கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2008.06

Page 1


Page 2
. c.!'T', S=wдчن 62 CASE ே
: ΡΔΗΠΕΣ LAKA PV) LD. B'É. FEE R -
ಸ್ಪ್ರೆ? ',{{|[[၊၊၊၊၊၊၊၊၊ மது 擎
KENLLIX LUKURY
NEW ROYAL
HARDWARE
155Cyprun,
MAINSTREET, MAWADICHCHENAI, VALAICHCHENAL Tel: 0777223284,077-5922326, 065-2257630
TTTk T S S TTTTTaTT CTTTS GTCLL LLLLSLLLLLLLS LLGGGGLLLLLLLLT LLTLGGLGS LLTLLLLLLLLS ' . LS LLLS GLLS LLLLLLMLM TkkkLLLLSSSLLSLLLLL S LLLLS
fe" FFF TITI F'T "mf", "I Fee Wife Ft Mr F f,
r N A. N
HAROW GRIGAS 'Deateus and Distributan8 in aéé J(ind af 7 Jtaviduaye d. 8tectical Jtema ܠܐ
Moulana Complex, Main Street, Kattankudy - 02.
..
Te|| FBX : O65-2246582
"置ーミ
リ -5 O65-224.5528, 曹 క్రైక్కై O65-2247085
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ہند۔آI
اط العقيلية "இரிையம் இல்லாமல் இலக்கியம் இல்லை"
டூததிேர் 6
ஆனி 2008 (திவ ஆண்டு 2039)
ஆசிரியர் : செங்கதிறோள்
fid-2LLITBIT BLITTUJūlų.
தொடர்புமுகவரி:
திருதகோபாலகிருஸ்ணன் இல19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை.
COItaC :
Mr.T.Gopalakrishnan
19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி /Telephone
O55 2223950
OWW 20234
மின்னஞ்சல் / E-mal
senkathirgopalagInail.co.In
|fി[[If[
அன்பானவர்களே!
உங்கள் கரங்களில் தவழ் வது "செங்கதிர்" இன் 6வது இத ழாகும். இலங்கைத் தமிழ்ச் சூழ லில் இலக்கியச் சிற்றிதழ் ஒன்றினை மாதந்தோறும் கிரமமாக வெளிக் கொணர்வதிலுள்ள பொருளாதாரத் தேவைகள் நீங்கள் அறியாத தொன்றல்ல. தனிப் பிரதிகளின் விற்பனையால் வரும் சிறு தொகையைவிட சந்தாப் பணத்தி லேயே செங்கதிர்" இன் வரவு தங்கியிருக்கிறது. எனவே, இது வரை சந்தா செலுத்தாதவர்கள் சந்தாவைச் செலுத்தும்படியும், அரையாண்டுச் சந்தா செலுத்திய வர்கள் தங்கள் சந்தாவைப் புதுப் பித்துக்கொள்ளும்படியும், சந்தா தாரர்கள் மேலுமொரு சந்தாதார ரைச் சேர்த்து உதவும்படியும் அன்போடு வேண்டப்படுகின்றீர் கள் மேலும், வசதிபடைத்தவர்கள் தங்கள் அன்பளிப்புக்களை இவ் விலக்கிய முயற்சிக்கு வழங்கி ஊக்குவிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. அதேவேளை சந்தா செலுத்த வசதியில்லாத இலக்கிய ஆர்வலர்களுக்கு "செங்கதிர் இதழை மாதந்தோறும் இலவச மாக அனுப்பி வைப்பதற்கும் நாம்

Page 3
தாராள மனமுடையோம் "செங்கதிர் ஓர் வணிக இதழுமல்ல. வணிக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதுமல்ல என்பதை அனைவரும் அறிவீர்கள். இலக்கியத் தாகமே அதன் மூலதனம். இதனைப் புரிந்துகொண்டு உதவுங்கள்
"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் 11 ”
மனந்திறந்து இவ்வாறு தங்களைக் கேட்பதில் தவறில்லை என்றே நம்புகின்றோம். - (്യIിr =
"செங்கதிர்"
La GíMJ (அஞ்சல் செலவு உட்பட)
இலங்கை இந்தியா வெளிநாடு
அரையாண்டுக்கட்டணம் 5OW- 250)- USS IO ஓராண்டுக் கட்டணம் MOO- 500- USS 2C) ஆயுள் கட்டணம் 10,000- 5000- USS OO புரவலர் கட்டணம் 25,000- 12,500/- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" வழங்கப்படும் புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" வழங்கப் படுவதுடன் "செங்கதிர்" எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்
GOTIIDILIJA, B, LLGROOTLİ
பின் அட்டை வெளிப்புறம் முழு 500 15DM) USS 5
அதிர 3DO OJO USS3) முன் அட்டை உட்புறம் (JAP BOOO OOO USS 3) அரை 2O) 750 USS 2) பின் அட்டை உட்புறம் (ԱՆԼք 2O 高0 USS 20 அவிர SOO USS 5
அன்பளிப்பு
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி மக்கள் வங்கி (நகரக்கினை), மட்டக்களப்பு கணக்கு இல . 11310038588996 (நடைமுறைக்கணக்கு) காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
2ஜி
8החל Rם%ה&
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"செங்கதிர்' இதழின் இம்மாத அதிதி கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவரும், கல்விமானுமாகிய பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களாவார்.
யாழ்ப்பாணம் இணுவில் ஊரில் 27.02.1940 இல் பிறந்த சபாரெத்தினம் ஜெயராசா அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை இணுவில் சைவ மகாஜன பொழுது இணுவில் இந்துக் கல்லூரி) கற்று இடைநிலைக் கல்வியை கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி ஆகியவற்றில் தொடர்ந்தார். உயர்கல்வியினைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று கல்விமாணிப் பட்டம் பெற்றார். கலை முதுமாணிப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக் கழகத்திலும், கலாநிதிப் பட்டத்தை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் பெற்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறைப் பேராசிரியரான இவர் ஆணித்தரமான கருத்துக்களைத் துணிவுடன் முன் வைப்பதில் முதன்மையா னவர். இராமநாதன் நுண்கலைப் பீடாதிபதியாக இருந்தவேளை இசைப் பட்டப்படிப்பை மேற்கொள்ள வடிகால் அமைத்துக் கொடுத்தார். மார்க்சியம் சார்ந்து உளவியல், மானிடவியல், கல்வியியல், கலையியல் கருத்துக்களை முன்னிறுத்தி பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். ஈழத்துப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இவரது இறுக்கமான கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன.
கல்வியியல், உளவியல் சார்ந்த நூல்களை எழுதிய பேராசிரியர் சபா ஜெயராசா குழந்தைகளுக்கான நூல்களையும், கலை இலக்கியம், திறனாய்வு, மொழி பெயர்ப்பு என்று 58 நூல்கள்வரை படைத்துள்ளர். உலகப்புகழ் பெற்ற ஆராய்ச்சிச் rs4.s0s, as GITITST New Frontiers in Education, The Mythical Journalஆகியவற்றிலும் அவரின் ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
ඝ|සීස්

Page 4
இவரது ஐந்து நூல்கள் அரச விருதினைப் பெற்றுள்ளன. கல்வியியல் -gjillojë Fejé605 (Educational Research Magazine) fisi gau ராகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்க நூற் பட்டியல் நிறுவனம் 2004ம் ஆண்டுக்கான உலக மனிதர் (Man of the Year) பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது. கொழும்புத் தமிழ்ச் சங்கம் ‘சங்கச் சான்றோர்’ விருதும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிச் சமுகத்தினர் "கல்விப்புலரி' என்னும் பட்டத்தினையும் வழங்கிக் கெளரவித்துள்ளனர்.
குறுகிய காலத்துள் பல நூல்களை எழுதிச் சாதனை படைத்துவரும் பேராசிரியர் "இலங்கையின் கல்வி வரலாறு', 'கல்விச் சமுகவியல்","கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும்’, ‘கற்றல் உளவியல்’, "உளவியல் முகங்கள்', 'இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள்” ஆகிய நூல்களை அண்மையில் வெளியிட்டுள்ளார். இன்னும் பல நூல்கள் அச்சில்
LSISTSIT
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளையும், முதுமெய்யியல் மாணிப்பட்டம், கலாநிதிப்பட்டம் பெற மேற்பார்வையாளராகவும் இருந்து செயற்பட்ட பெருமைக்குரியவர். தற்பொழுது கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து இயல், இசை நாடகம் ஆகிய முத்தமிழையும் வளர்த்து வருகின்றார். எல்லோருடனும் அன்பாகப் பழகும் சுபாவம் கொண்டவராகிய இவர் உளவியல் சார்ந்த அணுகுமுறையைக் கையாளவல்லவர். சிறந்த மாணாக்கர் பலரை உருவாக்கியவர் என்ற வகையில் பெருமைபெற்றவர்.
கல்வியுலகத்தால் வெகுவாக மதிக்கப்படுகின்ற பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களை “செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதியாக அறியத்தருவதில் "செங்கதிர் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிடமிருந்து ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர், "செங்கதிர்" r" இல18, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு
జాగి 2008

பின்னைய மானிட இலக்கியம்
శాడా? "ഋ" جيجا بصصي
- சபா.ஜெயராசா
நவீன நுகர்ச்சிச் சமூகம் தழுவிய கலைப்படைப்புக்கள் ஆக்க உற்பத்தி என்ற வடிவத்தை முனைப்புடன் எடுக்கும்பொழுது, பல்வேறு சிக்கலான நிலைகள் தோற்றம் நின்றன. கல்வி மாகவும், வாழ்க்கைநிலை காரணமாகவும் மத்தியதர வகுப்பினரின் ஈடுபாடு அல்லது கையாடல் அச்சு வடிவத் தொடர்பாடலிலும் மின்னணுத்தொடர்பாட விலும் மேலோங்கியுள்ளமையால் அவர்களின் புலக்காட்சிகளின் திணிப்பு சமூகத்தின் அடித்தளத்து மக்கள் மீது மேற்கொள்ளப்படுகின்றது.
மத்தியதர வகுப்பினரினது "ஊசலாடும்" மனவெழுச்சிகளின் ஆக்கிரமிப்பு வடிவங்களாகப் புனைவுகள் எழுச்சி கொள்கின்றன. பிரதிகூலம் எய்திய சமூக அடையாளத்தைக் காட்டிலும் தமது அடையாளத்தைக் காட்டுவதற்கு நடையியல், மற்றும் கதை உரைப்பியலைக் கையாளுதல் மேலோங்கிவருதலை தனித்தனி ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. சமகாலத்தைய உலகம் தழுவிய பொதுப் பண்பாக இது காணப்படும் நிலையில் அதனை ஈடுசெய்வதற்கு "பின்னைய மானிட இலக்கியம்” என்ற தொடர் பயன்படுத்தப்படுகின்றது. விரைந்து வளரும் தொழில்நுட்ப வளர்ச்சி, தொடர்பாடற் பிரளயம், வேகமாக மாறிவரும் நுகர்ச்சிக் கோலங்கள், மனித உடல் "பொறியுடலாக" (Cyborg) மாற்றப்படுதல் என்ற நிலவரங்கள் இலக்கியப் புனைவுகளில் செல்வாக்கு களை ஏற்படுத்தத் தொடங்கி உள்ளன.
பொறியுடலை முதன்மைப்படுத்தும் புனைகதையாக்கங்கள் விரைந்து வளர்ச்சி புற்று வரும் இன்றைய சூழலில் அந்த எண்ணக்கருவை விளங்கிக்கொள்ளல் அவசிய மாகின்றது. மனிதஉடலையும் செயற்கைப் பொறிகளையும் ஒட்டுணைப்புச் செய்தஉடலே பொறியுடல் என அழைக்கப்படுகின்றது பின்நவீனத்துவத்தின் அடையாளமாகப் பொறியு டலைக்குறிப்பிடும்திறனாய்வாளரும் இருக்கின்றனர். பொறியுடல் மரபுவழியான இருமைத் தன்மைகளைநிராகரிக்கின்றது. அதாவது, இயற்கைசெயற்கை,மனிதன் மணிதம் அற்றவை என்ற கறாரான வேறுபாடுகள் தகர்க்கப்படுகின்றன. மனித உடலின் உள்ளே, செயற்கை உறுப்புக்கள் வைக்கப்படுகின்றன. விற்பனைப் பண்டங்களாக மாறி வருகின்றன. இவை பின்னைய மானிட இலக்கியங்களுக்குக் கருப்பொருளாக ஆகின்றன. இதேவேளை வளர்முக நாடுகளில் மனித அவலங்கள் தீவிரமடையத் தொடங்கியுள்ளன. வறுமை எல்லையின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு, பொருண்மியநிலையிலும் இனத் துவநிலையிலும் மேற்கொள்ளப்பட்டுவரும்பறிப்பும் கரட்டலும்,நவீன மருத்துவவசதிகளும் கல்விவசதிகளும் கீழ்வழ்வேருக்குக்கிடைக்கப்பெறாதிருத்தல்முதலியவை மேலோங்கத்
இங்ஜி

Page 5
தொடங்கியுள்ளன. அதேவேளை இம்மக்களைத் தொடர்புச் சாதனங்கள் தமது"எண்ம வெளியில்'(DழialSpace)-சிக்க வைப்பதற்குரிய அகல்விரிமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையிற் பின்னையமானிட இலக்கியம் மேட்டுக்குடியினரின்புளிகங்கிதத் துக்குரிய புனைவுகளையும் கருத்தாடல்களையும் முன்னெடுத்துவருதல் குறிப்பிடத்தக்கது
பின்னைய முதலாளியத்தைக் குவியப்படுத்தி, "இல்லா இடங்கள்” என்ற எண்ணக்கருவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. "இல்லா இடங்கள்” (Non Places) என்ற எண்ணக்கருவை பிரெஞ்சு மானிடவியலாளராகிய மார்க் அகே (MarcAge) அறிமுகம் செய்துள்ளார். ஒவ்வொருவரும் தத்தமக்குச் சொந்தமில்லா இடங்களில் வாழ்ந்துகொண்டி ருக்கும் நிலை தோற்றம் பெற்றுள்ளது. ஒடும் வண்டி, தொழில் நிலையம், பொழுது போக்கிடம், அங்காடி என்றவாறு தமக்குச் சொந்தமில்லா இடங்களில் வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கின்றது. இதனை அடியொற்றி"புதிய” அந்நியமயப்பாடு என்ற இடர்களுக் குள் மனிதர் சிக்கிவரும் புதிய தோற்றப்பாடு மேலெழத் தொடங்கியுள்ளது. இவற்றை மேலும் திரிபுபடுத்துகின்ற கலை,இலக்கிய ஆக்கங்கள் மானிட வஞ்சிப்புக்குத் துணை போகின்றன.
இல்லா இடங்களின் புதிய வளர்ச்சிதமது வாழ்விடங்களை இழந்து வாழ்தலும், தாம் வாழ்ந்த நாட்டை இழந்து புலம்பெயர்ந்து வாழ்தலுமாகும். இவற்றை அடியொற்றி எழும் கலை,இலக்கிய வகைகளில் இருமைப்பாடுகள் இடம்பெறுகின்றன. - இவற்றில் ஒருவகை "தூய வெளிப்பாடுகளாக"(Pure Expressions)க் காணப்படுகின்றன. அதாவது, அடிநிலை வெளிப்பாடுகளை இலக்கிய வழியாக அடையாளப்படுத்தாத மேலெழும்பூச்சுக்களாக அவைமுகிழ்க்கின்றன. அதேவேளை அடிநிலை அடையாளப்படுத் தலைக் கலை வீச்சுக்குள் கொண்டு வரும் ஆக்கங்கள்“ஆழ்நிலை வெளிப்பாடுகள்” எனப்படும். சமகால இலக்கியங்களை நோக்குவதற்குரிய புலக்காட்சியை இவ்வகைப் பாகுபாடு தோற்றுவிக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் "பெருங்காலனியம்","சிறு காலனியம்" என்ற இரு வகை எண்ணக் கருக்களையும் விளங்கிக்கொள்ளல் நவீன இலக்கியப் புலப்பாடுகளுடன் தொடர்புபட்டுநிற்கின்றதுகோளமயமாக்கலைவலியுறுத்திபெரும் இலாபமீட்டற்செயற்பாட் டுடன் இயங்கிவரும் பெரும் காலனிய நடவடிக்கைகள் புதிய எழுகோலங்களை உள்ள டக்கிய தூய வெளிப்பாடுகளைக் கலை இலக்கிய ஆக்கங்களிலே ஊக்குவித்துவருகின் றன. பெருங்காலனித்துவத்துடன்இணைந்து தொழிற்படத்தொடங்கியுள்ள சிறுகாலனியம் வளர்முக நாடுகளிலே பல்வேறு மக்கள் எதிர் நடவடிக்கைகளையும், திணிப்புக்களையும், இன ஒடுக்கங்களையும் மேற்கொண்டு வருதல் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான புதிய முரண்பாடுகள் வளர்முக நாடுளிலே வளமானதும், கனதியானதுமான இலக்கியங்கள் அடி மட்டங்களிலே தோற்றம் பெறுவதற்குரிய கள நிலவரங்களை உருவாக்கி வருகின்றன. இந்தப்புதிய வளர்ச்சிபுதியமானிடவாதத்தாற்கண்டறியப்படாத நடப்பியலுக்கு வெளிச்சம் தரத் தொடங்கியுள்ளது. ெ
Gloż
t:rifi շtinծ

அவர்தான் சோமசுந்தரப்பிள்ளை. அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, பெரும் புலவருமாவார். "ஏல்பி திறி” என அழைக்கப்படும் லிங்கபுரம் பாடசாலையில் கடந்த இரு வருடங்களாகக் கடமையாற்றி வருகிறார். அது கிளிவெட்டிப் பிரதேசத்தில் உள்ள ஒரு குடியேற்றப் பிரதேசம். போக்குவரத்து வசதிகளற்ற மிகக் கஸ்டமான பகுதி வெள்ளிக்கிழமை நாட்களில் சமாளித்துக் காலை பத்துமணி பேருந்தைப் பிடித்தால் மாலை ஐந்து மணிக்கு மட்டக்களப்பிலுள்ள களுவாஞ்சிக்குடியை அடையலாம் அங்கிருந்து எருவில் குறுமண்வெளி ஊடாக பொடிநடை போட்டால் மண்டூர் துறையை அடையலாம். மட்டக்களப்பு வாவி நிலத்திணிவை இரு கூறுகளாக்கி நீண்டு படுத்திருக்கும் அந்த வாவியில் தோணிகட்டிப் படகுச்சவாரி போவது உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அனுபவம் கிடைக்கும் வாவிக்கரைகள் தோறும் கிராமங்கள் மெருகூட்டும். ஆவினமும் மேதிகளும் தலையாட்டும். வாவியின் இருகரைகளையும் இணைத்துக் குறுக்காகத் தோணிகள் பயணம் போகும். சோமசுந்தரப்பிள்ளை இந்த வாரம் வியாழக்கிழமையே புறப்பட்டுவிட்டார். புதன்கிழமை கிடைத்த செய்தி அவரை உலுக்கிவிட்டிருந்தது. அவரது இல்லத்தரசி
*

Page 6
பவளம் தான் அந்தச் செய்தியை அனுப்பியிருந்தார். புலவருக்கு யோசனை தலைக்கேறிவிட்டது. ஒரு தாளை எடுத்துத் தனது நிலைமையை விளக்கிச் சொந்த ஊருக்கு இடமாற்றம் தரும்படி கல்வித் திணைக்கத்திற்கு மனுவினை எழுதித் தபாலில் சேர்த்தும்விட்டார். ஊர்மனை உறங்கிக்கொண்டிருந்தது. பழைய மாணவனின் துணையோடு சைக்கிளில் கிளிவெட்டித் துறையை அடைந்தார். கூட்டிவந்தவரை உபசரித்து அனுப்பிவிட்டு பயணத்துக்கு ஆயத்தமானார். ஆனால், வஸ் வண்டியைத் தான் காணவில்லை. கிளிவெட்டி, வெருகல், பனிச்சங்கேணி, குறுமண்வெளி துறைகளைத் தாண்டி மண்டூர் செல்லவேண்டும்.
அதிகாலையில் புறப்பட்ட பயணம் இது. வஸ் வந்ததும் ஏறிக்கொண்டார். வஸ் ஓடுவதற்கேற்ப அவரது கற்பனைத் தேரும் ஓடியது. கண்களை மூடியபடியே அந்த உலகத்தில் உலா வந்தார். இடையிடையே கற்பனை கலையும், விழித்துக் கொள்வார். சில நேரங்களில் பவளத்தின் கடிதச் செய்தி பூதாகரமாக உருவெடுக்கும் சற்று நேரத்தில் இதெல்லாம் பெரிய பிரச்சினையா? என்று மங்கித் தூசாகும். கண்களை மூடி மண்டுர் முருகனை மனதிருத்தினார். "மண்டூர் முருகா! ஒருக்காக் கண்திறந்து பாரையா. எனக்கு யாரிருக்கார், உன்னைத்தானே நம்பியி ருக்கிறன், நாசமறுவான் இப்படி இடமாற்றத்தத் தந்து கஸ்டப்பட வச்சுப்போட்டான். அவள் அங்க எவ்வளவு பாடுபடுவாளோ தெரியாது’ வழிநெடுகிலும் மண்டூர் முருகனையே நினைத்து நெஞ்சுருகி வேண்டுதல் செய்து கொண்டுதான் வந்தார். தனது கஸ்டத்திலும் பிறரைத் திட்டித் தீர்க்கும்போது பயன்படுத்தும் சொற்களையும் எண்ணிப்பார்த்தார். "நாசமறுவான்’ என்பது நாசம் + அறு + ஆண் = அழிவு இல்லாதவன் அல்லது நாசத்தை இல்லாதாக்குபவன் என்றல்லவா பொருள். நான் அவனைத் திட்டினேனா அல்லது வாழ்த்தினேனா?” தனக்குள் சிரித்துக் கொண்டார். பிறர் நமக்குத் தீங்கு செய்தாலும் நாம் அவருக்குத் திருப்பி அதனைச் செய்யக்கூடாது. மனதினில் போராட்டம். ஒருவாறு மண்டூர் துறையடிக்கு வந்து சேர்ந்துவிட்டார். துறையைக் கடக்க கோவிந்தனின் உதவி கிடைத்தது. அவன் புலவரை தனது தோணியில் ஏற்றிக் கரைசேர்த்துவிட்டான். துறையடி மாரியம்மனை ஒருக்காத் திரும்பிப் பார்த்துவிட்டு "நீயெல்லாம் ஒரு இடத்தில் இருக்க நான் மட்டும் அங்க இங்க என்று இழுபடுறன். நீ நல்லா இரு' மனதில் முணுமுணுத்தபடி தோளிலும், கைகளிலும் சாமான் சட்டுக்களைத் தூக்கிப் போட்டுக்கொண்பர். மெதுவாக நடக்கத் தொடங்கினார். மனிதமனம் பொல்லாதது. துன்பம் சூழும்போது தனிமையில் தனக்கு வாயில் வந்தவாறு புலம்பும் இறைவனை முன்னிறுத்தி குற்றவாளிக் கூண்டில் ஏற்றி நீதி கேட்கும். விசித்திரமான மனம்
प्लोट्स cos

