கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிர்காமத்திற்கு நடைப் பயணம்

Page 1


Page 2

கதிர்காமத்திற்கு நடைப் பயணம்
சுனில் குணசேகர
தமிழாக்கம்: லோரன்ஸ் துரைராஜா
இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் கொழும்பு

Page 3
இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் 2 கின்சி ரெறஸ், கொழும்பு - 8, இலங்கை
பதிப்புரிமை டு ICES 2007
Printed by Unie Arts (Pvt) Ltd No.48 B, Bloemendhal Road Colombo 13

இக் கட்டுரையானது 2004 ஆம் ஆண்டு மார்கழி மாதம் கொழும்பு, இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தினால் “மாறுநிலை உருவாக்கம்: இலங்கைத் தமிழரின் தேசியம் பற்றிய ஒரு கருத்தரங்கு” என்ற தலைப்பில் நடாத்தப்பெற்ற மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. இம் மகாநாடு அபிவிருத்தி ?ģghj6oopŮJiba5TGOT (35TÜGB6nui6ö (ypab6JJğß96öIT (NORAD- Norwegian Agency for Development Cooperation) 55 s) -256 ul6i GaujLIG55 Lil' (6 6.15tb இலங்கை கற்கைகள் நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு செயற்றிட்டமாகும்.
சிங்கள தேசிய வாதம் பற்றிய சமூகவியல், அரசியல் ஆய்வுகள் அளவிலும், பண்பிலும் குறிப்பிடத்தக்களவு மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கும் நிலையில் தமிழ் தேசியவாதம் சில காலங்களாக ஆய்வுக்குட்படாத ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய ஆய்வுகள் கூடத் தமிழ் மொழியில் மாத்திரமே காணப்படுகின்றன. எனவே இலங்கைத் தமிழரின் தேசியவாதம் பற்றிய சிக்கல்களையும் பண்புகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய தேவை இருந்து வந்துள்ளது.

Page 4

கதிர்காமத்திற்கு நடைப் பயணம்
சுனில் குணசேகர
T6)
2008 ஜூலை 31
நாம் பாணமையிலிருந்து காலை ஆறரை மணிக்குப் புறப்பட்டோம். வேலுப்பிள்ளைக்கும் இராஜரத்தினத்துக்குமிடையில் இன்னமும் எரிச்சலுணர்வு குறையவில்லை. இராஜரத்தினத்துடன் தேவையில்லாத விடயங்களில் ஈடுபட்டது குறித்து நான் வேலுப்பிள்ளையைக் கடிந்து கொண்டதால் அவன் இன்னமும் என்னிடம் வராமல் தவிர்த்துக் கொண்டிருந்தான். வேலுப்பிள்ளை எல்லைமீறிக் குதிப்பது மற்றும் இராஜரத்தினத்துக்குக் கட்டளையிடுவது குறித்து சிவம் அவன் மீது மனவருத்தம் கொண்டிருந்தான். அடுத்திருந்த தேநீர்க் கடை காலையிலேயே திறந்திருந்தது. நாங்கள் தேநீர் குடித்து முடிந்ததும் வேலுப்பிள்ளை தனியாகப் புறப்பட்டான். சிவமும், நானும் ஒன்றாக நடந்தோம். தெளிவான காலைப்பொழுதில் தெருவின் இருபுறமும் பரந்திருந்த நெல்வயல்களில் பெரிதும், சிறிதுமாகத் தேங்கியிருந்த நீர்ப்பரப்பில் ஒளிரும் முகில்களின் அழகான விம்பங்கள் தெரிந்தன. வேலுப்பிள்ளையின் கசப்பான உணர்வுகள் குறித்த சிறு யோசனையைத் தவிர அனைத்தும் நம்பிக்கையூட்டுவதாகவும், மகிழ்ச்சியாகவும் தோற்றமளித்தன.
தெருவில் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருந்த சந்தியில் யாத்திரிகர்கள் இடதுபுறம் திரும்பி ஒக்கந்தவுக்குப் போக வேண்டும். நாம் அடுத்ததாக நிற்க வேண்டிய இடம் பத்து கிலோமீற்றர் தொலைவிலிருந்தது. சந்தியில் நான் வேலுப்பிள்ளையைக் கூப்பிட்டு அவனுக்கு ஒரு சிகரெட்டைக் கொடுத்தேன். இந்த நடையின் போது அவன் மனநிலை சிறிது தேறியிருந்தது போலத் தோன்றியது. மீண்டும் எமது குழுவுடன் இணைந்து கொள்ள ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தான். இது அவனுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாகியது. நான் சிறிது முன்னால் நடந்து, என்னோடு வந்தவர்கள் தமது பிரச்சினையைத் தமக்குள் தீர்த்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானித்தேன்.
வழியில் பஸ்களிலும், வான்களிலும் ஒக்கந்தவுக்குச் செல்லும் யாத்திரிகர்களைச் சந்தித்தோம். ஒக்கந்தவுக்குச் செல்லும் பாதிவழியில் பாணமை ஜனங்கள் விக்கிரக்கேம (Vekerakema) என்று அழைக்கும் ஓரிடத்துக்கு வந்துசேர்ந்தோம். இது காட்டினுள் இருக்கும் இன்னுமோர் இடமாகவிருந்த
1

Page 5
போதிலும், இங்கு ஒரு சிறு பிள்ளையார் கோவில் இருந்ததே ஒரு வேறுபாடாகும். ஒக்கந்தவுக்குச் செல்லும் யாத்திரிகர்கள் இந்தப் பிள்ளையார் கோவிலில் வழிபடுவது வழமையாகும். இதற்கு முன்னரும் பல தடவைகள் செய்தது போன்று கற்பூரம் கொளுத்தி, பிள்ளையாருக்கு மரியாதைசெய்து, அங்கு சில நிமிடங்கள் ஒய்வெடுத்தோம். ஒன்பதரை மணியளவில் நான் ஒக்கந்தவை வந்தடைந்தேன். எனது நண்பர்களும் சற்றுப் பின்னராக வந்து சேர்ந்தார்கள்.
ஒக்கந்த யால வனவிலங்குகள் காப்பிடத்தின் வடகிழக்குப் பக்கமாக ஓர் அற்புதமான கடற்கரைப் புகலிடமாகும். அது குமண பறவைகள் சரணாலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. மஞ்சள் கடற்கரையில் பரந்து, சிதறுண்டு கிடக்கும் பாறைகளில் நின்று பார்த்தால் கிழக்கில் சமுத்திரம் விரிந்து பரந்திருப்பதும், மேற்கில் காடும் நன்கு தெரியும். காட்டிலுள்ள நீர்நிலைகளில் நீலவானம் தெரிகின்றது. அங்கு நீல, வெண்ணிறத் தாமரைகளையும், கொக்குகளையும், கருஞ்சொண்டு நாரைகளையும், தாமரை இலைகளில் பச்சைநிறத் தவளைகளையும், அவற்றின் கீழ் வெள்ளி மீன்களையும், எண்ணிலடங்காத ஏனைய தாவரங்கள், விலங்குகளையும் பார்க்கலாம். கடற்கரையோரமாக அடர்ந்த காடு உள்ளது. கடற்கரையிலிருந்து வெகு தொலைவிலில்லாத ஒரு வெளியில் முருகனுக்கென்று அமைக்கப்பட்ட கோயிலொன்று உள்ளது. இதுவே ஒக்கந்த மலை வேலாயுதசுவாமி கோவில் அல்லது கந்தசுவாமி கோவிலாகும்.
முருகனுக்கு ஒரு வாழ்விடம்
முருகன் இல்லாவிடில் ஒக் கந்தவும் இன்னுமொரு கவர்ச்சியான கடற்கரையென்பதோடு முடிந்திருக்கும். ஒக்கந்த ஏன் முருகனுக்கு விசேடமான இடமென்று கதிர்காமத்திலும், ஏனைய இடங்களிலுமுள்ள எனது இந்து நண்பர்கள் நன்கறிவார்கள். ஒக்கந்த எவ்வாறு ஒரு புனிதத்தலமாகியது என்பது குறித்துப் பல கதைகள் வழங்கி வருகின்றன. நான் முன்பே கூறியவாறு, முருகன் இலங்கைத் தீவுக்கு முதலில் விஜயம் செய்தது தனது தீவிர விரோதியாகிய சூரபத்மனைப் பிடித்துக் கொல்வதற்காகும். அவர் சூரனின் கோட்டை கதிர்காமத்தில் இருப்பதைக் கண்டார். இங்கு கிறிஸ்து வருடம் 2ஆம் நூற்றாண்டிலிருந்து கிரி விகாரையும் இருந்து வருகின்றது. சூரனைச் சில பறவைகளாகவும், ஒரு மாம்பழமாகவும் மாற்றிய பின்னர், முருகன் தமிழ்நாட்டில் தனது வீட்டுக்குத் திரும்பினார்.
முருகன் இலங்கைக்கு வந்திருந்த போது, வாகுர குன்றில் தனது வேலால் குத்தினார். மூன்று ஒளிக்கதிர்கள் அவ்விடத்தில் தோன்றின. அதில் ஒன்று, ஒக்கந்த மலையில் விழுந்தது. அதனால் இந்த இடம் முருக பக்தர்களுக்குப் புனிதமானதாகும்.

இலங்கையின் அரக்கர் குல அரசனாகிய இராவணன் சிவனை வழிபடுவதற்குக் கோணேஸ்வரம் கோயிலுக்குச் சென்ற வழியில் ஒக்கந்தவில் ஒய்வெடுத்தான். அமர்வதற்கும், ஒய்வெடுப்பதற்குமான தமிழ்ச்சொல் உட்கார்ந்தார் என்பதாகும். ஒக்கந்த மற்றும் ஒஹந்த என்னும் இடங்களின் பெயர்கள் இதிலிருந்தே தோன்றுகின்றன. எவ்வாறாயினும், இங்கு முதலில் ஒரு சிறு வணக்கத் தலத்தை உருவாக்கியவர்கள் வேடர்களேயாவர். அவர்கள் தடிகளாலும் , தென்னோலைகளாலும் ஒரு குடிசையை அமைத்து, மிகவும் எளிமையான ஒரு வணக்கத் தலத்தை அமைத்தார்கள்.
வெகுகாலங் கழித்து, முருகனின் நண்பர் ஒருவர் - யார் கதையைக் கூறுகிறார் என்பதைப் பொறுத்து பெயர் ரிஷி நாரதர் என்பதிலிருந்து சிவலிங்கம் வரை வேறுபடுகின்றது. ஆயினும் அது ஒரு பொருட்டல்ல - வேடர் குலத்துப் பேரழகியாகிய வள்ளியம்மன் கதிர்காமக் காட்டின் நடுவில், வளர்ப்புத் தந்தையாகிய நம்பிராஜனின் திணைப்புனத்தில் கிளிகளை விரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். இந்த நண்பர் அவளின் பேரழகினால் கவரப்பட்டு, அவள் முருகனுக்கு நல்லதொரு துணைவியாவாள் என்று சிந்தித்து, தமிழ்நாட்டுக்கு விரைந்து சென்று முருகனிடம் தான் கண்டதைச் சொன்னார். உடனடியாக இந்த அழகியைத் தேடிப் புறப்பட்ட முருகன் ஒரு வயதான துறவி வேடத்தில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். அங்குள்ள தமிழர்களிடம் உணவும், தங்குவதற்கு இடமும் கேட்டார்.
யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் தீவிர முருக பக்தர்கள் ஆவர். ஆயினும் அவர்களுக்கு அந்நியர்களையும், சந்தேகத்துக்கிடமான தோற்றம் கொண்டவர்களையும் பிடிப்பதில்லை. அவர்கள் இவரை ஒரு மோசடிப் பேர்வழியென்றும், தொல்லை கொடுக்கும் நோக்கில் வந்தவரென்றும் எண்ணித் துரத்திவிட்டார்கள். ஏமாற்றமும், கோபமும் கொண்ட முருகன் கடற்கரை வழியாக நடந்தார். ஆசாரங்கள், காணிக்கைகள், விரதங்கள் மற்றும் பக்தியின் ஏனைய வெளிவேடங்கள் எத்தனை அர்த்தமற்றவையென்று சிந்தித்தார். மனிதர்களிடமிருந்து தூர விலகியிருப்பதை விரும்பி, அழகான கடற்கரையில் எவருமற்ற ஓரிடத்தைத் தெரிவு செய்து, அங்கேயே தங்கி வள்ளியம்மனைத் தேட முடிவு செய்தார். இந்த இடமே ஒக்கந்த ஆகும். ஒஹந்த அல்லது தமிழர் கூறுவது போல் ஒக்கந்த இலங்கையில் முருகனுக்கு முதலாவது வீடாகும். இன்னுமொரு கதையின் பிரகாரம், முருகனும், வள்ளியும் இங்கு வந்து சேர்ந்தது இரு கற்களாலான படகுகளிலாகும். இப்படகுகள் இன்னமும் கடற்கரையிலுள்ளன. அங்குள்ள பெரிய பாறைகள் இதற்குச் சான்றாகும். ஒக்கந்தவிலுள்ள பாரிய கல்மலையொன்றில் அவர்கள் தமது வீட்டை அமைத்தனர்."
இங்கு நிரந்தரமாகத் தங்குகையில் முருகனும், வள்ளியும் தமிழ்நாட்டின் வள்ளிமலைப் பாங்கையே பின்பற்றினர். வள்ளி மலையின் உச்சியிலும், முருகன்
3

