கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2008.11

Page 1


Page 2
e CAUSEWA
PLAKAPV LP.
MAINSTREET, MAVADICHCHENA, WALAICHCHENAI.
Te:O777223284,077-5922326,065-2257630
LMLMLuM LTTL S S TTTLTTC TMTTS LLLLLC LkS LTTTLTLL TTSTTTMMTkLkTTTMTkSLeLGGLMLS " "WC irring Fria rே Fr r,
(Feneral Farah'a Fr Mercha'nırs,
sysMASeelA
ARDARE EEGRIGAS feateus and fistuitiutous in ate Jind of I
3saudauawe di Ɛfectuicat items
Моиlaпа СотрMex, Main Street, Kaftankudy - 02.
Te Fax: O65-2246582
リ -டு O65-224.5528. O65-2247085
 
 

කෞණ#Aptf"{"
- 1.5 நுக!
f
== "86D"Uប៉ា இல்லாமத்து
இலங்லியம் இல்லை"
கார்த்திகை 2008 (திவ ஆண்டு 2039)
ஆசிரியர் : செங்கதிரான்
ിgLീ|ഗ്രഖീ':
திரு.த.கோபாலகிருஸ்ணன் இல, 19 மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை
Contact :
Mr.T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி /Telephone
O65 2.22395)
(J77
மின்னஞ்சல் / E-mal
senkathirgopalagmail.com
| ஆக்கங்களுக்கு
| Éjffle24LIFICEJ ELIPTIJūlų. உ=
6 Ara wi väl så
சர்வாமி விபுலானந்த அடி களாருக்குப் பின்னர் மட்டக்களப் பின் தமிழ்ப்புலமையின் குறியீடா கத் திகழ்ந்தவர் அமரர். புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்களா வார். இங்கே மட்டக்களப்பு எனக் குறிப்பிடப்படுவது வடக்கே வெரு கல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலையும் மேற்கே ஊவா மலைக் குன்றுகளையும் எல் லையாகக் கொண்ட நிலப்பரப் பாகும,
ஆழ்ந்த தமிழ்ப்புலமை யும், ஆற்றல் மிகு கவித்திறனும் கொண்ட அவருக்குப் பல பட்டங் கள் கிடைக்கப்பெற்ற போதிலும் மட்டக்களப்புத் தமிழ்க்கலை மன் றம் வழங்கிய "புலவர்மணி" என்ற பட்டத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டார். அதுவே அவருடைய பெயரோடு ஒட்டிக்கொண்டது.
02.11.2008 அவரது 30வது சிரார்த்த தினமாகும். ஆன்மீகவாதி யாகவும் விளங்கிய புலவர்மனி அவர்கள் இன மொழி சாதி சமய நிற பேதமற்ற சமுதாயமொன் றைக் காண அவாவி நின்ற முற் போக்காளர். அவர் தனது சுயசரி தையாக எழுதிய "உள்ளதும் நல் லதும் கட்டுரைகள் இவ்வுண்
வெளிப்படுத்துவன. இப்பெரியா

Page 3
ரைச் சங்கை செய்யும் நோக்கில் “செங்கதிர் இவ்விதழை (கார்த்திகை 2008 - விக்சு 11) புலவர்மணி நினைவுச் சிறப்பிதழாக வெளியிட்டு மகிழ்கிறது.
இவ்விதழைத் தயாரிப்பதில் அனுசரணை வழங்கிய அமரர்
புலவர்மணி அவர்களின் புதல்வர்களான திருவாளர்கள் விஜயரெத்தினம்,
சத்தியலிங்கம் ஆகியோருக்கும் எழுத்தாளர் இராநாகலிங்கம் (அன்புமணி) அவர்களுக்கும் “செங்கதிர் இன் மனமார்ந்த நன்றிகள்.
- செங்கதிரான் -
கட்டண விபரம் ബ്രൈ aaaa a LL)
இலங்கை இந்தியா வெளிநாடு
“செங்கதிர்”
அரையாண்டுக்கட்டணம் 500/- 250/- USS 10 ஓராண்டுக் கட்டணம் 1000/- 500/- US$ 20 ஆயுள் கட்டணம் 10,000/- 5000/- USS 100 புரவலர் கட்டணம் 25,000/- 12,500.- US$ 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்” வழங்கப்படும். புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்" வழங்கப் படுவதுடன் “செங்கதிர்” எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்.
. . . ." விளம்பரக் கட்டணம் : பின் அட்டை வெளிப்புறம் முழு 5000 1500 USS 50
அரை 3000 1000 USS 30 முன் அட்டை உட்புறம் (ՄXԱՔ 3000 1000 US $ 30 அரை 2000 750 USS 20 பின் அட்டை உட்புறம் (ՄXԼՔ 2000 750 USS 20 அரை 1500 500 USS 15
அன்பளிப்பு
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி : மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு. கணக்கு இல . 113100138588996 (நடைமுறைக்கணக்கு) காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று பெயரிடுக, அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
இந்தி
డmeడడా 2008
 
 
 
 
 
 

தந்தையார்
ஆரம்பக்கல்வி
ஆரம்ப ஆசிரியர்கள்
1917 - 1920
சக மாணவர்களில் ஒரு
08.01.1889, மண்டுர், மட்டக்களப்பு
சோமநாதர் வண்ணக்கர் ஏகாம்பரப்பிள்ளை
வண்ணக்கர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் புதல்வி சின்னத்தங்கம் அம்மையார் (ஐந்து வயதில்) - மண்டூர் உவெஸ்லி மிஸன் தமிழ்ப் பாடசாலை திரு.வே.கனகரத்தினம், திருமூதம்பாபிள்ளை * பத்து வயதில் ஐந்தாம் வகுப்புச் சித்தி தமிழ்க்காவிய பாடசாலை (வீட்டுடன் இணைந்தது)- குருகுலவாசம் சூடாமணிநிகண்டு, திருச்செந்துர்ப்புராணம், வில்லிபுத் தூரர் பாரதம், கந்தபுராணம் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தி
uJTuj
வர் : பண்டிதர் வீ.சி.கந்தையா
9ே பன்னிரண்டு வயதில் தாயாரின் மறைவு. ஆங்கிலக்கல்வி (ஏழாம் வகுப்புவரை) - கல்முனை உவெஸ்லியன் மிஷன் ஆங்கிலப் பாடசாலை (தற்போது
வெஸ்லிக் கல்லூரி) ஆசிரியர்கள் : திரு.கே.எஸ்.குஞ்சித்தம்பி,
திருஆர்.என்.சேதுகாவலர்,
திரு.எஸ்.கே.பொன்னையா காவிய பாடசாலை -யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை. ஆசிரியர்கள் : மட்டுவில் பண்டிதர் மகாலிங்கசிவம்,
சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர்.

Page 4
கற்றவை
1922
1923 - 1925
1925
1926 ஆவணி 1926 - 1930
1930 -1931
1931-1934
1932-193
1936
1936-1938
1938-1941
1943
1950
1951
1951
திருக்குறள், மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, திருமுல்லை
வாயில் அந்தாதி, நன்னூற் சூத்திரங்கள், சமஸ்கிருத சுலோகங்கள், பாரதம், கந்தபுராணம், இராமாயணம், நன்னூல்விருத்தி, நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலக் காரிகை,
தண்டியலங்காரம் சக மாணவர்களில் ஒருவர்:பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
- யாழ்ப்பாணம் நுணாவில் அமிர்தாம்பிகை சைவ வித்தியாசா
லையில் ஆசிரியர் பதவி சாவகச்சேரி சங்கத்தானை இந்துக்கல்லூரியில் பண்டிதர் பதவி
சாவகச்சேரி இந்து வாலிபர் சங்கத்தில் இராமயாணம் படிப்பித்தல்
கிறிஸ்தவ மதத்தைத் தழுவியமை. பசுமலை (இந்தியா) வேதசாத்திரகலாசாலையில் பயிற்சி "
மதுரையில் சுவாமி விபுலானந்தர் சந்திப்பு, மீண்டும் சைவ
சமயத்தைத் தழுவி இலங்கை திரும்புதல். திருமணப்பதிவு. மனைவி; நல்லம்மா
திருகோணமலை இந்துக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்
பண்டிதர். - புளியந்தீவு (மட்டக்களப்பு) அர்ச். அகுஸ்தீனார் ஆசிரிய
பயிற்சிக் கலாசாலையில் தமிழ்ப் பண்டிதர். - அர்ச்சிசிலியா மகளிர் ஆங்கிலக் கல்லூரியில் எஸ்.எஸ்.ஸி
வகுப்புக்குத் தமிழ் படிப்பித்தல். புனிதவளனார் மடம், மட்டக்களப்பு. மட்டுநகரில் பாலபண்டித வகுப்பு நடாத்தியமை. அரசாங்க சபைத் தேர்தலில் மட்டக்களப்புத் தெற்குத் தொகுதி வேட்பாளர் எஸ்ஓகனகரத்தினம் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம். மண்டூரில் உப தபால்நிலைய அதிபர்.
அர்ச். அகுஸ்தீனார் ஆசிரியபயிற்சிக் கல்லூரியில் மீண்டும்
தமிழ்ப் பண்டிதர்.
: பகவத்கீதை வெண்பா’ பாடத்தொடங்கியது.
*விபுலானந்தர் மீட்சிப்பத்து’ நூல் வெளியீடு (முதற்பதிப்பு) யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில்
பகவத்கீதை வெண்பா' அரங்கேற்றம்.
மட்டக்களப்புத் தமிழ்க் கலைமன்றத்தினால் ‘புலவர்மணி’பட்டம்
வழங்கப்பட்டது.
கார்த்திகை 2006

1951. : தென்னகத் தமிழ் வளர்ச்சிக்கழகம்- யாழ்ப்பாணவிழா - உரை
1952 : யாழ்ப்பாணம் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலத்திலே நடைபெற்ற
ஆரியதிராவிட பாஷாவிருத்திச் சங்க பட்டமளிப்பு விழாவிலே
“பண்டிதமணி’ பட்டம் வழங்கப்பட்டது.
1954 : இலங்கைக் கலைக்கழகத்தின் உபகுழுக்களுள் ஒன்றான நாட்டுப்பாடல்
நாட்டுக்கூத்து குழுவின் உறுப்பினர்.
- அரசகரும மொழித் திணைக்களத்தின் ஆலோசனைச் சபையில்
கலைச்சொல் குழு உறுப்பினர்.
- இலங்கை வானொலி கல்வி ஒலிபரப்பு ஆலோசனைச் சபை
1958
உறுப்பினர். 1947-1959 : மட்டக்களப்பு அரசினர் கல்லூரி (தற்போது இந்துக்கல்லூரி) ஆசிரியர். 15.02.1959 : அரசசேவையிலிருந்து (மட்டக்களப்பு அரசினர் கல்லூரியிலிருந்து)
ஓய்வு. 19.07.1960 : “விபுலானந்தர் மீட்சிப் பத்து இரண்டாம் பதிப்பு வெளியீடு,
மட்டக்களப்பு. 1962 மட்டக்களப்பு தமிழ்க்கலைமன்றம் தங்கப்பதக்கம் சூட்டிக் கெளரவிப்பு.
1967 :பூரீலங்கா சாகித்திய மண்டல செந்தமிழ் இலக்கியக்குழுவில் உறுப்பினர். 1970-1978 : இந்து சமய விவகார ஆலோசனைச் சபை உறுப்பினர். அமரராகியது : 02.11.1978
9ே முதல்முதல் இயற்றியது 'மண்டூர்ப்பதிகம்’. 9 அகில உலக இந்து மாமன்றத்தின் உபதலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
புலவரீமணி பற்றி சுவாமி விபுலானநீதரீ
பண்டூரும் முகிற்குலங்கள் எமதிறைவர்
மருகர்திருப் பதியீ தென்ன விண்டூர மழைபொழியும் சிறப்பதனால்
வளம்மலிந்து மிகுந்து தோன்றும் மண்டூரி லுறைமுருகன் மலரடிக்கோர் திருப்பதிகம் மரபிற் சொற்றான் கண்டுரு மினியமொழிப் பெரியதம்பிப்
பிள்ளையெனும் கலைவல்லோனே.
காத்திகை 2008

Page 5
6. f6)
asmáenos 200ô
மண்டூர் எனும் தமிழ் மணங்கமழும் பதியிலே
வண்ணக்கர் ஏகாம்பரம் மயிலனைய எழில்சின்னத் தங்கம் இவர் செய்திட்ட மகிமைபெறு தவப்பேற்றினால்
| கண்டுரு மனியதமிழ்க் கவிமாரிபொழிந்திடக்
கவின் புதல்வ னாகமலர்ந்தான் காரேறு முதாரின் மயில்வா கணப்புனிதன் கவிபாடி வாழ்த்தியருள பண்டூரு முகிற்குலம் பண்பாடி மழையுதவ
பழனங்கள் கழுபதியில் பாராளு வேலோடு மயிலேறி நின்றருளும் பழமான முருகனடியில்
தொண்டூர நின்றருகி மண்டூரின் பதிகமதைச்
சொல்லிமகிழ் பெரியதம்பி தாயதமிழ் நறைவந்த பாய உளம் நிறைகின்ற சொற்கொண்டல் புலவர் மணியே!
நீர் மகிளிர் பயில்கின்ற வாவியிடை யூர்ந்தோடு
நில்லாமல் யாழ்நாலினை நிகரில்லாத் தனிநட்ப மதியினோடு ஆராய்ச்சி நிகழ்த்தியிசைத் தமிழக்கீந்தவன்
பார்புகழு முத்தமிழ்ப் பணியிலொரு வித்தகன்
பகர்ணிக விபுலமுனிவன் பங்கமுற் றுடல்நோயின் பாற்பட் டுழல்கையில் பதறியத் தயரில்மீள
ஆர்வமோடு செயற்பட்டு அழகுத்தமிழ்ப் பதிகமொன்(று)
ஆக்கினான் பெரியதம்பி அதeட்சிப் பத்தாகும் குயில்நன்கே கூவிட ஆணையிட்டழகுதமிழில்
 
 
 

கூர்மதிய குரவனத குறைதீரப் பாடியே குணமாக்கி மிடுசிதந்தோன் குன்றனைய நெஞ்சுரம் கொண்ட தமிழ் மாமனிதன் குலவுதமிழ்ப் புலவர் மணியே!
தணைவியது பிணிதீர்க்க கொழும்பிலே வாழ்நாளில்
தொடர்ந்துபக வத்கீதையை தாயதமிழ் வெண்பாவில் உருவாக்கிப் புகழேந்தி தோற்றோடப் புகழ்படைத்தான் இணையற்ற அனுபவம் ‘உள்ளதும் நல்லதும்"
எடுத்தோதம் பனுவல்தந்தான் எளிதான நடையிலே இகல்பாலைக் கலி'தந்த இலக்கியச் சுவைபடைத்தான் குணக்குடி மஸ்தானின் பாடல்கள் உரையிலே
கூர்மதி கொண்டமைத்தான் கொஞ்சுதமிழ் நடையிலே நாமகள் இலம்பகம் குறைவற்ற வாறமைத்தான் கணந்தோறும் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை காக்கவே
காரியம் பல புரிந்தான் கல்வியில் சமூகத்தில் கவிதையில் பணியாலே கரைகண்ட புலவர்மணியே!
மட்டுநகர் பெற்றெடுத்த மணியான புலவர்மணி
கொட்டும் தமிழ்ப்பாவால் குவலயத்தை ஆண்டமணி கட்டழகுப் பேச்சால் கவிர்ந்திழுத்த தங்கமணி திட்டமிட்டே எந்தச் செயலையும் செய்தமணி
பட்டம்பல கிடைத்தம் பண்புதவ றாதமணி
கொட்டம் அடிப்பவருக்கும் குணக்குன்றாய் நின்றமணி மட்டம் உயர்வு இல்லை மனிதரிலே என்ற மணி விட்டுப் பிரிந்தாலும் மேலிருந்த காக்குமணி
அட்டதிக்கும் சேவையினால் ஆலாய் விரிந்தமணி
நட்ட விதைகளினால் நாம் இன்று பூக்கின்றோம் பட்டமரம் இல்லை, பலவாய்த் தளிர்க்கின்றோம் பெட்யுயர்ந்த பெரியதம்பிப் பிள்ளைபுகழ் வாழியவே.
ா திமிலைத்துமிலன்
నీం

Page 6
SA TqqqSS LLLLLSL S SASAS ASLq ALSL SiS S S Aq SiSHiHSASASATSASALLL ரியின் தமிழ்த் தொண்டு . நல்லையா கலாதேவி . மட்டக்களப்பு புலவர்மணி நினைவுப் பணிமன்றம் 1995 இல் நடாத்திய நாடளாவிய திறந்த கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கட்டுரை கிழக்கிலங்கைத் தமிழறிஞர் வரிசையில் புலவர்மணி ஏ.பெரிதம்பிப் பிள்ளை அவர்களுக்கு தனித்துவமானதோர் இடமுண்டு. மீன்பாடும் மட்டுமாநகர் தந்த தமிழறிஞர்களுள் விபுலாநந்தருக்குப் பின் விதந்து போற்றப்படுபவர் புலவர்மணி அவர்களேயாகும். இதனை புலவர்மணி, பண்டிதமணி, பன்மொழிச் சைவமாமணி, ஞானபானு, மதுரகவி, கவியரசு, வெண்பாவிற் புகழேந்தி போன்ற சிறப்புப் பெயர்கள் வெளிப்படுத்தியிருக் கின்றன. இத்தகைய சிறப்புப் பெயர்கள் அவர் தமிழுலகிற்குச் செய்த தமிழ்த்தொண்டினையே புலப்படுத்தி நிற்கின்றன. இந்தவகையில் பல்வேறு பட்டங்களையும், புகழ்மாலைகளையும் பெற்ற போதும் புலவர்மணி’ என்ற பெயராலேயே கவரப்பட்டார்.
புலவர்மணி அவர்கள் ஈழத்தில் மண்டூர் என்னும் கிராமத்தில் 1889ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தமிழ்ப்பணி சிறந்து காணப்பட்ட மைக்கு பிறந்த இளரும், அவர் ஆரம்பத்தில் பெற்ற தமிழுணர்வுமே காரண மாக அமைகின்றன. அவ்வாறு நோக்கும் போது புலவர்மணி அவர்கள் குருகுலமுறைப்படி தமிழைப் பயின்றமையும், சந்திரசேகர உபாத்தியாயர், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர், மட்டுவில் மகாலிங்கசிவம் ஆகியோரிடத் தில் கல்வி பயின்றமையுமே இவரது பணியை மேலும் இளக்குவித்தது. அதுமட்டுமல்லாது விபுலாநந்தரது உறவும், கற்பிக்தல் தொழிலிலும் இவரது சிந்தனை, பேச்சு, எழுத்து யாவற்றிலும் தமிழை வெளிப்படுத்த தூண்டுதலாக அமைந்திருந்தது.
புலவர்மணியின் தமிழ்ப் பணியினை அவரது சிந்தனை, பேச்சு, நடை, நூலாக்கம், கவிதை, கட்டுரை, வெகுசனத் தொடர்பு என்பவற் றைக் கொண்டு அறியலாம். அதுமட்டுமன்றி சமகாலத்தில் வாழ்ந்த ஏனையோரைவிட அவருக்கு தமிழில் இருந்த ஈடுபாட்டினைக் கொண்டும் அறியக்கூடியதாயுள்ளது. எனவே இதனை இவர் வாழ்ந்த எழுபத் தொன்பது ஆண்டு காலப்பகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்ட தமிழிலக் கியப் பணிகளாலும், சமய சமுகப் பணிகளாலும் நோக்கலாம்.
08 இந்திர்
கார்த்திகை 2005
 

