கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2008.12

Page 1
பரதக் கலாயைா இயக்கு
U5
 

னர் நாட்டியக் கலாமணி
TIDIG ரா கிருபாகரன்

Page 2
|苓$盘 。之。
* 量醬°多"
LUKURY
- NEW BOYAL
MíDSK VTMDSE ARDWARE MAINSTREET, MAVADICHCHENAI, WALAICHCHENAI. Tel: O777223284,077-5922326, 065-2257630
Dealers irr : Murrliiry pariri t, irar bar, (irrrrrrrrs. Barlin arra firrings, CryEPřir,
P. W. T. Vīrring, Errfriral s Fr Jr Pff, |Pлғғ. Тоғыlн, Gertera. Hardware Moferrrrrriro
(ysWASேேA
HAROWARE 8EbßGIRIGAbs
speadeus and Distuihutous in ate Jindaf
3tauduane á 8tectical Jtemø V
-
Moulana Complex, Main Street, Kattankudy - 02.
蠶 2
స్ట్ "エ三 Tel./Fax: 065-2246582
O65-224.5528, 065-2247085
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

誇ー -
"இரிையம் இல்லாமல் இலக்கியம் இல்லை"
|மார்கழி 2008 (தி.வ. ஆண்டு 2039)
12
ஆசிரியர் : எசங்கதிரான்
தொடர்புமுகவரி:
திரு.த.கோபாலகிருஸ்ணன்
இல,19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை
Contact:
Mr.T.Gopalakrishnan
19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி /Telephone
O55 222395)
077 26O2.634
மின்னஞ்சல் / E=mal
senkathirgopalagmail.com
ഋീബ്ര ஆகியன [].
=9
கெ|
| ééfwf vis உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்கள் "கிறிஸ்மஸ் கொண்டாடுகின்ற மாதம் மார்கழி மாதம.
இயேசுக்கிறிஸ்து பாவிகளுக் காக மரித்தார்; மற்றவர்களின் "சிலுவைகளைச் சுமப்பதே மனிதப் பிறவியின் மகோன்னத மான செயற்பாடாகும் என்பதே இயேசுவின் வாழ்க்கை தரும் செய்தியாகும்.
அரசியல் என்றாலும் சரி, ஆன்மீகம் என்றாலும் சரி, கலை இலக்கியச் செயற்பாடு கள் என்றாலும் சரி, அத்தனை யும் மக்களை சமுகத்தை மையப்படுத்தியதாக அமையும் போதுதான் அவற்றின் அறு வடை மக்களை சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் மாறாக, அச் செயற்பாடுகள் யாவும் தனி மனிதனையே மையப்படுத்திய தாக அமைந்தால் அதனால் விளைவது அழிவும் அவலமுந் தான். இதுதான் வரலாறு புகட் டும் பாடம் நடைமுறையில் ஒவ்வொருவரும் இயேசுவாக - புத்தராக - காந்தியாக வாழ முடியாதுவிட்டாலும் அவர்க ளது வாழ்க்கை தரும் செய்தி யினைப் புரிந்து அவற்றின்
வழியில் நடக்க குறைந்தபட்சம்
ਹ.
- اپريل
..)

Page 3
முயல்வோமானால் உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் தேடி அலைய வேண்டியதில்லை. நமது அன்றாட வாழ்வில் இயலா மையில் இருக்கின்ற ஒருவருக்குத் துணை போவோம் - இல்லாமை யில் இருக்கும் ஒருவரோடு உள்ளதை நல்ல மனதோடு பகிர்ந்து கொள்வோம் - ஒதுக்கப்பட்ட ஒருவரை அன்புக்கரம் நீட்டி ஒருவருக் கொருவர் நம்பிக்கையூட்டிக் கொள்வோம் - அநீதிக்கு ஆளான ஒருவருக்காகக் குரல் கொடுத்து நீதியைப் பெற்றுக் கொடுப்போம் அப்படிச் செயல்படுகின்ற போது உள்ளத்தில் ஏற்படுகின்ற அந்தக் குளிர்மையான உணர்வே இயேசு சொல்லும் அமைதி என்பதை உணர்ந்து அனைவரும் செயற்பட சங்கற்பம் செய்துகொள்வோம் - செங்கதிாேள் - கட்டண விபரம் : (அஞ்சல் செலவு உட்பட) இலங்கை இந்தியா வெளிநாடு
"செங்கதிர்"
அரையாண்டுக்கட்டணம் 500- 25CN- USS ICO ஓராண்டுக் கட்டணம் |ODO- 500- USS 20 ஆயுள் கட்டணம் I (), OOC)/- 5000/- USS JOC) புரவலர் கட்டணம் 25,000- 2,500.- USS 250
ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" வழங்கப்படும் புரவலர்களுக்கு வாழ்நாள் முழுவதும் "செங்கதிர்" வழங்கப் படுவதுடன் "செங்கதிர்" எதிர்காலத்தில் வெளியிடவுள்ள எல்லா நூல்களும் இலவசமாக வழங்கப்படும்
FloTILIT (ILLGMI வெளிப்புறம் முழு 50[]] I5[][) USS 50
பின் அட்டை
அரே 3Ո(II) IOOO USS 30 முன் அட்டை உட்புறம் (ԼՔԼի 3D JOL) USS 3) )ki]]IT 2OOD 75) USS 2sلg பின் அட்டை உட்புறம் (էք{ւր 20[][] 75ዐ LUS S 2) அரை USS 5
அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரும்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழங்கலாம்.
வங்கி மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்டக்களப்பு கணக்கு இல . 1131003858896 (நடைமுறைக்கணக்கு) காசுக்கட்டளை அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
காசோலைகள் / காசுக்கட்டளைகளை த.கோபாலகிருஷ்ணன் என்று
பெயரிடுக. அல்லது பணமாக ஆசிரியரிடம் நேரிலும் வழங்கலாம்
இந்தி
DIT E TIČE
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"செங்கதிர்’ இதழின் இம்மாத அதிதி இலங்கையின் முத்த ஒளடகவியலாளர் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் / பிரதிப் பணிப்பாளர் நாயகம் - இந்நாள் ஆலோசகர் திருவிஏதிருஞானசுந்தரம் அவர்களாவார்.
அனைவராலும் அன்போடு திரு” என அழைக்கப்படுகின்ற திருஞான சுந்தரம் அவர்கள் 0.12.1937இல் யாழ்ப்பாணம் வடமாராட்சிப் பகுதியைச் சேர்ந்த துன்னாலையில் பிறந்தார். தந்தை வேலுப்பிள்ளை அண்ணாமலை கரணவாயைச் சேர்ந்தவர். தாய் தெய்வானை துன்னாலையைச் சேர்ந்தவர்.
ஆரம்பக்கல்வியை ஆறாம்வகுப்புவரை கரணவாய் தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் பயின்று பின் கரவெட்டி விக்கினேஸ்வர வித்தியாலயத்தில் எஸ்.எஸ்.சி வரை கற்றுச் சித்தியெய்தினார். உயர் கல்வியின் பொருட்டு கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரிக்கு 1955இல் வந்தார். இங்கு எச்.எஸ்.சி பயின்றுகொண்டிருக்கும் போது தாயாரின் மறைவினால் உயர்கல்வி தடைப்பட நேர்ந்ததும் 1956இல் ‘வீரகேசரி' தமிழ்த்தினசரியில் இதழியலாளராகத் தொழில் பெற்றார். அப்போது வீரகேசரியின் ஆசிரியராக் இருந்தவர் திரு.கே.பி. ஹரன் அவர்கள், செய்தி ஆசிரியராக இருந்தவர் கே. வி. எஸ். வாஸ் அவர்கள். 1980இல் வீரகேசரி ஒளழியர்களால் சம்பள உயர்வு கோரி மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் விளைவாக வீரகேசரியை விட்டு விலக நேரிட்டது.
இவ்வாறு விலகியிருந்த காலகட்டத்தில் க.பொ.த (சாதாரண) வகுப்பிற்கு பெளதீகம், தமிழ் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியராகவும் சேவை
இக்காலத்தில் (1955-1980) இலங்கை வானொலியோடும் அவருக் குத் தொடர்புகள் ஏற்பட்டன. "மாலைமதியம்' என்ற வானொலி நிகழ்ச் ல் "கோழி வளர்ப்பு' என்ற கட்டுரையை வாசித்ததன் முலம் திருவின்
[...? onde 20

Page 4
குரல் முதன்முறையாக வானொலியில் பதிவாகியது. அதுபோல் மாதர் பகுதியில் 'மருதோண்டி" பற்றிய அவரது கட்டுரை இடம்பெற்றது. வானொ விக்காக "வளரும்பயிர்' என்ற நிகழ்ச்சிக்குப் பிரதிகள் எழுதியும் தயாரித்தும் நேரடி ஒலிபரப்பாக வழங்கியுள்ளார்.
1961இல் தேசியமயமாக்கப்பட்ட இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத் தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகச் சேர்ந்து விளம்பர உத்தியோகத்தர், நிர்வாக இடத்தியோகத்தர், பிரிவுத்தலைவர் ஆகிய பதவிகளில் அமர்ந்து நிறைவேற்று அலுவலர் (நிர்வாகம்) ஆக உயர்வு பெற்று 1980இல் அதனை விட்டு தாமாகவே விலகினார். இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட "காப்புறுதி' எனும் தமிழ்ச்சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்துள் ளார். இக்காலகட்டத்திலும் (1961-1980) இலங்கை வானொலியுடனான அவரது தொடர்புகள் தொடர்ந்தன. 1962 இல் இலங்கை வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்புப் பெற்றார். அக்காலத்தில் செய்திகளின் முலப் பிரதிகள் ஆங்கிலத்தில்தான் இருக்குமாம். அதனைத் தமிழில் மொழிபெயர்த்துத்தான் செய்தி வாசிக்க வேண்டும். திரு அதனைத் திறம்படச் செய்தார். 1985இல் கொழும்பு குதிரைப் பந்தயத்திடலில் பிரமாண்டமான கைத்தொழில் கண்காட்சி நடைபெற்றது. அதன் முதல் நாள் நிகழ்வினை இயந்திரலோகம்’ எனும் தலைப்பிலும், இறுதிநாள் நிகழ்ச்சியை "முன்னேற்றப் பாதையில் முப்பத்திரண்டு நாட்கள்’ எனும் தலைப்பிலும் எழுதித் தயாரித்து ஒலிபரப்பியவர் திரு. தவிர முப்பத்திரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கண்காட்சியின் நிகழ்வுகளை பொருட்காட்சித் திடலிலிருந்து கா.சிவத்தம்பி, சில்லையூர் செல்வராசன் ஆகியோருடன் இணைந்து ஒலிபரப்பினார். இலங்கையின் சகல கூட்டுத்தாபனங்களினதும் முன்னேற்ற அறிக்கைகளை உரைச்சித்திரமாக ஒலிபரப்பியதோடு அவற்றில் பங்குபற்றியும் உள்ளார்.
இவை தவிர "வள்ளுவர் வந்தார்’ எனும் இசை இடையிட் உரைச் சித்திரம், றேடியோவின் சுயசரிதை', நாளைய சந்ததி' எனும் நிகழ்ச்சி மற்றும் திரு எழுதிய "விடே நாடகம்' எனும் தொடர்சித்திரம், திருவின் பிரதி ஆக்கத்தில் உருவான "கண் (அம்மா) என் காதலி எனும் இசை இடையிட்ட உரைச்சித்திரம், "எமது அதிதி நிகழ்ச்சி என்பன திருவின் குரல் வளத்திற்கும், நிகழ்ச்சித் தயாரிப்பு ஆற்றலுக்கும், பிரதி ஆக்கத்திறனுக்கும், படைப்பாற்றலுக்கும் சான்று பகிர்கின்ற
ಛಿಷ್ಠ боаа

வானொலி நிகழ்ச்சிகளாகும். இவை அத்தனையும் தேசிய சேவையில் ஒலிபரப்பானவை.
இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் காப்புறுதி சம்பந்த மான ஆவணங்கள் இவராலேயே தமிழ்வடிவம் பெற்றன. இவை இன்றும் கூட நடைமுறையிலுள்ளன. அக்காலத்தில் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் பல வானொலி நிகழ்ச்சிகளையும் அளித்தது. "தேன்கூடு’, ‘விடிவெள்ளி' ஆகிய தொடர் நாடகங்களுக்கும், "காப்புறுதியே காவற்கலசம்', 'செத் தும் கொடுத்தான் சீதாகாதி" ஆகிய ஆயுள் காப்புறுதியின் நோக்கங்களை விளக்கும் விளம்பரச் சித்திரங்களுக்கும் திருவே பின்புலமாகத் திகழ்ந்தார்.
1980 இல் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திலிருந்து விலகி இாடகத்துறையுடன் (இலங்கை வானொலி) தன்னை முழுநேர மாக இசைத்துக் கொண்டார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1980இல் உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஆகச் சேர்ந்து 1987இல் மேலதிகப் பணிப்பாளர் (வர்த்தக சேவை), மேலதிகப் பணிப்பாளர் (தமிழ்ச்சேவை), தமிழ்ச்சேவை பணிப்பாளர் (1984) ஆகிய பதவிகளில் அமர்ந்து இறுதியாக 1990இல் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்/பயிற்சிஆராய்ச்சி) ஆக உயர்ந்து 1997ல் ஓய்வு பெற்றார். இடையிலே 1983 பூலைக்கலவரம் காரணமாக 1983 யூலையிருந்து 1983 ஒக்டோபர் வரை யாழ்ப்பாணத்தில் வசிக்கவும் நேரிட்டது. 1986இல் தினகரன் வாரமஞ்சரியில் "காற்றைக் கருவி கொண்டு கலைபடைத்த வித்தகர்கள்’ எனும் தொடர் கட்டுரையினையும் எழுதினார். Ý TJgfu 6)|LITiblUpET60Lru ITGTJ (General manager) Lakhanda VITN-Ltd
1997/1998 * ஜனாதிபதி ஊடகப்பிரிவின் ஒளடக இணைப்பாளர் - 1998/2001 Tiċri 6,jbfu JaumerTij (erJefulusio) l-ABC (PWT) Ltd, News Division
(வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) * நிகழ்ச்சித்திட்ட மற்றும் செய்தி முகாமையாளர் சுவர்ணஒலி, BAP
Radio Network * தலைவர், இலங்கை கலைக்கழக நாடகக்குழு - 1998/1999
* ITN பணிப்பாளர் சபை உறுப்பினர் el 2001 in ri
n

Page 5
女
பணிப்பாளர் (ஒளடகம்) வடமாகாண புனர்வாழ்வு புனரமைப்பு மற்றும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் அலுவல்கள் அமைச்சு - 2001/2002
வருகை விரிவுரையாளர், இதழியல் கற்கைநெறி, கொழும்புக் கலைக் கழகம் - 2002இலிருந்து. பணிப்பாளர் உலக இந்து மாநாட்டுச் செயலகம் (2003 பெப்ரவரிமே) செயலாளர், பனை அபிவிருத்திச் சபை - 2003மேநவம்பர் பணிப்பாளர் சபை உறுப்பினர், நிர்வாக ஆலோசகர் -INLd (2003/2004) பணிப்பாளர் சபை உறுப்பினர், ஆலோசகர் - இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் (2004/2005) நிபுணத்துவ ஆலோசகர் (Consular) - நிர்வாகம், தமிழ் நிகழ்ச்சிப் பிரிவு செய்திப் பிரிவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். அரச கரும மொழித்தினைக்களத்தின் கலைச் சொல்லாக்கக்குழு உறுப்பினர் (தொடர்பாடற் கற்கைக் கலைச்சொல் அகரமுதலி) கரவெட்டி விக்கினேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கொழும் புக் கிளைச் செயலாளர் ஆகிய பொறுப்புக்களிலிருந்து பணிகளை ஆற்றியவர். தவிர, 1983 மாகாணசபைத் தேர்தல்கள், 1988 ஜனாதிபதித் தேர்தல், 1939 பாராளுமன்றப் பொதுத் தேர்தல்கள், 1994 பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களின் போது வானொலி ஒலிபரப்பு ஒருங்கிணைப்பாளராகவும்: 1982 ஜனாதிபதித் தேர்தல், சர்வஜன வாக்கெடுப்பின் போது வானொலி ஒலிபரப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒருங்கினைப்பாளராகவும் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார். -
இவர் வெளியிட்ட நூல்கள் :
古
宫
宣
"கரவையூற்று" - (2001 - பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பற்றிய பன்முக நோக்கு)
"சிவலயம் - (2004 - காற்றைக் கருவிகொண்டு கலைபடைத்த வித்தகர்கள் (ஒலிபரப்பாளர்கள்) 31 பேர் பற்றியது.
"மனோலயம்" - (2007 - காற்றைக் கருவிகொண்டு கலைபடைத்த
வித்தகர்கள் (ஒலிபரப்பாளர்கள்) 48 பேர் பற்றியது. 'சாகாவரம் பெற்ற சான்றோன்" -(2002 - மு.சிவசிதம்பரம் பற்றியது)
இந்தி Gloż

பெற்ற பட்டங்கள்: * கலைச்செம்மல்" (1987) - பிரதேச அபிவிருத்தி அமைச்சு * தமிழ் ஒளி' - (1993) - இந்து கலாசார அலுவல்கள் அமைச்
சின் தமிழ் சாகித்திய விழாவில் * "ஒலி அரசு" - (1992) - பூரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம்,
மயூரா பிளேஸ், வெள்ளவத்தை. * "Madura Bashanai - (1992) - அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் * 'பூஞரீ லங்கா திலக - ஒளடகத்துறைச் சேவையை அங்கேரித்து
ஜனாதிபதி வழங்கிய தேசிய விருது * 'கலாபூஷணம்" - (2008) - (ஊடகத்துறை) கலாசார அமைச்சு
‘வீரகேசரியில் பணியாற்றிய பத்திரிகைத்துறை அனுபவம் (1956-1980), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய நிர்வாகத்துறை அனுபவம் (1961-1980), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடமை யாற்றிய ஊடகத்துறை மற்றும் முகாமைத்துவ அனுபவம் (1980-1997). 1997இல் ஓய்வுக்குப் பின் அவர் வகித்த பொறுப்புக்கள் - இவையெல்லாம் திருஞானசுந்தரம் அவர்களின் பரந்துபட்ட ஆளுமையை வெளிக்காட்டி நிற்கின்றன. அவரிடம் அடங்கியுள்ள திறமைகள் அளப்பரியன. இருந்தும் மிக அடக்கமாகவும் அமைதியாகவும் அனைவருடனும் அன்பாகவும் எளிமை யாகவும் பழகும் குணநலனுடனும் ஓர் நிறைவான மனிதன் ஆக தன்னை அடையாளம் காட்டி நிற்கும் திரு’ அவர்களது பெயர் பேராசிரியர் கா.சிவத்தம்பி கூறியிருப்பது போன்று "இன்னும்தான் மக்கள் கவனிப் பினைப் பெறவேண்டிய அளவுக்கு பெறாமல் போயுள்ளதே” என்பது ஆச்ச ரியமே. அதற்குக் காரணம் பேராசிரியரின் கூற்றிலேயே "தன்னை முன் நிறுத்தாது தகைமையை முன்னிறுத்தும் "திரு’ ஆக இருக்கலாம்.
அகவை எழுபதைத் தாண்டிவிட்டபோதும் தன் ஆற்றல்களை சாதனைகளை மற்றவர்களைப் போல் பறைசாற்றாது நிறைகுடம் ஆக வாழ்ந்து கொண்டிருக்கும் " இன்றும் கூட ஊடகத்துறை (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் SLBC) ஆலோசகராகச் சேவையாற்றிக் கொண்டிருக்கும் திரு. வி. ஏ. திருஞானசுந்தரம் அவர்களை “செங்கதிர் இதழின் இம்மாத அதிதியாக அறியத்தருவதில் செங்கதிர் பெருமையும்
bär of Libl 501 503.L.
மகிழ்ச்சியு கிறது. ம சிரியர்.
LITH ATTI"

