கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்களின் பட்டயம் (இலங்கை)

Page 1
பெண்களின
(இலங்
மகளிர் விவகார இராஜாங்க சுகாதார மகளிர் வி
கொழு இலங்ை
 

Por esa
ர் பட்டயம்
ப்கை)
அமைச்சு அலுவலகம் வகார அமைச்சு
ம்பு
595

Page 2

பெண்களின் பட்டயம் (இலங்கை)
பாயிரம்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு, ஆண் பெண் சமத்துவமும், பாலியல் காரணமாக ஓரங்காட்டப்படாதிருப்பதற்கான சுதந்திரமும் அடிப்படை உரிமையாகும் என ஏற்றங்கீகரித்து, அதனை நீதிமன்றங்களில் வலியுறுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாதலாலும்,
அரசியலமைப்பு ஆண் பெண் சமத்துவமின்மைகளை நீக்குவதற்காக உறுதியான, சட்ட ரீதியான அத்துடன், நிருவாகம் சார்ந்த தலையீட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளதாதலாலும்,
சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஓரங்காட்டாமை நெறியை உறுதிப்படுத்தி, மனிதர் அனைவரும் பிறப்பினால் கெளரவத்திலும், உரிமைகளிலும் சமத்துவமானவர்களும், சுகந்திரமானவர்களும் எனவும், பால் அடிப்படையிலான வேறுபாடு உள்ளிட்ட எவ்வகை வேறுபாடுமின்றி எல்லா உரிமைகளுக்கும், சுகந்திரங்களுக்கும் ஒவ்வொருவரும் உரித்துடையவர்கள் எனவும் பிரகடனப்படுத்தியுள்ளதாதலாலும்,
இலங்கை, இச் சர்வதேச தராதரங்களை ஆதரித்து பெண்களுக்கு எதிரான அனைத்து வகை ஓரங்காட்டலையும் நீக்குவதற்கான சமவாயத்தின் கீழுள்ள சர்வதேச கடப்பாடுகளை, உறுதிப்படுத்தல் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளதாதலாலும்
ஆண் பெண் சமத்துவம், ஓரங்காட்டாமை ஆகியவற்றின் விழுமியங்களுக்கு இலங்கையின் சமூக, சட்ட பாரம்பரியங்களும் அதன் சட்டங்களும் கொள்கைகளும் அனேகமாக ஆதரவாக இருந்து வந்துள்ளனவாதலாலும்,
பெண்களுக்கு எதிரான ஓரங்காட்டால் தொடர்ந்து நிலவுவதைக் கருத்திற்கொண்டும் ஆண் பெண் அடிப்படையிலான வன்செயல் மனித உரிமைகளினதும், அடிப்படைச் சுதந்திரங்களினதும் மீறலாகும் என்பதையும், அது இந்த அங்கீகரிப்பட்ட உரிமைகளையும், சுதந்திரங்களையும் பெண்கள் துய்ப்பதைப் பாதிக்கின்றது அல்லது மறுக்கின்றது என்பதையும் ஏற்றங்கீகரித்தும்,
தெளிவாக உணரப்பட்டிருக்கின்ற ஆண் பெண் சமத்துவம் பற்றிய சட்டங்களையும் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் முன்னிலும் திட்பமாக எடுத்துக் கூறவும், புதிய பாரப்பொறுப்புக்களையும் தராதரங்களையும் விதிக்கவும்,
விரும்பியும்,
பட்டயத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள உரிமைகளும் நெறிகளும், கொள்கைகளும்
எல்லா மனிதர்களாலும் நிறுவனங்களாலும் ಆಳ್ವ.: தொழில் முயற்சிகளாலும் மதிக்கப்படுதலும், அவற்றின் செயல்களுக்கு வழி காட்டுதலும் வேண்டுமென்று விரும்பியும்,
இலங்கையில் வாழ்க்கையின் எல்லாத் துறைகளினதும் நீதியையும் ஒப்புரவையும் ஆண் பெண் சமத்துவ அங்கீகரிப்பையும் உறுதிப்படுத்தத் தீர்மானித்தும்,