முதலில் இவரது இலக்கியப் பணியில் கவிதை முக்கியத்துவம் பெறுகின்றது. கவிதை இயற்றுவதுடனேயே இவரது எழுத்துப் பணி ஆரம்பமாகின்றது. இவர் சிறிதும் பெரிதுமாக பல செய்யுள் நூல்களைச் செய்துள்ளார். நூல்களை விட அவ்வப்போது பல தனிப் பாடல்களையும், சிறப்புப் பாயிரச் செய்யுள்களையும் இயற்றியுள்ளர். இவரின் கவிதை நூல்களாக பகவத்கீதை வெண்பா, விபுலாநந்தர் மீட்சிப்பத்து, தில்லை மண்டுர்ப்பதிகம், கொக்கொட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பதிகம் என்பனவும், மாமாங்கப் பிள்ளையார் பதிகம், சித்தாண்டித் திருப்பதிகம், சமய சமரச திருப்பதிகம், இலங்கைப் புகையிரத பெருவிபத்து, ஆனைப் பந்தி சித்திவிக்கினேஸ்வரர் பதிகம், காளிகாமடு விநாயகர் ஊஞ்சல் என்பனவும் அவ்வப்போது அச்சுவாகனம் ஏறியுள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்து புலவர்மணி நினைவுப் பணிமன்றம் ‘புலவர்மணி கவிதைகள்” என்னும் தொகுப்பு நூலாக வெளியிட்டுள்ளது.
புலவர்மணி அவர்கள் தாம் வாழ்ந்த காலத்து மக்களுடன் ஒன்றாகக் கலந்து பழகியமையினால் மக்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறியும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் நாட்டையும், மொழியையும், மக்களையும் நேசித்து தமது தமிழ்ப்பணியினையும் மேற்கொண்டுள்ளார்.
இலங்கை மணித்திருநாடு, ஈழநாடே நீ வாழி, நவீன இலங்கை, உயிரனைய மட்டுநன்னாடு, கன்னியாய்த்திரு, சுதந்திரகீதம், வாழி கல் லோயா கங்கை, யாழ்ப்பான நன்னாடு, செந்தமிழ் வாழ் மாநாடு, போன்ற கவிதைகள் இதனைத் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. இவற்றுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க திருத்தலங்கள் மீதும்
பதிகங்கள் பாடியுள்ளார்.
மேலும் இவரது கவிதைப்பணியில் சமுகவுணர்வு வெளிப்படு கின்றது. தம் காலச் சமுதாயத்திற்கு அவசியமான பல கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். மனித குலத்தை நேசித்தவராகவும், சமுகத்திலே காணப்பட்ட சின்னத்தனங்களை கண்டு சிறியெழுந்தவராகவும் காணப் படுகின்றார். தீண்டாமை எனும் கொடுமை உச்சநிலையில் இருந்த போது வாழ்ந்தமையினால் எல்லோருடனும் சமமாகப் பழகி செய்யுள்களை இயற்றியுள்ளார். மேலும் தாழ்ந்த சமுகத்தினரான ஆறுமுகம் என்பவரை தமது நண்பராக கொண்டிருந்தார். அகிரிக்ந்த
09|3)ෂ්
smђzas 2006

Page 7
* ஒழுக்கத்துயர்குலமாம் ஓங்கு புகழுண்டாம்
இழுக்கத்திழி குலமாம் என்றே - விழுப்பத்து நூற்குலத்தையெல்லாம் நுணுகியறிந்தாது முகன்
9
என்று பாடிச் சாதிக் கொடுமையினை வெகுவாய்ச் சாடியுள்ளார். மேலும் சமத்துவ சமரசமாக சாதி வேற்றுமை யினைக் கண்டித்துள்ளார். சமுகத்தை சீர்திருத்த வேண்டும் என்ற காரணத்தினால் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை முன்வைத்துள்ளர். இன் றைய காலகட்டத்திற்கு இவருடைய இப்பணி மிகவும் முக்கியமானதாகும். மேலும் தம் காலத்து சமுதாய வாழ்விற்கு அவசியமான பல கருத்துக் களையும், தம்கால சமுகநலவுரிமைகளையும் குறிக்கோளகக் கொண்டு கவிதை புனைந்துள்ளார். இதற்கமைய சர்வசமய சமரச பதிகத்தையும் : LITւգպair@TITÙ.
அடுத்து சமயசமத்துவ வாதியாக நின்று சமயப்பணியை வெளிப் படுத்தியுள்ளார். சிவன், பிள்ளையார், முருகன், காளி, இயேசு, அல்லா, புத்தர் ஆகிய கடவுளரைப் போற்றிய பாடல்கள் முலம் அறியலாம். மேலும் இவரால் இயற்றப்பட்ட பதிகங்களையும், ஊஞ்சல்களையும் குறிப்பிடலாம். கோயில் நிர்வாகச் சீர்கேடுகளையும் எதிர்த்துள்ளார். சைவத்திற்கு மட்டுமல்லாது கிறிஸ்தவத்திற்குச் செய்த பணிகளும் அளப்பரியதாகும். “கிறிஸ்து திருவவதார கீதங்கள், கிறிஸ்தவமதத் துயிலுணர்ச்சி, குருபரத்தரிசனத் திருவேட்கை” என்பனவும் இதனைப் புலப்படுத்து கின்றன.
அடுத்து மானுடம் பாடும் பணியினையும் மேற்கொண்டுள்ளார். முதலில் எழுத்தறிவித்தவன் இறைவனாகும் என்ற சான்றோர் வாக்கிற்கு இலக்கணமாகத் தமது குருவணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளர். “19ஆம் நூற்றாண்டின் பழம் பெட்டி”யெனத் தம்மை அறிமுகம் செய்யும் புலவர்மணி அவர்கள் தமது ஆசிரியர்களையும் அப் பழைமைப்பாணியிலே நினைவு கூருகின்றார். இதற்கமைவாக சந்திரசேகர உபாத்தியாயர், விபுலாநந்த அடிகள், குமார சுவாமிப் புலவர் ஆகியோரை வணங்கியே பகவத்கீதை வெண்பாவைப் பாடியுள்ளார். குருவுடன் சேர்த்து சான்றோர்களையும் பாடியுள்ளர். மகாலிங்க சிவம், ஆறுமுகநாவலர், சேர்.பொன்.இராமநாதன், வைத்தியலிங்கம் துரைச்சாமி, மட்டக்களப்பு பூபாலப்பிள்ளை பண்டிதர் ஆகியோரின் பணிகளையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கார்த்திகை 2008

புலவர்மனியின் கவிதைப்பணியில் யாப்பு மிகவும் முக்கியமானதா கின்றது. பொதுவாக வெண்பா, விருத்தம், அகவல், கட்டளைக் கலித் துறை முதலிய யாப்புக்களைக் கையாண்டுள்ளர். நாயக்கர்காலப் புலவர்க ளைப் போல் சிலேடைப் பொருள்பட கவிதைகள் புனைந்துள்ளமை போற் றத் தக்கதாகும். வெண்பாக்களில் பாட்டுடைத் தலைவன், தலைவி, தெய்வம், சிறப்புக்குரிய இளர் அல்லது இடம் முதலிய பல்வேறு பாடு பொருள் களையும் பாடியுள்ளார். மற்றும் இயற்கை வர்ணனை, நாடுநகர்ச்சிறப்பு புராணச் செய்திகள், இறைவனின் உறைவிடங்கள், அறம் வலியுறுத்தப் படுதல் முதலிய செய்திகளையும் கொண்டுள்ளன. எனவே நாயக்க காலம் புலவர்களைப்போல் சந்தர்ப்பத்திற்கு தக்கவகையில் சிறப்பாகவும், நையாண்டியாகவும் பாடல்களைப் பாடி பணிபுரிந்துள்ளார்.
புலவர்மனியின் முயற்சிகளுள் அடுத்து விதந்து குறிப்பிடக்கூடி யவை மொழிபெயர்ப்பு முயற்சியாகும். வடமொழிப் புலமையும், தமிழ்மொழி இலக்கண, இலக்கிய ஆளுமையும், யாப்பறி நுட்பமும் இவருடைய மொழி பெயர்ப்புகளினூடாகத் தெரிகின்றன. இவரது மொழிபெயர்ப்புச் செய்யுள் பகவத்கீதை வெண்பா' ஆகும். எனினும் வெண்பாவைக் கையாண்டு கவிதைப் பணி புரிவதில் மிகவும் திறமையுடையவராக புலவர்மணி விளங்குகின்றார். “வெண்பாவிற் பெரியதம்பி’ என்று கூறுமளவிற்கு இவரது வெண்பா யாப்பு அமைந்துள்ளது. எளிமையான சொற்களைக் கையாண்டு எல்லோருக்கும் விளங்கக்கூடிய வகையில் புலவர்மணி அவர்கள் கவிதை புனைந்துள்ளார். இதனை வெண்பாவினைக் கையாண்ட ஏனைய புலவர் களுடன் ஒப்பிடும் போது புலப்படுகின்றன. சுவாமி பிரேமானந்தா அவர்கள்,
கீதா சாஸ்திரம் கூறும் அரிய கருத்துக்களை சொல்வளமும்
பொருட்செறிவும், யாப்பமைவும், இசைநயமும் பொருந்த
எளிய நடையில் இனிமையான வெண்பா யாப்பில்.
பின்வருமாறு அவரது பணியை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் என்னும் முன்று யோகங்களையும் சேர்த்து மொத்தம் 698 செய்யுள்களை ஆக்கியுள்ளார். பகவத்கீதை வெண்பாவில் கீதோபதேச உண்மைகளை விளக்குவதற்கு தேவார திருவாசகங்கள், திருக்குறள், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், வில்லிபாரதம், கம்பராமாயணம், தாயுமானவர் பாடல்கள் முதலிய
stളിൽ 2OO5

Page 8
பல இலக்கிய நூல்களையும் கையாண்டு மேற்கோள்கள் காட்டி விளக்கிச் சென்றுள்ளார். நீதியும், அறக்கொள்கைகளும், மதவாதிகளால் வலியுறுத் தப்பட்டன. ஒழுக்கத்தையும், மதக்கொள்கைகளையும் எளிமையான பாடல்களல் எல்லோரிடத்தும் பரப்ப எண்ணியதன் விளைவே வெண்பா வால் அமைந்த அறநூல் எனலாம். இதற்கு அமைவாகவே புலவர்மணி யினது பணி அமைந்துள்ளது. நூலமைப்பில் சிறப்புப் பாயிரம், காப்பு அவையடக்கம், கடவுள் வாழ்த்து, நூற்பயன் எல்லாம் கொண்டு அமைந் துள்ளன. எனவே மொழிபெயர்ப்புப் பணியானது இக்காலம் வரை அறியக் கூடியதாக எல்லோருக்கும் உகந்து அமைந்துள்ளது.
பலராலும் போற்றப்படும் ஒன்றாகவே காணப்படுகின்றது. இவ்வுரை நடை யமைப்பினையும், தன்மையினையும், போக்கினையும் அவர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளிலிருந்தும், இலக்கிய உரைகளிலிருந்தும், ஆய்வு ரைகளிலிருந்தும் அறியலாம். இந்த வரிசையில் புலவர்மணி அவர்கள் சிந்தாமணி வார இதழில் “உள்ளதும் நல்லதும்” என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளமை சிறப்புக்குரியதாகும். அவற்றுடன் இவரது கட்டுரைகள் பண்டைத் தமிழ் இலக்கிய இலக்கணங்கள், பெரியார்கள், மட்டக்களப்பு பிரதேசம் என்பன பற்றியனவாகக் காணப்
படுகின்றன.
தமிழிலே இலக்கிய கர்த்தாக்கள் தங்கள் வரலாற்றை தாங்க ளாகவே எழுதுவது மிகக் குறைவாகவே இருந்துள்ளது. எழுதியவர் களுள் உ.வே.சாமிநாதையர் குறிப்பிடத்தக்கவராக விளங்குகின்றார். இந்த வரிசையில் உள்ளதும் நல்லதும் என்ற தலைப்பில் ஐம்பது கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். இதனை புலவர்மணி நினைவுப் பணி மன்றம் நூலாக தொகுத்து வெளியிட்டுள்ளது. இப்பணியின் முலம் தற்கால மக்கள் புலவர்மணியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள வும், நாட்டிலுள்ள பல்வேறு சாதி சமயங்களைச் சேர்ந்த மக்களோடு அவர் கொண்டிருந்த தொடர்பினைத் தெரிந்து கொள்ளவும் துணைசெய் கின்றன. தன் வரலாறு கூறுமுகமாக எழுதப்பட்டாலும், சமுகத்திற்கு அவசியமான பல்வேறு விடயங்களைத் தொட்டுக் காட்டி தமது பணியை
12
கார்த்திகை 2008

புலவர்மனியின் பணிகளில் இலக்கியங்களுக்கு உரை எழுதி யுள்ளமை சிறப்புக்குரியதாகும். இவை பெரும்பாலும் கல்வித்தேவையின் பொருட்டும், சமயத்தேவையின் பொருட்டும் எழுதப்பட்டுள்ளது என்பது புலனாகின்றது. இவற்றினை நூலுருவாக வெளிவந்த இலக்கிய உரைகள், பத்திரிகைகளில் வெளிவந்தவை எனப் பிரிக்கலாம். நூலுருவாக வெளி வந்தவற்றில் பதவுரை, பொழிப்புரை, மதிப்புரை, முகவுரை எனப் பல்வேறு உரைகள் எழுதியுள்ளார். நற்சிந்தனை - மதிப்புரை, திருகோணமலைப் பத்திரகாளியம்மன் பதிகம் - முகவுரை, நறுமலர்மாலை - மதிப்புரை, விபுலாநந்தர் கவிமலர் - பதிப்புரை, சீர்பாதகுலவரலாறு " மதிப்புரை, முதலியனவற்றை உதாரணமாக சுட்டிக் காட்டலாம். இருந்தும் மதிப்பு ரையே கூடுதலாக எழுதியுள்ளமையை இவரது உரைகள் புலப்படுத்தி நிற்கின்றன. பொதுவாக சொற்களைப் பொருள் இயைபுபட பிரித்து, கொண்டு கூட்டி, இலக்கண முடிபு கூறி உரை விளக்கம் செய்துள்ளார். உரையாசிரியர்களைப்போல் புலவர்மணியிடம் காணப்பட்ட சிறப்பான பணியாகும் அடுத்து தினகரன் பத்திரிகையில் கலித்தொகையிலுள்ள முதல் பதினாறு செய்யுள்களுக்கும் “கற்றறிந்தோரேத்தும் கலித்தொகை” என்ற தலைப்பில் விருத்தியுரை எழுதியுள்ளார். இதனை “பாலைக்கலி” என்னும் நூலாக புலவர்மணி நினைவுப்பணி மன்றம் வெளியிட்டுள்ளது. பொருளுக்குத் தக்கதாக சொற்களைக் கையாளுகின்ற அதேசமயம் படிப்பவர் தகுதியினையும், நிலையினையும் மனதில் கொண்டு உரைப்பணி செய்துள்ளார் என்பது புலனாகின்றது.
புலவர்மணி அவர்கள் தமிழாசிரியராக இருந்தமையினால் குழந்தை களுக்குரிய இலக்கியங்களையும் உருவாக்கியுள்ளார். அதிலும் நாடக வடிவினைக் கையாண்டமை அவரது பணியினை மேலும் வலிமையாக்கு கின்றன. இது புலவர்மணி அவர்கள் எழுதிய “சீவகசிந்தாமணி பாலசரிதை நாடகம்” என்ற நூலின் முலம் வெளிப்படுகின்றது, நாடக வடிவினை ஆக்கியமை இவரது தமிழ்ப்பணியை மேலும் வெளிப்படுத்துகின்றன.
இலக்கிய உணர்வோடு தமது தமிழ்ப்பணியை நிறுத்தாது பத்தி ரிகை, வானொலி, மேடைப்பேச்சு போன்ற வெகுசனத் தொடர்பு சாதனங் கள் முலமும் மேற்கொண்டுள்ளார். "கிழக்குத் தபால்’ என்னும் பத்திரிகை யின் ஆசிரியராக சிலகாலம் பணிபுரிந்துள்ளார். மேலும் இலங்கைப் பல்கலைக்கழகம், கிழக்கிலங்கை சமாதான விசாரணைக்குழு, யாழ்ப்பா
கார்த்திகை 2008

Page 9
ணத்து ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் என்பனவற்றின் உறுப்பினராகவும், அகில இலங்கை இந்துமாமன்றம், கிழக்கு மாகாண கூட்டுறவுச் சங்கப் பேரவை போன்றவற்றில் உதவித் தலைவராகவும் இருந்து தமிழ்ப்பணி புரிந்துள்ளார். மேலும் மட்டக்களப்பு தமிழ்க்கலை மன்றத்தின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். செயலாளராக இருந்த ம. சிவநேசராசா அவர்களும் இவருடன் சேர்ந்து பணிபுரிந்தனர். 1954இல் இவர்களால் நடத்தப்பட்ட தமிழ் விழா சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். 1970களில் இந்துசமய விவகார ஆலோசனைச் சபையின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு, 1978வரை பணிபுரிந்துள்ளார். இக்கால கட்டத்தில் இந்துசமய செயற்றிட்டங்களைச் செயற்படுத்தியுள்ளார்.
பேச்சுத்துறையில் இலங்கை, இந்தியா போன்ற இடங்களுக்கும் சென்று சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். இந்தியாவிலுள்ள எட்டய புரம், திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் முதலிய இடங்களுக்குச் சென்று சமய விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார். இலங்கை வானொலியிலும் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். கிழக்கு மாகாண தேர்தல் பிரச்சா ரங்களிலும் முன்னின்று உழைத்துள்ளார். இவ்வாறாக எழுத்து, பேச்சு துறைகளில் தமது பணியை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது நல்லதொரு மாணவ சமுகத்தினரையும் உருவாக்கியுள்ளார்.
புலவர்மனி பற்றி “உள்ளதும் நல்லதும்” என்ற நூலின் முன்னுரை யில் எஸ்.டி. சிவநாயகம் குறிப்பிடுவது ஆழ்ந்து நோக்கத்தக்கதும், அறிய வேண்டியதுமாகும்.
“அவர் சிறந்த மேடைப்பேச்சாளர், சிறந்த கவிஞர்,
சிறந்த வசன கர்த்தா, சிறந்த மொழிபெயர்ப்பாளர், சிறந்த நல்லாசிரியர், சிறந்த அரசியல் ஆய்வாளர். என்று அடுக்கிக் கொண்டே போகலாம் என்று குறிப்பிட்டுள்ளமை இவரது தமிழ்த்தொண்டை மேலும் தெளிவாக்குகின்றன.
த9
இத்தகைய சிறப்பான பணிகளோடு ஈழத்திலும், தமிழ் நாட்டிலும் 20ஆம் நூற்றாண்டு தமிழுக்குப் பணி செய்தவர்களில் தனியிடம் பெறுகின்றார் என்பதில் ஐயமில்லை. இவர் மறைந்தாலும் இவரது தமிழ்ப்பணியினை “புலவர்மனி நினைவுப்பணி மன்றம்” முன்னெடுத்துச் சென்றுகொண்டிருக் கின்றமை நோக்கத்தக்கதாகும்.
aslúžiacos 2008

- Bij' =
கிழக்கிலங்கையின் புகழ்பூத்த இலக்கியப் பெருமக்கள் இருவர். ஒருவர் சுவாமி விபுலானந்த அடிகளார்; மற்றவர் அவரின் வழிவந்த புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள். புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள், தனது அறிவாற்றலாலும், கவித்திறனாலும், இலங்கையில் மட்டுமல்லாது தமிழகத்திலும் பிரசித்தி பெற்றார். இலக்கிய அரங்குகளிலும் தமிழ் மாநாடுகளிலும் கலந்து புகழ்பெற்றார்.
1. தோற்றம்:
அத்தகைய பெருமகன் 2.11.1978ல் அமரரானார் அவர் மறைந்து 16 நாட்களில், அதாவது 18.11.1978ல் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் செ. இராசதுரை தலைமையில் ஓர் இரங்கற்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புலவர்மணியின் பணிகளைத் தொடரு முகமாக புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணிமன்றம் உருவானது. பின்வருவோர் உத்தியோகத்தர்களாகத் தெரிவு செய்யப்
பட்டனர்.
தலைவர் gsb. e. 6. Ugj5LDBT56ër
உபதலைவர்கள் : டாக்டர். வி. பஞ்சாட்சரம்
திரு.எஸ்.கே.தெய்வநாயகம்
செயலாளர் திரு.ம.சிவநேசராசா
உபசெயலாளர் : திரு.இரா.நாகலிங்கம் (அன்புமணி)
பொருளாளர் : திரு.எல்.நடராசா
இவர்களுடன் ஒன்பதின்மர் கொண்ட நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.
2. செயற்பாடுகள்:
இம்மன்றம் புலவர்மனியின் பின்வரும் நூல்களை வெளியிட்டது. 1. புலவர்மணி கவிதைகள் 2. உள்ளதும் நல்லதும் (சுயசரிதை)
கார்த்திகை 2008

Page 10
3. பாலைக்கலி (கட்டுரைகள்) 4. புலவர்மணி நூற்றாண்டு விழா மலர் 5. விபுலானந்தர் மீட்சிப்பத்து
பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 1. ஆண்டுதோறும் புலவர்மணி நினைவுதின விழா (நவம்பர் 2ம் தேதி) 2. நூற்றாண்டு விழா 3. கவிதை, கட்டுரைப்போட்டிகள் 4. புலவர்மணி வீதிப் பெயரிடல் 5. புலவர்மணி நினைவு முத்திரை வெளியீடு 6. இலக்கிய கலாநிதி பட்டம் (கிழக்குப் பல்கலைக்கழகம்) 7. ஆண்டுதோறும் தமிழுக்கான நினைவுப்பரிசில் (கிழக்குப் பல்க
லைக்கழகம்) 8. புலவர்மணி சிலை (புலவர்மணி பூங்கா) 9. புலவர்மணிக் கோவை நூல் வெளியீடு (கலாநிதி க.தா.செல்லராசகோபால்) 10. தமிழ் விருதுபெற்றோரைக் கெளரவித்தல் 11. நூல் வெளியீட்டு விழாக்கள் 12. நூல் அறிமுகவிழாக்கள்
3. கடந்த கால நிர்வாக சபைகள் :
இம்மன்றத்தின் பொதுக்கூட்டங்களில் காலத்துக்குக் காலம் தெரிவு செய்யப்பட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் விபரம் வருமாறு: 1. 18.11.1978 - தலைவர் : அ. இ. பத்மநாதன்
செயலாளர் : திரு.ம.சிவநேசராசா பொருளாளர் : திரு.எல்.நடராசா
2. 02.10.1988 - தலைவர் : வித்துவான் FX.C. நடராசா
செயலாளர் : ஆசிரிய சிரோமணி.த.செல்வநாயகம் பொருளாளர் : திரு.கே. கார்த்திகேசு
3. 02.01.1992 - தலைவர்
68Fuguitary பொருளாளர்
திரு.இரா.நாகலிங்கம் திரு. கே. கார்த்திகேசு
55.85s, 8 Lig5 bLUTöFT
estãÉlecoes 2OOô

4. 05.03.1995 - தலைவர்
திரு. கே. கார்த்திகேசு திரு. சி. க.பொன்னம்பலம்
செயலாளர் பொருளாளர் திரு. இ. பாக்கியராஜா
5, 2012-1997 - தலைவர் திரு. சி.சண்முகம்
செயலாளர் : திரு. ரி.பொன்னம்பலம் பொருளாளர் : திரு.கே.தங்கவேல்
6. 24.11.2007 - தலைவர் திரு.த. கோபாலகிருஷ்ணன்
(செங்கதிரோன்) செயலாளர் : திரு.கதிர்பாரதிதாசன் பொருளாளர் : திரு.எம்.கனகரெத்தினம்
4. ஆரம்பகாலப் பணிகள் :
இம்மன்றத்தின் முதலாவது செயலாளரான அமரர் ம.சிவநேசராசா, மன்ற வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார்.
இம்மன்றத்தின் முதல் தசாப்த ஆண்டறிக்கையில் அவர் பின்வரும் செயற்பாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
女
★。
‘புலவர்மணி கவிதைகள்’, ‘உள்ளதும் நல்லதும்’ ஆகிய இரு நூல்கள் வெளியீடு. புலவர்மணியின் முதலாவது நினைவுதின விழா 2.11.79. இதனை யொட்டி பின்வரும் கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அ) புலவர்மணியின் எண்ணங்கள் என்றென்றும் வாழும்
(எஸ்.டி. சிவநாயகம் - “சிந்தாமணி') ஆ) புலமைக்கொரு புலவர்மணி
(வித்துவான் க. செபரத்தினம் - ‘வீரகேசரி')
07.03.19816) புலவர்மணி கவிதைகள் நூல் வெளியிடப்பட்டது.
மட்/தமிழ் ஆராய்ச்சி மன்றம் இதற்காக ரூ.3600/= அன்பளிப்புச் செய்தது.
02.11.1981ல் புலவர்மணி நினைவு விழா மட்/வின்சென்ட் மகளிர்
கல்லூரியில் நடைபெற்றது, மன்றத் தலைவர் ஏ.கே.பத்மநாதன் தலைமை வகித்தார்.

