கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சர்வதேச நினைவு தினங்கள்

Page 1


Page 2


Page 3

(விழிப்புணர்வுக் கட்டுரைகள்)
அல் ஹாஜ் யூ. எல். அலியார் M.A. (Ed.), P. G. Dip. in Ed. (Col.) Dip. in Eng., Dip. in EMIS (Australia) 366 6ffalogurami (PGDE & B. Ed. - NIE) பிரதிக்கல்விப் பறிப்பாளர்
‘பைத்துல் ஹிக்மாஹற்’ 143/15, கிறாண்ட்பாஸ் வீதி, கொழும்பு - 14.

Page 4
நூல் விவரம்
நூற் பெயர் வகுதி ஆசிரியர் பதிப்புரிமை ே முகவரி
முகப்பு ஓவியம் : நூலளவு எழுத்து பக்கங்கள் பிரதிகள்
அச்சு
முதற் பதிப்பு விலை
சர்வ தேச நினைவு தினங்கள்
பொது
பூ எல். அலியார்
ஆசிரியர்
"பைத்துல் ஹிக்மாதிற்” 33. கீச்சார் வீதி, சம்மாந்துறை - 02, 143/15, கிறாண்ட்பாஸ் வீதி, கொழும்பு - 4, கல்முனை எஸ். ருத்ரா # [[ବ୍ଯକ୍ସ୍ - 1;'&
10 புள்ளி
O
500 எல்டார் ஒப்செற் பிரிண்டர்ஸ் பிரதான வீதி, சாய்ந்தமருது. ஜூன் 1998
јLIT III.
Bibliographical Data
Tite
Class Author Copyright Address
Cover Design : Size Type Pages Copies Printers
1 St Editio Prii:E
: Sarwathesa Ninaivu Thinangal
[International Comппвпnoratioп Days)
: Genaral : J.L. Aliyaar : AuthOr : "Baithul Hikmah"
53, Keechar Road, Sarrnanthurai-O2. 143/15 Grandpass Road, Colobo - 14. KalITUrai S. Ruthra
: Crown - 1/8 : 10 pts,
: O2
: 1500 : Star Offset Priter
Main Street, Sainthamaruthu.
: June 1998. RS, 100 =
ISBN: 955 - 9.5831 - 1 - 5

r
*

Page 5

நிறைவான அருளும் நிகரற்ற அன்பும் தனக்கெனக் கொண்ட தனித்தவன் அவனை நினைவிலே இருத்தி தொடர்கிறேன் பணியை,
கல்வியியல் நோக்கு என்னும் என்னுடைய கன்னி முயற்சிக்கு கல்வி உலகம் வழங்கிய பேராதரவு இன்னும் என்னை மெய்சிலிர்க்கச் செய்கிறது. அதன் பேறாக எனது இரண்டாவது நூலை உங்களிடம் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
கொழும்பு பல்கலைக் கழகத்தில் பத்திரிகையியல் டிப்ளோமா பாடநெறியைப் பயிலும் காலத்தில் யான் பெற்ற ஆய்வு அனுபவங்களை ஒட்டியதே இந்நூல்.
பயனுள்ள பல்துறைத் தகவல்கள் விழிப்புணர்வு ஊட்டும் கட்டுரைகளாக கோவைப்படுத்தப்பட்டுள்ளன. இக் கட்டுரைகள் பொது அறிவு தேடும் கற்றோர்க்கும், விழிப்புணர்வு வேண்டும் மற்றோர்க்கும், விடய அறிவு விழையும் மாணவர்க்கும் மிகப் பயனுள்ளவை எனக் கருதுகின்றேன். மேலும் இவை அறிவுத் தேட்டத்துக்கு விருந்தாக மட்டுமன்றி, நல்ல மனப்பாங்குகளை வளர்ப்பனவாகவும், உயர் சிந்தனைகளுக்கு வழிவகுப்பனவாகவும், உறுதியான விழுமியங்களை உருவாக்குவனவாகவும் அமையும் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கையுண்டு.
இவ்வாக்கத்துக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆலோசனை வழங்கி ஊக்கமளித்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். சிறப்பாக, ஆலோசனையுடன் அறிமுகமும் வழங்கிய கொழும்பு பல்கலைக்கழக கல்விபீட பேராசிரியர் சோ. சந்திரசேகரன அவர்கள் மறக்கொனா மாண்புடையவர்; என்றும் என் மதிப்புக்குரியவர்.
மேலும், நூலுருத்தந்த சாய்ந்தமருது ஸ்டார் ஒப்செற் அச்சகத்தார், கற்பனைக்குக் கலைவடிவம் தந்த ஓவியர் கல்முனை எளில் ருத்ரா ஆகியோருக்கும் இதய பூர்வமான நன்றிகள். அதைவிட மேலாக இந்நூலைப் பெற்று வாசிக்கும் உங்களுக்கும் உரித்தாகுக.
யூ. எல். அலியார்

Page 6
ólusGéM-Sð5b
V பக்கம்
பகுதி ஒன்று : முன்னுரை --- O பகுதி இரண்டு : விழிப்புணர்வுக் கட்டுரைகள் 07 01. உலக நீர்த்தரைப் பரப்பு தினம் -- 08 02. சர்வதேச மகளிர் தினம் OMN 11 03. உலக நுகர்வோர் தினம் ■ 13 04. உலக நீர் வள தினம் ы» 16 05. உலக கயரோக தினம் VM 19 06. உலக சுகாதார தினம் 2 07. உலக புவி தினம் - 23 08. உலக நூல் பதிப்புரிமை தினம் 25 09. சர்வதேச தொழிலாளர் தினம் (மே தினம்) 28 10. உலக பத்திரிகைச் சுதந்திர தினம் --- 30 11. உலக செஞ்சிலுவை செம்பிறை தினம் 32' 12. உலக தொலைத்தொடர்பு தினம் 34 13. உலக பண்பாட்டு தினம் 36 14. உலக புகைப் பாவனை தவிர்ப்பு தினம் 39 15. உலக சுற்றாடல் தினம் 42 16. உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் 44 17: உலக வெகுசனத் தொடர்பு தினம் bb 46 18. சர்வதேச கூட்டுறவு தினம் 50 19. உலக சனத்தொகை தினம் 54 20. மூன்றாம் உலக தகவல் தினம் 56 21. உலக சமாதான தினம் 59 22. சர்வதேச எழுத்தறிவு தினம் na 63 23. உலக சுற்றுலா தினம் 66 24. சர்வதேச முதியோர் தினம் - 68 25. சர்வதேச சிறுவர் தினம் 70 26. உலக குடியிருப்பு தினம் 73 27. உலக ஆசிரியர் தினம் 75 28. உலக தபால் தினம் quam 77 29. உலக தர நிர்ணய தினம் --- 79 30. சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் - 82 31. உலக உணவு தினம் spome- 84 32. ஐக்கிய நாடுகள் தினம் 87 33. உலக சிக்கன தினம் are 90 34. உலக எயிட்ஸ் தினம் 92 35. உலக மனித உரிமைகள் தினம் · 94
உசாத்துணை நூல் விபரம் 96

பகுதி : ஒன்று
UPSIDIGOU
வெகுசன தொடர்பூடகங்களின் பணி :
பொதுமக்கள் தொடர்பான விடயங்களில் வெகுசன தொடர்பு ஊடகங்கள் அக்கறை காட்டுவது இயல்பு. இந்த வகையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சு ஊடகங்களும், வானொலி, தொலைக்காட்சி ஆகிய மின்னியல் ஊடகங்களும் பொதுமக்கள் நலன்களுக்காக பல பணிகளை ஆற்றுகின்றன. அவற்றைப் பின்வருமாறு பட்டியல் படுத்தலாம். அவை,
தகவல் / செய்தி வழங்குதல்.
அறிவுரை / ஆலோசனை வழங்குதல்.
கல்வியூட்டல்.
அறிவுறுத்தல் வழங்குதல்.
மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்தல்.
அபிப்பிராயங்களை உருவாக்குதல்.
சிந்தனையைக் கிளறுதல்.
பொழுதுபோக்கு வாய்ப்பளித்தல். 9. கலையுணர்வுகளுக்கு விருந்தளித்தல் போன்றவையாகும். இவற்றைத்
தவிர, குறிப்பிட்ட பிரச்சினைகள் மீது மக்களிடையே விழிப்புணர்வை
(AWareness) ஊட்டுவதும் பிரதான பணியாக அமைகின்றது.
மக்கள் போதிய விளக்கத்தினையும், உணர்வினையும் பெற்றுக் கொள்வதன் மூலமே ஒரு பிரச்சினைக்கு முகங்கொடுக்கவும், அதற்கான தீர்வினைத் தேடவும் முயற்சியெடுப்பார்கள். உதாரணமாக எயிட்ஸ் நோயிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளல், சுற்றாடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளல், போதைப் பொருட் பாவனையை ஒழித்தல், பத்திரிகைச் சுதந்திரத்தைப் பேணுதல் போன்றவற்றில் மக்களின் விழிப்புணர்வு மிகமிக இன்றியமையாததாகும். மக்களின் விழிப்புணர்வும், விளக்கமும் போதாமை யினால் எயிட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு மக்கள் இலக்காவதும், சுற்றாடல் பேணப்படாமையால் தொற்றுநோய்கள் பரவுவதும், போதைப்பொருட் பாவனையினால் சமூகம் சீர்கெட்டு அழிந்து போவதும் பத்திரிகைச் சுதந்திரம் பற்றிய விளக்கமின்மையால் சனநாயக சமுதாயத்தில் மக்கள் தம் பங்களிப்பைப் பயன்படுத்த முடியாதிருப்பதும் துரதிஷ்டமாகும்.
இவை போன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் .
உலகளாவிய ரீதியில் கவனம் செலுத்தப்பட வேண்டியவையாகும். ஐக்கிய நாடுகள் தாபனமும் (UNO), உலக சுகாதார தாபனம் (WHO), ஐக்கிய
சர்வதேச நினைவு தினங்கள் O1

Page 7
நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமையம் (UNESCO) போன்ற அதன்
போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் இத்தகைய கருப்பொருள்களுக்கு (Themes) முதன்மையளிக்கின்றன. இலங்கை போன்ற வளர்முக நாடுகள் கவனம் செலுத்த வேண்டிய பல முக்கிய கருப்பொருள் களும் இவற்றுள் அடங்குகின்றன. இவை மீது மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் மேலும் பல நினைவு தினங்கள் முக்கிய கருப்பொருட்களைக் கொண்டு அனுஷ்டிக்கப்படலாம்.
நினைவு தினங்களின் அடிப்படைகள் :
சர்வதேச நினைவு தினங்கள் பல்வேறு அடிப்படைகளைக் கொண்டவையாகும். சர்வதேச மட்டத்தில் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, வரலாற்றுப் பின்னணிகளை இத்தினங்கள் பிரதிபலிக்கின்றன.
(es) S-SI gsfueó
சில தினங்கள் அரசியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஐக்கிய நாடுகள் அமைய தினம், ఇవి சமாதான தினம், பத்திரிகை சுதந்திர தினம் என்பன அரசியல் ரீதியில் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டவை. இன்று உலக சமாதானம் சகல தரப்பினராலும், சகல நாட்டினராலும் விழ்பப்படும் ஒரு கருப் ாருளாகும். சமாதானத்துக்காகவே யுத்தம் புரிகிறோம் என நியாயப்படுத்தும் நாடுகளும் அதனையே வேண்டி நிற்கின்றன. ஐக்கிய நாடுகள் அமையம் (UNO) உலக சமாதானத்தினதும் உலக நிருவாகத்தினதும் அடித்தளமாக விளங்குகின்றது. 2ம் உலக யுத்தத்தின் அனுபவங்கள் இந்த அமையத்தை உருவாக்கியது. உலக அரசியலின் சமநிலையையும் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கும் இத்தினம் அரசியல் விழிப்புணர்வுக்கு இன்றியமையாதது. பத்திரிகை சுதந்திரம் மக்களுக்கு அடிப்படை அரசியல் அறிவை வழங்குவதாகும்.
(ஆ) பொருளாதாரம்
பொருளாதார முக்கியத்துவமுடைய பல நினைவு தினங்கள் உள்ளன. உலகை வழிநடத்தும் சக்திவாய்ந்த ஓர் அம்சமாக பொருளாதாரம் விளங்குகின்றது. பொருளாதாரம் பற்றிய நினைவு தினங்களாக பின்வருவனவற்றைக் கொள்ளலாம். அவையாவன, உலக நீர் தினம், உலக தொலைத்தொடர்பு தினம், நுகர்வோர் தினம், கூட்டுறவு தினம், சுற்றுலா தினம், உணவு தினம், சிக்கன தினம், தர நிர்ணய தினம், சனத்தொகை தினம் என்பன.
O2 . . யூ. எல். அலியார்

சிக்கன தினம் மக்களிடையே சிக்கனத்தையும் சேமிப்பையும் வலியுறுத்துகின்றது. சேமிப்பின் மூலமே நாட்டின் முதலீட்டுத்துறை வளர்ச்சி யடைகின்றது. கூட்டுறவு தினம் கூட்டுறவின் மூலம் ஏற்படும் பொருளாதார அபிவிருத்தியைச் சுட்டிக் காட்டுகின்றது. தர நிர்ணய தினம், நுகர்வோர்தினம் என்பன நுகர்வோர் தரம் வாய்ந்த உற்பத்திகளைப் பெற்றுக் கொள்வதை வலியுறுத்துகின்றன. உணவு, சுற்றுலா, தொலைத்தொடர்பு போன்றவையும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும். சுற்றுலாத்துறை நாடுகளுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் முக்கிய துறையாக வளர்ந்து வருகின்றது. உணவு உற்பத்தி, விநியோகம் என்பன பொருளாதார செயற் பாடுகளைக் குறிக்கின்றன. தபால், தொலைத்தொடர்புத் துறைகள், பல்துறை வளர்ச்சிக்கு இன்றியமையாதன. சனத்தொகை பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கூறாக உள்ளது. இவற்றின் மீது மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்று சர்வதேச சமுதாயம் நம்பிக்கை கொண்டுள்ளது.
(இ) சமூகம்
சமூக ரீதியான கருப்பொருள்களைக் கொண்ட சர்வதேச நினைவு தினங்கள் சமூக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அத்தகைய சில தினங்களாவன, முதியோர் தினம், சிறுவர் தினம், வெள்ளைப் பிரம்பு தினம், புகைப்பாவனை தவிர்ப்பு தினம், போதைப்பொருள் ஒழிப்பு தினம், சுகாதார தினம், எயிட்ஸ் தினம், கயரோக தினம், மனித உரிமைகள் தினம் என்பன. இவை சமூக நலனை வலியுறுத்தும் கருப்பொருட்களைக் கொண்டவையாகும்.
மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து மக்களின் விழிப்புணர்வு மகளிர் முன்னேற்றத்திற்கு காலாக இருந்து வந்துள்ளது. முதியோர், பார்வை இழந்தோர், செவிப்புலன் குறைபாடுடையோர், நோயுற்றோர் போன்ற நலிவுற்ற அல்லது ஊனமுற்ற மக்களின் நலன்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுத்துச் செல்லப்படுவதை இத்தகைய சர்வதேச தினங்கள் புலப்படுத்துகின்றன. மதுவிலக்கு, போதைவஸ்து ஒழிப்பு, புகைப்பாவனை தவிர்ப்பு எயிட்ஸ் ஆகியன சமூகத்தைப் பாதிக்கும் பல்வேறு நோய்கள் கெடுதிகள் என்பவற்றிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.
சிறுவர் தினம் சிறுவர் துஷ்பிரயோகத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களின் கல்வி, சுகாதாரம் என்பவற்றைப் பேணவும் வழிவகுக்கின்றது. எழுத்தறிவு, மனித உரிமைகள், குடியிருப்பு, தொழிலாளர் தினங்கள் சமூக விழிப்புணர்வைத் தோற்றுவிப்பனவாகும். மக்களின்
Wrowesw நினைவு தினங்கள் O3

Page 8
விழிப்புணர்வின் மூலமே சமூக முன்னேற்றத்தை எய்த முடியும் என்பதற்கு இத்தினங்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.
(ஈ) கலாசாரம்
கலை, பண்பாடு, சுற்றாடல், விலங்கினம், பறவையினம் என்பவற்றைப் பாதுகாத்தல், மதம், மொழி, தகவல் பரிமாற்றம் போன்றவை மனித கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் துறைகளாகும். சர்வதேச நினைவு தினங்கள் பல, கலாசார மேம்பாட்டையும் மனித நேயத்தையும் பிரதிபலிப்பனவாக உள்ளன. அவையாவன, பண்பாட்டு தினம், தகவல் தினம், சுற்றாடல் தினம் நீர்த்தரைப் பரப்பு தினம், ஆசிரியர் தினம், செஞ்சிலுவை செம்பிறை தினம் ஆகியனவாகும்.
மனித பண்பாடுகள் காலங்காலமாகப் பேணப்பட்டு வருபவையாகும். மனித கலாசார வளர்ச்சியே ஒரு நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகிய சகல துறைகளுக்கும் அத்திவாரமாகும். வெகுசனத் தொடர்பு ஊடகங்கள், தகவல் பரிமாற்றம் ஆகியன சனநாயகத்துக்கு இன்றியமையாத துறைகளாகும். ஆசிரியர் தினம், பாரம்பரிய குரு மகத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது. செஞ்சிலுவை, செம்பிறை தினம் பேதமின்றி பிறர்க்குதவும் உயரிய விழுமியத்தைப் பிரதிபலிக்கின்றது. சுற்றாடல், நீர்த்தரைப் பரப்பு தினங்கள் முறையே மனித வளர்ச்சிக்கு அவசியமான சுற்றாடல் நீர்த்தரைகளில் உறையும் பறவையினங்கள், விலங்கினங்களைப் பாதுகாக்க வேண்டிய பண்பினை வலியுறுத்துகின்றன.
(உ) வரலாறு
நினைவு தினங்களுள் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஐ. நா. தினம், சர்வதேச தொழிலாளர் தினம், சர்வதேச செஞ்சிலுவை தினம், உலக மனித உரிமைகள் தினம் போன்றவை, சமூக, அரசியல், கலாசார முக்கியத்துவம் வாய்ந்தவையாகவுமுள்ளன. மே தினம் என இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் தொழிலாளர் தினம் பல போராட்டங்கள். தியாகம் என்பவற்றைக் கொண்ட வரலாற்று அம்சங்கள் பொதிந்தவை. இவற்றின் மீது மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அவற்றின் செயற்பாட்டை சமூக முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தலாம்.
விழிப்புணர்வுச் செயற்பாடுகள் :
நினைவு தினங்களை அனுஷ்டிப்பதன் முக்கிய நோக்கம் குறிப்பிட்ட கருப்பொருட்களின் பால் மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
04 பூ. எல். அலியார்

அதாவது குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக மக்களிடையே நேரிடையான தாக்கத்தை ஏற்படுத்துவதே இதன் அடிப்படையாகும். பொதுவாக நாட்டின் அபிவிருத்தி மக்களின் சுபீட்சமான வாழ்க்கை, பிறர் உரிமைகள் மதிக்கப்படல், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற நல்விளைவுகள் (Positive Effects) இவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றன.
பாரம்பரியமாக விழிப்புணர்வுச் செயற்பாடுகளாகப் பின்வருவன மேற்கொள்ளப்படுகின்றன. அவையாவன, மகாநாடுகளும் கருத்தரங்குகளும், சொற்பொழிவுகள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், பதாதைகள் (பானர்), கண்காட்சிகள், ஊர்வலங்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை விழாக்கள், நாடகங்கள், திரைப்படக் காட்சிகள் ஆகியன.
சமுக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் மேற்படி செயற்பாடுகளைத் தவிர, பாடசாலை மட்டத்திலும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நேரடியாக கல்வி அமைச்சினால் அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சின் அனுசரணையுடன் போட்டி நிகழ்ச்சிகளும் ஒழுங்குபடுத்தப்படுவதுண்டு.
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகள்
பலதரப்பட்டவையாக அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு உள்ளுராட்சி சபைகள் மட்டத்தில் நகரைச் சுத்தமாக வைத்திருக்கும் இயக்கம், சிரமதான இயக்கம், மர நடுகை இயக்கம், சித்திரக் கண்காட்சி, கருத்தரங்குகள், ஊவலங்கள், விவரணத் திரைப்படம் காட்டுதல், பேச்சு, கட்டுரைப் போட்டிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் நடத்துதல், சுவரொட்டி விளம்பரம், பதாதைகள் தொங்கவிடுதல், உற்பத்தி நிறுவனங்களின் அனுசரணையுடன் சுலோகங்களைப் பொறித்த பனியன்கள், தொப்பிகள் போன்றவற்றை விநியோகித்தல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
பாடசாலை மட்டத்தில் மாணவரிடையே நடாத்தப்படும் பேச்சு, கவிதை, ஒவியம், பாட்டு, நாடகம் போன்ற போட்டிகளுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் துணை நிற்பதுமுண்டு. இத்தகைய பாடசாலைச் செயற்பாடுகள் மறைமுகமாக பெற்றாரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
தொடர்பு ஊடகங்களின் பங்களிப்பு :
சமுக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வுச் செயற்பாடுகளில் வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இக்காலத்தில் அவை பொழுதுபோக்கு அம்சங்களோடு கல்வியூட்டும் மற்றும் தகவல் வழங்கும் நிகழ்ச்சிகளையும் சேர்த்துள்ளன.
சர்வதேச நினைவு தினங்கள்

Page 9
வானொலி, தொலைக்காட்சி ஆகியவை, மக்கள் மத்தியில் ஜனரஞ்சகமாக வளர்ந்துள்ளன, சமுகப் பிரச்சினைகள், சமூகச் செயற்பாடுகள், தனிமனிதப் பிரச்சினைகள், உணர்வுகள், சமுக உறவுகள் போன்றவற்றில் இவை நவீன நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகின்றன. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகப் பின்வருவன அமைந்துள்ளன. சொற்பொழிவு, உரையாடல்கள், நாடகம், நேர்முகம் - செவ்வி கானல், விவரனச் சித்திரம், செய்திக் குறிப்புகள் போன்றன.
வானொலியை விடவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காட்சியையும், கருத்தையும் ஒருங்கே கொண்டிருப்பதால் அதிகம் மக்களால் விரும்பப்படு கின்றன. இதன்மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தவல்லன.
ஒப்பீட்டு ரீதியில் பார்க்கும்போது அச்சு ஊடகங்கள் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டவை. பத்திரிகைகளில் வெளியிடப்படும் கட்டுரைகள், கதைகள், கவிதைகள் மற்றும் விடய தானங்களை வாசகர் மிக சாவகாசமாக வாசிக்கவும், மீண்டும் பல தடவைகள் வாசிக்கவும் சில காலத்தின் பின்னர் வாசிக்கவும், சிந்தித்து உள்வாங்கவும், மேற்கோளாகப் பயன்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. வாசகரின் தேவைக்கேற்ப அவற்றைப் பயன்படுத்த முடியும் இது அச்சு ஊடகங்களுக்குரிய சிறப்பம்சமாகும்,
இந்த சிறப்பம்சத்தின் அடிப்படையில் பத்திரிகைகள், சஞ்சிகைககள் அல்லது தினசரிகள் வெளியிடும் விழிப்புணர்வூட்டும் விடயதானங்களும் பெறுமதி வாய்ந்தவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் மீது மக்களின் விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் தினசரிகளில் நினைவுதினக் கட்டுரைகள், செய்திக் குறிப்புக்கள் முதலியன வெளியிடப்படுகின்றன. குறிப்பிட்ட தினத்தின் நோக்கம், அது குறிக்கும் கருப்பொருள் அதன் சமூகத் தாக்கம் போன்ற தகவல்களை வழங்குவதன் மூலம் தினசரிப் பத்திரிகைகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
இந்த விழிப்புணர்வு மக்களின் எண்ணங்களிலும், மனப்பாங்கு. நடத்தைகளிலும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியனவாக உள்ளன. தனிநபர்களின்மீது ஏற்படுத்தும் தாக்கம் நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படையாக அமைகின்றது. சர்வதேச நினைவு தினங்களை நினைவூட்டு வதில் இலங்கை தினசரிகளின் பங்கு கணிசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Oó பூ. சில் அவிWf

பகுதி ! இரண்டு
விழிப்புணர்வுக் கட்டுரைகள்
இப்பகுதியில் சர்வதேச நினைவு தினங்கள் பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைகள் கோவையாகத் தரப்பட்டுள்ளன. விழிப்புணர்வு நோக்கில் எழுதப்படும் கட்டுரைகள் பொதுவாக தகவல் வழங்குவதுடன் மட்டும் அமைந்துவிடக் கூடாது. தகவலின் பின்னணியில் அதன் முக்கியத்துவமும், மக்கள் வாழ்க்கையுடன் பிரச்சினை கொண்டுள்ள பினைப்பும் வலியுறுத்தப் படுவது முக்கியமாகும். புள்ளிவிபரங்களை வழங்கும்போது கூட வாசகர் மனதில் அவை ஓர் உணர்வினைத் தோற்றுவிக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணக்கரு (Concept) அல்லது கருப்பொருள் (Theme) குறித்து வாசகர் சிந்தனையைத் தூண்டுவதாகவும் உணர்விலும் மனப்பாங்கிலும், நடத்தையிலும் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
இங்கு வழங்கப்பட்டுள்ள கட்டுரைகள் சவேதேச நினைவு தினங்களின் கருப்பொருள்கள் மக்கள் கவனத்தை ஈர்த்து, அவர்தம் விழிபுனர் தூண்டும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை காலவரிசைப்படி வைக்கப்பட்டுள்ளன். தினத்தின் கருப்பொருள். அதன் பின்னணி வரலாறு' விழிப்புணர்வின் பரிமாணம் என்பன கட்டமைப்பு வடிவில் வழங்கப்பட்டுள்ள
■
குறிப்பிட்ட தின்த்தின் பொதுவான கருப்பொருளின் அடிப்படையில் ஆண்டு: தோறும் விஷேட அம்சங்களுக்கு முதன்மையளிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட, தினத்தை நடைமுறைப்படுத்தும் சர்வதேசதாபனம் நடப்பு வருட தினத்துக்கானி தொனிப் பொருளை தீர்மானிக்கின்றது. உதாரணமாக உலக சுற்றாடல் தினத்தின் 1997ஆம் ஆண்டின் தொனிப்பொருள் "கற்றாடலைப் பேணுவோம் என்பது. 1993இன் தொனிப்பொருள் "கடல் வளங்களைப் பாதுகாப்போம்" என்பதாகும். இதேபோன்று உலக தொலைத் தொடர்பு தினத்தின் 1997ஆம் ஆண்டுக்கான தொனிப்பொருள் "தொலைத் தொடர்புகளும் மனிதாபிமான் உதவியும்' என்பது 1998இல் "தொலைத் தொடர்புத் துறையில் வர்த்தகம்' என்பதாகும்,
விழிப்புணர்வு என்ற பகுதி தினத்தின் முக்கியத்துவம், அதன் பரிமானம் என்பவற்றை விளக்குகிறது. தேவையான தகவல்களும், தரவுகளும்பூஒளி விபரங்களுடன் தரப்பட்டுள்ளன. முடியுமானவரை அண்மிய சதிக்வில்கள்
فE" لا يتم
உள்ளடக்கப்பட்டுள்ளன. -- GቻffJ፪” "
- - - - عصحنظلز * fwதேச நினைy தினங்கள் 醚 " اسیده یا OT

Page 10
டு) உலக நீர்த்தரைப் பரப்பு தினம்
(World Wetlands Day)
தினம் : பெப்ரவரி 02
கருப்பொருள் :
உலகின் நீர்த்தரைப் பரப்புக்களைப் பேணி உயிரினங்களின் மாறுபாடுகளைப் பாதுகாத்தல்.
பின்னரிை :
உலகின் நீர்த்தரைப் பரப்புக்களின் (Welands) பாதுகாப்புப் பற்றிய சர்வதேச மகாநாடு 1971 இல் ஈரானில் Ramsa என்னுமிடத்தில் நடைபெற்றது. கந்நாடல் பாதுகாப்பு, வனவிலங்குப் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்பான அமைச்சுக்கள், திணைக்களங்கள் ஆகியன இந்த மகாநாட்டில் கலந்து கொண்டன. இலங்கையின் சார்பில் வனவிலங்குப் பாதுகாப்பு திணைக்களம் இதில் கலந்து கொண்டு இங்கு நிறைவேற்றப்பட்ட சாசனத்திலும் கைச்சாத்திட்டது. இலங்கையில் உலக நீர்த்தரைப் பரப்பு தினத்தை அனுஷ்டிப்பதற்கும் இத்தினைக்களமே பொறுப்பாகவுள்ளது.
விழிப்புணர்வு :
Ramsa சாசனம் நீர்த்தரைப் பரப்புக்கள் என்றால் என்ன என்று வரைவிலக்கணம் கூறுகின்றது. "சதுப்பு நிலம் அல்லது சகதி அல்லது நீர்ப்பரப்பு: அது இயற்கையானதாகவோ அல்லது தற்காலிகமாக நீரைக் கொண்டுள்ளதாகவோ அந்த நீர் நிலையானதாகவோ அல்லது ஓடிக் கொண்டிருப்பதாகவோ மேலும் அது நன்னீராகவோ அல்லது ஆறு மீற்றர் ஆழத்திற்கு மேற்படாத கடல் நீர்ப்பரப்பை உள்ளிட்ட உவர் நிராகவோ இருக்கலாம். இவை அனைத்தும் நீர்த்தரைப் பரப்பு எனப்படும்" இதனைப் பின்வருமாறு விளக்கமாக கூறலாம்.
1. இயற்கையாக அமைந்தவை ஆறுகள், அருவிகள், வெள்ளம்
காரணமாக உருவான வில்லுகள், சதுப்பு நிலங்கள், சகதிகள், அல்லைகள்
ஆகிய நன்னீர் சார்ந்தவையும், களிமுகங்கள், களப்புக்கள் ஆகிய உவர் நீர் சார்ந்தவையுமாகும்.
2. மனிதரால் உருவவாக்கப்பட்டவை ; நீர்ப்பாசனக் குளங்கள், நீர்த்தேக்கம்,
மின்சார உற்பத்திக்கான அனைக்கட்டுக்கள், உட்பளம் (உவர்) ஆகியன.
OE பூ. எஸ். அவிTர்

இந்த நீர்ப்பரப்புக்களின் மதிப்பும், பாதுகாப்பும் பல காரணங்களினால் ஏற்பட்டுள்ளது. அவை,
1. உயிரினங்களின் வசிப்பிடம் (தாவரம், விலங்கினம்)
. நல்ல காட்சியாக அல்லது தரைத்தோற்றத்தைக் கொண்டிருத்தல்
3. மனோரம்மிய ஆழல்
4. பண்பாட்டுப் பெறுமானம்
5. விஞ்ஞானப் பெறுமானம்
6. இடத்தின் ஒருங்கிணைந்த தன்மை
இப்பெறுமானங்கள் Ramsaா மகாநாட்டில் ஏற்றுகொள்ளப்பட்டன. உலகின் மொத்த நிலப்பரப்பில் 6.4 சதவீதம் நீர்த்தரைப்பரப்புக்களாகும்.
பொதுவாக இந்த நீர்ப்பரப்புக்கள் "நோயாளியான பூமியின் சிறுநீரகம் (Patient Earth's Kidney) என அழைக்கப்படுகின்றன. காரணம் சுற்றாடலுக்கும், மனிதனுக்கும் இவை நன்மை விளைவிப்பனவாக அமைந்துள்ளதாகும். பல வகை இரசாயனக் கழிவுகளால் மாசடைந்த நீரை இந்த நீாப்பரப்புக்கள் சுத்தப்படுத்துகின்றன. மேலும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மனிதனுக்கு இயற்கை வழங்கியுள்ள நன்கொடையாகவும் இது அமைந்துள்ளது. வேகமாக கரைபுரண்டு வரும் வெள்ள நீர் கரையோரங்களைச் சேதப்படுத்தாமல் இந்த நீர்த்தரைப் பரப்புக்கள் தடுக்கின்றன. அவற்றில் வளர்ந்துள்ள புல், பூண்டுகள், நீர்த்தாவரங்கள் என்பன வேகத்தை தனிப்பனவாக உள்ளன.
இலங்கை நதிக்கரை நாகரீகத்தைக் கொண்ட ஒரு நாடு என்று கூறப்படுகிறது. எமது பண்பாட்டின் அடித்தளமாக அமைந்துள்ள நீர்ப்பரப்புக்கள் எமக்காகவும், பிற்சந்ததிக்காகவும் மிக மதிநுட்பத்துடன் முகாமைத்துவம் செய்யப்படல் வேண்டும், இலங்கையின் நிலப்பரப்பில் 13 சதவீதமான பகுதி தாவரங்கள், பிராணிகள் பாதுகாப்புக் கட்டளைச் g|LEgli Uly. (Flora and Fauna Protection Ordinance) urgislds jul"L பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
Directory of Asian Wetlands (Scott 1989) aligan TG) 35orfiritsuili 41 நீர்த்தரைப் பரப்புக்களை பட்டியல்படுத்தியுள்ளது. ஆனால் விஷேட நிபுனர்கள் இன்னும் 35 பரப்புக்களைச் சேர்த்துள்ளனர். வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் இவற்றைப் பரிபாலித்து வருகின்றது. அவற்றுள் முக்கியமானவை, மின்னேறியா, சேனநாயக்க சமுத்திர நீர்த்தேக்கம், பால கிழக்குப் பிரதேச, தெற்குப் பிரதேசப் புகலரண்கள், லகுகல குளம், வீரவில குளம், பூந்தல தேசிய பூங்காவிலுள்ள குளமும், களப்பும், லுனாவ கலமிட்டிய களப்புக்கள், வெல்லன்விலா - அத்திட்டிய சதுப்பு நிலம், ஹோட்டன சமவெளியின் அருவிகள் போன்றவையாகும்.
Wவதேச நினைவு தினங்கள் O9