Page 6
அன்றைய இலங்கை வானொலி
திரு.வி.ஏ.திருஞானசுந்தரம்
இருபதுகளின் முற்கூறிலே தோற்றம்பெற்ற இலங்கை வானொலி (தற்போதய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) நாற்பதுகளின் பிற்கூறிலே, சுதந்திர நாட்டின் குரலாக ஒலிக்க வேண்டியிருந்தபோது பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அக்காலத்திலே சமூகப் பண்பாட்டுப் பொரு ளாதார மீட்சி கடினமான ஒரு காலத்திலே சமூகப் பொருளாதார மீட்சி கடினமான ஒரு கருமமாக விளப்பரூபமெடுத்து நின்றமை முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். தேசிய அபிவிருத்தியை விரைவுபடுத்த வேண்டுமாயின் தேசிய உணர்வுகளை விழித்தெழச்செய்யும் சகல சாதனைகளையும் பயன்படுத்தவேண்டியிருந்தது. அச்சாதனங்களுள் வானொலி அன்று அதி முக்கியமானதொரு இடத்தினை வகித்தது. (இன்றும் அவ்வாறுதான்!)
1925இலே 176 வானொலிப் பெட்டிகளே பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால், நாற்பதுகளின் ஆரம்பத்தில் 10000 எல்லையை அடைந்தது. ஐம்பதுகளில் இலட்ச எண்ணிக்கை இலக்கினையும் தாண்டியது. பதிவு செய்யப்படாத வானொலிப் பெட்டிகளையும் கணக்கிலெடுத்துக் கொண்டால் வானொலி மக்களிடையே முக்கியமான வெகுசன தொடர்பு சாதனமாக வளர்ந்து கொண்டிருந்தமை தெளிவாகப் புலனாகின்றது. (கடந்த சில ஆண்டுகளாக, வானொலிப் பெட்டியையோ, தொலைக்காட்சிப் பெட்டியையோ லைசன்னப் பெறாமலேயே பயன்படுத்தலாம்) இத்தகைய வானொலி அன்றைய கால கட்டத்தில் வெகுசன தொடர்பு சாதனங்களிலே மக்களின் மனோபாவத்திலே நன்மையாகவோ தீமையாகவோ தாக்கத்தினை ஏற்படுத்தும் ஆற்றலை வெகுவாகப் பெற்றிருந்தது என்பது என்னவோ உண்மைதான்.
pg|প্রতিষ্ঠ,

இலங்கை வானொலி விதேசிய நிலையில் இருந்து மீட்சி பெற்றபோது சுதேசிய சிந்தனை வழியே இயங்கத் தொடங்கிய போது தேசிய அபிவிருத்தியும், பண்பாட்டு பேணலும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவையாகக் காணப்பட்டன.
காலனித்துவ பொருளாதார நிலையில் ஒழுகிவந்த மனோபாவத்தினை மாற்றியமைக்கும் போது அரசுகள் எதிர்நோக்கிய பிரச்சினைகளை, எடுத்து ரைக்கும் சிறந்த சாதனமாக அன்றுமுதல் வானொலி இயங்கிக் கொண்டு வந்துள்ளது. பரிய அபிவிருத்தி வேலைகளைப் பற்றி மக்களிடையே வானொலி போதிய அறிவினை உருவாக்கத் தன்னாலான முயற்சிகளை மேற்கொண் டுள்ளமை தெளிவாக நாம் கண்டுகொண்ட உண்மைகளாகும். இத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் பெறக்கூடிய பலாபலன்களை மக்களுக்கு உணர்த்துவதிலேயே அது முக்கிய கவனஞ் செலுத்தியது.
தேசிய அபிவிருத்தியிலே முக்கிய இடத்தினை வகித்த மற்றொரு அம்சம் கல்வி அல்லது அறிவு விருத்தியாகும். பொதுவான அறிவினை விருத்தி செய்யும் கல்வி முயற்சிகளையும் மாணவர்க்கான துணையாக அமையும் கல்வி நிகழ்ச்சிகளையும் நாம் கருத்திலெடுக்க வேண்டியது அவசியமாகும். சுதேசிய விழிப்பின்போது பொதுமக்களின் அறிவுத்திறனை வளர்க்கும் முயற்சியில் வானொலி கவனம் செலுத்தி பொதுவாக கல்வியறி ஆட்டும் நிகழ்ச்சிகள் பலவற்றை வழங்கத் தவறவில்லை. -
ஆயினும், அதனிலும் மேலான சேவையொன்றும் வானொலி செய்ய வேண்டியிருந்தது. கிராம மட்டங்களிலே அறிவியல் கல்வி பரவுவதற்கு பல தடைகள் ஆரம்பத்திலிருந்தே காணப்பட்டு வந்துள்ளன. ஆசிரியர்களின் பற்றாக்குறை, பரிசோதனை நிலையங்கள், அவற்றிற்கு வேண்டிய சாதனங்கள் முதலியன இவற்றில் அடங்குகின்றன. இத்தடைகளை நீக்குவதற்கு வானொலி சிறந்ததொரு வரப்பிரசாதகமாக அன்று உணரப்பட்டது. வானொலியின் கரங்கள் மிக நீண்டு தொலைவில் இருக்கும் எல்லைப் புறங்களையும் தழுவக் கூடிய னவாதலால் அன்று வானொலி மூலம் அறிவியல் கல்வி வழங்க முடியும் என்பது தெளிவாயிற்று.
æË.

Page 7
சுதேசிய கட்டத்தினை வானொலி அடைந்தபோது இலங்கையின் பண்பாட்டு விழுமியங்களைச் சீர்கேட்டிலிருந்து காப்பாற்றவேண்டிய முக்கிய பிரச்சினையும் முன்னின்றது. விதேசிய மயக்கத்திலே தம் பாரம்பரியங்களை மறந்து, அவற்றின் சிறப்பினை உணராத சந்ததி உருவாகிக் கொண்டிருந்த போது அம் மயக்கத்தினைத் தெளிவித்துப் பண்பாட்டுச் செல்வங்களை அவற்றிற்குரிய பெருமையோடு எடுத்துக்காட்ட வேண்டிய கட்டாயமான சூழல் அன்று நிலவியது.
மேலும் இலக்கியம், இசை, நடனம், நாடகம், நுண்கலைகள் போன்ற சிறந்த பண்பாட்டு விழுமியங்களைப் போற்றிப் பேணவேண்டுமென்பதை உணர்த்த வானொலி முன்னின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நோக்கினைச் செயற்படுத்த முற்பட்ட ஆரம்பகட்டத்தில் இலங்கை வானொலி கிராமிய செல்வங்களை - நாட்டார் கலைப் பொக்கிஷங்களைப் போற்றிப் பேன முற்பட்டதைப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். அன்று வானொலி காட்டிய அக்கறை அறிஞரையும் ஆர்வலரையும் பாரம்பரிய கலைகளைத் தேட வைத்தமை குறிப்பிடத்தக்கது.
கிராமிய விழுமியங்களுக்கு மட்டுமன்றி, நாடகக் கலைக்கும் இசைக் கும் இலங்கை வானொலி சுதந்திர மண்ணிலே உயிர்ப்பளிக்கும் முயற்சிகளிலே அன்றுமுதல் ஈடுபட்டு வந்துள்ளது. நாட்டுக் கூத்துக்களும் நவீன நாடக உத்திகளையுமுடைய நாடகங்களும் பொழுதுபோக்காக மட்டுமன்றி, சிறந்த படைப்புக்களாக நின்று நிலவ இலங்கை வானொலி எடுத்த முயற்சிகள் இன்று ஞாபகப்படுத்த வேண்டியவையே.
பாரம்பரிய கலை வடிவங்களை வியாபார நோக்குடன் மாற்றியமைக்கும் போது அவற்றின் சிதைவுக்கு நாம் வித்திடுகின்றோம் என்பதை மறக்கக்கூடாது. நவீனத்துவம் என்ற பெயராலும் கலை வடிவங்களை - சிறப்பாக நாடகமும் இசையும் மிகுந்த பாதிப்பினை அடைந்துள்ளன. இலங்கை வானொலிக்கு இன்றயை கட்டத்திலேயும் சிறந்த பணியினைத் தொடர்ந்து ஆற்றவேண்டிய சூழலே நிலவுகின்றமை இத்தால் புலனாகின்றது.
ஒலிபரப்பினை வளர்முக நாடுகள் பல்வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தி வந்துள்ளன. சிற்சில நாடுகளிலே நல்ல நல்ல நோக்கங்களுக்கும்
10||8|fig
மார்கழி 2008

சிற்சில நாடுகளிலே சிறப்பற்ற நோக்கங்களுக்கும் அவை துணைபோகின்றன. இலங்கையில் சில இலட்சியங்களை முன்கொண்டு, அவற்றினைச் செயற்படுத்த ஒலிபரப்புப் பயன்படுகின்றது. பொதுமக்களின் தாக்கத்தினையும் திறத்தினையும் ஒட்டியே ஒலிபரப்பு சிறப்படைய முடியும் என்பதை நிதர்சனமாக உணர முடி யும் அன்றைய வானொலி சாதித்தவற்றை இன்றைய கட்டத்தில் தனித்தனியாக மதிப்பிடல் அவசியமாகும். இது ஒரு தர்மீக கடமையுமாகும். அத்துடன் இலங்கையில் ஒலிபரப்பச் சேவை 1925 டிசம்பர் 16 இல் ஆரம் பித்து இம் மாதம் 83 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள இன்றைய வேளையிலே விசேடமாக இலங்கை வானொலி தமிழ்பேச ஆரம்பித்த வரலாறு மிக முக்கியமானதாகும்.ா
பாதை நீளத்திற்கும் பள்ளம், படுகுழிகள், பெய்த மழைநீரெல்லாம் "பெரிய குளம் தாண்டதுபோல் தெருவையே காணவில்லை.
குத்தமதிப்புபெடுத்து பாதையின் ஓரமாக வேட்டியைத் தாக்கிப் பிடித்தபடி பிள்ளையார் கோவிலுக்கு தீர்த்தமாடப் போகின்றேன்.
எங்கிருந்தோ வந்த"லொறி
எண்மேனியெல்லாம் வெள்ளநீரை அள்ளி இறைத்து .தீர்த்தமாடிச் செல்கிறது ۔۔۔۔۔۔۔۔یہ === č56)|(óbT திரும்புகிறேன் வீட்டை நோக்கி செ.குணரத்தினம் அமுது சாப்பிட
அன்பான வேண்டுகோள்
சந்தாதாரர்கள் தங்கள் 2009ம் ஆண்டுக்குரிய சந்தாவைச் செலுத்திப் புதுப்பிப்பதுடன் தங்களுக்குத் தெரிந்த இலக்கிய ஆர்வலர் களில் குறைந்தபட்சம் ஒருவரையாவது சந்தாதாரராகச் சேர்த்து உதவுங்கள். அது "செங்கதிர் இன் வரவுக்கும், வளர்ச்சிக்கும் உரமாக அமையும். 2009ம் ஆண்டுக்குரிய ஆண்டுச்சந்தா ரூ.750/- மட்டுமே.

Page 8
மட்டக்களப்பு பரதகலாலயா வழங்கிய செல்வி.தர்மி உதயகுமார் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் 01.11.2008 அன்று சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு, இராஜதுரை அரங்கில் நடைபெற்றது.
‘பரதகலாலயா” (இல10 திசவீரசிங்கம் சதுக்கம், எல்லை வீதி மட்டக்களப்பு
3 1982ம் ஆண்டில் 05 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட மட்டக்களப்பு
பரதகலாலயா நிறுவனம் நாட்டியக்கலா تخت قلقات மணி, பரதகுடாமணி திருமதி சுபித்ரா 4 கிருபாகரன் அவர்களின் வழி நடாத்தலின் A. Yä. கீழ் இயங்கி இவ்வருடம் 02:05,2008, 03.05.2008 ஆகிய தினங்களில் தனது வெள்ளிவிழாவை RT) நிருத்தலாவண்யா' எனும் நிகழ்ச்சி ဖာe:#)နှဲ`= 空。 வெகு விமரிசையாக கொண்டாடிய பெருமை " மிக்கது. அதனை யொட்டி ‘கலாலயசாகரம்’ எனும் சிறப்பு மலரையும் வெளியிட்டது.
இதன் நிறுவனரும் இயக்குனருமான திருமதி.சுபித்திரா கிருபாகரன் அவர்கள் தனது இள வயதிலிருந்தே நடனக்கலைக் குத் தன்னை அர்ப்பணித்தவர் தனது ஆரம் பக் குருவான நடன கலாமணி ம.கைலாயப் பிள்ளை அவர்களிடமும்; தொடர்ந்து யாழ்ப் பாணம் கீதாஞ்சலி ஏமுநல்லையா; இந்தியா
 
 
 
 
 

பரத சூடாமணி இயக்குனர் அடையார் கேலக்ஸ்மணன் அவர் களிடமும் நடனக்கலை பயின்று பரதநாட்டியத்தில் "டிப்ளோமா" பட்டமும் நட்டுவாங்கப் பயிற்சியும் பெற்றதுடன் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் கலாபூஷணம் மகாவித்துவான் பிரம்ம ரீ மாதந.வீரமணி ஐயர் அவர்களிடமும் நடனம் பயின்றவர். நடனம் பயின்ற காலத்திலேயே பல போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு இடது கை
நட்டுவனாவார். தற்போது மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் நடன ஆசிரியையாகப் பணிபுரியும் இவர் இலங்கையின் வடக்கில் பிறந்து வடக்கிற்கும் கிழக்கிற்கும் கலைப்பாலம் அமைத்தவர்.
தற்போது 300க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டியங் கும் "பரதகலாலயா” பல நடனக்கலைஞர்களையும், நடன ஆசிரியர்களையும் உருவாக்கிய பெருமையுடைத்து பரத கலாலயாவின் மாணவிகள் சிலர் கனடா, லண்டன், ஜேர்மனி, சுவிஸ் போன்ற வெளிநாடுகளில் நடனக்கலை வகுப்புகளை நடாத்துகின்றனர்.
வருடாவருடம் ‘பரதகலாலயா” மாணவர்கள் நடன நிகழ்ச்சிக ளைச் சிறப்புற நடாத்திவருகின்றனர். தமிழ்மொழித் தினப் போட்டிகள் மற்றும் வடஇலங்கை சங்கீதசபைப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர். மேலும், முப்பதுக் கும் மேற்பட்ட பொது நிகழ்ச்சிகளிலும் அளிக்கை செய்துள்
ளனர.
திருமதி.சுபித்திரா கிருபாகரன் அவர்களிடம் பயின்று அரங்கேற்றம் கண்ட முக்கிய மாணவிகள் 1. செல்விசிவலோகநாதன் வெண்ணிலா 14.03.1998 2. செல்விநிவேதனா இன்பதுரை 18.01.2003 I ) 3. செல்விதர்மி உதயகுமார் 01.11.2008 ஆய
(3)

Page 9
9 பரதகலாலயாவின் இயக்குனர் திருமதிசுபித்திரா கிருபாகரன்
அவர்கள் பெற்ற பட்டங்களும், விருதுகளும் வருமாறு
நாட்டியக்கலாமணி’ - பரதகலாலயாவின் ஆண்டு விழாவில் (2000) அமரர் திரு.N.ராஜூ அவர்களால் வழங்கப்பட்டது.
‘ஜெயாஞ்சலி நாட்டிய கலா விருது 2004 - ஜெயாஞ்சலி நாட்டியாலயா நடனப்பள்ளியினால் வருடந்தோறும் ஒரு பிரதேசத்தில் ஒரு கலைஞரைத் தேர்ந்தெடுத்துக் கெளர விக்கும் நிகழ்வில் 08:08:2004 அன்று வழங்கப்பட்டது.
நிருத்தியவாணி'-01.11.2008 அன்று நடைபெற்ற செல்விதர்மி உதயகுமார் அவர்களின் அரங்கேற்ற விழாவிலே நாட்டிய வேள்’ கலாபூஷணக் கலைஞர் திரு.வேல் ஆனந்தன் (இளைப்பாறிய அழகியற்கல்வி உதவிப்பணிப்பாளர், வடக்கு கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சு, திருகோணமலை) அவர்களால் வழங்கப்பட்டது.
திருமதிசுபித்திரா கிருபாகரன் அவர்கள் ஆண் நடனக் கலை
ஞர்களையும் 'பரதகலாலயா” மூலம் மட்டக்களப்பில் உருவாக்கி உள்ளார்.
1)
2)
3)
திருமுரளிதரன் சதீஸ்குமார் - மட்டக்களப்பு கல்லடி விபுலா னந்தா வித்தியாலயத்தில் நடன ஆசிரியர். திருதியாகராஜா தயாபரன் - மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நடன ஆசிரியர். திரு.சிவராமமூர்த்தி விக்னகுருபரன் - பட்டிருப்பு மகாவித்தியாலயத்தில் நடன ஆசிரியர்.
مقاطعة سميت T
國原
மார்கழி 2008
 

 ே1982ம் ஆண்டு திருமதி மேபிள் இராஜேந்திரம் அவர்களின் தூண்டுதலின் பேரில் அவரது மகனையே முதல் மாணவனாகக் கொண்டு தனது சொந்த வீட்டிலேயே 'பரதகலாலயா” என்ற நடனப்பள்ளியை உருவாக்கி இவ்வருடம் வெள்ளி விழாக் கொண்டாடிய அதன் நிறுவனர், இயக்குனர் நாட்டியக் கலாமணி, பரதசூடாமணி நர்த்தன வித்தகி திருமதிசுபித்திரா கிருபாகரன் அவர்களையும், 01.11.2008 அன்று அரங்கேற்றம் கண்ட அவரது மாணவி செல்விதர்மி உதயகுமார் (கிழக்குப் பல்கலைக்கழக 2ம் வருட முகாமைத்துவ மாணவி) அவர்களையும் "செங்கதிர்" வாழ்த்தி மகிழ்கிறது.
s
"மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும்" LLOLLI (கலாபூஷணம் கமகேஸ்வரலிங்கம்
கட்டுரைகள்)
தொகுப்பு க.இரகுபரன்
(செயலாளர், பதிப்புக்குழு, கொழும்புத் தமிழ்ச்சங்கம்)
வெளியீடு : கொழும்புத் தமிழ்ச்சங்கம்
விலை : 300/-
மட்டக்களப்பு வாழ்வியல் பற்றி கலாபூஷணம் மகேஸ்வரலிங்கம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான "மட்டக்களப்பு வாழ்வும் வழிபாடும் நூல் வெளியீடு 22.11.2008 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் சபா.ஜெயராசா (தலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்) தலைமையில் Uநடைபெற்றது. آير
எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்களிடமிருந்து ஆக்
கங்கள் வரவேற்கப்படுகின்றன. அனுப்ப வேண்டிய முகவரி :
ஆசிரியர், "செங்கதிர்' இல:19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு
riTin fil շճյոք,

Page 10
"இஞ்ச.மழ தூறுது.
என்ன செய்விங்க. இந்தாங்க குட கம்மா போறிங்க. குடையெடுத்திட்டு
卤 டுத்தி கொண்டு பேங்க" என்று கூரிக்கொண்ே
போங்களன்.” வீட்டு வாசற்படி தாண்டி வெளிே நோக்கி
1ளியே புறப்பட்ட நாதனை நோக | மீதுள்ள கரிசனையால் குடையை
ால் கொடுக்காள் அவன் மனைவி குரல "*ே" " " | விரித்து நாதன் கையிலே கொடுத்தாள். நரமதா,
|குடையோடு வந்த நர்மதா கணவன்
"குடயக் காணவத்துப் போட்டு வந்து உன்னிட்ட ஏச்சு வாங்கிறதவிட மழமில நனைஞ்சி காச்சல் வந்து படுக் கிறது பரவாயில்லை' என்று பரிகாச
“மழ உரக்கும் போல கிடக்கு மாகச் சிரித்துக்கொண்டே குடையை மழயில நனைஞ்சி காச்சல் கீச்சல் வந்தா வாங்கிக் கொண்டான் அவன்.
6.
பார்கழி 270
"லேசான தூறல்தான். கெதியா வந்திருவன். குட தேவல்ல' நின்று பதில்
சொன்னான் நாதன்.
 

