கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2008.05

Page 1
தந்து
| No ss | so 2 爵 (£8 || 19 じ 2 || 岛
棒*( 竺」
 

I 010 QI099, ÎIBIQossillos)

Page 2
es CAUSEWA
E . E till
--
Berobas ALISWA'
エ
EMulsh PAINT
NEW ROYALARDWARE MAIN STREET, MAWADICHCHENAI, WALAICHCHENAI. Tel: 0777223284,077-5922326, 065-2257630
” q S CTTLLkLkC T S S TTLTT LTTTS GTT TTCS LLTLTTCS TTTCLLCTS GTTLLS LTLLLCTS L LLSLLLS aGTDCS LLLkL LLTTTTLMLSSSLCtGLL TTTS Entre General Hardware Mercke fals.
-
 
 
 
 
 
 
 
 
 
 

"இசிையம் இல்லாமில் இலக்கியம் இல்லை"
வைகாசி 2008 (திவ ஆண்டு 2039)
ஆசிரியர் : எசங்கதிரான்
g|Li|്യമഖീ
திருதகோபாலகிருஸ்ணன் இல,19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை,
COItaC :
Mr.T.Gopalakrishnan
19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
Garso GaoGiff /Telephone
O55 2223950
077 3597.045
மின்னஞ்சல் / E-mail senkathirgopalagmail.com
ஆக்கங்களுக்கு ളൂിയ്യ സ്ത്രി,
- -
لم
"ஆண்டுகள் பலவாய் மீண் டும் ஒரு ‘மே தினம். வழமை போல் அரசியல் தலைவர்களின் மேதினச் செய்திகள் - அரசியல் கட்சிகளின் மேதின ஊர்வலங்கள்
மாநாட்டுத் தீர்மானங்கள்
மாநாட்டுத் தீர்மானங்களையும் அரசியல்வாதிகளின் வாக்குறு திகளையும் கேட்டுக் கேட்டுத் தொழிலாளர்களுக்குச் சலித்துப் போய்விட்டது. எல்லாமே "ஏட்டுச் சுரக்காய் தான். மேதின ஊர்வ லங்களும் - மேதின விழாக்களும் தொழிலாளர்களின் உரிமைகளுக் குக் குரல் கொடுக்கும் நிலை மாறி, அவை இன்று அரசியல் கட்சிகளின் மக்கள் பலத்தை "பம்மாத்துக் காட்டும் கேளிக்கைக ளாகிவிட்டன. தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுக்குப் போராடிய காலம் போய் தொழிலாளர்களைச் சுரண்டுபவைகளாக மாறிவிட்டன. இந்த நிலையில் மேதினம் தொழி லாளர்களின் வாழ்வில் அர்த்தமற்ற தாகிவிட்டது.
விலைவாசி ஏற்றமும் - கட்சி அரசியல் போட்டியும் - தொழிற் சங்கங்களுக்கிடையேயான தக ராறுகளும் இவையெல்லாவற்றிற்
Ol

Page 3
கும் மேலாக நாட்டில் தொடர்ந்து நிலவும் யுத்த முனைப்புக்களும் தொழிலாளர்களையே பெரிதும் பாதிப்படையச் செய்கின்றன.
எனவே, தொழிலாளர் வர்க்கத்தைச் சமூக, பொருளாதார ரீதியாகக் கைதுக்கிவிட்டு அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விடுவதற்கு மே தினங்கள் வழிவகுக்காதவரை அதனால் எந்தப் பலனும் விளையப் போவதில்லை என்பதை நாட்டின் அரசியல்வாதிகளும் - தொழிற்சங்கத் தலைவர்களும் - கல்விமான்களும் உணர்ந்து உருப்படியான செயற்பா டுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே "செங்கதிர் இன் மேதின வேணவா வசங்கதிரான் - கட்டண விபரம் : (அஞ்சல் செலவு உட்பட)
இலங்கை இந்தியா வெளிநாடு
"செங்கதிர்
அரையானன்டுக்கட்டணம் 500/- 250/- USS O ஓராண்டுக் கட்டணம் IOOO- 500- USS 20 ஆயுள் கட்டணம் 70,000/- 5000- USS I00 புரவலர் கட்டணம் 25,000/- 2,500/- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் ಆಟ್ತಿ "செங்கதிர்" வழங்கப்படும் புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" வழங்கப் படுவதுடன் "செங்கதிர்" எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் கட்டணம் பின் அட்டை வெளிப்புறம் முழு 5))) 1500 USS 50
9527DJ 3DOL) TJD) USS 30 முன் அட்டை உட்புறம் (Լքվի 3DO USS 30 அரை 2D 750 USS 20 பின் அட்டை உட்புறம் (ՔԼք 2. 750 USS 2D
அரை I50[] 500 USS I5
அன்பளிப்பு
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல 11310038588996 (நடைமுறைக்கணக்கு)
காசுக்கட்டளை அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.போபாலகிருஷ்ணன் என்று
பெயரிடுக.
02ஆவிஜி
Tlmaierf zoon
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"செங்கதிர்' இதழின் இம்மாத அதிதி கல்வி, கலாசார அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாள ரும், கல்விமானுமாகிய ஜனாப்எஸ்எச்.எம்.ஜெமீல் அவர்களாவார்.
முத்தமிழ்வித்தகர் விபுலானந்தர் அடிகளார் பிறந்த
காரைதீவுக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள
சாய்ந்தமருது’ எனும் கிராமத்தில் வாழையடி வாழையாக கதேச மருத்துவம், கல்வி ஆன்மீகம் ஆகிய துறைகளில் சிறப்புற்று விளங்கும் குடும்பமொன்றில் 1940ம் ஆண்டு எஸ்.எச்.எம்.ஜெமீல் பிறந்தார்.
தனது ஆரம்பக் கல்வியைக் காரைதீவு இராமகிருஸ்ண ஆண்கள் வித்தியாலயத்திலும், கனிஸ்டநிலைக் கல்வியைக் கல்முனைப் பாத்திமாக் கல்லூரியிலும், உயர் கல்வியைக் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியிலும், பல்கலைக்கழகக் கல்வியைப் பேராதனை - கொழும்பு - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களிலும் பெற்றார். பொருளாதாரச் சிறப்புப் பட்டதாரியான இவர், கல்வி டிப்ளோமா, மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் முதுமாணிப் பட்டங்களைப் பெற்றவர்.
கல்வித்துறையில் ஆசிரியராக - கல்லூரி அதிபராக - ஆசிரியர் கலாசாலை அதிபராக - கல்வி நிர்வாக சேவையின் முதலாம்தர அதிகாரியாக - பரீட்சை உதவி ஆணையாளராக - கிழக்குப் பல்கலைக்கழக (முதலாவது) பதிவா ளராக - முஸ்லிம் சமய, கலாசார அமைச்சின் ராஜாங்கச் செயலாளராக - கல்வி, கலாசார அமைச்சின் மேலதிகச் செயலாளராக பதவி வகித்த மிகச்
சிறந்த நிர்வாகி,
தவிர, இளப்லாமிய நுண்கலைக்குழுத் தலைவர்- கல்வி அமைச்சின் இஸ்லாம் சமய விவகார ஆலோசனைச் சபைத் தலைவர் - கிழக்குப் பல்கலைக்கழகக் கவுன்சில் உறுப்பினர் - தென்கிழக்குப் பல்கலைக்கழக அறபு இஸ்லாமிய பீடச் சபை உறுப்பினர் - இலங்கை ரூபவாஹினி மற்றும்

Page 4
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் விவகார ஆலோசனைச் சபை உறுப்பினர் - காதி நீதிமன்ற மேன்முறையீட்டுச் சபை உறுப்பினர் ஆகிய ஆளுமைகளை அலங்கரித்தவர். இவர் எழுதிய “கிராமத்து இதயம்’ என்ற நாட்டுப் புறவியல் ஆய்வு நூலுக்கு 1995 இல் அரச சாஹித்திய விருதும், வடக்கு, கிழக்கு மாகாண சபையின் இலக்கியப் பரிசும் வழங்கப்பட்டன. கல்முனை சாஹிறாக் கல்லூரியின் அதிபராகவிருந்த காலத்தில் உயர் வகுப்புக்களில் இந்து நாகரிகத்தையும் ஒரு பாடமாக அறிமுகம் செய்து இன ஐக்கியத்தை ஏற்படுத்திய பரந்த சிந்தனையாளர்.
மேலும், சிறந்த பேச்சாளர், ஆய்வாளர், சமூகப் பணியாளர்.
கிழக்கிலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒன்று கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவிக்க வேண்டிய சகல தகுதிகளையும் உடைய ஜனாப்எஸ்எச்எம்ஜெமீல் அவர்களை “செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதியாக அறியத்தருவதில் “செங்கதிர் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது. - ஆசிரியர் -
*遍飢廬啞°
- எஸ்.எச்.எம்.ஜெமீல் -
དེ༡༡༡༽
இலங்கையில் இராமகிருஷ்ண சங்கத்தின் சேவைகளைப் பற்றிச் : சிந்திக்கும் பொழுது முதலில் மனதில் தோன்றுவது சுவாமி விபுலாநந்: தரும் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இராமகிருஸ்ண சங்கப் பாடசாலைகள், ! மட்டக்களப்பு சிவானந்தா வித்தயாலயம், கல்லடி - உப்போடை சிறுவர் :
exoooaasrTá 2008
 
 
 

இல்லம், காரைதீவு சாரதா சிறுமிகள் இல்லம் என்பனவாகும். இவ் இராமகிருஷ்ண சங்கப் பாடசாலைகளும் குறிப்பாக சிவானந்தா வித்தியாலயமும் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்திருக்கின்றன.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவியைத் துறந்து இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவியைப் பொறுப்பேற்றவேளையில் இரு முஸ்லிம்கள் சுவாமியின் மாணவர்களாயினர். ஒருவர் இஸ்லாமியத்
அவர்களாவார். அடுத்தவர், தலைசிறந்த தமிழ் அறிஞராகவும், நூலக
வியற் துறையில் துறைபோகக் கற்றவராகவும் இன்று திகழ்ந்து கொண்டிருக்கும் எஸ். எம். கமால்தீன் அவர்களாவார்.
| இதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் சுவாமி அவர்கள் கல்வித் | தொண்டில் முழுமையாக ஈடுபட்டிருந்த காலத்தில் ஒரு முஸ்லிம்
பெரியார் அவரது ஆய்த நண்பராகவும் இன்னொருவர் அவரது பிரிய மாணவனாகவும் இருந்துள்ளனர்.
சாய்ந்தமருதுவைச் சேர்ந்த முத்தலிபு வைத்தியரே அவரது நண்ப
ராவார். சுவாமியும் அவரும் 1892 ஆம் ஆண்டு பிறந்தவர்கள். இளமைப் பிராயத்தில் இருந்தே நண்பர்கள். மயில்வாகனனார் பிரபோத சைத்தன்யர் :
ஆகி சுவாமி விபுலாநந்தரான பின்னர் தமது பிறந்தகமான காரைதீவுக்கு அடிக்கடி வருவதுண்டு. அவர் வரும் வேளைகளில் இராமகிருஷ்ண சங்கம் நடத்திய சாரதா வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள அநாதை கள் இல்லக் கட்டிடத்தின் ஓர் அறையில் தங்கியிருப்பார். அவ்வாறு அவர் அங்கு தங்கியிருக்கும் வேளைகளில் அவரது தங்கச்சியின்
சென்று பலமணி நேரங்கள் மிக அந்நியோன்யமாகக் கதைத்துக் கொண்டிருப்பார்.
இந்நெருக்கத்தின் காரணமாகவே முத்தலிபு வைத்தியரின் பிள்ளை களும் பேரப் பிள்ளைகளும் காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண் பாடசாலையிலும் ஆண் பாடசாலையிலும் கல்வி கற்றனர். இவர்கள்
f
eodearagráil 2OOő
தமிழ் இலக்கியத்தின் பிதாமகனான அல்லாமா பேராசிரியர் எம்எம்உவைஸ் :
மகளான கண்ணம்மா அவரது நலன்களைக் கவனித்துக் கொள்வார். இவ்வாறான வேளைகளில் முத்தலிபு வைத்தியர் சுவாமியைக் காணச்

Page 5
மட்டுமன்றி, சாய்ந்தமருதுவைச் சேர்ந்த அநேக பிள்ளைகள் இவ்விரு பாடசாலைகளிலும் கல்வி கற்றனர். சாரதா வித்தியாலயம் என அழைக்
மருமகளான கண்ணம்மா அக்காவும் அங்கு ஆசிரியையாகக் கடமை யாற்றினார்.
பாடசாலையில் படித்தனர். அவ்வாறு படித்தவர்களுள் ஒருவர் பின்னர்
முத்தலிபு வைத்தியரின் பேரர்கள் காரைதீவு இராமகிருஷ்ண சங்கப்
நிந்தவுர் வட்டாரக் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றபொழுது,
வழங்கிய இடமாக இருக்கவேண்டும் எனத் தீர்மானித்து காரைதீவு: இராமகிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலைக்கே முதன்முதல் விஜயம் ! செய்தார்.
இதேபோன்று முத்தலிபு வைத்தியரின் மகனான அப்துல் மஜீத் என்பவர் தனது இடைநிலைக் கல்வியை முழுமையாக மட்டக்கள சிவானந்தா வித்தியாலயத்திலேயே பெற்றார்.
இந்நாட்டின் முதுபெரும் புலவராகத் திகழும் மருதமுனையைச் சேர்ந்த புலவர்மணி அல்ஹாஜ் ஆ.மு. ஷரிபுத்தீன் அவர்கள் கல்முனையில் சுவாமி நடத்திய மதுரைத் தமிழ்ச் சங்க வகுப்பில் மாணவனாகப் படிக்கும் பேறுபெற்றார். அவ்வாறு பாடங்கேட்டபோது சுவாமி ஒரு நாள் “நீ பிற்காலத்தில் ஒரு பெரும் புலவனாகத் திகழ்வாய்” என வாழ்த்துக்கூறி ஆசி வழங்கியதைப் புலவர்மணி இன்றும் நினைவு கூர்கிறார்.
1950களில் இஸ்லாமிய இலக்கியம் என்றால் சீறாப்புராணம், மஸ்தான் சாஹிபு பாடல்கள் இரண்டுமே என்றிருந்த நிலைமை மாறி, இன்று: இஸ்லாமிய இலக்கியம் என்றால் ஈராயிரத்து ஐநூற்றுக்கு மேற்பட்டவை: உள்ளன என்பதை உலகுக்குக் காட்டிய உவைஸை உருவாக்கி விடடவர் விபுலாநந்த அடிகளே ஆவார். எம்.எம். உவைஸ் இலங்கைப் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவுடன் தமிழ், சிங்களம், அறபு ஆகிய முன்று மொழிகளையும் தமது பாடங்களாகக் கற்க ; விரும்பினார். ஆயினும், பல்கலைக்கழக நேரசூசி இதற்குத் தடையாய
 
 
 
 
 
 
 
 
 
 

மைந்தது. அதனால் அறவு மொழியைக் கற்க முடியவில்லை. தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும் ஒரே பாடவேளையில் நடைபெற்ற 1ாரணத்தினால் அங்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனைச் சுவாமி அவர்களே தீர்த்து வைத்தார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கத் தமிழும், சிங்களமும் நடைபெறுகின்ற பாடவேளையில் அவர் சிங்கள விரிவுரைகளுக்குச் செல்லலாம் எனவும், அக்காலையில் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த தமிழ் டிப்ளோமா வகுப்பில் தமிழைக் கற்க வேண்டும் என்றும் டிப்ளோமா வகுப்பில் தமிழைக் கற்க வேண்டும் என்றும் அனுமதி வழங்கப்பட்டது. இவ்வனுமதியைப் பெற்றுக் கொடுத்தவர் சுவாமியே ஆவார். இந்நன்றிக் கடனுக்காகவே உவைஸ் பல்கலைக்கழகத்தில் தமிழை சுவாமி விபுலாநந்தரின் கீழ் படிப்பதற்குத் தீர்மானித்தார். ஆயினும் 1947 ஆம் ஆண்டு விபுலாநந்தர் அடிகளர் இவ்வுலக வாழ்வை நீத்தமை உவைஸஉக்கு ஒரு பேரிழப்பே. ஒரு நண்பரின், வழிகாட்டியின், ஆலோசகரின், தத்துவஞானியின்
என அல்லாமா உவைஸ் எண்ணற்ற இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் சுவாமியிடம் கற்ற இன்னொரு மாணவன் அல்ஹாஜ் எஸ்.எம். கமால்தீன் ஆவார்.
இலங்கையின் முதல் முஸ்லிம் சிவில் சேவையாளனாக வாழ்வினை ஆரம்பித்து, பின்னர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபராகக் கல்விப் பணிபுரிந்த ஏ.எம்.ஏ. அஸிஸ் அவர்களும் தமது கல்விக் கொள் கைகளை உருவாக்குவதில் சுவாமி விபுலாநந்தரின் ஆளுகைக்கும் உட்பட்டிருக்கிறார் என்பதைத் தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட் டுள்ளார். அக்கட்டுரையில் அஸிஸ் பின்வருமாறு கூறுகிறார்.
“நான் 1942-43 ஆம் ஆண்டுகளில் கல்முனை உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய வேளையில் சுவாமி விபுலானந்தரோடு நெருங்கிய தொடர்புகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. சிறிது காலம் கல்முனையில் இருந்து சில மைல்கள் தூரத்திலுள்ள தனது ஒளரான காரைதீவில் அவர் தங்கியிருந்தார். பின்னர் 1944 இல் கண்டி உதவி
அரசாங்க அதிபரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான 'மெளன்ட்
evelastrál 2OOð
கன்னலமற்ற ஆதரவு உவைஸக்கு அற்றுப்போய்விட்டது. இருப்பினும் : தம்மை இஸ்லாமியத் தமிழ் அறிஞராக ஆக்கிவிட்டவர் அடிகளாரே !