பிரயான அலுப்பு சுமையை அதிகமாக்கியது. மனிதன் தனிமையில் இருக்கும் போதுதான் உள்மனிதன் விழித்துக் கொள்கிறான். அந்த உள் மனிதன் உண்மை களை அறிந்தவன். நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுபவன். புலவரைச் சிந்திக்க வைத்துவிட்டான். "நானும் பொறுமையாக இருந்திருக்க வேணும். அந்த அரசியல்வாதியிடம் மோதியிருக்கக் கூடாது. அரசியல்வாதி சொன்னதுபோல் ஒத்துப் போயிருந்தால் இந்நிலை வந்திராது. எப்படி ஒத்துப் போவது? அநியாயம் செய்யும் அரசியல்வாதிக்குப் பக்கபலமாக இருப்பதைவிட விலகியிருப்பது நல் லது. அவருக்கு இப்போது அது நினைவில் தட்டியது. அந்த அரசியல்வாதியின் திட்டத்தை சின்னத்துரை சொன்னவிதம் அவருக்குப் பிடிக்கவில்லை. "புலவரையா நம்மட் தலைவர், உங்கள தன்ர பக்கம் வேலை செய்யட்டாம் அவருக்காக எடுக்கிற விழாவில் பாட்டும் எழுதிப் பாடட்டாம் மேடையில் தன்னை ஆதரித்துப் பேசட்டாம் என்னை அதுக்காகத்தான் அனுப்பினவர்" புட்டு வைத்தான். “சின்னத் துரை. ஒரு தலைவனைப் புகழ்வதில் தப்பில்லை. ஆனால் போலிகளை இந்தப் புலவன் புகழமாட்டான். சொல்லிப் போட்டன். நீ போ”புலவர் கடுகடுத்தார். "நான் நல்லதுக்குத்தான் சொன்னனான். பிறகு வரும் வில்லங்கத்துக்கு என்னைப் பிழை கூறக்கூடது”கூறியவாறே சின்னத்துரை மெதுவாக நழுவ முட்பட்டான். புலவர் ஆத்திரத்தில் "தன்னைப் புகழச் சொல்பவன் தலைவனா? மக்களின் கஸ்டநஸ்டம் தெரியுமா அவருக்கு? தொண்டு செய்பவன்தான் தலைவன். என்னால் முடியாது. பேய்ச் சொல் செய்மிறதைச் செய்யட்டும் புலவர் கடுகடுத்தர் அதன் பலனை இன்று அனுபவிக்கிறார். s
"நாடு கெட்டுப்போய் கிடக்கிறது. மனிதர்கள் ஆளையாள் கொன்றொழிக்கி நார்கள். இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? ஏன் இந்த நிலை வந்தது? இதற்கு யார் பொறுப்பு?"மனதினிலே எண்ணியவாறு நடந்தார். "பிள்ளைகளை வலுக்கட்டாயமாக இழுத்துப் போறார்களாம். யார் இழுத்துப் போகிறார்கள்? எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?" ஒன்றும் விளங்காத நிலையில் தடுமாறிப்போனார். எல்லாம் இந்தச் சுயநல அரசியல்வாதிகளின் சதிவேலை செவ்வந்தி மாலைப்பொழுது அழகைச் சொரிந்து கொண்டிருந்தது. அந்த செவ்வந்தி மாலைப்பொழுதை அவ ரால் இரசிக்க முடியவில்லை. "அழகை இரசிப்பதற்கும் மனதில் நிம்மதி வேண்டும் நிம்மதி என்பது அவரவர் மனதைப் பொறுத்ததுதானா? எனக்கு அழகாகத் தெரியும். பொருட்கள், காட்சிகள் மற்றவர்களுக்கு அழகாகத் தென்படுவதில்லை ஏன்?. ஒருவர் இரசிக்கும் காட்சியை வேறொருவர் இரசிக்கமாட்டார். என்ன வேடிக்கையான மனம்" சோமசுந்தரம் மனதோடு உரையாடிக் கொண்டிருந்தார். கால்கள் நடந்து கொண்டிருந்தன. அவர் சிந்தனையில் ஆழ்ந்தாரென்றால்
四隅

Page 7
அவரையே அவர் மறந்து நடந்து கொண்டிருப்பார். கால்கள் போகவேண்டிய இடத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும். பக்கத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. சிலநேரங்களில் இவரது நிலையைக் கண் வர்கள் விசரன் என்று விலகிப் போவதுமுண்டு புலவர் கற்பனையில் இறங்கினால் தன்னை மறந்துவிடுவார். அவரது கண்கள் புருவ நெற்றிக்கூடாக நேர்பார்வையில் இருக்கும் எண்ணமெல்லாம் இழையோடிக் கொண்டிருக்கும் சொற்கூட்டம் சேர்ந்து கொள்ளும் பாவடிவில் பயணிக்கும். மெட்டெடுத்து வாய் முணுமுணுக்கும் அவர் ஒரு அற்புதப் பிறவி,
அப்பொழுதுதான் மண்டூர் கவிஞர் சோமசுந்தரம்பிள்ளை களைத்து வந்து சேர்ந்ததைக் கந்தவனத்தார் கண்டுகெண்பர். அவரது உடலை மூடியிருந்த வாலா மணி நனைந்திருந்தது. அவரை இப்பொழுதெல்லாம் அடிக்கடி மண்டூரில் காண முடிவதில்லை. "நல்ல மனிசன். ஏன் அவருக்கு இடமாற்றம் வந்தது?"கந்த வனத்தாரிடம் பலர் இப்படிக் கேட்டார்கள். "நல்லதைக் கேட்டால், சொன்னால் அவன் பொல்லாதவன். கவிஞர் பொதுநலவாதி. பொதுமக்களுக்காகக் குரல் எழுப்பி னர். நமது அரசியல்வாதிகளுக்குப் பிடிக்கல்ல. அதுதான் அவருக்கு வந்த வினை" கந்தவனத்தார் பெருமூச்சுடன் சொன்னார். "யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றுதான் புறப்பட்டர். ஆனால் பொருளாதாரக் கஸ்டம் அவருக்குச் சுமையாகியது. வீடும் பாடசாலையும் என்று வாழ்ந்தவருக்கு இடமாற்றம் வேதனையை அளித் தது. சம்பளத்தை எடுப்பார். மனைவி பவளத்தின் கையில் கொடுப்பார். அவ்வளவுதான். வீட்டில் நடப்பது அவருக்குத் தெரியாது. கந்தவனத்தாருக்குப் புலவரின் குணாதிசயங்கள் அத்துப்படி புலவர் முன்னால் போய்க் கொண்டிருந்தார். பின்னால் கந்தவனத்தார் விரைந்து நடந்தார். "என்ன புலவரையா? கடும் யோசனை?” குரல் கேட்டுத் தன்னைச் சுதாகரித்துக்கொண்ட மண்டூர்ப் புலவர் சோமசுந்தரம் குரல் வந்த பக்கம் திரும்பிப் பார்த்தார். அவர் பக்கத்தில் கந்தவனத்தார் புன்னகை யோடு நின்றார்.
“வாங்க உகந்தவனம். இப்பதான் வாறன்"ஒரு புன்னகையை வீசியெறிந்து பேசினார். அவரது முகத்தில் சோர்வு தெரியவில்லை. சொந்தக்காரரைக் காண்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்தது. தனது சொந்த ஊரில் கால்பட்டதும் சுகம் கூடிக்கொண்டது:ஒருவித பெருமிதத்தோடு நடந்தார். கந்தவனத்தார் புலவரின் பொருட்களின் கீமையைப் பகிர்ந்து கொண்டார். ஊர் விசயங்கள் புரண்டு துள்ளின. பார்க்கும் இடமெல்லாம் இப்போது அற்புதமாகத் தெரிந்தது. ஆனாலும் புலவரது மனதினிலே இனந்தெரியாத வேதனை முள் தைப்பதைப்போல் குத்திக் கொண்டிருந்தது. அந்த வலியினால் ஏற்பட்ட உளைச்சல் எரிச்சலையும் கூட்டியது.
d
Syanaf 2003

க வாழ்ந்த மக்களது மனங்கள் துயரக்கடலில் மூழ்கியுள்ளதை நினைத்து ந்துகொண்டர். "புலவரையா எப்படி இப்ப வேலை பார்க்கிற இடம்?"நம்மட ாரைப்போல இருக்குமா?”."உகந்தவனம். அந்த ஊர் நல்லதுதான். நல்ல ானங்கள். ஆனாலும் நம்மட ஊர் நமக்குச் சொர்க்கம்தான். சொந்த ஊரைப்போல ஒன்றும் சுகம்தராது. அங்க உல்லாசமாக இருந்தாலும், ஒரு தனிமை வாட்டும். ம்மட ஊர்ல காலை நீட்டிக் கொண்டிருந்தாலே போதும். சுகம் சுண்டும். அந்தச் சுகம் எங்கும் கிடைக்காது. ஆனால் அது இப்ப தொலைஞ்சு போச்சுது பாலக் கிடக்குது” புலவர் அடுக்கிக் கொண்டு போனார். கந்தவனத்தார் மட்டக்களப்பைத் தவிர வேறு ஊர்களுக்குப் போனது கிடையாது. அரசாங்க உத்தியோகம் பார்க்கிறவர்கள் இடமாற்றம் பெற்றுப் பல ஊர்களில் வாழக்கூடிய சந்தர்ப்பங்களைப் பெற்றுக் கொள்வார்கள். நல்ல அனுபவங்களைப் பெற்றும் கொள்வார்கள். கந்தவனத்தார் போன்றவர்கள் சொந்த ஊரிலேயே கிடப்பவர்கள். கிணற்றுத் தவளைகளைப் போல் ஊருக்குள்ளேயே கிடப்பதைத் தவிர வேறு அனுபவம் கிடைக்கச் சந்தர்ப்பம் இல்லை. அவருக்குப் பல ஊர்களைப் பற்றி அறிய ஆசைதான். எப்படிப் போய்ப் பார்ப்பது. பொருளாதாரம் இடம் கொடுக்காது. அது சாத்தியப்பட்டும் வராது.
"என்டாலும் புலவரையா நீங்க கொடுத்து வைத்தவர்தான். நாலு இடங்க ளையும் மனிசரையும் பார்த்துப் பழகச் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கல்லவா?”நடந்து கொண்டே கந்தவனத்தார் தன் உள்ளக் கிடக்கையை வெளிக்காட்டினார். புலவரின் உள்ளம் அவரிடம் இல்லை. அது பறந்தோடியது. அந்த ஒரு வினாடிப்பொழுதில் அந்தக் கணத்தைக் கண்பர். பழையதை அசைபோடுவதில் ஒரு புதுமை இருக் கும். சுகமும் இருக்கும். புலவருக்கு தான் கடமையாற்றும் பிரதேசத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருப்பதை நன்றியோடு நினைவுகூர்ந்தார். நவராத்திரி தொடங்கினால் மூதூர் பிரதேசம் குதூகலிக்கும். பாடசாலைகளும் கோவில்களும் விழாக்கோலம்பூணும் மாலை தொடக்கம் நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடை பெறும். கவிதை அரங்குகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படும். மல்லிகைத் தீவு அற்புதமான மருதநிலக் கிராமம் செந்நெல் வயல்சூழ்ந்து விளைந்து கிடக்கும். தென்னஞ்சோலை பாளைவெடித்துச் சிரிக்கும். மாலையானால் மைனாக்களின் குதூகலிப்பு. கட்டிப்புரண்டு கதைபேசி மகிழும் காட்சி மனதை ஈர்க்கும் பார்க்கும் பக்கமெல்லாம் பகமை போர்த்திருக்கும் மல்லிகைத்தீவு மகா வித்தியாலயம் தன்னை அலங்கரித்து மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கும். மண்டபம் நிறைந்து மக்கள் வழிந்துகொண்டிருந்தனர். "கவிதை அரங்கு எப்போது? கவிஞர்கள் வந்து விட்டர்களா?”கேள்விமேல் கேள்வி கேட்டுக் கவிஞர்களின் வருகைக்காக மக்கள்
ແ)

Page 8
காத்துக் கொண்டிருந்தனர். வரிசையாகக் கவிஞர்கள் சைக்கிள் சவாரி செய்த வண்ணம் வந்து சேர்ந்தார்கள். மண்டுர் கவிஞரும் எடுப்பாக நின்றார். இது அவர்களுக்கு எத்தனையாவது சுற்று? கிராமங்கள் தோறும் வாணிவிழா கவிதை அரங்குகள் களைகட்டும். பல கிராமங்களில் கவிதையரங்குகளில் பங்குகொண்டு விட்டுக் களைத்து வந்திருந்தார்கள். தாமரைத்தீவானின் தலைமையில் கவிதையரங்கு. ஆலையூரன். ஈச்சையூர்தவா, தமிழ்பித்தன், பின்னால் புலவர் இசையோடு பாடினார்.
தோப்பூரில் வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை - உனக்கு சொந்தக்காரர் இல்லை, இங்கு துன்பம் கோடி தொல்லை ஆப்பு வைத்தான் ஒருவன் அதில் அகப்பட்டவன் நாளை ஆப்பு உடைத்து வருவான் உன் அகந்தை உடைத்து வெல்வான்
கைதட்டலும் சிரிப்பும் வானைப் பிளந்தது. புலவர் இறுதியாக இசையோடு பாடினார். தொடர்ந்து பாடிய கேணிப்பித்தன்,
தோப்பூரில் வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை - உனக்கு சொந்தக்காரர் கொள்ளை, இங்கு துன்பம் கோடி இல்லை. காப்பவிழ்ந்த பூதான் நீ காலமெல்லாம் வாழ்வாய் காலம் பதில் சொல்லும் கவலை உனக்கு இல்லை.
இப்படிப் பாடினார். மக்கள் ஆரவாரித்து மகிழ்ந்ததை புலவர் மனநிறைவோடு எண்ணிக்கொண்டார். மனிதமனம் அலைபாயும் தன்மையுடையது. நிறம் மாறும் ஓணான்போல் நிமிடத்து நிமிடம் மனம் மாறும் புலவரும் அப்படித்தான். சட்டென்று விசயத்துக்கு வந்துவிட்டார். "இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சைதான் கந்தவனம்"புலவர் தனது மன உளைச்சலை பெருமூச்சோடு வெளித்தள்ளினார். நடந்துகொண்டே தான் பிறந்து வளர்ந்த ஊரின் அழகையும் பெருமையையும் வியந்து மெய்மறந்து நெக்குருகினார்.
அழகான அந்த வாகைமரம் காற்றினை ஏந்தி அரவணைத்துச் சலசலத்துத் தாளம்போட்டுக் கொண்டிருந்தது. வாகை மரங்கள் ஊடாக மட்டக்களப்பு வாவியின் பரந்த அழகு எட்டிப்பர்க்கிறது. அந்த வாவியில்தான் சித்திரை முழுநிலவின் ஒளியில் நீரரமகளிர் இன்னிசை பாடி வருவதாக ஐதீகம் விபுலானந்த அடிகள் அந்த இசை யைக் கேட்டு யாழ்நூலை எழுதினார். அந்த வாவி மட்டக்களப்பை இரு கூறுக ளாக்கிப் பரந்து நீண்டு கிடக்கிறது. எழுவான்கரையில் எம்பிய காற்று, படுவான் கரையை நோக்கி வீசுகின்றது. யாழ்நூலில் வித்தகன் விபுலானந்தரின் கற்பனை

அற்புதம் பாடும் மீன்களான நீரரமகளிர் மாலையில், நீலவானில் நிலவு பவனிவரும் வேளையில், மலைவுகொண்டு பாடி ஆடி மட்டக்களப்பு வாவியில் உலா வரும் காட்சியை அற்புதமாகக் காட்டியுள்ளார். பாடலுக்கேற்ற இசையை அள்ளிய காற்று வாவியின் மெலிதான அலைகள் ஊடாகப் பரப்புகிறது. மயங்கிய மாலைப் பொழுதில் மனங்கள் துள்ளி ஆடுகின்றன.
நீல வானிலே நிலவு வீசவே மாலை வேளையே மலைவு கொள்ளுவோம் சால நாடியே சலதி நீருளே பாலை பாடியே பலரெடாருவோம்.
சுவாமி விபுலானந்தரின் இந்தப் பாடலை மண்டுர்ப் புலவர் சோமசுந்தரம் வாய்விட்டுப் பாடி மகிழ்வார். பாடி மற்றவர்களையும் மகிழ்விப்பார். மண்டூர் புலவர் சோமசுந்தரப்பிள்ளை ஒரு வித்தியாசமான மனிதர். அவரது கொடுப்புள் ஒரு புன்னகை ஒளிந்துகொண்டிருக்கும் புருவங்களைச் சுருக்கி இனிமையாகப் பேசுவார். வெள்ளை வேட்டி சட்டையுடன் கழுத்தில் மாலையாக சால்வை அலங்க ரிக்கும். அகம்பாவமற்ற உயர்ந்த தோற்றத்தோடு நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுமாக காட்சி தருவார். அவரது கற்பித்தல் முறையும் வித்தியாசமானது. அவரே பாடப் புத்தகம்தான். வகுப்பறையில் அவர் பாடம் தொடங்கினால் பக்கத்து வகுப்பறை மாணவர்களது மனங்களும் கண்களும் அவர் பக்கம் இருக்கும். செயல்மூலம் கற்பிக்கும் திறங்கொண்டவர். மாணவர்களது அபிமானம் பெற்ற நல்லதொரு ஆசிரியர். அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக மண்டூர்க் கரையில் மோதி உடைகின்றன. மண்டுர், வாவியின் அலைகளை அணைத்து முத்தமிட்ட வாறு நீண்டு விரிந்து படுத்திருக்கிறது. வெயிலின் வெப்பத்தினால் ஆவியாக்கம் நடைபெற்று வளி குளிரைத் தடவிக் குதூகலிக்கிறது. வாவி நீரில் குளிர்ந்த காற்று புதுமையைக் கலந்து மரக்கொப்புகளை உலுப்புகிறது. அந்த உலுப்புதலில் அசைவாக்கம் பிறக்கிறது. அந்த அசைவில் ஒரு நளினம் சுழன்றாடியது.
காற்று, அசைவினூடாக இன்னிசையைப் பரப்பி இங்கிதத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. பெரியதொரு யானை, அசைந்தாடுவதுபோல் வாகைமரம் காட்சி யாகியது. அதன் அடிமரம் சரிந்து வளைந்து, இடையில் கிளைவிட்டு வளைந்து சடைத்துச் சாய்ந்திருந்தது. அதன் வேர்கள் நிலத்தின் மேல் பெரிதாய் விரிந்து, புடைத்து இருக்கைகளாக மேடையமைத்திருந்தன. அப்படியான வாகைமரங்கள் மூன்று, நான்கு நின்று நிழல்வடித்துக் கொண்டிருந்தன. வருவோர் போவோருக்கு இளைப்பாற்றும் பணியை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். இந்த மரங்களுக்கு
फ्लlट्सಕ್ಲಿಫ್ಟ್ನ