Page 6
மலையடிவாரத்திலும் கோயில் கொண்டனர். இரு கோயில்கள் அமைந்துள்ள இச்சூழலில் பக்தர்கள் காண்பது கடவுளுக்கும், அவரின் துணைவிக்குமிடையிலான உறவின் பிரதிபலிப்பையே ஆகும். வள்ளியம்மன் முருகனின் கிரியா சக்தியாகவிருக்கையில், தெய்வயானை அம்மன் அவரின் இச்சா சக்தியாக விளங்குகின்றார். தந்திராவில் கூறப்படுவது போன்று ஆணாகிய முருகன் தனது கிரியா சக்தியின் பக்தனும், பணியாளுமாகின்றார். سمبر
இந்த மலையில் முப்பத்திரண்டு நீருற்றுக்கள் உள்ளன. இவை புனிதநீர் நிறைந்த தீர்த்தமென்று அழைக்கப்படுகின்றன. வள்ளியம்மன் இந்த நீருற்றுக்களில் நீராடுகின்றாள். பக்தர்கள் இந்த நீருற்றுக்களில் தமது உடலையும் நனைத்துப் புனிதம்பெறுகின்றனர்.
சிங்கள மக்களும் ஒக்கந்தவுக்கு உரிமை கொண்டாடுகின்றனர். பல பாளி 'அத்தகாத்தா மற்றும் சமந்தபஸ்திக்கா" என்பவை பிரசித்தி பெற்ற அரஹாத் மலியதேவா விஜயம்செய்த பெளத்த துறவிகள் நிலையமாகிய லோகாந்தர விகாரையைப் பற்றிக் கூறுகின்றன. இந்த விகாரை தற்போதுள்ள ஒக்கந்தவில் அல்லது அதற்கு அருகாமையில் அமைந்திருந்தது. காட்டினுள் புராதன பெளத்த நிலையமொன்றின் எச்சசொச்சங்கள் உள்ளன. எவ்வாறாயினும், கடற்கரையிலுள்ள பிரம்மாண்டமான பாறைகள் கதிர்காமக் கடவுளை ஒக்கந்தவுக்குக் கொண்டு வந்த தங்கத்தாலான படகுகளின் பகுதிகளென்பதைத் தமிழர்களைப் போலவே சிங்கள மக்களும் ஏற்றுக்கொள்ளுகின்றனர்.
பிரிந்துசெல்லும் இடம்
வெகு நீண்ட காலமாகவே ஒக்கந்த குறித்த மரபுக்கதைகள் அதை யாத்திரிகர் நடந்து சென்று தரிசிக்கும் ஒரு முக்கிய தலமாக்கியிருந்தன. இராவணனும், முருகனும் செய்தது போலவே அவர்களும் ஒக்கந்தவில் ஓய்வெடுத்தனர். இவ்வாறு அவர்கள் ஓரிரண்டு தினங்கள் இளைப்பாறி, நீண்ட நடைப்பயணத்தின் மிகவும் சிக்கலான தூரத்துக்குத் தம்மைத் தயார்செய்கின்றனர். இது யால வனத்தினுடான நடைப்பயணமாகும். இதுவரையில் திருக்கோவிலுக்கும், சங்கமன்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்தைத் தவிர, ஏனைய இடங்களில் அவர்களுக்கு உணவும், தண்ணிரும், மனிதர்களின் உதவியும் கிட்டின. ஆயினும், யாலவில் மனித சஞ்சாரம் எதுவுமே இல்லை. இக்காட்டைக் கடக்கும் வேளையில் யாத்திரிகர்கள் உணவு, தண்ணிர் மற்றும் அவசியப்படும் ஏனைய பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டும். யாத்திரிகர்கள் ஒக்கந்தவில் தங்கிய காலத்தில் அங்கு முருகனுக்கு ஒரு சிறிய வணக்கத்தலத்தை அமைத்துப் பூஜை வழிபாடுகளை நடத்தி, தமது அன்பு, பக்தி மற்றும் பயத்தை வெளிப்படுத்தும் பாடல்களைப் பாடி, யால
4

வனத்தைக் கடக்கும் போது தம்மைப் பாதுகாக்குமாறு முருகனிடம் வேண்டுவர். படிப்படியாக, யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்த போது சிறிய வணக்கத்தலம் தனக்கென்று சொந்தமாகக் குருக்களைக் கொண்ட கோயிலாக வளர்ச்சிபெற்றது. அனேகமாக வருடம் முழுவதும் இக்கோயிலுக்கு யாத்திரிகர்கள் வருவது பாத யாத்திரையின் போதான தமது வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகும். தொழில் முயற்சியுள்ள சுப்பிரமணியம் என்பவர் (ஆரம்பத்தில் இவர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். இப்போது சிங்களப் பெண்ணாகிய மனைவி நானாவதியுடனும், பிள்ளைகளுடனும் பாணமையில் வசிக்கின்றார்) ஒக்கந்த கோயிலுக்கு வருடம் முழுவதும் வருவோர் சம்பந்தமான வியாபார வாய்ப்புகளை உணர்ந்து, ஒலைக்குடிசையில் அங்கு ஒரு தேநீர்க் கடையை ஆரம்பித்தார். அங்கு யாத்திரிகர்கள் தேநீர், பிஸ்கட், இனிப்பு வகைகள் மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட பானங்களை வாங்கலாம். காலப்போக்கில், வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் வளங்களைப்பேணும் திணைக்களங்களைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளும் இங்கு கிரமமாக வரத்தொடங்கினர். பின்னர், அரசாங்கம் யாலவின் கிழக்குவாசலில் ஓர் இராணுவ காவற்படையை ஏற்படுத்திய போது பாதுகாப்பு ஆளணியினரும் சுப்பிரமணியத்தின் வாடிக்கையாளராகினர். சுப்பிரமணியம் கேட்போருக்குத் தினமும் மூன்று வேளை உணவையும் வழங்கத் தொடங்கினார். வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு சிறிய கூட்டம் அவரின் சேவைகளை நம்பி வாழத் தொடங்கியது. உல்லாசப் பிரயாணத்தொழில் காரணமாக அறுகம்பை பிரதான உல்லாசப் பிரயாணிகள் தளமாகவும், சர்வதேசரீதியில் பிரசித்தமான நீர்சறுக்கு விளையாட்டிடமாகவும் மாறியது. இந்த விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் சிலர் ஒக்கந்த கடற்கரைக்கும் வந்தனர். உரிய பருவ காலங்களில் இவர்களும் ஒக்கந்தவுக்குக் கிரமமாக வந்து சுப்பிரமணியத்தின் தேநீர்க் கடைக்கும் வந்து சென்றனர்.
இனமோதல்கள் காலத்தில் பாதயாத்திரைப் பயணம் அருகிப்போனது. யுத்தம் காரணமாக நடைப்பயணம் அபாயகரமான ஒன்றாகியது. முன்பிருந்த சுதந்திர நடமாட்டத்தை, யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் இப்போது கட்டுப்படுத்தினர். எவ்வாறாயினும், ஒக்கந்த கோயில் அளவிலும், முக்கியத்துவத்திலும் வளர்ச்சியடைந்தது. யுத்தம் தீவிரமாக இடம் பெறுகையில், யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்கக் கல்விமான் பட்ரிக் ஹரிகான் அனுசரணையில், சிறிது மாற்றமுற்ற வடிவத்தில் இப்பாதயாத்திரை இடம் பெற்றது. வழியில் ஏனைய யாத்திரிகர்களையும் சேர்த்துக் கொண்டு இவர்கள் செல்வதற்கு அரசாங்கமும், எல்ரீஈ அமைப்பும் அனுமதி வழங்கினர். நீண்ட ஊர்வலமாக இந்த யாத்திரிகர்கள் ஒக்கந்தவுக்கு வந்து சேர்ந்தனர். இது கோயிலுக்கும் ஓர் உந்துசக்தியாக அமைந்தது. மட்டக்களப்பு, அக்கரைப்பற்று மற்றும் கிழக்குக் கடற்கரைப் பிரதேசங்களைச்
5

Page 7
சேர்ந்த பிரபலமான நபர்கள் ஒன்றுசேர்ந்து கோயில் நிர்வாகக் குழுவொன்றையும், மன்னார் குருக்கள் கழகத்தில் பயின்ற குருக்கள் ஒருவரையும் நியமித்தனர். அவர்கள் சிறிய வழிபாட்டுத் தலத்தை ஒரு நடுத்தர அளவிலான முருகன் கோயிலாக மாற்றியமைத்தனர். இங்கு பல்வேறு சடங்கு மேடைகள், பிள்ளையார் கோயில், கிரகங்களின் வழிபாட்டுக்கான தனி வணக்கத்தலம், குருக்களின் வாசஸ்தலம், சமையலறை, பண்டகசாலை, அலுவலகம் மற்றும் இவற்றைச் சுற்றியமைந்துள்ள மதில் என்பவை நிர்மாணிக்கப்பட்டன. முருகன் கோயிலுக்குப் பின்புறமாகவுள்ள பிரமாண்டமான கற்பாறையில், முன்பிருந்ததையொத்த, வள்ளியம்மனுக்கான வணக்கத்தலம் அமைக்கப்பட்டது. பாரிய ஆலமரங்கள் இதைச் சூழ்ந்து நிற்கின்றன. இதுவே ஒக்கந்த கதைகளில் வரும் வள்ளியம்மன் ஆலயமாகும். பாணமையிலிருந்து யாத்திரிகர்கள் ஒக்கந்தவுக்கு நடந்து செல்லும் வழியில் வள்ளியம்மன் கோயில் தொலைவில் காட்சியளிக்கின்றது. இது நீலவானப் பின்னணியில் அழகாகவும், கவர்ச்சியாகவும் தோற்றமளிக்கின்றது. கோயில் நிர்வாகக்குழு பாதயாத்திரிகர்களின் வசதி கருதிக் கிணறுகளையும், தங்குமிடங்களையும், மலசலகூடங்களையும் நிர்மாணித்தது.
ஒக்கந்தவுக்கு நான் முதலில் சென்றது இதற்கு முந்திய நவம்பர் மாதத்தில் சடங்குகள் எதுவும் இடம்பெறாத தினத்திலாகும். ஒருசில தினங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் பெய்த பருவக்காற்று அடைமழை பாணமை வீதியின் பகுதிகளையும், மதகுகளையும் அடித்துச் சென்றுவிட்டது. சைமனின் பழைய, நம்பிக்கையான மினிவான் ஒருவாறு தண்ணிர்க் குழிகளையும், சேற்றையும் கடந்து சென்றது. இன்னமும் சமுத்திரத்தினுள் நீர் வடிந்து கொண்டிருந்தநிலையில், பாரிய நீர்ப்பரப்பொன்று கோயிலைச் சுற்றிக் காணப்பட்டது. கோயில் அமைந்துள்ள இடம் ஒரு தீவு போல் காட்சியளித்தது. அதிருஷ்டவசமாக மழை நின்று. குளிர்ந்த காற்று வீசியது. சுப்பிரமணியத்தின் தேநீர்க் கடை பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. அன்று ஒக்கந்தவில் மூன்று பேர் மாத்திரமே இருந்தனர். இவர்கள் சுப்பிரமணியமும், குருக்களும், வேறொரு கோயில் பணியாளருமே ஆவர். கடலின் இரைச்சல், சில்வண்டுகள், பறவைகளின் ஒலி மற்றும் காட்டுமரங்களின் இலைகளின் சலசலப்புத் தவிர, அனைத்துமே அமைதியாகவும், சுத்தமாகவும் இருந்தன. இரவு நாம் கோயிலுக்கு முன்பாகவுள்ள திறந்தவெளியில் படுத்துறங்கினோம். யானைகள் வராதிருப்பதற்காக சுப்பிரமணியம் மண்ணெண்ணெய் லாம்புகளை ஏற்றி இந்த இடத்தைச் சுற்றித் தொங்கவிட்டார். பளிங்கு போலத் தெளிவான இரவு வானத்தில் பால்வெளி பரந்து கிடப்பதைக் கண்டோம்.
பாதயாத்திரையில் நான் ஒக்கந்தவைச் சென்றடைந்த போது இந்த அன்றாட வாழ்வின் அமைதியழகைக் காணவில்லை. ஏற்கெனவே ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் வந்திருந்ததோடு, கோயில் நிர்வாகக்குழு ஏற்பாடு செய்திருந்த
6