Page 11
நீர்த்தரைப் பரப்புக்கள் வடஅரைக்கோளத்திற்கும் தென் அரைக் கோளத்திற்குமிடையே ஒரு சுற்றாடல் தொடர்பையும் ஏற்படுத்துகின்றன. லட்சக்கணக்கான பறவைகள் வடக்கிலிருந்து தெற்கின் வெப்ப வலய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றன. இவற்றின் உயிர்வாழ்க்கை நீர்த்தரைப் பரப்புக்களைப் பேணுவதிலேயே தங்கியுள்ளது. ஆனால், விவசாய நிலங்களிலிருந்து வரும் கிருமிநாசினி கலந்த நீரும், கைத்தொழில் கழிவுகளும் இந்த நீர்ப்பரப்புக்களை பாதிக்கின்றன.
உலகில் இவ்வாறு பாதிப்புக்குள்ளான 900 இடங்களை Ramsar சாசனம் சுட்டிக்காட்டியது. இலங்கையில் பூந்தல தேசிய பூங்கா மட்டும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 6216 ஹெக்ரயர் பரப்பைக் கொண்ட இந்த நீர்பரப்பில் 20000 பறவைகள் வருடாந்தம் வெளிநாடுகளிலிருந்து வருகின்றன. ஆகஸ்ட் - ஏப்ரல் காலப்பகுதியில் இவை இங்கு வாழ்கின்றன. குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில் இப்பறவைகளில் 45 வகையானவை நீண்டகால்களைக் கொண்டவை. இவை நீரில் நடக்கக்கூடியன. கரையோர களப்புகளிலும், சதுப்பு நிலப் பரப்பிலும், சேற்றிலும் உப்பளங்களிலுமே இவை வாசம்
செய்கின்றன.
தற்போது உலகெங்கும் இந்த நீர்த்தரைப்பரப்புக்கள் குறைந்து செல்லும் அபாயம் உள்ளது. இவை பாரதூரமான அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. இலங்கை எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களாவன,
நகரவாசிகள் வசிப்பிடமாக சுவீகரித்தல். விவசாயத்துக்காக பயன்படுத்தல். விவசாயம், கைத்தொழில் என்பவற்றால் மாசடைதல். கைத்தொழில் கழிவுகள் குவிக்கப்படல். நீர்த்தாவரங்களின் மிதமிஞ்சிய வளர்ச்சி. மிதமிஞ்சிய நன்னீர், உவர்நீருடன் கலப்பதால் உயிரினம் பாதிக்கப்படல். நீர் குறைவதால் தாவரங்களும், உயிரினங்களும் பாதிக்கப்படல். கால்நடைகளால் சிதைக்கப்படல். தாவர இனங்களும் உயிரினங்களும் அழிக்கப்படல். தாவரங்கள் அழிக்கப்படல்.
மரம் வெட்டல்.
மிதமிஞ்சிய மீன்பிடிப்பு என்பன.
எனவே மனித செயற்பாடுகள், நீர்த்தரைகளைப் பாதுகாப்பதற்கு முரண்பட்டவையாகவுள்ளன. இலங்கையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் என்பன இவற்றைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்துகின்றன. 1991ல் நீர்த்தரைப்பரப்புப் பாதுகாப்புச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவற்றைப் பாதுகாப்பதில் விழிப்புணர்வு மிக அவசியமாகும்.
O யூ. எல். அலியார்

029 சர்வதேச மகளிர் தினம்
(International Women's Day)
தினம் : மார்ச் 08
கருப்பொருள் :
பெண்களுக்கான மனித உரிமைகள் மதிக்கப்படல் வேண்டும். சமூக வளர்ச்சியில் அவர்களின் முதன்மையும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
பின்னணி :
பண்டைய கிரேக்கத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆண்களுக்கு பாலியல் சேவையை வழங்கி வந்த லைஸிஸ்ட்ராட்டா (Lycistrata) என்ற சாதாரண பெண், போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு தன்சேவையை பகிஷ்கரித்தாள். இச்செயல் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் வரலாற்றில் பெண்ணுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகவும் அமைந்தது. பிரான்ஸியப் புரட்சியின் போது பாரிஸ் பெண்கள், விடுதலை, சமத்துவம், தோழமை வேண்டி போராடினர். இத்தகைய போராட்டங்கள் 20ம் நூற்றாண்டில் வலுவடைந்தன.
1909 இல் அமெரிக்காவில் சோஷலிசக் கட்சியின் பிரகடனத்துக்கு அமைய முதலாவது தேசிய மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 1910 இல் கொப்பனேகனில் சர்வதேச மகளிர் மகாநாடு கூட்டப்பட்டது. தொடர்ந்து வேறுபல நாடுகளிலும் மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 1917 இல் சார் வீழ்ச்சியின் பின் ரஷ்யாவில் பெண்கள் வாக்குரிமை பெற்றனர். 1945 இன் ஐ. நா. சாசனம் பெண்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்த முதலாவது ஆவணமாகும். 1947 இலிருந்து பெண்கள் அந்தஸ்த்துக்கான ஐ.நா. ஆணைக்குழு செயற்படத் தொடங்கியதும் மேலும் பல உரிமைகளை பெண்கள் பெற்றனர்.
முதலாவது சர்வதேச பெண்கள் மாநாடு 1975 இல் மெக்ஸிகோவிலும் தொடர்ந்து 1980 இல் கோப்பனேகனிலும், 1985 இல் நைரோபியிலும், 1995 இல் பீஜிங்கிலும் கூட்டப்பட்டன. 1981 இல் நடைமுறைக்கு வந்த பெண்களுக்கு எதிரான சகலவித பாரபட்சங்களையும் நீக்குவது தொடர்பான சாசனம் பெண்களுக்கான உரிமைப்பட்டயம் எனப்படுகிறது. 161 நாடுகள் இதனை ஏற்றன. இதனைத் தொடர்ந்து இலங்கையிலும் சர்வதேச மகளிர் செயற்பாடுகள் அழுத்தம் பெறலாயின.
சர்வதேச நினைவு தினங்கள் 11

Page 12
விழிப்புணர்வு :
நீண்டகாலமாக பெண்கள் பால்நிலை ரீதியாக க்கப்பட்டுப் த்திலிருந் தள்ளப்பட்டும், நசுக்கப்பட்டும் வந்துள்ளனர். பால்நிலை வேறுபாட்டை, பாரம்பரிய கலாசார நம்பிக்கைகளும், குடும்பக் கட்டமைப்பும் உறுதிப்படுத்தியே வந்துள்ளன. குடும்ப செயற்பாடுகளிலும், தீர்மானம் மேற்கொள்வதிலும் பெண்களின முதன்மை கருத்திற் கொள்ளப்படவில்லை. கல்வி, பயிற்சி போன்றவற்றிலும் அவர்தம் திறமை அங்கீகரிக்கப்படவில்லை. தொழில் தேர்வு, வாழ்க்கைத்துணைத் தேர்வு போன்றவற்றிலும் அவர் நிலை சீர்தூக்கப்படவில்லை.
தவிர பாலியல் வன்முறை, குடும்ப அடக்குமுறை, தொழிலிடங்களில் தொந்தரவுகள், சக்திக்கு மிஞ்சிய வேலை, குறைந்த கூலி போன்ற இழிநிலைகள் பெண்களின் உரிமைக்கு சவாலாக அமைந்தன. இந்நிலை ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் தீவிரமாகக் காணப்படுகின்றது. பங்களாதேஷில் பெண்கள் 10 - 14 மணித்தியால வேலைக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இந்நிலையிலிருந்து விடுபட பெண்கள் அபிவிருத்தி, அரசியல், நிருவாகம், சமூகசேவை, பாதுகாப்பு, விஞ்ஞான ஆராய்ச்சி, கணணி, கலை, இலக்கியம் போன்ற சகல துறைகளிலும் அவர்தம் திறமையும், முதன்மையும் அங்கீகரிக்கப்படல் வேண்டும். கடந்தகால வரலாறுகள் அவர்தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளன. நாட்டின் தலைவிகளாகவும், விண்வெளி விஞ்ஞானிகளாகவும் அவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கையில் பெண்களின் படிப்பறிவு வீதம் 592 ஆகும். இதன் விளைவாக அவர்களில் அநேகமானோர் சிறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
கணிசமான தொகையினர் மத்திய கிழக்கு நாடுளில் பணிப்பெண்களாக வேலைவாய்ப்புப் பெற்று நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகினறனர். பெண்களின் நிலையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பல நிறுவனங்கள் உழைக்கின்றன. இலங்கையில் மகளிர் விவகாரத்துக்கென்றே தனி அமைச்சு செயல்படுகிறது.
இன்று மகளிர் அந்தஸ்தும், முக்கியத்துவமும் உலகளாவிய ரீதியில் உணரப்பட்டுள்ளது. அவர்களுக்குரிய உரிமைகளும், சுதந்திரங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளன. இன்னும் நாடுகளில் புரையோடியுள்ள பெண்ணடிமை நிலையிலிருந்து அவர்களை மீட்க சர்வதேச ரீதியில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்களுக்குச் சமமான உரிமைகளும், அபிவிருத்தியில் சமமான பங்கும் உடையவர்கள் என்ற கருப்பொருள் அழுத்தம் பெற்றுள்ளது. v,
12 այ. 676ծ 96փակոf

09 உலக நகர்வோர் தினம் (World Consumer's Day)
தினம் : மார்ச் 15
கருப்பொருள் :
நுகர்வோர் பாதுகாப்பையும் நலனையும் உறுதிப்படுத்தலும், நுகர்வோர் வாழ்க்கைப் பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்தலும்.
பின்னணி :
அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எப்கென்னடி நுகர்வோரின் 4 உரிமைகளை அமெரிக்க காங்கிரஸில் பிரகடனப்படுத்தினார். 21 வருடங்களின் பின்னர் மேலும் 4 உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. முதன்முதலாக 1983 மார்ச் 15ம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
விழிப்புணர்வு :
நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்களால் மனிதனது தேவைகள் விரிவடைந்தன. மனித தேவைகளை நிறைவு செய்ய ஒருபுறம் உற்பத்தியாளர் பண்டங்களை உற்பத்தி செய்கின்றனர். மறுபுறம் நுகர்வோர் அவற்றைப் பயன்படுத்துகின்றனர். நுகர்வோரின் நோக்கம் நியாயமான அல்லது குறைந்த விலைக்கு தரமான பொருளைப் பெற்று உச்ச திருப்தியை அடைய வேண்டும் என்பதாகும். அதே வேளை உற்பத்தியாளரின் நோக்கம் உச்ச இலாபம் பெறவேண்டும் என்பதாகும். இரு தரப்பாரின் நலன்களும் முரண்பட்டவை. தத்தம் நலன்களுக்காக இருசாராரும் சங்கங்களை நிறுவிச் செயல்படுகின்றனர்.
டென்மார்க் அறிஞர் Hans Rask கூறுவதுபோல "இருசாரார் இடையேயும் ஏற்படும் மோதல்களில் நுகர்வோர் நலன் மிகக் குறைந்த அளவிலேயே கருத்திற் கொள்ளப்படும்." நுகர்வோரைப் பார்க்கிலும் உற்பத்தியாளர் தகவல் அறிந்தவராகவும் அமைப்புடன் செயற்படுபவராகவும் உள்ளனர்.
அரசின் சட்டதிட்டங்கள் இந்தச் சூழ்நிலையில் நடுநிலையாக அமைகின்றன. குறிப்பாக உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கச் செயற்பாடுகள் முதன்மை பெறுகின்றன.
//வதேச நினைவு தினங்கள் 3

Page 13
நுகர்வோர் உரிமைகளாவன :
1. அடிப்படைத் தேவைகள் : உயிர் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் உணவு, உடை, உறையுள், சுகாதாரம், கல்வி, ஆரோக்கியமான பொருட்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் உரிமை, 2. பாதுகாப்பு : நுகர்வோரின் உடலுக்கும், வாழ்வுக்கும் ஊறு விளைவிக்கின்ற பொருள் சேவைகளின் சந்தைப்படுத்தலுக்கு எதிராக பாதுகாப்புரிமை (பொருளின் தரம் பேணப்படுதல்) 3. தகவல் பெறும் உரிமை : பண்டங்கள் சேவைகளுக்கான போலி விளம்பரங்கள், போலி லேபல்கள், நேர்மையினம் என்பவற்றிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்காக பொருளின் நிறை, விலை, பாவனைத் திகதி போன்ற விபரங்களை அறிந்து அவற்றின் அடிப்படையில் தெரிவு செய்து கொள்வனவு செய்யும் உரிமை. 4. தெரிவு செய்யும் உரிமை : பொருளின் திருப்திகரமான தரத்தை உறுதி செய்து போட்டியடிப்படையிலான விலையில் பொருளையும் சேவையை யும் தெரிவு செய்யும் உரிமை. 5. நுகர்வோரின் நலன்கள் சம்பந்தப்பட்டவரை பொருள் பண்டங்களின் குறைபாடுகளை அரசுக்கு வெளிப்படுத்தி தம் நலன் காக்கும் உரிமை. 6. நிவாரணம் : பிழையான, ஊறுவிழைவிக்கின்ற பொருட்கள் அல்லது
திருப்தியற்ற சேவைகளுக்காக நிவாரணம் பெறும் உரிமை. 7. நுகர்வோர் கல்வி : தகவல் பெற்ற ஒரு நுகர்வோருக்கு வேண்டிய
அறிவு, திறன் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ளும் உரிமை, 8. ஆரோக்கியமான சுற்றாடல் : அச்சுறுத்தல் இல்லாததும் ஆபத்து இல்லாததும் கெளரவமானதும், சிறப்பானதுமான ஒரு வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஒரு சுற்றாடலில் வாழ்வதற்கும் வேலை செய்வதற்குமான உரிமை,
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோர் நலன்பேணும் சங்கங்கள் ஆகிய ஏற்பாடுகள் இருந்தபோதிலும் நுகர்வோரின் அறிவு பூர்வமான விழிப்புணர்வே முக்கியமானது. ஏனெனில் பல்வேறு விளம்பர உத்திகள் மூலம் வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் உற்பத்தியாளர்களின் பொருட்களையும் சேவைகளையும் விளம்பரம் செய்கின்றன. அசலையும் போலியையும் இணங்காணமுடியாதவாறு விளம்பரங்கள் நுகர்வோரின் உணர்வுகளை மயக்கிவிடுகின்றன.
14 யூ. எல். அலியார்

பொருளின் விலை, ஏனைய பிரதியீட்டுப் பொருளுடன் ஒப்பிடுகையில் நியாயமானதா? சந்தையில் குறைந்த விலையில் இப்பொருள் கிடைக்குமா? தரமானதா? குறைபாடு இருப்பின் திருப்பிக் கொடுக்கலாமா? மேலுறை பாதுகாப்பானதா? உடலுக்கு ஊறு விளைவிக்கும் ஏதாவது பதார்த்தம் பொருளில் சேர்க்கப்பட்டுள்ளதா? ஆகியவற்றை நுகர்வோர் கூர்மையாகப் பார்க்க வேண்டும்.
இந்த வகையில் நுகர்வோர் 5 விடயங்களில் காத்திரமான பொறுப்புக்களைக் கொண்டிருக்கின்றனர். அவை,
1. பொருள், தேவை, விலை, தரம் ஆகியவற்றைக் குறித்த விமர்சனப்
Lusité06).
2. பொருளின் சந்தைப்படுத்தல் நியாயமானதாக அமைந்துள்ளதா?
என்பதைக் குறித்து துடிப்பான ஈடுபாடு.
3. நுகர்வுப்பாங்கு, ஏழைகளைப்பொறுத்து ஏதேனும் சமூகத் தாக்கத்தை
ஏற்படுத்துகிறதா? என்பது.
4. நுகர்வுப்பாங்கு, சுற்றாடல் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறதா? என்பது.
5. நுகர்வோரின் தொகையளவிலான பலம் மாற்றத்தைக் கொண்டு
வருமா? என்பதை உணர்தல்.
நுகர்வோர் பாதுகாப்புச் சங்கங்கள் பொறுப்புடன் இயங்க வேண்டும். அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவை பலம் பொருந்தியவை. இலங்கையிலும் 9000 க்கு மேற்பட்ட சங்கங்கள் இயங்குகின்றன. பொருள், உற்பத்தி, சேவை என்பவற்றில் இடம்பெறும் மோசடிகளைத் தவிர்ப்பது நுகர்வோர் பாதுகாப்புச் சங்கங்களின் காத்திரமான செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.
சர்வதேச நினைவு தினங்கள் 15

Page 14
டு) உலக நீர் வள தினம்
(World Water Day)
தினம் : மார்ச் 22
கருப்பொருள் :
நீர் வளத்தை மதிப்பிட்டு மிகப்பயனுள்ள வகையில் அதனை முகாமைத்துவம் செய்தல்.
பின்னணி :
நீர் வளமானது சகல உயிரினங்களினதும் வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையாகும். அதனைப் பயன்படுத்துபவரிடையே மேலும் தேவைப்பட்டுக் கொண்டிருக்கும் போட்டிப் பொருளாகவும் அது ஆகிவிட்டது.
1992ல் ஐ. நா. பொதுச்சபை 22ம் திகதியை உலக நீர்வள தினமாகப் பிரகடனப்படுத்தியது. அருந்தலாகக் கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதர் தம் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்தவேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு :
நீர் வளத்தின் முக்கியத்துவம் எக்காலத்திலும் உணரப்பட்டு வந்துள்ளது. புகழ்பெற்ற உலக நாகரிகங்களெல்லாம் நீர்க்கரையை அடிப்படையாக வைத்து தோன்றியவையாகும் நைல்நதி, சிந்துநதி, யூப்பிரடீஸ் - தைகிரீஸ் பள்ளத்தாக்கு என்பன உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றன.
உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்பு நீராகவும் 2.5 சதவீதம் நன்னிராகவுமுள்ளது. நன்னிர்ட்பரப்பிலும் 69 சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசங்களாகும். 30 சதவீதம் நிலக்கிழ் நீர்; 3 சதவீதம் நன்னிர் ஏரிகளும், நதிகளும்; எஞ்சிய பகுதி ஈரளிப்பான தரைப்பிரதேசமாகும்.
உலகளாவிய ரீதியில் பார்க்கும் போது அதிக நீரைப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். (85 சதவீதம்), கைத்தொழில்துறை 10 சதவீதத்தை பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது.
16 யூ. எல். அலியார்

அருந்தலாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையும்.
நீர்ப்பயன்பாடு இன்று பலதரப்பட்டதாகும். விவசாயத்திற்கு, வலு உற்பத்திற்கு, வீட்டுப்பாவனைக்கு என நீர் பயன்படுத்தப்படுகின்றது.
நகர மயமாக்கல், பல்வேறு நீர்ப்பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றது. குடிநீர் போதாமை, சுகாதாரம் பேணப்படாமை, மற்றும் நீர் மூலம் உருவாகும் வியாதிகள் என்பவற்றிற்கு முகங்கொடுக்கவேண்டியுள்ளது. உலகின் வறிய நாடுகள், நிலக்கீழ் நீரையும் பெற்றுக்கொள்ளும் அளவில் தாகமுள்ளவையாக உள்ளன. காரணம், காடழிப்பு, வனாந்தரமாதல் ஆகியவற்றால் மழைவீழ்ச்சி குறைந்தமையாகும்.
வருடாந்தம் சனத்தொகை 90 மில்லியனால் அதிகரித்துச் செல்கின்றது. அந்தளவு நீரைப் பயன்படுத்தும் மக்களும் அதிகரிக்கின்றனர்.
நீர் தீர்ந்துபோன ஒரு வளம் என்பது பற்றிய உலகளாவிய விழிப்புணர்வு, றியோடி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மகாநாட்டிலும் 1992ல் நீரும் சுற்றாடலும் பற்றிய டப்ளின் மகாநாட்டிலும் பிரதிபலித்தது. றியோ - டப்ளின் மகாநாட்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வள முகாமைத்துவம் சம்பந்தமாக சர்வதேச நடவடிக்கைககள் பல மேற்கொள்ளப்பட்டன. வீட்டுப்பாவனையாளர் சங்கங்களும் கமக்காரர் அமைப்புக்களும் முறையே வீட்டுத் தேவை, விவசாயத் தேவை என்பவற்றுக்கான நீரை முகாமைத்துவம் செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.
நீர்ப்பிரச்சினைகளின் பாரதூரமான விளைவுகள் குறித்து நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளது. முக்கிய விதப்புரைகள் 1977ல் ஆஜண்டீனாவில்" நடந்த ஐ. நா. வின் நீர்வள மகாநாட்டில் உருவாக்கப்பட்டன. அதன்பின் 1992ல் நடந்த றியோ மகாநாடு, 1994 இல் றியோவில் நடந்த சுற்றாடலும் அபிவிருத்தியும் மகாநாடு என்பன உலகில் நன்னீா வளங்களை மதிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தின. 1997ல் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியது.
உலக வானிலை அவதான அமைப்பும் (WMO) யுனெஸ்கோவும் 1997ல் உலக நீர்வள தினத்தைக் கொண்டாடுவதற்கான தலைமை முகவராகப் பணியாற்றின.
சர்வதேச நினைவு தினங்கள் 17

Page 15
சென்னை நீரியல் துறை அறிஞர் பேராசிரியர் ஏ. மோகனக் கிருஷ்ணன் கூற்றுப்படி "உலகிலுள்ள 240 பெரும் ஆறுகள் உள்ளூர்ப்பாவனைக்கு போதுமானவையாகவே உள்ளன. பெருகிவரும் சனத்தொகையால் நீர்வளம் அருகி வருகின்றது. 21ம் நூற்றாண்டில் இந்நிலை மேலும் உக்கிரமடையும். உலக யுத்தம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்குமானால் அது நீருக்காகவே ஏற்படும்."
இலங்கையின் நீர்வள முகாமையின் வரலாறு பெரும்பாலும் வழங்கல் வரலாறாகவே இருந்தது. பண்டைய நீர்ப்பாசனக் குளங்கள் தேவையான நீரை விநியோகித்தன.
இலங்கையின் தற்போதைய நீர்நிலைமை பற்றி விவசாயத்துறை நிபுணர், கலாநிதி. சி. ஆர். பானப்பொக்கே "நமது நீர்ப்பாவனை பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்ப்பாவனை குறித்து நமது பழக்கவழக் கங்களும் பண்பாடும் மாறவேண்டும். இன்றேல், அடுத்த நூற்றாண்டில் நாம் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும்" என்று கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது.
இலங்கையில் குடிநீருக்காக 5 பேருள்ள ஒரு குடும்பத்துக்கு நாளொன்றுக்கு 220 கலன் நீர் தேவைப்படுகின்றது. நீர்வழங்களுக்காக வருடமொன்றுக்கு 2300 மில்லியன் ரூபா செலவு ஏற்படுகிறது.
தற்போது இலங்கையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID தாபனம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குடிநீரை விநியோகிக்கின்றது.
நீர் பற்றி செவ்விந்தியத் தலைவர் Siyattle (1857) கூறியுள்ள கூற்று நீரின் அருமையைக் குறித்து எமது சிந்தனையைத் தூண்டுவதாகும். "இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும், ஆறுகளிலும், ஓடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று; இது எம் முன்னோரின் இரத்தம். அவை புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். மேலும் எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத் தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்."
18 யூ. எல். அலியார்

டு5) உலக கயரோக தினம்
(World T. B. Day)
தினம் : மார்ச் 24
கருப்பொருள் :
நோயாளியின் அக்கறையே கயரோகத்தை ஒழிக்கும்.
பின்னணி :
ஆரோக்கியமான இருதயத்தையும் மூளையையும் கொண்டவர்களைத் தவிர எஞ்சியுள்ள இளைஞர்களைத் தாக்கும் கொடிய நோயாக கயரோகம் (Tubodosis) அறியப்பட்டது. அதனால் 1993ல் உலக சுகாதார தாபனம் கயரோகம் உலக அச்சுறுத்தல் எனப் பிரகடனம் செய்தது. பொருளாதார அபிவிருத்தியைப் பொறுத்தவரை இளைஞர்கள் மிக முக்கியமானவர்கள்: உற்பத்தித்திறன் கொண்டவர்கள். இத்தகையவர்கள் கயரோக நோய்வாய்ப்பட்டு மரணிக்கும் போது அது பொருளாதாரத்துக்கு பேரழிவாக அமைகின்றது. இதனால் இந்நோய் பற்றிய மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார தாபனம் இத்தினத்தை உலக கயரோக தினமாக பிரகடனம் செய்தது.
விழிப்புணர்வு :
கயரோகம் மனித வர்க்கம் உற்பத்தியான காலத்திலிருந்து உருவான ஒரு நோயாகும். எகிப்திய பூதவுடல்களில் (Mumy) கயரோகம் இருந்ததற்கான தடயங்கள் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 5000 வருடங்களாக மனிதர் இந்நோயுடன் இருந்து வந்துள்ளனர்.
போதியளவு நோயைக் குணப்படுத்தும் மாத்திரைகள் இருந்தும் தற்போது முன்னர் எப்போதுமில்லாத அளவு கயரோகத்தினால் மனிதர் இறக்கின்றனர். இந்நோய் மனிதருக்குச் சவாலாக நிலைத்து நிற்கின்றது. இதனை வெற்றி கொள்வது மனிதனின் இடைவிடாத முயற்சியிலேயே தங்கியிருக்கின்றது. கயரோகம் மக்களைக் கொல்லும் அளவினை நோக்கினால் அது மலேரியா, எய்ட்ஸ் ஆகியவற்றின் பாதிப்புக்களை விட அதிகளவிலானது. வருடாந்தம் சுமார் 30 லட்சம் பேர் இந்நோயினால் இறக்கின்றனர். இவர்களில் 80 சதவீதமானோர் 15 - 49 வயதுக்கு இடைப்பட்டோராவார். வருடாந்தம் 10 லட்சத்திற்கும் அதிகமான பெண்களையும். ஒரு லட்சத்திற்கும் அதிகமான சிறுவரையும் இந்நோய் பலியெடுக்கின்றது.
அண்மைக் காலத்தில் இந்நோய் HIV வைரஸ் கிருமிகளைச் சார்ந்து விருத்தியடைந்துள்ளது. இவ்விரு நோய்களும் இரட்டை நோய்கள் என
சர்வதேச நினைவு தினங்கள் 19

Page 16
கருதப்படும் அளவு ஒன்றையொன்று தீவிரப்படுத்துவதோடு போஷித்தும் வருகின்றன. IV பிடித்துள்ள ஒருவரிடத்தில் கயரோகம் 30 மடங்கு மேலாக வேகமாக பரவுகின்றது.
பொதுவாக மக்கள் இருதயநோய், இரத்த அழுத்தம் போன்ற பயங்கர நோய்களைப் போன்று கயரோகத்தைக் கருதுவதில்லை. தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளில் கயரோகத்தைக் கட்டுப்படுத்த முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.
நவீன சிகிச்சை முறைகளைக் கையாள அதிக பணம் செலவாகிறது. ஒரு கயரோக நோயாளியைக் குணப்படுத்த 34 அமெரிக்க டொலர் செலவாகிறது. 1990ல் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கயரோகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 16 மில்லியன் அமெரிக்க டொலர் செலவானது. பொதுவாக நோயாளிகள் முதல் நாளிலேயே தாம் சிகிச்சை பெற்றுவிட்டோம் என நினைத்து தொடர்ந்து சிகிச்சை பெறுவதை விட்டுவிடுகிறார்கள். நோய் அறிகுறிகள் மறைந்து விடுவதால் தாம் பூரண சுகம் அடைந்துவிட்டதாக மூடநம்பிக்கை கொள்கிறார்கள். உண்மையில் ஒரு நோயாளியின் உடலிலிருந்து கயரோக கிருமிகளை முற்றாக இல்லாதொழிக்க குறைந்தது 6 மாதங்கள் எடுக்கின்றன.
நோயாளிகள் தொடர்ச்சியாகவும், ஒழுங்காகவும் மாத்திரைகளை எடுக்காது விட்டுவிட்டு எடுப்பதாலும் நோய்க்குரிய மாத்திரைகள் செயலற்றுப்போய் விடுகின்றன. இதனால் நோயாளிகள் மரணத்தைத் தழுவ வேண்டி ஏற்படுகிறது. இவர்கள் மரணித்தாலும் பரவாயில்லை. ஆனால் மரணத்தின் முன்பு மேலும் பல சுகதேகிகளுக்கு நோயைப்பரப்பி விடுகிறார்கள்.
பல மாத்திரைகளுக்குத் தாக்குப்பிடிக்கும் கயரோகம் (Multidrug Resistant Tuboclosis) என்பது மனிதரது தவறுகளின் விளைவாக ஏற்பட்ட நோயாகும். தற்போது உலக சுகாதார தாபனம் நேரடியாக அவதானிக்கும் சிகிச்சை முறையை (DOTS) அறிமுகம் செய்துள்ளது. அதாவது நோயாளி அண்மையிலுள்ள சிகிச்சை நிலையத்திற்கு நேரடியாக வந்து ஒரு வைத்திய தாதியின் நேரடிக்கவனிப்பில் மாத்திரைகளை உட்கொள்ளும் முறையாகும். இதனால் பல மாத்திரைகளுக்கு தாக்குப் பிடிக்கும் கயரோகத்தை 95 சதவீதத்தால் குறைக்க முடிகிறது.
இன்று மீண்டும் உலகின் பல பாகங்களிலும் இந்த மனிதகுல எதிரி தலை நிமிர்ந்துள்ளது. இதனைத் தடுக்க நேரடி அவதான முறையே பயனுள்ளது.
தற்போது உலகளாவிய ரீதியாக சகல அரசாங்கங்களும் இளைய தலைமுறையினரைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. வயோதிப செல்வந்தரைப் பாதுகாப்பதைவிட ஏழைச்சிறுவரைப் பாதுகாப்பது நாட்டுக்கு நலன் விளையும் என்பதை உணர்ந்து செயற்படுகின்றன.
20 பூ. எல். அலியார்

டு உலக சுகாதார தினம்
(World Health Day)
தினம் : ஏப்ரல் 07
கருப்பொருள் :
நோயுற்றோருக்குச் சிகிச்சையளித்தலும் நோய் வருமுன் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலும், தொற்று நோய்த்தடுப்பில் மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
பின்னணி :
உலக சுகாதார தாபனம் (WHO) 1948 ஏப்ரல் 7ம் திகதி உருவாக்கப்பட்டது. ஐ.நா.வின் முகவரான இத்தாபனம் சகல மக்களினதும் உடல், உள ஆரோக்கியத்தைப் பொறுத்து சர்வதேச ஒத்துழைப்புக்கான நிறுவனமாகும். இதன் தலைமை அலுவலகம் ஜெனீவாவில் உள்ளது. இத்தாபனத்தின் அனுசரணையுடன் வருடாந்தம் ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார தினமாக அனுஷ்டிக்ட்படுகிறது. பொதுமக்கள் ஆரோக்கியம் தொடர்பாக மிக முக்கிய பிரச்சினைகள் மீது வருடாந்தம் அழுத்தம் கொடுத்து மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.
விழிப்புணர்வு :
சுகாதாரம், நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தியில் கணிசமான தொகையைச் செலவிட்டு வரும் ஒரு துறையாகும். நாட்டு மக்கள் ஆரோக்கிய முடையோராக வாழ்வதிலேயே அந்நாட்டின் சுபீட்சம் தங்கியுள்ளது. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" உணவு, உடை, உறையுள் ஆகிய இன்றியமை யாத்தேவைகளுக்கு அடுத்து ஒரு மனிதனின் முக்கிய தேவையாக அமைந்திருப்பது சுகாதாரமாகும். மக்களின் சுகாதாரத்தின் மீதே நாட்டின் பொருளாதார அபிவிருத்தி கட்டியெழுப்பப்படுகின்றது. இதனால் இத்துறை அதிக அளவு முக்கியத்துவம் பெறுகின்றது.
நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப மாற்றங்களும், அவை மக்கள் வாழ்க்கைப் பாங்கில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் சனத்தொகைப் பெருக்கம், குடியிருப்பு, உணவு, தொழில்வாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளும், சுற்றாடல் மாசடைதல், இயற்கை அனர்த்தங்கள் என்பனவும் அகதிமுகாம் வாழ்க்கையும், பிதியும் இன்று மக்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன.
fഖയ്ക്കേ நினைவு தினங்கள் 21