Page 9
இப்படியான கட்டளையை இட்டது யார்? இடையிடையே வம்மி மரங்களின் பிரசன்னம், வம்மிப்பூக்களில் இருந்து பரவும் நறுமணம் சொர்க்கத்தை நினை வூட்டும். இந்தப் பூக்களில் இருந்து எப்படி இந்த வாசனை வருகிறது? கந்தவனத்தார் ஒரு வம்மிப்பூவைக் கையில் ஏந்தி அதனைத் தன் கைகளுள் திணித்து அதன் மென்மையை உணரத் தொடங்கினார். கந்தவனத்தாரின் நண்பகல் அந்த வாகமரத்தடியில்தான் கழியும் சீனித்தம்பியும் அங்குதான் வருவார். அவரோடு பலர் குழுமுவார்கள். கூட்டங்கூட்டமாகப் பரந்திருப்பார்கள், களைப்பாற மட்டும் வருவதில்லை. வேலோடு விளையாடும் முருகனின் திருவிளையாடல்களைப் பேசி மகிழ்வதற்குமாகவும் ஒன்றுகூடுவார்கள். சூரனை வதம்செய்ய கந்தன் ஏவிய வேலினது அகோரம் தணியவில்லையாம் அது பல கிளைகளாகப் பிரிந்து பல இடங் களில் தங்கியதாக மக்கள் கூறுகின்றனர். ஒரு வேல் மண்டுரின் வாவியோரமாக இருந்த தில்லைமர வேரில் தங்கியதாக இன்றும் மக்கள் நம்புகின்றார்கள். அந்த வேலினைக் கண்ட மக்கள் அப்படியே கோயிலமைத்து வணங்கி வருவதாக வரலாறு. முருகனின் புகழ்பாடும் மண்டூர் பெருமைமிக்கது.
அதர்மத்தை விலக்கித் தர்மத்தை நிலைநாட்ட அவ்வப்போது அவதாரங்கள் தோன்றும் சூரனின் பிடியில் சிக்கித் தவித்த ஆன்மாக்களுக்கு விடுதலையழித்து விண்ணரசைத் தோற்றுவித்ததாக இதிகாசங்களும், புராணங்களும் கூறுகின்றன. அவற்றையெல்லாம் அசைபோட்டவாறு ஒரு கூட்டம் கூடிக் குதூகலிக்கும் மதியம் பன்னிரெண்டு மணி மண்டூர் முருகனின் கோயில்மணி ஒலிக்கிறது. கருவறைக் கதவின் திரையில் ஆறுமுகமும் பன்னிரு கைகளும் பக்கத்தில் வள்ளி தெய்வானை சமேதரராய் முருகனின் அழகுக் காட்சி, அற்புதமாக அழகு வண்ணத்தில் ஓவியமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. வண்ணக்கர் குணசுந்தரனார் பூசக ருக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் வேண்டிய ஆணைகளைப் பிறப்பித்தவாறு விசாலமாகத் தோன்றுகிறார். சாதாரண மனிதனுக்கு அது அற்புதமான காட்சியாகத் தெரியும். ஆனால் தத்துவ ஞானிகளுக்கு பரப்பிரமத்தின் அற்புதப் பொருள் தென்படும். பாரினில் ஐந்தாய் பரந்த நாயகன். தீயினில் நான்காய்த் திகழ்ந்த தத்துவன். நீரினில் மூன்றாய் மூழ்கிய நுண்ணியன். வளியினில் இரண்டாய் வலம்வரும் புண்ணியன். வெளியிடை ஒன்றாய் வியாபித்த சோதிவானவனின் திருவிளையாடல் அனுபவமாகும். தீபாராதனையுடன் பூசை தொடங்குகிறது. கற்புகனார் கந்தையா பயபக்தியில் மூழ்கி முருகனில் ஆழ்ந்திருக்கிறர் குழுமியிருந்த ஆண்களின் தோளில் கிடந்த சால்வைகள் இடுப்பில் தஞ்சமாகின்றன. கைகள் தலைமேல் வைத்துக் கண்ணிர் அரும்பித் ததும்ப, மனங்களை முருகனின் சந்நிதானத்தில் படைத்து சாஸ்டாங்கமாக விழுந்து "முருகா. மண்டூர் கந்தா.
Liga 3066

குகனே. கதிர்வேலவனே. பட்ட துன்பங்கள் போதும். இந்த நாட்டில் சமாதானத்தையும் சாந்தியையும் காட்டு யுத்தம் இல்லாத சூழலை ஏற்படுத்து. மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் காட்டு'கந்தவனத்தாரின் கைகள் அகல விரிந்து தலைமேல் குவிந்து இருக்கின்றன. தாய்மார்கள் தமது பிள்ளைகளை "யுத்தச் சுனாமியிலிருந்து காப்பற்று"இரந்து நிற்கிறார்கள். தனக்காக வேண்டுதலை அங்கு காணவில்லைஉலக மக்களின்துயரங்களைப் போக்க ஆராதனை நடக்கின்றது.
காட்டுத்தர்பார் நடக்கும் நாட்டில் பிணமுண்ணும் பேய்களைத்தான் காண
முடியும். தவித்த முயலடிக்கும் சந்தர்ப்பவாதிகளைத்தான் சந்திக்க முடியும். சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாயும் மானிடர்களைத்தான் பார்க்கக் கூடும். இறைவன் இருக்கின்றானா? இறைவன் கல்லா? வெறும் கற்பனையா? இது புரியாத புதிர்தான். கணிர் குரல் ஒன்று ஓங்கி ஒலிக்கிறது.அருணகிரியாரின் அற்புதப் பாடல் பரவுகிறது. கண்களில் கண்ணீர் மல்க மண்டூர் கவிஞர் சோமசுந்தரம் பிள்ளை உடல்சிலிர்க்கப் பாடுகிறார். அவரது குரல்வளம் அற்புதமாக ஒலிக்கிறது. பாடலின் ஒவ்வொரு சொல்லும் மிகத் தெளிவாக, அர்த்தபுஷ்டியாக இதயங்களில் படிகின்றன. பாடலோடு ஒன்றித்து அனுபவித்து ஒலிநயத்தோடு பாடல் செவிகளில் புகுந்து மெய்சிலிர்க்க வைக்கிறது. கேட்டுக் கிறங்கிக் கல்லாக மக்கள் திரண்டு நிற்கிறார்கள். அவர்களது மனங்கள் நீராய் உருகி ஓடுகிறது. ஒருபுறம் பெண்கள் கூப்பிய கைகளோடு விழிகள் மூடி, மனங்களைக் கந்தன் தாளில் படியவைத்து மெய்மறந்து நிற்கிறார்கள். ஆண்கள் தலைமேல் கைகள் மொட்டிக்க "கந்தா" என நா வறள அரற்றி நிற்கிறார்கள். பாடல் முடிய அவர் தோப்பூரில் கவிதை அரங்குகளில் அவ்வப்போது நகைச்சுவைக்காகப் பாடும் அந்தப் பாடலை சற்று மாற்றி முணுமுணுக்கத் தவறவில்லை.
தோப்பூரில் வேலை செய்யும்
சோமசுந்தரம் பிள்ளை உனக்கு
ஆப்பு வெச்ச தாரு அதனை
அகற்றி வைப்பவர் யாரு
அவரது வேண்டுகோள் முடிந்தது. பக்தர்கள் பரவசமாகி நிற்கிறார்கள். எங்கிருந்தோ அந்தத் தோகைமயில் பறந்து வருகிறது. இரண்டு வரிசையாக நிற்கும் மக்கள் மத்தியில் புகுந்து வளைந்து நடக்கிறது. மேளவாத்தியம் முழங்கு கிறது. அதற்கேற்ப மயிலின் அசைவுகள் பார்ப்போரைக் கிறங்கடிக்கின்றன. அற்புதமான காட்சியாத் தெரிகிறது. இந்த மயில் கோயிலுக்கு வெளியேதான் திரியும் கோயிலைச் சுற்றி வலம் வரும் கோயில் கோபுரத்தில் நின்று அகவும் பறந்து மரக்கிளைமில் தாவும் பக்தர்கள் கொடுக்கும் உணவுகளைக் கொத்தி உண்ணும்.

Page 10
ஆனால் இன்று வித்தியாசமாக கோயில் உள்ளே பூசை நேரத்தில் புகுந்துள்ளது. ஒரு நடனமாது போன்று அசைந்து நடந்து புலவர்முன் நின்றது. அங்கிருந்து நேரே பறந்து வெளியில் குதித்தது. அது பறந்த விசையில் காற்று எம்பி உதைத்தது. ஆச்சரியத்தோடு பக்தர்கள் "முருகா" என்று அரற்றினார்கள். பூசை முடிந்து வெளியில் வந்தார்கள். "புலவரையா. ஏதோ நன்மை நடக்கப் போகிறது. அது உங்களுக்குத்தான். இருந்து பாருங்கள்.அடுத்த கிழமை நீங்கள் மண்டூருக்கு மாற்றலாகி வந்து விடுவீர்கள்” கந்தவனத்தார் கம்பீரமாகச் சொன்னார். "நீங்க சொன்னது பலிக்கட்டும்". வழமையான புன்சிரிப்போடு சொல்லி வீட்டுக்கு நடைபோட்டார்.
"இரண்டுநாள் ஃவு போட்டு நில்லுங்கள். இந்தச் சச்சரவுகள முடிச்சுப்போட்டுப் போனால் நல்லதுதானே” பவளம் சொல்வதிலும் ஞாயத்தைக் கண்டார். “சரி. நான் சொல்லிப்போட்டுத்தான் வந்தனான். புதன்கிழமை போவம். அதுக்குள்ள காரியங்களப் பார்த்து முடிச்சிட்டுப் போடுவம்' புலவரின் பதிலைக் கேட்டதும் பவளத்துக்குச் சந்தோசம், வீவைப் பற்றிக் கதையெடுத்தாலே பொத்திக் கொண்டு கோபம் வரும் இன்று புலவரின் நடத்தையில் பவளம் மற்றத்தைக் கண்டுகொண்டார். ஊரின் நிலவரங்களை அறிய வேணும். வீணான வம்புகளில் மாட்டுப்படக் கூடாது. சைக்கிளை எடுத்துக்கொண்டு உலா வந்தார். பவளம் கடிதத்தில் குறிப்பிட்டது போல் அவ்வளவு பிரச்சினைகள் இருந்ததாக அவருக்குத் தெரியவில்லை. ஏதோ அங்கொன்று இங்கொன்று நடந்திருக்கு அவை தவிர்க்க முடியாதவை எனத் தெரிந்து கொண்டார். எனினும் பவளத்தின் உடல்நிலையில் மாற்றத்தைக் கண்டார். "பவளம் ஒருக்கால் கல்முனைக்கு அல்லது மட்டக்களப்பு ஆளப்பத்திரிக்குப் போய் காட்டுவோமா?"ஆதரவோடு கேட்டார். "இதுக்கெல்லாம் ஆளப்பத்திரிக்குப் போவானேன்? நம்மட ஊர் ஆஸ்பத்திரியில் காட்டி மருந்தெடுப் போம். சாதாரண காய்ச்சல்தானே? அது மாறிடும்” பவளம் மறுத்துவிட்டாள். அவளுக்கு நாட்டு நிலவரத்தை எண்ணியே கவலையாயிருந்தது. இளம் பிள் ளைகளை வீடுகளில் வைத்துப் பார்ப்பது பெரிய வேலை. இப்போதுள்ள பெற் றாருக்குப் பெரும் கவலையைக் கொடுத்தது. அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. "நீங்கள் இருந்தா கொஞ்சம் தைரியமாயிருக்கும். நான் தனிய எப்படிச் சமாளிப்பதென்றுதான் யோசினை”. அவளது கண்கள் குளமாயிற்று. அவள் கண் கலங்குவதையிட்டு வேதனை கொண்டார். "பவளம் கவலையை விடு' நடப்பது நடக்கட்டும். எல்லாம் இறைவன் செயல். நாம ஆருக்கும் கெடுதல் செய்யல்ல. சொல்லியவாறு தனது கண்ணிரை அவளுக்குத் தெரியாதவாறு துடைத்துக்கொண்டார். படலையில் சைக்கிள் மணி ஒலித்தது. “ஆரது”என்று
16,

அெடி, 'pfჩი, ; rዯነ፡ኣ "Fा#,
Air
سیاسی صلى الله عليه وسلم:مایوستگی
பவளம் எட்டிப் பர்த்தர் "அட தம்பி சுந்தரம் வா. அதிசயமாயிருக்கு எப்படி இந்த நேரத்தில் கடிதம் வரும் கடிதம் மண்டூருக்கு வர எப்பிடியும் ஒரு மணியாகுமே?” கூறியவாறே படலையடிக்குச் சென்றாள். "அம்மா ஐயா இருக்கிராறா?” கேள்வியோடு கந்தரம் உள்ளே வந்தான். “ஓமோம். வா சுந்தரம்” புலவர் எழும்பி வந்தார். "ஐயா. உங்களுக்குத் தந்தி வந்திருக்கு. அதுதான் தர வந்தனான்" தபால்காரச் சுந்தரம் கையிலிருந்து தந்தியைக் கொடுத்தான். "தந்தியா? எனக்கு யாரிருக்கா அனுப்ப? கொண்டா பாப்பம்” வாங்கிப் பிரித்துப் படித்தார். சிறகில்லாது வானில் பறக்கும் உணர்வினைப் பெற்றார். அவருக்கு ஆச்சரியம் அத்துடன் அதிர்ச்சியாகவும் இருந்தது. "இஞ்சபார் பவளம் எனக்கு மண்டூருக்கு மாற்றம் போட்டிருக்கு கந்தவனத்தார் சொன்னது சரியாப் போச்சு. முதலில் அந்த மனிசனுக்குத்தான் இதைச் சொல்லணும்' கூறிக்கொண்டு தந்தியை சட்டைப் பொக்கற்றில் மடித்து வைத்தார். “கடவுள் சோதிக்கிறது மனிதர்களைப் புடம்போடத்தான். கஸ்டம் வந்தால்தானே கடவுளை நினைக்கிறம்” பவளம் மனதில் இனந்தெரியாத பக்தியுணர்வு பீறிட்டுப் பாய்ந்தது. புலவர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கந்தவனத்தாரைத் தேடிப் போனார். ஏனோ அவரது மனம் கனத்தது. "அருமையான பிள்ளைகள். அன்புடைய சனங்கள். எப்படி அந்தச் சனங்களை விட்டு வருவது? சீ. இந்த மனம் பொல்லாதது. இங்கிருந்தால் அங்கு இருப்பது நல்லதாகத் தோன்றுகிறது. அங்கிருந்தால் இங்கிருப்பது நல்லதாகப் படுகிறது. இல்லாததையெல்லாம் எண்ணி ஏங்குகின்றது. கந்தவனத்தார் தூரத்தில் வந்து கொண்டிருந்தார். சைக்கிளை விட்டு இறங்கி நின்றார். கந்தவனத்தாரிடம் செய்தியைச் சொன்னார். தனது சங்கடத்தையும் சொன்னார். அவர் ஒரு சிரிப்புச் சிரித்தார். புலவருக்கு அதன் பொருள் விளங்காமலில்லை. புலவரே நீங்கதானே
*தோப்பூரில் வேலை செய்யும்
சோமசுந்தரப் பிள்ளை உனக்கு
ஆப்பு வெச்ச தாரு அதனை
அகற்றி வைப்பவர் யாரு
என்று பாடிநீங்க. ஆப்பு அகற்றப்பட்டுவிட்டது. சந்தோசமாக உலா
வருவோம். நம்மட ஊருக்கு நல்லதச் செய்வம் வாங்க. ஒருக்கா முருகனிட்டப் போய்வருவம், கோயிலுக்குச் சென்று மனதார வணங்கினார். விடைபெற்று வீட்டுக்குத் திரும்பினார். ே (கற்பனை கலந்த உண்மை)
莺 ಙ್ಗಿ ಇÇä

Page 11
கதிர்முகம்
எழுத்துக்குக்கிடைத்த
தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் "பாலம்’ மாத இதழ் சர்வதேச ரீதியாக நடாத்திய வல்லிக்கண்ணன் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் ஈழத்து எழுத்தாளர் நீயிஅருளானந்தம் அவர்கள் எழுதிய "இரத்தம் கிளர்த்தும் முள்முடி’ சிறுகதை முதல் பரிசு பெற்றுள்ளது. உலகெங்கும் இருந்து கிடைக்கப்பெற்ற 900 எழுத்தாளர்களது சிறுகதைகளில் (அவற்றில் இலங்கையிலிருந்து 200 படைப்புக்கள்) "இரத்தம் கிளர்த்தும் முள்முடி’ முதல் பரிசு பெற்றுள்ளது.
திருநீயிஅருளானந்தம் அவர்கள் 13.11.1947 இல் வவுனியா சூசைப்பிள்ளையர் குளம் கிராமத்தில் பிறந்தவர். ஆரம்பக்கல்வியை வவுனியா இறம்மைக்குளம் அந்தோனியார் பாடசாலையிலும் பின் க.பொ.த.(சாதாரண) தரம் வரை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றவர். சிறுகதை எழுத்தாளராகவும், நாவலாசிரி யராகவும் அறியப்பட்ட இவரது முதல் கலை இலக்கியப் பிரவேசம் நாடகம் மூலமே நிகழ்ந்தது. பதினேழு வயதில் "பொண்ணுக்கேற்ற மாப்பிள்ளை' எனும் நாடகத்தை எழுதி, நெறியாள்கை செய்து அதில் கதாநாயகன் பாத்திரத்திலும் நடித்தார். இந்நாடகம் வவுனியா, முல்லைத்தீவு, புளியங்குளம், யாழ் வீரசிங்கம் மண்டபம், யாழ் திறந்த வெளியரங்கு ஆகிய இடங்களில் மேடையேறியது. இருபதாவது வயதில் இவரது முதல் சிறுகதை 'அனுபவம் புதிது" வீரகேசரியில் வெளிவந்தது. ஆனாலும் தனது முப்பத்து மூன்று வயதுவரை நாடகங்களிலேயே அதிக ஈடுபாடுள்ளவராகத் திகழ்ந்தார். "ரூபவாகினி தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார். 1986 இல் யாழ்ப்பாணத்திற்கும் பின் 1996 இல் கொழும்புக்கும் இடம்பெயர்ந்தார். வவுனியா நூலகமே தன்னை வளர்த்தது என்று பெருமையோடு கூறும் இவரது சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகளான "வீரகேசரி", தினக்குரல்", "தினமுரசு", "சுடரொளி" ஆகியவற்றிலும் இலங்கைச் சஞ்சிகைகளான 'தாயகம்", "ஞானம்’, ‘ஓலை’, *இருக்கிறம்", "செங்கதிர்
 

ஆகியவற்றிலும், தமிழ்நாட்டில் “கணியாழி', 'தாமரை” ஆகிய மாசிகைகளிலும் வெளிவந்துள்ளன. தவிர, சுமார் இருநூறு கட்டுரைகள் இலங்கையில் வீரகேசரி, தினகரன், தினக்குரல் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
மாற்றங்களை மறுப்பதற்கில்லை (சிறுகதைத் தொகுதி - வைகாசி 2002), “கயளிகரம் (சிறுகதைத் தொகுதி - சித்திரை 2003). 'ஆமைக்குணம்’ (சிறுகதைத் தொகுதி - வைகாசி 2004), “கறுப்பு ஞாயிறு" (சிறுகதைத் தொகுதி = ஆவணி 2005). 'வாழ்க்கையின் நிறங்கள்" (நாவல் - ஐப்பசி 2006), அகதி" (சிறுகதைத் தொகுதி - ஆனி 2007) என்பன இதுவரை வெளிவந்த இவரது நூல்கள். 'வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து’ எனும் கவிதைத் தொகுப்பும், "ஒரு பெண்ணென்று எழுது' எனும் பிறிதொரு சிறுகதைத் தொகுதியும் 3082008 அன்று வெளியீட்டு விழாவில் வெளிவரக் காத்திருக்கின்றன.
மேற்கூறப்பட்ட நூல்களில் “கறுப்பு ஞாயிறு" 2006 இல் அரச சாகித்திய விருதையும், “வாழ்க்கையின் நிறங்கள்" 2007 இல் வடமாகாண சாகித்திய விருதையும், மற்றும் அரச சாகித்திய விருதையும் பெற்றவை. தவிர, 1975 இல் பேராதனைப் பல்கலைக்கழகம் அகில இலங்கை ரீதியாக நடாத்திய பவளவிழாச் சிறுகதைப் போட்டியில் இவரது ‘கபனிகரம்’ சிறப்புப் பரிசையும் 2000 இல் லண்டன் பூபாளராகங்கள் சர்வதேச ரீதியாக நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது “அம்மாவின் இரக்கம்' ஆறுதல் பரிசையும் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் பாலம்’ மாத இதழின் பரிசளிப்பு விழா 10052008 அன்று சென்னையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் இல்லத்தில் நடைபெற்றது. "பாலம் சஞ்சிகையின் ஆசிரியராக இந்தியநாட்டின் மதிப்பிற்குரிய உலகறிந்த சமூக சேவையாளர் திரு.பா.கலியாணசுந்தரம் அவர்களும், அதன் நிர்வாக ஆசிரியராக இந்தியாவின் "ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் திருதஜெயகாந்தன் அவர்களும் விளங்குகின்றனர் என்பதும் பெருமைக்குரியதே.
தனது படைப்பிலக்கிய ஆக்கத்திறன் மூலம் ஈழத்து எழுத்துக்கு அங்கீகாரம் பெற்றுத்தந்து பெருமை சேர்த்துள்ள திருநீயிஅருளானந்தம் அவர்களை "செங்கதிர்' வாழ்த்தி மகிழ்கிறது.

