தல் வேண்டும். மீளமைப்புப் பிரச்சினைகளைக் கையாளுவதில் நாம் கொள்கையைப் பிரயோகித்தல் வேண்டும்.
தீர்த்துக் கட்டல் மதிப்பீடு தொடரும் தொழில் முயற்சியென்ற வகையில் அதன் மதிப்பீட்டுக்குக் குறைவானதாக இருக்கும் போது நொடித்தற் கொள்கை மீளமைப்பை ஊக்குவிக்கிறது. இதற்கு நேரெதிராக, தொடரும் தொழில் முயற்சியென்னும் வகையில் மதிப்பு தீர்த்துக் கட்டல் மதிப்பீட்டை விடக் குறைவாக இருக்கும் போது இக்கொள்கை தொழில் முயற்சியைத் தீர்த்துக் கட்டுவதை ஊக்குவிக்கின்றது. இத்தகைய செயன்முறையில், தீர்த்துக் கட்டப்பட்ட சொத்துக்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தொகையில் தொழிலாளருக்குரிய நியதிச்சட்ட நிலுவைகள் உரிமை கோரலுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். ஆகவே (தொழிலாளர் பங்குகள் விநியோ கிக் கப் படாமல் ) அரசு சரிறுபான் மை ப் பங்குடைமையாளராக எஞ்சியிருக்கும் ஒவ்வொரு தொழில் முயற்சி விடயத்திலும் ஓர் உயர்வாழ்க்கைத் தொழில் மதிப்பீட்டாளர், அல்லது கணக்காளர் நிறுவனமொன்றின் மூலம் தொழில் முயற்சியை ஒரு தொடரும் முயற்சியாகவும்,
162

தீர்த்துக்கட்டல் நிலைமையின் கீழும் மதிப்பீடு செய்து கொள்ளுதல் அவசரத் தேவையாகும். மண்வெட்டி உற்பத்தியிற் போன்று உற்பத்தி ஆகு செலவுகளில் குறிப்பான மட்டுப்பாடுகள் அல்லது வினைத்திறனற்ற தன்மைகள் காணப்படுமெனில், உற்பத்திப் பொருள் போட்டித்தகவற்ற தன்மையைப் பெறுவதால் எவ்வளவு தான் மீளமைப்புச் செய்யப்பட்ட போதிலும் இத்தொழில் முயற்சிக்குப் புத்துயிரளித்தல் முடியாது. இத்தகைய ஒரு விவகாரத்தில் நொடிப்புச் செயன்முறை நிதிநெருக்கடிக்களுக்கு வேகமான தீர்வாக அமையும். ஆகவே இச்சட்டவாக்கத்தின் குறிக்கோள்கள் வேறு வழிவகைகளில் ஈட்டப்பட்டிருக்க முடியுமா என்னும் கேள்வி எழுகின்றது. எஸ். ராமச்சந்திரன் நொடிப்பு சம்பந்தமான தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போன்று நாம் ஒரு திருகாணியைச் செலுத்துவதற்கு ஒரு சம்மட்டியை உபயோகித்துள்ளோமா? தீர்த்துக் கட்டும் செயன்முறையைக் கொண்டு வருவதற்கு அல்லது அதற்கு மாற்றாகத் தொழில் முயற்சியின் மீளமைப்புக்கு கம்பெனிகள் சட்டத்தின் ஏற்பாடுகளை உபயோகித்திருக்க முடியாதா?
இத்தகைய செயன்முறைகள் சட்ட மூலத்தின் முதற் கட்டத்தில் கூறப்படும் மீளமைப்பு சம்பந்தமான பாரிய பிரச்சினைகள் குறித்த பேச்சு வார்த்தைகளுக்கான சட்டகத்தை வழங்கக்கூடும். துரதிருஷ்டவசமாக பெருந்தொகையான இவ்விடயங்கள் நீதிமன்றங்களினால் தீர்மானிக் கப்பட வேண்டிய நிலையிலுள்ளன. இப்பிரச்சினைகளைத் தெளிவுபடுத்துவதில் இந்நீதிமன்றங்கள் பெரும் இடர்களை எதிர்நோக்குகின்றன. சட்ட முறைமை, மற்றும் தொழிற்சட்ட அமுலாக்கல் முறைமை என்பவற்றிற் பகுதித் தோல் விகள் காரணமாகத் தோல்வியடைந்த தொழில் முயற்சிகளின் பிரச்சினைகள் மேலும் மோசமாகியுள்ளன. நீதியமைச்சர் ஒரு வணிக நீதிமன்றத்தை ஆரம்பித்துள்ளதும், நீதிமுறைத் திறமையையும் பயனுறுதியையும் பலப்படுத்தம் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதும் பொருத்தமானவையாகும்.
163

Page 94
குறிப்பாக சட்ட மூலத்தின் வாசகங்களைக் குறித்த வேறு அவதானிப்புகளும் உள்ளன. முதலாவதாக, ஒரு தொழில் முயற்சி தோல்வியடைந்ததாகக் கணிக்கப்படும் 2 (1) பிரிவில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள், அதாவது, ஏதாவது அலகுகளின் வேலை குறைவடைதல் அல்லது பணியாளர் தொகை குறைவடைதல் சகல தனியார் மயப்படுத்தல் விடயங்களுக்கும் பொருந்தும். இங்கு ஏதோ ஒரு வகையான மீளமைப்பு தவிர்க்க முடியாததாகும். இந் நிபந்தனைகள் மேலும் கடுமையாக வரைவிலக்கணப்படுத்தப்படல் வேண்டுமென்பது முக்கியமாகும். இரண்டாவதாக, இயற்கை நீதி விதிகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் பிரிவு 2 இன் கீழான உத்தரவு செயற்படுத்தப்படும் முன்னர் தொழில் முயற்சியாளர் கூறுவதைக் கேட்பதையும் உறுதி செய்ய வேண்டிய தேவையுள்ளது.
மூன்றாவதாக, பிரிவு 4 இன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்திலும் இத்தகைய கோட்பாடுகள் பொருந்துவனவாக இருப்பதோடு, இத்தகைய உத்தரவு ஏன் பிறப்பிக்கப்படக் கூடாது என்பதைத் தொழில் முயற்சியாளர் விளக்குவதற்குத் தொழில் முயற்சியாளருக்குச் சந்தர்ப்பமளிக்கப்படல் வேண்டும். நட்ட ஈட்டு இணக்க சபையை உருவாக்குவதற்கும், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு விண்ணப்பிப்பதற்கான உரிமையை வழங்குவதற்குமான செயன்முறைமைகள் நஷ்ட ஈட்டுத் தொகையைக் குறித்தே மட்டுப்பட்டனவாயுள்ளனவே அன்றி, உத்தரவின் சட்டத்தகவைக் குறித்தன்று. உரை செய்தல் திருத்தக் கட்டளைச் சட்டம் இத்தகைய நிலைமைகளில் மீயுரிமை நிவாரணங்களின் வரை வெல்லையைத் தீர்க்கமாக மட்டுப்படுத்துவதால் இப்பிரச்சினை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
இறுதியாக, தொழிலாளரின் அவல நிலை குறித்த கரிசனை சமுக, மற்றும் பொதுக் கொள்கையின் சட்ட நிலைத் தகவுள்ள ஓர் அம்சமாகும். கதவடைப்புக்கு உள்ளாகும் தொழிலாளரின் பயிற்சி மற்றும் மீளப் பணிக்கமர்த்துதல்
64

குறித்த, ஏதோ ஒரு வடிவிலான நஷ்ட ஈட்டு நிதியம் தாபிக்கப்படுவது இன்றியமைததாகும்.
தனியார் மயப்படுத்தப்பட்ட பொதுத் தொழில் முயற்சிகளைப் புனரமைப்புச் செய்யும் நோக்கில் மாண்பு மிகு பேராசிரியரும், நீதி மற்றும் அரசியல் விவகார அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமாகிய திரு. ஜீ.எல். பீரிஸ் அவர்களால், I.10.96 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
165

Page 95
கட்டிடக் கலைஞரின் செயல் நிறைவேற்றத்தைப் பிரமாணப்படுத்துதல்
முதலில் கட்டிடக்கலைஞர்கள் நிறுவகத்தின் வேண்டுகோளைக் கெளரவ-அமைச்சர் அவர்கள் ஏற்றுக்கொண்டு கட்டிடக் கலைஞர்கள் நிறுவகச் சட்டத்துக்கான திருத்தத்தை நடைமுறைக்கிடுவதற்கு நடவடிக்கைகள் எடுத்தமை குறித்து அவரைப் பாராட்ட விரும்புகிறேன். இந்நாட்டில் கட்டிடக்கலை உயர் வாழ்க்கைத் தொழிலைக் கைக்கொள்ளுவதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொண்டோரை விதிப் பிரமாணப்படுத்துவது குறித்து அக் கறைக் கொண்ட பொறியியலாளர் நிறுவகம் போன்ற வேறு உயர் வாழ்க்கைத் தொழில் அமைப்புகளோடும் ஆலோசனை கலக்கும் சந்தர்ப்பம் கட்டிடக் கலைஞர் நிறுவகத்துககுக் கிட்டியிருக்குமென நான் நம்புகிறேன். முக்கியமாக இத்துறையில் பொறியியலாளர்களின் பணிக்கும், கட்டிடக் கலைஞர்களின் பணிக்குமிடையில் ஒரு தொடர்பு வெட்டுப்புள்ளி இருப்பதாலேயே நான் இதை இங்கு கூறுகின்றேன். சட்டவாக்கத்தில் இது குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரத்தியேகமாக, சட்டமூலத்தின் 10 ஆம் வாசகத்தைக் குறிப்பிடவேண்டும். (3) ஆவது வாசகத்தில் பட்டயக் கட்டிடக் கலைஞரும், பட்டயப் பொறியியலாளரும் யாக்க அமைப்பொன்றில் ஒன்றாகப் பணிபுரிவது குறித்துச் சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும் இவ்விரு விடயப்பரப்புகளில் இடம்பெறும் தொடர்பு ஊடறுத்தல் குறித்துச் சிறிது தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது.
நான் கூறவிரும்பும் இரண்டாவது விடயம் என்னவெனில் கட்டிடக் கலைஞருக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும் தத்துவம் இந்நிறுவகத்துக்கு வழங்கப்பட்டுள்ள காரணத்தால் இவ்வாறு
166

பதிவு செய்யப்படாதவர்கள் இரண்டு தகைமையீனங்களை எதிர்நோக்குகின்றனர் என்பதாகும். முதலாவதாக, 4 (அ) (1) இன் கீழ் பட்டயக் கட்டிடக்கலைஞர் அல்லது கட்டிடக்கலை அனுமதிப்பத்திரமுடையவர் என்னும் பெயரை அவர்கள் பெற்றுக்கொள்ளவோ, உபயோகிக்கவோ முடியாது. இரண்டாவதாக, செலுத்தப்படாமலிருக்கும் கட்டிடக் கலைஞருக்கான கட்டணங்களை மீளப் பெறுதற்கு நீதிமன்றங்களில் அவர்கள் வழக்குத்தொடர முடியாது. நான் கூறவிரும்புவது என்னவெனில், கட்டிடக்கலைப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கும், பாரிய நிர்மாண அபிவிருத்திக் கருத்திட்டங்களில் ஈடுபட்டுக் குறித்துரைத்த கட்டிடக் கலைப் பணியை நிறைவேற்றும் வெளிநாட்டுக் கட்டிடக் கலைஞருக்குமிடையில் வேறுபாடு காணப்படுதல் வேண்டும் என்பதாகும். கெளரவ. அமைச்சர் அவர்கள் நன்கு அறிந்துள்ளவாறு, சில பெரிய விடுதிகள் உள்ளன. உதாரணமாக முன்னணிக் கட்டிடக் கலைஞர்களுள் ஒருவரான வில்லியம் தாபிளர் அவர்களைக் கலதாரி விடுதியை வடிவமைக்குமாறு வேண்டிக் கொண்டனர். அதேபோன்று, பாரிய நிர்மாணக் கருத்திட்டங்கள் பலவற்றில் வெளிநாட்டுக் கட்டிடக் கலைஞர்களையும், கட்டிடக்கலை நிறுவனங்களையும் நாம் பணிக்கமர்த்தியுள்ளோம். இத்தகைய பணிகளில் அவர்கள் உள்ளூர்க் கட்டிடக் கலைத்திறன்களை மாத்திரம் உபயோகிப்பர் என்று எண்ணுவது யதார்த்த நிலைக்கு முரணான ஒரு விடயமாகும். அவர்கள் இத்தகைய ஒரு வேலையைப் பொறுப்பேற்பதற்கு வெளிநாட்டுக் கட்டிடக் கலைஞர்களை இங்கு கொண்டுவர வேண்டியிருக்கும். அத்தகைய குறித்துரைத்த கட்டிடக் கலைஞர்களைப் பணிக்கமர்த்துவதை இச்சட்டவாக்கம் தள்ளிவிடாது, அதையும் உறுதிசெய்யும் விதத்தில் கெளரவ. அமைச்சர் அவர்கள் தொழிற் பட வேணி டுமென் று வேண் டிக் கொள்ள விரும்புகின்றேன்.
மூன் றாவதாக, வெளிநாட்டுத் தகைமை களைப் பெற்றுக்கொண்டு தற்பொழுது இந்த நாட்டில் கட்டிடக்
167

Page 96
கலைஞர்களாகத் தொழில் புரியும் பெருந்தொகையானோர் குறித்து நான் குறிப்பிட விரும்புகிறேன். கெளரவ. அமைச்சர் அவர்கள் நன்கறிந்தவாறு, எமது முன்னணிக் கட்டிடக் கலைஞர்களுள் ஒருவரான திரு. ஜோப்ரே பாவா இந்நாட்டுக்குப் பெரும் புகழைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளார். அவரது முதற் பட்டக் கல்வி சட்டத் துறையிலாகும் , கட்டிடக்கலையில் அல்ல. இதற்குப் பல வருடங்கள் கழித்தே அவர் கட்டிடக்கலையில் உயர் தொழில் தகைமையைப் பெற்றுக்கொண்டார். எனவே, தற்பொழுது கட்டிடக்கலைப் பணியில் ஈடுபட்டுள்ளோரும், இச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் சான்றிதழ் பெறக்கூடிய நிலையில் இல்லாதோருமான நபர்களைப் பாதுகாக்கக்கூடிய காப்புவாசகம் ஏதாவது இருத்தல் வேண்டும்.
நான் கூறவிரும்பும் நான்காவது விடயம் சட்டத்தின் 8 E (ஆ) (iv) பிரிவோடு தொடர்புற்றதாகும். அது சட்டமூலத்தின் 9 ஆவது பக்கத்திலுள்ளது. வெளிநாடுகளிலிருந்து கட்டிடக் கலைஞர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய கல்வி மற்றும் உயர்வாழ்க்கைத் தொழில் தகைமைகள் குறித்து இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. சட்டவாக்க அட்டவணை 'B' IV ஆம் பகுதிக்கான பின்னிணைப்பில் அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய ராச்சியங்கள் மற்றும் இந்தியா போன்ற வெளிநாட்டுத் தகைமைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்கள் நிரற்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைமைகளுக்கு மேலதிகமாக வேறு இரு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும். முதலாவதாக, ஒரு குறிப்பிட்ட காலப் பகுதிக்கான நடைமுறை அனுபவம் இருத்தல்வேண்டும். இரண்டாவதாக, பதிவு நோக்கத்திற் கென மன்றத் தினால் நடத்தப் படும் உயர்வாழ்க்கைத் தொழில் செய்முறைப் பரீட்சையில் சித்தியடைதல் வேண்டும். ஒருவர் அவுஸ்திரேலியாவில் பூரண தகைமை பெற்ற கட்டிடக் கலைஞராக இருந்திருப்பினும் இங்கு பதிவு பெற்றுக் கொள்ள விரும்பினால் இவ்விரு மேலதிக தகுதிகள் இருத்தல் வேண்டும். ஒருவர் வெளிநாட்டில் கட்டிடக் கலைஞராகத் தகுதி பெற்றுப் பின்னர் இலங்கைக்கு
168