Page 6
:எயிறி’ எனும் வீட்டில் என்னுடன் பன்னிரெண்டு நாட்கள் தங்கியிருந்தார். : :இவ்வேளையில் அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
:கருத்துக்கள் துணையாக இருந்தன. அரபு - தமிழ் அகராதி ஒன்றின் :தேவையை வற்புறுத்தியும் அதை ஆக்குவதற்குத் தான் உதவி அளிக்க:
:விரிவாக எடுத்துக் கூறினார். கிழக்கு மாகாணத்தைப் பற்றிய அவரது :அறிவையும், அனுபவத்தையும் கொண்டு அப்பகுதி மக்களுக்கு மத, ! இன, சாதி வேறுபாடுகளின்றித் தத்தமது சமய முன்னேற்றத்திற்கும், :கல்வி வளர்ச்சிக்கும், சமுதாய எழுச்சிக்குமான அவசர உதவிகள் : :தேவைப்படுகின்றன எனக் கருதினார். இதற்கான தலைமைத்துவம் :கல்வி அறிவுள்ள, சமயப்பற்றுள்ள, தூய மனமுடையவர்களிமிருந்தே ! :வரமுடியும் என நம்பிக்கை கொண்டிருந்தார்”.
இவை எல்லாவற்றையும் விட, இருபதாம் நூற்றாண்டின் மத்திய :காலப்பகுதியில் முஸ்லிம்களின் கல்விக்கு மட்டக்களப்பு சிவாநந்தா :
:வித்தியாலயம் பெரும் பங்காற்றியுள்ளது.
சிவாநந்தா வித்தியாலயம் 1929 இல் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக் :களப்பு நகரைவிட்டு ஒதுக்குப்புறமாகக் காடு மண்டிக்கிடந்த ஒரு :
08
eoauasné: 2006
 
 
 
 
 
 
 
 
 

எல்லா முஸ்லிம்களுக்கும், இளவாவிலுள்ள சிங்களவர்களுக்கும் அது உதவுதல் வேண்டும் என்றே சுவாமி ஆசைப்பட்டார்.
அவரது ஆசை வீண்போகவில்லை. ஒரு காலத்தில் கிழக்கு மாகா
ஏற்பாடு செய்திருந்தார் சுவாமி.
சமகாலத்தில் கல்வி கற்றனர். அவர்களை இனங்கண்டு கொள்வதற் காகப் பட்டப் பெயர்களும் சூட்டப்பட்டிருந்தன. முத்தலிபு வைத்தியரின் மகன் அப்துல் மஜீது பிற்காலத்தில் சட்டத்தரணியாகக் கடமை யாற்றினார். அடுத்தவர் பொத்துவில், சம்மாந்துறைத் தொகுதிகளில் 30 வருடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினரா
பிரதியமைச்சருமான முதலியார் எம்.எம். இப்றாஹீம் அவர்களின் மருமக னும், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரியின் ஆயுட்
; காதியாகவும் கடமையாற்றிய அல்ஹாஜ் அப்துல் மஜீது நான்காவது
மன்ற உறுப்பினர் எம்.ஐ.அப்துல் மஜீது ஆவார். முதுர் தொகுதி நாடாளுமன்ற அங்கத் தவராகவும், பிரதி அமைச்சராகவும் கடமை யாற்றிய ஏ.எல். அப்துல் மஜீத் அவர்களும் இவ்வித்தியாலயத்திற் கற்றவ
ரேயாவார்.
இவர்களைப் போன்று இப்பிரதேசத்தின் வேறு பலரும் இங்கு கல்வி கற்றவர்களே ஆவர்.
ணத்தின் எல்லா முஸ்லிம் கிராமங்களில் இருந்தும் பெருந்தொகை : மாணவர் சிவாநந்தா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கியிருந்தே : கல்வி கற்றனர். அங்கு றம்ழான் காலத்தின் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் சுவாமியினால் செய்து கொடுக்கப்பட்டன. இஸ்லாமும் ஒரு கட்டாய பாடமாகக் கற்பிக்கப்பட்டது. இதேபோன்று சிங்களமும்: பெளத்தமும் கற்பிப்பதற்கும் ஓர் ஆசிரியரையும் ஒரு பிக்குவையும்:
கவும் பல வருடங்கள் பிரதியமைச்சராகவும் கடமையாற்றிய அல்ஹாஜ் எம்.ஏ. அப்துல் மஜீது ஆவார். முன்றாமவர் சாய்ந்தமருதுவைச் சேர்ந்த வரும், பொத்துவில் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் :
; காலத் தலைவருமான அல்ஹாஜ் பளில் ஏ. மஜீத் ஆவார். அவரது : ; சகோதரும் உள்ளுராட்சி உதவி ஆணையாளராகவும் கல்முனை :
ஆளாவார். ஐந்தாமவர் பொத்துவில் தொகுதி முன்னைநாள் நாடாளு :
09|
eoasarré 2008

Page 7
எனவே, கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் கிராமங்களிலே மகா வித்தியாலயங்களை ஆரம்பிப்பதற்கு முற்பட்ட காலப்பகுதியில் அக்கிரா : ; மங்களிலிருந்து ஆங்கிலக் கல்வி பெற விரும்புபவர்கள் மட்டக்களப்பு: நகரத்திலும், கல்முனையிலும் அமைந்திருந்த மிஷனரிப் பாடசாலைக ளுக்குச் சென்றனர். இதே காலப்பரப்பிலேதான் கல்லடி ஓடப்போடை யில் சுவாமி விபுலானந்தரினால் சிவாநந்தா வித்தியாலயம் ஆரம்பிக் : கப்பட்டு வடக்கே முதூரில் இருந்து தெற்கே பொத்துவில் ஈறாகவுள்ள : i பெருந்தொகையான முஸ்லிம் மாணவர்கள் அங்கு சென்று கல்வி : கற்றனர். எனவே, 20 ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் கிழக்கு: மாகாண முஸ்லிம்களிடையே ஆங்கிலக் கல்வி பெற்றோரினை உருவாக்குவதில் இராமகிருஷ்ணமிஷன் பாடசாலைகள் ஆற்றிய பணி என்றும் நினைவுகூறத்தக்கது.
நன்றி : இராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த மலர், கல்முனை. 1997 செப்டம்பர் 2;ப: 24-26
புரட்சி
O இருந்து
ஒப்பினால்
குடிசையில்
விழும்.
குடிசையில் நின்று
தப்பினால் േu
600.
நன்றி: "காசி ஆனந்தன் நறுக்குகள்’
円
வைகாசி 2008
 
 

(2 கதிர்முகம்
தொழிலாளர்தினமாகிய
மே (ΜΑΥ DAY,
அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் 1886ம் ஆண்டில் தொழி லாளர்களால் ஹை மார்க்கட் (Hay Market) எனும் இடத்தில் நடை பெற்ற வேலைநிறுத்தப் போராட்டம் எட்டு மணிநேர வேலை எனும் முக்கிய கோரிக்கையை முன்வைத்தது. அன்றைய வேலை நிறுத் தத்தில் கறுப்பின மக்களின் தொழிலாளர்களே அதிகமானோர். தொழில் வளர்ச்சி கண்ட அமெரிக்காவின் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பன்னிரெண்டு முதல் பதினான்கு மணிநேரம் கட்டாய வேலை செய்யவேண்டி நிர்வாகம் நிர்ப்பந்தித்தமையால் இவ்வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்பட்டது. வெள்ளைநிறக் கொடிகளைத் தாங்கியபடி எட்டுமணி நேரம் வேலை கேட்டு இவ்வேலை நிறுத்தம் நடைபெற்றது. போராட்டம் தொடர்ந்தபடியினால் நிர்வாகம் அடக்கு முறையைத் தூண்டியது. நிர்வாகத்துக்குச் சார்பாக அரச படைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 12 பேர் உடனடியாகவும் பலர் காயமடைந்தும் பின்பு பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் வெண்கொடிகள் இரத்தத்தினால் செங் கொடிகள் ஆக்கப்பட்டன. இவை நடைபெற்று மூன்றாவது ஆண் டான 1889ல் இரண்டாம் அகிலம் எனும் இன்டர்னஷனல் முழு உலகிலும் ஒரு நினைவு தினத்தை பிரஞ்சுப் புரட்சியின் நினைவுகூரல் நிகழ்வாக நடத்தியது.
1890ல் கூடிய இன்டர்நெஷனல் எனும் உலக அகிலம் மே மாதம் முதல் திகதியை உலக தொழிலாளர் தினமாகப் பிரகடனப் படுத்தியது.
“மேதினத்தின் வரலாறு புரட்சியின் வரலாறாகும்”.
unilates 2ᏅᏅ8

Page 8
பார்க்கையில்
நீங்கள்
அணிந்திருக்கிறவனின் காலைப் பார்க்கிறீர்கள்.
அவன்
விெட்டியது திறகை.
விளந்தது
3இனை
sese abajarfil 2006
நன்றி: "காசி ஆனந்தன் நறுக்குகள்
 
 
 
 
 
 

FTGOTT
இலங்கை வானொலி நிலையத்தின் நாடகத் தந்தை' என வர்ணிக்கப் பட்ட 'சானா (செல்லத்துரை சண்முக " நாதன்) அவர்கள் யாழ்ப்பாணம் தெல்லிப் பளையைச் சேர்ந்தவர். பரமேஸ்வராக் கல்லூரியில் படித்தவர்.
முன்பு 'கொழும்பு வானொலி நிலையம்’ என்ற பெயரில் இயங்கிவந்த இலங்கையின் ஒலிபரப்புச் சேவை புனரமைக்கப்பட்டு 1949ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து ‘இலங்கை வானொலி' என்ற பெயரில் இயங்கத் தொடங்கிய பின்னர் வானொலி நாடகத் துறைக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. அந்தவகையில் 1951 இல் முதலாவது தமிழ் வானொலி நாடகத்துறைத் தயாரிப்பாளராக நியமனம் பெற்றார் சானா அவர்கள்.
முற்றிலும் மேடை நாடகத்துக்கே பழக்கப்பட்டிருந்த சூழலில் அவர் இலங்கை வானொலியில் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) கடமையாற்றிய 1950-1973 காலப்பகுதியில் வானொலி என்கிற ஊடகம் மூலமாக தமிழ் நாடகம் பயிலப்படுவதற்கும், அது சம்பந்தமாக பரிச்சயப்படுத்தலுக்கும் சானாவினுடைய பங்கு மிகக் கணிசமானது.
ஒவியக்கலை பயில்வதற்காக சென்னை சென்ற அவர் அங்கு நடிப்பு உலகினுட் புகுந்து சினிமாவிலும் (“கண்ணகி’, ‘சகுந்தலை") தோன்றியவர். ஆங்கில அறிவுள்ள - நாடகத்தைப் பற்றித் தெரிந்த - நாடகத்தைத் தொழிலாகவே கொண்டவர் எனக் கூறுமளவுக்கு வாழ்ந்த "சானா’ அவர்கள் வானொலி நாடகத் தயாரிப்பாளர் மட்டுமல்ல, ஓர் சிறந்த நடிகனாகவும் திகழ்ந்தார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட 'டிரைவர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 1942-1945 காலப்பகுதியில் ‘தேவதாசி' எனும் இந்தியத் திரைப்படத்தில் நட்டுவாங்கம் செய்யும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இதிர் eabajas Tél 2006

Page 9
ஈழகேசரியில் பணியாற்றிய போது “பரியாரிபரமர்” போன்ற கட்டுரைகளை
(உரைச் சித்திரம்) எழுதினார். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இலங்கை வானொலியில் ஒலிபரப்பான "லண்டன் கந்தையா' 'விதானையார் வீடு” போன்ற நாடகங்கள் (இலங்கையர் கோன் எழுதியவை) சானாவின் கலை வண்ணத்தில் உருவாகிய வானொலி நாடகங்களுள் சில. வானொலி நாட கங்களுக்கான நாடகப் பிரதிகள் எழுதுவதிலும் திறனுடைய இவர் மேடை நாடகங்களைத் தயாரிப்பதிலும் வெற்றி கண்டவர். (உ+ம்) ‘பதியூர்ராணி', "பதிவுத்திருமணம்’. V−
இலங்கை வானொலியில் மத்தாப்பு’ எனும் மாதமொருமுறை நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தியவர்.
தமிழ்த் திரைப்படத்துறை - இதழியல் அனுபவம் - இலங்கை வானொலி - கொழும்புத் திட்டத்தின் கீழ் பிபிசியில் பணி - ஷேக்ஸ்பியர் நினைவுக் கலையரங்கில் பயிற்சி என்பன இவரது ஆற்றலைப் புடம்போட்டன.
சிறந்த ஓவியருமான இவர் பல புத்தகங்களுக்கு அட்டைப் படங்கள் வரைந்துள்ளார். (உ+ம்) ‘தேனருவி', 'பால போதினி. கன்வஸ் துணியில் ஒயில்பெயின்டிங்கால் ஒவியங்கள் வரைவார். ஒட்டுச் சித்திரங்கள், கேலிச் சித்திரங்களும் (Cartoons) வரைவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். இவரால் வரையப்பட்ட பல ஓவியங்கள் கதிர்காமத்தில் இருந்தன.
கடமையில் மிகவும் கண்டிப்பானவராகத் திகழ்ந்த 'சானா’ அவர்கள் நகைச் சுவை உணர்வுமிக்கவர். நாடகங்கள் வானொலியில் நேரடியாக ஒலிபரப்பப்பட்ட அக்காலகட்டத்தில் நேரத்திற்கு மிக முக்கியத்துவமளித்துக் கண்டிப்புடன் கலைஞர்களை வழிநடாத்தியவர். அவரால் உருவாக்கப்பட்ட வானொலி நாடகக் கலைஞர்கள் பலபேர். (உ+ம்) சுப்புலகூழ்மி காசிநாதன், திருமதி.ராஜேஸ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீத், அப்புக்குட்டி இராஜகோபாலன், யோகா தில்லைநாதன், கே.எஸ்.பாலச்சந்திரன், கோகிலவர்த்தனி சிவராஜா, எஸ்.செல்வசேகரன்,
- வாங்கதிரான்,
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிடமிருந்து ஆக்கங்கள்
வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர், “செங்கதிர்’ இல.19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
விசாலாட்சி றமீட்.
இEதிேர் coelesmá) 2OOð

ருேதிகுறிபின்னரான
எனது சராசரி நாட்களின் இறுக்கங்களில்
போர் பற்றியதான வாசகங்களில் སྨོསྨོསྤྱི་ "− உரசப்பட்ட
கனவுகளையும், கனாக்களையும் சுமந்துகொண்ட நொண்டிச் சிறகு இனி எங்கு புறப்படும்.?
ஆயுதம் குடுறும்
போரின் வேட்டையிலிருந்து
செவிகளை விலத்தி
சமரசங்களை யாசிக்கவே துணிகிறேன். சமயலறைச் சுவரில் புடுவங்களில் படர்ந்து S 0pbysissI ||M, FiluIIð டுகத்தைக் கவ்வியுள்ளன இடுள் அவாவி
இரத்தக்கறைகள். விடிகாலையுடன் சார்ந்து கொள்கிறது
உன் உள்ளத்தில் வசீகரம் நிறைந்த
தோய்ந்து போன இரவின் கனவுகளும் கோப உணர்வுகளின் பகற் கணாக்களும் வன்ம தேர்வுகளை போரின் வக்கிரத் தடங்களல்
B மயானவெளிக் களங்களாக இடுப்பும் - மரணடுமாக உடுமாறிவிட்டன. அமையப்போகிறது? - eraberesi) ezayab -
2008

Page 10
விேைதர்தல்மண
மால்டர் சிவலிங்கம் அவர்கள் (ஆர்.இரத்தின சிங்கம் சிவலிங்கம்) இலங்கையில் வில்லுப்பாட்டுக் கலையை அறிமுகம் செய்தவர். ஈழத்து வில்லிசை யின் பிதாமகன் அவரே. கதை சொல்லும் கலை T= இவருக்குக் கைவந்த கலை. சுமார் 18 ஆண்டுகள் " மட்டக்களப்பு மாநகர சபை பொது நூல்நிலையத் தில் கதை சொல்லும் கலைஞராகப் பணியாற்றி 7 யவர். இலங்கை கலாசார அமைச்சின் கலாபூஷன விருது (1999), வடக்கு-கிழக்கு மாகாண ஆரூநர் محنت== விருது (2000) கிழக்குப்பல்கலைக்கழகம் வழங்கிய இலக்கியக் கலாநிதிப் பட்டம் (2002) ஆகியவற்றைப் பெற்றவர். 1997 இல் இங்கிலாந்திலும் வில்லுப்பாட்டு
நிகழ்ச்சி நடத்தியவர் நடத்தியவர். நாடகக் கலைஞரும் கட
நஉேஇறிேஉைறிலே80
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பிலே "சூரு சாம்பலாப் போச்சிப் போடியாரே" என்ற நகைச்சுவைக் கிராமிய நாடகம் பார்த்தவர்கள் பலராலும் புகழ்ந்து பாராட்டப்பட்டது.
மட்டக்களப்பின் பலபாகங்களிலும் இருபத்தைந்து மேடைகளிலே நடிக்கப்பட்டு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது "சூடு சாம்பலாப் போச்சி போடியாரே" என்ற BITL-Els.
அந்த நாடகத்திலே போடியாராக இரா.பத்மநாதனும் போடியாருடைய வய லிலே வேலை செய்யும் முல்லைக்காரன் இசுமாலெவ்வைக்காக்காவாக நானும் போடி யாரின் மனைவியாக திருமதி.மூர்த்தியும்
|ष्ठं քt HIE
போடியாரின் படித்த மக னாக கவிஞர் காசி ஆனந் தனும் முக்கிய பாத்திரங் களை ஏற்று நடித்தோம். நாடகத்தை நெறிப்படுத்தி யவர் இரா.பத்மநாதன்.
மட்டக்களப்பு நகர மண்டபத்திலே நடைபெற்ற கலை விழா ஒன்றிலே எங் கள் நகைச்சுவை நாடகமும் இடம்பெற்றது. மண்டபம் நிறைந்த ரசிகர் கூட்டம்,
நாடகத்தில் ஒருகட் டத்தில் போடியார் தனது மனைவியைப் பார்த்து
 
 
 

"பொன்னம்மா..! இசுமாலெவ்வைக்கும் எனக்கும் தேத்தண்ணி கொண்டுவா, அந்த வெத்தில வட்டாவையும் கொண்டுவா." என்று கூறுவார்.
வழக்கமாக தேநீர்க் கடையிலிருந்து தேநீர் வாங்கி வைத்திருப்பார்கள். அதை
மனைவி எடுத்துவந்து போடியாருக்கும் இசுமாலெவ்வைக்கும் கொடுப்பார்.
அன்றைய தினம் தேநீர் வாங்கத் தேநீர்க் கடைக்குச் சென்ற பையன் உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. என்னசெய்வ தென்று புரியாமல் போடியாரின் மனைவி தவித்துக் கொண்டிருந்தார்.
"பொன்னம்மா! அங்க என்ன செய் பிறா." என்று சத்தம் போட்டார் போடி யாராக நடித்த பத்மநாதன்.
மேடையின் ஒரு பகுதியிலே நின்ற போடியார் மனைவி "தேநீர்க்கடைக்கு போன பையன் இன்னும் வரவில்லை" என்று சைகை மூலம் பரபரப்போடு தெரிவித்தாள்.
விசயத்தைப் புரிந்துகொண்ட நான் மேடையை அங்குமிங்கும் நோட்டமிட்டேன். விழாவில் பங்குபற்றும் கலைஞர்களுக்குக் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்தசோடா' போத்தல்கள் எனது கண்ணில் பட்டன. எனது முகம் மலர்ந்தது.
"போடியார் பொஞ்சாதி இந்த வெயில் நேரத்தில் தேத்தண்ணி வேணங்கா. சோபா இருந்தாக் கொண்டாகா, இந்த வெயிலுக்கு சோடாதான் பசின்ரா இரிக்கும்" என்று கூறியபடி, மூலையில் காணப்பட்ட சோடாப் போத்தல்களை சபையோருக்குத் தெரியாத
匣 ፵፫Xዄይ
இரு கிளாஸ்களில் ஊற்றி, போடியாரின்
விதத்தில் சுட்டு விரலால் சுட்டிக்காட்டினேன்.
செய்வதறியாது திகைத்து நின்ற போடியார் மனைவி நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி இரண்டு சோடா போத்தல்களை எடுத்து எனக்கும் போடியாருக்கும் தந்தார். இருவரும் ரசித்தபடி பருகினோம்.
எங்கள் நாடகம்
முடிந்து நாங்கள் ஒப்ப
னையை (மேக்கப்பை) நீக் கிக் கொண்டிருந்தபோது தான் வியர்த்து நடுங்கியபடி தேநீர்ப் போத்தலுடன் வந்து சேர்ந்தான் அந்தப் பையன். "தேநீர் வாங்கி வரும் போது பைசிக்கிள் ரயரில் ஆணி ஏறிக் காற்றுப்போய் விட்டது. சைக்கிளை உருட் டிக்கொண்டு வந்ததால் தாமதம் ஏற்பட்டுவிட்டது. என்று அவன் நடுக்கத்துடன் கூறினான்.
"சரி, சரி. கவலைப்ப டாதே, அந்தக் கட்டம் சிறப் பாக நடைபெற்று முடிந்தது" என்று கூறி அவனையே தேநீரைட் ச் செய்தேன்.
மட்டக்களப்பு நகர மண்டபத்திலே நடைபெற்ற நகைச்சுவை நாடகம் ஒன் றிலே நான் அரண்மனைச்

Page 11
சிப்பாய் வேடத்திலும் எனது காதலி வேடத் தில் கவிஞர் காசி.ஆனந்தனும் நடித்தோம்.
காசி ஆனந்தன் என்னைவிட உய ரம் கூடியவர். நாடக ஒத்திகை நடக்கும் போது, நான் காதலிக்கு மாலை சூட்டும் கட்டத்தில் அவர் தலையை நன்றாகக் குனிந்தபடி நிற்பார். நான் நிமிர்ந்து மாலை சூட்டுவது வழக்கம்.
நகர மண்டபத்தில் நாடக அரங்கேற் றத்தின் போது சிப்பாடப் தனது காதலிக்கு மாலைசூட்டும் கட்டத்தில், காதலியாக நடித்த காசி ஆனந்தன் தலை நிமிர்ந்த படியே நின் றார்.
தலையைக் குனியும்படி சைகை செய்தேன். ஆனால் அவர் கண்களை மூடிய படி ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி
நிமிர்ந்து நின்றதால் எனது சைகையை அவ ரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
எனக்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை. ஒருகணம் திகைப்புற்று நின்றேன்.
மறுகணம் ஒருவாறு சII ளித்துக்கொண்டு மேடையை அங்குமிங்கும் அவதானித் தேன்.
மற்றுமொரு நாடகக் காட்சி அமைப்புக்காக கொண்டு வரப்பட்டிருந்த சிறிய மரக் கட்டை ஒன்று மேடையின் ஒருமுலையில் காணப்பட்டது.
துள்ளிப் பாய்ந்து சென்று அந்த மரக்கட்டையை இழுத்துவந்து காதலிக்கு அருகில் வைத்து அதன் மேல் ஏறி நின்று காதலிக்கு மாலை சூட்டினேன் அதனைப் பார்த்து ரசித்த ரசிகர் கூட் டம் ஏற்படுத்திய சிரிப்பொலி
பத்தையே அதிரவைத்தன. காதலியாக நடித்த கவிஞர் காசி ஆனந்தனும் வாய்விட் டுச் சிரித்தார்.
18
CHIE
தலைவர்கள்
குத்தவிளக்கு ஏற்ற நிகழ்ந்தன விழாக்கள்.
தேடுகிறோம்.
எங்கே
வெளிச்சற்?
 