Page 3
இலங்கை அரசாங்கமானது பின்வருமாறு வெளிப்படுத்துகிறது:
பாகம் 1
1. ஆண்களுக்குச் சபமானவர்கள் என்ற அடிப்படையில் மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதநதிரங்களையும் பெண்கள் பிரயோகிப்பதற்கும் துய்ப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்திற்காக, பெண்களின் முழுமையான அபிவிருத்தியையும், முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்துவதற்கென, எல்லாத் துறைகளிலும், குறிப்பாக அரசியல், சமூக பொருளாதார, கலாச்சாரம் ஆகிய துறைகளில் சட்டவாக்கப் பிரகடனம் செய்தல் உட்பட தோதான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்தல் வேண்டும்.
அரசியல் உரிமைகளும், குடியியல் உரிமைகளும்:
2. (1) பகிரங்க, தனியார் துறைகளில் நாட்டில் அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும், பெண்களுக்கு எதிரான ஓரங்காட்டலை நீக்குவதற்கு அரசு தொதான எல்லா நடவடிக்கைளையும் எடுத்து, பெண்கள் ஆண்களுக்குச் சமமாகச் செயற்பட பின்வரும் உரிமைகளை உறுதிப்படுத்தல் வேண்டும்
(அ) எல்லாத் தேர்தல்களிலும், பொது மக்கள்தீர்ப்புக்களிலும் வாக்களித்தல், அத்துடன் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்படும் எல்லாக் குழுக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமையுடையவர்களாக இருத்தல்;
(ஆ) தேசிய, மாகாண, உள்ளுராட்சித் தேர்தல்களின் போதான தேர்தல் நியமன நடவடிக்கைகளில் ஒப்புரவான பிரதிநிதித்துவம் பெறுதல்;
(இ) அரசினி கொள்கையை வகுத்தமைத்தலிலும், அதனை அமுலாக்குவதிலும் பங்குபற்றுதளிலும், அரசின் அனைத்து மட்டங்களிலும் பகிரங்க பதவிகளை வகித்தலும், எல்லாப் பகிரங்க பணிகளையும் புரிதலும்
(1) தொழிற் சங்க நடவடிக்கைகளிலும், அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள எல்லா ஒழுங்கமைப்புகளிலும் கழகங்களிலும் பெண்கள் பங்கு கொள்வதனை அரசு ஊக்குவித்தல் வேண்டும்.
3. ஆண்களுக்குச் சமமாகவும், எவ்வித ஒரங்காட்டலுமின்றியும், சர்வதேச மட்டத்தில் அவர்களது அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், சர்வதேச ஒழுங்கமைப்புகளின் வேலைகளிலும் செயற்பாடுகளிலும் பங்கு கொள்வதற்கும் ஆன வாய்ப்பை பெண்களுக்கு உறுதிப்படுத்துவதற்குத் தோதான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்தல் வேண்டும்.
4. (1) பெண்கள் தமது தேசியத்தைப் பெறுவதில், மாற்றுவதில் , அல்லது வைத்திருப்பதில் ஆண்களுக்குச் சமமான உரிமைகளை துய்க்கின்றனர் ாண்பதை உறுதிப்படுத்துவதற்குத் தோதான எல்லா நடவடிக்கைகளையும் அாக எடுத்தல் வேண்டும் வேற்று நாட்டவர் ஒருவருடனான திருமணமோ, திருமணத்தின் போது கணவன் தமது தேசியத்தை மாற்றிக்

கொள்ளுவதோ காரணமாக மனைவியின் தேசியம் அதாகவே மாற்றப்படுவதையும், அவர் நாடற்றவராக்கப்படுவதையும், அல்லது கணவனின் தேசியம் அவர்மேல் திணிக்கப்படுதையும் தவிர்ப்பதை அரசு குறிப்பாக உறுதிப்படுத்தல் வேண்டும்.
(i) தமது பிள்ளைகளின் தேசியம் சம்மந்தமான விடயங்களைத் தீர்மானிப்பதற்கு ஆண்களுடன் சம உரிமைகளைப் பெண்கள் துய்ப்பதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.
(i) கலப்புத் திருமணத்தின் விடயத்தில், வாழ்க்கைத் துணைகள் பொதுச் சட்டத்தினால் ஆளப்படத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டிருப்பதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.
(v) ஆட்கள் இடம்பெயருவதும், அவர்கள் தமது வதிவிடத்தையும், வாழிநடத்தையும் தேர்ந்தெடுப்பதற்குள்ள சுதந்திரமும் தொடர்ப்பிலான சட்டம் சம்மந்தமாக ஆண்களும், பெண்களும் ஒரே வித உரிமைகளைத் துய்ப்பதை அரசு உறுதிப்படுத்துதல் வேண்டும்.
5. அரசியலமைப்பு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட, ஒருவரது சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமையும், சட்டத்தின் கீழ்ச் சமமான பாதுகாப்புக்கான உரிமையும் உள்ளிட்ட பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு அவசியமான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்தல் வேண்டும்.
6. குடியியல் விவகாரங்களில் ஆண்களுக்கு வழங்கப்பட்ட அதே சட்டத்தகுதியையும் அத்தகுதியைப் பிரயோகிப்பதற்கான அதே வாய்ப்புக்களையும் பெண்களுக்கும் வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை அரசு எடுத்தல் வேண்டும்.
ம்பச் Gr க்கம் உரிமைகள்:
7. (1) திருமணமும், குறிப்பாக குடும்ப உறவுகளும் சம்மந்தமான எல்லா விவகாரங்களிலும், பெண்களுக்கு எதிரான ஓரங்காட்டலை நீக்குவதற்குத் தோதான எல்லா நடவடி க்கைகளையும் எடுப்பதற்கு அரசு பாடுபடுதல் வேண்டும் என்பதுடன், ஆணுக்குப் பெண் சமம் என்னும் அடிப்படையில் பின்வருவனவற்றை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(அ) திருமணம் செய்து கொள்வதற்கு ஒரேவித உரிமை,
(ஆ) வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும் அவர்களது சுதந்திரமான மழுமையான சமமதத்துடன் மட்டுமே திருமணம் செய்து கொள்ளுவதற்குமான ஒரேவித உரிமை உரிமைகளும், பொறுப்புடைமைகளும்
(இ) திருமணத்தின் போதும் அது கலைக்கப்படும் போதும் ஒரே விதமான
உரிமைகளும், பொறுப்புடைமைகளும்
(ஈ) தமது பிள்ளைகள் தொடர்பான விடயங்களில், எல்லாச் சந்தர்ப் பங்களிலும் பிள்ளைகளின நலனி களே