விசேட பஸ் சேவை மேலும் யாத்திரிகர்களைத் தொடர்ச்சியாக அழைத்து வந்தவண்ணமிருந்தது. கோயில் திருவிழாக் காலத்துக்கெனத் தருவிக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் மூலம் மின்விளக்குகள் ஒளிர்ந்ததோடு, கோயிலும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் வளவினுள், பிள்ளையார் வணக்கத்தலத்துக்கருகில் அமைக்கப்பட்டிருந்த விசேட கொட்டகையினுள் கோயில் நிர்வாகக்குழு அணியினரும், அவர்களின் உதவியாளர்களும் அமர்ந்திருந்து கொடைகளை வசூலித்துக் கொண்டிருந்தனர். யார், எவ்வளவு கொடுத்தாரென்பதை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்துக்கொண்டிருந்தனர். ஏனைய வேளைகளில் அவர்கள் பஜனைகள், தேவாரங்கள் மற்றும் முருகனின் பக்திக் கீதங்களை உரத்த குரலில் பாடினர். “முருகையா வா.வா! முருகையா வா.வா" என்னும் வரிகள் எனக்குத் தெளிவாக நினைவிலுள்ளன.
யாத்திரிகர்கள்
திருவிழாக் காலத்தில் ஒக்கந்தவுக்கு வரும் யாத்திரிகர்கள் இருவகையினராவர்: ஒக்கந்த செயற்பாடுகளில் மாத்திரம் கலந்து கொள்ள வருவோர், மற்றும் கதிர்காமத்துக்குச் செல்லும் வழியில் வருவோர். கதிர்காமம் செல்வோரும் இருவகையினராவர்: ஒக்கந்த வரையில் முழுத்தூரமும் கால்நடையாகவே வருவோர் மற்றும் ஒக்கந்தவுக்கு பஸ்ஸில் வந்து, அங்கிருந்து கதிர்காமத்துக்குக் கால்நடையாகச் செல்வோர். 2003 ஆகஸ்ட் 1ஆந் திகதி அங்கிருந்த அனேகமான யாத்திரிகர்கள், பஸ்ஸில் வந்து எஞ்சிய தூரத்தைக் கால்நடையாகக் கடப்போராவர். இதுவே இப்பொழுது சாதாரண நடைமுறையென்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாலைப் பொழுதுகளில் முதல்நாள் ஒக்கந்தவுக்கு வந்தோர் யால சரணாலயத்தைக் கடப்பதற்கு ஒக்கந்தவிலிருந்து புறப்படுவதையும், அதே வேளையில் கூடுதலான யாத்திரிகர்கள் பஸ்களிலும், கால்நடையாகவும் வந்து சேருவதையும் கண்டேன். இவர்கள் அடுத்த நாள் காலையில் கதிர்காமத்துக்குச் செல்வார்கள். யாத்திரிகர்கள் அனேகமாகச் சிறுவர்களையும் உள்ளடக்கும் விதத்தில் சுமார் பத்து அல்லது பதினைந்து பேர் கொண்ட குழுக்களாகவே வந்தனர். இருபாலாரும் சமமாக இருந்ததோடு, பல முதியவர்களும் வந்திருந்தனர். ஒவ்வொரு யாத்திரிகர் கூட்டத்திலும் இரத்த உறவுக் குழுக்கள் அல்லது அயலவர்களான குழுக்கள் அல்லது இரண்டும் கலந்த குழுக்கள் இடம்பெற்றிருந்தன. இளைஞர்களான பக்தர்கள், குடும்பத்தைச் சேர்ந்தோரும், அயலவர்களுமான முதியோர் பாதயாத்திரையில் இணைந்து கொள்வதை வரவேற்பது போலத் தோன்றியது. முதியோர் பாதயாத்திரைகளில் கலந்து கொள்வதை விரும்புவதும், கடினமான நடைப்பயணத்தில் அவர்களுக்குக் கவனப் பராமரிப்பு வழங்குவதும்
7

Page 8
ஒரு பக்திச் செயற்பாடாகும். இதற்கு மறுதலையாக, பாதயாத்திரையில் முதியோர்கள் கலந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிட்டுவது முருகனின் அருளைக் குறிப்பதாகும். பாதயாத்திரையில் செல்வதற்கு ஒன்று சேருவது குடும்ப அங்கத்தினர்களிடையிலும், அயலவர்களிடையிலும் ஆரோக்கியமான பிணைப்புகளையும் குறிப்பதோடு, இது அவர்களின் நாளாந்த சமூகப் பிணைப்புகளையும் மேலும் வலுப்படுத்துகின்றது.
ஒக்கந்தவில் ஓர் இரவு தங்கியிருப்போர் யாத்திரிகர் மடங்களில் தங்கினர். இங்கு இடமில்லாதபோது கோயில் முன்புறத்தில் திறந்த வெளியிலுள்ள பெரிய ஆலமரங்கள். பாலை மரங்கள், அரச மரங்களின்" கீழும், ஏனைய மரங்களின் கீழும் முகாமிட்டனர். யாத்திரிகர்கள் எங்கு முகாமிட்டாலும் அவர்கள் ஒரேபாணியைப் பின்பற்றினர். ஒவ்வொரு கூட்டமும் தமக்கென ஓரிடத்தைத் தெரிவுசெய்து கொண்டாலும், ஏனையோரின் இடத்தை ஆக்கிரமிப்பதில்லை. படுக்கைவிரிப்புப் போன்ற பெரிய பிளாஸ்டிக் விரிப்பொன்றை வைத்து அதைச் சுற்றித் தமது பொருட்களான பெரிய பிளாஸ்டிக் பைகள், முதுகில் சுமக்கும் பைகள், உடைகள், மருந்துகள், உணவுப் பொருட்களுள்ள பிரயாணப்பைகள் என்பவற்றை வைட்பார்கள். அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, வெங்காயம், வாசனைப்பொருட்கள் என்பவையே இந்த உணவுப்பொருட்களாகும். அத்தோடு பல அலுமினியப் பானைகள், பிளாஸ்டிக் கோப்பைகள், உணவுத் தட்டுகள், சில அலுமினியக் கரண்டிகள், பெரிய பிளாஸ்டிக் தண்ணிர்க் கொள்கலன்ங்கள் என்பவற்றையும் எடுத்து வருவார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் மூன்று கற்களால் செய்யப்படும் அடுப்புகளோடு கூடிய "சமையலறை சொந்தமாகவிருக்கும். முதியவர்கள் படுத்திருப்பார்கள், இளம் பெண்கள் உணவு தயாரிப்பார்கள், பிள்ளைகள் அங்குமிங்கும் திரிவார்கள், ஆண்கள் பேசிக்கொண்டும், பீடி குடித்துக்கொண்டும் அருகில் நிற்பார்கள். தமது இடத்தினுள் நெருக்கமாக இருந்தாலும், அடுத்துள்ள மற்றவர்களின் இடத்தில் பிரவேசிக்காமலும், சமூகத் தலையீடு எதையும் ஏற்படுத்தாமலும் ஒழுங்காகவிருப்பர். பொதுவாக அவர்களின் கூட்டங்கள் ஒன்றையொன்று அலட்சியம் செய்தாலும், ஒன்றுக்கொன்று மரியாதை காட்டும். அருகருகே பொழுதைக் கழிப்பதால் அருமையான சந்தர்ப்பங்களில் நட்புணர்வும் ஏற்படும். அவ்வாறு நிகழும் சந்தர்ப்பங்களில் இரு குழுக்களிடையே பேச்சு மற்றும் உணவுப் பரிமாற்றம், முதியோருக்கு உதவுதல் என்பவை இடம்பெறும். உணவருந்திய பின்னர் அவர்கள் படுத்து நித்திரை செய்தனர். பெண்களின் குழுக்கள் அங்குமிங்கும் நடந்து ஏனைய முகாம்களைப் பார்வையிடுவர். அனேகமான சந்தர்ப்பங்களில் நண்பிகளையும் சந்திப்பர். கிணற்றடியில் திரண்டுநின்று குளிப்பர். அனேகமாக ஆண்களும், பெண்களும் ஒரே கிணற்றில் குளிப்பதில்லை. பெண்கள் குளித்த முறையைக் கண்டு நான் ஆச்சரியமுற்றேன். சிங்கள மக்களைப்போலவே தமிழ் இந்துக்களும், அவர்கள் நாட்டின் எந்தப் பாகத்திலிருந்தாலும் பெண்கள் விடயத்தில் சமூகரீதியில் மிகவும்
8

பழைமைவாதிகளென்று நான் எண்ணியிருந்தேன். குளிக்கும் கிணறுகள் பெண்களின் அந்தரங்கத்தைப் பேணும் வகையில் வழக்கமாக மூடி அடைக்கப்பட்டிருக்கும். ஆயினும், ஒக்கந்தவில், கதிர்காமத்தைப் போலவே, வீட்டு வாழ்க்கையில் தனித்தன்மை பேணும் நியமங்களை ஒதுக்கி வைக்கும் முறையிலான பொதுக் குளியலாகவே இருந்தது. வீட்டு வாழ்க்கையில், குளிக்கும் பெண்களை ஏனையோர் பார்ப்பது மோசமான விடயமென்று கருதப்படுவதாலேயே தனித்தன்மை குறித்த நியமங்கள் வழங்கி வருகின்றனவென்பதைக் கூறத் தேவையில்லை. இது ஆண்கள் சமூகரீதியில் தவறான நடத்தைகளில் ஈடுபடத் தூண்டக்கூடுமென்பதே இதன் உட்கிடையான கருத்தாகும். ஆயினும் ஒக்கந்தவிலுள்ள கலாசாரச் சூழல் காரணமாக இதற்கு இடமில்லை. யாருமே முருகக் கடவுளின் கோபத்துக்கு ஆளாக விரும்புவதில்லை.
கலாசாரங்களின் மோதல்
பரின் மதரியப் பொழுதன் ஆரம்பத் தல சூழல் வெப்பமாகவும் , ஈரக்காற்றுள்ளதாகவுமிருந்தது. வெப்பமும், இரைச்சலும், ஜனநெருக்கடியும், சந்தடியும் எனக்கு எரிச்சலேற்படுத்தின. கடற்காற்றில் சிறிது ஆறுதல் காணுவதற்கும், ஒரு சில நிமிடங்கள் தனிமையை அனுபவிப்பதற்குமென அங்கு செல்லத் தீர்மானித்தேன். கோயிலைக் கடற்கரையுடன் இணைக்கும் பாதையின் இருமருங்கிலுமுள்ள காட்டினுள் செல்ல முடியவில்லை. அங்கு யாரோ உட்கார்ந்து மலங்கழித்துக் கொண்டிருப்பதே இதற்கான காரணமாகும். எனக்கு இது ஆச்சரியமாகவிருந்தது. நான் இந்த நாற்றம் வீசும் பாதையில் ஏதோவொருவாறு கடற்கரையை நோக்கிச் சென்றேன். ஒக்கந்த கடற்கரை அதற்கு முந்திய நவம்பர் மாதத்தில் நான் கண்டவாறே அழகு கெடாமலிருக்குமென்று நம்பினேன். ஆனால் விடயம் அவ்வாறிருக்கவில்லை. ஒவ்வொரு பற்றைக்கும், பாறைக்கும் பின்னால் யாத்திரிகர்கள் தனியாக அல்லது குழுக்களாகக் குந்தி மலங்கழித்துக் கொண்டிருந்தார்கள். ஆட்களில்லாத பற்றைகளும், பாறைகளும் மலத்தினால் நிறைந்திருந்தன.
நான் சுப்பிரமணியத்தின் தேநீர்க் கடைக்குத் திரும்பிவந்து, முற்றத்து வாங்கில் அமர்ந்து எனது குறிப்புகளை இற்றைப்படுத்தினேன். சிறிது நேரத்தின் பின்னர் சுப்பிரமணியம் வெளியே வந்து வாங்கில் அமர்ந்தார். அவரின் மனைவி நானாவதியும், பிள்ளைகளும் பாணமையிலிருந்து வந்திருந்ததால் அவர் சிறிது ஓய்வாக இருந்தார். சுப்பிரமணியம் அருகில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தேநீர்க் கடை குறித்த விருப்பமின்மையை வெளிப்படுத்தினார். பெரிய ஜனக்கூட்டங்கள் வரும்போது இவை காளான்கள் போல முளைக்கின்றனவென்று கூறினார். ஆனால்
9