"நீங்களும் உங்கட பகிடியும்” என்ன? யார் எழுதியது? விலை என்ன? என்று மூக்கில் இலையான் மொய்த்தால் என்று ஒரு சுற்றுச் சுற்றி நோட்டம் முகத்தைத் திருப்புகிற மாதிரி முகத்தைவிட்டான். புதிதாக வெளிவந்திருக்கிற ஒரு வெட்டு வெட்டிச் செல்லமாகக் 'இருக்கிறம் சஞ்சிகையின் முதலாவது கோபித்துக் கொண்டே நாதனின் பதிஇதழின் அட்டையில் "சிவாஜி ரஜனி லுக்குக் காத்திராமல் உள்ளே Gudi கவர்ச்சியாகக் காட்சி தந்தார். கையில் மறைந்தாள் நர்மதா, எடுத்துப் பக்கங்களைப் புரட்டியவன் சஞ்சிகையை மூடி விலையைப் ش3 | "பார்த்தான். அறிமுக விலை 40/- என வீதியை நோக்கி நடையைக் கட்டினான். |இருந்தது. வாங்கிக் கொண்டு அடுத்து "குட கவனம்' உள்ளேயிருந்து |மனைவி சொல்லிவிட்ட மரக்கறி வகை |களை வாங்குவோம் என்றெண்ணிய வண் காலிவீதியைக் குறுக்காகக் கடந்து மறுகரையில் வரிசையாக வைக் கப்பட்டிருந்த நடைபாதை மரக்கறிக் காலி வீதியை அடைந்த நாதன், கடைகளை அணுகினான். தான் வழக்கமாக புத்தகங்கள், சஞ்சிகை
நாதன் வெள்ளவத்தை கா
நாதனின் காதில் தெளிவாக விழுந்தது. வழமையா" "ரிவுறுத்தல்தான்.
திடீரென்று கண்ணில் யாரோ ஃபிபா Trını çıxır.Tri நடந்தான். தூறல் மழை ஓய்ந்திருந்தது. ' குத்தியது : குடையை மடித்து புத்தகசாலையின் குத்து *---
க்கிக் கொண் பிப் பார்க்கான். நுழைவாசலுக்குச் சற்று வெளியே அதற்| ಇಂದಿக புரததான கென வைக்கப்பட்டிருந்த 'ಹಾಗಾಗಿಲ್ಲ..ಹಾ!" ကြီး ని வானிக்குள் ஏற்கனவே ஏனையவர்களால் II. 乐 ே நத அழ அங்கு வைக்கப்பட்டிருந்த பல நிற : T To தனது தேய்ந்த குடைகளுடன் சேர்த்துத் ಕಣ್ರ :: ని டைய கறுத்தக் குடையையும் j၆၈aué|'''''''''; நறிக் கொண்டு T? குத்தாக நிறுத்திவிட்டு புத்தகசாலைக்குள் பார்த்து நி அங்கிள்" ே சொல்
ழைந்தான். " நுழைந்த லிக் கொண்டு நின்றிருந்தாள். கோபம் புத்தகங்கள் என்றால் நாதனுக்குக்கீச தனது குடையால் மெல்ல 9ഖg கொள்னை ஆசை. அங்கு அலுமாரித்டைய முதுகில் ஒரு தட்டுத்தட்டு தட்டுகளிலும் மேசைகளின் மீதும் அடுக்கி|வோமா என்றெண்ணியவன் பாரததான வைக்கப்பட்டிருந்த அத்தனை புத்தகங்க கையில் தனது ಅಣು-ಹಾಲಹ காண ளையும், சஞ்சிகைகளையும் தலைப்பு|வில்லை. சுதாகரித்துக் கொண்டு "பரவா
7. 蠶。
கள் வாங்கும் புத்தகசாலையை நோக்கி

Page 11
மில்ல, பக்கத்தில் வருபவர்களையும் பாத்து கேட்ட அந்த பெண்பிள்ளைக்குப் நட பிள்ள’ என்று பதில் சொல்லி விட்டு பதிலே சொல்லாமல் குளிசை வாங்கிய குத்து வாங்கிய நோவையும் பொருட் 'பாமசி'யை நாடி வேகமாக நடந்தான். படுத்தாமல் ஓட்டமும் நடையுமாகச் சென் GG a நான் தான் சற்று ಆ: சென்று வந்த ருப்போம் ::::::::: புததகசாலையை நாக்கி. தக் குடையையும் காணவில்லையே’ ‘அப்பாடா. நல்லவேளை. நாத என்ற ‘பாமசி’க்காரனின் பதிலைத்தான் னின் மீள் வரவைக் கண்டு 'பிளாஸ்டிக்’ இறுதியாகப் பெற்றுக் கொண்ட நாதன் வாளிக்குள் இருந்த குடை அவனைப் இராமாயணத்திலே இராமனுடனான பர்த்துச் சிரித்தது. ஒடிச் சென்று அதனை சண்டைக் களத்திலே எல்லாவற்றை எடுத்து உச்சி வே ೧°C யும் பறிகொடுத்து நிராயுதபாணியாக தான் குத்துப்பட்ட கண்ணைத் தடவிப் ! வெறுங்கையேடு இலங்கை மீண்ட பார்த்தான். இலேசான நோதான். ஒன்றும் இராவணனைப் போல முகததைத நடக்கவில்லை. கண்ணை இமை காத் ూర్లో கொண்டு பமசி 60)
d டடு (olவளயே வநத நாதன நடை துக் கொண்டது. பாதையிலே நின்று யோசித்தான். குடை மரக்கறிகளை வாங்கிக் கொண்டு | யில்லாமல் வீட்டுக்குப் போனால் என்ன வீட்டை நோக்கித் திரும்பிய நாதனுக்கு ! நடக்கும்? மனைவி சொல்லிவிட்ட மருந்துக் குளிசை ஞாபகம் வர பக்கத்திலிருந்த ‘பாமசி’க்குள் பிரவேசித்தான். குளிசை களை வாங்கிக் கொண்டு மரக்கறிப் பைக ளுடன் இனி வீடு செல்லலாம் என்று உருத்திரா மாவத்தையால் திரும்பினான். திரும்பும் சந்தியில் சற்று முன்னர் கண் | ணில் குடையால கு த்திய அதே பெண் நர்மதா, இன்று ஞாயிற்றுக்கிழமை சந் பிள்ளை எதிரே வந்து “எப்படி அங்கிள் (6 க்க வேண் ளில் கண்” என்றாள் இலேசாக சிரித்துக் தாசமாக இருக்க ഖങ്ങu நா ಗಖ கொண்டே. இப்போதாவது இவளுக்குக் gಡಾ. ": குடையால் ஓர் அடி போடவேண்டும் அவளிடம வாங்க்க கட்டிககொளள
என்று எண்ணிய நாதன் கையைப்
முந்திய நாட்களில் தான் இவ் | வாறு பஸ்ஸில், ஒட்டோவில், கடை களில் தொலைத்த குடைகளின் விலை கள், நிறங்கள், வாங்கிய வரலாறு அல் லது அன்பளிப்பாகக் கிடைத்த சந்தர்ப் பம் எல்லாம் சொல்லி ஒரு குடைப் புராணமே படிப்பாளே. மனைவி
| வேண்டி வருமே.
பார்த்தான். மீண்டும் குடையைக் காண யோசனையொன்று பொறி தட்
வில்லை. “எப்படி அங்கிள் கண் என்று டிற்று “பொக்கற்றுக்குள்’ இருந்த
Lorral 2OO6

மீதிக் காசை எண்ணிப் பார்த்தான் எழு என்று மரக்கறிப் பையை நீட்ட அவள் பது ரூபாய்தான் தேறியது. சிறிது நேரம் அதனை வாங்கிக் கொண்டாள். சிந்தித்தான். பின் திரும்பி ஐந்தாறு கடை களைத் தாண்டி ‘பென்சி ஹவுஸ்’ என்று பெயர்ப்பலகை மாட்டியிருந்த கடைக்குள் கார்ந்து வாங்கிவந்த இருக்கிறம் சஞ்
ಹಾಲ புரட்டத் தொடங்கினான்.
நாதன் நாற்காலியிலே உட்
எட்டிப் பார்த்தான். நல்ல வேளை அங்கு நின்றிருந்த கடைச் சொந்தக்காரன் காதர் முகைதீன் நாதனைக் கண்டதும் “வாங்க நாதன் சேர். சொகமா இருக்கிங்களா.
“குடய மறக்காமக் கொண்டு வந்தீங்களா? எங்க குட” என்று குசினி
என்ன சேர் வேணும்” என்று வாசலுக்கு அலுவல்களுக்கிடையே குரல கொடுத்
O ாள் நர்மதா, வந்து வரவேற்றான். நாதனுக்கு நன்கு" " தெரிந்தவன்தான் காதர் முகைதீன். “ஓம் இந்தா மேசையில இருக்கு” என்று உரத்துச் சொன்ன காசு கொண்டுவர மறந்திட்டன். குறையக் நாதன இருக்கிறம் சஞ்சிகைக்குள்
d a 99 a மூழ்கிப் போனான்.
காசுதான் இருக்கு. அதுதான்.” என்று நாதன் இழுக்க, அருகில் வந்த நர்மதா நாத னைத் தட்டி ‘இதென்ன புதுக்குட” என்று சொல்ல நாதன் அப்போதுதான் அதனை அவதானிப்பது போல பாசாங் |அத 35 ங்கு |பண்ணிவிட்டு “ஆரோ ஒருவன் குடய வைத்த இடத்தில் மாத்திக் கொண்டு போய்விட்டான். நல்லது தானே, இது
“குடயொன்று வாங்க வேணும்.
‘இதென்ன சேர். நீங்க என்ன தெரியாத ஆளா. வேண்டிய சாமான்களை எடுத்திட்டுப் போங்க. காசப் பொறவு பாத் துக்கலாம்” என்றான் கடைக்காரன்.
பிறகென்ன, நாதனின் யோசனை நிறைவேறியது. புதிய கறுத்தக் குடைநல்ல புதுக்குட" என்றான். யொன்றுடன் வேறு எங்காவது சென்றால் “இதற்கு முதல் எத்தின குட அதையும் தொலைத்து விடுவோமோ |யத்தான் தொலைச்ச நீங்கள். அதுக என்ற பயத்தில் நேரே வில்லிலிருந்து கெல்லாம் சேத்து ஆண்டவனாப் பாத்து புறப்பட்ட அம்பு போல் விரைந்தான் பழைய குடய மாத்திப் புதுக்குட தந்தி வீட்டை நோக்கி. ருக்கார்’ என்று கூற வெற்றிக்களிப்பில்
நர்மதா குசினிக்குள் அலுவலாக உள்ளுக்குள் சிரித்துக் கொண்ட நாதன் இருந்தாள். நாதன் வீட்டுக்குள் சென்று 'அதக் கவனமா எடுத்து வை’ என் புதிதாக வாங்கிய குடையை மேசையில் |றான் மனைவியிடம்.
வைத்துவிட்டு “நர்மதா இந்தா மரக்கறி’ అ ఆఆ ఆ ఆe
மார்கழி 2008

Page 12
பாடும்மீன் சுழறிகந்தராசா சுனாமியே வா! அவுஸ்திரேலியா
மீண்டும் ஒருமுறை வா! முன்னர் சென்ற எந்த மூலைக்கும் போகாதே! இன்னும் விழுந்தவர்கள் எழமாட்டா திருக்கும் அந்த மண்ணுக்குச் செல்லாதே, வா இங்கே, கெதியாய் வா! புலம்பெயர்ந்த தமிழர்களில் போக்கிரிகள் யாரென்று இனங்காட்டி உன்னோடு இழுத்துச் செல்! இங்கே வா!
சுனாமியே இனியும் பொறுக்க முடியவில்லை! சுறுக்காய் ஒருமுறை நீ மீண்டும் வந்தவிடு: கணக்கு முடிக்கும் கடமை உனக்கு இங்கே கனக்கவுண்டு ஒருமுறை வா!
எந்தத் தவறையும் இழைத்தோரை விட்டிடலாம். வந்த நிவாரணத்தை வழியிலே தடுத்தவரைக் கொன்று சிதைத்தக் குழியிலே புதைத்தவிடு! வாரிச்சுருட்டி வருமானம் எடுத்தவரை வாரி நீ இழுத்து உன் வயிற்றில் நெரித்துவிடு வாரிசுகளுக்குப் பகிர்ந்தவரை நேரிரண்டாய் வகிர்ந்தவிடு!
மார்கழி 2008
 

இந்தவகை செய்த எந்த மனிதருக்கும் இரங்காதே! இழுத்துச் சென்று காறி உமிழ்ந்தடலை கரையில் எறிந்தவிடு: கூவி அழைத்து மக்களிடம் நன்கொடைசேர்த்தவிட்டுக் கொமிசன் பெற்றவரைத் தாவிப்பிடித்தத் தலையைத்திருகி
தரையில் வீசிவிடு
கழகங்கள் சேர்த்தபணக் காசோலையைக்
கச்சிதமாய் தமது வங்கிக் கணக்கில் போட்டு ஊருக்குப் பணம் அனுப்பி பலருக்கு உதவியதாய்ப் போலிக்கணக்கெழுதி ‘போட்டோ’ பிரதிகாட்டுகின்ற ஊழல் பெருச்சாளிகளின் உயிர் குடிக்க ஒருமுறைவா! கொல்லப்பட்டாரெங்கள் குடும்பத்தவர் என்று வெள்ளைக்காரனிடம் இலவச விமானச் சீட்டினை பல்லைக்காட்டிப் பவ்வியமாய் இரந்த வாங்கி உல்லாசப்பயணம் செய்த உலுத்தர்களை கொல்லாமல் விட்டால் கொடுமை, வந்தவிடு: உன்னால் அகதியானோர்க்கு உதவவென்று உலகமெல்லாம்
தம்மால் ஆனவற்றை மக்கள் தானமாய்த் தந்தார்கள்.
சேர்ந்த பணத்தையெல்லாம் அந்த மக்களுக்குச் சேராமல் தடுத்தோரை
சாட்சியில்லை யாரும் என்றெண்ணித்
தமக்காய் எடுத்தோரை நாராய்க் கிழித்த நரம்பும் எலும்புகளும் கூறுபலவாகிடவே கொண்டுபோக ஒருமுறை வா! ஊரும் உலகும் தீயோரை உணரட்டும்! உண்பழியும் சிறிதே அதனால் தீரட்டும்! ஓங்கி எழுந்த ஒருமுறை வா!
இதிேர்
Lomas 2008

Page 13
05.12.1995 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 線 கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்த புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப் படை முகாம் தாக்குதல் சம்பவத்தில் படை யினருக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் நடைபெற்ற மோதலில் துரதிஸ்டவசமாக அகப்பட்டு அகால மரணமடைந்த அப்பாவி
oao.4949 - oslaugss 灣黎。樂隊 S• V
பயணிகளுள் கவிஞர் வீ. ஆனந்தனும் (வேலுப்பிள்ளை ஆனந்த குமாரசாமி) ஒருவன். இச்சம்பவத்தில் காயமுற்ற பயணிகளைத் தாமதமின்றி வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றிருந்தால் ஆனந்தன் உயிர்பிழைத்திருக்கக் கூடும். ஏனெனில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு சம்பவம் நடந்து மிகவும் தாமதித்தே கொண்டுவரப்பட்ட சடலங்களில் சற்று முன்னதாகவே ஆனந்தன் இறந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறின. தாக்குதல் காயத்தினால் குருதி வழிந்தோட குற்றுயிராய்க்கிடந்து பலமணி நேரம் அவன் ஓடயிருக்காய்ப் போராடியிருக்கிறான். ஆம் ஆனந்தனை அறிந்தவர்களுக்குத் தெரியும், அவன் ஒரு போராட்ட வீரன், புரட்சியாளன், சமுக அநீதிகளுக்கு எதிராகப் போராடும் உணர்வு படைத்தவன். தன் மனதில் வரித்துக்கொண்ட கொள்கைகளுக்காக அவை கலை, இலக்கியம் சார்ந்தவையாயினும் சரி அல்லது அரசியல் ஆயினும் சரி எந்த சந்தர்ப்பத்திலும் பணம், பதவி, புகழ் என்பவற்றிற்காகச் சமரசம் செய்துகொள்ள மறுத்து
நின்று போராடியவன். அவனது மதம் மனிதாபிமானமே. அவனது கரங்க ளில் ஓர் அப்பாவிப் பயணிச் சிறுமியை நெஞ்சோடு முடி அணைத்தபடிதான் இறந்து கிடந்தான் எனப் பார்த்தவர்கள் சொன்னார்கள். மரணிக்கும் தறுவாயிலும் கூட அவன் ஒரு சிறுமியின் உயிரைப் பாதுகாக்க முனைந்த மனித நேயன். அதனையும் அவனையும் நினைக்கும் போது கண்கள் பனிக்கின்றன.
ஆனந்தனின் பிறப்பிடம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந் துறை. தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து வாழும் கிராமம். அம்மாவின்
&2OO חtp
 
 
 

பெயர் தம்பாப்பிள்ளை தங்கரட்ணம் (மாரிமுத்து), அப்பாவின் பெயர் வேலுப்பிள்ளை. சம்மாந்துறை ஆண்கள் பாடசாலை (தற்போது சம் மாந்துறை தேசியக் கல்லூரி) யில் பள்ளிப்படிப்பு, தபால் திணைக்களத்தில் சம்மாந்துறை தபாலகத்தில் ஒரு தபாற்காரனகச் சேர்ந்து இறக்கும் போது தபால் தரம் பிரிக்கும் அதிகாரியாக தொழில் உயர்வு பெற்றிருந்த ஆனந் தன் தனக்குக் கிடைக்கவிருந்த ஆசிரிய தொழிலை அரசியல்வாதிகளுக்கு அடிவருடியாக வாழ விரும்பாததால் இழந்தவன். ஆசிரியராக வந்திருந் தால் பின்னாளில் கலாநிதிப்பட்டம் பெற்றிருக்கக் கூடிய திறமையும், அறிவும் ஆனந்தனுக்கு இருந்தது. மட்டக்களப்பு முகத்துவார வீதியில் வத்சலா (பேராசிரியர் சி. மெளனகுரு அவர்களின் மருமகள்) வை காதல் திருமணம் செய்து கொண்டிருந்தான். குழந்தைகள் இல்லை.
ஆனந்தன் ஒரு கவிஞன், சிறந்த விமர்சகன், மட்டக்களப்பு வாசகர் வட்டத்தின் பிரதான பங்காளன். கல்முனை வியூகம் அமைப்பின் உறுப்பினன். மலையாள இலக்கியங்களை தமிழுக்கு மொழிபெயர்த்த வன். மட்டக்களப்பு கலை, இலக்கியக் களத்தில் ஆனந்தன் பதித்த தடங்கள் கனதியானவை. ஆனந்தனின் ஆளுமை அவனது சிறந்த வாசிப்பே. படித்துப் பட்டம் பெற்ற கலாநிதிகள், பேராசிரியர்களுக்குக் கூடத் தெரி யாத கலை, இலக்கிய, அரசியல் தகவல்களை அவன் அதிகம் அறிந்து வைத்திருந்தான். கலை இலக்கியப் படைப்புக்களை அவன் விமர்சிக்கும் பாங்கே தனியானது. போலிகளைத் தோலுரித்துக் காட்டும் துணிச்சல் மிக்கவன். ‘நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” எனக் கூறத் தயங்காதவன். அவன் அதிகம் எழுதிக் குவித்தவன் அல்ல; ஆனால் அதிகம் எழுதும் அளவுக்கு அறிவும், ஆற்றலும், ஆளுமையும் கொண்டிருந் தவன். அவன் பங்குபற்றிய (குறிப்பாக கல்முனை, மட்டக்களப்பு பிரதே சங்களில்) இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள், கவியரங்குகள் அனேகம். அவை எல்லாவற்றிலும் ஆனந்தன் தன் தனித்துவ முத்திரை பதித்தவன். நாடறிந்த எழுத்தாளனாக, கலைஞனாக அவன் தன் வாழ்நாளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லையாயினும் கூட நாடு அறியப்பட வேண்டிய ஆளுமை மிக்கவனாகத் திகழ்ந்தான். மாணவப் பருவத்திலேயே இடது சாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு இறக்கும் வரை எந்தக் குழுவாதங்களுக்குள்ளும் தன்னைக் குறுக்கிக் கொள் ளமல் பாட்டாளிவர்க்கத்தின் உண்மையான தோழனாக வாழ்ந்தவன். அவனது பணிகளின் அறுவடையில் ஒன்றுதான் மட்டக்களப்பில் இன்று இயங்கும் தரிசனம்’ விழிப்புலனற்றோர் பாடசாலை.
Lomassió 2OO8