இப்பகுதி இளையோருக்கானது. ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இளங்கதிர், மேபா, "செங்கதிர்' ஆசிரியர். இல,19, மேல்மாடி விதி, மட்டக்களப்பு.
புதுமுக அறிமுகம்
செல் வி.தி. காயத்திரி அவர்கள் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் (ஆரம்பப் பிரிவு - 2ம் வருடம்) | ஆசிரிய பயிலுநராகப் |ே பயின்று வருவபர். | \த் கவிதை, சிறுகதை என் 劃下 பவற்றில் மிகுந்த ஈடு LIII (b60Lu இவர், தனது "பொழியும் மழையில் நிரம்பும்
குளங்கள்” என்ற தலைப்பிலான கவிதை மூலம்
செங்கதிர் இம்மாத இதழில் அறிமுகமாகிறார்.
ce.

Page 12
வானம் பார்த்த பூமியத தரிசு நிலமாய் தவமிருந்தது ஒரு சொட்டு மழைக்காக. மேலிருக்கும் திமிர்க்குனத்தில் பூமிபார்க்கும் வானமதும்
கொஞ்சம் கூட இரங்கவில்லை. அடைமழையாக வானத்திற்கும் பூமிக்குமான போட்டியிலே அல்லைப்பிட்டியில் மன்னாரில் மாட்டிக்கொண்டார் பாவி மக்கள் என்று வயல்கள் ஏதும் விளையவில்லை. விஸ்வரூபம் எடுத்தது. பட்டினியால் உடல் மெலிந்தார். மழை வெள்ளத்தால் அடிக்கப்பட்டு
வானம் கொடுக்காத மழையை ஒதக்கப்பட்ட ஒடமாய் பல வானங்கள் இன்று நானும்
கொடுக்கத் தொடங்கின. அந்நிய தேசத்தில் அநாதையாய். மழை இரைச்சலுடன் சோவென மழையும் விடுவதாய் இல்லை. பெய்யத் தொடங்கியது. இலங்கையில் வாணங்களும் முடிவதாய் இல்லை. அதவும் தமிழர் பகுதிகளில் மட்டும் சிறு மழைக்காக எதிர்பார்த்த சிறிய சிறிய தாறலாக என் தேசம் இன்று தொடங்கிய மழை திகைப்படைந்து நிற்கிறத. முதலில் பெருமழையாக பொழிகின்ற மழையால் செம்மனியில் பொழியத் தொடங்கியது. குளங்கள் எல்லாம் நிரம்பி
பின்னர் ஒரு நாலு வருடமாக வழிகின்றன ஓய்ந்திருந்த மழை سڑکتی ہے குருதியால். பின்பும் சிறுசிறு தாறலாகத் தொடங்கி
 

இளம் ஓவியத்தனைஞர் கை
། === 鶯 foURI மெளநேவர் (Siwaraja 9Mounesh) LDČ Läs i != ' 。 களப்பு மாவட்டம் ஏறாவூரில் தமிழர் பகுதியான 4ம் **” தி குறிச்சியில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை ஏறாவூர் 。臀 அரசினர் த. Eեքllհն|5ET பாடசாலையிலும், EDIJŲ སོ་7་འབོད་
. ܬܐ . ஜனக் கல்லூரியிலும், தனது பட்டப் " --
= :ଶ୍ରେ مجھا
தரத்தை மட்'மஹ'
இs | படிப்பை கலைப் பிரி A. 鷺 * s ܓ ဓါး။ கிழக்குப் பல்கவைக் கழகத்திலும் நிறைவு செய்துள்ளார். தற்போது | நிரந்தர வசிப்பிடத்தை மட்டக்களப்பு அமிர் தகழி கிராமசேவகர் பிரிவில் கொண்ட இவர், ஓவியம் வரைவதில்
திறமையுள்ளவர். நவீன ஓவியங்களிலும், கோட் டுச் சித்திரத்திலும் ஆர் வம் கொண்டு ஈடுபட்டுள் ா|ளார். விரைவில் இவரு டைய ஓவியக் கண்காட்சி
நடைபெறவுள்ள
-. - . இங்கே, தான் வரைந் 'சுனாமி ஓவியத்தின்
s மூலம் அறிமுகமாகிறார்.
S | இவருடைய ஓவியங்கள் ஏற்கனவே கிழக் குப்
སྣ་
பல்கலைக்கழக வெளி மீடுகளில் இடம்பெற்
. .
றுளளன.
இங்தி
രി 2

Page 13
r
மி O Olle ےnحیح )OکہحO( தமிழர் விரலற்றில் சமயங்கள்
- TÉfibITTI - தமிழர் வாழ்வின் சிறப்பினையும் சிந்தனைத் தெளிவினையும் சங்ககால இலக்கியங்கள் சரிவர எடுத்துக்காட்டும். இற்றைக்கு இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தில் (கி.மு.300- கி.பி.200) தமிழகம் சேர (இன்றைய கேரளம்) சோழ பாண்டியர் என்னும் மூவேந் தர்களால் ஆளப்பட்ட போதும் செந்தமிழிடமே அதன் செங்கோல்
இருந்தது.
மண்வளத்தோடு, மனவளத்தைத் தரும் கல்வியும் கலையும் அந்தத் தமிழ் நிலத்தில் கலந்திருந்தமைக்கு ஆண்பால் புலவர்கள் மட்டுமன்றி ஒளவையார், காக்கைப் பாடினியார், நற்செள்ளையார், ஆகிய பெண்பால் புலவர்களும் பாணர், பொருநர் முதலான பண்பட்ட கலைஞர் களும் சான்றாக விளங்குவர்.
நாடாண்டி மன்னனும் நல்ல கல்வியாளனாய்த் திகழ்ந்தமையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின்
உற்றுழ் உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே.
என்னும் புறநானூற்றுப் பாடல் எடுத்துக்காட்டும். கல்விச் செல்வம் தான், அக்காலப் பகுதியில் பொருட்செல்வம் இன்றி வாடிய புலவர்களைக் கூட மன்னர்கள் வரவேற்று உபசரிக்கக் காரணமாக அமைந்தது. தமிழ்ப்புலமைக்காகத் தலைகொடுக்க முன்வந்த குமணனை பெருந்தலைச் சாத்தனார் மனம் குழையப் போற்றியமையும் அதியமான் ஒளவையின் சொற்கேட்டு அடங்கியமையும் கற்றோர் மீது அரசர்கள் காட்டிய மரியாதையை உணர்த்தும்.
இதிர் εαοδυαδπό 2OΟδ
 

வறுமையால் பிணிக்கப்பட்ட கலைஞர்களுக்கும், அரசர்கள் வாழ்வு கொடுக்கத் தவறவில்லை. மறம் போற்றிய அம் மன்னர்கள், மனிதாபிமானம் என்னும் அறம் போற்றி வாழ்ந்தமைக்குப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது கல்லாடனார். பாடிய பாட்டு நல்லதொரு காட்டு ஆகும்.
உயர்ந்த பண்புகளின் உறைவிடமாக வாழ்ந்த சங்ககாலத் தமிழர், எப்போதும் உலகியல் உணர்வோடு ஒன்றி வாழ்ந்தவர்கள். இந்த உணர்வே, முனைவர் ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளது (திராவிட மொழி இலக்கியங்கள் பக் - 36) போன்று அத்தமிழ் நெஞ்சங்களை மனித உணர்வுகளுக்கு முதலிடம் கொடுக்க வைத்தது.
காதலையும் விரத்தையும் தமது இரண்டு கண்களாகக் கருதிய தமிழர் வாழ்க்கையில் சமயம் அல்லது மதம் தல்ைகாட்டவில்லை. லத் தெய்வங்கள் என்று சாற்றப்படும் கொர் O üb, போருக்கும் போருக்குமுன் நடத்தப்படும் வெறியாட்டிற்குமுரியவர்களா கவே கொள்ளப்பட்டனர். எனவே போர்க்கோல முருகனுக்கும், ஆரி யரின் கதைகளாலும் தத்துவங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள சண்முகனுக்கும் எவ்வித சம்பந்தமும் இருப்பதற்கில்லை.
குறிஞ்சி நில முருகனைப்போல, அவன் தாயாகிய கொற்றவை யும் இன்று காளி, துர்க்கையாகக் கொண்டாடப்படுகிறாள். ஆனால் வெற்றி வீரம் எனும் பொருள் தரும் பழந்தமிழரின் இந்தக் கொற்ற வைக்கும், அச்சமூட்டும் இலட்சணங்களோடு கூடிய ஆரியரின் காளி, துர்க்கைக்குமிடையில் தொடர்புகளைக் கற்பித்தல், சங்ககாலத் தமிழரின் வாழ்க்கை நெறியைச் சரியாகப் புரிந்துகொள்ளாமையின் வெளிப்பாடாகும். மேலும் கொற்றவையே காலப்போக்கில் காளி, துர்க் கையாக ஆக்கப்பட்டமைக்கு பிற்காலத்து சிலப்பதிகாரம், கலிங்கத் துப்பரணி ஆகிய நூல்கள் பேராதாரங்களாகும்.
உலகியலையும், மனித உணர்வுகளைளயும் ஓம்பிய தமிழர் வாழ்வில் சமய உணர்வு நுழையவில்லை என்பதற்கு கி.மு. 3ம் நூற் றாண்டில் தோற்றம் பெற்றதாகக் கொள்ளப்படும் தொல்காப்பியத்தில் சமயம், மதம் எனும் சொற்கள் இடம்பெறாமையை எடுத்துக்காட்டும் மறைமலை அடிகளார் புறநானூற்றில் மதம் எனும் சொல் காணப்படி னும் அது கொள்கை அல்லது கோட்பாடு எனும் பொருளைக் கொண்டிருக்கவில்லை என்பார் (தமிழர் மதம் - பக்-45)
இன்று, சமயம், ஆலயம், கோயில், கடவுள் எனும் சொற்க
sese abeauarrál 2008

Page 14
ளுக்குத் தத்துவவிளக்கங்கள் தரப்படுகின்றன. ஆனால் கடவுள் எனும் சொல்லுக்கு முனிவர் (துறவி) என்னும் பொருளையே குறுந்தொகை (203ம் பாட்டு) கலித்தொகை (28ம் பாட்டு) ஆகிய சங்க இலக்கியங்கள் வழங்கியிருக்கின்றமை சிலருக்கு ஆச்சரியம் தருதல் கூடும். இச்சொல் போன்றே கோயில் எனும் சொல்லும் அக்காலத்தில் அரசனின் அரண் மனையையே (கோ - அரசன், இல் - மனை) குறித்து நின்றமையை சிலப்பதிகாரத்தில் வரும் காவல் வெண்குடை மன்னவன் கோயில்' எனும் பாடல் அடி எடுத்துக்காட்டும். V
சங்க இலக்கியங்களில் காணப்படும் இத்தகைய கருத்துக்கள் காரணமாகவே 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாமிநாத தேசிகரும் சிவஞான சுவாமிகளும் அவ்விலக்கியங்களைப் படிக்கவேண்டாம் என்று மக்களைப் பணித்ததாக கூறும் அறிஞர் மயிலை, சீனி, வேங்கடசாமி அவர்கள் அவ்விழி செயலாலேயே வளையாபதி, தகரூர் யாத்திரை முதலான பழந்தமிழ் நூல்கள் அழிந்துபோயின என்பார் (பத்தென்பதாம் நூற்றாண்டுத் தமிழ்
இலக்கியம் பக்.64)
சங்க இலக்கியங்களில் காணப்படும் ஒருசில தெய்வங்களின் பெயர்களைச் (மாயோன், இந்திரன், முக்கண்ணன்) சுட்டிக்காட்டி அக் காலத்தில் சமய ஆசாரம் நிலவியதாகச் சிலர் கூறக் கூடும். ஆனால் அவை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழகத்தில் அடி எடுத்து வைத்துவிட்ட ஆரியரின் சமயச் செல்வாக்கின் விளைவு என்பதே சரியான கூற்றாகும். ஆரியரின் இச்செல்வாக்கின் ஆதிக்கத்தைப் பிற் காலச் சங்க இலக்கியங்கள் என்று பேசப்படும் பாடல், திருமுருகாற்றுப்படை என்பவற்றில் நாம் பார்க்கலாம். ஆயினும் இச்செல்வாக்கு அன்று தமிழர் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இந்தச் சூழ்நிலையில் கி.மு.3 நூற்றாண்டிற்கு முன்பே தமிழ கத்தினுள் நுழைந்துவிட்ட வட இந்திய சமண, பெளத்த சமயங்கள் தமது கொள்கைகளையும் வாழ்க்கை முறைமையையும் அந்தமண்ணில் நிலைநாட்ட முற்பட்டபோதும் புலாலும் கள்ளும் உண்டு போர்க்கோலம் பூண்ட தமிழர்கள் அவற்றைப்புறக்கணித்து விட்டனர். எனினும் கி.பி. 2ம் நூற்றாண்டில் எதிர்பாராத விதமாக அங்கு உருவான அந்நியரான களப்பிரரின் ஆட்சி அச் சமண, பெளத்த சமயங்களின் ஆசை நிறை வேறுவதற்கான வாய்ப்பை அளித்தது. தமிழர் வாழ்க்கை முறையும் தலைகீழாக மாறத்தொடங்கியது.
களப்பிரரால் உருவாக்கப்பட்ட அரசியல் சூழ்நிலையை இறுகப் பிடித்துக்கொண்ட சமணமும் பெளத்தமும் தம் கைவரிசையைக்காட்டத்
sese &R 2OO&חפajaמס&

தொடங்கின. அதனால் தமிழில் எழுந்த முதல் காப்பியம் சிலப்பதி காரத்தில் இளங்கோ அடிகள் அறத்தை வலியுறுத்தியதோடு டாக்டர் மு.வ. குறிப்பிட்டுள்ளது (தமிழ் இலக்கிய வரலாறு பக்-89) போல பத்தினி கண்ணகியைத் தெய்வமாக வழிபடும் உணர்ச்சிக்கும் தம் நூலில் வித்திட்டு கோயில் அமைக்கவும் வழிகோலினார்.
தவறு செய்யாத தன் தந்தைக்குக் கிடைத்த மரண தண்டனை, அதனால் அவலமே வடிவான பெரிய அன்னை-மாதவியின் மகள் மணிமேகலையைப் பெளத்த துறவியாக்கின. இதனை மதுரைக் கூல வாணிகன் சாத்தனார். தமது பெளத்த மதப் பிரச்சாரத்திற்கு தக்க முறையில் பயன்படுத்தியமையை அவரது காவியம் காட்டும். முன்பு தமிழர் அறிந்திராத சமய உணர்வு அதனோடு ஒட்டிய துறவற வாழ்க்கை ஆகியவற்றிற்கு முன்னுரை எழுதிய களப்பிரர் காலத்தையடுத்துத் தோன்றிய பல்லவர் காலம் ஆரியரின் அத்தனை நம்பிக்கைகளையும் சடங்குகளையும் அரவணைத்துக்கொண்டது. பிராமணர்களான சம்மந் தருக்கும் சுந்தரருக்கும் இது மிகவும் பிரியம் தந்ததில் வியப்பில்லை.
காரைக்கால் அம்மையார் (கி.பி. 5ம் நூற்றாண்டு) கால்கோள் விழா நடத்திய இந்தச்சைவ சமய எழுச்சி பெளத்த, சமண எதிர்ப்பில் பிறந்ததெனினும் பல்லவர் ஆட்சியில் அது ஒரு பெரும் கடலாகப் பெருக்கெடுத்தது. முழுமையாக இந்தக் கடலில் மூழ்கிய தமிழர் பின் அதிலிருந்து வெளியே வரவில்லை என்பதனை சோழர் காலத்தின் பெரியபுராணமும் கம்பராமாயணமும் நிரூபிக்கும்.
காதலையும் வீரத்தையும் தமது இரு கண்களாகக் கொண்டி ருந்த தமிழரின் சந்ததியினர் சைவத்தையும் வைணவத்தையும் அந்த இடத்தில் வைத்துப்போற்றத் தொடங்கியமை சங்ககாலம் மறைந்து விட்டமையையே நினைவுபடுத்துகிறது.
சோழர் காலத்தின் பின் 12, 14 நூற்றாண்டுகளில் தமிழகம் வந்துசேர்ந்த இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மத்தியகிழக்குச் சமயங்க ளும், தமிழரிடம் குறிப்பிடத்தக்க மரியாதையைப் பெறத்தொடங்கின. இந்தச் சமயங்களும் சமண, பெளத்த, சைவ சமயங்களைப்போன்று தமிழைப் பயன்படுத்தித் தம்மை வளர்ப்பதிலேயே முனைப்புக் காட்டின. இதன் காரணமாகவே, வீரமாமுனிவரின் தேம்பாவணியும் உமறுப்புலவரின் சீறாப்புராணமும் எழுந்தன.
உண்மை இதனை உதாசீனம் செய்வது போல சமயங்கள், தமிழை வளர்த்தன என்னும் கூற்று எந்தவகையிலும் ஏற்கக்கூடியதன்று.
|4ణి
expsiasTéfl 2006

