கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொல்காப்பியத் தேன் துளிகள்

Page 1


Page 2

O O O 2 தொல்காப்பியத்
தேன் துளிகள்
ஆசிரியர் நுணாவிலூர் கா. விசயரத்தினம்
HONEY DROPS
from Tami
ΤHOL-KAAPPIYAM
By
NUNAVILOOR
天。 . ohjęyaratnam
471,86
NYUSE
assisted by மணிமேகலைப்பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எண்4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 2434 2926, 2434 6082 L6sit 91556) : manimekalai1Gdata one in 960600TL 56Tih : www.tamilvanan.com മ
A.

Page 3
ሀሪ
All Rights Reserved
Title : (Tamil) : தொல்காப்பியத் தேன் துளிகள் (English): HONEY DROPS FROMTAMIL
THOLKAAPPIYAM Copyrights (a) 2008
Main Book : Nunaviloor Karthikeyan Wijeyaratnam Foreword (English) : Professor Kopan Mahadeva Foreword (Tamil) : Professor Kopan Mahadeva Commentary-1 : S. Karunanantharajah (Yugasarathy) Commentary-2 : Kathirithamby Sivananthan Commentary-3 : Meenakshisundaram Rajagopalan
NOTE: All Rights Reserved. No part of this book may be reproduced, or stored in a retrieval system or transmitted in any form or by any means without prior permission from the copyright holders, except for small passages used in research, study or review. And the authors take complete responsibility for the opinions expressed in their respective writings.
PRINTING DETALS
Type of format : Paperback, perfect bound; Paper : 18.6 kg. Size of book A5 (14x21 cm)
Font size 11 pt
No. of Pages : xxivo + 200 = 224 Price - : Rs. I00/-
Cover Design by : Mr. Mohan Typesetting by : Express Computers Printed by : B.V.R. Offset, Chennai-94.
FIRST EDITION 2008 ISBN: 978-1-87326S-57-4 Publishers: CENTURY HOUSE, 35, HA 1 2JU, MIDDLESEX, U.K. Assisted by: MANIMEKALAI PIRASURAM, CHENNA - 17, TAMIL NAADU. S. INDIA
 
 
 

YM 19
aFa DřízÚZuazoyitió
பயிற்றப்பட்ட ஓர் ஆசிரியையாய் என் வாழ்வில் ஒன்றறக் கலந்து, எந் நிலையிலும் ஒட்டி வாழ்ந்து குடும்ப வாரிசாக மும் மணிகளைத் தந்து அவர்களைப் பேணிக் காத்து வளர்த்துக் கல்வி புகட்டி, உற்றார்சுற்றார் உறவுகளையும் நேசித்து வருவோரையும் இன்முகம் காட்டி விருந்துாட்டி என்றும் எனக்கு உறுதுணையாயிருந்து என் உயர்ச்சியில் ஊக்கம் காட்டி என் ஆக்கங்களை உள்வாங்கித் தன் கருத்தளித்துக் கற்பிக்கும் தொழிலைத் தெய்வமென மதித்து உப அதிபராயுயர்ந்து இளைப்பாறியுள்ள என் துணைவியார்
திருமத7. சிவபாக்கியம் விசயரத்தினம்
அவர்களுக்கும்,
நற்பிள்ளைகளாய் கல்வி கற்று மேற்படிப்புக்காக இலண்டன் மாநகரம் சென்று உயர் பதவிகள் வகித்து
எம்மையும் இலண்டனுக்கு வரவழைத்துப் புகலிடமளித்துச் சகல
வசதிகளும் தந்து எழுத்துத்துறையில் எனக்கு ஆக்கமும் ஊக்கமும்
தந்து நிற்கும் என் மூத்த மகன்
தரு. விசயரத்தரினம் காந்தருபன
அவர்களுக்கும், என் இரண்டாம் மகன் திரு. விசயரத்தரினம் சாநதருபன அவர்களுக்கும், என் கடைசிச் செல்ல மகளான தருமத7. மலர்விழி யெயராசா அவர்களுக்கும், எனக்குக் கணிணி, அச்சடிக்கும் இயந்திரம், இணையத்தளம், மின்னஞ்சல் ஆகியவற்றை வாங்கி அமைவில் பொருத்தித் தந்து அவற்றின் செயற்பாடுகளையும் சொல்லித் தந்தவரும், எம்மை மாமா மாமி என்ற முறை கூறியழைக்காது அப்பா அம்மா
என்றழைப்பவரும், அதனால் அவரும் எம் மகன் போன்றவரும்,
கணிணித்துறையில் நிபுணரும், விரிவுரையாளரும், நிர்வாகியுமான என் மருமகன்
தரு. இராசையா யெயராசா
அவர்களுக்கும்
இந்நூல் சமர்ப்பணம்.

Page 4
2
ܓ
iv
427 6LIITGyat disash
FOREWORD
by Professor Kopan Mahadeva, (PhD, Hon DLitt) ஆசியுரை
பேராசிரியர் கோபாலபிள்ளை (கோபன்) மகாதேவா பாவினிலோர் பாராட்டு
எஸ். கருணானந்தராஜா (யுகசாரதி) ஆய்வுரை
சைவப்புலவர் கதிரித்தம்பி சிவானந்தன் அணிந்துரை
மீனாட்சிசுந்தரம் ராஜகோபாலன் (மீரா.) என்னுரை
நூலாசிரியர் நுணாவிலுர் கா. விசயரத்தினம் 1. சங்கத்தில் பிறந்து வளர்ந்த
தொல்காப்பியமும் அகத்தியமும்
wii
xii
xvii
xxi
2. தொல்காப்பியம் கூறும்
முதற்பொருள் - கருப்பொருள் - உரிப்பொருள்
3. ஏழு திணைகளை உணர்த்தும் புறத்திணையியல்
4. பொருளதிகாரத்தில் பேசப்படும்
13
21
கைக்கிளை - பெருந்திணை. 5. தொல்காப்பியர் காலக் களவொழுக்கம் 6. பழந்தமிழரின் கற்பொழுக்க நெறி 7. சங்ககால நடுகல் கோயிலாகவும் தெய்வமாகவும்
t
39
45
62
எழுந்த வரலாறு 8. பரத்தைமை பற்றிப் பேசும் தொல்காப்பியமும் தமிழ்
இலக்கியங்களும்
72
9. தமிழரின் தொடர் ஆண்டு எது?
10.பழந்தமிழரின் பிரிவிற்குரிய நிமித்தங்கள் 11.உயிர்களின் பகுப்பும் சிறப்பும் மரபும் கூறும்
தொல்காப்பியம்
12.திருமணம் சாதி சீதனம் பற்றிச் சங்க
காலத்திலிருந்து இற்றைவரை இலக்கியங்களில் பேசப்படும் பாங்கு
13.பெண் பெருமை பேசும் முக்குணமும் நாற்குணமும் -
14.அணிகலன்கள் மகளிரை விழிப்புடன்
வைத்திருக்கின்றனவா?
15. தமிழன்னையை அலங்கரிக்கும் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி
16.உசாத்துணை நூல்கள்
83
124
128
137
1.65
182
87
193 198

W
类 27 PUBLISHERS FOREWORD
፵%Yofessor زK جیpan Jafadeva
MSc, PhD, CEng, FIET, FCM1, Hon DLitt
Thol-Kaappiyam is the oldest surviving treatise on Tamil Grammar. Scholars like our present author Nunaviloor K. Wijeyaratnam reckon that this stupendous work dates over 7000 years. A conservative view is that its date is circa 1200 B.C. Some researchers push it to a later era, by 900-1000 years.
This classic has a total of 1602 aphorisms with a section of 234 maxims devoted to Tamil poetry, and has had several later commentaries written on it. Three of its forerunners worthy ofmention are: Akaththiyam, the oldest known classic on Tamil grammar, dated modestly around 4000 B.C. (with only excerpts now surviving from it), said to have been followed by more extensive but also now untraceable Maapuranam and Poothapuranam.
These are believed to have perished in deluges around 2387 BC, 504 BC or 306 BC. Thol-Kaappiyam is attributed to author TholKaappiyar, and Akaththiyam to Akaththiyar (both, probably titles-based noms-de-plume).
Thol-Kaappiyam consists of three parts, each with nine sections. The first part deals with the 247 Tamil alphabets, their sounds, combinations, sequences, and so on. It has 483 maxims in total. The second part deals with words as parts of speech, their formation, syntax, . beginnings and ends, declensions, conventions, and such topics.
This part has 463 maxims or rules. The final part, using 656 maxims deals with meanings of words, art of writing including poetry, concepts and traditions of compiling books and treatises, and also with material aspects of Tamil life & society, nature, love, and social customs & conventions as expressed in words. It is from this part of Thol-Kaappiyam
݂ مـ

Page 5
y N
that Mr. Wijeyaratnam has hand-picked many and most of his Honey Drops, and presents them expertly in this book, in 15 interesting and readable chapters, followed by a Bibiliography.
He is an experienced and reputed author. He has published two earlier books. The first one dealt with man and computers by way of interpreting the rapid technological developments of our 21" Century and also with other scientific and cultural topics. His second book dealt with essentials of English grammar.
He is a septuagenarian blessed with 50 years of happily married life, children and grandchildren, with experience of professional and active life in two different but historically related continents of the world. He has chosen as the catchment area of topics for this third book, sections on love and life from our ancient treatise on Tamil Grammar, TholKaappiyam.
As the Patron of Eelavar Literary Academy of Britain (ELAB, to which the author belongs), and as the pioneer and prime mover at Century House, I am pleased to accept his invitation to publish this book, ably assisted by the reputed Manimekalai Pirasuram of Chennai, S. India.
02-04-2008

影
27
ஆசியுரை
பேராசிரியர் கோபாலபிள்ளை (கோபன்) மகாதேவா
எமது நண்பர், இளைப்பாறிய கணக்காய்வு அத்தியட்சக்ர் நுணாவிலூர் திரு. கா. விசயரத்தினம் அவர்கள் எழுதிய தொல்காப்பியத் தேன் துளிகள் எனும் இத் தமிழிலக்கிய ஆய்வு நூலுக்கு எனது நல்லாசிகளை நல்குவதில் மிகமகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
நூலாசிரியர், தமிழீழத்தில் நான் பிறந்துவளர்ந்த தென் மராட்சியைச் சேர்ந்த மட்டுவில் தெற்கு, கைதடி நுணாவில் கிராமங்களை அண்மித்த நுணாவில் மேற்கைச் சேர்ந்தவர். நான் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் யாழ் மத்திய கல்லூரிக்கும் மாறிச் செல்லு முன் ஒராண்டு ஆங்கிலக் கல்வியில் அத்திவாரத் தளம் பெற்ற டிறிபேக் கல்லூரியில் அவரும் கற்றவர். நாம் கிட்டத் தட்ட ஒரே வயதினர். எனினும் இலண்டனிலேயே சில ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் சந்தித்து இப்போது அன்னியோன்னியமாகச் சமூக, இலக்கியப் பணிகளில் சேர்ந்து உழைத்து வருகிறோம். உதாரணமாக, நான் ஊக்குனராகத் தொடங்கி நடத்தும் ELAB என்னும் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தில் இந் நூல் ஆசிரியரும் ஒரு மூத்த, மிகவும் மதிக்கப்படும் அங்கத்தவர். இந்நூலில் இடம் பெறும் சில கட்டுரைகள் எம் மாதாந்தக் கூட்டங்களில் வாசித்துக் கருத்துப் பரிமாறல் நடத்தி மெருகூட்டி முடிவாக்கப் பட்டவை. சில, பூந்துணர் எனும் பெயருடன் 2007 ஆண்டின் முடிவிலே ELAB வெளியிட்ட தொகுப்பு நூலிலே ISBN: 1-873265-52-2, iSBN(13): 978-1-873265-52-9) effluus 6ði (86.g சில கட்டுரைகளுடன் வெளிவந்து பல விமர்சகரின் பாராட்டைப் பெற்றவை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
பொதுவாகச் சங்க இலக்கியத்தில் மிகவும் ஆர்வங் கொண்ட எம் ஆசிரியர், இந்நூலில் தொல்காப்பியம் என்னும் தமிழரின் தரித்துநிற்கும் மிகப் புராதன இலக்கண நூலின் பொருள் அதிகாரத்திலே சில ஆத்திரங்களை மிகவும் துல்லியமாக ஆராய்ந்து, அறிவுட்டும் வகையரிலும் வாசிப் போருக்கு

Page 6
数グ
viii
வசீகரமாகவும் பதினான்கு கட்டுரைகளும், ஐம்பெரும் காப்பியங் களில் பகுதி அழிந்த நிலையில் உள்ள வளையாபதியைப் பற்றிய ஒன்றுமாகப் பதினைந்து காத்திரமான கட்டுரைகளை வரைந்து ஒன்றுக்கு ஒன்றாகப் பதினைந்து அத்தியாயங்களுடன் இந் நூலை ஆக்கியிருக்கிறார். அத்துடன் நூலின் முடிவில், தன் ஆராய்ச்சிக்குப் பாவித்த உசாவுத் துணை நூல்களின் நிரல் ஒன்றையும் தயாரித்து அளித்திருப்பது மற்றைய ஆராய்ச்சியாளருக்கும் உதவக்கூடிய ஒரு சிறப்பான அம்சம்.
இந் நூல் திரு. விசயரத்தினம் அவர்களின் மூன்றாவது நூல் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு நற்செய்தி. கணினியை விஞ்சும் மனித முளை எனும் 2005 இன் முதல் நூலும் என்னுடைய ஆசியுரையுடன் வெளிவந்தது எனக்கும் திருப்தியைத் தருகின்றது. ஏனெனில் அந்நூலில் வெளிவந்து பிரபல்யமான, சமூகப் பலனுள்ள, முன்னர் வேறொரு ஆசிரியராலும் எழுதப்படாத கருப் பொருள் களில் அமைந்த 30 கட்டுரைகளில் பல, வெவ்வேறு பத்திரிகை களில் மறுபிரசுரமாகி நூலாசிரியருக்குப் புகழீட்டி, இப்போது என் உதவியுடன் வெளிவரும் இந்நூலுக்கு வழிவகுத்தது எனலாம். அத்துடன் அவருடைய இரண்டாவதாகிய 2007 இன் ஆங்கில இலக்கண நூல் முக்கியமாக இங்கிலாந்தில் வாழும் தமிழ் மக்களால் மிகவும் விரும்பிப் பெறப்பட்டு வருகின்றது எனவும் அறிகிறேன்.
இந் நூலுக்கு, நான் நன்கறிந்த சக இலக்கிய ஆர்வலர் களும் கல்வியாளருமான திரு. எஸ். கருணானந்தராஜாவும் (யுகசாரதி), திரு. கதிரித்தம்பி சிவானந்தனும், மீனாட்சிசுந்தரம் (மீ.ரா.) ராஜகோபாலனும் , முறையே பாவிற் பாராட்டும் , ஆய்வுரையும், அணிந்துரையும் எழுதியிருக்கின்றனர். அவர் மூவரும் செய்துள்ள மதிப்பீடுகள் மிகவும் பொருத்தமாகவும் நியாயமானவையாகவும் அமைந்துள்ளன. எனவே நான், இந்நூலின் வேறு உள்ளடக்க நுணுக்கங்களில் ஒருசில கருத்து களையே வெளியிடவிரும்புகிறேன்.
விஞ்ஞான, தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பல வருட அனுபவத்தினுடன் புள்ளிவிவரக் கணிதவியலையும் ஓரளவு
கற்றுகiள எனக்கு, இவ்வாசிரியர் கொடுத்துள்ள எண்களிலும்
கணக்குகளிலும், அவை சார்ந்த ஆராய்ச்சி முடிவுகளிலுமே, முதலில்
N

27
劉ク
கண்களும் மனமும் சென்றமை ஆச்சரியப் படுவதற்கில்லை உதாரணமாக, தலை, இடை, கடைச் சங்க கால விவரங்களை முதல் அத்தியாயத்தில் அளிக்கும்போது, இச் சங்கங்களில் முறையே 549, 69, 49 புலவர்கள் அங்கத்தினராகவும் 4449, 3700, 449 புலவர்கள் ஒருமித்தும் தமிழில் இலக்கியம் சமைத்துள்ளனர் என ஆசிரியர் சொல்லியிருப்பதை, முக்கியமாக அவரின், பின்னர் கோடிட்டுக் கொடுத்திருக்கும் தொகுப்புப் பட்டியலைப் படித்தபின் திரும்பவும் புள்ளிவிவரங்களைக் கூட்டிப்பார்க்க உந்தப்பட்டேன். ஏனெனில், 549, 69, 49 என்னும் இலக்கங்கள் பட்டியலில் இடம் பெறவிலி லை. ஆசிரியர் இவற்றைத் தவறுதலாக மறந்துவிட்டாரா என்று எண்ணித் திரும்பவும் உற்று நோக்கியபோதே, இவர்களுடன் ஒருமித்து, இவர்களோடு ஒருமித்து, சேர்ந்து ஒருமித்து என்னும் பதங்கள் ஆசிரியரால் பாவிக்கப் பட்டுள்ளதை அவதானித்து, ஒய்வு பெற்ற எம் கணக்காய்வாளர், கூட்டலிலும் பதப் பிரயோகத்திலும் தவறவே இல்லை எனும் திருப்தியை அடைந்தேன். நானும் கவிதைகளை எழுதி, வெளியிட்டும் வருகிறேன். எனவே மேற்கூறிய கட்டுரை தரும் செய்திகள் இன்னும் சில தாக்கங்களை எனினுள் ஏற்படுத்தின.
முதலில், இன்றைய உலகில் தமிழில் கவிதையெழுதும் நூற்றுக்கணக்கான முன்னணிச்சமகாலக் கவிஞர்கள், அதிலும் கூடிய நூற்றுக்கணக்கான சங்ககாலத்துக்குப் பின்னர் தோன்றி மறைந்த புலவர் பெருந்தகைகள், போன்றோரின் ஆக்கங்கள் எல்லாவற்றையும் ஒருதடவையாவது படிக்க முடியாது தவிக்கும் யான், சங்ககாலத்தில் இருந்த (எம் ஆசிரியரின்) கூட்டு மொத்த மான 8598 புலவர்களின் பெயர்களைக் கூட என் வாழ்நாளில் அறியமுடியாதே எனும் ஏக்கம்.
இரண்டாவது, சங்க காலங்கள் வசன நடை, நாவல், சிறுகதை இலக்கியங்கள் தோன்ற முந்திய காலங்கள் என்ற படியால, அக்கால ஆக்கவினைஞருக்குக் கிடைத்த ஒரேயொரு
எழுத்து வாகனம் கவிதையே என்னும் ஞாபகமூட்டல் வெளிப்பு.
மூன்றாவதாக, தமிழர் கி.மு. 10000 ஆண்டுகளுக்குக் கிட்டக் கவிதை இலக்கியத்தை ஆக்கி வந்தனரே எனும்

Page 7
フ
数グ
X
பெருமிதமூட்டும் திகைப்பு. அண்மைக்கால ஆராய்ச்சியாளர்
இப்படியான வரலாற்றுப் பதிவுகளை மறுத்து, உதாரணமாகத் தொலி காப்பியம் எழுதப்பட்ட காலத்தை இன்னும் 4-5 மில்லேனியங்கள் பின்போட்டு மதிப்பீடு செப்வதையும், நான் அறிவேன். மேலும் எமது ஆசிரியரும் அதை அறிவார். எனினும் அவரின் இறுதி மதிப்பீடு (மற்றும் பல தமிழறிஞரைப் போல) தொல்காப்பியத்தை கி.மு. 5000 ஆண்டில் வைத்ததால் அவரின் அபிப்பிராயத்தை நாம் மதித்து ஏற்று, அவரின் இலக்கிய எழுத்தைச் சுவைப்போமாக.
முடிவில், ஆசிரியர் நுணாவிலூர் திரு. கா.விசயரத்தினத்தின் இந்நூலை எமது Century House மூலமாக (அவரின் முந்திய இரண்டு நூல்களையும் நன்றே வெளியிட்டுதவிய) சென்னையின் புகழ் பெற்ற மணிமேகலைப் பரிரசுரத்தனர் உதவியுடன் வெளியிடுவதில் பெருமைப் படுகிறேன்.
பேராசிரியர் கோபாலபிள்ளை (கோபன்) மகாதேவா.
02-04-2008
N

罗
27
LIT6oflaflgeomff LIIIUmzdb
எஸ். கருணானந்தராஜா (யுகசாரதி) S6060GTUIT6Tft (2006 - 2007)
பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் (ELAB)
ஈலாப் என்னும் இலக்கியக் களத்தில்
நூலாய்ந்தெமக்கு நுண்ணறிவுட்டி மேலாம் தமிழின் பெருமையுணர்த்தினர் வித்தகர் விஜய ரத்தினம் ஐயா
ஒல்காப் பெரும் புகழ் தொல்காப்பியத்தின் உயர்வும் தினைப் பொருளறிவும் சேர்த்து நல்கிய எங்கள் நற்றமிழறிஞர் நயந்தவை நன் நூலாய் மலர்ந்ததுவே.
வட தமிழிழத் திருநாeந்த வித்தகர் விஜய ரத்தினம் தந்த ஒண்தமிழ் நூலை ஓதிட் அறிஞர் உயர்ந்திலக்கியத்தின் உள் வெளி கண்டே
ஐந்திணையழகும் அகமும் புறமும் ஆய்ந்தொரு முழுமை அவரடைந்திடுவ.ர் செந்தமிழன்னை சிரத்தினிற் குடச் சேர்ந்தது ஒரு பூ திறனிது தானே.
-எஸ். கருணானந்தராஜா 30-03-2008

Page 8
JAM xi
ஆய்வுரை
aparavůqav avgif
கதிரித்தம்பி சிவானந்தன் B.Sc.(Hons), FCMA, MBA.
ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமும், அணுவைத் துளைத்துக் குறுகத் தறித்த திருக்குறளும் என்றுமுள தென் தமிழின் பெருமையையும், கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த தமிழ்க் குடியின் சிந்தனைச் செழுமையையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இயம்பி நிற்கின்ற இரண்டு அரிய புராதனச் செல்வங்களாகும். இவற்றில் பின்னது நீண்ட காலமாகவே கற்றோரால் மட்டுமின்றி மற்றோராலும் போற்றப்பட்டுப் பிறமொழி அறிஞர்களாலும் தத்தம் மொழிகளில் உவப்போடு மொழிபெயர்க்கப்பட்டும் பயிலப்பட்டும் வருகின்றது. காலத்தால் மூத்த தொல்காப்பியமோ, பெரும்பாலும் தமிழ்ப் பண்டிதர்களாலும் வித்துவான்களாலும் தமிழ்ப் பேராசிரியர்களாலும் மட்டுமே அறியப் பட்ட இலக்கண நூலாக, தனக்குரிய கெளரவத்தைப் பெறாது முடங்கிக் கிடந்தது.
சமீப காலமாகவே தமிழ்ப் பொதுமக்கள் பரவலாக இவ்வரிய நூலின் சீர்மையையும் சிறப்பையும் அறியவும் பயிலவும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இவ் விழிப்புணர்வைத் தமிழ்மக்கள் மத்தியில் ஏற்படுத்தியவர் மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களாவர். "தொல்காப்பியப் பூங்கா" எனும் தனது ஆக்கத்தின் மூலம் இருட்டில் கிடந்த தொல்காப்பியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அதன் பால் தமிழ் மக்களது ஆர்வத்தைப் பொங்கியெழச் செய்தவர் கலைஞர் அவர்களேயாவர் என்று கூறுதல் மிகையாகாது.
"தொல்காப்பியப் பூங்கா" வில் உலவிச் சுகம் கண்ட தமிழ் மக்கள், மேலும் மேலும் இந்நூலைப் பயிலவும் ஆழ்ந்து ஆராயவும் விரும்புகின்ற மனோநிலை தற்போது முன்னெப் போதையும் விடவும் அதிகமாகவே காணப்படுகின்றது. அவர்களது ஆர்வத்தைப் பூர்த்தி செய்கின்ற வகையில் தொல்காப்பியம் குறித்த நுால் களும் ஆராயப் க்சிக் கட்டுரைகளும் தமிழில்

7
Z
xiii
தொடர்ந்து வெளிவந்த வண்ணமிருக்கின்றன. அந்தவரிசையில் நுனாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் இன்று தொல்காப்பியம் எனும் சமுத்திரத்தில் முக்குளித்து, முத்துக்கள் பலவற்றை வெளிக்கொணர்ந்து தமிழ் மக்களது பார்வைக்குச் சமர்ப்பிக்கின்ற உயர்ந்த பணியை ஆற்றியதன் விளைவாகப் பிறந்த நூலும் சேர்ந்து உங்கள் கரங்களிலே தவழ்ந்து கொண்டிருக்கின்றது.
நூலை வாசித்துக் கொண்டே போகின்றபோது, ஆசிரியர் தொல்காப்பியத்துடன் மிக நீண்ட காலமாகப் பரிச்சயம் உடையவர் என்பதைத் துல்லியமாகவே காண்கின்றோம். மீள மீளத் தனது கருத்துகளை நுண்மையாக ஆராய்ந்து தெளிந்து அவற்றை இனிய தமிழ் நடையிலே அழகுற வெளியிட்டுள்ளார். தொல் காப்பியத்தில் மூழ்கித் திளைத்து அனுபவித்த இலக்கிய இண்பத்தில் ஊறிய தமிழ் நெஞ்சமொன்று, தொல்காப்பியம் எனும் புராதன இலக்கண இலக்கிய நூலின் சிறப்புகளை இயம்புகின்ற போது இதயத்தில் இதமோடு விம்மிவெடிக்கின்ற நுண்ணுணர்வுகள் ஆயிரமாம். இத்தகைய இனிய உணர்வுகளைத் தூண்டிவிட்ட தற்காகவே ஆசிரியருக்குப் பல்லாயிரம் தடவை நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
புத்தகத்தை வாசித்து முடித்தபோது ஓர் ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுதியைப் படிக்கின்றபோது ஏற்படுகின்ற வறட்சி கலந்த உணர்வு ஏற்படாமல், தரமானஇலக்கிய நூலொன்றினைப் படித்து முடித்தோம் என்பது போன்ற உணர்வே மேலிட்டது. இதையே நூலாசிரியர் ஈட்டிய மாபெரும் சாதனையாகக் கருதி அவரைப் பாராட்ட விழைகின்றேன்.
பழந்தமிழ் நூல்களின் காலவரையறை குறித்து இன்றளவும் தெளிவான ஓர் அபிப்பிராயம் தமிழறிஞர்களிடையே ஏற்படாதது நமது துரதிட்டமே. ஆரம்பகாலத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த கிறித்தவப் பாதிரிகளே தமிழைக் கற்று அதன் பின்னர் பழைய நூல்களுக்குக் கால எல்லைகளை விதிக்க முயன்றனர். இவர்கள் இத்துறையிலே வல்லுனர்கள் அல்ல என்பதை நாம் மனம் கெரள்ள வேண்டும். இவர்கள் குறித்த கால எல்லைகளே இன்று வரையிலும் பெரும்ளவுக்குப் பல்கலைக் கழகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டும் வருகின்றன.

Page 9
ブ/
ク
XổV 繋ク N
இந்நிலையில் ஆசிரியர் அவர்கள், தொல்காப்பியம் ஏழாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுந்த நூலெனவும், திருமந்திரம் எண்ணாயிரம் ஆண்டுக் காலப் பழமை வாய்ந்தது எனவும், அழுத்தந் திருத்தமாகக் கூறுகின்றபோது முதலிலே ஏற்படுகின்ற காலமயக்கம் தவிர்க்கவியலாத ஒன்றாகும். இத்துறையிலே நிபுணத்துவ மிக்க பேரறிஞர்கள் இதுவரை கூடியாராய்ந்து முடிவு காணாத இன்றைய நிலையிலே, பழங்காலித்திலே போதுமான
ஆராய்ச்சிகளின்றி எழுந்தமானமாக வரையறுக்கப்பட்ட கால எல்லைகளை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று துணிச்சலோடு மறுத்துத் தனது கருத்துகளை வெளியிடும் ஆசிரியரின் தன்னம்பிக்கையை நாம் பாராட்டவே G866x506ub.
'இது போலவே, தமிழினத்தின் தொடர் ஆண்டு எது? என்ற கட்டுரையில் அகத்தியர் காலத்திலிருந்து தமிழினத்தின் தொடர் ஆண்டு தொடங்கப் பெற்றால், தமிழின ஆண்டு 12000 ஆண்டுக்கு மேலான பழமை உடையது என்று பூரிக்கலாம் எனத் தனது தமிழபிமானத்தையும் தெளிவுறவே வெளிக்காட்டி நிற்கின்றார் ஆசிரியர்.
"ஏழு திணைகளை உணர்த்தும் புறத்திணையியல்" என்னும் கட்டுரையிலே பொருளுக்கும், ஒழுக்கத்துக்கும் உரிய புறத்திற்குரித்தான திணைகளையும, அவற்றுக்குரிய துறை களையும் தொல்காப்பியம் எங்கனம் விபரித்துச் செல்கின்றதென ஆசிரியர் விளக்குகின்றார். சூத்திரங்களைத் தடித்த எழுத்திலே வடித்தும் அவற்றிற்கான விளக்கங்களை இன்பத் தமிழிலே தொடுத்தும் செல்லுகின்ற பாங்கு ஆசிரியர் தம் எழுத்து வன்மையையும் தொல்காப்பியத்தில் அவருக்கிருக்கின்ற ஆழ்ந்த அறிவையும் தெளிவாகவே காட்டிநிற்கின்றது.
தொடர்ந்து "பொருளதிகாரத்தில் பேசப்படும் கைக்கிளை - பெருந்திணை” எனும் கட்டுரையிலே பொருந்தா ஒழுக்கங்களைத் தொல்காப்பியர் எத்துணை நுண்மையாக விபரிக்கின்றார் என ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றபோது வியப்பிலே ஆழ்ந்து விடுகின்றோம். மேலும், "தொல்காப்பியர் காலக் களவொழுக்கம்", "பழந்தமிழரின் கற்பொழுக்க நெறி" எனும் கட்டுரைகள் மூலம் தொல் காப்பியனார் அன்றைய தமிழ்ச் சமுதரயத்தைக் கற்பு, களவு எனும் நோக்குகளுடாக விபரிக்கின்ற பாங்கினைத் தெளிவு ܢ
لص۔

XM M N #ಣ/
படுத்துகின்றார். ஆசிரியர் கட்டுரைகள் பலவற்றிலும் இக்கட்டுரை களிலேயே அவரது கைவண்ணம் மிக அதிகமாகப் பளிரிட்டுப் பிரகாசிக்கின்றது.
9.
プ
இன்னும் "சங்க கால நடுகல் கோயிலாகவும் தெய்வ மாகவும் எழுந்த வரலாறு", "பரத்தைமை பற்றிப் பேசும் தொல் காப்பியமும் தமிழ் இலக்கியங்களும்" என்ற இரு கட்டுரைகள் நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளுகின்ற விதமாக ஆசிரியரால் வடிக்கப்பட்டுள்ளன. தொல் காப்பியத்தோடு திருமந்திரம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு, பரிபாடல், குறுந்தொகை, கலித்தொகை, சிலப்பதிகாரம், நாலடியார், நற்றிணை போன்ற சங்ககால நூல்களையும் சங்கமருவியகால நூல்களையும் பிற்காலத்திய ஒளவையாரின் கொன்றை வேந்தனையும் அலசி ஆராய்ந்து நடுகல், பறை, பரத்தைமை பற்றி இந்நூல்கள் கூறும் கருத்துகளை அற்புதமாகப் பதிவுசெய்துள்ளார்.
இந்த நூல்களிலிருந்தும் பாடல்களைத் தடித்த எழுத்திலே தரப்பட்டுள்ளமை அழகுக்கு அழகு சேர்ப்பது போலுள்ளது. பழந் தமிழ் இலக்கியப் பிரியனாகிய எனக்கு இந்த இரு கட்டுரைகளும் தேனிலே தோய்த்த பலாச்சுளைகளாகத் தித்திக்கின்றன. எத்துணை முறைபடித்தாலும் தெவிட்டாத தீநீதமிழின் சுவையருந்த விரும்புவோர் படிக்கவேண்டிய, பயிலவேண்டிய இரு கட்டுரைகள் இவை என்பது எனது திடமான அபிப்பிராயமாகும்.
அடுத்து ஆசிரியர் திருமணம், சாதி, சீதனம் என்பன பற்றிச் சங்ககாலத்தில் இருந்து பாரதி வரையில் கூறப்படும் கருத்துகளை எடுத்து விளக்குகின்றார். அகநாநூற்றிலே பிராமணர்கள் திருமணச் சடங்கை நடாத்தி வைக்கவில்லை. ஆனால் சிலப்பதிகாரத்திலே பிராமணர்கள் திருமணச் சடங்கை நடாத்தி வைப்பதையும், தீவலம் செய்வதையும் பாடல்கள் மூலம் தெளிவாக்கிப் படிப்போர் மனத்திலே அதற்கான காரணங்களை அறிய அவாவுகின்ற விருப்பொன்றை எழுப்பி விடுகின்றார். மேலும் மனு நீதி நூலில் சாதிப்பிரிவு மிகத் தெளிவாக வரையறுக் கப்பட்டதையும், ஆனால் தொல்காப்பியத்தில் நான்கு வகுப்புகள் கூறப்பட்ட போதிலும் சாதிப் பிரிவினை பற்றி எதுவும் கூறப்
لم .படாமையையும் ஆசிரியர் நயமாகவே ஒப்பீடு செய்கின்றார் ܢ

Page 10
# ट्र
ஆதியில் தமிழர்கள் மத்தியில் சாதிகள் இல்லை யெனவும், அது நீதியில்லாத நெறிமுறை எனவும், சாதி என்பது தமிழரை அழிப்பதற்காய்ப் பாதியிலே வந்த அநீதி எனவும் நிறுவுகின்ற திறமையை நாம் வியந்து விதந்து பாராட்டவே வேண்டும்.
ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த மாபெரும்
இலக்கிய இலக்கண நூல் தொல்காப்பியம். இவ்வருங் காப்பியத்தை
இனிய இலகு தமிழ் நடையிலே, பல்வேறு கோணங்களிலிருந்து ஆராய்ந்து பல்வேறு சுவையான தகவல்களை வெளிக்கொணர்ந்த ஆசிரியர் தமிழன்னைக்குச் சூட்டுகின்ற ஆரமாக நாம் இந்நூலைக் கொள்ளவேண்டும். வேறுபல சங்க நூல்களிலிருந்தும் பிந்தைய தமிழ் இலக்கிய நூல்களிலிருந்தும் பாடல்களையும் மேற்கோள் களையும் வழங்கி நூலின் மெருகை மேலும் அழகு செய்துள்ளார். அலுப்புச் சலுப்பில்லாமல் ஆர்வமுடன் இறுதிவரை படிக்கத் தூண்டும் ஆற்றலுடன் இந்நூலை வடித்திருப்பது ஆசிரியரின்
பரந்த தமிழறிவுக்கும் ஆழ்ந்த இலக்கியப் புலமைக்கும் சான்று
பகர்கின்றது. மேலும் பல நூல்களை ஆசிரியர் எமக்குத் தந்து தமிழ்ப்பணியாற்ற வேண்டிய நீண்ட ஆயுளை வழங்கி இறைவன் அன்னாரை ஆசிர்வதிப்பானாகுக.
அன்புடன் 4.ീമ/തുമ്മമ്
20-03-2008

ܢܠ
XV அணிந்துரை
மீராஜகோபாலன் (மீரா)
M.Sc., M.S., MBA, PMP.
-Ng'
சங்கம் வளர்த்த தமிழ் என்பர் சான்றோர். சங்ககாலம் எனும் முதல், இடை, கடைச் சங்க காலங்களில் தமிழுலகம் பரந்தும், தமிழர்தம் மொழி உணர்வு விரிந்தும், அதனால் தமிழ் நூல் வளங்கள் வளர்ந்துமி, இன்றும் நாம் பெருமையுடன் வாழ்ந்துவரும் பேறு பெற்றுத் தந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் தமிழின் பால் அன்பும் அவ்வன்பினால் இலக்கியப் பணியும் செய்து தமிழ் வளர்த்த பெரியோர்களே.
வரையின்றி தமிழர்கள் வாழ்விற்காய் இன்று வையம் பரந்து வாழ்கின்றனர். வாழ்க்கை நடத்துதற்கு வாணிகமாய் மொழியும், கலையும் பணயம் வைக்கப்படும் இந்த அவசரமான உலகத்திலே "சற்றே நில்லுங்கள் சார்ந்த தமிழர்களே! மற்றேது மொழிகளுக்கு
இம்மாபெருமை இருக்கிறது? நற்றவத்தால் நாம் தமிழர் நற்றமிழோ
நம்மூச்சு கற்றறிவோம் நம் ஒழுக்கம் கைகொடுங்கள்" எனக் கூறி நமது கரங்களில் இக்கட்டுரை மலர்க்கொத்தை கைநிறையக் கொடுக்கின்றார் நண்பர் திரு விஜய் அவர்கள்.
மாதமொரு மாலைப்போதில் கீதமெனத் தமிழ்க்கவிதை படித்துத் தங்கள் தமிழிலக்கிய தாகம் தணித்துக்கொள்ளும் இலக்கிய நண்பர்களிடையே நான் கண்டு வியந்தவர் நண்பர் அன்புக்குரிய விஜய் அவர்கள். நல்ல இயற்றமிழால் எழுத்துப் பணி செய்து வரும் நூலாசிரியரின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு சங்கத்தமிழின் பெருமையை தமிழ் மரபை தமிழ் நூல் வளத்தை பல அரிய கருத்துகள் மூலம் நம் மனதுக்குள் ஆழப் பதிக்கிறது. இதனைப் படித்து ஆய்ந்து விமரிசிக்கும் ஆற்றல் எனக்கில்லை எனினும், ஆழ்ந்து மகிழ்ந்து அரவிணைக்கும் அன்பிருக்கிற தென்பதாலி இந்தச் சிறிய அணிந்துரையைச் சீராகத் தருகின்றேன்.
"சங்கத்தில் பிறந்து வளர்ந்த தொல்காப்பியமும் அகத்தியமும்' எனும் முதல் அத்தியாயத்தில் ஆசிரியர் சங்க காலங்களின் காலக்கோட்டினைச் சுட்டிக்காட்டி பைந்தமிழ் நூல்கள் பழந்தமிழாய்ப் பிறந்து பாருலகில் இன்றும் பவனிவரும் அருந்தமிழின் ஆணிவேராய் நிலைத்திருப்பதைப் பல எடுத்துக் காட்டுகளுடன் விளக்குகின்றார். தமிழுலகு பாரதத்தில் வட
لم

Page 11
92/
27
xviii
வேங்கடம் முதல் தென் குமரிவரை பரந்திருந்ததையும் அப்பரப்பளவைப் பாநூல்கள் பலவற்றின் குறிப்பினாலும், அப்பாநூல் படைத்த பைந்தமிழ்ப் புலவர்களின் வாய்மொழி வளத்தினாலும் நமக்குப் புலப்படுத்தி செந்தமிழ்த் தொண்மையை நமக்கு உணர்த்திப் பெருமை கொள்ளச் செய்கின்றார். கட்டுரைக் கருவாக அகத்தியம் எனும் அருந்தமிழ் இலக்கணநூலே தமிழில் மூத்த இலக்கணநூல் என்றும், அந்நூல் கடலால் அழிந்த போதிலும், அதற்கு அடுத்த கால கட்டத்தில் படைக்கப்பட்ட திருமந்திரம் எனும் ஆன்ம அறிவுநூலும், சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட தொல்காப்பியம் எனும் இலக்கண நூலுமே இன்றைய தமிழ் நூல்களுக்கெல்லாம் மூத்த படைப்பு என நமக்கு ஆய்ந்து அறிவிக்கின்றார்.
தொல்காப்பியம, இக்கட்டுரை ஆசிரியரின் மனத்திலும் மதிப்பிலும் ஆழப்பதிந்துள்ளது என்பதற்கு இத்தொகுப்பில் அவர் கையாண்டுள்ள தொல்காப்பியக் கருவூலமே சான்று. SJ60 LTib கட்டுரையில் ஆசிரியர் தொல்காப்பியம் கூறும் பொருட்களாக மனித வளத்திற்கு முக்கியமான முதற்பொருள், கருப்பொருள், மற்றும் உரிப்பொருள் யாவையென விளக்குகின்றார் முதற்பொருள் என்பது, வசிக்கும் நிலத்தினையும் அந்நிலத்தில் வசிப்போரின் இன்பத்திற்கு ஏதுவான காலத்தினையும் குறிப்பது என்றும், கருப்பொருள் என்பது ஐந்திணைகளுக்கும் உரியனவாகவும், அவற்றின்கண் உள்ளனவாகவும், விளங்கும் தெய்வம் முதலிய பதினான்கு கருப்பொருள்களைக் குறிப்பது என்றும், உரிப் பொருள் என்பது வாழ்கின்ற மக்களின் உள்ள உணர்வும், ஒழுகு முறையும் சார்ந்ததென்றும் ஆசிரியர் இலக்கியச் சான்று களால் விளக்குகின்றார். இதனைத் தொடர்ந்து வரும் கட்டுரை யில் அகத்திணை, புறத்திணை என்பன யாதென விளக்கி அவற்றுள் புறத்திணையின் திணைகள் ஏழு பற்றியும், அவை ஒவ்வொன்றின் துறைகள் பற்றியும், விளக்கி மூன்றாம் அத்தியாயமாக பழந்தமிழர் வாழ்வின் சீரமைப்பைச் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றார்.
இன்பம் என்பதை இயலுணர்வாய் அடைவதே மனித வேட்கை. அதனை விளக்கும் பொருட்டோ என்னவோ ஆசிரியர் அடுத்து வரும் கட்டுரைகளில் கைக்கிளை எனும் ஒருதலைக் காமம் பற்றியும் பெருந்திணை எனும் ஒவ்வாக் காமம் பற்றியும், நாலாம் அத்தியாயத்தில் எடுத்துரைக்கின்றார். இதற்கும் எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரங்களைக் கொண்ட தொல் காப்பியமே ஆதாரம்.

94
火ク
家。 'தெல்காப்பியர் காலக் களவொழுக்கம்' எனும் ஐந்தாம்
Χάκ
பகுதியில் களவொழுக்கம் எட்டுவகையானதென்றுமி, பிறகு மணப் பொருத்தம் பற்றியும், காதல் மணப்பொருத்தம் பற்றியும், புணர்வால் உணர்வும், உணர்வால் உறவும் கொண்டு இலங்கும் கள
வொழுக்கம் பற்றியும் கலந்துரைக்கின்றார். களவொழுக்கம் கள்ள
ஒழுக்கமில்லாதிருக்கையில் கற்பொழுக்கமாக மதிக்கப் படுதலையும், அத்தகைய அரும் பண்பு பழந்தமிழரின் உயிரொழுக்கமாய் இருந்ததென்பதையும் ஆசிரியர் "பழந்தமிழரின் கற்பொழுக்க நெறி' எனும் அத்தியாயத்தில் பழுதற அறியத் தருகின்றார்.
இதனைத் தொடர்ந்து சங்ககால நடுகல், கோயில், தெய்வம், பறை என்பன இலக்கியத்தில் எவ்வாறு பேசப்பட்டன என விளக்கி பழந்தமிழர் வாழ்வில் சமுதாய ஒழுங்கு, பொதுநலக் கோட்பாடு, இறை உணர்வு என மரபு சிறந்து விளங்கியதை வெளிப்படுத்துகின்றார்.
புல்லாகிப்பூடாகிப் புழுவாகி மரமாகி என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் கூறியது போல உயிரினங்கள் பலகோடி. அவற்றை ஒரறிவு முதல் ஆறறிவு வகையிலான உயிரினங்களாகப் பகுத்து அவைகளது இயல்பாவன யாவென வகுத்து அளித்துள்ள தொல்காப்பியம் தமிழினத்தைத் தலைநிமிர்த்தி வைத்திருக்கும் மணிமகுடம். ஆசிரியர் 'உயிர்களின் பகுப்பும் சிறப்பும் மரபும் கூறும் தொல்காப்பியம்" என்ற தலைப்பில் தமிழ் மெர்ழிக்கே பெருமை சேர்க்கும் தொல்காப்பியம் என்பதைப் பல உதாரணங்களுடன் விளக்கித் தனது தொல்காப்பியத் தவத்தினை மேலும் உறுதிப் படுத்திக் கொள்கின்றார்.
இன்பம் எனும் பொழுது, காதலும் களவொழுக்கமும் எண்ணப்படுவதைப் போலவே அழகும் பெண்மையும் பேசப்
படுகின்றது. ஆசிரியர் பெண்மையை ஆய்வதற்குத் துணிந்து
"பெண்ணின் பெருமை பேசும் முக்குணமும் நாற்குணமும்" என்ற தலைப்பில் ஓர் அரிய கட்டுரையைச் சமைத்துள்ளார். அச்சம், நாணம், பேதைமை எனும் மூன்று குணங்களே முதலில் பெண்களின் குணமாகப் பார்க்கப்பட்டது என்றும், பின்பு பயிர்ப்பு எனும் நான்காவது குணத்துடன் சேர்ந்து பெண்களின் இயற்கைக் குணங்களாக இந்நான்கும் தமிழிலக்கியங்களிலே பேசப் படுகின்றது என்று கூறுகின்றார் நூலாசிரியர். பயிர்ப்பு எனும் சொல் ஒப்புமை இல்லாச் செயலால் ஏற்படும் வெறுப்பென்றும் அதற்கு உதாரணமாக அந்நியர் திண்டலை அருவருப்பாய் உதறும் கன்னியர் செயலாகக் காட்டுகின்றார். தொல்காப்பியர் காலத்தே

Page 12
9.
y
フ
劉ク丁
X3X
பயிர்ப்பு எனும் பதம் இல்லாமல் முக்குணமாகவே பெண்டிர் பண்பு பேசப்பட்டிருப்பதால் பயிர்ப்பு எனும் காழ்ப்புணர்ச்சி பெண்டிருக்கு தொல்காப்பிய காலத்தில் இல்லையா? எனக் கேட்டிருக்கின்றார்.
பெண்ணின் பெருமை பேசிடும் போது அணிகலன் பற்றிக் கூறாமல் ஆகுமோ! அடுத்த கட்டுரையில் நகை அணிவதால் நங்கையரின் மெல்லறிவு மேலதிகரித்து இருக்கிறதா? எனும் வினாவினை எழுப்பி அதற்கான விளக்கமாக பழந்தமிழரது ஒழுங்கையும் அவர் பாவித்திருந்த அழகுமுறைகளையும் நமக்கு எடுத்தோம்பி, அணி கலன்கள் அழகை மட்டுமல்ல, அறிந்துணரும் விழிப்புணர்ச்சியையும் அதிகரிக்கும் உபகரணமாக இருக்கிறது எனக் கூறுகின்றார் ஆசிரியர்.
அணிகலனைக் கையாண்டதாலோ என்னவோ அடுத்த கட்டுரையாக வளையாபதி எனும் ஐம்பெருங்காப்பியங்களின் ஒன்றான அருநூலை, பலருக்கும் அறிமுகப்படாத ஒருநூலை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். முற்றிலும் பாதுகாக்கப்படாமல் ஒருசில பாடல்களே எஞ்சி நிற்கும் வளையாபதி எனும் இவ்வரிய நூலின் கருப்பொருளை எளிய நடையில் விளக்கிய ஆசிரியர் இக்கட்டுரையின் வாயிலாக வளையாபதி எனும் காப்பியத்தின் கால அனுமானத்தையும், அந்நூலின் அரிய பாடல்களில் அமைந்துள்ள கவித்துவத்தையும், சொல், பொருள் நயத்தினையும் அறம் சார்ந்த ஆழ்ந்த ஒழுக்கத்தைப் பிரதிபலிக்கும் நற் சிறப்பினையும் நமக்கு விளக்கி அதன் மூலம் தான் ஒரு மேம் பட்ட தமிழ் ஆய்வாளர் என்பதை அங் கைக் கணியென அறுதியிட்டுக் காட்டுகின்றார்.
நூலாசிரியர் அரிய தமிழ் வார்த்தைகளால் கோர்த்த வாக்கியங்களும், ஆய்ந்தெடுத்த முத்துக்களாலான தமிழ்மரபு நெறியும், தொல்காப்பியம் முதலான தொலைநோக்கு இலக்கியங் களின் கருத்து வளமும் இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் தமக்கே உரித்தான ஆத்மார்த்தமான தமிழ் நேய நெகிழ்வும் சேர்த்து இந்தக் கட்டுரை மாலையைத் தொடுத்துப் படைத்திருக்கின்றார்.
தமிழன்னையின் பாதங்களுக்கு இந்த மாலை சேரட்டும். அதன் மகரந்தம் தமிழுலகு எங்கும் பரவட்டும்.
அன்புடன் 4;/g68//0്രf
15-03-2008

Хој
நுழையுமுன் என் உரை
94
KZ
フィ
27
எனக்கு உயிரும் உடலும் தந்த என் பெற்றோரை மனதிலிருத்தி, நான் பிறந்த மண்ணான நுணாவில் ஊரை என் பெயர்முன் வைத்து, இவை மூன்றும் என் முழுமுதல் மூச்சான மும்மணிகளாய் நிறுத்தி, இலண்டன் மாநகரிலிருந்து என்னுரையைத் தொடங்குகின்றேன்.
தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல் என்று கூறப்பட்டாலும் அந்நூல் ஓர் இலக்கிய நூலுமாகும். அதில் நிறைந்த இலக்கியங்கள் பொதிந்துள்ளன. அதிலுள்ள சூத்திரங்கள் சாதாரண மக்களுக்குப் புரிவதில்லை என்றும், அவை பண்டிதர் பரம்பரைக்குரியன வென்றும்: கூறி எட்ட நிற்போர் பலர். தொல்காப்பியச் சூத்திரங்கள் கடினமானவையே. ஆனால் தொல்காப்பியம் எழுந்த காலத்தை நாம் நோக்கவேண்டும். அன்று தமிழ்மொழி சிறப்புற்றிருந்தது. அக்கால மக்களுக்கு அன்று அவை புரிந்திருக்க வேண்டும். ஏனெனில் தொல்காப்பியம் மக்களுக்காக எழுதப்பட்ட நூல். ஆனால் இன்றுள்ளார்க்கு இச் சூத்திரங்கள் கடினமானவையே.
சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் இலகு தமிழில் எழுதுவதே என் நூலின் நோக்காகும். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை மையப்படுத்தியே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தொல்காப்பியர் காலத்து மக்கள் இயற்கையோடு இணைந்து, பின்னிப் பிணைந்து, மகிழ்ந்து வாழ்ந்தனர். தாம் வாழ்ந்த மண்ணை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நால்வகை நிலங்களாக வகுத்தனர். நாளடைவில் முல்லையும், குறிஞ்சியும் திரிந்து, வெம்மையால் வளம் குன்றிய பகுதியைப் 'பாலை” என வகுத்து ஐந்நிலங்களாக்கினர். இவற்றுடன் "கைக்கிளை', 'பெருந் திணை' ஆகிய இரண்டையும் சேர்த்து, திணைப் பெயருமிட்டு ஏழு திணைகளாக வகுத்தனர்.
மேலும் இவற்றைக் கைக்கிளை - ஒரு தலைக் காமம், அன்புடைக் காமம் - அன்பின் ஐந்திணை, பெருந்திணை - பொருந்தாக் காமம் என மூன்று நிலைப்படுத்தி வகுத்தனர். இவற்றுள் அன்புடைக் காமம் என்பது ஐவகை நிலங்களின் தன்மைகளைச் சார்ந்தனவாய் அவற்றின் சூழல்களோடு பின்னிப்

Page 13
数ク
XX
物 பிணைந்தனவாய் நிகழ்வனவாம். ஐந்திணைகளுக்கும் முதற்
பொருள், கருப்பொருள், உரிப்பொருள் வகுத்து, பெரும்பொழுது, சிறுபொழுது கணித்து, குறிஞ்சியில் புணர்தலும், முல்லையில் இருத்தலும், பாலையில் பிரிதலும், மருதத்தில் ஊடலும், நெய்தலில் இரங்கலும் நிகழ்த்தி நிறைவு கண்டனர்.
தொல் காப்பியர் காலத்திலும் அதறிகு முன்பும் தலைவன் தலைவியர் காதற் களவியல், கற்பியல் ஒழுக்கத்தில் இறங்கி அன்பினாற் கூடி மகிழ்வுற்று வாழ்ந்தனர். இது நெடுநாள் நிலைக்கவில்லை போலும், தலைவன் தலைவியரிடையில் பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோர் ‘கரணம்' என்னும் சடங்கு முறைகளை வகுத்து வரையறை செய்தனர். இச் சடங்கு முறைகள் இன்றும் நம்முடன் ஒட்டி, உறவாடி, நிலைத்து நிற்பதை நினைந்தால் மனம் பூரிப்படைகின்றது.
தொல்காப்பியர் காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் அனைவரையும் அந்தணர், அரசர், வைசிகன், வேளாளர் ஆகிய நால்வகை வகுப்பினரில் அடக்கிய சிறப்பினையும் காண்கின்றோம். தொல்காப்பியர் காலத்தில் சாதிப் பிரிவினையும், சீதனக் கொடுக்கல் வாங்கலும் இல்லாத ஒரு பொற்காலமாகும். அக்கால மக்கள் இவ் வணிணமி நிறைந்த வாழ்க்கை நடாத்தி மகிழ்வுற்றிருந்தனர்.
மேலும், தொல்காப்பியர் உயிர்களின் பகுப்பும், சிறப்பும், மரபும் பற்றிக் கூறுகையில் ஓரறிவுள்ள புல், மரம் முதலியனவற்றி லிருந்து ஆறறிவுள்ள உயிரான மனிதன்வரை பகுத்து வகுத்துக் கூறிப் புல், பூண்டு, மரம் ஆகியவற்றுக்கும் உயிர் உள்ளது என்பதை எடுத்துக் காட்டியமை அக்காலத்திலும் விஞ்ஞானம் சிறப்புற்றிருந்தமை தெளிவாகின்றது.
இவ்வண்ணம் தொல்காப்பியத்தில் இருந்து படிப்பதற்கு நிறைந்த விடயங்கள் உள்ளன. நாம் தான் தேடல் போட வேண்டும். தேடுங்கள் கிடைக்கும். தட்டுங்கள் கதைக்கும். காலத்தால் விஞ்சிய இவ்வரிய தொல்காப்பிய நூலைப் பக்குவப்படுத்திப் பாதுகாத்து வைத் திருக்க வேணி டியது நம் மனைவரிணி பொறுப்பாகும். இன்னும் பலர் இந்நூலைப் பற்றி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

XOxiii
ᎠᏃ •
Z மேலும், "தொல்காப்பியத் தேன் , துளிகள்" என்ற
இந்நூலுக்கு பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள் வழங்கிய ஆசியுரையும், வேறு முன் னின்று உதவிய கருத்துகள், புத்திமதிகள், ஆலோசனைகளும், திரு. எஸ். கருணானந்தராஜா (யுகசாரதி) அவர்கள் பாவில் வடித்த பாவினிலோர் பாராட்டும், சைவப்புலவர் திரு. கதிரித்தம்பி சிவானந்தன் அவர்கள் வழங்கிய ஆய்வுரையும், திரு. மீ. ராஜகோபாலன் (மீ.ரா) அவர்கள் உவந்தளித்த அணிந்துரையும் இந் நூாலை அலங்கரித்து நிற்கின்றன. இப்பெரியோர் நால்வருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் இந்நூலைச் சீரிய முறையில் பதிப்பித்து உதவிய Century House பிரசுரத்தாருக்கும், மணிமேகலைப் பிரசுரத்தாருக்கும் நன்றிகள்.
"தொல்காப்பியத் தேன் துளிகள்" என்ற இந்நூல் உங்கள் கரங்களில் தேன் துளிகளாய் என்றும் இனித்துக் கொண்டிருக்கும் என்பது என் மனத் துணிவாகும்.
வணக்கம்.
JAP தனதுர் 477afavaaZ/af afzzafa,7azz திருவள்ளுவர் ஆண்டு 2039, சித்திரைத் திங்கள், ஓராம் நாள். 13-04-2008
K. Wijeyaratnam, MAAT. Superintendent of Audit. (Rtd.) 86, Sangley Road, Catford, LONDON. SE6 2JP. U.K.
T.P.No. 020 8695 1255. E-mail: WijeyGltiscali.co.uk

Page 14
தொல்காப்பியத் தேன் துளிகள்

சங்கத்தின் Zது வனZத 42/727av/7ZZZZZó
/y27ZZZZZ2وعے
திலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய முச்சங்கங்களை அமைத்துத் தமிழை வளர்த்து வந்தனர் பாண்டிய மன்னர்கள். அவர்கள் தமிழைக் காதலித்து, அரச அவையில் உரிய இடமளித்து, அங்கீகாரமும் கொடுத்து, பல்லாயிரம் ஆண்டுகள் உயிரென மதித்துப் பேணிக் காத்து வந்தனர். முச்சங்கங்களில் பிறந்த நூல்கள் பல. அவற்றுள் எஞ்சிய நூல்களைவிட அழிந்த நூல்களே அதிகமாகும்.
தலைச் சங்கம்
தலைச் சங்கம் கடலாற் கொள்ளப்பட்ட மதுரையில் அமைந்து தமிழை ஆராய்ந்து வளர்த்து வந்தது. இச் சங்கத்தில் 549 புகழ் பெற்ற புலவர்கள் உறுப்பினராக இருந்தனர். இவர்களுடன் ஒருமித்து 4,449 புலவர்கள் பாடல்களை இயற்றினார்கள். அகத்தியனார், இறையனார், குன்றெறிந்த முருகவேள், முரஞ்சியூர்முடிநாகராயர், நிதியின் கிழவன் ஆகியோர் அப்புலவர்களில் ஒரு சிலராவர். அகத்தியம், பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை

Page 15
2 Gیع۶۶یص هویگ சென் துனிசன்
ஆகியவை அவர்கள் இயற்றிய நூல்களிற் சிலவாகும். இச் சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்து வாழ்ந்தபின் கடலன்னையுடன் சங்கமம் ஆகியுள்ளது. இத்துடன் தலைச் சங்க நூல்கள் அத்தனையும் அழிந்துபோய் விட்டன. இக் காலப்பகுதியில் 89 பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆண்டு சங்கத் தமிழையும் வளர்த்து வந்தனர்.
இடைச் சங்கம்
இடைச் சங்கம் கபாடபுரத்தில் அமைந்திருந்தது. இச் சங்கத்தில் 69 புலவர்கள் உறுப்பினராக இருந்துள்ளனர். இவர்களோடு ஒருமித்து 3,700 புலவர்கள் சங்கத்திலிருந்து தமிழ்ப்பணியாற்றினர்.
தொல்காப்பியனார், இருந்தையூர்க் கருங்கோழிமோசி, வெள்ளுர்க்காப்பியன், சிறுபண்டாரங்கள், திரையன்மாறன், துவரைக் கோமான், கீரந்தை ஆகியோர் அப்புலவர்களில் ஒரு சிலராவர். இப்புலவர்கள் இயற்றிய நூல்களுள் தொல்காப்பியம், குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகவல், கலி போன்றவை ஒரு சிலவாகும். இச் சங்கம் 3700 ஆண்டுகள் வாழ்ந்திருந்தது. இக்காலப் பகுதியில் சங்கத்துடன் 59 பாண்டிய மன்னர்கள் தொடர்புகொண்டு தமிழை வளர்த்தனர். கபாடபுரமும் கடலாற் கொள்ளப்பட்டது. இதில் தொல்காப்பியம் என்ற நூல் தவிர இடைச் சங்க நூல்கள் அனைத்தும் மாண்டுபோயின.
கடைச் சங்கம்
கடைச் சங்கம் உத்தரமதுரையில் நிறுவப்பட்டிருந்தது. இச் சங்கத்தின் உறுப்பினரான் 49 புலவர்களுடன் சேர்த்து ஒருமித்து 449 புலவர்கள் தமிழ் வளர்ப்பிலும் ஆய்விலும் ஈடுபட்டிருந்தனர். இவர்களுள் சிறுமோதாவியார், சேந்தம்பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றுார்க்கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மதுரை மருதனிளநாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்போர் ஒரு சிலராவர். இப்புலவர்கள் இயற்றிய நூல்களுள் நெடுந்தொகை, நானுாறு, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, 150 கலி, 70 பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை போன்ற நூல்கள் ஒரு சிலவாகும். இச் சங்கத்தின் வாழ்நாள் 1850 ஆண்டுகள் ஆகும்.

egz விசமத்தினர்) 3.
இக் காலப்பகுதியில் இச் சங்கத்துடன் 49 பாண்டிய மன்னர்கள் தொடர்புடன் இருந்து தமிழை வளர்த்தனர்.
முச்சங்க ஆயுட்காலம்
இம் மூன்று சங்கங்களின் முழு ஆயுட்காலம் 9990 ஆண்டு களாகும். இவற்றில் 8,598 புலவர்களும், 197 பாண்டிய மன்னர்களும் இடம் பெற்றிருந்தனர். கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் கடைச் சங்கம் முடிவுற்ற காலமென்பர் ஆய்வாளர்கள். எனவே, கி. மு. பத்தாயிரம் (10000 ) ஆண்டுகள் முதல் தமிழ்மொழி சங்கத் தமிழாக வளர்ந்து வந்தது உறுதியாகின்றது.
இவ்வாறான முச் சங்கங்களின் முக்கிய விபரங்களை ஓர் அட்டவணையில் ஒரே பார்வையில் அமைத்துப் பார்ப்போம்.
சங்கத்துடன் தொடர்பான சங்கத்தை வளர்த்த சங்கத் தினி சங்கப் பெயர்
புலவர் எண்ணிக்கை பாண்டிய மன்னர் ஆயுட் காலம் எண்ணிக்கை (ஆணிடுகள்)
தலைச் சங்கம் 4,449 89 4440 இடைச் சங்கம் - 3,700 59 - 3700
கடைச் சங்கம் 449 49 u 1850
8,598 197 9990 لـ ܢܠ
இலக்கண நூலான அகத்தியம்
தலைச் சங்க காலத்தில் 'அகத்தியம்' என்ற இலக்கணப் பெருநூலை அகத்தியனார் என்னும் குறு முனிவர் இயற்றித் தந்தார். இவர் கி. மு. 10000 ஆண்டுகளுக்கு முன் தலைச் சங்க காலத்தில் வாழ்ந்தவர் என்று கூறுவர்.
அன்றொரு நிகழ்வில் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. இதைக் கண்ணுற்ற தேவர்கள் அகத்தியரை நாடி இந்நிலையைச்

Page 16
4. Gبه تصویگ zzzz۶تضییع தேன் துனிசன்
சமன்படுத்துமாறு ஒரு வேண்டுகோள் விடுக்க அவரும் தென்திசை சென்று பொதியமலையில் தங்க வடதிசை, தென்திசை சமநிலைக்கு வந்தது. அங்கே அகத்தியர் முருகன்பால் தமிழ் கற்றுக் குறுமுனியாய்த் திகழ்ந்தாரென்றும் இந்து மதப் புராணக் கதை கூறும.
தலைச் சங்கம் அமைந்திருந்த மதுரை கடலாற் கொள்ளப்பட்ட பொழுது அகத்தியம் உட்பட எல்லா நூல்களும் அழிந்து போயின. அகத்தியம் என்ற நூலில் 12,000 ஆத்திரங்கள் இருந்தனவாம். அகத்தியம் முத்தமிழான இயல், இசை, நாடகம் ஆகியனவுக்கு உரிய இலக்கணம் கூறும் நூலாய் இருந்ததென்றும் கூறுவர்.
இலக்கண நூலான அகத்தியம் அழியாதிருந்திருப்பின் 10000 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாரம்பரியத் தொன்மையை இன்றும் நாம் இன்புற்றுப் பேசிக்கொண்டிருக்கலாம். மேலும், 12,000 ஆத்திரங்களில் அமைந்துள்ள எத்தனையோ தகவல்கள் நம் பழந்தமிழ்ப் பெருமைக்கு இன்றும் மெருகூட்டிக் கொண்டிருக்கும்.
தொல்காப்பியம்
தொல்காப்பியம் என்னும் நூலைத் தொல்காப்பியனார் என்ற பெரும் புகழ் பெற்ற புலவன் பாடியருளினார். தொல்காப்பியம் கி. மு. 5000 ஆண்டுகளுக்கு முன் தொன்மை, செழுமை, வளம், செப்பம், வனப்பு, நாகரிகம், பெருநிலை போன்றவற்றுடன் தோன்றிக் காலத்தால் பழமை வாய்ந்த ஒரு பெரிய இலக்கண உயிர் நூலாய் நம் மத்தியில் உலா வருகின்றது. இந்நூலை யாத்த தொல்காப்பியனார் தலைச் சங்க இறுதியிலும், இடைச் சங்கத் தொடக்கத்திலும் வாழ்ந்தவராவார்.
“இடைச் சங்கத்தாருக்கும் கடைச் சங்கத்தாருக்கும் நூலாயிற்று தொல்காப்பியம்.” என்று நக்கீரனார் கூறியுள்ளார். மேலும் , “தொலி காப்பியம் பணி டைத் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகச் சிறப்பையும் விளக்கும் பழம் பெருநூல்.’ என்பது டாக்டர் மு.வரதராசனாரின் கூற்றாகும்.

ez ه 6تهzz2ی وarقص D 5
இன்னும், "ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்படுகின்றார் தொல்காப்பியர். இவர் ஒரு காப்பியக் குடியில் தோன்றியவரென்றும், அவர் இயற்பெயர் தொல்காப்பியர் எனவும் சான்றோர் கூறுவர். வேறு சிலர் இவரின் இயற்பெயர் “திரனதுாமாக்கினி” எனவும் “சமதக்கினியாரின் புதல்வர்” எனவும் கூறுவர். அகத்தியனாரின் பன்னிரு மாணாக்கர்களுள் முதல் மாணவன் தொல்காப்பியனார் எனவும் கூறுவர். இன்னும், இவர் பரசுராமரின் உடன் பிறந்தவரென்றும் ஒரு கதையுமுண்டு.
சங்க காலத்தில் சேரர்க்குக் கருவூரும் ( வஞ்சியும் ), முசிறியும், சோழர்க்கு உறையூரும், காவிரிப்பூம்பட்டினமும், பாண்டியர்க்கு மதுரையும், கொற்கையும் தலை நகரங்களாக விளங்கின. இன்னும், சேரர்க்கு வில்லும், சோழர்க்குப் புலியும், பாண்டியர்க்கு மீனும் அரசியல் இலட்சினைகளாய் இருந்தன. தமிழகத்தை ஆண்ட பல்லவர்க்கு நந்தி இலட்சினையாயிருந்தது. இவர்கள் காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை என்னும் முப்படைகளை வைத்து இருந்தனர் என்று தொல்காப்பியம் கூறும்:
"தானை யானை குதிரை எனிற
நோனார் உட்கும் மூவகை நிலையும்."
- (Gurdot. 72-1-2)
இங்கு சங்க காலத்தில் தேர்ப்படை ஒன்று இருந்தமைக்குச் சான்றில்லை என்பது கவனத்திற் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.
ஆனால் காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகளையும் மேற்கூறிய தொல்காப்பியர் தேர்ப்படை ஒன்று இருந்ததாக இங்கு கூறவில்லை. அன்று தேர்ப்படை ஒன்று இருந்திருந்தால், முப்படைகளுடன் சேர்த்துத் தேர்ப்படையையும் குறிப்பிட்டாகவேண்டிய இடம் இதுதான். இன்னும், தொல்காப்பியர் பிறிதோரிடத்தில் (பொருள். 75) தேர்ப்படையைப் பற்றிக் கூறியுள்ளார். எனவே, அன்று முப்பிடைகள் மட்டும்தான் போர் தொடுக்க மன்னர்க்கு இருந்துள்ளமை தெளிவாகின்றது.