Page 11
5.
* புலவர்மணி அமராவதற்கு முன் தனது சுயசரிதையை "உள்ளதும் நல்லதும்’ என்ற தலைப்பில் சிந்தாமணி வார ஏட்டில் தொடர் கட்டுரையாக எழுதினார். 50 கட்டுரைகளுடன் இத்தொடர் நிறைவு பெற்றது. சிந்தாமணி ஆசிரியரின் அனுமதி பெற்று இம்மன்றம் அக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டது. இவ்வெளி யீடு 20.06.1982ல் மட்/மாநகர மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர் செ.இராசதுரை, மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எம். அந்தோனிமுத்து முதலியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவ்விழாவில் மன்றம் விடுத்த வேண்டுகோளை ஏற்று அமைச்சர் செ.இராசதுரை, சுவாமி விபுலானந்தரின் 'மதங்க சூளாமணி’ எனும் நூலை மறுபதிப்புச் செய்து வெளியிட்டார்.
நூல் அறிமுக விழாக்கள்: 05.09.1982ல் "உள்ளதும் நல்லதும் நூல் அறிமுகம் திருகோணம லையில், திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் அன்று நடைபெற்ற தி.த.கனகசுந்தரம் நினைவு விழாவில் இடம் பெற்றது.
பின்னர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இந்நூலின் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் செ.இராசதுரை, பேராசிரியர் ஆ. சதாசிவம், தினகரன் ஆசிரியர் இ. சிவகுருநாதன் முதலியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தனர்.
1992ல் புலவர்மனியின் 'பாலைக்கலி நூலும் கனடாவில் வதியும் கலாநிதி க.தா.செல்வராசகோபால் எழுதிய ‘புலவர்மணிக்கோவை’ நூலும் வெளிவந்தன. இவ்விரு நூல்களினதும் அறிமுக விழா 05.07.1992ல்
கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர்,
அமைச்சர் பி.பி.தேவராஜ் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
02.11.1992ல் புலவர்மணியின் ஒளரான குருக்கள்மடத்தில் அமைந்து ள்ள குருக்கள் மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில், புலவர்மணி நினைவு விழாவும் 'பாலைக்கலி நூல் அறிமுகமும் இடம்பெற்றன. சட்டத்தரணி இ. கந்தசாமி இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். விழா முடிவில் புலவர்மணி குடும்பத்தினர் மதியபோசனம் வழங்கினர்.
asseroa 2OO8

6.
இலக்கியவாதிகளைக் கெளரவித்தல் : 1992ல், அரச விருதுகள் பெற்ற பின்வருவோரை கெளரவிக்கும் நிகழ்வு புலவர்மணி நினைவுப் பணிமன்றத்தினால் நடாத்தப்பட்டது. இவ்விழா 24.04.1993 மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கெளரவிக்கப்பட்டோர் விபரம் வருமாறு () வித்துவான் FX.C. நடராசா - “கலாசூரி’ விருது (i) இரா.நாகலிங்கம் (அன்புமணி) - தமிழ்மணி” விருது (i) கவிஞர் செ. குணரத்தினம் - தமிழ்மணி' விருது (iv) திரு.ரீ.பாக்கியநாயகம் - தமிழ்மணி' விருது (V) திரு.எஸ்.டி.சிவநாயகம் - ‘இலக்கியச் செம்மல்’ விருது (v) திரு.வெ. விநாயகமுர்த்தி - “கலாசூரி’ விருது (1993ல்)
குறிப்பு: FX.C. நடராசா, எஸ்.டி.சிவநாயகம், ரீ.பாக்கியநாயகம் ஆகியோர் சமுகம் அளிக்கவில்லை.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நினைவுப் பரிசில் நிதியம்: புலவர்மனியின் குடும்பத்தினர் வழங்கிய நிதியுடன் மன்றத்தின் நிதியும் சேர்த்து ரூ.10,000/= நினைவுப்பரிசில் நிதியமாக கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கு வைப்பு செய்யப்பட்டது. இந் நிதியத்திலிருந்து ஆண்டு தோறும் தமிழில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் பட்டதாரி மாணவர் களுக்குப் பரிசில் வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழகத்தின் நினைவுப் பரிசில் நிதியம் : இவ்வாறே யாழ்பல்கலைக்கழகத்தில் 1992ல் பின்வருவோருக்கு பரிசில் வழங்கப்பட்டது. . .
(1) செல்வி 5'ufiksiT6Ox6T LDñ ற்கரசி - கோயில்வீதி சித்தாண்டி, (i) செல்வி. சி. ஜூலியானா ஞானேஸ்வரி - பெரியகல்லாறு
நூற்றாண்டு விழா, நூற்றாண்டு மலர் வெளியீடு: புலவர்மணியின் பிறந்ததின நூற்றாண்டு விழாவும் 19வது நினைவு
தினவிழாவும் 08.01.1998ல் மட்/ஆனைப்பந்தி R.K.M மகளிர் வித்தியால
யத்தில், மன்றத் தலைவர் திரு. சி.சண்முகம் (அரச அதிபர்) தலைமை யில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Page 12
பிரதம விருந்தினராக, அப்போதைய மாநகர முதல்வர் திரு.செழியன் ஜே.பேரின்பநாயகம் கலந்து கொண்டார். பேராசிரியர் சி. மெளனகுரு நினைவுப் பேருரை நிகழ்த்தினார். திரு. சி.சண்முகம் தலைவராக இருந்த காலத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன.
Sleo)6):
நூற்றாண்டு விழாமலர் வெளியீடு : இம்மலரை திரு.இரா.நாகலிங்கம் (அன்புமணி) தொகுத்தளித் தார். பல அரிய கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்று அதை ஒரு உசாத்துணை நூலாக்கியது.
புலவர்மணி சிலை : மன்றத்தின் நீண்டகாலக் கனவாக இருந்த சிலை நிறுவுதல் புலவர்மணியின் நூற்றாண்டு விழாக்காலத்தில் நிறைவேறியது.
வருமான கலாநிதி. க.தா.செல்வராசகோபால் (கனடா) இதற் கான முழுத்தொகையினையும் அன்பளிப்புச் செய்தார். நிற்கும் நிலையிலுள்ள இம் முழு உருவச்சிலையை சிற்பி டாக்டர். கந்தசாமி செய்து கொடுத்தார். இச்சிலை மட்டக்களப்புக் கல்வித் திணைக் களத்திற்கு முன்னுள்ள சிறிய பூங்காவில் நிறுவப்பட்டது. அன்று முதல் இன்றுவரை, நவம்பர் 2ம் திகதி வரும் புலவர்மணி நினைவு தினம் இச்சிலை முன்பாகவே அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
8. புலவர்மணி பற்றிய நூல்கள்:
புலவர்மணியைப் பற்றிய நூல்கள் அவ்வப்போது வெளிவந்துள்ளன. அவற்றுள் பின்வருபவை குறிப்பிடத்தக்கன.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஓர் ஆய்வு (2005) எழுதியவர் திரு. சி. சிவநிர்த்தானந்தா, கல்விப்பணிப்பாளர். சித்தாண்டியைச் சேர்ந்த திரு.சிவலிங்கம் ஆசிரியரின் மகன் ஆவார். இந்நூல், நூலாசிரியரது M.A பட்டத்துக்கான ஆய்வு நூலாகும். இந்நூலின் வெளியிட்டு விழா மட்/ஆசிரிய கலாசா லையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.
புலவர்மணி பெரியம்பிப் பிள்ளை வாழ்க்கைக் குறிப்புகள் எழுதியவர் கலாநிதி க.தா. செல்வராசகோபால் (கனடா)
asmeroars 200ô

புலவர்மணிக்கோவை (செய்யுள் நூல்) : எழுதியவர் கலாநிதி. க.தா.செல்வராசகோபால் (கனடா) இந்நூலின் அறிமுகவிழா, கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடை பெற்றது. இது பற்றி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவைதவிர சில சிறிய நூல்களும் அவ்வப்போது வெளிவந்துள் ளன. அவற்றுள் பின்வரும் நூல் குறிப்பிடத்தக்கது.
கிழக்கின் பேரொளி புலவர்மணி (மாணவருக்கானது)
எழுதியவர் புலவர்மணியின் சொந்த இளரான குருக்கள் மடத்தைச்
சேர்ந்த கவிஞர் சதா.நவரெத்தினராஜா
பதிப்பகம் ஜீவாபதிப்பகம், தேற்றாத்தீவு (1980)
பதிப்பாசிரியர் : க.தா.செல்வராச கோபால், தேற்றாத்தீவு
(இவரே 1984ல் கனடா சென்று புலவர்மணி பற்றிய இரு நூல்களை வெளியிட்டவர்)
புலவர்மணி பற்றிய முதலாவது வாழ்க்கை வரலாறு நூல் இது என்பதுவும், புலவர்மணி ஜீவியவந்தராக இருக்கும் போதே இந்நூல் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலவர்மணி குரும்பத்தினரின் மங்களிப்பு: புலவர்மணி நினைவுப் பணிமன்றச் செயற்பாடுகளுக்கு அவரது குடும்பத்தினர் அளித்த அனுசரணையும், ஒத்துழைப்பும் மறக்க முடியாதது. அவரது முத்த புதல்வர் பெ.தருமலிங்கம், இளைய புதல்வர் பெ. விஜயரெத்தினம் ஆகியோர் கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற வைபவங்களை ஏற்பாடு செய்வதில் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர்.
திரு. பெ. விஜயரெத்தினம், தமிழ் தந்த புலவர்மணி’, ‘புலவர்மணி கவிதைகள்’ (2வது) ஆகிய நூல்களைத் தொகுத்து வெளியிட்டுள் ளார். புலவர்மணியின் கடைக்குட்டி மகன் திரு. பெ. சத்தியலிங்கம், மட்டக்களப்பில் நினைவு தினங்களை ஏற்பாடு செய்வதில் முன்னின்று பாடுபட்டுள்ளார். அவ்வாறே புலவர்மணியின் மருகர் திரு.சி.குமார சாமி, மேற்படி நினைவு தினங்களை நடாத்துவதில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளர்.
四|器。

Page 13
O.
புலவர்மணியின் ஒவ்வொரு நினைவுதின வைபவத்தின்போதும், அவரது குடும்பத்தினர் அத்தனைபேரும், மலர் மாலைகளுடன் வந்து, நிகழ்ச்சியைச் சிறப்பாக நடாத்த உதவியுள்ளனர். புலவர்மணியின் உறவினர் ஒருவர் லண்டனிலிருந்து ரூ.50,000/= பணம் மன்றப்பணிக ளுக்காக புலவர்மணியின் மருகரான திரு.சி.குமாரசாமிக்கு அனுப்பி யுள்ளார். இப்பணம் அவரிடமே உள்ளது.
புதிய செயற்குழு : 1998ம் ஆண்டின் பின் சில வருடங்கள் செயற்படாமலிருந்த இம்மன்றம் 24.11.2007ல் புனரமைக்கப்பட்டது. புதிய செயற்குழு உறுப்பினர் விபரம் வருமாறு : காப்பாளர்கள் :
1. இரா.நாகலிங்கம் (அன்புமணி)
2. கலாசூரி வெற்றிவேல் விநாயகமுர்த்தி
தலைவர் : திரு.த. கோபாலகிருஷ்ணன் (செங்கதிரோன்)
செயலாளர் :
திரு.கதிர்பாரதிதாசன்
பொருளாளர் :
திரு.மா. கனகரெத்தினம்
துணைத் தலைவர்கள் : திரு.எஸ். எதிர்மன்னசிங்கம், திரு. வே. லட்சுமிசுந்தரம்
துணைச் செயலாளர் :
திரு. இ.மகேந்திரன்
செயற்குழு உறுப்பினர்கள் : திரு. சி.குமாரசாமி, திரு. ஆலாலசுந்தரம், திருமதி. மண்டூர் அசோகா
திரு.எஸ். அந்தோணிமுத்து (முத்தழகு), சைவப்புலவர் எஸ்.தில்லை
நாதன், திரு. பெ. சத்தியலிங்கம், திருமதி.சாரதாதேவி சிவபாலன், திரு.க. விநாயகமுர்த்தி, திரு.இரா.நித்தியானந்தன், திரு. க.கிருஷ்ண பிள்ளை (திமிலைத்துமிலன்), திரு.த. இளங்கோவன், திரு.க.அருட்பிரகாசம்
கணக்காய்வாளர்கள் : திரு.PDA.ஜெயக்குமார், திரு. அ. ச. பாய்வா து
6്ളിയ6 2006

-கவிஞர் முனாக்கானா
மட்டக்களப்பு புலவர்மணி நினைவுப் பணிமன்றம் 1995 இல் நடாத்திய நாடளாவிய திறந்த கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற கவிதை. இக்கவிதை கவிஞர் மூனாக்கானாவின் ‘கவிதை நெஞ்சம்” (மணிமேகலைப் பிரசுரம் - 2008) நூலிலும் இடம்பெற்றுள்ளது.
மட்டுநகர் தந்தமணி, மதியோர்க்குள்ளே மாமேரு போன்றமணி, தமிழாந்தேனை கொட்டுகின்ற மேகமணி, குழந்தையுள்ளம் கொண்டதொரு அன்புமணி, உயர்வு தாழ்வை வெட்டிவிட்ட வீரமணி, பழகுதற்கோ மேலான பண்புமணி, இவையனைத்தும் தொட்டுநின்ற புலவர்மணி, பெரிய தம்பிப் பிள்ளையெனுந் திருநாமம் வாழ்க! வாழ்க!
புவிபோற்றுங் காப்பியங்கள் சங்கநூல்கள் புராணங்கள் திருமுறைகள் தோறுங்கண்ட கவிதைகளில் ஊடுருவி உண்மைகண்டோன் கற்ற இவன் முகம்பார்த்து தமிழ் தா வென்று தவியாகத் தவித்துவரும் தமிழ் ஏழைக்கு தாராள மாய்க்கொடுத்தோன் புகழைநாங்கள் செவியிருந்தும் கேளாது விட்டோமானால் செவிகளைநாம் பெற்றிருந்தும் செவிடராவோம்.
வெண்பாவில் புகழேந்தி என்ற நாமம் விலக்கிவிட்டு அப்புகழை தனதாய்க்கொள்ள ஒண்பாவாம் கீதைவெண்பா நமக்குத் தந்தார் உலகுபுகழ் கவிஞரதை ஏற்றுக்கொண்டார் எண்ணுவதும் சொல்செயலும் ஒன்றேயான எங்களது புலவர்மணி கவிதை தன்னை கண்ணிருந்தும் பார்த்துமணம் மகிழாவிட்டால் கண்களை நாம் பெற்றிருந்தும் குருடராவோம்.

Page 14
தாயினது உளங்கொண்டு தமிழ்ப்பாலூட்டி தமிழறிஞர் பலரையிங்கே வளர்த்துவிட்ட நாயகனாம் புலவர்மணி இன்று இல்லை நாட்டிவைத்த விருட்சங்கள் பலவுமுண்டு தூயவிபுலாநந்தன் அடிக்கீழ் நின்று தொண்டுசெய்த பெரியதம்பி சேவைதன்னை வாயிருந்தும் பேசாது விட்டோமானால் வாயதைநாம் பெற்றிருந்தும் ஊமையாவோம்.
தையலரும் மீனினமும் கவிகள்பாடும் தகுதிகொண்ட மட்டுநகர் மண்ணின் மீது துய்யசிவமணங்கமழும் மண்டூர்தன்னில் தோன்றியாழ் நகர்சென்றும் புலமைபெற்று வையகத்தில் தாய்மண்ணை மதிக்கவைத்த மன்னுடபுகழ் பெரியதம்பி வடித்த நூலை கையினிலே தொட்டெடுத்துப் படிக்காவிட்டால் கையிருந்தும் சொத்திகளாய் வாழ்வோமன்றோ?
மலைவிளக்காய் புகழ்பூத்து உயர்வுகொண்டோன் மாணவர்க்குச் சுரபியைப்போல் அறிவுதந்தோன் நிலையாகத் தொண்டு செய்தத் துறவுபூண்ட நிகரற்ற நமதுவிபுலாநந்தருக்கு கலையாமல் குயிலே! நீ பாடு என்று கவிசெய்தோன் சிலையேனுங் கண்டு நாங்கள் தலைசாய்த்து நாம் வணங்கிச் செல்லாவிட்டால் தலையினை நாம் வைத்திருந்தும் பயனேயில்லை.
சொல்லினிமை கொண்டதொடருரையின்மூலம் உள்ளதுவும் நல்லதுவும் உரைத்தோனன்று இல்லையெனில் தமிழ்மரபுக் கவிகளேது இறைபுகழ்சொற் பொழிவுமிலக் கணமுமேது எல்லையில்லா இலக்கியத்தின் பொருளுமேது எமதுமண்ணின் புகழேது இவைகள் தந்த நல்லவனை இதயமதில் நினையாவிட்டால் நாமிதயம் வைத்திருந்தும் பயனேதையா?
asmeros 2008

சேலாடும் பொய்கைகளும் திருஆடும்வயலும் சிவநெறியும் திருநீறும் தினமாடும்பண்பும் வேலாடும் முருகனது பதியாடும் மண்டூரில் மிகுமேன்மைக் குடும்பத்தில் வளர்மதியாய்த்தோன்றி நூலாடும் மன்றங்கள் அறிவகங்கள் தோறும் நுண்கலைகள் தந்தவனின் வீடுபதிநோக்கி காலாடும் படிநடந்து கண்டு தொழாவிட்டால் காலிருந்தும் முடவர்களாய் நாம்வாழ்வமன்றோ.
பிறந்தவர்கள் உலகினிலே பலநூறுகோடி பிறந்தறிஞராகியவர் ஒரு சிலவேலெட்சம் சிறந்தகவிப் புலவர்சில ஆயிரமேயுண்டு சிந்தையிலே நின்றோரில் புலவர்மணிஒன்று நிறைந்தகுடம் போலமைதித் தமிழ்த்தொண்டு செய்த நிகரற்ற பெரியதம்பிப் புலவரதுநாமம் நறையெனவே செவியினிக்க நா பேசாவிட்டால் நாவிருந்தும் கொன்னையராய் நாம் வாழ்வமன்றோ.
நித்தியமும் வெள்ளாடை புனையுமொருமேனி நிறையறிவு காட்டுகின்ற பரந்ததொருநெற்றி பத்தியொடு திருமுறைகள் ஒதுகின்றநல்வாய் பார்த்தவரைக் கவர்ந்திழுக்கும் பார்வையுள்ள கண்கள் சத்தியஞ்சொல் கவிபுனையும் பேனையுள்ள ன்கயும் சாமிதலம் வலம்வருகும் தளராத காலும் இத்தனையுங் கொண்டவனின் பூதவுடம்பில்லை இனிமேலும் வாழ்ந்திடுவான் புகழுடம்பினோடு.
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிடமிருந்து ஆக்கங்கள் ۔۔۔۔
வரவேற்கப்பருகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர், "செங்கதிர்’ இல.19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
ඝmüÑñóගඝ 20Oර්