வந்து சான்றுப் படுத்தலுக்கு விண்ணப் பிக்கலாம். கட்டிடக்கலைக் கல்வித்துறையைப் பொறுத்த வரையில் பல மாற்றங்கள் இடம்பெறுவதையும், புதிய நிறுவனங்கள் தோன்றுவதையும் கெளரவ. அமைச்சர் அவர்கள் அறிவார்கள். இவ்வட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சில நிறுவனங்களுக்கு மாத்திரமே சட்டவாக்கம் இதனை வரைவுபடுத்துவது குறித்தே நான் ஆதங்கமடைகின்றேன். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், கட்டிடக் கலைஞர் நிறுவகத்துக்கு அல்லது ஒரு பிரமாணத்தின் மூலம் அமைச்சருக்கு இந் நிறுவனங்களின் நிரலைத் திருத்துவதற்கு அல்லது விரிவுபடுத்துதற்கான தத்துவம் இருத்தல் வேண்டும். ஆகவே புதிதாகத் தோன்றும் நிறுவனங்கள் குறித்தும், இங்கு பதிவு பெறாத தேசங்கள் குறித்தும் கவனத்திற்கெடுத்துக் கொள்ளப்படல் வேண்டும். உதாரணமாக, கட்டிடக் கலைத் தகைமைகள், பொருந்தக் கூடிய சார்க் நாடுகள் பல உள்ளன. உதாரணமாக யப்பானைப் பொறுத்த வரையில் அங்கிருந்து உயர் வாழ்க்கைத் தொழில் தகைமைகள் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டுமென்ற நியதி இல்லை. ஆகவே இவ்விடயத்தில் கூடுதலான நெகிழ்ச்சித் தன்மை இருக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன்.
இறுதியாக, உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் உலக வர்த்தக அமைப்பு தாபிதம் என்பவற்றுக்குப் பின்னர் வர்த்தகம் தொடர்புற்ற சேவைகள் என நாம் அழைக்கும் சேவைகளைத் தாராள மயப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்குண்டென்று கெளரவ. எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறியது போன்று கெளரவ அமைச்சர் அவர்கள் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். ஆகவே ஒருவர் கட்டிடக் கலைஞராகச் சான்று பெறுவதை விதிப் பிரமாணப்படுத்துதல் குறித்து நாம் ஆராய வேண்டும். வர்த்தகம் தொடர்புற்ற சேவைகளென மதிக்கப்படும் சேவைகளைத் தாராள மயப்படுத்த வேண்டிய கடப்பாட்டை எமக்கு வழங்கும் சர்வதேச ஒப்பந்தமொன்றில் நாம் கைச்சாத்திட்டுள்ளோம் என்பதையும் நாம் கவனத்துக்கு எடுத்தல் வேண்டும். இலங்கைப் பிரசைகள் மாத்திரமே பட்டயக் கட்டிடக் கலைஞராகவோ
169

Page 97
அல்லது கட்டிடக்கலை அனுமதிப்பத்திர தாரியாகவோ பதிவுபெற உரித்துள்ளவர் எனக் கூறும் 8 (இ) (1) (ஈ) பிரிவை இங்கு விசேடமாகக் குறிப்பிட விரும்புகின்றேன். இச் சர்வதேச கடப்பாட்டின் ஒளியில் பிரதானமாக இப் பிரத்தியேக ஏற்பாட்டை மறுபரிசீலனை செய்தல் வேண்டும்.
கெளரவ. அமைச்சர் அவர்கள் கட்டிடக்கலைக் கல்வியை உயர்வாழ்க்கைத் தொழில் மயப்படுத்தல் குறித்து எடுத்துள்ள அக்கறைக்காக அவரைப் பாராட்ட விரும்புகிறேன். எமது பல்கலைக்கழங்களில் கட்டிடக் கல்வியைப் போதிப்பது குறித்த நியமங்கள் மிகவும் உயர்வானவை. மிகச் சிறந்த இயலுமை பெற்ற மாணவர்களே இங்கு அனுமதிக்கப் படுகின்றனர். கட்டிடக் கலைஞருக்குத் தொடர்ச்சியாக ஊக்கமளித்து வரும் கெளரவ அமைச்சருக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்.
கட்டிடக் கலைஞர் பதிவுச் சபை ஒன்றை நிறுவுவதற்கும், அத்தோடு துணைநிலைப் பயனுள்ள விடயங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் நோக்கில் மாண்புமிகு வீடமைப்பு, நிரு மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சர் திரு. நிமல் சிரிபால டி சில்வா அவர்களால் 23.05.96 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
170

தெற்காசியாவில் ஆட்சிச் செயன்முறையில் தீவிர நெருக்கடி
வரவு-செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் என்பது நாம் ஒதுக்கங்களைக் கருத்திற் கொண்டு, திணைக்களங்களினதும் அரசாங்க முகவர் நிலையங்களினதும் மீண்டுவரும் மற்றும் மூலதனச் செலவினங்கள் குறித்த முன் மதிப்பீடுகளை மீள்பார்வை செய்யும் கட்டமாகும். அது நிதி மீது பாராளுமன்றம் செலுத்தும் கட்டுப்பாட்டின் ஒரு முக்கிய அம்சமும், நிறைவேற்று நடவடிக்கை குறித்து சட்டவாக்க மன்றம் தீவிர பரிசீலனை செய்யும் சந்தர்ப்பமுமாகும். ஆயினும், இன்று ஒரு சில நிமிடங்களுக்குள் 19 நிறுவனங்களின் முன்மதிப்பீடுகளை மீள்பார்வை செய்யுமாறு எம்மைக் கேட்டுள்ளனர். இவற்றுள் சனாதிபதி, அமைச்சரவை அங்கத்தவர்கள், மற்றும் பாராளுமன்றம் ஆகிய, எமது அரசாங்க முறைமையின் கீழான அதிமுக்கியம் வாய்ந்த நிறுவனங்களும் அடங்கும். அத்தோடு, சனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு என்பது 12 விசாரணை ஆணைக் குழுக்கள், மனித உரிமைகள் பணிக்குழு, இலங்கை மன்ற அமைப்பு, அடிப்படைக் கல்விகள் நிறுவகம், வடபிரதேசப் புனர்வாழ்வுப் பணிக்குழு போன்ற முக்கியமான நிறுவனங்களை உள்ளடக்கும் ஒன்றாகும். இதை ஒரு யதார்த்த பூர்வமான, அர்த்தமுள்ள நடவடிக்கையாகக் கொள்ள முடியாது. எமது உள்ளூர்த் தேர்தல் தொகுதிகளைத் திருப்திப்படுத்தும் சில அவதானிப்புக்களை நாம் வழங்கக் கூடும். ஆயினும் முன் மதிப்பீடுகள் ஆக்கப்படும் முறை குறித்தோ அல்லது நிறுவனங்கள் கருமமாற்றும் முறை குறித்தோ எவ்வித தாக்கத்தையும் எம்மால் ஏற்படுத்த முடியாது. வரவு-செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் குறித்து நாம் தீவிரமான முறையில் மீள்பரிசீலனை செய்ய
171

Page 98
வேண்டிய அவசியம் உள்ளது. முன்மதிப்பீடுகளைத் தீவிர பரிசீலனை செய்வதற்கு மாற்றுச் செயன்முறைகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். ஐக்கிய இராச்சியங்களில் முன்மதிப்பீடுகள் குழுவொன்று உள்ளது. அதற்குப் பெருமளவிலான செல்வாக்கு உள்ளதோடு, அதனால் ஏற்படும் தாக்கமும் கணிசமான அளவினதாகும். நாம், உரிய கலந்தாலோசனைக் குழுக்களில் மேலும் விதிமுறையற்ற சூழ்நிலையில் முன்மதிப்பீடுகள் குறித்து விவாதிக்கலாம். இங்கு ஒவ்வொரு திணைக்களத்தினதும், நிறுவனத்தினதும் முன் மதிப்பீடுகள் போதிய அளவு பரிசீலனைக்கு உட்படுத்தப்படலாம்.
தெற்கு ஆசியாவில் மிகவும் பாரதூரமான ஆட்சிச் செயன்முறை நெருக்கடியை நாம் இன்று காண்கின்றோம். அரசியலிலும், அரசியல் நிறுவனங்களிலும் பரந்த அளவிலான நம்பிக்கையீனம் நிலவுகின்றது. எமது சகல பொது நிறுவனங்கள் குறித்தும் இத்தகைய ஒரு நம்பிக்கை நெருக்கடி நிலவுகின்றது. அரசு மூன்று முக்கிய கருமங்களை ஆற்ற வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கின்றோம். சகல நபர்களினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், வேறுபாடுகள், சமத்துவமற்ற நிலைமைகளை ஒழித்தல், மற்றும் மனித உரிமைகள் மற்றும் சனநாயக விழுமியங்களைப் பாதுகாத்தல் என்பவையே அவையாகும். சனநாயக விழுமியங்களை ஒட்டி நிற்கும் அதே வேளையில் , தெற்கு ஆசியாவில் நாம் எமது பொருளாதாரங்களையும், சமூகங்களையும் மாற்றியமைக்க வேண் டிய பரி ரத் தியேகமான சவால் களை எதிர்நோக்குகின்றோம். தென்கிழக்கு ஆசியா மேலும் சர்வாதிகாரமான ஓர் அபிவிருத்தி மாதிரியையே பின்பற்றியது. ஆயினும், தெற்காசியா, போதியளவு இச் சவாலுக்கான விளைவுப் பிரதிபலிப்பைக் காண்பிக்கவில்லை.
சாதாரண மக்களின் தேவைகள் அபிலாஷைகளை மேலும் கற்பனாவளமுள்ள ரீதியில் பூர்த்தி செய்யக் கூடிய அரசு ஒன்றை மீளக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. சனாதிபதி செயலகம், அமைச்சரவை மற்றும் அமைச்சரவைக்
172

குழு முறைமை போன்றவற்றை மீள் மதிப்பீடு செய்ய வேண் டிய தேவை உள் ளது. அவற்றுக் கென ஒதுக்கியளிக்கப்பட்ட பாத்திரங்களை நிறைவேற்றுவதில் அவற்றின் பயனுறுதியை நாம் மதிப்பீடு செய்தல் வேண்டும். பாராளுமன்றத்தைச் சீர்திருத்தம் செய்து, குழு முறைமையை மேம்படுத்தி, வரவு-செலவுத் திட்டச் செயன்முறை, சட்டவாக்கச் செயன்முறை, பொதுமக்கள் பங்கேற்பு, உயர்நிலைச் சட்டவாக்கத்தின் மீள்பார்வை போன்ற அனைத்தும் மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும். மனிதர்களின் துயரைத் துடைப்பதில் பங்களிப்புச் செய்யலாம் என்ற நம்பிக்கையிலேயே எம்முள் அநேகர் பொது வாழ்வில் பிரவேசித்தனர். ஆயினும் நாம் பெருமளவிலான துன்ப துயரங்களையும் பார்க்கிறோம். தனிப் பட்ட ரீதியில் நிவாரணம் வழங்குவதில் கையாலாகாதவர்களாக இருக்கிறோம். மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளைப் பொறுத்த வரையில் இது பெரும் பரிமாணங்களை எடுக்கின்றது.
குடியியல் நிர்வாகம், பாதுகாப்பு அதிகாரிகள், உள்ளூர் உத்தியோகத்தர்கள் மற்றும் நிவாரணப் பணி முகவர் நிலையங்களுக்கிடையில் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்த விடயங்களைக் கூட்டிணைப்புச் செய்வதற்கு சனாதிபதி செயலகத்தினுள் ஒரு குவிவு மையம் இருப்பது எமக்கு மிகவும் அவசியமாகும். கடந்த காலத்தில் திரு. பிராட்மன் வீரக்கோன் சகலரதும் ஆசீர்வாதத்தோடு இத்தகைய ஒரு பணியை நிறைவேற்றினார்.
1996 மாசி 23 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பும், 1996 ஆடி 9 ஆம் திகதி அதன் மூன்றாவது வாசிப்பும் இடம்பெற்றன. அநேகமாக நான்கு மாதங்கள் கழிந்துவிட்ட நிலையில் ஆணைக்குழு இன்னமும் உருவாக்கப்படவில்லை. இது மனித உரிமைகள் பணிக்குழு போன்ற வேறு மனித உரிமை நிறுவனங்களுக்கு அவற்றின் எதிர்காலம் குறித்த பெருமளவிலான நிச்சயமற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது. இலங்கை மன்ற அமைப்பில்
173

Page 99
பாரபட்சங்களை ஒழித்தலுக்கான ஆணைக்குழு ஒன்று உள்ளது. இதன் பணிகள் நிறுத்தப்பட்டதால் கடந்த கால முறைப்பாடுகள் பெருமளவில் தேங்கியுள்ளன. ஆகவே ஆணைக்குழு வெகு விரைவில் உருவாக்கப்படுதல் வேண்டும். பணிக்குழு யாழ்ப்பாணத்தில் அதன் கிளை ஒன்றை உருவாக்கும் செயல் முறைகளில் ஈடுபட்டுள்ளது. அது தனித்துவமாக இயங்குவதற்குத் தேவையான சகல மூலவளங்களும் கொடுக்கப்படுதல் வேண்டும். காணாமற் போனவர்களைப் பொறுத்த வரையில் நபர்களின் பெயர்களைக் கொண்ட பல்வேறு நிரல்கள் உலவுகின்றன. இத்தகைய நபர்கள் காவலில் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்கும், இவர்கள் சென்ற இடங்களைத் தேடுவதற்கும் தேவையான வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
20 கார்த்திகை 1996
174

தெற்கு அபிவிருத்தி
இந் நாட்டில் அபிவிருத்தி குறித்த பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் பாரிய பிரச்சினைகளாக இருந்து வந்துள்ளமையால் இது ஒரு முக்கியம் வாய்ந்த சட்டவாக்க நடவடிக்கையாகும். திரு. சந்திரப்பிரேமா அவர்கள் ருகுணை குறித்த நூல் ஒன்றை எழுதியிருப்பதை அனைவரும் அறிவர். இந்நூலில் அவர் ருகுணைத் தனித்துவம் குறித்தும், 19 ஆம் நூற்றாண்டு தொடக்கம் அது இந்நாட்டின் ஒரு முக்கிய தொழில் முயற்சித் தளமாக இயங்கி வந்தது குறித்தும், இப் பிரதேசங்களில் சமீபத்தில் உருவாகிய அமைதியின்மை அபிவிருத்தி யின்மையோடும், இந்நாட்டின் பல்வேறு பகுதிகள் சமமற்ற ரீதியில் அபிவிருத்தி பெறுவதோடும் தொடர்புற்றதாகவும் பெரிதும் கூறியுள்ளார். இப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கத்தோடு இவ்வதிகார சபை தாபிக்கப்படுவதால் இச் சபையின் சகல உறுப்பினர்களும் இச் சட்டவாக்கத்தை வரவேற்பார்கள் என்பது நிச்சயம்.
இத் தெற்கு அபிவிருத்திச் சபையின் குறிக்கோள்கள் எவை என்பது குறித்து மேலும் தெளிவாகக் கூறப்படுதல் வேண்டும். இவ்வதிகார சபையின் நோக்கம் இப்பிராந்தியத்தில் தனியார் துறை அபிவிருத்தியை ஊக்குவிப்பதா அல்லது இப் பிராந்தியத்தில் அக நிலையமைவு அபிவிருத்தியை ஊக்குவிப்பதா அல்லது தெற்குப் பிராந்தியத்தில் இணைந்த பிராந்திய அபிவிருத்தியை ஏற்படுத்துவதா?
சட்ட மூலத்தின் 12 ஆம் பிரிவில் அடங்கியுள்ள குறிக்கோள்கள்
மற்றும் தத்துவங்களை நோக்கும் போது இவ்வதிகார சபை
பிரதானமாக எவற்றில் கவனம் செலுத்தும் என்பது குறித்து
பெருமளவு தெளிவின்மை காணப்படுகின்றது. பலர் முதலீட்டுச்
175