Page 4
அதிமுக்கியமானவையாகவும். மணமான பிள்ளைகளுக்கும், மணமாகாத பிள்ளைகளுக்கும் இடையில் எத்தகையதுமான எவ்வித பாகுபாடுமின்றியும் இருக்கும் வகையில், அவர்களது திருமண அந்தஸ்து எவ்வாறு இருப்பினும், பெற்றோர் என்ற வகையில் ஒரேவித உரிமைகளும் பொறுப்புகளும்
(உ) தமது பிள்ளைகளின் எண்ணிக்கை பிள்ளைகளுக்கிடையிலான கால இடைவெளி என்பவற்றைச் சுதந்திரமாகவும் பொறுப்புணர்வுடனும் தீர்மானிப்பதற்கும், இந்த உரிமைகளைப் பிரயோகிப்பதற்கான தகவல்கள், கல்வி அறிவு, வழிமுறைகள் ஆகியவற்றைப் பெறுவதற்கும் உள்ள ஒரேவித உரிமைகள்.
(ஊ) பிள்ளைகளின் பாதுகாப்பாண்மை, காப்பாண்மை, நம்பிக்கைப் பொறுப்பு, மகவேற்பு ஆகியவை தொடர்பாகவோ இக்கருத்துக்கள் உள்ள அல்லது தேசிய சட்டவாக்கத்தில் ஏற்றங்கீகரிக்கப்பட்ட ஒத்த நிறுவனங்கள் தொடர்பாகவோ ஒரேவித உரிமைகளும் பொறுப்புடைமைகளும்
(எ) ஒரு குடும்பப் பெயர், வதிவிடம், வாழிடம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை உட்பட கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் ஒரேவித ஆளுக்குரிய உரிமைகள்.
(ஏ) ஆதனங்களின் சொத்தாண்மை, கொள்ளுதல், முகாமை, நிருவாகம்,
துய்ப்பு, கையுதிர்ப்பு தொடர்பாக வாழ்க்கைத் துணைகள்
ம் ஒரேவித உரிமைகள்.
(11) தமது சொந்தப் பிள்ளைகள் அல்லாத வேறு ஆள் எவருக்கும்
(1)
திருமணத்திற்குப் பிரதிபயணுக அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனங்களைக் கைமாற்றுவதைத் தடைசெய்வதற்கு, அத்தகைய கைமாற்றங்கள் ஏலவேயுள்ள சமயஞ்சார் சட்டங்களின் கீழ் சட்டமுறையானவாக இருக்குமிடத்துத் தவிர, அரசு சட்டங்களை ஆக்குதல் வேண்டும்.
ஓர் உத்தியோக பூர்வ பதிவகத்தில் திருமணங்களைப் பதிவு செய்வதற்கு அரசு ஏற்பாடு செய்தல் வேண்டும். திருமணம் செய்வதற்கான ஆகக் குறைந்த வயது 18 எனக் குறித்துரைப்பதற்கு அரசு சட்டமியற்றல் வேணடும் என்பதுடனர், அந்தச் சட்டமூலத்தைப் பிரசித்தப்படுத்துவதற்கும், இந்த வயதெல்லைக்கு குறைந்தவர்களின் ஒன்றுசேர்க்கை பயனுறுத்தப்பட்டிருக்குமிடத்து, அவ்வாறு ஒன்றுசேர்ந்த திறத்தவர்களைப் பாதுகாக்கும் வகையில் அத்தகைய ஒன்று சேர்க்கையை ஒரு குறித்துரைக்கப்பட்ட இடைக்காலப் பகுதிக்குப் பதிவு செய்வதற்கும், அரசு விசேட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தல் வேண்டும்.
(11) திருமண முறிவை திருமணக் குலைப்புக்கான அடிப்படையாக அரசு
ஏற்றங்கீகரித்து, திருமணம் குலைக்கப்பட்டு செயலற்றதாக்கப்பட்ட பின்னரான குடும்பத் தேவைகளும், ஆதரவும் அத்துடன் பெற்றோருக்கு இருக்கும் உரிமைகளும் பொறுப்புடைமைகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்பட ஏற்பாடு செய்தல் வேண்டும்.

(11)குடும்பப் பிணக்குகளை இணக்கமுறையில் தீர்த்து வைப்பதற்கு அவசியமான
நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளுதல் வேண்டும் என்பதுடன் இயைபான விடத்தெல்லாம் நம்பகத் தன்மையையும் இரகசியத் தன்மையையும் பேணும் உரிமையை ஏற்றங்கீகரித்தலும் வேண்டும்.
கல்விக்கும் பயிற்சிக்குமான உரிமை
(i)
(ii)
(iii)
(iv)
பின் வருவனவற்றை ஆணிகளும் பெணிகளும் பெறுவதனை உறுதிப்படுத்துவதற்கு அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும்
(அ) கூட்டுக்கல்வி, முறைசாராக் கல்வி, அத்துடன் தொடர் கல்வி, பயிற்சி விரிவாக்க நிகழ்ச்சித் திட்டங்கள் உட்பட, பாடசாலை முன்னிலைக் கல்வி ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, மூன்றாம் நிலைக் கல்வி, தொழில் நுட்பக் கல்வி, தொழில்முறைக் கல்வி, உயர்தொழில்சார் கல்வி ஆகியவற்றைப் பெறுவதற்கான கல்வி வாய்ப்புக்கள்.
(ஆ) 10 வருடகாலக் கட்டாயக் கல்வி
(இ) புலமைப் பரிசில்களாலும், கல்வி மானியங்களாலும் அடையக் கூடிய
நன்மைகளைப் பெறுவதற்கான ஒரேவித வாய்ப்புக்கள்.
(ஈ) ஒரேவித பாடவிதானங்கள், பரீட்சைகள், சான்றிதழ்களைப் பெறும் நடைமுறைகள், ஒரேவிதமான தராதரத்தைக் கொண்ட கல்வித்தகைமைகள் உடைய ஆசிரியர் பணிக்குழு, பாடசாலை வசதிகளும், பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களும், ஒரேவித தரத்தையுடைய உபகரணங்களும், உடற்கல்வியும், அழகியற்கல்வியும் ஆகிய அனைத்தையும் பெறுவதற்கு ஒரேவித வாய்ப்புக்கள் அத்துடன்,
(உ) உத்தியோகம் சார்பான, தொழில்சார்பான வழிகாட்டுகலையும் மற்றும்
ஆலோசனை நிகழ்ச்சித் திட்டங்களும்.
இயலாத ஆட்களைக் கொண்ட குடும்பங்களில் முக்கிய பொறுப்பு அக்குடும்பத்திலிருக்கும் பெண்களையே சாருகின்றன்றதென்பதை ஏற்றங்கீகரித்தது, மற்றவர்களுடன் சமமாகக் கல்வியையும் பயிற்சியையும் இயலாத ஆட்களும் பெறுவதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.
தேசிய கொள்கைக்கு அமைய, பிள்ளைகளின் நலனே அதிமுக்கியமானது என்பதைக் கருத்திற் கொண்டு, பிள்ளைகளின் கல்விப் போதனா மொழியைத் தேர்ந்தெடுப்பதில் சம உரிமை தாய், தந்தை இருவருக்கும் வழங்கப்படுதலை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்.
\போதனா கற்கைச் சாதனங்களை மீட்டல், தயாரித்தல், எழுதுதல் ஆகியவை மூலம் எல்லாவகைக் கல்வியினதும் பொருளடக்கம், கல்விச் சாதனம் என்பவற்றில் இருக்கும் ஆண், பெண் இனத்தவர் சார்ந்தன என நம்பப்பட்டு மாற்றமடையாமல் இருந்து வரும் எண்ணக்கருக்கள் நீக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு வேண்டிய எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்தல் வேண்டும்.