Page 15
உள்ளதும் நல்லதும்
புலவர்மணி ஏபெரியதம்பிப்பிள்ளை அவர்கள் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகளைத் திரட்டி தனது எண்பதாவது வயதிலே ‘உள்ளதும் நல்லதும்’ என்னும் தலைப்பிலே “சிந்தாமணி வார இதழில் வாராவாரம் தொடர்கட்டுரைகளாக எழுதினார். அப்போது தினபதி - சிந்தா மணி பிரதம ஆசிரியராக திரு. எஸ்.டிசிவநாயகம் அவர்கள் விளங்கினார். இக்கட்டுரைகளைச் சேர்த்து ‘உள்ளதும் நல்லதும்’ எனும் அதே பெயரிலே 1982இல் புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை நினைவுப் பணிமன்றம் தனது இரண்டாவது வெளியீடாக வெளியிட்டது. அந்நூலிலிருந்து சில பகுதிகளைத்
தொகுத்து இங்கு தருகிறோம். 0L S S L S S S 0LASqqqqqq S LLL S S L S S 0L S S LLLL S S
நன்றி : "உள்ளதும் நல்லதும் الم
ா முன்னுரையிலிருந்து.
சுவாமி விபுலானந்தர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் ஒரு நெருங்கிய நண்பராகவும், உறவினராகவும் விளங்கினார். அதேவேளை, சுவாமிகளைக் குருவாகவும் ஏற்றுக்கொண்டு அவரிடம் தமிழ் இலக்கிய மும், ஆங்கில இலக்கியமும் கற்றார் புலவர்மணி பெரிதம்பிப்பிள்ளை அவர்கள்.
சுவாமி விபுலானந்தரின் மாணாக்கரின் மாணாக்கர் ஆகும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அதாவது, புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் எனக்குக் குருவாக வந்து வாய்த்தார். இது நான் செய்த பாக்கியமாகும்.
என்னைப் போலவே அந்தப் பாக்கியம் பெற்ற இன்னொருவர் திரு.ம.சிவநேசராசா அவர்களாவார்.
நாங்கள் இருவரும் அப்போது மட்டக்களப்பில் சுத்தாநந்தர் கழகம் என்று ஒரு கழகத்தை அமைத்து அதன் இணைச் செயலாளர்களாகப் பணிபுரிந்து வந்தோம். அந்தக் கழகத்தின் ஆதரவுடன் ஒரு தமிழ் இலக்கிய வகுப்பை ஏற்பாடு செய்திருந்தோம். அந்த வகுப்பின் நல்லாசி ரியராக அமைந்தார் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்.
estfägóleos 2006

பத்து பன்னிரண்டு மாணவர்கள் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களிடம் பாடம் கேட்டோம். நன்னூல், தொல்காப்பியம், யாப்பிலக் கணம், திருக்குறள், கம்பராமாயணம், நளவெண்பா, பெரிய புராணம் முதலிய நூல்களிலிருந்து பல பகுதிகளை ரசமாகப் பிழிந்து வடித்தெடுத்து எங்களுக்குப் பருகக் கொடுத்தார் புலவர் மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்கள். அவர் போட்ட அத்திவாரம் பலமான அத்திவாரமாக அமைந்தது. அப்போதுதான் புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் எப்பேர்ப்பட்ட ஒரு பேராசிரியர் என்பதை என்னால் மட்டுமல்ல நண்பர் திரு.ம.சிவநேசராசா அவர்களாலும் அறியவும் முடிந்தது, உணரவும் முடிந்தது.
எஸ்.டி.சிவநாயகம் கொழும்பு, பிரதம ஆசிரியர், )5.02.1982 தினபதி - சிந்தாமணி.
ா பதிப்புரையிலிருந்து.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பேரறிஞருள் ஒருவர், மாபெரும் கவிஞர், சிறந்த ஆசிரியர், சமரசவாதி, கேட்டார்ப் பிணிக்கும் மேடைப்பேச்சாளர்; தன்னலமற்ற சமயப் பிரசாரகர், தேசப்பற்று மிகுந்தவர்.
மரபு வழியான கல்வியை நடமாடும் பல்கலைக்கழகம் போன்ற சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரிடம் பயின்றவர். இரு பல்கலைக்கழகங்களின் முதற்றமிழ்ப் பேராசிரியராக இருந்த விபுலானந்த அடிகளார் தொடர்பால் அறிவையும், புலமையையும் வளர்த்துக் கொண்டவர்.
தாம் வாழ்ந்த எழுபத்தொன்பதாண்டுகளில் அறுபதாண்டுகள் பல்வேறு சமய, கலாசார, அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டுழைத்தவர்.
இத்தகைய முதுபெரும் அறிஞரின் பெருமைகளை நாம் பூரணமாக அறிய முடியாமலிருந்து வந்தது. இக்குறையைப் புலவர்மணி அவர்களே ‘உள்ளதும் நல்லதும் கட்டுரைகளை சிந்தாமணி இதழில் எழுத முன்வந்ததன் மூலம் தீர்த்துவைத்தார்கள்.
ம.சிவநேசராசா
38, வாவி வீதி எண் - 2, செயலாளர், மட்டக்களப்பு. புலவர்மணி நினைவுப் பணிமன்றம், O.O2.982 மட்டக்களப்பு.

Page 16
ா மண்டூருக்குத் தென்கிழக்கே எட்டுமைல் தூரத்தில் கல்முனைப் பட்டினம் அமைந்துள்ளது. அது மட்டக்களப்பின் இரண்டாவது பட்டினமாகும். அங்கே உவெஸ்லியன் மிஷன் ஆங்கிலப் பாடசாலையொன்று நடந்து கொண்டிருந்தது.
அது இப்போது வெஸ்லிக் கல்லூரியெனப் பெரிய கல்வித் தாபனமாக விளங்குகிறது. அந்த நாளில் அதற்கு முகாமையாளராக இருந்தவர் கனம் பாக்கர் ஐயரவர்கள். வெள்ளைக்காரப் பாதிரிமாரை ஐயர் என்பது அக்கால வழக்கம்.
பாதிரிமாரும், உபதேசிமாரும் ஊரூராய்ச்சென்று சமயத்தொண்டும்,
கல்விச்சேவையும் செய்து கொண்டிருந்த காலம் அது. கனம் பர்க்கர்ஜயர்
இதே நோக்குடன் எங்கள் வீட்டுக்கும் வருகை தந்தார். இதனால், எனது
ஆங்கிலம் கற்கும் ஆசை இலேசாக நிறைவேறும் வாய்ப்புக் கிடைத்தது.
() () ( )
ா மட்டக்களப்பு மாநாடு என்றால் அது மீன்பாடும் தேன்நாடு. நான் பால கனாயும், வாலிபனாயும் இருந்தபோது கண்ட இந்நாட்டின் வளமையை ஒரு சிறிது கூறுகின்றேன். இது இயற்கை நவிற்சி.
“பால்பெருகும்; தேன்பெருகும்; பண்புடைய மன்னவர்செங் கோல்பெருகும் படிவயற்பைங் கூழ்பெருகும்; புனல்பரந்து கால்பெருகும்; கல்லார்க்கும் சொல்லாட்சி மிகப்பெருகும்; நூல்பெருகும் இடையார்க்கு நுவலறங்கள் பெருகுமால்.” இன்று காலம் மாறிவிட்டது. நிலமை வேறு. எனது இந்தப் பாட்டைப் படிப்பவர்கள், இது வெறும் புனைந்துரை என்றுதான் சொல்ல வேண்டி யிருக்கும். М
சமூக வாழ்விலும், சமயவாழ்விலும், அரசியல் வாழ்விலும் ஓர் இணைப்பு வழியைப்பின்பற்றி நடக்கும் நாடு இந்நாடு. விபுலானந்த அடிகளார் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டு காலத்தின் முன்பே இந்த வாழ்க்கைமுறையில் இது பூரண வளர்ச்சி பெற்றிருந்தது. விபுலானந்தரின் வருகையால் ஒரு புது உயிர்ப்பும், புது மலர்ச்சியும், புது மணமும் பிறந்ததென்றே சொல்லலாம்.
盟。

இந்த இணைப்பு முறையால் சிவபக்தியும், கிருஷ்ணபக்தியும், கண்ணகி வணக்கமும், திரெளபதி வழிபாடும் இந்நாட்டு மக்களிடையே சமமாகப் பிரபலம்பெற்று விளங்குகின்றன.
கண்ணகி வழக்கத்தின் வாயிலாக வழக்குரை காதையும், திரெளபதி வழிபாட்டின் வாயிலாக வில்லிபுத்தூரர் பாரதமும் இந்நாட்டிலே நிலை கொண்டுள்ளன. இங்குள்ள திரெளபதி கோயில்கள் மிகப்பல. இவற்றுள்ளே கல்முனையின் வடக்கெல்லையிலே பாண்டிருப்பு என்னும் பழம் பேரூரில் உள்ள கோயில் மிகப் பிரசித்தி பெற்றது.
உண்மையிலேயே பஞ்சபாண்டவர் திரெளபதிதேவியுடன் இப்போது அங்கே உயிருடன் வாழ்கின்றர்கள் என்றுதான் பாண்டிருப்பைச் சொல்ல வேண்டும் அவ்வளவு பஞ்சபாண்டவர் திரெளபதி பக்தியின் மயமாக அது திகழ்கின்றது. ஆண்டுதோறும் புரட்டாசி மாசத்திலே அங்கு திருவிழா நடைபெறும். தீப்பாயும் வைபவம் மிகவும் அற்புதமானது. அக்கினி பகவான், திரெளபதி அம்மனின் பூரணகட்டுப்பாட்டுக்கு அடங்கிச் சாந்த சொரூபியாய் அமைதி கூடுவதை அங்கே காணலாம்.
திரெளபதி அம்மன் கோயில்களில் எல்லாம் இந்த விழா நாட்களில் வில்லிபாரதம் படித்துப் பயன் சொல்லுவது வழக்கம். பாண்டிருப்பில் பாரத மென்றால் ஒரு தனி மதிப்பு. பாரதம் தெரியாத ஒருவரை மட்டக்களப்பில் தமிழ் படித்தவராக கொள்ளமாட்டார்கள். மட்டக்களப்புக் கலாசாரம் பாரதமேதான்.
(a) () (9 (a
கன்னக் கொண்டைதான் மட்டக்களப்பு நாகரிகம். எனக்கும் கன்னக் கொண்டை என் போன்ற இளைஞர்கள் எல்லாருக்கும் கன்னக்கொண் டையே. இப்போது கொண்டையுமில்லை, குடுமியுமில்லை. எங்கும்
விரி சிகைதான். .
() () () ()
தந்தையாரும் சம்மதித்து, கல்முனைக்குப் போய் ஆங்கிலம் படிக்க ஆயத்த மாகும்படி அன்பாகக் கூறினார். தாமில்லாப் பிள்ளை, சலுகையும் கூட. தமிழ்க்கதவு அடைபட, முன்அடைபட்டிருந்த ஆங்கிலக் கதவு
29|3ෂ්
கார்த்திகை 2008

Page 17
திறந்தது. எனது கவலையெல்லாம் பறந்தது. ஒரு புது மகிழ்ச்சி பிறந்தது. நகையும், அழுகையும் கலந்ததுதானே இந்த உலகம். எல்லா ஒழுங்கு களையும் செய்துகொண்டு கல்முனைக்குப் புறப்பட்டேன். சதாசிவம் கோஷ்டியில் நாங்கள் நாலைந்து பேர். கல்முனை எட்டுக்கட்டை. விடிய நாலுமணிக்கு எழும்பவேண்டும். நடந்து தான் போகவேண்டும். ஆறும் கடக்கவேண்டும். துறைநீலாவணத்துறை முக்காற்கட்டை விசாலம் துழா (சவள்), துடுப்பு (தண்டு), ஊன்றுகம்பு இம்மூன்றாலும் தோணியைச் செலுத்தவேண்டும். புதுப்பழக்கம். கைப்பட்டை தூக்க முடியாமல் நோகும். இந்தச் சிறப்புகளின் மத்தியிலே வேர்த்து விரு விருத்துக் காலை எட்டுமணிக்கு கல்முனை போய்ச்சேருவோம். துறைச் சுணக்கம் ஏற்பட்டால் ஒன்பதாயும் போகும். வெள்ளிக்கிழமை சாயந்தரம் இதே நடையில் ஊருக்குத் திரும்புவோம்.
ஒரு புதுச் சூழ்நிலை. இனி எனது தனி அனுபவத்தையே சொல்ல வேண்டிய நிலை. கனம் பாக்கர் ஐயர், கனம் லொக்வூட் ஐயர், கனம் சீடபிள்யூ தாமோதரம் பாதிரியார், திருஈ.சீ. டேவிட் என்னும் நல்லோரின் அறிமுகமும், ஆதரவும் எனக்குக் கிடைத்தன. திருடேவிட் அவர்கள் எனது கலாசாலை அதிபர். கோப்பாயைச் சேர்ந்தவர். எனக்குப் பல வகையில் உதவிய உபகாரி. அப்போது அங்கே ஆசிரியராயி ருந்து எனது ஆங்கிலக் கல்விக்கு வித்திட்டவர் திருகே.எஸ்.குஞ்சித்தம்பி அவர்கள்.
விபுலானந்த அடிகளாருக்கு ஆரம்ப ஆங்கில ஆசிரியராயிருந்த அன்னர் எனக்கும் ஆசிரியராக வாய்த்தமை ஒரு பெரும் பேறாகும். இவ்விரு பெருங்குரவரையும் இங்கே நினைவுகூருகின்றேன்.
() () () () ா மட்டக்களப்பு முழுவதிலும் ஒரு பேரியக்கம் நடந்து கொண்டிருந்தது. நமது பிள்ளைகள் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கவேண்டுமென் பதுதான் அந்த இயக்கத்தின் நோக்கம்.
சுவாமி விவேகானந்தரின் அமெரிக்க சிஷ்யைகளுள் ஒருவரான சகோதரி அவபாமியா அம்மையார் மட்டக்களப்புக்கு விஜயம் செய்து கிராமங் கள் தோறும் இந்து சமயப் பிரசாரம் செய்தமையால் நாடெங்கிலும் ஓர்
|ඝ
snůšáleons 20O5

எழுச்சி உண்டாயிற்று. இந்த எழுச்சியின் பயனாகவேதான் மேற்குறிப்பிட்ட பேரியக்கம் தோன்றியது. 1914ஆம் ஆண்டு தொடக்கம் 36ம் ஆண்டு வரையும் இவ்வியக்கம் நடைபெற்றது. சைவப் பிள்ளைகளெல்லாரும் சைவப் பள்ளிக்கூடத்திற் படிக்கவேண்டும் தேவையான பள்ளிக்கூடங்களை ஊரெங்கும் நாமே கட்டுவோம் என்று பெரியோரும், இளைஞர்களும் துள்ளியெழுந்து நமது தோள்களால் மரம் தடிகளைச் சுமக்கிறார்கள். கட்டடங்கள் எழும்புகின்றன. முந்தியே இவ்வியக்கத்தில் விடுமுறை
காலங்களில் இடையிடையே கலந்து கொண்ட நான் இப்போது முழுநேரத் தொண்டனாகிவிட்டேன்.
எங்கள் நோக்கம் நல்ல நோக்கம். இதுவரையும் நமது காரியங்களை நமக்காகப் பிறர் செய்தது போதும். இனி எமது அலுவல்களை நாமே பார்ப்போம் என்பதுதான் எங்கள் குறிக்கோள். இதைப் பிழையாக விளங்கிக் கொண்ட சிலர் எங்கள் இயக்கம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது, மிஷனரி மாருக்கு துரோகம் பண்ணுவது என வீண்பழி தூற்றலாயினர்.
அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள் சிலரின் செல்வாக்கைக் கொண்டு எங்கள் இயக்கத்தை நசுக்கவும் முயன்றனர். இது பலிக்கவில்லை. எனினும் மிஷனரிமாரைப் பற்றிய நல்லெண்ணம் என் மனத்தில் இருந்து கொண்டே இருந்தது. இது 1921ஆம் ஆண்டில் ஒரு செய்யுளாகப் பரிணமித்துள்ளதை இங்கே குறிப்பிடவிரும்புகிறேன்.
“உடல்பொருள் ஆவி மூன்றையும் நமக்காய்
உதவிட உளந்தனில் உன்னிக் கடல்பல கடந்து தேசத்தை விருத்துக் கதித்திரு சுதந்திரம் விருத்துப் படலரும் பெரிய பாடுகள் பட்டுப் பணிக்கெனத் தம்மையர்ப் பணித்த திடமுள மனத்து மிஷனரி மாரின் செய்ந்நன்றி காந்தல் நம்கடனே”
இச்செய்யுள் “கிறிஸ்தவ சபைத் துயிலுணர்ச்சி” என்னும் எனது நூலிலுள்ளது. இந்நூல் நாற்பத்தைந்து விருத்தங்களால் ஆகியது. 1921ஆம் ஆண்டில் மதுரையில் அரங்கேறியது. நூல் கைவசமில்லை.
35
5res 2OO8

Page 18
இனி எங்கள் இயக்கத்துக்கு வருகின்றேன். இந்த இயக்கத்தினால் நாடெங்கும் சைவ மணம் கமழ்ந்தது ஒருபுறம் மட்டக்களப்பும் யாழ்ப்பாண மும் இரண்டறக் கலந்தது ஒருபுறம். நமது பிள்ளைகள் இருக்க வேண்டிய இடத்திலிருக்க வேண்டும் என்று கோஷமெழுப்பிய எங்களை கைதுக்கியாண்ட பல பெரியோர்களை இங்கே நினைவுகூருகின்றேன்.
இவர்களுக்குள்ளே, முதலியார் காவமார்க்கண்டன், குருநாதபிள்ளை கனகசபை, கந்தப்பர் முத்தையா ஜேயி, வித்துவான் சபூபாலப்பிள்ளை, பண்டிதர் சாமிதாச மயில்வாகனனார், வித்துவான் அசரவணமுத்தன், தேசிகமணி அருணாசலம், வித்துவான் பொவைத்தியலிங்க தேசிகர், பொ.ஆறுமுகசாமி என்போர் இந்நாட்டைத் தாயகமாகக் கொண்ட தவப் புதல்வர்களாவர்.
அருளம்பலச் சுவாமியர் காணிப் பதிவுக் கந்தேர் அதிர் வட்டுக்கோட்டை கவியித்தியலிங்கம் பி.ஏ இதே பதவி வகித்தவர், வண்ணார் பண்ணை தம்பி பஞ்சாட்சரம், தெல்லிப்பளை பொஅம்பலவாணர், மல்லாகம் மாணிக்கம் இவர்கள் மூவரும் மட்டக்களப்புக் கச்சேரி உயர் அதிகாரிகள், சுளிபுரம் ஐக்கியச் செல்லப்பா, இவர் பொலீஸ் கந்தோர் பிரதம லிகிதர், களுவாஞ்சிக்குடி பொன்னம்பலச் சக்கடத்தார் என்போர் யாழ்ப்பாணத்துப் பெருமக்களாவார். நினைவில் வராத இன்னும் சிலரை இங்கே குறிப்பிட முடியாமற் போனமைக்கு வருந்துகின்றேன்.
சனி, ஞாயிறு, வேறு விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் எங்கள் வீடு பெரிய விழாக்கோலம் பூண்டுவிடும். இவர்களெல்லாரும் எங்கள் வீட் டில் வந்து கூடிவிடுவார்கள். நெல்மலைகள் உள்ள ஊர். விருந்து பசாரத்துக்குக் குறைவில்லை. நாயன்மார் காலம் வந்துவிட்டதோ?
நிகழ்ச்சி நிரலின்படி போகவேண்டிய ஊர்களுக்கு போய் மக்களை அஞ்ச வேண்டாம் என அபயமளித்துச் செல்வார்கள். இந்த இயக்கத்தின் பயனாகப் பல பெரியார்களைச் சந்தித்து அவர்களுக்குச் சேவைசெய்யும் பழக்கமும் எனக்கு வாய்த்தது. பெரியோரின் ஆசியும் கிடைத்தது.
(a) () () ()
இதிேரி stളി(6 2OO8