Page 100
சபை, அரசுத் தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு போன்ற, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தனியார் மயப்படுத்தலுக்குப் பொறுப்பாகவுள்ள நிறுவனங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். அகநிலையமைவு முதலீட்டுப் பணியகம் ஒன்றும் உள்ளது. கொள்கை ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்படும் பொருளாதார நிலை 1995 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சினைகளுள் ஒன்று அரசு சம்பாத்தியம், முதலீடு மற்றும் தொடர்புற்ற விடயங்களில் தீர்மானங்கள் எடுப்பதற்குப் பொறுப்பான பல்வேறு முகவர் நிலையங்களுக்கிடையில் கூட்டிணைப்பு இல்லாமையாகும். தெற்கு அபிவிருத்தி அதிகார சபைக்கும் ஏற்கெனவே சட்டரீதியாகத் தாபிக்கப்பெற்ற நிறுவனங்களுக்குமிடையில் இருக்கும் உறவு குறித்து கூடுதலான தெளிவு இருத்தல் வேண்டும். தேவையான வசதிகள், வரிச் சலுகைகள், செலாவணிக் கட்டுப்பாட்டு விட்டுவிடுதல்கள், தெற்கில் முதலீட்டை இலகுபடுத்துவதற்குத் தேவையான சுங்கத்தீர்வை மீதான விட்டு விடுதல்கள் போன்றவற்றை வழங்கக் கூடியவை இந்த நிறுவனங்களேயாகும்.
தெற்கின் கரிசனைக்குரிய இரண்டாவது விடயம் அபிவிருத்தி அதிகார சபையின் அரசியல் வகைப்பொறுப்பு ஆகும். மாகாண சபைகள் சட்டத்தின் அட்டவணையின் பிரகாரம் திட்டமிடல் மற்றும் அமுலாக்கம் குறித்த சகல தத்துவங்களும் ஒரு மாகாண சபையைச் சேர்ந்தவையாகும். பொருளாதாரம் குறித்த திட்டமிடல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தத்துவங்கள் மாகாண சபைக்கு பகிர்வு செய்யப்பட்டவையாகும். முன்பே தீர்மானிக்கப்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்திக் கருத்திட்டங்களை ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தும் குறிக்கோளும், தத்துவமும் தென்மாகாண அபிவிருத்தி அதிகார சபைக்கும் கொடுக்கப்படுகின்றது. ஆகவே இக் குறிப்பிட்ட பொறுப்புக்கும், மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு செய்யப்பட்டுள்ள பொறுப்புக்கும் இடையே விடயப் பொருள் தொடர்பும் அது குறித்த சிக்கல்களும் ஏற்படுமா என்றும் கேள்வி எழுகின்றது. இச்சட்டத்தில் எதிர்நோக்கப்படும் தத்துவங்கள் குறித்து மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும்
176

மாகாண சபை அமைச்சர்கள் சபை உறுப்பினர்கள் போன்ற மாகாணத் தலைவர்களோடு கலந்தாலோசனை மற்றும் அவர்களுக்கு வகைப்பொறுப்பு குறித்த ஏதாவதொரு அர்த்தமுள்ள செயன்முறைமை குறித்தும் சிந்திக்கலாம்.
மற்றப் பிரச்சினை தெற்கு அபிவிருத்தி அதிகார சபையினால் உண்மையில் பிரயோகிக் கப் படும் தத் துவங்கள் தொடர்பானவையாகும். இத்தத்துவங்களுள் அதிகாரசபையின் திட்டமிடல், அமுலாக்கல் கருமங்களை ஆற்றுவது தொடர்பில் எவருக்கும் எழுத்து மூல அறிவுறுத்தல்கள், கட்டளைகளைப் பிறப்பிக்கும் தத்துவமும் அடங்கும்
மாகாண மற்றும் உள்ளூராட்சி மட்டத்திலான அரசியல் தலைமைத்துவம் அதிகார சபையின் செயற்பாட்டெல்லையுள் இடம்பெறும் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றுக்கிடையில் அர்த்தமுள்ள கலந்தா லோசனைகள் இடம் பெறுதல் அவசியம் கைத்தொழில்களின் இட அமைவு, சூழல் குறித்த பிரச்சினைகள், இக் கருத்திட்டங்களில் பணியாற்றுவதற்கான ஆட்சேர்ப்பு மற்றும் எதிர்நோக்கப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்களின் சமூக, பொருளாதார விளைவுகள் என்பவை குறித்த தீர்மானங்களில் அர்த்தமுள்ள பங்கேற்பு இடம்பெறுவதை இது உறுதிப்படுத்தும். இந்த அதிகார சபையின் புதிய தவிசாளர் பாடசாலையில் என்னுடன் கல்வி பயின்றவரும், இயலுமை மற்றும் உயர் விழுப்பம் கொண்டவருமான திரு. நவீன் குணரத்ன என அறிகிறேன். உள்ளூர் அரசியல் தலைவர்களோடும், பிராந்தியத்திலுள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களோடும் கலந்தாலோசனைக்கான தேவை குறித்து அவர் சிந்திப்பாரென நான் எண்ணுகிறேன்.
இவ்வதிகார சபைக் கட்டமைப்பில் தவிசாளர் அதிகார சபையின் பிரதான நிறைவேற்றுநராகவும் விளங்குகின்றார். வேறு வார்த்தைகளிற் கூறுவதாயின் தவிசாளரே பணிப்பாளர் நாயகமாகவுமுள்ளார். அதிகார சபைக்கும் பாரிய அளவிலான
177

Page 101
தத்துவங்களை அளிப்பதால், பணிப்பாளர் சபைக்குப் பயனுறுதியுள்ள விதத்தில் வகைப்பொறுப்புக் கூறுதல் அவசியமென்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கின்றேன். தாங்கள் ஒரு பாரிய அரசுத் துறை நிறுவனத்தில் பிரதான நிறைவேற்றுநராக இருந்த காரணத்தால் இத்தகைய அனுபவங்களைத் தாங்களும் கொண்டுள்ளீர்கள். தவிசாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்தின் கருமங்களைப் பிரிப்பதில் சில அனுகூலங்கள் உள்ளன. இது பூரணமாக ஒரு பிரமாணப்படுத்தும் அமைப்பு அல்லவென்ற காரணத்தால் ஒரு செயற்பாட்டு உத்தியோகத்தர் அதிகார சபையின் அன்றாட நிர்வாகத்தின் போது கையாள முடியாத பிரச்சினைகளைச் சபை சுதந்திரமாகக் கையாளுவதற்கு உதவும். இது முழுக்க முழுக்க ஒரு கூட்டிணைப்பு அமைப்பும் அல்ல. இதற்குச் செயற்பாட்டுப் பொறுப்பு உள்ளது. கருத்திட்டங்களை உருவாக்கி, நடைமுறைப்படுத்தும் தத்துவம் இதற்குள்ளது. ஆகவே இதற்கு மிகவும் முக்கியமான தத்துவங்களும், கருமங்களும் உள்ளன.
பிரதிச் சபாநாயகர் அவர்களே! ஜேர்மன் அரசுத் தொழில் முயற்சிகளை முகாமைத்துவம் செய்யும் முறைமையை நோக்கினால் அங்கு மேற்பார்வைச் சபை எனப்படும் ஒன்று உள்ளது புலப்படும். அவர்களை நியமிப்பது பிரதான நிறைவேற்றுநரின் பணிக்குத் தடையாக அன்று. மாறாக இது அவருக்குத் தொழில்நுட்ப, நீதி மற்றும் சட்ட விடயங்களில் அமைப்புக்குள் பெற்றுக்கொள்ள முடியாத, குறிப்பிட்ட சில மதியுரைகளை வழங்குவதற்காகும்.
வேறு எந்த அரசியல் அதிகார சபைக்கும் வகைப் பொறுப்புக் கூறவேண்டிய அவசியமின்மையால் இங்கு வகைப்பொறுப்புக் குறித்த ஒரு கேள்வி எழுகின்றது. ஆகவே சபை பெருமளவுக்குப் பயனுறுதி கொண்ட ஒன்றாக இருத்தல் வேண்டும். இச் சபை தெற்குப் பிராந்தியத்தின் பல்வேறு நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துதல் வேண்டும். தாங்கள் அறிந்தவாறே தெற்கில் ஹரிஸ்சந்திர மில்ஸ் போன்ற பெரிய கம்பனிகளும்,
178

மிக முக்கியமான உள்ளூர்த் தொழில் முயற்சி நலன்களும் உள்ளன. இவை தெற்கின் அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு வழங்கியுள்ளன. இவ்வதிகார சபையின் சபை அங்கத்துவத்தில் இவர்களின் நலன்களும் பிரதிபலித்தல் வேண்டும்.
இன்னுமொரு விடயத்தைப் பற்றி மாத்திரம் குறிப்பிட விரும்புகின்றேன். அது தெற்கு அபிவிருத்தி அதிகார சபையினால் பேச்சுவார்த்தைகள் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் சர்வதேசக் கடன்களுக்கு உத்தரவாதம் வழங்கும் அரசின் தத்துவங்கள் குறித்ததாகும். கடன்கள் குறித்த ஏற்பாட்டில் இவ்வதிகார சபை பெற்றுக் கொள்ளும் எந்த வெளிநாட்டுக் கடன் விடயத்திலும் ஏற்படக் கூடிய நாணய இடர்வரவு குறித்த இழப்பு அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் இதில் அடங்கியுள்ளது. 23 (6) ஆவது வாசகத்தை நான் பிரத்தியேகமாகக் குறிப்பிட வேண்டும். அரசாங்கம் உத்தரவாதம் வழங்கும் கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் நாணய இடர்வரவுக்கு அரசாங்கம் பொறுப்பு எனக் கூறப்பட்டுள்ளது. அரசு "பொறுப்பாக இருத்தல் வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டு ள்ளமையால் இது வழக்கத்துக்கு விரோதமான ஓர் ஏற்பாடாகத் தோன்றுகின்றது. அரசாங்கம் "பொறுப்பு ஏற்கலாம்” என்பதாகவே இந்த வாசகம் அமைந்திருக்க வேண்டுமென்று நான் எண்ணுகின்றேன். அரசுக்கு உத்தரவாதம் செய்யும் அல்லது நாணய இடர்வரவை உள்வாங்கிக் கொள்ளும் தற்றுணிபு வழங்கப்படுதல் வேண்டும். இல்லையேல் அரசாங்கம் ஒரு வகைப்பிரிவைச் சேர்ந்த சர்வதேசக் கடன் கொடுக்கல் வாங்கலில் உத்தரவாதம் வழங்குவதோடு, வேறு கருத்திட்டங்கள் விடயத்தில் - நாம் அறிந்தவாறு யென் குறிப்பீட்டுக் கடன்கள் விடயத்திற் போன்று - மிகவுயர்வான நாணய இடர்வரவுக் கடப்பாடுகளையும் பொறுப்பேற்கும் வழக்கத்துக்கு விரோதமான ஒரு சூழ்நிலை உருவாகும்.
ஆகவே, நான் தெற்கு அபிவிருத்தியென்னும் எண்ணக்கருவில் அடங்கியுள்ள கோட்பாடுகள் மற்றும் குறிக்கோள்களைப்
179

Page 102
பாராட்ட விரும்புகிறேன். இது பிரத்தியேகமாக வட - கிழக்கு மாகாணம் போன்ற நாட்டின் வேறு பகுதிகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு எண்ணக் கருவாக இருத்தல் வேண்டும். இச் சட்ட வாக்கத்தில் தெற்கு அபிவிருத்தி அதிகார சபைக்கும், தெற்குப் பிராந்தியத் தின் பகுதிகளாக விளங்கும் மாகாணங்களின் மாகாண சபைகளுக்கும் இடையிலான முறையான உறவுகள் சரியாகக் கையாளப்படவில்லை என்பது விசனமளிப்பதாகவுள்ளது.
தென்பகுதியில் அபிவிருத்திக் கருத்திட்டங்களை இனங்கண்டு, வகுத்தமைத்து நடைமுறைப்படுத்தலைக் கூட்டிணைப்புச் செய்வதற்கும், அத் தோடு தொடர் புற்ற மற்றும் இடைநேர்விளைவான விடயங்களைக் கையாளுவதற்கும், ஓர் இலங்கைத் தெற்கு அபிவிருத்தி அதிகார சபையைத் தாபிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் நோக்கில் மாண்புமிகு. கல்வி உயர்கல்வி அமைச்சரும், அரசாங்கப் பிரதம கொறடாவுமான, திரு. ரிச்சார்ட் பத்திரன அவர்களால் 18.06.96 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
180

அரசியல் வாழ்க்கை வரலாறுகள்

Page 103

ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் அதிகரித்த அவலங்களின் காலப்பகுதியும்
சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திரு.ஜே.ஆர். ஜெயவர்த்தன இச்சபையில் திரு.எம். திருச்செல்வம் அவர்கள் குறித்த இரங்கலுரையில் பின்வருமாறு கூறினார்: "நான் அறியாத ஒருவரின் வாழ்வு குறித்த தொலைதூரக் காட்சி ஒன்றை அல்லது நிகழ்வுக் குறிப்புரையை நோக்குவது போன்று நான் இவ்வுரையை நிகழ்த்தவில்லை. 50 வருடங்களுக்கு மேலாக நான் நன்கு அறிந்த ஒருவரைப் பற்றியே பேசுகின்றேன்". சனாதிபதி ஜெயவர்த்தனவுடனான எனது தொடர்புகள் அதைவிட மிக மிகக் குறைவானவை. 1980 இல் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான திரு. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் விதந்துரையின் பேரில் சனாதிபதி என்னை அதிகாரப் பகிர்வு குறித்த சனாதிபதி ஆணைக்குழுவில் பணியாற்றுவதற்கு நியமித்தார்.
அப்பொழுது நான் அவரை அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆயினும் பின்னர் அப்போதைய அரசுக்கும் பிரதான எதிர்க்கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டண்க்குமிடையில் இரு பிரதான சமூகங்களையும் பிரித்த பிரச்சினைகள் குறித்த ஒரு தொடரான சிக்கலான பேச்சு வார்த்தைகளில் நான் பங்கெடுத்துக் கொண்டேன். இப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் மாவட்ட சபைகள் திட்டத்தை அமுல் நடத்துவதிலும், 83 இனக்கலவரங்களின் பின்னர், இறுதியில் அரசியலமைப்புத் திட்டத்துக்கான 13 ஆவது திருத்தத்தோடு ஏற்பட்ட மாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்வுக்கும் இட்டுச் சென்ற ஆவணமாகிய பின்னிணைப்பு - சீ மீதும் கவனஞ் செலுத்தின.
183

Page 104
1977 ஆடி தேர்தல்களின் பின்னர் பாராளுமன்றம் கொழும்பில் அமைந்திருந்த அதன் பழைய கட்டிடத்தில் அப்போதைய சனாதிபதி திரு. வில்லியம் கோபல்லாவ அரசாங்கக் கொள்கையை வாசிப்பதைக் கேட்பதற்குக் கூடியது. சம்பிரதாயப்படி முதல் மூன்று ஆசனங்களிலும் பிரதமர் ஜுனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தன அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களும், நிதியமைச்சர் ரொனி டி மெல் அவர்களும் அமர்ந்திருந்தனர். அமர்வுகள் ஆரம்பிக்க ஒரு சில நிமிடங்களுக்கு முன்பாக 71 வயதான திரு. ஜெயவர்த்தன அவர்கள் அமிர்தலிங்கத்திடம், "அமிர், மூன்றாவது ஆசனத்திலிருந்து முதலாவது ஆசனத்திற்கு வருவதற்கு எனக்கு 30 வருடங்கள் எடுத்தன” என்று கூறினார். இச் சுருக்கமான அவதானக் குறிப்புரை உபகண்டத்திலேயே பலருக்குப் பெரும் புதிராக விளங்கிய ஒரு அரசியல் வாதியின் வாழ்க்கைப் போக்கில் ஏற்பட்ட மேடு பள்ளங்கள், ஏமாற்றங்கள் மற்றும் பெரும் சாதனைகளைப் படம் பிடித்துக் காட்டப் போதுமானது.
ஜுனியஸ் ஜெயவர்த்தன ஒரு சட்டக் குடும்பத்தில் அவதரித்த பெருமகன். அவரது தந்தையார் ஈ.டபிள்யூ. ஜெயவர்த்தனாவும், பேரனார் ஏ. சென்ட்.வீ. ஜெயவர்த்தன அவர்களும் புகழ்மிக்க சட்டவறிஞர்களாக விளங்கியதோடு, நாட்டின் அதிஉயர் நீதிமன்றத்துக்கும் பதவி உயர்வு பெற்றனர். அவர் றோயல் கல்லூரியில் கல்வி பெற்றார். அது முன்னணிப் பொதுப் பதவியினராகிய இலங்கையரின் பொதுப் பாடசாலையாக விளங்கியது. இங்கு அவர் கல்வியில் அதிகமாகப் பிரகாசிக்கவில்லையெனினும் பாடசாலைக் கிரிக்கட், ரக்பி மற்றும் குத்துச்சண்டைக் கோஷ்டிகளில் இடம் பெற்றிருந்தார். ஒரு தடவை அவர் அரசியலைக் குத்துச்சண்டைக்கு ஒப்பிட்டார். இதயத்தைக் குறிவைத்த போதிலும் தலையே தாக்குதலுக்கு உள்ளாகின்றது. மிகவும் தனித்துவமான மிகச் சிறந்த பேச்சாளர் போட்டியொன்றின் இறுதித் தேர்வுக்கு அவர் தெரிவாகியதோடு, அதில் பரிசையும் பெற்றார். ஒப்புவமையற்ற ட்ரொட்ஸ்கீயவாத சட்டவறிஞரும் வரலாற்றாசிரியருமான கொல் வின்
184