Page 5
O.
(V) உரிய காலத்துக்கு முன்பாகவே பாடசாலைகளிலிருந்து விலகுவதைக் குறைப்பதைய ப, பாடசாலையிருந்து உரிய காலத்திற்கு முன்னரே விலகிய சிறுமிகளு’ ம் பெண்களுக்கும் ஏற்ற நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்க ைப்பதையும் உறுதிப்படுத்துவதற்குத் தோதான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்தல் வேண்டும்.
பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவும், நன்மைகளைப் பெறவும்
(1) முறைசார்ந்த, அத்துடன் முறைசாராத பொருளாதாரத் துறைகளில் அனைத்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் பின்வருவனவற்றை உறுதிப்படுத்துவதற்குத் தோதான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்தல் வேண்டும்.
(அ) நிதிசார் நன்மைகளைப் பெறுவதற்கான பொருளாதார
நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஒரேவித உரிமை;
(ஆ) ஆட்சேர்ப்பு தொழிலமர்த்தல் பதவிஉயர்வு, சேவை நிபந்தனைகள், தொழில் பாதுகாப்பு என்பனவற்றில் ஆண் பெண் அடிப்படையில் ஓரங்காட்டல் எதுவுமின்றி, பகிரங்கதுறை, தனியார்துறை, முறைசாராத்துறை ஆகியவற்றின் எல்லாத் தொழில் மட்டங்களிலும் ஒரேவித தொழில் உரிமைகளும், ஒரேவித தொழில் வாய்ப்புகளும்;
(இ) தொழில்முறைப் பயிற்சி, மீள்பயிற்சி, சேவைக்காலப் பயிற்சி, தொழில் பயிற்சி ஆகியவற்றைப் பெறுவதற்கான ஒரேவித வாய்ப்புக்களை சமமாகப் பெற்றுக் கொள்ளுதல்;
(ஈ) (1) குடியமர்வுத் திட்டங்களிலுள்ள காணி உட்பட காணிக்கான சொத்தாண்மையையும் ஏனைய உரிமைகளையும் சமமாகப் பெற்றுக் கொள்ளுதலும், அத்துடன் காணி, கமநலச் சீர்திருத்தங்களில் சமமாகக் கணிக்கப்படுதலும்;
(2) விவசாயக் கொடுக்கடன்கள், கடன்கள், ஏனைய வகையிலான கொடு கடன்கள், சந்தைப்படுத்தும் வசதிகள், ஏரிவாக்க சேவைகள் போன்ற மூலவளங்களை பெறுவதற்கான சம வாய்ப்பு.
(உ) (1) பெண்களின் வருவாயை அதிகரிக்கும் வழிவகைகளைப்
பெறுக்குவதற்கும்,
(11) ஆண்களும், பெண்களும் வீட்டிலும் வேலைத்தலத்திலும் சமூகத்திலும் தங்கள் பொறுப்புக்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பொருளியல்சார் நடவடிக்கைகளிலும், பொருளியல்சாரா நடவடிக்கைகளிலும் நேரத்தையும் சிரமத்தையும் குறைப்பதற்கும் என;