ா ஆவணிமாதம் முடிய யாழ்ப்பாணம் பயணம். அதுவும் தனிப் பயணம் தந்தையார் முதலிய பெரியோரின் ஆசியும், சிறிய தந்தையார் வயத்தக் குட்டி ஆசிரியரின் கடிதமும் துணையாகப் புறப்படுகின்றேன். அந்தக்காலம் மட்டக்களப்பில் பஸ் வண்டியுமில்லை, புகைவண்டியுமில்லை. மட்டக்களப்பு முகத்துவாரத் துறைமுகத்திலிருந்து பாய்க்கப்பலில் அல்லது புகைக் கப்பலில் பயணம் பண்ணவேண்டும்.
மர்க்கண்டு முதலாளிக்குச் சொந்தமான சின்னப் பருவதம் பெரிய பருவதம் என்னும் பாய்க்கப்பல்களும், லேடி மக்கலம், லேடிவிளேக் என்னும் புகைக்கப்பல்களும் இலங்கையைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது ஞாபகம் ஒரு குறிப்பிட்ட நன்னாளில் முகத்துவாரத்திலிருந்து இரவு எட்டு மணிக்கு லேடிமக்கலம் மூலமாகப் புறப்பட்டேன். விடிய ஐந்து மணிய ளவில் கப்பல் திருகோணமலையை அடைந்தது. திருகோணமலையில் கடல் கிழக்குப் புறம், துறைமுகம் மேற்குப் புறம். 'ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்’மனம்போல் அமைதி கொண்டிருந்தது இந்த இயற்கைத் துறைமுகம். இது எனது வாழ்க்கையில் ஒரு புது அனுபவம் கரையிலே என்னைக் காத்துக் கொண்டிருந்தார் திருகோபாலப் பிள்ளை ஆசிரியர். சிறிய தந்தையார் பத்தக்குட்டி ஆசிரியர் கொடுத்த தந்தித் தகவலால் இந்தப் புது அறிமுகம் கிடைத்தது. அன்று அன்னாரின் விருந்தாளியாய் இருந்து விட்டு இரவு எட்டு மணிக்குக் கப்பலேறினேன். விடிய ஐந்து மணிக்குக் கப்பல் பருத்தித்துறை சேர்ந்தது. கரைக்கு வந்ததும் இரண்டு புதுமுகத்தினர் என்னை அடையாளம் கண்டு கொண்டு அணுகிவந்து தம்மை அறிமுகம் செய்து கொண்டார்கள்.
ஒருவர் பண்டிதர் மகாலிங்கசிவத்தின் தம்பி நடராசா, மற்றவர் சிகணபதிப் பிள்ளை. நடராசா பிற்காலத்தில் பி.எஸ்.ஸி பட்டதாரியாகிக் கலாசாலை அதிபராயிருந்து அண்மையிற் காலமாகிவிட்டார். சிகணபதிப் பிள்ளை பிற்காலத்தில் பண்டிதமணியாய் இன்று பல்கலைக்கழகத்து இலக்கிய கலாநிதியாய் எண்பது கண்டு இனிது வாழ்கின்றார். நாங்கள் மூவரும் காலைச்சாப்பாடு சாப்பிட்டு மோரும் பருகிக்கொண்டு மாட்டு வண்டியில் புறப்பட்டோம்.
asтifiableoa, 2006

Page 19
சாவகச்சேரி பதின்மூன்று கட்டை. அங்கிருந்து மட்டுவில் மூன்று கட்டையென நினைக்கின்றேன். மட்டுவில் வடக்கைச் சேர்ந்ததும் அங்கே முதல் முதல் மகாலிங்கசிவத்தின் இனிய முகமலர்ச்சி எனக்கு நல்விருந் தாயிற்று. தம்பிமுத்துப்பிள்ளையும் தரிசனம் தந்தார். இங்கே மட்டுவில் வடக்கைப் பற்றிச் சிறிது சொல்ல வேண்டும்.
உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளையவர்கள் பிறந்த திருவுடைய சீரூர் இதுவாகும். அன்னார் நாவலர் ஐயாவின் நன்மாணக்கர், சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலைத் தலைமைத் தமிழாசிரியர், வித்துவான் நசுப்பையா பிள்ளையின் நல்லாசிரியர், சிறந்த கவிப்புலவர். அற்புத சக்திவாய்ந்த பன்றித் தலைச்சியம்மன் கோயில் இங்குள்ளது. இது கண்ணகி கோயில். மட் டக்களப்பில் அடைத்த தமிழ்க் கதவை யாழ்ப்பாணத்திலே எனக்குத் திறந்து விட்ட இந்த இனிய ஊரை என்னால் மறக்க முடியாது. மட்டுவில் எனக்கு மண்டூர் போலாயிற்று.
() () () ()
இயல்பாக என்னுள்ளே அமைந்து கிடந்த கவிதாசக்தி இலக்கண அறிவினால் தூய்மைபெறலாயிற்று. வரம்புக்கு உட்பட்ட நடையினால் அது வளம்பெற்று வாழ்கின்றது. இங்கே இளங் கவிஞர்களுக்கு ஒன்று சொல்கிறேன். கவி இயற்கை. கல்வியறிவால் அதை வளஞ்செய்து கொள்ளுங்கள். வளம்பெறாத கவியூற்று வற்றிப்போகும். அது வாழாது.
மக்கள் நடைக்கு வரம்புண் டதுபோல
மக்கள் கவிக்கும் வரம்புண்டு - மக்கள்
வரம்பு கடந்தால் மதியார் கவியும் வரம்பு கடந்தால் வழு.
அன்றியும் பாட்டின் இசைக்கு மாத்திரையே அத்திவாரம். மாத்திரை குறைந்தாலும், கூடினாலும் இசைகெடும். பாட்டின் உருவமும் கெடும். பாட்டின் உருவமும் கெடும். "இழுக்குடைய பாட்டுக்கிசை நன்று என நம் முன்னோர் கூறிய இயல்பினையும் புதுக்கவிஞர்கள் நினைவில் வைத்துக் கொண்டு பாடவேண்டும். நாவிற் படுவதால் பாட்டென்னும் பெயர் வந்தது.
கார்த்திகை 2008

மாத்திரையில் நின்றும் வளருமிசை யவ்விசையால் நாத்திருந்தும் செய்யுள் நடக்குமே - சாந்றின் ஒருமாத் திரைதப்பிள் ஓசைகெடும் பாட்டும் உருமாற்றம் பெற்றொழி யும்
(a) () () ()
ா அந்நாளில் புகையிரதப் பாதையிலே பாதுகாப்பற்ற கடவைகள் அதிகம். யாழ்ப்பாணத்திலே புகைவண்டியைக் கோச்சி வண்டி என்பர். குதிரை வண்டியை குதிரைக்கோச்சி என்பர். °Coucர்” என்னும் மேல்நாட்டு மொழியின் திரிபாக அது தமிழ்ப்பேச்சு வழக்கில் இடம்பெற்றுள்ளது. புகைவண்டியென்றால் உண்மையிலே புகைவண்டிதான். ஒரே புகையும் தூசும். கரிக்கோச்சி. தூம சகடம். 'டீசெல்’ இயந்திரங்கள் வந்தபின் நிலைமை மாறிவிட்டது. பெயர்மட்டும் மாறவில்லை. பாதுகாப்பற்ற கடவைகளிலே “கோச்சி வரும் கவனம்” என்று எழுதியிருக்கும். அந்நாளில் உமது ஆச்சி என்பதைக் கோச்சி என்றும், உமது அப்பர் என்பதை கொப்பர் என்றும் வழங்குவர்.
மட்டக்களப்பிலே அக்காலம் இந்தக் கோச்சிக்கதை இல்லை. 1925இல் தான் மட்டக்களப்பிற்குப் புகையிரதம் வந்தது. அப்போதைய சட்டசபைப் பிரதிநிதி திருஈ.ஆர்தம்பிமுத்து அவர்களே ரயிலை மட்டக்களப்புக்குக் கொண்டுவந்தவர். கல்லடிப்பாலத்தைக் கட்டுவித்தவரும் அவரே.
(a) (d. 9 ()
ஊ இனித்தான் பெரிய சம்பவம் காத்திருக்கிறது. நான் முன்பு கூறிய பெரும் புயல் அடிக்கும் சூழ்நிலை உருவாகப்போகிறது. சாவகச்சேரியில் தாழ்த் தப்பட்ட குலத்திற்பிறந்து, தன் முயற்சியால் உயர்ச்சியடைந்த ஒரு பெரியார் வாழ்ந்து வந்தார். தூய்மையான உடை, அடர்ந்து வளர்ந்த தாடி, திருநீற்றுப்பூச்சு, சந்தனப்பொட்டு, உருத்திராட்ச மாலை, தவமுனிவர் போன்ற தோற்றப் பொலிவு.
நாதசுரம், வீணை, வயலின் ஆகிய இசைக்கருவிகளில் வல்லவர். சைவசித்தாந்த சாத்திரப்பயிற்சியும் உடையவர். இவர் பெயர் ஆறுமுகம். இவரது மகனின் பெயர் அப்பாத்துரை. மகனும் வயலின் வாசிப்பதில் வல்லவர். இசை பயிற்றுவதால் வரும் ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கை
டத்துபவர்.
35
கார்த்திகை 2008

Page 20
ஆறுமுகப் பெரியார் என்னைப் பற்றி ஏதோ அறிந்து கொண்டு இந்து வாலிபர் சங்கத்துக்கு அடிக்கடி வருவார். அவர் வரும்போதெல்லாம் நான் எழுந்து வணக்கம் செலுத்தி வரவேற்று, ஆசனமளித்து, உபசரித்து, உரையாடி மகிழ்ந்து அவரை வழியனுப்பி வைப்பது வழக்கம். யாழ்ப்பா ணத்தில் அந்தக் காலம் இப்படிச்செய்வது பெருங்குற்றமாகும். இதை ஆரோ போய்க் காரியதரிசிக்குச் சொல்லிவிட்டார்.
ஒரு நாள் முதலியார் சிவகுரு அவசரமாக சங்கத்துக்கு வந்து கொண் டிருக்கிறார். முகம் சரியில்லை. அவர் என்னைப் பர்த்து, “நீங்கள் இங்கே பள்ளர் பறையருக்கெல்லாம் கதிரை கொடுத்து விடுவீர்கள் போல் தெரிகிறது. உமது புரட்சிக்கு இது இடமல்ல. இனிமேல் இந்த விழக் கத்தை வைத்துக் கொள்ளவேண்டாம்” என்று கடிந்து கொண்டார்.
இப்படிச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஒரு சமத்துவவாதி. வாய் வேதாந்தம் பேசும் பேர்வழியல்ல. நான் முதலியாரைப் பார்த்து “நமக்குள்ளே ஒழுக்கங் கெட்டுப் பள்ளராய் எத்தனை பேர் வாழ்கின் றார்கள் என்பதை நாம் பார்ப்பதில்லை. அவர்களை திருத்த நினைப்ப தில்லை. பள்ளர் குலத்திற் பிறந்து ஒழுக்கத்தால் உயர்குலமான நல்லோரை அவமதிக்கும் பழக்கம் பற்றி நாம் பெருமைப்படுகிறோம். இந்த வீண் பெருமை நம்மை விட்டு ஒழியவேண்டும்”. இவ்வாறு அழுத்தமாகக் கூறினேன். முதலியர் ஏதோ நினைத்துக் கொண்டு போய் விட்டார். காலம் அதை வெளிப்படுத்தும்.
ஆறுமுகம் நல்ல வயதாளி. சில மாதங்கள் சென்றதும் அவர் இறந்து விட்டார். அமைதியாக நடந்த மரணச்சடங்கில் நானும் கலந்து கொண்டு ஆறுதல் மொழி கூறினேன். சில நாள் கழித்து மகன் அப்பாத்துரை என்னிடம் வந்து “நீங்கள் அப்பாவுடன் நல்லாயிருந்தவர். அவரின் நினைவாகச் சில பாடல்கள் பாடித்தர வேண்டும். எங்களுக்கு ஆறுதலாயிருக்கும்” என்று வேண்டிக் கொண்டதும் பத்து வெண் பாக்கள் பாடிக்கொடுத்தேன்.
ஒரு வெண்பாவை இங்கே தருகின்றேன். எனது வாழ்க்கையிலே பெரும் புயலடிக்கச் செய்த இந்தப் பாட்டை நான் ஒரு நாளும் மறப்பதற்கில்லை.
smů5letos 2OO6

“ஒழுக்கத் துயர்குலமாம் ஓங்குயுக முண்டாம்
இழுக்கத் திழிகுலமாம் என்றே - விழுப்பத்து நூற்குலத்தை யெல்லாம் நுணுகியறிந் தாறுமுகன் மேற்குலத்த னானான் விரைந்து.”
இந்தப் பாட்டுகள் அச்சாகி வெளிவந்ததுதான் தாமதம் முதலியாரும் இந்து வாலிபர் சங்க நிருவாகிகளும் முண்டியடித்துக் கொண்டு வந்து என்னை இந்து வாலிபர் சங்கத்திலிருந்து வெளியேற்றிவிட்டர்கள். இது தான் அரை நூற்றாண்டின் முன் இருந்த யாழ்ப்பாணச் சமூக நிலை. மட்டக்களப்பில் இந்த ஏற்றத்தாழ்வு கிடையாது. மட்டக்களப்பின் இந்தச் சமூக வாழ்க்கை நிலை தென்னகத் தமிழ் மக்களும் தெரிந்து கொண்ட செய்தியாகும்.
1966ஆம் ஆண்டு ஆவணி மாதம் முப்பதாந் தேதியன்று செந்தமிழ்ச் செல்வர், வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களின் மணிவிழாவைக் கொண்பாடும் முகமாக மட்டக்களப்பு மக்கள் அளித்த வரவேற்பு வையத்தில் என்னாற் பாடி அன்னாருக்கு வழங்கப்பெற்ற வாழ்த்து மடலில் இச்செய்தி இடம் பெற்றுள்ளது. அதைக்குறிப்பின் பொருட்டு இங்கே தருகின்றேன்.
* கோயிலிலும் பள்ளி
குளங்களிலும் நிர்பெருகிப் பாயும் நதியில்வயற் பண்ணயிலும் - போயொருங்கேர் தாய்வயிற்றுப் பிள்ளைகள்போல் சார்ந்துசம மாயெவரும் நேயமுடன் வாழும் நிறுைதாரு - தூயமனச் சிட்டர் புகழும் திருநாடு செந்தமிழ்வாழ் மட்டக் களப்பென்னும் TDIBTb”
நான் வெளியேறியதைப் பற்றிய கவலை எனக்கில்லை. விசாலமான இந்த உலகத்தில் மக்கள் பலர் ஏன் ஒடுக்கமான கொள்கையுடன் வாழ்கிறார்கள்? என்பது பற்றிய கவலைதான் எனக்கு, இராஜ அரியரெத்தினம் வீட்டில்
asmňferos 2008

Page 21
வசித்துக்கொண்டு அவரின் தாய்மாமன் கவிஞர் மாயீதாம்பரத்துடன் கூடித்திரியலானேன். வெளிப்பார்வைக்கு எனது போக்கு ஒரு மாதிரி, எனது உள் நோக்கமோ வேறுபட்டது.
சம சந்தர்ப்பம், சமத்துவம், சமரசம் என்னும் மூன்று மொழிகளும் எனது ஜீவ மந்திரமாகிவிட்டன. ஒரு சமத்துவ சமுதாயத்தைக் காண முடியாதா? அதில் நான் ஒரு அங்கமாயிருக்கும்நாள் ஒன்று எனக்கு வராதா? என்ற சிந்தனையில் நான் ஆழ்ந்துவிட்டேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில் இரண்டு பெரியாரின் நட்பு எனக்குத் தற்செயலாகக் கிடைத்தது. ஒருவர் ஞானகலாநிதி ஐசக் தம்பையா, மற்றவர் எட்வேட் மேதர். இருவரும் என்னை அழைத்துக் கொண்டு சாவகச்சேரியில் கனம் ஜே.கே.சின்னத்தம்பிப் போதகரிடம்போய் எனது மனநிலை மாற் றத்தை அன்னார்க்குச் சொன்னார்கள். அவர் என்னைச் சமாதானப்படுத்தி இங்கே எங்கள் மத்தியில் எல்லாரும் சமம். பள்ளருமில்லை, பறையரு மில்லை. சமத்துவ சமுதாயமாக நாங்கள் வாழ்கின்றோம். எங்களோடு சேர்ந்தால் உங்கள் நோக்கம் நிறைவேறும் நீங்கள் எங்கள் சகோதரர் என்றார்.
போதகரின் பேச்சு எனக்குப் பிடித்துக் கொண்டது. மருள் நீக்கியார் சமணர்களுடன் சேர்ந்து கொண்டது போல நான் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து கொண்டேன். மிகவும் கவர்ச்சிகரமான சில சம்பவங்களை வாசக நேயர்கள் இனித்தான் படிக்கப் போகிறார்கள்.
எனக்கு சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரியில் தமிழ்ப்பண்டிதர் வேலை கிடைத்தது. இந்துக் கல்லூரியில் நின்றும் வெளியேறி விட்டேன். ஆசிரியர் ஜே.கே.சின்னத்தம்பி வீட்டில் எல்லா வசதிகளுடனும் வசிக்கலானேன். இந்த எதிர்பாராத சம்பவம் யாழ்ப்பாணம் முழுவதும் பரவி மட்டக்களப்பிலே பெரும் கலக்கடியை உண்டாக்கிவிட்டது.
எத்தனையோ பல தூண்டுதல்களுக்கும், வேண்டுதல்களுக்குமிடையில் நான் அகப்பட்டுக் கொண்டேன். மட்டக்களப்பிலிருந்து எனது தம்பி சிதம்பரப்பிள்ளையும் வந்துவிட்டார். அவர் சிகசகிதம் வந்து வீடடிலே
கார்த்திகை 2008

தந்தையார் முதலியோரின் ஆறாத் துயரத்தையும், நாட்டில் மக்கள் அடைந்துள்ள கவலையையும் கண்ணிர் விட்டு வாய் தழுதழுத்துச் சொல்லி என்னை மட்டக்களப்புக்கு வருமாறு எவ்வளவோ மன்றாடியும் இந்தப் பைத்தியத்துக்கு இரக்கம் வரவில்லை. தம்பி மனவடிவுடன் ஊர் திரும்பிவிட்டார். தம்பியார் இன்று மண்டூரில் பிறப்பு இறப்பு விவாகப் பதிவாளராய், சமாதான நீதிபதியாய் நல்மதிப்புடன் வாழ்ந்து வருகின்றார் என்பதையும் இங்கே குறிப்பிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
கிறிஸ்தவர்கள் மத்தியிலே இங்குமொரு தருமசேனர். கிறிஸ்தவ வேதா கமத்தைக் கரைத்துக் குடித்து ஏப்பமிடத் தொடங்கிவிட்டேன். புதுப் புதுக் கருத்துக்களை வெளியிடலானேன். எல்லாத் தேவாலயங்களிலிருந்தும் அழைப்பின் மேல் அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் சென்று பிரசங்கமாரி பொழிந்து கொண்டிருக்கின்றேன். குருபீடத்தில் ஏறி நின்று பேசுவதற்கு மாத்திரம் அனுமதியில்லை.
இந்த நிலையில், 1923 பிற்பகுதியில் என்னைப் பசுமலையிலுள்ள வேத சாத்திரக் கலாசாலையில் இரண்டு வருடப் பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள்.
பசுமலையென்பது மதுரைக்கும், திருப்பரங்குன்றத்துக்கும் இடையிலுள்ள ஒரு சிறிய நகரம் அமெரிக்க மிஷனின் அரண் போன்றது. அங்கே ஞான
கலாநிதி பனிங்கா என்னும் அமெரிக்கப் பெரியார் அதிபராயிருந்தார். கலாசாலையில் எனக்குப் படிக்கும் வேலை மிகக் குறைவு. திருச்சபைச் சரித்திரம் மாத்திரம் படிப்பேன்.
வந்தது நத்தார்ப் பண்டிகை. கலாசாலை விரிவுரையாளர்களுள் ஒருவரான கனம் மாசிலாமணிப் போதகர் என்னைக் கூப்பிட்டுக் கிறிஸ்தவ ஜயந்தி கீதங்கள் சில பாடித்தருமாறு கேட்டுக்கொண்டார். உடனே கிறிஸ்து திருவவதார கீதங்கள் என ஒரு சிறு பிரபந்தம் பாடிக் கொடுத்தேன்.
அது அச்சு வாகனமேறி இந்தியா, பர்மா, இலங்கை முழுவதும்
சென்று பிரபலம் பெற்றது. பிரதி கைவசமில்லை. மாதிரிக்கு இதோ ஒரு கீதத்தின் முதற்பகுதியை நினைவிலிருந்து தருகின்றேன்.
கார்த்திகை 2008

