கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: துயரம் சுமப்பவர்கள்

Page 1


Page 2


Page 3


Page 4

gzug\Ha\sÜU

Page 5
நூற்குறிப்பு
துயர3 ச\90uவிர்கள்
நிபி.அருளானந்தம்
உரிமை நீபி.அருளானந்தம்
முதற்பதிப்பு: கார்த்திகை 2009
உருபா 3'-
ISBN 978-955-1055-0-6,
Thuyaran Sumappa varkal Subject:
Nowel
- -- Wuthor: | || N. PArulananthaIII Copyright;
Author First Edition: November 2009 Published by: Thirumagal Pathippagam No. 7, Lilliyan Avenue, Mt. Lawinia - Tel:4967027, 2731887 (0722:4) 54
Printel:
A.J. Prints 44, Station Road, Dehiwela 2734765,272.3205
1 . 11 1
Elliill:1::
நாவல்
ஆசிரியர் நீபி.அருளானந்தம்
ஓவியம்:
கனிவுமதி
கெளதமன் கணினி தட்டச்சமைப்பு: கு.பிரதிபன் (பளை) பின்புற அட்டை ஒளிப்படம்: கே.விமணி (ஒளிப்பதிவாளர், சென்னை)
பதிப்பு:
திருமகள் பதிப்பகம் இல, 7 லில்லியன் அவெனியூ, கல்கிசை
அச்சுப்பதிப்பு ஏ.ஜே பிரிண்ட்ஸ் 44. புகையிரத நிலைய வீதி, தெஹிவளை 2734765, 2723205

முன் குறிப்பு
இந்த நாவலை நீங்கள் வாசிப்பதற்கு முன்னர் என் குறிப்புக் குள்ளாலே எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பின்னுரையாகத் தருகிறேன். ராமன், சிமியோன், செவ்வந்தி, திரேசா, ஏன் சுந்தரம்பிள்ளையும் உங்களுக்காகக் காத்துக்கொண்டி ருக்கின்றனர்.
கா.சி.
iii

Page 6
சாதியை மையமாக வைத்து, தமிழில் முதலாவது நாவலாக 1925 - இல் வெளிவந்த, 'நீலகண்டன் அல்லது சாதிக்கார வேளாளன் - இன் ஆசிரியர் யாழ்ப்பாணம் நாகமுத்து இடைக்காடர் அவர்களுக்கு, இந்நூல் சமர்ப்பணம்.
iv

விடியற்காலை ஐந்து மணி வேதக்கோயில் மணி தொடர்ந்து அடித்துவிட்டு ஓய்ந்துவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, வவுனியா கடைத்தெருப்பக்கமுள்ள 'முருகன் ஆலயத்திலும் மணி ஓங்கி ஒலித்தது. "கொறப்பத்தானை' - வீதிச் சந்தியிலுள்ள பள்ளிவாசலிலிருந்தும் தொழுகைக்கான பாங்கு அப்போது கேட்டது. சூசைப்பிள்ளையார் குளம் சவக்காலை வீதியருகில் உள்ள அந்தச் சேரி, ஒழுங்கில்லாத வைக்கோல் மூட்டைகள் போன்ற குடிசைகளின் தொகுப்பு அங்கேயுள்ள ஒலை வேய்ந்த மண்தொடும் குடிசைகளிலே, மணிச்சத்தத்தோடு விளக்குகள் ஒவ்வொன்றாக எரியத்தொடங்கிவிட்டன.
தோட்டி ராமனும் நித்திரைப் பாயிலிருந்து எழுந்து இருந்தான். பனி உதிரும்வேளை கருங்குருவிகளும் வெளிப்பட்டு கத்தத் தொடங் கிவிட்டன. தீப்பெட்டி வைத்த பக்கம் அவன் கையால் தடவினான். 'யானை-மார்க் தீப்பெட்டி விரல்களில் தட்டுப்பட்டது. எடுத்துத் தீக்குச்சியைத் தட்டி விளக்கேற்றினான். குடிசைக்குள் வெளிச்சமாகியது. அவனுக்கு எட்டவாக பாயில் பனம்பூப்போல படுத்துக்கிடக்கும் தன் இரு பெண்பிள்ளைகளையும் இராமன் பார்த்தான். முத்தவள் செவ்வந்தியின் முகம், விளக்கு வெளிச்சத்தில் பூரணச்சந்திரன் போல அவனுக்குத் தெரிந்தது. அவளுக்கு காற்றில் கரையும் கற்பூர குணம்' அவள் நினைவை அப்படியே நீட்டி வளர்த்துக்கொண்டு பெருமூச்சு விட்டான். எழுந்து இப்படியே நான் நித்திரைப்பாயில் இருந்தால் எப்படி..? என்று நினைத்ததும் செய்யவேண்டிய தொழில் ஞாபகம் அவனுக்கு வந்தது. உடனே பாயைச் சுருடடி எடுத்து குடிசை மூலைக்குள் அதை நிறுத்தினான். வாசலின் ஒலைத்தட்டியை கையால் தூக்கித் தள்ளிவைத்துவிட்டு வெளியே வந்தான்.
முகம் தெரியாத இருட்டாய் எங்கும் படர்ந்திருந்தது. இன்னும் விடியாத பொழுது குளிர்ந்திருந்தது. அவன் குடிசையிருந்த காணியைச் சுற்றிலும் நெல்லி அலம்பல் வேலிதான். வெளிப்படலையும் அலம்பல் விசிறிகளையடக்கி வரிச்சுப்பிடித்திருந்தது. படலையைத் திறந்து கரித்துண்டு பொறுக்கி எடுக்க வீதிக்குப் போனான். அந்தப்பக்கம் சாம்பல் மேடாய் இருந்தது. அக்கம்பக்கம் உள்ள குடிசையிலுள்ளவர் களெல்லாம் கரிசாம்பல் கழிவு கொட்டும் இடம் அது அந்த இடத்துக் குத் தள்ளிப்போய்க் குந்தி இருந்தபடி அவன் ஒன்றுக்கிருந்தான். 'ஆ' வென்று வெளியேறிய சிறுநீர், வெறும் காலடியில் வந்து இதமாய்ச் சுட்டது. குறி சுருங்கி ஒன்றுக்கிருப்பது நின்றது. எழுந்துபோய் இறுகிய சாம்பலுக்குள்ளே விரலால் தோண்டிப்பார்த்து கரித்துண்டு பல்துலக்க அவன் எடுத்தான். வாயில் போட்ட கரித்துண்டைக் கடித்ததோடு,
slugs ssövakissti O l O

Page 7
அவன் குடிசைக்கு அருகாய்த் தெரியும் சவக்காலையைப் பார்த்தான். சவக்காலைக்குள் தெரிந்த மெளனத்தை அவன் சிந்தனை கடந்து சென்றது, மெளனமாக!
இறந்துபோன சாந்தியின் நினைவு, இப்போது மீண்டும் அவனுக்கு வரத்தொடங்கியது. அந்தச் சவக்காலையில் தன் மனைவியைக் கொண்டு சென்று புதைத்த ஞாபகத்தோடு, சுட்டுவிரலைக் கொடுப்புப்பக்கம் நுழைத்து பல்தேய்க்கத் தொடங்கினான். எல்லாம் தன்பாட்டுக்கே இயங்குவதாக அவனுக்கு இருந்தது. கால்கள் குடிசைப்பக்கமாக நடந்தன. ஏதோ படலையென்று பேர்தான். அப்படியும் இருக்கத்தான் வேண்டும் என்கிறதான ஒரு வாழ்க்கை, உள்ளே போனதும் ஒழுங்காக படலையை மூடி வைத்தான். வேலியோடு நின்ற பாலைமரவேரடிக்குப் பக்கத்திலே மண்பானை இருந்தது. காலையில் குடம் நிறைய அதிலே தண்ணீர் இருக்கும். சேரிக் கிணறுகளிலே தண்ணீரில்லாமல்போன தண்ணீர்ப் பஞ்சத்திலும் அவன் பிள்ளைகள் இருவரும் தூரம் நடந்துபோய்க் குடங்களில் காவிவருகிற தண்ணீர்!
வேளாளர் வீடுகளிலே போய் தண்ணிருக்காக குடத்துடன் கால்கடுக்கக் காவல் நின்று, கொண்டுவருகிற தண்ணீர்தான் அது அந்தத் தண்ணீரிலே காலையில் வாய்கொப்பளித்துக் கண் துடைத்துக் கொள்ளலாம். அதைவிட ஏதும் கொஞ்சம் அதில் தேவை கருதி எடுக்கப்போனாலும் கறுமம்! பிள்ளைகள் தண்ணீர் காவிக்கொண்டுவரும் கஷ்டம் ராமனுக்குத் தெரியாதா என்ன? சேரிப்பக்கம் குடி தண்ணிருக்கென்று இந்தச் சனம் அலைந்து திரியும் கஷ்டம் எப்போது மாறுமோ?
அந்தக் கவலையுடன் ராமன் முகம் கழுவியது போல நினைத்து, குடத்துத் தண்ணிரில் கொஞ்சம் கைக்கு வார்த்து கண்களை மட்டும் துடைத்துக்கொண்டுவிட்டு, பாலை அடிமரத்தடியிலே சென்றான். அவன் அதைத் தழுவியதுபோல் பார்த்துக்கொண்டு, பாரித்திருக்கும் அதன் உச்சியினூடே வானத்தை நோக்கினான். வசந்தம் மாறி வசந்தமாக வளர்ந்து கொண்டிருந்த அந்த மரத்தை இருட்டுக்குள்ளும் பார்த்தபோது அவன் மனதுக்குள் பச்சையாய்க் குளிர்ந்தது. அதோடு அவன் குடிசையருகில் நின்ற வீரை மரமும்; உலகில் உனக்கு உள்ள சொந்தங்கள் நாங்கள்தான் என்று கூறுவது போல அவனுக்குத் தோன்றியது.
கோயில் வளவுக்குள் தொக்ஃகென்று பனம்பழம் விழுந்தது. இராமன் அந்தச் சத்தத்தைக் கேட்டபடி குடிசை வாசலடியில் நின்று உள்ளே பார்த்தான். அந்த நேரம் ஒலைக்கூரையில் பூனை ஒட, இறுதிமூச்சைவிடும் நிலையில் இருந்த மட்கிக் கருகிய ஓலைத் துண்டுகள், பொல பொலவென்று படுத்தபடி கிடந்த செவ்வந்தியின் முகத்திலும் பாயிலும் உதிர்ந்து விழுந்தன.
O 2 O ரீ.பி.அருளானந்தச்

66
"ஆ.” என்று பெரிதாக பூனைக்குச் சத்தம் வைத்துவிட்டு, செவ்வந்திம்மா." என்று தன்குரலைத் தாழ்த்தி மகளைக் கூப்பிட்டான் ராமன். செவ்வந்தி உடனே முகத்திலே விழுந்திருந்த ஒலைத்துண்டுகளை தட்டிக்கொண்டு எழுந்துவிட்டாள். அவளுக்குப் பக்கத்திலே, விரித்துப் படுத்திருந்த கந்தல் துணியிலிருந்து விலகிக்கிடந்தாள் தங்கை, மட்டமல்லாக்க அவள் படுத்துக் கிடந்தாள். அவளை ஒரு முறை பார்த்ததோடு தகப்பனையும் திரும்பிப் பார்த்துவிட்டு "இந்தா இப்பவேயா தண்ணிய அடுப்பில நானு கொதிக்க வச்சுர்ரேனப்பா” என்று சொல்லியபடி சுறுக்கென்று பாயிலிருந்து அவள் எழுந்துவிட்டாள். அவள் அடுப்பை மூட்டி தேநீர் போட்டுக் கொடுக்க ராமனும் அதைக் குடித்தான். அதைக் குடித்ததும் அவனுக்கு வயிற்றை முறுக்கியது.
சேரிப்பக்கம் கழிப்பறைகள் எங்கேதான் உண்டு. சக்கென்று உட்கார்ந்து அதனால் அங்கே உள்ளவர்களுக்குக் கக்கூசுக்குப் போக முடியாது. சேரிப்பக்கம் முன்னால் உள்ள கோயில் வளவுக் காட்டிற்கு, விடிவதற்கு முன்னால் அங்குள்ள பெண்கள் போய்க்கொள்வார்கள். காலைக்கடன் கழிக்க அந்த இடம் அவர்களுக்கு தோதாய்ச் சமைந்த ஒதுக்குப்புறமாயிருந்தது. ஆனாலும் சீலையைத் திரைச்சுத் தொடைக்கு மேலே சுருட்டி இடுப்புக்குமேலே ஏத்திவிட்டுக்கொண்டு இருக்கிற நேரம், ஆண்கள் தகரப் பற்றைக்குள் நிசப்தமாய் மறைந்து கொண்டுவிட்டால் என்கிற மனப்பயமும் அவர்களுக்கு இருக்கத்தான் செய்தது.
ஆண்களுக்கு சவக்காலைக்குப் பக்கத்துக் காடுகளுக்குள்ளே தொலைதூரம் போகவேண்டும். அனேகமாக சேரிப்பக்கத்து ஆண்கள் செடிகள் மண்டிய இடமாகப் பார்த்து கக்கூசுக்கிருந்துவிட்டு, மணத்தல் இலையை உருவிக் கையிலெடுத்துக் குண்டியைத் துடைப்பார்கள். பிறகு பீ மணம் இல்லாத குழை மணத்தோடு சாரத்தைக் கீழே விட்டுக் கொண்டு, தங்கள் சேரிப்பக்கம் குடிசைகளுக்கு வந்து சேர்வார்கள். இராமனும் காட்டுக்குப் போனான். அதே வழிமுறையைப் பின்பற்றி கழிவுக் கருமத்தை முடித்துத் தானும் செய்கிறதை செய்துகொண்டு குடிசைக்கு வந்தான். எல்லா அலுவல்களும் முடிந்தது. இனி வேலைக்கு நான் போகவேண்டும் என்ற அவசரத்தோடு தன் காக்கி யூனிபோமை அவன் எடுத்து உடுத்துக்கொண்டான்.
"நான் போயிட்டு வர்றேம்மா. நீ வெளக்க அணைச்சிட்டு வேணுமின்னா படுத்துக்கம்மா?” என்று மகளுக்குச் சொல்லிவிட்டு வீதிக்கு அவன் இறங்கினான். சேரிப்பக்கமுள்ள அந்தச் சவக்காலை வீதியால் அவன் நடக்கத் தொடங்கியபோது செவ்வந்தியும் தகப்பன் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தினமும் இப்படித்தான் காலையில் எழுந்து தகப்பனுக்குத் தேநீர் போட்டுக்கொடுத்துவிட்டு வீட்டுக்
துயரச் சுலப்பண்கள் O 3 O

Page 8
காரியங்களை அவள் செய்யத் தொடங்குவாள். அவளுக்கு விடிந்ததும் முக்கியமான வேலை, சேரி கழியவுள்ள வேளாளர் வீடுகளுக்குப் போய் தண்ணீர் அவர்கள் பானையில் ஊற்றிவிடவும் அதைக் கொண்டு வருவதுதான். சேரிப் பெண்களோடு சேர்ந்து கொண்டுதான் அவளும் மண்குடத்தோடு தண்ணிருக்குப் போவாள். அவளின் தங்கை ராக்காயியும் அக்காவுடன் கூடவே போவாள். செவ்வந்திக்கு தகப்பன் அன்பாகச் சொல்லிவிட்டுப் போனது அந்தக் காலை வேளையில் மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியுமாயிருந்தது. வானம் வெளுத்துக் கொண்டுவருவதைப் பார்த்துவிட்டு இருக்கின்ற அந்த இருட்டிலும் எண்ணெய்யை மிச்சப்படுத்த விளக்கின் திருகாணியைத் திருகிக் குறைத்து சுடரை அவள் அணைத்தாள். "இதிலே கொஞ்ச நேரம் பொறுத்திருந்து கொள்வோம். நிலம் வெளிச்சத்தில் தெளிய இருக்கிற இந்த முற்றத்தைக் கூட்டிப் பெருக்கலாம்” என்ற யோசனையுடன் குடிசை வாசலில் அவள் குந்திக்கொண்டு இருந்தாள்.
இராமன் வளைந்து செல்லும் அந்த வீதியால் நடந்துசென்று தாழ்வான குடிசைகளைக் கடந்துவிட்டான். அவனைப் போல தோட்டி வேலை பார்க்கிற பலர், விருப்பு வெறுப்பற்று, அமைதியான மாதிரி வடிவங்களைப் போல தொலைதுாரமாக அவனுக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்தார்கள். கிராம சபைக்கட்டிடம் இருக்கும் பகுதியில்தான் இவர்களெல்லாம் போய் தங்களது கக்கூசு. வண்டியையும் மலப்பீப்பாய்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பெயர் பதிந்தானதும் அதற்கென்று போடப்பட்டிருக்கும் தண்ணிர்க் குழாயடிக்குப் போய், ஒரு பீப்பாயில் தண்ணிரை நிரப்பி தள்ளு வண்டிலுக்குள் வைத்து கொண்டு, அவர்களுக்கென்று குறிக்கப்படும் வட்டாரப் பகுதிகளுக்கு வெளிக்கிட்டுப் போய்க்கொள்ள வேண்டும்.
விடிந்த பொழுதில் தோட்டிகளெல்லாம் ஊருக்குள்ளே சுத்திகரிப்புச் செய்யப் போய்விட வேண்டுமென்பது சுகாதார உத்தியோகத்தரின் கண்டிப்பான கட்டளை. அதனால் ராமனுடன் எல்லோரும் சுறு சுறுவென்று நடையைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். சேரி கழியவும் ஒரு புத்தம் புதிய சுயம்புவான காற்றின் சுகானுபவம் அவர்களுக்குக் கிடைத்தது. நாளும் கழிப்பறைகளிலே அதிக நேரத்தைக் கழிக்கின்ற அவர்களுக்கு, அந்தக் காற்றின் சுகானுபவம் உடலுக்கு இதமுட்டியது. மனம் அவர்களுக்கு தாமரை இலையாகக் குளிர்ந்தது. சூசைப்பிள்ளையார் குளம் சந்திக்குப் பக்கத்தே வீதியோரம் நின்ற இலுப்பை மரம் பூத்துச் சொரியும் நிலையிலே நின்றது. இலுப்பைப் பூக்கள் வீதியெல்லாம் உதிர்ந்து கூடை கூடையாகக் கொட்டிக் கிடந்தன. பரந்துகிடந்த அந்தத் தேன் சுரப்போடுள்ள பூக்களின் வாசம் கம்மென்று வாசித்தது. இராமனுக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்த வேலையாட்களும் அவர்களுக்குப் பின்னால்
O 4 O ரீ.பி.அருணானந்தரு

நடந்து போய்க்கொண்டிருந்த இராமனும், ஆதிமரம் போல அதிலே நிற்கும் இலுப்பையை கண்ணுக்குள் வைத்துக்கொண்டு அதற்குக் கீழாலே தாங்கள் போகும் போது, பொத்திப் பொத்திக் கால்களை நிலத்தில் மிதித்து பூப்போல நடையைக் கட்டினார்கள்.
அந்த இடத்தை நடையுடன் கடந்தபின், ஒரு இடத்திலே மாடுகள் தடபுடவென எழுந்து நின்றன. சந்தியாலே திரும்பிப்போய் அவர்களெல்லாம் தர்மலிங்கம் மில் வீதிக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அடுத்து கடைத்தெருவுக்குள்ளாலே போகும் சிறு பாதையூடாக நடந்து, கிராமசபை அலுவலகத்தில் போய் நின்றார்கள். இராமனுக்கு முன்னால் போய்ச் சேர்ந்த மூக்கன், அழகன், தண்ணிமலை என்பவர்களுடன் ஏலவே அங்கு நின்றுகொண்டிருந்த வீரன், வெள்ளையன், காளிமுத்து, மாடசாமி, கோடாங்கி, முனியன், அழகன், கூளையன் ஆகியோர் தாங்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்ததும் அன்றைய வேலைக்குத் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொண்டார்கள்.
இதன் பிறகு தங்கள் பாவனையிலிருக்கும் இலக்கமிட்ட மல வண்டிகளைத் தள்ளி உருட்டிக்கொண்டுபோய் குழாயடியில் ஒரு பீப்பாய்க்குத் தண்ணிரும் நிரப்பிக்கொண்டு வண்டியுடன் அந்தக் கட்டட மைதானத்தைவிட்டு வெளியேறினார்கள்.
அவர்களில் வீரன், வெள்ளையன் என்பவர்களது கக்கூசு வண்டி குடியிருப்பு வட்ட்ாரம் நோக்கிப் போனது. கோடங்கி, முனியன் ஆட்கள் இறம்பைக் குளத்திற்கும் வெள்ளையன், காளிமுத்து, அழகன் போன்றவர்கள் பண்டாரிகுளத்திற்கும் மற்றையவர்கள் கடை வீதிக்கென்றும் பிரிந்து பிரிந்து சென்றார்கள். மாடசாமிக்கும் ராமனுக்கும் சூசைப்பிள்ளையார் குளம் வட்டாரம் முழுவதுக்குமான சுத்திகரிப்பு வேலை. மாடசாமி "கொறப்பத்தானை' - சந்தியூடாகப் பிரியும் சூசைப்பிள்ளையார் குள வீதியிலே வண்டியை விட்டான். அந்தச் சந்திக்குப் பக்கத்திலே உள்ள பொது மலகூடம் அருகே நின்ற நாவல்' மரத்தடிக்குக் கீழே அவன் வண்டி நின்றது. வெற்றுப் பீப்பாய்கள் இரண்டை வண்டியின் மேல் தகர மூடியைத் திறந்து வெளியில் எடுத்து வைத்துவிட்டு, இரண்டு கைகளிலும் பிறகு அதைத் தூக்கி எடுத்துக்கொண்டு, மலகூடத்தின் பின்பக்கம் வாளி இழுத்தெடுக்க அவன் போனான்.
வெகு தூரத்தில் தெரிந்த அடிவானத்தில், சூரியன் ஒரு கனிந்த கிண்ணம் மாதிரிப் பளபளத்தது. சூசைப்பிள்ளையார்குளம் வீதியாலே பட்டிமாடுகள் வவுனியா குளக்கரைப்பக்கம் மேய்ச்சலுக்குப் போகக் கிளம்பிவிட்டன. சிற்றம்பலம்" - தியேட்டர் வீதியாலே இராமனின் கக்கூசுவண்டி, அந்தத் தெருவைச் செப்பனிட கொட்டிக்கிடந்த கற்களின் மேலே "கட கட'வென்று ஒலித்தபடி நேரே வந்துகொண்டிருந்தது.
kugo astuaksa O 5 O

Page 9
<
இராமன் வண்டியைத் தள்ளிக்கொண்டுவந்து சுருட்டுக்காறச் சுப்பையாவின் வளவுக்கு முன்னால் அதை நிறுத்தினான். வளவின் கோடிப்புறப்பக்கம்மலசலகூடத்துக்குப்பின்னால், ஒருவேலிப்படலையும் அங்கே இருந்தது. அவனை மாதிரித் தொழிலாளர்கள் இந்த விஷயம் ஒன்றுக்கு மட்டுமே, இப்படியானவர்களின் வளவுக்கேற்றுக்குள் கேட்டுக் கேள்வியில்லாமல் உள்ளே நுழையலாம். காலை வேளையிலே கடவுள் மாதிரியாக அவனைப் போன்றவர்களை நினைத்து காத்திருப்பவர்கள் இந்த வட்டாரம் வழியே உண்டு. அந்தநேரம் வாளிக் கக்கூசுகளை சுத்தம் செய்யாமல் மலசலம் கழிக்கவென்று போவது யாருக்குத்தான் அது வெறுப்பாயிராது.?
சுப்பையாவின் வீட்டிலே உள்ள மற்றையவர்கள் ஏதோ இவற்றை யெல்லாம் தாக்குப் பிடித்துக்கொண்டு, பல்லைக்கடித்தபடி கழிவுக் கருமத்தை முடித்தாலும், சுத்தம் சுத்தம்' என்று எந்நேரமும் அலட்டிக்கொண்டு திரியும் சுப்பையாவுக்கோ இதுவெல்லாம் தன்னைக் கொல்லக் கொண்டுபோகுமாப் போலத்தான் இருக்கும். இராமன் வந்து கழிப்பறையைச் சுத்தம் செய்யாத அளவில் சுப்பையா எப்போதுமே மலசலகூடத்துக்குள் போகவே போகமாட்டார். காலையில் சில வேளைகளில் அவனைப் போன்றவர்கள் வருவதற்குப் பிந்தினால், தன் அடி வயிறு நிரம்பி வெடிக்கும் கொடுமையில் உடலிலே வரும் ஒரு மிரட்டலோடு ஓட்டமும் நடைமுயாய் பக்கத்துக் காட்டுப்பக்கம் நேரடியாய் அவர் ஓடிப்போய்விடுவார்.
இன்றைக்கும் அவர் கொஞ்சம் அந்த நெளிப்புடன் மூத்திரம் முட்டிக்கொண்டு வரும் வேதனையாகவே இருந்தார். மலம் அவருக்கும் உள்ளுக்குள் புரண்டு மடங்கி மேலெழுந்துகொண்டிருந்தது. அதனால் உதட்டைக் கடித்துக்கொண்டு மூச்சை உள்ளிழுத்துப் பிடித்தபடி அவர் மலவாயை இறுக்கிக்கொண்ட அளவிலே நின்றார். சுப்பையாப் பிள்ளை வளவில் உள்ள மலசலகூடம் கிணற்றிலிருந்து அறுபது அடி தூரம் அளவிலேதான் சட்டப்படியாகக் கட்டப்பட்டிருந்தது. அவர் கோடிப்புறமுள்ள அந்த மலசலகூடம் மட்டுமாய்த் தவிப்புடன் நடைபோட்டுக் கொண்டிருந்தார். இராமன் அப்போது வந்து படலையைத் திறக்கவும்தான், அவருக்கு அவனைப் பார்த்ததும் உயிர் வந்ததைப் போல இருந்தது. ஒரு மெளனச் சீற்றம் அவருள் எழுந்தாலும் அதை அடக்கிக்கொண்டு,
"ராமா ராமா, கெதியாடா கெதியாடா” - என்றார்.
இராமன் அவர்படும் அவதியை உணர்ந்தவனாக: - "இந்தாய்யா, o 6 o ரீ.பி.அருணானந்தே

இப்பவே, சுறுக்குச் சுறுக்கா யேனுட்டு வேலய முடிச்சுர்றேனய்யா" என்றான்.
“ஏன்டா இவ்வளவு நேரம் போச்சு?” - என்று மூச்சை அடக்கியபடி இடுப்பை நெளித்து வைத்துக்கொண்டு பிறகு கேட்டார் சுப்பையா.
"தெருவெல்லாம் கல்லுப் பரப்பீண்டு கிடந்திச்சுச் சாமி.!” - என்றான் அவன்.
“கல்லுக்கும் நீ வர்றத்துக்கும் என்னடா..? “வீதியில வண்டி உருட்டிக் கொண்டர வேணாமாய்யா..?”
“சரிடா உன்ர கதயவிட்டிட்டு அலுவலப்பார்ரா.? “உங்க நான் தண்ணிய அள்ளிக்கொண்டந்து கக்கூசுக்குள்ள வச்சிருக்கிறன். கதைச்சுக்கொண்டு சும்மா நிக்காம கெதியா செய்யிற அலுவலப் Lumtirgim...?”
பல்லை இறுக்கிக் கடித்துக்கொண்டு கோபமும் எரிச்சலும் பொங்க சுப்பையாப்பிள்ளை சொன்னார். அவருக்கு ஆடையில் இழுக்கி விடுகின்ற நிலையில் இருந்தது. இராமன் சுப்பையாப்பிள்ளையின் அவதியைக் கண்டு உண்மையிலேயே மனவருத்தமும் பட்டான். அருவருக்கத்தக்க ஒரு தொழிலை அவன் செய்தாலும் அவனுக்கு மனித நேயம் என்பது இருந்தது. அவன் எந்த அளவு அடிமட்டத்து ஏழ்மை வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தாலும், இரங்கும் இதயம் கொண்ட இனிய மனிதனாகவே வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஆனால் இவனைப் போன்றவர்களைவிட தங்களை உயர்ந்த சாதிக்காரர் என்று கூறிக்கொண்டு உச்சத்தில் இருந்தவர்களெல்லாம், மனதில் குரூரமும் மூர்க்கத்தனமும் கொண்டவர்களாகவே அவ்விடங் களில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தோட்டி வேலை பார்க்க வருகிறவர்களுக்கு “அம்மா. ஐயா..” என்று ஒரு கூப்பிடு கேட்டதும் விழுந்தடித்துக்கொண்டு தங்கள் வீடுகளின் வெளியேவாய் வந்து வாளிக்கு தண்ணீர் ஊற்றி விடுபவர்கள், சேரியிலிருந்து குடி தண்ணி ருக்காக குடங்களுடன் வரும் அவர்களின் பெண்களுக்கு உடனே அதுபோல தண்ணீர் வார்த்து விடுவதில்லை.
உலகில் தண்ணிருக்கான பஞ்சத்தில் தவிக்கும் மக்களில், இந்தத் தாழ்ந்த சாதியென்று ஒடுக்கப்பட்ட மக்கள்தான் மிகவும் பாதிக்கப் படுபவர்கள். எத்தனையோ கிணறுகளிலே தண்ணீர் தாராளமாய்த் தளம்பிக்கொண்டு கிடக்கிறது. அள்ள அள்ள நீர் சுரக்கும் இந்தக் கிணறுகளிலேயே தண்ணீர் அள்ளிக் குடிக்க முடியாததொரு நிலைமை அவர்களுக்கு. இயற்கை மனிதனுக்கென்று இலவசமாய் அருளிய
slugă estualăsă o 7 o

Page 10
இந்தத் தண்ணீரையும் தாழ்ந்த சாதிக்கு இல்லையென்று மறிக்கின்ற கொடுர குணம்.
உயர்சாதியென்று தம்மை சொல்லிக்கொண்டவர்கள்தான் இப்படியான கீழ்த்தரமான மனிதத்தன்மையற்ற செயலைத் தொடர்ந்தும் அவர்களுக் குச் செய்தவண்ணம் இருந்தார்கள்.
இராமன் தன் கையுறையை ஞாபக மறதியில் வண்டியில் வைத்துவிட்டு வந்துவிட்டான். தண்ணீரை ஊற்றி சுத்தம்பண்ணிவிட கையில் ஈர்க்குக் கட்டுடன் வந்தவனுக்கு கையுறை கொண்டுவராது விட்டது என்னவோ பெரிதாகத் தோன்றவில்லை. என்னதான் இல்லாது போனாலும் அவனுக்கு இப்போது அவைகளா முக்கியம்? இங்கே அவனுக்கு முன்னால் ஒரு மனிதன் துடித்துக்கொண்டு அவதிப்படுகிறானே? அந்த மனிதன் படும் வேதனை அவனுக்குத் தெரியும் அதனால் அவன் உடனே கழிப்பறையின் உள்ளே சென்று தண்ணிர் வாளியை எடுத்துக்கொண்டு பின்பக்கத்துக்குப் போனான். வெறுங்கையால் மல வாளியைப் பிடித்து அதை வாசலால் வெளியே இழுத்தான். அந்த வாளிக்குள் மனிதக் கழிவுகள் தங்க ஒட்டியானம் போலவும், கரும் அட்டைகள் போன்ற நிறத்திலும் மின்னிக்கொண்டு குரூரமான ஆபாசத்தோடு மிதந்துகொண்டிருந்தன. அவஸ்தையோடு முக்கி முக்கி வயிற்றுத் தசைகள் இறுக கழித்துவிட்டுப்போகும் அதற்கு உரியவர்களின் ஆசனத்துவாரங்களுக்கேற்ற அந்த அசிங்கத்தை யெல்லாம், இராமன் நாளாந்தம் பார்த்துப் பழக்கப்பட்டவன். இந்தத் தொழில்தான் தனக்கும் பிறவித்தொழில், என்றதாய்த்தான் அவனும் தனக்குள் உறுதிப்படுத்திக்கொண்டு வாழ்பவன். எனவேதான் அவன் மலப்புழுக்களைக்கண்டும் மனம் கோணவில்லை. தன் இரு கைகளாலும் அருவருப்பைத் தொலைத்துவிட்டு, அந்த வாளியைத் தூக்கித் தான் கொண்டுவந்திருந்த வெற்றுப்பிப்ப்பாய்க்குள் அவன் அதைக் கொட்டினான். அதன் பிறகு வாளிக்குள் கொஞ்சம் தண்ணிர்விட்டு, ஈர்க்குக் கட்டால் உள்ளே தட்டி ஒழுங்காக வாளியை சுத்தம் செய்துவிட்டு, கழிவு நீரை முத்திரங்கிடங்கிலே ஊற்றினான். வெறும் வாளியைப் பிறகும் அவன் கழிப்பறைக்குள் ஏற்றினான். தூரத்தில் நின்று இதையெல்லாம் பார்த்துக்கொண்டு நின்ற சுப்பையாப்பிள்ளை "அங்க நெருப்புத் தண்ணிப் போத்தல் உள்ள கக்கூசு மூலைக்க கிடக்கு ராமா. அதில எடுத்து உள்ள வடிவா ஊத்தி நல்லா கழுவி விடு சுத்தமா..?" என்று அவனுக்கு அவர் அடுத்த வேலையைச் சொன்னார்.
அவர் சொன்ன மாதிரியே அவனும் நெருப்புத் தண்ணிர் ஊற்றி
உள்ளேயெல்லாம் திறமாய்க் கழுவிவிட்டு கக்கூசை விட்டுப் படியிறங்கினான். அவன் கக்கூசுப்படியால் இறங்கியகையோடு உடனே
0 & 0 தீவி.ஒருசானர்டின்


Page 11
தான் வைத்துக்கொண்டு நின்ற கை வாளித் தண்ணிரோடு, சுறுசுறு வென்று நடந்து கக்கூசுப்படியேறி அவர் உள்ளேபோய் கதவைச் சாத்திக்கொண்டார். அதன் பிறகு மூர்க்கத்துடன் தங்கி இருப்பதை முக்கி முனகி மலம் கழிப்பதன் அருமையை அனுபவித்துக்கொண்டு வெளியேற்றிக் கொண்டிருந்தார் சுப்பையா. அவரின் காரியம் ஆகிக் கொண்டிருந்தது.
இராமன் மலப்பீப்பாயை முடியால் மூடி ஒரு கையில் அதையும், மறு கையில் ஈர்க்குக் கட்டையும் எடுத்துக்கொண்டு, தன் வண்டிலடிக்குப் போனான். அதற்குப் பிறகு சுப்பையாப்பிள்ளை வீட்டருகில் உள்ள மலகூடம் இருக்கின்ற வளவுகளுக்கெல்லாம் சென்று, அங்கும் தனது சுத்திகரிப்பு வேலையைத் தொடர்ந்து அவன் செய்தான். அங்குள்ள வேலையெல்லாம் முடிந்த பின்பு, சந்தியிலுள்ள பொது மலகூடத்தை அவன் போய் சுத்திகரிக்குச் செய்யவேண்டியதாய் இருந்தது.
பொது மலகூடங்களுக்கென்றொரு தனி அடையாளமுண்டு. அங்கே மலகூடத்தின் சுவர்கள் முழுவதும், மனிதப் பிறப்புறுப்புக்களின் கோரச் சித்திரங்களால் நிறைந்திருக்கும். மனித உற்பத்தியைச் சித்தரிக்கும் மேலும் பல சித்திரங்களும், கரி எழுத்துக்களுடன் அங்கே சுவர்களில் காணப்படும். அந்தச் சுவர்களிலுள்ள வெடிப்புகளுக்கு உள்ளேயெல்லாம் நிறுசீர்விட்ட மூத்திரக்காடியின் மணம் இருந்துகொண்டு மூக்கை மோதும்.
இராமன் மல வண்டியை தள்ளிக்கொண்டு போய் கான்பக்கம் ஒரமாக நிறுத்திவிட்டு, பீப்பாய்கள் இரண்டை தூக்கிக்கொண்டு மலகூடத்தின் பின்பக்கம் போனான். இம்முறை கை இரண்டிற்கும் அவன் பாதுகாப்பு உறை போட்டிருந்தான். இந்தப் பாதுகாப்புக் கையுறையானது, தோட்டிகளுக்கு கிராம சபை மூலமாக கொடுக்கப்பட்டு வந்தது. உற்ைகளை தொழில் நேரம் கைகளுக்குப் போடவேண்டுமென்பது சுகாதாரப் பரிசோதகரின் கண்டிப்பாக கட்டளை அவர்களுக்கு.
இராமன் பொது மலசலகூடம் துப்பரவு பண்ணுகிற போதுதான், கொஞ்சம் மனம் கிலித்துப் போவான். சில வேளைகளில் அந்த நாற்றத்தினால் அழுகிச் சிதைந்து போகின்றாற்போலவும் அவன் ஆகிவிடுவான். வழிப்போக்கரிலிருந்து இந்த மலசலகூடத்துக்குப் பலரும் பத்துப்பேரும் போவார்கள். இதனால் வாளியும் தளம்பி ஊற்றுண்டு நரகல் நாறும். பறவை எக்கி எக்கி எச்சம் விடுவதைப் போல அவன் அங்கே வாளியை இழுக்கும்போது, உள்ளே இருப்பவர்கள் சிலர் வெளியே நடப்பதைத் தெரியாமல், தளும். தொளும்.’ என்று வாளிக்குள் விழுகிற கெட்டியான பீக்கழிச்சலோடு இருப்பார்கள். வாளி இழுபடுவதைக்கண்டுவிட்டால் ஏதோ சீல் வைத்து அடைத்து முத்திரை குத்தினது மாதிரி நிறுத்திவிடுவார்கள். அந்தப் பீயிலிருந்து O 10 O ரீ.பி.அருணானந்தே

ஆவி உயர்ந்து கொண்டிருக்கும். மல வாளிக்குப் பின்னால் சிறுநீர் பாய்ந்தொழுகும் வாய்க்கால் சொத சொதத்துக்கிடக்கும். அதற்குப் பக்கத்திலும் நீண்டிருக்கும் சிறுநீர்க்கோடுகளின் பிசுபிசுப்பில் காலை வைத்துக்கொண்டு நின்றுதான், அவன் சுத்திகரிப்பு வேலையைச் செய்யவேண்டும். பொது மலகூடத்தில் ஆறு வாளிகளாவது இருக்கச் செய்யும். இவையனைத்தையும் அவன் சுத்தம் செய்து முடிப்பதற்கிடையில் கெட்ட நாற்ற விசேஷத்தில் அவன் வியர்த்துக் களைத்துவிடுவான். முகமெல்லாம் அவனுக்கு இருண்டு விடும். நெஞ்செல்லாம் படபடக்கும். உடலெங்கும் வேர்வையோடு அரிக்கும். என்றாலும் நாளாந்தம் தன் சுவாசத்தை நுரையீரலிலே நிறுத்தி வைத்துக்கொண்டு, செய்து செய்து எல்லாமே அவனுக்குப் பழகிய தாய்விட்டது. இப்போது தன் வேலையெல்லாம் செய்து முடிந்தது என்கிற திருப்தி அவனுக்கு. அவன் மலப்பீப்பாய்களை நிரையாக வண்டிலுக்குள் வைத்து, வண்டிலின் தகர மூடியை முடி அதைத்தள்ளி எடுத்துக்கொண்டு மலக்கிடங்குப் பக்கம் போய்ச்சேர்வதற்கு அங்கிருந்து வெளிக்கிட்டான்.
வண்டிலை தள்ளிக்கொண்டு வெளிக்கிடும்போது, மலநாற்றம் சுவாசத் தில் ஏறியதால் மூச்சிலும் அவனுக்கு அவ்வளவு சூடு. வெயிலும் நன்றாக ஏறி சுள்ளென்று உறைத்தது. வண்டியிலும் பாரம் ஏறியிருந்தது. சல்லிக்கல் கொட்டிய பாதையிலும் கஷ்டப்பட்டு அவன் வண்டிலைத் தள்ளிக்கொண்டிருந்தான். ஒரு பக்கம் வண்டில் தளும்பி அசையும்போது பீப்பாயிலிருந்து மலம் வழிந்து நிலத்திலும் ஒழுகிக்கொண்டிருந்தது. இராமன் வண்டிலைத் தள்ளியபடி தன் நடையோட்டத்தை ஆரம்பித்தான். அந்த வீதியில் போகின்ற எல்லோரினதும் முகச்சுழிப்புக்குள்ளும் இருந்து விலகிப் போய்விடவேண்டுமே என்பது அவனது அவசரம். வீதியில் போகின்றவர்களுக்கெல்லாம் தான் ஒரு இடையூறாக இருக்கின்றேனே, என்ற மனக்காய்வு அவனுக்கு.
வண்டிலை உருட்டிக்கொண்டு அவன் போகும்போது 'என்னே விதி இந்தத் தொழில் வாழ்வு' - என்றும் அவன் நினைத்துக்கொண்டான். அவன் கண்களிலும் கண்ணிர் அப்போது கசியத்தான் செய்தது.
சேரியிலே வாழ்பவர்களுக்கு அவர்கள் வாழ்விடத்துக்கு முன்னால் உள்ள அந்த வீதி, தங்கள் மணமும் பிணமும் போகின்ற வீதியாகத்தான் இருந்தது. அந்தச் சேரிக்குப் பக்கத்திலே சவக்காலை இருந்ததுதான் அதற்கான காரணமாய் இருந்தது. அந்தச் சவக்காலையில் புதைக்கப் படும் பிரேதங்களெல்லாம், அந்தவழியாகவேதான் அனேகமாகக் கொண்டுவரப்பட்டன. சவக்காலைக்குப் பின்புறம் குளத்துக்குப் போகின்ற வீதி இருந்தது. சவக்காலை கடந்து அந்த வீதியில்
plugið anøövalăsař O l l O

Page 12
இறங்கினால் முதல் முதலில் ஒருவர் கண்ணில் சந்திப்பது அந்த வீதிக்குப் பக்கமுள்ள பெரும் மலச்சாக்கடைக் குழிகள்தான். அந்த
இடத்தை ஒருவர் தாண்டிப்போக மட்டும் மலக்கழிச்சல் நெடி, மூத்திரக்
கவிச்சை நாற்றம், புழுக்கை மணம் இருந்துகொண்டே இருக்கும்.
இராமன் தீக்கொளுத்தும் வெயிலின் உக்கிரத்தைத் தலையில் தாங்கியபடி வண்டியை அந்த இடத்துக்குக் கொண்டுபோனான். மலக்கிடங்குக்கு அந்த வண்டிலைத் தள்ளிக்கொண்டு போவது அவனுக்கு மிகவும் கடினமான வேலையாயிருந்தது. மலம் பாதையில் வழிய வழிய ஒருவாறு அந்த இடத்தை வண்டிலுடன் அவன் அண்மித்தான். அவனைப் போலவே பல வட்டாரத்திலிருந்து சுத்திகரிப்பு முடித்து வந்த தோட்டிகள், தங்கள் வண்டிகளுடன் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். அந்த மலக்குழிகளுக்குப் பக்கத்திலெல்லாம் ‘ ஆனைத்தகரை - வளர்ந்து மஞ்சள் நிற பூக்களைப் போர்த்தியிருந்தன. அவர்களெல்லாம் பீப்பாயிலுள்ள மலக்குப்பைகளை குழிகளில் கொட்டிக் கொண்டிருந்தார்கள். இராமனும் அவர்களைப் போல மலத்தைக் குழியில் கொட்டினான். பிறகு கிராம சபையில் இருந்து கொண்டு வந்த தண்ணீரில் பீப்பாயைக் கலக்கி குழிக்குள் பாய்ச்சிவிட்டு, அந்த வெட்ட வெளியில் ஒற்றை மரமாய் நின்றிருந்த புளியமரத்தடிக்கு வந்தான். புளியமரத்துக்குக் கீழே சூரியனின் ஒளி பதுங்கியிருந்தது. அவனுடன் அந்த இடத்தில் நின்ற தொழிலாளர்களெல்லாம் அவன் நின்று கொண்டிருந்த புளியடி நிழலின்கீழ் வந்து சேர்ந்தார்கள்.
“என்ன ராமா. சாராய கடைப்பக்கமா நீ வண்டிய விட்ட பின்னாடியா என்கூடவா வர்றியா..?” என்று கேட்டான் மூக்கன். ராமன் இடையிடையே சாராயம், கள்ளு குடிப்பவன்தான். ஆனாலும் நாளாந்தப் பழக்கமாயில்லை. அதனால், "இண்ணைக்கா நான் வரலடா.” என்றான்.
வீரனும் வெள்ளையனும் புளிமரக் கிளையில் கைக்கு எட்டவாகக் கிடக்கும் காயைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். கடும் கசப்பு வாய்க்கு புளியங்காயை கடித்துக்கொண்டு, “கடும் புளிக்காய்” . என்றான் வெள்ளையன்.
"அறைச்சுக் கொளத்து மீன் குளம்புக்குப் போட்டா ருஸ்சீ.! இது பழமா வந்துடிச்சின்னா தின்னவாட்டி நல்ல மதுரமா இருந்துக்கும்.! தெவர்ப்பும் புளிப்பும் இனிப்புமா..” என்றான் வீரன்.
“போனவாட்டி இந்த மரம் காய்ச்சது என்னவோ புழுக்கடியும் வெம்பலும் கருக்காயுமாக்கிடந்து கீழே எல்லாமே கொட்டிச்சு. ஆனா இந்த வாட்டி மரம் காய்ச்சதெல்லாமே, நீளம் நீளமா, அகெலம் அகலமா, எந்துட்டுப் பெரிய பெரிய காயுங்க..? கெட்டே சிலித்துப்
O 12 O ரீ.பி.அருணானந்தே

போயிக் கெடந்து பாரமாயுந் தொங்குறதப்பாரு.”
என்று அந்தப் புளிய மரத்தின் போன ஆண்டுக் காய்த்தலையும், இந்த ஆண்டில் அதன் பிரயோசனத்தையும், விலாவாரியாக எடுத்துச் சொன்னான் வெள்ளையன்.
“அவன் சொன்னது சரிதான்..!” என்று நினைத்துக்கொண்டு அதற்குக் கீழே நின்ற எல்லோரும் தலைநிமிர்ந்து மரத்தின் உச்சிக்கிளைவரை
பார்வையை உயர்த்திக்கொண்டு போனார்கள்.
இராமனுக்கு அந்தப் புளிக்காய்களைப் பார்த்துக்கொண்டிருக்க வேறு ஒரு நினைப்பு வந்தது. சின்னஞ்சிறு பிள்ளைகள் பள்ளிக்கூடம் விட்டுவரும்போது, மில்லடி வீதிப் புளிக்கு தங்கள் சின்னஞ்சிறு கையால் தடியை எடுத்து புளியங்காய் விழுத்த ஓங்கி எறிந்து பார்க்கிறதும், அதிலே ஒரு பிரயோசனமும் கிடைக்காமல் ஏமாற்றத் தோடு மரத்திலுள்ள புளிக்காய்களைப் பார்த்துக்கொண்டு திரும்பிப் போவதும் அவன் கண்களிலும் கண்டுகொண்டதுதான்.
அதை நினைத்துப் பார்த்து இப்படியும் அவன் எண்ணினான்.
“இந்தப் புளியம்பிஞ்சுங்கள புடுங்கிக்கிட்டுப் போயி பசங்களுக்குக் கொடுத்தா எப்புடியெப்புடியெல்லாம் தின்னுக்குவாங்க.! யின்னா
மாதிரியா சந்தோஷப்பட்டுக்குவாங்க..!" என்று அவன் அந்தச் சிந்தனையில் மூழ்கியிருந்தான்.
"ராமா என்னடா மரத்தையே உர்ரென்னு பாத்துக்கிட்டிருக்கா. புளி பழுத்திச்சின்னா தனிய ஒனக்கு மட்டுமில்லடா. நம்ம எல்லாருக்குமா இந்த மரம் பங்குதான்! அதையும் நீ நெனைச்சிக்கடா?” என்று சிரித்துக்கொண்டு சொன்னான் வெள்ளையன். ராமனும்தான் யோச னையை விட்டுவிட்டு, கூடவே அவர்களோடு சிரித்தான்.
"சரி சரி நேரமாச்சு ஆளாளுக்கு வண்டியோட வெளிக்கிடுங்கடா..? வேளாவேளைக்கிதக் கொண்டுபோயி எடுத்த இடத்தில ஒதுக்கிப்புட்டு வந்து அப்புறம் கொளத்தில போயி விழுந்துக்கணும். என்ன மாதிரிப்பா அவியுது இந்த ஒடம்பு.?”
அவன் சொல்லவும், எல்லோரும் தங்கள் தங்களது காலி வண்டிகளை உருட்டிக்கொண்டு மலக்கிடங்குப் பகுதியை விட்டு வெளிக்கிடத் தொடங்கினார்கள். அவர்கள் வண்டியுடன் வெளிக்கிட்டு வீதியாலே போகும்போது, அவர்களுக்குக் கொஞ்சம் முன்னால் அவர்களின் குறுகிய நிழல்களும் போய்க்கொண்டிருந்தன. வண்டில் தகரம் தன்பாட்டுக்கு தடதட-வென்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. குளத்தடிப்பக்கமுள்ள கல்குவாறியில் கல் பிளந்தெடுக்க கல்வெடி’
துயரம் சுண்பண்கள் O 13 O

Page 13
வைத்துக் கொளுத்தி விட்டிருந்தார்கள். "டமார்" என்று பெரியதாய் அதிர்வு வெடிச்சத்தம்! அந்தச் சத்தத்துடன், முடம்பட்ட முதிர்ந்த கருங்காலி மரத்தின் கரிய கிளையில், கும்பலாய் இருந்துகொண்டிருந்த குருவிகள், அதை விட்டுக் கலைந்து அங்குமிங்குமாக விரைவாகப் பறக்கத் தொடங்கின. ஆட்காட்டிக் குருவி குளத்து அலை கரையில் ஏற்கனவே சத்தம் கொடுக்கத்தொடங்கி இருந்தது.
え
காலையின் தென்றல் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. வெயில் வரப்பார்க்கிறது. தண்ணிமலை பெண்டாட்டி வீட்டுக் கோழிகள் இரண்டு, கோயில் பக்கத்துக் காட்டை நோக்கி வீதியைக் கடந்து ஓடுகின்றன. ஆஸ்பத்திரியில் கங்காணி வேலை பார்க்கும் அன்னலட்சுமியம்மா வீட்டுப்பசு ஒன்று, கயிற்றை அறுத்துக்கொண்டு சிறும் வீச்சோடு சவக்காலை வீதியிலே ஓடி வருகிறது. செவ்வந்தி விட்டுக்கு முன்னால் உள்ள சாம்பல் மேட்டில், நாய்கள் இரண்டு ஒன்றுசேர்ந்து ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டிருக்கின்றன. செவ்வந்தி குடத்தில் இருந்த அடித்தண்ணீரை பூக்களுக்கு கையால் தெளித்தாள். தண்ணிரை வாங்கிக்கொண்டு பூக்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. அவள் பதியம் வைத்து நட்ட ரோஜாச் செடி, இலையும் முள்ளும் பரப்பிவிட்டு இறுதியில் பூப்பூத்திருந்தது. செவ்வந்திக்கு மரங்களிலும் மலர்களிலும் அபாரப்பிரியமுண்டு. தான் வளர்த்து வைத்திருக்கும் செவ்வந்திப்பூச்செடிகளைப் பார்த்தபடி,
"கெதியா வெளிக்கிடும்மா நேரமாயிடுச்சில்லே.?" என்று தன் தங்கையை தண்ணிருக்குப் போகவென்று அந்நேரம் கூப்பிட்டாள்.
"வர்றேனுக்கா. வர்றேனுக்கா" என்று கொண்டு அவளது தங்கை ராக்காயி குடிசைக்குப் பின்னாலிருந்து சின்னக் குடத்தோடு அதிலே வந்தாள்.
"என்ன பிள்ள நி எல்லாத்திலயும் சொணங்கிக்கிண்ணு." - என்று அவள் செல்லமாக கடிந்தாள். "என்னக்கா நீ இப்பவாட்டிதானே என்ன கூப்பிட்டே"
"நல்லாருக்கடி! உனக்காகவா. எத்துணுரண்டு நேரமா உன்னயப்பாத்துக்கிட்டு நானு இதிலயா நிண்ணுக்கிட்டிருகிறேன் எனக்கு நீ கதவுர்றியா..? நாம நேரத்துக்கு போய்கிட்டாத்தான் அந்த ஆளுங்க வீட்டில இருந்து எங்களுக்கெல்லாமா தண்ணிய ஊத்திவிட்டுக்கு வாங்க. நேரம் பிந்தினாக்க ஆளையாளு எங்கினையாச்கம் அவுங்க 0 14 0 ரீ.ரி.ஒருனாவுத்தம்


Page 14
கெளம்பீடுவாங்க. அப்புறம் அம்மாம்ாருங்க அவுங்க அவுங்க வீட்டில சமையலுக்கிண்ணு குந்தீடுவாங்க, பிறவாட்டி நாம போனா அவுங்களுக்கு வாயில இருந்து பேச்சுத்தாண்டி வரும்.”
ராக்காயி அக்கா முகத்தைப் பார்த்தபடி, அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு வேலிப்படலையடியில் நின்றாள். செவ்வந்தி குடத்தை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டபடி நடந்துபோய் படலையைத் திறந்தாள். தங்கை அப்போது முன்னால் போக அவளும் பட்லையைச் சாத்திக்கொண்டு வெளிக்கிட்டாள். -
இராமனின் குடிசைக்குப் பக்கத்துக் குடிசை தண்ணிமலையிலுடையது. அவன் குழந்தைகளும், வேலியே இல்லாத அந்தக் குடிசைக்கு முன்னால் உள்ள நிலத்தில் கூனிக்குறுகி உட்கார்ந்திருந்தார்கள். சின்ன வேப்பம்பூப்போல் அவர்களுக்கெல்லாம் கண் முனையில் பீளை தள்ளிக்கொண்டதாய் இருந்தன. வாயின் இரு பக்கங்களிலும் காய்ந்து ஒட்டியிருந்தது சளுவை. ஒரு பிள்ளை அதற்குள் ஊழை மூக்கை வடித்துக்கொண்டிருந்தான்.
“லட்சுமியக்கா”
"இந்தா வந்துர்றேன் புள்ள" தண்ணிமலையின் பெண்சாதி குடத்துடன் வந்து செவ்வந்தியுடன் சேர்ந்துகொண்டாள். மூவருமாகச் சேர்ந்து கொண்டு இரண்டு குடிசைகளையும் தாண்டியதும் ‘வீரம்மா குருவம்மா." என்று லட்சுமி குரல் கொடுத்தாள். அவர்கள் அதிலே கணக்காய் வந்துசேர, அங்காலே உள்ள குடிசையிலிருந்து வெள்ளையம்மா, அன்னத்தாய், பூசாத்தாள், சாந்தி, கூறி, மாடத்தி என்றும் பெயருடைய பல பெண்கள் ஒன்றாக ஒருச்சேர்ந்து கொண்டார்கள். தள்ளி ஊதிய வயிற்றுடனும் ஒருத்தி, குடத்துடன் வந்து நின்றாள். மாடத்தி, பூசாத்தாள், வெள்ளையம்மா போன்றவர்கள் அறுதல் பழசான சேலை கட்டியிருந்தார்கள். அவர்களுடன் அவர்களுக்குரிய மணமும் குச்சில் கதவுகளைத் திறந்துகொண்டு அவர்கள் வந்ததோடு சேர்ந்து வந்தது.
“இம்மாண்டுப் பட்டாளமா எங்க நாம போய்க்கிறோம்.?” என்று புதிதாக அவர்களுடன் வந்து சேர்ந்த பாப்பாத்தி என்பவள் அவர்களையிெல்லாம் பார்த்து ஒரு விசமக் கேள்வி கேட்டாள். அவள் கேட்டதுக்கு எல்லாப் பெண்டுகளும் குடத்துடன் நின்றுகொண்டு கலகலவென்று சிரித்துக்கொண்டார்கள். அவர்களுக்குள்ளே நடுத்தர வயது கடந்த பெண்கள் இருந்தார்கள். இப்போதுதான் திருமணமா கியிருந்த புதுமணப்பெண் ஒருத்தியும் செழிப்புடன் அதற்குள் இருக்கக் காணப்பட்டாள். செவ்வந்தியைப் போலவும் இரு பெண்கள் இருந்தார்கள். எல்லாச்சாதகமான வாய்ப்புக்களிலும் ஒன்றிவிடும், குமரான பருவத்திற்கே உரிய உற்சாகமான நிலையில் அவர்கள் காணப்பட்டார்கள்.
O 16 O ரீ.பி.அருணானந்தே

"அந்தப் பக்கம் உள்ள குடிசேல உள்ள எல்லாருமே நேரத்துக்கு கெளம்பீட்டாங்க. நாங்கதான் இண்ணிக்கி பிந்தினாப்புல தண்ணீர்ப் பிச்சைக்குக் கெளம்பிக்கிட்டிருக்கோம்.” என்று சொன்னாள் பாப்பாத்தி அவள் அந்தப் பக்கக் குடிசைகள் என்று, எவர்கள் இருக் கும் பகுதியைச் சுட்டிக் கூறுகிறாள் என்பது அங்கு நிற்கும் எல்லாப் பெண்களுக்கும் விளங்கியிருந்தது.
அந்தச் சேரிப்பக்கம் முழுவதிலுமாக ஒரே தொழிலைச் செய்து வாழ்பவர்கள் மாத்திரம் சீவிக்கவில்லை. ஒதுக்குப் புறமாக உள்ள சவக்காலைப் பக்கத்துக் குடிசைகளிலே, தோட்டி வேலை செய்பவர் களான இவர்களின் வாழ்விடமிருக்க, இவர்களின் குடிசைகளுக்கு முன்னாலே உள்ள பரந்த நிலப்பரப்பில் 'கூட்டுப்பாட்டி' என்று தங்கள் தொழிலைச் சொல்லிக்கொள்ளும் நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் இருப்பிடங்களான குடிசைகளும் இருந்தன. தொழில் நிமித்தமாய் இவர்களும் தங்களை பிரித்துக்கொண்டே வாழ்ந்தார்கள். ஆனாலும் இவர்களின் இரண்டு சமூகத்துக்குள்ளும் உறவும் இருக்கவில்லை. பகையும் இருக்கவில்லை. குடுக்கல் வாங்கலென்று எதுவும் நடக்கவில்லை. சாவு, வாழ்வு, என்கிற யாவுமே இந்தப் பரிவாரத்துக்கு உள்ளேதான் நடந்துகொண்டிருந்தது. பொதுவாக ஒரு வாக்கியத்தில் இதைச் சொன்னால், அவர்கள் தனியே! இவர்களும் தனியே! அப்படித்தான் இரு சமூகமும்.
பாப்பாத்தி அவர்களுக்கு அப்படிச் சொல்லிவிட, மற்றப் பெண்க ளெல்லாம் சிந்தனைவயப்பட்டவர்களாய் நின்றார்கள். அவர்கள் அப்படித் தாங்கள் சிந்திக்கவேண்டியதாய் உள்ள ஒரு காரணமும் இருந்தது. எல்லாப் பெண்களும் கூடி ஒரு கிணற்றடிக்கென்று போய்ச் சூழந்து நின்றால், அவர்களின் குடங்களுக்கு தண்ணிர் ஊற்றிவிடவரும் வீட்டுக்காரர்கள் சினந்தெழுவார்கள்.
"எல்லாரும் நீங்க இப்பிடி வந்து ஒரு கிணத்திலயா குவிஞ்சா நாங்க எல்லாருக்கும் எப்பிடியா? தண்ணி அள்ளி ஊத்துறது. அக்கம் பக்கம் கிணறுகளுக்கும் கொஞ்சம் கொஞ்சப் பேராய்ப் பிறிஞ்சு போய்க் கொள்ளுறது தானே.?” இப்படி ஒரு கதை கேட்டால் பாப்பாத்தி தன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இராள். அவள் ஏதோ தன் வாயில் வருவதை உடனே முணுமுணுத்த விதமாய் வெளியே கொட்டிவிடுவாள்.
"யோவ்! ஏனய்யா எங்களுக்காகவா நீங்க இவ்வேளவு கஷ்டம் சுமக்கணும்.? எங்களையே நீங்க தண்ணியள்ளிக்க கிணத்துப்பக்கமா வுட்டுடுங்களேன்.? நாம வேண்டியத கெணத்தில அள்ளிக்கிறம் glugið -sövaðissi O 17 O

Page 15
virus."
இந்த நேரம் செவ்வந்தி பாப்பாத்தியின் பக்கத்தில் நின்றால், அவளுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்துவிடும். ஆனாலும் அதை அவ்விடத்தில் அடக்கிகொண்டபடி தன் முழங்கையால் பாப்பு வின் இடையில் அவள் இடிப்பாள்.
"பின்னே. இப்புடீயெல்லாம் அவுங்க கத சொன்னா ஞாயமுண்ணு ஒரு பதிலு எங்ககிட்டேயுமிருந்து இப்பிடித்தானே வரும்டி..” என்று செவ்வந்திக்கு மட்டும் கேட்க பாப்பு உடனே கிசுகிசுப்பாள்.
இவர்கள் தண்ணிருக்காகப் போகும் அந்தத் தெருவில், நாற்சந்தியில் உள்ள வீடு கணகரெத்தினத்தினுடையது. இலுப்பையடிப் பக்கம் முச்சந்தி வீடு அன்னலட்சுமியினுடையது. இடையிலுள்ள அந்த மாக்கள் பலாக்கள், தென்னை மரங்கள் நிற்கும் பெரிய வளவு, புடவைக்கடை தம்பிஐயாவுடையது. புடவைக்கடைத் தம்பிஐயா - பணப்புளிப்புப் பிடித்தவர். அதனால் திமிரான பேச்சும் நடைமுறையும் அவரிடத்தில் இருந்தன. யாரையும் அவர் மதித்து நடப்பதும் இல்லை. அவர் தன் வீட்டிலும் உள்ளவர்களுக்கு, பல சட்டங்கள் போட்டிருந்தார். அவர்கள் எல்லோருக்கும் சுதந்திரமில்லா அடிமை போன்ற நிலைதான் இருந்துகொண்டிருந்தது. இவர்தன் ஒப்பல் றெக்கோட் காரிலேதான் நாளாந்தம் கடைக்குப் போவார், வருவார். தன் கார் வீட்டுக்கு வலு தொலைவாக வீதியில் வந்து கொண்டிருக்கும்போதே ஹாரன் ஒலியை எழுப்புவார். உடனே அவரின் வீட்டு வேலைக்காரனோ அன்றி அவரது பிள்ளைகளோ விழுந்தடித்து ஓடிப்போய் வளவின் கோடிப்புறமுள்ள தகரப்படலையைத் திறந்து வைத்துக்கொள்ளுவார்கள். கார் வந்த வேகத்திலேயே கராச் கொட்டிலுக்குப் போகும். இதைப்போன்றே அவரது எல்லாச் செயற்பாடுகளும் இருக்கும். தான் ஒரு வெள்ளைக் காரத்துரை என்பது போலத்தான் அவருக்குள் இருக்கும் நினைப்பும் இருந்தது.
அவர் உறவினரையோ பிறத்தியாரையோ வளவுக்குள் எடுத்ததாக சரித்திரமே இதுவரை இல்லை. இப்படியாயிருக்கும்போது, சேரியிலி ருந்து குடிதண்ணிருக்கென்று வருபவர்களுக்கு எப்படியாக அவர் தண்ணீர் அள்ளி ஊற்றிவிடும் அந்தப் பரோபகாரத்தை செய்ய விரும்புவார்? அவரது மனம் போலத்தான் அவரது வளவு வேலிகளும். அந்த வேலிக்கதியால்களுக்குள் ஒரு ஈர்க்குக்கூட உள்ளே நுழைக்க முடியாது. அவ்வளவு நெருக்கம் அவைகள். அந்த இடங்களில் கிளுவை வளர்ந்து மூடியதால் ஒரே இருட்டாகத்தான் இருக்கும். முதலையின் வாயைப் போல பெரிதாக அகன்றிருந்த பின் வேலிப்படலையிலே, ஒரு எருமைமாட்டு மண்டை ஓட்டின் முகம்போல இருந்தது பூட்டு.
O 18 O ரீவி.அருளரைத்தடு

அந்தப் பகுதியில் சேரிப்பக்கத்துப் பெண்கள் தண்ணீருக்கென்று போகாத வளவு அது ஒன்றுதான். அந்த வளவைவிட்டு மற்றைய எல்லாருடைய வளவுக் கிணறுகளுக்கும் அவர்கள் காலை மாலை யென்று இரு வேளைகளிலும் போவார்கள். அவர்கள் கும்பலாக சேர்ந்துகொண்டு சிலவேளையில் போகும்போது, ஏசிப்பேசினாலும் தண்ணிர் ஊற்றிவிடுவதை அவர்கள் எப்போதும் மறுப்பதில்லை.
கனகரெத்தினம் வளவுப் படலையால், அப்போது கூட்டுப்பாட்டிப் பகுதியைச் சேர்ந்த பெண்களெல்லாம் தண்ணீர்க் குடங்களுடன் வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.
“நல்ல சகுனம் தாண்டியம்மா இப்ப எங்களுக்கு அவுங்க எல்லாமே கிணத்துப்பக்கத்தால வெளிய கெளம்பி வந்துப்புட்டாங்க” - என்று பாப்பாத்தி தன்னுடன் நிற்பவர்களைப் பார்த்துச் சொன்னாள்.
“எண்ணாலும் நாம உள்ள போனா ஒடனே அவசரமா குடத்துக்கு அவங்கயெல்லாம் தண்ணியா ஊத்திவிடப்போறாங்க.?” - செவ்வந்தி அவர்களுக்குச் சொல்ல, தங்களுக்குப் பக்கத்தால் தண்ணிர் குடத்துடன் நடந்து தங்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கும் பக்கத்துச் சேரிப் பெண்களை அவர்கள் பார்த்தார்கள். தங்களைப் போலவே சாயம்போன ஜாக்கட்டுக்களையும் சுருங்கிப்போன புடவைகளையும் உடுத்தியிருக்கும் அவர்களைப் பார்த்தபடி, வேலிப்படலையடியில் போய் அவர்கள் நின்று கொண்டார்கள். அங்கே படலையருகில் உள்ள வேலியிலே செம்பரத்தைச் செடி நிறையப் பூப் பூத்திருந்தது. அதில் ஒரு பூவைப் பிடுங்கி பாப்பாத்தி கூந்தலில் சூடிக்கொண்டாள்.
"இவ ஒரு அழகுக்காறி! கொண்டயில ஒரு 'பூ' இல்லாம எப்பவும் இருந்துக்கமாட்டாவோ..?”
“இவ குளிச்சே நாலு நாளாயிருக்கும் தல புழுத்திருக்கும். அதுக்குள்ள பூக்கேக்குதோ..?” இரண்டு பெண்கள் சேர்ந்து பாப்புவுக்கு கதைவிட்டார்கள்.
"நான் பூவு வைச்சுக்கிட்டா அதுக்கு உங்களுக்கேண்டி பெண்டுகளா பூறு கிடந்து எரியுது..?” - என்று பாப்பாத்தி சொல்ல, "ஸ். சும்மா இருங்கடியம்மா வாயவைச்சுக்கிட்டு” என்று செவ்வந்தி சொன்னாள்.
“யம்மோவ் யம்மோவ்” என்று அவர்களுக்குள்ளே அன்னத்தாய் அப்போதிருந்து, இரங்கும் ஒருவித குரலில் வீட்டுக்கார அம்மாவைக் கூப்பிட்டாள். அவள் கூப்பிட்ட குரலுக்கு, கனகரெட்ணத்தாரின் மகனும், மகளும் வீட்டு வாசலில் நின்றுகொண்டு படலையடியில் வந்து நிற்கின்ற பெண்களைப் பார்த்தார்கள். கனகரெத்தினத்தாரின் மகளுக்கு செவ்வந்தியின் வயதளவுக்கு இருக்கும். அவள் செவ்வந்தியைக்
ugš astvaiašai O 9 o

Page 16
காண்கின்ற போதெல்லாம் அவள் கறுப்பாயிருந்தாலும், மினுக்கி ஈர்க்கிற வடிவாயிருக்கிறாளே..? என்கிற ஒருவித மன எரிச்சல் மனதில் எழுவதுண்டு.
அப்படி அவள் பொறாமைப்படும் அளவுக்கு, சேரியிலுள்ள இளம் பெண்களில் செவ்வந்தியைப் போல அத்தகைய சுத்தத்தை யாரிடமும் காணவே முடியாது. அதைவிட ஒரு பழைய சேலைத்துண்டைக் கிழித்து அதையே தாவணியாகக் கட்டியிருந்தாலும் பார்க்கக் கட்டும் முட்டுமாக இளமைத் துடிப்புடன் அவள் இருந்தாள். அவள் கறுப்புத்தான்! என்றாலும், அதில் ஒரு இதமான நிறப்பொலிவு இருந்தது. தலை முதல் மார்பு வரை திருத்தமாக அவளுக்கு நிமிர்ந்திருந்தது.
செவ்வந்தியை அவர்களுக்குள்ளே கண்டதும் கனகரெத்தினத்தின் மகள் சொண்டைப் பிதுக்கி வெறுப்புடன் சுழித்தாள். தன் காலில் கொலுசுமாட்டிக்கொண்டு - கழுத்திலுள்ள நகைகளுடன் - நீர் நிற வைரங்கள் பதிக்கப்பட்ட காது மலரோடு - சிலுக்கு சிலுக்கு என்று ஒரு நடை நடக்கிறவள் - அந்தளவுக்குத் தன்னை எந்நேரமும் அலங்கார நிலையில் வைத்துக் கொள்பவள், கழுத்தும் காதும் நிர்வாணமாய் இருக்கும் அவளைப் பார்த்துவிட்டுத் தன் தமையனுக்கு அவள்,
"அந்தச் சக்கிலியப் பெட்டையின்ர ஸ்ரயில பாத்தியாண்ணா.? அவவும் அவவிண்ட தாவணி போடுகையும்! எப்படியெண்டு அதையும் நீ ஒருக்காப் பாரண்ண. இப்ப இவயள்தான் எங்கட ஆக்களுக்கு புதுப்புது ஸ்டைலுகள் பிடிச்சுக்காட்ட வெளிக்கிட்டிட்டினம்.?” என்று கொதித்த உள்ளத்துடன் சொன்னாள்.
ஆனால் அவனுக்கோ செவ்வந்தியை அவர்களுக்குள் கண்டு கொண்ட தும் மனம் குளிர்ந்திருந்தது. அவள் தண்ணிருக்கென்று வந்தால் அவளை அவன் இனிப்புக் கரும்பு போலத்தான் பார்ப்பான். “இவ்வளவு பசுமையான பெண் அந்தப் பறச்சேரியில இருக்கிறாளே." என்று அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவன் நினைத்துக்கொள்வான்.
பெண்களுக்குத் தன்னைவிட அழகாயிருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது இயல்பாகவே ஒருவித பொறாமை மனதில் ஏற்படும். ஆனால் ஆண்கள் அழகாயிருக்கும் பெண்ணைப்பார்த்துத்தான் ஆசைப்பட்டு ஏங்குவார்கள். இந்த விதத்தில் ஒரு ஆணுக்கு ஒரு அழகான பெண்ணின்மேல், ஏன் அழகாயிருக்கிறாள் அவள் என்று பொறாமை வரப்போகிறது?
கனகரெட்ணத்தின் மகன் தங்கை சொன்னதை அதனால் கண்டுகொள்ளவே இல்லை.
“படலையைத் திறந்துகொண்டு எல்லாரும் கிணத்தடிப்பக்கம் O 20 O ரீ.பி.அஞ்ளனர்தல்

வாருங்கோ” - என்று தன் குரலில் இதங்குழைத்தபடி செவ்வந்தியைக் குறிப்பாக பார்த்தவாறு அவன் சொன்னான்.
அவளுக்கு அண்ணன் அப்படிச் சொல்லவும் எரிச்சலாக வந்தது.
“இப்பத்தானே நாங்கள் வந்ததுகளுக்கெல்லாம் கை உழைய கை உழைய கிணத்திலதண்ணியள்ளிஊத்திவிட்டனாங்கள். அதுக்குள்ளயா பிறகும் பேந்தும் தண்ணி இதுகளுக்கு ஊத்திவிடுறதெண்டா எப்பிடியாய் ஏலும்.? நீ வாண்ண போய் இப்ப நாங்கள் காலமச்சாப்பாட்டச் சாப்பிடுவோம்.?” என்று சொல்லி தமையனின் செயற்பாட்டுக்கு, தான் ஒரு வெட்டுப்போடப் பார்த்தாள் அவள்.
அவனுக்கு வந்த பெண்களுக்கு உடனே தண்ணீர் ஊற்றிவிட விருப்பம், ஏனென்றால் அப்படித் தண்ணிர் ஊற்றிவிடும்போது, செவ்வந்தியையும் பார்த்து அவள் அழகை ரசிக்கலாமே என்ற ஏக்கம் என்றாலும் தங்கை தன் விருப்பத்துக்கு இடையூறாக, மூங்கில்முள்போல் இதிலே நின்று குத்துமாப்போல இடைஞ்சலாக நிற்கிறாளே என்ற மாதிரி அவனுக்கிருந்தது.
கனகரெட்ணத்தின் மகன் 'உள்ளே வாருங்கள்' - என்று சொன்ன கையோடு படலையைத் திறந்துகொண்டு அவர்களெல்லாம் கிணற்றடி அடைப்பைச் சுற்றி நடந்து உள்ளே போய்க்கொண்டிருந்தார்கள். செவ்வந்தி கிணற்றடியில் நின்ற தோடை மரத்தின் வழுவழுப்பான தோடங்காய்களைப் பார்த்துக்கொண்டு தங்கைக்குப் பிறகாலே நடந்து கொண்டிருந்தாள். செவ்வந்தி மேலுள்ள பார்வையை கனகரெட்ணத்தின் மகன் இன்னுமாக விலக்கிக்கொள்ளவில்லை.
அவன் தங்கை அவன் கையைப் பிடித்து ஒரு உலுப்பு உலுப்பினாள்.
“என்ன அந்தச் சக்கிலியச் சாதியளயே நீர் நிண்டு பார்த்துக்கொ ண்டிருக்கிறீர்..? வாரும் சாப்பிட.?” அவள் அதிகாரத் தொனியில் சொன்னாள். அவனுக்கோ அவள் போட்ட கட்டளைக்கொன்றும் சொல்லமுடியாததாய் இருந்தது. பூனை மாதிரி அவன் தங்கைக்குப் பிறகாலே எச்சிலை விழுங்கிக்கொண்டு நடந்துபோனான்.
கிணற்றண்டைக்குப்போன பெண்களெல்லாம், அதிலே தாங்கள் காவிவந்த குடங்களைத் தரையில் வைத்துவிட்டு கிடுகு அடைப்பு மூலையில் நின்றுகொண்டிருந்தார்கள். வெயில் அவர்களின் மேல் விழுந்து கொண்டிருந்தது. மினுக்கி ஈர்க்கும் தூர் பிடித்துக்கொழுத்த கரும்புகள் அந்தக் கிணற்றடிப்பக்கமெல்லாம் வளர்ந்திருந்தன. அதற்குப் பக்கத்திலே கினிக்கோழிகள் ஒருபக்கம், வாத்துக்கள் ஒரு பக்கம், க்வக் க்வக்கென்று கத்திக்கொண்டு இறகுகளை படீர்
Augus a\о0vайанай О 21 O

Page 17
படிர்' என்று உடலில் அடித்துக்கொண்டும் அலைவுபட்டவாறு திரிந்து கொண்டிருந்தன. தண்ணிருக்கு வந்த அவர்கள், கிணற்றடியைச் சூழ உள்ள அவைகளைப் பார்த்துக்கொண்டு வெயில் காய்ந்து கொண்டிருந்தார்கள். வெயில் ஏறிக்கொண்டிருந்தது. வெக்கையில் அவர்கள் உடம்பு வேர்த்துக்கொண்டிருந்தது.
இன்னுமா ஒருவங்களையுமே இதியா வந்துக்கக் காணல்லையே?” என்று இளைப்புடன் ஒரு நடுத்தர வயதுப் பெண் சொன்னாள்.
நேரமாக நேரமாக எல்லாப் பெண்களும் அந்தக் குசினியடி வாசலை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
இதற்குள்ளே செவ்வந்தியின் தங்கை ராக்காயி, தான் நின்ற இடத்தை விட்டு அந்தக் கிணற்றுக் கட்டைச் சுற்றிப்போய், பின்பக்கத்தில் நின்றவாறு எட்டிப்பார்த்தாள். கிணற்றுத் தண்ணிரைப் பார்க்க அவளுக்கு அவ்வளவு ஆசை. பாறைகளுக்கிடையே ஆயிரம் சன்னல்களைத் திறந்து எவ்வளவு எடுத்தாலும் வற்றாத சுரப்பைத் தந்துகொண்டிருக்கிற கிணறல்லவா அது ராக்காயி உள்ளே பார்க்கிற போது, முக்கால் கிணற்று விட்டத்துக்கு அதிலே தண்ணீர் இருந்தது. கிணற்றுத் தண்ணீர் கண்ணாடியைப் போல மென்மையானதாகவும் பிரகாசமானதாகவும் தோன்றியது. இன்னும் அவள் ஆவலில் கிணற்றுச் சுவரில் வயிறு குனிந்து எக்கியபடி உள்ளே பார்த்தாள்.
செவ்வந்தி வெயிலுக்குத் தலை குனிந்து கொண்டு நின்றவள், எதேட்சையாய் தலை நிமிர்த்தி கிணற்றடியைப் பார்த்தாள். ராக்காயி கிணற்றுக்கட்டருகில் நிற்பதைக் கண்டுவிட்டாள்.
"நாய்சமாப் போறவளே இங்கிட்டு வாடி..?” என்று மெலிதான குரலில் உடனே கத்திக் கூப்பிட்டாள். ராக்காயி உடனே திகைத்துப்போய் தமக்கையின் அருகில் ஓடிவந்து நின்றுவிட்டாள். அவளுக்கு முதுகில் அடியும் போட்டாள் செவ்வந்தி “ஏண்டீம்மா நீ எங்களயும் இங்கினவா தண்ணிக்கு வரேலாம செய்துவுர்றத்துக்கா இப்புடீயெல்லாம் செய்யிறே.? ஆட்டம் போடுறதப்பாரு இந்த வயசிலயும்?” என்று பாப்பாத்தியும் அவளைப் பேசினாள்.
“கெணத்துக்க உனக்குப் போயி பாக்கிறதுக்கு அங்க என்னடி இருக்கு.? வீட்டுக்காறங்க பாத்தா உன்னக் கொண்ணுப்புடுவாங்கடி.?” என்று மாடத்தியும் கட்டைக் குரலிலே அவளை இடித்துரைத்தாள். ராக்காயிக்கு எல்லாரும் அப்படித் தன்னைப் பேச முகம் இருட்டிவிட்டது. என்றாலும் அந்தளவு தண்ணிரை கிணற்றுக்குள் இருக்கத் தான் கண்டது மனதுக்குள் அவளுக்குக் குளிர்ந்து கொண்டிருந்தது. இன்னும் அந்தத் தண்ணீரின் காட்சி அவளுக்குக் கண்களைவிட்டு மறையவில்லை.
O 22 O ரீ.பி.அருணானந்தல்

அதே ஆச்சரியத்தில் அவள் தன்னை ஆழ்த்தி இருந்தவாறு, அதிலே நிற்கின்றவர்கள் எல்லோருக்கும் அந்தத் தண்ணீரின் காட்சிபற்றி
அவள் கூறினாள்.
"ஐயோவெண்ணுற ஆழம் ஆழம்! அதுக்குள்ளயா நானு பாத்தா, அம்மாடீம்மா. ஐய்ஞ்சு ஆளு அளவுக்கு உள்ள தண்ணியிருக்கும்.”
"அப்புடியா பிள்ள..?” வெள்ளையம்மா வாயைப்பிளந்தாள்.
ராக்காயி அப்படியெல்லாம் தான் பார்த்து ஆசைப்பட்டதைச் சொல்லிவிட, அந்தக் கிணற்றை தங்கள் சேரிப்பக்கம் தூக்கிக் கொண்டுபோய் வைத்துவிட்டதான ஒரு கற்பனையின் சந்தோஷத்தோடு, எல்லோரும் அந்தக் கிணற்றுக்கட்டை மாத்திரம் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றார்கள். கனகரெட்ணம் வீட்டுக் குசினியிலே அவருடைய மகன் காலைச் சாப்பாட்டை சாப்பிட்டு முடித்ததும், கிணற்றடிப்பக்கம்போக நின்றான். ஆனாலும் அவனது தங்கையானவள், அவனை அங்கே போகவிடாது அப்போதும் தடுத்துக்கொண்டிருந்தாள்.
அவன்: “ரதி பாவம் அதுகள் ரதி போய்த் தண்ணிய ஊத்திவிடுவமே..? அதுகள் உந்த வெய்யிலுக்கயும் கனநேரமா நிண்டுகொண்டு காயுதுகள்.” - என்று சொல்ல, "நல்லாய் நிண்டுகொண்டு கொஞ்ச நேரம் வெய்யிலுக்க அவயள் காயட்டும்.! அப்பத்தான் பிறகும் இந்த வீட்டுக்கு தண்ணிக்கு வர்றத கொஞ்சம் குறைச்சுக்கொள்ளுங்கள். வேற கிணத்தையும் போய்ப் பாக்குங்கள். இடங்குடுத்தால் உந்தச் சாதிகள் இப்பிடித்தான். அதுகள அதுகளிண்ட இடத்தில கணக்காய் நாங்களும் வைச்சுக்கொள்ளத்தானே வேணும்.?” என்று அவள் சொல்ல,
"அது சரி! நான் தானே தண்ணி அள்ளி ஊத்திவிடுறன். அதுக்கேன் நீர் கிடந்து ஏதோ நீர்தான் தண்ணி இழுத்து ஊத்துறமாதிரி ஒரு கதை கதைக்கிறீர்?" என்று அவனும் ஒரு கேள்வி கேட்டான்.
"ஓகோ உப்பிடிக் கதைக்கிறீரோ நீர்..? நீர் இருக்கிற நேரம் தண்ணி அள்ளி அவயஞக்கு ஊத்தி விடுறீர் சரி. ஆனா நீர் எப்பவும் வீட்டில இருக்கிற ஆளே..? நீங்களெல்லாம் உங்கட பாட்டுக்கு வெளியால எங்கயும் போயிடுவீங்கள். பேந்து நாங்கள் இங்க வீடுவளிய இருக்கிற பொம்புளயள்தான் தண்ணி இழுத்து ஊத்தி மாய வேணும்" என்று அவளும் அவன் கதைக்கு ஒரு எதிர்ப்புக் கதையைச் சொன்னான்.
“நீர் கத கனக்கக் கதைக்காதயும் என்னோட.?” என்றான் அவன் கோபத்தோடு,
துயரம் கசப்பண்கள் O 23 O

Page 18
என்ன ஒரு கதை எண்டுறீர்..? எனக்கும் உதுகள் எல்லாம் தெரியும்" ஆணி அடித்தமாதிரிச் சொன்னாள் அவள்
“என்ன தெரியும் உமக்கு.?” என்றான் மீண்டும் அவன் கோபத்தோடு, என்றாலும் அவனது மனதுக்குள்ளே கொஞ்சம் பயமாய் இருந்தது.
"நீர் ஏன் தண்ணி அள்ளி ஊத்த இப்ப அவசரப்படுறிர் எண்டுறது எனக்கும் தெரியும்.?”
"தெரிஞ்சா இருமன். அதுக்கேன் 905 விடுப்புக்கதை கதைக்கிறீர்.?”
“ஓம் நான் கதைக்கத்தான் செய்வன்! அவயஞக்கு பொம்புளயஞக்கு நீர் தண்ணியள்ளி ஊத்திற வேல வேணாம்!"
"சட்டம் போடுறீரோ எனக்கு நீர்..?” "உம்மட கள்ளத்த அம்மாட்ட நான் சொல்லவோ?”
"சொல்லுறதச் சொல்லடி நீ சனியன். நான் என்ர விருப்பத்துக்குச் செய்யிறதச் செய்வன்."
"ஓ அவ்வளவு பெரிய ஆள் ஆயிற்றீரோ நீர் இந்த வீட்டில..?” “வாயப்பொத்து."
"நீர் உம்முடைய வாயப் பொத்தும்!”
"போடி.!"
“(I), Jim Ln..!'
அவன் கோபத்தோடு குசினி முற்றத்தால் நடந்து கிணற்றடிக்கு வந்தான். அவள் குசினி வாசலடியில் பாவாடையைத் தூக்கி இடுப்பில் செருகியபடி கையை கப்பில் வைத்துக்கொண்டு விறைப்பாக நின்றாள். அப்படி நின்றபடி தமையன் என்ன செய்கிறான் என்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள். அவன் தனக்குள் இருந்த ஆத்திரத்தோடு வந்து துலாக்கயிற்றை ஒரு இழுவை இழுத்தான். வாளியை தண்ணீரடிக்குப் போகுமளவு விரைவாக உள்ளே விட்டான். அதிலே பெண்களெல்லாம் தங்கள் குடங்களைக் கொண்டுவந்து, நிரையாக கிணற்றின் முன் வைத்துக்கொண்டார்கள். அதிலே நின்ற பெண்களுக்குள் செவ்வந்தி எல்லோருக்கும் நடுவே நின்றாள். ராக்காயியும் அவளுக்கு அருகில் நின்றாள். கனகரெத்தினத்தின் மகள் பொறிப்பறந்த பார்வையிலேயே நின்றாள். செவ்வந்தியையும்
о 24 о தீவி.அருணனர்தல்

அவளுக்கு முன்னால் இருந்த குடத்தையும், குறிப்பாக குசினி வாசலடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
முதல் வாளித்தண்ணீரை தமையன் யாருக்கு ஊற்றப்போகிறான்? என்ற மன விசாரணையிலே அவள் கவனம் இருந்தது. கனகரெட்ணத்தின் மகன் வாளித்தண்ணிரைக் கையிலே எடுத்ததும் கடைக்கண்ணால் குசினிப்பக்கம் பார்த்தான். தங்கை கண்கொழுக்கிபோட்டு கள்ளம் பிடிக்க நிக்கிறாள்' - என்பது அவனுக்கும் விளங்கிவிட்டது. உடனே அவன், அந்தப் பெண்களுக்குள் வத்தலும் கொத்தலுமாயிருந்த ஒருத்தியின் குடத்துக்குத் தண்ணிரை முதலில் வார்த்தான். ஆனாலும் தண்ணீர் வார்க்கும்பொழுதும் அவனுக்குப் பார்வை செவ்வந்தியின் மேல்தான் இருந்தது. பிறகும் அவன், மற்றப் பெண்களின் குடங்களுக்குத் தண்ணீர் வார்த்துவிடும்போதும் அவளைப் பார்க்காமல் இருக்கவில்லை.
ஏதோ அவனுக்கு அவளைப் ப்ார்க்காமல் இருப்பது, அவ்விடத்தில் முடியாத காரியமாகத்தான் இருந்தது. அங்கே உள்ள எல்லோரினதும் குடங்களுக்குத் தண்ணீர் நிரப்பிவிட்ட பின்புதான் அவன் செவ்வந்தியின் குடத்துக்குத் தண்ணிரை வார்த்தான். அவன் கடைசியாக அவளின் குடத்துக்குத் தண்ணீர் வார்த்துவிடும்போது பார்வையில் தன் தவிப்புகளை அவளிடத்தில் கொட்டினான். கனகரெத்தினத்தின் மகனும் அழகன்தான். அவன் அப்படி இப்படி என்று ஒரு விதமாக தன்னைப் பார்ப்பது, செவ்வந்திக்கும் என்னவோ வெட்கமாய் இருந்தது. மற்றப் பெண்களும் அவன் அப்படியெல்லாம் அவளைப் பார்க்கும்போது, தாங்களும் அவைகளைப் பார்க்கத்தான் செய்தார்கள். "அவள் சேற்றிலே முளைத்தாலும் செந்தாமரைதான்! இவளின் அழகு எவரை யும் உடனே ஆட்டிப் படைத்திடும்தான்!” என்று தங்களுக்குள் அவர்கள் நினைத்துக்கொண்டார்கள். கனகரெட்ணத்தாரின் மகன், தண்ணீரை குடங்களுக்கு வார்த்துவிட்டு கிணற்றுப்பக்கமிருந்து வெளிக்கிட்டான். இன்னும் அதிலே நின்றபடி அவனின் தங்கை அவனைப் பார்த்தபடி நின்றாள். அதனாலே அவன் குசினி வாசலடியால் வீட்டுக்குள் போவதற்குப் போகவில்லை. அவன் முற்றத்தடியால் நடந்துபோய், முன் தலைவாசலால் வீட்டுக்குள் போனான்.
அவனின் தங்கைக்கு இனி என்ன அங்கே வேலை? அவளும் காலை தரையிலே உதைத்து, சொண்டைக் கடித்தபடி, கரிச்சான் குருவியைப் போல் பின்பகுதியை ஆட்டி ஆட்டி நடந்தவாறே தானும் உள்ளே பிறகு போய்விட்டாள்.
தண்ணிர்க் குடத்துடன் எல்லாப் பெண்களும், படலையடியால் ehry\ð sSövakssä O 25 O

Page 19
வெளியே வெளிக்கிட்டு வந்துகொண்டிருந்தார்கள். கடைசியாக வெளியே வந்தவள் படலையின் கயிற்று வளையத்தை போட்டுவிட்டு வந்தாள். அவர்களின் முகங்களிலெல்லாம் மகிழ்ச்சி பரவியதாய் இருந்தது.
அந்தப் பெண்களில் சிலர் இடுப்பிலும் தலையிலுமாக, ஆளுக்கு இரண்டு தண்ணீர்க் குடங்களைச் சுமந்தபடி வந்தார்கள்! பூசாத்தாள் என்பவளுக்கு சட்டிக் கருணைபோல சள்ளையான உடம்பு. அவளுக்கு தலையிலும் இடுப்பிலும் பாரம் ஏறியதும் எக்கச்சக்கமாய் குண்டி மட்டுமல்ல அவளின் அம்மி போன்ற மார்புடன் ஒவ்வொரு அங்கமும் குலுங்கியது. கன்னத்துத் தசைகளும் அசைந்தன. அவள் நடந்துகொண்டிருக்கும்போது,
"செவ்வந்தியோடதான் நாம எல்லாமே எப்பவுமே இந்த வீட்டுப்பக்கோம் தண்ணிக்கெண்ணு வரையிக்க சேந்து வரணும்” என்றாள். அவள் அப்படிச் சொல்ல, தண்ணிமலையின் பெண்டாட்டி ஏதோ தனக்கு அது ஒன்றும் விளங்காதது போல நடித்துக்கொண்டு “ஏண்டி அப்புடி சொல்லுறே.?” என்று கேட்டாள். அவள் தலையைத் திருப்பி அவளைப் பார்க்கவில்லை. ஏனென்றால் இடுப்பில் உள்ள குடத்தோடு அவள் தலையிலும் தண்ணிர்க்குடம் இருந்தது.
“என்ன உனக்கொண்ணுமே தெரியாதா? அந்தப் பையன் இவளைப் பாக்கிற பார்வை. இவ நம்மகூட வர்ற நேரமெல்லாம் மருகி மருகி சுக்குறானே.?”
"நானென்னடீம்மா இதுவளயெல்லாம் கண்டுக்கிட்டன். எனக்கு வயசு
போயிட்டு.?”
"ஆமா, நாப்பது வயசுக்கு மேலயுமா இப்பயும் கொழந்த பெத்துக்கிறே. அதெல்லாமே ஒனக்கு வேணுமாயிருக்கு இதுமாத்திரம் தெரியலியோ..?
"நான் எங்கயும் இதத்தானாடி இருந்து பாத்துக்கிட்டுத்திரியிறேன் உன்னயபோல.”
அவள் நறுக்கென்று பதில் சொன்னாள்.
“ஏண்டி நீங்க பெண்டுகளா உங்கபாட்டுக்கு ஆளையாளுக்கு அடிச்சிக்கிற மாதிரி பேசிக்கிறீங்க.? செவ்வந்தி நம்ம சேரிப்பக்கமுள்ள பெண்ணுதானே? அவளு இளவரசி கணக்கா அழகாயிருக்கிறது நமக்குப் பெருமதானே..? அந்தப் பயல மாதிரி சாதிக்காறன் ஆராச்சும் வந்துதான் நம்ம செவ்வந்தியையும் கண்ணாலம் ஒருநாளு பண்ணிக்கிட வருவான். அப்புடியா ஒருவன் வந்து செவ்வந்திய கட்டாயமா
O 26 O ரீ.பி.அருளரைத்தச்

தூக்கிக்கிட்டாச்சும் போவத்தானே செய்யுவான் பாருங்க.”
பாப்பாத்தி அப்படிச் சொல்லவும், அப்படி உண்மையாகவே ஒருநாள் அவளுக்கு நடக்கத்தான் போகிறது என்ற மாதிரியாக மற்றப் பெண்களெல்லாம் நம்பிக்கைகொண்டதுபோல மெளனமாக நடக்க ஆரம்பித்தார்கள். ஆனாலும் அந்த மெளனத்திலிருந்து கூறி என்பவள் மீண்டுகொண்டாள்.
“நம்ம சேரியில உள்ள, முறைப்பையன் இவள எங்கயாச்சும் யாரும் வந்து கொத்திக்கிட்டுப் போக விட்டுடுவானா..?”
“யாரு இவன் சோணயச் சொல்லுறியா? அவன் கொறங்கு மாதிரி.! இவ கிளி மாதிரி! அப்புடியும் ஒரு நெனப்பு இருக்கோ அவனுக்கு.?” பாப்பாத்தி கேட்டாள்.
"அவன் மொற மாப்பிளடி இவளுக்கு” என்றாள் கூறி.
“அவன் கொறங்கு.” - என்றாள், கதையைத் தன் காதில் விழுத்திக்கொண்ட செவ்வந்தியின் தங்கை,
“ஏண்டீம்மா அவ கல்யாணத்த இப்பல்லாம் நீங்க போட்டு அலட்டிக்கிறீங்க. ஒங்க வாய கம்முண்ணு பொத்திக்கிட்டு இருந்துக் குங்கடி. ஒங்க கதயெல்லாம் அப்பிடியே இருந்துக்கட்டும். இப்ப நானு ஒங்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறனே.? நம்ம செவ்வந்தியக் கண்ணாலம் பண்ணிக்கிறதுக்கு யில்லாப் பயலுகளுமே இங்கினயா போட்டி போட்டுக்கிட்டுத்தான் நிப்பாங்க. எனக்கு ஒனக்கு எண்ணுகிட்டு எல்லாருமா வழுக்கு மரத்தில ஏறிக்கிட்டு பண முடிச்சு அவுத்துக்கிறமாதிரி ஒரு போட்டியிலதான், இந்தப் பொண்ணுக்கு கழுத்தில மஞ்சள் கயிறு கட்டுற அளவுக்கும் கடைசியில வந்துக்கும் பாரு..” என்று ஜோசியம் சொன்னாப்போல கூறினாள் பூசாத்தாள்.
"ஆமாடி ஒனக்கு அப்பிடித்தாண்டி ஒரு நாளுல அப்புடியா நடந்தாலும் நடக்கும்டி..?” என்று அவள் சொன்னதைக் கேட்டுவிட்டுச் சிரித்துக்கொண்டு சொன்னாள் பாப்பாத்தி செவ்வந்தியும் பாப்பாத்தி சிரித்ததோடு, தானும் சிரித்தாள். பாப்பாத்திதான் செவ்வந்தியின் தோழி அவளுடன்தான் செவ்வந்தி மனம்விட்டுப் பேசுபவள். ஆனாலும் பல பெண்கள் கூடிக்கதைக்கும் இடங்களில்தான் ஒன்றும் எதிர்க்கதை கதைக்காது இவள் மெளனமாகிவிடுவாள். என்றாலும் இனி ஒரு தருணம் பாப்புவைத் தனிமையில் அவள் சந்திக்கும் போதுதான், இந்தப் பெண்கள் கதைத்த கதைக்கெல்லாம் அவள் தன் அபிப்பிராயத்தை அவளுக்குச் சொல்ல விழைவாள்.
அந்தப் பெண்களெல்லாம் தன்னைப் பற்றிக் கதைத்த கதைகளைக் glugis anstövadňasai o 27 o

Page 20
கேட்டதோடு செவ்வந்திக்கென்றால் இப்போது சுகந்தத்தின் சிந்தனை கள்! அதே வேளை அவளுக்கு மறுபுறத்திலோ ஆபத்தின் சன்னமான
சூசகங்கள்.
அவள் பூமேல் மிதிப்பதுபோல் எட்டுவைத்து நடந்துகொண்டிருந்தாள். அவர்கள் தண்ணீர்க் குடங்களைச் சுமந்துகொண்டு சவக்காலை வீதிய டிக்கு வந்து சேர்ந்தார்கள். கோயில் வளவு முதிரை மரங்களிலிருந்த சில்வண்டுகள், காலை வெய்யிலின் சூடுபடவும், உயிர்பெற்று எழுந்ததுபோல தணிந்ததாகவும் கடுமையானதாகவும் மெட்டுக்களை மாற்றியபடி பாடத்தொடங்கிவிட்டன.
4,
காலைச்சூரியன் அந்தச் சாலையருகில் நின்ற மரங்களின் இடுக்குவழியே தங்க ஊசிகளைத் தோகையாய் விரித்துக்கொண்டிருந்தான். வவுனியா குடியிருப்புப் பகுதியிலே கூட்டுப்பாட்டித் தொழிலாளர்கள் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் தருக்கள் உதிர்ந்த இலைச் சருகுகளை தடிவிளக்குமாற்றால் கூட்டிப்பெருக்கி சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். குப்பைக் குவியல்கள் கான் அருகே வைத்து நெருப்புக் கொளுத்தப்பட்டன.
அந்தக் குழுவை வேலையில் கொண்டு நடத்தும் கண்காணி மனுவலின் முகம் எப்போதும் பூரித்துக்கிடக்கும். ஆனால், வேலையில் யாராவது ஒழுங்கில்லையென்றால் மனுவலுக்கு முக லட்சணம் கெட்டுப்போகும் கங்காணி மனுவலும் மற்ற வேலையாட்களோடு தானும் வேலைதான்! அவனும் தடி விளக்குமாறோடு, சளைக்காமல் மற்றவர்களோடு சேர்ந்து வேலை செய்வான். அவர்களுக்குக் குறித்த இடத்தை துப்பரவு பண்ணிமுடித்துவிட்டால் மேற்பார்வையார் வந்து பார்வையிடுவார். பிறகு வேலை முடிந்துவிடும். வீட்டுக்குப் போய்விடலாம்.
குடியிருப்புப் பகுதியிலும் ஏராளம் மாட்டுப் பட்டிகள் இருந்தன. அவர்கள் கூட்டிப் பெருக்கும் வீதியை நிறைத்துக் கொண்டதுபோல திமுதிமுவென அதாலே கால்நடைகள், பாதம் ஊன்ற இடமில்லாமல் நெருக்கிக்கொண்டு தூசி கிளப்பிச் சென்றுகொண்டிருந்தன. மாடுகள் வீதியில் சிரமப்படுவதுபோல அடைபட்டுக்கொண்டுபோக, அவர்கள் ஒதுங்கி நின்றார்கள். ஒரு பக்கம் நெருப்புப்புகை, இன்னொரு பக்கம் புழுதி ஒரு மாடு பசுவின் பிறப்புப் புற இதழை மோப்பம் பிடித்துக்கொண்டு அங்காலும் இங்காலேயுமாய் தலையை ஆட்டிக்
O 28 O ரீ.பி.அருணானந்தs

கொண்டே போகிறது. கான் கரையாலே அது போகிற போக்கில் ஆரோக்கியத்தின் காலிலும் அது உழக்கிவிட்டதாகவும் போய் இருக்கும்.
“நல்ல காலம்! சனி மாடு சனியன் மாடு ஆக்கள் நிக்கிறதக் கண்டா அந்த ஆனையே ஒதுங்கிப்போகும்! ஆனா இந்தச் சவமாடுகள் ஒதுங்கிப்போவாது.!” என்று அவள் பேசினான். விளக்குமாற்றுத் தடியால் மாட்டுக்கு ஒரு போடு போட்டிருப்பான். அந்தப் புகையிலும் புழுதியிலும் இதையெல்லாம் யார் யார் ஒரு மனுஷர் கண்டுகொள்வார்கள்? ஆனாலும் விளக்குமாறுத் தடியாலே மாட்டுக்கு அடிக்கக்கூடாது என்ற நினைப்பு வந்துவிட, அப்படி அவன் செய்ய வில்லை.
மாடுகள் கடந்துபோய்விட்டன. வேலையும் அவர்களுக்குக் கொஞ்சம் குறுகி ஓய்ந்து வருகிறாய் விட்டது. கொஞ்ச நேரம் தாங்கள் வேலை செய்து கொண்டிருந்த பக்கம் அங்கங்கே நின்றுகொண்டு அவர்கள் இளைப்பாறினார்கள்.
ஒய்வான நேரம் மனுவல் தன் வேலையாட்களுடன் கதைப்பான். எல்லாரும் வீட்டுக் கஷ்ட நஷ்டங்களைத்தான் அதிகமாகக் கதைப்பார்கள். பணக்கஷடம் எல்லோருக்கும் இருக்கும். அறுபது ரூபா சம்பளத்திலே எல்லாவற்றையும் சமாளித்துப் போவதென்பது கஷ்டம்தானே?
"ஆரோக்கியம் நேற்று எடுத்த சம்பளக்காசு எல்லாம் பின்னேரமே சாராயக் கடையில கொண்டுபோய் முடிச்சிட்டாய் போல. நீராவிலயா எண்டதாய் முழுக்கலுமில்லாம? விடிய விடியவும் வெறிப்புலம்பலோட கிடந்தாய்..?”
மனுவல் கேட்க, அவன் கையிலிருந்த விளக்குமாற்றை வேலியில் சாத்திவிட்டு,
"உது ஒரு கதையெண்டு இப்ப என்னட்டக் கதைக்கிறீரே. கங்காணியர்.?” என்றான்.
"இல்லயடாப்பா, என்னோட வேல செய்யிற எங்கட பகுதி ஆள் கஷ்டப்பட்டா அதுவும் சொந்தபந்தமெண்டு இருக்கிறவன் ஒருவன் கஷ்டப்பட்டா அது எனக்கும் மனவருத்தம் தானேடா. நீயேன் இப்பிடி மோசமாக் குடிக்கிறாய்..?”
"ஆர் சொன்னவன் மோசமாக் குடிக்கிறதெண்டு.? எந்த வேசமக்கள் சொன்னவங்கள் அப்பிடியெல்லாம் நான் குடிக்கிறதெண்டு.? சரி சரி நீங்கள் அப்பிடி ஒண்டும் குடிக்காத மனுசன் எண்டதால
துயரச் சுண்பண்கள் O 29 O

Page 21
அப்பிடியெல்லாம் என்னட்டக் கேக்கிறியள். ஆனா நான் பெரிய குடியன், வெறியன் எண்டமாதிரி நீங்கள் சொல்லுமாப்போல நான் குடிக்கிறனானே.?”
"ஓ அப்பிடிக் குடிக்கேல்ல விடு நீ அந்தக் கதைய. அடுத்த கத என்னெண்டால் நீ ஏன் பொழுதுபடத் துவங்கி நடுச்சாமம் வரைக்கும் வீட்டுல கிடந்து பெரிசா சத்தம் போடுறாய், குளறுறாய்..?”
"நான் என்ர வீட்டகிடக்கிறன் சத்தம் போடுறன். வேற ஆக்களிண்ட வீடு வழிய போய் அவங்களோட சத்தம் போடுறனானே, சண்டை பிடிக்கிறானே.?”
“ஆக்களிண்ட பேர இழுத்துப் பேசுறது உனக்கு அப்ப வெளியில தெரியேல்ல. அதத்தான் விடு. உன்ர அந்த மனுசிக்கு ஏனப்பா போட்டு ராவுராவாய் அடிக்கிறாய் நீ?”
“என்ர மனிசிக்கு நான் அடிக்கிறத ஆர் கேக்கிறது.?” "ஆர் கேக்கிறதோ, பொம்பிளைக்கு அடிக்கிறவன் ஒரு மனுசனே.?”
"உந்தக்கதைய என்னோட கதைக்காதயுங்க. ஊரில முக்காவாசி வீடுகளில நடக்கிற சண்டைதான் என்ர வீட்டயும். அது என்ர குடும்பப் பிரச்சன.!”
"என்ன குடும்பப் பிரச்சன.? நீங்க ரெண்டுபேரும் சண்டைபிடிக்க. அவள் பெரிசாக்கிடந்து அழுது குளற, நாங்கள் அங்கின அக்கம் பக்கம் இருக்கிறேல்லயோ..?”
"நான் மட்டுமே மனுசியோட சண்டை பிடிக்கிறன். மற்ற வீடுகளில புருஷன்மார் மனுசிமாரோட சண்டை பிடிக்காமலேயே இருக்கிறாங்கள்.?”
"அப்பிடி ஆர் எவன் உன்ன மாதிரி அங்கினேக்கயா இருக்கிறானெண்டு ஒருக்காச் சொல்லு பாப்பம்.?”
“உங்கள மாதிரி உதான் எனக்கு நெடுகவா வேலயே? ஆர் எவன் தன்ரை மனிசிமாரோட அங்கினேக்க கிடந்து சண்டைபிடிக்கிறான் எண்டு தேடித் திரியிறதே என்ர வேல.?” "கொழுப்புக் கதையும் 'வெறிக்கதையும்தான் எப்பவும் உன்ர கத. ஒரு மனுசனா இருந்து மனுசரோட கதையன் நீ. ஒரு கதையக் கேட்டா அதுக்கு நீயும் ஒரு ஒழுங்கான விளக்கமான பதிலை கேக்கிற ஆக்களுக்குச் சொல்லன்.?”
O 30 ం #0.9emory

“என்ன கங்காணியார் நீர் இப்பிடிக் கதைக்கிறீர்..? ஒரு வயதுக்கு மூத்த மனுசன் எண்டு ஒரு மரியாத வைச்சுக்கொண்டுதான் இப்ப நான் உங்களோட கதைக்கிறன். ஒரு கதைய ஒரு மனுசர் கதைக்கேக்கிள கொஞ்சம் ஞாயமும் எல்லே இருக்கவேணும்.? நான்தான் எங்கட பக்கம் குடிக்கிறன், வெறிக்கிறன் சண்டை பிடிக்கிறன் எண்டமாதிரி நீங்கள் மட்டுமில்ல உங்கின கனக்கப்பேர் என்னோட முகத்துக்கு நேர கதைக்காட்டியும் அவயள் அவளுக்க சேந்து கதைச்சுக்கொள்ளுறது எனக்கும்தான் தெரியும். அதைப்பற்றியெல்லாம் இப்ப ஒரு கதையும் வேண்டாம்! அதுகள விடுவம் இப்ப நான் உங்களிட்ட ஒரு கதயக்கேக்கிறன்.? ஏன் இத நான் உங்களிட்ட கேக்கிறனெண்டால், எங்கட ஆக்களில நாங்கள் மதிக்கிற ஆள் நீங்கள்தான்! நாங்கள் செய்யிற தொழிலிலயும் எங்களுக்கு நீங்கதானே கண்காணியாகவும் இருக்கிறியள். அதால இப்ப ஒரு கேள்வி உங்களிட்ட நான் கேக்கிறன்.? நான் குடிச்சுப்போட்டுத்தான் மனுசியோட சண்டை போடுறன். சரி என்ர வீட்டுச் சண்டைதான் எங்கட சேரிக்க விரிஞ்சுகிடக்கு. ஒத்துக்கொள்ளுறன்! அது ஒரு பக்கம் கிடக்கட்டும். ஆனா இவன் உங்கட மருமோன் சிமியோன் தன்ர மனுசி திரேசாவைப் போட்டு அவள வாயப்பொத்திக்கொண்டு நில் எண்டு சத்தம் வெளிய கேக்காம போட்டு அவள மொத்து மொத்தெண்டு மொத்துறான். அவன் குடிக்காம நிதானமாயிருக்கிறவன்! அவன் மனுசியப் போட்டு அந்த அடி அடிக்கிறான்! வீட்டுக்க அவள வைச்சு தலைமுடியைப் போட்டு ஆட்டி ஆட்டி, அவளக் கொல்லுற மாதிரி அடிக்கிறான். அத நீங்கள் அல்லாட்டி அந்த இடத்தில் உள்ள வேற ஆக்கள் ஆராது கேட்டாங்களோ..?” அவனுக்கு வார்த்தைகள் திரண்டுகொண்டு வந்தன.
ஆரோக்கியம் கேட்ட கேள்விக்கு மனுவலாலும் உடனே ஒன்றும் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது. அவன் உறவு சொன்னது போல மனுவலுக்கு சிமியோன் மருமகள் முறையானவன். மனுவலின் சகோதரி றோசையின் புருஷனுடைய சொந்தக்காரன் அவன். சிமியோன் அப்படி மனைவியைப் போட்டு அடிப்பதும் சண்டைபிடிப்பதும் பற்றிய விவகாரம் மனுவலும் அறிந்ததுதான். சிமியோன் திரேசாவை திருமணம் முடித்து ஐந்து வருடமாகிறது. ஆனால் பிள்ளைச் செல்வமில்லை அவனுக்கு, குழந்தை ஒன்று வேண்டும் என்று அவனுக்கு பெரிய ஆசை. இதுதான் அவர்கள் இருவருக்குள்ளும் சண்டை. ஆனால் இந்தக் குடும்பச் சண்டையை, சிமியோன் மனைவியைப் போட்டு அடிப்பதை, சேரியில் உள்ள அவனது உறவினரெல்லாம் ஞாயப்படுத்துகிற மாதிரித்தான் தங்களுக்குள் அவர்கள் நினைத்து வைத்துக்கொண்டிருந்தார்கள். "மலட்டுச் சனியன். மலடி. மலடி.” என்று அவன் தன் மனைவி திரேசாவைத் திட்டுவதை அவர்களும் உண்மையென்றும் ஏற்றுக்கொண்டு அவளில்தான் குறை இருப்பதாகக்
t O 31 Oقیقه تانا یا قایلنا

Page 22
கதைத்துக்கொண்டார்கள். நாள் செல்லச்செல்ல இந்தக் கதையே உண்மையாகிவிட்டது. அங்குள்ள எல்லோராலும் அவள் மலடிதான்! என்றதாக பிறகு நிரூபிக்கப்பட்ட அளவிலும் வந்து அவளைக் காய்க்காத மரமென்று ஒதுக்கிவிட்டார்கள்.
ஆண்வர்க்கம் எந்த விதத்திலும் பெண்ணை அடக்கி ஆளவேண்டுமென்றுதான் விரும்புகிறது. எந்த விதத்திலும் அடக்குமுறையை அது பெண்களின்மேல் செயல்ப்படுத்துகிறது. எது நியாயம் என்பது எப்பொழுதும் ஆண்களிடத்தேதான் இருக்கும். பிழைகளும் குற்றங்களும் பெண்களிடத்தேதான் சேரும். அதனால் பெண்கள் தண்டனை அனுபவிக்க வேண்டிய பிறவிகளாக இருப்பார்கள். ஏனென்றால் எல்லாக் குற்றங்களும் பொய்களும் ஏமாற்றுதல்களும் பெண்களிடமிருந்துதான் ஆண்களிடம் சென்று வேர்கொள்ளப்படுவதாக சமய நூல்களிலும், இலக்கியங்களிலும் எழுதப்பட்டிருக்கின்றன. எந்தச் சமயப் புத்தகத்திலும் முதல் கதையாக இப்போது இதுதான். அதுவே சிறுவயதிலிருந்து யாருக்கும் போதிக்கப்படுகிறது. பைபிளைத் திறந்தால் உடனே எதிர்ப்படுகிறவள் ஏவாள். அவள் பிசாசினால் ஏமாந்தாள். அதே ஏமாற்றுதலை புருஷனுக்கும் செய்கிறாள். கடவுள் தந்த நித்திய வாழ்வை மனித குலத்திற்குக் கிடைக்காது கெடுத்தவள் ஏவாள். இப்படியான கதைகளை வைத்துக்கொண்டுதான் எல்லாக் கேடுகளுக்கும் பெண்களே காரணமென்று ஆண்வர்க்கம் தன்னைத் தப்பித்துக்கொள்கிற அளவிலேயே செயற்படுகிறது.
சமயம் சார்ந்த அறிவிலேயே தன் வாழ்வை வாழப்பழகியிருப்பவன் மனிதன். இந்த வாழ்வில் ஏதோ ஒரு விதத்தில் பெண்கள் அடிமைகள்தான். இந்த வாழ்க்கை முறையிலிருந்து அவர்கள் மீட்சி அடைவதென்பது மிகவும் கஷ்டமானதொன்றுதானே?
ஆரோக்கியம் சிமியோனின் கதையைக் கொஞ்சம் உரத்துச் சத்தமான வேணுமென்கிற அளவில்தான் சொன்னான். மனுவலும் அவனுடைய குடும்ப உறவினர்களும் தங்களைப் பரிசுத்தவான்களாக வைத்துக்கொண்டு தன்னை ஏளனப்படுத்துகிறார்கள்' - என்ற மன உறுத்தல் அவனுக்கு இருந்தது. ஆரோக்கியமும் மனுவலுக்கு உறவினன்தான். என்றாலும் தூரத்து உறவு உறவில் அதிகம் நெருக்கமில்லாததினாலேயே மனுவலின் குடும்ப உறவினரோடு அவன் அளவளப்பான ஒட்டுதல் இல்லை. இனி இவன் ஒரு குடிகாரன். ஆனால் மனுவலின் உறவுகள் குடிப்பதில்லை. இறம்பைக்குளம் அந்தோனியார் கோயிலில் தாங்கள் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்ட காரணத்தால் மனுவல் ஒரு மாதா கோயிலை சேரிக்குள்ளே உருவாக்கியிருந்தான். அந்தக் கோயில் வழிபாட்டில் பக்தியும் அவர்களுக்கு இருந்தது.
ஆரோக்கியம் உரத்துச் சத்தம் வைத்துச்சொல்ல அவன் சொன்ன O 32 O ரீ.பி.அஞ்ளனர்தே

அவைகள் அனைத்தையும் கொஞ்சம் தள்ளிநின்ற சிமியோனின் காதுகளிலும் விழுந்துவிட்டது.
அதனால் அவன் கோபம் தலைக்கேறி விளக்குமாறை ஒரு பக்கம் வீசிவிட்டு சிமியோன் நின்ற இடத்துக்கு வந்தான்.
"நீ உன்ர வீட்டுக் கதையக் கதைக்கிறத விட்டிட்டு ஆர் வீட்டுக் கதையையும் ஏன் வேலை செய்யிற இடத்தில வந்து கதைக்கிறாய்.?” என்று அவனைக் கேட்டான்.
“என்ர வீட்டுக் கதய உன்ர மாமா வந்து இதில ஏன் என்னட்டக் கதச்சவர் எண்டு அவர ஒருக்கா நீ கேள்.?” என்று ஆரோக்கியம் சிமியோனைப் பார்த்து உடனே சொன்னான்.
"மாமா உன்ர வீட்டுக் கதயக் கேட்டா..? அவரோட நீ அதக் கதைக்க வேணும். என்ர கதயக் கதைக்க நீயார்.?”
"நான் ஆரோ.? அட நானும் நாரந்தனையான்தானடா. உங்களவிட நான் நல்ல சாதிப்பறையனடா நான். உங்கள மாதிரி மலடுகளில்ல எங்கட பரம்பரை. அந்தக் கடவுள் ஆசீர்வதிச்சுவிட்ட பரம்பர நாங்கள். என்ர அப்பன் சேவேத்திதான்ரா அந்தக்காலத்தில முதல் முதலா இங்க வவுனியாவுக்கு வந்தது. இந்த முகாந்திரம் தருமலிங்கம் ஐயா அப்பவும் கிராமசபைத் தலைவராயிருக்கையிக்க அங்க பகவதி ஹோட்டல் பஸ்ராண்ட் அடியில கொட்டிலப் போட்டுக்கொண்டு நீ இரு எண்டதாய் அவர் அப்ப விட்டவர். அதற்குப் பிறகுதான் இங்க அவயஞம் உவயளும் எண்டு நீங்க எல்லாருமா புழுதிய மூக்கில நிரப்பிக்கொண்டு பின் சீற்றிலயிருந்து இங்க வவுனியாவுக்கு நாரந்தனையிலயிருந்து வந்து சேந்தியள். இங்கவந்தும் எல்லாருமா பஸ் காலைக்க இருந்தும் அதுக்குள்ளால பேந்து எல்லாரும் எழும்பிப்போங்கோ, நான் இந்த இடத்த பஸ் ஸ்ராண்ட் ஆக்கப்போறன். கொட்டில புடுங்கி எறியப்போறன் எண்டு தர்மலிங்கம் ஐயா சொல்லேக்க அவரிட்டக் கேட்டு இதுக்க சூசைப்பிள்ளையார் குளத்துக்க சவுக்காலைப் பக்கம் காட்டை வெட்டி முதல் முதலா அதில குடியேறினவர் என்ர அப்பன் செவ்வேத்திதானடா. அவர்தான் உங்கள எல்லாரையும் இந்த இடத்தில் குடி ஊன்றி வச்சுவிட்டவர். அப்ப ரெண்டாவது மகாயுத்தம் நடக்கேக்கிள முதல் முதல் அப்பவும் இங்கவா வந்து உங்க ரண்வேப்பக்கம் வெள்ளக்காரனிட்ட வேல செய்தவனும் என்ர அப்பன் செவ்வேத்திதான். ஓம் ஓம் அத ஆரும் உவயள் ஆரும் இதில நிண்டுகொண்டு இல்ல எண்டட்டும் பாப்பம். இப்ப பெரிசா என்னோட எல்லாரும் அந்தச் சேரிக்க இருந்துகொண்டு எங்களுக்கு எழுப்பங்காட்டிறியள் என்ன..? ஏதோ பெரிய சரித்திர மகாராசாக்கள் நீங்கள் எண்ட மாதிரி நினைச்சுக் கொண்டு கத என்னோட கதைக்கிறியளென்ன..?”
துயரச் சுச0uண்கள் O 33 O

Page 23
"எந்தக் கதையையோ நான் உன்னட்டக் கேக்கத்துவங்க நீ இப்ப என்ன என்ன விடுப்புக்கதையளயெல்லாம் எங்களுக்குச் சொல்லத் துவங்கீற்றாய்..?” என்று ஆரோக்கியம் சொன்ன கதைக்கு மனுவல் தன் முகத்தை முறுக்கிக்கொண்டு எரிச்சலோடு சொன்னான். "ஓ நீங்கள் எல்லாரும் ஒண்டாச் சேந்து கொண்டு நிக்கிறது இப்ப எனக்குத் தெரியும். எனக்கு இனிமேல உங்கட கத வேண்டாம்.! உங்களுக்கும் என்ர கத காரணம் ஒண்டும் இனிமேல வாயில வரவேண்டாம்.! எனக்குப் பிள்ளை குட்டியள் இருக்கு மனுசி இருக்கு! நான் அதுகளப் பாக்க வேணும். மற்றவன் மாதிரி மனுசிமாரோட பிள்ளைகுட்டி எனக்கு இல்லையெண்டுற சண்டையும் ரெண்டாம் கலியாணம் நான் முடிக்கப்போறன் எண்டுற ஏற்பாடுகளும் எனக்கில்லைத்தானே.?” என்று ஆரோக்கியன் கடைசியாக ஒரு கதையைக் கொண்டுவந்து தன் கதையோடு கொழுவிவிட,
“என்ன கதையடா எளியவனே நீ கதைக்கிறாய்..?” என்றுகொண்டு சிமியோன் தன் அருகில் நின்ற ஆரோக்கியத்தின் பழைய சேட்டைக் கையால் கொத்தாகக் குவித்துப் பிடித்தான்.
“விடுடா. அடக் விர்ர்றா. அவனிண்ட சேட்ட." என்றுகொண்டு மனுவல் இருவருக்கும் இடையில் நின்றுகொண்டு விலக்குப்பிடித்தான். ஒட்டிக்கிடந்த மாதிரி நின்ற இருவரையும் பிரிக்கப் பாடுபட்டான். ஆரோக்கியம் தன் சேட்டை சிமியோன் பிடித்து இழுத்து உலுப்ப, கையை நீட்டி உடனே அவன் நேராய் சிமியோனின் குரல்வளையைப் பிடித்துவிட்டான்.
அந்த நேரம் அக்கம் பக்கம் கையில் விளக்குமாறோடு நின்றவர்க ளெல்லாம், அதைப் போட்டுவிட்டு உடனே இவர்களின் அருகில் ஓடிவந்தார்கள். எல்லாரும் சேர்ந்து இருவரையும் வெட்டின மாதிரி விலக்கிப் பிரித்துவிட்டார்கள். ஆரோக்கியத்துக்குப் போட்டிருந்த சட்டை கிழிந்துவிட்டது. சிமியோனுக்கு இருமல் வந்து இருமி இருமிச் சளி காறித்துப்பினான்.
விலக்குப் பிடித்தவர்களில் ஒருவன் டோம்மினிக்! அவன்: "என்னப்பா இது எங்களுக்க அடிபாடு, சண்டை சீ.” என்று அவர்கள் இருவரையும் பார்த்துப் பேசினான். “வீட்டுக்கதையளையும், எங்கயோ கிடக்கிற விழல்க்கதையளையும் வேலைசெய்யிற இடம் வழிய நிண்டுகொண்டு ஏன் கதைப்பான்.?” என்று மனுவலைப் பார்க்காமல் எங்கேயோ பார்வையை நிலைநிறுத்திக் கொண்டு, ஆனால் அதை அவருக்குச் சொல்கிற மாதிரி கூறினான் சந்தியோ.
o 34 O ரீ.பி.அருணரைத்தச்

"நானும் எல்லாச் சனியன் குடியளையும் குடிக்கிறன். ஆனால் வீட்டிலயும் சண்டையில்ல. ஆரோடயும் நான் சண்டை பிடிக்கிறேல்ல. நான் ஏதோ என்ர பாட்டுக்கு போத்தலில தேன் இறுக்கிக்கிடக்கிற மாதிரிக் கிடக்கிறன். நேற்றுச் சம்பளம்! நான் அதக் கையில எடுத்தகையோட இவர் தாண்டிக்குளம் செல்லமுத்தர், கந்தோர் வாசல்படியில காத்துக் கொண்டு நிண்டு என்ர சம்பளக்காசு முழுக்கலையும் வட்டியோட கணக்குப்பாத்து வாங்கிக்கொண்டு போட்டார். அவருக்குப் பத்து ருவாய்க்கு ரெண்டு ரூபா வட்டிக்கெண்டு கணக்குப் பாத்தா, எடுக்கிற சம்பளக் காசு எப்பிடி மிஞ்சும்.? இண்டைக்குப் பின்னேரம் போய்ப் புதுக்கணக்கு வைச்சு அவரிட்டத்தான் நான் வட்டிக்குக் காசு வாங்க வேணும். அதுக்குப் பிறகுதான் இண்டைக்குச் சோத்துக்கு அரிசி சாமான் வாங்கிக்கொண்டு நான் வீட்ட போகலாம். எல்லாமே என்ரபாடு. ஒரு நாய் படாத பாடுதான்.”
என்று தான் படுகிற பாட்டையும் கேட்டையும் ஒரு கதைபோலச் சொன்னான் ஆரோக்கியம். ஆரோக்கியத்தின் கதையை அதிகமாகச் சேரியிலிருப்பவர்கள் கணக்கெடுப்பதில்லை. ஏனென்றால் அவன் கசிப்பு, ஸ்பிறிட் என்று குடிப்பதையிட்டு எல்லோரும் அவனைக் கழித்துவைத்திருந்தார்கள். என்றாலும் அந்த நேரம் அவன் கதைத்த கதையிலே தான் வட்டிக்குப் பணம் வாங்கி மாளுகின்றேன் என்றமாதிரி சொல்லிக் கொண்டிருக்கும்போது, எல்லோரும் அவனுடன் தாங்களும் சேர்ந்து அப்போது ஒன்றினது மாதிரியே அவன் மேல் பார்வையைக் குவித்தார்கள்.
சேரியில் உள்ளவர்களுக்கு பணத்தைக் கொடுத்து அதற்கு அநியாய வட்டி வசூலிக்கும் செல்லமுத்தரின் உருவத்தை, ஒரு பிசாசைப் போல அவர்களெல்லாம் அப்போது நினைத்துக் கொண்டார்கள்.
என்றாலும் "செல்லமுத்தரை விட்டால் எங்களுக்குக் கதியென்ன..? அவர் பணம் தராவிட்டால் வேறு யார் எங்களை நம்பி வட்டிக்காயிலும் சரி பணம் தரப்போகிறார்கள்.? - என்று அந்த விதமாகவும் அவர்கள் சிந்தித்தபோது, செல்லமுத்தர் வெள்ளைவேட்டி நசனல் போட்டுக்கொண்டு தன்வீட்டு முற்றத்தடியிலுள்ள நெல்லிமரத்துக்குக் கீழே, கதிரையில் காசுப்பெட்டியுடன் இருந்து சிரித்துக் கொண்டிருப்பது மாதிரியான காட்சி அவர்களுக்குப் பிறகு நினைவில் மாறியது.
“சரி வேலையத்துவங்குங்கோ. கெதி கெதியா இருக்கிற மிச்ச சொச்ச இடங்கள கூட்டித்தள்ளி நெருப்பு வைச்சுட்டு வெளிக்கிடுவம்.? இப்ப ஒவசியரும் இங்க பாக்க வருவார்.?” என்றான் கங்காணி மனுவல். அவன் சொன்ன கையோடு எல்லாரும் தங்கள் வேலையைத் தொடங்கினார்கள். ஆரோக்கியம் நின்று கூட்டிப் பெருக்கும் இடத்தை விட்டு சிமியோன் தொலைதூரமாகப் போய்நின்று தன் வேலையைத்
துயரச் சுரப்பண்கள் O 35 0

Page 24
தொடங்கினான். அவன் நின்ற இடத்தடிக்கு கூட்டிக்கூட்டித் தள்ளிக் கொண்டவாறு முன்னேறி ஆசீர்வாதம் அருகில் போனான்.
"நீயேன் அவனோட கதைவெளிக்குப் போறாய்? அவன் ஒண்டுமில்லாத ஒரு ஒட்டாண்டி. நீ அப்பிடியே, இங்க சேரிக்க கொஞ்சம் வசதியா நீ தான் இருக்கிறாய்! உன்ர மனுசி கழுத்தில காதில பவுண் நகையெண்டாலும் போட்டிருக்கிறாள்! அதுவும் தான் ஒரு காரணம். எல்லாரும் உன்னோட பொறாமைப்பட்டு கொளுவ நிக்கிறாங்கள். அதைவிட உன்ர வீட்டில உன்னோட இருக்கிற உன்ர சொந்தக்காறப் பெடியன் அவனும், அங்க சவுக்காலைக்க குழிவெட்டி அதில வாற காசுகளையும் உனக்குத்தந்து போட்டு உன்னோட இருக்கிறானெல்லே.? அதுவும் எல்லாருக்கும் படு மன எரிச்சல். அதாலதான் வேற ஒண்டையும் செய்து ஏதும் உனக்குச் சொல்லி ஆத்திரப்படுத்தேலாது எண்டுற அளவில. இந்தப் பிள்ளை உனக்கில்லாத கதையையும் அதையும் இதையும் கதைச்சு தங்கட ஆத்திரங்களை இப்புடித் தீக்கலாமெண்டு பாக்கிறாங்கள். நீ மலடாயிருந்தாலென்ன? உன்ர மனிசி மலடாயிருந்தாலென்ன உவங்களுக்கேன் அந்தக் கதயள..? நீ இன்னொரு கலியாணம் முடிக்கிறது உன்ர இஸ்டம்! அதைக் கேக்க அந்த நாயஞக்கு என்ன அதிகாரமிருக்கு.?”
சிமியோனுக்குப் பக்கத்திலே தானும் கூட்டிக்கொண்டு நின்றபடி இவைகளையெல்லாம் சொன்னான் ஆசீர்வாதம்.
சிமியோன் அவன் சொன்னதை தான் அக்கறையாகக் கேட்காதமாதிரி வேலையோடு நின்றான். என்றாலும் மலட்டுக் கதை பற்றி அவன் எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கும்போது மனதில் மடிந்து கிடந்த உள் விஷயங்களை விளக்குமாறால் குப்பை கிளறுவது போல அவனுக்கு இருந்தது.
என்றாலும் அவன் ஆசீர்வாதத்தோடு ஒரு கதையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற நினைப்பில் கப்சிப்பென்று இருந்து தன் வேலையை இன்னும் விரைவுபடுத்திக்கொண்டிருந்தான்.
றோட்டுப்பக்கம் முழுக்க கூட்டி முடியும் தறுவாய்க்கு வந்துவிட்டது. நெருப்புவைத்த பச்சைகளும் சருகுகளும் கலந்த குப்பைகளெல்லாம் எரிவதும் புகைப்பதுமாய் இருந்தன. வேலை முடிந்து மனுவல் பார்ட்டி குடியிருப்பைவிட்டு வெளிக்கிட்டார்கள். வவுனியாக் குளத்தடி குறுக்குப்பாதையால் நடந்து பள்ளிவாசல் கடைத்தெரு வீதிக்குப் போக வந்தார்கள். அவர்கள் வந்து கொண்டிருந்த ஒற்றையடிப் பாதையருகில் குளத்துத் தண்ணீரின் மணம் பச்சைகூடி நின்றது.
o 36 o ரீ.பி.அருளானந்தம்

அந்தோனியார் கோயிலிலிருந்து நண்பகல் திருந்தாதி மணி ஒலித்தது.
மணிச்சத்தம் கேட்டதும் “என்ர அந்தோனி முனியோரே, மடுமாதாவே தாயே..” என்று பத்துமுறை கூப்பிட்டவாறு நடந்தான் மனுவல்.
குளக்கரையில் அந்த நேரம் நீர்கொழும்புப் பக்கம் இருந்துவந்த வியாபாரிகள் பன்றிகளைக் கலைத்துப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அவைகள் அன்ரனிஸ் ஹோட்டல் முதலாளி வளர்த்த பன்றிகள். எல்லாப் பன்றிகளும் சாப்பாட்டுக்கடைக் கழிவுகளைத் தின்று குளத்து அலைக்கரையில் திரிந்துகொண்டிருந்தன. அவைகளை குளத்துப்பக்கம் விட்டு குட்டிகள் ஈன்று அவை பெரிதாகவும் விற்பது அவருக்குக் கொழுத்ததொரு வியாபாரம், குளக்கரையில் வைத்துப் பிடித்த கொழுப்புள்ள நல்ல முற்றின பன்றிகளையெல்லாம், கால்களைக் கட்டி நீண்ட கழியில் தலைகீழாகத் தொங்கவிட்டு, அவை அலற அலறக் கொண்டுவந்து நிறுத்துக் கணக்குப்பார்த்து வாகனத்தில் வியாபாரிகள் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சம் கணக்கான பருவத்துப் பன்றிகள் குளத்துப்பக்கமிருந்த கழிவு நீர் ஒடையில் மூக்கால் துளாவிக்கொண்டிருந்தன. அந்தப் பன்றிகளை அவர்கள் கம்பி வளையம் போட்டுப் பிடிப்பதும், பிடிபட்ட பன்றிகள் குளக்கரை அதிர அலறிக்கொண்டிருப்பதுமாக, அந்த இடமே அப்பொழுது ஒரு சத்தக் காடாக மாறியிருந்தது.
மனுவலும் அவனுடைய ஆட்களும் இவைகளையெல்லாம் அந்த வழியாலே போகும்போது, புதினம் பார்த்துக்கொண்டு போனார்கள். ஆனாலும் அவர்களுக்குள்ளே சிமியோனுக்கு மாத்திரம் அந்தப் பன்றியின் அலறல்களைக் கேட்க, ஏனோ நெஞ்சுக்குள் அவனுக்கு சுள் சுள்ளென்று அவைகள் எழுப்பும் ஒலி நீளமளவுக்காய் வலித்திடச் செய்தது.
タ
தோட்டிகள் வசிக்கும் சேரிப்பக்கம் அவர்களது வாழ்க்கைக்காலப் பழங்கதைகள் சொல்லப்பலபேர் இருக்கின்றார்கள். ஆனாலும் அவர்களுக்குள் லட்சுமிக்கிழவி போல பெருங்கதை சொல்ல யாருமே இல்லை! என்றவாறேதான் அவளைப்பற்றி இளம் பெண்களெல்லாம் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். தனக்குப் பன்னிரண்டு வயதாக இருக்கும்போது, இந்தியாவிலுள்ள இராமநாதபுரத்தில் வைத்துக் காத்தமுத்துவுக்கு கல்யாணம் முடித்துக் கொடுத்தார்கள் என்று
glugs ssÖuaðssk O 37 O

Page 25
அவள் சொல்லாமல் விட்ட ஆட்களே அவ்விடத்தில் ஒருவருமில்லை. அந்தளவுக்கு முக்கியமாக தன் திருமண நாளை அவள் நினைவில் வைத்துக்கொண்டிருந்தாள். அவள் அங்குள்ள குமரிப் பெண்களுக்கும் தான் சொல்லியதை மறந்துபோய்விட்டு, திரும்பத் திரும்ப இந்தக் கதையை அவர்களுக்குச் சொல்லும்போது “பாட்டியம்மா நீ அப்ப சமைஞ்ச புறமாத்தான் உன் புருஷனக் கண்ணாலம் முடிச்சிக்கிட்டியா?” என்று வீம்புக்கு அவளை அவர்கள் கேட்பார்கள்.
"தூ தெரித்திரம் புடிச்சதுவளே சமைஞ்சுக்காம பெண்ணுங்களை எப்பிடீடி பெரிவங்க பாத்து யாருக்காச்சும் கண்ணாலம் முடிச்சுக்குடுத்துக் குவாங்க” என்று மடிச்சேலையை உதறித் தட்டிவிட்டுக்கொண்டு உடனே அவர்களைப் பார்த்து அவள் கேட்பாள்.
“சரி கண்ணாலம் பண்ணிக்கிட்டாய்.1 புள்ளங்க குட்டிக ஒண்ணுமே நீ பெத்துக்கேல்லயா..?” இப்படிக் கேட்டுவிட்டால் தாம்பூல எச்சிலை ஒரு பக்கமாத் துப்பிவிட்டு,
"பெத்துக்கிட்டதுதான்.! புள்ளேங்க பெத்துக்காம வேற ஆராச்சும் மாதிரியா மலடியாவா நான் திரிஞ்சேன்.? ஒண்ணுக்கு மூண்ணு பிள்ளகள நான் பெத்துக்கிட்டேன்தான்!”
"அப்புறம் உன் பிள்ளைங்க யெங்க அதுங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு.?”
“என்ன ஆச்சோ.! அப்படியா எனக்கும் பாழாப்போச்சு..! எனக்குக் கொடுப்பனவே கொஞ்சூண்டும் இல்ல. ரெண்டுதவட எனக்கு தங்கி இருந்திச்சுதுக. அப்புறம் பொறந்ததுங்க அதுங்க எல்லாமே இந்த உலகத்த முடிச்சுக்கிண்ணு செத்துப் போச்சுங்கடியம்மா.” இதைச் சொன்னதோடு லட்சுமி மனம் நொறுங்கிப் போனதுமாதிரியாக இருந்தாள். தனக்கு முன்னே தான் பெற்ற செல்வங்கள் சுடுகாட்டுக்கு முந்திக்கொள்கிற சம்பவங்கள் எந்தத் தாயைத்தான் அசைத்திடச் செய்யாது. அவள் கண்களில் அப்போது நீர் முட்டிக்கொண்டிருக்க அந்த நான்கு பெண்களும் அவளைப்பார்த்துத் துக்கப்பட்டுப்போனார்கள். ஆனாலும் பாப்பாத்தியால் மட்டும் மீண்டும் அவளைக் கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லை.
"புள்ளேங்கதான் அப்படிப் போயிட்டுதுங்கவெண்ணு நீ சொல்றே பாட்டி. ஆனா எங்க காலத்திலயா நாங்க எல்லாரும் உன் புருஷனக் கண்ணாலயே காணக் கெடக்கிலயே பாட்டி?”
"ஒன் காலமென்னடி வயசு.? நீ குமரியாயின வயசில நிக்கிறே. அந்த மவராசனு என் தாய் மாமனு மவனுதான்! அவரு என்னயவிட்டுப் போயி யெவ்வேளவோ காலமாயிடிச்சுடி. அதெல்லாம் சொல்லிக்கப்போனா o 38 о ரீ.பி.அருணானந்தே

பெரியக் கதே.”
லட்சுமி இந்த அளவுக்கு சொல்லிக்கொண்டுவர இதுதான் தருணம் என்பதை அறிந்து.
“என்ன அப்பிடியெல்லாமே ஒன்ரகத.?” என்று கேட்டவாறு கிழவிக்கு அவர்கள் சாவி போட்டு முறுக்கிவிட்டார்கள்.
“என் கதையில உங்கப்பா அம்மா எண்ணுக்கிறவங்க கதைகளோட, அவங்கப்பா பாட்டன் முப்பாட்டனுண்ணு அவங்களு கதைங்களும் ரொம்ப ரொம்ப இருக்குங்கடீம்மா” என்பாள் அவள்.
சரி அதுங்களத்தான் நீ எங்களுக்கும் சொஞ்சூண்டு வெவரமா இப்ப சொல்லேன் பாட்டி” என்பார்கள் அவர்கள்.
பிறர்க்கு கதை சொல்வதிலே இனிமையான இன்பம் காண்பவள் லட்சுமிக்கிழவி கதையின் சில சம்பவங்களை இன்னும் நூறு நூறு சிலும்பல் வேர்கள் மாதிரியாய் அவள் விபரிக்கும்போது, அதற்கேற்ற அதிர்வலைகளும் அவளிடமிருந்து வெளிப்படும். மன ஒருமைப்பாட்டுடன் விரைவான சிந்தனையோடு அவள் கதையைத் தொடர்ந்து கொண்டிருப்பாள். வாழ்நாள் முழுக்கலும் அவள் சேரியில் வாழ்ந்து கழித்தாலும், அதற்கு மேல் தான் அறிந்த பல விஷயங்களையும் அவள் தன் கதைகளில் அள்ளி வீசுவாள். அவளிடம் நிறைய இன்பக் கதைகளும் இருந்தன. சந்திரப் பார்வையுடன் அவள் தன் இளமைப் பருவத்தை சொல்லும்போது, அதைக் கேட்கும் இளம் பெண்கள் நீண்ட ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பார்கள். அவர்களின் கண்களிலே அப்போது ஆரம்பப் பாடங்களைக் கவனிக்கும் பிரகாசம் இருக்கும். பிறரின் சோகக் கதையை அவள் சொல்லும்போது, அந்தக்கதை கேட்டு எவரின் கண்களில் கண்ணிர் தளும்பாவிட்டாலும், அவள் கண்களில் கண்ணிர் எங்கிருந்து ஊறிவருகிறது என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருக்கும்படி நிறைந்துவிடும். தான் சொல்லுகிறதையெல்லாம் உடனே நிறுத்திவிட்டு, அந்தத்துன்பத்தை தானும் அனுபவித்ததாக நினைத்து அப்படியே சீறல் போன்று ஒலி எழுப்பி அவள் அழுவாள். அதன் பிறகு தொடர்ந்தும் நீர் ஓடையில் விழுந்த பூ ஓடியது மாதிரி அவள் கதையும் தொடரும்.
என்றும் அவளுக்கு ஆற அமர இருந்துகொண்டு கதை சொல்லப் பொருத்தமான இடம் அந்தக் கருங்கல்தான். மட்டமான இருக்கையான அந்தக் கல் அவளின் மெல்லிய தேகம் இருந்துகொள்ள உறுத்தாத கல். 'மதுரமான இடம்' - என்று அவள் விரும்பத்தக்கதாக அருகே ஒரு பாலை மரமும் நின்றது. அந்தப் பாலை மரம் நின்ற இடத்திலேயே
slugă sistualăsă o 39 o

Page 26
செவ்வந்தியின் குடிசையுமிருந்ததும் அவளுக்கொரு வாய்ப்பு. குளுகுளு என்றுள்ளதாய் அவள் லட்சுமி கேட்கும் போதெல்லாம் தண்ணீர் கொண்டுவந்து கொடுப்பாள். தாகம் தீர்க்கும் 'கங்காதேவி - நீதாம்மா ஒருத்தி எனக்கு!’ என்பாள் கிழவி லட்சுமி சில வேளை சோர்ந்து களைத்துப்போய் அதிலே வந்து இருந்தாளென்றால், செவ்வந்தி அவளுக்கு தேநீர் போட்டும் சுடச்சுடக் கொண்டுவந்து கொடுப்பாள். கொஞ்சம் தொண்டைக்குள் சுடச்சுடக் கடுஞ்சாயமாய் தேநீர் குடிக்கத்தான் லட்சுமிக்கு விருப்பம். அவளின் தாகமறிந்து எந்த வேளை எதை அவளுக்குக் குடிக்கக் கொடுக்கவேண்டுமென்பது செவ்வந்திக்கும் தெரியும். "பாவம் லட்சுமி ஆச்சி! பாவப்பட்ட ஜென்மம்! வயசுபோன கெழவி! இதுங்களுக்கு நம்ம மாதிரி வயசுக்காரிங்க ஒதவிக்காம வேற யாரு ஒதவிக்கிடுவாங்க? - என்று அங்குள்ள யாராவது லட்சுமிக் கிழவியைப் பற்றிக் கதைத்தால், வயசு போய்விட்ட அவளுக்கு நாங்கள் உதவிட வேண்டியது பெருங்கடமை' என்பதாக அவள் அவர்களுக்குச் சொல்வாள். இதுவித காரணங்களால்தான் லட்சுமிக் கிழவிக்கு செவ்வந்திமேல் மாறாத ஒரு அன்பிருந்தது. அவள் தன்னை இந்தளவு வயதிலும் வைத்துப் பராமரித்து வரும் தன் உடன் பிறந்த தம்பியாரின் பேர்த்தியில்கூட செவ்வந்திமேல் உள்ள அன்பைப் போல் வைத்ததில்லை. இன்னும் செவ்வந்தி பெற்ற தாயுமின்றி வாழ்பவள். இதனால் தன்னைப் போலவே இழப்பும் வாழ்வில் அவளுக்கு உண்டு, என்று நினைத்து இரக்கமும் அவள்மேல் கொண்டிருந்தாள்.
கொதித்துத்துப்பிய மண்ணின் சூடு அடங்கிவிட்டது. லட்சுமி இப்போதும் அந்தக் கல்லின் மேல்தான் குந்திக்கொண்டிருந்தாள். இந்தப் பின்னேரப் பொழுது கழிய வேண்டுமே அவளுக்கும். வாலாட்டிக் குருவியொன்று வீரமரத்திலிருந்து சலம்பிவிட்டு இறக்கைகளை வீசிப் பறந்தோடியது லட்சுமிக்கு முன்னாலே நாலு பெண்கள் நின்றார்கள். குருவி பறந்துபோன பக்கம்தான் கிழவிக்கு விழி ஒட்டம் போகிறது. அந்தண்டையில் நிற்கும் செவ்வந்திதான் அவளின் கண்ணுக்குள் பிறகு நிற்கிறாள்.
செவ்வந்திக்குப் பக்கத்திலே நிற்கிற சிட்டு, வீரம்மா என்பவர்களிலும் பார்க்க பாப்பாத்தி என்பவள்தான் சரியான கதை பிடுங்கி.
“பாட்டீம்மா ராமநாதபுரம் நம்ம எல்லாரினதும் தாயி மண்ணு எண்ணு நீ எங்களுக்கெல்லாம் முன்னாடி இதில வைச்சு சொல்லிக்கிட்டே. சரி நீ எப்பவாச்சும் இங்க இருந்து போயி அங்க உன் ஊரு ஒலகத்தயாப் பாத்திருக்கிறியா..?”
அவளின் கேள்வியோடு தான் பிறந்த மண்ணின் நினைவில், பாலை மரக்கிளையை மேல்நோக்கி நிமிர்ந்து பார்த்தாள் கிழவி இலைகளில் O 40 O ரீலி.அருணனந்தே

முசுறு எறும்பு அடைவைத்திருந்தது. “ஏன்டி நீ இந்தக் கிளையெல்லாம் வெட்டிப் போடுண்ணு உங்கப்பன் ராமன்கிட்ட சொல்லலியா..?”
"நான் அதுக்கெல்லாம் வெடெல்லே பாட்டீம்மா. இந்த மரம் கிளை முழுக்கலுமா பழம் பழுத்துக்கும். அதப்போயி யாராச்சும் வெட்டுவாங்களா?”
"ஆமா எல்லாம் நீ இப்பிடித்தாண்டி. அண்டா அண்டாவா தண்ணியப் போயி சுமந்துக்கிட்டுவந்து செடீங்களுக்கெல்லாம் ஊத்திக்கிட்டிருடீ. அதுங்களும் பூத்தா அதை நீ பாத்துக்கிட்டிருந்தா உனக்குக் காணும்தானே.? ஒன்ர கனவுங்களயில்லாம் சேத்துக்கிட்ட ஒன் முகம் மாதிரித்தான் இந்தப் பூக்களும் இல்லையாம்மா செவ்வந்தி.?”
செவ்வந்திக்கு உடனே சிரிப்பு
“பாட்டீம்மா நான் கேட்டதுக்கு என்ன பதிலே சொல்லல." பாப்பாத்தி
விடவில்லை.
“சொல்லுறண்டி அதுதான் எனக்கு இப்ப ஞாபகம் போய்க்கிட்டிருக்கு. அந்த ஊருபோய் பாக்கிறதுக்கு அங்க எனக்கு இப்ப யாரு இருக்கா..? அதெல்லாம் எத்துணுாண்டு காலமாச்சு எவ்வேளவு தூரம்! அதுங்கெல்லாம் பழய கதே.! எனக்கு வயசு போச்சுக்கடியம்மா."
"எல்லாம் நினைவு தொட்டுக்க முடியாத தூரத்துக் கதயெல்லாம் நீ ஞாபகம் வைச்சிக்கிட்டிருக்கே. அதுங்களச் சொல்லிக்கிறே. இதுவள மாத்திரம் சொல்லிக்க உனக்கு ஞாபகம் வரலியோ..?”
"வரும்டீயம்மா. அதெல்லாம் பாப்பாத்தி. நீதான் கொஞ்சம் பொறுத்துக்கயேன். அதெல்லாண்டியம்மா பூரணமா நானு ஒங்களுக்கு சொல்ல வேணாமோ..? அங்கிட்டும் நானு பொறந்தது என்ன அரண்மனையிலயாடி பொறந்தேன். இங்க மாதிரி சேரிதான் அதுவும். இந்த இடத்தவிடவா அங்கிட்டு ரொம்ப மோசம். காத்து மேனியில மல வாடதான் புரண்டுக்கிட்டு வரும். அப்படியாகத்தான் அங்கின இருந்திச்சு. இங்கிட்டு நம்ம சேரிக்கு முன்னால உள்ள வீதியிலயா இந்த ஊரில உள்ள பெரிய பெரிய மனுசனுங்க கூட போறாறுவ. அவுங்க சமுசாரம் புள்ள குட்டீன்னு இந்த வீதியால கொளத்துக்கும் போய்க்கிறாங்க வந்துக்கிறாங்க. ஆனா ராமநாதபுரம் பக்கம் நாமெல்லாரும் இருந்துக்கிட்டமே சேரி. அந்தப்பக்கமே நம்ம நிழலுபட்டாலே தீட்டு எண்ணு மனுசனுங்க யாருமே தலயக்கூடக் காட்ட மாட்டங்கடி. அந்தளவுக்கு நம்மமேலயும் நாம இருந்துக்கிட்ட சேரிமேலயும் அவங்களுக்கு வெறுப்புண்ணா அவ்வளவு வெறுப்புக் கசப்பு. அங்கிட்டு நாங்கில்லாமே எங்க ஊரில தெலுங்கு பாஷையிலதான் கதைச்சுக்குவோம்.”
துயரம் கசப்பண்கள் O 41 O

Page 27
"இங்கவந்து ஏன் பாட்டி தெலுங்கு கதைச்சுக்காம விட்டுப்புட்டீங்க. எங்களுக்கெல்லாம் நீங்க கதைச்சுக்கிற அந்தப் பாஷையே புரியலியே பாட்டி..?” என்று இப்படியும் ஒரு கேள்வியை பாப்பாத்திதான் கேட்கக்கூடியவளாய் இருந்தாள்.
"அப்படி கேளுடீயம்மா. இந்த ஊரில யாருகூடவா நாம தெலுங்கு பேசிக்கிறது.? இங்க வந்துகிட்டதும் நாம எல்லாம் தெலுங்கிலதான் நம்மளோட ஆக்களுங்கோட பேசிக்கிட்டோம். ஆனாலுமே இங்கிட்டு வேற எல்லாருங்கோடயும் தமிழிலதான் பேசிக்க முடிஞ்சுது அப்பிடியே இப்ப பேசிக்கிட்டாப்போல தெலுங்கு பேசிக்கிறது நொறுங்கிப் போச்சுது. பாரு நீங்களும்தான் இங்கிட்டா தமிழயேதான் பேசுக்கிறீங்க உங்களுக்கு எப்புடீடி தெலுங்கு வரப்போவுது..?”
“ம் அப்புறமா மேல சொல்லேன்.?”
"அதுகளத்தான் இனி சொல்லிக்கப்போறேன். அங்க என்னடாண்ணா அந்த ஊர் பண்ணையார்கிட்டத்தான் போயி நம்ப சேரிங்களில உள்ள ஆக்களுங்கெல்லாமே ஆணுங்க பொண்ணுங்களாக் கூடிக்கிட்டு வேல செய்துக்கிட்டாங்க. கெடைக்கிற கூலிப்பணம் எங்களுக்குத் திங்கிறதுக்குக் கூடப்பத்தல. அதால வேல செஞ்சிக்கிற பண்ணயில இருந்து வேற பண்ணைக்கும் எங்களால போவவும் கூடமுடியல.”
"அது ஏன் பாட்டி..?”
"பண்ணையாரு அப்புறம் நாம எங்காச்சும் போவ நெனச்சா சீறிக்கிண்ணு வந்து எங்களயில்லாம் கொண்ணுப்புடுவாரே.?”
"அட அநியாயமே..?”
"ஆமா அப்புடீயெல்லாம்எங்களைப்போட்டு அநியாயம்பண்ணினாங்க..! ஆம்புளங்களெல்லாம் அங்க சட்டையே போட்டுக்கேலாது. வெறுமேனி யாத்தான் எங்கிட்டும் போவாங்க. இப்புடியா நாம எல்லாம் கஷ்டப்பட்டுக்கிட்டு அதிலே நாம சீவிச்சுக்கழிச்சு அப்புறம் பாடயிலயும் போயிருவமா? எண்ணு இருந்துக்கிற காலத்திலதான் ஒலக சண்டை வந்திச்சுது. சண்டை நடந்துக்கிட்டிருந்த அந்தக் காலத்திலயா தரகருமாதிரியான ஆக்களுங்கெல்லாம் நம்ப சேரிப்பக்கம் வந்து ஆம்புளங்களயெல்லாம் மலேசியா, சிங்கப்பூருண்ணு வேலைக்கு கூட்டிக்கிட்டுப் போனாங்க. பர்மாக்கும் கால்நடையா நடத்திக் கூட்டிக்கிடுப் போனாங்களாம். இப்பிடியே ஏராளமா அங்க நம்ம சேரியில இருந்த ஆம்புளங்களெல்லாம் கெளம்பிக்கிட்டு அங்கின அங்கினயா போயிக்கிட்டாங்க.”
"அப்புறம் இங்க சிலோனுக்கு நீங்கெல்லாம் எப்பிடியா வந்தீங்க.?” O 42 O ரீ.பி.அருளரைத்தே

"அதுப் பெரிய கதங்கeம்மா. ஒவ்வொரு ஆளுங்களும் திக்குத்திக்காய் போய்க்கிறாங்க. நாமளும் ஒரு பக்கம் பஞ்சம் பொழைக்கப் போய்க்குவோம் எண்ணு நினைச்சுப்புட்டுத்தான். இந்த ஊருக்கு வந்தோம்.”
"எல்லாருமா நீங்க ஒண்ணாவா சேந்திக்கிட்டு அந்தவாட்டி வந்தீங்க..?”
“ஒண்ணா எப்புடி வர்றதாம். அப்புடி புருஷேன் பெஞ்சாதி குழந்தை குட்டீண்ணு எல்லாரையும் சேத்துக்கிட்டு இங்கிட்டுப்பக்கம் அவங்களெல்லாம் கூட்டிக்கிட்டு வருவாங்களா? அவுங்க ஆம்பிளங் களைத்தான் மொதமொதலா இங்க கூட்டிக்கிட்டு வந்தாங்க. அதுவும் இந்தியாவில இருந்து தோணியில ஏத்திக்கிட்டு இங்க வந்து அவுங்கள தலைமன்னாரு என்னுக்கிற யெடத்தில இறக்கினாங்க. அப்புறம் தென்ன மரங்களுக்கு கீழயா ரெண்ணு மூணு நாளுகளா அவங்கள தின்னவும் ஒழுங்கா குடுத்துக்காம ஒழிச்சுக்கிட்டு வைச்சிக்கிட்டிருந்துப்புட்டு இங்கிட்டுள்ள ஊருங்களுக்கெல்லாம் அவுங்கள வேலைக்கெண்ணு கூட்டிக்கிட்டுப் போனாங்க”
“உங்க புருஷனுகூட அப்புடித்தான் வந்தாருவள பாட்டி..?”
“எப்பிடி எல்லாருமா இங்க வந்து சேந்தானுங்களோ அப்புடீயாத்தான் அவரும் எம்புருஷனும் வந்தாரு. என்னையும் அங்கிட்டு தனியவா விட்டுப்புட்டு அவரு மாத்திரம் தனியவா இங்க வந்தாரு. அங்கிட்டு இருந்து இங்க வரேக்கிளயே திங்கிறத்துக்கு ஒண்ணுமே கையில கொண்ணுகிட்டு வராம புளியங்கொட்டைகளை நான் வறுத்துக் குடுத்தேன். அதத்தான் மூணு நாலு நாளா வைச்சி திண்ணுக்கிட்டு உயிரப்பிடிச்சு வைச்சிக்கிணு வந்தேணு பொறவாட்டி அவரு எனக்கு இங்கின வந்தவாட்டி சொன்னாரு.”
“சரீப்பாட்டி உன் புருஷன் இங்க வந்துக்கிட்டாரு. அப்புறமா நீ எப்பிடியா இங்க வந்தே.?”
“அதுதான் எல்லாத்துக்கையும் விடவா பெரிய கதடிம்மா. யேன் புருஷேன் என்னியத் தனியா இங்க தவிக்க விட்டிட்டுப் போயிட்டாரே எண்ணுக்கிட்டு நானு ராப்பவலா கண்ணிர் வடிச்சுக்கிட்டிருந்தேன். என்ன மாதிரித்தான் எத்தினயோ பொண்ணுக அவுங்க புள்ளேங்க குட்டியள வைச்சுக்கிட்டு பரிதவிச்சுக்கிட்டு இருந்தாங்க. எனக்கிண்ணா என் மனசுக்குத் தெரியும் என் கழுத்தில மூணு முடிச்சுப்போட்ட என் தெய்வம் எப்புடியாவது என்ன அவருக்கிட்ட கூப்பிட்டுக்கும் எண்ணு. அந்த ஒரு நம்பிக்கேலயே நானு நாளுங்கள ஓட்டிக்கிட்டிருந்தேன். அதுக்குள்ள எண்ணடாண்ணா இங்கிட்டு வந்த ஆம்புளங்களில
துவரச் சுண்பண்கள் O 43 O

Page 28
சிலதுங்க பொண்டாட்டி புள்ளங்கள மறந்துப்பிட்டு வேற கண்ணாலமும் கட்டிக்கிட்டாங்களாம்.” "இதெல்லாம் எப்பிடி அங்கிட்டு இருந்துக்கிட்ட உனக்கு தெரிஞ்சுது..?”
“எனக்கெப்புடித் தெரிஞ்சுக்கும்? அங்கிட்டெல்லாம் இதுகள ஆருக்குமே தெரியல. அவுங்க அவுங்கபாட்டுக்கு பண்ணைக்கே வேலைக்கு நாம போயிட்டு நம்மஞக வயித்துப்பாட்டப் பாத்துக்கிட்டிருந்தோம்.”
“பொறவு.?” “பொறவென்ன. என் மவராசனு பணம் காசுங்கள கையில சேத்துக்கிட்டு என்னையும் அவருகூடயா கூப்பிட்டுக்கிட்டாரு.” “எப்பிடி நீ இங்க வந்து சேர்ந்தே பாட்டி..?”
"அவுங்களுக வந்தாப்புலதான் நானும் அப்புடியா வந்தேன். என்னியயும் கடலிலயா தோணியில ஏத்திக்கிட்டு அங்கிட்டிருந்து இங்கிட்டுக்கொண்டு வந்தானுங்க.” “உங்க புருஷனும் அப்பவா வவுனியாவிலதான் இருந்தாங்களா..?” "அவரு மொதல்ல இங்க வந்தப்புறம் எங்கெங்கேயோவெல்லாம் இருந்தாராம். மன்னாரில இருந்து அவர கூட்டிக்கிட்டுப் போனவங்க திசமாறாம எண்ணற ஊருக்குத்தான் கூட்டிக்கிட்டுப் போனாங்களாம். வேற ஆக்களுங்களயெல்லாம் கொழும்புக்கெண்ணும், தங்காலக்கெண் ணும், அண்ராசபுரமு, மதவாச்சி, குல்லியாப்பிட்டி. இன்னும் எனக்கு அந்தப் பேருங்களே சரியாத் தெரியாதுங்கடியம்மா. அப்புடியா அந்தந்த ஊருங்களுக்கெல்லாம் கூட்டிக்கிட்டுப் போயி வேலேங்களில போட்டுக்கிட்டாங்களாம்.'
“என்ன வேலைங்க ஆச்சி.?”
"இதுதான்.”
இதுண்ணா எது.?
“கக்கூசு அள்ளிக்கிற வேலயா?”
y9
லட்சுமி 'ஆ' - என்கவும், நாலு பெண்களும் அதைக்கேட்டுக்கொண்டு O 44 O ரீ.பி.அருணானந்தல்

மெளனமாக நின்றார்கள். பாப்பாத்தி திரும்பவும் லட்சுமிக்கிழவியிடம் கேட்டாள்
“சிலோனுக்கு நீயும் ஒன் புருஷனும் இப்புடியாத்தான் வந்தோமுங்கிறே. அதுவுஞ்சரி. வேற நம்மஞ ஆக்களுங்கெல்லாம் அப்புடியாத்தான் ராமநாதபுரத்தில இருந்து இந்த ஊருக்கு வந்துசேர்ந்தாங்க எண்ணுறே. அதுவும் இப்பவா தெரிஞ்சுக்கிட்டுது. இப்பிடித்தான் ஒன்கூடப் பொறந்தவரும் அவரு பொஞ்சாதியும் வந்து சேந்தானுங்களா..? அதுங்க எல்லாத்தையும் விட நானு கேக்கிறது என்னெண்ணா. நீ கட்டிக்கிட்டவருக்கு பொறவு என்னதான் ஆச்சுது..? அவரு செத்துப்பிட்டாரு என்கிறியே எப்படி அவரு செத்தாரு.?”
"அதுதான் என்விதி.! எங்க ஊரில நாம பொறந்தோம் இருந்தோம், சீவிச்சோம். அங்கிட்டும் நாங்க ஒரு வேளயாச்சும் வயிறு நிரம்ப திண்ணுகுடிச்சு ஒழுங்கா வாழல. பசி பட்டினியோடதான் சீவிச்சுக் கிண்ணு வந்தோம். ஆனா இங்கிட்டு நாம வந்து இந்தத் தொழில என்னதா இனிமேல செய்யிறது எண்ணு நினைச்சுக்கிட்டு செய்துக்கிட்டாலும், ஒரு வேளைக்காச்சும் நமக்கு ஒழுங்கா திங்கிறதுக்குக் கிடச்சுது. அப்புடியா சந்தோஷப்பட்டுக்கிட்டுத்தான் இருந்துக்கிட்டோம். ஆனா எனக்கிண்ணா இந்த சந்தோஷம் பல நாளுங்களா இருந்துக்கிட்டேயிருக்கேல்லடியம்மாடி. புள்ளங்கதான் எனக்கெல்லாம் அப்புடியா போச்சு. அதுதான் போச்சுண்ணு நானு வேதனய சுமந்துக்கிட்டிருந்தா. அதயடுத்து என் கழுத்து மஞ்சள் கயிறுமா அறுபட்டுப் போவணும்.? என் மவராசனு போகிற வயசா அது.? இரும்பு மாதிரி இருந்த மனுசனுக்கு அப்புடி என்ன நடந்ததிண்ணே எனக்குத் தெரியலயே.?”
லட்சுமியிடம் மூச்சுத் தேங்கி வெளிப்பட்டது. துக்கத்தினால் தொண்டை கரகரக்க லேசாக விம்மினாள். அவளின் கண்ணைவிட்டு தவ்வி வந்தது கண்ணிர்த்துளி உடனே கையால் இரண்டு கண்களையும் துடைத்துக்கொண்டாள். "இந்த வயதிலையுமா எதுக்குப்பாட்டி இப்பிடீ நீ கவலப்படுறா..?” பாப்பாத்திக்கு கிழவியைப் பார்க்க ஒருபுறம் வேடிக்கையாகவும் இருந்தது. மற்றப் பெண்களுக்கும் அவள் புருஷனை நினைத்துக்
கவலைப்படுவதை எண்ணி மனதுக்குள் சிறிது மனவருத்தமும், அதைவிட அதிக வேடிக்கையாகவும் எண்ணினார்கள்.
லட்சுமிக் கிழவி இப்போது இறந்த தன் புருஷனுடன் தானும் சேர்ந்து எங்கோ ஆவி உடலுடன் திரிகிற மாதிரியான நிலையிலிருந்தாள்.
"அவரோட நானும் யெப்புவோ செத்துப்புட்டேன். செத்துப்புட்டேன்." துயர3 அஃப்பன்கள் O 45 O

Page 29
என்று சூனியம் சுமந்த அந்தத் திசையிலே உள்ள சவக்காலையை தன் உள்ளொடுங்கிய கண்களால் பார்த்துக்கொண்டு சொன்னாள் லட்சுமிக்கிழவி.
“எங்க செத்தாய் கிழவி.? நீ இங்கதான் உசிரோடயா இருக்கிறே. அதவிட்டுப்புட்டு அவரு செத்தது எப்புடீண்ணு சொல்லு நீ எண்ணுறன், நீ என்னவோ அறள பேந்துக்கிட்டமாதிரிப் பொலம்புறே.?”
"நான் ஏண்டி பொலம்புறன்.? ஒங்களுக்கு முன்னாடி இருந்துகிட்டு இப்ப என் கதேயத்தானே சொல்லிக்கிறேன்.?
"அதுசரி பாட்டீம்மா. ஆனா நீ மாயா பஜாருபடக்கதய சொல்லிக்காம ஒன் புருசனிண்ட நெஜக்கதயச் சொல்லு. அதக்கேட்டுக்குவம். அதே நீ சொல்லு.?”
“இதுதாண்டி உன்ன மாதிரிக்குமரிங்களோட நான் எதையும் கதைச்சுக் கிறதே யில்ல. செவ்வந்தி பாரு அவ எல்லா பொண்ணு.?” லட்சுமிக்கிழவி சொல்ல, நின்றிருந்த அந்தப் பெண்களுக்கெல்லாம் சிரிப்பு வந்துவிட்டது.
"ஆமா அவ தங்கப்பொண்ணுதான் நீ கதயச் சொல்லு?” என்றாள் பாப்பாத்தி.
"அவரு என் மகராசரு. தங்கக்கட்டி மாதிரி செவசெவண்ணு ஜொலிப்பாத்தான் இருந்தாரு. இரும்பான ஒடம்பு அவருக்கு ஆனா என்னதான் செஞ்சிக்கிறது? அவரு செஞ்சிக்கிட்டிருந்த இந்தத் தொழிலும் அப்புடி. அந்த வருஷம் வாந்திபேதியிண்ணு எல்லா சனங்களுக்கும் வந்துச்சுடியம்மா. அந்த நோயி எப்படியோ எம் புருஷனுக்கும் தொத்திப்புட்டுது. நோயி வந்திடிச்சு எண்ணு இந்தத் தொழிலச் செஞ்சுக்கிறவங்க வீட்டில கெடக்கேலுமா..? ஏலாமப்போயி இருக்கிற அந்தக்காலத்திலயாக்கூட அவரு செஞ்சிக்கிற இந்த வேலைக்கு காலேல போனாரு. ஆனா ஒரு நாளு விடிஞ்ச பொழுதில அவரு தன் கண்ணையே திறக்கல. அப்படியே ராவு படுத்தபாயிலயா என் மவராசருக்கு சீவன் போயிட்டிது. அந்த நாளிலயா இருந்து நான் தனி மரமாயிட்டன். எனக்கு யாரிருக்கா..? நான் எங்கபோயி புழைச்சுக்கிவேன்.? இப்பிடியா நானு கிடந்து என் குடிசைக்குள்ள புலம்பிக்கிட்டிருந்த நேரம்தான். என் உடன்பிறப்பு என்னியக்கூப்பிட்டு வைச்சிக்கிட்டு யேன் பசிக்கு கஞ்சி ஊத்திக்கிட்டிருந்திச்சி. அதுவும் கூட எனக்கு எத்தன நாளுக்குத்தான் இருந்திச்சுடியம்மா. என் தம்பிகூட காலில தோலு கசிஞ்சு நெழுநெழுத்தமாதிரி புத்துப்புத்தா செரங்கு பிடிச்சு, அந்தப்புண்ணு பிசுக்கோட வலிப்பும் இழுத்துச் செத்துக்கிட்டான். இப்பிடியே அவன் குடும்பத்துக்குள்ளயே
о 46 о ரீ.பி.அருணானந்தே

ஒவ்வொருத்தரு நிழலு கீழ குந்திக்கிட்டிருந்து என் காலமும் இப்ப போய்கிட்டிருக்கு. இதில குந்திக்கிட்டிருந்தா செவ்வந்தியாவது மூக்குப் பேணியில காட்டா தளும்பத் தளும்ப ஊத்திக்குடுக்கும். வேற யாராச்சும் இந்தச் சேரியில என்னக் கூப்பிட்டு என் வயிறு நனைஞ்சு, ஒணந்து போன என் ஜீவனையும் நெனைச்சு ஒரு வேள தின்கிறத்துக்கு ஏதாச்சும் குடுக்கிறாங்களா..? இதுதாண்டியம்மா என் கதேயே.? நான் செத்துப்புட்டா அந்த இடுகாட்டில அனாத பொணம் தாக்கிற இடத்தில என்னியும் கொண்டுபோயி புதைச்சுக்குவாங்க. அதோட என் கதையும் முடிஞ்சிடும்.!”
இதைச் சொல்லிய உடனே லட்சுமிக் கிழவிக்கும் தன்னையறியாத நிலையில் சிரிப்பு வந்துவிட்டது.
“தான் சாவுறத சொல்லிப்புட்டு இந்தப் பாட்டிக்கு வந்த சிரிப்பப் பாருங்கடி.?” என்று பாப்பாத்தி சொன்னதைக்கேட்டு மற்றப் பெண்க ளெல்லாம் கிழவியைப்பார்த்து வாய்விட்டுச் சிரித்தார்கள். லட்சுமியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டு பிறகும் சிரித்தாள்.
"இருட்டு இருட்டிக்கிட்டு வந்திடிச்சுடி நாம வீடுங்களுக்கு போயிக்குவோம்.?” என்று மற்றைய பெண்களின் சிரிப்புகளுக்கு இடையே பாப்பாத்தி இதைச் சொன்னாள்.
“பாட்டி பாட்டி நாம வாறம் பாட்டி..?" என்று பாப்பாத்தி சொன்ன சொல்லோடு சிட்டு என்பவளும் லட்சுமிப்பாட்டிக்கு அதைச் சொல்லிவிட்டு, வீரம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு அவளோடு வெளிக்கிட்டாள்.
“ஒன்னய ஒன்வீட்டிலயா கூட்டிக்கிட்டுப் போயிவிடவா பாட்டி..?” என்று பாப்பாத்தி கிழவியைக் கேட்டாள்.
“எனக்கு நல்லா கண்ணு தெரியிது இருட்டுப்பட்டாக்கூட போய்க்குவேன்' என்றாள் லெட்சுமிக்கிழவி.
“சரியான வீம்புக்கட்டை." என்று கிழவிக்குச் சொல்லிவிட்டு. "நானு வர்றன்டி செவ்வந்தி.?” என்று பாப்பாத்தியும் தன் குடிசைக்குப் போக நடையைக் கட்டத் தொடங்கினாள். லட்சுமிக்கிழவி அந்தக் கல்லிலிருந்து எழுந்தாள். அவள் மெல்ல மெல்லமாக நடக்கத் தொடங்க மட்டும் தன் கையால் பிடித்துக் கிழவிக்கு உதவினாள் செவ்வந்தி
லட்சுமிக்கிழவி தான் நடக்கத் தொடங்கியதும் "நீ போம்மா நான் போய்க்கிறேன்” என்றாள். அவள் கொஞ்சத்துரம் நடந்து போகின்றவரை அவள் போவதைத் தான் பார்த்தபடி செவ்வந்தி பாலை மரத்தடியினில் Augus a\stivайавай O 47 о

Page 30
நின்றாள். பின்பு குடிசைக்குள் போய் விளக்குத்திரிபோட வேண்டுமே என்ற யோசனை வந்ததும், சீலைத்துண்டைக் கிழித்து எடுத்துக்கொண்டு கீழே இருந்தாள்.
அவ்வாறு இருந்தபடி மூட்டுக்கு மேலே தன் துணியை உயர்த்தினாள். நிர்வாணமான தொடையில் சீலை முறுக்கேற்றினாள். அது முடிந்து விளக்கில் கருகி இணைக்கப்பட்ட பழைய திரியை அகற்றிவிட்டு புதுத்திரியை விளக்கில் போட்டு லாம்பு கொளுத்த அவள் ஆயத்த மானாள். ராக்காயி தன் வயதுச் சிறுமிகளுடன் விளையாடிவிட்டு குடிசைக்கு வந்து சேர்ந்திருந்தாள். அந்தவேளை பாலை மரத்தில் குருவிக்கூட்டங்கள் வந்து அடைந்து ஒரே குருவிச்சத்தங்களாயிருந்தன. அப்படியே இருளின் திரைகள் சிறிது சிறிதாக போர்த்தப்பட ஆரம்பித்தவுடன் அந்தச் சேரிப்பக்கமும் இருட்டடையத் தொடங்கியது. வானமும் அழுக்கடைந்த சேலையாய்ப் பின்பு காட்சியளித்தது.
έ
சேரி உள்ள இடத்தைக் கடந்து சவக்காலையையும் தாண்டிச் செல்கின்ற அந்த வீதி வவுனியா கொறப்பத்தானை வீதியில் போய்ச் சேருகிறது. கோயில் வளவிற்குப் பின் புறமாக இருக்கும் அந்த சேரிக்கு மறு பக்கத்திலே பெரும் பெரும் மரக்கறித்தோட்டங்கள். அவற்றிலே சங்கரப்பிள்ளை என்பவரின் தோட்டம்தான் எல்லாரது தோட்டங்களிலும் நின்று பெருந்தோட்டம், பயிர் வளர்ப்புக்கு ஏற்ற மண் வற்றாத நல்ல கிணற்றுத்தண்ணீர்! அதனாலே நல்ல விளைச் சலின் வருமானம் கிடைத்தது அவருக்கு.
அன்று காலையிலிருந்து அவரது தோட்டப் பயிர்களுக்குக் களை வெட்டுகிற வேலை பக்குவமாக நடந்துகொண்டிருந்தது. பத்துப் பெண்கள் வரை தோட்டத்தில் வேலைசெய்துகொண்டிருந்தார்கள். அந்தப் பெண்களெல்லாம் முன்பு தேயிலைத் தோட்டத்துப் பக்கங் களில் வாழ்ந்தவர்கள். அங்கும் வறுமை காரணமாக இடம் பெயர்ந்து வவுனியாவுக்கு வந்து கூலி வேலை செய்து நாட்களைப் போக்காட்டிக் கொண்டிருந்தார்கள்.
வளர்ந்த பயிர்களுக்கு இடையே உள்ள களைகளை வெட்டிப்பரசி அள்ளினால், சாரணைக் கீரையும், பயிரி என்ற பசளைக் கொடியும் அம்பாரமாய்த் திரளும் அடிப்புல்லும் கலந்து கிடந்த அவைக ளைக் கொண்டுவந்து, வேலிக்கு வெளியே அங்கு வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் கொட்டிவிட்டுப் போனார்கள். கான்
O 48 o ரீ.பி.அருணானந்தே

வழியே கொட்டியதெல்லாம் குவியலாகக் கிடந்தன. அவைகளைக் கண்டுவிட்டு சேரிப்பெண்கள் சிலர் அவ்விடத்திற்கு வந்தார்கள், தோட்டத்து வேலிக் கரையோரமாக நின்று அவர்களுடன் வந்த பாப்பாத்தி உள்ளே தோட்டத்தைப் பார்த்தாள். இளம் வாழையிலை பளபளவென்று தெரிந்தது.
"பத்துப் பதினைஞ்சு பொண்ணுங்க நிண்ணு கள புடுங்கிறாங்க.?” என்று அவள் உள்ளே நின்ற எல்லாப் பெண்களையும் பார்த்துவிட்டு குருவம்மாவிற்குச் சொன்னாள். அந்தச் சேரியிலிருக்கிற அவர்களது இடத்துப் பெண்களையெல்லாம் குருவம்மாதான் தலைவியாக இருந்து ஒரு பட்டாளமாக எங்கேயாவது வேலைக்கென்று வழிநடத்திக் கூட்டிக்கொண்டு போவாள்.
வவுனியாவைச் சூழ உள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் மாரி மழைபெய்வதற்கு முன்னாலே காடுகளை வெட்டுவார்கள். வெயிலும் தீயைப்பரவிடச் செய்யும் உரத்த காற்றும் உள்ள தோதான காலம் அதுதான். அதைப் பயன்படுத்தி காட்டை வெட்டி எரித்தபின் மழையொன்று வந்து எரித்த சாம்பலடக்கிமண்ணில் பசளையாக்கியதும்; அதன்பிறகு விவசாயிகள் மண்ணைக் கொத்திப் பதப்படுத்திப் பயிர்களின் விதை விதைப்பார்கள். வானம் பார்த்த பயிர்கள்தான் இவை மழை முறையாகப் பெய்து கொடுக்காவிட்டால் விளைச்சல் இவர்களுக்குக் கிடைக்காது நட்டம் போகும். இந்தச் சேனை விதைப்பை தோட்டக் காணி குளத்துவயல்காணி இல்லாதவர்களும் அங்கங்கே காட்டை வெட்டித் தங்களுக்கு முடியுமான அளவுக்குச் செய்தார்கள். அவர்களுடன் பெருங்குளத்து நீண்ட வயல்காணிகளையுடைய வசதிமிக்கவர்களும் கூட பெரும் காடுகளை வெட்டி எரித்து வருடா வருடம் பயிர்ச்செய்கை பண்ணினார்கள்.
உளுந்து, பயறு, சோளம், கெளப்பி, எள்ளு என்று உள்ள நவதானியங்கள் எல்லாமே இந்தச் சேனைகளிலே செய்கை பண்ணப் பட்டு அறுவடைக்காகக் காத்துநிற்கும். இந்த நாளிலே அவைகளை அறுவடை செய்து எடுப்பதற்காக கூலி வேலைக்கென்று ஆட்கள் தேவைப்படுவார்கள். ஒவ்வொரு தோட்டத்திற்கும் வேலையாட்களை தரகர்கள் நின்று ஆள் சேர்த்துக் கொண்டுபோய்க் கொடுப்பார்கள். அவர்களுக்கு ஆள் சேர்த்துக் கொடுத்ததிற்கான தரகர்க்கூலி கிடைக்கும். சேனையில் போய் வேலை செய்வதற்கு எந்தவித அனுபவமும் தேவையில்லை. அங்கே நாலுபேர் செய்வதை பார்த்துத் தாங்களும் செய்ய வேண்டியதுதான். கண்பார்க்க கை செய்யலாம். அப்படித்தான் ஒழிய வேறு ஒன்றும் பெரிதாக இல்லை.
glugs ssövsks-k O 49 O

Page 31
இந்த வேலைகள் ஆரம்பிக்கும் காலத்தில்தான் சேரிப்பெண்களுக்கு வேலை கிடைக்கும். ஊருமில்லை, பேருமில்லை, சாதியுமில்லை என்ற அளவில் உழவு இயந்திரத்திற்குள் அவர்கள் எல்லாரையும் அதக்கி அடக்கி காட்டுக்குள்ளே கொண்டுபோய்க்கொட்டினாற்போல இறங்கிவிடுவார்கள். அதோடு வேலை தொடங்க வேண்டியதுதான்! பின்னேரம் ஆனவுடன் கூலி கிடைக்கும். பிற்பாடும் வந்த மாதிரியே உழவு இயந்திரம் பெட்டியில் ஏற்றிக் கொண்டுவந்து வவுனியாக் கடை வீதிப்பக்கமாக அவர்களை இறக்கி விடுவார்கள். அறுவடைக்காலம் முடியமட்டும் கூலிவேலை செய்கின்ற பெண்களுக்கு இதனால் நாள் தவறாது வேலை கிடைக்கும். பெண்களோடு ஆண்களுக்கும்தான்! இதனால் இக்காலங்களில் கூலிவேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பஞ்சம் பட்டினி என்பது மிகக் குறைவு குடும்பத்திலுள்ளவர் எல்லாம் வேலைக்குப் போகும்போது கையில் காசுப் புழக்கமும் திருப்தியாயிருக்கும்தானே.
சேரிப் பெண்களுக்கும் இந்தக் காலம் சந்தோஷம்தான். தாங்கள் வேலைக்குப்போனால் தங்களுக்கு விரும்பியதை வாங்கிக் கொள்ளலாம்' என்று அவர்களுக்கு ஒரு உற்சாகம். அந்தக்காலம்தான் அவர்களுக்கு வசந்தம்!
ஆனால் அந்தக்காலம் தவிர்ந்தால் அவர்களுக்கு இலையுதிர்காலம் போலப் பஞ்சம்தான். வீட்டில் உள்ள ஆண் ஒருவர் மட்டும்போய் வேலைபார்த்து எப்படித் தங்கள் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்வது கிடைக்கும் ஊதியம் வயிற்றுக்குப் போட்டுக் கொள்ளவும் கூடப் போதாதே? அதோடு ஆண்களில் அனேகருக்குக் குடிப்பழக்கம் வேறு செய்கிற தொழிலே நரகல் அள்ளுவது. இதைக் கொண்டு குடிக்காமல் அவர்களைத் தடுக்கவும் வீட்டிலுள்ள பெண்களுக்கு எப்படி இயலும்?
ஊருக்குள் உள்ள தோட்டங்களில் களைபிடுங்குவது, நாற்று நடுவது, என்று உள்ள வேலைகளுக்கெல்லாம் சேரிப்பெண்களை வேலைக்கென்று அங்குள்ள தோட்டக்காரர்கள் அழைப்பதில்லை. தோட்டப் பாத்திகளுக்குள் அவர்களை இறங்கவிட்டால், மண்ணும் தீட்டுப் பொறுக்காது. பலன் அளிக்காது என்றும் அவர்களுக்குப் பயம்! அதோடு ஒழுங்காக அவர்களும் வேலை செய்துகொள்ளத் தெரியாதவர்கள், என்றும் தப்பவிப்பிராயம் அவர்களிடம் இருந்தது.
என்றாலும் போனால் போகிறது என்ற அளவில் பாத்திகளில் வெங்காயம் இழுத்து முடிந்தால், தாள் வெட்டுகைக்கு மாத்திரம்தான் அவர்களைத் தோட்டக்காரர்கள் வேலைக்கென்று கூப்பிட்டார்கள். அதுவும் கொட்டில் போட்ட அந்த நிழலுக்குள் இருந்து வேறு பெண்களெல்லாம் தாள் அறுக்க, பட்டுப்படைக்கின்ற வெய்யிலிலே O 50 o ரீ.பி.அருணானந்தே

ஒரு ஒதுக்குப்புற இடத்திலிருந்து சேரிப்பெண்கள் வெண்காயத்தாள் அறுத்துப்போட வேண்டும்.
இவைகளையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் பாப்பாத்தி தோட்டத்தைப் பார்த்துவிட்டுக் குருவம்மாவிற்குச் சொன்னாள். அவள் சொன்னதோடு புல்லுக்குவியலுக்குள் கீரை தெரிந்தெடுத்துப்போக வந்த அந்தப் பெண்களெல்லாம், பாப்பாத்தி சொன்னதோடு தாங்களும் எட்டி வேலிக்கு மேலாலே பார்த்தார்கள்.
"இந்த ரெண்டு மூணு கிழமை முடிஞ்சு போய் ஆச்சின்னா வெங்காயம் புடுங்கிக்குவாங்க” என்று தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டாள் குருவம்மா. அதைச் செவ்வந்தி கேட்டுவிட்டு.
"அந்த நேரவாட்டி நமக்கும் வேல கிடைச்சுக்கும்தானே.?” என்று குருவம்மாவை அவள் கேட்டாள்.
"அந்த ஐயா வருஷா வருஷம் வேலைக்கும் கூப்பிட்டுக்கிறவர்தானே. இந்த வருஷம் மாத்திரம் கூப்பிடாம விட்டுப்புடுவாரா..?”
"ஆமா அப்புடியா நம்முளயும் நாலு பேருங்க மாதிரிக் கூப்பிட்டு வேல தந்துக்கிட்டா என்னதான் அவுங்களுக்கு குடிமுழுகப்போகுதாம்.” என்று அவர்களுக்குள் நின்ற தண்ணிமலை பெண்சாதி சொன்னாள். அவள் வேலைக்குப் போனால்தான் வீட்டிலுள்ள தன் நான்கு குழந்தைகளுக் கும் உடுப்பு வாங்கிக் கொடுக்கமுடியும்.
அவளுக்கு அந்த எதிர்பார்ப்பு
“இந்த வெங்காயம் புடுங்கிக்கிறதுக்கு இன்னும் எவ்வளவோ நாளுங்க இருக்கு. அதுக்குள்ளயா ஏண்டியம்மா அலட்டிக்கிறீங்க.." என்று இருளாண்டி பெண்சாதி எல்லோரின் கதையைக் கேட்டுக்கொண்டு சொன்னாள்.
"அதுதானே வந்த வேலயப் பாருங்கடீம்மா. கிரய தெரிஞ்செடுத்துக்கிட்டு போயிக்குவம். நேரமாகிட்டுதெல்லே.” என்று குருவம்மாவும் பிறகு கூறினாள். அவளின் சொல்லுக்குத் தாங்கள் அமைச்சலானவர்கள் போல எல்லாப் பெண்களும் புல்குவியல்களைக் கிளறிக் கீரை தெரிந்தெடுக்கத் தொடங்கினார்கள் கூறி, குருவம்மாவுக்குப் பக்கத்தில் நின்றாள். அவளிடம் கோழி ஒன்று இறந்து அழுகியது போன்ற நாற்றம் குருவம்மாவின் மூக்கிலடித்தது.
"ஏன்டி நீ குளிக்கிறேல்லக் கழுவுறேல்லயா..?” என்று ஒரு பக்கம் துப்பிவிட்டுப் பேசினாள் அவள்.
ερωνυ η συυαδιακά ο 51 Ο