Page 17
மக்கள் பழக்கவழக்கங்களிலும், உணவு முறைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் புதுவகையான நோய்களைத் தோற்றுவித்துள்ளன. மக்கள் அவதானமாகவும் விழிப்புடனும் இருப்பதன் மூலமே தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இலங்கையில் வாந்திபேதி (கொலறா) அடிக்கடி தலைதுாக்கி வருகிறது. 1973லிருந்து இதுவரை உலகின் பல பாகங்களிலும் 30 புதுவகையான நோய்கள் பரவியுள்ளதாக உலக சுகாதார தாபனம் குறிப்பிட்டுள்ளது.
1995ல் இத்தாலியில் பரவிய பிளேக் நோயினால் 170 கோடி டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. 5 - 15 வயதுக்கிடைப்பட்ட இளைஞரைத் தாக்கும் இருதய நோயினால் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் நாளாந்தம் 12 மில்லியன் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர்.
மகப் பேற்று சிகிச்சை வசதிகள் கிராமப்புறங்களில் போதியதாக இல்லாமையால் கர்ப்பணிகள் அதிக அளவில் மகப்பேற்றின்போது இறக்கின்றனர் என அறிக்கைகள் கூறுகின்றன. 1997இல் உலகளாவிய ரீதியில் மகப்பேற்றின்போது இறந்த கர்ப்பிணிகளின் தொகை 585000 என உலக சுகாதார தாபனம் அறிவித்தது. இவர்களில் அநேகம்பேர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள். இலங்கையில் வருடாந்தம் சுமார் 250 கர்ப்பிணித்தாய்மார் மகப்பேற்றின்போது இறக்கின்றார்கள். அதேவேளை தினமும் 500 - 700 இடைப்பட்ட கர்ப்பிணிகள் சட்டவிரோத கருக் கலைப்பு செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சட்ட விரோத செயற்பாடுகள் மரணத்தை ஏற்படுத்துகின்றன.
சுகாதாரத்துறை மீதான அரசாங்க செலவினம் வருடாந்தம் கணிசமாக அதிகரித்து வந்துள்ளது. இலங்கையில் 1978இல் 3.2% வீதமாகவிருந்த செலவு 1983இல் 4.3% வீதமாகவும், 1987லிருந்து 5% வீதமாகவும் உயர்ந்து வந்துள்ளது. புதிய வைத்திய சாலைகளின் தோற்றம், சுகாதார ஊழியர் நியமனம், மருந்தகங்களின் செலவு என்பன இதற்குக் காரணமாகும். 1988 முதல் 1995 வரை வைத்தியர்கள் 2316லிருந்து 4627 ஆகவும், தாதிகள் 8317லிருந்து 13403 ஆகவும், மருத்துவிச்சிகள் 3209லிருந்து 4389 ஆகவும் அதிகரித்தது.
சுகாதார சேவைகளில் தனியார் துறையினரும் கணிசமான பங்கு வகிக்கின்றனர். 1997 அறிக்கையின்படி நாட்டில் 2300 படுக்கைகளுடன் 85 தனியார் வைத்தியசாலைகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 1000 வைத்தியர்கள் சேவையாற்றுகின்றனர்.
இரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய், எயிட்ஸ், கயரோகம் போன்ற நோய்கள் இக்காலத்தில் பெருகி வருகின்றன. இதனால் நாடுகள் பெரும் செலவை எதிர்நோக்குகின்றன. மக்கள் அவதானத்துடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டால் நோய் தொற்றாமலும் தொற்றுநோய் பரவாமலும் தடுக்கலாம்.
22 பூ. எல். அலியார்

O7) உலக புவி தினம்
(Global Earth Day)
தினம் : ஏப்ரல் 22
கருப்பொருள் :
நாம் வாழும் இயற்கைச் சுற்றாடலின் சமநிலையைப் பாதுகாப்பதன் மூலம் புவியைப் பாதுகாத்தல்.
பின்னணி :
மனிதர்களின் அலட்சியப் போக்கு காரணமாக புவி தன் சமநிலையை இழந்து செல்கிறது. நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், கைத்தொழில் மயமாக்கம், நகரமயமாக்கம், சனத்தொகைப் பெருக்கம் ஆகிய காரணிகளால் சூழல் பல வகையாக மாசடைகின்றது. நச்சு வாயுக்களால் வளிமண்டலம் நிரம்பியுள்ளது. காடழிப்பினால், இயற்கை மழையை புவி இழந்துள்ளது. போர்ச்சூழலினாலும், அனுப்பரிசோதனைகளாலும் அழிவுகளைப் புவி எதிர்நோக்குகின்றது. இத்தனைக்கும் மனிதரின் அலட்சியப்போக்கும், சுயநலமுமே காரணமாகவிருக்கின்றது. இத்தகைய பேராபத்துக்களில் இருந்து நாம் வாழும் புவியைப் பாதுகாக்க உலக மக்கள் அனைவரும் ஒருமித்து செயற்படவேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது. இந்தப் பின்னணியி லேயே சர்வதேச புவிதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு :
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பன மனித வாழ்க்கைக்காக இறைவனால் வழங்கப்பட்ட நன்கொடைகளாகும். புவியை அலங்கரித்துள்ள கடல், நதி, நீர்வீழ்ச்சிகள், காடு, கழனி, வனாந்தரங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை. வானம், பூமி, வளிமண்டலம், ஆதவனின் ஒளி, சந்திரனின் குளிர்ச்சி, மாலையின் சிருங்காரம், காலையின் கனிவு, மரம், செடி கொடிகள், தரைவாழ் கடல்வாழ் உயிரினங்கள், பறவைகள் அத்தனையும் இயற்கையின் அணிகலன்கள். மனிதன் வாழ்க்கையை வளமாக நடாத்துவதற்கு அத்தனையும் தேவையானவை. இந்தச் சுற்றாடல் தொகுதி புவியின் சமநிலையைப் பேணி வருகின்றது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் புவியின் தன்மையை மாற்றி விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
சர்வதேச நினைவு தினங்கள் 23

Page 18
1980களில் புவியில் பல விபரீதமான சம்பவங்கள் நிகழ்வுற்றன. அதிகமான ஆபிரிக்க நாடுகளில் பஞ்சம், இந்தியாவில் போபாலில் விஷவாயுக் கசிவு, சோவியத்தில் சேர்னோபில் அணுஉலை விபத்து போன்றன சில உதாரணங்களாகும்.
உலகின் சிசு மரணம் குறைந்தமை, ஆயுட்காலம் அதிகரிப்பு, உலக சனத்தொகையில் எழுத்தறிவு பெற்றோர் அதிகரிப்பு, நாகரிகம், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி என்பனவெல்லாம் வெற்றிகரமாக அமைந்த அதேவேளை வெற்றிகளை ஈட்டித்தந்த அதே படிமுறைகள் புவியும் மனித குலமும் இனிமேல் தாங்கமுடியாத அளவு நெருக்கடிகள் உருவாகுவதற்கும் வழிகோலின.
புவிக்கோளை அதிதீவிரமாக மாற்றியமைக்கக்கூடிய சுற்றாடல் போக்கு மனிதருக்கும் மற்றும் உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ஒவ்வொர் ஆண்டும் 60 லட்சம் ஹெக்ரயர் உலர் நிலங்கள் பாலை நிலங்களாக மாற்றமடைகின்றன. சுமார் 1.1 கோடி ஹெக்ரயர் காடுகள் ஆண்டுதோறும் அழிக்கப்படுகின்றன. அமிலப்படிவுகள் மண்ணின் வளத்தை நச்சாக்கி விடுகின்றன. கைத்தொழில் வாயுக்கள் வளிமண்டலத்தைக் குறிப்பாக ஓசோன் படலத்தை அழித்துக்கொண்டிருக்கின்றது. இதனால் புவி உஷணமடைவதுடன் ஆழலையும் பாதிக்கின்றது. ጎ
சுற்றாடல் மாசடைவதைத் தவிர்ப்பதன் மூலம் புவியை நாம் பாதுகாக்கலாம். திட்டமிடாத காடழிப்பு, மண் அகழ்தல், விவசாயத்தில் அளவுக்கதிகமாக நச்சுத்திரவங்களைப் பயன்படுத்துதல், இரசாயனப் பசளைகளைப் பயன்படுத்துதல், தொழிற்சாலைக் கழிவுகளையும், வீட்டுக் கழிவுகளையும் பாதுகாப்பாக அகற்றாமை ஆகிய செயற்பாடுகளால் ஆழல் மாசடைகின்றது. புவி தன் சமநிலையை இழந்து விடுகின்றது.
மனிதர் சூழலைப் பாதுகாக்கும் அக்கறையுடன் இருந்தால் மட்டுமே இத்தகைய ஆபத்துக்களில் இருந்து புவியைப் பாதுகாக்கலாம்.
24 யூ. எல். அலியார்

09 உலக நால், பதிப்புரிமை தினம்
(World Book and Copyright Day)
தினம் : ஏப்ரல் 23
கருப்பொருள் :
அபிவிருத்திக்கு நூல் வெளியீடும் வாசிப்புப் பழக்கமும் அடிப்படையாக அமைதல்.
பின்னணி :
அபிவிருத்தி அடைந்த நாடுகளின் முன்னேற்றம் பெருமளவில் நூல் வெளியீட்டிலும் வாசிப்புப் பழக்கத்திலுமே தங்கியிருந்தன. அந்நாடுகள் தெளிவான நூல்வெளியீட்டுக் கொள்கையைக் கொண்டிருந்தமை இதற்கு அடிப்படையாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகளில் இத்தகைய திட்டவட்டமான நூல்வெளியீட்டுக் கொள்கைகள் இருக்கவில்லை. இது வாசிப்புப் பழக்கத்திலும் ஒரு குறைபாட்டினை தெளிவுபடுத்தியது. இதனை உணர்ந்த யுனெஸ்கோ 1972ம் ஆண்டினை சர்வதேச நூல் ஆண்டாகப் பிரகடனப்படுத்தி மூன்றாம் உலக நாடுகள் தமக்கென நூல் கொள்கைகளை உருவாக்குவதற்கு ஊக்குவித்தது. இருந்தும் இந்நாடுகள் குறிப்பிட்ட இலக்கை எய்தாத நிலையில் யுனெஸ்கோ அதன் பொதுச்சபைக் கூட்டத்தில் ஏப்ரல் 23ம் திகதியை உலக நூல் பதிப்புரிமை ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. இத்தினம் உலகப் பெரும் கவிஞர் சேக்ஷ்பியர் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்பானியாவில் கடலோனியா என்னுமிடத்தில் சென். ஜோர்ஜ் தினம் என்றொரு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இத்தினத்தில் மக்கள் தன் அன்புக்குரியவர்களுக்கு ஒரு ரோசா மலருடன் ஒரு நூலை அன்பளிப்புச் செய்தனர். இந்த பண்டைய மரபு நூல் தினத்துக்கு அடிப்படையாக அமைந்திருக்கலாம்.
விழிப்புணர்வு :
நூல் வெளியீடும் வாசிப்பும் மனித முன்னேற்றத்திற்கு மிக அத்திவாரம் என்பது சகல நாடுகளும் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். மூன்றாம் உலக நாடுகளில் வாசிப்புப் பழக்கம் அதிகரித்து வருகின்ற போதிலும் இலங்கையில் திருப்திகரமான அதிகரிப்பு ஏற்படவில்லை.
சர்வதேச நினைவு தினங்கள் 25

Page 19
இலத்திரனியல் 2xtடகங்கள் அண்மைக்காலங்களில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற போதிலும், அச்சு ஊடகங்கள் அறிவை வழங்குவதற்கும் தகவலைப் பரப்புவதற்கும் மிக முக்கிய சாதனமாகத் தொடர்ந்திருப்பது உணரப்பட்டுள்ளது. நூல்களும் மற்றும் எழுத்து ஆவணங்களும் மக்களின் முதுசொங்களையும் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் பேணிப் பாதுகாப்பதற்கும் பிற் சந்ததிக்கு அவற்றை வழங்குவதற்கும் பொருத்தமான சாதனங்களாக அமைந்துள்ளன.
நூல் அபிவிருத்திச் செயற்பாடானது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மிகத் தாமதமாகவே நடைறுெகின்றது. இதற்குக் காரணம் தேசிய ரீதியில் நூல் வெளியிட்டுக் கொள்கை இல்லாமையே, யுனெஸ்கோ, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தமக்கென நூல் வெளியீட்டுக் கொள்கையை வகுத்துக்கொள்ள ஆலோசனை கூறியதோடு அதற்கான குறிக்கோள்களையும், வழிகாட்டல்களையும் வழங்கியது.
ஆசிய பசுபிக் நாடுகளில் நூல் அபிவிருத்திக்கான யுனெஸ்கோ பிராந்திய அலுவலகம் இஸ்லாமாபாத்தில் உள்ளது. வாசிப்புப் பழக்கம், நூல் அபிவிருத்தி என்பன சம்பந்தமான செயற்றிட்டங்களுக்கு இது பொறுப்பாக உள்ளது. இவ்வமைப்பு 1993 இல் புதுடில்லியில் தென்னாசியாவின் தேசிய நூல் கொள்கை, தேசிய நூல் அபிவிருத்தி மன்றங்கள் சம்பந்தமாக மாநாடு நடத்தியது.
இலங்கையில் தேசிய நூல் அபிவிருத்தி மன்றம் நாட்டின் நூல் ஆக்கத்துக்கான உத்தியோகபூர்வ தாபனமாகும். கல்வி அமைச்சின் கீழ் இது இயங்குகின்றது. இந்தியா, சிங்கப்பூர், நைஜீரியா, பங்களாதேஷ், தாய்லாந்து, மலேசியா என்பன ஆசியாவில் தலைசிறந்த நூல் வெளியீட்டு நாடுகளாக மிளிர்கின்றன.
அண்மைக்காலத்தில் இலங்கையும் நூல் வெளியீட்டில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. நூல் வெளியீட்டுக் கொள்கை தொடர்பான சில நடவடிக்கைகள் இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள்
முக்கியமானவை.
1. நூல் விற்பனை நிலையங்களின் பதிவு
2. நூலகப் பாவனையை ஊக்குவித்தல்.
3. மாணவர் வாசிப்புப் பழக்கத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலவச
பாடநூல்களை கவர்ச்சியாக அமைத்தல்,
எழுத்தாளரிலிருந்து வாசகர்வரை நூல் துறையில் ஈடுபட்டுள்ள
26 யூ. எல். அலியார்

சகலரினதும் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்துவதே தேசிய நூல் கொள்கையின் குறிக்கோள். மேலும் தேசிய நூல் கொள்கை சர்வதேச நூல் வெளியீட்டு நியமங்களின் வரையறைகளுக்கு ஏற்புடையதாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.
எடுத்துக்காட்டாக சர்வதேச தரத்தில் நூல் என்பது 49 பக்கங்களுக்குக் குறைவில்லாமலும் 1/8 கிறவுண் அளவிலும் அழகான அச்சிலும் அமையவேண்டும். சிறுவர் நூல் என்பது 4 - 11 வயதுக்கிடைப்பட்ட சிறுவருக்காக 16 பக்கங்களுக்கு மேற்படாது இருத்தல் வேண்டும். மேலும் அது ஆக்கியோனிலிருந்து வாசகர்வரை சம்பந்தப்பட்ட சகலரினதும் சட்டரீதியானதும் தார்மீக ரீதியானதுமான உரிமைகளைப் பாதுகாக்கவும் வேண்டும்.
கலை, விஞ்ஞான, இலக்கியப் படைப்புக்களின் பதிப்புரிமை சம்பந்தமான பேர்ண் உடன்படிக்கைக்கும் (1886), 1979ம் ஆண்டின் 52ம் 96).db&B Code of Intellectual Property Act 660T UGSLD 936) is 60560LD& சொத்துக்கள் கோவைச் சட்டத்துக்கும் அமைய நூல் வெளியீடுகள் பாதுகாப்பைப் பெற வேண்டும்.
சர்வதேச நூல் பதிப்புரிமை தின நினைவாக புத்தக கண்காட்சிகள் புத்தகம் வெளியிடுவோருக்கு மானியம், மலிவுவிலையில் நூல் விற்பனை போன்ற ஊக்குவிப்புச் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் 27

Page 20
09 சர்வதேச தொழிலாளர் தினம் (மே தினம்) (International Worker's Day / May Day)
தினம் : மே 01
கருப்பொருள் :
தொழிலாளர் உரிமைகளும் நலன்களும் மதிக்கப்படல் வேண்டும்.
பின்னணி :
1886ம் ஆண்டில் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஆரம்பிக்ப்பட்ட தொழிலாளர் போராட்டமே இத்தினத்தின் அடிப்படையாகும். 1880களில் உலகளாவிய ரீதியில் தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. ஜேர்மனி, பெல்ஜியம், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் இச் செயற்பாடுகளில் முன்னணி வகித்தன. 1886 இல் சிக்காகோவில் 8 மணித்தியால வேலை நேரக் கோரிக்கையின் பேரில் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் 3 லட்சத்துக்கும் அதிக தொழிலாளர் கலந்து கொண்டனர். இதனை அடக்க அரசு வன்முறைகளைப் பிரயோகித்தது. தொழிலாளர் இரத்த வெள்ளத்தில் மிதந்தனர். விசாரணையின் பின்னர் தொழிலாளர் தலைவரான நுகஸ்ட் என்பவருக்கும் மற்றும் ஏழு தலைவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது. 1889 இல் பாரிஸில் நடைபெற்ற உலக தொழிலாளர் காங்கிரஸ் மாநாட்டில் இந்நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து 1890இல் இருந்து மே 1ம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையில் முதலாவது தொழிற் சங்கம் ஏ. இ. குணசிங்காவினால் 02 - 09 - 1922 இல் தாபிக்கப்பட்டது. லங்கா சமசமாஜக் கட்சி 1935 இல் தாபிக்கப்பட்டது. இவற்றினால் இலங்கையில் மே தினம் அனுஷ்டிக்ப்பட்டது. பிற்காலத்தில் அரசியற் கட்சிகளின் பின்னணியில் இடதுசாரி, வலதுசாரி என்ற பேதமின்றி சகல பிரிவுத் தொழிற்சங்கங்களும் மே தின ஊர்வலங் களையும் கூட்டங்களையும் நடத்தி இத்தினத்தை அனுஷ்டிக்கின்றன.
விழிப்புணர்வு :
மே தினம் உலக தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட வெற்றித்
தினமாகக் கொண்டாடப்படுகிறது. கைத்தொழிற் புரட்சியின் பயனாக ஆலைகளின் பெருக்கம், இயந்திரமயமாக்கம், பேரளவு உற்பத்தி ஆகிய
28 யூ. எல். அலியார்

காரணிகள் தொழிலாளரை ஒரு வர்க்கமாக ஒன்றுபட வைத்தது. ஒருபுறம் முதலாளிகள் உற்பத்தி முயற்சியில் இலாபம் பெறுகின்றனர். தொழிலாளரிடமிருந்து ஊழியத்தைப் பெறுகின்ற அளவு அவர்களுக்கான உரிமைகள், ஊதியம், சலுகைகள் என்பவற்றை வழங்குவதில் உற்பத்தியாளர் ஆர்வம் காட்டவில்லை. கால்வயிற்றுக் கஞ்சிக்காக தம் உழைப்பை நல்கும் தொழிலாளர் வேறு வழியின்றி முதலாளிகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டனர். இதனால் தொழிலாளர் வாழ்க்கையை சிறுமையும், வறுமையும் ஆட்கொண்டன.
இத்தகைய இழிநிலையிலிருந்து தொழிலாளர் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தி அவர்தம் உரிமைகளை வென்று எடுக்கவும் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தைப் பெறவும் மே தினம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. 1917 ஒக்டோபர் புரட்சியின் பின் பொதுவுடமை நாடுகளிலும் சமதர்ம நாடுகளிலும் மே தினம் மிக உத்வேகத்துடன் கொண்டாடப்பட்டு வந்தது.
இன்று கைத்தொழில்உற்பத்தித்துறை சகல நாடுகளிலும் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. இயந்திரமயமாக்கம், பொறிகளின் பாவனை, நவீன கருவிகளின் செயற்பாடு என்பன பேரளவு உற்பத்திகளை ஊக்குவித்துள்ளது. அதே வேளை தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களின் தேவையையும் இன்றியமையாததாக்கியுள்ளன. இதனால் தொழிலாளர் ஒரு சக்தியாக ஒன்று திரண்டு செயல் படுகின்றனர். இதன் மூலம் அவர்கள் தம் நலன்களைப் பேணமுடிகிறது.
சில கைத்தொழில்களைப் பொறுத்தவரையில் தொழிலாளி வர்க்கமும் அத்தொழிலின் மூலதனப் பங்காளியாக மாறிவருவது அவர்களின் முதன்மையைப் புலப்படுதுவதாகும்.
இன்று சகல நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டுவரும் தொழிலாளர் தினம் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்கு மட்டுமன்றி உற்பத்தியில் முதலிட்டுள்ள முதலாளி வர்க்கத்துக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக உள்ளது. தொழிலாளர் நலன்களிலேயே தமது உயர்வு உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
சர்வதேச நினைவு தினங்கள் 29

Page 21
1ே0 உலக பத்திரிகைச் சுதந்திர தினம்
(World Press Freedom Day)
தினம் : மே 03
கருப்பொருள் :
பத்திரிகைச் சுதந்திரம் ஓர் அடிப்படை மனித உரிமை
பின்னணி :
பத்திரிகைச் சுதந்திரத்துக்கான அடிப்படை ஐ. நா. வின் (1948) மனித உரிமைகள் பற்றிய சர்வதேச பிரகடனத்தில் 19வது உறுப்புரையில் குறிக்கப் பட்டுள்ளது. சர்வதேச குடியியல், அரசியல் உரிமைகள் சாசனத்திலும் 19வது உறுப்புரையில் இதற்குச் சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் அரசியல் யாப்புக்களிலும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் நடைமுறையில் அரச கொள்கை களுக்கமைய இந்தப் பத்திரிகை சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்துள்ளது. அமெரிக்க நீதியரசர் கார்டோஸோ "மற்றைய சுதந்திரங்களுக் கெல்லாம் கருவாக திகழ்வது சிந்தனை, மற்றும் பேச்சுச் சுதந்திரம்" என்றார். Informed public is the Essence of working democracy 61601 is கூறப்படுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் இக்காலத்தில் வலியுறுத்தப்படுகிறது. இதுபற்றிய மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக பத்திரிகைகள் சங்கம் 1997 இல் இத்தினத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது.
விழிப்புணர்வு :
பத்திரிகைச் சுதந்திரம் என்பது மக்களின் தகவல் பெறும் உரிமை, தகவல் வழங்கும் உரிமை, பேச்சு, எழுத்து, கருத்து வெளிப்பாட்டு உரிமை என்பவற்றின்மீது கட்டியெழுப்பப்பட்ட அடிப்படைச் சுதந்திரமாகும். பத்திரிகைச சுதந்திரம் 4 சுவர்களைக் கொண்டு கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அவை 1.உண்மைக்குப் பாதுகாப்பு 2. சனநாயகத்துக்குப் பாதுகாப்பு 3. மக்கள் சுதந்திரத்துக்குப் பாதுகாப்பு 4. பொதுநலன்களுக்குப் பாதுகாப்பு என்பனவாகும். இலங்கை அரசியலமைப்பில் அத்தியாயம் 3 இல் 14 (1) (அ) உறுப்புரையாக எழுத்து, பேச்சு, வெளிப்பாட்டுச் சுதந்திரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் நலன், நாட்டு நலன், பொதுப்பாதுகாப்பு, பொதுச்சுகாதாரம், பிறர் உரிமை பாதுகாக்கப்படல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த அடிப்படைச் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்தவும், மட்டுப்படுத்தவும் பல சட்ட ஏற்பாடுகள் உள்ளன. அரசியலமைப்புச் சட்டம், தேசிய பத்திரிகைப் பேரவைச் சட்டம், தண்டனைச்
30 யூ. எல். அலியார்

சட்டக்கோவை, பாராளுமன்ற அதிகாரங்கள், சிறப்புரிமைகள் சட்டம், நீதிமன்ற அவமதிப்புக்கு எதிரான சட்ட ஏற்பாடுகள் என்பன பத்திரிகைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாகவும் அவமானமாகவும் உள்ள சட்டங்கள் பண்டைய ஆங்கில கோட்பாட்டின் அடிப்படையில் பிறந்தவையாகும். அதாவது மன்னன் தவறு செய்வதில்லை என்ற அடிப்படையாகும். பிரித்தானியப் பாராளுமன்றத்தில் மன்னரின் செலவின ஒதுக்கீடுபற்றி விமர்சித்த ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது தண்டிக்கப்பட்டனர். மன்னரின் இத்தகைய எதேச்சாதிகாரப் போக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் guiu ffôl JT8b.JLILL-60T.
உலக அரசியல் வரலாற்றில் பத்திரிகைகள் சக்திபடைத்த ஆயுதமாகப் பயன்பட்டு வந்துள்ளன. பிரான்ஸில் லி கோன்’ பத்திரிகை அப்போதைய ஜனாதிபதி டி கோலை விமர்சித்தது. இதனால் பத்திரிகை ஆசிரியர் நடவடிக்கைக்கு உட்பட்டார். இச் செயலைக் கண்டித்த பத்திரிகை பணிப்பாளர் சபை இராஜினாமாச் செய்தது. அமெரிக்காவில் வாசிங்டன் போஸ்ட்’ பத்திரிகை 'வாட்டர்கேற் சம்பவத்தை அம்பலப்படுத்தியது. இதனால் ஜனாதிபதி நிக்சன் பதவியையே துறந்தார்.
மேற்கத்தைய நாடுகளில் அச்சுறுத்தலின்றி பின்பற்றப்படும் பத்திரிகைச் சுதந்திரம் மூன்றாம் உலக நாடுகளில் நசுக்கப்படுவது நடைமுறையாக உள்ளது. ஸாம்பியா, ஐவரிகோஸ்ட், கமறுான் ஆகிய நாடுகளில் ஜனாதிபதியைக் குறித்து எழுதியமைக்காக பத்திரிகையாளர் சிறையிடப்பட்டுள்ளனர். இதே போன்று அரட்டைப் பகுதியில் இலங்கை ஜனாதிபதியைப் பற்றி அலசியமைக்காக சண்டே டைம்ஸ் ஆசிரியர் 1997 இல் தண்டிக்கப்பட்டார். உண்மையான தகவல்களையும் செய்திகளையும் எழுதியமைக்காக பல செய்தியாளர்கள் அடிதடிகளையும் ஆபத்துக்களை எதிர் நோக்கிய பல சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரம் இரண்டுவித அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. 1. பத்திரிகை - செய்தித் தணிக்கை 2. பத்திரிகையாளருக்கெதிரான தாக்குதல்.
1996 இல் 160 நாடுகளில் பத்திரிகையாளர் மீது 1800 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. 22 நாடுகளில் 180 பத்திரிகையாளர்கள் சிறையில் உள்ளனர். 12 நாடுகளில் பத்திரிகையாளர்கள் பத்திராதிபதிகள், வெளியீட்டாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; தாக்கப்பட்டுள்ளனர்; தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; தொல்லைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வெளியீடுகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. காரியாலயங்கள் மூடப்பட்டுள்ளன.
உலக பத்திரிகைச் சுதந்திர குழு, உலக நாடுகளில் இத்தகைய பத்திரிகைச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் சட்டங்களுக்கு எதிராக அணிதிரள பத்திரிகையாளருக்கு அழைப்பு விடுக்கின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் 3.

Page 22
1ே0 உலக செஞ்சிலுவை ~ செம்பிறை தினம்
(World Red Cross and Red Crescent Day)
தினம் : மே 08
கருப்பொருள் :
போரில் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி பேதமின்றி உதவி செய்வதும் முரண்பாடுள்ள தரப்பினரிடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதுமாகும்.
பின்னணி :
செஞ்சிலுவை இயக்கத்தைத் தாபித்தவர் சுவிஸ் நாட்டில் ஜெனிவாவில் 1828ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதி பிறந்த ஜீன் ஹென்றி டுனாண்டு ஆவார். ஏழாவது வயதில் அயலவர் படும் இன்னல் கண்டு வேதனையுற்றார். சிறைக் கைதிகள் அனுபவிக்கும் கடும் தண்டனைகளுக்காக மனம் நொந்தார். சிறைக் கூடங்களுக்குச் சென்று கைதிகளுக்கு ஆறுதல் கூறி வந்தார். பின்னர் வங்கித் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறினார். 1859 ஜூன் 25 இல் அவர் வட இத்தாலிக்குப் பயணமானபோது அங்கு சோல்பரினோ போர் நடைபெற்றிருந்தது. ஆஸ்திரிய, பிரான்ஸிய, இத்தாலிய படைகளின் 3 லட்சம் பேர் 16 மணித்தியாலங்கள் போரிட்டதன் விளைவாக 40000 பேர் போர்க்களத்தில் குற்றுயிராய்க் கிடந்தனர். எத்தரப்பினரும் இவர்கள்மீது அக்கறை காட்டவில்லை. இந்தக் காட்சி டுனாண்டின் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவித்தது. ஊரவர் உதவியுடன் காயப்பட்டோருக்கு அவர் பேதமின்றிச் சிகிச்சையளித்தார். பகை நிரம்பிய அச்சூழலில் இவரது பணி புரட்சிகரமானதாக அமைந்தது. ஜெனிவர் திரும்பிய அவர் “சோல்பரினோ நினைவுகள்" என்ற நூலை எழுதினார். இந்நூலில் அவர் மனித சமுதாயத்திற்கு உதவக்கூடிய அறிவுரைகளை வழங்கினார். பின் நாடுநாடாகச் சென்று யுத்தகளப் பணிகள் பற்றிய அவசியத்தை எடுத்துரைத்தார். பிற்காலத்தில் வறுமையின் பிடியில் அவர் சிக்கினாலும் ஈற்றில் நோபல் பரிசுக்குரியவரானார். 1910 ஒக்டோபர் 30 இல் உயிர் நீத்த இவரது பிறந்த தினமே செஞ்சிலுவை செம்பிறை தினமாகும்.
விழிப்புணர்வு :
செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் உலகிலேயே மிக விரிவாக ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ்சிலுவை கிறிஸ்தவ
32 , யூ. எல். அலியார்

சமயத்தைப் பிரதிபலிப்பதுபோல அமைந்துள்ளமையால் இஸ்லாமிய நாடுகளில அதன் சின்னம் செம்பிறையாகக் கொள்ளப்பட்டது. இன்று இவ் வியக்கம் உலகில் 160க்கு மேற்பட்ட நாடுகளில் சேவையாற்றி வருகின்றது.
போரில் காயமுற்ற மக்களுக்கு உதவும் நோக்கில் உருவாக்கப்பட்ட போதிலும் இதன் செயற்பாடுகள் விரிவடைந்துள்ளன. 7 கோட்பாடுகள் இதன் செயற்பாட்டை வழிநடத்துகின்றன. அவை : மனிதாபிமானம், பாரபட்சமின்மை நடுநிலைமை, சுதந்திரத் தன்மை, தொண்டுபுரிதல், ஒற்றுமை, சர்வவியாபகத் தன்மை என்பன.
போரினால் பாதிப்புறும் மக்களுக்கு இன, மத, மொழி, பிரதேச பேதமின்றி இவ்வியக்கம் அன்புக்கரம் நீட்டி உதவுகின்றது. முரண்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் எத்தரப்பினரையும் சாராது, அரசியல் வேறுபாடுகளில் அக்கறை காட்டாது, நடுநிலையுடனும், சுதந்திரத்துடனும் இது செயற்பட்டு வருகின்றது. அதேவேளை நாட்டின் சட்டத்துக்கு உட்பட்டே கருமமாற்றுகின்றது.
இலங்கையில் வடக்கு, கிழக்கு யுத்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் இது முன்னின்று செயற்படுகின்றது. 1989 இல் இலங்கையில் பணியை ஆரம்பித்த இவ்வியக்கம் பல இடங்களில் உப அலுவலகங்களைத் தாபித்துச் சேவையாற்றுகின்றது. போரின் நிமித்தம் சிறைப்பட்டிருக்கும் கைதிகளைப் பார்வையிடல், தடுப்புக் காவல் நிலையங்களில் தடுத்து வைக்கப் பட்டுள்ள கைதிகளைப் பார்வையிடல், எதிர்த்தரப்பினரின் தடுப்புக் காவலிலுள்ள இராணுவத்தினரையும், பொதுமக்களையும் பார்வையிடல், காணாமற்போகும் நபர்களைக் கண்டுபிடிக்கும் விடயத்தில் அக்கறை காட்டுதல், குடும்பச் செய்திகளைப் பரிமாறுதல் போன்றவற்றுடன் இரு தரப்பினரிடையே சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள் எடுத்துச் செல்லல், நோயாளிகளுக்குப் போக்குவரத்து வசதியளித்தல், தொழில் மீட்சிக்கு உதவுதல், மருத்துவ உதவி, நீர்வழங்கல் போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபடுகிறது.
இவ்வியக்கத்தின் மனிதாபிமான சேவைகளும் பணிகளும் உலகளாவிய ரீதியில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
சர்வதேச நினைக்ஷ் தினங்கள் 33

Page 23
(12) உலக தொலைத்தொடர்பு தினம்
(World Telecommunication Day)
தினம் : மே 17
கருப்பொருள் :
தொலைத்தொடர்பு நாட்டின் அபிவிருத்திக்கும் மனிதாபிமான வளர்ச்சிக்கும் உதவுதல்,
. பின்னணி :
தொலைத் தொடர்புத் துறை மிக அசுர வேகத்தில் முன்னேறி வரும் துறையாகும். ஆரம்பத்தில் மனிதன் தொலைவிலுள்ளோருக்குத் தன் செய்தியை அல்லது தகவலைப் பரிமாறிக்கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான். ஆனால், கம்பியில்லாத் தந்தி கண்டுபிடிக்கப்பட்டதும், தொழில்நுட்ப ரீதியில் தொலைத் தொடர்புத் துறை வளர்ச்சியடையத் தொடங்கியது. இத்துறையில் தொலைபேசி, தொலைக்காட்சி, நடமாடும் தொலைபேசி, இலத்திரனியல் தபால், இன்டர்நெற் போன்றவை வரலாற்றுப் போக்கில் ஏற்பட்ட வளர்ச்சியின் பெறுபேறுகளாகும். சாதாரண மனிதர் வாழ்க்கையில் மட்டுமன்றி நாட்டின் அபிவிருத்திக்கான சகல துறைகளிலும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி செல்வாக்குச் செலுத்துகிறது. 1865 இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் (ITU) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது. மனித குலத்துக்கு அது ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
விழிப்புணர்வு :
தொலைத்தொடர்பு தொழிலநூட்பத்தின் வளர்ச்சியால் மனிதன் பெருமளவு முன்னேற்றத்தைக் கண்டுள்ளான். வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, பொக்கட் தொலைபேசி, டெலக்ஸ், பக்ஸ், இலத்திரனியல் தபால், இன்டர்நெற், செய்மதித் தொடர்புகள் என்பன மனிதன் அடைந்த சாதனைகளின் சின்னங்களாகும். தொலைதொடர்பு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பத்தையும் (Information Technology) போஷித்து வருகிறது.
மனிதனின் தகவல் தொடர்புகள், செய்திப் பரிமாற்றம், கல்வியூட்டல், கருத்துப் பரிமாற்றம், பொழுதுபோக்கு, கலை வெளிப்பாடு, வர்த்தகம், முன்னெச் சரிக்கைகள் போன்ற பல தேவைகளுக்கு தொலைத்தொடர்பு தொழில்நுட்பம்
34 այ. 676ծ, -9/6մսոմ