Page 15
ஏனெனில் தமிழ் சமயங்களை அறியாத காலத்திலேயே தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனும் இலக்கியச் செல்வங்களோடு தலைநிமிர்ந்து நின்றது. எனவே தமிழ்தான் சமயங்கள் அனைத்தையும் தமிழகத்திற்கு அறிமுகச் செய்து வைத்ததோடு அவை வளரவும் உதவியது. பலன் எதிர்பாராத இந்த உதவி தமிழுக்குப் பல நன்மைகளைத் தந்தது என்பதனை யாரும் மறுக்கப்போவதில்லை.
கி.பி 14ம் நூற்றாண்டில் மாலிக்கபூர் என்னும் முஸ்லீம் படைத் தளபதியினால் மதுரை எரிக்கப்பட்டதோடு தமிழ்நாட்டில் ஆரம்பமான முஸ் லீம்களின் குறுகியகால ஆட்சியில் இஸ்லாமைத் தழுவிய தமிழர்களே தமிழ் இலக்கியம் படைக்க ஆரம்பித்தனர் என்பார் பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியம் அவர்கள். (தமிழ் இலக்கிய வரலாறு பக் - 201) அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் பேராசிரியரின் இக்கருத்தை அப்படியே வழி மொழிவார். (பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் பக்கம் -123) டாக்டர் மு.வ. அவர்களும் இந்த இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகளை ‘முஸ்லீம் தமிழர் ' எனக்கூறுதல் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்று. (தமிழ் இலக்கிய வரலாறு பக் -236)
ஆரம்பகாலத் தமிழக முஸ்லீம் படைப்பாளிகள் பற்றிய அறிஞர் களின் மேற்படிக் கருத்து, கிழக்கிலங்கை முஸ்லீம்களுக்கும் பொருந்தும். போர்த்துக்கீசர் காலத்தில் (கி.பி.16ம் நூற்றாண்டு) மட்டக்களப்புத் தமிழகத் தில் (அன்று அம்பாறை மாவட்டம் எனும் பெயரில் ஒரு நிலப்பரப்பு இருக்க வில்லை) கண்டி அரசன் செனரத் என்பவனால் குடியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமிழ்ப்பெண்களைத் திருமணம் செய்து தமிழ்ப் பண்பாட்டையும் பெரிதும் கைக்கொள்ளலாயினர்.
இந்த வாழ்க்கை முறை ஊடாக தமிழரின் பிரதேசப்பேச்சு வழக்கு, கவிவளம் இலக்கியப்புலமை என்பன முஸ்லிம்களின் ஏகபோகச் சொத்தாயின. இதனால் அக்கரைப்பற்றில் உமறுலெவ்வைப் புலவர், சம்மாந்துறையில் இஸ் மாயில் லெவ்வைப்புலவர், காத்தான்குடியில் அகமது நயினார் புலவர் ஆகி யோர் அற்புதமான இலக்கியங்கள் படைத்து தமிழ்த்தாயை அலங்கரித்தனர்.
தமிழர் வரலாற்றில், தமிழ் இத்தகைய மாற்றங்களுக்குட்பட்டு பல நன்மைகளைப் பெற்றிருப்பினும் காலம் செய்த கோலம் என்பதற்கிணங்க சமயங்களை வளர்க்கும் ஆதீனமாக அது தன்னை ஆக்கிக் கொண்டது. இதனால் தனது தனித்துவத்தையும் சமயச்சார்பற்ற யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் உலகியல் நோக்கையும் இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை அதற்கேட்பட்டமை அதன் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு முக்கிய (33-1185 BEGIT(5th).
ebalasré1 2008

கவிஞர் நீலாவணனின் வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி.)
(சென்ைை2ாவை அன்னத்திற்குக் கேடிருப் போகிறார்கள்)
“செல்லனுக்கென்றே அன்னம் சின்னனிலிருந்தென் எண்ணம்" சொல்லுவாள் பெத்தா, சொல்லி(ச) சொந்தத்தைச் சேர்த்து வைப்பாள். மெல்லமாய்க் கணகம் காதில் மென்மேலும் ஓதிஓதி செல்லனைக் கேட்டுப் போகச் சிரத்தையாய் நின்று வென்றாள்.
செழிப்புடன் சேமம் எங்கும் சேர்ந்ததோர் சிறந்த நாளில் "கொழுக்கட்டை கொண்டு போக கூப்பிட்ட சுற்றம் கழ
திேர் eodaliantáil 2006

Page 16
குளக்கட்டுக் கோயில் சென்று கும்பிட்டு வந்த பின்னர் வெளிக்கிட்டார் கந்தப்போடி வீட்டுக்கு அழகிப் போடி,
கொல்லையில் நின்ற கன்றுக்
குட்டியொன் றோடி வந்து
sese coeaærréf) 2OOð
செல்லனின் வீட்டுத் திக்கில் சென்றது அழகிப்போடி “வில்லங்கள் இல்லை" என்றார். வீதியை எட்டிப் பார்த்து "நல்லது முழிவியள் ளம் நடவுங்கள்” என்று சொல்ல
வெற்றிலைப்பகளி, பாக்கு வெண்கல வட்டா வொன்றில் முற்றிய கோழிச்சூடன் முழுப்சிப்பு: உள்ளே எல்லாம் ஒற்றைப்பட வைத்து மேலும் ஒரு துண்டு மஞ்சள், தேசி சுற்றியே வெள்ளைச் சீலை சுமக்கின்றாள் கனகம் முன்னால்.
கொழுக்கட்டைப் பெட்டி பின்னால் குலையோடு கோழிச் சூடன், முழக்கட்டை போல வெள்ளை மொந்தனும், தயிரும் காவில். புழக்கத்தில் உள்ள நல்ல புழுங்கனும், தேங்காய் வேறு. வழக்கம் போல் ஊரார் நின்று வழியிலே புதினம் பார்த்தார். -இன்னும் விளையும் -

இலஇேற வளரீதியில்
இழத்துச் მნიშkoგჯგუმწit
|- த.சிவசுப்பிரமணியம் -
தமிழ்நாட்டில் தீவிரமான இலக்கிய முயற்சிகள் ஊக்கத்தோடும் உற்சாகத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், இலங்கை யிலும் அவற்றின் தாக்கம் ஏற்பட்டதை அவதானிக்க முடிகின்றது. இலங்கை யிலுள்ள இலக்கிய வாதிகள் புதுவிழிப்புடனும் புதிய உத்வேகத்துடனும் செயற்பட ஆரம்பித்தனர். தமிழ்நாட்டில் “மணிக்கொடி" வெளிவந்துகொண்டி ருந்த காலத்தில் இலங்கையில் "ஈழகேசரி" தோன்றி இலக்கிய மறுமலர்ச் சிக்காக உழைத்து வந்தது. அதைத் தொடர்ந்து "மறுமலர்ச்சி” தோன்றி தனது இலக்கியப் பங்களிப்பை ஆற்றி வந்தது.
ஈழத்து நவீன இலக்கியம் பற்றிய எண்ணக்கரு தோன்றிய நாற்பது களில் முதன் முதலில் சஞ்சிகைகளே தோற்றம் பெற்றன. இன்னுமொரு நிலையில் கூறுவதாயின் அக்காலங்களில் வெளிவந்த சஞ்சிகைகளின் உருவாக்கம்தான் நவீன இலக்கிய முயற்சிகளுக்கு வழித்தோன்றலாக அமைந்துள்ளமையை அவதானிக்கலாம். அத்துடன் நவீன இலக்கிய வளர்ச்சியுடன் இரண்டறக் கலந்துள்ளமையை நோக்க முடிகின்றது. உண்மையைக் கூறுவதாயின் நவீன இலக்கியத்தின் பிறப்பு நிலையில் சஞ்சிகைகள் தாயின் ஸ்தானத்தில் இருந்துள்ளன. வளர்ச்சி நிலையில் வளர்ப்புத்தாயாகவும் சஞ்சிகைகள் இருந்துள்ளன. எனவே ஈழத்து இலக்கிய வரலாற்றில் சஞ்சிகைகளின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடமுடியாது.
கொழும்பிலிருந்து கே.கணேஸ் என்னும் மார்க்சியவாதியால் 1946 இல் “பாரதி” என்ற சஞ்சிகை வெளிக்கொண்டு வரப்பட்டது. இச்சஞ்சிகையில் புதுமை இலக்கிய முற்போக்கு முன்னோடி மார்க்ஸிம் கார்க்கியின் கதை, முற்போக்கை முழுமையாகத் தழுவிக்கொண்ட அ.ந.கந்தசாமியின் கதை, நவயுக எழுத்தாளன் "ரால்ப் பாக்சை” பற்றி கே.ராமநாதன் எழுதிய கட்டுரை ஆகியன வெளிவந்து தனது இருப்பை உறுதிப்படுத்தியது. அதே ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான "மறுமலர்ச்சி’யும் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பை வழங்கிப் பல எழுத்தாளர்களை உருவாக்கியது. அவர்கள் "மறுமலர்ச்சி” எழுத்தாளர்களென அழைக்கப்பட்டனர். வரதர் ஆசிரியரா யிருந்து வெளிவந்த 'மறுமலர்ச்சி” புதிய பரிமாணத்தைக் கொண்டிருந்தது.
இதிர்
ാഖ6Tി 2OOb

Page 17
“பாரதி” ஈழத்தின் முதல் முற்போக்கு சஞ்சிகை என்ற முத்திரை யைப் பதித்துக்கொண்டது. இப்பின்னணியில் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியிலே “பாரதி” என்ற இதழ் முக்கிய இடம்பெறுகிறது. மார்க்சியம் சார்ந்த சமூகநோக்கு என்ற அடிநாதத்துடன் “பாரதி” இதழ் திசைபரப்பி நின்றது. “ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்ட ஏடு பாரதி” என்று மூத்த எழுத்தாளர் தெளிவதை ஜோசப் குறிப்பிட்டுள்ளார். “பாரதி” சஞ்சிகையில் நவீன முற்போக்கான கவிதைகள் வெளிவந்ததுடன் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் இடம்பெற்றன. 'மறுமலர்ச்சி' சஞ்சிகையின் வரவுடன் ஈழத்து நவீன கவிதைகளின் தோற்றமும் அவ்வாறே ஈழத்துச் சிறுகதைகளும் மண்வாசனையுடன் வெளிவரும் போக்கும் உருவாகின. வரதர், நாவற்குழியூர் நடராசன், அ.செ.முருகானந்தம், அ.ந.கந்தசாமி சு.இராசநாயகன், மஹாகவி, சொக்கன், ஆகியோர் 'மறுமலர்ச்சிப் பண்னை யில் வளர்ந்தவர்களே. 1948-களில் திருகோணமலையிலிருந்து 'எரிமலை’ என்னும் சஞ்சிகையும், மட்டக்களப்பில் இருந்து "உதயன்', 'பாரதி ஆகிய சஞ்சிகைகளும் வெளிவந்துள்ளன. 1954 இல் இலங்கை முற்போக்கு எமுத் தாளர் சங்கம் நிறுவப்பட்டது. அது நடத்திய இலக்கிய இயக்கத்தினுடாக ஈழத்து எழுத்தாளர் மத்தியிலும் ஈழத்துப் படைப்பிலக்கியம் சம்மந்தமான விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டன. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது முதலாவது மாநாட்டில் முன்வைத்த ஜனநாயக யதார்த்தவாதக் கோட்பாட்டை அடியொட்டி 1960 இல் தேசிய இலக்கியத்தைப்பிரகடனம் செய்தது. இதனைத்தொடர்ந்து தேசிய இலக்கியம் பற்றிய விளக்கத்தையும் அளிக்க வேண்டி இருந்நது. 1961 இல் வெளியான இளங்கீரனின் கலை இலக்கியச் சஞ்சிகையான மரகதம் இப்பணியை ஏற்றது. அதன் முதல் இதழில் பேராசிரியர் க.கைலாசபதி தேசிய இலக்கியம் பற்றிய தனது முத லாவது கட்டுரையை எழுதினார். அவரைத்தொடர்ந்து ஏ.ஜே.கனகரத்தினா, அந.கந்நசாமியின் படைப்புக்களும் இடம்பெற்றன. பாரதி, மறுமலர்ச்சி, மரகதம் ஆகிய மூன்று சஞ்சிகைகளிலும் அ.ந.கந்தசாமியின் எழுத்தாக் கங்கள் வெளிவந்துள்ளன.
மரகதம், புதுமை இலக்கியம், கலைமதி, வசந்தம் ஆகிய கலை இலக்கியச் சஞ்சிகைகள் முற்போக்கு இலக்கியக் கருத்துக்களை முன் னிறுத்தி வெளிவந்தன. யாழ்ப்பாணத்திலிருந்து சிற்பி சரவணபவனை ஆசிரியராகக் கொண்டு 'கலைச்செல்வி என்னும் சஞ்சிகை வெளிவந்தது. ஈழத்து எழுத்தாளர்களை உருவாக்கியதில் 'கலைச்செல்விக்குப் பெரும் பங்குண்டு. 1958 ஆம் ஆண்டு ஆடிமாதம் தொடக்கம் கலைச்செல்வி வெளிவரத் தொடங்கியது.
exdeasTá 2008

செயோகநாதன், செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், பெனடிற் பாலன், யாழ்நங்கை, மு.பொன்னம்பலம், மு.கனகராஜன், தெணியான், ச.வே.பஞ்சாட்சரம், செ.கதிர்காமநாதன், சாந்தன் ஆகியோர் கலைச் செல்வியின் பண்ணையில் வளர்ந்தவர்களே. ஆகவே கலைச்செல்வியின் பங்களிப்பைக் குறைத்து எடைபோட முடியாது. வரதருடைய “வெள்ளி”, *புதினம்" சஞ்சிகைகளும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தன. புரட்சிகர சிந்தனையாளர்களின் எழுகளம் என்னும் அமைப்பினர் ‘பொன்மடல்’ என்னும் ஏட்டை வெளியிட்டனர். ‘அக்னி’ என்னும் சிற்றேடு மனிதாபிமானப் படைப்பாளிகளின் முற்போக்குச் சிந்தனைக் களமாகச் செயற்பட்டது.
1963 ஆம் ஆண்டு சி.சிவஞானசுந்தரம் தமிழ்ச்சஞ்சிகை உலகிற்குப் புதுமை சேர்க்கும் வகையில் “சித்திரன்’ என்னும் சஞ்சிகையை வெளிக் கொணர்ந்தார். பலரைச்சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிரித்திரன் சஞ்சிகை இலக்கிய உலகில் மட்டுமன்றி கார்ட்டுன் துறையிலும் பெரும் சாதனை களைப் படைத்துள்ளது. டொமினிக் ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு 1966 ஆகஸ்ட் 15 ஆம் திகதி "மல்லிகை" முதலாவது இதழ் வெளிவந்தது. பல சோதனைகள் வேதனைகளுக்கு மத்தியிலும் சோர்ந்து விடாமல் இன்றுவரை ஒரு இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு வருவது இமாலயச் சாதனையாகும் 1969களில் 'அமுதம்" என்னும் சஞ்சிகையும் வெளிவந்துள்ளது. முற்போக்கு எழுத்தாளரான செ.கணேசலிங்கன் “குமரன்” என்னும் சஞ்சி கையை வெளியிட்டார். கலை இலக்கிச் சஞ்சிகையான குமரன் இலக்கியத் துறையில் பெரும்பங்களிப்பை ஆற்றியுள்ளது. கதம்பம், கலைக்கதிர், தமிழின்பம், அறிவுக்களஞ்சியம், கலைச்சுடர், தமிழருவி ஆகிய சஞ்சிகை களும் அவ்வப்போது வெளிவந்து தொடரமுடியாமல் நின்றுவிட்டன. 1968களில் மருதூர்வாணன் அசிரியராக இருந்து ‘தேன்மதி’ எனும் ஏட்டை நடத்தினார். இளம் எழுத்தாளர்களுக்கு உற்சாகமளிக்கும் அரங்கமாகக் கலைக்கூடல் என்ற அமைப்பையும் உருவாக்கி எழுத்தாளர்களைச் சந்திக்க வைத்தது.
1967 இல் கல்முனையில் நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு “பாருமீன் வெளிவந்தது. 1970-களில் சஞ்சிகைகளின் வரவில் புதிய உத் வேகத்தை காணக்கூடியதாகயிருந்தது. ஈழத்தின் இலக்கியம் தனித்துவமான உச்சநிலையில் வீறுநடைபோட்ட காலப்பகுதியில் பலசஞ்சிகைகள் தத்தமது இலக்கியப் பங்களிப்பை வழங்கலாயின. செல்வராசாவை ஆசிரியராகக் கொண்ட “அஞ்சலி, த.சிவசுப்பிரமணியத்தை சிறப்பு ஆசிரியராகக் கொண்ட “கற்பகம்’, மணிசேகரனின் ‘தமிழமுது’ ஆகிய சஞ்சிகைகள் கொழும்பில் இருந்தும் வெளிவந்தன. அன்புமணியை ஆசிரியராகக் கொண்டு மட்டக்களப் பிலிருந்து "மலர்” என்னும் சஞ்சிகையும் வெளிவந்தது.
gii 2OOs

Page 18
“1970 இல் கற்பகம் தோன்றியது. 'வண்மையுடையதொரு சொல்லி னால் உங்கள் வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம்" என்ற பாரதி வாக்கை இலட்சிய வரிகளாகத் தாங்கி கலை இலக்கியம் அறிவியல் பொருளாதாரம் போன்ற பல துறைகளிலும் கவனம் செலுத்திய கற்பகம் ஈழத்து மண்வாச னையையும் சாதாரண விவசாயதொழிலாள மக்களுடைய வாழ்க்கை முறையையும் கருத்திற் கொண்டு ஆற்றல் இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது” என்று பிரபல எழுத்தாளர் வல்லிக் கண்ணன் அவர்கள் 'இலங்கை இதழ்கள்'என்னும் கட்டுரையில் குறிப்பிட் டுள்ளார். "நூறு சிந்தனை மலரட்டும் நாறும் கீழ்மைகள் தகரட்டும்' என்ற கொள்கை முழக்கத்துடன் களனி என்னும் சஞ்சிகை ஒரு விவசாயப் பிரதேசமான கிளிநொச்சியை நிலைக்களமாகக் கொண்டு 1973 இல் வெளிவந்தது. 1974-களில் இருந்து தாயகம்' என்னும் சஞ்சிகை கலை இலக்கியத் தாகத்துடன் வெளிவந்து கொண்டிருக்கிறது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடான இச்சஞ்சிகை.இற்றைவரை எழுபது இதழ்களை வெளிக்கொணர்ந்துள்ளது. டானியல் அன்ரனியை அசிரியராகக் கொண்ட 'சமர்” எனும் முற்போக்கு இலக்கிய ஏடு 1979 இல் வெளிவந்தது. கீற்று இலக்கிய வட்டம் என்ற அமைப்பு கல்முனையில் இருந்து "கிற்று' என்னும் காலாண்டுச் சஞ்சிகையை நடத்தியது 'வயல்’, ‘அலை', 'புதுசு", சமுகதீபம்', 'களம்', 'ஒளி', 'நதி', 'பாவை’, ‘பூரணி', 'வியூகம், தேனருவி, "இன்சான்', 'இளம்பிறை', தாரகை, முனைப்பு', 'படி’, ‘உன்னைப்போல் ஒருவன்', 'முன்றாவது மனிதன்', 'பூவரசு’ ஆகிய சஞ்சிகைகள் அவ்வப்போது தோன்றி இலக்கியப் பணியாற்றியுள்ளன. ‘அருவி', 'அமுது" ஆகிய சஞ்சிகைகளும் இவற்றுள் அடங்கும்.
“இந்த இலக்கிய வேள்வியில் கலந்துகொள்ளுமாறு படைப்பாளி களையும் ஆர்வலர்களையும் இருகரங்கூப்பி வரவேற்கிறோம்". இவ்விதம் அறிவித்துக்கொண்டு ஆசிரியர் சி.சங்கரப்பிள்ளை தாரகை” என்னும் சஞ்சிகையை 1981 இல் மட்டக்களப்பில் இருந்து வெளியிட்டார். மட்டக்களப்பில் ரீபாக்கியநாயகத்தை ஆசிரியராகக் கொண்டு "சுமைதாங்கி என்ற சஞ்சிகையும் வெளிவந்தது. சிலோன் நியூஸ் பேர்பர்ஸ் லிமிட்டட் “சுடர்' என்னும் கலை இலக்கியத் திங்கள் இதழை நடத்தியது. யாழ்ப்பாணத்திலிருந்து க.வீரகத்தியை ஆசிரியராகக் பொண்டு 1981 இல் கிருதயுகம்' என்னும் ஏடு வெளிவந்தது.
மலையகத்திலிருந்து மாலைமுரசு, மலைப்பொறி, சாரல், குன்றின் குரல், அகசலனம், வடம், பிரவாகம் ஆகிய சஞ்சிகைகளுடன் மலையகத்
இததிேர் erossrrá 2OOð