Page 12
ாரீத்தர் நினைவு
பேராசிரியர் நந்தி |
எழுத்துலகில் 'நந்தி’ என அறியப்பட்ட செல்லத்துரை சிவஞானசுந்தரம் அவர்கள் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்தார். பெற்றோர் நல்லூரைச் சேர்ந்தவர்கள்.
பளை தமிழ்க் கலவன் பாடசாலை - காங்கேசன்துறை றோமன் கத்தோ விக்க பாடசாலை - இடைக்காடு தமிழ் பாடசாலை (தற்போது மகா வித்தியாலயம்) - யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி - கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் 1933 - 1948 காலப்பகுதியில் ஆரம்பக் கல்வியிலிருந்து பல்கலைக்கழகப் புதுமுக வகுப்புவரை பயின்றார்.
1950 இல் கொழும்புப் பல்கலைக்கழகத்திற் பிரவேசித்து கொழும்பு வைத்தியக் கல்லூரியின் MBBSபட்டம் பெற்று 1955 இல் வெளியேறினர்.
தனது சிறிய தந்தையரான பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைப் பேராசானாக விளங்கிய பேராசிரியர்.வி.செல்வநாயகம் மற்றும் அமரியதாசன், எஸ்ஏசார்ல்ஸ், கேலக்ஷ்மண ஐயர் ஆகியோரிடம் தமிழ் கற்றார்.
பழந்தமிழ் நூல்களைக் கற்றதுடன் பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம், கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை ஆகியோரது கவிதைகளையும், இரசிகமணி டி.கே.சி, தமிழ்த் தென்றல் விகல்யாணசுந்தரனார் ஆகியோரது எழுத்துக்களையும் ஈடுபாட்டுடன் படித்துத் தனது தமிழ்ப் புலமையை வளர்த்துக்கொண்டார்.
02.03.1947 வீரகேசரி இதழில் வெளிவந்த "சஞ்சலமும் சந்தோசமும்’ என்ற சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்த நந்தி (செசிவஞானசுந்தரம்)
 
 

அவர்களின் படைப்பிலக்கிய ஆளுமை 1950களின் பிற்பகுதியிலேயே வெளிப் படலாயிற்று. பின் நாவலாசிரியராகவும் நாடறியப்பட்டார். 1955 வரை தனது சொந்தப் பெயரிலும் வி.செசி, பெனிசிலின், மகன், ஜெய்கிந்த் சாத்திரியார் ஆகிய புனைப் பெயர்களிலும் ஆக்கங்களைப் படைத்திருந்தாலும், 1958 யூன் மாதம் 9ந் திகதி மூதறிஞர் ராஜாஜி சூட்டிய நந்தி' எனும் பெயரே நிலைத்துவிட்டது. எழுத்தாளராக மட்டுமல்ல மருத்துவராகவும், மருத்துவ அறிவினை மக்களிடையே பரப்பும் ஒருவராகவும் சமூக மருத்துவத் துறையில் இலங் கையின் புகழ்மிக்க பேராசிரியர்களுள் ஒருவராகவும் உலக சுகாதார நிறுவ னத்தின் மதிப்பார்ந்த நிபுணர்களில் ஒருவராகவும் இவரை நாடு அறிந்தது.
"அருமைத் தங்கைக்கு (மருத்துவ அறிவுரை - 1960); "மலைக்கொழுந்து" (நாவல் - 1964), "ஊர் நம்புமா? சிறுகதைத் தொகுதி - 1986), ‘அன்புள்ள நந்தினி' (மருத்துவ அறிவுரை - 1973), நந்தினி உன் பிள்ளை' (மருத்துவ அறிவுரை - 1973), 'உங்களைப்பற்றி" (சிறுவர் அறிவுரை நூல் -1975); குரங்குகள்" (நாடகம் - 1975); தங்கச்சியம்மா' (நாவல் - 1977);"கண்களுக்கு அப்பால்’ (சிறுகதைத் தொகுதி - 1984); நம்பிக்கைகள் (நாவல் - 1988) ஆகிய நூல்களைத் தந்தவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராயினும் மலையக மண்ணையும் மக்களையும் மனதார நேசித்த இவரது ‘மலைக்கொழுந்து நாவல் இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்றதாகும்.
கொழும்பு வைத்தியக் கல்லூரியில் MBBSபட்டம் (1951/55) பெற்று வெளியேறிய இவர் 1955/56காலப்பகுதியில் குருநாகல் பொது வைத்திய சாலையிலும், 1958/1958 இல் ஹிரிப்பிட்டியா (குருநாகல் மாவட்டம்) கிராம வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகவும் 1958 இல் கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகளுக்கான வைத்தியசாலையிலும், 1959/60 இல் நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரியாகவும், 1961/65இல் யாழ் சுகாதார வைத்திய அதிகாரியாகவும் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியாகவும், 1965/67இல் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சமூக வைத்தியத்துறை விரிவுரையாளராகவும் பணிபுரிந்தார். 198 இல் லண்டன் DPHபட்டமும் 1971 இல் (1969 - 1971) PHDபட்டமும் பெற்றார். தொடர்ந்து 1971/75 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்
இனிது 团冈

Page 13
சமூக வைத்தியத்துறை சிரேஸ்ட விரிவுரையாளராகவும் மற்றும் 1975/78இல் இணைப் பேராசிரியராகவும் பின் 1979இல் யாழ் பல்கலைக் கழகத்தில் சமூக வைத்தியப்பிரிவில் பேராசிரியராகவும், 1984/88 இல் மருத்துவ பீடத்தின் போதிபதியாகவும் பதில் துணைவேந்தராகவும் உயர்வு பெற்றவர். தவிர யாழ் தாதிமார் பயிற்சிக் கல்லூரி, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆகியவற்றில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பேராதனை/கொழும்பு பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பயிற்சி நெறியாளராகவும் விளங்கியவர்.
பேராசிரியர் நந்தி' என்றாலே அனைவரும் அறிவர்.
ா கலை, இலக்கியத்துறையைப் பொறுத்தவரை சிறுகதை / நாவல் எழுத் தாளராக மட்டுமல்லாது, நாடகாசிரியராக - நாடகத் தயாரிப்பாளராக - நாடக நெறியாளராக - நடிகனாகவும் திகழ்ந்தவர். 1949 இல் “சுதந்திரன்' பத்திரிகையில் 'விசித்திர முக்குக்கண்ணாடி’ என்ற பெயரில் சிறுகதை யாகவும், 1957 இல் சிங்கள வானொலியில் ‘புதுமகன்ைனாடிய' என வெளிப் படுத்தப்பட்ட ஆக்கம் பின் 1975 இல் "குரங்குகள்’ என்ற பெயரில் மேடை நாடகமாக்கப்பட்டது. இந்நாடகம் பேராதனைப் பல்கலைக்கழகம் நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி, யாழ் வீரசிங்கம் மண்டபம், ஊர்காவற் துறை ஆகிய இடங்களில் மேடையேற்றப்பட்டது. இதனை நெறிப்படுத்தி யதுடன் இதில் நடித்துமிருந்தார். மேலும் சொக்கன் எழுதிய ‘சிங்ககிரிக் காவலன்' எனும் வரலாற்று நாடகத்தைத் தயாரித்தவர். "பொன்மணி என்ற இலங்கைத் திரைப்படத்தில் (1976) பல பிள்ளைகளின் தந்தையாக நடித்தவர்.
ா தமிழ்நாட்டில் கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம், சரஸ்வதி ஆகிய
சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
ப இலக்கியம், மருத்துவம் சார்ந்த இவரது உரைகள் இலங்கை வானொலி, சிங்கப்பூர் வானொலி, பிபிசி (லண்டன்) ஆகியவற்றில் ஒலிபரப்பாகியுள்ளன.
குழந்தை வைத்திய நிபுணராகவும், மகப்பேற்று வைத்திய நிபுணராகவும், மலேரியா நோய்த்தடுப்பு மருத்துவ நிபுணராகவும் விளங்கிய பேராசிரியர் நந்தி அவர்கள் உத்தியோக தோரணையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ், இந்தியா ஆகிய வெளிநாடுகளுக்கும் சென்று வந்தவர்.
圆圆缸 22|ž

"கண்களுக்கு அப்பால்’ என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி வழங்கியுள்ள முன்னுரையில் 'நந்தியினால் தமிழ்ச் சிறுகதைகளின் பரிமாணங்கள் அகன்றுள்ளன" என்று குறிப்பிட் டுள்ளதுடன், இவரது “காப்பு’ என்னும் சிறுகதையை தமிழில் எழுதப் பட்ட சிறந்த சிறுகதைகளுள் ஒன்றாகவும் அடையாளம் கண்டுள்ளார்.
சானா, கலையரசு சொர்ணலிங்கம், சிவத்தம்பி, கைலாசபதி, ரொசாரியோ பீரிஸ், ஃபிலோமினா சொலமன் ஆகியோருடன் வானொலி நாடகத் தொடர் பும்; பரமஹம்சதாசன், சொக்கன், செகணேசலிங்கம், டொமினிக் ஜீவா, டானியல், இளங்கீரன், ஈழத்துச்சோமு, தீர்வை பொன்னையன், காவலூர் இராஜதுறை, சில்லையூர் செல்வராசன், ஆப்டீன் ஆகியோருடன் இலக்கித் தொடர்பும் கொண்டிருந்தார்.
1959 இல் இலங்கை முற்போக்குச் சங்கத்துடன் இணைந்து 1961 இல் அதன் யாழ் கிளைத் தலைவராகவும் விளங்கியவர்.
இலக்கிய நண்பர்கள் 1978 இல் இவரது மணிவிழாவினையொட்டி எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பக வெளியீடாக ‘நந்தி’ எனும் மலர் வெளியிட்டுச் சங்கை செய்தனர். - செங்கதிரோள்,
இன்னவைதான் கவி எழுத ஏற்றபொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல்லாதீர்! சோலை, கடல் மின்னல், முகில், தென்றலினை மறவுங்கள் மீந்திருக்கும் இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு
என்பவற்றைப் பாருங்கள்.
-மஹாகவி

Page 14
இப்பததி இளையோருக்கானது. ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி : இளங்கதிர், மேரியா, "செங்கதிர்" ஆசிரியர். இல,19, மேல்-மாடி வீதி, மட்டக்களப்பு.
படித்த பாடசாலை : மட்/வாழைச்சேனை
இந்துக்கல்லூரி ா தற்போது வாழைச்சேனை பொது வைத்திய சாலையில் கணனி Trainee-யாகப் பணி யாற்றுகிறார்.
ா பாடசாலை மட்ட, கோட்ட மட்ட, வலய மட்டப் போட்டிகளில்
சிறுகதை ஆக்கத்திற்குப் பரிசுகள் பெற்றுள்ளார்.
ா தேசிய இலக்கியக் கலை விழா 2006ல் பிரதேச மட்ட பாடசாலைக ளுக்கிடையிலான சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
ப பேச்சுப்போட்டி, சிறுகதை, கவிதை என்பவற்றில் ஈடுபாடுள்ளவர்
ப “விடுதலை" சிறுகதை மூலம் அறிமுகமாகிறார்.
 
 

புடைத்துவிம்மிய மனதை அடக்க முற்பட்டு தோற்றுப்போன நெஞ்சம். தோல்வியைத் தாங்கமுடியாது விழிகள்
ரைச் சொரிந்து கொண்டிருந்தன.
விட வேண்டும் என்று எண்ணிய வளாக கைக்குட் டையை தன் கன் னங்களில் ஒற்றிக் கொள்கிறாள். மீள முடியாத சோகத் தின் விளிம்பில் தடுமாறி கடைசி பில் வலுக்கட்டாயமாக போலிச் சிரிப்பை வரவழைத்துக் கொள்கிறாள். நீதிமன் றத்தில் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் "சம்மதம்” என்று தலையை ஆட்டிக் கொள்கிறாள். யார் இவள்.?
இரு தரப்பு வாதங்களின் பிரகாரம் இருவரும் பிரிந்து வாழலாம். இருவ ருக்கும் விவாகரத்தைச் சட்டபூர்வமாக இந்த நீதிமன்றம் வழங்குகின்றது. அவளுக்கு பூட்டப்பட்ட விலங்கு வெடித் துச் சிதறியது போன்ற விடுதலை
ஒரு கூண்டுக்கிவி கூண்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு எப்படி பறந்து செல்லுமோ அதுபோல என்னை நோக்கி ஓடிவந்து கட்டி அணைத்தாள். நான் மெளனித்து நிற்கிறேன் கடந்த கால ஞாபகங்களுடன்,
5 இந்தி స్లో
KafplatagO
பிரியமயூரி தேவரட்ணம்
"மதி" என்றுதான் அவளைத் தோழிகள் அழைப்பார்கள் பெய ருக்கு ஏற்றாற்போலவே அறிவும் அழகும் ஆற்றலும் அவளிடம் வியா பித்திருந்தது. மிடுக்கான நடையும், துடுக்கான பேச்சும் பலரையும் அவள் பின்னே ஈர்க்கச்செய்தது. யாழ் பல் கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு கலைப் பிரிவில் மதி அவ்வேளையில் கற்றுக் கொண்டிருந்தாள். மதி மட்டக்களப் பைப் பிறப்பிடமாகக் கொண்டவள். பல்கலைக்கழகம் கிடைத்ததால் அவள் யாழில் தன் மாமனாரின் வீட்டில் தங்கியிருந்தே தன் பல்கலைக் கழகக் கல்வியைக் கற்று வந்தாள்.
ஒரு பூ மொட்டு மலராகும் வரைக்கும் மரத்திற்குச் சொந்தம். மலராகி விட்டாலோ பறிப்பவருக்கே சொந்தம். இது இந்த உலகின் நீதியும் நியதியுமாகிவிட்ட நிலை யில் பெண்கள் மட்டும் என்ன இதற்கு விதிவிலக்கா?உலகில் மனித இனம் மட்டுமே உலகின் பட்டிதொட்டி எங் கும் வியாபித்திருக்கையில் ஆணுக்

Page 15
குப் பெண்மேல் ஈர்ப்பு வருவதும், பெண் ணுக்கு ஆண்மீது காதல் வருவதும் உலகினில் புதிதல்ல. ஆனால் மதிக்கு வந்ததில்தான் ஆச்சரியம், பல தடவை கள் அவளுக்குப் போடப்பட்ட காதல் விண்ணப்பங்களைக் கிழித்து வீசியி ருக்கிறாள். இபபோது மட்டும் என்ன வாகிவிடடது இவளுக்கு?
மதி யாழ்ப்பாணம் வந்து இரண்டு வருடமாகியது. அந்த இரு வருடங்க ளாக அவளது மாமன் மகன் மதன் தான் மனதை ஆக்கிரமித்திருந்தான். அவர் களது காதல் மெல்ல மெல்ல அரும்பா கித் துளிர்விட்டு இலையாகி வளர்ந்து கொண்டே வந்தது. கூடவே பிரச்சினை யும் வளர்ந்தது. மதியின் வீட்டுக்கு இந்த விஷயம் தெரியவந்ததும் இரு குடும்பங்களுக்கிடையில் சண்டைகளும் சச்சரவுகளும் அடிக்கடி ஏற்பட்ட வண்ணமிருந்தன.
மதி இதன் பின்னர் மட்டக்களப் பில் தன் வீட்டிலேயே சிறை வைக்கப் பட்டாள் மதியின் நிலை இதனால் மேலும் மோசமாகியது. கையில் இருப்பதைப் போட்டு உடைப்பதும் தன்னைத்தானே கிறிக்கொள்வதும், சூடு வைப்பதும் இப் படி ஒரு புத்திசுயாதீனமற்றவளாக மாறிக் கொண்டிருப்பதை அவளது பெற்றோர் களால் பார்த்துக்கொண்டிருக்க முடிய வில்லை. கடைசியில் அவளுக்கு அவள் மாமன் மகன் மதனுடனேயே திருமணம் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடந்தும் முடிந்துவிட்டது.
ஆயிரம் கனவுகளுடனும், ஆசைக ளுடனும் அவள் திருமண பந்தத்தில் நுழைந்தாள். திருமணம் நடந்து முற்
ಕ್ರೌಹf
றாக ஒரு மாதங்கட்ட ஆகியிருக்களது மீண்டும் அவள் வாழ்வில் புயல் வீசி யது. மதன் வேறு பெண்களுடன் சக வாசம் வைத்திருப்பதும், குடிபோ தைக்கு அடிமையாகியிருப்பதும் வெட்டவெளிச்சமாகியது. எல்லாம் விரைவில் சரியாகிவிடும், மதன் திருந் திடுவிடுவான் என அசையா நம்பிக்கை வைத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நாளுக்கு நாள் அவளை மதன் படுத்தும்பாடு கொஞ்சநஞ்ச மல்ல. அவள் எல்லாவற்றையும் சகித் துக்கொண்டாள். ஒன்றும் பலனளிக்க வில்லை. பெற்றோரும் கைவிட்டுவிட் டார்கள் நீதானே தேடிக்கொண்டது என்று.
கடைசியில் ஒரு இலட்சியத்தைக் கையில் எடுத்துக்கொண்டாள். அவ னிடமிருந்து பிரிந்து வாழ முடிவு செய்தாள். விவாகரத்துக் கோரினாள். அதில் வெற்றியும் கண்டுவிட்டாள் இனி யாவது இவள் வாழ்வில் வசந்தம் வீசட்டும்.
"கல்லானாலும் கணவன், புல்லா னாலும் புருஷன்" என்று பெண்கள் வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. திருந்தாத கணவனுடன் இருந்தென்ன செய்வது காதலித்ததற்காக அல்லது கட்டிக்கொண்டதற்காகக் காலமெல் லாம் துன்பப்படுவதைவிட மதியைப் போல் துணிவான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று எண்ணிய நான் அவளை அன்போடு அணைத்து எனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் அவளது உறவுக்காரப் பெண்ணான நான். ப

(கவிஞர் நீலாவணனின் "வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சி.)
பெண் வீட்டார் வரவேற்பு
வட்டாவைக் கனகம் நீட்ட
"வாகா வா. மச்சாள்!" என்று
தட்டோடு பொன்னு வாங்க ே
தயாராகி நின்ற மற்ற ',
(് * கிட்டடிச் சொந்தக் காரர் S&' *్య SSSSSSL SLSS S S "- مرمريكية கிரமமாய் முன்னே வந்து లీలి
பெட்டிகள் பெற்றுப் போனார்
பிறகென்ன பேச்சுத்தானே!

Page 16
வாசலில் வந்து நின்று "வா! மச்சான்.” என்று கந்தர் பேசத்தான் முயன்றார். அன்புப் பெருக்கில் நா எழவேயில்லை. பாசத்தால் கையைப் பற்றிப் பாயின்மேல் அமரச் செய்து நேசத்தால் நெஞ்ச மெல்லாம் நெய்யைப்போல் உருக நின்றார்.
பிரிந்தவர் கூடி நின்றால் பேசவும் வேண்டுமாமோ? இருந்தனர் அழகர், கந்தர் இருவரும் அருகில்; கண்டோர் "விருந்தெலாம் எமக்கு இன்று விமரிசையாய் இருக்கும்” என்று புரிந்தனர் சைகை தம்முள்; பூரித்துப் போனார் கந்தர்.
கல்யாணப் பேச்சுவார்த்தை சுயமாக முடிந்தது
Seraf 2008
"விருப்பத்தச் சொல்லு மச்சான்!
வேண்டியதெல்லாம் கேளு மருக்கொழுந் தல்லோ அன்னம் மடிக்குள்ளே வைத்து நாங்கள் பொருப்பத்தி வளர்த்த பெட்டை பொல்லாப்பு வேணாம் பின்னர்” சுருக்கவிழ்த் தழகிப் போடி சுணங்காமல் பேச்செடுத்தார்.

"உள்ளதோ இன்னும் என்ன ஒரு பெட்டைக் குஞ்சு தானே! புள்ளயின் பேரில் தோட்டம், புதுவிடு; வளவும் உண்டு; *பள்ளவெளிக் காணி மொத்தம் பத்தேகால் ஏக்கர் தேறும்; உள்ளது முழுதும் அன்னம் ஒருத்திக்குத் தானே” என்றார்.
"சொல்லயா வேணும் அண்ணா! சொந்தத்துக் குள்ள... எங்கள் செல்லனும் செல்லப்பிள்ள. சித்திரை கழியச் செய்வம்; செல்லனுக் கென்றே அன்னம் சிலையின்மேல் எழுத்துப்போல; பொல்லாப்பு ஒண்டும் இல்ல” பொன்னம்மா விடை பகர்ந்தாள்.
"என்னெண்ணம் வேறா என்ன? இளசுகள் வாழவேணும்! சொன்னாத்தான் கொடுப்பாயா? நீ சும்மாதான் விடவா போறாய் என்னால ஏண்ட தையும் என்மகனுக் கெழுதி வைப்பன்" சொன்னாரே கந்தப்போடி சுபமாக முடித்தும் வைத்தார்.
*பள்ளவெளி-வயற்காணியின் இடப்பெயர். -இன்னும் விளைவு
జాజి

Page 17
á5A
2ølA6V
ള്
if ÜÜ.
புறமுதுகிடும்படி துரத்திற்று காலவாழ்வு.
வன்புணர்வாளனாய் வெருட்டும் தெருவெளிப்பார்வை.
எல்லோர்க்கும் நல்லவனாய் நான் ஒருக்கால் இருந்ததுண்டு.
எல்லோர்க்கும் ஒருபுதிராய் உன்னோடு கலந்ததுண்டு.
கருக்கி விழுத்திய இலை மிதிபட கணுவெடித்து அரும்புகள் சுகம் தேடும் வசந்தகாலமது.
பட்டிக்காரனிடம் மாட்டிய குருட்டுச்சாரையாய் வெளுக்க வாங்கிட நெளிந்து துடித்தோடும்துயர் அன்றிலை,
பிறர்மகிழ்வெய்திடல் பிடித்திடா பேய்மனம் எனக்கிலை. என்னிடமும் உன்னிடமும் நிறையவே உள்ளன இரகசியங்கள். சங்கேதக்குறியால் நிறைகிறது மனச்சுமை.
உன்குழந்தையோடு நீ கொஞ்சுவாய் குழைவாய் குதுகலிப்பாய் பிஞ்சுக்குழந்தையின் இதழமிர்தம் முத்தச்சொர்க்கம் என்பதறிவேன்யான்.
எனினும் உன்னைத் தாலாட்டுதே என்னிதயம்.