பயன்பட்டு வருகின்றது. சூறாவளிகள், எரிமலைகள், பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்த வேளைகளிலும், போர்மூட்டம், பாதுகாப்பு. தொற்றுநோய் போன்ற சந்தர்ப்பங்களிலும் அறிவுறுத்தல்களை வழங்குவதால் மக்கள் முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிகிறது. நிவாரண நடவடிக்கை களைக்கூட இன்று நடமாடும் கம்பியில்லாத் தொலைபேசி மூலம் துரிதமாக மேற்கொள்ள முடிகிறது.
அண்மைக்காலத்தில் கணணி முறைக்கும் தொடர்பியல் தொழில்நுட்பத்துக்கும் இடையில் ஓர் இணைவுப்போக்கு செயல்பட்டு' வருகின்றது. தகவல்களைச் சேமித்து வைக்கவும், மீண்டும் பார்க்கவும் பாரிய அளவிலான வசதிகளைக் கணணிகள் வழங்குகின்றன.
இவை இணையம் எனப்படும் “இன்டர்நெற்" முறையில் பரிமாற்றம் செய்யப்படுகின்றது. "இன்டர்நெற்" தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தினால் ஏற்பட்ட அதி நவீன சாதனையாகும். 150க்கு மேற்பட்ட நாடுகள் இந்த வலைப்பின்னல் அமைப்பில் இணைந்துள்ளன. 50 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இதன் பயன்பாட்டை அனுபவிக்கின்றனர். செய்மதி மூலம் வழங்கப்படும் "இன்டர்நெற்" சேவையில், ܫ
1. தொடர்பு சேவைகள். 2. தகவல் சேவைகள் ஆகிய இருவகைச் சேவைகள் உள்ளன.
மின்னியல் தபால், மின்னியல் சஞ்சிகை, மின்னியல் வெளியீடு, ரெல்நெட், தொடர் கலந்துரையாடல், உலகின் பரந்த வலை (World Wide Web) போன்ற பல வகையான நிகழ்ச்சித்திட்டங்கள் உள்ளன.
தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் இன்னும் அதிக வேகமாக வளர்ச்சி யடைந்து கொண்டு செல்கிறது. மனித குலத்தின் மேம்பாட்டுக்கும், மனிதாபிமான வளர்ச்சிக்கும் அது பயன்படுகிறது.
தொலைத் தொடர்புகள் இன்று மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து மனித மேம்பாட்டுக்குத் துணைபுரிகின்ற அதேவேளை, தொலைத் தொடர்பு கோபுரங்களும், தொலைத் தொடர்பு கட்டமைப்புக்களும் குண்டு வைத்துத் தகர்க்கப்படுவது இந்நாட்டின் துரதிஷ்டமான சம்பவங்களாகும்.
சர்வதேச நினைவு தினங்கள் 35

Page 24
1ே3 உலக பண்பாட்டு தினம்
(World Culture Day)
தினம் : மே 21
கருப்பொருள் :
பண்பாடு மானுட வர்க்கத்தின் மேம்பாட்டுக்கான ஆணிவேர்.
பிண்னணி :
ஐ. நா. தாபனம் 1988 ஆம் ஆண்டில் பண்பாட்டு வளர்ச்சிக்கான பத்தாண்டுகளை ஆரம்பித்தது. யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பண்பாட்டு வளர்ச்சியில் அக்கறையுடன் செயலாற்றி வந்துள்ளது. உலக நாடுகளின் முன்னேற்றத்துக்கு பொருளாதாரம் மட்டுமன்றி பண்பாடும் மிக அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவேதான் மக்களின் பண்பாட்டு வளர்ச்சியை இலக்காகக் கொண்டு உலகளாவிய ரீதியில் பண்பாட்டு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு :
சிறிது காலத்துக்கு முன்பு ஒன்றைப்பற்றி மற்றொன்று அறியாதிருந்த சமுதாயங்கள் இப்போது ஒன்றோடொன்று நெருங்கியும் அடிக்கடி தொடர்பு கொண்டும் வாழ்கின்றன. பரஸ்பர உறவுகள் ஒன்றிலொன்று தங்கியிருக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளன.
"பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட்கூட்டம் தனது சமூக வரலாற்று வளர்ச்சியினூடாக தோற்றுவித்துக் கொண்ட பெளதீகப் பொருட்கள், ஆத்மார்த்தக கருத்துக்கள், மத அனுட்டானங்கள், சமூக விழுமியங்கள் ஆகிய யாவற்றினதும தொகுதியாகும்." "ஒரு கூட்டத்தாரின் பண்பாடு என்பது அக்கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சிநிலை, உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், கலைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியாகும்."
"கலை என்பது பண்பாடு எனும் பெருவட்டத்தினுள் வருவது மட்டுமல்ல; அது ஒரு குறிப்பிட்ட பண்பாட்டை வெளிப்படுத்துவதற்கான அமைப்பாகும். இதனால் கலைகளின் பொலிவு நிலையில் பண்பாட்டை இனம் காணலாம் எனும் கருத்தும் உள்ளது.”
36 யூ. எல். அலியார்

ஒரு சமுதாய உறுப்பினன் என்ற முறையில் மனிதன் ஈட்டுகிற மரபு வழியாலும் அனுபவத்தாலும் கற்றுக் கொள்கிற பழக்கவழக்கங்கள், திறன்கள், மக்கள் குழு உருவாக்குகின்ற உலகாயதப் பொருட்கள், அனைத்தையும் தழுவியதுதான் பண்பாடு.
இன்று அனைத்துலக சமுதாயம் முன்னேற்றம் எனக் கருதுவது பொருளாதாரக் கூறுகள், சமூவியற் கூறுகள், பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் பிணைந்த முன்னேற்றத்தையே. ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு மக்கட் கூட்டத்துக்கும் அவரவர் தம் பண்பாட்டைப் பொறுத்தே சிறப்பு அமைகிறது.
எனவே மனிதனின் தனித்துவப் பண்புகள் பேணப்படவேண்டும். சமுதாய முன்னேற்றத்தில் பண்பாடு உறுதியான இடத்தைப் பெற்றுள்ளது. கலைப் படைப்புக்கள் மட்டுமன்றி, அறிவுத்திறன், உண்ணும் உணவு, உடை, உறையுள், குடும்ப உறவுகள், சமுதாய உறவு, போற்றும் நெறிமுறைகள், கல்வி முறை, சிந்தனை, எதிர்கால எதிர்பார்ப்புக்கள், நம்பிக்கைகள், புதிய வர்களுடன் பழகுதல் போன்ற வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களிலும் பண்பாடு வெளிப்படுகின்றது. ஓர் இனத்தின் உயர்வு அதன் பண்பாட்டுப் பாரம்பரியங்களிலேயே தங்கயுள்ளது. இதனால் இனங்களின் தனித்துவப் பண்புகள் பேணப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் வலுப்பெற்றன. பல்லின மக்கள் வாழும் நாட்டில் அவரவர் தம் பண்பாடுகள் பேண இடமளிக்கப்பட (866öT(Bb.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் பண்பாடுகளின் தனித்துவம் பாதிக்கப்படுவதாகவும் குறைகூறப்படுகிறது. அதாவது புதிய உலக தொடர்புகள், தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி, செய்திப் பரிமாற்றம் என்பன உலக பண்பாடு களை அவற்றின் தனித்துவத்தைக் கடந்து ஒன்றோடொன்று நெருங்க வைத்துள்ளன. மக்களின் சுவை, சிர்தனை, கருத்தக்கள், வாழ்க்கை முறை, போக்கு, உடை, உணவு, இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்பவற்றில் பல்லின - பண்பாடுகளைக் கொண்ட மக்களிடையே பொதுப் பண்பாட்டம்சங்களும், புரிந்துணர்வும் ஏற்பட்டு வருகின்றன. பொதுவாக தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி பண்பாடுகளின் தனித்துவத்தைச் சிதைப்பதாகக் குறை கூறப்படினும் உண்மையில் அப்படி மரபு சிதையாது என்பதற்கு ஜப்பான் உதாரணமாக விளங்குகிறது.
இனங்களின் தனித்துவப் பண்புகள் பேணப்படுவதை மேற்கத்தைய சிந்தனையாளர்களும் ஆதரிக்கிறார்கள். தென்ஆபிரிக்க மானிடவியல் அறிஞர் கிளக்மேன் கூற்றுப்படி இன ஒதுக்கல் கொள்கையை ஆதரிக்கும் மேற்கு நாட்டவர்கள் தாம் ஆபிரிக்காவின் உள்நாட்டு இனங்களின் பண்பாடுகள
சர்வதேச நினைவு தினங்கள் 37

Page 25
அந்த மக்களுக்குப் பொருத்தமானவை என்றும், அவற்றைப் பேண அம் மக்களுக்கு உரிமை உண்டு என்றும் ஆதரித்துள்ளார்கள்.
ஆனால் மரபு பிறழாமல் அம்மக்களுடைய பண்பாடுகள், வாழ்க்கை வசதிகளில் நவீனத்துவம் பின்பற்றப்பட வேண்டும் எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. வறுமை, நோய், சிசுமரணம், எழுத்தறிவின்மை, மகளிர் இழிநிலை, அரசியல் அறிவின்மை என்பவற்றை அகற்றி முன்னேற்றத்தை ஏற்படுத்த நவீன மயமாக்கல் பின்பற்றப்பட வேண்டும் எனக் கருதப்படுகிறது.
பண்பாட்டில் தாய்மொழி பிரதான இடத்தை வகிக்கின்றது. மக்கள் உணர்வுகள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள் என்பன அவர் தம் தாய்மொழியிலேயே பொதிந்துள்ளன. தேசியப்பண்பாட்டின் உயிர் நாடியாக மட்டுமன்றி, பண்பாட்டை வளர்க்கக்கூடிய சாதனமாகவும் மொழி விளங்குகின்றது. ஒரு நாட்டில் சிறுபான்மையினராக உள்ள மக்களின் மொழியை ஒதுக்கிவிட அல்லது நசுக்கிவிட பெரும்பான்மையின மக்கள் நினைப்பது தவறாகும். அது துரோகமும் ஆகும், சிறுபான்மை இனங்களின் மொழியும் பண்பாடும் பாதுகாக்கப்படுவதன் மூலமே நாட்டின் பண்பாட்டுப் பெருமை மேலோங்கும். பொதுமொழி அல்லது பெரும்பான்மையின மொழியை பலவந்தமாக திணிக்கக் கூடாது. அது தாமாகவே ஈர்க்கப்பட வேண்டும். பல்வேறு சிறுபான்மை இன, மொழிகள் இருந்தும் ரஷ்ய மக்கள் ரஷ்ய மொழியைப் பொதுமொழியாக ஏற்றனர். ரஷ்ய மொழியின் பண்பாட்டம்சங்கள் மக்களை தாமாகவே ஈர்த்துக்கொண்டது.
பன்மைப் பண்பாடுகளைக் கொண்ட நாடுகளில் இனப் பிரச்சினை, மொழிப்பிரச்சினை என்பன ஏற்பட்டுள்ளன. இதற்குப் பிரதான காரணம் பெரும்பான்மையின மக்களின் மனப்பாங்கு ஆகும். பேரினவாத சிந்தனைகளே இந்நாடுகளில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. இலங்கையில் இத்தகைய பிரச்சினைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு யாப்பில் சிறுபான்மை, இனங்கள், மொழிகளுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இனங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த மும்மொழிப் பயிற்சித் திட்டம், கலாசாரப் பரிவர்த்தனை, நல்லெண்ண விசயங்கள், கூட்டுக்கலைப் படைப்புக்கள், தொடர்பு சாதனங்களில் பண்பாட்டம்சங்களுக்கு இடம் ஒதுக்கப்படல் ஆகிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. பண்பாட்டுத் தனித்து வங்களைப் பேண தனித்தனி, சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களங்கள் பணியாற்றுகின்றன. தனித்துவப் பண்பாடுகளை மதிப்பதன் மூலமே பொதுப்பண்பாடும் புரிந்துணர்வும் பிறக்க வழியேற்படும்.
38 பூ. எல். அலியார்

9ே உலக புகைப்பாவனை தவிர்ப்பு தினம்
(World No Tobacco Day)
தினம் : மே 31
கருப்பொருள் :
புகைத்தலால் தமக்கும் பிறருக்கும் சமூகத்துக்கும் ஏற்படும் திங்கு களிலிந்து தவிர்ந்து கொள்ளல்.
பின்னணி :
உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரணையுடன் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் நாளொன்றுக்கு 750 பேர் புகையிலைப் பாவனையினால் மரணித்து வருகின்றார்கள். புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையாத பட்சத்தில் அடுத்த 3 தசாப்தங்களில் இறப்பு விகிதம் 10 மில்லியனாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. இதனால் இன்று வளர்ந்தோரிடையேயும் இளைஞர்களிடையேயும் புகைப்பாவனை தவிர்ப்பது வலியுறுத்தப்படுகின்றது.
விழிப்புணர்வு :
அமெரிக்க தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் பணிப்பாளர் வில்லியம் பொலின் கூறுவது சிந்திக்கத்தக்கது. "புகையிலை மதுவைவிட ஏன் ஹெறோயினை விடவும் பாவனையாளர்களை அதிகம் அடிமைப்படுத்தக் கூடியது. அடிமையானவர்களில் 60% - 90% வீதமானவர்கள் தம் பழக்கத்திலிருந்து மீட்சி பெற முடியாதவர்களாக உள்ளனர். சீனாவில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் பேர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர். ஓர் ஆண் வருடமொன்றுக்கு 1900 சிகரெட்டுக்கள் புகைக்கின்றார். புகையிலைக்கு அடிமையாவதற்கு அப்படி அதில் என்ன சுவை இருக்கின்றது என எண்ணும் போது இதில் அடங்கியுள்ள இரசாயனப் பதார்த்தம்தான் காரணம் என ஆய்வாளர் கூறுகின்றனர். புகையிலையில் "நிக்கோடின்" என்னும் நச்சுப் பொருளுடன் வேறும் 700 வகையான இரசாயனக் கூட்டுப்பொருட்கள் சேர்ந்துள்ளன என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் பல குழி தோண்டிப் புதைக்கக் கூடிய - மனித குலத்துக்கு பேராபத்தை
சர்வதேச நினைவு தினங்கள் 39

Page 26
ஏற்படுத்தககூடிய அதி சக்தி வாய்ந்த நச்சுப்பொருட்களாகும். இவற்றைத்தான் புகை அபிமானிகள் வாயினுள் உறுஞ்சி நெஞ்சார அனுபவிக்கின்றனர்.
சிகரட் புகை சாதாரணமாக எமது கண்ணுக்குப் புலப்பட்டாலும் அதில் 450 வகையான நச்சு மூலகங்கள் உள்ளன. குறிப்பாக அசிடோன், ஆர்ஸனிக், சையனைட், கார்பன் மோனோசைட், பியூட்டேன் போன்றவை பயங்கர உயிர் கொல்லிகள் ஆகும். இதனால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்பட்டு புற்றுநோய்களும் பிடிக்கின்றன. சர்வதேச மட்டத்தில் 20,000 கோடி அமெரிக்க டொலர், மக்கள் வாயில் சிகரட்டாக எரிக்கப்படுகின்றது.
உலக சுகாதார தாபனத்தின் அறிக்கைப்படி புகை சார்ந்த நோய்களால் ஒவ்வொரு நிமிடமும் 6 பேர் இறக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் பேர் மாள்கிறார்கள். இளம் வயதிலிருந்து புகைக்கும் பழக்கத்தைக் கொணடிருப்பவரின் ஆயுட்காலம் 8 - 10 வருடங்களால் குறைந்துவிடுகிறது. புள்ளி விபரங்களின் படி, அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஆண்களில் 50 வீதமும் பெண்களில் 8 வீதமும் புகைத்தலுக்கு அடிமைப்பட்டுள்ளனர். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் ஆண்களில் 41 வீதமும் பெண்களில் 21வீதமும் புகைத்தலுக்கு அடிமைப்பட்டுள்ளனர். கைத்தொழில் நாடுகளில் வருடாந்தம் 5 இலட்சம் பெண்களை புகைப்பழக்கம் கொன்று வருகின்றது.
புகைப்பழக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் புகைப்பவர்களைவிட பக்கத்தில் இருப்பவர்களே என்பது ஆய்வுகளின் முடிவாகும். உலக சுகாதார தாபனத்தின் அறிக்கைப்படி நுரையீரல் புற்றுநோய் 16% வீதத்தால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு புகைப்பிடிபவர்களிடத்திலன்றி பக்கத்தில் இருப்பவர்களிடமே ஏற்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய சிட்னி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியினால் மேற்கொள்ளப்பட்ட ஒர் ஆய்வு முடிவின்படி, புகைப்பழக்கமுடையவர்கள் முதுமைப் பருவத்தை அடையும்போது சிலருடைய பார்வை முழுமையாகவே இழக்கப்படுகிறது. மற்றும் சிலருடைய பார்வை குறைந்து விடுகிறது.
புகைத்தலுக்கு எதிராக நீண்டகாலமாக அறிவுறுத்தலும் பிரச்சாரமும் செய்யப்பட்டுவந்தபோதிலும் ஆக்கபூர்வமான பலன் ஏதும் ஏற்படவில்லை. சுகாதாரப்பகுதி புகைப்பாவனையால் வரும் தீங்குகளைப் பிரச்சாரம் செய்யும் அதே வேளை, புகையிலையும், மதுபானமும் அரசுக்கு வருமானம் ஈட்டித்தரும் துறைகளாக அமைந்தன. இந்த முரண்போக்கே இந்நிலை நீடிப்பதற்குக காரணமாக இருந்தது.
40 பூ. எல் அலியார்

மேலைத்தேயத்தவரால் அறிமுகம் செய்யப்பட்ட புகைப்பழக்கம், தமக்கு கெளரவத்தைத் தருவதாக மக்கள் கருதுகின்றனர். புகைப்பாவனையை விளம்பரங்கள் மூலம் ஊடகங்களும் ஊக்குவிக்கின்றன. கிரிக்கட் மைதானங்களையும் சிகரட் விளம்பரங்கள் அலங்கரிக்கின்றன. சில நாடுகள் இத்தகைய விளம்பரங்களைச் சட்ட பூர்வமாக தடுத்துள்ளன. 1988இல் பின்லாந்தும், 1994இல் பிரான்ஸம் மதுபான, புகைத்தல் விளம்பரங்களைக் கட்டுப்படுத்தின. ஐரோப்பிய யூனியன், நியூஸிலாந்து போன்றவையும் கட்டுப்படுத்தும் கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றன. இலங்கையில் 1998 ஜூன் மாதம் 23ம் திகதி நீதியமைச்சர், ஜனாதிபதி செயலணிக்குழு சிபார்சுப்படி, நாட்டில் மதுபான, சிகரட் பாவனையைக் குறைக்க உள்ளுர் சிகரட், மதுபானங்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்படும் எனவும், மதுபான, புகைத்தல் தொடர்பான எல்லா நேரடி மறைமுக விளம்பரங்களுக்கு தடைவிதிக்கப்படும் எனவும் அறிவித்தமை எமது கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய விடயமாகும்.
எவ்வாறிருந்த போதிலும் பாவனையாளர் தாமாகவே உணர்ந்து செயல்படுவதே வெற்றிக்கு வழிவகுக்கும்.
சர்வதேச நினைவு தினங்கள் 41

Page 27
(5) உலக சுற்றாடல் தினம்
(World Environment Day)
தினம் : ஜான் 05
கருப்பொருள் :
உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றாடல் பிரச்சினை களுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றாடல் பிரச்சினை களுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றாடலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்.
பின்னணி :
1972 இல் சுவீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற மனித குடியிருப்பும் சுற்றாடலும் என்ற வரலாற்றுட் புகழ்மிக்க உலக மாநாட்டில் சுற்றாடலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜூன் 5ம் திகதியை உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
விழிப்புணர்வு :
இயற்கை வளங்களான நீர் நிலை, காடுகள், வனாந்தரங்கள், வனசீவ ராசிகள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் இறைவனால் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்கள். மனித குலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு இந்த சுற்றாடலின் சமநிலையிலேயே தங்கியுள்ளது. இச்சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றாடலை மட்டுமன்றி. உயிரினங் களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது.
நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, கைத்தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றாடல் மாசடைகிறது. இரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் என்பவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங் களுக்கு ஆபத்தாக அமைகிறது. கொழும்பில் மட்டும் திண்மக்கழிவுகள் தினமும் 1000 தொன்கள் குடியிருப்புகளுக்கு அணி மையில் குவிக்கப்படுகின்றன.
சுற்றாடலை மனிதன் பாதுகாக்கவே கடமைப்பட்டவன். நினைத்தவாறு அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டவனல்லன், திட்டமிடப்படாத காடழிப்பு காரணமாக உலகின் வனப் போர்வை முற்றாக அழிந்துவிடும் ஆபத்து உள்ளது. உலகின் வெப்பவலயக் காடுகள் நிமிடத்திற்கு 1000
42. பூ. எல் அலியார்

ஏக்கர் என்ற வீதத்தில் அழிந்தவண்ணமிருக்கின்றன. இலங்கைக் காடுகளில் இன்று எஞ்சியுள்ளது 25 சதவீதமே. மனித அபிவிருத்திற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் இயற்கை வளங்களை மனிதன் திட்டமிட்டு பேண வேண்டிய பொறுப்புடையவன். சுற்றாடலும் அபிவிருத்தியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றன.
புவி வெப்பமடைந்து வருவதும் ஓசோன் படையில் ஒட்டை விழுந்துள்ளது என்ற தகவலும் சுற்றாடலின் சமநிலையில் ஏற்பட்ட பாரிய விளைவுகளாகும்.
உலகளாவிய ரீதியில் பல நிறுவனங்கள் சுற்றாடலைப் பாதுகாப்பதிலும் புவியைப் பேணுவதிலும் கவனம் செலுத்துகின்றன. 1972ல் ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற மனித சுற்றாடல் மாநாட்டின் பேறாக உருவாக்கப்பட்ட ஐ. நா. சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டம் (UNEP), ஐ. நா. நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் இணைந்து கற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக 1991 இல் 294 செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தியது.
இவற்றின் மூலம் ஆழல் தொடர்பாக சுவாத்திய மாற்றம், புவிக்கோளம் உஷணமடைதல், ஓசோன் படை பாதிப்பு, நன்னீா வளம், சமுத்திரம், கடற்கரைப் பிரதேசங்கள், காடழிப்பு, வனாந்தரமாக்கல், உயிரியல் மாறுபாடு, உயிரியல் தொழில்நுட்பம், சுகாதாரம், இரசாயன பாதுகாப்பு போன்றவை கவனம் செலுத்தப்பட்டன.
UNEP நிர்வாகப் பணிப்பாளர் கலாநிதி. முஸ்தபா கே. டொல்பா “அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதன் மூலம் இன்றைய வறுமை, சீரழிவு என்பவற்றை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவை லட்சக்கணக்கான மக்களின் சுற்றாடல் பாதிப்புற காரணமாக அமைகின்றன. எனவே மக்கள் தம் வாழ்க்கை முறையை அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப மாற்றியமைப்பது குறித்து சிந்திக்க வேண்டும்" என்றார்.
உலகளாவிய ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடுகளிலும், அபிவிருத்தி யடைந்துவரும் நாடுகளிலும் சுற்றாடல் பாதுகாப்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். ஆசிய நாடுகளில் மொத்த தேசிய உற்பத்தியில் 2 முதல் 3 சதவீதம் வரை சுற்றாடல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படுகின்றது. இலங்கையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை (CEA), இலங்கை விஞ்ஞான, கைத்தொழில் ஆராய்ச்சி நிறுவகம் (CISIR), தேசிய கட்டிட ஆய்வு அமைப்பு (NBRO), நகர்ப்புற சுற்றாடல் அபிவிருத்தித் திட்டம் (MEIP), ஐ. நாவின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) என்பன சுற்றாடல் தொடர்பாக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. தவிர அரச சார்பற்ற நிறுவனங்களும் மக்களிடையே சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஒத்துழைக்கின்றன. உலக சுற்றாடல் தினத்துடன் தேசிய மர நடுகை தினம், புவி தினம் போன்றனவும் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.
சர்வதேச நினைவு தினங்கள் 43

Page 28
9ே உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம்
(World Anti - Drugs Day)
தினம் : ஜான் 26
கருப்பொருள் :
போதைப் பொருட் பாவனையின் தீங்கிலிருந்து மக்களைப் பாதுகாத்தல்
பின்னணி :
போதைப் பொருட் பாவனை உலகை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகின்றது. இவற்றைப் பாவிப்பதனால் மக்கள் பல்வேறு பிணிகளுக்குட படுவதோடு பிறருக்கு தீங்கு விளைவிப்பவராகவும் மாறுகின்றனர். இன்று வர்த்தக ரீதியில் உலகெங்கும் போதைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அநேகமாக, சட்ட விரோதமான கடத்தல் போன்ற வழிகளிலேயே இவ்வர்த்தகம் நடைபெறுகின்றது. போதைப் பொருட் பாவனையால் ஏற்படும் தீங்குகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜூன் 26ம் திகதி சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு :
போதைப் பொருட்கள் பண்டைக்காலம் முதல் பாவனையில் இருந்து வந்துள்ளன. அபின், கஞ்சா, கள்ளு, சாராயம், கசிப்பு, பீடி, சிகரட், சுருட்டு என்பன மக்களால் பாவிக்கப்பட்டு வந்தன, அபின் ஒளஷதமாகவும் பாவிக்கப் பட்டது. பொதுவாக களியாட்ட காலங்களில் மக்கள் போதை தரும் பானவகைகளையும், புகையிலை வஸ்துக்களையும் பாவித்தனர். ஆனால் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அவை நவீன உருவிலும், இலகுவான தன்மையிலும் தயாரிக்கப்பட்டன. மிகச் சிறிய அளவு பாவிப்பதன் மூலம் அதிகளவு போதை தரக் கூடியதாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், இவை இலகுவாகக் கடத்தவும் பரிவர்த்தனை செய்யவும் வாய்ட்டாக அமைந்தன.
மேலை நாடுகளில் தயாரிக்கப்பட்ட ஹெறோயின், கொகேய்ன், கோடின், மோர்பீன், கனபிஸ், மர்ஜுவானா, ஹஸஸ் போன்ற நவீன போதைப் பொருட்களும் மற்றும் குளிசை வடிவத்தில் தயாரிக்கப்பட்ட எல். எஸ். டி. தூக்க மாத்திரை போன்ற வஸ்துக்களும் அதிமிகு போதையைத் தரும் மதுபானங்களும், சர்வதேச ரீதியில் பல நாடுகளுக்கும் கடத்தப்படுகின்றன. இதற்கான சர்வதேச கடத்தல் பாதைகளும் உள்ளன. சில நாடுகளின்
44 யூ. எல். அலியார்

பொருளாதாரம் போதைப்பொருள் வியாபாரத்திலேயே தங்கியுள்ளது. உதாரணமாக பெரு, வெனிசூலா, கொலம்பியா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளைக் குறிப்பிடலாம்.
ஊசி மூலம் போதைப் பொருளை உடலிற் செலுத்திக் கொள்ளும் பழக்கம், தீவிர பாவனையாளரிடையே உள்ளது. இதனால் இப்படிப்பட்டவர் களிடத்தில் எய்ட்ஸ் வைரசும் தொற்றிக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. அமெரிக்காவில் எய்ட்ஸ் நோயாளரின் 26% சதவீதமானோர் இத்தகையவர்களே என ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன.
1988 இல் ஐ. நா. சபையின் போதைப் பொருளுக்கெதிரான உலக மகாநாடு நடைபெற்றது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை என்பன நவீன போதைப் பொருட்கள் நாட்டினுட் பிரவேசிக்க வழிவகுத்தன. பயங்கரவாத இயக்கங்களின் பணம் ஈட்டலுக்கும் போதைப் பொருட் கடத்தல் பெருமளவு உதவியது. இலங்கையில் போதை வஸ்துக்கள் 1980களில் பரவ ஆரம்பித்தது. இலங்கையில் ஹெறோயின் விற்பனையாளர் முதன் முதலில் 1981 மே 26இல் 270 கிறாம் ஹெறோயினுடன் பேருவளையில் கைதுசெய்யப்பட்டார். போதைப் பொருட்களைப் பாலிப்பதற்கும், கடத்தல், வைத்திருத்தல் போன்றவற்றுக்கும் எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. அநேகமான நாடுகளில் இவற்றுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இளம் வயதினர் குறுக்கு வழியில் இன்பம் அனுபவிக்க போதைப் பொருட்களை உட்கொள்ளுகின்றனர். இலங்கையில் தற்போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் போதை வஸ்துக்கு அடிமையாக உள்ளனர். 1993 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பின்படி நாட்டில் 936 ஹெறோயின் பாவனையாளர்கள் இருந்தனர். போதைப் பொருள் பணியக (Narcotic Bureau) அறிக்கைப்படி, 1996 இல் 14787 பேர் போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டனர். 1991 - 1995க்கு இடைப்பட்ட காலத்தில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் அளவு பின்வருமாறு, கனபிஸ் 48610969 கிறாம், ஹஸிஸ் 91369 கிறாம், அபின் 12669கிறாம். ஹெறோயின் 5569 கிறாம், ஏனைய 44669 கிறாம்.
1984இல் தாபிக்கப்பட்ட போதைப் பொருள் கட்டுப்பாட்டுச் சபை போதைப் பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அக்கறையுடன் செயல்படுகிறது. நாட்டைக் குட்டிச் சுவராக்கி, குடும்ப வாழ்வைச் சீரழித்து நாட்டுக்குழைக்கக்கூடிய நல்லவர்களை நடைப்பிணமாக்கியுள்ள போதைப் பொருட்பாவனையை வேரோடுகளைய வேண்டும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வுமே இப்பாவனையை இல்லாதொழிக்கும்.
சர்வதேச நினைவு தினங்கள் 45

Page 29
(1) உலக வெகுசனத் தொடர்பு தினம்
(World Mass Communication Day)
தினம் : ஜூலை 01
கருப்பொருள் :
வெகுசனத் தொடர்பு உலக சமுதாயத்தை ஒன்றிணைக்கும்.
பின்னணி :
வெகுசனத் தொடர்பு தற்காலத்தில் வெகுவாக வளர்ந்துள்ள ஒரு துறையாகும். தொடர்பாடல் என்பது இன்றைய உலகின் தேவையுமாகும். மனிதன் தனித்து வாழ முடியாது. ஒருவரோடொருவர் கொண்டுள்ள தொடர்புகள்தாம் உலக மக்களிடையே புரிந்துணர்வையும் நல்லுறவையும் ஏற்படுத்தி முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். உலகம் ஓர் குலம் என்ற ஐ.நா.வின் உன்னத தத்துவத்தை உலக வெகுசன தொடர்பு திண்ம் பிரதிபலிக்கின்றது.
விழிப்புணர்வு :
வெகுசனத் தொடர்புகளை மேம்படுத்துவதில் வெகுசனத் தொடர்பு சாதனங்களுக்கு அதிகளவு பங்கு உள்ளது. 1960 களில் கனடாவைச் சேர்ந்த செய்தித் தொடர்பு பகுப்பாய்வு அறிஞர் மார்ஷல் மக்லூகன்,
"நிலவுலகம் ஒருராய் அமைந்திடல் வேண்டும். உலக மக்கள் ஒரு குடைக்கீழ் இணைந்திடவேண்டும். தொலைக்காட்சி கணநேரப் பொழுது தன்னில் தொலைதூரக் காட்சிகளைக் காட்டிட வேண்டும்." எனக் கனவு கண்டார்.
இன்று உலகின் மூலை முடுக்கெல்லாம் பட்டியிலும், தொட்டியிலும், மாடியிலும், குடிசையிலும், தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு நாட்டுப் பண்பாட்டுப் பெருமைகளையும் நிதர்சனமாகக் காண்பித்துக் கொண்டிருக்கின்றன.
உலக மக்களிடையே தொடர்புகளையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்தவும், மக்கள் உணர்வுகளையும் வாழ்க்கை முறைகளையும் தாம் அறிந்து கொள்ளவும்
46 யூ. எல். அலியார்