சீர்த்திருத்திய தொழில்நுட்பவியலை அணுகுதல் உட்பட தோதான தொழில்நுட்பத்தை சமமாகப் பெறும் வாய்ப்பு
(ஊ) நன்மைகள் உட்பட, சமமான ஊதியத்தைப் பெறுவதற்கான உரிமையும் சம பெறுமானம் உடைய வேலை தொடர்பிலும், வேலையின் தரத்தை மதிப்பிடும் போதும் சமமாகக் கணிக்கப்படுவதற்கான உரிமையும்:
(எ) குறிப்பாக ஓய்வுபெறும் போதும் வேலையற்ற நிலையிலும் சுகயினம் உற்றிருக்கும் போதும், வயதில் முதுமை பெற்றிருக்கும் போதும், வேலை செய்ய இயலாத நிலையிலும் சமூகப் பாதுகாப்புப் பெறுவதற்கு ஒரேவித உரிமை,
(ஏ) குழந்தைப் பராமரிப்பிற்காகவும், குடும்பப் பொறுப்புக்களை பூர்த்தி செய்வதற்காகவும் அல்லது சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வேறு காரணங்களுக்காகவும் லீவுக்கான மற்றும் லீவுக்காலப் பகுதியின் பின்னர் திரும்பி வருவதற்கான உரிமை,
(ஐ) சுகாதாரப் பாதுகாப்பு, வேலைசெய்யும் இடங்களில் பாதுகாப்பான நம்பகரமான உபகரணங்களை ஏற்பாடு செய்தல் உட்பட எல்லாவித சுகாதார ஊறுகளும் அற்ற பாதுகாப்பான வேலைசெய்யும் நிலைமை, ஆகியவற்றைப் பெறுவதற்கு ஒரேவித உரிமை.
(ஒ) (1) பாதுகாப்பான குடிநீர், போதிய உடனல வசதிகள், அடிப்படை மருத்துவ வசதிகள், நலன்புரி வசதிகள் உட்பட தேகசுகத்திற்கு உகந்த பணிபுரியும் சூழலைச் சமமாகப் பெறுதல்,
(11) தமது குடும்பத்திற்கு பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரித்து, அரசின் அனைத்து அபிவிருத்தித் திட்டங்கள், நன்மைகளின் பகிர்ந்தளிப்பு அவற்றுடன் கூடிய பொறுப்புக்கள் ஆகியவற்றில் ஆண்களுக்குச் சமமான வாய்ப்பினைப் பெண்கள் பெறுவதை உறுதிப்படுத்தும் குடும்பத் தலைவர் என்ற பதத்திற்கு அரசு மீள வரைவிலக்கணம் கூறுதல் வேண்டும்.
11 திருமணம் அல்லது மகப்பேறு காரணமாக பெண்களுக்கு எதிராக ஓரங்காட்டுவதைத் தவிர்ப்பதற்காகவும், வேலை செய்வதற்கான அவர்களது பயனுறுதியான உரிமையை உறுதிப்படுத்தவும் தோதான நடவடிக்கைகளை அரசு எடுத்தல் வேண்டும்.
(1) மகப்பேற்று லிவும் மற்றும் நன்மைகளும் வழங்கப்படுதலும், துய்க்கப்படுதலும் பெற்றோர் சார்ந்த, சமூகஞ்சார்ந்த ஒரு பொறுப்பு நிறைவேற்றமாகும் எனக் கருதப்படுதல் வேண்டும் என்பதை உறுதிப்படுத்தல்.
(i) பெற்றோருக்கான லீவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்,

Page 6
(iii)
(M)
(v)
(vi)
(vii)
ஏலவேயுள்ள அல்லது நடைமுறையிலுள்ள தொழிலையோ, சேவை மூப்பு நிலையையோ, சமூகப் படிகளையோ இழக்காது ஊதியத்துடன் அல்லது ஒப்பிடக்கூடிய சமூக நன்மைகளுடன் மகப்பேற்று லீவைப் பெறுவதற்கு பக்கமளிப்பதுடன் சட்ட ஏற்பாடுகளை செயற்படுத்தலும், தாய்ப்பால் டாட்டுதலுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தலும்
திருமணம் அல்லது கருவுற்றிருத்தல் அல்லது மகப்பேற்றிகான லீவு காரணமாக (வேறு நொண்டிக் காரணங்களைக் காட்டியோ காட்டாமலோ) பதவி விலக்கலையும், திருமண அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்டு ஓரங்காட்டி பதவி விலக்கலையும், தடைசெய்து அவற்றிற்கான தண்டனைகளை விதித்தல்,
குறிப்பாக பல குழந்தை பராமரிப்பு நிலையங்களைத் தாபித்து அபிவிருத்தி செய்வதை மேம்படுத்துவதன் மூலம், பெற்றோர் குடும்பக் கட்டுபாடுகளுடன் தொழிற் பொறுப்புக்களையும் பொது வாழ்விற் பங்கு கொள்வதையும் இணைப்பதை இயலச் செய்வதற்கென, அவசியமான ஆதார சமூக சேவைகளுக்கு ஊக்கமளித்தலும், அவை சம்மந்தமான சட்ட ஏற்பாடுகளைச் செயற்படுத்தலும்,
வாழ்க்கைத் துணைகள் இருவரும் சாத்தியமான பொதியெல்லாம் ஒரே நில அமைவிடத்தில் வேலைசெய்ய உரித்துடையவர்கள் என்பதை
உறுதிப்படுத்துதல்,
கர்ப்பிணிப் பெண்களுக்கொ, பிரசவிக்க இருக்கும் குழந்தைக்கோ தீங்கு விளைவிக்கும் எனநிரூபிக்கப்பட்ட வகையான தொழில்களில் அப் பெண்களை கர்ப்ப காலத்தின் போது அமர்த்துவதைக் தடை செய்தல்,
12. பின்வருவனவற்றிற்குத் தோதான நடவடிக்கைகளை அரசு எடுத்தல் வேண்டும்
(1)
வேலையில் அமர்த்துவதற்கு 15 வயதே ஆகக் குறைந்தது என்பதைச் சட்டவாக்கம் மூலம் உறுதிப்படுத்துதல்.
(11) இருதரப்பு உடன்படிக்கைகள் மூலம் குடிபெயர்ந்திருக்கும் பெண்களின்
நலன்கள், அவர்களுடைய நாட்டினுள்ளும் குடியேறிய நாட்டினுள்ளும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தல்,
(11) கைத்தொழில் வேலையாட்கள் சம்பந்தமான பாதுகாப்புச் சட்டங்கள்
(iv)
யாவும் எல்லாக் கைத்தொழில் துறைகளிலும் பயனுறுவகையில் வலியுறுத்தப்படுவதை உறுதிப்படுத்தலும், அவர்களுடைய உரிமைகளும் அக்கறைகளும பாதிக்கப்படாது, பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக புதிய சட்டங்களையும், கொள்கைகளையும் விருத்தி செய்தலும்,
ஆணுக்கும் பெண் சமம் என்னும் அடிப்படையில் ஒரேவித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கென குறிப்பாக வங்கிக்கடன் பெறுதல் ஈடுவைத்தல் வேறு வகையான நிதிக் கொடுக்கடன்களைப் பெறுதல் ஆகியவற்றுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கென ஏனைய பொருளாதார