தின் இளைய தலைமுறையைச்சார்ந்த புத்திஜீவி வட்டத்தினரால் தீர்த்தக் கரை' எல். சாந்திகுமாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. மலையக மக்களின் வாழ்க்கையையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் ஆக்கங்கள், மலையகம் பற்றிய ஆய்வுபூர்வமான கட்டுரைகள் என்பன தீர்த்தக்கரையில் இடம்பெற்றன. காலாண்டு ஏடாக வெளிவந்த இவ்விதழ் ஐந்து இதழ்களுடன் நின்றுவிட்டது. அதன் தொடர்ச்சியாக நந்தலாலா’ என்னும் சஞ்சிகை வெளி வந்தது. மலையகத்தின் தலைநகராம் கண்டியிலிருந்து அன்தனி ஜீவாவை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் கொழுந்து மணம்பரப்பிக் கொண்டிருக் கின்றது. பெண்ணிலைவாத நோக்கில் எழுந்த 'பெண்ணின்குரல், நிவேதினி, பெண், நங்கை ஆகியனவும் பெண்களை ஆசிரியராகக்கொண்டு வெளி வந்துள்ளன. ஈழத்திலே நவீன நாடகம் பற்றிய சிந்தனையை தூண்டும் வகையில் 'கலைமுகம்', 'அரங்கம்', 'ஆற்றுகை, ஆகிய நாடகம் பற்றிய சஞ்சிகைகளும் வெளிவந்தன.
', யாத்திரா, 赣 ir”, e 爱》 , ge ir, அருச்சுனா", தமிழ்த்தென்றல்' ஆகிய சஞ்சிகைகள் மணம்பரப்பின. உதயன் பத்திரிகை நிறுவனத்தினரால் 'அருச்சுனா'வும் திருகோணமலை வடக்கு-கிழக்கு மாகாணப் பதிப்பகத் திணைக்களத்தால் தமிழ்த்தென்றலும் வெளியிடப் பட்டன. 1994 இல் இருந்து ஆற்றுகை' என்னும் நாடக அரங்கியலுக்கான இதழ் திருமறைக் கலாமன்றத்தினரால் வெளியிடப்படுகின்றது. மேலும் திருகோணமலையிலிருந்து எஸ்.பி.ராமச்சந்திராவை ஆசிரியராகக் கொண்டு 'அறிவு” என்னும் சஞ்சிகையும், எஸ்.ஆர். தனபாலசிங்கத்தை ஆசிரியராகக் கொண்ட நீங்களும் எழுதலாம்' என்னும் கவிதை இதழும், யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து சின்னராசா விமலன், கலாமணி பரணிதரன் ஆகிய இருவரையும் பிரதம ஆசிரியர்களாகக் கொண்டு ஜீவநதி' என்னும் தரமான கலை இலக்கியச் சஞ்சிகையும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'சிரித்திரன்' பாணியிலே திக்கவயல் தர்மகுலசிங்கம் 'சுவைத்திரள்’ எனும் சஞ்சிகையை மட்டக்களப்பில் வெளியிடுகிறார். அக்கரைப்பற்றிலிருந்து மணிவாசகனை ஆசிரியராகக் கொண்டு மகாசக்தி நிறுவனத்தின் 'சங்கதியும், மருதமுனையிலிருந்து மருதூர்வாணனை ஆசிரியராகக் கொண்டு சமாதானம் உம் பருவ இதழ்களாக அவ்வப்போது வெளிவருகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளாக தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு ஞானம்' என்னும் சஞ்சிகை மாதம் தவறாமல் வெளிவந்து கொண்டிருக்கிறது. கொழும்புத்தமிழ்ச் சங்கத்தின் ‘ஓலை’ என்னும் சஞ்சிகையும் தெ.மதுசூதனனை ஆசிரியராகக்கொண்டு ‘அகவிழி', 'கூடம் சஞ்சிகைகளும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. வத்தளையிலிருந்து
exalastrfil 2008

Page 19
ம.இ.லோசனை ஆசிரியராகக் கொண்டு காலாண்டிதழான நதி, கவிஞர் கலா விஸ்வநாதனின் சமூகமாற்றத்திற்கான ‘குன்றம்' சஞ்சிகையும் வெளிவருகின்றன. மட்டக்களப்பிலிருந்து 'தென்றல்' காலாண்டிதழும் வெளிவருகிறது.
கொழும்பிலிருந்து இளைஞர்களால் பயில்நிலம் ஏடு வெளிவந்ததாக அறிய முடிகின்றது. கிழக்குமாகாணம் சாய்ந்தமருது என்னும் இடத்திலிருந்து ஏ.ஜே.எம்.பிறவ்ஸ் என்பவரை ஆசிரியராகக் கொண்டு மின்னல்" இலவச வெளியீடாக வந்து கொண்டிருக்கிறது. இந்தியச் சஞ்சிகைகளின் சாயலில் இலங்கையிலிருந்து இருக்கிறம்', 'அமுதம்', "வேடிக்கை ஆகியவை வெளி வந்து கொண்டிருக்கின்றன. அனுராதபுரத்திலிருந்து வெளிவரும் படிகள்' 2008 ஜனவரியில் தனது ஐந்தாவது ஆண்டு இதழை (18)வது விரித்துள்ளது. மேலும் மட்டக்களப்பில் கத்தோலிக்க சமய நிறுவனங்களின் அனுசரணை யுடன் போது', 'தொண்டன்' என்பன வெளிவருவதோடு மறுகா' என்ற புதுமையான இதழும் வெளிவருகிறது. மட்டக்களப்பிலிருந்து செங்கதிரோன் "செங்கதிர்' என்னும் சஞ்சிகையை வெளியிடுகின்றார். இறுதியாக ஈழத்து நவீன இலக்கியத்தின் தோற்றத்திற்கும் பன்முகப்பட்ட வளர்ச்சிக்கும் ஈழத்தில் வெளிவந்த கலை இலக்கியச் சஞ்சிகைகள் காத்திரமான பங்களிப்பினை வழங்கியுள்ளன. அதேவேளை இலங்கைச் சஞ்சிகையாளர் பலரும் தமது ஆத்ம திருப்திக்காகவே சஞ்சிகையை வெளிக்கொணர்ந்தார்கள் என்ற உண்மையையும் ஜீரணித்தேயாகவேண்டும். தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகள் ஆக்கபூர்வமான இலக்கியப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
கடற்கரை உடல் நலம்
தேடி s காற்று வாங்க 凯 வந்து போகும் 割 பெரிய இடத்து A மாடிகள்.
·园 母 இங்கேயே - 散 动 GBTGELLUNT(6ub
நொடியோடும் 曲 ஒடுங்கிக் கிடக்கும் மீனவர் ܟܳܗܶܳ
குடிசைகள்.
54 திர்
 

இப்பகுதிகலைஞருக்கானது. ஆக்கங்களை அனுப்பவேண்டியமுகவரி: கலைக்கதிர், மேபா செங்கதிர்” ஆசிரியர், இல,19, மேல்மாடி விதி, மட்டக்களப்பு.
கலைஞராத வாழ்வோரும்
போல வாழ்வோரும்
சங்கராபரணம் படத்தில் சங்கர சாஸ்திரிகள் கச்சேரி பண்ணிக் கொண்டிருக்கிறார். அமைதியான சூழலில் அவரின் பாடல் அற்புதமான சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உண்மை இரசிகர்கள் அதில் தோய்ந்து கிடக்கிறார்கள். படாரென அவ்வூர்ப் பண்ணையார் உள்ளே நுழைகிறார். அவருக்குச் சங்கீதம் பற்றி ஒன்றும் தெரியாது. உள்ளே நுழைந்தவர் சடார் என்று சத்தம் எழ நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்காருகிறார். இனிமையான சங்கீதச் சூழலில் அந்த அபஸ்வர சப்தம் சங்கர சாஸ்திரிகளின் அமைதியைக் கலைக்கிறது. உடனே சங்கீ தத்தை நிறுத்தி எழுந்து சென்றுவிடுகிறார்.
வந்திருப்பவர் ஊரில் பெரியவர். பண்ணையார், பணக்காரன் என்பதைச் சங்கர சாஸ்திரி கவனிக்கவில்லை. சங்கீதமறியாத ஒரு மண்டூகம் தன் தவத்தைக் குலைத்துவிடுகிறது என்ற தார்மீக ஆவேசமே சங்கர சாஸ்திரியின் கோபத்திற்குக் காரணம்.
அதனை நாம் கலைஞரின் திமிர் எனலாம். இக்கலைத்திமிர் ஆணவத்தினடியாக வருவதன்று. கலை மீது கொண்ட பற்றுக் காரண
se: 2008

Page 20
மாக அக்கலையிலேயே தோய்ந்து வாழ்ந்து அக்கலையைத் தன்னுடன் இரண்டறப் பிணைத்துக் கொண்டதன் வாயிலாக வருவது.
இக்கலைத்திமிர் இன்று நம் மத்தியில் எந்தக் கலைஞருக்கு இருக் கிறது. கலை அறியா மண்டூகங்களை அவர்கள் பெரிய அதிகாரிகளாக, பெரிய தொழில் வல்லுனராக (டாக்டர், என்ஜினியர், புரக்டர், எக்கவுண் டண்ட்) இருப்பதன் ஒரே காரணத்தினால் பிரதம விருந்தினராக அழைத்து அவர்கள் முன்னிலையில் அவர்கள் தம் தொழில் விடயங்களைக் கதைத் துக் கொண்டிருக்கும் வளவளாப் பேச்சுகள் மத்தியில் தமது கச்சேரிகளை, நாடகங்களை நடத்தும் கலைத்திமிர் அற்ற கலைஞர்களையே நாம் இன்று காணுகிறோம். 伞
சங்கீத அல்லது நாடகக் கச்சேரி நடந்து கொண்டிருக்கும். பெரிய மனிதர்கள் உள்ளே நுழைவார்கள். அவர்களைப் பார்த்து ஒரு கூழைக்கும் பிடுவினைப் போட்டுவிட்டுத் தொடர்ந்து பாடும் பல பிரபல்யங்களை நான் கண்டிருக்கிறேன். பிறரை வணங்கக் கூடாது என்பது எம் வாதமல்ல. அர்த்தமற்ற கூழைக் கும்பிடுகள் அக் கலைஞனின் கலைத் திமிரைச் சாகடித்துவிடும்.
கலைத்திமிர் இல்லாதோர் கலைப்போலிகளாகவே இருப்பர். கலைப்போலி என்பது யாது? கலைஞரைப் போல காட்சிதருவது. 'மக்களே போல்வர் கயவர்' என்றார் வள்ளுவர். கயவரும் மக்களைப் போலவே காட்சி தருவர். ஆனால் அவர்கள் மக்களன்று, கயவர். கலைஞரும் கலைஞரைப் போல காட்சி தருவர். ஆனால் அவர்கள் கலைஞரன்று. கலைப் போலிகளே!
இப்போலிகளுக்கு முதலில் தேவை புகழ் புகழுக்காக எவரையும் குழிபறிப்பர், கோளுரைப்பர். இரண்டாவது இவர்கட்குத் தேவை பணம். மூன்றாவது இவர்கட்குத் தேவை செல்வாக்கு. புகழ், பணம், செல்வாக்கு என்பன தேவைதான். ஆனால் இவற்றை தன் திறமையாலன்றி வேறு வழிகளிலும் சேர்த்துக் கொள்ள எண்ணுபவர்களே போலிக் கலைஞர்கள்.
கலைஞர்கள் எப்போதும் கலைஞர்களாக வாழவேண்டும். கலை ஞர்களைப் போல வாழக்கவடாது. நமது நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தனியார் மன்றங்கள் என்பன பல்லாயிரக்கணக்கான
छālी.

இசை, நடன, நாடக விற்பன்னர்களை வருடம் தோறும் பிரசவித்து வெளி விடுகின்றன. இதுவரை பல்லாயிரக்கணக்கான கலை அறிந்தோர் இவற்றிலிருந்து புறப்பட்டிருக்கிறார்கள்.
எனினும், நம் மத்தியில் தனித்து ஆளுமையுடன் மிளிரும் கலைஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். தன் கலையைத் தன் வாழ்வாக எண்ணி அதனையே மூச்சாகக் கொண்டு வாழாமல் அதனை ஒருமாத வருமானம் தரும் தொழிலாக ஆக்கிவிட்டனர். அவர்களுக்குத் தான் கற்ற கலையில் இடையறாத பயிற்சி வேண்டும், தொடர் கற்றல் வேண்டும் என்ற ஆர்வமும் வேகமும் இருப்பதில்லை. LDITDITEs UITL&IT600); அல்லது உயர்கல்வி உத்தியோகம்; மாத வருமானம் என்ற குறுகிய உலோகாயுதத்துள் ஒடுங்கிவிட்டார்கள்.
போதாக்குறைக்குத் தொலைக்காட்சிகள் இவர்களைக் காயடித்து விட்டன. தொடர்ந்து பயிற்சி செய்யாமையினால் தன் திறன்களையெல்லாம் இழந்துவிட்ட பல ஆழமான கலைஞர்களையும் நாம் காண்கிறோம்.
கலைஞர் சமூகத்தின் உணர்திறன் மிக்கவர்கள்.
மற்றவர்கள் விரும்புவதைத் தருபவன் கலைஞன் அல்ல; அவன் வியாபாரி. புதிது புதிதாக உருவாக்குவதும், புதிய கற்பனைகளிற் சிந்திப்ப தும், இன்னொருபடிக்கு மக்கள் உணர்வையும் சிந்தனையையும் எடுத்துச் செல்வதுமே கலைஞனின் பணி
கலைஞருக்கு முதலிற் தேவை தன் கலையில் பாண்டித்தியம்.
இரண்டாவது தேவை பாண்டித்தியத்தை அடைய எடுக்கும் முயற்சி அர்ப்பணிப்பு.
மூன்றாவது தேவை இவற்றால் வரும் கலைத்திமிர்.
பாண்டித்தியமும், அர்ப்பணிப்பும், திமிரும்மிக்க கலைஞர்க ளைத் தேடுகிறேன். அகப்படுவோர் யாருமிலர்.
உசாத்தனார்
sese eoaueméf 2006

Page 21
தேனிலும் இனியது தமிழ் தெவிட்டாச் சுவையது தமிழ் இலக்கணம் சிறந்தது தமிழ் இயல்வளம் செறிந்தது தமிழ் பண்ணில் பழையது தமிழ் சொல்லில் புதியது தமிழ் எம் செந்தமிழ்.
என்ற வரிகள் என்காதுகளில் இன்றும் சொட்டத்தான் செய்கின்றது. ஆம் நாம் பிறந்தது முதல் இன்றுவரை ஏன் எதிர்காலத்திலும் கூட நாட்டின் நடப்புக்கள், விளையாட்டு, அறிவியல், அரசியல், நகைச்சுவை போன்ற அனைத்து விடயங்கள் பற்றியும் மக்க ளுக்கு தெரிவிப்பதில் ஊடகத்துறை இன்று அளப்பரிய சேவையாற்றி வருகின்றது. அப்படியானால் வேற்றுமொழிகள் எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது அதிக்கம் செலுத்தாமலும் அதன் செழுமை குன்றாமலும் காக்கவேண்டியது ஊடகத்துறையின் பங்கல்லவா? அதுமாத்திரமன்றி தமிழை தமிழாக உச்சரிப்பது அதன் சேவைகளில் ஒன்றல்லவா?
அரிசி, சீனி, பருப்பு போன்றவற்றில் கலப்படம் காணப்படுவது போல தேன்சொட்டும் எமது தமிழ் மொழியிலும் கலப்படம் சேர்வதனை எவ்வாறு ஏற்றுக் கொள்வது. உதாரணமாக தொலைக்காடசி, வானொலி, நிகழ்ச்சி ஒன்றினை எடுத்துக் கொள்வோமானால் “ரொம்ப நன்றி” என்று கூறுகின்றனர். அது எம் தமிழா? அனேகமான மக்கள் தங்கள் பொழுது போக்கு சாதனமாக கூடியநேரத்தை கழிப்பது வானொலியுடனும், தொலைக் காட்சியுடனும் என்றால் அதில் சிறிதளவேனும் ஐயம் இல்லை. இப்படி இருக்கையில் இவ்வாறான அறிவிப்புக்கள் நேரடியாக மக்களை பலமுறை சென்றடைகின்றது. இவ்வாறான பிழைகள் தொடர்ந்தும் ஏற்பட்டால் மெல்லத் தமிழ் இனிச் சாகும் நிலைகூட ஏற்படலாம்.
58 expelestó 2008
 

செய்திகள் வாசிப்போர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர்கள் என் போரில் காணப்படும் அடுத்த பிழை யாதெனில் உச்சரிப்புப் பிழைகள். உதாரணமாக "தமில் மொலியில் மாத்திரம் பேசவும்” “இந் நிகழ்ச்சிக்கு 'இனை அனுசரனை வழங்குவோர்” என்றெல்லாம் தவறாக உச்சரிப்புச் செய்கிறீர்கள். அதுமாத்திரமன்று உங்களுடன் தொடர்புகொள்ள மக்களுக்கு நீங்கள் வழங்கும் தொலைபேசி இலக்கங்களைனயும் கூட முன்று', 'ஏலு', நாலு என்று கூறி எத்தனை முறைதான் தவறிழைக்கின்றீர்கள். மேலும் வேற்று மொழி கலப்புகள் உதாரணமாக “எங்களுக்கு கோல் பண்ணுங்க” சமையல் குறிப்பு ஏதேனும் கூறுவதாயின் அதன்போதும் "எல்லா சாமான் களையும் மிக்ஸ் பண்ணுங்க” என்றல்லவா கதைக்கின்றீர்கள். எமது தமிழ் ஏன் இவ்வாறு தமிங்கிலம் ஆகின்றது. இவ்வாறு எம் தமிழுக்கு ஏற்படுகின்ற அழிவுகளை கூறுவோமாயின் கூறிக்கொண்டே செல்லலாம்.
இதனைக் கேட்கும் போது உள்ளுர ஓர் வெறுப்பும் ஆதங்கமும் ஏற்படுகின்றது. தமிழைத் தமிலாக உச்சரிக்காதீர்கள். செந்தமிழ் என்பது நாப்பழக்கம் தானே! அதனை ஏன் துகிலுரிந்து துச்சப்படுத்துகின்றீர்கள்? மேலும் ஓர் செய்தியினை எடுத்துக்கொள்வோம், காலி பிரதேசத்தில் கரையோர மக்களுக்கு இன்று கெளரவ அமைச்சர் மீன் பிடிக்க வளைகளை வழங்கினார். இங்குள்ள குறைபாட்டைப் பாருங்கள் "மீன் பிடிக்க” எனும் சொற்பதம் மாத்திரம் வராவிடின் அது வளைகள் வழங்கப்பட்டதாகத் தானே பொருள்படும். உண்மையில் "மீன்பிடிக்க வலைகள் வழங்கப்பட்டது” என்று தானே வாசிக்கவேண்டும். ஆகவே இவ்வாறான பிழைகளைத் தவிர்க்கும் முகமாக னகர, ழகர, லகர, உச்சரிப்புக்கள் ணகர, னகர, உச்சரிப்புக்கள் போன்றவற்றை செவ்வனே உச்சரித்து பயிற்சி பெற்று செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கவும்.
இவ்வாறான பிழைகள் எல்லா அறிவிப்பாளர்கள் மத்தியிலும் காணப் படுகிறது என நான் கூறவில்லை. எத்தனையோ முத்தான அறிவிப்பா ளர்களும் இருக்கிறார்கள். அவர்களின் அறிவிப்புக்களை அவதானித்து வளர்ந்துவரும் அறிவிப்பாளர்கள் தங்களை மாற்றிக்கொள்வார்களாயின் எதிர்காலத்தில் நல்லதொரு அறிவிப்பாளர்களை ஊடகங்கள் பெறும்.
உலகிலே உள்ள சுமார் ஆறாயிரம் மொழிகளுள் அவற்றுள் செம்மொழிகளாக பாரசீகம், தமிழ், சீனம், கிறேக்கம், லத்தின், அரபி, எபிரேயம், சமஸ்கிருதம், ஆகியவை செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. மற்றும் உலகத்திலே தோன்றிய முதல் மனிதன் தமிழ் மண்ணில் இருந்து தான் தோன்றினான் என்பதற்கான அடிப்படைச் சான்றுகள் உள்ளதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ബTി 2OO8