தமது பண்பாட்டுப் பெருமைகளையும் வாழ்க்கையையும் பிறர் புரியும்படி செய்யவும் தமக்கிடையே கருத்துப் பரிமாறவும் வெகுசனத் தொடர்பு சாதனங்கள் அல்லது ஊடகங்கள் பணியாற்றி வருகின்றன.
வெகுசன தொடர்பு ஊடகங்கள் பலவகைப்பட்டன. பொதுவாக இவற்றை இரு பிரதான பிரிவுகளாகப் பிரிப்பர். ஒன்று, அச்சு ஊடகங்கள். அதாவது பத்திரிகை, சஞ்சிகை, நூல்கள் போன்ற எழுத்துச் சாதனங்களை இது குறிக்கும். மற்றையது, இலத்திரனியல் அல்லது மின்னியல் ஊடகங்கள். இதில் வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி, கணணி, செய்மதி மூலம் பெற்றுக்கொள்ளப்படும் இன்டர்நெற் என்பவற்றை அடக்கலாம்.
நவீன விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் வெகுசன தொடர்பு ஊடகங்களின் பணியையும் மேம்படுத்தியுள்ளன. மக்களின் கலை, இலக்கிய, அரசியல், அறிவியல், பொருளாதார, தத்துவ, சமய உணர்வுகளைப் பிரதிபலிப்பதற்கு இவை துணைபுரிகின்றன. மேலும், தகவல், வழங்கல், செய்திப்பரிமாற்றம், கருத்துப் பரிமாற்றம், கல்வியூட்டல், களிப்பூட்டல், கலைவெளிப்பாடு, அறிவுரை வழங்கல், அறிவுறுத்தல், எச்சரிக்கை வழங்கல், ஆன்மாவுக்கு சாந்தியளித்தல், சிந்தனைக்கு விருந்தளித்தல், அமைதிக்கு உரமூட்டல் போன்ற பல பணிகளை இவை செய்து வருகின்றன.
தொலைக்காட்சி ஒளிபரப்பும் நாடகங்கள் வாயிலாக மனிதரின் வாழ்க்கை நிலையை உலகின் சகல மக்களும் கண்டு களித்து உணர்ந்து கொள்கிறார்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் - வறிய மக்களின் வாழ்க்கை நிலைமைகள் தத்ரூபமாக எடுத்துக் காட்டப்படுகின்றன. இதனால் அவர்கள் மீது பரிவு ஏற்படுகிறது. உலகப்பூசல்களைத் தீர்க்க ஒரே வழி புதிய செய்தித் தொடர்புத் தொழில் நுட்பந்தான் என மக்லூகன் போன்றோர் கருதுகின்றனர்.
தற்காலத்தில் தகவல் பிரவாகம் தொடர்பு ஊடகங்களின் செயற்பாட்டை அதிகரித்துள்ளது. உலகின் இருவேறு கோணங்களில் வாழும் மக்களின் உணர்வுகளை வெகுசன தொடர்பு ஊடகங்கள் ஒன்றிணைக்கின்றன. மேலும் பண்பாட்டுக் கலப்பு, பண்பாட்டுப் புரிந்துணர்வுகள் மூலம் மனிதாபிமானபி உணர்வுகளை மேம்படுத்துகின்றன.
வெகுசன தொடர்பு ஊடகங்கள் - குறிப்பாக தொலைக்காட்சி ஊடகம் உலகை மக்களின் ஒரே பார்வைக்குள் கொண்டு வந்துள்ளது எனலாம்Sெ கற்பனைக்கெட்டாத் தொலை தூரத்தில் நடைபெறுகின்ற நிகழ்வுளையுரிய
சர்வதேச நினைவு தினங்கள் 43。

Page 30
மக்கள் தமக்கெதிரில் கண்டுகளிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதிசயிக்கிறார்கள்; கண்களை அகல விரிக்கிறார்கள்; உணர்ச்சி பிறிட துள்ளிக் குதிக்கிறார்கள். தம் ஆழலை மறந்து மக்கள் தொலைக்காட்சிகளில் ஒன்றித்து விடுகிறார்கள், விண்வெளி வீரருடன் தாமும் விண்ணில் சஞ்சரிக்கிறார்கள், ஒலிம்பிக்கைக் கண்டு களிக்கிறார்கள், கிரிக்கட் அணியுடன் சேர்ந்து விளையாடுகிறார்கள், ஆபிரிக்கக் காட்டில் மிருகங்களைப் பார்த்து மெய்சிலிக்கிறார்கள், கடலடியில் சுழியோடி அற்புதங்களை ஆராய்கிறார்கள். இத்தகைய சக்தி வாய்ந்த வெகுசன தொடர்பு ஊடகங்கள் மனித மேம்பாட்டுக்காக பணியாற்றுவது மிக இன்றியமையாதது.
வெகுசன தொடர்பு ஊடகங்களின் சுதந்திரமான போக்கினால் அவை இன்று சனநாயக நலனுக்காக - மக்கள் நலனுக்காகப் பணியாற்றுகின்றன. மக்களின் பிரச்சினைகளும் அவர்தம் உணர்வுகளும் முன் வைக்கப்படுகின்றன.
மேற்கத்தைய நாடுகளில் நன்கு வளர்ச்சியடைந்த வெகுசனத் தொடர்புத் துறையின் செல்வாக்கு இலங்கை போன்ற 3ம் உலக நாடுகளின் போக்கிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. முன்பு மக்களை நோக்கிச் சென்ற தொடர்பு ஊடகங்கள் இக்காலத்தில் மக்களையே தொடர்பு ஊடகங்களுக்குள் கொண்டு வந்தமர்த்தியுள்ளன. சமூக நிகழ்ச்சிகள், நேரடி பங்குபற்றல் நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் பங்குபற்றலுக்கு அதிக இடம் ஒதுக்கப்படுகிறது. சமூக ஈடுபாடுகொண்ட இச்சாதனம் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துக்கள், காட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நல மேம்பாட்டுக்கும், நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் பணியாற்ற வேண்டும்.
இலங்கையில் வெகுசனத் தொடர்பு துறைக்கு தனியான அமைச்சு செயல்படுகின்றது. மக்கள் வெகுசனத் தொடர்பு ஊடகங்களுடன் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர்.
யுனெஸ்கோவின் 1962ம் ஆண்டின் அறிக்கைப்படி அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒவ்வொரு 100 குடியிருப்பாளருக்கும் 5 வானொலிப் பெட்டிகள், 2 சினிமா ஆசனங்கள், 10 பத்திரிகைப் பிரதிகள் என்பன பாவனையில் இருந்தன.
ஆயின் 1996 கணிப்பின்படி இலங்கையில் ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் 20 வானொலிப் பெட்டிகள், 14 சினிமா ஆசனங்கள், 57 தினசரிப் பத்திரிகைப் பிரதிகள், 49 தொலைக்காட்சிப் பெட்டிகள் என்பன பாவனையில் இருந்தன.
48 பூ. எல். அலியார்

மேலும் இலங்கையில் 190000 தொலை பேசி இணைப்புக்களும், 200 பேருக்கு 1.5 தொலைபேசிகளும் இருந்தன. சுமார் 1.5 மில்லியன் வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தன. 3.5 மில்லியன் வானொலிப் பெட்டிகள் இருந்தன.
தற்போது நாட்டில் பத்திரிகைகள் பெருகிவருவதோடு பத்திரிகை படிக்கும் பழக்கமும் பெருகி வருகின்றது. மும்மொழிகளிலும் தினசரி, வாராந்த, இருவார, மாதாந்த பத்திரிகைகள் வெளி வருகின்றன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், லக்ஹண்ட என்ற இரு அரச சார்பு வானொலி சேவைகளும் சிறச, எப்எம் 99, கபிடால், சவானா, ஏஸ்/எப்எம், ரிஎன்எல் ஆகிய தனியார் வானொலி நிலையங்களும் இயங்குகின்றன.
அதே போன்று ரூபவாஹினி, ஐரிஎன் ஆகிய இரு அரச சார்பு தொலைக் காட்சி சேவைகளுடன் டெல்சான், எம்ரிவி, சிறச, ஈரிவி, சுவர்ணவாஹினி, டைனாவிசன் முதலிய தனியார் தொலைக்காட்சி சேவைகளும் இயங்குகின்றன. விளம்பரத்துறை பொதுவாக தொடர்பு ஊடகங்களைப் போஷித்து வருகின்றன.
நாட்டின் வெகுசனத் தொடர்புத் துறை சார்ந்த சட்டங்கள் இவ்வூடகங்களைக் கட்டுப்படுத்தியுள்ள போதிலும், அவை ஓரளவு சதந்திரமாக செயற்படுகின்றன. அவற்றின் செயற்பாடு நாட்டின் நலன், மக்கள் நலன் என்பவற்றை கட்டியெழுப்ப பயன்படுமானால் வெகுசனத் தொடர்புத் துறைக்கு உயர்ந்த அந்தஸ்தினை வழங்கமுடியும்.
சர்வதேச நினைவு தினங்கள் 49

Page 31
(9 சர்வதேச கூட்டுறவு தினம்
(International Co-operative Day)
தினம் : ஜூலை 01
கருப்பொருள் :
கூட்டுறவே நாட்டுயர்வு.
பின்னணி :
கூட்டுறவுத் துறை நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. "கூடிவாழ்ந்தால் கோடி நன்மை" "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்ற பல முதுமொழிகள் கூட்டுறவின் தேவையை வலியுறுத்துவன. இன்றைய உலகின் சமூக, பொருளாதார மாற்றங்களுடன் கூட்டுறவின் தேவை நன்கு உணரப்பட்டுள்ளது. மக்களிடையே கூட்டுறவு, கூட்டுணர்வு, நாடுகளிடையே கூட்டுறவு என்ற எண்ணக்கருத்துக்கள் சர்வதேச மட்டத்தில் கூட்டுறவு தினத்தை நினைவு கூர வாய்ப்பளித்துள்ளன. சர்வதேச கூட்டுறவு மாநாடு இத்தினத்தை அனுஷ்டிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
விழிப்புணர்வு :
கூட்டுறவு இயக்கம் இக்காலத்தில் பலதுறைகளிலும் வியாபித்து நிற்கும் பயனுள்ள அமைப்பாகும். இந்த அமைப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாகி வளர்ந்து வந்துள்ளது. பிரான்ஸின் சமதர்மவாதி சார்ள்ஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த றொபர்ட் ஓவன் (1771 - 1858), டாக்டர் வில்லியம் கிங் போன்ற தன்னலமற்ற இலட்சியவாதிகளின் சிந்தனையில் முகிழ்த்த இத்தத்துவம், 1844 இல் றொக்டேல் நகர தொழிலாளர்களால் செயல்வடிவம் பெற்றது. இவர்கள் றொக்டேல் முன்னோடிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.
கூட்டுறவுத் தத்துவத்தின் பொது இயல்புகளாவன,
1. (88s bg.) Gauson siggb6) (Associated Action)
2. சகலருக்கும் பொதுவான தன்மை (Universality) 3. g56ipuff digsb5y 6 (5uL (Free Will of the individual)
50 யூ. எல். அலியார்

சமத்துவம் (Equality)
af6Orgb(Tuasib (Democracy)
சேவை நோக்கு (Service) g56flybut dig555gib (Individual Freedom) BG5606)ub &eps Eglutb (Equity and Social justice) sin (66007ff6! (Spirit of Solidarity) 10. Lig5u &epsis (grig5 (New Social Order) 1 1. LD6óîg5f6őT SÐbg56riogĝ60D607 Ldgjg56o(Rocognition of dignity of men) 12. Duff Qg585 floodó) (High moral standard)
இங்கிலாந்தில் நுகர்வோர் சங்கமாக உருவெடுத்த கூட்டுறவு அமைப்பு ஜேர்மனியில் கடன்பளுவைப் போக்கும் இயக்கமாக மாறி கடன் வழங்கும் சங்கங்களைத் தோற்றுவித்தது. இதே போன்று உலகின் பல நாடுகளிலும் அவ்வந்நாட்டுத் தேவைக்கேற்ப உருவாகின. இவ்வாறு சர்வதேச ரீதியில் உருவான சங்கங்களை தொடர்புபடுத்தும் அமைப்பாகவும் வளர்ச்சியின் சின்னமாகவும் 1895 இல் சர்வதேச கூட்டுறவு இணைப்பு நிறுவனம் உருவாக்கப் பட்டது. பல்வேறு நாடுகளினதும் தேசிய மட்டக் கூட்டுறவு நிறுவனங்களின் இணைப்பாக இது விளங்குகின்றது. இதன் தலைமையகம் லண்டனில் உள்ளது.
சர்வதேச கூட்டுறவு அமைப்புக்கள் எல்லாம் வானவில்லின் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலக யுத்தம் காரணமாக உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. நாடுகளின் உணவு உற்பத்தி, விநியோகம் என்பவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. பொருளாதார அமைப்பிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. மக்களின் வருமானம் அதிகரித்தது. இத்தகைய மாற்றங்கள் கூட்டுறவு அமைப்பிலும், சமூக பொருளாதார, கலாசார அமைப்புக்களிலும் மாற்றங்களைத் தோற்றுவித்தன. இதற்கமைய கூட்டுறவு கொள்கைகளும் மறு சீரமைக்கப்பட்டன. இதற்காக அமைக்கப்பட்ட குழுவின் சிபார்சுக்கமைய 1966 இல் அனைத்துலக கூட்டுறவு மகாநாட்டில் பின்வரும் ஆறு அம்சங்களும் கூட்டுறவுக் கொள்கைகளாக பிரகடனப்படுத்தப்பட்டன. 9606),
(அ) தன்விருப்புடனான தடையற்ற அங்கத்துவம். (ஆ) ஜனநாயக முறைக் கட்டுப்பாடும், நிர்வாகமும். (இ) முதலுக்கு ஏற்ற வட்டி வீதம். (ஈ) இலாபம் அங்கத்தவரிடையே சமமாகப் பங்கிடப்படல். (உ) கூட்டுறவுச் சங்கங்களுக்கிடையே பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியன.
சர்வதேச நினைவு தினங்கள் 51

Page 32
இலங்கை ஆங்கிலேயராட்சியில் இருந்த வேளை கிராமிய விவசாயம் புறக்கணிக்கப்பட்டது. பெருந்தோட்டச் செய்கையில் கவனம் செலுத்தப்பட்டது. அதற்காக கிராமிய விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டன. இயற்கையின் வரட்சி கிராமிய விவசாயிகளைப் பெருமளவு பாதித்து அவர்களை வறுமைக்குட்படுத்தியது. இதனால் அவர்கள் வட்டிக்குப் பணம் வழங்கும் முதலாளிகளிடம் தஞ்சமடைந்தனர். இந்நிலையில் விவசாயிகள் கூட்டுறவுப் பண்புகளையுடைய சங்கங்களை அமைத்து செயல்பட்டபோதும் அதற்கு சட்டவரையறை இன்மையால் அவை நிலைத்து நிற்கவில்லை.
எனினும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசு கிராமிய விவசாயிகளின் கடன் தொல்லையிலிருந்து நிவாரணமளிக்கும் வகையில் 1908 இல் கூட்டுறவுச் சங்கங்களை அமைக்க முற்பட்டது. 1911ம் ஆண்டின் 7ம் இலக்க கட்டளைச் சட்டம், கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்க அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது சட்டமாகும்.
ஆரம்பத்தில் நாணய சங்கங்களே பதியப்பட்டன. 1913/14ம் ஆண்டில் 35ஆக இருந்த சங்கங்கள் 1920/21 இல் 154 ஆகவும் உறுப்பினர் தொகை முறையே 1820 லிருந்து 17876 ஆகவும் அதிகரித்தது. 1921ம் ஆண்டின் 35ம் இலக்க சட்டத்திருத்தத்தின்படி ஏனைய வகைச் சங்கங்களும் பதிவு செய்ய வகை செய்யப்பட்டன. இதனால் நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாய உற்பத்தி விற்பனைச் சங்கங்கள் என்பன பதிவு செய்யப்பட்டன. 1939 இல் இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு பங்கீட்டு அடிப்படையில் உணவு விநியோகிக்கும் பொறுப்பு கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல் உத்தரவாத விலைத்திட்டம், நெற்களஞ்சியங்கள் என்பன நடைமுறைப்படுத்தப் பட்டன. 1942 - 45க் கிடையில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட நுகர்வோர் சங்கங்கள் இருந்தன. 1946 இலிருந்து கூட்டுறவு விளைபொருள் உற்பத்தி விற்பனை சங்கங்கள் பதியப்பட்டன. 1949ம் ஆண்டின் 21ம் இலக்க சட்டத் திருத்தத்தின் மூலம் நாணய உதவி வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
குடிசைக் கைத்தொழில்களிலும் பாரம்பரிய சீவனோபாய தொழில்களிலும் ஈடுபட்டவருக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன. (உ + ம்)
கூட்டுறவுப் பாற்பண்ணை சங்கங்கள். கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள். தெங்கு உற்பத்தி விற்பனை கூட்டுறவு சங்கங்கள்.
52 பூ. எல். அலியார்

நெசவுத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள். தும்புத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள். தச்சுத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள். செங்கல், ஒடு உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள். அச்சிடுவோர் கூட்டுறவு சங்கங்கள். பாதரட்சை செய்வோர் கூட்டுறவு சங்கங்கள். புகையிலை பயிரிடுவோர் கூட்டுறவு சங்கங்கள் போன்றன.
1957 இலிருந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தாபிக்கப்பட்டன. 1958 முடிவில் இலங்கையில் இயங்கிய பல வகைக் கூட்டுறவுச் சங்கத்தினது எண்ணிக்கை 12852 ஆகும். இவற்றைத் தவிர இரண்டாம்படிச் சங்கங்களாக கூட்டுறவுச் சமாசங்களும் இயங்கின. தற்போது கூட்டுறவுச் சங்கங்கள் பல்வேறு சேவை தொழிற்துறையினரிடையேயும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. சிக்கன கடனுதவிச் சங்கங்களும் (சணச) விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
1995ம் ஆண்டு புள்ளிவபரப்படி இலங்கையில் இயங்கிய சகல கூட்டுறவுச் சங்கங்களினதும் தொகை 24766 ஆகும். இரண்டாம்படிச் சங்கங்களின் தொகை 200 ஆகும். கூட்டுறவுக்கடன் வழங்கும் சங்கங்கள் மூலம் வழங்கப் பட்ட கடன்களின் தொகை 1996 இல் 1635 மில்லியன் ரூபாவாகும்.
கூட்டுறவுச் சங்கங்களை வழிநடத்தியோரால் அவ்வப்போது ஏற்பட்ட ஊழல், மோசடி, இழிசெயல்கள் என்பன பொதுமக்களிடையே அது பற்றிய தவறான பதிவுகளை ஏற்படுத்தியுள்ளமை துரதிர்ஷ்டமே, நேர்மையும் பொதுநல நோக்கும் சேவை மனப்பான்மையுமிக்க இயக்குநர்களின் கைகளில் அவை நன்கு சேவையாற்றுகின்றன. இக்காலத்தில் பாடசாலை மாணவரிடையே கூட்டுறவுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாடசாலைக் கூட்டுறவுச் சங்கங்கள் அவர்களுக்கு கூட்டுறவு பற்றிய புரிந்துணர்வையும் பயிற்சியையும் வழங்கி வருகின்றன.
மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூட்டுறவுத் துறை ஆற்றும் பணி மகத்தானது. கூட்டுறவே நாட்டுயர்வு என்பது பரீட்சார்த்தமாக கண்டறியப்பட்டது. தனியொருவர் பெற்றுக்கொள்ள முடியாதவற்றை பலர் இணைந்த கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் இலகுவில் சாதித்துக்கொள்ள முடிகிறது. மக்களிடையே ஐக்கிய உணர்வு மிகப்பலம் வாய்ந்தது என்பதை கூட்டுறவு எண்ணக்கரு புலப்படுத்துகிறது.
சர்வதேச நினைவு தினங்கள் 53

Page 33
(19 உலக சனத்தொகை தினம்
(World Population Day)
தினம் : ஜூலை 11
கருப்பொருள் :
சனத்தொகைப் பெருக்கம், அபிவிருத்தியிலும் சுற்றாடலிலும் ஏற்படுத்தும் தாக்கமும், இளம் சந்ததியின் இனப்பெருக்க சுகாதாரம், உரிமைகள் என்பன பேணப்படலும்.
பின்னணி :
உலக சனத்தொகை மகாநாடுகள் முறையே புகாரெஸ்ட் (1974), மெக்ஸிக்கோ (1984), கெய்ரோ (1994) நகரங்களில் கூடின. இருந்தபோதிலும், உலக சனத்தொகை பற்றிய காத்திரமான உணர்வு 1987 லேயே ஏற்பட்டது. இவ்வாண்டில் உலக சனத்தெகை 500 கோடியைத் தாண்டியது. இதனால் வரும் பாதிப்புக்களைக் கருத்திற்கொண்டு 1988 இல் ஐ நா வின் சனத்தொகை நிதியம் (UNFPA), ஜூலை 11ம் திகதியை உலக சனத்தொகை தினமாகப் பிரகடனப்படுத்தியது.
விழிப்புணர்வு :
1987 இன் நடுப்பகுதியில் உலக சனத்தொகை 585 கோடியாக அமையும் என மதிப்பிடப்பட்டது. சனத்தொகை வளர்ச்சி விகிதம் தற்போது 11.5 வீதமாகவே உள்ளது. ஒரு நாட்டின் சனத்தொக்ை கொள்கையானது சனத்தொகை அதிகரிப்பு சம்பந்தமான செயற்பாடுகளில் கவனம் செலுத்துகின்றது.
சனத்தொகை கொள்கை, நாட்டின் சனத்தொகை வளர்ச்சி வேகத்தைப் பொறுத்தும், பொருளாதார நிலைமை, இயற்கை என்பவற்றைப் பொறுத்தும் அமைவதாகும். அதிகரித்து வரும் சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதையே சனத்தொகைக் கொள்கை இதுவரை குறிக்கோளாகக் கொண்டிருந்தது.
சனத்தொகை நடவடிக்கைகளில் முன்னர் குடும்பத்திட்டம் இடம்பெற்றது போல தற்போது இனப்பெருக்க சுகாதாரம், தாய் சேய் நலன் பேணல் போன்றவை இடம்பெறுகின்றன.
54 այ. 676ծ. Ց/6փայոմ

1994 இல் கெய்ரோ சுகாதார மகாநாடு, 1995 பெய்ஜிங் மகளிர் மகாநாடு 1995 கொப்பனேகன் சமூக நலன் மகாநாடு என்பவற்றில் இனப்பெருக்க சுகாதாரத்தின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டது.
இனப்பெருக்க சுகாதாரம் சமூக நன்மைகளுக்கு இன்றியமையாதது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. இனப்பெருக்க சுகாதாரம் பற்றி ஆண், பெண் இளைஞர்களுக்குக் கல்வியூட்டல் (பாலியல் கல்வி) காலத்தின் தேவையாக உள்ளது. சமுதாயத்தில் புரையோடியுள்ள பிரச்சினைகளான கன்னித்தாய்மார், கர்ப்பச்சிதைவு, பாலியல் துஷபிரயோகம், HIV/AIDS அச்சுறுத்தல் என்பவற்றிலிருந்து இளைய தலைமுறையினரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு சனத்தொகைக் கொள்கையில் அழுத்தம்
கொடுக்கப்பட்டுள்ளது.
15 - 24 வயதுக்கிடைப்பட்டோர் உலகில் 100 கோடிக்கு மேல் வாழ்கின்றனர். தாம்பத்திய வாழ்க்கை, ஆரோக்கியமான குடும்பம், பிரசவம், பிள்ளை வளர்ப்பு போன்ற விடயங்களில் இளைஞர்களுக்குப் போதிய விளக்கத்தை வழங்கவேண்டும். HIV பீடிக்கப்பட்டோரில் அரைப்பங்கிலும் அதிகமானோர் இளைஞர்கள் என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
இலங்கையின் சனத்தொகைக் கட்டமைப்பை நோக்கும்போதும் இளைஞர் கள் கணிசமான தொகையினர் என்பது குறிப்பிடத்தக்கது. 1981ன் சனத் தொகைக் கணக்கெடுப்பின்படி 19 வயதுக்குக் கீழ்ப்பட்ட சனத்தொகை மொத்த சனத்தொகையின் 46 வீதமாகும். சுமார் 7 சதவீதமானோர் 60 வயதுக்குக் கூடியோராவர். இவர்களில் பெரும்பகுதியினர் தங்கி வாழ்வோராவர். இலங்கையின் சனத்தொகையில் பெண்களின் பங்களிப்பும் முக்கியமானது. 20 - 60 வயதுக்குமிடைப்பட்ட சனத்தொகையில் பெண்களின் விகிதாசாரம் ஆண்களைவிட சற்றுக் கூடியதாகும். இந்நிலை கல்வி, சுகாதாரம், தொழில் வாய்ப்பு, குடும்ப வாழ்க்கை எனப் பல்வேறு துறைகளிலும் சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இத்தகைய பிரச்சினைகள் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அளவான குடும்பம் ஆரோக்கியமான குடும்பம் என்ற எண்ணக் கருக்கள் எமது நாட்டிற்கும் உகந்தது என்ற நிலை ஏற்பட்டு வருகிறது.
சர்வதேச நினைவு தினங்கள் 55.

Page 34
2ே0 மூன்றாம் உலக தகவல் தினம்
(Third World Information Day)
தினம் : செப்டம்பர் 12
கருப்பொருள் :
மூன்றாம் உலகத் தகவல் முறைமை பல்துறை அபிவிருத்திக்கும் அடிப்படையாகும்.
பின்னணி :
1976 இல் கென்யாவின் தலைநகரான நைரோபியில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் தகவல் தொடர்புகள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது. தகவல் தொடர்பு சாதனங்கள் யார் கையில் உள்ளன? தகவல் எங்கிருந்து பெறப்படுகின்றன? செய்திகள் யாருக்காக தயாரிக்கப்படுகின்றன? யார் அவற்றை நுகர்கின்றனர்? என்ற விடயங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீண்ட காலமாக தகவல் வழங்கல் என்பது ஒருவழித்தொடர்பாக மூன்றாம் உலக நாடுகளை நுகர்வோர் நிலையிலேயே வைத்து வந்துள்ளது. 1973 இல் அல்ஜியர்ஸில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டுப் பரிந்துரைகளும் 1976 கொழும்பு மாநாட்டுப் பரிந்துரைகளும் மூன்றாம் உலக நாடுகளில் புதிய தகவல் ஒழுங்கு முறையை உருவாக்கவும் வலுப்படுத்தவும் முனைப்பாக அமைந்தன. இந்தப் பின்னணியில் யுனெஸ்கோ நிறுவனம் மூன்றாம் உலக நாடுகளின் தகவல் பரிமாற்றத்தை ஒழுங்கமைப்பதில் தன் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியது. இதன் முக்கியத்துவத்தை உணர்த்த தகவல் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
விழிப்புணர்வு :
தகவல் என்பது தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் ஒரு சக்தியாகக் கருதப்படுகின்றது. இங்கு இருவித ஆற்றல்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை தொழில்நுட்ப ஆற்றல், அரசியல் ஆற்றல் என்பன. இன்று பொதுவாக தகவல் தொடர்பு துறையில் (பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், நூல் வெளியீடு முதலியன) மேற்கத்தைய நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் அவை தயாரிக்கும் செய்திகளே தகவல்களாக அமைகின்றன.
56 யூ. எல். அலியார்

பொருளாதார வளர்ச்சியில் பண்டங்கள் முக்கியத்துவம் பெறுவதைப் போல பண்பாட்டு வளர்ச்சியில் தகவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தகவல்களைத் தயாரிப்பதிலும், விநியோகிப்பதிலும் எத்தகைய பங்கும் வளர்முக நாடுகளுக்குக் கிடைப்பதில்லை. பெரும்பாலும் ஒரு வழிப்பாதையாக அனுப்பட்படும் செய்திகளே வளர்முக நாடுகளின் தகவல்களாக அமைகின்றன. மேற்கத்தைய நாடுகள் தயாரிக்கும் செய்திப் பண்டங்களை நுகர்வோராக மட்டுமே மூன்றாம் உலக மக்கள் அமைகின்றனர். -
மேற்கத்தைய நாடுகளின் செய்தி - தகவல் நிறுவனங்கள் மூன்றாம் உலக நாடுகளின் நலன்களை வேண்டுமென்றே புறக்கணித்தும் செய்திகளைத் திரித்தும் கூறி வந்தன. குறிப்பாக 3ம் உலக நாடுகளின் பண்பாட்டுக்கு முற்றிலும் மாற்றமாக செய்திகளைத் திரித்தும், புனைந்தும் கூறிவந்தன. இந்நிலை 1970இன் பின்னர் மாற்றமடைந்து வருகின்றது.
யுனெஸ்கோ, எழுத்துச் சுதந்திரம், செய்திச் சுதந்திரம்' என வெறுமனே பேசிக் கொண்டிராமல் செய்தி தொடர்பில் பங்கு கொள்ளவும் சமச்சீரான தகவல் பரிமாற்றம் நடைபெறவும் சகல நாடுகளுக்கும் வலியுறுத்தியது.
இந்த முனைப்புக்களின் அடிப்படையில் 1975 இல் யூகோஸ்லாவியாவின் செய்தி நிறுவனமான டான்ஜுக் செய்திகளைச் சேகரித்து அணிசேரா நாடுகளிடையே பரப்பும் பணியை ஆரம்பித்தது. அதேபோன்று 1976 ஜனவரி 1 முதல் கரிபியன் நாடுகளுக்கான CANA செய்தி நிறுவனம் சுதந்திர நிறுவனமாக மாறி பணியாற்றத் தொடங்கியது.
எனினும் இன்னும் உலகின் தகவல் தொடர்பு வழங்கல் பெரும்பாலும் வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகளின் கட்டுப்பாட்டிலும், செல்வாக் கிலுமேயே இருக்கின்றன. உதாரணமாக உலகளாவிய விற்பனையுடைய TIME, News Week போன்ற பத்திரிகைகளும் பல நாடுகளில் உலக GSF figs60615 505tb CNN, BBC (8 JT66p fol6 Triassbib INTERNET (UTsip தொலைத்தொடர்பு அமைப்பு ஊடகங்களும் ஒரு சில மேற்கத்தைய நாடுகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இவற்றின் தகவல்களும், செய்தி உட்பொருட்களும் வளர்ச்சியடைந்த மேற்கத்தைய பண்பாடு, சிந்தனை செல்வாக்குள்ள நாடுகளில் தயார் செய்யப்படுகின்றன. இவை, மூன்றாம் உலக நாடுகளின் செய்திப் போக்கையும், பண்பாட்டு நெறிகளையும், எண்ணங்களையும், உளப்பாங்குகளையும் பாதிப்பனவாக உள்ளன. மேலும் மேற்கத்தைய செய்திகள் அந்நாடுகளைப் பற்றி 3ம் உலக நாடுகள் நல்லபிப்பிராயம் கொள்ளக்கூடிய விதத்தில் செய்திகளைத் தயாரிக்கின்றன.
சர்வதேச நினைவு தினங்கள் 57

Page 35
உலகில் இன்று கிடைக்கின்ற செய்திகளில் 80 சதவீதம் மேற்கத்தைய நாடுகளிலிருந்தே கிடைக்கின்றன. 10 - 30 சதவீதமான செய்திகளே வளர்முக நாடுகள் பற்றிய செய்திகளாக உள்ளன. எமக்குச் செய்திகளை வழங்கும் செய்தி நிறுவனங்களான ராய்ட்டர் (பிரித்தானியா) AP, UP (அமெரிக்கா), AFP (பிரான்ஸ்) மேற்கத்தைய நாடுகளுக்குச் சொந்தமானவையாகும். இக்காலத்தில் சின்ஹவா (பீகிங்), TASS (ரஷ்யா) KOYOTO (ஜப்பான்), PT (இந்தியா) என்பனவும் சர்வதேச செய்திகளை வழங்குகின்றன.
இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் பெறும் தகவல் பெரிதும் மேற்கத்தைய செல்வாக்குடைய செய்திகளாகவே அமைந்துள்ளன. ‘லங்காபுவத்' நிறுவனம் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பதாகவே வெளிநாட்டு செய்தி முகவர்கள் குறிப்பிட்ட செய்தியை வெளியிட்டு தம்முடைய செல்வாக்கை பலப்படுத்தி வருகின்றனர்.
தற்போது புதிய தகவல் ஒழுங்கு முறைக்கு 3ம் உலக நாடுகள் தம்மைத் தயார்ப்படுத்த வேண்டியுள்ளது. மேற்கத்தைய பிரதான செய்தி தொடர்பு சாதனங்கள் தயாரித்து வழங்கும் செய்திகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் அந்நாடுகளின் வர்த்தக நலன்களையும், தேசிய, அரசியல், பண்பாட்டு கண்ணோட்டங்களையுமே பிரதிபலிக்கின்றமையால் 3ம் உலகின் உண்மைத் தேவைகளை அவை புறக்கணிக்கின்றன. பழைய குடியேற்றவாத காலத்திய துயர நினைவுகளின் எச்ச சொச்சங்களாக மின்னியக்க தொடர்பு சாதனங்களின் செல்வாக்கு இந்நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது.
எனவே 3ம் உலக நாடுகள் தமக்கிடையில் தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளவும், மேற்கத்தைய தகவல் திரிபுகளிலிருந்தும், பண்பாட்டுச் சிதைவுகளிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், மனித நல மேம்பாட்டுக்காக தகவல் தொடர்புகளை ஆக்கிக் கொள்ளவும் உலக செய்தித் தொடர்பு வாய்ப்புக்களையிழந்துள்ள வறிய நாடுகளுக்கு வாய்ப்புக்களை வழங்கவும் முனைப்புடன் செயலாற்றவேண்டும்.
58 44ا. எல். அலியார்