ஆர்.டி. சில்வா, சர்வதேச சட்டவறிஞர்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரீ.எஸ். பெர்னாண்டோ, நிதியமைச்சராக இருந்த ஸ்டான்லி.டி. சொய்சா, புகழ்மிக்க சிவில் வழக்கறிஞரும் இராணி வழக்குரைஞருமான டி.எஸ். ஜயவிக்கிரம ஆகியோர் இவருடன் போட்டியிட்டனர். இது அவரின் இலட்சியத்தை அடையும் உறுதியான நோக்கு மற்றும் வெல்லுவதற்கான திடசங்கற்பம் என்பவற்றின் ஆரம்பகால வெளிப்பாடுகளாய் அமைந்தது. சமகாலத்தவர்களான கிறிஸ்து தேவாலயக் கல்லு ரியிலும் , ஒக்ஸ் போர் ட் டிலும் பயின் ற பண்டாரநாயக்காவைப் போலன்றி, கேம்பிரிட்ஜில் பயின்ற டட்லி சேனாநாயக்காவைப் போலன்றி, லண்டன் பொருளியல் கல்லூரியில் பயின்ற என்.எம். பெரேராவைப் போலன்றி, ஜெயவர்த்தனவின் மூன்றாம் நிலைக் கல்வி இலங்கைச் சட்டக் கல்லூரிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்கியது.
அவர் சட்டத்துறையில் பிரவேசித்த போது குடும்பத் தொடர்புகளும், இயற்கையாகவே அமைந்திருந்த இயலுமையும் விரைவான வெற்றியை உறுதிப்படுத்தப் போதுமானவையாக அமைந்திருந்ததெனினும் அவர் அத்தோடு திருப்தியுறாது மாநகர சபைத் தேர்தல்கள் மூலம் அரசியலில் பிரவேசித்தார். அரசு மன்றம், மற்றும் சுதந்திர இலங்கையின் முதல் பாராளுமன்றப் பிரவேசம் என்பவை தொடர்ந்தன. 1947 இல் நிதியமைச்சராகிய போதிலும் பலரும் கண்வைத்திருந்த அவரது கட்சித் தலைமைப் பதவி அவர். 1970 இல் எதிர்க்கட்சித் தலைவராகும் வரையில் அவருக்குக் கிட்டவில்லை. இக் கட்டத்திலேயே அவர் ஊக்கமிழந்து, உணர்விழந்திருந்த கட்சியை மீண்டும் கட்டியெழுப்பி, 1977 இல் ஐந்தில் நான்கு பெரும்பான்மையுடன் வெற்றிக்கு வழி நடாத்தினார். குடியரசின் தேர்தல் வரலாற்றில் இது இதற்கு முன் எப்பொழுதும் இடம்பெற்றிராத ஒரு சாதனையாகும்.
நண்பர்களும், எதிரிகளும் ஜெயவர்த்தனவில் கண்டது சிக்கலான, புதிரான, முரண்பாடுகள் நிறைந்த ஒர்
185

Page 105
ஆளுமையையாகும். அவர் அதிகாரத்தை இறுக்கமாகப் பற்றி நின்றதோடு, அவரது பிரதான அரசியல் எதிரியை வெளியேற்றிய ஒரு செயன்முறையை ஆரம்பித்து வைத்தார். அத்தோடு அரசியல் சட்ட நிலைத்தகவு எதுவுமற்ற ஒரு பொதுசன வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தின் ஆயுளை நீடித்தார். எவ்வாறாயினும், 1976 இறுதியில் தமது அரசியல் வாரிசைத் தெரிவு செய்யும் முடிவைக் கட்சிப் பாராளுமன்ற அபேட்சகர்க்ளின் கைகளில் கொடுத்ததன் மூலம் ஒழுங்கான அரசியல் மாற்றத்துக்கு வழி அமைத்தார். 1988 இல் அவர் எவ்வித சந்தடியோ, விழாவோ இடம்பெறாது அமைதியாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார் . இரக்க மற்ற, கணிப்புகளோடியங்கும் ஓர் அரசியல் பேருபாயக்காரராக அவர் பலருக்கும் தோற்றமளித்தார். அதே வேளையில் அவரோடு பணியாற்றியோர் அவரைப் பெருமனது படைத்தவராகவும், அறிவு நகைச்சுவையோடு உரையாடக் கூடியவராகவும், எப்பொழுதும் மற்றவர்களுக்கு உரிய மரியாதையை வழங்குபவராகவும் கண்டுள்ளனர்.
அவர் காந்தீயக் கொள்கைகளை மதித்துப் புகழ்ந்ததோடு, அசோகச் சக்கரவர்த்தியை மெச்சுபவராகவும், பிரித்தானிய அரசியல் வரலாறு மற்றும் அதன் பாராளுமன்றச் சம்பிரதாயங்கள் என்பவற்றில் ஆழ்ந்த புலமை பெற்றவராகவும் விளங்கினார். அரசியல் கருத்து வேறுபாடுகளைச் சகித்துக் கொள் ளா த வார் என் றும் , தொழிற் சங் கவாத இயக்கங்களுக்கெதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டவரென்றும் , இனத் துவக் குழுக்களின் போராட்டங்களை ஒடுக்கியவரென்றும் பலர் அவரைக் குறை கூறுகின்றனர். அவர் அடிப்படை உரிமைகளின் முதனிலையை ஏற்றுக்கொண்ட ஓர் அரசியலமைப்புத் திட்டத்தை உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றம் செல்லும் உரிமையையும் நிலைநாட்டினார். எனினும் அரசியல் சர்வாதிகாரத்தைத் திடப்படுத்தியதற்கும், சில சந்தர்ப்பங்களில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தத் தவறியமைக்கும் எதிராகப் பலர் அவரை விமர்சிக்கின்றனர்.
186

"அவர் இலங்கையின் பொருளாதாரத்திலும், அரசியல் முறைமையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தினார். 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையிலாவது அவை மாற்றமுறாது தொடரும் தோற்றப் பாட் டினைக் கொண்டிருந்தன. பொருளாதார மாற்றங்கள் பிரத்தியேகமாக இத்தன்மையன. நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்குமான நிகழ்ச்சி நிரல் அவரால் முடிவு செய்யப்பட்டது”, என்று ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் வாழ்க்கை வரலாற்றா சிரியர்களான பேரா. கே.எம்.டி. சில்வா மற்றும் ஹவார்ட் ரிகின்ஸ் என்போர் குறிப்பிடுகின்றனர். அவரின் அரசியல் கொடையுரிமை குறித்த இக் கருத்தைப் பலர் தீவிரமாக மறுத்துரைத்து, அவரது சாதனைகளைவிட, அவரின் தோல்விகளையே அழுத்திக் கூறியுள்ளனர். கெளரவமான, மனப்பூர்வ அனுதாபம் தெரிவிக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த வாதப் பிரதிவாதங்களில் இறங்குவதற்கு நான் விரும்பவில்லை. ஆயினும், ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்களே தமது மாபெரும் ஏமாற்றம் என்று ஏற்றுக்கொண்ட, தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அவர் தவறியமை கூர்ந்து நோக்கப்பட வேண்டிய ஒன்றாகவுள்ளது. அவர் இது விடயத்தில் 1987 இல் சிங்கப்பூர் பிரதமர் லீகுவான் - யூவிற்கு எழுதிய கடிதத்தை அவரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதில் அவர் பின்வருமாறு கூறினார். "ப்ன்மைத்துவச் சமூகமொன் றில் தேசிய அரசியல் வாழ்வுக்குரிய அரசியலமைப்புப் பின்னணியை உருவாக்கியிருக்கக் கூடிய யதார்த்தநிலை வாதமும், நடைமுறையியல் ஞானமும், நேர காலத்தோடு வராதது மிகவும் விசனத்துக்குரியது. பழத்தின் கசப்புணர்வே எமக்குப் பாடமாக அமைந்தது என்பதே எமக்குரிய ஒரேயொரு ஆறுதலாகும்.” வேறு ஒரு நிகழ்வுத் தொடர்பில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட கையோடு அவர் ஏன் விரைந்து செயற்படவில்லையெனப் பத்திரிகை நிருபர் வினவினர். அவர் மிகவும் இதய சுத்தியோடு பின்வருமாறு பதிலளித்தார்: "எனக்குத் தைரியம்
187

Page 106
இருக்கவில்லை. எனக்குப் புத்திசாதுரியம் இருக்கவில்லை. எனக்குத் தொலைநோக்கு இருக்கவில்லை.”
தமிழரின் துன்ப துயரங்கள் குறித்த தெளிவான இடித்துரைப்பும், அவற்றைத் தீர்க்கத் தவறியதன் விளைவுகளும் ஐ.தே.க. வின் 1977 ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணக்கிடக்கின்றன. இதுவரை எவரும் பெற்றுக் கொள்ளாத அரசியற் பெரும்பான்மை கிட்டிய பின்னரும் நிரந்தரத் தீர்வொன்றினை எட்டுவதற்கான சந்தர்ப்பத்தை அவர் ஏன் பற்றிக் கொள்ளவில்லை என்பது பலருக்கு இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.
நாடக பாணியிலமைந்த மகத்தான தேர்தல் வெற்றிக்குப் பின்னர் மூன்று வாரங்களுள் தமிழர்களுக்கெதிராக இடம்பெற்ற கூட்டு வன்செயல் பின்னடைவிலிருந்து அவரது நிர்வாகம் இலகுவில் மீள முடியவில்லை. அது யாழ்ப்பாணத்தில் ஒரு சிறிய பொலிசார் குழுவுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும் இடையில் ஆரம்பித்தது. இது தீவின் சகல பாகங்களிலுமிருந்த தமிழர்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டதோடு, இந்நிலைமை கட்டுப்படுவதற்கு ஒரு வாரம் எடுத்தது. இக் கலவரங்களின் கொடூரம் அவரை மிகவும் நிம்மதியிழக்க வைத்ததென்றும், 1956 இல் அவரைப் பதவியிலிருந்து துரத்திய அரசியல் சக்திகளை அது நினைவூட்டியதென்றும் அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இந்நிகழ்வுகள் அவரது நிர்வாகத்தின் ஆரம்ப வருடங்களில் ஓர் இருண் ட நிழலைப் படிய வைத் ததோடு, இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கை வளர்ச்சியுற்றது. பேரு பாய உத்தியைப் பொறுத் தவரையில் பாரிய அனர்த்தங்களைக் கொணரும் மாற்றம் ஏற்பட்டது. சர்வகட்சி மாநாடு குறித்த பேச்சு எதுவும் அதன் பின்னர் இடம்பெறவில்லை. மேலும் பரந்த அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தத்தின் மீது வலியுறுத்துகை அமைந்தது. இதில் உடனடி இனத்துவ துன்ப துயரங்களுடனான இணைப்பு தெளிவின்றி பெரிதும் மயக்கமான ஒன்றாகவே அமைந்தது.
188

ஐ.தே.க. தேர்தல் விஞ்ஞாபனம் தமிழர்களின் நீண்ட காலத் துன்ப துயர்ங்கள் குறித்த ஒரு விளக்கத்தை வெளியிட்ட போதிலும், அதன் உண்மையான தாற்பரியங்கள் குறித்தும், இத்துன்ப துயரங்கள் உருவாக்கியிருந்த தேசிய இன உணர்வின் வேகம் குறித்தும் உணருவதற்கு அரசு தவறிவிட்டது. தமிழ் அரசியல் தலைமைத்துவத்தில் புதிய பரம்பரை பிரவேசித்த போது அத்தோடு இயைபாகச் செயலாற்றுவதற்கு ஜெயவர்த்தனவுக்குக் கஷ்டமாக இருந்தது. அவரது தனிப்பட்ட தொடர்புகள் மூன்று பிரத்தியட்சமான தலைவர்களாகிய ஜீ.ஜீ. பொன்னம்பலம், எம். திருச்செல்வம் மற்றும் எஸ்.ஜே.வீ. செல்வநாயகம் ஆகியோருடன் உள்ளவையாக இருந்தன. இவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முந்திய 6 மாத காலத்தினுள் இறந்தனர்.
தமிழ்ப் போராளிகளின் தன்மை மற்றும் தோற்றம் குறித்து விளங்கிக் கொள்ளுவது அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அது துடிப்பாக நீண்ட நாட்களுக்கு நிலைத்திராது என்னும் தப்புக் கணக்கைப் போடும் தவறைச் செய்தார். மறுபுறத்தில் பெருந்தோட்டத் தமிழர் களின் பிரச்சினையைப் பொறுத்தவரையில் விரைவான அனுதாபத்தையும், விளக்கத்தையும் வெளிப்படுத்தியதோடு வர்க்க மற்றும் இனத்துவ இணைப்பு அங்கிருப்பதையும் இனங்கண்டார். குடியுரிமை, குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள், சம்பளக் கோரிக்கைகள் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் தோட்டத் தொழிலாளர்களாகிய இந்திய வம்சாவழி மலைநாட்டுத் தமிழர்களால் வெல்லப்பட்டது அவரின் ஆட்சிக்காலத்திலேயே ஆகும். அவரை ஒரு பூரணமான பாராளுமன்ற வாதியாகவும், தந்திரோபாய விற்பன்னராகவும், மனப்பதிவை ஏற்படுத்தும் பிரசன்னமும், கவர்ந்திழுக்கும் குரல் வன்மையும் படைத்த விவாத வித்தகராகவும் நினைவு கூருகின்றோம். அவர் கல்வியறிவு படைத்த அரசுத் தலைவர்களுள் ஒருவராக விளங்கியதோடு பல்வேறு புத்திஜீவி ஈடுபாடுகளிலும் ஆர்வங் கொண்டிருந்தார். நூல்கள் மற்றும் அரசியலாளரின் வாழ்க்கை வரலாறுகளில் தொடர்ச்சியான ஆழ்ந்த அக்கறை
189

Page 107
அவருக்கிருந்தது. கட்சி முறைமையின் நவீன மயப்படுத்தல், ஸ்தாபனத்தைக் கட்டியெழுப்பிய சக்தி, தேர்தல் தோல்வியால் மனமுடைந்து போயிருந்த ஒரு கட்சியை மீண்டும் புனருருவாக்கிய அர்ப்பணிப்பு என்பவற்றுக்காக அவர் என்றும் நினைவு கூரப்படுவார்.
18 கார்த்திகை 1996
190

றுநீமாவோ ஆர்.டி. பண்டாரநாயக்கா குடியியல் உரிமைகள் நீக்கம்
இவ்விவாதத்துக்கு இச்சபையின் கெளரவ. அங்கத்தவர்களின் உன்னத பங்களிப்புகளுக்காக அவர்களையும், குறிப்பாக கெளரவ. நீதி மற்றும் அரசியல் அமைப்பு அலுவல்கள் அமைச்சர் இத் தீர்மானத்தைப் பிரதிநிதித்துவ சனநாயகம் குறித்த அரசியலமைப்பு யோசனைகள் மற்றும் எண்ணக்கருக்கள் என்னும் பரந்த சட்டகத்துள் வைத்தமைக்காக அவரையும் பாராட்ட விரும்புகிறேன்.
பிரதித் தவிசாளர் அவர்களே! இச்சபை 16 வருடங்களுக்கு முன் திருமதி. பண்டாரநாயக்காவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் திருத்த முயலுகின்றது. வாக்களிக்கும் உரிமை, தேர்தலில் போட்டியிடும் உரிமை, பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட அரச பதவியெதையும் வகிக்கும் உரிமை என்பவை அவரிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டன. 1982 இல் இடம்பெற்ற சனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட முடியவில்லை. தெரிவு செய்யப்படக் கூடிய வேறு எந்தப் பதவிக்கும் அவர் போட்டியிட முடியவில்லை. இத்தகைய ஒரு கொடிய தலைவிதியை வேறு எந்த அரசியல் தலைவரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். இந்நிலை அவர் ஓர் அரசியல் பிரமுகர் என்னும் அடையாளத்தையே அழித்துவிட முயன்றது.
ஏனையோர் சுட்டிக்காட்டியவாறு, திருமதி. பண்டாரநாயக்கா வெறுமனே ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக விளங்கியவரல்ல. அவர் இரு தடவை பிரதமர் பதவியை வகித்துள்ளார். அந் நேரத்தில் அவர் பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாக விளங்கினார். கூட்டுச்சேரா இயக்கத்தின் தலைவர் என்ற வகையில் வேறு எந்த இலங்கையருக்கும்
191