Page 14
இன்று இலங்கையில் இயங்கிவரும் இடதுசாரிக் கட்சிகளிலொன் றான புதிய ஜனநாயகக் கட்சியின் 4வது தேசிய மாநாடு 2002 நவம்பர் 8ம், 9ம் திகதிகளில் நடந்தேறியபோது நினைவுகூரப்பட்ட மக்கள் கலை இலக்கியத் தளத்தில் பணியாற்றி மறைந்த தோழர்களில் ஆனந்தனும் ஒருவன்.
கல்முனைப் பிரதேசத்தில் மறைந்த கவிஞர் நீலாவணன் அவர்கள் ஒரு கவிஞர் பட்டாளத்தையே உருவாக்கியிருந்தார். இப்பாசறையில் பயிற்சி பெற்றவர்களுள் ஆனந்தனும் அடக்கம்.
*அதர்மம் நாட்டில்
அதிகரிக்கும் போது கண்ணன் மட்டுமல்ல கவிஞனும் பிறப்பான்”
என்ற தனது கவிதை வரிகளால் சமுதாயத்தில் கவிஞனின் முக்கியத்து வத்தையிட்டு முழங்கியவன் ஆனந்தன்.
“என்னை இன்னொருவர் காணும்போது
அன்னவர் முகம் மலரவும் அதனறிகுறியாய் புன்னகை அவர் முகத்தில் பூக்கவும் வேண்டும். இதுவே நான் எருத்த பிறவிப்பயன்”
என்ற அவனது கவிதை வரிகள் அவனது மனித நேயக் கொள்கையினை வெளிப்படுத்துகிறது.
“560š60örö8u! 56u!
கற்பின் பேரரசே! தீத்திறத்தார்தம்மைத் தீயிட்டளித்தவளே! கொங்கைத் தீயால் கொடு நகர் எரித்தாய்! மீத முலையொன்று உன்னிடத்தே மிச்சமிருக்குதம்மா! அதையும் பிச்செறி இந்த பிணந்தின்னும் நாடெரிய என்ற ஆனந்தனின் கவிதை கொடுமைகளைக் கண்டு கொதித்து எழும் தர்மாவேசம் மிக்கவனாக அவனை அறிமுகம் செய்கின்றது.
-செங்கதிரோன்.
urotrexé 2008

நோர்தின்
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை யைக்கொளுத்துவோம்” என்று பாடினான் பாரதி.
“மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க’ என்றும் கூறினான் பாரதி
“பெண்ணுக்கு விருதலையென்றிங்கோர் நீதி பிறப்பித்தேன், அதற்குரிய பெற்றி கேளிர் மண்ணுக்குள் ளெவ்வுயிருந் தெய்வ மென்றால், மனையாளுந் தெய்வமன்றோ? மதிகெட் டீரே! விண்ணுக்குப் பறப்பதுபோற் கதைகள் சொல்வீர், விருதலையென் பீர்கருணை வெள்ள மென்பீர், பெண்ணுக்கு விருதலைநீ ரில்லை யென்றால் பின்னிந்த வுலகினிலே வாழ்க்கையில்லை” - இது பென் விடுதலை பற்றிப் பாரதி உரைத்தது.
“தையலை உயர்வு செய்” பாரதியின் புதிய ஆத்திசூடி.
இவ்வாறு பெண் விடுதலை, பெண்ணின் உயர்வு, பெண்ணின் அடிமை வாழ்வு, பெண்ணின் கல்வி நிலை என பல கவிதைகளைப் பாடியவன் பாரதி. பெண் அடிமைத்தனத்தை ஒழித்து, பெண் விடுதலையை உணர்த்தி முதன் முதலில் புரட்சிகரமாகக் கருத்துரைத்தவன் பாரதி. இருப்பினும் பெண் விடுதலை பற்றி, பெண்ணடிமைத்தன விடயம் பற்றி ஆன்கள் சிந்திப்பது பொருத்தமற்றது, பென்தான் சிந்திக்க வேண்டும், எழுத வேண்டும், பேசவேண்டும் என்று பெரும்பாலான பெண்ணியவாதிகள் சிந்திப்பதும், கருத்துரைப்பதும் எவ்வளவுக்குப் பொருத்தமானது என்பது சிந்தனைக்குரியது.
சிறுவர்க்கான இலக்கியங்களைச் சிறுவர்கள்தான் படைக்கவேண்டும் என்பது போல் தலித்துக்கான இலக்கியங்களை (தாழ்த்தப்பட்டோருக்கான
Uonfæló 2OOð

Page 15
இலக்கியங்கள்: தலித்திலக்கியங்கள் எனப்படும்) தலித்துகள் தான் எழுதவேண்டும் என்பது போல் பெண்தொடர்பான பிரச்சினைகள் சார்ந்த இலக்கியங்களை பெண்களே படைக்க வேண்டும் என்பது அண்மைக் காலத்தில் எழுந்துள்ள கோஷம். இந்தக்கோஷத்தை எடுத்துக்காட்டும் முகமாக பின்வரும் கவிதையைப் பாருங்கள்.
“ஆண்டாண்டு காலமாக அடைபட்டுக் கேள்வி கேட்காமல் சுமந்ததால் பெண்ணிற்கு தன் உலகம் மறந்து போய் அவளின் சிறைகள் பூந்தோட்டங்களாகவும் சுமைகளே சிறகுகளாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உண்மையை பெண்ணிற்குப் புரியவைக்க இன்னொரு பெண்தான் இன்றைய தேவை' என ஜி. விஜயபத்மா என்பவர் எழுதியுள்ளார். பெண் ஒருவரால்தான் பெண்ணுக்கு தன் மறந்துபோன உலகத்தை நினைவுக்கு கொண்டு வரமுடியும் என்பது பெண்களின் வாதம்.
தாயாக, தாரமாக, சகமனுஷியாக ஆண் பார்த்தபோதும், சமமாக
நடத்தியபோதும் அதனை பெண்கள் நம்புவதாயில்லை. இதைவிட சற்று மேலே சென்று ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய கவிதையைப் படியுங்கள்.
“பாவாடை நாடாவிலிருந்து
பயணித்து
மார்பை அடைந்தாலும்
எவராலும் தொடமுடிவதில்லை
உள் ததும்பும் மனசை
தூரம் அதிகம்
அவளின் மார்புக்கும் மனசுக்கும்
புணர்கையில் உணர்வதில்லை
நகக் கண்ணை குத்தும்
ஊசியின் கூர்மை என்றும்
எல்லாப் பெண்ணுக்குள்ளும்
புதைந்திருக்கிறது
வெளியில் கேட்காத
ரகசியக் கேவல்
ಕ್ಲಿಫ್ಟ್ಸ್

அமிலக் கொதிப்புக்குத் தெரியுமா?
முலையும் மீசையும் ஸ்நேகத்துக்குக் கிடையாதென ஸ்நேகம் மனசால் ஆனதென’
சிநேகிதம் அற்ற, மனசால் உணர்ந்துகொள்ள முடியாத, விரும் பாத ஆனாதிக்க மனப்பாங்கு ஆண் பெண் உறவை மென்மேலும் விரிசலடையச் செய்கிறது. இதற்கு பெரும்பாலான ஆண்களின் ஆனா திக்கச் சிந்தனையும் அதனாலான செயற்பாடுகளும் காரணமாகின்றன. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் முற்கூறில் சேர்.பொன் இராமநாதன் “பெண்களுக்கு வாக்குரிமை அவசியமற்றது” எனக் கருதியதுடன் "அது குடும்பத்த நல்லிணக்கத்தையும் அமைதியையும் குலைத்து விடும்’ எனவும் 'பெண்கள் சுதந்திரக் கருத்து உடையவர்களாக இருப்ப தற்கு இடம் கொடுத்தால் அவர்கள் தமது கணவர்களுடன் முரண்பட நேரிடும்” எனவும் “இது விரும்பத்தகாதது” எனவும் குறிப்பிட்டார். இவ்வாறான கருத்துக்கள் அக்காலத்தில் பெரும்பாலான ஆண்களால் ஆமோதிக்கப்பட்டதும் அக்கால ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் இக்கருத் தினை பிரதிபலிக்கும் வகையில் ஆக்கங்களைப் படைத்தது பெண்களை பாதித்ததும், பெண்கள் தொடர்பான ஆண்களின் மனப்பாங்கும் நிலைப் பாடும் இதுதான் எனப் பெண்களை எண்ணவைத்ததும் இன்றும் இந் நிலப்பு தொடர்வதும் வேதனைக்குரியது. இந்நிலை மாறவேண்டும்.
ஆண்கள் எழுதும் எழுத்துக்களில் பெண்கள் பற்றிய உண்மை நிலைகளை உணர்வுபூர்வமாக எழுதும் போதுதான் பெண்களின் மனப் பாங்கில் மாற்றம் ஏற்படும். மத ரீதியான, இன ரீதியான, வர்க்க ரீதியான, பிரதேச ரீதியான. என பிரிவினைகள் மென்மேலும் அதிகரித்துச் செல்லும் இன்றைய காலகட்டத்தில் பால்ரீதியான பிரிவினையும் இவற்றோடு சேரவேண்டுமா? தாயைத் தெய்வமாகப் போற்றும், தாரத்தை சமசக்தியாக நோக்கும், மகளை செல்வமாகப் பேணும் போக்கை உடைய ஆண்கள் கலை - இலக்கியம் என்று வரும் போது அடிமையாகக் கருதும் நிலை எப்படி உருவானது என்பது கேள்விக்குரியது. மது, மாது இரண்டும் மனிதனுக்குப் போதை தரும் வஸ்துக்கள் என்பதும், மன் ஆசை,
.

Page 16
பொன் ஆசை, பெண் ஆசை என்பவை மனிதனுக்கு கேடு என்பதும் இது காலா காலாமாகச் சொல்லிக் கொண்டு வருவதும் இன்றும் கூட இதனைச் சிலர் மந்திர உச்சாடனம் செய்வதும், அடக்கி ஆளப்பட வேண்டியவள் பெண் என்பதும் எழுதா மறையாக, ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாக இன்னும் சிலர் கருதுகிறார்கள். குறிப்பாக பெண்களை வேலைக்கு அனுப்புவதை, அதிலும் மனைவியை தொழிலுக்கு அனுப்பாத ஆண்கள் இப்போதும் எம்மோடு இருக்கிறார்கள். இங்கு பெண்ணின்/
D60)6OTau765 ofbLD5ub?
“நாளும் கிழமையும் மனிதர்க்கில்லை
ஞாயிற்றுக் கிழமையும் எங்களுக்கில்லை” என்றொரு பெண் ஆதங்கப்படுமளவிற்கு இன்றைய நிலைமை காணப்படுகிறது.
“எங்கிருந்தாலும் பெண்
சாவி கொருத்த பொம்மையாக மூளையைக் கசக்கிக்கொள்ளாமல் இயங்குவதற்கெனவே காலங்காலமாக கற்பிக்கப்பட்டிருக்கிறாள். தரும தேவதைகள்
அன்ன பூரணிகள்
கிருக லெட்சுமிகள்
அழகு தேவதைகள் இந்த அடைமொழி ஊன்றுகோல் இல்லாமல் நமது பெண்மணிகளால் நடக்கமுடியாது”
என்றெழுதும் நிலைக்குப் பெண்கள் பின்தள்ளப்பட்டு பெண் அடிமைத்தனத் துக்குள் அமுங்கிப் போயிருக்கின்றனர். இந்நிலையிலிருந்து வெளிவர பெண்களே பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்து, துன்பங்களிலிருந்து விடுதலை பெற முயற்சிக்க வேண்டும், ஆண்கள் எழுதுவார்கள், அது பெண்களின் உண்மையான துயரங்களை எடுத்துக் காட்டாது, வெறும் போலி எழுத்துக்களாக அமையும் என்பது பெண்ணிலை வாதிகளின் கருத்தாகின்றது.
மார்கழி 2008

அ. சங்கரி "அவர்களின் பார்வையில்’ என்ற தலைப்பில் எழுதி யுள்ள கவிதையைப் பாருங்கள்
“கற்புப் பற்றியும் மழை பெய்யெனப் பெய்வது பற்றியும் கதைக்கும். அவர்கள் எனது உடலையே நோக்குவர்
கணவன் தொடக்கம் கடைக்காரன் வரைக்கும் இதுவே வழக்கம்”
பால் ரீதியான பிரிவினை மட்டுமன்றி, பென்களின் பிரச்சினைகள் ஆண்களால் புரிந்து கொள்ளவோ, அவற்றை எழுத்தில் வடித்திடவோ முடியாது என்ற நிலை எவ்வளவு தூரம் பொருத்தமானது என்பதே இன்றைய கேள்வி. தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமுர்த்தி “உன் மனைவியை மனைவி என்கின்ற வேலியை அகற்றிவிட்டு சக உயிர் என்று பார். இந்தப் பார்வை நூதனமானது. சிக்கலோ சிரமமோ இல்லாத கண்ணோட்டம்” என்று கூறுகிறார். இந்தப் பார்வையை ஆண் எழுத் தாளர்கள் பார்த்தால் பெண்ணிலைவாத எழுத்துக்களை படைத்தவர்கள் ஆகலாம்.
V0 ஆக்க இலக்கியம் படைக்கும் போது ஆண் - பெண் என்ற வேறுபாடுகளைக் கடந்து பார்க்கும் பக்குவம் அனைவருக்கும் இருக்க வேண்டும். மாறாக ஆண், பெண் வேறுபாடுகளைப் பார்த்துப் படைக்கும் போது மிகைப்படுத்தல்கள், பிரசார நெடி என்பன நிலவத்தான் பார்க்கும். எமது இலக்கியப் படைப்புக்களில யதார்த்தம் அற்று, கொள்கை பரப்பும் செயற்பாட்டு ഖഖഥT5 மாறியதற்கு இஃதோர் காரணமெனலாம். பெண்கள் கூட தங்களின் பிரச்சினைகளை, துன்ப துயரங்களைக் கூற முற்படும் போது கலைத்துவமின்றி பிரசார வாடை அடிப்பதைப் பார்க்கி றோம். இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.
முடிவாக, பெண்கள் தொர்பான விடயங்கள் யாவையும் உள்ளடக் கங்களகக் கொண்டு பெண்கள் மட்டும் தான் படைக்கவேண்டுமென்றோ, அவர்கள் படைத்தால்தான் முழுமை பெறுமென்றோ கருதுவது எதுவித
ag
torra 2008

Page 17
பொருத்தமுமில்லை என்றே கூற வேண்டும். முற்காலங்களில் முற்போக்கு எழுத்தாளர் குழுவினர் எழுதிய எழுத்துக்களில் கலைத்துவம் குறைந்து கொள்கை விளக்கம் அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கோடு (பிரச்சினை, போராட்டம், மிகைப்படுத்தல்) எழுதிய நிலைதான் பெண்ணியல்வாதி களினது எழுத்திலும் காணப்படும். இதனால் ஒரு முத்திரை குத்தப்பட்ட நிலையே காணப்படும். அந்த எழுத்து புறக்கணிக்கப்படும் நிலையும் ஏற்படும். எனவே ஆண்-பெண் என்ற வேறுபாடுகளைக் கடந்து இருபாலா ரும் எல்லா விதமான கருப்பொருள்களையும் கையாண்டு தரமான இலக் கியம் படைப்பதே கவனத்திற் கொள்ளப்பட வேண்டியது. ஆர் குற்றினாலும் அரிசி வரவேண்டும் என்பது போல் தரமான இலக்கியம் கிடைப்பதே அவசியமெனலாம். ப
=இக்கட்டுரை தொடர்பான கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்.
கன்னியவள் மீது வெகு
காதல் வயப்பட்டு கடைத்தெடுவை நோக்கிஅந்த
காளை புறப்பட்டு கையினிலே கொண்டு வந்தான்
காஞ்சிபுரப் பட்டு Iണtuഖ് 96്താIഖj
கண்ணிலது பட்டு கனலினிலே போட்டெரித்தாள்
கடும் சினந்தான் பட்டு காளையுமோ கண்டுமனம்
கலவரமேபட்டு காதலியைச் சென்று கண்டு
கலந்தனன் ஒன்றுபட்டு கண்டுகொண்டான் காளைக்கினி
கன்னியுடல் ‘பட்டு’.
கா.சிவலிங்கம்
Lorrass 2008
 

ஆடற்கலை லீலாம்பிகை செல்வராஜா, கலாக்ஷேத்ரா டிப்ளோமா (பரத நாட்டியம்), பயிற்றப்பட்ட ஆசிரியர் - விசேடம் (நடனம்) இல43, அரச தொடர்மாடி, புனித அந்தோனியார் மாவத்தை, கொள்ளுப்பிட்டி, கொழும்பு -03, இலங்கை. : நாட்டியம் தமிழ் முதலாவது பதிப்பு செப்டெம்பர் 2008 நூலாசிரியர் கெளரி பிரிண்டர்ஸ், இல207, சேர்ரட்ணஜோதி சரவணமுத்து மாவத்தை (ஆட்டுப்பட்டித் தெரு), கொழும்பு-13, பூரீலங்கா. கணனி நெறியாக்கம்
செல்வராஜா புருஷோத்தமன் இலங்கை விலை : ரூ. 750/=
9 fooD
அச்சகம்
பேராசிரியர் திருமதி.ஞானாம்பிகை குலேந்திரன் அவர்கள் இந்நூலுக்கு வழங்கிய 68HGOrfãĝigus(DJ தமிழக மண்ணில் உருவாகி வளம் பெற்று, அகில இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பரந்துபட்ட நாடுகளிலும் பரதக் கலை நாளுக்கு நாள் நல் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தியப் பண்பாட்டுப் பின்னணி அல்லாதோரும் இக்கலையை விரும்பிப் பயின்று அரங்குகளில் ஆடி அபி நயித்து மக்களைப் பரவசப்படுத்தி வருகிறார்கள்.
மார்கழி 2008

Page 18
பெருகிவரும் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களாலும் உலக மயமாக்கும் சூழலாலும் பழம்பெரும் மரபுக் கலைகளில் வேறுபட்ட பல்கலைத் தாக்கங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. பரீட்சார்த்த முறைகள், கலைகளின் இணைப்பு, பல்கலைக் கலப்பு, புதிய ஆக்கங்கள் என்றவாறு நமது நாட்டியக் கலை முறையிலும் சில மரபுகள் மாற்றம் பெறுகின்றன. இரசிகப் பெருமக்களும் மரபு வழி உருப்படிகளைச் சுவைப்பதுடன் புதிய புதிய ஆக்கங்களை எதிர்பார்க்கின்றனர். கலை வரலாற்றில் இது தவிர்க்க முடியாது எனினும் இத்தகையதொரு நிலையில் உயர்கலைச் செல்வமாகிய பரதக் கலையின் சிறந்த பாரம்பரிய மரபுகள் மெல்ல மெல்ல மறையக்கூடும் என்ற ஆதங்கம் ஏற்படக் காரணமுண்டு அல்லவா?
அறிவியல் முறையில் உயிரினங்களை அழியாமல் பாதுகாக்க அவற்றின் 'GENE' எனப்படும் பரம்பரை அலகுகளைச் சேகரித்து வைக்கும் ஜீன் வங்கிகள் (Gene Barks) உண்டு. இது போல நம்மவர் மரபுக் கலைகளின் அடிப்படை இலக்கணங்கள் சிதைந்தும் அழியாமலும் இருக்க அவற்றைத் தக்க முறையில் பதிவுசெய்து பாதுகாத்தல் அவசியமாகிறது. இத்தகு பதிவுகள் காலம் காலமாகப் பண்படுத்தி வளம் செய்த நாட்டியக் கலையின் உயர்வான மரபுகளை முறையாகத் தெரிந்து தெளியவும் வருங்காலத்தோர் காலத்தின் தேவைக்கேற்ப பாரம்பரிய மரபுகளைத் தழுவிய புதுமைகளைத் தக்கவாறு இணைத்து மேற்செல்லவும் உதவும்.
கலாபூஷணம் திருமதி லீலாம்பிகை செல்வராஜா அவர்களின் ஆடற் கலை இத்தகு தேவையைப் பெருமளவு ஈடுசெய்யும் ஓர் அரிய பதிவு நூலாக விளங்குகிறது. இரண்டாமிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வாழும் நமது நாட்டியக் கலைமின் வளமிக்க மரபைச் செவ்வனே விளக்கும் அருமையான நூல். புதிய பாதையை நோக்கிச் செல்வோருக்குக் கடந்து வந்த சீரான மரபுப் பாதையை உணர்த்தும் வலுவான இணைப்புப் பாலமாக இந்நூல் திகழ்வது பாராட்டிற் குரியது.
அழகு தமிழில் எழுதியிருக்கும் இந்நூலை முழுமையாகப் படித்தேன். நமது நாட்டியத்தின் மரபுப் பெருமைகளை வரலாற்றுக் கண்ணோட்டத்தில்

ஆராய்ந்து தந்த நூலாசிரியர், ஆன்மீக மரபை இறைவனின் தாண்டவ நடனத்தாலும், செவ்வியல் மரபை நிருத்த நிருத்திய ஆடல் நெறிகளாலும், இசை மரபினை பரதக் கலைக்கு அணி செய்கின்ற இசைக் கருவிகளாலும் பொதுவியல் மரபை நாட்டிய நாடகங்கள் மற்றும் தெருக்கூத்து வகைகளின் பாரம்பரியத்தாலும் பக்குவமாக விளக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. குறவஞ்சி நாட்டிய நாடகம், யக்ஷகாணம், தமிழகத் தெருக்கூத்து வகைகள், இலங்கைத் தமிழர் கூத்து வகைகள் பற்றி விளக்கிய ஆசிரியர் இதுவரை பரிட்சயமில்லாத தஷவித நாடகங்கள் பற்றிய தகவல்களையும் தந்திருப்பது கலைஞர்களுக்குப் பெரும் பயன் தரும் கலை பயிலும் மாணவர்களுக்கும் கலை பயிற்றுவிக்கும் நல்லாசிரியர்களுக்கும், கலையைச் சுவைக்கும் இரகசிகப் பெருமக்களுக்கும் அரிய தகவல்களை அள்ளித் தரும் நூல் இது.
திருமதிகீலாம்பிகை செல்வராஜா அவர்களை ஒரு சிறந்த நடன மணியாச முன்னர் அறிந்திருந்தேன். அவரது பரத நாட்டிய நிகழ்ச்சிகளுக்குப் பக்க இசை பாடிமிருக்கிறேன். ஒரு கலைஞனின் உயர்விற்கும் நன்மதிப்பிற்கும் அவசியமாக வேண்டப்படும் ஆழமான மரபுப் பற்று அவரிடம் ஊறிக் குடிகொண்டிருந்ததை அன்று கண்டு வியந்திருக்கிறேன். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பின் அவரை இப்போ சந்தித்தேன். பல் கலாசாரத் தாக்கங்கள் அவரைச் சிறிதளவும் மாற்றவில்லை. மாசற்ற மரபுக் கலைஞராக, மரபு காக்கும் நல் ஆசிரியராகப் படித்த அறிவையும் பதிவு செய்து தரும் பொறுப்புள்ள நூலாசிரியராகவும் அவர் கலை உலகில் பீடுநடை போட்டு வலம் வருவதைக் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
கடின உழைப்பின் வெளிப்பாடு இந்நூல். நாட்டியப் புலமையும் தமிழ் வளமையும் வாய்ந்த கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜா அவர்கள் தொடர்ந்து இத்தகு நூல்களை வெளியிட வேண்டி வாழ்த்தி மகிழ்கிறேன்.
பேராசிரியர் ஞானம்பிகை குலேந்திரன் பி.ஏ. (ஆனர்க). எம்.ஏ.பி.எச்.டி
தலைவர் (முன்னாள்) இசைத்துறை மற்றும் பரத நாட்டிய உயர்பயிற்சி மையம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
இந்தியா.
.