சிறுகதை
குப்தியிலிருந்து
でアー T
@* ܠ ܐܙ *
இ
வேத மூர்த்திக்குக் கடந்த பல மாதங்களாகப் பெரும் கவலை; பதற்றம். அடிக்கடி "இறைவா" என்ற வார்த்தை அவரை அறியாமலே வெளி வரும்; பெருமூச்சுடன்தான் காரணம் பத்திரிகைகள் செய்திகள்தான்.
ஆள்கடத்தல்; ஒருவர் வெட்டி மரணம்; இளைஞர் கட்டுக்கொலை; வல்லுறவுக் குள்ளான கன்னி பற்றைக் குள் சடலமாக மீட்கப்பட்ட யுவதி. இன்னும் இன்
னோரன்ன செய்திகள்.
வாசித்து, கேட்டு கதறும், பதறும் பல்லாயிரக்கணக்கானோர். அறுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் தெற்குச் செய்திகள்.
கடந்த இரண்டாண்டுகளாக வட - கிழக்கில்,
உழலுறும் தமிழர்கள், உலகம் மெளனம் சாதிக்கிறதே
ஏன் இலங்கை முழுவதும்
வெறும் அறிக்கைகள் துன்பங்களை, அவலங்களைத் தீர்க்குமா? சென்னையிலும் அறுபதாவது சுதந்திர தினக் கொண்டாட்டம், தினியாவல பாலிததேரோ சென்னை மகாபோதி சங்கத் தலைவர், சென்னைக் கொண்டாட்டத்தில் அவர் கூறிய முக்கிய கருத்துக்கள்
छ| 飄

Page 18
"இந்த அறுபது ஆண்டுகளில் இலங்கை என்ன
முன்னேற்றத்தைக் கண்டது? பின்னோக்கி அல்லவா செல்கிறது? தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகியோர் ஒற்றுமையாகச் சுதந்திரத்திற்குப் போராடினார்கள். ஆனால் இன்று.?"
வேதமூர்த்தி தொடர்மாடி வீடுகளில் ஒன்றில் வசிக்கிறார். முன் மாடி கணவன் - மனைவி இருவரும் இலண்டன் பயணம், ஒரு மகனின் வேண்டு கோளுக்கு செவிசாய்ப்பு அவன் குடும்பத்துடன் தங்கல்; ஆறு மாதங்களுக் குத்தான்.
முன்மாடி வீட்டுக்காரரின் அனெக்ஸ்"ஸில் (Amex) வாடகைக்கு ஒரு குடும்பம், வீரசிங்கம் "அனெக்ஸ்’ குடும்பத்தின் தலைவர்.
வீரசிங்கத்தின் மருமகள் வெளிநாடு செல்வதற்காக வீசா (Visa) வுக்குக் காத்திருக்கிறாள். கணவன் வெளிநாடுகள் ஒன்றில் பணி புரிகிறான்.
வீரசிங்கத்தின் மருமகள் குமுதினியைப் பார்க்க அவளின் அக்கா நீலாம்பிகை யாழில் இருந்து வருகை, உடன் இவந்தாரியான மகன். யாழில் இருந்து வந்தவர்களுடன் மூர்த்தி அளவளாவினார். "கொழும்பில் இப்பொழுது "தில்லு முல்லு" கள்.
தமிழர்களைப் பிடிக்கிறார்கள். விசாரணையின்றித் தடுத்து வைக்கிறார்கள். அட்டகாசங்கள் வேறு. இப்ப - இவைகள் நடக்கிற காலத்தில், வந்தது நல்லதல்ல" அங்கேயும் அப்படித்தான் அண்ணை, ஊரடங்குச் சட்டம் இருக்கு. கொலை, கொள்ளை, களவு, மானபங்கம், வல்லுறவு எல்லாம் ஊரடங்கு நேரம்-இரவில்தான்."
"ஆர் செய்யினம்." "சில குழுக்களம், ஆமி சப்போற் (Support) எண்டு கதைக்கினம்." "எண்டாலும் அக்கம் பக்கம் இனம்சனம், சுற்றத்தார், நண்பர்கள் - எல்லாரும் எங்கட ஆக்கள்தானே
ஆபத்துக்கு உதவினமே." "அண்ணை, இதுகளைக் கதைக்கக்கூடாது. ஒட்டுக் கேப்பினம்" "சரி, இங்க வந்தீங்கள். உங்கட நோக்கம் என்ன?” "மகனை வெளிநாட்டுக்கு அனுப்பப் போறன்"
இலண்டனில் இருந்து, முன் வீட்டுக்காரர் திரும்பினர். ஆறுமாத விசா (Wisa) (ypçöğGaPL.Lg5.
இந்தி 函|器,

அக்கா நீலாம்பிகை, மகன் இனி அங்கே தங்கேலாதே. நீலாம்பிகை இடந்தேடினார். வீரசிங்கமும் அவவுக்காக அறை தேடினார். ஒரு சிறிய அறை கிடைத்தது. தமிழருடைய வீட்டில்தான். ஒரு கொண்டிசன் (Condition) ; நிபந்தனை. அறையில் சமைக்கக் கூடாது. சுவர்கள் மங்கிவிடும் படுக்கை மட்டுந்தான். மகன் இளந்தாரி, எனவே, நீலாம்பிகை அவனை வெளியே செல்ல அனுமதிப்பதில்லை.
சாப்பாட்டுப் பார்சல் காலை, மதியம், இரவு வெளியே வாங்கிவருவது ய்தான்.
திடீரென்று, ஒருநாள் இரவு களேபரம், கலவரம் இரவு சாப்பாடு எடுக்கச் சென்ற தாய், அறைக்குத் திரும்பவில்லை. மகன் இராப் பட்டினி,
எங்கும் 'அமளி துமனி" நூற்றுக்கணக்கான தமிழர்களைப் பிடித்தனராம். பஸ்ஸில், வீதியில், ஒழுங்கைகளில், கடைகளில், நித்திரையில். ஒரு நியதி இல்லை.
மறுநாள் காலை, இளைஞன் சிறியதாய் குமுதினி இருக்கும் முன் மாடி அனெக்ஸ்" (Annex) க்கு வந்தான். விசயத்தை அறிந்த குமுதினி அக்காவை நினைந்து "கண்ணிரும் கம்பலை"யுமாக இருந்தாள். உண்ணவுமில்லை; உறக்கமும் இல்லை. பல கதைகள்; வதந்திகள்,
"விசாரணைக்குக் களுத்துறைக்குக் கொண்டு சென்று விட்டனர்" - சிலரின் கூற்று.
"இல்லை, பூசாவுக்குத்தான் கொண்டு போயிட்டினம் - பலரின் ம்பக்கூடிய வார்த்தைகள்.
வீரசிங்கம் களுத்துறை சென்றார். அங்கே பெண்கள் இல்லை" என்றார்கள். அடுத்த அவரின் பிரயாணம்ட பூசாவுக்கு "விசாரணை நடக்குது; இரண்டு கிழமை கழித்து வா" இன்குயறிஸ்"ஸில் (Inquiry office) இருந்தவன் சொன்னான்.
"பிளிஸ் (Please)அவ உங்க இருக்கிறாவா? எண்டு பார்த்துச் சொன்னால் போதும்.?
"ஏய் மனுசா, சொல்றது விளங்கேல்ல. இரண்டு கிழமைக்குப் பிறகு
வீரசிங்கம் தளரவில்லை. இரு கிழமைகளின் பின் சென்றார். "இன்குயறி அறையில் வேறு ஒருவன் இருந்தான். பதிவுப் புத்தகத்தைப் புரட்டினான். வீரசிங்கம் குறிப்பிட்ட பெயர் இருக்கு விசாரணை நடக்கும் பொழுது ஒருவரும் சந்திக்க இயலாது. விசாரணைகள் துரிதமாக நடக்கிறது.
53 ಕ್ಲಿಷ್ಠ

Page 19
எதற்கும் இரண்டு மூன்று கிழமை பொறுத்து வாரும் என்று சொல்லி அனுப்பினான்.
முந்தியவனை விட இவன் நல்லவன் போல் வீரசிங்கத்தின் மனதில் பட்டது.
முயற்சியை விடவில்லை. மூன்று கிழமைகளின் பின் "இன்குயறி அறை முன் வீரசிங்கம்,
இப்பொழுது ஒரு புதியவன். கடந்த நடந்த விசயங்களைப் பவ்வியமாகச் சொன்னார். இவன் பதிவேட்டைப் பல தடவைகள் புரட்டினான். வீரசிங்கம் மெல்லத் தலையை நீட்டிப் பார்த்தார்.
எல்லாம் சிங்களம், புதியவன் சொன்னான். "நீங்க சொன்ன நீலாம்புள்ளை இல்லையே!” முந்தி இருக்குது எண்டு சொன்னாங்க. விசாரணை நடக்குது எண்டு சொன்னாங்களே இப்ப இல்லை என்கிறீர்களே." "நான் 'புக் கில (Book) இருந்தால்தானே சொல்ல முடியும். என்னைப் பொய் சொல்லச் சொல்றியா?." வீரசிங்கம் "வெலவெலத்து பலவீனமான கிழட்டுச் சிங்கமானார். அவரின் தலை சுற்றியது. மயங்கிச் சாய்ந்தார். சிலர் முகத்தில் தண்ணிர் விசி ஆசுவாசப்படுத்தினர்.
வீரசிங்கம் கண்களை விழித்தார். நிலைமையை உணர கொஞ்ச நேரம் பிடித்தது.
கொழும்புக்குத் திரும்பினார். காணாமல் போனோருக்கு, கண்டுபிடிக்க உதவும் ஒரு தமிழ் பிரதி அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுத்தார். வெளிநாட் டுத் தூதர்களையும் சந்தித்து விளக்கினார்.
வீரசிங்கத்தின் முயற்சி தொடர்கிறது. பலன் இதுவரைக்கும் பூச்சியந்தான். ஒரு லோயரின் (lawyer) உதவியுடன் உருக்கமான ஒரு கடிதத்தை அதிமேதகு ஜனாதிபிக்கு எழுதினார்.
இரு வாரங்களின் பின் ஜனாதிபதியின் அறிக்கை வெளியானது.
பதிவேட்டில் நீலாம்பிகையின் பெயர் காணப்படவில்லை. ஒருவேளை கள்ளத் தோணியில் தமிழ்நாடு சென்றிருக்கலாம். அவவின் உற்றாருக்கும், உறவினருக்கும் எமது அனுதாபம்" ஆரை நோவது நீலாம்பிகையின் குடும்பத்தினர் தம் கைகளைக் குவித்து, சிரசில் வைத்து ஆகாயத்தை நோக்கித் துதிக்கின்றனர்.
ಕ್ಲಿಪ್ತ್

盔
முற்றிற்றழையஏல்லைகள் தகர்க்கவியல்
- சந்திரகாந்தா முருகானந்தன் -
கலாசார விழுமியங்களைக் கட்டுடைத் துக் கொண்டு மேலெழும் பெண்ணிய நடவடிக் கைகள் பற்றி நேரானதும், எதிரானதுமான வாதங் கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்று எதிர்கொள்ளப்படுகின்றன. மனிதனும் ஒரு பிராணி ான் என்ற உயிரியல் வாதம், விலங்கு மனம் கொண்ட மனிதனின் கட்டுப் ாடுகளைத் தகர்க்கும் போது, கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து வாழ்ந்த பண்டைய ஆற்றோர வாழ்க்கை முறையை நோக்கியதாகப் பயணிக்குமா என்ற பலமான கேள்விகள் உருவாகின்றன. இதனால் இன்றைய மனித ாகரிக மேம்பாட்டுதலுக்கான குடும்பம் என்ற அமைப்பு முறை நகர்க்கப்படுமா என்ற கேள்வியுடன், மார்க்ஸியம் சொன்ன மீட்சி முறை ரியானது என்ற எண்ணமும் ஏற்படுகிறது. குடும்ப அலகு தான் பெண்ணை இரண்டாம் தரத்திற்குப் பின்தள்ளி, பால் அசமத்துவத்தை உருவாக்கி பெண்ணை அடிமையாக்கியது என்பது உண்மையே என நம்பும் நிலை உருவாகி வருகிறது. குடும்ப அலகைப் புறம்தள்ளிய மார்க்ஸிய நோக்கா னதைக் காட்டமாக எதிர்த்து விவாதித்துப் புறம் தள்ளியது தவறோ என்ற கேள்வி இன்றைய சின்னாபின்னப்பட்டுப் போயுள்ள குடும்ப உறவுகளை நோக்கிய போது எழுகின்றது.
எல்லாவித நடவடிக்கைகளும் மேலைத்தேயத்தைப் பின்பற்றி பின் தொடரும் அவல நிலையே இன்று மூன்றாம் மண்டல நாடுகளில் உள்ள சாபக்கேடாக உள்ளது. தமக்கென ஒரு முதுகெலும்பற்ற தன்மை சகல துறைகளிலும் ஊடுருவிப் போய்விட்டது. மேலைத்தேய முதலாளித்துவம் எமது உற்பத்தி மற்றும் பாவனைப் பொருட்களை மாற்றி நாம் உணராமலே சின்னாபின்னப்படுத்தியுள்ளமை போலவே பெண்ணியமும், இலக்கியத் துறையும் கூட அவர்களின் மேலாதிக்கத்துடனேயே பயணிக்கும் அவல நிலை உள்ளது. இலக்கியத்தைப் பொறுத்தவரை உலக தரம் என்பதை

Page 20
நிர்ணயிப்பவர்களாக அவர்களே இருக்கின்றார்கள். இதற்குப் பெண்ணிய இலக்கியமும் கூட விதிவிலக்கற்றுப் போயுள்ளது எமக்கென ஒரு பார்வை ஏன் இருக்கக்கூடாது.
ஆணாதிக்கம் மேலோங்கிப் போயிருந்த குறைபாடு இருந்தபோதிலும், குடும்ப அலகானது பாரம்பரியமாக எமது கலாசார, பண்பாட்டு அம்சங் களை தன்னகத்தே கொண்டதாகக் குறிப்பிடத்தக்க நல்ல சில அம்சங்களை யும் கொண்டிருந்தமையை மறுக்க முடியாது. "கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்” என்ற கூற்றில் ஆணாதிக்கத்திற்கு மேலாக சில நற்பண்புகளும் உள்ளடக்கப்பட்டிருந்தது. எனினும், இவ் ஆதிக்கமான, சமனிலியான போக்கை மீள் பரிசீலனை செய்யும் போது அதனோடு உள்ளடங்கியிருந்த நல்ல அம்சங்களும் அடியுண்டு போகின்றன. இதன் வெளிப்பாடே இன்றைய குடும்பப் பிணக்குகளுக்கான தீர்வான விவாக ரத்தும் ஆகும்.
இன்றைய பெண்ணியவாதிகளின் கருத்து நிலையில் பெண் விடுத லைக்கான தீர்வு விவாகரத்துதானா? ஆணும் பெண்ணும் ஐக்கியமாக வாழ்தலே உலகச் சுழற்சியின் தேவை என்பது மறுதலிக்கப்படுகின்றனவா? இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றபோது, ஏன் பெண்கள் குடும்ப அல கினை நிராகரிக்காமல் தமது சுதந்திரத்தை வென்றெடுக்கும் விடுதலைக் கான முனைப்புகளில் தமது உத்தமங்களையும், இருப்பையும் மேம்படுத் தும் வகையில் போராடக் கூடாது என்ற கீழைத்தேசத்தவர்களின் கருத்தும் புறம்தள்ளப்படவேண்டியதில்லை. மேலைப்புல காலனித்துவம் மீண்ெ ழுந்து உலகம் தழுவிய ஈர்ப்பையும், ஆக்கிரமிப்பையும் உலகமயமா தலின் ஊடாக எட்ட நினைக்கும் இவ்வேளையில் பெண்ணியமும் அது சார்ந்த இலக்கியமும் அதற்குப் பலியாகிவிடக்கூடாது. எமது தேசத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு எமது பாரம்பரிய அம்சங்களை முற்று முழுதாகத் தூக்கி எறியாமல், பெண்ணுக்குச் சார்பான அல்லது சமத்து வமான அம்சங்களை உள்ளடக்கலாமே!
இன்று மேலைத்தேச மேலாதிக்கமானது பால்நிலை பற்றிய நமது எல்லை களையும் அணுகுமுறைகளையும் தகர்க்கத் தொடங்கியுள்ள வேளையில் நாம் விழிப்புடனும் சுயசிந்தனையுடனும் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆண் ஆதிக்கச் சமூகத்தால் செய்யப்பட்ட கட்டுடமை

களை நிலைமாற்றம் செய்வதற்கு முற்படும்போது, நிதானமாகவும் ஏற்புடமை, நிஜ சமத்துவம் என்பன பங்கமடையாமலும் நாம் எமது கலாசார விழுமி யங்கள், மத நம்பிக்கைகள், பாரம்பரியங்கள் என்பவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து பெண்ணிய முன்னெடுப்பை முன்கொண்டு செல்லவேண்டியமை காலத்தின் தேவையாகும். ஆணின் ஆதிக்கத்தை நிலையுறுத்தும் வகை யில் தொடரும் கலை இலக்கிய உருவாக்கங்கள் உள்ளிட்ட பிற மின்னியல் தொடர்பாடல் அம்சங்களை வென்றெடுப்பதும் இன்றைய பெண்ணியவாதி களுக்குச் சவாலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. மந்த நிலையிலிருந்து மீட்டெடுத்த பின்நவீனத்துவம் இன்று எல்லைதாண்டி எதிரலைகளை உருவாக்கிவிடுமோ என்ற ஐயப்பாட்டுடன் அஞ்சிநிற்கும் இவ்வேளையில் கீழைத்தேய பெண்ணிய செயற்றிட்டம் ஒன்று தோற்றம் கொள்ளுதல் அவசியமாகிறது.
இன்று மேலைத்தேசத்தில் அதிகரித்துவரும் விவாகரத்தும், சேர்ந்து வாழ்தலும், சமபாலுறவு இணைவும் எம்மையும் விழுங்கிவிடாமல் இருத்தல் விருப்பம் கொள்ளத்தக்கது. இவ்வாறான நடவடிக்கைகள் மேன்மையுறா வண்ணம் தீர்வுகளை நோக்கிய நகர்வுகள் இருத்தல் வேண்டும். தற்போ துள்ள உலகத்து வாழ்வியல் நகர்வுகளில் குடும்ப அலகை நிராகரித்தல் என்பது பல பின்னடைவுகளையும் எதிர்பாராத பின் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியவை என்பதும் மனம்கொள்ளத்தக்கது.
மேலைத்தேசத்தில் அறிமுகமாகிவரும் பொறியுடல் நுட்பங்கள் பால் நிலைக் கட்டுமானங்களைத் தகர்க்கும் வல்லமை பெற்றுள்ளதாக கருதப் படுகின்ற போதிலும் இது தொடர்பான சாத்தியப்பாடுகள் பற்றி பொறுத் திருந்து தான் பார்க்க வேண்டும். பின்னைய மனிதத்துவ நவீனத்துவம் மேலாண்மை கொண்டெழும் மேலைத்தேய இலக்கியப் போக்கும் எமக்கு எந்தளவில் ஏற்புடையது என்பது பற்றி நாம் சிந்தித்தல் நன்று ம
எழுத்தாளனுக்குப் புலவர்மணியின் வெண்பா
எட்டுமட் டும்பாயும் ஏவுகணை இவ்வுலகில் எட்டாத தூரம் ஏகியே - பட்டுருவிப் | பாயுமே எழுதுகோல்; பாவிப்போம் நாமதனை
நேயக் கரம்பிடித்து நின்று.
- புலவர்மனி ஒர.பெரியதம்பிப்பிள்ளை -
5இ
ճիզմ 200ծ

Page 21
கதவு திறந்து, சடங்குகள் நடந்தன. கோயில் பறைச்சத்தம் கனகம்மாவின் காதிலும் கேட்டது. அவ்வளவுதான் பக்திப் பரவசத்தோடு
"அம்மாளே தாயே! என் பிள்ளையை இந்த முறையாவது ஓ-எல் பரீட்சையில்
LITEILIȘTII SIIIDI, வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட
என் கணவனுக்கு
'அரியசோட்டு வேலை கிடைக்க
அருள் செய்தாயே!
எனக்கிருக்கும்
நெஞ்சுவலியை நிறுத்தி,
சந்தோசமாய் வாழ வழிகாட்டம்மா”
கனகம்மா கண்ணிர்விட்டபடி பெரிய வீட்டுக்குள் நின்று கதறினாள்.
அப்போது பார்த்து அம்மண் கோயில்காரர்கள் சடங்குக்காசு கேட்டு தெருவாசலில் வந்து நின்று கூடப்பிட்டார்கள்.
"சாப்பாட்டுக்கு வழியில்லாம
சனங்களெல்லாம் தவிக்குதுகள் அதுக்குள்ள இவரங்களுக்கு அம்மனும், சடங்கும்."
பணம் கேட்டு வந்தவர்கள் திரும்பிப் போகும்வரை கனகம்மா கதவைத்தாளிட்டுக்கொண்டு சத்தம் போடாமல் வீட்டுக்குள்ளேயே இருந்தாள்.
 