Page 32
"ஆமா எல்லாரும் பெரிய வெளுத்த இங்கிலீசுக்காறீங்க எண்ணுற நெனப்பு. என்னிலதான் நாத்தம் கண்ணுக்கிட்டாங்க. உங்க மேலில எல்லாம் சாம்புறாணியா மணக்குதோ..?” என்று எரிச்சலுடன் வெடுக்கென்று குருவம்மாவுக்குக் கூறினாள் கூறி.
"உனக்கு ஏதாச்சும் சொன்னா நாத்தக்கதைதாண்டி கதைச்சுக்குவாய். என் வேலய நான் பாக்கிறத விட்டுட்டு ஊரு ஒளவாரம் பாக்கிறதுக் குண்ணு போனா இதுதான்.! எனக்கு இன்னும் வேணும்.!” என்று சொல்லிக்கொண்டு கீரை தெரிந்தெடுக்கும் கவனத்தில் நின்றாள் குருவம்மா. எல்லாரும் தாங்கள் தெரிந்தெடுத்த கிரைகளைப் பிறிம்பு பிறிம்பாகக் குவியலாக வைத்துக்கொண்டார்கள். தேவையான கீரை தெரிந்ததும் பெண்கள் சிலர் அவற்றை மாராப்புச் சேலையில் போட்டுப் பொட்டலமாகக் குவித்துப் பிடித்துக்கொண்டார்கள். செவ்வந்தியும் பாப்பாத்தியும் தாங்கள் கொண்டுவந்த ஒலைப்பெட்டிக்குள் கீரையைப் போட்டுக்கொண்டார்கள். கீரைக் கறிக்கு இவ்வளவு எங்களுக்குப் போதும் என்ற கணிப்பிலே, தெரிந்தெடுத்த அவ்வளவோடு அவர்கள் அந்த இடத்தாலே வெளிக்கிட்டார்கள். எட்டி கால்களை வைத்து அவர்கள் நடக்கக் குடிசைகளும் அவர்களுக்குக் கிட்ட நெருங்கியதாய் விட்டன.
செவ்வந்தியின் குடிசைக்கு முன்னாலே நாய் ஒன்று கால் உயர்த்தி சிறுநீர் விட்டபடி நின்றது. கிழவி வழமையாக வந்து குந்தியிருக்கிற கல். அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
“சீக் சனியனே.” என்று அவள் விரட்ட நாய் பெய்து பெய்து ஓடியது. மற்றப் பெண்கள் அதைக்காண தங்களுக்கு ஒன்றும் புதினமாயில்லை என்றமாதிரியே போனார்கள்.
சற்றே காற்று வீசினமாதிரி இருந்தது. செவ்வந்தி அலம்பல் தட்டியைத் திறந்துகொண்டு உள்ளே போனாள். பாலை மரம் காற்றுக்கு மெல்லக் கிளையாட்டிக்கொண்டிருந்தது. அவள் அலம்பல் வேலியிட்ட சுற்றுப் பிரகாரத்தின் படலைச்சாத்துகிற வேளை, வீதிப்பக்கமாக முகம்மது காக்கா என்பவர் குதிரைச் சவாரியில் வந்து கொண்டிருந்தார். சவக்காலை விதி அவருக்கு குதிரை ஓட்டத்திற்குத் தோதானது போலத்தான். எந்த நேரமென்றில்லை அவருக்கு குதிரைச்சவாரிக்கு.! இரண்டு கால்களாலும் பிணைத்த கணக்கில் லாவகமாக முதுகைக் கவ்விப்பிடித்திருக்கும் காக்காவின் ஆளுமை, குதிரைக்கும் சுகமாயிருக்கும்போல, அதன் பொருட்டு பத்து நற்சுழியும் அமைந்த தேசிங்கு ராஜாவின் நீலவேனிக் குதிரைபோல அதுவும் பாய்ச்சல் காட்டுகிறது.
குதிரை ஓடும்போது அதற்கே உரியதான தனி அழகு ஒன்று இருக்கிறது. O 52 о i. பி.அருளானந்தல்

அதன் தசைத்திரட்சி அசைவதுதான் அழகா? அன்றி பிடரியின் சிலிர்த்த மயிர்தான் அழகா.? குதிரைவால் ஈர்க்கின்றதான அதனுடைய அந்த அழகு எந்தவொரு மிருகத்திடமும் அப்படியில்லையே? என்று பலவாறாகவும் சிந்தித்தபடியேதான் அந்தக்குதிரை ஓடி வருகின்ற போதெல்லாம் செவ்வந்தியும் அதை ஆவலோடு பார்ப்பாள்.
ஆனால் செவ்வந்தி அதிலே நின்று சிலவேளை, குதிரையைப் பார்க்கின்ற பார்வை காக்காவின் குதிரை ஓட்டத்தை இன்னமும் அதிகரித்துவிடும். ஒரு ஆண் மகனுக்குரிய வீரம் தன்னிடம் மட்டும்தான் உள்ளது, என்பதாய்க் காட்ட தன் குதிரைச் சவாரியை அவர் சாதகமாக்கிக் கொள்வார். தன்னையும் குதிரையையும் பிரித்துப் பார்க்க இயலாத அளவிலே அவளின் பார்வைக்கு தானும் ஒரு குதிரைபோல காட்சியளிக்க அவர் முயற்சிப்பார்.
முகமது காக்கா முன்பெல்லாம் வசதியற்றவராகத்தான் இருந்தார். ஆனால் இருந்தாற்போல செல்வம் சேர்ந்து பெரும் பணக்காரனாக பிறகு ஆகிவிட்டார். அவருக்கு எந்த வழியில் இந்தச் செல்வம் சேர்ந்தது என்று ஊரிலிருந்த அனேகருக்குப் பிற்பாடு தெரிய வந்துவிட்டது. ஆனால் சேரி வாழ் மக்களுக்கு இதுவரையிலும் அவர் விஷயம் தெரியவரவில்லை. இன்னொரு சமூகத்திலுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை அறிவதற்கு ஏன் இவர்கள் அக்கறைப்படவேண்டும்? இதைப்பேசி என்னதான் லாபமுண்டு இவர்களுக்கு? எல்லாவற்றுக்கும் மேலாய் யார் எவர் இவர்களுக்கு அந்தக் கதையைச் சொல்ல இருக்கிறார்கள்? அந்த அளவுக்கு வேற்று சமூகத்தில் உள்ளவர்கள் இவர்களுடன் ஏதாவது பேச்சுத்தொடர்பு வைத்திருக்கிறார்களா? அப்படியாய் இல்லையே..?
முகம்மது காக்காவுக்கு மூத்த சகோதரர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அப்துல்லா. அவர் முகமது காக்காவைப்போல சோம்பேறியல்ல. ஓயாத ஒரு உழைப்பாளி அவர். பத்துப்பேர் தொழிலாளர்களை வைத்துக்கொண்டு பாண் பேக்கரி நடத்திக்கொண்டிருந்தார். இரவு வேலையாட்களோடு சேர்ந்து தானும் வெதுப்பகத்தில் சேலை செய்வதோடு காலையில் சுடச்சுடப் பாண்கொண்டுசென்று விற்பதெல்லாம் அவரேதான். எந்த இடத்தையும் தவிர்ப்பதில்லை. மூலைமுடுக்கெல்லாம் சென்று பாண் விற்பார். சேரியிலும் கூடத்தான். ஆனால் அவ்விடங்களில் மாத்திரம் வீதியைவிட்டு ஒழுங்கைக்குள் இறங்கமாட்டார். அவர் செய்வது சயிக்கிள் யாவாரம்தான். எந்த நேரமும் சயிக்கிள் ஒட்டிப்போக அவர் சளைப்பதேயில்லை. அவரின் சயிக்கிள் கரியரிலே ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கியபடி மூன்று பெட்டிகள் கட்டப்பட்டிருக்கும். ஒரு பெட்டியில் முறுகலான பதமுள்ள
O 53 O تم تمتلك انعاس قانوناريه

Page 33
சிறிய பாண்கள் இருக்கும். அடுத்த இரண்டு பெட்டிகளிலும் மெதுமை வாய்ந்த முழுப்பாண்கள் அவர் அடுக்கி வைத்திருப்பார். அந்தப் பெட்டிகளின்மேலே மெழுகுசீலையைப் போர்த்துக்கட்டி ஒரு பெரிய வெட்டுக்கத்தியும் மறைத்து அவர் வைத்திருப்பார். ஏனென்றால் கள்வர் பயம்! காசை காட்டுவீதி வழியால் போக தன்னிடமிருந்து அபகரித்துவிடுவார்கள் என்றுதான் இந்த ஏற்பாடு
அனேகமான வீடுகளில் உள்ளவர்கள் அப்துல்லாவிடம் பாண் வாங்கிக்கொள்ளும்போது,
“இண்டைக்கு வாங்கிறது கணக்கில வைச்சுக்கொள்ளுங்க காக்கா. நாளைக்குத் தந்திடுறம்..” என்பார்கள். அவர் அதற்கு ஒன்றுமே மறுப்புச்சொல்லாது “சரி” என்று விடுவார் இன்னும் சிலர் சொல்வார்கள் “ஒரு மாதமளவுக்கு நாளாந்தம் நாங்கள் பாண் வாங்குகிறோம் சரியாகப் பிறகு காசை நாங்கள் தருவோம்” என்று, அதற்கும் அவர் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் கொடுப்பார். கேட்டால் எந்தக் கதையுமே பேசாது எவர்க்கும் உடனே கடன்கொடுப்பதில் அப்துல்லா என்பவர் உத்தம புருஷன்தான்.
ஆனால் கடன் வாங்கியவர் தான் சொல்லியபடி அந்நாளில் கடனை அடைக்காத பொழுதில்தான் அப்துல்லா எப்படியான மனிதன் என்பது அவர்களுக்குத் தெரியவரும்.
கடன்வாங்கிய வீட்டில் அவர் எந்த ஒரு ஆண்மகனையும் அவ்வேளை யில் வம்புக்கு இழுக்கமாட்டார். அப்படி ஒரு ஆணுடன் மல்லுக்கட்டுவது கடன் அறவிடுவதற்குத் தேவையற்ற செய்கை என்பது அவரது நினைப்பு. ஆகவே ஆண்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளாது தன் கால்மிதிவண்டியை படலையருகில் நிறுத்திவிட்டு,
“பாண் வாங்கிய கடன இப்ப தாறியா அல்லாட்டி வீட்டுக்க எனக்கும் பாய விரிக்கிறியா..?” என்று ஒரு சூட்சுமம் வைத்துச் சத்தம்போடுவார். சீறின பிறகுதான் நாகம் அது என்று பார்ப்பவருக்குத் தெரியும். காக்கா நஞ்சுள்ளவர் என்பது இப்போதுதான் கடன் வாங்கியவர்கள் அறிவார்கள். இரக்கமில்லாமல் அந்த வீட்டுப் பெண்களையே இழிவுபடுத்திவிடுகின்ற கொடுரமான வசைகளைச் சொல்வது மைதேய்த்துச் சிவப்பாக்கப்பட்ட தாடியுடன் திரியும் அப்துல்லாவுக்கு என்னவோ சர்வ சாதாரணமானதுதான். ஆனால் பட்டினியில் வாங்கித் தின்றுவிட்டவர்களோ மானம் கெட்டுப்போனதாக நினைத்து வெளியில் தலைகாட்டக்கூட வெட்கப்படுவார்கள். பெண்களின் முகங்களோ இரத்தம் கெட்டு வெளுறிப்போனதாகிவிடும்.
எவர் மனம் நொந்தாலென்ன..? மானம் இழந்து போனதாய் நினைத்துக்
O 54 O ரீ.பி.அருளானந்தே

கஷ்டப்பட்டாலென்ன? இன்னொருவரின் நிலைபற்றி துளியளவும் சிந்தனையில்லை அப்துல்லாவுக்கு. அவருக்குத் தன் கடனை அறவிட இதுதான் சரியான வழி என்றதாய்த்தான் நினைப்பு இவ்வாறாகத்தான் வெதுப்பகம் வைத்து நடத்தி, பாண்கொண்டு திரிந்து விற்று, கொஞ்சம் கொஞ்சமாக பணத்தைச் சேர்த்து பின்பு பல வியாபாரங்களையும் செய்து அவர் பணம் ப்டைத்தவரானார்.
ஆனாலும் அந்த வசதியான நிலையில்கூட அவர் தன் சகோதரனுக்கு உதவவில்லை. தன் சகோதரரின் வறுமை நிலையைக் கண்டும் அவர் பாராமுகமாயிருந்தார்.
முகமதுவுக்குத் தமையனின் வசதியும் அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் புறக்கணித்து நடத்துகிற பாங்கும் காய் மகாரத்தை எழுப்பியது. வெறியுணர்வு மேலோங்கி கொலை வெறியாக அவரிடத்தில் பிறகு அது உருவெடுத்தது. முகமதுவுக்கு தீயவர்களுடன் நட்பிருந்தது. அவர்களை வைத்துக்கொண்டு அவர் ஒரு திட்டம் தீட்டினார். அந்தச் சதித்திட்டத்தின்படி ஒரு நாள் இரவு கச இருட்டு வேளை, அப்துல்லா தனியாக வீதியில் வரும்போது தன்னுடன் சேர்ந்தவர்களை ஏவிவிட்டு அவரை கத்தியால் வெட்டிக் கொலை செய்வித்தார்.
கொலை செய்தவர்கள் அப்படியே சட்டத்தின் கைகளில் நின்றும் தம்மை தப்புவித்துக்கொண்டார்கள். முகமது தமையனின் மனைவியை தன் உடமையாக்கினார். அதன் மூலமாக சொத்துக்களெல்லாம் அவர் கைக்கு வந்தன. “ஒருவன் பாடுபட்டு உழைத்து வைத்தான். இன்னொருவன் அதையெல்லாம் அபகரித்து தான் அனுபவிக்கிறான்” என்று ஊரிலுள்ளவர்களெல்லாம் நடந்த உண்மையறிந்து கதைத்துக் கொண்டார்கள். முகமதுவுக்கும் தான் செய்த கொடுமையான செயல் மனதுக்குள் கருவாள்கொண்டு அறுப்பது போலத்தான் இருந்து கொண்டு வந்தது. என்றாலும் முகமது காக்கா அந்த நினைவுகளைத் தன்னிடமிருந்து விரட்டிவிட, நாளாந்தம் குதிரைச்சவாரியுடன் உல்லாச மாக வாழ்நாளைக் கழித்தபடிதான் இருக்கிறார்.
விரைவாக குதிரையை ஒட வைக்க கையிலுள்ள குறும்சவுக்கால் பின்னங்கால் தொடையில் அதற்கு அடக்கவேண்டும். முகமது காக்கா போட்ட சவுக்கு அடியை வாங்கிக்கொண்டு குதிரை இன்னும் மூச்சைச் சீறியபடி விரைவாக ஓடியது. செவ்வந்தியின் குடிசைப்பக்கம் வரவும் அவளின் திரட்டழகை தன் ஓரச்சாய்ப்பான பார்வையால் பருகி அனுபவித்தார் முகமது அவளது அலை வளைவுகள் நிறைந்த கூந்தலையும், இன்னும் சில நொடிகள் இப்படியாய்ப் பார்த்து
துயர சுஸ்ண்கள் O 55 O

Page 34
ரசிக்கலாம் என்ற ஆசை அவரிடத்தில் எழுந்தாலும், குதிரை விரைவாக அவரைக்கொண்டு அவள் நின்ற இடத்தைக் கடந்து சென்றுவிட்டது.
செவ்வந்தியின் பார்வையென்னவோ முகமதுவின்மீது இல்லை. அவள் கண்ணின் நோக்கெல்லாம் குதிரை மீதுதான். குதிரையின் முன் அழகைப் பார்த்தாள். அது சில நொடிகள் நீடித்தது. அதற்குள் அவளைக் கடந்துபோன அந்தக் குதிரையின் பின்னழகு முன்னைவிட அவளை வெகுவாகப் பிற்பாடு ஈர்த்தது. குதிரையின் பின்புற தொடைச்சதைகளின் புரளலில் விசைத் தீவிரம் அவளுக்குத் தெரிந்தது. அசைந்துகொடுக்கும் அதன் திரட்சியான அழகு ஆணொருவனின் பின்புற அழகா. இல்லை ஒரு பெண்ணினது இடுப்பளவிற்குக் கீழான பின்புறத்து உடல் அழகா? அவளும் தனக்குள்ளே இறுகியசையும் அந்தக்குதிரையின் தொடைச் சதைகளைப் பார்த்தபடி கற்பனை பண்ணிக்கொண்டிருந்தாள். குதிரைபாதங்கள் படும் ஒலியுடன் வேகமெடுத்துக்கொண்டு அவள் பார்வையிலிருந்து மறைந்து போய் விட்டது. குடிசைக்குள் இனி போவோம்' - என்ற நினைப்பில் திரும்பினாள். பார்வை திரும்பியபோது இரண்டு சிறுவர்கள் வீதியருகில் நிற்பது அவளுக்குத் தெரிந்தது. வயிறு வைத்துக் குண்டி சூம்பி தேவாங்குபோல் இருக்கும் அந்த இரண்டு குழந்தைகளும், குதிரையைத்தான் அதிலே நின்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். செவ்வந்தியைப் பார்த்துவிட்டு அவர்களும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பின் மகிழ்வோடு காட்டு மயில் போல் தன் கை அருகில் அணைந்து திரியும் தங்கையின் நினைப்பு அவளுக்கு வந்துவிட்டது. "ராக்காயி ராக்காயி” என்று அவள் குடிசைவாசலைப் பார்த்தபடி அதிலே நின்றுகொண்டு கூப்பிட்டாள். அக்கா கூப்பிடவும் உடனே, பிடாரனின் கூடைப் பாம்புபோல் விருட்டென வெளியே வந்தாள் ராக்காயி, "என்னங்கக்கா” என்று செல்லமாய்க் கேட்டுக்கொண்டு அவள் தமக்கைக்குப் பக்கத்தே வரவும் அவளைத் தன்னுடன் சேர்த்து ஒருபக்கமாய் வைத்து அணைத்து அவளின் கன்னம் இறுக்கி முத்தமிட்டாள் செவ்வந்தி “என்னங்கக்கா.” என்று அவள் மகிழ்ச்சியினூடே தமக்கைக்குச் சொல்லிக்கொண்டபோது 'ஜிப்’ வாகனமொன்று அந்த வீதியிலே போனது. புழுதியைக் கிளப்பியபடி அந்த வாகனம் எங்கே போகிறது, என்ற நினைவில் அதை அவர்கள் பார்த்துக்கொண்டு நின்றவேளை, சரியாக அது சவக்காலை அருகிலுள்ள வெடிமருந்துக்கிட்டங்கிக்கு அருகே சென்று நின்றது.
வீதியருகில் முன்னம் நின்றுகொண்டிருந்த அந்த இரண்டு சிறுவர்களும் ஜீப் போன பாதைப் புழுதியில் வந்து நின்றார்கள். புழுதியில் நின்று "ஜிப் ஜீப்” என்று சொல்லி அவர்கள் கத்தினார்கள். அங்கே நிறுத்தப்பட்ட ஜீப்வாகனத்தின் பின்புறமிருந்து ஒருவர் அப்போது இறங்கினார். வெளியாலே இறங்கி நின்ற அவர் அதிலே நின்றபடி
O 56 O ரீ.பி.அருளானந்தர்

உள்ளே இருந்த பாய்ச்சுருணையையும் பெட்டியையும் தன் கைகளிலே எடுத்துக்கொண்டார்.
“யாருங்க அது அக்கா..?” அங்கேயே பார்வையை வைத்தபடி கேட்டாள் ராக்காயி.
“தெரியா”
“யாருங்க அது அக்கா..?” திரும்பவும் அவள் செவ்வந்தியிடம் கேட்டாள்.
“தெரியல.” - செவ்வந்தி அங்கேயே பார்த்தபடி அவளுக்குச் சொன்னாள்.
“யாருங்க அது அக்கா..?”
“தெரியலடி, சும்மா இருடி.!"
“என்ன தெரியில தெரியில எண்ணக்கிட்டிருக்கே? அக்கா உனக்கு என்னதான் தெரியும்.? ஆனா எனக்கெண்ணா புருஞ்சிக்கிட்டுது..!"
“என்ன புரிஞ்சுக்கிட்டுதாம் உனக்கு.?”
"அங்கினயா உள்ள வெடிமருந்துக்கூட்டுக்கு புதுசா காவலாளி வந்திருக்கக்கா.”
தங்கை சொல்லியதற்கு செவ்வந்தி பிற்பாடு ஒரு பதிலும் சொல்ல வில்லை. அவள் ஜீப் வாகனத்தில் இறங்கிய அந்த மனிதனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அந்த மனிதனை இறக்கிவிட்ட கையோடு ஜீப் வாகனம் திரும்பிப் போய்விட்டது. இறங்கியவர்கையில் வைத்திருந்த பாய்ச்சுருணை பெட்டியோடு கொட்டில் கதவை திறந்து கொண்டு உள்ளே போய்விட்டார்.
சவக்காலைக்குப் பக்கத்தில் சேரியை அண்டியுள்ள கொட்டிலினுள் ஒரு புதிய மனிதன்! இவர் யார்? என்ற வியப்பில், அக்காவும் தங்கையும் அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தார்கள். சவக்காலைக்கு அருகிலுள்ள இலைகள் சோர்ந்த மரத்திலிருந்து, நெடிய காக்கைக் குரல்! அந்தக் காக்கை கழுத்தைக் குறுக்கிக்கொண்டு வாயைப் பிளந்து கத்திக்கொண்டிருந்தது.
ty =്ഷക്ക് ഠ് 57 O

Page 35
7
சேரியில் உள்ள மக்களின் தண்ணீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கிராமசபை நிர்வாகத்தினர் முன்வந்தனர். குடிசைகள் உள்ள இடத்தின் தொடக்கத்திலே அந்தக் கருங்காலி மரத்தருகேதான் அவர்கள் கிணற்று நிலையம் எடுத்தார்கள். சேரிக்குடிசைகள் அமைந்த பகுதி முழுவதுமே மேட்டுநிலமாயிருந்ததால் அவ்விடத்திலும் நாற்பது ஐம்பது அடியில் தண்ணீர் தட்டுப்படுமென்று நிலையம் பார்த்தவர்கள் நிர்வாகத்தினருக்குக் கூறினார்கள்.
அந்த நாளில் வெயில் சற்றுக் கடுமைதான்! ஆயினும், கிணறு தோண்டுகிற வேலையை கிராமசபை நிர்வாகத்தினர் ஆரம்பித்தார்கள். நாளாந்தம் கிணற்று வேலை தொடர்ந்து நடந்தது. கிணற்று வேலை செய்த தொழிலாளர்கள் குறிக்கப்பட்ட ஆழம் செல்லவும் தண்ணீர் சிலுப்பிக்கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சேரியில் உள்ள பெண்களுக்கெல்லாம் தங்கள் இடத்துக் கிணற்றில் தண்ணீர் வந்துவிட்டால் தாங்களே கயிறு வாளி போட்டுத் தண்ணீர் அள்ளிக் கொள்ளலாம், என்ற மகிழ்ச்சியில் திழைத்தபடி இருந்தார்கள். குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீருக்குப் போகும்போதெல்லாம், அந்தக் கிணற்றுக்கு அருகே வந்து ஒரு அமானுஷ்ய உயிர்த்தாகத்துடன் அவர்கள் தோண்டுகின்ற குழியை எட்டிப்பார்த்துவிட்டுப் போனார்கள். சேரியில் உள்ள வளர்ந்த பிள்ளைகளுக்குக்கூட கிணற்றினது நினைவு, அவர்கள் மனதில் குளிர்மை கூடியதாய் நின்றது. அதிலே தண்ணீர் வந்துவிட்டால் இறம்பைக் குளத்திற்குத் தாங்கள் குளிக்கப்போகும்போது, அங்கே துள்ளத்துடிக்க மீன் குஞ்சுகளைப் பிடித்துக்கொண்டு வந்து போடலாம் என்று அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். இப்படியாய் அங்குள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள், என்று எல்லோருக்குமே தங்கள் கிணற்றிலும் புளக் புளக்கென்று வாளி அடித்துத் தண்ணீர் அள்ளும் சத்தம் விரைவில் தங்கள் காதுகளில் கேட்கும் என்கிற ஆசை. ஆசை.! ஆனாலும் இவ்விதமான எதிர்பார்ப்புக்களுடன் கூடியதான இவர்களது ஆசை, அங்கே கிணற்றுத் தண்ணீரைக்கண்டு கைகூடியதாக நடக்கவேயில்லை. கிணற்றக்குள்ளே எவ்வளவு ஆழம் வெட்டிக்கொண்டுபோயும் தரை நசநசக்கவில்லை. ஆழக்கிணற்றுக்குள் கடினமான கற் பாறைகளும் கண்டதால் கிணறு தோண்டும் வேலையும் சிரமமாகிவிட்டது. இனிமேல் கல்வெடி வைத்துத்தான் கற்பாறைகளைத் தகர்க்கவேண்டும் என்ற அடுத்த கட்டத்து வேலையை வேலையாட்கன் தொடங்கினார்கள்.
அன்று காலையில் கல்லில் குழிபோட்டு, அதற்குள் வெடிமருந்தை
О 58 О ž.б.9tрstuts*тўАš

இறுக்கமாய் அடைத்துத் திரிவைத்து முடிந்ததும் பொழுதைப் பார்த்தால் நடு மத்தியானத்துக்குக்கிட்டவாக இருந்தது. சவக்காலை வீதியிலும் சன நடமாட்டமில்லாமல் வெறிச்சோடித்திருந்தது. அந்த நேரம் கருங்காலி மரத்தில் கட்டி கிணற்றுக்குள் போட்டிருந்த அந்தக் கயிற்றைப் பிடித்து ஏறி, மேலே தரைக்கு இரண்டு வேலையாட்கள் வந்தார்கள். அவர்களின் நெற்றியில் எதிர்வெயில் சாடியது.
“சின்னவா திரியப் பத்தவைச்சுப்போட்டு மேலயாக் கெதியா நீ ஏறிவா.” என்று வெளியால் ஏறி வந்துவிட்ட அந்த இருவரிலே ஒருவன், கிணற்றை எட்டிப்பார்த்தபடி உள்ளே இருந்தவனுக்குக் கூறினான்.
உள்ளே இருந்தவன் "சரி.!” என்று பதில் கூறினான். அவனின் சப்தம் கிணற்றக்குள் அமுங்கித்தான் மேலே தெளிவில்லாமல் வெளிப்பட்டது. மேலே நின்ற இருவரும் சின்னவன் உள்ளே நின்றபடி திரிக்குத் தீவைப்பதைப் பார்த்தபடி நின்றார்கள். சின்னவன் மேலே நின்ற இருவரையும் விட வயதில் இளையவன். அவன் தீக்கொளுத்திய கையோடு கயிற்றைப்பிடித்துச் சுறுக்காக ஏறி கிணற்றுக்கு மேலே வந்துவிட்டான். அவன் வெளியால் வந்ததும் மூவரும் ஒன்றாகக் கூடியபடி நடந்து, சற்றுத் தொலைவான தூரமாய்ப் போய் அங்கே காணப்பட்ட ஒரு மரத்தின் நிழலின் கீழ் நின்றார்கள். கிணற்றுக்குள் பற்றி எரிந்துகொண்டிருக்கும் திரியின் அளவு அவர்களுக்குத்தான் தெரியும்! அது வெடிக்கப்போகும் நேரத்தையும் அவர்கள்தான் அறிவார்கள்! எனவே அயலிலுள்ள அனைத்து மக்களையும் எச்சரிக்கை செய்யும்
“கல் வெடியோக் கல்வெடி.!! கல் வெடியோக் கல்வெடி.!! கல் வெடியோக் கல்வெடி.!!” என்று பெரிதாக சத்தம்போட்டுக் கத்தினார்கள். அவர்களின் சத்தத்தைக் கேட்டு கிணற்றின் அக்கம்பக்கம் உள்ளதான வீடுகளில் வசிப்பவர்களெல்லாம் வீடுகளுக்குள் புதுந்து கொண்டுவிட்டார்கள். அந்த ஓரிரு நிமிடங்கள் கழிந்த கையோடு கிணற்றுக்குள் வைத்த வெடிகள் “டமார். டமார். என்று பூமி அசைந்து கொடுப்பது போல வெடித்துச் சத்தம் கேட்டன. பலமான அந்தச் சத்தத்தால் கோயில் வளவு மரங்களில் இருந்த பறவைகள் அமைதி இழந்துபோய் சில வினாடிகள் சலசலப்பை ஏற்படுத்திவிட்டு, மீண்டும் மரங்களுக்குள் தஞ்சம் புகுந்தன. சேரிப்பக்கமே அந்தச் சத்தத்தில் அதிர்ந்தது. அதிர்வு எல்லோரினதும் நெஞ்சப்பள்ளங்களில் ஏறி வயிற்றுச் சதையையும் மிதித்ததுமாதிரி இருந்தது. கிணற்றக்குள் இருந்து எழுந்த வெடிச்சத்தத்தோடு கற்குறுணிகள் சிதறிப் பறந்து கிணற்று வளைவுக்குள்ளேயே அடிபட்டு திரும்பவும் உள்ளே பொல பொலவென்று கொட்டுப்பட்டன. கற்சிதறல்கள் அந்த இடத்திற்குச்
துயர சுஃபண்கள் O 59 O

Page 36
சூழவும் போய் விழுந்தன. இன்னும் விசிறி வீசப்பட்ட சில கற்கள் தூரவும் போய் விழுந்தன. ஒரு பாரமான பெரிய கருங்கல் சிமியோன் வசிக்கும் குடிசையின் வாசலிலும் போய் விழுந்தது. ஆனாலும் அதிலே கல் வந்து விழுந்ததை அவனோ அன்றி அவன் மனைவி திரேசாவோ கண்ணால் காணவில்லை. அவர்கள் இருவரும் வாய்க்குவந்தபடி பேசி தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
சிமியோன் வசிக்கும் குடிசையை அங்குள்ள குடிசைகளோடு அளவில் ஒப்பிட்டுக்கூற முடியாது. அந்த அளவுக்கு கிடுகு ஓலையால் வேயப்பட்ட அவனது வீடு மற்றவர்களின் குடிசைகளைவிட வசதி மிக்கதான விசாலமுடையதுதான்.
அந்த ஒலை வீட்டுக்கான பெரிய மண்சுவர் வைக்கவும், அதற்குத் தேவையான தடிகம்புகளை காட்டில் போய் களவாக வெட்டிக்கொண்டு வந்ததுமான எல்லா வேலைகளையும் சிமியோனுக்கு இங்கே செய்துகொடுத்தவன், பெஞ்சமின்தான். அந்தக் கழுத்தளவு சுவர் வைக்கும்போது, அவன்தான் தன்மீது சேற்றைச் சிந்திக்கொண்டு பொதியப் பொதிய மண் மிதித்துக்கொண்டிருந்தான். மண் செதில்களையெல்லாம் பண்ணரிவாளால் வழித்து அவனேதான் ஒழுங்குபடுத்தினான். பெஞ்சமினுக்கு நெருங்கிய உறவென்றதாய் யாருமே இல்லை. தாய், தகப்பன் இல்லாத அநாதையாகவும் அவன் இருந்தான். நாரந்தனையில் இருக்கும்போது அவனை யாருமே ஆதரவாக அணைத்து அன்புகாட்டவில்லை. முரட்டுத்தனம் மிக்கதான அவனை யாருக்குமே பிடிப்பதில்லை ஆனாலும் பெஞ்சமின் ஊரில் உள்ள அவன் வயதை ஒத்த ஆண்கள் எல்லோரையும் விட கடினமான உழைப்பாளியாக இருந்தான். எந்தப் பூவரசு மரத்தையோ, புளியமரத்தையோ, கொஞ்ச நேரம்கூட ஒய்வெடுத்து இளைப்பாறாமல் வெட்டி அவன் கீழே வீழ்த்திவிடுவான். வீழ்த்தின மரத்தையும் அவ்விதமே கொத்தி வேலை செய்து விறகாக்கிவிடுவான். கோடாலி வேலைக்கும் சரி, மண்வெட்டி வேலைக்கும் சரி யாருமே அவனுடன் போட்டிபோட்டு வேலையில் சரிநிகராய் நிற்கவே முடியாது. அந்த அளவுக்கு கடினமான எல்லா வேலைகளையும் தனித்து நின்றே செய்யக்கூடிய உழைப்பாளி அவன்.
சிமியோனுக்கு பெஞ்சமின் எனப்பட்டவன் தூரத்து உறவுக்காரன்தான். ஆனாலும் அந்த உறவின் காரணமாக அவன் மேல் இரக்கப்பட்டு சிமியோன் அவனை தன் வீட்டில் சேர்த்து வைத்துக்கொள்ளவில்லை. சிமியோன் எந்த விதமான வீண் செலவுகளுமற்ற சிக்கனமான வாழ்க்கையை வாழ்பவன். அவனுக்கு பண ஆசையும் அதிகம் இருந்தது. மாதாமாதம் சம்பளப் பணத்தில் மிச்சம் பிடித்து ஊரில் அவன் O 60 O ரீ.பி.அருணானந்தs

வட்டிக்கும் பணம் கொடுத்து இருந்தான். அந்த வட்டிப் பணமெல்லாம் குட்டிபோட்டுப் பெருக, இன்னும் பலருக்கு வட்டிக்கு காசுகொடுத்து இருந்தான். வட்டியைத் தவிர மூலத்தை அவன் வாங்குவதில்லை. அதனால் மாதாமாதம் வவுனியாவிலிருந்து நாரந்தனைக்குப் போய், சிமியோன் வட்டிப் பணத்தை மாத்திரம் முறியாமல் வசூலித்து வாங்கிவந்து கொண்டிருந்தான். எப்பொழுதும் வவுனியாவில் இருந்து நாரந்தனைக்குப் போய்வருவது அவனுக்குக் கொல்லைத் தலைமாடு மாதிரி இருந்தது.
இப்படியான அவன் ஒரு நாள் வவுனியாவிலிருந்து நாரந்தனைக்குப் போகும் வேளையில் முன் வரைவாக மனதிலொரு திட்டம் ஏற்படுத்திக் கொண்டு போனான்.
பெஞ்சமினை அவன் தன்னோடு இங்கே கூட்டிக்கொண்டுவந்து வைத்திருந்தால், புதைகுழி தோண்டுகின்ற வெட்டியான் வேலைக்கு அவனை அனுப்பலாம். அவன் தனித்துத்தான் ஒருவனாய் நின்றே குழி வெட்டி முடித்துவிடுவான். அப்படிப்பட்ட தைரியம் படைத்தவன் அவன். அப்படியானவனை வைத்துக்கொண்டு மூன்று வேளை சாப்பாட்டை மாத்திரம் அவனுக்குத் தின்னக்கொடுத்தால் மட்டுமே போதும். அவன் இருக்கும் நிலையில் அது மட்டுமே அவனுக்குத் தேவை. வேறு எந்த எதிர்பார்ப்புகளுமே இல்லையே அவனுக்கு? இதனால் அவன் செய்கிற வேலைக்கான கூலிப்பணமெல்லாம் என் கைக்கே கிடைக்கும் பணம் என் கையிலும் புரளும்! அதனாலே அவன் எனக்கு லாபகரமான மனிதன்! நான் ஊரிலிருந்து திரும்புகிற வேளை எப்படியும் அவனை என்னுடன் கூட்டிக்கொண்டே போய்
விடவேண்டும்.!
அதுதான் அவன் நினைத்த திட்டம்.
எவரும் மனதில் திட்டம் தீட்டலாம். ஆனாலும் நடைமுறையில் அது சாத்தியமாகிவிடவும் வேண்டுமே. ஆனால் சிமியோனுக்கு அவன் நினைப்பதெல்லாம் நடந்து ஈடேறி விடக்கூடிய நல்லகாலம்தான்.! அவன் நினைத்துக்கொண்டு வந்தது இப்போது அவனுக்கு நிறைவேறப்போகிறது என்ற மாதிரித்தான் நல்ல சகுனம்.
அவன் அங்கே பேருந்திலிருந்து இறங்கி வீட்டுக்குப் போகும் வழியிலே பெஞ்சமினும் அவ்விடத்தின் முன்னால் வரக்கண்டுகொண்டானே.
“பெஞ்சமின் கொஞ்சம் நில்லடா..?”
என்னவோ ஒரு யோசனையோடு தன்னைக் கடந்து போன அவனைக்கூப்பிட்டான் சிமியோன்.
துயர சுண்பண்கள் O 61 0

Page 37
"என்ன இவன்! என்றைக்குமில்லாதமாதிரி புதினமா என்னக் கூப்பிடுறானே.?” என்ற நினைப்போடு பெஞ்சமின் திரும்பி சிமியோ னைப் பார்த்தான். ஆனாலும் அவன் பார்வையில் ஏன் என்னைக் கூப்பிட்டாய் என்ற கேள்வியே பிரதிபலிக்கவில்லை.
“எங்கடா போறாய்..?”
“சும்மா." என்று சொல்லியபடி தான் போகிற வழியைக் காட்டினான் அவன்.
"கடைக்கா..?”
தலையை மட்டும் ஆட்டினான்.
"அப்பிடி இல்லாட்டி எங்க போறாய்..?” “கோயில்” ஒரு சொல்தான். அதைக் கொண்டுதான் மிகுதியை கேட்பவர் ஊகிக்க வேண்டும்.
“கோயில் வெளியில அங்க பெடியள் புட்போல் அடிக்கிறத பாக்கப்போறியா..?”
மீண்டும் தலையாட்டல் மட்டும்தான்.
"சாப்பிட்டியா..?”
இதற்கும் அப்படியாய்த்தான் அவன் தலையை ஆட்டவும், சிமியோனு க்கு அவனோடு உள்ள பேச்சு சட்டென குறைந்துவிட்டது.
"ம்.” என்று அவனும் முனகியபடியே சிரித்தான். பிறகு,
"வாவன் உந்தக்கடையில தேத்தண்ணி குடிப்பம்.?” என்று அவனைக் கூப்பிட்டான்.
பெஞ்சமினுக்கு இப்பிடியெல்லாம் அவன் ஒருநாளுமில்லாதமாதிரி தன்னைக் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. தலையை ஒருபக்கம் சாய்த்துக்கொண்டு அவனைப் பார்த்தான். கேட்டதற்கு இணங்குகிற மாதிரித்தான் அவனும் நின்றான்.
“வா.” என்று கூப்பிட்டுக்கொண்டு நடந்தவாறு பின்னாலும் அவனுக்கு கையாலும் சைகை காட்டினான் சிமியோன். அவன் கால் பாதத்தைப் பார்த்துக்கொண்டு ஒரு பசு மாட்டுக்கப் பின்னாலே அதன் கன்று போவதுபோல பெஞ்சமினும் அவனுக்குப் பின்னால் போனான். தேநீர்
O 62 O ரீ.பி.அருளனர்தே

கடைக்குள்ளே இருவரும் போனதும் பரிமாறுகிறவன் வடை, போண்டா, என்று உள்ள எல்லா பலகாரமும் தட்டுடன் கொண்டுவந்து வைத்தான். அந்தத் தேநீர்க்கடையின் உரிமையாளன் அவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவன்தான். பெஞ்சமினுக்கு இரண்டு பால் தேத்தண்ணியும் கொண்டுவரும்படி தட்டை வைத்தவனுக்குச் சொன்னான் சிமியோன். “ம். சாப்பிடடா பெஞ்சமின்”
என்று அவன் சொல்லியும் பெஞ்சமின் கையைத் தூக்கவில்லை. ஆனால் பார்வை மட்டும் தட்டில் உள் பலகாரங்களில் பாய்ந்து கொண்டிருந்தது.
இவன் ஒரு வடையை எடுத்து அவனுக்கு நீட்டினான்.
“ம். பிடி. சாப்பிடு”
அதை மட்டும் உடனே அவன் தன்கையில் வாங்கிக்கொண்டான். வாங்கின கையோடு அதை சாப்பிட்டு முடித்துவிட்டான். சிமியோன் தனக்கென்று ஒரு வடையைக் கையில் எடுத்துக்கொண்டு தட்டை அவன் பக்கம் நகர்த்தினான்.
"எல்லாம் உனக்குத்தான். சாப்பிடடா. கதை இருக்கு.?” “என்ன..?” என்று இப்பொழுதுதான் வாய்திறந்து கேட்டான் அவன்.
“சாப்பிடு.?” என்று சிமியோன் சொல்லவும் எந்தவிதமான யோசனையு மில்லாமல் மளமளவென்று தட்டிலுள்ள பலகாரங்களை அவன் சாப்பிட்டே முடித்துவிட்டான். கண்ணாடிக் குவளையில் நிறைய பால் தேத்தண்ணீர் மேசைக்கு வந்தது.
“தேத்தண்ணியக்குடி. எல்லாம் உனக்குச் சொல்லித்தான் தின்னவும் குடிக்கவும் வைக்கவேணும்போல.?”
சிமியோன் தனக்குத்தானே இதை வேடிக்கையாகச் சொல்லிவிட்டு, பிற்பாடு சிரித்தும் கொண்டான்.
“சரியடாப்பா நீ இங்க இருக்கிறத விட்டுட்டு என்னோடயா அங்க வவுனியாவுக்கு வாவன். என்ன வாறியா என்னோட.?”
இப்படித்தான் அவன் விளங்கிக்கொள்வதற்கும் விருப்பப்படுவதுக்கும் ஏற்றவாறு, அவனுடன் பேச்சை ஆரம்பிக்கவேண்டும் என்பதாய் சிமியோன் நினைத்தான். அவன் என்ன மூளைசாலியான ஆளா,
துயரம் அஸ்வீர்கள் O 63 O

Page 38
இல்லையே? இதனால் நேரடியாகவே அவனிடம் எல்லாவற்றையும் பேசி அவனை இணங்கச் செய்துவிட வேண்டும் என்ற நோக்கம் சிமியோனிடம் இருந்தது.
“என்ன யோசனை என்னோடயா நாளைக்கு வவுனியாவுக்கு வாறியா..?”
“வவுனியாவுக்கா..?”
"ஓ அங்கத்ானே நான் இருக்கிறன்! இங்க ஊரில உள்ள எங்கட ஆக்களெல்லாம் இப்ப அங்கதானே இருக்கினம்!”
"மாமி. மாமியும் அங்கதானே இருக்கிறா?.” “ஒ. உன்ர மாமி. அவவும் அங்கதான் இருக்கிறா..!"
“ஒ. ஒ. ஆனா நான் அங்க வந்தா இங்க அவன் தாசன் எண்டவன் பேசுவான்.”
"ஏன் பேசிறான்.?” "அவன்ர வீட்டதானே இங்க சாப்பிடுறனான் படுக்கிறனான்.?”
"நீ சும்மாவோ அவன்ர வீட்டில சாப்பிடுறணி. வேலை செய்யிற காசெல்லாம் நீ அவனிட்டத்தானே குடுக்கிறனி.?”
"ஓ அப்பிடியே காசெல்லாம் குடுத்துடுறனான்.”
"அப்ப நீ இப்ப உடுத்திருக்கிற சாறமென்ன. அதை ஒருக்காப்பார்.? உதென்ன கோலம்.? ஒரு நல்ல சாறம் பனியன் உனக்கு உடுக்க அவன் வாங்கித்தாறானா..?”
சிமியோன் சொல்லவும் அவன் தலையைக் குனிந்து மேசைக்குக் கீழாலே தன்னுடைய சாரத்தைப் பார்த்தான்.
“GrËJas urtit...”?
தலையை அவன் நிமிர்த்தினான். "நான் உனக்கு வஞ்சன செய்யன். உடுதுணிமணி புதிசாய் உடுத்த நான் உனக்கு வாங்கித்தருவன்."
தலையை அவன் ஆட்டினான். “நல்ல சாப்பாடும் மீன் இறைச்சியெண்டு எவ்வளவும் நீ வயித்துக்கு நல்லா சாப்பிடத்தருவன்..!"
O 64 O ரீ.பி.அருணானந்தே

"நீ என்னோட வந்து பாரன். அங்கநல்லா குளிக்கலாம் கொள்ளலாம்.! நல்ல குளமெல்லாம் இருக்கு. உனக்கு பீடியெல்லாம் பத்துறத்துக்கு தேவையானதுகள நீ வாங்கிக்கொள்ளன்..!"
இதையெல்லாம் சிமியோன் சொன்ன பிற்பாடு, அவனும் "ஓம்" என்ற மாதிரித்தான்! அவன் மனப்பட்டுவிட்டான் என்றமாதிரி முகமெல்லாம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. கண்களும் அகலங்கொண்டிருந்தன.
"அப்ப நாளைக்கு என்னோடயா நீ வாறியா..?”
499
O
“ம். எண்டுபோட்டு இப்பிடியே போயிடாம றங்குப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு இப்பவே என்ர அம்மா வீட்டடிக்கு வா..?”
KK y 92
"அங்க ராவு படுத்துப்போட்டு காலேல ரெண்டு பேரும் வவுனியாவுக்கு வெள்ளனப்பொழுதில இங்க இருந்து பஸ்ஸில வெளிக்கிட்டிட வேணும்.?”
b. '
"அப்ப இப்ப நீ அங்க போய் என்ன செய்வாய் சொல்லன்.?” “தாசன் வீட்டபோய் றங்குப்பெட்டிய எடுத்துக்கொண்டு வாறன்.”
“என்ர அம்மாவின்ர வீட்டுக்கு நீ வரவேணும்.?”
D ''
இப்படிக் கதையப் போட்டுத்தான் பெஞ்சமினைத் தன்னோடு வவுனியாவுக்கு இழுத்துக்கொண்டு வந்தான் சிமியோன். அதன் பிறகு பிணக்குழி தோண்டும் வெட்டியான் வேலைக்கு பெஞ்சமினை அவன் அனுப்பினான். அவன் கஷ்டப்பட்டு வேலை செய்து உழைக்கின்ற பணமெல்லாம் சிமியோனின் கைக்குத்தான் வந்து சேர்ந்தது என்றாலும் தான் கூட்டிக்கொண்டு அவனை வரும்போது அவனுக்குச் சொல்லியது மாதிரி ஒழுங்காக அவனுக்கு மூன்று வேளையும் சாப்பாடு போட்டான் சிமியோன்.
பெஞ்சமினுக்கு வவுனியாவுக்கு வந்தது முதல், குடிப்பது தின்பது எல்லாம் சிமியோன் வீட்டிலே திருப்தியாக இருந்தது. புகைப்பதற்குப் போதுமான பீடியும் சிமியோன் வாங்கிக் கொடுத்ததால் மனத்திருப்தி
துயரச் சுயேண்கள் O 65 O

Page 39
யோடும் அவன் இருந்தான். இதனால் சிமியோன் என்ன வேலையை அவனுக்குச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டாலும் அவன் செய்வதற் குத் தயாராகத்தான் இருந்தான்.
அன்று காலையில் 'வீட்டில சமைக்க விறகில்ல' என்று பெஞ்சமினுக்கு சொன்னாள் திரேசா. “நீ காட்டுக்கு விறகு வெட்டப் போயிற்று வா பெஞ்சமின்.?” என்று அவனுக்கு சொல்லியபடி தேய்ந்து பிடியும் தேய்ந்த கத்தியை எடுத்து அவனிடம் கொடுத்தான் சிமியோன். இவன் அதைக் கையில் வாங்கிக்கொண்டு வளையாத முதுகுடன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கத்தியும் கையுமாய் சவக்காலை வீதியில் நடந்துகொண்டிருந்தான். வவுனியாவுக்கு இவன் வந்தநாள் முதல் பலியாட்டின் கழுத்தில் அசையும் பூமாலை போல கழுத்திலும் ஒரு கறுத்த நாடாக்கயிறு போட்டிருக்கிறான். அதிலே பெரிய வெள்ளிக் குருசும் தொங்குகிறது.
இந்தக் கோலத்தில் கண்களை அசைக்காமல், ஒரு துறவு நிலையில் எதிர்ப்பட்டதை நோக்கிக்கொண்டு அவன் போகிறபோது, தண்ணிருக்கென்று வெளிக்கிட்டுவந்த குமரிகள் எல்லாம் அவனைப் பார்த்துப் பொறுக்கமுடியாமல் அப்பொழுது சிரித்துவிட்டார்கள். அவனுக்கு உடனே வெட்கத்தில் தோள் பட்டைகள் சுருங்கிச் சரிந்து போய்விட்டது. கூனிக் குறுகிக்கொண்டு பிறகு நடந்தான்.
என்றாலும் காட்டிற்குள் போய் நின்றபோது மீண்டும் புதுத்தெம்பு அவனுக்கு வந்துவிட்டது. அங்கே வெட்ட வெட்ட அது மொட்டைக் கத்தியாயிருந்தாலும், எந்தப் பச்சை மரத்தையும் அவன் அந்தக் கத்தியால் வெட்ட முடியும். ஆனால் அடுப்பு எரிக்க இப்போது பச்சைத்தடி தோதுப்படாதே? என்றதால்த்தான் முள் விறகுகளை யெல்லாம் முறித்துவைத்து உரல்போல, அதை ஒரு கொடியால் அவன் கட்டினான். அந்தக் கட்டுக்குள் கத்தியையும் செருகிக்கொண்டு அதைத் தலையில் தானே தூக்கி எடுத்துச் சுமந்தபடி இங்கே அவன் பிற்பாடு அவற்றைக்கொண்டு வந்திருந்தான்.
அவன் குடிசை வாசலடியின் முன்னால் வந்து சேர்ந்த வேளையில்தான் கிணற்று வெடிச்சத்தம் கேட்டது. அந்த வெடிச்சத்தத்தோடு அவனுக்கு முன்னால் ஒரு பெரிய கருங்கல் துண்டு வந்து விழுந்ததையும் அவன் பார்த்தான்.
அவனுக்கென்ன, கருங்கல்துண்டு விழுந்தாலென்ன, பெரும் பாறைக் கல்லே உருண்டு வந்தாலென்ன, எதுதான் தலையில் விழப் போகிறதென்றாலும் அவன் ஏன் கலவரமடையப்போகிறான்.? ஏதும் ஒரு விளைவை யோசித்துப் பார்ப்பவனுக்குத்தானே பய உணர்வு இருக்கும்.? இவனுக்குத்தான் அந்தச் சிந்தனையே இல்லையே?
o 66 о ரீ.பி.அருணானந்தே

அவன் அமைதியாகத்தான் இருந்தான். தலையில் இருந்த விறகுச் சுமையை அப்பிடியே தலையைச் சரித்து ஒரு உன்னலுடன் கீழே நிலத்தில் அதை விழுத்தினான். அதிலே விழுந்து கிடந்த கல்லைக் குனிந்து எடுத்து ஒரமாய்ப் போட்டான். குடிசைக்குள்ளே திரேசாவும் சிமியோனும் சத்தம்போட்டுப் பேசிச் சண்டைபிடிப்பது அவன் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருந்தது. இரவிலும் பகலிலும் அவர்கள் இருவரினதும் வாய்ச்சண்டைகளை இவனுக்கும் கேட்டுக் கேட்டு அது இப்போது பழக்கம்தான். இந்தப் பழக்கம் நாளடைவில் வலுத்து, இரவிலும் இதைக்கேட்டுக்கொண்டு தூங்கக்கூடிய நிலையி லும் அவன் இருந்தான்.
குடிசைக்குள்ளே இருந்து திரேசாவின் அழுகுரல் பிறகு கேட்டபடி இருந்தது.
சிமியோன் ஒரு பக்கம் மோசமான வசவுகளாலே வாய்க்கு வந்தபடி அவளைப்பேசிக்கொண்டிருந்தான். அது ஒரு அசிங்கமான சண்டையின் ஆரம்பம் போல அவனுக்கும் இருந்தது. ஆனாலும் பெஞ்சமினுக்கு அவர்களது சண்டைபற்றி எந்த விதமான அக்கறையுமே இருக்க வில்லை. ஏதோ இதுவெல்லாம் இந்த வீட்டில் நாளாந்தம் தொடர்ந்து நடக்கிற சர்வசாதாரணமான ஒரு விஷயம் போலத்தான் அவனுக்கும் அதுவெல்லாமே இருந்தது.
அவனுக்கு இப்போது கவனமெல்லாம் அந்த வேலியில்தான். அப்படியே பார்வை போன இடத்தில் அங்கே தேர்வடம் போலக் கிடக்கின்ற அதை அவன் பார்த்துவிட்டான். இலைகளின் கீழ்நாடாப்பின்னல் போன்ற நிழலுக்குள் கிடக்கின்ற அது. என்ன?
அது ஒரு பாம்பாக இருக்குமா?
இல்லை!
மஞ்சளாக அது இருக்கிறதைக் கண்ணுற்றதால் சாரை போன்றுதான் இருக்கிறது! என்று அவன் பிற்பாடு தெரிந்துகொண்டான். உடனே மண்ணை அள்ளி வேலி மூலையில் வீசினான். அது நெளிந்து ஊரத்தொடங்கியது. மீண்டும் தன் கையில் மண்ணை நிரம்ப அள்ளி எடுத்து வேலியில் உள்ள இலைகளில் விழ வீசினான். மண் அவ்விடத்தின் இலைகளிலே “பொல பொல"வென்று விழ அந்தச் சத்தத்தோடு, அழுக்கு நிறமுள்ள நீண்ட அந்த மஞ்சள் சாரைப்பாம்பு மண்வெளியில் உடனே விரைந்தூரத்தொடங்கியது.
துயரச் சுண்பண்கள் O 67 O

Page 40
ダ
சிமியோனின் அன்றாட நடைமுறைகளில் முன்னெப்பொழுதும் இல்லாத வித்தியாசமான போக்குகள் காணப்படுவதை திரேசா கண்டுணர்ந்து கொண்டாள். அடிக்கடி ஒலைச் செத்தையில் செருகியுள்ள கண்ணாடி யில் பார்த்து அவன் தலைவாரிக் கொள்கிறதையும், புதிது புதிதாக சாரம் சேட்டுக்களை றங்குப்பெட்டிக்குள்ளால் இருந்து எடுத்து உடுத்திக்கொண்டு நாரந்தனைக்குக் கிளம்பிப் போகிறதையும் கண்டு அவளுக்கு சந்தேகம் வலுத்திருந்தது.
"முன்பெல்லாம் இப்படி தன் கணவன் ஆக்ரோசமாகத் தன்னுடன் சண்டைபிடித்துக்கொள்வதில்லையே.?” என்றும் அவள் தனக்குள்ளே நினைத்து வைத்துக்கொண்டிருந்தாள். அந்த நினைவுகளுக்கெல்லாம் பொருத்தமாக சிமியோன் ஏன் அடிக்கடி இங்கிருந்து நாரந்தனைக்குப் போய்வருகிறான் என்கிற செய்தியும் அவள் உறவினரது வழியாக அவளுக்குக் கிடைக்கவும்தான் செய்தது. என்றாலும் இதையெல்லாம் தான் பெரியதாக எடுத்துக் கணவருடன் பேசிச் சண்டையை இன்னும் வளர்க்காது அவள் தனக்குள் எல்லாவற்றையும் அடக்கி வைத்திருந்தாள். ஆனாலும் எத்தனை காலம்தான் அவள் இந்தப் பொறுமையைத் தனக்குள் கையாண்டு வாயைப் பொத்திக்கொண்டிருப்பது என்றாவது ஒரு நாள் எரிமலையானது குமுறி வெடித்து நெருப்பை வெளியே கக்கத்தானே செய்யும்? அதைப்போலத்தானே ஒரு மனிதனது மனமும், அவன் உள்ளக்குமுறல்களை எப்படித்தான் அடக்கி வைத்திருந்தாலும் அதுவும் ஒருநாள் கட்டுமீறி வெடித்து வாய்வளியே வார்த்தைகளாக வெளிப்படத்தானே செய்யும். பெருந்தவம் செய்து மனத்தழுக்ககற்றிய ஞானிகளே கோபத்தை அடக்கமுடியாது சாபம் கொடுத்துவிடுகிறார்கள் என்றிருக்கும் போது, சாதாரண மனிதனொருவன் கோபம் வரும் போதெல்லாம் தன்னை அடக்கிக்கொண்டிருப்பது என்பது சுலபமான தொாரு செயலா என்ன?
அதைப்போலத்தான் இன்றும் திரேசாவினால் தன்னையே அடக்கிக் கொள்ள முடியாத மாதிரியாகப் போய்விட்டது. அவள் இருக்கிற நிலைபரத்தில் பயங்கரமாகக் கேட்ட அந்தக் கிணற்று வெடிச்சத்தம் கூட அவளுக்கு அதிர்ச்சியாயில்லை. ஆனாலும் வழமையைவிட இன்று அவன் எடுத்ததிற்கெல்லாம் மலடிக்கு மலடி என்ற வார்த்தைகளால் சாடுவதே அவளுக்கு பேரதிர்ச்சியாகவும் மனதால் தாங்கிக்கொள்ள இயலாததாகவும் இருந்தது.
அதோடு "மலடி மலடி நீ.” என்று அவன் பேசுகிற பேச்சுக்குள் O 68 O ரீ.பி.அருணானந்தே

அவளுக்குக் கொத்திப்பிடுங்குகிற அவமானம் வேறு.
அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. குரல்கம்மி விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள்.
“இந்த வீட்டில கிடந்து இப்பிடி வேதனேல வதபடுறது எனக்குக்கூடக் கூடிப் போகுதே. சதா சகாய மாதாவே நான் என்ன தாயாரே செய்யிறது?”
என்று சொல்லியளும் போது இரைச்சலுடன் மூச்சுக்காற்றும் அவளுக்கு வெளிவந்தது. அவளது கண்களிலிருந்து மழைபோல கண்ணீர் கொட்டியது. இவ்வளவு நாளும் சாப்பிட்டு ஊறின இரத்தத்தையெல்லாம் மழைபோல இப்போது கண்ணிரில்தான் வடிக்கின்றதாக நினைத்து அவள் சோர்வடைந்து கொண்டிருந்தாள்.
ஆனால் இதையெல்லாம் தன் மனைவியிடம் கண்டுகொள்ளா நிலையில் சிமியோன் ஆத்திரத்தில் நின்றபடி ஆடிக்கொண்டிருந்தான்.
"நீ வேசம் போடுறது இனி எனக்குக் காணுமடி..? நீ சுத்த மலடிதான். உன்னோட நான் காலம் கழிச்சா நீ கிழவியாப் பேந்து போயிடுவாய். பிறகெங்க பிள்ள இந்த வீட்டில பிறக்கப்போகுது..?”
"நாங்க நினைச்சாப் போல எல்லாம் நடக்குமே..? அது கடவுளெல்லே தரவேணும்.?” என்று அழுகையோடு திரேசா சொன்னாள்.
“வாய மூடடி? எத்தின கடவுள்மாருக்கு நீ நேத்திவைச்சுக் கொண்டிருக்கிறாய்..? எப்பவும் நீ நேத்தி வைச்சதுக்கும் இங்கின ஏதும் நடந்திருக்கேடி..?”
"தெய்வத்தையும் திட்டுறியே மடு மாதாவையும் திட்டிறியே.?”
“மலடி நீ, சாணிப்பிணமா வீட்டுக்க நெடுகலும் படுத்துக்கொண்டு சோம்பல் முறிக்கிறாய். உனக்கு மடுமாதா என்ன செய்யிறது. அந் தோனியார்தான் என்ன செய்யிறது.?”
"உண்ணான நீ இப்பிடியெல்லாம் சொல்லி அழியப்போறாய்.?"
“என்ன சொல்லுறாய் மலட்டு வேச.”
"ஐயோ. ஐயோ. அடி என்ன அடி அடிச்சு நீ கொண்டுபோடு."
"உன்னக் கொண்டுபோட்டு நான் ஏன் மறியலுக்குப் போறன்.? பிள்ள
பெற ஏலாத மலடி நீ ஏன் என்னோட இருந்து சீவிக்கிறாய்? நீ எங்கயாவது போவன். போய்த்துலையன்.?”
plugs aslövaalisai o 69 o

Page 41
"எங்க போறதெண்டுறாய்..?”
"உன்ர கொப்பன் கொம்மாவோட போயிரன்.?
"ஏன் நான் அங்க போகவேணும்.?”
"பின்ன இங்க இருந்து நீ என்ன செய்யப்போறாய்..? மலடி.”
“என்ன மலடி மலடி எண்டு ஒரு கத உண்ரவாயில நெடுக வருது.”
“மலடி இல்லாம நீ பாக்கியவதியாளே..? மலடி தானே னி.?”
"ஆர் மலட்டு ஆக்கள்.?”
“என்ன ஆக்கள் பூக்கள் எண்டு ஒரு கதை கதைக்கிறாய் என்னடி நீ வாயடிக்கிறாய்..?”
“பின்ன! உன்ர கொண்ணருக்குப் பிள்ள இல்லத்தானே..? அங்க ஆராம் மலடி.? உங்கட அண்ணரோ இல்லாட்டி அண்ணியாமே. அவயளில மலடு.?”
"ஒகோ. அடிசக்க. இப்பத்தான் எனக்கும் தெரியுது. இப்பிடியும் நீ இப்ப கதயக்கொண்டு போகப் பாக்கிறியோ..? அகா. அப்பிடியோ சங்கதி.? அப்பவடி நான்தான் மலடன்! எங்கட பரம்பரதான் மலடுகள்
எண்டு நீ இப்ப சொல்லிறியோ..?”
"அப்பிடி நான் இப்ப சொன்னனானே..? அதுகளுக்கும் பிள்ளையஸ் இல்ல அவயஞம் சீவிக்கினம் எண்டுதானே நான் சொல்லவந்தன்.?”
“என்ன வந்தன் கிந்தன்! உந்தக்கத ஏன் இப்ப உன்ர வாயில இருந்து வந்ததெண்டு எனக்கு இப்ப தெரியுது.? இப்பத்தான் உன்ர கள்ளத்தனமும் கபட நாடகமும் எனக்கு விளங்குது. நீ இப்பிடி என்னோட இப்ப கதைச்சதத்தானே இதுக்கு முதல் எனக்குத் தெரியாம வெளியாக்களுக்கெல்லாம் போய்ச் சொல்லியிருப்பாய்..?”
"ஐயோ கடவுளான உண்ணான சத்தியமா அந்த யேசு அறிய நான் ஒண்டும் அப்பிடி இப்பிடி ஆரோடயும் இதுவரைக்கும் கதைச்சதேயில்ல. நீ ஏன் இப்பிடிக் கூழ்ப்பாடிக் கதையெல்லாம் கதைக்கிறாய்?”
"அடியேய் என்னடி நீ ஒண்டும் தெரியாத பாப்பா மாதிரி ஆட்டம் காட்டுறாய்..? இவ்வளவு காலம் நான் உன்னோட சீவிச்சதில உன்ன எனக்குத் தெரியாமலிருக்கே.? ஆனா எல்லாத்துக்குமா நான் இப்ப உனக்கொண்டச் சொல்லுறன். இன்னும் ஒரு வருஷம்தான்
O 70 O ரீ.பி.அருணரைத்தs

நீ என்னோட இங்க இந்த வீட்டில இருந்து சீவிக்கிறது. அந்தக் காலத்துக்குள்ள உனக்கு வயித்திலயா வாயிலயா ஒண்டும் வராட்டி பேந்து நீ இந்த வீட்ட விட்டு வெளிக்கிட வேண்டியதுதான்."
“ஓகோ அப்பிடி என்ன வெளிக்கிடுத்திப்போட்டு பிறகு நீ என்ன
செய்வாயாம்.!"
“அது என்னவோ நான் நெச்சதைச்செய்வன். அது என்ர இஷ்டம். எனக்கு விருப்பப்பட்டத நான் செய்வன்தானே.?”
"உனக்கு விருப்பப்பட்டதை செய்வாயெண்டு சொன்னா என்ன கதை? அத எனக்கும் சொல்லன்.?”
"அது என்ர இஷ்டம்! அத ஏன் உனக்கு நான் சொல்லவேணும்.? எனக்கு விருப்பப்பட்டது என்னத்தையும் நான் செய்வன் நீ யார் கேட்க.?”
"நான் ஆரோ.? ஒம் இப்புடியும் கதைக்க வெளிக்கிட்டாச்சோ..? ஆனாலும் எனக்கு உன்ர கள்ளமெல்லாம் தெரியும்.! நான் என்ன முழுக்குருடு முக்காக்குருடெண்டு நினைச்சியே? நான் எல்லாம் உன்ர நடவடிக்கையள பாத்துக்கொண்டுதான் இருக்கிறன். உன்ர தல இழுப்பும் கண்ணாடிப் பாப்பும் ஏன் எண்டும் எனக்குத் தெரியும். நீ ஏன் அடிக்கடி அங்க ஊருக்குப் போறாய்..? அங்க போய் ஆர்விட்ட போய்த்திரியிறாய்..? எண்டெல்லாம் நானும் அறியாமலே இங்க இருக்கிறன். நான் என்ன ஒண்டும் தெரியாத பேச்சியெண்டு நீ நினைச்சுக்கொண்டிருக்கிறாயோ..?”
“ஓ உனக்கெல்லாம் அப்பிடிச்சகலமும் தெரியும்தானே. உலகத்த வித்த வேச நீ உனக்கென்னவும் தெரியாமலிருக்கே.?”
“இங்க சும்மா ஏதாச்சும் கத! ஆனா, வேசதாசியெண்டு உன்ர வாயால ஏன் நீ என்னச் சொல்லறாய். அப்பிடி நான் ஆரோடயும் ஆடிக்கொண்டு திரியிறனே. நீ தான் இப்ப அமர்பிடிச்சு வேற கலியாணம் முடிக்க ஒடித்திரியிறாய் நானப்பிடியே.?”
"அடியேய் நான் என்ர இஷ்டத்துக்கு என்னவும் செய்வன். நான் ஆம்பிள. இப்ப விசயத்த உடைச்சு நான் சொல்லுறன் உனக்கு. எனக்கும் என்ர தாய் சகோதரம் சொந்தக்காறரெண்டு எல்லாரும் இருக்கினம்தானே. அதுகளுக்கெல்லாம் எனக்கொரு பிள்ள இல்லையே எண்ட விஷயத்தில கவலையும் இருக்கும்தானே? எனக்கு மாமி சொல்லுறா நீ உன்ர கலியாண எழுத்தத் தள்ளிப்போட்டுட்டு வா என்ர மகள உனக்குக் கட்டித்தாறனெண்டு. இதுதான் இனிமேலயா நடக்கப் போகுது. இந்த என்ர நிலமயக்கண்டு எனக்கு இப்பிடிச் சொல்லுற
துயரச் சுண்பண்கள் O 71 O

Page 42
மாமிய நான் கோயில்கட்டிக் கும்பிடுவன்.”
“ஆ. ஆ. கும்பிடுவாய் நல்லாக்கும்புடுவாய். நாசக்காற நாய் அந்த நாய். இன்னொரு குடும்பத்தைக் குலைக்க நினைக்கிற கெட்ட நாய். அவள் ஒரு மாமியே உனக்கு.? மோளக் கட்டிக்குடுக்க வெளிக்கிட்டிருக்கிறாளாம் முண்டச்சனியன். அவள் ஒரு நல்ல மனுசியே? ஏன் அவளுண்ட மோளுக்கு வேற மாப்பிள ஆரும் கிடைக்கேலயாமே..? தேவடியாளும் தேவடியாளிண்ட மோளும்! இப்பிடியெல்லாம் கிடந்து ஆடுறாளவயளே. அவளயஞக்கு முதுகுத்தோல அடிச்சு உரிக்கவேணும்! ஆட்டக்கார நாயஸ்.?”
“எடியேய் நீ என்ன கற்பூரக்கட்டிபோல சுத்தமானவளே? என்ர மாமி ஆக்கள ஒரு மாதிரிக் கதைக்கிறாய்? . என்ன ஆட்டக்காறியள் கீட்டக்காறியன் எண்டு அவளயஸ் இல்லாத இடத்திலயா நீ அவளயளப் பேசிறாய்..? அவளயளிட்ட நீ உதச்சொன்னியெண்டா உன்ர கடவாயக்கிழிச்சு விட்டுடுவாளயஸ் கண்டியோ.”
"ஓ கிழிப்பாளவயள் கிழிப்பாளவயள் உன்ர ஆக்கள்! நானும் அவளயளிண்டதுகளைப் பிடிச்சுக் கிழிச்சுவிட்டிடுவன் கண்டியோ? நானும் என்ர அப்பன் ஏசுவுக்கும் என்ர அம்மா சலோமிக்குமாப் பிறந்தவள்தான்! எனக்கும் அவயளயளப்போல எல்லாம் செய்யிறதுக்கு நல்லா ஏலும் கண்டியோ..? நான் இங்க உயிரோட இருக்கிற காலத்துக்க இந்த வீட்டுக்கிள்ள அவளும் அவளிண்ட மோளும் கால் வைக்கிறாளயளோவெண்டு ஒருக்காப் பாப்பம்.?”
"எடியேய் இது என்ர வீடடி! என்ர சாமான்! என்ர காசு! எண்டு எல்லாமே என்ரதுதான்.! நீ எப்பிடி வந்தியோ அப்பிடியே பிறகு உன்ர றங்குப்பெட்டிய தூக்கிக்கொண்டு ஒரு வருஷத்தால இதில இருந்து வெளிக்கிட வேண்டியதுதான். உந்தக் கோயில் அந்தோனியார் ஆண உது கட்டாயம் நடக்கும் ஒ.”
“எது நடக்குமெண்டிறாய்.?” "நீ இந்த வீட்டால போறது ஒரு நாள் கட்டாயம் நடக்குமடி.!”
"அதுதான் இல்ல.! என்ர நெஞ்சுக்குள்ள. இந்த நெஞ்சுக்குள்ள கடவுள் இருக்கிறார். சதாசகாயத்தாய் இருக்கிறா. அவ என்னக் கைவிடா. இந்த நெஞ்சில என்ர கையால அடிச்சக்கொண்டு நான் சொல்லறன். இந்த மாதா என்ன மலடி எண்ட பேரோட இந்த வீட்டுக்கால வெளிக்கிட்டுப்போகக் கடைசிவரையும் விடாது. நான் கடவுள் பக்திக்காறி உன்ர அலுவல்கள் நீ போடுற பிளானுகள் எப்பவுமே நடக்காது. கண்டியோ. எண்டாலும் நீ போற இடத்துக்கெல்லாம் போ. செய்ய நெச்சதெல்லாம் செய். உன்னால எல்லாம் ஏலுமெண்டு о 72 o ரீ.பி.அருளானந்தல்

திமிரடிக்கிறாய். அப்பிடியே நீ திமிரிலதிரி. ஆனாலும் நான் ஒரு பெண்பிரச! எனக்கு என்னதான் ஏலும்.? எண்டாலும் என்னக் கடவுள் காப்பாற்றுவார்.1 சர்வ சராசரங்களையும் படைச்சுக் காப்பாத்துற கடவுள் என்னப் பாத்துக்கொண்டிருக்கிறார்! அவர் என்னக் கைவிட மாட்டார். எல்லாத்துக்கும் என்னப் படைச்ச ஆண்டவன் இருக்கிறார்! என்னக் கடவுள் காப்பாற்றுவார்."
"ஏடீ விசர்வந்தமாதிரி நீ பீத்தாத. அவன் ஒருவன் பாவம் வேல செய்யிறவன். அவனுக்கு சாப்பாட்டப் போட்டுக்குடு. ரெண்டு மூண்டு மணியாகுதெல்லே.?”
"அதயும் உன்ர புது மனுசியக்கூட்டி இங்க வைச்சுக்கொண்டு செய்யன்.? எனக்கு வேல சொல்லறாய் நீ? ஆருக்கும் நான் இங்க அவிச்சுக்கொண்டிக்கொண்டு இருக்கிறன். நீ சோக்குப் பண்ணிக் கொண்டு குமரியளத் தேடிக்கொண்டு போவன்.?”
“திரேசா திரும்பவும் திரும்பவும் இந்தக் கதையள எடுத்து சண்ட கொழுவாத.? இனி வேணாம் சண்ட.! நீ அவனுக்கு சாப்பாட்டப் போட்டுக்குடு.! நேரம் செண்டிச்செண்டா நான் பஸ்ஸையும் விட்டிடுவன். நான் இப்பவே ஊருக்குப் போறது என்ர வட்டிக்காச வாங்கத்தான். நான் இப்ப இப்பிடியெல்லாம் கதைச்சது உன்ர வாய்க்கொழுப்பாலதான். எண்டாலும் அதில உண்மை இருக்கு. ஒரு நாளைக்கு எப்படியோ இந்த வீட்டில அது நடக்கத்தான் போகுது.! அதெண்டா உண்மை. ஆனா இப்ப ஒண்டும் அதெல்லாம் இல்ல.! நீ இப்ப அவனுக்கு சாப்பாட்டப் போட்டுக்குடு. நான் ஊரால வர மூண்டு நாள் ஆகும். வேலைக்கு கங்காணியாரிட்ட மூண்டு நாள் வரமாட்டனெண்டும் நான் சொல்லிப்போட்டன்! சும்மா நிண்டு எனக்கு இனிக்கதைச்சுக்கொண்டிருக்கேலாது. நான் இனி வெளிக்கிடப் போறன். அவனுக்கு நீ சாப்பாட்டப் போட்டுக்குடு.”
என்று சொல்லியபடி முன்னம் எப்பிடியெல்லாமோ திசைதிரும்பிப் போன பேச்சைக் கடைசியில் ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருந்தான் சிமியோன். ஒரு சாதாரண புள்ளியிலிருந்து ஆரம்பமாகிய சண்டை அதன் உச்சக்கட்டத்திலிருந்து இப்போது தணிந்திருந்தது.
அவன் குடிசைக்குள்ளால் இருந்து வெளியே வெளிக்கிடும்வேளை, சுடச்சுட இன்னும் ஏதாவது பேசவேண்டும் என்ற ஆத்திரத்தில் திரேசாவுக்கு நாவு தினவெடுத்தது என்றாலும் பிரயாணம் போகின்ற மனுசனுக்கு அப்படி ஏதும் இவ்வேளையில் பேசப்படாது என்று நினைத்து அவள் சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
ஆனாலும் சிமியோன் போகும் வழியை குடிசைக்குள் அவள்
g ടൈ O 73 O

Page 43
இருந்து பார்த்துக்கொண்டிருந்தபோது, அவன் தன்னைப் பேசிய பேச்சுக்களெல்லாம் ஞாபகத்துக்குவரவும் அவளுக்கு நெஞ்செல்லாம் பற்றி எரிந்தது. உடல் அவளுக்கு சோர்ந்து போய் பஞ்சியாக இருப்பது போல இருந்தது. அவள் இருந்த இடத்தால் எழுந்து, வீட்டு மூலையில் செத்தையடியில் சாத்திக்கிடந்த பாயை எடுத்து அதிலே விரித்துப்போட்டாள். சோகத்துடன் அந்தப்பாயிலே அப்படியே விழுந்து குப்புற அவள் படுத்துக்கொண்டாள். என்றாலும் திரும்பவும் அவளுக்கு சிமியோனின் வெறியுள்ள வசவுகளும் திட்டுகளும் காதில் அதிர்ந்து முழங்குவதைப்போலவே இருந்துகொண்டிருந்தது. எல்லா ஏச்சுக்களையும்விட, அந்த "மலடி மலடி” என்ற பேச்சுத்தான் அவள் மனத்தில் கள்ளிமுள்ளாய் கொத்தாக இருந்து குத்திக்கொண்டிருப்ப தைப்போல நொந்தது.
தாகத்தில் தவிப்பவன் எங்கே தண்ணீர் கிடைக்கும் என்று தவிப்புடன் தேடித் தேடி அலைந்துகொண்டிருப்பதைப்போல, தன் பிரச்சினையையும் எந்த வழியைக் கடைப்பிடித்துத் தீர்த்துக்கொள்வது என்ற கணக்கில் அவள் தன் சிந்தனையை ஒடவிட்டுக்கொண்டிருந்தாள். இதைக்கொண்டு தன்னைப் பற்றி மனதில் தோன்றக்கூடிய எல்லா வகையிலும் மிக அநியாயமான எண்ணங்களையும்கூட அவள் எண்ணத்தொடங்கினாள். என் பிரச்சினையைத் தீர்க்க என்ன வழி? என்ன வழி? என்று தனக்குத்தானே கேள்வியை மனதில் கேட்டுக்
கொண்டாலும், அதற்குரிய வழி ஏதும் கிடைக்காத அளவில் தன் சிந்தனையில் தடுமாறிக்கொண்டிருந்தாள் அவள். ஆனாலும் தடுமாறிய சிந்தனையிலே அவளுக்குள் ஒரு திட்டம் உருவாகியது. அந்தத்திட்டத்தை நினைத்ததும் உடனே அவள் மனதுக்குள் கடல் கொந்தளித்தது போல கொந்தளிப்பு ஏற்பட்டது. அந்த நினைவுகள் அவளுக்குக் காற்றாய்ச் சிறியது, முழங்கியது. இன்னும் ஸ்திரமாக திரும்பவும் அதை நினைத்தபோது முன்னும் பின்னுமாக எரியும் நெருப்பை தன் நெஞ்சுக்குள் தள்ளுவதைப் போலவும் அவளுக்கு இருந்தது.
இப்படியே அவள் ஒரு சில நிமிடங்களாக அடர்ந்து தழைத்த இலைகளுக்கு உள்ளே, சூரிய ஒளியைக் காணாது தவிப்பதுபோலத் தவித்தாள். என்றாலும் அந்த இக்கட்டுக்குள் புதிதாகத் தோன்றிய யோசனையானது, அவளுக்கு இப்போது இலைகளைக் கடந்து சூரிய கிரணங்களின் ஒளியைக் கொடுத்தது போல இருந்தது.
ஒளி இப்போது பரிபூரணமான சூரியன் - போன்ற வடிவில் அவளுக்கு நினைவில் நின்றது. அவள் குந்திதேவி - போன்று தானும் ஒளிபொழியும் ஜுவாலைகளையுடைய அந்தச் சூரிய ஒளியையே பார்த்துக்கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தாள். அந்த
O 74 O ரீ.பி.அருணானந்தே

ஒளியில் நீல நிறக்கவச குண்டலங்களுடன், ஒருகையில் தாமரையோடு 'பெஞ்சமின் - நடந்தபடி தன்னிடமாய் வந்துகொண்டிருப்பதாகவும் ஒரு நினைவுக்காட்சி அவளுக்குப் புலப்பட்டது. இந்த யோசனைகள் இன்னும் நெஞ்சில் வலுத்து இறுக்கம் பெற, இலைகளின் நாடாப்பின்னல் போன்ற நிழல்போல அவள் பாயில் கிடந்தபடி நெளிந்தாள். வேலிப்பக்கம் ஒரு செம்போத்தின் குரல் ஏக்கமாகக் கத்திக்கொண்டிருந்தது. அந்தச் சத்தம் தெளிவாக அவள் காதுகளில் அப்போது கேட்டுக்கொண்டிருந்தது. எனினும் அவளோ, தன் சிந்தனை வழியாகப் போகப் போகப் போய்க்கொண்டே இருந்தாள். அந்த ஒடுபாதை வெளியில் முடிவின்மையில் அவள் மனம் விரைந்தபடியே இருந்தது.
4.
கணவன் என்று தன் மனத்தில் வைத்திருந்த நம்பிக்கையை சுருட்டிச் சுருக்கிவிட்ட ஒரு கொடிய ஏமாற்றம். அதோடு என்னை அவர் ஒரு பழந்துணி மூட்டையைப் போல தூக்கி எறிந்துவிடுவாரோ என்று அவளுக்கு நெஞ்சிலே ஒரு பயம்! இப்படிப்பலவாறான சிந்தனைகளில் அல்லல்பட்டுக்கொண்டிருந்த திரேசா, சோர்ந்துபோய் அப்படியே நித்திரையாகிவிட்டாள். ஆனாலும் அந்த நிம்மதியான நித்திரைக்குள்ளே யாரோ தன்னைத் தட்டி எழுப்பியதைப்போல அவளுக்கு இருந்தது. உடனே திடுக்கிட்டு அவள் கண் விழித்துவிட்டாள். அப்படியே பாயில் கிடந்தபடி திறந்துகிடந்த வாசல் வழியாக வெளியே பார்த்தாள். வெயில் சாய்வாக இறங்கியிருந்தது. ஒரு நாளுமில்லாதமாதிரி என்னையும் மறந்து இப்படிப் பகல் நித்திரை கொண்டுவிட்டேனே.? என்று நினைத்தபடி, உடனே எழுந்து பாயைச் சுருட்டி வீட்டு மூலையிலே போட்டுவிட்டு அவள்தன் கூந்தலை உதறி முடிந்துகொண்டாள்.
"எங்கள் வீட்டில் எங்களுக்குள்ளே இருக்கின்ற பிரச்சினைகள் வேறு. அதற்காக நாங்கள் எங்களுக்குள் அடிபடலாம்! குத்துப்படலாம்.! சண்டை பிடிக்கலாம். சாப்படாமல் கிடக்கலாம். ஆனாலும் இந்த வீட்டிலுள்ள எங்களை நம்பி. தன் உழைப்பையும் கூட எங்களிடம் தந்துவிட்டு. சாப்பிடுகிற அந்தச் சாப்பாட்டுக்காக மட்டும் தூங்கிக் கொண்டு கிடக்கிற அந்தச் சீவனை. வயிறு காயப்போடுறதா..? இது எவ்வளவு பாவம் எனக்கு? எதையும் எனக்குத்தா என்று வாயாலகூடக் கேக்காத ஆத்துமாவுக்கு இப்புடியெல்லாம் நாங்கள் செய்யிறதா.?”
என்று நினைக்கவும் அவளுக்கு அப்போது ஏனோ அழுகை
eugs stsövaðissá O 75 O

Page 44
அழுகையாக வருகிற அளவில் இருந்தது. பெஞ்சமின் வீட்டுக்கு வந்த நாள் முதல், அவன் சாப்பிடுகிற சாப்பாட்டுக்கு திரேசா ஒரு பொழுதும் வஞ்சனை செய்ததில்லை. பெஞ்சமின் உடலால் நன்றாகக் கஷ்டப்பட்டும் வேலை செய்வான். அது போலவே சாப்பாட்டிலும் விட்டுக்கொடுக்காத அளவுக்கு நன்றாக அவன் சாப்பிடுவான். இதன்பொருட்டு சிமியோனுக்கு பெஞ்சமின் மீது ஆத்திரம்தான். போடப்போடத்தின்னி' - இவன நான் வீட்ட கூட்டிக்கொண்டுவந்து வைச்சிருக்கிறதால என்ரபாடும் இப்ப நட்டமா வரும்போலக் கிடக்கு. யானையைக் கட்டி வைச்சுக்கூட தீனி போடலாம். ஆனா இந்த அசுரன வீட்டில நான் வைச்சுச் சாப்பாடு போடுறதெண்டால் ஏதும் நெல்லு ஸ்டோரை உடைச்சுக் களவா மூடையள அள்ளிக்கொண்டந்தாத்தான் கட்டுப்படியாகும் போல.?”
என்று பெஞ்சமின் வீட்டில் இல்லாத போது சிமியோன் திண்ணைக் குந்தில் இருந்து தன்பாட்டுக்குத் திட்டிக்கொண்டிருப்பது திரேசாவின் காதுகளிலும் விழத்தான் செய்தது. இந்த வீட்டிலே பெஞ்சமினை தன் கணவர் சேர்த்து வைத்துக்கொண்டிருப்பது லாபமா, நஷ்டமா என்பது திரேசாவுக்கு நன்கு விளங்கும்.
பெஞ்சமின் தைரியமான நான்கு ஆண்கள் செய்கிற வேலையைக்கூட குறித்த நேரத்தில் தனித்து தான் ஒருவனே நின்று செய்வான். அவனோடு நாலு பேர் விறகு கொத்தினால் களைத்துக் கை ஓய்ந்து போய்விடுவார்கள். ஆனால் அவன் மட்டும் ஆழப்பதிந்த முளையென அசையாது அலட்சியமாக நிற்பான், கையில் கோடாலியைப் பிடித்துக்கொண்டு.
சவக்காலையில் பிணக்குழி வெட்டுகிற வேலையிலும் அவன் அப்படித்தான்! அந்தப்பக்கம் உள்ள மண் பாங்கே இறுகிய கிரவல் மண்படை சவக்காலையைச்சுற்றி எல்லா இடத்திலும் ராட்சத மரங்கள். அப்படியான இடத்தில், நடுவாலே வேர் போகும் இக்கட்டிலயும் குழியை சவப்பெட்டி சவக்காலைக்கு வந்துசேர முதல் வெட்டி முடித்துவிடுகிறானே என்று எல்லாருக்கும்தான் ஆச்சரியம்! அவன் வெட்டுகிற குழியை சவப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு அங்கு வருகிறவர்கள் பார்த்துவிட்டு,
“சுற்றியும் ஒரு முள்முரடு இல்லாமல் என்ன அழகான குழி” என்பார்கள். அதோடு “பெட்டிக்கு அளவு கணக்காக, உள்ளே நேர்த்தியாக அதை இறக்கி வைக்குமளவிற்குத் திறமையாகவும் வெட்டியிருக் கிறான்.” என்றெல்லாம் அவனுக்குப் பாராட்டும் கிடைக்கும். அதற்காக சாராயம், வெற்றிலை, பீடி, என்று அவைகளையும் செத்தவீட்டுக்காரர்கள் அவனுக்குக் கொடுப்பார்கள். அவனுக்கு அவர்கள் கொடுக்கிற பொருட்களிலே பீடி’ மட்டுமே தேவை. அதை О 76 О ž.б.зtуетстўАš

அவன் எடுத்துக்கொள்வான். மற்றதெல்லாமே சிமியோனுக்குத்தான். ஆனால் சிமியோன் குடிப்பதில்லை. அவன் பெஞ்சமினுக்குக் கிடைக்கிற சாராயத்தைத் தான்வாங்கி, அதை விற்றுக் கையில் காசாக்கிவிடுவான்.
“இப்படியெல்லாம் தன் உழைப்பு முழுவதையும் சிமியோனிடமே கொடுத்துவிட்டு, சோத்துக்காகவே தூங்கிக்கொண்டு கிடக்கும்
அவனுக்கு வஞ்சனை செய்வது எவ்வளவு மகா பாவம்?"
என்றெல்லாம் அப்பொழுது அவள் அவனைப்பற்றிச் சிந்தித்தாள். “இந்தச் சிந்தனையெல்லாம் வழமையிலும் விட பசளையிட்ட பயிர்போல ஏன் என்னிடம் செழித்து இலைகள் விடுகின்றன?” என்ற கேள்வியும் அவள் மனதில் எழுந்தது.
சாதாரணமாக ஒரு மனிதனது செயற்பாட்டில் ஏதோ ஒரு விதத்தில் சுயநலம் என்பது இருக்கத்தானே செய்கிறது. பொது நலம் என்ற விதத்தில் சேவையை செய்பவர்களிலும் அவர்களையறியாது சுயநல வேர்கள் வேரோடி விடுகிறதல்லவா?
ஒரு விதத்தில் பார்த்தால் பெஞ்சமினின் உடல் உழைப்பால் கிடைக்கும் ஊதியம் முழுவதையுமே சிமியோன் உறிஞ்சிவிடுகிறான். மறுபுறம் அவன் மனைவி திரேசா என்பவள், அவனைத் தன் தேவை ஒன்றிற்காய் வலையில் விழுத்தச் சதித்திட்டம் போடுகிறாள். ஆக இந்த இரண்டு பேருமே இரத்தம் குடிக்கும் அட்டையைப் போன்றவர்கள்தான்! இருவருக்குமுள்ள செயல்பாடு அந்தவிதத்தில் ஒன்றேதான்!
O
திரேசா குடிசை வாசலில் நின்றபடி திண்ணைப் பக்கமாகப் பார்த்தாள்.
அந்த ஓரச்சாய்ப்பான திண்ணையில் குந்தியிருந்தபடி பெஞ்சமின் வேலிக்கரையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"ஐயோ நான் படுத்துக்கிடந்தாப்போல அப்பிடியே நித்திரையாப் போனன் பெஞ்சமின்” என்று உறக்கம் தெளியாதவளைப்போல பேசினாள் திரேசா. அவளின் குரல் கேட்கவும், தனது வெற்று மார்பு அவளை நோக்கித் திரும்பி இருக்கப் பரிதாபமாக அவளின் முகத்தைப் பார்த்தான் அவன்.
“கொஞ்சம் பொறுத்திரு முட்டையெல்லாம் அவிச்சுப் பருப்புக்கறி காய்ச்சிக் கருவாடு பொரிச்சு, உனக்குச் சோறு போட்டுத்தாறன்.”
என்று புதுக்கதை ஒன்றையும் போட்டாள் அவள்.
rhyts-souaši--à O 77 O

Page 45
அவள் சொன்னதைக் கேட்க அவனுக்கு இன்னும் பசித்தது. வாயைத் திறந்தபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“கொஞ்சம் இரு என்ன. எல்லாத்தையும் பொரிச்சு அவிச்சு எடுத்து உனக்குத்தாறன் என்ன..?”
அவள் பிறகும் அப்படிச்சொல்லவும்தான், சந்தோஷத்தில் மெல்ல அவன் சிரித்தான். அவன் சிரிக்கிறான் என்பதைக் கண்டுபிடித்துக் கொள்வதே கஷ்டம்தான். அவன் முகத்திலிருந்து அவ்வளவுதான் வெளிப்படும். தடித்த சொண்டு விலகி ஒருபக்கம் இழுத்துக்கொண்டு நிற்க அதுவே அவனிடத்தில் எழும் சிரிப்பு என்பதாய் ஆரும் ஊகிக்கவேண்டும். பெஞ்சமின் சிரித்ததைப் பார்த்து திரேசாவும் அவன் சிரிப்பில் பங்குபெறுவதுபோல தானும் சிரித்தாள். வழமையாக அவனை ஒரு மரத்தைப் பார்ப்பதுபோலப் பார்ப்பவள் இப்போது பூவைப் பாக்கிற புத்துணர்ச்சியோடு அவனைப் பார்த்தாள். அவளுக்கு அவன் உருவத்தின் மீதுள்ள தன் இயல்பான வெறுப்பை மாற்றி அவன் மீது விருப்புள்ள ஆசையை வளர்க்கவேண்டும் என்ற சிந்தனை அலைமோதியது. அந்த மனமாற்றத்தோடு அவனைப் பார்க்கையில் சூரியனில் காய்ந்த அவனது தோள்கள் அவளுக்கு அழகுடையதாய்த் தோன்றியது. தில்லை நடராசக் கடவுள்போல் திறந்துவிட்ட இவன் மார்பும் வீரியமாகத்தான் இருக்கிறது என்று அதையும் அவள் நினைத்தாள். இங்கே வந்ததன் பிறகு உடம்பு திரண்டு திரண்டு’ இப்ப வடிவாகவும் இருக்கிறான்! என்றும் நினைத்தபடி, அவனை அதிலே நின்றபடி அவள் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் பெஞ்சமினோ, அவளைப் பார்த்துக் கதைத்துவிட்டுத் திரும்பி இருந்துகொண்ட பிறகு வேலிப்பக்கமாகவே தன் பார் வையை வைத்துக்கொண்டிருந்தான். அவனுக்குப் பசி ஒருபுறம் குடலைப்போட்டு விறாண்டினாலும், அது ஒன்றும் பெரிதாகப் படவில்லை. அவனுக்கு நாளாந்தம் வெயிலுக்குள் நின்று வேர்த்து வடிய வேலை செய்யவேண்டும். அதற்குப்பிறகு நன்றாக வயிறு கொள்ளுமட்டும் திருப்தியாகச் சம்பலுடனும்சரி சோறு சாப்பிட வேண்டும். அப்படியெல்லாம் இல்லாமல் ஒருநாள்பொழுது பூராகவும் இப்படியே சும்மா குந்திக்கொண்டிருப்பது அவனுக்கு வேப்பங்காய்க் கசப்புத்தான். இப்படியெல்லாம் இருப்பது அவனுக்குத் துளியளவுகூட விருப்பமில்லை. அந்தச் சோர்வுடன்தான் அவன் வேலிப்பக்கம் பார்த்துக்கொண்டிருந்தான். ஒரு ஓணானாகிலும் அந்த வேலியில் ஊர்ந்துபோகாதா என்ற பார்வையின் தேடலோடு அவன்.
திரேசா சமையலுக்கு இனி ஆயத்தப்படுத்த வேண்டுமென்ற அவசரத்தோடு விடுவிடுவென்று குடிசைக்குள்ளே போனாள். அங்கே அடுப்படிப்பக்கம் பலகையை இழுத்துப்போட்டுக் குந்தியவள் O 78 O நீ.பி.அஞ்ளனந்தச்

மளமளவென்று சமையல் அலுவல்களைச் செய்யத் தொடங்கினாள். ஒரு அடுப்பில் சோற்றுப்பானையில் அரிசி வேகிக்கொண்டிருக்க, அடுத்த அடுப்பிலே எண்ணெய்த் தாச்சிவைத்து மிளகாய் வெங்காயம்போட்டு கருவாடு பொரித்தாள். பிறகு எண்ணெய்த்தாச்சியை இறக்கிவிட்டு பருப்புக்கறி வைத்தாள். நாலு முட்டைகளை முழு அவியல் பருவமாகவும் அவித்தெடுத்தாள். இவ்வளவுக்கும் பிற்பாடு இனி என்ன ஒரு கறியை விசேஷமாகச் செய்யலாம் என்று அவள் யோசித்தாள். ஆக்கிய கறிகளுக்குத் தோதாய் இன்னுமொரு சுவையான சுவை சேர்த்தால் நல்லது போல அவளுக்கு இருந்தது. அந்தச் சுவை காரமாக இருந்தால்த்தான் சோற்றையும் இழுக்கும். நாவுக்கும் சுவையாக இருக்கும், என்று நினைத்து மாசிச்சம்பல் இடிக்க மர உரலைத் துப்பரவாகத் துடைத்தாள். அவள் சம்பல் உரலில் இடிக்கத் தொடங்கிய நேரம் பொழுதுபட்டுக்கொண்டு வந்தது. அந்திப்புட்கள் கூடிப்பாடிக் கூடடையும் நேரமாகிவிட்டது. அவள் சம்பல் இடித்து முடிந்ததும் உள்ளே கைவிளக்கைக் கொளுத்தி வைத்துவிட்டு, வாசல் பக்கமாக வந்தாள். வெளியே பாதுகாப்புடன் உள்ள சிறிய வெளிச் சத்தையம் அழித்துக்கொண்டு இருட்டுப்பரவியிருந்தது. அவள் வாசலடியில் நின்றுகொண்டு.
“வா பெஞ்சமின் உள்ள வா. உள்ள வந்து இரு நான் சாப்பாடு போட்டு உனக்குத்தாறன்” என்று சொல்லி அவனை அழைத்தாள்.
அவனுக்கு “என்ன இன்று இப்படி இவள் ஒருநாளுமில்லாதவாறு என்னை உள்ளே வாவென்று அழைக்கிறாள்?” என்று ஆச்சரியமாகவிருந்தது. “வளமையாக இந்தத்திண்ணையில் இருக்கும்போதுதானே இவள் சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு வந்து என்னிடம் கொடுப்பாள்! இன்று உள்ளே என்னை ஏன் கூப்பிடுகிறாள்?” என்ற குழப்பத்திலும் தடுமாறிக்கொண்டு.
"இதில இருந்து சாப்பிடுறனே கொண்டந்து குடன்.?” என்று அவன்
சொன்னான்.
அவன் சொன்னதற்கு உடனே அவள்,
"இதில மண் விழும் காத்தடிக்குதில்லே உள்ள வடிவா இருந்து விளக்கு வெளிச்சத்தில ஆறுதலாச் சாப்பிடன்.?” என்றாள்.
“வேணாம். நான் இதில இருந்து சாப்புடுவன்.” என்று தன் முரட்டுப்பசியைத் தாக்குப்பிடித்துக்கொண்டு பக்கென்று பதில் சொன்னான் அவன்.
“வெளிச்சத்தில வந்திருந்தாத்தான் உனக்கு வேண்டிய கறியள
பாத்துப் பார்த்து நான் போடுவன்?” என்று அவள் பிறகும் அவனுக்குச் துயரச் சுஸ்ண்கள் O 79 O

Page 46
சொன்னாள். அவனுக்கு ஏற்கனவே "கருவாடு மணத்தையும் மாசிச் சம்பல் மணத்தையும் குடித்துக் குடித்துப் பசி ஏறியிருந்தது. அவள் கூப்பிடக்கூட ஏதும் பதில் அவளுக்குச் சொல்லிக்கொண்டிருந்தால் என் பசிக்கு அவள் சோறு தராமலும் விட்டுவிடுவாளோ? என்ற பயமும் அவனுக்கு வந்துவிட்டது. "மத்தியானம் இவள் சிமியோனிடம் போட்ட சண்டைக்கோபத்தை வைத்துக்கொண்டு, எனக்கும் ஏதாவது செய்துவிடுவாளோ?” - என்ற யோசனையாகவும் அவனுக்கு இருந்தது.
அவள் திரும்பவும் அவனை.
“வா பெஞ்சமின் உள்ள வா.” என்று மதுரமான குரலிலும் கூப்பிட்டாள் இப்பிடியெல்லாம் சாப்பாடு தனக்குத் தருவதற்காக அன்பொழுகக் கூப்பிடுகிறாளே இவள்!' - என்றதாக பிறகு அவன் நினைத்துவிட்டு அந்தத் திண்ணையிலிருந்து எழுந்து நின்றான். அவன் எழுந்து நிற்கிறதைப் பார்த்துவிட்டு அவள்,
“வா வா சாப்பிடு! ஆறப்போகுது நான் உள்ளபோய் சோத்தப் பீங்கான் தட்டிலயாப் போடுறன் உனக்கு.?” என்று சொல்லியவாறு உள்ளே போனாள். பெஞ்சமின் அவள் உள்ளே போகவிட்டு, அவளின் பின்னாலே குடிசைக்குள் போனான். அவன் இந்த வீட்டுக்கு வந்த நாளிலிருந்து இன்றைய நாள் வரையாக, அந்தக் குடிசைக்குள்ளே போனதே கிடையாது. அந்தக் குடிசைக்குள்ளே போக வேண்டிய தேவை அவனுக்கு இதுவரை இருந்ததேயில்லை. அவனுக்கு நாளும் பொழுதும் அந்த வெளித் திண்ணையிலேதானே சீவியம். அவனுக்கு அறிவு பூர்வமான வயது வந்த அந்த நாளிலிருந்து திண்ணையில் படுப்பதும் சாப்பிடுவதுமாகத்தான் காலம் கழிந்தது. அந்தப் பழக்கத்திலே காற்று வீசாத இடத்தில் படுத்தால் அவனுக்குத் தூக்கமே வராது. சாப்பிடவும் பிடிக்காது, இருக்கவும் பிடிக்காது அவனுக்கு! இதைவிட அவனுக்கு யாரும் தன்னோடு இருந்து கசமுசா என்று தொடர்ந்தாற்போல கதைப்பதும் பிடிப்பதில்லை. அவனுக்கு எந்நேரமும் வேண்டியது தனிமை ஒன்றுதான்! அதுதான் அவனுக்கு இனிமை! இப்படிப்பட்ட குணநலம் பொருந்திய ஒரு மனிதன்தானே அவன்!
குடிசைக்கு உள்ளே வந்து நின்ற அவனுக்கு திரேசா பலகை ஒன்றை எடுத்துத் தனக்கு முன்னாலே வைத்தாள். "இரு” என்று அவள் சொல்லவும், அவன் விளக்குச் சுடரைப் பார்த்துக்கொண்டு அந்தப் பலகையில் இருந்தான். அப்படிக் குந்தியிருந்துகொண்டு காலை மடித்து இருப்பது அவனுக்கு பெரிய கஷ்டமாகத்தான் இருந்தது.
O 80 O ரீ.பி.அருளரைத்தே

அவனுக்கு உடல் நல்ல வளர்த்தி வளர்த்திக்கேற்றமாதிரியான திரேக தாட்டியம். உலகளந்த பெருமாள் போல காலும் நல்ல நீட்டம். அந்தக்காலை மடித்து பலகையில் இருப்பது என்னவோ அவனுக் குக் கஷ்டமாகத்தான் இருந்தது. என்றாலும் அந்தக் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டு, அந்தரத்தில் இருப்பதுபோல அவன் இருந்தான்.
திரேசா அகப்பையை கையிலெடுத்து பானையில் உள்ள சோற்றைத் தட்டில் அள்ளிப் போட்டாள். அந்தப் பீங்கானில் கிடந்த சோற்றை, எருமை கண்களை இமைப்பது போல தன் கண்களை முடிமுடித் திறந்தபடி பெஞ்சமின் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் கறிச்சட்டி மூடியைத் திறந்தபோது, அந்தக் கருவாட்டுக்கறியின் மணம் அவன் மூக்கைத் திறந்துபோய் வயிற்றில் பசி அக்கினியை ஊதிப் பெருக்கி யது. இதனால் சாப்பாட்டு ஆசை ஆலமரம் போலப் பரவி நிற்க அவன் அவதிப்பட்டுக்கொண்டு நின்றான்.
திரேசா சட்டியில் உள்ள குழம்பை அகப்பையால் ஒதுக்கி வழித் தெடுத்துச் சோற்றின் மேல் செழிக்க ஊற்றினாள். அதன் பிறகு பருப்புக்கறியும் நிறையப்போட்டு மாசிச்சம்பலையும் குவியலாய்ப் போட்டாள். அவன் சோத்துப்பீங்கானைத்தான் இப்பொழுதும் வைத்த குறி வாங்காமல் பார்த்தபடி இருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும்.
“இந்தச் சந்தர்ப்பத்தை வைத்துக்கொண்டு தன் நோக்கத்தையும் ஒரு செய்கையின் மூலம் முதல் அத்திபாரமாக அவனுக்குப் புலப்படுத்தி விடவேண்டும்” - என்று ஒரு யோசனையும் மின்னல்போல் அவளுக்குப் புலப்பட்டது. அதை உடனே செயலாற்றவும் அவள் வெளிக்கிட்டாள். அவித்த முட்டைகளில் ஒன்றை எடுத்து சோற்றின் மேலே வைத்தாள். மற்ற இரண்டு அவியல் முட்டைகளையும் அவன் பார்த்துக்கொண்டிருக்க அந்தச் சோற்றுக்குள்ளே புதைத்தாள்.
திரேசா அப்படி முட்டையை சோற்றக்குள்ளே புதைப்பதைப் பெஞ்சமின் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அவளின் சாரமுள்ள குழ்ச்சித்திறன்மிக்க செயலை விளங்கிக்கொண்டு அதை மனதுக்குள் ரசிப்பதற்கு அவனுக்கு அனுபவமில்லை. அறிவுமில்லை. என்றாலும் திரேசாவுக்கென்றால் அவனது அறிவையும் செயல்பாட்டையும் பற்றிப் பூரணமாகத் தெரியும். இவன் அறிவுக்கேற்ற விதமாய் அவன் விளங்கிக்கொள்கின்ற அளவில் எப்படி ஒன்றைச் சொல்லவேண்டும், புரிய வைக்கவேண்டும்! என்ற தந்திரங்கள் யாவும் அவள் அறிந்தவள்தான். இது விஷயத்தில் அனேகருக்கு சாடைமாடையான சைகைகளைக் காட்டியே விஷயத்தைப் புரிய வைத்துவிடலாம். ஆனால் இப்படி ஒரு மரம் போன்ற மனிதனுக்கு
துயரச் சுச0uண்கள் 0 81 O

Page 47
அனாவிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டுமென்ற மாதிரி அவள் நினைத்தாள். அதனால் சோற்றில் முட்டையைப் புதைத்த பிற்பாடு அவனைப் பார்த்து, “இப்புடியெல்லாம் மறைச்சு ஒழிச்சு உனக்குத்தாறது உன்னில இருக்கிற அன்பிலதான்! அது தெரியுதுதானே உனக்கு இப்ப.” என்று அவளை
அவள் கேட்டாள்.
அவனுக்கோ அவள் சொன்னது ஒன்றும் சரியாக விளங்கவில்லை. ஆனாலும் "அன்பாகத் தன்னிடம் பேசுகிறாள்! இன்று விஷேசமான சாப்பாடும் தனக்குச் சமைத்துத் தருகிறாள்!” என்று நினைத்துக் கொண்டு சந்தோஷத்தோடு அவளைப் பார்த்தபடி தலையை ஆட்டினான்.
"ஆனால் நான் உனக்கு ஒண்டு சொல்லுறன். அதைக் கவனமாகக் கேட்டு நட?” என்று திரேசா வேண்டுமென்று தன் குரலில் ஒரு நடுக்கத்தை வரவழைத்துக்கொண்டு அவனுக்குச் சொன்னாள்.
அவனுக்கோ அவள் ஏன் அப்படித் தனக்குச் சொல்கிறாள் என்று ஏதும் புரியவில்லை. அவள் பயப்படுவதைப்போல தளர்ந்து இளகிய குரலில் சொல்லியதில், அவனுக்கும் பயப்பீதி பிடித்ததைப்போல ஆகிவிட்டது. வழமையான வாய் திறத்தலோடு, அவளின் விழிகளைப் பார்த்தான். ஏதும் விபரீதமா? என்று அவளைக் கேட்கின்றதைப்போல அவனின் பார்வை இருந்தது. திரேசா அவன் நிலைமையைப் புரிந்துகொண்டு மீண்டும் அவனை பழைய நிலைமைக்குக் கொண்டுவர, தன் முகத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டு சிரித்தாள்.
அவள் சிரிக்கின்றதைப் பார்த்துவிட்டு அவனுக்கும் வழமையாக அவனிடத்தே இருந்துவரும் அந்தச்சிரிப்பு வெளிப்பட்டது.
இதுதான் தருணம் என்று நினைத்துக்கொண்டு திரேசா சொன்னாள்.
"உன்னில உள்ள அன்பாலதான் நான் இதையெல்லாம் செய்யிறன்..! இதைப் போய் நீ ஆருக்காவது வெளியாலயோ எங்கயோ சொன்னி யெண்டா நான் பேந்து சத்தியமா உயிரோட இருக்கமாட்டன். செத்துப் போடுவன்!"
அவள் சொன்ன சொல் என்ன சாதாரணமான ஒரு சொல்லா. எவ்வளவு கொடுமையான செயல் அதற்குள் இருந்து வெளியே தலைநீட்டுகிறது. செத்து விடுவாளாமே..? இவள் ஏன் சாகவேண்டும்.? அப்படி என்ன அவளுக்கு இப்போ கெடுதி வந்திட்டுது.? ஒருவருக்கும் இதைச்
O 82 O ரீ.பி.அருணானந்தே

சொல்லாதே என்று சொன்னால் அதற்குள் இருக்கின்ற மர்மந்தான் என்ன..? என்று இப்படியாயெல்லாம்தானே அவன் தனக்குள் யோசித்துப் பார்க்கவேண்டும்? ஆனால் இவனுக்கோ அந்தப் பகுத்தறியும் சிந்தனை விரிவடைந்ததாய் இல்லை.
ஆனாலும் தன்மேல் அன்பு உள்ளதாய் கவலையும் படுகிறாள் என்ற அளவில் மட்டும் அவன் நினைத்துக்கொண்டான். அவள் சொன்னதில் ஒரே ஒரு சொல் மட்டும் அவன் நெஞ்சைப்போட்டு உறுத்தியதாக இருக்கவேண்டும்.
"நீ சாகாத சாகாத.?”
அவனுக்கு திக்குமுக்காடி சொற்கள் குழறிவந்தன. கண்களுக்குக் கீழே சின்ன நீர்க்கலம் தளும்பியது. அவன் படும்பாட்டைப் பார்த்து தனக்கு ஒரு விதத்தில் வெற்றி கிடைத்ததாகத்தான் திரேசா நினைத்தாள். அவளுக்கு மனதுக்குள் சந்தோஷமாக இருந்தது.
"நான் ஒண்டும் சாகமாட்டன். ஆனா நான் சொல்லுற மாதிரி நீ கேட்டு நடக்கவேணும்? இப்ப நீ சோத்த வடிவா சாப்பிடு பசிக்கும் உனக்கு.?” என்று சொல்லியபடி சோத்துப் பீங்கானை அவன் இருந்த பலகையின் அருகில் அவள் எடுத்து வைத்தாள். அவனுக்கு அருகே சோத்துப் பீங்கான் வைக்கப்பட்டதும் சற்றுமுன் நடந்த நிகழ்வுகள் யாவையும் பெஞ்சமின் மறந்துவிட்டான். அவனது கையும் வாயும் தட்டிலுள்ள சோறு கறிகளை காலிசெய்யும் நோக்கில் பரபரப்பாக இயங்கத்தொடங்கிவிட்டன. அவனது அகோரப்பசிக்கு அந்தத்தட்டில் கிடந்த சோறும் கறியும் எந்த மூலைக்குத்தான் காணும்? அவன் தின்னுகிற சுறுக்குக்கு சில நிமிடங்களில் தட்டிலுள்ள உணவு காலியாகிவிட்டது. திரேசா இரண்டாவது தடவையும் சோறு போட்டு குழம்பு ஊற்றி அவனுக்கு வைத்தாள். இந்தத்தடவையும் சோற்றை அவன் மிருகப் பரபரப்புக்குடியேறிய விதத்தில் இரண்டு கன்னமும் 'உப்ப உப்ப சோற்றை அள்ளி வாயில் அடைத்தபடி சாப்பிட்டு முடித்தான். நல்ல ருசிப்பான மணமுள்ள கறிசோறு என்று இன்று அவனுக்கு இருந்ததால் நாவிலும் ருசி தட்டிவிட்டது. அவனது நிலையைக் குறிப்பால் உணர்ந்து கொண்டாள் திரேசா. அதனால் அடுத்த முறையும் தனக்கென்று மிகுதியாயிருந்த சோற்றை அவனுக்கு அவள் தட்டில் போட்டுக் கொடுத்தாள். அவன் எல்லாவற்றையும் தின்றுவிட்டு ஏவறை விட்டான். அவனுக்குப் பசியுடனுள்ள பசு பசும் புல்லை வயிறுமுட்ட மேய்ந்தது போன்ற உடல் ரீதியான நிறைவு! பசி விலகி சுகம் பெற்ற இன்பம்!
மனநிறைவோடு திரேசாவின் முகத்தை அவன் ஏறெடுத்துப் பார்த்தான்.
setugið -sovaks-ö O 83 O

Page 48
அவன் அப்படித் தன்னைப் பார்க்கும்போது, தன்னுடைய பார்வையை அவனுக்குத் தரம்பிரித்துக் காட்டினாள் திரேசா. ஆனாலும் அவளது முயற்சியானது அவனிடத்தில் பயனளிக்கவில்லை.
இதனால், தன் மனக்கருத்து ஒருக்கால் மரத்துப்போகும் நிலைக்குக்கூட வந்துவிடுமோ..? என்றும் அவள் ஒரு கணம் மனம் தளர்ந்தாள். ஆனாலும் தன்நம்பிக்கையை அவள் முற்றாக இழக்கவில்லை! இந்த யோசனைகளில் அவளுக்கு இருந்த பசி எங்கு மறைந்தது என்பது போல ஆகியும்விட்டது. அவள் தன் வயிற்றுப் பசியை மறந்து காரியப் பசியைத் தீர்த்துக்கொள்கிற செயலிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தாள்.
O
பெஞ்சமினுக்கு அந்தக் கருணை மயமான கடவுள் கொடுத்த உறக்கம் வந்து கண்களைச் சுழற்றத்தொடங்கிவிட்டது.
"நித்திரை வருகுது எனக்குத் திரேசா. நான் போய்த் திண்ணையில படுக்கவா..?” என்று குழந்தைத்தனத்தோடு அவளைப்பார்த்து அவன் கேட்டான். அவன் கேட்டதிற்கு திரேசா உடனே எதையோ சொல்ல வாயெடுத்தாள். ஆனாலும் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவரவில்லை.
வெறும்"ம்" மென்ற சத்தம் மாத்திரம் எல்லாவற்றையும் விழுங்கியபிறகு அவள் வாயிலிருந்து வெளிவந்தது. பெஞ்சமின் அவளின் மெளனமான முகத்தைப் பார்த்துக்கொண்டு பலகையிலிருந்து எழுந்தான். அப்படி எழுந்து நின்ற கையோடு, குடிசைக்குள்ளாலே நடந்து வெளியே போய்த் தான் படுக்கிற திண்ணையில் சரிந்து படுத்துவிட்டான். நன்றாகச் சாப்பிட்ட களைப்பில் அவனுக்குத்துக்கம் கண்களை சுழற்றியது. கூச்ச இழைகளின் மெல் அசைவு கூட இல்லாதவன் போல அவன் நித்திரை கொண்டுவிட்டான்.
பெஞ்சமின் வெளியே போன பிறகு, திரேசா - தான் படுப்பதற்குப் பாயை உள்ளே விரித்துப் போட்டாள். அவள் நெஞ்சுக்குள் கணவன் காலையில் பேசிய பேச்சுக்களெல்லாம் அக்கினியாய்ப் படர்ந்தெரிந்து கொண்டிருந்தன.
அவளுக்கு விளக்கு வெளிச்சத்தையும் பிடிக்கவில்லை. அதைப் புறக்கணித்து எரியும் சுடரை வாயால் ஊதி அணைத்தாள். மொத்தையான இருள்ப்போர்வையில் மயங்கிப் போனது குடிசை அவள் காலால் பாயைத் தட்டிப்பார்த்து அதில் போய்ப்படுத்தாள். அவளுக்கு நித்திரையே வரவில்லை. நேரஞ்செல்லச்செல்ல அவளுக்கு நரகப்புரளலாகவே இருந்துகொண்டிருந்தக. மார்பும் விம்மி விம்மி O 84 O ரீ.பி.அருணனந்தே

பெருமூச்சு விட்டபடியாய் இருந்தது. மறுபடி மறுபடி அந்த ஒரே நினைவே அவளது கருத்தில் உதைத்தது. அதனால் அவளது உடம்பு கொதித்தது. இரைதேட நாகம் நெளிவதுபோல பாயில் கிடந்து நெளிந்தாள்.
“வெளியே போபோ”என்றவாறுஅவள்மனம்சொல்லிக்கொண்டிருந்தது. படுத்தகிடையிலிருந்து எழுந்து இருந்தாள். எழுந்து இருந்த கையோடு அவிழ்ந்து குலைந்தது கூந்தல், அவள் கூந்தலைக் கோதி முறுக்கி உச்சிமீது ஏற்றிக்கொண்டையாய் முடிந்தாள். "திண்ணைப் பக்கமாகத்தான் நான் இனிமேல் போகவேண்டும்” என்ற அந்த நினைப்பு அவள் மூச்சுப்போல சுவாசமாகிவிட்டது.
அவள் உறக்கப்பாயில் இல்லை! பூரான் நகர்வில் தவிப்போடு குடிசை வாசல் பக்கம் போனாள். தட்டிக் கதவை மெல்லத்திறந்துகொண்டு வெளியே பார்த்தாள். வெளியே கரும் இருட்டாய் இருந்தது. அந்த இருட்டுக்குள் கண்களை நட்டுக்கொண்டு சிறிது நேரம் அதிலே நின்றாள்.
அவளுக்கு மூச்சு சூடாக இருந்தது. திண்ணைப்பக்கம் பார்த்தாள். ஒரு துறவு நிலையில் தன்னைச் சுருட்டிக்கொண்டு படுத்துக்கிடப்பது போல் உறக்கப்பாயில் சிமியோன் கிடந்தான். அவன் நல்ல நித்திரையிலும் எண்ணெய் புரளாத பறபறத்த தலையை சொறிந்துகொண்டு கிடந்தான்.
அவள் திண்ணைப்பக்கமாக போக கால் எடுத்து, முன்னாலே வைக்க முயன்றாள். ஆனாலும் அந்த ஒரு அடிக்கு மேலே மறு அடி எடுத்துவைக்க அவளால் முடியவில்லை. அந்த அளவுக்கு அவள் உடல் நடுக்கம் கண்டது. முகத்தில் வியர்வைத்துளிகள் அரும்பின. இதயம் பெரிதாக அறைய ஆரம்பித்தது. முதுகுத்தண்டில் ஒருவித திடீர்ச்சிலிர்ப்புத் தோன்றி மறைந்தது. “ஏதோ விபரீதமான செயலைச் செய்யப்போகிறாய் நீ?” என்பதாக அவளது மனச்சாட்சி அவளை உறுத்தியது. தான் தாழ்ந்து தாழ்ந்து ஒரு சகதியில் அமிழ்வது மாதிரியாகவும் அவளுக்கு இருந்தது.
திண்ணைக்குக்கீழே பளிச்சென்ற ஒளியுடன் இரு கண்கள்! என்ன அது? என்று உற்றுப் பார்த்தாள். கனமான பூனைக்குரல்! “ங்கியாவ்" என்று அதட்டியது. அவள் உடனே முன்வைத்த தன் காலை பின்னெடுத்து உடனே வைத்துக்கொண்டு, மண்படியிலே நின்றுவிட்டாள். முன்னால் உள்ள வேலியில் மின்மினிப் பூச்சிகள் நெருப்புப்போல பறந்து கொண்டிருப்பது அவள் கண்களுக்குத் தெரிந்தது. அவளுக்கு மனம் கிலேசித்தது. அந்த அவளது மனக்கிலேசத்தை எங்கோ அலறிக் கொண்டு பறந்த ராக்குருவி அதிகரித்தது. அவள் உடனே குடிசைக்குள்
துயரம் கசப்பண்கள் O 85 O

Page 49
திரும்பிவந்து பாயில் படுத்துவிட்டாள். எங்கும் ஒரு சத்தமுமில்லாமல் அமைதியாயிருந்தது. அப்பொழுது சன்னமாய்க் காற்றெழுந்து இலைகள் சலசலத்தன. பிரிவில் இரைச்சலோடு சவக்காலைத் தெருவில் ஒரு சயிக்கில் போய்க்கொண்டிருந்தது. அவள் உடலைச் சுருட்டிக் கயிறுபோல சுருட்டிக்கொண்டு நித்திரையில்லாமல் பாயில் கிடந்து புரண்டுகொண்டிருந்தாள்.
f0
சவக்காலைக்குப் பக்கத்திலே மரணம் கொண்டதுபோல அமைதியாக நிற்கிறது அந்தப் பெரிய மரம். அந்த மரத்துக்கு அருகே இலைகளின்றி கொப்பும் குச்சியுமாய் மொட்டைத் தவக்கோலம் தரித்திருக்கும் கொண்டல் மரமொன்றும் நிற்கிறது. இவையெல்லாம் அவ்விடத்தில் மனிதர்களின் அழுகுரல்களைத் தவிர வேறு என்னத்தைத்தான் கேட்டிருக்கும்? அனேகமான பொழுதுகளில் அவ்விடத்தே ஆளில்லை, அசைவில்லை, எல்லாமே இல்லாது போனாற்போல தோன்றும் அந்த இடத்தில் சத்தமும் கேட்பதில்லை. ஆனாலும் வெளியாகக் காணப்படும் அந்த இடத்தில் எப்பொழுதும் பகல் வேளையிலே வெளிச்சம்மாத்திரம் இருந்துகொண்டே இருக்கும்.
அப்படியான சூழ்நிலையுடைய இந்த இடத்தில்தானே செல்வநாயகம் என்கிற இவனும் காவல் காக்கிற வேலையை தொடங்கியிருக்கிறான். வெடிமருந்து சேமித்துவைத்துள்ள இரும்புக் கதவுகள் போட்ட இந்தக் கூடத்திற்கு இப்போது காவலாளி இவன்தான்!.
இந்தக் கூடத்திலுள்ள பொருட்களெல்லாம் கச்சேரி நிர்வாகத்தினர் பொறுப்பில்தான் இருந்தன. 'கிணறு தோண்டும்போது எதிர்ப்படும் கற்பாறைகளை உடைப்பதற்கோ, அன்றி வீடுகள் கட்டுவதற்கான கருங்கற்களின் தேவைகளுக்கோ, பாவனையாளர்கள் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் கச்சேரி நிர்வாகத்தினர் வெடிமருந்துகளை அவர்களுக்குக் கொடுப்பார்கள்.
காலப்புழு செய்த வேலையைப் பார்த்தால்.
வில் போன்ற சிமெந்துக் கூரை வடிவத்தையுடைய இந்த மருந்துக் கூடமானது எப்போதோ அமைக்கப்பட்டதாயிருக்கும் பழையதான கட்டடம்தான்! அதன் அமைப்பைப் பார்த்துவிட்டு எந்தக் காலத்தில் இது கட்டப்பட்டது? என்ற தடுமாற்றம் யாருக்கும் நினைவில் எழுவதில்லை! காரணம், அதைப்போல பல தினுசான கட்டடங்களெல்லாம் இதற்குக்
O 86 O ரீ.பி.அருணானந்தர்

கொஞ்சத்துரம் தள்ளியுள்ள விமான ஓடுபாதைப் பக்கமெல்லாம் காணக்கூடியதாகவே இருந்தன.
இரண்டாவது உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த காலமதில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களே இவைகள். அந்த யுத்த காலம் முடிவடைந்ததிலிருந்து இன்றுவரையான காலத்தைக் கணக்கிட்டால், அனேககாலங்கள் வரையில் கடந்தாகி விடவில்லையே?. ஒரு பேச்சுக்கு இரண்டு சகாப்த காலங்கள் என்றுதானே நாங்கள் இப்போது சொல்லிக்கொள்கிறோம். அந்தக் கடந்து போன காலங்களை கண்மூடி முழிக்க முதல் போய்விட்டது என்றுதானே நாங்கள் கதைக்கும் கதைக்குள்ளேயும் ஒரு கதை போல இப்போதும் சொல்லிக் கொள்கின்றோம்.
சவக்காலைக்குப் பக்கத்திலே ஒரு கொட்டிலில் இருந்து கொண்டு காவல் வேலை பார்ப்பவன் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை. ஒரு மனிதன் அந்தக் கொட்டிலில் இருந்து காவல் காத்துக்கொண்டு ஏகாந்தமாக வாழ்க்கை நடத்துவ தென்றால் அது எவ்ளவு சிரமமாக இருக்கும்? இந்தச் சிரமங்களை சாதாரண வாழ்க்கை வாழும் ஒரு மனிதன் கூட அனுபவிப்பதற்கு முடியுமா? தன்பாட்டுக்கு எங்கும் இஷ்டம்போல சுயேட்சையாக சுற்றித்திரிவதிலும், சோம்பேறித்தனமாக சுகவாழ்க்கை நடத்துவதில்லும் பழகிய மனிதர்களால், இம்மாதிரித் தனிமையான ஒதுக்குப்பட்ட ஒர் இடத்திலிருந்து செய்யக்கூடிய இந்தக் காவல்கார வேலையில் எவ்வாறு மனம் பிடித்து இருக்க முடியும்?
ஒரு கதைக்குச் சொல்லப்புோனால், காவல் காரனாக வேலை பார்ப்பவர்கள் எல்லோருமே ஏறக்குறைய ஒரு கைதியைப் போன்ற நிலையில் உள்ளவர்கள்தான்! இப்படியான தொழிலைச் செய்பவர்கள் ஒரு சன்னியாசியைப் போலவோ, அன்றி முற்றும் துறந்த ஒரு முனிவரைப் போலவோதான் தங்களின் வாழ்க்கையை வாழ வேண்டும்.
இந்த விதமான ஒரு வாழ்க்கைதான் செல்வநாயகத்துக்கும் இன்று கிடைத்திருந்தது. அந்தக் காவல் கொட்டிலுக்குள்ளாலே இருந்து முன்னே வாசல் வழியாகப் பார்க்கும்போது, அவன் பார்வையில் பட்டுக் கொண்டிருப்பது சவக்காலை வெளியாகத்தான் எந்நேரமும் இருந்துகொண்டிருக்கும்.
இன்னும் பொழுதுவிடிந்த கையோடு அவன் அவ்விடத்தே பார்த்தபோது, கறுப்புப் பனை அடிமரம் மாதிரி ஒரு முரட்டு உடம்பான ஆள் சவக்காலைக்குள்ளே நின்று பிரேதக்குழி வெட்டிக்கொண்டிருந்தான். அவன் கறுத்துக் கனத்த தோள்களின் பூரிப்புக்கட்டும், மயிர்க்காடாய்
துயரச் சுண்பண்கள் 0 87 O

Page 50
விம்மிய நிமிர்ந்த மார்பும், அவனைத் திகைக்கச் செய்தது. அவன் போடும் ஒவ்வொரு மண்வெட்டிக் கொத்தலுக்கும் புளியமர வேர்ப் பகுதிகள் போல இறுகிய அவன் தசைகள் அசைந்தன. குழி வெட்டத் தொடங்கிய நேரத்திலிருந்து அவன் ஒய்வே எடுக்கவில்லை. அவன் அப்படியே தொடர்ந்தாற்போல வேலைசெய்து கொண்டிருப்பதை செல்வநாயகமும் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இவன் கொஞ்சநேரமாவது செய்கிற வேலையை நிறுத்திவிட்டு ஒய்வெடுக்க மாட்டானா?” என்கிற இரக்கமாகவும் அவனுக்கிருந்தது. ஆனால் அவன் எங்கேதான் ஒய்வு எடுக்கிற அளவில் இருக்கிறான். அவன் வேலை செய்து கொண்டிருந்த நேரம் மண்வெட்டியை உறுதியாக ஒரு கணம் நிற்கவைத்தான்.
"அப்பாடா இப்பவாவது ஓய்வெடுக்க வேலையை நிறுத்திக் கொண்டானே” - என்று இவன் நினைத்திருக்க. அவனோ, உள்ளங்கை யில் உமிழ்நீர் தும்பித்தேய்த்துப் படிமானத்தை உறுதிசெய்துகொண்டு மீண்டும் தன் வேலையைத் தொடங்கிவிட்டான். அவன் மீண்டும் தன் வேலையைத் தொடங்கிவிட அதைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு “இவன் ஒரு மனிதனே அல்ல "இயந்திரம். இயந்திரம்” என்றவாறாய் செல்வநாயகமும் தன் வாய்திறந்து சொல்லிக்கொண்டான். அவன் சொன்ன சொல்லுக்குத் தோதான ஒரு இயந்திரம் போலத்தான் பெஞ்சமினும் அதிலே நின்றுகொண்டு, மொத்தச் சக்தியையும் ஒன்று திரட்டி இறுகிய கிரவல் மண்ணை வெட்டிக் குழி எடுத்துக் கொண்டிருந்தான்.
காலை வெயில் ஏறிக்கொண்டிருந்தது. கலிரென்று சிரித்துக் கேலியடித் துக் கும்மாளம் போட்டுக்கொண்டு, நாலைந்து பெண்கள் வரை குளத்தடிப்பக்கம் போக அதாலே போய்க்கொண்டிருந்தார்கள். அந்தக் கும்பல் காவல் கொட்டிலடிக்குப் பக்கத்து வீதியாலே போன பிறகு, நாலைந்து சேரிப் பெண்கள் தங்களுக்கேயுரிய போர்க்குணத்தோடு வாய்வலியே இல்லாமல் வாய்ச்சண்டையில் ஈடுபட்டபடி குளத்துக்குக் குளிக்கப் போய்க்கொண்டிருந்தார்கள்.
சவக்காலையடிக்கு அப்போது சோணமுத்துவும் வந்தான். அவ்விடத்தில் வந்ததும் மதில் கரைஓரமாக நின்று சவக்காலைக்குள்ளே எட்டிப் பார்த்தான். அங்கே குழிவெட்டிக்கொண்டிருக்கும் பெஞ்சமின் இரும்பைப்போன்ற ஒரு மனிதன் என்பது அவனுக்குத் தெரியும். அவன் குணமும் இதுநாள் வரையிலாக அவனும் அறிந்துதான் இருந்தான். எனவே ஒரு சிந்தனை ஓட்டத்தோடு மதில் மேல் கையை வைத்தபடி, பெஞ்சமினையே சிறிது நேரமாய் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். தன் பக்கத்து சேரியில் உள்ளவர்கள் மாத்திரம் செய்கின்ற இந்த வேலைக்கு எதிரியாய் இப்போது இவன் வந்து எல்லாவற்றையும் O 88 O ரீ.பி.அருணானந்தல்

சிதறடிக்கிறானே..? என்று அவ்வேளையில் அவன் நினைத்தான். பெஞ்சமினோ தன்னைச் சூழ நடக்கும் எந்த நிகழ்விலும் கவனம் செலுத்தாது தன் வேலையிலேயே கவனம் செலுத்திக்கொண்டிருந்தான். குழி ஆழம்போக தோளுக்கு மேலாகவுள்ள அவன் உருவமே வெளியே தெரிந்தது. இந்த நேரம் கணக்கான சிறு பையனொருவன் அவனுக்கு ஒத்தாசையாய் வேலைசெய்ய அங்கே வந்து சேர்ந்தான். அவன் குழிக்குப் பக்கத்திலே நின்று பெஞ்சமின் கூடையில் மண்நிறைத்துக் கொடுக்க, அதை அப்படியே பக்கத்தில் குவியலாகக் கொட்டிக் கொண்டிருந்தான்.
சோணமுத்துவுக்குப் பெஞ்சமின் அப்படி தொடர்ந்து களைக்காமல் வேலைசெய்வது என்னவோ மனதுக்கு எரிச்சலாகவும் இருந்திருக்க வேண்டும். அவன் பெஞ்சமினின் கை மொத்தத்தைப் பார்த்துவிட்டு தன் கையையும் ஒருமுறை பார்த்துக்கொண்டான் இந்த மெலிந்த வளைவான கைக்கும், உருக்கு இரும்பால் செய்யப்பட்டதுபோன்று இருக்கும் அவன் உறுதியான தசைகள் திரளும் கைகளுக்கும் எவ்வளவு வித்தியாசம்? என்று நினைக்கவும் அவனுக்குச் சோர்வாக இருந்தது. சோணமுத்துவுக்கு 'உலகத்திலுள்ள எல்லாமே தனக்குக் கிடைக்க வேண்டும், தான் அனுபவிக்கவேண்டும்,' என்ற குணப்பாங்கு இருந்தது. தனக்குக் கிடைக்காதது மற்றவர்க்குக் கிடைக்கப்படாது என்ற பொறாமையிலும் அவன் மனம் எரிவான். அந்தப் பொறாமையில் அவன் ஏதும் கெடுதியும் மற்றவர்களுக்குச் செய்வான். சோணமுத்து அதிலே நின்று வானத்தை அண்ணாந்து பார்த்தான். அவனுக்கு எல்லையில்லா இயற்கையான அந்த நீல வானமும் மனதுக்குப் பிடிக்கவில்லை. கீழே பார்வையை இறக்கி அருகே உள்ள காவல் கொட்டிலைப் பார்த்தான். அவன் அங்கே பார்க்கும் வேளை செல்வநாயகத்தின் பார்வையையும் சந்தித்தான். செல்வநாயகத்தின் பார்வை ஒரு காவல் காரனின் துளைக்கும் பார்வையாக இருக்கவே சோணமுத்துவால் அதைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவன் தலையைக் குனிந்துகொண்டான். அவனுக்குத் தன்மீதே கோபமாய் வந்தது. எல்லாரிடமும் தான் தோற்றுவிட்டதுபோன்று மனவெப்பியாரமுமாய் அவனுக்கிருந்தது. மனவெறுப்பின் உச்சத்தோடு அவன் பார்வையை ஓட விட்டான். பாசிபிடித்துப் பச்சைநிறத்துடன் விளங்கும் அந்தச் சவக்காலைச் சுற்றுச்சுவர்களின் பொந்துகளில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிர்கள் இரவும் பகலும் ஒய்வெடுக்கும். அவன் பார்வை போனபக்கம் வெடித்த சுவருக்கு மேலே அப்போது ஒன்றன் மீது ஒன்றாய் ஓணான்கள் படுத்திருந்தன. மனிதர்கள் மேல் அவன் வைத்த குரூரம் மிருகங்களின் மேல் அவனுக்கு மாறியதாய்விட்டது. அவன் கீழே குனிந்து ஒரு கல்லைத் தேடிக் கையிலெடுத்தான். படுத்திருக்கும் ஓணான்மீது கல்லெறிந்தான். எறிந்த கல் ஒணான் இரண்டிலும் சரியாகப் போய்ப்பட்டது. அடிபட்டதும் ஓணான்கள்
துயரம் சுஸ்ண்கள் O 89 O

Page 51
இரண்டும் மதிலுக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டன. பிணைப்பு விடுபட்டு
ஒவ்வொரு திசைபார்த்து ஓணான்கள் ஓடின. குறிதவறாமல் கல்போய்
அடிபட்டது சோணமுத்துவுக்கு மனமகிழ்ச்சியாயிருந்தது. முகம் அவனுக்குக் குழுரமாய் மலர்ந்தது. தேன் சிட்டைப்போல சளைக்காத சீட்டியடிப்போடு உல்லாசமாக தன் தோள்களையும் அசைத்துக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அவன் அகன்று போனான்.
சவக்காலை மதிலுக்கருகில் நின்ற மரத்துக்குக் கீழே சரசரக்கும் சருகுகளை காற்றலை ஏற்றிச் சுழற்றிப் பாதையில் வீசிற்று. தூசி கண்ணிலும் வந்து விழ செல்வநாயகம் கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தான். குழி வெட்டப்படும் இடம் முஸ்லிம் - சமயத்தவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் சவக்காலைப்பகுதி என்பது அவனுக்குத் தெரியும். இன்று இறந்த ஒரு முஸ்லிமின் உடல் அங்கு புதைகுழியில் அடக்கம் செய்வதற்கு ஆயத்தப்படுத்தப்படுகிறது என்பதையும் அவன் அறிவான்.
அந்தச் சவக்காலையில் ஒவ்வொரு மதப்பிரிவினருக்கும் நடுநடுவே சுவர் எழுப்பி அவரவர்க்குரியதென பிரிக்கப்பட்டிருந்தன. இந்து' சமயத்தவர்க்கென்று ஒதுக்கப்பட்டிருந்த சவக்காலைக்கு அருகே றோமன் கத்தோலிக்கரின் சவக்காலையும் இருந்தது. இந்த இடத்திலே இறந்த மனிதர்களின் உடலை சாதி சமயம் என்று பாராது எங்கும் புதைக்கலாம் என்ற ஒரு கட்டுப்பாடின்றி இருந்தாலும், கிறிஸ்தவ சமயத்தவர்க்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அந்தச் சவக்காலை யில் மாத்திரம் பிற மதத்தவர்களின் இறந்த உடல்களைப் புதைப்பதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. காரணம் அந்தச் சவக்காலை யின் நிர்வாகமும் பராமரிப்பு எல்லாம் கிறிஸ்தவ கோயில் நிர்வாகத்திலேதான் செயல்பட்டன. இதனால் தனித்து அவ்விடம் மட்டும் கிறிஸ்தவர்களுக்கென்றே கண்டிப்பாக ஒதுக்கப்பட்டதாக சட்ட திட்டங்களுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
செல்வநாயகம் கொட்டில் வாசலில் நின்றபடி கிழக்குப் பக்கமாகப் பார்த்தான். பிரேதக்குழியிலுள்ள சிலுவைகளை மொத்தமாக ஜொலிக்க வைத்துக்கொண்டு, வெயில் அவ்விடத்தில் கடந்து போனதுபோல அவனுக்குத் தெரிந்தது. அந்தச் சவக்காலைக்கு உள்ளே புதைக்கப்பட்ட எல்லாப் பிரேதங்களும் மண்ணை நெஞ்சில் சுமந்தபடி படுத்துறங்குவது மாதிரி அவனுக்குக் கனவாக நினைவுகள் வந்து கொண்டிருந்தன. இறந்தவருடைய கருவிழியுற்ற வெள்ளைக் கண்களெல்லாம் அவனைக் கொட்டிலடிப்பக்கமாகத் தேடுவது போன்ற ஒரு காட்சியையும் அவன் நினைத்துப் பார்த்தான். உயிரில்லாத அந்த உடல் சட்டைகளெல்லாம் மண்ணுக்குள் இப்போது பாதி எலும்பு, பாதி பிணச் சதையாகவும் O 90 O. ரீ.பி.அருளரைத்தே

இருந்துகொண்டிருக்கும் என்று அதையும் நினைத்தான். இந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தால் இவைகள் போன்றவைகள்தான் ஒருவனின் நினைவில் வருமா? காணும் கனவிலும் இதனைத்தான் அதனால் காண வருமா? என்று இப்படியெல்லாம் அவன் சிந்தித்தான்.
எல்லா நினைவுகளும் கடும் கசப்பாய் அவனுக்கு இருந்தன. நான் யாழ்ப்பாணத்தில் இருந்தமாதிரியே இருந்திருக்கலாம். இந்த நுளம்புக்காட்டுக்குள் ஏன் வந்து சேர்ந்தேன்.?” - என்ற கேள்வியும் அவன் மனதுக்குள்ளே எழுந்தது.
செல்வநாயகத்தின் தந்தை தன் இளம் வயதிலேயே பிறந்த இடமான யாழ்ப்பாணத்தைவிட்டு மலேசியாவுக்குப் பிழைக்கவென்று போனவர். பிறகு அங்கேயே அவருக்கு வாழ்க்கையென்பது நிரந்தரமாகிவிட்டது. அந்நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள நாட்டுக்கூத்துக் கலைஞர்கள் மலேசியா சிங்கப்பூரிலும் போய், தங்களுக்கென்றே தனித்துவச் சிறப்பாயுள்ள நாட்டுக் கூத்துக்களெல்லாவற்றையும் போட்டார்கள். கூத்து ஆடப் போன கையோடு தங்கள் உறவினர்களையும் கண்டு கதைத்துத் திருமண சம்பந்தங்களையும் பேசி முடித்துக்கொண்டார்கள். இந்த வழியிலேதான் செல்வநாயகத்தின் தந்தைக்கும் திருமணம் நடை பெற்றது. அதன்பிறகு செல்வநாயகமும் மலேசிய மண்ணிலேதான் பிறந்தான். சங்கிலி கோத்த வரிசைக்கிரமமாக வருடங்களும் சென்றன. செல்வநாயகத்தின் தந்தைக்கு யாழ்ப்பாணத்துமண்ணை மறக்கமுடியவில்லை. ஒரு மனிதன் மனநிறைவோடு வாழ்வதற்கு மலேசிய நாடு என்னவோ எல்லா வகையிலும் சிறந்ததுதான்! என்பது அங்குதான் வாழ்ந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து செல்வநாயகத்தின் தந்தைக்கு அதுவெல்லாம் நன்கு தெரிந்தது. ஆனாலும் மனதுக்கும் உடலுக்கும் குணமளிக்கும் தான் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாணத்து மண்ணை அவரால் மறக்கவே முடியாததாய்ப் போய்விட்டது. மலேசியா தேசத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் யாழ்ப்பாண குடா நாட்டின் காற்று சுத்தமாக இருப்பதுபோல் அவருக்குத் தோன்றியது. அந்த மன மாற்றத்தோடு தன் மனைவியையும் தங்கள் ஒரேயொரு மகனையும் கூட்டிக்கொண்டு அவர் யாழ்ப்பாண மண்ணுக்கே திரும்பவும் வந்து சேர்ந்துவிட்டார். ஆனாலும் வந்ததுதான் வந்து சேர்ந்தார் பெருஞ்செல்வத்துடன் அவர் இங்கு வந்து சேரவில்லை. ஆகவே அவரது அன்றாட வாழ்க்கையையும் மிகவும் சிரமமாகத்தான் நகர்ந்தது. செல்வநாயகத்துக்கு அப்பொழுது பத்து வயதுதான் நிரம்பியிருக்கும். துருதுருவென்றுதான் அவன் சுறுசுறுப்பாயிருந்தான். அவன் யாழ்ப் பாணத்துக்கு வந்து சேர்ந்த பொழுது, மலேசியச் செழுமை gflug\šo aristvaŭas aŭ O 9 l o

Page 52
அவன் உடலில் தெரிந்தது. ஆனால் தாய்ப்பாஷை தமிழைப்பேச திக்குமுக்குப்பட்டுக்கொண்டு அதற்காக மலே பாஷையிலேதான் எடுத்ததற்கெல்லாம் தன் தாய் தகப்பனோடு கதைத்துக் கொள்ள இயலுமானதாய் இருந்தான்.
மலேயா’ பாஷையில் அவன் அங்கு கல்வி கற்றிருந்ததால், இங்கு வந்ததும் அதே பாஷையில் அவனுக்கு கல்வியைத் தொடர முடியாது போய்விட்டது. இங்குள்ள பாடசாலையில் பத்துவயது நிரம்பிய அவன் ஆரம்பக் கல்வியில் இருந்துதான் தன் படிப்பைத் தொடங்கினான். இதனால் வகுப்பிலுள்ள சக மாணவர்களினால் அவன் கேலிக்கும் பழிப்புக்கும் ஆளாகினான். இதையெல்லாம் அவனால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. கஷ்டப்பட்டு ஆறாம் வகுப்புவரை படித்துவிட்டு பிறகு படிப்பிற்கே அவன் முழுதாய் ஒரு முழுக்கப் போட்டுவிட்டான். அதன் பிறகு தன் படிப்பை வைத்துக்கொண்டு நல்லதொரு வேலை அவனுக்குத் தேடிக்கொள்ளமுடியவில்லை. மலேசியாவில் அவன் பிறந்த காரணத்தால் அரசாங்கத்தில் ஒரு சிறு வேலையில் சேர்ந்து கொள்வதற்குக்கூட அவனுக்குக் கஷ்டமாகவிருந்தது.
செல்வநாயகத்தின் தந்தையும் மகனுக்காக ஒரு நல்ல வேலையைத்தேடி நாளெல்லாம் அலைந்தார். படிப்புக்குறைவான மகனுக்கு நல்லதொரு உத்தியோகம் எப்படிக்கிடைக்கும். ஆனாலும் அரசியலில் செல்வாக்குள்ள ஒரு பெரிய மனிதரின் காலைக் கையைப் பிடித்துக் கெஞ்சியதுமாதிரி கேட்டுக் கொண்டதில், இந்த மாதிரியான ஒரு வேலையென்றாலும் செல்வநாயகத்துக்கு அமைந்தது. அந்த வேலையை ஏற்றுக்கொண்டு அவன் வவுனியாவுக்கு வந்தான். இந்த வேலையை ஒப்புக்கொண்ட சில நாட்களின் பின்பு, எல்லா விதமான மகிழ்ச்சியிலுமிருந்து தான் விடுபட்டுப் போய்க்கொண்டிருப்பதான மனச்சோர்வு அவனுக்கு. இந்த இடத்திலிருந்து அவன் சிந்திக்கும்போது மனித வாழ்வின் மரணம்தான் என்நேரமும் அவன் நினைவுகளில் நிழலாடுகின்றது. எத்தனையோ சித்தர்களும் ஞானிகளும் ஞானத்தைத் தேடிப்போன இடம் சுடுகாடுதான். அங்கே இருந்தால் மனதில் அமைதிவரும். வாழ்வு என்றால் என்ன என்ற கேள்விக்கு அங்கே சரியான விடை கிடைக்கும். மூச்சை அடக்கிப் பழகாமலேயே யோகம் கைகூடிவரும் இடமல்லவா இந்த இடுகாடு முன்னால் உள்ள இடுகாட்டைப் பார்த்துப் பார்த்து இவனுக்கும் ஒரு வகையில் அந்த ஞானம் என்பது அருட்டத்தான் செய்கிறது.
நேரம் போக்குவதற்கென்று அவன் சில வேளையில் எடுத்து வாசிக்கும் வாய் வீணையும், அவன் உடுப்புப் பெட்டிக்குள் கிடந்து தூங்குகின்றது. அது அவன் வாயில் பொருந்தும் வேளைகளில் காற்றோடு தன் உயிர்ப்புப் பெறுகிறது. குயில் கூவும் போது
O 92 O ரீ.பி.அருணானந்தரு

தன் காதுகளில் கேட்கவென்றேதானே கூவுகிறது? இவனும் அந்த வாய்வீணையைத் தான் கேட்டு அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தான் விரும்புகிற வேளைகளிலெல்லாம் எடுத்து வாசித்துக்கொண்டிருப்பான். தனிமையில் தன்னிடமிருந்து எழுந்துவரும் அந்த இசையில் தானே மயங்கி திரும்பத்திரும்ப அதைவைத்து வாசித்து அனுபவிக்கிற ஒரு சுகம்! தன்னையே நிலைக்கண்ணாடியில் பார்த்து அனுபவிப்பதுபோல.
அங்கே குழிவெட்டிக் கொண்டிருந்தவன் முற்றாக தன்வேலையை முடித்துக்கொண்டுவிட்டான் என்பதுபோல, செல்வநாயகத்துக்குப் பார்க்கும்போது தெரிந்தது. பெஞ்சமின் குழிக்குப் பக்கத்தில் நின்று அதன் ஆழத்தைப் பார்த்தபடி தாம்பூலம் போட்டுக்கொண்டிருந்தான். அவன் ஒய்வெடுத்த சிறிது நேரத்துக்குள்ளாலேயே மய்யக்கட்டிலுடன் சவஊர்வலம் சவக்காலையடிக்கு வந்துவிட்டது. வலிமை வாய்ந்த தோள்களில் மய்யக்கட்டிலை தூக்கிவந்தவர்களோடு சேர்ந்து ஊர்வலத்தில் வந்தவர்களெல்லாம் “லா இலாஹா இல்லல்லா! லா இலாஹா இல்லல்லா” என்று ஒன்றுசேர்ந்தாற்போல சொல்லிக்கொண்டு வந்தார்கள். மய்யக்கட்டிலை அடக்கஸ்தலத்துக்குக் கொண்டுவந்தவர்கள் குழிக்கு அருகே அதை வைத்தார்கள். வெள்ளைத் துணியில் பொதித்து மூன்று கட்டுக்கள் கட்டப்பட்ட பிண உடம்பை மய்யக்கட்டிலுக்குள் இருந்து எடுத்து குழிக்குள் வைத்தார்கள். யாரோ ஒருவர் மல்லாக்கத் திறந்த மய்யக் கட்டிலின் கதவுகளை மூடினார். கனமுள்ள அந்தப் பிண உடலுக்கு மூன்று பிடி மண் வீதம் எல்லோரும் துரிதமாக வாரியிட்டார்கள். இதன்பிறகு பெஞ்சமின் சவக்குழியை மண்போட்டு நிரப்பி மேலே குவியலாக அழுத்தித்திடப்படுத்தினான்.
எல்லா செயல்பாடுகளும் நிறைவேறியதுடன் சவக்காலைக்கு வந்தவர்களெல்லாம் அவ்விடத்தைவிட்டு அகன்றார்கள். ஆட்கள் திரும்பிப் பயணம் தொடங்கும் போது அவர்களின் கையில் காலியான மையக்கட்டில் இருந்தது. இப்படியாக சவக்காலையில் மேலும் ஒரு இறந்த மனித உடல், நான் இந்தக் காவல் கொட்டிலில் வேலைக்கென்று வந்த காலத்துக்குள் சேர்க்கப்பட்டிருக்கிறது. என்ற ஒரு யோசனையோடு செல்வநாயகம் தன்னிடமுள்ள அந்த வாய்வீணையை எடுத்து வாசிக்கத்தொடங்கினான்.
துயரச் சுச0uவீர்கள் O 93 O

Page 53
ss
செருமல்கள் இருமல்கள் ஒரு ஜீவ இயக்கத்துடன் சேரிப்பக்கம் பூரணமாக விழித்துப் பூரணமாக செயல்பட ஆரம்பித்து விட்டது. விடிந்து கொஞ்ச நேரம் போன கையோடு அனேகமான பெண்கள், பானைகளோடு தண்ணிருக்கென்று வெளிக்கிட்டுப் போய்விட்டார்கள். எல்லாம் அவனே துணை என்று கைகளையும் தலைமீது குவித்து வைத்து சூரியனைக் கும்பிட்டுக் கொண்டு லட்சுமிக் கிழவி குடிசை முற்றத்தடியிலே நிற்கிறாள். அவள் நின்ற இடத்துக்குக் கொஞ்சத்தூரம் தள்ளியதாய்ச் சில சிறுவர் சிறுமியர்கள், வினோதமான பூச்சிபுட்டரைகளைப் பிடித்துவைத்து விளையாடிக் கொண்டிருக் கிறார்கள். இறம்பைக் குளத்தில் துல்டில் போடுவதற்கு, பானை சட்டி கழுவும் சொத மண்ணில் குச்சிவைத்துக் கிண்டியவாறு மண்புழுவைத் தேடிக்கொண்டிருக்கிறான் ஒரு பையன். இந்தப் பக்கத்து சேரியில் வாழ்பவர்களோ அதை அண்மித்ததாயுள்ள அடுத்த சேரிப்பக்கத்தில் வாழ்கின்றவர்களாய் இருப்பவர்களோவென்று எவருமே அவ்விடத்தில் ரகசியக் குரல்களில் கதைப்பதென்பதே இல்லை. அந்தளவுக்கு எந்நேரமும் அந்த இடம் பைம்பலாகத்தான் இருக்கும். ஆனாலும் அங்கு வசிக்கிற யாக்கோப்பு' என்கிற பெயருடைய கிழவன் மட்டும், காதில் மஞ்சள் 'பூ' வைத்துக்கொண்டு பல்விளக்க நாயுருவி" பிடுங்கப்போகும் நேரம் மட்டும் யாரோடும் கதைப்பதில்லை. அதன் காரணம், பளிச்சென்ற பல்லுக்கு சரஸ்வதிகடாட்சம் பிறகு கிடைக்க மாட்டாதாம்! மூலிகையின் மகத்துவம் போய்விடுமாம்! இவ்வாறான ஒரு நம்பிக்கை அவனிடத்தில் சேரியில் உள்ளவர்கள் சிலரது வாழ்க்கை இப்படியேதான் தினமும் நடந்துகொண்டே போகிறது, எவ்வித மாற்றமுமில்லாமல்.
வெறுங்குடங்களுடன் தண்ணீருக்கென்று போன பெண்களெல்லாம் தண்ணீர்க் குடங்களைச் சுமந்தபடி வந்து கொண்டிருந்தார்கள். செவ்வந்தி குடிசைக்கு வந்து சேர்ந்ததோடுதலையிலும் இடுப்பிலுமுள்ள குடங்களின் சுமையோடு நின்று கொண்டு "படலையத் திறடி.” என்று தங்கைக்குச் சொன்னாள். ராக்காயிக்கு தான் கொண்டுவந்திருந்த ஒரு குடம்தான் இடுப்பில் சுமையாயிருந்தது. அதை நிலத்தில் இறக்கி வைத்துவிட்டு அவள் படலையைத்திறந்தாள். அவள் திறந்த படலைக்கு உள்ளே போன உடனே "இடுப்பில இருக்கிறத இறக்கடி.” என்றாள்! அவள் சொன்னதைச் செய்கிற பொழுதிலே ராக்காயிக்குத் தெரியும், தமக்கை இனி என்ன அவ்விடத்திலே செய்யப் போகிறாளென்று? அவள் நினைத்தமாதிரியே, செவ்வந்தி தான் கொண்டுவந்த குடங்களிலே ஒரு குடத்துத் தண்ணீரை, அப்படியே அங்குள்ள பூஞ் செடிகளுக்கெல்லாம் ஊற்றினாள்.
О 94 О ரீ.பி.அருளானந்தல்

“இம்மாந்துாரம் காவிக்கிட்டு வந்தத, முழுசா அப்பிடியே நிலத்தில விடுறியே அக்கா..?” என்றாள் அவள்.
“வெறும் நிலத்துக்காடி நான் ஊத்திக்கிறேன். பூஞ்செடிங்களுக்கு ஊத்திக்கிறது கண்ணக்குத் தெரியலியாடி உனக்கு?”
“தெரியுது தெரியுது..! என்ணாலும் நீ குடத்தில அரைவாசி தண்ணிய ஊத்திக்கலாம்தானே.?”
“ஏண்டி நான் சுமந்து வாற தண்ணிய நானு ஊத்திக்கிறேன் உனக்கேன்டி கிடந்து எரியுது..?”
“எனக்கொண்ணும் எரியல. ஆனா நாம தண்ணிக் கெண்ணுபோயி அந்த வீடுகளில எல்லாம் தூங்கிக்கிண்ணு நிக்கணுமே? அதை நினைச்சுத்தான் எரியுது. அதனாலதான் சொன்னேன்.”
"நீ சொல்லுறதும் நியாயம்தானுடி புள்ள..! எண்ணாலும் நான் நட்ட செடியளுங்க யேன் கண்ணுமுன்னாலயே வாடுமேம்மா..?”
"அக்கா உனக்கு அப்பீடீயொரு இரக்கம் தான்! எண்ணாலும் இதுங்கள நீ நட்டுவைக்காமலே இருந்திருக்கலாம்தானே.?”
“என்னுடி நீ சொல்லறா? இதுங்க பூக்கிறத பாக்கிறது உனக்கு விருப்பமேயில்லயா..? "இந்தப் பூக்களுங்கெல்லாமே பாரு அழகாயில்ல.?”
"அழகுதான், பெரிய அழகு.! நாம இருக்கிற நெலவரங்களுக்கு இது ஒரு தேவயா..?”
"ஏன்டி நாங்க எல்லாம் மத்தவங்கள மாதிரி மனுசங்களே இல்லயா..? எங்களுக்குண்ணு ஆசையே இருக்கக்கூடாதா..?”
"இருக்குதுதான் அக்கா. ஆசை எங்கிறது எங்களுக்கும் இருக்குதுதான்! ஆனா மத்த மனுசங்க மாதிரி நாங்களும் இங்க சீவிச்சுக்கிறமா..? நம்ம விரும்பிக்கிறபடியா எதையாச்சும் எங்களால செஞ்சுக்க முடியுதாக்கா..? இந்த இடத்துக்கிளயே நாம சுத்திக்கிட்டுத் திரியிறமே. நாம விரும்புறமாதிரி எங்கயாவது போய்க்க முடியுமா..? நாலு ஆளுங்களோட நாமளுமா சேர்ந்து நிண்ணு ஒண்ணப்பாக்க முடியுமா? தின்ன முடியுமா? என்னக்கா எங்கட வாழ்க்கை.?”
"அடி அம்மா இத்துணுாண்ணு இருந்துக்கிட்டு எத்தின பெரிய பெரிய
கதையுங்க யில்லாம் நீ இப்ப கதைக்கிறியேடி.? இதெல்லாமே ஆருடி உனக்குப் பேச அப்பிடியா சொல்லிக்குடுத்தா..?”
துயரச் சுண்பண்கள் O 95 O

Page 54
"எல்லாமே அந்த லட்சுமிக்கிழவிதான் எனிக்குச் சொல்லிக்குடுத்துச்சு எண்ணு வைச்சிக்கயேன்!”
"அத்தானே பாத்தேன்! இம்மாமுண்டு பெரிய பெரிய விஷயமெல்லாம் யிந்த யெடத்தில அந்தக் கெழவிக்குத் தெரியாம வேற ஆருக்குத்தான் தெரியும்.? சரிடி ஒன்கதையும் நீயும் இப்பிடியே தண்ணிக்குடத்தோட நிண்ணுகிட்டு நீயும் நானும் கதைச்சுக்கிட்டு நிண்ணா சமயல் காரியம் எப்புடி ஆகும்? வேளைக்கு அப்பேனும் வவுத்த கையால தடவிகிட்டு பசிக்குதுண்ணு வந்து நிண்ணுடப்போறாரே? அதுக்கு முன்னாலே வாவேன்டி காட்டுப்பக்கமா அங்கனேக்கயா போயி ஏதாச்சும் பாத்து புடுங்கிக்கிட்டு வருவோம்?” “என்ன புடுங்கணும் கிடுங்கணும் எண்ணுக்கிட்டிருக்காயுக்கா..? நீ இப்ப எங்க போவப்போறே எண்ணுக்கிட்டிருக்றே.?” “சவக்காலப் பக்கமா போயி காட்டுப்பாவக்கா புடுங்கி இண்ணிக்கி குழம்புக்கறி வச்சுக்குவமா..?” "அந்தப் பாவக்காயயா..? ஆக்! நெக்கவே தொண்டை வரையுமா கசக்குது.” "ஆமா உனக்குக் கசக்குது. எங்கப்பனுக்கு அதுதானே வாய்க்கு ருசிக்குது.” "ஏன் உனக்குங்கூடத்தானெண்ணு சொல்லேன் அந்த உண்மைய.?” "ஆமாண்டி எனக்கும் அது ரொம்ம விருப்பந்தான்.!” என்று சிரிப்போடு கலந்து சொன்னாள் செவ்வந்தி அவள் சிரிக்கிறதைப் பார்த்துவிட்டு. "அந்தக் கசப்பப் போயி எப்பிடீக்கா நீ ருசியிண்ணு தின்னுறா?” என்று மூக்கைச் சுருக்கினாப் போல வைத்துக் கொண்டு ராக்காயி அவளைக் கேட்டாள். "இனிப்ப நாம தின்னக்கிற மாதிரி கசப்பயும் திண்ணுக்கவேணும் எண்ணு கிழவி கூட சொல்லிக்கும் பாரு.?” "ம் அந்தக் கிழவி சொல்லிக்கிற மாதிரி நீயெல்லாம் சமைச்சுக்க வெளிக் கிட்டீண்ணா அப்புறம் சாப்பாடே வேணாமுண்ணும் போயிடும்”
“அடியாத்தே அப்புடீ வேணாமுண்ணு போனா நீ சாப்பிட்டுக்காம பட்டினி கிடப்பியாடி..?”
"நீ தினம் இப்புடியே சமையல் பண்ணிணிண்ணா சாப்பிட்டுக்க
O 96 O ரீ.பி.அருணானந்தர்

முடியுமா..? பட்டினிதானே நான் கிடக்கணும்.?”
"அடியே என் செல்லம்! அப்புடீல்லாம் நீ ஏண்டி பட்டிணி கெடக்கணும்? நான் உனக்கு இண்ணிக்கி பிடிச்சமான குழம்பும் ஆக்கிக்குடுக்கிறனே.?”
"எனக்கு என்ன குழம்புக்கா..?”
“கறுவாடு.!”
“அதா.”
“சிரிப்பப்பாரு.?”
"அக்காக்கிண்ணா இந்தத் தங்கச்சிமேல உசிருதான் என்னக்கா..?”
“இப்பிடியே தேனாய் பேசி ஒன் காரியம் முடிக்கிறதில நீ சமர்த்துத்தான்டியம்மா. நீ இப்பவா உந்தக் கொடத்தக் கொண்ணுக் கிட்டுப்போயி அடுப்பங்கரைப் பக்கமா வைச்சிட்டு வெரசா வெளியவா. நானு என் குடத்த இதில வைச்சுப்புட்டு நீ வருங்காட்டியா நிக்கிறேன். சீக்கிரம் வாம்மா கெளம்புவம் நேரமாகுதில்ல.?” என்று சொல்லி தங்கையை துரிதப்படுத்தினாள் செவ்வந்தி ராக்காயி அவள் சொன்னது போல தண்ணீர்க்குடத்துடன் குடிசைக்குள்ளே போய் விட்டாள். செவ்வந்தி தான் வைத்திருந்த தண்ணீர்க் குடத்தைக் கொண்டு போய் வாசல் பக்கத்தில் வழமையாக குடத்தை வைக்கின்ற இடத்தில் வைத்தாள். அவளுக்கு மனம் பூக்கன்றுகள் நிற்கின்ற இடத்துக்குப் போக இழுத்தது. அதற்காக அங்கே நின்ற அவள் பாலை மரத்துக்கு அருகாகப் போக நடந்து வந்தாள்.
செவ்வந்திப் பூப்பூத்து அவைகள் சந்தன நிறத்தில் சிரிக்கிறாப்போல இருக்கும் அழகே தனி
அவள் கொஞ்சம் போல சூரியனின் பொன்னிற ஒளி விழும் அந்த இடத்தில் நின்றுகொண்டு, முழுதும் விரிந்து பரிமளம்பரப்பும் அந்த மலர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பூக்களில் இருந்து வந்த சுகந்தத்தைத் தன் சுவாசத்தில் தொடர்வது, அவள் மனதுக்கு இன்பம் தரும் செயலாய் இருந்தது. அந்தப் பூக்களின் மேல் அழகிய கருவண்டைப் போன்ற அவள் விழிகள், பறந்து வட்டமிட்டன. கொஞ்சநேரம் பேச்சுே இல்லாத சுகம் அவளுக்கு.
ஆனாலும் அதே நிலையில் நின்று கொண்டிருந்த அவளை, தங்கை
அதிலே வந்தபோது கையைப் பிடித்து உசுப்பினாள்.
"அக்கா நீயும் ஒரு பூமரமா அந்தப் பூக்களைப் பாத்துக்கிண்ணு zugă sistuaiască o 97 O

Page 55
நிற்கப் போறியா..?” "நீ ஒண்ணுமே விளங்காத ஜடம்டி.”
"ஆமா எனக்கு ஒண்ணுமே விளங்காது உனக்கு மாத்திரம் இந்த உலகம் பூரான விஷயமெல்லாமே தெரியும்.”
"நீ வாயாடிடீ.?” "நா வாயாடி நீ வாயில்லாப் பூச்சி.!" "உன்னோட கதச்சுக்கேலாதடியம்மா..?” “கத கெடக்கட்டுமக்கா. வாக்கா போவம்.?”
"நீ படலயத் திறவண்டி..?”
"அதுவாட்டி இதிலயா நிண்ணு என்னத்த நீ பாக்கப்போறா இதுவளயா..?” அவள் பூக்களை தன் கையை நீட்டிக் காட்டினாள்.
"உன்னோட கதைச்சுக்கிட்டு நிண்ணா என் தலையே வெடிச்சிடும்டீ வா போய்க்குவம்.?” என்று சொல்லியபடி செவ்வந்தி தன் தங்கையின் கூடவே நடையைத் தொடர்ந்தாள்.
அவர்கள் இருவருமே அந்த வீதியால் நடந்துவந்து சவக்காலை இருந்த பக்கத்தை அண்மித்தார்கள். அங்கே காவல் கொட்டிலுக்கு அருகாமையிலுள்ள பள்ளமான வீதிவழியாக இறங்கி அவர்கள் நடக்கும்போது வாய் வீணையின் இனிய ஒலி அவர்களுக்குக் கேட்டது.
"யாருடி அது. இது ஊதிக்கிறது.?” என்று ஒன்றுமே அந்த விபரம் அறியாதவளாய்த் தங்கையைக் கேட்டாள் செவ்வந்தி ராக்காயி நிதானித்துச் சிந்தித்து எதையுமே சரியாக சொல்லிவிடக்
கூடியவள்.
"அந்தாளுதான், காவலாளி. ஏதோ வீண மாதிரித்தான் இருக்கும்.!”
அவள் சொல்லவும் அதைக் கேட்டுக்கொண்டு செவ்வந்தி அப்படியே நடையை நிறுத்திவிட்டு நின்றாள். தமக்கை அதிலே நிற்கிறதைப் பார்த்துவிட்டு? ராக்காயியும் ஒன்றும் பேசாது அதிலே நின்றாள். காவல் கொட்டிலுக்குப் பின்புறம் நின்று கொண்டிருந்த அவர்களின் காதுகளில், வீணையின் இனிய ஒலி ஒருமுறை தாழ்ந்தும் மறுமுறை உயர்ந்தும் அலைபோல வந்து பாய்ந்துகொண்டிருந்தது. O 98 O ரீ.பி.அருளரைத்தs

"திருவிழாவில கடேங்கள்ல நாம வாங்கி ஊதிக்குவம்பாரு அதுமாதிரித் தான் இருக்கணுமக்கா. ஆனா இது வேற. எப்பிடியா அந்த ஆளு வாசிக்கிறாரு கேக்க நல்லாயிருக்கில்ல.?”
"ஆமாடி நல்லாத்தான் இருக்கு. ஆனா இதில நாம நிண்ணுக் கிட்டருக்கிறத அந்த ஆளு பாத்தா எதுவாட்டியும் தப்பாவுமா நெச்சுக்குமே?”
"ஆமாக்கா நீ சொல்றமாதிரித்தான்! வா நம்ம அலுவல பாத்துக்குவம்?" என்று அவளும் சொன்னாள். அதன்பிறகு அதிலே நிற்காமல் இருவரும் அப்பாலே நடந்து போனார்கள்.
சவக்காலைப் பக்கமெல்லாம் குருவித்தலைக் காட்டுப் பாவக்காயின் கொடி படர்ந்துள்ள இடங்கள் நிறையவே இருந்தன. மெல்லிய காம்பில் பெரிய தொங்கட்டான் போல, சிறிய காய்கள் கொடிகளில் மறைவாகக் காய்த்துத் தொங்கியபடி இருக்கும்.இந்த முள்முள்ளான வடிவமுடைய பச்சைக் காய்களோடு மஞ்சள் பூக்களும் நிறையவே பூத்துக் கிடக்கும். கொடிகளை தூக்கிப் பார்த்துத்தான் காயைக் கண்டு பறித்திடலாம். காய்கள் பழுத்துப் போனால் மஞ்சள் நிறமாகவும் வந்து வெடித்துப் போய்க்கிடக்கும். செவ்வந்தி அவ்விடத்தில் காய்களைப் பறித்து எடுப்பதற்காக ஒரு பக்கம் கொடிகளைத் தேடிப்போனாள். ராக்காயியும் ஒரு பக்கம் அக்காவை விட்டுத் தனித்துப் போய்ப் பூத்துக்கிடக்கும் பாவற்கொடிகளை, கையால் உயர்த்திப் பார்த்து, அவைகளில் காய்த்துக்கிடந்த காய்களை பறிக்கத் தொடங்கினாள். அந்தப் பாவற் கொடிகளில் சில முட்செடிகளின்மேல் மூடிப் படர்ந்துகிடந்தன. இன்னும் சில அடர்ந்த பற்றைச் செடிகளிலும் கொடிவிட்டுப் படர்ந்திருந்தன. அக்கொடிகளெல்லாம் காட்டின் உயிர்ச்சத்தையே விழுங்கி வளர்த்திருப்பவைபோல, வண்ணப் பச்சையுடன் ஒரு வித தனித்துவமான அழகை கண்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தன.
கொடிகளைப் பார்த்துப் பார்த்துக் காய்களைப் பறித்துக் கொண்டிருந்த செவ்வந்தி, ஒரு இடத்தில் தரையிலே வலைபோல் பின்னலுடன் குவிந்துகிடந்த கொடியை கையாலே பிடித்து உயர்த்திப் பார்த்தாள்.
முடிக்கிடந்த அந்த கொடிகளுக்குக் கீழே ஒரு மனித மண்டையோடு, "ஈவ்” என்ற பல் இளிப்போடு, கண்களில்லாது - துவாரங்களோடு வெறுமையாகக் காணப்பட்டது. அதைக் கண்டவுடனே செவ்வந்தி "ஏவ்” - என்று குரல் எழுப்பியவாறுே முகம் சுழித்தாள்.
வெளியாலே புல்வெளியில் இருந்த மனித மண்டையோடுகள்
சிரித்துக்கொண்டு ஆங்காங்கே கிடக்கின்றதை அவ்விடத்தில் grქსJu\პ ფleზUakeთრtí O 99 O

Page 56
போகின்றவர்கள் வருகின்றவர்களெல்லாம் பார்க்கத்தான் செய்கிறார் கள். ஒரு காலம் அந்த மண்டைஓட்டுக்குச் சொந்தமாயிருந்த மனிதன் யாரோ? எப்படி எப்படியெல்லாம் இவர் வாழ்க்கையையும் அனுபவித்திருப்பார்? இப்போது இவர் சிரித்துக்கொண்டு இந்தக் குப்பை மேட்டில் காவல் கிடக்கிறார் என்றதாயும், அவைகளைப் பார்த்துவிட்டு சில வேடிக்கைக் கதைகளைக் கதைத்துக்கொண்டு அவர்களெல்லாம் அவ்விடத்தாலே போவார்கள்.
அதிலே கொடிகளை உயர்த்திக் காய்கள் இருக்கின்றதா என்று பார்த்த செவ்வந்தி, மண்டை ஒட்டைக் கண்டதும் திரும்பவும் அந்தக் கொடிகளை இருந்தமாதிரியே விட்டுவிட்டாள். மண்டை ஓடு ஒட்டி வைத்தாற்போலுள்ள சிரிப்போடு திரும்பவும் கொடிகளுக்குள்ளே மறைக்கப்பட்டுவிட்டது.
இவள் சத்தம் வைத்ததைக் கேட்டவுடன் திரும்பிப் பார்த்துக் கொண்டு “என்னக்கா” என்று பதறினமாதிரி ராக்காயி கேட்டாள்.
9
"இல்ல. இங்க இந்தக் கொடிக்குள்ளயா ஒரு மண்டை ஓடடி. என்றாள் செவ்வந்தி."
"அதைக் கண்டுட்டா இவ்வேளவு பயம்?"
"இல்லடி.” என்றுவிட்டு அவள் அடுத்த இடத்துக் கொடியைத் தேடிப்போனாள். அந்தப் பாவற் கொடி படர்ந்திருந்த அருகே மண் புற்றாயிருந்தது. பொசுபொசுவென்று இருந்த மண் தரையிலேயே மண் புற்றை மூடியும், குருவித்தலைப் பாவற்காய்க் கொடி செழித்ததாய்ப் படர்ந்திருந்தது. அவள் ஆசையோடு கொடிகளை கையால் தூக்கினாள். அந்தக் கொடியைத் தூக்கிய கையோடு உள்ளே இருந்து உஸ்’ என்ற இரைச்சலுடன் கண்ணாடி விரியன் பாம்பு வால் துடிக்கச் சீறியது.
செவ்வந்திக்கு சுருண்டுகொண்டு கிடந்த பாம்பைக் கண்டதும், சதுரமெல்லாம் நடுநடுங்கத் தொடங்கியது. அப்படியே வேர்த்து வெலவெலத்துப் போனாள். அவளுக்கு குழறவும் வரவில்லை. குதித்தோடவும் கால்கள் வரவில்லை. என்றாலும் ராக்காயி..!" என்று தங்கையை கூப்பிட்டுவிட்டு இங்கடி பெரிய ஒரு பாம்பு.!" என்றும் அவளுக்குக் கேட்க நடுக்கத்தோடு சொன்னாள். ராக்காயி தமக்கை பாம்பு என்று சொன்னதைக் கேட்ட கையோடு, அவள் நின்ற பக்கம் வர அரைவாசித்தூரம் ஓடி வந்தாள். "இங்கிட்டு பக்கமா வந்திடக்கா இங்கிட்டுப்பக்கமா நீ வந்திடக்கா.” என்று சொல்லியபடி, ஓடிவந்த நடு வழியிலே அவளும் பயத்தில் நின்றுவிட்டாள். செவ்வந்திக்கு கையிலிருந்த பையும் நழுவிக் கீழே விழுந்துவிட்டது. அவள் கொடிக்குள்ளாலே நெளிந்து ஊர்ந்தபடி வந்த பாம்பைப்
O 100 O ரீ.பி.அருளானந்தே

பார்த்துக்கொண்டு பின்பக்கமாக காலடிகளை வைத்து நகர்ந்தாள். கொடிக்குள்ளால் வெளிக்கிட்ட பாம்பு மொண்ணைத் தலையுடன் நெளிந்துகொண்டு சீறியது. செவ்வந்திக்கு அதைக் கண்டதும், பயத்தில் ரெத்தமெல்லாம் உச்சியில் உதைத்ததைப்போலிருந்தது. எங்கிருந்து அவளுக்கு அந்தத் துணிவு வந்ததோவென்று தெரியவில்லை. அவள் ராக்காயி நின்ற இடத்தடிக்கு ஓடிப்போனாள். அதற்குப் பிறகு அதிலே பேயடித்த மாதிரி நின்று கொண்டிருந்த தங்கையின் கையைப் பிடித்து அவளையும் இழுத்துக்கொண்டு, அருகே இருந்த அந்தக் காவல் கொட்டிலடிக்கு ஓடிப்போனாள். பயத்திலும் எங்கேயாவது இவ்வேளை பாதுகாப்பிற்காக ஒளிந்து கொள்ள வேண்டும் என்ற பதற்றத்திலுமாய், அவர்கள் இருவரும் ஓடிவந்த வேகத்தோடு அந்தக் கொட்டில் வாசலடிக்குள்ளே புகுந்துவிட்டார்கள். அந்தக் கொட்டில் மூலைக்குள் இருவரும் போய் நடுங்கியவாறு நின்றார்கள்.
திடுமென உள்ளே ஓடிவந்து நின்று கொண்டிருக்கும் அவர்களைக் கண்டதும்; செல்வநாயகமும் வாயில் வைத்து ஊதிக்கொண்டிருந்த வீணையை விலக்கி கையைக் கீழே விட்டுவிட்டு அவர்களைப் பார்த்தான். அழகான இந்தப் பெண் யார்? இந்தச் சிறுமி யார்? ஏன் இவர்கள் உள்ளே வந்து இப்படி நடுங்கியபடி நிற்கிறார்கள்? இவர்களை யாராவது துரத்தி வந்தார்களா? இல்லை எதையாவது கண்டு மிரண்டுபோய் பயத்தில் ஓடிவந்து இதற்குள் புகுந்திருக்கிறார்களா?. என்றதாய் அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை. அவனும் தான் இருந்து கொண்டிருந்த சாக்குக் கட்டிலால் எழுந்து உடனே நின்று கொண்டு செவ்வந்தியைப் பார்த்தான். “என்ன என்ன நடந்தது.?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்டான்.
"பாம்பு பத்தக்கயா இருந்து எங்களயா துரத்திச்சு.” என்று ராக்காயி செல்வநாயகம் கேட்டதற்குப் பதிலைச் சொன்னாள்.
"எங்க பாம்பு எங்க பாம்பு?" என்று கூறியபடி செல்வநாயகம் உடனே தன் கொட்டிலுக்குள் வைத்திருந்த பொல்லுக் கொட்டானை உடனே தூக்கினான். அதைக் கண்டுவிட்டு ராக்காயி
"பாம்பு இங்க இல்ல ஐயா அது அங்கேயாத்தான் கிடந்து துரத்திச்சு” என்றாள்.
"எங்க இருந்து உங்கள துரத்திச்சு?”
"அது அங்கனேக்கயா இன்னும் தூரம்"
O 10l O به تهیه وانایانه قالوالاچ

Page 57
“தூரமெண்டா..?”
毫猛 . ys
அங்கனேக்கயா.
“அங்கின எல்லாம் ஏன் நீங்க போனிங்க..?
“பாவக்கா ஆய்ஞ்சுக்கப் போனம்.”
“பாவக்காயா..? அது காட்டுக்க எங்கால.?”
“காட்டுப் பாவக்காயுங்க.”
"ஓ அப்பிடியா.!”
"ஆமா அதப் புடுங்கிக்கிறதுக்காவத்தான் நானுமா எங்கக்காவுமா போய்கிட்டோம். அந்தவாட்டிதான் பாம்பு எங்களயா துரத்திச்சு. பயத்தில ஒடனே இந்தக் கொட்டிலுக்கயா ஓடி வந்துப்புட்டம்.”
"நீங்க எங்க இருக்கிறீங்க.?”
“பக்கத்தில தானிய்யா.”
“பக்கத்து இடமெண்டா எந்த இடம்.?”
“இதுங்களுக்க இருக்குங்களே சேரி அதுவிலதான். எங்கவுடது கடைசிக் குடிசையுங்க."
"ஆ அதிலயா இருக்கீங்க.?”
"ஆமாங்க.”
“இது உங்க அக்காவா..?”
“ஆமுங்க.”
அவள் சொல்லவுந்தான் செல்வநாயகம் இப்போது செவ்வந்தியை நன்றாக உற்றுநோக்கினான். பயமும் அவள் முக அழகுகளிலே ஒன்று போல அவளைப் பார்க்கும்போது அவனுக்குத் தெரிந்தது. செவ்வந்தியின் அடர்ந்த இமைகளுடன் கொண்ட பெரிய கண்களும், பளபளப்புக் கொண்ட கரிய கூந்தலும், ஒசிந்த இடுப்புக்குமேலே புடைத்து நின்ற மார்பகங்களும், அவளை ஒரு சிறந்த அழகியாக அவனது கண்களுக்குக் காட்டின. சேரியில் வாழும் ஒரு பெண்ணுக்கு
இப்படியாகவும் ஒரு பிரமாதமான அழகா வனமலர் மாதிரியான அழகாய் இவள் இருக்கிறாளே? என்று தனக்குள் நினைத்தபடி வியந்தவாறு நின்றான் அவன்.
O 102 O நீ.பி.அருணானந்தல்

ஆனால் செவ்வந்தியோவெனில், செல்வநாயகம் தன்னை அப்படிப் பார்ப்பதைக் கண்டுவிட்டு, மிகுந்த வெட்கத்தில் பாவாடையைத் தன் இரண்டு கைகளாலும் முன்னால் சுருக்கி இறுக்கிப் பிடித்தபடி நின்றாள். முன் பின் அறிமுகமில்லாதவர் இருக்கின்ற இடத்தில் இப்படிக் கேட்டுக் கேள்வி இல்லாமல் வந்து எங்கள் இஷ்டத்துக்குப் புகுந்து உள்ளே நின்றின்றோமே என்று நினைக்கவும் மனதுக்கு அவளுக்கு ஏனோ சங்கடமாய் இருந்தது.
செல்வநாயகம் வாசித்துக்கொண்டிருந்த வாய்வீணை அந்தச் சாக்குக் கட்டிலின் மேல் கிடந்தது. ராக்காயி அந்த வீணையையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இத நீங்க எப்பவும் வாசிச்சுக்கிட்டு இருப்பீங்களாய்யா.?” என்று அந்த வீணையைப் பார்த்துக் கொண்டிருந்தபடி செல்வநாயகத்தைக் கேட்டாள்.
"நெடுகலுமெண்டா எனக்குள்ள, வேலயப் பார்க்காமலா.?" - என்று அவளுக்குத் சொன்னான் செல்வநாயகம்.
`W> "ஒன் வாய சும்மா வைச்சுக்கிண்ணு சும்மா இருடி?” என்று தங்கையை
அப்போது செவ்வந்தி தன் முழங்கையால் ஒரு இடி இடித்தாள்.
"அப்பாடா உங்கட அக்கா இப்பத்தான் வாயத் திறந்திருக்கிறா. நான் ஏதோ இவ பேசமாட்டவாக்கும் எண்டு நினைச்சன்!” என்று செவ்வந்தியைப் பார்த்துக் கொண்டு ராக்காயிக்குச் சொல்வது போல சொன்னான் செல்வநாயகம், செவ்வந்தி செல்வநாயகம் அப்படிச் சொல்ல உடனே வெட்கத்தில் குங்குமமாய்ச் சிவந்து. முகம் வெளுத்துப் போனாள். அந்த நேரம் தமக்கையின் முகத்தைப் பார்த்து விட்டு ராக்காயி செல்வநாயகத்துக்குச் சொன்னாள்.
“இப்பிடியாத்தான் அக்கா எதுவும் பேசாம சும்மா வாய முடிக் கிட்டிருக்கும். ஆனா பேச வெளிக்கிட்டுட்டிண்ணா யாருமே இதோட போட்டி போட முடியாது.”
"அப்படியா?” செல்வநாயகம் கேட்டான். "ஆமாங்க” என்றாள் ராக்காயி
போடி" என்று திரும்பவும் செல்லமாக தங்கையை தன் முழங்கையால் ஒரு இடி இடித்தாள் செவ்வந்தி
அதை ஒன்றும் பொருட்படுத்தாது ராக்காயி திரும்பவும் அந்த வாய் வீணையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
துயரசுேண்பண்கள் O 103 O

Page 58
“இத எப்பிடீய்யா ஊதுக்குவீங்க ஒரு வாட்டி ஊதிக்காட்டுங்க பார்க்கலாம்.?” என்று தன் எல்லை மீறிய ஆசையோடு ராக்காயி செல்வநாயகத்தைக் கேட்டாள்.
“வீணை ஊத உனக்கு ஆசையா..? அவன் அவளைப் பார்த்துக் கேட்டான்.
G 9
ஆமா...' என்றாள் அவள்.
“இந்தா வாயில வைச்சு நீ ஊதிப்பார்.?” என்று அந்த வீணையை எடுத்து அவள் முன்பு நீட்டினானன் அவன்.
"ஐயோ நம்ம சாதிங்க எச்சில்பட்டாலே உங்களுக்கு ஆகாதீங்க அய்யா.” என்றாள் அவள் பரிதாபமாக.
"ஐயா இவளுக்கு மூளை லூசுங்க. அதான் இப்படியெல்லாம் அலட்டுறா.” என்று செவ்வந்தி அப்பொழுது செல்வநாயகத்திடம் சொன்னாள்.
"பரவாயில்லை இதில எச்சில் பட்டாலும் எனக்கு அதால பெரிய வெறுப்பு வரப்போகிறதில்ல. நீ ஆசையோட கேட்டாய் அதால நீ இதை வாங்கி ஒருக்கா என்னமாதிரி இது இருக்கு எண்டு ஊதிப் பாக்கத்தான் வேணும். ம். இந்தா..?” - என்று அவளை நோக்கி திரும்பவும் தன்கையில் வைத்திருந்த ஒறியன் மவுத் ஓர்கணை அவளிடம் நீட்டினான் செல்வநாயகம், அவள்: “வேணாமுங்க ஐயா" என்று உள்மனத்தில் நிறைய விருப்பத் துடனும் ஆனால் வாய்ச்சொல்லில் விருப்பமில்லாதது போலச் சொன்னாள்.
“வேணாமுங்க ஐயா! இந்தப் புள்ள ஏதோ ஒண்ணும் வெளங்காத அளவிலயா சொல்லிப்பிடிச்சு” என்று ராக்காயி அப்படிச் சொன்ன கையோடு செவ்வந்தியும் சொன்னாள்.
ஆனாலும் செல்வநாயகம் திரும்பவும் அந்த வீணையை ராக்காயி முகத்துக்கு முன்னாலே நீட்டிக் கொண்டு "பரவாயில்ல ஒருக்கா உன்ரை ஆசைக்கு இத வாசிச்சுப் பார் பிடி?” என்றான்.
ராக்காயிக்கு செல்வநாயகம் அப்படித் திரும்பத்திரும்ப சொல்லவும் கண்கள் இரண்டிலும் ஆசையின் ஒளி துளும்பியது. அவள் மெல்லத் தன் இரு கைகளையும் நீட்டி செல்வநாயகம் கையில் நீட்டிக்கொண்டிருந்த அந்த வீணையை பக்தியோடு பிரசாதம் வாங்குவதுபோன்று ஒரு நிலையில் இருந்தவாறு வாங்கிக் கொண்டாள்.
О 104 O ரீ.பி.அருளானந்தே