விடயங்களிலும் சமூக வாழ்விலும் பெண்களுக்கு எதிரான ஓரங்காட்டலை நீக்குவதற்குத் தோதான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தல்,
(v) நாட்டின் தேசிய உற்பத்தி உட்பட பொருளியல், சமூக, கலாச்சாரத் துறைகளில் பொருளியல், நாட்டிற்கு அவர்களின் பங்களிப்பைப் பிரதிபலிப்பதான ஆண் பெண் ரீதியிற் தொகுக்கப்படாத தரவையும், தகவலையும் சேகரித்து, வகுத்து கிடைக்கத்தக்கதாகச் செய்தல்,
(M) வேலைவாய்ப்பு அல்லது சுயவேலை வாய்ப்பு மூலம் பொருளியற் துறையில் சமவாய்ப்புக்களைப் பெறுவதற்கென அவசியமானவிடத்து சுய உதவிக் குழுக்களையும் கூட்டுறவுச் சங்கங்களையும் ஒழுங்கு செய்தல்
(vi) ஒரு பெண் தொழிலாளிக்குச் செலுத்தப்படற்பாலதான ஊதியம், சம்பளம் வேறு நன்மைள் அல்லது படிகள் யாவற்றையும் தொழில் தருநர்கள் அவருக்கு நேரடியாக வழங்குவதை உறுதிப்படுத்தல்,
சுகாதாரக் கவனிப்புக்கும், போஷாக்குக்குமான உரிமை:
13. (1) பின்வருவனவற்றை ஆண்களுக்கும், பெண்களுக்கும் பாகுபாடின்றி
வழங்குவதை அரசு உறுதிப்படுத்தல் வேண்டும்:
(அ) போஷாக்குக் கல்வி உட்பட சுகாதாரக் கவனிப்புத் தகவலையும், கல்வியையும், அலோசனைகளையும், பிணித் தடுப்பும் பரிகாரமும் தொடர்பான சேவைகள் உள்ளிட்ட சேவைகளையும் சமமாகப் பெற்றுக் கொள்ளுதலும், அத்துடன் குடும்ப வளங்களைப் பகிர்ந்து கொள்வதில் சமத்துவமும்.
(ஆ) பாலியல் தொடர்பான நோய்கள் பற்றிய தகவல், கல்வி, ஆலோசனை, பரிகாரம் ஆகியவற்றைப் பெறுதல். (பா. தொ. நோ)
(11) அரசு குறிப்பாகப் பின்வறுவனவற்றை உறுதிப்படுத்தல் வேண்டும்.
(அ) நோயாளிகளின் மருத்துவ, உளநோய் சிகிச்சைகள் சம்பந்தமாக தகுந்த பண்பு நயமான வசதிகளை ஏற்பாடு செய்தல் உட்பட, பெண்களின் உடல் உள நலன்களை மேம்படுத்திப் பாதுகாக்கும் திட்டங்களை கிடைக்கக்கூடியனவாக்குதலும், பெற்றுக்கொள்வதும் அத்துடன் வயது முதிர்ந்த உடற்குறைபாடு உடைய பெண்களும் சமூக ஆதரவு வழங்கும் நடவடிக்கைகளைப் பெறுவதை உறுதிப்படுதல்;
(ஆ) கர்ப்பகாலம், பிரசவ காலம், பிரசவத்தின் பின்னரான காலம் தொடர்பில் கிடைக்கத்தக்க உயர்ந்த தரத்திலான சுகாதாரக் கவனிப்பை ஏற்பாடு செய்தலும், அவசியமான விடத்து இலவச சேவைகளும், சமூக ஆதரவும் அளித்தலும், கருத்தரித்த காலத்திலும் தாய்ப்பால் ஊட்டும் காலத்திலும் போதிய ஒய்வு கிடைப்பதை உறுதிப்படுத்தலும், இதில் பெண்களைக் கட்டுக்காப்பில் வைத்திருக்கும் போது அவர்களுக்கு விசேடமான பாதுகாப்பு, பாதுகாவல் ஆகியவை கிடைப்பதும் உள்ளடங்கும்.
9