Page 17
6 G2zیع۶۶ی صوص சிசன் துனிசன்
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் போன்ற நூல்களுக்கு முற்பட்டது தொல்காப்பியம். இயல் தமிழுக்கு மட்டும்தான் தொல்காப்பியம் இலக்கணம் அமைத்துத் தந்துள்ளது.
தொல்காப்பியத்தை எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது இயல்களாக ஒருமித்து 27 இயல்கள் உள்ளன. எழுத்ததிகாரத்தில் 483 சூத்திரங்களும், சொல்லதிகாரத்தில் 463 சூத்திரங்களும், பொருளதிகாரத்தில் 656 சூத்திரங்களுமாக ஒருமித்து 1,602 சூத்திரங்கள் தொல் காப்பியத்தில் உள்ளன. ஆனால், இந்நூற் சூத்திரங்கள் 1,595 என இளம்பூரணரும், 1,611 என நச்சினார்கினியரும் வகுத்து உரை யெழுதியுள்ளனர்.
செந்நாப்புலவரான பனம்பாரனார் தொல்காப்பியனாரின் ஒரு சாலை மாணவர். இவர் தொல்காப்பிய நூலுக்குச் சிறப்புப் பாயிரம் ஒன்றினைச் செய்துள்ளார். இது இந்நூலின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது. நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்பானின் அரச அவையிலே அதங்கோட்டாசிரியரின் முன்பாக அந்நாளில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்ற செய்தியும் அப்பாயிரத்தின் மூலம் பின்வருமாறு அறியக்கிடக்கின்றது.
"வடவேங்கடநீ தெனிகுமரி ஆயிடைத்
தமிழிகறுமி நலிலுலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆயிரு முதலினி எழுத்துஞ் சொலிலும் பொருளும் நாடிசி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூலி கணிடு முறைப்பட எணிணிப் புலந்தொகுத் தோனே போக்கறு பனுவலி நிலந்தரு திருவிற் பாணிடியனி அவையத்து அறங்கரை நாவினி நாணிமறை முற்றிய

சூன. ه ح6تهzz 2ییarzق D 7
அதங்கோட் டாசாற் கரிதபத் தெரிந்து மயங்கா மரபினர் எழுத்துமுறை காட்டி மலிகுநீர் வரைப்பினர் ஐந்திரம் நிறைந்த 65/76545/777 பியனிஎனத் தனிபெயர் தோற்றிப் பலிபுகழி நிறுத்த படிமை யோனே.”
இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார் ஆகியோரும் இன்னும் பலரும் தொல்காப்பிய நூலுக்கு உரை எழுதியுள்ளனர். இவற்றுள் இளம்பூரணர் உரை ஒன்றே காலத்தால் முற்பட்டதும், முற்றாகக் கிடைப்பதும் ஆகும்.
வடக்கே திருவேங்கட மலையும், தெற்கே குமரியாறும், கிழக்கு மேற்குத் திசைகளில் கடலாகவும் அமைந்த எல்லைப் பரப்பே ஆசிரியர் தொல்காப்பியர் காலத்துத் தமிழ்நாடு என்றழைப்பர். ஆனால், தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பனம்பாரனார் கடல் எல்லைகளைக் குறிக்கவில்லை. அவர் பாயிரம் இவ்வாறு தொடங்குகின்றது.
"வடவேங்கடந் தெனிகுமர ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்து . ."
பனம்பாரனாரின் பாயிரத்தில் ஒரு சிறப்பு அம்சம் அமைந்து இருப்பதை நாம் காணலாம். இங்கே ஆசிரியர் ஒரு விடயத்தை - அதாவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடில் எல்லையாக அமைந்து உள்ளதென்பதைச் சொல்லாமற் சொல்லிப் போகின்றார். வடக்கே நீண்ட தொடர் வேங்கட மலை. தெற்கே பாய்ந்தோடும் குமரியாறு. இது கடல் வரை சென்று சங்கமிக்கும். எனவே, கடல் எல்லையைக் கூறாமற் கூறியுள்ளார். இன்னும், வேங்கட மலைக்கும், குமரியாறுக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு என்று குறிப்பிடுவது கிழக்கு, மேற்குத் திசைகளில் கடல் எல்லைவ்ரை உள்ள நிலப்பரப்பே தமிழ் கூறும் நல்லுலகமாகும் என்பது தோன்றா நிற்கும். தமிழுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டென்று சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளார் இவ்வாறு கூறியுள்ளார்.

Page 18
8 (தொல்காட்சியத் தெரன் മണീഭയ
"ப3றுளி யாற்றுடனர் பனிமலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடலி கொள்ள
வடதிசைக் கங்கையும், இமயமும் கொண்டு, தெனிதிசை ஆணிட தென்னவனி வாழி./”
(மதுரைக்காணிடம் 17-19-22)
தமிழ் நாட்டின் தென் திசையில் நெடுதூரம் பரவியிருந்த பஃறுளி ஆறும், பல மலைத் தொடர்களும், குமரி மலையும் கடல் கொண்டு போனதாக இளங்கோ அடிகளார் ஒரு வரலாற்றுச் செய்தியைத் தந்துள்ளார். கடல் கொண்டு எஞ்சிய பகுதிதான் கடலோரக்குமரி என்பதாகும். அதுவே இன்றைய கன்னியாகுமரியாம். அதேபோல் அக்கடற் கொந்தளிப்பில் எஞ்சிய ஒரேயொரு தமிழ் நூல்தான் தொல்காப்பியம் ஆகும்.
தமிழக வரலாற்று ஆய்வாளர்கள் மூன்று கடல் கோள்களைக் குறிப்பிடுகின்றனர். அவற்றுள் முதலாவது கி.மு. 2387 ஆம் ஆண்டிலும், இரண்டாவது கி.மு. 504 ஆம் ஆண்டிலும், மூன்றாவது கி.மு. 306 ஆம். ஆண்டிலும் நிகழ்ந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இரண்டாம் முறையாக நிகழ்ந்த கடல் கோளுக்குப்பின் எஞ்சியிருந்த தமிழகத்தின் எல்லையினையே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"நெடியோனி குனிறமும், தொடியோனி பெளவமும்,
தமிழ் வரம் புறுத்த தணி புனலி நன்னாட்டு, மட மதுரையும், பீடார் உறந்தையும், கலிகெழு வஞ்சியும், ஒலிபுனலி புகாரும், அரைசு வீற்றிருந்த , உரைசாலி சிறப்பினர்,”
- (வேனிற்காதை, ச-1-5) தமிழ் மொழியின் சிறப்பும் தொன்மையும்
தமிழ் மொழியில் உள்ள இலக்கிய, இலக்கண நூல்கள் எவரையும் கவரக்கூடிய சிறப்பு அம்சம் கொண்டமை ஒரு வரப்பிரசாதம்.

ez ے حکعہvیکھ تھے برevzقD 9
இதன் காரணமாக பிற நாட்டவரும் தமிழ் மொழியைக் கற்று, அதில் பாண்டித்தியம் பெற்று, தமிழறிஞர்களையும் விஞ்சும் அளவுக்கு உயர்ந்துள்ளமை போற்றற்குரியது. இது தமிழ் மொழிக்கு ஒரு பெரும் சிறப்பாகும். அவர்கள் ஆற்றிய, ஆற்றும் தமிழ் மொழியின் ஆய்வுகள் எமக்கு ஒரு புதிய திறவு பாதையாய் அமைகின்றன.
வின்ஸ்லோ என்ற அறிஞர் “செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியினையும், இலக்கியப் பெருமையில் லத்தீன் "மொழியினையும், வெல்ல வல்லது தமிழ் மொழி” என்று கூறியுள்ளார். இது, அவர் பல மொழிகளைப் பயின்று அவற்றோடொத்துப் பார்த்துக் கூறிய உண்மைக் கூற்றாகும்.
இனி, டாக்டர் போப் பாதிரியார் கூற்றையும் பார்ப்போம். “தமிழ் மொழி எம்மொழிக்கும் இழிந்த மொழியன்று" எனக் கூறி, தம் கல்லறையின் மேல் “இங்கே தமிழ் மாணவன் அடக்கம் செய்யப் பட்டு இருக்கின்றான்” என்று கல்லில் பொறித்து வைக்குமாறு விருப்புமுறி எழுதி வைத்தார். டாக்டர் போப் பாதிரியார் அவர்கள் ஒரு பெருந் தமிழ் அறிஞர். இருந்தும், தம்மை ஒரு தமிழ் மாணவன் என்றே கூறுவது அவர் பெருந் தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.
மேலும், “வட மொழியை அறவே அகற்றிவிட்டுத் தமிழ் தனித்து இயங்க வல்லது” என்பதை ஆராய்ந்து கூறியவர் டாக்டர் கால்டுவெல் என்ற பேரறிஞர். ஆனால், டாக்டர் கால்டுவெல் அவர்களின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் வெளிவராத காலத்தில், “தமிழ் தனித்தியங்கும் மொழி. மொழிகளுக் கெல்லாம் தந்தை மொழி.’ என்று அருட்சோதி இராமலிங்க அடிகள் கூறியுள்ளதையும் இங்கு நினைவிற் கொள்ளவேண்டும்.
"ஆங்கிலம் வணிகத்தின் மொழி. இலத்தீன் சட்டத்தின் மொழி. கிரேக்கம் இசையின் மொழி. இத்தாலியம் காதலின் மொழி. பிரஞ்சு தூதின் மொழி. தமிழ் இரக்கத்தின், பக்தியின் மொழி” என்று கூறுபவர் டாக்டர் தனிநாயக அடிகளார் அவர்கள்.
இவ்வாறு தமிழ் மொழியின் சிறப்புக்குப் பிற நாட்டு, உள்
நாட்டு அறிஞர்களிடமிருந்து போதிய கூற்றுக்களை எடுத்து அடுக்கிக் கொண்டே போகலாம்.

Page 19
70 Gിരിക്കമല് های الأعوضهz%ضه ع
இனித் தமிழ் மொழியின் தொன்மையைக் கூறுமிடத்து காலத்தால் முந்திய மூன்று நூல்களைக் குறிப்பிடலாம்.
முதலாவது நூல் அகத்தியம் ஆகும். இந் நூல் கி.மு. 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிக் கடலன்னையுடன் சங்கமம் ஆகிவிட்ட ஓர் இலக்கண நூலாகும்.
இரண்டாவது நூல் திருமந்திரம் ஆகும். இந் நூல் கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி இன்றும் எம்முடன் உலா வருகின்றது. நமக்கு இன்று கிடைக்கும் நூல்களுள் இதுவே காலத்தால் மூத்தது.
மூன்றாவது நூல் தொல்காப்பியம் ஆகும். இது கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி இன்றும் நம்முடன் வாழ்ந்து வருகின்ற ஓர் இலக்கண, இலக்கிய நூலாகும். இது காலத்தால் திருமந்திர நூலுக்கு இளைய சகோதரி நூலாகும்.
இம் மூன்று நூல்களும் தமிழ் மொழியின் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றன. கி.மு. 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கண நூலான அகத்தியம், கி.மு. 6000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆகம, சித்தாந்த, யோக, ஒழுக்க நெறி, தெய்வத் தன்மை வாய்ந்த நூலான திருமந்திரம், கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இன்னொரு இலக்கண, இலக்கிய நூலான தொல்காப்பியம் ஆகிய மூன்று நூல்களின் சீரிய, கூரிய தமிழிலக்கணம் தோன்ற வேண்டுமென்றால் இதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவது தமிழ் மொழி தோன்றிச் செம்மை நிலையடைந்திருக்க வேண்டுமென்பது ஆய்வாளர் கருத்தாகும். இலக்கியம் தோன்றிய பின்தான் அதற்கு இலக்கண வரம்பு அமைவது மரபாகும். இவை தமிழ் மொழியின் உச்ச நிலைத் தொன்மையை எடுத்துக் காட்டுகின்றன.
மேலும், இம் மூன்று நூல்களுக்குப் பிந்திய சங்கத் தமிழ் நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு ஆகிய முப்பத்தாறு (36) நூல்களும் தமிழ் மொழியின் தொன்மையையும் பேசுகின்றன.

77 D قشهمكعكس علمه مع
கி.மு. 10000 ஆண்டுகள்வரை முச் சங்கங்களை அமைத்து, அதில் நேரடித் தொடர்பும் வைத்திருந்த 197 பாண்டிய மன்னர்கள், 8,598 புலவர்களைச் சங்கப் புலவர்களாக நியமித்து, நாட்டையும் ஆண்டு, மக்களையும் பேணிக் காத்து, தமிழையும் வளர்த்து வந்தனர்.
அத் தமிழை நாம் இன்று இன்தமிழ், வண்தமிழ், ஒண்தமிழ், முத்தமிழ், செந்தமிழ், தென்தமிழ், தண்தமிழ், தெளிதமிழ், பழந்தமிழ், பைந்தமிழ், தெய்வத்தமிழ் என்று பேசி, எழுதி, பெருமைப்படும் நிலையில், முச் சங்கங்களை நிறுவித் தமிழை வளர்த்த அப் பாண்டிய மன்னர்களை நினைவில் நிறுத்தி, வாழ்த்தி, போற்றி, துதித்து, பாராட்ட வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழினத்தின் தலையாய 85L60)LDuus (85lb.
மேலும், முதற் சங்க நூலான "அகத்தியம்' பன்னிரண்டாயிரம் (12000) ஆண்டுகளுக்கு முன்பும், இடைச் சங்க நூல்களான திருமந்திரம்', 'தொல்காப்பியம்' ஆகியன முறையே எண்ணாயிரம் (8000) ஆண்டுகளுக்கு முன்பும், ஏழாயிரம் (7000) ஆண்டுகளுக்கு முன்பும் எழுந்த நூல்களென்ற செய்திகளை மேலே பார்த்தோம். இவற்றில் அகத்தியம் இயற்கை அன்னையுடன் கலந்து விட்டது. மற்றைய இரு நூல்களான திருமந்திரமும், தொல்காப்பியமும் நம்முடன் ஒட்டி, உறவாடி, உயிரோடு, உலாவி வருகின்றன.
இம் மூன்று நூல்களும் எழுந்த காலம் கணிக்க முடியவில்லை. அவை காலத்தை வென்று நிற்கின்றன. ஒரு சிலர் மேற்கூறிய கால எல்லையை ஏற்று நிற்கின்றனர். வேறு சிலர் அதை மறுத்து உரைக்கின்றனர். இன்னும் ஒரு சாரார் பின்னடைவான கால எல்லைகளை மேற்கோள் காட்டி மக்கள் மத்தியில் மயக்கத்தை ஊட்டுகின்றனர்.
இது தொடர்பில் கற்றறிவாளர்க்கிடையில் கருத்தோட்டம் ஒன்று அணி மையில் நடாத் தப்பட்டது. அதன் பெறுபேறுகள் இவ்வாறமைகின்றன:-

Page 20
72
1. திருமூலர் வாழ்ந்த காலத்தை வரையறுப்பதில் எண்ணாயிரம் (8000) ஆண்டுகளின் முன்னரிலிருந்து ஆயிரத்து இருநூறு (1200) ஆண்டுகள் வரையில் ஏறுநிலை இறங்குநிலை முரண்பாடுகள் அவதானிக்கப்பட்டன. இதில் காலவேறுபாடு ஆறாயிரத்து எண்ணுர்று (6800) ஆண்டுகளாகும். இது மிக நீண்ட ஓர் இடைவெளி யாகும்.
2. தொல்காப்பியர் வாழ்ந்த காலத்தை வரையறுப்பதில் பத்தாயிரம் (10000) ஆண்டுகளின் முன்னரிலிருந்து ஆயிரம் (1000) ஆண்டுகள் வரையில் முரண்பட்டிருந்தனர். இதில் காணும் ஒன்பதினாயிரம் (9000) ஆண்டுக் கால வேறுபாடு மிக நீண்ட ஓர் இடைவெளியாகும்.
ஒரு நூல் எழுந்த கால எல்லை மிக முக்கியமானது. அது அந்நூலின் பெருமை. மேற் காட்டிய கால எல்லை முரண்பாடுகள் களையப்படல் வேண்டும். இதன் பொறுப்பு நம் தாய்நாட்டைச் சார்ந்தது. தாய்நாட்டில் அறிஞர் குழாம் நிரம்பி உள்ளனர். எனவே, அவர்கள் வேண்டிய குழு நிலைகளை நிறுவி, ஆய்வு மேற்கொண்டு, முரண்பாடான கால எல்லைகளை ஆராய்ந்து, நீக்க வேண்டியன நீக்கி, இந் நூல்களினதும் பிற கால எல்லையற்ற நூல்களினதும் கால எல்லைகளைக் கணித்து, வீண் விவாதங்களை நீக்கித் தமிழுக்குப் புத்துயிரளிப்பார்களெனத் தமிழுலகம் வேண்டி நிற்கின்றது.

73
áZø7zớ457ZZ%Zớ 4624Zớ Ø222767/7Zsaf - aszz76Z74567 - a/767/7Zsaf
பண்டைத் தமிழர் வாழ்வியலை அகம், புறம் என வகுத்து இயற்கை வழி நின்று வாழ்ந்து காட்டியுள்ளனர். புறம் புறவாழ்விய லோடு இணைந்த ஆண்மை, வீரம் பற்றி எடுத்துக் கூறும். அகம் அகவாழ்வான இன்ப உணர்வுகளோடு இணைந்த இல்வாழ்வு பற்றி விபரிக்கும். மேலும் இதை ஒருதலைக் காமம் எனவும், அன்புடைக் காமம் எனவும், பொருந்தாக் காமம் எனவும் மூன்று பகுதிகளாக்கி அவற்றை முறையே கைக்கிளை எனவும், அன்பின் ஐந்திணை எனவும், பெருந்திணை எனவும், ஒருமித்து ஏழு திணைகளை ஆன்றோர் எடுத்துக் காட்டியுள்ளனர். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் இவ்வண்ணம் அமைத்துள்ளார்.
"கைக்கிளை முதலாப் பெருந்தினை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதினை எனிய, "-
- (GLITutólf. ot)

Page 21
74 G2 یع۶۶یع ص ரேன் துனிசன்
இதில், அன்புடைக் காமம் என்றும், அன்பின் ஐந்திணை என்றும் கூறப்படுவது ஐவகையான நெறி பற்றிய கூற்றாம். அவை ஐவகை நிலங்களிற்கேற்ப ஒட்டிய சூழல், சுற்றாடல் ஆகியவற்றோடு இணைந்தனவாய் நிகழ்வனவாம். இவற்றை ஐந்திணைகளான முல்லைத்திணை, குறிஞ்சித்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல்திணை எனவும், ஐவகை நெறிபற்றி வகுத்தும், அவற்றைப் பகுதிகளாக்கிப் பற்பல துறைகளில் நின்று உள்ளத்து உணர்வெழுச்சி களை நயம்படச் செய்யுள் தொடுத்து நிற்பது பண்டைத் தமிழர் மரபாகும்.
சிறந்த புலவர் யாக்கும் செய்யுளில் அடங்கிய பொருளை ஆயுங்கால் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய முப்பொருள்களும் காணப்பெறுமென்று திணைகளின் பொருள் பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
*முதலிகரு உரிப்பொருளி எனிற முனிறே
நுவலுங் காலை முறைசிறந் தனவே பாடலுட் பயின்றவை நாடுங் காலை."
- (Gurdj6t. O3)
முதற் பொருள்
முதற்பொருள் எனப்படுவது நிலமும், பொழுதும் ஆகிய இயற்கையென உலகவியலை அறிந்தோர் கூறுவரெனச் சூத்திரம் கூறும்.
"முதலெனப் படுவது நிலம்பொழு திரணிடினி
இயலியென மொழிய இயலிபுணர்ந் தோரே."
- (பொருள். O4)
நிலம் என்பது முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்ற ஐவகை நிலங்களாக வகுக்கப்பட்டவையாம். பொழுது என்பது அந்த ஐவகை நிலம் சார்ந்தோருக்கு இன்ப உணர்வினைக் கொடுக்கின்ற பெரும்பொழுதும், சிறுபொழுதும் ஆகிய இரண்டுமாம்.

KZ ه ح۶هzz ییarzق D 75
இன்னும், பெரும்பொழுதில் கூதிர், முன்பணி, வேனில், பின்பணி, வைகறை, ஆறு பருவங்கள், கார், ஆகிய காலமும், சிறுபொழுதில் யாமம், நண்பகல், மாலை, எற்படும் பொழுது, விடியல் ஆகிய பொழுதும் அடங்கும். இனிச் சூத்திரம் கூறும் பாங்கினையும் காண்போம்.
"காரும் மாலையும் முலிலை. و و
- (Gundréif-O6) குறிஞ்சி,
szállj LITIOLÓ 676oftD6öTITf L/6vállj. '-
- (பொருளி-O7) "பனியெதிர் பருவமும் உரித்தென மொழிய, "
- (GLIIrdisit. O8)
வைகறை விடியணி மருதம்."
- (GLIIIdolf. O9)
67թաn (6)
"நெய்தலி ஆதலி மெய்பெறத் தோன்றும்."
- (பொருள். 1O)
நடுவுநிலைத் தினையே நணர்பகலி வேனிலொடு முடிவுநிலை மருங்கினர் முன்னிய நெறித்தே."
- (பொருள். 11) பினிபனி தானும் உரித்தென மொழிப."
- (பொருள். 12)

Page 22
76 G2 صوصzzzz۶تضییع ரேன் به عصبع
மேலும் நிலம் பற்றிக் கூறுகையில், திருமால் காக்கும் காடாகிய முல்லை இடமும், முருகவேள் காக்கும் மலையாகிய குறிஞ்சி இடமும், இந்திரன் காக்கும் வயலாகிய மருதம் இடமும், வருணன் காக்கும் பெரு மணலான நெய்தல் இடமும், முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முன்னோர்களால் மொழியப்பட்ட பெயர்கள் எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.
"மாயோனி மேய காடுறை உலகமும்
சேயோனி மேய மைவரை உலகமும் வேந்தனி மேய திம்புனலி உலகமும் வருணனி மேய பெருமணலி உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொலிலிய முறையாற் சொலிலவும் படுமே."
- (Gudjaf. O5)
தொல்காப்பியர் காலத்திற்கு முன் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்கள் இருந்துள்ளமை தெளிவாகின்றது. ஆனால் காலப்போக்கில் முல்லையும், குறிஞ்சியும் முறைமுறை திரிந்து, நல்லியல்பு இழந்து, வெம்மையால் வளமை குன்றிப் போயுள்ள நிலத்தைப் பாலை' எனப் பெயரிட்டனர். இதன் பின்தான் நால்வகை நிலங்கள், ஐவகை நிலங்களாகவும், ஐந்திணை களாகவும் பெயர் பெற்றன. பாலை பிறந்த கதையைச் சிலப்பதிகாரத்தில் காண்போம்.
முல்லையும், குறிஞ்சியும், முறைமையினி திரிந்து நலி இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப், பாலை எனியது ஓர் படிவம் கொள்ளும்."
- (காடுகாணி காதை, 64 - 66)
உரிப்பொருள்
உரிப்பொருள் என்பன, மக்களுடைய ஒழுகு முறைகளும், அவர் உள்ளத்தில் எழும் மன உணர்வான எழுச்சிகளுமாகும். இதைத் தொல்காப்பியம் இவ்வாறு கூறும்.

മേ ഷീരുമD 77
"புணர்தலி பிரிதலி இருத்தலி இரங்கலி
ஊடலி அவற்றின் நிமித்தம் எனிறிவை தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே."
- (Gundat 16 )
இவை ஐந்திணைகளையும் ஒட்டிப் பத்து வகையாகப் பேசப் படுகின்றன. அவற்றைக் குறிஞ்சியில் புணர்தலும், புணர்தல் நிமித்தமும் எனவும்; பாலையில் பிரிதலும், பிரிதல் நிமித்தமும் எனவும், முல்லையில் இருத்தலும், இருத்தல் நிமித்தமும் எனவும், மருதத்தில் ஊடலும், ஊடல் நிமித்தமும் எனவும், நெய்தலில் இரங்கலும், இரங்கல் நிமித்தமும் எனவும், ஆகிய பத்து வகையாகக் கூறுவர்.
இன்னும் தலைமகளை உடன் அழைத்துக் கொண்டு செல்லு தலைக் கொண்டுதலைக் கழிதல்' என்று கூறுவர். பாலைத்திணையில் தலைமகனும் தலைமகளும் பிரிந்த பொழுது அப்பிரிவினைத் தாங்கும் ஆற்றலின்றி வருந்துவதைப் பிரிந்தவண் இரங்கல்' என்றும் கூறுவர். இந்நிகழ்வில் தொல்காப்பியர் கூற்றினையும் காண்போம்.
கொணிடுதலைக் கழிதலும் பிரிந்தவணி இரங்கலும் உணர்டென மொழிய ஓரிடத் தான. "
- (பொருளி. 17)
தலைவியைக் கண்ட பொழுது தலைவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி நிலையும், குறிப்பு அறியும்வரை ஏற்படும் நிகழ்ச்சியும், தலைவியை எதிர்கொண்டு காணுதலும் ஆகிய நிகழ்ச்சிகள் ஓரிடத்தில் நிகழும் உரிப்பொருளாம் என்று சூத்திரம் கூறும்.
கலந்த பொழுதும் காட்சியும் அணின."
- (பொருள். 18)
கருப்பொருள்
ஐந்திணைகளுக்கும் உரியனவாகவும், அவற்றின் கண் உள்ளனவாகவும், இருப்பனவற்றைக் கருப்பொருள்கள் என்று கூறுவர்.

Page 23
፲8 G2تكهنتسمعتصمو Cதரன் മസഭയ
தெய்வம், உணவு, மா (விலங்கு), மரம், புள் (பறவை), பறை, தொழில், பண் (இசை) முதலிய எட்டும், அத்தன்மைய பிறவும் கருப்பொருள் என்று தொல்காப்பியர் கூறுவர்.
"தெய்வம் உனாவே மாமரர் புட்பறை
செய்தி யாழினி பகுதியொடு அவ்வகை பிறவும் கருவென மொழிய."
- (பொருள். 2O
இன்னும் பூ, நீர் என்பனவும் கருப்பொருள்கள் என்று கூறுவர் இளம்பூரணர். நச்சினார்க்கினியர் ஊர் என்பதையும் இதனுடன் சேர்த்துள்ளார். மேலும், நம்பியகப்பொருள் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என மக்களையும் யாழ், பண் எனவும் பகுத்து இதனுடன் சேர்த்துக் கூறும். கருப்பொருள்கள் அவ்வத் திணைக்குரிய சிறந்த பொருள்கள் என்று மட்டுமே கருதவேண்டும். மேற் கூறப்பட்ட தெய்வம் முதலான பதினான்கு கருப்பொருள்களையும் முல்லை, குறிஞ்சி, UsT606), மருதம், நெய்தல் ஆகிய ஐந்திணைகளுக்கும் வகுத்துக் கூறின்
அவை இவ்வண்ணம் அமையும்.
நிலம் முல்லை குறிஞ்சி T6RCA) மருதம் நெய்தல்
1தெய்வம் LomrGBuunteir முருகவேள் கொற்றவை இந்திரன் வருணன்
குறும்பொறை பொருப்பன் வி Gstrusăr
நாடன், வெற்பன், l6), ம் US 2உயர்ந்தோர் கிழத்தி, சிலம்பன், காளை LAO ழநன. புலமபன,
தோன்றல் குறவன் எயிற்றியர், கிழத்தி, பரத்தி
மனைவி நுழைச்சி மனைவி குறத்தி
Luി, இை 荷 குறவர், O s உழத்தியர், பரத்தியர்,
கானவர், மறத்தியர் கடைசியர், நுழைச்சியர் ܀ ܐ به چه 3.தாழ்ந்தோர் இடைச்சியர், குறத்தியர் வயிற்றியர், உழவர் நளையர் ஆய்ச்சியர், வேட் ఎi எயினர், ளவர் கோவலர், மறவர் S6)list, அளவா பொதுவியர் குன்றுவர் களமர் திமிலர்
பருந்து, வண்டானம் கடற்காகம் diG இளி 4. புள் ಇಷ್ಕ್ರೀಃ॥ ould எருவை, பெருநாரை அன்னம் புறா, கழுகு மகன்றில் அன்றில்

ez حمعهazهيمیایazق D
79
புலி, சிங்கம் செந்நாய், புலி, எருமை, சுறாமீன், 5. விலங்கு மான், முயல் யானை, கரடி JTS)GT நீரநாய் கராமீன் 6. earI பாடி, சேரி, சிறுகுடி, குறும்பு பேரூர் Lurrėštas úb
பள்ளி குறுஞ்சி பறந்தலை மூதூர் ulu-artb 7§ሱ అభిజ్ఞవాణా அறுவி நீர் ಹೆಗ್ಗೋ p யாற்று நீர் *
சுனை நீர் நீரில்லா கிணற்று நீர் கான்யாற்று நீர் குழி கவர்நீர்
ல்லைப் வேங்கை, நெய்தல்
•ဦ; றிஞ்சி குரா அமயு. 8. L. Cyo l குறிஞ் மரா அம்பு 5порju 4 5Tipo
தோன்றிப் பூ காந்தள் ܙܕܝܘܚܪ கழுநீர்ப் பூ மூண்டகப் பூ
பிடவம் பாதிரிப் பூ -
lead சுனைக் குவளை billfuld கொன்றை சந்தனம், தேக்கு இருப்பை, உழி காஞ்சி, asalirudio 9. மரம் &TuT, மூங்கில், அகில், ஞை வஞ்சி புன்னை குரந்தம் அசோகு, நாகம் பாலை, ஓமை Loossib ஞானம்
மூங்கில் அரிசி, உப்பு, மீன், 6N2.Jś, ரை ATGES 10 alone ఆ மலை நெய், : seirfâu விற்றுப் பெற்ற
தினை பொருள்கள் 11.Lu Gongo 9 ఏజంu- ஆறலைப் பறை ట நாவாய்ப் பறை 12. uту முல்லை யாழ் குறிஞ்சி யாழ் பாலை யாழ் மருத யாழ் sálemfi ump
3.ua சாதாரி குறிஞ்சிப் பண் பஞ்சுரம் மருதப் பண் செல்வழிப் பண்
சாமை, வரகு விதைத்தல், தேன் எடுத்தல், Rypon, மீன் பிடித்தல் 14.தொழில் கடலாடுதல் தினை காத்தல், சூறையாடல் விழாச் உப்பு
நிரை கனை நீராடல், போர் செய்தல், செய்தல் ܘ[ வித்தல் மேய்த்தல் வெறியாடல் நீராடல் ளைவித்த கூத்தாடல்
இதுவரை முப்பொருள்களான முதற்பொருள், உரிப்பொருள், முதற்பொருளில் நிலம், பொழுது ஆகிய இரண்டினையும், நிலத்தில் ஐந்திணைகளான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களையும், பொழுதில்
கருப்பொருள்களையும்,
யாமம், நண்பகல், மாலை, விடியல், எற்படு காலம் என அடங்கியவை சிறுபொழுது என்றும், கூதிர், முன்பணி, வேனில், பின்பணி, கார், ஆறுபருவங்கள் என அடங்கியவை பெரும்பொழுது என்றும், உரிப் பொருளில் ஐந்திணைகளையும் ஒட்டி மக்கள் மனதில் எழும்

Page 24
20
மனவுணர்வுகளான இருத்தல், புணர்தல், பிரிதல், ஊடல், இரங்கல் ஆகியனவற்றையும், கருப்பொருளில் ஐந்திணைகளுக்கான வெவ்வேறு பட்ட தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், புள், விலங்கு. ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் ஆகிய பதினான்கு சிறப்பு வாய்ந்த பொருள்களையும் மேற்காட்டிய தொல்காப்பியச் சூத்திரங்கள் மூலம் படித்து அறிந்தோம்.
தொல்காப்பியர் எம் கண்முன் ஓர் அரிய காட்சியைத் தந்துள்ளார். அக்காலப் பண்டைத் தமிழர் இனப்பற்றும், நாட்டுப் பற்றும், மொழிப்பற்றும், அறநெறிப்பற்றும் அமைந்தவராய், இயற்கை யோடு இணைந்து, ஒட்டி, உறவாடி, அறநெறி நின்று, இணைந்த ஒத்த இன்பமெய்தி, மலர்ந்த வாழ்வியல் பெற்றிருந்தனரென்பது புலனாகின்றது.
இதில் நாம் இன்று அதிகமானவற்றை இழந்து, வாழ்க்கை நெறி குலைந்து, தவிக்கின்றோமென்பதை நினைந்து கவலையுறாதிருக்க முடியவில்லை.

27
ളZ മീബബ്ബ് aaZ22Z Za257ava7ZZz67
இன்ப ஒழுக்கத்தின் இயல்பைப் பற்றி அகத்திணையிலும் அறம், பொருள், ஒழுக்கங்களின் இயல்பைப் பற்றிப் புறத்திணையிலும் விபரித்துக் கூறப்பட்டுள்ளது. அகத்திணையில் ஏழு திணைகளான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை ஆகியவை பற்றிச் சொல்லப்பட்டுள்ளன. இவற்றின் புறத்தே நிகழ்வனவான வஞ்சி, வெட்சி, வாகை, உழிஞை, தும்பை, பாடாண், காஞ்சி ஆகிய ஏழு திணைகளும் புறத்திணையில் பேசப்படுகின்றன.
1. காடாகிய முல்லைத் திணைக்குப் புறம்பான, மண்ணாசை கொண்ட மன்னனுடன் மற்றோர் மன்னன்சென்று போர் செய்தலைக் கருதி வஞ்சி என ஒரு பெயர் பெறும்.
2. மலைப் பாங்கான குறிஞ்சித் திணைக்குப் புறம்பான நிரைகோடலும், நிரை மீட்டலும் ஆகிய வேறுபாடு குறித்து வெட்சி என்றும் கரந்தை என்றும் இரு பெயரிட்டுக் கூறுவர்.

Page 25
22 (தொல்காம்பியச் சேன் துனிசன்
3. வனாந்தரமான பாலைத் திணைக்குப் புறத்தான, மன்னரும் ஏனையோரும் தமது வெற்றியை வேறுபடுத்திக் குறித்தலால் வாகை என்றொரு பெயர் பெறும்.
4. வயல் சார்ந்த மருதத் திணைக்குப் புறத்தான, எயில் அழித்தல், எயில் காத்தல் வேறுபாடு குறித்து உழிஞை எனவும் நொச்சி எனவும் இரு பெயரிட்டுக் கூறுவர்.
5. கடலும் கடல் சார்ந்த நெய்தல் திணைக்குப் புறம், இரு வேந்தரும் தம் வலிமையே பொருளாகக்கொண்டதால் தும்பை என ஒரு பெயர் பெறும்.
6. ஒரு தலைக் காமமான கைக்கிளைக்குப் புறத்தான,
செந்நிறமாகிய ஒரு பொருளைக் குறித்து வருதலினால் பாடாண் என்று ஒரு குறி பெறும்.
7. பொருந்தாக் காமமான பெருந்திணைக்குப் புறத்தான, நிலையாமையாகிய பொருளைக் குறித்து வருவதால் காஞ்சி என்றொரு பெயர் பெறும்.
7.வஞ்சித் தினை
‘வஞ்சி' என்னும் புறத்திணை “முல்லை’ என்னும் அகத்திணைக்குப் புறனாகும். மண்ணாசை கொண்ட மன்னனுடன் இன்னோர் அரசன் சென்று பெரும் போர் தொடுத்தலைப் பின்வரும் சூத்திரம் வஞ்சியின் இயல்பாகக் கூறுகின்றது.
"வஞ்சி தானே முலிலையது புறனே
எஞ்சா மணிநசை வேந்தனை வேந்தனி அஞ்சுதகத் தலைச்செனிறு அடலிகுறித் தனிறே. 象象
- (Guirassif. 64)
வஞ்சித் திணைக்கு மிகச் சிறப்பு வாய்ந்த பதின்மூன்று துறைகள் உரியனவென்று தொல்காப்பியம் கூறுகின்றது. அவையாவன: (1) படையின் பேரொலியும், (2) பகைவன் நாட்டைத்

ez விசமதத்தினர்) 23
தீயிட்டுக் கொளுத்துதலும், (3) படைகளின் பெருமையும், (4) அரசன் பரிசில் கொடுத்தலும், (5) பகைவரைக் கொன்ற வெற்றியும், (6) பாராட்டுப் பெற்ற வீரன் தானே புகழ்ந்து கொள்ளுதலும், (7) பிறரால் புகழப்படுதலும், (8) தன் படையைச் செலுத்திய பேராண்மையும், (9) நீர்ப்பெருக்கை ஒரு கற்றுாண் தடுத்து நிற்பது போல் தான் ஒருவனே எதிர் நின்று பகைவரை எதிர்த்தலும், (10) மிகுதிச் சோற்றைத் தன் வீரர்களோடு உண்டலும், (11) வென்றோர் விளக்கமும், தோற்றோர் குறையும், (12) பகைவர் நாடு அழிவுற்ற தற்கு வென்றோர் வருந்திக் கூறும் வள்ளைப் பாட்டும், (13) போரில் இறந்தோரையும், காயமுற்றோரையும் துக்கம் விசாரித்துப் பொருள் கொடுத்துதவுவதும் ஆகியவைகளாம்.
"இயங்குபடை அரவம் எரிபரந்து எடுத்தனி
வயங்கலி எய்திய பெருமை யானும் கொடுத்தலி எய்திய கொடைமை யானும் அடுத்தூர்ந்து அட்ட கொற்றைத் தானும் மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருளினிறி உய்த்த பேராணி பக்கமும் வருசிறைப் புணலைக் கற்சிறை போல ஒருவனி தாங்கிய பெருமை யானும் பிணிடம் மேய பெருஞ்சோற்று நிலையும் வெனிறோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் குனிறாச் சிறப்பினி கொற்ற வளிளையும் அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பினி துறையதினி முனிறே."
- (Guruvat. 65) 2. வெட்சித் தினை - கரந்தைத் திணை
அகத்திணை இலக்கியத்தை உணர்ந்து புறத்திணை இலக்கியத்தைக் கூறின் ‘வெட்சி' என்னும் புறத்திணை 'குறிஞ்சி’ என்னும் அகத்திணைக்குப் புறனாக அமையும். அது பகைவர்கள் அஞ்சக்கூடிய பதினான்கு துறைகளைக் கொண்டது என்பர்.

Page 26
24 G2zبه عه zz۶۶۶یع ரேன் துனிசன்
"அகத்தினை மருங்கினி அரினிதய உணர்ந்தோர்
புறத்தினை இலக்கணம் திறம்படக் கிளப்பிணி வெட்சி தானே குறிஞ்சியது புறனே உட்குவரத் தோனிறும் ஈரேழி துறைத்தே."
- (பொருள், 59)
பகைமன்னர் மீது போர் தொடுப்பதன்முன் அரசனால் ஏவி விடப்பட்ட மக்கள் பகை நாட்டுள் யாரும் அறியாவண்ணம் சென்று அந்நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து தம் நாட்டுக்குக் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்திருத்தல் என்பதைத் தொல்காப்பியர் வெட்சித் திணையின் இலக்கணம் எனக் கூறுவர்.
"வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவினி
ஆதந்து ஓம்பலி மேவற்று ஆகும்."
- (Guldbat. 6O
வெட்சியின் பதினான்கு துறைகளாவன: (1) பசுக் கூட்டங்களைக் கவர்தலால் எழும் படையின் பேரொலி, (2) வெற்றியை விரும்பி நிகழ்கின்ற நற்செய்தி கேட்டல், (3) ஒற்றர் அறியாவண்ணம் செல்லுதல், (4) பகைவர் அறியாது ஒற்றர் மூலம் அவரது நிலையை அறிதல், (5) பகைவர் அறியாவண்ணம் அங்கு சென்று தங்குதல், (6) தங்கி நின்று அவ்வூரை அழித்தல், (7) எதிர்ப்போரை வெற்றி கொள்ளல், (8) பசுக் கூட்டங்களைக் கவர்தல், (9) அவற்றை வருத்தாது ஒட்டி வருதல், (10) வீரர்களின் உறவினர் கவலையுற்றிருக்க வீரர் வீடு வந்து சேர்தல், (11) பசுக் கூட்டங்களைத் தம் ஊருக்குக் கொண்டு வந்து சேர்த்தல், (12) எல்லாரும் பசுக்களைப் பங்கிட்டுக் கொள்ளல், (13) பெற்ற வெற்றியால் மது அருந்தி ஆடி மகிழ்தல், (14) தமது பசுக்களை இரந்து கேட்போர்க்குக் கொடையாகக் கொடுத்தல், என்பனவாம்.

ez விசவரத்தினர்) 25
"படையிலங்கு படையிலங்கு அரவமி பாக்கத்து விரிச்சி
புடைகெடப் போகிய செலவே புடைகெட ஒற்றினி ஆகிய வேயே வேப்ப்புறம்
ஒற்றினி ஆகிய புறத்து இறை முற்றிய ஊர்கொலை ஆகோளி பூசலி மாற்றே நோயினிறு உய்த்தனி நுவலிவழித் தோற்றம் தந்துநிறை பாதிடு உணிடாட்டுக் கொடையென வந்த ஈரேழ் வகையிற்று ஆகும்."
- (Gurdj6t. 61)
அரசர் ஒரு நாட்டின்மேல் போர் தொடுப்பதற்குமுன் அந்நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து கொண்டு வந்து விடுவது அந்நாளிலுள்ள ஒரு வழக்கம். போரின் பொழுது பசுக்களுக்கு ஓர் இன்னலாவது நடந்துவிடக் கூடாதென்பது அவர்களின் அசையா நம்பிக்கை. பசுக்களை ஒரு தெய்வப் பிராணியாக எண்ணினர். பசுக்களைக் கொல்லும் வழக்கமும் இருக்கவில்லை. அன்று சீவகாருண்ணியம் கடைப் பிடிக்கப்பட்டது. பசுக்களைக் குளிப்பாட்டிச் சோடித்துப் பூத்தொடுத்து விழாவெடுப்பதும் உண்டு. தொல்காப்பியர் காலத்தில் பசுக்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஈண்டு நன்றே புலனாகின்றது.
கரந்தைத் திணைக்கு இருபத்தொரு துறைகள் உரியன வென்று தொல்காப்பியம் கூறும். அவையாவன: (1) வெறியாட்டுச் சிறப்பினையும் உயிர்க்கொலைக்குரிய கொடிய வாயினையுமுடைய வேலன், காந்தள் மாலையணிந்து தெய்வமாடும் காந்தளும், (2) பகைவன், மன்னன் படைகளுக்கிட்ையே வேறுபாடு காண வேண்டி அணிந்த பனம்பூ, வேப்பம்பூ, ஆத்திப்பூ ஆகிய பூக்களும், (3) வாடும் கொடியல்லாத வள்ளி என்னும் கூத்தும், (4) வீரர்களால் புகழப்பட்ட கெடாத வீரக்கழல் நிலையும், (5) புறங்காட்டி ஓடாது எதிர்த்து நிற்கும் பகைமன்னனின் செயலை உன்னமரத்தோடு ஒத்துப் பார்க்கும் உன்ன நிலையும், (6) திருமாலின் காத்தற் புகழையும்,

Page 27
26 G6ھ قعہ ہوۓzzترzتھی برے حو தேன் gരീഭയ
மற்றோரின் படைத்தல், அழித்தல் ஆகிய புகழையும், (7) அரசர் தொழிலுக்கு O660) D காட்டப்படும் பூவை நிலையும், (8) போரின் பொழுது பகைவரைப் புறங்காட்டி ஓடச் செய்தலும், (9) கவரப்பட்ட பசுக் கூட்டங்களை மீட்டலும், (10) புகழ் பெற்ற அரசன் சிறப்பை எடுத்துக் கூறுதலும், (11) தன் போர்த் தொழில் ஆர்வத்தால் வஞ்சின மொழிகளைத் தன்னுடன் கூட்டிச் சொல்லுதலும், (12) தன்னை நாடிவரும் கொடிய படையை எதிர்த்து நிற்றலும், (13) பகைவரைத் தன் வாள்வன்மையால் வீழ்த்தித் தானும் வீழ்ந்து மடிதலும், (14) போரில் மறவர்கள் செய்யும் அஞ்சாமையும், (15) வாட்போரில் பகைவரை வென்ற அரசிளங்குமரனை மக்கள் பாராட்டி, பறை ஒலித்து, அரசைக் கொடுத்துக் கொண்டாடிய ஆட்டமும், (16) போரில் இறந்த வீரர்களின் நினைவாக நிறுத்தற் கல்லைப் பார்த்தலும், (17) அக் கல்லை எடுத்து வருதலும், (18) அக் கல்லைக் கழுவிச் சுத்தப்படுத்தலும், (19) அதை ஓர் இடத்தில் நடுதலும், (20) நட்ட கல்லைக் கோயிலாக எழுப்பி, அவன் பீடுகளைத் தீட்டிச் சிறப்புச் செய்தலும், (21) நடப்பட்ட கல்லினைத் தெய்வமாக்கிப் போற்றி வாழ்த்துதலும் ஆகியனவாம்.
வெறியறி சிறப்பினர் வெவ்வாப் வேலணி வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை வேந்திடை தெரிதலி வேனிடி ஏந்துபுகழிப் போந்தை வேம்பே ஆரென வருஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் வாடா வள்ளி வயவர் ஏத்திய ஓடாக் கழலிநிலை உளப்பட ஓடா உடலிவேந்து அடுக்கிய உணின நிலையும் மாயோனி மேய மணிபெருஞ் சிறப்பினர் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் ஆரமர் ஓட்டலும் ஆபெயர்த்துத் தருதலும் சீர்சாலி வேந்தனி சிறப்பெடுத்து உரைத்தலும் தலைத்தாளர் நெடுமொழி தனினொடு புணர்த்தலும்

KZ ه حجتهzaقصاصص2یی D 27
மனைக்குரி மரயினது கரத்தை அணிறியும். வருதார் தாங்கலி வாளிவாய்த்துக் கவிழ்தலெனிறு இருவகைப் பட்ட பிள்ளை நிலையும் வாள்மலைந்து எழுந்தோனை மகிழிந்துயறை துங்க நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டும் காட்சி காலிகோள் நீர்ப்படை நடுகலி சீர்த்த மரபிலி பெரும்படை வாழித்தலெனிறு இருமூன்று மரபிற் கல்லொடு புணரச் சொலிலப்பட்ட எழு முனிறு துறைத்தே."
—(Glштd56яf.6з)
அன்று பேரில் இறந்த வீரர்களின் நினைவாக நட்ட நடுகல் கோயிலாகவும், தெய்வமாகவும் எழுந்த முறை கண்டோம். இற்றைக்கு ஏழாயிரம் (7,000) ஆண்டுகளுக்குமுன் எழுந்த கோயில்களும், தெய்வங்களும் அன்றிலிருந்து இன்றுவரை சங்கிலித் தொடராய் வருவதையிட்டு நாம் பெருமையடையும் இதே நேரத்தில், இவ்வாறான அரும் பெரும் செய்திகளை அன்றே பூவுலகில் விதைக்கப்பட்ட விதைகள் இன்றுவரை தொடர்ந்து முளைவிட்ட வண்ணமிருப்பதற்குக் காரணகர்த்தாவாக இருந்த 'ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனாரைப் பெருமைப்படுத்தி நம்மனைவர் மனத்திலிருத்திப் போற்றுவோம்.
3, 62/InazDöö Afilzxzzov
'வாகை என்னும் புறத்திணை பாலை’ என்னும் அகத் திணைக்குப் புறனாக அமையும். இது, குற்றமற்ற கொள்கையுடைய தங்கள் இயல்பை, மற்றவரினும் பார்க்க மாறுபட்ட முறையில் மிகுதிப்படுத்தல் என்று வாகைத் திணைக்கு இயல்பு கூறுகின்றது தொல்காப்பியம்.
"வாகை தானே பாலையது புறனே தாவிலி கொளிகைத் தத்தம் கூற்றைப் பாகுபட மிகுதிப் படுத்தலி எனிய, "
- (GL756t. 73)

Page 28
28 Gിരിക്കമ് മക്ക് துனிசன்,
சிறப்புறுதலாகிய வாகைத் திணைக்கு ஏழுவகையான பாகுபாடுகள் அமைந்துள்ளனவென்று கூறுவர் புலவர். அவையாவன:- (1) ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய ஆறு திறன்களும் அந்தணர் பக்கமும், (2) ஓதல், வேட்டல், ஈதல், படை வழங்கல், குடிகாத்தல் ஆகிய ஐந்து வகைகளும் அரசர் பக்கமும், (3) கற்றல், வேள்வி செய்தல், கொடுத்தல், உழவுத் தொழில், வாணிபம், பசுக்கள் வளர்த்துக் காத்தல், ஆகிய ஆறு பகுதிகளும் வணிகர் பக்கமும், (4) உழுதல், பிற தொழில் செய்தல், விருந்தினரைப் பாதுகாத்தல், விலங்கு வளர்த்தல், வழிபடுதல், வேதம் நீங்கிய கல்வி கற்றல் என்னும் ஆறு பகுதிகளும் வேளாளர் பக்கமும், (5) மழை, பனி, வெயில் ஆகிய முக்காலத்தையும் கணியன் பக்கமும், (6) நீரில் குளித்தல், தரையில் உறங்குதல், தோலை உடுத்திக் கொள்ளுதல், முடியை வளர்த்தல், தீயை வளர்த்தல், ஊர்ப்புறங் களுக்குச் செல்லாமை, காட்டு உணவை உண்ணல், கடவுளையும் ஞானிகளையும் வணங்குதல் ஆகிய எட்டு வகைகளும் தவமேற் கொண்டார் பக்கமும், (7) பாலறி மரபில் பொருநர் பக்கமும், இவற்றுடன் சொற்போர், பாட்டுப் போட்டி, ஆடற் போட்டி, சூதாட்டப் போட்டிகளில் வெல்லுதலும் என்பனவாம்.
"அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபினி அரசர் பக்கமும் இருமுனிறு மரபினர் ஏனோர் பக்கமும் மறுவிலி செய்தி மூவகைக் காலமும் நெறியினி ஆற்றிய அறிவனி தேயமும் நாலிரு வழக்கிலி தாயதப் பக்கமும் பாலறி மரபிலி பொருநர் கணினும் அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையாலி
தொகைநிலை பெற்றது எனிமனார் புலவர்."
- (பொருளி. 74)
வாகைத் திணைக்குப் பதினெட்டுத் துறைகள் உள்ளனவென்று தொல்காப்பியச் சூத்திரம் கூறும். அவையாவன: (1) கூதிர், வேனில் ஆகிய இரு பாசறைகளின் போர் விருப்பினால் புரிந்த போர்நிலை

ez ബ്ബ് 29
வகையும், (2) உழவர் உழுது நெல் பெற்று அறம் செய்வதுபோல், அரசன் போரில் பெற்ற பொருள்களைப் பரிசில் கொடுக்கும் சிறப்பினைப் புலவர் பாடுதலும், (3) தேர்ப்படை அரசனை வென்ற அரசன் தேரின்முன் ஆடும் முன்தேர்க் குரவைக் கூத்தும், (4) ஒன்றிய மரபுடன் தேரின்பின் ஆடுகின்ற பின்தேர்க் குரவைக் கூத்தும், (5) பெரும் பகையினை எதிர்த்து நிற்கும் வேலினைப் புகழும் இடமும், (6) பெரும் பகைவரை எதிர்த்து நிற்கும் ஆற்றலும், (7) பொருந்தா வாழ்க்கை உடைய வலிய ஆண்மையினைப் பொருந்தும் பகுதியும், (8) பகைவர்கள் நாணுமாறு தன் தலைவனைப் பற்றி முன்கூறிய உறுதிமொழியை நிரூபிக்கத் தன் உயிரை வழங்கிய அவிப்பலியும், (9) பகைவரின் இடத்தைப் பொருந்திய பகுதியும், (10) எருது புறந்தருகின்ற வேளாளரும், பசுவினைப் பாதுகாக்கும் வணிகரும் ஆகிய சான்றோர் பகுதியும், (11) பிறன்மனை விரும்பாத பகுதியும், (12) குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவு நிலைமை, அழுக்காறாமை, அவாவின்மை ஆகிய எட்டுப் பகுதியினையுடைய அவையகமும் (13) அடக்கமுடைமை, ஒழுக்க முடைமை, நடுவு நிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினை யச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை ஆகிய கட்டுப்பாட்டுடனான இல்லறத்தின் பகுதியும், (14) மிக்க புகழினைத் தரும் கொடையும், (15) பிழ்ை செய்தோரைத் தாங்கும் பாதுகாவலும், (16) மெய்ப் பொருளோடு இணைந்த பகுதியும், (17) அருளோடு சேர்ந்த துறவும், (18) காமம் நீங்கிய பகுதியும் என்பனவாம்.
"கதிர் வேனிலி என்றிரு பாசறைக்
காதலினி ஒன்றிக் கணிணிய வகையினும் ஏரோர் களவழி அணிறிக் களவழித் தேரோர் தோற்றிய வெனிறியும் தேரோர்
வெனிற கோமானி முனிதேர்க் குரவையும ஒன்றிய மரபிற் பிணிதேர்க் குரவையும் பெரும்பகை தாங்கும் வேலி னாலும் அரும்பகை தாங்கும் ஆற்ற லானும் புலிலா வாழ்க்கை வலிலானர் பக்கமும்

Page 29
30 G29 توضعهمتهم كمتعام தேன் ജയഭ്യ
ஒலிலார் நாணப் பெரியவர்க் கணிணிச் சொலிலிய வகையினர் ஒனர்றொடு புனர்த்துத் தொலிலுயிர் வழங்கிய அவிப்பலி யானும் ஒலிலார் இடவயிற் புலிலிய பாங்கினும் பகட்டி னாலும் ஆவி னாலும் துகள்தபு சிறப்பினி சானிறோர் பக்கமும் கடிமனை நீத்த பாலினி கணினும் எட்டுவகை நுதலிய அவையகத் தானும் கட்டமை ஒழுக்கத்துக் கணிணுமை யானும் இடையிலி வணிபுகழிக் கொடையி னானும் பிழைத்தோர்த் தாங்கும் காவ லானும் பொருளொடு புணர்ந்த பக்கத் தானும் அருளொடு புணர்ந்த அகற்சி யானும் காமம் நித்த பாலி னாலுமெனிறு இருபாற் பட்ட ஒணிபதினி துறத்தே."
- (பொருளி. 75)
4. உழிஞைத் தினை : நொச்சித் திணை
"உழிஞை என்னும் புறத்திணை, மருதம்' என்னும் அகத் திணைக்குப் புறனாகும். இது, நிரம்பிய தலைமை கொண்ட பகைவரின் மதிலைக் கைப்பற்றுதலும், அழித்தலுமாகிய மரபினை இலக்கணமாகக் கொண்டது.
“உழிஞை தானே மருதத்துப் புறனே
முழுமுதலி அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும் என்ப."
- (GLIIIdrist - 66) உழிஞைத் திணைக்கு எட்டு வகையான துறைகள் உள்ளனவென்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது. அவையாவன: (1) தன் அரசையும், ஆணையையும் ஏற்றுக் கொள்ளாத பகைவரது நாட்டைக் குறித்த வெற்றியும், (2) நினைத்ததை முடித்துக் காட்டும் அரசன்

கு. ه ح۶یعهzzقصاصی و D 37
சிறப்பும், (3) எதிரியின் பழமையான மதிலின்மீது ஏறி நிற்றலும், (4) அப்பொழுது பகைவரால் எறியப்படும் அம்பு முதலியவற்றைத் தடுக்கும் கேடயம் ஆகிய கருவிகளின் மிகுதியும், (5) மதிலின் உட்புறத்தே வீற்றிருக்கும் அரசனது செல்வ மிகுதியும், (6) மதிலகத்திருப்போன் புறத்தே உள்ளவனைத் தன் செல்வத்தை விடப் போர்த்தொழிலால் வருத்தியதைக் கூறலும், (7) மதிலகத் திருப்போன் தன் மதில் அழியத் தொடங்கியவிடத்து வெளியேயுள்ள வனுடன் தான் தனித்துச் சென்று போர்புரியும் நெஞ்சுறுதியும், (8) மதிலின் வெளியேயுள்ளோன் உள்ளே உள்ளவன்மேல் பகையினைப் பொருட்படுத்தாமையும் என்பனவாம்.
"கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்
உள்ளியது முழக்கும் வேந்தனது சிறப்பும் தொலிஎயிற்று இவர்தலும் தோலது பெருக்கமும் அகத்தோணி செலிவமும் அணிறி முரணிய புறத்தோனி அணங்கிய பக்கமும் திறற்பட ஒருதாணி மணிடிய குறுமையும் உடனிறோர் வருபகை பேனார் ஆரெயிலி உளப்படச் சொலிலப் பட்ட நாலிரு வகைத்தே."
- (Gurdjaf. 68)
நொச்சித் திணைக்குப் பன்னிரண்டு துறைகள் உள்ளன என்று தொல்காப்பியம் கூறுகின்றது. அவையாவன: (1) காத்தற் குடையினை நன்னாளிற் புறப்படச் செய்தல்போல் பகைவரை வருத்தும் வாளையும் நன்னாளில் எடுக்கச் செய்தலும், (2) மதிலின் ஏணிமீது ஏறி நின்று மதிலின் அகத்தோனும் புறத்தோனும் போர் புரிதலும், (3) புறத்தோன் புறத்தே போரிட்டு அகத்தோனையும் வென்று புறமதிலையும் உள்மதிலையும் தன்வசமாக்கிய வினைமுதிர்ச்சியும், (4) புறத்தோனால் கைக்கொள்ளப்பட்ட புறமதில், உள்மதிலிடத்தில் அகத்தோன் விரும்பின மதில் காவலும், (5) அகத்தோன் காத்து நின்ற இடைமதிலைப் புறத்திருந்தோன் விரும்பிக் கைக்கொண்ட புதுமையும், (6) புறத்தோனும் அகத்தோனும் இருகரைமதிலிலும் நின்று நீரின்கண் பாசிபோல் கிடங்கினில் போரிட்ட பாசியும்,

Page 30
32 G6یzaھے تھzzترzzzzتھ Cரன் ഇതിഭല
(7) ஊரின் நடுவே நடைபெறும் போரினை விரும்பிய பாசி மறனும், (8) ஊரின் மத்தியில் அமைந்த மதில், புறத்தே அமைந்த மதில், கோயில் மதில் ஆகியவற்றில் ஏறி நின்றும், (9) போர் செய்தற்கு விரைந்து சென்றோன் கூறுபாடும், (10) போரின்கண் ஒருவனை. ஒருவன் கொன்று இறந்தவன் பெயரால் முடிபுனைந்து நீராடும் மங்கலமும், (11) வென்றவன் வாளினை வெற்றி விழாவாக நீராட்டுதலும், (12) வென்றவன் படைகளுக்குச் சிறப்பு விழாவெடுக்க ஒன்றுகூடுமாறு அழைத்தலும் ஆகியனவாம்.
"தடையும் வாளும் நாளிகோளி அணிறி
மடையமை ஏணிமிசை மயக்கமும் கடைஇச் சுற்றமர் ஒழிய வெனிறுகைக் கொணிடு முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய அகத்தோணி விழிந்த நொச்சியும் மற்றதனி புறத்தோணி வீழ்ந்த புதுமை யானும் நீர்ச்செரு வீழ்ந்த பாசியும் அதா அண்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதனி மறமும் மதிலிமிசைக் கிவர்ந்த மேலோர் பக்கமும் இகலிமதிற் குடுமிகொணட மணினு மங்கலமும் வெனிற வாளினி மணினோடு ஒனிறத் தொகைநிலை எனினுந்துறையொடு தொகை இ - வகைநான் மூனிறே துறையென மொழிப."
- (பொருள். 69) 5. தும்பைத் திணை
'தும்பை என்னும் புறத்திணை, 'நெய்தல்' என்னும் அகத் திணைக்குப் புறனாகும். இது, வீரம் பொருந்திய அரசனை எதிர்த்து அவன் வீரத்தை அழிக்கும் சிறப்பெனத் தும்பையின் இயல்பு பற்றிப் பேசப்படுகின்றது.