 

திறனாய்வு, விமர்சனம் ஆகிய இரு பதங்களும் ஒன்றையே கருதுகின்றன. விமர்சனம் என்பது வடமொழிச் சொல். திறனாய்வு என்பது தமிழ் மொழிச் சொல். இதனை இரண்டு கருத்துக்களைச் சொல் லும் பதங்களென சிலர் குறிப்பிடுவதுண்டு. அது தவறு. இந்நிலையில் ஏதாவதொரு சொல்லைப் பயன்படுத்துவது நல்லது. இந்நிலையில் தமிழ் மொழிச் சொல்லான திறனாய்வு என்பதையே நாம் பயன்படுத் துவது நல்லது.
திறனாய்வு என்பது இது இப்படி இருக் கிறது. இப்படி இருப்பதற்கு இதுதான் கார ணம். இது இப்படி இருந்திருக்கலாம். அல்லது இப்படி இருக்கக்கூடாது எனக் கூறுகிறது ஆய்வும் அபிப்பிராயமும் சேர்ந் தது தான் திறனாய்வு எனச் சுருக்கமாகக் கூறலாம். திறனாய்வின்வரைவிலக்கணம் கலை இலக்கியங்களைப் பகுத்தாராய்ந்து அவற்றின் தன்மைகளை மதிப்பிட்டு தீர் மானிக்கின்ற ஒரு கலை அல்லது செயற் பாடு என்று கூறப்படுகின்றது.
திறனாய்வு என்பது கலையா? விஞ் ஞானமா? என்ற கேள்வியும் அடிக்கடி எழுகின்றது. "விஞ்ஞானம் என்பது வாய்ப்பாட்டு மட்டைகளும் யாந்திரிகமான விதிகளும் சூத்திரங்களுமே என்று யாரும்
 ைசில குறிப்பூதிகள்
ாநபார்த்திபன்ா
கருதினால் திறனாய்வு கலை யாக இருப்பது நல்லது மாறாக முற்றிலும் உணர்வு சார்ந்த எந்தவிதமான பகுப்பாய்வுக் கும் இடமளியாததாக இருப் பதுகலை என்றால் திறனாய்வு விஞ்ஞானமாக இருப்பது நல் லது' என்று கூறுகிறார் பேரா சிரியர் சி.சிவசேகரம்.
"திறனாய்வின் பணிகளில் ஒரு படைப்பின் தன்மையை அடையாளம் காண்பது முக் கியமானது ஒரு படைப்பாளி தன் படைப்பின் மூலம் கூற முனைவது என்ன? அதை அவர் எவ்வளவு நேர்த்தியாகக் கூறுகின்றார்? என்பவற்றை அட்ையாளம் காண்பதற்கான தேவை மிகவும் இருக்கிறது. இதுவே திறனாய்வு எனப்படு கின்றது. திறனாய்வு இலக்கி யத்தின் வரைகோடுகளைத் தாண்டி இன்று புதிய எல் லைகளைத் தொட்டிருக்கின் றது" என்று பேராசிரியர் திசுநடராசன் குறிப்பிடுகின்றார்.

Page 22
மேற்குறிப்பிட்ட இலக்கியத்தின் வரை கோடுகளைத் தாண்டி, புதிய எல்லைக ளைத் தொட்டுக்கொண்டிருக்கின்ற போதும் ஆக்க இலக்கிய கர்த்தாக்களுக்கும் திற னாய்வாளர்களுக்கும் பொருந்திப் போவ தில்லை. திறனாய்வென்பது இலக்கியத் தைப் புரிதலும் புரிய வைத்தலும் ஆகிய நோக்கங்களை இலட்சியமாகக் கொண் டதும், இலக்கியத்திற்கும் வாசகனுக்கும் உள்ள உறவுகளை அர்த்தமாக்குவதும், அதனை வளர்த்தெடுப்பதும், படிப்பவருக் குப் பல்வேறு விளக்கங்களைக் கொடுப் பதும் படைப்பாளியையும் தொடர்ந்து வரும் படைப்புலகையும் செழுமைப்படுத் துவதுமாகிய இன்னோரன்ன இலக்குகளை நோக்கிப் பயணப்படுகிறது.
திறனாய்வாளன்'ஓடச் சொல்லிக் கொடுக்கிற நொண்டி’ என்று எழுத்தாளர்க ளால் எள்ளி நகையாடப்படுகிறான். ஒரு சில எழுத்தாளர்கள் இவ்வாறு குறை கண்டு பிடித்துப் புகழ் வாங்கும் திறனாய்வாள ரைப் பார்த்து நீங்கள் ஓர் ஆக்க இலக்கி யத்தைப் படைத்துக் காட்டுங்கள் என்று சவால் விட்ட நிகழ்வுகளும் உண்டு. இந்தச் சவால்களுக்குப் பயப்படுவதால் "தேவதை கள் கால் பதிக்க அஞ்சும் இடம்' என்று பேராசிரியர் சி.சிவசேகரம் குறிப்பிடுகிறார்.
'ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்ற நிலையே எழுத்தாளனுக்கும் திறனாய் வாளனுக்கும் உள்ள இழுபறி சில திறனாய் வாளர்கள், திறனாய்வு என்பது முதுகு
சொறியும் வேலை என்றோ இல்லை முட்டையில் மயிர் பிடுங்கும் வேலை என்றோ கருதுவதால் இந்தப் பக்கம் தலைவைப்பதுமில்லை. ஓர் எழுத்தாளன் எவ்வளவோ கஷ்டப்பட்டு எழுதி (புத்தகம் =யாரோ செய்த தவத்தினால் நாங்கள் பெற்ற வரம்) அத னைப் பணச் சடங்குபோல் வெளியீடு செய்து திறனாய் வாளனிடம் குட்டு வாங்கு வதா? எனவே நலனோம்பல் செய்தால் போதும் என்று இருந்து விடுகிறார்கள். இது வும் தவறானது.
பேராசிரியர் திசுநடராசன் "இலக்கியத்தை வளர்ப்பதில் திறனாய்வாளனுக்கு முக்கிய பங்குண்டு” எனக் குறிப்பிட்டு “வளர்க்கிறது என்றால் முலைப் பாலூட்டி சேயை வளர்க்கும் தாய் போல அல்ல, நெற்பயிர் வளர்கிறது. நெல் - நாற்று - பயிர் - நெற்கதிர் எல்லாம் படைப்பாளி தான். படைப்புக் கள்தான். ஆனால் களையைக் களைய வேண்டாமா? நல்ல உரம் வேண்டாமா? வரப்புயர நெல்லுயரும் திறனாய்வு ஒரு இலக்கியச் சூழலை உருவாக் குகின்றது. உருவாக்கப் பாடு படுகின்றது ஏற்புடைய அந்தச்

சூழலில் நல்ல படைப்பிலக்கியம் வளர் கிறது” என்று கூறுகிறார்.
ஆனால், ஏ.ஆர்சோன்ஸ் "திறனாய்வு ஓர் எல்லையில் வெறுமனே புத்தக மதிப் புரையாகவும் மறு எல்லையில் புரிந்து கொள்ள முடியாத கடுஞ் சிக்கலுடையதா கவும் இடைப்பட்ட நிலையில் வெறும் குழப்பமாகவும் அமைந்து கிடக்கின்றது” என்று கூறுகிறார். இதன் விளக்கமானது வாழ்க்கையைப் பற்றிய பார்வை ஒவ் வொரு விதமாக இருக்கிறது. அதுவும் தொழிற் சமூகத்தில், இயந்திர வாழ்க்கை யில், பணப் பொருளாதாரத்தில் ஒருவ ருக்கே பல விதமாகவும் என்றுமில்லாத அளவிற்குக் குழப்பமாகவும் இருக்கிறது. இந்த நிலைமைகள் வாழ்க்கையிலிருந்து தோன்றும் இலக்கியத்திலும் அவ்விலக்கி யத்திலிருந்து தோன்றும் திறனாய்விலும் காணக்கூடியதாயிருக்கின்றது. எனவே திற னாய்வை ஒரு வரையறைக்குள் பிடிப்ப தும் சிக்கலாக இருக்கின்றது.
"ஒருவர் தன்னைத் திறனாய்வாளராக நிறுவிக் கொள்ளுதல் என்பது மதிப்புக்க ளைக் கணித்துத் தீர்ப்புக் கூறும் நீதிபதி யாகத் தன்னை உருவாக்கிக் கொள்ளுதல் ஆகும்” என்கிறார் ஐஏரிச்சர்ட் இந்நிலை யில் ஒரு பக்கம் திறனாய்வாளர் தன்னை இதயத்தாலும் அறிவாலும் தகுதிப்படுத்திக் கொள்ளக் கடுமையாக முயற்சிக்க வேண் டியிருக்கிறது; மறுபக்கம் நடைமுறை வாழ் வில் கடுமையான எதிர்ப்புக்களையும் இடையூறுகளையும் எதிர்கொள்ள வேண்
டியிருக்கிறது” என்கிறார் முனைவர்.க.பஞ்சாங்கம்.
உலகிலுள்ள பல எழுத் தாளர்களின் பொதுவான கருத்து திறனாய்வாளருக்கு எதிராகத்தான் இருக்கிறது. அதனாற்தான் வல்லிக்கண் ணன் என்ற எழுத்தாளரும் திறனாய்வாளருமான இவ ரின் கூற்று இவ்வாறு அமை கின்றது. “திறனாய்வு என்பது எதிர்ப்புக்களையும் ஏச்சுக்க ளையுமே அதிகம் பெற்றுத் தரக்கூடிய விவகாரம். எதை யும் தாங்கிக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர் களே திறனாய்வுத் துறையில் திறமையாகச் செயற்பட முடியும்” என்று கூறலாம். மேலும், “பொதுவாக, திற னாய்வாளர் என்பவர் குற் றமே காண்கிற ஓர் அறிவியல் துறையின் மற்றொரு பெயர் தான் என்ற கருத்து படைப்பா ளிகளின் நடுவே பரவலாக இருப்பதாக”நார்த்தராப்பரை என்பவர் சுட்டிக்காட்டுகிறார்.
"நெற்றிக் கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே என்று கூறிச் சாம்பலாகிய திறனாய்வாளரைப் பற்றிப் பெருமையாகக் கூறி நாங்கள்

Page 23
நக்கீரன் பரம்பரையல்லோ என்று மார்தட்டு வோரைப் பாரக்கிறோம். மாறாக பேராசிரியர் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோ ருக்கு எழுத்தாளர்களால் கொடுக்கப்பட்ட நெருக்கடி நிலைமைகள், தூற்றுதல்கள் என்பவற்றையும் அறிகிறோம். (காய்த்த மரங்கள் கல்லெறி வாங்குதல் என்போரும்
உண்டு).
குமரித்துறைவன் என்ற எழுத்தாளர்
திறனாய்வு - திறனாய்வாளர் என்ற தலைப்
பில் எழுதிய கவிதை ஒன்று பின்வருமாறு
காண்படுகிறது.
"வேலைக்காரியைக் குறை
சொல்லி மாமியார் அவல் இடிக்க உமி ஊதி ருசி பார்த்து ருசி பார்க்க உமி ஊதி எஞ்சியத உரலும் உலக்கையுமே”
மேலும் சிற்பி என்ற கவிஞர் ஒரு படி மேலே சென்று எழுதியுள்ளதைப் பார்ப்போம்.
அதோ வாரும் பிள்ளாய் திறனாய்வாளரே
எண்னை நானே சிதையில் ஏற்றி எருவிட்டு மூடி மூணுதரம் சுற்றிவந்தது நெருப்பு மூட்டி எரித்துப் பார்த்து முடித்தாச்சு போடாபோ! உன்
ಕ್ಲಿಪ್ಸ್
நமத்துப்போன தீக்குச்சிகளை வெயிலில் காயப்போடு வீணையை வெட்டி விறகாக்கு விரலை நறுக்கிக் குழம்பு வை இதயத்தை வற்றல் ஆக்கு ஊரைக் கடப்பிட்டு விருந்த வை! ஒருத்தரும் வராவிட்டால் பந்திக்கு நீயே முந்து
இவ்வாறு படைப்பாள னுக்கும் திறனாய்வாளனுக் " கும் இடையே எதிர் நிலைப் பாடுகள் தோன்றுவதற்குக் காரணம் மனிதனுக்குள் இயங்கும் நான் என்ற உணர்வு தான். இதுபற்றி நார்த்தராப்பரை கூறுவதைப் பார்ப்போம். "வெளிப்பட்ட கவிதையானது அந்தக் கவி ஞனுக்கென்றே உரித்தான தனிப்பட்ட நினைவுகளில் இருந்தும், அவனை வெளிப் படுத்திக் கொள்ள முயலுகிற அவனது ஆசைகளில் இருந் தும் அவனுடைய நான் என் னும் முனைப்பிற்கும் ஊட்டச் சத்தளிக்கும் அனைத்து நரம்புக் குழாய்களில் இருந் தும் சுருக்கமாக அனைத்துக் தொப்பூழ்க் கொடிகளிலிருந் தும் விடுபடுவதற்கு அலறித்

துடிக்கிறது. நல்ல திறனாய்வாளன் எந்த இடத் தில் கவிஞன் கை கழுவி விடப்பட்டானோ அந்த இடத்தில் நின்று கவிதையைத் தன்னு டையதாக ஏற்றுக்கொள்கிறான்” என்கிறார்.
இதனையே ரவீந்திரநாத் தாகூரும் 'படைப்பவன் படைப்பிலிருந்து விடுதலை பெற்ற உணர்வோடு விளங்க வேண்டும் န္တိ၊ தன் எழுத்து, தன் படைப்பு என்று உரிமை கொண்டாட உண்மையான இலக் கிய உலகில் இல்லை என்றும் அம்பை வேக மாக அனுப்புவதற்கு முன்பு வில்லானது அம்பிடம் முணுமுணுக்கிறது. உன்னை விடு தலை செய்வதில் தான் எனது விடுதலை அடங்கிக்கிடக்கிறது. தாகூரின் இந்த உவமை இலக்கிய உலகு எத்தகைய மேன்மையான தளத்தில் இயங்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
ஆனால் இன்றைய இலக்கிய உலகு அவ்வாறில்லை. எல்லாவற்றையும் பணம் தரும் சந்தைப் பொருளாகப் பார்க்கும் இன் றைய வணிகப் பண்பாட்டில் இத்தகைய தளங்கள் அருகிவிட்டன. உயர்ந்த ஒரு தளத்தில் இயங்கும் போது தான் திறனாய் வும் இலக்கியமும் தங்களை மேலும் மேலும் செழுமைப்படுத்திக்கொள்ள முடியும் உயர்ந்த வினாக்கள் இல்லாமல் உயர்ந்த விடைக ளும் இல்லை. அதுபோல் உயர்ந்த விடை கள் இல்லாமல் உயர்ந்த வினாக்களும் இல்லை. இந்த உறவை உள்வாங்கிக் கொண்டு செயற்பட்டால் இலக்கிய உலகம் உயரும் என முனைவர்கபஞ்சாங்கம் குறிப் பிடுகின்றார்.
జాజి,
மேற்கூறிய கருத்தைப் படைப்பாளனும் திறனாய்வா எனும் புரிந்துகொண்டு செயற் படும் சுமுகநிலை தோன்ற வேண்டும். பட்டினத்தார் கூறியது போல்
“எட்டுத்திக்கும்பதினறுகோணமும்
முட்டித்ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டி தம் கக்கத்தில் வைப்பர். கருத்தில் வையர்'
யினரும் கருத்திற்கொள்ளாத நிலை இரு அணியினரையும் இரு துருவங்களக்கியுள்ளன. இது மாற வேண்டும்.
எச்.எச்.அச்குயித் "அறி வார்ந்த உலகில் படைப்பா ளர் ஒருவர்; அதனைத் திற னாய்வு செய்பவர் மற்றொரு வர் என்ற வேலைப் பிரி வினை எதுவுமே கிடையாது" என்கிறார். பிளேட்டோ, பிரான்சிஸ் பேக்கன் முதலி யோர் ஒரே நேரத்தில் சிறந்த படைப்பாளிகளாகவும் நல்ல திறனாய்வாளர்களாகவும் விளங்கினர் என்பது படைப் பாளிகளினதும் திறனாய்வா ௗர்களினதும் ஒருமித்த கருத் தாகும் திறனாய்வின் ஆய்தல்

Page 24
என்ற அம்சம் ஆக்கலின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியே அதன் தொகுத்தல் அம்சத்தில் அது படைத்தலாகும்' என்று திறனாய்வுச் செயலைப் படைப்பாக்கச் செயலாகக் கருதி பென்கான்சன் கருத்துரைக்கின்றார்.
இலக்கியத்தைப் பற்றிய நல்ல திறனாய் வுக் கண்ணோட்டம் இல்லை என்றால் நல்ல இலக்கியம் படைக்க முடியாது உணர்வில் படைப்பாற்றல் இல்லை என்றால் நல்ல திற னாய்வாளன் உருவாக முடியாது ரெனேவெல் லக் "இலக்கியக் கொள்கையும் திறனாய் வும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பன: ஒன் றின் துணை இன்னொன்றிற்கு வேண்டப் படுகிறது. உண்மையில் இரண்டிற்கும் வேறு பாடு மிகவும் குறைவு” என்று கூறுகின்றார். மேலை நாடுகளில் திறனாய்வு என்பது அரிஸ்ரோட்டிலிலிருந்து ஆரம்பிக்கின்றது. அங்கே திறனாய்வென்பது இலக்கியக் கொள்கையையும் சேர்த்துப் பேசுவதாகவே கருதப்படுகின்றது.
"அதீத தனிமனித வாதத்தாலும் அர்த்த மற்ற கோஷ்டி மனப்பான்மைகளினாலும் வலுவிழந்து கிடக்கும் இன்றைய தமிழிலக் கியத் திறனாய்வு குறைந்தபட்சமான பொதுப் பண்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் எழுத்தாளருக்கு மட்டுமன்றி சமுதாயம் முழு வதற்குமே பயன்தரும் ஓர் ஆய்வறிவுத் துறை யாக அமையுமென்பதில் ஐயமில்லை' என்று இலக்கியமும் திறனாய்வும் என்ற நூலில் பேராசிரியர் க.கைலாசபதி குறிப்பிடுகிறார். இந்தச் சமுதாயத்திற்குப் பயன்தரும் என்ற எண்ணமே இன்று எழுத்தாளருக்கும்
திறனாய்வாளருக்கும் முக்கிய அம்சமாக இருக்க வேண் டும், சமுதாயத்திற்குப் பயன் படும் வகையில் ஓர் எழுத் தாக்கத்தைப் படைக்காத போது திறனாய்வாளன் சமூக அக்கறையோடு திற னாய்வு செய்து பாலையும் தண்ணீரையும் பிரித்தெடுக் கும் அன்னம் போல தொழிற் பட வேண்டும். தரமானதை இனங்காட்ட வேண்டும். இத னைத் தான் எழுத்தாளன் உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையேல் வாசகன் புறந்தள்ளி விட வேண்டும். வாசகனுக்கு இந்த ஆற்றலைத் திறனாய் வாளன் வழங்க வேண்டும்.
"இலக்கியம் என்பது வெறும் கருத்துக் கோவை யன்று. அது அழகுணர்ச்சி யுடன் சம்பந்தப்பட்டது. கருத் தாழமற்ற ஆனால் கலையழ குள்ள ஓர் ஆக்கம் இலக்கி யமாகக் கருதப்படலாம் ஆனால் கலையழகற்ற கருத் தாழமுள்ள ஆக்கம் இலக் கியமாகாது' என பேராசி ரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடு கின்றார். வெறும் பிரசாரமான இலக்கியங்களை உருவாக் காது அழகியலை கவனத்திற்

கொள்ளும்படி இவர் கூறுவது இன்று அவ யமானது. பிரச்சினையை, துன்பங்களைக் கூறி இலக்கியத்தின் அழகியலை மறந்து Iற்கின்ற ஆக்கங்கள் திறனாய்வுக்குட் படுத்தி அழகியல் உணர்வை வெளிப்படுத்த திறனாய்வாளன் வாசகனுக்கு உதவுகிறான். இது அழகியல் பார்வையை எழுத்தாள
றுக்கு ஊட்டுகிறது.
முடிவாக, "தேரற்க யாரையும் தேராது
தேர்ந்து தெளிவதனாலேயே பொருண்மையின் மாட்சியை சிறப்பை நாம் பளிச்சிட்டுக் காட்ட முடியும் உணர்ந்து கொள்ளவும் முடியும் என்பத னால் நல்ல எழுத்தாக்கத் தைத் தேர்ந்தெடுக்க சிறந்த திறனாய்வு அவசியம் என
உணருவோம்.
வயதாகிவிட்டது.
எனது புன்னகை தோல்வியைத் தடுவிக் கொண்டது
எனது வேட்கை மரணித்து விட்டது
ஓடுதுளி உயிரின் புள்ளியைத் தேடி எனது காலங்கள்
வாழ்வின் வசந்தங்களாக
கிழக்கின் சூரியன் வண்ணத்திகளின் ஒத்திகை பூக்களின் இதழ்கள்
வயல்வெளிகளின் வாடை என் காதலியின் அழைப்பு இற்றுப்போய் விட.
|
எல்.வளிம் அக்ரம்
சோகப்பிரளயம் கடுவுண்ைடு பினவாடை வாசலில் விச நிதர்சனங்களை ஆக்ரோச உணர்வுகள் உணவாக்கிக் கொள்ள எனது மண் காவு கொள்ளப்படுகிறது சுனாமியைப் போல.