Page 22
பூலோகந் தனிற்பிறந்தாரே . பரனாரே மேலோகத்தின் மேன்மைவிட்டு மிகுமதிசய சுதனென இதோ . (பூலோகந்.)
வரத்தையும் வேதாட் சரத்தையும் கிர்பா கரத்தையும் சுதந்தரத்தையும் தரப் பரத்தையும் தேவ புரத்தையுமுயர் தரத்தையும் துறுந்திரட்சகரெனப் - (பூலோகந்.) வஞ்சமும் பிரபஞ்சமும் தீய நெஞ்சமும் பவ நஞ்சமும் விகடக் கொஞ்சமும்மினி அஞ்சலென்றுநற் தஞ்சமும் பத கஞ்சமுந்தரப் - (பூலோகந்.) இப்படிச் சுவையான கீதங்கள் பல அந்தப் பிரபந்தத்தில் உள.
(a) () () () ா 1928 ஆம் ஆண்டு மகாத்துமா காந்தியின் இலங்கை விஜயம் நடை பெற்றது. யாழ்ப்பாணம் வாலிபர் காங்கிறஸ் விடுத்த அழைப்பை ஏற்று காந்திஜி இலங்கை வரலானார். பேரறிஞர் எச்.பேரின்பநாயகம் வாலிபர் காங்கிரஸ் தலைவராயிருந்தார். கதர்நிதிக்கு வாலிபர் காங்கிரஸ் ஐம்பதினா யிரம் ரூபா சேர்த்து உபசரிக்க வேண்டும் என்பது காந்திஜியின் நிபந் தனை. ஆனால், ஒரு லட்சத்துக்கு மேல் நிதி இலேசாகச் சேர்ந்துவிட்டது.
காந்தி மகாத்மா கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவில்லை. திருகோணமலை மக்கள் தேசிய சேவைகளில் முன்னணியில் நிற்பவர்கள். சில துடிப்புள்ள இளைஞர்கள் காந்திஜியின் காரியதரிசி மகாதேவ தேசாய் அவர்களுடன் தொடர்புகொண்டு மகாத்துமாவை வரவேற்கும் பாக்கியம் திருகோணமலைக்கும் கிடைக்க உதவுமாறு வேண்டினார்கள்.
தேசாயின் பெரும் பிரயாசத்தினாலும், திருமலை இளைஞர்களின் விடாப் பிடியினாலும் ஒரு சிறு இடம் கிடைத்தது. வரவேற்கும் இடம் திருமலை யல்ல; அனுராதபுரம் புகையிரத நிலையம், நேரம் பத்து நிமிஷம், வேளை நள்ளிரவு. கொழும்பிலிருந்து மகாத்துமா யாழ்ப்பாணம் செல்லும் நிகழ்ச்சி யின் இடையே சமயோசிதமாகத் திருமலைக்குக் கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு காந்தி தரிசனம் பெற்ற கண்கொளாக் காட்சியை அடுத்து கட்டுரையில் தருகின்றேன்.
asmeros 2008

மகாத்மா காந்தியை வரவேற்பதற்கான வரவேற்பு சபையொன்று தெரிவாயிற்று. உறுப்பினரின் பெயர்கள் சரியாய் நினைவிலில்லை. பிழையோ, சரியோ சில பெயர்களைச் சொல்லுகின்றேன். இந்துக்கல்லூரி அதிபர் கே.எஸ்.இராமசுவாமி ஐயர், ஆசிரியர் செல்லையா, அல்லிராஜா, கசிவபாலன் வன்னியனார், ஒவசியர் வீகுகதாசன், சரவணப்பெருமாள், ஒப்பிலாமணி உருத்திரா, தயாலசுப்பிரமணியம், நயாலசுப்பிரமணியம் என்போர் சுறுசுறுப்பாக இவ் வரவேற்புப் பாணியில் ஈடுபட்டனர். வரவேற்புப் பத்திரம் தயாரித்து வாசித் துச் சமர்ப்பிக்கும் பணி எனக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஒருநாள் பகல் ஒரு மணியிருக்கும்; சுவாமி அவிநாசானந்தரும், சுவாமி விபுலானந்தரும் போசனம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்து விறாந்தையில் நான் உலாத்திக் கொண்டு நிற்கிறேன். சுவாமிகள் இருவரையும் நான் அணுகி “மகாத்துமாவுக்கு வரவேற்புப் பத்திரம் எழுத வேண்டும் நான் என்ன செய்ய?” என்று கேட்டேன்.
“பாட்டில் பாடிவிட வேண்டியதுதானே” என இருவரும் ஒருமித்துச் சொன்னார்கள். நான் உலாத்திக்கொண்டே “கவாமி ஒரு பாட்டு வந்து விட்டது” என்றேன்.
*சொல்லுங்கள் பார்ப்போம்” என்றனர்.
“சாந்தம் பொலிமுகமும் தண்ணவிசேர் கண்ணிணையும்
வாய்ந்தகத ராடை வடிவழகும் - சேர்ந்து மகான் காந்தியென ஒர்வடிவம் கண்முன்னர் நின்றதால் சாந்தி எமக்கின்று தான்”
எனப் படித்துக் காட்டினேன். “நல்லாயிருக்கிறது பாடுங்கள்” என்றனர். உலாத்திக்கொண்டே “அடுத்த பாட்டும் வந்துவிட்டது சுவாமி” என்றேன். பாடுங்கள் என்றனர்.
“சகதர்ம மெல்லாம் தனிவளர்க்கு மண்பாம் தகவுடைய கஸ்துரித்தாயை - அகமகிழக்
கண்ணிற் தரிசித்தோம் காய மெருத்திந்த மண்ணிற் பிறந்தபயன் வாய்த்து” எனப் பாடினேன்.
கார்த்திகை 2008

Page 23
சுவாமிகள் இருவரும் மிகமிக நல்லது என்று உற்சாகமூட்டினர். போசனம் பண்ணி முடிவதற்குள் இன்னும் மூன்று பாட்டுக்களைப் பாடி எல்லாம் ஐந்து வெண்பாக்களில் வரவேற்புப் பத்திரத்தை மனத்தில் எழுதிக் கொண்டேன். இனித்தான் கடதாசியில் எழுதப்போகிறேன்.
எனது தமிழ்க் குரவரின் ஆசி முந்தியே என்னோடுள்ளது. இன்று அவிநாசனந்த சுவாமிகளின் அருளாசிக்கும் பாத்திரனாய் விட்டேன். இங்கே அவிநாசனந்த சுவாமிகளைப் பற்றி இரண்டொரு வார்த்தை சொல்ல வாசகர்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.
சுவாமிகள் முன்னரே ஒரு குடும்பஸ்தர். எம்.ஏ. பட்டதாரி, இந்திய தேசீயக் கல்லூரியின் முன்னைநாள் அதிபர், காந்தியடிகளுக்கு இரண்டு வருடம் காரியதரிசியாயிருந்தவர். இவரது அறிவு, ஆற்றல், தூய்மை, துணிவு என்பவற்றை நேரில் அறிந்த யூரீ ராமகிருஷ்ண சங்கத்தின் தலமைப் பீடாதிபதி இவரது குடும்பத்தினர்க்கு மாதச்சன்மானம் கொடுக்கும் ஒழுங்கினைச் செய்து இவரைத் துறவியாக்கி பயன்செய்தனரென்றால், அவிநாசனந்த சுவாமிகளின் ஆசியைப் பெறுவதற்கு அடியேன் முன்பு என்ன தவம் செய்து வைத்தேனோ?
1976 ஆம் ஆண்டில் வெளிவந்த மட்டக்களப்பு கல்லடி உப்போடை பூரீராமகிருஷ்ண மாணவரில்லப் பொன் விழா மலரில் அடிகளாரை
“அஞ்சாமை நேர்மை அகந்தூய்மை நம்மகத்தே
எஞ்சாமல்நிற்க இணைத்து வைத்தார் - தந்தை அவிநாசா னந்த அடிகளார் நாம்செய் தவமாக வந்தபுனிதர்”
பாடல்களை வரவேற்புச் சபை அங்கீகரித்தது. அதிபர் இரரமசுவாமி ஐயர் அழகான ஆங்கில மொழிபெயர்ப்பும் செய்து தந்தார். கைதேர்ந்த ஒரு சித்திரகாரரைக் கொண்டு பாடல்களை அழகாக எழுதிக் கண்ணாடி யும் போட்டுக்கொண்டோம். ஆங்கில மொழிபெயர்ப்புடன் பல நூறு பிரதிகளையும் அச்சிட்டு வைத்துக் கொண்டோம்.
asmråšóleons 2008

குறித்த நாள் வந்ததும் வரவேற்புச் சபை அதிகாலையிலேயே அனுராதபுரம் புகையிரத நிலையத்தை அடைந்துவிட்டது. நிலைய அதிபரின் அனுமதியு , டனும் அன்பர்களின் ஆதரவுடனும் நிலைய முன்றலில் இயற்கை அழகு மிளிர அலங்கார மேடை அமைக்கப்பட்டது. ஆடம்பரமற்ற முறையில் சுற்றிவரச் சோடிப்பும் செய்யப்பட்டது.
நேரம் ஆக ஆகச் சனசமுத்திரம் அலை அலையாகக் கூடிவிட்டது. சரியான நேரம் வந்ததும் கை காட்டியின் பச்சை விளக்கு மகாத்துமாவின் வருகையை எல்லார்க்கும் அறிவித்தது. ஓசை ஒலி எல்லாம் அடங்கி விட்டது. ஆர்வம் பெருக்கெடுக்கிறது. புகையிரதம் வந்து நின்றதும் “வந்தே மாதரம் மகாத்துமாவுக்கு ஜேர்” என்னும் கோஷங்கள் வானைப் பிளந்தன.
மகாத்மாஜ் புகையிரதத்தை விட்டு இறங்கவில்லை. வெளியே தலையை நீட்டிப் புன்னகை செய்து கை கூப்பி எல்லார்க்கும் வணக்கம் செலுத்தினார். வரவேற்புச் சபையினர் அனுமதியுடன் உள்ளே சென்று மகாத்துமாவுக்கும் கஸ்தூரி தாய்க்கும் வணக்கம் செலுத்திவிட்டு மகாதேவா தேசாய், இராஜகோபாலாச்சாரியார் முதலிய பிரமுகர்களுக்கும், பரிவாரங்களுக்கும் முறையே அஞ்சலி செலுத்தி முடிந்ததும், நான் வரவேற்புப் பத்திரத்தை ஆங்கில மொழிபெயர்ப்புடன் மகாத்துமாவுக்குச் சமர்ப்பித்து அஞ்சலி செலுத்தி நின்றேன். அச்சிட்ட பிரதிகள் எல்லார்க்கும் வழங்கப் பெற்றன. மற்றதை மறந்து போனேன், கலியாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்தது போல வரவேற்புச் சபைத் தலைவர் நானூற்றொரு ரூபா அடங்கிய அன்பளிப்பினை வணக்கத்துடன் காந்திஜீயிடம் ஒப்படைத்தார். காந்திய டிகள் ஆங்கில மொழியில் நற்செய்தியும் நன்றியும் நவில; இராஜகோபா லாச்சாரியார் தமிழிற் சொல்ல, பச்சை விளக்கின் ஒளியும், நிலைய அதிபரின் “விசிலி”ண் ஒலியும் ஒருக்கே கிளம்ப நாங்கள் வணக்கத்துடன் கீழே இறங்கினோம்.
புகையிரதம் நகரலாயிற்று “வந்தே மாதரம் காந்திஜீக்கு ஜே” என்னும் ஒலிகளின் மத்தியில் புகையிரதம் வடக்கு நோக்கி விரைந்தது. நாங்களும் திருமலைக்கு விரைந்தோம்.
() ) () ()
图*。

Page 24
ரா நான் அகஸ்தீனார் ஆசிரிய கலாசாலையில் இருந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்க சபையிலே மட்டக்களப்பு தென்பகுதியின் பிரதிநிதியாகத் திருசதருமரெத்தினம் அவர்கள் பதவியில் இருந்தார்கள். இது 1938ஆம் ஆண்டின் பிற்பகுதியாயிருக்கலாம்.
தருமரெத்தினம் ஒரு தனவந்தர்; ஆடம்பரமற்றவர்; ஏழைபங்காளர்; காட்சிக்கெளியர், கடுஞ்சொல் இல்லாதவர். வீட்டின் முன்பக்கத்து அரைச் சுவர்க்கட்டின் மேலேதான் அதிகமாயிருப்பார்.
அவரின் மருகர் கேள் சோமசுந்தரமும் ஏழைகளுக்கு அன்பர், தமிழுக்கு வாரி வழங்குபவர். எனது பகவத்கீதை வெண்பா' ஒவ்வொரு பிரதிக் கும் ஒவ்வொரு நூறு ரூபா உபகரித்துச் சில பிரதிகளைப் பெற்றுக் கொண்ட திருவுடையவர் அவர்.
அந்நாளில் அதிதீவிர கருமவீரராக விளங்கிய இளைஞர் வநல்லையாவைத் திருதருமரத்தினம் தமக்கு உசாத்துணையாகப் பிடித்துக்கொண்டார். நுளம்புகளின் பாசறையாய்க் கிடந்த அட்டாளைச்சேனையிலே நல்லையாவின் ஆலோசனை கொண்டு திரு. தருமரத்தினம் ஓர் ஆசிரிய கலாசாலையை அங்குரார்ப்பணஞ் செய்து வைத்தார். இது தமிழ் முஸ்லீம் சமூகங்கள் இரண்டுக்கும் சம உரிமை வழங்கும் ஒரு பொதுத்தாபனமாக 1941இல் நிறுவப்பெற்றது.
நல்லையா இதன் அதிபராயிருந்தார். மன்னாரைச் சேர்ந்த ஜனாப் காதர் உப அதிபராயிருந்தார். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நானும் அங்கே சென்று இலக்கியமும் நன்னூல் விருத்தியும் படிப்பித்து உதவி புரியலா னேன். இது நல்லையாவுக்காகச் செய்யும் கெளரவ சேவை. என்னைப் பொறுத்தவரை ஒரு இரவு நுளம்புக் கடிமாத்திரமே. நான் என் அனுப வத்தைக் கொண்டு சொல்லுகின்றேன். நல்லையா, காதர் இருவரின் உதிரத்தில் வளர்ந்து உருவாகியது தான் அட்டாளச்சேனை ஆசிரிய
&ffi6lህዘኾቇዘ6ኝ)6ህ)•
ா அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையின் தொடர்பாக இன்னு மொன்று சொல்ல விரும்புகின்றேன். திருகோணமலையிலே விபுலானந்த அடிகளாரின்
கார்த்திகை 2008

தமிழ் வகுப்பைப் பற்றிச் சொன்னபோது அங்கே பெயரளவிற் குறிப்பிட்ட எனது சகபாடி பண்டிதர் செபூபாலப்பிள்ளையின் நினைவு இங்கே வருகிறது.
பண்டிதர் பூபாலப்பிள்ளை வேறு. வித்துவான் சபூபாலப்பிள்ளை வேறு. இருவரும் மட்டக்களப்பு அன்னையின் புதல்வர்களே. வித்துவான் முந்தியவர், பண்டிதர் பிந்தியவர். வித்துவான் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் பெரும் புலமை படைத்தவர்.
நான் திருமலையைப் பிரிந்த பின் பண்டிதரும் மட்டக்களப்புக்கு வந்து விட்டார். அவர் எனக்குப் பக்கபலமானவர், தம்பி போன்றவர். திரு மலையில் நான் நோய்வாய்ப் பட்டிருந்தபோது மருத்துவத் தாதி போன்று என்னைப் பராமரித்தவர். ஒரு கரும வீரர். பண்டிதர் அட்டாளச்சேனை ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகக் கடைமை புரிந்து வருகையில் ஆசாரம் சம்பந்தமான ஒரு பிரச்சினை தலைதூக்கியது. பண்டிதரும் தலை நிமிர்ந்து நின்று சுவதருமத்துக்காக வாதாடினார். இதன் பயனாக மட்டக்களப்பில் தமிழருக்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த ஆசிரிய கலாசாலை நிறுவப்பட்டது. பண்டிதர் அங்கு விரிவுரையாளராயிருந்து சைவசீலங்களை நிலை நாட்டி வைத்து எல்லா மதிப்புகளுடனும் ஓய்வுபெற்றார்.
கருமவீரர் பண்டிதர் பூபாலப்பிள்ளை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவராகவும், கல்லடி உப்போடை அருள்நெறித் திருக்கூட்டத்தின் தலைவராகவும் சமயப் பணி புரிந்துகொண்டே 1967ஆம் ஆண்டு வைகாசி மாதம் தமது நெல் வயலில் தலைசாய்ந்து இவ்வுலக வாழ்வை நீத்தார்.
பண்டிதரின் மூத்த புதல்வி மங்கையர்க்கரசியின் கணவர் மாஸ்டர் சிவலிங்கம் தினபதி - சிந்தாமணியில் கலைத்தொண்டு செய்து வருவது பொருத்தமானதாகும். தம்பதிகளின் இருவரும் எனது மாணாக்கர் என்பதும் எனக்கு மகிழ்ச்சி தருகின்றது.
GRO (9 GO GO
st£ിൽ 2OO5

Page 25
ா 1940ஆம் ஆண்டளவில் திருக்குறள், கம்பராமாயணம் ஆகிய இரு வகுப்புகளை மட்டுநகரில் தொடங்கினேன். பல மாணவர்கள், படித்த பிரமுகர்கள் ஆகியோர் வகுப்பிற் கலந்து கொண்டு படித்தும் கலந்துரை யாடியும் பயன் பெற்றனர். எனது அறிவும் வளரலாயிற்று. இந்த வகுப்பால் நான் பெற்ற பண ஊதியத்திலும் பார்க்க அழிவில்லாத பெரிய ஊதியமொன்றைப் பெறலானேன். எங்கும் இந்த ஊதியம் தான் மிச்சம். இறந்த பின்பும் இது எஞ்சி நிற்கும்.
நவீல்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
LIGOőqGOLLUITGAŬ GIBTLjų இந்த வகுப்பில் பல பண்பாளர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கக் கிடைத்தது. அவர்களுள் இருவரைப் பற்றி அதிகம் சொல்லலாம். அது தனித்தனி நூலாகிவிடும். சந்தர்ப்பம் நோக்கி இங்கே சிறிது சொல்கின்றேன்.
ஒருவர் வெதிருநாவுக்கரசு, இவர் ஒரு பிஏ பட்டதாரி. பண்பின் வடிவம், பணிவின் சின்னம், உருவும் திருவும் வாய்ந்த தோற்றப் பொலிவு, செருக் கில்லாத நிமிர்ந்த நடையையும், உருக்கமான உபசார மொழியையும் இவரிடத்திலே காணலாகும்.
கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயத்தில் விரிவுரையாளராயிருந்த இவர் ஒரு கணித விற்பன்னருமாவார். மட்டக்களப்பில் எல்லாராலும் விரும்பப்படுகின்ற டாக்டர் ரவீந்திரன் இவரது மனம் போன்ற மைந்த ரென்பதை மகிழ்ச்சியுடன் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
“பண்புடையார்ப் பட்ருண்ருலகம்; அது இன்றேல்
மண்புக்கு மாய்வதுமன்” என்னும் திருக்குறளைப் படிக்கும் போது அன்பர் திருநாவுக்கரசு என் கண்முன்னே நிற்கின்றார். m
மற்றவர் எஸ்.டி.சிவநாயகம். இவர் மட்டக்களப்பு மாநாட்டின் மாதவப் புதல்வர்களுள் ஒருவர். அகங்காரத்தோடு கூடிய அதிகாரத்தின் முன்னே தமது முழங்கால்களை மடக்காதவர். ஆர்.சீ.எஸ். குக் என்பவரின் அடக்கு முறைப் போக்குக்கு அடிபணிய மறுத்துத் தமது கூட்டுறவுப் பரிசோதகர் பதவியைத் துறந்த தன்னம்பிக்கை கொண்டவர். சிவநாயகம் கூட்டுறவுப்
asmeros 2OO53