Page 22
உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் தமிழ் மொழி ஓர் மூத்த மொழி. இந்த மூத்தமொழி அழியாமல் காப்பாற்றவேண்டியது எம் கடமை யன்றோ. தமிழ் வளர்ப்போம் 'தமிழுக்கே முதலிடம் என்று பிதற்றிக் கொள்ளும் ஊடகங்கள் இன்று தமிழைக் கொச்சப்படுத்தலாமா? அதன் சிதைவுக்கு வழிவகுக்கலாமா? ஒருமொழி சிதையுமாயின் அது அழியத் தொடங்குகிறது என்றுதானே கருத்து ஆகவே தமிழ் மொழியிலுள்ள சிறப்பு அழியாமலும், அதன் செழுமை குன்றாமலும் மக்களைச்சென்றடைய ஊடகவியலாளர்கள் சிரத்தை கொள்ளவேண்டும். இவ்வாறு நடந்தேறின் தமிழ் செம்மை குறையாது செழுமையாகப் பிரகாசிக்கும் என்பது திண்ணம்.
தமிழறிவோம்
பதிவு செய்தள்ளது.
01 அடக்கம் 02 அந்தர் 03 முழவு 04 இடக்கை 05 உருக்கை 06 உபாங்கம்
07 கரடிகை 08 கணப்பறை 09 கண்விருதும்பு 10 குடமுழா 11 öfb6UDHD 12 சல்லிகை 13 சந்திரவளையம் 14 சிறுபறை 15 தக்கை , 16 தமருகம்
ஆவணப்படுத்தியுள்ளார்.
L
pစ္ရြာဇံနှ*.....
17
18
19
2O
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
தமிழர்களிடமிருந்த தோற்கருவிகள் முப்பத்திரண்டை சிலப்பதிகாரக் காவியம்
தண்ணுமை
தருணிச்சம் தடாரி தாம்பு திமிலை
ტIIQტł(b60)ðნ நாழிகைப்பறை நிசானம் Lb IIIöló பெரும்பறை பேரிகை மத்தளம்
(DJör மொந்தை விரலேறு
இத் தோற் கருவிகளை அடியார்க்கு நல்லார் தமது சிலப்பதிகார உரையில்
- திருவிோணன்

அதிஷ்டமில்ல/தவிை
மட்டக்களப்பு வாவிக்கரைகள் அதரிஷடமில்லாதவை.
வாவிமகள் மட்டும் அவ்வப்போது முலை இழுத்து பாலூட்டும் சோம்பேறித்தாய்போல் இறால் வடிக்கும் மீனவனோடு சலிப்போடு சம்பந்தம் பண்ணிக்கொண்டு.
அதிஷ்டமில்லாத வாவிக்கரைகள் குப்பைகளைக் குவிக்கின்ற இடமாய்.
அழகுப் பெண்களை அந்தி சாய வந்து கால் நனைத்த போது சிவிர்ப்பூட்டி மகிழவைத்த வாவிக்கரை.
கோட்டைமுனைப் பாவத்தை
குருவிகளாய் நிறைத்து வழிந்த இளசுகள் காலாற நடந்துவந்த வாவிக்கரை.
Eise 2008

Page 23
கடலுக்குள் முளைத் தெழுந்த முழுநிலவை இழுத்து வந்து
ஊருக்குள் உலவவிட்டு ஓசையின்றி அழகு பார்த்த வாவிக்கரை.
நடு நிசியும் தாண்டும் ஊரின் ஓசைதேய.
மீன்பாடும். தாலாட்டில் தலை சாய்த்த வாவிக்கரை இப்போ ஆளரவமின்றி. குப்பைகளை குவிக்கின்ற இடமாய்.
நரை விழுந்த அம்மாக்கள் சொல்ல தொப்பை விழுந்த அப்பாக்கள் ஆமோதரிக்கிறார்கள். கம்பளி உடைக்குள் வாய் பிளந்து பிள்ளைகள்
தேம்ஸ் நதியை போவாவா..? இல்லை. அது தேன் நதி இறந்த காலத்துக்குள் தம்மை மறக்கும் இடம் பெயர்வுகள். கற்பனைக்குள் முடங்கும் இளசுகளின் கால் நனைக்க முடியாமல்
அதிவுச்டரில்லாதவை மட்டக்களப்பு வாவிக்கரைகள்.

என்ன சின்னாச்சி, றில் பழகிற மாதிரி பொண்டுகளெல்லாம் வரம்புக்கட்டால போறயள்? எங்க பன்புடுங்கவா?
6रींo१०७-०९ 6iგ ી. )يوكاك
சும்மா இருக்காதே! அது மெய்தான். இப்ப / ZASš பண்பாய் விக்கிற விலைக்கு அஞ்சிபத்துப் பாய 4
இழச்சிப் போட்டா நம்மட சோத்த "A
அதுசரி, இப்ப அரிசி விக்கிற விலையில
தின்னாதுதான்.
W\ \ எப்பிடிச் சின்னாச்சி நீங்கெல்லாம் சோறாக்கித் \ திண்டுநீங்க? பன்னப் புடுங்கிப் பாய இழச்சி, A வித்தெடுக்கிறதுக்கிடையில உங்கட உசிர் போனாலும் போயிரும். தொழில் த்ொழி லெனர்டு முழுநாளும் உங்களுக்கு ஒரே
亡
வேலவேலெண்டு வெறும் குடலோட கிடந்து உத்தரிச்சீங்கெண்டா கூடிய சீக்கிரத்தில மேலோகம் பொமித்தி ருவீங்க!
என்ன எங்க போறெனண்டாலும் சம்மதம்தானா? இதன்னடி புள்ள
--سیہ
பொன்னாச்சி உண்ர கதையும் ހި/ -m m பேச்சும்? உங்களுக்கெல்லாம் Ya வாழ்க்கையில போராடிப் போராடி அலுத்துப் போச்சென்ன? அலுக்கப்பொடா புள்ள உசாரா உழைக்கோணும். உரிமையோட வாழோணும் உங்களைப் போல கயிற்றப்பட்ட தொழிலாளர்கள் தான் அமெரிக்காவில சிக்காக்கோ எண்டுற நகரத்தில முதலாளிமாரோடு போராடிச் சண்டபுடிச்சாங்க.
அப்படி அவங்க போராடினதால்தான் இண்டைக்கு நம்மட நாட்டிலயும் வேல செய்யிற ஐயாமார்கள்கூட எட்டு மணித்தியாலம் வேல செய்யிறாங்க. அதுக்கும்
.

Page 24
மேல வேல செஞ்சா ஓவர்டைம் எண்டுபோட்டுக் கொஞ்சத்தையா அள்ளி எடுக்கிறாங்க.
அதுக்காகப் பொன்னாச்சி உன்னையும் நான் கந்தோரில போயிருந்து வேல செய்யச் சொல்லல்ல. அதுக்கெல்லாம் உனக்குப் படிப்புக் காணா.
இண்டைக்கு உலகமெல்லாம் சீவிக்கிற தொழிலாளிகளெல்லாம் ஒருமித்து நிண்டு ஊரூராக இந்த மே தினத்தக் கொண்டாடுற சங்கதியொண்டையும் நீங்க கேள்விப்படல்லையா? தெரியும்தானே! புறகென்ன இண்டைக்கெண்டாலும் பன் புடுங்கிற வேலய உட்டுப்போட்டு, விழா நடக்கிற இடத்தில போய்த் தலையக் காட்டுங்களன்.
நாங்க ராப்பகலா வேல செய்யிறம்! ஆனா எங்கட முடும துலையல்ல! எல்லாத்துக்கும் வில ஏறிக்கொண்டு போகுது வித நெல்லுக்கும் வில உரத் துக்கும் வில, எண்ணெய்க்கும் வில, இப்படியே எல்லாத்துக்கும் விலய ஏத்தி, எங்கட வகித்தில அடிக்காதீங்க எண்டெல்லாம் தொண்ட கிழியக் கத்துங்களன். அப்படிக் கத்தினாக் கொஞ்சமாச்சும் பெரியவங்கட செகிட்டுக் காதுகளுக்குக் கேக்கும். சுடுதண்ணிக்குப் பதிலா பச்சத்தண்ணியாவது கிடைக்கும். சும்மா கிடந்தா ஒண்டும் நடக்கா புள்ள
என்ன போன வருசமும் அவன்ட இவன்ட ஆச வாத்தயள நம்பி"
நீங்களெல்லாம் அள்ளுப்பட்டுப் போய், அன்னந்தண்ணி இல்லாம வெறுங் குடலோட நடநடையாத் திரும்பி வந்தனீங்களா?
கடவுளே கதிராமசாமியான இதொண்டும் எனக்குத் தெரியாபுள்ள
இவனுகளெல்லாம் இப்படித்தான். பெரிய எடுப்பெடுத்துக் கூட்டம் போடு வானுகள்! இந்தா கிழிக்கிறன், புடுங்கிறன் எண்டெல்லாம் கூத்துக்காட்டிப் போட்டு ஆளாள் தெரியாம ஓடிப் பொயித்திருவானுகள். கூட்டிவந்த சனமெல்லாம் றோட்டோரம் வழிய படுத்துக் கிடக்கும்கள்.
இவனுகளுக்கெல்லாம் விழாவும் வேடிக்கையும் தேவைதானா? சரிபுள்ள, நீங்க உங்கட விருப்பம் போல என்னெண்டாலும் செய்யுங்க! நான் வாறன்.
.
- ெேதுனன் -

ஆசிரியர் : இரா.கிருஸ்ணபிள்ளை
(சிறுகதைத் தொகுதி)
(இராதி)
நூல் வெளியீடு 26.04.2008, ஞாயிற்றுக்கிழமை அம்பாறை மாவட்டம், காரைதீவு விபுலானந்த மணிமண்டபத்தில் ஓய்வுபெற்ற அதிபர்
திரு.வி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.எஸ்.இராம
கிருஸ்ணனும், சிறப்பு அதிதியாக கல்வி அமைச்சின் முன்னாள் கல்விப்
பணிப்பாளர் திரு.என்.நடராசா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நூல் நயவுரையை பிரபல ஊடகவியலாளரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான திரு.விரிசகாதேவராஜா நிகழ்த்தினார்.
காரைதீவு-02, “சணச"நிறுவனம் நூலைப் பதிப்பித்திருந்தது.
நூலின் முதற் பிரதியை தர்மகர்த்தா இதிருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார்.
நூலாசிரியர் திரு.இராமக்குட்டி கிருஸ்ணபிள்ளை (இரா.கிருஸ்ணபிள்ளை . இராகி) அவர்கள் ஓய்வுபெற்ற அதிபரும், கவிஞருமாவார்.
மணிக்கொடி எழுத்தாளர்களின் பாதிப்பில் சிக்குண்ட இராகியின் கன்னிப் படைப்பு இது.
114 பக்கங்கள் கொண்ட 14 சிறுகதைகள் தாங்கி கச்சிதமாக
sese cðsæTéf 2008

Page 25
வெளிவந்துள்ள இப்படைப்பில் ஆறு தசாப்தகாலமாக அவர் எழுதிய முக்கிய சில சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன. 1933களில் "சுதந்திரன்' இல் எழுதிய கதை முதல் அண்மைக்காலமாக ‘வீரகேசரி', 'தினகரன்' வாரமலர்களில் வெளிவந்த கதைகளும், மேலும் வெளிவராத கதைகளும் இந்நூலில் இடம்பிடித்துள்ளன. வ. வே. சு. ஐயர், புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரையிலான காலப்பகுதியில் இலக்கியப் பரப்பில் உலா வந்தவர் இராகி. இராகி ஒரு நாடகக் கலைஞர், கவிஞர், சிறுகதை எழுத்தாளர். நூலின் சமர்ப்பணம் அவரை ஈன்ற தாய், தந்தையரைக் கண்ணியப் படுத்துகிறது. அணிந்துரையை கவிஞர். பொன் சிவானந்தன் வழங்க, வாழ்த்துரைகளை பத்மநாதன் பா.உ. உம், பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணனும் வடித்துள்ளனர். "சணச"சங்கம் வெளியீட் டுரையை வழங்கியுள்ளது.
உறவுகள், இத்தாலி கப்பல், விதி, பாலுநிலவு நிர்மலா, முடிந்த கதை, பாறை, தனிமரம், அறுவடை, காதல், ஓடு, சத்தியம், நான் யார்ரி, விரக்தி, ஏமாற்றம் என 14 கதைகள் உள்ளன. சமகால நிகழ்வுகள், சமுகங்களின் அவலங்கள், பெண்ணடிமை போன்றன கருப்பொருளாக உள்ளன.
நூலாசிரியரின் 40 வருடகால இலக்கிய வரலாற்றில் முதல் படைப்பு
இது. -ዕFöbWI
கட்டைச் சங்கிலியில் GIT
கண்ணீர் வழக்கிறதாம் f நாய்.
நீளச் சங்கவி வாங்க கடைத்தெரு போகிறாள் 霍 சீமாட்டி. R
 

கவிஞரும் எழுத்தாளருமான இராகி" (இரா.கிருஷ்ணபிள்ளை) அவர்களின் முதல் நூல் "உறவுகள் சிறுகதைத் தொகுப்பு 'பாண்டியூர் இராகி” என்ற புனைப்பெயரில் அவர் எழுதிய "சரியா தப்பா’ என்ற முதல் சிறுகதை சுதந்திரன் வார இதழில் 1964 இல் வெளியானது.
ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகால எழுத்துலக தொடர்புடையவர். 'அறுவடை', 'நினைத்ததும் நடந்த தும்', 'உள்ளத் தூய்மை' போன்றவை 1964 இல் கதந்திரன் பத்திரிகையில் அவரால் எழுதப்பட்ட சிறுகதைக வாகும் "மன்னிப்பு' (1954), "அடியார்க் கெழியான் (1964), "சேற்றிலே ஒரு செந்தாமரை” (1986) ஆகிய நாடகங் களை எழுதி நடித்து இயக்கியதன் மூலம் தனது பல்துறைப் புலை மையை வெளிப்படுத்தியவர்.
கவாமி விபுலானந்தரின் சிலை யெடுப்பு விழா மலரான "அடிகளார் படிவமலர்" (1969), சுவாமி விபுலா
47 sêse.
னந்தர் மணிமண்டபத் திறப்பு விழாவின் 'அடிகளார் நினை வாலய மலர்' (2004) போன்ற நூல்களின் மலர்க்குழு உறுப் பினராக விளங்கியதுடன் அம் மலர்களில் தனது ஆக்கங்க ளையும் எழுதியவர். ஆன்மீக, இலக்கிய ஈடுபாடுடைய இராகி சிறந்த பேச்சாளரும், கவிஞரு மாவார். கலைப்பட்டதாரியான இவர் ஆசிரியராக, பிரதி அதி பராக, அதிபராக சேவையாற்றி ஓய்வுபெற்றவர். பல அமைப்புக் களாலும் பாராட்டப்பட்ட சமூக சேவையாளர்.
- கலாநிதி.ந.நடராசா (M.A.), B.Ed. (Hons)

Page 26
"விானொலி ஒன்பது" (இதுபோக்கள்)
கேசகன்.
வானொலியை மார்க்கோனி படைத்தார்! வரும் பலன்கள் பலவென்றே நினைத்தார். e6OTLuu6or (F.M.) 6T. 6TibLDIT6), அகிலத்திற்கில்லையென, தானறிந்தால், மீண்டுமுயிர் துறப்பார்.
2) 6)IT66OTT656oulu (SLTLITC36o eäröi,
வளவளப்பு "டெலிபோனில் பேச்சு போனதந்தப் பொற்காலம், புதுமைசெய்த வானொலிக்கு, ஆன புகழ், பேர், பெருமை போச்சு
3) ஊரெங்கும் வானொலியோ கொள்ளை
உருப்படியாய் ஒன்றேனும் இல்லை! 'பாரத சஞ்சிகைத் துணுக்கை,
பாடல்களை ஒலிபரப்பி, நாறடிப்பார்! நமக்கதுவே தொல்லை!
4) காணுகிற நேரமெலாம் பாட்டு,
கண்ட கண்ட பெயர் சொல்லிப் போட்டு வானொலியென்றால் எனக்கு வாந்திவரச் செய்துவிட்டார் காணுமிந்தக் காதுவலி பூட்டு.
நிேதி
2008
 

5)
6)
ア)
8)
9)
'அந்தவகை', 'இந்தவகை இல்லாட்டி அவர்பாடோ அந்தரத்துத் தொட்டில் 'எந்தவகை பேசுவது என்றிவர்க்குத் தெரியாது வந்ததையா வானொலி இக்கட்டில்
நல்ல தமிழ் பேசாதே பத்து நரம்பேனும் தெறித்திடவே கத்து மெல்ல இது ஜோக் என்று மெதுவாகச் சொல் சிரித்து, எல்லோரின் காதிலும் பூச்சுத்து
“லகரத்தை 'ழ', 'ள வென்றார்க்கு ‘ன கரத்தை “ன வென்றும் ஆக்கு சிகரத்தை எட்டியதாய் éfl6OLbLum LLLD &C6Lb 2-60D6OT, இகழ்வார்கள், போய் வழி உன் நாக்கு
அறிவிப்பு செய்வதற்குத் தகுதி ஆட்களுக்குத் தேவையில்லை மிகுதி முறையற்றுப் பேசுதற்கும் முக்கி முக்கிக் கத்துதற்கும் தெரியுமென்றால். போய்ச் சேர் அப்பகுதி
பாட்டுக்களை மாற்றி இவர் தந்தார் பகிடிவிட்டுத் தான் சிரித்து நொந்தார்!
சேட்டை விட்டார் டெலிபோனில் செய்கருமந்தனில் மட்டும்
கோட்டை விட்டார்! தமிழ்த் தாயோ நொந்தாள்

Page 27
தலைவர்களே தோழர்களே
2
3}
இங்கில்நிதில் இவெரடு செறிபெழிஷ்
蠶 இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் 隱 தகுந்த சமூகமாகக் கருதலாம் ஆனால், நாங்கள் பிரிட்டிஷ் ஜ் தொழிற்கட்சியை மிகமிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய்க் ரீஜ் கருதுகிறோம் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்
ஏனெனில் தொழிற்கட்சித் தலைவராகிய தோழர் லான்ஸ்பரி இ அவர்கள் சிப்பாய்கள் சுடுவதையும், கொல்லுவதையும் (" தான் சிறிதும் விரும்புவதில்லை என்று பெருமை பேசிக் :" கொள்ளுகின்றார்கள், ஆனால் எங்கள் கார்வாத் (Charan): சேனைகள் நிராயுதபாணிகளான மக்களைச் சுடுவதற்கு இ மறுத்ததற்காக, தோழர் லான்ஸ்பரியின் தொழிற்கட்சி : கவர்மெண்டானது - அந்தச் சிப்பாய்களுக்கு 15 வருடி கடின காவல் தண்டனை விதித்திருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன்.
தொழிலாளர் சங்கமாகிய டிரேட் யூனியனை (Trade Union) ஆதரிப்பதாகவும் அதில் சேர்ந்து உழைப்பதாகவும் பறைசாற்றுகிறீர்கள். ஆனால், எங்கள் ஏழை இந்தியச் சுரங்க வேலைக்காரர்களும், மற்றும் தொழிலாளிகளும் சேர்ந்து ஒரு டிரேட் யூனியன்'சங்கம் ஸ்தாபிப்பதற்காக அதன் அதிகாரிகளையும், அதற்கு உதவிசெய்த பிரிட்டிஷ் தோழர்களையும் வெளியில் இருக்கவிடாமல் உங்கள் தொழிற்கட்சி அரசாங்கமானது மீரத்து சிறையில் அடைத்துப் போட்டுவிட்டது.
தோழர் லான்ஸ்பரி அவர்கள் இந்தியர்கள் விஷயத்தில் மிக்க அனுதாபம் இருப்பதாகவும், இந்தியர்கள் கடப்படுவதையும் அடிக்கப்படுவதையும் சிறையில் அடைக்கப்படுவதையும் தாம் விரும்புவதில்லையென்றும் சொல்லிக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், தோழர் லான்ஸ்பரியுடைய தொழிற்கட்சி அரசாங்க கேபினட்டானது சுமார் 80 ஆயிரம் பேர் வரை இந்திய ஆண் பெண்களை
s.
 