Page 9
தான் எப்பொழுதும் அங்கே இருப்பதாகத் தெரிவித்தார். அவர்கள் விநோதமான பிளாஸ்டிக் கதிரைகளையும், மேசைகளையும் கொண்டு வருகிறார்கள். அவரிடம் இன்னமும் இருந்தவை பிளக்கப்பட்ட மரத்துண்டுகளால் செய்யப்பட்ட இரண்டு வாங்குகள் மாத்திரமேயாகும். ஆயினும் வழமையான வாடிக்கையாளர்கள் இன்னமும் அவரையே தேடி வந்தனர். அவர்கள் முகம் சுளிக்கவில்லை. அவரின் வருமானம் நன்றாகவிருந்தது. கூடுதலாகப் பொருட்கள் வாங்குவதற்குப் பணமிருந்தால் எவ்வளவு நல்லது! எத்தனை புதிய தேநீர்க் கடைகள் வந்தாலும் அவர் கவலைப்படப்போவதில்லை. முருகன் பார்த்துக் கொள்வார். கோயில் பக்கமாகத் திரும்பி, கைகளை மேலே உயர்த்தி "ஐயோ, சாமி” என்று அழைத்தார்.
வியாபாரிகள் பலர் வந்திருந்தனர். சுப்பிரமணியத்தின் போட்டியாளர் அவர்களுள் ஒருவர் மாத்திரமே. அவரின் தேநீர்க் கடைக்கு அருகில் இருவர் ஒரு லொறியிலிருந்து மரக்கறி மற்றும் பழங்களை விற்றுக் கொண்டிருந்தனர். தேநீர்க் கடையின் மறுபக்கத்தில் வேறொருவர் இந்தியக் கைத்தறிப் படுக்கைவிரிப்புகள், துவாய்கள், பிளாஸ்டிக் விரிப்புகள், சீப்புகள், பற்பொடி, பற்பசை மற்றும் ஏனைய பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவர் வானுக்கு முன்பாகப் பிளாஸ்டிக் துணியொன்றை விரித்து, அதில் தன் விற்பனைப் பொருட்களைப் பரப்பியிருந்தார். வெற்றிலை விற்பவர்கள், இனிப்பு வியாபாரிகள் மற்றும் வானிலிருந்து ஐஸ்கிறீம் விற்பவர்கள் அங்கிருந்தனர். சர்க்கஸ் காண்பிப்பதற்கு ஒரு பெரிய கூடாரம் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சில யாத்திரிகர்களும் பகுதிநேர வியாபாரிகளாகவிருந்தனர். அவர்கள் மரக்கறிகள், அரிசி, சீனி, பால் பவுடர் மற்றும் நிலக்கடலை என்பவற்றை ஏனைய யாத்திரிகர்களுக்கு விற்பனை செய்வதற்கென அதிக அளவுகளில் கொண்டு வந்திருந்தனர். அவர்களுள் சிலர் தமது பொருட்களை இங்கு விற்பனை செய்த போதிலும், அவர்களின் சந்தை உண்மையில் ஒக்கந்தவல்ல. யால சூழலில் உண்பதற்கு எதுவுமே கிடைக்காது என்பதால் அதுவே அவர்களுக்கு உயர்வான விலைகளைப் பெற்றுத்தரும் உண்மையான சந்தையாகும். யாத்திரிகர்களான வியாபாரிகள் கதிர்காமத்தில் உயிர் வாழ்வதற்கும், தமது கிராமங்களுக்கு பஸ்ஸில் திரும்பிச் செல்வதற்கும் எதிர்பார்த்தனர். இதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் யாத்திரையுடன் தொடர்புற்றவையே ஆகும். ஏனைய வியாபாரிகள் தொழில் முறையிலான நாடோடி வியாபாரிகளாவர். அவர்கள் ஜனக்கூட்டம் சேரும் எந்த இடத்துக்கும் செல்வார்கள். சுப்பிரமணியம் என்னோடு பேசிக்கொண்டிருந்த வேளையில் இரு முச்சக்கர வாடகை வண்டிகள் தேநீர்க் கடைக்கு வந்தன. சுப்பிரமணியம் "அவுஸ்திரேலியர்கள் அவுஸ்திரேலியர்கள்" என்று பரபரப்பாகக் கத்தினார். உல்லாசப் பிரயாணிகளைப் பார்த்தே அவர்கள் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்களென்று அவரால் கூறமுடியும் போலத் தோன்றியது. ஒரு வாடகை வண்டியில் இரு அவுஸ்திரேலியர்களும், அடுத்ததில் வேறோர் அவுஸ்திரேலியரும், உள்ளுர்
10

நபரொருவரும் இருந்தனர். அவுஸ்திரேலியர்கள் நீர்ச்சறுக்குப் பலகைகளை வைத்திருந்தனர். உள்ளுர் ஆள் தான் அறுகம்பையிலிருக்கும் ‘உல்லாசப் பிரயாணிகள் வழிகாட்டி’ என்று கூறினான். அவுஸ்திரேலியர்கள் பெரிதாகப் புன்னகை புரிந்தனர். சூரியக்கதிர்களால் பழுப்புச் சிவப்பு நிறமாகியிருந்தனர். வியர்வையில் நனைந்திருந்தனர். ஒக்கந்தவுக்கு வந்து சேர்ந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தது போலக் காணப்பட்டனர். அவர்கள் வாடகை வண்டியிலிருந்து கீழே இறங்கி, நீர்ச்சறுக்குப் பலகைகளையும், பைகளையும் இறக்கினர். கைகளை நீட்டி மடக்கி, அங்குமிங்கும் பார்த்தனர். ஓர் அவுஸ்திரேலியர் ஜனநெரிசல் அதிகமென்று வழிகாட்டிக்குக் கூறினார். இன்னோர் அவுஸ்திரேலியர் அதை ஏற்றுக்கொள்வது போலத் தலையாட்டினார். இத்தனை பெரிய ஜனக்கூட்டத்தைத் தான் எதிர்பார்க்கவில்லையென்று கூறினார். மூன்றாவது அவுஸ்திரேலியர் நீர்ச்சறுக்குப் பலகை மற்றும் முதுகில் காவும் பை என்பவற்றை இறக்கி விட்டு எதுவும் புரியாமல் அங்குமிங்கும் பார்த்தார். முதலாவது அவுஸ்திரேலியர், ஜனக்கூட்டம் குறைவாக இருக்குமென்று கூறியதற்காக வழிகாட்டியைக் கடிந்துகொண்டார். வழிகாட்டி தான் இவ்வளவு பெரிய கூட்டத்தை எதிர்பார்க்கவில்லையென்றும், சாதாரண நாட்களில் அங்கு யாருமே வருவதில்லையென்றும் மன்னிப்புக் கேட்கும் தோரணையில், "உல்லாசப் பிரயாணிகள் வழிகாட்டிகளின் ஆங்கிலத்தில்" கூறினார். ஆரம்ப அதிர்ச்சியிலிருந்து விடுபட்டதும் அவுஸ்திரேலியர்கள் அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் மகிழ்ச்சியுடன் கடற்கரைக்குச் செல்லும் திசையை வழிகாட்டியிடமிருந்து அறிந்து கொண்டனர். சுப்பிரமணியம் தேநீர்க் கடையினுள் சென்றார். நான் எனது குறிப்புப் புத்தகத்துக்குத் திரும்பினேன்.
வெகுநேரம் செல்லுமுன்னரே அவுஸ்திரேலியர்களும், வழிகாட்டியும் திரும்பி வந்தனர். அவுஸ்திரேலியர்கள் இப்பொழுது சிரிக்கவில்லை. அதற்குப் பதிலாக வெறுப்புடன் முகத்தைச் சுளித்தனர். வழிகாட்டி அவர்களுடன் பேச முயன்றான். அவர்களுக்கு எதுவுமே கேட்கவில்லை. அவர்கள் அவசரமாக வண்டிக்குள் பொருட்களை மீண்டும் ஏற்றினர். உடனடியாகவே அந்த இடத்தை விட்டு அகன்றனர். காரணத்தை நான் அறிந்திருந்தேன்.
சிறிது நேரத்தின் பின்னர் சுப்பிரமணியம் மீண்டும் வந்து என்னோடு அமர்ந்து இந்த விடயம் குறித்துப் பேச்சுக் கொடுத்தார். கைநகங்களிலுள்ள கறுப்புநிற அழுக்கை, தீக்குச்சியைக் கடித்துத் தயாரித்த பற்குச்சியால் அகற்றியவாறே பேசினார். திருவிழாக் காலத்தில் உல்லாசப் பயணிகளை அழைத்து வந்தது வழிகாட்டியின் தவறு என்பதே அவரின் கருத்தாகவிருந்தது. உல்லாசப் பிரயாணிகள் வருவது கடற்கரையில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பதற்காகும். அவர்கள் நீச்சலடிக்கவும், நீர்ச்சறுக்கு விளைவாட்டுக்களில் ஈடுபடவும், வெயிலில் படுத்து கதகதப்பை அனுபவிக்கவுமே வருகின்றனர். யாத்திரிகர்கள் இங்கிருக்கையில்
11

Page 10
இந்த நடவடிக்கைகள் சாத்தியமில்லை. யாத்திரிகர் மடங்கள் அவர்கள் அனைவருக்கும் இடமளிக்கப் போதியவையல்ல என்பது போலவே, அவர்கள் அமைக்கும் மலசலகூடங்களும் அவர்கள் அனைவரின் தேவைகளுக்கும் போதாதவையாகும். நிர்வாகக்குழு அவற்றை அமைத்தது ஒரு நல்ல விடயமாகும். ஆயினும், இவ்வளவு பெரிய ஜனக்கூட்டத்துக்கு யாரும் வசதிகளை வழங்கி விடமுடியாது. மலசலம் குறித்த தேவைகள் இயற்கையானவைகி தள்ளிப்போட முடியாதவை. ஆகவே யாத்திரிகர்கள் காட்டையும், கடற்கரையையும் பயன்படுத்துகின்றனர். அவர்களைக் குற்றஞ்சொல்லவும் முடியாது. உல்லாசப்பயண வழிகாட்டிகளாகவும், உள்ளுர் விடயங்களில் நிபுணர்களாகவும் பாசாங்கு செய்யும், அறுகம்பையில் பிசங்கிப் பொழுதுபோக்கும் ஏமாற்றுப்பேர்வழிகள் இந்த விடயங்களை நன்கறிவர். ஆயினும் உல்லாசப் பயணிகளிடமிருந்து இவற்றை மறைக்கின்றனர். அவர்கள் ஏமாற்றமடைவார்களென்பதை நன்கு தெரிந்தபின்னரும் அவர்களை இங்கே அழைத்துவருகின்றனர். ஏமாற்றமடைந்த உல்லாசப் பயணிகள் தருவதாகக் கூறிய தொகையை வழிகாட்டிகளுக்குத் தராமல் விடக்கூடும். உண்மையான உடன்படிக்கை இருப்பது அங்கல்ல. உண்மையான உடன்படிக்கையிருப்பது வழிகாட்டிகளுக்கும், முச் சக்கர வாடகை வண்டியோட்டிகளுக்குமிடையிலாகும். இவையனைத்தும் மோசமானவையும், கடவுளுக்கு ஏற்க முடியாத விடயங்களுமாகும். ஆயினும், விந்தையாகவிருப்பினும், உல்லாசப் பயண வழிகாட்டிகளென்று அழைக்கப்படுவோரும் உயிர் வாழ வேண்டும். சுப்பிரமணியத்தின் பகுப்பாய்வு மிகவும் வலுவான ஒன்றாகத் தோன்றியது. ஒரு பாரிய உலகத்தில் மத நம்பிக்கையின் இருதலைப் பொறி நிலைகள் பல விந்தைகளை உள்ளடக்குகின்றன. ஒக்கந்த அழகும், அமைதியும் நிறைந்த ஓரிடமாகும். இந்த ஆறுதலளிக்கும் அழகமைதி உடலுக்கும், உள்ளத்துக்கும் அமைதியூட்டுவதாகும். இங்கிருட்பது தெய்வங்களின் சக்தி நிறைந்துள்ள ஓரிடத்தில் இருப்பதுபோன்ற ஒருணர்வை ஏற்படுத்தக்கூடியதாகும். கதிர்காமத்துக்குச் செல்லும் வழியில் இங்கு தங்கி இளைப்பாறும் முருக பக்தர்கள் ஒக்கந்தவில் முருகக் கடவுளின் சக்தியைக் கண்டுணர்ந்ததால் இங்கு அவருக்கு ஒர் ஆலயம் அமைத்தனர். காலப்போக்கில் ஒக்கந்த முருகன் தலம் இரவைக் கழிப்பதற்கும், பூஜைகள் செய்வதற்கும், பஜனைகள் பாடுவதற்கும் அங்கீகரிக்கப்பட்ட ஓரிடமாக மாறிவிட்டது.
சமீபகாலம் வரை, இந்த ஜனக்கூட்டங்கள் ஒக்கந்தவின் அமைதிக்கும், அழகுக்கும் பெரிய அச்சுறுத்தலாக விளங்கவில்லை. பாரம்பரியமாக, யாத்திரிகர்கள் தமது பொருட்களைச் சீலைப்பைகளில் அல்லது பிரம்பு, தென்னை மற்றும் வாழைநார்க் கூடைகளில் எடுத்துச் சென்றனர். அவர்கள் வீசியெறிந்த பொருட்கள் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் போஷணையாகியதோடு, ஒருசில வாரங்களில் இருந்த இடம் தெரியாமல் உக்கிப்போயின. இன்று இது முற்றாக வேறுபட்ட ஒரு
12