Page 19
(கவிஞர் நீலாவணனின் “வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சி.)
இதுவரை : அன்னம்மா - செல்லையா கல்யாண ஏற்பாடுகள்
எல்லாம் பூர்த்தியாகிவிட்டன.
கல்யாணத்திற்கு அழைப்பு
ஆடியும் கழிந்து மாதம்
ஆவணி ஆயிற் றுாரில் போடியார் கந்தர் - பொன்னு
புத்திரச் செல்வம் செல்லன் ஈடிலார் அழகிப் போடி
எழில்மகள் அன்னம்மாவைச் சோடியாய்ச் சேரும் நாளை
சொல்லினர் வட்டா வைத்தே.
மார்கழி 2008
 

கல்யாண நாளன்று மாப்பிள்ளைத் தோழன் வந்து மாப்பிள்ளையைக் கூட்டிய் போதல். கல்யாண நாளில் அன்று
காலையில் தோழன் வந்து நெல்லினைக் குவித்த மேட்டில்
நிறைகுடம் வைத்த வீட்டில் செல்லையா தலையில் பாலும்
சிறுகென அரைத்த மஞ்சள் புல்லுமாம் அறுகும் தப்பிப்
புதுநீரில் முழுக வார்த்தார்.
மாப்பிள்ளை வேட்டி கட்டி
மாலையாய்ச் சால்வை இட்டு
கூப்பிட்ட சொந்தக் காரர்
கூறைகொள் பெட்டி ஏந்தி
ஊர்ப்பட்ட உரித்துக்காரர்
ஊர்வலமாகச் செல்ல மாப்பிள்ளைத் தோழன் முன்னே
மச்சானைக் கூட்டிப் போனார்.
பெண்ணின் வீட்டை அடைதல் அன்னத்தின் வீட்டு வாசல்
அடைந்ததும் அங்குநின்ற பெண்ணெலாம் குரவை வைத்தார்.
பீரங்கி வெடியின் ஒசை முன்னாலே அழகிப் போட்டி
முகமெலாம் மலர நின்றார். அன்னமோ அறையின் உள்ளே
அணங்கென அழகுக் கோலம்,
omrel 2008

Page 20
நீள் முடித் தேங்காயோடு
நிறைகுடம், படியில் வைத்த பால் நிறத் துணியை மேலே
பரப்பிய பலகை மீது கால்களைத் தூக்கிச் செல்லன் கவனமாய் ஏறி நிற்கும் கோலத்தைக் கண்டு நெஞ்சில்
குதுாகலம் கொண்டார் கந்தர்.
அன்னத்தைத் தேடிக் கண்கள்
அலையவே நின்ற செல்லன் எண்ணத்தைப் புரிந்த பொன்னு
என்னவோ கனகம் காதில் சொன்னதைக் கேட்ட பெத்தா
“சுறுக்கா.கா’ என்று சொல்ல புன்னைப்பூ சொரிந்தாற் போல
பொண்டுகள் முறுவல் பூத்தார்.
-இன்னும் விளையும்.
r YO ר
அடுத்தஇதழில் GI) ÁL6GRäGDBGI)
இததிேர்.
ortal 2008
 
 

இப்பகுதி இளையோருக்கானது. ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இளங்கதிர், மேfபா, செங்கதிர்” ஆசிரியர். இல, 19, மேல்மாடி வீதி, மட்டக்களப்பு.
புதுமுக அறிமுகம்
பெயர் : ஜெ.ஜெயகிறிஸ்ரோ
விலாசம் : பத்தாவத்தை,
இளவாலை, யாழ்ப்பாணம்.
563)356OLD கல்விக்கல்லூரி
ஆசிரியராகப் பயின்று
தற்போது நியமனத்திற் காக யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
ஆக்கம் : ‘விடியலைத் தேடி
இதிர் மார்கழி 2008

Page 21
ళ in ്മ്മങ്ങ( O (AO), il-Pas , விடியலைத் தேடி
நாகரிக மோகத்தில் விஞ்ஞானத்தின் விஸ்வரூபத்தில் தேவைகளை நிறைவுசெய்ய தேவையானத தேடல்
சுமை சுமர்ந்த சோர்ந்த மனிதரெல்லாம் 91.1636...... விடியலை தேடி
சாதிக்க தடிக்கும் சரித்திர புருஷரெல்லாம் சாதனையின். விடியலை தேடி
அகிம்சையை போதித்த மகாத்மா காந்திகளும் சுதந்திரத்தின். விடியலை தேடி
உயிர்களை இழந்த
உணர்வுகளை தொலைத்து உண்மையை ஊனமாக்கியவர்கள்
விடியலை தேடி
இலட்சியப் பயணத்தின்
இறுதி இலட்சியம்
மனித மனங்கள்
விடியலை தேடி G.Gaudisabel
uporas 2^nYA
 

எழுத்தாளரும் இலக்கியச் செயற்பாட்டாளரும் திருமண ஆற்றுப்பருத்துநருமான வேல் அடும்தன் (குரும்பசிட்டியூர் மாயெழு வேல் அமுதன்) அவர்கள் தனது நினைவுகளை மீட்டுகிறார்.
வடபுலத்தில் மிகவும் பிரபலமான கல்லூரிகளுள் ஒன்று தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி. இக்கல்லூரியில் ஒரு தசாப்த காலம் குறிப்பாக உயர்திரு. தெது.ஜெயரெத்தினம் அதிபராகப் பணிபுரிந்த பொற்காலத்தில் கல்வி பயிலும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
1954ஆம் ஆண்டு என ஞாபகம். ஒரு நாள் வகுப்பு நேரம், இலக் கிய ஜாம்பவான் தசண்முகசுந்தரம் அவர்கள் (தசம்) “குடியியல்’ பாடம்
கற்பித்துக் கொண்டிருந்த வேளை ஒரு தவறைத் தெரியாது செய்துவிட்டேன்.
சண்முகசுந்தரம் மாஸ்டர் மிக அக்கறையாகப் பாடத்தை விளங்கப் படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கையில், அப்பியாசக் கொப்பி ஒன்றால் மறைத்தவண்ணம் ‘சூழ்ச்சி வலை’ என்ற நாவலை எழுதிக் கொண்டி’ ருந்துவிட்டேன். நான் கையெழுத்துப் பிரதியை ஒழித்ததையும், நாவலொன்றை எழுதிக் கொண்டிருந்ததையும் எப்படியோ மாஸ்டர் அவதானித்து விட்டார்.
“நான் தொலைந்தேன்’ என்ற நினைவுதான் அப்போது எனக்கு வந்தது. ஏன் என்றால், மாஸ்டருக்குக் கோபம் வராது, வந்தால் தொலைத்து விடும் சுபாவம் அவருடையது.
நிமிர்ந்து பார்த்தேன். சீற்றம் வந்து சீறும் சிங்கமொன்றுதான் எனக்குத் தெரிந்தது. மாஸ்டர் வருவது தெரியவில்லை. குரும்பசிட்டி வாழ் முத்துமாரி அம்மனே! நீதான் துணை என மனம் நொந்து வேண்டிக் கொண்டது. va
Lomas; 2008

Page 22
எனது உடம்பு நடுக்கம் எடுத்தது; வியர்வை கொட்டியது, தேகம் பதம் பார்க்கப் படப்போகிறது என அஞ்சினேன்.
“என்ன அது? என்ன எழுதுகிறாய்?’ என கோபாவேஷமாகக் கேட்டபடி என்னிடமிருந்த கடுதாசிக் கத்தையைப் பிடுங்கி எடுத்தார். ஒரு சில வரிகளை வாசித்தார்.
என்ன ஆச்சரியம்
கோபம் படிப்படியாகத் தணிந்தது. “நாளைக்கு என்னை எங்கடை வீட்டில வந்து சந்தி’ எனச் சொல்லி விட்டு மீண்டும் குழம்பிய மன நிலையாக இருந்தபோதும், குடியியல் பாட கற்பித்தலைத் தொடர்ந்தார்.
அன்றைய இரவு எனக்கு நித்திரை இல்லை. ஆசிரியரை மாவிட்ட புரம் கந்தசாமி கோவில் கிழக்கு வீதியில் அமைந்த அவரின் வீட்டில் சந்திக்கும் வரை குலை நடுக்கம். ஏச்சு பேச்சு அடி உதை வரவேற்கும் என்ற ஏக்கம் எனக்கு.
ஆனால், மீண்டும் பேரதிர்ச்சி
“நான் உண்ரை நாவலைத் திருத்தித் தாறன்”, என வாக்களித்த ஆசிரியர், தனக்கு நேரம் கிடைக்கும் நேரமெல்லாம் என்னை அவரின் வீட்டிற் சந்திக்கச் செய்து, பிழை திருத்தித் தந்ததோடு நாவல் நுணுக்கங் களையும், ஆக்க இலக்கிய நுட்பங்களையும் பயிற்றுவித்தார்.
உயர்திருதசண்முகசுந்தரம் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத் தின் கலைப்பாடம் பயின்று பட்டம் பெற்றவர். பல்கலைக்கழக மாணவராக இருந்த வேளை மாணவர் சஞ்சிகையான "இளம்கதிரின் முதல் ஆசிரியராக இருந்து, திறம்பட சஞ்சிகை வெளிவர உழைத்தவர். பின்நாள்களில் தினகரன் தினசரியின் துணை ஆசிரியராகி தினகரன் சிறப்பாக வெளிவரப் பாடுபட்டவர். நாட்டாரியல் பிதாமகனாக இருந்து கோவில் கலைகள் தொடர்பாக ஆக்கங்கள் பிரசுரித்தவர். சிறுகதைகள், நாடகங்கள், நடைச்சித்திரங்கள் என பல படைப் புக்களை நூலுருவில் தந்த பெருமான்.
அத்தகைய ஓர் அறிஞன் என்னை அரவணைத்ததும், ஆதரித்ததும் எனக்கு பெரும் அங்கீகாரமும் ஊக்குவிப்புமாக அமைந்தது.
மார்கழி 2008

உயர்திருதசண்முகசுந்தரம் மாஸ்டர் ஏற்படுத்திய ஞானோதயத்தால் நானும் சிறுகதைகள், குறுங்கதைகள், நாடகங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதினேன்.
கொடுர உள்ளுர் யுத்தத்தின் விளைவாக நாலு தடவைகள் இடம் பெயர நேரிட்டமையால் நூற்றுக்கணக்கான எழுத்துருக்களை இழந்தேன். இருந்தும் தேறியவற்றுள் ஒரு சிலதைத் திரட்டி பின்வரும் ஆக்கங்களை இதுவரை வெளியிட்டுள்ளேன்.
ஆண்டு ஆக்கம் -
”நாடகம் - “அறுவடை س- 1976
977 - சிறுகதைத் தொகுப்பு - “வைகறை”
சிறுகதைத் தொகுப்பு - “மரீனம்” - சாகித்திய மண்டல -م- 1978
தேசிய விருது பெற்றது.
1980 - நாடகம் - “வாழும் வழி”
2002 - சிறுகதைத் தொகுப்பு - “ஓர்மம்’
2007 - கட்டுரை -“திருமண ஆற்றுப்பருத்துநர் அனுபவங்கள்”
“வேரனுந்த நாட்கள்’
(சிறுகதை)
: ஜின்னாஹ் ஷரிபுத்தீன் : அன்னை வெளியீட்டகம்
மருதமுனை l6, LAL FIT6oo6o அவனியூ
புகையிரத வீதி, தெகிவளை.
: 250/- வெளியீட்டு விழா 25.10.2008 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப் பிள்ளை மண்டபத்தில் பேராசிரியர் சபா ஜெயராசா (தலைவர், கொழும்புதமிழ்ச்சங்கம்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக கெளரவதஈஸ்வரன் (இலங்கைக்கான மொரீசியஸ் நாட்டின் கெளரவ தூதுவர்) அவர்கள் கலந்து கொண்டர்)
மார்கழி 2008

Page 23
«x-ჯა
ளில் ລທີ່ແກີ່ mລາທີ່ສ எழில்வேநீதன் முடலுக்கு
(618ujéIDITEgílő. 1yája)
(நவீன தமிழிலக்கியப் படைப்பாளிகளில் முக்கியமானவராகக் கருதப்படுபவர்களில்
ஒருவர் ஜெயமோகன். ஆனால் அவர் ஈழத்து இலக்கியங்களுக்கு எதிரானவர், அல்லது ஈழத்து இலக்கியங்களை மதிப்பவரல்ல என்ற ஒரு கருத்து பொதுவாக முன்வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக என்னுள் இயல்பாகவே அவர் மீது ஒரு வெறுப்பு உருவாகியிருந்ததுடன், அதுவே அவர் படைப்புக்கள் மீதான ஒரு ஒதுக்கல் கொள்கையையும் என்னுள் வளர்த்துவிட்டிருந்தது. ஆனால் அவரது இணையத்தளத்தை பார்க்கின்ற, படிக்கின்ற வாய்ப்புக் கிடைத்தபோது இவரையா அப்படி நினைத்தோம் என்னுமளவிற்கு அவரது எழுத்துக்கள் அமைந்திருந்தன. குறிப்பாக ஈழத்துப் படைப்பாளர்களான அமுத்துலிங்கம், எஸ்பொ, சுவில்வரத்தினம், பேராசிரியர் மெளனகுரு, ஆழியாள் போன்றவர்களைப் பற்றி ஜெயமோகன் எழு திய ஆக்கங்கள் அவற்றில் முக்கியமானவை. அது மட்டுமன்றி நான் பணிபுரிந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பற்றியும் அவ்வப்போது அவரது ஏனைய படைப்புக்களில் சிலாகித்து எழுதியிருந்தார். அவரது அண்மைய எழுத்துகளில் ஒன்றான “வர்கிஸின் அம்மா’ என்ற ஆக்கம் என்னை அவருக்கு எழுதத் தூண்டியது. என் மனதில் அவர் தொடர்பாக இருந்த நீங்கள் ஈழத்து இலக்கிய எதிர்ப்பாளரா? என்ற ஐயத்துடனே எனது கடிதம் தொடங்கியது. அவரிடமிருந்து பதில் வருமென நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தும் கேட்டேன். ஆனால் இரு தினங்களிற்குள் அவரிடமிருந்து தனது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் பதில் கிடைத்தது. அந்தப் பதிலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென எண்ணு கிறேன். அத்துடன் அவரது இணையத்தள ஆக்கங்களை செங்கதிரில் மறுபிரசுரம் செய்வதற்கும் அவர் அனுமதி தந்திருக்கிறார் தொடர்ந்துவரும் இதழ்களில் அவற்றை எதிர் பார்க்கலாம். அவரது இணையத்தள முகவரி
http://jeyamohan.in எஸ்.எழில்வேந்தன்ノ ܓܠ
அன்புள்ள எழில்வேந்தன்,
உங்கள் கடிதம் கண்டேன். என்னுடைய ஈழ இலக்கிய விமரிசனங்களை ஒட்டி அப்படி ஒரு கசப்பு உருவாக்கப்படுகின்றதென்பது உண்மை. ஆனால் அது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. அதேயளவுக்கு கசப்பு இங்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
மார்கழி 2008

தமிழகத்தில் ஈழ எழுத்துக்கள் மீதான வாசிப்பு என்பது மிக மிகக் குறைவு. ஈழத்தவர் மத்தியில் வாய் உபச்சாரமாக மிகவும் மிகையான புகழ்மொழிகளைச் சூட்டுவார்கள். அப்படி சூட்டிய பலருக்கு ஈழ எழுத்தாளர்களின் பெயர்களே கூட தெரியாது என்பதை நான் அறிவேன். எளிமையாக இதைக் கண்டுபிடிக்கலாம். அப்படி புகழ்பவர்கள் வேறு எங்காவது, எதற்காவது, எந்த ஈழ எழுத்தையாவது மேற்கோள் காட்டியிருக்கிறார்களா? ஈழ இலக்கியம் பற்றி எதையாவது எழுதியி ருக்கிறார்களா?
தமிழகத்தில் ஈழம், ஈழம் என்று சொல்பவர்களில் நான்கு ஈழ எழுத்தாளர் பெயர்களைச் சொல்லத்தெரிந்தவர்கள் ஒரு சிலர் கூட இருக்கமாட்டர்கள். இதனால் தான் ஈழ எழுத்துக்கள் தமிழில் சில பிரதிகள்கூட விற்பதில்லை. ஆனால் இந்த வாய் உபசாரங்களே ஈழ எழுத்தாளர்கள் மற்றும் எளிய வாசகர்களுக்கு போதுமான தாக இருக்கிறது. அவர்களுடைய வருந்தும் மனதுக்கு அவை ஆறுதல் அளிக்கின்றன.
ஈழ எழுத்து பற்றி சீரான கவனம் கொண்டிருந்த, தொடர்ச்சியாக அதைப் பற்றி இங்கே எழுதிய விமரிசகர் என்றால் வெங்கட் சாமிநாதன். ஈழ எழுத்தை எப்போதுமே அவர் கவனித்துப் படிப்பார். எந்த விதமான உபச்சாரச் சொற்களும் இல்லாமல் நேரடியாக அவரது விமரிசனக் கருத்துக்களை முன்வைப்பார். இன் றும் அதைச் செய்து வருகிறார்.
அவருக்கு அடுத்தபடியாக ஈழ இலக்கியம் குறித்து தொடர்ந்த கவனம் கொண்டிருப்பவன், தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவன் நான் மட்டுமே. இதில் எளிய அளவில்கூட என்னுடன் ஒப்பிடக்கூடிய தமிழ் எழுத்தாளர்களோ விமரிசகர்களோ கிடையாது. பெரும்பாலானவர்களுக்கு அங்கே என்ன நடக்கிறதென்பதே தெரியாது. வேதசகாயகுமார் வாசிப்பதுண்டு, பெரிய அளவில் எழுதியதில்லை.
பத்து வருடங்களுக்கும் மேலாக நான் ஈழ எழுத்துக்களைப் பற்றி எழுதி வருகிறேன். ‘அமர்தல் அலைதல்’ என்ற பேரில் தமிழினி வெளியீடாக ஒரு நூல் வந்துள்ளது. 'ஈழ இலக்கியம் ஒரு விமரிசனப்பார்வை’ என்ற பெரிய நூல் எனி இண்டியன் வெளியீடாக வரவுள்ளது. தமிழ் நவீன இலக்கிய வரலாறுகளில் ஈழ இலக்கியத்துக்கும் சரியான இடம் கொடுத்து எழுதப்பட்டுள்ள நூல் நான் எழுதிய நவீனத்தமிழிலக்கிய அறிமுகம்’
LoTsS 2OO8