அந்த 'மவுத் ஒர்கன் ராக்காயியினது கைகளில் இப்போது பளிரெனக் கிடந்து மின்னிக்கொண்டிருந்தது. அந்தப் பளபளப்பையும் தங்கையின் முகத்தையும் செவ்வந்தி பார்த்தாள். பிறகு செல்வநாயகத்தின் முகத்தையும் தன் கண் இமைகளை இமைக்காது சில நொடிகளாய் அவள் பார்த்துக்கொண்டேயிருந்தாள். சாதித்துவேஷத்தின் விஷம் தோய்த்த ஆக்ரோஷமான பலரது முகங்களைத் தான் அனேகமாகவும் அவள் கண்டிருக்கிறாள். இப்படிச் சகசமாகவும் சந்தோஷத்துடனும் கதைத்துப் பழகுகின்ற ஒரு மனிதரை அவள் இதுவரையில் காணவேயில்லை. இதனால் செல்வநாயகத்தின் மலர்ந்த முகம் அவள் மனத்தை முழுமையாக ஈர்ந்தது. அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது அவள் மனதுக்கு நிறைவாகவும் மகிழ்வாகவும் அவ்வேளையில் இருந்தது.
ராக்காயி கையில் வாங்கிக் கொண்ட மவுத் ஓர்கனை, வாயில் வைத்து மெல்லக் காற்றை ஊதினாள். அவளுக்குத் தன் வாயிலிருந்து காற்று வெளிவர முன்னமே, அந்த வீணையிலிருந்து பல விதமான ஒலிகள் வெளிக்கிளம்புவதைப்போல கேட்கும்போது இருந்தது. அந்த ஒலியை கேட்க அவளின் பிஞ்சு உடம்பு இன்னும் மென்மையுற்றதைப்போல ஆகியது. மகிழ்ச்சி வெள்ளம் மனதில் அவளுக்குப் பொங்கி வழிந்தது. உற்சாகம் கரைபுரண்டது போல எழும்பியது. அந்த வேகத்தில் காற்றை உள் இழுத்தும் வெளியில் விட்டும் அந்த வீணையைத் தன் ஆசை தீரமட்டும் அவள் ஊதினாள்.
அவள் அப்படியெல்லாம் மிகுந்த ஆசையுடன் அந்த மவுத் ஓர்கனை வாசிப்பதைப் பார்த்துவிட்டு, செல்வநாயகம் வாய்விட்டுச் சிரித்தான். செவ்வந்திக்கும் தங்கை அவ்வாறு வீணையை வாசிப்பதைப் பார்த்துச் சிரிப்பு வெடித்துவிட்டது.
என்றாலும் தங்கையைப் பார்த்து “காணும் காணும்டி” என்று அவள் சிறிது நேரத்தின் பின் சொன்னாள். அக்கா இடையில் அப்படிச் சொன்ன உடனே, ராக்காயி வீணை ஊதுகிறதை உடனே நிறுத்திவிட்டாள். அவளுக்கு என்னவோ வேறு ஒரு லோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்ததுபோல அப்பொழுது இருந்தது. தன் நிலைக்கு வந்த பிறகு ஏனோ அவளுக்கு வெட்கமாகவும் இருந்தது. அந்த வீணையில் தன்னுடைய வாய் எச்சில் பட்டுவிட்டது என்று நினைக்கவும் அவளின் மனதுக்கு அது ஓர் பிழையாகவும் மனதுக்குத் தெரிந்தது. அந்த வீணையில் பட்டுவிட்ட தன் எச்சிலை எதைக்கொண்டு சுத்தப்படுத்தலாம் என்று அவள் ஒரு கணம் தவித்தாள். காட்டுக் கொடிகளைப் பிடித்து அளைந்ததிலும், கையிலும் ஒரு மணம் போகமாட்டேன் என்று இன்னும் மணக்கிறது. உடுத்த பாவாடையும் ஊத்தை பிடித்தாற் போலத்தான் கிடக்கிறது. இந்நிலையில் என்ன
துயரச் சுeப்பண்கள் O 105 O

Page 59
செய்வது? இதை எங்கே துடைத்துச் சுத்தம் செய்துவிட்டு அவரிடம் இதைக் கொடுப்பது? என்ற மனக்குழப்பத்தில் ஏக்கப் பார்வையோடு, தான் வைத்திருந்த வீணையையும் செல்வநாயகத்தின் முகத்தையும் அவள் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
ஆனால் செல்வநாயகத்திற்கு அவளின் நிலைமை புரிந்துவிட்டது. மகிழ்ச்சியாக இவ்வளவு நேரம் இருந்த அவளின் முகம் திடுமென இப்படி ஏன் மாறியது? என்பதை எளிதில் அவள் அறிந்ததாய்விட்டான். அதன்பொருட்டு திரும்பவும் அவளை சகச நிலைக்குக் கொண்டு வருவதற்காக சரளமாக மீண்டும் அவளோடு உரையாட ஆரம்பித்தான்.
"ஆசை தீந்ததா இன்றும் கொஞ்ச நேரம் ஊதன் வீணைய.?” என்று அவன் கேட்டது என்னவோ அவ்வேளையில் ராக்காயினது மனதுக்கு ஆறுதலாகஇருந்தது. ஆனாலும் தான் ஒரு குற்றத்தைச் செய்தது போல தோள்களை முன்னால் வளைத்துப் பிடித்தபடி நின்றுகொண்டு
“என்னிட எச்சிலு இதில நல்லா பட்டிட்டய்யா அதான் துடைச்சிக்கவும் நல்ல துணியுமில்ல.” என்று பவ்வியமாகச் சொன்னாள்.
“இதில என்ன இருக்கு இந்த வீணைய யாராச்சும் ஊதினா அதில எச்சில் படத்தானே செய்யும். நீ ஆசைக்குக் கேட்டாய் நானும் விருப்பத்தோடதான் தந்தன் இதில என்ன வெறுப்பு எனக்கு.?” என்று சொல்லியபடி ராக்காயி கையில் வைத்திருந்த வீணையைத்தன் கையில் வாங்கிக்கொண்டு தான் உடுத்திருந்த சாரத்தில் வீணையின் வாய்ப்பக்கத்தை அவன் துடைத்தன்.
செவ்வந்திக்கு செல்வநாயகத்தின் செயல்கள் எல்லாமே பார்ப்பதற்கு ஆச்சரியமாகவிருந்தது. ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டதாய் வாழும் தங்களுடன், ஏதோ சொந்தபந்தம்போல அவன் கதைப்பதும் சிரிப்பது மாய் பழகுவதைப் பார்க்க, அவன்மேல் அவளுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. என்றாலும் அதிலே இனியும் தங்களுக்கு நிற்கவேண்டிய தேவை ஒன்றும் இல்லையென்பதாய் தெரிய
"நாங்கள் எங்ங் வுட்டுக்கு இனி போய்க்கிறம் ஐயா." - என்று அவனைப் பார்த்துச் சொன்னாள்.
“ஏதோ காய் புடுங்கிக் கொண்டு போகலாம் எண்டமாதிரி முதலில சொன்னிங்க இனி அங்கால நீங்க போகேல்லயா.” என்று அவள் சொன்ன உடனே கேட்டான் செல்வநாயகம்.
"அங்க பாம்பு இருக்கும் ஐயா இனிமே அங்கிட்டு இண்ணிக்கு போவவே முடியாதுங்க” என்றாள் ராக்காயி
O 106 O நீ.பி.அருளானந்தல்

"அப்ப நானும் உங்களுக்கு துணையா வாறனே" என்று அவளை உடனே கேட்டான் செல்வநாயகம்.
"ஐயையோ அதெல்லாம் வேணாமையா” என்று அவன் சொன்னதுக்குப் பதில் சொன்னாள் செவ்வந்தி என்றாலும் ஒருவித மகிழ்ச்சியில் மார்பு சற்றே விம்மிப் பெருமூச்சுவிட்டுக்கொண்டாள் அவள்.
"நாங்க பையிங்களில புடுங்கிப் போட்டதுங்களெல்லாமே அந்தப் பக்கம்தான் கீழயா போட்டிட்டு ஓடி வந்துப்பிட்டமய்யா. எப்படியும் அதுங்கள நாளைக்காச்சும் பொறவு எடுத்துக்கலாம். இப்ப அந்தப் பக்கமே நாம போவப்படாது. பாம்பு இருக்கும்.! நாங்க இப்பவா வுட்டுக்குப் போய்க்கிறமய்யா.” என்று கொஞ்சம் விவரமாகத் தமக்கை சொன்ன பிறகு ராக்காயியும் அவளும் அந்தக் காவல் கொடடிலை விட்டு வெளியேறி தங்கள் குடிசைக்குப் போக நடையைக் கட்டினார்கள். செல்வநாயகம் கொட்டில் வாசலடியில் நின்று செவ்வந்தி தன் தங்கையோடு நடந்துகொண்டு போவதை பார்த்துக்கொண்டே இருந்தான். நடந்துகொண்டிருக்கும் போது நடுவழியில் ராக்காயி தலையைத் திருப்பி ஒருமுறை செல்வநாயகத்தின் கொட்டில் பக்கம் பார்த்தாள். அவள் பார்வையில் செல்வநாயகம் அந்தக் கொட்டில் வாசலடியில் நின்று தங்களையே பார்த்துக் கொண்டிருப்பது மாதிரித் தெரிந்தது. அவள் மீண்டும் தலையைத் திருப்பிக் கொண்டு நடக்கும்பொழுது தமக்கைக்கு எதையோ சொல்லியிருக்க வேண்டும், என்கிற மாதிரித்தான் செல்வநாயகம் தன்னில் உணர்ந்தான். அவனுடைய கற்பனை ராக்காயியினது செயலின் வெளிப்பாட்டிற்குத் தக்க பொருத்தமுடையதாய்த்தான் அவ்வேளையில் இருந்தது. அவள் தங்கை எதையோ ஒரு விஷயத்தைச் சொன்னதற்குப் பிறகு மகிழ்ச்சியில் அவளை தன்னோடு கிட்டவாய் அணைத்தவாறுதான், செவ்வந்தி நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
காவல் கொட்டிலுக்குப் பின்னால் உள்ள காட்டின் கிழக்கு மூலை யிலிருந்து மயில் ஒன்று “கேவ்.” எனக் கத்தியது சேரி முழுக்கக் கேட்டது. தொடர்ந்து வடக்குத் திசையிலுள்ள கோயில் வளவுக் காட்டிலிருந்து வேறு சிலவும் "கேவ். கேவ்.” எனக்கத்தின.
மயில்கள் கத்துகிற அந்த ஆழ்ந்த இனிய ஓசையை கேட்டுக்கொண்டு செவ்வந்தி நடந்துசெல்கிற அழகைப் பார்த்து ரசித்தபடி நின்று கொண்டிருந்தான் செல்வநாயகம். மயில் தன் தோகையுடன் நடக்கும் போது காணப்படும் அழகு போலத்தான், செவ்வந்தியின் பின் அழகும் ஒத்ததாய் இருப்பதாக அவன் அப்போது தனக்குள் அவளை கற்பனை பண்ணிப் பார்த்துக் கொண்டான். இங்கு வந்ததிலிருந்து தினம் தினம் அந்தச் சவக்காலைக்குள் தெரியும் புதைகுழிகளை மட்டுமே பார்த்து விரக்தியுடன் இருந்த அவனுக்கு, இந்நேரம் மனம் குளிர்ந்ததுடன்
gură sistu«răscă o l07. O

Page 60
உடலில் உற்சாகமும் பிறந்ததைப் போல இருந்தது. அவள் இன்னும் தன் அருகில் நிற்பதைப்போன்ற ஒரு ஞாபகத்தில் இருந்துகொண்டு அவள் போகிற வழியையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் போகும் வழியில் ஆள் உயரத்துக்கு மேல் இருந்த கள்ளிச் செடி அவர்களைப் பிறகு அவன் கண்பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அங்காலே உள்ளதுகளெல்லாம் தவிட்டை மரங்கள் தான். அவன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் அதைக்கடந்து போகின்ற மனிஷரைக் கண்ணுக்குத் தெரியவே தெரியாது.
14
கோயில் வளவுக் காணிக்குள்ளே ஒருவர் நுழைந்து போய்ப்பார்த்தால் பெரிய காடு ஒன்றுக்குள் வந்துவிட்டது போன்றே அவரை நினைக்குமாறு செய்யும் ஆனாலும் அதற்குள்ளே காணுகின்ற எழில் கொஞ்சும் இயற்கை அழகையெல்லாம் பார்த்துவிட்டு, அதை ஒரு ஏதேன்' - தோட்டத்தைப் போலவும் பார்க்கின்றவர் பாராட்டத்தான் செய்வர்.
இப்படியாய் அந்த வளவு நிறைய இடித்து நெருக்கி நிற்கின்ற மரங்கள் கொஞ்சநஞ்சமா..? அவ்வாறு அடர்ந்து தழைத்த அங்குள்ள பெரு மரங்களின் இலைகளைக் கடந்து சூரிய கிரணங்கள் கூட தரையில் பட முடியாது. அந்த அளவிலேதான் உள்ளே மரங்களுடன் காணப்படுகிறது எத்தனையோ ஏக்கர் விசாலமுடைய அந்த வளவு பெரிய காட்டுக்குள்ளே கூட தேடிக் காணக்கிடைக்காத பல மரங்களெல்லாம் இதற்குள்ளே எப்படி வளர்ந்தன? அதற்குக் காரணம் இவ்வாறும் இருக்கலாம்! டால்ஸ்டாய் - மரங்களை வளர்ந்ததுபோல கோயில் நிர்வாகத்தினரும் அவ்வாறு செய்திருப்பார்கள்!
அப்படி இல்லாமலிருந்தால் இந்த அரசமரம், தேக்குமரம், புளியமரம், வேப்பமரம், ஆலமரம் என்று நிறைய அந்த ரக மரங்களை அதற்குள்ளே காண முடியுமா? இன்னும் முதிரைமரம், கூமாமரம், கூழா, கருங்காலி கொண்டலென்று இந்தப் பெயர்களெல்லாம் உடனே சொல்லக்கூடிய அவ்விதமான மரங்களுடன் ஒரு பக்கம் மூங்கில்களும் நெருங்கியபடி நிற்கின்றதே.
ஆனாலும் அதற்குள்ளே ஒரு இடம்தான் மரங்கள் இல்லாத இடம்! அது ஒரு முள் காடு கருவமுள்! அந்த விஷக்காடு வளர்ந்த இடம் கற்பாறை. அதனால்தான் அவ்விடத்தில் மட்டும் மரங்கள் இல்லை.
O 108 O ரீ.பி.அருளானந்தல்

இந்தக் காடு வளர்ந்த வளவு முழுக்கலும் இறம்பைக்குளம் 'புனித அந்தோனியார் - ஆலயத்துக்குத்தான் சொந்தமானது. கோயிலுக்கு அருகாமையில் "கத்தோலிக்க மிஷன்” - பாடசாலையும் உண்டு. கோயிலுக்குப் பக்கத்திலே கட்டளைக் குருவானவரின் அறைவீடும் இருக்கிறது. பரிசுத்தக் குறைச்சலில்லாமல் அவர் இருந்து கொண்டு, நாள் பூசையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பலிப்பூசை வரை ஒழுங்காக அவர் கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தபடியே தனக்குள்ள கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
சுவாமியாருக்கென்றால் காட்டுமிருகங்களின் இறைச்சி உண்ணுவதற்குக் கொள்ளை ஆசை இறைச்சியைத் தின்று அலுத்துப்போன மனுசன் உலகில் யாராவது இருக்கிறார்களா? நாக்கு ருசிப்பட்டுப் பழகிவிட்டால் பிறகு மச்சம் மாமிசம் தின்பதில் எப்படி வெறுப்பு வரப்போகிறது? சுவாமியாருக்கென்றால் ஒரு சந்தி, சுத்த போசனம் என்று விரதம் கடைப்பிடிக்கும் நாளைக்கடந்து மற்றைய நாளிலெல்லாம் சாப்பாட்டில் மச்சம் மாமிசமென்று இருந்தாக வேண்டும். இறைச்சிவகைகளிலே 'காட்டுப்புறா இறைச்சிதான் சுவாமியாருக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் அந்தப் பறவையினது ரோமம் புடுங்கி, குடலை உருவி எறிந்துவிட்டு, மசாலாத்தூள் உப்பு உள்ளே வைத்துச் சுட்டுத்தின்பதிலே அவருக்குக் கொள்ளைப் பிரியம் உண்டு. இவற்றையெல்லாம் வீட்டுக்குசினியிலுள்ள சமையல் வேலைக்காரன்தான் சாமியாருக்கு வேண்டியவிதமாய் எல்லாம் சமையல் செய்து கொடுப்பான். குருவிக் கறியில் நெய் ஒழுக சுட்டு எடுக்கிற பக்குவம் அவனுக்கு நன்றாகத் தெரிந்துதான் இருந்தது.
சுவாமியாருக்கு பறவைகள் உடும்புகளைத் துவக்காலே சுடுகிற வேட்டையாடும் பழக்கமும் இருந்தது. வேட்டைக்கென்று 'றைபிள்' துவக்கும் தன்னிடத்தில் அவர் வைத்திருந்தார். அவர் தன்னுடைய தேவைக்கு மாத்திரம் கோயில் வளவுக் காட்டுக்குள்ளே சென்று பறவை உடும்பைப் பார்த்துத் துவக்காலே சுடுவார். அவர் கோயில் வளவுக் காட்டுக்குள்ளே சுடப்போகும் போது, மனுவலின் கடைசிமகன் லாசர்தான் துணைக்குக் கூடவே அவருடன் போவான். லாசர் கோயில் வளவை குப்பை கூட்டித் துப்பரவு செய்கிற வேலையை இடையிடையே வந்து செய்வான். அங்கே வந்து சுவாமியார் சொல்லுகிற எடுபிடி வேலையெல்லாம் அவருக்கச் செய்து கொடுப்பான். அவன் செய்கிற வேலைகளைப் பார்த்து குருவானவர், காசு பணம் என்று இடையிடையே அவனுக்குப் பார்த்துப்பாராமல் கொடுப்பார். அவர் பார்க்கிற கோயில் மீசாமைச் சேர்ந்த மக்களெல்லாம், கொடுக்கிற இனிப்புப் பண்டம், பழங்கள், என்று அவைகளிலே தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு, மிகுந்திருப்பதையெல்லாம் லாசருக்கும் கொஞ்சம் சுவாமியார் அவைகளிலே கொடுத்தும்தான் வந்தார்.
glugs søðvaðissti O 109 O

Page 61
லாசருக்கு பதினைந்து வயது நிறைவடைந்திருந்தது. அவன் அர்ச். அந்தோனியார் பாடசாலையில்தான் கல்வி பயின்று வந்தான். சேரியில் உள்ள றோமன் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு மாத்திரம், அந்தோனியார் பாடசாலையில் படிப்பதற்கென்று இடம் கிடைத்தது. ஆனால் அங்குள்ள சைவ சமயத்தைச் சேர்ந்தவர்களது பிள்ளைகளெல்லாம் சீ.சி.ரி.எம்.எஸ். பாடசாலையில்தான் போய் கல்விகற்று வந்தார்கள். ஆனாலும் எந்தப் பள்ளிக்கூடத்திலும்சரி சேரியில் இருந்து வரும் பிள்ளைகளுக்கு அங்கே கடைசி வாங்குதான். அப்படியாக இருந்து பாடம் படிக்கத்தான் அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது.
O
வழுக்கு வழுக்கென்றதாய் உள்ள மென்மையான உடலுடையவன் லாசர் நிலப்பரப்பைத் துடிதுடிக்க வைக்கும் அதிகமான சூரிய வெக்கையை லாசர் தாங்கிக் கொள்ள மாட்டான். அந்த வேளை களிலே குடிசைக்குள்ளே அவன் இருந்து கொண்டிருந்தாலும், சூரியனின் ஒளிக்கத்தி தலையைத் தாக்குவதுபோல அவனுக்கு உஷ்ணமாக இருக்கும். தான் வாழும் சேரி முழுவதும் நச்சுத் தன்மை நிறைந்துள்ளது போல அவனுக்குத் தென்படும். உடனே அவன் வானத்தின் ஆழமான நீல தொலைவைக் காணமுடியாத கோயில் வளவுக் காட்டுக்குள்ளே போய்ப் புகுந்துவிடுவான். அதற்குள்ளே பறவைகள் கலையும், பூசலிடும் ஒய்யார ஒலிகள் கேட்கும்போது இன்பங்கள் அவனுக்குக் கிட்டும். சில மரங்களிலே துடைத்துச் சுத்தம் பண்ணப்பட்டதுபோன்று இருக்கும் இளந்தளிலைகள் அவன் கண்களுக்கு விருந்தளிப்பதுபோல் காணப்படும். உதிர்ந்து கிடக்கும் இலைகளினது வாசத்தையும் அவன் விருப்புகின்றவன்தான்.
அதற்குள்ளே தருக்கள் உதிர்ந்த தழை மூடிக்கிடக்கும் இடத்தாலேயும் கூட லாசர் நடந்துபோவான். பழுத்த பழம் உள்ள மரங்களுக்குக் கீழாலே அவன் நடந்து போகும்போது, "கீச்சுக் கீச்சென்று பல்வகைப் பறவைகளின் சிலம்பல் ஒலி அவனுக்குக் கேட்கும். உடனே அந்த மரத்துக்குக் கீழே சிறிது நேரம் நின்றபடி மேலே பார்த்துக் கொண்டிருப் பான். அங்கே பறவைகள் வருவதையும் போவதையும் பார்க்க ஒரு தனி அழகாக அவனுக்குத் தெரியும்.
காட்டுக்குள்ளே கண்ட நேரமும் சுற்றி அலைந்து திரிந்த பழக்கத்தால், லாசருக்கு தாவரங்கள் மரங்கள்மேல் இருந்த ஞானம் அபாரமென்றுதான் சொல்ல வேண்டும். காட்டுப் பழங்களில் எதைத்தின்னலாம், எதைத் தின்னக்கூடாது, என்ற விபரமெல்லாம் அவனுக்கு அத்துப்படி அவன் கூழாமரத்துக்குப் பக்கமாக வரும்போது, மரத்திலிருந்து முறுக்கிக்கொண்டு இறங்கினது ஒரு பாம்பு பாம்பைக்கண்டு அவனுக்கு O 10 O ரீ.பி.அருளரைத்தs

என்ன பயம்? அது தன் பாட்டுக்கு போகும்தானே? அந்த மரத்தின் பச்சை இலைகளுக்கிடையே கூழாம் காய்கள் எவ்வளவு குளிர்மையுடன் கொத்தாகத் தொங்குகின்றன. மரத்தின் கிளைகளில் பறவைகள் பல நூறு குச்சிகளை, சுள்ளிகளை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து வந்து, மிகுந்த கட்டுமானத்தோடு கூடுகள் அமைக்கும் வேலையும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இந்தக் காட்டுக்குள் வருடக்கணக்கான பழக்கமிருந்தாலும்கூட இவை எல்லாவற்றையும் பார்க்க அவனுக்கு அதிசயமாகவே இருக்கிறது. தலையில் வண்டு ஒன்று விழுந்து ஊர்ந்தமாதிரி இருந்தது அவனுக்கு. சொறிந்து கொண்டு தலையைக் கீழே குனிந்தான். இருளைப்பரப்பினது போன்ற அந்த இடத்திலே, ரகசியங்களை தங்களுக்குள் குடிவைத்துள்ளவை போன்று பூச்சிகள் ஒடித்திரிந்துகொண்டு இருந்தன. கிளை கிளையாய் பிரிந்து கிடந்த நிழலில், ஒன்றின் மேல் ஒன்றாக புணர்ந்த நிலையிலே பட்டுப் பூச்சிகள் சில ஒருமித்து நகர்ந்து கொண்டிருந்தன. ஆணும் பெண்ணும் இப்படி ஒட்டிக்கொண்டுதான் இருக்குமா? அவைகளைப் பார்த்ததோடு கண்பார்வை அவனுக்குக் கூடிவிட்டது போல இருந்தது. வெப்பம் அடிவயிற்றில் இறங்கியது போல உடம்பும் சூடேறியது. மரங்களின் பச்சைத் தனத்தைப் பார்க்கும் ஆர்வமும் அவ்வேளையில் அவனிடமிருந்து அகன்றது. இதன் பிறகு செவ்வந்திதான் அவன் நினைவில் வந்து கொண்டிருந்தாள். செவ்வந்தி இவன் வயதிலிருந்து நான்கு வயது மூத்தவளாயிருந்தாலும், அவளைக் காணும் தருவாயிலெல்லாம் தீராப்பசியைப் போலத்தான் ஏதோ ஒரு வித ஆசை அவனை மீண்டும் மீண்டும் துன்புறுத்தும். அவளைக் காணும் போதெல்லாம் தலையின் உச்சிவரை கூட அவனுக்கு இன்பம் பெருகும். ஆனால் அவள் வேறு சமூகம். இவன் வேறு சமூகம். கதைப்பது என்னவோ நடக்கவும் நடக்காது. அப்படி கதைத்துத்தான் ஆசையாவது தீர்ப்போமென்றாலும் துணிவும் அவனிடம் இல்லை. அவன் வயதும் அப்படி,
லாசர் தன் சிந்தனையில் ஏற்பட்டுவிட்ட குழப்பத்தோடு கூழாமரத்தைத் தாண்டி முன்னால் நடந்துகொண்டிருந்தான். மூங்கில்கள் அசைந்தாடி இருக்குமுருக்கென்று' - கழிகள் உரசிச் சத்தம் போடும் அந்த இடத்தடிக்கு வந்தவுடனே அவனால் தன்னை அடக்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் மிகுந்த உணர்வுமயமானவனாய்விட்டான். உடம்பு அவஸ்தையாக இருந்தது. செவ்வந்தியின் முன்னோக்கியுள்ள எடுப்பான மார்பும் அவளின் புட்டமும் அவன் நினைவைக் கலக்கிக் கொண்டிருந்தன. அவளின் ரவிக்கைத் துணிக்குள் துள்ளிக் கொண்டிருக்கும் முற்றிய மாரிடங்களை நினைக்க அவனுக்கு வலுக் கூடியது. அவனால் தன்னைப் பிறகு கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவ்வேளையில் நாகம் தனது பிளவுண்ட நாக்கைக் கொண்டு வேவு பார்ப்பதைப் போன்ற செயற்பாட்டில், யாராவது
துயரச் சுஃப்யவிர்கள் O 111 O

Page 62
அவ்விடம் காட்டுக்குள்ளே வருகிறார்களா என்று பரபரவென நாற்புறமும் ஒருமுறை நன்றாக நோட்டம் விட்டுப் பார்த்தான். எவரும் இல்லை என்று நன்றாகத் தெரிந்த பிறகு, உடுத்திருந்த கால்சட்டையைக் கழற்றி தோளிலே போட்டுக்கொண்டு வளைந்து கீழே போயிருந்த மரத்தின் கிளையிலே வசதியாக இருந்து கொண்டான். காட்டுக்குள் தனித்து அவன் திரியும்போது இந்தச் சிதைக்கப்படுதலாலேயே சனிப்பிடித்த இந்தப் பழக்கமும் ஏதோ அவனுக்குத் தொற்றிக்கொண்டுதான் விட்டது. அவனும் அப்படி முஷ்டி மைதுனத்தின் சுகத்தை அறியத்தொடங்கிய காலமும்தானே? அவன் அந்த வளைந்த கிளையில் இருந்தவாறு கரமைதுனத்தின் சுகானுபவத்தில் மூழ்கிவிட்டான். இறுகியிருக்கும் உடம்பு அவனுக்கு இளகிக்கொண்டுவந்தது. மூச்சுப் பெலத்தது. நரம்புகள் புடைத்தன. ஒரு மாம்பழத்திக் குருவி எழுப்பிய குரல் இந்தப் பொழுதிலும்கூட அவன் காதில் விழுந்தது. கர்று புர்ரென்று மூச்சுவிடுகின்ற மாதிரியும் மூச்சு அவனிடமிருந்து வெளிப்பட்டது. அதோடு மதங்கொண்ட உடலின் தீட்சண்யமான சூட்டின் அவஸ்தையும் அவனிடத்தில் இருந்து வெளியேறியது. இவ்வளவு நேரமும் ஆவேசம் கொண்டவன் போல் இருந்தவன் உடம்பெல்லாம் சோர்வடைந்ததுபோல் இருந்தான்.
என்றாலும் அவன் மனமும் உடலும் வெள்ளம் வடிந்த ஆற்று மணலைப்போல் சுத்தமான பூர்ண நிறைவாக இருந்தது. வேட்கை தணிந்த பிறகு மரங்களடர்ந்த அந்த வளவுக்குள் இருந்து கொண்டிருக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. அவன் இருந்த இடத்திலிருந்து வளவின் வேலியும் கூட அருகில்தான் இருந்தது. அவன் தோளில் போட்டிருந்த கால்சட்டையை எடுத்து உடுத்திக்கொண்டான். அந்தப் பக்கத்தாலே இருந்து நடந்துபோக, முள்செடிகள் படர்ந்திருந்த இடத்துக்கற்பாறை அவன் கண்களுக்குத் தெரிந்தது. யாருடையவோ சாபமேற்றதுபோல குட்டையான செடிகள் மூடி வளர்ந்ததாய் அவ்விடத்தில் நின்றன. அதற்கு அருகே உயரமான புல் வளர்ந்து அடர்ந்து இருந்த இடத்தாலே அவன் நடந்துபோக, வளவின் வேலி காணப்பட்டது. வேலியில் உள்ளவை யாவுமே முது பூவரசு மரங்கள். வேலியடியில் பழுப்புக்களும் சருகுகளும் மரத்தாலிருந்து கொட்டி குப்பையாகக் கிடந்தன. நெருக்கி நிற்கும் மரங்களடர்ந்த வேலிதான் அது என்றாலும் ஏற்கனவே உடல் சுருங்கியதாய்ப்போல இருந்த அவனுக்கு அதாலே நுழைந்துவெளியேறுவது லேசான காரியமாய் இருந்தது. வேலிக்குள்ளாஸிருந்து வெளியேறிய உடனே அவன் சவக்காலை வீதியிலே கால் பதித்துவிட்டான். சவக்காலை வழிநடையில் யாரோ இரவு கழிப்புப்படைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இந்தக் காரியம் இடையிடையே அந்த வீதியில் நடப்பதுதான். லாசர் கழிப்புப் படைப்பைக் கண்டதும் பயத்தின் பிரேதக்குளிர்ச்சியோடு அதற்கு ஓரமாக விலகிப் போனான். ஒரு பக்கத்து வேலியருகிலெல்லாம் O 112 O ரீ.பி.அருணானந்தே

மனிதக் கழிவு கிடந்து நாறிக்கொண்டிருக்கிறது. கசப்பின் துளிகள் முகத்தில் சொட்ட அவன் அந்த இடத்தைக் கடக்க விரைவாக நடந்தான். முதிர்ந்து வளரும் மரங்கள் கொண்ட அந்த உண்மையான காடு போன்ற இடத்தில் இருக்குமட்டும் அவன் உள்ளத்தில் சந்தோஷம் இருந்தது. ஆனாலும் அந்த இடத்தை விட்டு அவன் வெளியேறியது முதல், அதெல்லாம் எங்கே போயிற்று? அவன் வாழும் இடத்திலிருந்து எதிர்ப்பக்கமாயுள்ள அடுத்த சேரியில் உறுமி மேளச்சத்தம் கேட்கத் தொடங்கியது. உறுமிமேளம் சகமேளங்களோடு கொட்டி முழுங்குகிற சப்தம் சேரி முழுதும் அதிர்ந்தது. சட்டென்று அந்த மேளங்களெல்லாம் ஒலியெழுப்பத்தொடங்கவும், பக்கத்துக் கற்பாறைகளில் கல்லுடைக்கும் சப்தம் அப்படியே அமுங்கிப்போனதாய் விட்டது.
/列
சூடான சோறும், காட்டுப்புறா இறச்சிக் குழம்பும் சேரும்போது அதிலிருந்து ஒரு ரசிப்பான மணம் உண்டாகும். அந்த வகை மாமிசக் கறி சில நாள் சாப்பிடாதது சுவாமியாருக்குத் திருப்தியாக இருக்கவில்லை. அந்த ருசியை நினைக்க சுவாமியாருக்கு தாகம் நாக்கைப் பிடுங்கியது. வாயில் மணல் கிடப்பது போல என்ன இந்தச் சாப்பாடெல்லாம்? சப்பென்ற மாதிரிக் கிடக்கு என்றவாறாய் முதல் நாள் பின்னேர வேளையிலிருந்து யோசித்துவிட்டு, அடுத்தநாள் காலை பூசை முடியவிட்டு லாசரை அவர் தன் அறைக்கு வருமாறு மணிக்கூட்டுக் கோபுரத்தடியில் நின்று கூப்பிட்டார். சுவாமியார் கூப்பிடவும், கோயிலடியில் நின்ற லாசர் உடனே ஓடிவந்தான். அவன் தன் அருகிலே வந்து நின்ற பின்பும் சுவாமியார் அவனுக்கு ஒன்றுமே சொல்லவில்லை. லாசர் கையைக் கட்டிக்கொண்டு நின்றபடி அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். சுவாமியார் கோயில் வாசலடியைப் பார்த்துக்கொண்டு நின்றார்.
y
பரிசுத்த குடும்ப சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரி லியோனி அவ்வேளையில் அந்த கோயில் வாசலடியில் வந்து நின்று கொண்டு மணிக்கூட்டுக் கோபுரம் உள்ள பக்கம் பார்த்தார்.
"சிஸ்ரர் லியோனி”
சுவாமியார் கூப்பிடவும்
பாதர்!” - என்று அவரும் மரியாதை செய்தார்.
gugus astăvarăiasai o l 13 O

Page 63
“பெடியன்களைக் கேட்டு விசாரிச்சியளோ..?”
'?
"ஓம் பாதர்.
“எங்க அவயளெல்லாம்”
"அங்காலிப் பக்கத்துக் கோயில் விறாந்தையடியில நிக்கினம்.”
"அவயள் எல்லாரையும் நேரா அப்பிடியே அறை வீட்டுக்கு வருறத்துக்கு நீங்க இப்ப அனுப்புங்கோ.?” -
குருவானவர் சிஸ்ரருக்கு சொல்லும்போது "லாசர் அவரின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியும் பெடியன்களுக்கு அறை வீட்டில் வைத்து என்ன நடக்கப் போகிறதென்று.? சுவாமியார் லாசர் நின்று கொண்டிருந்த பக்கம் திரும்பிப் பார்த்தார்.
"நீ போன ஞாயிற்றுக் கிழமைப் பூசைக்கு காலமை வந்தனியோ..?”
சுவாமியார் கேட்டவுடன் லாசருக்குத் திக்கென்று நெஞ்சிடித்தது. அவனுக்குப் பாதர்மார் எவரைக் கண்டாலும் பயம்தான். என்ன அந்த “லோ - வுக்குத்தான் பயம்! அவர்கள் உடம்பு முழுவதுமாகப் போட்டிருக்கும் வெள்ளைநிற அங்கியும், இடையிலுள்ள இறுக்கின கறுத்தப்பட்டியும், கறுத்த நிறக்கழுத்து நாடாவில் தொங்கும் குருசும், அதில் அறையப்பட்டிருக்கும் வெள்ளி லோகத்தில் செய்த இயேசுவின் சொரூபமும், குருவென்கின்ற அடையாளத்தைக் காட்டி மரியாதையென்ற பயத்தை மனதில் அவனுக்கும் உடனே வரவளைத் துத்தானே விடுகிறது.
அவர் கேட்ட கேள்விக்கு லாசர் உடனே உடம்பை நெளித்தான். பிழைசெய்யாது விட்டாலும் அதற்கு அவன் ஏன் அவரைப்பார்த்துப் பயப்படவேண்டும்?
"ஓம் பாதர் வந்தனான்.”
அவர் அதற்குப்பிறகு அவனிடம் ஏதும் அக்கறைகாட்டவில்லை. கோயில் வாசலடியைத்தான் அவர் பிறகும் பார்த்தார். கோயில் படிகளாலிருந்து நாலைந்து பையன்கள் அப்போது இறங்கி வந்துகொண்டிருந்தார்கள். சிஸ்டர் லியோனி படிகளின் மேலே நின்று கொண்டு சுவாமி நின்ற பக்கம் அவர்களைப் போகச் சொன்னதுபோலிருந்தது. அதையெல்லாம் அவர் கவனமாகப் பார்த்துவிட்டு பிறகும் லாசர் நின்ற பக்கம் அவனைப் பார்த்தார். "இண்டைக்கு வளவுக்க ஒருக்காப் போய்ப் பார்க்க வேணும் நீ எங்கயும் போயிடாத நில்..?”
O 114 O ரீ.பி.அருணானந்தல்

"ஓம் பாதர்! ஓம் பாதர்!”
அவன் இரண்டுதரம் “ஓம்!” போட்டான். அவன் சொல்லி முடிக்க பெடியன்களெல்லாம் பாதர் நின்ற அவ்விடத்தடிக்கு வந்து விட்டார்கள்.
“எல்லாரும் உப்புடியே நேரா அறை விறாந்தையடிக்குப் போய் அங்க வரிசையா நில்லுங்கோ?” சுவாமி சொல்லவும். “போச்சு பெடியன்மாருக்கெல்லாம் இண்டைக்குப் பூசைக்கு வராததுக்கு நல்ல பிரம்புப்பூசை விழப் போகுது”
இப்போதும் அதை ஒருக்கால் நினைக்கவும் லாசருக்குப் புழுகமாகவும் இருந்தது. அவனுக்கு தன்னுடன் பாடசாலையில் படிக்கும் பையன்களி லும் ஆத்திரம் பள்ளிக்கூடத்தில் சாதித்துவேஷக் கதையை அவர் கள் தங்களுடன் கதைக்காவிட்டாலும், சேரியிலுள்ளவர்களென்று வெறுப்புடன் ஒதுங்கி நடப்பது அவன் மனதிலும் வடுவை ஏற்படுத்தி யிருந்தது.
சுவாமியார் இரும்புப் பாரம் கட்டியிருந்த படலையைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே பூஞ்செடிகள் நிற்கும் வழியால் நடந்து அறை வீட்டுக்குள் போய்விட்டார். பையன்களெல்லாம் அவர் பிறகாலே நடந்துபோய் அறைவீட்டு விறாந்தையில் நிரையாக நின்றார்கள்.
குருவானவர் கையில் வைத்திருந்த செபப் புத்தகத்தை உள் அறையிலே கொண்டுபோய் வைத்துவிட்டு, நீட்டுப் பிரம்பைக் கையில் எடுத்துக்கொண்டு விறாந்தையடிக்கு வந்தார். நிரையில் முதலில் நின்றவனிடம் விசாரணையைத் தொடங்கினார். அவருக்கு ஞாபக சக்தி அபாரம். எல்லாப் பையன்களினதும் பெயர்கள் உடனுக்குடனே அவருக்கு வாயிலிருந்து வெளிவந்தது.
“யேசுதாசன் ஏன்ரா நீ போன ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு வரேல்ல?”
“பாதர்! அதுபாதர், அண்டைக்குக் காலேலயே புலவுக்குப் போகவேணு மெண்டு அம்மாவும் ஐயாவும் வெள்ளனவே என்ன அங்க வாவெண்டு கூட்டிக்கொண்டு போயிட்டினம்.” l
"கடன் திரு நாளெல்லா, அண்டைக்கு உன்னுடைய அம்மாவுக்கும் அதை நீ செல்லேல்லயா..?”
"இல்ல. அவயள் என்னப் புலவுக்கு வாவெண்டு கூப்பிட்டுக் கொண்டு நிக்கினம்.?”
துயரச் சு30uவிர்கள் O 115 O

Page 64
"அதை நான் கேட்கேல்ல. நீ படிக்கிற மாணவன். அவயள்தான் அப்படிப் போகிறோமெண்டு சொன்னாலும் நாள் பூசைக்கு நான் கட்டாயம் போக வேணுமெண்டு சொல்லி நீ வந்திருக்கலாம்தானே..? ஏன் நீ அப்பிடி அவயஞக்குச் சொல்லேல்ல.?”
"அது பாதர்.”
“என்ன அது. ஏன் சொல்லேல்ல.?” பாதர் உரத்துச் சத்தமாய்க் கேட்டார்.
“சொல்லேல்ல” யேசுதாசன் முனகிக்கொண்டு சொன்னான்.
“கையை நீட்டு” - பாதர் பிரம்பை உயர்த்திப் பிடித்தார்.
கண்ணைச் சுருக்கிக் கொண்டு, நீட்டிய தன் கையை முழங்கையை மடித்துப் பின்னாலே இழுத்தான் யேசு.
"நீட்டிறா கை நேராய்..?”
கொஞ்சம் முன்னால் அவன் நீட்ட? சுள்ளென்று விழுந்தது பிரம்படி
“F法.!!”
யேசு அடியுடன் வயிற்றை எக்கிக்கொண்டு நெளிந்தான்.
“”LLIT?”
"ஊ. ஊ.” - என்று கொண்டு அடுத்த அடிவாங்க அவன் கையை நீட்டினான்.
சிலாஸ்ஸ்.’ என்று அடுத்த அடி,
“ஒவ் ஒவ்”
யேசு அடியை வாங்கிக்கொண்டு ஒரு துள்ளுத் துள்ளினான். நெளிந்தான். குண்டியிலே அடிவாங்கி நோப்பட்ட கையை தேய்த்துக் கொண்டு பாதரின் முகத்தைப் பார்த்தான். பாதரின் முகம் இறுகிப் போன மாதிரி இருந்தது. அதைக் கொண்டு இன்னும் எனக்கு அடி இருக்கு என்றமாதிரித்தான் யேசு நினைத்துக் கொண்டான். கண்களில் அவனுக்குக் கண்ணிரும் கசிந்து நின்றது.
மூன்றாவது பிரம்படி அவனுக்குக் கடைசிப் பிரம்படி என்ற காரணத் தால் மிகவும் உறைப்பாக விழுந்தது. அவன் அடியை வாங்கிக் கொண்டு சுழன்றான். சுவாமியாரின் விசாரணை அடுத்த பையனிடம் ஆரம்பமானது.
O 116 O ரீ.பி.அருளனத்தs

"யோசேப்பு நீ யேன்ரா வரேல்ல.?”
"அது பாதர்.”
சிலாஸ்.'
அடியுடன் விறுவிறு என்று அவன் சொல்லத் தொடங்கினான்.
“தோச்சுப்போட்ட காச்சட்ட சேட்டு நேற்று ரவ்வு பெஞ்ச மழையில நல்லா நனைஞ்சு ஈரமாப் போச்சு.”
சிலாஸ்.
"ஐயோ அதான் போட உடுப்பில்ல எண்டுபோட்டு வரேல்ல பாதர்." "ஏன்ரா ஒரு உடுப்புத்தானா நீ வச்சிருக்கிறாய்..?” “மற்றதெல்லாம் ஊத்த பாதர் தோய்க்கேல்ல” “சிலாஸ் சிலாஸ் சிலாஸ்.”
யோசேப்புக்கு சோம்பேறித்தனமாக இருந்த காரணத்தால் ஐந்து பிரம்படி கிடைத்தது.
"சோம்பேறித்தனமும் அற்ப பாவமில்ல. சாவான பாவம்.” - என்று பிரம்படிக்குப் பிறகு சுவாமியார் அவனுக்குச் சொன்னார்.
அடுத்த பையன் பெயர் சேவியர். அவனுக்குப் பாதர் தன் கையிலிருந்த பிரம்பை நீட்டி அடிபோட உயர்த்தும்போது,
"வீட்டில எல்லாருக்கும் மலேரியாக் காய்ச்சல் பாதர்.” என்று சொன்னான்.
"உனக்குக் காய்ச்சலா.?”
"இல்ல."
"அப்ப ஏன் நீ வரேல்லப் பூசைக்கு?”
“அவயளுக்குத் தேத்தண்ணி வைச்சுக் குடுக்கவெண்டு அடுப்பில நான்தான் சுடுதண்ணிக்கு வைச்சு எரிச்சனான்.”
“நேரத்துக்கு நீ எழும்பி அதெல்லாம் செய்து கொடுத்துப்போட்டுப் பூசைக்கு வாறதுதானே.?” அவனுக்கும் நல்ல பிரம்படி விழுந்தது.
அடுத்த பையன் பெரிய மல்லன் மாதிரி வளர்த்தியும் உடம்பும்!
துயரக் கசப்பண்கள் O 117 O

Page 65
அவன் விறுமனாட்டம் கையை நீட்டிக் கொண்டு நின்றான்.
அவனுக்கு ஏதும் வாய் விசாரணையின்றி மளமளவென்று சுவாமியார் பிரம்படிபோட்டு நிறுத்தினார். பத்துக் கற்பனை உங்களைத் திருத்துதோ இல்லையோ என்ர பிரம்படி உங்களைக் கட்டாயம் திருத்தும், என்ற மாதிரித்தான் சுவாமியார் அவர்களுக்குக் கொடுத்த சிட்சை இருந்தது.
அடிவாங்கிய பையன்களெல்லாம் சோகம் தாங்கிய முகங்களோடு குருவானவரின் அறைவீட்டாலிருந்து வெளியேறினார்கள். படலையைத் திறந்துகொண்டு அந்தப் பையன்களெல்லாம் போகும் போது, லாசர் அதிலே நின்றபடி மனதில் மகிழ்ச்சியோடு அவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
பையன்களுக்குப் பிரம்படி கொடுத்து முடிந்த கையோடு சுவாமியார் காலைச் சாப்பாடு சாப்பிடுவதற்காக சாப்பாட்டு மேசையடிக்குப் போனார். பாண்முட்டைப் பொரியல் சம்பலுடன் ரீ இருந்தது மேசையில் அவர் கதிரையில் இருந்து கொண்டு சாப்பிடுவதற்கு முன்பாக ‘அசனத்துக்கு முன் ஜெபம்' - சொன்னார். செபம் சொல்லி முடிந்த கையோடு மூன்று சிலைஸ்" பாண் முட்டைப் பொரியல் சம்பலுடன் சேர்த்துச் சாப்பிட்டார். அதைச் சாப்பிட்டுவிட்டு சீனி போடாமல் பால் தேத்தண்ணீர் குடித்தார். எல்லாம் சாப்பிட்டுக் குடித்தானதும் கடவுளுக்கு நன்றியறிந்த ஸ்தோத்திரமாய் அசனத்துக்குப் பின் செபத்தைச் சொல்லிவிட்டுக் கதிரையாலிருந்து எழுந்தார்.
சுவாமியாருக்கு அசாத்தியமான ஒரு சுறுசுறுப்பு எப்போதும் அவர் செய்கிற வேலைகளிலெல்லாம் இருந்துகொண்டிருக்கும். திருப்பலிப் பூசை ஒப்புக் கொடுப்பதைக்கூட விறுவிறுவென்று நடத்தி அவர் வேளைக்கு முடித்துவிடுவார். பின்னேரம் விளையாட்டு மைதானத்தில் பெடியன்களுடன் சேர்ந்து அவர் கால் பந்தும் சிறிதுநேரம் விளையாடுவார். கனகலிங்கம் சுருட்டுப்புகைக்கிற பழக்கமும் அவரிடம் இருந்தது.
வெளியே லாசர் தனக்காகக் காத்துக்கொண்டு அங்கே நின்று கொண்டிருக்கிறான், என்று சாப்பிட்டானதும் அந்த விடயத்தை நினைவில் எடுத்துக் கொண்டார் சுவாமியார். அந்த நினைவோடு, அவதியுடன் போய் அறைக்குள்ளே உள்ள தன் “றைபிள்” துவக்கை ரவைகள் போட்டு நிரப்பிக் கொண்டு வெளியே வந்தார். படலையடிக்கு அவர் நடந்து வர லாசரும் அவருடன் போவதற்குத் தயாராய் நின்றான். படலையடிக்கு அவர் நடந்து வருகிறபோது அவன்தான் போய்ப்படலைத் திறந்து பிடித்துக்கொண்டு நின்றான்.
O 118 O ரீ.பி.அருளானந்தs

“சரி வெளிக்கிடுவம்” என்றார் அவர்.
அவர் சொல்லிவிட்டு முன்னால் நடந்து போக, சுவாமிக்குப் பின்னாலே லாசர் நடந்தான். அந்நேரம் கோயிலின் பின்புறமுள்ள மரங்களின் வளைந்த கொப்புகளிலிருந்து மந்திகள் குதித்துக் கீழே இறங்கி ஓடின. சுவாமியார் அவைகளைக் கண்டுவிட்டு,
“கோயில் கூரை வழிய ஏறி உள்ள ஒடுகள் எல்லாத்தையும் இந்தக் குரங்குகள் போய் உடைக்கப்போகுது” என்று சொல்லிக்கொண்டு "சைமன்! சைமன்! இங்க பார் குரங்குகளை கோயில் ஒடு வழிய போய்ப் பாயப்போகுது?” என்று சமையல் கட்டில் நின்ற அவனுக்குக் கேட்கக்கூடிய விதமாய் உரத்த சத்தமாய்ச் சொன்னார்.
சமையல் பார்ப்பதோடு, குரங்குகள் கோயில் பக்கமாக வந்தால் அவைகளை வெடிகள் கொளுத்திக் கலைப்பதுகூட சைமனின் வேலைதான். அவன் சுவாமியார் தனக்குச் சொன்ன சூட்டோடு சூடாய் குசினிக்குள் வைத்திருந்த வெடிப்பைக்கட்டைக் கொண்டுவந்து ஒற்றை வெடி கொளுத்திப் போட்டான். வெடிச்சத்தத்தோடு கருங்குரங்கு களெல்லாம் வளவுக் காட்டு மரங்களிலேறிப் பாய்ந்தோடின. அந்தக் குரங்குகள் யாவும் கிளைகிளையாய்த் தாவி ஓடும்போது, மரக்கிளைகள் வளைவதும் நிமிர்வதுமாய் அசைந்தாடிக் கொண்டிருந்தன. “ஈர்க் கூர்க் கென்று குரங்குகள் பாய்கின்றபோது அவைகள் போடுகிற சத்தம் ஒருபுறம் கிளைகள் குழைகள் சொய் சொய்.” என்று அதனுடன் ஒத்தாய்க் கேட்கின்ற சத்தம் இன்னொருபுறம்! என்றவாறாயெல்லாம் இருக்கும்படி கோயில்வளவுக் காட்டையே சிறிது நேரமாய் குரங்குகள் கலவரப்படுத்திக் கொண்டிருந்தன.
f4
காட்டுப்பக்கம் நெருங்கும்போதுசுவாமியாரினதும் லாசரினதும்தலைக்கு மேலாக தும்பிகளின் கூட்டம், வட்டமிட்டபடி பறந்துகொண்டிருந்தன. அவர்கள் நடந்துகொண்டிருக்கும்போது, கால்களின் கீழே வேப்பம்" முத்துக்கள் மிதிபட்டன. நல்ல காலைக் காற்றடித்தது. காற்றின் வேகம் மரக்கிளைகளை உசுப்பி எழுப்பியது.
"லாசர் மூழ்கிய தியானத்தைப் போல் தலை கவிழ்ப்போடு, துள்ளல் துடிப்பு இல்லாமல் நடந்துகொண்டிருந்தான்.
நடைபாதையில் ஒருபக்கம் அறுத்துப்போக முடியாத தாவர, கொடிப்
plugs alstvaradi o 119 о
a ys. "

Page 66
பின்னல்கள்! அந்த இடம் தள்ளி விலகி நடந்தார் சுவாமியார். காட்டுக்குள்ளும் அவருக்கு வெடுக் வெடுக்கென்ற நடை. அவர் போட்டிருந்த கனதியான கால்சப்பாத்தில் சுள்ளிகளும் இலைச் சருகு களும், மிதிபட்டு சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
"லாசர் வெறுங்காலுடன் செருப்புப் போடாமல் திரிபவன். எந்த இடத்திலும் கல்லுமுள்ளுக் காலில் குத்தாமல் அவனுக்கு நடந்து போகத் தெரியும். ஆனாலும் சுவாமியாரின் அருகே அவன் நடந்து போகையிலேதான், இப்படியான தொந்தரவுகளெல்லாம் அவனைப் பற்றிப் பிடித்தததாகி விடுகின்றன. அவனுக்கு இப்போது முட்செடி முகத்திலடித்துச் சாதுவாய்க் கிழித்துவிட்டது. நடைவழியில், அவன்கை நகத்துக்கு அகப்படும் முட்களைக் கிள்ளி எடுத்து எறிந்து கொண்டிருந்தான்.
"கவனமாகப் பாத்து வாவன்ரா லாசர்?" - என்று சுவாமியாரும் அவன் நிலையைக் கண்டுவிட்டுப் பேசினார்.
சுவாமியாருடன் சேர்ந்து கொண்டு வராவிட்டால் இந்தக் கோயில்வளவுக் காட்டுக்குள்ளே அவன் ஒரு ஜிம்போ! இந்த இடத்தின் ஒவ்வொரு மரங்களிலெல்லாம் ஜிம்போ' மாதிரி ஏறி கிளை உருவிக் கீழே விழுந்து மறுபடியும் தூர் வழியே ஏறிப்போய்த் தொங்குகிறவன்
இவன்.
இப்போது சுவாமியார் அருகில் வந்துகொண்டிருக்க, மனம் அவனுக்குச் சோர்வாக இருந்தது. தனியே இந்தக் காட்டுக்குள் அவன் வந்திருந்தால், தன் இஸ்டப்படி எல்லாம் அவன் இதற்குள்ளே சுற்றித்திரிந்திருப்பான். சாப்பிடக்கூடிய காய்கனி பூவென்று அவை களையெல்லாம் விரும்புகிற மாதிரி மரம் செடிகளிலிருந்து பறித்துச் சாப்பிட்டிருப்பான். சிலவேளைகளில் அந்தமாதிரியான வேறு ஆசைவந்தாலும்கூட அதையும் உடனே தீர்த்துக்கொள்வான்.
அப்படியான சுதந்திரமும் சந்தோசமும் பாதருடன் கூடவே வருகிற போது கிட்டுமா? இந்தக் காட்டுக்குள்ளே கூட பாதரின் முழுநீள வெள்ளை அங்கி அவனைப் பயத்தில் ஆழ்த்திவிடத்தானே செய்கிறது?
லாசர் மனதுக்குள் இப்படியாகவும் நினைத்துக்கொண்டான்.
“கோயில் பூசை வைக்கிற சுவாமிக்கு ஏன் இந்தக் கொலை பாதக வேட்டை.? இவர் தன்ர அறை வீட்டில இருந்து கொண்டு சமையல் செய்யிற கோக்கியை சந்தைக்கு அனுப்பினாரெண்டா, அவன் தேவையான இறச்சிய வாங்கிக் கொண்டருவான். மாட்டிறைச்சி ஆட்டிறச்சியில இருந்து நாட்டுக் கோழிவரை அங்கின வாங்கிக் O 120 O ரீ.பி.அருளரைத்தs

கொள்ளேலும்தானே? காட்டுப் பண்டி இறைச்சிகூட இடை இடையே அங்கினேக்க வந்து நல்லா இப்ப வில்படுது. மான் இறைச்சியும் பொலிசுக்குப் பயந்து கள்ளமா வைச்சு அங்கின வழிய விற்பாங்கள், வேணுமெண்டால் அதையும்தான் அந்தச் சந்தைவழிய திரிஞ்சா வாங்கலாம்! இப்புடியெல்லாம் இந்த வவுனியாவில இறைச்சி வாங்கிக் கொள்ள நல்ல வசதிகள் இருக்கேய்க்க, இந்தத் துவக்கக் கொண்டந்து இந்தக் காட்டுக்க சுட்டுத்தான் இவர் இறச்சி சாப்பிட வேணுமே? இந்த மரம் வழிய என்ன கிடக்கு? மிருகங்களே வருது? பாவம் இந்தக் குருவிகள் தான் வந்து விழுகுது! அல்லாட்டி அந்த உடும்பு அதெல்லாம் இந்தச் சுவாமிக்கு தின்னுறத்துக்குப் பெரிய ருசியில்ல. ஆனாலும் இவருக்கு ருசி. தன்னட்ட உள்ள துவக்கால கொண்டந்து, தான் இதுக்க நிண்டு குருவி உடும்பு சுடவேணும்.! அதைப்பிறகு தான் சுட்டதெண்டு நினைச்சுக்கொண்டு அவர் சமைச்சுச் சாப்பிடுறதாவும் இருக்கும்!"
என்றதாய் இவைகளை மட்டும் அவன் யோசித்துக் கொண்டு சுவாமிக்குப் பின்னாலே நடந்துகொண்டிருக்கவில்லை. அவன் இதற்கும் மேலாக தன் மனதைப் போட்டு நாளாந்தம் வருத்திக் கொண்டிருக்கும் இன்னொரு விடயத்தையும் பற்றி அவ்வேளையில் நினைத்தான்.
“இந்தச் சுவாமியும் சுத்தமான ஒரு பாதர் மாதிரியா இல்ல. இவரும் சாதித் துவேஷம் காட்டுறவயள எதிர்த்து ஒண்டும் செய்ய முடியாமல்தானே இந்தக் கோயிலயும் பாதரா இருந்து கொண்டிருக்கிறார்? எங்களைப் பெருநாள் வழிய நடக்கிற சுற்றுப்பிரகாரங்களில சுரோல தூக்க அவங்கள் விடுறாங்களேயில்ல. நாங்களும் சுரோல தூக்கப் போகேல்லத்தான்! எங்களையும் விடுங்கோ எண்டுபோய் அவங்கள நாங்கள் கேக்கேல்லத்தான். எண்டாலும், எங்களயும் ஒரு மனுசரா அவங்களோட சேத்து ஏதும் கோயில் அலுவல்களில செய்யிற காரியங்களுக்கு இவரெண்டாலும் எங்களைக் கூப்பிடுறாரோ.? இல்லயே..? எதில எங்களைக் கலந்துகொள்ளாம இவயள் விட்டாலும் பறவாயில்ல சரி போகட்டும் எண்டு விட்டிடலாம்! ஆனா, பரிசுத்தமான ஆண்டவர் செத்த அந்தப் பெரிய வெள்ளிக்கிழமையில எண்டாலும் அந்தப் பாடுபட்ட சுருவத்துக் கல்லறை ஆண்டவற்றை சுரோலையை எண்டாலும் சுற்றப்பிரகாரத்தில எங்களைத் தூக்க விடலாம்தானே.? கோயிலுக்கிளயும் நாங்கள் ஒதுக்குப்புறம்தான். அதுக்குள்ளயும் நாங்கள் ஒரு மூலைக்க நிண்டுதானே பூசை காணவேணும்.? எங்கள மாதிரிப் பெடியன்களுக்கு பூசைக்கு உதவ ஆசை. இந்த விசயத்தில எண்டாலும், சுவாமி எங்களக் கூப்பிட்டு பூசைக்கு உதவ விடலாம்தானே..? அதுகள் ஒண்டுமே எனக்கும் இல்ல. எங்கட பக்கத்து சேரியில உள்ள ஆக்கள் ஒருவருக்குமில்ல. ஆனா இப்பிடியான வேலையளுக்கு மாத்திரம் சுவாமி எங்களத் தன்னோட
துயரச் சுண்பண்கள் O 121 O

Page 67
வைச்சுக் கொள்ளுறார். இந்தக் காட்டுக்குள்ள நடமாடுறத்திற்கான திறம மட்டும்தான் என்னட்ட இந்தப்பாதர் கண்ட ஒரே தகுதியோ?”
காட்டுக்குள்ளே நுழைந்ததற்குப் பிறகு, இலைச் சத்தமும், சில்வண்டு ஒலியும் தவிர வேறு ஒலியே இருக்கவில்லை. யோசனை அவனுக்குப் போய்க்கொண்டே இருந்தது. அந்தச் சிந்தனையிலிருந்து நழுவாமல் அதையே பற்றிக் கொண்டு அவன் நடந்து கொண்டிருந்தான். சுவாமியார் பெரிய பாலை மரத்துக்குக் கீழே நடந்து வந்தபோது, மேலே அண்ணாந்து பார்த்தபடி அவ்விடத்திலே நின்றார். பாலை மரத்து இலைக் கூட்டக்கிளைகளின் இடைவெளியே தெரிந்த சூரிய வெளிச்சத்துக்குத் தள்ளி நின்றாலும், அவ்விடத்துக்கு அருகே பார்த்தார். மரத்துக் கெட்டிலே மூக்கை உரசிக் கூர்பார்த்துக் கொண்டிருந்தது ஒரு மரங்கொத்தி அதன் வண்ண அடுக்குகளான இறகுகளைப் பார்த்துவிட்டு, அங்காலே உள்ள கனத்த கிளையைப் பார்த்தார். அதிலே காட்டுப்புறா உட்கார்ந்திருந்தது. புறா பதுங்கியது மாதிரி இருந்தது. ஜாக்கிரதையோடு அது தன் முழு உருவமும் கண்ணுக்குப் புலப்படாத சாமர்த்தியமாய், ஒவ்வொரு கிளையாய்த் தாவித் தாவி மறைந்து கொண்டே இருந்தது. அவர் கிளைகளுக்கு ஊடாக அதைப் பார்த்துக்கொண்டு நகர்ந்து றைபிளை தோளில் அணைத்துப் பிடித்துக்கொண்டு குறிபார்த்தார். ஒரு இடத்தில் குறி புறாவின்மீது சரியாகப் பொருந்த துவக்கு விசையைத் தட்டினார். "கிறிட்ஸ்” என்ற சத்தத்துடன் தோட்டா வெடித்து ரவை பாய்ந்தது. ரவை அடிபட்டுத் துளைத்த காயத்துடன் புறா சுழன்றடித்தபடி மரத்தின் கீழே விழுந்தது. லாசர் சுவாசத்தை நுரையீரலிலேநிறுத்தி வைத்துக்கொண்டான்.
வெடிச்சத்தத்தோடு ஆலமரக் குருவிகள் குய்ய்' எனப் படபடத்து அமர்ந்தன. மரங்களில் கூடிய பறவைகளின் கெக்கட்டம் அடங்கினது மாதிரி இருந்தது. அவையெல்லாம் வெடிச்சத்தத்தோடு திகைத்தது மாதிரியாய் இருந்தன. குரங்குகள் ஒரு பக்கம் மரங்களுக்குத் தாவித்தாவி கோயில் வளவுக் காட்டையே தரைதொடாமல் வளைய வந்து கொண்டிருந்தன.
லாசர் குண்டு துளைத்துச் செத்து விழுந்த புறாவைப் பார்த்தான். புறாவின் அழகிய மார்பிலேதான் குண்டு துளைத்திருந்தது. இரத்தத்தில் நனைந்துகிடந்த புறாவை அவன் தன்கையில் எடுத்துக் கொண்டான். ஒருவித புன்னகை நெழிப்போடு சுவாமியார் பிறகு நடந்துபோய் கூழாமரத்தடியில் நின்றார். அந்த மரத்துக்குப் பக்கத்திலே நின்ற சொட்டு மாங்காய் மரம் காற்றுக்குக் காய் குலுக்கிக் கொண்டிருந்தது. அதன் கீழ்க்கிளையில் வந்தமர்ந்த ஒரு ஒற்றைப் பறவை கிறீச்சிட்டது. அந்த O 122 O ரீவி.அருணானந்தே

மரத்துக்குக் கீழேயும் நின்று கொண்டிராமல் பாதர் கொஞ்சம் தள்ளித் தூரமாய் நடந்து போனார். அவர் போன இடத்தில் ஒரு பெரிய நாவல் மரம் நின்றது. அதற்குப் பக்கத்தில் நின்ற காட்டுமரத்தில் பருத்துத் திரண்ட கொடிகள் அதைச்சுற்றிப் பிணைந்திருந்தன. தடித்த இலை விடும் கொடி அந்தக் கொடிசுற்றி மேலேறிப்போன உயரத்தில் அவர் பார்த்தார். உறுதியான தசையின் நெளிவோடு ஒரு உடும்பு கொஞ்சம் நகர்ந்துபோய் மரத்துடன் உடலை இறுக்கி ஒட்டிக் கொண்டிருந்தது. பறவைகள் பெரிய சந்தைபோல நாவல் மரத்திலிருந்தும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தன. சில குருவிகள் கீழே இருந்து வரும் அபாயத்தை அறிவிக்க வேறுவிதமான அபாய ஒலியை எழுப்பத் தொடங்கின. நாவல் மரத்தில் கொக்கும் இருந்தது. சுவாமியாருக்கு எல்லாவற்றையும் பார்க்கப் பரபரப்புக் குடியேறியது.
நிழல் அடர்ந்த தரையில் நின்றுகொண்டு மேலே பார்க்கும் போது வெயில்பட்டுக் கொண்டிருக்கும் இடத்துக் கிளை மறைவுகளில் பறவைகளைத் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்வது கஷ்டம். அவருக்கு உடும்பையும் விட மனமில்லை. கொக்கையும் விட மனமில்லை. ஒன்றைக் குறிவைத்துச்சுட்ட பின்பு மற்றையதைச் சுடுவதென்பது நடவாத காரியம். கொக்கைச் சுட்டால் சத்தத்துக்கு உடும்பு ஓடிவிடும். அதேபோல் உடும்பைச்சுட்டால் கொக்கு மரத்தில் தரித்திராது உடனே பறந்துவிடும்!
என்ன செய்யலாம்? யோசித்தார்! “லாசர் எதையடா சுடுவம்?” . மெதுவான சத்தத்தில் கேட்டார்.
"உடும்பு பெறுமதி பெரிய உருப்படி!” - என்று அவனும் சத்தத்தைக் குறைத்து அவருக்குச் சொன்னான். "அப்ப கொக்கு?” - அதற்கும் ஆசை சுவாமிக்கு. "அது வேணாம் நீங்க பாதர் உடும்பைச் சுடுங்கோ" லாசருக்கு சந்தோசமாக இருந்தது. "சுவாமி கூட என்னட்டக் கேட்டிட்டுத்தானே துவக்காலயும் சுட இருக்கிறார்.?” என்றதாய் மனதுக்குள் பெருமை அவனுக்கு.
சுவாமியார் சோணைக்கருகாகத் துவக்கை அணைத்துப் பிடித்துக்கொண்டு, உடும்புக்குக் குறிபார்த்தார்.
“கிறிட்ச்"
வெடி விழுந்தது.
zugă asovariască o 123 o

Page 68
றைபிள் குண்டு உடும்பின் வயிற்றுப் பக்கத்தில் துளைத்தது. அதை மரத்துப் பிடிப்பிலிருந்து பிய்த்து எடுத்துத் தூர வீசியது. உடும்பு கீழே நிலத்தில் தக்கென்ற சத்தத்துடன் விழுந்தது. அந்த மரத்தில் உடும்பு இருந்த இடத்துக்கு மேலே உள்ள கிளைகளில் கிளிகளும் சில இருந்துகொண்டிருந்தன. உடும்புக்கு வைத்த வெடியோடு, அவைகளும் மேலாலே பறந்தன. நாவல் மரத்தடியில் இருந்த குருவிகளும், கூழா மரத்திலிருந்த குருவிகளும் இந்தச் சத்தத்தில் பெரும் கலவரப்பட்டுப் பறப்பதும், பிறகு திரும்பவும் கூரையாக நிறைந்திருந்த இலைப்பரப்பில் போய் இணைவதுமாக இருந்து கொண்டிருந்தன. முன்பு போலவே இப்போதும் வெடிகேட்டதிலிருந்து குரங்குகள் அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தன.
“லாசர் சரி நாங்க இனிப் போவம்!” - என்று பாதர் அவனுக்குச் சொன்னார்.
அவர் அவ்வாறு சொல்லவும். அப்பா. எனக்கு விடுதலை இனி.!" - என்றமாதிரி லாசருக்கு இருந்தது. அவன் முன்புதான் வைத்திருந்த புறாவோடு, சுடுபட்டு விழுந்து கிடந்த உடும்பையும் மறு கையில் எடுத்துக்கொண்டான். சுவாமி முன்னால் துவக்குடன் நடந்து போக, அவருக்குப் பின்னாலே லாசரும் நடக்கத் தொடங்கினான்.
சேரியிலே செவ்வந்தி வீட்டுக்குப் பக்கத்திலே உள்ள தண்ணிமலை என்பவனது வீட்டு நாய், துவக்குச் சத்தங்கள் கோயில் வளவிலிருந்து கேட்டதோடு வெருண்டுவிட்டது. அது மேலே போக கால் ஏறாமல், அதிலே நின்றபடி பின்னிப் பின்னிக் குரைத்துக் கொண்டிருந்தது. தன் வீட்டு வாசலில் குந்தியிருந்து கொண்டு முற்றத்தில் உள்ள செவ்வந்திப் பூக்களைப் பார்த்துக்கொண்டிருந்த செவ்வந்திக்கு, நாய்ச் சத்தம் நெஞ்சில் அடிக்கிறது போல இருந்தது.
"சவம்பிடிச்ச நாயி..” என்று அதைத் திட்டியவாய் அவளுக்கு ஒயவில்லை,
ஏதோ கீழாலே பறந்து வந்து அவள் இருந்து கொண்டிருந்த வாசலுக்கு மேலே உள்ள செத்தையில் மோதி, தனக்கு முன்னால் விழுந்ததுபோல இருந்தது. பார்த்தாள்!
ஒரு பச்சைக் கிளி சிபிச்சக்கரவர்த்தி காலடியில் விழுந்த புறாப் போல இதுவும் அவள் காலடியிலே வந்து விழுந்திருக்கிறது. அது கீழே விழுந்ததும் மீண்டும் பறந்துபோக சிறகை அடித்தது. ஆனால் அதனால் பறக்க முடியவில்லை. முயன்று மீண்டும் நடுங்கிக்கொண்டு தன் சிறகை பட படவென்று அடித்தது. அந்த விசையில் சுழன்று O 124 O நீ.பி.அருளரைத்தச்

சுழன்று மண்ணிலே கிடந்ததேயொழிய, அதனால் பறக்கவே முடியவில்லை. "கூக். கர்க். கீக்.” என்று அதற்கென்று உள்ள இயல்பாயில்லாத சத்தம். வேதனையும் பயமும் கலந்ததான சத்தமாய் அதைக் கேட்கவும் செவ்வந்திக்கு இருந்தது. சிறகடித்துச் சிறகடித்துக் களைத்துவிட்டது கிளி வாயைத் திறந்தபடி களைத்து மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. விழியில் பயத்தின் சாயல், செவ்வந்தி கிளிக்குப் பக்கத்தில் நின்றபடி குனிந்து அதைப் பார்ந்தாள். “கர்க் கர்க்” என்று அடித் தொண்டையால் அது கத்திக் கொண்டிருந்தது. "பாவம்.! பாவம்!” என்று சொல்லியபடி அதைத் தொடக் கையை நீட்டினாள். அவள் கையை நீட்டுவதைக் கண்டுவிட்டு சிறகடித்தது கிளி அவள் உடனே பயத்தில் கையை மடக்கிக் கொண்டாள். அது தன் சொண்டை நிலத்தில் ஊன்றி உடலை இழுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. செவ்வந்தி பயப்படாமல் கையை நீட்டிக் கிளியைப் பிடித்தாள். அது “கர். கர்” என்று சத்தமிட்டது. அவளின் விரலை சொண்ட்ால் கவ்விப்பிடித்தது. அவள் விரலை விலக்கிக் கொண்டு பாதுகாப்பாக அதைப் பிடித்துக் கொண்டாள். "ராக்காயி” என்று வேலிக்குப் பக்கத்தில் நின்று கொண்டு, தண்ணி மலையின் வீட்டுப்பக்கம் பார்த்தபடி கத்தி அவளைக் கூப்பிட்டாள். அவள் கூப்பிட்ட குரல் கேட்டு ராக்காயி உடனே ஓடிவந்தாள். “என்னக்கா. என்னக்கா” என்று அவள் கேட்க, தன் கையிலுள்ளதை அவளுக்குக் காட்டினாள்.
“என்னக்கா கையில?”
“ë]6ñፃ!”
"sofu int...?'
“எங்க பிடிச்ச.?”
"கீழ பறந்து வந்திட்டு இதிலயா அடிபட்டு விழுந்திடிச்சு.?” “கிர்கிர்க்.”
"என்னக்கா கத்திது.?”
“தெரியல்ல.!” - சொல்லிவிட்டு கிளியின் கால் பக்கத்தில் விரலால்
தடவினாள். அவளின் விரல் படவும் கால் நகத்தைக் குறுக்கிக்
கொண்டு "கர். கர். கர்.” என்று அது கத்தியது.
zugă sistualăsă o l25 o

Page 69
"Tuub..."
"SITLILDIT...?'
"b. '
"யாராச்சும் கல்லால இதுக்கு அடிச்சிருப்பாங்களாக்கா..?”
“தெரியல்ல.”
"அப்புடீத்தான் இருக்குமக்கா. ஆராச்சும் இதுக்குக் கல்லால எறிஞ்சிருப்பாங்க. அதுதான் காயம் பட்டு இங்கின மட்டுமா பறந்து வந்து விழுந்திருக்கு.?”
"பாவம்.”
“ம். பாவம் தான்.”
“கிர்கிர். கிர்.”
''
"புண்ணு வேதன கத்துது
"மருந்து ஏதாச்சும் வைச்சு கட்டுவமா..?”
"ஆமாக்கா பாவம்!”
"நான் பச்சில புடுங்கிறன் அதுமட்டும் இத புடிக்கிறியா.?”
"ஆமா. ஆனா இது கடிக்கும் உது கொத்திப்புடுமே?”
“சரிடி விடு.!” - என்று அவளுக்குச் சொல்லிவிட்டு அவள் கிளிக்கு வாயால் காற்றை ஊதிக் கொண்டு குடிசைக்குப் பின்புறமாகப் போக நடந்தாள். ராக்காயியும் தமக்கைக்குப் பின்னாலேயே போனாள். பின்புறமுள்ள வேலியின் மூலையில் 'அம்மான் பச்சரிசி மூலிகை நிறைய முளைத்திருந்தது. அதைப் பிடுங்கிக் கிளியின் காயம்பட்ட இடத்தில் அதன் பாலினை வைத்தாள். அது போதாதென்று பிறகு நினைத்துவிட்டு, வீட்டுப் படலைத்திறந்துகொண்டு வெளியிலே போய் சாம்பல் மேட்டுப் பக்கம் முளைத்திருந்த தாத்தாதலைப் பூண்டினைப் பிடுங்கிக் கொண்டுவந்து, கிளியை கடகப் பெட்டிக்குள் மூடிவைத்துவிட்டு பூண்டைக் கல்லிலே வைத்துக் குத்தினாள். அதன் சாற்றைப் பிழிந்து சிரட்டையில் வைத்துக்கொண்டு கடகப் பெட்டிக்குள் இருந்த கிளியைப் பிடித்து அந்த இலைச் சாற்றையும் அதன் காயத்துக்குப் போட்டாள். நேரம் செல்லச் செல்லக் கிளி' கொஞ்சம் வருத்தத்திலிருந்து தேறியிருந்தது. செவ்வந்தி கிளியைக் கையிலே தூக்கிக்கொண்டு அன்று முழுக்கத்திரிந்து கொண்டிருந்தாள். O 126 O ரீ.பி.அருணானந்தே

அதற்குத் தண்ணீர் பருகக் கொடுத்தாள். உணவூட்டினாள். ஆனால் உண்ணாமல் உதறியது கிளி நேரஞ் செல்லச் செல்ல கிளி தேறியது மாதிரி வந்தது. அவளது கையிலிருந்து சிறகை உருவிக் கொண்டு படபடக்க அது சிறகடித்தது. செவ்வந்தி உடனே கையை விரித்தாள். ‘விர்'ரென உடனே பறந்து விட்டது அந்தக் கிளி.
கிளியுடனிருந்த சிறிதுநேர உறவில் அவளுக்கும் ஒருவிதமான துக்கம். ஆனாலும் மகிழ்ச்சி. ராக்காயி கிளி பறந்துபோன திசையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். நன்றாக மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டாள். தன் வியர்வை நாற்றம் அவளுக்குத் தெரிந்தது. அக்காவும் தங்கையும் பிறகு தங்கள் வீட்டு வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்கள். நேரஞ் செல்ல இருள் கவிந்து வளைத்தது. கோயில் வளவுக்காடும் அயர்ந்து தூங்குவதைப் போல அமைதியானது. எங்கோ ஆந்தைகள் அலறின.
15
நரையும் வயோதிபமும் தனக்கு வந்துவிட்டாலும் இளம்பெண்களுக்கு பிடித்தமான கதைகளைக்கூறி அவர்களைத் தன்னிடம் பிரியமுள்ளவர் களாக இருக்கும்படி ஆக்கிவைத்திருந்தாள் லட்சுமிக்கிழவி லட்சுமிக் கிழவிக்கு என்ன கஷ்டம் இருந்து கொண்டிருந்தாலும் முகத்தில் மலர்ச்சி எந்நேரமுமிருக்கும். அதென்ன அப்பிடி ஒரு மந்தகாசமே ாஇந்தக்கிழவியின்ர முகத்தில? என்று யாருமே அவளைப் பார்த்து நினைத்துவிடும்படி அவள் செழிப்போடுதான் எப்போதும் இருப்பாள். அந்தளவுக்கு அந்த மலர்ச்சி, புன்னகை' - என்கிற பெயரோடு சிம்மாசனமிட்டு அவளிடம் அமர்ந்திருக்கும்.
பின்னேர வேளையில் 'செவ்வந்தி வீட்டுக்கு முன்னுள்ள அந்தக் கல்லில் வந்து 'லட்சுமிக் கிழவி இருந்துவிடுவாள். 'கிழவியை அதில் கண்டதும் நீர்க் குடத்திலிட்ட பூப்போல, அங்குள்ள இளம் பெண் களெல்லாம் அவளைச் சுற்றிவந்து நிற்பார்கள். லட்சுமிக் கிழவி கதை சொல்லவும் அதைக்கேட்டு அவர்கள் சிரித்து உருளுவார்கள். கிழவியுடன் கேலியடித்துக் கும்மாளம் போடுவார்கள். அவளை அது இது வென்று, இழுத்துவைத்து சிரித்துப் பேசிப் பொழுதைப் போக்குவதுதான், அங்குள்ள இளம் பெண்கள் சிலருக்கு வேலையாக விருந்தது.
லட்சுமிக் கிழவி "இங்கே வா?” என்று தனக்கு முன்னால் அதிலே நின்று கொண்டிருப்பவளைக் கூப்பிட்டால், கூப்பிட்ட கையோடு துயரச் சுஃபண்கள் O 127 O

Page 70
அப்படியானவள் உடனே அவளின் அருகில் போய் விடவேண்டும்.
"இந்தக் கல்லிலயா ஒண்ட காலத்தூக்கி வையிடி?” என்று அவளைப் பார்த்துக் 'கிழவி' பிறகு சொல்லுவாள். அவள் அப்படி சொல்லுவதைக் கேட்டு “இந்தக் கிழவி புதுசா இண்ணிக்கு எதையோ வெல்லாம் சொல்லிக்கப் போகுதடி.?” என்று கொண்டு மற்றக் குமரிகளெல்லாம் அவ்வேளையில் ஆர்வத்தோடு நடக்கப்போவதைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
“பாட்டீம்மா அவ காலப்பிடிச்சுப்பாத்து நீ என்னதான் செல்லுவியாக்கும்” - பாப்பாத்தி உடனே கிழவியைக் கேட்டுவிட்டாள்.
“உங்க உங்க காலுங்கள என் கைக்குள்ளயா பிடிச்சுப் பாத்துப்பிட்டு எப்பிடியெல்லாம் நீங்க பொம்புளேங்க இருப்பீங்க எண்ணு நான் சொல்லிப்புடுவேனாக்கும்.”
"அப்புடீல்லாம் உனக்கு சொல்லவா தெரிஞ்சுக்குதோ..?”
கிழவிக்கு அணைவாக நிக்று கொண்டிருக்கிறவள் வியப்புடன் கேட்க,
"ஆமா எல்லாமே தெரிஞ்சுக்கிட்டுத்தான் நானு ஒங்களுக்கு சொல்லிக் கிறண்டியம்மா..! நானு சொல்லிக்கிறத கேட்க உங்களுக்கு லட்டு மாதிரி இருக்கும் பொண்ணுகளா.”
(எல்லோருமே சிரிக்கிறார்கள்)
"ஏன் பாட்டி உனக்கு இதுகளயெல்லாம் யாரு பாட்டி சொல்லிக் குடுத்தாங்க..?” செவ்வந்தி கேட்டாள்.
"இதுங்களயெல்லாம் என் ஆத்தாளுதான் எனக்குச் சொல்லிக்குடுத் திச்சிம்மா”
"ஆத்தாளு இதுகூடவா உனக்குச் சொல்லிக்குமா..?” கிழவியைக் கிண்டிவிட்டுப் பாப்பாத்தி கூத்துப் பார்த்தாள்.
''
"உனக்குண்ணா சரியான திமிருடி வாய்கொழுப்படி..!” என்று வெடுக்
கென்று அவளுக்குச் சொல்லிவிட்டாள் கிழவி.
“கல்லில என் கால வைச்சுக்கிட்டிருக்கிகேன்! ஒரு காலில நிக்குந்தனயா
என் காலே நோவுது! நீ அதுவ யோசிக்காம கதைச்சுக்கிட்டிருக்கிறியே பாட்டி..?” என்றாள் அதிலே காலை வைத்துக்கொண்டு கிழவிக்கு முன் நின்றவள்.
O 128 O ரீ.பி.அருணானந்தே

“கொஞ்கூண்டு நேரமாச்சும் நிற்கேலாதாக்கும் உனக்கும் பொம்புள?” என்று கொண்டு அவளின் பாதத்துக்கு மேலே தன் கையால் பொத்திப் பிடித்துப் பார்த்தாள் கிழவி கண்ணை மூடியவாறு சற்றே யோசித்தாள்.
"வைரமாயிருக்கடி உன் காலு! நீ உன் புருசனுக்கு அடங்கவே மாட்டியாம்.!” என்று உடனே சுடச்சுட அவளுக்கு கிழவி
சொல்லிவிட்டாள்.
இந்நேரமாய் இந்தக் கூட்டத்திலுள்ள பெண்களை தொலைவிலிருந்து கண்டுவிட்டு, பாவாடை சட்டையுடன் நின்ற ஒருத்தி புதினம் பார்க்க வென்று அவ்விடத்திற்கு ஓடி வந்தாள். ஓடி வந்தவள் நடுவழியே தடுமாறி விழுந்தாள். துணி சரிந்தது. பளிரென்று எல்லாம் தெரிந்த அப்பட்ட நிலை. தெளிந்த வாளிப்பும் பளபளப்பும் அசத்தின.
கிழவியுடன் நின்ற பெண்களெல்லாம் அவள் விழுந்த கோலத்தைப் பார்த்தார்கள்.
“பறப்பிசாசே! ஏன்ரி உனக்கிந்த ஓட்டம்? கொழுப்புப்பிடிச்ச குமரி.!" என்று ஒருத்தி அங்கு நின்ற வாக்கிலே அவளைப்பார்த்துப்
பேசினாள்.
“நல்லகாலம் ஆம்பிளங்க இல்ல. பாத்திருந்தா மானம் கிழிஞ்சிருக்கும்!” என்று அதற்குள்ளே நின்ற இன்னொருத்தி சொன்னாள். அதைச் சொன்னவள் யார் என்று கவனிக்காமல் அவள் சொன்னதை எல்லாப் பெண்களும் யோசித்துப் பார்த்தார்கள். அவர்களுக்குக் கூசச்செய்தது.
“சீச்சீ.” - என்று சொன்னாள். அவள் விழுந்ததையும், தான் கண்டதை யும் நினைத்து விட்டு ஒருத்தி!
“விழுந்தா எழும்பிக்க வேண்டியதுதானே? என்ன மாதிரியா கெழவியா அவ குமரிதானே.?”
கிழவி அவள் விழுந்ததைக் காணவில்லையென்றாலும் தன்னைச் சுற்றி நின்றவர்களின் கதையை நோட்டம் விட்டபிறகு தானும் ஒன்றைச் சொன்னாள்.
விழுந்தவள் கால் எரிவுடன் நடந்துவந்து அங்கு நின்ற மற்றப் பெண்களுடன் சேர்ந்து நின்றாள். அவர்கள் எல்லாரும் முன்பு இருந்தது போல வழமைக்குத் திரும்பினார்கள்.
"இவளு கால ஒருக்கா பிடிச்சுப்பாத்து இவ எதில சேர்த்தி எண்ணு
துயரச் சுண்பண்கள் O 129 O

Page 71
சொல்லு பாட்டி.”
அவளொருத்தி சொல்ல
கிழவி பார்த்து,
éé 99
வா.” என்று அவளைக் கூப்பிட்டாள்.
“என்னடி வெக்கம்? ஆம்பிளைங்களா இங்க இருக்கு? பொம்புளைங்க தானே..! போடி கிழவி என்ன சொல்லுது பாத்துக்குவம்.?”
அவளை முன்னால் போகத்தள்ளிவிட்டாள் அவளுக்குப் பக்கத்தில நின்றவள்.
“ம் காலைக் கொண்டாம்மா?” என்று முதலவள் காலைப் பிடித்துப் பார்த்தமாதிரி இவளது கால் பாதத்துக்கு மேலும் தன் கையைப் பிடித்துப் பார்த்தாள் கிழவி
அவள் கையால் பிடித்துப்பார்த்தமாதிரிக்கு மென்மையாக இருந்தது.
"ம். இவள் புருஷனுக்கு அடங்கி நடப்பாள்.!” என்று அவளுக்குக் குறி சொல்வது போல சொன்னாள் லட்சுமிப் பாட்டி
“அடங்கி நடக்கிறது அடங்காம நடக்கிறது எண்டா என்ன கிழவி.? நீ என்ன சொல்லுறா..?” பாப்பாத்திக்கு எரிச்சலாகவிருந்தது. என்னவோ இந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டாள்.
“அடங்குறது அடங்காதது எண்ணுறது பொம்புளயாளுங்க எல்லா விஷயத்துக்கும்தான் பொருந்திக்கும். எல்லாமே தெரிஞ்ச குமரி நீ இதுமாத்திரம் தெரியாத பாப்பா மாதிரி கேள்வி கேட்கிறே.?”
கிழவி வாழைப்பழத்தில் ஊசி இறக்கிறமாதிரிச் சொன்னாள். இப்படி அவளுக்குச் சொன்னதோடு அதை நினைத்து எல்லாப் பெண்களுக்கும் சிரிப்புச் சிரிப்பாகவே வந்துகொண்டிருந்தது.
அதற்குள்ளே ஒருத்தி தானே வலிய கிழவிக்குமுன்னால் போய் நின்று தன்னைச்சுற்றிவர நிற்கும் மற்றப் பெண்களை ஒரு முறை பார்த்துச் சிரித்துவிட்டு "என்ரை காலப் பிடிச்சுப் பாத்திட்டுச் சொல்லு கெழவி?” - என்று அவளைப் பார்த்துக் கேட்டாள். தன் விம்மிய மார்பை முன்னுக்குத் தள்ளிய கணக்கில் வந்து நின்று, கர்வத்தோடு இப்படிக் கேட்டவளைக் கிழவி பார்த்தாள்.
* நீ எதுக்கும் துணிஞ்சவதானடீம்மா. ஒன்கால என்ன பிடிச்சுப் பாத்துக்கிறது. ஒன்னயப் பாக்கவே தெரியுதிடீம்மா. நீ எந்த
O 130 O ரீ.பி.அருணானந்தே

விஷயத்துக்கும் துணிஞ்சு இறங்குவீண்ணு. தீதையின்னுழநீ வந்தே பாரு ஒரு நட, அதுவே சொல்லுதே.? இதை அவள் சொல்லவும் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது சில பெண்களுக்கு. ஆனாலும் அவர்கள் அடக்கிக் கொண்டார்கள். அவள் விலகிப் போக உப்பிக்குண்டாகி பொதியாகி உருட்டுச் சட்டி மாதிரி இருந்த இன்னொருத்தி ஆச்சிக்குமுன்னால் வந்து நின்றாள். அவளைப் பார்த்துவிட்டு, "நீயிண்ணா சரியான சாணிப்பிணம், படுத்துக்கிட்டு சதா சோம்பல் முறிச்சுக்கிட்டிருப்பே?” என்று அவளுக்குச் சொன்னாள். அவளுக்குப் பிறகு மற்றவள் அதிலே வந்து நிற்க,
“ஒண்ணுக்கு ஒம்பது யோசன பண்ணுவா இந்தக்குமரி!” என்று தன் வாயில் வந்ததை உடனே அவளுக்குச் சொன்னாள்.
அவளுக்குப் பிறகு ஒரு பெண், பொத்திப் பொத்தி மிதித்து மெல்லமாக நடந்துவந்து அவளுக்கு முன்னால் நின்றாள். அவளிடமிருந்து உடல் வாசமும் வந்து கொண்டிருந்தது. கிழவி அவளைப் பார்த்து ஒரு தினுசாக சிரித்துவிட்டு ஒன்றும் அவளுக்குச் சொல்லாமல் இருந்தாள்.
"ஏன் பாட்டி இவளுக்கு ஒண்ணும் சொல்ல உன்வாயில இப்ப வரலயா..? உம்முண்ணு இருக்கிறே.!” - என்று பாப்பாத்தி கேட்டாள்.
"நானு ஒண்ணும் இவளுக்கு சொல்லிக்கமாட்டேன்!” “அட கம்மா சொல்லு.?” பாப்பாத்தி கிழவியை முடுக்கினாள்.
"அவ ஏதாச்சும் தப்பா நெச்சுக்கிட்டு ஆத்திரத்திலயா யேன்மேலயும் பாயுவா. தேளு மாதிரி என்னயப் புடுங்கிப்புடுவா.”
"அப்புடீயொண்ணும் நா இல்ல." அவளே கிழவிக்கு சமாதானம் சொன்னாள்.
"இதெல்லாம் சாமுத்திரிகா லட்சணொம் பாத்து சொல்லுறதும்மா. நானு யின்ன வேணுமுண்ணா ஓங்களுக்கு சொல்லுறேன். ஓங்க கையி, கண்ணு, மூக்குவாயி எண்ணு பொம்புளைங்களுக்கு இருக்கிற ஒடம்பு பூரா நிதானமா பாத்து அளந்துதான் நானு சொல்லிக்கிறேன். ஒரு பொண்ணு எப்படியானவேண்ணு அவ நடக்கிற நடயில தெரியும் அவ உக்காந்துக்கிற மாதிரியில தெரியும் எழுந்துக்கிற நேரம் தெரியும்! அவசிரிப்புல தெரிஞ்சுக்கும் வேர்வ மணத்தில தெரியும்! இப்பிடி ஒடம்பு பூராவுமே பாத்திட்டு யோசிச்சுச் சொல்லிக்கிறதுக்கு பெரிய படிப்பிருக்கடி பொண்ணுகளா?”
துயர சுச0uவிர்கள் O 131 O

Page 72
"ஆமா நீ பெரிய படிப்புத்தான் படிச்சியாக்கும்.? உன் புருசனும் கலெக்டர்மாதிரி வேலபாத்த ஆளுபாரு." பாப்பாத்தி கிழவிக்கு நக்கலடித்தாள். இவ்வேளையிலும் எல்லோருக்கும் நன்றாய்ச் சிரிப்புத் தான் வந்தது.
"என்ன சிரிப்பாணிச் சிரிப்பு இதில எல்லாம் ஓங்களுக்கு.? ஏண்டி பாப்பாத்தி யேன் புருசன அப்பிடி அப்புமல்லாம் கண்டவாச்கம் கதைச்சுக்கிறியே ஒனக்கு வாறவன் மாத்திரம் பட்டணத்தில நகைக்கடை வச்சுக்கிறவனா வந்திடுவானா..? ஒனக்கு வர்றவனும் இங்க உள்ளவள் தொழில பாக்கிறவன்தானே வந்துக்கப்போறான்.?"
இதைக் கிழவி சொல்ல ஒருவருமே சிரிக்கவில்லை. அதற்குள் நின்ற ஒருத்தி கிழவியை பழைய கதைக்குள் கொண்டுபோய் விடுவதற்கு வழிசமைத்தாள்.
"அதெல்லாமே வுட்டுப்புட்டு நீ பாட்டி ஒன் கதைக்கு வருவியா..?"
அப்புடிக் கேளு! இவ ஏதேதோ சொல்லிக்கிட்டு என்னையுமில்லா இப்பவா கொழப்பிக்கிறா."
"
"அதப் பார்த்துப்பிட்டுத்தான் நானு சொல்லிக்கிட்டேன். இப்ப இவ காரியமா சொல்லுறத சொல்லிக்கியேன் பாட்டி..?"
ஏ பொண்ணு மொத மொதலா நானு சொன்னனே ஓங்களுக்கு எல்லாமா. இவவண்ணா பிரச்சினைக் காரியடியினன்னு."
"அதான் அவுவே சொல்லிப்புட்டாவெல்லே. பொறவும் என்ன தொண தொணவெண்ணுக்கிட்டு.? நீ சொல்லித் துலையேன் கிழவி?”
"ம். இவ்வேளவும் என்னய நீங்கல்லாம் பிச்சுப்பிடுங்கிக்கிறதால சொல்லிக்கிறேன். அப்புறம் இவளாச்சு நீங்களாச்சு எனக்கொண்ணும் நீங்க பாதகம் பண்ணிக்காம இருந்துக்கிடுங்க.?"
"சரிதான் கதய விட்டுப்புட்டு. நீ சொல்லிக்கிறத சொல்லு.?”
கிழவி அசைந்து அசைந்து சொல்லத் தொடங்கினாள்.
"அதான் இப்ப சொல்லுறேன். இவ குமரிக்கு ஒட்டுக் கேக்கிறத்திக்கும் ஒளிஞ்சிருந்து எதையாச்சும் பாக்கிறதிக்கும் ரொம்பப்பிடிக்கும். இவளுக்கு அதில அலாதிப் பிரியம்! இது நல்ல ருசி இவளுக்கு. காலு பெருத்த இவளுக்கு வீரியமான முரட்டு ஆம்பளதான் தேவ அவனுட ஆளுமையாலதான் இவ பொம்புளய கட்டுப்படுத்தி வைச்சிக் கலாம்! இல்லாட்டிக் கஸ்டம்தான்."
0 132 0 ரி.வி.ஒருளானர்ஒர்


Page 73
இப்படிக் கிழவி சொல்ல, அவ்வாறெல்லாம் பாட்டி தனக்குச் சொல்லு வாள் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்துவிட்டது. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு கிழவியை முறைத்துப் பார்த்தபடி அவள் சுடு மூச்சு விட்டாள்.
இந்நேரம் அவர்களெல்லாம் நின்றுகொண்டிருந்த இடத்தருகே உள்ள வீதியால், தலையில் பெட்டியைச் சுமந்துகொண்டு வளைச்செட்டி வந்துகொண்டிருந்தான். இந்தக் கும்பலிலே ஒருத்தி நின்றுகொண்டு அங்குமிங்கும் தலையைத் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவனைக் கண்டுவிட்டாள்.
“காப்புச் சீப்புக் கண்ணாடி வருது.” என்று சொல்லியவாறு ஒரு துள்ளுத் துள்ளினாள்.
“இதில எங்களுக்கும் கொட்டாந்து காட்டுங்க செட்டியய்யா, இங்கிட்டு வாங்கய்யா?” என்று சொல்லி செட்டியாரைக் கூப்பிட்டாள் பாப்பாத்தி
"இவரு காப்பச் சீப்பு விக்கிறவங்களில புதுமாதிரியா உள்ள ஒரு ஆளு. பொம்புள மாதிரி" என்று தனக்குப் பக்கத்தில் நின்ற பெண்களுக்கெல்லாம் பிறகும் அவள் லேசான குரலில் சொன்னாள்.
பாப்பாத்தி சொன்னதுக்கு மிகவும் பொருத்தமுடையவனாகத்தான் அவனும் இருந்தான். அவன் பெண்களைப் போல குண்டிப்பக்கத்துத் தசைகள் ஆட, நடையிலும் அசைவிலும் விநோதமான நடன பாவத்துடன் நடந்து வந்தான். அவன் அவர்கள் நின்றிருந்த பக்கமாக வந்ததும், அவனின் தலையில் இருந்த வளையல் பெட்டியை சில பெண்கள் பிடித்து கீழே இறக்கி வைத்தார்கள்.
மேல் பெட்டியைத் திறந்தான் அவன்.
உள்ளே அவித்த குழாய்ப்புட்டுக்களைப் போல வளையல்கள் அடுக்கப்பட்டுக் கிடந்தன. அடுக்கிக் கிடந்த பெட்டிகளில் அடுத்த பெட்டியைத் திறந்தான்.
அந்தப் பெட்டிக்குள் வண்ணத்துப் பின்னூசிகள் இருந்தன. சூரிய காந்திப் பொட்டுச் சந்திரகாந்திப் பொட்டு, குங்குமம் எல்லாமே இருந்தன. அத்தரும் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு,
“என்ன அது?” - என்று கேட்டாள் ஒருத்தி
“ம்." - என்று சொல்லியவாறு, ஒரு குப்பிப் போத்தலை அவன்
О 134 О ரீ.பி.அருளானந்தே

எடுத்து அவளுக்குக் கொடுத்தான்.
"வாசத்தப்பாரு. மோந்துப்பாரு.?” அவள் அதை வாங்கி மணக்கும் போது மலைத்தாள். உச்சியில் அடித்தமாதிரி இருந்தது.
“ஊ.!’
“என்ன..?” கேட்டாள் ஒருத்தி
"6 IIT600s-Ittib!"
"ஆமா இங்கிட்டும் எனக்கும் கூடத்தான் மணக்குது!”
இருவரும் அப்படிக் கதைக்கவும், கால்விரல் நுனியில் நின்றவி தமாய் ஆர்வத்தில், எல்லாபக்கத்தில் நின்ற பெண்களும் செட்டியார் கொண்டுவந்த பொருட்களைக் கண்குத்தச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பொருட்களை வாங்குவதற்காக வீட்டில் தாங்களாகச் சேமித்து வைத்திருக்கும் காசுக் கதைகளைக் கதைக்கத் தொடங்கினார்கள்.
கிழவி அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஏச்சுக் கொடுத்தாள்.
“இந்தாடி சளசளவெண்ணு பனை ஓலேல நாய் மோண்டது மாதிரி சத்தம் போட்டுக்கிட்டு இதிலயா நிண்ணுக்கிட்டிருக்காதீங்கடி.
உங்க உங்க வீடு வழிங்கயா போயி காச எடுத்துக்கிட்டு ஓடி வந்திருங்கடி.? செட்டியாரு ஐயாவு பாவம். நாலு தெரு சுத்திச் சுத்திப் போயி யாவேரம் பாக்கவுண்ணு இருக்கிறவர கஸ்டம் குடுங்காதீங்கடியம்மா..?”
கிழவி இவ்வாறு சொல்லவும், அது செட்டிக்கும் நல்ல வாய்ப்பாகி விட்டது.
“அந்த ஆச்சி சொல்லிக்கிட்ட மாதிரி வெரசா போயி பணத்தோட வாங்க. எனக்கும் நேரமாகுதில்ல.?”
என்று கொண்டு அவனும் அவசரப்பட்டது மாதிரி நின்றான். செட்டி இப்படிச் சொன்ன கையோடு கோதண்டத்திலிருந்து புறப்பட்ட இராமபாணம் போல, விரைவாக ஒருத்தி தன்வீட்டுக்கு ஓடினாள். செவ்வந்தியும் பாப்பாத்தியும், தங்கள் குடிசைகளுக்குப்போக விரைவாக நடந்தார்கள். இப்படியே குடமுடைந்து பூச்சிதறியது போல, ஆளொரு பக்கமாக அதிலே நின்ற பெண்களெல்லாம் தங்கள் குடிசைகளுக்குப் போக விறுவிறென்று நடந்தார்கள்.
துயரம் சுஃபண்கள் O 135 O

Page 74
பெண்களெல்லாம் அந்த இடத்தாலே போக, வளைச்செட்டி கிழவியுடன் கதைத்துக்கொண்டு நின்றான். அவன் கிழவியுடன் கதைத்துக் கொண்டு நின்றதில் சில நிமிடந்தான் சென்றதாக இருக்கும். அதற்குள்ளாக அவ்விடத்தைவிட்டுப் போன பெண்களெல்லாம் திரும்பவும் அங்கே வந்து சேர்ந்ததாய் விட்டார்கள். அவர்கள் எல்லாருடைய கைகளிலும் சில்லறைக் காசுகள் இருந்தன. ஐந்துசதம், பத்துச்சதம், இரண்டுசதம், ஒரு சதம், என்று உள்ள சில்லறைக் குற்றிகளை ஒரு தரத்துக்கு இரண்டுதரம் மூன்றுதரமென்று பலதடவைகள் அவர்கள் திரும்பத்திரும்ப எண்ணிக் கணக்கெடுத்துப் பார்த்துக் கொண்டார்கள். செட்டியார் காசு கொடுத்தவர்களுக்கெல்லாம் அந்தந்தக் காசுக் கணக்குக்கேற்றபடி, அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒரு திருகுத்திருகி முறுக்கி இறக்கி வளையல் போட்டு விட்டான். தங்கள் கைகளில் சோங்கும்பாங்குமாக வலியே இல்லாமல் செட்டியார் போட்டுவிட்ட கண்ணாடி வளையல்களைக் குலுக்கிப் பார்த்துக்கொண்டும், றப்பர் வளையல்களைக் கைகளுக்கு இழுத்து நெருக்கிவிட்டு அழகு பார்த்துக்கொண்டும், அந்தப் பெண்களெல்லாம் மகிழ்ச்சி ஆரவாரத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் வண்ணத்துப் பின்னூசி, பொட்டு, செண்டு மணம் வீசும் பவுடர், கழுத்து மாலைகள், என்று அவையும் கூட செட்டி கொண்டு வந்த பெட்டியிலிருந்து யாவாரம் போனது.
யாவாரம் முடிந்து பெட்டி கட்டுகிற நேரம் வர, செட்டி கிழவிக்கு நாலு ரப்பர் காப்புகள் காசு வாங்கிக் கொள்ளாமல் சந்தோஷமாகப் போட்டுவிட்டான். ஆனாலும் கிழவி தன் வளையல் போட்ட கையை மேலும் கீழுமாய் திருப்பித்திருப்பிப் பார்த்துவிட்டு,
“என் கையி இப்பவா போயில மாதிரி சுருங்கிப்பிட்டுது. இதுக்கொரு
காப்புப் போட்டுக்கணுமா..?” - என்று வாயைச் சுழித்துக்கொண்டு சொன்னாள்.
கிழவி இடக்கு மடக்காகக் கதைத்தால், பாப்பாத்திதான் சுடச்சுட அவளுக்குப் பதிலடி கொடுப்பது மாதிரிச் சொல்லுவாள்.
"உனக்கு காசு வாங்கிக்காம ஒசியில காப்புப் போட்டு விட்டாரு பாரு செட்டியாரு. அவருக்கு வேணும்.”
அப்படி அவள் சொன்ன உடனே கப்பென்று வாய் இறுகிவிட்டது கிழவிக்கு. பிறகு ஒன்றுமே அவள் வாய் திறந்து ஏதும் சொல்ல வில்லை.
வளைச்செட்டி பெட்டிகளை மூடிப் பூட்டிக்கட்டினான். இரண்டு பெண்கள் சேர்ந்து பெட்டியைத் தூக்கி செட்டியின் தலையில் அந்தப் பாரத்தை O 136 O ரீ.பி.அருளானந்தே

ஏற்றிவிட்டார்கள். தலையில் ஏறிய காப்புப் பெட்டியைக் கையால் பத்திரமாகப் பிடித்துக்கொண்டு செட்டி நடையைக் கட்டினான்.
காப்புக் கையிலேறிய உற்சாகத்தில் ஒரு கிலுங்கும் பொருள் மாதிரி தங்களை மற்றவர்களுக்குக் காட்டிக்கொண்டு எல்லாப் பெண்களும், குடிசைகளுக்கு உடனே போய்விட்டார்கள்.
கிழவிமாத்திரம் அந்தக் கல்லிலே தனியனாக இருந்துகொண்டிருந்தாள். ஆனால் குடிசைகளுக்குச் சென்றடைந்த பெண்களெல்லாம் தாங்கள் வாங்கிய காப்புக்களையும் பிற பொருட்களையும் உறவினர்களைக் கூப்பிட்டு அவர்களுக்கும் காட்டி சந்தோஷக் கதைகளைக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கெல்லாமே மனத்தில் அளப்பரிய மகிழ்வுதான். ஆனாலும் அவர்களில் ஒருத்திதான் மனத்தில் முள் குத்திய வேதனையுடன் தன் குடிசைப் பக்கத்துக் கோடிப்புறத்தில் குந்தியபடி இருந்தாள். அவளிடம் மற்றப் பெண்களைப் போல காப்பு வாங்கிக்கொள்வதற்குக் காசு கையில் இருக்கவில்லை. எல்லோரும் காசு எடுத்துவர குடிசைகளுக்குப் போன தருணம், அவளும் தான் அவர்களைப் போல போயிருந்தாள். ஆனாலும் குடிசைக்குவந்த அவள் கையில் ஒரு ஒட்ட ஒருசேமும் இல்லாத காரணத்தால் திரும்பிப் போகவில்லை.
"எல்லோரினது கையிலும் வானவில் மாதிரி வடிவான வளையல்கள் இருக்கும். என் கை மட்டும் என்ன முடமா சொத்தியா..? என்கையும் வெறுமையில்லாமல் வளையல் போட்டுக் கொண்டால்தானே வித்தியா சம் இல்லாததாய் இருக்கும்?” அந்த நினைவோடு அவள் என்னதான் அதிலே இருந்தபடி செய்துகொண்டிருக்கிறாள்.?
அவள் பிடிபொடி மணலை எடுத்துத் தன்கைக்குள் வைத்து அழுத்தித் தேய்த்துக்கொண்டு, பித்தளைக்காப்பை மினுக்குகிறாள் போல்தான் கிடக்கிறது. அந்தக் காப்பும் அவைகளைப்போட்டு மினுக்குகிறபோது பளிச்சென்று பளபளக்கிறதுதானே?
14
இரவு நித்திரைக்கென்று போய்ப் படுக்கையில் படுத்துக்கொண்ட போதிலும் சுப்பையாப் பிள்ளையின் சிந்தனை முழுவதும் தொழுவத் தில் கத்திக் கொண்டிருந்த பசுமாட்டைப் பற்றியதாகவே இருந்தது. “பொழுதுபட வவுனியாக் குளக்கரைப்பக்கமிருந்து மேய்ச்சலால் வந்த அந்த மாட்டுக்கு என்ன நடந்தது? என்னத்தத்தான் அது திண்டுதோ?
துயரச் சுஸ்பண்கள் O 137 O

Page 75
செமியாமல் வயிறும் ஊதி. ஐயோ அருமந்த சீதேவியான பால் மாடெல்லே அது”
அவர் உண்மையிலேயே அதிர்ந்துதான் போயிருந்தார்.
“இன்னும் இந்த வீட்டுக்கு என்னென்னவெல்லாம் வரக் காத்திருக் குதோ..?” என்று அவர் உள்ளத்தில் ஒர் எண்ணம் பளிச்சிட்டுச் சென்றது. அந்த எண்ணத்தில் தன் வீடே இப்போது பொலிவை இழந்து மயான அமைதியுடன் காட்சியளிப்பதுபோல அவருக்குத் தெரிந்தது. ஆழ்ந்த சோகத்தில் அவரது மனக்கண்முன் பனிமூடியதைப் போலத் தோன்றியது. அந்த மங்கலான காட்சியில் தொழுவத்தில் கத்திக் கொண்டிருந்த பசுவின் தோற்றத்தை நினைத்துக்கொண்டு அவர் பேசத் தொடங்கினார்.
“என்ன நாசவேல ஆர் உனக்குச் செய்து முடிச்சாங்களோ..? அப்பிடி ஏதும் இல்லையெண்டால்..?” அதை மிக உறுதியாகச் சொல்லிவிட்டு ஒருகணம் தடுமாறினார். "என்னப்பா நேற்றைக்குப்போல பாக்க நல்லா இருந்துதே இந்த மாடு.?” கட்டிலால் எழுந்து இருந்துகொண்டு வெறித்துப் பார்ப்பதுபோல முன்னால் தணிவாக எரிந்துகொண்டிருந்த அரிக்கன் லாம்பைப் பார்த்தார். மனத்தில் அவருக்கிருந்த நம்பிக்கை யெனும் அஸ்திவாரமே அசைந்ததுபோல் இருந்தது.
இதன் பின் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும் தொழுவத்தையே இரண்டாகப் பிளந்து விடுவதுபோன்ற கணக்கில் மாடு பரிதாபமாகக் கத்தியது. அந்த ஒலி பலமாகவும் தெளிவாகவுமாக அவரின் காது செவிடுபடுமாறும் ஒலித்தது.
மாட்டின் ஒலம் அவரின் வயிற்றிலே தீயால் சுட்டதுபோல் இருந்தது. அவர் அந்த வேதனையைத் தாங்காது கட்டிலால் இறங்கி நிலத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தார். மீண்டும் அந்தப் பசுமாடு அதேமாதிரியான ஒலம் வைத்தது. உடனே லாம்பைக் கையில் தூக்கியபடி அறைக் கதவைத்திறந்துகொண்டு வெளியே வெளிக்கிட்டார். வெளிவாசலடிக்கு விளக்குடன் அவர் நடந்தபோது அவருக்கு முன்னாலே ஒரு எலி நடுங்கி விலகி ஓடியது.
வாசல்படியால் அவர் இறங்கியபோது அலைந்து பறந்துகொண்டிருந்த பூச்சிகள் அவரின் முகத்தில் வந்து மோதின. கொசுக்கள் அவரை மொய்த்து இரைந்தன. நேரம் பதினொரு மணி இருக்கும் என்று அவர் நினைத்துக்கொண்டார். நிலாவும் விண்மீன்களும் வீசிய பளிச்சிடும் பொன்னொளியைப் பார்க்க அவர் மனம் விரும்பவில்லை. வானத்தில் வெளவால் பறந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்.
O 138 O நீ.பி.அருளானந்தச்

“என்ன இந்த மாட்டுக்கு நடந்தது.? இது என்னத்தைத் திண்டுதோ..? எங்க போய்க் கிடந்து மேஞ்சுதோ..? அதிண்ட வயிறு நல்லா உப்பி
ப்போய்க்கிடக்கே.?”
கையில் அவர் வைத்திருந்த லாம்பு அவரின் தள்ளாட்டமான நடைக்கு ஏற்றவிதமாய் ஆடிக்கொண்டிருந்தது. தொழுவத்தை நெருங்கிய தும் லாம்பைக் கீழே ஒரு பக்கமாக அவர் வைத்தார். வெளிச்சம் பசுவின் முகத்தில் நன்றாக விழுந்தது. தன் நெஞ்சில் ஒரு கையை வைத்துக்கொண்டு பரிதாபமாக மாட்டின் முகத்தைக் குனிந்து பார்த்தார். மாட்டைப் பார்த்து அவர் அழுது விடுவதற்குத் தயாராக நின்றிருப்பதுபோல் இருந்த வேளையில் மாடு 'உஸ்' - சென்ற சத்தத்தில் பெரிதாக அவர் முகத்திலே சுடு மூச்சு விட்டது. பசுவின் சுடான சுவாசம், காய்ச்சல் வந்தவர்களின் சுவாசம் போல வாடை
இருந்தது.
அவர் பசுவின் மூச்சுக்காற்றைப் பொறுக்க முடியாத அளவில் உடனே முகத்தை அதற்கு விலக்கிக் கொண்டார்.
“கண்ணம்மா உனக்கு என்னம்மா நடந்தது.?” பிரியத்தோடு அழைக்கும்போது தொண்டை அவருக்கு ஒத்துழைக்கவில்லை. ஊதிக் கிடந்த அதன் வயிற்றுப் பக்கத்திலே தன் கையை வைத்து மெல்லத் தடவினார். பசு இன்னும் அழுகிறது போல தெரிந்தது. முன் இருந்த அதன் கண்ணிர்த் தடயத்திலே தண்ணீராய்ச் சிறிது கசிந்ததை அவர் கண்டார்.
பசுவின் கன்றும் அதன் பக்கத்திலே நின்று கத்திக்கொண்டிருந்தது. அதற்கும் குடிக்கப் பால் இல்லை. தாய்ப்பசு ஊட்டுவதற்கு விட வில்லை. இந்த வயதுக்கு என்று உள்ளதான நித்திரைக் களைப்பு சுப்பையாப்பிள்ளையைச் சோர்வடையச் செய்தது. ஆனாலும் தொழு வத்தைவிட்டு அவருக்கு அங்கே இங்கே என்று எங்குமே அசைவே மனம் வரவில்லை.
மாடு அடுத்து அடுத்துக் கத்தியது. வருத்தத்தின் எல்லா உணர்வுகளையும் அதன் ஒலம் சித்தரித்தது போலவே சுப்பையாப்பிள்ளைக்கு கேட்கவும்
இருந்தது.
அந்தக் கோடிப்புறத்திலே வெயிலுக்கும் மழைக்குமாக பாவிக்கவென்று போட்டுக்கிடந்த தகரக் கதிரையொன்று கிடந்தது. அதைப் போய்ச் சுப்பையாப்பிள்ளை தூக்கி எடுத்துக்கொண்டு வந்தார்.
கட்டிக்கிடந்த மாட்டுக்குக் கொஞ்சத்தூரமாய் அதைத் தள்ளிப் போட்டுவிட்டு கதிரையிலே அவர் இருந்துகொண்டார். பக்கத்தில் லாம்பும் எரிந்துகொண்டிருந்தது. அவருக்கும் தூக்கக்கலக்கத்தில் யோசனை
துயரக் கசப்பண்கள் O 139 O

Page 76
பலமாகப் போய்க்கொண்டிருந்தது. காற்றில்லை, சாணி மூத்திர நாற்றம் சுடுவெக்கையாக அவரின் மூக்கிலடித்துக் கொண்டிருந்தது. சாடையான பனிக் குளிர். ஆனால் பனி தொடங்கவில்லை. மாடு இடையுறாது கத்திக் கொண்டிருந்தது. கண்ணை அப்படியே அவருக்கு மயக்கிக் கொண்டு சொருகிறது மாதிரி சாதுவான தூக்கக் கலக்கம் நெஞ்சில் சொறசொறக்கும் அசதியுடன் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் தலைகீழே சரிந்தது. ஒரு முறை தூக்கக் கலக்கம் அவரை தூக்கியடித்தது. சரிந்து விழப்போனவர் தப்பித்தார். அந்தத் திடுக்கிடுத லோடு ஒருமுறை தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தார் அவர்.
தனக்குப் பின்னாலே மனைவியும் இரண்டு பிள்ளைகளும் ஒன்றுமே பேசாது மெளனமாய் அதிலே நின்றுகொண்டிருப்பதை இப்பொழுதுதான்
அவர் கண்டார். அவர்களின் முகங்களிலும்தான் வாட்டம். கயிறாக
உடலை இறுக்கிக்கொண்ட அளவிலேதான் அவர்களும் அதிலே நின்றுகொண்டிருந்தார்கள்.
"நீங்களும் எல்லாம் ஏன் இந்த நடுச்சாமத்தில நித்திரயால எழும்பி வந்து நிக்கிறியள்.?”
அவர்களைப் பார்த்ததும் கேட்டார் அவர் “அறைக்கிள்ள நாங்களும் எவ்வளவு நேரம் எண்டுதான் முழிச்சிருந்து கொண்டு இந்த மாடு படுகிற வேதனய நினைச்சுப் பொறுத்துக் கொண்டிருக்கிறது.? எப்பிடித்தான் இந்த வேதனைய நெஞ்சால தாங்கிறது. இந்த ராத்திரியில இதுக்கு வைத்தியம் பாக்க ஆரத் தேடிப் போறது?” சுப்பையாவின் மனைவி அழாத ஒரு குறையாக இதைச் சொன்னாள். அதைச் சொல்லிவிட்டு "நீங்கள் ஏன் நித்திரையைக் குழப்பிக்கொண்டு இதில இருக்கிறியள் உங்களுக்கு கிறுதி வந்திடுமெல்லே.?” என்றும் அவரைக் கேட்டு வைத்தாள். "எல்லாம் அந்தக் கடவுளிண்ட செயல். அந்த முருகன்தான் எங்களைக் காப்பாற்ற வேணும்.” என்று ஏதோ ஒன்றை தனக்குள் நினைத்துக்கொண்டு அவர் சொன்னார். அதைச் சொன்ன கையோடு நீண்ட ஒரு பெருமூச்சையும் அவர் வெளிவிட்டார். மாடு இரண்டுமுறை கத்தியது. வேதனையிலும் வீரியமாககக் கத்திய மாடு இவ்வேளை வாயைத் திறந்து அனுங்கியமாதிரியே கத்தியது.
அவர்களின் மகள் கமலா அவ்வேளையில் கண்களைத்திறந்து திறந்து
О 140 О ரீ.பி.அருணானந்தே

திரும்பவும் மூடிக்கொண்டாள். புருவங்கள் அவளுக்கு கலவரத்தால் ஆடித் துடித்தன.
“என்னம்மா இது.? பாவம். ஐயோ..” என்று மெல்ல அழுகிறதைப் போல சிணுங்கினாள்.
மகன் தகப்பனைப்போலப் பெருமூச்சுவிட்டான்.
மாடு தன்னைச் சுற்றியபடி இரண்டுமுறை சுழன்றது. மூன்றாம்முறை சுற்றும்போது அதன் கால்மடிந்தது. அப்படியே சரிந்து தக்கென்று நிலத்தில் விழுந்தது பசு. மூச்சுத் திணறியதால் பாட்டத்தில் கிடந்து இழுத்துக்கொண்டிருந்தது. தலையை மேலே நீட்டி ஒருமாதிரிக் கிடந்து வலித்துக்கொண்டு "ம்மா” என்று மெலிந்து மங்கின சத்தத்தில் கத்தியது. விளக்கு வெளிச்சம் மாட்டின் ஒரு பக்கத்தில் விழுந்துகொண்டிருந்தது. சுப்பையாப்பிள்ளை கதிரையால் எழுந்து நின்றுகொண்டிருந்தார்.
மகன் உடனே போய் மாட்டினது கழுத்துக்கயிற்றை அவிழ்த்துவிட்டான். மாடு சாவின் கடைசிக்கட்டத்துக்கு வந்துவிட்டது என்று அவர்கள் எல்லோருக்கும்தான் தெரிந்திருந்தது. ஆனாலும் ஒருவரும் தங்கள் வாய் திறந்து அப்படியான வார்த்தை ஒன்றையும் பேசவில்லை. அப்படி ஒன்றும் சொல்லக்கூடாது, என்ற அளவிலேதான் அவர்கள் இருந்துகொண்டிருந்தார்கள்.
சுப்பையாப்பிள்ளையின் மனைவியினது கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அந்தப் பசுவும் அவளுக்கு ஒரு பிள்ளை போலத்தான். காலையிலே எழுந்தால் எட்டுலட்சணமும் அழகாய்ப் பொருத்தியிருக்கிற அந்தப் பசுவிலேதான் அவள் போய் முழிப்பது போல் இருக்கும். பால்கறப்பதும் பாலைக் காய்ச்சுவதுமான செயல்பாடெல்லாம் அந்தப் பசுவினோடு சம்பந்தப்பட்டதான செயல்பாடுகள்தானே. அதனால் அவளுக்கு அழுகையை அடக்கவே முடியவில்லை. தாய் அழ அதைப் பார்த்து மகளும் சிணுங்கினாள் மகனும் ஆண்பிள்ளையாக இருந்ததால் அழுகையை அடக்கலாமென்று பார்த்தான். நெஞ்சை முன்னால் தள்ளிக்கொண்டு நிமிர்ந்துநின்று அழக்கூடாது என்று மனத்துள் தன்னைக் கண்டித்துப் பார்த்தான். ஆனாலும் முடியவில்லை. அவனும் சகோதரியைப் போலவே அழுதான். சுப்பையாப்பிள்ளை லாம்பை கையில் தூக்கி வைத்துப் பிடித்துக்கொண்டு நின்றார். அவரின் கைகள் இரண்டும் நடுங்கிக் கொண்டிருந்தன. அவருடைய மன வேதனையை அவரின் முகபாவத்தின் ஒவ்வொரு இயல்பிலும் காண முடிந்தது. அவர் மனத்தில் பாய்ந்த உணர்வுகளை சமாளிக்க முடியாதவராய்ப் போராடிக்கொண்டிருந்தார்.
glugs sísÖvakissti O 14l O

Page 77
பசுவிடமிருந்து துயரம் கலந்த கத்தல் கேட்டது. புல்லரித்துப் புல்லரித்து அது நடுங்கியது. அதன் பிறகு உறக்கமடைந்ததுபோல யாவும் அதனிடம் அடங்கி அமைதியாகிவிட்டன.
பசு செத்துவிட்டது என்பதை சுப்பையாப்பிள்ளை தனக்குரிய தனிமுறையில் புரிந்துகொண்டார். கருமையாய்த் தோன்றிய இருட்டி லும் மாட்டின் கண்கள் மட்டும் ஒளிர்ந்துகொண்டிருப்பது போலத் தெரிந்தது. சுப்பையாவின் மகள் வெளிச்சம் தன்னில்படாத ஒரு இடத்தில் போய்நின்று கொண்டிருந்தாள். விம்மல்களை அடக்கு வதற்கு ஆழமாக மூச்சை இழுத்து உள்ளுக்குள் அவள் வைத்துக் கொண்டாள். மகனோவென்றால் தன் இதயத்தையும் மன நிலையையும் வினவுகிறவனைப்போல. தோன்றினான்.
கணவனும் மனைவியும் தங்களுக்கு உரித்தானதை இழந்துவிட்டவர்கள் போல அவ்வேளையில் துக்கத்தால் துடித்தார்கள். பசுக்கன்று தாய்ப்பசு இறந்ததைத் தெரியாது அதற்குப் பக்கத்தில் நின்று கத்திக்கொண்டிருந்தது. கிழக்கு வானில் வெளிச்சம் மெல்லப் பரவத் தொடங்கியது. எல்லாச் சோதனைகளையும் தாக்குப்பிடிக்கத் தனது பலத்தைத் திரட்டித் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும்பொருட்டு, இயற்கை மனிதனுக்கு அளிக்கும் இரவு எனும் பொழுது மறைந்து புதியநாள் உதயமாயிற்று விடியலைக் கண்ணால் காண்பது மனித மனங்களுக்கு எப்போதும் மகிழ்வேதான். ஆனால் சுப்பையாப்பிள்ளையின் குடும்பத்தினர்க்கு அந்த விடியல், அவர்களது மனங்களின் அமைதிநிலை, திடுமென எழும்புயலுக்கு உட்பட்ட கடலைப் போல அடியோடு அதிர்ந்து குழப்பமடைந்தாகி விட்டது.
f7
விடிந்ததும் விடியாததுமான அந்த நேரத்தில் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிராமசபை அலுவலகத்தடிக்கு ஓடிப்போனான் சுப்பையாப்பிள்ளையின் மகன்.
அவன் அங்கு போய்ச் சேர்ந்த வேளையிலே வீரன், வெள்ளையன், கோடங்கி, முனியன், தண்ணிமலை போன்றவர்களும் தங்களுக்குரிய மல வண்டிகளை தள்ளி எடுத்துக்கொண்டு போவதற்கென்று நின்று கொண்டிருந்தார்கள்.
சுப்பையாப்பிள்ளையின் மகன் கிராமசபைக்கட்டடத்துக்கு முன்னால்
நின்ற பெரிய வாகை மரத்துக்குக் கீழே சயிக்கிளைச் சாத்திவிட்டு,
о 142 o ரீ.பி.அருணானந்தச்

"முனியா” - என்று தூரத்தில் நின்று கொண்டிருந்த அவனைக் கூப்பிட்டான். அவன் கூப்பிடவும் அங்கே நின்றபடி சுப்பையாவின் மகனைப் பார்த்துவிட்டு முனியன் அவ்விடத்திலிருந்து இவன் நின்ற இடத்துக்கு உடனே வந்தான்.
"õ6õ60 oguu...?"
கிட்ட வர முதலே கேட்டுவிட்டான்.
“வீட்ட உள்ள எங்கட பசுமாடு கண்டியோ காலயில செத்துப்போச்சு முனியா.”
சொல்கிற போது பெருந்துக்கம் அவனுக்கு! ஆனால் அவன் சொன்ன தைக் கேட்க, முனியனுக்கு மிகச் சந்தோசமாக இருந்தது. அந்தப் பசு எதற்காகச் செத்தது? ஏன் செத்தது? என்ற கேள்விகள் ஒன்றும் அவன் வாயிலிருந்து அப்போது வரவேயில்லை. அது அவனுக்குத் தேவையிலாத ஒரு விஷயம்.
அவன் "இருங்கையா கொஞ்சூண்டு பொறுங்கையா” என்று மாத்திரம் உடனே சுப்பையாப்பிள்ளையின் மகனுக்கு மிக அவசரத்தோடே சொன்னான். அவ்வாறு அவனுக்குச் சொல்லிவிட்டு பின்புறம் திரும்பி நின்றபடி அங்கே வண்டிலடியருகில் நின்று கொண்டிருந்த தன் ஆட்களையெல்லாம்,
"இங்கிட்டு ஒருக்கா சீக்கிரம் வந்திட்டுப் போய்க்கிடுங்கப்பா..? வாங்கப்பா வெரசா..? என்று சத்தம் வைத்துக் கூப்பிட்டான். அவன் கூப்பிட்ட குரலுக்கு, அங்கு நின்ற எல்லாரும் தான் அவனடிக்கு உடனே வந்தார்கள். வந்தவர்களில் தண்ணிமலை என்பவன் “என்னப்பா முனியா?” என்று அவனைக் கேட்டபடி சுப்பையாவின் மகனையும் ஒரு கேள்விக் குறியோடு பார்த்தான். “நம்ம ஐயாவிட்டு மாடு செத்துப்புட்டுச்சாமுப்பா.” என்று நடந்த சம்பவத்தைமுனியன் அவர்களுக்குச்சொல்லிவிடவும், அவர்களெல்லாம் அதைக்கேட்டு வியந்துபோன மாதிரியாக விரிந்த கண்களுடனும் திறந்த வாயுடனுமான அளவிலே நின்று கொண்டிருந்தார்கள்.
சட்டென்று அதற்குள்ளாகத் தண்ணிமலை, "நாங்க எல்லா ஆளுவளுமா வந்து தூக்கிக்கிட்டு அதப்பேயிடுறம்யா..? நீங்க ஒண்ணுக்குமே அதப்பத்தி யோயிச்சிக்க வேணாமுங்கய்யா..?
என்று சொன்னான்.
துவர கசப்பண்கள் O 143 O

Page 78
“அட நம்ம வேலய முடிச்சிக்காம எப்பிடீப்பா இப்பவா அங்கிட்டு போய்க்கிறது?” - என்று தண்ணிமலையைப் பார்த்துக் கேட்டான் வீரன்.
வீரன் அவனிடம் அப்படிக் கேட்டாலும், அவன் கேட்டதுக்கு முனியன்தான் உடனே ஒரு கதையைச் சொன்னான்.
"அது காலேலதான் அப்பா அப்பிடியா ஆயிருக்கு. நம்ம வேலங்கள முடிச்சுப் போய்க்கிற நேரத்திலகூட பொருளுக்குப் பழுதுவாற மாதிரியா இருந்துக்காது. இப்ப ஐயாவுங்கள அனுப்பிடுவம்!” அவன் இவ்வாறு சொல்ல
"ஆமாய்யா! நீங்க போய்க்கிருங்கையா. நாம நம்ம வேலைங்கள வெரசா முடிச்சுப்புட்டு அதத்துக்கிட்டுப் போய்க்கிறோம்.!” என்று தண்ணிமலை சுப்பையாவின் மகனுக்குச் சொன்னான்.
"ஐயாநாம வந்திடுவமய்யா!ஒண்ணுக்கும்நீங்க யோசிக்காதீங்கய்யா..?” என்று கோடங்கியும் மற்றவர்கள் மாதிரியே தன் பங்குக்கும் சொன்னான். அதன் பிறகு ஆளுக்கு ஆள் மாறி மாறி.
“வந்திடுவமய்யா"
"ஆமா வந்திருவமய்யா"
“அது ஒண்ணும் யோசிக்காதீங்க..? வந்திருவமய்யா..!" என்று அவனுக்குச் சொல்லியபடி நின்றுகொண்டிருந்தார்கள்.
பெயர்பதிவு செய்பவர் அங்கே தூரத்தில் தன் இடத்திலேயாய் நின்றபடி “வெள்ளயா வீரா முனியா" என்று பெரிதாய் ஒரு சத்தத்தில் இவர்களைக் கூப்பிட்டார். அவர் அழைக்கவும் முனியன் உடனே " வாறமுய்யா வந்துக்கிறம் வந்துக்கிறம்.!" என்று அவருக்குக் கேட்கக் கூடிய சத்தத்திலே சொன்னான்.
“காலேல வீட்டால இருந்து வெளிக்கிட்டு வந்து இவங்களோட எல்லாம் இப்பிடிச் சில்லெடுக்க வேண்டியதாய்க்கிடக்கு” என்று சுப்பையாவின் மகன் மனத்தில் நினைத்துக்கொண்டான். “சிக் இந்தச் செத்த மாட்டத் தூக்கிக் கொண்டு போவெண்டு இவங்களோட இதுக்க வந்து நிண்டுகொண்டு நானும் கதைக்க வேண்டிக்கிடக்கு. என்ன செய்யிறது? மாடு செத்தா அதக் குழிதோண்டிப் புதைக்கிறதுக்கு மண் வெட்டிறத்துக்கெண்டு ரெண்டு கூலியாள் தேவை. எவ்வளவு செலவு.? அதுக்கு இப்பிடியாவது போகட்டுமெண்டு இவங்களிட்ட வந்து சொன்னா. அவங்களும் தாங்கள் தங்கட வேல முடிஞ்சுதான் வருவமெண்டுறாங்கள். அதுமட்டும் தொழுவத்தில அது கிடந்து
o 144 o ரீ.பி.அருளானந்த8

கொண்டிருக்கும். செத்த மாட்ட அவ்வளவு நேரம் செண்டு போனபிறகு இவங்கள் கொண்டுபோய் அதை எப்பிடியா..?” அவனுக்கு அதை ஒரு முறை நினைத்துப் பார்க்கவும் மனதுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
"ஆ. என்னவோ அவங்கள் செய்வாங்கள். நாங்கள் எங்கட எங்கட வேலயப் போய்ப்பாப்பம்."
இதை நினைத்துவிட்டு
g
அப்ப கட்டாயம் வருவியள்தானே வருவியள்தானே.?" என்று அவனும் அவர்களைப்பார்த்து ஒன்றுக்கு இரண்டுதடவை கேட்டான்.
"வருவமுய்யா கட்டாயமா வருவமுய்யா” அவன் கேட்டத்துக்குத் தோதாய் அவர்களும் சொன்னார்கள்.
"வீரா தண்ணிமலை முனியா” மீண்டும் அங்கிருந்து கூப்பிடுதல் கேட்டது.
"வாறமய்யோவ்” - என்று கொண்டு அவர்களும் தங்கள் வண்டிகள் நின்றபக்கம் போக நடந்தார்கள்.
இவன் தன் சயிக்கிளை எடுத்துக்கொண்டு, உடனே அவ்விடத்தாலிருந்து வீட்டுக்குப் போவதற்கு வெளிக்கிட்டுவிட்டான்.
சரியாகப் பகல் பதினொரு மணிக்கு, சேரியிலிருந்து ஒரு கூட்டமாக கூடிவந்து அவர்களெல்லாம் நீக்கம்பு கயிற்றோடு சுப்பையாப் பிள்ளையின் வீட்டு வளவுப் படலையடியில் நின்றார்கள். அவர்களைப் படலையைத் திறந்து மகன்தான் உள்ளே வரவிட்டான். தொழுவத் தடிக்கு நேராக அவர்கள் வந்தார்கள். அந்நேரம் அவ்விடத்திற்கு சுப்பையாப்பிள்ளையோ அவரது மனைவியோ மகளோ வரவேயில்லை.
வந்தவர்கள் செத்தமாட்டைப் பார்த்தார்கள். தொழுவம் அன்று சுத்தம் செய்யாததில், மூத்திர வீச்சமும், வைக்கோலின் நெடியும், சாணக் கழிச்சலின் கந்தமும் மூக்கைத் துளைக்கத்தான் செய்தன. ஆனால் வந்தவர்களுக்கு அது சாதாரணமாகத்தான் இருந்தது. அவர்கள் முதலில் நிம்மதியாய் வெற்றிலை பாக்குப் போட்டுக்கொண்டார்கள்.
மாட்டின் சடலம் வீரை மரக்கட்டைபோல இறுக்கமாகக் கிடந்தது. ஈக்களும் அதன்மேல் மொய்த்து மொய்த்து, சபித்தமாதிரி சத்தம் போட்டுக்கொண்டு பறந்தன. வீரனும் முனியனுமாக மாட்டின் முன்னங்கால் இரண்டையும் பின்னங்கால் இரண்டையும் கயிற்றால்
துயர சுரப்பவர்கள் O 145 O

Page 79
கட்டுப் போட்டார்கள். கட்டிய கால்களுக்கு உள்ளாக, வெள்ளையன் தாங்கள் கொண்டுவந்த முடிச்சுக்கணுக்கள் இல்லாத உலக்கை போன்ற உருளைக்கம்பை நுழைத்து, மறுபக்கம் வருமளவிற்குத் தள்ளினான். அதன் பிறகு முன்னும் பின்னும் கம்புக்குச் சரிசமனாய் அவர்கள் நின்று கொண்டு, தோளிலே கம்பைப் பொறுக்க வைத்துக்கொண்டு மாட்டின் பாரத்தை அவர்கள் தூக்கினார்கள். மாட்டைத் தூக்கி நடக்கும்போது, ஒழுங்காக இல்லாமல்குட்டையாகத்தான் எல்லாரும் இருந்தபடி நடந்தார்கள்.
தம்பிடித்து "ம்" என்ற சத்தத்துடன் அவர்கள் பாரத்துடன் நடந்தபோது, அவர்களின் கழுத்து நரம்புகள் இழுபட்டு நெளிந்தன. முதுகுகள் அவர்களுக்கு முறுக்கி எழுந்தன. தோள்பட்டைகள் மெலிந்துபோன கிழட்டு மாட்டின் ஏரி மாதிரி இருந்தன. கைகளிலும் அவர்களுக்கு தசைகள் கொளுக்கட்டை போல திரட்சியாய் உருண்டன.
சுப்பையாப்பிள்ளையின் மகன் அவர்களுக்கு முன்னாலே ஒடிப்போய்ப் படலையைத் திறந்து வைத்தபடி நின்றான். அவர்கள் திறந்து கிடந்த அந்தப் படலையாலே, பாரம்பிடித்த அந்த மாட்டைத் தூக்கி நடந்தவாறு வீதிக்கு வந்து சேர்ந்தார்கள்.
அவன் வீதியாலே அவர்கள் தூக்கிக்கொண்டு போகும் செத்தமாட்டைக் கடைசியாகப் பார்த்தான். அவ்விதம் பார்த்துக்கொண்டிருந்த நேரம் ஒரு பெருமூச்சும் விட்டான். அதற்குப் பிற்பாடு படலையைப் பூட்டிவிட்டு உள்ளே போய்விட்டான்.
மாட்டைத் தூக்கிக் கொண்டு நடப்பது அவர்கள் தோள்கள் முறிகிற அளவுக்கு வலுவான பாரமாக இருந்தாலும், அதை வெல்லமாக நினைத்துக்கொண்டதில் அந்தப் பாரமே அவர்களுக்குப் பஞ்சைத் தூக்கி நடப்பதுபோலத் தெரிந்தது என்றாலும் குறுகக்குறுக அடியிட்டு நடந்தே அவர்கள் தங்கள் சேரிப்பக்கம் சென்றடைந்தார்கள். மாடு கொண்டு வந்து உரித்தால், எல்லோருக்கும் பங்கு இறைச்சி அதிலே உண்டு என்பதால், மொத்தத் தொகையான பதிநான்கு குடும்பத்து ஆண்களும் அதிலே வந்து சேர்ந்துகொண்டார்கள்.
ஆனாலும் அந்த இடத்துக்கு ராமன் அப்போது வந்திருக்கவில்லை. அவன் மகள் செவ்வந்திக்கு இதெல்லாம் அறவே பிடிப்பதில்லை. "இதொண்ணும் நமக்குண்ணா வேணாப்பா. அவுங்க குடுத்தாலும் வாங்கிக்கிண்ணு இங்கிட்டு வந்திடாதீங்க..” என்று தகப்பனுக்கு அவள் கண்டிப்பாகச் சொல்லி வைத்திருந்தாள். அந்தச் சேரியில் உள்ள ஆண்கள் சிலர் தாங்கள் செய்யும் வழமையான வேலை முடிந்ததும்
O 146 O ரீ.பி.அருளானந்தே

போய்ச் சாப்பாட்டுக் கடைகளிலும் வேலை செய்வார்கள். கடையில் உள்ள எச்சில் இலைகளை சாக்கில் அள்ளிக்கொண்டுபோய், குளத்து வெளியில் பற்றைச் செடிகளுள்ள பக்கம் கொட்டிவிட்டு வருவதும், கான் கழுவித் துப்பரவாக்குவதும்தான் அவர்களின் வேலை. அவர்கள் செய்கிற வேலைக்கு கடைக்காரர்கள் ஏற்ற கூலியைக் கொடுப்பார்கள். சாப்பாட்டுக்கடையென்றால், அங்கே மிஞ்சுகின்ற சளிச்சதும் புளிச்சதுமான உணவுகளும் அவர்களுக்குக் கிடைக்கும். இப்படியான வேலைகளைப் போய் அங்கே ராமனும் செய்து வருபவன்தான். ஆனாலும், அங்கே அவர்கள் மற்றவர்களுக்குக் கொடுப்பதைப் போல் தரும் பதங்கெட்டுப்போன உணவுகளை இவன் வாங்கிக் கொள்வதில்லை. “அதெல்லாம் இங்கிட்டுப்பக்கம் நம்ம வீட்டுக்கே எப்பவுமாச்சும் வேணாமப்பா.” என்கிறாதாய் செவ்வந்திதான் அதையும் தடுத்திருந்தாள்.
O
சேரிப்பக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்ணில் படும்படியாக சில மரங்களும் நின்றன. அவ்விடத்தில் ஒரு போதுமே காய் காய்க்காத கருங்காலி மரத்தடியில் கொண்டுவந்த அந்த மாட்டை அவர்கள் நிலத்தில் கிடத்தினார்கள். ஒரு சிலர் திரும்பிப்போய் கோடாலி கத்திகளை குடிசையிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தார்கள். கொண்டு வந்தவைகளை கல்லில்வைத்துத் தீட்டிக் கூராக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.
மாட்டின் வயிறு பூமிக்கோளமாய் வீங்கியிருந்தது. ஆனாலும் மாட்டை வெட்டும்போது நீலம் பாரிக்காத அளவுக்கு இருப்பது அவர்களுக்குத் தெரிந்தது. மளமளவென்று இரத்தப் பிசுக்கோடு உரிப்பதும், வெட்டுவதும் கொத்துவதுமான வேலை நடந்தது. அதிலே வைத்து எல்லோருக்கும் பிற்பாடு பங்கு இறைச்சிகள் அறுத்து அறுத்துப் போட்டுப் பரிமாறப்பட்டன. எல்லோரும் மகிழ்சியுடனும் விருப்புடனும் தங்களுக்குக் கிடைத்ததை வாங்கிக் கொண்டு சமையல் செய்வதற்காக விரைவாக அதை தங்கள் குடிசைகளுக்குக் கொண்டுபோனார்கள்.
மாட்டைத் தூக்கிக் கொண்டு வந்தவர்களுக்கும், அதை வெட்டிப் பிரிந்துப் பங்குபோட்டவர்களுக்குமென்று, விசேஷமாய் எல்லோரும் தங்கள் பங்கு என்று அவர்களுக்குக் காசு கொடுத்திருந்தார்கள். அந்தப் பணத்தை அப்படியே முனியன் வீரனிடம் கொடுத்து "கள்ளுமுட்டி ரெண்ணில நிறைய வாங்கிட்டு வந்துர்ரா” என்று சொல்லி அனுப்பினான். வீரன் கொறப்பொத்தானை வீதியிலிருக்கும் வெறியரின் கள்ளுக் கொட்டிலுக்கு தான் வாங்கிக்கொண்ட காசோடே போனான். கொட்டிலில் மடா நிரம்பி வழியும் அளவுக்கு, பின்னேரக் கள்ளு இருந்தது. அவன் நிரம்ப இரண்டு முட்டிக் கள்ளு வாங்கிக் கொண்டு, கொட்டிலுக்கு
plugs ostvate« o 147 o

Page 80
வெளியே மரவள்ளிக்கிழங்கு விற்றுக்கொண்டிருந்தவனிடம் இரண்டு றாத்தல் அதிலும் வாங்கிக்கொண்டு, விறுவிறுவென்று நடந்து சேரிக்கு வந்து சேர்ந்தான்.
கள்ளு வந்து சேர்ந்ததும் மாடு வெட்டி உரித்த இடத்துக்குக் கொஞ் சத்துாரம் தள்ளி கல் அடுப்பு அவர்கள் வைத்தார்கள். கள்ளுக்கு உபகாரமாக காரங்கள் இட்ட மாட்டுக் குடலும் வறுவலும் சமைத்தார்கள். கள்ளுப் பானையிலிருந்து எல்லோரும் பிறகு கள்ளை வார்த்துக் குடிக்கத் தொடங்கினார்கள்.
முனியன் கொஞ்சம் அதிகமாகத்தான் குளுமாடு வாய்வைத்து மண்டுவதுபோல, முட்டியிலுள்ள கள்ளை வார்த்து ஒரே மூச்சில் குடித்தான். அதைப் பார்த்து மற்றவர்கள் ஒருவரும் ஒன்றுமே பறையவில்லை. அவன்தானே இந்தவிஷயத்துக்கெல்லாம் அவர்களுக் குத் தலைவன்!" என்ற மாதிரி நினைத்துப் பேசாமல் தாங்கள் இருந்துகொண்டார்கள்.
விறுவிறுப்பாக வெறி ஏறவும் முனியனுக்குக் கெக்கெக்கே.’ என்று பெருஞ்சிரிப்பு கண்களில் அவனுக்கு நீர் துளும்பியது.
பெரிய சட்டியில் வைத்து அவித்த இறைச்சி வேகத்தொடங்கியது. அவித்த மாட்டிறைச்சிக்கறியின் வாசனை அந்த இடம் முழுக்கப் பரவியது. கள்ளுக்குடித்த அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போதெல்லாம் புதுமழையின் பிசுறுபோல் எச்சில் தெறிக்கத் தொடங்கியது. குழம்பு கொதித்துக் குமிழியிட்ட சிறிது நேரத்தில் அவர்கள் கறிச்சட்டியை அடுப்பாலிருந்து இறக்கினார்கள். ஆவலி லும் ஆவேசத்திலும், சுடுகறிக்குள் கைகளைவிட்டு அவர்கள் வெண் கொழுப்போடுள்ள இறைச்சியை எடுத்து ஊதி ஊதிச் சாப்பிட்டார்
56T.
“மரச்சிராய் மாதிரியா இறுக்கமான நல்லே யெறச்சி. கொழுப்பு யெறைச்சி. நல்ல முத்தின மாடு.!” என்று சாப்பிட்டுச் சாப்பிட்டுச் சொல்லிக்கொண்டிருந்தான் தண்ணிமலை.
அந்தச் சட்டியில் உள்ள இறைச்சிக்கறி எல்லாவற்றையும் நான் தின்னு, நீ தின்னு என்ற கணக்கிலே முதல் எடுப்புத் தின்றுவிட்டு, அதற்குப் பிற்பாடும் சட்டியில் இறைச்சியைப் போட்டு அவித்துப் போதும் போதும் என்ற அளவிலே வயிறு முட்ட அவர்கள் கறியை அனுபவித்துச் சாப்பிட்டார்கள். அவர்கள் சூப்பிப் போட்ட எலும்புகளை யெல்லாம் அதிலே வந்துநின்ற வத்தலும் கொத்தலுமான நாய்கள் சாப்பிட்டன. தாங்கள் சாப்பிட்ட அந்தத் திருப்தியோடு பீடி சுருட்டும் பற்றவைத்து அவர்கள் புகைக்கத்தொடங்கினார்கள். அவர்கள் குடித்து
O 48 O ரீ.பி.அருளனர்தே

விட்டுப் போட்ட பீடி, மற்றும் சுருட்டுத் துண்டுகள், அவர்கள் இருந்து கொண்டிருந்த பகுதியிலெங்கும் நிறைந்ததாகிவிட்டன.
வீரன் குபுக் குபுக்கென்று நன்றாக புகைவிட்ட கணக்காய் சுருட்டுக் குடித்துக்கொண்டிருந்தான். வாயில் ஊறிய புகையிலைச் சாற்றின் தேக்கத்தினாலே, பாதி வார்த்தைகளை அவன் உளறிக்கொட்டினான்.
“இண்ணைக்கு நம்ம மேளச் சமா எல்லாத்தையுமா இதில வைச்சிக்கிருவமுப்பா. என்னப்பா தண்ணிமலே. நீ முனியா யின்னா சொல்லுறே.?”
அவன் கேட்கவும் முனியன்,
“பக்கமேளம் அடிக்கிறதுக்கு சோணமுத்தையும் கூப்பிட்டுக்கணு மெல்லே.” - என்று சொன்னான்.
அவனப் போயி தண்ணிமல நீ கூட்டிக்கிட்டு வந்துக்க” "அப்புறம் நாயினம் வாசிக்கிறவரு.?” “அவனயும் தண்ணிமலயே கூப்பிட்டுக்கிட்டு வந்துப்புடுவாரே.?”
"ஆமா இறைச்சிதான் நாம எல்லா ஆளுங்களுக்கும் பங்கிட்டுக்கிண்ணு குடுத்தமே. அவுங்க எல்லாம் வூடுங்கவழிய என்னதான் பண்ணிக்கிட்டுக் கெடக்கப் போறாங்க.? இங்கிட்டு வந்து நம்மோட சேந்துகிட்டாலும் வினோதமாயிருக்குமில்ல.?”
"அப்புடீன்னா அடுப்பை அணைச்சுக்க விடாம பெரிய கட்டையா எடுத்து இதிலயா வைச்சுக்குவம். வீரா இது ஒன் வேல! நானு போயி அவுங்க எல்லாரையுமா இங்கினவாட்டி அழைச்சூண்டு வந்திர்றேன்..!” என்று தண்ணிமலை வீரனுக்குச் சொன்னான். “சரீப்பா நானுயேன் வேலய நீயி சொன்னமாதிரியா செஞ்சுடறேன்..! நீ போயி ஆளுங்கள சேத்துக்கிட்டு ஒடனயே வந்துப்புடு - " என்று சொல்லிவிட்டு அவன் எரிக்க விறகுக் கம்பு தடி பார்த்தெடுக்கப் போனான்.
வீரன் அடுப்பு எரிந்த இடத்தில் விறகு தடிகள் கொண்டுவந்து போடும் நேரம், மேற்கு வானில் சிவப்புத் தீற்றல்களாய் அடர்ந்தன. பொழுதடைந்ததாய் விட்டது. மேகத்து வெளிச்சம் மட்டும் மிச்சமாக இருந்தது.
வானமெல்லாம் தவிட்டு நிறம்!
துயரசுேண்பண்கள் O 149 O

Page 81
அதோடு இருட்டிவிட்டது.
அவன் அடுப்புக்கல்லைத் தடியால் நகர்த்தி விலத்தி வைத்துவிட்டு, கொண்டுவந்த விறகுக் கட்டைகளை அதில் போட்டு நெருப்புப் பொருந்த வைத்தான். அந்த நேரம் மேளகாரர்களெல்லாம் தாங்கள் வைத்து வாசிக்கும் மேளங்களுடன் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். சோணமுத்துவையும் நாயினம் வாசிக்கும் பிச்சாண்டியையும் ஒத்தூதும் குழல்வாசிக்கும் வெள்ளையனையும் தண்ணி மலை அவ்விடத்துக்குக் கூட்டிக்கொண்டு வந்து சேர்ந்தான். - -
நெருப்பிலிட்ட விறகுக் கட்டைகள் போதுமான வெளிச்சம் வர எரியத்தொடங்கிவிட்டன. அவர்கள் எல்லாரும் தங்கள் மேளங்களை வாசிப்பதற்குச் சரிபார்த்துக் கொண்டார்கள்.
தண்ணிமலைதான் உறுமிமேளத்தை வாசிப்பவன். ஆரம்பமே உறுமிமேளம்தான் என்பதால், தண்ணிமலை அந்த மேளத்தில் ' உம்.-மென்ற ஒசைலயத்தை உண்டாக்கினான். தவறாமல் ஒரே உத்தியைத் திரும்பத்திரும்பக் கையாண்டதாய் இல்லாமல், உறுமி மேளத்தின் உள்ளடக்கத்தையெல்லாம் அந்த ஒசையில் முறுக் கேறியதாய் அவன் வெளியேற்றினான். அந்த உறுமியின் ஒலியில் பக்கமேளகாரர்களுக்கெல்லாம் வீரியம் வந்து சேர்ந்தது போல இருந்தது. அந்த உறுமி ஒலிக்கு ஒரு உடைப்பை ஏற்படுத்த, மற்ற மேளங்களெல்லாம் தடதட-வென்று முழங்கத் தொடங்கின.
“டிடிவிண்டா. ண்ட.டிடி விண்விண்டா” மேளத்தை அடிப்பவர்களுக்கு அதைத்தாங்கள் கேட்கவே குளுமையாக இருந்தது. அந்த இசையைக் கேட்டு தாங்களே குலைந்துபோகக்கூடிய நிலையை அவர்கள் அடைந்தவண்ணம் இருந்தார்கள். மேளத்தை அவர்களெல்லாம் அடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த இசையில் புதிது புதிதாக தேடிச்செல்லும் அலைச்சல் அவர்களுக்கு ஏற்பட்டது. புதிதான ஒலி அமைப்புக்களை அசைத்துக்காட்டுவதில் அவர்கள் கவனம் கொண்டார்கள். உறுமி மேளம் சக மேளங்களுடன் கொட்டி முழங்குகின்ற சப்தம் சேரி முழுக்கவும் என்றதாயில்லாமல் அந்த இடம் தாண்டியுள்ளதாய் உள்ள மயானக் காட்டிலுமாய் அதிர்ந்தது. அந்த ஓசை அவர்களின் நரம்பு தொட்டுச் சுண்டி இழுத்துத் தீக்கொளுத்தியது.
மேளத்துக்குத்தோதாய் பிச்சாண்டியும் தான் வைத்துக்கொண்டிருந்த குழலின் ஊது பாகத்தை வாயில் பொருத்தி ஊதத்தொடங்கினான். அவன் இசைக்கத்தொடங்கியதும் வெள்ளையனும் தன் ஒத்தூதும் குழலை ஊதத்தொடங்கினான். கண்களை மூடிக்கொண்டு தனக்குள் எழுந்த ஆன்மீக நினைவின் அசைவுகளை, குழலோசையிலே
O 150 O நீ.பி.அருளானந்தs

பிச்சாண்டி இழையோடச் செய்து கொண்டிருந்தான். அவன் வாசிப்பது தோடியா, காம்போதியா, கல்யாணியா, சிந்துபைரவியா என்ன ராகம் என்று தெரியவில்லை. ஆனாலும் அவன் குழலுக்குரிய தனிச்சொத்து இனிமையாக இருந்தது. குளுமையாக இருந்தது. நல்ல சுருதியும் நளினமும் இருந்தது. ஓசை ஏறி இறங்கியும் பாதிகரைந்தும் மீதி தெளிந்தும் கேட்டது.
அந்தக் குழலோசையைக் கேட்பவர் மனமெல்லாம் மெழுகாக உருகிக் கொண்டிருந்தன. அந்த அளவுக்கு குழலின் ஒலி ஒரு அருவியைப் போல மாறியது. குன்றும் குழியுமுள்ள இடத்தில் அது குதித்துக் குதித்துச் சென்றது. மரணம், துன்பம், வலி என்பவற்றைத் தருகிறாற்போலத்தான், உறுமிமேளத்தினதும், சக மேளங்களினதும் ஒலி கேட்பவர்கள் எல்லோருக்கும் இருந்தன. வலுத்துத் துள்ளி எழுந்து காற்றுடன் நிரம்பி அந்த இசை ததும்பியும், நுரைத்தும், பீறிட்டும், சுழித்தும், அலைத்தும், பெருகியும், அவ்விடங்களிலெல்லாம் நிறைந்தன. உலகில் உள்ள பலகோடி இசையில் இதுதான் உயர்ந்ததோ என்று கேட்பவர் பலரும் எண்ணி வியக்கும் படியாய் அவர்கள் வாசித்துக் கொண்டிருந்த மேளங்களின் ஒலிகளும், குழலின் ஒலியும் இருந்தன. அவர்கள் மேளம் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களுக்கெல்லாம், அதிலே ஒரு சிறு சனக்கூட்டம் கூடிவிட்டது. வந்தவர்களில் ஒரு சிலர் மன்னாரிலிருந்து வந்த ஆட்டக்காரன் “பொம்புளைக்காளி' என்று சொல்லப்படுகின்றவனுடன் சேர்ந்து சலங்கை மணிகளைக் காலில் கட்டிக்கொண்டு ஆட்டம் போட்டார்கள். காலில் சலங்கை குலுங்க, லாவகமாக அடவுகளில் ஆரம்பித்த ஆட்டம் மெள்ள மெள்ள அவர்களிடம் உக்கிரமாகியது. கால்பின்னலுடன் இசைந்து அவர்கள் ஆடினார்கள். சுழன்றபடி வியர்வையில் அவர்கள் குளித்தார்கள். சதங்கைகளைப் பேச வைக்கிற சிறந்த ஆட்டக்காரர்களான தங்களின் திறமைகளை அவர்கள் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். வந்தவர்களெல்லாம் சப்பணம் போட்டு நிலத்தில் அமத்தலாய் அமர்ந்து கொண்டு, அவர்களின் ஆட்டத்திறனை மெச்சிக்கொண்டு மேள இசையையும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தக் கலைஞர்கள் தங்கள் எண்ணங்களின் பாஷையை, தாங்கள் வாசிக்கும் இசைக் கருவிகள் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
1s
சேரி முழுவதையும் கிடுகிடுக்க வைத்த அவர்களது மேளங்களின் ஒலிகள் அடங்கிப் போய் வெகுநேரமாகிவிட்டது. மேளம் அடித்த வர்களெல்லாம் தங்கள் குடிசைகளினுள்ளே உறக்கப்பாயில் கிடந்தார்கள். குடிசைகளின் உளுத்துப்போன ஒலைகளையெல்லாம்
துயரச் சுஃபண்கள் O 151 O

Page 82
கரையான்கள் தின்று கொண்டிருந்தன. கோயில்வளவுப் பக்கமிருந்து காற்றின் மேனியில் புரண்டுவரும் மலவாடை குடிசைகளை நோக்கி வீசிக்கொண்டிருந்தது. எங்கும் இருட்டு கசம் கட்டியிருந்தது.
கனமான சுமைகொண்டு அழுத்தப்பட்டது போல் சேரி முழுவதும் தூங்கிக் கொண்டிருந்தது. ஆனால் ஊருசனம் தூங்கின நேரத்திலும் திரேசா என்பவளுக்கு மாத்திரம் அந்தத் தூக்கம் என்பது வாய்க்கப் பெறவில்லை.
அவள் ஒழுங்காக நித்திரை கொள்வாளானால், அவளின் நரம்புக ளெல்லாம் நீவி விடப்பட்டு நேர்த்தியாகும். அவளைப் புத்துணர்வு கொள்ளச்செய்யும். காயம் பட்ட அவளின் மனது ஆறும் இழந்த சக்தியையும் அவள் பெற்றிடுவாள்.
எனினும் தூக்கம் சுழற்றினாலும் தூங்க முடியவில்லை அவளுக்கு, நடந்த சம்பவங்களெல்லாம் நினைவில் தொட்டுத் தொட்டு வந்த வண்ணம் அவளை உறங்க விடுகிறதாக இல்லை.
தலையணையின் நொய்ந்த பகுதியில் தலை நழுவிய போது தன் கணவனைப் பற்றித்தான் அவள் யோசித்தாள். திரும்பவும் ஊருக்கு நான் போகிறேன் என்று அவன் வெளிக்கிடும் போது எந்த அம்பை, தன் கொடுங்குணத்தின் அம்புறாய் தூணியிலிருந்து அவன் பயன்படுத்துவானென்னு எதிர்பார்த்தாளோ, அதையே அவன் நேற்றுக்கூட வழமைபோல அவளுக்கு வீசியெறிந்தான். அவனுக்குள்ள அந்தப் பேச்சு ஒன்றும் இன்னும் உருமாறவேயில்லை. "நான் மலடியேதானாம். தனக்கு அதனால் மறுமணம் தேவையாம்.?” “ம். நானும் எனது பரிதாபமும். அதை ஒன்றும் தன் கண்ணால் அவர் கண்டு கொள்ளாது, "நான் அத்தகைய ஒரு மனிதன் தான்!. உன்னைப் பழிவாங்க எத்தகைய செயலில் ஈடுபடநேர்ந்தாலும் அது பற்றி நான் எள்ளளவும் கவலைப்படப்போவதில்லை!" என்பதாய்த்தானே எந்நேரமும் அவரிடமிருந்து வெறுப்பும் அவருவருப்புமான செயல்களும் என்மீது கொப்பளிக்கின்றன. ஒவ்வொரு கணமும் என் வாழ்வின் ஜீவாதாரமான என் இதயத்தில் செருகப்பட்ட கொடுவாளைப்போலத்தானே "மலடி மலடி” என்று அவர் சொல்லுகிற வார்த்தைகள் இருந்து கொண்டிருக்கின்றன.
மலடியாம் மலடி?
யார் மலடாம்?
O 152 O ரீ.பி.அருணானந்தல்

நானா? வேண்டாம்!
இனிப் பொறுத்தது எனக்குப் போதும்! அவர் ஆழமாக என்னைக் காயப்படச் செய்துவிட்டார்! சோகமான சிந்தனைகளொன்றும் இனிய என் நண்பர்களாக இனி எனக்கு இருக்கவே வேண்டாம் என் கணவரே எனக்குத் துரோகம் செய்து, கொடுரமான விஷத்தை எனக்குக் கொடுத்ததைப் போல கொடுத்து என்னை முடித்துவிட நினைக்கிறார். அந்தக் கொடுரம் எப்போது என்னைத் தீண்டும்? - என்ற நிரந்தரப் பயத்திலேயே நான் வாழவேண்டியதாய் இன்று இருக்கிறது. என் தூக்கத்தில் அதிபயங்கரக் கனவுகளுடன் தூங்கி, அச்சத்துடனேயே உண்டு, அன்றாடம் நான் செத்துப் பிழைக்கிறேன்.
ஆனால் இனிமேல், நான் இதுவரையெல்லாம் கட்டிக்காத்தது முழுக்க லுமே தூள் தூளாகச் சிதறட்டும் அழிந்துபோய் நாசமாகட்டும்! நிரந்தரப் பீதியிலும் உள்ளக் கொதிப்பிலும் வாழ்வதைக் காட்டிலும், என் உள்ளத்தில் கருந்தேள்களை நிரப்பிக்கொண்டாவது இந்தப் பயங்கரமான காரியத்தில் இன்று நான் ஈடுபட்டேயாக வேண்டும்.
"நான் வாழவேண்டும்! அதுவும் அவரோடுதான் நான் வாழ வேண்டும்.!”
அப்படி நான் வாழ்வதானால் எனக்கொரு குழந்தைச் செல்வம் கட்டாயம் வேண்டும்.
என்ன ஒரு இனிமையான நினைவூட்டல் அவளுக்கு. அந்த நினைவிலே அந்த விருந்தைச் சுவைத்து உண்ணும் அளவுக்கு பசியுள்ளவள்போல் அவள் ஆகிவிட்டாள்.
அவளுடைய துன்பங்களையெல்லாம் யார் கண்களால் காணாது விட்டாலும், எவர்தான் செவிகளால் கேட்காது போயிருந்தாலும், அவள் தலைவைத்துப் படுக்கின்ற அந்தத்தலையணை மாத்திரம் நன்குணர்ந்தது போலிருந்திருக்கிறது. அவள் கண்ணால் வடித்த கண்ணிரெல்லாம் ஊறியதும் அந்தத் தலையணையில்தானே? அந்தத் தலையணை அவளுக்கு இப்பொழுதில் மென்மையாக இருந்தது. சுகமாக இருந்தது. ஆறுதலாகவும் இருந்தது. அந்த இதத்தோடு அவள் மனத்துணிவு பெற்றாள். தான் படுத்திருந்த பாயிலிருந்து ஒரு வித தைரியத்தோடு எழுந்தாள். ஆனாலும் குருட்டுத் துணிச்சலோடு எழுந்து நிற்கும் போது இந்த அவளது மனம் என்பது கிடந்து அவளுக்குத் தக தகவெனக் காந்தியது. இடறியது, தவியாய்த் தவித்தது. ஒரு பாவத்தைச் செய்யப் போகிறேன்.? என்கிற குற்ற உணர்வில், முள் சுமையானது அவளுக்கு திரும்பவும் வந்தது.
“என்ன கேவலமான செய்கை.? இது நன்றாயில்லை, கொஞ்சமும் O || 5 3 O به همه واناییاه قانوار

Page 83
நன்றாயில்லை, வெட்ககரமானது.” என்றுதான் செய்யப்போவதை ஒரு கணம் நினைத்துக் கொண்டு அவள் புஸ் புஸ் சென்று மூச்சு வாங்கினாள். என்ன செய்வதென்று தெரியாத நொடிகள் கடந்தபின், திரும்பவும் "ஒரு குழந்தை எனக்கு வேண்டும்!” என்ற நினைப்பு அலையாய் வந்து அவள் மனதில் மோதியது.
அந்த நினைப்பு மட்டும் அவளை விட்டு உறிஞ்சப்படவில்லை. திரும்பத்திரும்ப உந்தி ஏறி அவள் நினைவில் உட்கார்ந்தது.
இவ்வேளையில் அவளின் கரங்கள் என்னவோ இருந்தாற்போல் அசாத்திய உறுதியுடன் பலம்பெற்றது போல ஆகியது.
தேனி கடிக்குமென்று பயந்த கரடி ஒருபோதும் தேன் குடிக்காது, அப்படியான ஒரு நிலையிலேதான் அவளும் மனத்தில் எழுந்த பயத்தையும் கலவரமான நினைவுகளையும் ஒருபுறம் தன்னிடமிருந்து அதைத் தள்ளியதாய் வைத்துவிட்டு, குடிசைக் கதவை நோக்கி நடந்தாள். கதவைத்திறந்து விட்டு வாசலில் நின்றபடி வெளியே பார்த்தாள். பக்கத்தில் வெள்ளை உடுப்போடு ஆள் நின்றாலும் தெரியாத கருக்கிருட்டு,
ஒவ்வொரு சின்னச் சலனத்துக்கும் “லொள்லொள்.” என்று வறட்டுத்தனமாகக் குரைத்துக் கொண்டிருக்கும் பக்கத்துவிட்டுச் சொறிநாய்கூட, இன்று இருக்கும் இடம்தெரியாமல் போய்விட்டதோ? என்ற மாதிரியாத்தான் அதன் சிலமனையே அவ்வேளையில் காண வில்லை.
அவள் திண்ணைப் பக்கம் கழுத்தைத் திருப்பி அவ்விடத்தைப் பார்த்தாள். இருட்டாகத்தான் தெரிந்தது. நட்சத்திர வெளிச்சத்தை அவளின் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொண்டன. பார்வை இப்போது வெளித்தது அவளுக்கு. அவன் படுத்துக் கிடப்பது ஓரளவு மங்கின நிழலாக அவளுக்குத் தெரிந்தது. அவனை அதிலே அவள் கண்டதும்தான் அவளின் பெரிய தலை முடிக்கட்டு அவிழ்ந்து விழுந்தது. உடம்பு லேசாக வியர்த்து ஒழுகியது. ஆனாலும் மளமளவென்று துணிவுடன் நடந்துபோய் பெஞ்சமின் படுத்துக்கிடந்த இடத்துக்குப் பக்கத்திலே இருந்தாள். இது ஒரு மோசமான செயல்’ - என்று அவனுக்குப் பக்கத்திலே போய் இருக்கும்போது அவளது மனம் சொன்னது. ஆனால் அதை அவள் ஏற்கவில்லை, நிராகரித்தாள். அதிலே படுத்துக்கிடக்கும் பெஞ்சமினை சில நொடிகளாக அவள் உற்றுப் பார்த்தாள். காற்றினுடைய ரூபத்தையே கண்ணால் காணக் கூடிய மனப்பக்குவமாக அவளுக்கு இருந்தது.
O 154 O நீ.பி.அருணானந்த\s

மெல்ல அவனுக்கு அருகே குனிந்து அவனைப் பார்த்தாள் அவள் மெல்லிய சுவாசம் இழைபோட உறங்கிக் கொண்டிருந்தான் அவன்.
நெடுங்காலமாக தண்ணிரைப் பார்க்காமலிருக்கும் அவனது உடையின் நாற்றம் அவளுக்கு முக்கிலடித்தது. அவன் கிடந்த இடமே வேர்வையில் புழுங்கி நாறியது. என்றாலும், அந்த மணம் அவளுக்கு வெறுப்பாகத் தோன்றவில்லை. அவளது சக்தியுள்ள தசைகள் பணிந்தது. அப்படியே அவனருகில் அணைவாக ஆதரவாக தன்னை ஒழித்துக்கொண்டு அவள் கிடந்துவிட்டாள். அவள் முன் நெற்றியின் வியர்வையில், முடிக்கற்றை நனைந்து ஒட்டிப்போயிருந்தது. அதே விதமாக அவளும் அவன் அருகே தன் உடல் படும்படியாக ஒட்டிப்போய்ப் படுத்தாள்.
உணர்ச்சிகள் இழைய இழைய "ஆ. ஆ." - மனசு லேசாகத்தானே செய்யும்?
பெஞ்சமினுக்கு முழிப்புத்தட்டிவிட்டது. இருந்தாற்போல இது என்ன? என்று அவனுக்கும் அதை அறிந்து கொள்ள சற்று அவகாசம் பிடித்தது. அவன் படுத்துக்கிடந்த நிலையிலே அசையாது அப்படியே கிடந்தான். அவனுக்கு மூச்சு ஒலிநாசியிலிருந்து எழுந்தது. தனக்குப் பக்கத்தில் படுத்துக்கிடப்பது திரேசாதான்! என்று பரிபூரணமாக அவனுக்குப் பிறகு விளங்கிவிட்டது. ஆனாலும் அசையவில்லை. இருட்டையே விழித்தவாறு அவன் நோக்கிக் கொண்டிருந்தான்.
இன்றும் இரவு சாப்பாடு சாப்பிடுகிற நேரத்தில் "ஒரேப்பைச் சோறு கூடப்போடவா. கூடப்போடவா..?” என்று கேட்டு உபசரித்தாளே திரேசா. அது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவள் பலநாள் ஒரே கதையை திரும்பத்திரும்பத் தனக்குச் சொல்லியதும் அவனுக்கு ஞாபகத்தில் புரண்டது.
“எதையும் யாரிடமும் சொன்னால் இவள் இறந்துவிடுவாளாமே? சாக்குருவிகத்துகிறமாதிரி தனக்கு இப்பிடி 9 Isru Lib வரப்போகுதெண்டெல்லாம் ஏன் இவள் சொல்லுகிறாள்? எவ்வளவு பெரிய பாவம் இவள்!”
அவன் அதையெல்லாம் நினைத்துக்கொண்டு மெளனமாகக் கிடந்தான். ஆனாலும் அவனுக்கு மூச்சுப் பெலத்தது. அவளும் அதை உணர்ந்துகொண்டு அசைந்து இசைந்து கொடுப்பதுபோலக் கிடந்தாள். அவளுக்கு முயலின் நெஞ்சுத்துடிப்பு அவனுக்கோ சீறும் வீச்சு முகர்ந்து அறியாத நறுமணத்தைப் போன்ற சுகந்தம்.
அவனுக்குக்கித்தார்கம்பிகளைப்போல்விண்விண்ணென்று விறைத்தது. மூச்சுக் கிளர்ச்சித் திணறலில் திக்கிக்கொண்டு வர நாடித்துடிப்பு துரிதகதியிலிருந்தது. சுருதி கூட்டியது போல அவனுக்கு ஆகிவிட்டது.
துயரகேசப்பண்கள் O 155 o

Page 84
அப்படியே திரும்பிப்படுத்து அவளின் முகத்துக்குக்கிட்டவாய் முகம் உரசிய அளவில் அவன் கிடந்தான். பிறகு அவளை அவன் தன்னுடன் அணைத்துக் கொண்டான். அணைத்தவன் கைகளும் அணைத்தவள் கைகளும் நடுங்கின. அவன் அவளை ஏற்றுக்கொண்டான். அவளின் அணைப்பு அவனிடம் மயங்கிக் கிடந்த சில உள் ஆர்வங்களைத் தட்டியெழுப்பின. பசி இருக்கும் அளவுக்கு அவனுக்கு வேகம் பிடித்துவிட்டது. முதல்தரம் பெண்ணுடலைத் தொட்டுணரும் அனுபவம்! அவன் தசைகன் புயல் மரங்களாயின. அவளின் உடல் முழுமையாக அவனுக்குத் தேவைப்பட்டது. அவளும் உட்ச பட்ச வேகத்தில் வீணைத்தந்தியை தேவையான அளவு முடுக்கிய திருப்தியுடன் அவனைத் தன்னுடன் இணைத்துக்கொண்டாள். வசதியாக உரசும் கனத்த தொடைகள் சுகப்பட்டன. சுருதி சரியாக சேர்ந்திருக்கிறதா? என்ற பரிசோதிப்புடன் அவள்! பாம்பைப் பிடித்திருக்கும் கிரிபோல, அவனின் பிடி இறுக்கம் தளராமல் இருந்தது. அவனின் உதட்டின் வெப்பம், அவளுக்குள் இறங்கியது. அவளும் அவனை அணைத்த படி அமுத தாரைக்குக்கிண்ணமாய்க் குவிந்தாள். வலி விலக்கி சுகம் கொடுக்கும் இன்பமும் முடிந்தது.
தலை இன்பலயிப்பில் கீழ்ப்புறமாக அவனுக்குத் தாழ்ந்து இறங்கியது. நல்ல பாம்பும் சாரைப்பாம்பும் பிணைச்சலில் கிடந்து பின்கலைந்து அதது பாட்டுக்கு வெவ்வேறு மார்க்கங்களில் ஒடுமாம். அதுபோலவே ஏதும் ஒருவார்த்தைகள் பேசாது அவர்கள் விலகிப் போனார்கள். பெஞ்சமின் தான் படுத்திருந்த திண்ணையைவிட்டு எழாது முகட்டுப்பக்கம் இருட்டைப் பார்த்தபடி படுத்துக்கிடந்தான். திரேசாவும் குடிசைக் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே போய்ப் பாயில் படுத்துக் கொண்டாள். அவளுக்கு ஒரு போர்க்களத்தில் மல்லுக் கட்டி முடிந்த ஆயாசம். படுத்துக்கிடந்த அவளுக்கு, ஆண்களும் பெண்களுமாக அந்த வீதியிலே ஒரு சிலர் கதைத்துச் சளசளத்துக் கொண்டு போகும் சத்தங்கள் கேட்டன. அவர்கள் இரண்டாவது ஆட்டம் சினிமா முடிந்து போகிறார்களாக்கும் என்று அவர்களின் சில உரையாடலை கேட்டு விளங்கியதால் நினைத்துக் கொண்டாள். நேற்றைக்கும்போல் புதிய சினிமாப்படம் ஆரம்பமாகிறது என்று விளம்பரப்படுத்த மாட்டுவண்டிலிலே மேளம் அடித்தவாறு நோட்டீஸ் போட்டுக்கொண்டு போனார்கள். இவளும் ஒன்றை வீதியிலிருந்து பொறுக்கிக் கொண்டுவந்து பார்த்தாள். விதானை பொன்னையாவின் நியூ இந்திரா - கூடாரக் கொட்டகையில்தான் அந்தச் சினிமா ஆரம்பமென்று படிக்கும் போது அவளுக்குத் தெரிந்தது.
'சிவாஜியின்’ படமும் பத்மினியின்’ - படமும் அழகாகத்தானிருந்தன நோட்டீசில்! ஆனாலும் நான் இருக்கிற கேட்டுக்கு, எனக்கு என்ன படம் பார்ப்பு? என்று நினைத்து கையிலிருந்த நோட்டீசைக்கூட அவள்
O 156 O ரீ.பி.அருளரைத்தே

அதிலே வீசிவிட்டாள்.
அந்தச் சினிமாக் கதையைத்தான் தங்கள் கதைகளிலே புதுப்பித்துக் கொண்டு போகிறார்களாக்கும் என்று அவளும் நினைத்துக் கொண்டாள்.
போகிற அந்தச் சனத்துக்குள்ளேயிருந்து ஒருவன் பாட்டுப்பாடினான். அதையும் அவள் கேட்டாள்.
“பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே”
என்ன பாட்டு இது?
இதுவும் அந்த சினிமாவில் வருகிறதோ?
பெண்களென்றால் அவ்வளவு என்ன இளக்காரமோ?
அதைப் பாடிக்கொண்டு போகிற அவனையே போட்டுத் தன் காலால் உதைக்க வேண்டும்போல அவளுக்கு ஆத்திரமாக இருந்தது.
ஒரு பெண்ணுடைய உணர்ச்சிகளும், கஷ்டங்களும் இன்னொரு பெண்ணுக்குத்தான் தெரியும். அவள் படுகின்ற கஷ்டங்களும், இடிபாடுகளும், நெருக்குதல்களும், இரக்க உணர்சியே சிறிதுமல்லாத ஆண்களுக்கு எங்கே புரியப்போகிறது.
பாட்டு எழுதுகிறார்களாம் பாட்டு?
அந்தப்பாட்டை இந்தச் சோம்பேறி ஒருவன் என்ன சொகுசாய்ப் பாடுகிறான்?
அந்தப் பாட்டையும் தன் இன்றைய இப்பொழுதைய நிலையையும் நினைக்க, அவளுக்கு உடம்பு எரிவது போலக் கொதித்தது. பாயிலிருந்து உருண்டுபோய் வெறும் நிலத்திலே காலை அகலப் போட்டுக் கொண்டு மல்லாக்கப்படுத்தாள். சூடேறிய உடம்புக்கு சாணி மெழுகிய தரை குளிர்ச்சியாக அவளுக்கு இருந்தது.
எங்கேயோ இருந்து கோழி கூவும் சத்தம் கேட்டது. பக்கத்துக் குடிசை வீட்டிலும் அந்தக் கோழி கூவியதற்குப் பிற்பாடு சேவற்கோழி சிறகடித்துக் கூவும் சத்தம் கேட்டது. "இனிக் கொஞ்ச நேரத்தால விடிஞ்சிடும்போலக் கிடக்கு” என்று அவள் நினைத்தாள். இந்த விடியல் என் வாழ்விலும் இனி வந்துவிடும்' - என்பதாய் அவளுக்கும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இவ்வளவு நாளும் புண்பட்டுக் கிடந்த மனம் அவளுக்கு ஆறியதைப் போல சுகமாக இருந்தது. அந்த நிம்மதியிலே நல்ல தூக்கம் வந்தது அவளுக்கு அப்படியே அவன்
ugă astruasăscă O l57 o

Page 85
தந்த அந்த வலிகளின் ஆனந்தங்களை நினைத்துக்கொண்டு நன்றாகத் தன்னை மறந்தபடி தூங்கிவிட்டாள் அவள்.
፲ፃ
இறம்பைக்குளத்துத் தண்ணிரில் கைகால் முகம் கழுவிவிட்டு நிமிர்தான் ராமன். பிறகு வாய் கொப்பளித்தும் பீய்ச்சித்துப்பினான். ஆயாசமாய் இமைகளைத் திறந்து சூரியனைப் பார்த்தான். உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தது.
அவன் தான் போட்டிருந்த கால் சட்டையையும் மேல் சட்டையையும் கழற்றி, உள் கோமணத்தோடு மாத்திரம் நின்று கொண்டு அவைகளைத் தண்ணீரிலே நனைத்தான். கொண்டு வந்த துண்டுச் சவர்க்காரத்தை உடுப்புகளுக்குப் போட்டு சலவைக்கல்லிலே கும்மியெடுத்து அடித்துத் தோய்த்தான். ஓடாத தண்ணிரில் சோப்புநுரை மிதந்து நிற்கிறது. உடுப்பைப் பிறகு தண்ணீரில் அலசிக் கசக்கிப் பிழிந்தான். அகல விரித்து உதறி தோளிலே போட்டுக்கொண்டு குளக்கட்டடியால் ஏறிப்போனால் மறுபக்கச் சரிவில் மிகப் பசுமையான புல்லாய்த் தெரிந்தது. தடித்த இலைவிடும் எருக்கலைக் குத்துச் செடிகள் நின்ற பக்கத்திலே, தோய்த்த உடுப்புக்களைக் கொண்டுபோய் அவன் வெயிலில் காயப்போட்டான்.
இனிப்போய் அவன் குளத்தில் விழுந்து கிடந்துவிட்டு, இவற்றை எடுத்து உடுத்திக்கொண்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.
ஆனாலும் அந்தக் கட்டிலே காற்றுச் சுகத்தை அனுபவித்தபடி, முன்னாலே தெரியும் நெல் வயலைப் பார்க்காமல் குளிக்கப் போக அவனுக்கு மனமில்லை.
"எடுப்பாச்சோடிச்சு வர்ற பெண்ணுங்கமாதிரி பயிரு இப்ப எம்புட்டு அழகா வந்திருக்கு." - என்று அவனுக்கு வயலைப்பார்க்கவும் மனதுக்குப் புத்தூக்கம் பிறந்ததாய் இருந்தது. பயிரில் பால் பிடிக்கிற சமயத்திலிருந்து இதே வேலைதான் அவனுக்கு, நெற்கதிர்கள் கழுத்தளவு தண்ணில் நீச்சலடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து மனம் மகிழ்வான் ராமன்.
“இவ்ளவு காலமா திமிறிக் கொண்ணு நிண்ண பச்சப் பசேலெண்ணு பயிரு, இப்போ பருத்தித்திரண்ட நெல்மணிங்களிண்ண பாரத்தோட என்ன மாதிரியா அழகா தலையாட்டிக்கிட்டு தளதளெண்ணு நிண்ணுக்
o 158 o 5.6.stsevitavys

கிட்டிருக்கு
அவன் தனக்குள்ளாகச் சொல்லிக்கொண்டான்.
“வேகமா பக்கொம் பக்கமா கணக்கில்லாம தரையில இருந்து சில்லுங்க வெடிச்சு வந்தப்புறமே எனக்குத் தெரிஞ்சிக்கிட்டுது. இது குதிச்சுக்கொண்ணு இப்பிடியா வளந்துக்குமுண்ணு. இப்பவுண்ணும் பாத்தா என்னா மொத்தம் உலர்ந்தும் மஞ்சளாயிருக்கிற இந்தப் பயிரு. கதிரு உச்சியிலயும் தங்க முதிர்வா நெல்லுங்க கொத்துக் கொத்தா யெம்புட்டு அழகு?” அவனுக்கு அந்த நெல் வயலைப் பார்க்கப் பார்க்க மனதுக்கு இன்பமாயிருந்தது. வெறும் மேனியில் படும் வெயிலின் உறைப்பும் அவனுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை.
அவனுக்கு அந்த வயலைப் பார்க்கும் போது வேறுவிதமாகவும் ஒரு யோசனை போனது. பார்க்கும் ஒவ்வொரு பொழுதுகளிலும் அவனுக்கு இந்த எண்ணம் வருகின்றதொன்றுதான். அது ஒன்றும் புதிதல்ல. இன்றும் அதே நினைவுதான் அவனுக்கு! அது அவன் மனதில் மனப்பாடமாய் இருப்பதொன்று.
“இந்த வயலு நிலத்தில நமக்கேன் அவ்வளவுமா? எனக்கிண்ணு எல்லா நிலமும் இருக்கணுமெண்ணு பேராச எனக்கில்ல. இதில கொஞ்சூண்டு சொந்தமா இருந்தா போதாதா எனக்கு.? அங்கிட்டு மேற்கா இருக்கிற வேலிக்கம்பில இருந்து இங்கிட்டுப் பக்கம் கிழக்காயிருக்கிற தடிக்கம்பிலயாமட்டும் அப்பிடியே நேரா வெட்டின மாதிரி வந்தா அவ்வளவு பாத்திங்களும் காணும். இதுங்க மட்டும் போதுமே எனக்கிண்ணு.? இதிலயா நாத்துநட, கள புடுங்கிக்க, அரிவு வெட்டிக்கவுண்ணு எவ்வளவு வேல எனக்கு இருக்கும்.? எல்லாமே நானே தனியவா இந்த வயலோடயே ரவைக்கும் பகலிக்குமாக் கிடந்து செஞ்சுக்குவேன்..! அப்பிடீண்ணு ஒரு நிலம எனக்கு வந்துதிண்ணா இப்போ நானு செஞ்சுக்கிற நாத்த வேல ஏன் எனக்கு.? அப்புறம் நாலுபேருங்கமாதிரி நானும் ஒரு வெவசாயியாயிடுவேன். என் காலுங்களில இப்போ நான் மிதிக்கிற அசிங்கமே பட்டுக்காது. அதுக்குப்பதிலா இந்த வயலு மண்ணுங்களும் சேறும்தான் என் காலில படும். என் கையி அந்த அசிங்கமான வாளிய தூக்கிறத விட்டுட்டு பச்சைப் பசேலெண்ணு கிட்டிருக்கும் நெல்லு நாத்துப் பயிரைத்தான் பிடிச்சிக்கும். பொறவா நானும் அடுத்த வயலுக்காறங்க மாதிரி ஏர்சுமந்து மாட்டையும் பிடிச்சுக்கிட்டு இது வழிய வேல செஞ்சிக்கலாம். சேத்துக்கு தழை கழிச்சு, பயிருக்கு வேலியடைச்சு, அம்மாடி எம்மாம் வேல.? அப்புறம் என் வீடே களகட்டும்! சீதேவியா மாறிடும்! வீடு முழுக்கலுமா நெல்லு மூடைங்களா வந்து நெறையும்.! என் மகளுங்க எல்லாத்தையுமே பெரிய குபேரனுங்க கண்ணாலம் பண்ணிக்கிடுவாங்க. இப்பிடியா இந்த வயலு எனக்கு மட்டும் இருந்தா
getugs ssöUaksali O 159 O

Page 86
எப்பிடி எப்பிடீல்லாம் என் வாழ்க்கையெங்கிறதே மாறிருக்கும்.? ப்பிடியா ஒரு நெலம எனக்கு வருமா..?” என்று வயல்களை குளம் என்று நினைக்கும் மீனையும் நண்டையும்போல அவனும் நினைத்துக் கொண்டிருந்தான். இவைகளை தொடர்ந்ததாய் அவன் நினைக்க அவன் கண்களில் கண்ணீர் கசிந்தது. “கடவுளே.!” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு தலை உச்சிக்கு நேரே நின்ற சூரியனை அவன் நிமிர்ந்து பார்த்தான். கண்களில் வெயில் அவனுக்குச் சுட்டது. அதைத் தாங்க இயலாது தலையைக் குனிந்தான். அதோடு பழைய ராமனாகி தனது நிலைக்குத் திரும்பிவிட்டான் அவன்.
அவனது மனத்துயரம் மூச்சுக் காற்றிலும் வெளிப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதிகளோ இந்த மண்ணின்மீதும் வளம் மீதும், எந்த உரிமையும் அற்று இருக்கின்றார்கள். அதைத்தான் இப்போது நானும் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். என்று நினைத்து மனத்தில் உச்ச வேதனையை சிறிது நேரம் அனுபவித்தான் ராமன்.
தன் உணர்ச்சிகளை அவனுக்குப் பிடரியிலும் அறிய முடிந்தது. நேரத்தைப் போக்காமல் குளக்கட்டின்மேலே ஏறி நின்றான். நடுக் குளத்துப் பக்கம் புதிதாக மழைத் தண்ணிரோடு வந்து சேர்ந்த வாளை மீனாக இருக்க வேண்டும், அது தண்ணிரை அலங்க மலங்க அடித்தது அவனுக்குத் தெரிந்தது.
அவன் குளிப்பதற்கு இறங்கி நின்ற இடத்துக்குத் தூரமாய் நின்று கொண்டு சேரிப் பையனொருவன் மீன் பிடிக்கத் தூண்டில் போட்டுக் கொண்டு நின்றான். கையைத் தளர்த்தி நூலை தாராளமாகவும் விட்டான். தக்கை தண்ணீரில் மிதந்தது. மேலும் மேலும் கண்ணுக்குத் தெரியாமல் நீரில் அழுந்தியது. இழுத்தான். தலைக்கு மேலே வந்த மீன் உலுப்பலுடன் கட்டில் விழுந்து துடித்தது. கணையன் மீன்! தூண்டில் கொக்கியிலிருந்து அதைக் கழற்றி எடுத்தான் பையன். அவன் ஏலவே தூண்டில் போட்டுப் பிடித்த மீன்கள் கோர்வையில் கிடந்தன. அதிலே கோத்துக்கிடந்த பெரிய ஜப்பான் மீனோடும் சின்ன விரால் குஞ்சோடும் இப்போது தூண்டிலில் இழுத்த கணையனையும் அவன் குத்திக் கோத்தான். ராமன் அவனையே சிறிது நேரம் பார்த் தான். அவனுக்குப் பக்கத்திலே கோர்வையில் கிடந்த மீனையும் பார்த்தான். தற்போது கையில் அவனுக்குக் காசு இருக்கவில்லை. குளத்தில் குளிக்க வருகிறவனுக்குக் காசு எதற்குத் தேவை இருக்கு? வேலை முடிந்து கிராமசபை அலுவலகத்திற்குப் பின்னால் மல வண்டியை விட்டுவிட்டு வரும்போது கிட்டினனின் பொட்டல் தேநீர் கடைக்கு வெளியே நின்று அவன் தேநீர் குடித்தான். கிட்டினனின் கடையிலும் இரண்டு தம்ளர் முறை இருந்தது. ராமன் போன்றவர்கள் வந்தால் O 160 O ரீ.பி.அருணானந்தே