Page 108
கிட்டாத சர்வதேச பிரபலமும், அங்கீகாரமும் அவருக்கிருந்தன. பிரதித் தவிசாளர் அவர்களே! இலங்கை தெற்காசியாவிலேயே நீண்ட கால இருகட்சி முறைமைப் பாரம்பரியம் வாய்ந்த நாடுகளுள் ஒன்றாக வர்ணிக்கப்பட்டுள்ளது. காலத்துக்குக் காலம் அரசியல் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், பூரீலங்கா சுதந்திரக் கட்சியின் கைகளுக்கும் மாறியது. தத்துவார்த்தங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மோதல்களிலிருந்து பிறக்கும் உண்மையான மாற்று வழியொன்றை வாக்காளர்களுக்கு வழங்குவதில் இந்த இரு கட்சி முறைமை வாழ்வாதாரமான முக்கியத்துவம் பெற்றதாக விளங்கியது. பிரத்தியேகமாக 1977 - 1978 கால கட்டத்தில் இவ்விரு கட்சி முறைமை ஒரு பின்னடைவை எதிர்நோக்கியது. பூரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு பாரதூரமான தேர்தல் தோல்வியைத் தழுவியிருந்ததோடு அதன் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் எட்டு அங்கத்தவர்களாகக் குறைந்தது.
இந்நாட்டின் அரசியல் வரலாற்றுக் குத் திருமதி. பண்டாரநாயக்காவின் நிலையான பங்களிப்பு இரு கட்சி முறைமை உயிர்வாழ்வதற்கு வழங்கப்பட்ட பங்களிப்பு ஆகும். அவர் அரசியல் ஏளனத்துக்கும், அரசியல் சதிகளுக்கும் உள்ளாகிய வேளையில் விட்டுக்கொடுப்பதற்கு அவர் பிடிவாதமாக மறுத்துவிட்டமை, கட்சி மீதான அவரது திடசித்த விசுவாசம், எதிரிகளோடு சேர்ந்து கொள்ள மறுத்தமை போன்ற நடவடிக்கைகள் பூரீலங்கா சுதந்திரக் கட்சி உயிர் வாழ் வதற்கும் , மறுமலர் சி சரியடைவதற்கும் காரணமாயமைந்தன. இதனால் இரு கட்சிமுறைமை உயிர்வாழ்வது சாத்தியமாயிற்று. பிரதித் தவிசாளர் அவர்களே! இத்தேசத்தின் அரசியல் வாழ்வுக்கு அவர் வழங்கிய உன்னத, தனித்துவமிக்க பங்களிப்பு இதுவே என்பதைத் தாங்களும் ஏற்றுக்கொள்வீர்களென நம்புகிறேன்.
திருமதி. பண்டாரநாயக்காவின் அரசியல் சாதனைகளை நினைவு மீட்டுகையில், அவரது அரசுக்கும் எமது அரசியல்
192

கட்சிக்குமிடையில் எவ்வித பேதங்களும் இருந்ததில்லை எனக் காட்டுவதற்கு நான் விரும்பவில்லை. அப்படிச் செய்வது வரலாற்றைத் திரிபுபடுத்தும் ஒரு விடயமாகும். உண்மை மற்றும் நீதி என்னும் விழுமியங்களை உயர்வாக மதிப்பதற்கு இச்சபை முயலுகையில் அது வரலாற்றை மறுக்க முயலாது. அவர் மிகவும் துயரத்துக்குரிய முறையில் இனத்துவ ஒருமைப்பாட்டுக்கான சந்தர்ப் பங்கள் இழக்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்ளும் முதல் நபராக இருப்பார். 1960 களின் முற்பகுதியில் பனாகொடையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திரு.எம். திருச்செல்வம் மற்றும் சமஷ்டிக் கட்சித் தலைவர்களைப் பார்ப்பதற்கு எனது தாயாரோடு ஒரு பாடசாலை மாணவனாக நான் சென்ற நிகழ்ச்சியை நினைவு மீட்டிப்பார்க்கிறேன். இந்த அரசியல் கைதிகளுக்கெதிராக அவ்வேளையில் எந்தவிதமான குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. அதே விதமாக எழுபதுகளில் சமத்துவம், அடிப்படை உரிமைகள், மற்றும் அதிகாரப் பகிர்வுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கக் கூடிய நல்லிணக்க அரசியலமைப்பொன்றை உருவாக்கும் விடயத்திலும் தோல்வி ஏற்பட்டது. பிரதித் தவிசாளர் அவர்களே! இந்நிகழ்வுகளை நான் நினைவு மீட்டுவது கசப்புணர்வுடனோ, ஆத்திர உணர்வுடனோ அல்ல. பின்னர் கடந்த இரு தசாப்தங்களில் மற்றவர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்கள் எம்மில் சிலர் அனுபவித்த தோல்விகள், வசதியீனங்களோடு ஒப்பிடுகையில் மிக மிகப் பொரியவை. உன் னதமான எதிர் காலமொன் றை அமைப்பதற்கான தைரியம் எமக்கு ஏற்பட வேண்டுமெனில், எமது துயரம் நிறைந்த வரலாற்றின் யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
இத் தீர்மானம் இந்நாட்டின் ஒரு முக்கியமான, புகழ்மிக்க பிரஜை சம்பந்தமானது என்பதால் மாத்திரம் இதற்கு நாம் ஆதரவு நல்கவில்லை. 1977 தேர்தலின் போது அத்தனகலைத் தேர்தல் தொகுதியின் சனநாயக விருப்பு வேட்கையைக் குடை சாய்ப்பதற்கென உருவாக்கப்பட்ட சட்டவாக்கத் திட்டத்தைக்
193

Page 109
கவலையுணர்வுடன் நோக்குகின்றோம். பிரதித் தவிசாளர் அவர்களே! தேர்தலின் போது திருமதி. பண்டாரநாயக்கா அத்தனகலை மக்களால் தெரிவு செய்யப்பட்டார் என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கும். அவருக்கு 30,328 வாக்குகள் கிடைத்தன. அவரது கட்சியின் ஏனைய அங்கத்தவர்களுக்குப் படுதோல்வி கிடைத்த ஒரு நேரத்தில் அவருக்குக் குறிப்பிடத்தக்க பாராளுமன்றப் பெரும்பான்மை கிடைத்திருந்தது. அவரது பதவிக்காலம் முழுவதும் எவ்வித இடையூறுமின்றித் தொடர்ச்சியாக அவர் தமக்குச் சேவை செய்வாரென்பது அத்தனகலைத் தேர்தல் தொகுதி மக்களின் சட்டநிலைத்தகவு விருப்பு வேட்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆகவே அத்தனகலை மக்களின் இந்த சனநாயக விருப்பு வேட்கையைத் தோற்கடிப்பதற்கான பாராளுமன்றத் திட்டமொன்று இருந்தது. 1978 இல் ஆக்கப்பட்ட விசேட சனாதிபதி விசாரணைகள் ஆணைக்குழுச் சட்டம் இத் திட்டத்தின் முதற் படியாகும் . இவ் வேளையில் இச்சட்டவாக்கத்திற்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்தமைக்கு ஐந்து காரணங்கள் இருந்தன.
முதலாவதாக, பழிவாங்கல், அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு இச்சட்டம் விசேட சனாதிபதி ஆணைக்குழுவிற்கு அதிகாரமளிக்கின்றது. அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற பதங்களுக்குத் துல்லியமான சட்ட அர்த்தம் இல்லையென்பதும், அவை மயக்கமானவை, தெளிவற்றவையென் பதும் விசனமளிப்பதாயிருந்தது.
இரண்டாவதாக, இச்சட்டம் கடந்த காலத்தையும் அளாவிய பயனுறுதியைக் கொண்டிருந்ததோடு இவ்வாணைக்குழு வெறுமனே நிகழ்வுண்மைகளைத் தேடும் ஒரு அமைப்பாக இல் லாது, தண் ட வரிளைவுகளோடு d9n - tuu விதந்துரைப்புக்களைச் செய்யக் கூடிய ஒன்றாக விளங்கியது.
மூன்றாவதாக சட்டத் தில் நடவடிக் கை முறை வழிகாட்டல்களுக்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லாததோடு,
194

தனது சொந்த நடவடிக்கை முறைகளை வகுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை ஆணைக்குழு கொண்டிருந்தது. நான்காவதாக, சாட்சியம் குறித்த விதிகளை உதாசீனஞ் செய்வதற்கு ஆணைக் குழுவுக்குச் சட்டம் அனுமதி வழங்கியிருந்தது. மேன்முறையீட்டு உரிமை இருக்கவில்லைவு யென்பதும், சாதாரண வழக்குகளிற் பொருந்தக் கூடிய சாட்சியப் பாதுகாப்புகளை மீறுவனவாகிய சாட்சியங்களின் அடிப்படையிலமைந்த விதந்துரைப்புகள் மீது இறுதி முடிவு முத் திரை குத் தப்படும் என்பதும் பிரதியேகமாகக் கவலையளிப்பதாக இருந்தது.
ஆகவே பிரதித் தவிசாளர் அவர்களே! இத்தகைய ஒரு சட்டவாக்கத்தின் சட்டகத்தினுள் அமையும் ஒரு விசாரணையின் சட்ட விளைவுகள் குறித்து நாம் பெரிதும் விசனமுற்றிருந்தோம். இவ்விசாரணை அமர்வுகளின் நியாயபூர்வமான தன்மையை மதிப்பீடு செய்கையில் கெளரவ. நீதி மற்றும் அரசியல் அமைப்பு விவகார அமைச்சர் இத்தகைய பகுப்பாய்வுகளுக்கு இயைபான சட்ட முன்நிகழ்வுகள் குறித்த பல முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். நான் வெறுமனே, இந்நிகழ்ச்சிக்கு இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இடம்பெற்ற 'ரெக் எதிர் இன சமத்துவத்துக்கான குழு’ வழக்கில் பிரபுக்கள் சபைத் தீர்ப்பில் டிப்ளொக் பிரபுவின் வார்த்தைகளை நினைவு மீட்ட விரும்புகின்றேன். “ஓர் ஆணைக்குழுவென்பது தனது தத்துவங்களை நன்கறியப்பட்ட சட்டநிலைக் கோட்பாடுகளுக்கும், நியாய விளக்கத் தன்மைகளுக்கும், நடவடிக்கை முறைச் சீலங்களுக்கும் அமைவாகப் பிரயோகிக்க வேண்டிய பொது அதிகார சபையாகும். குற்றவியல் நீதி ஆணைக்குழுக்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை இதற்கு முந்திய ஒரு கடிதத்தில் குறிப்பிட்டது போன்று நீதிநெறிச் செயன்முறை அரசியல் நோக்குக்காக மலினப்படுத்தப்படும் போது இத்தகைய உயர்வான கோட்பாடுகள் பாதுகாக்கப்படுமென நாம் நம்பவில்லை” என்று டிப்ளொக் பிரபு கூறினார்.
195

Page 110
இவ் விடயத் தில் எமது நியாய உணர்வு மற்றும் நடவடிக்கைமுறை நீதி என்பவற்றைப் புண்படுத்திய வேறு அம்சங்களும் இருந்தன. 1978 பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முற்பட்ட விடயங்களை விசாரணை செய்யும் அதிகாரம் ஆணைக் குழுவுக்கு வெளிப்படையாக வழங்கப்படாத காரணத்தால் அதன்மீது மேன்முறையீட்டு நீதிமன்றம் தடைப் பேராணை ஒன்றை விதித்தமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நவம்பர் 20 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் பயனுறுதியைக் கடந்த காலத்தையும் அளாவும் வகையில் இரத்துச் செய்து இத்தகைய விடயங்களில் அதன் பேராணை நியாயாதிக்கத்தை மீயுயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் வகையில் அரசியல் சட்டத்துக்கான ஒரு திருத்தத்தை அரசு அறிமுகஞ் செய்தது. மேலும், திருமதி. பண்டாரநாயக்கா இச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட அடுத்தநாள் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம், சனாதிபதித் தேர்தல் சட்டம் என்பவற்றில், குடியியல் உரிமைகள் பறிக்கப்பட்டோர் தேர்தல்களின் போது உரையாற்றுவதையும், ஆதரவு தேடுவதையும் தடை செய்யும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இச்சட்ட மூலங்கள் எதிர்வரும் பாராளுமன்ற மற்றும் சனாதிபதித் தேர்தல்களில் எதிர்க்கட்சி பயனுள்ள விதத்தில் பங்கேற்பதைத் தடுப்பவை எனக் கூறி குடியியல் உரிமைகள் இயக்கம் அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக விளங்கிய திரு. அமிர்தலிங்கம் அவர்களும், திரு. சிவசிதம்பரம் அவர்களும் திருமதி. பண்டாரநாயக்கா அவர்களின் நிலையை ஆதரித்து ஆற்றிய நாவன்மை மிக்க உரைகள் பிரசித்தமானவை. வாக்கெடுப்பின் போது 139 வாக்குகள் பிரேரணைக்குச் சாதகமாகவும், 19 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. திருமதி. பண்டாரநாயக்கா வாக்களிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டார். இந்நிகழ்ச்சிக்கு 3 வருடங்களுக்குப் பின்னர் 1983 வன்செயல்களைத் தொடர்ந்து அரசியல் சட்டத்துக்கான ஆறாவது திருத்தம் கொண்டு வரப்பட்டபோது அதே விதமான தலைவிதிக்கு உள்ளாக இருந்த தமிழர் விடுதலைக்
196

கூட்டணியின் 14 அங்கத்தினர்களும் எதிர்த்து வாக்களித்தோரில் அடங்குவர். பாராளுமன்ற உறுப்பினர்களைக் குடியரசுக்கான ஒரு புதிய விசுவாசப் பிரமாணத்தைச் செய்யுமாறு கோருவதன் மூலம் அரசியலமைப்புக்கான ஆறாவது திருத்தம் வட கிழக்கு மக்களின் வாக்குரிமையைப் பறித்து அப்பிராந்தியத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இல்லாமற் செய்தது. பொது மக்கள் வாக்கெடுப்பையும், பாராளுமன்ற ஆயுள் நீடிப்பையும் தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்த்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆயினும் அவர்களது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்திய குறுக்கிடும் நிகழ்வாக அமைந்தது ஆறாவது திருத்தமாகும்.
ஆறாவது திருத்தத்தின் நாசகரமான விளைவுகள் குறித்துப் பல அரசியல் விஞ்ஞானிகள் எழுதியுள்ளனர். ஆயினும் 1980 இல் இத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்து, 1983 இல் தமது பாராளுமன்ற ஆசனங்களை இழந்த 14 அங்கத்தவர்களுக்கு ஏற்பட்ட பயங்கரமான தனிப்பட்ட அவலங்களை இங்கு நினைவு மீட்ட விரும்புகிறேன். அவர்களுள் நான்கு பேர் ஈவிரக்கமின்றிக் கொலை செய்யப்பட்டனர். வேறு இருவர் வெளிநாடுகளில் வாழும் போது மரணமடைந்தனர். இருவர் அரசியலிலிருந்து விலகி, அதிக நிம்மதியான மரணத்தைத் தழுவினர். இன்னுமொருவர் வெளிநாட்டுப் பிரயாணமொன்றுக்குச் சற்றுமுன்பாக மாரடைப்பினால் காலமானார். கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்புக் கோருவதால் இந்த உயிர்களை மீளப் பெற்றுக் கொள்ளலாம் என்பதாலோ, அல்லது வீண் விரயமாக்கப்பட்ட காலங்களை மீட்டுக் கொள்ளலாமென எண்ணியோ நான் இதைக் கூறவில்லை. சனாதிபதி ஜெயவர்த்தனாவின் மன்னிப்போ அல்லது இத் தீர்மானமோ திருமதி. பண்டாரநாயக்காவுக்கு அவரது வேதனை நிறைந்த, வீணாக்கப்பட்ட காலங்களைத் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை. இன்று எமது நோக்கம் திருமதி. பண்டார நாயக்காவுக்கு எதுவித அனுகூலத்தையும் வழங்குவதல்ல. மாறாக இப்பிரதிநிதித்துவ சபையின் தவறைப் பணிவோடு
197