Page 7
14.
15. அரசு.
(1)(அ) இனவிருத்தியைப் பெண்கள் தாங்களே கட்டுப்படுத்துவதற்கான
உரிமையை அங்கீகரித்து, பாதுகாப்பான குடும்பக் கட்டுப்பாட்டு உபாயங்களை ஏற்பாடு செய்தல் உட்பட குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமான தகவல், கல்வி அறிவுரைகள், சேவைகளை சமமாகப் பெறுதலும், அத்துடன் அவர்களின் பாதுகாப்புத் தொடர்பான ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்தலும, வலுவுக்கிடுதலும்.
(ஆ) குடும்பக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்
போது அத்தகைய கொள்கைகள் ஆண், பெண் மீது சமமாக கண்ணோட்டம் செலுத்துவதை உறுதிப்படுத்துதல்.
(இ) எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பிள்ளையின் நலனே
அதிமுக்கியமானது என்பதைக் கருத்திற்கொண்டு, ஒரு குடும்ப த்தில் பெற்றோர் என்ற ரீதியில் அவர்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொள்ளல், உரிமைகளில்/ உடைமைகளில் நியாயமான பங்கை ஏற்றல், சமூகப் பொறுப்பைச் சரியாக விளங்கிக் கொள்ளல் ஆகியவை குடும்பக் கல்வியில் அடங்கும்.
சமூக ஓரங்காட்டலில் பாதுகாப்புப் பெறும் உரிமை:
பின்வருவனவற்றிற்குத் தோதான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்தல் வேண்டும்:
(1) ஆண், பெண் இருபாலாரிலும் ஒருவர் தாழ்ந்த நிலையிலுள்ளவர் மற்றவர் உயர்ந்த நிலையிலுள்ளவர் என்ற எண்ணத்தின் அடிப்படையிலும், ஆணுக்கு இவை, பெண்ணுக்கு இவை என அங்கீகரிக்கப்பட்டு மாற்றப்படாது இருந்து வரும் பாத்திரங்களினாலும் ஏற்பட்டிருக்கும் தப்பபிப்பிராயங்களையும், வழங்களையும், மற்றும் வழக்காறுகளையும் நீக்கும் நோக்கத்துடன் சமூக கலாச்சார மனப்பாங்குகளை விருத்தி செய்ய ஊக்கமளித்தல்.
(11) பொதுசனத் தொடர்பு சாதனங்களில் பெண்களைப் பற்றிய எதிர் விளைவுகளைத் தரும் வருணனைகளை வெளியிடுவதைத் தடைசெய்தல்.
(11)பெண்களையும், பிள்ளைகளையும் போதைப் பொருள் கடத்தவோ, விலைமாதுகளாகவோ பயன்படுத்தும் எல்லாவகை சுரண்டலையும் நீக்குதல்.
(1) விதவைகள், மணவிலக்குப் பெற்ற பெண்கள், தனிப் பெற்றோர், தனிப் பெண்கள், பாதிப்புறக்கூடிய ஏனைய வகையான பெண்கள் ஆகியோரைப் பற்றிய எதிர் விளைவுகளைத் தரும் சமூக மனப்பாங்குகளை நீக்குவதற்கும் பாடுபடுதல் வேண்டும்.

16.
(11) அத்தகைய பெண்களுக்கு சமூகப் பொருளியல் ரீதியாக ஒரல் காட்டப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும்.
(11) சமுதாயத்தின் பிரதான ஓட்டத்தில், அவர்கள் பங்கு கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு பயனுறு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
ஆண் பெண் அடிப்படையிலான வன்செயல்களிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை
சமுதாயத்தில் பெண்கள், பிள்ளைகள், இளம் ஆட்கள் ஆகியோருக்கு எதிராக வேலைத்தலத்திலும், குடும்பத்திலும், கட்டுக்காவலில் இருக்கும் இடங்களிலும் வன்செயல் நடக்கும் நிலையை, குறிப்பாகக் கற்பழித்தல், சகோதரரோடு பாலியல் துர்ப்பிரயோகம், சித்திரவதை, கொடுரம், மனிதாபிமானமற்று, அல்லது கீழ்த் தரமாக நடாத்தப்படுதல் ஆகியவற்றை தவிர்ப்பதற்கு அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும்.
அத்தகைய நடவடிக்கைகள் பின்வருவற்றையும் உள்ளடக்கும்:
(1) பொருளளவிலான சட்டத்தின் பரிகாரம் மாத்திரமின்றி, வன்செயலினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளைத் தெளிவாக அங்கீகரிக்கும் தடுப்புமுறைகளையும் தண்டனை முறைகளையும் உள்ளடக்கிய சட்டச் சீர்திருத்தங்களை ஊக்குவித்தல்,
(11) பெண்களுக்கெதிராக இழைக்கப்படும் வன்செயற் குற்றங்களைக் கையாளுவதற்கு அவர்களுக்குள்ள ஆற்றலை வலுப்படுத்தும் வகையில், சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளின் உள்ளத்திற் சாதகமான மாற்றத்தையும் ஊக்குவித்தல்.
(11) ஆயுதம் தாங்கிய மோதல்கள், உள்நாட்டுச் சச்சரவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, வன்செயல்களாற் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு மற்றும் ஆலோசனை சேவைகள் வழங்கும் அரசு சார்பற்ற ஒழுங்கமைப்புகளுக்கும், சமூக அடிப்படையிலான ஒழுங்கமைப்புகளுக்கும், நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் ஆதரவு வழங்குதல்.

Page 8
LJITSLib Il
தேசிய குழுவைத் தாபித்தல்
(1) இந்தப் பட்டயத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் கடப்பாடுகளை அடைவதிற் கண்ட முன்னேற்றத்தை பரிசீலனை செய்யும் நோக்கத்திற்காகவும், இதன் குறிக்கோள்கள் எய்தப் பெறுவதைக் கண்காணிப்பதற்காகவும் பெண்கள் பற்றிய தேசிய குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டும். இது இதனகத்துப் பின்னர் குழு' எனக் குறிப்பீடு செய்யப்படும்.
(2) இக் குழு 15 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.
(i)
(ii)
(iii)
(iv)
(v)
சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெற்றவரும் பின்வரும் துறைகளில் பிரபல்யம் பெற்றவருமான ஆட்களிடையே இருந்து இலங்கை ஜானாதிபதியினால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள்:
(அ) சட்டம்
(ஆ) சுகாதாரம்
(இ) பொருளியல் அபிவிருத்தி
(ஈ) கல்வி
(உ) விஞ்ஞானமும், தொழில் நுட்பமும்
(ஊ)சூழல்
பெண்களின் வலிந்துதவு ஒழுங்கமைப்புக்கள் பணியில் அல்லது பெண்கள் விவகாரங்கள் பற்றிய துறையில் பிரபல்யம் பெற்ற
ஆட்களிடையே இருந்து இலங்கை ஜனாதிபதியினுல் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள், அத்துடன்
அகில இலங்கை அரச சேவையின் வகுப்பு 1 இற்கு குறையாத பதவி வரிசையில் உள்ளவராக அல்லது அரசு சார்பற்ற துறையில் அதற்குச் சமமான அல்லது அதேபோன்ற பதவி வரிசையில் உள்ளவராகவும், பெண்கள் சம்பந்தமான வேலையிலும் அபிவிருத்திலும் அனுபவம் உள்ளவராகவும் இருப்பவரும், இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவரும 1ான நிறைவேற்றுப் பணிப்பாளரொருவர், இந்த நிறைவேற்றுப் பணிப்பாளர் குழுவின் ஓர் உறுப்பினராகவும் முழு நேர அலுவலராகவும் இருப்பர்.
இந்த உட்பிரிவின் (1) ஆம், (11) ஆம் பந்திகளின் கீழ் நியமிக்கப்படும் 14 உறுப்பினர்களில் ஒருவர் குழுவின் தவிசாளராக இலங்கை ஜனாதிபதியினால் நியமிக்கப்படுவார்.
குழுவின் செயலாளராக இலங்கை ஜனாதிபதியால் ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் ஒரு முழுநேர அலுவலராக இருப்பர்.