பரிசோதகர் பதவியைத் துறந்தமையினால் அல்லவா இன்று அகில
உலகிலுமுள்ள தமிழ் மக்கள் அன்னாரின் சொல்லமிர்தத்தைத் தினசரி
பருகிக் கொண்டிருக்கிறார்கள்.
சிவநாயகத்தால் பத்திரிகைத் தருமம் வாழ்கின்றது, பத்திரிகைத் தருமத்
தால் சிவநாயகம் வாழ்கின்றார்.
*விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெரிண்”
என்னும் திருக்குறளைப் படிக்கும்போதெல்லாம் சிவநாயகம் நினைவுக்கு
வந்து விடுகிறார். A
9 9 9 9
ா 1935ஆம் ஆண்டிலிருந்து இரண்டு மூன்று வருடம் வரை ஆசிரியத் தொழில் புரிவதில் நின்றும் சற்றே விலகியிருப்பது நல்லதெனக் கருதினேன். எங்கிருந்தாலும் என்னைச் சும்மா விடமாட்டார்கள். 1938இல் அரசாங்க சபைத் தேர்தல் வந்தது.
அதில் எனக்கு ஒரு தருமசங்கடம் உண்டாமிற்று. இரு வேட்பாளர்களுள் ஒருவரைத் தெரிந்து கொள்வதுதான் அது. ஒருவர் எனது இனிய நண்பர் ஜனாப் எம்.ஏ.எல் காரியப்பர். இவர் ፴® சட்டத்தரணியுமாவார். மற்றவர் எனது நெருங்கிய உறவினர் முதலியார் எஸ்ஓகனகரெத்தினம். அவர் மட்டக்களப்பு வரலாறு என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர். நல்ல நிருவாகத் திறமையுள்ளவர்.
நன்றாக ஆலோசனை செய்தபின்பு முதலியாரை ஆதரிப்பதெனத் தீர்மானஞ் செய்து கொண்டேன். வாக்குறுதியும் கொடுத்துவிட்டேன். இதையறிந்த நண்பர் காரியப்பர் என்னிடம் வந்து தேர்தலில் நடுநிலமை வகிக்குமாறு பரிந்து வேண்டிக்கொண்டார். நடுநிலமை வகிப்பது நாட்டுக்குச் செய்ய வேண்டிய கடமையிலே தவறுவதாக முடியும் நான் முதலியாரைப் பற்றி நல்லதைச் சொல்வேன். உங்களைப் பற்றிக் குறைவாகப் பேசமாட்டேன் என்று சொல்லி விட்டுத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கலானேன்.
எதற்கும் ஒரு முன்மாதிரி வேண்டும். பாலகங்காதர திலகரையும், மகாத் துமா காந்தியையும்நான் முன்மாதிரியாகக் கொண்டவன். சிறுவனாயிருக்கும்
கார்த்திகை 2008

Page 26
போதே திலகரின் படத்தை எனது படுக்கையின் முன்னே சுவரில் தூக்கி வைத்துக் கொண்டு அதிகாலையில் எழுந்தவுடன் அதில் விழித்துக் கொண்டே வெளியே செல்வது வழக்கம். திலகர் அங்கவஸ்திரம் தரிக்கும் முறையலேயே நானும் அங்கவஸ்திரம் தரித்துக் கொள்வேன்.
இலக்கியப் பேச்சென்றாலும் சரி, சமயப் பேச்சென்றாலும் சரி, அரசியல் பேச்சென்றாலும் சரி, உள்ளக் கருத்துக்களையும் கொள்கை வேறுபாடுக ளையும் எடுத்து விளக்குவதுதான் எனது போக்கு. ஆட்களைத் தாக்கிப் பேசும் முறையில் நான் பழகவில்லை. என்னைத் தாக்கிப் பேசுவோருக்கும் நான் மறுமொழி சொல்வதில்லை. நமது பேச்சு நம்மையும் திருத்தி பிறரையும் திருத்தும் முறையில் அமைய வேண்டும்.
இதை நான் ஏன் சொல்கிறேனென்றால் ஒரு சிலர் பிறரைத் தூற்றிக் கீழ்த்தரமாகப் பேசுவதிலேயே பேரும் புகழும் பெற்று, உயர் பதவியும டைந்து சமயோசிதமாக மாறிக்கொள்கிறார்கள். சந்தர்ப்பவாதத்தால் இவர்க ளின் மனப் பண்பும் கெடுகிறது. சமூகமும் கெடுகிறது. நாடும் தனது பாரம்பரியத்தை இழக்கும் நிலமை ஏற்படுகிறது என்பதை உணர்த்துவதற் காகவே என்க. சந்தர்ப்பவாதி அந்தரத்தில் தொங்குவான்.
கல்லடிப் பாலம் தொடக்கம் பாணமை வரையும் இந்த முறையிலேயே எங்கள் பிரசாரம் நடந்தது. தேர்தலில் முதலியாரே பிரதிநிதியானார். இந்தத் தேர்தல் முறையினால் மற்றைய அபேட்சகர்களின் மனம் புண்படவுமில்லை, பழைய நட்புக்கு பாதகம் உண்டாகவுமில்லை.
() () () ()
ா 1946 ஆம் ஆண்டு திருவநல்லையா எம்எஸ்சீ. அவர்களின் முயற்சியால் மட்டுமா நகரில் அரசாங்கக் கல்லூரி நிறுவப்பெற்றது. இலங்கையிலே றோயல் கல்லூரி போன்ற ஒரு தாபனமாக அது விளங்கவேண்டுமென்பது நல்லையாவின் குறிக்கோளாகும். நாட்டு மக்களை முன்வைத்து அதற்கேற்ப அரசியல் அந்தஸ்தைப் பயன் செய்த விசாலமான நோக்குடையவர் நமது நல்லையா.
() () ( (.)
கார்த்திகை 2008

மட்டக்களப்பிலே மருதமுனையில் இரண்டு மகாநாடுகள் நடைபெற்றன.
ஒன்று அரசியல் மகாநாடு. இது ஐக்கியதேசியக் கட்சி ஆதரவாளர்கள் ஒழுங்கு செய்தது. 1956ஆம் ஆண்டில் நடைபெற்றது. மேற்சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எம்.ஏ அசீஸ் அவர்கள் பிரதம விருந்தினராக மகாநாட்டிற் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
கிழக்கிலங்கையிலே தமிழர்களும் இஸ்லாமியர்களும் எந்தச் சக்தியா லும் பிரிக்க முடியாதபடி இணைந்து வாழ்கின்றார்கள். இந்த இணைப்புச் சாதாரணமான ஒன்றல்ல. தமிழ் மொழியினாலே உண்டான இயற்கையான இணைப்பு, உயிர்ப்புள்ளது, துடிப்புள்ளது.
“இரண்டு இனமும் இந்த நாட்டின் பழங்குடிகள். நம்முன்னோர்கள் இங்கே அண்ணன் தம்பிகள் போல் வாழ்ந்திருந்தார்கள். நமது சந்ததி யிலும் இந்த ஐக்கியம் நிலைபெற வேண்டும். எதிர்காலச் சந்ததிக்கும் இந்த ஐக்கியமே பாதுகாப்பாக அமையவேண்டும்” எனக் கூறிக்கொண்டு தமது பேச்சை நிறைவு செய்தார்கள். அசீஸ் மூவினங்களுக்கும் மத்தியில் ஓர் இணைப்புச் சக்தியாக விளங்கினார்.
அடுத்தது எனது பேச்சு. தமிழர், முஸ்லீம்கள் ஆகிய நாம் மட்டக்களப்பு அன்னையின் இருதயத்தின் இரண்டு இதழ்களையும் போன்றவர்கள். இரண்டு இதழும் ஒத்து இயங்கினால்தான் இருதயத் துடிப்பு நிலை பெறும். ஒத்து இயங்காவிடின் இருதயத் துடிப்பு நின்றுபோகும். அன்னையின் உயிர்வாழ்வுக்கு இந்து, முஸ்லீம்களாகிய நமது ஒற்றுமை அவசியம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். பிரிவினைச் சக்திகளுக்கு இடங்கொடுத்து அழிவுப் பாதைகளுக்குச் செல்லாமல் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வோமாக என்னும் பொருளமைந்த ஒரு பாடலைப்பாடி எனது பேச்சைத் தொடங்கினேன். குறித்த பாடலை இதோ தருகிறேன்.
“இருதயத்தின் ஈரிதழ்போல் இந்துமுசி லீம்யாம்
ஒரு வயிற்றுப் பிள்ளைகள்போல் உள்ளோம் - அரசியலில் பேராசை கொண்டோர் பிரித்துநமை வேறாக்கி ஆராயர் செய்வர் அழிவு” 49 இதிர்
srürólows 2008

Page 27
அடுத்தது இஸ்லாமிய இலக்கிய, கலாசார மகாநாடு. இது 1966 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
co o о э ா நான் பழகிய இரண்டு நண்பர்களைப் பற்றி இங்கே குறிப்பிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். இருவரும் நமது தேசிய கலாசாரத் தேசியப் பண்பின் இரண்டு வடிவங்கள் போல் என்முன் காட்சியளிக்கின்றனர். ஒருவர் தேவசூரியசேன; மற்றவர் கலாநிதி சரத்சந்திர.
தேவசூரியசேன ஓர் இசைநடனப் பிரியர். மேனாட்டு இசைக்கலையில்
ஒரு மேதை. நாட்டுப்பாடல், நாட்டுக்கூத்து ஆகிய தேசியக் கலைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். அவற்றின் முன்னேற்றத்திற்குத் தம்மை அர்ப்பணம் செய்தவர். இனிய பண்பாளர்.
கலாநிதி சரச்சந்திரா இலங்கைப் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர். சமஸ்கிருதம், பாளி, சிங்களம் ஆகிய பல மொழிப் பீடத்தின் தலைவர். பல நாடகங்கள் இயற்றிய எழுத்தாளருமாவார்.
இரு நண்பர்களும் குருக்கள்மடத்தில் என்னுடன் ஒருவார காலம் தங்கியிருந்தனர். பழைமை வாழ்கின்ற கிராமங்களுக்கெல்லாம் அவர்களை அழைத்துச் சென்றேன். பிரபல அண்ணாவி மாரையும்,சிறந்த நடிகர்க ளையும் சந்திக்கச் செய்தேன். மட்டக்களப்பு நாட்டின் பழைமையை ரசித்து அவர்கள் புதுமகிழ்ச்சி கொண்டார்கள்.
பலரக நாட்டுப் பாடல்களை ஒலிப்பதிவு செய்ததுடன் நாட்டுக் கூத்துக்கள் சிலவற்றின் பகுதிகளையும் நடிக்கச் செய்து ஒலிப்பதிவு செய்துகொண்டர்கள் செட்டிபாளையம் இகணபதிப்பிள்ளைப் புலவர் முதலிய பழந்தமிழ்ப் புலவர் சிலரின் நண்பும் இவர்களுக்குக் கிடைக்கலாயிற்று. நள்ளிரவில் மீன்பாடும் இன்னிசை விருந்தாகிய புது அனுபவத்தையும் அடைந்து கொழும்பு திரும்பினர்.
இரண்டொரு மாதம் சென்றபின் நான் கொழும்புக்குப் போயிருந்தபோது சூரியசேன அவர்கள் என்னை அல்விஸ் பிளேசிலுள்ள தமது பத்தாம் இலக்க வீட்டுக்கு அழைத்துச் சென்று தமது மனைவியாரை அறிமுகஞ்
asmeros 2003

செய்து வைத்து விருந்துபசாரம் செய்து வழியனுப்பிய இனிய நிகழ்ச்சி இன்னும் என் நினைவில் இருக்கின்றது.
தேவசூரியசேனாவின் வாசத்தலத்தில் நாடக அரங்கொன்றும் அமைந்துள் ளமை எனது உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. கலாநிதி சரச்சந்திரா அவர்கள் எழுதியிருக்கும் ஒரு நூலில் மட்டக்களப்பு நாட்டுப் பாடல், நாட்டுக்கூத்து இவற்றின் செய்திகள் காணப்படுவதாக அறிகின்றேன். கலைப் பண்பினால் இணைந்து வாழ்வோம்.
o o o o
ா அகில இலங்கை இந்துமா மன்றம் 1955ஆம் ஆண்டு மாசி மாதம் ஆறாந் தேதி நிறுவப் பெற்றது. இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து வந்து கூடிய பல நூற்றுக்கணக்கான மக்களிடையே பெயர் வைப்பதில் அபிப்பிராய பேதமுண்டாயிற்று. சைவமாமன்றம் எனப் பெயரிட வேண்டுமென வாதாடினர் ஒரு சாரார். இந்துமா மன்றம் எனப் பெயரிடுவதே பொருத்த
மாகுமென வாதாடினர் மறுசாரார்.
இந்துமா மன்றம் எனப் பெயரிட வேண்டுமென வாதாடிய கோஷ்டியின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உயர்திரு.பொன்பூீரீஸ்கந்தராசா அவர்கள். நான் பூரீஸ்கந்தராசா கோஷ்டியில் சேர்ந்துகொண்டு உரையாற்றுகையில், இந்து என்னும் சொல் சைவம் எனும் எல்லாப் பிரிவுகளையும் அடக்கும். சைவம் எனும் சொல் அவ்வாறு அடக்காது. இந்து சாதனம், இந்துக் கல்லூரி, இந்து வித்தியா விருத்திச் சபை, இந்து அற நிலையம் போன்ற அடிப்பட்ட வழக்குடைய சொற்களையும் நாம் நோக்கிப் பார்க்க வேண்டும். பெயர் பொருத்தமாக அமையவேண்டும்.
நமது நோக்கம் விசாலமானது. நாம் எல்லார்க்கும் இடம் கொடுக்க வேண்டும். இந்துமா மன்றம் எனப் பெயரிடுவதே பொருத்தமானது, நல்லது என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம் சபை இப்பெயரையே ஏகமனமாக ஏற்றுக்கொண்டு நமது இந்தத் தாபனத்துக்கு அகில இலங்கை இந்துமா மன்றம் எனப் பெயரிட வேண்டுமென அன்பாகக் கேட்டுக் கொள்ளுகின்றேன் எனக் கூறிமுடித்தேன். இந்து என்ற பெயரே சபையில் அங்கீகாரம் பெறலுாயிற்று. () () ()
areas 2008

Page 28
“செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர் களின் புதல்வன் - கொழும்புத் தமிழ்ச் சங்கத் தின் முன்னால் தலைவர் திரு.பெ.விஜயரெத்தினம் அவர்களாவார்.
திரு. பெ. விஜயரெத்தினம் அவர்கள் 25.08.1934 அன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பாலுள்ள குருக்கள்மடம் எனும் கிராமத்தில் பிறந்தார்.
மட்டக்களப்பிலுள்ள புளியந்தீவில் அமைந்திருந்த இராமகிருஷ்ண மிசன் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்று, பின் குருக்கள்மடம் மெதடிஸ்தமிஷன் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து மட்/காத்தான்குடி மத்திய் பாடசாலையில் கல்வி பயிலச் சென்றார். 1949ம் ஆண்டு மட்டக்களப்பு அரசினர் கல்லூரியில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார்.
உயர்கல்வியைப் பெறுவதற்காக கல்கத்தா சர்வ கலாசாலைக்கு அனுப்பப்பட்டார். இங்கு வரலாறு, பொருளியல் முதலிய பாடங்களைப் பயின்று பட்டதாரியாக வெளியேறினார். இலங்கையில் ஆசிரிய சேவை யில் இணைந்து முப்பது ஆண்டுகள் பணியாற்றி, தனது அறுபதாவது வயதில் ஓய்வுபெற்றார். ஆசிரியை சேவையிலிருக்கும் போது கல்வி டிப்ளோமா கற்கைநெறியிலும் தேர்ச்சிபெற்றார். தனது ஆசிரிய சேவையை மட்/பழுகாமம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பித்து,
::IE
 

பின்னர் கல்முனை வெஸ்லி உயர்தரப் பாடசாலை, கல்முனை ஸாகிறாக் கல்லூரி, மருதானை அல்மனார் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
கல்வி, தமிழ், சமுக, சமயத் தொண்டு புரிவதில் ஈடுபாடுள்ளவராக விளங்கிய இவரின் பணிகள் கல்முனை இந்து இளைஞர் மன்றம் " மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் - மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் கிளை - கல்முனை சித்தி விநாயகர் ஆலயத் திருப்பணிச் சபை - மட்டக்களப்பு புலவர்மணி நினைவுப் பணிமன்றம் (ஆலோசகர்) - உலக சைவப் பேரவையின் இலங்கைக்கிளை (துணைத் தலைவர்) ஆகிய அமைப்புகளினூடாக அமைந்தன.
"ஈழத்துத் தமிழ்ச் சான்றோர்’, ‘தமிழ்நாடும் ஈழத்துச் சான்றோரும், 'கிழக்கிலங்கையின் புகழ்பூத்த மக்கள்', "20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்து தமிழ்ப் புலவர் வரலாறு', 'புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை - ஒரு ஆய்வு ஆகிய நூல்கள் வெளிவருவதற்குத் தேவையான தகவல்களைத் தேடி வழங்கியும் ஆலோசனைகள் வழங்கியும் நூலாசிரியருக்கு உதவி, நூலாக்க முயற்சிகளில் பெரும் பங்காற் றியவர். மேலும் தமிழ்தந்த புலவர்மணி" என்ற நூலைத் தொகுத்து கொழும்புத் தமிழ்ச் சங்க வெளியீடாக 1998ம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலுக்கு வடக்குக் கிழக்கு மாகான கல்வி, கலாசார அமைச் சினால் 'சாகித்திய பரிசு வழங்கப்பட்டது. இவ் அமைச்சின் நிதியுத வியுடன் புலவர்மணி கட்டுரைகள்’ என்ற நூல் 1999ம் ஆண்டு வெளிவந்தது. இதன் தொகுப்பாசிரியர்கள் இரா.நாகலிங்கம் (அன்புமணி) அவர்களும், திரு.பெ.விஜயரெத்தினம் அவர்களுமாவர். புலவர்மணி கவிதைகள்’ என்ற நூலை சென்னை மணிமேகலைப் பிரசுரம் முலமாக மறுபதிப்புச் செய்தார். ‘வீரகேசரி', 'தினகரன்' ஆகிய பத்திரிகைகளில் “கிறிஸ்தவர்களின் தமிழ்ப்பணி’ என்ற தலைப்பில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது கட்டுரையைப் பாராட்டி இப்பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்களில் எழுதியுள்ளன.
ಕ್ಲಿಪ್ಲೆ'

Page 29
இலங்கை வானொலியிலும் பல உரைகளை ஆற்றியுள்ள இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளார். ஆசிரிய சேவை யில் சிறந்த ஆசிரியராக விளங்கி சிறந்த மாணாக்கர்களை உருவாக் கிய இவர், கிழக்கிலங்கையின் உயர்கல்வி வளர்ச்சியில் காட்டிவரும் ஆர்வம் பாராட்டத்தக்கது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம், விலங்கியல், தமிழ் ஆகிய பாடங்களுக்குத் தமது உறவினர்கள் முலம் புலமைப் பரிசில்களை ஏற்படுத்தியுள்ளார். கர்நாடக சங்கீதம், கணக்கியல், தமிழிசை முதலிய பாடநெறிகளுக்கு புலமைப் பரிசில் களை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறார். கிழக்குப் பல்கலைக் கழக நூலக வளர்ச்சியில் அக்கறைகொண்டு இதுவரை முன்னூ றுக்கும் மேற்பட்ட நூல்களை வழங்கியுள்ளதுடன் இன்னும் பல நூல்களை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
ஈழத்துப் பூதந்தேவனார் தமிழ்ப்புலவர் கழக உறுப்பினர்களில் ஒருவராகவும் விளங்கும் இவர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய போட்டிகளிலும், 2004ம் ஆண்டு நடைபெற்ற தொல்காப்பிய விழாப் போட்டிகளிலும் பரிசுபெற்ற மாணவர்களுக்கு தனது தந்தையார் புலவர்மனி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் பெயரில் பரிசில்களை வழங்கியுமுள்ளார்.
பேராசிரியர்களான அமரர்.முத்துலிங்கம், அமரர் பத்தக்குட்டி சந்திர சேகரம், சோ.சந்திரசேகரம் ஆகியோரிடம் கல்வி பயின்றார். கொழும் புத் தமிழ்ச் சங்கம் எதிர்வரும் 22.11.2008 அன்று இவருக்குச் சிறப் புக் கெளரவம் வழங்கவுள்ளது.
இத்தகைய சிறப்புக்கள் பொருந்திய திரு.பெ.விஜயரெத்தினம் இவர் களை அவரது தந்தையின் நினைவுச் சிறப்பிதழாக வெளிவரும் "செங்கதிர் இதழின் இம்மாத அதிதியாக அறியத்தருவதில் "செங்கதிர் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றது.
- ஆசிரியர்.
画圆缸 野 諡 TrT Beton, 2.Č00

sel. ானைவி D]5[ .اسلام کےہے
மனைவி D666
------- 9' - ܡܪ̈ܝܒ - ܡܡ - ܒܫܒܐ -- ܒ -- ܒ -"
*kaskád: நல்லம்மா (மறைவு 1979) தருமலிங்கம் (மறைவு 1994)
சாந்தலிங்கம்
(மறைவு 1984)
鴨
n. 霹 寮/ 推 - ya
easilisinthias'
சந்தானலட்சுமி
தனலட்சுமி
瓯 55 = "l'HE t = infե