விடயமாகியுள்ளது. யாத்திரிகர்கள் தாம் முன்பு பொருட்களை வீசியெறிந்த அதேவழியில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் கொள்கலன்களை வீசியெறிகின்றனர். வேண்டுமென்று செய்யப்படாவிட்டாலும் இது புனிதமான சூழலை மாசுபடுத்துகின்றது. திருவிழாக் காலம் முடிவடைகையில் ஒக்கந்தவில், பொத்துவிலில் நிகழ்வதுபோன்று பிளாஸ்டிக் குப்பைகூளங்கள் மலையாக நிறைந்திருப்பதோடு, கடற்காற்றில் அள்ளுண்டு ஒவ்வொரு மரத்திலும், பற்றைகளிலும் தொங்குகின்றன. எஞ்சிய பொருட்களின் இந்த அவலட்சணம் ஒக்கந்தவின் அழகைச் சீரழிக்கின்றது. ஒக்கந்தவின் அமைதியான அழகுச் சூழலால் கவரப்பட்ட யாத்திரிகர்கள் இன்று அதைத் தாமே அழித்துக் கொண்டிருக்கின்றனர். முன்பிருந்ததைப் போலன்றி நவீனத்துவம் வர்த்தகக் கலாசார வடிவில் யாத்திரிகர்களுக்கும், கடவுளுக்குமிடையில் இணக்குவிப்பாளராக உள்ளது. நவீன வசதிகளும், தொழில்நுட்பச் சாதனங்களும், மலிவான, இலவச, வாய்ப்பான மற்றும் அழிக்க முடியாத பொதிசெய்யும் பொருட்களும் இலங்கையின் பாரம்பரிய, நாகரிகமற்ற மாற்று வழிகளை இல்லாது செய்துவிட்டன. எவ்வாறாயினும், விரயப் பொருட்களை வீசியெறியும் பாரம்பரியத்தினிடத்தை உயிரியல் ரீதியில் உக்க முடியாத விரயப் பொருட்களைக் கையாளும் மாற்றுவழி, வரன்முறை ஒழுங்கொன்று எடுக்காத நிலையே உள்ளது. இதற்குப் பதிலாக, விரயப் பொருளகற்றும் அதே பழைய மரபே தொடர்கின்றது. இது ஒக்கந்தவின் அமைதியான அழகைக் கெடுக்கும் பாரதூரமான சூழல் சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினை ஒக்கந்தவுக்கு அல்லது கதிர்காமத்துக்கான பாதயாத்திரைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. இது இன்று தேசிய வாழ்வில் அன்றாடப் பிரச்சினையாகும்.
யாத்திரிகர்கள் நிரம்பிய பெரிய பஸ் வண்டியொன்று பாரிய தூசி மண்டலத்தைக் கிளப்பிக் கொண்டும், அலையலையாகக் கரும்நரை நிற நச்சுப் புகையைக் கக்கியவாறும் வந்து சேர்ந்தது. இது அனைத்தும் அங்கு நின்ற ஆட்கள்மீதும், மரங்களின் கீழிருந்த பிளாஸ்டிக் விரிப்புகள் மீதும், அடுப்புகளில் திறந்த பானைகளில் கொதித்துக் கொண்டிருந்த உணவின் மீதும் படிவுகளாகத் தங்கியது. இது ஒக்கந்தவின் புனிதப் பிரதேசத்துக்கும், பொருத்தமற்ற வகையில் உள்ளுர் மரபுடன் கலப்புறும் நவீன கலாசார அம்சங்கள் குறித்த வேறொரு இருதலைப்பொறி நிலைக்கும் இடையிலான கலாசார மோதலாகவே எனக்குத் தோன்றியது.
நோயுற்றோர், முதியோர் மற்றும் நடந்து செல்லும் பாரம்பரிய யாத்திரைக்கு நேரமற்றோரான பல ஏதிலிப் பக்தர்களுக்கு பஸ்களும், வான்களும் மலிவான போக்குவரத்து வசதிகளை வழங்குகின்றன. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய நிர்வாகப் பதிவேடுகள், பலர் யாலவினுடாகக் கதிர்காமத்துக்குச் சென்றதாகத் தெரிவிக்கின்றன. ஆயினும் மலிவான தானியங்கி
13

Page 11
வண்டிகள், பிரத்தியேகமாக மலிவான வெகுஜனப் போக்குவரத்துச் சேவையை வழங்கிய பஸ்கள் மூலம் ஒக்கந்த வழியாகக் கதிர்காமம் சென்றோரின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இது ஒரு சிறிய ஒழுக்காகும். நவீனத்துவ காலத்துக்கு முந்திய யாத்திரைகள் தைரியமிக்க பக்தர்கள் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டவையாகும். இவர்கள் நன்கு அறியப்படாத, வனவிலங்குகள் நிறைந்த பாதைகளில் நடந்து சென்றனர். இவர்கள் தள்ளாமை, கொலரா, மலேரியா போன்ற நோய்களால் வழியில் இறந்து, தாம் கைவிடும் இலைகள் மற்றும் கந்தல் துணிகளைப் போன்றே உக்கி மறைந்த சம்பவங்களும் உண்டு. நவீனத்துவத்துக்கு முந்திய சகாப்தத்தில் ஒக்கந்தவுக்கு வந்து சேர்ந்தவர்கள் ஏற்கெனவே களைத்து, பசியோடும், வியாதியுற்ற நிலையிலும் வந்து சேர்ந்தனர். எத்தனை பேர் இந்த நடைப்பயணத்தில் உயிர் பிழைத்து, கதிர்காமத்தைச் சென்றடைந்து, முருகனை அருகிலிருந்து தரிசித்து, வீடு திரும்பினரென்பது அறியப்படாத ஒன்றாகும். இன்று ஆயிரக்கணக்கானேர் ஒக்கந்தவுக்கு வருகின்றனர். புராதன பாரம்பரியத்துக்கு ஏற்ற வகையிலான தீர்த்தத்தின் பின்னர் இங்கிருந்து ஆரோக்கியமான, பலமிக்க யாத்திரிகர்களாகக் கால்நடையாகப் புறப்படுகின்றனர். அரசாங்க உத்தியோகத்தர்கள் இவர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்கின்றனர். ஆயினும் மாசுபடுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மலிவாக ஒடும் பஸ்களிலேயே மலிவான பஸ் கட்டணங்கள் சாத்தியமாகும். இந்த பஸ் சேவை, ஒக்கந்தவின் இலகுவில் பாதிப்புறக்கூடிய அழகை மாசுபடுத்தி, சீரழிக்கின்றது. மாசு குறைவான தொழில்நுட்பங்கள் உயர்வான ஆகுசெலவுகளைக் கொண்டவையென்பதால், யாத்திரிகர்களுக்கு அவை கட்டுபடியாகமாட்டா.
மீண்டும், இது ஒக்கந்தவுக்கு மட்டுமேயுரிய ஒரு பிரச்சினையல்ல. இது ஒரு தேசியப் பிரச்சினையாகும். நாடு முழுவதும் பலவிதமான தானியங்கி வண்டிகளிலிருந்து வெளியேறும் கட்டுப்பாடற்ற புகை பெருந்தெருக்களிலும், அருகிலுள்ள பிரதேசங்களிலும் முகில்கள் போல் நிறைந்து, ஒரு கறுப்பு நிறப் பசையான படிவை எங்கும் விட்டுச் செல்லுகின்றது.
இந்த இடத்தின் ஒலிகள் சத்தம்?
ஒரு சாதாரணமான தினத்தில் ஒக்கந்த ஓர் அமைதியான இடமாகும். கடலின் இரைச்சல் மற்றும் பறவைகளின் ஒலியைத் தவிர, ஒக்கந்தவில் வேறு சந்தடி எதுவுமில்லை. அதன் அமைதி அதன் மென்மையான ஆகர்ஷத்தின் ஒரு பகுதியாகும். சத்தம் என்பது பூஜை வேளைகளிலும், மந்திரங்கள் உச்சாடனம் செய்யும்போதும், ஒரு சிறிய மணி ஒலிக்கும் போதும் தற்காலிகமாக ஏற்படுவதாகும்.
14

சுப்பிரமணியத்தின் ட்ரான்சிஸ்டர் வானொலி மிகவும் சிறியது; அதன் சத்தம் பலவீனமானதாகையில் அது தேநீர்க் கடைக்குள் மாத்திரமே கேட்கும்.
திருவிழாக் காலத்தில், ஒக்கந்தவில் ஒலிபெருக்கிச் சத்தங்கள் காதைப் பிளக்கும். இவை இரண்டு வகையானவை: கோயில் நிர்வாகக் குழுவின் அறிவித்தல்கள் மற்றும் பக்திக் கீதங்கள் - ஒலிப்பதிவு செய்யப்பட்ட பஜனைகள், உச்சாடனங்கள், மேளவாத்தியம், கொம்பூதுதல் மற்றும் திருவிழாக்காலச் சடங்குகள் குறித்த இசைகள். எவருமே இந்த ஒலிகளிலிருந்து தப்பிச் செல்ல முடியாது. சில யாத்திரிகள் கூட்டங்கள் கோயில் கண்ணுக்குத் தெரியாத தொலைவில் முகாமிடுகின்றனர். கோயிலிருப்பது இந்த ஒலிகள் மூலமே அவர்களுக்கு உணர்த்தப்படுகின்றது. அவற்றுக்கு எவருமே கவனஞ் செலுத்துவதில்லையெனத் தோன்றினாலும், கோயில் இருப்பதை ஒவ்வொருவரும் அறிவர். ஒக்கந்தவில் இந்த ஒலிகள் செய்வது என்ன?
வெளித்தோற்றத்தைப் பொறுத்தளவில் எனது சொந்தக் கண்ணோட்டத்திலும், ஓர் உயிர் உளவியல் கண்ணோட்டத்திலும், இந்த இரைச்சல் எந்தக் கருமத்தையும் ஆற்றுவதில்லையென்றே தோன்றியது. இந்த 'இரைச்சல் எதுவுமில்லாதிருப்பது யாத்திரிகர்களுக்கு நன்மையல்லவா? களைத்த உடல்களுக்கு ஓய்வு அவசியம். பல யாத்திரிகர்களின் மனங்களில் தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிரச்சினைகள் நிறைந்துள்ளது. இவற்றுக்கு முடிவு காண்பதற்கே இந்த யாத்திரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஓர் அமைதியான சூழல் களைத்த உடல்களுக்கும், மனங்களுக்கும் ஓர் அருமருந்தாக அமையுமல்லவா? ஒக்கந்த அமைதியான இடமாகவிருப்பின் இந்த நோக்கங்கள் மேலும் சிறந்த முறையில் நிறைவேறுமல்லவா? இக்கண்ணோட்டத்தில், பஜனைகளும், உச்சாடனங்களும், மேளவாத்தியங்களும், கொம்பூதலும் காது பிளக்கும் வகையில் அமைந்தால் அவற்றால் எந்தப் பயனுமில்லை.
விடயங்களைக் காட்டுபவை
எவ்வாறாயினும், இந்த ஒலிகள் அங்கு எக்காலமும் இருந்து வருபவையாகும். உயிரியல் மற்றும் உளவியல் வாதவிடயங்கள் குறித்து ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நான் ஏனைய காரணங்களைத் தேடினேன். சமூகவியல் அர்த்தத்தில் இந்த ஒலிகள் ஆற்றும் கருமங்கள் இருந்தால், அவை எவை? இந்த ஜனங்கள் ஏன் இதைக் கேட்டுச் சகித்துக் கொள்ளுகின்றனர்?
இந்த ஒலிகள் வெறுமனே கேள்விப் புலன்களுக்கு உணர்வூட்டுபவை மாத்திரமல்ல, அவை புனிதமான ஒலிகளாகும். அவை முருகக் கடவுளையும், அவரின் ஆலயத்தையும் பிரதிநிதித்துவம் செய்ததோடு, தொடர்ச்சியாக அவரின்
15