2ே0 உலக சமாதான தினம்
(World Peace Day)
தினம் : செப்டம்பர் 18
கருப்பொருள் :
உலக சமாதானம் மனித உள்ளத்திலிருந்து பிறக்க வேண்டும்.
பின்னணி :
உலகின் சகல முன்னேற்றத்துக்கும் அடிப்படையானது சமாதானம். உலக வரலாற்றில் பல போர்கள் நடைபெற்றுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக யுத்தங்கள் பல கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் பலிகொண்டது. 2ஆம் உலக யுத்தத்தின் பின் உலக சமாதானத்துக்காக 1945 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் தாபனம் உலக நாடுகளிடையே ஏற்பட்ட பூசல்களையும் போர்களையும் தடுக்க கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் துப்பாக்கிகளுக்கு ஒய்வு கொடுக்க முடியவில்லை. இதனால் உலகில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பாரிய பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. உலக சமாதான முயற்சியொன்றின்போது ஐ.நா.வின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தமை (1961) வரலாற்றுச் சுவடாகும். அவர் உயிர் துறந்த செப்டம்பர் 18ஆம் நாள் உலக சமாதான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு :
யுனெஸ்கோவின் முகவுரை வாசகம், "மனித உள்ளங்களில்தான் போர் தோன்றுவதால் மனித உள்ளங்களில்தான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப்பெறல் வேண்டும்" என்பதாகும். விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன், "படைகொண்டு அமைதி ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால்தான் அதனைப் பெற முடியும்” என்றார். இந்நோக்கத்தில் யுனெஸ்கோவின் பொறுப்பும், பணியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதன் யாப்பு 1வது உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. "உலக மக்களுக்காக இனம், பால், மொழி அல்லது சமய பேதமின்றி ஐ. நா. சாசனத்தில் உறுதி செய்யப்படுகிற நீதிக்கும் சட்ட ஆட்சிக்கும் மனித உரிமைகளுக்கும், அடிப்படைச் சுதந்திரங்களுக்கும்,
சர்வதேச நினைவு தினங்கள் 59

Page 36
உலகளாவிய நன்மதிப்பினை வளர்ப்பதற்கென கல்வி, அறிவியல், பண்பாடு மூலமாக நாடுகளிடையே ஒத்துழைப்பினை மேம்படுத்தி சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் பாடுபடுவதே இந்த அமையத்தின் நோக்கமாகும்." அதாவது யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல், பண்பாட்டு தொடர்புகளின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொதுநலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா. அமையமும், ஐ.நா. சாசனமும் இக்குறிக்கோள்களின் பேரிலேயே நிறுவப்பெற்றுள்ளன.
மனித உரிமைகள், கடமைகள் அனைத்தும் செயற்படுத்துவதற்கு இன்றியமையாது தேவைப்படுவது நிலையான சமாதானமாகும். அதாவது குடிமக்கள் அனைவரும் முதன்மை பெறும் - ஒருங்கிணைந்து வாழும் இன்ப துன்பங்களைத் தம்மிடையே பகிர்ந்து கொள்ளும் . சுதந்திரமான, நியாயமான, சட்ட ஆட்சியுடைய சமத்துவம், ஒருமைப்பாடு என்பது தான் சமாதானம் ஆகும். சமாதானம், மேம்பாடு, சனநாயகம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று உறுதுணை புரியும் முக்கோணமாகும். அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நாடுகளுக் கிடையேயும் நாடுகளுக்குள்ளேயும் போரும் பூசலும் தாண்டவமாடிவந்துள்ளன. ஐ. நா. நிறுவப்பட்டு 3 ஆண்டுகளுக்குள்ளேயே 1948இல் பெர்ளின் முற்றுகை, 1950இல் வட - தென் கொறியப் போரும் சீனாவின் தலையீடும், பலஸ்தீனப் பிரச்சினையும் தொடர்ந்து எகிப்து - இஸ்ரவேல் போர்களும், 1960இல் கொங்கோ நெருக்கடி, 1962இல் கியூபா - அமெரிக்க நெருக்கடி, 1970, 1980 களில் ஈரான் - ஈராக் மோதல்கள் (1991 வரை) காஷ்மீர் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் மோதல்கள் (1965லிருந்து), 1991 - 1995 வரை யூகோஸ்லாவிய போர்கள், 1979 ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவ தலையீடு, ஈராக் - குவைத் வளைகுடா யுத்தங்கள், கம்போடியா, ருவண்டா, சோமாலியா, லைபீரியா இராணுவ மோதல்கள், இனப்படுகொலைகள் என இவ்வாறு உலக நெருக்கடிகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.
இத்தகைய நெருக்கடிகளின் போதெல்லாம் ஐ. நா. அமையம் அதன் அமைதி பேணும் நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளது. அதன் அமைதிப் படைகளும் சமாதானத்துக்கான ஒப்பந்தங்களும் போரின் உக்கிரங்களைத் தடுத்து வந்துள்ளன. போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தடுக்கவும் (1968 ஜூலை 1) ஆயுதக் குறைப்புக்களை உறுதிப்படுத்தவும் (1978, 1982, 1988) ஒப்பந்தங்கள் ஏற்படுத்தட்பட்டன. 1993 ஜனவரி 13இல் பரிஸ் மகாநாட்டில் இரசாயன ஆயுதங்களைத் தடைசெய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
60 யூ. எல். அலியார்

ஐ. நா. பொன்விழாக்கண்ட 1995ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது. பிறரைப் புரிந்து கொள்வதே சமாதானத்தின் அடிப்படையாகும் என்பது இதன் மூலம் வலியுறுத்தப்பட்டது. "நான்தான் அந்த பிற மனிதன்" என்ற உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் வறுமை, புறக்கணிப்பு, ஒதுக்கல், மனக்கசப்பு, பகைமை போன்ற விகாரங்களை முளையிலேயே கிள்ளி எறிய முடியும் என்பதும் உணர்த்தப்பட்டது.
உலகளாவிய பூசல்களின் ஆணிவேர்களைக் கண்டறிய வேண்டும். உலகெங்கும் வன்முறையையும், கொடுமைகளையும் களைவதற்கு சமுதாயம் முழுவதும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இது தனியே அரசினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பு மட்டுமன்று. குடியியல், இராணுவ சமய அமைப்புக்களின் கூட்டு மொத்தமான செயற்பாடாக அமைய வேண்டும். நாடுகளின் பாதுகாப்பு அல்லது போர் நடவடிக்கைக்கான அமைச்சுக்கள் எல்லாம் படிப்படியாக சமாதான அமைச்சுக்களாக மாறவேண்டும்.
தற்போது உலகில் சமாதானத்துக்கான நாட்டம் ஏற்பட்டு வருகின்றது. போரில் ஈடுபட்டுள்ள தரப்பினரிடையே சிந்தனைத் தெளிவு, சமாதான வேட்கை என்பன ஏற்பட்டுள்ளன. இது சமாதானம் நிலை பெறுவதற்கான நல்ல அறிகுறியாகும். எல் சல்வடோர், நமீபியா, மொசாம்பிக், அங்கோலா, தென் ஆபிரிக்கா, குவாதமாலா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஏற்பட்டுள்ள சமாதான உடன்படிக்கைகள் குறிப்பிடத்தக்கன.
சமாதானம் கோட்பாடு மட்டுமல்ல; அது செயற்பாடு. செயல்பட்டால்தான் சமாதானம் அர்த்தமுள்ளதாகும். அறிஞர் கார்லோஸ் பியூண்டஸ் கூறுவது போல “சமாதானம் என்பது மாறுபாடுகளின் சேர்க்கை. கலாசாரங்களின் இனக் கலப்பு. அது அருவக்கோட்பாடு அல்ல. மாறாக, பண்பாட்டு அரசியல் சமூக, பொருளாதார சூழல்களில் ஆழ வேரூன்றிய ஒன்றாகும்.”
இன்று தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விரல் நுனியின் சிறு அசைவினால் எண்ணற்ற தகவல்களைப் பெற்று பெருமிதம் அடைகிறோம். ஆனால் இந்த முன்னேற்றம் கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைப் பலிகொண்டு அப்பாவி மக்களின் வாழ்வை அழித்தொழிக்கும் போர்களுக்கு மாற்றிடாக அமையவில்லை. போரின் சொல்லொணாத் துரங்களை வீடு வீடாகக் கொண்டு செல்லும் ஒலி, ஒளி ஊடகங்களால் போரின் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் உணர்வினை சமாதான உணர்வாக மாற்ற முடியுமானால் அது உலகளாவிய கிராமத்தின் (Global Village) fas 2 66 g5 &ng sporurias groupub.
சர்வதேச நினைவு தினங்கள் 6

Page 37
இலங்கை போன்ற 3ம் உலக நாடுகளே போரின் கொடுமையால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாகும். இந்தியாவில் 11 - 05 - 1998லும் 13 - 05 - 1998லும் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுதப் பரிசோதனைகளும் இரு வாரங்களில் தொடர்ந்து பாகிஸ்தானால் மேற்கொள்ளப்பட்ட அணுப் பரிசோதனைகளும் ஆசிய நாடுகளின் சமாதானத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்தவையாகும்.
இலங்கையில் நீண்ட காலமாக தெற்கில் வாழும் பெரும்பான்மைச் சமூகத்துக்கும் வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கு மிடையில் வளர்ந்து வந்த மனக்கசப்பு பின்னர் அரசுக்கும் சிறுபான்மை மக்களின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு விடுதலை இயக்கத்துக்கும் இடையே பெரும் (தொடர்) போராக மாறியது. இதன் விளைவாக நாட்டு மக்கள் அனைவரும் துன்பத்துக்குள்ளாகினர். உயிரிழந்து, வீடிழந்து, சொத்திழந்து, அகதிகளாகவும், அனாதைகளாகவும் புலம்பெயர்ந்து வாழவழியின்றி நிர்க்கதிக்குள்ளாகிய மக்கள் எண்ணிலடங்காதோர்.
ஆயுதப் போரை நிறுத்தி அரசியல் தீர்வு காணவேண்டும் என மக்கள் அங்கலாய்த்துள்ள போதிலும் போரும் சமாதான முயற்சிகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. அரசு, தான் சமாதானத்துக்காகவே போர் செய்வதாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 1998 மே மாத முற்பகுதியில் ஐ. நா. சபையின் விசேட பிரதிநிதி ஒலாறா ஒட்டுணு, இலங்கையின் உள்நாட்டுப் போரில் சிறுவர்களும், மாணவர்களும் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த மேற்கொண்ட நல்லெண்ண விஜயம், இலங்கையில் நிரந்தர சமாதானம் ஒன்று ஏற்படுவது குறித்து ஐ. நா.வின் விசேட கவனத்தை ஈர்க்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
62 այ. 676ծ, -9,6մարմ

929 சர்வதேச எழுத்தறிவு தினம்
(International Literacy Day)
தினம் : செப்டம்பர் 22
கருப்பொருள் :
எழுத்தறிவு சர்வதேச அபிவிருத்தியின் அடித்தளம்.
பின்னணி :
எழுத்தறிவு மனித முன்னேற்றத்துக்கு மிக அவசியமானது. உலகின் பல நாடுகளிலும் எழுத்தறிவின்மை பெருகி வருவது குறித்து யுனெஸ்கோ அதிக அக்கறையெடுத்து வந்துள்ளது. ஒருபுறம் மக்கள் எழுத்தறிவு வாய்ப்புக்கள் இல்லாது காணப்படுகின்றனர்; மறுபுறம் பல்வேறு காரணங்களால் மக்கள் கூட்டம் எழுத்தறிவு பெறுவதில் அக்கறையின்றியுள்ளனர். மக்கள் எழுத்தறிவு பெறுவது அடிப்படை மனித உரிமையாகும். மேலும் அது சக்தி வாய்ந்தது. அரசியலில் பங்கேற்பதற்கும் சனநாயகத்தில் ஈடுபாடு கொள்வதற்கும் அது அத்தியாவசியமாகும். எழுத்தறிவும் மக்களாட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது. இதனாலேயே சர்வதேச கல்வி மாநாடுகளிளெல்லாம் எழுத்தறிவூட்டலுக்கு கரிசனை காட்டப்பட்டது. 1980 செப்டம்பரில் பெல்கிறேட்டில் நடந்த யுனெஸ்கோ 21வது மகாநாட்டில் எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டது. எழுத்தறிவு நடவடிக்கைகளில் மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டவேண்டும் என்பதற்காக யுனெஸ்கோ செப்டம்பர் 22ம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. 1990இல் சர்வதேச எழுத்தறிவு ஆண்டு அனுஷ்டிக்கப்பட்டது.
விழிப்புணர்வு :
யுனெஸ்கோவின் 10வது பொதுப் பேரவைக் கூட்டத்தில் எழுத்தறி வற்றோர் யார் என்பது பற்றி விளக்கம் கூறப்பட்டது.
"ஆள் எவரும் தமது அன்றாட வாழ்வு தொடர்பான உண்மைகள் பற்றிய சுருக்கமான, எளிய உரையினைப் புரிந்து கொள்ளவும், எழுதவும், படிக்கவும்
சர்வதேச நினைவு தினங்கள் 63

Page 38
இயலாதவராக இருக்கின்றார் என்றால் அவர் எழுத்தறிவில்லாதவர் ஆவார். இதன்படி தான் சார்ந்திருக்கும் குழுவினரின் மற்றும் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் வாசிப்பு, எழுத்து, கணித அறிவையும் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அவரை இயல்விப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதிருக்கிற நபர் செயல்முறையில் எழுத்தறிவற்றவர் ஆவார்."
பெரும்பாலான நாடுகளில் எழுத்தறிவற்றவர் விகிதம் பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது. எழுத்தறிவு என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. உதாரணமாக பிரித்தானியாவில் 9 வயதுக் குழந்தையின் கல்வி மட்டத்துக்கும் குறைவானர்கள் எழுத்தறிவற்றவர்கள். கியூபெக்கில் 5ஆம் வகுப்புக்குக் குறைவாகப் படித்தவர்கள் எழுத்தறிவற்றவர்கள்.
அமெரிக்காவில் 1970இல் 16 வயதுக்கு மேற்பட்ட 185 கோடி மக்கள் செயன்முறை எழுத்தறிவில்லாதவர்களாக இருந்தனர். அங்கு செயன்முறை எழுத்தறிவு இல்லாதவர்களாகக் கருதப்படுபவர்கள். தினசரியைப் படிக்கவும், அதன் உள்ளடக்கம் பற்றிய வினாக்களுக்கு விடையளிக்கவும், தொலைபேசித் தகவல் தொகுப்பை பயன்படுத்தவும், வேலை விண்ணப்பங்கள், சமூகப் பாதுகாப்பு விண்ணப்பங்கள், வங்கி கணக்குப் படிவங்கள் ஆகிவற்றை சரியாக நிரப்பவும், காசோலை எழுதவும், பஸ் நேர அட்டவணையைப் படித்துப் புரிந்து கொள்ளவும் முடியாதவர்கள் ஆவார்.
1980இல் உலகில் 82.4 கோடி மக்கள் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர். இத்தொகை வயதுவந்தோரில் 29 சதவீதமாகும். அண்மைக்கால கணக்கெடுப்பின்படி 94.8 கோடி வயதுவந்தவர் உலகில் எழுத்தறிவற்றவராக உள்ளனர். எழுத்தறிவற்றோர் தொகை ஒப்பீட்டளவில் 3ஆம் உலக நாடுகளில் அதிகமாகும். சுமார் 80 சதவீதமான மக்கள் எழுத்தறிவற்றவர்களாவர்.
எழுத்தறிவின்மைக்குப் பல காரணங்கள் அடிப்படையானவை. அவை, மக்கள் தொகைப் பெருக்கம், அதனால் குறைந்த வாழ்க்கை வசதிகள், கல்வியில் அக்கறையின்மை, சிறுவர் பள்ளி செல்லாமை, இடைவிலகல், போர்ச் ஆழல், வறுமை, அகதி முகாம் வாழ்க்கை, நாடோடி வாழ்க்கை முதலியனவாகும். 90 கோடி மக்கள் எழுத்தறிவற்றவராக இருக்க 43 பேருக்கு 1 இராணுவ வீரர் என்ற அடிப்படையில் பாதுகாப்பு, போர் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
1984 - 89ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுனெஸ்கோவின் கருப்பொருள் அனைவருக்கும் கல்வி (Education for Al) என்பதாகும் 1995இல் தாய்லாந்தில் சகலருக்கும் கல்வி மாநாடு நடைபெற்றது. இதன் அடிப்படையில் உலகில்
64 யூ. எல். அலியார்

எழுத்தறிவின்மையை ஒழிக்க உலக வங்கி, யுனெஸ்கோ, ஐ.நா. அபிவிருத்தித்திட்டம், யுனிசெப் போன்ற உலகளாவிய அமைப்புக்கள் எழுத்தறிவுத் திட்டங்களை அதிகளவில் வளர்முக நாடுகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றன. இத்திட்டங்களில்
(அ) அனைவருக்கும் ஆரம்பக்கல்வி - கட்டாயக்கல்வி,
(ஆ) முதியோர் கல்வி,
(இ) முறைசாராக் கல்வித்திட்டத்தின் கீழ் தொழிற்திறன் பயிற்சி
வழங்கல், அதாவது செயன்முறை எழுத்தறிவு வழங்கல்,
(ஈ) எழுத்தறிவு இயக்கத்தை வலுப்படுத்தல் போன்றவை முக்கியமான
வையாகும
இதற்காக பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எழுத்தறிவின்மை, 3ஆம உலகை மட்டுமன்றி 4ஆம் உலகையும் பாதித்துள்ளது. அதாவது கைத்தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளின் தொழிலாளர் குடியிருப்புக்களில் எழுத்தறிவின்மை நிலவுகின்றது. அமெரிக்காவில் 19.1 கோடி வயது வந்தோருள் 47 சதவீதத்தினருக்கு எழுதப்படிக்க கணக்கிடுவதில் குறைந்த தரமே காணப்படுகிறது. கைத்தொழில் நகரங்களையண்மிய தொழிலாளர் குடியிருப்புக்களில் இந்நிலை காணப்படுகிறது. உலகில் எழுத்தறிவற்றோர் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியா, பங்களாதேஷ், எகிப்து போன்ற நாடுகளில் காணப்படுகின்றனர்.
இலங்கை 3ம் உலக நாடாக இருந்தபோதிலும். எழுத்தறிவு வீதம் ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் திருப்தியாக காணப்படுகிறது. (1992 - 89%) எனினும் எழுத்தறிவற்றவர் பற்றிய உண்மையான புள்ளி விபரங்கள் எழுத்தறிவுத் திட்டங்களை ஊக்குவித்துள்ளன. இன்று பள்ளிசெல்லா 5 - 14 வயதுக்குட்பட்ட சிறுவர் விபரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. மக்களுக்கான எழுத்தறிவு, தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புக்கள் என்பன முறைசாராக் கல்வித்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றன. m
எழுத்தறிவு என்பது ஒரு தனிமனித தேவை மட்டுமன்று. அது வளர்முக நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார, தொழில்நுட்ப விடுதலைக்கும் அத்திவாரமாகும். பண்பாட்டு உறுதிக்கும் அடிப்படையாகும். எழுத்தறிவு திறனைப் பெறுவதால் மட்டுமே ஒருவன் தனது பண்பாட்டின் முழு செயல்திறன் மிக்க உறுப்பினனாக முடியும். (UP(9 வளர்ச்சி பெற்ற குடிமகனாக முடியும்.
எனவே எழுத்தறிவின்மையை ஒழித்தல் சர்வதேச சமுதாயத்தின் தார்மீகக் &BLULTG5b.
சர்வதேச நினைவு தினங்கள் 65

Page 39
(2B) உலக சுற்றுலா தினம்
(World Tourism Day)
தினம் : செப்டம்பர் 27
கருப்பொருள் :
சுற்றுலா மூலம் பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச புரிந்துணர்வு, சமாதானம், சுபீட்சம் என்பவற்றை அடைதலும், எவ்வித பாகுபாடுமின்றி சகலரும் மனித உரிமைகளையும், அடிப்படைச் சுதந்திரங்களையும் அனுபவிக்கவும், மதிக்கவும் உதவுதலும், இவற்றினுடாக சுற்றாடலைப் பாதுகாத்தலும், தொழில்வாய்ப்பை உருவாக்குதலும் ஆகும்.
பின்னணி :
சுற்றுலாத் துறையில் ஈடுபாடு கொண்ட உலகின் 51 நாடுகள் சுற்றுலா அமைப்புக்களின் சர்வதேச சம்மேளனத்தில் (UOTO) 1925 இல் இணைந்து கொண்டன. பின்னர் இந்த அமைப்பு, ஐ.நா.வின் கீழ் இயங்கும் ஒர் அதிகார பூர்வமான அமைப்பாக உலகச் ༄། iறுலா தாபனத்தை (WTO) தாபித்துக் கொண்டது. இத்தாபனத்தை அமைப்பதிற்கான யாப்பு 1970 செப்டம்பர் 27ஆம் திகதி மெக்ஸிக்கோ நகரில் கூடிய IUONO நிருவாகக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. WTOவின் பொதுச்சபை செப்டம்பர் 27ம் திகதியை உலக சுற்றாடல் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொண்டது.
உலக சுற்றுலா தினம், சமூக, கலாசார, கல்வி, அரசியல், பொருளாதார வலுவாக அமைந்துள்ள சுற்றுலாத் துறையின் முக்கியத்துவத்தை சிந்திக்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.
விழிப்புணர்வு :
சுற்றுலாத்துறை உலக நாடுகளிடையே வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு துறையாக மட்டுமல்லாது கலாசார அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை நாடுகளிடையே வளர்க்கும் ஒரு துறையாகவும் வளர்ந்து வருகிறது. WTO வின் அறிக்கைப்படி 1950 இலிருந்து சர்வதேச சுற்றுப் பயணிகள் வருகையால் வருடாந்தம் 72 சதவீதம் உலக சுற்றுலாத்துறை வளர்ந்துள்ளது. மேலும் அடுத்த 2 தசாப்தங்களில் சுற்றலா நடவடிக்கைகள் இருமடங்காகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
66 யூ. எல். அலியார்

இலங்கை சுற்றுலாத் துறையில் 3 தசாப்தங்களை நிறைவு செய்துள்ளது. இக்காலப் பகுதியில் பல சவால்களுக்கு அது முகங்கொடுத்துள்ளது. 1982இல் 407000 பேர் வருகை தந்தனர். 83 ஜூலை கலவரம் அடுத்த வருடங்களில் பயணிகள் வருகையைக் குறைத்தது. 1994இல் 407,511 பேர் வருகை தந்தனர். பின்னர் மீண்டும் வீழ்ச்சியடைந்தது.
சுற்றுலாத்துறை பல அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாத்துறை நாட்டில் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் கைத்தொழில் உபசாரகர், வழிகாட்டிகள் தொழிற்பயிற்சி என்பனவற்றின் மூலம் பலர் தொழில்வாய்ப்பைப் பெற்றுள்ளனர். போக்கு வரத்துத் துறையும் விருத்தியடைந்துள்ளது.
ஆசியாவில் சுற்றுலாத் துறையின் பொருளாதார விளைவு பற்றிய IDRC அறிக்கையின்படி (1983) இலங்கையில் நேரடியாக சுற்றுலாத்துறையில் தொழில்வாய்ப்புப் பெறும் ஒருவர் மற்றும் 14 பேருக்கு மறைமுகமான தொழில்வாய்ப்பை ஏற்படுத்துகின்றார். 1996இல் இலங்கையில் 31963 பேர் நேரடியாகவும் 44748 பேர் மறைமுகமாகவும் தொழில்வாய்ப்புப் பெற்றனர்.
சுற்றுலாத்துறை வருமானத்தை ஈட்டித்தரும் அதேவேளை சுற்றாடலுக்கு அது அச்சுறுத்தலாகவும் அமைகிறது. சுற்றுலாவுக்கு அடிப்படையானது. சுற்றாடலாகும். திட்டமில்லாத, கட்டுப்பாடில்லாத சுற்றுலா, சுற்றாடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை வனப்பு, காடுகள், வனாந்தரம், வன ஜீவராசிகள், பறவைகள், கடற்கரைகள், சுண்ணக்கற்பாறைகள் (Corals), பளிங்குப் பாறைகள் (Crystals) மலைத்தொடர், நீர்வீழ்ச்சி, மாணிக்கம், தோட்டங்கள், பூஞ்சோலைகள், அழிபாடுகள் (Ruins) என்பன பிரதான சுற்றுலாச் சொத்துக்கள் ஆகும்.
ஹோட்டல் கழிவுகள், நீர்மாசடைதல், சட்டவிரோத குடிசைகளும், விடுதிகளும், சுண்ணக்கற்பாறை அகழ்வு போன்றன சுற்றாடலைப் பாதிக்கின்றன. இதைவிட மறைமுகமாக சுற்றுலாத் துறையுடன் சங்கமித்துள்ள பாலியல் சுற்றுலா, கடற்கரைச் சிறுவர்கள், போதைவஸ்து பாவனையும கடத்தலும், அந்நியரின் அரைநிர்வாணப்பவனி, கசினோ ஆதாட்டம் என்பன பெளதீகச் சுற்றாடலை மட்டுமன்றி பண்பாட்டுச் சூழலையும் சீரழிக்கின்றன.
இவை குறித்து அரச கட்டுப்பாடுகளும், சமூக விழிப்புணர்வும் மிக அவசியமாகும்.
சர்வதேச நினைவு தினங்கள் 67

Page 40
629 சர்வதேச முதியோர் தினம்
(International Day for the Elderly)
தினம் : ஒக்டோபர் 01
கருப்பொருள் :
முதியோரின் துயரங்கள் மீது உலகின் கவனத்தை ஈர்ப்பதும் அவர்கள் மறக்கப்பட வேண்டியவர்களோ இழிவாக நோக்கப்பட வேண்டியவர்களோ அல்லர் என்பதை உறுதிப்படுத்துவதும்.
பின்னணி :
ஐ. நா. தாபனம் இத்தினத்தை முதியோர் தினமாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. சர்வதேச ரீதியில் முதியோர் படும் அவஸ்தைகளைக் கருத்திற்கொண்டு இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அவர்கள் உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதுகாக்கப்படுவதன் தேவையை உணர்த்துவதையே இத்தினம் குறிக்கின்றது.
விழிப்புணர்வு :
உலகில் குறிப்பாக ஆசிய, பசுபிக் பிராந்திய நாடுகளில் அண்மைக்காலமாக அதிகரித்துக்கொண்டு வரும் முதியோர் சனத்தொகை அவர்களின் நலன்கள் பற்றிய விடயத்தில் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. மொத்த சனத்தொகையில் 10 சதவீதமானேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோராவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமை நிலையிலும் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் வாழ்பவராவர்.
பாரம்பரிய விரிவடைந்த குடும்ப அமைப்பில் முதியோர் தம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்போரின் அரவணைப்பில் மிகக் கெளரவமாக நடாத்தப்பட்டனர். ஆனால், நவீன, விஞ்ஞான, தொழில்நுட்ப, பண்பாட்டு மாற்றங்களால் அவர்கள்மீது கவனிப்பும், அனுதாபமும் குறைந்துள்ளது. தற்போதைய குறுகிய குடும்ப அமைப்பு முறையில் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகளில் பிளவுபட்ட குடும்பங்களில் பெற்றார் - பிள்ளை உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கீழைத்தேய
68 யூ. எல். அலியார்

பாரம்பரிய பெற்றார் - பிள்ளை உறவிலிருந்து அவை வேறுபட்டவை. உதாரணமாக அங்கெல்லாம் பிள்ளைகள் ஆரம்ப வயதிலிருந்தே சுதந்திரமாக நடந்துகொள்வதற்கு கற்பிக்கப்படுகின்றனர். பிறந்த குழந்தை பெற்றோரிட மிருந்து தனிமைப்படுத்தப்படுகின்றது. புட்டிப்பால் ஊட்டப்படுகின்றது. 18 வயதானதும் அவர்கள், பெற்றாரிலிருந்து பிரிந்து தனி வாழ்க்கை நடத்துகின்றனர்.
வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் பெற்றார் தினத்தில் அவர்கள் தாய் தந்தையர் வீட்டைப் பரிசுப்பொருட்களோடு தரிசிக்கின்றனர். தம் கல்விச் செலவையும் தாமே உழைத்துத் தேடிக் கொள்கின்றனர். இது மேற்கத்தைய வாழ்க்கை முறை. கிழக்கு நாடுகளில் இன்னும் பாரம்பரிய குடும்ப உறவுகள் முற்றாக மடிந்துவிடவில்லை. முதியோர்களைக் குடும்பத்தினரே கவனிக்க வேண்டும் என்ற பண்பாட்டு மரபு உள்ளது. இந்த மரபுதான் இன்று அருகி வருகிறது. மேற்கு நாடுகளைப்போல முதியோர்க்கு அரசின் சமூகப் பாதுகாப்பு உத்தரவாதம் இங்கு இல்லை. இதனால் முதியோர் பல்வேறு அவஸ்த்ைகளுக்குள்ளாகின்றனர்.
குடும்பத்தில் பிள்ளையின் படிப்பு, எதிர்காலச் சேமிப்பு, வாழ்க்கைச் செலவு என தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் பெற்றார் தம்முடைய முதியோர்களைக் கவனிக்க முடியாதவர்களாக உள்ளனர். இன்று இன, மத, மொழி பேதமற்ற நிலையில் முதியோரைப் பராமரிக்க வேண்டிய கடமைப்பாட்டை சமூகம் உணர்ந்துள்ளது. இதற்காக அரசாங்க நிறுவனங்கள் மட்டுமன்றி அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்னின்றுழைக்கின்றன. Helpage Sri Lanka என்பது முக்கிய அரச சார்பற்ற நிறுவனமாகும். இது ஏனைய சமூக சேவை நிறுவனங்களுடனிணைந்து முதியோர் இல்லங்கள், முதியோர் நிலையங்கள், சமூக நிகழ்ச்சித் திட்டங்கள் என்பனவற்றை நடாத்தி வருகின்றது.
1997இன் கணிப்பின்படி 100 உழைக்கும் மக்களில் 9 முதியோர் தங்கி வாழ்கின்றனர். இன்னும் 20 வருடங்களில் இத்தொகை 18 ஆகும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனவே முதியோர் நலனில் அக்கறை கொண்டு செயற்படுவது எமக்கு நாமே செய்துகெள்ளும் முன்னேற்பாடாகும்.
சர்வதேச நினைவு தினங்கள் 69

Page 41
2ே5) சர்வதேச சிறுவர் தினம்
(Universal Childrens' Day)
தினம் : ஒக்டோபர் 01
கருப்பொருள் :
சிறுவர் நலவுரிமைகள் பேணப்படவேண்டும்.
பின்னணி :
விஞ்ஞான, தொழில்நுட்ப மாற்றங்கள், வாழ்க்கை வசதிகளில் ஏற்பட்ட அபிவிருத்தி, கைத்தொழில் பெருக்கம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நகரமயமாக்கம் போன்ற பல காரணங்களால் சிறுவர் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க நேரிட்டது. எனவே சிறுவர் மீது மக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 1952இல் அரச சார்பற்ற நிறுவனமான சர்வதேச சிறுவர் நலனுக்கான சங்கத்தால் (UCW) சிறுவர் தினம் முன்மொழியப்பட்டது. 1953 ஒக்டோபர் 1ம் திகதி முதலாவது சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. 40 நாடுகள் இதில் பங்குபற்றின. 1954இல் ஐ. நா. பொதுச்சபையின் தீர்மானப்படி சர்வதேச சிறுவர் தினத்தை அமுல் நடத்தும் பொறுப்பு UNICEF இடம் ஒப்படைக்கப்பட்டது. UNICEF, UNESCO, SAVE THE CHILD (ELT66's 96OLD ListB6i U6) Gyuis’ LIBIB606T முன்வைத்துச் செயற்படுகின்றன. ஐநா வின் சிறுவர் சாசனத்தை அடியொற்றிய இலங்கை சிறுவர் சாசனம் 5 - 7 - 1992இல் அங்கீகரிக்கப்பட்டது.
விழிப்புணர்வு :
உலக சனத்தொகையில் கணிசமான தொகையினர் சிறுவராவார். இலங்கை சனத்தொகைழ் புள்ளிவிபரங்களின்படி 1995 இல் 27.7 சதவீதம் சிறுவராவார். சிறுவர் என்பது இலங்கை சிறுவர் சாசனப்படி 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவராவர். 1939 இன் சிறுவர், இளைஞர் கட்டளைச் சட்டம் சிறுவர் 14 வயதுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும், இளைஞர் 14 - 16 என்றும் வரையறுத்துள்ளது. 1989 இன் வயது வந்தவர் திருத்த சட்டத்தின்படி சிறுவர் 18 வயதுக்குக் கீழ்பட்டவராவர். பொதுவாக 14 வயதுவரை என ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
70 பூ. எல். அலியார்

இன்று உலகின் பல பாகங்களிலும் சிறுவர் எத்தகைய பாதிப்புக்கு உட்படுகின்றனர் என்பதை வெகுசன ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. அவர்கள் குறைந்த சம்பளத்தில் கடின வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். வீட்டு எஜமானிகளின் தண்டனைகள், நெருப்பினால் சூடு, உணவின்றிப் பட்டினி போடல், வீட்டைவிட்டுத் துரத்தல் போன்ற கொடுர செயல்களால் சிறுவர்கள் தெருவில் அலைகிறார்கள்; பிச்சை எடுக்கிறார்கள்.
UNICEF இன் அண்மைக் கால அறிக்கைகளின் படி (1996) உலகில் 14 வயதுக்குக் கீழ் 250 மில்லியன் சிறுவர் கடின உழைப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியாவில் மட்டும் 60 - 115 இலட்சம் சிறுவர் வேலை செய்கின்றனர்.
14 வயதுக்குக் கீழ் சிறுவரை வேலைக்கமர்த்தலுக்கு எதிராக இலங்கையில் பல சட்டங்கள் இருந்த போதிலும், 10 இலட்சம் சிறுவர், உழைப்பில் ஈடுபடுத்தப் படுகின்றனர். 1 இலட்சம் சிறுவர் தெருவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர். ஒடுக்கப்படுவதன் காரணமாக இளங் குற்றவாளிகளாகவும் மாறுகிறார்கள். சுமார் 5 இலட்சம் சிறுவர் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவரை இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதும் உலகளாவிய ரீதியில் காணப்படும் அம்சமாகும். சிறுவரை ஆயுதப் போரில் ஈடுபடுத்துவது தொடர்பான ஐ.நா. வின் விஷேட பிரதிநிதி அலுவலகம் விடுத்துள்ள தகவலின்படி, கடந்த 10 வருடத்தில் மட்டும் 20 இலட்சம் சிறுவர்கள் போர் நடவடிக்கைகளால் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 250,000 சிறுவர் உலகின் பல பாகங்களிலும் நடைபெறும் யுத்தங்களில் இளம் போர் வீரர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12 மில்லியன் சிறுவர் வீடிழந்து நிர்க்கதியாகியுள்ளனர். சிறுவரை ஆயுதப்போரில் ஈடுபடுத்துவதை நிறுத்துவது தொடர்பாக ఖ விஷேட பிரதிநிதி ஒலாறா ஒட்டுணு 1998 முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இராணுவத்திற் சேர்ப்பதனை ஒரு போர்க் குற்றமாக கருத வேண்டும் என்று UNICEF ஆலோசனை கூறியுள்ளது.
மறுபுறம் சிறுவர், பாலியல் துஷபிரயோகங்களுக்கும் உட்படுத்தப் படுகிறார்கள். கடற்கரைச் சிறுவர் என்ற பெயரில் இவர்கள் அந்நிய உல்லாசப் பயணிகளுக்கு விற்கப்படுகிறார்கள்.
சர்வதேச நினைவு தினங்கள் 71