Page 30
கிழக்கீழத்தின் சமயப் பெயராக, தமிழ்த்தந்தையாக, இலக்கிய அண்ணாவாக
அறிவொளி பரப்பின் எழுகதிராம் புலவர்மனி பெரியதம்பிப்பிள்ளை அவர்களின் மறைவால் துயரிருவில் தருமாறும் கல்முனை இகிச. வித்தியாலய அதிபர் ஆரியர்கள், பிள்ளைகள், ஒன்றாகக்கூடி பாடிக் கொருக்கும் இரங்கற்பா
வெண்பா காலயுத்தி ஐப்பசிநாள் காணும் பதினாறில் ஞாலமெற்றிக் கைபிசைந்த நாமழவே - கோலமுந்து தமிழீழப் புலவர்மனி தானடைந்தார் வானுலகு அமிழ்தாவா ரவரங்கே யாம்.
ஆசிரியப்பா வளம்கலை மலிவாய் வழங்கிடு மீழக் களமெனும் மட்டக் களப்பிலே முருகன் கொண்டிடும் படைவீடொன்றெனப் புகழும் மண்டூர்ப் பதியில் மறைமொழி புதுக்கப் பெரிய தம்பிப் பிள்ளைப் புலவர் அரிய பிறவி ஆகக் கிழக்கின் மணியாய்த் தோன்றி மா தமிழாளோர் அணியாய்க் கொள்ளு மரும்பெரும் யாழ்நால் ஆக்கியோன் விபுலா நந்தனின் நிழலாய் தாக்கினார் பணியைத் தணைநலம் குருக்கள் மடத்தினில் கண்டார் மட்டக் களப்பினில் கடமையிலரசினர் கல்லூ ரித்தமிழ் தலைமைப் பதவி தாங்கித் தொண்டின் விலையாய்க் கீதை வெண்பா முதலாம் நால்கள் தந்தார் நகர்ந்தோம் தெளிந்தோம்
20
 

சுன்னைக் குமாரசுவாமிப் புலவர் தன்னால் கலைகள் தகைந்த முதல்வர் கிழக்கே இருளில் கிடக்கத் தறந்தார் விளக்கம் வேண்டின் விழுமெழு கதிரே! எம்மைத் தண்பம் ஏற்றிச் சென்றார் அம்மா விதயம் அகலப் போமோ
கட்டளைக் கலித்துறை அன்புக் குரியார் தணைநலம் மக்கள் ஆசிரியர் தன்புரு வமின்ற கண்ணிரிறைக்கும் தலமாகத்
தண்பத் தருவாய்த் தடிக்கத் திரும்பாத தாரத்தே தெண்பா லெழுந்தா யையாதயரென்று தீர்ந்திடுமே
கவியாக்கம் : அமரரின் மாணாக்கரில் ஒருவரான ஆசிரியர் பொன்.தவநாயகம் அவர்கள்.
செங்கதிர் - 6 (யூன் 2008, வீச்சு:06) வது இதழின் 37ம் பக்கத்தில் பிரசுரமான ‘எழுத்தாளனுக்கு புலவர்மணியின் வெண்பா சரவை பார்த்த தவறுகாரணமாக பிழையாக அச்சாகியுள்ளது. தவறுக்கு வருந்து கிறோம். சரியான வெண்பாவை இங்கே தருகின்றோம். - ©ງກົງກົມມ໌
திருத்தம்
எட்டினமட் ரும்பாயும் ஏவுகணை; இவ்வுலகில் எட்டாத துரமெலாம் ஏகியே - பட்டுருவிப் பாயும் எழுதுகோல் பாவிப்போம் நாமதனை நேயக் கரம்பிடித்து நின்று.
- புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை.
sies 2008 :

Page 31
E8);
இவற்றE முற்றிற நூல்36
1.
г. 5.
6.
'வாழையடி வாழை - வித்துவான் க. செபரெத்தினம் (அரசு வெளியீடு, கொழும்பு)
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, புலவர்மணி ஏ. பெரிய தம்பிப்பிள்ளை ஆகிய இருவரையும் பற்றி எழுதப்பட்ட நூல்,
"புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை' - எஸ். எதிர்மன்ன சிங்கம் (விபுலம் வெளியீடு - 3, மட்டக்களப்பு - 1993)
"கிழக்கின் பேரொளி புலவர்மணி" (மாணவர்களுக்கானது) - சதா.நவரெத்தினராஜா (பதிப்பகம் ஜீவா பதிப்பகம், தேற்றாத்திவு மட்டக்களப்பு - 1980)
"கலாநிதி புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளைப் பண்டிதர் அவர்களின் வரலாற்றுக் குறிப்புக்கள் - ஈழத்துப் பூராடனார் தா. செல்வராச கோபால் (வெளியீடு: ஜீவாபதிப்பகம், றொரன்டோ, கனடா - 2005)
"புலவர்மனி நூற்றாண்டுவிழா மலர்' - தொகுப்பு: அன்புமணி வெளியீடு புலவர்மனி நினைவுப்பணி மன்றம், மட்டக்களப்பு - 1998
"புலவர்மணிக்கோவை (செய்யுள் நூல்) - கலாநிதி க. தா. செல்வராச கோபால் (கனடா)
"தமிழ் தந்த புலவர்மனி - தொகுப்பாசிரியர்: பெரியதம்பிப் பிள்ளை விஜயரெத்தினம் கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடு - 1998
"புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை - ஓர் ஆய்வு - சி. சிவ நிர்த்தானந்தா (2005)
ir-ritrataset li l

அருள்மழை பொழிந்து நித்தம் அடியவர் வினைகள் தீர்க்கும் முருகவேள் வாழும் மண்டூர் மனமுவந் தனித்த மேதை.
புலவருள் மணியாம் எண்கள் பெரியதர் ரிப்பீர் னையோர் திலகமெணி நாற்பொப் பயில்லை தரணியே சான்று சொல்லும்,
SR
பெற்றனர் மணியை ஏகாம் பரப்பீர்ண சிண்ணத் தங்கம் கற்றி வைத்தார் மெ.மி கண்முனைப் பள்ளி தண்ணில்
தமிழினில் ஆர்வம் ஓங்க தணயம்ை யாழு ரேகி அறிந்தாரம் தமிழை உண்டு அரியபணி டிதராப் ஆணரர்.
s
S. 5 (S.
காலமுM கனிந்து வந்த காரணத் தரலே கான
சீலமும் வனப்பும் மிக்க கந்தரிநண்லம் மரளை
திருமண மாலை சூட்டத் தோண்றின லிங்கம் நாண்கு
சத்தியர் நாண்கு மோங்க
இலட்சுமி வேண்டு மணிறோ இஸ்லத்திர் கெண்று ராக இலட்சிய ரீட ரீர்று சந்தானந்தனமு மோங்க

Page 32
வேறு
பல்பணிக ளாற்றிடினும்
புலவர்மணிக் கேற்ற பணி
கல்விஅமு தாட்டிடுமோர்
குருப்பணிதான் வேறில்லை.
ஆக்கிவைத்தா ராசுகவி
ஆயிரமாங் கவிதைகளை
ஊக்குவித்தார் கல்வியினில்
உயர்ந்திடவே மாணாக்கர்.
பண்டிதராம் மதுரகவி
பாவேந்தன் கவியரசாம்
உண்மையிலே விருதுகளில்
உயர்"புலவர் மணி"சிகரம்.
பலமணிக ளென்று புகழ்
பட்டங்கள் பெற்றிடினும்
புலவர்மனி" என்றதுமே
புரிந்து விடும் யாரென்று.
அதியுயர்ந்த நல்விருதாம்
இலக்கியச் செம்மல்" தனை
ததி தவறிப் பெற்றார் தன்
தேகாந்த நிலையினிலே,
தீண்டாமையையொழிக்கத்
தாளாண்மை கொண்டெழுந்தார்
தாண்டா மனிவிளக்காய்
தானொளிந்தார் தாரணியில்,
முனிவர் விபு வனந்தர்
மீட்சிப்பத் திர்ை செய்யுள் தனிலுமவர்கீதையதைத்
தந்திட்டார் வெண்பாவாய்.
so இந்தி
உள்ளதும் நல்லதுடன்
உயர்பாலைக் கலியினுளும் உள்ளகட்டுரைகளெல்லாம்
மணிபுகழைப் பாடுதற்கு
மணிகள் சில போதாதே
பணிகளிலே தோய்ந்து மிளிர்
புலவர்மணி வாழியவே.
மங்காத புகழுடலோ
மறையாது மறையாது
மண்ணுலக முள்ளவரை.
உள்ளத்தைத் தொடுபவைதான்.
மறைந்ததவர் பொய்யுடல் தான்
புலவர்மணி பற்றி:
தில்லைச் சுடரொளி மண்சூர்ப் போன்மகள் திகழத் திக்கொங்கும் நிருவார் முருகன் அறிமளர் நிருவடி முது பெரும் அன்பEள் சொல்வளர் புேைனார் மாயண் பெரிய நம்iர்னா பயில் சுன்னைக் குமாரசுவாமிப் புலவர்
TIJE FI I Tid Iல் வளமும் பேது பைந்தமிழ் முற்றிய IITIKAIGA TENGAGE: til பகவான் கண்கஅரண் 1ாகர் பகவத் கீதைப் பாற்கடம் வெள்ளிய சங்கம் ஒத்ததென வெண்பாச் சுனைமவி வீந்தகம் விரிவுரையான் என் ITV யாங்கண்டம்
வெள்: கரே
விழவுத புள் நாள் கோரு வாழ்த்த விளங்குக 1ல்ாண்டே
ميكنة
மண்டுர்க் கவிஞர்ஞர் மு.சோமகந்தரம்பிள்ளை

விபுலாநந்தர் கல்விச் சகாய நிதியின்
- اfn ,_ اfo______سر کماري . கதி என்ன?
புலவர்மண் ஏ.பெரியதம்பிப்பிள்ளை. 1935 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஒரு நாள் எங்கள் பகுதி வன்னிமை முதலியாரைப் பார்க்கப் போயிருந்தேன். போய் அன்னாருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது ஒரு சந்தர்ப்பத்தில், "நான் மண்டுர்க் கோமிலுக்கு ஒரு யானையை அன்பளிப்புச் செய்யப்போகிறேன்” என்று அவர் என்னிடம் சொன்னார்.
“கோயிலைச் சாப்பிடுவதற்கு வண்ணக்குமாரே போதும். யானை ஒன்று அவசியமில்லை ஐயா’ என்று நான் அவருக்குச் சொன்னேன். நான் இவ்வாறு சொன்னதற்குரிய காரணத்தை நேயர்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.
எத்தனையோ ஆலய நிருவாகிகள் தாமாகவே சிந்தித்து எவ்வளவோ பெரிய காரியங்களைச் செய்திருக்கலாம் பல்லாயிரக்கணக்கான, ஏன் பல லட்சக் கணக்கான ரூபா வருமானமுடைய பல ஆலயங்கள் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் இருக்கின்றன.
நிரந்தர வருமானம் தருகின்ற பலகோடி ரூபா பெறுமதியான அசை வில்லாத ஆதனங்களைப் பல ஆலயங்களுக்கு முன்னோர் தருமசாதனம் பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் மறைந்துவிட்டார்கள். நாம் எப்படியும் நடக்கலாம் என்று எண்ண வேண்டாம். நாம் செய்வதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்.
பல ஆலய நிருவாகிகள் தமது முன்னோரின் நம்பிக்கைக்குத் தகுதியாக நடந்து கொள்வதில்லை. நிருவாக உரிமையைப் பெறுவதற்கு வாதும் சூதும் செய்து வழக்கும் ஆடுகிறார்கள். வாதம் ஒழிந்த இடத்தில் வாதம் சமாதானம் நிலவவேண்டிய இடத்தில் வழக்கு. நிருவாகத்தை கைப்பற்றிய பின்பு எதிர்க்கட்சிக்கும் மறைமுகமாகப் பங்கு கிடைக்கிறது. பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது' என்பது போல் ஆகிவிடுகிறது பரிபாலன நிலைமை. புண்ணியம் போல் பாவம்!
இவிதி
anske kun, A.J.

Page 33
காரைதீவுக் கண்ணகை அம்மன் கோயிலுக்கு இனி வருகின்றேன். இருபது ஆண்டுகளின் முன்பென்று நினைக்கிறேன். ஆலய விசாரணைச் சபைத் தலைவர் கிழக்குப் பிரதேச வித்தியாதிகாரி திரு.ஏ.விமயில்வாகனம். வழக்கறிஞர் திருகேஎன்.குமாரசுவாமியும் நானும் அங்கத்தவர்கள். விசாரணை நடந்து கொண்டு போகிறது. விசாரணைச் சபைத் தலைவர் ஒரு கட்டத்தில் என்னைப் பார்த்து இந்தப் பிரதம வண்ணக்கர்தான் நிருவாகச் சீர்கேடு முழுவதுக்கும் காரணகர்த்தாவாயிருக்கிறார் என்று சொன்னார்.
"ஐயா அவசரப்பட வேண்டாம் சாயந்தரம் எல்லாம் அம்பலமாகும் பொறுத்திருப்போம்” என்று நான் தலைவருக்குக் கூறினேன். மதிய போசனத்தின் பின்பு விசாரணை நடந்து கொண்டிருக்கையில் நான் தலைவரிடம் நகைச் சுவையாகச் சொன்னேன். "ஐயா முறைப்பாடு செய்ய வேறு ஆள் தேவைப் படுகிறது” என்று.
“என்ன சொல்லுகிறீர்கள். விளங்கவில்லையே” என்று தலைவரும் மற்றைய அங்கத்தவரும் என்னைக் கேட்டார்கள்.
"இந்த மனுதாரர்களும், எதிர் மனுதாரர்களும் முந்தி ஒரே கூட்டு இந்த ஆலய நிருவாக ஊழல்களுக்கு இவர்கள் எல்லாருமே காரணகர்த்தாக்கள். ஏதோ உள்ளுக்கு நடந்த குத்துவெட்டுக்கள் காரணமாக இரண்டாகப் பிரிந்து கொண்டு "கொமிஷன்” கேட்டிருக்கிறார்கள். இதைத்தான் சொல்கின்றேன்” என நான் விஷயத்தை அம்பலப்படுத்தினேன்.
நான் இப்படிச் சொன்னதும் மேல் விசாரணையை நடத்தும் அவசியம் இல்லாமற்போய்விட்டது. இரு கட்சியினரும் ஒரு சமாதானத்துக்கு வந்து விட்டார்கள்.
இந்த ஆலயத்துக்கு நூற்று முப்பத்திரண்டு 'ஏக்கர் நெல்வயல் இருக்கிறது. இற்றைக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பே 'ஏக்கர் ஒன்றுக்கு நூற்றறுபது புசல் விளையும் பொன் கொழிக்கும் போக பூமியாகும். சங்கநிதி, பதுமதிதி இரண்டும் வாய்ந்த கரைவாகுப் பகுதியிலுள்ளது இந்தத் தங்க வயல்.
இந்த நூற்று முப்பத்திரண்டு ஏக்கர் நெற்காணியில் சரி அரைவாசி அறுபத்தாறு ஏக்கரில் வரும் வருமானம் கோயில் வண்ணக்குமாருக்கு
62|वैष्ट्री
=Tరి 2008

மற்ற அரைவாசி வருமானம் கோயிலுக்கு இதைவிட கோயிலுக்கு வருகின்ற பிற வருமானமோ அள்ளா கொள்ளை.
இரு கட்சியினரும் கூட்டாக இணங்கிக்கொண்டதன் பேரில் எங்களால் அங்கீகரிக்கப்பட்ட சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை இங்கே தருகின்றேன். குறித்த சமாதான அம்சம் நாங்கள் சிறப்பாகச் சிபார்சு செய்ததும் பிரதானமா னதும், பெரும் பயன் தருவதுமான ஒன்றாதலால் அதுபற்றி வாசக நேயர்கள் அறிந்திருக்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.
வண்ணக்குமார் பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்த அறுபத் தாறு ஏக்கர் வருமானத்தையும் காரைதீவுக் கல்வி விருத்திக்குப் பயன்படுத்து வது, ‘விபுலாநந்தர் கல்விச் சகாய நிதி என்னும் பெயரில் இலங்கை வங்கி போன்ற ஒரு வங்கியில் குறித்த வருமானத்தை நிரந்தர வைப்பாக இட்டுவைப்பது; அதற்கொரு தர்மகர்த்தா சபையை நியமிப்பது; காரைதீவி லிருந்து பல்கலைக்கழகம் புகும் மாணவர்களுக்குத் தகுதிக்கேற்பக் கல்வி நன்கொடையோ, கடன் தொகையோ வழங்குவது.
இந்த நிபந்தனைகளுக்கு அடக்கமாக விபுலாநந்தர் கல்விச் சகாய நிதி நிறுவனம் அம்மாளின் சன்னிதியில் கொமிஷனர்களின் முன்னிலையிலே, இரு கட்சியினரதும் ஒரே சம்மதத்துடன் சட்டபூர்வமாக அங்கீகாரம் பெற்று நிறைவேறியது. ஆனால், இதுவரை குறித்த கல்விச் சகாய நிதி நிறுவப்படவுமில்லை. நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யவுமில்லை. -
கால் நூற்றாண்டுவரை இதற்குச் சேரவேண்டிய நிதி என்னவாய்ப் போமிற்றோ தெரியவில்லை. காரைதீவு இளஞ் சந்ததி இந்தக் கொடுமையைக் கண்விழித்துப் பார்க்க மாட்டாதா? எத்தனை லட்சம் சேர்ந்திருக்கும்.
அடுத்து இன்னொன்றை நோக்குவோம். விபுலாநந்தர் சிலைத் திறப்பு விழா. பிரதம விருந்தினராக வருகின்றார் தெய்வசிகாமணி குன்றக்குடி அடிகளார். திறப்பு விழாவைச் சிறப்புறத் தொடங்கி மங்கள சம்பூரணமாக நிறைவு செய்து வைத்த அடிகளார் விபுலாநந்தர் கல்விச் சகாய நிதியொன்றை அங்குாார்ப்பணம் செய்துவைத்துக் குறித்த நிதிக்குத் தாமே ஒரு பெருந் தொகையை நன்கொடையாக வழங்கிய உருக்கமான நிகழ்ச்சி நமது
a.m.54-'æt:5 20:15
|

Page 34
முது சமுதாயத்தின் தளர்ந்த ஞாபகத்துக்கு மறை பொருளாகப் போய் விட்டாலும், கிளர்ந்தெழுகின்ற நமது இளஞ் சமுதாயத்தின் ஞாபகத்துக்கும் இது மறை பொருளாகப் போய்விட்டதோ? இந்த நிதிக்கு என்ன நடந்தது எங்கே போயிற்று? கேட்பாரில்லையா? எத்தனை சாதனைகளைச் செய்திருக் கலாம். வேதனை வேதனை வேதனை
காரைதீவு என்றால் அது சாதாரணமான ஓர் ஊரன்று. மட்டக்களப்புத் தமிழ்ச்சமூகம் முழுவதையுமே தோள்கொடுத்துத் தாங்கக்கூடிய சக்தி அதற்குண்டு. அது சரியான முறையிலே ஒருமுகப்பட்டுத் திடமாகச் செயற்ப டுமானால் மட்டக்களப்புத் தமிழ் மக்களின் தலைவிதியையே நிர்ண மித்து விடக்கூடிய பழவிறற் பெரும் பேரூராகும் காரைதீவே நீ எங்கே சென்று கொன்ை டிருக்கிறாய்? எவ்வாறு சென்றுகொண்டிருக்கிறாய்? இடுக்கிப் பாய்ச்சலுக்குள் அகப்படாதே. வடக்கையும் தெற்கையும் திரும்பிப்பார். நிலைத்து நில், தறிப்பு :
புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் தனது எண்பதாவது வயதில் (1988/89) "சிந்தாமணி” வார இதழில் "உள்ளதும் நல்லதும் என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரைகளைத் தொகுத்து மட்டக்களப்பு புலவர்மணி நினைவுப் பணிமன்றம் "உள்ளதும் நல்ல தும்" என்ற பெயரிலேயே 1982 இல் நூலாக வெளியிட்டது. இந்நூலி லுள்ள நிறைவுக் கட்டுரையே மேற்குறித்த 'விபுலானந்தர் கல்விச் சகாய நிதியின் கதி என்ன?’ எனும் கட்டுரையாகும்.
Eg Ezab DOFPÖ(5 முதல் நாள் உறை FIRST DAY COWER
is a
தேசிய வீரர்கள் MWATIWMLEIRO ES اس لئے -
இது
| || Eriէ գեյ եք: Հf:
 
 
 
 
 
 
 
 
 

25ధ్వర్తపు
கயதெரிவு முறை முன்னோடி, மூத்த, புகழ்பூத்த, திருமண ஆற்றுப்படுத்துநர்,தனிநபர் நிறுவநர், குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனே! = விபரங்களைத் திங்கள், புதன் வெள்ளி மாலை வேளைகளில்
011-2380488, 2360894, 4873929 தொலைபேசியில் விசாரித்தறிகுக = முகவரி : 8-3.3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு முன்பாக, நிலப்பக்கமாக, 33ம் ஒழங்கை வழி) 55 ஆம் ஒழுங்கை, கொழும்பு - 06
ழ | ள வேல் முதலே
三黎愛リ劉

Page 35
IOMers
t
- Sta
戀 辩 km 察 to 綫 * 綬 塔 《 铃 段 * 橙 錢 铃 ∞
 

“Aharam” 82, Bar Road,
Batticaloa. Tel: O60-264.3986