Page 111
ஏற்றுக் கொள்ளுவதாகும். பிரதித் தவிசாளர் அவர்களே! இந்த விவாதம் பயனுள்ள ஒன்றாக வேண்டுமெனில் நீதிசார் செயன் முறையில் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு எம்மாலான அனைத்தையும் செய்தல் வேண்டும். விசேட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தில் அத்தோடு இயைபான ஏற்பாடுகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் ஒரு சட்டமூலத்தை அறிமுகஞ் செய்யுமாயின், நாம் அத்தகைய ஒரு நடவடிக்கைக்கு எமது மகிழ்ச்சிகரமான ஆதரவை நல்குவோம். நன்றி.
8 சித்திரை 1996
198

பீட்டர் கெனமன் : மனம் வருந்தாத பொதுவுடமைவாதி
பீட்டர் கெனமன் 1917 இல் பிறந்தார். அவரது முழு ஜீவியமும், வாழ்க்கைப் பணியும் அக்டோபர் புரட்சியால் ஊக்கம் பெற்ற மாபெரும் நிகழ்வுகளோடு பிரிக்க முடியாதவாறு இணைந்திருந்தன. அவர் லெனினை அச்சொட்டாகப் பின்பற்றியவர். அவர் சட்டத்திலும் நீதித்துறையிலும், பெரிதும் பிரகாசித்த, மேல் தட்டு ஒல்லாந்து - பறங்கியர் குடும்பத்தின் வழித்தோன்றல் ஆவார். உயர்நீதி மன்ற நீதிபதியாக விளங்கிய அவரது தந்தையார் ஆர்தர் கெனமன் மகனுக்கு ரோயல் கல்லூரியிலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் சலுகை பெற்ற ஆளும் வர்க்கத்தின் கல்வி கிடைக்க வழிசெய்தார். ரோயல் கல்லூரியில் இளம் கெனமனின் சாதனைகள் இது வரையில் ஈடிணையற்றவையாக விளங்குகின்றன. அவர் கல்லூரிச் சஞ்சிகையின்
பதிப்பாசிரியராகவும், மாணவர் இலக்கிய மன்றத்தின் தவிசாளராகவும், ரக்பி விளையாட்டுக்குழுத் தலைவராகவும் விளங்கினார். சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கம் கவிதை நடையில் இடம்பெற்றது. அவர் கல்விப் புலமைக்காகப் பல மாண்புறு பரிசுகளையும் , பொதுத் திறமைக் கான டோர்ன்ஹோஸ்ட் பரிசையும் வென்றார்.
இரு உலக யுத்தங்களுக்கிடைப்பட்ட, கொந்தளிப்பான நிகழ்வுகளைத் தோற்றுவித்த முப்பதுகளின் நடுப்பகுதியில் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். குமாரி ஜயவர் தன சமீபத்தில் சுட்டிக் காட்டியவாறு "இப் பல்கலைக்கழகம் மாற்றுக் கருத்தாளர்களையும், பிரசித்தி பெற்ற ஆசான்களையும் உருவாக்கியது. தத்துவஞானத்தில்
199

Page 112
பேர்ட்ரண்ட் ரஸல், விட்ஜென்ஸ்டீன் மற்றும் ஜீ.எம்.மூர் என்போரையும், விஞ்ஞானத்தில் ஜே.பீ.எஸ். ஹல்டேனையும், பொருளியலில் மோரிஸ் டொப் மற்றும் கெய்ன்ஸ் என்போரையும், உருவாக்கியது. 1930 களின் ஆரம்பக் கட்டத்திலான பொருளாதார நெருக்கடி, ஜேர்மனியில் பாசிஸத்தின் வளர்ச்சி, ஸ்பானிய சிவில் யுத்தம், அபிசீனியாவில் முசோலினியின் ஆக்கிரமிப்பு என்பவை மாணவர்களை அரசியல் மயப்படுத்தின. கேம்பிரிட்ஜில் அவரது சக மாணவர்களுள் ஹெடி சைமன், எரிக் ஹொப்ஸ்போம், வியன்னா யூத அகதிகள், மோகன் குமாரமங்கலம், பீ. கந்தையா, மற்றும் என். வைத்தியலிங்கம் என்போர் அடங்கியிருந்தனர். மார்க்ஸிஸவாதிகள் செயற்துடிப்பாக விளங்கியதோடு கேம்பிரிட்ஜின் தொழில் மற்றும் சோஷலிஸ் சங்கங்களையும், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் துடிப்பாக ஈடுபட்டிருந்த தெற்காசிய மாணவர் அனைவரையும் ஒரு குழுவாக இணைத்த மஜ்லிஸையும் கைப்பற்றினர். அடுத்தடுத்து கேம்பிரிட்ஜ் மாணவர் சங்கத்தின் தவிசாளர்களாக பீட்டர் கென மனும் , மோகன் குமாரமங்கலமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய ஒரு தனிப்புகழை ஈட்டிக் கொண்ட இரண்டாவது இலங்கையர் பீட்டர் கெனமன் அவர்களாவார். அவர் 1939 இல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 1939 புரட்டாதியில் அஸ்கோனா, சுவிட்சர்லாந்தில் ஹெடி சைமனைத் திருமணம் செய்து கொண்டார்.
அவர் இலங்கைக்குத் திரும்பி வந்து ஐக்கிய சோஷலிஸக் கட்சியில் இணைந்தார். அது கலைக்கப்பட்ட போது 1943 ஆடி 3 ஆம் திகதி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தாபக அங்கத்தவருள் ஒருவரானார். ஒரு சிறிது காலம் இலங்கை டெய்லி நியூஸ் பத்திரிகையில் முன்னணி எழுத்தாளராகத் திகழ்ந்தார். எனினும் விரைவிலேயே கொழும்புத் துறைமுகத் தொழிலாளரை அணிதிரட்டுதல், அரசியல் மயப்படுத்தல் போன்ற கட்சி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டார். பீட்டரும், தானும் சேர்ந்து ஈடுபட்ட அரசியல் வேலையின் தன்மை குறித்த ஓர் ஆழமான பார்வையை அவரின்
200

மனைவியார் ஹெடி அவர்களே வழங்குகிறார். "எமது வேலையில் ஈடுபாடு காட்டிய பலர் நடுத்தர வர்க்கத் தோராகவும் ஆங்கிலக் கல்வி பெற்ற மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும், எழுதுவினைஞர் களாகவும் விளங்கினர். இக் காரணத்தால் நான் கூட்டங்களில் ஆங்கிலத்தில் உரையாற்ற முடிந்தது. சோவியத் யூனியன் நண்பர்கள் நூல் நிலையத்திலும், வாசிப்பு நிலையத்திலும் நான் பணியாற்றி சஞ்சிகைகள், துண்டுப் பிரசுரங்கள் என்பவற்றின் வெளியீட்டில் உதவி புரிந்தேன். அத்தோடு அங்கத்துவத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு கொழும்புக்கு வெளியே வேறு நிலையங்களுக்கும் பிரயாணம் செய்தேன்.” (குமாரி ஜயவர்தன, ஹெடியை நினைவுகூர்தல், பாகம் 4, பிராவ்தா 27).
1947 இல் பீட்டர் கெனமன் பல அங்கத்தினர் தொகுதியாகிய கொழும்பு மத்தியைப் பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற அங்கத்தவராகினார். 1947-1977 காலகட்டத்தில் இடையீடின்றி, இத் தொகுதியின் பிரதிநிதியாக விளங்கினார். அவர் ஒரு பண்பட்ட, சிந்தனையாற்றல் நிறைந்த பேச்சாளர். பிறருக்கு உறுத்தலற்ற நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஒரு பிரச்சினையை ஆழமாக ஆய்வு செய்து, தெளிவாகப் பேசுவார். அவரது பேச்சு எளிமையாகவும், விசுவாசக் காத்திரம் மிக்கதாகவும், பயனுறுதி கொண்டதாகவும் அமைந்திருக்கும். அவரது திரட்டிய உரைகளும், கட்டுரைகளும் பின்னர் மக்கள் பிரசுராலயத்தினால் வெளியிடப்பட்டன. பாராளுமன்றச் செய்தி நிருபர் அஜித் சமரநாயக்க சமீபத்தில், “திரு.என்.எம். பெரேரா சுற்றிவளைக்காமல் ஆக்கிரமிப்பாகப் பேசுபவர்; கொல்வின் (ஆர்.டி. சில்வா) அவர்களின் பேச்சு பகட்டாகவும், வார்த்தை ஜாலங்களுடனும் விளங்கும்; பீட்டர் கெனமனோ பிரித்தானிய பல்கலைக்கழக விவாதங்களின் பாணியில் மின்னல் பளிச்சிடுவது போன்று மேதாவிலாசத்துடனும், நுண்மதித்திறனுடனும் உரையாற்றுவார்” எனக் கூறினார்.
அவர் தேசியப் பிரச்சினை குறித்து லெனினிஸக் கோட்பாடுகளின் அடிப்படையிலமைந்த, உறுதியான கொள்கையைத் தொடர்ச்சியாகக் கைக்கொண்டு வந்தார்.
201

Page 113
“இலங்கையின் சகல தேசிய இனங்கள் மற்றும் சிறுபான்மையினங்களின் அபிவிருத்திக்குரிய பூரணமான, சமத்துவமான வாய்ப்புகளை உறுதி செய்வதன் மூலம் மாத்திரமே ஒர் ஐக்கிய, சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்” என்னும் தீர்மானத்தை 1940 ஐப்பசி 15 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற பாரிய மக்கள் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றுவதை அவர் உறுதி செய்தார். தேசிய இனங்கள் பிரச்சினையில் லெனினின் போதனைகளுக்கிணங்க, எமது சொந்த தேசியப் பிரச்சினைக்குரிய சரியான தீர்வுகளை நாம் வகுத்துக்கொள்ளக் கூடியதாக இருந்தது என்று ஒரு தடவை கூறினார். தமது வேறொரு கட்டுரையில் பின்வருமாறு கூறினார். "தமிழ்ப் பிரதேசங்களுக்குப் பிராந்திய சுயாட்சியுடன் கூடிய ஐக்கிய இலங்கை ஒன்றைப் பேணிப்பாதுகாப்பதே தீர்வு என்பதே எமது அபிப்பிராயமாகும்." 1956 இல் பாராளுமன்றத்தில் அரச கரும மொழிச் சட்டவாக்க விவாதத்தின் போது அறிவுத் தீட்சண்யமிக்க பங்களிப்பைச் செய்து அவர் ஆற்றிய உரையில் 1956 இல் வன்செயலின் கோரப்பிடியில் சிக்கிய தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து துணிச்சலாக வாதிட்டார்.
பீட்டர் தமது வாழ்நாளின் பிற்பகுதியில் ஒரு தீர்மானகரமான அரசியல் செயற்பாட்டாளராக அன்றிக் கூடுதலாகப் பார்வையாளராகவே விளங்கினார். அவர் அடக்கமாகவும், தாம் வளர்ந்த சலுகை பெற்ற ஆளும் வர்க்க புத்திஜீவி மற்றும் கலாசாரப் பின்னணியைப் பெரிதுபடுத்தாமலும் இருந்த போதிலும் நூல்கள், கருத்துக்கள், சங்கீதம் மற்றும் ஒவியம் போன்றவற்றில் ஆர்வத்தைத் தொடர்ந்தும் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சிச் சஞ்சிகையான "போர் வார்ட்” அவரது அறிவாழ மிக்க அரசியல் கட்டுரைகளைத் தொடர்ந்தும் தாங்கி வெளிவந்தது.
பீட்டர் கென மனின் மரணம் 1997 தை 23 ஆம் திகதி, அநேகமாக 1937 இல் அவர் பிரித்தானியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 60 வருடங்களுக்குப் பின்னர், சம்பவித்தது. சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் பரிணாம
202

வளர்ச்சியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இடதுசாரித் தலைவர்கள் தலைமுறையில் அவர் அநேகமாக இறுதி நபராவார். அவர் இடதுசாரி இயக்கத்தினுட் கவரப்பட்டது உண்மையான புத்திஜீவி விசுவாசக் காத்திரத்தினாலன்றி உரிமைகள் பறிக்கப்பட்ட உணர்வினால் அன்று. அவர் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தின் இலட்சியத்துக்கு விசுவாசமாக இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியின் தந்தையாகிய தலைவர் எஸ்.ஏ. விக்கிரமசிங்க குறித்து அவர் வழங்கிய கருத்துரைகள் அவருக்கும் பெரிதும் பொருந்துவனவாகும். "அவர் அடக்கத்துடனும், அமைதியான பேச்சுடனும் கூடிய ஒருவர். அவரின் ஒழுக்க நேர்மை கேள்விக்கிடமற்றது. இலட்சியத்துக்கான அவரின் அர்ப்பணிப்பு உறுதியானது. வேறு சிலர் செய்தது போன்று அவர் தடுமாறவோ, ஈடாட்டம் கொள்ளவோ, கைவிடவோ, கழுத்தறுப்புச் செய்யவோ இல்லை. 1920 களின் இறுதிப் பகுதியில் இந்த நாட்டில் அவர் ஏற்றி வைத்த அரிவாளும் சம்மட்டியும் இலங்கும் செம் புரட்சிக் கொடியின் கீழேயே அவர் வாழ்ந்து, பணிசெய்து மறைந்தார்.”
4 d 1997
203

Page 114
சைமன் காசிச் செட்டி : கற்றுணர்ந்த பேரறிஞர்
எதுவித சந்தேகமுமின்றி சைமன் காசிச் செட் டிக்கு உரியதாகவிருந்த புகழும், அங்கீகாரமும் கடந்த ஆறு வருட காலத்திலேயே அவருக்குக் கிடைத்தன. 1983 ஒக்டோபர் 18 ஆம் திகதி, பெருமளவுக்கு அன்றைய பாராளுமன்ற அங்கத்தவர் திரு. நைனா மரிக்கார் அவர்களின் முன் முயற்சியின் பேரில், புத்தளம் புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதிச் சுவரில் சைமன் காசிச் செட்டிக்குப் புகழாரம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. 1984 ஒக்டோபர் 19 ஆம் திகதி அன்றைய நீதியமைச்சர் (கலாநிதி) நிஸ்ஸங்க விஜேரத்ன ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார். அது அனேகமாக அன்னாரின் புத்திஜீவிப் புலமைச் சாதனை குறித்த ஒரு திண்ணிய மதிப்பீடாக அமைந்தது. 1988 இல் ஆசிய கல்விச் சேவைகள் அமைப்பு அன்னாரின் "தமிழர் மத்தியில் ஜாதிகள், வழக்கங்கள், பண்பாடுகள் மற்றும் இலக்கியங்கள்” என்னும் நூலைப் பிரசுரம் செய்தது. 1989 இல் பி.எல். டபிள்யூ அன்ட் கம்பனி, புதுடில்லி நவராங் அமைப்புடன் சேர்ந்து, கொட்டா திருச்சபை அச்சகத்தினால் 1834 இல் முதன் முதலாகப் பிரசுரிக்கப்பட்ட 'சிலோன் கசெட்டியர்” இதழை மீள்பிரசுரம் செய்தது. வெளியீட்டாளர்களுக்கு ஒன்றரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாகப் பெரும் சவாலாக விளங்கிய இப்பிரசுரத்தைக் கையாளுவதில் திரு. மேர்வின் காசிச் செட்டி அவர்கள் வகித்த பாத்திரம் தீர்க்கமான ஒன்று என்பதை நாம் அனைவரும் நன்றியுணர்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
காசிச் செட்டி 1838 யூன் 29 ஆம் திகதி சட்டமன்ற நியமனத்துக்கு பெயர் குறிக்கப் பெற்றார். 1845 இல் அவர்
204