33 ( قضarzهای توصzaبه حاجعه کم
"தும்பை தானே நெய்தலது புறனே
மைந்துபொரு ளாக வந்த வேந்தனைச் செனிறுதலை யழிக்கும் சிறப்பிற்று எனிய, "
- (Gurditat. 7o)
தும்பையின் சிறப்பியல்பு பற்றிக் கூறுமிடத்து, பகைவரால் ஏவப்பட்ட கணையும், வேலும் பாய்ந்து உயிர் பிரிந்த மறவன் உடல் தன் வீரப்பண்பினால் பூமியில் விழாது நீர்வாழ் அட்டையின் உடல் இரு துண்டானவிடத்தும் இயங்குவதுபோல் நின்று ஆடியது எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.
"கணையும் வேலும் துணையற மொய்த்தலிற்
GeFoaip A2 u fillfloof délszigo uLutraš6zpas இருநிலத் தீணிடா அருநிலை வகையோடு இருபாற் பட்ட ஒரு சிறப் பினிறே."
- (பொருளி. 71)
தும்பைத் திணையில் பன்னிரண்டு துறைகள் உள்ளன வென்று தொல்காப்பியம் கூறும். அவையாவன: (1) காலாட்படை, (2) யானைப்படை, (3) குதிரைப்படை ஆகிய முப்படைகளின் நிலையும், (4) வேற்போரில் முதன்மை புெற்று நின்ற மன்னனைப் பகைவர் சூழ்ந்து கொண்ட பொழுது, மன்ன்ன் படைவீரன் ஒருவன் பகைவர்மீது வேல்களை வீசியெறிந்த தார் நிலையும், (5) இரு பக்கத்தாரும் தம்முள் பொருதி இறந்துபடுதலும், (6) சிதறுண்ட படையிலுள்ள ஒருவன் தனித்து வந்து எதிர்த்த பெருமையும், (7) படைக் கருவிகள் தீர்ந்த பொழுது கைப்போர் புரிந்து வெற்றி பெறுதலும், (8) பகைவரை எதிர் கொண்டு அவர் யானைகளைக் கொன்று போரிடும் பெருமையும், (9) வென்ற அரசனுடைய வீரர்கள் கூடி அவன் புகழ் பாடி ஆடும் ஆட்டமும், (10) இருபெரு வேந்தரும் தம் படைவீரர்களும் அழிந்த தொகைநிலையும், (11) போரில் தன் தலைவன் வஞ்சகத்தால் கொல்லப்பட்டான் என நினைந்து கடும் போர் புரிந்து புகழ் பெற்ற நிலையும், (12) அறம் நோக்காது வாள் கொண்டு பலரைக் கொன்றொழித்த வீரமும் ஆகியனவாம்.

Page 31
34 G63 zھ تصzتحصے مجسم 7ھ حصہ یہ تھی چھتر
“Sarapesawt Lumrapezar égaszor 67ezip
நோனார் உட்கும் மூவகை நிலையும் வேலிமிகு வேந்தனை பொய்த்தவழி ஒருவனி தானிமினிடு எறிந்த தார்நிலை அணிறியும் இருவர் தலைவர் தபுதிப் பக்கமும் ஒருவனி ஒருவனை உடைபடை புக்குக் கூழை தாங்கிய பெருமையும் படையறுத்துப் பாழி கொள்ளும் ஏமத் தானும் பட்ட வேந்தனை அட்ட வேந்தனர் வாளோர் ஆடும் அமலையும் வாளிர்வாய்த்து இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக் கணினும் செருவகத்து இறைவனி விழிவுறச் சினை(இ ஒருவனை மணிடிய நலிலிசை நிலையும் பலிபடை ஒருவற்கு உடைதலினி மற்றவனி ஒளிவாளி வீசிய நூழிலும் உளப்படப் புல்லித் தோன்றும் பனினிரு துறைத்தே."
- (பொருள். 72)
காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படை களையும் மேற்கூறிய தொல்காப்பியர் தேர்ப்படை ஒன்று இருந்ததாக இங்கு கூறவில்லை. ஆனால் தொல்காப்பிய்ர் பிறிதோரிடத்தில் (தொல். பொருள். 75) தேர்ப்படையைப் பற்றிக் கூறியுள்ளார். எனவே, அன்று முப்படைகள் மட்டும்தான் போர் தொடுக்க மன்னர்க்கு இருந்துள்ளமை தெளிவாகின்றது.

ez ه حراجعهzzیصیarقص D 35
6. LII_maiúr ólarator
‘பாடாண்’ என்னும் புறத்திணை, "கைக்கிளை' என்னும் அகத்திணைக்குப் புறனாகும். இது, (1) கடவுள் வாழ்த்து, (2) வாழ்த்தியல், (3) மங்கலம், (4) செவியறிவுறுத்தல், (5) ஆற்றுப் படை, (6) பரிசிற்றுறை, (7) கைக்கிளை, (8) வசை ஆகிய எட்டு வகை களைக் கொண்டனவாம்.
"பாடாணி பகுதி கைக்கிளைப் பிறனே நாடுங் காலை நாலிரணி (நிடைத்தே."
- (Guruvat. (78)
பாடாண் திணையின் துறைகளை இவ்வாறு தொல்காப்பியம் கூறுகின்றது.
(1) கொடுத்தோரைப் புகழ்தலும் கொடாதோரை இகழ்தலும், (2) வெற்றியால், குணத்தால் உயர் நிலையடைந்தோரைப் புகழ்ந்து கூறும் வாழ்த்தும், (3) வருத்தம் தீர வாயில் காத்து நிற்போருக்கு உரைக்கும் வாயில் நிலையும், (4) அரசன் இனிதே துயில்வதைக் கூறிய கண்படை நிலையும், (5) கபிலநிறப் பசுவின் கொடையினைக் கூறுதலும், (6) விளக்கு எரியும் திறத்திற்கேற்ப வேலின் வெற்றியைக் கூறுதலும், (7) நன்மையின் பொருட்டு தீங்கற்ற சொற்களால் உண்மையைக் கூறுதலும், (8) நன்னெறி அறிவுறுத்தலான செவியறிவும், அரசனைப் பாராட்டும் புறநிலை வாழ்த்தும், ஆண்பாற் கூற்றுக் கைக்கிளையும், பெண்பாற் கூற்றுக் கைக்கிளையும் ஆகிய இவை நான்கும் சேர்ந்த மற்றைய யாவும் பாடான் துறையாம்.
“கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் அடுத்தூர்ந் தேத்திய இயனிமொழி வாழ்த்தும் சேய்வரவி வருத்தமி விட வாயிலி காவலர்க் குரைத்த கடைநிலை யானும் கணிபடை கணிணிய கணிபடை நிலையும் கயிலை கணினிய வேளிர்வி நிலையும்

Page 32
36 GESzéæzzzzø øs ضه میهنصی
வேலை நோக்கிய விளக்கு நிலையும் வாயுறை வாழித்தும் செவியறி வுறுவும் ஆவயினி வருஉம் புறநிலை வாழ்த்தும் கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇத் தொக்க நாணிகும் உளவென மொழிய, "
- (பொருள். 87)
இன்னும், பாடாண் திணைக்கு மேலும் சில பகுதிகள், முடிபுகள், வகைகள், துறைகள் போன்றன பொருள். 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 88 ஆகிய சூத்திரங்களிற் காட்டப்பட்டுள்ளமையும் காண்க.
7 öIIG5éfj flzDaor
"காஞ்சி' என்னும் புறத்திணை, "பெருந்திணை' என்னும் அகத்திணைக்குப் புறனாக அமையும். நிலையில்லாத உலகத்தை பொருந்திய நெறியையுடையது என்று காஞ்சித் திணையின் இயல்பு குறித்துத் தொல்காப்பியம் கூறும். இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகிய மூன்றும் நிலை யில்லாதனவாம்.
"காஞ்சி தானே பெருந்தினைப் புறனே பாங்கருஞ் சிறப்பிற் பனினெறி யானும் நிலிலா வுலகம் புலிலிய நெறித்தே."
- (GLIIIditat. 76)
காஞ்சியின் துறைகள் இவ்வாறு அமைகின்றன. (1) எமனைப் பற்றிச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சியும், (2) கற்றோர் மற்றார்க்குக் கூறிய முதுகாஞ்சியும், (3) நற்குணம் பொருந்திய பகுதியை நோக்கித் தன் மறப்பண்பினாலே புண்ணைக் கிழித்துக்கொண்டு இறந்துபடும் மறக்காஞ்சியும், (4) போர்க்களத்தில் புண்பட்ட பாதுகாப்பற்ற மறவனைப் பேய்கள் காக்கின்ற பேய்க்காஞ்சியும், (5) இன்னான் இறந்தானென்று உலகத்தார் இரங்கும் மன்னைக் காஞ்சியும்,

கு. ه عهدهzz ییarقص D 37
(6) இன்னது பிழைத்தால் இக் கேடு வருமென்று கூறிய வஞ்சினைக் காஞ்சியும், (7) இன்பமூட்டும் நகையணிந்த மனைவி புண்பட்ட கணவனைப் பேய்கள் தீண்டாது காத்த தொடா அக் காஞ்சியும், (8) கணவன் உயிரைப் பறித்த வேலினால் தன் உயிரையும் போக்கிய வஞ்சிக்காஞ்சியும், (9) பெண்கொடுக்க மறுத்ததனால் பகைவனாய் பெண் கொள்ள வந்த அரசனுக்கு முதுகுடி வணிகரும், வேளாளரும் தம் பெண்ணைக் கொடுக்க அஞ்சிய மகட்பாற் காஞ்சியும், (10) தன் கணவன் இறந்தவிடத்து அவன் தலையோடு தன் முலையையும் முகத்தையும் சேர்த்து இறந்த நிலையும், ஆகியவை ஒருமித்து காஞ்சித் திணையின் துறைகள் பத்தாகும் என்று கூறுவர் சிலர். வேறு சிலர் இவற்றுடன் இன்னும் ஒரு பத்துத் துறைகளைச் சேர்த்துக் கொள்வர்.
மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமையும் கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் பணிபுற வருஉம் பகுதி நோக்கிப் புணிகிழித்து முடியும் மறத்தி னாலும் ஏமச் சுற்றம் இனிறிப் புணர்னோனி பேணப் ஒம்பிய பேணப்ப் பக்கமும் இனினனெனிறு இரங்கிய மனினை யானும் இனினது பிழைப்பினி இதுவா கியரெனத் துனினரும் சிறப்பினி வஞ்சினத் தானும் இனினகை மனைவி பேணப் புனினோனி துனினுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் நீத்த கணவனி தீர்த்த வேலின் பெயர்த்த மனைவி வஞ்சி யானும் நிகர்த்துமேலி வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும் முலையும் முகனும் சேர்த்திக் கொணிடானி தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ fóDJó bregó estafu Gulfikopf...”
- (GLITE6t. 77)

Page 33
38
இதுகாறும் அகத்திணையில் அடங்கிய முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழு திணை களையும் கூறி, அவற்றிற்குப் புறனான வஞ்சி, வெட்சி, வாகை, உழிஞை, தும்பை, பாடாண், காஞ்சி ஆகிய ஏழு திணைகளையும் புறத்திணையில் சாற்றி, இவற்றிற்குரிய இலக்கணமும் அமைத்து, துறைகளும் வகுத்து, மாற்றான் பசுக்கூட்டங்களைக் கவர்ந்து, போரிட்டுப் பகை மன்னரை வென்று, வெற்றி வாகை சூடி, மது அருந்தி ஆடிமகிழ்ந்து, பகை மன்னர் மதிலைக் கைப்பற்றியும், அழித்தும், காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை ஆகிய முப்படைகளின் போர் நிலைச் சிறப்பும், கணவன் இறந்தவிடத்து மனைவியும் அவனுடன் இறந்த நிலையும், போரில் இறந்தோரையும் காயமுற்றோரையும் சென்று பார்த்து, துக்கம் விசாரித்து, பொருள் கொடுத்து, ஆறுதல் கூறியும், பகைவரை வாட்போரில் வென்ற அரசிளங்குமரனைப் பாராட்டிப் பறை முதலிய ஒலிக்கருவிகள் முழங்கி அரசைக் கொடுத்தும், போரில் இறந்த வீரர்களின் நினைவாகக் கல்நிறுத்திக் கோயிலாக எழுப்பித் தெய்வமாக்கி வாழ்த்தியும், ஆகிய வீரதீரச் செய்திகள் மேலே பேசப்பட்டுள்ளதைப் பார்த்தோம்.
ஏழு திணைகளும், அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே துறைகளும், அவற்றின் ஒருமித்த கூட்டுத் தொகையாக நூற்றி முப்பத்தேழு (137) துறைகளும் புறத்திணையில் அமைந்து உள்ளமை காண்க. அக்கால மக்கள் வாழ்ந்த சீரிய முறைகளைச் சிறப்புடன் தொல்காப்பியனார் எடுத்துக் கூறியுள்ளமை பாராட்டுக்கு
உரியனவாம்.

39
47ZZzaz2675/7ZZ2677 6Zazz/6/27 கைக்கினை - 2/தZதினை
தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயலாக அமைந்துள்ளது. எழுத்ததிகாரத்தில் நூன் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் ஆகிய ஒன்பது இயல்கள் கூறப்பட்டுள்ளன. சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் ஆகிய ஒன்பது இயல்கள் அடங்கியுள்ளன. பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகிய ஒன்பது இயல்கள் விரிவுபடுத்திக் கூறப்பட்டுள்ளன.
பொருளதிகாரம் அகத்திணையியலில் இன்ப ஒழுக்க வகை, அதன் இயல்பு ஆகியன பேசப்படுகின்றன. "கைக்கிளை’ என்று

Page 34
40 (செசல்சாட்சியத் தேன் துனிசன்
al
கூறப்பெறும் பொருள் முதலாகப் பெருந்திணை' என்று கூறப்பெறும் பொருள் இறுதியாக எழுபொருள் முற்படக் கூறப்பட்டன என்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.
“தைக்கிளை முதலாப் பெருந்தினை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதினை எனிய, "
- Gundoit. O1)
எழுதிணை என்பது கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை என்பனவாம். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நடுவாகி நின்ற ஐந்திணைகளும் தமக்கென நிலம் பெற்றுக் கடல் சூழ்ந்த உலகமாய்த் திகழ்கின்றன. நடுவண் ஐந்திணை’ என்பது முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களைக் குறித்து நிற்கின்றன. கைக்கிளைக்கும், பெருந்திணைக்கும் நிலம் ஒன்றும் ஒதுக்கப்படாமை ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. இவ்வண்ணம் தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.
"நடுவணி ஐந்தினை நடுவனது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பணியே."
- (பொருளி. O2)
கைக்கிளை
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம். (கை - பக்கம், கிளை - உறவு). இதை ஒவ்வாக் காமம் என்றும் கூறுவர். கைக்கிளை புணரா நிகழ்ச்சியாகும்.
தாழ்வான ஒழுக்கங்களான காமவுணர்ச்சி தோன்றாத சிறிய பெண்ணிடத்துப் பாதுகாவல் இல்லாதபொழுது துன்பமுற்றுப் புகழ்தலும், பழித்தலும் ஆகிய இருசெயல்களாலும், தனக்கும், அவளுக்கும் சார்பானவற்றைச் சேர்த்து, அவள் சொற்கேளாமல் தானே சொல்லி இன்பமடைதல், பொருந்தித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பு ஆகுமென்று தொல்காப்பியம் கூறும்.

gz تضمهمتوصله حكمه D 47
“asтиоб5 г/revir 606творио (3штеfo/ијkof
ஏமஞ் சாலா இடுமியை எய்தி நன்மையும் தீமையும் எனறிரு திறத்தானி தனினொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅணி சொலிலி இனியுறலி புலிலித் தோனிறும் கைக்கிளைக் குறிப்பே."
- (பொருள். 53)
அடிமைத் தொண்டு புரிந்து வாழ்வோரும், பிறர் ஏவல் வழி நிற்போரும், ஐந்திணை ஒழுக்கத்திற்கு உரியவராக மாட்டார். இவர்கள் கைக்கிளை, பெருந்திணைக்கு உரியவர் என்றவாறு.
"அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலயுறத் தெனிமனார் புலவர்."
- (GLIIIdeaf. 25)
மேலும், அடியோரும், வினைவலரும், இன்னும் பிறரால் ஏவற்குரிய பிறரும் புறத்திணையாகிய கைக்கிளை, பெருந்திணைக்கு உரியவரென்றும் கூறுவர்.
"ஏவலி மரபினர் ஏனோரும் உரியர்
ஆகிய நிலைமை அவரும் அனினர்."
- (பொருளி. 26) பெருந்தினை
பெருந்திணை என்பது ஒருவனும் ஒருத்தியும் ஒருவர்க்கொருவர் அன்பின்றிக் கூடி வாழும் முறையாகும். இதைப் பொருந்தாக் காமம் என்றும் கூறுவர். பெருந்திணை புணர்ந்த பின்னான நிகழ்ச்சியாகும். ஆண்மகனுக்கே உரிய மடலேறுதல், இளமை நீங்கி முதுமைக் காலத்தும் ஆசை மிகுதியால் தம்முள் கூடி இன்பம் துய்த்தல், தெளிவற்ற நிலையில் காமத்தின் கண் மிகுதிப்பட்டு நிற்றல், ஐந்திணையாகிய ஒத்த காமத்தின் மாறுபட்டு நிற்றல் ஆகிய நான்கும் பெருந்திணை எனத் தொல்காப்பியம் கூறும்.

Page 35
42 G62وۓzھ تعzzترz72تھی بر தேன் துணிசன்
"ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம் தேறுதலி ஒழிந்த காமத்து மிகுதிறம் மிக்க காமத்து மிடலொடும் தொகைஇச் செப்பிய நாணிகும் பெருந்தினைக் குறிப்பே."
- (பொருள். 54)
பெருந்திணை தாழ்வான ஒழுக்கங்களைச் சார்ந்தது. இளமை தீர்திறம்' என்பது தலைவன் முதியவனாகித் தலைவி இளையவளாதலும், தலைவி முதியவளாகித் தலைவன் இளையவனாதலும், இவ்விருவரும் இளமைப் பருவம் நீங்கிய பின்பும் அறத்தின்மேல் மனம் நாடாது காமத்தின்மேல் மனம் நாடலும் என்னும் மூவகையாம்.
மேற் கூறப்பட்டுள்ள 'ஏறிய மடல்திறம் முதலிய நான்குக்கும் முந்திய நிலையான ஏறா மடல்திறன், இளமை தீராத்திறம், தேறுதல் ஒழிந்த காமத்து மிகாத்திறம், மிக்க காமத்தின் மாறாகாத்திறம் ஆகிய நான்கும் பெருந்திணைக்கு முன்னாற் கூறிய கைக்கிளைக்கு உரியனவாம்.
"முனினைய நானிகும் முனினதற்கு எனிப."
- (பொருள். 55)
ஏறா மடல்திறம' என்பது - வெளிப்படையாக இரந்து நிற்றல். இளமை தீராத்திறம் என்பது - தலைவியின் அழகினைப் பாராட்டி மனம் மகிழ்ந்து கூறி நிற்றல்.
தேறுதல் ஒழிந்த காமத்து மிகாத்திறம்' என்பது - பொருந்தா விடத்தும் மன்றாடி இரங்கி நிற்றல்.
மிக்க காமத்தின் மாறாகாத்திறம்' என்பது - தன் எல்லை கடந்த விருப்பத்தைக் கூறி நிற்றல்.

Az ജിബ്രക്രിസ്ഥD 43
பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள்
இன்பத்தை வெறுத்தல், துன்பத்தில் புலம்புதல், உருவெளிப்பாடு கண்டு வருந்துதல், குற்றம் ஆராய்தல், பசியால் வருந்தல், பசலை படர்தல், ஊண் குறைத்தல், உடல் இளைத்தல், உறங்காமை, கனவை நனவென எண்ணல், தலைவன் கூற்றைப் பொய்யென நினைத்தல், பொய்யை மெய்யெனக் கூறல், தலைவனை ஐயப்படல், தலைவன் உறவினரைக் கண்டு மகிழ்தல், அறத்தினை அழித்துக் கூறுமிடத்து நெஞ்சழிந்து கூறல், எவ்வுடம்பாயினும் தன்னோடு ஒப்புகை கொள்ளுதல், வேறொன்றைக் கண்டு அது தன் மகனோடொக்குமென மகிழ்தல், தன் மகன் பெயர் கேட்டு மகிழ்தல், மனங்கலங்குதல் ஆகியவை பெருந்திணைக்குரிய மெயப்ப்பாடுகளாம் என்று தொல்காப்பியம் கூறும்.
"இனியத்தை வெறுத்தலி துணிபத்துப் புலம்பலி
எதிர்பெய்து பரிதலி ஏதம் ஆய்தலி Lufhaul Afilipat LudFoap6v Luuruůs6að உணிடியிற் குறைதலி உடம்புநனி சுருங்கலி கணிதுயிலி மறுத்தலி கனவொடு மயங்கலி பொய்யாகி கோடலி மெப்யே எனிறவி ஐயஞ் செய்தனி அவனிதமர் உவத்தலி அறனழிந் துரைத்தலி ஆங்குநெஞ் சழிதலி எம்மெய் ஆயினும் ஒப்புமை கோடலி ஒப்புவழி யுறுத்தலி உறுபெயர் கேட்டலி நலத்தக நாடினி கலக்கமும் அதுவே."
- (பொருளிர் 266)
மேற் கூறப்பட்ட ஏழு திணைகளான கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை ஆகியவற்றைத் தொல்காப்பியச் சூத்திரக் கருத்துக் களோடு சேர்த்துப் பார்த்து மகிழ்ந்தோம்.

Page 36
44
மேலும், கைக்கிளை ஒரு தலைக் காமம் எனவும், முல்லையில் இருத்தல் எனவும், குறிஞ்சியில் புணர்தல் எனவும், பாலையில் பிரிதல் எனவும், மருதத்தில் ஊடல் எனவும், நெய்தலில் இரங்கல் எனவும், பெருந்திணை பொருந்தாக் காமம் எனவும் ஏழு வகையான அன்பின் நெறி முறைகள் மேற் பேசப்பட்டுள்ளதையும் இதுவரை பார்த்தோம்.
இன்னும், ஐந்திணையில் அவரவர் ஐவகை நிலத்திற்கேற்ற ஒத்த காம உணர்வு, எழுச்சி, நெகிழ்ச்சி ஆகியவற்றோடு ஒன்றறக் கலந்து, இணைந்து, பிணைந்து வாழ்க்கை நடாத்திய பண்டைத் தமிழரின் பண்பினைத் தொல்காப்பியர் தொகுத்துக் காட்டிய சூத்திரங்கள் வலிமை பெற்று இந்நாளிலும் உயிருடன் உலா வருகின்றதை நினைந்து அன்னாரின் வழித்தோன்றலாகிய நாம் அவரை என்றும் சிரமேல் வைத்துத் துதித்து நிற்போமாக.

45
427/7aav/7ZZ7 கZனக் கண47வZக்கம்
பூமிப் பந்தாகிய உலகம் படைக்கப்பட்டதன் நோக்கம் அங்கு வாழும் அனைத்து உயிரினங்களின் இன்பம் கருதியேயாம். மனிதன் இன்பமுற்று வாழ்ந்தால் உலகமே இன்ப மயமாகி விடும். அவனின்றேல் உலகம் காடுதான். மனித வாழ்வுதான் உலகமாகின்றது.
மனிதன் தோன்றிய காலத்திலிருந்து இற்றைவரை இன்பத்தையே நாடிச் செல்கின்றான். இதை அனுபவிக்க அவனுக்குப் பெண் ஒருத்தி காத்திருப்பாள். கிழவனும் கிழத்தியும் எதிர்ப்படும் நிலையில் காதற்களவு நிகழும். இன்பம், பொருள், அறம் என்று கூறப்பட்ட அன்புடனிணைந்த ஐந்திணையில் (கைக்கிளை, பெருந்திணை நீங்கிய ஐந்திணையான குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல்) நிகழும் காமக் கூட்டமானது எட்டு வகை மணத்துள் அமைந்த யாழினை யுடைய காந்திருவரது கூட்டத்தை ஒத்தது போலாகும் என்று கள வொழுக்கத்தைப் பற்றித் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்து உள்ளார்.

Page 37
46 Gിരിക്കമ് മക്ക് ജയത്
"இனியமும் பொருளும் அறனும் எனிறாங்கு
அனியொடு புணர்ந்த ஐந்தினை மருங்கினி காமக் கட்டங் காணுங் காலை மறையோர் தேஎத்து மணிறலி எட்டனுளிர் துறையமை நலியாழத் துனைமையோர் இயலிபே'
- (பொருள். 89)
மணம் எட்டாவன: (1) அசுரம், (2) இராக்கதம், (3) பைசாசம், (4) காந்திருவம், (5) பிரமம், (6) பிரசாபத்தியம். (7) ஆரிடம், (8) தெய்வம் ஆகியனவாம். இவற்றுள் அசுரம், இராக்கதம், பைசாசம் ஆகிய மூன்றும் கைக்கிளையைச் சாரும் என்று சூத்திரம்
&n D.
"முனினைய முனிறுமி கைக்கிளைக் குறிப்பே. ”
- (பொருள். 1O2)
இன்னும், மேற்காட்டிய எண்வகை மணத்துள் பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம் ஆகிய நான்கும் பெருந்திணையைச் சாரும் என்று சூத்திரம் அமைத்துள்ளார் தொல்காப்பியர்.
"யினினர் நானிகும் பெருந்தினை பெறுமே."
- (a Iuliaf. to3)
எண்வகை மணத்துள் எஞ்சிய காந்திருவம் ஐந்திணைக் குரியதாம். ஐந்திணையோடு பொருந்தி வரும் யாழோர் கூட்டம், சிறப்புற்ற ஐவகை நிலத்தையும் பெற்றதனால், யாழோர் கூட்டம் ஐந்தெனப்படுமாம். நிலமும், காலமும் முதல் எனக் கூறப்பட்டுள்ளது.
ஐவகைக் கூட்டமாவன:- களவு, கற்பு, உடன் போக்கு, இற்கிழத்தி, காமக்கிழத்தி.. காதற்பரத்தை என்பனவாம்.
முதலாகு புணர்ந்த யாழோர் மேன தவலருஞ் சிறப்பினர் ஐந்நிலம் பெறுமே."
- (பொருள். 1O4 )

கு. ح۶تهzzz 2ییarzق D 47
இவ்வண்ணம் எண்வகை மணத்தையும் ஏழு திணைகளுக்கும் வகுக்கப்பட்டமை காண்க. தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்துங் கால், அவர்களை மறுபிறப்பிலும் மீண்டும் ஒன்றாக்குவதும் வேறாக்குவதும் ஊழேயாம். ஊழின் ஆணையினால் பிறப்பு முதலிய பத்துக் குணங்களிலும் ஒத்த கிழவனும் ஒத்த கிழத்தியும் ஒன்றுபடுவர். தலைவன் இக் குணங்களில் மிகுந்து விளங்கினால் குற்றமில்லை யாம். தலைவனைவிடத் தலைவி இக் குணங்களில் மிக்கு விளங்கினால் அது கூடாவாம். t
“ஒன்றே வேறே எண்றிரு பாலிவயினி
ஒன்றி உயர்ந்த பால தாணையினர் ஒத்த கிழவனும் கிழத்தியும் காணிப மிக்கோ னாயினும் கடிவரை இனிறே."
- (பொருள். go)
ஒத்த பத்து வகைப் பண்புகள்
பண்டைத் தமிழர்கள் மணவாழ்க்கைக்கு மிக முக்கியத்துவம் கொடுத்துப் பத்து வகைப் பண்புகளில் தலைவனும் தலைவியும் ஒத்திருக்க வேண்டுமென விதிகள் அமைத்துள்ளனர்.
அவையாவன: (1) ஒத்த பிறப்பும், (2) ஒத்த ஒழுக்கமும், (3) ஒத்த ஆண்மையும், (4) ஒத்த வயதும், (5) ஒத்த உருவும், (6) ஒத்த அன்பும், (7) ஒத்த நிறையும், (8) ஒத்த அருளும், (9) ஒத்த அறிவும், (10) ஒத்த செல்வமுமாம். இதைத் தொல்காப்பியர் சூத்திரத்தில் பார்ப்போம்.
*பிறப்பே குடிமை ஆணிமை ஆணர்டோடு
உருவு நிறுத்த காம வாயிலி நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே."
- (Gurdisaf. 269)

Page 38
48 (தொல்காம்பியத் ജയഭ്യ
இப்படியான பத்து (10) வகைப் பண்புகள் ஒத்திருக்கும் தலைவன் தலைவியரிடையே அன்று திருமணம் நிகழ்த்தப்பட்டு அவர்கள் சீரும், சிறப்பும் அமைந்த இல்வாழ்க்கையை நடாத்தி இன்புற்றிருந்தனர். இன்று நாம் திருமணத்துக்குமுன் பதினான்கு (14) வகைப் பொருத்தங்கள் பார்த்து மணவிழா நடாத்துகின்றோம். அவையாவன: (1) நட்சத்திரப் பொருத்தம், (2) கணப் பொருத்தம், (3) மகேந்திரப் பொருத்தம், (4) ஸ்திரீதீர்க்கப் பொருத்தம், (5) யோனிப் பொருத்தம், (6) இராசிப் பொருத்தம், (7) இராசியதிபதிப் பொருத்தம், (8) வசியப் பொருத்தம், (9) இரச்சுப் பொருத்தம், (10) வேதைப் பொருத்தம், (11) புத்திரப் பொருத்தம், (12) ஆயுள் பொருத்தம், (13) விருச்சப் பொருத்தம், (14) நாடிப் பொருத்தம் என்பனவாம். இன்றுள்ள பதினான்கு வகைப் பொருத்தங்கள் அன்றிருந்த பத்து வகைப் பொருத்தங்களிலிருந்து எவ்வண்ணம் மாறுபட்டுப் போயுள்ளன என்பதை மேலே பார்த்தோம். மேலும், இன்று ஒரு சிலர் பிரதான பொருத்தங்களான (1) கணம், (2) யோனி, (3) இராசி, (4) இரச்சு, (5) நட்சத்திரம் ஆகிய பொருத்தங்களை மட்டும் பார்த்துத் திருமணம் நடாத்தி வைக்கும் முறையும் O 6п5).
களவொழுக்கக் காலவரை
களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ள பொழுது தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்திருக்கும் வழக்கம் இல்லை. களவுக் காதல் தெய்வீகமானது. அவ்வண்ணமே அன்றைய காதலர்கள் கருத்தோருமித்துச் செயற்பட்டனர். இருந்தும், தலைவன் தலைவியரிடையே தோன்றிய களவின் காலவரையை இரண்டு மாதம்தான் நிகழுமென்று இறையனார் களவியலில் வரையறை வகுக்கப்பட்டுள்ளது. سمعیہ
"களவினுள் தவிர்ச்சி வரைவினி நீட்டம்
திங்கள் இரணிடினி அகமென மொழிய."
- (bsbur. 32)

ez ه ح۶عهza 2ییarقض D 49
தலைவன் தலைவியரிடையே ஒரு தவறும் நடந்தேறிவிடக் கூடாதென்ற பேரவாக் கொண்ட பழந்தமிழறிஞர் இவ்வாறான வரையறையை வகுத்துள்ளமை போற்றற்குரியதாகும்.
ஐயம் தோன்றலும் : ஐயம் நீக்கலும்
தொல்காப்பியர் காலத்து மகளிர் மிகப் பேரழகிகள். அன்று எதிர்ப்பட்ட தலைவன் தலைவியருள், உயர்வுடைய தலைவனுக்கு 'இவள் ஒரு மக்கள் மகளா? அன்றேல் இவள் ஒரு தெய்வ மகளோ? என ஒர் ஐயம் தோன்றினால் அது சிறந்ததென்று கூறுவர்.
ஆனால், அத் தலைவனிலும் குறைந்த தலைவிக்கு ஐயம் தோன்றின் இழிவுண்டாகி இன்பம் நிகழாவாம்.
"சிறந்துழி ஐயம் சிறந்த தெணிய இழிந்துழி இழிவே சுட்ட லான."
- (Gurditóif. 91)
இஃது இவ்வாறிருக்க கி.மு. 31 ஆம் ஆண்டில் உதித்த திருவள்ளுவருக்கும் மேற்காட்டியவாறான ஓர் ஐயம் அன்று தோன்றிற்று. அதை அவர் தாம் யாத்த திருக்குறள் என்னும் நூலில் காமத்துப்பால் என்னும் அதிகாரத்தில் முதற் குறளாக வடித்துத் தந்துள்ளார்.
“அனங்குகொலி ஆய்மயிலி கொலிலோ கனங்குழை மாதர்கொலி மாலும்எனர் நெஞ்சு. ”
- (espaif. to81)
'அடர்ந்த அழகிய கூந்தலையுடைய இப் பெண் தேவமகளோ? மயிலோ? மானிடப் பெண்ணோ? என என் நெஞ்சம் மயங்குகின்றதே. என்பதுதான் அந்த ஐயம். தலைவனுக்குத் தலைவிபால் ஓர் ஐயம் ஏற்பட்டுள்ளது. இது காதற் களவுக்குத் தடை போட்டுவிடும். எனவே அவள்பால் ஏற்பட்ட ஐயம் நீக்கப்படல் வேண்டும். இதற்கும் தொல்காப்பியர் ஒரு வழி அமைத்துத் தந்துள்ளார்.

Page 39
50 சொல்காம்மியத் தேன் துனிசன்
A
அவள் அணிந்துள்ள பூவில் வண்டு மொய்த்தல், அணிகள் அணிந்திருத்தல், உடலில் பச்சை குத்தியிருத்தல், கொடி எழுதி யிருத்தல், அணிந்திருக்கும் மாலை வாடியிருத்தல், கண் பிறழுதல், அசைதல், இமைத்தல். ஆண்மகனைக் கண்டு அஞ்சுதல், கால் நிலம் தோய்தல், வியர்த்தல், நிழலாடுதல் போன்றன ஏற்பட்ட ஐயத்தை நீக்கி அவள் மானிடப் பெண்தான் என்ற துணிவினைத் தரும் செயல்கள் என்று தொல்பாப்பியம் கூறும்.
"வணிடே இழையே வள்ளி பூவை
கணினே அலமரலி இமைப்பே அச்சமென்று அணினவை பிறவும் ஆங்கணி திகழ நின்றவை களையும் கருவி என்ப."
- (பொருள். 92)
தலைவன் தலைவி இலக்கணம்
தலைமகனுக்கு இவ்வாறு இலக்கணம் அமைத்துத் தந்துள்ளார் தொல்காப்பியர்.
“பெருமையும் உரனும் ஆடூஉ மேன. "
- (6LIIIdolf. 95)
பழிபாவங்களுக்கு அஞ்சி, குற்றச் செயல் புரியாமலும், அறிவுடையவனாய் இருத்தலும் ஆண்மகனுக்குரிய இயல்பாகும். இதனால் தலைமகளது உடல் ஆசைக் குறிப்பை உணர்ந்து புணர்ச்சியை உடன் நிகழ்த்தாது வரைந்து கொண்டதன் பின்பே நிகழ்த்தும் என்றவாறு.
தலைமகளுக்கும் இவ்வாறு இலக்கணம் அமைத்துக் கூறுகின்றது தொல்காப்பியம்.
அச்சமும் நானும் மடலும் முந்துறுதலி நிச்சமும் பெணியாற் குரிய என்ப."
- (GLIIrdisit. 96)

கு. விசமத்தினம்) 57
அச்சம், நாண், பேதைமை ஆகிய முக்குணங்களும் தலைவி யருக்கு என்றும் முந்தி நிற்றல் மகளிர்க்குரிய ஒரு சிறப்பாகும். இதனால் அவர்கள் வேட்கையுற்றவிடத்தும் புணர்ச்சிக்கு இசையாது, வரைந்தெய்தலையே வேண்டி, ஒதுங்கி நிற்பர். தொல்காப்பியர் காலத்து மகளிர்க்கு அச்சம், மடம், நாணம் ஆகிய முக்குணங்களும் இருந்துள்ளமையை மேற்காட்டிய சூத்திரம் கூறுகின்றது.
இவ்வாறான முக்குணங்களும் இந்நாளில் மகளிர்க்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்றாகி நாற்குணங்களாய் அவர்களுக்கு நாற்படையாகவும் திகழ்கின்றதைக் காண்கின்றோம். இந்நான்கும் அவர்கள் பிறப்புடன் ஒட்டிப் பிறந்தனவாகின்றன. தொல்காப்பியர் காலத்தில் பயிர்ப்பு' என்ற நான்காவது குணம் மகளிர்க்கு இருக்கவில்லை என்பதையும் அறியமுடிகின்றது.
நளவெண்பா நூலில் இந்நாற்குணங்களைப் பற்றிப்பேசப்படும் ஒரு வெண்பா இது.
"நாற்குணமுமி நாற்படையாஜமீபுலனுமி நலிலமைச்சா ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா வேற்படையும் வாளுமே கணினா வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே பெணிமை அரசு."
— (з9)
அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய நாற்குணங்களையும், தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை, காலாற்படை என்ற நாற்படையாகவும் ஐம்புலனான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை நல்ல அமைச்சரவையாகவும் ஒலிக்கும் காற்சிலம்பை அணி முரசாகவும் வெட்டிப் பாயும் கண்ணை வேற்படை, வாட்படையாகவும் அழகிய முகத்தை வெண்கொற்றக் குடையாகவும் அமைத்து ஆளுகின்ற ஒரு பெண்மை அரசைக் காண்கின்றோம்.

Page 40
52 (தொல் சாம்பியத் தேன் துனிசன்
நானும் கற்பும் உயிரினும் சிறுந்தது
‘உயிரினும் நாணம் சிறந்தது. நாணத்திலும் பார்க்கக் கற்புச் சிறந்தது.” என்ற முன்னோர் கூற்றின்படி தலைவன் இருக்குமிடம் நாடிச் செல்லுதலும், வருத்தமற்ற சொல்லைத் தலைவி சொல்லுதலும் ஆகிய பிறவும் பொருளாகத் தலைவிபால் கூற்று நிகழுமென்று தொல்காப்பியர் கூறுவர்.
உயிரினும் சிறந்தனிறு நாணே நாணினும் செயிர்திர் காட்சிக் கற்புச்சிறந் தனிறெனத் தொலிலோர் கிளவி புலிலிய நெஞ்சமொடு காமக் கிழவனி உள்வழிப் படினும் தாவிலி நனிமொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவும் தோனிறுமணி பொருளே.
- Gurd.6t. 1 ft)
தலைவி, தலைவன் இருக்குமிடம் நாடிச் செல்லலாமா? இது முறையா? இது சரியா? இது இழுக்கா? இவ்வாறான கேள்விகள் எழுந்த காலம் அன்று. அவள் அவனைக் காதலித்தாள். தன்னை அவனிடம் இழந்தாள். அவனோ பொய்த்து விட்டான். எட்ட விலகியும் விட்டான். அவள் கதியற்ற நிலையானாள்.
'காமக் கிழவன் உள்வழிப் படலாம்.' ஆகவே, அவன் இருக்குமிடம் நாடிச் செல்லலாம். இதற்கு இடம் உண்டு. ஏனெனில் உயிரைவிட நாணமும், கற்பும் சிறந்தது என்பது தமிழ் மரபு. அவள் தன் கற்பைக் குலைக்காது காத்துக் கொள்ளத் தன் தலைவனை நாடிச் சென்றாள். சென்றவள் தன் நாணத்தையும், கற்பையும் நிலைப்படுத்தி நின்றாள். இவ்வண்ணம் தொல்காப்பியர் தெளிவுறக் கூறுவது காண்க.
புனர்ச்சியில் தலைவி தலைவன் இயல்பு
இயற்கைப் புணர்ச்சியில் தலைவி, தலைவன் இயல்புகள் பற்றித் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார். இதில் தலைவியின் இயல்பு பற்றி இவ்வாறு கூறுகின்றார்.

கு. سههzzهاییavقه D 53
"வேட்கை ஒருதலை உள்ளுதலி மெலிதலி ஆக்கஞ் செப்பலி நாணுவரை இறத்தணி நோக்குவ எல்லாம் அவையே போறலி மறத்தலி மயக்கம் சாக்காடு என்றிச் சிறப்புடை மரபினவை களவென மொழிய, "
- (GLITuiaf. 97)
அடையப் பெறவேண்டுமென்ற பேராசையும், என்றும் நினைத்தலும், எண்ணம் கிட்டாதெனின் உண்ணாது உடல் மெலிதலும், விழித்திருத்தலும், தன் எண்ணப்படி தானே கூறிக்கொள்ளு தலும், நாணம் நீங்குதலும், காணும் பொருள் யாவும் முன்கண்ட பொருளென நினைத்தலும், அவை நினைவாகப் பித்தாதலும், மயக்க முறுதலும், கைகூடாதவிடத்து இறந்து விடுதலும் ஆகியன தலைவிக் குரிய சிறப்பு வாய்ந்த மரபினையுடைய களவென்று கூறுவர் புலவர். இனித் தலைவன் இயல்பு எவ்வாறமைகின்றது என்பதைப் பற்றிய சூத்திரத்தையும் பார்ப்போம்.
"முனினிலை யாக்கலி சொலிவழிப் படுத்தலி நனினயம் உரைத்தலி நகைகனி உறாஅ/ அந்நிலை அறிதலி மெலிவுவிளக் குறுத்தலி தனினிலை யுரைத்தனி தெளிவகப் படுத்தலெனிறு இனினவை நிகழும் எனிமனார் புலவர்."
- (பொருளி. 98)
முன்னிலையாகாதவற்றை முன்னிலைப்படுத்திக் கொள்ளுதல். அவை சொல்லாதவற்றைச் சொல்வனபோலச் சொல்லுதல், அவை பேசுவதாக நினைத்துத் தன் மனத்திலுள்ளதை எடுத்துக் கூறுதல், தலைவி மிகவும் மகிழ்ச்சியுறாமல் புணர்ச்சிக்கு இனமாகிய பிரிவுநிலை அடைய அவள் ஆற்றும் தன்மையை அறிதல், இப் பிரிவினால் ஏற்பட்ட தன் வருத்தத்தைத் தலைவி அறியுமாறு கூறுதல், தலைவி வருத்தம் அறிந்து அது தீரக் கூறுதல், “எம் தொடர்பு நிலைக்கும். பிரிவு ஏற்படாது' என்று தலைவி மனம் குளிரக் கூறுதலும் ஆகியவை இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் தலைவனுக்கு உரியனவென்று கூறுவர் புலவர்.

Page 41
54 (தொல்காட்சியத் 25هa۶ മണീഭയ
களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோர்
பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, தலைவன், தலைவி ஆகிய அறுவகையோரும் களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோராவர் என்று கூறும் சூத்திரம் இது.
"பார்ப்பானி பாங்கனி தோழி செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவனி கிழத்தியொடு அளவியன் மரபினி அறுவகை யோரும் களவியற் கிளவிக் குரியர் எனிப."
— (alштеля56f. 49o)
மேற்காட்டிய சூத்திரத்தின்படி களவிற் கூற்றிற்குரியோரில் பார்ப்பான் ஒருவன் என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். பாங்கன் ஒருவன் இருக்கும் பொழுது இப் பார்ப்பான் ஏன்? என்றொரு ஐயப்பாடு எழுகின்றது. பார்ப்பான் களவிற் கூற்றில் எவ்வாறானதோர் இடம் பிடித்திருப்பான் என்பதும் தெளிவில்லை.
களவின்கண் தலைவனும் தலைவியும்
(1) காதற்களவு ஒழுக்கத்தில் தலைவனும் தலைவியும் ஈடுபடுங்கால், ஆசைமிகுதியில் தலைவன் தலைவியின் மேனி தொட்டுப் பழகுதலும், (2) அவள் கூந்தல் நுதல் முதலியவற்றைத் தடவிப் பொய்யாகப் புனைந்து கூறுதலும், (3) தலைவியிடம் நட்புப் பூண்டு பழகித் தழுவவேண்டுமெனக் கூறுதலும், (4) நாணங்கொண்ட தலைவிக்கு புணர்ச்சிக்கு இடையூறாகத் தலைவன் கூறுதலும், (5) புணர்ச்சி நிகழாது காலம் நீடித்தலுக்கு வருத்தப்படக் கூறுதலும், (6) வருந்தினானென்றறிந்த தலைவியின் நாணம் நீங்குதலும், (7) தலைவன் முற்கூறிய நுகர்ச்சியை விரைவில் பெறுதலும், (8) என்றும் பிரியாமைக்கான சூள் உரைப்பதும் ஆகிய சிறப்பினை யுடைய எட்டு வகையான கூற்றுக்களும் தலைவன் இயற்கைப் புணர்ச்சிக்கு உரியனவாம். × + °

egz ഷ്ക്രിസ്ഥD 、5
"மெய்தொட்டுப் பயிறலி பொய்யா ராட்டலி
இடம்பெற்றுத் தழாஅலி இடையூறு கிளத்தலி நீடுநினைந்து இரங்கலி கூடுத லுறுதலி சொல்லிய நுகர்ச்சி வலிலே பெற்றுமித் தீராத் தோற்றம் உளப்படத் தொகைஇப் பேராச் சிறப்பினர் இருநாணிகு கிளவியும்"
- (GLITcp6t. 99)
களவுக் காதலில் தலைவனுக்கு உறுதுணையாக நின்று வேண்டிய உதவி புரிபவனும், புத்திமதி கூறுபவனும் பாங்கன் ஆவான். (1) பாங்கன் துணையுடன் கூடும் கூட்டம், (2) அவன் நிலை, (3) ஒப்பு பொருள்கோள், (4) தெய்வம், (5) யாழோர் கூட்ட மாகிய களவு, (6) உடன் போக்கு, (7) கற்பின் சின்னமாகிய இல்லக் கிழத்தி, (8) காதற்பரத்தை, (9) காமக்கிழத்தி, (10) அரும் பொருள் வினை, (11) இராக்கதம், (12) பேய்நிலை ஆகிய பன்னிரண்டு வகைகளும் பாங்கனைச் சாரும்.
"பாங்கர் நிமித்தம் பணினிரணி டெனிu.”
- (பொருளி. 101)
காதலர் சந்திப்பதற்கான பகற்குறி இரவுக்குறி இரண்டும் பிழைத்தவிடத்தும், குறியிடம் குறித்தும் தலைவி ஆங்கு வராமையால் வருந்தி வேட்கை மிகுதியால் மயக்கமுற்றுச் செயலற்று நிற்குமிடத்தும், தான் தகுதியற்ற நேரத்தில் சென்று எதிர்ப்பட்டு விருந்தினன் ஆகியவிடத்தும், தலைவனைத் தலைவி உபசரிக்க விரும்புதலால் தோழி அவனை விருந்தினனாக ஏற்றுக்கொள்ளுமிடத்தும், வாள் வீரத்தைக் காட்டுவதற்குப் பிரிவு தோன்றியவிடத்தும், நாணம் தலைவி மனத்தை வருத்துவதை நீக்கியவிடத்தும், மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற தோழியின் கூற்றுக்குப் பதில் கூறுமிடத்தும், மணம் செய்து கொள்ள விருப்பம் கூறுமிடத்தும், மணநிகழ்ச்சிக் கண்ணும், தலைவியின் தமர் மணம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவிடத்தும் தலைவனுக்குக் கூற்று நிகழும். இச் சூத்திரத்தின் இறுதியடியை 'கிழவோள் மேன’ எனக் கொண்டு, தலைவிக்கும் கூற்று நிகழுமென்பாரும் உளர்.

Page 42
56 G6یۓzھ قعہz تھی بر7ے ترے தேன் துனிசன்
இருவகைக் குறியிழைப் பாகிய இடத்தும் காணா வகையிற் பொழுதுநனி இகப்பினும் தானகம் புகாஅணி பெயர்தலி இனிமையிற் காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையினர் மயங்கிக் கையறு பொழுதினும் புகாஅக் காலைப் புக்கெதிர் பட்டுழிப் பகாஅ விருந்தினி பகுதிக் கணினும் வேளாணி எதிரும் விருப்பினி கணினும் வாளான எதிரும் பிரிவி னாலும் நானுநெஞ் சலைப்ப விடுத்தற் கணினும் வரைதலி வேனிடித் தோழி செப்பிய புரைதிர் கிளவி புலிலிய எதிருமி வரைவுடம் படுதலும் ஆங்கதனி புறத்தும் புடைLட வந்த மறுத்தலொடு தொகைஇக் கிழவோனி மேன எணிமனார் புலவர்."
— (6lштеля6яf. 1o5)
காம ஒழுக்கத்தில் நிலைத்து வருகின்ற நாணம், மடம் ஆகிய இரண்டும் பெண்மைக்குரியனவாம். தலைவியிடத்து எழும் வேட்கை குறிப்பினாலும் இடத்தினாலும் ஏற்படுமேயன்றி, அவள் வாயிலாக வெளிப்படையாகத் தோன்றாதெனத் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்துள்ளார்.
“காமத் தினையிலி கணிநின்று வருஉம் நானும் மடனும் பெனிமைய ஆகலினர் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயினர் ஆன. "
- (பொருள். 106)
வேட்கையை உணர்த்தாத நாட்டம் இவ்வுலகில் இல்லாமை யினால், தலைவனுக்குப் பாதுகாவலாக இருத்தற் பொருட்டு நானும், மடனும் தலைவிபால் அமைந்துள்ளதென்று கூறுவர் புலவர்.

eZ ه حجتهzz ص2ییwzقD 57
"காமஞ் சொலிலா நாட்டம் இனிமையினர் ஏமுற இரணிடும் உளவென மொழிய."
- (GLIIIdolf toZ)
சில வேளைகளில் பாங்காயினர் எவருமின்றித் தலைவனும், தலைவியும் தாமே கூடுவதும் உண்டாம். இந்நிலையில் தாமே தமக்குத் தூதுவரும் ஆதல் உளதாம். இதைத் தனிமை ஒழுக்கம் எனக் கூறுவர்.
காமக் கட்டநீ தனிமையிற் பொலிதலினி தாமே துதுவ ராகலும் உரித்தே."
- (பொருளி. 117)
தலைவன், தலைவி ஆகிய இருவரிடையே நிகழும் களவொழுக்கத்தில், அவர்களுக்குத் துணை நின்று, உதவி யாற்றி, அறிவுரை கூறத் தோழி, செவிலி, நற்றாய் (தாய்), பாங்கன், தந்தை, தமையன்மார் ஆகியோர் உளர். இவர்களில் தலைவனுக்குப் பாங்கன் அமைவதுபோல் தலைவிக்குத் தோழி அமைவாள். தலைவியின் தோழியாக இருப்பவள், செவிலியின் மகள் ஆவாள். உற்ற நண்பிகளெல்லாரும் தோழியராகார் என்றவாறு.
"தோழி தானே செவிலி மகளே."
- (பொருளி. 123)
இந்நாளில் நடைபெறும் திருமணவிழாவில் தலைவியின் சகோதரன் தலைவனுக்குத் தோழனாகவும், தலைவனின் சகோதரி தலைவிக்குத் தோழியாகவும் ஏற்படுத்தித் திருமணம் நடாத்தப் படுவதை நாம் காண்கின்றோம்.
தலைவன் தலைவியைச் சேர நினைக்குங்கால் தலைவியின் மனக் கருத்தினை அறிந்து, அதற்கேற்றவாறு அவர்களைக் கூட்டு வித்தலும் தோழியிடம் உண்டென்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.