Page 24
ஆனால் ஒன்று உண்டு, நான் இலக்கிய மதிப்பீடுகளில் சமரசம் செய்து கொள்வதில்லை. தனி வாழ்விலும் அரசியல் நோக்குகளிலும் நான் எப்போதுமே சமரசப்போக்கை மட்டுமே நாடுபவன். எதிலும் சமரசத்துக்கு ஒரு இடமிருக்கும் என்பதே என் பிரியமான கோட்பாடு. இலக்கியதரத்தில் அப்படி அல்ல. மேலானதை, மேலும் மேலானதை தொடர்ச்சியாக நாடுவதே இலக்கியத்தின் ஆதாரமான அக இயல்பு என நம்புகிறேன். ஆகவே சமரசமில்லாமல் தரத்தையே நாடுகிறேன்.
ஆகவே என்னைப் பொறுத்தவரை உலக இலக்கியத்துக்கு என்ன அளவு கோலோ அதுவே தமிழிலக்கியத்திற்கும், தமிழக இலக்கியத்திற்கும் என்ன அளவுகோலோ அதுவே ஈழ இலக்கியத்திற்கும். உபச்சாரம் என்பதற்கே இடமில்லை.
ஒரு வாசகராக உங்களுக்குத் தெரியும், அப்படி ஒரு துல்லியமான ரசனையுடன் இலக்கியத்தைப் பார்த்தால் மிகக் குறைவான படைப்புக்களையே அங்கீகரிக்க முடியும் என்று. காரணம் இலக்கியம் என்பது அத்தனை எளிய ஒரு நிகழ்வல்ல. அதற்கு ஒரு அபூர்வத்தன்மை உண்டு. ஒரு மொழிச்சூழலில் பலர் அரசியல், சமூகவியல், தனிப்பட்ட தேவைகளுக்காக பல தளங்களில் நிறை யவே எழுதுவார்கள். இலக்கியமாகத் தேறுவது கொஞ்சமே.
இலக்கியத்தை மட்டுமே அளவுகோலாகக் கொண்ட ஒரு விமரிசகன் ஒருவரை அங்கீகரிக்க நூறு பேரை நிராகரிக்க வேண்டியிருக்கும். நிராகரிப்புக்கு உள்ளாகிறவர்களுக்குரிய எளிய ஆயுதம் தங்களை நிராகரிப்பவனை நிராகரிப்பதே. அவனுக்கு இனம், மதம், சாதி என ஏதேனும் முத்திரையைக் குத்தி. ஆகவேதான் தனது மேலான படைப்பை அவன் அங்கீகரிப்பதில்லை என்று சொல்லிக் கொள்வது. எனவே பெரும்பாலும் இலக்கிய விமரிசகர்கள் மீது இம்மாதிரியான பொருளில்லாத மனக்கசப்புகள் ஏராளமாக இருக்கும். எழுத்தாளன் விமரிசனம் செய்தால் அந்தக் கசப்புகள் அவன் படைப்புகளை மறைக்கும் திரையாக ஆகிவிடும்.
இதனால்தான் எழுத்தாளர்கள் விமரிசனம் எழுதுவதில்லை. என்னிடமும் பலர் எழுத வேண்டாமெனச் சொன்னதுண்டு. நான் அதை ஏற்றுக்கொண்ட தில்லை. எதை எழுத வேண்டுமெனத் தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும் என்பதே என் எண்ணம். அதன் மூலம் உருவாகும் எதிர்விளைவுகளைப் பற்றிக் கவலையே படக்கூடாது. இப்போதிருக்கும் ஆயிரம் வாசகர்கள் எப்படியும் இருப்பார்கள். அதற்கு மேல் எதுவும் இங்கே எதிர்பார்ப்பதற்கும் இல்லை.
நான் எழுத வந்த நாள்முதல் எனக்கு வசைகளும் அவதூறுகளும் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த இருபதாண்டுகாலத்தில் மாதம் தோறும்
மார்கழி 2008

குறைந்தது இரண்டு அவதூறு, வசைக்கட்டுரைகளாவது அச்சிலேறுகின்றன. என் எழுத்து அவற்றை மீறி எனக்கு, கொஞ்சம் வாசகர்களைப் பெற்றுத் தந்துள்ளது. அதுபோதும் எனக்கு. என்னை எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண் டும், பெருவாரியாக படிக்கவேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. என்னை ஒட்டுமொத்த தமிழகமே வெறுத்தாலும் கூட ஒரு கவலையும் இல்லை.
ஈழ இலக்கியம் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் என்னுடைய வாழ்க்கை நோக்கு, என்னுடைய இலக்கிய அளவுகோல் மட்டுமே செயல்படுகிறது என்பதைக் காணலாம். ஈழ இலக்கியம் என்ற தனிக்கரிசனம் ஏதும் இல்லை. அதுவே இயல்பானது. அது ஈழமக்கள் மீதான நம்பிக்கையும் கூட. அவர்களி டமிருந்து மிகச் சிறந்ததை எதிர்பார்க்கும் விளைவு. அவர்களால் இவ்வளவுதான் முடியும் என்ற சமாதானம் அல்ல அது.
ஈழ இலக்கியத்தில் ஒரு நல்ல படைப்பு உருவானால் அதைப்பற்றி முதன் முதலில் எழுதக்கூடியவனாக நான் இருக்கிறேன். சென்ற காலங்களில் அனேகமாக எல்லா முக்கியமான படைப்பாளிகளைப்பற்றியும் நான்தான் விரிவாக எழுதியி ருக்கிறேன். அது ஈழ இலக்கிய வெறுப்பால் அல்ல என்று மட்டுமாவது இவர் கள் எதிர்காலத்தில் ஒத்துக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.
s (2) to }P{ سسسسس}tella கண்ரர் அஞ்சறி!
、こAエ々、エペ、ペリなん
10.11.2008 அன்று கொழும்பில் கர்ல மான மட்டக்களப்பு மன்று நிறுவனத் தின் ஸ்தாபகரும், ‘இருக்கிறது’ சஞ்சிகையின் நிர்வாக ஆசிரியரும் அத் துடன் மட்டக்களப்பில் வெளிவந்து நின்றுபோன 'விடிவானம்' (வாரப் பத் திரிகை), தினக்கதிர்’ (தினசரி)
ஆகியவற்றின் வெளியீட்டாளருமான
சமுக சேவையாளர்
ராஜசிங்கம் மனோரஞ்சன் அவர்களுக்கு “செங்கதிர் இன் அஞ்சலி,
匈函剑函颜 மார்கழி 2008

Page 25
ஒரு கோடீஸ்வர வெள்ளைக்காரனுக்கு குறிப்பிட்ட அரிதான 'குரூப் இரத்தம் அவசர அவசரமாகத் தேவைப்பட்டது. உடனே பத்திரிகையில் விளம்பரம் செய்தார். எவ்வளவு தொகையாயினும் தருவதாக, அரிதான 'குரூப்’ என்பதால் ஒரே ஒரு விண்ணப்பம் வந்தது. அதுவும் ஒரு
தமிழரின் விண்ணப்பம்,
இரத்தம் சோதிக்கப்பட்டது. வைத்திய அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இரத்தம் கொடுக்கப்பட்டது. 10,000 யூஎஸ் டாலர் எமது தமிழருக்குக் கொடுத்தார் அந்த வெள்ளைக்கார கனவான்.
மூன்று மாதங்கள் சென்றன. அதே வியாபாரி. அதே இரத்தம், எமது தமிழருக்கு கொடுக்கப்பட்ட தொகையோ 5000 டாலர்.
இன்னமும் t மாதங்கள் சென்றன. மீண்டும் வியாபாரி. வேறு ஒருவரிடமும் அந்த 'குரூப் இரத்தம் இல்லாததால் அந்த குறிப்பிட்ட தமிழரே வந்தார். 2OOC) யூஎஸ் டொலர் கொடுக்கப்பட்டது.
சற்றுக்காலம் சென்றபின் தமிழர் இரத்தம் கொடுக்கத் தாமாகவே சென்றார். வெள்ளைக்காரனோ ஒரு சதமும் கொடுக்கவில்லை.
எம்மவர் டாக்டரை அணுகி “என்ன இது? 10,000 டாலரிலிருந்து தற் போது ஒரு சதமும் தரவில்லையே? என்ன விடயம்?” என்று வினாவினார்.
டாக்டர் கூறிய பதிலினால் எம்மவர் மயக்கமடைந்தார்.
"நீங்கள் முதலில் கொடுத்தது ஒறிஜினல் தமிழ் இரத்தம் 10,000 டாலர் கிடைத்தது. போகப்போக உங்கள் இரத்தம் அவருக்கேற்றி, உங்கள் இரத்தம் முழுக்க ஏறி உங்கள் பிறவிக் கஞ்சத்தனத்தால் தான் இந்த நிலைமை” என்றார்.
"யோகா" வகுப்பில் திரு.ஆறுமுகம் ஐயா கேட்டு இரசித்தவர் - இணுவை இரது
ஆளிதி
மார்கழி 2008
 

ཟ -్న o
导 fágfaíñS.
ஐப்பசி மாதத் தொடர்ச்சி.
சக்தி, கண், ஒளதா ஆகிய சஞ்சி டிருந்தது. தொடர்ந்து ஊதா, கைகள் பெண்கள் அமைப்புகளுக்கு பெண்கள் சந்திப்பு மலர், சக்தி 2ளடாக வெளிவந்தவை. அதே போன்ற பெண்களால் உருவாக்கப் போன்று தற்போது பல சஞ்சிகை I பட்ட சஞ்சிகைகளும் இன்னும் மறை கள் சங்கங்கள் மற்றும் அமைப்பு யாத மறுபாதி’, ‘புது உலகம் கள் மூலமே வெளிவருகின்றன. எமை நோக்கி’, ‘ஊடறு போன்ற பெண்கள் சஞ்சிகைகள் பற்றிறஞ்சி தொகுப்புகளும் வெளிவந்தன. அண்மையில் எழுதிய கட்டுரை ஒன் புகலிட வாழ்வு, பெண்ணியம், விளிம்பு றில் பின்வருமாறு குறிப்பிடுவது நிலை மாந்தர்கள், தமிழ் அரசியல் கவனத்திற்குரியது. குறிந்த படைப்புக்கள் தாங்கிய தொகுப்புக்களாக இவை தம்மை "15 வருடங்களுக்கு முன்னர் மேற்கு இனங்காட்டின." ஐரோப்பாவில் பல மாற்றுக் கருத்
பளைக் கொண்ட சஞ்சிகை | சில சஞ்சிகைகள் தனித்த பார் கள் வெளிவந்தன. அவற்றில் பெண் வைக்குரியன. பிரான்ஸில் இருந்து களும் எழுதினார்கள். அநேகமான வெளிவந்த "அம்மா' சஞ்சிகை சிறு சஞ்சிகைகளில் பெண்களாலும் ஆன் கதைக்கென தனித்த இதழாக வெளி களாலும் பெண்ணியக் கருத்துக் வந்து நின்றுபோனது. நான் அறிந்த கள் முன்வைக்கப்பட்டன. விவாதிக் வரையில் 13 இதழ்கள் வரையில் கப்பட்டன. பிரான்ஸிலிருந்து "கண்" கானக்கிடைத்தது. 1997 பங்குனி என்ற பெண்கள் சஞ்சிகை முதலில் யில் ‘அம்மாவின் 1" இதழ் வெளி கொண்டுவரப்பட்டது. இது பென் வந்துள்ளது. 2001 இல் இதன் 13" களை ஆசிரியர் குழுவாகக் கொண் இதழ் வெளிவந்துள்ளது. வெளி

Page 26
வந்த இதழ்களில் சராசரியாக 5 ! கதைகளாவது வந்துள்ளன. அப் படிப் பார்த்தால் 75 கதைகளாவது பிரசுரம் பெற்றிருக்கக்கூடும்.
அதிகமான புலம்பெயர் படைப்பாளி களின் சிறுகதைகளுக்கு ‘அம்மா’ களம் அமைத்துள்ளது. குறிப்பாக ஷோபாசக்தி, பார்த்ததிபன், பொ.கருணாகரமுர்த்தி, நிரூபா, ப. வி. சிறிரங்கன், அ.முத்துலிங்கம், ! சிவலிங்கம் சிவபாலன், சித்தார்த்த சேகுவேரா ஆகிய கவனத்திற்குரிய படைப்பாளிகளின் கதைகளும் 'அம் மா’வில் வெளிவந்துள்ளன. இந்த வகையில் அம்மா புலம்பெயர் இலக்
கியப் படைப்புலகில் சிறுகதைக் கென தனித்த இதழாக ബെf வந்து பலத்த பாதிப்பை ஏற்படுத்திய சஞ்சிகையாக அமைந்துள்ளது.
'சமர்’பிரான்ஸிலிருந்து ரயாகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த சஞ்சிகை. இதில் கவிதை, சிறுகதை எவையும் வெளிவந்ததாகத் தெரிய வில்லை. கட்டுரை மற்றும் அரசியல் சார் விடயங்களுக்கு முக்கியத்து வம் கொடுத்து அரசியல் தத்து வார்த்த புரட்சிகர விமர்சன ஏடாக
வெளிவந்தது. நான் அறிந்தவரை யில் 31 இதழ்கள் 2002 வரை ഭൈ' வந்துள்ளன. இது தவிர அரசியல் பொருளாதார கலாசார இதழாக வெளிவந்த ‘புதுமை’ என்ற சஞ்சி
ories 2008
கையும் நீண்ட காலம் தொடர்ச்சி யாக வெளிவந்து நின்று விட்டது.
எழுத்தாளர் க.நவம் (எழுத்தாளர் தெணியானின் சகோதரர்) ஆசிரி யராகப் பணியாற்றிய நான்காவது பரிணாமம் கனடாவிலிருந்து வெளி வந்த சஞ்சிகையாகும் கலை இலக் கிய காலாண்டு இதழாக 1991 செப் ரெம்பரிலிருந்து 1994 ஏப்பிரல் வரை 13 இதழ்கள் மாத்திரமே இதுவரை வெளிவந்துள்ளன. பின்னர் இது வும் நின்றுவிட்டது. இது வெளி வந்த காலப்பகுதியில் பல நூல் வெளியீடுகளை, குறிப்பாக, ஆரம் பத்தில் வெளிவந்த கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு அவை சார்ந்த கருத்துக்களை முன்வைத் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனரஞ்சகமாக வெளிவந்த பல இதழ்களும் உண்டு. அத்துடன் “இந்தியா ருடே’ பாணியிலும் வெளி வந்து நின்றுபோன இரண்டு சஞ்சி கைகள் பார்க்கக் கிடைத்தன. இலண்டனிலிருந்து வெளிவந்த ‘உலக தமிழழோசை", "உலகத் தமிழ்” ஆகிய இரண்டு சஞ்சிகைக ளும் கலை இலக்கியம் மட்டுமல்லாது அனைத்துத் துறைகளையும் உள் ளடக்கி வெளிவந்தது. இதனாலேயே எந்தவொரு வாசக மட்டத்திலும் நிரந்தரமாகத் தமக்கென ஓரிடத் தைத் தக்கவைக்க முடியாத நிலை

இவற்றுக்கு ஏற்பட்டுவிட் டது. இந்த வகையில் தற்போது வெளி தற்போது இவை இங்கு வரும் சஞ்சிகைகளாக உயிர்நிழல், கிடைப்பதில்லை. காலம், மண், நுட்பம், குவியம், இனி, உயிர்மெய், காற்றுவெளி முற் புலம்பெயர் படைப்புலகில் வெளிறம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். வந்த சஞ்சிகைகள் கலை, இலக் தொடர்ச்சியாக வெளிவரும் மேலும் கியம், விமர்சனம், அரசியல், பென் சில சஞ்சிகைகளும் உள்ளன. இலத் ணியம், மாற்றுக்கருத்து, சிறு திரனியல் ஒளடகமான இணையத்திற் வர்களுக்கானது/இளையோருக் கூடாகவும் அதிகமான இணைய கானது (சிறுவர் அமுதம், மண், சஞ்சிகைகள் தற்போது வெளிவரு பாரதி சிறுவர் இதழ், ஊசி இலை) கின்றன. ஆற்றுக்கலை, ஆன்மீகம், வர்த்தகம் என்றவாறு சிறப்புப் பண்புகளைப் இதுவரை புலம்பெயர் படைப்புல பெற்று வந்துள்ளமை தெரிய வருகில் தடம்பதித்த சஞ்சிகைகள், கின்றது. இந்தச் சஞ்சிகைகள் யாவும் பத்திரிகைகள் முழுமையாக ஈழத்தில் கிடைக்காத நிலையிலே இவை பற்றிய பகுப்பாய் பிரான்ஸ் (36) வினை மேற்கொள்ளுதல் மிகக் அசை, அம்மா, அநிச்ச, ஆதங்கம், கடினமான ஒரு பணியாகவே அமை | ஈழமுரசு, உயிர்நிழல், உறவுகள், கிறது. ஈழத்தில் ஆவணப்படுத்த எக்ஸில், எழில், எரிமலை, ஐரோப் வேண்டிய பல்கலைக்கழக நூல 1 பிய முரசு, ஓசை, கதலி, கண், கங்களுக்கோ அல்லது பொதுசன கம்பன், குமுறல், சமர், சிந்து, சிரித் நூலகங்களுக்கோ (யாழ். பல்க திரு, சுட்டுவிரல், தமிழன், தமிழ் லைக் கழக நூலகத்திலே எக்ஸில், (Մ»Սծ, தமிழ்த் தென்றல், தாயகம், அம்மா, சமர், மண் ஆகியவற்றின் தேடல், பள்ளம், பாரிஸ் ஈழநாடு, சில இதழ்கள் மட்டுமே பார்க்கக் பாரிஸ் ஈழமுரசு, பகடைக்காய்களின் கிடைக்கின்றது) இச்சஞ்சிகைக அவலக்குரல், புன்னகை, புதுவெள் ளின் பிரதிகளை வெளியீட்டாளர் 1ளம், முற்றம், மெளனம், வடு, களும் படைப்பாளிகளும் பொறுப் வண்ணை, வான்மதி. புணர்வுடன் அனுப்பிவைக்காதது ஒரு குறைபாடே. இந்நிலை இவை ஜேர்மனி (30) பற்றிய ԱpԱք6OLDաT607 ஆய்வுகளுக் அக்கினி, அறுவை, இளைஞன், (55 d560)LuIIT85 sióOLD556T6T60T. | இரவல் தூண்டில், ஈழமணி ஊதா,
ဗြွစ္သநிதிர் ஐ 2008