ராஜினாமாச் செய்ததையடுத்து, சிவில் சேவைக்கும் அதன் பின்னர் விரைவிலேயே சிலாபம் மாவட்ட நீதிபதியாகவும் நியமனம் பெற்றார். குடியேற்றவாத இலங்கையின் பொதுவாழ்வில் சுதேச மக்களின் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்த ஒரு காலத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், நீதிபதியாகவும், சிவில் உத்தியோகத்தராகவும், முதலியாராகவும் காசிச் செட்டியார் வகித்த முக்கியமான பதவிகள் அவரது ஒப்பற்ற வாழ்க்கைப் பணியை உன்னதமான ஒன்றாக்கின. சட்டப் பேரவையிலும், மேலும் கருத்து மோதல்களை உருவாக்கிய அவரின் எழுத் தாக்கங்களிலும் சமூகச் சீர் திருத் தங்களை வலியுறுத்தியதோடு, சுதேசிகள் தமது சமுதாயத்தின் ஆட்சியியலில் முறைப்படி பங்கேற்கும் வகையில் பொதுச் சேவையில் அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படல் வேண்டுமென்றும் வாதாடினார். இவை குடியேற்றவாத ஆட்சியின் தவிர்க்க வொண்ணாத் தன்மையை இலங்கையின் சலுகை பெற்ற வர்க்கம் தட்டிக்கேட்காத ஒரு காலத்தில் தேசிய விழிப்புணர்வின் தோற்றமும், தெளிவான வெளிப்பாடும் மிக மிக ஆரம்பக் கட்டத்திலிருந்த ஒரு காலத்தில், மிகவும் முற்போக்கான கருத்துக்களாகும். அவர் சமூக விடயங்களோடு தம்மைத் தொடர்புபடுத்திக் கொண்டதோடு, கற்பிட்டியில் ஒரு தமிழ் பாடசாலையைத் தாபித்து, ஒரு அங்கிலிக்கன் தேவாலயத்தையும் நிறுவ உதவினார்.
எவ்வாறாயினும், ஒரு சுதேச புத்திஜீவி மரபைத் தாபித்த புலமையாளர் என்ற வகையிலேயே அவரின் நினைவு இன்றும் நின்று நிலவுகிறது. விதிமுறையான ஒரு இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் கல்வியைப் பெறாத நிலையில் ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், பாளி, அரபு மொழிகளைத் தாமே தேடிக் கற்றுக்கொண்டதோடு, லத்தீன், கிரேக்க, போர்த்துக்கேய மற்றும் டச்சு மொழிகளில் நியாயமான அளவு அறிவையும் பெற்றுக் கொண்டார். ஒரு பரந்த வசதிகள் கொண்ட நூல் நிலையம் இல்லாதிருந்தும், புலமையாளர் சமூகம் ஒன்றின் நட்போ, ஆதரவோ இல்லாத
205

Page 115
நிலையிலும் இவ்வாராய்ச்சி மற்றும் எழுத் தாக்க வெள்ளப்பெருக்கு எவரையும் பிரமிக்க வைப்பதாகும். 50 க்கு மேற்பட்ட புலமையாளர் மற்றும் இலக்கிய சஞ்சிகைகளில் மூன்று பிரதான எழுத்தாக்கங்களும், எண்ணற்ற கட்டுரைகளும் வெளிவந்தன. "தமிழர் மத்தியில் சாதிகள், வழக்கங்கள், பண்பாடுகள் மற்றும் இலக்கியங்கள்” பின்னர் 1934 இல் வெளியிடப்பட்டது. அது தமிழ் மக்களின் கலாசாரம், மத நம்பிக்கைகள் மற்றும் சாதிக் கட்டமைப்புக் குறித்த ஒரு தனிப்பெரும் ஆக்கமும், முதல் பாரிய சமூகவியல் ஆய்வும் ஆகும். இது தொடர்ந்தும் சமகாலப் புலமையாளராலும், ஆய்வியலாளராலும் அங்கீகரிக்கப்பட்டு, எடுத்தாளப்பட்டு வருகின்றது. அது தமிழ் மக்களின் சமூக, கலாசார வரலாறு, மற்றும் நம்பிக்கை முறைமைகள் குறித்த ஆழமான தகவல்களின் கருவூலமாகும்.
இரண்டாவதாக 1934 இல் வெளியிடப்பட்ட சிலோன் கசெட்டியர் காசிச் செட்டியின் மாபெரும் சிருஷ்டியாகும். அது ஒரு மகத்தான ஆய்வு வேலையும், புலமைசார் அர்ப்பணிப்பு ஒழுகலாறு, மற்றும் புத்திஜீவி உணர்வூக்கத்தின் விளைபொருளுமாகும். சமீபத்தில் மறுபதிப்புச் செய்யப்பட்ட ஒரு பிரதியை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. அது தேசம் மற்றும் மக்கள் குறித்த இதற்கு முந்திய ஆய்வுகள் எவற்றையும் விட அனைத்துமடங்கும் தன்மை மற்றும் புத்திஜீவி விடய ஆழம் என்பவற்றில் சிறந்து விளங்குவதும், வாசகரைக் கவருவதுமாகும் . இந்த ஆய் வோடு பின்னிணைப்பாகக் காசிச் செட்டி "தமிழ் சாதியினரை வகுப்பினப்படுத்துதல்”, “முக்குவர் மற்றும் சோனகரின் வழக்கங்களும், பண்பாடுகளும் ” போன்ற விடயங்களிலான கட்டுரைகளையும் சேர்த்துள்ளார். முக்குவர்கள் கேரளாவின் நாயர்களோடு பகிர்ந்து கொள்ளுவது போலத் தோன்றும் மரபுரிமையாகச் சொத்துக்களை வரித்துக் கொள்ளும் விடயத்தில், தாய்வழியுரிமைக் கோட்பாடுகளிற் காணப்படும் முக்கியமான சமாந்தரத் தன்மைகளுக்கு முதலில் கவனத்தை ஈர்த்தது காசிச்செட்டி அவர்களே. சிலோன் கசெட்டியர்
206

கல்வித்துறைகளை இணைக்கும் முன்னோடி ஆய்வாகும். இன்று அது வரலாற்றாசிரியர், சமூகவியல் ஆய்வாளர், மனித நாகரீகவியலாளர் மற்றும் புவியியலாளர் என்போரின் கூட்டு முயற்சியின்றிச் சாத்தியமற்ற ஒன்றாகும்.
மூன்றாவது படைப்பாகிய தமிழ் மெய்ஞானம்", தமிழ் இலக்கியக் கருவூலங்கள் மற்றும் ஆசான்கள் குறித்த ஓர் ஆய்வாகும். சமகால எழுத்தாளர் குறித்தும் அது ஆய்வு செய்வதோடு, இலக்கிய வரலாறு குறித்த முதல் பாரிய ஆய்வாகவும் விளங்குகிறது. அது காசிச் செட் டி சென்னையிலிருந்து பெற்றுக் கொண்ட நூல்களின் திரட்டு ஒன்றை அடிப்படையாகக் கொண்டது. "சிலோன் மகசீன்", "சிலோன் ஜெர்னல்" போன்ற இலக்கிய சஞ்சிகைகளுக்கு அவரின் பங்களிப்புகளின் மதிப்பீடும், 1845 இல் தாபிக்கப்பட்ட ரோயல் ஆசியாட்டிக் சமாஜத்தில் பத்து ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து (இலங்கைக் கிளை) அவர் வகித்த பாத்திரமும், "உதயாதித்த” என்னும் தமிழ் செய்திப் பத்திரிகை அவரால் தாபிக்கப்பட்டமையும் ஆழ்ந்து நோக்கற்பாலன.
சைமன் காசிச்செட்டி தேசத்தின் பொது வாழ்வில் ஒரு ஆபரணமாக இலங்கியதாகக் கூறப்படுகின்றது. இப் பிராந்தியத்தின் சிந்தனைகள் மற்றும் புலமை வரலாறு என்னும் பரந்த நிகழ்வுத் தொடர்பில் அவரை வைப்பதே மேலும் உசிதமானதென நான் எண்ணுகிறேன். எட்வார்ட் சயீட் அவர்களால் 'கழகக் கல்விக் கீழைத்தேயவாதம்” எனக் குணவியல்புப்படுத்தப்பட்ட காலனித்துவவாத நிர்வாகிகள், திருப்பணியாளர் மற்றும் தனிப்பட்ட எழுத்தாளரின் புலமை மரபிலிருந்து பெரிதும் வேறுபட்டுச் செல்பவை காசிச் செட்டியின் ஆக்கங்கள். மேலே குறிப்பிட்டோரின் ஆக்கங்கள் மேலைத்தேயத்தவரின் கீழைத்தேயம் குறித்த கருத்துக்களைப் பிரதிபலித்தன. அவை சிலவேளைகளில் இலைமறைகாயாகவும், சிலவேளைகளில் வெளிப்படையாகவும் ஐரோப்பிய மேன்மை மற்றும் மேற்கின் கலாசார ஆதிக்கம் என்பவற்றின்
207

Page 116
செல்வாக்கைக் கொண்டிருந்தன. இதன் இயல்பான விளைவாகவே இந்த மரபினுள் இடம்பெற்ற ஆய்வுகள் மற்றும் எழுத்தாக்கங்கள் கிழக்கை ஒரு மாற்றமுறாத ஸ்தூலப் பொருளாக நோக்கும் தவறான கருத்தாக்கங்கள், திரிபுகளினால் மாசுபடுத்தப்பட்டிருந்தன. காசிச்செட்டி இத்தகைய மரபு மற்றும் உரையாடல் பாணியிலிருந்து ஒரு விலகலைப் பிரநிதித்துவம் செய்தார். இந்த நாட்டு மக்களின் சமூக நிறுவனங்கள், வழக்கங்கள் மற்றும் நம்பிக்கை முறைமைகள் குறித்த அவரது ஆய்வுகள் சுதேசியப் புலமையாளர் ஒருவரின் உணர்வூக்கத்தையும், அதிகார முத்திரையையும் பிரதிபலித்தன. அவரது பிரதான பணிகள் மேற்கொள்ளப்பட்ட காலம் சென்னை, பம்பாய் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்படுவதற்குப் பல தசாப்தங்கள் முன்னராகும். ஆழ்ந்த கல்விப் புலமை, பகுப்பாராய்வுச் செம்மை மற்றும் ஈடுபாடுகளின் வீச்சுக் குறித்து உபகண்டத்தின் வேறெந்தப் பகுதியிலும் அவருக்கொப்பிட எவருமிலர்.
இரண்டாவதாகக் காசிச் செட்டி காலனித்துவவாத கால மற்றும் சுதந்திரமான இலங்கையின் புத்திஜீவி மற்றும் கலாசார வாழ்வின் நகரம்சார் தன்மையிலிருந்து விலகிச் செல்லும் போக்கைக் கொண்டிருந்தார் காசிச் செட்டி. இன்றுபோல் அன்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் புத்திஜீவிப் புலமை நிலையங்களிலிருந்து வெகு தூரத்துக்கப்பாலிருந்த கற்பிட்டியில் பணிபுரிந்தார். அவர் காலனித்துவவாத நிர்வாகிகளான ஜோர்ஜ் ரேணுரர், தேசாதிபதிகளாகிய ஹோர்ட்டன், மக்கென்ஸி மற்றும் சேர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் போன்றோரின் பரிவாதரவைப் பெற்றுக் கொண்ட போதிலும் பெருமளவில் அவர் தனிமைப் படுத்தப்பட்டவராகவே பணிசெய்தார். இதே போன்று இன்றும் பல காசிச் செட்டிகள் மாகாணங்களில் நூல்நிலையங்களோ அல்லது வேறு எந்தவிதமான ஆதரவோ இன்றி ஏக்கப் பெருமூச்சுடன் வாழ்கின்றனர். இச் சமமின்மைக்கு நிவாரணங் கண்டு, இவர்களின் முழுப் புத்திஜீவிச் சாத்தியவளமும், சிருஷ்டிகர கற்பனாவளமும் மலர்ந்து,
208

பொலிவுறக் கூடிய வகையில் செயலாற்றுவதே காசிச் செட்டிக்குச் செய்யக்கூடிய அதியுன்னதமான அஞ்சலியாகும்.
மூன்றாவதாக தமிழர், முக்குவர், சோனகர், மற்றும் ரொடிய சமூகவியல் குறித்த தமது ஆய்வுகள் மூலம் எம்மவர் எமது மண்வாசனையை உணரவைத்தார். இதன் மூலம் எமது கலாசாரங்களின் பல்லினப்பாங்கு ஒரு முக்கியமான வரலாற்றுக் கொடை என்பதையும், ஒருவரையொருவர் அறிந்து கொள்ளும் தொடர்ச்சியான வாய்ப்புகளை அது வழங்கி நிற்கிறதென்பதையும் உணர்த்தினார். காசிச் செட்டி, எமது காலத்து இலங்கையர் எவருமே செய்யாத அளவுக்கு எம்மை நாமே கண்டுபிடிப்பதற்கு உதவினார். இக் கலாசார மறுமலர்ச்சிச் செயன்முறையில் எமது வரை வெல்லைகளை வெற்றி கொண்டு முன்னேற உதவினார்.
1989 மே 22 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முத்திரை வெளியீட்டுப் பணியகம் சைமன் காசிச் செட்டியின் நினைவாக முத்திரை வெளியிட்டு வைத்த சந்தர்ப்பத்தில் ஆற்றிய உரை.
209

Page 117
வில்லியம் ஐவர் ஜென்னிங்ஸ் - சட்டமும் அரசியலமைப்பும்
வில்லியம் ஐவர் ஜென்னிங்ஸ் இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் எழுத்தறிவற்ற தச்சுத் தொழிலாளியாகிய வில்லியம் ஜென்னிங்ஸ் அவர்களுக்கும், ஆடைத் தொழிற்சாலையொன்றில் தையல்காரியாகிய எலியனோருக்கும் மகனாகப் பிறந்தார். 64 ஆவது வயதில் அவர் மரணமடைந்த வேளையில் ஆங்கிலச் சட்டம் குறித்த டவுணிங் பேராசிரியராகவும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ட்ரினிட்டி மண்டபத் தலைமை ஆசானாகவும், பொதுமக்கள் சட்டம், அரசாங்கம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத் தத்துவம் குறித்த 13 பிரதான நூல்களினதும், எண்ணிறந்த கட்டுரைகளினதும் ஆசிரியராகவும் விளங்கினார். அவை எவ்வளவுதான் சீரிய சாதனைகளாக விளங்கிய போதிலும் இன்று காலைப் பொழுதில் எமது கவனத்தை அவை மாத்திரம் ஈர்க்கவில்லை. ஒவ்வொரு சட்டப் புலமையாளரும் அல்லது அரசியலமைப்புச் சட்ட அறிஞரும் முத்திரை வெளியீட்டுப் பணியகத்தாலும், அஞ்சல் மாஅதிபரினாலும் கெளரவிக்கப்படுவதில்லை.
1940 - 1955 வரையிலான தமது வாழ்வின் மிகவும் ஆக்கபூர்வமான 15 வருடகாலப் பகுதியை அவர் இலங்கைக்காக அர்ப்பணித்து, பல்கலைக்கழகக் கல்லூரியின் அதிபராகவும், இலங்கைப் பல் கலைக் கழக உபவேந்த ராகவும் , அரசாங் கத்துக் கு அர சரியலமைப் புச் சட் ட மதியுரையாளராகவும் சேவையாற்றியமையால் அவரை நாம் அக்கறையுடன் நினைவு கூருகிறோம். ஜென்னிங்ஸ் இன்றும், அன்றும் முரண்பாடுகள் நிறைந்த ஒரு மனிதராவார். அவர் திகைப்புறு பாணியில், வெளிப்படையாகப் பேசும் ஒருவராவார்.
210