Page 43
58 (தொல் சம்மியத் சென் துனிசன்
"முயற்சிக் காலத்து அதற்பட நாடிப்
புணர்த்த லாற்றலும் அவளிவயி னான."
- GLIIIditat. 127)
செவிலித்தாய் உயர்ந்த மறைப் பொருளை எடுத்துக் கூறும் ஆற்றல் பெற்றவளாதலால் அவளே தலைவிக்குத் தாயுமாகின்றாள்.
"ஆப்பெருஞ் சிறப்பினி அருமறை கிளத்தலினி தாயெனப் படுவாளர் செவிலி யாகும்."
- (GLIdiot. 122) குறியிடம் கூடும் தலைவன் தலைவி
தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் இருக்கும்
பொழுது குறியிடம் அமைத்துக் கூடுவர். இரவில் கூடுமிடம் இரவுக்குறி என்றும் பகலிற் கூடுமிடம் ‘பகற்குறி’ என்றும் கூறுவர்.
"குறியெனப் படுவது இரவினும் பகலினும்
அறியக் கிளந்த ஆற்ற தெனிய."
- (பொருளி. 128)
இரவுக்குறிக்குரிய இடம் . இல்லத்துக்கு அண்மித்ததாக வீட்டிலுள்ளோர் பேசுவனவற்றைக் கேட்குமாறு அமைந்த இடமாகும்.
"இரவுக் குறியே இலிலகத் துள்ளும் மனையோர் கிளவி கேட்கும்வழி யதுவே மனையகம் புகாஅக் காலை யான."
- (பொருளி. 129)
பகற்குறிக்குரிய இடமானது மதிலின் புறத்தே அமையுமென்றும், அவ்விடம் தலைவிக்கு நன்றாகத் தெரிந்த இடமாகவும் அமைய வேண்டுமென்றும் கூறுவர்.
"பகற்புணர் களனே புறனென மொழிய
அவனறி வுணர வருவழி யான."
- (பொருள். 13O

KZ ه ح47عهza 2ییarقص D 59
தலைவன் விருப்புக்கு மாறுபட்டுத் தலைவி நடக்கமாட்டாள். எனவே அவன் விருப்பத்தோடு தலைவி தான் சென்று வரக் கூடியதான ஒரு குறியிடம் கூறுவாள். இன்னும், தலைவன் தலைவியர் கூடலுக்குத் தோழி குறியிடம் குறித்தலும் உளவாம்.
"அவனிவரம்பு இறத்தணி அறந்தனக் கினிமையினி
களஞ்சுட்டு கிளவி கிழவிய தாகும் தானிசெலற் குரியவழி யாக லான."
- (பொருளி. 173) "தோழியினர் முடியும் இடனுமார் உணிடே."
- (பொருளி. 119) தலைவன் தலைவியர் களவுக் கூடல் முதல் மூன்று நாட்களும் பாங்கனின் துணையுடன் நடக்கும். இம் மூன்று நாட்களும் அவன் துணை நீக்கப்படாது எனத் தொல்காப்பியம் கூறும்.
"முந்நா ளல்லது துணையின்று கழியாது அந்நா ளகத்தும் அதுவரை வினிறே."
- (Guldbat. 12O தலைவி களவொழுக்கத்தில் நிற்குங்கால், அவள் தந்தையும், உடன் பிறந்த தமையன்மாரும் தலைவியின் செயற்பாட்டினைக் குறிப்பினால் அறிந்து கொள்வர்.
"தந்தையும் தனினையும் முனினத்தினி உணர்ய."
- (பொருள். 135)
தலைவன் தலைவியர் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது களவு வெளிப்படுதலுமுண்டு. இது 'அம்பல்', 'அலர் என இருவகையால் வெளிப்படும். அம்பல் என்பது சொல் நிகழா முகிழ்நிலைப் பரவாக் களவாகும். அலர் என்பது சொல் நிகழ்தலான பரவிய களவாகும். இவ்விரண்டிற்கும் தலைவனே பொறுப்பாவான் என்று கூறும் தொல்காப்பியம். தலைவி இவற்றிற்குப் பொறுப்பாகாள் என்றவாறு.

Page 44
60 (தொல்காம்பியத் தேன் துனிசன்
"அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலினி
அங்கதனி முதலிவனர் கிழவ னாவான்."
- (GLIIId56t. 137)
களவொழுக்கத்தில் ஈடுபட்டுள்ள காதலர்கள் களவு வெளிப்பட்ட பின்னரும், களவு வெளிப்படா முன்னரும் ஆகிய இரு நிலைகளிலும் தலைவியரைத் தலைவர் திருமணம் புரிந்து கொள்வர் எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறும்.
“வெளிப்பட வரைதலி படாமை வரைதலி என்று
ஆயிரணி டெனிய வரைதலி ஆறே."
- (பொருள். 138)
களவின் வெளிப்படைதானே கற்பினோடும், உரிமையோடும் தலைவியுடன் கூடி வாழ்வதைப் போன்றது. முற்கூறிய ஒதற்பிரிவு, தூதுப்பிரிவு, பகை தொடர்பில் பிரியும் பிரிவு ஆகிய முப்பிரிவுகளில் மணம் முடித்துக் கொள்ளாது பிரிதல் தலைவனுக்கு இல்லையாம்.
“வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும்
ஞாங்கர்கீ கிளந்த மூன்று பொருளாக வரையாது பிரிதலி கிழவோர் கிலிலை."
- (பொருளி. 139)
தலைவனின் ஊர்திகள்
தலைவன் தலைவியர் காதல் வலையிற் சிக்குண்டனர். தலைவன் தலைவியை நாடிச் செல்வது வழக்கம். தேர், யானை, குதிரை முதலியவற்றிலும், பிறவற்றிலும் தலைவன் விரைந்து சென்று தலைவியைக் கூடுதலும் உண்டென்று சூத்திரம் அமைத்தவர் தொல்காப்பியனார்.
தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் எனிப."
- (பொருள். 209)

ez ഷ്ക്രിബ് 67
தலைவன் ஒருவனிடம் தேரும், யானையும், குதிரையும் பிற ஊர்திகளும் உண்டென்பது அவனின் சிறந்த பொருளாதார நிலையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இன்னும் அவன் நாட்டுச் செழிப்பும் அவ்வண்ணம் அமைந்துள்ளமையும் புலனாகின்றது.
இதுவரை களவியலில் களவொழுக்கம், எண்வகை மணம், திருமணப் பொருத்தம், ஊழின் ஆணை, தலைவியர் சிறப்பு, தலைவன் இயல்பு, பாங்கன், தோழி, செவிலி, நற்றாய், தந்தை, தமையன்மார் ஆகியோர் பங்கு, குறியிடம் குறித்துக் கூடல், குறியிடம் கூறும் தலைவி, இரவுக்குறியும் இடமும், பகற்குறியும் இடமும், அன்றைய மகளிர்க்கு முந்தி நின்ற அச்சம், மடம், நாணம், இன்றுள்ளார்க்கு உள்ள அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, களவின்கண் தலைவனும் தலைவியும், இயற்கைப் புணர்ச்சியில் தலைவன் தலைவி இயல்பு, களவு வெளிப்படல், அம்பலும் அலரும், வரைதலின் வகை, வரைந்தன்றிப் பிரியாமை, தலைவன் பாவனைக்குரிய ஊர்திகள் ஆகிய துறைகளை மேலே பார்த்தோம்.
இவை யாவும் ஏழாயிரம் (7000) ஆண்டுகளாக மக்கள் வாழ்வில் என்றும் இணைந்து, பிணைந்து, உருண்டோடிக் கொண்டிருப்பதை உணர்ந்து மனப் பூரிப்புடன் சிந்தைக்கு எடுக்கவேண்டியுள்ளது. தொல்காப்பியர் தந்துள்ள செய்திகள் அனைத்தையும் கட்டிக் காத்துப் பேணி அடுத்த சந்ததியினருக்கு விட்டுப் போவது நம்மனைவரின் கடமையாகும்.

Page 45
ZதZன் ്മീബZ£് ബമീ
ற்ேற்பின் வழிநின்று வாழ்வதை எல்லாச் சமுதாயமும் விரும்பி அதன்படி வாழ்வியலை அமைத்து நடாத்த அவாக்கொள்வர். இதில் தமிழரின் நிலை ஒருபடி மேலாகும். சீரான குடும்ப வாழ்வுக்குக் கற்பு நெறி மிக முக்கியம். இதற்கமைய ஆன்றோரும் சான்றோரும் சில கட்டுப்பாடுகளையும், வழிமுறைகளையும் அமைத்து உதவியுள்ளனர். இருந்தும், சிலர் அவற்றை உதறித் தள்ளிவிட்டுத் தம் எண்ணப்படி நடப்பவர்களும் இல்லாமலும் இல்லை. இவர்களால் குடும்ப வாழ்வு சிதைவடைவதும் உண்டு.
இனி, காலத்தால் மூத்த பழந்தமிழ் நூலான தொல்காப்பியம் இற்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுந்த கற்பொழுக்கத்தின் இயல்புகளை எவ்வாறு உணர்த்தி நிற்கின்றன என்பதையும் காண்போம்.
கைகோள்வகை
கைகோள் என்பது பொருள்பெற வந்த களவு, கற்பு என இருவகைப்படுமென்று தொல்காப்பியர் தாம் யாத்த தொல்காப்பிய நூலில் குறிப்பிட்டுள்ளார்.
 

63
“மெயப்பெறும் அவையே கைகோளி வகையே."
- (பொருள், 439)
d76IT6/
காமப் புணர்ச்சியும், இடந்தலைப்படலும், பாங்கற் கூட்டமும், தோழியிற் கூட்டமும் என நான்கு வகையும், அவற்றுடன் சார்ந்து வருகின்ற மொழியானும் வருவன களவென்று கூறுதல் மறையறிந்தோர் நெறியாமென்று சூத்திரம் கூறும்.
“காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
பாங்கொடு தழாஅலுமி தோழியிற் புணர்வுமெனிறு ஆங்கநாலி வகையினும் அடைந்த சார்வொடு மறையென மொழிதலி மறையோர் ஆறே."
- (பொருள். 487)
கற்பு
தலைவன் தலைவியர் களவொழுக்கம் வெளிப்படுதலும், தமரின் மூலம் திருமணம் செய்து கொள்ளுதலும் என்று கூறப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியில் மகிழ்தலும், புலத்தலும், ஊடலும்,
ஊடல் தீர்த்தலும், பிரிதலும் என்று சொல்லப்பட்டவற்றுடன் கூடிவருவது
கற்பு என்று கூறப்படும்.
“மறைவெளிப் படுதலும் தமரிற் பெறுதலும் இவைமுத லாகிய வியனெறி திரியாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே."
- (பொருள், 438)

Page 46
64 Gبه تصویب zzz یعنی தென் துனிசன்
கற்பும் கரணமும்
கரணம் என்பது சடங்கொடு கூடிய மணநிகழ்வு. சடங்கோடு கூடிக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய தலைவன், கொள்ளுதற் குரிய மரபினையுடைய தலைவியைக் கொடுத்தற்குரிய தலைவியின் தமர் மணஞ்செய்து கொடுக்கும் முறையைக் கற்பென்று சிறப்பித்துக் கூறுவர். இது கொண்டு கொடுக்கும் முறையாம். கற்பு, கரணம், கிழவன், கிழத்தி, கொளற்குரி மரபினர், கொடைக்குரி மரபினர், கொண்டு, கொடுத்து என்பன நிரல் படுத்திக் கற்பொடு பொருந்திய மணவிழாவினைக் காண்க.
கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவனி கிழத்தியைக் கொடைக்குரிமரயினோர் கொடுப்பக் கொள்வதுவே. ”
- (பொருளி. 14C)
தலைவியும் தலைவனும் அன்பினாற்கூடி ஒன்றுபட்டுச் சேர்ந்து சென்ற பொழுதும், கொடுத்தற்குரிய தலைவியின் தமர் இல்லாத விடத்தும், சடங்கோடுகூடிய மணநிகழ்வு நடைபெறுதலும் உண்டாம். கரணத்தின் சிறப்பு கூறப்பட்டமை காண்க.
"கொடுப்போர் இனிறியும் கரணம் உணர்டே
புணர்ந்துடனர் போகிய காலை யான."
- (Gurdisf 147)
நால்வகை வகுப்பினரான அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியவர்களிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்த காலமொன்று அன்று இருந்தது. அதன்பின் மேலோர் என்று சொல்லக் கூடிய அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகை வகுப்பாரிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்தது.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உணிடே."
- GLIrulaif. 142)

ez ہoحکzzعلیمی تھی برevzقیD 65
தொல்காப்பியர் காலத்துக்கு முன்னர் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகுப்பாரிடையில் கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்ததென்பதும், தொல்காப்பியர் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர் ஆகிய மூவகுப்பாரிடையில் கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்ததென்பதும், வேளாளர் தமக்குள் மாத்திரம் மணவினை நிகழ்த்தினரென்பதும் புலனாகின்றது. இன்று இம்முறைகள் யாவும் அருகி மறைந்துவிட, நால்வகுப்பினரும் தத்தமக்குள் கொண்டு, கொடுத்து, மணவினை காண்கின்றனர். இன்னும், நம் பண்டைத் தமிழ் ஆன்றோர் தம்இன மக்கள் அனைவரையும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரில் அடக்கி, அரசர்களிலும் பார்க்க அந்தணர்க்கு முதலிடம் அளித்து, இரண்டாமிடத்தில் அரசரை அமர்த்தி, மூன்றாம் நான்காம் இடங்களில் முறையே வணிகர், வேளாளர் ஆகியவர்களை நிறுத்தி, அரசன் கையில் செங்கோல் கொடுத்து, மக்களை மாண்புடன் வாழவைக்கும் முறையினை அமைத்தமை காண்க.
மேலும், இன்று நம் மத்தியில் தாண்டவமாடும் சாதிப் பிரிவினையும், சீதனக் கொடுமையும் தொல்காப்பியர் காலத்தில் இருக்கவில்லை என்பதும் தெளிவாகின்றது. நாம் தொல்காப்பியர் வழியில் நிற்கின்றோமா? என்பது விடையற்ற ஒரு கேள்வி.
தலைவன் தலைவியைக் கண்டு, காதல் கொண்டு, சிலநாட் பழகி, பல நாள் மறைந்தொழுகி, பின் நானறியேன் என்று பொய் கூறுதலும், குற்றப்பட ஒழுகுதலும் மக்கள் வாழ்வில் மங்கா வடுக் களைத் தந்து வாழ்க்கை முறைகளைச் சீரழித்து விடுகின்றன. தலைவன் தலைவியரிடையே பொய்யும், வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோரும், சான்றோரும் சடங்குகளை வகுத்து, வரையறைகளை அமைத்தனர்.
“பொய்யும் வழுவும் தோனிறிய பினினர்
ஐயர் யாத்தனர் கரணம் எனிL."
- (பொருளி. 143)

Page 47
66 Gیع۶ رضویه نصیب சேன் துனிசத்
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் என்று வரும் கூற்றால், பொய்யும் வழுவும் தோன்றாக் காலமொன்றிருந்தமை புலனாகின்றது. அக்காலம் தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதென்பதும் தெளிவாகின்றது.
பொய்யாவது செய்ததனை மறுத்து நிற்றல். வழுவாவது செய்ததை அதன் கண் நில்லாது தவறி ஒழுகுதல். கரணத்தொடு செயற்படின் பொய்யும், வழுவும் நிகழாவாம். இவ்வண்ணம் கரணம் வேண்டுவதாயிற்று.
anufliassir
தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய பன்னிருவரும் ஒழுக்கத்திற்குச் சிறந்த வாயில்களாவார் என்று கற்பியலில் தொல்காப்பியச் சூத்திரம் கூறும்.
"தோழி தாயே பார்ப்பானி பாங்கனி
பாணனி பாடினி இளையர் விருந்தினர் கத்தர் விறலியர் அறிவர் கணிடோர் யாத்த சிறப்பினர் வாயிலிகள் எனிu."
- (பொருள். 191)
இவர்கள் எல்லாரும் பேச்சுக்குரியவர்களாவெனத் தொல்காப்பியர் விளக்கவில்லை. இன்னும், இப் பன்னிருவரும் பேச்சுக்குத் தேவைப்பட்டவர்களா? என்ற ஐயமும் எழுகின்றது.
கூற்று களவிற் கூற்று நிகழ்த்துற்குளியோர்
பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, சிறப்பினையுடைய தலைவன், தலைவி ஆகிய ஆறுவகையினரும், களவிற் கூற்று நிகழ்த்தற்குரியோராவர் எனத் தொல்காப்பியச் சூத்திரம் கூறும்.

KZ ے حکمہvسمجھیے تھےzقD 67
பார்ப்பானி பாங்கனி தோழி செவிலி சீர்த்தகு சிறப்பிற் கிழவனி கிழத்தியொடு அளவியணி மரபினர் அறுவகை யோருமி களவியறி கிளவிக் குரியர் எனிu."
(பொருளி - 49C)
கற்பிற் கூற்று நிகழ்த்தற்குளியோர்
பாணன், கூத்தன், விறலி, பரத்தை, அறிவர், கண்டோர் ஆகிய அறுவருடன் சிறப்பினையுடைய பார்ப்பான், பாங்கன் தோழி, செவிலி, கிழவன், கிழத்தி ஆகிய அறுவரையும் சேர்த்துப் பன்னிருவரும் கற்பிற் கூற்று நிகழ்த்தற்கு உரியோராவார்.
"பாணனி கூத்தனி விறலி பரத்தை
யானஞ் சானிற அறிவர் கணிடோர் பேணுதகு சிறப்பிலி பார்ப்பாணி முதலா முனினுறக் கிளந்த அறுவரொடு தொகைஇதி தொனினெடு மரபிற் கற்பிற் குரியர்."
- (பொருளிர் 491)
இவ்விடத்திலும் பன்னிருவரும் கூற்றுக்குரியவர்களா? என்றொரு ஐயப்பாடு எழுகின்றது. கற்பிற் கூற்று நிகழ்தற்கு இடம் பெறுவோர் பன்னிருவரில் பரத்தையும் ஒருத்தியாவாள். பரத்தை கற்பில் தவறியவள். அவளை கற்பிற் கூற்றுக்கு உரியவளாகக் காட்டப் பட்டமை ஐயப்பாட்டைத் தருகின்றது. ஆனாலும் பரத்தையர் கூற்று நடந்ததாகத் தொல்காப்பியர் காட்டவில்லை. இன்னும், கற்பியலில் காமக்கிழத்தியர் கூற்று நடந்தேறியதாகக் காட்டப்பட்டுள்ளது.
களவிற் கூற்று நிகழ்த்தற்கு அறுவகையினரையும், கற்பிற் கூற்று நிகழ்த்தற்குப் பன்னிருவகையினரையும் அமைத்த நம் பண்டைத் தமிழர் தம் வாழ்வியலில் களவுக்கும், கற்புக்கும் கொடுத்துள்ள சிறப்பினைக் காண்க.

Page 48
68 G62 یع۶۶یی به هر தேன் துனிசன்
தலைமகன் தலைமகள் கூற்று
சான்றோர் வகுத்த சடங்கு முறைப்படி மணவிழா நடந்தேறிய பின் தலைவன் தலைவியரிடையே அதிகமான கூற்று நிகழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்களில் கூடுதலான சொல்நிகழ்ச்சிகள் தலைவனுக்கே உரியதாம். அவை முப்பத்து மூன்று சொல்நிகழ்ச்சிகள் எனத் தொல்காப்பியம் கூறுகின்றது.
இருவரும் களவுப் புணர்ச்சியில் நடந்தேறிய நிகழ்வுகள் பற்றிக் கூறுமிடத்தும், மனவடக்க வேட்கை கட்டவிழக் கூடி மகிழ்ச்சியுற்ற விடத்தும், ஒருவரையொருவர் புகழ்ந்து கூறி நின்றவிடத்தும், தலைவியின் கற்புநெறி, வாழ்க்கைநெறி பற்றிக் கூறுமிடத்தும், 'ஏனது சுவைப்பினும் நீ கைதொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால்' என்று தலைவியைப் புகழ்ந்தவிடத்தும், இன்பதுன்பம் ஏற்படுங் காலையும், தலைவன் பரத்தையரை நாடுமிடத்தும், அதனைப் பொறாது அவள் ஊடல் கொண்டவிடத்தும், தலைவன் பரத்தையரை மறந்து தலைவியைநாடி வந்தவிடத்தும், தலைவன் தலைவியின் அடிகளை வருடி இரந்து நிற்குமிடத்தும், ஒருவரையொருவர் குறைபட்டு நின்றவிடத்தும், இருவரும் நீண்டநாள் பிரிந்து நின்றவிடத்தும், பொருளினும் காமம் வலியது என்று நினைத்தவிடத்தும், தலைவியை விட்டுத்தான் பிரிவதற்கு அஞ்சியவிடத்தும், இன்னோரன்ன நிகழ்வுகளில் தலைவன் தலைவியர் கூற்று நிகழ்வனவாம். (பொருள். 144, 145).
அலர் எழுதல்
களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இரண்டிலும் தலைவன் தலைவி ஈடுபட்டிருக்கும் பொழுது அலர் (பழி) தூற்றுதல் நிகழ்வதுண்டாம். ஆனால் அது ஒரு வேளை நிகழ்தலும், சில வேளை நிகழாமையும் உண்டாம்.
களவுங் கற்பும் அலர்வரை வினிறே. *
- (GLITutsif. 16o)

egz ه ح47عهzz2ی وarzق D 69
அலரைப் பற்றித் திருவள்ளுவர் கூற்றும் ஈண்டு நோக்கற்பாலது. காதலனை நான் ஒரு நாள்தான் பார்த்தேன். அதனால் எழுந்த அலரோ பாம்பு சந்திரனை விழுங்கிய செய்தி போல் எங்கும் பரவி விட்டதே என்று கண் கலங்கும் காதலி குறைபடுகின்றாள்.
"கணிடது மனினும் ஒருநாள் அலர்மனினும் álbýæ6O6IIú LIIIót/alæ/T6öf LppI."
- (குறளி. 1746)
பிறர் அலர் தூற்றியதால் தலைவன் தலைவியரின் காம வேட்கை அதிகரிக்கும் எனச் சூத்திரம் கூறும். அலரினால் வரும்பயனெனத் தலைவன் தலைவி மகிழ்வர்.
"அலரிலி தோனிறுமி காமத்து மிகுதி."
- (Gulsat. 761)
ஊரவர்களின் அலர் தூற்றல் எருவாகவும், அது கேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொற்கள் நீராகவும் கொண்டு இக்காம நோயானது செழித்து வளர்கின்றதெனக் காதலி களிப்படைகின்றாளர். இவ்வாறு கூறுபவர் வள்ளுவப் பெருந்தகை.
ஊரவர் கெளவை எருவாக அனினைசொல் நீராக நீளும்இந் நோய்."
- (குறள் 1747)
தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து, பரத்தையை நாடிச் சென்று, அவளுடன் சேர்ந்து ஆடல், பாடல் நிகழ்த்தி, ஆற்றிலும், குளத்திலும் நீராடி மகிழ்தலும், அலர் பரவலுக்குக் காரணமாம்.
கிழவோனி விளையாட் டாங்கும் அற்றே."
- (பொருளி. 162)

Page 49
Cரன் துனிசன் یعzz۶۶ به تهی وG62
தவம் பயிலல்
தலைவனும் தலைவியும் மணவிழாக் கண்டு, இன்பம் துய்த்து, முதுமைக் காலத்தில் மீண்டும் சிற்றின்பத்தில் இறங்காது, பாதுகாவல் தரக்கூடிய மக்கட் செல்வத்துடனும், அறம் நாடும் உறவினருடனும் கூடி வாழ்ந்து கொண்டு, சிறந்த பேரின்பத்தை அடையும் முறைகளைக் கைக்கொள்வதே இப்பிறப்பின் பயன் ஆகும் என்பர்.
"காமஞ் சானிற கடைக்கோட் காலை
ஏமஞ் சானிற மக்களொடு துவனிறி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றலி பிறந்ததனி பயனே.”
- (பொருள். 190)
வழியில் தங்காமை
சிலவேளைகளில் வினை காரணமாகத் தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், அவ் வினை முடித்துத் திரும்பி வரும் பொழுது, நீண்ட வழியாயினும் இடையில் தங்கி இளைப்பாறி வருவதென்பது கிடையாதாம். இதற்கு அவன் உள்ளத்திலும் இடமில்லை. அவன் உள்ளம் தலைவிபால் நிலைத்து நிற்கின்றது. இதற்கமைவாக, சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அவன் தேரானது விரைந்து சென்று அவன் உள்ளத்து நினைவை நிறைவேற்றும் என்றவாறு.
"வினைவயிற் பிரிந்தோனி மீணடுவரு காலை
இடைச்சுர மருங்கிலி தவிர்தலி இலிலை உள்ளம் போல உற்றுமி உதவும்
y6f6fluupið 456ýluont A26aDL6aDuo uLunraw. ”
- (பொருள். 192)

egz ബ്ബ് 77
இதுவரை களவு, கற்பு, கரணம், நால்வகை வகுப்பாரிடையே கொண்டு, கொடுத்து மணவினை நிகழ்ந்த முறையும், பின்பு அம்முறை அருகி நால்வகுப்பினரும் தத்தமக்குள் கொண்டு, கொடுத்து மணவினை நிகழ்த்தும் முறையினையும், பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஆன்றோர் கரணம் அமைத்த முறையினையும், பன்னிருவர் கற்பிற் கூற்று நிகழ்த்தற்குரியோராவர் என்பதையும், மணவிழா நடந்தபின் தலைவன் தலைவியரிடையே அதிகக் கூற்று நிகழ்வதையும், ஒருவரை யொருவர் ஏத்திப் புகழுரை நிகழ்த்துவதையும், அலர் எழும் முறை யினையும், வினையிற் சென்றோன் வினைமுடித்து வரும் வழியில் தங்காது விரைந்து தலைவியை நாடிவருவதையும், முதுமைக் காலத்தில் சிற்றின்பத்தில் நுழையாது அறத்தை நாடிப் பேரின்பம் அடைவதும் ஆகியவை மேற்கூறப்பட்டமை படித்தறிந்தோம்.
இவ்வாறான சீரிய முறைகளை வகுத்துத் தம்மக்கள் இன்புற்ற மணவாழ்வை அனுபவிக்க வேண்டுமென்ற பேரவாக்கொண்டு செயற் பட்ட நம் பண்டைத்தமிழ் ஆன்றோரையும், சான்றோரையும் போற்றி
நிற்போமாக.

Page 50
éFZóasztZ76z” Az6456ő 65Z7zZZzz/7z56yZő 627Z72/Z/766/Z 67%2A27 az762/Z/
எண்ணாயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நடுகல், கோயில், தெய்வம், பறை ஆகியன இற்றைவரை நிலைத்து நிற்கும் விந்தை.
ரிேங்க இலக்கியங்கள் தமிழர்களின் நாகரிகப் பண்பாட்டு அடித்தளமாய் விளங்குகின்றன. அன்பும், ஆண்மையும், பண்பும் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்த பழந்தமிழரின் நல்லற வாழ்க்கையையும், இயற்கையோடு கலந்து மலர்ந்த வாழ்வியல் நெறிகளையும் எல்லா இலக்கியங்களிலும் காணலாம். தமிழரின் கலை, கலாசாரம், பண்பாடு, அவர் நீண்ட வரலாறு யாவையும் தமிழ் இலக்கியங்கள் இயம்பி நிற்கின்றன.
சங்ககால நடுகல், கோயில், தெய்வம், பறை ஆகியவை இற்றைவரை எவ்வண்ணம் இலக்கியங்களில் பேசப்படுகின்றன என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கு.
 

73
தொல்காப்பியம்
கி.மு. ஐயாயிரம் (5000) ஆண்டுகளுக்குமுன் தோன்றிய மூத்த நூல்களுள் ஒன்றான தொல்காப்பியம் என்னும் நூலில் பொருளதிகாரம் - புறத்திணையியலில் நடுகல், கோயில், தெய்வம், பறை ஆகியவை பற்றிக் கூறப்பட்ட ஒரு சூத்திரத்தைத் தொல்காப்பியர் அமைத்துத் தந்துள்ளார். வாட்போரில் எதிர்த்து நின்ற பகைவனை எதிர்த்து வெற்றிவாகை சூடிய அரசிளங்குமரனை அந்நாட்டு மக்கள் பாராட்டிப் பறை முழங்கி அவனுக்கு அரசைக் கொடுத்துக் கொண்டாடினர். போர்க்களத்தில் வீரச்சாவெய்திய போர்வீரர்களின் நினைவாக நடுகல் நிறுத்தற் பொருட்டுச் சிறந்த கல்லைத் தேடி, அதை எடுத்து வந்து, நீரினால் கழுவிச் சுத்தம் செய்து, அக் கல்லினை ஓரிடத்தில் நட்டு, அதைக் கோயிலாக எழுப்பி, அதில் அவர் பீடுகளைத் தீட்டி, அக் கல்லிற்குப் பெருஞ் சீரும் சிறப்பும் செய்து, பின்னர் நடப்பட்ட கல்லினைத் தெய்வமாகப் போற்றி வணங்கி வாழ்த்தி வந்துள்ளனர்.
"வாளிமலைந்து எழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க நாடவற்கு அருளிய பிள்ளை யாட்டும் காட்சி காலிகோளி நீர்ப்படை நடுகலி சீர்த்த மரபிலி பெரும்படை வாழ்த்தலெனிறு இருமூணிறு மரபிற் கலிலொடு புணரச்
ー (aumapaf 63ー7アー27ノ
மேலும், பழந்தமிழ்ச் சான்றோர்கள் தம் வாழ்வியலை குறிஞ்சித் திணை, முல்லைத்திணை, பாலைத்திணை, மருதத்திணை, நெய்தல் திணை என ஐந்திணைகளாக வகுத்து, ஒவ்வொரு திணைக்கும் தனித்தனியே அவற்றின்கண் உள்ளனவான பதினான்கு (14) கருப் பொருளான தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் ஆகியனவும் வகுத்து, இன்புற்று வாழ்ந்து காட்டினர்.

Page 51
ኧ4 G6 تھے”کترے وھ قصہ یہ தென் துனிசன்
இப் பதினான்கு கருப்பொருள்களில் தெய்வம், பறை ஆகிய இரண்டும் ஐந்திணைகளில் எவ்வண்ணம் பேசப்ப்டுகின்றன என்பதையும் ஈண்டுக் காண்போம்.
திணை தெய்வம் பறை
1. குறிஞ்சி முருகக் கடவுள் தொண்டகப் பறை
(சேயோன்) (முருகியம்) 2. முல்லை. மாயோன். ஏறங்கோட் பறை. (திருமால், நெடுமால்) (ஏறுகோட் பறை)
3. UIT60)6). கன்னி. 59.
(துர்க்கை, கொற்றவை) 4. மருதம். இந்திரன். நெல்லரிகிணை,
(வேந்தன்) D600TOLpp6. 5. நெய்தல். வருணன். மீன் கோட்பறை, நாவாய்ப் பம்பை.
ஐந்திணைகளிலும் வெவ்வேறு தெய்வங்களும், வேறு பட்ட பறைகளும் இருந்துள்ளமை காண்க. இன்னும், பண்டைத் தமிழர்கள் ‘மணமுழவு பறை அடித்துத் திருமணங்கள் நடாத்தி யுள்ளமையும் புலனாகின்றது. இன்றும் கோயில்களிலும், விழாக்களிலும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பறை அடிப்பதை நாம் காண்கின்றோம். இவை தொடர்பில் தொல்காப்பியனார் தரும் ஒரு சூத்திரம் இது.
"தெய்வம் உன7வே மாமரம் புட்பறை
செய்தி யாழினி பகுதியொடு அவ்வகை பிறவும் கருவென மொழிய, "
- (பொருளி. 2O

ez به عه a قض همایی D 75
திருமந்திரம்
கி.மு. ஆறாயிரம் (6000) ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த திருமூலர் யாத்த திருமந்திரம் என்னும் நூல் காலத்தால் மூத்த முதல் நூலாகும். இந்நூலில் கோயிலைப் பற்றிப் பல மந்திரங் களிலும், பறை பற்றி ஒரு மந்திரத்திலும் அழகுறக் கூறப்பட்டு உள்ளன.
"கோயிலி இருந்து குடிகொணர்ட கோணிநந்தி."
- (116)
"செப்ப மதிளிஉடைக் கோயிலிஉள் வாழிபவர்
செப்ப மதிளிஉடைக் கோயிலி சிதைந்தபினர்."
- (154)
"உடமியுளே உத்தமனி கோயிலிகொணி டானிஎனிறு உடம்பினை யானிஇருந்து ஓம்புகினி றேனே."
- (725) "கூப்ந்தறிந்து உள்உறை கோயிலும் ஆமே."
- (e 7o) "கோயிலினி உள்ளே குடிசெய்து வாழிபவர்."
- (611) "உள்ளம் பெருங்கோயிலி ஊனுடம்பு ஆலயம்."
— (18гз) "படமாடக் கோயிலி பகவற்கு ஒனிறுFயிலி."
- (1857) "பறைஅறை யாது பணிந்து முடியே."
- (748)

Page 52
76 G62وzبه زعه zzz۶یع தெரன் துனிசன்
திருக்குறள்
கி.மு. முப்பத்து ஓராம் (31) ஆண்டில் தோன்றிக் கடைச்சங்க காலத்திலும் வாழ்ந்தவரான திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் நூலில் தெய்வம் பற்றியும், பறை பற்றியும் கூறப்பட்டுள்ள செய்தி களையும் காணலாம்.
"தெய்வம் தொழாஅள் கொழுநனி தொழுதெழுவாளர்
பெய்யெனப் பெப்யும் மழை."
- (espat. 55) "தெய்வத்தானி ஆகா தெனினும் முயற்சிதனி
மெய்வருத்தக் கூலி தரும்."
- (ծնյ61 619)
'മൃഞ്ഞുമIങ്ങp அனினர் கயவர்தாம் கேட்ட
மறையிறர்க்கு உய்த்துரைக்க லாணி."
- (espot. to76) “அனிச்சப்பூகீ காலிகளையாளர் பெய்தாளி நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை."
- (குறளி. 1115)
இனி, எட்டுத்தொகை நூல்களில் அகநானூறு, புறுநானூறு, குறுந்தொகை, கலித்தொகை ஆகிய நான்கு நூல்களிலும் எவ்வண்ணம் நடுகல், கோயில், தெய்வும், பறை ஆகியவை பேசப்படுகின்றன என்பதையும் காணலாம்.
c3ø[filIngoJugpy
போரில் இறந்துபட்ட கரந்தை வீரர்களின் பெயர், போர்ப் பெருமை, புகழ் யாவும் எழுதி, மயிற்பீலி சூட்டி, பாலை நிலந்தோறும் உயர்ந்த நிலையான நடுகற்கள் நாட்டப்பட்டு, அவர் பிடித்திருந்த வேலை அந் நடுகல்லிடத்து நாட்டி, கேடகங்களும் அதன்கண்

ez விசவத்தினர்) 77
சார்த்தப்பட்டிருந்தன. இது வேறு வேந்தரின் போர்முனைபோல் தோன்றி அச்சம் தரும் கானக் காட்சியாயிற்று. இவ்வாறு நடுகல் நட்டு நாட்டைக்காத்த போர்வீரரைப் போற்றும் பழந்தமிழர் மரபு காண்க.
இவ்வாறு மதுரை மருதன் இளநாகனார் என்னும் புலவர் பாடிய ஒரு பாடல் அகநானூறு நூலில் காணலாம்.
"ஆடவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பிலி சூட்டிய பிறங்குநிலை நடுகலி வேனிஊனிறு பலகை வேற்றுமுனை கடுக்கும் வெருவரு தகுந காணம்."
- (131-to-13)
վ[ԱՄյոgյթԱյJ
பகைவர் கவர்ந்த ஆநிரைகளைத் தனித்து நின்று மீட்டுக் கொணர்ந்த கரந்தை மறவன் இறந்து விட்டான். அவன் பெயர், மயிற்பீலி சூட்டி, புடைவையால் செய்த பந்தலின் கீழ் நடப்பட்ட நடுகல்லிற் பொறிக்கப்பட்டு விளங்குகின்றது. இச் செய்யுளை வடமோதங்கிழார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
"மடஞ்சாலி மஞ்ஞை அனிமயிர் சூட்டி
இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப் படஞ்செய் பந்தர்க் கலிமிசை யதுவே."
- (26O-26-29)
இன்னும் கரந்தை மறவர். பகைவர் கவர்ந்த ஆநிரைகளை மீட்டுத் தந்த போரில் மடிந்தனர். அவர் வீரம் போற்றி நடுகல்லும் எழுப்பினர். அதனால் அவரும் நடுகல்லாகினர். “களிற்றடி போன்ற பறை" என்ற கூற்றும் நோக்கற்பாலது.
"நிரைஇவனர் தந்து நடுகலி ஆகிய"
ー (267ー75) (பாடியவர் : ஆவூர் மூலங்கிழார்)

Page 53
አ‛8 (தொல்காம்பியத் தென் துனிசன்
“பெருங்களிற்று அடியினி தோனிறுமி ஒருகணி
இரும்பறை இரவல! . ."
- (263-1-2) "கொலிபுனலி சிறையினி விலங்கியோனி கலிலே."
- (263-s) (பாடியவர் : தெரியாது) "அனிமயிற் பீலி குட்டிப் பெயர்பொறித்து
இனிநட் டனரே கலிலும் . ."
- (264-3-4) (பாடியவர் உறையூர் இளம்பொன் வாணிகனார்)
"பலிஆனி கோவலர் படலை குட்டக்
கலிஆ யினையே ."
- (265-4-5) (பாடியவர் : சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்)
குறுந்தொகை
குறுந்தொகை நூலில் பறைகள் ஒலிக்கவும், சங்குகள் முழங்கவும் கடவுள்தன்மையுடைய முதிர்ந்த ஆலினைக் கொண்ட பொதியின்மலைக் கண்ணே என்று ஒளவையார் ஒரு பாடலைத் தந்துள்ளார்.
"பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொணிமூ தாலத்துப் பொதியில் தோனிறிய ."
ー (75ー7ー2)
கலித்தொகை
ஒலிமிக்க பல பறைகள் ஒலியார்ப்ப மாறிமாறிப் பல வடிவங்களும் காட்டி, நீ பயங்கரமான 'கொட்டி’ என்ற கூத்தினை ஆடுவாயே என்று

79 D قzص2یقیصریه حاجعه بیرحم
கலித்தொகை நூலில் கடவுள் வாழ்த்துப் பாவில் காட்டப் பட்டமையும் காண்க.
"படுபறை பலஇயம்பப் பலிலுருவம் பெயர்த்துரீ
G45/76645/772 AL/ITOE45Iras v A
ー (sーeり
சிலப்பதிகாரம்
இனி, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரம் என்னும் நூலில் இச் செய்திகள் எவ்வண்ணம் கூறப்பட்டுள்ளன என்பதையும் பார்ப்போம்.
சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று எதிர்த்து வந்த ஆரிய மன்னர்களை வென்று. இமயத்தில் பத்தினித் தெய்வத்துக்கு உருவெழுதக் கல்லெடுத்து, அதனைத் தோற்றுப் பிடிபட்ட கணகவிசயர் முடிமேல் ஏற்றி, கங்கையில் நீர்ப்படை செய்து, வஞ்சிமாநகருக்குக் கொணர்ந்து, படிமம் அமைத்து, சிறப்பு விழாவெடுத்து, தெய்வமாக நட்டு, கோயில் எழுப்பி, கொண்டாடி மகிழ்ந்தான் மக்களுடன். இவ்வாறு கண்ணகி நடுகல்லாய், கோயிலாய், தெய்வமாகின்றாள்.
"பொற்கோட்டு இமயத்துப், பொருவறு பத்தினிக்
கற்காலி கொணர்டனணி காவலனி ஆங்கு,எனி."
- (26-253-254)
"கடவுள் பத்தினிக் கல்காலி கொணர்டயினர். '
- (27-2)
"பறைக்கணி பேப்மகளர் Lாணிக்கு ஆடப் ."
- (26-2O8) "வடித்தோலி கொடும்பறை வாலிவளை நெடுவயிர். "
- (26-193)

Page 54
80 சொல்காம்பியச் சேன் துனிசத்
"இமய மாலிவரைக் கண்கடவுளிர் ஆம்."
- (29-23)
"பத்தினிக் கோட்டப் படிப்புறம் வகுத்து.
- (3o-151)
"தெய்வம் தெளிமினி தெளிந்தோர்ப் பேணுமினி"
— (зо—1вz)
கொன்றைவேந்தன்
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் யாத்த நீதி நெறி நூலான கொன்றைவேந்தனில் கோயில், தெய்வம் ஆகியவற்றின் சிறப்பினை மிக அழகாக விபரித்துக் கூறியுள்ளார்.
'அணினையும் பிதாவும் முனினறி தெய்வம்."
"-26vLLŐ GABITgp625/ 4FIT6v62/LŐ Aö6zfgny. "
"தாயினி சிறந்த ஒரு கோயிலும் இல்லை."
"தெய்வம் சிறிணி கைதவமி ஆகும்."
gadómamagpuLu LumíaDGJuflasi
உற்சவ காலங்களில் மக்கள் கோயிலில் கூடி, இராக் கூத்தாடி, தெய்வத்திற்கு மன்ட பரவி, பறை அடித்து, தெய்வம் உருக்கொண்டாடி, மக்கள் குறை கேட்டு, குறி சொல்லி, தெய்வ ஆட்டத்துடன் பறை முழங்கக் கடற்கரைநாடி, வழிவெட்டி, விழா நடாத்துவது நாம் இன்றும் காணும் காட்சிகளாம். நாட்டில் நோய் பரவி, மழை குன்றி, வறுமை ஏற்படுங்கால் தெய்வம் எழுந்தருளி வீதிவலம் வந்து மக்களையும், நாட்டையும் காத்து அருள் வழங்குவதும் தெய்வச் செயலாம்.

ez ح۶یعهzzaقصاصی ص D 87
நாட்டைக் காக்கும் போராளி வீரச்சாவெய்தியவிடத்து அவர் நினைவாக நடுகல் நட்டு, கல்லறை சமைத்து, அவர் பெயர், புகழ், வீரம் தீட்டி, ஆண்டாண்டு தோறும் மலர் தூவி, அவரை நினைந்து உருகி நிற்கும் நிலை தமிழீழத்தின் ஒரு வரலாற்று நிகழ்வாகும். இக் கல்லறைகள் கோயில் ஒத்த புனித இடமாகும். எனவே இவையும் கோயில்களே.
தமிழீழத்தில் பறை ஒரு மங்களகரமான வாத்தியக் கருவியாகும். மகளிரின் சுகப் பிரசவம் வேண்டிக் கோயில்களில் பறை முழக்குவிக்கும் நிகழ்வுகளை நாம் இன்றும் கிராமப்புறங்களில் 85T600T6)Tib.
மேலும், வசதி குறைந்த கிராமங்களில் சில முக்கிய அரச அறிவித்தல்கள் மக்களைப் போய்ச் சேரும்படி, பறை அடித்து அறிவித்தலைக் கூவிவாசிக்கும் முறையும் உள்ளது.
ஈமச்சடங்கு நடாத்தும் பொழுதும் இறந்தோரை நினைந்து, அழுது புலம்பி, கிரிகைகள் செய்து, பாடை கட்டி, பறை அடித்துச் சுடலைவரை சென்று, இறந்தாரைத் தீக்கிரையாக்கி வழியனுப்பும் வழக்கம் ஒரு நீண்ட வரலாற்றுச் செய்தியாம்.
ըpւգ5ւյ60Մ
பாண்டிய மன்னர்களால் நிறுவப்பட்ட இடைச்சங்க, கடைச் சங்க காலத்தில் எழுந்த பண்டைத் தமிழ் நூல்களான திருமந்திரம், தொல்காப்பியம், திருக்குறள், குறுந்தொகை, அகநானுறு, புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், கடைச் சங்க காலத்துக்குப்பின் எழுந்த கொன்றைவேந்தன் ஆகிய நூல்களில் நடுகல், கோயில், தெய்வம், பறை ஆகியவை எவ்வாறு பேசப் பட்டுள்ளன என்பதை ஆதாரங்களுடன் பார்த்து மகிழ்ந்தோம்.
ஒரு போர்வீரன் போரில் மடியுங்கால், அவன் நடுகல்லாய், கோயிலாய், தெய்வமாய் உயிர்த்தெழும் நிலை கண்டோம். மனிதப் பிறவிகளான இயேசுநாதர், புத்தர், கண்ணன், இராமர், கண்ணகி,

Page 55
82
திருமூலருடன் அறுபத்துமூன்று நாயன்மார்கள், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார், மாணிக்கவாசகர் போன்றோர் தெய்வமாகிய நிலையும் நாம் அறிவோம். இவ்வண்ணம் சில அற்புத மனிதர் தெய்வமாகின்றனர். “உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான்.” என்றுரைப்பது திருமூலர் மந்திரம். அது தெய்வம் மனிதனாகும் நிலை.
பாராண்ட மன்னர் போர்ப்பறை முழங்கிப் போர் தொடுத்து, வெற்றிவாகை சூடி, மக்களைக் காத்து, நல்லாட்சி புரிந்து வந்துள்ளனர். இப்பொழுது மன்னராட்சி மங்கி மறைந்து விட்டது. ஆனால் அவர்கள் பாவித்த பறை இன்றும் எம்முடன் நிலைத்து நின்று முழங்கிக்கொண்டிருக்கின்றது.
இற்றைக்கு எண்ணாயிரம் (8000) ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நடுகல், கோயில், தெய்வம், பறை ஆகியவை அன்றிலிருந்து இன்றைவரை மக்கள் மத்தியில் நிலைத்து நின்று தமிழரின் பூர்வீகத்தையும், சிறப்பையும், பெருமையையும் பேசிக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்து நாம் பூரிப்படைவோமாக.

83
AZZ525avZ7 ZZ 6Zazző ബZബZ ക്രZ
- asszézőZ7456zZő
உலகில் மிக உயர்ந்த நுணுக்கமான தத்துவப் படைப்பு மனிதப் பிறவியே. இதை மனிதன் உணராவிடினும், இது உலக உணர்வாகும். ஆணைப் பெண்ணுக்காகவும், பெண்ணை ஆணுக்காகவும் படைக்கப்பட்டமை ஒரு தத்துவ உண்மையாகும். மனித இனம் தொடர்ந்து உலகோடு ஒட்டியிருக்க வேண்டுமென்பது மனிதப் படைப்பின் கருப்பொருள். இது திருமணம் என்ற ஓர் அன்பின் பிணைப்பாய், இணைப்பாய், காதற்பரிசாய், இனப் பெருக்க ஊற்றாய் அமைந்து உலகை உயிர்ப்பித்து நிற்கின்றது.
சமூக விரோதச் செயலான தம் உடம்பை ஆடவர்க்கு விற்கும் பெண்களைப் பொதுமகளிர், விலைமாதர், விலைமகள், தாசி, பரத்தை, விபச்சாரி, வேசி, வரைவின் மகளிர், விலைமாது, கற்பற்றார், என பல விதமாக அழைப்பர். இச் செயலை ஒரு தொழிலாக நடாத்து கின்றனர். பணம், பொருள் சேர்ப்பதுதான் இத் தொழிலின் நோக்கம். விலைமாதர் இல்லம் என்ற பெயரில் பதின்மூன்று (13) வயதிலிருந்து

Page 56
84 (தொல்காட்சியச் சேன் துனிசன்
இருபத்தைந்து (25) வயதுள்ள அழகிய கன்னிப் பெண்களை ஈடுபடுத்தி, இத் தொழிலில் அநுபவம் வாய்ந்த சில முதிய பெண்கள் நடாத்தி அதிக பணம் சம்பாதிக்கின்றனர். சில நாடுகளில் இவர்கள் ஒன்று கூடிச் சங்கம் அமைத்துப் பரத்தமையை ஒரு தொழிலாக நடாத்த அங்கீகாரமளிக்கும்படி அரசைக் கோருகின்றனர். அநேகமாக அரசு இதற்குச் சிவப்புக் கொடி காட்டி மறுத்து வருகின்றது. இருந்தும் பரத்தமை ஒழிந்தபாடில்லை. காவல் துறையினரை ஏமாற்றிய வண்ணம் இத்தொழில் விறுவிறுப்பாக நடந்து கொண்டுதான் வருகின்றது.
பரத்தை என்னும் சொல் பெண்ணைத்தான் குறிக்கின்றது. இப் பெண்பாற் சொல்லுக்கு ஆண்பாற் சொல் இல்லை. ஆனால் பரத்தையரின் வாடிக்கையாளர்கள் ஆண்களே. ஆண்கள்தான் அவர்களைப் பரத்தையராக்கி விட்டு தப்பி ஓடிவிடுகின்றனர், காவல் துறையினரிடம் அகப்பட்டுத் தண்டனை பெறுவோர் அதிகமாகப் பரத்தையர்களே.
மேற்கத்திய நாடுகளில் ஆண் விபசாரம், பெண் விபசாரம் என்று ஆணுக்கும், பெண்ணுக்கும் சமநிலை கொடுத்துள்ளமை நோக்கற்பாலது. இங்கு இருவருக்கும் தேவை உள்ளது. ஆண் சுகத்தைப் பெறுகின்றான்: பணத்தை இழக்கின்றான். பெண் பணத்துடன் சுகமும் பெறுகின்றாள்.
பரத்தமை காரணமாகப் பயங்கரத் தீங்குள்ள “எயிட்ஸ்" என்று கூறப்படும் உயிர்க் கொல்லி நோய் தொடர்புடைய ஆண்களையும் பெண்களையும் தாக்குகின்றது. எயிட்ஸ் நோயால, நோய் எதிர்ப்புச் சக்தி முற்றிலும் அழிந்து இறப்பு ஏற்படுகின்றது. எயிட்ஸ் நோய் முதல் முதலாக அமெரிக்காவில் 1981 ஆம் ஆண்டில் இனங் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 189 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். மேலும் பத்து ஆண்டுகளில் இந் நோய் உலகத்தில் சனத் தொகை கூடிய எல்லா நாடுகளுக்கும் பரவியது. எயிட்ஸ் நோய் பரப்பிக்கிருமிகளின் பிறப்பிடம் ஆபிரிக்க நாடெனக் கண்டு பிடித்தனர்.

egz ه ع6تهzz 2یریavقص D 85
இந் நோயால் ஆண்டுதோறும் பல இலட்சம் மக்கள் பாதிக்கப் படுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்கள் பரிதாப நிலையில் இறந்து மடிவதையும் கேள்வியுற்று அதிர்ச்சியடைகின்றோம். இன்னும், ஒரு சில மேற்கு நாடுகளில் விலைமாதர் சட்ட பூர்வமான பாதுகாப்புடன் தொழில் புரிகின்றனர். வேறு சில நாடுகளில் அவர்கள் தம் சொந்த அமைப்புகளை நிறுவியும் உள்ளனர்.
மனித வாழ்வு மூவாசைகளான மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை ஆகியவற்றை எதிர்பார்த்து ஓடுகின்றது. இவை கிடைத்துச் சந்தோசப்படுவோர் பலர்.
ஆனால் ஒரு சிலருக்குச் சிலவேளைகளில் இனிப்புப் பழங்கள் கூடப் புளித்து விடுகின்றது. இதை மனத்திலிருத்தி இனிமையை நாடிப் பரத்தையரிடம் போய் வருகின்றனர். அறிவு முன்னின்று தடுக்க, ஆசை போவென்று உந்த, பரத்தை மெத்தை சுகம் தந்தாலும், அதன் பின்விளைவு தரும் தீங்கினை அவர்களால் உடன் உணர முடிவதில்லை. இனி, பரத்தமை பற்றிக் காலத்தால் முந்திய இலக்கிய இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கிய நூல்கள் ஆகியனவற்றில் பேசப்படும் பாங்கினையும் காண்போம்.
தொல்காப்பியம்
தொல்காப்பியனார் யாத்த தொல்காப்பியம் காலத்தால் தொன்மை வாய்ந்தது. இந் நூல் கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. தொல்காப்பியர் காலத்திலேயே பரத்தையிற் பிரிவு தோன்றியுள்ளது.
தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையை நாடிச் சென்று விட்டான். சென்ற காலை தலைவி பூப்பெய்திய செய்தி கேட்டுத் தலைவியை நாடி முதல் மூன்று நாளும் அவள் சொற்கேட்டு. ஒழுகி நின்று, பிற்பட்ட பன்னிரண்டு நாளும் அவளைப் பிரியாது கூடி நிற்பான். பரத்தையிற் பிரிவைத் தணிக்க இவ்வரையறை கூறப்பட்டுள்ளது. இதனால் அக்கால மக்கள் குழந்தைப் பேற்றிற்குக் கொடுத்துள்ள முக்கியத்துவமும், சிறப்பும் புலனாகின்றது. இதைத் தொல்காப்பியச் சூத்திரம் இவ்வாறு கூறுகின்றது.

Page 57
86 (தொல்காம்மியத் தென் துனிசன்
பூப்பினி புறப்பாடு ஈராறு நாளும் நீத்தகனிறு உறையார் எனிமனார் புலவர் பரத்தையிற் பிரிந்த காலை யான."
- ( பொருள். 185)
அக்காலத்தில் பரத்தையிற் பிரிவு எல்லாக் குலத்தார்க்கும் உரித்து என்பதைக் கீழ் வரும் சூத்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இங்கு நால்வர் என்பது- (1) அந்தணர் (2) அரசர் (3) வணிகர் (4) வேளாளர் என்னும் நால்வகுப்பினரைக் குறிக்கின்றது.
பரத்தை வாயிலி நாலிவர்க்கும் உரித்தே நிலத்திரி யினிற3 தெனிமனார் புலவர்."
- (G.IIIb,6t. 22O
"காதற் பரத்தை எலிலார்க்கும் உரித்தே."
- (இறையனார் களவியலி.)
கற்புடைய தலைவி தலைவனின் பரத்தையைப் புகழ்ந்து மெச் சிப் பேசினாளாயினும், அவளுள்ளத்தில் ஊடல் மேம்பட்டிருக்குமென்று கூறுவர் புலவர்.
"கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்தினும் உள்ளத்து ஊடலி உணர்டென மொழிய."
- (பொருள். 229)
தொல்காப்பியர் காலத்தில் நடைமுறையிலிருந்த பழக்க வழக்கங்களுக்குத் தொல்காப்பியனார் சூத்திரம் அமைத்துள்ளா ரென்பது அவர் கூறும் ‘என்மனார் புலவர்', 'மொழிப', 'என்ப" போன்ற பதங்களால் தெளிவாகின்றது. இதிலிருந்து பரத்தைமை தொல்காப்பியர் காலத்திற்கும் முன்பே இருந்துள்ளமையும் புலனாகின்றது.

egz ه عرصهza قضص2یی D 8ፖ
திருக்குறள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது திருக்குறள். திருவள்ளுவர் (கி.மு.31) அருளிச் செய்த திருக்குறளில் “வரைவின் மகளிர் என்ற ஓர் அதிகாரத்தில் பொது மகளிரைப்பற்றிப் பத்துக் குறள்களால் விபரித்துள்ளார்.
பொதுமகளிர் அன்பினால் விரும்பார். அவர் பொருள் மேல் உள்ள ஆசையால் விரும்புவது போல் நடித்துப் பேசுகின்ற இன்சொல் ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.
அணியினி விழையார் பொருளிவிழையும் ஆய்தொடியார் இனிசொலி இழுக்குத் தரும்."
- (east 971)
பொதுமகளிர் பொருளையே விரும்புவர். பொய்யாகத் தழுவுவர். இது ஓர் இருட்டறையில் தொடர்பற்ற ஒரு பிணத்தைத் தழுவுதலுக்கு ஒப்பானது எனக் கூறுகின்றார் திருவள்ளுவர்.
"பொருட்யெணிழர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையிலி
sgálaj úlzuÉázlóg) ugógy. "
- (espesif 913)
பொருள், பணம் மேல் ஆசை கொண்ட பொதுமகளிரின் புன்மையான இன்பத்தை, அருட்பொருளை ஆராயும் அறிவுடையோர் விரும்பமாட்டார் என்பது வள்ளுவர் வாக்கு.
"பொருட்பொருளார் புனினலம் தோயார் அருட்பொருளி
ஆயும் அறிவி னவர்."
- (espat 914)
அழகு, வயது, தோற்றம் முதலியவற்றால் செருக்குற்றுத் தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் அறிவுடையோர் விரும்பார்.