வேலிக்கம்பிலே கவிழ்த்துப் போட்டுக் கிடக்கிற பேணியை கையில் அவர்கள் எடுத்துப் பிடித்துக் கொள்ளவேண்டும். உடனே கிட்ணபிள்ளை அதிலே சிறிது தண்ணிர் ஊற்றுவார். அவர்கள் என்னத்தைத்தான் கழுவுகிறது. ஒரு சிலாவு சிலாவி தண்ணிரை நிலத்தில் கொட்டுவார்கள். அதற்குப் பிறகு சுடச்சுடத் தேநீரை அவர் அதற்குள் ஊற்றிவிடுவார். இப்படியெல்லாம் நடத்திவிட்டு, கடைசியிலே காசை மாத்திரம் அவர்களின் கையாலிருந்து தன் கையை நீட்டித் தொட்டுவாங்கி லாச்சியில் அவர் போட்டுக் கொள்வார்.
பட்டால் தீட்டு பஞ்சமர் நிழல்கள் என்பார்களே இந்தக் காசு பணத்திலே மட்டும் அந்தத் தீட்டு ஒட்டிக்கொள்வதில்லையோ? கோயில் உண்டியலிலும்தான் சாதிக்குறைவானவன் காசைக் காணிக்கை போடுகிறான். பிராமணி தொட்டுத் தொட்டு எண்ணிப் பைக்குள் போட்டுக் கொண்டு அதைத் தன் வீட்டுக்குள்ளே கொண்டு போய் வைக்கிறான். இதிலே மாத்திரம் தீட்டில்லையோ? தீட்டுப் பட்டுக்கொள்ளாதோ அவருக்கு? கீழ்ச்சாதிக்காறன் தொட்டகாசு கடைசியில் எல்லோரின் கையிலும்தான் புரழ்கிறது. தலையணைக்கு அடியில் வைத்துக்கொண்டும்கூட படுக்கிறார்கள். இதிலேயெல்லாம் இவர்களுக்குத் தீட்டு என்பது இல்லாமல் எங்கே போய்விட்டது என்பதாய் நடந்துகொள்கிறார்கள்?
ராமன் கையிலே காசு இல்லாத நிலையை நினைத்துக்கொண்டு அந்த மீன் கோர்வையைத் திரும்பவும் பார்த்தான். கடைசியாக பையன் கோத்த கணையன் மீன் 'விலுக் விலுக்கென்று கிடந்து அதிலே துடித்துக் கொண்டிருந்தது. துடித்தவண்ணம் கிடந்த கணையன் மீனின் வெள்ளி வயிறு வெயில் பட்டு மினுக்கு மினுக்கியது. குளத்து மீன் கறியென்றால் கொள்ளை ஆசை ராமனுக்கு.
"நீ தூண்டிலில பிடிச்ச மீனுங்கள விப்பியா தம்பீ?” என்று அவனைப் பார்த்து ராமன் கேட்டான்.
“விற்கிறதும் தான்.!” - என்று வாய்க்குள்ளே சொன்னமாதிரி முனகினான் அவன்.
“என்ன வெல.?”
"அம்பது செதம்.?” இதச் சொல்லும் போதும் சத்தமாகச் சொல்ல வில்லை அவன்.
“யின்ன ஐம்பேசமா..?”
“ህb...!”
slugă astualăsă o 161 o

Page 87
"முப்பது சதம் வாங்கிக்கயேன் .?”
"ம். எடுத்துக்குங்க..!"
அவன் இப்படிச் சொன்ன பிறகுதான் காசுக் கதையைச் சொன்னான் ராமன்
“கொளத்துக்கு வந்ததினால காசு கையில கொண்டரல தம்பி என் வீட்டயா அத பின்னாடி வந்து நீ வாங்கிக்கிறியா?”
ராமன் இவ்வாறு சொல்ல பையன் அவனின் முகத்தைப் பார்த்தான். ராமனை அவனுக்குத் தெரியும். அவனின் நாணயத்தைப் பற்றியும் அவன் அறிந்திருந்தான். எனவே அவனுக்குத் திருப்தி
“சரி நான் அப்புறமா வாங்கிக்கிறன்! மீன நீங்களு எடுத்துக்குங்க” - என்று அவனுக்குச் சொல்லிக்கொண்டு தூண்டில் கயிற்றை தண்ணிருக்கு மேல் திரும்பவும் அவன் வீசினான். தக்கை அல்லிக் கொடியோரமாகப் போய் விழுந்த்து மீன் வந்து புழுவைக் கொத்த தக்கை நடுங்கி நடுங்கி வளையம் போக்கிக் கொண்டிருந்தது. அவன் தன்னுடைய அலுவலில் கவனமாய் இருந்து கொண்டிருந்தான். ராமன் கோர்வையில் கிடந்த மீனைப் போய் எடுத்துக் கொண்டு வந்து தன் பக்கத்தில் வைத்துவிட்டுக் குளத்துத் தண்ணிருக்குள் இறங்கினான்.
நாம்பன் மாடுகளைக்கூட நடுக்குளத்தில் பின்நின்று உந்திநீரில் இறக்கிக் கொண்டுபோய் குளிப்பாட்டுகிறவர்கள், சேரியில் உள்ளவர்கள் குளிப்பதற்கென்று மட்டும் குளத்தின் தொங்கல் கரையைத்தான் அவர்களுக்கென்று ஒதுக்கிவிட்டிருந்தார்கள். தண்ணீர் குளத்தில் வற்றும் காலத்தில் அந்த இடத்தில் குப்புறப்படுத்த மாதிரிக் கிடந்ததுதான் அவர்களுக்குக் குளிக்க வேண்டியதாயும் வரும். அவ்வளவு கஷ்டமும் பாடும் அவர்களுக்கு. எளியன் சாதி குளித்தாலென்ன, உயர்ந்த சாதிக்காரன் குளித்தால் முழுகினாலென்ன, குளத்துத் தண்ணீர் எல்லா மனிதனின் ஊத்தைகளையும்தான் தன்னிடம் வாங்கிக் கொள்கிறது. எல்லா இடத்திலும் அது கலந்து நிறைந்துவிடுகிறது. இதை ஏன் சாதித்துவேஷம் காட்டுகிறவர்கள் எண்ணிப் பார்க்கவில்லை. அந்தத் தண்ணீரை இப்படியெல்லாம் பேசும் தங்கள் வாய்க்குள் விட்டு வாய் கொப்பளித்துத் துப்புகிறார்கள். அதிலே மட்டும் தீட்டில்லையோ? குளத்துக் கலங்கல் நீரில் கால் நனைத்து நின்றபோது ஒரு வகையான ஊமைவலி அவன் நெஞ்சில் ஏற்பட்டது. அவனுக்கு முன்னால் உள்ள நீர்ப்பரப்பைத் தொட்டு உயர்ந்தது ஒரு மீன்கொத்தி அவன் அந்தக் கலங்கல் தண்ணீரில் இறங்கிக் கிடந்து தலைமுழுகிவிட்டுப் பிறகு கரையேறினான். கட்டிலே ஏறிப்போய் எருக்கலைச் செடியின் அருகில் வெயில் காயப்போட்ட உடுப்புகளை எடுத்து உடுத்திக்
O 162 O ரீ.பி.அருணானந்தல்

கொண்டான். குளக்கட்டில் ஏறி நின்றால் நல்ல காற்றுத்தான்! அது மேனியில் பட சுகமாகத்தான் அவனுக்கு இருந்தது. தண்ணிருக்குள் கிடந்து எழும்பியதால் உடம்பு குளிர்த்தியாகவும் இருந்தது. எல்லாமே ஒரு மன அமைதியைக் கொடுத்தது. அந்த உற்சாகத்தோடு அதிலே நின்றபடி முன்னால் தெரிந்த நீண்டு பரந்த அந்த வயலைப் பார்த்தான். கண்ணுக்குப் புலனாகாமல் வந்து போகும் காற்று! அதன் அசைவிலே அலை அலையாக அசைந்தாடிக் கொண்டிருக்கும் நெற்கதிர்கள்! அதன் மேலே திடீரென்று அவனுக்கொரு ஆசை பிறந்தது.
“இதாலே நான் வீட்டுக்குப் போகும்போது கைப்பிடி அளவு கொஞ்சம் கதிரோடுள்ள நெல்மணிகளைக் கொண்டு போனாலென்ன” என்று நினைத்தான்.
ஆனாலும் பயம்!
“யாராவது என்னை அப்படியான நேரத்தில் கண்டுவிட்டால், அடித்து என் எலும்பையும் முறித்து நாசப்படுத்தி விடுவார்களே?”
நினைக்கவே அவனுக்குக் கலக்கடியாய் இருந்தது என்றாலும் மனதில் உள்ள ஆசை அவன் மனதை விட்டு விலகவில்லை.
போய்ப்பிடுங்கினாலென்ன..? போ போ என்று சொல்லிக்கொண்டே இருந்தது அவன் மனம்!
அவன் தலையைச் சொறிந்துகொண்டு சுற்றுமுற்றும் பார்த்தான். நடு மத்தியானம் தாண்டிய நேரமாயிருந்ததால் வயல் பக்கத்திலும் ஒருவரையும் காணவில்லை. குளத்துப் பக்கமும் ஆள் அரவமற்: வெறிச்சோடித்த மாதிரித்தான் இருந்தது. அந்தப் பையன் மாத்திரம்தான் அதிலே நின்றபடி தூண்டில் போட்டுக் கொண்டு நின்றான். அவ்வளவையும் கண்டுகொண்ட பிறகு அவனுக்கென்றால் அதிலே நின்று கொண்டிருக்க மனம் வரவில்லை.
மளமளவென்று குளக்கட்டால் இருந்து இறங்கி வயல் தரைக்குப் பக்கத்தில் வந்தான். வயல் வேலிக்குப் பக்கத்திலே பற்றைச் செடிகள் நெருக்கி வளர்ந்ததாய் நின்றன. அந்தப் பற்றைக்குள் சென்று மறைந்திருந்து கொண்டு வேலிக்குள்ளாலே வயலுக்குள் கையைவிட்டால், நெற்பயிர் கைக்கு எட்டும். ஆரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவன் அதை நினைத்துக்கொண்டு பற்றைச் செடிக்குள் சென்று மறைந்திருந்து கொண்டு வேலிக்குள்ளே பார்த்தான். வயலின் அடிப்பரப்பிலே நீர் நின்றது. நெல்லின் நறுமணம் அவனது மூக்கிலடித்தது. தலை நீட்டிக் கொண்டிருந்த நெற்பயிர்களிலே கொத்தாக நெல்மணிகள். அடுத்த கணமே வேலிக்குள்ளாலே அவன் தன் ஒரு கையை விட்டான். எட்டவில்லை. இன்னும் எட்டியதாய்த்
துயர3 க\30Uண்கள் O 163 O

Page 88
தன் ஒரு கையை அவன் உள்ளே நீட்டினான். வேலிப்பக்கத்து முள் அவன் சொக்கையில் குத்தியது.
என்றாலும் நீட்டிய கையை அவன் திரும்பவும் எடுக்கவில்லை. முழங்காலை ஊன்றிக்கொண்டு இன்னும் உள்ளே கையைப் போகவிட்டான்.
பரந்த அவன் விரல்களுக்கு மட்டுமீறி வளர்ந்து நின்ற பயிர் பிடிபட்டது. அகப்பட்டதை இழுத்தான். நெல்மணிகள் சிதறாமல் தாளுடன் அவை பிடுங்கப்பட்டுக் கைக்குள் வந்தன. ஒரே கஷ்டம்தான். அந்தக் கைக்குள் வந்ததை அப்படியே மற்றக் கையில் கொடுத்துவிட்டு மீண்டும் கையை உள்ளே விட்டுப் பிடிபட்டதை இழுத்தான். இப்படியே அடுத்தடுத்து இழுத்தெடுத்ததில் கை மொத்தத்துக்கு மேலே நெல்துர் கிடைத்தது. அதைப் அப்படியே தான் போட்டிருந்த சட்டையைக் கழற்றி அதற்குள் சுற்றி எடுத்துக்கொண்டு, திரும்பவும் குளக்கட்டில் ஏறினான். அவன் வைத்துப்போன இடத்திலேயே மீன் கோர்வை கிடந்தது. ராமனைக் கண்டுவிட்டு தூண்டில் போட்டுக்கொண்டு நின்ற அந்தப் பையன்.
“யேன் இத எடுத்துக்கேல்லயா.” - என்று கேட்டான்.
"மறந்துப்புட்டுப் போயிட்டேன் தம்பியா எடுத்துக்குறேன் எடுத்துக்கிறேன்.” - என்று அவனுக்குச் சொன்னான் ராமன். ஒரு கையில் அவன் சுற்றி வைத்துக் கொண்டிருக்கும் மேல் சட்டை இருந்தது. மறு கையில் அந்த மீன் கோர்வையைத் தூக்கிக் கொண்டு அவன் மளமளவென்று நடந்து சேரிக்குப் போய்ச்சேர்ந்தான். அங்கே தன் வீட்டுப் படலையைத் திறந்துகொண்டு உள்ளே போகிறபோது தலையை ஆட்டியவாறு மலர்ந்த முகத்துடன் நடந்துசென்றான் அவன். குடிசைக்குள் போய் கொண்டுவந்த மீனை மகளிடம் கொடுக்கும்போது "இது உனக்கு ரொம்பப் பிடிக்குமா இல்லையா?” என்ற கேள்வியோடு சட்டையில் சுற்றி எடுத்துக்கொண்டுவந்த நெற்தூரை மகளுக்குக் காட்டினான். செவ்வந்தி தனக்குப் பிடிக்கும் என்றதாய் நெல் மணிகளைப் பார்த்துக்கொண்டு மெளனமாகத் தலையை ஆட்டினாள். ராமன் வாய்திறந்து அதற்குப் பிறகு ஒரு வார்த்தையும் பேசாது நெற்கொத்தின் தலையை கைவிரல்களால் கோதினான். பிறகு ஒரு சணல் கயிற்றுத்துண்டைக் குடிசைக்குள் தேடியெடுத்து, அதைக் கொண்டுபோய் செத்தைத் தட்டியிலே ஒரு பக்கத்தில் உயர்த்திக் கட்டித் தொங்கவிட்டான். 'என்னிடம் உள்ள இந்தச் சொத்துக்கு முழு உடமையாளன் நான்தான்! என்பதாய் அந்த நெற்கதிர்களைப் பார்க்கவும் அவனுக்கு மனமகிழ்ச்சியாக இருந்தது. அந்த நெற்கதிர்களிலேயே தன் உள்ளத்தைப் பறிகொடுத்தமாதிரி அவன அதைப் பார்த்தபடியே சில கணங்களாக நின்று கொண்டிருந்தான்.
O 164 O ரீ.பி.அருணானந்தே

செவ்வந்தி மீனைக் கொண்டுபோய் சட்டிக்குள் போட்டு மூடியால் மூடிவைத்துவிட்டு, அடுப்படிக்கு வந்தாள். குளித்துவிட்டு வந்ததும் தகப்பனுக்குக் கொடுக்க வேண்டும் என்று, அவள் சோற்றாலிருந்து வடித்து வைத்திருந்த கஞ்சி ஆறி இறுகிப் போயிருந்தது. அதைத்திரும்பவும் சூடுகாட்டி எடுக்க, அடுப்பில் வைத்து அவள் விறகுக்கு நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தாள்.
20
காலைச் சூரிய ஒளியின் முன்னால் அந்தக் காவல் கொட்டிலின் வாசலிலிருந்து செல்வநாயகம் பார்க்கும்போது, அவனுக்கு முதன் முதலாகத் தென்படுவது அந்தச் சவக்காலைதான்! அதிலே நின்று தன் கண்களை விரிக்கும் அந்தக் கணநொடியில், சிறு துன்பத்தையும் அவன் மனதில் சுமப்பான். அவன் கண்களால் பார்த்து மகிழ்வெய்தவேண்டிய காட்சிகள் சவக்காலைக்குள்ளே என்னதான் உண்டு? அங்கே ஒருபக்கம் அவனுக்குக் காணப்படுவதாய் இருப்பவை புதைகுழிச் சிலுவைகள்! மறுபக்கம் உள்ள சவக்காலைக்குள்ளே, பழைய குழிக்குள்ளே இருந்து எடுத்துவீசிய மண்டை ஓடுகள் ஒரு சிலதின் பல்லிளிப்புக் காட்சிகள்! இவையெல்லாம் உள்ளத்தில் சிறிதாவது அவனுக்கு மகிழ்ச்சியைப் பெருக்குமா? அதைவிடுத்து அவனுக்கு இந்தக் காட்சியெல்லாம், " ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் கடைசியில் இவ்வாறுதான் முடிகிறது’ என்ற ஞானத்தைத்தான் கொடுக்கின்றது.
y
அந்தச் சவக்காலையின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போலத்தான் அதன் அருகிலிருந்த அந்தச் சேரியும். அந்தச் சேரியில் வாழ்ந்த தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை அந்தக் காவல் கொட்டில்ப் பக்கத்தாலே கூட்டிக்கொண்டு குளத்துக்குக் குளிக்கப்போகும்போது, அவர்களை அவன்பார்ப்பான். அவன் பார்வையில்படும் பிள்ளைகள் சிலர், எலும்பும் தோலுமாகத்தான் காணப்படுவார்கள். வேறுபிள்ளைகள் சிலருக்கு உடல் முழுவதும் புண்கள் படர்ந்திருக்கும். தாய்மார்களோ பட்டினியும் நோயும் ஒன்றி உழைத்ததின் பலனாக, கண்களும் குழிவிழுந்து போய் ஜீவஜோதியை இழந்தவர்கள் போலத் தென்படுவார்கள். அவர்களின் கன்னங்கள் ஒட்டி, நெஞ்சு ஒடுங்கி, அவயவங்கள் வாடித் துவண்டு வற்றி பார்க்கவே இதெல்லாம் அவனுக்குப் பெரிய கவலைதான்.
ஆனாலும் ஒன்றிரண்டு நிமிஷ நேரத்துக்கு அப்படியே மனதில் நிற்கும் இந்தக் கவலைகளுக்குப்பிறகு? செவ்வந்தியின் நினைவுதான் அவனுக்கு விடாது நீண்டு நிற்கும். அந்த நினைவோடு மவுத் ஓர்கனை
slugošavůvaňsaň O 165 O

Page 89
எடுத்து வாசித்துக்கொண்டு, அவள் நினைவையும் அந்த இசையிலே அவன் பொருத்துவான். அந்த இசை அவனைப் பாதுகாத்துக்கொண்டது மாதிரி இருக்கும். அதிலே அவனுக்கு ஆர்வம் பொங்கப் பொங்க வேதனைகளை மறந்து அதிலே அவன் லயித்துப் போவான்.
செவ்வந்தி பாம்பைக்கண்டு பயந்து ஓடிவந்து கொட்டிலுக்குள் நின்ற நாள் தொடங்கி, இப்படியாகத்தான் மாறிவிட்டது அவன் போக்கு. வீணையும் கையுமாக தான் இருக்கின்ற நேரத்தை விட மிகுதி நேரங்களில், இந்தப்பக்கமாக எப்பொழுதேனும் அவள் வருவாளா போவாளா என்று நினைத்துக் கொண்டு கொட்டில் வாசலில் நின்று காத்துக் கொண்டிருக்கவும் அவன் தொடங்கிவிட்டான். அவ்வேளை உள்ளத்திலிருந்துபெருமூச்சுகளும் அவனுக்கு உயர்ந்துகொண்டிருக்கும். இப்படியே அந்தக் கொட்டிலில் இருந்த கணக்கிலே அன்றையப் பொழுதும் அவனுக்கு எரிந்து அடங்கிவிடும்.
இவ்வாறாகத்தான் செல்வநாயகத்துக்கு செவ்வந்தியின் மேல் அவன் கொண்டிருந்த காதல் ஒரு கனவு போல இருந்தது. அவனுக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று அவள் தன்னிடம் எதையெல்லாமோ கேட்கவேண்டும், தானும் என்னவெல்லாமோ அவளுக்குச் செய்யவேண்டும், செய்துதான் ஆகவேண்டும், என்பதாய் ஒரு பிரமை தட்டிக்கொண்டு இருந்தது.
இந்த நினைப்பில்தான் செவ்வந்தி அன்று பாம்பைக்கண்டு பயந்து ஓடி வந்ததற்குப் பிறகு, தானே போய் அடுத்த தடைவை அந்தக் கொடிகளிலே பாவற்காய்களை அவளுக்கென்று கொடுப்பதற்கு அவன் பிடுங்கிக் கொண்டுவந்து கொட்டிலில் வைத்திருந்தான். இரண்டு நாள் கடதாசிப் பையில் அவ்வளவும் கிடையாய்க் கிடந்தது. இப்படியே கிடந்தவாக்கில் பாவற்காயெல்லாம் பழுக்கப்போகிறதே என்று அவன் நினைத்துக்கொண்டிருக்க, செவ்வந்தியும் தங்கையும் அடுத்தநாள் காலையில் அவ்விடத்தடிக்கு வந்தார்கள். செவ்வந்தி அங்கே வந்து கொடிகளுக்குப் பக்கத்திலே போகப் பயந்துகொண்டிருக்க, ராக்காயி அவளுக்கு "நீ இதிலயே நிண்ணுக்கிட்டிருக்கா நானு அதுங்களில பாத்து காயி புடுங்கிக்கிறன்” என்று சொன்னாள்.
“அடி பாத்தடி அதுங்களுக்கு கீழயாவும் சில வாட்டி பாம்பும் இருந்துக்கும்.” என்று செவ்வந்தி அவளைப் பார்த்து அன்றைய பாம்பு நினைப்பைத் தனக்குள்வைத்துக் கொண்டு சொன்னாள்.
“எல்லா இடங்களிலுமா பாம்பு கிடந்துக்கப் போவுது..?”
"ஆமா நீ பெரிய துணிஞ்ச கட்ட. இதெல்லாமே இனிமேல வேணாம்! வா நம்ம வீட்டுக்குப் போய்க்கிவம்.?” - என்று சொல்லி செவ்வந்தி
O 166 O ரீவி.அருளரைத்தே

தங்கையைக் கூப்பிட்டாள்.
போக்கா வந்ததுதான் வந்தம் அங்கிட்டுப்பாம்பு இருந்த பக்கம் பாத்துப்
போவாம இங்கிட்டுள்ள கொடியளில பாத்து கொஞ்சூண்டாச்சும் கறி வைச்சுக்க காய் பறிச்சுக்கிட்டுப் போவமே..?” என்று சொன்னாள் அவள்.
“நீ நல்லது எது சொன்னாலும் உண்ட காதிலயா கேட்டுக்கமாட்டா புள்ள. சரியான வீம்புக்காரி.” என்று அவளைப் பேசினாள் செவ்வந்தி
"சும்மா எதுக்கும் நீ பயம்.! பயந்தாங்கொள்ளி. சும்மா இதிலயா நிண்ணுக்கக்கா நீ.?” என்று சொல்லிக்கொண்டுபோய் ஒரு பாவற் கொடியைக் கையால் பிடித்துத் தூக்கிப் பார்த்தாள் அவள். அந்தக் கொடிகளிலே சிறிய உருளைப் பிஞ்சுகளையும் அவள் காணவில்லை. கொடிகளிலே மஞ்சள் பூக்கள் மாத்திரம் தலை நீட்டிக் கொண்டிருந்தன. அவைகளைப் பார்த்துவிட்டு, பக்கத்துப்பக்கத்துக் கொடிகளையும் அவள் அவ்வாறே தூக்கிப் பிரட்டிப் பார்த்தாள். ஒன்றிலும் காய்களை அவள் காணவில்லை.
“காயுங்க ஒண்ணுமே கொடிங்களிலயா காணல அக்கா." என்று சொல்லியவாறு ஏமாற்றத்தை முகத்தில் தேக்கிக் கொண்டு தமக்கையை திரும்பிப் பார்த்தாள் அவள்.
“யாரு புடுங்கிட்டுப் போயிருப்பா..?” "ஆராச்சும் புடுங்கிட்டுப் போயிருப்பாங்க போல.” "அப்புடியா ஆரடி இதுங்கள வந்து புடுங்கிக்கிட்டிருப்பா..?”
“இதுங்கள நாம மட்டுமா தின்னுக்கிறோம்.? இது வழியா கொளத் துக்குப் போறவளுக ஆராச்சும் வருகிறப்ப போயிக்கிறப்ப புடுங்கிக் கிண்ணும் போயிருப்பாங்க அக்கா.” தங்கை அப்படிச் சொல்ல செவ்வந்திக்கு மனம் தளர்ந்துவிட்டது. "அப்புடீண்ணா கிடக்கட்டும் வா நீ புள்ள நாம வுட்டுக்குத் திரும்பிப் போய்க்குவம்.” என்று அவளைக் கூப்பிட்டாள். தமக்கை கூப்பிட ஏமாற்றம் தோன்றும் படியான ஒரு நிலையோடு அவளின் அருகே வந்து சேர்ந்தாள் ராக்காயி. இருவரும் அந்த வழியால் திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவர்களையே தன் கொட்டிலில் நின்றபடி எதையோ எதிர்பார்க்கும் அதிக ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தான் செல்வநாயகம். அவர்கள் இருவரும் கொட்டில்பக்கத்தாலே நடந்து
zugă sistvoirscă o l67 o

Page 90
வந்துகொண்டிருந்தபோது அவனுக்கு அவர்களைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது.
“என்ன போனிங்க கையில ஒண்டுமே இல்லாம வாறிங்க..?” - என்று அவன்கேட்க,தங்கையைதனக்குமுன்னால்நடந்துபோகவிட்டுக்கொண்டு ரகசியமாக அவனைப் பார்த்துச் சிரித்தாள் செவ்வந்தி "பாவக்காயி ஒண்ணும் கொடீங்களில இல்லய்யா. அதுதான் பாத்துப்புட்டுத் திரும்பிட்டமுங்க..” என்று கொஞ்சதூரம் செல்வநாயகத்தைப் பார்த்தபடியே நடந்தபிறகு நின்றபடி பதில்சொன்னாள் ராக்காயி.
அவன் சொன்னான். “சிலவேளை ஆராச்சுப் புடுங்கிக் கொண்டும் போயிருப்பினம் என்ன?” அப்படிச் சொல்லவும்,
செவ்வந்தி அவனைப் பார்த்துக்கொண்டே “ம்.!” என்றாள். இவ்வுலகை முழுவதையுமே சுவாசித்து இழுத்தது மாதிரி நீண்டது அவள் சுவாசம். கன்னத்தில் அவளுக்கு ஜோராய் சிவப்பும் பூத்தது. “என்னநிறம், புது நிறம் இவள் முகத்தில?” - என்று நினைத்துக் கொண்டு அவளின் முகத்தைப் பார்த்தான் செல்வநாயகம். “சரி ஏன் ரெண்டு பேரும் வெறுங்கையோட வீட்ட போறிங்க..? நான் கொடிகளில இருந்து பிடுங்கின பாவக்காயள் கொஞ்சம் கிடக்கு வேணுமெண்டா அதுகளத் தாறன் கொண்டு போங்களன்.?” என்று அவன் கேட்டுவிட்டு அவர்களின் முகங்களை மாறி மாறிப் பார்த்தான்.
“உங்களுக்கு ஏதய்யா பாவக்காயுங்க? நீங்கதான் இந்தக் கொடீங்க ளிலயா காய் புடுங்கிக்கிட்டீங்களா..?” என்று ராக்காயி உடனே அவனைக் கேட்டாள்.
"நீங்க எல்லாம் வழமையா இந்தக் கொடிகளிலதான் பாவக்காயள புடுங்கிறியளெண்டுறது எனக்குத் தெரியும்.! பேந்தேன் இதுகளிலயா நான் ஆயுறன்.?”
"அப்புறம் எங்கிட்டய்யா காயி புடுங்கிக்கிட்டீங்க?" ராக்காயி அப்படிக் கேட்க செவ்வந்திக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அவள் சிரித்தாள்.
"ஏன் இந்த இடத்தவிட்டா வேற இடத்தில இந்தப் பாவக்காயே இல்லயா? வேற எங்கயும் இதுகள ஆயேலாதா..?”
அவன் தொண்டைக்குள் எச்சிலை விழுங்கிக் கொண்டு ராக்காயியைக் கேட்டான்.
"கிடக்குந்தான். ஆனா இதுங்களயெல்லாம் நீங்க ஏன் போயி O i 68 O ரீ.பி.அருணானந்தே

அங்கினயா புடுங்கிக்கிட்டு வந்தீங்க..? நீங்களும் இதுங்கள ஆக்கித் தின்னுவீங்களா?”
“சேச்சே, நான் ஏன் சமைக்கிறன்! கடையில வாங்கித்தானே சாப்பிடுறன்.?”
"அப்புறம் ஏன் ஐயா..?”
“இத உங்களுக்குக் குடுக்கவேணுடுமெண்டுதான் புடுங்கினன்.” “என்ன எங்களுக்காகவா புடுங்கிட்டு வந்தீங்க..?”
“ம். ம்..!” அவன் தலையை ஆட்டினான். “எங்கிட்டையா இதுங்களயெல்லாம் நீங்க போய்ப் புடுங்கினிங்க..?” “இந்தக் காடுகளில உள்ள போய்த்தான்.” “அதுக்குள்ளயா போயா..?” அவள் இரக்கமாகக் கேட்டாள்.
“ub...!”
“உங்களுக்கு பாவக்காயின்னா விருப்பமாய்யா..?”
S. 8 sy
D...
"அப்புடீண்ணா உங்க சொந்தக் காரருங்க ஆருக்கிட்டயாவது குடுத்து கறி வைச்சு சாப்பிட்டுக்கலாமே..!”
“எனக்கு சொந்தமே இங்க இல்லயே.?” "அப்புடீண்ணா உங்க ஊரு இதில்லயா?”
“இல்ல 99
"அப்பிடீண்ணா யாப்பாணத்து ஆளுங்களா நீங்க ஐயா..?”
GG. ''
D.
“ஒங்க அம்மா அப்பா எல்லாருமா அங்கிட்டு உள்ள ஊருங்களிலதா இருக்காங்களா?”
"ஆமா ஆமா உன்ர பாசையில சொல்லுறன்.”
“போங்கய்யா அப்புறமய்யா, நீங்க உங்க ஊருக்குப்போயி அவுங்கள பாத்துப்புட்டு வரலயா..?”
துயரம் சுஸ்வீர்கள் O 169 O

Page 91
"நான் இங்க வந்தே நாள்கணக்குத்தான் ஆகுது. அதுக்குள்ள எனக்கு லீவு தருவாங்களா?”
"நான் ஒரு மக்கு.”
"இல்ல நீ நல்ல புத்திசாலி. ஆனா உன்ர அக்காதான் அதிகமாகக் கதைக்கிறதே இல்லப் போல கிடக்கு?”
"அக்கா இப்பிடித்தான் ஊம மாதிரி இருந்துக்கும்! அப்புறமா கதைச் சுக்கும்.! இப்ப நானு உங்ககூட கதைக்கிறதே அக்கா கதைச்சிக்கிற மாதிரித்தானிண்ணு வைச்சுக்குங்களேன்?
"என்னடி வண்டுமாதிரி துளைச்சிக்கிட்டிருக்கிறா சும்மா ஒண்டய வாய வைச்சுக்கிட்டு இருக்கிறியாடி..?” செவ்வந்தி அவள் முதுகில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டினாள்.
“என்னக்கா பூமாதிரி இருக்கு உன்ர கையி எனக்கு வலிக்கவே இல்லயே.?”
"இரு இரு அப்ப வீட்ட போயி பெரம்பால ரெண்ணு நல்லாத்தர்றேன் ஒனக்கு.?”
"அப்புடீன்றியா அதுகூட நீ செய்யவே மாட்டா. இன்னுமொண்ணு நானு இந்த ஐயாவ கேட்டுப்புர்றனே?”
"அதுக்கு என்னிய யேன்டி நீ ஒன் கூடவா இழுத்துக்கிறே? உன்னோட
எனக்குப் பெரிய வம்பாச்சுடி.?”
“என்ன வம்பு? நான் இந்த ஐயாவத்தானே கேக்கிறேன்.?”
"ஐயோ என்னடி அவரப்போயி நீ கேக்கப்புறே.?”
"அவருக்குக் கல்யாணம் ஆயிடிச்சாவெண்டு கேக்கப்புறன்.?”
"உனக்கேண்டி அந்தக் கதைங்களெல்லாம்?”
"நீ சும்மா இரு அக்கா! நான் ஏதோ அவர கேக்கிறன்.? நீங்க கண்ணாலம் பண்ணிக்கிட்டீங்களாய்யா?”
“இல்ல.”
"ஏன் இவ்வளுண்டு காலமா நீங்க கண்ணாலம் பண்ணிக்கல்ல.?”
ராக்காயி அப்படிக் கேட்க நல்ல தெளிவாகச் செவ்வந்தி செல்வநாய கத்தின் முகத்தைப் பார்த்தாள். அவனும் செவ்வந்தியைத் தன்
O 170 O ரீ.பி.அருணானந்தே

கண்களுக்குள் அடக்கியதைப் போல் வைத்திருந்துவிட்டு ராக்காயி யைப் பார்த்தான்.
“நீ வளருமட்டும் நான் பாத்துக் கொண்டிருக்கிறன் பேந்து நீ என்னக் கலியாணம் முடிக்கிறியா?” என்று அவளை வேடிக்கையாகக் கேட்க.
"நாங்க சக்கிலிய ஆக்களு ஐயா. பகிடிக்காச்சும் இப்பிடி நீங்க கதைச்சீங்கண்ணா அப்புறம் உங்களுக்கும் கூடாதுங்களே..?” - என்று தாழ்மையாகச் சொன்னாள் அவள்.
"ஏன் கூடாது.?” என்று திருப்பிக் கேட்டான் செல்வநாயகம், “ஆரும் கேட்டுப்புட்டாலே கஷ்டமாயிடுமே..?" "அப்பிடி ஒண்டுமில்ல எனக்கு." "அப்பிடீண்ணா அப்பிடி ஒண்ணுழே பாத்துக்காத ஆளா நீங்க.?”
"ஆமா." என்று அவன் சொல்ல செவ்வந்திக்கு அது புது உற்சாகத்தை அளிப்பதாக இருந்தது. அவன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள் அவள் செவிகளில் முழங்கிக் கொண்டிருந்தன. அந்தச் சொற்களிலே இன்னதென்று தெரியாத சுகந்தம் அவளுக்கு அப்படியே செல்வ நாயகத்தைப் பரிசோதிக்கிற மாதிரிப் பார்த்துக்கொண்டு செவ்வந்தி சிரித்தாள். அவள் உடம்பின் அசைவுகள் நின்றன. கண்கள் மாத்திரம் அவனைச் சுற்றிச் சுழன்று கொண்டே இருந்தன. சங்கரப்பிள்ளை தோட்டத்திலிருந்து "ஹோ. ஒ. ஒ. ஒ. ஒ.” என்றதாய் ஏரைப்பூட்டி உழும்போது வரும் ஒரு ரக ஆலாபனை அவ்விடத்திலெங்கும் கேட்கத்தொடங்கியது.
அவ்வேளை குளத்துக்குப் போகும் வீதியாலிருந்து நேரே நடந்து வந்துகொண்டிருந்தான் சோணமுத்து அவனைத் தூரத்திலே வரக்கண்டுவிட்டு "அக்கோய் அங்கினயா சோணமுத்து மாமேன் வந்துக் கிட்டிருக்காரு.?” - என்று தன் தொண்டையைத் திறந்துவைத்துக் கொண்டதுமாதிரி சத்தமாகச் சொன்னாள் ராக்காயி தங்கை இப்படிச் சொன்னவுடனே செவ்வந்தியும் உடனே பதற்றமடைந்தாள். "வா வா அந்தச் சனியன் பிடிச்சவன் வர முன்னாடி கிளம்பீருவம்டி.!” - என்றவாறு அவளும் அவசரப்பட்டாள். இருவரின் விழிகளிலும் பயத்தின் இருள் கனத்துக் கிடக்கிறதை செல்வநாயகமும் கண்டு கொண்டான். அவர்கள் ஏன் இப்படிப் பயப்பிடுகிறார்கள்? என்று சரியாக அவனுக்குத் தெரியாவிட்டாலும், ஏதோ பிரச்சினை அவர்களுக்கு என்று உடனே அவனுக்கு விளங்கிவிட்டது. உடனே அவன் அவர்களைப் பாாததுக,
துயரச் சுஸ்வீர்கள் O 17 O

Page 92
“கொஞ்சம் பொறுங்க போயிராதயுங்க." என்று சொல்லிவிட்டுப்போய் கொட்டிலுக்குள் கிடந்த அந்தக் கடதாசிப் பையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்.
செவ்வந்தியும் ராக்காயியும் சோணமுத்து வரும்வழியையும், செல்வநாயகத்தின் காவல் கொட்டிலையும் மாறிமாறிப் பார்த்தபடி அவசரத்தில் நின்றார்கள். செல்வநாயகம் ராக்காயியைப் பார்த்து “இந்தா இதக் கொண்டுபோ..?” என்றவாறு கையில் இருந்த பையை நீட்டிக்கொண்டு அந்த வாசலில் நின்றபடி அவளைக் கூப்பிட்டான். “வெரசா போயி வாங்கிட்டு வா பிள்ள..?” என்று செவ்வந்தி உடனே தங்கைக்குச் சொன்னாள். அவளும் சுறுக்காகப் போய் அவன் கையில் இருந்த பையைத் தன்னிடம் வாங்கிக் கொண்டு "நாங்க போயிற்று வர்றமுங்க ஐயா" என்று அவனுக்குச் சொல்லிவிட்டு வந்தாள். அவள் திரும்பி தமக்கையிடம் போகும்போது செல்வநாயகம் செவ்வந்தியை ஊடுருவினமாதிரிப் பார்த்தான். அந்தப் பதற்றத்திலும் செல்வநாயகத்தின் பார்வை அவளுக்கு இனிமையாக இருந்தது.
அந்த இன்ப உணர்ச்சியோடு "நாங்க வாறமுங்க” என்று அவனைப் பார்த்துச் சொன்னாள். அவனும் மதுரமாக “ஓ” - என்று ஒலி செய்தான். அவள் ஆவல் தகதகக்கும் கண்களால் அவனைப் பார்த்துக் கொண்டு “வா வா சுறுக்கா போய்க்குவமடி?” என்று தங்கையைத் துரிதப்படுத்தினாள். இருவரும் பிறகு அந்த வீதி வழியாக விரைவாக வீடுநோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். செல்வநாயகம் சுகமான உணர்வுகளோடு செவ்வந்தியின் நினைவிலே அதிலே நின்று கொண்டிருந்தான். அவனது மன அரங்கிலே அவ்வேளை செவ்வந்தி தான் சஞ்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனாலும் சுகமான அவனின் உணர்வுகளை கனமான ஒரு குரல் வெட்டி முறித்தது.
“எங்கவுட்டுப் பொம்பளங்களில கண் வைச்சா கண் இராது? கை வைச்சா கையிராது.?”
சோணமுத்துதான் அந்தக் கொட்டிலுக்குப் பக்கத்தாலே நடந்து போகும்போது எங்கேயோ தன் பார்வையை வைத்த கணக்கில் உரத்த குரலில் சொல்லிக்கொண்டு போனான். செல்வநாயகம் தன்பாட்டிலேயே அப்படிப் பிதற்றிக்கொண்டு போகும் அவனைப் பார்த்தான். அவன் யாருக்கு இதைச் சொல்லிக்கொண்டு போகிறான் என்ற நினைப்பில், அவனுக்கு முன்னாலும் பின்னாலும் வேறு யாராவது அவ்விடத்தில் வருகிறார்களா? என்றும் அறிய அங்காலேயும் இங்காலேயுமாகப் பார்த்தபோது யாரையுமே அங்கே காணவேயில்லை. ‘இவன் ஏன் இதிலே வரும்போது, எங்கிருந்து பேசுகிறதே என்று தெரியாத உந்த உளறல் கதையைச் சொன்னான்?” என்று அவன் யோசித்தபோது, அவனுக்கும் ஏதோ விளங்கியது மாதிரி ஒரு முள் தைத்தது. அவன் O 172 O ரீ.பி.அருளானந்தே ܫ

கொட்டிலடியைத் தாண்டிப்போகும்போது, தனக்கு எதிராக ஏதோ சூழ்ச்சி நடக்கிறதென்று உய்த்துணர்ந்து கொண்டவன்போல கவனமாக அவனைப் பார்த்தான். அவன் பார்க்கும்போது சோணமுத்துவும் தன்பார்வையை செல்வநாயகத்தின் மேல் ஊன்றினான். புரூட்டசின் தீட்டிய கத்தி மாதிரி, சோணமுத்தின் பார்வை அப்பொழுது செல்வநாயகத்தைக் குத்தியது மாதிரி இருந்தது.
آگ
செல்வநாயகத்தின் உருவத்தை அடிமுதல் நுனி வரையாக கண்ணெடுக்காமல் சற்றுநேரம் பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தான் சோணமுத்து. அவனுக்குக் கடுமையான கோபமாய் இருந்தது. அந்தச் சீற்றத்தை வைத்துக்கொண்டு, நிலத்தைப் பார்த்தபடி அவன் மளமளவென்று நடந்துகொண்டிருந்தான். “என் ஆசைகள் சாபல்லிய மாகிவிடாத அளவுக்கு ஒரு எதிரி எனக்கு வந்துவிட்டான்” - என்று திடீரென்று அவனுக்கு யோசனை போனது கீழே பார்த்தவாறு நடந்துகொண்டிருந்தவனுக்கு தீப்பெட்டி ஒன்று நிலத்தில் கிடப்பது கண்களில் தட்டுப்பட்டது. புதிதாகத் தென்பட்ட அந்த நெருப்பெட்டியைக் கையிலெடுத்துத் திருப்பிப் பார்த்துவிட்டுத் திறந்தான். உள்ளே ஒன்றுமேயில்லை. “வெத்துப் பெட்டி” என்று தானே சொல்லிவிட்டு வீசினான்.
அதை வீசி எறிந்த கையோடு, எல்லையில்லாத கோபம் அவனுக்கு செவ்வந்தி மேல் ஏற்பட்டது. தன் மாமன் ராமனின் மேலும், அடுத்து அந்தக் கோபம் அவளிலிருந்து தாவியது. ராக்காயிமேலும் விடாது தன் கோப உணர்வுகளை அவன் வளர்த்தான். எல்லார் மேலிலும் உள்ளதான இந்த ஆத்திரத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது? என்று அவனுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. "இதற்கெல்லாமாக அவர்களுக்குத் தண்டனை கொடுத்து அவர்களை நஷ்டமடையச் செய்யவேண்டும்.” என்ற வக்கிர உணர்வு தீவிரமாக அவனுக்கு வந்தது. உடனே நடைபாதையில் கிடந்த கல்லொன்றைக் கையி லெடுத்து உயர்த்திப் பார்த்தான். அவர்களைக் கல்லாலெறிந்து கொல்ல வேண்டுமென்ற குரூரமான ஆசை அவனுக்கு வந்தது. தன் பற்களைக் கடித்துக்கொண்டு வீசுவதற்காக அந்தக் கல்லை எறிய ஓங்கினான். கோபத்தில் அந்தக் கல்லை எங்கே எறிவது என்று அவனுக்குத் தெரியவே இல்லை. "ஓங்கின கல்லை எங்கேயாவது எறிந்துதானாக வேண்டும்” - என்ற ரோசமாக அவனுக்கு இருந்தது. கல்லை தாராளமான வீச்சாக எறியக்கூடிய இடம் கோயில் வளவுதான்.
zugă asovakiască o l73 o

Page 93
அந்த இடம்தான் அவனின் இலக்குக்கு ஏற்றதாகத் தெரிந்தது. " எல்லாம் துகளாகப் போகட்டும்.” - என்ற நினைப்பில் கை நீட்டிக் கல்லை வீசி அங்கே எறிந்தான் அவன்.
கோயில் வளவு அவன் எறிந்த கல்லை மெளனமாக பெற்றுக்கொண்டது போல இருந்தது. "என்னை எவராவது ஏமாற்றினால் அவர்களை அழிக்கும் வேலையில் நான் தீவிரமாக ஈடுபடவேண்டும்.” என்ற சிந்தனையுடன் சோணமுத்து மீண்டும் தன் நடையினைத் தொடர்ந் தான். அவன் நடந்துகொண்டிருந்த வழியில், உலர்ந்த சருகுகள் விழுந்துகிடந்திருந்த குறுகிய பாதை வரவும், அவன் மெல்ல நடந்தான். அவன் மனமெங்கிலும் செவ்வந்தியைப் பற்றிய கனவுகள் நிரம்பி நின்றன.
O
சோணமுத்து செவ்வந்திக்குத் தாய்மாமன் முறையானவன். அவள் சடங்காகியபோது, தங்களுக்குள்ள குல வழமைப்படி தாய்மாமனான அவனுக்குத்தான் முதன்முதலில் அறிவித்தார்கள். அவனும் தன் சுற்றத்துடன் சீர் எல்லாம் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்தான். இனிமேல் அவள் அவனுக்கே உரியவள்! என்பது போலத்தான் அவர்களது சமூகத்தின் சட்டம். ஆனாலும் அவர்களது சமூகத்தில் இன்னொரு நடைமுறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அப்படித்தாய் மாமன் உறவானது வலுவானதாக இருந்தாலும் அவர்கள் சமூகத்திலுள்ள பிறர் ஒருவரும் பெண்ணைத் திருமணம் பேசி வரலாம், என்ற ஒரு தளர்வான முறையும் இருந்துகொண்டிருந்தது. இதன்மூலம் தாய் மாமனாக இருப்பவர் விருப்பட்டால் மாத்திரம், கல்யாணம் பேசிப் போகிறவர்கள் அவரையும் கூட்டிச் சென்று பெண் வீட்டாருடன் கதைத்து கல்யாணத்தை மாமனின் சம்மதத்துடன் நிச்சயித்துக் கொள்ளலாம்! என்றதாய் ஒரு நடைமுறையும் இருந்தது. ஆனால் சோணமுத்துவுக்கோ, தன்னைவிட்டு செவ்வந்தியை வேறொருவருக்குத் தாரைவார்த்துக்கொடுப்பதுபோல் கொடுத்துவிட மனமே இல்லை. மணிநாதம் போன்ற அவள் சிரிப்பும், அழகையும் பார்த்துப் பார்த்து அவளை இழக்க விரும்பாத அளவில்தான், அவன் கிடந்து துடித்துக்கொண்டிருந்தான்.
இதனால் யாராவது செவ்வந்தியைப் பெண்கேட்டு தன்னிடத்தில் வந்தாலும், அதற்குத் தான் ஒத்துழைப்புக் கொடுக்கக்கூடாது என்றும் மனத்தில் வயிரிப்புடன் அவன் இருந்தான். அப்படி ஏதும் ராமனது வீட்டில் நடந்தேறும் முன்பாக, தானே பெட்டி அரிசி கொண்டுபோய்க் கொடுத்து செவ்வந்தியை தனக்குடையவளாக நிச்சயம் பண்ணிக்கொள்ள வேண்டும்' என்றும் மனத்தில் அவன் உறுதி கொண்டிருந்தான். (பெட்டி அரிசி என்று இவர்கள் கூறுவது. o 174 O நீ.பி.அருளனர்தல்

தேங்காய், அரிசி, வெற்றிலை, பழம், பாக்கு, நூற்றி ஒரு ரூபாய் பணம், ஒரு சேலை ஆகியவை உள்ள ஓலைப்பெட்டியாகும்) இந்த முறையில் முன்னேற்பாடாக அந்தக் காரியத்தைத் தான் செய்து முடித்துவிட்டால், வேறொருவர் அந்த வீட்டுக்குப் பெண்கேட்டுப் போக இயலாதென்பது அவனுக்குத் தெரியும். இது இருபக்கத்து உறவு முறையார் எல்லாரும் கூடியிருந்து செய்கிற சடங்கு. இதற்குப் பிறகு நிச்சயம் தனக்கும் செவ்வந்திக்கும் கல்யாணம் நடந்தே தீரும். அது எனக்கு இனிவரும் நாளிலே நிச்சயமானதுதான்.
"ஆனாலும் அதற்குள்ளே எனக்கெப்படி வந்துள்ளது இந்தச் சோதிப்பு.? யார் இவன்? இந்தக் கொட்டிலில் வந்து இன்று சேர்ந்ததாய் இருக்கிறான்? எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவனாகவும் இல்லை அவன்! பிற்பாடு ஏன் என்’சொத்தில் இவன் கண் போடுகிறான்? ஒரு வேளை காத்திருந்தவன் பெண்டாட்டியை நேற்றுவந்தவன் கொண்டுபோன கதைபோல ஆகிவிடுமோ என் கதையும் இலவு காத்த கிளிபோல கடைசியில் ஏமாந்ததாகவும் என் வாழ்வு முடிந்துவிடுமோ?” என்று நினைக்கவும் அவன் திடீரென்று பயந்தான். சற்று உஷ்ணமானான். சில நிமிஷ மெளனத்துக்குப்பின், செவ்வந்தியின் வசீகரமான சிரிப்பு அவன் கண்முன்னே தெரிவதுபோல அவனுக்குப் பிரமையாக இருந்தது. ' அவளுடைய உதடுகள் மெல்லியவை, என்ன மாதிரி அழகானவை. எந்தக் கடுமையுமில்லாத ஒரு மிருதக் குரலிலல்லவா அவள் பேசுவாள்! ஐயோ. அப்படிப்பட்ட அவள் என்னை வஞ்சிப்பாளா? என்னைச் சுகமாகச் சாவதற்கு வசதி பண்ணிக்கொடுக்கத் திட்டம் போடுகிறாளா அவள்?” எல்லாவற்றையும் நினைக்க பொறுமையிழந்து விட்டிருந்தான் சோணமுத்து. அவன் இதயம்.! அவன் இதயம், அப்படி வேதனையுற்றது.
செவ்வந்தியின் குடிசையருகே நெருங்கியதும் அவளைக்கூப்பிட்டு “முன்ன பின்ன அறிமுகமில்லாத கண்ணில கண்ட கழுத நாயிங்களிட்டயில்லாம் யேன்டீ உங்களுவளுக்குக் கதே.?” - என்று கேட்டுவிட வேண்டும்போல அவனுக்கிருந்தது. மனதில் வெளுத்துப் பழுத்த புழுக்கள் துடித்துக் கொண்டிருக்கிறமாதிரியான நிலையிலே, அந்தக் கிழக்குவேலிப் படலையருகில் அவன் போய் பொருபொருத்த மணலில் நின்றான். அங்கிருந்து அவன் பார்த்தபோது குடிசைக்கதவு முன்னால் சாத்தியபடி பூட்டிக்கிடக்கின்றது அவனுக்குத் தெரிந்தது. என்றாலும் செவ்வந்தியும் ராக்காயியும் குடிசைக்குள்ளேதான் இப் போது இருந்துகொண்டிருப்பார்கள் என்கிற ஐயத்திற்கிடமில்லாத முடிவோடு.
"செவ்வந்தி. ராக்காயி?” என்று அவர்களது பெயரைச் சொல்லிப் பெரியதாக சத்தம் வைத்துக்கூப்பிட்டான்.
துயரச் சுஃபண்கள் 0 175 O

Page 94
செவ்வந்தியும் ராக்காயியும் அந்நேரம் தங்கள் குடிசைக்குள்ளேதான் இருந்துகொண்டிருந்தார்கள். தாங்கள் இருவரும் காவல் கொட்டிலடி யிலே நின்று செல்வநாயகத்துடன் கதைத்துக் கொண்டிருந்ததை சோணமுத்துக் கண்டதன் பிறகு, எப்படியும் அவன் தங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து சத்தம் போடுவான் என்பது அவர்கள் இருவருக்கும் தெரிந்துதான் இருந்தது. அதன் காரணமாகவேதான் குடிசைக் கதவையும் மூடிக்கொண்டு அவர்கள் உள்ளே இருந்துகொண்டிருந்தார்கள்.
சோணமுத்து திரும்பவும் ஒருமுறை "செவ்வந்தி ராக்காயி” என்று கூப்பிட்டான். அவனின் கூப்பிடுதலோடு, வீரை மரத்தில் இருந்த அணில்களின் துடிக்குரல்களும், அவனின் இருமல் சத்தங்களும் குடிசைக்குள் இருந்த அவர்களின் செவிகளில் கேட்டபடி இருந்தன.
சோணமுத்து அப்படித் தங்களைத் திரும்பத் திரும்பக் கூப்பிடுவதைக் கேட்டுவிட்டு, ராக்காயி அந்த அடுப்பங்கரையில் இருந்தவாறே பாறை நண்டுபோலப் பதுங்கினாள். அவள் உட்கார்ந்திருக்கிறவிதம் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு தான் தவிப்பதுமாதிரி இருந்தது.
“யக்கோய் சோணமுத்துமாமா இதிலயா வாசலில நிண்ணுக்கிட்டுத்தாம் நம்மள கூப்பிட்டுக்கிட்டிருக்காரு” என்று அவள் தமக்கைக்குச் சொன்னாள். “அந்தாளுக்கு பருந்து மாதிரியா கண்பார்வ!” என்று சொல்லிவிட்டு சத்தமில்லாமலும் அவள் சிரித்தாள்.
செவ்வந்தி பலகையில் வைத்து கையால் பிடித்துக்கொண்டிருந்த கத்தரிக்காயோடு அப்படியே மூச்சு இழையும் சத்தம்கூடக் கேட்காமல் யோசித்துக்கொண்டிருந்தாள். ஆனாலும் பிறகு தன்னைச் சமாளித்துக் கொண்டு, மற்றக்கையில் வைத்துக்கொண்டிருந்த கத்தியாலே அதை ஒரு வெட்டு,
பிறகு சாவகாசம்
திரும்பவும் அதை வெட்டுகிற வேளை "மாமாக்கு இங்கிருந்தவாக்கில நீ சொல்லுடி. அப்பா வீட்டிலயா இல்ல. பிறகு நீங்க வந்து பேசிக்கிங்க எண்ணு.?”
"சரீக்கா!" என்று உடனே தைரியத்தையும் தெம்பையும் வரவளைத்துக் கொண்டு சொன்னாள் அவள் அவளுக்குச் சொல்லிவிட்டுத் திரும்பிக் குடிசை வாசலடியைப் பார்த்தாள். வெளியிலே நின்றுகொண்டிருக்கும் சோணமுத்துவுக்கு தான் சொல்லுவது சரியான முறையில் காதில் விழவேண்டுமே என்று நினைத்துக்கொண்டு,
"மாமா இங்கிட்டு அப்பா யாருமில்ல. அப்புறமா அவர் வரவாட்டியா நீங்க இங்க வந்து அவருவோட பேசிக்கிங்க” என்று உரத்த சத்தமாக
o 176 O ரீ.பி.அருணானந்தs

வேண்டா வெறுப்பாகச் சொன்னாள். அவளது வார்த்தைகளும் தொனியும் அப்படித்தான் இருந்தது. "நம்ம இனசனத்துக்குள்ள இப்புடீயொரு குணங்கெட்ட மூதேசிய நான் பாக்கவே இல்ல” என்று பிறகு தன்னை ஒரு பெரிய மனுசி கணக்காய் நினைத்துக்கொண்டு தமக்கைக்கு அவள் இதையும் சொன்னாள். அவள் சொன்னதை தன் காதைத் தீட்டி வைத்துக்கொண்டிருந்த அளவில் கேட்டான் சோணமுத்து. அவனுக்குத் தன்னை யாரோ தீ உமிழ்ந்து தீக்கொளுத்திவிட்டது மாதிரி இருந்தது. அடக்கிக்கொள்ள இயலாத சினத்தோடு தண்ணீர்ப்பாம்பு மாதிரிக் கழுத்தை நீட்டி அந்த வேலிக்கு மேலே அவன் எட்டிப்பார்த்தான். உள்ளே மலராத ‘செவ்வந்தி மொட்டுக்கள் பல செடிகளிலே தலைநீட்டிக் கொண்டிருந்தன. ஒரு பாவமும் அறியாத மென்மையான பூமொட்டுக்கள். அவை எல்லாவற்றையும் உள்ளே தன் கரடுமுரடான கையை நீட்டி சொடசொடவெனப் பிடுங்கிக் கசக்கிவிட்டு, அந்தக் குடிசை முற்றத்திலே அவைகளை அவன் வீசி எறிந்தான். அப்படி என்ன செய்தும் செவ்வந்தி மீதும் ராக்காயியின் மேலும் அவன் கொண்டிருந்த கோபம் ஆறவில்லை. அதனால் வசைகளை அவர்கள் மேல் இறைத்தபடி, அந்த இடத்தைவிட்டுத் தாண்டிப் போய்விட அவன் மீண்டும் அந்தவழியே நடந்துகொண்டிருந்தான்.
அவன் இருந்த மன நிலையில் நேரே வீட்டுக்குப்போய்ச்சேர அவனுக்கு மனம் வரவில்லை. எங்கேயாவது ஒரு இடத்தில் போய் ஆறுதலாக சிறிதுநேரம் அவ்விடத்தில் நின்று விட்டுப்போனால்தான் தன் மனம் கொஞ்சம் சுகப்படும் என்றமாதிரி அவனுக்கிருந்தது.
அதனால், 'கிணற்று வேலை நடந்து கொண்டிருந்த அந்த இடத்திலே போய், கருங்காலி மரத்து நிழலிலே கொஞ்சம் நிற்போம்.' என்று நினைத்துக்கொண்டு அவன் நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். அவ்வழியே போய்க் கொண்டிருந்தபோது சிமியோனின் குடிசையும் அவனுக்கு எதிர்ப்பட்டது. அந்தக் குடிசைக்குப் பக்கத்திலே உள்ள மரநிழலாலே குளிர்மையை அனுபவித்துக்கொண்டு போவோம் என்று அவன் ஒதுங்கி நடந்துகொண்டிருந்தபோது, எதேச்சையாகத் தன்கழுத்தைத் திருப்பி அவனது குடிசையையும் பார்த்தபடி நடந்தான். அந்தக்குச்சில்கதவு கொஞ்சம் போலதிறந்துகிடந்தவாறு இருந்தது. குடிசை உள்ளே ஒதுக்குப்புறமாயிருந்ததால் தெருவடியால் போகிறவர் யார்பார்வையிலும் அவசியமில்லாமல் விழாதுதான்! ஆனாலும் அவன் உன்னிப்பாகப் பார்த்தான். அந்த இடைவெளிக்குள்ளாலே அவன் உள்ளே பார்த்தபோது நான்கு கணுக்கால்கள் பிணைந்து உடல்கள் ஒன்றோடொன்று அறியக்கிடக்கிறமாதிரி அவனுக்குத் தெரிந்தது. அவனது கவனம் திசை திரும்பியது. சட்டென இயல்பான நிலைக்கு வந்த அவன், தன் நடையை நிறுத்திவிட்டு புருவங்கள் இரண்டும் உயர்ந்தெழ அங்கேயே சிலநொடிகள் பார்த்தவாறு நின்றான். அவன்
அஸ்விகள் O 177 O بٹالیونانچہ

Page 95
உதடுகளில் அவ்வேளை குரூரமான புன்னகை நெழித்தது.
"ஒகோ. இப்புடீயும் ஒரு சங்கதி இந்த வூட்டுக்குள்ளயும் இப்ப நடக்கவுண்ணு ஆரம்பிச்சுட்டுதா? பானக்கிள்ள போட்டு அப்பிடியே கவிழ்ச்சட்டி மூடுறமாதிரி இந்த விசயத்தையா நீங்க மறைக்கப் பாக்கிறீங்களோ?” என்று அவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். கோவில் வளவு வேலியில் இருந்து, அண்டங்காக்கையொன்று தனது கரகரப்பான குரலில் அந்தப்பகுதியின் அமைதியையே கெடுக்கும் விதமாகக் கரைந்துகொண்டிருந்தது. அது கரைகிற சத்தத்தைத் தன் காதில் கேட்டுக்கொண்டு, புன்னகைத்தவாறே சோணமுத்து தன் நடையைத் தொடர்ந்துகொண்டிருந்தான். அந்தக் காக்கை வேலியில் இருந்துகொண்டுவிடாது நெடுநேரமாகக் கரைந்துகொண்டே இருந்த படியிருந்தது. அந்த இடத்திலே கேட்போர் செவிகளுக்கெல்லாம் அரியண்டம் குடுப்பதுபோல இருந்தது அதனுடைய நாராசக நெடிய குரல்! ஆனால் சோணமுத்துவுக்கு மட்டும் அதனுடைய குரல், அப்பொழுது ‘கந்தர்வகானம்' போல கேட்கும்போது இருந்தது. அந்தக் குடிசையில் அமங்கலமாக இனி நடக்கப்போகும் சில சம்பவங்களை, அந்தக்காக்கை இப்பொழுது ஆரூடமாக அழகாகச் சொல்வதுபோல அவனுக்கு அவ்வேளையில் எண்ணத்தோன்றியது.
<<
இன்று வெயில் சற்றுக் கடுமைதான்! சூரியன் உதயமாகிக் கொஞ்ச நேரமேயானாலும் வெயில் அதனுடைய சக்தியைத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டது. "இண்ணிக்குக் கட்டாயம் மரத்திலயா ஏறி புளியம் பழம் உலுப்பி நாம எல்லாருமா சேந்துநிண்ணு பொறுக்கிப்புடனும்" - என்று ராமன் காலையில் வண்டில் எடுத்துக்கொண்டு புறப்படும்போதே எல்லோருக்கும் சொல்லியிருந்ததால், வேளைக்கே தொழிலை முடித்துக்கொண்டு எல்லோரும் அவ்விடத்துக்கு வந்து ஒருவர்பின் ஒருவராக குழுமத் தொடங்கினார்கள். அனேகமாக "தோட்டி' - வேலை பார்ப்பவர்களது ஒரு கூட்டமே, அங்கே மரத்துக்குக் கீழே கூடியதாய் நின்றார்கள். அங்கே உள்ளவர்கள் எல்லோருக்கும் ராமன் தான் தலைவன் மாதிரி நின்று கொண்டிருந்தான்.
"சின்னச் சின்னக் காத்துக்கூட ஒடம்பில முேதுவாப் படலயே சந்தணொம்.? என்ன தசைச்சூடு.? தாங்கவே முடியலப்பா..!" என்று காங்கலைக்கக்கிக்கொண்டு நிற்கும் புளியமரத்துக்குக் கீழே நின்றபடி சொல்லிக்கொண்டு நின்றான் சிட்டு.
o 178 O ரீ.பி.அருணானந்தே

"அப்புடீ வெயிலு. ஒறைப்பா அடிச்சிக்கிறதாலதான் மொரமொரண்ணு புளியம் பழமெல்லாமே காஞ்சு கெடக்கு. இப்பவா மரத்திலயா ஏறி கெட்டுங்கள உலுப்பினாக்கா பொலுபொலுண்ணு ஒண்ணுமே மரத்திலயா இல்லாம கீழ கொட்டிப்புடும்.!” என்று அங்கு நின்ற எல்லோரும் கேட்க பொதுவாகச் சொன்னான் சந்தனம்.
“இப்பிடி இதிலயா நிண்ணு இனி கதைச்சுக்குண்ணு நிண்ணா ஒரு காரியமுமே ஆவிடாது. இந்தாங்கப்பா உங்களப் பாத்துத்தான் நானு இத சொல்லிக்கிறேன். இதில நிக்கிறவனுங்களில யாருப்பா மரத்திலயா யேறிக்கக் கூடியவனுங்க.? முனியாண்டி சுப்பேன் அழகேன் நாகேன். நீங்களு மரத்திலேயா ஏறிக்கிறீங்களாப்பா..?” ராமன் கேட்டதற்கு,
“முனியாண்டியும் நாங்களுமுண்ணா ஏறிக்குவம்பா." - என்று ஒத்ததாய்ச் சேர்ந்து சொன்னார்கள்.
"அப்புடீண்ணா சுப்பேன் அழகேன் நீங்கரெண்ணு பேருமா விழுங்கிற பழங்கள பொறுக்கி ஒரு பக்கம் குவியலாப் போட்டுடுங்கப்பா" என்று அவன் அவர்களைப் பார்த்துச் சொன்னான்.
'மரம் ஏறிக்கிறதுக்கு ஏனப்பா ஆளையாளு கேட்டுக்கிட்டு நிக்கிறீங்க? இங்கின நிண்ணுக்கிட்டிருக்கிற சங்கிலி, நாகன், சன்னாசி, வெள்ளி, வீரன், கோட்டையூர் வெள்ளையன், எண்ணுற இவங்கயெல்லாம் நல்லா மரமேறக்கூடியவங்களுதானே.? என்னப்பா உம்முணுக்கிட்டு இதிலயா நிண்ணுக்கிட்டிருக்கிறீங்க, ஒங்க வாயுங்கள தொறந்து சொல்லிக்குங்கப்பா. முடியுமா முடியாதாண்ணு.?”
என்று அதிலே நின்றுகொண்டிருந்த முனியாண்டி அவர்களைப் பார்த்துக் கேட்க,
"இம்மாண்டு நேரமா ஏன்குரங்கே எண்ணு நீ இங்கிட்டா ஒருவார்த்த கேட்டுக்கல்ல. நம்ம ஊரிலயே சாலையில உள்ள புளியமரங்க எல்லாத்திலயுமா ஏறி புளியங்காயி புடுங்கிறவனுங்க நாங்களு. இது என்ன மரமேங்கிறேன்? அங்கிட்டுப் பக்கோம் நம்ம இந்தியாவில அறுவேது எழுவேது வருசோம் வசந்தகாலம் பாத்துப்புட்ட வயசாளிப் புளியெல்லாம் நிக்குது. அந்தப் பெரியா பெரியா மரங்களிலயெல்லாமே ஏறி வெளயாண்டவங்கதானே நாங்க..! அப்புடியானவங்களைப் பாத்து மரம் ஏறிக்குவியாவெண்ணு என்ன கேள்வியிது.?” என்று சொல்லிக் கொண்டு கோட்டையூர் வெள்ளையன் சிரித்தான்.
“சரிதான் விட்டாப் பெரிய கதையே நெடுகலுமா விட்டுக்கிட்டிருப்பீங்க ப்பா..? அப்புடீன்னா தடயுடண்ணு ஏறி அலுவலப் பாத்துக்கிடுங்கப்பா. நேரமாகுதில்ல.?” என்று முனியாண்டி பிறகு அவர்கள் எல்லோரையும் பார்த்தவாறு சொன்னான்.
se vyš asovaňseň O 179 o

Page 96
"எல்லாருமே மரமேற வெளிக்கிட்டாக்க பழம் பொறுக்கிக்கிறதுக்கும் கீழ ஆளுங்களு வேணுமே..?” ராமன் இதை முனியாண்டியிடம் கேட்க “வெள்ளி செட்டியெல்லாம் கீழவா இருக்கிறானுங்கதானே அவுங்ககூட சுப்பனும் அழகேனும் சேந்துக்கிட்டு பழம் பொறுக்கிக்கிடட்டும்.” என்று
அவன் பதில் சொன்னான்.
பழம் பொறுக்கவென்று முனியாண்டி குறிப்பிட்ட அந்த நான்கு பேரும் தங்கள் மெளனத்தைத் தொடர்ந்தார்கள். தலையை லேசாக ஆமோதிப்பது போல் அசைத்துக்கொண்டார்கள். மரம் ஏறுகிறவர்கள் முதலில் மரத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் மரத்தில் ஏறத் தொடங்கினார்கள். "நீ அந்தப் பக்கோம் கிளைங்களில நுனி மட்டுமா போயி உலுப்பிக்கடா நாகா. புளியங்கெட்டுண்ணா சுள்ளிக் கெட்டுக்கூட வயிரம்தான்.! முறிஞ்சுக்காது.? பயப்பிட்டுக்காம போயி உலுப்பிக்க.?” என்று அவனுக்குச் சொல்லியபடி முனியாண்டி நாகன் ஏறிப்போகும் கிளைக்கு எதிரே இருந்த மரக்கிளைக்கு ஏறியவாறு போய்க் கால் வைத்துக்கொண்டு, புளியங்கெட்டை உதைப்புக் கொடுத்தபடியும், கைகளால் கிளையை இழுத்து மேலும் கீழும் ஆட்டியபடியும், புளியம் பழங்களை உதிர உலுப்பினான்.
அவனைப் போன்றே பிறகு மரத்திலேறி நின்றவர்களெல்லாம், தாங்கள் ஏறி நின்று கொண்டிருந்த இடங்களிலே உள்ள கிளைகளைக் கால் பாதத்தால் உதைப்புக்கொடுக்க, இடித்தபடிகிடந்த கொத்துப் பழங்களெல்லாம் நிலத்தில் உதிர்ந்தன. சிந்திக்கிடக்கிற பழங்களை யெல்லாம் கீழே நின்றவர்கள் மளமளவென்று பொறுக்கி ஒரு பக்கம் குவியலாகப் போட்டார்கள். மரத்திலேறி இருந்தவர்கள் கிளைகளுக்கு உதைமானம் நன்றாகக் கொடுத்ததால், சில கணங்களுக்குள்ளாகவே பழங்களெல்லாம் கீழே உதிர்ந்துவிட்டன. மீண்டும் அவர்கள் கிளைகளைப் போட்டு ஆட்டியசைக்க வெறுமனேதான் அவைகள் அசைந்தன. அதன் பின்பு பழங்கள் உதிரவில்லை. எனவே ஒருவர் பின் ஒருவராக மரத்திலேறி இருந்தவர்களெல்லாம் பிறகு கீழே இறங்கத்தொடங்கினார்கள்.
கீழே விழுந்துகிடந்த பழங்களிலே, கோதுகள் கழன்று போயும் சிலதுகள் பார்க்கக் கிடந்தன. அவையெல்லாமே உள்ளீடு இறுகிய கருஞ்சிவப்பான பழங்கள். மரத்தால் இறங்கி நின்றவர்களுக்குக் கோதுடைந்து கிடக்கும் பழங்களைக்காண ஆசையாயிருந்தது. மரத்தில் ஏறி இறங்கின களை வேறு பசியையும் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தது. அந்தப் பசிக்கு புளியம் பழங்களை எடுத்து வாயில் வைத்து நரம்பை இழுத்து வீசிவிட்டுச் சாப்பிட்டார்கள். புளியம் பழத்தின் இனிப்புக் கலந்த கடும்புளிப்பையும், கனிவிதைகளையும், O 180 O ரீ.பி.அருணானந்தே

நன்றாகச் சுவைத்து அவர்கள் தின்றார்கள்.
எல்லாருக்கும் பங்கு பிறிப்புச் செய்கிற அந்த வேலையை, ராமன் தான் செய்தான். அவரவர் கொண்டு வந்திருந்த கடகப் பெட்டியிலே புளியம்பழங்களைச் செம்மச் செம்ம நிறைத்து, அவன்தான் எல்லோருக்கும் கொடுத்தான். புளியமரத்துக்குக் கிட்டவாக இருந்த மண்மூடாத மலக்குழியிலிருந்து, கெட்ட நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. மரக்கிளைகளை உலுப்பும்போது விசிறுட்டுப்போய் விழுந்த புளியம்பழங்களில் சில, மலம் குவிந்து கிடந்த குழிக்குள்ளும் விழுந்து கிடந்தன. நாகன் அதிலேபோய், குழியை அதிலே நின்று ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு வந்தான். அவன் தான்போய் அதிலே பார்த்துவிட்டு வந்ததை, அங்குள்ள ஒருவருக்கும் சொல்லவில்லை. ஆனாலும் எல்லோருக்கும் முன்பாக அவன்தான் வீட்டுக்குப் போக வெளிக்கிடுவதற்கு கடகப்பெட்டியைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு நின்றான்.
"கடகப் பெட்டியத்துக்கி தலையில வைச்சுக்குண்ணு நாகனும் பாருங் கப்பா கெளம்பிக்கிட்டானுப்பா. நாமளும் ஏன் இனி இங்கினயா வாட்டி நிண்ணுக்கிட்டிருப்பான் கெளம்பிடுவோம்?" என்று சொல்லிக்கொண்டு முனியாண்டியும் குனிந்து கடகப் புெட்டியில் கைவைத்தான்.
“கொஞ்சம் புடிச்சுவிடப்பா அவன் தலைக்கு." என்று அவன் பெட்டியில் கை வைக்கப் பார்த்துவிட்டுச் சுப்பன் என்கிறவன் அழகனைப்பார்த்துச் சொன்னான்.
“இந்தா பிடிப்பா..?”
அவன் தலைக்குத் தூக்கிவிட, “எனக்கும்புடிச்சு விடப்பா. எனக்கும் புடிச்சுவிடப்பா?” என்று கொண்டு மிச்சமுள்ள எல்லோருமே அவனைக்கொண்டு கடகப்பெட்டியைத் தூக்குவித்துத் தலைக் கெடுத்துக்கொண்டார்கள். கடைசியில் ராமன்தான் சுப்பனின் கடகப்பெட்டியை அவன் தலைக்குத் தூக்கிக்கொடுத்தான். ராமன் தனக்கெனக் கொண்டு வந்திருந்தது சிறியதொரு கடகப்பெட்டிதான். அதனால் பாரம் கணக்காத அந்தப் பெட்டியை அவனே தூக்கித் தன் தலைக்கு எடுத்துக்கொண்டான். வெயில் சுளிரென்று அறைந்து கொண்டிருந்தது. அவர்கள் எல்லாரும் கடகப் பெட்டியை தலையில் காவியபடி, கூடுதல் உற்சாகத்துடன் தங்கள் குடிசைகளை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள்.
ராமன் எல்லாருக்கும் முன்பாக விரைவாக நடக்கத் தொடங்கியி ருந்தான்.
“என்ரா ராமா எல்லாருக்கு முன்னாடி நீ பாஞ்சுக்கிட்டு போறவனாட்ட துயரக் கசப்பவர்கள் O 181 O

Page 97
மாநிக்கிறே.?” முனியாண்டி கேட்டான். “பள்ளிக்கூடம் விட்டுக்கிற நேரமாவுதில்ல!” "அதுக்கென்னப்பா உனக்கு.?” "புள்ளங்க அதால வீடுங்களுக்கு போவுமில்ல!” "அதுங்களுக்கு.?” ஒரு இழுவையுடன் அவன் கேட்டான். "பாவம்பா அந்தப் புள்ளங்களெல்லாம் புளியம்பழம் புடுங்கிக்க அங்கிட்டுப்பக்கம் நிண்ணுக்கிற மரத்துக்கில்லா கல்லுங்களால எறியுதுக”
"அதுக்கென்ன ஒனக்கு.?”
"என்ன நீ அப்பிடீல்லாம் கேக்கிற.? அந்தப் புள்ளேங்களெல்லாம் பாவமில்லே.? என்னவா இதுங்களதின்னுக்கிறதுக்கு அதுங்களெல்லாம் ஆசைப்படுதுக.? இதுங்களிலாயிருந்து கொஞ்சூண்டு நானு கொடுத் தாக்க யெம்பூட்டு அதுகளுக சந்தோஷப்பட்டுக்குங்க முனியா..?”
"அட வேல மெனக்கிட்டவனே அப்புடிப் போவுதாடா ஒன் கத.? அங்கிட்டு உள்ளவங்க நீயி செஞ்சிக்கிற வேலய கண்ணால பாத்துப் புட்டா ஒன்ன ஒத ஒதேண்ணு ஒதைச்சுப்புடுவாங்கடா..?”
“யேன் ஒதைக்கிறாங்க? பழத்திலயா யேன் கையா பட்டுக்கப்போகுது..? கோது இருக்கெல்லே பழங்களிலயா..? அப்புறம் யின்ன அசிங்கமாம்.? பாவம் அந்தப் புள்ளேங்க..?”
"ம். அப்புறமா நீயி சொல்லிக்கிறது எல்லாமே சரிண்டுதா அடம்பிடிச்சுக் கிட்டிருப்பே. எண்ணாலும்டா ராமா எனக்குண்ணா நண்ணா இப்பவே ஒண்ணு தெரிஞ்சுக்கிட்தாயிருக்கு. நீயி இண்ணைக்கு புள்ளயாரு கோயிலு வீதியில ஆருக்கிட்டயாச்சும் இருந்து செமுத்தியா ஒத வாங்கிக்கத்தான் போறே.?”
"ஆமா அப்பிடி ஏதும் வந்திட்டாலும் நானு வாங்கிக்கிறேன்..! ஒனக்கேண்டா கிடந்து இப்பகிண்டுது.? நீஒன் வேலயப் பாத்துப்புட்டுப் போ. நானு யேன் வேலையப் பாக்கிறேன்.”
"ஆமாடா ஆமாடா நீ போயிப் பாரு பாரு. நானும் பாக்கிறேன்! ஒன்க்கு என்ன பூசையெல்லாம் நடக்கவாப்போவுதெண்ணு.” என்று முனியன் பிறகு கோபத்தோடே ராமனுக்குச் சொன்னான். ராமன் முனியன் சொன்னதையெல்லாம் அசட்டை செய்துவிட்டு, தன்பாட்டுக்கு இன்னும் விரைவாக நடந்தான். சேரிக்குடிசைகள் கிட்ட நெருங்க
o 182 O ரீ.பி.அருணர்ைதே

அவரவர் தங்கள் இடம்நோக்கி விலகிப் போனார்கள். ராமன் தன் குடிசைக்குள்ளே போனதும் செவ்வந்தியைக் கிட்டவரச்சொல்லிக் கூப்பிட்டு கடகப்பெட்டியை அவளின் கையில் கொடுத்தான்.
"இதில கொஞ்சம் நானு எடுத்துக்கணும் மவளே..?”
“ஏப்பா..?”
“ஒருத்தேன் கேட்டானு என்கிட்டப்பாரு. அதுனால அவனுக்குக் குடுக்கணும்மா..?”
"அப்ப எதிலப்பா கொண்ணுகிட்டு போவீங்க.?” "ஏதாவது பை இருக்காம்மா போட்டுக்க.?”
“கடதாசிப் பையி.”
ዘ”
"ஆமா அது நல்லதும்மா.
“இ ருங்க” w
"நேரமாவுதம்மா நேரமாவுதம்மா..?"
ராமன் குடிசை வாசலடியைப் பார்த்துக்கொண்டு அவசரப்பட்டான். செவ்வந்தி மாட்டுத்தாள் கடதாசிப்பையை வீட்டுக்குள்ளே தேடியெடுத்து அதற் குள்ளே நிறையப் புளியம்பழங்களைப் போட்டுத் தகப்பனின் கையில் அதைக் கொடுத்தாள். ராமன் அதை கையில் வாங்கிக் கொண்டு புளியம்பழத்தின் வாசனையைப் பித்தனாய் ஆழ்ந்து சுவாசித்தான். பிறகு அந்த வெயிலுக்குள்ளாலேயே நடந்து மில் வீதியடிக்குப் போனான். அந்தநேரம் பள்ளிக்கூடம் விட்டு சின்னஞ்சிறு பிள்ளைக ளெல்லாம் வீதியாலே வந்துகொண்டிருந்தார்கள்.
“இந்தாங்க தொர வீட்டுப்புள்ளேங்களாபுளியம்பழோம் வேணுமெங்கிற புள்ளேங்க இதயா வாங்கிக்குங்கப்பா..?” என்று புத்தகப்பையைச் சுமந்துகொண்டு அதாலே வந்த பிள்ளைகளுக்கு, ராமன் தன் கையைவிட்டு பையிலிருந்து எடுத்து வைத்திருந்த புளியம் பழங்களை காட்டிக்கொண்டு சொல்லியபடி நின்றான்.
இந்தப் பிள்ளைகளுக்கெல்லாமே ராமனை நன்றாகத் தெரியும். அவன் என்ன தொழிலைச் செய்கின்றவன் என்பதும் அவர்கள் அறிவார்கள். தங்கள் வீடுகளிலே நாள்தோறும் அவனை வரக்காண்கிறவர்களுக்கு ஒன்றும் புதியவனில்லையே அவன்.
பிள்ளைகளுக்கு ராமன் தன் கையிலே அப்போது நீட்டியபடி இருந்த
gugus aristövlaŭsaŭ o 183 O

Page 98
புளியம்பழங்களைப் பார்க்க, வாங்கித் தின்பதற்கு ஆசையாகத்தான் இருந்தது. ஆனாலும் அவன் கையிலே அவைகள் இருப்பதை நினைத் ததும் ஏனோ அது அவர்களுக்குப் பிறகு நஞ்சாகவே தெரிந்தது.
ராமன்: “இந்தாங்கப்பா.” என்று சொல்லியபடியே கையிலுள்ள புளியம்பழங்களை அவர்களைப் பார்த்தபடி நீட்டிக் கொண்டு முன்னாலே நடந்துவந்தான்.
அவன் அப்படியாக தங்களை நோக்கி அருகே வருகின்றதைப் பார்த்துவிட்டு அந்தப் பிள்ளைகளெல்லாம்.
“இவனுக்கு என்னவாயிற்று.?” என்கிற மாதிரியான பயத்தோடு அவனையும் பார்த்தபடியே முன்னாலே வீதியில் ஒடத் தொடங்கினார் கள்.
ஒரு பையன் அப்படி அவனை வெறுப்பாகத் திருப்பிப் பார்த்தபடியே ஒடத் தொடங்கியபோது, கால்தடுக்கியும் விழுந்தான். பிறகு எழுந்து முழங்கால் மண்ணைத் தட்டிக்கொண்டு, புத்தகப்பையை மேலே கையால் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஒடத்தொடங்கினான்.
ராமனை விட்டு புழுதி கிளப்பும் தெருவிலே தூரமாக ஓடிச் சென்று விட்ட அந்தப் பிள்ளைகளெல்லாம், நாற்சந்தியடியிலே போனதும் அதிலே கொஞ்ச நேரம் நின்றார்கள். அங்கே நின்று ராமனை அவர்கள் பார்த்துக்கொண்டு, இரகசியமாகத் தங்களுக்குள் அவர்கள் பேசிக்கொண்டார்கள். நடுமத்தியானமாயிருந்ததால் அந்த வீதியிலே பாடசாலைப் பிள்ளைகளைவிட வேற்று மனிதர்களின் நடமாட்டம்
குறைவாக இருந்தது.
ராமனுக்கு பிள்ளைகளிடத்திலிருந்து வந்த வெறுப்பு, அவனிடத்தில் எதுவிதமான எதிர்வினைகளையும் உண்டுபண்ணவில்லை. அவன் எவ்விதப் பதற்றமும் அடையாமல் முகம் வெளிறிப் போகாமல் அமைதியாக இருந்தான். இப்படியாக அவனுக்கு ஏற்படுகின்ற துன்பங்கள் எல்லாம், கோடை காலத்து ஆகாயத்தில் உள்ள மேகங்கள் போல எளிதாக அவனைக் கடந்து சென்றுவிடுமா?
வாழ்க்கையில் எத்தனை உளி அடிகள் அவன் மனதில் பட்டிருக்கின்றன! எரிசாரம் போல சுட்டுவிடும் வார்த்தைகளைக்கேட்டுக்கேட்டுக் கல்லாகி யும் நிற்கிறது அவன் மனம், ஆனாலும் அந்தக் கல் இன்று அவனுக்கு உப்புக்கல்லாய்த்தான் கரைந்துவிட்டது. இப்போது அவனுக்கு மனதில் பளிங்குபோலத் தண்ணீர். சில மனிதர்களுக்கு உடல் உயிர் புலனெல்லாம் சாதிவெறி! சாதிவெறி! சாதிவெறி!
O 184 O ரீ.பி.அருணானந்தே

ஆணவம் ஆணவம் ஆணவம்! தங்களுடைய வார்த்தைகளில் அவர்கள் விஷத்தைத் தடவித் தடவியல்லவோ வெளியேற்றுவார்கள்.
ஆனால் இவனிடத்தில் ஆணவமுமில்லை. பகையும் நெஞ்சில் இல்லை. அன்புதான் ஊற்றாய் வெளிப்படுகிறது. பொறுமை இவனிடம் நிறையவே இருக்கிறது. அதனால்தான் யாராவது தன் சொல்லின் திரியில் நெருப்புப் பற்றவைத்து இவனை நோக்கி எறிந்த மாதிரிப்போட்டுவிட்டுப் போனால்கூட, இவன் அதை ஒன்றும் கணக் கெடுக்காது தன் பாட்டுக்குப் போய்விடுவான்.
ஆனாலும் கள்ளம் கபடு அறியாத அந்தச் சின்னஞ்சிறுசுகள் எல்லாம் இப்படியாக இன்று அவன்மேல் வெறுப்பைக் காட்டியபோதுதான், அவனுக்குப் பிறகு கல்லைத் தன் மார்பில் எறிந்து அடித்ததுபோல வேதனையாக இருந்தது. இந்நேரம் முனியாண்டி தனக்குச் சொன்ன வைகளையும் அவன் நினைத்துப் பார்த்தான். அவன் ஒரு குற்றச்சாட்டுத் தோரணையில் சற்றுமுன் அங்கு நடந்த சம்பவங்களையெல்லாம் பார்த்ததுமாதிரியும் தனக்குள் அவன் கற்பனை பண்ணினான்.
ராமனுக்கு தன் கையில் வைத்துக்கொண்டிருந்த புளியம்பழங்கள் போட்ட பையை, இனி என்ன செய்வதென்றே ஒரு வழியும் தெரிய வில்லை. “இவற்றை குப்பையிலே கொட்டிவிட்டுப்போவோமா?” . என்றுகூட உள்மனம் பேசத் தொடங்கியது. ஆனாலும் அதற்குக்கூட அவன் மனம் விரும்பவில்லை. பிறகு என்னதான் செய்வது.?
நினைத்து நினைத்து ஒரு முடிவுக்கும் அவனால் வரமுடியவில்லை. நாக்கு அவனுக்கு வரண்டது. தண்ணிர் விடாய்த்தது. நல்லதாகம்! நேராக பிள்ளைகள் அப்போது ஓடிப்போய்நின்ற சந்தியடிக்குப் பக்கத்திலே, கோயில்வளவு வேலி மூலையடியில் நின்றது ஒரு கூமாமரம். நல்ல நிழல். அந்த இடம் மக்கள் போக்குவரத்தான இடம்தானேயென்று மண்பானையில் குடிதண்ணீர் வைத்திருந்தார்கள். அந்தச் சந்திக்குப் பக்கத்திலே உள்ளவர் சாமிப்போக்கானவர். தாகத்துக்குத் தண்ணி ரளிப்பதே பெரிய தருமம் என்றுதான் ஒவ்வொருநாளும் பானை வரண்டுபோகாது அவர் தண்ணீரை அதற்குள் குறையாமல் ஊற்றிவிடுவார். அந்தப் பானையிலே தண்ணீர் அள்ளிக் குடிக்க மாத்திரம் சாதிப் பிரச்சினையில்லை. அதிலே யாரும் தாகத்துக்குக் குடித்துப் போகலாம் என்ற மாதிரித்தான் அவரது பரோபகாரம். இதனால் ஊரில் உள்வர்கள் யாருமே அந்தப் பானையிலிருந்து தண்ணீர் அள்ளிக் குடிப்பதில்லை. யாராவது வழிப்போக்கர்கள் அதிலே தண்ணீர் குடிப்பார்கள்.அடுத்து சேரியில் உள்ளவர்கள் உரிமையோடு அதிலே உள்ள நசுங்கிய குடிநீர்க் குவளையாலே அள்ளித் தண்ணீர் குடித்துவிட்டுப் போவார்கள்.
glugs sssövøissá O 185 O

Page 99
இப்போது ராமனுக்கு அதிலே போய் கொஞ்சம் தண்ணீர் குடிக்கவேண்டுமென்ற விடாய் இருந்தது. அந்த மரத்துக்குக் கீழே நிழல்பட, அவன் உடம்புக்கு நல்ல குளிர்மையாகவும் இருந்தது. கையில் வைத்திருந்த பையைத் தண்ணீர்ப் பானை வைத்துக்கிடந்த மரக்குற்றிக்குக் கீழேயாக வைத்துவிட்டு, மேலே கிடந்த நெளிந்த சுண்டுப் பேணியை எடுத்து, பானையின் மூடியைத் திறந்து அவன் தண்ணிர் அள்ளிக்குடித்தான்.
தண்ணிரைக் குடித்ததும் வெப்பம் நீங்கி அவனுக்கு ஆறுதலாகவிருந்தது. அதனால் கீழ்ப்பட்டதன்மைபோய் மன ஊக்கம் அவனுக்கு உண்டானது. அவன் தான் கீழே அப்பொழுது வைத்த அந்தப் பையைப் பார்த்தான். இடது கையை மேல்நோக்கி உயர்த்தி கூமா மரத்தைப் பிடித்து நின்றான். அதைத்திரும்பவும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு போவதைப்பற்றி யோசித்தபோது அவன் மனதுக்கு அது பெரிய கஷ்டமாகவிருந்தது. முனியாண்டி சிலவேளை பையுடன் தான் திரும்பி வருவதைக் கண்டாலும் இழிவுபடுத்திவிடுவான் என்றும் அவனுக்குப் பயமாகவும் இருந்தது. எனவே இதிலே வருகிறவர்கள் போகிறவர்கள் யாராவது இதைப்பார்த்தால் எடுத்துக்கொண்டு போகட்டும், என்று நினைத்து பையை அதிலேயே விட்டுவிட்டு, அவன் தன் வீட்டுக்குப்
போக நடையைக் கட்டத் தொடங்கினான்.
O யாரும் தனவான்கள் அந்த மரத்துக்குக் கீழே வந்து ஏன் நிற்கப் போகிறார்கள்? தூர இடங்களில் இருந்து வெயிலுக்காலே களைத்து நடந்து வருகிறவர்கள்தானே, அதிலே வந்து சிறிது நேரமாவது
வெப்பம் காந்துகின்றது என்று நிற்பார்கள். அந்த இடத்திலே இருந்து ராமன் போன பிறகு அடுத்ததாய் வந்து சேர்ந்தவன் ஒரு பிச்சைக் காரன்தான். பிச்சைக்காரனென்றால் அவன் வயிற்றுப் பசிக்குப் பிச்சையெடுப்பவனல்ல. அவன் ஒரு குடிகாரன்! காலையிலிருந்து பொழுதுபடுமட்டும் அவன் தவறணையில்தான் நிற்பான். அங்கே குடிக்கவென்று வருபவர்களிடம் கேட்டுக் கேட்டு இரப்புக் குடிவாங்கிக் குடிப்பான். யாரும் "பிச்சைக்குடி நீயேன் குடிக்கிறாயப்பா?” என்று பேசினாலும் அவனுக்குச் சொரணையில்லை. அப்படியானவன்தான் அவன். ஆனாலும் இன்று அவனுக்கு ஒரு சோலியில் ஈடுபடவேண்டி வந்ததால் நேரம் போய்விட்டது.
அவனுக்கு அந்த வீதியாலே நடந்துவருகிற நேரம் மரத்துக்குக் கீழே அந்தக் கடதாசிப்பை காணப்பட்டது பெரிய சந்தோஷம். அந்தப் பையை கையில் அவன் எடுத்து வாய்ப்பக்கத்தை விரித்துப் பார்த்தான். உள்ளே என்ன நிறையப் புளியம்பழமாயிருக்கிறதே...? என்று அவனுக்கு மிகவும் உற்சாகமாயிருந்தது. இன்று தனக்கு நரிமுகம் கண்டமாதிரித்தான். O 186 O நீ.பி.அருளானந்தர்

இந்தப் புளியம் பழங்களை யாரிடமாவது கொடுத்தால் அவர்களும் ஏதோ அதை வாங்கிக் கொண்டு கொஞ்சம் சில்லறைக் காசுகளை எனக்குத் தந்துவிடுவார்கள். அந்தத் தொகை எப்படியும் எனக்கு அரை றாம் சாராயம் குடிக்கக் காணும். "இண்டைக்கு மத்தியானம் அத வாயில ஊத்தி ஸ்டாட் பண்ணிப்போட்டால் பிறகு தன்பாட்டுக்கு குடிக்க எனக்கு அங்க வந்து கொண்டிருக்கும்தானே? என்ற நினைப்போடு அந்தப் பையை கையிலெடுத்துக்கொண்டு அவசர அவசரமாக அவன் தவறணையடிக்குப் போகவென்று நடந்துகொண்டிருந்தான். நடைவேகத்தில், தவறணை சென்றடையும்தூரம் வரவர அவனுக்குக் கிட்டிக்கொண்டிருந்தது. தவறணை அவன் கண்களில் படுமளவு தூரமளவிற்கு வர, அவன் நாவும் சாராயம் குடிப்பதற்காக ஏங்கிக் கொண்டிருந்தது.
அடுக்களையில் நின்றுகொண்டு "சாப்பிடவா நீங்க வாங்கோ?” என்று தன் புருஷனை அன்போடு கூப்பிட்டாள் திரேசா.
அவளுக்கு முன்னாலே கொஞ்சத்தூரம் தள்ளி பாயிலே இருந்து கொண்டிருந்த சிமியோன் புத்துணர்ச்சியுடன் எழுந்தான். அவளுக்குப் பக்கத்திலேபோய் அவளின் தோளைத் தொட்டான். அவளின் தலைமயிரை, புறங்கழுத்தை, முதுகை மெல்லத் தடவினான்.
அவளின் கழுத்து மடிப்பில் வியர்வையின் வழவழப்பு இருந்தது. அதைத் தன் தோளில் போட்டிருந்த துவாயால் எடுத்து மெல்ல அவன் துடைத்தான்.
"உன்ன நான் முந்தி சரியா கஷ்டப்படுத்திப்போட்டன் திரேசா” அதற்கு மேல் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை. அவளுக்கும் கண்களில் நீர் முட்டியது.
"நீங்க இப்ப என்னில எவ்வளவு அன்பாயிருக்கிறீங்க.?” திரேசா அவனின் முகத்தைப் பார்த்துக்கொண்டு குழந்தை மாதிரிச் சொன்னாள். அவளின் வட்டமுகத்தைப் பார்த்துக்கொண்டு "முந்தியதைவிட நீ இப்ப நல்ல வடிவா வந்திட்டாய் திரேசா?” என்று சொல்லியபடி அவளின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான். அப்படியே ஆதர வாக தன் கையால் அவளின் அடிவயிற்றைத் தடவினான். பெளக் வயிறு, உள்வாங்கி பின் மீண்டது மாதிரி கைபட்டதும் அவனுக்குத் தெரிந்தது.
துயரச் சுலப்பண்கள் O 187 O

Page 100
"பிள்ள வயித்துக்க துடிக்கிறமாதிரி இருக்கு.” என்று அவன் சிரித்துக்கொண்டு சொல்ல “இங்க இங்க..” என்று அவளும் சொல்லியபடி, அவனின் கையைப் பிடித்துத் தன் மேல் வயிற்றடியில் வைத்தாள்
“பிள்ள வயித்துக்க நீந்திறமாதிரியெல்லே இருக்கு. உதைச்சுக்கொண்டு குலுக்கெண்டு குதிக்குது." அவன் சொல்லிவிட்டு இன்னும் மகிழ்ச்சி யால் மேவி “கக்கக்கக்” என்றதாய்ச் சிரித்தான்.
வயிற்றுக்குள் குழந்தை புரள உதைக்கும் இடங்களில் தோன்றும் புடைப்புகளில் குழந்தை வலி ஒருகணம் அவளை துவட்டி எடுத்தது. ஒரு பிரளயம் வட்டமடித்துக் குறைகுடம் தளும்புவது போல வயிற் றில் ஒரு அசைவு தோன்றவும், அவள் வேதனையில் பல்லைக் கடித்துக்கொண்டாள். என்றாலும் அவளுக்குக் கண்களில் ஒரு கனிவு இருந்தது. புருஷனின் கை தன் வயிற்றில் பட்டது, உடலைப் பட்டுநார் கொண்டு கட்டி இழுப்பது மாதிரிச் சுகமாக அவளுக்கு இருந்தது. “இப்போது எனக்கு எவ்வளவு மன ஆறுதல்! நிம்மதி! இதையெல்லாம் எனக்கு இப்போது வயிற்றிலிருக்கும் இந்தப் பிள்ளைதானே கொடுத்தி ருக்கிறது? என்மேல் இதுவரை கணவர் வைத்திருந்த வெறுப்பை மாற்றி, இன்று கடல் அளவுக்கு அன்பை - ஊறும் பிரியத்தை - என்னிடம் வளர்க்கச் செய்கிற செயலைப் புரிந்திருப்பதும் எனக்கு இந்தப் பிள்ளைதானே? இந்தப் பிள்ளைக்காக எவ்வளவு வேண்டு தல்கள்! எவ்வளவு பிரார்த்தனைகள்! என்ன வழியாகவோ இந்தப் பிள்ளை எனக்கு வயிற்றில் தரித்தது சதாசகாய மாதாவின் கொடைதான்! எனக்கு இனி எந்த ஒரு பிரச்சினைகளையும் யோசிக்க வேண்டியதாயில்லை? இந்த உலகில், எல்லோரிலிருந்தும் விலகவும், எல்லாவற்றிலுமிருந்தும் ஒதுங்கவும், இனி எனக்கு அவசியமேயில்ல! ஏனென்றால் நான் இப்பொழுது ஒரு குழந்தைக்குத் தாயாகின்ற, அந்த நிலையில் இருந்துகொண்டிருக்கிறேன். இனி எனக்கு ஒரு குறைவுமே இல்ல! நான் என் கணவருடன் வாழ்ந்த காலத்தைப்போல இன்னும் எத்தனையோ இரட்டிப்புக் காலம் இன்னும் நிம்மதியாக வாழ்வதற்கு எனக்கு இருக்கிறது.” சில நொடிப்பொழுதிற்குள்ளே அவளது மனோமண்டலத்தில் இப்படியாய்ப் பல சிந்தனைகள்.
சிந்தனை இவ்வளவுதூரத்தை எட்டும்ப்ோதுபிள்ளைத்தாச்சியானவளுக்கு பெருமூச்சும் வரும்தானே? அவள் பெருமூச்சுவிட்ட கையோடு பிறகு இன்னொரு பிரச்சினை பற்றியும் யோசிக்கவேண்டியவளானாள்.
கண்களைப் பாதி மூடிய போது அவள் மனம் பெஞ்சமினையும் ஒருமுறை நினைத்துப் பார்த்தது. உடனே அவள் திடுக்கிட்டமாதிரிப்
O 88 O ரீ.பி.அருணானந்தே

போனாள். உடல் வியர்த்தது. உலகமே இருட்டானது போல அவளுக்குத்தெரிந்தது. மனத்தின் ஆழத்தில் எதுவோ முள்போல ஒன்று அவளுக்குத் தைத்ததுபோல இருந்தது.
“என்ன திரேசா வயித்துக்க ஏதும் செய்யுதா உனக்கு.? தலை கிலை
ஏதும் சுத்துதா..? ஒருமாதிரித் திடுக்கிட்டமாதிரி வந்திட்டாய்?” - அவன் கேட்கவும், சட்டென அவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
"ஒண்டுமில்ல! நீங்க சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ..!" என்று தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவள் சொன்னாள். சிமியோன் அவள் சொல்லவும் சாரத்தை மேலே வழித்துக்கொண்டு நிலத்தில் குந்தி இருந்தான். அவளுக்கு பெஞ்சமினை சற்றுமுன் நினைத்துப் பார்த்ததோடு முகத்தில் உருகி நைந்துவியர்வை வழிந்துகொண்டிருந்தது. அதைத்தன் சேலைத் தலைப்பாலே அவள் துடைத்துவிட்டு, சோறுகறி போட பீங்கானை அவன்முன்னாலே எடுத்துவைத்தாள். முன்னம் போலில்லாமல் முகலட் சணம் அவளுக்குச் சிறிது மாறியிருந்தது. அதையெல்லாம் சிமியோன் அவளிடம் கண்டு கொள்ளாமல்,
“என்ன எனக்கு மாத்திரம் நீ பீங்கான எடுத்துவைக்கிறாய்..? நான் சாப்பிடுறதோட நீயும் சேந்து இருந்து என்னோட சாப்பிடவேணும்” என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.
"ஐயோ எனக்கெண்டால் பசிக்கேல்ல. நீங்க சாப்பிடுங்களன் இப்ப! நான் பிறகு சாப்பிடுறனே?”
"ஆச்சோ பிள்ளைத் தாச்சியளா வந்திட்டா வேளாவேளைக்கு எதையும் வயித்துக்குச் சாப்பிட்டிட வேணும் திரேசா..?”
“ஊகும் எனக்குப் பசிக்கேல்லயுங்கோ..!"
“என்ன குழந்தைப் புள்ளயஸ் மாதிரி சிணுங்கிறாய் திரேசா.? சாப்பிடு திரேசா. வா..?”
அவன் பரிவும் குழைவும் கலந்த குரலில் சொன்னான், புருஷன் அப்படி அன்பாகத் தனக்குச் சொல்கிறாரே என்ற நினைப்பில் "சரி சரி நானும் உங்களோட சாப்பிடுறன்!” என்று சொல்லிக்கொண்டு திரேசா தனக்கும் ஒரு தட்டெடுத்துச் சோறுகறி போடவென்று முன்னால் வைத்துக் கொண்டாள். சற்றுமுன்னம்தான் அவள் கறிசோறு சமைத்து முடித்திருந்தால், உணவெல்லாம் சட்டி பானையில் சுடச்சுடவாய் இருந்தன. தட்டுக்களிலே அவற்றை அவள் போடும் போது கை வைத்து எடுத்துச் சாப்பிடக்கூடிய அளவுக்குக் கணக்கான சூடாகவும் அவைகள் இருந்து கொண்டிருந்தன. சிமியோன் தனக்குச் சரியாகப் பசிக்கிது’ என்று சொல்லிக்கொண்டு, பீங்கானில் கிடந்த சோற்றுக்
gvg'F s\söusvissi O 189 O

Page 101
கும்பல் மீன்துண்டு தலையைப் பார்த்துக்கொண்டு சாப்பிடத் தொடங்கிவிட்டான். அவனுக்கு இப்பொழுது சாப்பாட்டிலேயே முழுக் கவனமுமாகிவிட்டது.
திரேசா சோற்றிலேயே தன் கையை வைத்தபடி அதைப் போட்டுப் பிசைந்தவாறே இருந்துகொண்டிருந்தாள். அவளுக்கு உண்மையிலேயே வயிற்றில் பசி ஒரு தவிப்புப் போல இருந்தது. ஆனாலும் அவளுக்குச் சாப்பாட்டில் வெறுப்பை ஏற்படுத்தக்கூடிய மனக்கவலை உள்ளே கிடந்து அவளைத் தின்றுகொண்டிருந்தது. மனத்தில் பெஞ்சமினைப் பற்றிய சிந்தனைகள் ஆவேசம் கொண்டு அவளை அலைக்கழிக்கத் தொடங்கியிருந்தன. இந்தப் புயல் இனியும் ஏன் எழும்பி என்னைத் துன்புறுத்துகிறது. அந்தப் புயல் கடந்து வெகுதூரம் வரையாகவும் சென்றுவிட்டதே? அப்படி இருந்தும் எவ்வளவு அபத்தமான பிரமைகளை இந்தமனம் என்னிடத்தில் எழுப்பிக் கொண்டிருக்கிறது? "இரக்கமுள்ள ஆண்டவரே! சபிக்கப்பட்ட சிந்தனைகளிலிருந்து தயவு செய்து என்னைக் காப்பாற்றும்!” என்றும் தன் மனத்துக்குள்ளே அவள் மன்றாடிக்கொண்டாள். அதன்பிறகு.
தன் நெஞ்சை இடது கையால் தொட்டுப் பார்த்துக்கொண்டு தன் புருஷனையும் பார்த்தாள் அவள். சிமியோன் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாக்கிலே நிமிர்ந்து ஒருக்கால் திரேசாவையும் பார்த்தான்.
“என்ன ஒரு கையை நெஞ்சில வைத்துக்கொண்டு மற்றறக் கையால சோத்தையும் குழைச்சுக்கொண்டே இருக்கிறாய்? இன்னும் நீ சாப்பிடத்
துவங்கேல்லயா..?” என்று அவன் அவளைக் கேட்டான்.
“ம். ஓம். சாப்பிடுறன். நீங்க சாப்பிடுங்கோ.?” என்று சொன்னாள் அவள். “தன் மர்மங்களின் துர்நாற்றம் கணவருக்கு ஒரு காலம் தெரியவந்தால்..?” அவன் கண்ணுக்கு முன்னே சிரித்துக்காட்டிவிட்டு பிசைந்த சோற்றை அப்பிடியே கையில் எடுத்து அவள் சாப்பிடத்தொடங்கினாள். வேலியடிப்பூவரச மரத்திலிருந்து ஒரு காகம் கத்திக்கொண்டிருந்தது. "அதென்னது விசித்திரமாக் கத்துது.” என்று சாப்பாட்டுத்தட்டில் அப்படியே தன்கையை வைத்துக்கொண்டு அவனைக் கேட்டாள் அவள்.
"அது சும்மா ஏதோ காகம் கிடந்து கந்துது!” "இல்ல ஆரும் இங்க விருந்தாளி வரக்கத்துதோ..?”
O 190 O ரீ.பி.அருளானந்தs

"என்ன சாத்திரம் இது. நிமிஷத்துக்கொருக்கா என்ன இதுமாதிரிக் கதையெல்லாம் நீ கதைக்கிறாய்..? சாப்பிடன் சோத்தை திரேசா.?” என்று கொஞ்சம் கண்டிப்புக் கலந்த குரலில் சிமியோன் சொன்னான். அவனுக்குத் தட்டில் கிடந்த சாதமும் கறியும் சாப்பிட்டுத் தீர்ந்துவிட்டது. அதைக் கண்டுகொண்டு திரேசா அவனுக்கு மீண்டும் சாதமும் கறியும் பீங்கானில் போட்டுக் கொடுத்தாள். அவன் திரும்பவும் சாப்பிடச் சோற்றில் கை வைத்தபோது பெஞ்சமினின் ஞாபகம் அவனுக்கு வந்தது. உடனே மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.
“பெஞ்சமின் சாப்பிட்டானா திரேசா?” சிறு தவிப்புடன் அவன் கேட்டான்.
“இல்ல. விறகு கொத்திக் குடுக்கவெண்டு அங்காலிப்பக்கம் போன தாக்கும் இன்னும் வரேல்ல” என்றாள் அவள். “இவ்வளவு நேரமாயுமா வரேல்ல.? ஓரளவு மத்தியான நேரமாயிட்டா அவன் சாப்பிட வந்திடுவானே.?”
அவன் அவளைக் கேட்க அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தாள். ஆனாலும் அவள் கைவிரல்கள் மாத்திரம் சோற்றைப்போட்டுப் பிசைந்துகொண்டிருந்தது. சிமியோன் தன்பாட்டுக்கு யோசனையுடன் இருந்தவாறு, இரண்டு கவளம் குழம்புச் சோற்றைக் கையால் குழைச்சுச் சாப்பிட்டான். “இவனென்ன..?” என்று பெஞ்சமினை நினைத்துக்கொண்டு அந்த வார்த்தையை மாத்திரம் சொல்லிவிட்டு அவன் யோசித்தான்.
திரேசா இப்பொழுது தனக்கு ஒன்றிலும் அக்கறையில்லாதமாதிரி இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். "இவனென்ன..?” என்று மாத்திரம் தன் கணவன் சொல்லிவிட்டுக் கதையை நிறுத்தியது. அதில் ஒன்றுமே இல்லாதமாதிரியிருந்தாலும், அவளுக்கு உடனே அந்தச் சொல் என்னவோ பயங்கரமான அச்சத்தை மனதில் எழுப்பியது. அந்தப் பயம் பிள்ளை இருந்த வயிற்றிலும் குளிர் ந்து வேகமாகப் பாய்ந்து அவளின் முதுகெலும்பையும் தொட்டது. என் இரகசியமான விஷயம் கல்லறை வாயில்களில் வைத்து மூடப்பட்ட கற்களையும்கூட நகர்த்திக்கொண்டதாய் வந்து ஒரு நாள் வெளியே அம்பலப்படுத்தப்பட்டுவிடுமோ? - என்ற குழப்பத்தோடு அவள் இறுகிக் கிடக்க, "இவனேன் திரேசா ராத்திரி வழிய நாங்கள் படுத்து நித்திரையாகிவிட எழும்பிப்போய் அந்தச் சவுக்காலைக்குள்ளயும் படுத்திட்டு காலேல
துயரச் சுண்பண்கள் O 9 O

Page 102
வாறானாம்.?”
அவன் அப்படிக் கேட்க அவள் சோற்றைக் கையால் குழைத்து வாயில் வைத்துக்கொண்டே, தனக்கு ஒன்றும் தெரியாது என்றமாதிரி தலையை மட்டும் ஆட்டினாள்.
“பாத்தியே உனக்குத் தெரியாது? இது எனக்கும் தெரியாது? எண்டாலும் அவனை அப்பிடி அங்க கண்ட சனங்கள் சொல்லுதுகள்.! அப்பிடி ஏன் அவன் இப்பவெல்லாம் போய் அந்தச் சவக்காலைவழியப் படுக்கிறான்.?”
அவள் சப்பிக்கூழாய் வாய்க்குள் வைத்திருந்த சோற்றை விழுங்கினாள். பிறகும் எச்சிலையும் விழுங்கினாள்.
“உங்களாலதானே எல்லாம் வந்தது. நீங்கள்தான் அந்த மூளை கெட்டவனைக் கூட்டிக்கொண்டுவந்து இங்கின வீட்டில வைச்சிருக் கிறியள். அவன்ர குணக்கடியள் போக்குகளுக்கு அவனை வேற ஆரும் வீடுவழிய சேத்து வைச்சிருக்குங்களே..?”
"அவனால ஏதோ எங்களுக்கும் ஒரு நன்மை இருக்குத்தானே திரேசா.?”
“என்ன பெரிய நன்மை அவனால?” அவள் சொல்லிவிட்டு அடுப்பு நெருப்பைப் பார்த்தாள்.
“ஏதோ உழைக்கிற காசு முழுக்கலும் அவன் என்ர கையில தாறான்தானே.?”
“அதெல்லாம் அவனுக்கு நீங்க தின்னக்குடுக்கிறதுக்குக் கட்டாது.! எவ்வளவு நான் பீங்கானில கொட்டிக் கொட்டுப் போட்டும் கையையும் பிறகு நக்குவான் கெலி.!”
“அவன் ஒரு பாவம் திரேசா!”
“என்ன பாவம். இப்பிடி மூளை கெட்டதனமாப் போய் அந்தச் சவுக்காலைவழிய கிடந்திட்டு அங்க உள்ள பேயஸ் எல்லாத்தையும் அந்த ஆள் இங்க கொண்டாந்து இனிச் சேக்கப்போகுது..!” சற்றே நிறுத்தினாள். சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். பிறகு.
"நாளைக்குப்பிள்ளையும்பிறந்தாப்பிறகு.அந்தப்பச்சைக்குழந்தைக்கும் உள்ளநாட்டுப் பேய் பிசாசுகளையெல்லாம் கொண்டுவந்து தொத்த வைச்சிடும் உந்த ஆள். அதோட வாரிவிழுங்கிற முட்டை மாதிரிக் கண்ணும் முகமும் அவருக்கு. இந்த லட்சணம்கெட்டதுகளில காலேல நான் முழிச்சா அது பிள்ளைக்கும் கூடக்கூடாதே.?” என்றாள். o 192 O ரீ.பி.அருளானந்தே

அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
"அதுக்கு நான் என்னதான் செய்யிறது இப்ப.?” அவனுக்குப் பயம் பிடித்துப்போய் பதறியபடி கேட்டான். திரேசா கணவனின் பதற்றத்தைப் பார்த்தாள். அதன் மூலம் தனக்கு நல்ல காலம் கைகூடிவந்துவிட்டதென்று அறிந்து, தன் மீட்சிக்காக மனத்தளவில் அவள் விசுபரூபம் எடுத்தாள்.
"எவ்வளவு காலத்துக்குப் பிறகு விரதம் கிடந்து நேத்திவைச்சு மண்டாடிக்கிண்டாடி இந்தப் பிள்ளை எங்களுக்குப் பிறக்கப்போவுது. அதால இந்தப் பிள்ளையா அவனா உங்களுக்கு முக்கியம்.?”
"அட அதுக்கு நான் இப்ப என்னதான் செய்ய.?” அவன் சாப்பிட்டு முடித்த வெறும் பீங்கானை முன்னாலே கையால் தள்ளிவிட்டுக் கேட்டான்.
"அவர நீங்க இங்க கூட்டிக்கொண்டந்தமாதிரி திரும்பவும் கொண்டு போய் அவற்ற ஊரில விட்டுவிடுங்கோ!...”
"அவன என்னவெல்லாம் சொல்லி நான் என்ர வீட்ட நம்பிக்கையா கூட்டீற்று வந்தனான் திரேசா இப்ப நான் இப்பிடியெல்லாம் செய்தா அது ஞாயமா..?”
"என்னையும்தான் நீங்க என்ன என்ன எல்லாமோ சொல்லி கஷ்டப் படுத்தனியள். நான் உங்கட தாலி கட்டின மனுசியாயிருந்தும் எனக்கும் அப்பிடி நீங்க செய்ய வெளிக்கிட்டனியள்தானே.?” அவள் இவ்விதம் சொல்ல சிமியோன் தலையைக் குனிந்துகொண்டிருந்தான். பக்கத்தில் கிடந்த தண்ணீர்ச் செம்பைத்தூக்கி சாப்பிட்ட கையை பீங்கானுக்கு மேலே பிடித்துக்கொண்டு கை கழுவினான். "அதையேன் நீ இப்ப இந்தக் கதைக்கிள்ளயாக் கொண்டாறாய்.? எனக்கு ஒரு பிள்ளை வேணும் எண்ட ஆசை அதிலதான் ஏதேதோ நடந்தது அத விடன்!”
"சரி அந்தப் பிளளை நல்லா சீவிக்க வேணுமெண்டா அவன் இனி இங்க இருக்கவேபிடாது. அவன் ஒரு சவக்காலைப் பிசாசு.!" "முந்தி அவன் இப்பிடியெல்லாம் நடந்ததில்ல செய்ததில்லயே திரேசா?
"அதுசரி! இப்ப அந்தாளுக்கு அப்பிடியா வந்திட்டுது. அந்த விதமா வந்திட்ட ஆள இனி இங்க இந்த வீட்டில வைச்சிருக்க வேணாம்! கொண்டுபோய் அவர ஊரில விட்டிட்டு வந்திடுங்கோ?”
துயரச் சுரப்பண்கள் O 193 O

Page 103
திரேசா இப்பிடிச் சொல்ல பின்னாலே, கைகள் இரண்டையும் ஊன்றி குண்டியால் அரக்கிப்போய், நடுவளைக்கப்பினடியில் அமர்ந்து கொண்டான் சிமியோன்.
இருவருக்குமிடையில் பரவிய அமைதி இறுகியது. சிமியோன் ஒரு செருமல் செருமினான். விரிசல்விடும் அந்த மெளனத்தை மேலும் தீவிரம் கொள்ளவிடாது திரேசா உடைத்தாள்.
“என்ன யோசின? என்ன நீங்க யோசிக்கிறியள்.? உங்கட முடிவச் சொல்லங்களன்.?” அவளின் கேள்வியில் தீவிரமும் வலிமையும் மிக்க ஆளுமை எழுந்துவந்தது. சிமியோன் சட்டென்று கனத்த களைப்பாக மாறினான். பெஞ்சமினை அவன் இழக்கவேண்டிவரும்போது அவனால் வரும் நல்ல வருமானத்தையுமல்லவா இழக்கவேண்டியதாய்த் தனக்கு வந்துவிடும். இது விஷயத்தை அவன் யோசித்தபோது அவனுக்குள் சிறு திடுக்கல் ஏற்பட்டது. அந்தத் திடுக்கலோடு கலங்கிக் குழம்பி அவன் பொங்கினாலும், தன் பெயர் சொல்லவரும் குழந்தையை நினைத்ததோடு, காசுபண ஆசையெல்லாம் அவன் மனத்தைவிட்டு அறுத்தோடியது.
"நான் இனிமேல உன்ர பேச்சத்தான் கேப்பன் திரேசா.! நீ சொன்ன மாதிரியே அவனைக்கொண்டுபோய் இன்னும் ரெண்டு மூண்டு கிழமைக்கிடையில அவன்ரவிட்ட விட்டிர்றனே.”
அவன் மெல்ல மெல்ல இதைச்சொல்லச் சொல்ல, அவளின் மனதுக்கு அதுவெல்லாம் மிக மிக ஆறுதலாக இருந்தது. ஒரு தற்காலிக மன நிம்மதி அவளுக்குப் பிறந்தது. துன்பத்தின் இறுதிக் குமிழியும் அழிந்து இனிமேல் நிம்மதியாக நான் இருப்பேன்! என்று அவள் நினைத்துக்கொண்டாள்.
சிமியோன் அதிலே இருந்தவாறு, குடிசையின் முகட்டைப் பார்த்தான். அங்காலே திரும்பி வாசலைப் பார்த்தான். தன் வீட்டில் உள்ள அந்த றங்குப்பெட்டியில் கிடக்கும் பணம் - பெஞ்சமினின் உழைப்பால் அவனுக்குக் கிடைத்ததுதானே? பிற்பாடும் நினைக்க அவனுக்கு நரம்புகள் தெறிப்பது போல இருந்தது. உடல் உலுக்குவதுபோல அவன் உள்ளிருந்து ஓர் அதிர்வுடன் துக்கம் எழுந்தது. அதை அடக்க பல்லைக் கடித்து இறுக்கினான். உடனே பெருமூச்சு வந்தது அவனுக்கு.
O 94 O ரீ.பி.அருணானந்தே

&t
காலியான மண்குடம்போன்ற மனத்துடனும் வெறித்த பார்வையுடனும் வேலையில்லாத பொழுதுகளில் அந்தத் திண்ணையில் எப்போதும் அமர்ந்தவாறும் படுத்தவாறும் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தான் பெஞ்சமின்.
"உரோமம் நிறைந்த உறுதியான நெஞ்சு இவனுக்கு இவன் ஏன் இப்பவெல்லாம் துக்கத்தை விழுங்கினவன் மாதிரித் திரியிறான்?” என்று சிமியோனும் அவனைப் பார்க்கின்ற நேரமெல்லாம் தனக்குள் அவனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டுதான் இருந்தான். சில வேளைகளில் சித்தம் கலங்கியதுபோன்ற அவனின் பேச்சைக் கேட்டுப் பொறுமையைக் காக்காத அளவுக்குச் சீற்றமும் சிமியோனுக்கு வந்தது. அதனால் சிமியோன் "இப்படிப்பட்ட மனுசன் எனக்குத் தேவைதானா..? திரேசாவிட்ட நான் சொன்னதுபோல இவனைக்கொண்டுபோய் ஊரில இனி விட்டுப்போட்டு நான் வந்திடவேணும்.!” என்றதாகவெல்லாம் யோசித்துக்கொண்டு தன்னை மறுபடியும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். அவனுக்குத் தன் வீட்டுக்குள்ளே தனக்கு எதிராக தன் மனைவியும் பெஞ்சமினும் செய்த துரோகச் செயலைப்பற்றி இவ்வளவு நாட்களாகியும் ஒன்றும் தெரிய வரவில்லை. அவன் தன் மனைவியின் ஒழுக்கத்திலே அசைக்கமுடியாத முழு நம்பிக்கையை வைத்துக்கொண்டிருந்தான். இந்த நிலையிலே தன் மனத்தில் ஒன்றும் அறியாத வெள்ளை உள்ளம் கொண்ட ஒரு அப்பாவி ஆட்டுக்குட்டியாக அவன் நினைத்துக்கொண்டிருந்த பெஞ்சமினைப் பற்றி, அவன் ஏன் எந்தவொரு நிலையிலும் சந்தேகப்படப் போகிறான் .?
பெஞ்சமின் ஒரு குணக்கடியான போக்குள்ளவன் என்பது சிமியோனுக்கு நன்றாகத் தெரியும். "அவனுக்குச் சாப்பிடுறதும் படுக்கிறதும் எங்கயும் போய்த் திரிஞ்சு வேலை செய்யிறதையும் விட வேற ஒன்றுமே விளங்காது" - என்றதாய்த்தான் அவன் எண்ணிக்கொண்டிருந்தான். பெஞ்சமின் இங்கே வவுனியாவிற்கு வந்து பல மாதங்கள்வரை கடந்துவிட்டன. அதனால் இப்போது அவனுக்குத் தன் ஊர் ஞாபகம் வந்திருக்கும். அவனுக்கு நினைவெல்லாம் ஊருக்கு நான் ஒருக்கால் போகவேணும். அங்க போய் சில நாள் நிண்டுகொண்டு இன சனங்களையும் பாக்க வேணும் எண்ட மாதிரி யெல்லாம் யோசனையும் இப்ப வந்திருக்கும்! இதுகளாலதான் இவன் இப்பிடியெல்லாம் குழம்பியடிச்சுக்கொண்டு பிரளி பண்ணுறானோ..? இருக்கும், இதுகளாலதான் இவன் இப்ப குணம் மாறிப் போய்த்திரியிறானாக்கும். இப்பிடி அமைதி சீர்குலைஞ்சுபோன இவன இனிக்கட்டுப்பாட்டில நிலைநிறுத்துறதெண்டுறது சரியான கஷ்டம்!”
glugšalstvariaaš o 195 o

Page 104
என்றதாய்த்தான் சிமியோன் தனக்குள்ளே கற்பனை பண்ணிக் கொண்டு இருந்தான். இதுதான் காரணமாயிருக்கும் என்றும் அவன் நம்பிக்கொண்டிருந்தான்.
ஆனால் அவனுக்கு ஏன் இப்பியொரு மனப்பாதிப்பு ஏற்பட்டது என்பதும், இவ்வாறெல்லாம் அவன் ஏன் குழம்பியடித்துக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறான் என்பதும், அவனோடு சில நாட்கள் இரகசியத் தொடர்பு வைத்துக்கொண்டிருந்த திரேசா என்கிற இவளையல்லாது, வேறுயாருக்குத்தான் இது விஷயம் தெரியவரப்போகிறது?
திரேசா தன் கணவன் “மலட்டுத்தன்மை உடையவன்” - என்று, அவனது குடும்ப வழிமுறையினர் மூலமாக நன்கு தெரிந்துகொண்ட பிறகுதான் பெஞ்சமினோடு உறவுகொள்ள வெளிக்கிட்டாள். தன் அளவு கடந்த காமத்தில் உடல் பசியை தீர்த்துக்கொள்ள விபச்சாரம் பண்ண வெளிக்கிட்டவளல்ல அவள். ஆனாலும் அவளை இந்த நிலையில் ஒழுக்கம் கெட்டுப்போகச் செய்ததிற்கு அவள் கணவனும் ஒரு காரணமென்றும் தான் சொல்ல வேண்டும். திரேசா படிப்பறிவு குறைந்தவள். தன் காலிலே நின்றுகொண்டு யாருடைய தயவுமின்றி வாழ்க்கையை ஒட்டுவதற்கும் தைரியமில்லாதவள் அவள். பிறந்து வளர்ந்த இடத்திலும் அவளுக்கு அங்கே வறுமையே இருந்து கொண்டிருந்தது. அங்கேயும் தன்னை ஏற்று அவர்கள் வைத்துக் காப்பாற்றுவார்களா..? தின்னக் கொடுப்பார்களா..? என்ற ஐமிச்சமும் அவளுக்கு இருந்துகொண்டுதான் இருந்தது. இங்கே அவள் கணவன் நாளாந்தம் அவளைப் போட்டுப் பண்ணுகிற கொடுமைகள்தான் எவ்வளவு.? அவன் பண்ணின கொடுமைகளுக்கெல்லாம் அவள் கிடந்து நைந்தாளே!. கண்ணிர் கதறல் உள்ளதாய் நாளும் பொழு தும் அவளுக்கு எத்தனை.? அளவிலா வேதனைகள்! மலடி மலடியென்று சொல்லும் கணவனின் அந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் பூமியே பிளந்து தன்னை அப்பொழுது விழுங்காதா என்றுகூட அவள் கிடந்து விசனப்பட்டடிருக்கிறாளே? தன் கணவன் மறுவிவாகம் செய்துகொள்வதற்குத் தன்னை இப்போது தயார்படுத்திக்கொண்டி ருக்கிறான் என்பதும் - அதையெல்லாம் அவனது வாயாலே சொல்ல தான் கேட்டதும் அவளுக்கு அதுவும் பெரிய பேரிடி போலத்தான்! இதைவிட கணவன் தன்னை ஒரு குப்பைபோல தூக்கி வீசியெறிந்துவிடப் போகிறான் என்றதாய் அவளுக்குப் பயம்வேறு. இப்பிடியாய்த் தனக்கு இனிவரப்போகின்ற கஷ்டங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பது. எனக்கு ஒரு பிள்ளையில்லை. நான் மலடி என்ற அந்தக் குறைதானே?
ஆனால் அவளுக்கென்றால் தெரியும் தான் மலடியல்லவென்று! இருந்தும் கணவன்தான் மலடு என்று, அதை நிரூபித்து அவளுக்குச்
O 196 O ரீ.பி.அருணானந்தச்

சொல்வதற்கு அவளிடம் என்ன ஆதாரம்தான் இருக்கிறது.? இந்தப் பேச்சையெல்லாம் தொட்டுத்தாலிகட்டிய கணவனிடம் ஒரு பெண் வாய்திறந்து பேசமுடியுமா? ஒரு ஆண் இருதாரமோ அல்லது அதற்கும் மேலாகவோ கலியாணம் கட்டிக்கொண்டு பிள்ளையில் லாமல் இருந்தால்தான் அவனுக்கு மலடன் என்கிற பட்டம் சமூகத்திலிருந்து கிடைக்கும். ஆனால் ஒரு பெண்ணாணவளுக்கு அவள் கணவன் உண்மையில் மலடாக இருந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாது அவளுக்குமட்டும் தனியே மலடி என்ற பட்டத்தைத்தானே சூட்டிவிடுகிறது. இப்படியாய் எத்தனை விதமான பழிகள் பாவங்களையெல்லாம் ஆண் வர்க்கமானது தான் அடக்கி ஆள நினைக்கின்ற பெண்களின் மீதெல்லாம் தன்னைத்தப்புவித்துக்கொண்டு அவர்களின் மேல் அவையெல்லாவற்றையும் சுமத்திவிடுகிறது.
இவையெல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு கணவனின் இம்சை களையெல்லாம் சகித்துக்கொண்டு, எல்லாப் பெண்களுமே அவர்களுக்கு படிதாண்டாப் பத்தினிகளாய் வாழ்ந்து கொண்டிருப்பார்களா? அப்படி யாய் எல்லாப் பெண்களும் இருக்கத்தான் வேண்டுமென்று ஆண் வர்க்கம் எதிர்பார்ப்பது எவ்வளவு மடத்தனம்.
திரேசா தனக்கு ஒரு பிள்ளை வயிற்றில் தங்கிவிட்டால் இந்தப் பிரச்சினையெல்லாம் தீர்ந்து தனக்கு விடிவு வந்துவிடுமென்றுதான் நினைத்தாள். அந்த விடிவுக்காக அவள் துணிந்து ஒரு வழியைத் தேடினாள். அவள் தனக்குத் தேடிக்கொண்ட அந்த வழியென்பது மிகவும் பயங்கரமானதொன்றுதான். அந்த விஷயத்திலே இறங்குவதற்கு முதல், அதனாலே ஏற்படப்போகின்ற ஆபத்துக்களிலிருந்தும் தான் தப்பித்துக்கொள்வதற்கு ஏலவே ஒரு வழியை அவள் தேடிக்கொள்ள வேண்டுமே? இந்த விஷயத்தில் பறவைகளைப் பிடிக்கப் பயன்படுத்தும் பசையில் போய் மாட்டியதுபோல பிறகு மாட்டிக்கொள்ளவும் கூடாது. அதைப் போல பொறியிலோ அல்லது வலையிலோ சிக்கிக் கொள்ளாத அளவுக்கு அதிலிருந்து அவள் பிற்பாடு தப்பித்தும் கொள்ளவும் வேண்டும். அதன்பிறகு பனித்துகளைப் போல் எல்லோருக்கும் தூய்மையானவளாக அவள் காட்சியளிக்கலாம்! என்ற இவ்வாறானதொரு திட்டங்களோடேதான் அவள் தன் காரியத்தில் இறங்கினாள். அவள் விரும்பி எதிர்பார்த்தது போலவேதான் எல்லாம் நடந்தது. பெஞ்சமினுடன் அவள் கொண்ட கள்ளத்தொடர்பு மூலமாய் பிள்ளையும் வயிற்றில் ஜனித்துவிட்டது. அதைத் தனக்குள் நன்றாக அறிந்துகொண்ட நாட்கள் கடந்தபின்தான் பெஞ்சமினின் உறவையும் உடனே வெட்டிவிட அவள் திட்டம் போட்டாள்.
அன்று சிமியோன் வீட்டிலும் இல்லை. மாத முடிவு ஆகியிருந்ததால் வட்டிப்பணம் வசூலிக்கவென்று அவன் ஊருக்கென்று போயிருந்தான்.
slugă -sovalăsă o l97 o

Page 105
பெஞ்சமினும் காலையில் எழுந்து விறகு கொத்திப் போட்டுவிட்டு வரவேண்டுமென்று சொல்லிவிட்டுப் போயிருந்தான். திரேசாவுக்குத் தெரியும், சிமியோன் இன்று வீட்டில் இல்லாத வேளை விரைவாக வேலையை முடித்துக்கெண்டு தன்னிடத்தில் அதற்காக அவன் வருவானென்று,
இதையெல்லாம், இந்தநாட்களில், இப்படி இப்படியாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவள்தானே அவனுக்குச் சொல்லிக்கொடுத்துச் செய்யப்பழக்கப்படுத்தியவள். அதனால்தான் இதற்கு முன் தனக்கும் அவனுக்கும் நடந்த சம்பவங்களை, அவள் குடிசைக்குள் இருந்தபடி இதழ்களைப் பிய்த்து எடுத்தாற்போல ஒவ்வொன்றாக நினைவில் கொண்டுவந்து உலுர்த்திக்கொண்டிருந்தாள்.
அவையெல்லாவற்றையம் அவளுக்கு நினைக்க நினைக்க ஏதோ எக்கச் சக்கத்தில், மிகப்பெரிய எக்கச்சக்கத்தில் தான் இப்போது சிக்கிக்கொண்டது போன்ற உணர்ச்சி வதைத்தது. தப்பித்து வெளிவர முடியாத ஒரு இடத்தில் இப்போது மாட்டிக்கொண்டதாகி விட்டேனோ என்றும்கூட அவள் நினைத்தபடி தவித்தாள்.
அவளுக்குப் பிராணவஸ்தையாயிருந்த சில நிமிடங்களே அவை.
அதற்குப்பிறகு, இப்படித்தான்! இன்று நான் பெஞ்சமினுடன் நடந்து கொள்ளவேண்டுமென்று அவள் ஒரு திட்டத்தை மனதிலே தீட்டி வைத்துக்கொண்டாள். அந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தன் மனதில் தைரியத்தையும் தெம்பையும் வரவழைத்துக்கொண்டு பெஞ்சமினின் வரவுக்காகக் குடிசைக்குள்ளே காத்துக்கொண்டிருந்தாள் திரேசா.
அவள் நினைத்துக்கொண்டிருந்த விதமாகவே அன்று பெஞ்சமினும் வேளைக்கே விறகு கொத்துகிற இடத்தில் மளமளவென்று வேலையை முடித்துவிட்டு, திரேசாவின் நினைப்போடு குடிசைக்கு வரவென்று நடந்து வந்துகொண்டிருந்தான். அவனது மார்புப்பகுதி திரேசாவை நினைக்கையில் சுவாசக்காற்றால் விரிவடைந்து கொண்டே இருந்தது. பசி இருக்கும் அளவுக்கு அவனுக்கும் நடையிலே வேகம், அந்த மிருகப் பரபரப்பு குடியேறிய நிலையிலே, அவளின் சூட்டையும் சுகத்தையும் அனுபவிக்கவேண்டுமென்கிற ஆசையில், அவன் விரைவாக வந்துகொண்டிருந்தான்.
பெஞ்சமின் முன்பு இருந்ததுபோல குணமுடைய மனிதனாக இப் போது இல்லை. திரேசாவுடன் சேர்ந்துகொண்ட காலத்திற்குப் பிறகு, அவன் முற்றுமுழுதாகவே வேறு ஒரு குணங்கொண்ட மனிதனாக மாறிவிட்டான். ராகுவின் பார்வை பட்டால் பீஷ்மனும்
O 198 O ரீ.பி.அருளரைத்தே

- தாசி கேட்பான் என்பார்கள். அதைப்போன்றே பெஞ்சமினும் வேறு பெண்களையும்கூட முழுதாக விழுங்கி விடத்துடிக்கும் ஒரு கழுகு போல காமாந்தகப்பார்வை பார்க்கத் தொடங்கிவிட்டான். திரேசாவிடம் பெற்ற இரகசியமான இன்பம், அவன் சிந்தைகலக்கி இப்படியெல்லாம் அவனைச் சிதறவிட்டிருந்தது.
பெஞ்சமின் இப்பொழுதெல்லாம் சிமியோன் வீட்டிலில்லாத வேளை யில், அந்தக் குடிசைக்குள்ளே அடுப்படிமட்டும்போய்ப் பழகத்தொடங்கி யிருந்தான். வெளியே திண்ணையில் மட்டும் இருந்து கொண்டிருந்த அவனை வீட்டுக்குள்ளே எடுத்துப் பழக்கியவள் திரேசாதானே? பெஞ்சமின் அந்தத் தைரியத்திலே முற்றத்தால் தான் நடந்துவந்து வாசலில் ஏறி உள்ளேயும் போகக் காலடியெடுத்து வைத்து விட்டான்.
இந்நேரம் திரேசா அடுப்படியருகில் ஒரு பலகையின் மேலே குந்திக் கொண்டிருந்தவள், அவனை உள்ளே வரக்கண்டதும் கோபத்தில் பாம்பைப் போலச் சீறிக்கொண்டு எழுந்தாள்.
பெஞ்சமின் திரேசாவைப் பார்த்தபடி அந்தப் பழைய உறவைத் தன்கண்களிலே வைத்துக்கொண்டுநின்றான்.
அவனுக்கு ஞாபகம் சாகுமா? சாகாது.
திரேசாவுக்கு அடிவயிற்றிலிருந்து ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. கோபத்தோடு அவனின் கண்களைப் பார்த்தாள். அடுத்த கணமே அதைத் தான் காணவில்லையென்று அவள் நினைத்துக்கொண்டாள்.
அவன் முன்னால் ஒரு அடியெடுத்து வைத்து அவளை நெருங்கிப்போக நடந்தான்.
"அவரும் வீட்ட இல்லாத நேரம் நாய்மாதிரி நீ உள்ள வாறியோடா?”
அவள் அப்படிச் சவுக்காலடித்தது மாதிரி உறைக்கச் சொல்லவும், அவன் அப்படியே நிலைகுலைந்தமாதிரியாகப் போனான். உடலெல்லாம் வெக்கையில் உருகினாப்போல வந்து வேர்த்தது அவனுக்கு.
"திரேசா” - என்று மெல்ல வாய்குழறினான் அவன்.
"நான் நாளப்பின்ன தெருவில எங்கயுமே நடந்துபோகேலாமச் செய்யப் போறியோடா எனக்கு நீ?”
அற்ப ஆயுளைக் கொண்டிருக்கும் மலர் வாடிச் சுருங்கினால் பார்க்க எப்படி இருக்கும்? அந்தக்கோலத்திலே வந்து விட்டது அவன் முகம். துயரகேஸ்வீர்கள் O 199 O

Page 106
ஏன் இப்படி இவள் இருந்தாற்போல மாறினாள்? என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
பெஞ்சமினுக்கு முகம் சதகோணலாகிவிட்டது. அவளுக்குக் கசப்பின்துளிகள் முகத்தில் சொட்டியது.
“இனி இதுக்குள்ள இந்த வாசலுக்க நீ எப்பவுமே கால்வைக்காத. வெளிய போ..?” என்றாள் அவள்.
“தி.ரேஸ்சா.” அவன் இடிதாங்கின மரம் மாதிரி நின்றான். சிறிதான அசைவும்கூட அவனிடத்தில் இல்லை.
“என்ன..? என்ன..? என்ரை குடும்பத்தை நீ குலைக்கப் பாக்கிறியோ..? என்னக் கெடுகேவலமாக்கி றோட்டில விடப்போறியோ?” அவளுக்குக் கண்களெல்லாம் சிவந்து கன்னத்துத் தசைகளும் கோபத்தில் துடிக்கத் தொடங்கிவிட்டது. ஆனால் அவன் இன்னமும் அதிலே நின்றுகொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“சீ. எவ்வளவு பரிசுகேடு எனக்கு. போ வெளியபோ” என்று பெலத்துச் சத்தமாகவும் சொல்லாமல் அவனை இடித்துத் தள்ளுகிறமாதிரிக் குரலில் சொன்னாள் அவள்.
அவள் இப்பிடியெல்லாம் திடுமெனத் தன்னை மாற்றிக்கொண்டு, கதைத்தவை யாவும் இந்த விஷயத்தில்? தின்று கொட்டை துப்பிய அனுபவசாலிகளுக்கு’ - அது ஒரு சர்வ சாதாரணமாக இருந்திருக்கும். ஆனால் பெஞ்சமினுக்கென்றாலோ, அவள் அப்படிப் பேசியதெல்லாமே, தன்னை வெட்டிக்கிழித்து ரணகளப்படுத்திவிட்டது மாதிரியாக இருந்தது.
சவக்காலை வீதியிலிருந்து "ஹேய் ஹேய்' என்று வண்டிக்காரன் மாட்டை ஒட்டும் குரலும், "சட்சட்”டென்று சாட்டையைச் சொடுக்கும் ஓசையும் கேட்டுக்கொண்டிருந்தன. அந்த மாடுகளுக்கு விழுகின்ற சாட்டையடிகள் தனக்கும் முதுகிலே விழுகிறமாதிரி பெஞ்சமினுக்கும் அப்போது இருந்தது.
அவன் உடனே திரும்பி குடிசை வாசலாலே இறங்கி நடந்து திண்ணையிலே வந்து இருந்துவிட்டான். திரேசா தலைமுடியை விரிப்பாக்கிக்கொண்டு மீண்டும் தான் முன்பு இருந்த அந்தப் பலகையிலே போய் இருந்துவிட்டாள். அவளுக்கு இப்பொழுது பெஞ்சமினை நினைக்க மிக்க வெறுப்பும் ஆத்திரமுமாய் இருந்தது.
O 200 O ரீ.பி.அருணானந்தே

"நான் வெறும் ஒரு மரக்கட்டையெண்டுதான் இவன யோசிச்சுக் கொண்டிருந்தன். முன்னமெல்லாம் கோழிக்குஞ்சுபோல எவ்வளவு சாதுவானவனாக இவன் இருந்தான். ஆனா இவன் இப்ப எவ்வளவு சரியான மோசமான ஆள்.? வற்புறுத்தாமல் வற்புறுத்திக் கூடவே இழுத்துக்கொண்டும் போய்விடுமளவுக்கு இவன் பிறகாய் வந்திட்டானே?”
அவளால் இப்போது குணம் மாறியதாயிருக்கிற பெஞ்சமினை நம்பவே முடியவில்லை.
பெஞ்சமின் அதிலே குந்திக்கொண்டு இருந்தவன் பிறகு முறிஞ்சு எழுப்பேலாம அடிச்சுத் தரையோட தரையா கீழ தள்ளிப்போட்டது மாதிரி அப்படியே அதிலேயே சாய்ந்து படுத்துவிட்டான். வீதியிலே கண்பார்வையை ஒட்டிக்கொண்டு கிடந்தவனுக்கு அதாலே போய்க் கொண்டிருந்த மாட்டு வண்டில் தெரிந்தது. கழுத்துப்பாரம் தாங்காமல் அந்த மாடு திருகியது. வண்டிக்காரன் தார்க்கம்பால் மாட்டுக்கு ஓங்கி அடியை இடித்தான்.
மாடுகள் மண்டியிட்டபடி இழுப்பதை கவலையோடு அதிலே படுத்துக்கிடந்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் பெஞ்சமின்.
/タ
கடுவெக்கையடிக்கும் சித்திரைமாதம் கடந்து வைகாசியாகிவிட்டது. புதுார் நாகதம்பிரான் கோயில் திருவிழா நாள் கிட்டத்தே நெருங்கி வந்துகொண்டிருந்தது. நேர்த்திக்கடன் வைத்து காவடி தூக்கி ஆடவிருப்பவர்களெல்லாம், உறுமிமேளக் காரர்கள் கோஷ்டிக்குக் கொண்டுவந்து அச்சவாரம்' - கொடுத்துவிட்டுப் போயிருந்தார்கள்.
மேளச்செட்டில் உறுமிமேளம்' வாசிப்பவனுக்கும் நாதஸ்வரம்' வாசிப்பவனுக்கும் தான் மதிப்பு. காரணம் என்னவென்றால், இந்த இரண்டு வாத்தியங்களையும் எடுத்தவுடன் வேறு ஒருவர் உடனே வாசிக்கமுடியாது என்பதாகும். அதனால் உறுமி மேளம் வாசிக்கும் தண்ணிமலை என்பவன்தான் அவர்கள் கொடுத்த அச்சவாரத்தை யெல்லாம் தன்கையில் வாங்கியிருந்தான்.
“இந்தவாட்டி திருவிழாவுக்குப் போயி நாம மேளம் அடிச்சுப்புட்டு வர்றதுக்கு. எங்கூட்டு மேளங்க பூராவையுமே கைபாத்து புத்தம் புதுசாக்கிப்புடனும் அதால உங்கவுட்டு மேளங்களையேன் வூட்டுக்குக்
துயரச் சுரப்பண்கள் O 20 0

Page 107
கொண்ணந்திடுங்க.?” என்று தன் செட்டில் மேளம் வாசிக்கிற சகாக்களுக்கெல்லாம் அவன் சொல்லியிருந்தான். மேளங்களின் வாய்க் கெல்லாம் புதிய தோல் பதப்படுத்திப் போர்த்தவேண்டும் என்பதற்காக, தண்ணிமலைதான் போய் ஆடுவெட்டும் மடுவத்தில் தோல்கேட்டு அதை வாங்கிக்கொண்டு வந்திருந்தான். மேளங்களில் போர்த்திய தோலை இழுத்துக் கட்டவும், தோளிலே அவற்றைத் தொங்கப்போட்டபடி தூக்கிக்கொண்டு போவதற்குமென்று மாட்டுவாரும் தேவைப்பட்டது. அதற்காக அவன் அந்தமுறை இறைச்சிக்கடை குத்தகைக்கு எடுத்திருந்த நச்சுமூர்த்திக் காக்காவிடம்போய் “நான் மடுவம் கழுவுற நாலு அஞ்சு நாளு சம்பளக் காசுக்கு தோலு குடுங்கையா” என்று கேட்டு அதையும் வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.
தோலெல்லாம் நன்கு பதப்படுத்தி மேளங்களுக்குப் போர்த்துவதற்கு சோணமுத்து, வீரன், முனியன். எல்லாருமாகச் சேர்ந்து தண்ணி மலைக்கு உதவினார்கள். தோல் எல்லாம் போர்த்தி வார் இழுத்துக் கட்டிய பிறகு, தாய்மேளம் என்று சொல்லப்படுகிற ஓங்காரத் தொனிகொடுக்கும் தவிலும், இருபக்கம் அடிக்கக்கூடிய இன்னொரு மேளமும் பார்க்கப் புதுப்பொலிவோடு அவர்களின் கண்களுக்குக் காட்சியளித்தன. இடைசுருங்கி இருமுனைகளின் முகங்களும் அகன்றிருக்கும் பழமையான வாத்தியமான உறுமிமேளம்' என்கிற அந்த 'ழுழவு ஒரு விலங்கைப்போல உறுமி ஒலி எழுப்புவதற்குத் தயாராக இருப்பதுபோல தோல் இழுத்துக்கட்டி முடியவும் அவர்கள் கண்டார்கள். கீழ்ப்பகுதி ஒடுங்கி இருக்கும் தப்பை "நான் விட்டேனா பார்?” என்ற எழுப்பத்துடன் கம்பால் அடிபடுகிற தயார் நிலையிலே ஒருபக்க முகத்தின் சுருதி அதிகமாகி, விண் விண்வென்றதாய் இருந்துகொண்டிருந்தது.
உறுமிமேளத்தின் இடது முகத்தினது தோலில் கீழும் மேலும் உராய்ந்து ஒலி எழுப்புவதற்கு புதிதாக ஒன்றறை அடி நீளமுள்ள வளைந்த குச்சியை தேடிக்கொள்ள வேண்டுமென்று தண்ணிமலை நினைத்தான். மேளம் புதுமாப்பிள்ளைக் கோலத்தில் வந்துவிட்டபிறகு இந்தப் பழைய குச்சி எதற்கு? என்று நினைத்து, அதைத் தூக்கி எறிந்துவிட்டுக் காடுகாடாய்ப் போய்த்திரிந்து ஆவாரங்குச்சியையும் நொச்சி குச்சியையும் அவன் வெட்டிக்கொண்டு வந்தான். பசசைக குச்சியை நன்றாக வெயில் காயப்போட்டு எடுக்க வளைநத அந்தக் குச்சி மேளத்தின் இடது முகத்தின் தோலில் கீழும் மேலும் ஊராய்வதற்குக் கைக்குத் தோதாக அவனுக்கு வந்துவிட்டது.
உறுமியின் இடது முனையில் "ம்மு ஊமும்மு. ம்மூஉமும்மு." என்று வரும் ஓசைப் பக்கம் ஒருவித களிம்பு பூசப்பட வேண்டிய தேவையிருந்தது. அந்தக் களிம்பு பூசப்படாதவிடத்து எப்படி நாதம்
О 202 O ரீ.பி.அருணானந்தே

எழும்பும்? இப்படியான வேலைகளையெல்லாம் பக்குவமாகச் செய்து முடிப்பதற்குத் தண்ணிமலை ஒருவனே அவர்களுக்குள் நன்றாக விபரம் தெரிந்தவன். இந்தக் காரியங்களையெல்லாம் செய்வதற்கு அனுபவசாலியும் அவனேதான்.
எனவே களிம்பு தயாரிக்கவேண்டும் என்பதற்காக அவனே தனியவாய்ப்போய் தோட்டக்காரர் சங்கரப்பிள்ளையிடம் கேட்டுக் கொஞ்சம் வைக்கோல் வாங்கிக் கொண்டுவந்தான். அடுத்து அவனுக் குத் தேவைப்பட்டது புங்கம் எண்ணெய் வவுனியா கடைத்தெருப் பள்ளிவாசலுக்கு முன்னாலே உள்ள கப்பலார்'கடையிலே எந்த மூலிகை மருந்துக்கும் தட்டுப்பாடு இல்லை. எதையும் அங்கே நம்பிக்கையுடன் போய்க் கேட்டு வாங்கிக்கொண்டு வரலாமென்பதும் அவனுக்குத் தெரியும். "இதை வாங்கிட்டுவா?” என்று கடைக்குப் போய் வருகிற வேலையை வீரனிடம் விட்டுவிட்டான் தண்ணிமலை, வைக்கோலை எரிக்கப்போட்டுச் சாம்பல் ஆறிவிடமுதல் வீரன் புங்கம் எண்ணையும் கையுமாய் அங்கே வந்துவிட்டான். அவனிடமிருந்து அதைவாங்கி எரித்த வைக்கோல் சாசம்பலுடன், புங்கம் எண்ணெய்யை அளவு கணக்காகக் கலந்து குழைத்துக் களிம்புபோலாக்கி அதை மேளத்துக்குப் பூசினான் தண்ணிமலை, எல்லா வேலைகளும் முடிந்து மேள செட்காரர் களெல்லாம் தண்ணிமலையின் குடிசைமுற்றத்தடியிலிருந்து தங்கள் வீட்டுக்குப் போக வெளிக்கிட்டார்கள்.
உறுமி உறுமி என்னும் இந்தத் தோற்கருவி இரண்டு முகங்களை உடையது. இடை சுருங்கி நிற்கும். இருமுனைகளும் அகன்றிருக்கும். பம்பை என்னும் கருவியை விடச் சிறிது நீளமானது சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள வளைந்த குச்சியை இடதுகையில் கொண்டு வாசிப்பர். அது கருவியின் முகத்தை அடித்துத் தாக்குவதில்லை. இடது முகத்தின் தோலில் கீழும் மேலும் உராய்ந்து ஒலி எழுப்புகிறது. விலங்கு உறுமுவதைப்போன்று ஒலியை உண்டாக்குகிறது. உறுமியுடன் நாக சுரமும் சிறுபம்பையும் சேர்ந்து வாசிக்கப்படுகிறது. அப்பொழுது உறுமிமேளம் என்று பெயர் பெறுகிறது. சில சமயங்களில் இக்கருவியை வாசித்துக்கொண்டே, கால்களில் சதங்கைகளைக் கட்டிக்கொண்டு ஆடுகின்றனர். (நூல்: நாட்டார் கலைகள்)
“நாளையிண்ணைக்கு அடுத்த நாளு கழிஞ்சு பின்னேரவாட்டி இங்கிட்டு நம்ம வீட்டுப்பக்கம் வேளைக்கே எல்லாருமா நீங்க வந்துடுங்கப்பா. சொல்லி வைச்சாப் புலயா அந்த நேரமா இங்க டக்டரு மிசினு வந்துநிக்கும்.” என்று அங்கு வெளிக்கிட்டுப் போகவென்று நின்ற எல்லாரையும் ஒருமுறை பார்த்துவிட்டுச்
zugă -sou-ziseii O 203 O

Page 108
சொன்னான் தண்ணிமலை. அவன் சொன்னதை மற்றைய எல்லாரும் கவனமாகக் கேட்டுக்கொண்டாலும், சோணமுத்துவும் வீரனும் மாத்திரம் அக்கறையாக அவற்றைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. அவர்கள் முன்னமே அங்கிருக்கும்போது, சாராயக்கடைக்குப் போவோம் என்றவாறு கதைத்துக் கொண்டவர்கள்தான். அதைத் தண்ணிமலையும் அறிந்து வைத்திருந்ததால்,
"சோண கடைசி நேரத்திலயா, நீயி வாளிய பிறட்டி நாற வைச்சுடாத.?” என்று ஒரு கதையைப் போட்டான். எல்லோருமாகச் சேர்ந்து அப்போது சோணமுத்துவின்மேல் தங்கள் பார்வையை விழுத்தினார்கள்.
"நான் என்ன நாற வைச்சுப்புடுவேன் எண்ணுக்கிட்டிருக்காய் நீ”
"இல்ல நீ இப்பிடியா முன்னமா குழம்பிக்கிட்டு நம்மளூண்டுக்கு எல்லாம் பண்ணிக்கிட்டாய்தானே.?”
“யெப்பவாட்டியா நானு அப்புடீயா நடந்துக்கிட்டேன் என்கிறே.?”
"உனக்கு ஞாபகமில்ல. முன்னவாட்டி மன்னார், உயிலங்குளம், அடம்பன், எண்ணிருக்கிற அங்கிட்டயா இருக்கிற அம்மன் கோயிலு, மாடாசாமி கோயிலுக்கெல்லாம் அவுங்க மேளம் அடிச்சிக்கக் கூப்பிட்டு நாம அங்க போயிக்கிறப்ப, நீயி சாராயக்கடையில போயி தனியவா தண்ணியப் போட்டிட்டு வந்து எங்க செட் மேளகாறனுங்களே யெல்லாம் குழப்பியடிச்சியே அது ஞாபகமில்லியா..?”
“எப்பவோ நடந்திச்சு அது. அதையே பெரட்டிப் பெரட்டி கதைச்சுக்கிட்டே காலம் தள்ளாம இனிமேலாச்சும் நீயி சும்மா கெடப்பியாக்கும்!”
“என்ன சும்மா கெட சொமந்துக்கிட்டுக்கெட? அவனு வீரனையும் நீயிதானே கூட்டிக்கிட்டுப் போயி இப்ப கெடுத்துக்கிட்டிருக்கிறே.? இப்புடியா நீங்களு எல்லாமா செஞ்சுகிட்டிருந்தீங்கண்ணா. எங்கள நம்பீண்டு மேளம் புடிச்சிக்க யாராவது எங்ககிட்ட வருவாங்களா..? இங்கினயா வவுனியாவிலயா நாம மட்டுமா கொட்டுமேளம் வச்சுக்கிட்டு வெலாசம் அடிச்சுக்கிட்டிருக்கிறோம்? அங்கவா புத்தளம் பொல்காவல திருகோணமலையிலயெல்லாம் இந்த மேள செட்டெல்லாம் வைச்சிக்கிட்டு அவங்களுங்க அடிச்சுக்கிட்டிருக்கிறது ஓங்களுக்கு தெரிஞ்சிக்கலையாக்கும்.? இங்கிட்டு பக்கமா வல்லெட்டித்துறையு பருத்தித்துறையு காங்கேசன் துறையிலேகூட இந்த உறுமிசெட்டுங்க இருக்கு. அவங்க மேளங்கூட ரெண்ணு செட்டு இங்கிட்டு கோயிலுங்களுக்கு வந்து எங்ககூட நிண்ணு போட்டிக்கும் அடிச்சுக் கிட்டவங்கதானே..!"
O 204 O ரீ.பி.அருளரைத்தே

“என்ன கதைகதையா அவிட்டுக்கிட்டு போறியேப்பா நீயி தண்ணிமல.? அதுங்கபூரா நாமளும் கூட நல்லா தெரிஞ்சுக்கிட்டதுதான். அதை யெல்லாம் இப்பவா எனக்கு யேன் நீயி மறுவாட்டி மறுவாட்டியா சொல்லி புலம்பிக்கிட்டிருக்கே.?”
"அவசியமில்லாமலா நானு இதுபூரா உங்ககூட சளம்பிக்கிட்டிருக்கேன். நம்ம செட்டு ஆக்களுங்க ஒழுங்கா மருவாதையா இல்லாட்டிப் போனாக்கா நம்மூட்ட வந்திருக்கிற அம்மனு சாமி, வீரபத்திரர் சாமி கோயிலுக்காறனுங்களெல்லாம் நம்ம சேரிப்பக்கமே வந்துக்காம அங்கினயாவுள்ள வேறவேற ஊருக்காரனுங்க செட்டத் தேடிக்கிட்டுப் போயிடுவாங்களுவே? அப்புறமா நமக்கென்ன ஒழைப்பிண்ணு வந்துக்கப்போவுது..?”
"ஆமா பெரிய ஒசத்தியான உழைப்பிது பாரு. அவுங்களு இங்கிட்டுப் பக்கமா வரலியிண்ணா போய்க்கிறாங்க. நமக்கு சாவீட்டுக்காச்சும் அடிச்சிக்கிறதுக்கு ஆளுங்க தேடி வராமலா போயிடுவாங்க..? அவுங்க வுடுங்க வழிய நல்லா குடிச்சுக்கிறதுக்கு போத்தல் சாராயமும் குடுப்பாங்க! திங்கிறதுக்கும் குடுப்பாங்க! என்னதான் கொறேயிருக்கு?”
“என்ன ஞாயமூப்பா நீயிகதேச்சுக்கிறே.? நாலு பக்கமுமிருந்து வந்துக்கிற உழேப்பே நாம ஏண் வீணா கெடுத்துக்கணும்.”
“யாருக்கு உழைப்பூங்கிறே? வந்துக்கிற பணம் பூரா நீயி தானே உனக்கெண்ணு சுருட்டிக்கிறே.? சரிதான் போவுட்டு முண்ணுகிட்டு நாமளும் நீயி குடுக்கிற பணத்தை வாங்கிக்கிறம்.! அட நீயிதான் நமக்கு வாத்தியாரு எண்ணு நெனைச்சுக்கிட்டு நாமகூட நீயி குடுக்கிறத வாங்கிக்கிறம். இப்பிடியெல்லாம் ஒத்துமையா நாம நீயி செஞ்சிக்கிறத பொறுத்துக்குண்ணு ஒண்ணா உங்ககூட இருக்கிறமுண்ணு நீயி நினைச்சுக்காம, வாயில வந்தது மாதிரியெல்லாம் பேசிக்கிட்டிருக்கே யப்பா..?”
சோணமுத்துதான் ஒழுங்காகவும் சாதாரணமுமாய் இருக்கிறமாதிரித்தான் தண்ணிமலைக்கு இந்தக் கதையை எல்லாம் சொல்லிக் கொண்டிருந் தான். கதையோடு கதையாக மற்றவர்களுக்கும், இருந்து கொண்டி ருந்த காசுப்பிரச்சினையை, தான் இப்போது சொல்லிவிட்டேன் என்பதை நினைத்து அவனுக்குள் ஒரு ஆறுதலும் அவ்வேளையில் ஏற்பட்டிருந்தது. சோணமுத்து கடைசியாகச் சொன்ன காசுக் கதையோடு, தண்ணி மலை தன் பார்வையை நிலம்நோக்கிச் சரித்துவிட்டிருந்தான். சோணமுத்துவின் கண்களை தன் பார்வை சந்தித்தால், இன்னும்
துயரச் சு:0uவிர்கள் 0 205 O

Page 109
வேறு ஏதாவதும் கிண்டிக் கிளறியது மாதிரிச் சொல்லித் தன்னைத் தாக்குவான்!” என்று அவனுக்குப்பட்டது.
அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த மேளசெட்காரர்களுக்கெல்லாம், சோணமுத்து பேசிக்கொண்ட காசுக் கதையில் மட்டும் துல்லியமாக மனம் இணைந்து கொண்ட அளவிலேதான் இருந்தது. அவர்களுக்கும் துக்கம் எழுந்தது. சோணமுத்து தண்ணிமலையுடன் பேசிக்கொண்ட எதிர்ப்பினுாடாக அவர்களும் அவனை வெறிக்கப் பார்த்தார்கள். எல்லோருக்கும் சங்கடமான அமைதியாக கொஞ்சநேரம் இருந்தது. யாராலும் ஏதும் பேசவே முடியவில்லை.
"நாமளே எல்லாத்தையுமா கேவலம் பண்ணிக்கிறோம். அப்புறமா நாமளே முசுமுசுண்ணு அழுவுறோம். இதெல்லாம் எதுக்குப்பா? நம்ம ஒத்துமயப் பாத்து இங்கிட்டு இருந்துக்கிற வேற சாதிப் பயலுங்கவெல்லாம் வெக்கப்பட்டுக்கணுமம்பா. நம்ம கூட்டத்து ஆளு வளுங்க மருவாதைய நாமதானே காப்பாத்திக்கிடணும்?” என்று அந்த அமைதியைக் குலைத்துக்கொண்டு பேசத்தொடங்கினான் சோணமுத்து.
அவ்வேளை அவனைப் பலவீனமான ஒரு பார்வையோடு பார்த்தான்
தண்ணிமலை. அவனுக்கு மனம் சலித்துப்போயிற்று.
“உங்க எல்லாரையும் போலத்தானுப்பா நானும்.! நானு என்ன பூதாரமான பிசாசுவா..? காசுப் பேயி பிடிச்சு நானு அலையிறனா..? நானு ஒங்களுக்கு அப்பிடியொண்ணும் கள்ளத்தனோம் பண்ணிக்கவோ ஏமாத்தம் பண்ணுறத்துக்கோ நெனச்சுக்கூடப்பாக்கல.! சோணமுத்து நீ ஒரு முடிச்சப் போடேக்கிளயா மத்த முடிச்சிய ஒண்டய மனதுக்க போட்டுக்குவியெண்ணு எனக்கு நல்லா தெரியுமுப்பா..? ஆனா நீ கடேசியா ஒரு கதை சொன்னியே? அதே நீ சொல்லிக்கிட்டதாகவும் சரியிண்ணு நானும் இப்பவா யேத்துக்கிறேன். அதேவாட்டி இங்கிட்டு இதில நிண்ணுக்கிட்டிருக்காங்க பாரு நம்ம செட்டுக்காரனுங்க, அவுங்களுகூட சொல்லிப்புட்டதாகவும்தான் நானு அதையெல்லாம் ஏத்துக்கிறேன். நம்ம வாத்தியக் காரங்களுக்கு நான் கெளரவம் குடுத்துக்குறேன். எல்லாருக்கும் எல்லா உரிமயும் இருக்கூங்கிறேன். இதனால எல்லாருக்குமா வர்ற பணத்தில சரிசரியா இனிமேல பங்கு குடுத்துக்கிறன். ஒரு ஆளுக்கிண்ணு கூடிக்காம கொறைஞ்சிக்காம வர்றத அப்பிடியே ஆளாளுக்கு நாம பங்கா பிரிச்சுருவோம். இது உங்களுக்கு சரிங்கிறீங்களா?” தண்ணிமலை இப்படிச்சொல்ல அவர்கள் வெளியாக சிரிக்காவிட்டாலும் மகிழ்ச்சியானது அவர்களின் இதயத்துக்குள் போய்விட்டது. அவர்களின் இதயத்திலே என்ன 'பூ' - அது என்று அளவிட்டுக் கண்டுபிடித்துக்கொள்ள முடியாத மகிழ்ச்சிப் பூப் பூத்தது.
O 206 O ரீ.பி.அருணானந்தs

தண்ணிமலைக்கு இப்படியாகவெல்லாம், தன்னோடு இருக்கும் மிருக்குமான கதையெல்லாம் கதைத்த சோணமுத்துவின்மேல் மனத்துக்குள் மிகப்பெரிய ஆத்திரமாகத்தான் இருந்தது. அவனை அறைந்துபிடித்து இழுத்து வெளியே தன் கூட்டத்திலிருந்து தள்ளி, கதவைச் சாத்திவிட்டமாதிரி செய்துவிடவேண்டுமென்றுதான் அவன் கருவிக்கொண்டிருந்தான். அவ்வளவு எரிச்சலின் உச்சம் சோணமுத்து வின் மேல் அவனுக்கு இருந்தது. இருந்தும், ஒரு புற்றுநோய்ப் புண்ணைப்போலத் தனக்கு எரிச்சலும் கொதிப்பும் கொடுத்துக் கொண்டிருக்கும் இவனை இந்தக் குழுவிலிருந்து எப்படித்தான் உடனே வெளியேற்றுவது? என்று அவனுக்கு ஒரே குழப்பமாகவே இருந்துகொண்டிருந்தது. என்றாலும் தன் மனக்குழப்பங்கள் ஒன்றையும் மற்றவர்களுக்குக் காட்டிக்கொள்ளாத அளவில், ஒரு துறவி பிரார்த்தனை செய்கிற மாதிரியான நிலையில் தண்ணிமலை நின்று கொண்டிருந்தான்.
கோயில் வளவுக்காட்டிலிருந்து காற்றோடு தொட்டெழும்பிக்கொண்டு மூழ்கடிக்கும் மல நாற்றம் பரவிவந்தது. தண்ணிமலையும் அவன்வீட்டு முற்றத்தடியில் நின்றுகொண்டிருந்த மற்றயவர்களும் அந்த நாற்றத் தைப் புறக்கணிக்கும் எத்தனங்களின்றி, சாதாரணமாய் அதிலே நின்று கொண்டிருந்தார்கள். எனினும் அவன் குடிசைக்கு முன்னால் உள்ள வீதியில் போய்க்கொண்டிருந்த பிற இடத்து ஆட்கள் நான்கு பேரும் தங்கள் முகங்களிலும் உடல்களிலும், அதைத் தவிர்க்கும் பாவனைகளோடு மூக்கைப் பிடித்துக்கொண்டு வளைந்து தடுமாறியபடி நடந்துகொண்டிருந்தார்கள்
தண்ணிமலை வீட்டருகில் நின்று கொண்டிருந்த சோணமுத்து அவர்கள் படும் அவதியை நன்றாகப் பார்த்து அறிந்துவிட்டான். அவனுக்கு அவர்களைப் பார்த்துச் சிரிப்பு வந்துவிட்டது. "ஆக் கடவுள்ளே யின்னா நாத்தோம்!” என்று அவர்கள்படும் அவதியை பக்கத்தில் நின்றவர்களுக்குச் சொல்லிவிட்டு அரைச்சிரிப்புச் சிரித்தான் அவன். இதைச் சொல்லியதோடு மட்டும் தன் மனத்துக்குத் திருப்திப்படாமல், "அதில போறவங்க எல்லாம் தூய்மையான ஆத்துமாக்க! அவுங்க சாதிக்காறங்க! உசத்தியானவருங்க எங்கிறதால செத்தாலும் அவனுங்க அழுகி நாற மாட்டாங்க..!" என்று கொஞ்சம் சத்தமாகவும் சொன்னான். முனியன் அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு வெறுப்புடன் அவனை விழித்துப் பார்த் தான்.
துயரகேச0uண்கள் O 207 0

Page 110
"ஒண்ட வாய காவலில வைச்சுக்கப்பா சோண.?” என்று உடனே அவனுக்குச் சொன்னான்.
"நீதிய எங்காச்சும் கதைச்சிக்கிறதுக்கு தைரியம்வேணுமப்பா. அது உங்ககிட்டயெல்லாம் இல்ல என்கிட்ட அது இருக்கு. நான் ஏன் பொத்திக்கணும் வாய.?”
"ஆமா நீ இப்பிடீல்லாம் கதைச்சுக்கிறதே அவுங்க காதுவழிய கேட்டா சங்கு சக்கரத்தோட பிறவாட்டி சண்டைக்கு வந்து ஒன்னயும் அடிச்சு க்கொண்ணுப்புடுவாங்கப்பா.”
"அதுக்குவா நீயி பயப்புடுறே.? அதுக்காவா நீயி இப்புடீயில்லாம் எனக்கு சொல்றே.? அடப் பாவி மனுசனுங்களா..! அடிபட்டுச் சுருண்டு கிடக்கிறமாதிரி இருக்கிறவனுங்கப்பா நாங்களு.? எங்கூட்டு நெலய மாத்திக்கிறதுக்கு எங்களுக்கெல்லாம் தைரியம் வேணுமப்பா..? மத்தவங்க எல்லாம் எங்கூட நெஞ்சிலயா மிதிச்சி ஏறிக்கிண்ணு தாண்டவமாடவெல்லாம் எப்பவுமே நாம விட்டுக்கப்புடாது. இத மாத்திரம் நீங்க எல்லாமே ஒங்கட நெஞ்சிலயா வைச்சுக்குங்க..? இனியாவது நமக்கும் மத்தவங்க மாதிரி ரோசம் இருக்குங்குற மாதிரி நடந்துக்குங்க.?” அவன் சொல்ல முனியன் தன் தலையை கவிழ்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்துப் பரிவாக சிரித்தான் சோணமுத்து. அதன்பிறகு,
“என்னதாம்பா வந்திச்சு உங்களுக்கெல்லாம். இப்பம் பாத்தா ஒலவமே அழிஞ்சுப்புட்ட கணக்காயில்லா எல்லாருமா உம்முண்ணுகிட்டு நிக்கிறீங்க.? பழய எடுப்பே ஒருதருட்டயுமே இல்லாத மாதிரி செத்த கணக்காயில்லா நிக்கிறீங்க..? நாம இனி போயி அவுங்க அவுங்க அலுவலுவள பாக்கிறதில்லயா..? வீரா நாம போயி நம்ம சோலிங்களை பாத்துக்கவோம் வாடா..?” என்று வீரனை அவன் கூப்பிட்டான்.
"நம்ம வேலய எப்ப செஞ்சிக்கிறது எங்கிறதெல்லாமே நமக்குத் தெரியும்தானே.? வாங்கப்பா நாம போய்க்குவம்?” என்று முனியன் மற்றவர்களைக் கூப்பிட்டான். எல்லாரும் அவ்விடத்திலிருந்து ஒன்றா கத்தான் வெளிக்கிட்டுப் போவதற்கு நடையைக் கட்டினார்கள். ஆனாலும் சோணமுத்துவும் வீரனும் மாத்திரம் அவர்களை விட்டு தாங்கள் தனியவாய் முன்னாலே விறுவிறுவென்று நடந்து
போனார்கள்.
சோணமுத்து வீரனுடன் சேர்ந்து முன்னாலே கொஞ்சதூரம் நடந்து போய்ப் பிறகு திரும்பிப் பார்த்தான். பின்னாலே வந்த கூட்டத்தைக் காணவில்லை. அவர்கள் கலைந்து தங்கள் வீடுகளுக்குப் போய் விட்டார்கள், என்று அவனுக்குத் தெரிந்தது. O 208 O ரீ.பி.அருளனந்தல்

"அந்தக் கல்லில கொஞ்சம் ஆறி இந்துக்கிட்டு, பீடி பத்திப்புட்டு அப் புறமா நாம அங்க போவமாடா?” என்று அவன் வீரனைக் கேட்டான்.
“சரி. பத்திட்டுப் போய்க்குவம்!” என்றான் அவன். இந்நேரம் அந்த வீதியாலே இருட்டுச் சூழ்ந்த முகத்துடன் பெஞ்சமின் நேரே நடந்து வந்துகொண்டிருந்தான்.
“டேய் அதோ வர்றான் பாரு, அவன உனக்குத் தெரிஞ்சிருக்காது! அவன் ஒரு மோசமான ஆளுடா!” என்றான் சோண.
“என்ன. அவனா..?”
"ஆமா..! அவன்தான்! அவன் ஒரு பயங்கரமான ஆளு! நாகம்!”
"நீ யின்ன சொல்றா..? உனக்கு யெப்பிடியா தெரியும் .? அவனு என்னவோ குழிவெட்டி அண்டாடம் பொழைச்சிக்கிறான் நீ போயி.”
"ஆமாடா! இப்புடித்தான் இவனுவளுல அப்பிடீ ஒண்ணுமேயில்ல எண்ணு நெனைச்சு நெனைச்சுத்தான் பல பேருவ ஏமாந்துக்கிறாங்க. ஆனா இப்பிடியான ஆளுங்க தான் ஒலகத்தில ஆயிரம் கொடுமையும் செஞ்சுக்கிற ஆக்களுவா இருந்துக்கிட்டிருக்காங்க..?”
"நீ சொல்லிக்கிற கதே ஒண்ணுமே எனக்கு வெளங்கிக்கலிப்பா..? அவனு என்ன செஞ்சான் .? என்ன பண்ணிப்புட்டான் எண்ணு நீயி கிடந்து நெளியிறே.? அவன் அப்பிடி என்னதான் செய்தானுண்ணு முதல்ல சொல்லேன்.”
அவன் புருவம் தூக்கிக் கேட்டான்.
"நீ பேத்துப் பேத்து கேக்கிறேடா மூதேவி. நீ சரியான கத புடுங்கீடா? எண்ணாலும் நானு அந்தக் கதய ஆறவிடாம ஒனக்கு சொல்லுறேன். இது நம்ம சேரிக்காரனுங்க வீட்டுச் சமாச்சாரமில்ல. இது அடுத்த பக்கத்தூண்டு இருக்கிற சேரிக்காரனுங்கவுட்டு சமாச்சாரோம். அதினால கதய நீயி வெளியிலயா வெடாத. இவனு இருக்கிறானுபாரு சிமியோனு வீடு, அவனோட சம்சாரம் இருக்கிறாளில்லா தெரேசா. அண்ணைக்கு அவ வீட்டில புருஷன் இல்லையாக்கும். நானு அந்தப்பக்கமா போய்க்கிண்டிருந்தக்க யேன் கண்ணாலயா கண்டேன். இவனும் அவளும் இறுக்கமா முரண்டிக்கிட்டு நல்லா ஒட்டிக்கிட்டு பாயில கெடந்தாங்கடா."
"அப்டீன்றியா..? நிஜமாவா கண்டே.?”
“அட ஆமான்றேன்."
gură sistuaitscă o 209 O

Page 111
"எல்லாம் ஒரோத்தருக்கு ஒரு யோகமாக்கும்.!”
"என்னடா யோகம் .? இதுண்ணா விஷம் .? இரு இரு இவனு இதால எங்ககிட்டத்தாலதான் போய்க்குவான் பாரு. அப்ப பாரு நான் ஒரு சூடு குடுக்கிறேன்” என்று கருவத்தோடு அவன் நின்றான். சோணமுத்துக்கு இந்த விஷயத்திலெல்லாம் கூர்மையான கத்தியை வைத்து அறுவை சிகிச்சை செய்யிற மாதிரியெல்லாம் செய்யத் தெரியும். இப்படியான குத்தல் கதைகளையெல்லாம் இருந்து உள்பட இருக்கப் பேசத் தெரிந்தவனல்லவா அவன்.
பெஞ்சமின் அவ்வழியாலே தான் ஒரு சித்திரவதை செய்யப்பட்ட உயிர் போலவும், ஏதோ தான் இப்போது ஒரு மாயத்தோற்றம் போலவும், இருக்கிறதாக நினைத்துக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான்.
பெஞ்சமின் தனக்குப் பக்கத்தாலே வருகிறதைக் கண்டுவிட்டு உடனே சோணமுத்து,
"சில பொம்புளங்க வீரா, தங்கூட்டு புருஷன்மாருவ வீட்டிலயா இல்லாத நேரமா, தாங்க இஷ்டப்பட்ட ஆம்புளங்களயா தங்கவுட்டுக்கு ரொம்ப உருத்தான ஒரு ஆள் மாதிரியா அடுப்பங்கர மட்டும் சருவா சாதாரமாப் பழகிக்கிறதுக்கு விட்டிடுவாங்கப்பா.”
"அப்புறம்.?” என்று தருணம் பார்த்துக் கணக்காகக் கேட்டான் வீரன்.
"அப்புறம் என்ன..! தென்ன நட்டுவைச்சிட்டவனு ஆரோ, அதில யெழனி புடுங்கீட்டு குடிக்கிறவன் தேங்கா புடுங்கிக்கிறவனு யாரோ.?, இதுதாண்டாப்பா பார் ஒலகம்" என்றான் சோணமுத்து அவனின் கதையைக் கேட்டுவிட்டு, இப்போ அவனுக்கும் மேலாக தான் ஒரு நக்கலடித்தான் வீரன்.
"சோண, நல்ல தண்ணியில கணவா மீனில இருந்துக்கிற பழுப்பு மையி கலந்தா தண்ணி பொறவு யின்னா கலரில வந்துக்கும். அது மாதிரியாத்தானுப்பா. சிலருங்க, நல்ல குடும்பத்துக்குளயே பூந்துக்கிட்டு அதைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிப்புடுவாங்கப்பா.”
பெஞ்சமின் அவர்கள் இருவரின் கதைகளையும் காதால் கேட்டுக் கொண்டு, கண்களைப் பாதி மூடிய அளவிலே வைத்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தான். அவர்களின் குத்தல் கதைகளைக் கேட்டபிறகு, அவன் ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டான். அவனுடைய மனம் அவ்வேளையில் தன் சொந்த ஊரான நாரந்தனையை நோக்கிப் பயணித்தபடியே இருந்தது.
O 210 o ğ.6). s9rbyaxastaqr#yW5



Page 112
பால் கொண்டுவந்து பூசாரி வைப்பார். அதை வந்து பாம்பு குடிக்கும். இந்தக் கோயிலுக்கு நேர்த்தி வைப்பவர்களெல்லாம் வீட்டில் வளர்க்கும் கோழிகளைத்தான் கொண்டுவந்து காணிக்கையாகக் கொடுப்பார்கள். காவடி தூக்கி ஆடுவார்கள்.
நாகதம்பிரான் கோயிலுக்கு நேர்த்திக்கென்று கொடுக்கப்பட்ட கோழிகளெல்லாம் காலையிலே ஏலத்தில் அவ்விடத்தில் வைத்து விற்கப்படும்.
அதிலே விற்கப்படும் கோழிகளின் எண்ணிக்கை, ஒராயிரம் அளவுக்கு இருக்கும். கோழிகளை விற்கும் பணமும், அன்றைய கோயில் வருமானமுமெல்லாம் அந்தக் கோயில் உரிமையாளரான ஐந்து குடும் பங்களைச் சேர்ந்தவர்களே தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்வார்கள். அவர்களுக்கெல்லாம் நாகதம்பிரானே குலதெய்வம். அவர்கள் தங்களுக்குள் எந்த விதமான சண்டை சச்சரவுகளுமற்று கோயில் பணி செய்துகொண்டிருந்தார்கள். அவ்விதம் நாள்தோறும் கோயிலுக்கு வந்து தன்னை முழுமையாக கோயில் பணியிலே ஈடுபடுத்திக்
கொண்டிருப்பவள்தான் நல்லம்மா என்பவள்.
தன் அப்பு வல்லிபுரம் கட்டிய கோயில்தானே என்று அவளுக்கும் அந்தக் கோயிலிலே ஒரு ஈடுபாடு. இவைகள் எல்லாவற்றையும்விட நாகதம்பிரானிலே அவளுக்கு அதீதமான பக்தியிருந்தது. அந்தப் பக்தியையும் அவளின் மனதிலே உண்டாக்கி வைத்தவரும் வல்லிபுரத்தார்தான்.
புதுார் நாகதம்பிரான் கோயிலை நிர்மாணிப்பதற்கு முன்னம் ஒரு நாள் இரவு ஆழ்ந்த நித்திரையின்போது வல்லிபுரத்தார் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் அப்படியே எல்லாம் உண்மையாக நடப்பதுபோன்ற காட்சிதான் அவருக்குக் காணப்பட்டது.
அவர் இதுவரையும் அறியப்படாத அந்தப் பாதையில் தன் பட்டி மாடுகளைச் சாய்த்துக்கொண்டு போய்க்கொண்டவாறு இருக்கிறார். அவர் சென்றுகொண்டிருக்கும் இடத்திலே இலைகளையே துளையிட்டு இறங்குமளவிற்கு வெயில்பரவிக்கிடக்கிறது. கொளுத்தி எரியும் அந்த வெயிலுக்குள்ளாலே ஊடுருவிச் செல்லும் நடைப்பயணம் அவருக்குத் தொடர்கிறது. மேய்ச்சலுக்காக சாய்த்துக்கொண்டுவந்த தன் பட்டி மாடுகளை இப்போது அவருக்குக் காணக்கிடைக்கவில்லை. ஒரு சில வெப்பப் பறவைகள் மாத்திரம் எரியும் வெய்யிலின் ஜுவாலையை அணு அணுவாகத் தங்களிடம் உள்வாங்கியபடி உருக்கிக்கொண்டு, அவரின் தலைக்கு மேலாலே பறந்தபடியாய் இருக்கின்றன.
நடக்க நடக்கத் தொலைவாய்ப் போய்க்கொண்டிருக்கும் தன் பயணத்
O 212 O ரீ.பி.அருளானந்தல்

தின் வேளையிலே அவருக்கும் வாய்க்குள்ளே முணுமுணுப்பு அவர் இளைப்பாற குத்துச் செடிகூட அங்கு இல்லை.
என்றாலும் அவர் நடந்துகொண்டிருக்கும் அந்த இடத்திலிருந்து தொட்டுவிடும் தூரத்திலே புல் இல்லாத அந்தத் தரையில் அவர் ஒரு நாகதாளி நிற்கிறதைக் காண்கிறார். அதன் கிட்டவாய் நடந்துசென்று பார்க்கும்போது அந்த நாகதாளி நிழல்சரிவுக்குக் கிட்டவாக பளிரென்ற வெளிர் அலை மணல் அவருக்குத் தென்படுகிறது. வெப்பமான தன் கால்களில்பட்ட புழுதித் தூசியைத் தட்டிவிட்டு தூய்மையான அந்த வெதுவெதுவென்ற மணல் தரையில் அவர் கால் வைக்கிறார்.
அவர் தேடித் தேடித் திரிந்த தனிமைக்கும் இருப்புக்குமான இடம் போலத்தான் அந்த மணல்தரை அவருக்கு இருக்கிறது. அப்படியே கீழே சம்மணமிட்டவாறு இருந்தபடி வெண் மணலின் வெள்ளையான நரம்புகளை தன் விரல்களால் மென்மையாக அவர் வருடுகிறார். அவர் விரல் கீறும் உருதான் என்ன? உயரத்திலிருந்து கீழே சரிகிறது மாதிரி இவ்வேளையில் அவருக்கு உள் உருகும் துக்கம்! தாகம் மிகுதியாக உடலும் சோர்ந்துவிட்ட நிலையில்,
“நாகதம்பிரானே.”
என்று மெல்லச் சொல்லிக்கொண்டு வெய்யிலில் சோர்ந்து உள் உருகும் பக்தியில் அவர் வெப்பமூச்சு விடுகிறார்.
அவ்வேளையில் வெய்யிலுக்கென்ற விதிகளின்படி உருவானதாக வளர்ந்து நிற்கும் அந்த நாகதாளி மரத்துக்குப் பின்னாலிருந்து ஓர் அசரீதி கேட்கிறது அவருக்கு.
"மகனே நான் புளியம்பொக்கணையில் இருந்து இனி உன் இடத்துக் கேதான் வந்துவிடப் போகிறேன். உன் ஊரிலேதான் இனி நிரந்தரமாய் வாசம் செய்வேன். உன் குலத்தை நான் காப்பேன். என்னை ஆதரி! இனி உனக்கொரு குறையுமில்லை. இப்போதே இந்த மணல் தரையில் நான் உனக்கு என் அடையாளத்தை வைக்கிறேன்! என் மூச்சுக்காற்று உன்போன்ற மானிடனுக்கு ஆகாதென்பதால் கொஞ்சம் நீ தூரப்போய் இருந்துவிட்டு வா மகனே.!”
அந்த அசரீதி கேட்ட கையோடு சங்குமணி ஓசைகளுடன் சீறிச்சினந் தெழுந்த ஒரு பெரிய நாகத்தின் சீறல் ஒலியும் ஓங்கிச் சுழன்று தன்பக்கம் வந்துகொண்டிருப்பதாக அவர் கண்டார். அதைக் கேட்டதும் மிகவும் அஞ்சிக் குதித்தோடிப்போய் தொலைவில் நின்று கொண்டு அவர் அந்த நாகதாளிச் செடியைப் பார்த்தார்.
பயத்தில் தன் இருகைகளையும் கூப்பிக்கொண்டு, நாகதம்பிரானே என்று glug\s sssövakissá O 213 O