எமது மாயைகளுக்குக் குழிபறிப்பதில் நைப்போல் போன்ற இயலுமையைக் கொண்டிருந்தார். மிகவும் ஆவேசமாக வார்த்தைக்கு வார்த்தை திருப்பித்தாக்கும் பதில்கள் வராதபோது பெரிதும் ஏமாற்றமடையும் இயல்பும் அவரிடமிருந்தது. இலவசக் கல்வியையும், தாய்மொழியைப் போதனா மொழியாக்குவதையும் அவர் எதிர்த்தார். தேசம் தேர்ஸ்டன் வீதியிலுள்ள ஒரு சோலையைத் தவிர ‘ஒரு கலாசாரப் பாலைவனம்' என்று கூறினார். பரிணமிக்கும் ஒரு தேசத்தில் வளர்ச்சியுற்றுவந்த கலாசார விழிப்புணர்வு, தேசிய மற்றும் குடியேற்றவாத எதிர்ப்புச் சக்திகளுக்குப் பகைவராக விளங்கினார். அப்படியானால் எமது ஏகாதிபத்திய, கடந்த கால எச்ச சொச்சம் ஒன்றுக்குப் புத்துயிரளிப்பதற்கு முத்திரை வெளியீட்டுப் பணியகம் முயற்சிசெய்ய வேண்டிய அவசியம் என்ன? இச்சந்தர்ப்பத்தில் ஜென்னிங்ஸ் அவர்களை நாம் நினைவுகூருவதற்குப் பொருத்தமான மூன்று காரணங்கள் உள்ளன.
முதலாவதாகப் பேராதனை வதிவுப் பல்கலைக்கழகத்தை உயர்கல்வி நிலையமாக அபிவிருத்தி செய்தமைக்காக நாம் ஜென்னிங்ஸ் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், இலங்கை ஒரு நவீன தேச அரசாகப் பரிணமிப்பதற்குமிடையில் ஒரு நெருங்கிய பிணைப்பு இருக்கவேண்டிய தேவையை நன்குணர்ந்து கொண்டார். பல்கலைக்கழகம் சமூக உருவாக்க மற்றும் தேசநிர்மாணச் செயன்முறைக்குச் சக்தியூட்டுவதாகவும், புத்திஜீவிக் கூர்முனையைக் கொடுப்பதாகவும் இருத்தல் வேண்டுமென்று ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். கல்வி நிலையமொன்றை அபிவிருத்தி செய்வதில் அவரது புத்திஜீவி மற்றும் உணர்வுரீதியான அர்ப்பணத்தின் காத்திரம், பேராதனைப் பல்கலைக்கழகம் பொதுநலவாயத்தில் ஒரு முன்னணிப் பல்கலைக்கழகமாகும் சாத்தியவளத்தை அபிவிருத்தி செய்தது. அதன் சட்ட, வரலாற்று, ஆங்கில மற்றும் சமூகவியல் துறைகளைச் சேர்ந்த பட்டதாரிகள் உலகின் வேறு எப்பகுதியிலுமுள்ள பல்கலைக்கழகப்
211

Page 118
பட்டதாரிகளுக்கு ஈடாக விளங்கினர். வளாகத்தின் புவியியல் அமைவு, பதவியினரின் ஊதியக் கொடுப்பனவுகள், கற்பித்தல் புலமை, அல்லது மாணவர் பிரச்சினைகள் எதுவுமே அவரின் கவனத்துக்குத் தப்பவில்லை. சட்டப்பிரிவுக் கற்கைநெறிகளில் அரசியலமைப்புச் சட்டம் , மற்றும் இலங்கையின் சட்டமுறைமைகள் குறித்துப் போதித்தார்.
இன்று நாம் ஒரு முழுச்சுற்றுவட்டத்தில் சென்றுள்ளது போலத் தோன்றுகிறது. பரந்த சமூக நெருக்கடிகள் பல்கலைக்கழகங்களைச் சூழ்ந்துள்ளன. பல்கலைக்கழகக் கல்வியின் இலட்சியங்கள், குறிக்கோள்கள் மற்றும் உள்ளடக்கம் குறித்து வாதை நிரம்பிய மீள்மதிப்பீடு ஒன்றைச் செய்வதில் நாம் ஈடுபட்டுள்ளோம். பல்வேறு பிரச்சினைகளில் ஜென்னிங்ஸ் தவறான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அவர் பல்கலைக்கழகக் கல்வியைச் சுற்றிக் கட்டியெழுப்பிய சலுகைபெற்ற வர்க்கப் புத்திஜீவி மகத்துவத்தை அவரின் மாணவர்களே வினாவெழுப்பி நிராகரித்தனர். ஆயினும் சமகால நெருக்கடிகளோடு மிகவும் இயைபுடைய, மூன்றாம் நிலைக்கல்வி குறித்த ஜென்னிங்ஸின் எண்ணக்கருவாக்கத்துக்கு வாழ்வாதாரமான முக்கியத்துவம் கொண்ட ஒர் இலட்சிய சிந்தனை இருந்தது. இது கழகக்கல்வி மேன்மைக்கான நாட்டம் குறித்த அவரது உணர்ச்சிகரமான நம்பிக்கையாகும். இத்தேடல் விடயத்தில் விட்டுக்கொடுப்பு அல்லது அறவே அதைக் கைவிடல் ஒரு பல்கலைக்கழகத்துக்கான நோக்கத்தையே மறுதலிப்பதாகுமென அவர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்.
நான் வேறொரு சந்தர்ப்பத்தில் எமது சமுதாயத்தின் வரலாற்றில் "உள்ளடக்கக் கணம்” எனக் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஜென்னிங்ஸ் வகித்த முக்கியமான, வாழ்வாதாரமான பாத்திரமே நாம் அவரை நினைவு கூருவதற்கான முறையான இரண்டாவது காரணமாகும். இவை சமூக, அரசியல் மற்றும் தத்துவார்த்தச் சக்திகளின் கூட்டு ஒன்று, அரசியல் மற்றும் அரசியலமைப்பு விடயங்களில்
212

அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு திடசித்தங் கொண்டு நிற்பது போல் தோன்றும் சில சந்தர்ப்பங்களாகும். ஜென்னிங்ஸ் அரசியல் அதிகாரத்தைக் கைமாற்றுவதிலும், 1948 அரசியலமைப்புத் திட்டத்தை வரைவதிலும் பெரிய பாத்திரத்தை வகித்தார். G3F ni Giot_urf? அறிக்கைக்கு அடிப்படையாக அமைந்த 1944 ஆம் ஆண்டின் அமைச்சரின் வரைபு அநேகமாக முழுவதுமே ஜென்னிங்ஸ் அவர்களால் வரையப்பட்டிருந்தது. ஆகவே 1948 அரசியலமைப்பு மேலும் பொருத்தமான முறையில் “ஜென்னிங்ஸ் அரசியலமைப்பு" என அழைக்கப்படலாம் என்னும் நியாயமான முடிவுக்கு ஒருவர் வரமுடியும். அது அநேகமாகக் கால்நூற்றாண்டுக்காலம் நிலைத்த ஒரு அரசியலமைப் பாகும் . ஜென் னிங் ஸ் அவர் களின் அரசியலமைப்பு இலட்சிய தரிசனம் தெளிவாகவே குறைபாடுகளைக் கொண்டிருந்தது. சமூகத்தின் பன்மைத்துவக் குணவியல்புக்கு ஈடுகொடுக்கக்கூடியதும், பயனுறுதிமிக்க அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை அபிவிருத்தி செய்வதுமான அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கு அவர் எந்த விதமான முயற்சியும் எடுக்கவில்லை. நடைமுறைப்படுத்தக் கூடிய உரிமைகள் சாசனம் ஒன்றையும் அவர் உள்ளடக்கவில்லை. ஆயினும் பகிரங்க சேவையின் சுதந்திரம், மற்றும் நீதிச்சேவையின் சுதந்திரம், இரண்டாவது சபை அல்லது பாராளுமன்ற முறைமையின் மறுமலர்ச்சி குறித்த ஆலோசனைகள் முன் வைக்கப்படும் பொழுது நாம் நாடிப்பெற்றுக் கொள்ளுவது 1948 அரசியலமைப்பின் கருத்துக்களையும், அனுபவங்களையுமே எனத் தோன்றுகிறது. ஒர் அந்நிய, அரசியலமைப்பு மாதிரியைத் திணித்தமை குறித்து தீவிர விமர்சகர்கள் கூட ஒரு மாற்று அரசியலமைப்பு இலட்சிய தரிசனத்தின் குறித்துரைத்த அம்சங்களைத் தெளிவாகக் கூறுவதில் இடர்களை எதிர்நோக்கினர்.
இறுதியாகத் திரு. ஜென்னிங்ஸ் அவர்களின் கருத்துக்களின் வரலாறு மற்றும் அரசியலமைப்புச் சிந்தனையின் பரிணாம வளர்ச்சி என்பவற்றுக்காக அவருக்கு நன்றிக்கடன் செலுத்த
213

Page 119
வேண்டியோராகவுள்ளோம். மேன்மை மிக்கவையும், மதிப்புக்குரிய புலமைப் பணிகளும் ஆகிய பல நூல்களை ஜென்னிங்ஸ் எழுதியுள்ளார். ஆயினும் வேறு கோணங்களில் நோக்குகையில் அவை கீர்த்திமிக்கவையெனக் கொள்ளல் இயலாது. அவரது பாராளுமன்றம், அமைச்சரவை ஆட்சி மற்றும் பொதுநலவாய நாடுகளின் அரசியலமைப்புகள் குறித்த பல நூல்கள் இருப்பினும் அவற்றை உசாவும் மாணவர்களோ, சட்டத்தொழில் அல்லது அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களோ குறைவு. ஆயினும் அவரது ஒரு நூல் பளிச்செனத் துலங்குவதாகும். அதன் உரைநடைவேறு தனித்தன்மை கொண்டது, அதன் நறுக்கான, போரிடும் பாணியும், அரசியலமைப்புத் தத்துவம் குறித்த வினாக்களை அது கையாளும் துணிச்சலும் போற்றத்தக்கவை. இது 1933 இல் ஜெனிங்ஸ் லண்டன் பொருளாதாரக் கல்லூரியிலிருந்து எழுதிய "சட்டமும் அரசியலமைப்பும்” என்னும் தலைப்புள்ள நூலாகும்.
ஒரு முழுத் தலைமுறையினராகிய அரசியலமைப்புச் சட்டவறிஞர்களின் சட்டச் சிந்தனையை ஆக்கிரமித்திருந்த டைசியின் அடிப்படை அரசியலமைப்புக் கருத்துக்களை அவர் விமர்சித்தார். டைசியின் சட்டத்தின் ஆட்சி எண்ணக்கரு 19 ஆம் நூற்றாண்டு விக்ஸ் குழுவினரின் அரசு தலையீடற்ற, சுதந்திர எண்ணப் போக்குகளின் செல்வாக்கைக் கொண்டதென்றும், கூட்டுநலன் சிந்தனைகளின் பரவல் மற்றும் அரசின் கருமங்களின் விரிவாக்கம் என்பவையாக அவை இருப்பதினால் ஒதுக்கப்பட வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன வென்றும் அவர் வாதிட்டார். டைசி குறித்த ஜென்னிங்ஸின் விமர்சனம் ஒரு பரந்த நோக்கத்தை நிறைவேற்றுகிறது. சட்டத்தின் ஆட்சி, இறைமை, மற்றும் சட்டத்தின் முன் சமத்துவம் என்பவை ஒரு நிலையான கருத்தைக்கொண்ட மாற்றமுடியாத கோட்பாடுகள் அன்று. இத்தகைய எண்ணக்கருக்கள் தமது பழைய அர்த்தத்தை இழந்து, மாற்றமுற்றுவரும் சமூக, பொருளாதார நிகழ்வுத் தொடர்பில் புதிய அர்த்தம் பெறுவது மட்டுமன்றி,
214

அரசியலமைப்பு மேடையின் மையத்தைப் புதிய கருத்துக்களும் எடுத்துக்கொள்ளுகின்றன.
நாம் இதை எமது சொந்த அரசியலமைப்பு வரலாற்றிலேயே காணக் கூடியதாகவுள்ளது. "பொறுப்பு வாய்ந்த அரசாங்கம்” என்னும் எண்ணக்கரு குடியேற்றவாத உரையாடலின் பகுதியாக அமைந்தது. பின் னர் அறுபதுகளில் “பாராளுமன்றத்தின் இறைமை” மற்றும் தத்துவங்கள் பிரித்தமைதல் போன்ற எண்ணக்கருக்கள், இக்கருத்துக்களின் இடத்தை எடுத்துக்கொண்டன. இன்று அதிகாரப் பகிர்வு, அடிப்படை உரிமைகள், சுய நிர்ணயம் போன்ற எண்ணக்கருக்கள் அரசியலமைப்பு உரையாடலில் மையத் தானத்தை எடுத்துள்ளன. அரசியலமைப்புசார் நீதிகாணல் பணியில் நாம் ஈடுபடும் போது, அரசியலமைப்பு சீர்திருத்தப்பணியை நாம் அணுகும்போது இக்கோட்பாடுகள் மற்றும் எண்ணக்கருக்களின் மாற்றமுறும் உருத்தோற்றங்களை நினைவில் இருத்துதல் அவசியமாகும்.
ஜென்னிங்ஸ் அரசியலமைப்பு எண்ணக் கருக்களின் இயங்குநிலை குறித்து எமக்கு அறிவுறுத்தியது மட்டுமன்றி, அரசியலமைப்புகளின் நிலையாமை குறித்தும் எம்மை எச்சரித்தார். "அரசியலமைப்புகள் தண்ணிரைப் போன்று வருகின்றன. அவை காற்றைப் போன்று அகன்று செல்லாவிட்டாலும் அவற்றை உருவாக்கியோர் கூட எதிர்பார்த்திராத விந்தையான விடயங்கள் அவற்றுக்கு நிகழக் கூடும். அதன் குணவியல்பு ஆளுவோரும், ஆளப் படுவோரு மான மக்களின் குணவியல் பைப் பொறுத் துள்ளது," என அவர் வாதாடினார் . நல்லாட்சியென்பது ஆளும் சலுகைபெற்ற வர்க்கத்தினரின் குணசீலத்தைப் பொறுத்த ஒன்று அன்று மாறாக அது மக் களரின் நல் லுணர்வு மற்றும் தார் மீக நம்பிக்கைகளினடிப்படையிலமைந்த அதிகாரம் கொண்ட மக்கள் பிரதிநிதிகளிலேயே தங்கியுள்ளதெனத் தமது சமஷ்டியியல் பத்திரங்களில் மாடிசன் கூறியவற்றையே இங்கு
215

Page 120
ஜென்னிங்ஸ் எதிரொலிப்பது போலத் தோன்றுகிறது. இங்குதான் எமது தோல்விகள் மிகத்துலாம்பரமாகத் தெரிகின்றன. குடியியல் குணசீலங்கள், சமூக மற்றும் சனநாயக விழுமியங்கள் குறித்துப் பொதுமக்களுக்குக் கல்வியூட்டும் எந்த முயற்சியையும் உயர்வாழ்க்கைத் தொழில் மற்றும் கழகக்கல்விச் சான்றோர் எடுக்கவில்லை. நீதிபதி லேர்னட் ஹான்ட் அவர்கள் எமக்குப் பின்வருமாறு நினைவூட்டினார்: "அரசியல் அமைப்புகள் மீதும், சட்டத்தின்மீதும், நீதிமன்றங்களின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துள்ளோமோவென்றும் அனேக சந்தர்ப்பங்களில் நான் யோசிக்கிறேன். இவை பிழையான நம்பிக்கைகள். நான் சொல்லுவதை நம்புங்கள். இவை பிழையான நம்பிக்கைகள். சுதந்திரம் ஆண்களினதும், பெண்களினதும் இதயங்களில் உள்ளது. அங்கே அது மரணிக்கும் போது எந்த அரசியலம்ைப்பும், சட்டமும், நீதிமன்றமும் அதைக் கிர்ப்பற்ற முடியாது".
வில்லியம்ஸ் ஐவர் ஜென்னிங்ஸ் அவர்களை நினைவுகூரு முகமாக 1989, ஒக்டோபர் 16 ஆம் திகதி முத்திரை வெளியீட்டுப் பணியகம் சட்டம் மற்றும் சமுக நம்பிக்கைப் பொறுப்பு அமைப்புடன் சேர்ந்து நடாத்திய முத்திரை வெளியீட்டு வைபவத்தின்போது ஆற்றிய உரை.
{ } { } {


Page 121


Page 122


Page 123


Page 124

நீலன் திருச்செல்வம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமாவார். இவர் இலங்கைப் பல்கலைக் கழகத்திலும்
ls) still TL Lublis))); கழகத்திலும் கல்வி பயின்றவர். தற்போது இனத்துவ ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையத்தின் பணிப்பாளராகவும், சட்ட, சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளராகவும் பணி புரிகின்றார். -

Page 125
Printed by Uni
 
 
 

e Arts (Pvt) Ltd.