Page 58
88 - - - (தொல்காம்மியத் தேன் துனிசன்
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புனினலம் பாரிப்பார் தோளர். "
- 6 gp6if 916 )
பொதுமகளிர் சேர்க்கை வஞ்சமும், கபடமும் நிறைந்தது. ஆய்வறிவற்றார்க்கு இது ஓர் அணங்கு (மோகினி ) போல் தோன்றும்.
“ஆயும் அறிவினர் அல்லார்க்கு அனங்கெனிய
மாய மகளிர் முயக்கு"
- (குறளி 918)
பொதுமகளிர் ஒழுக்கம் குன்றியவர்கள். அவர்கள் மெல்லிய தோளைப் பற்றுவது நரக வேதனைக்குச் சமனானது என்று குறள் அமைத்துள்ளார் வள்ளுவர்.
வரைவிலா மாணிழையார் மெனிறோளர் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு."
- ( espot. 919 )
இரு மனமுடைய பொதுமகளிரும், கள்ளும், சூதுமாகிய இம் மூன்றும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.
"இருமனப் பெணிழரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு."
- (குறளி 92O
நாலடியார்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றானது நாலடியார். “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி: நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி” என்பது பழமொழி. இதில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றது.

egz ه ح۶عهza قضاپیمایی D 89
இவ்விரு நூல்களும் மிகச் சிறப்பு வாய்ந்தவை. இனி, பொதுமகளிர் பற்றி நாலடியார் கூற்றையும் பார்ப்போம்.
விளக்கின் ஒளி நெய் வற்றியவுடன் ஒழிந்து விடுவதுபோல, பொதுமகளிர் நட்பும் பொருள் நீங்கியவுடன் ஒழிந்து விடும். விளக்கின் ஒழியும், பொதுமகளிர் நட்பும், இவ்விரண்டும் தீர ஆராயுங்கால் வேறாகமாட்டா.
“விளக்கொளியும் வேசையர் நட்பும் இரணிடும் துளக்கற நாடிணி வேறலில- விளக்கொளியும் நெய்யற்ற கணினே அறுமே அவர் அணியும் கையற்ற கணினே அறும்."
- (371)
தேவரால் வணங்கப்படும் கண்ணனாயினும் தம் கையால் கொடுக்கப்படும் பொருள் இல்லாதாரைப் பொதுமகளிர் தம் கையால் வணங்கி அனுப்பி விடுவார்கள்.
"அம்கணி விசுமியினி அமரர் தொழப்படும்
செங்கணிமாலி ஆயினும் ஆகமணி தம்கைக் கொடுப்பதொனிறுஇலிலாரைக் கொய்தளிர் அணினார் விடுப்பர்தம் கையாலி தொழுது."
- (373)
அன்பற்ற மனமுடைய அழகிய கணி களையுடைய பொதுமகளிர்க்கு, பொருள் இல்லாதார், விடம் போல் கொடியவராவார். செக்கு ஆட்டும் இழிதொழிலுடையோர் செல்வந்தராயின், அப்பொதுமகளிர்க்கு அவர்கள் சர்க்கரை போல் இனியவராவார்.
"ஆனLமிலி நெஞ்சத்து அணிநீலக் கணினார்க்குக் கானமிலி லாதார் கடுஅணையர்- காணவே செக்கரிந்து கொணிடாரும் செய்த பொருளுடையார் அக்காரம் அணினார் அவர்க்கு."
- (374)

Page 59
90 G6کے ترے بھی قعہ ہوۓZzتھی بر தேன் துனிசன்
பாம்பு போலவும் மீன் போலவும் காண்பிக்கும் விலாங்கு மீனைப்
போன்ற தன்மையுடைய பொதுமகளிர் தோள்களைப் பகுத்தறிவற்ற
மிருகத்தையொத்த மூடர்கள்தான் சேர்வார்கள்.
“பாம்பிற்கு ஒருதலை காட்டி யொருதலை
தேம்படு தென்கயத்து மீனர்காட்டும் - அங்கு மலங்குஅன்ன செய்கை மகளிர்தோள் சேர்வர் விலங்கனின வெள்ளறி வினார்."
- (375)
காட்டுப் பசுவைப் போல் முதலில் இன்பம் உண்டாக நக்கி தம்மிடம் கூடியவர்களின் செல்வத்தைக் கவர்ந்த பின் எருதைப் போல் கவிழ்ந்து படுத்துக் கொள்ளும் தாழ்ந்த நடத்தையுடைய பொதுமகளிரிடத்தில் காணப்படும் அன்பை, மயக்கம் அடைந்து தமக்குரியதென்று இருந்தவர் பலராலும் நகைக்கப்படுவர்.
"ஆமாபோலி நக்கி அவர்கைப் பொருளிகொணிடு
சேமாபோலி குப்புறுஉம் சிலிலைக்கணி அணியினை ஏமாந்து எமதெனிறு இருந்தார் பெறுபவே á5/TIDIIIð L/6Vp/T6ð B6:Dæ."
- ( 377)
பொதுமகளிர் தம் மனம் ஒருவனிடத்தில் இருக்க, கபடமாக அன்புடையார் போன்று செய்கிற எண்ணம் அனைத்தும் ஆராய்ந்து அறிந்த போதும், தீவினைச் செயல் நிறைந்த உடம்புடையவர்கள் உண்மையை அறியமாட்டார்கள்.
*?2 6f67776 ஒருவர்ை உழையதா வொணினுதலார்
களிளத்தாலி செய்யும் கருத்தெலிலTமீ - தெள்ளி
gyrffilius A2Légi/Lô eg/pdffilu/ITUTITLô (UT62/Lô செறிந்த வுடம்பி னவர்."
- (, зво)

Nasaz ബ്ബ 97
எம் கணவர் என்றும் எம் தோள்களில் அணைந்து எழுந்தாலும், அன்று அவரைப் புதிதாக மணம் செய்து கொண்டது போல இன்றும் நாணம் அடைகின்றோம். ஆனால், பொருள் ஆசையினால் பொதுமகளிர் என்றும் பலர் மார்புகளைச் சேர்ந்து ஒழுகுகின்றனரே? இது எத் தன்மையதோ ?
"எஞ்ஞானிறுமி எமிகணவர் எமிதோள்மேலி
சேர்ந்துஎழினும் அஞ்ஞானிறு கணிடேம் போலி நாணுதுமாலி
எஞ்ஞானிறும் எனினை கெளிஇயினர் கொலிலோ பொருளிநசையாலி பனிமார்பு சேர்ந்தொழுகு வார்."
— (зв5) திருமந்திரம்
கி.மு. 6000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த திருமூலர் அருளி யாத்த திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகும். திருமூலர் பரத்தமையைப் பற்றி வெளிப்படக் கூறாவிடினும் பிறன் மனை நயவாமை", "பொருட்பெண்டிர்' என்ற தலைப்பில் பிறர் மனைவியை அடைய விரும்பக் கூடாதென்றும், பொருள்ை விரும்பும் பெண்களைச் சேரக்கூடாதென்றும் இடித்துரைக்கின்றார். இல்லத்தரசி வீட்டிலிருக்க பிறர் மனைவியை விரும்பும் இளைஞர் செயலானது, வீட்டில் பழுத்துத் தொங்கும் பலாப்பழத்தை உண்ணாமல் எங்கோ பழுத்துக் கிடக்கும் ஈச்சம் பழத்துக்கு ஆசைப்பட்டு அவதிப்படுவது போன்றதாகும்.
"ஆத்த மனையாளர் அகத்திலி இருக்கவே 45Italias ID6D6O7III/6061T45 457gog/Lls 45/76067TLlf காய்ச்ச பலாவினி கணிஉணின மாட்டாமலி
ஈச்சம் பழத்துக்கு இடர்உற்ற வாரே."
- (2O1)

Page 60
92 െ മങ്ങ് ജബ്ബ
சுவை மிக்க மாம்பழத்தைப் பொன்னென எண்ணி அறையில் பூட்டி வைத்து விட்டு, உண்ணமுடியாத புளிமாமரத்திலேறிக் கீழே விழுந்து காலை முறிப்பது ஆசை மனைவியை ஒதுக்கி விட்டு மாற்றான் மனைவிமேல் ஆசை கொண்டதற்கு ஒப்பானது.
"திருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை
அருத்தம் என்றெணிணி அறையிலி புதைத்துப் பொருத்தம் இலாத புளிமாங் கொம்பேறிக் கருத்தறி யாதவர் காலிஅற்ற வாறே."
- (2O2 )
அழகு வாழ்வுக்கு ஆதாரமான இளம் பெண் யானை போன்ற பெண்கள், மழை பெய்யத் துளிர்க்கின்ற புல்போல ஆடவருடன் கூடி இன்புறினும் அவர்கள் மனம் பொருள் மீதே நாட்டம் கொண்டலையும். பொருட் செல்வரென்றால் அவரை ‘வானுலகத் தேவர் என்பர். பொருளற்றோரைப் போ வெளியே' என்று விரட்டுவர்.
"இயலிஉறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயலிஉறும் புலிலினி புணர்ந்தவர் ஏயினும் மயலிஉறுமி வானவர் சாரஇருமி எனியார் அயலிஉறப் பேசி அகன்றுஒழிந் தாரே."
- (2O6).
Didiofloanor
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகத் திகழ்வது நற்றிணை யாகும். இந்த எட்டுத்தொகை நூல்களையும் பின்வரும் பழம் பாடல் ஒன்றில் அடக்கப்பட்டுள்ள சிறப்பினையும் ஈண்டுக் கவனிப்போம்.
'நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடலி கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறம் எனிறு இத்திறத்த எட்டுத் தொகை."

ea ےoھ7ھzzصحکھ بھی برzzقD 93
மேற்காட்டிய எட்டுத்தொகை நூல்களில் நற்றிணை நூலை முதல் நூலாகப் பாடலில் காட்டியமை இந் நூலின் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது.
இனி, இந்நூலில் பரத்தைமை பற்றி எவ்வாறு பேசப்படுகின்றது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையுடன் கூடி வாழ்ந்து, மீண்டும் தலைவியை நாடி வருகின்றான் தலைவன். தலைவி அவன் செயலைக் கூறிப் பழிக்க, அவன் யாரையும் நான் அறியேன்” எனக் கூறித் தலைவியின் சினத்தைத் தணிக்க முயலுகின்றான்.
"ஜய குறுமகட் கணிடிகும் வைகி
மகிழ்நனி மார்பிலி துஞ்சி, அவிழ்இணர்த் தேம்பாப் மராஅம் கமழும் கூந்தலி துளங்கியலி அசைவரக் கலிங்கம் துயலிவரச் செறிதொடி தெளிர்ப்ப விசி, மறுகிற் பூப்போலி உணர்கணி பெயர்ப்ப நோக்கிச் செனிறனளி - வாழிய, மடந்தை"
- (2O : 1-7) - ஓரம்போகியார்
(குறுமகள் - இளைய பரத்தை. மரா அம் - வெண்கடம்பு கலிங்கம் - மெல்லிய ஆடை, தெளிர்ப்ப - ஒலிப்ப)
பரத்தையுறவு கொண்டிருந்த தலைவன் மீண்டும் தலைவியை நாடி வருகின்றான். தோழி தலைவியின் ஊடலைக் கூறுகின்றாள். 'யாதும் யான் அறியேன்” எனத் தலைவன் மறுக்கின்றான். அவனுக்குத் தோழி கூறுவதாக அமைந்தது இப் பாடல்.
"ஏர்தரு தெருவினர் எதிர்ச்சி நோக்கிநினி
மார்புதலைக் கொணிட மாணிஇழை மகளிர் கவலி ஏமுற்ற வெய்துவீர் அரிப்பனி கால் ஏமுற்ற பைதரு காலைக்”
- (3o:4-7) - கொற்றனார்.

Page 61
94 G2 ، یع۶ روی صنعه Cதன் gരീഭയ
ஏர் தரு - எழுந்தருளும். "தெரு' என்றது, பரத்தையர் வாழும் தெருவினை. மாண்இழை மகளிர் - மாட்சிமையான இழைகளை அணிந்தோரான பரத்தையர்.]
பரத்தைபால் மயங்கிக் கிடந்தான் தலைவன். தலைவியோ தனித்து நின்று வாடினாள். பினி, அவளிை விரும்புவதாகப் பாணனைத் தூது விடுகின்றான் தலைவன். தூது வந்த பாணனுக்குத் தலைவி இவ்வாறு கூறுகின்றாள். "பெருங் கடற்கரை நாட்டினனான நம் தலைவனை நமக்கு அயலவன் என்று ஊரார் கூறுகின்றனர். மேலும் அப் பரத்தையினையே அவன் கிழத்தி என்றும் கூறுகின்றனர். இனி அவர் அவளுடனாவது இன்புற்று வாழட்டும்.
"சிறுவி ஞாழற் பெருங்கடற் சேர்ப்பனை
ஏதி லாளனும்" 76eft A. '
- (グa 5ーe ル
"கணிடலி வேலிய ஊர் அவனி
பெனிடு" என அறிந்தணிறு பெயர்த்தலோ அரிதே'
– (ፖ4: to-11ル - ap G6362)/Telfyri60WITiff
(சிறுவி ஞாழல் - சிறு பூக்களையுடைய ஞாழல் மரம். ஏதிலான் - அயலான். கண்டல் - தாழை. பெண்டு - இற்கிழத்தி.)
பரத்தையை விரும்பித் தலைவியைத் துறந்து சென்றுவிட்டான் தலைவன். பின்னர் பரத்தையின் உறவும் அவனுக்கு வெறுத்து விட்டது. அவன் தலைவியின் உறவை நாடுகின்றான். தன் செயலால் தலைவி ஊடலிலிருப்பாளென்பதை அறிந்தவன், தன் பாணனைத் தூதாக அனுப்பித் தனக்கு அவளை இசைவிக்குமாறு வேண்டுகின்றான். பாணன் பொய்க்கூற்றுக்களைக் கூறிப்

4A ہoحکzzعلیمی تھی برevzقD 95
பொருத்தி வைப்பவன். ஆகவே தலைவி அதனை ஏற்கமாட்டாள் என்றவாறு.
"கைகவர் நரம்பினி பனுவற் பாணனி
செய்த அலிலலி பலிகுவ வையெயிற்று ஐதகனி அலிகுலி மகளிர் இவனி பொப்பொதி கொடுஞ்சொலி ஒம்புமினி"
676O Go. - (2OO:8- f) - கடலுர்ப் பலிகனர்ணனார்.
தலைமகன் ஒருவனின் காதற் பரத்தை அவள். அவன்மேல் திராக் காதல் கொண்டவள். அவள் தலைவியின் பாங்கிலுள்ளோர் கேட்குமாறு எடுத்துக் கூறுவதாக அமைந்த பா இது. ஊடலோடு கூடிக் கலவி தருபவராய் என்பால் இல்லாராயினும், அவரைக் கண்டு இன்புற எல்லையிலேனும் வாழ்ந்திருத்தல் எனக்கொரு இன்பச் செயலாகும். கண்படு தூசியைக் கை வந்து விலக்குவதுபோல், அவர் பிரிவாலான காம நோயினை வந்து விலக்காராயினும், அவரில்லா ஊரில் யான் இருப்பது மீண்டும் துன்பத்தைத் தருகின்றது. வேங்கைக் கடவுள் காத்தல் செய்கின்ற இடத்திலே அயலான் ஒருவன் உண்டாக்கிய கவலை உள்ளத்தை வருத்த, தன் ஒரு முலையை அறுத்துத் தன் கற்பை நிலைநாட்டிய திருமாவுண்ணியின் கதையைக் கேட்டோரும், அதேபோல் நம்மைக் கைவிட்டனராயினும், நம் விருப்புக்குரியவரையன்றிப் பிறர் எவரும் நமக்கு இன்னாதவரேயாம் என்றவாறு.
திருமாவுண்ணியின் கதை கண்ணகி கதையையே ஒத்திருத்தலைக் காண்க. இன்னும், பரத்தையர்களிலும் இவ்வாறான சிறந்த அன்புடையோர் பலர் இருந்தனர் என்பதற்கு கோவலன்பால் மாதவிக்கு இருந்த அன்பினையும் காட்டலாம்.

Page 62
96 (தொல்கட்சியத் தேன் துனிசன்
“துனிதிர் கட்டமொடு துணினார் ஆயினும் இனிதே கானுநர்க் காணிபுழி வாழ்தலி கணினுறு விழுமங் கைபோலி உதவி நம்முறு துயரங் களையார் ஆயினும் இனினா தனிறே அவரில் ஊரே! எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகார் கழனியினி இதனத்து ஆங்கணி ஏதி லாளனி கவலை கவற்ற ஒருமுலை யறுத்த திருமா வுணினிக் கேட்டோர் அனையர் ஆயினும், வேட்டோர் அலிலத பிறர்இணி னாரே/7
- (216) - மதுரை மருதனி இளநாகனார்
துனி - புலவியாகிய துன்பம். காண்புழி - காண்பதற்கு உரிய ஒர் இடம். விழுமம் - துயரம். எரி - நெருப்பு. வேங்கைக் கடவுள் - வேங்கை மரத்தில் உறையும் கடவுள்.
பரத்தையை நாடிச் சென்ற தலைவன், தலைவியை விரும்பி வீட்டிற்கு வருகின்றான். தலைவியின் ஊடலையும், சினத்தையும், முன் பின் அறியாத் தலைவனி, அவளைச் சமாதானப்படுத்தித் தருமாறு தோழியை வேண்டி நிற்கின்றான். அதற்குத் தோழி கூற்று இவ்வாறமைந்துள்ளது.
“எம்மை வேண்டி நிற்றலை விடுத்து, நின்பால் சினம் ஏதும் இல்லாதிருப்பவளாகிய பரத்தையிடம் சென்று அவளுக்கு அருள் புரிவாயாக. தனிமை எம்மை வதைத்த காலத்திலே, அது நீங்குமாறு காய்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ள வயலிலே குளிர்ச்சிப் புது வெள்ளம் பாய்ந்து பரவினாற்போல, உன்னைப் பார்க்கும் பொழுது அந்தக் காட்சியே எமக்கு இன்பந்தருவதாக உள்ளது. எமக்கு அதுவே போதும்.”

egz حهمهazهاییavaق D 97
"முனிவிலி பரத்தையை எனிதுறந் தருளாப் நனிபுலம்பு அலைத்த வேலை நீங்கப் புதுவறங் கூர்ந்த செறுவிலி தனினென மலிபுனலி பரத்தந் தாஅங்கு இனிதே தெப்யநினி கானுங் காலே!"
- (23ore-to) - ஆலங்குடி வங்கனார்.
(முனிவு - சினம். புலம்பு - தனிமைத் துயரம். புதுவறம் - புதிதாய் உண்டான வறட்சி. மலிபுனல் - நிறைந்த புதுப்புனல்)
பரத்தையுறவால் தலைவியை மறந்துவிட்டான் தலைவன். பின் தலைவியை நினைந்து தோழியைத் தூதனுப்புகின்றான். தோழி தலைவியை நாடித் தலைவனை மீண்டும் ஏற்குமாறு வேண்டத் தலைவி இவ்வாறு கூறுகின்றாள்.
"தோழி! அவன் பொருந்தாப் பரத்தமையுடையவன் என்பதைக் கண்டிருந்தும், யான் அவனிடத்தில் ஊடல் கொள்ளவில்லை என்கின்றனை. என் பழமை முதிர்ந்த குன்றுாரிலே வயலைக் காவல் செய்யும் மள்ளர்கள், தாம் சுடுகின்ற நத்தையை ஆமை முதுகிலே உடைத்து உட்ணபார்கள். இவ்வாறமைந்த என் மனையில் மிகுதியான விருந்தினர்கள். அவர்களைக் கவனிப்பதில் என் கவனம் நிலைத்து விடும். யான் அவனைப் பல நாள் சந்திக்கவில்லை. அதனால் அவன்பால் ஊடல் கொண்டிலேன். அவன் எண்ணம்கூட எனக்குத் தோன்றவும் இல்லை.”
"தணிதுறை பூரணி தனிடாப் பரத்தமை
புலவாய் எனிறி தோழி/ புலவேனி பழன யாமைப் பாசறைப் புறத்துக் கழனி காவலர் சுடுநந்து உடைக்கும் தொனிறுமுதிர் வேளிர் குனிறுார் அணினவெனி நணிமனை நனிவிருந் தயரும் கைது வினிமையினி எப்தா மாறே!"
- (28O-4-to)
- பரணர்.

Page 63
98 Gിരിക്കമ് മക്ക് ജയഭജ
(தண்டாப் பரத்தமை - பொருந்தாத பரத்தமை. பழனம் - வயல். பாசறை - பசிய கற்போன்ற மேற்புறம். கைதுவல் - கையொழிதல். காவலர் - காவல் செய்வோர்)
பரத்தையிற் பிரிந்த தலைவன், மீண்டும் தலைவி எண்ணம் கொண்டு அவள் வீடு வந்து தலைவியின் இசைவு பெற்றுத்தர வேண்டுகின்றான் தோழியை. இதற்குத் தோழி அவனைக் கடிந்து மறுத்துக் கூறிய கூற்றையும் ஈண்டுக் கவனிப்போம்.
“புதுவருவாய் நிறைந்த ஊரினனே! மாண்பான இழைகள் பூண்ட பரத்தை மகளிரை எம் மனை அழைத்து வந்து குலமகளிரைப் போல் அவரோடு கூடி வாழ்ந்தாலும் அவர்களது பொய் மனத்திலே உண்மைக் காதல் உண்டாகாது. அவர் உனக்குப் புத்திர பாக்கியம் தந்து கற்புடையவராய் எம்முடன் இருந்திடல் அரிதினும் அரிதாகும். இதை நீ அறியவில்லையே..!”
"யானர் ஊர/ நினி மாணிழை மகளிரை
எம்மனைத் தந்துமீ தழீஇயினும், அவர்தம் புனிமனத்து உணிமையோ அரிதே, அவரும் பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
56offif7 FITeafp கற்போடு எம்பா டாதலி அதனினும் அரிதே'
- (33O:6-77) - ஆலங்குடி வங்கனார்
(யாணர் - புதுவருவாய். மாணிழை மகளிர் - மாண்பான இழைகள் பூண்ட பரத்தையர். புன்மனம் - புன்மை வாய்ந்த மனம். எம்பாடு - எம் பக்கம்)
தலைவன் பரத்தையுறவு கொண்டிருந்தான். சின்னாளில் தலைவியின் மனைக்குத் தலைவன் வருகின்றான். தலைமகள் உள்ளத்தில் அவன்மீது ஊடல் இருந்தாலும், அவனை ஏற்கும்

99 (قسمجھے تھےvے حکمہ جھجھ
பண்பும் இருந்துள்ளது. இருந்தும், அவள் ஊடியும், சினந்தும் அவனைப் பழித்துக் கூறுகின்றாள்.
"என் பழைய அழகு முற்றும் தொலைவதாயினும், உன்னை என் பக்கத்தில்கூட நெருங்க விடமாட்டேன். அப்படி நெருங்க விடுவேனாயின் நீ இறுகக் கட்டித் தழுவும் கையணைப்பை விலக்கி ஒதுக்க முடியாதவளாவேன். பரத்தையின் சந்தனம் உன் மார்பில் உள்ளது. அவளோடு தழுவியதால் உன் மாலை வாடிக்கிடக்கின்றது. ஆகவே என் மனை வராதே. உன்னைத் தழுவி நிற்பவளான பரத்தையுடன் வாழ்வாயாக!”
இவ்வாறு கூறித் தன் ஆற்றாமை தீர்ந்தவளாக, அவனை ஏற்றுக்கொள்கின்றாள். அவளை அவன் கைவளைத்து இறுகத் தழுவினால், அக்கையணைப்பை விலக்கி ஒதுக்க முடியாதவள் தான் என்று இணங்குவதால், முதலில் ஊடிப் பிணங்கினாலும் முடிவில் இசைந்து கூடி நிற்பதே பயனென்று கொள்ளலாம்.
"என தொலிகவினி தொலையினும் தொலைக/சார
விடேஎனி, விடுக்குவெனி ஆயினி, கடைஇக் கவவுக்கை தாங்கும் மதுகையம் குவவுமுலை சாடிய சாந்தினை, வாடிய கோதையை,
ஆசிலி கலந்தழி இயற்று: வாரலி, வாழிய, கவைஇ நினி றோளே”
- ( 35o: 5-to ) -- பரணர்.
(கடைஇ - சொல்லி. ஆசுஇல் கலம் - கழித்துவிட்ட பழங்கலம். கவைஇ - தழுவி. கவவுக்கை. இறுகக் கட்டித்தழுவும் கையணைப்பு. கோதை - மாலை. சாந்து சந்தனம்
தலைமகன் பரத்தை உறவிலே களித்துக் கிடந்தான். தலைவி அவன்மேல் வருத்தமும், சினமும் கொண்டு ஊடி நின்றாள்.

Page 64
700 Gിരിക്കുമ് മക്ക് ജയഭ്യ
இவ்வேளையில் ஒரு நாள் தலைவன் தலைவியின் உறவை நாடித் தன் மனைக்கு வருகின்றான். அப்போது தலைவி பேச்சின்றி ஒதுங்கி விடுகின்றாள். அவள் குறிப்பறிந்த தோழி "நேற்று உன்னைச் சேர்ந்தோரின் புதிய அழகு நலத்தைக் கொள்ளை கொண்டாய். இன்று பாணனால் கொண்டு தரப்படும் மகளிர் மென் தோள் பெறும் பொருட்டு விரைந்து செல்வாயாக. உன் பரத்தையும் எந்நாளும் இன்பம் பெற்றுச் சிறப்பாளாக!” என்று தலைவனுக்குக் கூறிக் கடிந்துரைத்தாள்.
"நெருநைப் புணர்ந்தோர் புதுநலம் வெளவி இனிறுதரு மகளிர் மெனிதோளி பெறிஇயர் செனறி' - பெரும - சிறக்க நினி பரத்தை"
— (зво:з—5) - ஒரம் போகியார்.
நெருநை - நேற்று. வெளவி - கவர்ந்து கொண்டு. சென்றி - சென்று வருக.)
பரத்தை தன்னைப் பிரிந்து போகும் தலைவனை அண்மி "உன்னை அன்றி எனக்கு இங்கு வேறு என்ன நலன் இருக்கின்றது? எனவே நீ சென்றாலும் என்னை மறவாது மீண்டும் வந்து அருள்வாயாக." என்று புகழ் கூறி வழியனுப்பி வைக்கின்றாள்.
'நினினினிறு அமைகுவெனி ஆயினி இவனிநின்று இனினா நோக்கமொடு எவணி பிழைப்பு உணர்டோ?”
(6۔-5 تOOہے) سے - ஆலங்குடி வங்கனார்.
இன்னாநோக்கம் - துன்புறுவதான கருத்து.)
குறுந்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது குறுந்தொகை. இனி, குறுந்தொகையில் பரத்தையர் பற்றிப் பேசப்படும் பாங்கினையும் UITÜüʼj(8UITLíb.

Naz விசயரத்தினம்) 707
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்குத் தோழி கூறியது. “உழவர் களைபறித்து வரம்பிடத்தே வாடும்படி எறிந்து விடினும், அவர் கொடியவரென்று எண்ணாது, அவர் ஏருழும் நிலத்தில் மீண்டும் மலரும் நின்னூர் நெய்தலை நிகர்ப்பாய். நீ எமக்குத் துயர் பல புரிந்திடினும் நீயின்றி நாம் ஆற்றல் அற்றோராகி விடுவோம்.”
“கைவினை மாக்களிதஞ் செய்வினை முடிமார் சுரும்புன மலர்ந்த வாசம் கீழ்ப்பட நீடிய வரம்பினி வாடிய விடினும் கொடியர்ஏர் நிலம்பெயர்ந்து உறைவேம் எனினாது பெயர்த்தும் கடிந்த செறுவிலி பூக்கும் நினினுர், நெய்த லனையை எம்பெரும நீயெமக்கு இனினா கியபல செய்யினும் நிணநினிறு அமைதலி வலிலா மாறே. *
- (3O9) - உறையூர் சலிலியணி குமாரனி.
பரத்தையை நாடிச் சென்றுவிட்டான் தலைவன். தலைவி, வீட்டில் தனித்து, வாடி, வதங்கிக் கிடந்தாள். மீண்டும் தலைவியின் எண்ணம் தலைப்பட, பரத்தையைத் துறந்து தன் மனை ஏகினான் தலைவன். இதைக் கண்ணுற்ற தலைவி, தலைமகன் கேட்கும் வண்ணம் தோழிக்குத் தலைவி கூறுவதுபோல் அமைந்தது இப் பாட்டு.
"மலர்களைச் சிதைத்து மீனை உண்ணும் நாரை தங்கும் மேட்டையுடைய கடல் துறைவனை ஏற்றுக் கொண்டு நம் நலத்தை மீளக் கொள்வோம் என்கின்றனை தோழி. துயரை அஞ்சி இரந்தார் விரும்பியவற்றைக் கொடுத்து அவற்றை மீளத் தாவென்று சொன்னாலும் இன்னாதது. ஆதலால் நம் இன்னுயிரை இழந்து மறுபிறப்பில் நம் நலத்தைப் பெறுவோம்.”

Page 65
702 G2به زعه و zzz7zصے تحصی تیرyتخصیصلہ/ص
"அரும்பவிழி அனிமலர் சிதைய மீனருந்தும்
தடந்தாளர் நாரை இருக்கும் எக்கர்தி தணிணநீ துறைவற் றொடுத்து நந்நலம் கொள்வா மென்றி தோழி கொள்வாமி இடுக்க னஞ்சி இரந்தோர் வேனிடிய கொடுத்தவை தாவெனச் சொலிலினும் இனினா தோநம் இனினுயி ரிழந்தே."
- (349) -சாத்தனி
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டப் பெறாது தானே மனை புகுவது கண்டு தோழி, பாணற்குக் கூறியது. "பாண மாலையில் பரந்த நிலவில், குறுகிய கால்களையுடைய கட்டிலில் யானையைப்போல் தூங்கித் தன் புதல்வனைத் தழுவிக்கொண்டான் வல்லமையுடையான். அப் புதல்வன் தாய் அவனது புறத்தைத் தழுவிக்கொண்டாள்.”
"கணிடிசினி பான பணிபுடைத் தம்ம மாலை விரிந்த பசுவெணி நிலவிலி குறுங்காற் கட்டில் நறுமிபூஞ் சேக்கைப் பள்ளி யானையினி உயிரா அசைஇப் புதலிவனி தழிஇயினணி விறலவனி புதலிவனி தாயவணி புறங்கஹைஇ_யினளே."
— (з59) - Guangf.
பரத்தையை நாடிச் சென்ற தலைவன், சின்னாளில் அவளையும் பிரிந்து தன் மனை நாட, வாயில் மறுத்துத் தோழி கூறிய கூற்றுக்கள் இவை.
“நீரில் நெடுநேரம் நின்று ஆடின் கண்கள் சிவந்திடும். உண்டோர் வாயிடத்துத் தேனும் புளித்து விடும். எம்மைப் பிரிந்தாயானால், எம் தந்தைக்குரிய எம் ஊரில் தெருவிடத்து நடுங்கும்

Naz ه ح42عهzzقصصی ویD 703
துயர் தரும் இன்னலைப் போக்கிய எம்மை எம் மனையில் கொண்டு போய் விடுவாய்.”
"நீர்நீ டாடிலி கணினும் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயிலிதேனும் புளிக்கும் தணந்தனை யாயினிஎம் இல்லுய்த்துக் கொடுமோ அந்தணி பொய்கை எந்தை எம்மூர்க் கடும்பாம்பு வழங்குந் தெருவிலி நடுங்களுர் எவ்வங் களைந்த எம்மே."
- (354) - கயத்துர்கிழானி.
“கரும்பின் செவ்வியை அழித்த தோளையும், நீண்ட நெடிய கூந்தலையும், சிறு வளையல்களையும், அணிந்த மகளிர்களது நலத்தைத் துய்த்துக் கைவிடுவாயாயின், மிக மிக நன்றாகும்.” என்று தலைவன் தன் பரத்தையர்மேல் அக்கறையுள்ளான் என்று நகையாடித் தோழி வாயில் மறுத்த செய்தியையும் ஈண்டுக் காண்கின்றோம்.
“உழுந்துடைக் கழுந்திற் கருமிபுடைப் பனைத்தோளி
நெடும்பலி கூந்தலி குறுந்தொடி மகளிர் நலனுணிடு துறத்தி யாயினி மிகநர்ை றமிம மகிழ்ந்த குளே."
— (зв4) - காம்போதியார்.
UIfUIILoi
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றானது பரிபாடல். பாவினத்தால் ஆகிய பாக்களின் தொகுதி என்பதால் 'பரிபாடல்' என்ற பெயரைப் பெற்றுள்ளது. இந்நூலின் சிறப்புக் கருதி ஓங்கு பரிபாடல்' என்னும் பெரும் புகழ் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இனி, இந்நூலில் பரத்தமை பற்றிப் பேசப்படும் சிறப்பினைப் பார்ப்போம்.

Page 66
704 (தொல்காம்மியச் சேன் துனிசன்
தலைவியைப் பிரியேனென்று கூறிப் பிரியத் தொடங்கும்போது தலைவன்பால் சினம் கொண்டு ஊடிச் சீறினாள் தலைவி. "நீ பரத்தையருடன் கூடி, உறவாடி இன்பமனுபவிக்கின்றாய். அவர் நறு மணம் உன்னிலும் நாறுகின்றது. காலையில் சென்று மாலையில் தான் மனைக்கு வருகின்றாய். பகல் நேரத்தே சேரியில் பரத்தையருடன் பரவசமடைகின்றாய். இனியாவது பரங்குன்றைக் குறித்துப் பொய் ஆணையிடும் உன் செயலை நிறுத்திக் கொள்வாயாக.” என்று கடிந்துரைத்தாள் தலைவி.
"இனிமனினும் ஏதிலர் நாறுதி ஆணிடுப் பனிமலர்க் கணினாரோ டாட நகைமலர் மாலைக்கு மாலை வருஉம் வரைகுள் நினி காலைப் போப் மாலை வருவு."
- (6:47-so) - நலந்துவனார்.
(மன்னும் - மிகவும். ஏதிலர் - அயலாரான பரத்தையர். ஆண்டு - அவ்விடத்து. பனிமலர் - குளிர்ந்த தாமரை மலர். நகை - ஒளி. சூள் - ஆணை.
புது நீர் வையைக்கு வந்து விட்டது. ஊரே திரண்டு வையையை நாடிச் செல்லும் காட்சி இது. முதியவர், இளைஞர், மொட்டுப் பருவத்தினர், புதுமணப் பெண்கள், இருதிற மாந்தர், அவர் தம் காதலியர், நரை திரை உடையோர், கற்புடைப் ப்ெண்டிர், பரத்தையர், பாங்கியர், ஆகியோர் வையையை நாடிச் சென்று அதன் கரையினைச் சென்றடைந்தனர்.
"முதியர் இளையர் முகைப்பரு வத்தர்
வதிமன வம்பலர் வாயவிழ்நீ தணினார் இருதிற மாந்தரும் இனினினி யோரும் விரவுநரை யோருமி வெறுநரை யோரும் பதிவத மாதர் பரத்தையர் Lாங்கர் அதிர்குரலி வித்தகர் ஆக்கிய தாள

சூ4. ح6تهzza ییarzق D 705
விதிகட்டிய இயமெனி னடை போலப் பதியெதிர் சென்று பருஉக் கரை நணணி."
- (to: 19-26) - கரும்பிள்ளைப் பூதனார்.
(வதி - தங்கிய வம்பலர் - புதுமலர். பதிவத மாதர் - கற்புடைய மகளிர்.
“தோழி! தன்மையற்ற பரத்தையின் தோள் இன்பத்தை உண்டான். அதனால் நம்மைத் துறந்தான்.” என்று தனிமையில் வாடும் தலைவி ஒருத்தி, தன் தலைவனைச் சினந்து, வெறுத்து, ஊடி, நிற்கும் இன்னொரு காட்சி இது.
"நாணாளிகொலி தோழி நயனிலி பரத்தையிலி தோளிநலம் உணிடு துறந்தா னெனடிருத்தி."
- (12:45-46) - நலிவழுதியார்.
(நயன் - தன்மை. தோள்நலம் - தழுவிப் பெறும் இன்பம்)
பரத்தை ஒருத்தி தோழியருடன் நீராடிக் கொண்டிருந்தாள். தோழியர் பீச்சாங்குழலில் சிவப்புச் சாய நீரை எடுத்து பரத்தைமீது பீச்சினர். அதனை அவள் தான் உடுத்திருந்த சேலையின் முன்தானை யால் ஒற்றிக்கொண்டாள். சிவப்புக் கறை முன்தானையிலும் ஏறிக்கொண்டது. தலைவன், அவளை நாடி வரக்கண்ட தோழியர் "அவளைத் தழுவாதே. அவள் பூப்புற்றாள். அவளை விட்டு விலகு.” என்று பொய் கூறினர். இதை நம்பாத தலைவன், அவளோடு சேர்ந்து அவள் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவள் அவனுக்குப் புளிப்பேறிய கள்ளினைக் கொடுத்தாள். அதனை அவன் பருகாது, அவள் மார்பிடத்துச் செந்நிறக் கறையைத் துடைக்க அவளை நெருங்கினான். இதைக் கண்ணுற்ற அவள் தோழியர் "நங்கை பூப்புற்றாள். அவள் பொலிவு பெறுக’ என வாழ்த்தொலி செய்தனர். இதைக் கேட்ட

Page 67
706 _@്രിക്കസ്ഥലമ് മക്ക് ജയഭക്ഷ
தலைவனும், பரத்தையும் நாணிக் கோணியவராக நின்றனர். இத்தகைய இன்ப நிகழ்ச்சிகள் வையையாற்றின் புது வெள்ளம் வந்ததனாலே ஏற்பட்ட வாய்ப்பாகும்.
"சுருங்கையினர் ஆயத்தார் சுற்றும் எறிந்து
குரும்பை முலைப்பட்ட பூநீர் துடையாள் பெருந்தகை மிளி வருவானைக் கணிடே இருந்துகிலி தானையினி ஒற்றிப் பொருந்தலை பூத்தனளி நீங்கெனப் பொய்யாற்றாலி தோழியர் தோற்றமோ ரொத்த மலர்கமழி தணிசாந்தினி நாற்றத்தினி போற்றி நகையொடும் போத்தந்து இருங்கடற்கு ஊங்கிவரும் யாறெனத் தங்காணி மகிழக் களிப்பட்ட தேனிதேறலி மாற்றிக் குருதி துடையாக் குறுகி மருவினியர் பூத்தனளிர் நங்கை பொலிகென நானுதவி வாய்த்தனிறாலி வையை வரவு"
- (16:2O-31) - ஆசிரியர் நலிலழிசியார்.
(சுருங்கை ‘ உள் துவாரமுள்ள பீச்சாங் குழல். ஆயத்தர் - தோழியர். பூ நீர் - சாய நீர். மீளி - தலைவன். இருந்துகில் - பெரிய சேலை. தானை - முன்தானை. ஊங்கிவரும் - விரைந்து வரும். களிப்பட்ட - புளிப்பேறிய தேறல் - மது. குருதி - குருதி நிறத்துச் சாந்து. மருவினியர் - தோழியர். நாணுதல் - நாணங்கொள்ளல்.
பரத்தையர் நீராட்டு விழாவினை இன்புற வேண்டிக் கள்ளினைப் பருகியிருந்தனர். நீரை விட்டு விலகாது நெடுநேரம் நீருக்குள் விளையாடியபடியும் இருந்தனர். இன்னும், தம் தலைவர்மீது ஊடலும், சினமும்கொண்டிருந்தனர். இதனால, ஒளியுள்ள மையுண்ட கயல்மீன் போன்ற அவர்களின் கண்கள் செந்நிறம் பெற்று ஒளியோடு விளங்கின. அப் பெண்களின் கூந்தல் மலர்களில் வண்டினங்கள் மொய்க்கும் அழகோடு உதிர்ந்து நீரில் விழும் பூக்களிலிருந்து தேன் துளிகள் நீரில் வீழ்ந்து கலந்தன. பல்விதமாக அடுத்தடுத்து ஆடுகின்றவரான பரத்தையரை, அவர்தம் தலைவ்ர்கள் தழுவி நிற்பர்.

egz ه ع6تهzz یریaraق D 707
*களிளே புனலே புலவியிம் முனிறினும்
ஒளிளொளி சேய்தா ஒளிகிளர்உணி கணிகெனச்டை பலிவரி வணிடினம் வாய்குழி கவினொடும் செலிநீர் விவயினி தேனிசோரப் பலிநீர் அடுத்தடுத்து ஆடுவார் புலிலக் குழைந்து."
- (16: 39-43) - ஆசிரியர் நலிலழிசியார்.
(புலவி - ஊடற்சினம். கெண்டை - கயல். வாய் - இடம். கவின் - அழகு. புல்ல-தழுவ
அங்கு நின்ற பெண்கள் பலர், தலைவிக்கும் பரத்தைக்கும் இடையில் உண்டான பூசலைத் தடுத்து, இருவரையும் சாந்தப் படுத்தினர். “அழகால் வசியப்படுத்தும் மானைப் போன்றவளே! தலைவியோடு மாறுபட்டு நிற்றலைக் கைவிடு. உன்னை விரும்பி ஆடவர் தந்த பொருளெல்லாம் இந் நாடறிந்த உன் பொருள்களே. கூடலுக்கு இனிய பரத்தையரிடத்தே செல்பவனாகிய தலைவனை, அவன் தலைவி அவன் புரியும் பிழைகளைப் பொறுத்துக் குடும்ப நலனைக் காத்தலன்றி, அவனைச் சினந்து ஒதுக்கி வாழ்தல் பொருந்துமோ? பொருந்தாதே’ என்று பரத்தையிடம் கூறி, அவள் ஊடலைத் தணித்தனர். -
"வச்சிய மானே மறலினை மாற்றுமக்கு நச்சினார் ஈயவை நாடறிய நும்மவே சேக்கை இனியார்பாலி செலிவானி மனையாளாலி காக்கை கடிந்தொழுகலி கடுமோ? கடா."
- (2O.a4-87)
- ஆசிரியர் நலந்துவனார்.
(வச்சியம் - வசியம். மறல் - மாறுபடல். நச்சினார் - விரும்பி
வரும் ஆடவர். சேக்கை - கூட்டம். காக்கை - காத்துப் பேணுதல்.)

Page 68
708 (தொல்காம்மியத் தேன் துனிசன்
பரத்தை ஒருத்தி நீராடும் பொழுது, புதுப்புனலோடு ஒரு பூமாலை ஊழ்வினையால் வந்தடைந்தது. அவள் அதை ஊரறியச் சூடி, அதற்குரியவனையும் ஏற்றுக் கொண்டாள். இச் செயல் தலைவியைப் புண்படுத்தியது. அவன் பரத்தையைக் கூடுவதற்கு முன்பாக ஊர் முழுவதும் அலர் பரவி விட்டது. இதனால் தலைவி வெதுப்பித் தலைவனோடு ஊடினாள்.
"புனலுடு போவதோர் பூமாலை கொணர்டை
எனலுழி வகை எய்திற்று எனிறேற்றுக் கொணிடை புனலுடு நாடறியப் பூமாலை யப்பி நினைவாரை நெஞ்சிடுக்கணி செய்யும் கனலியுடனி கடாமுனர் ஊடலி கொடியதிறம் கழனாலி ஊடாளோ ஊர்த்தலர் வந்துரிந்து."
- (பரிபாடற் பகுதி 2: 57-56)
(ஊழ் வகை - முறைப்படி. அப்பி - அணிந்து. இடுக்கண் - துன்பம்)
கலித்தொகை
கலித்தொகை நூலை ‘கலி', 'கலிப்பர்’, ‘கலிப்பாட்டு', நூற்றைம்பது கலி' எனவும் பண்டைய உரையாசிரியர் குறிப்பிடுவர். இந் நூல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றானது.
'கற்றறிந்தோர் ஏத்தும் கலி' என்பது பண்டைய சான்றோரின் மதிப்பீடு.
வயல் வளமும், நீர் வளமும் நிறைந்த பகுதி மருதம், வளமை மிகுதி, போக நுகர்ச்சி விருப்பத்தை ஊட்டத் தலைவன் காமத்தில் இறங்கிச் சுற்றித் திரிகின்றான். அவன் பரத்தனாவதும் உண்டு. மருதன் இளநாகனார் செய்தருளிய மருதக் கலியில் பரத்தமை பற்றிப் பேசப்படும் செய்திகளையும் பார்ப்போம்.

ez ജിബ്രക്രിസ്ഥD 709
பரத்தையர் சேரியிலே தங்கி விட்டு வீடு வந்த தலைவனை “இங்கே நான் வாடி வருந்கிக் கிடக்கின்றேன். நீ பரத்தையரோடு கூடிக் கலந்து மகிழ்ந்த களிப்புடன் என் முன் வந்துள்ளாய். அவர்களுடன் நீர்விளையாடி மகிழ்ந்திருக்கின்றாய் எனப் பிறர் வந்து கூறினர். உன் மாலையை எவளுக்கோ அணியக் கொடுத்து விட்டு, அவள் தலையில் அணியும் கோதையைச் சூடியுள்ளாய். நான் இங்கு தனித்து வருந்திக் கிடக்க, நீயோ அழகிய பரத்தையரோடு துணங்கைக் கூத்தாடினாய் என்ற செய்தியையும் கேட்டேன். நீயோ அந்தக் களிப்பு மங்காது என்முன் வந்துள்ளாய். ஏதோ இப்படியாவது வந்து அருள் செய்தாய். அதுவே போதும். உன் பரத்தையர் வருந்துவார்கள். அவர்களிடம் மீண்டும் போய் அவர் நலம் காப்பாயாக!” என்று தலைவி கூறி அவனை ஒதுக்கி வைக்கின்றாள்.
"அனைமெனிதோளர் யாமிவாட, அமர்துனைப்
புணர்ந்து நீ" மனமனையாய்! எனவந்த மலிலலினி மாணிபுஅனிறோபொதுக்கொணிட கவிவையினர்பூவணிப் பொலிந்தநினர் வதுவைஅம் கமழிநாற்றம் வைகறைப் பெற்றதை கனலும் நோய்த்தலையும் நீகனங்குழை அவரொடு புனலிஉளாப்" எனவந்த பூசலினர் பெரிதனிறேrதார்கொணிடாளர் தலைக்கோதை தடுமாறிப்பூணிடநினர் ஈர்அணி சிதையாது, எம்இலிவந்து நின்றதை தணந்ததனி தலையும், நீ தளர்இயல் அவரொடு துணங்கையாய் எனவந்த கவிவையினர் கடப்பனர்றோஒளியூத்த நுதலாரோடு ஓரணிப் பொலிந்தநிர்ை களிதட்ப வந்தஇக் கவினிகான இயைந்ததை
என வாங்கு; அளிபெற்றேம், எம்மைநி” அருளினை, விளியாது வேட்டோர் திறத்து விரும்பிய நினர் பாகனும் நீடித்தாய்" என்று, கடாஅம், கடும் திணிதேர் பூட்டு விடாஅ நிறுத்து.'
- (மருதக்கலி 1:9-25)

Page 69
770 (தொல்காம்மியச் சேன் துனிசன்
வதுவை - திருமணம். கனலும் - வருத்தும். பூசல் - அலர். தார் - ஆடவர் அணியும் மாலை. தலைக்கோதை - மகளிர் அணியும் தலை மாலை. வேட்டோர் திறத்து - விரும்பும் பரத்தையரிடத்திலே.)
தலைவியை நெடுநாட்பிரிந்து பரத்தையர் சேரியில் தங்கி விட்டான் தலைவன். தலைவியைத் தனிமை வதைக்க அவள் அழுது புலம்பினாள். புதல்வனைக் கட்டி அணைத்து ஆறுதல் அடைந்து உறக்கம் கொள்ள முயலும் போது, தலைவன் தனக்கேற்ற பரத்தையரைத் தன் மனை முன் கொண்டு வந்து அவர்களுடன் பாடியாடும் துணங்கைக் கூத்தின் ஒலி வந்து தலைவியை எழுப்பி விடுகின்றதாம்.
"அகலநீதுறத்தலினி, அழுதுஒவா உணிகனி, எமி
புதலிவனை மெய்தீனிடப், பொருந்துதலி இயைய
62/IT65, நினக்குஒத்த நல்லாரை நெடுநகரத் தந்து, நினி தமர்பாடுமி துணங்கையுளி அரவமிவந்து எழுப்புமே."
- (மருதக்கலி 5:11-14)
முற்பகலில் ஒருத்தியுடன் கூடி இன்புற்று, நண்பகலில் அவளையும் விட்டுப் பிறரிடம் சென்று, பிற்பகலிலே வேறொருத்தியைத் தேடுகின்ற ஒரு தலைவனைப் பித்துப் பிடித்தவனென்று தலைவி சினந்துரைக்கின்றாள்.
“முன்பகலி தலைக்கூடி, நணிபகலி அவள்நீத்துப், பினர்பகலி பிறர்த்தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய், "
- (மருதக்கலி 9; 10-11)
பரத்தை மனை சென்று களித்து, இன்புற்று வந்த தலைவன் தன் தலைவியிடம் தான் கடவுள் தரிசனத்திற்குப் போய் வந்ததாகப் பொய் கூறித் தப்பிக்க முயலும் ஒரு காட்சி இது.

y, AA. حیهeza ییarz777 (ق
"வணிடுது சாந்தம் வடுக்கொள நீவிய,
தணிடாத் தீம்சாயலி பரத்தை, வியலி மார்பI பணிடு, இனினையலிலைமணி, ஈங்கு எலிலிவந்தியகி, கணிடது எவர்ை? மற்று உரை: நன்றும் தடைஇய மெணி தோளாய்/கேட்டிவாயாயினிஉடனுறை வாழ்க்கைக்கு உதவி உறையும் கடவுளர்கணி தங்கி னேனர்."
- (மருதக்கலி 28: 7ーア)
தலைவன், கூந்தல் அழகி பரத்தையிடம் சென்று வந்தான். தலைவி சினங்கொண்டு ஊடி நின்றாள். அதற்குத் தலைவன் தான் காடைச் சண்டை பார்க்கப் போயிருந்ததாகப் பொய் கூறி மழுப்பி விட்டான்.
"நிலி, ஆங்கு நிலி, ஆங்கு இவர்தரலி-எலிலா நீ நாறுஇருங் கந்தலார் இலிசெலிவாய், இவ்வழி, மாறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே மாறு, இனி நினர்னாங்கே நினர், சேவடி சிவப்பசி, செறிந்து ஒளிர் வெணியலிலாப்/யாமீவேறு இயைந்த குறும் பூழிப்போர் கணிடேம்: அனைத்தலிலத,
யாதும் அடுத்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது."
- (மருதக்கலி 30: 1-7)
(மாறு - திரும்பிச் செல். சேறிந்து - நெருங்கி, வேறு இயைந்த - புதிதாக வந்த குறும்பூழ் - காடை)
பரத்தை வீடு சென்று வந்த தலைவன், தன் தலைவிக்கு அஞ்சி குதிரை ஏறி வந்தேன். என்று பொய் கூறினான். இதற்குத் தலைவி யாதும் அறிவோம். உன் குதிர்ை யாரெனவும் எமக்குத் தெரியும். இனி இங்கே வரவேண்டாம். அப் பரத்தையே குதிரையாகவும், நீயோர் குதிரைக்காரனாகவும் எப்பொழுதும் அதில் ஏறித்திரிவாயாக." என்று தலைவனுக்குக் கூறி அனுப்புகின்றாள்.

Page 70
772 (தொல்காம்மியத் தேன் துனிசன்
“ஏந்தி, எதிர்இதழி நீலம் பிணைத்தனின கணினாய்/
குதிரை வழங்கி வருவலி."
- (மருதக்கலி 31: 5-6)
"உருவழிக்கும் அகீகுதிரை ஊரலி:நீஊரிலி, பரத்தை பரியாக, வாதுவனாய், எண்றும் மற்று அச்சார்த் திரி, குதிரை ஏறிய செலி."
- (மருதக்கலி 31: 37-39)
பரத்தையரை நாடிச் சென்று நாட்கழிந்து வந்த தலைவனை புதுமலரைத் தேடும் வண்டைப்போல நாள்தோறும் மணக் கோலத்தில் விளங்குகின்றாய். நீ விரும்பிய பரத்தையரைக் கொண்டு வந்து சேர்க்க உதவிய தேர் சென்ற வீதியெல்லாம் உன்னைப் பற்றிய பேச்சுக்கள் அடிபடுகின்றனவே. உன் வஞ்சனையான பரத்தைமை எண்ணத்தைக் காட்டுவது போல, அழகு சேர வந்துள்ளாயே!” என்று கூறிச் சினந்து கொண்டாள் தலைவி. இதற்குத் தலைவன் வையை ஆற்றில் புதுப்புனல் ஆடிவரத் தங்கினேன் ” என்று ஒரு பொய்யுரைத்தான்.
“யாரை நீ எம்இல் புகுதருவாய்? ஒரும்
புதுவ மலர்தேரும் வணிடேபோலி- யாழ வதுவை விழவணி வைகலும் காட்டினையாய்மாட்டு மாட்டுஓடி, மகளிர்த் தரத்தரப், பூட்டுமானி திணிதேர் புடைத்த மறுகுஎலிலாம் பாட்டாதலி சான்ற நிர்ை மாயப் பரத்தைமைகாட்டிய வந்தமை கைப்படுத்தேணி- பணிடெலாம் கேட்டும் அறிவேனிமனி, யார்ை, தெரிகோதை அந்நல்லாய் தேறியலி வேணடும்பொருகரை வாய்சூழ்ந்த பூமலி வையை வருபுனலி ஆடத் தவிர்நீதேனி பெரிது எனினைச் செய்யா மொழிவது எவணி?”
aap (மருதக்கவி 33; 1-12)

Nazz ح۶عهazzص2ی وrzقD 773
வதுவை விழா - திருமண விழா. மாட்டு மாட்டு - இடந்தோறும் இடந்தோறும்.
பூட்டுமான் - பூட்டிக்கிடக்கும் குதிரைகளைக்கொண்ட புடைத்த - ஆரவாரித்த, பாட்டாதல் சான்ற - பெரும் அளவில் பேசப்பட்ட)
அகநானூறு
அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. இந்நூலை அகம், அகப்பாட்டு, நெடுந்தொகை என்றும் அழைப்பர். இந்நூல் (1) களிற்றியானைநிரை, (2) மணிமிடை பவளம், (3) நித்திலக் கோவை என்னும் மூவகைப் பகுப்பாயமைந்துள்ளது. அக உணர்வால் பெண் ஆணிலும், ஆண் பெண்ணிலும் அடங்காக் காதல் கொண்டு, குறிஞ்சியில் களவிற் கலந்து இன்புற்றும், முல்லையில் அவள் இரங்கி நின்றும், தலைவன் ஒழுக்கம் குன்றத் தலைவி மருதத்தில் சினந்து மருண்டு ஊடியும், தலைவன் தலைவியைப் பிரிந்து பொருளிட்டப் போகுங்கால் அவள் பாலையில் தனித்திருந்து ஏங்கியும், தலைவன் துணை நாடி அது கிட்டாது நெய்தலில் அவள் ஏங்கி இரங்குவதும் என அவர்கள் ஒழுக்கம் ஐந்து நிலங்களிலும் பரவி நிகழுகின்றது. இனி, அகநானூற்றில் பரத்தமை பற்றி எவ்வாறு பேசப்படுகின்றது என்பதையும் பார்ப்போம்.
மலர் மாலை அணிந்த தலைவன் தன் தலைவியைத் தனியே தவிக்க விட்டுப் பரத்தை ஒருத்தியோடு இன்பமனுபவிக்க விரும்பி அதற்கேற்ற ஒப்பனைகளையும் செய்து தெருவைக் கடந்து செல்லும் காட்சி இது.
"நிரைதார் மார்பணி நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தலி வேனிடிப், புதுவதினர் இயனிற அணியணி, இத்தெரு இறப்போணி."
- (66; 7-9) - செல்லுர்க் கோசிகர்ை கணினனார்.

Page 71
774 (செசல்சாம்பியத் தேன் துனிசன்
A.
தலைவி ஒருத்தி, தன் தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு கொண்டிருப்பதாகச் சந்தேகப்பட்டு அவனையும், அவளையும் பழித்துக் கூறினாள். அதனால் குமுறுகின்றாள் பரத்தை.
"துறைகேழி ஊரணி பெனிடுதனி, கொழுநனை
நம்மொடு புலக்கும் எனிய - நாம்அது செப்ய்ாம் ஆயினும், உப்யா மையினர், "
- (toes: s-7) - ஆலங்குடி வங்கனார்.
தலைவன் ஒருவன் தலைவியைப் பிரிந்து பரத்தை யொருத்தியுடன் தங்கிவிடுகின்றான். பின் சில நாளில் அவளையும் கைவிட்டு வேறொரு புதுப் பரத்தையுடன் தொடர்பு ஏற்பட்டுச் சென்றுவிடுகின்றான். இதைத் தலைவி அறியாது முதற் பரத்தையைப் பழித்துக் கூறினாள். இதையறிந்த அப் பரத்தை தலைவியின் தோழிமார் கேட்குமாறு தன் நிலையை இவ்வாறு எடுத்துக் கூறுகின்றாள்.
"ஒணிதொடி மகளிர் பணிடையாழி பாட,
ஈர்ந்தணி முழவினி எறிகுணிலி விதிர்ப்பு, தணிநறுஞ் சாந்தம் கமழும் தோளிமணந்து, இனினும் பிறளிவயி னானே. மீனையோள் எம்மொடு புலக்கும் எனL, '
- (ta6; to-14) - Lifarif.
(பண்டையாழ் - பழமையான யாழ். ஈர்ந்தண் - மிக்க தண்மை. குணில் - சிறு கொம்பு விதிர்ப்பு - அடித்து ஓசை எழச் செய்தல்
தலைவியோடு கூடி இன்புறாது பரத்தையர் உறவில் மயங்கி நின்றான் ஒரு தலைவன். அவன் காலை வேளையில் காவிரிப் பெருவெள்ளத்தில் அவளுடன் நேற்று புனலாடினான். அதனால் ஊரில் பழிச் சொல் பரவிவிட்டது.

A. ره حیعهz775 (قصص2ی وی
"நெடுவெணி மருதொடு வஞ்சி சாஅய்,
விடியலி வந்த பெருநீர்க் காவிரி, தொடிஅணி முனிகை நீ வெய் யோளொடு முனிநாளர் ஆடிய கவ்வை இந்நாள்,"
- (226: 9-12) - ԱՄ6007Մ.
(விடியல் - அதிகாலை. நீ வெய்யோளொடு - நின்னால் விரும்பப்பட்டவளோடு, கவ்வை - அலர்.
தலைவன் பரத்தையுடன் ஆற்றினிலே புனல் விளையாடினா னென்று தலைவி ஊடல் கொண்டாள். இன்னும் பழிச் சொல்லும் ஊரில் பரவிக் கொண்டது.
“போதுஆர் கூந்தலி நீவெப் யோளொடு
தாதுஆர் காஞ்சித் தணிபொழிலி அகலியாறு ஆடினை எனிய நெருநை, அலரே."
- (246: 5-7) - பரணர். (காஞ்சித் தண்பொழில் - காஞ்சி மரங்கள் சூழ்ந்த குளிர்ந்த பொழில்.) -
“பொய்யாலி அறிவெண்: நினி மாயம் அதுவே
கையகப் பட்டவும் அறியாய்: நெருநை மைஎழிலி உர்ைகணி மடந்தையொடு வையை ஏர்தரு புதுப்புனலி உரிதினினி நுகர்ந்து, பரத்தை ஆயம் கரப்பவும், ஒலிலாது கவிவை ஆகின்றாலி, பெரிதே."
- (256: a-13) - மதுரைத் தமிழிக் கத்தனார் கடுவன் Loeffortariff. (பொய்யால் - பொய்யாதே. மாயம் - வஞ்சனை. நெருனை நேற்று.)

Page 72
776 Gിരിക്കമ് മക്ക് മയ്യ
தலைவன் தன் காதல் மனையாளைப் பிரிந்து, காதற் பரத்தையரோடு நீராடல் உடையணிந்து, அவர்கள் கண் வீச்செறிய, தானும் எதிர் வீச்செறிந்து, காமம் அளவு கடந்து, வெட்கம் இழந்து, அவரோடு நீராடி இன்புற்றிருந்தான். அவன் மறுநாள் தன் தலைவியிடம் வந்து அணுக, அவள் ஊடல் கொண்டு. சினந்து அவனுக்கு இணங்காது எட்ட நின்று கடிந்துரைத்தாள்.
நரந்தம் நாறும் குவைஇருங் கந்தலி இளந்துணை மகளிரொடு ஈர்அணிக் கலைஇ, நீர்பெயர்ந்து ஆடிய ஏந்துஎழிலி மழைக்கணி நோக்குதொறும் நோக்குதொறும் தவிர்விலை
uuntaélé, காமம் கைம்மிகச் சிறத்தலினி, நாணிஇழந்து, ஆடினை எனிய மகிழ்ந/ அதுவே"
ー (266・イー9) - பரணர்.
நரந்தம் - நரந்தப் புல். தவிர்விலை - தவிர்தல் இல்லாதவனாயினை.
"கோதை இனர, குறுங்காலி, காஞ்சிப்
போதுஅவிழி நறுந்தாது அணிந்த கூந்தலி, அரிமதர் மழைக்கணி, மாஅ யோளொடு நெருநையும் கமழியொழிலி துஞ்சி, இன்றும், பெருநீர் வையை அவளொடு ஆடிப், புலரா மார்பினை வந்துநின்று, எம்வயினர்
கரத்தல் கடுமோ ..."
- (296: 1-7) - மதுரைப் பேராலவாயார்.
(கோதை - தலைமாலை. இணர - பூங்கொத்துக்களை உடைய)

A. ه ح47عهzz 2ییar777 (رقص
தலைவியைப் பிரிந்து சென்ற தலைவனுக்கும் பரத்தைக்கும் இடையே ஊடலும், சினத்தலும், இகழ்ச் சொற்களும் ஏற்பட்டதும் உண்டு.
"மதியேர் ஒளிர்நுதல் வயங்கிழை ஒருத்திஇகழ்ந்த சொல்லுஞ் சொல்லிச் சிவந்த ஆயிதழி மழைக்கணி நோயுற நோக்கித் தணிணறுங் கமழ்தார் பரீஇயினள் நும்மொடு ஊழனளர்- சிறுதுணி செய்தெம் மனனிமலி மறுகினி இறந்திசி னோளே."
- (3O6; to-15) - மதுரைக் கூலவாணிகனி சீத்தலைச் சாத்தனார்.
பரீஇனள் - அறுத்து எறிந்தனள். துனி - கலகம்)
தலைவன் பரத்தை ஒருத்தியுடன் உறவு பூண்டிருந்தான். தன் குழந்தையுடன் தலைவி வாடி வதங்கினாள். பின் தலைவன் மீண்டும் தன் வீடு வந்தான். தலைவியின் ஊடல் தணியவில்லை. தலைவன், தலைவியின் தோழியை நாடினான். அவளும் தலைவியிடம் சென்று ஊடல் தணிந்து, கூடல் கொள்ளுமாறு வேண்டி இவ்வாறு கூறுகின்றாள். “தேர்ப்பாகன் தேரில் தலைவன் வநதுள்ளான். நெகிழ் தோள்களையுடைய, ஊர் ஏற்றுக்கொள்ளும் முறைகளைக் கல்லாத பரத்தையரின் பரத்தமையைத் தாங்க முடியாமல் தலைவன் தவிக்கின்றான். நீயோ பயனின்றி ஊடி நிற்கின்றாய். இது உனக்குப் பொருந்தாது. மேலும், உன் மகனின் வருங்காலத்தையும் யோசித்துப் பார். அறிவுள்ள நீ இவ்வாறு நடக்கலாமா?”
“தேர்தர வந்த தெரிஇழை நெகிழ்தோளி
ஊர்கொளர் கலிலா மகளிர் தரத்தரப் பரத்தைமை தாங்கலோ இலனென வறிதுரீ புலத்தனி ஒலிலுமோ? - மனைகெழு மடந்தை."
- (376: a-71) - ஓரம்போகியார்.