18. (1)
(2)
குழுவின் தவிசாளரும், மற்றைய உறுப்பினர்களும் 4 வருடகாலத்திற்கு பதவி வகித்தல் வேண்டும். அவர்கள் அடுத்துவரும் ஒரு காலப்பகுதிக்கு மீள நியமனம் பெறத்தக்கவுடையவர்களாதல் வேண்டும்.
உறுப்பினர்களிடையே ஏற்படும் ஏதேனும் வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான ஓர் ஆளை இலங்கை ஜனாதிபதி யின் அங்கீகாரத்திற்கு அமைவாக, பெண்கள் அந்தஸ்த்திற்குப் பொறுப்பான அமைச்சர் நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்படும் எவரேனும் ஆள், அவர் எவ்வுறுப்பினரைத் தொடர்ந்து பதவிக்கு வருகின்றாரோ அவ்வுறுப்பினரின் முடிவுறா தெஞ்சியுள்ள பதவிக்காலத்திற்கு பதவிவகித்தல் வேண்டும்.
குழுவின் பணிகள் பின்வருவனவாதல் வேண்டும்:
(அ) ஆண், பெண் ஓரங்காட்டல்கள் சம்பந்தமான முறைப்பாடுளை
ஏற்றுக் கவனித்து, நுனித்தாராய்வு செய்து, பொருத்தமான சந்தர்ப்பங்களில் இயைபான நிர்வாக அதிகாரிகளுக்கோ, சம்பந்தப்பட்ட நபர்களுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைத்தல்.
(ஆ) இப்பட்டயத்தில் அடங்கியுள்ள ஏற்பாடுகளின் மீறல் பற்றிய
(g))
(FF)
(9)
முறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக, சட்ட உதவி பெறுவதற்காக அத்துடன் அல்லது மத்தியஸ்த சேவைக்காக அரசு ஒழுங்கமைப்புகளுக்கும், அரச சார்பற்ற ஒழுங்கமைப்புகளுக்கு ஆற்றுப்படுத்தல்.
அத்தகைய நடவடிக்கைகளைக் கண்காணித்து, இயைபான அதிகாரிகளிடம் இருந்து முன்னேற்றம் பற்றிய வருடாந்த அறிக்கைகளைத் தேவைப்படுத்தி, இந்த அறிக்கைகள் நாட்டில் பரவலாகக் கிடைக்கத்தக்கனவாகச் செய்தல்.
இந்தப் பட்டயத்தில் அடங்கியுள்ள பெண்களின் உரிமைகளும்
பாறுப்புடைமைகளும் மீதான அனைத்துச் சட்டவாக்கக் கொள்கையினதும், அபிவிருத்திக் கொள்கையினதும் தாக்கத்தை மதிப்பீடு செய்தல்,
இயைபான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு ஊக்கம் அளிப்பதன் மூலமாக பட்டயத்தின் குறிக்கோள்களை அடைவதற்கு உதவுதலும், அத்தகைய ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான விதப்புரைகளைச் செய்தலும்,
(ஊ) பெண்களின் அந்தஸ்த்துக்குப் பொறுப்பான அமைச்சர், குழுவினால்
சீர்தூக்கிப் பார்க்கப்படுவதற்காக அதற்கு ஆற்றுப்படுத்தும் பெண்களின் அந்தஸ்து தொடர்பான விடயங்கள் பற்றி அமைச்சருக்கு ஆலோசனை வழங்குதலும், அல்லது குழு தோதாகக் கருதக்கூடியவாறு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குதலும்.

Page 9
20,
21.
22.
23.
(1) குழுவினி ஏதேனும் கூட்டத்திற்கான நடப்பெணி
உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
(2) அவசியமாகக்கூடியவாறு அடிக்கடியும் ஆகக்குறைந்தது இரண்டு
மாதங்களுக்கு ஒரு முறையேனும் குழு கூடுதல் வேண்டும்.
(1) அமைச்சருக்கு முகவரியிடப்பட்ட ஒரு கடித மூலம் எந்த உறுப்பினரும் தனது பதவியிலிருந்து விலகிக்கொள்ளலாம்.
(2) இலங்கை ஜனாதிபதி தன்னால் நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் அல்லது அலுவலர் ஒருவர் நீக்கப்படுவது உசிதமானது என்று எண்ணினால் அவரை நீக்கலாம்.
குழு உறுப்பினர்களிடையே வெற்றிடம் இருப்பினும்கூட செயற்படலாம்.
குழு, நிறைவேற்றுப் பணிப்பாளரின் கீழ் பணியாற்றும் முழுநேர
பணியாட்டொகுதியினரைக் கொண்ட ஒரு நிரந்தர அலுவலகத்தையும், செயலகத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.
மகளிர் விவகார இராஜாங்க அமைச்சு அலுவலகம், 'டிசெம்பர் 1992


Page 10


Page 11
Printed by GRA

APHICSYSTEMS