 

ஜெயிலில் அடைத்திருக்கிறது; ஆயிரக் கணக்கான மக்களைச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது. ஆப்ரிக்கன் கிராமங்களின் மீது ஆயிரக்கணக்கான தடவை ஆகாயப் படை மூலம் கொடுமை செய்யப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான பர்மியர்களையும் கிராமத் தாரையும் கட்டுக் கொன்றிருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?
இந்தியச் சுரங்கங்களில் பத்தமணி நேர வேலைக்கு எட்டனா கூலிக்கு இந்தியர்களிடம் வேலை வாங்கப்படுகின்றது. சுமார் நாற்பதாயிரம் பெண்கள் தினம் ஐந்தனா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமையையும் ஆபாசத்தையும் நிறுத்தத் தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது.
தோழர் லான்ஸ்பரி அவர்கள் இங்கிலாந்தில் தொழிலாளிகளை ஆதரிக்க வேண்டு மென்று பேசுகிறார்; ஆனால், இந்தியா விஷயத்தில் தோழர் காந்தியையும் இர்வின் பிரபுவையும் கொடுமையான வட்டமேசை மாநாட்டையும் ஆதரிக்கிறார். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இந்தியாவானது இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும் முதலாளிமார்களும், ஐரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும் - தொழிலாளிகளுக்கும், குடித்தனக்காரர்களுக்கும் பாத்தி யமும், பொறுப்பும் இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் இந்திய நிர்வாகம் நடக்கும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்.
தோழர் லான்ஸ்பரி அவர்கள் யுத்தத்தையும், யுத்த முஸ்தீபையும் வெறுக்கிற தாகச் சொல்லுகிறார்கள். ஆனால், இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் துருப்புக்களையும், பிரிட்டிஷ் வைசிராயையும் திருப்பி அழைத்துக்கொள்ள மறுக்கிறார். கடைசியாக, இந்தத் தொழிற்கட்சி அரசாங்கமானது இரண்டு வருஷ காலத்தில் அனுப்பிய ஆகாய சண்டைக் கப்பல்களையும் வெடிகுண்டு களையும், மோட்டார் பிரங்கி வண்டிகளையும், கவசம் செய்த மோட்டார் வண்டிகளையும், எந்திரத் துப்பாக்கிகளையும் பிரிட்டிஷ் பட்டாளங்களையும் கணக்குப் பார்த்தால், பால்ட்வின் அரசாங்கமானது தனது ஐந்து வருஷ ஆட்சியில் அனுப்பப்பட்டதை விட அதிகமாகவே இருக்கிறது. தோழர்களே! இவற்றிலிருந்து பிரிட்டிஷ் தொழிலாளர் பார்ட்டி என்று சொல்லப்படும் சமதர்ம பார்ட்டியின் யோக்கியதையை அறிந்து கொள்வது என்பது எங்களுக்கு மிகக் கஷ்டமாகவே இருக்கிறது.
ஆதலால் - யார்க்ஷையர் தொழிலாளர்களே நீங்கள் இந்தப் போலிக் கட்சிகளை யும், கொள்கைகளையும் நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும் சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராட உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள். |(இங்கிலாந்தில் மேக்ஸ்பரோ (பான்சிலே "லேக் பார்க் கில், 20.06.1932ல்
கூடிய தொழிலாளர் கூட்டத்தில், சொற்பொழிவு)
5இ
DauT : DIA

Page 28
ஈழத்து இலக்கிய சிற்றிதழ்கள் வரிசையில்.
1)
2)
4)
5)
கரைச்சக்தி - 蠶
தமிழ் மொழியும், தமிழ் மண்ணும் கொண் டிருக்கும் பெருமைக்கு மேலும் அணி செய்யு
மாறு ஆக்கங்களை அளித்தல்,
தமிழ்சமுதாயத்தில் புரையோடியுள்ள குறை : " பாடுகளை நயமாக எடுத்துக்கூறி, அவற்றை படிப்படியாகத் திருத்தும் வழி வகைகளை யும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் - விளக்க வல்ல விடயதானங்களை வழங்குதல் வி
பழைமவாத சிந்தனைகளினால் முன்னேற்றம் பாதிப்புற்று உலகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படும் வகையில் புதிய புரட்சிகர சிந்தனைகளை முன்வைக்கும் ஆக்கங்களைத் தருதல்
எவரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தாத வண்ணமும், ஆனால் அவரது நடவடிக்கைகளால் சமுதாயம் பாதிப்புறும் போது அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவருக்கு அவரின் போக்கை மாற்றி விட வல்லதான இலக்கிய வடிவங்களை நயம்பட வழங்குதல்,
தமிழரின் பண்டைய கலாசார பண்பாட்டுக் கோலங்கள் சிதைவுறாது பார்த்துக் கொள்ளும் அதேவேளை அவற்றை நவீன விஞ்ஞான உலகின் அணுகுமுறையோடு இசைந்து செய்யுமாறு செய்ய வல்ல மாற்றங்களை எழுத்தின் மூலம் அறிமுகப்படுத்துதல்.
.
 
 
 
 

6) தமிழ் சமூகத்தின் உயிர் நாடியான மாணவர் சமுதாயத்தின் மேம் பாட்டிற்கான அறிவியல் சார்ந்த விடயதானங்களையும் அளித்து மொழி, அறிவியல், போட்டிகளையும் நடாத்தி ஊக்கப்படுத்துதல்.
7) தமிழர் சமூகத்தை புரட்சிகரமான மாற்றங்களுக்கு இட்டுச் சென்ற, செல்லுகின்ற செல்ல வைக்கும் சிந்தனையாளர்களையும் சேவையா ளர்களையும் தொண்டர்களையும் கெளரவித்தல்.
8 வருடம் ஒருமுறையாவது தமிழுக்கு விழா எடுத்து 'மாற்றம்" சஞ்சி கையின் ஆண்டு மலரை ஆங்கு வெளியிட்டு பல்துறைசார்ந்த பேரறி ஞர்களைக் கொண்டு சஞ்சிகையை விமர்சனம் செய்து, மேற்கொள் ளப்பட வேண்டிய திருத்தங்களை ஏற்றுக்கொண்டு செயற்படுதல்,
இவ்வாறான உன்னத இலட்சியங்களை மனதில் கொண்டு 1992 இன் இறுதிப்பகுதியில் வெளிவரத் தொடங்கியதே மாற்றம் மக்கள் சஞ்சிகையாகும். யாழ்ப்பாணம் நல்லூரில் இயங்கிய தமிழ்த்தாய் மன்றம் இதனை வெளியிட்டது. யாதுமுரான் எனப் புனைபெயரையுடைய திருவேநவமோகனை ஆசிரியராகவும் மல்லிகை மைந்தனை இணையா சிரியராகவும் கொண்டு, மறைந்த பிரபல ஓவியர் மாற்கு அவர்களின் அட்டைப்பட நவீன ஓவியங்களுடன் தமிழ்த்தாய் மன்றத்தின் ஆலோச கராய் விளங்கிய மில்க் வைற் அதிபர் கலாநிதி க. கனகராசா அவர்களின் ஆதரவுடன் 'மாற்றம்’வெளிவந்து வாசகர் நெஞ்சங்களை தன்னகத்தே ஈர்த்துக் கொண்டது.
அறிவுக் கட்டுரைகள், தகவல் புதிர்கள், கவிதைகள், சிறுகதைகள், நேர்காணல்கள். குறுக்கெழுத்துப் போட்டி என்பன அலங்கரிக்க சூடு பறக்கும் சுருட்டியார் பதில்கள் வாசகர்களை சிந்திக்க வைக்க மாற்றம்" வெளிவந்தது காலாண்டு சஞ்சிகையாக, அதனால் சஞ்சிகை மலரத் தொடங்கிய சில மாதங்களுக்குள்ளேயே தனக்கென தனியான வாசகர் வட்டத்தையும் எழுத்தாளர்களையும் கொண்டு பக்கச் சார்பற்ற நிலையில் மணம் பரப்பியது.
அத்துடன் மாற்றம்’ வாயிலாக ஒவ்வோராண்டுக்குமான தேசா பிமானியை தமிழ்த்தாய் மன்றம் சஞ்சிகையின் வாசகர் வட்டத்தின் வாக்கு களைக் கொண்டு தெரிவு செய்து கெளரவித்தது. தெரிவு செய்தவர்களி
.

Page 29
லிருந்து அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுத்து பரிசுகளும் வழங்கப்பட்டது சிறுகதைப்போட்டி, அட்டைப்படக் கவிதைப் போட்டி, பொது அறிவுப் போட்டி என்னும் அம்சங்களும் இடம் பிடித்துக் கொண்டன. பல இளம் வாசகர்கள் இவைகளில் கலந்து கொண்டு பரிசில்கள் பெற்று மகிழ்ந்தனர். 1993 இன் தேசாபிமானியாக உயர்திரு ஆ. சி முருகுப்பிள்ளை (விநாயகர் தருமநிதியம் ) அவர்கள் தெரிவாகிக் கெளரவிக்கப்பட்டார்.
'அறிவியல் மாமா' எனப்படும் அம்சமும் சஞ்சிகையில் உள்ளடக் கப்பட்டிருந்தது. இளம் சிறார்களின் அறிவியல் புதிர்களுக்கு எளிய விளக் கத்துடன் விடையிறுக்கப்பட்டது. இந்நிலையில் 'மாற்றம்' சஞ்சிகையின் ஆறாவது மலர் வெளிவந்தது. அதில் சுருட்டியார் ஒரு வினாவுக்குக் கொடுத்த பதில் 1994 காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண் டிருந்த ஆயுதக்குழுவொன்றிற்கு சினத்தை ஊட்டியது. அச்சில் ஏற்பட்ட தவறு எனக்கூறி விடையைத்திருத்தி அடுத்த இதழில் பிரசுரித்தபோதும் ஆயுதக்குழு "மாற்றம்' சஞ்சிகை மீதும் அதில் வரும் ஆக்கங்கள் மீதும் தன் கோரப்பார்வையைச் செலுத்தியது. மாற்றம் ஆசிரியர் அழைக்கப்பட்டு கடுமையான முறையில் எச்சரிக்கை செய்யப்பட்டார். ஆனாலும் 10வது இதழ்வரை சஞ்சிகை வெளிவந்தது. மாற்றத்தில் வெளிவந்த மற்றுமொறு முக்கியமான அம்சமானது கம்பன் கழக அமைப்பாளர் இ.ஜெயராஜ் அவர்களின் பேட்டியாகும். இதன்போதும் ஜெயராஜ் அவர்கள் மாற்றம்' இதழில் வழங்கிய பதிலால் யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு.சண்முகதாஸ் அவர்கள் கம்பன்கழகச் சிறப்பு உறுப்பினர் பதவியையே இராஜினாமா செய்யுமளவிற்குப் போய்விட்டது.
கடைசியாக மாற்றம் 10வது இதழானது தமிழ்த்தாய் மன்றத்தின் சார்பில் 1994 இன் தேசாபிமானியாக பசுமையின் நண்பன் மில்க்னவற் தொழிலதிபர் கலாநிதி கனகராசா அவர்களைத் தெரிவுசெய்து கெளரவித்தது. 1* இதழ் வெளியிடத் தயாராயிருந்த போதும் மற்றுமொரு ஆயுதக் குழுவி னால் சஞ்சிகை ஆசிரியர் பிடிக்கப்பட்டு மொட்டையடிக்கப்பட்டு எச்சரிக் கையுடன் விடுவிக்கப்பட்டார். அச்சம் காரணமாக அவர் கொழும்புக்கு இடம் பெயர வேண்டி ஏற்பட்டது. கொழும்பிலிருந்து கூட மாற்றம் வெளியிடக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து ஓங்கி வளர்ந்து கொண்டிருந்த மாற்றம்’ ஒரேயடியாய் முறிக்கப்பட்டுவிட்டது. தரமான இலக்கிய சஞ்சிகைக்கு சாவுமனியடிக்கப்பட்டுவிட்டது.

இதனூனனில் வினாவும்
தவறான விளக்கம் தரலாமா? தமிழறிவோம்’ எனும் தலைப்பில் திருவோணன் என்பவரால் தரப்பட்டுள்ள குறிப்பில் (செங்கதிர் - 3) நாள் எனும் ஒருமைச் சொல்லுடன் 'கள்' விகுதி சேரும் போது நாள்கள் என்று எழுதுவதே இலக்கணப்படி சரியானது என்று இயம்பியுள்ளார்.
ஆனால், நாள்' எனும் நிலைமொழியுடன் 'கள்' எனும் வருமொழி புணரும் போது நாள்+கள்) அது நாட்கள் என்றே திரியும். இதனை நன்னூலார் இவ்விதம் கூறுகிறார்.
ல ள வேற்றுமையில் ற டவும் அல்வழி அவற்றோடு உறழ்வும் வலிவரின் ஆம், மெலி மேவின் னணவும் இடைவரின் இயல்பும் ஆகும் இரு வழியானும் என்ப.
இச் சூத்திரத்தின் விளக்கம் இது. ல், ள் என்னும் மெய்களை உடைய சொற்கள் வேற்றுமைப் புணர்ச்சியில் தமக்கு முன் வல்லினம் வந்தால் மாற்றம் பெறும். ஸ் என்னும் மெய் ற் என்னும் மெய்யாகவும், “ள்' என்னும் மெய் "ட்" என்னும் மெய்யாகவும் திரியும். இதன்படியே நாள்+கள் என்பது நாட்கள் எனவும், சொல்+கள் என்பது சொற்கள் எனவும் திரிந்தன. இதிலிருந்து, நாட்கள் என்னும் பன்மைச் சொல் ஒன்றுக்கு மேற்பட்ட நாள் என்னும் அர்த்தத்தையே தரும். நாட்கள் என்பதற்கு வேண்டு மானால் திருவோணன் குறிப்பிட்டுள்ளபடி நாட்பட்டகள், நாளானகள் என்று விரித்தும் பொருள் கூறலாம்.
நாள்' எனும் சொல்லுக்கு இராப்பகல் கொண்ட பொழுது என்றே தமிழ் அகராதி பொருள் தருகின்றது. எனவே, நாட்கள் என்பதற்கு காலையில் குடிக்கும் 'கள்' என்று எவ்விதம் கருதக் கூற முடியும்?
-விாகரைவிானன்
п. alarijil 20 315.

Page 30
திருவோணனின் விளக்கம் (தவறில்லை) நாள்' எனும் ஒருமைச் சொல்லுடன் 'கள்' விகுதி சேரும்போது நாள்கள்’ என்று எழுதுவதே இலக்கணப்படி சரி என இலக்கணத் தாத்தா மே. வீ.வேணுகோபாலபிள்ளை அறிவுறுத்தியுள்ளார்.
நாட்கள்’ என்றால் நாட்பட்ட கள்ளாகிய பழைய கள்ளையும் குறிக்கும். காலையில் இறக்கிய கள்ளையும் குறிக்கும்.
"நாட்கள் உண்டு நான்மகிழ் மகிழின் யார்க்கும் எளிதே தேர்தல்லே' என்னும் புறநானூற்று 123ம் பாடலில் காலையில் இறக்கிய கள் என்னும் பொருளிலேயே சங்கப் புலவர் கையாண்டுள்ளார்.
அன்று இறக்கிய கள்ளைக் குடித்துவிட்டு அதனால் ஏற்படும் மகிழ்ச்சியில் தேரைப் பரிசாகக் கொடுத்தல் எளிது என்பது இப்பாடலின் பொருளாகும்.
மேலும், நாள்கள் என்றே புலவர்கள் இலக்கியங்களில் இச்சொல்லைக் கையாண்டுள்ளனர். கீழ்வரும் பாடல் அடிகள் இதற்குச் சான்று.
"நீள்துயர் நெடு நாள்கள்
நிறைவெம் போர்த்துறை விளைத்தார்” (பெரிய புராணம் - 129)
"பரவாதா ரில்லை நாள்களும்” IJ - 5516)
'பாவியே னுணரா தெத்தனை பகலும்
(திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி - 2)
"ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய்
ஒழிந்தன கழிந்த அந் நாள்கள் ” (பெரிய திருமொழி – 3)
"நாள்கள் மேல் சென்ற எண் என’
\ (கம்பராமாயணம் - கந்தரகாண்டம்)
"நீடு நாள்களும் கோள்களும் என்னமெல்
நிமிர்ந்து” (கம்பராமாயணம் - கிஸ்கிந்தா காண்டம்)
-திருவிோனன்
56 [ HI}ያ)

[b1TổÖT UT
மாபெரும் சக்தியிலிருந்து பிரசவ மானது இந்தப் பிரபஞ்சம். அதில் பஞ்ச பூதங்களாலான இயற்கையின் ரம்மியம். அந்த இயற்கையை அனுபவிக்க அரிதிலும் அரிதான அற்புத மானுடப் பிறவிகள். கூடவே விலங்குகள், பறவைகள், ஊர்வன என்று இன்னோரன்ன உயிரினங்கள். இந்தப் படைப்புக் களின் தோற்றுவாய் ஆகிய அந்த மாபெரும் சக்தியைத்தான் இறைவன் எண்கிறோம். இறைவன் மனிதனின் சுகத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும் தான் அனைத்தையுமே தோற்றுவித்தான். ஆனால் மனிதனோ எல்லாம் நான்தான் என்ற மமதையில் தன்னையே மறந்து போய் மெய் ஞானத்திலிருந்து தோன்றிய விஞ்ஞானத்தினாலே அஞ்ஞான மாகிப் போய்க்கொண்டிருக்கிறான் இன்று.
இயற்கை மாறுதலுக்குட்பட்டது. அதனுள் வாழும் மனிதன் உட்பட சகலதுமே மாறுதலுக்குட்பட் டவை, உடல் அழிந்து போக உயிராகிய ஆன்மா அழிவதில்லை.
நான் நான் என்று மார்பு தட்டுகின்ற மனிதன், அந்த நான் யார் என்பதை அறிந்து கொண்டா னானால் அதுவே பேரின்பம். உலகமே இன்பமயம், உடல் வேறு உயிர் எனப்படுகின்ற ஆன்மா வேறு. இந்த ஆன்மா வாடகைக்கு எடுத்துக் கொண்ட வீடுதான் உடல், நான் என்ற பதத்திற்கு பகவான் காயத்திரி சித்தர் இவ்வாறு விளக்குகிறார். உடலை நான் என்று சொன்னால் உறக்கத்திலும், மயக்கநிலையிலும், மரணத்தின் பின்பும் நடப்பவை யாவும் உணரப் பட வேண்டும். அது இல்லை யென்பதால் உடலை நான் என்று சொல்வதில் அர்த்தமில்லை. மன உணர்வுகளையும், உடல் உணர்ச்சிகளையும் என் இச்சைப்படி இயக்கி இண்ப துன்பங்களை அனுபவிக்கும் கர்த்தா தான் நான். ஐம்பொறிகளின் வழியாக உலகை