Page 73
778 Gിരിക്കസ്ഥമ മര് ജയഭ്യ
சிலப்பதிகாரம்
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம், சேரன் தம்பி இளங்கோவினால் எழுதப்பட்ட நெஞ்சையள்ளும் ஒரு தமிழ்க் காப்பியம். கலையரசன் கோவலனி, கற்புக்கரசி கண்ணகியை மணந்து, பின் அவளைப் பிரிந்து விலைமகள் குடும்பத்தில் பிறந்த கலையரசி மாதவியுடன் காதல் வாழ்வு வாழ்ந்து, பின் ஊடல் காரணமாக மாதவியையும் பிரிந்து, கண்ணகியிடம் சென்று கூடி வாழ்ந்து, பாண்டி மாதேவியின் சிலம்பைத் திருடியதாகப் பொய்க் குற்றம் தொடுக்கப்பட்டு, பாண்டிய மன்னன் ஆணைப்படி கோவலன் கொலை செய்யப்பட்டான். இதைக் கேள்வியுற்ற கண்ணகி பொங்கியெழுந்து பாண்டியன் சபை நாடி நீதி கேட்டு, நீதி தவறிவிட்டேனென்று பாண்டியன் உயிர் துறப்ப, அவனுடன் பாண்டிமாதேவியும் உயிர் நீத்து, இவை போதாதென்று கண்ணகி மதுரை மாநகரையும் எரித்துத் தானும் தெய்வமாகிய ஒரு நீண்ட கதைதான் சிலப்பதிகாரம்.
கோவலன் பிரிவைத் தாங்காத மாதவி துறவு பூண்டு வாழ்ந்து வந்தாள். கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையும் துறவு பூண்டு அறவாழ்வை மேற்கொண்டாள். மாதவி விலைமகள் குலத்தைச் சேர்ந்தாலும் அத்தொழிலில் ஈடுபடாது கற்புக்கரசியாய் கோவலனுடன் மாத்திரம் வாழ்ந்து வந்தாள். மாதவியையும், அவள் மகள் மணிமேகலையையும் விலைமகள் குலத்திலிருந்து நீக்கிக் கற்புடைய பெண்களாகக் காட்டிய பெருமை இளங்கோ அடிகளைச் சேரும். விலைமகள் குலம் இனி வேண்டாமென்று நினைத்துச் செயல்பட்டவர் இளங்கோ அடிகள்.
இனி, சிலம்பில் நாகாக்கா வம்பப் பரத்தை பற்றி இவ்வாறு கூறுகின்றார் இளங்கோ அடிகள
"குரலிவாய்ப் பாணரொடு, நகரப் பரத்தரொடு
திரிதரு மரபினர் கோவலனி போல இளிவாப் வணிடினொடு, இனிஇள வேனிலொடு, மலய மாருதம் திரிதரு மறுகிலி,
- (5: 2OO-2O3)

779 Dقarz نیرویzzz ح6ته zܘܢ
"வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு,
கொங்கலர் பூம்பொழிலி குறுகினர் செனிறோர், காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர் ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்" என்றே,
- (to: 219-222)
"வறுமொழி யாளரொடு, வம்பப் பரத்தரொடு, குறுமொழிக் கோட்டி, நெடுநகை புக்குப், GaQLIITdfdFI7tiu/ aD 6OCfG6?, @LII7qd56B56ODyt uLIIT6I7ff நச்சுக் கொனிறேற்கு, நனினெறி யுனிடோ? இருமுது குரவர் ஏவலும் பிழைத்தேனி."
A. (16: 63-67)
ըpւգ5ւյ60Մ
இது காறும் (1) தொல்காப்பியம், (2) திருக்குறள், (3) நாலடியார், (4) திருமூலர் திருமந்திரம், (5) நற்றிணை, (6) குறுந்தொகை, (7) பரிபாடல், (8) கலித்தொகை, (9) அகநானூறு, (10) சிலப்பதிகாரம் ஆகிய பழந்தமிழ் நூல்களில் பரத்தமை பற்றி எவ்வாறு பேசப் பட்டுள்ளதென்பதைப் பார்த்தோம்.
தலைவன் பரத்தையரை நாடுவதும், அவனுக்குப் பாணன் உதவுவதும், தலைவி சினங்கொண்டு ஊடி நிற்பதும், அவளைத் தோழி, பாங்கி சினம் தணிப்பதும், பரத்தைக்கு விறலி உதவுவதும், ஆகிய செயல்கள் பரத்தமைக்கு நீர் ஊற்றி வளர்ப்பதுபோல் ஊரறிந்த உண்மையாகும். பரத்தமை மன்னர் காலத்திலும் மங்காப் புகழ் பெற்றிருந்தது. அன்று பரத்தையர் ஆடற்கலைகளிலும் புகழ் பெற்று விளங்கினர்.
வையை நதியில் புதுநீர் வந்துவிட்டால் ஊரே திரண்டு, நதிக் கரையை அடைந்து, நீராடி மகிழ்வர். இன்னும், தலைவியரைப் பிரிந்து நின்ற தலைவர் துணங்கைக் கூத்தாடியும், பாணன், விறலி ஆகியோர் உதவியுடன் பரத்தையர் உறவு கொண்டு, அவர் மனம்

Page 74
720 GØszaớazzźzozef சேன் துனிசன்
குளிரப் பொன்னும், பொருளும் கொடுத்துத் தாமும் இன்புற்றிருப்பர். பரத்தையர், ஊரறியப் பெற்ற பொருட்களைத் தம்மனைக்குக் கொண்டு சென்று மகிழ்வர்.
இன்று விபசாரத்தால் ஏற்பட்டுள்ள பயங்கர நோயான 'எயிட்ஸ் உலகையே ஆட்டி வைத்து, இலட்சக்கணக்கான மக்களை வருடா வருடம் கொன்று குவித்து வருகின்றது. இனி, மேற்காட்டிய நூல்களில் பரத்தமையால் ஏதாவது பயங்கர நோய் அக்க்ாலத்தில் இருந்துள்ளனவா? என்பதையும், பரத்தமை மக்களுக்குத் தீங்கைத் தரக்கூடியது என்று நூலாசிரியர்கள் கூறியுள்ளனரா? என்பதையும் அலசி ஆராய்வோம்.
மூத்த நூலான தொல்காப்பியத்தில் பரத்தமை மக்களுக்குத் தீங்கைத் தரக்கூடியது என்று கூறப்படவில்லை. தொல்காப்பியனார் அன்று பரத்தமை எவ்வாறு நடைமுறையில் இருந்துள்ளமை பற்றி மட்டும் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
தொல்காப்பியர் முக்காலத்தையும் அணுகக்கூடியவராய் இருந்தும், அவர் ஏன் பரத்தைமையால் ஏற்படும் தீங்கினைக் கூறாது மெளனம் சாதித்தாரென்பது தெரியவில்லை. அவர் அன்று இதனால் ஏற்படக்கூடிய தீங்கினை எடுத்துரைத்திருப்பின், பரத்தமை இந்நிலைக்குப் பரவியிருப்பதைத் தடுத்திருக்கலாம் அல்லது தணித்திருக்கலாம்.
ஒருவேளை தொல்காப்பியர் காலத்திலும் பரத்தமையினால் நோய்கள் பரவி மக்கள் இறந்துமிருக்கலாம். ஆனால் அந்நோய்கள் இனங்காணப்படாமலும், மக்கள் மரணங்கள் இயற்கையென்றும், விதியென்றும் சொல்லக்கூடிய பட்டியலில் சேர்க்கப்பட்டுமிருக்கலாம். அன்றேல் அன்று பரத்தைமையினால் நோய்கள் ஒன்றும் தோன்றாமலும் இருந்திருக்கலாம்.
திருவள்ளுவர், திருக்குறளில் பொதுமகளிரைப் பற்றி ஓர் அதிகாரம் அமைத்துள்ளார். அதில் பரத்தமையினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் காட்டி அது சமுதாயத்திற்கு ஏற்றதல்ல என்று எவருக்கும் அஞ்சாது முதல் முதலில் இடித்துரைத்த பெருமை திருவள்ளுவரைச் சாரும்.

Naz ജിബ്രക്രിസ്ഥ 727
இதேபோல், நாலடியாரில் பொருள்மேற் காதல் கொள்ளும் இரு மனத்தினரான பொதுமகளிருடன் ஒரு தொடர்பும் வைத்திருக்க வேண்டாம் என்று தகுந்த ஆதாரங்களையும், எடுத்துக்காட்டுகளையும் நம் மத்தியில் வைத்து எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
திருமந்திரத்தில் பொருளையே நாடும் பொருட்பெண்டிருடன் உறவு வைத்திருக்க வேண்டாமென்ற சிறந்த கருத்துக்களை மக்கள் மத்தியில் வைத்து அரும் பெரும் மந்திரங்களைத் தந்துள்ளார் திருமூலர்.
சிலப்பதிகாரத்தில் விலைமகளிர் குடும்பத்தில் பிறந்த மாதவியைக் கோவலனுடன் மட்டும் தொடர்பு படுத்தி, கோவலன் மாதவியைப் பிரிந்த பின், அவளைத் துறவறம் பூணப்பண்ணி, இருவருக்கும் பிறந்த மகளான மணிமேகலையையும் துறவறம் பூணச் செய்து, விலைமாதர் குடும்பத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து, பரத்தமை உறவு வேண்டாமென்ற ஒரு திருப்பு முனை ஏற்படுத்திய சீரிய பெருமை இயங்கோ அடிகளாரைத் தவிர வேறு யாரால் தான் முடியும்? அவர் ஞாலம் (உலகம) போற்றும் அடிகளார் அல்லவா! --جيمس
மேலும், எட்டுத்தொகை நூல்களில் ஐந்து நூல்களான (1) நற்றிணை, (2) குறுந்தொகை, (3) பரிபாடல், (4) கலித்தொகை, (5) அகநானூறு அகியவற்றில் பரத்தைமை சமுதாயத்துக்குத் தீமை விளைவிக்கக் கூடியதெனக் கூறப்படவில்லை.
ஆனால் பரத்தமையை ஒரு விழாவாகவும், கொண்டாட்டமாகவும்
நடாத்தி, ஆடிப்பாடி, மகிழ்ந்து, இன்புற்றிருப்பதையும் இந்நூல்களிற் கூறப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மேலும், தலைவன் பரத்தையரை நாடுவதும், மீண்டும் தலைவன் தலைவிபால் ஆசை கொண்டு அவள் மனை நாடுவதும், தலைவி சினந்து ஊடுவதும், தோழி தலையிட்டுச் சினம் தணிப்பதும், ஊடல் கொண்ட தலைவி மீண்டும் கூடுவதும், சில தலைவிமார் குலப் பெருமை நிலைநாட்ட ஊடுவதுபோல் ஊடிக் கூடுவதும், சில

Page 75
722 GØszaớazzizozeS தேன் മസഭയ
தலைவர்மார் பரத்தையரிடம் போகவில்லை என்று பொய் கூறுவதும், தலைவியர் இதை நம்பாது சான்றுடன் பொய்க் கூற்றை நிரூபிப்பதும், தலைவர் திகைத்துப் பயந்து ஒதுங்குவதும், தலைவியர் பரத்தையர் ஒருவரை ஒருவர் கற்றம் கூறுவதும், தலைவர் பரத்தையர் ஒன்று சேர்ந்து வையையில் புதுப் புனலாடுவதும், துணங்கைக் கூத்தாடுவதும், இச் செய்திகள் உடனுக்குடன் தலைவியரைப் போய்ச் சேர்வதும், தலைவர் தலைவியர் குடும்ப விடயத்தில் விட்டுக் கொடுத்து நடப்பதும், தலைவர், தலைவியர் பின்னாடி இரந்து நிற்பதும் ஆகிய பல செய்திகள் புலவர் வாயிலாக இன்சுவை கலந்த இலக்கியமாக அமைந்துள்ளதை மேலே பார்த்து மகிழ்ந்தோம்.
இன்னும், இவ்வாறான பல நிகழ்வுகள் நடந்தேறியும் ஒரு நூலிலாவது தலைவன, தலைவி மத்தியில் ஒரு மணமுறிவுகூட ஏற்பட்டதாக ஒரு செய்திதானும் குறிப்பிடப்படாததையிட்டு நாம் பெருமைப்படவேண்டும். மேலும், இன்றைய சமுதாயம் இதைச் சிந்தனைக்கு எடுத்துச் செயல் முயற்சியில் இறங்க வேண்டும்.
அக்காலத்தில் முடிதரித்த மன்னர்கள்கூட விலைமாதர் குலத்தை அழித்து ஒழிக்க ஆணை பிறப்பித்ததாகச் செய்திகள் இல்லை. ஊரறிய, நாடறிய, மன்னரறியப் பரத்தமைக்கு பெருவிழா எடுத்துக் கொண்டாடிய செய்திகளையும் மேலே பார்த்தோம். மேற்காட்டிய பத்து நூல்களில் ஒரு நூலிலாவது பரத்தமையால் மக்களுக்கு உயிராபத்து ஏற்படக் கூடிய நோய்கள் இருந்ததாகச் செய்திகள் ஒன்றும் கூறப்படவில்லை.
பரத்தமையை ஒரு குலத்தாரின் வருவாய் தரும் நடைமுறைத் தொழிலாகக் காட்டி, அதனால் தலைவி தலைவன் இடையில் மன நெருடல் ஏற்பட்டு, பின் அவர்கள் ஊடியும் கூடியும் நின்று, பரத்தையரை அழகு படுத்தி, பாணன் தோழி விறலி போன்றோரை அறிவுரைக்கமர்த்தி, பாணன் தேரில் தலைவர் பவனி வந்து, பரத்தையர் தலைவர் சேர்ந்து நீராடியும், துணங்கைக் கூத்தாடியும், பரத்தை மெத்தை சுகம் தர இன்புற்றிருந்தனர்.
இந்நிகழ்ச்சிகளைப் புலவர்கள் தம் சிந்தனைச் சிறகு விரித்துச் சிறந்த கருத்தோட்டமான பாக்களைச் சீரிய இலக்கிய நயத்தோடு

Naz ബ്ബ 723
தெள்ளத் தெளிந்த இனிய தமிழில் நமக்குத் தந்துள்ளனர். இவை சுவைக்கச் சுவைக்கத் தெவிட்டா இன்பம் தருபவை. இவற்றைப் பேணிக் காப்பது நம் தலையாய கடனாகும்.
பரத்தமை ஏற்பட்டதற்கு வறுமை ஒரு காரணியாகவும், உடல் இச்சை இன்னொரு காரணியாகவும் இருக்கலாம். ஒரு பெண் தன் உடலைக் காட்டி, உடம்பை விற்றுத் தன் குடும்பத்தினருக்குச் சோறு போடும் நிலையில் உள்ளாளென்றால், அது கவனத்துக்குரிய விடயமாகும். இதில் அரசின் பங்கு மிக மிக அவசியம்.
'ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கு ஒருத்தி' என்ற ஆன்றோர் வாக்குப் பொன் வாக்குத்தான். இது நடைமுறையில் அமையாத பொழுது, பரத்தமை தானே முன்வந்து முந்தி நிற்கின்றது. எதிலும் மன நிறைவு வேண்டும். மனம் தான் நின்ைத்தபடி நடக்கின்றது. அறிவு கூறுவதையும், தடுப்பதையும் மனம் கேட்பதில்லை.
உலகில் ஆண்டுதோறும் எயிட்ஸ் நோயினால் பல இலட்சக் கணக்கில் மக்கள் இறந்தவண்ணம் உள்ளனர். இது இன்று ஓர் உலகச் சிக்கலாய் உருவெடுத்துள்ளது. ஆகவே எயிட்ஸ் நோய் ஏற்படுவதற்குக் காரணியாயமைந்துள்ள பரத்தமையை இல்லா தொழிக்க மக்கள் மத்தியில் போதிய அறிவுடைநிலையை ஏற்படுத்தி, சட்ட திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி மக்களைக் காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு அரசின் கைகளிற்றான் உள்ளது.

Page 76
ØZźZzZzzzźør 62ØzzzZzř ஆன்(தி எது?
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றி மூத்த குடி” என்று தமிழ்க் குடியின் பெருமையினைப் புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் ஐயனாரித்தனார் பாராட்டியுள்ளார். இன்னும், இக் கூற்று தமிழினத்தின் நீண்ட காலத் தொன்மையையும் எடுத்துக் காட்டுகின்றது. இதற்கமைய சில அபூர்வ சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள், கல்விமான்கள், சித்தர்கள், யோகிகள், அறிவுமேதைகள் போன்றோர் தம் இனமக்கள் சீர்பெற்று வாழ, அரும் பெரும் சாதனைகள் புரிந்து தமக்கென வாழாப் பிறர்க்கென வாழ்வர். இவர்களை நினைவில் நிறுத்தி அவர்களின் காலத்தை மையப்படுத்தி அவர்கள் பெயரில் தொடர் ஆண்டுகள் அமைத்து வருவது ஒரு சில இனத்தின் வழக்காகும். இத் தொடர் ஆண்டுமுறை ஓர் இனத்தின் தொன்மையை எடுத்துக் காட்ட ஏதுவாயமைகின்றது.
உலகில் சமயங்கள் பல உள. அவற்றுள் கிறிஸ்தவ, புத்த, இஸ்லாமிய சமயங்களுக்கு இத்தகைய தொடர் ஆண்டுகள் உள்ளன. இந்துமதம் கலியுக வருடத்தைத் தன் தொடராண்டாக வகுத்துள்ளது. கேரள நாட்டுப் பேரரசன் ஒருவனின் புகழை மையப் படுத்தி கொல்லம்' என்னும் தொடர் ஆண்டும் உள்ளது. மேலும்,
 

725
இந்தியப் பேரரசர்களான விக்கிரமாதித்தன், சாலிவாகனன் ஆகியோர் பெயரில் இரு தொடர் ஆண்டுகள் நடைமுறையில் உள்ளன. இன்னும், பசலி வருடம், சக்கரபகவத்பாத வருடம், சிருஷ்டியாதி வருடம்.” ஹிஜிரி வருடம் ஆகியனவும் தொடர் ஆண்டாக அமைந்துள்ளன. தமிழினம் உலகிலேயே மிகத் தொன்மை வாய்ந்த நாகரிகச் சிறப்பும், இலக்கிய வளமும், விழுமிய பண்புகளும், காலத்தை விஞ்சும் தொன்மையும் நிறைந்த ஓர் இனம். ஆனால் தமிழினத்திற்கு ஒரு தொடர் ஆண்டு இன்றி நீண்ட காலமாக இருந்துள்ளமை கவலைக்குரிய ஒரு விடயமாகும். இக்குறை தீர்க்கப் பல தமிழறிஞர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேரறிஞர் மறைமலையடிகள் தலைமையில் ஒரு மாநாட்டைக் கூட்டி தமிழர்களுக்கு உலகப் புகழை ஈட்டித் தந்த திருக்குறள் நூலை யாத்த திருவள்ளுவர் காலத்திலிருந்து தொடர் ஆண்டாக ஏற்பதென ஏகமனதாகத் தீர்மானித்தனர். இதனைத் தமிழ் இனம் ஏற்றுக் கொண்டது. இதனைத் தமிழக அரசும் 1971 ஆம் ஆண்டில் ஏற்று அனுமதியும் வழங்கியது. திருவள்ளுவர் திருக்குறளை முப்பெரும் பகுதிகளாக அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என ஒவ்வொன்றும் பத்துக் குறள்கள் கொண்ட நூற்றி முப்பத்து மூன்று (133) அதிகாரங்களில் ஒருமித்து ஆயிரத்து முன்னூற்றி முப்பது (1330) குறள்களைப் பாடியருளிய தெய்வப் புலவராவார். கடந்த இரண்டாயிரம் (2000) ஆண்டுகளாக மக்கள் மத்தியில் திருக்குறளின் கருத்தொளி மங்காது பிரகாசித்துக் கொண்டிருப்பது அந்நூலின் சிறப்பாற்றலை எடுத்துக் காட்டுகின்றது.
திருவள்ளுவர் கி.மு. 31 ஆம் ஆண்டில் பிறந்தவர். இன்று நாம் அவர் தொடர் ஆண்டினை "திருவள்ளுவர் ஆண்டு 2039'(31+2008) என்று கூறுகின்றோம். இன்று சில தமிழ் ஊடகங்கள் இத் தமிழ் ஆண்டினையும் பாவனையில் சேர்க்கின்றன. இன்னும் முழு அளவில் திருவள்ளுவர் ஆண்டினைத் தமிழுலகம் கையாள முன்வரவேண்டும். இதை ஓர் உயிரூட்டும் பணியென நினைந்து எல்லாத் தமிழ் ஊடகங்களும் ஒருமித்துச் செயலாற்றின் முயற்சி தானே திருவினையாகும்.

Page 77
726 Gبه تصویب zz۶۶۶یع தென் துனிசன்
இனி, திருவள்ளுவர் காலத்துக்குச் சற்றுப் பின்நோக்கிப் போனால் நாம் தொல்காப்பியனாரைச் சந்திக்கலாம். இவர் தொல்காப்பிய நூலை யாத்துத் தந்த தமிழ் அறிஞர். நமக்குக் கிடைக்கும் நூல்களுள் தொல்காப்பியம் காலத்தால் முந்திய ஒரு தமிழ் இலக்கண இலக்கிய நூலாகும். எழுத்து, சொல், பொருள் ஆகிய மூவதிகாரங்களைக் கொண்ட இயல் தமிழுக்கு இலக்கண வரம்பு கூறும் ஆயிரத்து அறுநூற்றிரண்டு (1,602) ஆத்திரங்கள் அடங்கிய நூல்தான் தொல்காப்பியம். தொல்காப்பியர் கி.மு. 5000 ஆம் ஆண்டில் வாழ்ந்தவர். தொல்காப்பியம் கடந்த ஏழாயிரம் (7000) ஆண்டுகளாக மக்களோடு உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பது அந்நூலின் சிறப்பாலென்பது தெரிகின்றது.
தமிழ் ஆண்டினைத் தொல்காப்பியருடன் தொடர்பு படுத்தினால் “தொல்காப்பியர் ஆண்டு 7008” (5000+2008) என்று நாம் இன்று கூறி, எழுதி, பேசிப் பெருமிதம் கொள்ளலாம்.
இன்னும், தமிழ்நாடு பாளையங்கோட்டைவட்டம் புலவர் அண்ணன் என்னும் தமிழறிஞர் தொல்காப்பியர் ஆண்டுதான் தமிழின ஆண்டு எனத் தெரிவித்து, தொல்காப்பியர் நாட்காட்டியையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், தொல்காப்பியர் ஆண்டினை விடுத்துத் திருவள்ளுவர் ஆண்டினைத் தமிழின ஆண்டாகக் கருதினால், தமிழின ஆண்டு 5000 ஆண்டுகளுக்குப் பிற்பட்டதாய் விடும்.
இனி, நாம் தொல்காப்பியர் காலத்துக்கும் பின்நாடிச் சென்றால் தவயோகி திருமூலர் அரசமர நிழலில் தவயோக நிலையில் இருக்கும் அருங்காட்சியைப் பார்க்கலாம். இவர் திருமந்திர நூலை அருளிச் செய்த ஞானி. திருமூலர் அரசமர நிழலில் அமர்ந்து தவமிருந்து ஆண்டுக்கு ஒரு மந்திரமாக மூவாயிரம் (3,000) திருமந்திரங்களைப் பாடியருளியவர். இவர் கி. மு. 6000 ஆண்டில் வாழ்ந்தவர். நமக்குக் கிடைக்கும் நூல்களுள் திருமந்திரம் என்ற நூல்தான் காலத்தை விஞ்சி நிற்கின்றது. அதாவது கடந்த எண்ணாயிரம் (8000) ஆண்டு களாகத் தமிழர் கைகளிலும், மடியிலும் தவழ்ந்து கதைத்துக் கொண்டு இருக்கும் ஒரே ஒரு தெய்வ நூல்தான் திருமந்திரமாகும்.

Naz ح۶عهzza 2ییazzقD 72ፖ
இனி, தமிழ் ஆண்டினை நாம் இன்று திருமூலருடன் தொடர்பு படுத்தி எழுதினால் “திருமூலர் ஆண்டு 8008” (6000 + 2008 ) என்ற நீண்டதொரு வரலாற்றுப் புகழ் தமிழனுக்குச் சேருமல்லவா? ஆம் சேரும். பின், அவன் இப்பெருமைக்குச் சொந்தக்காரன்.
இங்கு திருமூலர் ஆண்டினை விடுத்துத் திருவள்ளுவர் ஆண்டினைத் தமிழன் ஆண்டாகக் கொண்டால், தமிழின ஆண்டு ஆறாயிரம் (6000) ஆண்டுகளை இழக்கும் நிலை ஏற்பட்டு 6(6b.
மேலும், திருமூலரையும் விட்டு விட்டு இன்னும் மேலே சென்றோ மானால் எங்களை எதிர்பார்த்திருப்பவர் குறுமுனி அகத்தியனார். இவர் 'அகத்தியம்’ என்ற இலக்கண நூலை யாத்தவர். இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் பன்னிராயிரம் (12,000) சூத்திரங்களை அமைத்துத் தமிழுக்கு இலக்கண வரம்பு அமைத்துத் தந்த மாமேதை இவர். இந்நூல் கடலாற் கொள்ளப்பட்டு விட்டது. இது தமிழனுக்கு ஒரு பேரிழப்பாகும். அகத்தியர் கி.மு. பத்தாயிரம் (10000) ஆண்டில் வாழ்ந்து புகழ் பூத்த புலவன்.
இன்று நாம் அகத்தியரையும் தமிழாண்டுடன் தொடர்பு படுத்தினால் “அகத்தியர் ஆண்டு 12008” (10000+2008) என்று வாய்முட்டச் சொல்லி மனம் பூரிப்படைய ஏங்கி நிற்கின்றது தமிழ் உலகம்.
இன்னும், அகத்தியர் ஆண்டினைக் கருத்திற் கொள்ளாது திருவள்ளுவர் ஆண்டுடன் நின்றால் தமிழின ஆண்டு 10000 ஆண்டினை இழக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.
மேலே தமிழ் தொடர் ஆண்டு தொடர்பாக திருவள்ளுவர், தொல்காப்பியர், திருமூலர், அகத்தியர் ஆகியோர் பற்றி விபரித்துக் காட்டப்பட்டுள்ளது. இவை தொடர்பாக ஆன்றோரும், சான்றோரும் ஒருங்கிணைந்து ஆவன செய்ய வேண்டிய கடப்பாடு உடையோராவர் எனத் தமிழுலகம் எதிர்பார்த்து நிற்கின்றது.

Page 78
AAz27a, ZZ2%2Z/ Z252z725af
gb, 96õL, நேயம், காதல், காமம் போன்றன மக்கள் மனதில் தோன்றி அவை ஓர் இணைப்பையும், பிணைப்பையும் கொண்ட குடும்ப வாழ்க்கையைத் தந்துள்ளது. இவ் வாழ்க்கை குடும்பத்தினரிடையே ஓர் அன்புப் பாசத்தை ஏற்படுத்தி, அதிற் கட்டுண்டு, கசிந்து, நெகிழ்ந்து, உருகி, மகிழ்ந்து வாழ்வர். குடும்ப மாகச் சுற்றியிருந்து வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். எட்ட இருந்து வாழ விரும்பார். இதிலடங்கியவர்களில் ஒருவராவது சில நாட்களாவது பிரிந்து செல்வது கடினமான விடயமாகும்.
இவ்வாறான பிரிவிற்குரிய சில நிமித்தங்களைத் தொல்காப்பியம் வகுத்துக் கூறுகின்றது. கல்வி கற்பதற்காகப் பிரிதல், பகை காரணமாகப் பிரிதல், தூது போவதற்காகப் பிரிதல் ஆகிய மூவகைப் பிரிதல்களைத் தொல்காப்பியச் சூத்திரம் எடுத்துக் கூறும்.
"ஓதலி பகையே தூஇவை பிரிவே."
- (பொருள். 27)
 

729 மேற்கூறப்பட்ட மூவகைப்பிரிதலில், கல்வி கற்பதற்காகப் பிரிதலும், தூது செல்வதற்காகப் பிரிதலும் உயர்ந்தோராகிய மக்களுக்கே உரியனவாம். குணம், ஒழுக்கம், செல்வமி, கல்வி, ஞானம் முதலியன நிறைந்த மக்களே உயர்ந்தோரெனக் கணிக்கப்பட்டனர்.
"ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன,"
- (பொருள். 28)
மக்களைக் காப்பவன் அரசன் என்ற முறையில், பகை காரணமாகப் பிரியுமிடத்து அரசன் முன்னிலையில் நிற்பான். அரசன் தான் மட்டும் போதலும் உண்டு. தன் படையுடன் போதலும் உண்டு. அரசன் தான் தலைமை ஏற்றுச் செல்லுங்கால் "பகை தணிவினைப் பிரிவு என்றும், பிறர் தலைமையின் கீழ்ப் போதல் "வேந்தர்க்குற்றுமிப் பிரிவு' என்றும் கூறப்படும்.
"தானே சேறலும் தனினொடு சிவனி
ஏனோர் சேறலும் வேந்தனர் மேற்றே. *
- (பொருளி, 29)
மூவகைப் பிரிதலைப் பற்றி மேற்காட்டிய சூத்திரங்களிற் பார்த்தோம். இத்துடன், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் அமைந்துள்ள தெய்வங்களின் திருவிழாக் காரணமாகவும், இந்நால்வகை நிலங்களில் வாழ்கின்ற மக்களின் அறநெறி குன்றியவிடத்து, அதனை விலக்கித் தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும், வாழ்வதற்குப் பொருளிட்டுவதற்காகவும் தலைமகனின் பிரிவு அமையலாமென்றும் சூத்திரம் வகுத்துள்ளார் தொல்காப்பியர்.
"மேவிய சிறப்பினி ஏனோர் பழமைய
முலிலை முதலாச் சொல்லிய முறையாற் பிழைத்தது பிழையா தாகலி வேனிடியும் இழைத்த ஒனர்பொருள் doշաaրծ մfl362/. ՞
- (பொருள். 3O

Page 79
730 (தொல்கzசியத் தேன் துனிசன்
தொல்காப்பியர் காலத்தில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகையினர் இருந்துள்ளனர். இவர்களில் அரசரைவிட அந்தணர் முதல் இடத்தில் வைக்கப்பட்டும், மதிக்கப் பட்டுமுள்ளனர். தெய்வ வழிபாட்டுத் தொடர்பான பிரிவில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகையினரும் பங்குபற்றலா மென்று சூத்திரம் கூறும்.
“மேலோர் முறைமை நாலிவர்க்கும் உரித்தே."
- (GLIIIditat. 31)
மக்களைக் காப்பது மன்னன் கடமை. மன்னன் பொறுப்பில் உள்ள காவல் தொழிலை அவனுக்குத் துணையாக ஏவல் வழி நின்று வரும் வணிகரும், வேளாளரும் செய்வதற்கு உரிமையுடை யோராவர். இதில் அந்தணர் விதிவிலக்குப் பெற்றுள்ளனர். அவர்கள் அறநெறி வாழ்முறைகளில் ஈடுபடுவர்.
“Tup6of6o7f Lumsýaélosof filosofØsommf i egég Lu. ”
— (Glштd56яf. з2)
வணிகர், வேளாளர் ஆகியவர்களில் உயர்ந்தோராகிய வணிகர் கல்வி கற்றல் நிமித்தம் பிரிதலும் உண்டாம் என்று தொல்காப்பியம் கூறும்.
“உயர்ந்தோர்க் குரிய ஒத்தி னான."
- (பொருள். 33)
தூதுபோதல் தொழில் வேந்தனுக்குரியது. ஆனால், வேந்தனால் வணிகர், வேளாளர் ஆகிய இருவரையும் அதற்கு உரியவராக்கப்படின் அவர்களும் தூது போகலாம் என்று சூத்திரம் கூறும். உரியவராக்கப்படின் என்றது அவர்கள் அமைச்சராக்கப்படின் என்றவாறு.
"வேந்துவினை இயற்கை வேந்தனி ஒரிஇய
ஏனோர் மருங்கினும் எய்திடனி உடைத்தே."
- (பொருள். 34)

യ്ക്കേ ഷ്ളിസ്ഥ) 737
மனிதன் வாழ்வதற்குப் பொருள் இன்றியமையாதது. நாடுவிட்டு நாடுசென்று பொருள் தேடுவது வழக்கம். வணிகர், வேளாளர் ஆகிய இரு வகுப்பினரும் குடும்பத்தாரிடமிருந்து பிரிந்து வேறு நாடுகள் சென்று பொருள் தேடி மீண்டும் வருவரென்று தொல்காப்பியம் கூறுகின்றது.
“பொருள்வயிற் பிரிதலும் அவர்வயினி உரித்தே."
- (பொருள். 35) அந்தணரும் பொருள் தேடல் தொடர்பில் பிரியலாம். ஆனால் அவர்கள் தம் ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தி அதிலிருந்து விலகாது இருத்தல் வேண்டும். ஆசாரமும், கல்வியும் அவர் தேடும் பொருளாகும்.
"உயர்ந்தோர் பொருளிவயினி ஒழுக்கத் தான. "
- (பொருளி. 36)
தலைவன் தன் தலைவியையும் உடன் அழைத்துக்கொண்டு கடல் வழிப் பயணம் செய்யும் வழக்கம் கிடையாதெனச் சூத்திரம் அமைத்துள்ளார் தொல்காப்பியர்.
"முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை."
- (பொருள். 37)
அக்காலத்தில் கடற்பிரயாணத்தில் ஏற்பட்ட சிரமம், சிக்கல் காரணமாகப் பெண்கள் இப் பிரயாணத்தைச் செய்யக் கூடாதென்ற ஒரு வழக்கம் நடைமுறையில் வந்திருக்கலாம்.
தலைவன் தலைவியுடன் கடல் கடந்து செல்லும் வழக்கம் இல்லையென்பதால், அவளுடன் தலைவன் நிலவழிப்பிரிவு செய்யலாம் என்பது பொருளாகும். தொல்காப்பியர் காலத்தில் பெண்களுக்குக் கடற்பிரயாணம் தடைசெய்யப்பட்டதன் காரணம் தரப்படவில்லை. தந்திருப்பின் அதன் பொருள் நயத்திற்குரியதாகும்.

Page 80
732 (தொல்கம்மியச் சேன் துனிசன்
முந்நீர் வழக்கம்' என்பதை இளம்பூரணர் ‘கப்பல் வழியாகக் கடலில் செல்லும் பிரிவு' என்று பொருள் கூறுவர். அதே நேரம் நச்சினார்க்கினியர் 'ஓதல், தூது, பொருள் ஆகிய மூன்று நீர்மையால் செல்லும் பிரிவு' என்றும் பொருள் கூறியுள்ளார்.
முந்நீர் என்பது ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் என்பதாகும். இம் முந்நீரும் ஒன்றறக் கலந்ததுதான் கடல். இவ்வண்ணம் பொருள் கொள்வோரும் உளர். இன்னும், கடல் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முச் செயல்களையும் புரிந்து வருகின்றது என்பதும் ஒரு செய்தி.
களவொழுக்கத்தில் இருக்கும் பொழுது தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் வழக்கம் இல்லை. இல்வாழ்க்கையில் ஈடுபட்டபின் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையை நாடிப் போகும் வாய்ப்புக்கள் ஏற்படும். 'ஆசை அறுபது நாள். மோகம் முப்பது நாளர். என்பது உலகப் பழமொழி. பழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதுபோல், தலைவியுடன் வாழ்ந்த வாழ்வு தலைவனுக்குக் கசந்தது போலும். அகப்பொருள் நூல்களில் ஆறு வகைப்பட்ட பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. இறையனார் களவியல் என்னும் நூலில் அவ்வாறு தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.
"ஒதலி காவலி பகைதனி வினையே
வேந்தர்க் குற்றுமி பொருட்யினி பரத்தையெனி(று) ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே."
- (plgðLuur - 35)
(1) கல்வியின் பொருட்டும், (2) நாடு காத்தற் பொருட்டும், (3) சமாதானம் செய்யும் பொருட்டும், (4) அரசன் கட்டளைப்படி ஏதாவதொரு நிமித்தத்தின் பொருட்டும், (5) பொருள் ஈட்டுதற் பொருட்டும், (6) பரத்தை காரணமாகவும் பிரியும் போது தலைவன் தலைவியை உடன் அழைத்துக்கொண்டு செல்லும் வழக்கம் இருந்ததில்லை.
உலகியல் வழுவாகிய பரத்தமை எல்லாக் குலத்தார்க்கும் உரித்து என்று தொல்காப்பியமும், இறையனார் களவியலும் விதிகள் BnLD.

A. ه ح47عهzz 2ییazzقD
"பரத்தை வாயிலி நால்வர்க்கும் உரித்தே நிலத்திரி யினிற3 தெனிமனார் புலவர்."
- (பொருளி. 22O "காதற் பரத்தை எலிலார்க்கும் உரித்தே. ”
- (இறையனார் களவியல்)
மேற் காட்டிய ஆறு வகையான பிரிவுகள் தொடர்பில் தொல்காப்பியர் ஒவ்வொன்றிற்கும் கால எல்லைகளை வரையறுத்துக் கூறியுள்ளமை நோக்கற்பாலது. கல்வி கற்றல் தொடர்பான பிரிதல் மூன்று ஆண்டுகளுக்கு உட்பட்டிருக்க வேண்டுமென்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது.
"வேனிடிய கல்வி யானிடுமுனி நிறவாது."
- (Gurusoff. 166)
மன்னன் தொழிலாகிய தூதுபோதல், நாடு காத்தல், பகைதணி வினை ஆகிய பிரிவுகள் ஓராண்டுக்கு உட்படவே அமையுமென்று கூறப்பட்டுள்ளது. மேலும், பொருளிட்டல் தொடர்பான பிரிதலுக்கும் ஓராண்டுக்கு மேற்படாத கால எல்லையே குறிக்கப்பட்டுள்ளது.
"வேந்துறு தொழிலே யானிடினது அகமே."
- (பொருளி. 187) “ஏனைப் பிரிவும் அவிவியலி நிலையும்.”
- (Gurusaf. 168 )
பரத்தையர் பிரிவில் நின்ற தலைவன், தலைவி பூப்பெய்திய செய்தி கேட்டு, அவளை நாடி வந்து, பூப்புத் தோன்றி நிகழும் மூன்று நாளும் அவள் சொற்படி ஒழுகி நின்று, அதன் பின்னான பன்னிரண்டு நாளும் அவளுடன் மருவிக் கூடி நின்று, அவளைப் பிரியாது இன்புற்றிருப்பான். இவ்வண்ணம் மாதத்தில் பதினைந்து

Page 81
134 G2توضعهشامعتصمو தேன் துனிசன்
நாட்கள் அவளைப் பிரியாதிருப்பான். மறு பதினைந்து நாளும் பரத்தைபாற் பிரியும் வாய்ப்பும் உண்டாம். இச்சூத்திரத்தில் மக்கட் பேற்றின் பெருமை பேசப்பட்டுள்ளமை காண்க.
"பூப்பினர் புறப்பாடு ஈராறு நாளும்
நீத்தகன்று உறையார் எனிமனார் புலவர் பரத்தையிர் பிரிந்த காலை யான. "
- (பொருளி. 185)
தலைவன் தலைவியுடனும் காமக்கிழத்தியுடனும் வெளியிற் சென்று, ஆற்றிலும் குளத்திலும் பாய்ந்தாடியும், இளமரக்காவிற் சென்று விளையாடியும் இன்பம் அனுபவிப்பரென்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது. தலைவியானவள் இவ்வாறு காமக்கிழத்தியுடன் சென்று இன்பம் அனுபவித்திருப்பாளோ என்பதில் ஐயப்பாடு தோன்றுகின்றது.
"யாறுங் குளனும் காவும் ஆழப்
பதிஇகந்து நுகர்தலும் உரிய எனிய"
- (Guildsit. 189)
இன்னும், போர் முனைக்குப் போகும் பொழுது தலைவன் தலைவியோடு சென்று கூடியிருக்கும் வழக்கம் இருக்கவில்லை.
“எனினரும் பாசறைப் பெனினொடும் புணரார்."
- (பொருளி. 173)
ஆனால், போர்முனைப் பாசறையில் தலைவன் பரத்தையருடன் பரத்தமையில் ஈடுபடுவதும் உண்டாம்.
"புறத்தோர் ஆங்கணி புணர்வ தாகும்."
- (GLT16t. 174)
தமிழினத்தின் ஒற்றுமை, இனிய குடும்ப வாழ்வு, மக்கட்பேறு போன்றனவற்றை அன்றைய ஆன்றோர் தம் மனத்திலிருத்தி

Naz ബക്രിസ്ഥ) 735
இவ்வாறான கட்டுப்பாடு, ஏற்பாடு களைக் கொண்டுவந்துள்ளமை அவர்களின் தீர்க்கதரிசனச் சிந்தனை களை எடுத்துக்காட்டுகின்றது.
மேலும், தொல்காப்பியர் காலத்தில் எக் குலப் பெண்களும் மடலேறும் செயலை மேற்கொள்வதும் கிடையாதாம்.
“எத்தினை மருங்கினும் மகடூஉ மடனிமேலி
பொற்படை நெறிமை இனிமை யான."
- (பொருள். з8)
மடலேறல் அழகுதரும் செயலன்று. எனவே, இதை மகளிர் செய்யமாட்டார்கள். ஆனாலும், பெண்கள் காம நோயால் வருந்திய பொழுதிலும் மடல் ஏறாது தம் துயரைத் தாங்கிக் கொள்ளும் வல்லமை உடையவர்கள். ஆனால், ஆண்களோ காம நோயால் வருந்துங்கால் தம் வீரம், ஆண்மை, நாணம் போன்றவற்றையும் மறந்து தம் கைகூடாக் காதலுக்காகக் காதலியை நினைந்து மடலேறி வெற்றியும் காண்பர். மடலேற முடியாத மகளிர்க்காகவும், தமக்காகவும் மடலேறிய ஆண்கள் ஊரைக் கூட்டித் தம் காதலை எடுத்துக் காட்டி வெற்றியும் பெறுவர். வெற்றி கிட்டாதெனின் மடலேறும் வழக்கம் அந்நாளில் நிலைத்திருக்காது. மடலேறும் முறை இந்நாளில் அருகி வந்துள்ளது.
இதுகாறும் அந்தணர், மன்னர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகைக் குலத்தினரும் தெய்வ வழிபாடு, கல்வி கற்றல், தூது போதல், காவல் தொழில், பொருளிட்டல், பகை, பரத்தையிற் பிரிவு, ஆகியவை தொடர்பில் தமது குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து சென்று வந்துள்ளனர் என்பதையும், அவற்றிற்கான பிரிவின் கால எல்லைகளையும் மேற்காட்டிய தொல்காப்பியச் சூத்திரங்களிலிருந்து கற்றுக் கொண்டோம்.
இதில், தெய்வ வழிப்ாடு தொடர்பான பிரிதலில் நால்வகைக் குலத்தினரும், கல்வி கற்றல் தொடர்பான பிரிதலில் வணிகரும், தூது போதல் தொடர்பான பிரிதலில் வணிகர், வேளாளரும், காவல் தொழில் தொடர்பான பிரிதலில். மன்னர், வணிகர், வேளாளரும்,

Page 82
736
பொருளிட்டல் தொடர்பான பிரிதலில் வணிகர், வேளாளரும், அந்தணர் பொருளிட்டல் தொடர்பில் பிரிவதாயின் அது ஆசாரம், கல்வி தொடர்பில் அமையவேண்டுமென்றும், பகை தொடர்பான பிரிதலில் மன்னரும் பங்கேற்றிருந்தனர் என்பதும் தெளிவாகின்றது.
༄།།
இன்னும், அந்தணருக்குத் தெய்வ வழிபாடு, ஆசாரம், கல்வி போன்றனவற்றைக் கொடுத்து அவர்கள் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கல்வி கற்றல் தொடர்பான பிரிதலில் வணிகர் மாத்திரம் பங்கேற்கலாமென்றதும், வேளாளருக்கு இது மறுக்கப்பட்டதற்கான காரணத்தையும் கூறப்படவில்லை என்பதும் நோக்கற்பாலது. இன்று இந்நிலை மாற்றமடைந்து யாவருக்கும் கல்வி என்றாகியுள்ளது.
வேளாண்மைத் தொழில் குன்றிவிடுமோ என்ற அச்சம் காரணமாக வேளாளருக்குக் கல்வி கற்றல் தொடர்பான பிரிதலில் பங்கேற்க மறுக்கப்பட்டனர் போலும்.
இன்னும், கடல் கடந்து செல்லும் வழக்கமும், மடலேறும் வழக்கமும் அன்றைய மகளிரிடம் இருந்ததில்லை என்பதையும் மேற் காட்டிய பாடல்களில் பார்த்தோம். இதில் முன்னது அருகியும், பின்னது இன்றும் நிலைத்திருப்பதையும் காணலாம்.
எக்கால மக்களிடத்தும் சீரும், சிறப்பும், குதூகலமும் அமைந்த குடும்பத்தில் பிரிவு ஏற்படுத்த விரும்பாத பண்டைத் தமிழ் ஆன்றோர் மேற் காட்டிய வரையறைகளை வகுத்துத் தந்துள்ளனர் என்பதையும், அவர் தம் பின்னவரின் வாழ்க்கைமுறை சீர்பெற்றமைய வேண்டு மென்ற வேட்கை கொண்டிருந்தமையையும் உணரும் நாம் அவரை என்றும் நினைந்து, மகிழ்ந்து, உருகி நிற்பது எம்மனைவரின் 85L60)LDu JTg5tb.
S.
R
s

737
A24Z7z56Zár Zg5ZZő éZZZZő ZZZZ7 46o4Zớ 6297zớá5/7Z%Zớ
Tib வாழும் பூமிப் பந்தானது ஒரு காலத்தில் சூரியனின் ஒரு பகுதியாக இருந்தது. இயற்கை மாற்றத்தால் சூரியன் வெடித்த பொழுது, பூமி அதிலிருந்து தெறித்து வேறாகப் பிரிந்தது. அப்பொழுது பூமியும் சூரியனைப்போல் எரிந்து கொண்டுதான் இருந்தது. நாளடைவில் பூமியின் மேற்பரப்பு ஆறிக் குளிர்ச்சியடைந்தபொழுது அதில் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனால், பூமியின் உட்புறம் சூடாகவே இன்றும் எரிந்து கொண்டுதானிருக்கின்றது. எரிமலையும், அக்கினிக் குழம்பும், பூகம்பமும் இதற்குச் சான்று பகரும்.
உயிரினங்கள் தண்ணிரிலேதான் முதன் முதல் தோன்றின. அவை கண்ணுக்குத் தெரியாத அணுவாகத்தான் இருந்தன. அதன் உடல் இறுகிய திரவமாக இருந்தது. அதில் தலை, கால் இல்லை. ஆண், பெண் இனமுமில்லை. செடியென்றோ, விலங்கென்றோ கூற முடியாத நிலை. அவை தண்ணிரிற்றான் உயிர்வாழ முடிந்தது. நாளடைவில் இவ்வணுவிலிருந்து உயிர்கள் தோன்ற ஆரம்பித்தன. இவற்றுள் கடற்பஞ்சு ஒன்று. பின் தாவரம், பிராணி என்ற வேறுபாடு வெளிப்பட்டது. அதன்பின் புழு, சங்கு, நண்டு, பூச்சி, மீன், தவளை

Page 83
738 (தொல்காட்சியத் தேன் മയ്യ
ஆகிய பிராணிகள் தோன்றின. ஆண், பெண் பாகுபாடும் தோன்றின. பிராணிகளின் உடல்கள் வன்மை பெற்றன. மீன், தவளை போன்றன வற்றின் உடலில் எலும்புகளும் அமைந்தன. இவை நிலத்திலும், நீரிலும் வாழத் தொடங்கின. தவளைக்குப்பின் பல்லி, பாம்பு, பறவை, பசு, குரங்கு போன்ற விலங்குகள் தோன்றின. அதன்பின், கடைசியாக மனிதன் தோன்றினான். இவ்வண்ணம் கூறிநிற்பது விஞ்ஞானம்.
ஆனால், இற்றைக்கு ஏழாயிரம் (7000) ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தொல்காப்பியனார், உயிர்களின் பாகுபாட்டை ஓரறிவில் இருந்து ஆறறிவுவரை வகைப்படுத்தி ஒரு மேல்நிலை விஞ்ஞானியை விஞ்சும் முறையில் நிரல்படுத்திக் கூறியுள்ள பாங்கினை ஈண்டுக் காண்போம்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரணிடறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நானிகறி வதுவே அவற்றொடு கணினே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனமே நேரிதினி உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. 7
- (GLITotsif. S71)
உயிர்களை ஆறுவகைப்படுத்திக் காட்டும் இச் சூத்திரத்தின் பொருள் இவ்வாறு அமைகின்றது.
1. உடம்பினால் அறிவது ஓரறிவுள்ள உயிராகும்.
2. உடம்பினாலும், வாயினாலும் அறிவது ஈரறிவுளிள
உயிராகும்.
3. உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும் அறிவது
மூவறிவுள்ள உயிராகும்.
4. உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும்
அறிவது நாலறிவுள்ள உயிராகும்.

ez ه ح42عهzz قصاص2یی D 739
5. உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும் அறிவது ஐயறிவுள்ள உயிராகும்.
6. உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும், மனத்தினாலும் அறிவது ஆறறிவுள்ள உயிராகும்.
மேலும், தொல்காப்பியர் உலகிலுள்ள உயிரினங்களான தாவரம், மரம், பிராணி, விலங்கு, பறவை, மக்கள், தேவர், அசுரர், இயக்கர் என்று கூறப்பட்ட அனைத்தையும் ஆறுவகைப்பட்ட உயிர்ப் பட்டியலில் அமைத்துக் காட்டிய சிறப்பினையும் இங்குக் காண்போம்.
1. ஒரறிவு உயிர்கள்
மேல் நாட்டார் தாவரங்களுக்கு உயிர் உள்ளதென்று கூறுவதற்கு முன்பே தொல்காப்பியர் தாவரங்களுக்கு உயிர் உண்டென்று சூத்திரம் அமைத்தமை காண்க. புல், மரம் முதலியன ஓரறிவு கொண்டனவாம். கொட்டி, தாமரை ஆகியனவும் இவற்றுடன் சேரும்.
புலிலும் மரனும் ஒரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே."
- (Guiditat. 572)
இன்னும் ஓரறிவுயிரான புல், மரம் ஆகியவற்றின் சிறப்பு மரபுகள் பற்றித் தொல்காப்பியம் இவ்வாறு கூறுகின்றது.
"புறக்கா முனவே புலிலெனப் படுமே."
- (பொருள். 63O
புற வைரமுள்ள தென்னை, பனை, கமுகு, மூங்கில் முதலிய வற்றையும் புல்லென்று கூறுவர். இவை பெரும் புயலுக்குச் சரிந்து முறிந்து விழக்கூடியவை.

Page 84
740 (தொல்காம்மியத் தேன் துனிசன்
அகக்கா முனவே மரமெனப் படுமே."
- (6LITchaif. 631)
உள் வைரம் உள்ள வேம்பு, தேக்கு ஆகியவற்றை மரமென்று கூறுவர். இவை பெரும் புயலையும் எதிர்த்து நிற்கக் கூடிய மரங்கள். தோடு, மடல், ஒலை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலை என்பனவும், பிறவும் புறவைரமுள்ள புல்வகையின் உறுப்புகளெனக் கூறித் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்தமை காண்க.
"தோடே மடலே ஓலை எனிறா
ஏடே இதழே பாளை எனிறா ஈர்க்கே குலையே சேர்ந்தன பிறவும் புலிலொடு வருமெனச் சொலிலினர் புலவர்."
- (GLIditat. 632)
உள் வைரமும், புற வைரமுமில்லாத வாழை, ஈந்து, தாமரை, கழுநீர் ஆகியனவும் புல்லெனப்படுமாம்.
மரவகையின் உறுப்புகளை இலை, முறி, தளிர், தோடு, சினை, குழை, பூ, அரும்பு, நனை எனத் தொல்காப்பியம் கூறும். உள்ளும், புறமும் வைரமில்லாத முருக்கு, தணக்கு ஆகியனவும் மரமெனப்படும்.
"இலையே முறியே தளிரே தோடே
சினையே குழையே பூவே அரும்பே நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம் மரனொடு வருஉம் கிளவி யென்ப."
- (Gurdj6.f. 633)
இன்னும் காய், பழம், தோல், செதிள், வீழ் என்ற உறுப்புகள் மேற் கூறிய புல், மரம் ஆகிய இருவகைக்கும் பொதுவாக வருமென்றும் சூத்திரம் கூறுகின்றது.

A. سه حليمهOzeهلیتarzقD 747
"காயே பழமே தோலே செதிளே
விழோ டெனிறாங் கவையு மனின."
- (GLIrulaif. 634)
ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியனார் புல்வகை உறுப்புகளுக்கும், மரவகை உறுப்புகளுக்கும், இவ்விரண்டிற்கும் பொதுவாயமைந்த உறுப்புகளுக்கும் தனித்தனிப் பெயர்களை அன்றே அமைத்தும், அவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து இன்றும் நம் மத்தியில் உலாவருவதும், தமிழன் பெருமை பேசும் செயலென்ப.
இற்றைக்கு எண்ணாயிரம் (8000) ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த திருமூலர் அரச மரத்தை நாடி, யோக நிட்டை புரிந்து, மூவாயிரம் திருமந்திரங்களை மூவாயிரம் ஆண்டில் பாடியருளினார். "சேர்ந்து இருந்தேன் சிவ போதியின் நிழலில்.’ என்பது அவர் மந்திரம். போதி என்பது அரச மரம். ஆரச மரத்தின் மகிமையை அன்றே அறிந்து இருந்தவர் திருமூலர்.
தாவரங்களுடன் தமிழனுக்குப் பல்லாயிரம் ஆண்டுத் தொடர்புண்டு. மரங்களில் ஆல், அரசு, வேம்பு, வில்வம், மருதம் போன்றவற்றைத் தெய்வமரங்களாகப் போற்றி வருகின்றனர். இப்படியான மரங்களின்கீழ் தமிழர்கள் கோயில்கள் கட்டி வணங்கி வருகின்றனர். மேற்கூறிய மரங்கள் 95 சதவிகிதமான பிராண வாயுவை வெளியில் விடுகின்றன. இது கோயில்களில் கூடும் மக்களுக்குப் பெரிதும் உதவுகின்றது. இன்னும், தமிழர் தம் வீட்டுக்கு முன்னால் ஒரு வேப்ப மரத்தை நட்டு வளர்த்து வரத் தவறுவதில்லை.
2. ஈரறிவு உயிர்கள்
நந்தும், முரளும் ஈரறிவுடையன. இன்னும் பிறவும் உள. நந்து' என்று கூறியதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பனவும் ஈரறிவுடையனவாம். முரள் என்று குறிப்பிட்டதனால் சிப்பி, கிளிஞ்சி, ஏரல் என்பனவும் ஈரறிவுள்ளனவாகக் கொள்ளல் வேண்டும்.

Page 85
(செசல்சாம்பியத் தேன் துனிசன்
'நந்தும் முரளும் ஈரறி வினவே பிரவுர் உளவே அக்கினைப் பிறப்பே."
Wፋ፲፰
- (பொருஎர். 573)
3. மூவறிவு உயிர்கள்
சிதலும், எறும்பும் மூன்று அறிவினையுடையவை. என்பதனால் அட்டை போன்றனவும் இதிலடங்கும்.
"சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே."
- (பொருளி. 574)
பிறவும்
4. நானறிவு உயிர்கள்
நண்டும், தும்பியும் நாலநிவுடைய உயிர்கள். பிறவும் என்பதனால் ஞமிறு, சுரும்பு போன்றனவும் நான்கு அறிவினை உடையனவாம். ஞமிறு - வண்டு, தேனி சுரும்பு - வண்டு.
'நண்டும் துர்பியும் நாணிகறி வினவே பிறவுர் உனவே அக்கிளைப் பிறப்பே."
- (பொருள், 575)
5. ஐயறிவு உயிர்கள்
நாற்கால் விலங்குகளும், பறவைகளும் ஐவகை அறிவினைக் கொண்டவை. இவற்றுடன் பாம்பு, மீன், முதலை, ஆமை போன்றனவும் ஐவகை அறிவினை உடையனவாம்.
"மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே."
- (பொருள். 575)

sr. விசயரத்தினர்) 3.
6 ஆறுறிவு உயிர்கள்
மக்கள் ஆறறிவு படைத்தவர்கள். இவர்களுடன் தேவர், அசுரர், இயக்கர் என்பாரும் ஆறறிவு கொண்டவர்களாம்.
"மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. "
— (Gl//Tдб6ѓ. 577)
மேலும் கிளி, குரங்கு, யானை முதலிய பறவையும், விலங்குகளும் ஆறறிவு கொண்டவையாகக் கணிக்கப்படும் என்று கூறுவர்.
"ஒருசார் விலங்கும் உளவென மொழிப."
- (பொருள். 573)
மேற்காட்டிய சூத்திரங்களில் புல், மரம் போன்றனவற்றை ஓரறிவு உயிர்களில் அடக்கி, வேறுபட்ட பிராணிகளை ஈரறிவு, மூவறிவு, நாலறிவு உயிர்களிற் பகுத்துக் கூறி, நாற்கால் விலங்குகளையும் பறவைகளையும் ஐயறிவு உயிர்களிற் காட்டி, ஆறறிவுடைய மக்கள், தேவர், அசுரர். இயக்கர் முதலானோரை ஆறறிவு உயிர்களிற் சேர்த்துக் காட்டிய பெருமை தொல்காப்பியரைச் சாரும்.
இந்தியத் தாவரவிஞ்ஞான மேதை ஜே.சி. போஸ் (30.11.1858 - 23.11.1937) அவர்கள் தாவரங்களுக்கு உயிர், உணர்ச்சி, அறிவு உள்ளதென்பதை நிரூபித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றவர். ஆனால் இதற்குப் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல்காப்பியனார் தாவரத்தின் உயிர், உணர்வு, அறிவு பற்றியும், மற்ற உயிரினங்களின் அறிவு, உணர்வு, உயிர் பற்றியும் விபரமாக எடுத்துக் கூறிச் சூத்திரங்கள் அமைத்தமை காண்க.
இவற்றை ஊன்றிக் கவனித்தால், தொல்காப்பியர் காலத்தில் தாவரவியல், உடற்கூற்றியல், பறவையியல், விலங்கியல் போன்ற விஞ்ஞானத் துறைகளில் மேம்பட்டிருந்தமை புலனாகின்றது.