Page 42
UNICEF இன் கணிப்பீட்டின்படி 14 வயதுக்குக் கீழ்ப்பட்ட சுமார் 30000 சிறுவர் கடற்கரைப் பிரதேசங்களில் தன்னினச் சேர்க்கைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1970களின் பின் சுற்றுலாத்துறை அபிவிருத்தியுடன் இந் நடவடிக்கைகள் பெருகி வந்துள்ளன. தாய்லாந்தில் 2 இலட்சம் சிறுவர்களும், பிலிப்பைன்சில் 20000 சிறுவர்களும் பாலியல் துஷபிரயோ கத்துக்குப் பயன்படுகின்றனர். சிறுவர் பாலியல் நடத்தைகள் AIDS என்னும் கொடிய நோய்ப் பரம்பலுக்கும் காரணமாக அமைகிறது.
விரிவான குடும்ப அமைப்புள்ள ஆசிய நாடுகளில்கூட அதாவது பெற்றாரின் கண்காணிப்பில் பிள்ளைகள் வாழுகின்ற போதிலும்கூட சிறுவர் துஷபிரயோகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இன்று சிறுவர் பல அச்சுறுத்தல்களையும் அபாயங்களையும் எதிர்நோக்கியுள்ளனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன.
ஐ. நா. பொதுச் சபையில் 1989இல் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைச் சாசனத்தின்படி அது, குல, நிற, பால், மொழி, சமய, அரசியல், தேசீயம், சமூகம், செல்வம், இயலாமை என்ற எவ்வித வேறுபாடுமின்றி 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களின் உரிமைகளுக்கு உறுதியளிக்கின்றது.
இலங்கையில் ஆயிரக்கணக்கான சிறுவர் பாலியல் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சுரண்டப்படுகின்றனர். இத்கைய இழிநிலையிலிருந்து, எமது சிறாரைப் பாதுகாக்க வேண்டும். அது எமது கடமையுமாகும்.
72 u. 676ð. Systutt

26) உலக குடியிருப்பு தினம்
(World Habitat Day)
தினம் : ஒக்டோபர் 06
கருப் பொருள் :
உலகில் வாழும் அனைவருக்கும் குடியிருப்பு வசதிகளை வழங்குதல்.
பின்னணி :
மனித குடியிருப்பு குறித்த ஐ.நா. மகாநாடு முதலில் கனடாவில் வான்கூவரில் 1976இல் நடைபெற்றது. ஐ.நா. பொதுச் சபை 1985இல் மனித குடியிருப்பு ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் பிரதி வருடமும் ஒக்டோபர் முதற் திங்கட் கிழமையை உலக குடியிருப்பு தினமாக பிரகடனம் செய்தது. இதன்படி முதலாவது குடியிருப்பு தினம் 1986இல் அனுஷ்டிக்கப் பட்டது. இது வான்கூவர் மாநாட்டின் 10வது ஆண்டு நிறைவினையும் குறித்தது. மனித குடியிருப்பு குறித்த இரண்டாவது மாநாடு துருக்கி - ஸ்தான்புலில் நடைபெற்றது.
விழிப்புணர்வு :
மனித நாகரீகத்தின் பிறப்பிடமே குடியிருப்புக்களாகும். நதிக் கரைகளில் உருவான குடியிருப்புக்களே உலக நாகரிகங்களைத் தோற்றுவித்தன என்பது வரலாற்று உண்மை. குடியிருப்பு மனித வாழ்க்கைக்கு அவசியமானது. குடியிருப்பு என்பது வீடு, சுகாதார வசதி, குடிநீர் வசதி, வடிகாலமைப்பு, பொதுவசதிகள், வீதிப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு, நல்ல சுற்றாடல், சமூக கட்டமைப்பு ஆகிய அனைத்தையும் கொண்ட ஒரு தொகுதியினைக் குறிக்கும். இதற்கு அமைவாகவே எதிர்கால குடியிருப்புக்களும் நகரங்களும் அமையவேண்டும் என்பதை 1997இல் ஐ.நா. தம் இலட்சியமாகக் கொண்டிருந்தது. 2000 ஆண்டில் சகலருக்கும் குடியிருப்பு (Year 2000 Shelter for All) 676tugs agblf.66it 36) du LDT.g5ub.
மூன்றாம் உலக நாடுகளில் சனத்தொகை விரைவாக அதிகரித்துச் செல்லும் அளவு குடியிருப்பு வசதிகள் பெருகவில்லை. சுகாதார வசதிகளும் போதியதாக இல்லை. உலகெங்கும் நகர மயமாக்கல் வேகமாக நடைபெற்றுக்
சர்வதேச நினைவு தினங்கள் 73

Page 43
கொண்டிருக்கிறது. எனவே, மிக அவதானமாக திட்டமிட்டு செயலாற்ற வேண்டும் என்பதில் ஐநாவின் மனித குடியிருப்பு ஆணைக்குழு அக்கறையாக உள்ளது.
1997ஆம் ஆண்டுக் கணிப்பின்படி வீடற்றோரின் எண்ணிக்கை சுமார் 100 கோடியைத் தாண்டியுள்ளது. இவர்கள் சுத்தமான குடிநீர் வசதி, மின்சார வசதி, சுகாதார வசதி ஏதுமின்றி உயிர் வாழ்கிறார்கள். நகரவாசிகளிலும் 40 சதவீதமானோருக்கு சுத்தமான நீர், பொதுவசதிகள் என்பன கிடைப்பதில்லை. இன்று உலக சனத்தொகையில் அரைப்பங்கினர் நகரங்களிலேயே வாழ்கின்றனர். 2025இல் உலக சனத்தொகையில் 2/3 பங்கினர் நகரங்களில் தான் வாழ்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் நகர்ப்புறங்களில் வாழ்பவர் எண்ணிக்கை தினமும் 140,000 பேர் என்ற விகிதத்தில் அதிகரித்து வருகின்றது. உலகின் நகரங்களில் வாராந்தம் 10 லட்சம் பேர் அதிகரிக்கின்றனர்.
குடியிருப்பு நகரமயமாக்கல் என்பவற்றோடு இணைந்ததாக வறுமை, பெண்களின் சீரழிவு, சிறுவர் துஷபிரயோகம், வேலையின்மை என்பனவும் காணப்படுகின்றன. தற்பொழுது உலகின் நகர்ப்புறச் சனத் தொகையில் அரைவாசிப்பேர் திட்டமிடப்படாத, ஆக்கிரமிக்கப்பட்ட குடியேற்றங்களிலும், குற்றச்செயல்களையும், தொற்று நோய்களையும் கொண்ட சுற்றாடலில் அமைந்த தரக்குறைவான வீடமைப்புத் திட்டங்களிலுமே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு இலங்கையில் ஏனைய நகரங்களை பின் தள்ளிக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது சமநிலையான அபிவிருத்தியைப் பேணுவதற்காக மேல்மாகாணத்துக்குப் புறத்தேயமைந்துள்ள சிறிய, மத்தியதர 17 நகரங்களை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் நகரத்திட்டமிடல் அதிகார சபை (UDA), தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை (NHDA) ஆகியன மனித குடியிருப்பு தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றன. மனித குடியிருப்பினை மனித வாழ்க்கைக்கு உகந்ததாக அமைக்கும் பொறுப்பு அரசுக்கு இருப்பதுடன் மக்களிடமும் அது பற்றிய உணர்வு பிறக்க வேண்டும். அப்போதுதான் குடியிருப்பு பற்றிய ஐ.நா.வின் இலட்சியம் நிறைவேறும்.
74 யூ. எல். அலியார்

2ே0 உலக ஆசிரியர் தினம்
(World Teacher's Day)
தினம் : ஒக்டோபர் 06
கருப்பொருள் :
ஆசிரியர்களின் உன்னத சேவையைக் கெளரவித்தல்.
பின்னணி :
பாரம்பரிய சமுதாயத்தில் ஆசிரியர்களின் சேவை இறை சேவையாகக் கருதப்பட்டது. குருகுலக் கல்வி முறையும், குரு - சீட மரபும் ஆசிரியர்க்கிருந்த அந்தஸ்தை உயர்த்திக் காட்டியது. அரசு கல்விப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும் ஆசிரியர் அந்தஸ்து, கல்வி, சம்பளம், நலன்கள் அத்தனை அம்சங்களிலும் அதன் வழிகாட்டலும் கட்டுப்பாடும் ஏற்படத் தொடங்கியது. அதன் எதிர் விளைவாக காலப்போக்கில் ஆசிரியர் சேவை தன் மதிப்பை இழக்கத் தொடங்கியது.
அரசு ஆசிரியர்களின் நலன்களில் போதிய அக்கறை எடுக்காமையும், அவர்கள் தம் சுயகெளரவத்தையும், கடமையையும் மதிக்கத் தவறியமையுமே ஆசிரியர்களின் இந்நிலைக்குக் காரணங்களாகக் கொள்ளலாம். 1966இல் பாரிசில் "யுனெஸ்கோ"வின் ஆதரவில் நடைபெற்ற ஆசிரியர் அந்தஸ்து பற்றிய சர்வதேச மாநாடு இத்தனையையும் கருத்திற்கொண்டு விதப்புரைகளைத் தயாரித்தது. இந்த விதப்புரைகள் ஆசிரியர் அந்தஸ்தினை உயர்த்தும் ஒரு சாசனமாக அமைந்தது. யுனெஸ்கோவின் தீாமானப்படி முதலாவது உலக ஆசிரியர் தினம் 1991 ஒக்டோபர் 6ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் தம் நிலையை உணரவும், சமூகத்திற்கு ஆசிரியரின் மதிப்பை உணர்த்தவும் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு :
பாரம்பரிய சமுதாயங்களில் ஆசிரியர் உயர்ந்த அந்தஸ்துடன் மதிக்கப்பட்டனர். "எழுத்தறிவித்தவன் இறைவன்" மாதா, பிதாவுக்கு அடுத்து குரு வைக்கப்பட்டார். தெய்வத்துக்கு வழிகாட்டுபவன் ஆசிரியனாகவே இருந்தான். சமுதாயத்தின் தலைமைப் பொறுப்பு ஆசிரியனிடமே ஒப்படைக்கப் பட்டது. இதனாலேயே இறைவன் தேர்ந்தெடுத்த தீர்க்கதரிசிகளெல்லாம் ஆசிரியராகவே பணியாற்றினர். எனவே ஆசிரியப்பணி இறைபணியாகும். அறிவுக் கண்ணை விழிப்படையச் செய்யும் பணி உயர்வானது.
சர்வதேச நினைவு தினங்கள் 75

Page 44
பாடசாலையில் ஆசிரியர் கற்றலுக்கான வழிகாட்டி, பரீட்சகர், தன்னம்பிக்கையூட்டுபவர், பாதுகாவலர், ஆலோசகர், மாணவரை எதிர்காலத்திற்குப் பொருத்தமானவராக வடிவமைக்கும் சிற்பி. சமூகத்தில் அவர் பங்களிப்பு பலதரப்பட்டது. சமூக அபிவிருத்தியில் பங்காளி, பண்பாட்டாளர், கல்விமான், சமூகப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் அறிஞர், சமூகத்தை வழிநடாத்தும் தலைவன்.
இத்தகைய ஆசிரியரின் முதன்மை தற்காலத்தில் மேலும் அதிகரித்துள்ளது. ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அத்திவாரமான இளஞ்சிறாரின் கல்வி, பயிற்சி, ஒழுக்கம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக இருக்கும் அவர்கள் ஒரு முதலீடாகக் கணிக்கப்படுகின்றனர்.
இந்த அந்தஸ்து அரசு அவர்களின் நலனில் காட்டும் அக்கறை மூலம் தெளிவாகிறது. அவர்களின் வாண்மை விருத்திக்கும் பல வாய்ப்புக்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தும், தார்மீக தலைமைத்துவமும் அவர்தம் தியாக மனப்பாங்கிலும், திடமான சேவையிலுமே தங்கியுள்ளது. கல்வி ஒரு வர்த்தகப் பண்டமாக மாறியுள்ள இக்காலத்தில் அவர்களின் அந்தஸ்து பணத்தால் மதிப்பிடப்படுகின்றது.
அவர்கள் தம் தெய்வீகப் பணியிலிருந்து நழுவத் தொடங்கியதும் சமூகத்தின் பார்வையில் அவர்கள் குறைவாகக் கருதப்பட்டனர். இந்தச் ஆழ்நிலையிலேயே "நல்லாசிரியர்” என்ற எண்ணக்கரு, ஆசிரியர் பணியை நினைவூட்டுவதற்காக முன்வைக்கப்பட்டது. ஆசிரியர்கள் தம் பொறுப்புக்களில் காட்டும் அக்கறையைவிட தம் பொருளியல் நலன்களுக்காக வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் ஆகிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் காட்டும் கூடிய அக்கறை, நல்லாசிரியர் யார் என்பதை சமூகத்திற்கு எடுத்துக் காட்டியது.
யுனெஸ்கோ நிறுவனம் 50 நாடுகளில் 8 - 12 வயதுக்கிடைப்பட்ட சிறுவரிடையே நடத்திய கருத்துக் கணிப்பீட்டில் நல்லாசிரியர் யார் என்பது பற்றி முக்கிய தகவல்கள் பெறப்பட்டன. மாணவர்களே ஆசிரியர்களின் உண்மையான அந்தஸ்தினைக் கணித்துவிடுவார்கள் என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மாறிவரும் நவீன சமுதாயத்தில் ஆசிரியர்கள் மாற்றங்களை முன்னெடுத்துச் செல்பவர்களாகவும் இளைய தலைமுறையினர்க்கு வழிகாட்டி அவர்களை நற்பிரசைகளாக உருவாக்குபவர்களாகவும் பணியாற்றுதல் வேண்டும். இதன் மூலம் உலக ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அவர்தம் அந்தஸ்தினை உயர்த்திச் செல்வதாகவும் அமையவேண்டும்.
76 . யூ. எல். அலியார்

8ே உலக தபால் தினம்
(World Posta Day)
தினம் : ஒக்டோபர் 09
கருப்பொருள் :
எப்போதும் எங்கும் நிறைந்த தபால் சேவை மக்கள் நலனுக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் உதவுதல்.
பின்னணி :
தபால் ஊழியர்கள் இலட்சக்கணக்கில் உலகெங்கும் வேலை செய்கிறார்கள். இவர்கள் பொதுமக்கள் நலனுக்காகவே பணியாற்றுகிறார்கள். 1874 ஒக்டோபர் 9ஆம் திகதி அமெரிக்கா உட்பட 23 நாடுகளின் பங்குபற்றலுடன் பேர்ண் என்னுமிடத்தில் நடைபெற்ற மகாநாட்டின் முடிவில் சர்வதேச தபால் ஒன்றியம் தாபிக்கப்பட்டது. இதுவே சர்வதேச தபால் சேவையை ஆரம்பித்தது. உலக தபால் ஒன்றிய ஆரம்பத்தை நினைவுகூருமுகமாக ஒக்டோபர் 9ஆம் திகதி உலக தபால் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இலங்கை, உலக தபால ஒன்றியத்தில் 1877இல் இணைந்து கொண்டது.
விழிப்புணர்வு :
தபால் ஊழியர்கள் மக்கள் நலனுக்காகவும் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காகவும் கடினமாக உழைக்கிறார்கள். தாமதத்தினாலேயோ பிற்போடுவதனாலேயோ ஒருவருக்கு அசெளகரியம் அல்லது நஷ்டம் ஏற்படக் கூடாது எனக்கருதி அவர்கள் விசுவாசமாகவும் விரைவாகவும் உழைக்கிறார்கள்.
அமெரிக்க அறிஞர் எட்வாட் எவரெட் என்பவர் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தபால் ஊழியர்களின் பணி எவ்வளவு முக்கியமானது என்ற கருத்தினை வெளியிட்டார். 1973இல் அமெரிக்கா, தபால் ஊழியர்களின் அரிய பணியைப் பிரதிபலிக்கும் 10 முத்திரைகளை வெளியிட்டு அவற்றின் மறுபக்கத்தில் சுலோகமும் பொறித்தது. அவற்றுள் ஒன்று, "வருடாந்தம் அமெரிக்காவில் 13 மில்லியன் இறாத்தல் நிறையுள்ள தபால்கள், ஊழியர்களால் கையாளப்படுகின்றன. அவர்கள் உங்களின் கடிதங்களையும் பொதிகளையும் விரைவுபடுத்துகிறார்கள்.
சர்வதேச நினைவு தினங்கள் 77

Page 45
1937 - 1940 இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்பட்ட முத்திரைகள் தபால்கள் எவ்வாறு அக்காலை கொண்டு செல்லப்பட்டன என்பதைக் காட்டின. இலங்கையில் 1990 இல் அதுபோன்ற முத்திரைகளின் தொகுதியொன்று வெளியிடப்பட்டது. இலங்கையில் தபால் சேவையின் 175வது வருடாந்த நிறைவை அவை பிரதிபலித்தன.
ஆரம்ப காலத்தில் செய்திப் பரிமாற்றத்துக்கு மக்கள் புறாக்களைப் பயன்படுத்தினர். பின் படிப்படியாக கொண்டோடிகளையும் குதிரை வண்டிகளையும் பயன்படுத்தினர். இன்று தரை, கடல், வான் தபால் என இது வளர்ச்சியடைந்துள்ளது. 1970 இலிருந்து கடுகதி தபால் சேவை (EMS) என்பது நாடுகளுக்குள்ளும், நாடுகளிடையேயும் நடைமுறையில் உள்ளது.
சர்வதேச தபால் ஒன்றியம் இக்காலத்தில் தபால் சேவையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றது. இத்தாபனம் உலக
தொலைத்தொடர்பு ஒன்றியத்துடனும் (ITU) நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
அண்மைக்கால கணக்கெடுப்பின்படி (1997) உலகில் 670,000 நிரந்தர தபாற் கந்தோர்களும், 6 மில்லியன் தபால் ஊழியர்களும் உள்ளனர். 430,000 தபாற் பொருட்கள் வருடாந்தம் அவர்களால் கையாளப்படுகின்றன.
தொலைத்தொடர்புத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளபோதிலும் தபால் சேவை மக்கள் சேவையாக தொடர்ந்து இருப்பது தவிர்க்க முடியாதுள்ளது தபால் ஊழியர்கள் மக்கள் நலனுக்காக உழைக்கும் கடின உழைப்பாளிகள எனபதை நாம் எப்போதும் நன்றியுடன் நினைவில் இருத்தல் வேண்டும்.
78 யூ. எல். அலியார்

99 உலக தர நிர்ணய தினம்
(World Standard Day)
தினம் : ஒக்டோபர் 14
கருப்பொருள் :
உற்பத்திப் பொருட்கள், சேவைகளின் தரத்தை உறுதிப்படுத்தலும், உலக வர்த்தகத்துக்கு தேவைப்படுவது உலக மட்டத்திலான தரமே என்பதற்கு அழுத்தம் கொடுத்தலும்.
பின்னணி :
மக்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்களையும் சேவைகளையும் வழங்குவதில் பல தாபனங்கள் ஈடுபடுகின்றன. வாடிக்கையாளருக்கு வேண்டியது தரமான பொருளாகும். உற்பத்தியாளர் அல்லது வர்த்தகர் தரமானவற்றை வழங்கும்போது அது வாடிக்கையாளருக்கு மட்டுமன்றி வர்த்தக மேம்பாட்டுக்கும் உதவுவதாகும். இந்த அடிப்படையிலேயே உலக தர நிர்ணய தினம் அனுஷ்டிக்கப்டுகிறது. சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) சர்வதேச மின் தொழில்நுட்ப ஆணைக்குழு (IEC) சர்வதேச தொலைத் தொடர்பு சம்மேளனம் (ITO) உலக சுகாதார தாபனம் (WHO) ஆகியன இணைந்து உற்பத்தித்தர நடவடிக்கைகளிலும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன.
விழிப்புணர்வு :
தரம் அல்லது நியமம் (Standard) என்பது முதலில் உற்பத்தித் துறை தொடர்பாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் வேறு துறைகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. குறிப்பாக தகவல், விலங்கியல், போக்குவரத்து, ஹோட்டலும் உணவு வழங்கலும், சுற்றுலா போன்ற சேவைத் துறைகளில் ISO 9000, 14000 தரங்கள் எனப்படும் நியம முறைமையின் அறிமுகத்துடன் உலகளாவிய ரீதியில் தரத்தின் ஏற்புடைமைக்கும் சுற்றாடல் முகாமைத்து வத்திற்குமிடையே ஓர் இசைவு ஏற்படுத்தப்பட்டது. இது இந்நூற்றாண்டின் தரப்படுத்தல் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு சாதனையாகும்.
சர்வதேச நினைவு தினங்கள் 79

Page 46
எத்தகைய கைத்தொழில் துறையிலும் தரமுகாமைத்துவ நியமங்கள் பின்பற்றப்படலாம். சிற்றளவு கைத்தொழில்களில் மட்டுமன்றி பேரளவு அல்லது நடுத்தர கைத்தொழில் துறைகளும் தம் உற்பத்திகளை மேம்படுத்த தரநியமங்களைப் பின்பற்றுகின்றன.
வர்த்தகரும், வாடிக்கையாளரும் சர்வதேச ரீதியாக நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி சர்வதேச உற்பத்தி தரங்களையும் கருத்திற்கொள்ளும் போது உச்ச இலாபம் பெறுவதே அவர்களின் குறிக்கோளாக அமைகிறது.
வழங்குநர்கள், தனித்தனி நாடுகளின் தேவைகளுக்கமைய உற்பத்தி களைத் தயாரிப்பதை விடுத்து, சர்வதேச தரங்களுக்கு அமைவாக உற்பத்தி செய்து சந்தைக்கு வழங்குவதன் மூலம் இலாபத்தை ஈட்டிக்கொள்ள சந்தர்ப்பமேற்படுகிறது. அதேவேளை வாடிக்கையாளர், சர்வதேச தரத்தில் அமைந்த நம்பகமான, பாதுகாப்பான, விலை குறைவான உற்பத்திகளையே தெரிவு செய்வார்கள். வழங்குநர்க்கு இடையிலான போட்டியும் விலைக் குறைப்பை ஏற்படுத்தும்.
தர நிர்ணயம் பொதுவாக வழங்குநர் - வாடிக்கையாளர்களுக் கிடையிலான வர்த்தகத்துடன் அல்லது பொருள், சேவை பரிவர்த்தனையுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். பண்டைக்காலத்திலிருந்து நிறை, அளவு என்வற்றில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் வாங்கல், விற்றல் செயற்பாடுகளை இலகுவாக்கின. நவீன காலத்தில் பரிவர்த்தனை என்பது இருந்த இடத்தில் இருந்து கொண்டே பொத்தானை அழுத்துவதால் அல்லது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதால் செவ்வனே நிகழுகின்றது.
அரசியல் கட்டுப்பாடுகள், அரசின் ஏகபோக உரிமைகளில் ஏற்பட்டுள்ள தனியார்மயம் (மின்வலு, தொலைத்தொடர்பு என்பன) அபிவிருத்திப் பொருளாதாரம், புதிய வழங்குநர்கள் சந்தையுட் பிரவேசம் ஆகியன இன்றைய வர்த்தகத்தின் தோற்றப்பாடுகளாக உள்ளன.
உலக வர்த்தகத்தின் பருமனில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, உலக உற்பத்திச் சந்தையின் வளர்ச்சியைக் குறிக்கின்றது. உலக சந்தைக்கான தொழில்நுட்ப அடிப்படையாக விளங்கும் சர்வதேச தரங்களின் முக்கியத்துவம் உலக வர்த்தக அமைப்பினால் (WTO) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகத்துக்கு தொழில்நுட்பத் தடைகளின் மீது உடன்பாடு (TBT) சர்வதேச தரங்களைப் பயன்படுத்துமாறு அரசாங்கங்களைத் தூண்டுகின்றது.
80 யூ. எல். அலியார்

1996ம் ஆண்டின் சர்வதேச நியமங்களின் 1SO 14000 தொடர்கள், சுற்றாடல் பிரச்சினைகள் குறித்த வழிகாட்டல்களைக் கொண்டுள்ளன. 1993 இல் அமைக்கப்பட்ட சுற்றாடல் முகாமைத்துவம் பற்றிய தொழில்நுட்ப குழு (TC 207) என்னும் தாபனம் சுற்றாடல் முகாமைத்துவ முறைமை, சுற்றாடல் பரிசோதனை போன்றவற்றுக்குப் பொறுப்புாக உள்ளது.
சர்வதேச தரங்கள் குறித்து உற்பத்திகளுக்கு விருது வழங்கும் முறை, நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது. ஜப்பானில் 1951 இல் டெமிங் பரிசு என இந்த விருதுமுறை ஆரம்பிக்கப்பட்டது. 1987 இல் அமெரிக்காவில் தேசிய தர விருது ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
தேசிய நிறுவனமான இலங்கை கட்டளைகள் பணியகம் (SLSI) உற்பத்திகள், சேவைகளின் தரத்தை அதிகரிப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் வருடாந்தம் இலங்கை தேசிய தர 6(53556061T (Sri Lanka National Quality Awards) 6 upsids 6 (535.Bg5).
இலங்கைக் கட்டளைகள் பணியகம், தரப்படுத்தல், தர முகாமைத்துவம் என்பவற்றில் பயிற்சிகள் வழங்குகின்றது. கைத்தொழில் துறையில் ஈடுபட்டுள்ள சகல தரப்பினருக்கும் பலவித பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துகின்றது.
சர்வதேச நினைவு தினங்கள் 81

Page 47
80 சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்
(International White Cane Day)
தினம் : ஒக்டோபர் 15
கருப்பொருள் :
விழிப்புலனற்றவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதும் சமூகத்தில் அவர்களுக்குரிய முதன்மையை அங்கீகரித்தலும்.
பின்னணி :
முற்காலத்தில் விழிப்புலனற்றவர்கள் தாம் நடந்து செல்வதற்கு மூங்கில் தடியை அல்லது மரத்தின் சிறு தடியை உபயோகித்தனர். இதனால் பாதையில் எதிர்ப்படும் தடைகளை அவர்களால் உணர முடிந்தது. ஆனால் 2ம் உலகப் போரில் பங்குபற்றிய அமெரிக்க வீரர்கள் (விழிப்புலன் இழந்தோர்) புதுவகையான வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்தினர். இதன்படி "ஹ"வர் தொழில்நுட்பம்" எனப்பட்ட நீண்ட பிரம்பு நடைமுறைக்கு வந்தது. அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜோன்சன் ஒக்டோபர் 15ம் திகதியை வெள்ளைப் பிரம்பு பாதுகாப்புத் தினமாகப் பிரகடனம் செய்தார். இந்த நிகழ்வு விழிப்புலனற்றோரின் நீண்டகால வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருந்தது.
அமெரிக்க ஜனாதிபதியின் கூற்று, வெள்ளைப் பிரம்பின் சிறப்பையும் வெளிப்படுத்தியது. "எமது சமுதாயத்தில் வெள்ளைப் பிரம்பு, விழிப்புலனற்றோர் பிறர் உதவியின்றி தாம் நடமாடுவதற்குள்ள அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு சின்னமாக அமைந்துள்ளது." 1964 இலிருந்து விழிப்புலனற்றோரின் தேவைகள் அவர்களின் சாதனைகள் என்பன வெளியுலகத்துக்கு வெளிப்படுத்தப்பட்டன. அனைத்துலக விழிப்புலனற்றோர் சம்மேளனங்களின் மகாநாடு இலங்கையில் 1969 ஒக்டோபர் 15இல் நடைபெற்றது.
விழிப்புணர்வு :
விழிப்புலனற்றோர் சமூகத்தில் பயனுள்ள உறுப்பினர்கள் என்ற நிலைமை படிப்படியாக உணரப்படுகின்றது. அவர்கள் தாம் தேவையான இடங்களுக்குச் செல்லவும், சாதாரண வாழ்க்கையில் ஈடுபடவும் வெள்ளைப் பிரம்பு உதவுகிறது. அண்மையில் அமெரிக்காவில் நவீன இலத்திரனியல் பிரம்பு கண்டுபிடிக்கபட்டமை இத்துறையில் மேலும் ஒருபடி முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
82 யூ. எல். அலியார்

அரசு மட்டுமன்றி, அரச சார்பற்ற நிறுவனங்களும் அவர்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றன. அவர்களுக்கு சமுக பாதுகாப்பு மற்றும் சலுகைகள், போக்குவரத்து வசதிகள், கல்வியில் சமவாய்ப்பு, புனர்வாழ்வு வசதிகள், தொழில்வாய்ப்பு, என்பன் வழங்கப்படுவதோடு வெள்ளைப் பிரம்புக்குச் சட்ட அந்தஸ்தும் வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் விழிப்புலன் இழந்தோர் விஞ்ஞானிகளாகவும், தத்துவஞானிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும், மேதைகளாகவும் இருந்துள்ளனர். அண்மைக் காலத்தில் பிரித்தானிய பொதுத்தேர்தலில் டேவிற் பிளங்கெற் என்ற விழிப்புலன் இழந்த ஓர் இளைஞன் மிகப் பெரும்பான்மை வாக்கினால் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று சமூகம் , அவர்க்ளை மதிக்கிறது.
விழிப்புலனற்றோர் கல்விக்காக லூயிஸ் பிரெய்லி என்பவரால் வகுக்கப்பட்ட பிரெய்லி என்ற எழுத்துமுறை மூலம் லட்சக்கணக்கான விழிப்பலனற்றோர், படித்து, பட்டதாரிகளாகவும், கலாநிதிகளாகவும், நூலாசிரியர் களாகவும், பேராசிரியர்களாகவும், மேதைகளாகவும் முன்னேறியுள்ளனர். விழிப்புலனற்றோருக்காக விஷேட பாடசாலைகள் உள்ளன.
சமூகம் அவர்களை அங்கீகரித்து அவர்களுக்கும் ஏனையவர்களைப் போன்று சமத்துவம் கொடுப்பதன் மூலம் அவர்களிடத்தில் தன்னம்பிக்கை . யையும் தனித்திறன்களையும் வளர்க்க முடியும் என்பதை நாம் உணரவேண்டும். வாழ்க்கையின் பொது நீரோட்டத்தில் இணைந்து கொள்ள அவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர் என்ற உணர்வு எம்மிடம் பிறக்க வேண்டும்.
சர்வதேச நினைவு தினங்கள் 83

Page 48
8) உலக உணவு தினம்
(World Food Day)
தினம் : ஒக்டோபர் 16
கருப்பொருள் :
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உணவு உற்பத்தியைப் பெருக்கல்.
பின்னணி :
உணவு மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று. ஏனைய உயிரினங்களுக்கும் இது அவசியமானது. உலக சனத்தொகைப் பெருக்கம் உணவு உற்பத்திப் பெருக்கத்தை வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. நீண்ட காலமாக உலக உணவு உற்பத்தி வீழ்ச்சிகண்டு வருவதை புள்ளிவபரங்கள் தெளிவுபடுத்துகின்றன. எதியோப்பியா, சோமாலியா போன்ற வளர்முக நாடுகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் குறிப்பிடத்தக்கன. இந்தப் பின்னணியில் உலக உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் ஐ. நா. வின் உணவு விவசாய தாபனம் (F A. O) பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 1945 ஒக்டோபர் 16இல் இத்தாபனம் நிறுவப்பட்டது. 1981 முதல் உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு :
"உணவு பெறும் உரிமைதான் மனித உரிமைகளுள் மிகவும் அடிப் படையானது. போர், வரட்சி, வறுமை, இயற்கைச் சீற்றம் என ஏதேனும் ஒரு காரணத்தினால் ஏற்படுகின்ற பசிப்பிணியின் வரலாறு துன்பத்துக்கு இட்டுச்சென்றிருக்கின்றது. சகல பிரச்சினைகளிலும் மிக அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை சமாதானம் மட்டுமல்ல, பசியும்தான்."
விவசாயத்துறையில் உலகளாவிய ரீதியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் உலகில் இன்று 80 கோடி மக்கள் பட்டினியாலும், போஷாக்கின்மையாலும் வாடுகின்றனர். இவர்களில் 20 கோடி சிறுவர்கள
84 பூ. எல். அலியார்