Page 12
பிரசன்னத்தை நினைவூட்டுபவையும், அவரின் முன்னிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று யாத்திரிகர்களுக்கு அறிவுறுத்துபவையுமாகும். பஜனை வரிகள் எப்பொழுதும் முருகனின் ஏனைய பெயர்களைக் கூறுபவையாகும் - கந்தசாமி, ஆறுமுகன், குமாரசுவாமி, சண்முகன் போன்றவை. அவரின் உறவினர்களின் பெயர்களையும் அவை நினைவூட்டுகின்றன - சிவன், பார்வதி, கணேசன், திருமால், தெய்வாணையம்மன் மற்றும் வள்ளியம்மன் போன்றவை. பாடல்கள் சூரபத்மனுடன் செய்த போரில் முருகனின் பல்வேறு வீரச் செயல்களையும், நல்லவர்கள் மீது அவர் பொழியும் கருணை மற்றும் தியோர் மீது காட்டும் சீற்றம் என்பவற்றைக் கூறுகின்றன. கோவிலின் புனித உணர்வை மீண்டும் உருவாக்கும் மேளங்கள், கொம்புகள், யாத்திரிகர்களின் நன்கொடைகளை அறிவிக்கும் ஒலிபெருக்கிகள் என்பவை அனைத்தும் இந்த இடத்தின் அழகையும், அமைதியையும் தீவிர மத உணர்வையும் கிளறும் துடிப்பான மனநிலையாகவும், மரியாதை கலந்த பயவுணர்வாகவும் மற்றும் யாத்திரிகர்களின் பாரிய பொறுப்புணர்வாகவும் நிலைமாற்றமடைகின்றன. இந்த ஒலிகள் அனைத்தும் தனிநபர்களின் மனச்சாட்சியுடன் பேசுகின்றன. முருகனின் புனிதமான பிரசன்னம் குறித்துச் சிந்திக்குமாறும் அவர்களைத் தூண்டுகின்றன.
கடவுளும், உலகமும்
இச்சூழமைவுகளில் ஒக்கந்தவிலிருந்த வேறுபட்ட குழுக்களும், தனிநபர்களும் ஒரு தனி ஜனசமூகத்தை ஆக்குவது போலத் தோன்றியது. ஆயினும், இச்சமூகம் அன்றாட வாழ்வில் சமூகங்களின் பண்பை விட, தனக்கென்று அமைந்த சிறப்பான குணாம்சங்களைக் காட்டியது. இச்சூழலில் அன்றாடத் தேவைகள், பொறுப்புகள் குறித்த சமூக மற்றும் தனிநபர் கரிசனைகள் தோன்றவில்லை. இத்தகைய விடயங்களை யாத்திரிகர்கள் வீடுகளில் வைத்துவிட்டே பயணத்தை ஆரம்பித்தனர்.
நிச்சயமாகவே, அனேக யாத்திரிகர்கள் ஒரு பாரத்தை (வேண்டுதலை) நிறைவேற்றவே கதிர்காமம் செல்கின்றனர். இந்த நேர்த்தி அன்றாட வீட்டு வாழ்க்கை விடயங்கள் சம்பந்தமாகவே அமைந்திருக்கும் - வியாபாரத்தில் வெற்றி, சட்டப் பிணக்குகளில் வெற்றி, பரீட்சையில் வெற்றி, நோயிலிருந்து குணமடைதல், பிள்ளைப்பேறு, தீய கிரகத் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு மற்றும் இவை போன்ற விடயங்கள். அவ்வாறு நோக்கினால் அவர்கள் வீட்டை விட்டு அகலவில்லையென்றே கூறலாம். எவ்வாறாயினும், உடல்ரீதியாக அவர்கள் புறப்பட்டனர். பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்திய அன்றாட வீட்டுக் கருமப்பாடுகளைப் பிரிந்து வந்தனர். இப்பொழுது, ஒக்கந்தவில் முருகனின் சக்தி பிரவகிக்கும் சூழலில் ஆட்கொள்ளப்பட்ட மனோநிலையில் தமது பிரச்சினைகள்
16

குறித்துச் சிந்திக்கின்றனர். ஒக்கந்தவில் போட்டியாளர்கள், சூழல்கள், குடும்ப அங்கத்தினர் மற்றும் அயலவர் என்ற சுமைகள் சம்பந்தமாகப் பெரிய சமூகம் அவர்களை முறைக்கவில்லை. அதற்குப் பதிலாக, தருணத்துக்கேற்ற விழுமியப்பண்பு, அதே மனோநிலை கொண்ட மனிதர்களினாலான ஒரு மாற்றுச் சமூகமாகியது. இவர்கள் பிரிவினை, போட்டி மற்றும் பகைமை என்பவற்றுக்குப் பதிலாக ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவு என்பவற்றை வலியுறுத்தினர்.
இங்கு நான் ஒரு விடயத்தை வலியுறுத்திக் கூறவேண்டும். சிங்களவர்கள் ஓரிருவரைத் தவிர, ஒக்கந்தவில் காணப்பட்ட ஏனையோர் அனைவருமே கிழக்கு மாகாணத் தமிழர்களாவர். நடைமுறை விடயங்களில் இக்கூட்டம் இனத்துவரீதியில் தமிழர்களாகவும், கலாசாரரீதியில் இந்துக்களாகவும் விளங்கியது. பல சிங்களவர்கள் பாணமையிலிருந்து தமது தமிழ்க் குடும்ப உறவினர்களுடன் வந்திருந்தனர். ஆயினும் இச் சிங்களவர்கள் தமிழ் இந்து சமூகத்தைத் தழுவி ஏற்றுக்கொண்டோராவர். தமிழர்களும் ஓர் ஓரினக் கூட்டமாக இருக்கவில்லை. தோற்றத்தில், கோவில் உத்தியோகத்தர்களைத் தவிர, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தோராகவும், ஆயினும் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தோராகவுமிருந்தனர். முகாமிடும் பாங்கிலிருந்து ஜாதி முன்னுரிமைகள் தென்பட்டன. ஆயினும் அவர்கள் ஒரே மண்டபத்தில் அல்லது ஒரே மரத்தின் கீழ் தங்குமாறு சூழ்நிலைகள் பலவந்தப்படுத்திய வேளைகளில் இதை அவர்கள் கடுமையாகக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் ஜாதி அடையாளங்கள் வெளியிடப்பட்ட போதும், மற்றும் வெறுமனே வசிப்பிடம் மற்றும் ஜீவனோபாயத் தொழில் என்பவை குறித்து விசாரித்து, ஜாதி அடையாளங்களை அறிந்த போதும் தூர விலகியிருந்தனர். ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் அருகருகே தங்க விரும்புகின்றனர். ஆகவே யாத்திரிகர் கூட்டங்கள் ஒரே ஜாதி அந்தஸ்தைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களை உள்ளடக்கியிருந்தன. அவர்கள் இந்தக் குழு அடையாளங்களைப் பேணிப் பாதுகாத்தனர். அவர்கள் முருக பக்தர்கள் என்ற சமூகத்தை ஆக்கிய போது தமது வீட்டு வாழ்க்கை சம்பந்தமான சமூக அடையாளங்களைத் துறந்துவிடவில்லை.
அன்றாட சமூக வேறுபாடுகளைப் பேணிய போதிலும் இந்த விழுமியம் அன்றாட வாழ்வின் சமூகத் தேவைகளினால் கட்டுப்படுத்தப்படவில்லை. கடவுளின் வரன்முறையான கட்டளைகளே இவற்றைக் கட்டுப்படுத்துகின்றன. கடவுள் தமது பக்தர்களிடையே சமத்துவத்தைக் கோருகின்றார். பாதயாத்திரையின் பாரம்பரியம் புனிதமான கட்டளைகளின் சட்டகத்தினுள் நடத்தை குறித்த நியமங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒக்கந்தவில் காணப்படும் விழுமிய நடத்தையில் சமூக விடயங்கள் சம்பந்தமான தனிநபர் விருப்புகள் கிடையா. அது தனிநபர் விருப்புகளை அடக்கும் கூட்டுப்பொறுப்புகளை வலியுறுத்தியது. மீண்டும், இதன் கருத்து
17

Page 13
தனிநபர்களான யாத்திரிகர்கள் அங்கு வந்து சேர்ந்தவுடன் திடீரென்று தமது மனித குணங்களை விட்டு விடுகிறார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. ஒவ்வொருவரும், முதிர்ச்சியடைந்தவர்களாகவாவது வந்ததற்கான தமது சொந்தக் காரணங்களைக் கொண்டிருந்தனர். ஆயினும் கூட்டம் இதைப்பற்றி அறிந்திருக்கவுமில்லை, அறிய விரும்பவுமில்லை. அனைவருமே அன்றாட வாழ்வில் அவசியப்படாத ஒரு மரியாதையை ஒருவருக்கொருவர் காட்டுமாறு ஒரு சக்தி கட்டளையிட்டதை உணர்ந்தனர். இந்த உணர்வு ஜனநெருக்கடி நிறைந்த ஓரிடத்தில் வசிக்கும் கடினமான சூழ்நிலைகளில் கூட தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களைத் தூண்டியது. யாத்திரிகர்கள் உலகத்தின் ஒலிகள். யாத்திரிகர்களில் தூண்டிய உணர்வும் இதுவேயாகும்."
வெறும் தேநீர்க்குவளையில் புயல்
பின்மாலைப்பொழுதில் வெப்பம் சிறிது தணிந்தது. யாத்திரிகர்கள் குளித்து, அழகான ஆடைகளை அணிந்து கொண்டு குழுக்களாக நடந்து திரிந்தார்கள். ஏனையோரைப் போய்ப் பார்த்தார்கள், ஓய்வெடுத்தார்கள். இராஜரத்தினம் அவனை விட வயதில் குறைந்த ஒருவனுடன் முறைப்பாடொன்றைக் கொண்டுவந்தான். வயதுகுறைந்தவனுக்குப் பெயர் சின்னத்துரை என்பதாகும். அவன் யால சரணாலயத்தை எட்டுத் தடவைகள் கடந்து கதிர்காமத்துக்குப் போயிருக்கிறான். அவனுக்கு வழி நன்றாகத் தெரியும். அவனுக்குச் சமைக்கவும் தெரியும். நாளொன்றுக்கு நூறு ரூபா கூலி கொடுத்தால், எங்களுடன் வருவதற்குச் சம்மதம் தெரிவித்தான். அவன் குணரத்தினம் பொத்துவிலிலிருந்து எமக்கு அனுப்பிய பொருட்களையும் சுமந்து வருவதாகவும் கூறினான். விரைவில் இராஜரத்தினமும் அவனும் சேர்ந்து பொருட்களை வசதியான பொதிகளாக மீண்டும் கட்டத் தொடங்கினர்.
பொருட்களை வகை பிரிக்கும்போது வேலுப்பிள்ளையின் வேலைகளைச் சகிக்க முடியாதிருப்பதாக இராஜரத்தினம் சத்தமிட்டான். இராஜரத்தினம் தனது உறவினர்களோடு இருந்த வேளையில் அக்கரைப்பற்றில் செய்தது போன்று வேலுப்பிள்ளை அவனிடம் போய் அவனுக்குக் கட்டளைகள் பிறப்பித்திருக்கிறான். விசேடமாக மற்றவர்கள் அருகிலிருக்கும் போது வேலுப்பிள்ளையின் இந்த முதலாளி மனப்பாங்கு அவனுக்குப் பிடிக்கவில்லை. இராஜரத்தினத்தைவிடத் தான் உயர்ந்தவனென்று வேலுப்பிள்ளை காட்டிக்கொள்வது அவமானம் ஏற்படுத்துவதாக இருந்தது. இந்தமுறை வேலுப்பிள்ளை சமையல்காரனைத் தேடிக் கொண்டிருந்த போது இராஜரத்தினத்தைப் பொதிகளைக் கட்டுமாறு உத்தரவிட்டிருந்தான். இராஜரத்தினம் இதற்கு மறுத்துவிட்டதால் வேலுப்பிள்ளைக்குக் கோபம் ஏற்பட்டு
18

அவனை அவனது உறவினர்கள் முன்னிலையில் ஏசிவிட்டுப் போய்விட்டான். வேலுப்பிள்ளை முறையற்ற விதத்தில் ஒரு மிருகத்தைப் போல நடந்து கொண்டதாக இராஜரத்தினம் எண்ணினான். தனக்கு வேறொருவர் கூலி வழங்கும்போது இராஜரத்தினத்தின் உத்தரவுகளை ஏன் நிறைவேற்ற வேண்டும்? இராஜரத்தினம் இந்த யாத்திரையில் வரவேண்டுமென்று விரும்பியதும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததும் முருகன் ஆவார். வேலுப்பிள்ளை வெறுமனே ஒரு கருவியாவார், அதாவது ஒரு முடிவுக்கான ஒரு வழிவகை. நானும் இந்த முடிவுக்கான ஒரு வழிவகையே. ஆயினும் நான் விசேடமானவன். முருகன் இராஜரத்தினம் என்னுடன் போகவேண்டுமென்று விரும்பினார். இதனால்தான் மட்டக்களப்பிலுள்ள கோவிலில் சுவாமி காவுவதற்கு எங்கள் இருவரையும் தெரிவு செய்தார். அதுவே முருகனின் விருட்பத்தை நிரூபிப்பதாக அமைந்தது. இந்த வேலுப்பிள்ளை தானே இதையெல்லாம் ஒழுங்கு செய்வதாக வீண் பெருமையாக எண்ணிக்கொள்ளுகின்றான். வேறொருவர் யாத்திரையை ஒழுங்குபடுத்துகையில், அத்தோடு மேலும் வேறொரு நபர் அதற்காகப் பணம் கொடுக்கையில், அவன் தனக்கு உத்தரவிடுவதற்கு உரிமையிருப்பதாகக் கூறுகிறான்.
என்னுடைய குழு உடைந்து கொண்டிருந்தது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. வேலுப்பிள்ளைக்கும் இராஜரத்தினத்துக்கும் ஒத்துவரவில்லை. வேலுப்பிள்ளையின் திடீர்க் கோபங்களை என்னாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அக்கரைப்பற்றுக்கு வரும்வரை அவன் மிகவும் நல்லமுறையில் நடந்து கொண்டான். அங்குதான் அவனுக்குப் பிரச்சினை ஏற்பட்டது. ஒருவேளை அவன் நன்கு அறிந்த பட்டினமாகிய அக்கரைப்பற்றுக்குத் திரும்பி வந்தது அவனுக்குத் தைரியமளித்திருக்கவேண்டும். இதனால்தான் அவன் அக்கரைப்பற்று வாசியான் இராஜரத்தினத்துக்குத் தனது உயர்வான நிலைமையைக் காட்டுவதற்காக அவனைக் குறைவாகப் பேசியிருக்க வேண்டும். ஒருவேளை அவன் மட்டக்களப்புக் கோயிலில் இராஜரத்தினத்தின் நல்லதிருஷ்டம் காரணமாக அவர் மீது பொறாமை கொண்டிருக்கக்கூடும். அதற்குப் பிறகு இராஜரத்தினத்தில் ஏற்பட்ட மற்றவர்களை அலட்சியம் செய்யும் மனப்பான்மை ஒருவேளை அவனுக்குப் பொறுக்க முடியாமல் இருந்திருக்கலாம். அனைத்துமடங்கலாக, அக்கரைப்பற்றை விட்டுப் புறப்பட்ட பின்னர் வேலுப்பிள்ளை மகிழ்ச்சியற்றவனாகக் காணப்பட்டான். இது பாணமையிலும் வெளிப்பட்டது. திடீரென்று அவன் எங்களோடு தொடர்பின்றி ஒரு வெளியாள் போல் நடந்து கொள்ளத் தொடங்கினான். நாங்கள் பாணமையைவிட்டுப் புறப்பட்டபோது அவன் எங்களுடன் ஒருவித தொடர்புமில்லாதவன் போலத் தனியாக நடந்தான். பின்னர் அமைதியடைந்து மீண்டும் எங்களுடன் சேர்ந்து கொண்டான். இவ்வாறு திடீர் திடீரென்று மாறும் நடத்தைக்கான காரணம் என்னவென்று இராஜரத்தினத்துக்கும் புரியவில்லை, எனக்கும் புரியவில்லை. பல சந்தர்ப்பங்களில்
19