Page 31
அறிந்து கொண்டு, கர்மேந்திரி பங்கள் வழியாக உடலை இயக்கிக் கொண்டு இருப்பவன்தான் நான் ஆன்மா. நான் இல்லாவிட்டால் உடல், மனம், புத்திகள், வேலை செய்யா. நான் ஆன்ம சக்தியாக இருந்து கொண்டு இவைகளின் நிலையை வளர்த்து தகுந்த பரிகாரம் தேட முயற்சிப்பவன் மனிதன் என்ற உணர்வில் செயற் படும் உணர்வு தான் ஆன்மா. எனவே நான் எனும் பதம் ஆன்மாவை அதாவது உயிரை குறிக்கிறது.
இவ்வுயிரினங்கள் கூட தனிப்பட்டவை அல்ல. படைப்பின் முதலில் இருந்து ஒரு பெரிய ஆண்மா படைப்புக்காக அவ்வொன்று தன்னைப் பலதாகப் பகுத்துக் கொள்கிறது என்கிறார் சித்தர் பகவான். அவர் மேலும் ஒரு பெரிய தொட்டி நீர் பல பாத்திரங் களில் விழுந்து பாத்திரத்தின் வடிவத்தை பெறுவது போல இயற்கையின் கவசமே ஆன்மாக் களை வேறுபடுத்திக் காட்டுகிறது. சில நிமிடங்களுக்கு இயற்கை காரணங்கள் அனைத்தும் அழிந்து போனால் அவற்றுள் அடங்கிக் கிடந்த ஆண்மாக்களனைத்தும் இயைந்து பெரும் ஆன்மாவாக மாற வேற்றுமை மறைந்து விடும்.
కాల్లో
அடிப்படைத் தத்துவமே இப்படி இருக்கும் போது பிறகு ஏன் இந்த மனிதன் அடித்துக் கொள்கிறான். ஜாதி, மதம், இனம், மொழி, அந்தஸ்து பேதம் என்று எத்தனை பாகுபாடுகள், காலத் திற்குக் காலம் எத்தனை மகா புருஷர்கள் தோன்றினார்கள். மகா போதனைகளை தத்துவங்களைத் தந்து போனார்கள். இன்னமும் தோன்றி தந்து கொண்டிருக்கி றார்கள். இவற்றையெல்லாம் அறிந்துணரத் திரானியற்ற மனிதன் ஒருசாரார் நம்பிக்கையிலும் மறுசாரார் நம்பிக்கையற்ற தன்மையிலும் உண்டா? இல்லையா? என்ற விவாதங்களிலும் காலத்தைக்கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக இன்றிருக்கும் நாள் போல நாளை இருக்கப்போவதில்லை. மாறுதலுக்குட்பட்ட இந்த உலகில் சமநோக்கும், சம சிந்தனையும் கொண்டு இம் மனிதன் மாறுவானாக இருந்தால் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிற இவ்வுலகை முழுமையாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் காப்பாற்றிக் கொள்ளலாம். புரிந்து கொள்வானா மனிதன்?
-சிவாஜினி குகதாஸ்

இகளிற் தீவிருரிற் இருபியூ
திறந்த வெளியினில் தென்றலில் நிலவினில்
தேன்மலர் அழகினில் தீந்தமிழில்
பிறந்த காலையின் மலர்ச்சியில் உளக்கடல் !பெருகிடும் கவிதைகள் அலைபுரளும் الشقيق
பறந்து திரிந்த பறவைகள் கூடியே பசுமரக் கிளைகளில் ஒலி எழுப்பும் (قلاوون.
சிறந்த மாலையில் செவிகளில் பறவைகள் சிந்தும் ஒலிகள் நல் விருந்தளிக்கும்!
முதிர்ந்த வயதினில் முன்னைய நினைவுகள் முகிலென அசைந்தின்று மதிமயக்கும்! உதிர்ந்த மலரென ஒடிய நாட்களில் ஒன்றிய காட்சியில் உளம் நெகிழும்!
மாந்தளிர் மேனி மலர்களின் மென்மை மதிதரு தண்ணொளி சிறுகுறும்பு
பூந்தளிர் இதழ்களில் பூத்திடும் எழில் நகை பொன்னொளிர் குழவியின் றுளந்தவழும்!
மாதுளம் பூவிதழ் சிந்திடு மதலையின் மனந்தொடு குரலினில் உடலசைவில் ஈதெழில் வாழ்வென எண்ணிடும் உளம்புவி ஏகிய நாட்களும் பொருள் நிறையும்
|ē.

Page 32
國 வாசகர் ಕà
செங்கதிர் மாசி இதழில் எழுத்தாளர் அன்புமணி - கவிஞர் செகுணரத்தினம் ஆகியோருக்கிடையேயான உரையாடலை வாசித்தேன். அதில் ஒரு கட்டத்தில் அன்புமணி அவர்கள் சஞ்சிகைகளை இரண்டு வகைப்படுத் தலாம்; இலக்கிய சஞ்சிகை, ஜனரஞ்சக சஞ்சிகை. இப்போது வெளிவந் துள்ள "அமுதம்", "இருக்கிறம்" ஆகியன ஜனரஞ்சக வகையைச் சேர்ந் தவை என்று குறிப்பிட, கவிஞர் குணரத்தினம் "அப்படிப் பார்த்தால் தற்போது வெளிவரும் "செங்கதிர்' இலக்கிய சஞ்சிகை" என்று குறிப்பிடுகிறார்.
இலக்கியப் படைப்புக்களை கூடுதலாக வெளியிடும் சஞ்கிகைகளை இலக்கிய சஞ்சிகை என்றும் ஜனரஞ்சகப் படைப்புக்களைக்கூடுதலாக வெளியிடும் சஞ்சிகைகளை ஜனரஞ்சக சஞ்சிகைகள் என்றும் கூறலாம்.
இலக்கியப் படைப்புக்கள் என்றால் காப்பியங்கள் இதிகாசங்கள் புரா னங்கள், மற்றும் ஒவ்வொரு துறையிலும் துறைசார்ந்த நிபுணர்களால் ஆக்கப்படும் படைப்புக்களும் பண்டித நடையில் எழுதப்பட்ட நாவல்கள் மரபுக் கவிதைகள் புரியாத புதுக் கவிதைகள் என்ற மாயையே இன்று பலர் மத்தியில் நிலவுவதை அறியக்கூடியதாக இருக்கிறது.
கிராமிய மொழியில் பாடப்படும் தனிப்பாடல்கள் கூத்துப்பாடல்கள் கும்மிப் பாடல்கள் தாலாட்டுப்பாடல்களை யெல்லாம் நாட்டாரிலக்கியம் என்று ஏற்றுக் கொள்ளும்போது சாதாரண மக்களுக்கு விளங்கக்கூடிய வகையில் படைக்கப்படும் கதைகள் கட்டுரைகள் பாடல்கள் ஆகியவற்றை ஏன் இலக்கியத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் “ஜனரஞ்சக’ என்ற வார்த்தையை இலக்கியத்திலிருந்து பிரிக்காமல் அதை இலக்கியத்தின் ஒரு பிரிவாகவே கணிக்கவேண்டும்.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா அதிக வாசகர்களைக் கொண்டிருந்தார் என்றால் சாதாரண வாசகர்களுக்குப் புரியும்படியாகவே அவர் எதையும் எழுதினார். கரிசல் எழுத்தாளர் இராஜநாராயணன் "கோபல்லபுரத்து மக்கள்" என்ற தலைப்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை வட்டார
60 |ଞ
bejn F III
 

வழக்கில் தந்திருந்தார். பாலகுமாரன் பிராமண மொழி நடையில் நாவல்கள் படைத்துள்ளார். கிரேசி மோகன் "அமெரிக்காவில் மிச்சர்" என்ற தொடரில் புராண விடயங்களைக்கூட நகைச்சுவையாக எழுதி வெற்றி கண்டுள்ளார். ஏன் எழுபதில் வந்த அன்புமணியின் மலரில் வெளியான "வி.சி.மெம்பர் காசிநாதர்”, “பசுநெய் பஞ்சலிங்கம் ஆகிய படைப்புக்கள் ஜனரஞ்சகப் படைப்புக்களே. இலக்கியப் படைப்புக்களை எழுதுவது சிரமம் என்றும் ஜனரஞ்சகமாக எழுதுவது இலகு என்பதும் பலரது அபிப்பிராயம். உண்மையில் ஜனரஞ்சகமாக எழுதுவதுதான் சிரமம். எது எவ்வாறாயினும் ஆக்கங்கள் சாதாரண வாசகர்களைச் சென்றடையவேண்டுமாயின் அவர்களுக்குப் புரியும் நடையில் அவர்களைக் கவரும் வகையில் ஆக்கங்கள் படைக்கப்படவேண்டும் என்பதே உண்மை, இது தொடர்பாக ஏனைய வாசகர்களின் கருத்துக்களும் செங்கதிரில் வெளியானால் வாசகர் மத்தியில் ஒரு தெளிவை ஏற்படுத்தலாம்.
திருபிபி.அந்தோனிப்பிள்ளை ஆத்திக்குளி, முருங்கன். "செங்கதிர்" பங்குனி இதழ் பயனுள்ள பல விடயங்களைத்தாங்கி பெண்மைக்கு மதிப்பளித்து வெளிவந்திருக்கிறது. அதிதிப்பக்கம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. சட்டத்தரணி சபாரெத்தினம் அவர்க ளால் ஒரே நேரத்தில் இத்தனை கடமைகளை ஆற்றமுடிகிறதே! என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. பெண்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி என்று கூறினால் அது மிகையாகாது. "மாற்றங்கள் எம்மிடமே தொடங்கட்டும்" எனும் கட்டுரை மிக அருமையாக அமைந்திருந்தது. வாழ்வியலோடு தினமும் போராடி துவண்டு விழும் பெண்களை தூக்கி நிறுத்தும் கருத் துக்களை அந்தக் கட்டுரை வழங்கியிருக்கிறது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வாழ்ந்துகொண்டிருக்கும் அம்மணி மாலா சபாரெத்தினம் அவர்களுக்கும் பயன் மிக்க இவ்விடயங்களை எம் பார்வைக்கு வழங் கிய "செங்கதிர்" ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள். நன்றிகள்.
திருமதிகமலினி சிவனாதன் இல:03, அரச விடுதிகிரீன்ஸ் வீதி, மட்டக்களப்பு.
இலட்சியம் இல்லாமல்இலக்கியம் இல்லை என்ற கொள்கைப் பிரகடனத் துடன் வெளியாகும் உங்கள் சஞ்சிகையின் படைப்புகளில் அதனைத் தெளிவாகக் காணமுடிகின்றது. வேறுபட்ட இலக்கியத் தாகமுள்ள அனை வரையும் திருப்தி செய்ய முனையும் உங்கள் அளப்பரிய முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். சஞ்சிகை தொடர்ந்து வெளிவந்து ஈழத்து இலக் கியக் களத்தில் தன் சுவடுகளை ஆழமாகப் பதிக்க எனது வாழ்த்துக்கள். Dr.M.KMuruganandan 48/1, Dharmarama Road, Colombo 06. - Tel: 01 12507514

Page 33
R தத I),
சிரி” கதை |) இலங்கையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள் ஜேர்மனியில் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் அண்மையில் தான் ஜேர்மனிக்கு வந்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஜேர்மன் மொழி (டொச்) பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ தெரியாது.
ஒருநாள் நால்வரும் தெருவோரமாக நடந்து போய்க்கொண்டிருந்த போது நண்பர்களில் ஒருவரை ஜேர்மன்காரர் ஒருவரின் நாய் கடித்துவிட்டது. மற்ற மூன்று நண்பர்களும் பதறித்துடித்து அருகிலிருந்த டாக்டரிடம் அந்த நண்பரை அழைத்துச் சென்றார்கள்.
நண்பர்களின் துரதிஷ்டம் - அந்த ஜேர்மன் டாக்டருக்கோ ஆங்கிலம் தெரியாது. நம்மவருக்கோ ஜேர்மன் மொழி தெரியாது.
டாக்டரோ வைத்தியம் பார்க்கச் சென்றவர்களுக்கு தனது அலுமாரியில் இருந்த பெரிய, பெரிய புத்தகங்களைக் காட்டி ஜேர்மன் மொழியில் ஏதோ பிளந்து தள்ளினார். ஒரு நண்பர் அலுமாரி அருகில் சென்று அந்நூல்களைத் தட்டிப் பார்த்தார். அத்தனையும் ஜேர்மன் மொழியில்,
அவர் மீண்டும் திரும்பிவந்து டாக்டருக்குத் தாங்கள் சொன்னது புரியவில்லை என எண்ணி அங்குமிங்கும் பார்த்துவிட்டு, வெட்கத்தைப் பாராமல் இரண்டு கைகளையும் பாவித்து நாலு காவில் நின்றுகொண்டு நாய்போல் குரைத்துக் காட்டி டாக்டரின் கால்களிலும் கடித்தார்.
டாக்டரோ தனது தலையில் அடித்துக்கொண்டு ஜேர்மனி மொழியில் ஏதோ காரசாரமாகத் திட்டிவிட்டு நாயால் கடிபட்டவருக்கு ஊசிபோட்டு, மருந்தும் கொடுத்து நண்பர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். நனண்பர்களும், அலுவல் முடிந்ததே என்ற மகிழ்வுடன் வீட்டுக்குப் போனார்கள்.
நாட்கள் கடந்தன. நண்பர்கள் ஜேர்மன் மொழியில் நன்கு பரிச்சயமானார்கள். அப்போதுதான் அவர்களுக்குப் புரிந்தது. ஜேர்மன் நாட்டில் அந்நாட்டுக்காரர் வளர்ச் கும் நாய் பிறிதொருவரைக் கடித்தால் நாயை வளர்த்தவர் கடிபட்டவருக்கு இலட்சக்கணக்கான பணம் கொடுக்க வேண்டுமென்று. அல்லது கடிபட்டவ ருக்கு வழக்குப் போட்டுப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது. வைத்தியர் அலுமரியில் காட்டியது சட்டப்புத்தகங்கள் என்றும் தலையில் அடித்துக் கொண்டது. "முட்டாள்களே! உங்களுக்கு ஒன்றும் புரியவில்லையே” என்பதற்காகத்தான் என்றும் நண்பர்களுக்கப் புரிந்தது.
அந்த நண்பர்கள் தற்போது ஜேர்மனியில் ஒரு நாயாவது தங்களைக் கடிக் காதா என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது கொசுறுச் செய்தி
- இநறுவை ரது
இந்தி
cuit
 

4ாப் 3<-- - - - - - - > குறுக்கெழுதது குறுக்கெழுதது GLIIILlo - 05 |
ELITTg - 05 ||1 ||2, ||3 ||4
விடைகளை அனுப்ப | զ" | 3 | : by
8. 1[] 12 || 13
வேண்டிய முகவரி: 1. 1.
| 15 16 |17|18 |19|29, 21
"செங்கதிர்", | O () குறுக்கெழுத்துப் போட்டி-05|? ? 24, 25, 26
19, மேல்மாடி வீதி 「レ * | |\ F *
மட்டக்களப்பு |°、 so a། 33 ༢. 3། |
a
|க பரிசு ரூ.500/= | 637 ° ° ° * *
put urg do 300= " 11 ܐܠܐ N. &
3வது பரிசு ரூ 200/= | 43 44, 45 49 .4 * "א.
m |
வேண்டிய இறுதித் திகதி .. (30.06.2008) . ... لڑی.....................: محیص..............................................ایسی بھینسیمسیح)
இடமிருந்த வலம் 01) திரைப்படமாக்கப்பட்ட நாவல் 06) ஒற்றையிலைத் தாவரம். 09) கீரை வகைகளில் ஒன்று. 12) இது கொடுத்து வரவேற்பர். 16) ஆகி மனிதன் இதில் வாழ்ந்தான். 17)5UTLDTLLO காவியத்தின் முக்
கிய பென் பாத்திரம். 22).9ągFJ6780 வழங்கல். 37) எருதின் எச்சம். 40) பழமைக்கு எதிர். 43) பழந்தமிழ் இலக்கியங்களில் வரும் மன்னனின் பெயர். 48) பன்டைக்கால வாகனங்களில்
ஒன்று.
இநரிஜி
(tി 2ീ
மேலிருந்த கீழ்
0) ஆசை அறுபது நாள். இது
முப்பது நாள்.
02) மங்கையர் கழுத்துக்கு இது
GILD
03) ஈழத்தின் முத்த கவிஞர்.
(6) இது உண்ணக்கூடாது என்பர்.
12) கைவசம் உள்ளது. *
14) இதிலிருந்துதான் மனிதன் பிறந்
தான்.
22) ஊர்வனவற்றில் ஒன்று.
23 ) LUGAJLib பொருந்தியவன்.
34) கவிதைக்கு அவசியமான இலக்
கனம்.
39) இது வந்தால் பத்தும் பறந்து
போய்விடும்.
42) தானியங்களில் ஒன்று தலைகீழாய்

Page 34
நகரந்துப்பிட்யூட்டு, ரியர் Eigibles LogüBunl: 503, dana Ersuna Elm
1ம் பரிசு - திருமதி.ரஞ்சினி சிவஞானம் 日 |草
43, புகையிரத வீதி, மி |ா மட்டக்களப்பு I: ||
வைத் 2"பரிசு - ஜெ.சில்வின் Tha
பெத்தணி, கிரான், ||
品 3"பரிசு - வ.நிரோஷன் 3. 夢, 63/10, புகையிரத நிடிைய வீதி, 品除。 uit Generende மட்டக்களப்பு 衅T 晶显 35Saint straali. * | * ! கப்பட்டுள்ள
அடுத்த இதழிலிருந்து.
.W في
வாசகர்களின் வினாக்களுக்கு இப்பகுதியில் விடை அளிக்கப்படும். கலை, இலக்கியம் சார்ந்த விளக்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அனுப்பவேண்டிய முகவரி:
ஆசிரியர், செங்கதிர, இங்கே விடைஎங்கே வினா? இல.19,மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
இெ
ունլոաTքl :Ամ:
 
 
 
 
 
 
 
 
 
 

罗崧 1.
Y
불
சிந்து"
* eer
EA
KAROVARE 8EEGRIGAS feates and fistuitfutatus in able find a Jtanduave d. 8tectical Jtemø
Moulana Complex, Main Street, Kattankudy - 02.
Tel Fax: 065-2246582
O65-224.5528, O65-2247085

Page 35
Sun Printers. 05, Irutha
 
 
 
 

Aharam” 82, Bar Road, dago. Batticaloa.
el: 060-264398
கள் யாவும் ல் கிடைக்கப்பெற
650
yapuram West Batticaloa. 065-2222.597