Page 25
நம்பிக்கை வையடா மனிதா - உன் நேர்மையில் - நீதியில் நம்பிக்கை வையடா மனிதா நம்பிக்கை வையடா வை!
நம்பிக்கை வையடா மனிதா - உன் வாய்மையில் - துாய்மையில் நம்பிக்கை வையடா மனிதா நம்பிக்கை வையடா வைர
நம்பிக்கை வையடா மனிதா - உன் சொல்லிலும் - செயலிலும் நம்பிக்கை வையடா மனிதா நம்பிக்கை வையடா வை!
நம்பிக்கை வையடா மனிதா - உன் நல்லற வாழ்வில் - நித்தம் நம்பிக்கை வையடா மனிதா நம்பிக்கை வையடா வை!
நம்பிக்கை வையடா மனிதா - நின் சேவையில் - தேவையில் நம்பிக்கை வையடா மனிதா நம்பிக்கை வையடாவை
நம்பிக்கை வையடா மனிதா - சுய புத்தியில் - பக்தியில் நம்பிக்கை வையடா மனிதா நம்பிக்கை வையடா வை!
நம்பிக்கை வையடா மனிதா - திரு வள்ளுவர் காட்டிய பாதையில் நம்பிக்கை வையடா மனிதா நம்பிக்கை வையடா வை
|இந்தி
&mኒmrf] ጛlùùù
 

: மாமாங்கேஸ்வரப் பிள்ளையர்
மான்மியம்
மாமாங்கேஸ்வரம் பற்றிய விரிவான ஆய்வு நூல்
தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே சமயத்தில் வெளியிடு மாமாங்கேஸ்வரர் ஆலய உற்சவ நிறைவு நாளில் இடம்பெறும் கிழக்கிழங்கையின் புகழ்பெற்ற தலமான மாமாங் கேஸ்வரம் பற்றிய ஒரு விரிவான நூல் இதுவரை வெளிவரவில்லை. ஏற்கனவே வெளிவந்த நூல்கள் வெறும் அறிமுக நூல்களக மட்டுமே அமைந்துள்ளன. இவை - | ழரீ மாமாங்க விநாயகர் பதிகம் (வித்துவான் - அசரவணமுத்தன்) 2) மட்டுநகர் பூர் மாமாங்கப் பிள்ளையார் ஆலய வரலாறு
தநாகையா, ஆசிரியர் - ஆடி 1995)
இவை தவிர அவ்வப்போது மாமாங்கம் பற்றிய கட்டுரைகள் சிற்சல நூல்களில் வெளிவந்துள்ளன. அவை - (1) மட்டக்களப்பு சைவத் திருக்கோயில்கள் - தொகுப்பாசிரியர், வித்துவான்,
பண்டிதர் வி.சி.கந்தையா (2) மட்டக்களப்புத் தமிழகம் - வித்துவான் பண்டிதர்.வி.சி.கந்தையா
இத்தகைய பின்னணியில் மாமாங்கேஸ்வரத்தைப் பற்றிய ஒரு விரிவான நூலை, கனடாவில் வதியும் இதங்கராசா (முன்னாள் வங்கி அதிகாரி) எழுதி யுள்ளார். இந்நூல் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. தமிழில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் மான்மியம்’ (பக்.192 GIRI6.Jth, egládfajjai Mattakalappu, Mamangeswara Pillayar Manmium” (பக்.94) எனவும், நூற்பெயர் அமைந்துள்ளது. தமிழில் சுமார் 50 அத்தியா பங்களும், ஆங்கிலத்தில் சுமார் 40 அத்தியாயங்களும் இடம் பெறுகின்றன.

Page 26
இந்நூலை ஆக்குவதற்காக, நூலாசிரியர் இதங்கராசா மிகுந்த பிரயாசை எடுத்துள்ளார் என்பதும், பல நூல்களை ஆய்வு செய்து தகவல்களைச் சேர்த்துள்ளார் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றன. ஏராளமான வர்ணப் புகைப்படங்கள் இந்நூல்களில் நிறைந்துள்ளன. மாமாங்கேஸ்வரத்தின் தலபுராணம் எனக் கொள்ளத்தக்க இந்நூல்கள் அழகிய வடிவமைப்பில் அமைந்துள்ளதும் குறிப்பீடத்தக்கது.
இந்நூல்கள் எதிர்வரும் மாமாங்கேஸ்வரர் உற்சவத்தின் போது நிறைவு நாள் அன்று (30.07.2008) ஆலய முன்றலில், ஆலயப் பரிபாலன சபையால் வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.
நூலாசிரியர் இளையதம்பி தங்கராசா (4000 கிங்றோட் ஒன்ரேறியோ சிங்சிற்றி L7B 1K4 கனடா) அவர்கள் மட்டுநகர் நாவற்குடாவில் 08.04.1932 இல் பிறந்தவர். தந்தையார் இளையதம்பி, தாயார் பிள்ளையம்மா மட்/சிவானந்தா இந்: வித்தியாலயத்தில் ஆங்கிலத்தில் கல்வி கற்றவர் இலங்கை |மத்திய வங்கியில் நியமனம் பெற்று அங்கு பல பதவி
கனடாவில் இலக்கிய கலாநிதி க.தா.செல்வராச இது கோபால், வித்துவான் க.செபரெத்தினம் முதலியோரு டன் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றி வருகின்றார். பல சிறப்பு மலர்களில் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
மாமாங்கப் பிள்ளையார் மேல் சிறுவயது முதல் பக்தி கொண்ட இவர் அவ்வப்போது வெளிவரும் சில செய்திகளைக் கருத்திற் கொண்டு இவற்றை ஆராய்ந்து தெளிவுபெற எண்ணினார். அந்த ஆராய்ச்சி பல நூல்களையும் தேடிப்படித்து பல்வேறு தகவல்களைச் சேகரிக்க உதவியது. பல சந்தர்ப்பங் களில் மாமாங்கப் பிள்ளையாரே அவரை வழிநடாத்தியுள்ளார்.
தமிழ் நூல் பூர்த்தியாகும். சமயத்தில் இந்நூலை ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் என எண்ணினார். அதன் பயனாக இன்று மட்/மாமாங் கேஸ்வரப் பிள்ளையார் மான்மியம் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரு சேர வெளிவந்துள்ளது. நூல் வெளியிட்டு விழா நடாத்த வேண்டிய தருணத்தில் மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் வருடாந்த உற்சவம் வந்து சேர்ந்தது. இந்த உற்சவத்திலேயே நூல் வெளியிடப்பட வேண்டும் என்பது இறைவன் திருக் குறிப்பு என்றே நாம் கொள்ள வேண்டும்.
- அன்புமணி.
 
 

தமிழர் வரலாற்றில்
--மு~ருகு
தமிழ்” எனும் சொல்
- வாகரைவாணன் -
தமிழ் என்னும் சொல் மிகவும் பழமை வாய்ந்தது. மூவின (வல்லினம், மெல்லினம், இடையினம்) எழுத்துக்களாலான இச்சொல்லின் தொன்மையைக் கிமு 3ம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகக் கொள்ளப்படும் தொல்காப்பியம் எனும் இலக்கண நூலில் இடம்பெற்றுள்ள தமிழென் கிளவியும் அதனோரற்றே" (எழுத்ததிகாரம்) என்னும் சூத்திரமும் முற்காலச் சங்க இலக்கியங்களில் முதன்மைபெற்றுத் திகழும் புறநானூற்றின் (19)
臀 இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கைத்
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து.
எனும் பாடல் அடியும், பிற்காலச் சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலின் (6)
தமிழ் வையைத் தண்ணம் புனல்’ எனும் பாடல் அடியும் காட்டும். இந்நூல்கள் போன்று சிலப்பதிகாரம், மணிமே கலை (கிபி 2ம் நூற்றாண்டு) எனும் இரட்டைக் காப்பியங்களில் காணப்படும்
இமிழ் கடல் வரைப்பின் தமிழகம் அறியத் தமிழ் முழுது அறிந்ததன்மையரின் ஆகி.
(அரங்கேற்றுக்காதை)
"தண்டமிழ் விளைஞர்தம்மொடும் கூடி. (சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)
எனும் கூற்றுக்களும் தமிழ் எனும் சொல்லின் பழமைக்குத் தக்க சான்றாக அமையும்.

Page 27
இத்துணை பழமையும் இளமையும் மிக்க தமிழ் எனும் சொல் திராவிட எனும் சமஸ்கிருத சொல்லிலிருந்து பிறந்ததென்பார் மொழியியல் egfig5J, 3, Tsü(90lsiusű (CALD WELL) egy5.j56ít. A COMPARATIVE GRAMMER OF THEDRAVIDIANLANGUAGES sigh guns) 1856i எழுதி வெளியிட்ட இவ்வறிஞரின் மேற்படி கருத்தோடு உடன்படாத மொழியில் அறிஞர்களில் ஒருவரான டாக்டர். மு.வரதராசன் அவர்கள் தமிழ் எனும் சொல்லிலிருந்தே 'திராவிட' என்னும் சொல் தோன்றியதென்பர். இதனை அவர் தமிழ், தமிள், த்ரமிள, த்ரமிட, திரபிட, திராவிட (தமிழ் இலக்கிய வரலாறு பக்-2) என வரிசைப்படுத்திக் காட்டுவார். மொழியியல் அறிஞர் முவவின் இந்தக் கருத்தினையே பாக்டர் சியாலகப்பிரமணியன், பாக்டர்சஅகத்தியலிங்கம் ஆகியோரும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திராவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்தே தமிழ் எனும் சொல் பிறந்ததென்று கால்டுவெல் கருத்துத் தெரிவித்திருப்பினும், பழைய மலையாள இலக்கியங்களில் DRAMILA என்னும் சொல்லும், பாவி மொழியில் DAMILO என்னும் சொல்லும் காணப்படுகின்றன. (பாக்டர்சஅகத்தியலிங்கத்தின் திராவிட மொழிகள் 1-பக்-23) என்று அவர் கூறுவதை கூர்ந்து கவனிப்பவர் களுக்கு தமிழ் எனும் சொல்லின் நிழல் அச்சொற்களில் (DRAMILA, DAMILO) படிவதைக் காணாமல் இருக்கமுடியாது.
இதுபோன்றே வரலாற்றறிஞர் S.Kசட்டர்ஜியின் (CHAITERI)ஆய்வின் படி கிமு 1500 அல்லது 1000ம் ஆண்டளவில் (திராவிடமொழிகள் 1 பக்24) கிரேக்கத்தில் வாழ்ந்த AEGEAN என்னும் இனத்தினர் TERMILA அல்லது TRAMIL என்று அழைக்கப்பட்டதாக தெரிகிறது. இச்சொல் பற்றி சட்டர்ஜி கருத்துரைக்கையில் இதற்கும் தமிழ் திராவிட என்னும் சொற்களுக்குமிடையே நெருக்கமான தொடர்பு உண்டு என்பர்.
5Tafilth ORIGIN AND THE SPREAD OF THE TAMILS என்னும் வரலாற்று நூலினை எழுதிய இராமச்சந்திர தீட்சிதர் அவர்கள் இச்சொல்லினை ஆய்ந்துரைக்கையில் இந்தியாவிலிருந்து மத்திய தரைக் கடல் நாடுகளில் ஒன்றான ASIAMINOR-ல் (இன்றைய துருக்கி) குடியேறிய

ர்களே TRAMIL என்று அறியப்பட்டதாக கூறுவர். (திராவிட மொழிகள் -பக்-101) அறிஞரின் இக்கூற்றிலிருந்து தமிழ் என்னும் இச்சொல்லின் ரிபாகவே TRAMIL என்னும் சொல்லைக் கொள்ள வேண்டியுள்ளது.
மேலும் தமிழகம் என்னும் சொல் PERIPLUS என்னும் நூலில் கிமு80) TAMIRA என்றும், பியூத்திங்கர் அட்டவணையில் DAMIRICE iறும் வழங்கும் என்பார் முனைவர் பாஇறையரசன் (தமிழர் நாகரிக லாறு பக்-12) அவர்கள். இவ்வறிஞரின் இக் கருத்து தமிழின் பழமையை
பிப்பதற்கான மற்றுமொரு ஆதாரமாகும்.
அறிஞர் சட்டர்ஜியின் திராவிட என்னும் சொல் கிபி 1ம் நூற்றாண் டிலேயே தோற்றம் பெற்றது' என்னும் கருத்தை அறிஞருலகம் ஏற்குமாயின் திராவிட என்னும் சொல்லுக்குத் தமிழ் என்னும் சொல்லே தாய் என்பது எத்தகைய தடையுமின்றி நிரூபிக்கப்பட்டுவிடும்.
ஆய்வறிஞர்கள் முன் வைத்துள்ள மேற்படி ஆதாரங்கள் தமிழின் பழமையை வெளிச்சம் போட்டுக்காட்டும் அதேவேளை தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழினத்தின் பழமையையும் உறுதிசெய்யும் சிறந்ததோர்
அடையாளமாகவே தமிழ் விளங்கக் காணலாம்.
இதற்கு இன்னுமேர் எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் ஒரு பகுதியான பலுசிஸ்தானில் மூன்று லட்சம் மக்களால் பேசப்படும் பிராகூய் என்னும் மொழி தமிழின் கிளை மொழி என்பர். (முனைவர் பாஇறையரசனின் தமிழர் நாகரிக வரலாறு) இச்சான்று, ஒரு காலம் இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழ்ந்த மையை எடுத்துக்காட்டப் போதுமானதாகும்.
புராதன இந்தியாவில் செறிந்து வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களே குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் மத்திய தரைக்கடல் நாடுகளில் குடியேறி வாழ்ந்தமைக்கு அங்கு (சைப்பிரஸ், சிரியா, பாலஸ்தீனம்) கண்டெடுக்கப்பட்ட குலங்கள், பித்தளையிலான சேவல் போன்ற பொருட்கள், ஊர்களுக்குச் சூட்டப் பட்ட தமிழ்ப் பெயர்கள் என்பன மறுக்கமுடியாத சான்றுகளாக அமையும். இந்தச் சான்றுகள் தமிழினதும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினத்தின தும் பழமையை உறுதி செய்யவல்லன என்று சொல்லவும் வேண்டுமா? பு
[...

Page 28
கலாநிதிப்பட்டங்கள் என் பதற்கு கல்வி சார்ந்ததாக, சமூகம் சார்ந்ததாக, கலை இலக்கியம் சார்ந்ததாக அமையல்ாம். இதுவரை கல்வி சார்ந்ததான கலாநிதி களைத்தான் நமக்குப் பரவ லாகத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் அது கெளரவமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று கல்விசார் சமூகத்தினை ஒரு உச்சநிலைக்கு நாம் உயர்த்திய நிலைப்பாடாகும். அதுவும் பல்கலைக்கழகம் சார்ந்ததாக இருத்தலே சிறந் தது. பலராலும் மதிக்கப் படும் அல்லது நீண்டகால சமூக வாழ்வியல் கலை, இலக் கிய சமர்ப்பித்தலின் அர்ப் பணித்தலுக்காக வழங்கினால் அது பயன்பாடாகும். ஒரு நோபல் பரிசு போல.
கலை இலக்கிய வாழ்வில் தங்களின் வாழ்வினை அர்ப்ப ணித்து ஏழையாக நோயாளி யாக மண்ணில் மாண்டுபோன எமது மாணிக்கங்களை மறத் தலின்றி, மறுத்தலின்றி ஏற் றுக் கொள்ளுகின்ற பக்குவம்
யூதியவழியில் لكنك
கலாநிதிப்
шѓц Ёič66її
இல்
கலாநிதிப் பட்டங்களுக்கு அல்லது அவ்வா றான பட்டங்களால் ஏற்பட வேண்டும்.
வி.வி. வைரமுத்து, பூந்தான் யோசப், கே.வி. நடராஜன், அ.செ.முருகானந்தன், மயிலங் கூடலூர் பிநடராஜன், டொமினிக் ஜீவா, சி.வி. வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம். ராமையா, கோகிலம் கப்பயைா, வ.அ. இராசரெத்தினம், அந கந்தசாமி, சில்லையூர் செல்வராஜன், அங்கையன், நீலாவணன், மகாகவி, கே.வி. எஸ்.வாஸ், ஈழத்து ரத்தினம், பார்வதி நாத சிவம், அன்புமணி, அகஸ்தியர், சித்தி அமர சிங்கம், பஸிர் காரியப்பர், புதுவை ரத்தின துரை, எஸ்.பொ. மு.பொ. முதளையசிங்கம், இன்னும்.இன்னும். பட்டியல் நீளும்.
மாறாக பணம் பண்ணும் நிறுவனங்கள் சில முளைத்து கலாநிதிப்பட்டங்கள் தருவதாக தாங்களே அறிவித்துவிட்டு அவர்களிடமே பணமும் கேட்டுப் பெறுகின்ற நிலைமை பல விதத்திலும் சந்தேகங்களை ஏற்படுத்தவே செய்யும், கலாநிதிப் பட்டங்கள் கலாநிதிப் பட்டம் பெற்றுக்கொள்ளும் சுயமும் கூ சந்தேகப்படும். பிறகு வாழ்வியலின், கல்விய வின் மீதான கோபங்கள் விமர்சனத்திற்கு உள்ளாகலாம்.
அண்மையில் அவுஸ்திரேலியா சென்று வந்த நண்பர் கூடச் சொன்னார் குறிப்பிட்ட ஒரு நண்பர் இந்தியா சென்று விட்டார். திரும்பி வரும் போது கலாநிதிப் பட்டத்துடன் தான் வருவார். பாவம் எத்தனை இலட்சங்களை உறிஞ்சி விட்டார்களே என்று அங்கலாய்த் துக் கொண்டார்.
 

ப்போது இலங்கையில் ருந்து உயர் கல்வி நிறு னம் ஒன்று கலாநிதிப் பட் ம் வழங்குவதாக சொல் பிக் கொள்ளுகிறார்கள்.
பராளர்கள் வருவதால் பருந் தொகைப் பணம்
கொடுத்து அந்தப்பட்டம்
வர்களினதும், இனி பெற இருப்பவர்களின தும் பட்டங்கள் மீதான சந்தேகங்கள் வலுப் பெற வாய்ப்புண்டு. கல்லூரி அல்லது நிறுவன வளர்ச்சிநிதிக்கு பணம் கேட்பது தவறில்லை. ஆனால் கலாநிதி பட்டத்திற்கென பணம் வாங்காது தகுதி வாய்ந்தவருக்கு பட்டம் கொடுப்பதற்கு ஏனையவர்களிடம் நிதி கேட்பதும் தவறில்லை. கலாநிதிப் பட்டம் கொடுப்பதற்காக ஒருவரை அவமானத்திற்குள் வாக்கக் கூடாது. எவ்விதமான பட்டம் கொடுத்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருத்தல் அவ சியம். சிந்திப்போமா?.
- இராகவன் (இலண்டன்)
மையாதது.
es.
தமிழறிவோம் பிறமொழிச் சொற்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்றவாறே இருக்கிறது.
போட்டோ" என்கிற பிறமொழிச் சொல்லை முதலில் புகைப்படம் என்றே மொழிபெயர்த்தனர். பின்பு நிழற்படம் என்றனர். இரண்டுமே பொருந்தாது. 'போட்டா'வுக்குப் புகை பகை, நிழலும் தேவையில்லை. ஒளிதான் இன்றிய
ஒளியிருந்தால்தானே உருவம் தெரியும். உருவம் தெரிந்தால்தானே அதனைப் பதிவு செய்து கொள்ள முடியும். ஒளியைப் பாய்ச்சி எடுக்கப்படும் படம் ஒளிப்படம் என்பது மிகவும் பொருந்துகிறது அல்லவா?
இனி புகைப்படம், நிழற்படம் என்கிற சொல்லாட்சிகளை ஒரம் கட்டிவிட்டு ஒளிப்படம் என்றே வழங்குவோம்.
இச்சொல்லைக் கலைக்கதிர்' என்கிற அறிவியல் இதழ்தான் முதன் முதலில் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.
- திருவிோனன்

Page 29
2 - 06 magis eaderaan
மாலைப் பொழுதினில் நின்றிளங் காலையின்
மலர்ச்சியி லேமனம் திளைக்கிறது
கோலம் அழிந்திடு வேளைமுன் கூடிய
கோலத்தி லேயுளம் களிக்கிறது
என்றோ கேட்ட இன்னிசைத் தீங்குரல்
இன்னுமொரு செவியில் ஒலிக்கிறது
என்றோ எழுதிய கவிதையை எண்ணியே இன்னும் இதயம் துடிக்கிறது
கருமுகில் மூடிடு வானிலோர் தாரகை
கவினொளி நீட்டி அழைக்கிறது
ஒருமுக மாயுளம் தீண்டியெந் நாளுமென்
உணர்வினில் வாழத் தவிக்கிறது
காலமும் துாரம் நீண்டன! வாழ்வில் முன்
கண்ட பிணைப்பின்னும் நீள்கிறது" கோலமும் குன்றிடு மாலையில் முற்பகல்
கொண்ட உறவின்னும் வாழ்கிறது

மஞ்சள் நிறப் பூக்களில் தேனெடுக்கும் ஞாபகத்தில் படிக் கொண்டிருக்கின்றன வண்டுகள்
கோவிலின் கதவிடுக்கில் கண்களை வைத்து மூலஸ்தானம் பார்த்து ypt இரக்கிறாள் - ஒரு சிறுமி
பிச்சைக்காரர்களைக்
கடந்து சென்று கச்சான் வாங்கிக் கொறிக்கும்
பசார்க் கடை முதலாளி
கோபுறத்திலிருந்து புறாக்களையும் பிரகாரத்திலிருந்து வெளவால்களையும் விரட்டியாகி விட்டது.
sD பட்டாம்பூச்சிகளின்
மாமிசமுண்ணும் கனவுகளைத் தாண்டி
களைகட்டுகிறது திருவிழா
(6 திருவிழாவுக்கு மையூவென்று
(UP
கடவுள் லீவு விண்ணப்பத்தை நிரப்பி வைத்து விட்டு சுற்றுலாச் சென்றிருக்கிறார்.
நிஜி 5 ಹf12QQರಿ