Page 27
ஏலையா, கலைவிளக்கு, சிந்தனை, நெதர்லாந்து (6) சிவத்தமிழ், சிறுவர் அமுதம், தமிழ் 9l, ஆ, இ, உரிமை, சமநீதி, அருவி, தளிர், தாகம், தாயகம், சுமைகள், செய்திக்கதிர், தமிழ் ஒளி தமிழ் நாதம், தூண்டில், தென்றல், தேன், நமது இலக்கு, நமது கனடா குg) குரல், பாரிஸ் ஈழமுரசு, புதுமை, புதுயுகம், பூவரசு, மண், மலரும் மொட்டுக்கள், வண்ணத்துப்பூச்சி,
அமுதம், ஆத்மஜோதி, ஈழநாடு, ஈழ முரசு, உதயன், உலக தமிழோசை,
வெளிச்சம், வெற்றிமணி உலகத் தமிழர், கனடா ஈழநாடு, காலம், குவியம், சிறுவர் கதைமலர், இலண்டன் (25) | சுதந்திரன், சூரியன், செந்தாமரை,
அலை ஓசை, ஈழகேசரி, உயிர்ப்பு தங்கத்தீபம், தமிழர் செந்தாமரை, உலக தமிழோசை, காற்றுவெளி, தமிழர் தகவல், தாயகம், தினத் சுடரொளி, தமிழ் ஓலைகள், தமிழர் தமிழ் தேசியம், தேடல், தென்றல், தகவல், தமிழன், தமிழ் அகதி, நம்நாடு, நான்காவது பரிமாணம், தமிழ் உலகம், தாகம், தேசம், நுட்பம், பரபரப்பு, பார்வை, புரட்சிப் நாழிகை, பனிமலர், பாரிஸ் ஈழ | பாதை, பொதிகை, மறுமொழி, முர முரசு, புதினம், புலம் ஐ.பி.சி மீட்சி சொலி, முழக்கம், ரோஜா, வான
artet (upljaji, 6holarf, Journal of வில், விளம்பரம், வீடு, வீணைக் Eelam Studies, Race and Class, |
Tamil Times, Tamil Nation.
eqGióGyGiuT (13) | அக்கினிக்குஞ்சு, அவுஸ்திரேலிய மரபு அவுஸ்திரேலிய முரசு, இன்பத்
தமிழ், ஈழமுரசு, உணர்வு, உதயம், டென்மார்க் (5) |ਪਯੋ , கலப்பை, தமிழர் உலகம், அரும்பு, இனி, கற்பகம், காகம், தினமுரசு பாரதி சிறுவர் இதழ் மரபு. சஞ்சீவி
கொடி, வெற்றிமணி, ழகரம்.
சுவிஸ் (5)
இளசி இலை, தமிழ் ஏடு, தமிழ்நாடு, பாரிஸ் ஈழமுரசு, மனிதம்
| மேலும் (11) நோர்வே (5) அஞ்சல், உலகத்தமிழ், ஓலை, உயிர்மெய், சுவடுகள், சக்தி, சர்வ குருத்து, சுட்டுவிரல் திருப்பம், துளிர், தேச தமிழர், பறை பாலம், புதினம், மண், மேகம்.
uprasi 2OO6

சஞ்சிகைகளின் உள்ளடக்கம்: சஞ்சிகைகளின் அமைப்பு இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ள ஆரம்பத்தில் வெளிவந்த சில சஞ் சஞ்சிகைகளில் கலை இலக்கியம் சிகைகள் கையெழுத்துப் பிரதியாக சார்ந்தனவே அதிகம். அவை எழுதப்பட்டு அவை போட்டோ பிரதி கவிதை, சிறுகதை, தொடர்கதை, எடுக்கப்பட்டு வெளிவந்தன. பின் நூல் மதிப்பீடு, நூல் அறிமுகம், னர் தட்டச்சு செய்யப்பட்டு பேட்டோ விமர்சனம், கட்டுரை, வாசகர் பிரதி எடுக்கப்பட்டும் அதன் பின்னர் கருத்து, அரசியல், மாற்றுக் கருத்து, றோணியோ செய்யப்பட்டும் பல சஞ எதிர்வினை ஆகியவற்றை பிரதான சிகைகள் தமது பணியைத் தொடர்ந் மாகவும் வேறும் சில விடயங்களை தன. பின்னரே அவை அச்சு வடி உப பிரிவுகளாகவும் கொண்டு வம் பெற்றன. தாயகம் சக்தி புதுமை வெளிவந்தன. ஆகிய சஞ்சிகைகள் எனக்குப் பார்க் கக் கிடைத்த போது இந்த நிலை இவை ஒவ்வொரு சஞ்சிகைகளின் T ந்து தான் அவற்றின் வளர்ச்சி
Bl இலக்கிற்கு ஏற்பவும் மாறுபடும் பெண் ஆரம்பமாகியது. இது ஆரம்பத்தில் ணியக் கருத்துக்களை முதன்மைப் வெளிவந்த அதிகமான சஞ்சிகை படுத்தி வெளிவந்த சக்தி, கண் களுக்கும் பொருந்துவதாக அமைய ஆகியவற்றின் உள்ளடக்கத்திற்கும், லாயிற்று. சிறிது காலத்தின் பின் உயிர் நிழல், காலம் என்பவற்றின் | னரே அச்சுவடிவம் பெற்ற சஞ்சிகை உள்ளடக்கத்திற்கும் இடையில் களைக் காணமுடிந்தது. பெருத்த வித்தியாசம் உண்டு. அவற்றை வெளியிடும் குழுவின் கருத் தமிழகத் தொடர்புகள் கிடைத்த தியலுக்கு ஏற்ப அவற்றின் உள்ள போது வெளியீட்டாளர்கள் தமது டக்கம் மாற்றமுறுவதைக் கண்டு சஞ்சிகைகளை மகக் பதிப் கொள்ள முடியும். பிக்கவும் செய்தனர். தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் பல இவை எவற்றையும் மனங் கொள் சஞ்சிகைகள் தமிழகத்தில் மிகச் ளாமல் தமிழகத்தின் குமுதம், ராணி சிறப்பாக அச்சுப்பதிக்கப்பட்டு வெளி முத்து பாணியில் வெளிவரும் சஞ் வருகின்றன. அரநிச்ச (இரண்டு இதழ் சிகைகளும் புலம் பெயர் இலக்கிய களுடன் நின்றுவிட்டது. இதுபற்றிய உலகில் உள்ளன. அவை பெரி விபரத்தை கீற்று (www.keetru.com) தும் தமிழ்நாட்டு வெகுஜன கலாசா இணையத்தளத்தில் பார்க்கக்கூடிய ரத்தின் தாக்கத்திற்கு உட்பட்டி தாகவுள்ளது.) உயிர்நிழல், காலம் ருத்தலையும் கண்டு கொள்ளலாம். ஆகிய சஞ்சிகைகள் அண்மைக்

Page 28
காலத்தில் மிகுந்த அழகுடனும் பிரசுரம் பெறுவதும் சஞ்சிகைகளின் காத்திரமாகவும் வெளிவந்து குறைபாடுகளுக்கு மற்றுமொரு கார கொண்டிருக்கின்றன. விணமாகும். இவற்றில் பல எடுத்த
20செ.மீ x 15செ.மீ அளவுகளிலே எடுப்பிலேயே நின்று போவதற்கு.
ஆரம்பத்தில் வெளிவந்த அதிகமான சஞ்சிகைகள் அமைந்திருந்தன.
இவை A4 அளவுள்ள தாள்களில் நடைமுறைப் பிரச்சினைகள், வாழ் போட்டோ பிரதி எடுப்பதற்கு வாய்ப் நிலை முரண்பாடுகள், பிரமுகர்த் பாக அமைந்ததனாலும் கைக்கு தனம், போலித்தன்மையான தியாக அடக்கமான அளவாதலாலும் இந்த வெளிப்பாடுகள், தலைமைக்கான அளவுடைய சஞ்சிகைகள் பெரிதும் போட்டி, சிலரைத் தனிமைப்படுத்த விரும்பப்பட்டிருக்கலாம். EFLDI, TL। வேண்டும் என்ற சிலரின் அதித கம் சக்தி ஆகிய சஞ்சிகைகள் வேட்கை என்பவற்றை நாம் கவ இந்த அளவிலேயே அவை நின்று
போகும் வரையும் வெளிவந்தன.
இவை தவிர 28செ.மீ x 18செ.மீ, 28செ.மீ x 22செ.மீ இவற்றை அன் மித்த அளவுகளிலும் பல சஞ்சிகை கள் வெளிவந்துள்ளன. மெளனம், காலம், எக்ளில், உயிர்நிழல், நான் எப்படியாயினும் ஆளற்ற தனித்த தீவு காவது பரிமாணம், கனன், அம்மா கள் போல் ஆகிவிட்ட புலம்பெயர் ஆகிய சஞ்சிகைகள் இந்த அளவு படைப்பாளிகளின் உணர்வுகளைப் களில் வெளிவந்தமைக்கு உதார பதிவு செய்ய இந்தச் சஞ்சிகை
"குழுவிற்கான வேலைத்திட்டம்,
னத்திற் கொள்ள வேண்டும்"
என்ற கூற்றும் சஞ்சிகைகள் | தொடர்ச்சியாக வெளிவராமைக்கு ஒரு | gau காரணங்களாக அமைந்துள்ளன.
ಏCILDITgLC வெளியீடுகள் ஒரு களமாக அமைந் துள்ளன. அந்த வகையில் ஒரு இன்னமும் தாண்டவேண்டியவை இதழ் வெளிவந்து நின்று போனா சஞ்சிகைகள் தாண்டவேண்டிய தடை லும் கூட அதற்கூடாக அவர்களின் கள் பல உள்ளன. குறிப்பாக எல்லா வாழ்வு பதிவாகி காலம் தாழ்த்தியே சஞ்சிகைகளும் சேரவேண்டியவர்க | ஒனும் உரியவர்களுக்கு கிடைக்க ஓர் இருககு போய்ச் சேருவதில்லை 661 ஊடகமாக இவை அமைந்திருக்கின் பது முக்கிய குறைபாடாகும். ஏறக னவே ஒரு சஞ்சிகையில் பிரசுர மான ஆக்கம் மீண்டும் மீண்டும் மறு
ஆங்தி
LEntäÌ 2ÖÖರಿ
றன. இந்த முயற்சிகள் வரவேற்க வேண்டியனவே.

இன்னொரு கட்ட வளர்ச்சியாக இணைய சஞ்சிகைகள்:
கடந்த ஆண்டுகளில் இந்தச் சஞ் சிகைகளின் வரவு குறைந்துவிட்ட நிலையிலே தகவல் தொழில்நுட்
பத்தை புலம்பெயர் படைப்பாளிகள்
இந்தச் செயற்பாடு இணைய சஞ்சி
|கைகளின் வளர்ச்சியை நாம் நினைத் |துப் பார்ப்பதற்கு ஒரு மேலதிக தக
மிகப் பயனுள்ளதாக பயன்படுத்து வதற்கு சான்றாக தற்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும்
போக்குத்தான் தற்போது உள்ளது. தமிழகத்தினைச் சேர்ந்த சு.துரைக்
குமரன் இணைய சஞ்சிகைகளைப் பற்றி முனைவர் பட்டத்திற்காக பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வு ஒன்றினையே மேற்கொண்டுள்ளார்.
இணைய சஞ்சிகைகளைக் குறிப்பி |வலாக அமைகின்றது.
Le Tib.
இணைய சஞ்சிகைகளில் பல தமிழ
"இணைய வலைப்பதிவுகள்’ என்ற கத்திலிருந்தும் புலம்பெயர் எழுத்தா
தெரு பு ப அத்தியாயம் அன் மைக் டைதில் உலகெங்கும் வலுப் பெற்று வருகின்றது. இணையத் தில் ஒவ்வொருவரும் தத்தமக்கென தனியான வலைப்பதிவுகளை உரு வாக்கி உலாவவிட்டுள்ளனர். இது இந்தியாவிலேயே மிக அதிகம் என் றும் கூறப்படுகின்றது. அவ்வாறான தொடு நிலையினை இணையத்தில் உலவரும் சஞ்சிகைகளும் தனித் தனியான இணையத்தளங்களும் நிரூபிக்கின்றன.
இன்று இவற்றின் இன்னொரு கட்ட மாக இணைய சஞ்சிகைகள் மிக அதிகளவாக வெளிவரத் தொடங்கி யுள்ளன. அவற்றுள் ஏற்கனவே அச்சு வடிவம் பெற்றவை தவிர அதிகமும் புதிய பெயர்களைத் தாங்கி வெளிவருகின்றன. இது மேலும் அதிகரித்துக் கொண்டு செல்கின்ற
ਨੂੰ ഥ[=ൂി 2008
ளர்களிடம் இருந்தும் வெளிவருகின் றன. இவற்றுள் இரண்டையுமே பிரிக் துப் பார்க்க முடியாத அளவுக்கு படைப்பாளிகள் கலந்துறவாடுவது
தெரிகின்றது. இது ஈழத்தமிழ் இலக் |கியம், சர்வதேசிய இலக்கிய உலகு என்னும் பெரும் பரப்புக்குள் கலந்துற | வாடும் நிலையாகக் கொள்ளலாம். 'திண்ணை இணையத் தளத்தில் தமிழகப் படைப்பாளிகளுடன் அதிக மான புலம்பெயர் படைப்பாளிகளும் எழுதிவருகின்றனர். இவை தவிர
மரத்தடி, ஆறாம்தினை, தோழி, அம் பலம் என இன்னமும் பல தமிழக இணைய சஞ்சிகைகள் வெளிவரு
அடுத்த இதழில் முற்றும்.
நன்றி கலைமுகம் (காலாண்டுச் சஞ்சிகை)
கலை இலக்கியச் சமுக இதழ் ஜனவரி - ஜூன் 2008

Page 29
شی۔ نس آئاً *. » = } 01.09. 1919 - 19.10.2008 1963 இல் கொழும்புத் தமிழ்ச் சங் கத்தின் உறுப்பினராகி 1964இல் சங்கத்தின் நூலகச் செயலாள ராகப் பொறுப்பேற்றுப் பத்தாண்டு காலம் நூலக வளர்ச்சிக்காய் பாடுபட்டுப் பின் 1974இல் சங்கத் தின் பொதுச் செயலாளராகி இருபதாண்டுகளுக்கும் மேலாக அப்பதவியிலிருந்து பாரியபணி களையாற்றி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்கே தன் வாழ்வை அர்ப்பணித்து அண்மை
தமிழ்வேள் இ.க. கந்தசுவாமி அவர்களின் நினைவுப் பரவலும் அஞ்சலிக் கூட்டமும் 21.11.2008 அன்று கொழும்புத் தமிழ்ச்சங் கத்தில் சங்கத் தலைவர் பேரா சிரியர் சபா. ஜெயராசா அவர்க ளின் தலமையில் நடைபெற்ற போது சங்கத்தின் முன்னாள் இலக்கியக் குழுச் 6hafuloustomi த. கோபாலகிருஸ்ணன் (செங்க திரோன்) செலுத்திய கவிதாஞ்
fe.
இEதிேர்
மார்கழி 2008
చx
"
தாங்கிய தமிழ
தலைநகர் தமிழ்ச்சங் கத்தைத் தாங்கிய தமிழவேள்! நீ நிலையிலா வாழ்வை நீத்து நீள்துயில் கொண்ட சேதி தொலைபேசி யூடு பெற்றுத் தயரத்தில் தோய்ந்தேன்! ஐயா! தலைவன் நீ தந்தை போல்வாய்! தாளினைப் பணிந்தேன் போய்வா!
தமிழிலே தோய்ந்த சான்றோன்! தமிழுக்காய் வாழ்ந்த மாண்டோன்! அமிழ்தமாம் மொழிக்குத் தன்னை அடிமையாய் ஆக்கிக் கொண்டோன்! தமிழுக்கு விழாக்கள் நாறு தலைநகர் கொழும்பில் கண்டோன்! தமிழுள்ள வரைக்கும் உன்பேர் தரணியில் வாழும்! வாழும்!
உருவமோ மெலிந்த போதம் உள்ளத்தில் உறுதி; கொண்ட கருமமே கண்ணாய் நின்று காரியம் பலதை வென்றோன்! அருமையாய் நாவில் வார்த்தை அளந்தமே பேசு முந்தன் பெருமையைப் பேசுதற்கு பெற்றோம் நாம் பெரிய பேறே!
 
 
 

அன்று புதன்கிழமை, பிற்பகல் ஆறு மணி ரெலிபோன் ஹோல் கள் அளவுக்கு அதிகமாக வந்து அலுப்புத்தரும் நேரம். சட்டத்தரணி சின்னத்தம்பி ஜாதகக் குறிப்பைத் தொலைபேசி வழியாக எடுப்பதற்குத் தொடர்பு கொள்ளுகிறார்.
“GQJ6ö! 2 ÉJSGOL Reference No. 12 Sri F504. gTg55Ğs (56ČIGOLu | வாசிக்கிறீர்களா? மீனராசியில் இருந்து வாசியுங்கோ. நான் குறிச்சிக் கொள்ளுகிறன்”
டிங். டிங். டிங். எனது மற்றைய இரு தொலைபேசிகளும் ஒரே நேரத்தில் ஒலிக்கின்றன. . . . .
"ஐயா ஒரே ஒரு நிமிடம் பொறுத்துக்கொள்ளுங்கோ மற்ற ரெண்டு லைன்களிலும் ஹோல் வந்திட்டுது’ - நான் தயவாக வேண்டுகிறன்.
மற்றைய ரெலிபோன் அழைப்பாளருக்கு அடுத்த போனில் 1 முக்கிய விடயமாகப் பேசிக்கொண்டு இருப்பதாகச் சொல்லி, பத்து நிமிடத்தால் மீண்டும் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்ளுகிறன். சட்டத்தரணி சின்னத்தம்பி ஐயாவோடு பேச்சைத் தொடருகிறன்.
“Vel. I am paying for this call” – FL-ġ5g5JGOos 85QI6O6o தெரிவிக்கின்றார்.
“எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும். முக்கிய புள்ளி அவருக்கு உதவ வேணும். எனது அமைப்பொழுங்கின் பிரகாரம் எனது திருமண ஆலோசனையகத்திற்கு அவராக வந்து, Fees Pay பண்ணி, சாதகக் குறிப்பெடுக்கும் சிரமத்தைப் பெரிய மனுஷனுக்குக் குடுக்கக் கூடாது' எனப் பெருந்தன்மையாக உதவ நினைத்ததற்குப் போதும்போதும் என வாங்கிக் கட்டிவிட்டன்.
ஆனால்,
FL'Lĝ5g5JGOfGuJT GILDub g)g'(Gg), “Hurry up Vel! I have and important work to do" - ܢܠ
- யாவம் கற்பனையல்ல.
GAID 350 محمد
Lorrass 2008

Page 30
என்ன சின்னவா, காடுகாடாச் சவுக்கு மரத்தையெல்லாம் வெட்டிக் கொண்டு போறா? இதையெல்லாம் ஆடுமாடுகள் திண்னுமாம்பி அடடே எனக்கிந்த விஷயம் முதல்ல தட்டுப்படல்ல. பெற்றோலுக்கு விலையக்குறைச்சுப்
6रींo१०४-०९ வீரக்குழு
Չ
போட்டாங்களாமெண்டு கேள்விப்பட்ட சந்தோஷத் தில துப்பரவா நத்தார்க் கொண்டாட்டத்த மறந்து பொயித்தன். எல்லாம் சரிதான், நத்தார் வந்தாச் சவுக்குமரத்த மொட்டயடிக்கிறயள், காளிகோZ வில் கதவு துறந்தா வேப்பமரத்தையெல்லாம்: வெட்டிச்சரிக்கிறியள். அந்த நாளையில நம் மட பழையாக்கள் இப்படிச் செஞ்சதில ஏதோ ஒரு நல்ல காரணம் இல்லாம இருக்காது. ஆனா நாம ஒண்டுமே தெரியாம கண்ட பாணியில கொண்டையக் கட்டுறதுதான் எனக்குச் சரியாப்படல்ல.
உனக்குத் தெரியுமாம்பி போனவருஷம் நான் படாதபாடெல்லாம் பட்டு என்ட வளவில வளத்திருந்த சவுக்கு மரத்தையெல்லாம் நான் இல் ' லாத நேரம் வந்து ஆரோ சங் காரம் பணினிப் போட்டுப் پایتخ\\/ گبر سسک سست ہے பொயித்தானுகள். இது தேவை யாண்டு கேக்கிறன். ஒவ்வொருத்தனும் அவனவன்ட வளவுக்குள்ள சவுக்கு மரங்கள வளத்தா பாக்கவும் வடிவாமிருக்கும். தேவைக்கு வெட்டியும் எடுக் கலாம், நத்தாருக்கும் சோடிக்கலாம். ܕܕ
தீபாவளி, பொங்கல் மட்டுமில்ல இந்த நத்தாரையும் என்னத்துக்காகக் கொண்பாடுறமெண்டு தெரியாம காசெல்லாத்தையும் திண்டுகுடிச்சி மண்ணாக்
LilլիEմի քԸ iծ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறம், அறியாம இருட்டில அடிமைகளாக வாழ்ந்த சனத்தையெல்லாம் திருத்தி, நாட்ட நல்ல வழிக்குக் கொண்டு வரவேணுமெண்டுதான் இயேசு பிறப்பெடுத்ததாக நினைவறிஞ்ச நாளில இருந்து நான் கேள்விப்பட்டிருக்கன்.
நமக்காக அந்தாள் பட்டபாடுகள் கொஞ்சநஞ்சமில்ல, முள்முடியத் தலையில தூக்கி வெச்சானுகள், சவுக்கால அடிச்சானுகள், ரெத்தம் சொட்டச் சொட்ட சிலுவையில மல்லாக்கப் படுக்கவெச்சி கால்களிலும், கைகளிலும் ஆணியடிச்சி ஏத்தித் தொங்கவச்சானுகள். இதுகளையெல்லாம் கொஞ்சங்கூட நினைச்சிப் பார்க்காமத் துள்ளிக் குதிச்திச் சந்தோஷம் கொண்டாடுறம் நாம்.
அவர் பிறப்பும் பாவம், இறப்பும் பாவம். என்னவோடாம்பி நீ சவுக்கு மரத்தக் கொண்டு போய் வடிவாச் சோடிச்சுவை. நானும் வசதிப்பட்டா அங்கால ஊட்டுப்பக்கம் வாறன். -மிதுனன்.
பன்னூலாசிரியர் மானா மக்கின் ஆய்விலும் தொகுப்பிலும்
புதிய நூலொன்று தமிழ் நாட்டில் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
"இனிய உறவில் இரு சமுகங்கள்" என்று தலைப்பிடப்பட் டுள்ள அவரது நூல் இந்தியாவில் நிலவிய - நிலவுகிற பன்னெடுங்கால இந்து - முஸ்லிம் உறவுகளைச் சான்றுகளுடன் எடுத்துரைக்கும் ஒன் |றாகும். இது அவரது 32வது படைப்பாகும்.
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் விருப்பிற்கொப்ப சமய நல்லிணக்க ஒருமைப்பாட்டு நூல்களை வெளியிடும் பணியை மேற்கொண்டுள்ள கூத்தா நல்லூர் வடக்குக் கோட்டையார் முகம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளையின் அறங்காவலர் ஹாஜி வமுசெய்யது அகமது அவர்கள் தனது முதலாவது நூலாக இலங்கை எழுத்தாளரின் சேவையைப் பெற்று நிறைவேற்றியுள்ளார்.
இதற்குச் சமீபத்தில் வெளியீட்டு விழா நடாத்தப்பட்டு, அமைச் சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதற் பிரதியை அமைச்சர் பரிதி இளம் வழுதி பெற்றுக்கொண்டார். இத்தகைய நூல் முயற்சிகள் காலத்தின்
.யமாகுமென அனைவராலும் புகழ்ந்துரைக்கப்பட்டுள்ளது الساكنة
SS SS - الفيض
Lilitնեl : Աtiէ:

Page 31
ܠܐܒ ܒan+
O O } - ឆ្នាយ៉ា
நினைவாக. 23.11.1939 - 20.10.1997 (p.cfLTLJJG0I
(25.10.08 சனிக்கிழமை காலை துறுைநீலாவணை விளையாட்டுத்திடலில் துறை நீலாவணை மத்திய விளையாட்டுக்கழகத்தால் நடாத்தப்பட்ட கவிஞர் ஜீவா - ஜீவரெத்தினம் நினைவு வெற்றிக் கிண்ணக் கிறிக்கெற் இறுதிப்போட்டியில் விஷேட அதியாகக் கலந்துகொண்ட முசடாட்சரன் வெற்றிபெற்ற மருதமுனை விளையாட்டுக் கழகத்தை வாழ்ந்தி - வெற்றிக்கிண்ணத்தை வழங்கி உரையாற்றியதன் சாரம் இது)
வாழும் கவிதையால் வசீகரித்து என் உள்ளத்தில் இடம் பிடித்த உயர்நண்பா அண்புக்குரிய அருங்கவிஞா! நீ பிரிந்து பதினொரு ஆண்டுகள் பறந்தாலும் நாம் பாடித்திரிந்த பறவைக் காலங்கள் மறையவில்லை! நெஞ்சத்தின் பாரத்தை இறக்குதற்கு ஆளின்றி நீங்கா நினைவுச் சுமையால் வருந்துகிறேன்!
வானொலிக்கவியரங்குகள் நாம் வடிவாய் நடத்தியதும், நம் ஊர்க் கண்ணகி அம்மன் ஆலயத்தில் குளிர்த்தி விழாக் கவியரங்கம் குளிர்தமிழில் சொல்லி மகிழ்ந்ததுவும், இலக்கியப் பேரவை, எழுத்தாளர் சங்கத்தால் ஏற்றமுறும் விழாக்கள் எத்தனையோ செய்ததுவும்,
58 இவ்ஜி
T. His
 

எல்லோரும் போல எதிர்காலம் வேணுமென்று சில்லறைக் கடைவைத்துச் சிரமங்கள் பட்டதுவும், ஊரை வடிக்கும் தரியோதனர்க்கஞ்சி ஓடிப்போய் குந்தி மயண்டைக்குள் வந்ததுவும், மனம் வருந்திச் சோர்ந்ததுவும்! தெளிவாகக் கண்ணில் தெரிகிறது காட்சிகளாய்!
உண்மையை நேசித்த உயர்ந்த பண்பாளன், அண்பைச் சொரிந்த அதிசயப்பிறவி நீ தமிழும் ஆங்கிலமும் தழைத்தோங்க நம்மண்ணில் வித்திட்ட கவிஞன், நாடகக் கலைஞன் நீ விளையாட்டில் வீரன் வீனர்களைக் கண்டால் வெகுண்டெழும்பும் சூரண் நீ களைகட்டும் உனது கவிதை உரை எல்லாம் கண்டு களித்தவர்கள் ஏராளம் எண் செய்வேன் நண்பா, எண் இனிய ஜீவா - ஜீவரெத்தினம் வெற்றிக்கிண்ணக் கிறிக்கெற் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தி உன் நினைவுக் கிண்ணத்தை வழங்குகிறேன்!
வானுலகில் இருந்து நீங்களும் வாழ்த்துங்கள்: உங்கள் வளமான கவிதையினால் ஆசி கூறுங்கள் அமரர்களோடிருந்து அழகான வரிகளினால்
வெற்றிக்குமேல் வெற்றி பெற்று மகிழட்டும்! விரிபுலகெங்கும் நம்பிரதேச இளைஞர்கள். சாதனைகள் புரிந்த சரித்திரம் படைக்கட்டும்! துறையூர் மத்திய விளையாட்டுக்கழகம் தலங்கட்டும் நாளெல்லாம் தொடர்ந்து. வெற்றிக் கிண்ணங்கள் மலையாய்க் குவிக்கட்டும்
કg ང་ཚོ་
நாகரி:

Page 32
(66
எரியும்
- சாரல் நாடன் 1940ம் ஆண்டு தலைமை மருத்துவ அதிகாரியாக வால்பாறையைச் சேர்ந்த பி.எச். டேனியல் என்பார், அத்தேயிலைத் தோட்டத்தில் நிலவிய சகிக்கவே முடியாத மனிதத் தன்மையற்ற சூழலைக் கண்டு, அதனை எதிர்த்து போராடத் தீர்மானித்து தென்னிந்தியத் தோட்ட உத்தியோகஸ்தர்கள் சங்கத்தை ஸ்தாபித்தார். முன்பு நினைத்து பார்க்க முடியாத ஏராளமான உரிமைகளை அச்சங்கம் பெற்றுக் கொடுத்தது. தேயிலைத் தோட்டத் தொழிலை நிர்மாணிப்பதற்காக ஆயிரமாயிரம் தொழிலாளர்களும், உத்தியோகத்தர்களும் தேயிலைக்கடியில் மாண்டு மடிந்ததை டேனியல் தம் அனுபவத்தில் கண்டு மனம் உருகினார். அவரது உருகலில் உருவாகி ஆங்கிலத் தில் ‘ரெட் டி’ என்றெழுதப்பட்ட நாவலின் தமிழ்ப் பெயர்தான் *எரியும் பனிக்காடு”.
இந்நாவலைத் தமிழில் எழுதியிருப்பவர் இரா.முருகவேள். விடியல் பதிப்பகத்தினூடாக 2007ல் இந்நாவல் வெளிவந்துள்ளது. உழைக் கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் இந்நாவல், ஆங்கிலத்தில் எழுதப்பட்டு முப்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்து முதன்முதலாக தமிழில் வெளிவந்துள்ளது.
இன்றைய எழில் மிகுந்த மலை நகரங்களையும், அந்நியச் செல வாணியை அள்ளித்தரும் தேயிலைத் தோட்டங்களையும் கட்டி எழுப்ப தொகை தொகையாகய் பலிகொடுக்கப்பட்ட அந்தக் கண்கவரும் மலைச்சரிவுகளில் புதையுண்டு போன ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைதான் ‘எரியும் பணிக்காடு”.
ஐந்து பாகங்களைக் கொண்ட இந்த நாவல் 1920களில் தோட்டங் களிருந்த நிலைமையை வள்ளி, கருப்பன் என்ற பிரதான பாத் திரங்களைக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய அந்த இருண்ட இரத்தம் தோய்ந்த வரலாற்றை, அவர்களின் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அவல வாழ்வை நம் கண்முன் அற்புதமாக கொண்டுவருகிறது.
g၅န္ဒြ:
confessió 20O3
 
 
 

மெட்ராஸ் தேயிலைத் தோட்டச் சட்டம் 1902ல் கொண்டு வரப்பட்டது. தோட்டங்களில் தமது இரும்புப் பிடியைக் கொண்டு நடாத்துவதற்கு தோட்டச் சொந்தக்காரர்களுக்கு இது உதவி அளித்தது. இதன் படி சரியான காரணமில்லாமல் வேலையை அலட்சியப்படுத்தினாலோ, வேலை செய்ய மறுத்தாலோ, வேலைக்கு வராமலிருந்தாலோ 14 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி நேர்ந்தது. இம்மென்றால் சிறைவாசம் - ஏனென்றால் வனவாசம் என்பது இந்த மோசமான வாழ்க்கையைத்தான்.
தோட்டக்கூலியாகத் தம்மை பதிந்து கொண்டவர்கள், அந்த அடி மைச் சிறையிலிருந்து மீண்டுவர எத்தனிப்பது முயற்கொம்பை பெறும் முயற்சி. இந்த அவலத்துக்குள் சிக்கிக் கொண்ட ஒரு குடும்பம் படும் அவலங்களை நெஞ்சம் உருக எழுதியுள்ளார்.
இது இந்தியாவில் வால்பாறையில் மட்டுமல்ல, அஸாமிலும் இதே நிலைமை தான், இலங்கையின் மத்திய மலைநாட்டிலும் இதே அடிமை நிலமை தான். உலகின் எந்த பகுதியிலும் இவ்வேழைத் தொழிலாளர்கள் கூலிகளாக நடாத்தப்பட்ட அழிக்க முடியாத சோகக்கதை ஒரே மாதிரியாகத்தானுள்ளது. 1941லிருந்து 1965 வரை 25 ஆண்டுகள் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்த அநுபவத்தால் இந்நா வலை அச்சொட்டாக சித்தரித்திருக்கும் டேனியல், இக்காலப் பகுதியில் தோட்டங்களில் தொழில்புரிந்த பலரை பேட்டிகண்டு 1900 காலப்பகுதியை உள்வாங்கி இருக்கிறார். அவர்களின் எழுத்துபூர்வ மான வாக்குமுலங்களையும் பெற்றிருக்கிறார். ஒரு அத்தாட்சிபூர்வ மான நாவலை இவர் எழுத முடிந்துள்ளது.
இந்தியாவின் துணைகுடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரி இந் நாவலுக்கான முன்னுரையில் தொடக்கக் காலங்களில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் வாழ்வையும், வாழ் நிலையையும் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்நாவலை பரிந்துரை செய்துள்ளார்.
கோகிலம் சுப்பையாவின் "தூரத்துப்பச்சை’ நாவலில் இலங்கைக் கூலிகள், முல்க்ராஜ் ஆனந்தின் “இலையும் திரியும்’ நாவலில் அஸாம் கூலிகள், டேனியலின் ‘எரியும் பனிக்காடுகள்’ நாவலில் ஆனை மலைக் காடுகளில் அல்லறும் கூலிகள், என்று ஒரு சோகக்கதை தொடர்கதையாக வளர்வதைக் கண்டு கண் கலங்குகிறோம்.
61
மார்கழி 2005

Page 33
f
छ|2:ि.
. S al
மறுபடிவந் திடவேண்டும்
வாங்கக்கடல் பொங்கி
வழிந்திரண்டு லட்சமென மானிடரின் உயிர்குடித்து
வருடம் நான் காயிற்று as a இந்த இளங்
காலைப் பொழுதினிலே
இருக்காத வேளையிலே
வானுயரும கடலலைகள
மயானமென ஆயிற்றே!
a- - நீங்கள்
இயற்கையதன் தாண்டவத்தின் id56ifüsbuả a
பார்முழுதும் நடுங்கியதே
பாதையதும் மாறியதே
ஆண்டு முழுவதுமாய்
ஆறா மனத்துயரில்
eഡ്രജ്ര ജങ്ങിങ്ങീന്ദ്രb
- ஆறாக ஓடிற்றே!
மனித உறவெல்லாம்
எனவேமன் றாடிற்றே! நீண்டு வளைந்த கடல்
நிலைகுலைந்த காரணத்தால் நிலக்கீழ்க் கற்பாறைகளும்
நெட்டிமுறித்ததனால் மூண்ட அதிர்வுகளால்
முன்னெழுந்த பேரலைகள் முன்னொரு போதுமில்லா
மூச்சுடனே மோதினவே

छ:
੭ 2 OO “
எதிர்பாரா இயற்கை
அனர்த்தத்தால் இழந்தவைகள் இழந்தவைகள்தான்!
இதையெண்ணி மனம் நொந்தால் அது மீண்டும் வந்திடுமா?
ஆறுதல் தான் தந்திடுமா? ஆர்த்தெழுந்த அலையைவிட
ஆற்றலுடன் யாம் உளத்தில் புது உணர்வு கொண்டெழுவோம்!
புத்துலகை நாம் சமைப்போம்! பூகம்பம் வந்தாலும்
புறமுதுகு காட்டாமல் அதிர்வுகளைத் தாங்கவல்ல
அமைப்புக்களை ஆக்கிடுவோம்! ஆராய்ச்சி மையத்தை
ஆழிநடுவில்அமைப்போம்!
உற்றாரைப் பெற்றாரை
உறவினரை இழந்திட்டோம்! முற்றாக வாழ்வெல்லாம்
முறிந்துவிட நாம் அலைந்தோம்! பெற்றோம் யாம் அனைத்துமென்று
பெருமையடித்திட்டதெலாம் சற்றே நிமிடத்தில்
தகர்ந்துவிட்ட நிலை கண்டோம்! 6)ppngs 6:6ITUp60)Lu
இலங்கையினை மறுபடியாம் பெற்றாலே நாட்டுப்பற்
றாளரென்று பேசிடலாம்!
தேட யாருமேஇன்றித்
தெரியாத இடங்களிலே சிக்குப்பட்டுக் கூடாரங்களில் வாழும்
குடும்பங்கள் எத்தனையோ? கடற்கோள் கண்டும் ஓடாமல் நின்றோரை ஒருமித்தே
விழுங்கிவிட்ட சுனாமி பற்றிப் urTLITLD6b (Surresp6.60T unreleo60TIT?
அவன் வெற்றுப் பதரே அன்றோ?
,

Page 34
தமிழ் கூறும் நல்லுலகில் தடம் பதிக்கும் "செங்கதிர்".
சிந்தையைக் கவரும் செங்கதிரின் ஆடி, ஆவணி இதழ்கள் இரண்டும் கிடைக்கய் பெற்று வாசித்து முடித்தேன். ஆசிரியர் பக்கம் முதல் வாசகர் பக்கம் வரை வாசகரைக் களிரும் ஈர்ப்பு சக்தி இருந்தது; இதுதான் ஒரு இதழுக்கு மிகவும் முக்கியமானது வாழ்த்துக்கள்.
அதிதிப் பக்கத்தில் (ஆடி இதழ்) திருகேன்ஸ்,சிவகுமாரன் அவர்களைப் பற்றியும், ஜனாய்.அமுகம்மது சமீம் அவர்களைப் பற்றியும் (ஆவணி இதழ்) இதுவரை அறிந்திராத வகையில் அறிய முடிந்தது. இருவருமே பன்முகத் தன்மையுடைய ஆளுமைய் பண்புடை பவர்கள். இவர்காளப் பற்றி அறியத்தந்த ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.
இதேபோன்று கதிமுகம் பகுதியில் கலைஞர் கலைச்செல்வன் அவர்களைப் பற்றியும், (ஆடி இதழ்), எழுத்தாளர் ஆமுசிவேலழகன் (ஆவணி இதழ்) அவர்களைப் பற்றியும் தந்திருந்த சொல்லோவியங்கள் இரண்டும் சிறப்பாகவே இருந்தன; பிரமிக்க வைத்தன.
இந்த இரு இதழ்களிலும் இடம்பெற்ற சிறுகதைகளில் ஆசிரியரும் எழுத்தாளருமான மண்டுத் தேசிகன்" அவர்களின் "மந்திரச்சொல்" என்னும் சிறுகதையும் (ஆவணி இதழ்), பிரபல எழுத்தாளரான திருமதிசந்திரகாந்தா முருகானந்தன் அவர்களின் 'சாதித்தி" என்னும் சிறுகதையும் (ஆடி இதழ்) அருமையான கதையோட்டத்தோடு அமைந்திருந்தன. இதேபோன்று 'மண்டூர்த்தேசிகன்" அவர்களது 'சிறைவீடு" என்ற கவிதையும் தற்கால சூழ்நிலையும் மண் வாசனையும் கலந்து எழுதப்பட்டு மனதைத் தொட்டது.
இவற்றுக்கு மேலாக ஞானபீட விருது பெற்ற ஜெயக்காந்தளின் பிழைப்பு சிறுகதையானது வளர்ந்துவரும் சிறுகதையாளர்களுக்கு வரப்பிரசாதமாய் அமைந்திருந்தது. (ஆடி இதழ்) பிரபல இலக்கியவாதியும் வரலாற்றுவாணருமான வாகரைவாணன் அவர்களது "எங்கள் பூமி" என்னும் மரபுக் கவிதையானது இதமான மொழிநடையில் அமைந்து வாகரைப் பிரதே சத்தின் சிறப்பிரளயும், செழுமையினையும், அதன் தற்போதையை நிலையினையும் புடம்போட் டுக் காட்டி நின்றது. (ஆவணி இதழ்). வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த திகாயத்திரி அவர்களது "தேடினேன்" (ஆவணி இதழ்)என்னும் கவிதையோ சிறந்த சிந்தனை வார்ப்பாகவும், மானிடவியலின் பொது நோக்கமாகவம் அமைந்து மனதை வருடியது. இதே போன்று ஏறாவூர் அனலக்தர், ஏறாவூர் தாஹிர் முதலானோரின் கவிதைகளும் அருமையே. செங்கதிரோனின் "விளைச்சலோ"தொடர்ந்தும் பிரமாதமே மொத்தத்தில் மேற்படி செங்கதி இதழ்கள் இரண்டிலும் இடம்பெற்ற ஆக்கங்கள் அனைத்தும் இலக்கியத்தாகம் தீர்ப்பதா
கவே அரபந்திருந்தன. வளரட்டும் பணி வாழட்டும் தமிழ்.
- கன்னிமுத்து வெல்லபதியான் - (சரவணமுத்து நவேந்திரன்) பழைய சோமநாதர் வீதி, பாண்டிருப்பு:01, கல்முனை,
64|
பார்கழி 2008
 

కధ #Nధ ***
Zá
ኌኜm -- (8
翌雪庵乙爵雪岛。
சுயதெரிவு முறை முன்னோடி, மூத்த, புகழ்பூத்த, திருமண ஆற்றுப்படுத்துநர், தனிநபர் நிறுவநர், குரும்பசிட்டியூர், மாயெழு
வேல் அமுதனே! = விபரங்களைத் திங்கள், புதன், வெள்ளி மாலை வேளைகளில் 011-2360488, 2380694, 4878929 தொலைபேசியில் விசாரித்தறிகுக! = முகவரி 8-3.3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு முன்பாக, நிலப்பக்கமாக, 33ம் ஒழங்கை வழி) 3 55 ஆம் ஒழுங்கை, கொழும்பு - 06.
சுலபமான தெரிவுக்குச் சுயதெ முறையே மகோன்ன மணவாழ்வுக்குக் நம்பிரிட்டியூர் மாயெழ வேல் முதலே
露

Page 35
Sun Printers - 05, Iruthayap
 

82, Bar Road, Batticaloa. Te:060-264.3986
}த்தாளர்களது ள் யாவும் bò đóGODLõõ56) Lug)
கரம்
uram West, Batticaloa. 065-2222597