Page 14
வேலுப்பிள்ளை இராஜரத்தினத்தின்மீது தனக்கு அதிகாரம் உள்ளதென்று கூறுவது சம்பந்தமாக அவர்கள் இருவரும் வாக்குவாதப்படத் தொடங்கிய வேளைகளில் நான் தலையிட்டிருக்கிறேன். இராஜரத்தினத்துடன் கடுமையாகப் பேசவேண்டாமென்று பல தடவைகள் நான் அறிவுரை கூறியிருக்கின்றேன். ஒருவேளை என்னோடு அவனுடைய உறவு மோசமடைந்ததற்கு இதுவே காரணமாக இருக்கக்கூடும்.
ஒக்கந்தவில் வேலுப்பிள்ளை இரண்டு நாட்கள் தங்கி ஓய்வெடுத்து எட்டு அல்லது பத்து நாட்களில் யால சரணாலயத்தைக் கடந்து பதினோராம் நாள் நாம் கதிர்காமத்துக்குப் போய்ச்சேர வேண்டுமென்று விரும்பினான். என்னால் இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் இயன்றளவு விரைவில் சரணாலயத்தைக் கடந்து, கதிர்காமத்தில் ஒருசில நாட்கள் இளைப்பாறி, அவர்களை அனுப்பிவிட்டு, ஒரு வாரமளவில் வெளிக்கள ஆய்வை மேற்கொள்ள எண்ணியிருந்தேன். அண்ணளவாக நாளொன்றுக்கு ஐந்து கிலோ மீற்றர் என்று மெதுவாகப் போவது என்னுடைய நோக்கத்தை நிறைவேற்றமாட்டாது. என்னுடைய திட்டம் ஐந்து நாட்களில் சரணாலயத்தைக் கடக்கும் போது கடத்தல் பாங்குகள் சம்பந்தமான வெளிக்கள அவதானிப்புகளை மேற்கொண்டு, அவற்றை விளங்கிக்கொண்டு, மற்றும் தனிக் கலாசார சமூக நடத்தைப் பாங்குகளை அவதானிப்பதுமாகும். இதன்மூலம் பல்கலாசாரப் பின்னணியைக் கொண்ட கதிர்காமத்தில் கூடுதல் காலத்தைச் செலவிட முடியும். இயன்றளவு ஆய்வைச் செய்து முடித்துவிட்டு, எனது லீவு முடிவடைய முன்னர் பேராதனைக்குத் திரும்பவேண்டியிருந்தது. நாம் கடினமாகப் பணியாற்றினால் 3 நாட்களிலும், ஆறுதலாகச் சென்றால் 4 நாட்களிலும் யாலவைக் கடந்துவிடலாமென்று சின்னத்துரை கூறினான். இவ்வாறாக, வேலுப்பிள்ளையின் திட்டத்துக்கு இடமளிக்கும் நிலை இருக்கவில்லை. தான் பாதயாத்திரை சம்பந்தமாகப் பெரும் அறிவுள்ளவனென்று கூறிக்கொண்டதால் குழுவின் தலைவராக இருப்பதற்கு முயற்சிசெய்துகொண்டிருந்த வேலுப்பிள்ளைக்கு இது பிடிக்கவில்லை.
வேலுப்பிள்ளையின் கால்களும் மிகவும் மோசமான நிலையிலிருந்ததால் விடயங்கள் மேலும் கடினமாயின. அவன் குதிக்காலில் கொப்புளங்கள் மற்றும் தசைநார்ப்பிடிப்புகளால் அவதியுற்றுக் கொண்டிருந்தான். அவன் ஒக்கந்தவில் ஒருசில நாட்கள் தங்கிவிட்டு, கதிர்காமத்தில் என்னுடன் வந்து சேர்ந்து கொள்வதாகக் கூறினான். இந்த யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இராஜரத்தினம் உடனடியாகவே சம்மதம் தெரிவித்தான். இராஜரத்தினத்தின் குடும்பத்தைச் சேர்ந்த குழுவினர் ஒக்கந்தவில் மேலும் சில தினங்கள் தங்கியிருக்க எண்ணியிருப்பதால் வேலுப்பிள்ளை அவர்களுடன் வரலாமென்று கூறினான். வேலுப்பிள்ளைக்கு இந்த ஏற்பாடு மிகவும் பிடித்திருந்தது. அவன் தனக்கு சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் தேவையான அனைத்தையும் சுப்பிரமணியத்திடமிருந்து பெற்றுக் கொள்ளலாமென்று நான் கூறினேன்.
20

அவன் போய்ச் சிறிது நேரத்தின் பின்னர் சிவம் நொண்டிக் கொண்டு வந்தான் வரட்சிக் காலத்தில் ஒரு வாழையிலையைப் போல அவன் காட்சியளித்தான் அவனும் தசைநார்ப் பிடிப்புகளால் அவதியுற்றுக் கொண்டிருந்தான். சிவம் பருத்த உடலைக்கொண்டவன். அவனுடைய வயதுக்கு உடற்பாரம் மிகவும் அதிகமாகவிருந்தது. தான் ஒருசில நாட்கள் ஒக்கந்தவில் தங்கிவிட்டுக் கதிர்காமத்தில் என்னுடன் வந்து இணைந்து கொள்ள முடியுமா என்று கேட்டான். முழங்கால்களுக்கு ஒய்வு கொடுக்க வேண்டுமென்று சொன்னான். சிவம் என்மீது ஒரு சுமையாக இருப்பதாக மன்னிப்புக் கோரினான். அவன் அதுவரை எனக்குச் செய்த சகல உதவிகளுக்கும் நான் நன்றி தெரிவித்தேன். சிவமும், வேலுப்பிள்ளையும் ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டால் மிகவும் நல்லது. ஆயினும் சிவத்துக்கு வேலுப்பிள்ளையைப் பிடிக்கவில்லை. சிவம் ஒழுங்கான, அமைதியாகப் பேசும் ஓர் இளைஞனாவான். சகல சந்தர்ப்பங்களிலும் முறையாக நடந்து கொள்ளத் தெரிந்தவன். இந்தப் பயணம் முழுவதும் வேலுப்பிள்ளை இதற்கு எதிரான தன்மையையே வெளிப்படுத்தினான். அவன் சிவத்தின்மீது உறவுமுறைக்காரனைப் போன்று அதிகாரம் செலுத்தவும் அவனுக்குக் கட்டளையிடவுமே முயன்றான். சிவம் ஒரு நல்ல மருமகனைப் போல அவன் சொன்னதைச் செய்வான். ஆயினும் வேலுப்பிள்ளை அவனை ஒரு சிறு பையனைப்போலவே நடத்துவான். சிவத்தால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. மரியாதையாக விடயங்களைக் கூறுவதையே அவன் விரும்பினான். சத்தம் போடுவதும், உத்தரவிடுவதும் அவனுக்குப் பிடிக்காது. ஆயினும் அவன் வேலுப்பிள்ளையுடன் தங்கியிருக்கச் சம்மதித்தான்.
எமக்குள் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை என்னால் ஊகிக்கத்தான் முடிந்தது. இந்தப் பயணத்துக்கு நிதி வழங்குபவர் என்ற முறையில் மற்றவர்களைவிட எனக்குக் கூடுதலான அதிகாரம் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தமிழ்த் தனிக் கலாசாரத்தில் ஒரு சிங்களவராக இருப்பதும், ஒப்பீட்டுரீதியில் நல்ல முறையில் கல்வி கற்ற பல்கலைக்கழக ஆசிரியர் என்ற வகையிலும் எனக்கு ஒர் அனுகூலம் இருந்தது. அது விடயங்களை எனக்கு அனுகூலமாக ஒழுங்கு செய்வதற்கு உதவியது. இருபது வருடகால இனத்துவ யுத்தம் இலங்கையிலுள்ள சகல இனத்துவ மற்றும் கலாசாரக் குழுக்களுக்கும் நேருக்கு நேரான சமூக உறவாடல்களில் ஒருவருக்கொருவர் இயன்றளவு மரியாதையாகப் பேசவேண்டுமென்ற விடயத்தைப் போதித்திருந்தது. வேலுப்பிள்ளை என்னுடன் மரியாதைக் குறைவாகப் பேசிய ஒரு சில சந்தர்ப்பங்களில் இராஜரத்தினமும், சிவமும் என்னுடைய பக்கத்தை எடுத்து, வேலுப்பிள்ளை தனது நடத்தைக்காக மனம்வருந்துமாறு செய்தனர். நானே இந்தக் குழுவில் வயதில் மூத்தவனும் ஆவேன். வேலுப்பிள்ளையும், இராஜரத்தினமும் ஐம்பது
21

Page 15
வயதைத் தாண்டியபோதிலும், அவர்கள் இன்னமும் என்னைவிட வயதில் குறைந்தவர்களாவர். தெற்காசிய கலாசார நியமங்கள் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை காட்டவேண்டுமென்று கூறுவதால், அதுவும் எனக்கோர் அனுகூலமாக அமைந்தது. ஆயினும் வேலுப்பிள்ளைக்குச் சிவத்தின்மேல் இருந்த செல்வாக்கு தவிர அத்தகைய அனுகூலங்கள் எதுவும் இருக்கவில்லை. சிவத்தின் கண்ணோட்டத்தில் இதையும் அவன் துஷபிரயோகம் செய்தான். அவன் இராஜரத்தினத்தைத் தேடிக்கொண்டு வந்தாலும் அவனுக்குப் பணம் வழங்கியதும், இராஜரத்தினத்தின் பாதயாத்திரைக்கு ஏற்பாடு செய்ததும் நானே. இராஜரத்தினத்தைப் பொறுத்த வரையில் வேலுப்பிள்ளை நான் கூலிக்குப் பிடித்த இன்னுமொரு நபர் ஆவான். தான் என்ன செய்யவேண்டுமென்று சொல்வதற்கு அவனுக்கு அதிகாரம் இல்லை. இராஜரத்தினம் என்னிடமிருந்து மாத்திரமே உத்தரவுகளை எதிர்பார்த்தான். ஆயினும் வேலுப்பிள்ளை தான் ஓர் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியன் என்றும், கல்வி கற்றவன் என்றும் எண்ணியமையால் இராஜரத்தினத்தை வெறுமனே படிக்காத கூலியாளாக நோக்கினான். ஆயினும், வேலுப்பிள்ளை குடித்துவிட்டுத் தவறாக நடந்து கொண்டமையால் வேலை போய்விட்டது என்பதையும், அவன் தனக்கு மரியாதை வழங்குமாறு கேட்க முடியாதென்பதையும் இராஜரத்தினம் அறிந்திருந்தான். மேலும் இராஜரத்தினம் கூறி, சுப்பிரமணியம் உறுதிப்படுத்தியவாறு வேலுப்பிள்ளையை அவனின் மனைவி அவனது குடிப்பழக்கத்தைப் பொறுக்க முடியாமல் வீட்டிலிருந்து துரத்திவிட்டாளென்றும், இதனால்தான் வேலுப்பிள்ளை காரைதீவில் வசித்து வந்தான் என்றும் தெரியவந்தது. வேலுப்பிள்ளைக்கு ஒரு தொழில் கிடையாது. அவன் பல்வேறு இரக்கமுள்ள ஆட்களிடம் சுரண்டிப் பிழைத்து வந்தான். அவன் ஒரு முதல் தரமான ஏமாற்றுப் பேர்வழியுமாவான். தனக்கு உணவு கிடைக்கு மென்பதற்காகவும், வேலை கிடைக்கு மென்பதற்காகவும் அவன் பாதயாத்திரையை மேலும் நீண்ட நாட்கள் எடுக்கும் ஒன்றாக மாற்ற முயற்சித்தான்.
இவ்வாறாக எனது கோஷ்டி ஆரம்பத்திலிருந்து முரண்பாடுகள் நிறைந்த ஒன்றாக விளங்கியது. எம்மத்தியில் உணர்ச்சி சம்பந்தமான இணைப்புகள் எதுவுமே இருக்கவில்லை. நாம் ஒரு பணியைச் செய்வதற்காகச் சந்தித்தோம். இராஜரத்தினமும், வேலுப்பிள்ளையும் வெறுமனே எனது ஊழியர்களாவர். சிவம் பாதயாத்திரையில் ஈடுபடுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டிய ஒரு விருந்தினர் மாத்திரமே. கருமப்பாடற்ற ஒரேயொரு இணைப்பு இராஜரத்தினத்துக்கும் எனக்குமிடையே சுவாமி காவுபவர்கள் என்ற வகையில் ஏற்பட்ட பலவீனமான இணைப்பாகும். இராஜரத்தினத்தைப் பொறுத்தவரையில் அது வாழ்க்கையிலேயே மறக்கமுடியாத ஆன்மீக சாதனையாகும். அதை அவன் பெற்றுக்கொண்டது என்மூலமாகவேயாகும். இராஜரத்தினத்தையும், சிவத்தையும் பொறுத்தவரையில் என்னால்தான்
22