Page 113
சொல்லியபடி நாகதாளிச் செடியை அவர் நெடுநேரமாக பார்த்தபடி நின்றார். அந்த நேரம் அவ்விடத்தில் ஒரு நாக நிழல் விழுந்தது மாதிரி அவருக்கும் தெரிந்தது. அவ்விடத்திலிருந்து இமையாத பாம்புவிழிகள் மின்னியதைப்போலவும் அம்மணிக்கண்களுடன் ஒரு பாம்பு படம் விரித்தெழுந்தது போலவும் அவருக்குப் பூரண தரிசனம் கிடைத்தது.
சிறிது நேரத்தில் தன்னில் பேருருவமாய் எழுந்துவந்து சன்னதம் கொண்டு உறையும் ஒரு நாகத்தை அவர் உணர்வு மூலமாய் அறிந்தார். உடனே உணர்ச்சி வேகத்தில் “எம்பிரானே எம்பிரானே” என்று உரக்கச் சொல்லியபடி அந்த நாகதாளி மரம்நின்ற இடத்தருகே ஓடிச் சென்று பார்த்தார் அவர் அம்பைப்போல நாக்குகளைக் கொண்டதாய் எனக்குக் காட்சியளித்த என் நாகதம்பிரான் எங்கே? நாக முடி கொண்ட என்குலதெய்வமெங்கே? வேலன் மயில்மீது அணியாக நிற்கும் என் நாகதம்பிரான் எங்கே? கிருஷ்ண சர்ப்பம் எங்கே?
“முருகா. முருகா.”
பக்தியில் நாகமாடுவது போல தன்னுடலை ஆட்டிக்கொண்டு அவர் அந்த மணல்பரப்பைப் பார்த்தார். ஐந்து தலை நாகம் தலைபதித்த தடம் அந்த மணலின் மேலே அப்போது அவருக்கும் தெரிந்தது. சூரியக்கதிர்களின் வெள்ளி ஊசிகளைக் கொண்டு வரைந்த சித்திரம்போல ஐந்து தலைநாகத்தின் தடம் ஒருமுறை அவர் கண்களுக்கு மின்னியதாய்ப் புலப்பட்டது.
“முருகா.” என்ற பிதற்றலோடு நித்திரையில் நெருங்கி மூச்சுமுட்டச் செய்யும் ஒருவித பயத்தோடு உடனே அவர் கண் விழித்துவிட்டார். அங்கே விழித்ததும் பார்த்தால் ஒரே இருட்டாக மட்டுமே அவருக்குத் தெரிந்தது. திரும்பவும் அவர் உயிர்ப்படைந்ததான நிலைக்குள் தன்னை ஆக்கிக்கொண்டு கனவில் மறைந்துபோன நாகதம்பிரானின் தோற்றத்தை மெல்லிய ஈர்ப்பில் தன் நினைவில் கொண்டுவந்தார்.
“முருகா முருகா முருகா.” நித்திரைப் பாயிலிருந்து எழுந்திருந்தபடி தவத்தால் பழுத்த ஞானிகள் போல் சுவாசம் சூரிய கலையில் நிலைத்து நிற்க, குண்டலினியை தீப்பற்றும் அளவுக்கு வைத்தபடி வேலவனின் நாமத்தை சொல்லிக்கொண்டே இருந்தார் வல்லிபுரத்தார். அவரின் முகத்தில் அப்போது மகாயோகிகளின் தேஜஸ் வந்துவிட்டதாக இருந்தது.
பொழுது விடிந்ததும் யாரிடமும் ஒரு கதையும் பேசிக்கொள்ளாது பாலை மரத்தடியிலே கோயில் கட்டும் வேலையில் தன்னை O 214 O ரீ.பி.அருணானந்தs

ஈடுபடுத்தினார் அவர். இரண்டு நாளில் கோயில் கட்டுகிற வேலை அவருக்கு முடிந்தது. அந்தக் கோயில் சின்னக் கோழிக்கூடளவிலேயே இருந்தது. அதற்குள்ளே, தான் வீட்டிலே வைத்து வணங்கும் நாகதம்பிரானின் சிறிய வெங்கலச் சிலையைக் கொண்டுவந்து அவர் வைத்தார். அந்தப் பாலைமரத்தருகிலே காய்க்கும் பருவத்தில் ஒரு புளிய மரமும் நின்றது. இரண்டும் சேர்ந்ததாய் அந்த இடத்திலே நல்ல குளிர்மையாக நிழல். அன்று சாயந்தர வேளையானதும் பசு நெய்யில் திரிபோட்டு மலர்கள் சாத்தி விளக்கேற்றி தூபதீபம்காட்டி அவர் நாகதம்பிரானைப் பரவசமாகக் கும்பிட்டார். ஏலவே அவர் செய்துகொண்டுவந்த வழமைப் பிரகாரம் பாம்பிற்கும் பால் வார்த்தும் வைத்தார்.
பாம்பு வந்து பிறகு அந்தப் பாலைக் குடித்துவிட்டு பாலை மரப்புற்றுக்குள்ளே போனது.
புதுார் நாகதம்பிரான் கோயில் ஆரம்பத்தில் உண்டானதான கதையே இதுதான். அந்தக் கோயில் உண்டானதன் பிறகு அங்கு வந்து பணி செய்து கொண்டிருந்த நல்லம்மாவுக்குக் கிடைத்த அனுபவங்களோ சொல்லமுடியாத அளவுக்கு ரொம்பவும் விசித்திர மானது. அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி கொடுக்கும் புதிரான அந்த அனுபவங்களை சரித்திரக்காரர்களாலும் மன ஆய்வாளராலும் கூட கண்டுபிடித்துக்கொள்ளவே முடியாது. அந்த அளவுக்கு மன ஆழத்தில் சிற்பமாய் அமர்ந்துகொண்டுவிட்டது அவள் தன் வாழ்க் கையில் இவ்வளவு காலம்பட்ட விசித்திர அனுபவங்கள். இன்று வயதுபோய்விட்ட அளவிலும் பாம்பின் நினைவு அவளுக்குத் துடைக்கப்படவே இல்லை.
புதூர் நாகதம்பிரான் கோயில் முன்பிருந்ததைவிட கட்டட அமைப்பில் பிறகு சிறிது சிறிதாக வளர்ந்துகொண்டே வந்தது.
வெளியூர்களில் பாம்புகடித்து விஷம் தலைக்கேறிய அளவில் வரும் நோயாளிகளுக்குக்கூட புதூர் கோயிலில் வைத்து வல்லிபுரத்தார் வைத்தியம் பார்த்தார். கோயில் தீர்த்தம் விழுகிற புளிய மரத்தடி மண்ணைக்கரைத்து மருந்தாக்குடிக்கக் கொடுத்து, கடிவாயிலும் அதைப்பூசி நோயாளிக்கு நூலும் போட்டவுடனேயே, அந்த விஷம் பூராக இறங்கி சுகம் வந்து விடும் அவருக்கு.
அந்தக்கிராமத்துக்குள் விஷம் தீண்டலைப் பற்றிய பயமே எவருக்கும் இருந்ததில்லை. நாக பாம்புகளெல்லாம் அங்குள்ளவர்களில் வீடுகளிலே வந்து சர்வ சாதாரணமாக பழகிக்கொண்டே வந்தன.
zvyš s\sůvaňsaň O 215 O

Page 114
அவர்கள் விவசாயம் பண்ணிய வயல்ப்பகுதிகளிலும் பாம்புகள் திரிந்து கொண்டிருந்தன. அவர்கள் நெல்தாள்களை அறுத்துக்கட்டித் தலையில் அதைத்தூக்கிக்கொண்டு நடக்கின்ற வேளையிலும் அந்தக் கட்டுக்கு மேலே நாகம் படமெடுத்தவாறு சாத்வீகபாவத்துடன்தான் இருந்துகொண்டிருந்தது. அந்த ஊருக்குள் இருந்த நாகபாம்புகள் இப்படியாகவெல்லாம் அவர்களது காலுக்குள்ளும் கைக்குள்ளுமாய் நுழைந்துகொண்டு திரிந்தமாதிரியாய் இருந்தும் - எவ்வேளையிலும் அவைகள் அவர்களுக்கு எவ்வித கெடுதியும் செய்ததாக இருக்கவில்லை.
வல்லிபுரத்தார் வயது போய்க் கிழமாகிய பின்பு நல்லம்மாதான் பாலைமரத்தடிப் பாம்புக்கு கிண்ணியில் நிறையப் பால் வார்த்து வைத்துக்கொண்டு வந்தாள். பாம்புக்கு வைப்பது தேங்காய்ப்பால்தான். அன்று அவள் கோயிலுக்குள் வைத்துவிட்டுப் போன பாலிலே சற்று வித்தியாசம் இருந்தது. கப்பிப்பாலைத்தான் ஏதோ ஒரு நினைவோடு, கோயில் யோசனையின்றி அவள் வைத்துவிட்டுப் போயிருந்தாள். பாம்புக்கு கிண்ணியில் பாலை ஊற்றியபிறகு மூடியால் அதை மூடியும் கவனமாக சுத்தமாக வைக்க வேண்டும். அவள் அந்த வேலையைக் குறைவின்றி ஒழுங்காகத்தான் செய்திருந்தாள். ஆனாலும் பாலைக் குடிக்கவந்த பாம்பு கிண்ணி மூடியைத் தட்டிப் பார்த்துவிட்டு அந்தப் பாலைக் குடிக்காமலேயே தவிர்த்துவிட்டது.
அது அப்படியே பிறகு நேராக நல்லம்மாவின் வீட்டுக்குப் போய்விட்டது. அவள் அந்த நேரம் வீட்டுத் திண்ணையிலே இருந்துகொண்டிருந்தாள். அந்தப் பாம்பு அவளிலே தழுவிவழுவி ஊர்ந்து ஏறி அவளின் உடலின் மேலே செடியாய்ப் படர்ந்து நெழிந்தது. மென்மையான சுரப்புடன் ஊர்ந்த அந்த நாகத்தைக்கண்டு, அவள் திமிறி எழும்பவில்லை. ஆனாலும் அவள் பயத்தில் ஆவியடங்கின கணக்காய் சிறிது நேரம் அசையாமல் இருந்தாள். தன் மேல் ஊரும் அந்தப் பாம்பிலிருந்து வேம்பின் கசந்த பச்சை நெடிபோல ஒரு மருந்துமணம் அவளுக்கு மணத்தது. அந்த மணத்தோடு ஈரப்புற்றுமண் நாற்றமும் அவளுக்கு ш6001355).
"நாகதம்பிரானே” என்றாள் அவள். அந்த நாகம் அவள் கழுத்தடியில் நின்று புஸ்சென்று சீறிப் படமெடுத்துவிட்டுத் திரும்பவும் பெருமூச்சோடு கீழே இறங்கியது. தன் இமையற்ற கண்விழியாலே அவளைவிட்டு கீழே இறங்கியபின்பும் பார்த்துச் சீத்துச் சீத்தென நீளும் நாக்கோடு தலையைத் தூக்கி -ԶեւԳեւ 135l.
O 216 O ரீ.பி.அருளானந்தே

அதனுடைய அந்தப் பார்வையின் ஒளி அவளுக்கும் கண்ணுக்குள் பிரவேசித்தது மாதிரியாக இருந்தது. நல்லம்மா சிறு வயதிலிருந்தே பாம்புகளுடன் பழகி வந்தவள். அவைகளின் குணங்களும் அதிர் வலைகளும் அவளின் ஆழ்மனதில் நன்கு பதிந்தும் இருந்தன. இதனால் அவளுக்கு சிதறாத கவனம் இருந்தது. அதோடு மன ஒருமைப்பாடும், விரைவான சிந்தனையும் அதற்கேற்ற செயற்பாடுகளும், சூசகமான அதிர்வலைகளை உடனடியாக உணரும் தன்மையும், மன உறுதி தைரியம் ஆகியவைகளும் கூட அவள் பெற்றிருந்தாள். இவ்வகைத் தன்மையால் நல்லம்மாவுக்கு அப்போதுதான் கோயிலில் செய்த பிழை உடனே ஞாபகத்தில் வந்தது.
“நாங்கள் ஏதும் பிழை செய்தால்தானே கோயிலில் இருந்து இங்கே எங்கள் வீட்டு வாசலுக்கு வந்து அவர் சீறுவார்? அல்லாவிட்டால் எங்கள் வீட்டு முற்றத்திலுள்ள பாலமரத்திலே ஏறிக்கிடப்பார். இன்று நான் பெரிய பிழை செய்துவிட்டேனே? அனேகம் நாள் நான் கோயிலில் இவருக்கு தேங்காய்க்கட்டிப்பாலுடன் கப்பல் பழமும் சேர்த்துக்கரைத்துத்தான் கிண்ணியில் வைப்பேன். . இன்று என் அசண்டையினம். தேங்காய்க் கப்பிப் பாலைப் பிழிந்து வைத்துவிட்டேனே.? வழமையாக நான் கோயிலுக்குள்ளேயிருந்து கொண்டு பாலையும் பழத்தையும் என் கையால் பிசைகின்றபோது அவர் புற்றுவாயிலில் ஊர்ந்துவந்து அதிலே இருந்தபடி நான் செய்வதையெல்லாம் பார்த்துக்கொண்டிரு க்கிறவர்தானே.?”
அவளுக்கு இவற்றையெல்லாம் நினைத்துப்பார்க்கப் பயமும் மனதில் கப்பென்று படிந்தது. தன் முன்னே படமெடுத்தபடி நிற்கின்ற அந்தப் பாம்பு வெறும் மாயநிழலல்ல. அது ஒரு உண்மையான பாம்பு என்று தனக்குள் உணர்ந்துகொண்டு, கையெடுத்து அதைக் கும்பிட்டாள்
966.T.
“என்ன மன்னிச்சுக்கொண்டு கோயில்பக்கம் நீ போயிடப்பா. இனி இப்பிடி பிழையொண்டும் நான் உனக்குச் செய்யனப்பா. தம்பிரானே சினந்தணிஞ்சு போயிடப்பு."
நல்லம்மாவுக்கு கடவுள் பக்தி இருந்தாலும் - அந்தப் பாம்பை ஒரு மனுஷ ஜீவியாக பார்த்துப் பேசுவதைப் போலவேதான் அவ்வேளையில் பேசிக்கொண்டாள். அவள் பாம்போடுதான் சதாவும் உரையாடிப் பழகியிருந்ததால், பாம்பும் அவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அவளைப் பயமுறுத்தும் மூர்க்கத்தைவிட்டுவிட்டுப் பாலை மரப்புற்று இருட்டுக்குள்ளே உடலை ஒடுக்கியபடியே போய் விட்டது.
இது சம்பவம் நடந்து சில நாள் கழிந்தபின்பு,
g guല്ക്ക് ഠ് 217 O

Page 115
இன்னும் ஒரு பெரிய தொந்தரவு வந்து சேர்ந்தது பாம்பாலே நல்லம்மாவுக்கு. அவள் வீட்டுத் தோட்டத்தில் புதிதாக நட்டுவைத்த கப்பல் வாழைக்குட்டி வளர்ந்து பெரிதாக உருவாகி திறமான ஒரு குலை போட்டிருந்தது. அந்தக் குலைகளிலுள்ள காய்கள், முற்றிய பருவத்திலே ஒரு பக்கம் மடிந்துகிடந்த வாழையிலை நிழலுக்குள் மறைந்துபோய்க் கிடந்தன. இலை மறைவுக்குள்ளே மஞ்சளாய்ப் பழம் பழுத்துப்போய் தோலும் சற்று வெடித்தநிலை.
நல்லம்மாவீட்டார் இன்னும் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.
ஆனாலும் கோயில் ராசநாகம் புற்றுக்குள்ளாலே இருந்து வெளியே வெளிக்கிட்டுத் தலைகுனிந்து ஊர்ந்துவந்து அவளை மட்டும் துரத்தத் தொடங்கிவிட்டது. அவள் என்ன நடந்தது? என்ன நடந்தது? என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டு பாம்புக்கு விலகிவிலகிச் சென்று கொண்டிருந்தாள். திடுக்கிட்டதாய்ப் பின்னடைய கதவிலும் மோதினாள். அவள் குசினிக்குச் சென்று ஒழித்துக்கொண்டாலும் அந்தப் பாம்பு அவளை விடுவதாக இல்லை. பின்தொடர்ந்து தானும் அங்கே அது அவளண்டையில் வந்துவிடுகிறது. அவள் பயந்துகொண்டு படுக்கை யறைக்குள்ளே போய் கதவுக்குப் பின்னாலே ஒடுங்கிக் குறுகியபடி நின்றாள். பாம்பு அங்கேயும் அவளைவிடவில்லை. அவள் நின்ற கதவுக்குப் பக்கத்திலே நின்றபடி அது விரித்த படத்துடன் “பூவ்” என்று சீறிக்கொண்டே நிற்கிறது. நாகம் மணிக்கண்களுடன் பிளந்த நாக்கையும் நீட்டுகிறது.
"இந்தப்பாம்பு பாதாளம் நோக்கி நான் போனாலும் அங்கேயும் என்னைத்தேடி வானில் சுழன்று பறப்பது போல விரைவாக வந்துவிடும் போலிருக்கிறதே...?” - என்று நினைத்து அவள் கலவரப்பட்டாள். தலை பிளக்கும் யோசனையில் அவளுக்கு மண்டையிடியும் வந்துவிட்டது. உடம்பு நடுங்கும் பயத்தில், வியர்வையும் கழுத்தில் அரும்பி மார்பிடை யிலும் அவளுக்கு வழியத்தொடங்கிவிட்டது.
இனி எங்கும் இந்த வீட்டுக்குள்ளே நின்றபடி பாம்புக்குத்தான் ஒழிந்திருக்கமுடியாது என்று நல்லம்மாவுக்குப் பிறகு நன்றாக விளங்கிவிட்டது. அவள் பாம்பின் மேலே கசப்பைப் பெருக்கிக்கொண்டு அழாத ஒரு குறையோடும், பீதி கலந்த கோணல் தோற்றத்தோடும், வீட்டுப் பின்பக்கக் கோடிப்புறத்தடிக்கு ஓடினாள்.
ஆனாலும், மறுபடியும் அந்தப்பாம்பு அவளை கோடிப்புறத்தடியிலும் விடாமல் துரத்தத் தொடங்கியது.
நல்லம்மா வெயிலில் வெளிச்சிட்டுக்கிடக்கும் கோடிப்புறத்து வாழை மரங்களையும் சுற்றிச் சுற்றி ஓடத் தொடங்கினாள்.
O 218 O ரீ.பி.அருளானந்தல்

"என்னைப் போட்டு வதைக்கும் இந்தப்பாம்புக்கு என்னதான்
செய்கிறது" - என்ற மாதிரியான ஆத்திரமும் அவளுக்கு வந்தது.
அந்த நினைப்போடு கண் கூசும்படி இருந்த அந்த வெயிலுக்குள்ளே தன் தைைய நிமிர்ந்தி ஒருதரம் குலைபோட்டுக்கிடந்த அந்த
வாழைமரத்தைப் பார்த்தாள் அவள்.
இலைமறைவுக்குள்ளே அதற்குள் நான்கைந்து பழம் பழுத்துக் கிடக்கின்றது அவளுக்குத் தெரிந்தது. அதைப் பார்த்தவுடனே,
அவளின் உள்ளிருந்து மெல்லிய குரல்!
"இப்பொழுதும் உனக்குத் தெரியவில்லையா பாம்பு ஏன் உன்னை இப்படித் துரத்துகிறது என்று.?”
உடனே விஷயம் புரிந்துவிட்டது அவளுக்கு. இதுதான் உண்மை! அப்பட்டமான உண்மை! என்று திரும்பவும் தனக்குள் அவள் நினைத்துக்கொண்டு முன்னால் படமெடுத்தபடி இப்போது நின்று கொண்டிருக்கும் பாம்பை அவள் பார்த்தாள். அந்தப் பாம்பு கண்கள் மினுக்கியபடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தது.
"இந்த வாழைப்பழத்துக்குத்தானே என்னைப்போட்டு நீ இந்தத் துரத்துத் துரத்தினாய்..? நீ எனக்குக் கரைச்சல் தராம கோயிலுக்குப் போயிரப்பா..?நான் இந்தப் பழத்தைப் புடுங்கிக் கொண்டந்து இப்பவே உனக்கு அங்க இதைப் பாலில கலந்து கரைச்சு வைக்கிறன்.?”
அவள் இவ்விதம் சொல்ல, பாம்பு அவள் சொன்னவைகள் எல்லா வற்றையும் உணர்ந்தது மாதிரித் தலையைத் தூக்கிக்கொண்டு, அவளின் கண்களை ஊடுருவிப் பார்த்தது மாதிரி நின்றது. அதற்குப் பிறகு அவளிருந்த இடத்தை விட்டுத் திரும்பிப்போய், வேலிப்பக்கத்திலே ஓர் இடைவெளி வழியாக நுழைந்து கோயிலுக்கு நேரே போய்விட்டது.
நல்லம்மா பாம்பு உண்மையில் அந்த இடத்தை விட்டுப் போய்த்தான் விட்டதோ? என்ற ஐமிச்சத்தில் வேலிப்பக்கத்தை அணுகி கண்களால் அக்கம் பக்கம் மீண்டும் மீண்டும் துளாவினமாதிரிப் பார்த்தாள்.
அது அவ்விடமெங்கினும் இப்போ இல்லத்தான் என்பதுபோல அவளுக்குப் பார்க்கக்கிடைத்தது. அவளுக்கு அங்குமிங்கும் முட்டி மோதி ஓடித்திரிந்த உலைவில் தலைமயிரெல்லாம் காளிபோல அவிழ்ந்து குலைந்து தொங்கிக் கிடந்தது. அதனால் மயிர்ப் பரப்பை கையால் பிடித்துக்கோதி முறுக்கி உச்சியில் அவள் கொண்டை போட்டுக்கொண்டாள். நிறைதலை முடிபாரம் இன்னொரு தலையினை உருட்டித் தலைக்குமேலே ஏற்றினது போலிருந்தது அவளுக்கு.
துயரக் கசப்பண்கள் O 219 o

Page 116
அதன்பிறகு வீட்டுக்குள்ளேபோய் ஒரு கதிரையைத் தூக்கிக் கொண்டு வந்து, வாழைமரத்தின் கீழ் வைத்து அதிலே ஏறி நின்று பழுத்த பழமெல்லாம் அவள் பிடுங்கினாள். அதைப் பிடுங்கின கையோடு பழமும் தேங்காயும் கொண்டு அவள் கோயிலுக்குப் போனாள்.
இன்னும் அந்தப்பாம்பு புற்றுக்குள் போனதாக அங்கே போனதும் பார்த்தபோது அவளுக்குத் தெரியவில்லை. "என்ன அது இன்னும் நான் இங்க வந்து சேரேல்லயெண்டு என்னப் பாத்துக்கொண்டு காவல்கிடக்குதோ?” -
அவளுக்குப் பாம்பைத்திருப்பிப் பார்க்கவே ஒருவித அச்சமாக இருந்தது. கனத்த கன்னங்களுடன் கூடிய சுவாசத்தோடு அது தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது மாதிரி அவளுக்குப் பாம்பைப் பார்க்கவும் தெரிந்தது.
அவள் “முருகா” என்று பக்தியோடு சொல்லிக்கொண்டு தரையில்
அமர்ந்தாள். தான் கொண்டுவந்த தேங்காைையத்துருவி பாலைப் பிழிந்து அதனுடன் தித்திப்பான பழத்தையும் கரைத்துக் கிண்ணியில் ஊற்றிக்கொண்டுபோய் பாம்புப் புற்றருகே அதை வைத்தாள். பாம்பு இனி இதைக் குடிக்க புற்றால் இறங்கிவருமென்று அவளுக்குத் தெரியும்.
அந்த நினைப்போடு மூலஸ்தானத்திலுள்ள நாகதம்பிரான் சிலையைக் கையெடுத்து ஒருமுறை கும்பிட்டுவிட்டு அவள் வீட்டுக்கு வந்துவிட்டாள். அதன்பிறகுதான் அந்தத் தொந்தரவிலிருந்து அவள்மனம் நிம்மதியை அறிந்தது. மனம் வெட்ட வெளியாய் இருந்தது. ‘இனி அது என்னைப் பின்னால துரத்திவராது என்பதான நினைவில் தன் உடல் எடையெல்லாம் இழந்து வானில் பறப்பதுபோல ஒரு ஆறுதல் ஏற்பட்டது அவளுக்கு.
O
வல்லிபுரம் குடும்பத்தாருக்கும் அவர்கள் வாழ்க்கையில் ஏதாவது கஷ்டங்கள் கரைச்சல்கள் வரப்போகிறதென்றால் நாகதம்பிரான்தான் கனவிலே வந்து கவனமாயிருங்கோ. என்று சொல்லுவார். அவர்களும் நாகதம்பிரான் சொன்னதைத் தங்கள் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, அந்தக் கஷ்டத்திலிருந்து மீண்டுவரக்கூடிய உள் தைரியத்துடன் கவனமாக காரியங்களில் ஈடுபடுவார்கள். கனவு கண்டவர் அதிகாலை யில் எழுந்து குளித்து கோயிலுக்குப்போய் விபூதிபோட்டுக் கும்பிட்டு விட்டு, அன்றையநாள் முழுக்கலும் உண்ணாது விரதமும் இருப்பார்.
ஆனால் வயது கொஞ்சம் ஏற ஏற நல்லம்மாவுக்கென்றால், இந்த வித நம்பிக்கையின் மீதெல்லாம் மனம் சலிப்புற ஆரம்பித்துவிட்டது. O 220 O ரீ.பி.அருணானந்தச்

கோயிலுக்குள் எனக்கு வேலை கூடிப்போய்விட்டது என்று அப்புவிடம் சொல்லிவிட்டு, அவள் கோயிலுக்குப் போய்க் கும்பிடுவதைக்கூட மிகவும் குறைத்துக்கொண்டாள்.
"நாங்கள் எங்களுக்குள்ளே சிந்தித்து சுயமான முடிவுகளை எடுக்காமல் இதென்ன நம்பிக்கை.? நாகதம்பிரானின் வாக்கு இல்லாமல் நாங்கள் எடுக்கும் எந்த முடிவுகளும் எங்களை அடுத்த கட்ட அழிவுக்கே எடுத்துச்செல்லுமென்று உள்ளுர ஒரு நடுக்கத்துடன் ஏன் நாங்கள் அச்சப்படவேண்டும் .? நாங்கள் ஒரு பொருளைக் கையால் எடுக்கும்போது இறுகப் பற்றினதாகப் பிடித்துக்கொண்டால் அது ஏன் வழுக்கி விழப்போகிறது?”
இப்படியாகவெல்லாம்சிந்தனை போனதுநல்லம்மாவுக்கு. ஊருக்குள்ளே சொந்தபந்தத்துக்குள்ளேதான் பார்த்துத் தங்கள் பிள்ளைகளைத் திருமணம் செய்துகொடுக்கிற வழமைதான் குலையாமல் அங்கே தொடர்ந்ததாய் இருந்துவந்தது. அதே வழமையை தானும் பின்பற்றி மகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு நல்லம்மாவுக்கென்றால் விருப்பமே இல்லை. அப்படித் தங்கள் உறவுமுறையிலிருந்து மகளுக்குப் பேசிவந்த கலியாண சம்பந்தத்தை நல்லம்மா வேண்டாம் என்று சொல்லி மறுத்துவிட்டாள். அவளின் அப்பு வல்லிபுரத்தாரும் அவளைக் கேட்டார்.
"அந்த இடம் நல்ல இடம்தானே..? அந்தக் கலியாணத்தை செய்யலாம் தானே.?”
“எனக்கெண்டால் அந்தக் கலியாணத்தைப் பிள்ளைக்குச் செய்துகுடுக்க துண்டா விருப்பமில்லையப்பு”
அப்புவின் சின்ன ஒற்றைக்கட்டிலுக்கு விரிப்புகள் தலையணை உறைகளை மாற்றிக்கொண்டு நின்றவள் இவ்விதம் சொன்னாள்.
"ஏன் பிள்ள அப்பிடிச் சொல்லுறாய்..? அந்த இடம் எங்களுண்ட சொந்தத்துக்குள்ளயா வாற இடமெல்லே.? ஒண்டுக்குள்ள ஒண்டு எவ்வளவு நல்ல சம்பந்தம் .?” “அதாலதான் அது வேணாமெண்டு நான் சொல்றனப்பு.?”
"ஏன் பிள்ள?”
அவருக்கு அதிர்ந்த உணர்வு எழுந்தது. தனக்கு முன்னால் உள்ள மிகப் பெரிய முருகன்படத்தைப் பார்த்துக்கொண்டு அவர் யோசித்தார்.
"சாதிப்பலமும் கொண்ட எங்கட ஆக்கள்தானே பிள்ளை அவங்கள்?"
துயரம் சுஃபண்கள் O 221 o

Page 117
என்று திரும்பவும் அவர் நல்லம்மாவுக்குச் சொன்னார்.
"சாதி மட்டும் பாத்தால் போதுமேயப்பு. படிப்பு.? என்ர பிள்ள படிச்சுமிருக்குதேயப்பு? அவளிண்ட படிப்புக்கும் தோதான ஒரு மாப்பிள அவளுக்கு வேணுமே..?” - அவள் தன் மனதில் வேகம் ஏறின நிலையில் சொன்னாள். வல்லிபுரத்தார் குனிந்து தரையைப் பார்த்தார் பிறகு நிமிர்ந்து,
"அப்ப வேற என்ன ஒரு வழிக்குப் போகலாமெண்டு உனக்கு இப்ப யோசனை.?” என்று அவர் கேட்க,
நல்லம்மா அப்புவின் முகத்தை மெளனமாக உற்றுப் பார்த்தாள்.
அப்படியே இருந்தபடி அவள் ஒன்றும் பேசாதிருக்க,
"சொல்லன் பிள்ள நீ உன்ரை மனசுக்குள்ள யோசிக்கிற விஷயத்துக்கு நானும் ஒம்படுவன்தான். சொந்த பந்தமெண்டு இந்தக்காட்டுக்குள்ளயே கிடந்து கொண்டு வெளி உலகத்தில என்ன நடக்குதெண்டே தெரியாத மாதிரி சீவிக்கிறதில எனக்கும் இப்ப விருப்பமில்லத்தான்.”
அவர் மூச்சுவிடாமல் சொல்லிக்கொண்டே இருந்தார். அவளுக்கு உடனே தனக்குப்பிடித்ததை சொல்லக்கூடிய தைரியம் வந்துவிட்டது.
“அதாலதான் அப்பு இப்ப வேற ஒரு நல்ல இடத்தில இருந்து பேசி வந்திருக்கிற சம்பந்தத்துக்கு நானும் அவரும் ஒமெண்டு சொல்லலாமெண்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறம். எண்டாலும் வீட்டில நடக்கிற எந்தக் காரியத்துக்கும் உங்களிண்ட விருப்பத்தையும் கேட்டு நாங்கள் நடக்கத்தானே வேணும்.?” "அது நல்ல விஷயம்தான். எனக்கு வயசுபோயிட்டுது. இனிப் பிள்ளையஸ் வாழுற ஒரு வேறமாதிரி காலம் உலகம்தானே. அதால உங்கட அறிவுக்கு நீங்கள் பாத்து நல்லதைச் செய்யுங்கோ பிள்ளை.! அதுக்கெல்லாம் நானும் ஓம்தான்!” அப்பு இப்படிச்சொல்ல நல்லம்மாவுக்கு தான் இப்போது புதியதோர் உலகத்தில் சென்று குடியேறினது மாதிரியானதோர் மகிழ்ச்சி "எல்லாம் இனிச் சரிவந்து நல்லா எல்லாமே படிப்படியாக நடக்கும்.” என்று நினைத்துவிட்டு, அன்று இரவு சாப்பிட்டுவிட்டு ஆறுதலாக கொஞ்சம் இருந்து படுத்த வேளையிலே. அவளுக்கு ஒரு கனவு, ஓசையின்றி ஊர்ந்தது. அந்தக் கனவுப் பயணத்திலே அவளின் முகத்தருகிலே வந்தது ஒரு தனிப்பாம்பு தன் இரும்பு போன்ற உடல் சுருணையால் அவளை O 222 0 ரீபி.அருணானந்தே

அழுத்திச் சீறியது மாதிரி அவளுக்கு இருந்தது. பாம்பு அவளின் மார்பைத் தொட்டு நான்தான்! என்றமாதிரிச் சொன்னது மாதிரியாகவும் அவளுக்குத் தெரிந்தது.
கனவு துலக்கமாயில்லை.
மீண்டும் ஒன்றோடொன்று தழுவிப் பிணைந்து சீறிக்கொண்டிருக்கிற பெருவாரியான பிரம்ம, ஷத்திரிய, வைசிக, சூத்திரஜாதி நாகபாம்புகள்.!
“手运.”
அவளுக்கு மனம் வெறுப்பாயிருக்கிறது. கனவுதான் இதுவும்,
அவள் அஞ்சி எழுந்தமர்ந்து எங்கும் நோக்கியதான பார்வையில் இருக்கிறாள். அங்கே பிணைந்தபடி சீறிக்கொண்டிருந்த பாம்புகள் இப்போது அவள் கண்ணில்படவில்லையென்றாலும் எங்கேயோ அதல பாதாளத்தைத் திறந்துகொண்டு வெளியே வெளிக்கிட்டு வந்த மாதிரியாக விருந்த அந்தப் பாம்பை மாத்திரம் அவள் இப்போது அடையாளம் கண்டுகொண்டாள்.
அந்தப் பாம்பு அவள் வணங்குவதற்குரியதான பாம்பு அதன் உடல சைவுகளிலும் கண்பார்வையிலும் ஒரு அருள் இருந்தது. அதைப் பார்த்து தான் கைகூப்புவதும் கனவில் அவளுக்குத் தெரிந்தது. பாம்பு சில வேளைகளில் தனக்கு எதையோ சொல்வதுமாதிரி அவளுக்குத் தெரிந்தது. அது பேசுகிறது ஒன்றும் முதலிலே அவளுக்கு எதுவும் தெளிவாக இல்லை.
பிறகு எல்லாம் விளக்கமாக அவளுக்குக் கேட்டது. அதன் குரலும் பேச்சுத் தோரணையும் தன்னைப் போன்ற ஒரு பெண்ணைப் போன்றதாகவே கேட்கும்போது இருந்தது அவளுக்கு.
"மகளே நீ நிறைய தப்பு செய்கிறாய். உன் தவறுகளை திருத்தக்கூடிய ஆன்மபலம் உனக்கு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். நீ மனதைப் போட்டுக் குழப்பாமல் உன்னுடைய மகளை சொந்தத்திற்குள்ளேயே கூடி வாழச் செய். ..அப்படி நீ செய்தால் என் பரிபூரணமான ஆசி உன் மகளுக்கு உண்டு. நீ மனதைப் போட்டுக் குழப்ப வேண்டாம். நான் சொன்னதையே செய்.”
கனவிலே அவளுக்குத் தன் உடம்பின் ஒரு பகுதியை தூக்கிப் பிரட்டிப் போட்டது மாதிரியும் இருந்தது. முதுகுத் தண்டில் கூரிய ஊசியைக்
g a\uൿ O 223 O

Page 118
குத்தினமாதிரியும் ஒரு வலிப்பு தன்னுள் அந்த இன்னொரு உடல் திமிறி எழுவது மாதிரி உணர உடனே அவள் விழித்துவிட்டாள். அதோடு எழும்பி பாயிலே இருந்துகொண்டு வாயிலே வழிந்துகிடந்த
சூடான எச்சியை கையால் துடைத்துக்கொண்டாள் அவள்.
இந்தக் கனவை அவள் கண்டு மூன்று நாள் சென்றும் ஒன்றுமே நடை பெறவில்லை அவளுக்கு வெறும் கனவுதான்! என்று நினைத்துவிட்டு அதையும் மறந்திருந்தாள் அவள் வீட்டிலே இதையாருக்கும் சொல்லப்போனாலும் அவர்களும் ஏதாவது சொல்லுவார்களென்று அதையும்கூட அவள் தவிர்த்திருந்தாள். அப்பாவுக்கும்கூட அவள் தன் கனவைப்பற்றிச் சொல்லவில்லை.
அன்று வெள்ளிக்கிழமை நாளாகவிருந்தது. அதனால் காலையில் எழும்பிக் குளித்து வீட்டில் உள்ள வேலைகளெல்லாம் பார்த்து முடித்துவிட்டு, காலைச் சாப்பாட்டை இனிச்சாப்பிடுவோம் என்று அவள் தட்டில் போட்டுக்கொண்ட இடியப்பம் சொதி சம்பலுடன் பலகையில் குந்தினாள்.
பிறகு கையால் சாப்பாட்டைக் குழைத்து வாயில் வைப்போமென்று அதை எடுக்க,
அவளுக்கு முன்னாலே நின்றபடி சீறியதே ஒரு பாம்பு! அந்தச் சீறல் சத்தம் இங்கே உள்ள முழு ஊருக்கும் கேட்டிருக்கும் என்றதுமாதிரித்தான் அவ்வேளையில் அவள் நினைத்தாள். அந்தள வுக்கு சீறலின் சத்தமென்றாலோ ஆகப்பெரிய சத்தம்.
அவள் உடனே திகில்பிடித்து திக்குமுக்காடிப்போனாள் கையில் சாப்பிட அள்ளிய இடியப்பத்தை திரும்பவும் அந்தத் தட்டிலேயே போட்டுவிட்டாள்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்து கொண்டிருந்த அந்த நிலையிலேயே அவளுக்கு உடல் நடுங்கி உதறலெடுத்தது.
பாம்பு அலைநாவுகளுடன் அமைதியடையாத நிலையில் படத்தை இன்னும் விரித்துக்கொண்டு மூர்க்கமாகவும் பயங்கரமாகவும் சீறத் தொடங்கிவிட்டது.
அவள் மிகுந்த திணறலுடன் பலகையால் இருந்துகூட எழும்ப
முடியாமல் கஷ்டப்பட்டாள். அதே குழம்பிய உணர்வுகளின் பிழம்பு களுடன் இருந்து கொண்டு.
O 224 O நீ.பி.அருணானந்தs

“என்ரை அப்புச்சி இங்க வந்து இதைப் பாரணை?” மகளின் கூப்பிட்ட குரல்கேட்டு வல்லிபுரத்தார் உடனே குசினிக்குள் வந்தார். அங்கே அவர் பார்த்தபோது மகளுக்கு முன்னாலே பாம்பு ஒன்று படமெடுத்த படி நிற்கிறது.
“என்ன இது.?”
அவளின் குரல் சிறு நடுக்கத்துடன் இருந்தது. அவர் அப்படிக் கேட்கவும் பாம்பு, அவரைப் பார்த்தும் தன்னுள் மிக ஆழத்திலிருந்து வெளிவிட்ட கணக்காய் ஒரு நீண்ட சீறல் சிறியது.
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.”
"அப்பு என்னச் சாப்பிடவும் இது விடுகுதில்ல. என்ன நடந்ததப்பு.”
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.”
"என்ன நடந்தது?" அவரும் பூதவடிவம் மாதிரி கோலத்தில் நிற்கும் அந்த நாகத்தை உற்றுப்பார்த்துக்கொண்டு அவளைக் கேட்டார்.
“கலங்கிக் குழம்பிப் பொங்கிக் கொந்தளிச்சுக் கொண்டு நிற்குது.
பிறகும் சொன்னார்.
“கதையேன் அப்பு உதக் கலைச்சு விடுங்களப்பு.”
“போ. போ.”
அவர் சொன்னாலும் எங்கே அசைகிறது. அது வாலை வளையமிட்டு மண்டையை உயர வெடுத்துப் படம் விரித்தபடி தன் பிளவுண்ட நாக்கு வெளியலம்ப நின்றுகொண்டிருக்கிறது. நல்லம்மா பாம்பைப் பார்த்தபடி நடுங்கும் தன் கரங்களை மார்போடு சேர்த்து வைத்துக் கொண்டிருந்தாள்.
வல்லிபுரத்தாருக்கு பதற்றமிருந்தாலும் பிறகு ஆழ்ந்த மனத்திடம் வந்துவிட்டது.
“போ உதால போயிடப்பா.” என்று பெரிய சத்தம் போட்டுச் சொன்னார். அப்படி அவர் சொல்லவும்தான், பாம்பு ஏதோ அவர் சொன்னதற்கு தான் கீழ்ப்படிவதுமாதிரியான ஒரு நிலையை அதிலே காண்பித்துவிட்டு வயிற்றைச் சுழித்து நகட்டியபடி போய்விட்டது.
அப்பாடா என்று அது போனதற்குப் பிறகு கொஞ்சம் மனம் நிம்மதியாக
நல்லம்மாவுக்கு இருந்தது.
g suഷ്ടt O 225 O

Page 119
இந்த வேளையில் மூன்று நாளுக்கு முன்னம் தான் கண்ட அந்தக் கனவு அவளுக்கு ஞாபகம் வந்ததுதான். என்றாலும் அதை அவள் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. எவருக்கும் அந்தக் கனவைச் சொல்லவுமில்லை. அவளுக்குப் பசியும் இல்லாமல் குழம்பிவிட்டது. அந்தச் சாப்பாட்டைக் கொண்டுபோய் நாய்க்குப் போட்டுவிட்டு வந்து இருந்தாள்.
அவளுக்குத் தன் முன்னால் நின்ற பாம்பு போய்விட்டது என்பது மனதுக்குக் கொஞ்சம் நிம்மதிதான். ஆனாலும், அந்தப் பாம்பு தன்முன்னே படமெடுத்தபடி நிற்பது போன்ற ஒரு மாயா நிழல் அவளுக்குத் தெரிவதுமாதிரித்தான் இருந்தது. அது எக்கணமும் அவ்விடத்திற்குத் திரும்பியும் வரலாம் என்ற மாதிரியும் அவள் உள் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. அந்த ஐயம் அவளை அரித்துக் கொண்டிருந்தாலும் மனதிலிருந்த துணுக்குறலை அடக்கிக் கொண்டு மதிய சமையலை அவள் செய்துதான் முடித்தாள்.
காலையில் சாப்பிடாதது மத்தியானமான பிறகு நல்லபசி பசித்தது அவளுக்கு. அப்புவும் வெளியே போயிருந்த நேர்ம், சாப்பிடுவோம் என்று சோறு கறியை தட்டில்போட்டுக் கொண்டு பலகையில் அவள் குந்தியிருந்தாள். தட்டிலுள்ள சோற்றையே பார்த்துக்கொண்டு எங்கேயும் கவனிக்காதபோது ஒன்றுமில்லை என்றமாதிரி அவளுக்கு இருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்றைப் பார்ப்பதற்கு முந்தைய கணம் போல ஒரு பயம் அவளுக்கு வந்தது. அதையும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு சோற்றிலே கை வைத்தாள் அவள். அடுத்த கணம், அவளை மிரள வைத்தது அந்தச் சத்தம்!
“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.”
அதிகார எதிர்ப்போடு பாம்பு அவளுக்கு முன்னால் படமெடுத்தபடி சீறிக்கொண்டிருந்தது.
பாம்பைக் கண்டதும் அவளுக்கு திகிலாகிவிட்டது. கையும் காலும் பதைக்க, பிரக்ஞை பதறியடித்துத் துடிக்க அப்பு வைக்கூப்பிடுவோமோ? என்று அவள் யோசித்தாள். அவர்தான் வெளிய போயிட்டாரே! - என்று பிறகு ஞாபகம் வந்தது அவளுக்கு. "என்ன இது.? என்ன விட்டுத் தொலையாததாய் இந்தப் பாம்பு? என்னச்சாக வைக்க வேணுமெண்டதாய்த்திரியுதோ..?” நினைக்க அவளுக்குக் கண்கள் பொலக்கென்றுமுட்டிக்கொண்டுவிட்டன. அப்படியே பீங்கானில் போட்டுக்கிடந்த சாப்பாட்டைக் கொண்டுபோய் நாய்க்குக் கொண்டிவிட்டுவந்து, பாம்பு நின்ற இடத்தைப் பார்த்தாள்.
о 226 o ரீ.பி.அருளானந்தே

பாம்பைக் காணவில்லை!
அந்தப் பாம்பை அதிலே காணவில்லை என்ற பிறகுதான் அவளுக்கு மனதில் பரபரப்பும் பயமும் நிரம்பியதாய் விட்டது. அவள் கோபத்துடன் குசினி வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகுபோய்க் குசினிக் கதவை மோதிச் சாத்தினாள். விரிசல் விட்டிருந்த கதவு கொஞ்சம் பிளந்தும் விட்டது.
"அய்யோ.”
சொல்லிக்கொண்டு அப்பிடியே போய் கட்டிலில் படுத்துவிட்டாள். பசிக்களையாயிருந்தது அவளுக்கு, இரவும் இப்படித்தான் பாம்பு அவளை சாப்பிடவே விடவில்லை. அடுத்தநாள் காலையிலும் இதே கதிதான் அவளுக்கு வல்லிபுரத்தாரும் மகள் படுகின்ற கஷ்டத்தை இரவும் பகலும் கவனித்தார். மகள் என்ன பிழை செய்திருப்பாள்.? என்று அவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. அதனால் அவருக்கும்கூட பரபரப்பும் பயமும் மனதில் நிரம்பியிருந்தது.
அடுத்தநாள் மத்தியானத்துக்குமுன் "நீ இண்டைக்குச் சமைச்சுச் சாப்பிடப்பார் பிள்ளை. நானும் வீட்ட இருந்து என்ன நடக்குதெண்டு ஒருக்கால் இண்டைக்குப் பாத்திடுறன்?” என்று வேகமாக முற்றத்தடியா லிருந்து நடந்துவந்து நல்லம்மா இருந்த அறைக்குள்ளே நிற்கும்போது சொன்னார் வல்லிபுரத்தார்.
அவர் சொன்ன சொற்களுக்கு நடுவே இருந்த கோபத்தை நல்லம்மா இனங்கண்டுகொண்டாள். தனக்கு இப்படி நிகழ்வதெல்லாம் எங்கிருந்து அனுப்பப்படுகிறது என்ற குழப்பமாய் அவளுக்கு இருந்தது. இதையெல்லாம் நினைக்க எந்த மரத்திலும் அமர முடியாத பறவைபோல அவள் மனம் அலைமோதத் தொடங்கியது. பசி அவளின் வயிற்றுக்குள் கடித்துக்கொண்டிருந்தது. அவள் மன முடைந்துபோயிருந்தாலும் இப்போ அப்பு கொடுத்த ஒரு துணிச்சலில் குசினிக்குள்ளே போய் சமைப்போமென்று நினைத்துச் செய்ய வேண்டிய வேலைகளைத் தொடங்கினாள்.
மகள் சமைக்கின்றாள் என்பதைக் கண்டுகொண்டு வல்லிபுரத்தாரும் வீட்டைவிட்டு எங்கும்போகவில்லை. நல்லம்மா சமையல் வேலை யெல்லாம் முடித்து அப்பு இருக்கிறார் என்ற மனத்தைரியத்தில் சாப்பாட்டைப் பீங்கானில் போட்டுக்கொண்டு பலகையில் இருந்தாள். இந்தமுறை சோற்றிலே அவள் கைவைக்கும்போதே அந்தப் பாம்பு வந்து அவளுக்கு முன்னால் அகன்ற படத்தோடு நின்றபடி சீறத் தொடங்கிவிட்டது.
zugă asovatea o 227 o

Page 120
"அப் |..."
அவள் சாப்பிடாத தஞ்சைக்கேட்டிலும் கனத்த குரலில் கத்திக் கூப்பிட்டாள்.
கையில் அவள் வைத்திருந்த சோத்துப்பீங்கான் தவறிக் கவிழ்ந்து நிலத்தில் விழுந்துவிட்டது.
அப்படியே மார்புக்குள் அவளுக்குக் கடுமையாகப் பிசையப்படுவது போன்ற வலி உடல் முழுக்க அவ்வலி பரவி சட்டென்று கனத்த களைப்பாக மாறிவிட்டது அவளுக்கு அப்படியே தரைநோக்கிப் பலகையால் இருந்து கீழே சாய்ந்து ஏலாமல் படுத்துவிட்டாள்.
வல்லிபுரத்தார் வந்து அதிலே மகள் உடம்பு ஏலாமல் சாய்ந்து நிலத்தில் கிடப்பதைப் பார்த்து "ஐயோ" என்று கத்திவிட்டார்.
“எனக்கு ஒண்டுமில்லையப்பு"- என்று தன் அழுத்தி ஒட்டிய உதடுகளைத் திறந்து சொன்னாள் பவானி அப்படிச் சொல்லிக்கொண்டு மெல்லத் தன் கையைத் தாங்கலாய்க் கொடுத்து அவள் எழும்பினாள் வெறும் பீங்கானை கையிலெடுத்து வைத்துக்கொண்டு அதைப் பார்த்த வண்ணம் அழத்தொடங்கினாள்.
பாம்பு சீறிக்கொண்டிருந்தது.
அவளுக்குக் கண்ணெல்லாம் கண்ணிர்
"என்னச் சாப்பிடவே விடுதில்லயப்பு.?"
என்று சொல்லிவிட்டு அவள் அழுது குளறினாள்.
"என்ன செய்யிறது இத.?"
அவருக்கு நெருப்பான ஆத்திரம் “வேணாம் உத அடிச்சுக்கொண்டுவிடுங்கோ அப்பு?" "ஐயோ" அவர் மெல்ல தன்னைப் பிரித்துக்கொள்கிறமாதிரி நின்றார்.
"கோயிலுக்க ஆயிரம்பாம்பு புத்துக்க கிடக்கு அதுக்கிள்ள இதுவும் ஒண்டுதான். என்னச் சாப்பிடவிடுதில்லயே இது."
"அதுக்குப்போய் அடிச்சுக்கொல்லுற அளவுக்குப் போறது." அவரது மனமும் சொற்களும் சிக்கியமாதிரியாக இருந்தன.
"ஐயோ எனக்கு இனி சாவுதான் வரப்போகுது இப்பிடியே சாப்பிடாமல் 0 228 ) நீ.பி.ஐருவாணர்தல்


Page 121
கடநது நான் சாகப் போறன் .!” நல்லம்மா மார்பைப்பிடித்தபடி ஒப்பாரி வைத்தமாதிரி அழ. வல்லி புரத்தாருக்கு முள்ளிலே கால்வைத்து ஏறினமாதிரியாய் மனதில் வலி குத்தியது.
பாம்பைப் பார்த்தார். அது இன்னும் படமெடுத்தபடி அதிலே நின்று சீறிக்கொண்டிருந்தது. தன் இறுதிக்காலம் போல அவரைப்பார்த்து அது தலையை ஆட்டிக்கொண்டிருந்தது.
அதைப்பார்த்த கடுமையான கோபத்தோடு வல்லிபுரத்தார் வேலியடிக்கு விறுவிறுவென்று நடந்தார். ஒரு கையால் கிழுவைக் கிளையை எட்டிப் பிடித்ததிலே மறு கைக்கு நல்ல நீள வளைவுள்ள கிளுவந்தடி உடைக்க ஏலுமாயிருந்தது. அதைக் கையால் அவர் பிடித்து இழுக்க உடைந்தது அந்தத்தடி அதிலே வைத்து தடியின் நுனிக்குழையை ஒடித்துக்கீழே போட்டுவிட்டு கம்பும் கையுமாய்க் குசினிக்கு அவர் போனார்.
சீறிக்கொண்டு நின்ற பாம்புக்கு வலப்பக்கமாக நின்று ஒரே அடி பாம்பு அடியை வாங்கியதும் சுருண்டது. மளமளவென்று அடிக்கு மேல் அடி. வளைந்து கொடுத்த கம்பின் அடிக்கு அது கோணல் மாணலாகச் சுருண்டு பிறகு வயிறும் பிய்ந்து போய்விட்டது. செத்தபாம்பை அவர் தடியில் கொடி போலப் போட்டவாறு தூக்கிக் கொண்டு வெளியில் கொண்டுபோனார். பிறகு வேலியடியில் ஒலை போட்டு பாம்பை அதற்குமேல் போட்டு நெருப்பைக் கொளுத்தி எரித்தார் அவர்.
பாம்பை வல்லிபுரத்தார் அடித்துக் கொன்றதன் பிற்பாடு, அவரின் வீட்டு வளவுக்குள் வந்து புழங்குகிற பாம்புகளெல்லாம், வேலியைத் தவிர்த்து உள்ளே வராமல் வேலிக்கு வெளியே நின்றுவிட்டுப் போகின்ற அளவுக்காய் தங்களை ஆக்கிக்கொண்டுவிட்டன.
கொஞ்ச நாட்கள் செல்லச் செல்ல, வல்லிபுரத்தாரின் குடும்பத்தாருக்கு அவர்கள் வாழ்ந்த அந்த வீடே விளங்காமல் போய்விட்ட அளவில் ஆகிவிட்டது. பாம்பை அடித்துக்கொன்ற காரணத்தால் அந்த வீட்டுக்கு சர்வநாசத்தின் சாபம் விழுந்துவிட்டது என்பதாய் புதூரில் வாழ்ந்து கொண்டிருந்த சனங்களெல்லாம் பேசிப் பறையத்தொடங்கி விட்டார்கள்.
இந்தக்காரியம் நடந்து முடிந்ததற்குப் பிறகு நல்லம்மாவின் மகளுக்கு முற்றாகின அந்தக் கலியாண சம்பந்தமும் குழம்பிப்போய்விட்டது. மகளுக்குப்பிறகு மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வரண் பார்த்துக் கலியாணம் செய்துவைத்தார்கள். அந்தத்திருமணம் நடந்துமுடிந்தும் நல்லம்மாவின் மகளுக்கு பெரியதொரு குறைதான் வாழ்க்கையில் O 230 O ரீ.பி.அருளரைத்தs

தொடர்ந்ததாய் இருந்துகொண்டிருந்தது. பிள்ளை இல்லாத குறை மனசைப்பிழிய அவள் ஏங்கிக் கொண்டே இருக்கிறாள்.
எல்லாக் கவலைகளையும் கண்ணீராக மாற்றிக்கொண்ட நிலையிலே தான் நல்லம்மாவின் வாழ்க்கை விளக்குகளெல்லாம் அணைந்த வீடு போல நல்லம்மா வீட்டார் எல்லாருக்கும் அவர்களது வாழ்க்கையில்
இருட்டு,
அவர்கள் வீடு இருட்டானதைப் போல இருந்தாலும், புதுார் கோயில் திருவிழா என்னவோ வருடாவருடம் களைகட்டிய அளவிலேதான் சிறப்பாக நடந்துவருகிறது.
இவ்வளவு கஷ்டங்களைக் கடந்தும் நல்லம்மா இப்பொழுதும் சாதாரண பெண்ணைப் போலவே இருக்கிறாள். அவள் இப்போது கோயிலுக்குப் போய் கும்பிடுவதே இல்லை. அப்படிக் கோயிலுக்குப் போகாமல் பல ஆண்டுகளாகிவிட்டது அவளுக்கு அவளின் மனதில் கவலைப்புகை ஆலைபோல ஒலமிட்டவாறு இயங்கிக்கொண்டிருக்க, கோயிலுக்குள்ளே போக எப்படி மனம் வரும்? ஆனாலும் திரு விழாவன்று நாலுசனத்தோடு அந்த வெளியிலே தானும் ஒரு பாயை விரித்துப் போட்டுக்கொண்டு இருந்து கொண்டிருப்பது இப்போதைக்கெல்லாம் அவளுக்கு இருக்கின்ற ஆறுதலொன்று. அப்படி அவள் அதிலே இருந்து கொண்டிருக்கும் போது கோயில் மணியின் வெங்கலநாவு ஒரு லய ஒழுங்கில் அசைய அந்த ஓசையை தன் காதில் கேட்கும்போது அவளுக்கு ஒரு சாந்த சுதிகூடியதுபோல மனம் இருக்கும். உறுமிமேள வாத்தியங்களுடன் போகும் காவடி ஆட்டங்களையும் அவள் பார்ப்பாள். ஆனாலும் அதையெல்லாம் பார்த் துக்கொண்டிருக்கும்போது அவளுக்கு அந்த நாட்களில் தனக்கு நடந்த சம்பவங்கள் ஒரு கெட்ட கனவுபோல வந்து கொண்டே இருக்கும். மீண்டும் மீண்டும் அது எழும்போது எப்படி இதையெல்லாம் நான் கடந்துவந்தேன் என்ற வியப்பும் அவளுக்கு ஏற்படும்.
7 گ
செவ்வந்தி வீட்டு வளவுக்குள் நின்ற வீரை மரத்திலும் பாலை மரத்திலும் பூக்கள் துப்பிய காய்கள் வெளிப்பட்டு பல நாட்களாகிவிட்டன. இருண்ட நிழலை ஏற்படுத்தியபடி இருக்கும் கோயில் வளவுக்காட்டுக்குள்ளும் பழமையான அந்த வீரை மரங்களிலே சிலிர்த்துப் போனதாய் நிறையக் காய்கள். அவையெல்லாம் கிளைகளில் பச்சையானவை, பழமானவையாக முதலில் பார்க்கும்போது தெரிந்தன. பிறகு ஒரு
O 23 || O همه aiهان ادعایه فالاچ

Page 122
கிழமைக்குள் முற்றாக அவையெல்லாம் “பொல்” என்ற விதமாகப் பழுத்ததாகிவிட்டன. செவ்வந்தியின் குடிசைக்கு அருகே நின்ற அந்த வீரை மரம் பழுத்ததில் அந்தக் குடிசைக்குச் சூழவாயுள்ள எல்லா மரங்களுக்கும் அதுவே மூத்த காரணர்போல விளங்கியது. அந்த அளவுக்கு இலைப் பச்சையே தெரியாத அளவுக்கு ஒரே சிவப்பு மயமாய் நிறையவே பழங்கள் கிளைகள் பூராகவும் அதிலே காணக்கிடந்தன.
வவுனியாக் கடைத் தெருவிலும் பாலைப் பழவிரைப்பழ யாவாரம் சூடுபிடித்துவிட்டது. வன்னிக் காட்டுப்பகுதியில் வாழ்பவரெல்லாம் அந்த மரங்களின் கிளைகளை வெட்டித் தறித்து அவற்றிலுள்ள பழங்களைப் பிடுங்கி, கடகப் பெட்டிகளிலே நிறைத்துக்கொண்டு வந்து நடைபாதைகளிலும் சந்தைகளிலும் வைத்து, பேணிச் சுண்டில் அளந்து விற்பனை செய்யத்தொடங்கி விட்டார்கள். அந்த வியாபாரிகள் கடகப் பெட்டியில் வைத்துக் கொண்டிருக்கின்ற பாலைப்பழத்தினது வாசனை, நடைபாதையில் போகின்றவர்களுக்கு அவர்களின் சுவாசத்திலே ஏறியதாய்விடும். அந்த சுகந்தத்தை அவர்கள் மெல்ல நுகர்ந்து நுனி நாசி மடலில் ஸ்பரிசித்தபிறகு அதை வாங்கிச் சாப்பிடாமல் அந்த இடத்தைவிட்டுப்போகவே மாட்டார்கள்.
செவ்வந்தியின் குடிசைக்கருகில் நின்ற பாலைமரத்திலும் வீரை மரத்திலும் ஏதோ பாடும் ஒலி போல, பறவைகளின் இரைச்சல்கள் கேட்க ஆரம்பித்துவிட்டன. கொண்டைக்கிளாறு, குக்குறுப்பான், போன்ற பறவைகளுடன் வேற்று ஜாதிப் பறவைகளெல்லாம் அதிலே பழம்தின்ன வந்திருக்கிற போது அவற்றின் ஒலி மட்டும் சற்று சுருதி கூடி இருப்பது போல செவ்வந்திக்கு குடிசைக்குள் இருந்து கொண்டிருக்கும்போது கேட்கும்."
செவ்வந்தியின் குடிசைக்குப் பக்கத்துக் குடிசையிலுள்ள பெண்களெல்லாம் "எங்கவுட்டுக்கும் திங்கிறதுக்கு கொஞ்சம் பழம் புடுங்கிக்க விட்டிடம்மா..?” என்று அவளைக் கேட்கத் தெடங்கிவிட்டார் கள். தேனில் சிக்கிய எறும்பு மாதிரி அந்த மரத்தடியைவிட்டு நகரவே அவர்களுக்கு மனம் வரவில்லை.
"நீங்க மரத்தில்யா ஏறி வேணுங்கிறத கிளையில நுனியால வெட்டி விழுத்திப்புட்டு எடுத்திட்டுப் போங்களேன்.?” என்று செவ்வந்தி அவர்களுக்குச் சொன்னாள்.
"இந்தோம் மாதிரி மலையான ஒரு மரத்திலயா யாருடீம்மா எங்களு மாதிரி பொம்புள யாண்டாளுவ யேறிக்குவா..?”
மரத்தைப் பார்த்துக்கொண்டு கவலையாகச் சொன்னார்கள் அவர்கள்.
О 232 о ரீ.பி.அருளானந்தே

ராக்காயி அவர்கள் அப்படிச் சொல்லவும்தான், துடிக்கும் தொடை களுடன் நின்று, இரண்டு மரங்களையும் மாறிமாறிப் பார்த்தாள்.
"நானு மரத்தில ஏறி வெட்டிக்கவா அக்கா..?” அவள் கேட்கவும் செவ்வந்திக்கு வந்துவிட்டது கோபம்.
நீயின்ன காட்டுப் பொம்புளயாடி மரம் ஏறிக்க.?”
சொல்லிவிட்டு மனதுக்குள்ளும் அவளைப் பேசியபடியே அவள் இருந்தாள்.
"அந்தப் பெரிய மரக்கெட்டுக்காலயா யேறிப்போயி வெட்டினா நெறய பழம் புடுங்கிக்கலாம்” ஒரு கிளையைக் காட்டித்தன் சகோதரிக்குச் சொன்னாள்.
“அதில முசிறு ஒரு பக்கோம் கட்டெறும்பு இன்னொருபக்கோம். மரம் ஏறிக்கயிக்க எறும்பு கடிச்சு சரிஞ்சு நீ விழுந்தின்னா தலை உடைஞ்சிடும்டீ உனக்கு.?”
அவள் சொல்ல மற்றைய பெண்களெல்லாம் மரத்து உச்சத்தைக் கூர்ந்து பார்த்தார்கள். இதிலே பழம் பிடுங்கி இன்றைக்கு சாப்பிடுவது நடக்குமா, நடக்காதா என்றதாய்த்தான் அவர்களுக்கு யோசனை போய்க்கொண்டிருந்தது.
பாலை மரத்திலுள்ள கெட்டியான மஞ்சள் பழங்கள், அவர்களின் மனத்தைத் தன்பக்கம் விசையுடன் இழுத்துக்கொண்டிருந்தன.
கோயில் வளவிலிருந்து சுவாசிப்பதற்கில்லாத காற்றாய் வீசியது. ராக்காயி நாக்கைப் பல்லால் கடித்தபடி சிறிது நேரம் யோசித்தாள். பிறகும் தமக்கையைப் பார்த்து,
"வுடுக்கா நானு ஏறிக்குவனக்கா..?” என்று சொல்லி திரும்பவும் அவளிடம் கேட்டாள்.
“இவ குரங்குமாதிரியா மரம் ஏறிக்குவா. எனக்கு தெரியுண்டி செவ்வந்தி! ஆம்புளங்க மாதிரி ஒண்ட தங்கச்சி துணிஞ்ச ஒரு புள்ள! அவுள விட்டிடண்டி ஏறிக்கிடட்டும் .?” என்று அங்கு வந்து நின்ற பெண்களிலொருத்தி அவளுக்குச் சொன்னாள். தங்கையும் இப்படித்தன்னைக் கேட்கிறாள், இங்கு வந்து நிற்கிற பெண்களும் கூட இப்படியெல்லாம் சொல்கிறார்கள், என்ற நினைப்பில் செவ்வந்தி கொஞ்சநேரம் யோசித்தபடி நின்றாள். தாங்கள் விரும்பிய காரியம் நடைபெறவில்லையே என்ற மனவெறுமைப்
துயரச் சுலப்பண்கள் O 233 O

Page 123
பாட்டுடன் செவ்வந்தியைத் தவிர்ந்த மற்ற எல்லோருமே அதிலே ஒளி இல்லாக் கண்களோடு சோகமாக நின்றுகொண்டிருந்தார்கள்.
பாலைமரத்தில் ஒரு பறவை “உக் உக்” கென்று பேசுகிறதுபோல ஒலி எழுப்பிக்கொண்டிருந்து.
“விட்டிடம்மா செவ்வந்தி இவ மரத்திலயா ஏறிக்கிடட்டும்?” என்று இன்னொரு பெண் சொன்னதும் செவ்வந்தியின் காதில் வந்து விழுந்தது. - “சரிடி கவனோம் கவனோம்” - என்று செவ்வந்தி மரத்தைப் பார்த்தபடி சொன்னாள்.
“என்னக்கா..?”
יין
"அதான் நீ ஏறிக்கிறதுண்ணா ஏறிக்கயிண்ணுறேன்.
என்று அவள் தங்கைக்குச் சொல்ல
"சின்னக்குழந்தைமாதிரி p5 இருக்கிறேடி கவனம்புள்ள. கவனம்புள்ள.”
"ஆமா புள்ள கவனம்டியம்மா” என்று ராக்காயியைப் பார்த்துச் சொல்லிக்கொண்டபடி நின்றார்கள் மற்றப் பெண்கள்.
"இன்னுமாநானுமரத்திலயே கையப்புடிக்கல!ஏறிக்கக்கால வைக்கேல்ல! அதுக்குள்ளயா என்ன கவனோம் கவனோம் எண்ணக்கிட்டிருக்கீங்க?" ராக்காயி தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டபடி, குடிசைக்குள்ளே போய் ஒரு சின்ன வெட்டுக் கத்தியையும் இழைக் கயிற்றுத் துண்டையும் பார்த்து எடுத்துக்கொண்டு அதிலே திரும்பவும் வந்து நின்றாள். கத்தியின் கைப்பிடிக்குக் கீழே கயிற்றால் கட்டிக்கொண்டு, அதைத்தன் இடுப்பில் கட்டிக்கொண்டபோது திருப்தியாய் இருந்தது அவளுக்கு.
“எங்களுக்குண்ணா மரம் ஏறிக்க நெனச்சாலே கையி நடுங்கும். இவளப்பாரு.?” என்று அதிலே நின்ற ஒருத்தி சொல்ல, தனக்குப் பக்கத்தில் நிற்பவள் உண்மையைத்தான் சொல்றாள் என்று புரிந்து சிரிப்பை இழந்து நின்றாள் ஒருத்தி மற்றவர்களெல்லாம் கிளையில்லாத உருண்ட அந்த அடி மரத்திலே, உடும்புப் பிடியாய்ப் பிடித்தபடி மேலே ஏறிக்கொண்டிருக்கும் ராக்காயியைப் பார்த்தபடி நின்றார்கள்.
அவள் மேலே ஏறிக்கிளையிலே கையைப் பிடிக்குமட்டும் தன்
O 234 O ரீ.பி.அருளானந்தே

நெஞ்சைப்பிடித்தபடி நின்றாள் செவ்வந்தி அவள் பொறுப்பாகப் போய்க் கிளையிலே நின்றுகொண்ட பிறகுதான், அவளின் மனம் நிதானமாக இயங்கத் தொடங்கியது. என்றாலும் ராக்காயி விலகக்கூடிய ஒரு இடத்திலேயிருந்து, சிதறித் தெறித்து கீழே விழுந்த காய்ந்த குச்சிகளைக்கண்டு செவ்வந்தி பயந்துவிட்டாள்.
“கவனோம்” - என்று உடனே மேலே பார்த்தபடி தங்கைக்கு அவள் சொல்கிறபோது, உள்ளுக்குள்ளே அவளுக்கு நொதிச்சுப் புளிச்சமாதிரியாய் இருந்தது. இந்நேரம் மற்றப் பெண்களெல்லாம் அந்த மரத்தை ஒரு கடவுளாக நினைத்துக்கொண்டு “அந்தப் பிள்ளைக்கு ஒண்ணும் கெடுதி வந்திடப்புடாது" என்ற நினைப்பிலே தங்கள் கைகளை குவித்துக் கும்பிட்டபடி மேலே பார்த்துக்கொண்டிரு ந்தார்கள். ராக்காயி மேலே மரத்தில் இருந்தபடி கீழே நிற்கிறவர்களை ஒரே ஒரு கணம் பார்த்தாள். பிறகு குரங்கைப் போன்ற லாகவத்துடன் ஏறிப்போய், நன்றாக இலையடர்வுக்குள் பழம் பழுத்துகிடந்த கிளையிலே நின்றாள்.
அந்தக் கிளையில் கொக்குப்போல காலெடியெடுத்துவைத்து முன்னாலே போய்நின்று கொண்டு, இடுப்பில் கட்டிவைத்திருந்த கத்தியின் கயிற்றை அவிழ்த்தெடுத்தாள். கிளையில் மேலும் முன்ன கர்ந்து பார்த்துவிட்டு, கையிலிருந்த கத்தியால் அவள் அதை வெட்டத்
தொடங்கினாள்.
அவள் வெட்டத்தொடங்கவும் கீழே நின்று கொண்டிருந்த பெண்கள் பார்த்துவிட்டு "மொட்டக்கத்தி” என்று குறைசொல்லத்தொடங்கினார் கள். கண்களை மூடிமுடித் திறந்துகொண்டு, வெட்டப்படுகிற கிளை எப்போது விழுமென்று அவர்கள் பார்த்தபடி நின்றார்கள்.
ராக்காயி தன்கைகளுக்குள்ள பலத்தின் எல்லையை மீறி, வைரம் பழுத்த அந்தக் கிளையை தொடர்ச்சியாகக் கத்தியால் வெட்டிக் கொண்டிருந்தாள். கிளையை முக்கால்வாசியான ஆழம்வரை அவள் வெட்டியானதும், இருந்தாற்போல இடிஞ்சு பிளந்து கீழே விழுந்தது அந்த மரக்கெட்டு
“ஒ.” என்று வாயிலொரு ஓசை எழுப்பிக்கொண்டு, விழுந்த கெட்டைச் சுற்றி அந்தப் பெண்களெல்லாம் மொய்த்தார்கள்.
ராக்காயி அவர்கள் அவாவை மரத்திலிருந்தபடியே பார்த்துக்கொண்டு சிரித்தாள்.
"கிளய அங்கிட்டா இழுத்துக்கிட்டுப் போயிடுங்க கீழயா ஒருத்தருமே நிண்ணுக்க வேணாம். நானு அடுத்த கெட்டையும் வெட்டி விழுத்திர்றேன்.” அவள் கீழேயும் மேலயுமாகப் பார்த்தபடி
துயரச் சுரப்பண்கள் O 235 0

Page 124
அவர்களுக்குக் கேட்கும்படியாகச் சொல்லிவிட்டு, தயக்கமில்லாமல் அடுத்த மரக்கிளைக்குப்போகத் தன் காலைத் தூக்கி நீட்டி வைத்தாள்.
கிளையை எடுத்துப்போட்ட இடத்திலிருந்து பெண்களெல்லாம் கைச்சுறுக்காக தங்களுக்குத் தங்களுக்கென்று பாலைப்பழத்தைப் பிடுங்கிக் கொண்டிருந்தார்கள். பால்பிசுக்கோடு உள்ள அந்தப் பழங்களை வாயில் போட்டுக்கொள்வதும், கொண்டுவந்த ஒலைப் பெட்டிக்குள் போட்டுக்கொள்வதுமாக அவர்களது கவனம் இருந்து கொண்டிருந்தது.
செவ்வந்தி ஒரு ஒரமாய் நின்று மரத்திலேறி நின்றுகொண்டிருக்கிற தன் தங்கச்சியையே பார்த்துக்கொண்டிருந்தாள். தன் கண்கள் சற்று அசைந்தால்கூட அவள் மாறுபட்டுப்போவாள் என்ற பயம் அவளுக்கு. அவளுக்குத் தன் சகோதரியை "கீழே மரத்தால் இறங்கு” என்று சொல்லவும் நா எழவில்லை.
“நீ கவனம்!” என்று சொல்லவும் வாய் திறக்க முடியவில்லை. மரத்திலே ஏறி இருப்பவளுக்குக் கீழே இருந்து ஒன்றும் சொல்லி மனத்தைக் குழப்பக்கூடாது என்ற அளவில், அவள் வாய் அடைத்துப் போன கணக்கில் நின்றுகொண்டிருந்தாள்.
ராக்காயி கால்வைத்த கிளையில் அவளால் சமநிலை கொள்ளமுடிய வில்லை. என்றாலும் அவளுக்கு திடமான அடிவயிறாயிருந்தால் கால்களையும் உறுதியாக வைத்து, அந்தக் கிளைக்கு மேலே அவள் நடந்து போனாள். அந்த ஆட்டம் நிற்பது வரை அவள் சிறிது நேரம் நின்றாள்.
இவ்வேளை கிளை அசையவே இல்லை. அது திடமாக நின்று கொண்டிருந்தது. அவளுக்கு மார்பும் கழுத்தும் இடுப்பும் சூடாகத் தகித்தன. இடுப்புக்குள் ஏதோ கனமாக அவளுக்கு அழுத்துவதுபோல இருந்தது. வயிற்றுக்குள்ளும் ஏதோ ஒரு வலியாய் அவளுக்கு இருந்தது. ஒரு கணத்தில் தணிந்து கனிந்தன மாதிரியான வலிகள்.
அவள் அவைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் பற்களை கிட்டித்த படி வைத்துக்கொண்டு, பழங்கள் நிறைந்திருந்த அந்தக் கிளையை கத்தியால் வெட்டத்தொடங்கினாள். அவள் தன் கையை முஷ்டி பிடித்தமாதிரி வைத்துக் கொண்டு பலமாக கத்தியால் வெட்டியதில், சில கணத்திலே தறிபட்டுக் கீழே விழுந்துவிட்டது அந்தக் கெட்டு.
ராக்காயியுடைய கால்களில் அப்போது வந்து முசுறுகள் மொய்த்தன. அவள் காலை ஆட்டாமல் ஒரு தூண்போல அந்தக் கெட்டில்
o 236 O #:0.9emojs

நகர்ந்துபோய், மேலே உள்ள கிளையை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். பிறகு மறுகையால் காலில் ஒட்டினமாதிரியாய் கடித்துக் கொண்டிருந்த எறும்புகளைத் தட்டினாள். எறும்புகள் அழுந்தியிருந்தது தோலில் அவளுக்கு எரிச்சலைக் கொடுத்தது. அந்த எரிச்சல் மறையவிட்டு அவள் கீழே பார்த்தாள்.
“இதுங்க ரெண்டு கெட்டுத்தான் உங்களுக்காக்கும்.! இனி வெட்டிக்கப் போறது எங்களுக்குத்தான்.! புரிஞ்சுதா.?” என்று அவர்களைப் பார்த்து அவள் சொன்னாள். அவர்கள் தொண்டையில் சவ்வுப் படலம் கட்டினது மாதிரி "ஆமா சரி” என்று சத்தமில்லாமல் சொன்னார்கள். அவர்களுக்கு இன்னும் அவள் தங்களுக்கு பழக்கெட்டுக்கள் வெட்டிப்போடவேண்டும் என்பதாய் மனம்! அதனால்தான் அவர்களுக்கு குரல்கள் விலகிப்போய்விட்ட மாதிரியாக இருந்தன.
"பாலைப்பழம் ராக்காயி, நல்ல மஞ்சேஞம் பளிங்குப்பழமாயி மிருக்கு”
அப்போது ஒரு பெண் தலையை மேலே உயர்த்தி அவளைப்பார்த்துச் சொன்னாள்.
"அப்புடீண்ணா நானு வெட்டிப்போட வெட்டிப்போட நீ கீழயா நிண்ணுக்கிட்டு கால்சாக்கு ஆஞ்சுக்குவியோ..?”
ராக்காயி அவ்விதம் சொல்ல செவ்வந்திக்கும் அவர்கள்மேல் கோபம் வந்தது. அவளும் பொசுங்கிச்சீறினாள்.
“இவ்வேளவும் தான் ஓங்களுக்கு. இனிமேலயா காணும். எல்லாத்தி யும் வெரசா நீங்க புடுங்கிப்புட்டுப் போயிடுங்க.?”
அவள் சொல்லவும் ஒன்றும் வாய் பேசாமல் இருந்துகொண்டு உள்ள பழங்களையெல்லாம் பிடுங்கி முடித்துவிட்டு அவர்களெல்லாம் கையில் பெட்டியுடன் எழுந்து நின்றார்கள்.
“இதுங்களையெல்லாம் நீங்களே வெளியால இழுத்துக்கிட்டுப்போயி அந்தச் சாம்பலு மேட்டிலயா போட்டுட்டுப் போயிடுங்க.?”
வெட்டிப்போட்ட கிளைக்கெட்டுகளை அவள் கையால் சுட்டிக் காண்பித் தபடி சொன்னாள். அவள் இவ்விதம் சொல்லிவிட சில நிமிடங்கள் அதிலே நின்று கொண்டிருந்த பெண்களுக்கெல்லாம் தவிப்பாக இருந்தது. அவர்களுக்கு மனமில்லைத்தான். என்றாலும் இனி நின்று இதிலே தங்களுக்கு ஒரு பிரயோசனமுமில்லை. சகோதரிகள்
g aംuഷ്ട്. O 237 O

Page 125
இரண்டுபேரும் சேர்ந்து தங்களை கோபமாகவும் பேசுவார்கள் என்று நினைத்துவிட்டு அந்த மரக்கெட்டுக்களை இழுத்துக்கொண்டுபோய்
சாம்பல் மேட்டிலே போட்டுவிட்டு, அவர்களெல்லாம் தங்கள் குடிசைகளுக்குப் போய்விட்டார்கள்.
ராக்காயி நிறையப் பழம் கிடந்த கெட்டு ஒன்றைத் தெரிந்து பிறகு அதைக் கத்தியால் வெட்டத் தொடங்கினாள். மூச்சுவாங்கியது. அவளுடைய உடம்பு வியர்த்தது. சிறிதுநேரம் மரக்கெட்டிலே அமர்ந்திருந்தாள். பிறகு இறுக்கிக் கத்தியால் வெட்டத் தொடங்கினாள். 'டபுக்”கென்று அந்தக் கெட்டு உடைந்து கீழே விழுந்தது. அவள் கையிலிருந்த கத்தியைக் கீழே போட்டுவிட்டு, முன்பு மரத்தில் தான் ஏறின வழியூடாகவே இறங்கும்போதும் பார்த்துப் பார்த்துக் கீழே மலைப்பாம்புபோல வழுக்கி இறங்கினாள்.
கீழே இறங்கியதும் இடுப்புப் பாவாடைக்குள் தன் கட்டை விரலைப் போட்டு இழுத்து சரி செய்தபடி,
"கையோட வீரப் பழமும் கொஞ்சம் ஆஞ்சுக்க மரத்திலயா ஏறி வெட்டிக்கவாக்கா..?” என்று அவள் செவ்வந்தியைக் கேட்டாள்.
“போடி போடி இன்னுமா நீ மரம் ஏறிக்கிறதுக்கு நிக்கிறே? இது இண்ணிக்கி நமக்கு தின்னுக்கக் காணும்தானே.?”
"அட நமக்குண்ணு இல்லக்கா இப்ப நானு சொல்லிக்கிறது.?”
"அப்புறம் வேற யாருக்கடி.?”
“இது அவருக்காக்கும்.!”
"அவருக்குண்ணா எவருக்கு.?”
"உனக்கு விருப்பமானவருக்குத்தான்."
"அதாருடி சனியனே நீ இப்பிடியெல்லாம் சொல்லுறே.?”
"உன் மனசு எனக்குத் தெரியாதா..? நீ யாரிய உன்மனசிலயா வைச்சிக்கிட்டு யோசினேல இப்பவா திரியிறே எண்ணுறது எனக்கு வெளங்காதா..?” ராக்காயி குனிந்து கீழே குந்தி இருந்தவாறு, தரையின் மண்ணில் ஒரு குச்சியை எடுத்துக்கிளறியபடி இதைக்
கேட்டாள்.
தங்கை இதைக் கேட்கவும் செவ்வந்திக்கு மனத்தின் மிக ஆழத்தில் ஒரு தீண்டல். உடனே பெருமூச்சுவிட்டாள். ராக்காயி நிமிர்ந்து O 238 O ரீ.பி.அருணானந்தே

அவளின் முகத்தைப் பார்த்தாள். ஒரு கணம் ராக்காயியின் கண்களும் செவ்வந்தியின் கண்களும் தொட்டுவிலகின, செவ்வந்தியின் முகமாற்றத்தைக் கண்டுவிட்டு சிறு கன்னக்குழி விழ மிக அழகாக அவளைப் பார்த்துச் சிரித்தாள் ராக்காயி.
“என்னடி ஒரு சிரிப்பு என்னப்பார்த்து நீ சிரிச்சிக்கிறாய்..?”
உணர்ச்சியான பார்வையோடு, சத்தமே இல்லாமல் கேட்டாள்
செவ்வந்தி
“எனக்கு எல்லாமே தெரியுமுக்கா? நீ எனக்கு மறைச்சுக்காத.?” என்று ராக்காயியும் குரலைத் தாழ்த்தி அவளுக்குச் சொன்னாள்.
செவ்வந்திக்குப் பதற்றம் ஏறியது. "என்னடி நீ இப்புடீல்லாம் சொல் லுறே? அவுங்கெல்லாம் யாரு யாரோ ஆளுவ..? நாங்கெல்லாம் அப்பிடி நெக்கிறதே பெரிய மோசம்டி..?”
“என்ன மோசம்! நீ இப்ப பழைய மாதிரியே இல்ல. எதை எதியே நெச்சிக்கிட்டு நீ சில நேரவாட்டி அங்கிட்டும் இங்கிட்டும் குந்திக்கிட்டிருக்கிறத நானு பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன். அவரு அந்த ஐயாவுக்குத்தான் உன் மேலயா ஒரு மாதிரி அவரும் உன்னைய அங்கிட்டு நாம குளத்துக்குக் குளிக்கப்போறப்போ பாக்கிறப்ப வெல்லாம் நானும் கண்ணுக்கிட்டுத்தான் இருக்கேன். அவரு பாத்தா நல்லவருமாதிரித்தான் இருக்கு. சாதி சமயமெண்ணும் அவரு பாத்துக்க மாட்டாராம்.! அப்புடித்தானே அண்ணைக்கும் அவரு சொன்னாரு..? அதனால சொல்லுதேன் கேட்டுக்கோ.?”
“என்னடி சொல்லப்புறே.?”
“ஒனக்குப் பிடிக்காட்டி விட்டிடு! அப்படி அவர ஒன் மனசுக்குப் பிடிச்சுதுண்ணா.”
“பிடிச்சுதுண்ணா..?”
“முதல்ல இதய கொண்ணுகிட்டுப் போயி அவருக்கிட்டக் குடுத்திக் குவம். அவருக்கும் பழந்திண்ணுக்க விருப்பமாயிருக்குமில்லே.?”
"அவருக்கு இதெல்லாம் விருப்பமாயிருக்குமுண்ணு உனக்கு எப்பிடீயடி தெரியும்.?” கண்கள் குளிர்ந்த நிலையிலே அவள் கேட்டாள்.
“இதத் திண்ணுக்க விருப்பமில்லாத மாதிரியா யாரும் இருப்பாங்களா..? அதவிட அண்ணைக்கு அவரு பாவக்காகூட காட்டுக்கயாப்போயி புடுங்கிக்கொண்ணாந்துவச்சிக்கிட்டு அப்புறம் எங்களுக்குக் குடுத்தாரே? அவரு அப்புடியா எங்களுக்குக் குடுத்ததுக்காச்சும் நாம அவருக்கு
zugă severăsă o 239 o

Page 126
ஏதாச்சும் குடுத்துக்க வேணாமா..?” ராக்காயி இவ்விதமாகவெல்லாம் சொல்ல செவ்வந்தி இந்த உலகத்தொடர்பே இல்லாத ஒரு கனவுப் பாவனையோடு நின்றாள். செல்வநாயகத்தினது வீணை இசையில் மூழ்கியதாய் தான் எங்கோ நடந்து கொண்டிருப்பது போல ஒர் இசைவு அவளது எல்லா சலனங்களிலும் இருந்தது.
“நல்லா இருக்கு நானு எதையோ சொல்லிக்கிட்டிருக்கேன். நீ எதையெதையோ யோசிச்சுக்கிட்டிருக்கே.?” சொல்லிவிட்டு ராக்காயி கிளுகிளுவென்று சிரிக்க ஆரம்பித்தாள்.
"ஆசையிருந்தா மட்டும் போதாதுக்கா அதுக்கு கொஞ்சம் உனக்குத் துணிவும் வேணும்.?” என்று பிறகும் சொன்னாள் அவள்.
"நீயின்ன எளவு பேச்சு இப்பவா பேசுறேடி.?” “எனக்கு தோணியத சொன்னேன்! அது என் பிழயா..?” “பெண்ணா பொறந்தா கண்ணிருதாண்டி.!” “சும்மா போ உபதேசம் ஒண்ணும் செய்ய வேணாம் எனக்கு.?” “இந்தச் சேரியில பொறந்தவளுங்க நாங்க கவனமாதானேடி இருக்கணும்.?”
அவளின் குரல் ராக்காயியை சற்றுத் தணிய வைத்தது. “வேணாமா நீ அவரோடயா பேசவேணாமா..?”
ዘ”
“வேணாம்! இப்பிடியே நான் இருக்கட்டும்.
"அதில்ல நான் ஒன்னயக்கேக்கிறேன் ஒரு கேள்வி..? அவர உனக்கு பிடிச்சிருக்கா..?” செவ்வந்தி தலையைத் தாழ்த்தினாள்.
"அப்போ பிடிச்சிருக்கு ஒனக்கு..!"
“வேணாண்டி’
"சும்மா இரு இந்த முகத்த நீ அவரிட்டயா காட்டாத.? சிரிச்சுக்கிட்டு சந்தோஷமாக்கத. நானு ஒனக்கு ஒன் தங்கச்சி இருக்கிறனே எல்லாத்துக்கும்”
ராக்காயி அப்படிச் சொல்ல தன்வளையல்கள் அடர்ந்த ஒரு கையால் தங்கையை பாசத்தோடு அணைத்தாள் செவ்வந்தி அது ராக்காயிக்கு இதமான அணைப்புப்போல இருந்தது. அவளுக்கு மரத்திலேறியதால் ஏற்பட்ட களைப்பே தன்னைவிட்டுப் பறந்துபோனமாதிரியாக
о 240 о ரீ.பி.அருணானந்தே

இருந்தது.
"அப்பம் நானு இந்த மரத்திலயா ஏறி வெட்டிக்கவா அக்கா..?” என்று தமக்கையின் அணைப்பில் இருந்தபடியே அவளைக் கேட்டாள் ராக்காயி. அவள் கண்களை விரித்து ராக்காயியைப் பார்த்து "கவனம் டியம்மா..” என்றாள்.
ராக்காயி உள்ளங்கையை பாவாடையில் அழுத்தித் துடைத்துக்கொண்டு கத்தியைத் தன்னுடன் எடுத்துப் போகாமால் அந்த வீரை மரத்தில் ஏறத்தொடங்கினாள்.
வடிவ அமைப்பில் பாலை மரத்துக்கும் வீரை மரத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் உண்டு. பாலை மரம்மேலே கை நீட்டியது போல கெட்டுக் களைக் கொண்டதாய் விரிந்திருக்கும். பெருமரமாகவும் அது வளரும். ஆனால் வீரை மரமோவென்றால் கெட்டுக்களைத் தன்னிடம் அதிகம் ஒடுக்கிக்கொண்டதாகவே காட்சியளிக்கும். இருந்தாலும் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை பலவுண்டு. இலை இரண்டுக்கும் தடித்ததுதான். மரமும் வைரம் பொருந்தியதுதான். காட்டின் மாறாப் பசுமையூடாக ஆனி ஆடி மாதங்களிலே மொத்தப் பரப்பிலும் பழங்களைச் சொரிந்து கொண்டிருப்பவை இந்தமரங்கள்.
ராக்காயி வீரைப் பழத்தின் மென்மையான மணத்தை மூக்கில் பிடித்த படி, ஓரளவு உயரம் அளவு அந்தமரத்தில் ஏறியதாய் விட்டாள். "அதெய ஓடச்சிப் போடும்மா நல்லபழோம் அதிலயாக் கெடக்கு” என்று கீழே நின்றபடி சொன்னாள் செவ்வந்தி இலைச்சடைவான அந்த மரத்திலே தமக்கை எதைச்சொல்கிறாள், என்று ராக்காயிக்குத் தெரியவில்லை.
“இதயா?”
"இல்ல அதெ?”
“இதானா?”
"உன்கையால இப்ப பிடிச்சிக்கிறே." அவள் அதை உடைத்துக்கீழே
போட்டாள்.
“96öflu III...?"
"உன் கைக்கு மேலால இருக்கே அவிடெத்த?”
அவள் காட்டிய கெட்டு, குற்றுச்செடிபோல இருந்தாலும் இலைகள் கிளைகளுடன் ஒட்டியிருப்பது போலே அதில் நிறையப் பழங்களாயி
glugið aristövazňsači o 24 l O

Page 127
ருந்தன. அவள் அந்தக் கெட்டை உடைத்தாள். அவள் அதை கீழே போடும்போது, “இன்னும் ஒண்டய தல உச்சிக்கு மேலயா ஒரு கெட்டு இருக்கு.?”
என்றாள் அவள்.
ராக்காயி அவள் சொல்லியதைக் கேட்டு மேலே ஏறிப்பார்த்து மரத்தோடு ஒட்டி எழுந்திருந்த அந்தக் கெட்டை உடைத்துக்கீழே போட்டாள். அவள் கிளைகளைக் கையால் உடைக்கும்போது, நன் றாய்ப் பழுத்த கருஞ்சிவப்பு நிறமான பழங்கள் உலுர்ந்து நிலத்திலும்
கொட்டுப்பட்டன.
ராக்காயி கொஞ்சம் பழம் பிடுங்கி வாயிலும் போட்டுக்கொண்டாள். பழத்தை சுவைத்துச் சாப்பிடும்போது நல்ல ருசியாகத்தான் அவளுக்கு இருந்தது. துவர்ப்புக்கலந்த புளிப்பு இனிப்பின் பல்வேறு ஜாடைகள் அவளின் நாவில் கலந்து சுவை கூட்டின.
அவள் மரத்திலிருக்கும்போது ஒரு பக்கம் மட்டும் வெயில் விழுந்து கண் கூசும்படி ஒளிவிட்டது. அதை அவள் கண்டுவிட்டு, "அக்கா பொழுதுபட்டு இருட்டாயிடும்போல கிடக்கு நேரமாச்சுண்ணா நாங்க அங்கிட்டும் போயிட்டு வர ஏலாமலும் போயிடும். அதுக்குளயா அப்பாவும் இங்க வீட்டுக்கும் வந்திடும். அதால காணும் நானு கீழ இறங்கிக்கவா..?” என்று ராக்காயி தமக்கையைப் பார்த்துக் கேட்டாள். அவளும் உடனே தங்கை சொன்னதை நினைத்துப் பார்த்துக் கொண்டு, "ஆமாம்மா நீ சொன்னதுதான் சரி.! நீ மரத்தால இப்ப மொள்ளவா இறங்கி கீழ வந்துடம்மா." என்றாள். தமக்கை அப்படிச் சொன்னதும் தான் ராக்காயி வீரமரத்தின் முரட்டுக் கிளைகளை ஒவ்வொன்றாகப் பிடித்துப் பிடித்துக்கொண்டு, அவைகளில் மோதி மோதி இறங்குவது போல விரைவாக கீழே இறங்கி வந்தாள். அவளுக்கு சந்தோஷமோ என்னவோ, கீழே இறங்கி வந்ததும் வாயில் சிவப்புப் பல்லுடன் தமக்கையைப் பார்த்துச் சிரித்தாள். "ஒரே வீரப்பழ நெறமா வாயி கிடக்கு ஒனக்கு.” என்று தங்கையைப் பார்த்துச் செவ்வந்தி சொல்ல, ராக்காயி: "அதெல்லாமே கெடக்கட்டும் கெட்டுக்கெட்டா இதயெல்லாம் வெட்டிக்கிட்டுப்போயி அவருகிட்ட குடுத்துக்குவம். ஆனா நம்ம
O 242 O ரீ.பி.அருளரைத்தே

கையால தொட்டுப் பிடுங்கி இதுங்கள கொண்ணுட்டுப்போயி குடுத்துக்க வேணாம்.!” என்றாள். செவ்வந்திக்கும் ராக்காயி சொன் னது சரியாகப்பட்டது. என்றாலும் சோணமுத்துவை நினைத்ததும் அவளுக்கு மனத்தில் பயம் பிடித்துக்கொண்டது. அவள் நாக்கை மிகவும் சிரமப்பட்டு அசைத்து "சோணமுத்து இதால சில நேரவாட்டி வந்திட்டா என்னடி செஞ்சுக்கிறது” என்று தங்கையைக் கேட்டாள். முகம் அவளுக்கு அழப்போவது போலிருந்தது. ராக்காயி உடனே வியர்வை வழுக்கிய தன் உருண்டையான மென்மையான கையால் தமக்கையின் கையைப் பிடித்தாள். “பயந்துக்கிட்டு நீ சாகாதேக்கா இந்த நேரவாட்டி மாமா இங்கிட்டுப்பக்கம் வராதுண்ணு எனக்கு நல்லாவே தெரியும். நீ பேசாம இருந்துக்க.?” என்று சொல்லிவிட்டு அந்தக் கெட்டுகளில் சிறிய சிறிய கிளைகளாகப் பார்த்து அவள் கத்தியால் அவைகளை வெட்டி எடுத்தாள். பிறகு அவைகளையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து அவள் கயிற்றால் இறுக்கிக்கட்டினாள். அப்படிக்கட்டிவிட்டுப் பார்க்கும்போது பளபளவென்று அதிலே பழங்கள் அழகாக இருப்பதுபோலத்தான் அவர்கள் இருவருக்கும் தெரிந்தன.
"அக்கா நீ ஒரு கட்ட ஒனக்குக் தூக்கிக்க?” என்றாள் ராக்காயி.
செவ்வந்தி வாய்மீது கை வைத்து சும்மா அவளைப் பார்த்தவாறு நின்றாள். திரும்பவும், "எடுத்துக்கக்கா நேரம் போவுது?” என்றாள் அவள்.
செவ்வந்தியிடமிருந்து “உம்.” என்று குரல் வந்தது.
அவள் கையிலே அந்தக் கட்டைத் தூக்கிக்கொண்டு தங்கையை ஒரு குறிப்பிட்ட விதத்தில் தலை சரித்துப் பார்த்தாள்.
"ஐயோ உன்னோட பெரிய தலயிடி முன்னாலயா நடக்கா” என்றாள் ராக்காயி.
செவ்வந்திக்கு அவள் உடம்பெங்கும் உள்ளிருந்து பொங்கிவந்த துடிப்புத் துள்ளியது. கையில் இருந்த கட்டுடன் செல்வநாயகம் இருக்கின்ற காவல் கொட்டிலுக்கு துள்ளி ஓடவேண்டும் போல அவா மனத்தில் இருந்தது. ஆனால் அவை ஒன்றையும் தங்கையிடம் வெளிக்காட்டாத அளவிலே அவள் மெதுவாக முன்னால் நடந்து கொண்டிருந்தாள். முற்றத்துப் படலைத் திறந்ததும் ராக்காயியும் செவ்வந்தியுடன் சேர்ந்து ஒன்றாக நடக்கத் தொடங்கினாள். செவ்வந்திக்கு நடந்து கொண்டிருக்கும்போது யோசனையாயிருந்தது. செல்வநாயகம் தன்னுடன் கதைத்தால் தான் எதையெல்லாம் பதிலாகச் சொல்லவேண்டும்’ என்று அவள் அந்தச் சொற்களுக்காகத் துழாவித்துழாவிக் கொண்டிருந்தாள். செவ்வந்தி என்னவோ தங்கையின்
selugš svůuaňseň o 243 O

Page 128
துணிவுடன்தான் குடிசையில் இருந்து புறப்பட்டு வந்தாள். ஆனால் செல்வநாயகத்தின் காவல் கொட்டில், நடந்து கொண்டிருக்கும்போது அவளுக்கு நெருங்கியதாய்வர, உணர்வுகள் அனைத்தும் அடங்கி ஆழமான வெட்கம் அவளைத் தின்றுகொண்டிருந்தது.
乙夕
தன் கொட்டில் வாசலருகே "என்ன பைத்தியம் இது வாக்கா நீ.?” என்று யாரோ ஒரு பெண் எவரையோ பார்த்துக்கூப்பிட்டுக்கொண்டு நிற்கும் குரல் செல்வநாயகத்தின் காதுகளில் கேட்டது.
ஒரு கணம் ஏதும் புரியாமல் "யார்?” என்றான் உள்ளே இருந்த படியே.
"நாங்க தானுங்க?" என்று முன்பு அவன் கேட்ட அந்த மென்மையான குரலிலேயே அவனுக்கு வெளியாலேயிருந்து பதிலும் வந்தது. செல்வநாயகத்துக்கு தான் கேட்ட அந்தக் குரல் இப்போது பரிச்சய மானது போலத் தெரிந்தது. அவன் வாசலடிக்கு வந்தான். திறந்து கிடந்த கதவுக்குக் கொஞ்சம் அருகிலே ராக்காயியும் செவ்வந்தியும் நின்று கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது.
இருவரின் கையிலும் அவர்கள் வைத்துக்கொண்டிருந்த ஒளியுள்ள பச்சை இலைக் கெட்டுக்களையும் பார்த்தான். அதிலே உள்ளவை வீரைப்பழமும் பாலைப்பழமும் என்று உடனே அவனுக்குத் தெரிந்தன. அவன் புன்னகையுடன் “உள்ள வாங்க?” என்று அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டான். அப்போது அவன் பார்வை செவ்வந்தியில் உறைந்திருந்தது. செவ்வந்தி வெட்கத்தில் தலையைச் சற்றுக் குனிந்திருந்தாலும் விழிகளை மேலே உயர்த்தி செல்வநாயகத்தின் கண்களைப் பார்த்தாள். அவனின் பார்வையை தன்னிடத்திலே அவள் உள்வாங்கிக்கொண்டபோது அவளின் உடல் முறுக்கப்பட்ட கயிறு வடம் பிரிவது போல ஒரு கணம் நெளிந்தது.
"இண்டைக்கு நல்ல நாள்! நான் நினைச்சதெல்லாம் நடக்கும் எண்டு யோசிச்சுக்கொண்டிருந்தன்! அதான் நீங்களும் வந்திருக்கிறீங்க போல?” - என்று அவர்கள் இருவருக்கும் சொல்லிவிட்டுச் சிரித்தான் செல்வநாயகம்,
"அப்புடீண்ணா நாங்க வர்றதும் பேசுறதும் உங்களுக்கும் விரும்பந்தானுங்களா?” ராக்காயி உணர்ச்சிகளின் அசைவுகளோடு கேட்டாள்.
O 244 O ரீ.பி.அருளரைத்தச்

“பின்னப் பொய்யா சொல்லுறன்! நீங்க அக்காவும் தங்கச்சியுமா எவ்வளவோ ஒற்றுமையாயும் பாசமுமாயும் இருக்கிறமாதிரித்தான் எனக்குப் பார்க்கேக்க தெரியுது. அதால உன்னை எனக்கு உங்கள் ரெண்டு பேருக்குள்ளாலயும் ரொம்பவும் பிடிச்சிருக்கு.” என்று அவன் ராக்காயியைப் பார்த்துச் சொல்ல.
“அது மட்டும்தான் உண்மையுங்களா அய்யா? எங்க அக்காவ உங்களுக்குப் பிடிக்கேலிங்களா?” என்று அவள் உடனே கேட்டாள். தங்கை அப்படிக் கேட்ட கேள்வியோடு செல்வநாயகத்தின் முகத்தைப் பார்த்தாள் செவ்வந்தி அப்போது அவள் கண்களுக்குள் ஒரு பார்வையும் புன்னகையும் மின்னி மறைந்தன.
செல்வநாயகமும் அதைக் கண்டுகொண்டான். அவனுக்கும் ஒரு குளிர்ச்சுனை உள்ளுக்குள் ஓடியது மாதிரி இருந்தது.
“உனக்குத் தெரியுமோ தெரியாதோ? பிரியத்தை வெளிக்காட்ட இயலாத ஒருத்தரிட்டத்தான் அப்பிடியாய் அதிகப் பிரியமும் அப்படியான ஒருவரிட்ட இருந்து கொண்டிருக்கும்.!” அவன் சொல்லவும்,
"அப்புடீன்னா எங்க அக்காவையும் உங்களுக்கு பிடிக்குங்களா..?” என்று அவள் ஆவலோடு கேட்டாள்.
செவ்வந்தியின் கண்கள் மீண்டும் ஒளிவிட்டது. "உண்மையைச் சொன்னா உன்ரை அக்காவை என்ர மனசுக்கு நல்லாப் பிடிச்சிருக்கு” என்று அவன் சொல்லவும் "ஐயோ” என்று மெல்லக்கூறினாள் செவ்வந்தி அந்நேரம் இருவர் கண்களும் மிக நுட்பமாக ஒருமுறை உரசிக் கொண்டன. “உங்க அக்கா என்ன இப்படி எடுத்ததுக்கெல்லாம் பயப்புடுறா?” என்று ராக்காயியைக் கேட்டான் அவன். “உங்களுக்குத் தெரியாதுங்க இவ எப்பவும் அப்படித்தானுங்க! எதுண்ணாச்சும் இவ உடன பயந்து போயிடுவாங்க.!” என்று அவள் அவன் கேட்டதுக்குச் சொன்னாள். “எதுக்கும் இப்படி சும்மா பயந்து நடுங்கினா எப்பிடி?” என்று பிறகும் கேட்டான் அவன்.
"அதாங்க நானும் எங்க அக்காவுக்குச் சொல்லிக்கிறது. இப்புடியா
எடுத்ததுக்கெல்லாமா பயந்துக்குண்ணு நடுங்கிக்கிட்டிருந்தா நாம இந்த ஒலவத்தில சீவிச்சுக்கிட ஏலுங்களா?”
“அதானே நீ குழந்தை மாதிரியா இருந்தாலும் எவ்வளவு துபேரகேச0uவீர்கள் O 245 O

Page 129
துணிவாயிருக்கிறாய்? நீ கெட்டிக்காரிதான்.! என்ர மடத்தனம் உங்கள் ரெண்டு பேரின்ரயும் பேரையும் நான் இவளவு நேரமாயும் கேக்கேல்ல நீங்களும் உங்கட பேர்கள எனக்குச் சொல்லேல்லயே!”
"அதுக்கென்னயா அவசரம்! நாங்க எங்கூட்டுப் பேருங்கள அப்புறம் சொல்லிக்கிறம்! அதுக்கு முன்னாடி, ஐயாவூட்டு பேருவ எங்களுக்குச் சொல்லிக்கிங்க கேட்டுக்குவம்.?” என்றுவிட்டு அவள் தமக்கையைப் பார்த்துக்கொண்டு சிரித்தாள்.
"நீ கிழவிமாதிரி கதைக்கவிட்டா நீட்டி முழங்குவாய் என்ன” என்று சொல்லிக்கொண்டு செல்வநாயகமும் இருவரையும் பார்த்தவாறு சிரித்தான்.
"நீ சும்மா இருடி கொஞ்சம்..!" என்று அவளை அதட்டினாள் செவ்வந்தி
“பாருங்கய்யா அக்காவ இப்ப நான் என்னதான் சொன்னேன்.? ஐயாவூட்டு பேரைத்தானே நானு கேட்டேன்.?”
“அதானே நீ கேட்டது ஒண்டுமே பிழையில்ல.என்ரபேர்தானே உனக்கு இப்ப தெரியவேணும்.என்ரபேர் செல்வநாயகம்! போதுமா?” என்று அவளுக்குச் சொன்னான் அவன்.
"அம்மாடி உங்களுக்கிண்ணா அழகான பெயருதான். ஆனா எங்க வூட்டுக்காரங்க எல்லாம் எங்களுக்கும் அவங்களுக்குமா ராக்காயி, மூக்காயி மாடன், வீரெனண்டுதான் பெயருவள வைச்சிக்குவாங்க..! எனக்குந்தான் பாருங்களேன்! என்பேரு ராக்காயி! ஆனா அக்கா பேரு மாத்திரம் யேன் வூட்டுப்பேரில இருந்து கொஞ்சமூண்டு ஒசத்தி! இவஷ்பூட்டுப் பேரு செவ்வந்தி இவபேரு உங்களுக்கு எப்படி? உங்களுக்குப் பிடிச்சிருக்காய்யா..? நல்லா இருக்குங்களா எங்க பேருவ..?”
அவள் சின்னக்குழந்தைபோல ஆதுவாதில்லாமல் கேட்டாள். "பெயரில என்னதான் இருக்கு? இந்த மனம் தான் ஒருவருக்கு நல்லதாயிருக்கவேணும். நீங்க அக்கா தங்கச்சி இரண்டுபேருமே சூதுவாது எண்டு ஒண்டும் இல்லாதனியள். அதுதானே பெரிசு.?”
செல்வநாயகம் இவ்விதம் சொல்ல, அதை ஒரு தொலைதுார அருவியின் ஒலியைக்கேட்பதுபோல தன் கவனத்தைக் குவித்து வைத்தபடி செவ்வந்தி கேட்டாள்.
சகோதரிகள் இருவருக்கும் இதுவரையில் இருந்து கொண்டிருந்த
О 246 o. ரீ.பி.அருணானந்தே

இறுக்கம் முற்றாகப் பறந்து விட்டது.அவர்கள் இருவருக்கும் இனிமை
யான மனப்பாரம் ஏறியது.
"ஜயா உங்களுக்கு எங்கவுட்டு மரத்திலயாவுள்ள பழம் கொஞ்சமூண்டு புடுங்கிக்கிட்டு கொடுக்கவுண்ணு இங்கிட்டா வந்தோமுங்க..” என்று
சொன்னாள் ராக்காயி.
ராக்காயி இதைச்சொல்லவிட்டு, செவ்வந்தியும் ஏதோ செல்வநாயகத் துக்கு சொல்லவேண்டுமென்று உதடுகளில் வரியைச் சொல்லிச் சொல்லிப் பார்த்தாள்.ஆனால் பெருமூச்சு விடுவதும் அந்தவரியை மீண்டும் மீண்டும் வாய்க்குள்ளே சொல்லிக்கொள்வதுமாக இருந்தாளே அல்லாமல், ஒன்றுமே அப்போது வாய்திறந்து வெளியே அவளால் கூறமுடியாதிருந்தது. என்றாலும் அவள் கஷ்டப்பட்டு தணிந்த குரலாக ஒரு சொல் சொன்னாள்.
“எங்கூட்டு மரம்தாங்க”
அவள் வாய்திறந்து இதைச்சொல்லவும் அவள் உணர்வுகளையே கண்காணித்துக்கொண்டிருந்த அவன் கணநேர இனிமை கண்டான். “உங்கவீட்டு மரம்தானா” என்று அவளிடம் தான் எதை இப்போது
கேட்பது என்று தெரியாத ஒரு நிலையில், அவள் தனக்குச் சொன்னதையே திரும்பவும் அவளிடம் கனிவாகக் கேட்டான் அவன்.
அவள் முகம் முழுக்கப்பூரிப்புடன் "ஆமா” என்றாள்.
மலர்களில் அமரும் வண்ணத்துப்பூச்சிபோல சில கணங்களுக்கு மட்டும் இணைந்தது அவர்களுக்கு மோனம் !
மீண்டும் படபடத்துப் படபடத்து மனம் காற்றிலே அலைவது போல அவர்கள் இருவருக்கும் இருந்தது.
"நல்ல இனிப்பான சதையுள்ள பழங்களையா இந்தப் பழங்க. திண்ணு ஒருக்கா நீங்க பாருங்க..? அப்புறம் இன்னும் கொண்ணா. கொண்ணா. எண்ணு உங்களுக்கு கேட்டுக்கிட்டிருக்கும்.” ராக்காயி இவ்விதம் சொல்லிக்கொண்டு, தன்கையிலுள்ள கட்டாய்க் கட்டிய பழக்கெட்டுகளை அந்த வாசலருகில் வைத்தாள்.செவ்வந்திக்கு செல்வநாயகத்தின் நினைவில் தான் கையில் வைத்திருந்த அந்தக்கட்டு நழுவி எப்போதைக்குமாய் மறைந்துவிட்டதுபோல உணர்வாய் இருந்தது.
glugs -söUssss O 247 O

Page 130
“என்னக்கா மண்டேல அடிச்சமாதிரி இருக்கிறே.உனக்கு என்னவாக் கும்.?” என்றாள். அவளைப்பார்த்து ராக்காயி.
செவ்வந்தி தன்னைச் சுதாரித்துக்கொண்டு “ஆங் ஒண்ணுமில்ல” என்றாள். "நீதானே எனக்கு முன்னாடி ஜயாவுக்கு குடுக்கணுமெண்ணு சொல்லிக் கிட்டு உன்கையில இதத்துாக்கிக்கிட்டு வந்தே. இப்ப என்ன ஒன்கையிலேயே அதை வச்சுக்கிட்டு யோசனையாயிருக்கே.?”
தங்கை இப்புடிச்சொன்னதும் செவ்வந்திக்கு மெல்லிய குறுகுறுப்பாக விருந்தது. உடல்கூசிஅவளுக்குக் கன்னமும் சிவந்தமாதிரிவிட்டது.இனிய சோர்வு போல அவளுக்கு வந்து விட தன்கண்களின் பார்வையை அவள் கீழே சரித்தாள்.
"சரி நீ இப்படித்தான் நிண்ணுக்கிட்டிருப்பே இங்க கொண்டாக்கா நான் குடுத்துக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டு ராக்காயி, அவள் கையிலுள்ள கட்டை தன் கையிலே வாங்கி அதையும் கொண்டுபோய் ஒன்றாக அதிலேவைத்தாள்.
"இதெல்லாம் எனக்கு என்னத்துக்குத் தங்கச்சி? உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்.!” என்று செல்வநாயகம் ராக்காயியைப்பார்த்து கவலையாகச் சொன்னான்.
“என்ன கஷ்டமய்யா எங்களுக்கு? .இதெல்லாம் எங்கவுட்டு மரங்களில்தானே வெட்டிப்புட்டு எடுத்தோம்." "எண்டாலும் அந்த மரங்களில ஏறுறதுக்கும் தோதான ஒரு ஆள்
தேவையே.? அதுக்கும் ஒரு ஆம்பிள ஆள் எங்கேயும் நீங்க தேடிப்பிடிக்க வேணுமே?”
"ஆம்பிள மட்டும்தான் மரம் ஏறிக்கமுடியுங்களா? எங்கமாதிரி பொம் பிளங்களால மரம் ஏறிக்கிறதுக்கு முடியாதுங்களா..?”
"பாலை மரமெண்டாலே பெரிய மலைமலையான மரங்கள் தான்.! ரெண்டு மரங்களும் முதலைத்தோல் மாதிரி ஏறேக்க சிராய்க்கும்! அதில எப்படி பொம்பிள ஏறுவினம்.?” "எந்தப்பொம்பிள ஏறிக்காட்டிலும் இருந்திட்டுப்போவுட்டும். நானு தானேய்யா எங்கவுட்டு மரத்தில ஏறி இதுங்க எல்லாத்தையும் கத்தியால வெட்டிக்கீழே போட்டேன்”
"அடப்பாவமே! நீயா ராக்காயி அந்த மரமெல்லாம் ஏறினாய்..?”
O 248 O ரீ.பி.அருணானந்தs

"ஆமா! நானுதான் யேறினேன். மரம் ஏறிக்கிறது ஒண்ணும் எனக்கு பயப்புட்டுக்கிறதுக்கு இல்ல. அதில ஏறிக்க ஆரம்பிக்கிறவாட்டிதான் கொஞ்சூண்டு கஷ்டம்! அப்புறம் மேல ஏறிக்கிட்ட முண்ணா எல்லாம்ே வசதியாயிடும். பயப்பிட்டுக்கத்தேவையில்லை.”
'அடப்பாவமே.!
செல்வநாயகத்துக்கு ராக்காயி சொன்ன கதைகளைக்கேட்க அப்படியே மனம் நெகிழ்ந்தது.அந்தச் சின்னப்பெண் அந்தப் பெரிய மரமேறியதை நினைத்துப்பார்த்தபோது அவனுக்கு மனம் தாங்கமுடியவில்லை. தன்மீது உள்ள அன்பில் இப்படியெல்லாம் அந்தப்பெண் கஷ்டப்பட்டு மரத்திலேறி இதையெல்லாம் வெட்டி எடுத்துக்கொண்டு இங்கே என்னிடத்தில் கொண்டு வந்து தர வந்திருக்கிறாளே." என்று அவன் தன்மனதுக்குள்ளே நினைத்தபோது ராக்காயி அவன்கண்முன்னே உடன்பிறவாச் சகோதரிபோலத் தெரிந்தாள்.
அக்கணம் அவனுக்கு அவளை அப்படியே சகோதர பாசத்தோடு அணைத்து தலையை வருடத்தான் தோன்றியது.ஆனாலும் உணர்ச்சி யைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் நின்றான்.
அவனுக்கு ஊரைப்பற்றிய நினைப்பும் இந்தச்சூழ்நிலையோடு வரத்தான் செய்தது. இந்த சிறுபெண்ணையும் அவன் நினைத்துப்பார்த்துக் கொண்டு ஊரிலுள்ள தன் உறவினர்களைப் பற்றியும் அவன் எடைபோட்டுப்பார்த்தான்.
அவர்களின் கைகளில் நுால்வளை,நெளிவளை,மலர்வளை என்று கனத்த காப்புகள் இருந்தாலும், பொன்னும் மணியும் இறைந்து கிடந்தாலும், இந்த ஏழைகளுக்கு இருக்கும் சந்தோஷத்தை அவர்கள் அனுபவிக்கிறார்களா?
தங்களிடமுள்ள எதையாவது ஒன்றை மற்றவர்களுக்கு இவர்கள் கொடுக்கும்போது எவ்வளவு சந்தோஷத்தை இவர்கள் அனுபவிக் கிறார்கள். எதையுமே மற்றவர்களிடமிருந்து எதிர்பார்க்காமல் கொடுப்பது போன்றதாயுள்ள இவர்களின் மனம் அவர்களிடத்தில் இல்லையே..? தங்கள் மரபுகளை வழிபட்டுக்கொண்டு, வாழ்க்கையை சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாகவும் மாற்றி, எதையுமே மீறமுடியாமல் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கிறார்களே - அவர்களுக்கு இந்தப்பெண்களைப் போன்றவர்கள் வாழும் வாழ்க்கையிலுள்ள பேராசையற்ற தன்மை இருக்கிறதா? திருப்தியான மனம் இருக்கிறதா? இந்த நினை வெல்லாம் ஒரு கணத்தில் கத்திமுனைபோல அவனிடத்தில் புகுந்தது போல இருந்தது. இதெல்லாவற்றையும் நிதானமாகத்தான் யோசிக்க வேண்டுமென்று அவன் நினைத்துக்கொண்டான். அதன்பிறகு
zugă asovalăsei O 249 o

Page 131
பாரமிழந்த நிம்மதி அவனுக்கு ஏற்பட்டது.தனது தனிமையான இந்த வாழ்க்கைச்சூழலிலே இப்படிப்பட்ட அன்பான ஒரு உறவு கிடைத்தது அவனது மனதுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.
இதற்குள்ளே மெல்லிய அசைவுடன் ஒரு வினா அவன் உள்ளத்தில் உயிர்பெற்று எழுந்தது.அதேவேளை அவன் செவ்வந்தியைப்பார்த்தான். அவளும் தைரியமடைந்து தன்னருகே நிற்பதுமாதிரி அவனுக்குத் தெரிந்தது.
"இதெல்லாத்தையும் கையாலபுடுங்கி அதையெல்லாம் ஒரு பேப்பரில போட்டு சுற்றியெடுத்துக்கொண்டு வந்து நீங்க தந்திருக்கலாமே..? இப்படியெல்லாம் ஏன் கெட்டுக்கணக்கா வெட்டியெடுத்து கட்டித் தூக்கிக்கொண்டு வந்தீங்க.? இது பெரிய சிரமம்தானே.?”
அவன் இப்படிக்கேட்கவும்தான் செவ்வந்திக்குத் தொண்டையை அடைத்தது. ராக்காயியின் கண்களிலும் ஈரப்பளபளப்புத் தெரிந்தது.
"நீங்க சொல்லிக்கிறமாதி எங்களுக்கெல்லாம் இந்தப்பழங்களப் புடுங்கி பைகளில கடதாசியளில போட்டுப் பக்குவமா உங்களுக்கு கொண்டுவந்து குடுக்கத்தானுய்யா விருப்பமுங்க. ஆனா.”அவளுக்கு ஏதும் மேல பேசமுடியாமல் மூச்சு அழுத்திக்கொண்டது.
செல்வநாயகம் இதை அவளிடம் கண்டு கொண்டு கவனமடைந்தான். தணிந்த ஈரமான குரலில் “ஏன் அப்படியில்லாம. என்ன பிரச்சனை?” என்று அவளைக்கேட்டான். அவன் மனம் கூர்மையடைந்தது.
"நாங்கெல்லாம் ஓங்கமாதிரி ஒசத்தியான ஆளுங்களா அய்யா..? நாங்கெல்லாம் அசிங்கமான தொழில செய்யிறவங்களாயிருக்கிறோ ம்.? நாங்க வீட்டில இருக்கிற பொம்பிளங்களாயிருந்தாலும் ஒரே குடிசேக்கிள படுத்துக்கிட்டு எழும்பி சீவிக்கிறவங்கதானுங்களே. அப்படியான எங்க கைபட்ட தீனிய யாரும் திம்பாங்களா..? நாங்க ஆக்கிக்குடுக்கிறத உங்களமாதிரியெல்லாம் நல்ல சாதிக்காறங்க சாப் பிட்டுக்குவாங்களாய்யா..?”
ராக்காயி இவ்விதம் மனவேதனையோடு சொல்ல அவளை ஒரு சிறகு வெட்டப்பட்ட வெண்புறாவைப்போல பரிதாபமாகப்பார்த்தான் செல்வநாயகம்.பிறகு அவள் முகத்தைப்பாராமல் சவக்காலைப்பக்கம் தெரிந்த சிலுவைகளைப்பார்த்துக்கொண்டு அவள் உதடுகள் சொன்ன சொற்களை மீண்டும் தன்நினைவில் கொண்டுவந்தான்.அவனுக்கு சாதி என்ற வெறிக்கோலத்தை நினைத்துப்பார்க்க மன ஆழத்தில் எரிச்சல் கண்டது.அவள் வெறும் உதடுகளால் மாத்திரம் அந்தச்சொற்களை சொல்லவில்லை. அதைவிடுத்து தன்மன ஆழத்திலிருந்துதான் அதை யெல்லாம் வெளியே தனக்குச் சொல்லியிருக்கிறாள். என்றதாகவே O 250 O sğ.6). s9rbsaxnatorşy\3

அவன நினைத்தான். இந்த நினைப்பு அவனது நரம்புகளை இறுக்கி முறுக்கச்செய்தன. அவன் சவக்காலைப்பக்கம் வைத்திருந்த பார்வை யைத் திருப்பி செவ்வந்தியின் முகத்தைப்பார்த்தான். அவளின் முகத்திலும் கடலலைகளின் கொந்தளிப்பு இருப்பது மாதிரி அவனுக்குத் தெரிந்தது.
தன்பார்வை பட்டவுடனே கவலைப்பெருமூச்சில் அவளின் முலைக்குமிழ் கள் விம்மி எழுந்தமர்ந்ததையும் அவன் கண்டான். தன் கரங்களினால் அவள் முகத்தைப்பொத்திக்கொண்டு விரலிடுக்குகளினுாடாக கண்ணிர் சொட்ட தன்முன் அழுதுகொண்டிருப்பதுபோல அவனுக்கொரு கற்பனை.
அதை உடனே அவன் கலைத்துவிட்டு
“என்னவெல்லாம் கேவலமானது இந்த மனிசர்கள் வாழுகிற வாழ்க்கை.? சூட்டுத்தழும்புபோல அழிக்கவே முடியாத அவமானங்களையெல்லாம் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்துக்கு செய்கிறதே...?”
ஒரு மன உலுக்கலுடன் தன் வாய்க்குள் இதையெல்லாம் சொல்லிக் கொண்டான். ராக்காயிக்கும் செவ்வந்திக்கும் செல்வநாயகத்தின் மனம் எதையெண்ணித்தத்தளிக்கிறது என்று புரியவில்லை.அவன் மனம் வேகமாக மாறி உச்ச நிலைகளில் வாயில் எதைச்சொன்னான் என்றும் அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
ராக்காயி செல்வநாயகத்தை திரும்பவும் தன் கதைக்குள் இழுக்கும் முயற்சியில்
"ஜயா நேரம் போயிட்டுதுங்க அப்பா கூட இந்தநேரமா வீட்டுக்கு வந்துடும். நாங்க வீட்ட போப்புறமுங்க.?” என்றாள்.
ராக்காயி இதைச்சொன்னதும் "எதையோ மறந்து விட்டேன்” - என்று நினைத்தபடி அங்குமிங்கும் எதையோ தேடுவதைப்போல அவன் பார்த்தான். தேடிய பெருள் சாக்குக்கட்டிலுக்கு மேலே கிடப்பது அவனுக்குத் தெரிந்தது.
ராக்காயி "என்னங்க தேடுறீங்க.?” என்று கேட்டாள். “ஒன்றுமில்லை என்று அவளுக்குச்சொல்லிவிட்டு அந்தக்கட்டிலுக்கு மேலே கிடந்த தன்வாய்விணையை எடுத்துக்கொண்டுவந்தான் அவன்.
“என்னய்யா இதயேன் பக்கமா நீங்க நீட்டுறீங்க.?”
"உனக்குத்தான்.”
"ஜயையோ வேணாய்யா என்னய்யா இது.? - மனதிலொரு அதிர் துயரச் சுச0uவிர்கள் O 251 O

Page 132
வோடு கொஞ்சம் விலகி நின்றபடி சொன்னாள் அவள்.
“இங்க கிட்டவா. இது இனி உனக்குத்தான் கொண்டுபோ..!"
புன்னகையுடன் சொன்னான் செல்வநாயகம்.
"அவளுக்கேனய்யா இத.? ஒழுங்கா வாசிக்கவும் தெரியாது. அதோட இதெல்லாம் எம்புட்டு வெலயாயிருக்கும். நீங்க இத. எவ்வளவு ஆசையா வைச்சுக்கிட்டும் இருக்கீங்க. உங்க கையில இருந்தாத்தான் இந்த வாத்தியத்துக்கே பெருமை. இவகையில இதப்போயி நீங்க குடுத்தா அது காஞ்ச நார் மாதிரித்தானேய்யா கெடக்கும்.?”
செவ்வந்தி தன் கரத்தால் ராக்காயியின் தோளைத்தொட்டபடி செல்வ நாயகத்தைபார்த்துச் சொன்னாள்.
செல்வநாயத்துக்கு செவ்வந்தி அப்படி தன்னோடு இவ்வேளை கதைப்பது வெதுவெதுப்பான ஒரு சொகுசான புதைவாக இருந்தது. அந்தப்புதைவு அவன் மனதுக்கு இன்பமாக இருந்தது.
"நீங்கள் எனக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இதையெல்லாம் மரத்தில வெட்டி எடுத்துக்கொண்டு வந்து தந்திருக்கிறீங்க. அதுக்கு நானும் அன்பா ஏதும் தரத்தானே வேணும்.?”
"அதுக்கு நீங்க இப்பிடி சொல்லுறதே எங்களுக்கு பெரிய சந்தோஷ மாயிருக்கையா. அதுவே எங்களுக்கு பெரிய திருப்தியுங்க. அதுக்காக இதெல்லாத்தையும் நீங்க இவளுங்களுக்கு குடுத்துக்கத்தான் வேணுமுண்ணு. அப்புடீல்லாம்வேணாய்யா." அவள் பூப் போன்ற இதழசைப்புடன் சொல்லச் சொல்ல பளபளப்புடன் உள்ள சிலையைப் பார்ப்பதுபோல அவளைப் பார்த்து ரசித்தான் செல்வநாயகம்.
"நான் அன்பாய்த்தாறத நீங்க வாங்கிக்கத்தான் வேணும். எனக்கு இத ராக்காயிக்கு குடுக்கவேணுமெண்டுதான் ஆசை. அதுக்கு அக்கா சொன்னாத்தானே தங்கச்சியும் கையில இத வாங்குவா..?” அவன் சொல்ல செவ்வந்தியின் மனம் நிதானமடைந்து ஆனந்த எக்களிப்பில் குதித்தது.
"சரி நீங்க இத எங்களுக்குக் குடுத்துக்கிறீங்க. அதுக்குப் பதிலா நாங்களும் உங்களுக்கு ஏதாச்சும் கொண்ணுவந்து தரவுண்ணா அப்பிடியா ஏதும் எங்கிட்ட பெரிசா இல்லையே அய்யா..?” “எனக்கு அப்பிடி ஒண்டும் நீங்க கொண்டு வந்து தரவேணாம். அப்பிடி ஒண்டும் நான் எதிர்பார்க்கேல்ல. எனக்குத் தேவை நீங்க ரெண்டுபேரும் என்னோடை அன்பாய்ப் புழங்கிறது ஒண்டுதான்! அது மட்டும் காணும் எனக்கு..!"
O 252 O ரீ.பி.அருணானந்தே

"அப்ப வேற ஒண்ணும் நாங்க தந்தா நீங்க வாங்கிக்கமாட்டீங் களாய்யா..?” ராக்காயி ஆவலோடு கேட்க,
“ஒ. உங்களிட்ட இருந்து எதையும் நீங்க தரேக்கிளயா நான் வாங்குவனே.?” என்றான் அவன்.
"அப்பிடி என்னய்யா நாங்க உங்களுக்கு கொண்டந்து தந்தா வாங்குவீங்க.?”
ராக்காயி புன்னகையுடன் அவன் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டு கேட்க, செவ்வந்தியும் தன் மனம் மட்டுமே இயங்குகிற ஒரு நிலையில் இருந்துகொண்டு ஆவலாய் அவன் முகத்தைப் பார்த்தாள்.
"நீங்க ஒரு நாளைக்கு உங்கட வீட்டில சமைக்கிற சாப்பாட்டை எனக்கும் கொண்டந்து தாங்களன் சாப்பிட.?”
“ஐயையோ..” என்றாள் செவ்வந்தி
“என்ன ஐயையோ? எதுக்கு இந்த ஐயையோ. சொல்லுங்க.?” என்று அவன் கேட்டான்.
"நாங்க கண்டதையும் ஆக்கிக்குவோம்! கண்டதையும் தின்னுக்குவோம்! அதெல்லாம் நீங்க திண்ணிங்கண்ணா அதுங்க ஓங்க ஒடம்புக்கு ஆகாதுங்களே.!"
“எனக்கு அப்பிடியா ஒண்டுமே சாப்பிட வெறுப்பே இல்ல. நீங்க அதெல்லாம் சாப்பிடேக்க நானும் அத சாப்பிடலாம்தானே.?”
"அப்புடீன்னா எங்களு மாதிரித்தான் நீங்களுமாய்யா..?” என்று இடையில் ராக்காயி அவனைப் பார்த்துக் கேட்டாள்.
"ஆமாம்மா. உங்களமாதிரித்தான் நானும் ஒரு மனுசன்..!” என்றான் அவன்.
அவன் சொன்னதைக்கேட்டு சகோதரிகள் இரண்டுபேருமே சிரித்தார்கள். செவ்வந்தியின் தெளிவான கண்கள் சிரிப்புடன் செல்வநாயகத்தின் முகத்தைப் பார்த்தபடியே இருந்தன.
ராக்காயி ஏதோ நினைவை வைத்துக்கொண்டு யோசிப்பது மாதிரி சற்றுநேரம் இருந்தாள்.
"ஐயா இது நாங்க ஆக்கித் தந்தா நீங்க சாப்புடுவீங்களா..?” என்று தன் மன ஓட்டத்தில் பிடிபட்டதை உள்ளே வைத்துக்கொண்டு அவனிடம் அவள் கேட்டாள்.
Augé ¥Údizi O 253 O

Page 133
“எது எண்டு சொல்ல வாறாய்?”
“காளான் அய்யா. இப்பிடி மொட்டா இருக்குமே காளான்?”
"ஓ காளானா..?”
"ஆமா, ஆக்கினா நல்ல ருசியா இருக்கும். அது நீங்க சாப்புடுவீங்களா?”
"ஓ! நல்லாச் சாப்பிடுவனே. அது எங்க இருக்கு? எங்க அத வாங்குவீங்க?, எங்க புடுங்கலாம் அத.?”
“அத எங்க வாங்கிக்கிறது ஐயா. நம்ம மாதிரிப் போயி காட்டு மேட்டி லதான் புடுங்கிக்கணும்! ஆனா இப்ப அத." அவள் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.
“என்ன சிரிக்கிறாய்..?”
"ஒண்டுமில்ல அய்யா. அது எல்லாம் புடுங்கிக்கிறதெண்ணா. நல்ல மழை பெய்யனுங்களே. இடி இடிச்சு நெலம் வெடிச்சாத்தானுங்களே காளான் வரும்.?"
s
அப்ப மழைகாலம் வரட்டும்! அதுக்குப் பிறகு நீங்க அத சமைச்சுக்கொண்டு வாங்க நான் சாப்பிடுறன்.” என்று அவன் சொல்ல
“இவ ஒண்டு ஐயா! இப்பிடித்தான் எல்லாத்துக்கும் வாயிசளசளப்பா..! நீங்க விருப்பமானத சொல்லுங்க, எங்களால முடிஞ்ச அளவிலயா அத நாங்க ஆக்கி உங்களுக்குத் தந்திடுறோம்.”
மூச்சு சீராக ஒட மென்மையான குரலில் சொன்னாள் செவ்வந்தி அவள் சொன்னதைக் கேட்க இனிமையானதோர் உள்ளுணர்வு செல்வ நாயகத்துக்கு ஏற்பட்டது. அவள் சொன்ன சொற்களில் மெதுவாக தன்னை இணைத்துக்கொண்டான் செல்வநாயகம். அப்போது அவனது மனத் தடாகத்தில் மகிழ்ச்சித் தாமரைகள் பூத்ததுபோல இருந்தது.
"உன் கையாலே நிரந்தரமாக வாங்கிச் சாப்பிடுற ஒரு காலம் எனக்கு வரட்டுமே..?”
என்று கண்மணிகள் அசையாத நிலையில் அவன் அவளைப்பார்த்துக் கொண்டு சொன்னான்.
அவன் சொன்னது இனிய தென்றலாக வந்து தன்னை வருடியது போல செவ்வந்திக்கு இருந்தது.
C 254 O ரீ.பி.அருணனந்தல்

இதுக்கு என்ன அர்த்தம்? இதுக்கு என்ன அர்த்தம்.? அர்த்தமுள்ள அந்தச் சொல் அவளுக்கு நூறுவகை இன்பமான எண்ணங்களைக் கொண்டு வந்ததைப்போல அவளுக்கு இருந்தது.
அவள் அவனை ஆசையோடு பார்த்தபடி சொற்களற்ற மெளனத்துடன் வெட்கிப் போய் நின்றாள்.
ராக்காயிக்கும் அவள் மன அறைக்குள் ஏதோ எதிரொலித்ததைப்போல இருந்தது. சகோதரிகள் இருவருக்கும் செல்வநாயகம் கூறியது நல்ல மகிழ்ச்சியாகத்தாள் இருந்தது.
ஆனாலும் எவ்வளவு நேரம்! சட்டென்று செவ்வந்தி ஒரு கனவுகண்டு விழித்தவள் போல தங்கை
யைப் பார்த்தாள்.
“பிள்ள வெயிலில்லா நல்லா விழுந்துபோச்சு. நாங்க இனி போவணுமே வூட்டுக்கு.?” என்று அவளைப் பார்த்துச் சொன்னாள். அவளுக்குத் தனக்குள் ஏதோ மெல்லிய வலி ஒன்று முளைப்பது மாதிரி இருந்தது. ஏதுவற்ற ஏக்கத்தில் இழப்புணர்வு வந்து உள்ளத்தை அவளுக்கு வெறுமையில் ஆழ்த்தியது.
ராக்காயி தமக்கை சொல்லவும் தன்னைத் திசைமாற்றிக்கொண்டு சவக்காலையடிப் பாதையைப் பார்த்தாள். வெயில் வெளிச்சம் குறைந்த தால் கொஞ்சம் மங்கலாக அவளுக்குத் தெரிந்தது. சவக்காலைச் சுவரில் இருந்து கொண்டு ஒரு கரிச்சான் குருவி "சிர்ப். சிர்ப்.” என்று கத்திக் கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்திலிருந்து மீண்டும் மீண்டும் அதற்குப் பதில் சொல்ல நேர்ந்தது போல இன்னுமொரு கரிச்சான் குருவியும் இருந்து கத்திக் கொண்டிருந்தது. அவைகளை பார்த்துவிட்டு ராக்காயி ஒரு அசை வாகத் திரும்பி செல்வநாயகத்தைப் பார்த்தாள். "நாங்க இனி வீட்ட கிளம்பப்புறமுங்க ஐயா?” என்று அவளும் சொன்னாள். செல்வநாயகத்துக்கும் நிலைமை விளங்கிவிட்டது. “சரி இதைக் கொண்டு போ கையோட” என்று தன் கையில் உள்ள வீணையை நீட்டிப் பிடித்தபடி அவன் அவளுக்குச் சொன்னான். ராக்காயி நெற்றிமீது கை வைத்தபடி அக்காவைப் பார்த்தாள். செவ்வந்தி வாயில் தன் கரங்களை வைத்துச் சிரித்தபடி "வேங்கிக்க” என்றாள். அக்கா அப்படியாகச் சொல்லவும் ராக்காயியின் முகம் சிரிப்பில் மலர்ந்தது. கண்களில் உவகை ஒளிர செல்வநாயகத்தின்
துயரச் சுஸ்வீர்கள் O 255 O

Page 134
கையிலிருந்து அந்த வீணையை அவள் வாங்கிக் கொண்டாள். வீணையை கொடுத்தபிறகு செல்வநாயகம் செவ்வந்தியைப் பார்த்தான். அவள் கண்களிலும் நன்றி சொல்லுவது மாதிரி ஒரு பாவம்! அதில் ஒரு ஒளியும் தெரிந்தது அவனுக்கு.
அதன்பிறகு சகோதரிகள் இருவரும் விடைபெற்று அவனிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். போகும்போது செவ்வந்தி அவனைப் பார்த்துத் தன் சிவந்த உதடுகள் விரிய ஒரு புன்னகை புரிந்துவிட்டுப் போனாள். அந்தப் புன்னகை அவள் அந்த இடத்தைவிட்டுப் போன பின்பும் தேனின் இனிமையாக அவனின் நினைவைத் தாக்கிக் கொண்டேயிருந்தது. தன் சுகம் ஊதிப்பெருக்கிக் கொள்ளும் இனிப்பான அவள் நினைவிலேயே அவன் அதிலே நின்று கொண்டிருந்தான். வானம் ஒவ்வொரு கண்ணாய் மூடத் தொடங்கிய நேரமாகியும் விட்டது. செவ்வந்தியும் ராக்காயிலும் மெல்லிய குரலில் தங்களுக்குள் உரையாடியபடியே குடிசையின் அருகில் நடந்துவந்து சேர்ந்தார்கள். செவ்வந்திக்கு முன்னாலே ராக்காயி நடந்துபோய் மெழுகிக்கிடந்த படியில் உள்ளங்காலை வைத்துக்கொண்டு வாசல் தட்டிக் கதவைத் திறந்தாள். அவள் குடிசைக்குள்ளே காலடி எடுத்துவைத்து உள்ளே போகப் போனபோது ராக்காயியின் சாயம் போன பின்புறப் பாவாடையிலே செவ்வந்தியின் பார்வை போனது. அவளின் பாவாடையிலே புது இரத்தம் ஒட்டியிருந்ததை உடனே அவள் கண்டுவிட்டாள். அதைப் பார்த்ததும் பெண்களுக்கு இயல்பாக நிகழும் அந்த மலர்ச்சி அவளுக்கு உடனே ஞாபகம் வந்தது. அவளை ஒடித்தடுத்து உடனே வெளியே வெளிச்சத்தடிக்குக் கொண்டுவந்தாள்
அவள். ராக்காயி: "என்னக்கா என்னக்கா?” - என்று அவளைக் கேட்டாள்.
'வாழைக்குருத்து மாதிரி இனி நீ வளரப்போறே. நீ பெரிய மனிசியாயிட்டாயடி..?” என்று சொல்லிவிட்டு முகத்தில் பூரிப்பின் மலர்ச்சியுடன் அவளைப்பார்த்துச் சிரித்தாள் செவ்வந்தி
ராக்காயிக்கு வெட்கமாக இருந்தது. அக்கா சொன்னபிறகு, சொளக் சொளக்கென்று சுரந்துகொள்வது மாதிரியும் அவளுக்கோர் உணர்வு. செவ்வந்தி கொடியில் காயப்போட்டுக் கிடந்த சேலைத் துண்டை உருவி எடுத்து அவளின் தலைக்கு மேலே போர்த்தி குடிசைக்குள்ளே கூட்டிக்கொண்டு போய் ஒரு மூலையில் அவளை பாய்போட்டு குந்தி இருக்கச் செய்தாள். அடுத்த வேலையாக முற்றத்துப் புழுதி பறக்கச் செவ்வந்தி ஓடிப்போனாள் முட்டை வாங்கவென்று சந்திக்கடைக்கு.
"அந்த லொடலொடத்த கடையில இப்பவா முட்டை இருக்குமோ இல்லையோ..?” - அதுவும் அவளுக்கு யோசனையாய் இருந்தது.
O 256 O ரீ.பி.அருணானந்தே

之?
சேரியில் வாழுகின்ற கிறிஸ்தவர்கள், வரப்போகிற மடுப் பெருநாளை நினைத்தபடி இரவுகளையும், பகல்களையும் எண்ணியவாறு இருந்து கொண்டிருக்கையிலே, நாரந்தனையிலிருந்து கட்டையன் கபிரியேலும் இங்கு வந்து சேர்ந்தான். கபிரியேலுக்கு ஒன்றுவிட்ட சகோதர முறையானவன் தான் ஆசீர்வாதம், வவுனியாவுக்கு வந்தால் தங்கல் சாப்பாடு எல்லாம் அவன் வீட்டிலேதான் கபிரியலுக்கு ஆசீர்வாதம் தன் வீட்டுக்கு கபிரியேல் வந்துவிட்டானென்றால் அவனுக்கு நேரம் கழியாமல் கசிப்பும் கள்ளும் நாக்கில் நனைக்க வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பான். அவன் கொடுப்பதை யெல்லாம் தான் வாங்கிக் குடித்துக்கொண்டு கசிப்பின் சுவை நாக்கில் தங்கி நிற்க ஆசீர்வாதத்தை முன்னால் இருக்கும்படி வைத்துக்கொண்டு திட்டங்கள் தீட்டுவான் கபிரியேல். இருவரும் தங்களுக்குள் சேர்ந்து தீட்டிய திட்டங்களை நடைமுறைப்படுத்த, சேரியிலுள்ள நான்கு எட்டுப்பேர்களை தங்களுடன் முதலில் சேர்த்துக்கொள்வார்கள். கோயிலுக்கு போக வென்று சொல்லி ஒவ்வொரு வீடாகச் சென்று மடிப்பிச்சை வாங்குவதுதானே இனிமேல் அவர்கள் செய்யப்போவது?
இந்தக் குழுவிலே பெண்கள் இருவர். கபிரியேல்தான் எல்லோருக்கும் தலைவன். அவன் சொல்லுகிறதுக்குத் தான் எல்லோரும் ஆடவேண்டும். சொல்லித் தருகிறவைகளை அப்படியே சொற்கள் குலையாமல் போகிற வீடுகளிலே சொல்லவேண்டும். இதுதான் அருட்டி உருட்டி அவன் அவர்களுக்குப் போட்டிருக்கும் சட்டம்.
குழுவிலே உள்ளவர்கள் அவர்களுடன் சேர்ந்ததாய் பத்துப்பேர். இன்று காலையிலேயே எல்லோரும் வவுனியா இறம்பைக் குளத்திலே போய் இறங்கியதாக இருந்தால், அங்கே ஒரு ஒழுங்கையிலுள்ள வீடு கூட மிச்சம் விடாமல் அலசிப்போட்டுத்தான் சேரிக்குத் திரும்புவார்கள். அடுத்த நாள் ஆஸ்பத்திரிப்பக்கமுள்ள குடியிருப்பு என்ற அந்த ஊர் வழியே அவர்கள் போனால், பை நிறைய அரிசியும் கை நிறையக் காசும் அவர்களுக்குக் கிடைக்கும்.
அடுத்த நாள் ஆளுக்கொரு திசையில் பண்டாரிகுளம், அவர்கள் போனாலோ முதல்போன இரண்டு இடங்களையும் விட வருமானம் அவர்களுக்கு அதிகம் கடக்கும். இந்த இடமெல்லாம் அவர்கள் அலசி வழித்துத்துடைத்து விட்டமாதிரியான பிறகு, வவுனியாவைச் சூழவுள்ள கிராமங்களுக்கெல்லாம் அவர்கள் போவார்கள். மடிப்பிச்சை கேட்டு வீடு வழியே போனால், எந்தச் சமயத்தவரும் பாரபட் சமின்றி எதையாவது கட்டாயம் கொடுத்து உதவுவார்கள் என்று இவர்களுக்குத் தெரியும். அதுவும் மடுமாதாவென்று ஒரு வார்த்தை
துயரகேசப்பண்கள் O 257

Page 135
சொல்லி மடிப்பிச்சை கேட்டால், அந்த வீட்டிலுள்ளவர்கள் எவரும் மறுவார்த்தை வாய்திறந்து பேசமாட்டார்கள். உடனே கேட்ட சனத்துக்கு அரிசியோ காசோ கொண்டுவந்து கொடுத்துவிட்டுத்தான் தங்கள் சோலிகளை அவர்கள் பார்ப்பார்கள். மடிப்பிச்சை எடுத்துக்கொண்டு வருகிறவர்கள் வீடு திரும்புற நேரத்திலே, கபிரியேல் முன்பு அவர்களிடம் பேசிக்கொண்டபடி தனக்கு வரவேண்டிய ஒரு பங்கைக் கேட்டு வாங்கிக்கொள்வான்.
தன் தொழிலில் தீவிரமானவன் கபிரியல். அவன் தனக்குத் தரவேண்டிய பங்கை யாராவது தராது இடர்பண்ணினால், கல்லைத் துணியில் கட்டி அடித்த மாதிரியாய்ப் பேசுவான்.
சிலர்: “நாளைக்கு உனக்கு நாங்கள் சேருறத முழுக்க சேர்த்துத் தாறமண்ண?” என்று சறுக்கி விடப்பார்த்தால்,
"இண்டைக்கு இருக்கிறம் நாளைக்கு நாங்கள் இல்லை. அதால இங்க என்ரைய கணக்க இப்பவேதா?” என்று சுடச்சுடச் சொல்லி அவன் வாங்கிவிடுவான். ஆனாலும் அந்த இரண்டு பெண்கள் மட்டில் கபிரியேல் என்பவன் கொஞ்சம் போல நல்ல மனிதன் தான். அவர்களிடம் மாத்திரம் ஒன்றும் பேசாது ஏதோ கொடுக்கிறதை அவன் வாங்கிக்கொள்வான். இந்த விட்டுக்கொடுத்தலுக்கும் அவனிடத்தில் ஒரு காரணமிருந்தது. முப்பதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட அவர் களின் வயதிலே அவனுக்கும் மனத்தில் ஒரு ஈரம் கடுகடுவென்று கோபமில்லாமல் அவர்களுடன் சிரித்துக் கதைப்பதெல்லாம் அவன் வேறு ஒரு அலுவலுக்கு அவர்களிடம் அடிப்போட்டுத்தான்.
நாலைந்துநாள் தொடர்ச்சியாக ஊரிலே போய் தெண்டல் போட்டதற்குப் பிறகு, கபிரியேலும் ஆசீர்வாதமும் ஒரு மிதப்பிலே வந்துவிட்டார்கள். கையிலே கொஞ்சம் காசு புரள கூத்தும் கொண்டாட்டமுமாக
ஆசீர்வாதத்தின் வீடு இருந்தது.
ஒரு நாள் உற்பத்தியாகும் கசிப்புக்கு விலை குறைவு "அந்தச் சாராயத் தப் போய் வாங்கிக் கொண்டாடா?” என்று கபிரியேலிடமிருந்து உத்தரவு பிறக்க, அதை வாங்கிக்கொண்டு வர உடனே பறந்தான் ஆசீர்வாதம். கசிப்பை வாங்கிக்கொண்டு வரும்போது கபிரியேல் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டும் குடிக்க வேண்டுமென்பதற்காக, இவனுக்கொரு பொட்டலத்தையும் கையிலே பிடித்துக்கொண்டு அவன் வந்தான். கசிப்புக் குடிக்க ஆரம்பித்ததும் “எப்புடி இருக்கு.?” என்று ஆசீர்வாதம் கேட்டான்.
"கசிப்பா ஆகத்திறம்!” என்றான் கபிரியேல். வெறி ஏறவிட்டு ஏதோ எண்ணத்துக்கு எட்டாத ஓர் அற்புத உலகத்துக்கு தான் சென்றுவிட்டது
O 258 O ரீ.பி.அருளரைத்தே

போல அவன் இருந்தான்.
ஆசீர்வாதத்துக்கு குடித்து கொஞ்சம் வெறி ஏறினால் பாட்டுப் படிக்கவேண்டும் என்பதுபோல இருக்கும். அவன் களைத்த குரலில் சோகம் சிந்துகிற பாட்டும் படிப்பான் சந்தோஷப் பாட்டும் படிப்பான்.
இப்போது,
“ஓ ரசிக்கும் சீமானே.” பாட்டை எடுத்துவிட்டான். சத்தம் அடைத்துக் கொண்டது. கபிரியல் அவனை ஊடுருவிச்செல்லும் ஒரு பார்வை பார்த்தான்.
“என்ன பாட்டு நீ படிக்கிறாய்..?” என்று வெறுப்பாக அவனைப் பார்த்துச் சொன்னான்.
“எனக்கு ஒண்டும் இப்ப மூச்செடுத்துப் படிக்கேலாதப்பா. நான் அப்படியா இப்ப வந்திட்டன்” என்று கவலையோடு அவன் சொன் னான்.
“எனக்கெண்டா இப்பவும் எங்கட அப்பு அப்பவெல்லாம் படிக்கிற ஒரு பாட்டு ஞாபகமிருக்கு” என்று ஈடு இணையற்ற ஒரு சந்தோஷத்தோடு
சொன்னான் கபிரியல்.
“என்ன பாட்டு அது.?” கேட்டுவிட்டு ஒரு பீடியை பற்றவைத்துக் கொண்டான் ஆசீர்வாதம்.
“இது மாதிரிப் பாட்டை அப்ப அவயள் மடுப்பெருநாளுக்கு நடையில போகேக்க படிச்சுக்கொண்டும் போறவயளாம். அத அவர் படிக்கேக்க கேக்க ஆறுதலாத்தான் இருக்கும். அதமாதிரி எவ்வளவோ பாட்டுக்களப் படிச்சுக்கொண்டு தான் அவயளெல்லாம் அப்ப களை தெரியாமல் நடக்கிறவயளாம்”
கபிரியல் சொல்லவும் ஆசீர்வாதம் அவனை ஏறிட்டுப் பார்த்தான். ஆவலான பார்வை.
"அப்ப நீ ஒருக்கா அதப் படிச்சுக்காட்டன்.?” இடம்மாறி உட்கார்ந்து கொண்டு கேட்டான்.
"அந்தக்காலம் வேறயப்பா இந்தக்காலம் வேறயப்பா உனக்கது பிடிக்குமோ..?”
“எனக்கெண்டா அதுகள் பிடிக்குந்தான்!”
“சரி. அது ரெண்டாவது உலகச்சண்டை நடந்துதே அந்தக்காலத்துச்
plugš asůuaňseň o 259 O

Page 136
சம்பவத்தை வைச்சுக்கொண்டு அவயள் படிச்சபாட்டு” ஆசீர்வாதத்துக்கு ஆசை உச்சத்தில் போய் ஏறிக்கொண்டது. “எனக்கும் உதுகள் நல்லாப்பிடிக்கும் நீ படி?” என்றான். “கபிரியல் கொஞ்சம் கசிப்புப் பேணியில் வார்த்துக் குடித்தான். ஒரு துண்டு மரவள்ளிக்கிழங்கையும் எடுத்து சம்பலோடு சேர்த்து வாய்க்குள் செலுத்தித்தின்றான்.
“அம்மோவ் நல்லாயிருக்கப்பா கிழங்கு.”
“அதுசரி பாட்ட படிச்சுக்காட்டனப்பா நீ.?”
“இந்தப் பாடுபடுத்துகிறாய்” என்றுவிட்டு குரலில் எல்லையற்ற கணத்த மகிழ்ச்சியோடு அவன் படிக்கத் தொடங்கினான் “முப்பத்தொன்பதாம் ஆண்டு புரட்டாதி மாதம் மூன்றாம் திகதி மூண்ட சண்டை தப்பாமல் இண்டைக்கும் தானே நடக்குது எப்படி நாம் இனி மீளுவோமோ? சண்டை வந்து குண்டு போட்டுச் சாக முன்னமே குண்டு போடும் இப்ப உள்ள கூப்பன் அன்னமே! வாய்ப்பான் போச்சு, தோசை போச்சு, வடையும் போச்சு,
கடையில் குந்தி படி அளக்கும் விலை வியாபாரி கம்புகொண்டு தலையை வெட்டி வம்பு செய்கிறான்
ஒண்டரைக் கொத்து அரிசியெண்டு வாங்கினா ஒரு கொத்தும் இருக்காதையோ பெரிய தொல்லையே.
அவன் நாதமோங்கிய குரலில் பாடி முடிக்க,
“இதுதான் இவ்வளவு ஆண்டுகாலமாயும் உன்ர சீவியத்தில உனக்குத் தெரிஞ்ச பாட்டோ..?” என்று நக்கலாகக் கேட்டான் ஆசீர்வாதம்.
"இதுமாதிரி பாட்டுகளில்லாமல் எங்கட ஊர்சனத்துக்கு வேற என்ன பாட்டுத் தெரியும்.?” அவன் ஆத்திரத்தினால் சொன்னான்.
“இனி ஏதாவது சாப்பிடுவம். நல்லாப் பசிக்குது..?” என்றான் ஆசீர்வாதம்
“இப்ப ஏன் அவசரப்படுகிறாய் கொஞ்சம் பொறு.?” என்றான் அவன்
ஆசீர்வாதம் பெருமூச்செறிந்தான்.
o 260 O ரீ.பி.அருளானந்தே

சிறிதுநேர மெளனத்துக்குப் பின் கபிரியல்
நாளைக்கு மட்டும் தானப்பா நாங்கள் ஊருக்குள்ள போய் மடிப்பிச்சையெண்டு கேட்டு நிக்கலாம். அதுக்குப் பிறகு மடுப்பெருநாள் வந்திடும்.”
"அப்ப என்ன செய்யிறது.?” ஆசீர்வாதம் கேட்டான்.
"அதுதான் உனக்கு இப்ப நான் சொல்லவந்தனான். பெருநாளுக்குப் பிறகு ஆரும் மடிப்பிச்சை தாருங்கோ வெண்டு வீடுவழிய போவினமே..?”
“அதானே.”
"ஓ அதுதான் நான் சொல்ல வெளிக்கிட்டது என்ணெண்டால், இவ்வளவு நாளும் நாங்க ஊருக்குள்ளயெல்லாம் தெண்டலுக்கெண்டு போனம். இப்ப என்னெண்டால்..?”
“என்னென்டால்..?”
“கொஞ்சம் கட்டுப்பட்டு நீ பொறுத்திரு பாப்பம் என்னச் சொல்லவிடன் கதய.? சிரிக்காத நீ? நாணெண்டும் உங்கள மாதிரி முட்டாளில்ல எனக்கு உதெல்லாம் பிடிக்காது”
"நானென்னப்பா உனக்கு அப்படியெல்லாம் சொன்னனா..? நீதானே எனக்கு எதையும் செய்யிறதுக்குச் சொல்லவேணும்.? நீ சொல்லன் குழம்பாம.?”
“சரி அதான் இப்ப நீ ஆற அமர நான் சொல்லுறதக்கேளன்.?” “சொல்லு.?”
கபிரியலின் கண்கள் ஒரு கணம் ஆசீர்வாதத்தை அளவிட்டன. பிற்பாடு தன் குரலை கூர்மையாக்கிக்கொண்டு அவன் சொல்லத் தொடங்கினான்.
"நாங்கள் ஏதோ எங்கட கஷ்ட நஷ்டத்துக்கு மடுமாதாவின்ர பெயரச் சொல்லித்தான் காசுகள் அரிசியளெண்டு ஊருக்குள்ளயெல்லாம் போய் வாங்கினனாங்கள். மனுசர நாங்கள் ஏமாத்தலாம். தெய்வத்த நாங்கள் ஏமாத்த முடியுமோ..? அதுவும் மடுமாதாவென்டால் சக்தியுள்ள தாய் அவ, எத்தினை லட்சம் சனங்கள் அவவப்போய் வணங்கப்போகுதுகள்.? நாங்கள் இப்படியெல்லாம் சொல்லி வாங்கிப் போட்டு அவவிட்டப் போகாமலிருந்தா எப்பிடி அதால.?”
gug\šo añostŭvaŭa56ŭ O 26 O

Page 137
"அதால.?”
“அதால நாங்கள் எல்லாருமா அங்க நாளைக்குப் பின்னேரம் பஸ் ஏறிப்போய் அடுத்தநாள் காலயில பெருநாள் பூசையையும் சுற்றுப் பிரகாரத்தையும் கண்டுகொண்டு திரும்பிவருவமே..?”
"ஓ! ஓ! நல்லம். நல்லம்.! எனக்கும் அது நல்லவிருப்பம்தான்..! எண்டாலுமொண்டு உனக்கேக்கிறன்.?”
“என்ன.?”
"நாங்கள் ரெண்டு பேரும் கோயிலுக்குப் போறதெண்டுறது சரி. ஆனா ஒண்டு நீ சொன்னாய் எல்லாருமெண்டு ஆர் அந்த எல்லாரும்.?”
"ஆர்ஆர் எங்களோட சேந்து மடிப்பிச்சைக்கெண்டு வந்திச்சினமோ அவயள் எல்லாரையும் எங்களோட கூட்டிக்கொண்டு தானே நாங்களும் போவவேணும்.? அல்லாட்டி சரியில்லயே..?”
"எங்கட செலவிலயோ..?”
"பின்ன ஆர் செலவழிக்கிறது எங்களுக்கெண்டு.? அவங்களும் எங்களுக்கு தெண்டுறதில ஒரு பங்கத் தந்தவங்கள்தானே? அதால சரியில்லத்தானே.?”
“பொம்புள ஆக்களையுமே கூட்டிக்கொண்டு போறதோ..?”
.99 ܕ .
D DD....
மனதுக்குள் பதுங்கியிருக்கும் ஒரு நினைப்போடு கபிரியல்
சொன்னான்.
"அவளயள் கோயிலுக்கு வாறதெண்டு வெளிக்கிட்டால் தங்கட புருஷன்மார்களையுமெல்லே கூட்டிக்கொண்டரப் பாப்பாளயஸ்.?”
"அது சரிவராது அப்படியெண்டால் அவயள் நிக்கட்டும்! தனிய வாறதுகள் வரட்டும்.”
"நீ சொல்லுறமாதிரிப் பாத்தால் இவன் எங்கட செத்தவன்ர யோண் பெஞ்சாதி லில்லியாள் மாத்திரம்தான் தனிய வாறதெண்டால் வருவாள் போல” வெறிமிகுந்த பார்வையுடன் ஆசீர்வாதம் சொன்னான். கபிரியல் ஒரு சின்னத்துண்டு கிழங்கை கையால் உடைத்துச் சாப்பிட வாயடிக்குக் கொண்டுபோனான். குடிசை வாசலில் குளிர்ந்த நாசி நுனியுள்ள ஒரு கரிய நாய் நின்றுகொண்டு அவன் முகத்தைப் பார்த்தபடியே இருந்தது. அவன் சாப்பிடாமல் அந்தத் துண்டை நாய்க்கு
O 262 O ரீ.பி.அருணானந்தே

வீசினான். நாய் குதித்து உடனே அதை வாய்க்குள் எடுத்துவிட்டது.
“இனிச்சாப்பிடுவம் நாங்க. கிழங்கு மந்தமாயிருக்கு வயித்துக்கிள்ள! ஆ. அவள் லில்லியாள் வாறதெண்டால் வரட்டும் நாங்க எல்லாரும் நாளைக்குப் பின்னேரமா பஸ்ஸில வெளிக்கிடுவம்” சொல்லிவிட்டு பசி நிறைந்த பார்வையோடு எழுந்து நின்றான் கபிரியல். 'இனிச் சாப்பிடாமல் ஏதுமே கதை இல்ல' என்ற நிச்சயம் அவனிடமாய்த் தெரிந்தது. ஆசீர்வாதம் உடனே தன் மனைவியைக் கூப்பிட்டு “இரண்டு பேருக்கும் சோத்தப்போடு சாப்பிட” என்று சொன்னான். கபிரியல் சோத்துக்குள் கைவைத்து சாப்பிட தொடங்குமுன் பீடிக்கறள் ஏறிய தன் கரிய பற்களைக் காட்டிச் சிரித்தபடி ஆசீர்வாதத்தைப் பார்த்தான். “என்னப்பா சிரிக்கிறாய்” என்று கேட்டுக்கொண்டு ஆசீர்வாதமும் சிரிக்கத்தான் செய்தான். "ஒண்டுமில்ல. எல்லாமே வீண் இந்தத் தண்டலுக்கெண்டு ஊர்வழிய போய் கையில என்னதான் இப்ப மிச்சம்.? தாதிங்கத்தெய் தித்தெய்.”
“அதென்னப்பா அது.? சோத்தைப் தின்றுகொண்டு கேட்டான் ஆசிர்வாதம்
"நாட்டியமப்பா நாட்டியம்” என்று சொன்னான் ஆசீர்வாதம் “நாட்டியமோ தாதிங்க அங்கால.” "தித்தெய்” கபிரியல் சொல்லிவிட்டுச் சிரித்தான். ஆசீர்வாதமும் அவனுடன் சேர்ந்து சிரித்தான். அவர்களின் முன்னால் இருந்து முகங்களைப் பார்த்தபடி இருந்த ஆசீர்வாதத்தின் மனைவி. “சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ” என்றாள் பெருமூச்சுடன் உடலை தளர்த்தி இருந்துகொண்டு.
列)
இதுவரை மடுக்கோயிலுக்குப் போகும் சந்தியிலுள்ள நல்ல தண்ணீர் இறக்கம் என்ற இடத்துக்கு வந்து சேர்வது கபிரியனுடன் வந்தவர்க ளுக்கு ஓர் இலக்காக இருந்தது.
“இனி என்ன செய்வம்.?” என்று பஸ்ஸால் இறங்கி நின்றான பிறகு கபிரியலைப் பார்த்து ஆசீர்வாதம் கேட்டான். அதற்கு "நான் ஒன்று
g suá O 263 O

Page 138
சொல்லவா’ என்னு கபிரியல் அவனைக் கேட்டான்.
“என்ன..?”
“இப்புடியே மன்னார் பஸ் வர ஏறிப்போய் அங்க ரவுணுக்குப் பக்கத்தில கசிப்பிருக்கு அங்கினபோய் நாங்க வாங்கிக் குடிச்சுப்போட்டு இரவுக்குச் சாப்பாட்டையும் கட்டிக்கொண்டு இங்க கோயிலுக்கு வரலாம்தானே.?”
அவன் சொல்ல சுருள் விரிவதுபோல மனம் இறுகி விரிந்தது எல்லோருக்கும். கபிரியல், ஒரு மிருகம் சிறு உறுமலுடன் பார்க்கின்றது போல லில்லியாளைப் பார்த்தான்.
“என்ன அப்படியே அங்கயும் ஒருக்கா சுத்திப்போட்டு நாங்கள் கோயிலுக்குத் திரும்பி வருவம் என்ன?” என்று அவளுக்கும் அவன் சொன்னான்.
லில்லி பஸ்ஸில் அப்போது பிரயாணம் பண்ணிவருகிறவேளை ஜன்னல் வழியே கையை மடித்துப்போட்டபடி இருந்தாள். நிறைய மரங்கள் அடர்ந்த காட்டுப்பக்கத்தால் பஸ் வரும்போது கிளைகள் அவள் கைகளின் மீது உரசிவிட்டது. அதனால் கொஞ்சம் சிராய்ப்பான காயம். அவள் வலியை ஒருவருக்கும் சொல்லாமல் இப்போதும் கபிரி யல் கேட்டதுக்கு “ம்.” என்று சொல்லி தலையை அசைத்தாள்.
“எனக்கு இடுப்பு சரியா நோகுது பஸ்ஸிக்குள்ள பின்னால குலுங்க குலுங்க அப்பவா நிண்டுகொண்டு வந்ததாக்கும்” என்று சொல்லிக்கொண்டு வீரை மரத்துக்குக் கீழே இருந்த கருங்கல்லில் குந்திக்கொண்டு இருந்துவிட்டான் ஆசீர்வாதம். “மன்னார் பஸ் இதில வர நேரமிருக்கு” என்று சொல்லியபடி நல்ல தண்ணீர் இறக்கத்தில் உள்ளடங்கியுள்ள கடைகளை ஒரு பார்வை பார்த்தான் கபிரியல், பகபகவென்ற அந்த வெயிலிலும் சனக்கூட்டம் கடைகளுக்கு அலைந்துகொண்டுதான் இருந்தது. எல்லாப் பொருட்களையும் வாங்க ஏதுவாகத்தான் கடைகளையும் அவ்விடங்களிலே போட்டிருந்தார்கள். வீதியின் இரு மருங்கும் அடிபருத்த வீரையும் பாலை மரங்களும் நின்றதால் ஓரளவு நிழலாய்த்தான் அவ்விடங்கள் இருந்தன. கபிரியல் புகையிலைத்துண்டு ஒன்றை வாய்க்குள் செருகி சுவைத்துக்கொண்டு வேடிக்கையாக அவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் எல்லோருக்கும் கூடார வண்டில்களைப் பார்ப்பதுதான் மனதுக்கு ரொம்பப் பிடித்ததாய் இருந்தன. அந்த மாடுகளுக்கு லாடம் பிடித்து கொம்புகளுக்கு வர்ணம் பூசி அமர்க்களமாய் இருக்கிறதுபோல, அவர்களுக்கு அவைகளைப் பார்க்கும்போது தெரிந்தன.
о 264 o ரீ.பி.அருணானந்தே

“எங்கட பறச்சாதி சனத்துக்கெல்லாம் இப்பிடி ஒரு சீவியம் சீவிக்கக் கிடைச்சதே.?” என்று அவைகளைப் பார்த்தபடி ஏக்கப் பெருமூச்சோடு சொன்னான் ஆசீர்வாதம். அந்த மாட்டு வண்டில்களையும் அவற்றை இழுக்கும் தசை தெறிக்கும் காளைகளையும் பார்க்கப் பார்க்க அவனுக்கும் மனத்தில் துன்பம் ஒரு சுமையாய் அசைந்தது. பக்கத்தில் இருந்த பானையில் உள்ள தண்ணீரை பேணியால் அள்ளிக் குடித்துவிட்டு அவன் மூச்செறிந்தான்.
"விடியக்காலம் அங்க வீட்ட இருந்து குளிந்த நேரத்திலயா வண்டில் கட்டி இவயள் வெளிக்கிட்டா. கதை கதையெண்டு கதைச்சுக்கொண்டு வெயில் ஏறி வரவாட்டியா இங்க இறக்கத்தடிக்கு வந்து சேர்ந்திருப் பினம்" கபிரியல் சொல்ல ஆசீர்வாதம் மிகுதியை தான் தொடர்ந் தான.
"அப்பிடி இவயள் வரேக்க ஆனை றோட்டால குறுக்கறுத்துப் போகிறதப் பாத்திருப்பினம். அதேபோல மான் பாத்திருப்பினம்! மயில் பாத்திருப்பினம்! காட்டுக்கோழிகள் மரைளயப் பாத்திருப்பினம்! இடையிடையில வண்டில நிப்பாட்டி பாலைப்பழம் வீரைப்பழம் புடுங்கியும் சாப்பிட்டிருப்பினம்”
“முறுக்குப் பொரிவிளங்காய் எண்டு கனநாள் கிடக்கக்கூடிய பலகாரங் களும் செய்துகொண்டு தொலைதூரமிருந்து வாறவயள். அதையும் வழிவழிய திண்டுகொண்டு வந்திருப்பினம்.” கபிரியல் சொல்லி CpGui
“அதென்ன பொரிவிளங்காய்” என்று அவனைக் கேட்டாள் லில்லி,
"அது அரிசிமாச் சீனி நற்சீரகம். பிறகு எல்லாம்போட்டு சருக்கட்டிறது. உறைக்கும் இனிக்கும் நல்லாயிருக்கும்.”
"நீ திண்டனியே எப்பத்தையுமொருநாள்.?” லில்லி விரிந்த உதடுக
ளோடு கேட்டாள்.
“ஊரில ஒவசியர் ஜயா வளவு துப்பரவாக்கப்போகேக்க தந்தவர். திண்டனான். அப்பிடி கனவெள்ளான ஆக்கள் அவயளிண்ட வீட்டில தந்தவயள் திண்டிருக்கிறன்” என்று கபிரியல் சொன்னான்.
கபிரியலிடம் விஷயங்களும் உள்ளன என்றும் லில்லியாள் தனக்குள் நினைத்துக்கொண்டாள். கபிரியலுடன் சேர்ந்து வந்த மற்றயவர்க ளெல்லாம் ஒரு வீர மரத்தைச் சுற்றி அந்த நிழலில் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். மரத்தைச் சுற்றி ஒரு எறும்புக்கூட்டம் போய்க் கொண்டிருந்தது. அவர்களுக்கு முன்னாலே காகங்கள் அவசரமாகக் கத்தியபடி எதையோ நிலத்தில் கொத்திப் பொறுக்கிக்கொண்டிருந்தன.
துயரச் சுச0uவிர்கள் O 265 O

Page 139
முன்னால் உள்ள சாப்பாட்டுக்கடையில் அப்பங்கள் அடுக்கியபடி கிடந்தன. காற்றுடன் கலந்துவந்த பசியைத் தூண்டவைக்கும் தீவிரமணம் அவர்களின் மூக்குவழியே அடித்துக்கொண்டிருந்தது. கண்களை இடுக்கிக்கொண்டு அவர்கள் கபிரியலின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “கபிரியலின் கையில் நூல்போல ஒரு கண்டில் சுருண்டு பந்தாக நாங்கள் தூங்கிக்கொண்டிருக்கிறே ாம். அவன்தானே எங்களுக்கு எதையும் பார்த்துச்செய்யவேண்டும்? சாப்பாடும் அவன்தான் நினைத்து வாங்கித்தரவேண்டும்? குடிக்கவும் அவன்தான் வாங்கித்தரவேண்டும்? இப்படியெல்லாம் அவன் நினைத்துச் செய்யும்போதுதானே எங்களுக்கும் ஏதாவது கிடைக்கும்?” என்று நினைத்தபடி அவர்கள் கண்களை மூடித் திறந்துகொண்டிருந்தார்கள். கபிரியலுக்கும் அவர்களின் முக அறிகுறிகள் அப்படியே வரிசையாகத் தெரிந்ததுதான். என்றாலும் செலவைச் சுருக்க,
“உங்களுக்கெல்லாம் இருங்கோ ராச் சாப்பாடுதான்!” என்ற மாதிரி அவன் நினைத்துக்கொண்டிருந்தான். இன்னும் பஸ் வந்தபாடில்லை. அவனுக்கும் கதையைப் போட்டுக்கொண்டிருக்கவேண்டியதாய்
இருந்தது.
"நாடுவழிய உள்ளவயள் பஸ்ஸில காறில வராம காலாகாலமா உந்த மாட்டுவண்டில்களிலதான் வந்துகொண்டிருக்கினம். பெண்டுகளுக்கும் புள்ளயஞக்கும் வண்டில் பிரயாணமென்டால் சோக்காத்தானிருக்கும். வீட்டில போட்டுவைச்சிருந்த உண்டியலுடைச்சு நோட்டும் சில்றையுமாக கொண்டாந்து இந்த இறக்கத்தில பாய் தலகணி பாத்திரங்களெண்டும் புள்ளயஞக்கு விளையாட்டு சாமான்களெண்டும் வாங்கிக்கட்டி வண்டி
லில போட்டுக்கொண்டு போவினம்.”
கபிரியல் இப்படியே மன்னார் பஸ் வரமட்டும் கதையை இழுத்தடிக்கிற திட்டத்தில இருந்துகொண்டிருந்தான். மரத்தைச் சுற்றி இருந்த மற்றவர்களெல்லாம் “பசி” என்று தங்கள் வாயால் அவனுக்குச் சொல்லாமல் பயத்திலே அவனது முகத்தை மாத்திரம் பார்த்துக்கொ ண்டிருந்தார்கள்.
மரத்தடியில இருந்த ஒருவன் என்னவோ முனகியபடி இருந்தான் கோணிய வாயிலிருந்து அவனுக்கு எச்சில் வழிந்தது. அவனை தலை அசைவுடன் பார்த்துவிட்டுத் திரும்பினான் கபிரியல், ஆசீர்வாதம் ஆழ்ந்து ஒருகணம் மவுனமான பிறகு தலைதூக்கி கபிரியலின் முழு உருவத்தையும் பார்த்தான். எல்லாத்துக்கும் காய்வெட்டுறமாதிரிக் கதைபோட இவன் ஒரு நெருப்பு ஆள்தான்! என்று அவன் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.
இரைச்சலிட்டுக்கொண்டு அப்போது மன்னாருக்குப் போகும் பேரூந்து C 266 O ரீ.பி.அருளானந்தர்

வந்து நின்றது. அவனோடு சேர்ந்து வந்தவர்களிடமிருந்து வியப் பொலிகள் எழுந்தன. சிலர் “மடுமாதாவே மடுமாதாவே" என்று கூவினார்கள்.
“ஓடிப்போய் பஸ்ஸில ஏறுங்கோ” என்று கபிரியல் எல்லோருக்கும் சொன்னான். பஸ்ஸின் உள்ளே நின்றுகொண்டு சனம் நெருக் கியடித்துக்கொண்டிருந்தது. கபிரியலுடன் வந்தவர்களெல்லாம் அதற்குள் தாங்களும் உடல் குறுக்கி ஏறிக்கொண்டார்கள். பஸ் ஒரு பக்கச்சரிவோடு நின்ற சனத்தையெல்லாம் ஏற்றிக்கொண்டபடி வெளிக்கிட்டது. பஸ்ஸிற்குள் ஒரு மூலைக்கல்லாக ஆசீர்வாதம் போய் முடங்கிநின்றான். மற்றவர்களும் பின்னாலே மூலையில் மயிர் மணம் வேர்வை மணத்துடன் நின்றுகொண்டு, காலைத்தளர்த்தி நிற்க முடியாமல் பிரயாணம் செய்தார்கள். கபிரியல்லில்லியாளுக்குப் பக்கத்திலே அவளின் தலை உச்சியை முகர்ந்தபடி நெருக்கமாக நின்றுகொண்டிருந்தான். அவனுக்கு லில்லியாளிடமுள்ள மோகம் மேகமாக உள்ளுக்குள் மூடியிருந்தது. கபிரியலுடன் சேர்ந்துவந்த ஆட்களினது வியர்வையும் புளிச்சலும் கலந்த அருவருப்பூட்டும் வாடை, அவர்களின் பக்கத்தில் நின்று பிரயாணம் பண்ணிக்கொண்டிருந்த சிலருக்குப் பிடிக்கவில்லை.
"கெட்ட நஞ்சுநாத்தம்..” என்று அவர்களைப் பார்த்து பக்கத்திலுள் ளவர்கள் ஏசிக்கொண்டிருந்தார்கள். “எங்கட உடலை நாங்கள் மதிச்சாத்தான் அதற்குப் பிறரும் மதிப்புத் தருவாங்கள்! நல்ல உடம்பில தான் சுத்தமான மனமும் இருக்கும்.!" என்று நஸ்னல் வேட்டியுடுத்த வயதுபோனவர் அதற்குள் நின்று சொல்லிக்கொண்டார். சேரியில் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் வெறுப்பான பார்வைகள் ஈக்கள் மொய்ப்பதுபோல தொடர்ந்துபட்டுக் கொண்டிருக்க, அதனால் நெஞ்சை அழுத்தும் துக்கம் ஏற்பட்டன.
கபிரியல் பரபரப்பாகக் கடித்த தன் காது மடலைச் சொறிந்து கொண்டு நின்றான். லில்லியாளுக்குப் பக்கத்திலே காலைச் செருகிக் கொண்டு, கசிவுடன் பெருமூச்சோடு அவளின் கன்னத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். லில்லியாளும் கொஞ்சம்கொஞ்சமாக வெக்கையை உணர ஆரம்பித்தாள். அவளுக்கும் உள்ளுக்குள் நெருப்புப்போல எழுந்து கொதித்துக்கொண்டிருந்தது.
மன்னார்க் கடல்பாலம் தாண்டிப்போய் தரிப்பிடத்திலே பஸ் நின்றது. மனிதச் சதைகளை நசித்தபடி ஒரு விதிர்ப்புடன் நின்றுகொண்டு பிரயாணம் செய்வதவர்களெல்லாம் பஸ்ஸால் கீழே இறங்கும்போது, இரு பக்கமும் பார்த்தபடி இறங்கினார்கள். சிலர் நடை பழகாத குழந்தைபோல கவனமாகப் படியிறங்கினார்கள்.
zugă -souaăscă o 267 O

Page 140
கபிரியலின் ஆட்கள் கீழே இறங்கியதும், உற்சாகம் அடைந்திருப்பது அவர்களின் முகங்களில் தெரிந்தன. பூரிப்புடன் உதட்டில் ஒரு புன்னகை எல்லோருக்கும் படர்ந்திருந்தன.
கபிரியலின் முகத்தில் கோபம் தெரிந்தது.
“இருட்டுப்பட முதல் எல்லாருமா அங்கபோயிட்டு பிறகு கடையில சாப்பாட்டைக் கட்டிக்கொண்டு கோயிலுக்கு பஸ் ஏறிப்போயிட வேணும்.” என்று உத்தரவு போட்ட மாதிரி எல்லாரையும் பார்த்துச் சொன்னான். பஸ் தரிப்பிடத்தில் நின்ற வாகை மரங்களின் உச்சியில் மஞ்சள் நிற சூரியஒளி அலை அடித்துக்கொண்டிருந்தது. காகங்க ளெல்லாம் பஸ்தரிப்பிடப்பக்கமுள்ள வாகைமரத்தில் ஓங்காரமாக முழங்கியகணக்கில் சத்தம்போட்டுக்கொண்டிருந்தன.
“கெதியா கெதியா எனக்குப் பின்னாலயா வாங்க” என்று சொல்லி அவர்களை பின்னர் ஐயின் சினிமாத் தியேட்டர் பக்கம் கூட்டிக்கொண்டு கபிரியல் போனான். அவ்விடத்தே போன பிறகு ஒரு ஒழுங்கையைப் பிடித்து நடந்துபோய் அதிலே காணப்பட்ட ஒலைக் கொட்டிலுக்கு முன்னாலே தன்னுடன் வந்தவர்களை நிற்கச்சொன்னான். பிறகு கொட்டிலுக்குள்ளே தான் மட்டும் தனியப்போய் கதைத்துவிட்டு, வந்து எல்லோரையும் உள்ளுக்குள் கூட்டிக்கொண்டுபோனான்.
கடல் காற்றடித்தாலும் கொட்டிலுக்குள் கசிப்பும் வாந்தியும் வீச்சமடித் தன. எல்லாமே தீவிரமான புளித்த நெடியாயிருந்தது. கொட்டிலில் உள்ளவன் ஆறு போத்தல் கொள்ளக்கூடிய பிளாஸ்டிக் கான் நிரம்பக் கசிப்புக் கொண்டுவந்து முன்னால் வைத்தான்.
"குடியுங்கப்பா வேணுமானத வேணுமெண்டுற அளவுக்கு.?” என்று கபிரியல் சொல்லிக்கொண்டு ஒரு சிரட்டையில் கசிப்பை நிரம்ப வார்த்து லில்லியாளுக்கு அதைக்கொடுத்தான். லில்லியாள் மொடமொடப் பான சீலையை காலை அகட்டி வைத்துக்கொண்டு பனங்குத்தியில் குந்தினாள். பின்பு அவன் நீட்டிய கசிப்புச் சிரட்டையை தன் கையிலே வாங்கிக்கொண்டாள்.
"கசிப்பு எப்படி..?” ஆசீர்வாதம் கொட்டிலில் உள்ளவனைக் கேட்டான்.
“காட்டுறன் பாரன்.?” என்று அவன் உடனே சொல்லிவிட்டு விரலில் கசிப்பை நனைத்து நெருப்பை அதிலே அவன் கொளுத்திக் காட்டி னான். நெருப்பிலே சுட்டுக்கொண்டவரைப்போல அவர் இல்லை என்று கண்டதும் எல்லோருக்கும் சந்தோஷமாக இருந்தது.
"அப்ப சுப்பார் தான் சாமான்” என்றான் ஆசீர்வாதம். O 268 O ரீ.பி.அருளானந்தே

அந்தக்கணத்தோடு பசி வயிற்றோடு இருந்த அவர்களெல்லாம் சிரட்டைகளில் கசிப்பை நிரம்ப நிரம்ப கானிலிலிருந்து வார்த்தெடுத்துக் குடிக்கத்தொடங்கினார்கள். முதலில் ஒரு மிடறை அவர்கள் தொண்டைக்குள் தள்ளும்போது அது ஒரு நெருப்புப் பாதையைப்போல எல்லாருக்கும் இறங்கியது. உள்ளுக்குள் போய் அது அடிவயிற்றில் அவர்களுக்கு ஊறியபோது கண்கள் அவர்களுக்குச் சிவத்தன. வயிறெல்லாம் எரியத்தொடங்கியது. அவர்களின் மெல்லிய கரங்கள் முறுக்கேறிக்கொண்டிருந்தன. கசிப்பு வெறி ஏறியபொழுது பத்து மடங்கு ஆங்காரத்துடன் கபிரியலுடன் வந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள். சுற்றிலும் நடைபெற்ற பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டவாறு கசிப்பையும் குடித்துக்கொண்டு ஓயாமல் புகை பிடித்துக்கொண்டும் இருந்தான் கபிரியல்,
"இதெல்லாம் பழங்கள றம்முக்கபோட்டு அழுக வைச்சு ஈஸ்ட்சீனி போட்டு பேந்து பெரிய தகரப் பீப்பாய் வழிய நெருப்பு மூட்டி காய்ச்சி வடிக்கிற சாமான்.” என்று தான் அறிந்ததை அங்கிருந்த மற்றையவர்களுக்குச் சொன்னான் ஆசீர்வாதம்.
"கட்டக்கம்பி எண்டு சொல்லுவாங்கப்பா சிங்கள ஆக்கள். அப்பிடித்தான் சில பேர் விறுவிறுவென்டதாய் கசிப்பு வர கறள் கம்பிகளும் அதுக்குள்ளவாப் போட்டு வடிக்கிறவங்களாம்?” மற்றைய ஒருவன் இப்போதுதான் வாய்திறந்து பேசத்தொடங்கினான். அவன் சொல்லிமுடிய.
y
“கக்கூசுக்கும் நல்லாப் போகும் இதக் குடிச்சாக்காலேல. என்று அவனுக்குப் பக்கத்திலிருந்தவன் சொல்லிவிட்டு கசிப்பு ஊற்றிக்கொண்ட சிரட்டை விளிம்பில் வாய்வைத்தான்.
“நல்லாப் பசி எழும்பும் பசிக்கும்! நிறையச் சாப்பிடலாம்!” என்று அவனுக்கு முன்னாலே இருந்தவன் சொல்லிவிட்டு “ஏதோ தப்பிதமாக நான் இதச் சொல்லித்தான் போட்டன்போலக் கிடக்கு” என்று தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டு கபிரியலின் முகத்தைப் பயத்தோடு உற்றுப்பார்த்தான்.
“எல்லாம் ஒசியெண்டா வாங்கிக் குடுத்தா எல்லாரும் நல்லா மூக்குமுட்டக் குடிப்பினம்தான் தின்னுவினம்தான்” என்று அப்படிக் கதைபோட்டவனைப் பார்த்தபடி சொன்னான் கபிரியல். என்ன இருந்தாலும் சேரியில் இருந்து மடுவுக்குப் போகவென்று வந்த அவர்கள் அனைவருக்குமே, கபிரியலும் அதற்குள் உட்படத்தான், நெஞ்சில் பாரமான கவலைகள் இருந்தன. பஸ்ஸில் அவர்கள் பிரயாணம் பண்ணும்போது அவர்களுடன் பிரயாணம் பண்ணிய
glugis astuaisai O 269 O

Page 141
எத்தனை பேர்களது நகைப்புகளுக்கு அவர்கள் ஆளானார்கள். எவ்வளவு வெறுப்புக்கு உள்ளானார்கள். ஆனால் கசிப்புக் குடித்த வெறி அவர்களின் கவலைகளையெல்லாம் இப்பொழுது உடைத் தெறிந்துவிட்டது. பசியில் முதிர்ந்த முகம்போல் களைப்பாயிருந்தவ ர்களெல்லாம் சுறுசுறுப்பாகி விட்டார்கள். அவர்களுக்கும் பிறிதொரு உடல் வந்துசேர்ந்தது மாதிரியாய் இருந்தன. உடல் நரம்பெல்லாம் குடிக்கக்குடிக்கக் வெறி விரைவு ஏறுவதை அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். M
“நேரம் போகுதப்பா கொட்டில் காறன் கொண்டுவந்து வைச்ச கசிப்பும் முடிஞ்சுது” கானை கையில் தூக்கி ஆட்டிக்காட்டினான் கபிரியல்.
"முடிஞ்சுதோ எல்லாம்.?” ஆசீர்வாதம் கேட்க,
“இந்தா.” பிறகும் அவன் கானை எல்லோரும் பார்க்க ஆட்டிக்காட்டினான்.
“இனி என்ன செய்யிறது.?” ஆசீர்வாதம் கேட்டான்.
“இங்கயே இன்னும் இருந்துகொண்டு கசிப்ப வாங்கிக்குடிச்சுட்டு இதுக்குள்ளேயே எல்லாமாப்படுப்பம்.”
“என்ன பகிடி விடுறாய்..?”
“பின்ன என்ன உன்ர கதைக்கு நான் சொல்லுறதெண்டுறன்.?”
"அப்ப என்னப்பா செய்யிறது கபிரியல்..? கோவப்படாமல் சொல்லன்.?
"அப்பிடி மனுசன் மாதிரி வெறியில உளறாமல் கேள் சொல்லு றன்.?”
“எனக்கு நீ சொல்லுறமாதிரி அப்பிடி ஒன்டும் வெறியாயில்ல சொல்லு.?”
“ம் சரி. நீ இங்கபார் என்ன..? பரதேசி மாதிரி இனி எங்கயும் நாங்கள் அலையேலாது என்ன..?”
g s s
gld...
“என்ன ஒமாண்டிறாய்..?”
“என்னப்பா நீ.! நீ சொல்லேக்கிள்ள ஒமெண்டாமல் பிறகு என்ன
சொல்லுறது.?”
O 270 O ரீ.பி.அருணானந்தம்