Page 30
*சிரி" கதை இது
பிரேத ஊர்வலமொன்று முன்னால் ஒரு பிரேதம் - அடுத்து இன்
னொரு பிரேதம் - அதன் பின் ஒரு நாய் - அதனையடுத்து நடுத்தர வயது ஆண் ஒருவர். அவரைச் சுற்றிச் சிலபேர் - அதன் பின் சிறிது இடைவெளிவிட்டு ஒருவர்பின் ஒருவராக வரிசையாகப் பலபேர். இப்படி யாகப் போய்க்கொண்டிருந்தது.
வழியில் எதிர்ப்பட்ட ஒருவர் ஊர்வலத்தை நன்கு அவதானித்தபின் ஊர்வலத்தின் முன்னால் நாய்க்குப்பின்னால் போய்க்கொண்டிருந்த நடுத்தர வயது ஆணிடம் கேட்டார், "முன்னால் போகிற பிரேதம் யாருடையது?”
"அது என் மனைவியினுடையது'-பதில், | "எப்படி இறந்தார்?"
"நாய் கடித்து இறந்தார்" “அடுத்தும் ஒரு பிரேதம் போகிறதே. அது யார்?” .الي "அது என் மாமியினுடையது” "அவர் எப்படி இறந்தார்?'
"அவரும் அந்த நாய் கடித்துத்தான் இறந்தார்” என தனக்கு முன்னால் போய்க்கொண்டிருந்த நாயைக் காட்டிச் சொன்னார். வழிமறித்தவர் சற்று யோசித்தபின் அவரைக் கேட்டார், “அந்த நாய் யாருடையது? "என்னுடையது' - பதில்
"அப்படியானால் அந்த நாயை எனக்கு விலைக்குத்தர முடியுமா? நான் அதை வாங்க விரும்புகின்றேன்" அதற்கு அந்த நடுத்தர வயது ஆண் தனக்குப் பின்னே இடைவெளிவிட்டு ஊர்வலத்தில் ஒருவர் பின் ஒருவராக வரிசையில் வரும் நீண்
ஊர்வலத்தைச் சுட்டிக்காட்டி “அந்த வரிசையில் வாருங்கள்" என்றார்
வழிமறித்தவரிடம். - சுதர்சன் s இந்ஜி
eyrnaf 2005
 

ள்ளி, உனைவிட்டுப் பிரிகின்ற போதிலெலாம் கிள்ளி யெடுக்கின்றாப் என்மனதை அம்மாடி! பள்ளி தொடக்கம் பணிசெய்யும் இன்று வரிை உள்ளி விருக்கின்ற உணர்ச்சிகளை நாமறிவோம். அள்ளி உனைத்துாக்கி ஆகாயம் கொண்டுசெலப் புள்ளி னினமாப்ப் படைத்திருக்கக் கூடாதா? புள்ளி மயிலே பொறுவென்றுரைக்கின்றேனர் புண்ணி லெரிவைத்தாற் புளகாங் கிதம்வருமா?
கணிணி லொழிந்துள்ள கண்ணிரையே கொட்டி உன்னி லுறைந்துள்ள உணர்ச்சிகளைக் கொட்டுகின்றாய் பெண்ணி னினமென்று பேசாதிவி வுலகெனினும் எனினிலது வந்தால் ஏளனமாய்ப் போகாதா? எண்ணி ஒரக்காள் என்பினர்னே இரு தங்கை உணர்கை நிகர்த்தோர்கள் உள்ளார்க ளென்வீட்டில். தண்ணி தவிக்கின்ற தெனக்குந்தா னானாலும் உண்ணி ரெனவூட்ட உள்ளகடன் தள்ளுவதா?
छष्टे
எஹிட்4300
முன் 3ஆட்க?
உன்னை எவருக்கும் ஒப்பிடநான் பேயனிலை என்னை உணர்ந்தவள்நீ என்னிலையும் நீயறிவாய். தென்னை இளநீரும் தீங்கீரையும் முருங்கும் திண்ன விருக்கின்ற நாள்களிலே திண்னாமல் பின்ன ரொருநாளிற் பேய்விருந்து வைக்கின்ற பெற்றி கருதிமனம் பேதலித்துப் போகுதடி எனின தவக்குறைவோ ஏனிந்தச் சோதனையோ என்னை நீகேட்டால் எவரிடம்போப் நான் கேட்க?
கி. துரைாசசிங்கம்

Page 31
அடடே இதென்ன எப்பீட்டாத்தான் இவன் தெறிப்பான் கனவதி மோட்டச் சைக்கிள்ள ஒடிப் போறான். பொஞ்சாதிக்கென்ன வகுத்துக்க நோகுதாமா? இவன் தான் இன்னம் கலியாணம் முடிக்கல்லையே ஒள்ளுப்பத்துக்க தப்பித்தன். இல்லாட்டி என்ட கத முடிஞ்சிபோயிருக்கும். புதிசா மோட்டார் சைக்கிள் வாங்கி ஒடுறெண்டாலும்
விடிேசல விரக்கு:
கிறதப் பாக்கிறல்லையா? றோட்டும் சரியில்லு, நம்மட ஊரும் சரியில்ல. டே கந்தப்பா என்னடா தலையில பெரிசாக் கட்டுப்போட்டிருக்கா? தெறிப்பான் கணபதி மோட்டர் சைக்கிள்ள "அக்சிடன்ட்பட்டனியரி என்ன? ஏறாவூரில பஸ்ஸில வரக்க எநிஞ்ச கல்லு உன்ர மண்டமில பட்டு உடஞ்சிபொமித்தரி நீயேன்பாப்பா இந்த நெருக்கடிக்குள்ள அந்தப் பக்கம் பளப்ஸில போனஐரீ?
இன உறவு, அது இதெண்டு கதைக்கிறானுகள். சமாதானமாகச் சீவிக்க வேணுமெனர்டு சண்ட புடிக்கிறானுகள். புறகு பாத்தா கல்லையும், ல்ால் லயும் தூக்கிக் கொண்டு கொடுக்குக் கட்டித்து நிக்கிறானுகள். அண்டைக்கு எவனோ ஒருவன் சொன்னான் நாமெல்லாம் புட்டும் தேங்காப்பூவும் போலபாமெண்டு. எனக்கு இந்த உவமானம் சரியாப்படல்ல. புட்ட எண்ணிப்பாத்துப் பிரிக்கிறதுக்குத்தான் தேங்காப்பூவ இடை மில நம்மட சனங்கள் போடுதுகள்
கந்தப்பா, சமாதானம் எண்டுற சாமான் உசிருக்குள் இருந்துதான் ) வரோணும் உதட்டில் இல்ல மச்சான்! சமாதானம், சமாதானமெண்டு அணிடையில இருந்து இண்டைக்கு மட்டும் சண்டதான் புடிக்கிறாங்க, அது என்டைக்கும் வரப்போறல்ல. என்னவோ எனக்குத் தெரிஞ்சது இவ்வளவுதான். என்ன நீயும் பொல்லுச் சீவிரமாதிரிக் கிடக்கு? சண்டபுடிக்கப் போப்புறயா? கம்மா உட்டுப்போட்டு உண்ட மண்டையக் கொண்டுபோய் ஆளப்பத்திரியில காட்டு. காயம் புரச்சித்தெண்டா நீயும் புள்ள குட்டிக்காரன். கண்டப்படுவா பொல்லத் தூக்கி எறிஞ்சிபோட்டுப் போடாப்பா போ! என்ர சொல்ல இப்ப எவண்டா கேக்கிறான்?
ജ്യാ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்பிற்குரிய நண்பர் கோபாலகிருஷ்ணன் அறிவது, நலம். நலந்தானே?
கடந்த தடவை நான் மட்டக்களப்பிற்கு வந்திருந்தபோது நீங்கள் ஓடோடி
வந்து சந்தித்தமை இன்னும் பசுமையான நினைவாக உள்ளது. தமிழ்நாட்டில், கடந்த டிசம்பர் மாதம் நான் காசியண்ணன் வீட்டுக்குச்
சென்றிருந்தபோது நீங்கள் மறுநாள் அங்கே வருவதாகக் கூறினார். அன்றே நான் புறப்படவேண்டியிருந்ததால் சந்திக்க முடியவில்லை. உண்மையில் கவலைப்பட்டேன்.
நேற்று, "செங்கதிர் இதழின் வீச்சு 1உம், 2 உம் கிடைத்தன. மிகவும்
நன்றி. "செங்கதிர் இல் உங்கள் முத்திரை தெரிகின்றது. சிற்றிதழ்போல இல்லாமல், தமிழகத்தின் சனரஞ்சகமான சஞ்சிகைகளைப் போல இருக்கின்றது. அமைப்பிலும் சரி, உள்ளடக்கத்திலும் சரி, அட்டைப் படங்கள், விடயங்களுக்குப் பொருத்தமான ஓவியங்கள், படங்கள் என்பவற்றிலும் சரி, மிகவும் உயர்ந்த தரம் பேணப்பட்டுள்ளது. விரித்து வாசிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
பேராசரிரியர் பேசந்திரசேகரன் அவர்கள், சட்ட பீடாதிபதி நா.செல்வக் குமாரன், சாரல் நாடன், அன்புமணி, செகுனரெத்தினம், நீ.பி.அருளா னந்தம், அந்தனி ஜீவா, பத்மா சோமகாந்தன், ஜின்னா ஷரிபுத்தீன், எழில்வேந்தன், அக்கரைச்சக்தி, செங்கதிரோன் என்றிப்படி அப்பப்பா எத்தனையோ பெரிய அறிஞர்கள், இலக்கியவாதிகளின் பங்களிப்புக்கள் இந்த இரு இதழ்களிலும் நிறைந்திருக்கின்றன! அத்துடன், கவிஞர் நீலாவணன், பேராசிரியர் சு.வித்தியானந்தன், வ.அ.இராசரெத்தினம் என்னும் மறைந்த மாமேதைகளைப் பற்றிய செய்திகள், மற்றும் வாசுகி

Page 32
குனரெத்தினம் போன்ற வளர்ந்துவரும் மிகத் திறமையான இலக்கியவ திகளின் ஆக்கங்கள், மற்றும் உபயோகமான தகவல்கள் எல்லாமே கவையாக இருந்தன. எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்
"செங்கதிர் வீச்சுக்களை அனுப்பி வைத்தமைக்கு மீண்டும் எனது நயமிகு நன்றிகள்.
ஆEபுவே
சுழறீஸ்கந்தராசா அவுஸ்திரேலியா
உங்கள் சஞ்சிகை நன்றாக அமைந்துள்ளது. பொருளடக்கம் சிறப்பாக உள்ளது. இலக்கியப்பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
கயோகேஸ்வரி
54-54, செனற் லோரன்ஸ், வீதி, கொழும்பு - 0.
செங்கதிர் வரவு எம்போன்ற கலை, இலக்கியத்துறையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கின்றேன் புதிய பாணியில் புதிய வடிவமைப்பில் தனித்துவக் கொள்கைளுடன் சுடர்விட்டுப் பிரகாசிக்க எனது வாழ்த்துக்கள்.
வீரசொக்கன் வாட் இல . 3, உடப்பு கிழக்கிலங்கையிலிருந்து நல்லதொரு சிற்றேடாக “செங்கதிர்"உதய மாவது உண்மையில் மகிழ்வைத் தருகிறது. தடைகளைப் படிகளாக்கி *செங்கதிர் தொடர்ந்து உதிக்கவேண்டுமென மனதார விரும்புகிறேன் வாழததுககள. சக்திதரன் 58, புதுச்செட்டித்தெரு கொழும்பு - 13
கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கல்விக்கு வித்திட்டவர்
நாம் பல விடயங்களை நேரில் பேசிக்கொண்டாலும், விடுபட்ட சில விடயங்களைக் கடிதமூலம் தெரிவிக்க வேண்டியுள்ளது.
மே 2008 "செங்கதிர் இதழில் ஜனாப் எஸ்.எச்.எம்.ஜமீல் எழுதிய
"கிழக்கிலங்கையில் இராமகிருஷ்ணமிசனும், முஸ்லிம்களின் கல்வியும்"
என்ற கட்டுரை பல புதிய தகவல்களைத் தருகிறது. கட்டுரையாசிரியர்
தான் நேரில் அறிந்த பல விடயங்களைத் தருகிறார். மாதிரிக்குச் சில
(i) இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் முஸ்லிம்களின் கல்விக்கு, மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம் பெரும்பங் காற்றியது.
क्लो|ी

(ii) சிவானந்தா வித்தியாலயத்தில் ஐந்து அப்துல் மஜீதுகள் சமகாலத் தில் கல்விகற்றனர் எனக் கூறும் அவர் அந்த ஐந்து மஜிதுகளுடைய பெயரையும் குறிப்பிடுகிறார். அத்துடன் ஆறாவதாகவும் உள்ள ஒரு மஜீத் மூதூர்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவும் கடமையாற்றிய ஏ.எல்.அப்துல் மஜீத் என்பதையும் அவரே குறிப்பிடுகிறார்.
குறித்த கட்டுரை 1997, இராமகிருஷ்ணமிஷன் நூற்றாண்டு விழா ஞாபகார்த்த மலர். கல்முனை - 10 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது என்பது இன்னும் விஷேசமானது.)
ஜனப் SHM ஜமீல் சிறந்த கல்விமான். முஸ்லிம் கலாசார அமைச்சின் செயலாளராக இருந்தபோது, பல மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்க ளின் வரலாறு பற்றித் தனித்தனி நூல்களை எழுதியவர். அவர் எனது இலக்கிய நண்பர் - இளமைக் கால நண்பர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
செங்கதிர் மே 2008 இதழைத் தொடர்ந்து படித்தபோது மேலும் சில விடயங்கள் என் மனதில் தைத்தன. "தமிழர் வரலாந்றில் சமயங்கள்" (வாகரைவாணன்) "இலக்கிய வளர்ச்சியில் ஈழத்துச் சஞ்சிகைகள்" (த.சிவசுப்பிரமணியம்) "கலைஞராக வாழ்வோரும் கலைஞர்போல் வாழ்வோரும்" (சாத்தனார்) "ஊடகங்களில் இன்று தமிழ்" (சுமதி) "தேடல்" (கணஆறுமுகம்) முதலிய ஆக்கங்கள் கனதியாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் அமைந் துள்ளன.
அவ்வாறே கவிதைகளில் "பொழியும் மழையில் நிரம்பும் குளங்கள்"(காயத்ரி), "விளைச்சல்" (செங்கதிரோன்),"அதிகழ்டமில்லாதவை (ஏநவரெத்தினராசா குரூஸ்) "அகம் தீண்டும் அரும்பு” (க.கணேசலிங்கம்) முதலியவை மண் வாசனை வீசும் வளமிக்க கவிதைகளாக அமைந்துள்ளன. "வானொலி ஒன்பது" குறும்பாக்கள் மஹாகவியையும் மிஞ்சும் வண்ணம் குறும்புத்தனத்தை வெளிப்படுத்துகின்றன. கவிஞர் "கேசவன்"இவ்வா நான் குறும்பாக்களைத் தொடர்ந்து எழுதுதல் தகும் தலைப்புக்களுக்குப் பஞ்சமே இல்லை அல்லவா.
இரா.நாகலிங்கம் 19. சூரியா வீதி, மட்டக்களப்பு.
miese

Page 33
“செங்கதிர்” வீச்சுக்களை “சங்கதி” வாழ்த்துகிறது!
கவிஞர் "செங்கதிரோன்’ (த.கோபால கிருஷ்ணன்) முயற்சியில் "செங்கதிர்' வீச்சுக்கள் கடந்த ஐந்து மாதங்களாக தங்குதடையின்றி எமதர இலக்கியவானில் வீழ்ந்து எம்மை பெருமகிழ்வில் - ஆழ்த்தி யிருப்பதோடு - சாதிக்கத்தடிக்கும் ஒர் இலக்கியப் படைப்பாளியின் இலக்கியப் பயணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய வண்ணம் "செங்கதிர்’ திகழ்கின்றத என்பத என் கருத்தது.
கவிஞர் நீலாவணனின் 'வேளாண்மை’ "செங்கதிரோன்’ கைவண்ணத்தால் “விளைச்சலாகி, தமிழ்ச்சங்க ஒலையில் தொடங்கி - செங்கதிரோன்' "செங்கதிர் ஹம் காணக்கிடைப்பத ஒரு சிறப்பம்சமாகவே கருதுகின்றேன்.
ஐந்தாவது செங்கதிர் வீச்சில் - இளையோர் பக்கத்தில் செல்விதிகாயத்திரி தந்த "பொழியும் மழையில் நிரம்பும் குளங்கள்” கவிதை அரும்பாக இருந்தாலும் கரும்பாக இனித்தது - பாராட்டுக்கள்!
அன்பன்
என்.மணிவாசகன், ஜேபி.
ஆசிரியர் "சங்கதி, அக்கரைப்பற்று - 7/3.

க்கொமக்கப் ேே.-- 己一二一一一一
து" குறுக்கெழுத்துப் போட்டி 06)
| 1 2 3 4 is is 7
விடைகளை அனுப்ப
3. 9 10 11 12 14
வேண்டிர முகவரி: 6) || - | | ch .) 13.
ஆசிரியர், ||15 16 17 |18 |19 |20 |21 "செங்கதிர்", "ن லுக்கெழுத்துப் போட்டி-05|| | || | | | | | || i 19, மேல்மாடி வீதி, |
மட்டக்களப்பு 29 30 3 32 33 34 35 翡
r பரிசு ரூ 500/= 羽。円。 38 39 40 42 僧 I Life, b 300/= 'S - 3. பரிசு ரூ.200/= 43 ||44 ||45 t 47 48. 49.
੭gunipu......... இறுதித் திகதி |ഗ്രീല LLLLLLLLS LSLLLLL LLLLL LSSLSS SLLSSSSSSLSSSSSL L L L L L L LSL LSL LSLSSSSLLSLSSLSSLSSSLL LS S LS LLSLL SLLS LSSLSSSSLSL LLLLLLLLSLSSLS SLSSL SL L LS SSL LLLLLL (51.07.2008) ... .
திகதி ܢܣ̣ܩܘܼܗܗ
டமிருந்து வலம் I) இதிகாசங்களுள் ஒன்று. I) காலடி
I) இதனாலும் பல் துலக்கலாம்.
I) தூரத்திலிருந்து வருவது
I) தண்டனைக்குரிய குற்றமொன்று. ] இது பிறந்தால் நியாயம் பிறக்கும். ஆனால் இது இங்கே குழம்பியுள்ளது.
I) இது கூறி வரவேற்பர்.
I) பிலபல கார்ட்டுனிஸ்ட் ஒருவரின்
பெயர் மாறிக்கிடக்கிறது.
மேலிருந்து கீழ் 01) எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம்
ஒன்றின் பெயர். 02) சோழமன்னனின் பெயர் குழம்பி
யுள்ளது. 03) பூக்காத மரம் 04) நால்வகைப் படைகளுள் ஒன்று. 05) இரட்டைக் கிளவி, 07) செங்கையாழியான் எழுதிய வர
லாற்று நாவல்
10) உன்மைக்கு மாறானது.
I) பண்டைத் தமிழகத்தில் பகைவனு டனான சமரில் வீரமரணம் எய்தும் மறவர்குலத் தோன்றல்களை இது நட்டு வழிபடும் வழக்கமிருந்தது.
éyeof 200ଥ୍
18) முகத்தலளவையொன்றின் அலகு. 32) விரலில் உள்ளது தலைகீழாய்.

Page 34
:பூட் =4 : T. குறுக்கெழுத்துப்போட்டி - 4க்கானசரியா
Iம் பரிசு - ச.திருவர்மன் III
4991, திருமலை வீதி, air Air மட்டக்களப்பு. 8 |9 |10 || 1 ||12 || 13 |14 , | | | , தா விர | ட | ங்
2"பரிசு - யாழிவியோகேந்திரன் 15 HES 117 18 19 120 121
தா | ய | தி| Eர் ஒர ம் வ
교5 로
ஆண்டான்குளம் நீதி,
செங்கடி нт | дэд || || || | ப ஓர்
교표 I - 5 airpla rib II air al II ri Լե
LTLS TTkeTTTT TTeCLM TTS D L S S L S LL S S LLL S S L S LSLS uuSu ಇndara ನಖ್ವಿ- u೨-ism, க1ள் | ன் 1 ம் | ம | ய | மீ
E. கா| ழ் ப் பு | ஆ | ர | ல்
f
prit'
வாசகர்களின் வினாக்களுக்கு இப்பகுதியில் விடை அளிக்கப்படும் கலை, இலக்கியம் சார்ந்த வினாக்கள் வாசகர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
அனுப்பவேண்டியமுகவரி:
ஆசிரியர், செங்கதிர், இங்கே விLைஎங்கே வினா? இல,19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு
அடுத்த இதழிலிருந்து.
 
 
 

சகலரும் சுகமாகச் சுயதெரிவு'
வாழ்க்கைத் திணையைத்
(பிவள்ளவத்தை கால்ை நிலையத்திற்கு முன்பாகவுள்ள 33ஆம் ஒழுங்கை வழியாக) 55 ஆம் ஒழுங்கை, கொழும்பு-96.
விபரங்களைத் திங்கள், புதன், வெள்ளி மாலை சுயதெரிவுமுறை முன்னோடி மூத்த புகழ் பூத்த திருமண ஆற்றுப்படுத்துநர் தரும்பசிட்டியூர் மாயெழு வேல் சிமுதனிடம் விசாரித்தறிருக!
El III mulófl: 011-2360488/2360694/4873929 சுலபமான தெரிவுக்குச் சுயதெரிவு முறையே மகோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதனே

Page 35

Teg 060-264,393
எழுத்தாளர்களது ல்கள் யாவும் தில் கிடைக்கப்பெற
'ruthayapuram West, Battica