அடங்குவர். அனைவருக்கும் உணவு, உலகிலிருந்து பட்டினியை அடியோடு ஒழித்தல், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல் என்பன உணவு விவசாய தாபனத்தின் நோக்கங்களாகும். "தனியொருவனுக்குண வில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்” என்றான் பாரதி. உலக உணவு தினம் இதனை நினைவுபடுத்துகின்றது.
உலக நாடுகளில் 86 நாடுகள் உணவு பற்றாக்குறை நிலவும் நாடுகளாக கருதப்படுகின்றன. இவற்றுள் இலங்கையும் ஒன்று. உணவுற்பத்தியில் தன்னிறைவு காண்பது ஒவ்வொரு நாட்டினதும் இலட்சியமாகும்.
உலகின் பிரதான உணவுகளாக அரிசி, கோதுமை ஆகியவற்றை மக்கள் உண்கின்றனர். அரிசியைப் பிரதான உணவாக கொள்ளும் நாடுகளிலும் மக்கள் கோதுமையை உண்ணப் பழகிக் கொண்டனர்.
உணவுக் கொள்கை ஆய்வு நிறுவன கணிப்புக்களின்படி 1996 - 2020 இடைப்பட்ட காலத்தில் உலக சனத்தொகை 220 கோடியால் அதிகரிக்கும். இதில் 94 சதவீதம் வளர்முக நாடுகளில் இருக்கும். வருடாந்தம் உணவுக்கான கேள்வி 4 சதவீதத்தால் அதிகரிக்கும்.
1996 நவம்பரில் ரோமில் நடைபெற்ற உலக உணவு உச்சி மகாநாட்டில் பட்டினி ஒழிப்புக்கு நடவடிக்கை எடுப்பதற்காக கோஷம் எழுப்பப்பட்டது. வளர்முக நாடுகளில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதொன்றே இதற்குப் பரிகாரமாகும். வளர்முக நாடுகளின் பசுமைப் புரட்சிகள் (Green Revolution) இதனை நிரூபித்துக் காட்டின. 1960 - 1990 இடைப்பட்ட காலத்தில் சனத்தொகை 2 மடங்காக அதிகரித்த அதேவேளை, தலைக்குரிய உணவு நுகர்வு 1900லிருந்து 2500 கலோரியாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உணவு விவசாய தாபனத்தின் 1994ம் ஆண்டின் தீர்மானப்படி உணவுப் பற்றாக்குறை நிலவும் நாடுகளுக்கு உதவும் வகையில் உணவுற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உணவுப்பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.
இலங்கையும் இந்த விஷேட நிகழ்ச்சித்திட்டத்திக் கீழ் உதவி பெறுகிறது. 1948இன் பின் வந்த சகல அரசாங்கங்களும் உணவு தன்னிறைவு இலட்சியத்துடனேயே செயல்பட்டதனால் அரிசி உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும் கோதுமை மா, சீனி, பால் என்பன இறக்குமதி செய்யப்படும் நிலை உள்ளது.
சர்வதேச நினைவு தினங்கள் 85

Page 49
வளர்முக நாடுகளில் உணவு உற்பத்திற்குத் தடையாக சில காரணிகள் 26irst60T.
வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்தாமை. உற்பத்திச் செலவு அதிகரித்துச் செல்கின்றமை. உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம். பயிர்களுக்கு ஏற்படும் நோய் போன்ற தீங்குகள். உற்பத்திகளைச் சந்தைப்படுத்தல், களஞ்சியப்படுத்தல், விநியோ கித்தல் போன்றவற்றில் உள்ள சிரமங்கள்.
9H696) :
உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைக்க முடியும் சிறந்தவகை விதை, இயற்கை உரம், கிருமிநாசினிகளுக்குப் பதிலாக இயற்கையான பாதுகாப்பு முறைகள் என்பவற்றைப் பயன்படுத்த முடியும். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் அதிக விளைச் சலைப் பெற முடியும்.
எமது கோதுமை உணவுப் பழக்கத்தை மீண்டும் அரிசி மற்றும் உள்நாட்டு உணவு வகைகளுக்கு மாற்றுவதன் மூலம் எமது நெல் உற்பத்தியை ஊக்குவிக்க முடியும்.
இலங்கை அரசாங்கம் 1996 இல் தொடக்கிவைத்த 'வகாலங்கா இயக்கம் விவசாயத்துறைக்கான நிலையான அடித்தளமொன்றை உறுதிப்படுத்தும் திட்டமாகும்.
86 யூ. எல். அலியார்

829 ஐக்கிய நாடுகள் தினம்
(United Nations Day)
தினம் : ஒக்டோபர் 24
கருப்பொருள் :
உலகின் நடுநிலை அமைப்பாக விளங்கும் ஐ.நா. சபையின் சமாதான, அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தல்.
பின்னணி :
முதலாம் உலகப் போரின் முடிவில் அமெரிக்க ஜனாதிபதி வுட்றோ வில்சனின் முயற்சியால் நாடுகளின் அமையம் எனும் சர்வதேச சங்கம் (League of Nation) 1919 ஜூன் 28இல் உருவானது. இந்த அமைப்பின் சமாதான முயற்சிகள் வெற்றியளிக்காமையால் 2வது உலக யுத்தம் வெடித்தது. யுத்த முடிவில் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஒன்றின் இன்றியமையாமையை வெற்றிபெற்ற நாடுகள் வலியுறுத்தின.
அமெரிக்காவும் பிரித்தானிய தலைமையிலான நேச அணியும் ஐ.நா. வை உருவாக்கக் காரணமாக இருந்தன. 51 நாடுகளின் பிரதிநிதிகள் &ntg அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் ஐநா. சாசனத்தைத் தயாரித்தனர். இதனை 1945 ஒக்டோபர் 24ஆம் திகதி சீனா, பிரான்ஸ், பிரித்தானியா, அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய 5 நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இவை ஐ.நா. வின் நிலையான உறுப்பினர்களாகவும், பாதுகாப்பபுச் சபையை நடத்தும் வீடோ அதிகாரமுடைய நாடுகளாகவும் விளங்குகின்றன. இத்தினமே ஐ.நா. தினமாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
விழிப்புணர்வு :
நியூயோர்க்கில் தலைமைச் செயலகத்தைக்கொண்ட இவ்வமைப்பு ஆறு முதன்மை உறுப்புக்களைக் கொண்டது. அவற்றுள் பிரதானமானது ஐ. நா. பொதுச்சபை. இதில் சகல அங்கத்துவ நாடுகளும் இடம் பெறுகின்றன. 1955இல் 76ஆக இருந்த அங்கத்துவம் 1960இல் 100 ஆகி 1980இல் 154 ஆகி 1995இல் 185ஆக உயர்ந்தது. இச் சபையின் அமர்வுகள் ஆண்டுக்கொரு முறையாகும்.
சர்வதேச நினைவு தினங்கள் 87

Page 50
அடுத்தது பாதுகாப்புச்சபை 1946 ஜனவரி 12இல் நிறுவப்பட்டது. இது ஐ.நா.வின் உயிர்க்கூறு. தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கின்ற சபையாகும்.
மூன்றாவது பொருளாதார மற்றும் சமூகசேவை சபையாகும். இது 54 உறுப்பினர்களைக் கொண்டது.
நான்காவது பொறுப்பாட்சி சபை : சிறிய நாடுகளின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயல்படும் அமைப்பாகும்.
ஐந்தாவது உலக நீதிமன்றம் : நெதர்லாந்தில் ஹேக் நகரில் இயங்கி வருகின்றது. 15 நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம், நாடுகளுக்கிடையிலான பிணக்குளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும்.
ஆறாவது உறுப்பு செயலகம் : ஐ.நா. பொதுச் செயலாளரின் மேற்பார்வையில் இயங்கும் அலுவலகமாகும். இவற்றைத் தவிர யுனிசெப், யுனெஸ்கோ, உலக சுகாதார தாபனம் போன்ற முகவர் தாபனங்களும் திட்ட அமைப்புக்களும் செயல்படுகின்றன.
ஆரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியம் என வர்ணிக்கப்பட்ட பிரித்தானியா 2ம் உலகப்போரின் பின்னர் தன் முதன்மையை இழக்க, அமெரிக்காசோவியத் ஒன்றியம் ஆகிய இருபெரும் வல்லரசுகள் எழுச்சி பெற்றன. முன்பு பிரித்தானியாவின் தனியுரிமையாகவிருந்த உலக நிருவாகம், பொருளாதாரச் சுரண்டல், இராணுவ ஆதிக்கம் என்பன இவ்விரு வல்லரசுகளுக்கிடையேயும் பங்கிடப்பட்டன. இவ்விரு வல்லரசுகளிடையிலான பனிப்போர் (Cold War) பல சிறிய நாடுகளை நசுக்குவதன் மூலம் செயற்படுத்தப்பட்டது. தவிர மறைமுகமாக ஐ.நா. சபை அமெரிக்காவின் கைப்பொம்மையாகவே செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
ஐ.நா.வின் முன்னாள் உதவிச் செயலாளர் றொபர்ட் முல்லர் ஐ.நா.வின் இலக்கு பற்றி இவ்வாறு வர்ணித்தார்.
"இவ்வமைப்பானது மனித குலத்தின் நம்பிக்கை நட்சத்திரம். அமைதி, ஆயுதப் பரிகரணம், சூழல் பாதுகாப்பு, அபிவிருத்தி, நீதி, மனித உரிமைகள், வறுமைக்கெதிராகச் செயற்படல், இன சமத்துவம், பெண்களின் சுதந்திரம், குழந்தைகள், வலது குறைந்தோருக்கான பாதுகாப்பு போன்ற விடயங்களில்
88 யூ. எல். அலியார்

காத்திரமான பங்களிப்பைச் செய்து வருகின்றது." இலக்கு இலட்சிய பூர்வமானதாக இருந்தபோதிலும் நடைமுறைச் சாத்தியமில்லாமலிருந்தது. சபை உருவான பின்னர் உலகில் 149 யுத்தங்கள் இடம் பெற்றுள்ளன. 1967இல் ஐ.நா.வின் தீர்மானத்தை மீறி இஸ்ரேல், பலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்தது. 1968இல் சோவியத் - செக்கோஸ்லவேகியா பிரச்சினை, 1974இல் துருக்கியின் சைப்ரஸ் படையெடுப்பு. 1991இல் அமெரிக்க - ஈராக் யுத்தம் போன்ற பல நிகழ்வுகள் ஐ.நா.வின் இயலாமையை வெளிப்படுத்தின.
வீடோ அதிகாரம் சுயநலத்துக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டது. அண்மைய புள்ளி விபரங்களின்படி 20836 ஏவுகணைகளுடன் கூடிய அணுக்குண்டுகள் வீடோ நாடுகளிடமே உள்ளன. அமெரிக்காவிடம் 8720, ரஷ்யாவிடம் 11000, பிரான்ஸிடம் 482, சீனாவிடம் 434, பிரித்தானியாவிடம் 200. ஐ.நா.வின் சமூக சேவை அமைப்புக்கள் சிறப்பாக சேவையாற்றிய போதிலும் பாதுகாப்புச் சபை, சமாதானத்தைப் பேணத்தவறியமை துரதிர்ஷ்டமே. ஆங்காங்கே நடைபெற்ற அடக்குமுறைகள், மனித உரிமைகள் மீறல், பேரழிவுகள், அட்டூழியங்கள் குறிப்பிடத்தக்கன.
எவ்வாறாயினும் ஐ.நா.வின் சமூக சேவை அமைப்புக்களால் 3வது மண்டல நாடுகள் பல நன்மைகளைப் பெற்றுள்ளமையை மறுக்க முடியாது.
1960 - 1992க் கிடைப்பட்ட காலப்பகுதியில், 01. சராசரி வாழ்வுக்காலம் அதிகரிப்பு. 02. சிறந்த குடிநீர்ப் பாதுகாப்புத் திட்டம். 03. ஆரம்பக் கல்விபெறும் மாணவர் 48% இருந்து 77% ஆக அதிகரிப்பு 04. சிசு மரணம் 1000க்கு 149இல் இருந்து 70ஆகக் குறைந்தமை. 05. தடுப்பு மருந்து மூலம் வருடாந்தம் 3மில்லியன் குழந்தைகளுக்குப்
பாதுகாப்பு.
06. அகதிகளான 13 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பு.
ஐ.நா. சபையை மறுசீரமைத்து நடு நிலைமை கடைப்பிடிக்கப்படுமானால் உலக நாடுகள் மேலும் பல நன்மைகளை அடைந்து கொள்வது உறுதியாகும்.
சர்வதேச நினைவு தினங்கள் 89 .

Page 51
83 உலக சிக்கன தினம்
(World Thrift Day)
தினம் : ஒக்டோபர் 31
கருப்பொருள் :
சிக்கனமும் சேமிப்பும் பொருளாதர் சமநிலையைப் பேணுகின்றன.
பின்னணி :
1924இல் மிலானில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் காங்கிரஸ் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மகாநாட்டில் உலக சிக்கன தினம் கொண்டாடப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத்தினதும் சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது.
விழிப்புணர்வு :
தேசிய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை சேமிப்பு என்னும் செயற்பாடு நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும், பொருளாதார சுதந்திரத்துக்கும் மிக அடிப்படையான காரணிகளுள் ஒன்றாகும். சேமிப்பு, சிக்கனத்திலிருந்து பிறக்கின்றது. "சிக்கனம்" என்பது வளங்களை மிகக் கவனமாக (சிக்கனமாக) முகாமைத்துவம் செய்வதைக் குறிக்கும். இந்தப் பொருளில் பார்க்கும்போது சிக்கனம் என்பது தனிப்பட்ட வாழ்கையிலும் சரி, குடும்ப மட்டத்திலும் சரி, தேசிய மட்டத்திலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி அது ஓர் அறநெறியாகும்.
பண்டைக் காலத்திலிருந்து எமது நாகரிகமும் பண்பாடும், சிக்கனம், சேமிப்பு என்பவற்றின் பயன்களை அங்கீகரித்து வந்துள்ளன. தேனி, தேனைச் சிறுகச் சிறுகச் சேமிப்பதும், எறும்புகள் படிப்படியாக புற்றுக்களைக் கட்டியெழுப்பி உணவு சேமிப்பதும், மாரியின்போது அருவி நீர் குளத்தில் சேமிக்கப்படுவதும் சேமிப்புக்குத் தகுந்த உதாரணங்களாகும்.
எதிர்காலத் தேவையைக் கருத்திற் கொண்டு, சிக்கன வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்கள் சிறுகச் சிறுகச் சேமிப்பது நடைமுறையிலுள்ள
90 பூ. எல். அலியார்

பழக்கமாகும். பிடியரிசி சேமிப்பு எமது தாய்மாரிடையே பண்டைக் காலமுதல் இருந்துவந்த பழக்கமாகும்.
சேமிப்பு ஒரு ஒரு நாட்டுக்கு மூலதனமாக அமைந்து நாட்டின் அபிவிருத்திற்கு துணைபுரிகின்றது. நவீன பொருளாதார முறைமை, சேமிப்பைத் தூண்டுகின்றது. கவர்ச்சியான வட்டி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போன்றவற்றை வங்கிகள் உறுதியளிப்பதன் மூலம் சேமிப்பின்மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கின்றன. அரச அங்கீகாரம், பாதுகாட்பு, சலுகைகள் என்பனவும் மக்களின் நம்பிக்கையை வளர்த்துள்ளன.
இலங்கையில் மிகப் பழமையான சேமிப்பு நிறுவனம் 1832இல் நிறுவப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி ஆகும். 1885இல் தபால் சேமிப்பு வங்கி தாபிக்கப்பட்டது. 1971இல் இவ்விரு நிறுவனங்களும் இணைக்கப்பட்டு தேசிய சேமிப்பு வங்கி உருவானது. பாடசாலைப் பிள்ளைகளிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்குமுகமாக பாடசாலை வங்கிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏனைய வர்த்தக வங்கிகளிலும் சேமிப்புத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
எவ்வாறு அமைந்தபோதிலும் உள்ளுர் மொத்த உற்பத்தியில் 15.5 சதவீதமே இலங்கையின் தற்போதைய சேமிப்பு வீதமாகும். இது இலக்கை விட குறைவானதாகும். அதேவேளை மலேசியா 35%, இந்தோனேசியா 39%, சீனா 35% ஆகும்.
மூன்றாம் உலக நாடு என்ற வகையில் பொருளாதார ரீதியில் எமது நாடு எதிர் கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு நாம் எமது உள்நாட்டு மூலதனத்தைப் பெருக்கும் வழிவகைகளைத் தேடவேண்டும். நாட்டின் எதிர்காலத் தேவைகளுக்குத் தேவையான முதலீட்டில் ஒரு பகுதியையேனும் எமது சேமிப்புக்கள் மூலம் நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சொந்தக்காலில் நிற்பதற்கு (Self Reliance) எமது சிக்கன நடத்தைகளும் சேமிப்பும் எவ்வளவு துணை புரியும் என்பதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டும்.
வீட்டுச் சிக்கனமும் சேமிப்புமே நாட்டின் முதலீட்டை அதிகரிக்கும். மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு கவர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சர்வதேச நினைவு தினங்கள் 91

Page 52
9ே உலக எய்ட்ஸ் தினம்
(World AIDS Day)
தினம் : டிசம்பர் 01
கருப்பொருள் :
எய்ட்ஸ் நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வையும் விளக்கத்தையும் ஏற்படுத்தல். எய்ட்ஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளை விஸ்தரித்தலும், பலப்படுத்தலும்.
பின்னணி :
"எய்ட்ஸ்" நோய் உலகிற்கோர் அச்சுறுத்தல். இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையிலேயே அதன் அபாயம் உணரப்பட்டது. இந்நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமே முற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம் என உணரப்பட்டது. எய்ட்ஸ் பற்றிய உலக மகாநாடு 1994 டிசம்பர் 1ஆம் திகதி பாரிஸில் நடைபெற்றது. இத்தினமே எய்ட்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு :
AIDS 676öugs Acquired Immune Deficiency Syndrome 616613 Qg5TLsgöT சுருக்கமாகும். அதாவது தேடிப்பெற்ற நிர்ப்பீடணக் குறைபாடு நோய்த்தொகுதி என்பதாகும். HIV என்னும் வைரஸ் மூலமே இந்நோய் உருவாகிறது. HIV வைரஸ் உடலினுட் புகுந்து வெண்குருதிக் கலங்களைத் தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் AIDS பீடிக்கப்பட்ட ஒருவர் விரைவில் மரணத்தைத் தழுவுகிறார்.
எய்ட்ஸ் தற்போது உலகில் வேகமாகப் பரவி வருகிறது. 1991இல் உலக சுகாதார தாபனத்தின் மதிப்பீட்டின்படி 8 - 10 மில்லியன் ஆண், பெண் பிள்ளைகள் HIV இன் பாதிப்புக்குட்பட்டிருந்தனர். இவர்களில் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ்"க்கு ஆளாகுவர் எனக் கூறப்பட்டது. தினமும் 850 பேர் HIVக்கு இலக்காகின்றனர். எய்ட்ஸ் காரணமாக இதுவரை 60 லட்சம் பேர் மரணத்தைத்தழுவியுள்ளனர். தற்போது எய்ட்ஸடன் வாழும் மக்களில் 90 சதவீதமானோர் வளர்முக நாடுகளைச் சேர்ந்தோராவர்.
92 ա. 676ն 96ւՋամմ

HIV வைரஸ் 3 வழிகளில் ஒருவருக்குக் கடத்தப்படலாம். அவை,
1. நோயுற்றவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளுதல், 2. நோயாளரின் குருதியை மற்றவருக்கு மாற்றுவதன்மூலம் அல்லது நோயாளி
பாவித்த ஊசியை மற்றொருவருக்குப் பயன்படுத்துவதன் மூலம்
3. (3 iள தாய் தன் பிலுள்ள குழர் க்கக் கடக்கல்
சாதாரண அன்றாட வாழ்க்கையில் நோய் பிடிக்கப்பட்டவருடன்
சேர்ந்திருப்பதாலோ, பழகுவதாலோ இந்நோய் தொற்றுவதில்லை. பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளே அடிப்படையாக அமைகின்றன.
எவரும் இந்நோய் தமக்கு வராதென வாளாவிருக்க முடியாது. பாலியல் துர்ப்பழக்கங்களிலிருந்து எம்மைப் பாதுகாப்பதே முக்கியம் ஆகும்.
UNAIDS நிறுவனம், இந்நோய் பற்றி மேற்கொண்ட மதிப்பீட்டின்படி உலகில் 23 மில்லியன் மக்கள் HIV அல்லது AIDS நோயாளிகளாவர். இவர்களில் 40%க்கு மேல் பெண்களாவர். 1996இல் 15 வயதுக்குட்பட்ட 4 இலட்சம் சிறுவர்கள் HIVஆல் பாதிக்கப்பட்டிருந்தனர்.
சிறுவர் பாலியல் துஷபிரயோகம் இந்நோய் சிறுவரிடையே தொற்றக் காரணமாகும். வருடந்தோறும் உலகில் ஒரு மில்லியனுக்கு கூடுதலான சிறுவர் பாலியல் வர்த்தகத்திற்கு உடபடுகின்றனர் என 1996ஆம் ஆண்டில் கூடிய சிறுவர் பாலியல் துஷபிரயோகத்திற்கு எதிரான உலக மகாநாடு சுட்டிக்காட்டியது.
இலங்கையில் முதலாவது எய்ட்ஸ் நோயாளி 1987இல் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து இலங்கை தம்மை உசார்படுத்திக் கொண்டது. 31 - 10 - 97 வரை 76 பேர் AIDS நோய்க்கு இலக்காகினர். இவர்களில் 61 பேர் இறந்தனர். ஆண்கள் 46 பேர், பெண்கள் 15 பேர். இலங்கையில் 2005ம் ஆண்டளவில் 80000 பேர் HIVக்கு இலக்காகுவர் என UNDP கூறுகிறது. இலங்கையில் ஓர் எய்ட்ஸ் நோயாளியின் மருத்துவச் செலவுக்கு 290 முதல் 1150 வரை அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது. அநேகமான சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்பும் தொழிலாளர்கள் HIVயுடன் வருவதற்கு சாத்தியங்கள் உண்டு எனக் கூறப்படுகின்றது.
HIV யினால் அல்லது எய்ட்ஸினால் பிடிக்கப்பட்டவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களை ஒதுக்குவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடாது. அவர்களுக்கும் புனர்வாழ்வு வழங்க வேண்டும். அவர்களுக்கும் உரிமைகள் உள்ளன.
இந்நோயின் பாதிப்பிலிருந்து சிறுவரைப் பாதுகாக்க பாலியல் கல்வி மூலம் அறிவு வழங்கப்படுகிறது. அதேவேளை பெற்றாரிடமும் இதுபற்றி விழிப்புணர்வு வேண்டும்.
சர்வதேச நினைவு தினங்கள் 93

Page 53
8ே5) உலக மனித உரிமைகள் தினம்
(World hiuman Rights Day)
தினம் : டிசம்பர் 11
கருப்பொருள் :
மனித உரிமைகள் சகல தரப்பினராலும் மதிக்கப்படல் வேண்டும்.
பின்னணி :
1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐ. நா.வின் பரிஸ் மகாநாட்டில் உலக மனித உரிமைகள் அறிக்கை ஏற்கப்பட்டது. அப்போது பொதுவாக ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் சகல நாடுகளும் இப்பிரகடனம் தம்மை சட்டபூர்வமாக கட்டுப்படுத்தாது எனக் கூறின.
மனிதனை அடிமைப்படுத்தல், இனப்படுகொலை, வெளிநாட்டவர் உரிமை மீறப்படல் போன்ற மனித உரிமை மீறல்கள் பல்வேறு நாடுகளிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதனையொட்டியே மனித உரிமை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்த இத்தினம் அனுஷ்டிக்ப்படுகிறது.
விழிப்புணர்வு :
தற்காலத்தில் உலக அரசியல் அரங்கில் குடியியல், அரசியல் உரிமைகள் சம்பந்தமாகவோ, பொருளாதார, சமூக , கலாசார உரிமைகள் சம்பந்தமாகவோ எந்த விடயத்தை எடுத்துக்கொண்டாலும் மனித உரிமைகள் என்பதே பிரதானமான அம்சமாகத் திகழ்கின்றது. மனித உரிமைகள் பற்றிய இந்தப் புதிய அக்கறை, எழுச்சிபெற்ற மானுடத்தின் வெளிப்பாடு என்பது தெளிவானதே.
ஐ. நா. செயலாளர் நாயகம் கோபி அன்னான் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 54வது அமர்வில் (ஜெனீவா - 1998 மார்ச் 18) உரையாற்றிய போது "சகல மக்களும் வன்முறை, பட்டினி, நோய், சித்திரவதை, பாகுபாடு ஆகிய பயங்கரவாதப் பிடிகளிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர்” என்றார்.
மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆரம்ப காலங்களில், மனித உரிமைகள் மீறலுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மனித
94 யூ. எல். அலியார்

உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எவ்வித அதிகாரமும் இல்லையென்றே பல நாடுகளும் கருத்துக் கொண்டிருந்தன. இந்த விடயத்தில் அமெரிக்காவும் விதிவிலக்கில்லை. சில காலத்தின் பின் 35 நாடுகள் மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றன. இதனைத் தொடர்ந்து 6 அடிப்படை மனித உரிமை ஒப்பந்தங்கள் ஏற்கப்பட்டன. இவற்றுள் இரண்டு இனவெறி, பெண்களை ஒடுக்குதல், சித்திரவதை, குழந்தைகளின் உரிமைகள் தொடர்பானவை.
1979 இலிருந்து பல நாடுகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கண்காணிப்புக்குட்படத் தொடங்கின. 1995 இல் எல் சல்வடோர், கம்போடியா, ஹாய்தீ, ருவாண்டா, புரூண்டி ஆகிய நாடுகளில் ஐ. நா. தன் கவனத்தைச் செலுத்தியது. 1993 ஜூன் 14 இல் வியட்நாமில் நடந்த 2வது மனித உரிமைகள் மகாநாடு பெண்கள் உரிமைகள் பற்றி கவனம் செலுத்தியது.
கடந்த காலங்களில் மனித குலத்துக்குச் சொல்லொனாத் துன்பங்களைக் கொண்டு வந்த போர், பயங்கரவாதம், பஞ்சம் போன்ற பயங்கர அனுபவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்பதற்காவே மனித உரிமைப் பிரகடனம், ஒரு பணிக் கூற்றாகவே (Mission Statement) எமது மூதாதையரால் பிறப்பிக்கப்பட்டது.
மனித உரிமைகள் பிரகடனம், 50 வருடங்களில் பல சாதனைகளைப் படைத்துள்ளன. ஆனால், இன்னும் பல சவால்கள் உள்ளன. பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள் தொடர்ந்தும் அலட்சியம் செய்யப்படுகின்றன. இதன் காரணமாக போஷாக்கின்மை, தூய குடிநீரின்மை, சுகாதாரக்கேடு, ஆரம்பக் கல்வி வாய்ப்பின்மை, வீட்டு வசதியின்மை என்பன மனித உரிமைகளுக்குச் சவால்களாக அமைந்துள்ளன.
மனித உரிமைகள் என்பது சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சமூக சமத்துவத்துக்கும், பூரணத்துவம் வாய்ந்த ஊடகமாக உள்ளது. ஐ.நா. தாபனம் இந்த மனித உரிமைகளை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும், பாதுகாக்கவும் ஒரு மையமாகச் செயல்படுகிறது.
இலங்கை போன்ற நாடுகளில் இனப் படுகொலை, சிறுபான்மையினர் ஒதுக்கப்படல், கல்வி, வேலை வாய்ப்புக்களில் அசமத்துவ நிலை, எதேச்சையாகக் கைது செய்யப்படல், காணாமற்போதல், தடுப்புக்காவல், தண்டனைகள், சிறைக்குள் படுகொலை ஆகிய மனித உரிமை மீறல்கள் இனிமேலும் நடைபெறாதவாறு ஐ.நா. சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். மனித உரிமைகள் ஜனநாயகத்தின் ஆணிவேர், உயிர்நாடி அது சகலராலும் மதிக்கப்பட அதுபற்றிய விழிப்புணர்வு தேவை.
சர்வதேச நினைவு தினங்கள் 95 .

Page 54
01.
02.
O3.
04.
05.
06.
O7.
O8.
O9.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
20.
உசாத்தனை நால் விபரம் (Bibiliography)
Action Plan for Sri Lankan Children
Dept. of National Planning - Oct. 1991 Karunanayake, Nandana. The Press in Sri Lanka,
Nugegoda, 1996. Pant N. C., Dimensions of Modern Journalism
Kanishka Publishers, Delhi - 1995. Population Statistics of Sri Lanka
Population Information Centre,
Ministry of Health, Colombo - Oct. 1996 Statistical Pocket Book 1997
Dept. of Census and Statistics, Colombo The State of the World's Children 1990
UNICEF - Oxford University Press - 1990. திங்கள் - ஐந்தாவது மலர் 1996
அரசாங்க தகவல் திணைக்களம், கொழும்பு. பண்பாடு - வைகாசி 1993
இந்து கலாசார திணைக்களம் - கொழும்பு. பொருளியல் நோக்கு - மே 1989 மக்கள் வங்கி. பொருளியல் நோக்கு மார்ச் 1996. பொருளியல் நோக்கு ஏப்ரல் - மே 1997 பொருளியல் நோக்கு ஜூன் 1997 மார்க்கம் - இதழ் 02, மலர் 03 (1996)
மார்க்க நிறுவகம், கொழும்பு. யுனெஸ்கோ கூரியர் - ஜூன் 1977
- அதே - செப்டம்பர் 1982
- அதே -- (3d 1983
- அதே - ஏப்ரல் 1984
- அதே -- ஜனவரி 1995
- அதே -- டிசம்பர் 1995
- அதே -- (CFLJLLibri 1997
96
யூ. எல். அலியார்


Page 55


Page 56
5 TaoTTaf "fUIT LI Õ Ô
அல்-ஹாஜ் யூ, எல். அலியார் சேவை அதிகாரியாக இணைந்து தற்போ பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் சமூகப்பணி, சமயப் பணி, இலக்கியம், துறைகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பணி துறையில் கால் நூற்றாண்டுக்கும் தொடர்ந்திருப்பவர்.
ஜனாப், அலியார் அவர்கள் ே (1968) தாம் பெற்ற பட்டப்படிப்புடன் இ அக்கறை செலுத்தி உழைத்து வருபவர். கல்வி டிப்ளோமாவையும் (1977), யாழ்பல் எம். ஏ. பட்டத்தையும் பெற்றவர். மேலு பல்கலைக்கழகத்தில் கல்வி முகாமைத்து பயின்று டிப்ளோமா சான்றிதழ் பெற்றவர் இலங்கையில் வெ6 இந்திய இலங்கை ம ஆக்கங்களை வெளி காரணமாக, கொழும்ட டிப்ளோமா பயிற்சி நெறி பல்கலைக்கழக மட் ஹாஜ் அலியார், பட்டத 事 விரிவுரையாளராகவு! பிரதேசக் கல்விப் பணிப்பாளராகவும் ப நிறுவகம் நடாத்தும் பட்ட மேற்படிப்புக் விரிவுரையாளராகவும் கடமையாற்றி வரு கல்வியியல், இலக்கியம், இலச் ஜனாப், அலியார், மட்டக்களப்பு (1976) கொழும்பு (1979) ஆகிய இடங்களில் மகாநாடுகளில் தமது ஆய்வுக் கட்டுரைக நோக்கு என்னும் நூலை வெளியிட்டார் கல்வியாளர், கல்வி நிர்வாகி, பட்ட ஆளுமைகளைக் கொண்ட அலிய மேலாக என்னுடன் பழகி வந்தவர். அ பயிற்சி, இலக்கிய ஈடுபாடு, ஆய்வு முயற்
கல்விப் போதனா பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம், 1998.05.22
ISBN: 9
 

BLI UJIITaf TfLLITT
, இலங்கை கல்வி நிர்வாக து கல்முனை மாவட்டத்தில் கடமையாற்றி வருபவர். ஆராய்ச்சி எனப் பல்வேறு பாற்றி வரும் இவர் கல்வித் மேலாகத் தடம் பதித்தவர்; அப்பணியில்
பேராதனை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் ன்றளவும் தமது கல்விப் புலமை மேம்பாட்டில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கலைக்கழகத்தில் (1984) கல்வியியல் துறையில் லும், அவுஸ்திரேலியாவில் மக்கோறி (சிட்னி) வதகவல் முறைமை என்னும் விஷேட துறையில்
(1996). ரிவந்த பல தினசரிகளிலும், வார மலர்களிலும், ாத சஞ்சிகைகளிலும் 1965 லிருந்து தமது |யிட்டுள்ள இவர் தமது எழுத்து ஆர்வம் | பல்கலைக்கழகம் நடத்திய பத்திரிகையியல் றியையும் பயின்றார் (1997). டத்தில் பல்வேறு பட்டங்களையும் பெற்ற அல்ாரி ஆசிரியராகவும், ஆசிரிய கலாசாலையில் ம், கொத்தணிப்பாடசாலை அதிபராகவும், ணியாற்றியுள்ளார். அத்துடன் தேசிய கல்வி கல்வியியல் டிப்ளோமா பயிற்சி நெறிக்கான நகிறார். $கிய ஆய்வு என்பனவற்றில் பேரார்வம் காட்டும் , சென்னை (1974), காயல்பட்டணம் (1978), நடைபெற்ற அனைத்துலக தமிழாராய்ச்சி ளைப் படித்துள்ளார். 1995ல் இவர் கல்வியியல்
ஆய்வாளர், ஆக்க எழுத்தாளர் எனப் பன்முகப் Tர் அவர்கள், கடந்த இருபது ஆண்டுகளுக்கு வருடைய ஆழ்ந்த சிந்தனை, அகன்ற கல்விப்
சி என்பவற்றால் நான் பெரிதும் கவரப்பட்டவன்.
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
55-95831-1-5