“சரி அதவிடு அந்தக் கதய? இப்ப உனக்கு என்ன ஆச்சப்பா?"ஏன் இந்தக்கோலம்? நான் கேக்கிறன்.?”
“என்ன சொல்லுறாய் நீ.?” "உனக்கு மடுவுக்குப் போற எண்ணமிருக்கோ எண்டு கேக்கிறன்.?”
"இதென்ன கத அதுக்குத்தானே நாங்க எல்லாரும் உன்னோட வந்தனாங்கள்.?”
"அப்ப எண்டாச் சரி. இனி நாங்க இதால வெளிக்கிடுவம்.?”
“ஓம் வெளிக்கிடுவம்.” ஆசீர்வாதம் சொல்லிக்கொண்டு எழுந்து நின்றான். "அப்ப நீங்களெல்லாரும் என்ன இந்தக் கொட்டிலிலயே கிடக்கப் போறியளோ..?” என்று அவர்களைப் பார்த்து கபிரியல் கேட்க, அவர்களும் வெறிக் கண்களால் அவனை உற்றுப்பார்த்தபடி எழுந்துநின்றார்கள். "நானெண்டா உங்கள் எல்லாருக்கும் ஒருக்காலும் வஞ்சகம் செய்யன். பசியில வயித்தில கிடக்கிற புழுப்பூச்சியும் சாகவிடமாட்டன்.”
"சாப்பாடு வாங்கித்தருவன். ஆனா இங்க கடைவழிய இல்ல. சாப் பாட்டை கட்டிக்கொண்டு அங்கபோய்த்தான் கோயிலதான் எல்லாரும் சாப்பிடுறது.”
“ஓம் ஓம் ஓம்” என்று ஆசீர்வாதம் சொல்ல எல்லாருடைய வாயிலி ருந்தும் இந்த ஓம் என்ற சொல் வெளியே சிந்தியது.
"நீங்கள் எல்லாரும் ஒமெண்டா. அதுக்கு நான் உடன இல்லையெண்டு தான் சொல்லுவன்” வெறிப்பீத்தலில் கபிரியல் சொன்னான்.
"இருட்டுதப்பா.” என்று அப்பொழுது வெளியே கவனித்துவிட்டு கபிரியலுக்கு சொன்னான் ஆசீர்வாதம்.
"இருண்டு அடங்க முதல் எல்லாருமா நாங்கள் இதால வெளிக்கிட்டிட வேணும். பேந்து நேரம் பிந்தினா சிலவேளை கோயிலுக்குப் போறதுக்கு எங்களுக்கு மன்னாரிலயிருந்து பஸ்சும் கிடைக்காது” என்று அவன் மேலும் சொன்னான்.
"மாதாவே உம்முடைய பாதம் பற்றி இத்தன தூரம் நான் யாழ்ப்பாணத்தில இருந்து வந்திருகிறன் உம்மட அருள் எனக்கு எப்பவும் இருக்கவேணும்.” கபிரியல் தலைகுனிந்து வணங்கிய
துயர சுரப்பண்கள் O 271 O

Page 142
மாதிரியாய் நின்று மடுக்கோயில் உள்ள திசையைப பாாததுகoகாண்டு வெறியில் சொல்லிக்கொண்டிருந்தான்.
“சரி வெளிக்கிடுவம் இனி நாங்களப்பா. காசை நீ குடனப்பா..?” என்றான் ஆசீர்வாதம்.
“அது எனக்குத் தெரியும்.”
“ஒ. சரி தான் நீ குடு.!"
"உனக்குக் குடிச்சது காணுமோ..?”
“எனக்கும் காணாதுதான்” நீங்க மற்ற உங்களுக்கெல்லாம் காணுமோ..? லில்லி உனக்கு எப்பிடி.?”
"அப்ப ஒருவருக்கும் பத்தியமாயில்ல என்ன..? அப்ப என்னுமொரு ஆறுபோத்தல் கானில வாங்கிக்கொண்டுபோய். கோயிலடியில
வைச்சுக் குடிப்பம் என்ன..?” அவன் சொல்ல
"ஐயோ கோயிலடியிலயோ..?” என்று கேட்டான் ஆசீர்வாதம். மற்றவர்களின் முகங்களும் கபிரியலைப் திரும்பிப்பார்த்தன. “கோயிலடியில எண்டாக் கோயிலுக்கு உள்ளயே. அங்கயா எங்கேயும் உள்ள ஒரு வசதியான இடம்.” "அப்பிடி எந்த இடம் அங்கின வசதியா இருக்கும்.?
"குளக்கட்டிருக்கு, சவுக்காலை யெண்டொண்டு இருக்கு, அப்பிடி எவ்வளவு அங்க இடமிருக்கு.? சவுக்கால மாதிரி ஒரு நல்ல இடம் மனுசருக்கு நிம்மதியாயிருக்க கிடைச்சுக்கிடக்கே.?”
“சரி அப்பா வாங்கிறத கெதியா அப்ப நீ வாங்கிக்கொண்டா” என்று ஆசீர்வாதம் சொல்ல “இந்தாங்க அய்யா எங்களுக்கு இன்னும் ஆறு போத்தல் கசிப்பு கானோட தரவேணும்.? கானுக்கும் சேத்துக் காசை எடுங்க நீங்க.?” என்று கபிரியல் கொட்டில்காரனுக்கு சொன்னான்.
O 272 O ரீ.பி.அருளர்ைதே

கசக்கிய கஞ்சாவை பீடியில் வைத்து உருட்டியபடி நின்ற கொட்டில்காரன் கபிரியலிடமிருந்து தனக்கு வரவேண்டிய காசு முழுவதையும் முதலில் கணக்குப் பார்த்து வாங்கிக்கொண்டான். பிறகு தொழில் ரகசியம் பேச ஆரம்பித்தான்.
“இப்ப நான் உங்களுக்குத் தரப்போறது வேப்பம்பட்ட கொத்தமல்லிச் சரக்குகள் போட்டு வடிச்ச விசேஷமான சரக்கு.” என்று கபிரியலுக்குச் சொன்னான்.
"அப்ப சரக்கு சத்தான காரமாயிருக்குமோ..?”
“என்ரை கைப்பக்குவம்தான். குடிச்சிட்டுப்பாருங்க, பாம்பு மாதிரி சும்மா சீறும்.?” கஞ்சா பீடியை நெருப்புக்கொளுத்தினான் அவன்.
"அப்ப மப்புக்கு மேலே மப்புத்தான்! உச்சியில எல்லாருக்கும் அடிக்கப்போவுது..!" என்று விட்டுச்சிரித்தான் ஆசீர்வாதம்.
“இருங்க எல்லாரும் நான் இதால போயிட்டு உடன வந்திடுறன்.” என்று சொல்லிவிட்டு கொட்டில்காரன் கோடிப்பக்கம் போனான். அங்கே போய் காட்டாமணக்குப் பற்றைக்குள் மறைத்து அவன் வைத்திருந்த கசிப்புக் கானை கையில் எடுத்துக்கொண்டு வந்தான்.
29
அவனைக் கண்டதும் "சாமான் வந்திட்டுது அத நீ வாங்கு கையில. என்னு கபிரியல் ஆசீர்வாதத்துக்குச் சொன்னான். அவன் சொன்னது மாதிரியாய் உடனே கொட்டில் காரனின் கையிலிருந்த கசிப்புக்கானை தன் கையில் வாங்கிக்கொண்டான் ஆசீர்வாதம்.
“பஸ்சுக்குள்ள இத இப்பிடியே எப்பிடி பப்பிளிக்காகக் கொண்டு போறது.?” o
"அவளிட்ட வாக்குடு.?”
"ஆருலில்லிட்டயா..?”
“பின்ன ஆருட்டயாம்.? அவள என்ன கோழியடிச்சு குழம்பு வைக்கிற துக்கா அங்க கூட்டீட்டுப்போறம். அவளின்ட உடுப்புகள் வைச்சிருக்கிற யூரியாப் பைக்குள்ள இதயும் வைச்சு தூக்கிக்கொண்டுவரட்டும். பொம்புள எண்டா எவன் சந்தேகப்படப்போறான்.?”
அவன் சொல்லவும், ஆசீர்வாதம் கசிப்புக்கானை லில்லியாளைப் பார்த்துக்கொண்டு நீட்டினான். அவள் அவிழ்ந்த தலைமயிரை முடிந்துகொண்டு அதைக் கையில் வாங்கி யூரியா பையில் வைத்துக்கட்டிக்கொண்டாள்.
துயரச் சுஸ்வீர்கள் O 273 O

Page 143
எல்லோரும் பிறகு அந்த இடத்தாலே வெளிக்கிட்டு பஸ் தரிப்பிடத் தடிக்குச் சென்றடைந்தார்கள். அங்கே போனதும், கபிரியல் ஒரு சைவச் சாப்பாட்டுக்கடையைப் பார்த்துப்போனான். அந்தக் கடையிலே தங்கள் எல்லோருக்கும் சாப்பிடப்போதுமான அளவு தோசை சாம்பார் சம்பல் சரைகளாகக் கட்டிக்கொண்டு வந்து அவை எல்லாவற்றையும் ஆசீர்வாதத்தின் கையில் கொடுத்தான். பஸ் ஒன்று அப்பொழுது மன்னாரிலிருந்து மடுக்கோயிலுக்குப்போக வெளிக்கிட்டது. அந்த பஸ்ஸில் அவர்கள் எல்லோரும் ஏறிக்கொண்டார்கள். பஸ் வெளிக்கிட்டு மேடும்பள்ளமுமாய்க் கிடக்கும் மன்னார் வீதி வழியாக ஓடிக்கொண்டிருந்தது. அது போட்டுக் கொண்டிருந்த குலுக்கலிலும் குத்துதலிலும் ஆசீர்வாதமும் அவனோடு சேர்ந்த மற்றைய சிலரும் குபுக்கென்று கசிப்பு ஏப்பங்கள் விட்டார்கள். “இவங்கள உடன இந்த பஸ்லால கீழ இறக்கி விடுங்கோப்பா. புழுத்த கசிப்புக் கள்ளுச் சாராய நாத்தம்! கெட்ட கத்தாழ நாத்தங்கள் இவங்களிலயா..!" என்று பஸ்ஸிற்குள் நின்ற சனங்கள் எல்லாரும் நடத்துநரைப்பார்த்துஏசத்தொடங்கிவிட்டார்கள். அதனால் ஆசிர்வாதமும் கபிரியலும் சேர்ந்து நடத்துநரின் காலில் விழாத குறையாக மன்றாடிக் கேட்டுத்தான் கோயிலடிக்கு வந்துசேர்ந்தார்கள்.
கோயிலடிக்கு வந்து பஸ்ஸால் இறங்கியதும் அவர்களுக்கெல்லாம் அந்தக் குடி வெறியிலும் ஒரு அருள் தங்களிடம் வந்தாப்போல இருந்தது. மரக்கிளைகளில் கட்டப்பட்டிருந்த ஒலிபரப்புக் குழாய்களி லெல்லாம் “மாதாவே சரணம்” கோயில்பாட்டுப் பாடிக்கொண்டிருந்தது. இருட்டைப்போக்க மின்சார ஒளிக்குமிழ்கள் ஒளிவீசிக்கொண்டிருந்தன. அங்கே சில மரத்தின் கிளைகள் ஆபரண மாலையைப் போன்ற மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கபிரியல் எல்லோரையும் தன்னுடன் வரும்படி கூட்டிக்கொண்டு கோயிலுக்குத் தொலைவிலிருந்த சவக்காலையைத் தேடிப்போனான். எங்கும் வெளிச்சமாக மின்சார பல்புகள் தெரிந்தாலும், சவுக்காலைக்கு உள்ளே மட்டும் இருட்டாகவே தெரிந்தது. அதற்குள்ளே இவர்கள் போனபொழுது அங்கேவேறொரு மனிதர்களையும் அவர்கள் காணவில்லை. உள்ளே வறட்டுக்காடு மாதிரியும் ஒரு பக்கம் பற்றைச் செடிகளாயிருந்தன. சவக்குழிகளில் குவித்துவைத்த மண்ணும் சிலுவைகளும் கண்களில் பட்டன.
“உசிர் இருக்கிற மட்டும் இந்த மனிசன்கள் எந்த ஆட்டமெல்லாம் ஆடுறாங்கள். மற்ற மனிசரப் பார்த்து சி மணக்கு தெண்டுறான்! எங்களுக்கு பிடிக்கேல்ல எண்டுறான். இங்க மட்டும் என்னவாம்? இப்ப குழிகளுக்குக்கிழ ஒண்டும் பேசாம கிடக்குதுகள். நாங்கள் காலால போட்டு மிதிக்குறோம் துப்புறோம் ஒரு சத்தம் சாவாடியையும் காணேல்ல.?”
O 274 O ரீ.பி.அருணானந்தல்

“கபிரியல் இதை சொல்லிவிட்டு. வாங்கப்பா வாங்கப்பா நேரம் போகுது இனி குடிச்சுப்போட்டு நாங்கள் சாப்பிடவும் வேணும்” என்றான்.
எல்லோரையும் பிறகு அவன் சவக்காலைக்குள்ளே நின்ற வாகை மரத்துக்குக் கீழே கூட்டிக்கொண்டுபோனான். கிளைகள் விட்டு ஓங்கியிருந்த அந்த மரத்துக்குக் கீழே ஓரளவு வெளிச்சத்துடன் இருட்டாகவும் இருந்தது.
“லில்லி அத வெளியில எடு.?” அவன் சொல்லவும் யூரியாப் பையிலிருந்து கேனை வெளியிலெடுத்தாள் லில்லி
"இருங்கப்பா” சுற்றிவர எல்லோரும் அவன் சொல்லவும் இருந்தார் கள்.
"சிரட்டை”
"அதுவுமிருக்கு” என்று சொல்லி அதையும் அவள் எடுத்துக் கொடுத்தாள்.
கேனின் மூடியைத் திறந்தான் ஆசீர்வாதம். கப்பென்று அதற்குள்ளாலே வெளியே மிருகத்தின் காட்டுத்தனமான உவர்ப்பு நாற்றம் போல் வரும் கசிப்பு நாற்றம் அடித்தது.
உடனே “மணம் ஒரு மாதிரியிருக்கு?” என்றான் அவன்.
"உடன் கசிப்பு அப்பிடித்தான் எரிமணமாயிருக்கும். அதையெல்லம் பார்த்துக்கொண்டிராம கெதியா ஆளுக்காள் அடியுங்க..!" என்று கபிரியல் பக்கத்திலிருந்த செடியின் ஓர் இலையைப் பிய்த்தபடி ஆசீர்வாதத்துக்குச் சொன்னான். கபிரியலுக்கு தன் முன்னால் இருந்த லில்லியாளைப் பார்க்க உள்ளழுத்தத்தால் விம்மிக்கொண்டிருந்தது. அதனால் அவன்தான் முதலில் கசிப்பை சிரட்டையில் வார்த்துக் குடித்தான். குடிக்கும்போது அசுரத்தனமாக கசப்பாய் அது இருந்தது. இது இப்பிடித்தான் இருக்கும்போல என்று நினைத்துக்கொண்டு " எல்லாரும் கெதியா குடியுங்கோ குடியுங்கோ” என்று அவன் சொன் 606.
உடலும் உள்ளமும் கொதிக்கிறதுக்கு இந்தக் கசிப்புத்தான் நல்லது என்பதுபோல, நினைத்து எல்லாரும் கானில் கிடந்த கசிப்பை வார்த்து வார்த்து மண்டத் தொடங்கினார்கள்.
லில்லியாளும் நன்றாகக் குடித்தாள். எல்லோருக்கும் நல்ல வெறி ஏறிவிட்டது. வெறி ஏறவும் மானிடமுகம் போல அவர்களுக்கு இல்லை.
துயரச் சுண்பண்கள் O 275 O

Page 144
வித்தியாசமாகவே இருந்தது.
“எந்த நாயெண்டா எங்களுக்கென்ன? நீங்களாரடா எங்கள மணக்கிது குணக்கிது எண்டு சொல்ல.? நாங்கள் காலால உங்கள ஒரு உதை உதைச்சா குடலை வாயால வாயால கக்குவீங்களடா நாயளே..?”
என்று பஸ்ஸில் நடந்த சம்பவத்தை நினைவில் வைத்துக்கொண்டு வெறியிலே தன் பாட்டுக்கு திட்டிப்பேசிக்கொண்டிருந்தான் ஆசீர்வாதம். மற்றவர்களெல்லாம் இப்பொழுது சாப்பிடவும் விரும்பாமல் கசிப்பை ஊற்றி ஊற்றி சிரட்டையில் எடுத்தக் குடித்துக்கொண்டு? எல்லாத்திசைகளிலும் உடலைப்புரண்டு புரண்டு சரிந்தும் விழுந்து கொண்டிருந்தார்கள். தன்காரியம் இனி ஆகவேண்டும் என்ற நினைப்பில் கபிரியல் மிதமிஞ்சிக் குடிக்காமலிருந்தான். தன்னைப்போலவே லில்லியாளையும் அதிகம் குடிக்கவிடாமல் நிதானமாக அவன் வைத்திருந்தான். எல்லோரும் வெறியில் கிடந்து புரள,
"நீ இங்க வா..?” என்று அவளை அவன் ஒரு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்தான். “இவங்க எல்லாமா பாத்துக்கொண்டு இதிலயா இருக்கிறாங்க..?” "கதையவிட்டுட்டு வா" என்றான் அவன், லில்லியாளுக்கு தொழில் முறையாக வந்த சினேகம் ஒரு தொடுப்பாக இனி மாறும்போல தெரிந் தது. அவளும் ஆண் உடலை அறிந்து பழகியவள்தான்! அதனால், “சரி” என்றதாய் நினைத்துக் கொண்டு அவன் கூப்பிட்ட இடத்தடிக்குப் போனாள்.
“இப்பவா. இதிலயா?”
“பின்ன எப்பவா”
“வேணா மண்ண இப்ப" என்றாள் அவள்.
அவன் அவளை வற்புறுத்தாமல் வற்புறுத்தி இருட்டு நன்றாய் அப்பிக்கிடந்த இடத்தடிக்குக் கூட்டிக்கொண்டுபோனான். மரத்துக்குக் கீழே இருந்தவர்களுக்கெல்லாம் வெறிச்சுழற்சியாயிருந்தன. ஆசீர் வாதம் மட்டும் தன் முக்கால்வாசி வெறியிலும்கூட கபிரியலும் லில்லியாளும் போனதைக் காணத்தான் செய்தான். என்றாலும் அந்தக் கெட்ட சிறுக்கியோட விட்டுப்போன உறவை அவன் புதுத்துவக்கம் செய்கிறானாக்கும், என்று நினைத்தபடி நமக்கென வந்தது என்று அவன் பேசாமல் இருந்துவிட்டான்.
கபிரியல் காரியம் முடிந்து, திரும்பவும் அவளைக் கூட்டிக்கொண்டு O 276 O ரீ.பி.அருளானந்தச்

அவ்விடத்திற்கு வந்து அவர்களுடன் முன்போல இருந்துகொண்டான். கசிப்பை சிரட்டையில் வார்த்து லில்லியாளுக்குக் கொடுத்து தானும் குடித்தான்.
குடித்தவர்கள் எல்லோருக்கும் நாடி நரம்புகளை இழுத்துச் சுருக்கினாப் போல சிறிது நேரம் செல்லவும் வந்தது. கண்களை இருட்டியது மாதிரி அவர்களுக்கு இருந்தன. வேர்த்தது, மூச்சிழுத்தது. குடலைப் பிரட்டி சத்திசத்தியாய் எடுக்கத் தொடங்கினார்கள். வாந்தியிலிருந்து மீளமுடியாத வருத்தத்திலே மண்தரையில் கிடந்து புரண்டார்கள். குடல் அறுபட்ட வேதனையாய்த் துடித்துக்கொண்டிருந்தார்கள். கசிப்பு நஞ்சு கொடுரமாக அவர்களின் உடலை வதைத்துக்கொண்டிருந்தது. இறப்பின் கணம்! இதுதான் என்று அவர்களுக்கெல்லாம்பட்டது. அந்த அளவுக்கு அவர்களது உடல்கள் விலுக்விலுக்கென உதைத்துக் கொள்ளத் தொடங்கின. மெல்லிய காற்றில் மரத்தின் இலைகள் சலசலத்துக்கொண்டிருந்தன. ஒலிபரப்புக் குழாய்வழியே கோயிலில் நடந்துகொண்டிருந்த வேஸ்பர் ஆசீர்வாதப் பாட்டுகளும் மனம் கரைந்து சொல்லும் பிரார்த்தனைச் செபங்களும் அவ்விடமெங்கும் கேட்டுக் கொண்டிருந்தன. நீர்நிறைந்த ஒளி இழந்த கண்களுடன் உதட்டைக் கடித்து எங்கும் வலியை நிரப்பியபடி அவர்களெல்லாம் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தார்கள்.
மறுநாள் விடிவுக்கே உரிய ஒலிகள் எங்கும் கேட்க ஆரம்பித்தன. ஒரு சில ஆட்கள் சவக்காலைக்கு வெளியே நின்றபடி இவர்களைப் பார்த்து அதிர்ந்து போய் உள்ளேயும் வந்து இவர்களைப் பார்த்தார்கள். மயங்கின அளவில் கிடந்த அவர்களுக்குப் பக்கத்திலிருந்த கசிப்புக் கானையும் கண்டார்கள். சத்தி எடுத்த இடத்திலிருந்து எழுந்த வந்த நெடியை அவர்களால் தாங்கவே முடியவில்லை. மயங்கிக் கிடந்த அவர்களின் முகங்களெல்லாம் கன்னங்கரிய கல் முகமாய்த்தான் அவர்களுக்குத் தெரிந்தன. இந்த முகங்களெல்லாம் எப்படி இந்தப் பயங்கரத் தோற்றத்தை அடைந்தன என்று அடிவயிற்றைக்கவ்விய குளிருடன் அவர்களெல்லாம் அச்சத்துடன் நின்று பார்த்தார்கள். இந்தச் செய்தியை மடுக்கோயில் சுவாமியாரிடம் போய் பிறகு அவர்கள் சொன்னார்கள்.
உடனே கோயில் நிர்வாகம் அவர்களை மடுக் கோயிலில் இயங்கும் அரசினர்' வைத்தியசாலையில் கொண்டுபோய்ச் சேர்ப்பித்தது. ஆஸ்பத்திரிக்கு அவர்களைக் கொண்டு வந்ததும் அவர்களின் இறந்த உடல்களைக் கண்டது தான் உண்மை என்று டாக்டர்கள் கூறினார்கள். நீலம் பாரித்த உதடுகளுடன் கிடந்த அவர்களது உடல்களை சவ அறைகளுக்குள்ளே போட்டு பிண அறுவை ஆய்வு செய்தார்கள்.
O 277 O به چه که واقعا به قانوایی

Page 145
மது உண்டதால் நேர்ந்த இதய நெகிழ்ச்சியால் மரணம் ஏற்பட்டதாக, அவர்களின் சடலத்தின் மீது செய்யப்பட்ட மருத்துவ சோதனையில் தெரியவந்தது. சீரண உறுப்புகளிலும் நஞ்சு இருத்ததை அவர்கள் தங்கள் அறிக்கையில் புலப்படுத்தியிருந்தனர்.
மடுப்பெருநாளை முடித்துக்கொள்ள மனமின்றி பக்தர்களெல்லாம் சுரோலை சுற்றி சுரூப ஆசீர்வாதம் முடிய வீட்டுக்குப் போகக் கிளம்பி க்கொண்டிருந்தார்கள்.
சேரியில் இங்கே நடந்த துக்கம் அறிந்தும் "மாதாவே" என்று சொல்லி எவரும் பெரிதாய் மனவருத்தப்பட்டு அழவில்லை. அவர்கள் கசிப்புக் குடித்து இறந்து தீய்ந்துபோனதில் தங்களுக்கு விசனமில்லை என்ற மாதிரியாகவே அவர்களில் அநேகர் இருந்தார்கள். அவர்கள் மீது துக்கப்பட எந்த நியாயமும் இல்லை என்று கங்காணி மனுவலும் சொல்லிக்கொண்டான்.
என்றாலும் செத்தவர்களின் உறவுகள் துக்கமின்றி இருப்பார்களா..? அவர்களெல்லாம் துக்கத்தின் துடிப்புக்களோடு முட்டிமுட்டி அழுதுவிட்டு பஸ்பிடித்து ஏறிக்கொண்டார்கள், மடுக்கோயிலுக்குப் போவதற்கு.
உடலெங்கும் பரவி அழுத்திய களைப்புடன் கண்களை மூடி பெருமூச்சு விட்டாள் திரேசா. இன்றோ நாளையோ தனக்கு வயிற்றுக்குத்து எழும்பும் என்று உறுதியாக அவளுக்குத் தெரிந்துவிட்டது. சில நாட்களாக மேடிட்ட தன் வயிறு கீழே இறங்கியிருக்கிறதும் அதற்கான ஒரு காரணமாய் இருக்கும் என்றும் அவள் நினைத்துக்கொண்டாள். அவளுக்கு இது முதற்பேறுதானே. ஆனாலும் நாலைந்து பிள்ளைக ளுக்குத் தாயான பெண்கள் அவளுக்குச் சொல்லும்போது இதெல்லாம் அவளுக்குப் புரியத்தானே செய்யும்.
அன்று அவளைப்பார்க்க வந்த ஒரு கிழவி விரிந்த அவளின் வயிற்றைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.
“தேன் மெழுகு வார்ப்பு மாதிரியான உன்ரை உடம்பு இருக்கிறதுக்கும். பிள்ளைத்தாச்சியா இருக்கிற உன்ர வயிறு கொஞ்சம் பெரிசாவும் இருக்கிறதப் பார்த்தாப் பிறக்கிறது உனக்குப் பெட்டையாத்தான் இருக்கும் போலப் பார்க்கக் கிடக்கடி பிள்ள.”
அவள் சொன்னதைக் கேட்டவுடன், திரேசாவின் முகம் மகிழ்ச்சியில்
O 278 O ரீ.பி.அருளானந்தச்

உணர்ச்சி மிகுந்து மலர்ந்து தளதளத்தது. கிழவியை அன்புப் பார்வையுடன் பார்த்து. “எனக்கும் பொம்பிளப் பிள்ளதான் சரியான விருப்பமண ஆச்சி” என்று சொன்னாள்.
“சரி மூத்தது பொம்பிளப்பிள்ளையெண்டா பிறகு அடுத்ததா வாறது ஆம்பிளப்பிள்ளயா வரட்டுக்கேன்” என்றாள் அந்தக் கிழவி கிழவி சொன்னதைக் கேட்டவுடன் திரேசா பெருமூச்சு விட்டாள். அவள் மனம் பாவ உணர்வில் கூசிச்சிறுத்தது. பேசாமலிருந்தாள்.
ஒரு கணத்தில் தான் முன்பு செய்த முழுப்பிழைகளையும் அவள் நினைத்துப் பார்த்தாள். தூய மனமின்றி தூய உடலின்றிப் போக தான் உருவாக்கிய வழிகளை மீண்டும் உருவாக்குவதா?. வேண்டவே வேண்டாம் இனி அந்த விதமான செயல்கள்.! இனிமேல்பட்டு என் மனதையும் உடலையும் பரிசுத்தப்படுத்தியே நான் வைத்துக்கொள்ளவேண்டும். வழிதவறிப் போன நான் மீண்டும் என்பாதைக்கு வந்துவிட்டேன். நானே என்னைத்தூண்டிவிட்டுச் செய்த கொடுமைகளுக்கெல்லாம் பொறுப்பு நான்தான். என் செய்கைகளுக்கு நான் இப்போது திரைபோட்டுக் கொண்டாலும், மனதில் உள்ள நிம்மதியை நான் இழந்துவிட்டேனே.? பெருமெளனமாக நான் இருந்து செய்த அந்தப் பிழைகளை இனிமேலும் ஒருமுறை செய்யாத அளவுக்கு உரித்துவிட்டு, வேறு ஒரு நல்ல பெண்ணாக மாறி நான் இனிமேலே வாழவேண்டும்.” என்று எண்ணினாள்.
“நான் சொல்லுறமாதிரிக் கட்டாயம் பிள்ளை பாரன் உனக்கு நடக்கும். ஆ.” என்றாள் கிழவி மகிழ்ச்சியுடன் சிரித்தபடி பின்பு திரேசாவின் கையைப் பிடித்து முகர்ந்து முத்தமிட்டாள். திரேசாவுக்கும் மகிழ்ச்சியாகத்தானிருந்தது. அந்த மகிழ்ச்சி தன் இப்போதைய மனவருத்தத்திலிருந்து கொஞ்சம் குறைவானதாகவே இருப்பது போலவும் அவளுக்குத் தெரிந்தது.
"ஆச்சி இண்டைக்கு நாளைக்கு இடையிலதான் எனக்குக் கணக்கும் இருக்கு. அப்பிடித்தான் ஆஸ்பத்திரியிலயும் நாள் குறிச்சுச் சொன்ன வயள். எப்ப வயித்துக்குத்து எழும்புமோ தெரியேல்ல ஆச்சி?” என்றாள் அவள்.
“நாளைக்கு நிறை பறுவம் நாள் எண்டதால சொல்லேலாது பிள்ள. அப்பிடியும் வரும்.?”
கிழவி சொன்னாள்.
“தேத்தண்ணி குடியுங்களன் ஆச்சி. போட்டுத்தரவே.?”
"ஐயோ ராசாத்தி உன்ரை நிறைவயிறோட எனக்கெண்டு ஒரு கண்டறி O 279 O مهیه که واراویاه قانوار

Page 146
யாத தேத்தண்ணி போட்டுத் தந்துகொண்டு.” “அதுக்கென்ன ஆச்சி போட்டுத்தாறன் நான்?” "ஐயோம்மா வேண்டாமடி பிள்ள.” "அப்ப என்ன வேற என்னாச்சும் சாப்பிடவெண்டாலும்.?”
“ஒண்ணும் வேணாமம்மா..! அதை விடு அந்தக் கதய. ஆனா வேற ஒண்டு உனக்கு நான் சொல்ல வேணும். எண்டாலும் அத உனக்கு சொல்லியேதரவேணும்?”
"அப்பிடி என்ன ஆச்சி சொல்லக்கிடக்கு?”
"பாவமம்மா நீயடி பிள்ள. பிறகு வயித்துக்குத்து எழும்பினாலும் அந்த நேரம் ஆரும் கூட நாட உன்னோட இல்லாட்டி கஷ்டமாயெல்லே போயிடும். இவன் பெஞ்சமினையும் ஊருக்கு நீங்க இங்க வேணாமெண்டு அனுப்பிப்போட்டியள். அதால உன்ர மனுஷன் எங்கயும் இந்த ரெண்டு மூண்டு நாளுகளுக்கு வெளியால போகாம
வீட்டில உன்னோடயா கூட இருக்கச்சொல் என்ன..?”
கதையை நிறுத்தாமல் சொன்னாள் கிழவி திரேசாவும் “ஓமணையாச்சி.” என்று சொல்லித் தலையசைத்தாள். மனம் அவளுக்கு வினோதமான களிவெறியை அடைந்தது. "நில்லணை இதில கொஞ்சநேரத்துக்கு ஆச்சி” என்று கிழவிக்குச் சொல்லிவிட்டு அவள் வீட்டுக்குள்ளே போனாள். அங்கே போய் தன் உடுப்பு றங்குப்பெட்டியைத் திறந்தாள். அதற்குள்ளே கையைவிட்டாள். உடுப்புக்கு அடியில் ஐம்பது சதம் தட்டுப்பட்டது. அதைக் கையில் எடுத்துக்கொண்டுவந்து கிழவியிடம் "இந்தாச்சி! இதில வெத்தில பாக்கு என்னத்தையும் நீங்க வாங்குங்கோ?” என்று சொல்லியபடி நீட்டினாள் அவள்.
“எனக்கென்னத்துக்குப்பிள்ள..?” "சரிதான் ஆச்சி பிடியுங்கோ.?” என்றாள் அவள்.
கிழவிக்கும் தருகிறத வாங்க வேண்டுமென்ற மனம்தான்! இனியபரப் பாக, "சரி பிள்ள தா தாறத?” என்று சொல்லியபடி வாங்கிக் கொண்டாள். “வாயும் சுருங்கிப்போட்டுது! வயிறும் சுருங்கிப்போட்டுது! முரசும் இப்ப என்னத்தச் சப்ப வெளிக்கிட்டாலும் எனக்கு நோகுது.! ம் நான் வாறன் பிள்ள” என்று அவளுக்குச் சொல்லிவிட்டு கிழவி வெளிக்கிட்டுக் கொண்டு போய்விட்டாள்.
O 280 O ரீ.பி.அருணானந்தச்

திரேசா குடிசைக்குள் நுழைந்தாள். அவளுக்கு ஆழ்ந்த துக்கம் தரும் அமைதி பரவியதுபோல மனம் இருந்தது. வெறுமை மட்டும் தரும் அமைதியாக அது இருந்தது. ஆஸ்பத்திரிக்கு போவது பற்றி நினைத்தபொழுது உடல் புல்லரித்தது. நடுங்குமளவிற்கு கடுமையான அச்சம் அவளுக்கு ஏற்பட்டது. என்றாலும் தன்கையிலே எடுத்து கொஞ்ச ஒரு பிள்ளை தனக்கு வரப்போகிறது என்று அவள் நினைத்திடவும், மனதை வறளவைத்த வெறுமையும் பயமும் மாறி இனிய பரபரப்பு அவளுக்கு ஏற்பட்டது. அதனால் எப்போது தனக்கு இனி வயிற்றுக்குத்து எழும்பும்? என்று மெல்ல மெல்ல அதை அவள் விரும்ப ஆரம்பித்தாள்.
சாயங்கால வேளை கொஞ்சம் உடம்புக்கு குளிர்மையாக இருந்தது அவளுக்கு. பொழுதுபட்டதும் விளக்கைக் கொளுத்தி வைத்து விட்டுப் பாயை விரித்தாள் அவள். பாயிலே இருப்போம் என்று நினைத்துக்கொண்டு பாடுபட்டு அதில் இருந்தபோது, பெரிய பொறுப் பாக வயிறு அவளுக்கு இருந்தது. பெருமூச்சுவிட்டபடி கைகளை பின்னாலே ஊன்றியபடி அவள் உடல் தளர்ந்தாள். சாய்ந்து நிமிரும் தேர்மாதிரி அவள் வயிறு. அதனால் கைகளை இன்னும் கொஞ்சம் பின்னால் சரித்துக்கொண்டு அவள் இருந்தாள். வியர்வை மணம் எழுந்தது. சோர்வு அவளுக்கு ஏற்பட்டது. உடலில் நரம்புதுடிக்கும் ஒலி அவளுக்குக் கேட்கின்றது மாதிரியாக இருந்தன. வேர்வை வேர்த்து அவள் கழுத்திலும் கன்னத்திலும் தலைமயிர் ஒட்டிப்போய்விட்டன. அழுத்தமான பெருமூச்சுகள் அவளுக்கு வந்தன. இறுகிவந்ததுமாதிரி வயிற்றுக்குள்ளே நொந்தது. கஷ்டப்பட்டு பாயில் இருந்து எழுந்து வீட்டுக்குள்ளேயே அங்குமிங்கும் நடக்கத் தொடங்கினாள். மெல்லிய வலி அலைபோல வயிற்றுக்குள்ளே எழுவதுமாதிரி இருந்தது. உடலெல்லாம் பார்வையுணர்வைப் பெற்றதுமாதிரி அந்த வலியை அவள் யோசித்துப் பார்த்தாள். நடந்து கொண்டிருக்காமல் அவளால் ஒரு இடத்திலே இருக்க முடியவில்லை. எழுந்துவிட்ட வயிற்று வலியும் அசையவைத்தபடி நகர்வது போல அவளுக்கு இருந்தது.
"ஆசுப்பத்திரிக்குத்தான் போகவேண்டி ஆகப்போகுதோ..? நினைத்துக்கொண்டு வாசலடியிலும் நின்று வெளியே பார்த்தாள்.
"அவரையும் எங்க இன்னும் வீட்டவரக்காணேல்ல?” நினைத்ததும் குத்து வலியையும் அதோடே ஏற்றுக்கொண்டதாய் “ம்க்ம். ம்க்ம்' என்று அவளுக்கு திணற வேண்டியதாய் இருந்தது.
முழுநிலா குளிர்ந்த முகத்துடன் எழுந்து ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. நிலா வெளிச்சம் வீட்டு முற்றத்தடியிலும் விழுந்து பரவிக்கிடக்கின்றதை அவள் பார்த்தாள். ஒன்றிலும் மனம் அவளுக்குப் பதியவில்லை. வேதனையில் முற்றத்தடியிலும் வந்து வயிற்றைக் கையால்
துயரச் சுஃபேவிகள் O 281 O

Page 147
தடவிவிட்டுக்கொண்டும், தலையை அங்குமிங்குமாக சரித்து விழுத்திக்கொண்டும் அவள் நடந்துகொண்டிருந்தாள். வலி அவளுக்குப் பயங்கரப் பாரமாக ஏறிக் கனத்துக்கொண்டு வந்தது. சொல்லமுடியாத அளவுக்குப் பெருமூச்சும் முனகலும் அவளிடமிருந்து வெளிப்பட்டன. தள்ளாடியபடி நடந்து வந்து படலையடியில் நின்று அவள் வெளியே பார்த்தாள். தொலைவில் நிலவை அழிக்கும் வெளிச்சமாக ஒரு சயிக்கிள் லைட் வெளிச்சம் வந்துகொண்டிருந்தது. உச்சமான வெளிச் சமாக இருந்ததால் புது சைக்கிள் லைட் வெளிச்சம்தான் என்று அவள் நினைத்தாள்.
"இந்தச் சேரியிலே புதுச் சயிக்கிள் வைச்சு ஒடுறவர் என்ர மனுசன் தானே.? வேற ஆரட்டயும் இப்படியாய்ப் புதுச் சயிக்கிள் இல்லையே.?” தித்திப்பு ஞாபகமாக தன் வலிக்குள்ளும் இந்த நினைவு அவளுக்கு வந்தது.
சயிக்கிள் வேகமாக வந்து படலையருகில் நின்றது. சிமியோன் சயிக்கி ளில் இருந்து இறங்கினான். திரேசா படலையருகில் நிற்கின்றதைக் கண்டான்.
"என்ன திரேசா இருட்டுப்பட்டுபோன நேரம் பிள்ளத்தாச்சி நீ இதிலயா நிக்கிறாய்..? அவன் கேட்டதுக்கு உடனே பதில் சொல்லவில்லை அவள். ஆனாலும் அவன் முகத்தைப் பார்த்தபடி முட்டுப்போல மூச்சிழுத்தாள். அவள் முகம் வாடிப்போயிருப்பதைச் சிமியோன் கண்டுவிட்டான்.
“என்ன களைப்பாயிருக்கிறாய் திரேசா. என்ன செய்யிது.?”
"வயித்துக்க சரியாக் குத்துறமாதிரியிருக்கு!”
"என்ன வயித்துக்குத்துதோ..?” அவனுக்கு உடனே மனம் பட படத்தது.
"அப்ப காரைப்போய்ச்சொல்லிக் கூட்டியரட்டே ஆஸ்பத்திரிக்குப் போக.?”
"இப்ப வேணாம் போல இருக்கு. இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பாத்திட்டுப் பிறகு போவமே..?”
"அப்பிடியெண்டா..?”
"குத்து நல்ல எழும்பவிட்டி..?”
“வேணாம் வேணாம்! இப்பவே போயிடவேணும்.! நீ நான் வாங் கித்தந்த துவாய், ஓடிக்கலோன், சோப்பு, பிள்ளைக்கு உடுப்பு,
О 282 о ரீ.பி.அருணானந்தே

சுடுதண்ணிப் போத்தல், கோப்பி, சீனி, எண்டு அதுகளயெல்லாம் ஒரு பாக்கிலயாப் போட்டு றெடியா வைச்சுக்கொள்ளு. நான் இந்தா கார்புடிச்சுக்கொண்டு கெதியா கெதியா ஓடி வாறன்.”
சொல்லிவிட்டு அவன் அதே வெளிச்சத்தோடு சயிக்கிளில் பறந்த மாதிரி ஓடினான். திரேசா உடம்பில் ஏற்பட்டிருந்த வலியைப் பொறுத்துக்கொண்டு குடிசைக்குள்ளே வந்தாள். ஆஸ்பத்திரிக்குப் போகவென்று முன்னமே தயார்படுத்தி வைத்திருந்த அந்தப் பையை எடுத்துக்கொண்டு வந்து வாசலடியிலே அதை வைத்தாள். நாலைந்து மாதத்துக்கு முன்பு சிமியோன் ஒரு குழந்தைப் படத்தை வாங்கிக் கொண்டுவந்து வாசலுக்குப் பக்கத்துச் செத்தையிலே மாட்டியிருந்தான். காலையிலும் மாலையிலும் அவள் பார்த்துப் பார்த்து நாட்களைக் கழித்தபடம்தான். இருக்கிற இந்த உடல் வலியிலும் அதைத்தான் அவளுக்கு திரும்பவும் ஒருமுறை பார்க்கவேண்டிய விருப்பமாக இருந்தது. மிக அறிமுகமான படமாக இருந்தாலும் அந்த முகத்துக்குள்ளே அவள் அதுவரை பார்த்திராத ஒரு அழகு விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தமாதிரி அப்போது அவளுக்கு இருந்தது. அந்தப்பிள்ளையின் கண்களிலே புதிதாக ஒரு சுடர்! உதடு இன்னும் விரிய அவளை நோக்கிப் புன்னகைப்பதுபோலவும், அந்தக் கனிந்த சிரிப்போடு கையை நீட்டிக்கொண்டிருப்பது இன்னும் அழகாகவும் அவளுக்குத் தெரிந்தது. இன்று ஆவலாக அவளை ஈர்த்துக்கொண்ட துமாதிரியாகக் காணப்பட்டது அந்தப்படம்.
வாசலடியிலே கார் வந்து நிற்கும் சத்தம் அவளுக்குக் கேட்டது. அந்தக் கார் வந்து நின்றதோடு தான் தனக்குள் ரகசியமாய் இருந்ததுபோல் இருந்த வயிற்றுக்குத்து, இப்பொழுது தாங்க முடியாமல் இருப்பதாக அவள் உணர்ந்தாள். அவளுக்கு இடுப்பெலும்புகளையும் தசைச் சுவர்களையும் வேதனை புரள நெகிழ்த்திக் கொண்டிருந்தது. அந்த வலியை அடக்க மூச்சைத் தேக்கி தம்கட்டி நின்று அவள் முக்கு முக்கினாள். வலி திருகித்திருகி அவளை நிற்கக் கூட முடியாமல் ஆட்டுவித்துக் கொண்டிருக்கவும், பெஞ்சமினும் அவளுக்குப் பக்கத் திலே வந்துவிட்டான்.
தாங்க முடியேல்ல சரியா. ம்க். குத்துது வயித்துக்குள்ள..?” என்றான் அவள்.
சிமியோன் தன்னோடு அவள் தோளை சரிவுபடுத்திப் பிடித்துக்கொண்டு பையையும் ஒரு கையில் எடுத்துக்கொண்டான். அவளைப்பிறகு அன்பு புரியும் பாவனையுடன் மெல்ல மெல்ல நடத்திக்கொண்டுபோய்க் காருக்குள்ளே இருக்க வைத்தான். அவளுக்கு வெளியே எதையோ எறிந்து விடுவதற்கு உறுப்பு தவிப்பது மாதிரி இருந்து கொண்டிருந்தது.
துயரச் சுண்பண்கள் O 283 O

Page 148
"ஐயா இந்தா கொஞ்சம் பொறுத்திருங்கோ” என்று கார்ச்சாரதிக்குச் சொல்லிவிட்டு ஒட்டமும் நடையுமாக வந்து சயிக்கிளை உள்ளேவிட்டுக் குடிசைக்கதவைச் சாத்தினான் பிறகு படலைக்கு வெளியாலே வந்து அதையும் சாத்திவிட்டுக் காருக்குள்ளே ஏறிக்கொண்டான். மலையாளி பணிக்கரின் "கென்றிபோட்' கார் இரைச்சலிட்டுக் கொண்டபடி அந்த வீதியாலே மருத்துவமனைக்குப்போக விரைந்துகொண்டிருந்தது. காரின் பின்னாலே அதன் புகை.
திரேசா திரும்பத்திரும்ப “மாதாவே என்ர சதாசகாய. மாதாவே" என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அவள் அப்படிச் சொல்வதைப் பார்த்துவிட்டுச் சிமியோனும் கூப்பிய கரங்களாக மாறி “மாதாவே சதாசகாய மாதாவே" என்று காருக்குள் இருந்தபடி சொல்லத் தொடங்கினான். அவனிடம் நிறைந்திருந்த கடவுள் நம்பிக்கையற்ற தன்மை அவ்வேளை மறைந்தது போல இருந்தது.
வைத்தியசாலை வாசலில் கார்வந்து நின்றது. திரேசாவைக் காரிலிருந்து இறக்கி அவளைப் பொறுப்பாகத் தன்னோடு பிடித்தவாறு நடக்கவைத்துக் கூட்டிக்கொண்டு போனான் சிமியோன்.
ஆஸ்பத்திரியில் பெயரெல்லாம் பதிந்தபிறகு அவளைச் சக்கர நாற்காலியில் வைத்துக்கூடத் தள்ளிக்கொண்டுபோகாமல், "நடந்துவா நடக்கலாம் தானே நீ.” என்று ஒற்றை உடை அணிந்திருந்த தாதி ஒருத்தி அவளை வார்ட்டுக்குக்கூட்டிக்கொண்டு போனாள்.
"அம்மா இந்தப் பை” என்றுகொண்டு தாதிக்குப் பின்னாலே அவன் போனான். "நீ எங்க வாறாய்?" அவள் கேட்டாள்.
"அங்க வந்து இதுகள குடுத்திட்டுப் போவமெண்டு.” அவன் சொன்னான்.
“அதெல்லாம் அங்கின இந்த நேரம் ஆரும் உள்ள வரேலாது நீ உத அவளிட்டயே குடு அவள் கொண்டருட்டுக்கும். நீ போ இங்கின ஆரும் நிக்கேலாது.”
அவள் கண்டிப்பாகச் சொல்லிவிட, முன்னாலே சனங்கள் வந்து இருந்து கொள்ளுகிற இடத்தடியிலே போய் ஒரு வாங்கிலே இருந்துகொண்டு யோசித்துக் கொண்டிருந்தான் சிமியோன். நேரம் பத்துமணி இருக்கும் என்று அவன் தனக்குள்ளே கணித்தான். ஒரு சனமுமில்லாமல் அங்கே வாங்கெல்லாம் வெறுமையாகக் கிடப்பதைப் பார்க்க அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
о 284 о ரீ.பி.அருளானந்தே

"திரேசாவுக்கு என்ன நடந்ததோ. பிள்ளைப் பெறுவார்டுக்குக் கொண்டு போயிருப்பினமோ..?” மனதை உலுக்கிக் கொண்டிருந்தது அந்த நினைவு. திரேசா தன் எதிரே வயிற்றுக்குத்து வேதனையுடன் நிற்பது மாதிரியாய் அவன் நினைத்தான். பெருமூச்சு விட்டான். மின்சார பல்ப் வெளிச்சம் விழாத வாங்கிலே போய் அதிலே இருந்தால்த்தான் யாருக்கும் தன்னைத் தெரியாது . வெளியே துரத்த மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டு அந்த வாங்கிலே போய் மறைவாக இருந்தான். தூக்கம் அவனுக்கு, கண்கள் மீது அரக்குப் போல படிந்து இறுக்குவதுபோல இருந்தது. வாங்குச் சட்டத்திலே அப்படியே கையைப் போட்டுக்கொண்டு தலையை சரித்தபடி கண்களை மூடினான்.
யாரோ அப்போது முதுகிலே அவனுக்குத் தட்டியதுபோல இருந்தது.
"ஏய் ஆரு எழும்பு எழும்பு." டோர்ச்லைட் வெளிச்சமும் முகத்தில் அவனுக்கு விழுந்தது.
“காவல்க்காரன்தான்” என்று தலையைத் தூக்கிப்பார்த்தவுடன் நினைத் தான.
“என்ன இதில படுத்திருக்கிறாய்.”
“மனுசிய பிள்ளைப்பெறு வார்ட்டில விட்டிருக்கிறன்.”
"அப்ப நீயே இங்க ஆஸ்பத்திரியில பிள்ளைப்பெறப்போறாய்..?”
"இல்ல என்னமாதிரியெண்டு இருந்து பாத்திட்டு?”
"போ போ இதில இருக்கேலாது எழும்பு எழும்பு?” என்று சைகை காட்டி விட்டு நின்றான் அவன். கண்களுக்குள் தணலாட்டம் பிரதிபலித்தது.
"ஆர் அங்க..?” அதிலே வந்த ஒவசியரும் அவனைக் கேட்டார்
"ஆரோ ஒராள் இதில படுத்திருக்கு. அதான் வெளியால நான் போகச் சொல்லுறன்.”
"வீடே இங்க படுக்கவிட, கலைச்சுவிடு வெளியால உவரை?” ஒவசியர் சொல்ல,
“போ போ.” என்றான் காவல் வேலை பார்ப்பவனும்
"என்ன பதுங்கிப் பதுங்கிக்கொண்டு நிற்கிறாய். கெதியா வெளியால
நட.?” என்று ஒவசியரும் ஒரு சத்தம் வைத்தார்.
சிமியோன் பார்வையாளர் உள் வார்ட்டுக்குப் போகும் வழியை, துயரச் சுலப்பண்கள் O 285 O

Page 149
திரேசாவின் நினைவோடு ஒருமுறை அதிலே நின்றபடி திரும்பி ஒரு முறை பார்த்துவிட்டு வெளியாலே நடந்தான்.
அவன் வெளியாலே போக நடந்துகொண்டிருக்கும்போது, காவல்க்கா ரனின் கையிலுள்ள டோர்ச் வெளிச்சம் அவன் போகும் பாதையிலே விரட்டுவது மாதிரியான ஒரு பாங்கில், முன்னும் பின்னுமாக விழுந்து கொண்டிருந்தது.
வைத்தியசாலையில் இருந்து வெளிக்கிட்டு பிரதான வீதியால் நடந்து கொண்டிருந்த அவன், மேற்கே திரும்பிச் செல்லும் பாதைவழியாக நடந்து கொஞ்ச நேரத்திற்குள்ளாக தன் குடிசைக்கு வந்துசேர்ந்தான். பாயை விரித்துப் போட்டுவிட்டுப் படுத்தால், நித்திரையே அவனுக்கு வரவில்லை. அவனுக்கு திரேசாவின் நினைவாக இருந்தது. நெடுமூச்சு களாக மாற்றிவிட்டுக் கொண்டு நித்திரையின்றி அவன் கிடந்து புரண்டு கொண்டிருந்தான். இரவு முழுவதும் அவனுக்கு இப்படியே உபத்திரமாகவே இருந்தது.
கோழிகூவிய காலையில், களைத்த கண்களின் நித்திரை மயக்கத்தோடு பாயைவிட்டு எழுந்தான் சிமியோன் முகத்தைக் கழுவிய கையோடு சயிக்கிளை எடுத்துக்கொண்டு கடைவீதிக்குப் போனான். அங்கே நின்று சற்றுநேரம் கடத்திவிட்டு ஒருகணம் கூட மறக்கவியலாத பிள்ளையின் நினைவோடு ஆஸ்பத்திரியை நோக்கி சயிக்கிளில் அவன் போக விரைந்தான்.
அங்கே அவன் போனதருணம் பார்வையாளர் நேரமாகியும் விட்டது. சயிக்கிளை தரிப்பிடத்தில் விட்டுவிட்டு, போன சனக்கூட்டத்தோடு அவனும் உள்நுழைந்தான். பிள்ளைப் பெறுவார்ட்டுக்குள் அவன் போனபோது, அங்கே உள்ள கட்டில் வழியே தன் மனைவியை காண்பது அவனுக்கு இயல்வதாக இருக்கவில்லை. ஒரு கட்டில் யாருமில்லாமல் வெறுமையாகவும் அவனுக்குத் தெரிந்தது. "எங்கே திரேசா?” என்ற தேடலுடன் அந்தக் கடைசிக்கட்டில் மட்டும் அவன் நடந்துவந்தான்.
கட்டிலுக்குப் பக்கத்திலே கீழே விரிக்கப்பட்டுக் கிடக்கும் பாயிலே அவன் பார்வையின் கவனம் போனது. அது திரேசாதான். அவளும் அவனைப் பார்த்தபடியேதானே படுத்தவாறு இருந்தாள். பக்கத்திலே குழந்தை.
அவனுக்கு இதிலொன்றும் உடனே மகிழ்ச்சியின் ஈடுபாடு வரவில்லை. அந்தக் கட்டில் வெறுமையாய்க் கிடக்கிறதே, அதிலே தன் மனைவியையும் பிள்ளையையும் ஏன் படுப்பதற்கு அவர்கள் வைக்க O 286 O ரீ.பி.அருணானந்தே

வில்லை? என்றேதான் அவன் நினைத்தான். அதை நினைத்துக்கொண்டு ஒரு சொல்கூட வந்ததுக்குத் திரேசாவுடன் பேசாமல் அவன் நின்றுகொண்டிருந்தான். அந்த நினைவு அவனுக்குச் சினமும் பின்பு துயரமும் கொள்ளச் செய்தது. மனம் சுருங்கிவிட்டது. அடிபட்டது போல வலித்தது. தன் நெஞ்சுக்குள் அவை எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அவன் முன் நடந்தான்.
என்றாலும் திரேசா படுத்துக்கிடந்த பாயின் அருகில் போனபோது தன்னுள் முன்பு ஓடிய எண்ணங்களையெல்லாம் அவன் மறந்தான். சந்தோஷத்தில் சிரித்தான். “பொம்புளப்புள்ள” என்று அவளும் பிள்ளையின் பிஞ்சுக்கையைப் பிடித்துக்கொண்டு அவனுக்குத் தன் முகம் மலரச் சொன்னாள். சிமியோனும் தன் விரல்களால் பிள்ளையின் கால்களை தடவிப்பார்த்தான். பிள்ளை துயிலெழுந்து மெல்லிய சத்தமாக அழுதது. சிமியோன் கண்களின் ஒளியோடு நிறைந்த மனதுடன் தன் பிள்ளையைப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு திரேசாவுடனும் அவன் சந்தோஷமாகக் கதைத்துக்கொண்டிருந்தான். அந்நேரம் பார்வையாளர் நேரம் முடிந்ததற்கான அறிவிப்பாய் வைத்தியசாலைக்குள் இருந்த மணி கலங்கிய வீச்சத்துடன் அடித்துக்கேட்டது.
பொங்கி எழுந்து ஒலித்த அந்த மணியோசையைக் கேட்டதோடு, பார்வையாளராக வந்தவர்களெல்லாம் அந்த வார்ட்டுகளிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள். சிமியோன் திரேசாவைப் பார்த்துக் கதைத்துக் கொண்டிருக்கும்போது ஒரு கணம் தன் கண்களில் அவள் பெரிய ஆபத்தொன்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறாள் என நினைத்தான். அதனால் வாழ்ந்த காலம் முழுக்கத் தான் அவளிடம் சொன்னவை, திட்டியவை, ஏசியவை, எல்லாம் அப்போதுதான் அவன் செவிகளுக்குக் கேட்பது போன்று இருந்தன. அதெல்லாம் அவன் நெஞ்சில் புண்ணாக அவ்வேளையில் நொந்தாலும் திரேசாவுடன் அன்பாக இருந்து கதைத்துவிட்டுத்தான் அவன் வார்ட்டிலிருந்து வெளியேறினான். அந்த வார்ட் வாசலால் வெளிக்கிடும் போது, அங்கே வேலைசெய்கிற தாதி ஒருத்தி அவன் கண்ணில் சந்தித்தாள். அவளைக்கடந்து போக ஒவசியரையும் அவன் முன்னால் போன இடத்திலே கண்டான். அவர்கள் எல்லாரையும் அந்த அந்த இடத்தில் அவன் கண்டதோடே சரி! ஆனாலும் தன் மனைவியையும் பிள்ளையையும் பாயில் கீழே படுக்கப்போட்டிருக்கிறது பற்றிய விஷயமாக நியாயத்தை, அவன் அவர்கள் யாருடனும் கதைக்க முடியவில்லை. அன்றுதான் அவன் அப்படியொன்றில்லாமல் திரேசாவை அவன் ரிக்கட்வெட்டி வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோகும் கடைசி நாள்வரைக்கும், அவன் அதைப்பற்றி யாருடனும் பேசவே இல்லை.
glugis elsüvaisai O 287 O

Page 150
える
ஆடிமாதம் முடிந்தும் "விர்று விர்று” என்று வீசிக்கொண்டிருந்தது காற்று. பாலை மரத்துக்குக் கீழே நின்றுகொண்டிருந்த செவ்வந்திக்கு குப்பையெல்லாம் அள்ளித் தலைக்குமேலே எறிந்தது மாதிரி கொட்டியது. “யாத்தே காத்து.” என்றபடி மேலே நிமிர்ந்து பார்த்தாள் கிளையெல்லாம் கதிகலங்கினமாதிரி ஆடிக்கொண்டிருந்தன.
"ஓயடியம்மா வாவேண்டியம்மா குளிக்கப்போக?"அவள் ராக்காயியைக் கூப்பிட்டாள். “ஒவ்வொரு நாளும் என்ன குளிப்பு? அவர அதால போவக்க பாத்துக்கிட்டுப் போவத்தான் நீ இப்ப போவயா இருக்கிறே.?” அவள் குடிசைக்குள் இருந்தபடி சொன்னாள்.
"சாணிக்கட்டி சனியன்.! பீத்திறியாடி. வா வேண்டியம்மா..?”
罗%
“மாட்டேன்!.
அவள் பிறகு ஒரே பேச்சும் பேசாமல் மரத்தின் கிளையில் இருந்த குருவியையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு கேட்டாள்
"ஏம்மா வரமாட்டேங்கிறே?”
"கூழ் தண்ணிக்கா அதில யெப்புடீக்கா குளிக்கிற.? தண்ணிக்கொடோம் ரெண்ணு கொண்டாந்து தலையில ஊத்திக்கிறதுக்கு.?”
"அப்படியேன் கஷ்டப்பட்டுக்கணும் கொளம்தானே இருக்கு குளிச்சுக்கிறதுக்கு நீ வாடீண்ணா?”
“பெரிய கரைச்சலு அக்கா உன்னவோட.?” என்று கீழ்க்குரலில் முனகிக் கொண்டு அவள் வாசலால் வெளியே வந்தாள். தங்கையை பார்த்ததும் அவளுக்கு பளிரென்று சிரிப்பு வந்துவிட்டது. அவள்தங்கை யின் தலைமுடியை அழுத்தி வாரி சடைபோட்டுவிட்டது இன்னும் குலையவே இல்லை. பெரிய மனுசியாய்விட்டபிறகு பூத்துக்குலுங்கி புதுப்பாளை விரிஞ்சது மாதிரித்தான் இருக்கிறாள் இவள்! என்று அவள் நினைத்தாள்.
அப்படியே பூத்தமரம் போல வந்துவிட்ட அவளை வைத்தகண வாங்காமல் அவள் பார்த்தபடி நின்றாள். அவளின் உள்ளங்கை மலர்போல சிவந்து இருக்கிறதையும் பார்த்து அவள் ரசித்தாள்.
“என்னக்கா அப்பிடியா என்னையே பார்க்கிறே.?”
O 288 O ரீ.பி.அருளானந்தே

"நீ இப்பவா எம்பூட்டு அழகாயிருக்கா பிள்ள.!” “போக்கர்" அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது. என்றாலும் மனதுக்குள் ஒருவித மகிழ்ச்சி. அது மனதுக்குள் வெளிப்பட்டவுடன்.
"சரிக்கா போய்க்குவம் உடுப்புங்களை எடுத்துங்கக்கா?" என்றாள் அவள். செவ்வந்தி கொடியில் கிடந்த உடுப்புக்களை உருவி தோளில் போட்டுக்கொண்டாள். ராக்காயி குடிசைக்குள்போய் தன் உடுப்புக்களை எடுத்துவந்தாள். இருவரும் படலையைத் திறந்து கொண்டு வெளிக்கிட்டார்கள்.
செல்வநாயகம் கொட்டில் வாசலில் அமைதியாக நின்று கொண்டிருந் தான். செவ்வந்தி வந்துகொண்டிருக்கிறதை ஆசையுள்ள கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் தன்னையே பார்க்கிறதை அறிந்ததும் நடக்கும் பாதங்கள் அவளுக்கு மிருது ஸ்பர்சனமாக தரையைத் தொடத் தொடங்கிவிட்டன.
"அக்கா உன்னையேதான் அவர் பாக்கிறாரு?" ராக்காயியின் சொற்கள் ஒலித்தன.
“சும்மா வரமாட்டியாடி.”
"அவரோட இண்ணிக்கு கதைப்போமாக்கா..?” தங்கை கேட்க அவள் உடலுக்குள் இனிய இசை ஒன்று புகுந்துகொண்டதுபோல இருந்தது.
“வெளயாடாதடி நீ.?”
"அப்ப ஒன் ஆசயை அப்படியே வைச்சிக்கப்போறியா. நீ சேரக்கரை யில்ல.” அவள் சொல்லவும் செவ்வந்திக்கு மனம் ஏங்கியது. சோகமான கண்களுடன் தங்கையைப் பார்த்தாள்.
“பொறுத்துக்க இண்ணிக்கு ரெண்டில ஒண்ணு ஒன் விஷயத்தில நான் பாத்துக்குறன்.?”
“என்னடி செய்யப்புறே.?”
“கதைச்சுக்கிறதுதான்.?”
“என்னத்த.?”
“ஒன்னோட அவருமேல உள்ள விருப்பத்தத்தான்.?”
"வெக்கங் கெட்டவளே! இதெல்லாமே பெம்பளைங்க நாங்க செல்லக் கூடிய கதையாடி..?”
glugă sistualăsei O 289 o

Page 151
"சொன்னா என்னவாம்.?”
"உனக்கு வெக்கமாயில்ல.?” “போ நான் கண்டிப்பா இண்ணிக்கு சொல்லத்தான் போறேன்.?”
"ஐயோ இழவு புடிச்சவளே? நான் திரும்பி ஒடீடுவேன்! வேணாண்டி அப்புடீ ஒண்ணும் பேசாதடி.!” தங்கை சொல்லவும் கால்தடுமாறியவள் போல நடக்கத் தொடங்கினாள் செவ்வந்தி இருவரும் காவல் கொட்டிப்பக்கமாக நடந்து வந்தபோது "அக்காவும் தங்கச்சியுமா எங்க போறிங்க குளத்துக்கா குளிக்கப் போறியளா..?" என்று அவன் கேட்டான். உடனே ராக்காயி. "ஆமாய்யா இப்பெல்லாம் அக்கா கொளத்துக்குப் போயிக்கத்தான் வேணுமிண்ணு நாட்டுக்கிட்டுநிக்குது.” என்று ஒரு சிரிப்புச் சிரித்தபடி அவனுக்குச் சொன்னாள்.
“இப்ப எல்லாமெண்டா. அப்ப முன்னமெல்லாம் நாளாந்தம் நீங்க குளத்துக்குப் போறேல்லயா..?”
“போய்க்குவோம். மூணுநாளுக்குகொருவாட்டி இல்லாட்டியா ரெண்ணு நாளுக்கியா ஒருவாட்டி அப்படியாத்தான் இருந்துக்கிட்டிருந்துது”
“பிறகு ஏன் இப்படியா..?”
“என்ன தெரியாதமாதிரியில்லாம் நீங்க கேக்கிறீங்க..? நீங்க என்கிட்ட குடுத்தீங்கல்ல வீண. அதக்கூட அக்கா என்கிட்டத்தா எண்ணு இப்ப பறிச்சுக்கிட்டு தானே வைச்சிருக்கினா.”
“என்னடி இப்படியா பொய்யி சொல்லறே.?” அவள் முகம் சிவக்கக் கேட்க,
“சரி சரி இல்லத்தான். நீ சும்மா இருந்துக்க.!” என்று அவளுக்குச் சொன்னாள் ராக்காயி.
செல்வநாயகத்தின் கண்கள் சுடர்விட்டபடி செவ்வந்திமேல் திரும்பின. "அப்போ உங்க அக்காவுக்கு வீணையில அவ்வளவு விருப்பமா..?” என்று அவளைப் பார்த்துக்கொண்டபடியே அவன் கேட்டான்.
ராக்காயி உடனே சொன்னாள்: "நீங்க குடுத்த வீணை என்கிறதாலதான் அக்கா அத எங்கிட்ட இருந்து வாங்கிச்சு. வேற யாராச்சும் என்கிட்ட தந்திருந்தா அக்கா அத விருப்பப்பட்டு தான் வாங்கி இருக்காது.”
"அப்படியா..!"
o 290 o ரீ.பி.அருளானந்தம்

"பின்னே எப்படியாம்? நீங்க ஒண்ணும் தெரியாத மாதிரி கேட்கிறீங்க.?”
"அப்படியில்ல.”
“பிறவா எப்படி எண்ணுறீங்க..?” மெல்லச் சிணுங்கியபடியே ராக்காயி யின் கையை செவ்வந்தி பிடித்தாள்.
“இண்ணைக்கு ரெண்ணில ஒண்ணு ஒங்க வாயால தெரிச்சுக்க வேணு மிண்ணுதான் அக்காவு நிக்குதய்யா..?”
"அந்தளவுக்கு துணிவிருக்கா உங்க அக்காவுக்கு.?”
"எங்களுக்கு என்னையா துணிவு.? நாங்க கீழ்சாதிங்க! ஒங்களுக் குத்தானே துணிவென்கிறது வேணும்? நீங்கெல்லாம்தானே அதுங்கள எங்களுக்குச் சொல்லிக்கவேணும்.? நாங்க இதால போய்க்கிறப் பவெல்லாம் நீங்க எங்கூட விருப்பமா கொட்டிலடியில தூரவா நிண்ணுகிட்டு கதைக்கிறீங்க பேசிக்கிறீங்க. எங்களுக்கிண்ணா என்னதான் தெரியும்.?”
"ஆனாலும் உன்ர அக்கா எப்பவுமே வாய முடிக்கொண்டுதானே இருக்கிறா..?”
"அப்பிடீயில்லாம் அவவுக்கு வாயால ஒண்ணுமே சொல்லவராது. அவவுக்கு ஒடன வந்துபுடும் வெக்கம். இப்பநான் சொல்லுறதவளத்தான் அவ சொல்லிக்கிற மாதிரியா வையுங்களேன்.?”
“சரி நான் அப்ப உன்ர அக்காவில விருப்பமெண்டு சொன்னா பிறகு உங்கட அக்கா என்ன செய்வா..?”
“என்னத்த நீங்க சொல்லுறீங்களோ செய்வா ஐயா அவ.?”
ஆனந்தத்தின் பெரிய ஆனந்தத்துடன் சொன்னாள் ராக்காயி. அப்ப டியே தனக்குள் ஆழ்ந்த மகிழ்ச்சியோடு தலைகுனிந்தபடி நின்றாள் செவ்வந்தி
செல்வநாயகம் ஒரு நிமிடம் அப்படியே நின்றபடி தனக்குள் யோசித்தான். "செவ்வந்தி நூற்றி எட்டுப் பொருத்தமும் கொண்ட அழகுடையவள்தான். அதனால்தான் அவள் மீதுள்ள ஆசை முழுமையான வீச்சுடன் மேலெழுந்து எனக்கும் தவிப்பாக இருக்கிறது. இவளை நான் சேர்த்துக்கொண்டால் என்பக்கத்து உறவினரோடும் சேர்ந்து கொள்ளமுடியாது. அவள் பக்கத்து ஆட்களுடனும் சேர்ந்து தனக்கு வாழவும் முடியாது. நான் பிறகு நடுவீதியில்தான்!”
துயரச் சுச0uவிர்கள் O 291 O

Page 152
நினைக்கவும் மனம் திடுக்கிட்டு அவனுக்குப் படபடத்தது. என்றாலும் அவனுக்கு ஏக்கம் ஏற்பட்டது. இனிமேல் செவ்வந்தியின் மீது தனக்கு நினைவே இல்லை, என்று இருந்துகொள்ள முடியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது. இதற்கெல்லாம் முடிவாக நான் என்ன செய்வது? அவன் சிந்தித்தான். இடைவெளியில்லாமல் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைக்கு, அவளின் நினைவும் அவனுக்கு ஊசலாட்டம் போட்டது. கடைசியில் எல்லாம் ஓடிப்போய் மஞ்சத்தில் விழுந்தது மாதிரியாக அவனுக்கு வந்துவிட்டது. என்னபயம்? என்று அவன் நினைத்துத் துணிந்துவிட்டான். சம்பிரதாயம், சாதி, என்கிற கூண்டுக்குள் சுற்றிச் சுற்றிக்கொண்டு, ஆசையைக் கொன்று நிர்வாணமாக நிற்பதற்குப் பதிலாக, அதை உடைத்துக்கொண்டு ஓசையோடு வெளிப்பட வேண்டுமென்ற தைரியம் அவனுக்கு அப்போது வந்தது.
கிடைத்த அந்தச் சந்தர்ப்பத்தோடு தன் நிலையையும், விருப்பத்தையும் அப்பொழுதே கூறிவிட வேண்டுமென்று அவன் உடனே நினைத்தான். "உன்ர அக்காவில எனக்கும் தான் சரியான விருப்பம். ஆனா ரெண்டு பேரும் சேந்து சீவிக்கிறதாயிருந்தா எங்கயும் யாருமே கண்டும் காணாத ஒரு ஊருக்குத்தான் போய் சீவிக்க வேணும். அதுக்கு உங்கட அக்கா சம்மதிச்சு என்னோட வருவாவா..?”
அவனுக்கு இதைக்கூற ஆரம்பித்தபோது மிகச் சாதாரணமாக எல்லாம் இருப்பதாகத் தெரிந்தது. ஆனால் சொல்லிமுடித்தபிறகு மனதில் ஒருவித அச்சம் ஏற்பட்டது. இதென்ன பைத்தியம் என்கிறமாதிரியும் தன்னுள் ஒடும் அபத்த எண்ணங்களையும் அவன் உணர்ந்தான். என்றாலும் செவ்வந்திமேல் தனக்குள்ள ஆசையினால் அதையெல்லாம் நசுக்கிவிட அவன் நினைத்தான்.
செல்வநாயகம் இப்படிச் சொன்னவுடனே செவ்வந்திக்கு மனம் நிறைக் கும் குதூகலம் மிகுந்து உடல் மலர்ந்தது. குதூகலத்தில் அவளுக்கு சிகர உச்சியில் ஏறிநின்று சிறகடித்துப் பறப்பதைப்போல இருந்தது.
ராக்காயி சிரித்தாள்.
"அப்படீண்ணா நீங்க அக்காவை கண்ணாலம் பண்ணிக்கிட்டு காலம் பூரா அவவ வைச்சு காப்பாத்துவீங்களா..?” தன் நெற்றியை கையால் தொட்டுப் பிடித்தபடி அவள் கேட்டாள். அதற்கு அவன் "நீயென்ன சின்னப்பிள்ளையா எத எதயோ கதைக்கிறாய் உன்ர அக்காவைத்தான் என்னோட வாய்ப்பேசச்சொல்லன்?” என்று கேட்டான்.
“யக்கா என்னக்கா இது.? எதையெல்லாமோ எனக்குச் சொல்லிச் O 292 O ரீ.பி.அருணானந்தே

சொல்லி என்னய அவரோட கதைச்சுக்கவிட்டுப்புட்டு இப்பவா நீயி உம்மாண்டியா நிக்கிறே.? கொஞ்சம் அவரு முகம்பார்த்துத்தான் பேசேன்.” ராக்காயி சொல்ல, உடம்பு தகிப்பது போலிருந்தது செவ்வந்திக்கு. உதடுகள் துடித்தன.
“என்னத்தயடி நானு அவருக்கு சொல்ல.?” என்று தங்கையின் முகத்தைப் பார்த்தபடி கேட்டாள். "அவரைத்தான் விரும்பிக்கிண்ணு நாளாந்தம் யோசிச்சுக்கிண்ணு இருக்கிறமாதிரி இருந்துகிட்டிருந்தே. இப்ப வாயத் தொறந்திச்சிண் ணாலும் சொல்லேன்.?”
“அதான் விருப்பமுண்ணு உனக்கு முன்னாடியே சொன்னனே..? ஐயோ நீதான் அவருக்கு அத சொல்லேண்டி..?” அவள் குரல் சிதறியது. ஆனால் ராக்காயி அவளைவிடவில்லை.
“உன் வாயாலேயே அவரிகிட்ட சொல்லிக்க சொல்லக்கா?” என்றாள்.
தர்மசங்கடமாகத்தான் இருந்தது செவ்வந்திக்கு. வெக்கம் அவளைப் பிடுங்கித்தின்றது. என்றாலும் தன்னைப் பிடித்து நேராக வைத்தது போல இருந்து கொண்டு செல்வநாயகத்தைப் பார்த்தாள்.
“எனக்குப் பூரணமா உங்கமேல விருப்பந்தான். நீங்க சொன்னபடியா யில்லாம் நானு கேட்டு நடந்துக்கிறேன்..!” என்று இனிய குரலில்
வார்த்தைகளை துலக்கமாக அவள் சொன்னாள்.
செல்வநாயகத்துக்கு செவ்வந்தி தன்மேல் விருப்பம் என்று சொன்னதை நினைத்துப்பார்க்க இன்பமாக இருந்தது. அந்த இன்பமெனும் விதை உடனே துளிர்த்து இரண்டு இலை விட்டது போலவும் அவனுக்கு இருந்தது.
செவ்வந்தி இனி இல்லையென்ற மன மகிழ்ச்சியோடு சிந்தனையையும் மனதில் வரவளைத்துக்கொண்டாள். செல்வநாயகம் சொன்னதும் உண்மைதானோ? என்ற சந்தேகமும் அவளுக்கு ஏற்பட்டது. தான் வாழ்க்கிற தாழ்வான நிலைமை அவளுக்கு அந்தத் தாக்கத்தைக் கொடுத்தது. ஒருகணம் அவள் தன் நிலைமையை எண்ணி மனக் கஷ்டமும் அடைந்தாள். என்றாலும் செல்வநாயகத்தைப் பற்றிய மதிப்பீடு அவளுக்கு மனதில் உயர்ந்துகொண்டே இருந்தது.
"அக்கா குளத்துக்குப் போய் குளிக்கிறதுக்காவுந்தா நாங்க வீட்டில இருந்து வெளிக்கிட்டோம். இங்கேயே நிண்ணு கதைச்சுக்கிட்டு நிக்கிறதுக்காயில்ல. சிலநேரவாட்டி சோணமுத்து மாமன் கூடஇங்கிட்டு
துபேரகேசப்பண்கள் O 293 O

Page 153
பக்கம் வந்தாலும் வந்துக்கும்.” என்று தமக்கையின் முகத்தைக் கவனித்தபடி அவளுக்குச் சத்தம் குறைத்துச் சொன்னாள் ராக்காயி.
9
"நீங்க மெல்லமா கதைக்கிற கதையும் எனக்குக் கேட்டிட்டுது. என்று வேடிக்கையாக அங்கே நின்றபடி அவர்களுக்குச் சொன்னான் செல்வநாயகம்.
“சரி என்னதான் நானும் அக்காவும் கதைச்சுக்கிட்டோமுன்னுநீங்க இப்ப சொல்லுங்களேன் பார்ப்போம்.?” என்றாள் ராக்காயி.
"அது சந்தோஷமான விசயம் தானே.?”
“கத புடுங்குறீங்களாய்யா நீங்க.?”
"அப்படியாயொண்டும் இல்ல." என்று செல்வநாயகம் பிறகு சொன்னான்
“சரி நாம கதைச்சத ஒங்களுக்கும் சொல்லிக்கிறமே. எங்கவுட்டு மாமன் இருக்கிறாங்களே அவங்கள ஓங்களுக்கு தெரியுங்களா..?” என்று ராக்காயி அவனைக் கேட்டாள்.
“யாரு உங்கட மாமன் அவர எனக்கத் தெரியாதே.” என்றான் அவன்.
"அவர எப்படியாச்சும் உங்களுக்குத் தெரிஞ்சதாத்தான்வரும். யாரப் பார்த்தாலும் அவரு உம்முண்ணுகிட்டு முறைச்சுத்தான் பாப்பாரு..! ஆளுமெலிச்சமாதிரி இருக்கும். நல்ல ஒசத்தியா வளர்ந்த ஆளு, கால ஒருபக்கம் சாதுவா இழுத்துக்கிட்டுத்தான் நடப்பாரு. ஆ. இப்பதான் ஞாபகமு எனக்கு வந்துக்கிட்டிருக்கு. அண்ணைக்கு ஒருநாளு உங்ககூட கதைச்சுகிட்டு நாம இருக்கிறப்ப பின்னாடி அவரு வருராறெண்ணு சீக்கிரமா நாங்களும் வூட்டுப் பக்கம் ஒடனயா கிளம் பினமே. அப்பவா அவரநிங்க பாக்கிலிங்களா..?” அவள் கேட்க,
"ஆ ஓணான் குருவியைக் காணேக்கயெல்லாம் கல்லால எறிஞ்சு கொண்டு திரிவானே ஒரு ஆள். அவனா நீங்க சொல்லுற ஆள்.?”
"ஆ அவருதானுங்க ஐயா..! எங்க எண்ணு இல்ல நாங்க நிண்ணுக்கிற இடத்துக்கும் போயிக்கிற இடத்துக்கும் எங்களுக்கு பின்னாடியா அவரு வந்துக்கிட்டுத்தான் இருப்பாரு அவரு.! அப்புடியானவருதான் அவரு.!”
"அவரு ஏன் உங்களுக்குப் பின்னால அப்பிடியா திரியிறார்.?” “என்னய்யா அப்பிடியா நீங்க கேட்டுக்கிறீங்க எங்கூட்டு பொண்ணுவ
O 294 O ரீ.பி.அருளானந்தே

கண்ணாலம் கட்டிக்கிறதுக்கு அவருக்குத்தானே மொற இருக்குங்க. அக்காவக் கட்டிக்கிறதுக்குத்தான் அந்தாளு அந்தமாதிரி அலயிது.”
"அப்பிடி வேற இருக்கா..? அப்ப உங்கட அக்காவுக்கு அவனை கலியாணம் முடிக்க விருப்பமில்லாட்டி..?”
"அதொண்ணும் அப்பிடியா முடியாதுங்கய்யா விரும்பினமோ இல்லையோ சரி மொற மாமனத்தான் பெட்டி அரிசி கொண்ணாந்து கொடுத்தாக்க கட்டிக்கிட வேணுமுண்ணு எல்லாருமா நிப்பாங்க?"
"அப்படியெல்லாம் உங்கட வழமையில இருக்கா..?”
“அதாலதான் அதுக்கு முன்னாடி அக்காவ நீங்க எங்காச்சும் கூட்டிக் கிட்டுப் போயிடணும்.?” என்று மன ஆதங்கத்தோடு ராக்காயி செல்வநாயகத்துக்கு கதை சொன்னாள்.
“எதுக்கடி இதையெல்லாம் இப்பபோயி அவருக்குச் சொல்லி குழப்புறே.?” என்று செவ்வந்தி தங்கையைக் கடிந்தாள்.
செல்வநாயகத்துக்கு எடுத்த எடுப்பில் என்ன பதிலை அவர்களுக்கு சொல்வது என்பதை நினைக்கவும் தடுமாற்றமாக இருந்தது. அவர்களைத் தேற்ற வேண்டுமென்று உடனே நினைத்தாலும், என்னவார்த்தைகள் சொல்லலாம் என்றும் அவன் யோசிக்க ஆரம்பித்தான். அந்த நிலையில் அவர்கள் இருவரையும் பார்த்தபடி அசையாமல் நின்றான். அவனுக்கு முகம் வாடிவிட்டது. மனம் குழம்பிய சோதனை அவனுக்கு.
செவ்வந்தி செல்வநாயகத்தின் முகத்தைப் பார்த்தாள். அவளுக்கு அவனின் மனக் குழப்பம் முகத்தில் தெரிகிறது மாதிரியாய் பார்க்கவும் இருந்தது. அவனின் கவலையடைந்த முகத்தைப் பார்த்தபோது அவளுக்கு மனதில் கவலையாயிருந்தது.
"நீயேண்டி இப்டீயில்லாம் அவருகிட்ட சொல்லி மனசேக் கொழப்பி விட்டிட்டே.?” என்று தங்கையைப் பார்த்துச் சொன்னாள். அப்படிச் சொல்லியவாறு தங்கையின் கை விரல்களைதன் கைவிரல்களால் அழுத்திப் பிடித்தவாறு, "இப்பவா இதுங்களயெல்லாம் யோசிச்சு நீங்க மனசக் குழப்பிக்காதயுங்க எண்ணு அவருகிட்ட நீ சொல்லடி?” என்று தங்கையிடம் அவள் சொன்னாள்.
"நானு அவருக்கு சொல்லிக்கிறது கெடக்கட்டும் நீயேன் கைய பிடிச் சுக்காம விடக்கா. உன்கையி எனக்கு நெருப்பாச்சுட்டுக்குது.” என்று சொல்லிக்கொண்டு அவளிடமிருந்து தன் கையை உருவி எடுத்தாள் ராக்காயி. பின்பு தனக்குத்தானே பேசுபவள் போல எதையோ யோசித்துப்பார்த்துவிட்டு செல்வநாயகத்தின் முகத்தை அவள்
துயரகேச0uண்கள் O 295 O

Page 154
பார்த்தாள். "நீங்க எதுக்கும் துக்கப் படாதீங்கய்யா. எப்படியும் ஆறுதலும் நல்ல ஒரு வழியும் வந்துக்கத்தான் செய்யுமுண்ணு அக்கா உங்களுக்கு என்னய சொல்லச் சொல்லுதுங்க.?” குரலில் மரியாதையோடு ராக்காயி அவனுக்குச் சொன்னாள்.
"அப்படி ஒண்டுமா எனக்கு மனதில சஞ்சலமில்ல. நீங்க இப்ப சந்தோஷமா ரெண்டுபேரும் போய் குளிச்சிட்டு வாங்க. நான் பிறகு ஆறுதலா யோசிச்சு எல்லாம் சொல்லுறன்.” என்றான் அவன்.
அந்தநேரம் அந்த விதிவழியாக கொஞ்சம் தொலைவிலிருந்து ஒரு மாட்டுவண்டில் வந்துகொண்டிருந்தது. அதற்குப் பின்னாலே ஆட்கள் சிலரும் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.
அந்தப் பக்கம் திரும்பிப்பார்த்ததும் தயங்கியபடியே ராக்காயி செல்வநாயகத்தைப் பார்த்து “ஆக்களும் வந்துகிட்டிருக்காங்கையா நாங்க இனி போயிக்கப் போறமுங்க” - என்று சொன்னாள். செல்வநாயகத்தை ஒரு துயரமான பார்வை பார்த்தாள் செவ்வந்தி இவ்வேளை செல்வநாயகமும் அவளின் முழு உருவத்தையும் பார்த்தான். ஆசையோடு அவளின் பார்வையையும் தன் பார்வையில் சந்தித்தான். நான் இறந்தாலும் பாதகமில்லை அதற்கு முன்னால் என்னை உருக்கி உன்னில் கொட்டி உன் நெருப்பையும் அணைத்து உன்னோடுநான் கலந்துவிடுகிறேன். என் ஆன்மாவை சுட்டபடி இருக்கும் உன்நினைவை இனியும் என்னால் தாங்கவே முடியாது. என்ற ஒரு அவத்தைப் பார்வையையோடு அவளை அவன் பார்த்தபடி இருந்தான்.
"அக்கா கிட்டக்கிட்டவா வண்டிலும் வந்துகிட்டிருக்கு. வாக்கா இனிப்போய்க்குவம். என்று தமக்கையை கூப்பிட்டாள் ராக்காயி.
"ஐயா நாங்க போயிக்கப்போறோம். என்று செல்வநாயகத்துக்கும் உடனே அவள் சொன்னாள்.
"நாங்க வாறமுங்க”என்று புன்னகையுடன் நின்றபடி செவ்வந்தியும் செல்வநாயகத்துக்குச் சொன்னாள். இருவரும் பிற்பாடு அந்த இடத்திலே நின்றுகொண்டிராமல் குளத்துக்குப் போகும் வீதி வழியாக நடக்கத் தொடங்கினார்கள். செவ்வந்திக்கு தன் உடலை இல்லாமலாக்குவது போன்ற பெருத்த ஆறுதலைத்தரும் எண்ணங்கள் அவ்வேளையில் இருந்துகொண்டிருந்தன. இவ்வளவு காலமும் வாய்த்திராத எவ்வளவு இன்பகரமான எண்ணங்கள் இப்போது அவளுக்கு. செல்நாயகத்தைப் பார்த்ததும் கதைத்ததுமான அந்த இன்ப உணர்ச்சிகள் அவளுக்கு இன்னும் வடியவே இல்லை. அவளுக்குப் பக்கத்தில் நடந்து O 296 O ரீ.பி.அருளந்ைத8

வந்துகொண்டிருந்த ராக்காயி ஏதோ அவளுக்குச் சொன்னாள். அவளுக்கு தங்கை சொன்னது ஒன்றுமே காதில் விழுந்ததாக இல்லை. இன்னும் அவளுக்கு செல்வநாயகத்தைப் பற்றிய கனவுகலையாத ஒரு நிலைதான் இருந்துகொண்டிருந்தது.
މަލަމަ
குளத்துக்குப்போகும் பாதையின் இருமருங்கும் உயர்ந்த மரங்கள். கீழே குளிர்ந்த நிழல். கிளைகள் பின்னி அடர்ந்திருந்த மறைவிடங்களுக்குள்ளே பறவைகளின் ஒலி கேட்டபடியே இருந்தது.
செவ்வந்தியும் ராக்காயியும் பாதை சரிந்தபடியே செல்லும் இடத் தாலே நடந்து வந்து குளக்கட்டருகில் வந்து சேர்ந்தார்கள். அந்த இடத்தருகே, வயல் பக்கமுள்ள சப்பைக்கள்ளிச்செடி வளர்ந்திருந்த வேலியோடு குட்டையான புதர்கள் இருந்தன. அந்த இடத்தில் ஏதேதோ உயிர்கள் சலசலத்து ஒடுவதைப்போல இருக்க, இருவரும் திரும்பிப்பார்த்தார்கள். ஆனால் பொந்துக்குள் புகுந்துவிட்டவையாவும் மெளனம் அனுஷ்டிப்பது போல இருந்தன. அதைப் பார்த்துக்கொண்டு நடந்துவந்து இருவரும் குளக்கட்டு ஏற்றத்தில் ஏறி நடந்தார்கள். அங்கே தொங்கல் கரைக் குளத்துத் தண்ணிருக்குள் இருந்து கொண்டு காளி அப்பொழுது முழுக்குப் போட்டுக்கொண்டிருந்தாள். குளத்துத்தண்ணிருக்குள்ளே இருந்தாலும் தண்ணிருக்குள் முங்கி எழாது கை வாளியால் அள்ளி தலையில் அவளுக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். அப்படித் தலையில் ஊற்றிக்கொண்டால்தான் திருப்தி அவளுக்கு குளத்துக்குள் கழுத்தளவு ஆழம் தண்ணிரிலிருந்தாலும் இப்படியான வாளி வார்ப்புத்தான் அவளுக்குத் தேவை.
காளி குளத்துக்குள் குளிக்க இறங்கினாளென்றால் விரைவில் கரையேறமாட்டாள். அந்த வாளியும் கையுமாக இனி ஒரு மணித்தி யாலமோ அரை நாள் முழுக்கவோ எப்போது கரையேறுவாள் என்று சொல்லவேமுடியாது. அந்த அளவுக்கு வாளி வாளியாக மொண்டு மொண்டு தலையில் ஊற்றிக்கொள்ளும் ஆவேசத்தோடு இருந்தபடிதான் அவள் அலுப்பில்லாமல் குளித்துக்கொண்டிருப்பாள். கொதித்துக்கொண்டிருக்கும் தன் உடல் சூட்டைக் குறைத்துக்கொள்ளும் ஆதாரம் இந்தக் குளத்துத்தண்ணிரில்தான் இருக்கிறது என்பதுக்காகத் தான் அவள் நினைப்பு. குளித்துமுடித்துவிட்டு குளக்கட்டடியால் கூடிப்பேசிக்கொண்டு போகி றவர்களெல்லாம் காளியை பார்த்துப் பழைய நினைவூட்டலுக்கு வந்துவிடுவார்கள். காளிக்கு இப்பொழுது வயது போய்விட்டது. துயரக் கசப்பண்கள் O 297 O

Page 155
அவளைப்பற்றி ரகசியச் சாடைமாடையாய் என்ன கதை? அதனாலே உரக்கச் சத்தமெழுப்பிக்கொண்டும் அவளைப்பற்றிக் கதைப்பார்கள்
"வெட்டநோய் எரிவு. அதெல்லாம் உக்கிரமாயிருக்க தண்ணிக்கால வெளிக்கிடேலாம காளி கிடக்கு."
"தண்ணி தண்ணியெண்டு எல்லா ஊத்தயளயும் தன்னட்ட இருந்து இப்பவா கழுவிட அதுக்கயே கிடந்து கொண்டிருக்குக் காளி."
இவ்வாறெல்லாம் அவளை கண்டவுடன் கதைத்துக்கொள்வதிலே இன்னும் இன்னும் கூடுதலாக அவர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும். பெரிசுகளான கிழவிகள் இந்தக்கதையைச்சொல்லும்போதுஅவர்களுடன் கூட வருகிற குமரிகள் முகத்தைமேலே தூக்கிவைத்தபடி கண்களை மூடிக்கொண்டு சிரிப்பார்கள். இன்னும் எதுவாகிலும் அவளைப் பற்றியே பேசுவதைக் கேட்பதற்கு அவர்களுக்கும் விருப்பம்தான் ஒரு மனிதன் வாழும் தூய்மையான வாழ்க்கை நடைமுறைகளைக் கதைப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட, அசுத்தமான ஒருவரின் வாழ்க்கை குறித்து கதைத்துக் கொள்வதில்தானே அனேகமானவர்களுக்கு எல்லையற்ற விருப்பமாக இருக்கிறது.
காளி தண்ணிக்காட்டேரியாக ஏன் மாறினாள்? என்று இன்னும் ஒரு சிலர் ஒரு சேதியைச் சொல்வதுபோல கதைத்துக்கொள்வார்கள். அவள் வாழ்ந்த உண்மையான விபச்சார வாழ்க்கைக் கதையை இடித்துவிட்டு சாமிக்கதைக்குள்ளே அவளை அவர்கள் கொண்டு போய்விடுவார்கள்.
“இந்தக்காளி எண்டவள் இருக்கிறாளே. இவள் அந்த ஆலமரத்துக்குக் கீழபாதாள வைரவரைவைச்சு யாக பூசை செய்துகொண்டிருக்கிறவள். தன்ரை ஊன் உடம்பை விற்று தன்ரை வயிறை வளர்த்துக்கொண்டு பாதாள யாகம் செய்யிறதுதான் இவளினண்ட வழக்கம். அந்த யாக உட்ல் சூட்டத் தன்னில இருந்து தணிய வைக்கத்தான் ஒய்ச்சலில்லாமல் இப்பிடியொரு குளிப்பு இவளுக்கு.?”
என்று இப்படி கூறுகூறாக ஆக்கி அவளின் கதையை பலரும் ஊருக்குள்ளே நாலாவிதமாக கதைத்தாலும், ஊர்க்காரர்களெல்லாம் காளியை "விபச்சாரி" என்றே பொதுவான ஒரு முத்திரை குத்தி வைத் துக்கொண்டிருந்தார்கள்.
காளியின் பெயர் அவள் வயதுபோன பிற்பாடான இப்பொழுதும் பிரசித்தம்தான். காளியின் உருவம் ஒழுங்காகத் தெரியாத இள வட்டங்கள் கூட "காளிட்டத்தான் நீ போகவேணும்" என்று தங்க்ள் கதைக்குள்ளே வேடிக்கையாக அவளின் கதையையும் நுழைத்துப் பேசிச்சிரிக்கும் அளவுக்கு பிரமாண்டமாக இயங்கும் அதிபதியாக 0 298 ( ரீ.பி.ஆrர்ஒர்


Page 156
'காளி' - இருக்கிறது யாருக்குத்தான் ஒருவருக்கு அது விளக்கும்?”
காளி பிறந்த இடமும் குமரான வயசளவு மட்டும் திரிந்து கொண்டி ருந்ததும் யாழ்ப்பாணத்தில்தான். "நல்ல சாதிக்காறி நாசமாய்ப் போயிற்றாள்.?” - என்று சொந்தங்கள் எல்லாம் அவளைத் தூக்கி எறிந்ததுக்குக் காரணம் சீவல்காரத் தொழில் செய்யிறவனோடு அவள் வவுனியாப்பக்கம் இழுத்துக்கொண்டு ஓடிப்போயிற்றாள் என்பதால்த்தான். சொந்தமெல்லாம் காளியை அப்போது திமிலோ கப்பட்டுத் தேடியது. ஒரு கோஷ்டி இரண்டு பேரின் தலைகளையும் உருளவைக்க அரிவாள்களை தீட்டிக்கொண்டிருந்தது. அவர்களில் ஒருவன் கத்தியை கூராகத் தீட்டியபிறகு “அவளிண்ட தலையை இதால நான் அரிவன்.” என்று சொல்லி அதிலே நின்ற ஒரு தென்னையின் சரிந்த ஒலையையும் மற்றவர்கள் பார்க்க வெட்டிக்காட்டினான்.
ஆனால் இத்தனைக்கும் சுற்றத்தையெல்லாம் பகைத்துக்கொண்டுவந்த காளியோ நம்பிவந்தவனிடம் பிறகு ஏமாந்து போனாள். மலரிலிருந்து தேனை மட்டும் உறிஞ்சிச் செல்லும் தேனியைப்போல அவளை அனுபவித்தான் அவன். பிறகு நடுத்தெருவில் இவளை நாய்போல அலையவிட்டுவிட்டு எங்கோ அவன்கம்பி நீட்டிவிட்டான்.
அவளுக்கோ பிறகு ஊருக்குப் போய்க்கொள்ளவும் வழியில்லை. சொந்தங்களோடு பிறகு சேர்ந்து கொள்ளவும் வகையில்லை. அப்படியே துன்பப்பட்டு அலைந்து யார் யாரிடமோவெல்லாம் கைகளில் சிக்குப்பட்டு சீரழிந்துபோய்த்தான் கடைசியில் அவள் விபச்சாரியாகவே மாறிவிட்டாள்.
அதற்குப்பிறகு, எதையும் லட்சியம் செய்யாமல் சூசைப்பிள்ளையார் குளம் தொங்கல் காட்டுப்பக்கமாக ஒரு கொட்டில் போட்டுக்கொண்டு, வயிரவர் நம்மைக்காப்பாற்றட்டும்! என்று இருந்தவாறு தன் தொழிலைத் தொடங்கிவிட்டாள் காளி.
காளி ஒரு கறுப்புமரம் மாதிரி பார்க்கத் தெரிந்தாலும், அவள் தொழில் தொடங்கிய காலத்தில் அவளே கதியென்று பலர் அவளின் பாதத்தில் கிடந்தார்கள். யார்யாரோ ஆயிரமே சொன்னாலும் எனக்கென்ன? என்னை சந்தோஷத்தில் மூழ்கடித்துக் கிடத்திவிடும் அந்தப் பரத்தை யாளுக்கு நான் அடிமை என்கிறமாதிரி அவளின் கொட்டிலுக்குள் விழுந்து கிடந்தவர்களோ அனேகம். அதைவிட அவளுடன் ஒன்றாக பொழுதைக் கழிக்க விரும்பும் மனசின் உள்ளுணர்வுகளுடன் அங்கே போவதற்குத் தங்களால் முடியாது பயமும் வெட்கமும் கொண்டு திரிந்தவர்கள் இன்னும் அனேகமெனலாம்.
காளி வெட்டி வெட்டி நடந்து அதிருபவதிமாதிரிப் போகிறதை
o 300 O ரீ.பி.அருளானந்தல்

ஒரு நாள் வீதியில் கண்டுவிட்டு ஊர் விதானையாரும் ரசனையில் ஆழ்ந்துவிட்டார். விதானைதானே நான்! என்ற அளவில் அவர் பின்கை கட்டிக்கொண்டு மிடுக்காக நின்று அவளுடன் கதை கொடுத்தார். எத்தனைபேர் அவளுக்கு மடக்கம். விதானையார் என்ன கொம்பா அவளுக்கு.? அவர் கதையைப் போடவும் அவள் தன் இயல்பான சிரிப்பைத் துறந்து விட்டு குழைந்து சிரித்தாள். தன் கதையோடு அதற்குத் தகுந்தாற்போல் தன்கை அசைவுகளை நாட்டியம் ஆடுகிற கணக்கிலும் அசைத்தாள். அந்நேரம் முந்தானையும் அவளுக்கு ஒரு தடவை நழுவி விழுந்தது. அதோடு அவள் விதானையாருடன் அதிமென்மையாகக் கதைக்க அவருக்கும் உடனே அதிமயக்கம் கொள்ளும்படியாகிவிட்டது.
அந்தளவுக்கு அவரை அவள் சிவக்கச்செய்துவிட்டாள். பிறகு அன்றிலிருந்து காளிக்கு விதானையார்தான் தனி ஒரு வாடிக்கையாள ராகப் போய்விட்டார்.
'விதானையார் காளிவிட்டுக்குப் போகிறார்' - என்று தெரியவர, சில்லறை வாடிக்கையாளராக இருந்தவர்களெல்லாம் பயத்தில் அந்தத்திசைப்பக்கமே போகாமல் தங்கள் வரவை நிறுத்திக் கொண்டார்கள். விதானையாரும் மோகம் முப்பது நாளானபின் மடிய, காளியின் சகவாசத்தைவிட்டுக் கழன்றுவிட்டார். அவர் கழன்று போனால் அவளுக்கென்ன குறை? இந்தத் தொழிலுக்கென்று உள்ள அவளிடம்தான் ஆயிரம் பேர் வருவார்களே? அப்படி வருகின்ற பலபேரை சமாளிப்பதற்குரிய தந்திரத்தையும் அவள் நன்றாகக் கற்றும் வைத்திருக்கிறாள். இதனால் காசைக் கொடுத்துவிட்டு சதையெல்லாம் ஈவிரக்கமின்றி பிடுங்கி எடுத்துவிட்டுப் போகுமாப்போல அவளிடம் வருகிறவர்களையும் கூட அவள் சமாளிக்கக்கூடியவளாகவே ஆகி விட்டாள்.
என்றாலும் இதையெல்லாம் அவள் எத்தனைகாலம்தான் செய்து கொண்டிருப்பாள்? எருவடுக்கியமாதிரி பலநூறு ஆண்களின் சகவாசத் துக்குப்பிறகு வெறுப்புற்றுத்தான் இந்தத் தொழிலே வேண்டாமென்பது போல அவளுக்கு ஆகிவிட்டது.
காரணம், காலம் தேய்ந்தபிறகு உடலில் இளமை குன்றத்தொடங்கிவிட்டது. முகத்தில் மழுங்கல்தன்மை மிகையாக வெளியாகிக் கொண்டிருந்தது. திடமாகவும் உறுதியாகவும் இருந்த உடல் அவளுக்கு நாள்போக நாள்போக உருக்குலைந்துவிட்டது. அவளிடம் இப்போது நல்ல இயல்புகள் இல்லை. வயதும் போய்விட்டதால் ஆண் ஒருவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலும் அவள் இல்லை. வரவர வாடிய கத்தரிக்காய் போல அவளுக்கு உடலும் சுருங்கிவிட்டது. இவ்வாறாக எல்லாமே அவளிடமிருந்து போனபிறகு வாடிக்கையாளர்களை
zugă estuatăască. O 30l O

Page 157
இனிமேல் அவளால் எப்படியாக திருப்திசெய்யமுடியும்? அதனால்த் தான் தன் தொழிலிலிருந்து இப்போது எல்லோரிடமிருந்தும் விடுபட்டு வெறுமையாக காளி வாழத்தொடங்கிவிட்டாள். இரயில் தன் பயணிகள் எல்லோரையும் வெவ்வேறு நிறுத்தத்தில் இறக்கிவிட்டு வெறுமையாய் திரும்புவது போல, காளியும் தன் தொழிலைவிட்டு வெறும் சூனியமாகத்தான் இப்போது ஆகிவிட்டாள்.
குளக்கட்டின்மேல் நின்ற எருக்கலைச்செடிகளுக்கு மேலே, சின்னஞ்சிறு தும்பிகள் கீழும் மேலுமாகச் சுற்றிவந்து கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தன. குளத்துக்குள்ளே நீர்ப்பரப்பைத் தொட்டு உயர்ந்தது ஒரு மீன்கொத்தி
குளத்துத் தொங்கலடியின் மேல் கட்டில் நின்றபடி, ராக்காயி கண்கள் இறுகுவது வரை காளியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அலுக்காதோ சலிச்சுக்காதோ கிழவிக்கு! இப்பிடியா யின்னமுமா எவ்வேளவு நேரம் கிடக்குமோ இந்தக் கெய்வி.? ஒரு சொட்டுக்கூட வாயில விட ஏலாமலா கூழாக்கிப்பிட்டுதே.? தண்ணிய.?”
“சரிதான் நீ இறங்கடி கட்டாலயிருந்து. அதுபாவம் கெடந்து தன்னோட பாட்டிலயா குளிச்சுக்கிட்டிருக்கு.”
செவ்வந்தி சொன்னாள்.
"நாயி மாடெல்லாம் நடுக்குளத்திலயா குளிக்குது. அதவிட கேவலம் தான் நாங்களுவா..? இந்தக் கெழவியும் இப்போவா எங்களோடவா சேத்தி." ராக்காயி சிரித்துக்கொண்டு சொன்னாள். அதன் பிறகு கையை மேலே தூக்கிக்கொண்டு அவள் கட்டிலிருந்து கீழே இறங்கி னாள். செவ்வந்தியும் மேலே நின்றபடி கட்டுக்குக் கீழே தோளில் கிடந்த ஆடைகளை எடுத்துப் போட்டுவிட்டு மண்திட்டிகளில் கால் வைத்து இறங்கினாள். உடலை இறுக்கியபடி அவள் இறங்கினாலும் இறங்கும்போது மார்புகள் அவளுக்கு மேலும் கீழுமாக அசைந்தன. அக்காவை அன்புப் பார்வையுடன் பார்த்துவிட்டு
“இப்பவா நீ சந்தோஷமா இருக்கிறியாக்கா?” என்று கேட்டாள் ராக்காயி.
செவ்வந்தி பெருமூச்சுவிட்டாள்.
"எல்லாம் நல்லபடியா சரிவந்துப்புடுமக்கா. கவலப்படாத நீ.?”
என்று ராக்காயி பிறகும் அவளுக்குச் சொன்னாள். தங்கை சொல்லவும் O 302 C. ரீ.பி.அருளானந்தே

செவ்வந்தி
அவளின் கைகளைப் பற்றினாள். "உண்மையா நல்லபடியா எல்லாமே எனக்கு நடக்குமாடி..?” செவ்வந்தியின் முகம் உணர்ச்சி மிகுந்தது. "நடக்காம எங்க போவுது? நடக்கும்தானே அக்கா..? அந்த ஐயா எவ்வளவு நல்லவரு.அந்த வீணையைக்கூட அவரு எம்புட்டு ஆசையா வைச்சிருந்தாரு! அதுவக்கூட நானு ஆசைப்பட்டுக்கிட்டேன் எண்ணு நெனச்சுப்பிட்டு ஒடனேயே எனக்குக் குடுத்துப்புட்டாரே..! அப்புடியா
மனசு உள்ளவரு ஒன்னைய ஏமாத்திக்குவாரா..? அவருக்கும் ஒன்மேல ஆசதானேயக்கா..?”
என்று அவள் சொல்லவும் தன் கரங்களை தங்கையின் தோள்மீது வைத்தபடி
"உண்மையாடி..?” என்று அவளிடம் ஆசையோடு கேட்டாள் அவள்.
தமக்கை அப்படி சிறு குழந்தை போல கேட்க ராக்காயிக்கு ஏனோ மனம் பொங்கியது.
கவலையாகிவிட்டது அவளுக்கு. தமக்கையின்மீது உள்ள பாசத்தில், தழுதழுத்த குரலில்,
"நீயி அந்த ஐயாவோட நல்லபடியா வாழத்தான் போறாயிக்கா. அத ஒன் தங்கச்சி நானும் இருந்து பாக்கத்தானே போறேன்.”
"அடக் கெழவிமாதிரி இருந்து நல்லபடியா ஒண்ண நீ சொல்லிப் புட்டியேடி.?” என்று செவ்வந்தி தங்கை அவ்விதம் சொன்ன கையோடு கண்கள் ஒளியுடன் சுடர்படச் சிரித்தாள்.
அக்காவின் மகிழ்ச்சியைக் கண்டுவிட்டு ராக்காயியும் தான் அவளின் கூடவே சேர்ந்து சிரித்தாள்.
குளக்கட்டில் சீரான ஓட்டமாக காற்றடித்துச் சென்றபடியே இருந்தது. ஒரு எருமை மாட்டின் பீறிட்ட கத்தலைத் தொடர்ந்து குளத்து அலை கரையில் கூட்டமாக நின்ற கொக்குகள் சிறகடித்தெழுந்து பறந்தன. மேலே கொஞ்சத்தூரம் பறந்த கொக்குகள் மறுபடியும் அந்த இடத் திலே வந்து கீழே அமர்ந்தன.
"தாமரப் பூவளப் பாருடி எவ்வேளவு வெள்ளயா பரிசுத்த மாயிருக்கு.?” ;
O 303 O تم تعليمان عام قانوناني

Page 158
"உன்ன மாதிரியேதான்!” - ராக்காயி தமக்கைக்குச் சொன்னாள். “பேவுறப்ப புடுங்கிக்கிட்டுப் போவணும். வாசமாயிருக்குமில்ல.?”
"புதுசா என்ன சொல்றாயக்கா எனக்கு.? .எத்திணியோ நாளா நடக்கிறதுதானே இதுவும். குளத்துக்கு நீ வர்றவாட்டியெல்லாம் இந்தப்பூவு கொண்ணு போவாம நீ போவியா..?”
காலை மெதுவா தண்ணீரின் மீது வைத்துக்கொண்டு ராக்காயி
சொன்னாள்.
“குளிருதாடி தண்ணி?” செவ்வந்தி அவளைக் கேட்டாள்.
“வெதுவெதென்று இருக்கு. காளியம்மா குளிக்குதில்லே.?”
சொல்லிவிட்டுத் தோள்களைக் குறுக்கி கண்களைச் சுருக்கியபடி கிளுகிளுத்துச் சிரித்தாள் ராக்காயி
“சிரிச்சுக்கிட்டு நிக்கிறே? நேரம் போவுதில்லாடி? சட்டய கழட்டி மாத்திக்கேயேன்.” என்றாள் அவள்
தமக்கை சொல்லவும் மார்பில் கட்டுகிற துணியை மேலில் சுற்றிக்கொண்டு மெதுவாக உடைகளைக் களைந்தாள் ராக்காயி. காற்று உடுப்பைத் தூக்கி உயர்த்தியது. அவள் திரும்பி நின்று ஒதுக்கிப்பிடித்தபடி துணியை மார்பில் கட்டினாள். செவ்வந்தியும் உடுப்புக்களைக் கழற்றியதோடு மேலே போர்த்திருந்த துணியால் தோள்களை ஒடுக்கிக்கொண்டு நெஞ்சோடு தச்சது மாதிரி மார்பில் இறுக்கிக் கட்டினாள். ராக்காயி சரசரவென்று தண்ணிருக்குள் இறங்கினாள். கால் குளிரவும் மெல்லிய மயிர்ப்பிசுறுகளெல்லாம் அவளுக்குச் சிலிர்த்தன. குளத்து மீன்களும் அவ்வேளை அவளின் கால்களை முத்தமிட்டன. செவ்வந்தியும் சுருள்பிரிந்து விலகிப் பரந் திருந்த தலைமுடியை இன்னும் விரல்களால் நீவிவிட்டுக்கொண்டு தண்ணிருக்குள் இறங்கினாள். இருவரும் முழங்கால் கால்மூட்டும் இடுப்பும் தாண்டிய பிறகு, குதித்து நீர்ப்பரப்பில் விழுந்தார்கள். குறுக்குக்கட்டுக்கால் காற்று உட்புகுந்து பலூன் போல உப்பி எழுந்தது. நீரை கொப்பளித்துத் துப்பிவிட்டு ராக்காயி நீச்சலடித்தாள். செவ்வந்தி மூழ்கி எழுந்து சிரித்துவிட்டுப் பிறகு தானும் ராக்காயியுடன் சேர்ந்து கையையும் காலையும் அகற்றிப் போட்டபடி நீச்சலடித்தாள். ராக்காயி தமக்கையின் முகத்தை நோக்கி கையால் விசுக்கித் தண்ணீர் விழ அடித்தாள். தண்ணீர்த்திவலைகள் அவளின் முகத்தில் பட்டபோது அவளுக்கும் பூவிதழ்கள் வந்து விழுந்தது போல இருந்தன. அதை அனுபவித்துக்கொண்டு அவளைப் போலவே தானும் தண்ணிரை எற்றி அடித்தாள் அவள். ராக்காயி உடனே தமக்கையின் அருகில் போய்
O 304 O ரீ.பி.அருணா いあ

அவளின் கழுத்தில் கைகளை வைத்துக்கொண்டு தண்ணிருக்குள் அவளை அமுக்கினாள்.
“எடியே எடியே.” தண்ணிருக்குள் அவள் ராக்காயி உடலை இறுக்கிய படியே உரக்கக்கூவியபடி ஒரு சத்தம்போட்டு அவளின் தலைக்கு மேலாலே குதித்து நீர்ப்பரப்பில் விழுந்தாள்.
"புவாங்..” என்று தண்ணிர் மூழ்கலுக்கால் எழுந்து வெளிப்பட்ட செவ்வந்தி
“குமரியாடி நீ? இந்த மாதிரில்லாம் பாஞ்சு விழுவுறே? பையன் களாட்டம்.” என்று ஒரு பொய்ச்சினத்தைக்காட்டி அவளைப் பேசினாள்.
அவள் ஒன்றும் கூறாமல் செவ்வந்தி சொன்னதைக்கேட்டுச் சிரித்தாள். பிறகு துள்ளி எழுந்து தண்ணீர் பிளக்கும் ஒலியுடன் அவள் உள்ளே சுழி யோடிப்போய் வேறோரு இடத்தில் தலையை தண்ணிருக்குள்ளால் இருந்து உயர்த்திப் பார்த்தாள். காளிக்கு எவர்தான் வரட்டுமே யார் எவர்தான் அதிலே அவள் இருந்து குளிக்கின்ற இடத்தில் நின்று குளித்துவிட்டுப் போகட்டுமே., அதனால் அவருக்கு ஏதும் தடையுள்ளதா இல்லையே? காளிக்குத் தன் வாழ்வும் சாவும் இந்த றம்பைக்குளத்திலேதான் என்பது போலத்தானே நினைப்பு அவளுக்குச் சாகின்ற காலத்திலும் கங்கை நீர் போல இந்த றம்பைக்குளத்துத் தண்ணிரிலும் ஒரு சொட்டு நாவில் விட்டதால்தான் தன் உயிர்போகும் என்ற மாதிரியும் ஒரு நிலைமை. தாய்ப்பால் குடிக்கும் பருவத்துக் குழந்தை வேறு எதையும் வேண்டவில்லையே? அதே போல அவளுக்கும் இப்படியே கடைசிவரையும் இந்தக் குளிப்புமட்டும் இருந்தால் போதும்.
காளிக்கு இன்னும் மனம் திருப்திப்படவில்லை. அவள் இன்னும் வாளி முழுக்குப் போட்டுக்கொண்டபடிதான் இருக்கிறாள்.
குளத்துக் கரையிலுள்ள தண்ணீர் வைரக்கல்லை உள்ளே வைத்தாற் போல வெயில்பட்டுப் பளிச்சிட்டபடி இருந்தது.
செவ்வந்தியும் ராக்காயியும் ஊத்தை தேய்த்துக் கழுவி, பின்பும் தண்ணிருக்குள் கிடந்து குளித்துவிட்டுக் கரையேறினார்கள். இந்த ஈர உடுப்போடு வேறு ஒரு கண் தன்னை பார்த்திடக்கூடாது என்ற கூச்சத்தோடு வெளியே வந்ததும், துடைக்கின்ற துணியை எடுத்து தன் மார்பில் அள்ளி வைத்துக்கொண்டாள் செவ்வந்தி செவ்வந்தி கரைக்கு ஏறிய நேரம் தொடங்கி அவளையே குறிவைத்தமாதிரி பார்த்தபடி குளக்கட்டால் அப்பொழுது நடந்து வந்துகொண்டிருந்தார் சுந்தரம்பிள்ளை.
slugă estu«răscă. O 305 O

Page 159
செவ்வந்தியை ஈரம் ஒட்டிய குறுக்குக்கட்டுத் துணியோடு கண்டதும், அவருக்கு அந்தரத்தில் அசைவது போல நடைமாறியது. உடம்பு அவருக்கு குளித்துவிட்டு வந்திருந்தாலும் வெப்பமேறி தகதகவென
கனன்றது.
குளக்கட்டால் அப்போது சக்கரங்களின் நெளிவு கோணலுடைய ஒரு சைக்கிள் வந்தது. ஒரு பெடியன் மூச்சைப்பிடித்துக்கொண்டு ஓங்கி ஓங்கி பெடல் மிதித்தபடி, அந்தச் சயிக்கிளை ஓடி வந்தான். சுந்தரம்பிள்ளை சயிக்கிளுக்கு எதிராக வந்தார். ஆனால் அவரின் பார்வை குளக்கட்டுக்குக் கீழேதான். பெடியனுக்குக் கால்கள் நடுங்கின. முட்டப்போகிற அளவில் தடுமாறி தரிப்புப் போட்டு நின்றான்.
"பாத்துப் போவனய்யா எங்க வாய் பாக்கிறாய்?” என்று அவரைப் பேசிவிட்டு அவன் பிறகு மெது அசைவிலே ஒடிப்போனான். அவன் ஒரு சின்னப் பையன்தானே? அவனுக்கு சுந்தரம்பிள்ளைதான் வவுனியாவிலே பெரிய ஒரு முதலாளி பணக்காரன்! என்று எங்கே தெரிந்திருக்கப் போகிறது? அவன் அப்படி ஏதோ சொல்லிவிட்டு போனாலும் சுந்தரம்பிள்ளை அவன் பேச்சில் ஏதும் கரிசனை கொள்ள வில்லை. அவர் பார்வையும் கவனமும் செவ்வந்தி மீதுதான் இன்னும் இருந்துகொண்டிருந்தது.
தான் இதுவரை கண்டுபழக்கமில்லாத புதியதோர் அழகைப் பார்ப்பதுபோல செவ்வந்தியைப் பார்த்தபடி அவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அந்தளவுக்கு அவரை ஈர்த்துவிடும் அளவுக்கு ஈரைத்துணியோடு அழுத்தப்பட்டுத் தெரிந்த அவளின் தொடைகளின் திரட்சி அவரை வியப்பில் ஆழ்த்தியது. இதனால் இரையுண்டும் புலிபோல அவரின் உடல் இயக்கம்பெற அவளின் ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்து, மனதுக்குள் அவைகளை அடைத்துக்கொண்டுகரைக்குளத்துக்கட்டடிக்கு அவர்வந்தார்.
இப்போது நேர் எதிரே கட்டுக்குக் கீழாகத்தான் அவள். நன்றாகவே அவளை தன் நடையோடு கவனித்தார். செவ்வந்தி மார்பில் கை வைத்துக் கண்களை மூடியபடி அப்படியே காற்றினதும் வெயிலினதும் சுகத்தை அனுபவித்தபடியே நின்றாள்.
கையை அவள் சற்று மூடிவைத்தபடி நின்றாலும், சுந்தரம்பிள்ளை அவளின் மார்பழகைப் பார்த்தார். அதிலே அவரின் பார்வை ஊன்றி நிலைத்த ஒரு கணத்துக்குள் அவரின் மனம் அலைக்கழிந்தது. அவளின் உருட்சிபூர்த்த அங்கங்கள் எல்லாமே சுமக்கமுடியாத ரகசியங்கள் கொண்டிருப்பதாகவே அவர் தனக்குள் நினைத்துப் பார்த்தார்.
О 306 O ரீ.பி.அருணானந்தே

அதையெல்லாம் யோசிக்க மனம் அவருக்கு ஒரு பரவச நிலையில் நெளிந்தது. உடனே தன் நரைத்த கெழுத்தி மீசையை, விரல்களால் தடவி நிறுத்திக்கொண்டு குளக்கட்டால் இறங்கி நடந்தார் சுந்தரம்பிள்ளை. அவருக்கு செவ்வந்தியைக் கண்டதன்பிறகு மாயநோய் பிடித்ததுமாதிரியாக ஆகிவிட்டது. ஆமையின் முதுகில் எழுறியதைப் போல கிடக்கும் வரிகள், அவருக்கும் மனதில் பதிந்ததுபோல செவ்வந்தியின் நினைவால் ஆகியது. அவளை தான் அடைவதற்கு அசைவு கொள்ளும் பல திட்டங்களை மனதில் தீட்டியபடியே அவர் நடந்துபோய்க்கொண்டிருந்தார்.
குளம் ஊக்கமான காற்றை அழைத்து வந்தது. காற்றில் முகத்தை மோதவிட்டுக் கண்களை மூடியபடி நின்ற செவ்வந்தியை, தன் கையால் ஒரு இடித்தாள் ராக்காயி,
"குளிச்சிட்டு என்னக்கா வெயிலு காயிறே? கண்ணையும் மூடி நிண்ணுக்கிட்டு.?”
என்று அக்காளுக்கு அவள் சொன்னாள்.
"அய்யே அதுக்குள்ளாவா உடுப்புங்கள மாத்திக்கிட்டியாடி நீயி..?” என்று கண்களை உடனே திறந்து பார்த்ததும் கேட்டாள் செவ்வந்தி
"இல்லாம என்ன நானு ஒன்னய மாதிரி அந்த ஐயா நெனவிலயா இருந்துக்கிட்டிருக்கேன்.?”
“போடி எதுக்குண்ணாலும் அவரு வீட்டுக்கத தானடி ஒனக்கு.?” “ஒனக்கு பொறவு என்னதான் இருக்கப் போவுது யோசினே.?”
குளக்கரையில் அடிக்குமாப்போல காற்று வீசியது. செவ்வந்தியின் கூந்தலை சிறகு விரித்துத்தூக்கியதுபோல வீசிய காற்று எழுப்பி அவளின் முகத்தை மறைத்தது.
“போதுண்டி ஒண்ட கதே. நீயி ஏதும் சொல்லிக்கச் சொல்லிக்க எனக்கும் என்னவோ செய்யிதடி.?” என்று சொல்லியபடி கூந்தலை காற்றுக்குத் திரும்பிநின்று சரிசெய்துகொண்டாள் அவள்.
"சரிக்கா உடுப்ப நீ மாத்திக்கக்கா?” என்று ராக்காயி சொல்ல "பூ” என்று கொண்டு தாமரை இருந்தபக்கம் பார்த்தாள் அவள்
துயர சுச0uண்கள் O 307 O

Page 160
"நான் புடுங்கிக்கிறனக்கா?” ராக்காயி அவளுக்குச் சொல்லிவிட்டு அந்தப்பக்கமாகப் போனாள்.
“கவனம்டி சேறு.?” “சூ. எனக்குத் தெரியும் நீ உன்வேலயப்பாருக்கா..?”
என்று விரட்டுமாப்போலச் சொல்லிக்கொண்டு அவள் நடந்தாள். நீரில் படர்ந்தபடி இருக்கும் இலைகளை விலக்கிக் கொண்டு காலை உள்ளே வைத்தாள் அவள் ஏலவே இறங்கும் முன்னால் தூக்கிச் செருவி யிருந்த பாவாடைக் கரையும் அவளுக்கு நனைந்தது. அப்படியும் இருக்க அவள் இன்னும் உள் சென்று ஒரு வெண் பூப்பிடுங்கினாள். தாமரையின் மயக்கத்தில் இன்னும் உள்ளே தண்ணீரில் நின்று, கைக்கு எட்டிய இரண்டு பூக்களையும் குனிந்து தொட்டு அவள் பிடுங்கும்போது.
"வாடீம்மா கரைக்கு வெளியால இனிமே காணும்டி காணும்.” என்று சொல்லி சத்தம் போட்டுக்கொண்டு நின்றாள் அவள். அவள் அப்படிச் சத்தம் போட பூக்களைப் பிடித்திருக்கும் கரத்தை மேலே தூக்கிப் பிடித்துக்கொண்டு தண்ணிருக்குள்ளாலே இருந்து வெளியே வந்தாள் ராக்காயி.
"இந்தாக்கா பூவு?” விரல்கள் பூவுக்குக் கீழே மறைந்திருக்கப் பிடித்தபடி அவள் நீட்டினாள். அதைத்தன்கையிலே அவள் வாங்கும் போது எதையோ நினைத்துச் சலிக்கின்றது மாதிரி ஒரு பெருமூச்சு அவளுக்கு வந்தது.
“என்னதான் நானு சொல்லிக்கிட்டாலும். ஒன் நினைப்பெல்லாம் மாறிக்காது போலத்தான் இருக்கு. வாக்கா இனி வுட்டுக்கு போக லாம்.?” என்று எண்ணற்ற கனவுகளுடன் நின்ற அவளின் கையைப் பிடித்து இழுத்தாள் ராக்காயி. அக்காளும் தங்கையும் பிறகு இறங்கின குளக்கட்டு வழியாகவே மீண்டும் மேலே ஏறி வந்தார்கள். கட்டில் ஏறி நின்றபோது முன்னால் தெரிந்த கதிரறுக்கப்பட்ட வயலையும் பார்த்தார்கள். காய்ந்து வெடிப்பு வீழ்ந்துகிடக்கும் வயல் பக்கம், ஒவ்வொரு பாத்திக்குள்ளும் மெலிந்த சருகு உடலுலுள்ள கொக்குகள் நின்று கொண்டிருந்தன. அதற்குத் தொலைவாக கண்பார்வையை அவர்கள்
O 308 O ரீ.பி.அருளானந்தே

பதித்த இடத்திலே பன்றிகள் நின்றுகொண்டிருந்தன.
வெயில்மேல்தலை திருப்பிக் கேட்டது போல் நிற்கும் எருமை மாடுகளும் நின்றுகொண்டிருந்தன. இருவரும் அவைகளைப் பார்த்த படியே குளக்கட்டுத் தீர்ந்துபோன இடத்தாலே இறங்கி வீதியாலே நடக்கத்தொடங்கினார்கள்.
அங்கே குளித்துக் கொண்டிருக்கும் காளிக்கோ இன்னும் அந்த வேலை முடிந்ததாகவே இல்லை. அவள் வாளித் தண்ணிரை தலையில் ஊற்றி ஊற்றிக் கூனிக் களைத்ததாய்த்தான் போனாள். ஆனாலும் குளத்துப் பூச்சி போல் அதற்குள்ளேயே இருந்துகொண்டு அந்த நீரைத் தலையில் சுமப்பவள் போலத்தான், தண்டனையை அனுபவித்தபடியே அவள் இருந்துகொண்டிருந்தாள்.
多4
வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகு, சுந்தரம் முதலாளி ஒழுங்காகச் சாப்பிட்டாரோவென்றால் அது இல்லை. பின்னேர வேளையில் வழமையாக படுத்துத் தூங்கிறவர்தானே என்றால் அதுவும் இன்று நடக்கவில்லை. சுந்தரம் போல் இருக்கிற முதலாளிமார்களது வாழ்க்கையே வேறுதானே? அவர்களின் பாவனையும் அப்படித்தான்! அடபுடா’ என்று கூலியாட்களை அதிகாரம் செய்யும் தடல்புடல் மனிதர்கள் தானே இவர்கள்.
பூச்சிகள் வேரைத்தான் சாப்பிடும்! ஆனால் திமிர்பிடித்த முதலாளிக ளோவென்றால் தங்கள் சுகபோக வாழ்வுக்காக ஏழைகளைத் தான் சாப்பிட்டு ஏப்பம் விடுவார்கள். தாங்கள் நினைக்கிற காரியங் களையெல்லாம் தண்டத் தடியரை வைத்தாவது செய்வித்து நிறை வேற்றிக்கொள்ளத்தான் பார்ப்பார்கள். முதலாளி என்று இருப்பவர்கள் எல்லோரினதும் பொதுவான ஒரு நினைப்பு “ சந்தோஷமாயிருக்க தமக்கே உரிமை உண்டு” என்பதுதானே? அப்புடி சுகமா இருக்கும் வழிகளை தேடுகிற சுயநல நரிகளுக்கு எப்போதும் வாழ்வில் கொண்டாட்டம்தான்! ஆனால் நண்டைப் போல இருக்கும் ஏழைகளுக்கல்லவா நரிகளைப்போன்று இருக்கும் அவர்களால் பிராணாவஸ்தை. இவர்களின் களியாட்டங்களால் ஏழைகளுக்கு வரும் கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சமா?
சுந்தரம்பிள்ளை மூன்று வேளையும் மஸ்தான சாப்பாடுதான் சாப்பிடுகிறார். மாளிகை மாதிரியுள்ள தன் வீட்டினுள் வாழும் சுகத்தையும்தான் அவர் அனுபவிக்கிறார். அழகான மனைவியும்தான்
துயரச் சுரப்பண்கள் O 309 C

Page 161
அந்த வீட்டில் அவருடனிருக்கிறாள். என்றாலும் இவற்றுடன் அவருக்கு மனத்திருப்தியடைகிறதா? அவருக்கிருக்கும் மனப்பசி ஒரு தனிப்பசியல்லவா?
இதற்காக ஒரு சொகுசான தரம் உள்ள மோட்டார் காரும் வாங்கித் தனக்குத்தோதான ஒரு கார்ச் சாரதியையும் வேலைக்கு அவர் வைத்துக்கொண்டார். இந்த வசதிகளோடே வாரம் ஒருமுறை கொழும்புக்குப் போய் மென்றோஸ்” நிற அழகிகளுடன் ஹோட்டல் அறையிலே உல்லாசமாக இருந்துவிட்டு திரும்பவும் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுவார் அவர். AW
இப்படித்தான் ஒரு சுக போகச் சோம்பேறி வாழ்க்கையை சுந்தரம் இவ்வளவு காலமுமாய் வாழ்ந்துகொண்டிருந்தார். அது ஒரு திருப்தியான வாழ்க்கையாகத்தான் அவருக்கு இருந்தது. அப்படியான இன்பமான வாழ்க்கையெல்லாம் அவருக்கு நேற்றுவரைதான். ஆனால் இன்று காலை அதில் ஒன்றுமில்லை என்பதுபோலத்தான் அவருக்கு நிலைமை மாறிவிட்டது. இப்படியெல்லாம் சஞ்சலப்புயலில் அவர் சித்தம் தத்தளிப்பதற்கு யார் காரணம்.?
மாசற்ற மொட்டுப் போல அழகு செளந்தரியம் மிக்க செவ்வந்தியைப் பார்த்ததன் பிறகு தானே இவருக்கு இப்படியான நிலைமை ஏற்பட்டது. அவளைக் குளத்தடியில் கண்டதன் பின்புதானே இவர் இப்படியாகக் கொந்தளித்துக் கலங்கியதாய் இப்போது மனம்நோகக் கிடக்கிறார்.
இரவு கொஞ்ச நேரம்போக வேட்டியை வண்டிக்கு மேலாக லேசாக சுற்றிச் செருவிக்கொண்டு, மொட்டை மாடிக்கு ஏறிவந்தார் சுந்தரம். அங்கே அவர் இருந்துகொள்ளும் கதிரை இருந்தது. அதிலே வந்து இருந்தார். கதிரைக்கு முன்னாலே உள்ள புட்டகத்தின் மேலே உள்ள தட்டில் பச்சைப் பாக்கும் வெற்றிலையும் பாணிப் புகையிலையும் இருந்தன. எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டார். நன்றாக நிலவு காய்ந்ததால் மொட்டை மாடிக்குக் கீழாகத் தெரிந்த தென்னை மரங்களையும் பார்த்தார்.
அவரது மனம் செவ்வந்தியின் நினைவோடு இருந்தாலும், கண்கள் என்னவோ அந்த நிலவோடு தென்னங் குருத்துக்களிலும் ஊன்றின. அந்தக் குருத்து ஒலைகள் இளங்காற்றுக்குச் சொடக்குவிட்டன.
பிறகு ஓசைகேட்காமல் வாய் பொத்தினது மாதிரி ஒலைகள் விறைத்ததாய் நின்றன. அவர் உதட்டை இழுத்து மலர்த்தினமாதிரி வைத்திருந்துவிட்டு சப்பி வைத்திருந்த தாம்பூலத்தை விழுங்கினார். அதைவிழுங்கும்போது, பாணிப்புகையிலையின் வாசம் செவ்வந்தியைப் பார்த்து ரசித்த அந்த இடத்தில் கட்டி நின்றது போல ஒரு உணர்வாய்
O 310 O ரீ.பி.ஜிஞ்ளனந்தல்

அவருக்கு இருந்தது. உடனே எழுந்து வேக வேகமாக அந்த இடத்தில் இரண்டுமுறை நடத்தார். தெற்கும் வடக்கும் பார்த்தார். அன்று பின்னேரம் தன் கார்ச் சாரதி வீரசிங்கத்துடன் செவ்வந்தியைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்ட விபரங்களை மீண்டும் ஒருமுறை யோசித்தார். அவரின் மனம் ஆராய்ச்சியில் இறங்கியது.
"ராமனின் மகளாமே அவள்? அப்பிடியெண்டால் சக்கிலியப் பெட்டையெல்லோ. சரி தானே எல்லாமே சரிதான். சாதியாவது சனியனாவது? என்ன சாதி கீதி.? பணத்தியின்ரவேற பறச்சியின்ர வேறயே? எல்லாமே ஒண்டுதானே?.” அவர் தனக்குத் தானே இதை உள்ளால் ஒப்புக்கொண்டார்.
"வரட்டும் ராமன். அவன் வருவான்தானே அங்க என்ர கடைக் காணிக் கையுள்ள கக்கூசு கழுவ.? பாப்பம். காசைத்தூக்கி கட்டாப் போட்டா எவன்தான் வளையமாட்டான்.?’ திட்டம் போட்டு இதையெல்லாம் நினைக்க நினைக்க அவரின் வயிறு சுவாச அசைவுக்கு ஏற்றபடி நன்றாக உயர்ந்து தாழ்ந்துகொண்டிருந்தது.
அவர் மீண்டும் எதையெல்லாமோ நினைவு கூர்ந்தார். ஒரு பெரு மூச்சுக்குப்பிறகு தான்முன்னம் பட்டுக்கழித்த பல கஷ்டங்களையும் அவர் நினைத்துப் பார்த்தார். முன்னால் தன்பார்வைக்குத் தெரியும் வீட்டுத் தோட்டத்திலுள்ள தென்னை மரங்களையும் சற்றுநேரம் நோக்கினார்.
அதேநேரம் தூரத்திலிருந்து மாட்டு வண்டிலில் தான் தனியே வந்துகொண்டிருப்பதான ஒரு நினைவு அவருக்கு வந்தது. அதை நினைத்ததும் சமாதியில் அடங்கிய கதிக்கு ஆட்பட்டுவிட்டதைப் போன்று அவர் அப்படியே அசையாமல் நின்றார். காற்று அந்நேரம் மொட்டை மாடிப் பக்கம் விர்ரென்று நன்றாக வீசிக்கொண்டிருந்தது. அவர் இன்னும் தன் கடந்த காலத்தின் வெறுமையான யோசனை களுடன், சரியாகமல்லுக்கு நிற்கிற மாதிரி அதிலேயே நின்று கொண்டிருந்தார்.
ஒரு மனிதனை உருக்குலைக்கும் வித்தையை அவன்பட்ட கஷ்டமான காலத்து நினைவுகள்தான் கொண்டதாயிருக்கும். வண்டில் மாடு வைத்து எருவேற்றிக் கொண்டு திரியும் வேலையைச் செய்த சுந்தரம், எப்படி இவ்வளவு பெரிய முதலாளி ஆனார்? இருந்தாப்போல அவருக்கு அப்படி வந்து சேர்ந்த செல்வமெல்லாம் அவருக்கு வானத்தில் இருந்து கொட்டுப்பட்ட பொருள் மாதிரியாகவா வந்தது? அப்படியெல்லாம் இல்லை. அதெல்லாம் தனக்குக் கடவுளாகப் பார்த்துக்கொடுத்தது என்றுதானே இன்றளவும் அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். அன்று நடந்த அந்த ரகசியச் சம்பவங்களெல்லாம்
துயரச் சுண்பண்கள் O 311 O

Page 162
இன்றுவரை அவருக்குள்தான் தனியே அடக்கம். அவரை விட்டு வேறு ஒரு குருவிக்கும்கூட இந்த விசயம் பூரணமாகத் தெரியாது. இப்போ அதெல்லாம் நடந்து காலம் ஓடி முடிந்துபோய்விட்டதுதான். ஆனாலும் மனதுக்குள்ளே சுற்றிக் கொண்டே இருக்கிறது அவருக்கு அந்தப் பழமையான நினைவு.
அவருடைய வீட்டுக்குப் பக்கத்துச் சந்தியால் போய்த்திரும்புகிற வழியிலே பெரிய ஒரு ஆலமரம் நின்றது. அதன் உச்சியிலிருந்துகொண்டு கருங்காட்டுப் பேய்போல அந்த நேரம் ஆந்தை ஒன்று கத்திக் கொண்டிருந்தது.
அது கத்துவதை விட்டு மரத்தைவிட்டு ஓடிப்போகாதா? என்று பக்கத்து வீடுகளில் குடியிருந்தவர்களெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தார்கள். "இதுகத்துறத நிறுத்தித் தீரமாட்டுதோ?” என்று பலர் அதைச் சபித் துக்கொண்டுமிருந்தார்கள். p
ஆனாலும் குரலைச் சாகவிடாமல் ஆந்தை தொடர்ந்து கத்திக்கொண்டே
இருந்தது. அப்படியே கத்தியபடி சுந்தரம் முதலாளியினது துயரம் கலந்த முன்னிரவையும் அது கரைத்துக்கொண்டபடியே இருந்தது.
え死
ஐந்தாள் செய்யிற வேலையை ஒருவனே செய்யச்சொல்லி நிமிர்த்தி எடுக்கிற இந்த முதலாளியான சுந்தரம் ஒரு காலம் வண்டில் மாடு வைச்சு ஒட்டினவர்தான். அண்டைக்கண்டை வண்டிலில சாணியும் மண்ணும் இழுத்து வயித்தக் கழுவிக் கொண்டு திரிஞ்சவருக்கு அள்ளு கொள்கையாய் பணம் கிடைச்சதென்னவோ ஒரு அதிசயம்தான். நேரகாலம் வந்தால் கொட்டுற செல்வம் வீட்டுக் கூரையையும் பிரிச்சுக் கொண்டு கொட்டுமாம். அப்பிடியாகத்தான் கையிக்கயா வந்து மிதந்து இந்தப் பணமெல்லாம் இவருக்கு.
அந்தக் கதை ஒரு பெருங்கதை! அந்தக் கதையை யாருக்காவது சொன்னால் கேட்டுப் பெருமூச்சும் விட்டுக்கொள்வார்கள். அப்படியாய் யார்மனதிலுமிருந்தும் இலகுவில் இறந்துபோகாத மறக்க யாராலும் முடியாத சம்பவம் தான், சுந்தரத்துக்கு அன்று நடந்தது.
இற்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன்னம் என்று கணக்குப் பார்த்தால் அப்போது அவருக்கு இருபது வயது. அந்தக் காலத்தில்தான் இரண்டாவது உலக மகாயுத்தமும் நடந்துகொண்டிருந்தது. விமானங்கள் நிற்கும் பூமியாக றம்பைக்குளத்துக்கு முன்னாலே உள்ள இடமும் வந்துவிட்டது. உலக யுத்தத்தின் பிரசவத்தில் இப்படியெல்லாமே O 312 O ரீ.பி.அருணானந்தே

அந்த இடம் ஆகிப்போக, அந்த இடத்தில் நம்மவர்கள் அனேகருக்கு வேலை வாய்ப்புகளும் நிறையக்கிடைத்தன.
எல்லாருக்கும் பிழைப்பே இராணுவம் இருந்த விமான ஒடு பாதைப்பக்கமாக இருக்க, சுந்தரமும் பிறகு அங்கேதான்போய் வண்டில் பிழைப்பைத் தொடங்கினான். பொருட்களை வண்டிலிலே ஏற்றிக்கொண்டு வந்து இராணுவக் கூடாரங்களுக்கு கொடுக்கிற வேலையை அவன் செய்யத்தொடங்கினான்.
தொடர்ந்தாற்போல அவனுக்கு அங்கே வேலை இருந்தது. நல்ல கூலியும் கிடைத்தது. முண்டித்தவிச்சு மாடுகளும் தலையை முன்னுக்கு இழுத்துக் குனிந்துகொண்டு, வண்டிலில் ஏற்றிய பாரங்களை இழுத்துக் கொண்டிருந்தன. நாட்களும் போய்க்கொண்டிருந்தன.
சுந்தரத்துக்கு முன்னப் பின்னையாத் தெரியாத சில இராணுவ வீரர்களுடன், பழக்கமும் ஏற்பட்டது. ஒரு சிப்பாய் அவன் கூடாரங்களை யெல்லாம் தாண்டி வண்டிலில் போய்க் கொண்டிருக்கும் போது அவனுடன் நெடுகஷம் கதைக்கத் தொடங்கினான். பாதியத்தின்றுவிட்டு பாதியக் குடித்துவிட்டதாய்க் கொடுங்காமல், நல்ல உணவுப் பொருட்களையெல்லாம் காம்ப்பில் கள்ளமாய் எடுத்து அவன் சுந்தரம் போகும்போது கொடுத்துக் கொண்டிருந்தான். சுந்தரமும் ஒரே முழுக்கா முழுங்கினமாதிரி அந்தச் சிப்பாய் கொடுக்கிற சாமான்களையெல்லாம் எடுத்துச் சடக்கெண்டு சாக்கில போட்டு சுத்திமறைச்சுக்கொண்டு போனபடி இருந்தான். இப்படியே இது நாளாந்தம் நடந்துகொண்டிருக்க களவுச்சாமான்கள் கொண்டுபோகின்ற தைரியம் சுந்தரத்துக்கும் நெஞ்சில் ஏறிக்கொண்டிருந்தது.
அந்தக் காப்பிரி சிப்பாய் சுந்தரத்தின் முதுகைத் தடவிக்கொடுத்து, கைப்பாஷையிலேதான் பேசுவான். சுந்தரம் அவன் கைப்பாஷை காட்ட அதையெல்லாம் நெத்தியில வைச்சு யோசித்த அளவில் மடக்கென்று பிடித்துக்கொள்வான். இவன் ஏன் என்னைத் தன்வசமாக்குகிறான்? என்ற ஒரு கேள்வியும் சுந்தரத்தின் மனதில் இருந்து கொண்டிருந்தது. இவன் சொன்னால் சொன்னபடியே கேட்கிறான், என்று சிப்பாயும்தான் தன்மனதுக்குள் யோசித்திருப்பான் போல இருந்தது.
ஒரு நாள் சுந்தரத்துக்கு நல்ல வேலைப்பளு. அன்று முழுக்க காம்புக்கு வண்டிலில் சாமான் இழுத்துப் போட்டுக் கொண்டிருப்பதாகவே அவனுக்கு வேலை இருந்து கொண்டிருந்தது.
அவன் உடம்பிலே உள்ள அலுப்பை எடுத்து எறிஞ்சது மாதிரிப்
போட்டுவிட்டு, பகல் முழுக்கவாய் காம்புக்கு வண்டில் ஒட்டிக் splugiš erotvaňseň O 313 O

Page 163
கொண்டிருந்தான். உடம்பெல்லாம் தும்பு தூசியோடே மூக்காலும் அவனுக்கு ஒழுகிக்கொண்டிருந்தது.
கஷ்டப்பட்டு இப்படியாயெல்லாம் கிடந்து வேலை செய்துவிட்டு காம்புக்குள்ளால் இருந்து வெளிக்கிட்டு அவன் வண்டிலில் வந்து கொண்டிருந்தான். நேரமும் பொழுதுபட்டுப்போன அளவிலே இருந்தது. ஐப்பசி மாதமாயி ருந்ததால் ஆறு மணிக்கே இருட்டாகிப் போனமாதிரியாகவும் இருந்தது பொழுது விமான ஓடுபாதைக்கு அருகில் ஒரே மாதிரிப் புடியான நடையிலே அவனது வண்டில் மாடுகளும் களைப்போடு நடந்துகொண்டிருந்தன.
இருந்தாற்போல பின்னாலே தடக்' - கென்றதாய் ஒரு சத்தம்! பாரமான பொருள் ஒன்றைத் தான் வண்டிலிலே போட்டதுமாதிரி அவனுக்குத் தெரிந்தது. பின்னாலே விழுந்த பாரத்துக்கு ஒரு எம்பு எம்பின மாதிரி முன்னாலே வண்டிலில் இருந்த சுந்தரத்துக்கு இருந்தது. உடனே திரும்பிப் பார்த்தான். பெரிய றங்குப்பெட்டி' பின்னாலே வண்டிலில் போட்டுக்கிடந்தது தெரிந்தது.
வண்டிலுக்குப் பின்னாலே யார்.? அவன்தான்! அவன்! அந்தக் காப்பிலிச் சிப்பாய்தான்! சுந்தரம் உடனே புரிந்துகொண்டுவிட்டான். அது ஏதும் கள்ளச்சாமான்தான். ஆனால் இன்று பெரிய றங்குப்பெட்டியில் அல்லவா வந்து கிடக்கிறது. காப்புரியும் ஓடி விழுந்து களைச்சு வந்த சாங்கமாய்த்தான் அங்காலேயும் இங்காலேயும் பார்த்தபடி வண்டி லுக்குப் பின்னாலே வந்து கொண்டிருக்கிறான்.
சுந்தரத்துக்கு வேர்க்கத் தொடங்கிவிட்டது. காம்புக்குள்ள ஆரும் கண்டுபிடிச்சா, தான் ஆள் காலி, என்றும் அவனுக்கு நடுங்கத் தொடங்கிவிட்டது. பதற்றத்திலே கைகாலும் அவனுக்கு ஓடவில்லை. அதனாலே மாட்டைக் கூட அவனால் விரட்ட முடியவில்லை. “வீட்டை நான் உயிரோட போய்ச்சேருவனோ இல்லையோ..?” என்று நினைத்தபடி திரும்பி அவனையே பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தரம். வண்டில் அதன் பாட்டுக்கு முன்னாலே போய்க்கொண்டிருந்தது. காப்புலிக்காரன் "எடுத்துப்போ.” என்கிறது மாதிரி கைப்பாஷை காட்டினான்.
O 314 O ரீ.பி.அருணானந்தே

“எங்க எங்க..?” என்று சுந்தரம் றங்குப் பெட்டியையும் ஒருமுறை பார்த்துக்கொண்டு கேட்டான்.
"உன்ர வீட்டுக்கு.?” என்றமாதிரித்தான் இருந்தது அவன் காட்டிய
60D5F6cm)@。
“என்ரவிட்டயா.” சொன்ன சொல் சொல்லிமுடிந்தும் அந்த யா”வோடேயும் அவனால் தன் வாயை மூட முடியவில்லை.
"பத்திரமாய் வை! நான் வந்து பிறகு இதை எடுக்கிறன்.?” இப்பொழுதும் சரியானமாதிரித்தான் அவன் தன் சைகை மூலமாய் இதைச் சொன்னான். அவன் அப்படியெல்லாம் காட்டிச் சொல்லவும் 'ஓம்' என்று ஒப்புக்கு இவனும் தலையை ஆட்டிக்காட்டினான். அவன் சொன்னதை ஏற்றக் கொள்ளாமல் இருக்கவும் சுந்தரத்தால் முடிய வில்லை.
“எனக்கு இழவு வந்து விழத்தான் போகுது. இவன் இப்பயும் பரதேசி, என்ர வண்டிலுக்குப் பிறகாலயாத்தான் வந்துகொண்டிருக் கிறானே.?”
என்று மனதுக்குள்ளே எரிந்து அவனைப் பேசியபடி மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தான் சுந்தரம்.
"ஆனாலும் அவனுக்கு எவ்வளவு அளவிலே இந்தக் கள்ளம்குள்ள மெல்லாம் தெரிஞ்சிருக்கு இதுமாதிரியான ஒரு மாய வேல.! என்ன மாதிரி என்ர கண்ணக்கு முன்னால தோன்றினானோ அதே மாதிரியாய் இப்ப பிறகும் அவன் எங்கேயோ இதால மறைஞ்சும் போயிற்ரானே.”
இதே நினைப்புத்தான் பிற்பாடும், பின்னால் திருப்பிப்பார்த்தபோது அவனுக்கு வந்தது. "அவனைக் காணவில்லைத்தான்!” என்று நிட்சயத் தோடு வண்டில் ஆசனத்தட்டில் இருந்தபடி காலை நீட்டி பாதத்தால் மெல்ல மாட்டைத் தட்டினான்.
மாடுகள் கொஞ்சம் கெதியாய் ஓடத்தொடங்க அவனைவிட்டு விலகிக்கொண்டிருந்ததாய்த் தெரிந்தது விமான ஓடுபாதை. வண்டில் துள்ளலுக்கு கொஞ்சம் கூட கிரீச்சிடு சத்தம் இல்லாமலும் உரசல் ஒலியைவிடாமலும் பின்னாலே பிணம் மாதிரிக் கிடந்தது அந்த றங்குப் பெட்டி
ஆகாயம் தெரிகிற இடமெல்லாம் போய்க் காட்டுப்பாதையடிக்கு வந்து சேர்ந்து விட்டது மாட்டு வண்டில். இப்போதுதான் எல்லாப் பயத்தையும் நீக்கிவிட்டுச் சுந்தரம் சற்று அமைதியாயிருந்தான். "மனசைப்போட்டுப்
glugis asüveňseň O 3 l5 O

Page 164
பதைக்கச் செய்த இடமப்பா அந்த றண்வே றோட்டு.” அவனுக்கு நினைத்துப் பார்க்கவும் அக்கினிக்குள்ளாலே இருந்து தான் மீண்டு வந்தமாதிரியாக இருந்தது. என்றாலும் இன்னும் ஒரு விதமான பயம் அவனைப் பிடித்துக்கொண்டது. "இந்த றங்குப் பெட்டி இனி எனக்கு என்ன கெடுதியள நாள் போகப் போக உண்டுபண்ணப்போகுதோ?”
அவன் புலன்களிலேயெல்லாம் அந்த உணர்வுதான்.
“என்றாலும் இது என் சொத்தில்லை அவனுக்கே இதை வைச்சிருந்து திருப்பிக் கொடுக்கவேணும்.”
ஆழ்ந்து பெருமூச்சு விட்டான்.
மாடுகள் பழக்கமாக பாதையில் தங்கள் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந் தன. திருப்பிப் பெட்டியைப் பார்த்தான் சுந்தரம்.
“யாரும் இந்தப் பெட்டியைப் பார்த்தால் அசம்பாவிதம் வரும். இருட்டுக்குள்ளேயும் கண்ணுக்கு அடிக்கிறதே ஆமிக்காறரிண்ட இந்தக் குழைப் பச்சை நிறம்.” ஆசனத்தட்டிலிருந்து எழுந்து சாக்கை எடுத்து அதை மூடினான். நன்றாகக் கூட மூடிவிட முடியாது சாக்குக்குள்ளால் ஒரு பக்கம், றங்குப்பெட்டி வெளியே பார்ப்பதுமாதிரி அவனுக்குத் தெரிந்தது. "இதுக்க என்னதான் இருக்கும்? இருக்கும்?” தீர்க்கமான ஒரு கேள்வி தான் அவன் மனம் கேட்டகேள்வி. ஆனாலும் இந்த யோசனையே எனக்கு அவசியமில்லாதது. இந்தப்பெட்டிய நான் அவனுக்குத்தானே திருப்பக் குடுக்கவேணும்? அவனும் இதை எடுத்துப்போக வாறதெண்டும் சொல்லியிருக்கிறானே.?”
மறுகணம்:
"இத அவனிட்ட குடிக்காட்டியோ. நான் ஒரு துரோகி ஒரு வஞ்சகன்! எண்டு சொல்லி என்னைச் சுட்டுப்போடுவானே.?”
மறுகணம்:
“எவ்வளவு உதவி அவன் செய்திருக்கிறான்! அவனுக்கு நான் அப்படிச் செய்யேலுமா. செய்ய முடியாது. திருப்பி இதக் குடுத்துட வேணும்.!”
என்றெல்லாம் யோசித்துக்கொண்டு அவன் வண்டிலோடு வீட்டுக்குப் போய்ச்சேர்ந்தான். அவன் வீட்டு முற்றத்தில் சாணியும் மூத்திரமும் ஆவியாகும் வாடைதான் எப்பொழுதும் அடிக்கும். பக்கத்து வீட்டு வளவுகளும் ஒலை வீடுகள்தான். அவர்களெல்லாருமே கூலி
O 316 O ரீ.பி.அருளானந்தே

வேலைக்குப் போகிறவர்கள். எங்கு நின்றாலும் காதில் விழும் பெரிய சத்தம் போட்டுத்தான் அவர்கள் கதைப்பார்கள்.
சுந்தரத்துக்கு அமைதியின்மை தொடர்ந்த மாதிரித்தான் இருந்தது. வளவுக்குள்ளே வண்டிலை விட்டதும் மாடுகளை லீவாக்கிக் கொண்டு போய் அவன் கொட்டிலில் கட்டினான். வண்டிலில் சரிந்தமாதிரி ஒரு ஓரத்தில் கிடந்த அந்தப் பெட்டியை கையை நீட்டிப் பிடித்து இழுத்தான். கையில் பொறுப்பாக வந்து அதைத்தூக்கும்போது, பிணப்பாரமாக அவனுக்கு இருந்தது. றங்குப் பெட்டியில் இரண்டு பூட்டும் பூட்டிக் கலகலத்தமாதிரிக் கிடக்கிறதையும் அவன் பார்த்தான். பெட்டியைத் தூக்கிக்கொண்டுபோய் வீட்டுக்குள்ளே சாக்குகளால் மூடிவைத்துவிட்டு இரவு சாப்பிடவென்று ரொட்டி சுட்டான்.
அடுப்புக்குப் பக்கத்திலிருந்தபோது, அந்த நெருப்பு வெக்கையும் அவனுக்கு நெஞ்சைக் கணக்கச் செய்தது. ஒரு வித அச்சம் மனதை ஆழ்த்தும் ஏக்கம்! இரண்டையும் அனுபவித்தபடி சுட்ட ரொட்டியை சாப்பிட்டுவிட்டுப் பாயைப் போட்டுப் படுத்தான். பக்கத்து வளவிலுள்ள வீடுகளில் இடைவிடாது அவன் காதுகளில் விழுந்துகொண்டிருந்த உளியோசை போன்ற மனிதக் குரல்களும் அடங்கினதாய் அணைந்து விட்டன. களைப்புக்கு அவனுக்கு நல்ல நித்திரை வந்தது. மனம் அமைதியாயில்லாவிட்டாலும் அவன் நல்ல நித்திரையோடு அசைவின்றிக் கிடந்தான்.
விடிந்துவிட்டது.
அவன் இப்போதே இக்கணமே உதயத்தில் காம்பிலே போய் வண்டிலுடன் அங்கே நிற்க வேண்டும். அவனுக்கென்றால் ஒரே யோசனை.
வீட்டைவிட்டு கிளம்பிச் செல்வதற்கு முன் மூடியிருந்த சாக்கைவிலக்கி றங்குப் பெட்டியைப் பார்த்தான். அதைப் பார்த்ததும் மீண்டும் அவன் மனம் மிகவும் பயப்பட்டு புகையைத் தொடங்கியது. பெட்டியின் தோற்றப்பாடு அவன் மனதை முள்ளாய்க் குத்தியது. கண்களை மூடிக்கொள்ள உடனே அவனுக்கு இருமலும் வந்தது. அடித்தொண்டையில் கபம் சிக்கிய ஒலியுடன் இருமினான்.
வாயைத் துடைத்துக்கொண்டு, 'இதுதான் என்ர விதியாயிருக்குமோ? என்றவாறு நினைத்தபடி, வண்டிலைப் பூட்டிக்கொண்டு றன்வேப் பக்கத்துக்குப் போக பிறகு வெளிக்கிட்டான் சுந்தரம்.
விமான ஓடுபாதையடிக்கு வண்டில் நெருங்கியதாய் வரவர பயத்தில் துயரச் சுரப்பண்கள் O 317 O

Page 165
உடலெங்கும் பரவி அழுத்திய களைப்பாய் அவனுக்கு இருந்தது. உள்ளுக்குள் வண்டில்போன பிறகு எங்கேயும் கரிய அவன் நிழலா வது தெரிகிறதா, என்கிற மாதிரி கண்களால் அவன் அவனைத் தேடினான்.
ஆனால் அவன் நினைத்துத் தேடியது மாதிரி அவனையும் அதற்குள் காணவில்லை. அவனுக்குத் தெரிந்த வேறு இராணுவ வீரர்களையும் அங்கு அவனுக்குக் காணக்கிடைக்கவில்லை. அங்கேயுள்ள அகன்று விரிந்த கூடாரங்களிலேயெல்லாம் அவன் இதுநாள் வரையாகக் காணாத புதிய ராணுவ வீரர்கள்தான் அவ்வேளையில் நின்றுகொண்டி ருந்தார்கள். அவனை அங்கு காணவில்லை என்று நினைத்தபோது ஒரு வகையில் அவனுக்கு ஆறுதலாகவும் இருந்தது. மனம் அவனுக்குப் பிரகாசமடைந்தது. முகப்பொலிவுடன் அன்றைய வேலையைச் செய்துகொண்டிருக்கும்போது, அங்கு தன்னைப்போன்று வேலை செய்துகொண்டிருப்பவருடன் இதுபற்றி கதைவிட்டுக் கேட்டான். அவன் கேட்டதுக்கு அவர்கள் உடனே சொன்ன பதில், அவனுக்கு அப்படியே மனதுக்கு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுத்தது.
அப்படியே உறைந்தமாதிரி நின்றான் "நேற்றுடன் அவர்களெல்லாம் திடீரென வேலை மாற்றலாகிப் போய்விட்டார்களா..? உடனே அவர்களைப் பிளேனில் அள்ளிப்போட்டது மாதிரிப் போட்டு எங்கேயோ கொண்டுபோய்விட்டார்களாமே..? இந்த உலகச் சண்டை உலகம் முழுக்கவும்தானே நடக்கிறது. அவர்கள் எங்கு போனார்களோ..? இனிமேல் அவர்கள் என்ன ஆவார்களோ யாருக்குத் தெரியும்.?”
இப்படியெல்லாம் அவர்கள் தங்கள் வாயாலே சொல்லச் சொல்ல. மகிழ்ச்சி வெள்ளம் மனதில் அவனுக்குப் பெருகியது. அந்த மகிழ்ச்சி வெள்ளத்திலே தவளை போல அவன் மிதந்தான். அன்று அவன் உடல் அசைவுகளிலெல்லாம் ஊக்கமான ஒருவித லாவகம் கூடிவிட்டது.
பின்னேரமானதும் வேலைமுடிந்து, யாருக்கும் தன்னில் ஒரு சந்தே கமே ஏற்படாத நிலையில் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான் சுந்தரம். இப்படியே ஒரு நாள் கடந்தது, இரண்டுநாள் கடந்தது, அதேபோல ஒரு கிழமையும் கடந்தது. அவன் வீட்டுக்குள் இருந்த அந்த றங்குப் பெட்டியை பாதுகாக்க வாசல் கதவையும் பூட்டிப்பூட்டி அவன் வைத்தான்.
"அவன் காரியக்காறன் பெட்டியை எடுத்துக்கொண்டுபோக தவறாம இங்க வருவான்.?”
என்று நினைத்துக்கொண்டு தன்னிடம் றங்குப்பெட்டியைத் தந்துவிட்டுப் போன அந்தக் கறுப்புநிற மனிதனையும் அவன் எதிர்பார்த்துக்
o 318 O ரீ.பி.அருளர்ைதல்

காத்திருந்தான். ஆனால் அவனோ வந்ததாயில்லை. இன்னும் என்றைக் கென்றாலும் அவன் கட்டாயம் சிலநேரம் வருவான்! என்று ஒருமாதம் போய் இரண்டுமாதம் முடியும் காலம்மட்டும் பார்த்தான். அப்பொழுதும் அவன் வரவில்லை. இப்படியே நாளைக்கடத்தி ஆறுமாதங்கள் கூட இருந்து அவனை எதிர்பார்த்தான் சுந்தரம். அவனோ வருகிற மாதிரியா கவே இல்லை. இன்னும் கும்பிடுகிற சாமிகளையெல்லாம் பார்த்துப் பார்த்துக்கும்பிட்டுக் கொண்டு திரிந்தான் சுந்தரம். கசகச என்கிற உடம்போடும் பிசுபிசு என்கிற சாரத்தோடும் இதேயோசனையாக அவன் அலைந்துகொண்டே இருந்தான்.
இப்படியே ஒரு வருடங்கள் கூடக்கடந்துவிட்டது. ஆனால் அவன் வரவே இல்லை. அதைக்கொண்டு கடைசியாக இனி எந்தப் பொழுதிலும் அவன் இவ்விடம் வரவேமாட்டான் என்று நினைத்து முடிவெடுத்துக் கொண்டான் சுந்தரம்.
இதற்குப்பிறகு ஆசையோடு விடுகிற மூச்சு அவனுக்குக்கூடியது.
"அந்தப் பெட்டியில் அப்படி என்ன இருக்கும்.? இன்றைக்கே அதைப் பூட்டுடைத்துப் பார்த்துவிட வேண்டும்.?” - என்று அவன் நினைத்தான். பெட்டியைத்துக்கி நடுவீட்டில் வைத்துக்கொண்டு சுத்தியலால் பூட்டை உடைக்க அடித்தான். “கிணுங்கினுங்..” என்று நாதச்சத்தம் வந்தது. பூட்டென்றால் வாய் திறப்பதாக இல்லை. பிறகு துண்டு இரும்பைப் பிடித்துக்கொண்டு அதிலே சுத்தியலால் போட்டான். பலம் கொண்ட மட்டும் அடித்து நல்ல போராட்டமாகத்தான் அவனுக்கு இருந்தது. கடைசியாக இதுதான் உனக்கு அளவு என்று போட்ட அடியோடு வாய் விரித்தது அந்தப் பூட்டு
றங்குப் பெட்டியைத் திறந்தான். உள்ளே இருந்ததைப் பார்த்ததும் தலைக்குள் அவனுக்கு ஒரு சுற்றுச்சுற்றுகிற மாதிரியாய் வந்தது.
"எவ்வளவு காசு? தனித்தனிக் கட்டுக்கட்டா பெட்டி முட்டயா” வீணை அதிர்வுடன் அவன் உடனே விறைத்துப்போனான். தன்னைப் போலவே வேறு யார் யாரினதோ ஆயிரம் கண் றங்குப் பெட்டிக்குள் உள்ள பணத்தைப் பார்ப்பதுபோல அவனுக்கு இருந்தது. உடனே றங்குப் பெட்டியை சடாரென்று மூடிவிட்டு, எழுந்துபோய் வீட்டுக்கதவைச் சாத்தினான். அதற்குப் பிறகு வீட்டுமூலைக்குள் இருந்த அலவாங்கை கையோடு எடுத்துக்கொண்டுவந்து, பெட்டி இருந்த இடத்திலேயே பெரிய குழிதோண்டி எடுத்து அதற்குள்ளே அந்த றங்குப் பெட்டியை வைத்து மண்ணால் மூடி உரமாய் அடித்து இறுக்கினான். அவன் அந்த வேலையை முடித்த நேரம், வவுனியாக் குளத்தடிப்பக்கமிருந்து வால்நரிகள் ஊளையிட்டன. சுந்தரம் அதைக் கேட்டவண்ணம் தனக்கு வந்த அதிஸ்டத்தை நினைத்துச் சிரித்தான்.
ഴ്ചug\ a\uഷ്ട്. O 319 O

Page 166
இவ்வாறேதான் சுந்தரத்துக்கு கஷ்டப்படாமல் அவன் இருக்குமிடம் நோக்கி வந்த மாதிரியாக செல்வம் வந்தது. சுந்தரத்துக்கு விருட்சங்கள் துளிர்த்த இலைகளின் பச்சைமாதிரியாய் வாழ்வு மலர்ந்தது அதன் பிற்பாடேதான்.
சுந்தரம் புத்திசாலியும்கூட, பணம் வந்துவிட்டதேயென்று துவாயைப் போர்த்திக்கொண்டு திரிந்த அவன் உடனே பட்டுச் சட்டை வாங்கிப் போட்டுக்கொள்ளவில்லை. எந்தப் பவுசும் யாருக்கும் அவன் காட்ட வில்லை. அப்படி அவன் அனேக காலம் அமைதியாகவே இருந்தான். காம்புக்குப் போவதை நிறுத்திவிட்டு கரடு முறடான விறகுகளை வண்டிலில் ஏற்றி அவன் கொண்டுபோய் ஊருக்குள் உள்ளவர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தான்.
இப்படிக் கொஞ்சக் காலம் கடத்திவிட்டுத்தான் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த பெட்டியை அவன் பிறகு வெளியே எடுத்தான். அந்தப் பணத்தில் ஆமைவேத்திலே கொஞ்சம் கொஞ்சமாக பிறகுதான் சுந்தரம் காணிகள் வீடுகள் என்று சொத்துக்களை வாங்கிச் சேர்த்தான். சுந்தரத்தை அதற்குப் பிறகு யாரும் பார்க்கும்போது அவனுக்குப் பின்னால் ஒரு சூரியவட்டம் இருப்பதாகவே கற்பனை பண்ணி நினைத்துக்கொண்டார்கள். கோடீஸ்வரன் சுந்தரம் பிள்ளை-யென்று அவனுக்குப் பட்டப்பெயரும் வைத்துக் கதைத்துக் கொண்டார்கள்.
சுந்தரத்துக்கு எல்லாவசதிகளும் வந்துசேர மெல்ல மெல்ல உடலின் ஒளி அதிகரித்தபடி இருந்தது. பணமும், ஆட்பலமும், உடலில் திமிரும் ஏற ஏற, ஆழங்களும் முடிவின்மையும் கொண்ட இன்பமளிக்கும் தாடாகங் களைத் தேடித்தேடி அவன் அலைவதற்குத் தொடங்கிவிட்டான். பணம் வந்து அவனுக்கு என்னதான் நிம்மதி? இச்சையைவெல்ல முடியாது இருண்ட குகைக்குள் வாழ்வது போலவே, அவனது இன்றைய வாழ்க்கை நடந்துகொண்டிருந்தது.
多A
தனக்கு முதுமை வருவதையும் அறியாதிருந்தவர்தான் சுந்தரம்பிள்ளை. தன் உயிர் பிரிய முன்னே வேண்டிய அளவிலே உலகின் இன்பங்களை அனுபவித்துத்தீர்த்துவிடவேண்டுமென்ற ஆசைதான் நாளும் பொழுதும் அவருக்கு.
இன்று அவர் காலை ஒலிகள் கேட்டதோடேயே நித்திரையிலிருந்து எழுந்துவிட்டார். மனைவி கோப்பிதயாரித்துக் கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டுப் போக, அதை எடுத்துக் குடித்தார். கோப்பி குடித்ததும் அவருக்கு தெம்பு வந்தது. அந்தப் புத்துணர்ச்சியோடு O 320 O ரீ.பி.அருணானந்தல்

இரவு புதைக்கப்பட்ட நினைவுகளெல்லாம் அவருக்கு மீளவந்தது. செவ்வந்தியை விட்டுச் சென்ற இடத்திலேயே மீண்டும் அவரின் நினைவு வழிச்சென்றது. சுழற்காற்றுப் போல அவரின் நினைவில் அப்போது செவ்வந்தி சுற்றியபடி நடனமிட்டாள்.
“காலேல கடைத்தெருயாவாரம் போய்ப் பாத்திட்டு வரவேணுமெண்ட நினைப்பேயில்லாமல் இப்பவே என்ன இந்தச் சவநினைப்பு.”
அதிலே பிறகும் இருந்துகொண்டிராமல் எழுந்து நடந்துகுளியலறைக்குள் போனார். அதற்குள்ளே இருந்து இப்பொழுது குளித்து முடித்ததும் நல்லதுதான் என்பதுபோல மனமும் பிறகு அவருக்குக் குளிர்ந்தது. அதற்குப் பிறகு புதுவேட்டியையெல்லாம் எடுத்து உடுத்திக்கொண்டு, சடைக்கொடிகள் மாதிரியாயுள்ள தன் தங்கச் சங்கிலிகளையும் எடுத்துக் கழுத்தில் போட்டுக்கொண்டுபோய் அவர் சாமிகும்பிட்டார். சந்தனம் தொட்டு நெற்றிப் பொட்டில் வைத்தார்.
“நேரமாச்சு இனி வெளிக்கிடுவம்"என்று நினைத்துக்கொண்டு வெளி வாசல் கதவை தாண்டும்போது அவரின் தோள்பக்கம் வாசல்பக்க நிலையில் ஒரு உரசு உரசியது.
“யான மாதிரி முழு உடம்பா இப்ப என்ர உடம்பு போயிற்றுச் சீ.” மனதுக்குள் சலித்துக்கொண்டு வீட்டு வாசற் படியிறங்கினார். கார் வாசலடியில் தயாராக அவருக்கு நின்றது. கார்க்கதவு அருகில் சாரதி வீரசிங்கம் நின்றுகொண்டிருந்தான். நடந்துபோன வீச்சோடு கார்க் கதவைத்திறந்து பின் ஆசனத்தில் ஏறி இருந்துகொண்டார் சுந்தரம்.
முதலாளி காருக்குள் ஏறியதும், தானும் கதவைத்திறந்து றைவர் சீற்ரில் உட்கார்ந்தான் வீரசிங்கம். அதற்குப் பிறகு கண்ணாடியில் பின் சீற்ரிலுள்ள தன் முதலாளியை ஒருகணம் ஏறெடுத்துப் பார்த்துவிட்டு காரை அவன் ஸ்ராட் போட்டான்.
வீட்டுப்பக்கமிருந்து கார் வெளிக்கிட்டு வீதியில் ஒடிக்கொண்டிருக்கும் போது “எனக்கு ஏதும் வேலைசெய்யச் சொல்லி முதலாளி இண்டைக்கு உத்தரவு கொடுப்பாரோ.?” என்று தனக்குள் நினைத்துக்கொண்டு, பின்பும் ஒரு கணம் காரை ஓட்டிக்கொண்டிருக்கும்போது அவன் மேலே உள்ள கண்ணாடியில் அவரைப்பார்த்தான். அவர் பின் சீற்ரில் தனிமையில் கிடப்பது மாதிரி, கண்ணாடியால் வெளியே பார்த்துக்கொண்டு, மெளனமாக இருப்பது மாதிரித் தெரிய அவனுக்கும் ஒன்றும் புரியவில்லை.
அவன் உடனே கழுத்தைத் தணிந்து பின் வாங்குவது போல வந்து, நேரே வீதியைப் பார்த்தபடி கார் ஓட்டத்தொடங்கிவிட்டான். சுந்தரம்பிள்ளை கடை நெருங்கியதாய்க் கார்வர உடலைக் கொஞ்சம்
துயரச் சுடீ0uவிகள் O 321 O

Page 167
குறுக்கிக் கொண்ட மாதிரிச் சீற்றில் இருந்தார். ராமனுடன் இன்று கதைப்பதை அவருடைய உள்மனம் மறுத்தேவந்தாலும், செவ்வந்தியை கண்களால் பார்த்துக்கொண்டிருக்கிறமாதிரி இருந்த அவரது நினைவு அதையெல்லாம் அவரிடமிருந்து விரட்டிக்கொண்டிருந்தது.
கடைக்கு முன்னால் கார்வந்து நின்றதும் “வேற எவரும் இத அறியக்கூடாது. அறிஞ்சாப் பெரிய வெக்கக் கேடு" என்று தன் மனதுக்குள்ளேயே இதை நினைத்துச் சொல்லிக்கொண்டபடி அவர் கார்க்கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கினார்.
வீரசிங்கம் கீழே இறங்கி, காலுக்குள் சாரத்தை ஒதுக்கிக்கொண்டு, றைவர் சீட் கதவுக்குப் பக்கத்திலே மரியாதையாய் நின்றான். சுந்தரம் முதலாளி தசை அசைவுகளுடன் நடந்து கடைக்குள்ளே போனார். வேலையாட்களெல்லாம் அவரைக் கண்டதும் தங்கள் கண்களின் அசைவுகளை ஒரு கணம் நிறுத்தினமாதிரி நின்றார்கள். பிறகு அவர் தங்களுக்கு முன்னாலேயாக இல்லை, அவர் இப்போது எங்களைக் கடந்து போய்விட்டார், எனக் கண்டதும் தங்கள் வேலைகளிலே அசையத் தொடங்கினார்கள்.
சுந்தரம் முதலாளி கடைக்கு வந்தால், அதிகபட்சமாக தான் இருந்து கொள்ளும் அந்தப் பெரிய மேசைக்குப் பக்கத்திலுள்ள கதிரையில்தான் போய் உடனே இருப்பார். ஆனால் இன்று மனம் கலங்கிமேலெழும் அந்த நினைவுகளாலே அவருக்கு அந்தக் கதிரையில் போய் இருந்து கொள்ளமுடியவில்லை. அவர் கடைக்குள் வந்த வரத்தோடு, கடைக்குப் பின்புறமாகத்தான் நேரே போனர். அங்கே உள்ள கதவைத் திறந்தால் எதிரேயுள்ள சிறிய இடத்தில் தெரிவது ஒரு கிணறும், அதற்குக் கொஞ்சம் தள்ளியதாய் இருப்பது மலசலகூடமும்தான்.
அவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து நின்று பார்த்தார். இன்னும் ராமன் அங்கு வந்ததாயில்லை. பின்புறம் எழுப் பிக்கட்டப்பட்டிருந்த மதிலிலே ஒரு வழியும் விடப்பட்டிருந்தது. அதற்குள்ளாலே கக்கூசை சுத்தம்செய்பவர்கள் வரமுடியும், போகவும் கூட அந்த வழியால் முடியும்.
சுந்தரம் சாமி கும்பிட்டு புனிதமாக வந்தவர். அதிலே நின்று இப்போது கக்கூசைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கக்கூசுக்குள்ளாலே இருந்து பெரிய பொக்கான் தவக்கை எம்பி எம்பிப் பாய்ந்து அப்போது வெளியே வந்தது. கக்கூஸ் கதவில் சிறுசிறு பூச்சிகளும் ஒட்டிக் கிடப்பது மதிரி அவருக்குத் தெரிந்தது.
சுந்தரம் ஒரு காலம் மழைகாலமானநேரம், குளக்கரையில் உள்ள நீரின் மேலேயேயும் மலம் கழித்தவர்தான். நீரோட்டத்தில் அது
O 322 O ரீ.பி.அருணானந்தல்

மிதந்து ஒவ்வொரு குச்சியிலும் முட்டிக்கொண்டுபோக, அங்காலிப் பக்கம் பார்க்காமல் மழையிலே நனைகிறதே பத்துகிற பீடி’ என்று அதை 'புஸ்க் புஸ்க்" கென்று இழுத்துக்கொண்டு, அலுவலை அப்படி முடித்தவர்தான். இப்படியெல்லாம் சாரத்தைத் தூக்கிக்கொண்டு அவர் குளத்தடித் தண்ணிரில் நடந்து நடந்து குந்திக்கொண்டு மலம் கழித்ததெல்லாம் ஒரு காலம்.
ஆனால் இப்பொழுது, அதிலேயே நின்றுகொண்டு அந்தக் கக்கூசைப் பார்த்துக்கொண்டு ராமனையும் எதிர்பார்த்தபடி நிற்கும் நிலையில் அவருக்கு முகமண்டலமெல்லாம் கறுத்துப்போய்விட்டது. "என்ர மரி யாதையையும் அறுத்தெறியிற மாதிரியா யாருட்டயாப் பாத்து நான் என்னத்தக் கதைக்கவெண்டு இதிலயா இப்பவும் நிக்கிறன்.?” மனதில் அடித்தமாதிரி இந்த நினைப்பு இறங்க இறங்க கைகளிரண்டையும் கட்டிக்கொண்டு யோசித்தபடி அவர் நின்றார்.
இந்த நேரம் மதிலைப் பிளந்தது மாதிரி இருக்கும் அந்த இடைவெளியால் ராமன் தலையை நீட்டி உள்ளேபார்த்தான். "சதையான உடம்போடு அதிலே யார் நிக்கிறது.? பின்புறமாக ஆள்நிக்கிற சாங்கத்தில ஆருண்ணு தெரியிலயே.?” நினைத்தபடி சவட்டைக்கால் "தவக் தவக்” நடையுடன் உள்ளே ராமன் நடந்து வந்தான். வரும்போது தலையைத் திரும்பி இன்னொருமுறை நின்றவரைப் பார்த்தபோது, அது முதலாளியேதான் என்று அவனுக்கு உடனே தெரிந்துவிட்டது.
சுந்தரம் முதலாளியும் இதே தருணத்தில் திரும்பி நின்றார்.
ராமன்தான்!
"ஆ. வா வா வா."
"யா.ய்யா.”நெஞ்சுக்கூடு நடுங்கினமாதிரி அவரைக் காணவும் அவனுக்கு வார்த்தைகள் தடுமாறின. இன்று கொஞ்சம் நேரம் போய்விட்டதுதான். “கடவுளே என்ன செய்ய.?” பயம் பிடித்துக் கடிக்கிறமாதிரி விரட்ட, இன்னும் ஒருவாளி ஊற்றுவதோடு முட்டி வெளியே தள்ளினமாதிரி வருவது போல இருக்கும் மலப்பீப்பாயைக் கொண்டுபோய்க் கக்கூசுக்குப் பின்னாலே அவன் வைத்தான்.
நெற்றிவேர்வையோட கக்கூசுக்குமுன்னாலே பிறகு ஓடி வந்தான். "இன்னுமா இதிலேயே நிண்ணுகொண்டிருக்காரே மொதலாளி.? ஒண்ணுக்கு ரெண்டுக்கா, கக்கூசுக்குப் போவவா நிக்கிறாருவா?” "ய்யா ரெண்டு நெமிசத்துக்குள்ள எல்லாமே பூரா சுத்தம் செய்து புடுறேன்யா. பின்னாடி நீங்க போய்க்கிலாமியா.?” சொன்ன கையோடு கையிலே உள்ள ஈர்க்குக் கட்டுடன் கக்கூசுக்குப் பின்னாலே g rouഷ്ട് C 323 O

Page 168
ஒடிப்போனான் ராமன். அவனுடன் கதையை எப்படிக் கொடுத்து, சிக்கை எப்படி அவிழ்ப்பது? என்று யோசித்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ராமன் பின்னாலே போன கையோடு திரும்பவும் கக்கூசுக்கு முன்னால் விறுவிறுவென்று ஓடிவந்தான்.
“ய்யா ஓரம் சாரமா பாத்து அங்கிட்டுவா கொஞ்சமுண்டு நானுவேலய முடிக்காட்டிலுமா நிண்ணுக்குங்கையா. வாளி இழுத்துப் புடுங்கி ஊத்திக்கிற கழுவிக்கிற நேரத்திலயா கெட்ட நாத்தமும் மூஞ்சிக்கு அடிக்கும்.” என்று முன்னால் தன் கழுத்தை இழுத்துவைத்துக்கொண்டு அவருக்கு அவன் சொன்னான்.
"அது பறவாயில்லயடா ராமா. கோழிசெத்தா மணக்கிற மாதிரி இந்த மனிசன் செத்துக்கிடந்தாலும் பிணம் பிறகு மணக்கும்தானே. உலகத்தில எல்லாத்தையும்விட மனுசன் எண்டவன் தான்ரா பெரிசு. நீயும் தாண்டா பெரியமனுசன். உன்ன மாதிரி ஒரு மனுசன் இந்த வேலையும் செய்யாட்டிப்போனா ஊரேநாறும்.” என்றார் அவர்.
"எண்ணாலும் நாங்க சக்கிலிய சாதி ஆளுங்கையா எங்கவுட்டு வேலய வேறுயாராச்சும் ஒருமனுசன் விரும்பிக்கிட்டு செய்வானுங்களாய்யா. மூச்சுப் போயி செத்துப்போனவனுகூட நம்ம சாதிசனத்துக்குக் கிட்ட வருவாங்களாய்யா..?” ராமன் இப்படிச் சொல்ல அந்தச் சொற்கள் சுந்தரம்பிள்ளை மனசைக் கிழித்துத்தைத்து, தைச்சதை பிற்பாடு கிழித்தது மாதிரியும் இருந்தது. நெஞ்சில் அவர் செவ்வந்தியைப் பற்றி நினைத்து வைத்திருந்த கற்பனையெல்லாம் அவன் அந்தக் கதையைச் சொன்னதற்குப் பிறகு, வழுக்கு வழுக்கி அவர் மனதிலிருந்து வடிகஞ்சியாய் ஒழுகத் தொடங்கினமாதிரி இருந்தது.
அவர் உடனே வேட்டியை அவிழ்த்து லூசாக்கி பிறகு இறுக்கிப் பிடித்து இழுத்துக் கட்டினார். "கதையை விட்டுட்டுப் பார்ரா உன்ர பாக்கிற வேலய.?” - என்று பிறகு அவர் அவனைப் பார்த்து வெறுப்போடு முனகினார்.
"ய்யா சரிங்கையா சடபுடண்ணு செய்யிறன்யா." அவன் பிறகு விழுந்தடித்த மாதிரி கைவிளக்குமாறுடன் பின்னால் ஓடினான்.
சுந்தரம்முதலாளிக்கு கதவு அடைச்சது அடைச்சதுதான்!” - என்ற மாதிரிப் போய்விட்டது. மேலே ஆகாயம் கீழே பூமி’ என்றதுமாதிரியான ஒரு நினைவில் அண்ணாந்து மேலே அவர் வானத்தைப் பார்த்தார். பிறகு கீழே பூமியைப் பார்த்தது மாதிரி தலையைத்தொங்கப்போட்டுக் கொண்டு, கண்பார்வையளவுக்கு இறுக்கியோசித்தார். "எத்தனை
O 324 O ரீ.பி.அருளானந்தே

பூமாலைகளை சுமந்தது இந்தக் கழுத்து. எத்தனை பொன்னாடைகளைப் போர்த்திக்கொண்டது இந்தத் தோள்? எவ்வளவு கவுரவம்! எவ்வளவு பணபலம்! ஆட்பலம்! எல்லாமே சேர்ந்து எனக்கு இருக்க ஏன் எனக்குக்கடைசியா இந்தக் கக்கூசு மேலயா வந்து சேர்ந்தது ஒரு ஆசை.?”
அதைநினைத்த நேரத்தோடு கக்கூசுக் கழுவலால் வந்தடித்த மணமும் அவருக்கு வகிற்றைப் புரட்டியது. உடனே தூக்கி வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவர் கடைக்குள்ளே போய்விட்டார்.
அவர் உள்ளே வந்த அறிகுறி கண்டதும் கடைக்குள்ளே நின்ற பெடியன் அவரருகில் ஓடிவந்தான்.
“சாத்திடா போய் அந்தப் பின்கதவ. கக்கூசு சரியா இங்கயும் மணக்குது,” -என்று அவனைப் பார்த்தவுடன் சொன்னார். பெடியன் ஓடிப்போய் அதுக்குப் பிறகு திறக்கவே இயலாத அளவிலாக இருக்கிற மாதிரி அந்தக்கதவை ஒரு சாத்துச் சாத்திப்பூட்டினான்.
சுந்தரம்முதலாளிக்கு இப்போது ஒரு ஊமைப்படம் ஓடுவது மாதிரி எல்லாம் இருந்தது. அவருக்கு எல்லாமே சரிஞ்சதுமாதிரி இருக்க, கடை வியாபாரத்திலே கவனம் வந்தது.
“கணக்குப்பிள்ளை பங்குனிக் கடைசிக் கணக்கெல்லாம் பார்த்து முடிச்சாச்சா?” என்று நிமிர்த்தித் தலையைவைத்துக்கொண்டு முன்னால் மேசையில் இருந்தவரை அவர் கேட்டார்.
“ஓம் ஐயா முடிஞ்சுது! எப்பவோ பாத்து முடிஞ்சுது..!" என்று சொல்லிக்கொண்டு எழுந்துநின்றவாறே மேசையில் கிடந்த கொப்பி களை தள்ளி அவர் ஒதுங்க வைத்தார்.
"எல்லாக் குமரிகளிண்ட ஆட்டமும் ஓட்டமும் ஒருபிள்ளையோட சரி” என்று எதையோ ஒன்றைத் தனக்குள் நினைத்துக்கொண்டதுபோல, வாய்க்குள்ளே மெதுவாக அந்தநேரம் சொல்லிக்கொண்டார் சுந்தரம். அவர் என்ன சொல்லியிருப்பார்? என்று தனக்குள் ஒரு மதிப்பீடு செய்துகொள்ளமுடியாமல் கணக்குப்பிள்ளை தடுமாறினார்.
"எல்லாரும்நிண்ட இடத்திலயா அங்க அங்கயா எண்டுநிண்டுகொண்டிராம வேலயளப் பாருங்கப்பா..?” என்று சிங்கவாய் திறந்து வெளிப்பட்டது மாதிரியாய் ஒரு குரலோடு சொன்னார் சுந்தரம். அவர்போட்ட சத்தத்தோடு, வந்த கொட்டாவியை விழுங்கிக்கொண்டு கணக்குப் பிள்ளை கொப்பியைப் புரட்டத்தொடங்கிவிட்டார். எல்லாரும் அதற்குப் பிறகு தங்கள் வேலையில் கலந்துகொண்டு கிடக்க, வீரசிங்கத்தைக் கூப்பிட்டு காரை எடு? என்று சொல்லி, அந்தநேரமே கொழும்புக்குப்
துயரச் சுஃபண்கள் O 325 O

Page 169
போகவேண்டுமென்று அதில் பயணமாகிவிட்டார் சுந்தரம்.
O
அங்கே வேகவேகமாக கக்கூசு கழுவித் துப்பரவாக்குகிற வேலையைப் பார்த்துவிட்டு அதுமுடிந்ததும். "முதலாளி அதிலே நிற்கிறாரா?” என்று தேடுவதுபோல் பார்த்தான் ராமன்.
"கக்கூசு நானுகழுவிக்கிறநேரம் இங்கிட்டாநிண்ணுக்காம போயிட்டாரோ மொதலாளி.?” அவனுக்குப் படபடப்படைந்தது மனம்,
"நம்மில ஒண்ணும் பிழையிண்ணு இல்லையே..?” அவனே தனக்குள் பதிலளித்துக்கொண்டான், "...பெரியமனுசங்கள நாம யெப்படித்தான் நேர நேராயா பாக்குறது. பேசிக்கிறது அது மொறயில்லயே.?” நினைத்துக்கொண்டு அவன் பெருமூச்சுவிட்டான். பிறகு அந்த மலப்பீப்பாயைத் தூக்கியவாறு நடந்து மதில் இடைவெளியால் அவன் கடந்துபோனான். பீப்பாய் தளும்பி இரண்டு சொட்டு அதிலே நிலத்தில் விழுந்தன. ஆனால் மூடுவதற்குக் கதவுகள் இல்லாத இடத்தில் அவன் ஏன் அதைக் குனிந்துபார்க்கப்போகிறான். அவன் இப்போ மிகமெதுவாக முன்னோக்கிச் செல்லும் பாதையிலே கையில் மலப்பீப்பாயைத் தூக்கியவண்ணமாய் நடந்துகொண்டேயிருந்தான்.
牙7
அன்று தோட்டிவேலை செய்கிறவர்களின் சேரிப்பக்கம் சந்தடிமிகுந்திருந் தது. பேச்சொலிகளெல்லாம் பின்னேரம் போல அவ்விடத்தில் பெரிதாக இருந்தன. சம்பள நாளில் சினிமாவுக்குப் போகிறவர்கள் வேளைக்கே வெளிக்கிட்டு ஒரு கூட்டமாகச் சேர்ந்து போகிறார்கள்.
லட்சுமிக் கிழவி அந்தக் கல்லிலே இருந்தபடி தனக்கு முன்னாலே நடக்கிறதெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.
"அந்தாளுயாரடி.? அவருதா ஒன் மாமனாடி அதில போறவரு.?” என்று அவள் தனக்குப் பக்கத்தில் நின்ற பாப்பாத்தியைக் கேட்டாள்.
"தொலையா அங்கிட்டு போய்க்கிட்டிருக்கிறவங்கள அடையாளமே தெரியேலயே. ஒரமா போறவர சொல்லுறியா..? ஒசரமான
ஆளு.?”
"ஆமாடி..!”
"அவருக்கென்னவாம்.?”
O 326 O ரீ.பி.அருளானங்க"