Page 86
744 G6ھzaھ قzتھے جو تر தேன் துனிசன்
மாணிக்கவாசகர் தாம் இய்ற்றிய சிவபுராணத்தில் புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனிவராய், தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று கூறியுள்ளமை ஈண்டு நோக்கற்பாலது.
՞նյ6ծ6ծոճlմ եւnամմ Ազքճ2Inամ տՄտnalմ
பலிமிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கலீலாப் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வலி அசுரர்ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நினிற இத்தாவர சங்கமத்துள் எலிலாப் பிறப்புமி பிறந்திளைத்தேணி எமிபெருமானி மெய்யேஉர்ை பொனினடிகளி கணிடினிறு விடுறிறேனர்."
Immam adfløgif
உயிரினங்கள் அனைத்தும் பரிணாம வளர்ச்சிக்குட்பட்டு வளர்ச்சியடைகின்றன. அவ்வாறே உயிரினங்கள் ஓரறிவிலிருந்து ஆறறிவுவரை வளர்ச்சியடைந்துள்ளன. புல், செடி, கொடி, மரம், பிராணி, நாற்கால் விலங்கு, பறவை ஆகியவற்றினதும், மக்கள், தேவர், அசுரர், இயக்கர் போன்றோரினதும் உயிர் வளர்ச்சியின் ஏறுநிலைப் பட்டியலைத் தொல்காப்பியர் கூற்றுத் தெளிவுபடுத்தி நிற்கின்றது.
இனி, ஆறறிவு மனிதனுடன் உயிர் வளர்ச்சி தடைப்பட்டு நின்று விடுமா? என்றொரு கேள்விக்கு விடை காணவேண்டிய நிலை யொன்று எழுகின்றது. என்றோ ஒரு நாள் ஏழறிவுடன் மனிதன் தோன்றுவான். அவன் அசாதாரண மனிதனாய், தேவநிலையாளனாய், ஆய்வறிவாளனாய், சிந்தனையாளனாய், மேம்பட்ட ஆற்றல் கொண்ட வனாய்த் தோன்றி ‘மாமனிதன்' (Superman) என்றழைக்கப் படுவான்.
ஆறறிவு படைத்த மனிதருள் ஒரு சிலர் மிக்க ஆற்றல், அறிவு, தெளிவு உள்ளவர்களாய்த் திகழ்வதை நாம் இன்றும் காண்கின்றோம்.

Naz ബ്ബ 745
இவ்வகையில் விவேகானந்தர், காந்தி, யேசு, திருமூலர், நபிநாயகம், திருவள்ளுவர், அகத்தியர், தொல்காப்பியர், ஆறுமுகநாவலர் போன்றோரைக் குறிப்பிடலாம். இவ்வாறான ஒரு வகுப்பினர் ஏழறிவுடன் தோன்றுவர். அல்லது விஞ்ஞான ரீதியில் உருவாக்கப்படுவர். இவர்களே மாமனிதரும் ஆவர்.
இளமைப் பெயர்கள்
இனி, வழிவழித் தொடரான சிறப்பினையுடைய மரபிலக்கணம்
பற்றித் தொல்காப்பியர் கூற்றையும் கவனிப்போம். பார்ப்பும்', 'பறழும், 'குட்டியும்’, ‘குருளையும்', 'கன்றும்', 'பிள்ளையும்’, ‘மகவும், மறியும்', 'குழவியும் ஆகிய ஒன்பதும் தொகுத்துக் கூறப்பட்ட இளமை குறிக்கும் பெயராகும்.
"மாற்றருஞ் சிறப்பினி மரபியலி கிளப்பிலி
பார்ப்பும் பறமுங் குட்டியும் குருளையும் கணிறுமி பிள்ளையும் மகவும் மறியுமெனிறு ஒனபதுங் குழவியோ டிளமைப் பெயரே. 7
- (GLIIIdiot. S45)
மேற்கூறியவற்றுள் பார்ப்பு', 'பிள்ளை' என்னும் இரண்டும் பறவையினதும், ஊர்வனவற்றினதும் இளமைப் பெயர்களாகும்.
"பார்ப்புமி பிள்ளையும் பறப்பவற் றிளமை."
- (GLIIIditat. 548)
'தவழிபவை தாமும் அவற்றோ ரனின. "
- (பொருள். 549)
மூங்கா (கிரி), வெருகு (காட்டுப் பூனை), எலி, மூவரி (அணில்), என்பனவற்றின் இளமை குட்டி' என்று பெயர் பெறும். இன்னும்,
இவற்றைப் பறழ் என்றும் கூறலாம். இதனால் ஒரு தவறும் இல்லை என்று தொல்காப்பியம் கூறுகின்றது.

Page 87
746 (தொல்கzசியத் هوaz துனிசன்
“மூங்கா வெருகெலி மூவரி யணிலொ டாங்கவை நான்குங் குட்டிக் குரிய."
- (பொருள். 550)
"பறழெனப் படினும் உறழானி டிவிலை."
- (பொருள். 551)
மகவும்', 'பிள்ளையும்', 'பறழும்', 'பார்ப்பும்' ஆகிய இந்நான்கு பெயர்களும், குட்டியென்னும் பெயருடன், குரங்கின் இளமைக்கு உரியனவென்று கூறுவர்.
கோடுவாழி குரங்குங் குட்டி கூறுய."
- (Guru,6t. 557)
மகவும் பிள்ளையும் பறமும் பார்ப்பும் அவையும் அணின அப்பா லான."
- (ബffണ്. 658)
நாய், பன்றி, புலி, முயல், நரி என்பனவற்றின் இளமை 'குருளை என்றும், 'குட்டி’ என்றும், பறழ் என்றும் பெயர் பெறும்.
“நாயே பணிறி புலிமுயலி நான்கும் ஆயுங் காலைக் குருளை யென்ப."
- (பொருள் 552)
*நரியும் அற்றே நாடினர் கொளினே. "
- (பொருள். 553)
"குட்டியும் பறழுங் கற்றவணி வரையார்."
- Gundreif. 554)
பன்றி, புலி, முயல், நரி என்பனவற்றின் இளமை பிள்ளை' என்றும் கூறுவர்.

4A ح47عهzzz 2ییarقض D 747
"பிள்ளைப் பெயரும் பிழைப்பாணி டிலிலை கொள்ளுங் காலை நாயலங் கடையே, '
- (பொருள். 555)
ஆடு, குதிரை, நவ்வி (புள்ளிமான்), உழை, புல்வாய் (கலைமான்), ஆகிய ஐந்தின் இளமை 'மறி’ என்னும் பெயர் பெறும்.
"ஆடுங் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புலிவாய் உளப்பட மறியே."
— (GaQLurTqd56af. 556)
யானை, குதிரை, கழுதை, கடமை (காட்டுப்பசு), மான், எருமை, கராம் (கரடி), மரை, கவரிமான், ஒட்டகம் ஆகிய பத்தின் இளமையும் 'கன்று' எனப் பெயர் பெறும்.
'யானையும் குதிரையும் கழுதையும் கடமையும்
மானோ டைந்தும் கனிறெனறி குரிய, "
(பொருளி. 559)
"எருமையும் மரையும் வரைLா ராணிடே"
- (பொருள். 56O)
"கவரியும் கராமும் நிகரவற் றுள்ளே."
- (பொருள், 561) "ஒட்டகம் அவற்றோ டொருவழி நிலையும்."
- (GLIIIditat. 562)
யானை, பசு, எருமை, கடமை, மரை, குரங்கு, முசு, ஊகம் (கருங்குரங்கு) ஆகியவற்றின் இளமை குழவி' எனப் பெயர் பெறும்.

Page 88
தென் துனிசன் یعzzz۶ به ویه G2
"குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை"
- (பொருள். 563)
"ஆவும் எருமையும் அதுசொலப் படுமே."
- (பொருளி. 564)
"கடமையு மரையு முதனிலை யொன்றும்."
- (GLIIditat. 565)
*குரங்கும் முசுவும் ஊகமும் மூனிறும்
நிரம்ப நாடினி அப்பெயர்க் குரிய, "
- (Gurdj6t. 566)
'பிள்ளை', 'குழவி', 'கன்று', 'போத்து' என்னும் நான்கும் ஓரறிவுயிரின் இளமைப் பெயராக வரும். ஆனால் இந்த நான்கின் இளமைப் பெயர்கள் புல், நெல் போன்ற ஓரறிவுயிர்க்குப் பொருந்தாதாம்.
"பிள்ளை குழவி கணிறே போதிதெனக் கொள்ளவும் அமையும் ஒரறி வுயிர்க்கே."
- (GLIdolf. 568)
“நெலிலும் புலிலும் நேர7 ராணிடே."
- (GLITutólf. 569)
இன்னும், ‘குழவி', 'மகவு ஆகிய இரண்டு இளமைப் பெயரும் மக்கட்கு உரியனவாம்.
"குழவியு மகவு மாயிரணி டல்லவை
கிழவ வலில மக்கட் கணினே.”
(GLIIId56t. 567)

749 (رض٪۶zگیری z/4 کی۶صه z همه
ஆண்பாற் பெயர்கள்
’ஏறு', 'ஏற்றை’, ‘ஒருத்தல்’, ‘களிறு', 'சே', 'சேவல்’, ‘இரலை, "கலை", "மோத்தை’, ‘தகர்’, ‘உதள்’, ‘அப்பர்’, ‘போத்து', 'கண்டி’, ‘கடுவன்’ என்னும் பதினைந்தும், பிறவும், தொகுத்துக் கூறப்பட்ட ஆண்பாற் பெயரென்று தொல்காப்பியம் காட்டுகின்றது.
எருதும் ஏற்றையும் ஒருத்தலுங் களிறுமி சேவுஞ் சேவலும் இரலையுங் கலையும் மோத்தையுந் தகரு முதஞ மப்பரும் போத்துங் கணிடியுங் கடுவனும் பிறவும் யாத்த ஆணியாற் பெயரென மொழிப."
- (பொருள். 546)
தனித்தனிச் சிறப்புப் பெற்ற ஆண்பாற் பெயர்களைத் தொல்காப்பியர் கூறும் பாங்கினையும் காண்போம்.
ஆண் யானையையும், ஆண் பன்றியையும் 'களிறு' என்று சிறப்பித்துக் கூறுவர்.
'வேழக் குரித்தே விதந்துகளி றெனிறலி,"
- (பொருளிர் 579)
கேழற் கணினும் கடிவரை யினிறே. *
- (பொருள். 580)
புல்வாய், புலி, உழை (மான்), மரை, கவரி, கராம் (கரடி), நெடிய கொம்புடைய யானை, பன்றி, எருமை ஆகியவைகளின் ஆண் ‘ஒருத்தல்’ என்னும் பெயர் பெறுமென்று கூறுவது தொல்காப்பியம்.
புலிவாப் புலியுழை மரையே கவரி சொல்லிய கராமோ டொருத்தல் ஒனிறும்."
- (பொருள். se ひ

Page 89
750 G്രിമസ്ഥമ മങ്ങ് ജബ്ബ
62IITfG35nZ. aurana uni பணிறியும் அணின. "
- (பொருள். 532)
ஏற்புடைத் தெணிய எருமைக் கணினும்."
- (பொருள். 583)
பன்றி, புல்வாய், உழை, கவரி, எருமை. மரை, பெற்றம், சுறா ஆகியவற்றின் ஆண் ஏறு' எனப் பெயர் பெறும்.
பன்றி புலிவாப் உழையே கவரி என்றிவை நானிகும் ஏறெனற் குரிய"
- (பொருள். 534)
எருமையும் மரையும் பெற்றமும் அணின"
- (பொருள், 535)
கடலிவாழி சுறவும் ஏறெனப் படுமே."
- (பொருள், 536)
பெற்றம் (எருது), எருமை, புலி, மரை, மான், நீர் வாழ் முதலை, மயில், எழால் (புல்லுரு என்னும் பறவை) ஆகியவற்றின் ஆண் போத்து' என்னும் பெயர் பெறுவனவாம்.
பெற்றம் எருமை புலிமரை புலிவாய் மற்றிவை யெலிலாம் போத்தெனப் படுமே."
- (GLIIIdolf. 687)
நிர்வாழி சாதியும் அதுபெறற் குரிய."
- (Gurdist. 588)
மயிலும் எழாஅலுமி பயிலத் தோனிறும்."
- (பொருள். 589)

Naz قصصی وی راه ح47عهD 757 *7 மானின் ஆண்பாற்கு இரலை' என்னும் பெயரும், "கலை" என்னும் பெயரும் உரியனவாம்.
இரலையுங் கலையும் புலிவாய்க் குரிய."
- (GLIIIdolf. asso) உழைக்கும் குரங்குக்கும் "கலை" என்னும் பெயர் உரியதாகும்.
கலையெனர் காட்சி உழைக்கும் உரித்தே நிலையிற் றப்பெயர் முசுவினர் கணினும்."
- (GLITD6t. 597) ஆட்டின் ஆண்பாலுக்கு "மோத்தை', 'தகர்', 'உதள்', 'அப்பர் என்னும் பெயர்கள் உரியனவாம்.
மோத்தையும் தகரும் உதளும் அப்பருமி யாத்த எனிய யாட்டினி கணினே."
- (Gurditat. 592) மயில் தவிர்ந்த பிற பறவைகளின் ஆண்பெயர் 'சேவல் என்றுரைப்பர்.
"சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவனும் மாயிருந் துவி மயிலலங் கடையே."
- (GLIIIditat. 593) ஆற்றலொடு புணர்ந்த ஆண்பாற்கெல்லாம் ஏற்றை என்ற சொல் பொருந்துமென்றும் கூறுவது தொல்காப்பியம்.
ஆற்றலொடு புணர்ந்த ஆணர்பார் கெல்லாம் ஏற்றைக் கிளவி உரித்தென மொழிய."
- (பொருளி. 594) மேலும், ஆண்பால் உயிரெல்லாம் ஆண்’ என்னும் பெயர் பெறுமென்றும், பெண்பால் உயிரெல்லாம் "பெண்’ என்னும் பெயர் பெறுமென்றும் கூறுவர்.

Page 90
752 (சொல்காம்பியச் சேன் துனிசத்
ஆணியாலி எலிலாம் ஆனெனற் குரிய Guazzfuntað 6766Romzió Glu6oafGazowezauglý égfluu 4 IT60this 62/6062/II/6061 g/til IIT alraor.
(பொருள். 595)
பெண்பாற் பெயர்கள்
பேடை', 'பெடை', 'பெட்டை,பெண்,மூடு, நாகு, கடமை, அளகு, ‘மந்தி' 'பாட்டி', 'பிணை', 'பிணவு', 'பிடி’ என்னும் பதின்மூன்றும் தொகுத்துக் கூறப்ப்ட்ட பெண்பாற் பெயர்களாகும்.
"பேடையும் பெடையும் பெட்டையும் பெனினும்
மூடும் நாகுங் கடமையும் அளகும் மந்தியும் பாட்டியும் பிணையும் பினவும்
அந்தகுநீ சானிற பிடியொடு பெனினே."
- (பொருளி-547)
இனி, தொல்காப்பியனார் பெண்பாற் பெயர்களைத் தனித்தனிச் சிறப்புடன் கூறும் அழகினையும் பார்ப்போம்.
பெண் யானையைப் பிடி’ என்று கூறுவர்.
பிடியெனி யெணிபெயர் யானை மேற்றே. *
— (GLurtqd56stf. A596)
ஒட்டகம், குதிரை, கழுதை, மரை, பறவை ஆகியவற்றின் பெண், ‘பெட்டை' என்னும் பெயர் பெறும்.
ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை பெட்டை யெனினும் பெயர்க்கொடைக் குரிய"
- (GLIIIditat. 597)
புளிளும் உரிய அப்பெயர்க் கெனிய"
- (பொருளி. 598)

NZ ه ح۶یعهza2ییarzقD
"பேடை', 'பெடை' என்னும் சொற்கள் பெரும்பாலும் பெண் பறவையைச் சாரும்.
யேடையும் பெடையும் நாடிணி ஒன்றும்."
- (பொருள். 599) மயில், கோழி, கூகை ஆகியவற்றின் பெண், அளகு என்னும் பெயர் பெறும்.
கோழி கூகை யாயிரணி டல்லவை குழுங் காலை அளகெனலி அமையா."
- (GLITE6t. 6oo)
அப்பெயர்க் கிழமை மயிற்கும் உரித்தே."
- (Guruboit. 6O1)
புல்வாய், நவ்வி, உழை, கவரி ஆகியவற்றின் பெண், 'பிணை! என்னும் பெயர் பெறும்.
புலிவாய் நவ்வி உழையே கவரி
alæ16ð62/It BIggð tilsað6æralíusart tI()&to."
- (Guru,6t. 6O2)
பிணவு' என்னும் பெயரைப் பன்றி, புல்வாய், நாய் ஆகிய மூன்றின் பெண்பால் பெறும்.
பன்றி புல்வாய் நாயென மூன்றும் ஒன்றிய எனிய பினவெனி பெயர்க்கொடை."
-(Gurdj6t. 6O3)
பிணவல்' என்ற பெயரும் மேற்கூறப்பட்ட மூன்று வகைகளின் பெண்பாற்கும் உரியதாகும்.

Page 91
754 G29 تتكون تضعهمتهم كمتعام ഉണീഭയ
பினவலி எனினும் அவற்றினர் மேற்றே. *
- (Gurdj6t. 6O4)
பெற்றம், எருமை, மரை ஆகியவற்றின் பெண், 'ஆ' எனவும், நாகு' எனவும் பெயர் பெறும். நீர் வாழ் நந்தும் நாகு’ என்னும் பெண்பாற் பெயர் பெறுமென்பர்.
பெற்றமும் எருமையும் மரையும் ஆவே."
)605 .பொருள்( سه و
எருமையும் மரையும் பெற்றமும் நாகே."
- (G.IIIditat. 6O7)
நீர்வாழி சாதியுளி நந்தும் நாகே."
ATT) Gundaff. 6oe)
‘மூடு’, ‘கடமை' என்னும் பெயர்களைப் பெண் ஆடு தவிர்ந்த ஏனைய விலங்குகள் பெறமாட்டாது.
மூடுங் கடமையும் Lாடல பெறாஅ."
- (Guru.6t. 6O9)
பன்றி, நாய், நரி ஆகியவற்றின் பெண், “பாட்டி’ என்னும் பயரைப் பெறும்.
பாட்டி எனபது பணிறியும் நாயும்.
(பொருள். 6 to)
நரியும் அற்றே நாடினர் கொளினே."
- (GLIIIdolf. 671)

Naz விசவத்தினம்) 755
குரங்கு, முசு, ஊகம் ஆகியவற்றின் பெண்பெயர் 'மந்தி’ யாகும்.
குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி"
stmst பொருள். 612)
"பென்', 'பிணவு ஆகிய இரு பெயர்களும் மக்களின் பெண்பாற் குரியனவாம்.
பெனினும் பினவும் மக்கட் குரிய."
- (Gurdj6f 6O6)
மருவிய சில வழக்குச் சொற்கள்
மேலும், மருவிய சில வழக்குகள் பற்றித் தொல்காப்பியர் கூறுவதையும் காண்போம்.
குரங்கின் ஆணைக் கடுவன்' என்றும், மரத்தில் வசிக்கும் கூகையைக் கோட்டான்' எனவும், சிவந்த வாயினையுடைய கிளியைத் ‘தத்தை' எனவும், வெவ்வாய்ப் பூனையைப் பூசை எனவும், ஆண் குதிரையைச் சேவல்' என்றும், கருநிறப் பன்றியை 'ஏனம்' எனவும், ஆண் எருமையைக் கண்டி’ எனவும், முடிவாகக் கூறப்பட்ட D 605 வழக்குச் சொற்கள் இருப்பதால், கடமையை உணர்ந்தோர் இச் சொற்களையும் தவிர்க்கக்கூடாது என்று தொல்காப்பியனார் சூத்திரத்தில் அறிவுரை கூறுகின்றார்.
உலக வழக்கில் உள்ள நடைமுறைச் சொற்கள் பாதுகாக்கப் பட்டுப் பாவனையிலும் அமர்த்தப்பட வேண்டுமென்ற பெருநோக்குக் கொண்ட தொல்காப்பியனாரின் பேரெண்ணத்தை நினைந்து செயலாற்ற வேண்டியது நம் கடமையாகும்.

Page 92
756 Gിരിക്തമ മങ്ങ് ജയഭജ
குரங்கினி ஏற்றைக் கடுவனி என்றலும் மரம்பயிலி கூகையைக் கோட்டானி எனிறலும் செவ்வாய்க் கிள்ளையைத் தத்தை எனிறலும் வெவ்வாய் வெருகினைப் பூசை எனிறலும் குதிரையுள் ஆணினைச் சேவலி என்றலும் இருள்நிறப் பன்றியை ஏனம் என்றலும் எருமை ஆணினைக் கணிடி என்றலும் முடிய வந்த வழக்கினி உணிமையில் கடிய லாகா கடனறிந் தோர்க்கே."
- (பொருள். 613)
பெண், ஆண், பிள்ளை ஆகியவைகளைப் பொருந்தும் இடத்துக்கேற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டுமென்றும் தொல்காப்பியர் சூத்திரம் அமைத்தமை காண்க.
பெனினும் ஆணும் பிள்ளையும் அவையே."
- (Gurdj6t. 614)
நால்வர்க்கும் உரியவை
நான்கு இனத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியவர்களுக்கு உரியனவற்றைச் சீர்படுத்திச் சிறப்புறக் கூறும் சூத்திர அமைப்பையும் காண்போம்.
நூல், கரகம், முக்கோல், மணை ஆகியன, ஆராயுங்கால் அந்தணர்க்கு உரியனவாம்.
நூலே கரகம் முக்கோலி மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய."
- (GLIIIdiot... 615)
படை, கொடி, குடி, முரசு, குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகிய ஒன்பதும் பிறவும் செங்கோலையுடைய அரசர்க்கு உரியனவாம்.

AAZ ه حاجعهza2ی صarقصD 757
படையுங் கொடியுங் குடியும் முரசும் நடைநவிலி புரவியும் களிறுந் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொளர் செங்கோலி அரசர்க் குரிய. 7
- (பொருளி. 616)
மேலும், அந்தணர்க்குரிய மேற்கூறப்பட்ட நூல், கரகம், முக்கோல் ஆகிய முந்நூலும் மணையும் போன்றவை அரசர்களுக்கும் உரியன
என்றொரு பொருளும் உளவாம்.
அந்த னாளர்க் குரியவும் அரசர்க்கு ஒணிறிய வருஉம் பொருளுமா ருளவே."
- (பொருள். 617)
வைசிகன் வாணிகத்தினாலே வாழும் வாழ்க்கைக் குரியவனாவான். எண்வகை உணவான நெல்லு, காணம், வரகு, சிறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதுமை ஆகியவற்றைக் கூலமுஞ் செய்து விளைத்தலும் இவர் கடனாகும். மேலும், வைசிகருக்குக் கண்ணியும், தாரும் சொல்லப்பெற்றமையும் காண்க.
வைசிகனி பெறுமே வாணிக வாழிக்கை."
- (GLIIIdolf. 622)
மெய்திரி வகையினி எனிவகை உணவினர் செய்தி வரையார் அப்பா லான "
- (GLIIIdioif. 623) கணிணியும் தாரும் எனினினர் ஆணிடே"
- (GLITutoff. 624)
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் வாழ்க்கை மட்டும்தான் என்று வரையறையிடப்பட்டுள்ளது. உழுதுாண் வாழ்க்கையின்

Page 93
7.58 Gിരിക്കമ് മക്ക് ജയഭ
சிறப்பினை அன்று உணர்ந்துள்ளமை காண்க. வேளாளர் நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் பசிப்பிணி தீர்ப்பவர்களாக அன்றும் இருந்தனர்- இன்றும் இருக்கின்றனர். இனியும் இருப்பர் என்றும் கூறலாம்.
G362/6ITI76aof மாந்தர்க்கு உழுதுணி அலிலது இலிலென மொழிய பிறவகை நிகழ்ச்சி"
- (பொருள். 625)
மன்னரால் ஏவப்பட்ட தொழிலின் பிரகாரம், படையும் கண்ணியும் வேளாளர்க்கும் உரியனவாகும் என்று கூறுவர்.
வேந்துவிடு தொழிலிற் படையுங் கணினியும் வாய்ந்தன ரெனிய வவர்பெறும் பொருளே."
- (பொருளி. 526)
அந்தணர் அரசியல் பூண்டொழுகலாமென்று கூறப்படுகின்றது. அந்தணரொருவர் மன்னனுக்கு மந்திரியாகப் பதவி வகிக்கும் பொழுது கொடி, குடை, தார், கவரி முதலியன மன்னனாற்பெற்று அவரோடு ஒருநிலையில் இருத்தல் என்றவாறு.
அந்த னாளர்க் கரசுவரை வினிறே. *
- (GLITE6f 627)
அரசர், வணிகர் அல்லாதோர் படைக்கலவகை பெறாதோர் எனத் தொல்காப்பியனார் சூத்திரம் அமைத்துள்ளார்.
இடையிரு வகையோர் அல்லது நாடிலி படைவகை பெறாஅர் எனிமனார் புலவர்."
- (GLIrelief. 621)
வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், மா என்று கூறப்பட்டவை, அரசன் பெற்ற மரபினால் வணிகரும், வேளாளரும் பெறுவர் என்று தொல்காப்பியம் கூறும்.

Ez azzzzzøøawai D 7.59
"விலிலும் வேலும் கழலும் கணினியும் தாரும் ஆரமும் தேரும் மாவும் மணிபெறு மரபினர் ஏனோர்க்கு முரிய"
- (GLIIIdj6t. 628)
நூலின் மரபு
நூலின் மரபு பற்றித் தொல்காப்பியர் கூற்றைச் சிந்தைக்கெடுப்பது சிறந்ததாகும்.
செய்யுள், மரபு வழிப்பட்ட சொல்லினால் ஆக்கப்படல் வேண்டும். இது மரபு நிலையில் இருந்து திரிதல்படக் கூடாது. மரபுநிலை மாறுபடின் பொருள் சிதைவுற்று வழுவாயமைந்து விடும். வழக்கென்று கூறப்படுவது உயர்ந்தோர் கருத்தே. நூலின் நிகழ்ச்சியும் அவர்களுடையதே.
மரபுநிலை திரிதலி செய்யுட் கிலிலை log1/62pfh7 LILL- GharTeaseS7 6oTTeor... ”
- (பொருளி. 636) மரபுநிலை திரியின் பிறிதுயிறி தாகும்.
- (பொருள். 637)
வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான
- (GLITulsif. 638)
மரபுநிலை திரியாது சிறப்பு வாய்ந்தனவாய் அமையும் நூல்கள் முதலும், 'வழியும் என்று கூறப்பட்ட இருவகை நெறியையுடையனவாம்.
ŽoJTılsfilosop6v Alfiunt Lomz filluu 62/Ta67 உரையடு நூலிதாம் இருவகை நிலைய முதலும் வழியுமென நுதலிய நெறியின."
- (பொருள். 639)

Page 94
760 G6zھ قصzzتحصہ تھےبرےکےتر துனிசத்
முதனூல் - வழி நூல்
பிறவினைகளின்றி அறிவின் சான்றோன் யாத்தது முதல்நூல்' என்று கூறப்படும். சார்பு நூல் வழிநூலாகும். வழிநூலானது முனைவன் யாத்த முதன் நூலினைச் சார்ந்த நூலாகும்.
வினையினி நீங்கி விளங்கிய அறிவினி !pങ്ങങ്ങഖങ്ങ് കഞ്ഞ്ള ഗുള്ള ബക്രl.'
- (பொருள். 640)
வழியெனப் படுவது அதனி வழித்தாகும்."
- (பொருளி. 641)
வழிநூல் நான்கு வகைப்படும். அவையாவன: (1) முதல்நூல் ஆசிரியன் விரித்துக் கூறியதைத் தொகுத்துக் கூறுதலும், (2) அவன் தொகுத்துக் கூறியதை விரித்துக் கூறுதலும், (3) அவ்விரு வகையினையும் தொகை விரியாகச் சொல்லுதலும், (4) பிறமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்த்தலும் ஆகியனவாம்.
வழியினி நெறியே நால்வகைத் தாகும்."
- (Gudjat. 642)
தொகுத்தலி விரித்தலி தொகைவிரி மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தலோ டனைமர பினவே."
- (பொருள். 643)
'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்.’ என்று பாரதியார் கூறுவதற்கு முன்பே தொல்காப்பியர் பிறமொழி நூலைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்று இற்றைக்கு எண்ணாயிரம் ஆண்டுகளுக்குமுன் கூறியுள்ள செய்தி ஒரு தீர்க்கதரிசனத் தெய்வ வாக்காகும். தொல்காப்பியர் காலத்தில் மிகச் சிறந்த, தகுதிவாய்ந்த பிறமொழி நூல்கள் இருந்துள்ளமை அவர் கூற்றாற் தெளிவாகின்றது.

Ez azízzzzzašøazaá D) 167
காண்டிகை
குற்றமற்ற சூத்திரம் சொல்லும் முறையுடன் சூத்திரப் பொருளை மாற்றாது உள்ளவாறு எடுத்து விளக்கிக் கூறுவது காண்டிகை உரையாகும். மேலும். சூத்திரத்தில் அமைந்த சொற்பொருளினை விட்டு அகலாமல், விரிவுடன் பொருந்தி, குறித்த சூத்திரம் முடித்தற் பொருட்டு, ஏதுநடையினும் எடுத்துக் காட்டினும் பொருந்திய வாறு அமைகின்ற பொருள் நெறியினைக் கொண்டது காண்டிகை என்பர்.
பழிப்பிலி சூத்திரம் பட்ட பணியிலி
கரப்பினிறி முடிவது காணிடிகை யாகும்."
- (பொருளி. 647)
விட்டகலி வினிறி விரிவொடு பொருந்திச் சுட்டிய சூத்திரம் முடித்தற் பொருட்டா ஏது நடையினும் எடுத்துக் காட்டினும் மேவாங் கமைந்த மெய்நெறித் ததுவே."
- (பொருளி. 648) நூலின் இயல்பு
ஒத்த சூத்திரத்தாலும் காண்டிகையாலும் பொருள் மேற்கூறிய வகையதாய், பத்துக் குற்றமும் இன்றி, சிறந்த (முப்பத்திரண்டு வகை உத்தியோடு அமையுமாயின், நுட்ப அறிவினையுடைய புலவர் அதனை நூலென உரைப்பரென்று தொல்காப்பியர் நூலிற்கு இலக்கணம் அமைத்தமை காண்க.
ஒத்த சூத்திரம் உரைப்பிற் காணிடிகை மெய்ப்படக் கிளந்த வகைய தாகி ஈரைங் குற்றமும் இனிறி நேரிதினி
முப்பத் திருவகை உத்தியொடு புனரினி
நூலென மொழிய நுணங்குமொழிப் புலவர்."
- (பொருளி. 644)

Page 95
762 G6یۓzھ تعzzترz7zتھی بر தேன் துனிசன்
நூலின் சூத்திரம்
மேற் கூறப்பட்ட தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழி பெயர்த்தல் ஆகிய நால்வகையிற் கூறப்பட்ட பொருளோடு, சில எழுத்தினால் எழுந்த செய்யுளாகி, கூறுங்கால் பொருள் எல்லாம் உரையகத்தடக்கி, நுட்பமான பொருளுடன் கூடிய விளக்க முடையதாய், கேட்டைத்தராத் துணைச்சூத்திரங்களை உடையதாய், அளக்க இயலா அரும்பொருளையுடையதாய்ப் பலவகையிற் பயன் தருவது சூத்திரத்தின் தன்மையாகுமென்று கூறுவர் புலவர்.
மேற்கிளந் தெடுத்த யாப்பினுட் பொருளொடு சில்வகை யெழுத்தினி செய்யுட் டாகிச் சொல்லுங் காலை உரையகத் தடக்கி நுணிமையொடு புணர்ந்த வொணிமைத் தாகித் துளக்க லாகாத் துனைமை யெய்தி அளக்க லாகா அரும்பொருட் டாகிப் பலிவகை யானும் பயனிதெரி புடையது சூத்திரத் தியலியென யாத்தனர் புலவர்."
- (பொருள். 646)
நூற் குற்றங்கள்
நூற் குற்றங்களைத் தொல்காப்பியர் எடுத்துக் கூறுமிடத்து, கூறியது கூறல், மாறுபடக் கூறல், குன்றக் கூறல், மிகைபடக் கூறல், பொருளில கூறல், மயங்கக் கூறல், கேட்போர் வருந்தக் கூறல், பழிச் சொல்லால் தாழ்வுண்டாகுமாறு கூறல், தானே ஒரு பொருளை நினைந்து கூறல், எப் பொருளையும் உறுதியாகப் பற்றாது உணர்த்தல் ஆகியனவும் பிறவும் என்று கூறியுள்ளார்.
சிதைவெனப் படுபவை வசையற நாடில் கூறியது கூறல் மாறுகொளக் கூறலி குன்றக் கூறலி மிகைபடக் கூறலி பொருளில கூறல் மயங்கக் கூறலி

യ്ക്കേ, ബജ്രിബ 763
கேட்போர்கீ கினினா யாப்பிற் றாதலி பழித்த மொழியானி இழுக்கக் கூறலி தனினா னொருபொருள் கருதிக் கூறலி எனின வகையினும் மனங்கோ எரினிமை அணின பிறவும் அவற்றுவிரி யாகும்."
- (பொருள், 654)
எதிர்மறுத்து உணர்வாராயின், அவ்வுணர்வும் குற்றமாம் என்று தொல்காப்பியம் கூறி நிற்கின்றது.
எதிர்மறுத் துனரினி அத் திறத்தவும் அவையே.
- (Gudjat. 655)
நூலின் உத்திகள்
நூலின் உத்திகள் பற்றித் தொல்காப்பியர் பின்வருமாறு விரித்துக் கூறுவதையும் க்ாண்க.
கூறிய பொருள் அறிதல், அதிகாரமுறை தொகுத்துக் கூறல், தொகுத்துக் கூறிய பொருளை வகைப்படக் கூறல், கூறிய பொருளோடு பொருந்தக் கூறல், கூறாத பொருளும் உரையில் அமையுமாறு கூறல், வாராததற்கு ஒதிய இலக்கணத்தை வந்ததுகொண்டு முடித்தல், வந்தது கொண்டு வாராததை முடித்தல், முன்மொழிந்த பொருளை மீண்டும் திருப்பிக் கூறாது முறைமாற்றிக் கூறுதல், உறுதி பெறச் சொல்லுதல், தன் கொள்கை கூறல், கூறும் முறையிற் கூறல், பிறர் ஏற்றுக்கொண்ட கூற்றைத் தானும் ஏற்றல், கூறபபடாத பொருளைக் காத்தல். முன் கூறியதைப் பின் கூறாது விடுதல், தானே பெயரமைத்தல், ஒருதலைப் பக்கக் கூற்றைத் தவிர்த்தல், கூறிய இலக்கணத்தை எடுத்துக் கூறல், உறுதிபட உரைத்தல், சூத்திரம் பலபொருள் தருமெனில் அவற்றில் சிறந்ததை ஏற்றல், மற்றவர் கூற்றை மறுத்துத் தன் முடிபைக் கூறல், பிறர் கொள்கையைச் சொல்லல், தான் அறியாப் பிறர் கூற்றை ஏற்றல், கூறவேண்டிய பொருள் இதுவென உணர்த்தல், சொல்லப்பட்ட எச்சங்களுக்குச்

Page 96
764
சொல்லியவற்றாற் பொருள் கொள்ளுதல், பொருந்தாமை தோன்றின் பொருந்துமாறு ஆய்ந்து உரைத்தல் ஆகியவற்றுடன் உண்மைபெற ஆராய்ந்து, சொல்லாத பிறபொருள் வந்தாலும் சொல்லிய வகையாற் சுருங்கக் கூறி, உள்ளத்தாற் குற்றமறத் தெரிந்துகொண்டு, சொல்லிய இனத்தோடு சேர்த்து, நுண்ணறிவினையுடைய புலவர்கள் தம் நூலினை யாத்துத் தரல் வேண்டுமென்று பல உத்திகளைத் தொல்காப்பியனார் கூறியுள்ளார். (தொல். பொருள். 656 )
இதுகாறும், ஓரறிவிலிருந்து ஆறறிவுவரையான உயிர்களின் பகுப்பு, சிறப்புப் பற்றியும், இளமைப் பெயர்கள், ஆண்பாற் பெயர்கள், பெண்பாற் பெயர்கள், அவற்றிற்குரிய மரபுகள் பற்றியும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நால்வகையினருக்கு உரியன பற்றியும், நூலின் மரபு, முதநூல், வழிநூல், காண்டிகை, நூலின் இயல்பு, நூலின் சூத்திரம், நூற் குற்றங்கள், நூலின் உத்திகள் ஆகியன பற்றியும, விரிவாக மேற்கூறப்பட்டமை பார்த்தோம். இவை யாவையும் அன்று தொல்காப்பியர் ஏட்டில் பதித்து வைத்து, அவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வழி வழி வந்து இன்றும் நிலைத்து நின்று உயிருடன் வாழ்வதை நினைந்து அவரை ஏற்றிப் போற்றா விட்டாலும், அவர் தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்றிய பெருந் தொண்டென மதித்து அவரை நம் சிந்தையிலேற்றி நினைவு கூரல் நம் அனைவரின் கடமையாகும்.

76.5
4572Z6zzZő szZ57 é56zZő Zs சண்க க/னத்தின7தZது இன்2ைவ2ை7 APazaézőZZéavazZs azZavZZ2ző zZ7zéGé5
தொல்களப்பியர் காலத்தில் எழுந்த கரணம் என்னும் திருமணச் சடங்கு இன்றைவரை 7000 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் விந்தை
சாதிப் பிரிவினையும் சீதனக் கொடுமையும் தோன்றாத் தொல்காப்பியர் காலம்
Dனிதன் இப் பூவுலகில் பிறக்கும் பொழுது அவன் ஒரு சுதந்திரப் பிறவி. சுதந்திரமாகவே வாழவும் விரும்புகின்றான். இயற்கையும் இதற்கு இடையூறு கொடுப்பதில்லை. ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து நிற்பது அதன் வழியாம். அவன் வளரத் தொடங்கப் பல்வேறு சமூகச் சிக்கல்களும் அவனைத் தொடர்கின்றன. அவன் வளர்ச்சியில் தடங்கல் ஏற்பட்டுத் திணறுகின்றான். ஆனாலும் அவன் காதல் உணர்வுக்குட்பட்டவன். அவன் திருமணம் தொடர்பில் நாற்சுவரின் அடிபந்தாகின்றான். ஒரு பக்கம் சாதி, குலம், கோத்திரம். மறு பக்கம் சீதனம். இன்னொரு பக்கம். உற்றார், உறவினர். அவன்

Page 97
766 @ിരിക്കസ്ഥമ മര് മയ്യ
கட்டிய மனக்கோட்டை சிதைவுற்றுத் தீர்மானம் எடுக்க முடியாது திகைக்கின்றான். மற்றது சீதனக் கொடுமையால் திருமணமாகாமல்
எண்ணற்ற கன்னிப் பெண்கள் ஏங்கித் தவிக்கின்றனர். அதேபோல் தம் மகளுக்குச் சீதனச் சீர்வரிசை செய்து கொடுக்க முடியாது மனங்கலங்கி நிற்கும் பெற்றோர் நிலை பரிதாபமாகும்.
இனி, திருமணம், சாதி, சீதனம் ஆகியவை பற்றிச் சங்க காலத்திலும், அதன் பின்புமான இலக்கியங்களில் எவ்வண்ணம் பேசப்பட்டுள்ளன என்ற பாங்கினையும் காண்போம்.
தொல்காப்பியம்
தொல்காப்பியர் காலத்து மணமுறை இவ்வாறமைந்துள்ளது. கரணம் ஆகிய சடங்கு நிகழ்வோடு கொள்ளுதற்குரிய மரபின் தலைவன் அதே மரபின் தலைவியைக் கொடுத்தற்குரிய மரபின் தலைவியின் தமர் (பெற்றோர்."உற்றார்) மணம் செய்து வைப்பதைக் கற்பென்று கூறுவர். இது மரபுவழி நின்ற மணமுறை. இதைக் கற்பு மணம் என்றும் கூறுவர்.
கற்யெனப் படுவது கரணமொடு புனரக்
கொளற்குரி மரபிற் கிழவனி கிழத்தியைக்
கொடைக்குரிமரபினோர் கொடுப்பக் கொளிவதுவே."
(பொருளி. 14O
தலைவி பெற்றோரை விட்டுத் தலைவனுடன் ஒன்று சேர்ந்து போகுமிடத்தும், கொடுப்பதற்குத் தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்குமுறையோடு கூடிய மணம் நடைபெறுதலும் உண்டாம்.
- 1675 1765/68./Irif ASD6wfflu pub abf76wZÖ ap_60af6L
புணர்ந்துடனர் போகிய காலை யான."
- (பொருளி. 141)
தலைவன் தலைவியரிடையே பொய் கூறுதலும், குற்ற உணர்வுடன் ஒழுகுதலும் தோன்றிய பின்னர், சான்றோரும்

Naz ه ح۶یعهza2ییarzقD 767
ஆன்றோரும் (ஐயர்) கரணம் என்னும் சடங்கினை வகுத்துக் கொடுத்தனர். பொய்யும் வழுவும் தொல்காப்பியர் காலத்தில் தோன்றியுள்ளதென்பதும், தொல்காப்பியர் காலத்துக்குமுன் பொய்யும் வழுவும் தோன்றாக் காலமென்பதும் இதனாற் புலனாயிற்று. மேலும் கரணம் எழுந்த கதையும் கண்டீர். இதனைத் தொல்காப்பியச் சூத்திரத்தில் காண்போம்.
'பொய்யும் வழுவும் தோனிறிய பினினர் ஐயர் Lாத்தனர் கரணம் எனிய"
- (பொருளி. 143)
நால்வகை வகுப்பினரான அந்தணர், அரசர், வைசிகர், வேளாளர் ஆகியவர்களிடையே கொண்டு, கொடுத்து, மணவினை நிகழ்ந்த காலமொன்று அன்று இருந்தது. அதன்பின் மேலோர் என்று சொல்லக்கூடிய அந்தணர், அரசர், வைசிகர் ஆகிய மூவகை வகுப்பாரிடையே கொண்டு, கொடுத்து மணவினை நிகழ்ந்தது. வேளாளர் தமக்குள் மணவினை நிகழ்த்தினர். இதனை கி.மு. 5000 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தொல்காப்பியனார் இவ்வண்ணம் சூத்திரம் அமைத்தமை காண்க.
மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உனிடே"
- (பொருளி. 142)
நால்வகை வகுப்பினரைச் சேர்ந்தோரான அந்தணர், அரசர், வைசிகர், வேளாளர் ஆகியோரின் கடமைகளை இவ்வாறு தொகுத்துக் காட்டுவர் தொல்காப்பியனார்.
1. அந்தணர் : நூல், கரகம், முக்கோல், மணை ஆகியன கற்றல்.
2. அரசர் : படை, கொடி, குடி, முரசு. குதிரை, களிறு, தேர், தார், முடி ஆகியவற்றுடன் மக்களைக் காத்தல்.

Page 98
768 Gتضعهدشتستمتعه عم தென் துனிசன்
3. வைசிகர் : வாணிகம் செய்தல். எண்வகை உணவான நெல்லு, காணம், வரகு, சிறுங்கு, தினை, சாமை, புல்லு, கோதுமை ஆகியவற்றை விளைவித்தல்.
4. வேளாளர் : உழுதுண் வாழ்க்கையைத் தவிர பிறவகை யான வாழ்க்கை இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
இன்னும் நம் பண்டைத் தமிழ் ஆன்றோர் தம் இனமக்கள் அனைவரையும் அந்தணர், அரசர், வைசிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரில் அடக்கிச் சாதிப்பிரிவினை காட்டாதுள்ளமை போற்றற்குரியது.
மேலும், இன்று நம்மத்தியில் தாண்டவமாடும் சாதிப்பிரிவினையும், சீதனக் கொடுமையும் தொல்காப்பியர் காலத்தில் இருக்கவில்லை என்பதும் தெளிவாகின்றது. இதையிட்டுப் பெருமைப்படுபவனும் சங்கடத்தில் அமிழ்ந்துள்ள தமிழன்தான்.
அகநானூறு
கடைச் சங்ககாலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூற்றில் 86 ஆவது செய்யுளில் தமிழரின் பண்டைய திருமணமரபு பற்றிய செய்தி கூறப்பட்டுள்ளது. இப் பாடலை நல்லாவூர் கிழார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
உழுந்து சேர்த்துக் குழைவாகச் சமைத்த உழுத்தம் பருப்புப் பொங்கலின் பெரிய உருண்டைகளை மணவிழாக் காணவந்தோர் புசித்துக்கொண்டிருந்தனர். வரிசைக் கால்கள் நாட்டிப் பந்தலிட்டு, தரையில் வெண்மணல் பரப்பி, மனை விளக்கேற்றி, எங்கும் பூமாலை தொடுத்திருந்தனர். நல்லவேளை வந்ததும், தலையில் நீர்க் குடமும், கைகளில் புதிய மண் கலயங்களும் தாங்கி, திருமணம் நடாத்து பவராகிய மங்கல மகளிர்கள் முன்னேயும், பின்னேயும் தருவனவற்றை முறையாகத் தந்துகொண்டிருந்தனர்.

NAZ ബ്ബ 769
மகனைப் பெற்ற, தேமல் படர்ந்த வயிற்றினையுடைய, புத்தாடை யணிந்த மகளிர் நால்வர் கூடி நின்று ‘கற்பில் வழுவாது, நல்லவை உதவி, உன்னை மனைவியாகப் பெற்ற கணவனைக் காக்கும் துணைவியாவாயாக’ எனக் கூறி வாழ்த்தி நின்றனர்.
பூக்களையும், நெல்லையும் நீருடன் கலந்து அவள் தலையில் தூவினர். அவள் கரிய கூந்தலில் அவை தங்கி நிற்ப, அவளை மங்கல நீராட்டி வதுவை மணமும் நிகழ்ந்து முடிந்தது. அதன் பின்னர், தலைவியின் தமர் (பெற்றோரும், உற்றோரும்) விரைந்து வந்து "பெரிய இல்லக் கிழத்தி ஆவாய்' என்று கூறித் தலைவியைத் தலைவனிடம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஒரு தனி அறையில் முதல் இரவும் வந்தது.
"உழுந்துதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகாலி தனிபெரும் பந்தரித் தருமனலி நெமிரி, மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்.
கேடிலி விழுப்புகழி நாளிதலை வந்தென, உச்சிக் குடத்தர், புத்தகனி மணிடையர், பொதுசெய். கம்பலை முதுசெமீ பெனிடிர் முனினவும் பினினவும் முறைமுறை தரத்தரப்,
புதலிவற் பயந்த திதலை அவ் வயிற்று வாலிஇழை மகளிர் நாலிவர் கூடிக், கற்பிணினி வழாஅ, நற்பல உதவிப் பெற்றோற் பெட்கும் பிணையை ஆக" என நீரொடு சொரிந்த ஈர்இதழி அலரி
பல்இருங் கதுப்பினி நெல்லொடு தயங்க வதுவை நனிமணம் கழிந்த பினிறைக், கலிலெனி சுமீமையர், ஞெரேரெனப் புகுதந்து, பேர்இற் கிழத்தி ஆக எனத் தமர்தர: ஓர்இற் கூடிய உடனிபுனர் கங்குல்.
- (அகம் es)

Page 99
770 Gിരിക്തമ മഞ്ഞ് ജ്യത്
மேலும், திருமணம் பற்றிய இன்னொரு செய்தியை அகநானூற்றில் உள்ள 136 ஆவது பாடலையும் பார்ப்போம். இப் பாடலை விற்றுாற்று மூதெயினார் என்ற புலவர் பாடியுள்ளார்.
குற்றம் தீர நெய்யில் ஊறிய இறைச்சியோடு கலந்த வெண் சோற்றை மணவினை காணவந்த உயர்ந்தோர்க்குக் குறைவின்றிக் கொடுத்து, உரோகிணி கூடியதனால் எல்லாக் குற்றமும் நீங்கிய சுபநேரத்தில் மணவீட்டினை அலங்கரித்து, கடவுளை வணங்கி, மணப் பறையுடன் பெரிய முரசம் ஒலிக்க, தலைவியை நீராட்டிய மங்கல மகளிர் தம் கூரிய கண்களால் இமைத்து நோக்கிவிட்டு விலக, வாகையிலையையும் அறுகின் முகையையும் ஒன்றுசேர்த்துக் கட்டிய வெண்ணுாலைச் சூட்டி, தூய ஆடை உடுத்தி, மணப்பந்தலில் ஒன்று கூடி, மழைச் சத்தம் போன்ற மணவொலி கூடிய பந்தரிலே, ஆபரணங்கள் அணிவித்த சிறப்பினால் ஏற்பட்ட வியர்வையைத் துடைத்து, பெற்றோர் (தமர்) நமக்கு இற்கிழத்தியாகத் தந்த தலைநாள் இரவின் கண். என்று வதுவை மணம் நடந்தேறி முடிகின்றது.
“மைப்பு:அறப் புழுக்கினர் நெய்க்கணி வெணிசோறு
வரையா வணிமையொடு புரையோர்ப் பேணிப். சகடம் மணிடிய துகளிதிர் கூட்டத்துக், கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப், படுமண முழுவொடு பரூஉப்பனை இமிழ,
வதுவை மணினிய மகளிர் விதுப்புற்றுப், பூக்கனும் இமையார் நோக்குபு மறைய, மெனியூ வாகைப் புனர்புறக் கவட்டிலை,
பழங்கன்று கறித்த பயம்பமலி அறுகைத். தணிநறு முகையொடு வெந்நூலி குட்டித், துஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழைபட் டனின மணனிமலி பந்தர், இழைஅணி சிறப்பினி பெயர்வியர்ப்பு ஆற்றித் தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவினி.
— (C94ый. 1з6)

egz ه حاجعهza قصاص2یی D ፲ፖff
(மைப்பு-குற்றம். புழுக்கு-இறைச்சி. புரையோர்-உயர்ந்தோர். சகடம்-உரோகிணி. கடிநகர்-மணவீடு. புரூஉப்பணை-பெரிய முரசம். பூக்கண்-கூரிய கண். மேவர-விருப்பம். துவன்றி-ஒன்றுகூடி)
மேற்காட்டிய இரு மணவிழாவில், பந்தல் போட்டு அலங்கரித்தல், பெருஞ் சோறளித்தல், நல்ல நாள் நேரம் பார்த்தல், கடவுளை வணங்குதல், மணப் பறையுடன் முரசம் ஒலித்தல், வெண்ணுாலைச் சூட்டல், புத்தாடை அணிதல், மங்கல மகளிர் வாழ்த்தல், தமர் அளித்தல் ஆகியன நிகழ்ந்துள்ளன. இதில் பார்ப்பான் பங்கு இடம் பெறவில்லை என்பது நோக்கற்பாலது. இந் நிகழ்வினைச் சிலப்பதிகாரத்தில் பிறிதோரிடத்தில் பின்னர் காண்போம்.
மனு நீதி நூல்
மனு என்பவர் எழுதிய 'மனு சுமிருதி' என்ற தர்மசாத்திர நூல் ஒரு சிறந்த சட்ட நூலாகக் கருதப்படுகின்றது. இது கிறித்துவுக்கு முற்பட்ட நூலென்று சிலரும், கிறித்துவுக்குப் பிற்பட்ட நூலென்று வேறு சிலரும் கூறுவர். எனவே இதன் காலம் பற்றித் தெளிவில்லை. எனினும் கி.மு. 200 ஆம் ஆண்டளவில் எழுந்த நூலென்பது பலரின் கருத்தாகும்.
தொல்காப்பியர் காட்டிய நாலு வகுப்பினரைப் போல் சற்று
மாறுதலாக இந்த மறை நூல் மக்களை நான்கு சாதிகளாக (வர்ணம்) வகுத்து, அவர்களுக்குரிய கடமைகளையும் சட்டமாக்கியுள்ளது.
O பிராமணர் :- வேதங்கள் கற்றல், கற்பித்தல், தானங்கள் வழங்கல், பரிசில்கள் பெறுதல் போன்றவை. இவர் முதல் தரத்தினர்.
- (மனு சுமிருதி 1 : 88)

Page 100
772 (ിരിക്കസ്ഥമ മര് മയ്യ
9 சத்திரியர் :- நீதியான ஆட்சி, குடிமக்களைக் காத்தல், கொடை, வேதங்கள் கற்றல், புலனடக்கம் போன்றவை. இவர் இரண்டாந் தரத்தினர்.
- (மனு சுமிருதி 89) 0 வைசிகர் - வாணிபம் விவசாயம் செய்தல், கால்நடைகளைப் பராமரித்தல், தானம் வழங்கல், வேதங்கள் கற்றல், வட்டிக்குப் பணம் கொடுத்தல் போன்றவை. இவர் மூன்றாந் தரத்தினர்.
- (மனு சுமிருதி 1 : 90)
9 சூத்திரர் :- இரு பிறப்பாளராகிய மேல் மூவர்க்கும் விசுவாசமாக சேவை புரியும் ஒரே ஒரு கடமை மாத்திரம் இவர்களுக்குரியது. இவர் நாலாந் தரத்தினர்.
- (மனு சுமிருதி 91)
0 பிராமணர், சத்திரியர், வைசிகர் ஆகிய மூவர்களும் இரு பிறப்பாளர்கள். ஆனால் நான்காவதான சூத்திரர்களுக்கு ஒரு பிறப்பு மாத்திரம். ஐந்தாவது சாதி என்று ஒன்றும் இல்லை.
- (மனு சுமிருதி 04)
முதல் மூன்று சாதியினரும் கருவிலிருந்து வெளிவருவது முதற் பிறப்பென்றும், மதத் தீட்சை பெறுவது இரண்டாம் பிறப்பென்றும் கூறுவர். மதத் தீட்சை பெறும் உரிமை சூத்திரர்க்கில்லை. எனவே இவர் ஒரு பிறப்பாளர்.
திருமணம் தொடர்பில் மணமகன் ஒருவன் தான் விரும்பும் ஒரு மணமாகா மங்கைக்குரிய ஒத்துக்கொண்ட பணத்தைக் கொடுத்து, அவளைத் திருமணம் செய்யும் முறை ஒன்றை மனு நீதிச் சாத்திரம் கூறுகின்றது. அதாவது ஒரு பெண்ணுக்குரிய விலையை அவள் பெற்றோருக்குக் கொடுத்துவிட்டு அவளை விலைக்கு வாங்கிவந்து

Naz ബക്രിസ്ഥ) 773
திருமணம் செய்து கொள்வது. சீதனம் என்பது இதற்கு மாறுபட்டது. முன்னதில் பெண்ணை பணம் கொடுத்து விலைக்கு வாங்கித் திருமணம் செய்வது. பின்னதில் சீதனம் என்றும், வரதட்சனை என்றும், சீர்வரிசை என்றும், நன்கொடை என்றும், அன்பளிப்பு என்றும் பல சொற்பதங்களை முன்வைத்துப் பெண் வீட்டாரிடம் பெறுபவை எல்லாம் பெற்றபின் அவளைத் திருமணம் செய்வது.
9 ஒரு மணமாகா மங்கையைக் காட்டி வேறொரு பெண்ணைக் கொடுத்தால், அந்த மணமகனுக்கு இவ்விரு பெண்களையும் முன் பேசிய அதே விலைக்குத் திருமணம் செய்து கொள்ளலாம்.
- (மனு சுமிருதி VII : 204)
0 ஒரு கன்னிப் பெண்ணின் திருமணம் தொடர்பான கொடைப் பணத்தைக் கொடுத்தவர் இறந்தால், அப் பெண்ணின் சம்மதத்துடன் பணம் கொடுத்தவரின் சகோதரனுக்கு
அவளைத் திருமணம் செய்து வைக்கலாம்.
- (மனு சுமிருதி X : 97)
சிலப்பதிகாரம்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரத்தில் திருமணம் பற்றி எவ்வாறு பேசப்படுகின்றது என்பதையும் பார்ப்போம். ஆண்டு 16 அகவையான் கோவலனுக்கும் ஆண்டு 12 அகவையாள் கண்ணகிக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் பெற்றோர்கள் முடிவு ச்ெய்தனர். யானைமீது மகளிரை அமரச் செய்து புகார் நகரெங்கும் திருமணச் செய்தியை அறிவிக்க வைத்தனர். இது அக்கால வழக்கம் போலும், திருமண நாளன்று திருமண மண்டபத்தில் முரசு முழங்கின, மத்தளம் அதிர்ந்தன, சங்குகள் மங்கல ஓசை எழுப்பின, அரசன் ஊர்வலம் வருவதுபோல் வெண்கொற்றக் குடைகள் ஊர்வலமாக எழுந்து பூம்புகார் வீதியூடாக மாலைகள் தொங்கும் வயிரமணித் தூண்கள் நிறைந்த மண்டபத்தில் நுழைந்து,

Page 101
774 Gിരിക്തമല്ക്ക് മക്ക് മരക്ഷ
நீலப்பட்டினால் அமைந்த முத்துப் பந்தரில், வானில் உறையும் மதியமானது உரோகிணியைச் சேரும் நல்வேளையில், வானத்து அருந்ததி போன்ற கற்புடைய கண்ணகியை மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட, கோவலன் மணம் புரிந்து, இருவரும் தீவலம் வந்த காட்சியைக் கண்டோர் வியப்பால் பூரித்து நின்றனர்.
இங்கு சாதி பற்றியோ, சீதனம் பற்றியோ குறிப்பிடப்படாதமை, சிலப்பதிகார காலத்தில் இவற்றின் நடைமுறை இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
இருபெரும் குரவரும், ஒருபெரு நாளால், மனஅணி கான, மகிழ்ந்தனர்; மகிழ்ந்துழி, யானை எருத்தத்து, அணியிழையார், மேலி இரீஇ மாநகர்க்கு ஈந்தார் மனம்.
அவ்வழி,
முரசு இயம்பின; முருடதிர்ந்தன. முறை எழுந்தன பணிலம்; வெண்குடை
அரசு எழுந்ததோர் படி எழுந்தன; அகலுள் மங்கல அணி எழுந்தது.
மாலை தாழி செணினி வயிரமணித் துணகத்து, நிலவிதானத்து, நித்திலப்பூமி பந்தர்க் கீழ், வானுர் மதியம் சகடு அணைய, வானத்துச் சாலி ஒருமினி தகையாளைக் கோவலனி, மாமுது பார்ப்பானி மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காணிபார் கணி நோனிபு எனினை!"
— (i : 41—5з)
நல்வழி நூல்
ஒளவையார் அருளிச் செய்த நல்வழி நூலில் சாதிகள் பற்றி ஒரு புதுக் கருத்தினைக் கூறுகின்றார். உண்மையாகப் பார்த்தால் உலகில் சாதிகள் என்பதே கிடையாது. ஆனால் அறிவாளர் ஆண்

eZ. ح62تهzzaقصصیص ص D 775
சாதி, பெண் சாதி என்று மட்டும் கூறிச் சென்றார். ஆனால் ஒளவையார் கூறும் இரண்டு சாதிகள் வேறு. ஊயர்ந்த சாதி ஒன்று, மற்றது தாழ்ந்த சாதி. ஏழைகளுக்குக் கொடுத்துதவுவோர் உயர்ந்த சாதியினர் என்றும், உதவக் கூடிய நிலையில் இருந்தும் உதவிபுரியாதோர் தாழ்ந்த சாதியினர் என்றும் கூறுகின்றார் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார்.
சாதிஇரணர்டு ஒழிய வேறிலிலை சாற்றுங்காலி நீதி வழுவா நெறிமுறையினி - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கிலி உள்ளபடி.."
கலிங்கத்துப் பரணி
கலிங்கத்துப் பரணியைக் கவிச் சக்கரவர்த்தி சயங்கொண்டார் பாடியுள்ளார். இதில் பாட்டுடைத் தலைவன் முதற்குலோத்துங்க சோழமன்னன் (கி.பி.1070 - 1120) ஆவான். இவனின் படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் எய்திய கலிங்க வெற்றியே சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியைப் பாடுவதற்குக் காரணமாம்.
பரணியில் குலோத்துங்க மன்னன் போர்க்களம் இறங்கினான். பகையரசர் படைகள் அஞ்சிப் பின்வாங்கி ஓடின. இப்படித் தோற்றோடிய பகையரசர்களின் வெற்றி மகளைக் குலோத்துங்க மன்னன் திருமணம் புரிந்து கொண்டான். இதைக் கண்ணுற்ற தோற்றோடிய அரசர்கள் தங்களுடைய குதிரைகள், ஆண் யானைகள், பொருட்குவியல்கள் ஆகியவற்றைக் குலோத்துங்க மன்னனுக்குச் சீதனப் பொருட்களாகக் கொடுத்தனர்.
சரி களமிதொறும் தங்கள் சயமகளிர் தனினை மணி அபயனர் கைப் பிடித்தலும் பரிகளும் களிறும் தன ராசியும் பாரியோகம் கொடுத்தனர், பார்த்தியர்."
- (256) (பாரிபோகம் - சீதனப் பொருள்.)