"ஒண்ணுமில்ல ஒன்மாமன யோயிச்சிட்டாலே எனக்கு சிரிப்புவா வரு தடி.”
“யேன் ووبر
"இல்ல அவரு புள்ளய தூக்கி வைச்சுக்கிட்டு அவுங்க வீட்டு வாசல் படியில நிண்ணு அத கொஞ்சிக்கிட்டிருக்காரில்ல."
áá 9ʻy
"ஒண்ணுமில்ல. ஒன்மாமன் பார்த்தா ஒரு சிரிப்பாளுமாதிரித்தான் எனக்கு. முதுகு கூனலா இப்ப ஒன் மாமன் போய்க்கிட்டி ருக்காரில்லே. பொறவா அவரு சாராயங்குடிச்சிட்டு வர்றவாட்டி நிமிந்துகிட்டுத்தாண்டி வருவாரு.”
"அப்பிடீண்ணா இண்ணைக்கு அவுங்க வுட்டில பானை சட்டீங்க எல் லாம் காலியாகும் எண்ணு நீ சொல்லுறே.?”
"ஆமாடி சிரிப்பு வருது" என்று சொல்லிவிட்டு லட்சுமிக்கிழவி சிரித் தாள்.
"அப்புறம் கலர்கலரா பேச்சு வருமோ..?”
"ஆமாடி பேச்சிபய எம்புட்டா வெல்லாம் மனுசிய போட்டு அடிச்சிக்கு வான் பேசிக்குவான். அந்தப் பொம்புள பாவம் அவளில இப்பயா உசிரா இருக்கு.? எங்கபோய்க்கிவா அவ.? அப்பேன் ஆத்தா எண்ணு இன்னொரு வீட்டிலயா போயி இருந்துக்கவும் நாதியில்ல அவளுங்களுக்கு. ஒரு சோறு தண்ணி குடிச்சுக்கவும் வீட்டில யேதும் குடும்பானா இந்தப் பாவிப்பய.? யில்லாமே கொண்ணுகிட்டுப்போயி அந்தச் சாராயக்கடேலயில்லா குடுத்துப்புட்டு அவனுமொண்டுறான்.”
"அப்புடித்தான் ஆச்சி இந்த மாமேன் திருந்தவே திருந்தாது. மாமிதான் நாளு தப்பிக்காம கஞ்சித் தண்ணியோ ஏதோ புள்ளங் களுக்கு ஊத்திக்கவேணுமெண்ணு நெச்சிக்கிட்டு வேலக்குப் போய்க் கிட்டிருக்கா. அவவேலைக்குப் போறதாலதான் கச்சதோ புளிச்சதோ புள்ளங்க பசிக்குக் குடிச்சுக்கிட்டுக் கிடக்குதுக.”
"பெரியயெழவுடி பாவம் அந்தப் புள்ளங்க..! இப்ப அவ கண்ணிலதான் கொஞ்சூண்டு உசிருகிடக்கிறமாதிரி பாக்கயிக்கயா தெரியுது.”
"அந்தப் புள்ளயுங்களேயும் பார்க்கிறப்போ பெரியபாவம்தா! முற்றத் தில தொலேலஅதுங்களெல்லாம் உக்காந்திருக்குப் பாருங்க..? அந்தப் புள்ளையுங்களுக்கெல்லாம் கண்ணில கறுப்பு வளையம் சுத்திருக்கிறமாதிரிருக்கே அப்புடீல்லாம் சின்னப்புள்ளேங்களுக்கு வந்துக்குமா..?”
துயரச் சுலப்பண்கள் O 327 O

Page 170
"பின்ன வராதாடி புள்ள..? அந்த சண்டாளனு என்னத்தத்தா கொண்ணு கிட்டு வந்து புள்ளேங்களுக்குக் குடுக்கிறான் திங்கிறதுக்கு.? அவன் பெஞ்சாதிதான் பேக்கரியில தூங்கிக்கிட்டு நிண்ணு விக்காம அங்கிட்டு கடேலயாக்கிடக்கிற பழய பாணுங்களையெல்லாம் வீட்டுக்கு வாங் கிக்கிட்டுவாறா. அந்தப் பாணுங்களயெல்லாம் பிச்சு உள்ளயா பாத்தா கரைச்சது மாதிரி கழியா இருக்கும். அப்புறம் அதுக்கயா உள்ளதுங்களையெல்லாமே பிச்சு வெளிய வீசிப்புட்டு மிஞ்சினத அப்புடியே வெறும்பாணாத் திண்ணுப்புட்டு தண்ணிய குடிச்சிட்டு எல்லாமே ராத்திரிக்கு தூங்கிடுங்கபோல இருக்கு. ம். நாஒண்ணும் இதுங்கள சொல்லிக்கிறதுக்கு யாருக்குமே. பயப்பட்டுக்கல. ஏ மறைக்கணும்? இந்த ஊரு உலகத்துக்கெல்லாம் தெரிஞ்சததானே நானும் சொல்லிக்கிறேன்.”
“சரிப் பாட்டி! நீ பேசாம அப்புடியா பாத்துக்கிட்டிருக்கிறே. ஆனா எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு மாமேன் எண்ணும் பாத்துக்காம தலேல ஒரு கட்டையால ஓங்கி ரெண்ணு அடி போட்டுக் குடுத்திடலாம் போலதான் கையி விர்று விர்று எண்ணு கிட்டிருக்கு."
"அடிபோடி வெவரம் ஒண்ணுமே தெரியாத பேச்சி கணக்காட்டமா நீயி. ஒன் மாமனு மாத்திரமா இப்பிடீல்லாம் செஞ்சிருக்கிறான்.? நம்ம பக்கத்து சேரி அம்புட்டுமே அப்புடித்தாண்டி. இங்கிட்டா ஆம்புளங்க பொம்புளங்க எல்லாமேதான் வேலை செஞ்சிக்கிட்டு பிழைச்சிக்கிறாங்க. அதே மாதிரியா அவுங்கவுட்டு ஆம்புளங்களோட சேர்த்துக்கிட்டு போயி பொட்டப்புள்ளங்ககூட சாராயக்கடேல போயி குடிச்சிக்கிட்டு வாறாளுவளாமே. இங்க வீட்டுக்கு வந்தப் புறமா சீலத்துணி ஒடம்புல போனதும் தெரியாம வெறியில விழுந்து நெலத்திலயா கெடக்கிறாளவயளாமே..? இப்புடியா புள்ள குட்டீங்களுக்கு திங்கிறதுக்கு ஒழுங்கா குடுத்துக்காம சாராயம் போய்குடிச்சுக்கிட்டு திறியிறாங்கபாரு இவங்களுக்கெல்லாமே அந்தக் கடவுளுதான் தீப்புச் சொல் லோனும். இப்பிடியா குடிச்சுப்புட்டு குடியக் கெடுத்துக்கிட்டு திரியிறவனுங்களுக்கெல்லாமே நாம ஏதும் சொன்னா அது காதுல விழுவுதா இல்லியே.?”
"அதானே பாட்டி! எனக்கிண்ணா அந்தா பாரு அந்தப் புள்ளங்கமாதிரி தொவண்டு கிடக்கிற இப்புடியானவங்க வீட்டுப் புள்ளேங்கள பாக்கிறப்பதான் மனசில பெரிய கவல. குடிக்கிறவங்க வீடுவள்ல இருக்கிற புள்ளத்தாச்சியான உள்ள பொம்புளங்கள பாக்கிறப்பவும் கவலதான். அதுங்கள பாத்து என்ன ஏது எண்ணு விசாரிக்கவும் கூடதான் ஏலாது. அடுத்தநாளு அதுங்கவந்திடுமே எங்கவுட்டுக்கு.? அதுங்கள இதுங்களத்தா எண்ணுகிட்டு.? எங்கவுட்டிலேயே ஒண்ணும் எங்களுக்கு சரியா செஞ்சிக்கப்பத்தல..! அடுத்தாட்டுவூட்டுக்கெல்லாமே
O 328 O நீ.பி.அருளானந்தே

உதவி பண்ணிக்கிறதுக்கு அப்பிடி என்ன எங்ககிட்ட கெடக்கு.?”
"அதுண்ணா சரிடீம்மா! ஓங்கள மாத்திரித்தானேடி யம்மா நானும்! இந்த ஏழைக் கெழவியாலும் யாருக்குத்தான் ஒருவேள சாப்பாடி ண்ணாலும் திங்கிறதுக்குப் பாத்து கொடுத்துக்க ஏலுமா..?” கிழவிக்கு ஒருகணம் தொண்டையை அடைத்துக்கொண்ட மாதிரி இருந்தது.
சங்கடப்பட்டாள்.
“சரிப்பாட்டி விடு! எல்லாமே கஷ்டப்பட்டமாதிரியா சீவிக்கிற நாம எல்லாம் யேத்துக்கிடத்தானே வேணும்."
பாப்பாத்தி நெற்றியை சுருக்கிக்கொண்டு சொன்னாள்.
லட்சுமிக் கிழவிக்கு பிடரிப்பக்கத்தில் ஊர்ந்ததுமாதிரிக் கடித்தது. வளைந்து இணைந்து பிடித்துக்கொண்டு கடித்த இடத்தைக் கையால் சொறிந்தாள்.
"குளிச்சு ஒடம்புக்கு எத்தின நாளாவுது என்னேயும் ஓங்ககூடவா கூட்டிக்கிட்டுப் போங்களேண்டி கொளத்துக்கு.?” என்று அவள் பாப்பாத் தியைக் கேட்டாள்.
“கொளத்துக்குப் போய்க்கிறதுக்கு என்கிட்டயா நீயி கேக்கிறே பாட்டி..? ஒன் செவ்வந்திதான் நாளெல்லாம் போய்க்குவாளே கொளத்துக்கு, அவளிட்டயா கேக்கிறதுதானே..? அவளிண்ணா மழை பெஞ்சுகிட்டாலும் அதில நனைஞ்சு நனைஞ்சு போயும் குளத்திலயா விழுந்து குளிப்பா! அவதா ஒனக்குத் தோது." பாப்பாத்தி சொன்னத்தைத் தொடர்ந்து லட்சுமிக் கிழவி நிமிர்ந்து அவளைப் பார்த்தாள்.
“வேணாண்டி ஓங்ககூடவா கொளத்துக்குப்போய்க்கிற குளிப்பெல்லாமே எனக்கு வேணாம். மழைகாலம்தானே வருது. மழைபெஞ்சா நம்ம கூரைவீட்டுக்குளயா மழை ஒழுகிக்கிட்டேயிருக்கும். வீட்டுக்குள்ளயே நானு நிண்ணு நனைஞ்சுக்கிட்டு குளிச்சுக்குவேன். மழை ஒடம்பில பட்டா பூமால மாதிரியில்லா யிருக்கும். ஆலங்கட்டியும் கூரை ஒட்டைகளுக்காலயும் விழுமே? அதயும் கூட எடுத்து வாயில போட்டுக் கலாம்.!” சொல்லிவிட்டு ஏதோ ஒருவித சந்தோஷமிகுதியில் லட்சுமிக் கிழவிதன் பாட்டுக்குச் சிரிக்கத்தொடங்கிவிட்டாள். ஒரு வினாடி கிழவி சிரிக்கிறதை நின்று பார்த்துக் கொண்டிருந்த பாப்பாத்திக்கும் அவளின் சிரிப்பு பற்றிக்கொண்டதாய்விட்டது. அவளும் சிரித்தாள்.
லட்சுமிக்கிழவி பழகிப்போன சிரிப்பை டப்பென்று நிறுத்தினாள். அவளின் கண்ணொளி கொஞ்சம் மினுங்கியது. தாழ்வாகப் பறந்து கொண்டிருக்கும் தும்பிகளைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் அவளுக்குப் பொங்கியது மனம்.
gură sistu«răsti O 329 o

Page 171
''
“மழைவரப்போகுதடி. தும்பியளு. கீழ வாட்டியா பறக்குது..!” என்று பாப்பாத்திக்கு அவள் சொன்னாள். பாப்பாத்தியும் தன்னில் மோதுவது போல வந்து விலகிப் பறந்த போகும் தும்பிகளைப் பார்த்தாள். தரையிறங்கிப் பறக்கும் அத்தத் தும்பிகளெல்லாம் சிறகசைவு தெரியாமல் பறப்பதைப் பார்க்க அவளுக்கு மிகவும் அவ்வேளையில் ஆனந்தமாக இருந்தது.
えタ
துயரம் தோய்ந்த நாட்கள் வந்துவிட்டன. இந்த மழை நாட்கள்தான் சேரியில் உள்ளவர்களுக்கு வருடத்திலே சோகம் மிகுந்தவை.
அடை மழை வவுனியாவில் மார்கழியில்தால் தொடங்கும். விட்டுவிட்டுத் தான் மழை வரும். இடையே ஒரு நாள் இதமாக சூரியனும் ஒளிவீசும். லட்சமிக்கிழவி தும்பிகளைப் பற்றிய கதையை பாப்பாத்திக்கு சொல்லிக்கொண்டிருந்த அந்தக் கொஞ்ச நேரத்துக்குள்ளாக, எப்படி எக்கணத்தில் என்று தெரியாத அளவில் மேகத்தில் மேகக்கூட்டங்கள் குவிந்தன. கீழ்த்திசை வானத்தில் 'சிலிர்' என்று ஒரு மின்னல் வெட்டிக்கொண்டு ஓடி மறைந்தது. தொலைதூரத்திலிருந்து இடி முழக்கம் கேட்டது.
பாப்பாத்திக்கு உச்சந்தலையில் சொட்டென்று விழுந்தது நீர்த்துளி
“ஊ பாட்டி நீ சொன்ன கணக்கா மழை.” சொல்விட்டு அகல விரித்த கைகள்ை அவள் நேரே நீட்டினாள். கை நீட்டுக்கு இரண்டு மூன்று துளிகள் 'டப் டப்பென்று விழுந்தன.
லட்சுமிக்கிழவியும் உடம்பில் விழுந்த மழைத்துளிகளோடு அண்ணாந்து மேலே வானத்தைப் பார்த்தாள். அவளுக்கு நுனிமூக்கிலும் மறுதுளி தெறித்தது. "ஐயையோ சல்லு சல்லுண்ணு வீசியடிக்கிற மழையாக் கொட்டப்போவு தடி பாப்பாத்தி. நாம இருந்துக்கிற வீடுங்களும் கண்ட மாதிரியா ஒழுவப்போவுதே கடவுளாண்டானே.”
என்று குரலில் குடியேறிய பதைபதைப்புடன், மெல்லிய முணுமுணுப்பாகவும் சொல்லிவிட்டு இருந்துகொண்டிருந்த கல்லிருந்து எழுந்தாள் லட்சுமிக்கிழவி
O 330 O தீவி.அருளானந்தே V

பாட்டி மழை பெலத்துக்கப்போவுது. நனைஞ்சு தோஞ்சுக்காம வீட்ட கெதியா நீயி போயிடு.?” என்று பாப்பாத்தி அவளைப் பார்த்துச் சொன்னாள்.
"நான் போய்க்கிறேன் அம்மா. நீயி ஒடு உன் வீட்டயா.?” என்றாள் கிழவி.
வளைவு கோடாக வானில் மின்னல் மின்னிக் கொண்டிருந்தது. அலை அலையாக ஏதோ குளுமை நிறைவது போலிருந்தது. கீழ்க்காற்று இலைகளையும் தூசிகளையும் அடங்காத முறையிலே அள்ளிக் கொட்டியது.
பாப்பாத்தி முன்னால் உள்ள தன் குடிசைக்குப்போய்ச் சேர்ந்த பின்பு லட்சுமிக்கிழவியும் ஒழுங்கை வழியாகப் போய்த்தன் குடிசைக்குள் சேர்ந்துவிட்டாள்.
கருமேகங்களின் திரள் வானில் விலகாமால் இருந்தன. மழை தொடர்ந்து முதலில் தவிட்டுத்தூறலாய்த் தூறிக் கொண்டிருந்தது. காற்றும் குளிர்ந்தடிக்க அந்தத் தவிட்டுத்தூறல் கசகசத்துக்கொண்டிருந்தது.
இருந்தாற்போல பிரமாண்டமாக ஒரு இடி முழக்கம்! அதைத்தொடர்ந்து இறங்கிக்கொண்டிருந்த தவிட்டுத்தூறல், கம்பித்தூறலாய் வலுத்துப் பெரும் மழையாய்க் கொட்டியது. அந்தப் பெருமழையின் ஓசையோடு காற்றும் சேர்ந்தடித்தது. மழையில் குளித்த மரங்களெல்லாம் காற்றின் இசைவுக்கு ஏற்ப, கிளைகளைத்திருப்பித் திருப்பி ஆடவிட்டுக் கொண்டிருந்தன.
மழை இரைச்சலும், காற்று இரைச்சலும், பெரிதாகிக் கொண்டு வந்தன.
சேரியில் உள்ள சில குடிசைகளின் கூரைகளை, அடித்த பெருங்காற்று வாரித்தூக்கி எறிந்தது. அந்தக் குடிசையில் இருப்பவர்கள் எல்லாரும், எங்கேயும் ஓடிச்சென்று தஞ்சமென்று நுழைந்து கொள்ள முடியாத அளவில், நனைந்து கொண்டே அந்தக் குடிசைக்குள் இருந்தவாறு நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.
இரவு முழுவதும் மழை நிற்கவில்லை. கனமுள்ள குளிர்ந்த தூற்றலாய் சப்தத்துடன் இடைவிடாது அது கொட்டிக்கொண்டே இருந்தது. அந்த ஊரிலே விவசாயிகள் பலபேருக்கு ஆனந்தமாக இருந்த அந்த மழை, சேரியில் வாழ்ந்த சிலபேருக்கு மிகவும் துன்பத்தையும் சொல்லமுடியாத மனவருத்தத்தையும் கொடுத்துக்கொண்டிருந்தது.
அவர்கள் குடிசைக்குள் இருந்தாலும் ஒழுக்கில் தெப்பமாக நனைந்து
ഴ്ചg suക്ക്ട് ഠ 33 ! O

Page 172
பட்டினியுடன் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். இரவு கழிந்துமறுநாள் பொழுது விடிந்தது. ஆனாலும் வெளிச்சம் சற்றும் பூமியில் விழுந்ததாய் இல்லை. கால நிலையில் சற்றும் மாறுதலே காணப்படவில்லை. காகம் குருவிகளும் காலையில் கத்தியதாய் இல்லை. குளிர் விறைக்க அடித்துக்கொண்டிருந்தது. கொட்டுகிற மழை இன்றும் விடாமல் கொட்டிக்கொண்டேதான் இருந்தது.
சேரியில் உள்ள தாய்மார்கள் தங்கள் சின்னஞ்சிறு குழந்தைகளை தூணியிலே போட முடியாமல் தங்கள் நெஞ்சோடு கட்டி அணை த்துக்கொண்டிருந்தார்கள். குழந்தைகள் மழைத்தண்ணீரில் நனைந்து நடுங்கிக் கொண்டு அழுதவிதம் அந்தத் தாய்மார்களை கண்ணீர் விடவைத்தது.
ஒருவருக்கும் நித்திரை கொள்ளவும் வகையில்லை. மழை ஒழுக் குக்கு ஒடுங்கி, குடிசைக்குள் ஒரு பக்கம் நின்று கொள்ளவும் வசதியில்லை.
மண்சுவர் கரைய, இடிந்துபோக, இன்னும் குடிசைகளும் அவ்விதம்
ஒரு கேவலம். ஒருவாய் சாப்பிடக் கிடைக்காத வயிற்றுப்பட்டினியில் காந்தல் பரவிப்பரவி எரிய பிள்ளைகளெல்லாம் மூக்கைச் சிந்திக் கொண்டிருக்க, மழை இப்போதும் ரொம்ப பாரமாக நிலத்தில் கொண்டிக்கொண்டே இருந்தது.
லட்சுமிக்கிழவிக்கு இப்போ நிலைமை என்ன?
அவள் மழை ஒழுக்குக்குள் நனைந்தபடி அப்படியே கிடந்து உடல் விறைத்ததாகிவிட்டாள். வயதுபோய்ப் பலமில்லாமல் கிடந்த அவளின் உடம்பு, குளிர்ந்த அளவுக்கு வந்துவிட்டது. வாயும் ஒரு பக்கம் கோணலாய் அவளுக்கு இழுத்துவிட்டது. நேரம் போகப் போகக் கால் இரண்டும் குளிர்ஏறி விறைத்துப் போய், நிற்க முடியாத அளவிலே அவள் கீழே மட்ட மல்லாக்க விழுந்துவிட்டாள். குளிர் நடுக்கத்தோடு விழுந்த உடல் நோவும் அவளுக்குக் காய்ச்சலை உண்டாக்கிவிட்டது. நடுக்கல் காய்ச்சலோடு பசியாலும் அவள் அப்படியே துவண்டுபோய்க்கிடந்தாள்.
இந்தச் சந்தர்ப்பத்தில் அடித்துப் பெய்து கொண்டிருந்த மழை, தூறலும் சீறலுமாக விட்டுவிட்டுப் பெய்துகொள்ளத் தொடங்கியது. சிறிது நேரத்தின்பின் தூறல் நின்று மேகத்தில் வெளிச்சம் போட்டது.
சேரிச்சனமெல்லாம் மழைநின்ற கையோடு குடிசைகளை விட்டு வெளியேறித் தங்கள் தங்கள் அலுவல்களைப் பார்க்கத் தொடங்கினார் கள். முகடு பிரித்தெறிந்து கிடந்த ஒலைகளைப் பொறுக்கிக் கொண்டுவந்து சிலர் தங்கள் குடிசைகளுக்குப் பொத்திக் கட்டத் O 332 O ரீ.பி.அருளானந்தச்

தொடங்கினார்கள்.
மழை ஒழுக்கில்லாத குடிசைகளில் இருந்த குழந்தைகள் வெளியே வெளிக்கிட்டுவந்து மண்நிறமாய் ஒடும் நீரில் "தங் தங்தங்.” எனக் குதித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். மழைத்தண்ணீர் போக வழியின்றி நிற்க, அவர்களெல்லாம் ஒழுங்கைகளில் ஊழை மூக்கை வடித்துக்கொண்டு ஓடினார்கள்.
பயல்களின் ஆட்டத்தை உஷாராய் உடம்புடைய சேரிச்சனங்கள் சிலர் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தூவானம் போட்ட வானத்தில் வானவில் தெரிந்தது.
அசதியினாலும் பசியினாலும் பாதிக்கப்பட்டிருந்தாலும் அங்குள்ள அனேகமானவர்கள், தங்கள் பக்கமுள்ள அந்தக் கிணற்றைப் பார்ப்போ மென்று அவ்விடத்திற்கு ஓடினார்கள். மனதுக்குள் சுருண்டிருக்கும் ஆசையோடு நிர்மலமாக நீண்டு கிடக்கும் அந்த வானத்து வெளிச்சத்திலே அவர்களெல்லாம் கிணற்றை எட்டிப் பார்த்தார்கள்.
கிணற்றை எட்டிப்பார்த்த வயது போனவர்களுக்கும் அங்கே தண்ணிர்ைக் கண்டதும், இளமையின் துடிப்பு துள்ளித்ததும்பியது.
கண்கள் அவர்களுக்கு மின்னின உச்சிமுனை ஏறிவிட்டது மகிழ்ச்சி
உமிழ்ந்த ஒளியில் சூடு இல்லாத பொய் வெய்யில் அடித்தது. அந்த வெயிலில் கிணற்றுக்குள்ளாகத் தெரிந்த தண்ணீரின் குளிர்த்தி அவர்களைப் பரவசமூட்டிச் சிரிக்க வைத்தது. எரித்து எரித்துக் கிடக்கிற மனவேதனைகள் எல்லாம், தண்ணீரைக் கண்டதும் அவர்களுக்குப் பறந்துபோன மாதிரியாய் விட்டன.
“ப்பா. பளிங்கு போலப்பா தண்ணி." என்று அதிலே நின்ற ஒரு கிழவன் சொன்னான்.
"வாளி கயிறு உள்ளவங்க யாராச்சும் கொண்டு வாங்கப்பா. குளிருண்ணாலும் இந்தக் கிணத்திலயா நாம நம்ம கையால அள்ளி தலையில ஊத்திக்கிறதுக்கு கொள்ள ஆசயாக்கிடக்கு.?”
மனம் கனிகுலுங்குகிற சந்தோஷமான நிலையிலே இன்னொருவன் சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த அருகிலி ருந்தவர்களுக்கெல்லாம் முகங்களில் ஒருவித இரத்தினப் பொலிவு மழை தங்களைப் போட்டுக் கஷ்டப்படுத்தினாலும் இனி வரும் நாட்களை தங்களுக்குச் சுகப்பட்ட நாட்களாக்கிவிட்டது என்றதாய் அவர்கள் ஆர்ப்பரித்தார்கள்.
துயர சுஃபண்கள் O 333 O

Page 173
றம்பைக்குளம் அந்தோனியார் கோயிலிலிருந்து இனிய மணியோசை கேட்டது.
ஒருவன் கயிற்று வாளியை எடுத்துக்கொண்டு வரத் தன் குடிசையை நோக்கி ஓடினான். கிணற்றைச் சுற்றி நின்றவர்களுக்கு வீட்டுக்குத் திரும்பப் போவதற்கே மனம் வரவில்லை. அவர்கள் அந்த இடத்துக்குப் பக்கத்திலே மழைத்தண்ணீரை திலாவி நடக்கிறதும் திரும்பிவந்து நிறைகுமரிபோல தண்ணீர்நிரம்பியிருக்கும் அந்தக் கிணற்றைப் பார்ப்பதுமாக நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்கள்.
கிணற்றுக்குத் தள்ளியுள்ள மரத்தில் இரண்டு காகங்கள் வந்து உட்கார்ந்தன. மேலேயும் கீழேயும் காகம் உட்கார்ந்த வேப்பங்கொப்பு ஆடி அடங்க, சிலு நீர் கொட்டிக் கொண்டிருந்தது.
ஒத்தையாய் மாத்திரம் வராமல் ஒரு கூட்டமாக பெண்கள் கூடி அந்தக் கிணற்றைப் பார்ப்பதற்கென்று அப்போது வந்தார்கள்.
"இனி ஒப்பேறப்போவுதடி நம்ம வீடுகளில உள்ள கஷ்டங்களு எல்லாமே. நம்ம கெணத்துக்கு நெறையவா தண்ணி ஊறி வந்திடுச்சாமே. இனிமே தண்ணிப் பிச்சைக்கெண்ணு யாரு வீட்டுங் களுக்கும் நாம அலையவே வேணாம். நம்ம கிணத்திலயா நாமளே வாளி போட்டு தண்ணி அள்ளி குடிச்சுக்கலாம்! துணி தோச்சக்கலாம்! குளிச்சுக்கலாம்.!"
வீரம்மா குருவம்மாவைப் பார்த்துச் சொல்லிக்கொண்டுவந்தாள். பாப்பாத்தியும் செவ்வந்தியும் அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு அவர்களுக்குப் பின்னாலே நடந்து வந்துகொண்டிருந்தார்கள். பூசாத் தாள், மாடத்தி, வெள்ளையம்மா, கூறி, சாந்தி, அன்னத்தாய் என்று உள்ள மற்றப் பெண்களெல்லாம் செவ்வந்திக்கும் பாப்பாத்திக்கும் பின்னாலேயேயாய் நடந்துவந்து கொண்டிருந்தார்கள். கிணற்றருகில் வந்ததும் எல்லாப் பெண்களும் கட்டைச் சுற்றிவர நின்று கொண்டபடி உள்ளே எட்டிப்பார்த்தார்கள்.
“அடை மழை கட்டி அழுவுதெண்டு சொல்லிக்கிட்டு நாம பெரண்டு கத்திக்கிட்டமே. இப்ப பாத்திங்களாடி பெண்டுகளா கெணற.? யின்னமா இதுக்க தண்ணித்தண்ணியா மழை பெஞ்சுக்கிட்டதால வந்திடிச்சு”
காற்றை "ஆ"வென்ற கணக்கில் வாயால் வெளிவிட்டபடி சிரித்தாள்
வீரம்மா.
"இனிமேலயா இதிலயே நாம தண்ணி அள்ளி பொழங்கிக்கலாம்.!” > 334 O ரீ.பி.அருணானந்தம்

“நல்லா நிரம்பவா வந்திடிச்சி தாயி தண்ணி.”
"இந்தத் தண்ணியயே அள்ளி குடிச்சுக்கிடும் கெடந்துக்கலாம். ஏதாச்சும் வவுத்துக்கு திண்ணுக்கவும் கூட தேவல.” கெக்கக். கெக்ககெக்கென்று நீட்டிச் சிரித்தாள் கூறி.
எல்லாப் பெண்களும் இப்படி ஒவ்வொன்றைச் சொல்லிக்கொள்ள, அவர்களின் வாயையே பார்த்துக்கொண்டு செவ்வந்தியும் பாப்பாத்தியும் வாயடைத்துப்போய் நின்றார்கள்.
“கிணறு இருந்திச்சி அப்போ தண்ணி இல்ல. இப்போ தண்ணி இருக்கு, கயிறுவாளி இல்ல. யாரு இருக்கு நமக்கு இதெல்லாமே வாங்கித்தர? கைகாலுதான் நம்மகிட்ட இருக்கு காசுண்ணா அது எங்க, எங்ககிட்ட இருக்கு?” வெள்ளையம்மா தண்ணீரையே பார்த்துக்கொண்டு இப்படி யாய் ஒரு பாட்டுப் படித்தாள்.
கூறி உடனே மற்றப் பெண்களைப் பார்த்துச் சொன்னாள்.
"தண்ணியப் பாத்துக்கிட்டதும் இவ மண்டயிக்க புதுசு புதுசா முட்டிக்கிதாக்கும்” அவள் சொல்ல,
ஒரு பக்க உதட்டில் ஒரமாகச் சிரித்துக்கொண்டாள் செவ்வந்தி அவள் அப்படிச் சிரிப்பதைப் பார்த்துவிட்டு தலையில் அவளுக்கு ஒரு செல்லத்தட்டுத் தட்டினாள் பாப்பாத்தி இத்தருணம் கேட்பவர் நெஞ்சுக்குழியெல்லாம் நடுங்க, “யாத்தே லட்சுமிப்பாட்டி செத்துக்கிட்டதாய்க் கிடக்காடி ஒடியாங்கடி?”
என்று குரலேறக்கத்திக்கொண்டபடி கிணற்றடிப்பக்கம் ஓடிவந்தாள் தண்ணிமலை பெண்டாட்டி.
அவள் கத்திக்கொண்டுவர அவளை உற்றுப் பார்த்தபடி கிணற்றடியில் நின்ற பெண்களெல்லாம் அசையாமல் நின்றார்கள்.
மின்னல் பொட்டில அடித்தது மாதிரி ஒருகணம் அவர்களுக்கெல்லாம் இருந்தது. அடுத்தகணம் ஒப்பாரிக்கு உண்டான ராகத்தை வாய்களில் திறந்த அளவுக்கு வெளியே வரவைத்துக்கொண்டு, திமுதிமு' என்று அவர்களெல்லாம் ஓடினார்கள் கிழவியின் குடிசைக்கு.
அங்கே போய் அவர்களெல்லாம் கிழவியைப்பார்த்தால், அவளுக்கு மூக்குவழிக் காற்றும் நின்று இருதயக்கூட்டுக்குள் அடிக்கிற சத்தமும் முற்றாக நின்றதாய் விட்டது.
glugš askøðvaceñabaŭ O 335 O

Page 174
உடனே எல்லாப் பெண்டுகளும் தவிச்சுப்போய் பெரிய ஒப்பாரி வைத்துக் கத்திக் குளறினார்கள்.
O
பொழுது மேற்கே சாய அனேகமான ஆண்கள் அவ்விடத்துக்கு ஒன்றாய்ச் சேர்ந்தபடி வந்து சிறியதொரு பந்தல் போட்டார்கள். இரவெல்லாம் கண்முழித்துக்கொண்டு பெண்களெல்லாம் சாவீட்டில் இருந்தார்கள். இடையிடையே அவர்களில் சிலர் ஒப்பாரி ஒப்பிச்சும் அழுத மேனியாய் இருந்தார்கள். இராவு கடக்க காலையிலே சவத்தைக் குளிப்பாட்டிக் கொழகொழாவென்று சந்தனம் பூசி, குங்குமமும் அப்பிவைத்தார்கள். அவ்விடத்துக்குப் பிறகு கொட்டுமேளம் (உறுமி) வந்தது. அந்தக் கொட்டுமேளம் அடிக்கத்தொடங்க அடிச்சுத்துடிச்சுக் கொண்டு எங்களுக்குதான் கிழவி செத்ததில் கவன்ல என்றதாய் சேரிமுழுவதும் விளம்பரப்படுத்த சில பெண்கள் உசிர் கிழியக்
கத்தினார்கள்.
அன்று காலையில் வவுனியா டவுண் பக்கம் கடை திறந்த நேரம் லட்சுமிக்கிழவிக்கு உரித்தானவர்கள் அவ்விடம் போய் சவ அடக்கம் என்று சொல்லி, அவ்விடங்களிலிருந்து பணம் வசூலித்துக் கொண்டு வந்தார்கள்.
சவம் எடுக்கிறநேரத்துக்குக் கிட்டவாக சேரியிலுள்ள சனங்களெல்லாம் குய்யோ முறையோ என்றதாய் அதிலே கூடிவந்துவிட்டார்கள். கிழவி நெற்றிதடவி, மூஞ்சிதடவி, மாரத்தழுவி, தோளைத்தடவி, கையைத் தடவி வளர்த்த அயல்வீட்டுப்பிள்ளைகளெல்லாம் அவளின் செத்த பிரேதத்தைச் சூழ்ந்துநின்றபடி சோகமாய் இருந்தார்கள். பிரேதம் தூக்குகிற நேரம் வந்தது. ஆண்கள் சிலர் போய் சவப்பெட்டிக்குப் பக்கத்தில் நின்றார்கள். பெண்கள் சிலர் அவர்களை வெறிச்சு வெறிச்சுப் பார்த்தபடி கத்தியழத்தொடங்கினார்கள்.
“சரி சரி எந்திரிம்மா. காலவுடம்மா. கையிய எடம்மா” என்று சொல்லியபடி பெட்டிமேல் விழுந்து அழுதவர்களை விலக்கிவிட்டுப் பிரேதப் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அவர்கள் மயானம் நோக்கி வெளிக்கிட்டார்கள்.
பெண்களின் கண்களையெல்லாம் அந்நேரம் கண்ணீர் மறைக்கிறது.
சேரியில பாதி ‘ஓ’ வென்றதாய் அழுகிறது.
செவ்வந்தியினதும் பாப்பாத்தியினதும் கண்கள் ரெண்டிலேயும் அடை ᎥᏝ6Ꮱgp.
'ஓ'வென்று கத்தி இப்போதுதான் அவர்கள் அழுகிறார்கள். O 336 O ரீ.பி.அருணானந்தல்

列*
இடையிடையே பூவாளி மாதிரியாகக் கொட்டிக்கொண்டிருந்த மழை யாலே காடு கரைகளெல்லாம் கழுவித்துடைத்த பசும் பளிர், என்ற மாதிரி யாகத்தான் பார்க்கிறவர் கண்களுக்கெல்லாம் இவ் வேளையில் இருந்தன. தூர் நனைய, வேர் நனையப்பெய்த பெருங்கொண்ட மழையாலே, காடும் தலைவழியாய்த் தண்ணீர் குடித்த ஒருவித சந்தோஷத்தோடு செழித்தாய்விட்டன. குப்பை மேனி, தகரை, முடக்கொத்தானிலிருந்து நாயுருவிவரை, குளத்துக்குப் போகும் பாதையிலெல்லாம் அந்தச் செடிகள் முளைத்துப் பெரிதாய் வளர்ந்துவிட்டன.
வெறும் மண்தரையாய்த் தெரிந்த அவ்விடங்களெல்லாம் சரஞ்சரமாகக் கொடியோடி எல்லாமே பச்சையாகத்தான் மாறியதாயும்விட்டன. மழைவலுவிழந்த சில நாட்களின் பின், செவ்வந்தி வீட்டு முற்றத்திலும் வெள்ளம் தணிந்து தாழ்வானது. ராக்காயி குடிசைக்குள்ளால் இருந்து வெளியே இறங்கினாள். மழைநீரை இன்னும் உறிஞ்சாத பாலை மரத்தின் பள்ளத்தைப் பார்த்தாள். முற்றத்திலும் சேறும் தண்ணீருமாயிருந்தன. அதற்குள்ளே அகலக்கால்போட்டவாறு அங்குமிங்கும் ஒரு முறைநடந்தாள் பிறகு கொஞ்சநேரம் அதிலே நின்றபடி யோசித்தாள்.
அவளின் அகக் கண்ணுக்குள்ளே காளான் பற்றிய ஞாபகம் பரவியது. "ஆழத்திலிருந்து எழுந்திருக்கும். நேற்றுப் பெய்த சிறு மழையோடு நல்ல இடிமுழக்கமும்தானே.?"அவசரமாக பின் திரும்பிப்பார்த்தாள். "அக்கா புத்து மண்ணுங்க வழிய காளான் சிலநேரவாட்டி வெடிச்சு வந்துபிட்ட மாதிரியாகவும் இருந்துக்கும். வாறியாக்கா போயி பார்த்துக்கிட்டு வரலாம்.?” குடிசை வாசலடியில் நின்று கொண்டிருந்த செவ்வந்தியைப் பார்த்துக்கேட்டாள் அவள். "ஊரே வெள்ளக்காடாக் கெடக்கடி இதுக்குள்ளாலயா காட்டுப்பக்கமா போவேமெங்கிறியா நீ.?” "அப்படியாவா நீ சொல்லிக்கிறே.? தண்ணி நெலத்தில காஞ்சு அடங்கினப்புறமாத்தான் நீயி வெளியாலயா கெளம்பிக்கிவியோ..?” "அதுக்கில்லடி போயி நாம அங்க ஒண்ணும் கிடைக்காம திரும்பி வந்தா..?” “கெடைக்குமெங்கிறேன் நான். நேத்தைக்குக்கூட ரெண்ணு பெம்புளேங்க அங்கிட்டு பக்கமாயிருந்ததான் இந்த வழியா போனாங்களே..? அவுங்க கையில காளானும் இருந்திச்சி.!”
gură neousăscă o 337 o

Page 175

"நீ பாத்தியா..?"
"பாத்துக்காம சொல்லிக்குவனா..?"
"அப்பு2ண்ணா."
"அப்புருண்ணா யின்னா..? அங்கிட்டுப் பக்கம் எங்கனாச்சும் இன்னுமா இருக்கத்தானே செய்யும்.? ஆமாக்கா, இருக்குமக்கா இருக்கும்." அவள் தலையையும் அசைத்தாள் சிறிய உதடுகளை முன்னால் நீட்டி குவித்துக்கொண்டு கண்ணால் சிரித்த மாதிரியாகத் தமக்கையைப் பார்த்தாள்.
"அக்கா அந்த ஐயாவுக்கு காளான் கறி ஒரு நாளு நம்ம ஆக்கிக்
கொண்ணாந்து குடுக்கிறமுண்ணு சொல்லிப்பிட்டு வந்தமில்ல ஞாபகமிருக்கா..?"
"உனக்கு ஞாபகொமிருக்கிது எனக்கு மாத்திரம் இஸ்லாம போய்க்குமாடி..?" அவள் திரும்பி ஒரு கேள்வி கேட்டாள்.
"நீ அமசடக்காத்தான் எப்பவுமே இருப்பே அக்கா..? எதையாச்கம் வெளிப்படையா என்கிட்ட நீ சொல்லவே மாட்டே இல்லே.?"
"அதுக்கில்லடி. நானே இத ஒன்கிட்ட கேக்கலாமுணுதான் இருந்தேன். அப்புறம்."
பாம்? நீயேன் எண்ணி iனம் கேச் - - - - - - - - - - - - - - - - - نة அபபுறம எனன அபபுறம! நீயன எனணய ஒனணும மிகககாமலா பின்னாடி இருந்தே. என்கிறேன்.?"
"அடஅப்புடியா இருந்தேன் தாண்டி. அதான் நீயி எனக்கு முன்னாடியா அதயில்லாம் என்னிட்டயா கேட்டுப்புட்டியே.?"
"சரி இப்பவாவே அங்கிட்டா போவமுங்கிறியா.?"
"ஆமாங்கிறேன். அப்ப ஒரு சின்னூண்டு ஒலப்பெட்டியையும் எடுத்துக்கிட்டு நானு வந்துக்கிரவா."
"ஆமா சீக்கிரமா வெரசா வந்துக்கக்கா..? நாம அந்தப் பக்கமாக போறதுக்கு முன்னாடி ஆராச்சும் அங்கிட்டுப் போயி இருக்கிறதுவன புடுங்கி எடுத்துக்கிட்டாங்களுண்ணா.?"
"சரி இந்தாயு. இரு கொஞ்சம் வந்திர்ரேண்டி.." அவள் குடிசைக் குள்ளே உடனே போய் ஒரு சிறு ஒலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேவந்தாள். வாசல் தட்டியை இழுத்துப் பொருத்திவிட்டு,
"வாடி கிளம்பிக்குவம்.” என்றாள் அவள் இருவரும் முற்றத்தடியால் துவரர் அசப்பனங்கள் 0 339 0

Page 176
நடந்து வீதியில் வந்து ஏறினார்கள். நேர்ப்பாதையாலே நடக்க குளத்துக்குப் பிரிந்துபோகும் இறக்கமான பாதை வந்தது. அந்த வழியாக நடக்க மருந்துக் கிட்டங்கி நெருங்கியது. அதன் அருகிலுள்ள காவல் கொட்டில் அருகாக கண்களுக்குத்தெரிந்தும் செவ்வந்தியின் நெஞ்சில், செல்வநாயகத்தின் உருவ அசைவுகளே அச்சாகத் தோன்றியது. “ம்.” என்ற அந்த அமைதியான இடத்தில் அவனை எங்கே காணோம்? என்ற மாதிரியாக அவள் பார்வையால் அவ்விடத்தேயெல்லாம் தேடினாள். அவன் பார்வையாலென்றாலும் தன்னை அரவணைப்பானே என்ற தவிப்பு அவளுக்கு. செல்வநாயகம் உள் ஈர்த்தகுளிரைக் களைய, கொட்டில் பின்புறமாய் நின்று வெயில் காய்ந்துகொண்டிருந்தான். சூரிய ஒளிரேகை ஓடி உடம்பு சூடேறிவிட, போதும் என்ற அளவிலே முன்னாலே நடந்துவந்தான்.
அவன் வருகிறவேளை செவ்வந்தியும் ராக்காயியும் கொட்டிலுக்கருகாக நடந்துவந்துகொண்டிருந்தார்கள். செல்வநாயகம் அதிலே நெருங்கிக்கிட்டவாக வந்துவிட்ட அவர்களை முதலில் கண்டுவிட்டான்.
ராக்காயிக்கும் அம்புநீட்டி தொடுகிறமாதிரியான கூரிய பார்வை அவளும் கண்டுவிட்டாள்.
“ஐயா அங்கயா.” என செவ்வந்தியின் காதோடு பேசிவிட, திரும்பி அவள் பார்த்தாள். குதித்துக் குதித்துக் குதிரையெனக் குலுங்கியதைப்போல, இருந்தது அவள் மனம் செல்வநாயகத்துக்கு நெளிவு நெளிவாயுள்ள செவ்வந்தியின் அலைக் கூந்தலிலேதான் ஒரு கண், அது அசைத்துக் கொண்டிருக்கிறதான அவளின் ஞாபகம் அவனுக்குத் தனியே உண்டு.
அவளின் நெளிந்து பளபளக்கும் கூந்தலைக்கண்டாலே தன் மனச்சுமை எல்லாமே விலகிப்போய்விடும் என்ற ஏக்கம் எந்த நேரமும் அவனுக்கு அவன் பார்வைக்கு என்னமோ அவளின் கூந்தல் அதிகமான கனவுகள்தான்! அவளின் சாந்தம் தோய்ந்த முகத்துக்கு அந்தக் கூந்தலும் தான் எவ்வளவு பொருத்தம். செல்வநாயகத்தை அதிலே கண்டதும் செவ்வந்தி மெல்லியதாக ஒரு சிரிப்புச் சிரித்தாள். பின்னலிட்டுக் கோர்க்கும் இனிமையான ஒலி இழைகள்.
அவளின் சிரிப்பை, நீர் பார்த்துக் கிண்ணத்தில் ஏந்திக் கொள்கிற மாதிரியாக தன் நெஞ்சுக்குள் பிடித்து வைத்துக்கொண்டு, O 340 O நீ.பி.அருளானந்தே

“எங்க இங்கால, நீங்க இப்பவா இந்தப் பக்கம் .?” என்று அவன் கனிவாகக் கேட்டான்.
"ஓங்களயும் பாத்துப் பேசிப்பிட்டு கொளத்துப்பக்கம் போவமுண்ணு நானும் அக்காளுமா கெளம்பி வந்தமையா” என்றாள் ராக்காயி
“என்னப் பாத்துப் பேசவா..? என்னிலயும் உங்களுக்கு அக்கறை இருக்கா..?” என்று அவன் கேட்டான்.
"இருக்காதாய்யா..? நீங்க தனியா பாவம் இந்த கொட்டிலயா இருக்கிறீங்க.? பெரிய மழையில்லா பெஞ்சுகிட்டுது. ஒழுகிச்சாய்யா உங்க இடத்துக் கொட்டிலு.?”
"இல்ல இது இப்பதானே புதுசா மேஞ்சது. அதாலதான் ஒழுகேல்ல.! ஆ, உங்கட வீடுகளெல்லாம் எப்பிடி.? காத்து அடிச்சதில அந்தப் பக்கத்து வீடுகள் கணக்க சேதாரம் எண்டு செல்லுறாங்கள்.?”
"அப்பிடித்தாய்யா. நீங்க சொல்லிக்கிறமாதிரி உண்டுதான்..! ஆனா நம்ம வீடு மழைக்கு முன்னாடி கூரை மேஞ்சுக்கிட்டதால தப்பிடிச்சு..!”
“அதான் நானும் உங்க மழை பெய்யிற நேரம் யோயிச்சுக் கவலப்பட்டனான்தான். என்னமாதிரியா ஒரு மழையும் காத்தும்.?
இப்பத்தானே கொஞ்சம் வெய்யிலடிக்குது.?”
“அதாணய்யா நாங்களும் கிளம்பியிருக்கிறமுங்க. அந்தப் பக்கம் காளானும் கிடைக்குமுண்ணுதான் பாத்துக்கிட்டு வரலாமுண்ணு போறமுங்க.?”
“இந்தச் சிலுநீரும் ஈரத்துக்குள்ளாலயா..?”
“அதெல்லாம் எங்களுக்குப் பழக்கம் தானேய்யா.”
"அது சரி! ஆனாலும் உங்க அக்கா என்னோடயா கதைக்கிற பழக்கந்தான் இன்னும் வரேல்லயே.?”
"அக்கா இப்படித்தான். முன்னாடியே பலவாட்டி நான் இத உங்களுக்கு சொல்லித்தானேய்யா இருக்கிறேன். இப்பவும் கூட அக்கா கூப்பிட்டுக்கிட்டதாலதான் நானும் அவவுட கூட கெளம்பினேன். ஓங்களுக்கு காளான் பிடுக்கியாந்து கறி ஆக்கிக் குடுக்கணுமுண்ணு எங்க அக்கா ஒத்தக் காலிலயில்லா நிண்ணுகிட்டிருக்கா.” ஒய்வே அறியாத வாய் மாதிரி ராக்காயி சொல்லிக்கொண்டே இருந்தாள். ராக்காயி இதையெல்லாம் சொல்ல செவ்வந்திக்கு மகிழ்ச்சித்துடி துடிப்பாக இருந்தது. தன் பார்வையால் மட்டும் அன்பை அவள்
துயரச் சுரப்பவிர்கள் C 341 O

Page 177
அவனுக்கு உணர்த்தினாள்.
"நான் இந்தக் கொட்டிலில ஒரு தனி ஆளா இருந்து கொண்டிருக்கிறன். என்னில நீங்களெண்டாலும் அன்பா இருக்கிறீங்க, அக்கறை காட்டிறீங் களே..? அதுவே எனக்கு இப்ப பெரிய சந்தோஷமாயிருக்கு..!" என்று செல்வநாயகம் சொன்னான். அவன் சொன்னதுக்கு ராக்காயியும்,
“உங்க நிலம மாதிரித்தானயயா எங்க நெலமயும்! நாங்க பொறந்த நேரமும் நல்லாயில்ல. எங்க அம்மாகூட செத்துப்புட்டாங்க. அதால எங்களுக்கும் பெரிசா நிம்மதியில்ல. அந்தக் கடவுளும் எங்கள இப்படியா படைச்சு பாவத்தை நீங்க அழிச்சுக்கிடுங்க எண்ணதா விட்டிட்டாரு. .எங்களுக்கும் கூட ஒங்களோட கதைச்சுக்கிறப்பதான் கவலயெல்லாம் வெலகிப் போவுது.” தணிந்த குரலில் அவள் சொன்னாள்.
செவ்வந்திக்கும் கண்கள் கலங்கிவிட்டது. செல்வநாயகத்துக்கும் நெருப்பிலே செடி செத்தைகளைப் போட்டது மாதிரி மனதுக்குள் டப்டிப்பென்று வெடித்த மாதிரி அதிர்வாய் இருந்தது. கடலின் மறுகரை தேடும் பறவைபோல தன்நிலமைக்கு ஒரு கரையைத்தேடியதாய் அவன் சிந்தனைகள் பறந்தபடியே இருந்தது.
“என்னய்யா கதயெல்லாம் ஒடிஞ்சுபோயி ஆழம்' ஆன யோசினையி லயா நிக்கிறீங்க.?” என்று ராக்காயி கேட்டாள்.
"இல்ல ஊருக்குப்போறதெண்டு இப்ப எனக்கு யோசனைவரக்கிளயே கால்நடுங்கிறமாதிரி இருக்கு அதான்.” என்றான் அவன்.
“ஏனய்யா அப்பிடி இனி நீங்க ஊருக்கு போவமாட்டீங்களா..?”
“இல்ல.!”
"ஏன் ஐயா அப்பிடி.?”
"அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு.?”
“என்ன காரணமய்யா..?”
செல்வநாயகம் செவ்வந்தியைப் பாரத்தான்.
“உங்க அக்காதான் காரணம்.!” என்று அவளைப் பார்த்துக்கொண்டு அவன் ராக்காயிக்குச் சொன்னான்.
"அக்கா காரணமா..? அப்பிடிண்ணா என்னய்யா..? வெளங்க சொல்லுங்கையா..?” என்று கேட்டாள் அவள்.
O 342 O ரீ.பி.அருளானந்தே

முதலில நீங்க போயி காளான் பாத்துப் புடுங்கிக்கொண்டுவாங்க.” என்று சிரித்தபடி சொன்னான் செல்வநாயகம்.
“உங்க சிரிப்புமட்டுதானுய்யா பாக்கிறப்போ உங்கள எங்ககிட்டயா காந்தமா இழுக்குது. எங்கள எண்ணு நானு செல்லிப்பிட்டேன் அது பிழையுங்க எங்க அக்காவ.” என்று சொல்லிவிட்டு அவள் சிரிக்க அவளின் தலையில் குட்டிவிட்டு தானும் சிரித்தாள் செவ்வந்தி
பாதத்துக்குக் கீழே ராக்காயிக்குக் குளிர்த்தது. ”நெலமில்லாமே சேறாக் கிடக்குக்கா இனி போயிற்றுவந்திடுவம்
நேரமாகுதக்கா” என்று அவள் தமக்கையைப் பார்த்துச் சொன்னாள். தங்கை சொன்னதைக் கேட்டுக்கொண்டதோடு செவ்வந்தி செல்வநாயகத்தைப் பார்த்தாள்.
எதையாவது இப்போதாகிலும் செல்வநாயகத்துடன் கதைக்கவேண்டும் போல அவளுக்கு இருந்தது. ஆனாலும் வெட்கம் அவளை பிய்த்துப் பிய்த்துப் போட்டது. அதை சமன் செய்யப்பாடுபட்டாள். சிலவேளை நான் அதை அவருக்கு சொல்லும்போது என் குரல் கலைந்துவிடுமோ. அதை நினைத்த போதிலேயே இறுக்கமாகவும் வேகமாகவும் மனம் அவளுக்கு அலைக்கழிந்தது. என்றாலும் இறுக்கத்தைத் தன் மனத்தில் ஏற்றிக்கொண்டு அவனைப் பார்த்து இதமாகச் சிரித்தாள்.
"நாளைக்கு நாம கறிசோறு ஆக்கிக்கொண்டாந்து குடுத்தா நீங்க சாப்பிடுவீங்களாய்யா..?” என்று ஒவ்வொரு சொற்களையும் பிய்த்துப் பிய்த்துப்போட்டது மாதிரிச் சொல்லி செல்வநாயகத்திடம் இதைக் கேட்டாள் செவ்வந்தி
"தான் இப்படிக் கேட்டது சிலவேளை அவருக்கு அருவருப்பாக இருந்திருக்குமோ..?” என்று அவளுக்கு மனமும் உடலும் கூசச்செய்தது. ஆனால் செவ்வந்தி இவ்வாறு தன்னைக் கேட்டதன் பிறகு செல்வ நாயகம் அபூர்வமான ஒரு நிறைவு ஏற்பட்டதைப் போலத்தான் முகம் நன்றாக இருந்தான். அவனுக்கு மகிழ்ச்சி ஏறிச் சென்று கண் ஒளியிலும் அது மிளிர்ந்தது.
"அப்ப நாளைக்கு கடைச்சாப்பாட்டை விட உங்கட கையால நல்லதொரு சாப்பாடு சாப்பிடப்போறன்.” என்று பசுமையான கனியோடு அவளைப் பார்த்தபடி சிரித்துக்கொண்டே அவன் சொன்னான். அவன் இவ்விதம் சொன்னது செவ்வந்திக்கும் ராக்காயிக்கும் தாங்க முடியாத மகிழ்ச்சி யாக இருந்தது. நடந்து ஓடிய பறவை வானில் பறப்பதைப் போன்ற படிப்படியான ஒருவித மகிழ்ச்சி அவர்கள் மனதில்!
இதன் பிறகு செல்வநாயகத்திடம் சொல்லிக்கொண்டு அவர்கள் அந்த துயரச் சுரப்Uவிர்கள் O 343 O

Page 178
இடத்திலிருந்து புறப்பட்டார்கள். குளத்தடிக்குப் போகும் பாதையில் இருவரும் நடந்துகொண்டிருந்தார்கள். ஓங்கிய மரங்களும் அடர்ந்த புதர்களும் கொண்ட அந்தப் பாதைப் பக்கம் மழையின் பின்னாலே இப்போது எழுந்து பரவிய பசுமையாய் இருந்தது. அவர்கள் இருவரும் அந்த வழியாலே நடந்துகொண்டிருக்கும்போது, ஒரமாய் உள்ள புற்றுப் பக்கமிருந்து ஒரு முயல், மூக்கை நீட்டி முகர்ந்தமாதிரி வைத்துக் கொண்டு, செவிகளையும் விடைத்தபடி அவர்களைப் பார்த்துவிட்டு, ஒழியசந்துபொந்துதேடி ஓடியது.
இருவரும் அதாலே அரசமரம் நின்ற இடத்தடிக்கு வந்தார்கள். அரசமிலை நுனிகள் சிறிய காற்றடித்தலில் துடிதுடித்துக்கொண்டிருந்தன.
அரச மரத்துக்குப் பக்கத்திலே பிரிந்து செல்லும்பாதை ஈரநிலப்பரப்பாக இருந்தது. அந்த வழியாலே திரும்பி உள்ளே நடக்கத் தொடங்கக் காட்டுக்குள் தனிமையானவர்களாக அவர்களிருவரும் ஆகிவிட்டார்கள். பார்வைக்கு முழுக்கக் கிளைகளாகவும் வேர்களாகவும் கொடிகளாகவும். கொஞ்ச தூரம் உடம்பிலே குத்தி இழுக்கும் முள்ளுப் பற்றைகளாகவும் இருக்கும் இடத்தால் புகுந்து போக, புற்றுக்கள் அமைந்த இடம் அவர்களின் கண்ணுக்குத் தெரிந்தன. கண்கள் திருப்பப்பட்ட அந்த இடத்திலே அவர்கள் பார்த்தபோது - நிறையவே அதிலே காளான் படைகள் ராக்காயி கண்டுவிட்டு கன்னம் குழியச் சிரித்தாள். இருவரும் காளானைக் கண்டுவிட்ட தருணத்தோடு, அது முளைத்துக்கிடந்த புற்றுப்பீட மேறிவிட்டார்கள்.
ஊறிக்கிடத்த மண்ணிலிருந்து அவர்கள் அந்தக் காளான்களைப் பிடித்து இழுக்க மண்ணுக்குள்ளால் பாம்பு வால்போல நீண்டு வந்தது
மொட்டுக் காளான்கள்.
“சோக்கு வெள்ளக் கட்டி மாதிரியா எல்லாமே பால் மாதிரியாக மொட்டு காளானுக்கா..?” என்று செவ்வந்தியின் கண்களை நோக்கியபடி சொல்லிவிட்டு, காளான்களைப் பார்த்துப் பார்த்து இழுத்தெடுத்துக் கொண்டிருந்தாள் ராக்காயி, செவ்வந்தி: "நீ பிடுங்கிக்கிறது மாதிரித் தாண்டி நான் பிடுங்கிக்கிறதும்.” என்று மட்டும் மென் குரலில் சொன்னாள்.
"நீ அந்த ஐயாக் கிட்ட காளான் கறி அது இதுண்ணு நாங்க ஆக்கிக் கொண்ணாந்து குடுத்துக்கிறம் எண்ணு பெரிசா சொல்லிட்டே. நாளைக்கு சமயலில ஒண்ட கைப்பக்குவம் என்னமதிரி இருக்குமோ..?" என்று விட்டுச் சிரித்தாள் ராக்காயி. "நீ தொட்டிலயும் ஆட்டுவேடீ அப்புறம் படுத்துக்கிற புள்ளயயும் கிள்ளிவிடுவேடி அப்புடியான சாகசக்காரியடி நீ.?” என்று பொய்க்
O 344 O ரீ.பி.அருணானந்தல்

கோபத்துடன் அவளைப் பேசினாள் செவ்வந்தி
“சரிக்கா இதெல்லாம் சும்மா வேடிக்கைக்குக் கதைச்சுக்கிறதுதானே. அதுக்கேனுக்கா நீ கோவப்படுறே.?” என்றான் அவள்.
“என்ன கோபம்டி எனக்கு உன்னிலயா. ஒன்னயமாதிரியாத்தான் நானுமே. நீயி எனக்கு ஒரேயொரு செல்லத் தங்கச்சி! ஒன்ன நானு எப்பாச்சும் கோவிப்பனா கண்ணு.?” என்றுவிட்டு செவ்வந்தி சிரித்தாள்.
இருவரும் கதையோடு கதையாக அதிலே முளைத்து வெளிவந்து கிடந்த நிறையக் காளான்களைப் பிடுங்கி எடுத்துவிட்டார்கள். செவ்வந்திக்கு கொண்டு வந்து ஒலைப் பெட்டி, காளான்கள் போட்டு நிறைந்துவிட்டது. திரும்பிக் கீழே கொட்டி படுக்கைப்பாட்டு வசத்தில் பெட்டியில் அடுக்கியும், நிறைந்ததாயே கிடந்தது காளான்கள்! ராக்காயி கொடியால் கட்டியும் ஒருகட்டுதன் கைக்கு எடுத்துக்கொண்டாள்.
நிலத்திலே இனி ஒன்றுமில்லை என்று கண்டதன் பிறகுதான் ராக்காயி க்கு மன நிறைவாக இருந்தது.
“யாருமே காட்டுக்கு வந்து இவ்வேளவு காளான் புடுங்கிக்கிறத நினைச்சுப் பாக்க முடியுமா..?” என்று ராக்காயி சொல்ல செவ்வந்தி அதைக்கேட்டுச் சிரித்தாள்.
“நாளைக்கு காளான் கறி தனிய ஆக்கியே நாங்க திண்ணுக்கலாம்போல இருக்கடி. சாதத்துக்கு உலையே வைச்சுக்கத் தேவலப்போல இருக்கு. அவ்வளவாயில்ல இப்பயா இங்கிட்டு நிறையவா காளான் புடுங்கிக்கிட்டோம்.” செவ்வந்தியும் சந்தோஷப்பட்டுக் கொண்டு சொன்னாள். இதன் பிறகு புகுவதற்கு கடினமான குகைபோன்று இருந்த மரம் செடிகளுள்ள இடத்தாலே அவர்கள் வெளிக்கிட்டு நடந்துவந்து, அரசமரம் நின்ற இடத்தடிக்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் வெளியேறிவிட்ட அந்த வழியாக, இரண்டு பெண்கள் காளான் பிடுங்கிப் போகவென்று அவ்வேளையில் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களினது பார்வைகள் செவ்வந்தியினதும் ராக்காயியினதும் கைகளை நோக்கித்தான் பட்டன. செவ்வந்தி கையில் ஏந்திப் பிடித்துக்கொண்டுபோகும் பெட்டியில் உள்ள காளான்களிலே அவர்களின் பார்வை ஊர்ந்து செல்வதை இரு சகோதரிகளும் சாடையில் பார்த்தவாறு கண்டு கொண்டார்கள். அவர்களுக்கு அது மகிழ்ச்சி கொள்ளக்கூடியதாக இருந்தது.
துயர3 கசப்யவிர்கள் O 345 O

Page 179
4-0
பின்நோக்கிச் செல்லும் நேற்றைய நினைவுகளுடன் ஆனந்தப்பட்டுக் கொண்டு, சமையல் காரியங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் செவ்வந்தி கத்தியால் வெட்டவென்று அவள் தன்பக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்ட மொட்டுக் காளான்கள், வாடியநிலையில்லாமல் கொம்பு மாதிரி அப்படியே இறுக்கமாக இருந்தன. முதலில் அவள் சட்டியில் போட்டு அவற்றை துப்பரவாகக் கழுவினாள். தண்ணிருக்குள்ளும் நழுவி வழுக்காமல் றப்பர் மாதிரி இருந்தன காளான்கள். கழுவி முடிய எல்லாவற்றையும் கத்தியால் பிளந்து வெட்டி பெரிய சட்டியில் அவள் போட்டாள். அதற்குப் பிறகு உப்புப் புளி தூள் போட்டுப் பிரட்டிவைத்துவிட்டு அடுப்பை எரித்து வோறொரு சட்டியை எடுத்து கல்லின்மேல் வைத்தாள். வெந்தயம் நற்சீரகம் என்று உள்ளவைகளையெல்லாம் போட்டு சிறிது எண்ணெய் போட்டுத் தாளித்தாள். பிறகு காளான் பிரட்டலை அதற்குள் கொட்டி அவியவிட்டாள். காளான் நீர்விட்டுக் கொண்டு அந்தத் தண்ணிருக்குள்ளேயே கொழகொழவென்று அவிந்தது.
பக்கத்து வீடொன்றில் கறிவேப்பிலை பிடுங்கிக் கொண்டுவரப்போன ராக்காயி அப்போதுதான் குடிசைக்குவந்து சேர்ந்தாள்.
“கறுவப்பில ரெண்ணுநெட்டு பிடுங்கியாறதுக்கு இவ்வேளவு நேரமாடி ஒனக்கு.?” என்று அவள் வந்த தருணத்தோடு பேசினாள் செவ்வந்தி
"எங்கே தா.?” என்று அவளின் கையில் கொண்டுவந்ததை வாங்கினாள் அவள் சட்டியில் வெந்த காளான் நுரைத்திரள் இல்லாமல் கூட்டுச்சேர்ந்து எண்ணெய்யும் கலந்ததில் பொதுக் பொதுக் என்றதாய் சத்தம் போட்டபடி இருந்தது. செவ்வந்தி கறிவேப்பிலை உருவி அதற்குள் போட்டாள். கொதித்த குழம்புக்குள் பச்சையாகவே மூழ்கியது கறிவேப்பிலைகள்.
கறிவேப்பிலை குழம்பிலே கொதித்ததுடன் ஒரு சீரான கறிவாசம்! குழம்பை அகப்பையால் கொஞ்சம் அள்ளிஎடுத்து கையில் தொட்டதாய் வைத்து, சொட்டு நாவில் அவள் வைத்துப் பார்த்தாள். கறியின் சுவை உயிர்பெற்றது மாதிரி, நாவிற்கு மதுரமாய் இருந்தது அவளுக்கு. ராக்காயி கறிவேப்பிலைக் கொத்தை செவ்வந்தியிடம் கொடுத்தபிறகு குடிசைக்குள்ளாக அங்குமிங்கும் கால்வைத்த கணக்கில் நடந்து கொண்டிருந்தாள்.
சவக்காலை வீதியில், தீரவே தீராத மாதிரி குரைத்துக்கொண்டிருந்தது O 346 O ரீ.பி.அருளானந்தே

ஒரு நாய்! குரைப்பொலி நெருங்கி நெருங்கி வருவதுபோலிருந்தது.
செவ்வந்தி பக்குவம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு கறிச்சட்டியை இறக்கி சளிந்த திருகணையில் வைத்தாள்.
சட்டியை கீழே இறக்கிவைத்த பிறகும் காளான் கறியிலிருந்து, பூர்வீக வாசம் மாதிரியான ஒரு கறிவாசம்!
செவ்வந்தி அதை மூச்சில் ஏற்றிவிட்டு செல்வநாயகத்தை நினைத்தாள். அவளுக்கு உடலே இசைப்பெட்டியாக மாறியது மாதிரியான இன்பமாய் இருந்தது.
செல்வநாயகத்தின் நினைவோடு ராக்காயியிடம் ஏதோகேட்க வேண்டு மென்ற நினைப்பில் திரும்பினாள் அவள் அடுப்புப் புகைந்துகொள்ளத் தொடங்கியது.
"ராக்காயி அப்போது செவ்வந்தியின் கண்களை ஊடுருவினமாதிரிப் பார்த்தாள். முட்கள் தைத்ததைப்போல விடுபட முடியாததொரு
கலவரம்.
“என்னடி முகற இருண்டு போயி அறைஞ்சிப்பிட்டமாதிரியா இருக்கி றே.?”
"அக்கோய்.” சீறிச்சென்றது மாதிரியாக வந்தது அவள் குரல். கண்ணிரும் சாதுவாய்க் கண்களில் அவளுக்குத் துளிர்ந்தது. "யின்னடி யென்ன நடந்திச்சு.?"உறைந்த மாதிரியான ஒரு நிலையுடன் கேட்டாள் செவ்வந்தி
“அக்கோய் அது உம்மையா இல்லையா எண்ணு எனக்கு நல்லா ஒண்ணுமே தெரியல ஆனா பயம்மா இருக்கக்கா எனக்கு.?”
“என்னடி பயமிண்ணிறா? அதுக்குவா ஏதோதோ விளங்கிக்காத மாதிரி எனக்குச் செல்லிக்கிட்டிருக்கிறா..? என்னதாண்டி நடந்தது.? வெவரமா செல்லேண்டி..?” உடம்பு சூடேறிக் கொதித்த நிலையில் கேட்டாள் செவ்வந்தி
“அக்கோய் எங்க சோணமுத்து மாமன் இருக்காரில்ல, அவரு நம்ம வீட்டுக்கு இண்ணைக்கு பெட்டி அரிசி கொண்ணாந்து குடுத்துப்பிட்டு ஒன்னய கண்ணாலம் பண்ணிக்கிறதுக்கு நிச்சயம் பண்ணிக்கப் போறா ருவாம்.”
ராக்காயி இப்படிச் சொல்ல வாய் திறந்த எரிமலை தீக் கொம்புகளால் தன்னை இழுத்து உறுஞ்சி விழுங்கியதுமாதிரி இருந்தது செவ்வந்திக்கு.
துயரச் சுரப்பவிர்கள் O 347 Q

Page 180
என்றாலும் தன்னை ஒரு கணம் சுதாரித்துக்கொண்டு,
“ஆர்ருடீ இத உனக்குச் சொன்னாங்க..?” என்று பயத்தில் முழியைப் பிரட்டிக்கொண்டு அவள் கேட்டாள்.
“நானு கறிவேப்பில பிடுங்கியாறதுக்குப் போனனில்லா. அந்த வூட்டிலதான் இதயெல்லாம் அவங்களு கதைச்சுக்கிட்டாங்க. என்ன யும் கேட்டாங்க அக்கா..? ஆனா எனக்கென்னதான் தெரியும்.” உருப்பெறாத உடைந்த குரலில் இதைச்சொன்னாள் ராக்காயி அவள் சொன்ன கதையைக் கேட்டதும் திக்கென்று பதைப்பு வந்துவிட்டது செவ்வந்திக்கு. 'உண்மையாகவே மாமன் தன்னை திருமணம் செய்துகொள்ள நிச்ச யிக்க வரப்போகிறாரோ.? என்று தனக்குள் நினைத்துக் கொண்டதில், அவள் நடுங்கி அதிர்ந்தாள். இறக்கி வைத்த கறி உள்ள சட்டியிலும் அவள் கண்பார்வைபோனது. சுழித்த வெப்ப ஆவியடங்கி சமநிலைக்கு வந்துவிட்டதாக குழம்புச் சட்டியைப் பார்க்கவும் அவளுக்குத் தெரிந்தது. கறியைப் பார்த்த அந்தத் தருணத்திலே செல்வநாயகத்தின் நினைவு அவளுக்கு வந்தது.
“எவ்வளவு ஆசை ஆசையாக இதையெல்லாம் அவருக்குக் கொடுக்கவென்று நான் சமைத்து எடுத்தேன். இப்படியாயெல்லாம் பாடுபட்டு சமைச்சத அவரிடம் கொடுக்க இயலாமல்போய்விடுமோ..? இன்னொருபக்கம் அவருக்கும் ஏமாற்றம்தானே.? இன்று கறிசோறு சமைத்துக் கொண்டு வந்து தருகிறோம் என்று அவருக்குச் சொல்லிவிட்டு வந்ததெல்லாம் முழுப் பொய் என்றுதான் இருக்கும்படி ஆகிவிடப்போகிறது.? இது ஏமாற்றுதல்தானே.? நம்பி ஏமாந்ததாய்ப் போகுமே அவரின் நிலையும்.?”
அவளுக்கு இவ்வாறெல்லாம் நினைக்க நினைக்க மின்னல் வேகத்தில் மிகப்பல துளைகளை சாக்கு ஊசியால் நெஞ்சில் குத்தியதைப்போல வேதனையாக இருந்தது. மனம் கவலையில் பொங்கிவந்தது. தன் வாழ்க்கையின் பிரமாண்டமான ஒரு அபத்த நாடகம் இன்றுதான் மேடையேறப்போகிறதோ..? - என்றதாய் அவள் நினைத்தாள். கவலைகள் அவளின் மார்பைப் பிளப்பதுமாதிரி இருந்தது. அழுகை அவளுக்குப் பீறிட்டுவந்தது.
அந்தக் கவலையோடு அவள் தங்கையின் முகம்பார்த்தாள். உருளும் ஓர் துளியாக அவள் கண்களிலிருந்து கண்ணிர் விழுந்தது.
வறண்ட சாம்பல் மேட்டில் நின்ற அந்த நாய் இன்னமும் அதிலே நின்றபடி சவக்காலையை நோக்கியபடி சொறிந்து சொறிந்து ஊளையிட்டுக்கொண்டிருந்தது. நாயின் ஊளைச் சத்தம் எதையோ O 348 O ரீ.பி.அருணானந்தச்

வேண்டாததை அலறி அழைப்பதுபோன்ற சனியன் பிடித்ததாய்க் கேட்டது ராக்காயிக்கு.
அவளுக்கு தமக்கையின் உதிரத்திலே எரிகிறகவலை மனதைப் போட்டு வாட்டியது. அவளின் கண்களைப் பார்த்த இவளுக்கும் கண்களிலே கண்ணிர் கசிந்தது.
"அக்கா நீ ஏன் அழுவுறே.? அப்பிடியா ஒண்ணும் ஒனக்கு ஆயிராது..? மாமனு வந்தா என்ன..? ஒனக்கு இஷ்டமில்லாமே இந்தக் கலியாணம் நடந்துக்குமா..? நீ ஆவி துடிக்கிற சீவன் மாதிரியா அந்த ஐயாவையே நெச்சுக்கிட்டிருக்கிறே. அவரு எவ்வளவோநல்லவரு. அவருமாதிரியா இந்த எங்க மாமேன்.? இவருக்குப் போயி நீ வாழ்க்கப்பட்டுட்டா உன்னய பிறவா மிசுங்க மிதிச்சுக்குத்தி எறிஞ்சமாதிரி சித்திரவததான் செய்வாரு..! அதுக்கெல்லாம் நானும் விட்டிருவனா..? இண்ணிக்கு எப்படியாச்சும் நீ ஆக்கிற கறி சோற நான் கொண்டுபோயி கட்டாயமா நான் அவருக்குக் குடுத்துப்பிட்டுத்தான் வருவேன். அவுங்க எல்லாம் வந்தா வரட்டும். கதைச்சுக்கிறத இங்கிட்டா இருந்துகிட்டு கதைச்சு முடிவெடுத்துக்கிட்டுப் போயிடட்டும். எது எப்பிடியும் நடக்கட்டும். ஆனா நீயி ஒண்ணுக்குமே பயந்துக்காதயுக்கா. எல்லாத்துக்கும் ஒரு நல்ல வழியா நான் உனக்கு ஏற்பாடு செய்துக்குறன். அதுக்கெல்லாம் அந்த ஐயா மேல எனக்கு அசைக்கேலாத நம்பிக்கை இருக்கு. நீ கவலப்பட்டுக்காதயக்கா..?” ராக்காயி நிற்கத் தெம்பில்லாமல் போனவளைப்போல நின்ற செவ்வந்தியை தாங்கி நிறுத்தக்கூடிய அளவுக்கு தன் கதையால் தைரியம் ஏற்றினாள்.
செவ்வந்தி அப்படியே பாசத்தில் தங்கையைக் கட்டி அணைத்துக் கொண்டாள். ராக்காயியும் கையைக் கோர்த்து தமக்கையைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். ஒரு கணம் இருவருக்கும் பேச்சும் வரவில்லை. அழுகையும் வரவில்லை. பாசம் மட்டும் பூத்து நின்றது.
"அழுகிப் பொணமான மாதிரியா இந்த நாயி. இதில நின்றுகிட்டு ஊவுண்ணு ஊளையிட்டுக்கிட்டிருக்கு சனியன்..!” என்று வேலிப் படலையில் நின்றவாறு ராமன் பேசிக்கொண்டிருந்தது முற்றத்தைக் கடந்தும் குடிசைக்குள்ளே செவ்வந்திக்கும் ராக்காயிக்கும் கேட்டது. செவ்வந்தி நடுக்கப்பில் ராமன் கட்டிவைத்திருந்த மஞ்சள் வெளுத்த நெல்பிடியை பார்த்துக்கொண்டு விலகினாள்.
"இண்ணைக்கிண்ணு நேரத்துக்கு அப்பாவும் வூட்டுக்கு வந்தாப்புல இருக்கே.?” அலைபடும் யோசனையோடு செவ்வந்தி ராக்காயிற்குச் சொன்னாள்.
"அப்ப அதுதான் இப்ப நடக்கப் போறமாதிரித்தான் இருக்கக்கா..?
ഴ്ചug\ \uഷട്, O 349 O

Page 181
மாமனும் அப்ப வர்றாப்புலதான் ஒரு சாங்கமும் இருக்கிறமாதிரி இருக்கு.?” என்றாள் அவள்.
"அப்ப என்னடி செய்யிறது.?” அவள் ஏக்கத்தில் கேட்டாள்.
"ஒண்ணுக்கும் பயப்பிட்டுக்காம இருக்கா. எதுக்கும் என்னையும் போட்டுக் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்காம கொஞ்சநேரமாச்சும் சும்மா இருக்கா! ஒண்ணும் அப்பிடியா நடந்துக்காது.” என்றாள் ராக்காயி
இருவரும் தகப்பன் வரும் காலடி ஓசைகளை காதுகொடுத்துக்கொண்டு காத்திருக்க, எதையோ தனக்குள் சொல்லிச் சொல்லி நடந்தவாறாக குடிசைக்குள் வந்துவிட்டான் ராமன்.
தகப்பன் உள்ளே வந்ததும், ராக்காயி அவன் கண்களைப்பார்த்தாள். அப்பாவின் கண்களில் ஒடும் பழமையானதோர் மகிழ்ச்சியைக் கண்டதும், அவளுக்கோ மணவாட்டம். அவளின் கண்பார்வை தகப்பன் கையில் கொண்டுவந்திருந்த சுருக்குச் சீலைப் பையிலும் ஊர்ந்தது மெதுவாய்.
ராமன் அடுப்படிக்குப் பக்கத்தில் வந்தான். “கறி ஆக்கிப்பிட்டா போலயா இருக்கு.? என்ன கறி ஆக்கினாயும்மா..?” என்று கேட்டுக்கொண்டு மண் சுவர்க்குந்திலே சரிந்ததாய் நிறுத்திக்கிடந்த சுளகை எடுத்துக் கீழே போட்டான். செவ்வந்தியும் தங்கையும் பார்த் துக்கொண்டிருந்தார்கள். ராமன் சுருக்குப் பையின் வாயை அகட்டி அதிலுள்ளவற்றை சுளகில் கொட்டினான். கொஞ்சம்போல மரக்கறி வகைகளும், பச்சைமிளகாய் வெங்காயமும்தான்!
“ஏதோ ஒரு கறியின்னாலும்திங்கிறதுக்கு ஆக்கிவந்துக்கிறவங்களுக்குக் குடுக்கத்தானே வேணும். சுளகில் கொட்டிக்கிடந்த மரக்கறிவகைகளைப் பார்த்துக்கொண்டு ராமன் தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டான். தகப்பன் சொன்னதைக் கேட்டுக் கொண்டு அந்நேரம் முயல்குட்டி மாதிரிப் பம்மிப் பதுக்கி ஒரு மூலையில் ஒதுங்கினமாதிரி நின்றாள் செவ்வந்தி ராமன் தன் கதையோடு குழம்புச் சட்டியை குனித்து கொண்டு பார்த்தான். “என்ன கறிம்மா ஆக்கியிருக்கிறே.?"திரும்பவும் கேட்டுக்கொண்டவாறு அவன் நிமிர்ந்தான்.
செவ்வந்தி கூனிக்குறுகினமாதிரி நின்றுகொண்டு தகப்பனின் முகத்தைப்பார்த்தாள். r
o 350 O ரீ.பி.அருளானந்தல்

"அது.அது.காளான்.காளான் கறியுப்பா” இழுத்து இழுத்துச் செற்களைத் தேய்த்துத் தேய்த்துச் சொன்னாள் அவள். “நெசமாவா காளான் கறியா இவ்வேளவும்.? அடிச்சட்டியில ஆப்பய விட்டு தடவிக்கிட்டிருக்கிறதாயில்லாம சட்டி நெறையவா கறி கெடக்கு..! இவ்வேளவு காளான் எங்கிட்டம்மா கிடைச்சுது ஒங்களுக்கு.?” சிரிப்பொன்று சிரித்துக்கொண்டு மகள்மார் இருவரையும் பாரத்தபடி கேட்டான் ராமன், சோணமுத்துவுடன் அவன் ஆட்களை தன் வீட்டுக்கு வரச்சொல்லிவிட்ட யோசனையும் அவனுக்குப் போய்க்கொண்டிருந்தது. செவ்வந்தி தகப்பன் கேட்டும் பேச்சுமூச்சில்லாதமாதிரி நின்றாள்.
ராக்காயிதான் எங்கேயோ பார்த்தமாதிரி பார்த்துக்கொண்டு “நானும் அக்காவும்தான் அந்தக் காடு முழுக்கவா போய்த்திரிஞ்சு புடுங்கிக்கிட்டு வந்தமப்பா.” என்று பதில்சொன்னாள்.
"குழைய வடிச்ச சோத்துக்கு வெந்து மலர்ந்த இறைச்சிக்கறிமாதிரி காளான்கறிருசியாத்தான் இருந்துக்கும். நம்ம வுட்டுக்கு வாறபட்டாளம் முழுக்கவா திண்ணுக்க இந்தக் கறிமட்டுமே போதுமே..? வேற இதோட என்னதான் ஒரு கறிய ஆக்கிக்க வேண்டியதா இருக்கும்.? இது ஒரு கறியேபோதும் போதும்முண்ணமாதிரித்தான். இந்தக் காரக்கறிதான் எல்லாப் புள்ளயாண்டானுக்கும் புடிச்சுக்கும். அதால சோற மட்டும் ஆக்கிக்கிறதுக்கு அரிசியை நீ ஒலயில போடும்மா..?”
ராமன் அப்படிச் சொல்லவும், இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் ஒரேடியாக ஒடுங்கிப் போய்த் தொலைந்தமாதிரி செவ்வந்திக்கு இருந்தது.
"அப்பா யாரு வர்றாங்க வர்றாங்க எண்ணு சொல்லிக்கிட்டிருக்கிறீங்க. ..? அப்புடியா யாரு இவ்வேளவு காலமா இந்த வூட்டுக்கு வராதவங்க இப்ப வந்துக்கப்போறாங்க..? அப்புடியா அவுங்க யில்லாம் எதுக்காகவா இங்கினயா நம்ம வுட்டுப்பக்கம் வாறானுங்க..?” ராக்காயி தகப்பனை துருவித்துருவி துப்பறிகிறமாதிரிக் கேட்டாள்.
"ஓங்க மாமேன் சோணமுத்துத்தான் வாறானுவாம்.” “யேன். யேன்வாறாரு.?”
“என்னடி நீ பெரிய மனிசி மாதிரியா லொள லொள எண்ணு ஏதேதோ கேட்டுக்கிட்டிருக்கே.? சொந்த பந்தமுண்ணு சோணமுத்து ஒருவன்தானே நமக்குண்ணு இருக்கான். செவ்வந்தி ஒன் அக்காளு அவனுக்கு முறைப்பொண்ணுதானே.? அதால அவன் மொறைப்படி நம்மவுட்டுக்குப் பொண்ணுகேட்டுவாறான்.” ராக்காயிக்கு தகப்பன் அவ்விதம் சொல்ல முகம் கோவ்வைப் பழமாகச் சிவந்துவிட்டது.
gflug\š a\süvazaŭas aŭ O 35 l O

Page 182
“யப்பா. மாமா ஒரு நெதக் குடிகாரரு. அவருபோற இடம் வாற இடமும்கூட சரியில்ல. அதோட எதவித்து எதத்திம்பமுண்ணு அலைஞ்சிக்கிட்டிருக்கிறவரு அவரு. அப்படியான ஒரு ஆளுக்குப் போயி அக்காவக் கட்டிக்குடுக்கிறதெண்ணு ஏன் சொல்றே.?” மகளின் கதை குடைச்சல் குடைஞ்சு குடைஞ்சு ஆத்திரத்தை உண்டு பண்ணியது ராமனுக்கு.
"நீ பெத்த அப்பேனுக்கே கதை சொல்லுற மாதிரிவளந்திட்டியா. இல்லாத நொட்டைச் சொல்லுங்க எல்லாமே நீ அவனப் பத்தியா சொல்லுறே.?” என்று ஒரு சத்தம் போட்டதாய்ச் சொன்னான் ராமன். அப்பன் அப்படிச் சத்தம் போட்டது செவ்வந்திக்கு காதில் ஆணியடித்தது மாதிரி குத்தியது.
ஆனால் தகப்பன் அப்படி சொல்லியும் ராக்காயி சும்மா இருக்கவில்லை.
"மாமன் ஒழுங்கா ஒரு வேலைக்குமே யோய்க்காத ஆளு. கறித்தண்ணி ஆக்கித் திங்கிறதுக்கு வூட்டுக்கு ஏதும் குடுத்துக்குமோண்ணும் நிச்சியிமா இல்ல! அப்புடியான ஆளக்கட்டிக்கிறதுக்கு எங்க அக்கா விரும்பிக்குமாப்பா..?” என்று உடனே கேட்டுவிட்டாள்.
“மாமன கட்டிக்கிறது ஒரு காரியத்துக்குத்தான். நாஞ் செத்துப்போனா
யாரு ஒங்களப் பாத்துக்குவா..? அதாலதான் செத்துக்கப் போற நேரத்திலசுட ஒங்கம்மா என்னிய கூப்பிட்டு அவனுக்கே எங்க மூத்த பொண்ணக் குடுத்துடு எண்ணு சொல்லிப்பிட்டுச் செத்தா. அவ சீதேவி ஒரு காரியத்த நீ செய்யிண்ணு எனக்குச் சொல்லிப்பிட்டுச் செத்தா. அதையேதான் நான் இப்பவுமா நெச்சுக்கிட்டிருக்கிறேன். நானு ஒறங்கிக் கிட்டிருந்தாலும், ஒக்காந்திருந்தாலும், நடந்துக்கிட்டிருந்தாலும் பெரண்டு பெரண்டு அவ சொல்லிப்புட்ட அந்த சொல்லுதா ஞாபவத்திலயா நிக்கிது. சோணமுத்துக்கு எம்பொண்ணைக் குடுத்துட்டு நானு பிறவா மண்டையப் போட்டுட்டாலும் பறவாயில்ல. அவன் பிறவா ஒங்கள பாத்துக்குவான்தானே.?”
ராமன் இப்படி அடித்தமாதிரி நிச்சயமாகச் சொல்ல, செவ்வந்திக்குத் தன்னை கொம்பிலே தூக்கிமாட்டி குடலை அறுத்தெடுத்தமாதிரியாக வயிற்றுக்குள் புண்ணாய் நொந்தது. தலை கிறுகிறுத்து தன்னை பம்பரமாய்ச் சுற்றிச் சுழட்டுகிறமாதிரியும் வந்தது. அவள் அப்படியே ஒலைச்செத்தைப் பக்கமுள்ள கப்பில் உடல் சோர்ந்தவாறு சாய்ந்தபடி நின்றாள். ராக்காயி இன்னும் எதையோ தகப்பனுக்குச் சொல்ல வாயெடுத்தாள்.
ஆனால் அவளை பேச்சுவார்த்தையில்லாமல் பிரித்தேவிட்டமாதிரி
o 352 O ரீ.பி.அருணானந்தே

ராமன் வாசல் வழியாக வெளியே பார்த்துக்கொண்டு,
"ஆ. அவுங்களல்லாம் வேளக்கே வந்திட்டாங்க போலக் கெடக்கு. பாய ஈரமில்லாம காயப்போட்டீங்களாம்மா..? வாசல்ல குப்பையும் குமிச்சுக்கிட்டமாதிரிக் கெடக்கு. கண்ணுக்கு முன்னுக்கு அதுகெடந்துக் கிறதயும் நானு பாக்கல. பகல் பூரா கதை பேசிக்கிட்டிருந்தா இப்புடித்தான். வீடுகள்ல நல்லது ஒண்ணு நடக்கிறப்போ அவுகளுக்கு மருவாதயா உக்காரவச்சு எல்லாமே செஞ்சு முடியணுமே..?” ராமன் வேலிப்படலையை உற்று உற்றுப் பார்த்துக்கொண்டு காலும் ஓடாமல் கையும் ஓடாமல் இருக்கின்ற மாதிரியான ஒரு நிலையில் இருந்தான். வெளியே ஊளையிட்டுக்கொண்டு நின்ற நாய்க்கு யார் கல்லால் எறிந்து கலைத்தார்கள் என்று தெரியவில்லை. கல்லடிப்பட்டதோடு ஊளையை மாற்றிக்கொண்டு இறுக்கி ஓடிவிட்டது நாய், கறிச்சட்டி விளிம்பில் 'ஈ' ஒன்று நின்றதைப்பார்த்துவிட்ட ராக்காயி உடனே கையால் விசிக்கிவிட்டு மூடியால் மூடிவிட்டாள்.
ராக்காயி பிறகு தன் கழுத்தில் கிடந்த வெள்ளிச் சங்கிலியை, கையால் எடுத்து வாயில் வைத்துச் சப்பிக்கொண்டு, நிற்கிறமாதிரி இருந்தாள். செவ்வந்தி இழுத்துப் பெரு மூச்சுவிட்டுக்கொண்டவாறு தகப்பனைப் பார்த்தாள். அந்த வளவிலே பிழங்கினது மாதிரியான ஒரு செயல்பாட்டுடன் வேலிப்படலைத் திறந்தான் சோணமுத்து கையால் வாயைப் பொத்தியபடியே இருமிவிட்டு தன்னுடன் வந்த பெண்ணையும் “வாங்க வாங்கக்கா” என்று கூப்பிட்டான். சோணமுத்துவோடு வந்த வீரன் சறம் மடிப்புக்கட்டை அவிழ்த்துக் கீழே விட்டுக்கொண்டு பின்னாலே நடந்துவந்தான்.
“மொதல்ல பொம்புளயாளு சீதேவியா உள்ள போங்க.” என்று செவ்வந்தி வீட்டு வாசலடிக்கு வந்ததும் சோணமுத்து அவளைப் பார்த்துச் சொன்னான். தன் கையிலுள்ள பெட்டி அரிசித் தட்டையும் முனியம்மாவிடம் அவன் கொடுத்தான். ராமன் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டு “வாங்கம்மா உள்ள வாங்கம்மா..” என்று உடம்பு வளைஞ்ச அளவுக்கு நின்றான்.
“இந்தாம்மா மவ பாயா எடுத்துவிரிம்மா?” என்றான் அவன் பிறகு, அப்பன் சொல்லிவிட்டாரே என்று தன்னை அழுகுணி மாதிரி வந்தவர் களுக்குக் காட்டாமல் இரண்டு படுக்கைப் பாய்களையும் எடுத்து நிலத்தில் விரித்துப் போட்டாள் ராக்காயி இன்னும் ஒரு சின்னக் கும்பிடு எல்லாரையும் பார்த்துப் போட்டுவிட்டு.
துயரச் சுலப்பண்கள் O 353 O

Page 183
"இருங்கம்மா இருங்க. இருங்க மருமவேன். தம்பி இருங்க..!” என்றெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் பார்த்துச் சொல்லிக்கொண்டு நின்றான் ராமன். ராமன் சொல்லவும் சோணமுத்துவும் வீரனும் சாரத்தை மரியாதை காட்டும் விதமாக ஒதுக்கிப் பிடித்துக்கொண்டு பாயிலே ஒழுங்காக உட்காருகிறமாதிரி உட்கார்ந்தார்கள். முனியம்மாவும் சேலையைக் கையால் இறுக்கிப் பிடித்துக்கொண்டு பாயில் குந்தி இருந்தாள்.
பச்சைக் காம்பை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் வெற்றிலைக் கட்டோடு இருந்த பெட்டி அரிசித்தட்டு முன்னாலே பாயின் மேல் இருந்தது.
சவக்காலை வீதியாலே லொடக்கு லொடக்கு என்று சன்னமாய்ச் சத்தம் போட்டபடி மாட்டு வண்டில் ஒன்று போய்க்கொண்டிருந்தது. வழியெல்லாம் சொல்லிக்கொண்டு போகிறமாதிரியாகத்தான் அந்த மாட்டுவண்டிலின் சத்தம்.
செவ்வந்தி துயரம் கனத்த நெஞ்சோடு குடிசையின் ஓரத்தில்போய் நின்றுகொண்டு வந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
முனியம்மாதான் கதையை முதலில் தொடங்கினாள்.
“ராமு அண்ணேக்கு யில்லாமே தெரிஞ்ச வெசயம்தானே. சோணமுத்துவுக்கு சொந்தமுண்ணு இருக்கிறவங்க திசமாறாமகம எண்ணுறயிடத்திலதான் இருக்கிறாங்களாம். அவுங்கெல்லாம் எங்கயா இங்கிட்டெல்லாம் வந்துக்கப்புறாங்க. அவுங்க வராட்டிப்போனாத்தா யின்ன? நாங்க சோணமுத்துவுக்கு அக்கா தங்கச்சி தம்பி மாதிரியா இல்லயா..? பாவம் சோணமுத்து! அவனுக்கு ஆருதான் உறவெண்ணு அப்பிடிபெரிசா இருக்காங்க..? அவனுக்கு அப்பனுமில்ல, ஆத்தாளுமில்ல. அக்கா தங்கச்சீண்ணு ஆருமே அவனுக்கு இல்ல. என்னவோ அவனுக்கு இருந்துகிட்ட ஒறவு ஒண்ணுண்ணா ஓங்க சமுசாரம்தான். அவவுகூட செத்துப்பிட்டா. இப்பிடி என்னதா இல்லாம போயிக்கிட்டாலும் இருக்கிறது அவனுக்கு ஒரு ஒறவெண்ணு நீங்க தானே இப்பவா இருக்கிறீங்க..? அவனுக்கு முறைப்பொண்ணு உங்க மவதா. அவவ சோணமுத்து கண்ணாலம் பண்ணிக்கிட்டா இருக்கிற ஒறவு இன்னுமா ஒங்களுக்கு பலமாயிடும்.! அதாலதான் பொண்ண நிச்சயம் பண்ணி கண்ணாலம் பண்ணிக்கிறதுக்கு சோணமுத்து இப்பவா வந்திருக்கான். அவனுக்காகத்தான் நாங்க கூட தாயி தகப்பன் மாதிரி வந்திருக்கிறோம். எதுக்கும் சம்பிரதாயமெண்ணு ஒண்ணு நமக்கும் இருக்குத்தானே.? அவனுக்குத்தான் என் பொண்ணு எண்ணு நீங்க கூடத்தான் அவனுக்கு முன்ன பின்னயெல்லாம் சொல்லிக்கிட்டு இருந்திருக்கிறீங்க..? நீங்க ராம அண்ணே சொன்னவாக்கு
O 354 O ரீ.பி.அருளனர்தல்

மாறமாட்டாதவங்க..? இந்தப் பெட்டி அரிசியையும் வாங்கிட்டு வாயிலயா சம்மதமுண்ணு நீங்க இப்பவா சொல்லிப்புட்டியளிண்ணா. அடுத்த வாரமே கலியாணத்தை வைச்சுப்புடலாமுண்ணு சோணமுத்து ஆசப்பட்டுக் கிட்ருக்கான்."
முனியம்மா கதையைச் சொல்லி முடிக்கும் மட்டும் அதைக் கேட்டுக்கொண்டு பகவானை கும்பிட்டமாதிரி அவர்களைப் பாத்துக் கும்பிட்டுக்கொண்டு நின்றான் ராமன்.
"என்மவள மொத மொத சீலத் தொட்டிலு கட்டி அதில போடுகிற நேரமே என் தங்கம் சாந்தி சொல்லிக்கிட்டா என்மவளயேன் தம்பியா ண்டானுக்குத்தா கட்டிக்குடிக்கணுமுண்ணு. அவ செத்துப்பிட்டாலும் அவ சொல்லிக்கிட்டது என்னவோ யேன்மனசில வைரமாத்தான் அப்பிடியே பதிஞ்சுக்கிட்டு கெடந்துக்கிட்டுது. யேன் சம்சாரம் செத்துபிட்டாலும் அவளுல தா எனக்கு உசிரு. அவ விரும்பிக்கட்டத நெச்சயமா யேன் உசிரு இருக்கிறவாட்டியும் நானு செஞ்சுதான் முடிப்பேன். என்மவளு சோணமுத்துவுக்கேதான்! அதுண்ணா இப்பவும் கூட நிச்சயந்தான்.” ராமன் சொல்லிவிட்டு மகிழ்ச்சியில் சிரித்தான்.
அவன் இறுக்கி முடிஞ்சதுமாதிரி கல்யாணத்துக்குச் சம்மதம் என்றதாயச் சொல்லி விட, செவ்வந்திக்கு காயாத நரகல் மேல் தன்னை ஒரு தள்ளுத் தள்ளி விழுத்திவிட்டது மாதிரியாகவே இருந்தது. அவளுக்கு நெஞ்சமெல்லாம் காய்ந்து வற்றிப் போய் எரிவது மாதிரியாகவும் வந்தது.
ராக்காயிக்கும் நெஞ்சிலே ஏறி தன்னை யாரே மிதித்தது மாதிரியாக இருந்தது. "சீ இப்பிடியா அக்காவுக்கு ஆகிப்போச்சே.?” என்ற அந்த அதிர்ச்சியுடன் அவள் அவர்கள் கொண்டுவந்திருந்த பெட்டி அரிசிக்குள் கிடந்த சேலை பழம்பாக்கு தேங்காய் அரிசி, பத்து ரூபாய்த்தாள்கள் போன்றவற்றை வெறுப்புடன் பார்த்தபடி நின்றாள்.
ராக்காயிக்கு அந்தச் சேலையைப் பார்த்ததோடு அதுதன் அக்காவுக்கு வீட்டிலே விசேஷம் என்று கொடுக்கக் கொண்டுவந்திருப்பதாகத் தெரியவில்லை. அதற்குமாறாக தன் அக்காளுக்கு விஷம் கொண்டு வந்தது மாதிரியாகத்தான் அவளுக்குப் பார்க்கவும் தெரிந்தது.
ஆகா என்று சொல்லும் படியாக அந்தக் கலிணாணச் சேலையிலே ஊசிக் கம்பிகளாக சிறு சரிகை இழைகளும் மின்னியவாறுதான் இருந்தன. வழுவழுத்த சாதாரண பட்டாக அது இருந்தாலும் ஒரு எடுப்பாகத்தான் பார்க்க அது அவளுக்குத் தெரிந்தது. ஆனாலும் அந்தநேரம் வெயில் வரட்சியாக சுற்றுப்புற ஈரங்களை உறிஞ்சிக்கொண்டு ஏறுகிறமாதிரி
துயரல் சுண்பண்கள் O 355 C.

Page 184
அவளுக்கு அதைப் பார்த்துக்கொண்டிருக்க மனம் பெரிதாக துவண்டு போய்க்காய்ந்தது.
அவள் அச்சு முறிந்த வண்டில் போல அதற்குப் பிறகு தலையைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு நின்றாள்.
முனியம்மா “எல்லாம் சரிதானே.?” என்று ராமனை ஒருமுறை கேட்டாள்.
“யோசன பண்ணிக்க என்னதா இனிமேலயா இருக்குங்கிறேன்? எல்லாமே சரிதான்!.” என்று ராமன் சொன்னான்.
"அப்புறமென்ன பெட்டி அரிசிய மாப்புள ஆண்டானே. மாமன் கையிலயா குடுத்துப்புடட்டும்.?” என்று முனியம்மா சம்பிரதாயத்தைச் சொன்னாள். பிறகு அந்தப் பக்கம் பார்த்து "சோணமுத்து பாத்துக்கிட்டிராம வீரபத்திரசாமிய மனதில நெச்சுக்கிட்டு தட்டை எடுத்து மாமன் கையில கொடுத்துக்கப்பா..?” என்று அவனுக்குச் சொன்னாள்.
முனியம்மா சொன்னதுக்கு உடனே தலையை ஆட்டினான் சோணமுத்து. அதற்குப் பிறகு பாயில் இருந்து எழுந்து குனிந்து அந்தத் தட்டைத் தூக்கி ராமனின் கையிலே மரியாதையோடு அவன் கொடுத்தான். ராமன் கையிலே அதை வாங்கும்போது “எல்லாமே நல்லபடியா நடந்து முடியட்டும் சாமி.” என்று கும்பிட்டமாதிரி சொல்லிக்கொண்டு
வாங்கினான்.
ராக்காயிக்கு தன் முன்னால் நடக்கின்றது எல்லாவற்றையும் பார்க்க மனம் பொறுக்கவில்லை. அவளுக்கு தமக்கையை நினைக்கும்போது துயரம் முட்டியது. செத்தையோடு கட்டிக்கிடந்த கொடியில் உள்ள பாவாடையை தன் கையால் அவள் கசக்கிப்பிடித்துக்கொண்டு நின்றாள்.
செவ்வந்திக்கு செல்வநாயகத்தைப் பற்றிய இனிமையான நினைவுகளெல்லாம் கருகிப்போன மாதிரியாக இருந்தன. அவளுக்கு மனம் வேகியது. அப்படியே தகப்பன் கையிலுள்ள பெட்டி அரிசித்தட்டைப் பார்த்தபடி பொங்கிவரும் கண்ணீரை விழுங்கிக்கொண்டபடி அவள் சோகமே உருவானமாதிரி நின்றாள்.
கல்யாணம் கை கூடி விட்டது என்ற நிம்மதியில் சோணமுத்து இப்போது இருந்தான். அவன் இப்போதுதான் ஒரு ஓரத்திலே நின்றுகொண்டிருந்த செவ்வந்தியைப் பார்த்தான். பழம் கொத்துகிற பறவைபோல அவளை முத்தம் கொடுக்கப் போகிற மாதிரி இருந்தது அவன் பார்வை. சோணமுத்து அப்படித்தன்னைப் பார்க்கிறான்
o 356 O ரீ.பி.அருளானந்தல்

என்று கண்டதும் உடனே தன் முகத்தைத் திரும்பி தலை கவிழ்ந்து கொண்டாள் செவ்வந்தி அவளின் மனதுக்குள் கண்ணீராய் ஒழுகிக்கொண்டிருந்தாலும், ராமன்இப்போது வேர்பிடித்த நாற்று எழுந்து நிற்கிறமாதிரி உற்சாகமாக நின்று கொண்டிருந்தான்.
"எல்லாமே எனக்கு மனசு நெறைஞ்சமாதிரி யிருக்கு. திங்கிறது குடிக்கிறதயும் இந்த நல்ல நாளு அதுவுமா இருக்கிற இண்ணைக்கே வைச்சுக்கலாம்.? இருந்து எல்லாருமா சாப்பிட்டுத்தான் போகணும்.?” என்று எல்லோரையும் பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியோடு சொன்னான்.
"ராமன் அண்ணையோட காலத்துக்குன்னு மாறாம இருக்கிற கொணம் இது ஒண்ணுதான். யாராச்சும் வந்தா இந்த வுட்டில சாப்பிடாம போயிருப்பாங்களா..?” என்று ராமனை பெருமைப்படுத்தும் விதத்தில் ஒரு கதையொன்றை அவிழ்த்துவிட்டாள் மீனாட்சி
"இதில உங்க அதிஷ்டமும் இண்ணைக்கு இருக்கு. காளான் கறிதா. சட்டி நெறையவா என் மக ஆக்கி வைச்சிருக்கா.” என்று ராமனும் உடனே சொன்னான்.
"அப்ப அண்ண வீட்டிலயா இண்ணிக்கு நல்ல கறியும் திண்ணுக்கலாம் போல இருக்கு.?” என்று மீனாட்சியும் கறி நினைப்போடு
சொன்னாள்.
"இந்தா இப்பவேயா அரிசிய ஒலயில போட்டிட்டா சூடா இருக்கிற சோத்துக்கு பெரட்டி வைச்ச காளான் கறி தோதா இருக்கும்.” என்று அவன் சொல்லிவிட்டு செவ்வந்தியைப் பார்த்து
“பார்த்துக்கிட்டு இருக்கிறியம்மா. எல்லாருக்குமா அரிசியை ஒலயில போட்டுக்கம்மா நேரமாகுதில்ல.?” என்று அவளை அவசரப் படுத்தினான்.
நாலுபேருக்கு முன்னால் தகப்பன் இப்படியெல்லாம் சொல்ல தைத்த முள்ளைப் பிடுங்கி எறிய இயலாத மாதிரி ஒரு நிலைமை செவ்வந்திக்கு. அவள் இனிமேல் என்னதான் செய்வது என்ற ஒரு நிலைமையிலே கழன்று விழுந்து விடுகிற மாதிரி இருந்த தன் உடலை இழுத்து இறுக்கிக்கொண்டு சமையல் காரியங்களைச் செய்து முடித்தாள். வந்தவர்களை பாயிலே பந்தி இருத்தின மாதிரி இருக்கவிட்டு ராமன்தான் சோற்றையும் கறியையும் அவர்களுக்குப் பரிமாறினான். காளான் கறியை “ருசி ருசி.” என்று அவர்களெல்லாம் சொல்ல ராமன் அவர்களுக்குத் தின்ன மொத்தச் சோற்றையும் கறியையும் அள்ளிப்போட்டான். விரல் தொட்டால் நகம் வெந்துபோகும் சூட்டோடு உள்ள சோற்றோடு காளான் கறியை எல்லாருமே குழம்பு வாசனையோடு
துயரச் சுeப்Uண்கள் O 357 O

Page 185
ஒரு பிடிபிடித்தார்கள். சட்டியிலே கறி ஒன்றும் மிச்சம் மீதி இல்லாமல் கொட்டியதாய் அவர்களுக்கே தின்னக் கொடுத்துவிட்டான் ராமன். சாப்பிட்டு எல்லோரும் வெற்றிலை பாக்குப் போட்டுக்கொண்டு வெளிக்கிடும் நேரம், அவர்களை முன்னால் போகும்படி சொல்லிவிட்டு முற்றத்தடியில் தனித்து நின்றான் சோணமுத்து.
"மாமா இங்கிட்டொருக்கா நீங்க வந்திட்டுப் போங்க..?” - என்று அவன் கூப்பிட்டதற்கு மரியாதையாய் ராமனும் அவனருகில் வந்தான்.
“என்ன மருமவேன்.?” என்று பிறகு அவன் கேட்டான்.
“ஊரே இப்ப கெட்டுக்கிடக்கு மாமா. வெளியிலயா உள்ளவங்களும் அப்பிடியா சொல்லிக்கக்கூடிய ஆளுங்களாவுமில்ல. பசிக்கு நாம சோத்துக் கஞ்சிக்குப் பச்சமெளகா வெங்காயம் கடிச்சுக் குடிச்சுக்கிடணுமுண்ணுதான ஒரு நெலயிலதா இருந்துக்கிட்டிருக்கோம். நம்ம பொண்ணுங்களும் மானமா இருக்கணுமுண்ணா நாங்களுந்தா வேலியா காவலா அவுங்களுக்கு இருந்துக்கணும். ஆதனாலதா ஒண்ணு உங்களையா கேட்டுப்புட்டு சம்மதம் உங்ககிட்டவாங்கிப்புட
ணுமெண்ணு இத நான் கேட்டுக்கலாமுண்ணு இருக்கேன்.?”
கதையை நிறுத்தினான் அவன்.
“என்ன மருமவேன் இதுங்கிறேன்.? இப்புடியா ஒரு கேள்வி என்னிய
கேட்டா எனக்கு என்னதாய்யா வெளங்கிக்கும்.?” என்றான் ராமன்.
"அதான் மாமா ஒங்களுக்கு நான் இப்பவா சொல்லிக்கப்போறேன்." என்று கதையை ஆரம்பித்தான் அவன்.
"செவ்வந்திண்ணா இப்பவெல்லாம் செவ்வாழத்தாறு மாதிரி சிலிப்பின உடம்பா அழகா இருக்கா. கொளத்துக்கு குளிக்கோண்ணு போயிக்கிட்டாலும் காட்டுப் பாதவழியா தானே போய்க்கணும்.? யேன் பொண்டாட்டியா வர்றவளுக்கோ, அவ தங்கச்சிக்கோ, ஏதாவது அப்பிடியா இப்பிடியா நடந்துச்சென்னா. இந்த உசிரே எனக்கு பிறவா இருந்துக்காது மாமா..! அதாலதா நானும் செல்லிக்கிறேன். இவுங்க எங்கிட்டு போனாலும் அவுங்ககூட நானும் எங்கயுமா கூடவே போய்க்கிறேன். அது ரெண்ணு பேருக்கும் காவலாவுமிருக்கும்.! யேன் ஒசன அல்லாத்துக்குமே நல்லதுதானுங்களே மாமா..?” என்றான்
96)607.
சோணமுத்த இப்படியெல்லாம் சொன்னதைக் கேட்டுவிட்டு குளிர்ந்த நீரில் முகம் கழுவினது மாதிரி மகிழ்ச்சியில் மலர்ந்துவிட்டான்
ராமன்.
o 358 O ரி.வி.அருணானந்தடி

“என் மருமவேனுக்கு யேன் குடும்பத்திலயா எவ்வேளவு அக்கற.?” என்று அவனும் ஒத்துப் பாடினமாதிரி சொன்னான்.
"இந்த வூட்டுக்கு மருமகனா வர்றதுக்கு முன்னாடியே எவேளவு அக்கறையா இதயில்லாமே நீயி என்கிட்ட சொல்லிக்கிறே மவனே.” என்று உணர்ச்சிவசப்பட்டும் அவன் பிறகு சொன்னான்.
ராமன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டு சிறிதுநேரம் மெளனமாய் நின்றான் சோணமுத்து.
“எதுக்கும் செவ்வந்திக்கும் ராக்காயிக்கும் இதயிலாம் கண்டிப்பா நீங்களுமா சொல்லிவைச்சுருங்க மாமா.” என்று கடைசியாகவும் மாமனுக்கு ஒரு கதையைச் சொன்னான் அவன். அதற்குப் பிறகு அவனுக்கு ஒரு வேற்று முகம் விழுந்தது போல வந்துவிட்டது.
“நானு வாறேன்மாமா” என்று முறை சொல்லிக்கொண்டு அவன் அங்கிருந்து கிளம்பிவிட்டான். அந்தப் பாலை மரத்தின் கிளையிலே இருந்து கொண்டு அவ்வேளையில் இரண்டு குருவிகள் ஒன்றோடொன்று பேசிக்கொள்வது மாதிரி சத்தம்போட்டுக்கொண்டிருந்தன.
பிறகு பறந்து போகின்றன.
4-f
விடிந்து நேரம் கடந்தாயும் விட்டது அதற்குப் பிறகுதான் செவ்வந்தியும் ராக்காயியும் நித்திரைப்பாயிலிருந்து எழுந்தார்கள். செவ்வந்தி குடிசைக்கு வெளியே இறங்கி நடந்தாள். மஞ்சளாக வெயில் முற்றத்தில் கிடந்தது. வழமையாக பறவைகளால் நிரம்பியிருக்கும் பாலை மரம் வெறுமையாக நிற்பது மாதிரி அவளுக்குத் தெரிந்தது. பறவை ஒலிகளும் இல்லாமல் போய்விட்டதோ..?
ஏனோ சற்று மூச்சுவாங்கியது, அவளுக்குக் கண்கள் கனத்து வலித்தன. இரவில் சரியாக தூக்கமில்லை. என்ன மாதிரியாகவெல்லாம் கனவுகள்! கனவுகள்! இரவில் அவள் கண்ட கனவில் என்ன விதமான ஒரு அதிர்ச்சி அவளுக்கு செல்வநாயகத்துடன் அன்பாகவும், ஆறுதலாகவும் பேசிக்கொண்டிருந்த மாதிரியான ஒரு கனவிலிருந்து வெறோரு கனவுக்குள் அவள் எப்படி நுழைந்தாள்?
நேரில் கண்டதுபோல அல்லவா அந்தக் கனவில் அவளுக்கு எல்லாமே நடந்தது. வெளிச்சம் எல்லாம் அந்த இடத்தில் கலைந்துபோய் இருட்டுமட்டும் அவள் கண்முன் கிடந்தது. அவள் தட்டுத்தடுமாறி இருட்டுக்குள் நடந்துகொண்டிருந்தாள். ஒரு கரிய உருவம் தலையை
துயரச் சுரப்பவிர்கள் O 359 O

Page 186
உசுப்பிக்கொண்டு இருந்தாற்போல அவளின் பக்கத்தில் வந்தது. மனம் படபடவென்று அவளுக்கு அடித்தது. இப்போது என்ன செய்ய வேண்டும்? அவள் அந்த உருவத்திடமிருந்து தப்பிக்க ஒட நினைத்தாள். ஆனாலும் அவளால் எதுவும் செய்யமுடிவில்லை. அதிர்ந்து நின்றாள். அவன் முகம் தெரிந்தது. இந்த இருளுக்குள்ளும் இருளான முகமாய்த் தெரிகிறதே இவனின் முகம்?
விசித்திரமான இரண்டு கொம்பு மிருகம் மாதிரியாக யார் இது? ஆ அது சோணமுத்துதான். அவள் அப்படியே அச்சத்தால் கோணி வலித்துக்கொண்டிருக்க. உன்னை ஒரு அணை அணைச்சுக்கொள்கிறேன் என்றவாக்கில் அவளை முகர்ந்தவாறு அருகில் வந்தான் அவன். அப்படியே பிறகு அவளை தனக்குள் இழுத்து பாம்புபோல அவளைச் சுற்றி நெளிந்தான். அவனின் மூச்சுக்காற்று உஸ். என்று காதில் ஒலித்தது அவளுக்கு.
அந்தக் கனவின் அச்சத்தில் உடனே "திடும்” என்றதாய் விழித்துவிட்டாள் அவள் எவ்வளவு பயங்கரமான இருந்தது அப்போது அவளுக்கு. நித்திரையேவராமலிருந்து, பிறகு தட்டித் தட்டி ஒருவாறு தன்னைத் தூங்கச் செய்த நேரத்தில்தானே இந்தக் கெட்டகனவும் வந்து தெலைந்தது அவளுக்கு.
பாலை மரத்துக்குக் கீழே குழிபறித்துப்படுத்துக்கிடந்த நாய் செவ்வந்தியை அதிலே கண்டதும் உடலை இறுக்கிக்கொண்டே எழுந்து நின்றது. தன்னை அவள் விரட்டுவாளோ என்ற நினைப்பில் வாலைத் தாழ்த்தி எச்சரிக்கையுடன் நின்றது. ஆனால் செவ்வந்தி இருந்த நிலைமையிலே வெறுமைதான் இருந்தது. மிருக விழிகளுக்கும் மனிதனின் நிலைமை தெரிந்துவிடும்போலும் அப்படியாகத்தான் அந்த நாய் பின்னங் கால்களை மடித்து அமர்த்து அவளின் முகத்தை அண்ணாந்து பார்த்தது. பின்பு எழுந்து மெல்லக் காலடி எடுத்துவைத்து நடந்தவாறு வேலிப்பொட்டுக்கால் புகுந்து வெளியேறியது.
“என்ன வஞ்சகத்தையும் பாதகத்தையும் எங்களுக்குச் செய்ய வெண்ணு அப்பாவுக்கு இப்பிடியா ஊத்தி ஊத்தி வளத்த மாதிரி வளத்தானோ இந்தச் சோணமுத்து.? தன்னோட முறைப்பொண்ணு எண்ணு செவ்வந்தி அக்காவக் கேட்டு அவள கலியாணும் முடிக்கிறமாதிரியா முடிச்சு. அவளப் பொறவா சீரழிச்சுச் சின்னாபின்னமாக்கி. ஒழிஞ்சு போச்சடி ஒண்ட கத. தீந்துதடி உங்கமேலயா இம்புட்டுக்காலம் எனக்கிருந்த பழி எண்ணு அக்காவயும் என்னியயும் தீத்துக்கட்டத்தான் சோணமுத்து இப்பிடியா ஒரு திட்டம் போட்டுட்டாரோ.?” ராக்காயியும் இப்படியாக தன்னைப் போட்டு வறுத்தெடுத்த யோசனைகளோடு தமக்கையின்
O 360 O ரீ.பி.அருணானந்தே

அருகில் வந்தாள். அவளுக்கு அந்தக் காலை வேளையில் அழுது மூஞ்சி வீங்கிப்போனமாதிரியாக இருந்தது.
"அக்கா ஒரு கொறையுமில்லாம கறிசோறு ஆக்கிக் கொண்ணாந்து உங்ககிட்ட குடுக்கிறோம் எண்ணு அந்த ஐயா கிட்ட சொல்லிப்பிட்டு வந்தோம். ஆனா கடேசியா இப்பிடியாயெல்லாம் ஆகிப் போச்சே. அந்த ஐயாவும் நாங்க வருவோமுண்ணுதான் பார்த்துக்கிட்டு இருந்திருப்பாரு..?”
ராக்காயிதன் மனதைப் பாதித்த விஷயத்தை அக்காளுக்குச் சொன்னாள். செவ்வந்தி கண்ணீர் கசிந்த கண்களுடன் அவளைத் திரும்பிப்பார்த்தாள்.
“பாம்பு தேளு பூந்து கிட்டமாதிரியா நேத்து எல்லாருமா வந்து
எல்லாத்தையும் நாசமாக்கிட்டுப் போட்டாங்களேடி?”
அவள் அடங்காத ஆத்திரத்துடன் கூரிய குரலில்சொல்ல, ராக்காயி அவளைத் திடத் தன்மையுடன் பார்த்தாள்.
“கொஞ்சம் நீ பொறுத்துக்கிட்டிருக்கா. எல்லாத்தையும் நான் அந்த ஐயா கூட கதைச்சு உனக்கு நல்லதா ஒரு வழி பண்ணிக்கிறேன்.?” என்றாள். ஆனாலும் செவ்வந்திக்குத் தங்கை சொல்வது இருளில் கரைந்து மறையும் நிழல்போலவே நம்பிக்கையற்றதாக இருந்தது. தன்னிடம் உள்ளதெல்லாம் இனிமேல் அறுபட்டுப் போகப்போவதைப் போல அவளுக்குப் பிரமையெழுந்தது.
தன்முன்னால் விஷக்கோப்பை தளதளத்துக்கொண்டிருக்கிறது என்ற நினைப்பில் வாழ்க்கையில் அவளுக்கு வெறுப்பும் வந்தது. அவள் படபடப்புடன் கண்களை மூடிக்கொண்டாள்.
"நீ சின்னப்பிள்ள. இண்ணைக்கு இந்த வயசில நீவந்துகூட நான்தா ஒனக்கு தலைசீவி பொட்டு வைச்சுவிடுறேன். உனக்கு முள்ளுக்குத்திப்பிட்டாக்கூடா நானுதா அத எடுத்துவிர்றேன். அக்கா எண்ணு நீகூட என்மேல உசிராத்தான் இருக்கே. இந்தச் சேரியில யேன் பிரச்சினிய பேசித்தீர்த்துப்பிடுறதுக்கு ஆருதா வரப்போறா. அப்பிடியாத்தான் ஒரு ஈ காக்கா கூட இந்தப் பக்கமேவராது. ஆனாலும் தங்கச்சி எண்ணு இருக்கிற நீ உன்னாலயா எதுவாச்சும் ஏலுமோ ஏலாதோ எண்ணு அப்புடீத்தான் இருந்துகிட்டாலும், என்னியே சுத்தி சுத்தி வந்துகிட்டு எனக்காகவே கதைச்சுக்கிட்டிருக்கே. நெஞ்சுக் கூட்டில நீ வைராக்கியமானவதான். ஆனா இதெல்லாம் நீ சொல்லிக்கிறதெல்லாம் நடக்குமாடி.”
நெஞ்சைப் பிடித்துக் கொண்டமாதிரி கையை வைத்துக்கொண்டு sztug\ý aøŭvaĵŭas aŭ O 36 l O

Page 187
வேதனையோடு கேட்டாள் அவள் சகோதரி அப்படிச் சொல்ல ராக்காயிக்கு இன்னும் சோகமாய்ப் போய்விட்டது.
"அக்கா நானு பொறந்த நேரம் நல்ல நேரம் தான். நீயி பொறந்த நேரமும் நல்லநேரம் தான். நீ எதுக்குமே கவலப்பட்டுக்கிட்டு அழுவாத அக்கா கண்ண தொடச்சுக்க.? நெடுவலுமே எங்க மாமேன் வைச்ச கண்ணு வாக்காம பார்த்துக்கிட்டிருக்கிற மாதிரியா எங்களயில்லாம் பாத்துக்கிட்டிருப்பாரா..? அதினால இண்ணிக்கு மத்தியானமா குளிக்கவெண்ணு குளத்துக்குப் போவ நாம கிளம்பிக்குவோம்.! அப்பிடியா போற வாட்டி அந்த ஐயாவுட்ட விஷயம் பூரா சொல்லிப்புடுவோம். அப்புடியா நம்ம வெவரமெல்லாம் தெரிஞ்சிக்கிட்டா பொறவு அந்த ஐயாவே ஒரு வழிசொல்லுவாருதானே
அதினால கவலப்படாதேக்கா..?”
என்று ராக்காயி அப்படிச் சொல்ல நெஞ்சு அடைத்த துக்கம் விலகிவயிறும் குளிர்ந்தது செவ்வந்திக்கு.
"நானு புத்திகெட்ட பொண்ணாயிப் போயிட்டேன். ஆனா நீயிண்ணா புத்திசாலியாத்தான் கதே சொல்லுறே.? நீ சொல்லிக்கிற மாதிரியா செஞ்சிக்கலாம் போலத்தான் கெடக்கு..! எதுக்கும் நாம கொளத்துக்கு போவமுன்னாடி சமயலும் பாத்து எதையாச்சும் ஆக்கி வைச்சுப்பிட்டு கெளம்பிக்குவோம்.! அப்பாவந்தா பாவம்! அவருக்கு நானு காலங்காலத்தால குடிக்கக் கூட யேதும் தண்ணிவைச்சுக் கூட குடுக்கல. அந்தளவுக்கா எண்ணைக்குமில்லாம அப்பிடியா நானு தூங்கிப்பிட்டேன். இப்பவா மத்தியான முண்ணாலும் சாப்பிட்டுக்க அவரு வருவாரில்ல. பசிக்கு ஏதாச்சும் திங்கிறதுக்கு அவருக்கு ஆக்கி வைச்சுக்கத்தானே வேணும்.?”
செவ்வந்தியின் நினைவுத் தடத்தில் தகப்பனைப் பற்றியும் நினைவு வந்தது.
"உனக்கு என்னம்மா வேணும் சொல்லும்மா செல்வம்.? நானுதா
இருக்கிறனே! உனக்கு என்னவேணுமம்மா..?”
என்று அவளை இடையிடையே தந்தையின் பாசத்தோடு கேட்பவ னல்லவா அவன். தாய் இறந்தபின்பு முழிச்ச கண்ணு மூடாத மாதிரி இருந்து இவர்கள் இருவரையும் வளர்த்து ஆளாக்கி விட்ருப்பவன் தானே ராமன்..!
அதனால்தான் தந்தையின் நினைவும் செவ்வந்தியின் மனதுள்ளே சதாவும் நீந்துகிறதாக இருந்துகொண்டிருந்தது.
“என்ன எதையோ நெச்சுக்கிட்டு வெரசா இப்ப நீ இங்காலயுமா O 362 O ரீ.பி.அருளானந்தே

அங்காலயுமா நடந்துக்கிட்டிருக்கே அக்கா..?”
என்று ராக்காயி சொல்லச் சொல்ல, தான் நடந்தவாறே அவளைப் பார்த்தாள் செவ்வந்தி
"நீயும் என்னோடயாதானே நடந்துகிட்டிருந்தாய்..?”
"இல்ல நானு நிண்ணுட்டன் ஆனா எப்பவோ இருந்து நீதான் நடந்துக்கிட்டிருக்கே.? உனக்கு யோசன இப்பவா பெரிசா போவுது.” என்று ராக்காயி சொன்னாள்.
”எனக்குண்ணா மாமனு மூஞ்சிதா அப்பப்ப ஞாபவத்திலயா வந்துகிட்டிருக்கு. அதுலேசில போவமாட்டேங்குது. பயமாயிருக்கு என்றாள்.” செவ்வந்தி
"அப்புடியா பயப்பிட்டுக்கிறதயெல்லாமே நீ இனியாவிட்டுப்புடக்கா. இதுக்கு முன்னாடி ஏதோ சமையலப்போயி பாக்கப்புறேன் எண்ணு நீ சொன்னாயில்ல அதப் போயி நீ இப்பவா பாருக்கா. அது முடிஞ்ச கையோடயா கொளத்துக்கும் போவவுண்ணு நாம கிளம்பிக்கிடத்தானே வேணும்.?” என்று சொல்லி தமக்கையைத் துரிதப்படுத்தினாள் ராக்காயி.
"நீயும் மூஞ்சிய கழுவீட்டு உள்ள வந்து எனக்கு சமயலுக்கு கூடநாடயா ஒத்தாசையா இருந்துக்க.?”
என்று சொல்லிவிட்டு செவ்வந்தியும் குடிசைக்கு உள்ளே போனாள். அதன் பிறகு மிகச்சிறிய நேரத்தில் இருப்பின்றி சுழன்று சுழன்று அந்தரத்தில் நிற்பதுபோல, சகோதரிகள் இருவரும் சேர்ந்து சமையல் வேலையை செய்து முடித்தார்கள்.
அப்படி எல்லாவேலையும் முடித்து குடிசைக் கதவுத்தட்டியை இழுத்து மூடிவிட்டு வெளிப்படலையால் வெளிக்கிட்டு அவர்கள் வெளியே நின்றபடி பார்த்தால், அந்தநேரம் ஒழுங்கைக்குள்ளால் இருந்து வெளிக்கிட்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு, சடாரென்று தெருவுக்கு வந்துவிட்டான் சோணமுத்து
அவனைக் கண்டதும், பேயடிச்சது மாதிரியாக பேச்சு மூச்சில்லாமல் போய்விட்டது ராக்காயிக்கும், செவ்வந்திக்கும். சோணமுத்து துவாய்த்துண்டைத் தோளிலிருந்து எடுத்து இரண்டுமுறை உதறித் திரும்பவும் தோளில் போட்டுக்கொண்டு காவல்காரன் மாதிரி வந்துகொண்டிருந்தான். செவ்வந்திக்கு சோணமுத்து தனக்குக் கிட்டேயாய் நடந்து வர அழுகை ஊற்றுவது மாதிரி வந்துவிட்டது. என்றாலும் அழுகை வருகிற வழியை கல்வைத்து அடைத்தது மாதிரி
துயரச் சுண்பண்கள் O 363 O

Page 188
அடைத்துவிட்டு அவள் முன்னால் நடந்தாள்.
ராக்காயியும் நறுக்கென்று நெஞ்சிலே ஏதோ குத்தியது மாதிரி ஒரு வலியோடு சோணமுத்துவை திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு தமக்கையின் பின்னால் நடந்துகொண்டிருந்தாள். சோணமுத்து இரைபிடிக்கிற வேட்டைநாய் போல இருவருக்கும் கிட்டவாய் வந்து விட்டான்.
“ரெண்ணுபேருமா என்கிட்டவா சொல்லிக்காம எங்க தா போவுறதுக்கு இப்ப கெளம்பினிங்க.? மாமா ஒண்ணும் நானு சொல்லிப்புட்டது ஒங்களுக்குச் சொல்லலியா..?” என்று செவ்வந்திக்குப் பக்கத்தின்) நடந்தவாறு அவளிடத்தில் அவன் கேட்டான்.
செவ்வந்தியும் ராக்காயியும் ஒன்றுமே பேசவில்லை. தலையைக் குனிந்தபடி நடந்துகொண்டிருந்தார்கள்.
"கடவுளே எண்ணு ரெண்ணு பேரிண்டயும் காலிலயா நானு விழுந்தாத்தான் நீங்களு எல்லாம் பேசுவீங்களோ..?”
கேட்டுவிட்டு ஒரு சிரிப்புச் சிரித்தான் அவன்.
“பான தலேயில கொடம் இடுப்பிலயா தண்ணிக்கு அலைஞ்சு பொறவா தண்ணிக்கொடத்தோட பொடி நடையிலயா வந்துகிட்டிருந்தீபக. இப்பவா நம்ம கிணத்திலயே சமுத்திரம் மாதிரி தண்ணி வந்துகிட்டுது. அந்தக் கிணத்திலயா இருந்து வாளியில தண்ணிய அள்ளி தலயிலயா
ஊத்திக்காம கொளத்துக்கு குளிக்கவுண்ணு போவ யின்னதா அவசியோம்?”
அவன்பேச்சு ஒரு இழுவையாகவும் நக்கலாகவும் இருக்க, செவ்வந் திக்கும் ராக்காயிக்கும் அது நெஞ்சுக்குள்ளே வலிக்குமாப்போல இருந்தது.
ராக்காயி இனி மாமனோடு கதைக்காமல் வாயைப் பொத்திக் கொண்டுவந்தால் சோலிவரும் என்று நினைத்தாள். 'வீணாக ஏன் மாமனோடு சண்டை பிடிக்கிறமாதிரி கதைத்து பிரச்சினைகளை பெரிதாக்குவான்? - என்று அவள் யோசித்தாள். இந்த நேரம் மூளைக்கு வேலைகொடுத்து அவனோடு நயமாகப் பேசிசமாதானமாக இருந்துகொள்ளவேண்டும், என்று அவளுக்குப்பட்டது. எதையும் படக்கென்று இழுத்து மடக்கென்று ஒடிப்பது மாதிரியாக கதையிலும் நடத்தையிலும் அவனோடு இருந்துகொண்டால் திட்டம்போட்ட காரிய மெல்லாம் பிறகு கெட்டுப்போகும். “அதனால ஆளோட எதையும் எங்கட விஷயத்தக் கக்காம பட்டும் படாத மாதிரியா கதைச்சுக்குவோம். இப்புடி எல்லாம் இருந்துகொண்டால்தானே மாமேன் எங்களச் சுத்தமா
o 364 O நீ.பி.அருணானந்தே

நம்பிக்குவான்.” அவளுக்கு இப்படியாகவெல்லாம் இப்போது புரிந்தது.
சவக்காலைக்கு முன்னாலே ஆணும் பெண்ணுமாகப் பத்துப் பதினைந்துபேர் கொண்ட கூட்டம் 'எதுக்கு அதிலே நிற்குது? - என்று தெரியாத அளவிலே நின்று கொண்டிருந்தார்கள்.
"வேதக்காற ஆளுங்கதா அங்கினயா நிண்ணுகிட்டிருக்காங்கபோல இருக்கு பொம்புளேங்களும் வந்ததால .ஆருவோ செத்துப்புட்டாங் களாக்கும். சவம் கொண்ணுக்கிட்டுவந்து இங்கினயா சவக்காலேக்க புதைச்சிருப்பாங்க.” அவன் தன்பாட்டுக்குச் சொல்லிக்கொண்டு வந்தான். ராக்காயி அப்போது மாமனின் முகத்தைப் பார்த்தாள். “செல்வநாயகம் இருக்கும் காவல் கொட்டிலும்தான் நெருங்கிவருகிறது. அந்த இடத்தாலே எங்களுடன் இவர் சேர்ந்துவரும்போது எதையாவது அதிலேவைத்து எங்களுடன் இவர் கதைத்துவிடுவாரோ.?” என்பதை அவள் நினைத்துக் கலவரப்பட்டாள். செவ்வந்தியும் ராக்காயியின் நிலைமையிலேதான் இருந்தாள். அவள் நிதானமின்றி நடந்துகொண்டிருந்ததால் வலதுகால் பெருவிரல் பாதையின் குறுக்காகக் கிடந்த வேரில் தட்டுப்பட்டது. அடிப்பட்ட கால் நடக்க நடக்க சோர்ந்து களைத்ததுமாதிரி இருந்தது. அவள் அதை வெளிக்காட்டாமல் புண்சேர்ந்த காலை இழுத்து இழுத்து வலிமையில் நடந்துகொண்டிருந்தாள்.
சோணமுத்து எதையோ மனதில் திட்டம் தீட்டிக்கொண்டு வந்தவன் போலத்தான் இருந்தான். காவல் கொட்டில் அருவே வரவும் இருந்தாப்போல அவன் கதை மாறியது.
"செவ்வந்தி நேத்து நீஆக்கி எனக்கு திங்கிறதுக்குக் குடுத்த காளான்கறி சோத்துக்குப்பொறவா, எனக்கிண்ணா வேற ஒண்ணையுமே பொறவா சாப்பிடவேபுடிக்கல. அப்புடியா காளான் கறியிலயா இருந்த அந்த ஒறப்பும் புளிப்பயும், தேடி இப்பயுமா சப்புக்கொட்டி நிக்குது எண்ட நாக்கு” விசமத்துக்குத்தான் இப்படியெல்லாம் அதிலே வந்ததும் சொல்கிறான் என்று செவ்வந்தியும் ராக்காயியும் உடனே தெரிந்துகொண்டார்கள். செல்வநாயகமும் அந்த நேரம் செவ்வந்தியின் பெயர் யார் சொல்லியதாய் இப்போது என் காதில் கேட்டது என்பதை அறிய வெளியிலே வந்து பார்த்தான்.
உரக்க அப்படி ஏதோ பேசிக்கொண்டு வந்தவன் சோணமுத்துத்தான் என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது. ஆனாலும் செவ்வந்தியும், ராக்கா துயரசுேச0uவிகள் O 365 0

Page 189
யியும் அவனோடு சேர்ந்து அதாலே போகக் கண்டதில் அவனுக்கு அதிர்ச்சியும் வியப்புமாய் இருந்தது. சோணமுத்துவோடு போகின்ற அவர்களை அதற்குப் பிறகு அதிலே நின்றபடி ஒருகணம் கூடப் பார்ப்பதற்கு அவனுக்குப் பிறகு தைரியம் வரவில்லை. தன்னிடம் உள்ள அந்தக் கெளரவத்தோடு அவன் உடனே கொட்டிலுக்குள்ளே போய்விட்டான்.
செல்வநாயகம் வெளியே வந்துவிட்டு அதிலே நின்றபடி தங்களைப் பார்த்துவிட்டுப் போனதை, சோணமுத்து பார்வையை திருப்பாமல் பார்த்துக்கொண்டே வந்தான்.
அவன் முகம் மகிழ்ச்சியாய் இருந்தது.
"நான் கட்டிக்கப்போற பொம்பிளயோட சேந்து கொளத்துக்குப் போறத ஊரே பாக்கட்டும்” என்று பெலத்துச் சொல்லிவிட்டு அவர்களோடு சேர்ந்து அவன் நடந்துகொண்டிருந்தான்.
சோணமுத்து தங்களைப் பழிவாங்குவதற்கென்றே இப்படியெல்லாம் பேசிக்கொண்டபடி வந்துகொண்டிருக்கிறான் என்று தெரிந்ததும், சகோ தரிகள் இருவருக்கும் மனம் சுருங்கிப்போய் எரிச்சலும் ஏற்பட்டது. செவ்வந்திக்கு அதிலே தங்களை செல்வநாயகம் நின்று பார்த்துவிட்டுப் போன அந்தப் பார்வையானது, அப்பாலே நடந்துகொண்டிருக்கும் நேரத்திலும் மனதில் திரும்பவும் ஒட்டி ஒட்டி கவலையைக்கொடுத்தது. அவளுக்கு நடக்கக் கால்கள் தடுமாறிக்கொண்டே இருந்தன.
ராக்காயிக்கு மாமனின் செய்கையில் கோபமும் வெறுப்பும் ஏறியது. மனம் தெறிப்பதுபோல ஒரு வலி ஏற்பட்டது. மாமனை இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்கும் ஒரு விதமாக அவனை அப்படியே பிய்த்தெறிந்து விட்டு ஓடிவிடவேண்டும் போல அவளுக்குகிருந்தது.
ஆனாலும் கொஞ்சதூரம் அவள் நடக்க அது விலகி அமைதியாகி விட்டாள்.
குளத்துக்குப் போகும் பாதையில் நிற்கும் மரங்களினதும் மேற்பரப்பில் பறவைகள் அமர்ந்து எழுந்தும் பறந்தன.
“உங்களுக்கு ஏன் மாமா இந்தக் கஷ்டம் முன்னபின்னயெல்லாம் நானும் அக்காவும் கொளத்துக்கு இந்த வழியா போயிவந்தநாங்க தானே. அப்புடி ஒண்ணும் கொளத்துக்குப் போவ எங்களுக்குத் துணைவேணுமெண்ணு எங்களுக்கு இல்லயே.?” என்று சோணமுத்துவைப் பார்த்து ராக்காயி கேட்டாள்.
“என்ன கத அது.? அது எல்லாமே முன்னவா ஓங்களுக்கு
o 366 O ரீ.பி.அருணானந்தே

இருந்திருக்கலாம். இப்பவா ஏதாவது ஒங்களுக்கு நடந்துப்பிட்டா ஊரெல்லாம் என்னிய பாத்தில்லே சிரிச்சுக்கும்.”
சோணமுத்து இப்படி சொல்ல தலைக்குமேல் உள்ள வானத்தைப் பார்க்கிறமாதிரி தலையை உயர்த்திப்பார்த்துக்கொண்டு சிறிது தூரம் நடந்தாள் ராக்காயி. இப்படியெல்லாம் கனமான கதைசொல்ல சோணமுத்து மாமன் தெரிந்து வைத்திருக்கிறானே என்று அவளுக்கு அப்போது இருந்தது.
சோணமுத்துவை விலக்கி விலக்கி நடந்தவாறு குளத்தடிப்பக்கமாய் வந்து சேர்ந்த பிறகு செவ்வந்திக்கும், ராக்காயிக்கும் சோர்வாக இருந்தது. அவ்வேளையில் தொங்கல் குளக்கரைப்பக்கமாக காளியை யும் அதிலே காணக்கிடைக்கவில்லை. ராக்காயியும் செவ்வந்தியும் அதிலே வந்த பிறகு குளக்கட்டுச் சரிவாலே இறங்கினார்கள். சோணமுத்து பின்குளக்கட்டுச் சரிவாலே இறங்கிப் போய் ஒரு மரத்தின் கீழ் இருந்தபடி வயலைப்பார்த்துக்கொண்டிருந்தான்.
சகோதரிகள் இருவரும் உடைகளை மாற்றிக்கொண்டு நீரருகே சென்றார்கள். நீருக்குள் வெள்ளிநிற இதழ்கள்போல 'கணையன்’ சிறு மீன்கள் பரவி மிதந்தன. ராக்காயி காலால் நீரைத் தொட்டதும் மூழ்கி மறைந்தன. செவ்வந்தி அந்தத் தண்ணிருக்குள் கால்வைத்தும், குளிர் அவளின் மனத்தைத் தொடவில்லை. அழவேண்டும்போலிருந்தது. அழுதால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் எதை எண்ணி அவள் அழுவது..?
கொஞ்சம் முன்னால் காவல் கொட்டிலடிக்குப் பக்கத்தாலே அவர்கள் வருகிறபோது செல்வநாயகம் அவர்களைப் பார்த்த பார்வை சோகம் நிரம்பியதாகவே அவளுக்குத் தெரிந்தது. மீண்டும் உன்னைப் பார்க்கும் யோகம் எனக்கு கிடைக்குமா? என்பதைப்போலத்தானே இருந்தது அவனின் பார்வை. அந்தப் பார்வையின் பார உணர்வுகளிலே எவ்வளவு ஏக்கம். துன்பமே உருவான செவ்வந்தியின் முகத்தைப் பார்த்துவிட்டு தண்ணிருக்குள் இறங்கி நின்ற ராக்காயிக்கு கோபம் வந்துவிட்டது.
"நீ அழுது வடிஞ்சு கிட்டு இருக்காம இறங்கி உள்ள வந்து குளிக்கா..? ஏதோ கண்ணு போனமாதிரி நிண்ணு கவலப்படுறே.? உன்ன அந்த ஐயாகிட்டயா நானில்லா ஒழுங்கு பண்ணி ஒப்படைக்கிறது.? அவரு கிடக்கிறாரு நீ பயந்துக்காத வா குளி.”
என்றாள் ராக்காயி. அவள் இப்படிச் சொன்னபிறகும். "எனக்கு என்னதான் ஆகப் போகுதோ கடவுளே..?” என்று சொல்லிக்கொண்டு செழிப்பில்லாத தன் முகத்தை தண்ணீரில் கழுவிக்கொண்டு, பிறகு
துயரசுேரப்பவிர்கள் O 367 O

Page 190
தலை முழுகத் தொடங்கினாள் அவள்.
வயல்பக்கமாய் பார்த்துக்கொண்டிருந்த சோணமுத்து, நடக்கப்போகிற தன் கல்யாணக் காட்சியை நினைத்துக்கொண்டு, கனத்த சிறு கல்லு களை முதலில் பொறுக்கி எடுத்தான். கல்லெறியும் குணம் அவனுக்கு வந்துவிட்டது. வயல் வேலியில் கனத்த மரம் நின்றது. அதுதான் கல்லெறிய தோதாக அவனுக்குத் தெரிந்தது. மரத்தின் கிளை பிரிந்த இடத்துள்ளாலே இடைவெளியை அவன் கண்டான். அந்த இடத்துக்காலே வீசப்பட்டுப் போகக் குறிப்பாகப் பார்த்து அவன் கல்லெறியத் தொடங்கினான்.
"அக்காவும் தங்கச்சியும் ஒண்ணாச் சேர்ந்துகிட்டு எனக்கா விடுகை விர்ஹீங்க.” கடைசிக்கல்லை கையில் இறுகப்பற்றினான்.
"சோணமுத்து வைச்ச குறிதப்பாது.” என்று சொல்லிக்கொண்டு அச்சுறுத்தும் அளவுக்கு வீச்சாக அவன் அதை பிறகு வீசினான்.
செவ்வந்தியும் ராக்காயியும் குளித்து முடித்துவிட்டு தலைமயிரை உணர்த்திக் காயவைத்தார்கள். அதற்குப் பிறகு சிகப்பும் கறுப்புமாயுள்ள சட்டைகளை மாற்றிக்கொண்டு குளக்கட்டில் ஏறினார்கள். சோணமுத்து அவர்களைக் கண்டதும் வேகவேகமாக கட்டுக்கு மேலே வர அந்தச் சரிவால் ஏறினான்.
அவன் மேலே ஏறிவருவதைக் கண்டுவிட்டு ராக்காயி "இப்படி ஒரு கதையை இவருக்குப்போட்டல் என்ன..” என்று நினைத்துவிட்டு,
"ஏன்மாமா நீங்க குளிக்கல.? நீங்க குளிச்சிட்டு ஆறுதலா வந்துக்குங்களேன்.? நாங்க இங்கிட்டு வழியா வீட்டுக்குப் போய்க்கிறோம்.” என்றாள்.
ஆனால் சோணமுத்துவுக்கு ராக்காயி சொன்னதில் ஏதோ விளங்கிப் போய்விட்டது மாதிரி இருந்தது.
"இந்தக் கொளத்தில உங்க உயரத்துக்கு இடுப்புக்குமேல தண்ணி இருந்தா எனக்கு அது முழங்கால் தண்ணியாத்தான் இருக்கும். இதில இப்பவா குளிக்கிறதக்காட்டி நம்ம கிணத்தில நாலுவாளி அள்ளித் தலேல குளிச்சுக்கலாம் தானே.? நடவுங்க நடவுங்க.."என்றான் அவன்
s
அவன் அவ்வாறு சொன்னதைச் "செய். போ.” என்கிற மாதிரியாகச் சொல்லிவிட, ராக்காயி பல்லை இறுக்கிக் கடித்தபடி நடந்து கொண்டிருந்தாள். பாதையில் கண்ணுக்குச் சிக்கின காய்ந்த விறகுத் தடிகளிலுள்ள சின்ன முள்ளு, சில்லி முள்ளுகளைப் பார்த்துக்கொண்டு
O 368 O ரீ.பி.அருளானந்தே

செவ்வந்தியும் மனதில் வெறுமையோடு நடந்துகொண்டிருந்தாள்.
சோணமுத்து அவர்களை தனக்கு முன்னால் கடந்து போவதற்கு விட்டுவிட்டு பின்னாலே நடந்துகொண்டிருந்தான். “போங்க போங்க அக்கா தங்கச்சி ரெண்ணு பேருக்குமா மூக்கணாங்கயிறு இந்த சோணமுத்துத்தாண்டி குத்தி இழுத்துக்கட்டப் போறான்.?” அவன் சொன்னது முன்னால் நடந்துகொண்டிருந்த சகோதரிகளுக்குக் கேட்க வில்லை.
சோணமுத்து தான் சொன்னதை திரும்பத் திரும்ப நினைத்து, விட்டு விட்டுச் சிரித்தபடியே நடந்துகொண்டிருந்தான்.
کے 4ے
சோணமுத்துவுக்கும் தனக்கும் இன்னும் ஒரு வாரமளவில் நடக்கப்போகும் திருமணத்தைப் பற்றி யோசிக்க யோசிக்க, மண்டை
காய்ந்து போன மாதிரி ஆகிவிட்டது செவ்வந்திக்கு. அன்று காலை வேளையில்,
“இண்ணிக்குக் கட்டாயம் பின்னேரவாட்டி அந்த ஐயாகிட்ட நானு போயி எல்லா விஷயத்தையும் பூரா அவரிகிட்டவா சொல்லி முடிவ தெரிஞ்சிக்கிட்டு வாறேனுக்கா” என்று ராக்காயி செவ்வந்தியிடத்தில்
சொன்னாள்.
"நீ அங்கிட்டு போறத மாமன் பொறவு கண்ணுட்டாருண்ணா?” அவள் பயப்பிட்டுக் கொண்டுகேட்டாள்.
“இப்பவா நாங்க கடைசிக் கட்டத்திலயா தானே நிக்கிறோம். பயந்து கிட்டிருந்தா ஏதாவது நாங்க செஞ்சிக்க ஏலுமாக்கா..? யேன் தலய யாரும் அறுத்தெறிஞ்சிட்டாலும் பறவாயில்ல. நானு இண்ணிக்குக்
கட்டாயம் அங்கினயா போவத்தான் போறேன்.?”
என்றாள் அவள்.
செவ்வந்திக்கு தங்கை அப்படியெல்லாம் பெரும்போக்காகப் பேசுவதுபோலவே இருந்தது. அதனால் அவள் வரப்போகிற பின் விளைவுகளையும் சற்றுச் சிந்தித்தாள்.
“ஒண்ணுக்கு ரெண்டா யோசின பண்ணிக்கடி. உன்ன அந்த ஐயாவுட கொட்டிலிலயா சோணமுத்துமாமன் கண்ணுட்டாருண்ணா இந்த சேரியிங்களில உள்ள மூணு நாலு ஆளுங்கள சேத்து நீ
glugs sssöuskissti O 369 O

Page 191
அங்க போயி அந்த ஐயாவோட நிண்ணு கதைச்சதுங்கள அவரு சொல்லிக்கமாட்டாரு. அதுக்குப் பதிலா இங்கிட்டுள்ள பொண்டு பொடிசு நண்டான் சுட்டானுண்ணு அத்தின கூட்டத்தையும் கூட்டி வைச்சுத்தான் ஒன் மானத்த வாங்குவாரு அவரு.?”
செவ்வந்தி இவ்வாறு சொல்லவும் ராக்காயிக்கு மொறுமொறு என்றவாறு முறுகியது.
"அக்கா நான் செத்தவிடத்தில உசிரு போயிரும். யேன் மானத்த வாங்கணுமுண்ணு ஆராச்சும் வெளிக்கிட்டாங்களுண்ணா ஒலக்கய எடுத்து அவுங்கள பன்னியடிச்சு கொண்ணுப்புடுறமாதிரியா நானும் கொண்ணுப்புடுவேன். .இந்த விசயத்திலயா யேன்தலயே போய்க்கிட்டாலும் சரி எப்படியாச்சும் இத நான் செஞ்சுதான் முடிச்சுக்குவேன்.?”
ராக்காயி கைகளையும் கால்களையும் இறுக்கிப் பிடிச்சது மாதிரி வைத்துக்கொண்டு சொன்னாள்.
"ஐயோ எனக்கு மனசே சரியில்ல. அப்படியாயில்லாம் ஒனக்கு ஆயிடிச்சிண்ணா பிறவு யேன் கண்ணால ரத்தந்தான் ஒழுகும். அதுக்குப் பொறவு யேன் உயிரே வெளியேறிடும். நானு செத்துப் போயிடுவேன்.”
"சீச்சி. யின்னக்கா யிது ஒனக்கேன் யிந்தப் புத்தி.? ஒனக்கு யேன் எந்த நேரவாட்டியும் எத சொல்லிப்புட்டாலும் கண்ணிரா முட்டுது? ..நீயுக்கா ஒண்ணுக்குமே கவலப்படாத தைரியமாயிரு. இந்தப் பெரச்சினேயில இருந்து உன்னய நானு பொழைச்சுக் காமிக்கிறேன். எப்புடியும் செயிச்சுருவியக்கா நீயி..?”
"ஆமாடி நீ அப்பிடீயெல்லாம் சொல்லிக்கிறே. நெஞ்சுக்கூட்டில நீ வைராக்கியத்தோட சொல்லறே. ஆனா எனக்கிண்ணா மனசே செத்துப்போனமாதிரி இருக்கு. நானு அப்பிடியெல்லாம் ஒடிப்போனா, பொறவு உங்க மருவாதயெல்லாம் அத்துவிட்ட மாதிரில்லா போவும். ஊர் ஆளுவளெல்லாம் பொறவு உங்கள என்ன என்ன எல்லாம் சொல்லுவாங்களோ..?”
“இந்தா இந்த கதயில்லாம் நீயேன் இப்பவா கதைக்கிறே? கண்ணாலம் கட்டிக்கப் போறவ நீ உன் இஷ்டத்துக்குத்தானே நீ கண்ணாலம் கட்டிக்கணும்? இதயெல்லாம் பொறவா என்னிட்ட ஊரே கேட்டாலும் பறவாயில்ல! நாடே கேட்டாலும் எனக்குண்ணும் வரப்போறதாயில்ல.! ஆனா நீ தெம்பு திறமாயிரு.! இப்பவா நீ கண்ணத்தொடச்சிக்கிட்டு காரியத்தப்பாரு..!”
O 370 O நீ.பி.அருளானந்தே

ராக்காயி இப்பவும் அப்படியாய் அவளுக்குத் தைரியம் சொல்ல செவ்வந்தி ஒருவாறு மனத்தைத் தேற்றிக்கொண்டாள்.
“இப்ப எனக்குக் கொஞ்சம் உசிரு வந்தமாதிரிக் கெடக்கு. நாள் பூரா நாணு எதையாச்சும் யோயிச்சாலும் ஒண்ட யோசனேயிலதான் யேன் யோசனையும் கடசில போயி அடங்குது. நானு யேன் அழுது பொலம்பணும்? ஏன் நானு சோணமுத்துவ கண்ணாலம் கட்டிக்கிட்டு பொறவா சீரழிஞ்சு சாகணும்.? அவரு நான் குடிக்கிற கஞ்சியிலயுமா பொறவு மண்ணு விழுத்துவாரு.? ஆனா அந்த ஐயாவுண்ணா என்னிய கண்காணாத இடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாலும் என்னிய நல்லாதா பாத்துக்குவாரு.”
மனதுக்குள் இறுக்கிப் பாரமாக கனத்த ஒன்றை உடைத்துவிட்ட மாதிரி யாக செவ்வந்தி மாறியிருந்தாள்.
ராக்காயிக்கு அவளின் தைரியத்தைப் பார்த்துப் பிடித்ததாய்விட்டது.
"அப்புடீண்ணா நானு இண்ணிக்கி பின்னேரவாட்டியா அந்த ஐயா வுட்டயா போயி யில்லாத்தையும் கேட்டு முடிவ தெரிஞ்சிக்கிட்டு
வந்துள்றேன் என்னக்கா..?” என்றாள் அவள்.
செவ்வந்தி அவள் சொன்னதுக்குத் தானும் இசைந்ததுபோல முதலில் தலையை ஆட்டினாள்.
"ஆனாலும் ஒண்ணு இப்பவா செஞ்சுக்கிறதுக்கு நாங்க இருக்கம்மா..?” என்று தன் மனதில் எஞ்சியிருக்கும் ஒரு விஷயத்தை சொல்லத்துடிப்ப போல இருந்தாள் அவள்.
ராக்காயி "என்னக்கா சொல்லப்புறோ..?” என்று கேட்டாள்.
“இந்தாம்மா இதில நீயி உன் அக்காவோட பேச்சக் கேட்டுத்தான் நடந்துக்கணும். நம்மஞக்கும் சாமி குத்தம் ஏதாச்சும் இருக்கலாமில்ல.?”
“அதுக்கு.?”
"அதுக்கு என்ன நாங்க செய்யிறதுண்ணா கோயில போயி சாமிய கும்பிட்டுக்கிட்டுத்தான் ஏதாவது செஞ்சிக்க கெளம்பணும்.”
“சரி நானும்தா போவமுங்கிறேன் பொறவாயென்ன.?”
"அப்புறம் மாடாசாமிக்கு முன்னதா பூக்கட்டிப்போட்டுப் பாத்திடு
வோம்.?”
துயரம் சு:0uவீர்கள் O 371 O

Page 192
"அது எதுக்குப் பாக்கப்போறே.?”
"நீ போற காரியம் நல்லா வரணுமுண்ணு ஒரு நம்பிக்கதா. மாடசாமி உத்தரவு குடுத்துதுண்ணா. போற காரியமும் சித்திக்குமே..?”
"அப்ப எல்லாமே சாமியே மாத்திக் குடுத்துக்குமா..?”
"நீ கோளாறு பண்ணாதீம்மா. இதெல்லாமே செஞ்சுக்கிட்டா. அப்புறம் சாமிய நம்பின புத்தியா நம்ம புத்தீங்கிறது இருக்கும். சாமியே பெறவா துணையா நிண்ணு நமக்கெல்லாம் நினைச்சுக்கிட்டத செஞ்சு குடுப்பாரடி..?”
“யாத்தேடி யாத்தே உங்க நம்பிக்கையோடயே நானும் அப்புடியா நடந்திருக்கிறேனக்கா. அப்புடீண்ணா இப்பவே நாம மாடசாமி கோயில் பக்கமா போய்க்கிருவமே?” என்றாள் அவள்.
செவ்வந்தி "சூடம் சாம்பிராணி போயி நீ வாங்கிட்டுவா” என்று அவளை கடைக்குக் காசு கொடுத்து அனுப்பினாள். அவள் கிளம்பிப் போக செவ்வந்தி முற்றத்தைப் பெருக்கிவிட்டு முகம் கழுவினாள் பாலை மரத்துப்பக்கத்தில் வளர்ந்திருந்த பூச்செடிகளிலிருந்து வெள்ளைப்பூ, மஞ்சள் பூ, இரண்டையும் இலைகளை எடுத்துச் சுற்றிக் கட்டிக் கொண்டாள். ஒரு சிறு பூமாலை போதுமென்று நினைத்து அதையும் பூப்பிடுங்கி கோத்தெடுத்து மாலையாக்கினாள்.
அவள் எல்லாவற்றையும் தயார்படுத்திக்கொண்டு நிற்க ராக்காயியும் வந்து சேர்ந்தாள். இருவரும் அப்படியே இடது கைப் பக்கமுள்ள ஒழுங்கை வழியாகப் போய் வேப்பமரத்திலிருந்து மூன்றாம் வீடு தள்ளியுள்ள கருங்காலி மரம் நிற்கும் இடத்தடிக்கு வந்தார்கள். அந்தக் கருங்காலி மரத்தருகே சிறிய வெளியாக இடமும் அமைந்திருந்தது. மாடசாமி தெய்வம் அமர்ந்த இடமும் அந்தக் கருங்காலி மரத்துக்குக் கீழேதான்.
அதிலே வந்துவிட்ட தங்கள் இருவரையும் கண்டு பூரித்துப்போன நிலையில் மாடசாமி தெய்வம் இருப்பதுபோல சகோதரிகள் இரு வருக்கும் பார்க்கத் தெரிந்தது. மாடசாமி கழுத்தில் காய்ந்த பூச்சருகு மாலை காற்றில் சரசரத்துக் கொண்டிருந்தது. செவ்வந்தி அந்த மாலையைக் கழற்றி ஒரு பக்கம் போட்டாள். " மாடசாமிக்கு பொம்புளங்க நாங்க மாலை போட்டா குத்தமாடி.”
என்று அவள் ராக்காயியைக் கேட்டாள்.
"சாமி தானே. அதுக்கின்ன ஆம்பிளங்க பொம்புளங்க எண்ணுக்கிட்டு ஒரு பாகுபாடு. நீ போடுக்கா..?” என்றாள் அவள்.
O 372 O ஜீ.பி.அருணானந்தல்

செவ்வந்தி அவள் சொல்லிவிட்டாள் என்ற நம்பிக்கையில் கண்களை மூடி நின்று சிறிதுநேரம் கும்பிட்டாள். பிறகு தன் ஆசையெல்லாம் நிறைவேற வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, கனவு நிறைந்த விழிகளை விரித்தபடி கையில் கிடந்த மாலையை சாமி கழுத்தில்
போட்டாள்.
கருங்காலி மரத்திலிருந்த கொக்கு ஒன்று எச்சம் போட்டது. அதைச் சூ' என்று விரட்டிவிட்டு நின்றாள் ராக்காயி.
மாலையோடு உள்ள சாமி கண்களை நிறைப்பதுபோல எழுந்து வந்து கொண்டிருப்பது மாதிரி செவ்வந்திக்குப் பார்க்கவும் இருந்தது. சாமியைப் பார்த்தபடி கற்பூரம் ஊதுபத்தி அவள் கொளுத்தினாள். செவ்வந்திக்கு நினைத்துக் கும்பிடுவதற்கு நூறு விஷயங்கள் ஞாபகம் வந்து கொண்டிருந்தன. ஆனாலும் செல்வநாயகத்தோடு போய் தானும் ஒரு வழிக்குச் சேர்ந்து வாழவேண்டுமென்பதுதான் தொண்டையை அடைத்துக்கொண்ட துக்கமாய் இருந்தது.
அந்த ஒரு விடயத்தை மாத்திரம் கடைசியாக யோசித்துக்கொண்டு “எனக்கு நல்ல வழி வரவேணும் சாமி” என்று எல்லா சாமிகளையும் ஒருமுறை கும்பிட்டுக் கூப்பிட்டுக்கொண்டு கையில் தான் வைத்திருந்த ரெண்டு பூக்களையும் சாமியின் காலுக்கருகில் விழுகிற மாதிரி அவள்
போட்டாள்.
“ரெண்டில ஒண்ட எடடி” என்று ராக்காயிக்கு பிறகு அவள் சொன்னாள்.
ராக்காயி தட்டுத் தடுமாறின மாதிரி ஒரு பூவை கையில் எடுத்தாள். அதை வாங்கி செவ்வந்தி பிரித்துப் பார்த்தால், மஞ்சள்பூ!
“அட மஞ்சளாயில்ல பூ வந்திருக்கு.?” என்று செவ்வந்தி பார்த்துவிட்டு மனம் சோர்ந்ததாய் அவள் நிற்க,
“அட இன்னுமொருவாட்டி அவிழ்த்தது மாதியே அந்தப் பூக்கட்டக் கட்டிப் போட்டுப்பாருக்கா..? கண்ண மூடிக்கிட்டு நான் எடுத்துத் தந்திடுறேன்.?” என்றாள் ராக்காயி,
"ஆமா நீ சொல்லிக்கிறமாதிரி கடேசியா அந்த முடிவுதான் சரியான தாவும் சாமி சொல்லிக்கிறமாதிரியும் இருக்கும்.” என்று தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டு குலைந்த பூச்சரையைக் கட்டித் திரும்பவும் இரண்டையும், கும்பிட்டுச் சாமிக்கு முன்னால் போட்டாள் அவள்.
துயரச் சுடீ0uவிர்கள் O 373 O

Page 193
இந்த முறை ராக்காயி பூச்சரையை எடுத்ததும் தானே பிரித்தாள்.
"வெள்ளப்பூவுதான் வெற்றிதானுக்கா உனக்கு? என்று சொல்லியவாறு ராக்காயி பூவை அவளிடம் நீட்டினாள்.
அதைப்பார்த்தபிறகு மகிழ்ச்சிதான் இருவருக்கும். கலகலவென்று இருவரும் சிரித்தார்கள்.
செவ்வந்தி அதற்குப் பிறகு ஆடாமல் அசையாமல் அதிலே கண்களை மூடிக்கொண்டு நின்றபடி சாமி கும்பிட்டாள்.
மேய்ந்துவந்த மாடுகள் தாகத்துக்குத் தண்ணீர் குடிப்பதற்காக தொலைவில் அங்கங்கே திட்டுத் திட்டாக கிடக்கும் குழிகளிலுள்ள தண்ணிரைத் தேடி அந்த இடத்தாலே போய்க்கொண்டிருந்தன.
மாடுகளின் நாற்றத்தோடு குளம்புகளினதும் காலடி ஒசைகளும் காதில் கேட்க, கும்பிட்டதை விட்டுவிட்டு கண்ணைத்திறந்து பார்த்தாள் செவ்வந்தி *
அவள் கண் திறந்ததும் தூரத்துப் பார்வைக்கு முதலில் அகப்பட்ட வன் சோணமுத்துதான். வேப்பமரம் தாண்டி அந்த மூன்றாம் வீட்டுக்கு முன்னாலே நின்றுதான் அவன் இவர்களை அப்போது பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன மாதிரியான ஒரு பார்வை அவனின் பார்வை? அவனின் அந்தப் பார்வையானது செவ்வந்தியையும் ராக்காயியையும் குழிதோண்டிப் பார்க்கின்றமாதிரியாகவே இருந்தது. மாற்றி மாற்றி உலக்கை விழுத்துகிற குத்தாக அவன் இருவரையும் மாறி மாறி அதிலே நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தான்.
ராக்காயிக்கு சோணமுத்து அதிலே நின்றபடி தங்களையே அப்படிப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்க்க ஆத்திரம் வந்துவிட்டது.
"இந்தாளு என்ன ஒரு வேலவில்லடியும் இருந்துக்காம நம்ப கையிக் கிளயும் காலுக்கிளயுமா பூனமாதிரி சுத்திக்கிட்டேயிருக்கு. எங்கள அரைச்சு ஒரு முழுங்கா முழுங்கிறமாதிரில்ல அந்தாளு ஊர்று எண்ணுகிட்டு பார்த்துக்கிட்டேயிருக்கு. இரு இரு முள்ளு வெறவு மாதிரியா உன்னய நானு ஒரு நாளு முறிச்சுப் போடுறேன்.?” என்று அங்கே பார்த்துக்கொண்டு அவள் ஒரு மொற மொறச்சுக் கொண்டு சொன்னாள்.
அவள் அப்படியே கோபத்தில் சொல்ல
“காரியமில்லாம் பொறவு நமக்கு கெட்டுப்போயிரும்டி. நீ பேசாம
o 374 O ரீ.பி.அருணானந்தச்

வந்துக்க நாங்க இப்பிடியே நம்ம வீட்டயா போய்க்கிருவோம்” என்று செவ்வந்தி அவளுக்குச் சொன்னாள்.
செவ்வந்தி அவ்விதம் சொல்லியும் அதாலே சோணமுத்து நின்ற இடத்தருகாலே போகும்போது ராக்காயி மாமனை ஒரு மொற மொறைச்சதுமாதிரி பார்த்துக்கொண்டு நடந்தாள். அவளுக்கோ மிளகாய்ப்பழம் உடைத்து தன் மென்மையான தோலில் யாரோ பூசிவிட்டதைப் போன்ற எரிச்சல்தான். ஆனால் செவ்வந்தியோ பயத்தில் ராக்காயியோடு உரசிக்கொண்டு பாவப்பட்ட ஜென்மம் மாதிரித்தான் நடந்து கொண்டிருந்தாள்.
イろ
சோணமுத்து தங்களுக்குப் பின்னால் வேவுபார்ப்பதைப்போல் முன்னும் பின்னுமாக திரிந்து கொண்டிருப்பதைக்கண்டு செவ்வந்தி மிரண்டு போனாலும், ராக்காயி மனம் அசையாமல் இருந்தாள்.
ஆனாலும் பின்னந்தி வெயில் விழுகின்ற நேரமாய் ராக்காயிக்கு ஒரே யோசனையாக இருந்தது. தான் காவல் கொட்டில் பக்கம் போகி றதைப் பார்த்துவிட்டு சோணமுத்து மாமன் பிறகு அவ்விடத்துக்கு வந்துவிட்டால் அக்காவின் காரியம் கெட்டுவிடுமே, என்று நினைத்து அவளும் பயப்பட்டாள். “ஏலே உலக்கச்சி. யாரக் கேட்டடி நீ அங்கிட்டெல்லாம் போறே.?” என்று போற இடத்தில் குறுக்க வந்து விழுந்த மாதிரி நின்று அவன் இப்படியெல்லாம் கேட்கக் கூடியவன்தான்.
அப்படி சில வேளை அவன் கேட்டாலும் அதைப்பற்றி அவளுக்கென்றால் சற்றும் பயமில்லைத்தான்.
"ஏய் நீ ஆர்ரா கேட்க.?” என்று அவனுக்கும் தனக்குமுள்ள உறவு முறையெல்லாம் ஒருபக்கம் தூக்கி எறிந்ததாய்ப் போட்டுவிட்டு அவளும் நேருக்குநேர் நின்று துணிவாக கேட்கக்கூடியவள்தான். ராக்காயி ஒரு போக்கானவள். "மாட்டைப்பின்னால வெரட்டிப் போற மாதிரி எனக்குப் பின்னாடி ஏன் நீயி வாறே.?” என்று சொல்லி ஒரு கல்லை அவள் தூக்கினாளென்றால்.
அவனும்.
“விட்டால் போதுமடா சாமி.” என்று கொண்டு சிலவேளை ஓடிவிடவும் கூடும்.
துயரச் சுoப்பவிர்கள் O 375 O

Page 194
இதெல்லாம் அவளுக்கு தன் விஷயமாயிருந்தால் சரிதான். அதை யெல்லாம் இப்படி யாரோடும் சரி நேருக்கு நேர் நின்று பேசிச் சண்டை பிடித்து அவள் வென்றுவிடுவாள். ஆனால் இது அவள் சம்பந்தப்பட்ட விஷயமாயில்லாமல் அக்கா சம்பந்தப்பட்ட விஷயமாயிற்றே? நடக்கப் போகிற விஷயம் யாருக்காவது தெரிந்தால் பிறகு எல்லாமே குடிமுழுகிப் போனமாதிரியாகப் போய்விடும். அதன் பிறகு ஒன்றுமே செய்துகொள்ள வழியில்லாமல் கேணச்சியாக தானும் போய் குடிசை மூலையிலே ஒரு பக்கம் கிடக்க வேண்டியதாயல்லவா வந்துவிடும். என்ற பல விதமான யோசனைகளோடு வேலிப் படலையைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் ராக்காயி. கோயில் வளவு வேலிப் பக்கமிருந்து சாம்பலை அள்ளித் தெளித்தமாதிரி காற்றடித்தது. ராக்காயி தான் ஒவ்வொரு நாளும் அந்த வீதியிலே பொறுக்கிக் குமித்துக் குமித்து எருவாக்கி வைத்திருந்த பசுமாட்டுச் சாணியுள்ள பக்கத்திலே போய் நின்றாள்.
அவள் எருக்குமியலுக்குப் பக்கத்திலே போய் நிற்க குடிசை வாசலில் நின்றபடி "இனி என்ன நடக்குமோ..? ஏது நடக்குமோ..?” என்று நெஞ்சைப் பிடித்தபடி சிதறின மனத்தோடு அவளையே அங்கிருந்து பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் செவ்வந்தி
ராக்காயி அவ்விடத்திலே நின்றுகொண்டு அங்கங்கே ஊடுருவினமாதிரி முன்னாலே தன் பார்வைக்குத் தெரிந்த குடிசைகள் பக்கமெல்லாம் பார்த்தாள். அவளுக்கு சோணமுத்து அவ்விடங்களில் நிற்கின்ற போகின்ற சிலமன் ஒன்றுமாகவம் தெரியவில்லை.
அப்பொழுதுதான் சோணமுத்துவைப் பற்றிய இன்னொரு யோசனையும் அவளின் மூளையிலே வந்தது. பின்னேரத்தோடு பின்னேரமாய் சோணமுத்து சாராயக் கடைக்குப் போய்விடுகிற விஷயம் அவளும்தான் இதற்குள் அறிந்தும் வைத்திருந்தாள். பொழுதுபடுகிற நேரம் சேரிப்பக்கத்துப் பெண்டுகள் எங்கேதான் வெளிக்கிட்டு வெளியே போகப் போகிறார்கள்.? என்ற நம்பிக்கையும் சோணமுத்துவுக்கு இருந்திருக்கும். எனவே அவன் இப்போது சாராயக் கடைக்குத்தான் கண்டிப்பாகப் போயிருப்பான். பஜாரிலுள்ள கடைக்காரரின் கக்கூசுகளையெல்லாம் அவன்தான் போய்க் கழுவிச் சுத்தம் செய்துவிடுகிறதாலே கையிலே காசுக்கும் அவனுக்குத் தட்டுப்பாடில்லை. ஆகவே இந்நேரம் சோணமுத்து கட்டாயமா இந்தப் பக்கத்துக்கு வரவே மாட்டான்! என்று நினைத்துக்கொண்டு விறுவிறுவென்று அந்தப் பக்கத்தாலே நடந்து, ராக்காயி காவல் கொட்டில் உள்ள பக்கம் போய்க்கொண்டிருந்தாள். அவள் போகிற வேக நடையைப் பார்த்துவிட்டு, அந்த இடத்திலேயே நெஞ்சைப் பிடித்தபடி கீழே உட்கார்ந்து இருந்துவிட்டாள் O 376 O ரீ.பி.அருளானந்தச்

செவ்வந்தி
படபடவென்று அவளுக்கு நெஞ்சடித்தது. மேல் காலெல்லாம் வலித்தது. அந்தப் படபடப்புக்குள்ளே தனக்குள் அவள் பலவிதமாகவும் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அவளுக்கு மட்டும் கேட்கின்றமாதிரி இருக்கிறது ராக்காயி அங்கேபோய் செல்வநாயகத்தோடு கதைக்கும் சத்தம்.
“எப்படியாச்சும் காப்பாத்துங்கையா எங்க அக்காவ. இல்லாட்டி அவ உசிருகூட போயிருமையா.?”
ராக்காயி செல்வநாயகத்துக்கு சொல்லி அழுதுகொண்டிருக்கிறாள். செல்வநாயகமும் தீப்பிடிச்ச மாதிரி கலங்கி நிற்கின்றான்.
அவனும் ஏதோ சொல்கிறான். ஆனாலும் அதை ஏனோ இவள் தன் கற்பனையில் ஒரு வடிவம் கொடுத்து விளங்கிக்கொள்வதற்கு முடியவில்லை.
அவர் என்ன சொல்லியிருப்பார்?
அதையும் அவளே தனக்குள் கேள்வியாகவும் கூட ஒரு தடவை கேட்டும் பார்த்தாள். மீண்டும் மீண்டும் அதைத் தன் மனதுக்குள்ளே யோசித்தும் பார்த்தாள். ஒன்றுமே ஒழுங்காக அவளுக்குப் பிடிபட்டதாயில்லை.
ஆனாலும் செல்வநாயகம் சொல்கின்ற பதிலில் தன் தங்கை மகிழ்ச்சியில் முறுவலிப்பதைப்போன்றே அவள் நினைத்துப் பார்த் தாள். அவள் அந்தக் காட்சிகளையெல்லாம் இப்படியாகத்தான் இருக்கவேண்டுமென்று வலிந்த கணக்கில் சோடித்துக்கொண்டு நினைக்கவில்லை. அதில்லாமல் அவையெல்லாம் அவளுக்கு மிக இயல்பாக தென்படுகிறதாயிருந்தது. தட்டையான ஒவியத்திலுள்ள ஒரு பெண்ணின் முகம் எப்பிடியாக கண்திறந்து சிரிக்குமோ அதைப் போன்றே ஒவியச் சிரிப்பாயிருக்கிறது ராக்காயியின் முகம்.
அந்த அவளின் கனிவான முகம் அவளுள் மலர்ந்தபோது, மனம் தங்க மாம்பழத்தைச் சுமப்பதான ஒருவித சுகமாயிருந்தது செவ்வந்திக்கு. ஆனாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து தன்னைப்பற்றி கதைத்துக் கொண்ட அந்த சுமக்கமுடியாத ரகசியங்கள்தான் என்ன? அதெல்லாமே கண்களை மூடியதுமாதிரியாகத்தான் புலப்படாமல்இரு ந்துகொண்டிருந்தது அவளுக்கு. அதையெல்லாம் நினைக்க நினைக்க ஆவலில், அவள் மனம் பிறகு உடலையும் சேர்த்து அலைக்கழிப்பதைப் போன்றே ஆகிவிட்டது. சிறிதுநேரம் கடந்திருக்கும். செவ்வந்தி இன்னும் அந்த யோசனையி glugs assöVakissti O 377 O

Page 195
லேயே, முதுகும் வளைந்து விட்ட ஒரு நிலையில் இருந்து கொண்டிருந்தாள். பார்வை அவளுக்கு வேலிப்படலைப் பக்கமாகவே இருந்தது. அங்கே தங்கையின் வரவை காணக்கிடைக்காததில், அந்த இடத்தை விட்டு இன்னும் வெகுதூரமாகவும் அவளின் பார்வை நீளம் போட்டது. மனதில் ஆசை அதிகப்பட கால்களை நீட்டியும் இருந்தவாறே அவள் சோம்பல் முறித்தாள். பேச்சுக்குரல்கள் அவளுக்குக்கேட்டன. படலைக்கு வெளியே அவள் பார்த்தபோது உரக்க ஏதோ பேசியபடி வீதியாலே கொஞ்சம்பேர் போய்க்கொண்டிருந்தார்கள். அவளின் கண் அவர்களைவிட்டு திரும்பும் கணம், கைகளைத்தூக்கி தலைமயிரை ஒதுக்கியபடி படலையருகில் வந்துவிட்டாள் ராக்காயி முகம் நிறைய சிரிப்புடன் அவள் படலையைத் திறந்துகொண்டு வரு கிறதை கண்டுவிட்டு செவ்வந்தியும் உற்சாகமாய் எழுந்துநின்றாள். தங்கை நடு முற்றத்தடிக்கு வரமுன் அவள் மளமளவென்று நடந்து அவளுக்கருகில் போய்விட்டாள்.
“என்னடி அவர் சொல்லுறாரு என்னடி அவரு சொல்லுறாரு.?” தான் இப்படியெல்லாம் வாய்விட்டுக் கேட்டுகிறேன் என்பதில் அவளுக்கு ஒரு பக்கம் வெக்கம் வெக்கமாகத்தான் வந்தது.
தமக்கை அப்படிக் கேட்க ராக்காயி அவளைப் பார்த்து பல்லுத்தெரியாத மாதிரிச் சிரித்தாள்.
பிறகும் பல்லிகத்துகிற மாதிரி வெடிக்கிறது அவள் சிரிப்பு "இந்தச் சிரிப்பெல்லாம் சிரிக்காம எனக்கு சொல்லுடி நீ. என்ன அவரு சொன்னாருண்ணு.?” என்று அதற்குமேலே தனக்குப் பொறுக்க முடியாத அளவில் அவள் கேட்க.
ராக்காயி தமக்கையை குளிர்ந்த ஒரு பார்வை பார்த்தாள். "அக்கா எல்லாம் சரிக்கா. கண்ணிரும் வருத்தமுமா ஒறைஞ்சிக் கிடந்த உனக்கு இப்பவா விடிவு காலோம் வந்திடிச்சக்கா..!"
“நெசமாவா..?”
“பின்னே. ஐயா உன்னேய தன்னோடயா கூட்டிக்கிட்டு எங்கினயாச்சும் கண்காணாத இடத்துக்குக் கொண்டுபோய்கிறப் போறேன் என்கி றாரு..?”
O 378 O. ரீ.பி.அருணானந்தே

"ஐயையோ’
“என்ன ஐயையோ என்கிறே.? அப்படியாயில்லாம எப்படித்தான் நீ அவரோடயா சேந்துக்குவே.? உன்னய மேளதாளத்தோட அவருங் கூட தாலிகட்டி இவங்க வைக்கப்போறானுங்களா..? நடக்கிற கதையத் தானே நாங்க யோசிக்கணும்.?”
ராக்காயி சொல்லச் சொல்ல செவ்வந்திக்கு அழுகை அழுகையாக வருகிறது. கண்களில் கடகடவென்று கொட்டுகிறது கண்ணீர்.
“இந்த வீட்ட விட்டு ஒன்னய விட்டு எங்கப்பாவ விட்டுட்டு நானு எப்பிடீடி போவேன்.? .ஒண் நெனப்புத்தான் என் நெஞ்சுக்கயா நெறஞ்சு நிக்குது. நானு எங்கிட்டுப் போனாலும் நீ போடுற சத்தம்தான் என் காதுகளிலயா கேட்டுக்கிட்டிருக்கும்டி. இந்த வீட்டில எங்க ஆத்தா இன்னும் சாகாதமாதிரித்தா இருக்கிறா அவ இந்த வீட்டுக்குள்ளதா உயிரோட இருக்கா! நானு எப்பிடியா உங்க எல்லாரையும் விட்டுப்புட்டு கண்காணாத தேசம் போவேன்.? அவள் இப்படிச் சொல்லி அழ அப்போதுதான் ராக்காயிக்கு சகோதரியின் மன வருத்தம் தெரிந்தது. அவளுக்கும் வயிறெல்லாம் எரிந்த மாதிரி இருந்தது. கண்களில் கண்ணிரும் வந்துவிட்டது.
"அக்கா இப்பிடியாயில்லாம் நீ சொல்லிக்கிட்டிருந்தீண்ணா பிறகா ஒண்ணுமே உனக்கு நல்லது நடக்காதுக்கா. பொறவா சோணமுத்து மாமேன் உன்னய விழுங்கின மாதிரி விழுங்கிப்புடுவான். பொறவு உனக்கு மீட்சியேயில்ல. அந்த ஐயாவு நாளைக்கே தானு இப்ப செஞ்சிக்கிட்டிருக்கிற வேலைக்கு ராஜினாமா கடிதோம் எழுதிக் குடுத்துக்கப் போறாராம். அப்புறம் வேற வேலையாளு கொட்டிலுக்கு வந்துப்புடும் என்கிறாரு. எல்லாமே நீ சொல்லியதாதான் நானு அவருங்கூடயா கதைச்சப்புட்டேன். இப்பயா நீ கலியாணத்துக்கு மொத நாளு ராவில எப்பிடியாச்சும் இங்கிட்டிருந்து அவரு கொட்டி லுக்குக் கிட்டேவா போயிரணும். அப்புறம் அவரு உன்னய யாருக்கும் தெரியாம கூட்டிக்கிட்டுப் போயிருவாரு.” பக்குவம் சொல்லிக் கொடுக்கிறமாதிரி ராக்காயி சொன்னாள்.
செவ்வந்தி நெஞ்சை வலிக்குமாப் போல கையை மார்பில் வைத்தபடி நின்றாள். "பெத்த அப்பனையும் கூடப்பிறந்த உயிருக்குயிரான தங்கை யையும் இனி நான் பிரிந்துபோகப் போகிறேன்’ என்று நினைக்க அவளுக்கு நெஞ்சாங்குலையைப் பிடித்து இறுக்கிப்பிழிகிறமாதிரியாய் இருந்தது. இவ்வளவு காலம் பழகினதையும் பாசத்தையும் விட்டுவிட்டு உடனே பிரிந்துபோவதென்பது அவளுக்கு என்ன லேசானதாகவா இருக்கும்?
துயரச் சுச00விர்கள் O 379 C

Page 196
என்றாலும் செல்வநாயகத்தோடு தான் சேர்ந்து வாழும் அந்த விரும்பின வாழ்வு தனக்குக் கிடக்கப் போகின்றது என்பதை நினைக்கவும் எழுந்த துக்கமெல்லாம் அவளுக்கு ஆறியது.
ராக்காயிக்கு தமக்கையை எப்படியாக கல்யாணத்துக்கு முதல்நாளன்று இந்த வீட்டைவிட்டு வெளிக்கிடச் செய்து, செல்வநாயகத்திடம் சேர்ப்பிப் பது என்ற நினைவு தான் இப்பொழுது அவளின் புத்திக்குள்ளே புழுவாக குடைந்து கொண்டிருந்தது.
“யக்கா எப்பிடியும் நீயி போறப்போ வெறுங்கையோட போவாம. நம்மகிட்ட இருக்கிறது நஞ்சுபோன துணியாயிருந்தாலும் அதுக்குள்ளயா ரெண்ணதெரிஞ்சுக்கிட்டு எடுத்து பேப்பரு பையிலயிண்ணாலும்
போட்டு தயாரா வைச்சுக்கக்கா” என்று அவளுக்குச் சொன்னாள்.
தேய்ந்து கிடந்த மனதுக்கும் திரேகத்துக்கும் இப்போது ஒரு தெம்பு வந்தது மாதிரியான நிலையில் செவ்வந்தியும் தங்கை சொன்னதுக்கு சரி என்றதுமாதிரி தலையாட்டினாள்.
பொழுதுபட்ட நேரம் தொடங்கி பாலை மரத்திலிருந்து கத்திக்கொண் டிருந்த குருவிகளின் சத்தமும் ஒய்ந்துபோய்விட்டது மாதிரி இருந் தது. இருட்டுபட்டுப்போன பிறகு சேரியே ஒடுங்கிப்போனது மாதிரி யான ஒரு நிலை. குரைப்புக்குரைக்கும் அந்தச் சேரி நாயும் தூங்கிப் போய்விட்டதோ என்றது மாதிரியாக ஒரு சத்தமுமில்லை. செவ்வந்தியின் குடிசைக்கு வெளியே வீதியில் குவிக்கப்பட்டிருந்த கல் குவியலில் யாரோ சயிக்கிளில் வந்து தடுமாறி விழுந்த மாதிரியாகக் கேட்கிறது ஒரு சத்தம். செவ்வந்தி ஏதோ ஒரு யோசனையோடு, அந்தக் குடிசையைத் தான் போய் வெளியால் மூன்று சுற்றுச் சுற்றியதாய் நடந்துவந்தாள். வெளியே வீதியில் சத்தம் கேட்ட பின்பு போய்ப்படலையருகிலும் நின்று வெளியே பார்த்தாள். இருட்டாகத்தான் எல்லாம் இருந்தன.
44,
மரங்களில் தஞ்சமடைந்த பறவைகள் கத்திக்கொண்டிருந்த தருணம், பொழுதும் வேகமாக இருட்டிக்கொண்டு வந்தது.
சேரியிலே உழைத்துக் களைத்தவர்களெல்லாம் இருட்டுப்பட்டுப் போனபிறகு சீக்கிரம் உறங்கச் சென்றுவிடுவார்கள். ஆனால் சோணமுத்து தங்கியிருந்த மீனாட்சியின் குடிசைக்கு வெளியே, சில ஆண்களும் அதிலே கூடிவந்து சோணமுத்துவுடன் கதைத்துப் பேசிக்
o 380 O ரீ.பி.அருணானந்தே

கொண்டிருந்தார்கள.
அதிலே அவர்கள் கசிப்பும் வைத்தும் குடித்துக்கொண்டிருந்தார்கள். சோணமுத்து சந்தோஷத்தில் கைகளையும் கட்டிக்கொண்டு குடிப்பவர் கதைகளைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
வீரன் என்பவன் “சரி ஏதாவது நம்ம சாதி சனம் செஞ்சுக்கிற கண்ணாலம் காச்சி எண்ணு ஏதாவது ஒண்ணப்பத்தியாச்சும் கதையுங்கப்பா?” என்று தண்ணிமலையைப் பார்த்துச் சொன்னான்.
"நீயி சொல்லுறேதும் சரிதாப்பா வீரா. இப்பத்தைக்கு அந்தக் கதேங்க ளயில்லாம் சொன்னா நாளைக்கு கண்ணாலம் கட்டிக்கப்போற
சோணமுத்துக்கும் கேட்டுக்கிறதுக்கு ஒரு சொகமாயிருக்குமில்லே?"
என்று அவன் சொல்ல. கொட்டு மேளத்துக்கு குழல் ஊதுகிற சிலிப்பாத்தலைப் பிச்சாண்டி ஒரு சிரிப்புச் சிரித்தான்.
“நம்ம சேரிக்காறங்க என்ன மகாராசன் மாதிரியான ஆளுங்களா பந்தலு போட்டு எல்லாம் தடலுபுடலா கண்ணாலம் நடத்திக்கிறதுக்கு.? மஞ்சள் கயிறு மாத்திரம் கையில இருந்தா இங்க உள்ளவங்களுக்கு கண்ணாலம் ஆகிப்பிடுது. ஆனாலும்டா சோணமுத்து, ஒண்ட பெண்டாட்டிக்கு வவுத்திலயா யேழுமாசமாயிடுச்சிண்ணா அவுங்க அப்பனு அவள பொறவா தன்னோட வுட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிருவான். அதுக்குப் பொறவா நீ போயி பொண்ணு வீட்டில தங்கிக்க யேலாது. .அப்புடியா நீ அந்தவுட்டில தங்கினா வயசுபோனதுங்களெல்லாமே பாத்துப்புட்டு குழம்பீடுங்களடா. அதினால ஒன் காலம் இதுக்குள்ளயா எல்லாமே நீ அனுபவிச்சுப்பிடுறா?” என்று அவனும் சொன்னான்.
சோணமுத்து அவன் சொன்னதைக் கேட்டுக் கண்களால் சிரித்துக் கொண்டான்.
வெள்ளையனுக்கோவென்றால் பிச்சாண்டி கதைத்ததெல்லாம் பிடிக்க வில்லை. அவனுக்கு வயதும் மற்றவர்களைவிடக் கொஞ்சம் அதிகம் தான்.
"விலுவிலுண்ணு வெளுத்துப்போன கதைங்களேயில்லாம் நீங்க கதைச்சுக்கிறீங்கப்பா, ஏதாச்சும் உருப்படியான ஒரு கதையா சொல்லு ஹீங்களா..?” −
என்று அவன் சொன்னான்.
"உருப்படியிண்ணு என்னத்த நீ சொல்லுறே. ..அப்புடீண்ணா ஒன்னய மாதிரி எர்ம மாடு மாதிரியா. .செத்தமாடு தின்னி.” என்று பிச்சாண்டி
துயரச் சுஃபண்கள் O 381 O

Page 197
அவனை குத்தலாகக் கேட்டான். இந்தக் கதையில் வெள்ளையனுக்கு சுர்ரென்று கோபம் ஏறிக் கண்கள் சிவந்துவிட்டன.
“சொளு சொளுவுண்ணு எடுத்து திண்ணுதிண்ணு வாயிலயா வடிய வடிய நீங்களும் தாண்டா செத்தமாடு திண்ணுறிங்க..? எவன்விட்டு மாடு சாகுமுண்ணு நீஞ்களுதாண்டா கதியோ கதீன்னு கிடக்கிறீங்க..? மாசத்துக்கு ஒரு மாடு ஆங்கிட்டுப் பக்கமா விளுந்து சாவாதாவெண்ணு நீங்கதானுடா வாயிபாக்கிறீங்க.?” என்று அவன் எழுந்துநின்றுகொண்டு அவனைப் பேச சோணமுத்து உடனே,
"இதென்னடாப்பா கூத்து. இண்ணிக்கிண்ணு இங்கயா வந்து ஏண்டாப்பா அடிச்சுக்கிறீங்க..? உங்களுக்கு தீரமாட்டேங்குதே திமிரு.? ” என்று பேசினான்.
"நீ இருண்ணே வெள்ளையண்ணே.?” என்று பிறகும் சோணமுத்துவுக்கு அவன் சொல்ல. நெஞ்சில் வலியோடு கூடிய ஒரு வறட்சியுடன்,
"நீ சொல்லிப்பிட்டாயிண்ணு தா நானு இப்பவா இதில இருந்திக்கிறன். இல்லாட்டி கழுதே பண்ணிப் பிறவி மாதிரியா இவங்க கூட இருந்துக்கிட்டு லொள்ளுபடாம நானு எந்திரிச்சுப் போயிடுவேன்.” என்று சொல்லிக்கொண்டு அவன் நிலத்தில் குந்தியிருந்தான். கசிப்பு அரைச் சிரட்டையில் வார்த்து பிறகு ஒரு முழுங்கு முழுங்கினான் அவன்.
பிச்சாண்டி அதன்பிறகு ஒரு கதையுமே வெள்ளையனோடு பேச வில்லை. அதற்குப் பிறகு கதையிலிருந்து பின்வாங்கி விலகிக் கொண்டதுமாதிரி அவன் ஒன்றும் பேசாமல் இருந்தான்.
அவர்கள் இருவரும் பேசாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு வீரன் சோணமுத்துவைப் பார்த்தான்.
"சோணமுத்து நாளைக்கு புதுசுகட்டி புதுமாப்பிளைமாதிரி நீ இருக்கப்போறே. உனக்கென்னடா கொறே.? நீ அதிஸ்டசாலி தாண்டா..? ஒண்ட பெண்டாட்டி முழுப்பொறுப்பா வீட்டில இருந்துக் கிட்டு எல்லாக்காரியங்களயுமே கவனிச்சுக்கொள்ளுவா. அவ தங்கச்சிக்காறி றோட்டு விடிஞ்சதிலயாயிருந்து தெனமும் மூணு நாலு கூட சாணி பொறுக்கிச் சேத்திடுவா. உனக்கு இனியா ஒரு கவலயும் இல்லடா..?”
சோணமுத்து அவன் சொன்னதுக்கு உடனே சிரித்தான்.
"இதிலெ சிரிக்கிறதுக்கு ஒண்ணுமில்லடா. இதுல்லாம் ஒனக்கு நல்லதுண்ணு தெரிஞ்சிக்க. எனக்கிண்ணா உண்மயத்தான்
o 382 O ரீ.பி.அருணானந்தே

எதையாவது வாயில பேசிக்க வரும்.! வெறியின்னாலும் தெளிவா யோயிச்சுப்புட்டுத்தா நானு அப்புறமா கதைப்பேன்..!"
என்று வீரனும் இப்படியெல்லாம் கதையில் சோடனை போட்டு சோண
முத்துவைக் குஷிப்படுத்த, சோணமுத்து தான் வேறு எவரோ போல கற்பனை பண்ணிக்கொண்டு மகிழ்ச்சியில் விரிந்து கொண்டிருந்தான்.
ராமன் இந்நேரம் கை வீசி ஒடுவது போல அங்கும் இங்குமாக ஒடித்திரிந்து நாளைய கல்யாணத்துக்கான அலுவலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
காலையிலே கல்யாணத்துக்கென்று தன் வீட்டுக்கு வரும் ஜனங்களுக்கு மதியநேரம் சாப்பாடு கொடுக்கவென்று இராமன் தண்ணிமலை வீட்டில் சமையலுக்கு ஒழுங்குபடுத்தியிருந்தான். அந்த வீட்டில் சில பெண்டுகள் இருந்துகொண்டு நாளைய சமையலுக்காகக் காய் கறிகள் வெட்டிக் கொண்டிருந்தார்கள். பாப்பாத்தியும் அவர்களோடு ஒத்தாசை யாய் இருந்து வேலை செய்து கொண்டிருந்தாள்.
தண்ணிமலை பெண்சாதி பாப்பாத்திக்கு அருகில் இருந்ததால் அவளுக்கு இரகசியம் கதைப்பதற்கு ஏலுமாக இருந்தது.
“பாருங்களேனக்கா இந்த அணியாயத்த. அந்த செத்த நாயி மாதிரியா உள்ள சோணமுத்துங்கறேவணுக்கு கிளிமாதிரியாவுள்ள நம்ம செவ்வந்தியப் போயி கண்ணாலம் கட்டிக் குடுத்துக்கிறதுக்கு ராமன் நிண்ணுக்கிட்டிருக்கு. அவேன் என்ன ஓங்கு தாங்கான ஆளா..? செவ்வந்தியூட்டு அழகுக்கு அவேன் கிட்ட நிப்பானா?” என்று அவள் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு சொல்ல,
“என்ன செஞ்சுக்கிறதடி. விதி விட்டுச்சாடி அவளுக்கு.? அது தா அவ தல எழுத்துப்போல இருக்கு. .இனிமே முள்ளுமேல விழுந்த வாழப்பழத்தோலு மாதிரி தா அந்தப் பெட்டச்சி வாழ்க்கையும் போவப்போவுது.”
அவள் சொல்லிப் பெருமூச்சுவிட, இன்னும் தன்னில் தீராத ஆத்திரத் தோடு பாப்பாத்தி சொன்னாள்.
"இதெல்லாம் சொந்தம் வேணும் வேணுமெண்ணதா அவ அப்பேனுக்கு இருந்துக்கிற புத்தி. மவளுக்குச் சோணமுத்துவ கண்ணாலம் கட்டிக் குடுத்திட்டா சொந்தம் கூடுமாம்னு அந்த ராமேன் இந்த ஊருங் களுக்கெல்லாமே சொல்லிக்கிட்டுத் திரியிது. நீங்களும்தா ஒரு ரோசன பண்ணிப் பாத்துப்புட்டு சொல்லுங்கக்கா. இப்பிடிப்பட்ட
துயரச் சுஃப்யவிர்கள் O 383 O

Page 198
சோணமுத்துங்கிறவனுக்கும் நம்ம செவ்வந்திக்கும் ஏணி வைச்சாலும் எட்டுமா..?”
என்று அவள் கேட்க,
“எல்லாம்தா நெக்க சீவன அழிக்கிறது மாதிரி மனசும் தான் வேகுதடி பாப்பாத்தி. ஆனாலும் இந்த கல்யாணத்தில அந்தக் கடவுளுதான் குறுக்க வந்தாலும் ராமனு அண்ணேயிண்ணா ஒருகாலமுமே மாறவே மாறாது. இதுக்கெல்லாமே நாம என்னதா செஞ்சிக்கிறது.? நெச்சா மனசுதான் வேகுது. யோசிச்சுக்கிட்டா மண்ட காஞ்சு போற மாதிரியும்தா கெடக்கு. இதெல்லாமே நாம இதில இருந்துக்கிட்டு கதைச்சுக்கிட்டிருக்கிறத ஆருமே பொறவா கேட்டுப்புட்டா கசமுசாவாகி நாறிப்புடும். அதால கம்முண்ணு இருந்துக்கிட்டு இங்கிட்டு செஞ்சிக்கிற வேலய செஞ்சிக்கிறுவோம்” என்று உண்மையைக்கூட வெளிப்படையாகக் கதைப்பதற்குக் கஷ்டப்பட்டுக்கொண்டு உரலுக்குள் இறுகின எள்ளுப்பாகுமாதிரி அவள் தன்னை இறுக்கிக்கொண்டு இருந்துவிட்டாள். தண்ணிமலை பெஞ்சாதி இப்படிப் பேச்சுமூச்சு இல்லாத மாதிரி பிறகு இருந்து கொண்டிருக்க, பாப்பாத்தியும் ஒரக்கண்ணால் தன்னைச் சுற்றிலும் பார்த்துவிட்டு வந்த பெருமூச்சையும் அடக்கியபடி வேலை யில் கவனமாகிவிட்டாள். அந்நேரம் ராமனும் கசகசங்கிற உடம்போடும் பிசுபிசு என்கிற கால் சட்டையோடும் தண்ணிமலைபெஞ்சாதியின் வீட்டுவாசலிலே வந்து நின்றான். “வெறகு ரெண்ணு கட்டே பொளந்து போட்டிருக்கேன் தங்கச்சி. சமையல் பண்ணிக்கிறதுக்கு அதில்லாமே போதுமாண்ணு வந்து நீ பாத்துக்கிறியாம்மா..?” என்று அவளை அவன் கேட்டான். “பாத்துக்கத் தேவல அண்ணே அதில்லாமே காணுமுண்ணே. நம்ம வுட்டிலயம் கெடக்குங்க தானேயண்ணே கள்ளி வெறகுங்க..! போதாத துக்கு அதுங்கள எடுத்து சரிப்பண்ணிக் கலாமுண்ணே.!" அவள் அப்படிச் சொல்ல உடம்பில இருந்த அலுப்பை எடுத்து எறிஞ்சது மாதிரி போட்டுவிட்டு அடுத்துள்ள வேலைகளைப் பார்க்கக் கிளம்பிவிட்டான் ராமன்.
O
ஏழு மணிக்கே நடுச்சாமம் மாதிரியாக ஆகிப்போச்சு சேரிப்பக்கத்திலு ள்ளவர்களுக்கு அந்த ராத்திரி
O 384 O ரீ.பி.அருளானந்தல்

ஊர் உறங்கி ஒடுங்கிற நேரமாய் வர, படீரென்று ஒரு மின்னல் மூளையில் மின்னினமாதிரி ராக்காயிக்கு யோசனை வந்தது.
அவள் செவ்வந்தி நின்று கொண்டிருந்த வீட்டு முற்றத்தடிக்குப் போனாள். செவ்வந்தி வீட்டு வாசலால் வெளியே விழுந்த விளக்கு வெளிச்சத்தடியில் நின்றுகொண்டு, முன்னால் தனக்குத்தெரிந்த இருட்டைப் பார்த்தபடி நின்றாள்.
தமக்கையுடன் இந்த நேரத்தில் ராக்காயிக்குப் பேசுவதற்கு சொற்களோ மிகவும் குறைவுதான். அவளும் செவ்வந்தியைப் போல, அந்தக் கைப்பக்கம் சவக்காலையடியை மூடிப்போர்த்த மாதிரித் தெரிந்த இருட்டைப் பார்த்தாள். பரபரப்புடன் மனம் அவளுக்கு அவ்விடத்தை நோக்கி தேடியலைவதுமாதிரியாக இருந்தது. அவளின் பார்வையில் அந்த இருள் உடைபட்டு கண்களுக்குள் அவளுக்கு வெளிச்சம் பரவியதைப்போல இருந்தது.
"அக்கா இந்த நேரந்தா சரியான நேரம். நம்ம வீட்டிலயும் யாருமே இல்லாத நேரம்! அப்பா கூட இங்கிட்டு இப்பவா வந்துக்காம அங்கினவாட்டியா ஒடிக்கிட்டுத் திரிஞ்சுக்கிட்டிருக்கு.! நீ இப்பவே கெளம்பக்கா சீக்கிரமா கெளம்பு! அந்த ஐயாவும் அங்கினயா உன்னயா பாத்துக்கிட்டிருப்பாரு.?”
படபடப்புடன் சொன்னாள் அவள் தண்ணிமலை வீட்டிலிருந்துவெற்றிலை உரலில் தாம்பூலம் இடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
வெற்றிலை உரலிலே தாளம் பிறகு தப்புகிறது மாதிரிச் சத்தம் கேட்டது.
செவ்வந்தி ராக்காயி சொன்னதைக் கேட்டுவிட்டு இருட்டில் ஒரு நடுக்கத்துடன் நடந்தாள். அந்தப் பாலை மரத்தடிக்குக் கீழே போய் நின்றாள்.
ராக்காயி அவளுக்குப் பின்னாலே போனாள்
"அக்கா.”
ú4 罗罗
“என்னக்கா இது நீ கெளம்பேன் இதால. உடுப்பு பாக்கேயும் நானு எடுத்துக்கிட்டு வந்து தர்றேன்.”
அவள் சொல்ல இன்னும் இருட்டான இருட்டுக்குள் செவ்வந்தி நகர்ந் தாள். அவள் உருவம் மங்கின நிழலாக ராக்காயிக்குத் தெரிந்தது. அக்கா ஏன் தன்னை இப்படியாக இருட்டுக்குள் ஒளித்துக்கொள்ள lugš süviisi O 385 O

Page 199
விரும்புகிறாள். மெளனம் காக்கிறாள் என்று அவளுக்கு விளங்க வில்லை.
"அக்கா.” என்று கொண்டு அவள் இன்னும் அவளுக்கருகில் போனாள்.
செவ்வந்தி ராக்காயிதன் அருகில் வர இன்னும் அவள் குரல் கேட்காத தூரத்துக்கு விலகிப்போவதுபோல தள்ளிப்போய் நின்றாள்.
“என்னக்கா உனக்கு என்னதா நடந்திச்சு.? ஏன் ஒண்ணுமே பேசாம நிக்கிறே.?” அவள் அஞ்சுவது போன்ற ஒரு நிலையில் செவ்வந் தியைக் கேட்டாள். மனதுக்குள் அவளுக்குக் கோபமும் நிறைவது போல இருந்தது. உடலை முரட்டுத்தனமாகவும் முறுக்கியபடி வைத்துக்
காண்டு, "அக்கா நீ என்ன கெளம்பல்லியா. பயமாயிருக்காக்கா ஒனக்கு.?”
என்று அவளின் கிட்டே வந்து இருட்டில் மினுங்கியபடி இருக்கும்
அவளின் கண்களைப் பார்த்துக்கொண்டு கேட்டாள்.
அப்போதுதான் செவ்வந்திக்கு அவளைத் திற்ந்துகொண்டு அழுகை வெளியே வந்ததைப்போல இருந்தது.
ராக்காயி அவள் விசும்பி அழ, உடனே திடுக்கிட்டதாய்ப் போய் விட்டாள். ஏதோ திரை கிழிந்து புதிதாய்த் தெரிகிறமாதிரி அவளைப் பார்த்தாள். அவள் அழும்போது எங்கேயோவிருந்து அந்த இருளுக்குள்ளும் ஒரு பறவைக்குரல் அவளுக்குக் கேட்டது. ராக்காயிக்கு எல்லாப் பாரங்களும் தலையிலே ஏறினது மாதிரிக் கனத்தது. இனி ஏதும் மீதமில்லை என்பதாய்த் தாங்க முடியாத அளவில் அவள் இருந்தாள். ஏதோவெல்லாம் சரிவது போல அவளுக்கு இருந்தது. சரிந்து விழுவதெல்லாம் சிதறுவதுபோலவும் அவளுக்குப்பட்டது.
மூச்சிலே என்னத்தையோ தனக்குக் கலந்துவிட்டதுமாதிரி தலை சுற்றுவதுபோல அவளுக்கு வந்தது.
“என்னக்கா ஏன் நீ அழுகிறே.? சொல்லேக்கா. இதுக்கு முன்னாடி யேன்கூட நீ நல்லாத்தா பேசிக்கிட்டிருந்தே. இப்பவா உனக்கு என்னதான் நடந்திச்சு.? சொல்லேனுக்கா..?”
ராக்காயி அவளைக்கேட்டுக்கொண்டு மெல்ல அவளை தன் கையால் பிடித்துக்கொண்டு உலுப்பினாள்.
O 386 O ரீ.பி.அருளானந்தே

செவ்வந்தி உடனே இன்னும் குரல் உடைந்து கேவிக்கேவி அழுதாள். மிச்சமின்றி அழுதுவிட வேண்டும் என எண்ணுபவள்போல எண்ணி எண்ணி அவள் அழத்தொடங்கினாள். பிறகு வெறித்த நீர் நிறைந்த கண்களுடன் தங்கையைப் பார்த்தாள்.
ராக்காயிக்கும் தமக்கை அழ கண்களால் கண்ணிர் வந்துவிட்டது. அடக்க முடியாத துக்கத்துடன்
“என்னக்கா. ஏனக்கா நீயி இப்பவா அழுறே.?” என்றாள் அழுகையுடன்
"நான் போகேல்லடி அம்மா. நான் போகேல்ல போகேல்ல.”
அவள் சிதறித் தெறித்த சொற்களுடன் மீண்டும் அழ ஆரம்பித்து விட்டாள்.
செவ்வந்தியின் பதிலைக்கேட்டதும் ராக்காயிக்கோ தீயை உச்சியிலே வைத்ததுமாதிரி இருந்தது. திடுக்காட்டமாகிவிட்டது. அவள் தமக்கை இப்படிச் சரியான நேரத்தில் ஒரு குண்டைத் தூக்குப் போடுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.
இருந்தாற்போல செவ்வந்தி இப்படி திடீரென்று மனம் மாறியதற்கு என்ன காரணமாயிருக்கும்.? என்று அவளும் மூளையைப் போட்டுப் பிய்த்துக்கொண்டாள். இன்னொரு பக்கம் செல்வநாயகத்துடன் தான் சென்று கடைசியாகக் கதைத்துவிட்டு வந்தவைகளை நினைக்க கருகிய சருகுகளையும் சாம்பலையும் கொண்டுவந்து தன் தலைமீது யாரோ கொட்டியது போலவும் அவளுக்கிருந்தது.
இந்த விசயத்தில் செவ்வந்திக்கு ஏமாற்றமா? அல்லது செல்வநாயகத் துக்கு இது ஏமாற்றமா..? அல்லது விரும்புகிற அவர்கள் இருவரையும் சேர்த்துவைக்கப்பாடுபட்ட தனக்கு இது ஏமாற்றமா?
அப்படியாக தன்னுடன் சேர்ந்ததான இந்த மூன்று பேருக்குள்ளே எவருக்கு இது பெரும் ஏமாற்றம் என்று நினைத்தபோது அவளுக்கும் குழப்பம் வலுத்தபடி வந்தது.
"அக்கா. இங்கபாரு.? இங்க பாத்துக்கிட்டு எனக்கு நீ சொல்லக்கா..? உண்மையா உனக்கு அவரோட போயிக்க விருப்பமில்லயாக்கா..?” வெறுமையான ஒரு நிலையோடு அவள் கேட்டாள்.
"இல்ல. என்னாலயா முடியாது. நான் போகேல்லடி. நான்
போவேல்ல.”
செவ்வந்தி தலையைக் கீழே குனிந்தபடி அவளுக்குச் சொன்னாள்.
துயரச் சுஃபண்கள் O 387 O

Page 200
"அதுதான் ஏன் போவல எண்ணு நான் கேக்கிறனே.? நீ அவரோட இப்ப போயிக்காததுக்கு என்ன காரணமுண்ணு சொல்லேன்.?” அழுத்தமாக அவள் கேட்டாள்.
"என்கிட்ட ஒண்ணும் கேக்காத நான் போவேல்ல.?”
"அதுதான் யேன் போவல எண்ணு ஒன்னய எத்தினவாட்டியா நானு கேட்டுக்கிட்டிருக்கேன்.? ஐயோ அக்கா நீயேன் தான் இப்பவா போகேல்ல எண்ணு சொல்லிக்கிட்டிருக்கே. அத சொல்லேக்கா?”
"நான் போகேல்லடி.”
“யேன் யேன்யேன் போவல நீ.?”
"நானு அப்பிடி ஓடிட்டா அப்பா பொறவு மனமுடைஞ்சு போயிடும். யேன் மானம் போயிடிச்சு என்னு சொல்லி செத்துப்புடும். நாளிக்கு காலேல எம்பூட்டு ஆளுக இங்கிட்டு கூடி வருவாங்க பொம் புளய காணோமுண்ணா அப்பா அவங்களுக்கில்லாமே என்னதா பதிலுசொல்லும். சோணமுத்து மாமேன்தா அப்பாவ சும்மா விட்டுப்புடுவாரா? இடுப்பில கத்திய செருவிட்டு அப்பாவ கொலை பண்ணுவேன் எண்ணு சொல்லிக்கிட்டு நிண்ணுக்குமே அந்த ஆளு.?” அவள் இப்படிச் சொல்லிவிட்டு அழ, பூரான் தேள் பாம்பு எல்லாம் புகுந்து புத்திக்குள்ளே குடைந்தது மாதிரி இருந்தது ராக்காயிக்கு.
"அக்கா நீயி இந்த நேரவாட்டி இப்பவா இத சொல்லுறே. இவேளவு காலமா ஒனக்கு எங்கதான் போச்சு ஒண்ட புத்தி.? அப்பவே இதயெல்லாம் யோசிச்சிருக்கலாமுல்ல.? இப்ப அந்த ஐயா ஒன்னய நம்பி செஞ்சுக்கிற வேலையும் இல்லாம ஆக்கிப்புட்டுநிக்குது..? அங்கினயா அவரு இப்பவா நிண்ணுகிட்டு நீ வருவா வருவா எண்ணு பாத்துப்பிட்டுமிருக்கும்.! இதுக்கெல்லாமே அவருக்கு யெவ் வேளவு பெரிய ஏமாத்தோம்.? நாங்க எல்லாமே பீத்தமொறம், பித்தலுச்செருப்புகளு. பீத்தவெளக்குமாறு, எண்ணு அப்பிடியெல்லாம் அந்த ஐயா நெச்சு கவலைப்பட்டுக்கிற அளவுக்கு நீ செய்துப்புட்டியே அக்கா..?”
குரல் தழுதழுக்க அவள் சொன்னாள். அவள் சொன்னதைக் கேட்டுவிட்டு செவ்வந்தி இன்னும் அழத் தொடங்கினாள்.
“என்னாலதானே எல்லாத்துக்கும் இப்பிடியா கஷ்டமா வந்தது.? நான் செத்துப்பிட்டா ஆருக்குமே ஒரு பிரச்சினயாயில்ல.?”என்று சாவின் தொடுகோடுகளுடன் சொல்லி அழத்தொடங்கினாள் அவள்
O 388 O ரீ.பி.அருளானந்தல்

“என்னால தானே அந்த ஐயாவுக்கும் ஏமாத்தமும் கவலையும் கெடுதியும் வந்திச்சு. நான் தா அவர ஏமாத்திப்புட்டேன். நான்தா கேடுகெட்டவளாகிப்புட்டேன்.”
என்று பிறகும் அவள் தன் கையால் முகத்தை மூடிக்கொண்டு சொல்லிஅழ ராக்காயிக்கும் அதைக்கேட்டு மனம் வெந்தது. தன் அக்காள் சிலந்தி வலைப்பட்ட பூச்சியாய் விட்டாளே என்று அவளும் நினைத்து மனம் வெந்தாள்.
அதேநேரம் சீற்றத்துடன் ரயில் வண்டித்தொடர் வந்துகொண்டிருக்கிற சத்தம் கேட்டது. ராக்காயி ரயில் சத்தத்தைக் கேட்டுக்கொண்டு பார்வையை இருட்டில் பதிய வைத்தபடி யோசனையில் இருந்தாள்.
செவ்வந்திக்கு தன் கைகால் உடல் தலையை வெட்டி யாராவது தனித்தனியே மண்ணில் புதைக்க மாட்டார்களா என்ற விரக்தியின் வெறுப்பாயிருந்தது. அவள் உடலும் மனமும் சோர்ந்ததான நிலையில் குடிசை வாசலில் போய் குந்தி இருந்தாள். விளக்கு வெளிச்சத்தில் அவள் நிழல் முற்றத்தில் விழுந்து கிடந்தது.
ராக்காயி இவ்வேளை அந்த முற்றத்தில் நின்றபடி வானத்தையே நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். வானத்தில் நட்சத்திரத்தோட்டம் பளிங்குக் கண்ணாடிகள் போல ஒளி ததும்பி வழிந்து கொண்டிருந்தன. தக தக வென ஒளிரும் வெள்ளி ஒளியைக் கண்டு நடுங்கிக் கொண்டிருந்தது ராக்காயியின் மனம் தொடர்ந்து வானம் நோக்கி நீளக்கூடிய பார்வையாய் அவளின் பார்வை இப்போ இல்லை. மெளனத்தில் நகருகிறது மாதிரி மனத்தைக் கவலை அவளுக்கு அழுத்திக்கொண்டிருந்தது. அவள் சோர்வுடன் தலையைக் கீழே: குனிந்து இருட்டோடு கலந்து தெரிந்த மண்ணைப் பார்த்துக்கொண்டு
நின்றாள்.
イタ
இரவு முழுவதும் நார் நாராய் அறுத்த கவலைகளிலிருந்து செவ்வந்தி யும் ராக்காயியும் விடுபடவே இல்லை.
விடிகிற உருத்தோற்றத்தில் பட்சிகளின் உறங்கச் சடவழிந்த முதல் குரல்கள் விதம் விதமாய்க் கேட்டன. மாறிமாறிக் கேட்ட அந்த ஒலியில் சம்பாஷணையின் குறி தென்பட்டது. வானவெளியில் சூரியன் நிறமாகவும் எழுந்து வந்துவிட்டான். ஒவ்வொரு உருவிலும் பட்டு உணர்வுகொள்ளவைக்கும் காலை வெயிலும் எல்லா இடங்களிலும் படர்ந்துகொண்டிருந்தது.
துயரச் சுலப்பண்கள் O 389 O

Page 201
ஊமையான துயரமும் மன ஆழத்தில் சஞ்சலமுமாய் இருந்த செவ்வந்திக்கு இரண்டு பெண்கள் சேலை உடுத்துவிட உதவிக்கு வந்து நின்றார்கள். சுருக்குப் பிடிக்க மேல் பதிந்த விரல்களோடு அவர்கள் இருவரும் மாறிமாறிப் போராடினார்கள். ஒன்றைப்போல் ஒன்று இல்லாமல் இருக்கிற குறையைக் கண்டு சேலையை அவிழ்த்து அவிழ்த்துப் போட்டு அவளுக்கு உடுத்துக் கொண்டிருந்தார்கள்.
ராக்காயி சட்டைமாற்றி உடுத்துக் கொள்ளாமல் முற்றத்தடியில் நின்று கொண்டிருந்தாள். படலையைத் திறந்து வெளியே போவதற்குக்கூட அவளுக்கு வெறுப்பாக இருந்தது. செல்வநாயகத்தை நினைக்கவும் அவளுக்குக் கவலையாக வந்தது. “அந்த ஐயா நேற்று இரவு முழுவதும் யோசித்து யோசித்துக்கொண்டு அக்காவையும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருப்பார். ஆனால் அக்காவோ என்றால் தான் இஷ்டப்படாத இந்தக் கல்யாணத்தை அப்பாவின் நன்மைக்காகத்தான் இப்போது செய்யப்போகிறேன் என்று நிற்கிறாள். சோற்றுக்கும் துணிக்கும் இன்றுவரை அப்பா என்னவோ ஒரு குறையும் எங்களுக்கு விடவில்லைத் தான்! அதற்காக நாங்கள் கஷ்டப்படவில்லைத்தான்! ஆனால் இந்தக் கேடுகெட்ட கலியாணத்தைச் செய்து அவள் இனி எப்படித்தான் சீராய் வாழப்போகிறாள்.? வாழ்க்கை இனிமேல் அவளுக்கு சர்க்கரைப்பாகுமாதிரி மணமும் சுவையுமாய் இருக்கப்போவதில்லை. அதற்குப் பதிலாக தனிக்கசப்பாய்த்தான் வாழ்வு அவளுக்கு இருக்கப் போகிறது. அதற்குப் பிறகு அந்தச் சக்கரம் சுழலாத மாதிரி அச்சு முறிந்ததாகவும் வாழ்க்கை அவளுக்குப் போய்விடும். எல்லாம் நடந்து முடிந்தபிறகு அக்காவின் பிரச்சினையில் யார்தான் வந்து விசாரணை செய்யப்போகிறார்கள். 'என்கதை இவ்வளவுதான் என்று அவள் பிறகு எல்லாவற்றையும் அறுத்துக்கொண்டு இருக்கவேண்டியதுதான். சிலவேளை தன் கழுத்தைத் தானே அறுத்து உயிரையும் விட வேண்டியதான நிலைமையும் அவளுக்கு வந்துவிடுமோ..?
முடிவில்லாத நரக யோசனைதான் ராக்காயிக்கு, மனதில் அத்தகைய அச்சத்தோடு அவள் பாலைமரத்தின் கிளையை நிமிர்ந்து கவனித்தாள்.
"டிரீக்” என்று கூவியபடி பறந்துவந்து அதிலே இருந்தது ஒரு குருவி அது கீழே சரிந்து பறந்து வந்து ஒரு கெட்டில் அமர்ந்தது. சிறகுகளை இருமுறை விரித்தது. சுருக்கி இறுக்கி பிறகு அடுக்கிக் கொண்டது அசைவில் அது மரம் கொத்திதான். ராக்காயி அதை அலுப்புடன் பார்த்தாள். குருவி தலையைச் சரித்து மரக்கெட்டை கொத்த ஆரம்பித்துவிட்டது.
"ராக்காயி என்ன செய்யிறாயம்மா அங்க?” என்கவும் அவள் பதில் எழுப்பவில்லை. திரும்பிப் பார்த்தாள். O 390 O ரீ.பி.அருளானந்தே

அவளைக் கூப்பிட்டவள் குடிசை வாசலில் நின்றுகொண்டிருந்தாள் இவள் திரும்பிப் பார்த்ததும் அவள் முகத்தில் புன்னகை விரிந்தது.
“வந்து சட்டய எடுத்து நீயும் போட்டுக்கேம்மா, நேரமாவுதில்ல.? குலம் கூட்டத்தோட சனமும் இங்க வந்துக்கப்போவுது” ராக்காயி இப்பொழுதும் ஏதும் பேசவில்லை. மெளனத்தில் ஆழ்ந்தவாறு குடிசைக்குள்ளே போக நடந்தாள்.
உள்ளே போனதும்தான் அக்காவைப் பார்க்க கண்களை நிறைப்பது போல அவளுக்கு இருந்தது.
ஏன் தெரியுமா..?
அவள் கட்டியிருந்த சேலையை விட உடலின் தேஜஸ்தான் அவளை அழகாகக்காட்டியது. கரியநிறமும், தசைகள் முறுகி நெளிந்து வளைந்தது மாதிரியான உடலும் கொண்ட அந்தச் சேரிப்பக்கத்துப் பெண்களிலே, இவள் ஒரு வித்தியாசமானவளாகத்தானே பார்க்கவும் தெரிகிறாள்.
அவள் குடிசைக்குள்ளே நின்ற பெண்களின் கூட்டத்தை இப்போது தான் பார்த்தாள். இவ்வளவு பெண்களும் முற்றத்தில் நின்று கொண்டிருந்த என்னைத் தாண்டி எப்படி உள்ளே வந்தார்கள்.? அவளுக்குப்புரியவில்லை.
பாலை மரத்தடிக்குக் கீழே இருந்து உறுமி மேளத்தின் ஒசை அதிர்ந்து முழங்கியது. அந்த ஒசையில் தானும் அக்காளும் எங்கேயோ அடித்துச் செல்லப்படுவதுபோல ராக்காயி உணர்ந்தாள்.
வெளியே சிறிது சிறிதாக பேச்சுக் குரல்கள் கேட்க ஆரம்பித்தன. வரவர வலுத்தபடியே இருந்தன. “களிவெறி பரவி வெளியே குதித்தும் ஆடுகிறார்களாக்கும்?” என்று ராக்காயி நினைத்தாள். மணப்பெண்ணுக்கு சேலை உடுத்துவிட்டுச் சிங்காரிக்கிறோம் என்ற தாய்த் தட்டிக் கதவைச் சாத்திவிடுவதற்கு முடியாது. அதற்குப் பதிலாக ஒரு சிவப்புச் சீலையைக்கொண்டுவந்து வாசலுக்கு மறைத்துக்கட்டினாள் உள்ளே நின்ற ஒருத்தி "நானு மொதல்ல சொல்லலியாடி ஒனக்கு. பட்டுச் சேலையைக் கட்டிக்கிட்டா இவ செவ்வந்தி அம்புட்டு அழகாயிருப்பாளுண்ணு.?” சேலையை உடுத்திவிட்டவள் செவ்வந்தியைப் பார்த்துக்கொண்டே மற்றப் பெண்கள் கேட்கட்டுமென்று சொன்னாள். "இவளுட்டு மொகம்தான் வாடியிருக்கு. மத்ததுங்கயெல்லாம் துயரச் சுஃபண்கள் O 391 O

Page 202
அசத்துது." என்றாள் அதற்குள்ளே நின்ற ஒருத்தி
"அப்பேன் தங்கூச்சிய விட்டுப் பிரிஞ்சு போய்க்குவமுண்ணு அவே ளுக்கும் மனசு நோவாதா..?"
"அதானே ஏம்மா அப்புல்ேலாம் நீகவலபட்டுக்கிறே.? நீயின்ன வெளியூரு போய்க்கிறப்போறியா. இந்தூட்டுப் பக்கமாத்தானே நீ இருந்துக்கிறப்போறே.? அப்புறமின்னா ஒனக்குக் கவல.?"
மாடத்தி ஒரு தாய்போல பாசத்துடன் அவளுக்குச் சொன்னாள்.
"நீ சட்டையைப் போட்டுக்கம்மா. வெளியால நிண்ணுக்கிட்டிருக்கிற பொண்ணுங்களும் உள்ள வரப்போறாங்க. மாப்புளயும் பூசாரியும் அவங்களோடயா வந்துக்குவாங்க." என்று அவளே பிறகு ராக்காயிக்கும் சொன்னாள்.
அவள் சொல்லவும்,
கவலை இருப்பதை காட்டிக் கொண்டிருந்து இனி என்ன பயன்? என்று ராக்காயியும் நினைத்தாள். ஒரு நல்ல பாவாடை F' (LL றங்குப்பெட்டியைத் திறந்து எடுத்து அவளும் உடைமாற்றி உடுத்துக் கொண்டாள். அதற்குப் பிறகு வாசலுக்கு மறைப்புக் கட்டியிருந்த சேலையை ஒரு பெண் போய் அதைக் கழற்றி அகற்றிவிட்டாள் வெளியே செவ்வந்தி திறந்து தெரிந்த வாசலால் பார்த்தாள். முற்றத்தில் நிறைந்திருந்த சனக்கூட்டத்தைக் கண்டதும் அலைநீரில் மலர்போல அவள் மனம் கவலையில் தத்தளித்தது என்னை விரும்பாத ஒரு பந்தத்தில் கட்டிப் போடவா இவ்வளவு கூட்டம்? என்னை பிய்த்து வீசிவிடவேண்டும் என்ற ஒரு கங்கணத்தோடு அதே அவர்களுக்குள் சோணமுத்து மாமனும் நின்று கொண்டிருக்கிறானே. இவர்களெல்லாம் என்கண்களை விட்டு எங்கேயாவது இப்போது மறைந்து போக மாட்டார்களா..? என்னை விட்டு இவர்களெல்லாம் விலகிப்போய் விடமாட்டார்களா..? அவளுக்கு மனம் கிடந்து இப்படி யெல்லாவற்றையும் நினைத்து அல்லலுற்றது. அது விம்மி விம்மித் தணிந்து கொண்டிருந்தது. அவளால் இனிமேல் என்னதான் செய்ய முடியும்? செய்யமுடியாது! அவள் அழுத்தமான பெருமூச்சுடன் தலை குனிந்தாள்.
முற்றத்தில் நின்ற சோணமுத்து பிறகு அதிலே நின்ற மாடசாமி கோயில் பூசாரியின் அருகில் வந்து நின்றான். பூசாரி அதிகாரம் தன் கையில் இப்போ வந்ததுமாதிரி ராமனுக்கு ஏதோ சொல்லிக்கொண்டு நின்றான் குரலைவேத கோஷம்போல அவன் தனக்கு வைத்துக்கொண்டுதான் பேசினான். முற்றத்தில் நிறையப் பெண்களும் ஆண்களும்தான் நின்றார்கள். பாதகாணிக்கைத் தட்டு மாதிரி முனியம்மாவும் கையில் o 392 0 தீவி.ஒருளானந்தம்

N°F

Page 203
அதை தூக்கிப்பிடித்துக்கொண்டு நின்றாள். பூசாரிக்கு அதிகாரம் கையில் வருகிறது.
'மாப்பிள. அப்புறம் பொண்ணு அப்பேன் எல்லாம் வாங்கப்பா முனி யம்மா நட நீ உள்ள போம்மா." என்றான் அவன். பூசாரியின் குரலில் இருந்த இறுக்கம் முற்றத்தில் நின்றவர்களையெல்லாம் அவனை நிமிர்ந்து பார்க்கும்படி வைத்தது. “கொட்டுமேளம் கொஞ்சம் நிண்ணுக்குங்கப்பா.” அவன் சொல்ல அமைதி ஏற்பட்டது. ஆனாலும் அவனின் ஆளுமையைப் பார்த்து அங்கு நின்ற அனைவரிலும் சிரிப்பு மீதமிருந்தது.
ஏற்பாடுசெய்து வைத்தமாதிரி எல்லோரும் குடிசைக்குள்ளே வந்தார்கள். பூசாரி மாப்பிளையையும் பெண்ணையும் பாயில் அமர வைத்தார். இரவு கொஞ்சம் குடித்துச் சந்தோஷமாகவும் இருந்ததால் கனத்த கன்னங்களுடன்கூடிய களையான முகமாய் சோணமுத்து இருந்தான். செவ்வந்திக்கோ கவலைப்பட்டு அழுது காலம் கழித்திருந்ததால் கண்கள் வீங்கியிருந்தன. அவள் உலர்ந்து வீணாகிறமாதிரியான ஒரு மனோநிலையோடு இருந்தாள். ஆனால் பாயில் அவள் இருந்துகொண்டிருக்கிற இருப்பைப் பார்த்துவிட்டு அங்கே உள்ளவர்களெல்லாம் அவளை,
"எவ்வளவு சாது பாரு இவளு. பால் மணம் மாறிக்காத கன்னுக் குட்டிபோல பாரு இந்தப் பொண்ணு இருந்துக்கிட்டிருக்கிறா.” என்ற தாயும் தங்களுக்குள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அலுவல்களைப் பூசாரி உடனே ஆரம்பித்துவிட்டான். அவன் கற்பூரம் ஊதுவத்தி கொளுத்தி மாடசாமியைக் கும்பிட்டபடி நிற்க ஒரு பெண் செவ்வந்திக்கு தலைப்பூவை குத்தி வடிவுக்கு வடிவு சேர்த்தாள்.
பூசாரி கும்மிட்டு முடிந்து தாலிக்கயிற்றை எடுத்து சோணமுத்துவின் கையில் கொடுத்தான்.
ஓர் ஒல்லியான ஆள் குடிசைக்குள்ளாலே இருந்து வெளியே வந்து “கொட்டு மேளம் அடிங்கப்பா.” என்று சொல்லிவிட்டு வளைந்து குழைந்தது மாதிரி மீண்டும் குடிசைக்குள்ளே போனான். கொட்டுமேளத்தை மார்பில் உதைக்கக்கூடிய பெரிய சத்தத்திலே உடனே அவர்கள் அடித்து முழங்கத்தொடங்கினார்கள். கொட்டு மேளச்சத்தத்தோடு சோணமுத்து தாலிக்கயிற்றை செவ்வந்தி கழுத்தில் கட்டிக்கொண்டிருந்தான்.
O 394 O ரீ.பி.அருளானந்தச்

செவ்வந்திக்கு தாலி ஏற அவளைப் பாாததுககொண்டு தாங்கள் ஏதோ வெட்கப்படுவதுபோல நெளிந்து கொண்டிருந்தார்கள் சில பெண்கள். ராமன் கை இரண்டையும் கூப்பிக் கும்பிட்டபடி நின்றான்.
ராக்காயிகண்கலங்கியபடி தன் அக்காளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். பாவாடை விழிம்பால் அவள் கண்ணிரைப் பிறகு துடைத்துக் கொண்டாள்.
உறுமியின் சத்தம் தீப்பிடிக்கிறமாதிரி அவள் உடம்புக்குள் சூறாவளி சுத்தி ஆட்டி உலுப்பிக்கொண்டிருந்தது. “கொட்டுமேளத்த இன்னுமா ஒசத்தி சத்தமா அடிங்கப்பா..? ஓங்கித்தட்டி இறுக்கி இறுக்கி இன்னும் சத்தத்த கூட்டுங்கப்பா..? நம்ம சேரிப்பக்கத்து மேளம் ஆகாசத் துக்கும் கேக்கட்டும்.! பூமிக்கும் கேக்கட்டும்.! அப்புடியா ஒச்சமா எல்லாயெடத்தையும் பெரட்டிப் போடட்டும். அடிங்கப்பா..?”
ஒருவன் நல்ல வெறியில் வெளியே மேளகாரர்களுக்குச் சத்தம் போட்டுச் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் கதைக்கிற குரல்தான் இப்போது மேளச்சத்தத்தோடு அங்குள்ள எல்லாருக்கும் கேட்கிறது.
உறுமி சுதியேறி அதன் ஓங்காரநாதம் சுற்றியிருப்பவர்களின் காது களிலே அடித்து வீசுகிறமாதிரியும் தலைக்கு சுர்ரென்று ஏறுகிறமாதிரியும் இருக்கிறது.
மூச்சு வாங்கினாலும், கை ஒயிறவரைக்கும் வெளுத்துவாங்குவோம் என்ற அளவிலே மேளகாரர்கள் அடித்து விளாசுகிறார்கள். கீழ்மூச்சு வாங்குகிறது தவில் வாசிப்பவனுக்கு. குழல் ஊதும் பிச்சாண்டியை வாசிப்பில் ஒரு குறை குற்றம் சொல்லவே முடியாது. குழலுக்கு வெளியாலே இன்னும் நாதமாய் வெளிவருகிறது சத்தம். குழல் வாசிப்பில் மரியாதை குறையவில்லை அவனுக்கு, கனசத்தம் உசுப்பேத்துகிறது எல்லோருக்கும்.
காவல் கொட்டிலிலுள்ள செல்வநாயகம் செவ்வந்தி வீட்டுக்குக் கொஞ்சம் தூரமாய் உள்ள இடத்திலிருந்து உறுமி மேளக்கூட்டத்தினரின் வாசிப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது அனைத்து எண்ணங் களும், அந்த மேளச் சத்தம் கேட்டு குலைந்து போகும் பறவைக் கூட்டம் போல இருந்தன. நேற்றோ அதற்கு முன்னமோ, அல்லது இன்றாகவோ தான் அனுபவித்துக்கொண்டிருக்கும் சம்பவங்களிலெல்லாம் எது உண்மையானது, எது பொய்யானது என்று அவனுக்கு ஒன்றையும் இனங்கண்டுகொள்ள முடியாமலிருந்தது. சிதறிச்சிதறிப் பிரியும் எண்ணங்களில், உதடுகளைக் கடித்தபடி அவன் பதைபதைப்புடன் அதிலே நின்றான். கோபமும் விரக்தியும் அவனுக்கு மனதை
துபேரகேசரuவீர்கள் O 395 O

Page 204
எரியவைத்தன. தன் இரத்த அணு ஒவ்வொன்றிலும் தாளமுடியாத பாரத்தைச் சுமத்துகிற இந்தக் கவலையிலிருந்து விடுபடவும், இதிலே இருந்து கால் கடுக்க தான் எங்கேயாயினும் ஓடினாலென்ன? என்றும் அவன் எண்ணினான். ஆனாலும் தான் எங்கே அப்படியாக ஓடினாலும், மனதில் இப்போது ஏற்பட்டுள்ள அந்த வெறுமையின் அகழியைத் தன்னால் இனிமேல் மிதந்து தாண்ட முடியாது என்பதைப் போல அவனுக்கு இருந்தது.
இந்த மன அவசரங்களெல்லாம் என்னிடமிருந்து அடங்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டு அவன் கண்களை மூடிப்பார்த்தான். ஆனால் அவன் நினைத்தமாதிரியாக அது ஒன்றும் அவனுக்கு உடனே சாத்தியப் படவில்லை. மூடிய அவன் கண்களுக்குள்ளும் அந்தக் கல்யாணக் கூட்டம் அவனுக்கு இப்போதும் காட்சியளித்துக்கொண்டுதான் இருந்தது. அவனுக்கு சஞ்சலமும் தொடர்ந்து ஆத்திரமும் அதனால் ஏற்பட்டது. என் கண் இனி எப்போதும் இந்தக் காட்சியை விட்டுப் பிரிய அனுமதிக்காதோ? என்றுகூட ஒரு கணம் அவன் நினைத்தான். “எல்லாமே பாசாங்குதான்! பெண் என்பவள் பாசாங்குதான்!”
அவனுக்கு இந்தச் சொற்தொடர்கள் மனதை ஊடுருவின. அவையே மீண்டும் மீண்டும் குமிழிகளாக முளைத்து முளைத்து விலகிச் செல்வது போல அவனுக்கு இருந்தன.
கண்களைத் திறந்தான். மேலே நிமிர்ந்து பார்த்தான். வானில்
மேகங்களின் திரள்.
மீண்டும் தேன் நக்கும் குழந்தையைப் போல, பாலை மரத்தடிப் பக்கம் பார்த்தான். அதே நினைவுதான் முன்நோக்கியே ஒடிக்கொண்டிருந்தது அவனுக்கு.
பளபளவென மின்னியபடி வெயில் அவனுக்கு முன் நீளமாகக் கிடந்தது. ஆனால் அவன் முகத்திலோ ஒளி இல்லாதமாதிரி சோகமாயிருந்தது. அவன் கைகளை பின்னால் கட்டியபடி பிறகு கொட்டிலுக்கு நடந்து வந்து சேர்ந்தான். அவன் அங்கே வர சிலையை உற்றுப் பார்க்கிற மாதிரி காவல் வேலைக்குப் புதிதாக வந்திருக்கும் காவல்காரன் பார்த்தான்.
அவன் பார்வையில் ஒரு கேள்விக்குறி இருந்தது.
“நாளைக்கோ நாளையிண்டைக்கோ நான் பயணம்” என்று செல்வநாய கமும் அவனின் பார்வைக்கு ஒரு பதிலைச் சொல்லவேண்டியதாக இருந்தது.
O 396 O ரீஆெளானந்தம்

அதற்குப்பிறகு எல்லாம் கழட்டிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட செல்வநாயகம் அதிலே நின்று கொண்டு சவக்காலை வெளியையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அங்கே அவன் கண்ணில் பட்ட புதைகுழிகளும் சிலுவைகளும் அவன் பார்வையினூடாகச் சென்று அவன் மனதை அடைந்து கொண்டி ருந்தன.
உடனே அவனுக்கு மனதுக்குள் ஒரு முடிச்சு அறுபட்டது.
“இதுதானா மனிச வாழ்க்கை.? சதையும் சதையும் கொள்ளும் உரசலுக்கு என்மனம் ஏன் இப்படியெல்லாம் பாடுபடுகிறது.?”
இதையே திரும்பத்திரும்ப அவன் நினைத்துக்கொண்டிருக்க தன்னிலிருந்த மன எரிச்சல் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்க்கொண்டிருப்பதாக அவன் நினைத்தான். இனிமேல் தான் செய்யவேண்டியது என்ன? என்பதை தெளிவாக அவன் யோசிக்க ஆரம்பித்தான்.
O
கலியாண வீட்டிலே வந்திருந்தவர்களெல்லாம் அங்கே கொடுத்தவை களை வாங்கிச் சாப்பிட்டார்கள். இருக்கின்றதை குடித்து வெறித்து ஆட்டம் போட்டார்கள்.
“ஒரு கொறையில்லாம எல்லாத்தையும் இராமனு எல்லாத்துக்குமா தின்னக் குடிக்கக் குடுத்துப்புட்டாரு.”
என்று கல்யாண வீட்டுக்கு வந்தவர்கள் வாயால் புகழ்ந்து சொல்லிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள். போகிறவர்களோடு சேர்ந்து கொண்டு உறுமிமேளக் கோஷ்டிக்காரர்களும் போகிறார்கள் அவர்கள் அவர்களது வீட்டுக்கு.
O
பொழுதுபடப்பட செவ்வந்திக்கு வண்டுகள் நெஞ்சைக் குடைந்து உள் உறுத்துகிற மாதிரி இருந்தது. இலைப்புழு நெளிந்து தன்னில் ஒட்டிக் கொள்ள வருவதுபோல அருவருப்பான நினைவுகளாய் அவளுக்கு இருந்தன.
விளக்குவைத்த நேரத்தோடு இராமன் தன் மகள் ராக்காயியைத் தன்னுடன் கூட்டிக்கொண்டு தண்ணிமலையின் வீட்டுக்குப் படுக்கப் போய்விட்டான்.
aംUഷ്ട്. O 397 O قاروںنابیہ

Page 205
சேரிப்பக்கமெல்லாம் உறங்கிக் கிடக்கும் வீடுகளாகிவிட்டது. செவ்வந்தி மனவாட்டத்துடன் பாயிலே இருந்துகொண்டிருந்தாள். சோணமுத்து அவளின் பக்கத்தில் இருந்து இனிப்பாக கதைகள் பல சொன்னான். அவன் அவளைத் தொட பல்லைக் கடித்துக்கொண்டு முகம் சிறுத்து அவள் தள்ளி விலகி இருந்தாள். சோணமுத்துக்கு அதனால் அவள்மீது ஆத்திரம் வந்துவிட்டது. நறுக்கென்று அவள் நெஞ்சிலே குத்துகிறது மாதிரி வெறிமிக்க குரூரத்துடன் அவன் பிறகு கதைக்க வெளிக்கிட்டான். அவன் சொன்ன சொல் ஒவ்வொன்றும் செவ்வந்திக்கு நறுக்கு நறுக்கென்று நெஞ்சிலே குத்துவது போல இருந்தன. அவள் அழத்தொடங்கினாள். சோணமுத்துவுக்கு அவளை இப்படித்தான் பழி வாங்க வேண்டும்போல இருந்தது. அவள் அழுவதையும் கவலைப்படுவதையும் பார்க்க அவனுக்கு ஒருவித ருசியாகவிருந்தது.
செவ்வந்தி அழுகையை நிறுத்தாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள். அவள் அழுகிறாளே என்று சோணமுத்து அவளைச் சும்மாவிடவேயில்லை. அவன் மிருகம்மாதிரி ஆங்காரத்தோடு அவளுடன் கூடுகிறான். புறாக் குஞ்சின் சத்தம்போல் முனகல் மட்டும் அவளிடமிருந்து வந்துகொண்டிருந்தது. இரண்டு வலியிலே பெருங்கொண்ட வலி என்னதென்று தெரியாமல் செவ்வந்தி கிடந்து அவ்வேளை துடித்துக்கொண்டிருந்தாள்.
4b
பாயிலே படுக்கப்போட்ட பிள்ளைக்கு தானும் பக்கத்திலே படுத்துக் கொண்டு செழிப்பான மாரைத் திறந்து பாலைக் கொடுத்துக் கொண்டிருந்தாள் திரேசா.
அந்த நடுப்பகல் பனிரெண்டு மணியிலே, கோயில் வளவுக்காட்டுக்குள் இருக்கும் பனைகளில் யாரோ பனைஒலை வெட்டி விழுத்தும் தனி ஒலி கேட்டுக்கொண்டுடிருந்தது.
அவள் ஒரு பக்க மார்பில் பால் வற்றிவிட, தன் மிருதுவான கரிய நுனியுள்ள அடுத்த ஸ்தனத்தை பிள்ளையுடைய வாயில் வைத்தாள். கையால் முலையை அமுக்கிப் பால்சுரத்திக் கொடுத்தாள். அந்தப் பக்கம் பால்வழிப் பாதையின் உயிர்புள்ள கண்களிலிருந்து இறங்கி வந்த பாலை, பிள்ளை அமைதியாக முண்டி முண்டிக் குடிக்கத் தொடங்கியது. அந்த முட்டுகிற சுகமான ஒரு சுகத்தை கண்களை மூடி அனுபவித்துக்கொண்டு பிள்ளை தலையிலும் செல்லமாக தடவிக்கொண்டிருந்தாள் அவள்.
o 398 O ரீ.பி.அருணானந்தல்

பிள்ளையும் தாயின் அணைப்பில் உள்ள சுகத்தோடு, கீழ் ஈறில் முளைவிட்டிருந்த குட்டிப்பல்லால் பால் குடித்துக்கொண்டிருக்கும் போது நன்னுகிறமாதிரிப் பிடித்தது.
“சீ கடிக்கிறாள் பார் கழுதப்பெட்ட” என்று சொல்லி அவள் உடனே பிள்ளையின் காலில் ஒரு செல்லத்தட்டுத் தட்டினாள். ஒரு பக்க உதட்டில் ஒரமாக அவள் சிரித்தும் கொண்டாள். வயிறு நிறைந்து பால் தாகம் தீர பிள்ளை அமைதியாகத் தூங்கத் தொடங்கியது. அவளும் பிள்ளையைப் பார்த்துக்கொண்டு புலன்களை லயிக்கவிட்ட அளவில் அமைதியாக கண்களையும் சொருகி மூடிக் கொண்டு கிடந்தாள்.
"அக்கா அக்கா’
திரேசம்மா கண்களை விழித்துப் பார்த்தாள். வினோதமாகச் சிரித்தபடி அவளின் வீட்டு வாசலடியில் நின்று கொண்டிருந்தாள் சக்கரியாசின் LD56i.
"சலோமி என்னடியாத்த.?”
"அக்கா றோச மாமியின்ர மகளிண்ட சாமத்தியச் சடங்குக்கு கிராம போன் பெட்டியும் அங்க வந்திருக்கு.”
தொண்டை திறந்த மாதிரி பெரிய குரலோடு சொன்னாள் அவள்
“சூ. பிள்ள எழும்பப்போவுது மெதுவாக் கதையடி.? எப்பயடி என்ன நேரம் வந்தது கிராமபோன்?”
“இப்பத்தானக்கா.: மத்தியானமா ஒருமணி ஒண்டரைமணி போல.”
குரலை இறக்கிக் கொண்டு சொன்னாள் அவள்.
y
"மனோகரா வசனம், பராசக்தி வசனம், எல்லாம் வந்திருக்கக்கா.
பிறகும் சொல்லிவிட்டு அவள் சிரித்தாள்.
"அப்ப நீ சாமத்தியக் கலியாண வீட்டில இருந்துதான் இங்க இப்பவா வாறியோ..?”
“எல்லாம் அங்க இருந்துதான் நான் பாத்திட்டு வாறன். பாட்டெண்டு அந்தப் பெடிய நாங்க உடன கேட்டா பாட்டுகள். வசனமெண்டு கேட்டா உடன வசனங்கள். அப்பிடியா கிராமபோன் கொண்டுவந்த அந்தப் பெடியனும், எல்லாரும் விரும்புகிறதக் கேக்கக் கேக்க உடன போட்டுக்காட்டுது.”
துயரே თუსთხU«თkeთრიNo O 399 O

Page 206
"மதுரவீரன் பட வசனமும் கொண்டந்திருக்கிறாங்களோ..?”
"அதுவும் அவங்கட்ட இருக்கும். கட்டாயம் கொண்டந்திருப்பாங்கள்.! எம்.ஜி.ஆற்ற படக்கதை வசனம் கொண்டராம விடுறாங்களே..?”
"அப்ப அந்தப் படத்துப் பாட்டுக்களும் கொண்டந்திருப்பினமென்ன..?”
“ஓமக்கா, நீயும் வந்து அதுகள உண்ணாணப் பாரக்கா..? நானும் உங்கள ஒருக்காக் கூட்டிக்கொண்டுபோய் அதுகளக்காட்டத்தான் அங்க நிண்டுகொள்ளாம இங்க ஓடியந்தனான். ஏனெண்டா பின்னேரம் மட்டும் தானாம் அதுகளப் போட அவங்களிட்ட வாடைக்கெண்டு அவயள் பிடிச்சிருக்கினமாம்.”
"அப்ப பின்னேரமா கிராமபோன் பெட்டி போயிருமோ..?”
ரவிக்கையை இழுத்துவிட்டு, பக்க முந்தானையை ஒதுக்கிக்கொண்டு எழுந்து இருந்தாள் அவள்.
"அப்பிடித்தானக்கா. போயிரும்போலத்தான் கிடக்கு.”
"அப்ப நானும் இந்தா உன்னோட வாறனங்க..?”
அவள் சொல்லிக்கொண்டு படுத்திருந்த பிள்ளையை தூக்கிக் கொள்ள காலுக்குள்ளும் தலைக்குள்ளுமாகத் தன் கையை கீழே விட்டாள்.
“பிள்ள ஏன் அக்கா தூக்காதேயுங்கோ.?” என்றாள் உடனே சலோமி "ஏன்ரி.”
"அது நித்திரதானே.?”
"அப்பிடியெண்டா..?”
"அப்பிடியே பிள்ள படுத்துக் கிடக்கட்டுமக்கா. ஏன் நித்திரயக் குழப்புறா..?”
"தனிய வீட்டுக்க பிள்ளய விட்டுட்டுப் போவமெண்டுறியோ..?”
“பின்ன என்ன நல்ல நித்திரதானேயக்கா பிள்ள..?”
“எடியே பிள்ள நானில்லாட்டி வீட்டுக்க பிறகு தனிய எல்லேடி.?
"அது நித்திரதானே நீங்க பாத்திட்டு இங்க உடன வந்திருவியள் தானே.?”
“என்னடி பிள்ளய விட்டுட்டு போவம் எண்டுறாய்?”
O 400 O ரீ.பி.அருளானந்தs

"நீங்க வாங்கக்கா அது நித்திரதானே.? நித்திரயாக்கிடக்கட்டும்! நீங்க அதக் குழப்பாம வாங்க..?”
சலோமி சொல்லவும் திரேசா தன் குழந்தையைப் பார்த்தாள்.
சிரித்தாள்.
"பாவம் என்ர குஞ்சு நல்ல நித்திரயடி.!"
“சரி வாங்கக்கா..?”
“பொறன் கதவ சாத்திப்போட்டு.?
“சாத்துங்கோ..?”
அவள் கதவைச் சாத்த முன்னால் எட்டி நடந்துபோய் தள்ளி நின்றாள் சலோமி.
“என்னடி அவ்வளவு அவசரம் நீ.?” "நீங்க வாங்கக்கா..?” என்றாள் அவள் சிரித்துக்கொண்டு.
“சரி சரி நடவடி நடவடி” என்றாள் திரேசா.
இருவரும் ஒழுங்கையால் போய்த் திரும்ப, அவர்களை எதிர் கொள்கிற மாதிரி ஆரோக்கியநாதன் தள்ளாட்டமாய் அப்போது நடந்துவந்துகொண்டிருந்தான்.
“பெரியண்ணன் உங்க நல்ல வெறியில வருகுது..!" என்று அவனைப் பார்த்துக்கொண்டே சலோமி திரேசாவுக்குச் சொன்னாள்.
"நீ உன்ர பாட்டுக்குச் சும்மா வா..! ..” என்று திரும்பி பக்கத்துக் குடிசையைப் பார்த்துக்கொண்டு அவளுக்குச் சொன்னாள் திரேசா.
ஆரோக்கியம் அவர்களுக்குக் கிட்டே வந்ததும் நின்று. வெறியில் ஒரு ஆட்டம் ஆடினமாதிரி உடம்பை வளைத்துவிட்டு, மற்றப் பக்கமாக காறி எச்சில்க் கழியைத் துப்பினான்.
"சலோமி எங்கடி போறா?”
“சாமத்தியக் கலியாண வீட்டுக்குப் போறணண்ண.”
"அங்க என்னத்துக்கடி இந்த மத்தியானம் போறாநீ.?”
துயரச் சுச0uண்கள் O 401 O

Page 207
"அங்க கிறாமபோன் வந்திருக்காமண்ணய்.?”
"அதுதான் உனக்குப் பாக்காத ஒரு குற.1 சரிப் போ போ நீ. அதார் உன்னோடவா வாறவ. .ஆரை நீ இழுத்துக்கொண்டு போறாய்..? ஒச் சரி சரி உவவே உன்னோடயாய் வாறா. சரி போங்கோ போங்கோ போங்கோ.”
என்று சொல்லிவிட்டு போகிற அவர்களைப் பின்னால் நின்று திரும்பிப் பார்த்துக்கொண்டு வெறியில் ஆடிக்கொண்டு நின்றான் ஆரோக்கிய நாதன். வெறி விழுத்துகிற மாதிரி வரபக்கத்தில் நின்ற முள் முருங்கை மரத்தை எட்டித் தாக்குக்குப் பிடித்தான் அவன். - “என்னப்பா பூஊ. முள்ளு முள்ளு. ஆவ். ஒக்காள ஒளியள். முள் மரம் நட்டிருக்கிறாங்கள் நடு றோட்டில.” அவன் பெலத்துப் பேசிக்கொண்டு அங்காலும் இங்காலேயுமாய்த் தள்ளாடியபடியே நடந்து தன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். ஒலைத் தட்டிக்கதவு திறந்து கிடந்தது. உள்ளே இருந்த கோழி ஒன்று அவனின் மேலாகப் பறந்து தவ்விப் போனது.
"நாய் கோழியள வீட்டுக்க கிடக்க விட்டுட்டு அவளயஸ் எங்கயோ வீட்டத்திறந்து வைச்சுப்போட்டு ஊர் உலாத்தப் போயிட்டாளயஸ்.”
சொல்லிக்கொண்டு செத்தைத் தட்டியருகே போய் விழுந்துபடுத்தான் அவன். காலை அகட்டிப்போட்டுக் கொண்டு மல்லாக்கப்படுத்தபடி தலையையும் போட்டு ஆட்ட, சேட்டுப் பைக்கற்றுக்குள்ளாலே நெருப் பெட்டியும் பீடிகளும் கீழே கொட்டுப்பட்டன.
“ம்க். ம்..” என்று முனகியவாறு தலையை கொஞ்சம் உயர்த்தி பைக்குள்ளால் வெளியே விழுந்த நெருப்பெட்டியையும் பீடியையும் அவன் ஒருமுறை பார்த்தான். திரும்பவும் மண்டை நிலத்தில் அடிபடப்போட்டுப் படுத்துக் கொண்டான் அவன்.
O
றோசை என்பவளது வீட்டில் கிராமபோன் அலகில் பையன் ஊசியைப்
பொருத்தித் திருப்புவதை குழந்தைகள் பெரியவர்கள் நின்றபடி கவனித்துக்கொண்டிருந்தனர்.
O 402 O ரீ.பி.அருணானந்தே

ஹிஸ்ட் மாஸ்டர்வோய்ஸ்சில் இருந்த நாய் சுழலத் தொடங்கியது.
“ஸ்ஸ்ஸ்ஸ். மனோகரா உன்னை ஏன் அழைத்துவரச்சொன்னேன் தெரியுமா?”
அழைத்துவரச் சொல்லவில்லை அரசே இழுத்துவரச் செய்திருக்கிறீர்..?” h−
“ம்.! என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.?”
“கட்டளையா அரசே இது. கரைகாண முடியாத ஆசை. பொன்னும் மணியும் பூட்டி மகிழ்ந்து. கண்ணே, முத்தே, தமிழ்ப் பண்ணே என்று குலவிக்கொஞ்சி, தங்கத்திலான கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, என் வீரனே, என்விழி நிறைந்தவனே, வீரவழிவந்தவனே என்று யாரையெல்லாம் சீராட்டிப் பாராட்டினீர்களோ, அவனை, அந்த மனோகரனை, சங்கிலியால் கட்டி சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டுமென்ற தணியாத உங்கள் ஆசைக்குப் பெயர் கட்டளையா அரசே?”
“போதும் நிறுத்து! நீ நீதியின் முன் குற்றவாளி தந்தை முன் தனயனல்ல இப்போது.?”
“அரசே! தந்தை முன் தனயனாகவல்ல. பிரஜைகளில் ஒருவனாகவே கேட்கிறேன், குற்றமென்ன செய்தேன் கொற்றவனே குற்றமென்ன செய்தேன்.?
வசனம் தொடர்ந்து கடகடவென்று போய்க்கொண்டிருந்தது. ஈக்கள் எழுந்து காற்றில் சுழன்று கொண்டிருந்தது மாதிரி கிராமபோனைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தார்கள் சின்னஞ்சிறுசுகள். இடுப்பில் கையூன்றியபடி பக்கத்தில் நின்று வசனம் கேட்டுக்கொண்டிருந்தார்கள் வளர்ந்த பெண்கள்.
முகத்தை பல விதமாக மாற்றி கிராமபோனை பரிசோதித்துக்கொண்டி ருக்கிற மாதிரி வயது போன கிழடுகளும் அதைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். திரேசாவும் சலோமியும் நேரே நடந்துபோய் கிராமபோனை அணுகி நின்றார்கள். "மல்லா நீ அங்கால தள்ளி நில்லடா” என்று சொல்லிக்கொண்டு சலோமி கிராமபோனுக்குப் பக்கத்தில் நின்ற சின்னப் பெடியனை தள்ளிவிட்டுப் போட்டு நின்றாள். "இங்க எங்கட இந்த அக்காவுக்கு மதுர வீரனில இருந்து ஒரு பாட்டுப் துயரச் சுeduவிர்கள் O 403 O

Page 208
போடுங்கோ..? அவ கேட்டுட்டு உடன வீட்ட போவேணும்” என்று அவள் கிராமபோன் பெடியனுக்குச் சொன்னாள்.
“கொஞ்சம் பொறுங்க பாட்டு றெக்கோட்டுக்கள தேடியெடுத்துப் போடுறன்.” என்று அவன் சொல்லிவிட்டு றெக்கோட் தட்டுக்களை “சிலிஸ் சிலிஸ்.” என்று உறைகள் சத்தம் போட இழுத்தெடுத்துப்
பார்க்கத் தொடங்கினான்.
"மனோகரா பொறுத்தது போதும் பொங்கி எழு” சக்கரம் முறுக்கிய தட்டிலிருந்து குழல் வழியாக மனதைப் பிளக்கும் கண்ணாம்பாவின் வசனங்கள் போய்க்கொண்டிருந்தன. அதை நிறுத்தி ஊசிக் கையை தூக்கி எடுத்துவிட்டு மதுரைவிரன் பாட்டு இசைத்தட்டை மாற்றிப்
போட்டான் பையன்.
"நாடகமெல்லாம் கண்டேன் உந்தன் ஆடும் விழியிலே. டிங்கிடங்க டிங்கிடங்க. ஆடும் விழியிலே.” பாட்டுப்போக தன் கூந்தலை எடுத்து கையில் பிடித்தபடி நுகர்ந்துகொண்டு ஒளியுமிழும் கண்களோடு நின்றாள் திரேசா. அந்தப் பாடலின் இசைவளைவுகள் சுகமாய் அவள் மனத்தில்படர அவளுக்கு சிறகு விரித்து தனிமையில்தான் பறப்பது போல இருந்தது. காற்று நன்றாக எழுந்து வீசிக்கொண்டிருந்தது. குட்டிப் பந்தலுக்குள் கட்டியிருந்த சேலைகளும் மாலைகளும் அசையக்கூடிய அளவுக்கு அசைந்துகொண்டிருந்தன.
அந்தப் பாட்டு நிறைவு பெறவும்,
"இன்னும் நாலுபாட்டு மதுரவீரன் படத்தில உள்ளது இதுக்குள்ள
கிடக்கு.”
என்றான் பெடியன்.
"அப்ப அதையும் ஒருக்கா அடுத்தடுத்துப் போட்டு விடுங்கோ அக்கா நிண்டுகேட்டிட்டுப் போவட்டும்.” என்றாள் சலோமி
“எடி அங்க பிள்ளயெல்லே நித்திரயால எழும்பப்போகுது.” என்று சலோமிக்குச் சொன்னாள் திரேசா.
"அது நல்ல நித்திர நீங்க கொஞ்சம் நிண்டு பாட்டுக் கேட்டுட்டுப் பிறகு போங்க அங்கா?” என்றாள் அவள்.
திரேசா வள்ளத்தில் ஒரு காலும் நிலத்தில் ஒருகாலும் வைத்துக் கொண்டிருப்பது போல என்ன செய்வோம்? என்ற நிலையில் தடுமாறினாள். வீட்ட இப்பபோவமோ, பாட்டுக் கேட்டுட்டு பிறகு போவமோ என்று அவள் கிடந்து மனத்தை அலையவிட, பானுமதியின்
O 404 O ரீ.பி.அருளானந்தல்

அவர்க்கும் எனக்கும்’ என்ற பாட்டைப் போட்டான் அவன். அந்தப் பாட்டைக் கேட்க, நெஞ்சை ஆற்றிக் கொண்டிருக்கிறமாதிரி அவளுக்கு இருந்தது.
ஆனாலும் அவள் நெஞ்சிலே இன்னும் சிறிது நேரத்தில் ஒரு பெருமுள்ளை ஊன்றிக்குத்தக் காலம் தயாராகிறது என்று அவளுக்கு எப்படித் தெரியும்?
அதெல்லாமே ஒன்றும் தெரியாத அளவிலே சொகுசான பாட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டு அதிலே தன்னை மறந்தபடி அவள் நின்று கொண்டிருந்தாள்.
47
ஒரத்தட்டிச்செத்தைப் பக்கம் தலையை வைத்துப் படுத்துக்கிடந்த ஆரோக்கியநாதன், பீடித்தகனம் வந்துவிட கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டு எழும்பி இருந்தான்.
நிதானம் பெற இடுப்புக்கு மேலே உள்ள உடம்பை சக்கப்பணிய இருந்தபடி ஆட்டிக்கொண்டிருந்தான். முன்னாலே நிலத்தில் பீடி இருப்பது அவனுக்குத் தெரிந்தது. நெருப்புப்பெட்டியும் பக்கத்தில் கிடப்பது தெரிந்தது. உலகம் சுழலுமாப்போலத்தான் வெறி ஆட்டியது. ஆனாலும் பீடி ஒன்றை கையில் எடுத்தான். நெருப்புப்பெட்டியை எடுக்கவென்று அவன் கையை நீட்டிப் போட அது தட்டுப்பட்டு விலகியது. மறுமுறை நெருப்பெட்டியை கையால் பொத்தி தன் பக்கம் இழுத்தெடுத்தான். நெருப்பெட்டியில் குச்சுத் தட்ட வெளிக்கிட்டதில் மூன்று தீக்குச்சி வீணாகியது. வாயில் இருந்த பீடியில் வீணிரும் ஊறி நனைந்தது. கஷ்டப்பட்டு அடுத்த தீக்குச்சு எடுத்துத் தட்ட ஒருவாறு அது தீப்பற்றிக் கொண்டது. பீடியில் நெருப்பைப் பற்ற வைத்துக் கொண்டு. -- எரிந்து கொண்டிருந்த தீக்குச்சை ஓலைச் செத்தைப் பக்கம் வீசினான். பீடிப் புகையை உள்ளுக்குள் ஒரு தரம் இழுக்க, தலைச்சுற்றாய்ச் சுழற்றியது. மடோர் என்று விழுந்து திரும்பவும் அதே இடத்தில் மல்லாக்கக் கிடந்தான் அவன். அப்படியே அவன் கண்களை மூடிக்கிடந்த அளவில் உடம்பில் நெருப்புச் சுடுகிற மாதிரி வெக்கையாக இருந்தது. அவ்விதம் இருந்தும் அவனுக்கு எழுந்திருக்க மனசே வரவில்லை. பிறகு எழுந்திருப்போமென்று மனதில் அவன் நினைத்தாலும் அவனால் அதுவும் முடியவில்லை.
அவன் உள்ளுக்குள் இழுத்துக்கொண்டு போகிற அந்தக் கடுமையான gură estuarăască O 405 O

Page 209
வெறிக்குள்ளும் யோசித்தான்.
"சரிசரி எழும்பு" என்று மனம் சொல்ல கால் இரண்டையும் மடக்கி நேரே நீட்டிப் பார்த்தான். ஏதோ மண்ணுக்குள் போட்டு தன்னைப் புதைத்த மாதிரி ஒன்றுமே செய்ய முடியாதது போல அவனுக்கு இருந்தது.
மயிர் கருகி மணப்பதுபோல ஒரு நாற்றம் அவனுக்கு அடித்தது. உடம்பில் இன்னும் தனக்கு வெக்கையடிப்பது போலவும் அவனுக்கு இருந்தது கொள்ளியால் கட்டதுமாதிரி காலில் கள்ளென்று அவனுக்கு எரிந்து கொதித்தது.
அந்த எரிவுச் சூட்டில் அமுக்கின வெறியெல்லாம் முறிந்துபோய் சடாரென்று அவன் எழும்பி இருந்தான்.
எழும்பின வீச்சிலே உடுத்த சாரத்தைப் பார்த்தால் கால்பக்கத்திலே நெருப்பு
காலை உதறி. உதறி உருண்டு விழுந்தண்டித்து அவன் நிலத்தில் புரண்டான். "ஆண்டவனே" என்று அவன் சொல்லியபடி சாரத்தைக் கையால் பிடித்து உடனே கசக்கிவிட நெருப்பு அணைந்துவிட்டது.
ஆனால் குடிசையின் நாலு பக்கமும் அங்கே தீப்பிடித்து அப்போது பறந்துகொண்டிருந்தது. -- மளமளவென்று அங்கே எரியுது எரியுது நெருப்பு அவன் "என்ன பண்ணுகிறது. ஏது பண்ணுகிறது" என்று தெரியாத அளவில் வாசல் கதவுத் தட்டியை இழுத்துப் பிய்த்துக்கொண்டு வெளிக்கிட்டமாதிரி அந்த நெருப்புக்குள்ளால் பாய்ந்து வந்தான் வெளியே.
"ஐயோ ஐயோவென்ர விடெரிபுது வீடெரியுது." அவன் வெளியே நின்று கத்திக் குழறிச் சத்தம்போட,
பக்கத்து வீடுகளிலிருந்தும் அங்கே வெளியே நின்றுகொண்டு பலர்,
"ஐயையோ எங்கடயும் விடெரியுது வீடெரியுது ஓடியாருங்கோ, ஒடியாருங்கோ." என்று பதைபதைத்த குரலில் பெலத்துச் சத்தம்போட்டுக் குளறினார்கள்.
எறித்த வெயில் ஒரு பக்கம் கண்டிக்கொண்டிருக்க, இன்னொருபக்கம் காற்றும் நன்றாக சுழித்து அடித்துக் கொண்டிருந்தது காற்றில் நாக்குகளைச் சுழற்றிப்போட்டு தி ஆட்டமாய் ஆட, பக்கத்துப் பக்கத்துக் குடிசைகளிலும் தீ வேகமாய் தொற்றிப்பரவி விளாசி எரியத் தொடங்கியது.
D 106 C ரீ.சி.ஒருணாகரத்தம்


Page 210
நெருப்புப் பிடித்து எரியத் தொடங்கியதும், அதாலே வீதியில் போகிறவர்கள் வருகிறவர்களுடன் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் தொலைதூரங்களில் உள்ள வீடுகளில் இருப்பவர் களென்று எல்லோருமாக அங்கே அக்கினி துழாவிப்படரும் அவ்விடத்தில் திமுதிமுவென்று வந்து சேர்ந்துவிட்டார்கள். சேரியிலுள்ள இளம்பெண்கள் திரண்டோடி வந்தனர். குழந்தைகளும் ஓடிவந்தனர். வயோதிபரும் ஓடிவந்து கூடினர். தலையில் கை வைத்து வாய்விட்டுக் கதறினர்.
சேரியில் உள்ள வீடுகளிலே ஒரு குடம் தண்ணிருக்குமேலே பொட்டுத் தண்ணிர் கிடையாது. ஆனாலும் இருக்கின்ற அந்தக் குடத்துத் தண்ணிரைக் கொண்டு ஓடோடி வந்து எரியும் நெருப்பை அணைக்க அவர்கள் அடித்து வீசத் தொடங்கினார்கள். வீடுகளில் வேறு பண்ட பாத்திரங்களில் மிச்சம் மீதி இருக்கும் தண்ணிரைக்கொண்டுவந்தும், அவர்கள் ஆளாளுக்கு எறிந்தாலும், எரிய வெளிக்கிட்ட நெருப்பு குதியாட்டம் போட்டு எரிந்துகொண்டுதானிருந்தது. திக்கெல்லாம் தாவிப் பிடிக்கும் தீயாலே எவரும் தங்கள் தங்கள் குடிசைக்குள்ளே நுழைந்து அதையிதையென்று ஒரு பொருளையும் எடுக்கவே முடியவில்லை.
ஊற்றுகிற தண்ணிரையெல்லாம் யமன் போல குடித்துவிட்டு நெருப்போ நூராமல் இன்னும் எரிகிறது. அடிக்கிற வெயிலுக்கும் காற்றுக்கும் எல்லா இடத்திலும் நெருப்பிலிருந்து பொறிப்பறந்து பாறித் தெறித்துக் கொண்டிருந்தன. காற்றில் வானளாவி உயரும் தீ நாவுகளை துக்கத்துடனும் பயத்துடனும் ஒன்றுமே செய்வதற்கு வழிவகை தெரியாது சிலபேர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கிராமபோன் கரகரப்பான குரலில் பாடி முடிந்ததும், றெக்கோட்டில் கடந்து முடிந்த ஊசி, முன்னும் பின்னுமாய் நகரத் தொடங்கியது.
கிராமபோனின் ஊசிக் கையைத் தூக்கி, றெக்கோட்டைப் பையன் கையில் எடுத்த நேரம்,
"ஐயையோ அங்கயெல்லாம் எங்கட பக்கத்து வீடுகள் நெருப்புப்பிடிச்சு எரியிதே. . அடியே திரேசா உன்ர வீடும் தானடி எரியிது ஐயோ ஐயோ..” என்று ஒருத்தி கத்திக் குளறிக்கொண்டு விழுகிறமாதிரி ஓடிவர,
திரேசா உடனே "ஐயோ என்ற பிள்ள அதுக்க” என்று தன் தலையிலே கையால் மடாரென்று அடித்தாள். பிறகும் மார்பிலே கையால் அடித்துக்கொண்டு இன்னும் பலமாகக் கத்திக் குளறிக்கொண்டு தன் O 408 O ரீ.பி.அருணானந்தs

குடிசைப்பக்கம் ஓடினாள். அங்கே தலைவிரிகோலமாக ஒடிப்போன அவதியோடு அவள் பார்த்தால், குடிசைகளெல்லாம் தீப்பற்றி திகு திகு வென்று எரிந்துகொண்டிருக்கின்றன. அவள் அதைப் பார்த்த தும் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறினாள். "ஐயோ என்ர பிள்ள ஐயோ ஐயோ என்ர பிள்ள” என்று கத்திக்கொண்டே மிளாசி நெருப்பு எரிந்துகொண்டிருக்கும் தன் குடிசைக்குள் பாயப் பார்த்தாள். உடனே இரண்டு மூன்று பெண்கள் சேர்ந்து அவளை நெருப்புக்குள் போகவிடாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டார்கள்.
"ஐயோ என்ர பிள்ள வீட்டுக்க. ஐயோ என்ன விடுங்கோ. விடுங்கோ. நானும் என்ர பிள்ளயோட எரிஞ்சு சாகப்போறன். ஐயோ என்ர பிள்ளய என்னால காப்பாத்த ஏலாமப்போச்சே. ஐயோ ஐயோ ஆருமே என்ர பிள்ளய உடன காப்பாத்தாம விட்டிட்டியளே..? என்ர ஐயோ நான் இனி எப்படி சீவிப்பன்.? என்ர பிள்ள செத்தா நானும் என்ர பிள்ளயோட செத்துப் போயிடுவன். ஐயோ என்ன விடுங்கோ.! என்ர ஐயோ என்ன விடுங்கோ நானும் என்ர பிள்ளயயோட சாகப்போறன். என்ன விடுங்கோ நான் அந்த நெருப்புக்க விழுந்து சாகப்போறன்..! என்ன விடுங்கோ, ஐயோ என்ன விடுங்கோ..? நான் இனி சீவிக்கமாட்டன் என்ர பிள்ளயோட நான் சாகப்போறன்.!” என்று நெருப்பு எரிய எரிய தன்னைப் பிடித்துத்தடுத்து வைத்திருப்பவர்களிடமிருந்து இழுபறிப்பட்டுக்கொண்டு அவள் கத்திக்கதறி உருண்டு கொண்டு நின்றாள். அங்கே வந்த சனங்களெல்லாம் கையில் கிடைத்த பானைகள் கைவாளிகளோடு சேரிக்கிணற்றுக்கு தண்ணீர் அள்ளி எடுத்துவரவென ஓடினார்கள். சனங்களோடு சனங்களாக தண்ணீர் அள்ளிக்கொண்டுவர செல்வநாயகமும் ஓடினான். கிணற்றடியில் நின்று சோணமுத்துத்தான் கொண்டுவருகிறவர் வாளிகளுக் கெல்லாம் தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொண்டிருந்தான். அந்தக் கிணற்றில் மழைக்கு எழும்பின தண்ணீர் இப்போது வற்றிப்போய்க் கீழ்ப்பிள்ளைக் கட்டடியில் நின்றதால் வாளிவிட்டு அள்ளி எடுக்க நேரம் செலவழிந்துகொண்டிருந்தது. பானைவாளிகளில் ஒருமுறை ஊற்றகிற தண்ணிரை மாத்திரம் தனியே எடுத்துக்கொண்டு எரிகிற குடிசைப்பக்கம் போக ஒடியோடிக் கொண்டிருந்தார்கள் சனங்கள். செவ்வந்தியும் ராக்காயியும் இடையிலேதான் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தாலும் அவர்களும் தண்ணீர் அள்ளிக்கொண்டுவந்து கொடுத்ததுடன் பதறி அடித்துக்கொண்டு திரிந்தார்கள்.
திரேசாவின் பிள்ளை அந்தக் குடிசைக்குள் கிடந்து எரிந்து கொண்டி ருக்கிறது என்று தெரிந்ததும் பெண்களின் அழுகைக்குரல்கள் அந்தத்தாயின் அழுகைக்குரலோடு சேர்ந்து கொண்டு பேரோலமாயின. நெருப்புக்குள்ளே போய் அந்தச் சின்னக்குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தச் சனமெல்லாம் நெஞ்சு சிதறி அழுதது. பிள்ளையை
O 409 O به جraliaکه وانایا به فالوونارچ

Page 211
எரிநெருப்புக்குப் பலிகொடுத்து நிற்கும் அந்தத் தாயினது சோகமான அழுகை பார்த்திருப்பவர்கள் எல்லோரின் மனதையும் முழுதாகத் தாக்கியது.
குடிசைகள் எரிய எரிய அடர்த்தியான புகை எழும்பி அனைத்தையும் போர்த்திக்கொண்டது போல இருந்தன. சேரியிலுள்ள பிள்ளைக ளெல்லாம் குடிசைகள் எரிவதை பயக்கொழிப்புடன் பார்த்தபடி சுருண்டமாதிரியாக நின்றார்கள். தங்கள் வீடுகள் எரிவதைப் பார்த்துக் கொண்டிருந்த சில பிள்ளைகளது சலித்த கண்களிலிருந்து கண்ணிரும் வழிந்துகொண்டிருந்தது.
அங்கிங்கு எரிந்த நெருப்பின் நெளியலுக்கெல்லாம் தண்ணீர் கொண்டுவந்து வந்து ஊற்றி அடித்து திரேசாவின் குடிசை நெருப்பை அணைத்துவிட்டார்கள் சனங்கள். பிள்ளையின் பிணத்தை நீட்டுத்தடியை விட்டுத்தான் சுடு கரிக்குள்ளாலுமிருந்து வெளியே அவர்களுக்குத் தட்டி எடுக்கக்கூடியதாக இருந்தது.
அந்த நெருப்பில் கிடந்து பிள்ளை வெந்ததால், பிணம் கால் அகற்றிக் கிடந்தது. எரிந்து கிடக்கும் தன் பிள்ளையின் பிணத்தைப் பார்த்துவிட்டு திரேசா அதனருகே விழுந்து புரண்டு அழுதாள். தன் மார்பிலே கைகளால் அடித்துக்கொண்டு மண்ணில் புரண்டு உருண்டபடி அவள் அழுகிற துயரம் பார்க்க யாருக்குமே தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில பெண்கள் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கத்தினார்கள். வேறு அங்கு நின்று கொண்டிருந்த பெண்கள் அவளைப் பார்த்துக்கொண்டு கண்ணீர் வடிய நின்று கேவினார்கள். அதிலே எரிந்து கிடக்கிற பிள்ளையின் பிணத்தைப் பார்த்து அங்கே நின்று கொண்டிருந்த ஊர் ஆட்களினது மனங்களெல்லாம் உள்ளுக்குள் கவலையால் எரிந்தது. திரேசாவின் அழுதகுரல் அவர்களையெல்லாம் ஒரு குலுக்குக்குலுக்கி எடுத்தது.
எரிந்து கரிக்கட்டையாகி நிணம் சொட்டச் சொட்டக் கிடக்கும் அந்தக் குழந்தையின் பிணத்தைப் ப்ாாப்பதற்கு அந்த ஊர்ப்பக்கமுள்ள ஆட்களெல்லாம் அவ்விடத்தடிக்கு வந்து கொண்டிருந்தார்கள். மனுவலுடன் சேர்ந்துகொண்டு எங்கேயோ ஒரு அலுவலுக்கென்று தூராதுாரத்தில் போயிருந்த சிமியோனும், அந்த வேளையில்தான் அங்கே நின்று இந்தச் செய்தி கேட்டதன் பிறகு பறக்கப் பறக்கவாய் சயிக்கிள் ஓடி வந்தான். சேரிப்பக்கம் வந்த வேளை சயிக்கிலோடும் அவன் சறுக்குப்பட்டுக் கீழே விழுந்தான். விழுந்தவன் பிறகு காலில் பெரிய காயத்துடன் நெண்டிநொண்டி இழுத்தமாதிரி காலையும் இழுத்துவந்து சனத்தையும் தள்ளிவிலக்கிக் கொண்டுவந்து பார்த்தால்,
எல்லாம் சர்வநாசம்!
O 410 O நீ.பி.அருணானந்தச்

பிள்ளையும் கரிப்பிணமாய்க் கிடக்கிறது.
அவனுக்கு நடுங்கியது. "ஐயோ என்ர ஐயோ” என்று அவனைக்கண்டு கத்திக் குளறிய திரேசாவின் கத்தலோடு இவனும் "ஐயோ என்ர ஐயோ” என்று கிடந்து பெரிய ஒப்பாரியாய்க்கத்தினான்.
பிள்ளையின் பிணத்தருகே அவர்கள் இருவரும் சேர்ந்து வைத்த அந்த ஒப்பாரிச்சத்தம் சேரிப்பகுதியெல்லாவற்றையும் தாண்டி அங்காலே உள்ள வீடுகளிலெல்லாம் எதிரொலித்தைப்போல அப்போது இருந்தது.
எரிந்து முடிந்தும் அந்தக் குடிசைப்பக்கமெல்லாம் வெக்கையாவிநாலா பக்கமும் அடித்துக்கொண்டிருந்தது. சேரிச் சனங்களின் முகங்களி லெல்லாம் செத்த பிள்ளையின் சாவின் நிழல்தான் படிந்திருப்பது போல் காணப்பட்டன. எரிந்த குடிசைக்குச் சொந்தமானவரிடமெல்லாம் அவல சத்தங்களும், விம்மல்கள் ஏக்கங்களுடன் நெடிய மூச்சுக்களும் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன.சேரியே கிடந்து கதறியது மாதிரித்தான் இந்தச் சம்பவம் நடந்து முடிந்த பிறகாய் இருந்தது. குழந்தை நெருப்பில் துள்ளத் துடிக்க உயிர்பறிபோன விதி பற்றித்தான் சூசைப்பிள்ளையார் குளத்தில் வாழ்ந்தவரிடத்திலெல்லாம் பேச்சாய் இருந்தன. ஆனால் சேரிப்பக்கத்து மக்களிடமோ குடிசைகள் எரிந்த பிறகு எவரிடத்திலும் பேச்சு இல்லை. இருமல் கூட இல்லை. உலர்ந்த திராட்சை போல் மனம் சுருங்கிப்போன கவலையிலிருந்தார்கள் அவர்கள். குடிசைகள் எரிந்த பின்னேரப் பொழுது வானமும் ஒரம் சிவந்து தீப்பிடித்து எரிவது போல இருந்தது.
4夕
சின்னக் குழந்தையின் பிரேதத்தை கையில் தூக்கிக் கொண்டு போகும் மனுவலுக்குப் பின்னால், எந்தப் பேச்சும் தங்களுக்குளின்றி அமைதியில் நடந்து கொண்டிருந்தார்கள் சேரிப் பக்கத்து மக்கள்.
சவக்காலைக்குப் போய் சடலத்தை புதைகுழியில் வைத்து மண்ணால் மூடிவிட்டு வரும் பொழுது "காலமே நீ ஏன் இப்படி எங்களுக்குப் புதிய புதிய கவலைகளை மனதில் கொண்டு வருகிறாய்..?” . . என்றதாய் ஒரு நினைவோடு அவர்கள் கவலைப்பட்டுக் கொண்டு வந்தார்கள்.
வீடெரியக் கொடுத்தவர்களெல்லாம் வீதிக்கானுக்கு அருகேதான் அப்பொழுது பிள்ளை குட்டிகளுடன் சேர்ந்து குந்திக் கொண்டி ருந்தார்கள். அதிலே இருந்த பெண்டுகளும் கிழவர்களுமாகச் சேர்ந்து
zugă asovariască o 4ll o

Page 212
ஆரோக்கியநாதன் மேல் வசைபாடிக் கொண்டிருந்தார்கள்.
சவக்காலையிலிருந்து சனம் அவ்விடத்துக்கு வந்து சேர, சிமியோனைப் பார்த்து திரேசா ஒப்பாரி சொல்லிக் கத்தி அழத் தொடங்கிவிட்டாள்.
“என்ற பிள்ளை மத்தியானம் போலத்தானே என்னட்டயாப் பாலக் குடிச்சிட்டுப் படுத்தது. இப்பவா அந்தக் குஞ்சக் கொண்டுபோய் மண்ணுக்க புதைச்சுப்போட்டு வாறியளே..?”
அவள் சொல்லிக்கொண்டு உடைந்த குரலாய் அழ, அதிலே இருந்தவர்கள் எல்லோருக்கும் கண்கள் கலங்கிவிட்டன. சிமியோனும் ஒரு பெண் பிள்ளைபோல அழத்தொடங்கினான். அவன் அழுகிறதைப் பார்த்துவிட்டு வாடிச்சுருங்கினாற் போல இருந்துகொண்டு அவர்களெல்
லாம் மனம் கருகினார்கள்.
திரேசா கண்ணீர் உகுத்துக்கொண்டு தலை கவிழ்ந்தபடியே அதிலே இருந்து கொண்டிருந்தாள். சிமியோன் உதடுகளை அழுத்தியபடி, வானத்தைப் பார்த்துக்கொண்டு தன் மனைவிக்குப் பக்கத்தில் சோகத்தோடு இருந்தான்.
அந்த இடத்திலே சோணமுத்துவும் ராமனும் நின்று தங்கள் பக்கத்து ஆட்களின் எரிந்துபோன ஐந்து குடிசைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் பின்னாலே, எரிந்த
குடிசைகளுக்குச் சொந்தக்காரர்கள், சிக்கு விழுந்து சிறுத்துச் சிறுத்துப் போன முகத்தோடேயாய் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் உறவினர்களும், அவர்களுக்குண்டான தொழில் செய்கிறவர்கள் சிலரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார்கள்.
இந்தப் பக்கம் மனுவலும் எரிந்த ஐந்து வீடுகளுக்கு உரித்தானவர்களும், அவர்கள் பகுதியில் உள்ள ஆட்களும் நின்று கொண்டிருந்தார்கள். வீடு எரிந்ததில் செயலிழந்து சிலை போல நின்ற அவர்களுக்கு, மனுவல் தைரியம் வரக்கூடிய கதைகள் சொல்லிக்கொண்டிருந்தான்.
சோணமுத்து நின்ற பக்கத்தில் ஒருவன்,
"நாம யெப்புடியா இனி வீடு வாசல்களிலயா இருக்கப்புறம்.? எல்லாம் கெடுவு மாதிரி அந்தப் பக்கம் உள்ளவங்க இந்த வேல நமக்குச் செய்துப்புட்டாங்களே” என்று அவனுக்குச் சொன்னான். “இப்பவா நாம இந்த இடத்திலேயே இருக்கப்பிடாது மாதுரியில்லா செய்துபுட்டாங்க அந்த ஆளுங்க.? இப்ப பாருங்களேன் கப்பு சிப்புண்ணு இருந்துகிட்டிருக்காங்க.?” என்று இன்னொருவன் சொன்னான்.
O 412 0 ரீபி.அருணானந்தே

“இந்தாங்கப்பா புத்தி மாறி நிக்காதிங்கப்பா..? அந்தப் பக்கமும் தான் வீடெரிச்சு மனசொடிஞ்சு நிக்கிறாங்க.! பச்ச மண்ணுமாதிரி இருந்த பெத்த பிள்ளய பறிகொடுத்துப்புட்டு பொல பொலண்ணு அங்கிட்டொருத்தி கண்ணெல்லாம் கொளம் கட்டினது மாதிரியா அழுதுகிட்டிருக்கா. அந்தப் புள்ளேக்கு இவளவும் நடந்ததுனால இதயம் வெடிச்சு வாத்தயா வந்துகிட்டிருக்கு. அப்புடீயெல்லாம் இருக்கிறவங்கட்டப் போயி இந்த நேரமா ஓங்க தரப்பு ஞாயத்த நீங்க கேக்கணுமா..?” என்று ராமன் அவர்கள் இருவரையும் பார்த்து ஞாயத்தைச் சொன்னான். அவன் சொன்னதுக்குக் கீழே உண்மை இருக்கிறது தானென்று ராமனையே உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அந்த இருவரும்.
எரிந்த வீடுகளிலே நின்ற இடத்தில் நிற்கின்றமாதிரி புகை இன்னும் புகைத்துக்கொண்டிருந்து
சோணமுத்துக்கு இருந்தாற்போல ஒரு யோசனை வர?
"மாமா எதாயிருந்தாலும் நாமளும் அவங்கோடயா போயி பேசுக்கு வமா..?” என்று ராமனைக் கேட்டான்.
எல்லோரும் உடனே அவனை ஒரு பார்வை பார்த்தார்கள்.
"ஆமாங்கப்பா இப்புடியா அதெயும் இதேயும் நெச்சு நெச்சு வீங்கிப் போன மாதிரியா நிண்ணுகிட்டிருக்காம. ஒண்ணுக்கொண்ணு ஆதரவா அவுங்க கூடயும் சேந்துக்கிட்டு இப்பவா நாம இருக்கிறதுக்கு வீடுங்கள கட்டிக்கிறதுக்கு ஒரு வழியப் பாத்துக்குவமே..?”
அவன் உடனே அப்படித்தன்னைப் பார்த்தவர்களுக்குச் சொல்ல, அங்கே இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தவர்களும் சோணமுத்து நின்ற இடத்தடிக்கு வந்தார்கள். “கல்லுமாதிரி இங்கிட்டுப் பக்கமா இருந்துக்கிட்டிருக்காம சோணமுத்து சொல்லிக்கிட்ட மாதிரி அவுங்க கூடயா போயி ஒரு பேச்சுண்ணாலும் பேசிப்பாருங்கப்பா..?” என்று அவர்களுக்குள் நின்ற வீரனும் அப்போது சொன்னான். “என்னத்துக்கு வாய்க்குள்ள வைச்சு அமுக்கிக்கிட்டிருக்கிறீங்க போயி அவுங்க கூட கதையுங்கப்பா..?” என்று தண்ணிமலையும் கூடவே சொன்னான்.
"சரிசரி! வெவகாரத்தையெல்லாம் கோழி மாதிரி இப்பிடியா பம்மிக்கிட்டு நிண்ணு கிட்டிருக்காம. அவுங்க கூடயா போயி கதைச்சுப்புடுவம் வாங்க எல்லாரும்.” என்று ராமன் அவர்களையெல்லாம் கூப்பிட்டான்.
துயரச் சுண்பண்கள் O 413 O

Page 213
"நீங்க முன்னால போயி கதைச்சுக்கிங்க நாங்க எல்லாருமே உங்க கூடயா சேந்துக்கிட்டு வர்றோம்.” என்று தண்ணிமலை ராமனுக்குச் சொன்னான்.
"சரி வாங்க..” என்று சொல்லிக் கொண்டு ராமன் முன்னாலே நடக்க, மறுவார்த்தை பேசாமல் எல்லோரும் ராமனுக்குப் பிறகாலே போனார்கள்.
மனுவலின் ஆட்கள் ராமனின் கூட்டத்தார் தங்களிடம் ஏதோ கதைக்கத்தான் வருகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டுவிட்டார்கள்.
மனுவல் தனக்கு முன்னாலே வந்து நின்ற ராமனையும் மற்றவர்களையும் பார்த்துவிட்டு,
“மிச்சம் சொச்சமெண்டு விடாம எல்லாமே பரிநாசமா எரிஞ்சுபோச்சு..! இப்ப என்ன செய்யிறது.?” என்று சொல்லி அவர்களைக் கேட் LIT6.
“வீடெரிஞ்ச ஆக்களுக்கெல்லாமே தேகத்திலயும் அவுங்களுக்குச் சக்தியில்ல. நெஞ்சுக் கூட்டிலயும் இல்ல. கையெடுத்து யாரைக் கும்பிட்டு, யாரு இதெல்லாத்தயுமா இவங்களுக்கு செய்து குடுக்கப் போறாங்க?” ராமன் தன் பக்கத்து ஆட்களின் நிலைமையைச் சொன்னான்.
“வீடெரிஞ்சு எல்லாரும் தா இப்ப அவுங்க அவுங்க கதிகலங்கிக்கெட க்கிறாங்க. இதுக்கெல்லாமா நாமதானே எல்லாருமா சேர்த்துக்கிட்டு ஒரு வழி பண்ணிக்கணும்.?” என்று சோணமுத்துவும் சொன்னான்.
"இவங்கெல்லாம் வீடு கட்டிக்கிட்டு திரும்பவுமா பொழைப்புப் பொழைச்சிக்கிறதிண்ணா அதுக்கில்லாமா. நாம வேல செஞ்சிக்கிற கந்தோருதானே உதவி செஞ்சிக்கணும்.?”
உருப்படியான இந்த யோசனையை முதலில் சொன்னவன் தண்ணிமலை தான். ஆனாலும் மனுவல் அவன் சொன்னதைக் கேட்டுவிட்டு,
"நாங்களும் இதத்தான் இப்பவா நீங்க இதில வந்து சொல்லுறதுக்கு முன்னாடியும் அதப்பற்றி கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள். ஆனாலும் இப்ப நாங்கள் எல்லாருமா சேர்ந்து கொண்டதால அதுவும் எல்லாருக்குமொரு பெலமாப் போட்டுது. அப்ப இப்பவே நாங்கள் எல்லாரும் ஒண்டாச் சேர்ந்துபோய் கிராம சபைத் தலைவரிட்ட வீடெரிஞ்சதச் சொல்லி உடன எங்களுக்கு வீடு எல்லாருக்கும் கட்டித்தாருங்க எண்டு கேப்பம்.?”
о 414 o ரீ.பி.அருணரைத்தே

"அப்பிடி தலைவர் ஒடன எங்கூட்டுப் பிரச்சினய பெரிசா எடுத்துக்காட்டிப் போனா..?” எதிர்த்தரப்பிலிருந்து இந்தக் கேள்விவர
"செய்து எங்களுக்கு உடன தரத்தானே வேணும்! அவயள்தானே எங்களுக்கு இப்பிடியான நேரத்தில உடன ஏதாவது உதவி செய்ய வேணும்.?” என்று மனுவல் சொன்னான். ஆனாலும் எல்லோருக்கும் அது மனத்திருப்தியளித்ததாக இல்லை.
"நீங்க சொல்லிக்கிறது சரிதா, ஆனாஅவுங்க இண்ணிக்கு நாளைக்கு எண்ணு ஒண்ணும் செஞ்சு குடுக்காம காலம் கடத்திக்கிட்டிருந்தா. வீடெரிஞ்சு போனவங்க குடும்பமெல்லாமே றோட்டிலயா படுத்துக்கு வாங்க.? ஆக்கி மூட்டித் திங்கிறதுக்கு பான பாத்திரம் இருக்கா அவுங்களுக்கு.? மாத்தி உடுத்திக்கத் துணியில்ல. இதெல்லாத்துக்குமா யாருகிட்ட போவாங்க..? இந்தயெடத்த வுட்டு நாம எங்காச்சும் தஞ்சமுண்ணு போயி இருந்துக்க ஏலுமா..? ஒரு கோயிலில போயி நாம இருந்துக்க ஏலுமா..? இல்லாட்டியா ஒரு பள்ளிக் கூடத்தில போயி இருந்துக்கிறதுக்கு ஏலுமா..? அங்கிட்டெல்லாம் நம்ம சாதினசங்கள மத்தவங்க இருக்கத்தான் வுட்டுப்புடுவாங்களா..?”
மற்றப்பக்கத்திலிருந்து மனுவலை நோக்கி சரமாரியாக அம்புபோல வந்து கொண்டிருந்தது ஒருவனது கேள்விகள்.
மனுவலை அவனது கேள்விகள் ஒரு அமட்டு அமட்டியது.
"நம்ம தொழிலு இருக்குத்தானேப்பா. நாம செஞ்சுக்கிற பொழைப்பில நமக்கெல்லாம் எவ்வேளவு பலம் இருக்கு.? எல்லாத்துக்குமா நம்ம தொழிலு நமக்கு கைகுடுக்கும்பா. அதால யோசினய விடுங்க. ரெண்ணு நாளிக்கு ஊருக்குள்ளயா நாம போய் தொழிலு பாக்காம விட்டுப்புடுவமெண்ணு சொன்னா அவுங்கெல்லாம் கேட்டுப்புட்டு மெரண்டு போயிடுவாங்க ஊரே அழுகி மெதக்கப்போவுதுண்ணு பயந்துக்குவாங்க. அதினால நம்மகாரியம் உடனே சரியாப்புடும்.! கவலப்படாம எல்லோருமா ஒண்ணா வாங்க நாம அங்க போயி கதைச்சுக்குவோம்.?” என்று அப்போது வீரன் சொன்னான்.
4.
ம். வீரன் சொல்லுறதேதா சரி! நாம எல்லாம் இங்கிட்டுப் பக்கமாவுள்ளவங்க தொழிலுக்குப் போவாம நிண்ணுக்கிற மாதிரி. உங்க பக்கத்து ஆளுங்களும் போவாம விட்டுப்புடுவமுண்ணு சொல்லிட்டாங்கண்ணா நம்ம அவுங்கோட கதைச்சுக்கிறதுக்கு ஒடனே பலன் கிடைச்சிடும்.! இதுக்கு உங்க பக்கம் என்ன பதிலு சொல்லுறீங்க.?”
என்று சோணமுத்து மனுவலைப் பார்த்துக் கேட்டான்.
ugšasŪuoisai O 4l5 o

Page 214
'ஏதோ ரெண்டு பக்கத்து ஆக்களும் நாங்க இப்ப இதுக்கிளயாத்தான் சீவிக்கிறம்.! உங்கட பக்கம் ஏதாவது தீமை நடந்தா உடன நாங்கள் தான் வரவேணும். எங்கடபக்கம் ஏதாவது அப்பிடி நடந்தாலும் உங்கட பக்கம் உள்ள ஆக்கள்தான் வந்து உடன ஏதாவது எங்களுக்கும் உதவி செய்யவேணும். இப்பிடியா இங்கின உள்ள எங்கள உங்கள மாத்திரியான ஆக்களுக்கு வேற ஆர்வந்து உதவி செய்யப் போயினம்.? ஏன் என்ன நடந்ததெண்டெல்லாம் அப்பிடி வேற ஆரும் வந்து எங்களக் கேப்பாங்களே..? அதால நாங்கள் இதுக்க இந்த விஷயங்களுக்கெல்லாம் எல்லாரும் ஒற்றுமையாத்தான் ஒண்டச் செய்யவேணும்.! அதால இப்பவே நாங்கள் எல்லாருமாச் சேந்து அங்கபோய் கிராம சபைத் தலைவரிட்டயே நேருக்கு நேர் எல்லாத்தையும் கதைச்சுப் போடுவம். வெளிக்கிடுவம் அப்ப அங்க போறதுக்கு நாங்கள்.?”
மனுவல் அவர்கள் சொன்னதுக்கு "ஆம்" என்ற விதத்தில் இப்படியாகச் சொல்லிவிட, பிறகு ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் எல்லாருமாக கிராம சபை அலுவலகத்துக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
அவர்கள் போன நேரம் கிராம சபைக்கட்டிடத்திற்குள் அங்கு எவருமே இல்லாதது போல அமைதி நிலவியது. ஆனாலும் தலைவர் அவ்வேளை அலுவலகத்தாலிருந்து வெளியே வந்து நின்று கொண்டு முன்னாலுள்ள பரந்த வெளியைப் பார்த்துக்கொண்டு நின்றார். அவர் உடுத்தியிருந்த வேட்டியின் செருகல் கரை காற்றில் ஒரு பக்கம் பறப்பது மாதிரி இருந்துகொண்டிருந்தது.
தலைவரைக் கண்டதும் அவருக்குத் தூரவாய் எல்லோரும் நின்றுகொண்டார்கள்.
“கண்ணுட்டாருதானே ஐயா எங்கள. கூப்பிடுவாரு போலத்தா இருக்கு!” என்று ராமன் தன்னுடைய ஆட்களுக்குச் சொன்னான். மனுவல் கையைக்கட்டிக்கொண்டு, அதிலே ஒரு பக்கம் நின்றபடி தலைவர் நின்ற இடத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் ஆட்கள் அவனோடு சேர்ந்து கொண்டு அவன் பக்கத்தில் நின்றார்கள். ராமனோடு வந்தவர்கள் அவனோடு சேர்ந்து கொஞ்சம் தள்ளி நின்றார்கள். கிராமசபைத் தலைவர் அவர்களை அதிலே கண்டுவிட்டு கையசைத்துக் கூப்பிட்டார்.
நகரும் சங்கிலிகள் போல அவர் கூப்பிடவும் அவர்கள் எல்லோரும் போக வெளிக்கிட்டார்கள்.
“வேணாம் நிண்ணுக்கிங்க! ரெண்ணு பக்கமிருந்தும் அவுங்க அவுங்க o 416 O ரீ.பி.அருளானந்தே

பக்கத்து ஆளுங்க ஒவ்வொருத்தரு போனா காணும்.!” என்று உடனே சோணமுத்து சொன்னான்.
“அதுவும் சரிதான்! ரெண்ணு பக்கமிருந்தும் விஷயத்தை ஒழுங்கா கதைச்சுப் பேசிக்கக் கூடிய ஆளா போய்க்கிங்க..? மத்தவங்க எல்லாம் இதிலயா நாம நிண்ணுக்குவம்.”
என்று வீரனும் சொன்னான்.
அவர்கள் சொன்னதைக் கேட்டு கொண்டு மனுவலும் ராமனும் வெளிக் கிட்டார்கள். இரண்டு பேரும் கிராமசபைத் தலைவரின் அருகில் போய் நின்றதும்.
"ஏன் நிக்கிறீங்க அங்க எல்லாரும்.? உங்கட வீடுகளில கொஞ்சம் நெருப்புப் புடிச்சு எரிஞ்சு போட்டாமெண்டு இப்ப கொஞ்சத்துக்கு முன்னாலதான் கேள்விப்பட்டன். அங்க வந்து பாக்கத்தான் இப்ப நானும் வெளிக்கிட்டனான்.” என்று அவர் உடனே அவர்களுக்குச் சொன்னார்.
s
"எல்லாமா பத்து வீடுகள் முழுசா எரிஞ்சு போட்டுதையா.” என்று மனுவல் எல்லாருக்கும் ஏற்பட்ட நஷ்டத்தைச் சொன்னான். தலைவர் அவனை உற்றுப்பார்த்தார்.
“பத்து வீடுகளா..?”
கேட்கும் போதே அவரிடம் மிடுக்கும் கூர்மையும் குடியேறி இருப்பது போல இருந்தது.
“ஒரு சாமான்களயும் ஒரு ஆக்களுமே எடுத்துக்கேல்ல ஐயா எல்லாமே அம்புட்டா எரிஞ்சிட்டுதுங்க.” ராமன் சொன்னான்.
“ஒரு குழந்தப் புள்ளயும் நெருப்பில எம்பிட்டு கருகிச் செத்துப் போச்சு ஐயா” மனுவலும் துக்கத்தோடு செல்ல,
“அடக் கடவுளே!” என்றார் அவர்,
“எரிஞ்ச வீட்டாக்களுக்கு ஏதும் ஒரு உதவியுமில்ல. எல்லாம் றோட்டில தான் ஒண்டுமில்லாம நிண்டு கொண்டிருக்குதுகள். நீங்கள் தான் வந்து பாத்து உடன ஏதாவது உதவியைச் செய்து தரவேணும்.?”
முகத்தில் கவலைக்குறியோடு அவரைப் பார்த்தபடி அவன் பிறகும் சொல்ல.
“அதுக்கு நான் உடன என்ன செய்யிறது.? மெம்பேர்ஸ் எல்லாரையும்
துயர சுலப்பவிர்கள் O 417 0

Page 215
கூப்பிடுவிச்சு கதைச்சுத்தானே என்னவும் செய்ய வேணும்.?” கதவை அடைத்தமாதிரி கதை சொன்னார் அவர், "ஐயா படுத்துக்கிறதுக்கும். அந்தாளுவளுக்கு இடமில்ல ஐயா. கஞ்சிகுடிக்கச் சரி ஒண்ணுமில்ல. பண்ட பாத்திரம் துணி மணி எல்லாமே நெருப்பிலயா எரிஞ்சு போயிட்டுதுங்க. அது தாய்யா.” ராமன் அவ்விதம் சொல்ல, தலைவருக்கு கோபம் ஏறிச் செல்வது போல இருந்தது கண்டிக்கிற மாதிரி அவனைப் பார்த்தார். “என்னடா வைச்செடுத்தது மாதிரி உங்களுக்கு எல்லாம் உடனே
செய்து தரவெண்டுதானே நான் இங்க இந்த சீற்றில இருந்து கொண்டி ருக்கிறன்.? அது தானே எனக்கு இப்பவா முக்கியமான வேல.?”
என்று சாட்டையை எடுத்து வீசுகிறது மாத்திரி ராமனுக்கு அவர் சொன்னார்.
"ஐயா யெப்புடியும் நீங்க தானேய்யா இதுவள யெல்லாம் எங்க சனத்துக்கு செய்து குடுக்கணும்.? அப்பிடீல்லாட்டி வேற யாருவந்து எங்களுக்கெல்லாமே இத செய்து தந்துக்கப் போறாங்க.?” ராமன் விடாமல் கதைக்க, அவருக்கு இன்னும் ஆத்திரமாக வந்துவிட்டது. “இப்ப ஒண்டும் நான் செய்யேலாது. மெம்பேர்ஸ்சை கூட்டி கதைச்சுப் போட்டு ஒரு கிழமை ரெண்டு கிழமைக்குள்ள தேவையானதை பேந்து செய்து தரலாம்.!” அடித் தொண்டையாலே ஓங்கியடிச்சமாதிரிக் குரல் வெளியே வரச் சொன்னார் அவர்.
மூச்சு வாங்கி ஓய்ந்தது அவருக்கு “அண்டைக் கண்டை வேலைபாத்து வயித்தக் கழுவுற பறச்சக்கிலிய நாயஞக்கு எவ்வளவு திமிர்!” என்று அப்போது தன் மனதுக்குள்ளாகவும் அவர் நினைத்துக் கொண்டார்.
"ஐயா.”
“என்ன..?”
ராமனை அவர் நிமிர்ந்து பார்த்தார். “வீடு நீங்க ஒடனயா கட்டி குடுத்துக்காட்டி நம்ம ஆளுங்க நாளக் காலேல
ஊருக்கால போயி கக்கூசு வேல செய்ய போவமாட்டங்கையா.”
O 48 o ரீ.பி.அருளானந்தே

“பட்டீர்!” என்று அடித்தமாதிரி இருந்தது அவருக்கு.
"நாங்களும் எங்கட அங்கால உள்ள ஆக்கள் சொன்ன அதே மாதிரித்தான்! வீடு புதுசா போட்டு நீங்க தராட்டி எங்கட பக்கத்து ஆக்களும் நாளேல இருந்து வேலைக்குப் போகமாட்டமையா.”
மனுவலும் சொல்ல தீப்பிடித்தது மாதிரி எரிந்தது அவருக்கு.
“தேர்தலில எவ்வளவோ கஷ்டப்பட்டு வந்த என்ன. இப்படியெல்லாம் ஒரு பிரச்சினைய உண்டு பண்ணி பிறகு என்ன துலைச்சுவிடப் போறாங்களோ..? எல்லா முனியஞம் சேர்ந்து வந்த மாதிரி இந்த நாசமறுவார் வந்து இப்ப என்ற முன்னால நிக்கிறாங்கள். பேயஸ்தான் பிசாசுதான் இவங்கள் அதைச் சொல்லவேணும் முதலில.”
அவர் யோசித்துக் கொண்டு தடுமாறிவிட்டார்.
இவளவு நேரம் சிகரத்திலிருந்து பேசிக்கொண்டிருந்த அவருக்கு, இப்போது கீழ் நோக்கி ஒவ்வொரு அடியாய் இறங்கிவர வேண்டியதாய் இருந்தது.
“என்னப்பா ஒரு கதைக்கு ஒண்டச் சொன்னா அதுக்குப் போய் நீங்க செய்யிற வேலயள நிப்பாட்டப் போறம் அது இது எண்டு ஒரு குண்டத் தூக்கிப் போடுறியள்.? நீங்கள் செய்யிற உங்கட வேலயள பிறகு ஆரப்பிடிச்சு நாங்கள் வச்சுச் செய்யிறது.? இதுதான் நாங்களெல்லாம் உங்களோட கணக்கா அளவா கதைச்சுக் கொள்ளுறது.! சரி சரி நீங்களெல்லாம் உங்கட இடங்களுக்குப் போங்க. நாளக் காலேலயே கம்பு, தடி, ஒலை சாமான், சக்கட்டெல்லாம் றைக்டரில அங்க வர நான் அனுப்பிவிடுறன். ஆனா நீங்க ரெண்டு பாட்டி ஆக்களும்
உங்கட உங்கட வேலைக்குப் போயிருங்கப்பா..?”
உடைகிற ஒரு பொருளை பக்குவமாக ஒருவர் எப்படி இறக்கி வைப்பாரோ. அது போல இப்போது ஒரு சாதுவாக அவர்களுக்குச் சென்னார் தலைவர்.
"அப்ப நாளைக்கு நீங்களெல்லாம் வேலைக்குப் போறிங்க.?”
என்று பிறகும் அவர் தலையை ஆட்டியபடி அவர்களைக் கேட்டார்.
“ஒ. நாங்களெல்லாம் வேலைக்குப் போறமையா. அதில வந்தையா.”
“இனி ஒண்டும் ஒரு கதையும் எனக்கு நீங்க இங்க சொல்லவேணாம் சரிதானே.”
துயரச் சுச0uவிகள் O 419 O

Page 216
"ஆமாங்கையா!'
"ஒமையா..!"
"சரி சரி போங்கோ.”
சொல்லிவிட்டு அப்படியே நடந்து அலுவலகத்துக்குள் போய்விட்டார் அவர் தலைவர் போகிறதைப் பார்த்துவிட்டு இரண்டு பக்கத்து ஆட்களும் அவ்விடத்தடிக்கு வந்தார்கள்.
“கதைச்சுக்கிட்டது வெத்தியா வந்துபுட்டுதா.?” சோணமுத்து ராமனைக்
கேட்டான்.
“நல்லவாத்தயா நாலு வாத்த தலைவருட கதைச்சோம். ரெண்ணு மூணு கேள்விங்களும் கேட்டோம். நாளைக்கு காலேலயே தேவயான தெல்லாத்தயுமே அங்கிட்டு கொண்ணாந்து போட்டுப்புர்றோம் எண்ணு வாக்குக்குடுத்திட்டுப் போறாரு தலைவரு.”
என்று அங்குள்ள எல்லாரையும் பார்த்துச் சொன்னான் ராமன்.
ராமன் சொன்னதைச் கேட்கவே எல்லாருக்கும் மிகவும் சந்தோஷமா யிருந்தது. அதற்குப் பிறகு தங்களின் தொழிலுக்குரிய பலத்தை கூடிக் கூடித் தங்களுக்குள் அவர்கள் கதைத்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் சேரிப்பக்கம் அவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.
காலையில் கிழக்குப் பக்கம் துலக்கம் பெற்றது. ஆழங்களிலிருந்து வந்தது போன்று வானத்தில் மேலெழுந்து வந்துவிட்டான் சூரியன். நடுப்பகலில் ஒளிபடாத மூலைகளிலெல்லாம் காலைச் சூரியனின் ஒளி பாய்ந்து கொண்டிருந்தது.
சேரிப்பக்கத்து தொழிலாளர்களெல்லாம். நியாயம் சார்ந்த உணர்வு களோடு காலையில் தங்கள் வேலைகளுக்குப் போகாமல் வீதியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்வைகளில் சாமான்க ளுடன் றைக்டர் வீதியில் வருகிறதா என்ற எதிர்பார்ப்புக்களும் ஏக்கங்களும்,
ஆனாலும் கனநெடு நேரமாக அப்படி நின்று நின்று பார்த்தபடி ஏமாந்து போகவில்லை அவர்கள். றோட்டு மேட்டிலே நாலு உழவு இயந்திரங்கள் சாமான் ஏற்றியுள்ள பெட்டிகளுடன் வந்து கொண்டிருக்கிறது அவர்களுக்கெல்லாம் அவ்வேளை தெரிந்தது.
ஆக மொத்தம் ஆறு ஆட்கள் ஒலை தடிகள் ஏற்றியுள்ள சாமான்
O 420 O ரீ.பி.அஞ்ளனர்தே

பெட்டிகளுக்கு மேலும் இருந்தபடி வந்துகொண்டிருந்தார்கள்.
கூரை வேய்ந்துவிடவும்கூட தொழிலுக்கு ஆட்களும் வருகிறார்கள் போலக்காணப்படுகிறதே...?
சேரிப்பக்கத்து ஆட்களுக்கெல்லாம் அவர்களைக் கண்டதும் சந்தோஷ மென்ற சந்தோஷம். கால்கை ஒன்றுமே ஓடாத ஒரு அளவிலே நின்று கொண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
"தலைவரு நாமகேட்டுப்புட்டது மாதிரி ஒழுங்கா எல்லாத்தியுமே செய்துப்பிட்டாரு. அதே மாதிரியா நாங்களும் அவரிகிட்ட சொல்லிப் பிட்டு வந்த மாதிரி நம்ம வாக்கையும் காப்பாத்திக்கணும்.! எல்லாருமே வெளிக்கிடுங்கப்பா நம்ம பீப்பா வண்டிகள அங்கிட்டுப் போயி ஒடன எடுத்துக்கிட்டு ஊருக்குள்ளயா போய்க்கிடுவோம்.”
ராமன் அதிலே நின்று கொண்டு, தோட்டிவேலை செய்கின்ற எல்லாரை யும் பார்த்துச் சொன்னான்.
கம்பு தடி ஒலை பானை சட்டியென்று எல்லாமே அந்த இடத்தில் மிசின் பெட்டியிலிருந்து இறக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
ராமனோடு சேர்ந்து பிறகு தோட்டி வேலை செய்கிற தொழிலாளர் களெல்லாம் இலுப்பையடி வீதி வழியாக கிராம சபை அலுவலகம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் அந்த இடத்தாலே போனதற்குப் பிறகு மனுவலும் தன்னு டைய வேலையாட்களை கூப்பிட்டுக் கதைத்தான். அதன் பிறகு வவுனியா புகையிரத நிலையம் இருக்கின்ற பக்கம் குப்பை கூட்டிப் பெருக்கி எரிக்கிற வேலைக்குப் போக அவர்களெல்லோருமே வெளிக்கிட்டார்கள்.
ராக்காயி குடிசைக்குள்ளாலே வெளியே வந்து, அதிலே பொருட்களை இறக்கும்போது பார்த்துக்கொண்டிருக்கும் சனக்கூட்டத்தைப் பார்த்து விட்டுத் திரும்பிப் போனாள் எரிந்த வீடுகளில் உள்ள குடும்பத்து ஆட்களெல்லாம் ஒரு ஒழுங்கு இல்லாமல் சகட்டு மேனிக்கு கண்ட கண்ட இடத்தில் இருந்து கொண்டு சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருந் தார்கள். சாமான் இறக்கிக் கொண்டிருக்கிற இடத்திலே பனங்காட்டில் மழைபெய்யும் ஆரவாரம் போல மனிதச் சலசலப்பாய் இருந்தது. சேரிக் கிணற்றுக்குப் பக்கத்திலே புழுதித் தரையில் ஒரு பொம்மைபோல அசையாமல் இருந்து கொண்டு வெறித்த மாதிரி எங்கேயோ பார்த்தபடி திரேசா இருந்துகொண்டிருந்தாள். அவளுக்கு அழுதழுது
zugă elevusăscă O 421 O

Page 217
தொண்டையில் வலியோடு கூடிய ஒரு வறட்சி நெஞ்சில் பாரமான வேதனையோடும் வலியோடும் இடையிடையே தன் இறந்துபோன குழந்தையை நினைத்து நினைத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தாள் அவள்.
வெயில் ஏறிக்கொண்டிருந்தது. அந்தப் பிரச்சினைக்குள்ளும் சேரியி லுள்ள குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டிராமல், வெயிலுக்குள்ளும் ஓடியாடி ஆரவாரத்தோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். .-
ராக்காயி குடிசைக்கு முன்னாலுள்ள நிலத்திலே மாறி மாறி நடந்து நடந்து கொண்டிருந்தாள். அக்காள் அவளிடம் திருப்பிக் கொடுத்துவிட்டிருந்த வீணை, அவளின் கையில் இருந்தது. அவளுக்கு அக்காள் பட்டுக் கொண்டிருக்கும் கவலை ஒருபக்கம் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் செல்வநாயகத்திடம் தான் வாங்கிய அந்த வீணையை, திருப்பி அவரிடமே கொடுத்துவிட வேண்டுமென்ற யோசனையும் அவளுக்கு இருந்து கொண்டிருந்தது. செல்வநாயகம் இன்னும் அந்தக் கொட்டிலில் இருந்து வெளிக்கிட்டுப் போகவில்லை என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்தான். ஆனாலும் செல்வநாயகத்திடம் போய் அவரிடம் தான் கதைப்பதை, இங்கே சேரியிலுள்ள ஒரு ஈக்குஞ்சு கூட கண்டதாய் விட்டால், அந்த விஷயம் பிறகு சோணமுத்துவின் காதுகளுக்கும் போய்ச் சேர்ந்துவிடுமே..?
“பிறகு அக்காளுக்கல்லவோ அதனால் பெரும் அவதி.?”
அதை நினைக்கவே அவளுக்கு கால் தடம் போட்டு மறித்தது மாதிரியாய் இருந்தது. இருந்தாலும் அவள் மனம் கேட்காத அளவில் குடிசை வளவுக்காலிருந்து வெளியேபோய், இலை உதிர்ந்து கொண் டிருந்த அந்தக் காட்டு மரத்துக்குக் கீழே நின்று, சவக்காலைப் பக்கமாகவே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதிலே நிற்கும்போது அவளுக்கு, ஒவ்வொரு நிமிஷமும் வளர்ந்து கொண்டே போவது மாதிரியாக இருந்தது.
இப்படியே ஒரு பயம் கலந்த நிலையோடு அவள் அதிலே நின்று கொண்டிருந்த நேரம், செல்வநாயகம் அந்தக் காவல் கொட்டிலிலிருந்து கையில் சூட்கேஸ் பெட்டியுடன் வெளிக்கிட்டுப் போய்க் கொண்டிருந்தான். அவன் எதிர்த்தாற்போல உள்ள றம்பைக்குள வீதியால் நேரே போகிறதைப் பார்த்ததும், அவளுக்கு அழுகை வருவது போல இருந்தது. இருந்தாலும் மெளனமாக கைகளைக் கட்டுக்கொண்டு அவன் போகிறதைப் பார்த்தபடியே அவள் நின்றாள். கவலையில் அவள் கண்களில் திரண்ட கண்ணீர் அவளின் கைகளில்
O 422 O ரீ.பி.அருளானந்தே

சொட்டுப் போட்டதாய் விழுந்தது. செல்வநாயகம் அந்த வீதியாலே நடந்து போய் மறைந்துவிட்டது மாதிரி அவளுக்குத் தெரிந்தது. அவள் மனத்தில் ரொம்பக் கவலையுடன் நிமிர்ந்து மேலே மேகத்தைப் பார்த்தாள். இந்தச் சேரியை மறந்துவிட்டு மேலே மேகக்கூட்டமும் கூட வெறுப்புடன் போய்க்கொண்டிருக்கிறதோ என்ற மாதிரியாய் அவளுக்கு அப்போது நினைக்கவும் தோன்றியது.
துயரச் சுஃபண்கள் O 423 O

Page 218
أعيدنا مخلخخر2
சிறுகதைத் தொகுதிகள்
மாற்றங்கள் மறுப்பதற்கில்லை
கபளிகரம்
ஆமைக் குணம் கறுப்பு ஞாயிறு (அரசின் சாகித்திய விருதுபெற்றது) அகதி
ஒரு பெண்ணென்று எழுது
நாவல்
வாழ்க்கையின் நிறங்கள் (அரசின் சாகித்திய விருதுபெற்றது - வட மாகாண சாகித்திய விழாவில் சிறந்த நாவலுக்கான விருதும்பெற்றது) துயரம் சுமப்பவர்கள்
கவிதை
வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து (2008 ஆம் ஆண்டு அரச இலக்கிய விருதுக்காக கருத்திற்கொள்ளப்பட்ட கவிதைத் துறையிலான நூல்களில் இறுதிச் சுற்றுக்காக விதந்துரைக்கப்பட்ட இந்நூலுக்கு
சான்றிதழ் வழங்கப்பட்டது.)
04240 தீவி. அருளானந்த\3

மதிப்புரை
அருளானந்தம் எழுதியுள்ள துயரம் சுமப்பவர்கள் என்ற இந்த நாவலை வாசிக்கும் பொழுது, சில வேளைகளில் கண் சுகவீனம் காரணமாக வாசிக்கச் செய்து நுண்ணியதாகக் கேட்டபொழுதும் நமது நாட்டின் பிரஜையென்னும் வகையில் ஆழ்ந்த துக்கமும் இலக்கிய ஆர்வலன் என்ற வகையில் மிகமிக நிறைவான மனத் திருப்தியும் ஏற்பட்டன.
ஆக்க இலக்கியங்களுக்கு எழுதப்பெறும் மதிப்புரைகளோ, அவ்வாசிரியர் அல்லாதோரின் முன்னுரைகளோ, அப்படைப்பிலக் கியம் வாசித்து முடிக்கப்பெற்றதன் பின்னரே வாசிக்கப்பெற வேண்டுமென்பதிலே நிலையான நம்பிக்கை கொண்டவன் நான். ஏனெனில், புனைகதை இலக்கியத்தைக் குறிப்பாக நாவலை அதிலே பேசப்பெற்றுள்ளவை, அவையெடுத்துக்கூறப்படும் முறைமையாகி யன காரணமாக வாசக ஈர்ப்பைப் பெற்று, அவ்வாசகர் அதனை ஆவலோடு வாசிக்கும் நிலைமையேற்படுவதுண்டு. இதற்குக் காரணம் அந்த குறிப்பிட்ட நாவலில் எடுத்துக்கூறப்பெற்ற விடயங்கள் ஏதோ வொருவகையில் எம்முடன் சம்பந்தப்பட்டனவாகவே அமைவதுதான். அவ்வாறு அமைவதற்கான சாத்தியப்பாடுகள் அந்த இலக்கிய வடிவத்தினுள்ளேவுள்ளன என்பதனையும் கூறவேண்டும். இதனால் நல்ல நாவலொன்றினை வாசிக்கும் போது நம்மைப்பற்றி நமக்குத் தெரிந்தவர்கள் பற்றி நம்மருகே நடந்தவைபற்றி சிந்தனை, தொடர் வண்டிப்பாதைபோல சமாந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும்.
இதனாலேயே நாவல் என்பது வாழ்க்கையின் விமர்சன்மாக, வாழ்வு முறையின் இயல்புகளையும் சவால்களையும் எடுத்துக்கூறும் கதை சொல் வடிவமாக அமைகிறது. எனவேதான் அது நெடுங் கதை அல்ல (long Story). அது கதையொன்றின் மூலமாக சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்க்கையின் பல அம்சங்களையும்
ஆராய முற்படுவதாகும்.
நாவல் எழுதுவதற்கு வாழ்க்கை பற்றிய ஒரு "தரிசனம் இருத்தல் வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தின் அசைவியக்கம் பற்றிய முற்றுமுழுதானவொரு பார்வையில்லாது நாவல் செம்மையாக
425

Page 219
அமையாது. வாழ்க்கையின் இயல்பை விளக்கும் சம்பவங்கள், அந்த சம்பவங்கள் ஏற்படுவதற்கான சமூகப்பின்புலம் மாத்திர மல்லாது, அந்தச் சமூகத்தின் சிந்தனையோட்டமுறைமையும் முக்கியமாகின்றன. இதனாலேயே எழுத்துக்கு "கருத்துநிலை” (Ideology) முக்கியமாகின்றதென்பர்.
இந்தநாவலை வாசிக்கும்பொழுதுமேற்கூறிய சிந்தனையோட்டமே என் மனதில் மேலோங்குகின்றது. அருளானந்தம் வவுனியாவிலுள்ள சேரிப்பகுதியொன்றிலருகருகே வசிக்கும் மலசல சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், வீதிகளைப் பெருக்கித் துப்பரவாக்கும் தொழிலா ளர்களாகிய இரு குடும்பத்தொகுதிகளையும் மையமாகக் கொண்டு அந்தந்தக் குடும்பங்களின் அக நிலைகள் பற்றியும் அவர்களுக்கும் சூசைப்பிள்ளையார் குளத்து மக்களுக்குமுள்ள உறவுகளைப் பற்றியும் ஆராய்கிறார். மலசலக்கூடச்சுத்திகரிப்புச் செய்யும் குடும்பங்களின் சுட்டியாக இராமனையும் அவனது இரு பெண் பிள்ளைகளையும், வீதி சுத்திகரிக்கும் குடும்பங்களின் சுட்டியாக சிமியோன் திரேசா குடும்பத்தையும் மையமாகக் கொண்டு, இச்சமூகங்களின் பிரச்சினைகளைப் பாத்திரங்களின் இயல்பான நடத்தைகள் மூலமாக எடுத்துக்கூறுகின்றார்.
இராமன் குடும்பத்தைப் பொறுத்தவரையில் ஒரு செல்வநாயகமும், சிமியோன் திரேசா குடும்பத்தைப் பொறுத்தவரையில் ஒரு பெஞ்சமினும் குளத்திற்குள் எறியப்பட்ட கற்களாக அலைகளைக் கிளப்பி விடுகின்றனர். அந்த அலைகள் கரையை அடையும் பொழுது ஒரு குழந்தை எரிந்து பிணமான சம்பவம் சொல்லப்படுகின்றது. இது நெஞ்சை உருக்குகின்றது. அந்த உருக்கத்தினூடேயே இந்த நாவலின் வலுவும் தெரிகிறது.
அந்தக் குழந்தையொரு சாதாரண குழந்தையல்ல, சிமியோன் திரேசா குடும்ப உறவுத்தொடர்ச்சியைக் காப்பாற்றிய குழந்தை. திரேசா பிள்ளைக்காகவே பெஞ்சமினிடம் உடலுறவு கொண்டிருந்ததும், அவ்வெண்ணம் பூரணமானதும் பெஞ்சமினைத் தூர எறிவதும், முக்கியமான முரண் அணியாகும் (Irony)
திரேசா இப்படியென்றால் இராமன் மகள் செவ்வந்தி மேலும் ஒரு படி சென்றுவிடுகிறாள். தங்கள் சமூக அந்தஸ்துக்கு மேலேயுள்ள செல்வநாயகத்தை, அவனது பூரண விருப்போடு கைப்பிடித்து வாழவேண்டியவள், இந்த சிறு சேரிக்குள் தான் ஒடிப்போன நாளுக்கு அடுத்தநாள் நடக்கப்போவனவற்றை
426

மனக்கண்ணில் பார்த்தவளாய், தனது தகப்பனுக்கு அந்த அவப் பெயர் வரவேண்டாமென்பதற்காக, சோணமுத்துவை, அவள் மணம் செய்வதற்குத் தீர்மானித்துக் கொள்கின்றாள். இத்தியாகம் மகத்தானது; நெஞ்சுக்குள் கல்லுக்கரைந்தது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், தகப்பனுடைய தியாகத்தை அவள் தவிர்க்க முடியாத நடத்தைத் தேவையாகப் பார்ப்பதே ஆகும்.
உண்மையில் பாத்திரங்கள் அருளானந்தத்தையும் மீறி உயி ரோடும் சதையோடும் எம்முன்னே உலாவுகின்றன.
ஒருமுறை, காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் நண்பர் ரகு நாதன் என்னிடம் சொன்னார் "பஞ்சும் பசியும்” என்ற தனது நாவலில் வரும் சில பாத்திரங்களைத்தான் விரும்பியபடி நகர்த்த முடியாதிருந்தது, ஏனென்றால் அவர்கள் அத்தகைய முழுமையுள்ள ஆளுமைகளாகயிருந்தனர் என்று கூறினார்.
அருளானந்தத்தின் இந்த நாவலை வாசிக்கும் பொழுது செவ்வந்தி அத்தகையவொரு மானிட விஸ்வரூபத்தை பெறுகின் றாள். தோட்டிகளாகட்டும் உயர்ந்த குடும்பத்தினரென்று கருதப்படு பவராகட்டும் பெண்கள் நமது முற்றுமுழுதான பண்பாட்டு அமைப்பிலும் (Culture - Complex) தன் விருப்புகளுக்குத்தானே எதிராகப்போகும் வீரம் இருக்கிறது. இதனாலேதான், தான் பெற்றெடுக்கும் பிள்ளைகளை “வயிற்றுப்பிள்ளை”யென்றும் (தாலிகட்டிய) கணவனை "கயிற்றுப்பிள்ளை”யென்றும் கூறும் மரபொன்று தமிழகத்திலேயுள்ளது.
"துயரம் சுமப்பவர்கள்” என்ற இந்த நாவலில் புதுார் நாகதம் பிரான் கோயில் வரலாறு, அதன் வழமைகள் மிக கவர்ச்சிகரமாக அமைந்துள்ளன. உண்மையில் அந்தப்பகுதியை வாசிக்கும் பொழுது நமக்குப் பக்கத்திலேயும் நாகபாம்பு ஒன்று ஊருகின்றதோ என்றவொரு பயமே ஏற்படுகிறது.
ஆனால், புதுார் நாகதம்பிரான் கதை தனக்குள்தானே ஒரு சம்பவக் கோவையாக நின்றுவிடுகிறது. நாவலின் பிரதான விடயப் பொருளுடன் (Theme) அது இணைக்கப்பட்டுள்ள முறைமை பலவீனமானது என்பதை ஒப்பக்கொள்ளவே வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த நாவலின் பிரதான விடயப்பொருள், அல்லது பிரச்சினைமையம், அது மனிதர்கள்
427

Page 220
மனிதர்களாக வாழுவதற்கு மேற்கொள்ளும் போராட்டமேயாகும். இந்தப் போராட்டங்களில் வெற்றிகளிலும் தோல்வியிலும் நாங் கள் வாழ்க்கையின் யதார்த்தங்களைப் பார்க்கிறோம். இந்த நாவலின் பாத்திரங்கள் உங்கள் மனதில் சில நாட்களுக்காவது நின்று நிலைக்கப் போகின்றன. உங்களை சிந்திக்க வைக்கப் போகின்றன.
அருளானந்தம் தான் கணிக்கப்படவேண்டிய தமிழ் நாவலாசிரியர்களுள் ஒருவரென்பதை "துயரம் சுமப்பவர்கள்” மூலம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
இலக்கிய விமர்சகன் என்ற வகையில் ஒரு குறிப்பினை மிக்க அழுத்தத்துடன் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். எந்தவொரு படைப்பிலக்கியக்காரரும் தனது படைப்பினை மீள மீள வாசித்து வேண்டுமான இடங்களில் திருத்திக்கொள்வது அவசியம். அத்துடன் தான் மதிப்பு வைத்திருக்கும் இலக்கிய நண்பர்களிடத்து அதனை வாசிக்கச்சொல்லுமாறு வேண்டுதலும் வேண்டும். மேல்நாட்டு பதிப்பகங்களில் நூல்கள் வெளியிடப்படும்பொழுது அவை முதலில் அப்பதிப்பகத்தோடு சம்பந்தப்பட்ட Editors ஆல் வாசிக்கப்படும். Editors என்ற இச்சொல்லை பதிப்பாசிரியரென்று மொழிபெயர்த்துவிடக்கூடாது. அது தவறு, அதற்கான உண்மையான மொழிபெயர்ப்பு செம்மையாக்குனர், அன்றேல் செவ்விதாக்குனரே ஆகும்.
உலகின் மிகப்பெரிய நாவலாசிரியர்களும் இந்த நடைமுறைக்கு இணங்குவர், இணங்கியுள்ளனர், இணங்கிவருகின்றனர். தமிழில் பெரும்பாலும் அப்படியில்லை.
"நான் இதனை ஒரே மூச்சில் எழுதி முடித்தேன்” என்று கூறுவது தமிழெழுத்தாளர் பலரின் பலவீனமாகும். ஆங்கில எழுத்தாளர்கள் I am writing a novel 676igi Gaitoba)LDITLITid,6i. I am working on a movel என்றே சொல்வார்கள். அருளானந்தத்தைப் பொறுத்தவரை உண்மையில் அவர் இந்த நாவலை work பண்ணித்தான் இருக்கிறார். அவருக்கென் வாழ்த்துக்கள்.
அண்மைக்காலத்தில் நான் புனைகதை இலக்கிய வாசிப்பினை பெரிதும் மேற்கொள்வதில்லை. இருப்பினும் அருளானந்தத்தின் இந்த நாவலை வாசிக்கும் பொழுது ஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சி பற்றி சிந்திக்காதிருக்கமுடியவில்லை.
428

செங்கை ஆழியான் பலநாவல்களை எழுதியுள்ளவர். நான் அவற்றுள் “காட்டாறு” எனும் நாவலை பெரிதும் மதிக்கின்றேன்.
அருளானந்தம் இந்த நாவலுடன் இலங்கையின் முக்கிய தமிழ் நாவலாசிரியர்களிலொருவராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார். நல்ல எழுத்தாளர்களுக்கு நான் ஞாபகமூட்டவிரும்பும் ஓர் உண்மையுள்ளது. படைப்பிலக்கியத்துக்கு உச்சவரம்பு கிடையாது. படைப்பாளி நிலத்திலுள்ள தனது கால்களை ஊன்றி நிற்கும் அதே வேளையில் மேலே மேலே பறக்கும் சிருஷ்டித்திறனை வளர்க்க வேண்டும்.
மிக்க அன்புடன் கார்த்திகேசு சிவத்தம்பி 23A, Wanderwert Place, Dehiwela.
429

Page 221
நண்பனுரை
கதை சொல்வதும் கதை கேட்பதும் தமிழர்க ளின் பாரம்பரிய பழக்கமாகும். கதைகளின் மூலமாக நற்கருத்துக்களையும், வாழ்வியல் வழிமுறைகளையும் எடுத்துச்சொல்லி மக்க ளைப் பண்படுத்துவது கதைகளின் தலையாய நோக்கமாகும். இராமாயணமும், மகாபாரத மும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித் திருப்பதற்கான மூலகாரணமும் இதுவேயாகும். கதைகளின் மூலமாக சமூகத்தின் வாழ்வியலை, வரலாற்றுத் தகவல்களை அறியக்கூடியதாக இருக்கிறது.
நண்பர் நீபி.அருளானந்தம், இலங்கையின் மிகச் சிறந்த எழுத்தாளர். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி பரிசும் பாராட்டும் பெற்றவர். வவுனியாவில் பிறந்து மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். பல்வேறு தர மக்களுடனும் நெருங்கிப் பழகியவர். அவர்களின் வாழ்க்கை முறைகளை நன்குணர்ந்தவர். சிறுவயதிலிருந்தே வாசிப்பதிலும், எழுதுவதிலும் மிகவும் ஆர்வம் காட்டியவர். எதையும் கூர்ந்து கவனிப்பவர். எவ்வித பேதமும் பாராட்டாமல் மக்களின் சுகதுக்கங்களில் பங்குகொண்டவர்.
இத்தகைய பண்புகள்தான் இவரை எழுத வைத்தது. எழுத்தாள ராக்கியது. இவருடைய கதைகள் அனைத்திலும் மண்ணின் மணம் வீசுவதை கதை படிப்பவர்கள் எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.
பள்ளிப் பருவத்திலிருந்து நண்பர் அருளானந்தத்துடனான எனது நட்பு இன்றளவும் தொடர்கிறது. சிறுவயதில் அம்புலிமாமா' சிறுவர் இதழிலிருந்து எமது வாசிப்பு ஆரம்பித்தது. கதைகள் வாசிப்பதும், கேட்பதும் எமக்கு மிகவும் பிடித்ததான ஒன்று. அன்று, சின்னப்பு ஐயாவின் வீட்டு விறாந்தையில் இராமாயணக்கதை, மகாபாரதக் கதைப் படிப்பு வருடம் முழுவதும் நடைபெறும். நாம் இருவரும் அந்தப் படிப்பில் தவறாமல் கலந்துகொண்டு பயனடைந்தோம்.
430
 

காலப்போக்கில் 'கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல்புறா என எமது வாசிப்பு தொடர்ந்தது. நா.பார்த்தசாரதி, அகிலன், மு.வரதராசன், ரா.கணபதி, பரணிதரன், ஜெயகாந்தன் என எமது வாசிப்பு பல்துறைகளிலும் விரிவடைந்தது.
பல்துறை எழுத்தாளர்களின் கதைகளை, கட்டுரைகளை வார, மாத இதழ்களிலிருந்து பிரித்தெடுத்து புத்தகங்களாகக் கட்டி படிப்பதும், விவாதிப்பதும் எமக்கு வாடிக்கையாக இருந்தது. இளவயதிலிருந்தே எழுத்தார்வத்தினால் நாம் படித்த, விவாதித்த நூல்கள் கணக்கிலடங்கா. பிற்காலத்தில் அருளானந்தம் முழுநேர எழுத்தாளராகி சாதனை படைக்கிறார். நான் சிற்பத்துறையில் தடம்பதிக்கிறேன்.
வவுனியா நகரும், அதன் சுற்றுவட்டாரங்களும், அங்கு வாழும் மக்களும் நண்பர் அருளானந்தத்தின் கதைக்கருக்களாகும். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வவுனியாவில் நடைபெற்ற மாட்டு வண்டி சவாரிப் போட்டிகளை முன்னிலைப்படுத்தி அன்றைய வவுனியாவைப் படம்பிடித்துக்காட்டியது அவரது வாழ்க்கையின் நிறங்கள்’ என்ற நாவலாகும்.
அதே காலப்பகுதியில் வவுனியாவின் சேரிப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை மையமாக்கி எழுதப்பட்ட இரண்டாவது அற்புதமான நாவல் துயரம் சுமப்பவர்கள்’ ஆகும்.
தோட்டி, இராமன் வாழி மலகூடச்சுத்திகரிப்புத்தொழிலாளி அதிகாலை எழுந்து கிராமசபைக்குச் சென்று பெயர் பதிந்து, மலவாழிகளை வண்டியில் அடுக்கி வீடு வீடாகச் சென்று மலச்சுத்திகரிப்புச் செய்யும் அன்றாடக் கடமையுடன் கதை தொடங் குகிறது. சேரி வாழ் திரேசாவின் கள்ள உறவில் பிறந்த குழந்தை, தீயில் கருகி எரிவதுடன் கதை முடிவடைகிறது.
தோட்டி இராமனின் மகள்மார் செவ்வந்தி, ராக்காயி பாசத் திற்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர்கள். செவ்வந்தி தனது வீட்டிற்கு அருகிலுள்ள வெடிமருந்து கிட்டங்கி காவலாளி செல்வநாயகத்துடன் காதல் கொள்கிறாள். இருவரும் பல வழிகளில் சந்திக்கிறார்கள். இவர்களின் காதலுக்கு செவ்வந்தியின் தங்கை பக்கபலமாக இருந்து உதவுகிறாள். விதி வேறுவிதமாக விளையாடுகிறது. இராமனின் மருமகன் முறை மாப்பிள்ளை
431

Page 222
சோணமுத்து முரட்டுச் சுபாவமும் அகங்காரமும் கொண்ட குடிகாரன். மாமனை வசியப்படுத்தி செவ்வந்தியை திருமணம் செய்ய சம்மதம் பெறுகிறான். செவ்வந்தியோ தடுமாறுகிறாள். தந்தைமேல் வைத்துள்ள பாசம், சமூகக் கட்டுக்கோப்புக்களை மீறமுடியாத மனநிலையில் தனது காதலைத் துறந்து சோண முத்துவை மணம்முடிக்க முடிவெடுக்கிறாள். இம்முடிவு தங்கை ராக்காயியை மிகவும் திகைக்க வைக்கிறது. ராக்காயியை மட்டுமல்ல வாசகர்களையும் தடுமாற வைக்கிறது.
நாவலாசிரியர் அருளானந்தம் யதார்த்தமாக சம்பவங்களைக் கோவைப்படுத்தி, மிகவும் நேர்த்தியாக கதைக்கருவை நகர்த்திச் செல்லும்விதம் மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும்.
சிமியோன்-திரேசா தம்பதிகளின் தாம்பத்திய வாழ்வில் குழந்தைப்பேறு இல்லாமை பெரும் சுமையாகிறது. உண்மையில் மலடான சிமியோன், தனது மனைவியை மலடி” எனத் திட்டுவதும் வேறு திருமண உறவை நாடுவதும் திரேசாவைக் கொதிப்படைய வைக்கிறது. தான் மலடி அல்ல என்பதை நிரூபிக்கத் தகாத வழியை நாடுகிறாள். சவக்காலை குழிவெட்டும் பெஞ்சமினுடன் கள்ள உறவு கொள்கிறாள். இதன் பயனாக திரேசா கர்ப்பமாகி குழந்தை பெறுகிறாள். ஒரு சம்பவத்தின் விளைவாக குடிசைகள் தீப்பற்றி எரிகின்றன. திரேசாவின் குழந்தையும் குடிலோடு எரிந்து கருகிவிடுகிறது. m
சமூக ஒழுக்கங்களை மீறுவதின் விளைவை இச் சம்பவத்தின் மூலம் கதாசிரியர் சாதுரியமாக பதிவு செய்துள்ளார்.
வவுனியா மக்கள், வருடாவருடம் சென்றுவரும் கோவில்களில் முக்கியமானது. புதுர்நாகதம்பிரான்கோவில் கோவிலின் வருடாந்தத் திருவிழா, அலைமோதும் மக்கள் கூட்டத்தின் செயற்பாடுகள், நோய்தீர்க்கும் புற்றுமண் பூசாரியின் பாம்புக்கடி வைத்தியம் இன்னும்பல செய்திகளையும் ஆசிரியர் சுவைபடக்கூறுகிறார்.
வவுனியா, இறம்பைக்குள அந்தோனியார் ஆலய அமைவிடம், கோவிலைச் சூழவுள்ள காடுகள் மூங்கில்ச்சோலைகள், குருவான பங்குத்தந்தையின் மிருக வேட்டைகள் - குருவுக்கு ஒவ்வாத செயல்கள், பூசைமுறைகள் எல்லாவற்றையும் கதைக்களத்திலே 5576006)[0.

குரூரமனம் படைத்த வெதுப்பக உரிமையாளர் அப்துல்லா. கபட எண்ணம் கொண்ட சுந்தரம்பிள்ளை முதலாளி, அகங்கார எண்ணங்கொண்ட சுருட்டுக்கார சுப்பையா, மரக்கறித்தோட்டத்தில் பாமரர்களுக்கு தோட்ட வேலை வழங்கும் சங்கரப்பிள்ளை என பல பாத்திரங்களைக் கதையிலே காணலாம்.
சேரிவாழ் மக்களின் பேச்சு வழக்கும், அழகிய வர்ணனைகளும், ஆற்றொழுக்குப் போன்ற தமிழ் நடையும், கதையின் விறுவிறுப்பும், பாத்திரப்படைப்பும் நண்பர் அருளானந்தத்தின் ஆளுமையை வெளிப்படுத்துகின்றன. அருளானந்தத்தைப்போல் யதார்த்தத்தை வெளிப்படுத்தும் துணிவும் ஆற்றலும் கொண்ட எழுத்தாளர் மிகவம் அரிது என அறுதியிட்டுக்கூறலாம்.
துயரம் சுமப்பவர்கள் தமிழ் நாவல் உலகின் ஒரு திருப்புமுனையாகும். நாவலை வாசித்து நாவலாசிரியரின் எழுத்துப்பணியை ஊக்குவிக்குமாறு தமிழ் உள்ளங்களை அன்புடன் வேண்டுகிறேன்.
சு.சண்முகவடிவேல் (ஸ்தபதி) அபிராமி சிற்ப நிலையம்' இல. 61, முதலாம் குறுக்குத்தெரு, வவுனியா பேசி: 222 0063 Tele/Fax: 024 200 63 05-10-2009
433

Page 223
நினைவுருக்கள்
என்வாழ்வில் மறந்து போய்விட முடியாத பல சம்பவங்கள் இன்னும் என் நினைவில் இருந்து கொண்டிருக்கின்றன. அந்த நினைவுகளைக் கீறும்போது, வலி பொறுக்கமுடியாது இருக்கிறது எனக்கு என் நினைவுதப்பும் நேரம் வரை நெஞ்சால் மறக்க முடியாத சம்பவங்கள் அவைகள். அவைகளையெல்லாம் ஒவ்வொன்றாக, இன்று நான் இருந்து எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். நான் வாழும் காலத்தில் என் சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமையொன்று எனக்கு இருக்கிறது. அந்த கடமையைச் செய்வதற்காக தொடர்ந்து நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்படியெல்லாம் நான் எழுதுகிற போது, எதிர்காலத்திலும் நான் வாசிக்கப்படுவேன்!' - என்ற நம்பிக்கையும் இருந்து என்னை ஆறுதல்படுத்துகிறது.
அந்த அமைதியோடுதான் நான் இருக்கிறேன். துயரம் சுமப்பவர்கள்'- என்ற இந்த நாவலின் பிரசவம் பற்றிசொல்லும்போது, இந்த நாவலுக்குள்ளாக இரு சமூகத்தினரின் சரித்திரமே அடங்கி இருக்கிறது என்பதாகத்தான் என்னால் சொல்லவேண்டியதாக இருக்கும். இவ்வாறெல்லாம் சொல்லுமளவுக்கு, வவுனியாவில் அவர்கள் குடியிருந்த இடத்தருகே நாற்பது ஆண்டுகாலம் நிரந்தரமாய் நான் இருந்து வாழ்ந்திருக்கிறேன். அந்த நீடிய காலமாய் அவர்களின் வாழ்க்கையின் வதைபடுதலையெல்லாம் நான் கண்ணால் கண்டிருக்கிறேன். அதனால் மனம் நொந்து
மிருக்கிறேன்.
தங்கள் வாழ்நாள் காலம் முழுவதுமாய், மனித மலங்களை பீப்பாய்களில் சுமந்து திரிகிற தோட்டிவேலை செய்கிறவர்கள், அந்தச் சேரியிலே ஒரு காலம் கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு குடியிருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த அந்த இடத்திலேயே, குப்பை கூட்டிப் பெருக்கித் துப்பரவு செய்யும் தொழிலாளர்களும் வசித்தார்கள். உயர்வுதாழ்வு என்ற படி நிலைகள் கொண்ட இந்தச் சமூகத்தில், தொழிலில் தங்களுக்கு ஏற்பட்ட இழிவுகளை அகற்ற முடியாமல் அந்நேரம் வாழ்ந்தவர்கள் அவர்கள். சாதித்துவேஷ
434

மனச் சிக்கலுக்கு ஆழ்ப்பட்டுக் கருகியவர்கள் அவர்கள்.
இந்த இரு சமூகத்தினர்க்குள்ளும் ஒரு மனித வாழ்க்கையை சிறிதும் வாழ முடியாது துயர வாழ்வினையே வாழ்ந்து முடித்தவர்கள் "தோட்டி வேலை செய்தவர்கள்தான். வாழும் வரையெல்லாம் அவர்களின் வாழ்வியலோடு மன உள்வலிதான் கலந்திருந்தன.
அந்த மன வலியோடும், முடிவற்ற துன்பத்தோடும், தங்கள் வாழ்நாள் முழுக்கலும் மலம் அள்ளுகிற தொழிலையே இறுதி வரையும் செய்து செத்து மடிந்தவர்கள் அவர்கள். அவ்வாறு இறந்துவிட்ட அவர்கள் அனைவரும் இனிமேல் திரும்பவும் இந்த உலகில் பிறந்து வந்து ஒரு சிறந்த வாழ்வை வாழப்போவதில்லை. அப்படியான ஒரு சமூகத்திலே நான் இருந்து அந்தத் தொழிலைச் செய்து வாழ்ந்து கஷ்டப்பட்டிருந்தால் எப்படி எனக்கு இருந்தி ருக்கும்? என்றுதான் நான் அவர்களை இன்று நினைத்துக் கொண்டு கவலைப்படுகிறேன். அந்த மறவா நினைவுதான் நான் இந்த நாவலை எழுதுவதற்கு உந்துதலாய் இருந்தது.
இந்த நாவலில் வருகிற நிஜமான பல பாத்திரப் படைப்புகளிலே ராமன் - என்பவனும் ஒருவன். என் சின்ன வயதுக் காலத்திலே என் மனதைக் கவர்ந்த மனிதன் ராமன்தான் ராமன் என்று நான் சொல்லும்போது, அவனது சிரித்த முகம்தான் எனக்கு உடனே பூரணமாக ஞாபகத்தில் வருகிறது. ராமன் நல்ல அட்டைக்கறுப்பு நிறம்தான். எண்ணெய் பூசின மாதிரியாகவும் உடம்பெல்லாம் ஒருவித வழுவழுப்பு. காக்கிக்கால்சட்டையும் மேல்சட்டையுமான உடுப்போடுதான் நான் அவனை எங்கும் திரிந்து கொண்டிருக்கிறதைக் காண்பேன்.
அந்தக் காலம் எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதிவழியாக அவன் மல வண்டிலைத் தள்ளிக்கொண்டு போகும்போது, “ கொஞ்சம் நில்லு ராமா உதில?” - என்று நான் சொன்னால், உடனே அந்த இடத்திலேயே வண்டிலை நிறுத்திவிட்டு அவன் நின்றுவிடுவான்.
எனக்கு, அவன் வண்டிலை நிறுத்தியதும், நான் விரும்பியதை உடனே அவனிடம் கேட்டுவிடவேண்டும் என்ற ஆவல் இருக்கும். ஆனாலும் என்வயது என்ன? அவனின் வயது என்ன? நான் எவ்வளவோ அவனிலுமிருந்து வயது குறைந்த ஒரு சின்னப் பெடியன்தானே?
435

Page 224
அதனாலே நான் வாயை மூடிக்கொண்டு என் விழிகளில் ஆசையை வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தபடி இருப்பேன். ஆனாலும் அவனுக்கு விளங்கும், நான் அவனிடம் என்னத்தைக் கேட்பதற்காய் இருக்கிறேனென்று.
என்றாலும் ஒன்றும் தனக்குத் தெரியாத மாதிரி பாசாங்கு பண்ணிக்கொண்டு, எல்லாரையும் ஐயா என்று சொல்லி அழைக்கிற அந்தப் பழக்க தோஷத்தில்,
என்னையும் பார்த்து,
“என்னையா உங்களுக்கு வேணும்.? என்னய்யா நான் செய்யணும்.?” - என்று சிரித்தபடி அவன் கேட்பான். அவன் அப்படிச் சொல்லவும் எனக்கு மனத்தைரியம் வந்துவிடும். பெரிய மனிதனுக்குரிய தோரணை என்னில் உருக்கொண்டுவிடும்.
“ஒரு டான்ஸ் இப்ப நீ எனக்கு ஆடிக் காட்டீட்டுப் போ ராமா?” என்று நான் அவனைக் கேட்பேன். அப்படி நான் கேட்டதும்தான் தாமதம், உடனே அவன் அந்த வண்டிலிலிருந்து தன் கையை எடுத்துவிட்டு, அந்த இடத்திலேயே நின்று சிறிது நேரம் எனக்கு நடனமாடிக் காண்பிப்பான். அதற்குப் பிறகு அவன் வண்டிலைத் தள்ளிக்கொண்டு போகும்போது திரும்பவும் நான், "டான்ஸ் ஆடு ராமா..?” என்று ஒரு விஷமம் வைத்துச் சொன்னமாதிரி கேட்டாலும், தொலைதூரம் போன இடத்தில் நின்றுகொண்டும் அவன் நடனமாடிவிட்டுத்தான் போவான்.
ராமனை நடனமாடச் சொல்லிப் பார்க்கின்ற இந்த விளையாட்டு, எனக்குமட்டும் உரியதாக இருக்கவில்லை. எங்கள் பகுதியில் உள்ள எல்லாப் பசங்களுமே அவனோடு இந்தச் செல்ல விளையாட்டை வைத்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வரும்பொழுதுகூட அவனை மற்ற வேளையிலும் விட, மும்மடங்கு ஆடச்சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்போம். அவனும் எங்கள் கண்கள் நிரம்புகிற அளவுக்கு நடனமாடுவான். எந்நேரமும் அவனுடன் ஒட்டிக்கொண்டி ருக்குமாப்போல இருக்கும் அந்தச் சிரிப்பு அப்பொழுதும் அவனிடம் இருக்கும். அதுவும் அவனை விட்டுப்போய்விடாது.
எங்கள் இடத்திலே கையிலே பிள்ளையைத் தூக்கிவைத்துக் கொண்டு அதற்குப் பராக்குக் காட்டிக்கொண்டிருக்கிற தாய்மார்கள்
436

கூட ராமனைக் கண்டுவிட்டால் அவனை உடனே நடனமாடச் சொல்லுவார்கள். உடனே ராமன் அவனுடைய சிரிப்புடன், உற்சாகமே உடலான தோற்றத்தோடு நடனமாடத் தொடங்கிவிடுவான்.
ராமன் தன் வாழ்க்கையில் அப்படியெல்லாம் மகிழ்ச்சியாய் இருந்து கொள்ள எப்படி முடிந்தது?
சலித்து மட்கி ஒயும் அவனது வாழ்வுக்குள்ளே, அருவருப்புத் தாங்காமல் செய்கிற அந்தத் தொழிலையும் செய்துகொண்டு, தன்னை எவ்வாறு ஆற்றிக்கொண்டு இப்படியெல்லாம் அவன் நடந்துகொண்டான்? அந்தச் சுடுவெயிலுக்குள்ளும், மல வண்டியின் மணத்துக்குள்ளும், ஒரு சின்னப் பிள்ளையின் சந்தோஷத்தைக் கூட பெரிதாக மதித்து அவனுக்கு எவ்வாறு அப்படியாகவெல்லாம் நடந்துகொள்ள இயலுமானமாக இருந்தது? - இதையெல்லாம் இன்றும் கூட நான் எத்தனைதூரம் யோசித்தாலும், என் சிந்தனை சுருண்டுவிழுகிறதேயொழிய அதற்கான காரணமொன்றும் என் கற்பனைக்கும் கூட எட்டவில்லை.
'இழந்துபோன, பிரியமிக்க மனிதனை நினைத்து வேதனைப் படவும், அந்த இழப்புணர்வை என்றென்றும் ஒரு நிதிபோல் பாதுகாக்கவும் உள்ள அளப்பதற்கரிய இயல்பு மனித குணத்தின் மகோன்னதமான தனித்தன்மை' - என்று ‘எட்வின்ற் நெயிட்மான்’ என்பவர் கூறினார். அவர் கூறியதைப் போல நானும் இந்த நாவலை எழுதியதன்மூலம் எப்போதோ அடையாளமில்லாமல் இறந்துபோன ராமனைப் போன்றவர்களை இந்தக் கதையினுள்ளே கண்டுகொண்டு ஆறுதல் தேடவே முயன்று கொண்டிருக்கிறேன். இந்த நாவலின் என் ஒரே ஒரு சந்தோஷம் அதுதான்.
இந்தக் கதையை எந்தக் கட்டுப்பாடுகளையும் எனக்குள் வைத்துக்கொண்டு நான் எழுதவில்லை. சுதந்திரமான ஒரு மன நிலையோடுதான் வெளிப்படையாக எல்லாவற்றையும் எழுதியிருக் கிறேன்.
எவ்வளவு பெரிய மகா பாதக செயலைச் செய்தாலும் வருந்தாத அளவுக்கு மனிதனின் உணர்ச்சிகள் இன்று தடித்ததைப் போன்றதாய்விட்டன. அப்படியாக இருக்கும்போது பாலியல் உறவு குறித்து அதிகாரச் சமூகம் கட்டிக் காத்துக்கொண்டிருக்கும் புனிதங்கள் மாத்திரம் சிதைக்கப்படாமல் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்குமா? இக்கதையில் வரும் சில சம்பவங்கள் அதையும் கூட வாசிப்பவர்களுக்கு சரியாகப் புரிந்துகொள்ள வைக்கும்.
437

Page 225
என் மன உலகம் கிராம மக்களின் வாழ்க்கை அசைவுகளை நினைத்துப் பார்க்கின்றபடியாலேதான் இந்த நாவலையும் நான் எழுதவேண்டியதான விருப்பம் வந்தது. ஓர் எறும்பு நெடும் தூரத்தை எவ்விதம் பொறுமையாய் மெதுவாய்க் கடக்குமோ, அதேபோலத்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட அந்தச் சமூகத்தினர் வாழ்வை மிக அக்கறையோடும் தகவல் சேகரிப்போடும் அனேகமாக என்நேரங்களையெல்லாம் ஒதுக்கி இவைகளை யெல்லாம் எழுதி நான் பூரணமாக்கியிருக்கிறேன்.
இந்த நாவலை நான் எழுதியதன் நோக்கம் சாதியை வளர்ப்பதற்கல்ல; அதை விடுத்து நொந்து கஷ்டங்களை அனுபவித்த ஒரு சமூகத்தின் வாழ்வை படிப்பவர் உற்றுநோக்கவேண்டும் என்ற ஒரேயொரு எண்ணத்தோடுதான் - என்ற அந்தக் காரணத்தை, இதைப் படிக்கின்றவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மகாபாரதக் கதையிலே உயிர்ச்சத்தாக இருப்பவை அதிலே வருகின்ற கிளைக்கதைகள்தான்! அதை நான் உணர்ந்து உள்வாங்கியதாக வைத்திருந்ததால், இந்நாவல் எழுதும்போதும் அந்த யுக்தியை நான் கையாள வேண்டுமென்ற ஆவல் மிகுந்திருந்தது. அதனால் நுணுக்கமாக இந்நாவலையும் நான் எழுதும்போது, சில கிளைக் கதைகளையும் உள்ளே புகுத்தினேன். அப்படி அவற்றை நான் புகுத்தினாலும், அவை எல்லாமே அந்தச் சமூகத்தவருடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள்தான். கதைக்குள் எந்த முறிவுமின்றியே அவையாவும் சொல்லப்பட்டிருக்கின்றன. அதனால் இந்த முயற்சியில் போதுமான அளவு வெற்றியும் கிடைத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
கதையோ நாவலோ எழுதுவதில் எவரும் இதுவரை அப்படி ஒன்றுமே பூரணமாக சாதித்து விடவில்லை, என்பது போலத்தான் உலகப் பேரறிஞர்களின் கருத்து இருந்து கொண்டிருக்கிறது. நாவலின் உருவம், உள்ளடக்கம், முதலிய ஒன்றிலுமே பொது அங்கீரமுள்ள சட்டங்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு திறமை சாலியின் கையிலும் அது விருப்பம் போல் விதம் விதமான உருவையும் பாவத்தையும் அடைகிறது என்பதாகத்தான் நாவலின் சிற்பம் பற்றிய ஒரு கருத்தையும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அவர்களின் கூற்றுக்கு அமைவாகவே என் விருப்பப்படி நான் இந்த நாவலையும் எழுதியிருக்கிறேன்.
438

நான்படித்த தமிழ்மொழிபெயர்ப்பு நாவல்களிலே நல்ல' என்று சொல்லக்கூடிய உலகத்தின் எந்த ஒரு நாவலும் தடிமனான புத்தகமாகத்தான் இருக்கின்றது. புகழ்பெற்ற நாவல்களிலே மிகவும் சிறியது என்று விமர்சகர்களால் தெரியப்படுத்தும் நாவல்கள் கூட குறைந்தது ஐநூறு பக்கங்களாவது இருக்கிறதாகக் காணப் படுகிறது.
துயரம் சுமப்பவர்கள்' - என்ற இந்த நாவலிலே, அந்தச் சேரியில் வாழ்ந்த சமூகத்தவரைப் பற்றி நான் சொல்லியதைவிட சொல்லாததே அதிகம் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது. அதையெல்லாம் ஓரளவு பூரணமாக சொல்ல வெளிக்கிட்டால் மேலே கூறியதைப்போல இந்த நாவலின் சிற்பமும் அமைந்ததாய் வந்திருக்கும் என்று எனக்கு எண்ணத்தோன்றுகிறது. ஆனாலும் அப்படி ஒரு நாவலை எழுதி பெருஞ்செலவு செய்து இங்கே அச்சிட்டு பிறகு அதை விற்பனை செய்ய முடியுமா? என்பதே பிரச்சனைக்குரியதாகத் தோன்றுகின்றன.
நான் எழுதிய முதல் நாவல் ‘வாழ்க்கையின் நிறங்கள்' அந்த நாவலைப் படித்தவர்களெல்லாம் அது ஒரு நல்ல நாவல் என்றதாகவே புகழாரம் சூட்டி எனக்குச்சொல்லியிருந்தார்கள். அப்படியான அந்த நல்ல நாவலிலிருந்து மகத்தான ஒரு நாவலை எழுதுகிற ஒரு முயற்சியாகவே துயரம் சுமப்பவர்கள்' - என்ற இந்த நாவலை இப்போது நான் எழுதியிருக்கிறேன்.
இதை எழுதுவதற்கு முன் அந்த மக்களின் வாழ்வுக்குள் இல்லாத எதையும் படைப்புக்குள் கொண்டுவரக்கூடாது என்பதில் நான் மிகவும் குறியாய் இருந்தேன். இதன்பொருட்டு நேரடியாக நான் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் அன்பாகப் பேசி அவர்களின் வாய்வழியாகவே பல தகவல்களையும் பெற்றேன். நான் அவர்களின் வாழ்க்கை முறையை முன்பு பார்த்துத் தெரிந்துகொண்டதைவிட, அவர்களாகச் சொன்ன தகவல்களிலிருந்துதான் என்னால் அனேக விஷயங்களை இந்த நாவலுக்குள் கொண்டுவர முடிந்தது. ஏதோ தெரிந்ததை வைத்துக் கொண்டு போன போக்கில் சொல்லாது நல்லதொரு உயிரோட் டத்துடன் திவ்வியமான தெளிவோடு அதன்மூலம்தான் எனக்கு சொல்லுவதற்கு கைகூடியதாய் வந்தது. அங்கே எனக்கு போதிய தகவல் எல்லாம் தந்தவர் "ஜெயராமன்’ என்பவர்தான்.
439

Page 226
அவருடன் தருமலிங்கம்' என்பவரும் எனக்குப் பல கதை கள் சொன்னார். அவர்கள் கூறியது எல்லாமே எனக்கு இந்த நாவலை எழுதுவதற்கு வேண்டியதான தகவல்களாய் இருந்தன. அதனால் கவனமாய்க் கேட்டு எல்லாவற்றையும் என் நோட்டுப் புத்தகத்தில் குறிப்பெழுதி எடுத்தேன். முன்பு அவர்கள் வைத்து வாசித்த உறுமிமேளமும் பக்க மேளங்களும் இப்போது அவர்களி டம் இல்லை. இன்றைய காலத்தில் அதையெல்லாம் வைத்து வாசித்தால் தங்களுக்கு அது இழுக்கு என்று எல்லாவற்றையும் அடித்து நொருக்கிவிட்டோம் என்று அவர்கள் எனக்குச் சொன்னார் கள். அந்த வாத்தியங்களை வாசித்தவர்களே அப்படியெல்லாம் செய்தார்களா? - என்று நான் அவர்களைக் கேட்டபோது, அப்படியில்லை, அங்குள்ள வேறு ஆட்கள்தான் வந்து "இதெல்லாம் இந்த இடத்திலே இனிமேல் இருக்கக்கூடாது, யாரும் இங்கே இவைகளை இனிமேல் வாசிப்பதாயிருக்கக்கூடாது.” என்று சொல்லி அவ்வாறு செய்தார்கள் என்று கூறினார்கள்.
நான் உடனே அவர்கள் கூறுவதைக்கேட்டு மிகவும் துக்கித்தேன். இந்த வாத்தியங்களை இசைக்கும் கலைஞர்களையெல்லாம் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டிலே, மிகவும் மதிப்பு வாய்ந்த இடத்திலே வைத்து இப்போது கெளரவிக்கிறார்கள். இந்த இசையை கேட்பதற்கு பிறநாட்டிலிருந்து வருகிறவர்களும் அதிகம் விரும்புகிறார்கள். அதைப்பற்றி ஆய்வு செய்கிறார்கள். என்று சொல்லி நான் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது ராமநாத புரத்திலிருந்து வாங்கிவந்த உறுமிமேளம் சம்பந்தமான சிடிக்களையெல்லாம் அவர்களுக்குப் போட்டுக் காண்பித்தேன். அதிலே காட்சிப்படுத்தப்பட்டிருந்த தேவராட்டம், தனி உறுமி மேளத்தினது வாசிப்பு, போன்றவற்றையெல்லாம் அவர்களும் ஆர்வமாகப் பார்த்தார்கள். மிகவும் அதன் பொருட்டு அதனால் அவர்கள் மகிழ்ச்சியுமடைந்தார்கள்.
உறுமி என்னும் தோல்கருவி, இரண்டு முகங்களை உடையது. இடைசுருங்கி நிற்கும். இரு முனைகளும் அகன்றிருக்கும். சிறிது நீளமானது உறுமியுடன் நாகசுரமும், பம்பையும், வாசிக்கப்படுகிறது என்றே அதைப்பற்றிய விபரங்களை நாட்டார் கலைகள்' - போன்ற நூல்களிலிருந்து நான் படித்துத் தெரிந்துகொண்டேன்.
ஆனால் இந்தியாவிலே ராமநாதபுரத்துக்கு நான் சென்றபோது, அங்கே இடைசுருங்காத மேளத்தைத்தான் உறுமி என்று அவர்கள் சொன்னார்கள்.
440

அந்த உறுமி மேளம் பேசும் சொற்கட்டுக்களை,
டக்டக்டகு டீ
LeL5L(5
LeLŠLLđếLể
tԳԼԳlգԼԳlգԼԳւd;
டிடகுடகுடிடேக
டகுகுடக்டகு
டகுகுடக்டகு
டக்டீடக்டகு
LeL
என்றெல்லாம் அந்த மேளத்தின் வாசிப்பிலே சரியாக பொருந்தக்கூடியதாக எனக்குச் சொல்லிக்காட்டினார்கள். அந்தச் சொற்கட்டெல்லாம் தப்பாமல் உறுமிமேளம் வாசித்தவர் எனக்கு வாசித்துக்காட்டினார். உறுமிமேளம் வாசிப்பதற்கு 72 சொற்கட்டுகள் இருப்பதாகவும், 72 அடைவு அசைவு இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
ஆனால் எனக்கு அதையெல்லாம் பார்த்ததும் கேட்டதும், மனதுக்குக் குழப்பமாக இருந்தது. நாட்டார் கலைகள் என்ற நூலிலே, 'உறுமிமேளம்' - பற்றிச் சொன்ன அந்த வடிவம் போன்றே, வவுனியாவில் வைத்து வாசித்தவர்களும் தங்களிடம் வைத்து வாசிக்கிறதை நான் பார்த்தேன். பக்கமேளங்கள் நாகசுரம் ஒத்துதும் குழல், போன்றவற்றையெல்லாம் உறுமிமேளத்தோடு சேர்ந்ததாய் அவர்கள் வாசித்தார்கள்.
எனவே எனக்குத்தேவை இதைப்பற்றியெல்லாம் ஆய்வு செய்வதல்ல. நான் முன்பு அவர்கள் வாசிப்பதைக் கண்டதும், அந்த மேள வாத்தியங்கள் சம்பந்தமாக அவர்கள் என்னத்தைக் கூறினார்களோ - அவைகளை நாவலில் எழுதுவதுமே எனக்கு உசிதமாகப்பட்டது. அந்த யதார்த்தத்தோடு நானும் இணைவதே எனக்குச் சரியாகவும் பட்டதால், அப்படியே அவைகள் எல்லாவற்றையும் நான் இந்தக் கதைக்குள்ளே கொண்டுவந்தேன்.
இவைகளைவிட இந்தக் கதைக்குள்ளே வரும் புதுார்
நாகதம்பிரான் - கோயிலைப்பற்றிய தகவல் சகலதும் எனக்குச்
சொன்னவர் நல்லம்மா' - என்பவர்தான். நாகதம்பிரான்
கோயிலை உருவாக்கிய வல்லிபுரம்' என்பவரது மகள் இவர்.
கோயிலைப்பற்றி அவர் எனக்குத்தந்த தகவல்களும் அவரது
44

Page 227
அனுபவங்களையும் இந்தக் கதைக்குள்ளே ஒரு கதையாக நான் சொல்லியிருக்கிறேன்.
இந்த நாவலிலே சேரிமக்களின் குரல்கள் என்று மாத்திரம் இல்லாது, அனைத்துத் தரப்பு மக்களின் குரல்களும் மாறிமாறி ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியாக என் கண்களில் கண்டதையும் காதுகளில் கேட்டவைகளையெல்லாம் இழுத்துவைத்துத்தான் அவற்றையெல்லாம் இந்த எழுத்துக்குள் நான் கொண்டுவந்தேன். இப்படியாகவெல்லாம் பல தகவல்களை சேகரித்து மிகவும் சிரமங்களுக்கு ஆட்பட்டு எழுதிய இந்நாவல், காலங்கள் மாறிப் போனாலும் ஒரு ஆவணமாகவும் திகழும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த நாவல் பல பக்கங்கள் வளர்ந்திருந்தாலும், வாசகர்கள் இதைப் பொறுமையுடன் இருந்து படித்து முடிப்பார்கள்' - என்றே நான் நினைக்கிறேன். எழுதியது இவ்வளவும் இப்போதைக்கு எனக்குப் போதுமாகப்படுகிறது.
நிம்மதியுடன் இப்போதுதான் நான் மூச்சுவிட்டுக்கொள்கிறேன். இனி அடுத்ததாக என் இதய நன்றியைச் சொல்லவேண்டும்.
என்றும் தமிழ் இலக்கிய வரலாறு பேசுகிற சிறந்த விமர்சகராக இருப்பவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பிதான். அந்த மகா மேதைதான் என்னுடைய இந்த நாவலுக்கு அணிந்துரை எழுதிக் கொடுத்திருக்கிறார். நான் கேட்டதும் மறுப்பு ஏதும் சொல்லாது “ வாடா வாடா நீ தம்பி கொண்டாடா கொண்டாடா தம்பி” என்றார். நான் கொண்டுபோய்க் கதையைக் கொடுத்தேன். எழுதித்தந்தார். எனக்கு தண்ணிர் குடித்து தாகம் அடங்கியதுபோல இருந்தது. குளிர்ந்தது. வெவ்வேறு காலங்களில் வாழ்ந்து தொலைத்தவர்கள் வாழ்க்கையை தமக்குள் கற்பனை பண்ணி சித்திரம் வரைந்து தந்தவர்கள் என்ற ரீதியில் முதலில் நான் குறிப்பிட வேண்டியவர் ஒவியர் கனிவுமதி அடுத்தவர் கெளதமன், இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்.
இந்த இடத்தில் திரு. சுந்தரமூர்த்தி சண்முகநாதன் ஐயா அவர் களையும் நான் நினைவுகூருகிறேன். வித்தியாகரனான அவர் என் எழுத்துத்துறை சம்பந்தப்பட்ட சகல வழிகளிலும் நல்ல ஆலோசனை எனக்கு வழங்கி வருபவர். அவருக்கும் என் உள்ளார்ந்த அன்போடு நன்றி கூறுகிறேன்.
இவர்கள் எல்லாரையும் விட நான் கவனிப்பாக நன்றிசொல்ல வேண்டிய இன்னுமொருவர் எனக்கிருக்கிறார்.
442

அவரது பெயர் சு. சண்முகவடிவேல். அவர் நான் பிறந்த ஊரைச் சேர்ந்தவர். (வவுனியா - சூசைப்பிள்ளையார் குளம்) என் இனிய நண்பர். சிறந்ததோர் சிற்பக்கலைஞர். உலகம் வாழ் நெருக்கடி மனிதர்களுக்குள்ளே சிறந்த நூல்களையெல்லாம் எடுத்து வாசிக்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டிருப்பவர் அவர். அரச விருதுகள் பல பெற்ற மதிப்பு மிக்கவர். மனித துயரங்கள் மீது அக்கறை கொள்வதும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுமான அன்பு இதயம் கொண்டவர் அவர். அவரும் இந்த நாவலை வாசித்து முடித்து தன் கருத்தினைக் கூறியிருக்கிறார். அவருக்கும் நான் மனமகிழ்ச்சியுடன் நன்றிகூறுகிறேன்.
எல்லாமே முழுமை பெற்றவிட்டது என்று எனக்கு இப்போது உறுதியாக இருக்கிறது. நல்மனதுடன் என்னை எழுத்துத்துறையில் இன்று ஊக்குவித்துக் கொண்டிருக்கும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மறவா நினைவுகளுடனிருந்து நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்!
நீ.பி.அருளானந்தம் இல, 7, லில்லியன் சாலை 356ö5760pés (Mt. Lavinia) பேசி: 4967027
2731887
072284954
443

Page 228


Page 229


Page 230


Page 231
அன்ைமைக்காலத்தில் நான் புனைக மேற்கொள்வதில்லை. இருப்பினும் வாசிக்கும் பொழுது ஈழத்தின் தமிழ் முடியவில்லை.
அருளானந்தம் தான் கணிக்கப்பட ே ஒருவரென்பதை துயரம் சுமப்பவர்க உண்மையில் பாத்திரங்கள் அரு சதையோடும் எம்முன்னே உலாவு இலங்கையின் முக்கிய தமிழ் நாவல் நிலைநிறுத்திக்கொள்கிறார்.
என்னைப் பொறுத்தவரையில் இந்த அல்லது பிரச்சினை மையம், அது ம மேற்கொள்ளும் போராட்டமேயாகும் களிலும் தோல்வியிலும் நாங்கள் வ கிறோம். இந்த நாவலின் பாத்திரங்க காவது நின்று நிலைக்கப்போகின் போகின்றன.
CC
വൈണി திரும86ர் பதிப்பகம்
 
 
 
 
 
 
 
 

தை இலக்கிய வாசிப்பினைப் பெரிதும் அருளானந்தத்தின் இந்த நாவலை நாவல் வளர்ச்சிபற்றி சிந்திக்காதிருக்க
வண்டிய தமிழ் நாவலாசிரியர்களுள் ள் மூலம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளார். ானந்தத்தையும் மீறி உயிரோடும் கின்றன. அவர் இந்த நாவலுடன் ாசிரியர்களில் ஒருவராகத் தன்னை
நாவலின் பிரதான விடயப்பொருள் ரிதர்கள் மனிதர்களாக வாழுவதற்கு
இந்தப் போராட்டங்களில், வெற்றி ழ்க்கையின் யதார்த்தங்களை பார்க் ள் உங்கள் மனதில் சில நாட்களுக் bன. உங்களை சிந்திக்கவைக்கப்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
அவர்களது மதிப்புரையிலிருந்து.)
SBN 978-955-1055-06-6