Page 102
776 G3zتضییع۶۶ییر عنص Cதன் gരീബ
வீரராசேந்திர மன்னன் இறந்தபொழுது தென் திசையில் உள்ள சோழநாட்டின் அரசநிலை குலைந்திருந்தது. அப்பொழுது சாதிகள் ஒன்றோடொன்று தலைமாறித் தடுமாறின. எல்லாரும் தம் ஒழுக்க நெறியில் நிற்காது தடுமாறி அவற்றை மறந்தனர். இதனைச் சயங்கொண்டார் பரணியில் கூறும் பாங்கினைக் காண்போம்.
சாதிகள் ஒனிறோடு ஒனிறு, தலை தடுமாறியாரும் ஒதிய நெறியினர் நில்லாது, ஒழுக்கமும் மறந்து
GLTGLI.
- (26o)
பரணியில் திருமணம் பற்றியும், சாதி பற்றியும், சீதனக் கொடுப்பனவு பற்றியும் பேசப்பட்டுள்ள செய்திகளை மேலே பார்த்தோம்.
Unyflumí UIL Gib
பாரதியார் (1882-1921) "சாதிகள் இல்லையடி பாப்பா', 'சாதிக் கொடுமைகள் வேண்டாம்', 'சாதிப் பிரிவுகள் சொல்லி’ என்று கூறிச் சாடும் கவிதைகளையும் பார்ப்போம்.
2Tails6f APaapaug2 LTiLIT: - esai தாழிச்சி உயர்ச்சிசொலிலவி பாவம்"
- (5 uIII/III77 un0) 15)
Frail G.45mG)6OLD456if Goicoeft IIIb, - 9/60tly தனினிற் செழித்திடும் வையம்"
- (4 முரசு 8)
சாதிப் பிரிவுகள் சொலிலி - அதிலி தாழிவெனிறும் மேலெனிறுமி கொள்வார் நீதிப் பிரிவுகள் செய்வார்- அங்கு நித்தமும் சனிடைகள் செய்வார்."
- (4 முரசு Z)

777 Dقavaهیلیazحكمه
இதே காலப்பகுதியில் சடங்கோடு கூடிய மணவிழாவுடன் பதிவுத் திருமணமும் நடைமுறைக்கு வந்தது. எனினும் பதிவின்றியும் திருமணம் நடைபெறுவதும் உண்டு. ஆன்றோர் முன்னிலையில் கன்னி ஒருத்தி காளை ஒருவனுக்குச் சோறு போட்டுக் கொடுத்தால் அவர் இருவரும் கணவன் மனைவியாகிவிடும் முறையும் கிராமப் புறங்களில் இருந்ததை அவதானிக்கலாம்.
திருமணப் பேச்சுக்குமுன் முதலாவதாகச் சாதி, குலம் பார்ப்பர். இது சரிவந்தால் சீதனம் கேட்பர். இதற்கும் உடன்பட்டால், இருவரின் சாதகமும் பார்ப்பர். இம் மூன்றும் பொருந்தினால் திருமணம் நடந்தேறும்.
பணம், பொருள் படைத்தோர் தம் மகளுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் பொழுது அன்பின் காரணமாக பணம், பொருள், தங்க ஆபரணம் ஆகியவற்றை விருப்பார்வ நன்கொடையாகக் கொடுத்துச் சந்தோசப்பட்டனர். இது நாளடைவில் திருமணத்துக்கு ஒரு முன்நிபந்தனையாக மாற்றம் பெற்றுத் தரக்குறைவடைந்து இப்பொழுது உரிமையுடன் கோரும் சீதன முறையாகி விட்டது. இது பேருருக்கொண்டு கல்வீடு, வளவு, வயல், தோட்டம், இலட்சக் கணக்கில் ரொக்கப் பணம், வாகனம், பெண்ணை மறைக்கும் அளவு நகை ஆகியவற்றைச் சீதனமாக வேண்டி நிற்கின்றனர். எனினும் பெண்ணின் படிப்பு, உத்தியோகப் பதவி, அவள் அழகு போன்றன சீதன முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.
மக்களைத் தொல்காப்பியர் நான்கு வகுப்பினராகவும், மனு நீதி நூலார் நான்கு சாதிகளாகவும் கூறியதை மேலே கண்டோம். காலப்போக்கில் இவர்களிடையில் மாற்றங்கள் ஏற்பட்டுச் சாதிப் பிரிவினைகள் வளர்ந்து, நால்வகையில் அடங்காத மக்களைச் சாதி குறைந்தவர்களாகவும், இழிகுலத்தவராகவும், தீண்டாச் சாதியாகவும் கணிக்கப்பட்டனர். இவர்களிடையிலும் பலப்பல சாதிப் பெயர்கள் கிளைவிட்டுப் பரந்து வளர்ந்தன.
பிராமணர் வேதங்கள் கற்று, கோயில் பூசைகள் நடாத்தி, ஆகமங்கள் புரிந்து, அரச உத்தியோகமும் பார்த்து, மறை முறைகளை

Page 103
778 (தொல்காம்மியச் சேன் துனிசன்
எடுத்துரைத்து, தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு, மக்களுக்குதவி ஆகிய கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசர் ஆட்சி அருகி மக்கள் ஆட்சி மலர்ந்துள்ளமையால் அரசர் கடமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நாடுகளில் மாத்திரம் மன்னர் பதவிகள் பேரளவில் உள்ளன. ஆனால் ஆட்சிப் பொறுப்பு அவர் கைகளில் இல்லை. வைசிகர் வாணிபம், விவசாயம் போன்றவற்றைப் பெருமளவில் செய்து வருகின்றனர்.
தொல்காப்பியர் காலத்தில் வேளாளருக்கு உழுதுண் வாழ்க்கை மட்டும்தான் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மனு நீதி காலத்தில் சூத்திரர் (வேளாளர்) என்பவர் அந்தணர், சத்திரியர், வைசிகர் ஆகியோருக்குத் தொண்டு புரிய வேண்டுமென்று சட்டம் வந்தது. ஆனால் காலப்போக்கில் வேளாளர் வாழ்வியலில் பெருமாற்றம் ஏற்பட்டது. இவர்கள் வேளாண்மை, கல்வி கற்றல், அரச உத்தியோகம் ஆகிய துறைகளில் முன்னேறிப் பெருநிலப் பண்ணையாளராக வளர்ந்துள்ளனர். பொருளாதாரமற்ற சாதி குறைந்தவர்களின் வாழ்க்கை வேளாளரின் தயவில் வந்தது. வேளாளரின் காணி, வயல், தோட்டம், வளவு, துரவு ஆகியவற்றில் வேலை செய்வதற்குச் சாதி குறைந்தோர் வேலைக்கு அமர்த்தப் பட்டனர். இவ்வண்ணம் வேளாளர் எசமானராகினர். அவர் ஒடுக்கு முறைகளும் பெருகின.
தாழ்த்தப்பட்டோர் பொதுக் கிணற்றில்கூட தண்ணீர் அள்ள முடியாது. யாராவது ஒரு வேளாளர் வந்து தண்ணிர் அள்ளிக் கொடுக்குமட்டும் பார்த்திருக்க வேண்டும். இவர்கள் கோவிலுக்குச் சென்று வழிபட முடியாது. இவர்கள் பிள்ளைகள் சாதிக்காரப் பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. வேளாளரை எதிர் கொண்டால, இவர்கள் தம் தோளின் துண்டை எடுத்துத் தம் அக்குளுக்குள் வைத்து விட்டு நயினார்’ என்று கூறி ஒதுங்கி நிற்க வேண்டும். இவர்கள் மேலங்கிகூட அணியக்கூடாது. இப்படியான கண்க்கற்ற கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டு அவர்கள்

Naz ബ്ബ 779
வதைக்கப்பட்டனர். இத் தொடர் நிகழ்வால் பெருமளவு மக்கள் தம் மதங்களைத் துறந்து வேறு மதங்களை நாடி ஓடினர். இவர்களுக்கு அங்கு நல்ல சலுகைகள் கிடைத்தன. இவர் பிள்ளைகள் அங்கே நல்ல கல்வி கற்று, அரச பதவிகள் பெற்று முன்னேறியுள்ளனர்.
இதுகாறும் திருமணம், சாதி, சீதனம் பற்றிய செய்திகளைச் சிறந்த இலக்கிய நூல்களான தொல்காப்பியம், அகநானூறு, மனு நீதி, சிலப்பதிகாரம், நல்வழி, கலிங்கத்துப்பரணி, பாரதியார் பாடல் ஆகியவை கூறும் பாங்கினைப் பார்த்தோம். இவற்றின் கருப்பொருள் பற்றிய சுருக்கச் செய்திகளை இவ்வாறமைத்துக் காண்போம்.
திருமணம்
தொல்காப்பியர் காலத்துக்குமுன் தலைவன் தலைவியர் காதல் வயப்பட்டு, அன்பினாற் கூடித் திருமணம் நிகழ்ந்தது. தொல்காப்பியர் காலத்தில் தலைவன் தலைவியரிடையில் பொய்யும், வழுவும் தோன்றிய பொழுது சான்றோர் கரணம் என்னும் சடங்கு முறைகளை வகுத்துத் திருமணம் நடந்தது. அகநானூற்றில் மணவிழா ஒழுங்கு, விருந்தோம்பல் நிகழ்ச்சிகளுடன், நீருடன் பூவும், நெல்லும் கலந்து மணமகள் தலையில் தூவி, அவளை மங்கல நீராட்டி, வதுவை மணம் செய்து வைத்தனர். மனு நீதி நூலில் திருமணம் தொடர்பில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் காண்கின்றோம். கன்னி ஒருத்தியைக் காட்டி, வேறொரு பெண்ணைக் கொடுத்தால், முன் பேசிய அதே விலைக்கு அவ்விரு பெண்களையும் அந்த மணமகன் திருமணம் செய்யலாம் என்பது சட்டம். ஒரு கன்னிப் பெண்ணின் திருமணம் தொடர்பில் கொடைப் பணம் கொடுத்தவர் இறந்தால், பெண்ணின் சம்மதத்துடன் இறந்தவரின் சகோதரனுக்கு அவளைத் திருமணம் செய்யலாம் என்பதும் ஒரு சட்டம். சிலப்பதிகாரத்தில் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் வந்து கோவலன், கண்ணகி திருமணம் நடைபெற்றது. கலிங்கத்துப் பரணியில் முதற் குலோத்துங்க சோழன் கடிமணம் புரிந்த செய்தியும் கண்டோம்.

Page 104
780 Gിരിക്കമില്ക്ക് മക്ക് ജയഭക്ഷ
aFni57
தொல்காப்பியம், அகநானூறு, சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் சாதிகள் பற்றிப் பேசப்படவில்லை. தொல்காப்பியர் காட்டிய அந்தணர், அரசர், வைசிகர், வேளாளர் ஆகிய நால் வகுப்பினரையும், மனு நீதி நூலார் பிராமணர், சத்திரியர், வைசிகர், சூத்திரர் என்று நால்வகைச் சாதிகளாகச் சட்டம் வகுத்துள்ளார். சாதி எழுந்ததற்கு மனு நீதிச் சட்டமே காரணமாகும். நல்வழி நூலில் ஒளவையார் ஏழைகளுக்குக் கொடுத்துதவுவோர் உயர்ந்த சாதியினர் என்றும், அப்படிக் கொடுத்துதவாதோர் தாழ்ந்த சாதியினர் என்றும் ஒரு புது முறையைக் கைக்கொண்டுள்ளார். கலிங்கத்துப் பரணி என்னும் நூலிலும் சாதிகள் பற்றிப் பேசப்படுகின்றன. பாரதியார் பாடல் நூலில் பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று சாடுகின்றார்.
சீதனம்
தொல்காப்பியம், அகநானூறு, சிலப்பதிகாரம், நல்வழி, பாரதியார் பாடல் ஆகிய நூல்களில் சீதனம் பற்றி ஒன்றும் கூறப்படவில்லை. மனு நீதி நூலில் சீதனம் என்று நேரடியாகக் கூறாவிட்டாலும் சீதனம் போன்ற ஒரு கொடுப்பனவை மணமகன் பெண் வீட்டாருக்குக் கொடுத்து விட்டு அவர் பெண்ணைத் திருமணம் செய்யும் முறை ஒன்று சட்டமாயுள்ளது. இம் முறையானது நாளடைவில் சீதனம் என்ற முறைக்கு உருவெடுத்தது போலும். கலிங்கத்துப் பரணியில் சீதனம் கொடுக்கல், வாங்கல் பற்றிப் பேசப்படுகின்றது.
தமிழர் மத்தியில் சாதிப் பிரிவினையும், சீதனக் கொடுமையும் புகுந்து அவர்கள் வாழ்வின் முன்னேற்றத்தைத் தடுத்துச் சிதைத்துச் சின்னபின்னப் படுத்தி வருகின்றது. இவற்றைக் கழைய வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் கொடுக்கப்படல் வேண்டும். திருமண முறையிலும் மாற்றம் வேண்டும். இப்பொழுது கலப்பு மணத்தில் நாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் சாதிப்

D ፲8፲قarzهیمیایazحه zzܘܓ
பிரச்சினை அருகிவிடும். தற்பொழுது தமிழர் மத்தியில் திருமணம் தொடர்பில் சாதி ப்ர்ப்பதும், சீதனம் வாங்குவதும் மிகவும் தளர்ந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இது முன்னேற்றப் பாதையின் முதற்படி என நினைந்து மகிழ்வோம்.
இவற்றைப் பார்க்குமிடத்து, நாம் தொல்காப்பியர் காலத்தை நோக்கித் திருமணம், சாதி, சீதனம் ஆகியவற்றை எதிர்நாடி வீறுநடை போடுகிறோம் என்று நினைக்கச் சிந்தை இனிக்கின்றது. நம் முன் பச்சைக் கொடியும், பச்சை விளக்கும் சமிக்கை கொடுக்கின்றன. மேலும் தொல்காப்பியர் காலத்தில் எழுந்த கரணம் ஆகிய சடங்குமுறை இற்றைவரை ஏழாயிரம் (7000) ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் விந்தையை நாம் நினைந்து மனம் பூரித்து நிற்போமாக!

Page 105
፲82
6Z6zár 6Z26zvZ7 6Z-zző മമത്രബZ, Zത്രബമ
மிம் பண்டைத் தமிழர்கள் தம் பெண் குலத்தாரைச் சீருடனும், சிறப்புடனும் பெருமைப்படுத்தி ஓர் உயர் நிலையில் வைத்துப் போற்றியும் வந்துள்ளனர். அவர்களைப் புகழாத புலவர் இல்லை, பாடாத பாடகர் இல்லை, கவி தொடுக்காக் கவிஞர் இல்லை, எழுதா ஏடும் இல்லை. பெண்ணைப் பற்றிப் புகழ, பாட, எழுத, கவி தொடுக்க அவர்களின் அழகு, குணம், குலம், கலை, நடனம், காதல், களவியல், கற்பியல், அலர், அம்பல், பரத்தமை, ஒரு தலைக் காமம், அன்புடைக் காமம், பொருந்தாக் காமம், திருமணம், குடும்பப் பொறுப்பு, மகப் பேறு ஆகியன ஊற்றெடுத்து உதவ அவை இற்றைவரை உயிர் இலக்கியங்களாக நம்முடன் உறவாடி நிற்கின்றன.
இற்றைக்கு ஏழாயிரம் (7,000) ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தொல்காப்பியனார் யாத்த தொல்காப்பியம் என்ற காலத்தால் தொன்மை வாய்ந்த நூலில் பெண் பெருமை பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.
"அச்சமும் நானும் மடனும் முந்துறுதலி நிச்சமும் பெணியாற் குரிய எணிu.”
- Gundat - 96)
அச்சம், நாண், பேதைமை ஆகிய முக் குணங்களும் தலைவியருக்கு என்றும் முந்தி நிற்றல் அவர்களுக்கு உரிய ஒப்பான இலக்கணமும் சிறப்புமாகும். அவர்க்ள் காதற் களவில் ஈடுப்டுங்கால்

763
தலைவரின் வரம்பு மீறும் விருப்புக்கு உடன்படாதிருக்க இம் முக்குணங்களும் முந்தி நின்று தடை போட்டு அவர்களை நேர் நிலைப்படுத்தி நிற்கின்றன. இதனால் அவர்கள் வேட்கையுற்ற விடத்தும் புணர்ச்சிக்கு உடன்படாது ஒதுங்கி நிற்பதையும் காண்கின்றோம்.
அச்சம், நாணம், மடம் ஆகிய மூன்றும் தலைவியருக்கு முக்குணங்களாகவும், முப் பண்புகளாகவும் அவர்களுடன் கூடி நின்று அரண் அமைத்து உதவுகின்றன. ஆண்களுக்கில்லாத இவ்வரிய குணங்கள் பெண்களிடம் குடிபுகுந்து அவர்களைச் சிறப்பித்துத் தாமும் பெருமையுற்றுத் திகழ்கின்றன. தொல்காப்பியர் காலத்து மகளிர்க்கு அச்சம், நாணம், மடம் ஆகிய முக்குணங்கள் இருந்துள்ளமையை மேற்காட்டிய சூத்திரத்தில் படித்து மகிழ்ந்தோம்.
இப்படியான முக்குணங்கள் இந்நாளில் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என நாற்குணங்களாகிப் பெண்களுக்கு நாற்படையாகவும், நல்ல அணிகலன்களாகவும் அமைந்துள்ளமை நாம் அனைவரும் அறிந்த செய்திகள். தொல்காப்பியர் காலத்தில் பயிர்ப்பு' என்ற நான்காவது குணம் மகளிர்க்கு இருக்கவில்லை என்பதையும் அறிய முடிகின்றது.
கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் யாத்த நளவெண்பா நூலில் இந் நான்கு குணங்களைப் பற்றிக் கூறப்பட்ட ஒரு வெண்பா இது.
"நாற்குணமுமி நாற்படையாஜம்புலனும் நலிலமைச்சா ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா; வேற்படையும் வாளுமே கணினா வதன மதிக்குடைக்கீழ் ஆளுமே பெனிமை அரசு."
— (з9)
இப் பாவில் பெண் ஓர் அரசை அமைத்துச் செங்கோலோச்சுவது போல் ஒரு கற்பனையைக் காண்கின்றார் ஆசிரியர். அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு ஆகிய நாற்குணங்களையும், தேர்ப்படை, குதிரைப்

Page 106
1ዶፉ 4 G29 تصنعهشته متعام தென் துனிசன்
படை, யானைப்படை, காலாற்படை என நாற்படையாகவும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை நல்ல அமைச்சரவை யாகவும் ஒலிக்கும் காற்சிலம்பை அணி முரசாகவும் வெட்டும் கண்ணை வேற்படை, வாட்படையாகவும் அழகிய முகத்தை வெண் கொற்றக் குடையாகவும் அமைத்து ஆளுகின்ற ஒரு பெண்மை அரசு என்று ஆசிரியர் சிறப்புறக் கூறியுள்ளார். இவ்வாறான பெண்மை அரசு ஒவ்வொரு வீட்டிலும் செங்கோலோச்சுகின்றது என்ற உண்மையை ஒவ்வொரு ஆணும் அறிந்திருக்கவேண்டும்.
நான்காவது குணமான பயிர்ப்பு என்ற பதத்துக்கு அசுத்தம், அருவருப்பு. கடுவெறுப்பு, குமட்டல், சீற்றம், வெறுப்பு ஆகிய பொருள் கூறலாம். புகழேந்திப் புலவர் காலத்தில் பயிர்ப்பு என்ற சொல் வழக்கில் இல்லாதிருந்தால் “முக்குணமும் முப்படையா. .” என்றுதான் அவர் பாட்டமைத்திருப்பார்.
நாற்படைகளான காலாற்படை, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை ஆகிய நான்கு படைகளைப் பற்றித் தொல்காப்பியம் என்னும் நூலில் பேசப்படுகின்றது.
தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும்."
- (பொருள். z ےe: 7 -ے۔e(
"தேரோர் தோற்றிய வெற்றியும் தேரோர் வெனிற கோமானி முனர்தேர்க் குரவையும்."
- (பொருள். 75:4-5)
அதே நாற்படைகளைத்தான் புகழேந்திப் புலவரும் நளவெண்பா நூலில் கூறியுள்ளார். இந் நாற்படை தொல்காப்பியர் காலத்திலிருந்து புகழேந்திப் புலவர் காலம் வரை தொடர்ந்து நிலைத்திருந்தமை தெளிவாகின்றது.
ஆனால், இன்று நாற்படை அருகி இராணுவப்படை, கடற் படை, விமானப்படை என மூன்றாகக் குறைந்து முப்படைகளெனப் பெயர் மாற்றம் பெற்றும், முக்குணங்கள் நாற்குணங்களாய் உயர்வு பெற்றுள்ளமையும் ஈண்டு நோக்கற்பாலது.

785 z ഷ്ഠിതമDܗܘܢ
இன்னும் பயிர்ப்பு என்ற குணம் தொல்காப்பியர் காலத்தில் ஏன் இருக்கவில்லை? என்றொரு கேள்வி யாவர் மனத்திலும் எழும். இன்று ஒரு பெண்ணின் மேனியை ஓர் அந்நிய ஆண் மகன் தொட்டாலோ, தீண்டினாலோ அப் பெண்ணுக்குப் பயிர்ப்பு ஏற்படும். அதாவது அவளுக்கு அவன்மேல் ஓர் அருவருப்பு, வெறுப்பு, சீற்றம் போன்றன உண்டாகும். ஒரு தமிழ்ப் பெண்ணானவள் தன் மேனியை ஓர் ஆண் மகன் தீண்டினால் கற்புக் குலைந்தவளாகி விடுவாள் என்ற நோக்கில் வளர்க்கப்படுபவள். அவளுக்குக் கற்பு உயிர் போன்றது.
மேலும், தன் பெற்றோர், சகோதரர், சகோதரிகள், உற்றார், உறவினர் தொட்டால் அதைப் பெரிது படுத்தமாட்டாள். வளர்ந்த பெண்ணை அவள் பெற்றோர் தன்னும் தொட்டுப் பழக மாட்டார். பொது இடங்களில் ஆண்கள் ஒரு பக்கமாகவும், பெண்கள் வேறொரு பக்கமாகவும் இருப்பது வழக்கம். இது தமிழர் பண்டைய மரபு.
தற்பொழுது பெண்கள் முற்காலத்தைப்போல் வீட்டில் அடைபட்டு இருப்பவரல்ல. அவர்களும் ஆண்களைப் போல் வெளியிற் சென்று வேலைத்தலங்களில் ஆண்கள் மத்தியில் வேலை செய்கின்றார்கள். இப்பொழுது பெண்கள் மக்கள் மத்தியில் நெருங்கிப் பழகவேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகம்.
வாழ்க்கை ஒர் ஒட்டப் போட்டியாகி விட்டது. பெண்களும் சனநெருக்கடிக்குள் அகப்பட்டே ஆகவேண்டியவராகின்றனர். பேருந்தில், புகையிரதத்தில், பேரவைகளுக்கு, சந்தைகளுக்கு யாவரும் ஒன்றாகச் சென்று வரவேண்டிய நிலை இன்று. பெண்கள் இன்று தனித்தே எங்கும் சென்று வருகின்றனர். பொதுப் போக்குவரத்துச் சாதனங்களில் அவர்கள் ஆண்களுடன் அருகில் இருந்து பிரயாணம் செய்ய வேண்டிய ஒரு சங்கடமான நிலை அவர்களுக்குத் திணிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்று வழி இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்ற வேண்டியவர்களாகின்றனர்.
இச் சூழ்நிலைகள் அனைத்தும் பயிர்ப்பு என்ற குணத்துக்கு இடமளித்து, ஒரு தேவையையும் உண்டாக்கியது. எனவே ஆன்றோர் பயிர்ப்பு என்றொரு அருங் குணத்தை உருவாக்கி அதற்கொரு இலக்கணத்தையும் அமைத்தனர். இவ்வண்ணம் பயிர்ப்பு பெண்ணிடம்

Page 107
786
குடி கொண்டது. அவளும் அதற்கு அடிமையாகினாள். இவ்வாறே முக்குணங்கள் பயிர்ப்புடன் நாற்குணங்களாகின.
தொல்காப்பியர் காலத்தில் அதாவது இற்றைக்கு ஏழாயிரம் (7,000) ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெண்கள் நிலைமைகளை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். பொதுவாக அவர்கள் வீட்டில் உற்றார், உறவினருடன் சேர்ந்து வாழ்ந்தனர். வெளியிடங்களுக்குச் செல்லார் சென்றாலும் தனித்துச் செல்லார் என்றும் உற்ற தோழியுடன் இருப்பர். பெற்றோர், உற்றார் கண்காணிப்பும் உண்டு. கட்டுப்பாடுகளும் அதிகம் இருந்தன. நால் வேலிக்குள் வதிவர். பெரும்பாலும் ஆண்கள் தொடர்பின்றி வாழ்ந்து பழகுவர். கற்பு நெறியில் நின்று வாழ்வர். இன்னும் நெறி குன்றா ஆண் வர்க்கமும் அன்றிருந்தது.
இந் நிலையில் அன்று ஆண் பெண்ணைத் தொட்டுப் பழகும் வாய்ப்பு இருக்கவில்லை என்றே கூறலாம். எனவே "பயிர்ப்பு' என்ற குணம் அன்று ஏற்பட வாய்ப்பும் அமையவில்லை. ஆகவே பயிர்ப்பு இன்றி முக்குணங்களுடன் பெண்கள் அன்று வாழ்ந்தனர். இவ்வண்ணமே தொல்காப்பியர் அச்சம், நாணம், மடம் ஆகிய முக்குணங்களுக்குச் சூத்திரம் அன்று அமைத்தமை காண்க.
தொல்காப்பியர் காலத்துப் பெண்கள் பயிர்ப்புக்குரிய குணங் களுடன் அன்று நடமாடியிருந்தால், தொல்காப்பியர் அக் குணங்களுக் கேற்றவாறான ஒரு சொற் பதத்துடன் அதற்கேற்ற ஓர் அரும் பெரும் இலக்கணமும் அமைத்துத் தந்திருப்பார். அச் சொற் பதம் பயிர்ப்பு என்பதை விட இன்னொரு புதுப்பதமாகவும் இருந்திருக்கலாம். இக் குணத்திற்குரிய சொற் பதத்தையும், அதற்குரிய இலக்கணத்தையும் நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.
மேற் கூறப்பட்ட முக்குணங்களும், நாற்குணங்களும் அன்றும் இன்றும் பெண் பெருமை பேசி, அவர்களுக்கு ஓர் அரண் அமைத்து நிற்கின்றன. எனவே, கி.மு. ஐயாயிரம் (5,000) ஆண்டுகளுக்கு முன்பிருந்த முக்குணங்களையும், அதன் பின்பாக வந்த நாற்குணங் களையும் பதிவு செய்து அவற்றின் பெருமை பேசிப் பேணிக் காத்து வைத்திருத்தல் நம் அனைவரின் கடமையாகும்.
KANNKKNKSNC
R
oksa
K

78ፖ
avaz7562afavaf Avataz72a27 aoźZøŽZZøí avaløźøózsa6a67aźzeøvazz7F
ஆற்ண் பெண்ணை விரும்புவதுபோல், பெண்ணும் ஆணுக்கு அடுத்தபடி பொன்னை விரும்புகின்றாள். பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை எல்லாப் ப்ெண்களும் விரும்பி அணிகின்றனர். பெண்களைக் குளிர வைக்க ஆண்கள் அணிகலன்களுடன் முந்தி முதல் வரிசையில் அணி வகுத்து நிற்கின்றனர். மகளுக்குப் பெற்றோரும், மனைவிக்குக் கணவனும், தாய்க்கு மகனும் வேண்டிய பொன்னாபரணங்களை வாங்கிக் கொடுத்து, அணிவித்துப் பார்த்து மகிழ்வர். , −
தங்கம், பித்தளை, வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களினால் செய்யப்பட்ட ஆபரணங்களைப் பெண்கள் அணிகின்றனர். தமிழ்ப் பெண்கள் தங்கத்தினாற் செய்யப் பட்ட ஆபரணங்களை விரும்பி அணிவர்.
சங்க இலக்கிய நூல்களில் ஆபரணங்கள் அணிந்த பெண் களைப் பற்றிப் புலவர்கள் பாடிய பாடல்கள் நிறைய உள்ளன. திருக்குறள், சிலப்பதிகாரம், கலித்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, நாலடியார், பரிபாடல் ஆகிய நூல்களில் ‘கணங்குழை மாதர்', 'ஆயிழாய்', 'சுடர்த்தொடீஇ', திருந்திழாய்',

Page 108
፲፰ ጃ (சொல்காட்சியத் தேன் துனிசன்
நிறைதொடீஇ', 'அணியிழையார்', போன்ற பதங்கள் ஆபரணங்கள் அணிந்த பெண்களையும், "சிலம்பு, "தலைக்கோல்', "வளை", "மேகலை, புனை இழை', 'கடகம்', 'ஆரம்', போன்றவை மாதர்
அணியும் ஆபரணங்களையும் குறித்து நிற்கின்றன.
கி.மு. 5000 ஆம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தொல்காப்பியனார் பாத்த தொல்காப்பியம் என்ற நூலில் "காதொன்று களைதல், ஊழணி தைவரல்" (பொருள். 258) - காதணியைக் கழற்றுதல், முறையாக அணிந்துள்ள அணிகளைத் தடவுதல் என்றும், "அணிந்தவை திருத்தல்” (பொருள். 259) - அணிந்தவைகளை ஒழுங்கு செய்தல் என்றும் கூறியுள்ளார்.
இன்னும், கி.மு. 6000 ஆம் ஆண்டில் வாழ்ந்த திருமூலர் யாத்த திருமந்திரம் என்னும் நூலில் "கோல் வளையார்” (மந்திரம் 483) - திரண்ட வளையல் அணிந்த பெண்கள் என்றும், "கோல் வளை" ( மந்திரம் 484 ) - வளையல் அணிந்த பெண் என்றும், கூறியுள்ளார்.
பண்டைத் தமிழ்ப் பெண்கள் 29 வகையான ஆபரணங்களை அணிந்துள்ளனரென முனைவர் வே. வரதராசன் அவர்கள் படத்தோடு எடுத்துக் காட்டியுள்ளார். இந்த 29 அணிகலன்களையும் மகளிர் எவ்வாறு அணிந்தனர் என்பதைப் பற்றிப் படத்தில் பார்ப்போம்.
1. தலை, காது அணி - (1) வலம்புரிச் சங்கு மத்தகமணி, (2) புல்லகம் (தென் பல்லி), (3) புல்லகம் (வடபல்லி), (4) பூரப்பாளை, (5) தொய்யகம், (6) செவிப்பூ (7) அளகச் சூடம், (8) ஏகதளம், (9) குதம்பை,
2. கழுத்து அணி - (10) சவடி, (11) காறை, (12) வாகுமாலை, (13) முத்தாரம்,
3. தோள், கை அணி - (14) தோள்வளை, (15) வீரச்சங்கிலி, (16) தோள்வளை, (17) வாளைப்பகுவாய் மோதரம், (18) பரியகம், (19) சூடகம், (20) பவழ வளை, (21) ஆடைக்கட்டு, (22) கடக வளை,

9 I'ጃ (قدمهم جوسعهم معي
மகளிர் அணிகலன்கள்
Britச் சங்கமத்தகரீவி புள்வங் தெங் பள்ளி புல்லுகம் வடபுல்வி
l . தெய்யகம் சேவிப்பூ
தளர்ச் சூடம் ரத்தனம்
குதம்பை
fit.
атд
ஆாதுமானது முத்தாரம் . தோள்களை . வீரர்சப்விே
தோள்வளை
வாாப்பருவாய் மோதரம் பரியதம்
சூடகம்
- шарт tшынгі - ஆகிடக்கட்டு
RELE LIGGI . முந்ததை விரிசிகை)
முத்துபடம் நடவிடதாரம் குரங்குச் செதி நூபுரம் ரிம்பு)
i Tiki: தரங்குச் செரி 9. பரியக்
நன்றி: தமிழரின் ஒப்பளைக் கலைத்திரன், முனைவர் வே. வரதராசன்,
தமிழ்ப் பல்களிலுக்கழகம், தஞ்சை

Page 109
790 (தொல்காம்பியத் தேன் துனிசன்
4. இடுப்பு அணி - (23) முத்தரை (விரிசிகை) முத்துவடம், (24) உடைதாரம், (25) குறங்குச் செறி,
5. கால் அணி - (26) நூபுரம் (சிலம்பு), (27) பாடகம், (28) குறங்குச் செறி, (29) பரியகம்.
இன்று பெண்கள் மூக்கில் மூக்குத்தி அணிவதுபோல் அன்று மூக்கு அணி இருக்கவில்லை. மேலும், கால் விரலில் அணியும் மெட்டியும் அன்று இருக்கவி98ல்லை என்பதும் நோக்கற்பாலது.
இன்னும், ஓர் அறிஞர் ஐம்பெருங்காப்பியங்களை மகளிர் அணியும் அணிகலன்களாக்கி அவற்றைத் தமிழன்னையின் காதில் குண்டலமாக குண்டலகேசியையும், கழுத்தில் சிந்தாமணியாகச் சீவக சிந்தாமணியையும், கையில் வளையலாக வளையாபதியையும், இடுப்பில் மேகலையாக மணிமேகலையையும், பாதத்தில் சிலம்பாகச் சிலப்பதிகாரத்தையும் அணிவித்து மகிழ்வதுடன், அவ்வருங் காட்சியை நம் பார்வைக்கும் நிறுத்தியுள்ளார்.
மகளிரை இப்படியான அணிகலன்களினால் அலங்கரிப்பதன் நோக்கம் என்ன? இதன் விடைதான் இக் கட்டுரையின் கரு. பெண்கள் அழகாக இருப்பதைப் பெண்களும் விரும்புவர்: ஆண்களும் விரும்புவர். அணிகலன்களினால் பெண்கள் அழகாகத் தோற்றமளிக்கின்றனர். ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மைதான்.
ஆனால், இதற்கும் மேலான வேறோர் உண்மையும் உண்டு. தாலி பெண்ணுக்கு வேலி. அவ்வாறே அணிகலன்கள் பெண்ணைக் காக்கும் தெய்வங்கள். அவை பெண்களை என்றும் உணர்ச்சி, விழிப்பு, உசார், தயார் ஆகிய நிலைகளில் வைத்திருக்கின்றன. எனவே அவர்கள் என்றும், எதற்கும் தயார் நிலையில் உள்ளனர். தமிழ்ப் பாடசாலைகளில் ஆசிரியர் மந்த நிலையில் உள்ள மாணவரைத் தலையில் குட்டி, காதில் முறுக்கி, வயிற்றில் கிள்ளி அவர்களை உணர்ச்சி நிலைக்கும், உசார் நிலைக்கும் கொண்டு வர மாணவர்கள் உடனே ஆசிரியர் கேள்விகளுக்கு விடையளித்து விடுவர்.

797 Dقضarایی zzه ح6ته 42ܩܘܢ
இதேபோல் மகளிரின் ஒவ்வொரு அசைவுக்கும் அவர்கள் அணிந்துள்ள அணிகலன்கள் ஆடி, அசைந்து அவர்களுக்கு உணர்வைக் கொடுத்து, உசார் நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இதனால் ஆண்களை விடப் பெண்கள் என்றும் உசார் நிலையில் உள்ளனர்.
மகளிரை உணர்ச்சி வசப்படுத்த தலையணி, காதணி, மூக்கணி, கழுத்தணி, தோளணி, மார்பணி, கையணி, இடுப்பணி, காலணி, போன்றவை அவர்களுடன் என்றும் ஒடடி உறங்கா நிற்கின்றன. இதன் காரணமாக அவர்கள் ஒரு பிரச்சினை வந்தக்கால் அதிலிருந்து சுலபமாகத் தப்பித்து விடுவர். ஆனால் ஆண்களோ பிரச்சினைக்குள் புகுந்து வேண்டாத தொல்லைகளில் மாட்டுப்பட்டு வருந்துவர்.
கணவன் தன் மனைவிக்குத் திருமணநாளன்று அவள் கழுத்தில் கட்டிய தாலியைப் புனிதப் பொருளாகப் பூசித்து, வணங்கி, துதித்து அத்தாலியைத் தெய்வமாக்கி வருகின்றனர் நம் தமிழ்ப் பெண்கள். கட்டிய தாலியை என்றும் தம் கழுத்திலிருந்து கழற்ற LDITILITJ856ft.
தம் கணவர் சில நாட்கள் வேலை நிமித்தம் தம்மைப் பிரிந்திருந்தாலும் அவர்கள் தம்முடன் இருப்பதாக நினைந்து தம் தாலியைத் தொட்டுப் பார்த்து மகிழ்வர். இது அவர்களுக்கு உற்சாகத்தையும், மன நிறைவையும் கொடுக்கின்றது. இன்னும்,
அவர்கள் கற்பு நெறியிலிருந்து சற்றும் பிறழாதிருக்கவும் இவை உறுதுணையாயிருக்கின்றன.
இவ்வாறான ஒரு கலாசாரம் தமிழர் மத்தியில் மட்டும்தான் காலாதிகாலமாக நிலைத்து வந்துள்ளதையிட்டு நாம் பெருமைப்படவேண்டும்.
அன்று ஆண்களும் காதில் கடுக்கனும், கழுத்திலும் கையிலும் சங்கிலியும் அணிந்திருந்தனர். ஆனால் இன்று அப் பழக்கம் அருகி இல்லாதொழிந்து விட்டது. அன்றைய ஆண்மகனும் உணர்ச்சியுடன் தயார் நிலையில் இருந்திருக்கலாம். இப்பொழுது மேலை நாட்டு

Page 110
792.
இளைஞர் ஒரு சிலர் ஒரு காதில் காதணி, கையிலும் கழுத்திலும் சங்கிலி போன்ற அணிகலன்களை அணிகின்றனர்.
அன்றைய கடுக்கன் அணியும் முறை மீண்டும் ஆண்கள் மத்தியில் நிலவி வரக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றே கூறலாம். பின், பெண்களைப் போல் ஆண்களும் விழிப்புணர்ச்சி பெற்று, எதற்கும் தயார் நிலையடைந்து, இருவரும் சீர்பெற்ற வாழ்க்கையை அமைத்து இன்புறுவர்.
பழையவை புதியவையாகவும், புதியவை பழையவையாகவும் மாறி மாறிச் சுற்று வட்டத்தில் சுழன்று கொண்டு உலகை உய்விக்கும் பொழுதில் நாமும் அந்தந்தச் சுழலுக்கேற்றவாறு வாழ்க்கையை அமைத்துச் சிறப்புற்றிருப்பது நம்மனைவரின் கடமையாகும்.

793
தZன்னைZை அ/ைவிகZகிதம் 4gzóéZzzzzzý arzzzzŽzźZzZzýavazólaló ஒன்Zன7 வனை/ZZ7
பெருங்காப்பியங்கள் ஐந்து. இவற்றை ஐம்பெருங் காப்பியங்கள் என்றழைப்பர். அவையாவன: (1) சீவகசிந்தாமணி, (2) சிலப்பதிகாரம், (3) மணிமேகலை (4) வளையாபதி, (5) குண்டலகேசி. இவற்றின் சொந்தக்காரன் தமிழன். இக் காப்பியங்களில் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய மூன்று காப்பியங்கள் மட்டும்தான் நம்முடன் உயிருடன் உலாவி வருகின்றன. மற்றைய இரு காப்பியங்களான வளையாபதியும், குண்டலகேசியும் அழிந்து போயின. இவற்றுள் சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி ஆகிய மூன்று காப்பியங்களும் சமண மதக் கொள்கை களை வலியுறுத்தும் காப்பியங்களாகும். மற்றைய இரு காப்பியங் களான மணிமேகலையும், குண்டலகேசியும் புத்த மதக் கொள்கை களை வலியுறுத்தி நிற்கின்றன.
தமிழை ஒர் அன்னையாக உருவகித்து, ஐம்பெரும் காப்பியங் களைப் பெண்கள் அணியும் அணிகலன்களாக்கி, தமிழன்னைக்குப் பூட்டி மகிழும் தமிழன் பாங்கினை மெச்சாதிருக்க முடியாது.

Page 111
794 Gتضعهستسمعتصمع சென் துனிசன்
சீவகசிந்தாமணியை சிந்தாமணியாகத் தமிழன்னையின் கழுத்திலும், குண்டலகேசியை- குண்டலமாக அவள் காதிலும், மணிமேகலையைமேகலையாக அவள் இடுப்பிலும், வளையாபதியை. வளையலாக அவள் கையிலும், சிலப்பதிகாரத்தை சிலம்பாக அவள் காலிலும் அணிவித்து மகிழும் தமிழன் கலை ஓர் அரிய அற்புத விருந்தாகும்.
வளையாபதியின் ஆசிரியர் பெயர், அக்காப்பியத் தலைவன் பெயர், அக்காப்பியம் இயற்றப்பட்ட காலம் போன்றவை ஒன்றும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இக்காப்பியத்தின் 72 பாடல்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 66 பாடல்கள் 14ஆம் நூற்றாண்டில் தோன்றிய புறத்திரட்டில் மேற்கோளாகவும், 3 பாடல்கள் சிலம்பின் அடியார்க்குநல்லார் உரையில் மேற்கோளிாகவும், 2 பாடல்கள் யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக்கண நூலின் பெயர்தெரியாத ஓர் அறிஞரால் இயற்றப்பட்ட விருத்தியுரையில் மேற்கோளாகவும், எஞ்சிய ஒரு பாடல் இளம்பூரணரின் தொல்காப்பிய உரையிலும், யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையிலும், நச்சினார்க்கினியரின் தொல்காப்பியம் செய்யுளியலிலும் மேற்கோளாகவும் காட்டப்பட்டுள்ளன. தற்பொழுது வளையாபதிக் காப்பியம் கதைவடிவில் மாத்திரம்தான் உள்ளது. இக் காப்பியம் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் எழுந்த நூலென்பது ஆய்வுக் கணிப்பாகும். இனி வளையாபதியின் கதைச் சுருக்கத்தைப் பார்ப்போம்.
புகார் நகரில் நவகோடிநாராயணன் என்னும் ஒரு சிறந்த வைத்தியன் இருந்தான். அவன் சைவ சமயத்தவன். தன் குலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை மணந்து இன்பகரமான இல்வாழ்க்கை நடாத்) வாழ்ந்து வந்தான். இந்நாளில், ஓர் அழகிய வேற்றுச் சாதிப் பெண்ணைக் கண்டு காதலித்து அவளைத் தன் இரண்டாம் மனைவியாகத் திருமணம் புரிந்து கொண்டான். அந்நாளில் பலதார மணத்துக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்ட காலம். ஆனால், அவன் வேற்றுச் சாதிப் பெண்ணை மணந்ததை எதிர்த்து அவன் குலத்தவர்கள் அவனைச் சாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்போவதாக அச்சுறுத்தினர். இதற்கஞ்சி நவகோடிநாராயணன் தன் இரண்டாம் மனைவியை விட்டுப் பிரிந்து முதல் மனைவியுடன் கப்பல் மூலம்

அ. விசயரத்தினர்) 79.5 வேறு நாடொன்றுக்குச் சென்று வாழ்ந்து வந்தான். அவன் அந்த நாட்டில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டுச் செல்வச் செழிப்புமிக்க வணிகன் ஆனான்.
நவகோடிநாராயணன் தன் இரண்டாம் மனைவியை விட்டுப் பிரிந்த சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள். இந்நிலையில் இரண்டாம் மனைவி தனக்கு உதவுவார் எவருமின்றி மனங் குலைந்து, காளி தேவியை நாடி, கண்ணிர் மல்கி, அழுது, புலம்பித் தனக்கு உதவுமாறு இறைஞ்சி நின்றாள். காளிதேவியும் அவள் நிலை கண்டு இரங்கி பிள்ளை பிறந்தபின் உதவுவதாக வாக்குறுதி கொடுத்திருந்தாள். அவளும்- காளிதேவியை நாள்தோறும் வழிபட்டு வந்தாள். சில மாதங்கள் கழித்து அவள் ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அக் குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வந்தாள். ஐந்து வயதானதும் தன் மகனைப் பாடசாலை ஒன்றில் சேர்ப்பித்துக் கல்வியறிவு புகட்டி வந்தாள். அச்சிறுவனுடைய பாட சாலைத் தோழர்கள் அவனைத் தகப்பன் பெயர் தெரியாதவனென்றும், அநாதையென்றும் பழி கூறிப் பரிகாசம் செய்து துன்புறுத்தி வந்தனர். இதனால் மனம் உடைந்த சிறுவன் அழுத வண்ணம் தாயிடம் நடந்ததைக் கூறி, தன் தகப்பன் யாரெனக் கூறும்படி அடம் பிடித்து நின்றான், தாயும் வேறு வழியின்றி நடந்தேறிய துயரக் கதையை அழுதழுது கூறி, தகப்பனின் பெயரையும் கூறினாள். உடனே அச் சிறுவன் தன் தந்தையைப் பல இடங்களிலும் பல நாட்களாகத் தேடிச் சென்று ஈற்றில் தந்தை இருக்குமிடத்தைக் கண்டு பிடித்தான். பின், தாயிடம் வந்து தந்தை இருக்குமிடத்தைக் கூறி, அவளையும் அழைத்துக்கொண்டு தந்தையிடம் சென்று, தன்னை அறிமுகப்படுத்தி, தன்னையும் தாயையும் ஏற்றுக்க்ொள்ளும்படி வேண்டி நின்றான்.
இதற்கு நவகோடிநாராயணன் "உன் தாயை எனக்குத் தெரியும். அவளை நான் ஏற்பேன். ஆனால், நீ எனக்குத்தான் பிறந்தவனென்று எனக்குத் தெரியாது. எனவே, உன்னை நான் என் மகனாக ஏற்கமாட்டேன்.” என்று கூறிவிட்டான். அப்பொழுது காளி தேவி தோன்றி "நவகோடிநாராயணா! இவன் உன் மகன்தான். இவளும் உன் மனைவிதான். இவர்களையும் உன் மகனாகவும்,

Page 112
796 G2صبع تعرض تضعهشامعتصموzعه عا
மனைவியாகவும் ஏற்றுக்கொள்’ என்று கூற, நவகோடிநாராயணனும் காளிதேவியை வணங்கிவிட்டு, அவர்களையும் ஏற்றுக்கொண்டு, தன் மகனுக்கு வீரவாணிபன் எனப் பெயரிட்டு, இரு மனைவியர்களுடனும் பிள்ளைகளுடனும் இனிது வாழ்ந்து வந்தான் என்று கதை முடிகின்றது. மேலும், இச் சிறுவன் சிறிய வயதில் காளிதேவியின் உதவியுடன் இச்செயலைப் புரிந்ததாகக் காப்பியக்கதை கூறுகின்றது. சமண மதக் கொள்கைகளைக் கூறும் இக் காப்பியூத்தில் காளிதேவியைப் பற்றிய செய்திகளும், சைவ சமயத்தைச் சார்ந்த நவகோடிநாராயணன் பற்றிய செய்திகளும் இடம் பெற்றிருப்பது ஆய்வுக்கும், தேடலுக்குமுரிய ஒரு விடயமாகும்.
இக் காப்பியத்தின் அனைத்துப் பாடல்களும் கிடைத்திருப்பின், நூலின் கருப்பொருள், சொல் நயம், இலக்கியம், அக்கால வாழ்க்கைமுறை போன்றவற்றைப் படித்து இன்புற்றிருக்கலாம். இவை கிடைக்கப்பெறாதது ஒரு துரதிட்டமே.
பின் வரும் வளையாபதிப் பாடலொன்றை இளம்பூரணர் தொல்காப்பிய உரையில் செய்யுளியல் 98ஆம் நூற்பாவுக்கும், யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையாசிரியர் 37ஆம் நூற்பாவுக்கும் நூற்பெயரைக் குறிப்பிடாமல் மேற்கோளாகக் காட்டியுள்ளமை இப்பாடலின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. இன்னும், நச்சினார்க்கினியர் தொல்காப்பியச் செய்யுளியல்'148ஆம் நூற்பாவின் உரையில் இப்பாடலை வளைபதிச் செய்யுள் என மேற்கோள் காட்டி இக்காப்பியத்தின் சிறப்பினை உணர்த்தியுள்ளார். மேலும், இப்பாடல் கடவுள் வாழ்த்துப் பாடலாகவும் அமைந்துள்ளமை இன்னொரு சிறப்பாகும்.
“உலகம் மூன்றும் ஒருங்குடனி ஏத்துமாணி
திலகம் ஆயதிறலி அறிவனி அடி வழுவில் நெஞ்சொடு வாலிதினி ஆற்றவும் தொழுவலி தொலிவினை நீங்குக எனிறுயாணி."
இக் காப்பியத்தில் கிடைக்கப்பெற்றுள்ள 72 பாடல்களையும் புறத்திரட்டிலும், இளம்பூரனார் தொல்காப்பிய உரையிலும்,

797 Dقzصیصzaه حاجعه zع
நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையிலும், யாப்பருங்கலக்காரிகை விருத்தியுரையிலும், சிலப்பதிகாரம் அடியார்க்கு நல்லார் உரையிலும் மேற்கோள்களாகக் காட்டப்பட்டுள்ளமை, இப்பாடல்களில் பொதிந்து உள்ள் கருப்பொருள், ஈர்ப்புத் தன்மை, ஆற்றுப்படுத்தல், சொற் பிரயோகம், அறநெறியாற்றல், பிறர்மனை நயவாமை, உயிரோம்பல், ஊன் உண்ணாமை, பொய்யுரையாமை, இளமை நிலையாமை, தவம் நோற்றல் ஆகிய நற்சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
இக் காப்பியத்தின் மையப் பொருளை இவ்வாறு கூறலாம். நவகோடிநாரர்யணன் ஒரு சைவசமயத்தவன். அவன் அதே குலத்தில் ஒரு பெண்ணை விவாகம் செய்தான். இன்னும் அவன் வேறொரு குலப்பெண்ணைக் காதலித்து விவாகம் புரிந்து அவளைத் தன் இரண்டாம் மனைவியாக ஏற்றுக்கொண்டான். காதல் குலம் பார்ப்பதில்லை. பலதார மணம் பேசப்பட்டுள்ளது. வளையாபதி சமண மதக் கொள்கைகளைக் கூறும் நூல். ஆனால் நவகோடிநாராயணனின் இரண்டாம் மனைவி காளிதேவியை நாடி, வணங்கி நின்று, உதவி கேட்டுப் பெறுகின்றாள். எனவே இந்நூல் குலத்தால், மதத்தால், பலதார மணத்தால் இறுகிய கட்டுக்குள் அமையாது பரந்த நோக்குடன் சிறந்து நிற்பதைக் காண்கின்றோம்.
இன்னும் வர்ணம், குலம், சாதி ஆகியனவும், ஒடுக்குமுறை, சாதிக் கட்டுப்பாடு, குலப்பற்று. பலதார மணம், தெய்வ் நம்பிக்கை ஆகியனவும் அக்காலந் தொட்டே இருந்துள்ளன என்பதையும் இக் காப்பியம் எடுத்தியம்பி நிற்கின்றது.

Page 113
798
തുക/മ്മീബഞ്ച് zബീബ്
தொல்காப்பியம் (முழுவதும்), புலியூர்க்கேசிகன் தெளிவுரை யுடன், 469 பக், பாரி நிலையம், சென்னை, பன்னிரண்டாம் பதிப்பு, 2003.
. திருக்குறள் தெளிவுரை, டாக்டர் மு.வரதராசனார், MA
MOL, Ph.D. 291 பக், திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம். லிட். சென்னை. 136 ஆம் பதிப்பு, 1997.
- நற்றிணை, புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், முதற்
பகுதி - 436 பக், இரண்டாம் பகுதி- 468 பக், பாரி நிலையம், சென்னை. முதற் பகுதி- நான்காம் பதிப்பு 2001. இரண்டாம் பகுதி- முதற் பதிப்பு 2001.
. நாலடியார், விளக்கவுரையுடன், உரையாசிரியர்
கு.மதுரைமுதலியார். 144 பக், முல்லை நிலையம், பாரதி
நகர், சென்னை. முதற் பதிப்பின் மறுபதிப்பு 2003.
 

10.
1 1.
12.
13.
799
திருமூலர் திருமந்திரம், உரைவிளக்கம் ஞா.மாணிக்க வாசகன், 1424 பக், உமா பதிப்பகழ், சென்னை. முதற் பதிப்பு 2003.
பரிபாடல், புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், 312 பக், பாரி நிலையம், சென்னை, ஐந்தாம் பதிப்பு 2002.
குறுந்தொகை, உரையாசிரியர் திருமாளிகைச் செளரிப் பெருமாள் அரங்கன், 384 பக், முல்லை நிலையம், பாரதி நகர், சென்னை. முதற்பதிப்பு 2000.
கலித் தொகை, புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், 416 பக், பாரி. நிலையம், சென்னை. ஆறாம் பதிப்பு 2000.
சிலப்பதிகாரம், இளங்கோவடிகள். 244 பக், பூம்புகார்
பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு 1996.
அகநானுTறு, புலியூர்க் கேசிகன் தெளிவுரையுடன், களிற்றியானை நிரை - 304 பக், எட்டாம் பதிப்பு 2002, மணிமிடை பவளம் - 464 பக், ஏழாம் பதிப்பு 2002, நித்திலக் கோவை - 296 பக், ஆறாம் பதிப்பு 2002, Lumf நிலையம், சென்னை.
திருவாசகம் - சிவபுராணம் - மாணிக்கவாசகர். விளக்கியவர் சுவாமி சித்பவானந்தர், 994 பக், தபோவன அச்சுப்பள்ளி, திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி, பதின் மூன்றாம் பதிப்பு 2005.
புறநானூறு, புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், 563 பக், பாரி நிலையம், சென்ன்ன. முதற்பதிப்பு 1958, விரிவாக்கிய புதிய பதிப்பு 2002.
தொல் காப்பிய இலக்கியக் கொள்கைகளும் குறுநீ தொகையும், டாக்டர் கா. காளிமுத்து, M.A., Ph.D. 264 பக், பூம்புகார் பிரசுரம் பிரஸ், சென்னை. முதற்பதிப்பு 1983.

Page 114
2009
14.
15.
16.
17.
18.
19.
20.
நளவெண் பா, புலியூர் கி கேசிகன் தெளிவுரையுடன், 208 பக், பாரி நிலையம், சென்னை. முதற்பதிப்பு 1961, மறுபதிப்பு 2000.
ஐங்குறுநூறு, உரையாசிரியர் புலவர் அ. மாணிக்கனார், M.A. முதல் தொகுதி, 371 பக், புதிய பதிப்பு 2001, இரண்டாம் தொகுதி, 442 பக், புதிய பதிப்பு 2001, வர்த்தமானன் பதிப்பகம், தி. நகர், சென்னை.
நீதிநெறி நூல்கள் - கொன்றை வேந்தன்- ஒளவையார், வாண்டுமாமாவின் விளக்கவுரையுடன், 413 பக், வானதி பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு 2005.
மனு சுமிருதி - (ஆங்கில மொழிபெயர்ப்பு), மனு சாத்திர நூல்.
நீதிநெறி நூல்கள் - நல்வழி - ஒளவையார், வாண்டு மாமாவின் விளக்கவுரையுடன், 413 பக், வானதி பதிப்பகம், சென்னை. முதற்பதிப்பு 2005.
கலிங்கத்துப் பரணி, புலியூர்க்கேசிகன் தெளிவுரையுடன், 296 பக், பாரி நிலையம், சென்னை. புதின் மூன்றாம் பதிப்பு 2001.
பாரதியார் கவிதைகள், பதிப் பாசிரியர் முனைவர் ச. மெய்யப்பன், 478 பக், தென்றல் நிலையம், சிதம்பரம். பதிபபு 2001.


Page 115
இந்நூலாசிரிய
நுனாவிலுார் திரு. கா.விச தாயகமாம் ஈழத் திருநா தென்மராட்சிப்பகுதியில் சிறந்த ஆன்றோரும், சான்றோரும், கற்ே அமைந்த கோயில்களின் உறை நுனாவில் மேற்கு என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, தெற்கு சரசுவதி வித்தியா சாலை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லுாரியி:
இவர் படிப்பை முடித்து,
படிப்படியாகப் பல போட்டிப் கொழும்புக் கணக்காய்வுத் தி அத்தியட்சகராகக் கடமையாற்றி, பெற்றார். நுணாவிலுார் திரு.
அரச, கட்டுத்தாபன சபை ஆ கணக்காய்வு செய்து, அறிக்ை சமர்ப்பித்து, நாடாளுமன்றப் விவாதங்களிற் பங்கேற்ற அணு கணக்கியற் பட்டதாரியும் கணக்கா
2005 ஆம் ஆண்டில் வெ மனித மூளை’ என்னும் ஆய் ஆண்டில் வெளிவந்த Essentia ஆங்கில இலக்கண நுாலி கட்டுரைகளினதும் ஆசி திரு.கா.விசயரத்தினம் அவர்க
வசித்துவருகின்றார்.
Publish CENTURY HOUSE, 35, HA1
Assiste
MANIMEKALAI PIRASURAM, CHEN
ISBN: 978-1-8
 
 
 
 

ர .
யரத்தினம் அவர்கள், தமிழன் ட்டின் வடமாகாணத்தின் நகரான சாவகச்சேரியில் றோரும் நிறைந்து, நாற்றிசையும் ) தெய்வங்கள் காத்து நிற்கும் அழகிய பச்சைப் பசேலென்ற தமிழ்க் கல்வியை மட்டுவில் யிலும், ஆங்கில மேற்படிப்பைச் லும் கற்றவர்.
அரச சேவையில் சேர்ந்து, பரீட்சைகளில் சித்தியடைந்து, ணைக்களத்தில் கணக்காய்வு 1991 ஆம் ஆண்டில் ஓய்வு கா.விசயரத்தினம் அவர்கள் ஆகியவற்றின் கணக்குகளைக் ககளை நாடாளுமன்றத்துக்குச் பொதுக்கணக்குக் குழுக்கட்ட றுபவமுடையவர். இவர் ஒரு ய்வாளருமாவார்.
ளிவந்த “கணினியை விஞ்சும் வு நுாலினதும், 2007 ஆம் Ils of English Grammar" 6T60ï D. னெதும், நுாற்றுக்கணக்கான ரியராகிய நனாவிலுார் 5ள் இன்று 'த்ர்) னில்
CS: CO 2JU, MIDDLESEX, U.K. i by: NAI 600 017, TAMIL, NADU, S.INDIA
ܘܢܨܥ ܬܘ .
73265-57-4