அவர்களுக்குப் பாதயாத்திரையில் செல்லும் உணர்வு ஏற்பட்டது. எமது குழுவிலிருந்த ஒரேயொரு உணர்ச்சி சம்பந்தமான விடயம் இதுவேயாகும். ஏனையவை அனைத்தும் கருமம் சார்ந்தவையும், பாதயாத்திரை முடியும்வரை மாத்திரம் நிலைத்திருப்பவையுமாகும். நாம் கதிர்காமத்தில் போய்ச் சேர்ந்து அவர்களுக்குப் பணம் செலுத்தியதும் எமது குழு கலைந்துவிடும். இதுவே எமக்கும் ஏனைய யாத்திரிகர் குழுக்களுக்குமிடையில் இருந்த வேறுபாடாகும். ஏனைய யாத்திரிகர்களின் உறவுகள் மேலும் நிரந்தரமானவையும், வரலாறுகளைக் கொண்டவையும், எம்மிடையில் எப்பொழுதும் ஏற்படமுடியாத குழுவைச் சேர்ந்திருக்கும் உணர்வையும் போன்றவையாகும்.
வேலுப்பிள்ளையும், சிவமும் அங்கு தங்கியிருக்கும் காலத்திலும், யாலவின் ஊடாக அவர்களின் பயணத்தின் போதும் பயன்படுத்தக்கூடிய சகல உணவு மற்றும் குடிபான வகைகளை வழங்குமாறு சுப்பிரமணியத்துக்குக் கூறினேன். இராஜரத்தினமும், சின்னத்துரையும் எமது பொருட்களை மீண்டும் ஒழுங்குபடுத்தி இரண்டு கட்டுக்களாகத் தயாரித்தனர். அடுத்த நாள் காலையில் ஐந்து மணிக்குப் புறப்பட வேண்டுமென்று தீர்மானித்தேன். வேலுப்பிள்ளை திரும்பிவந்து தானும் எங்களுடன் வருவதாகவும், அடுத்த நாள் காலையில் பத்து மணிக்குப் புறப்பட வேண்டுமென்றும் கூறினான். ஆனால் இது எமக்குப் பிடிக்கவில்லை.
இப்பொழுது எங்களின் யால நிபுணர்’ சின்னத்துரை நாம் ஐந்து மணிக்குப் புறப்பட்டால் சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் கும்புக்கன் ஓயாவைச் சென்றடைந்து விடலாமென்று கூறினான். அங்கே ஓர் அம்மன் கோயிலும், ஒரு சிறிய கடையும் இருக்கின்றன. அதற்கிடையில் எதுவுமே இல்லையென்றும் தனியாகக் காட்டினுள் நாம் மாத்திரம் முகாமிடுவது ஆபத்தானதென்றும் கூறினான். நான் தூரங்களைப் பற்றிக் கேட்டேன். சின்னத்துரை ஒக்கந்தவுக்கும் கதிர்காமத்துக்கும் இடையிலுள்ள தூரம் 72 கி.மீ. என்று கூறினான். ஒக்கந்தவிலிருந்து கும்புக்கன் ஓயாவுக்கு 26 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். இரண்டு இடங்களுக்குமிடையில் தண்ணிர் கிடைக்கக்கூடிய இடம் ஒன்றுதான் உள்ளது. இது ஒக்கந்தவிலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள நாவலடியாகும். நாம் விரைந்து சென்றால் மாலைப்பொழுதில் கும்புக்கன் ஓயாவுக்குப் போய் விடலாம். நான் எமது சாத்திய வேகத்தைக் கணிப்பிட்டேன். ஒரு மணித்தியாலம் 3 கி.மீ. சென்றாலும் எமக்கு 9 மணித்தியாலங்கள் தேவைப்படும். ஆயினும் நாம் மதியப்பொழுதில் ஒரு மணித்தியாலம் ஒய்வெடுத்து மேலும் இரண்டு அரை மணித்தியால இடைவெளிகளையும் எடுத்தால் மொத்த நேரம் 11 மணித்தியாலங்களாகும். நாங்கள் அதிகாலை ஐந்து மணிக்குப் புறப்பட்டால், மணித்தியாலம் 3 கி.மீ. மெதுவான வேகத்தில் நடந்து, பின்மதியப்பொழுது நான்கு மணிக்கு கும்புக்கன் ஓயாவைப் போய்ச்சேரலாம். மாலையில் மழைபெய்யக்
23

Page 16
கூடுமென்றும் கவலைப்பட்டான். மழைவந்தால் விடயங்கள் மேலும் கடினமாகும். ஆகவே இயன்றளவு நேரகாலத்தோடு புறப்படுவது அவசியமாக இருந்தது. வேலுப்பிள்ளை தனது திட்டத்தைக் கைவிட்டான். ஒக்கந்தவிலும் யாலவின் ஊடான பயணத்தின் போதும் அவனுடைய செலவுகள் எல்லாம் வழங்கப்படுமென்று நான் கூறியதும் அவன் முகத்தில் மகிழ்ச்சி தோன்றியது. ஆயினும் அவனுக்குச் சிகரெட் வாங்கிக் கொடுக்க முடியாதென்றும், பிடிகள் மாத்திரமே கிடைக்குமென்றும் தெரிவித்தேன். அவன் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தான்.
மாலைப்பொழுது
சிறிது நேரத்தின் பின்னர் அருகாமையிலிருந்த கோயில்களின் குருக்கள்மாரும், மட்டக்களப்பிலிருந்து வந்திருந்த சிலருமாக கோயில் உதவியாளர்களின் குழுவொன்று சுட்பிரமணியத்தின் தேநீர்க் கடைக்கு வந்தது. நாங்கள் ஒக்கந்தவுக்கு வந்த தினத்தில் காலை வேளையில் கோயிலுக்குச் சென்றபோது அவர்களை ஏற்கெனவே சந்தித்திருந்தேன். அந்தவேளையில் நன்கொடைகளை வசூலித்துக் கொண்டிருந்த கோயில் உதவியாளர்களிடம் என்னை அறிமுகஞ்செய்து, அக்கரைப்பற்றிலிருந்த ஒரு கனவானும் கோயில் நிர்வாகக் குழு முக்கிய உத்தியோகத்தருமான ஒருவர் கோயிலில் அன்றிரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்ததாகக் கூறினேன். அவர்கள் அதை மாலையில் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்கள். தேநீர்க் கடையில் எனது பாதயாத்திரையைப் பற்றிப் பேசினோம். நான் அவர்களிடம் காரைதீவில் நான் பார்த்த சடங்கு குறித்தும், அழகான நாட்டுக்கூத்துக் குறித்தும் வினவினேன். இச்சடங்கு கிராமத்தின்மீது தீய ஆவிகளின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்துவதற்காக வருடந்தோறும் இடம் பெறுவதாக அவர்கள் தெரிவித்தனர். சடங்கு நிபுணர்கள், பிள்ளையார் வேடர்களை அழிக்கும்போது நீற்றுப் பூசனிக்காயை வெட்டினர். நீற்றுப்பூசனியை இரண்டாக வெட்டுவது பிள்ளையார் வேடர்களைக் கொல்லும் அதே விளைவைக் கொண்டதாகும்: தீமை அழிக்கப்படுவதாகும். வெட்டப்பட்ட நீற்றுப்பூசனிக்காயில் உள்ள குங்குமம் தீமை செய்தவனின் இரத்தத்தைக் குறித்தது. அது நாட்டைப் பிரிக்க முயற்சி செய்வோரின் செல்வாக்கையும் இல்லாமற் செய்யுமென்று ஒருவர் மேலும் தெரிவித்தார்.
இச்சடங்கின் அரசியல் வியாக்கியானம் காரணமாக இக்கருத்துரை கவனிக்கப்பட வேண்டியதாகும். அது என்னை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்டதென்று நான் நினைத்தேன். நான் காரைதீவில் கண்ட அதே சடங்கை அவர் அறிந்திருந்தாரா என்று கேட்டேன். இது கிழக்குக் கடற்கரைக் கிராமங்களில் மிகவும் பொதுவான சடங்கென்று அவர்கள் அனைவரும்
24

கூறினர். இது குறித்துரைப்பாக இனப் பிரச்சினையைக் கையாளுவதற்காகச் செய்யப்படுகின்றதா என்று கேட்டேன். அவர்கள் அது அவ்வாறு செய்யப்படுவதில்லை என்றும், ஆயினும் இப்பொழுது இனப்பிரச்சினை கிராம வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு தீமையாக மாறிவிட்டமையால், அதையும் இச்சடங்கு தாக்குதல் நடத்தும் தீமைகளுள் ஒன்றாகக் கருதலாமென்றும் தெரிவித்தனர். அது மிகவும் தர்க்கரீதியான ஒன்றாக எனக்குத் தோன்றியது. நான் ஒரு சிங்களவராகவும், அவர்கள் தமிழர்களாகவும் அங்கிருக்கும் அரசியல் சூழ்நிலை காரணமாக எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. பல்வேறு நிறுவனங்களால் அரசாங்க ஆதரவோடு நடத்தப்பட்ட பல பாதயாத்திரைகளை அவர்கள் கண்டிருந்தனர். ஹரிஜனப் பாதயாத்திரைகளின் அரசியல் தாற்பரியம் குறித்தும் அவர்கள் அறிந்திருந்தனர். இச் சூழமைவிலேயே அவர்கள் எனது பாதயாத்திரையையும் நோக்கினர். நான் இனத்துவ யுத்தத்தின்மீது கவனம் செலுத்தும் வெளிக்களப் பல்கலாசார ஆய்வொன்றை மேற்கொண்டிருந்ததால் எனது பணியிலும் அரசியல் கலந்திருந்தமையால் இதில் எவ்விதத் தவறுமில்லை. நான் இந்த இராஜதந்திர நகர்வை அனுபவித்து இரசித்தேன். இருந்தாலும், இச்சடங்கு குறுகிய, மேலும் மரபுரீதியான ஜனசமூகத்திலிருந்து தீய ஆவிகளை ஒட்டும் குறியிலக்குகளோடு அயலிலுள்ள மக்களுக்கு ஒரு மாலைநேரப் பொழுதுபோக்காகவும் அமைந்திருக்குமென்று நான் நம்புகின்றேன்.
மாலையில் ஜனசமூகத்தை மீண்டும் பார்ப்பதற்காக நான் நடந்து திரிந்தேன். மேலும் பல யாத்திரிகர்கள் வந்துசேர்ந்தனர். இயன்ற இடங்களில் அவர்கள் முகாமிட்டனர். பல பொலிசாரும், இராணுவக் காவல் நிலையத்தைச் சேர்ந்த காலாட்படை வீரர்களும் அன்றாட அவதானிப்புகளுக்காக வந்திருந்தனர். கோயிலில் இடம்பெற்ற பூஜையைத் தவிர, எவருடைய கவனத்தையும் கவரும் விதத்தில் எதுவுமேயிருக்கவில்லை.
பூஜை கிரமமாக இடம்பெறும் ஒரு விடயமாகும். ஆயினும் இந்தத் திருவிழாக் காலத்தில் அது மேலும் பெரிய அளவில் நடைபெற்றது. கோயில் பணியாளர் குழுக்களும் பூஜையில் கலந்து கொண்டனர். பிரதான பூஜைக்குப் பின்னர் சுவாமி ஊர்வலம் இடம்பெற்றது. மட்டக்களப்புக் கோயிலில் இருந்தது போன்ற ஒரு சிவிகையில் கடவுள் சிலையை வைத்து முருகன் ஆலயத்துக்கு வெளியில், சுற்றுமதிலுக்கு உள்ளே கோயில் வளவினுள் இருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலுக்கு முன்பாகக் கொண்டு வந்தனர். கோயில் வாசல் கதவினருகே நுாற்றுக் கணக்கான பக்தர்கள் திரண்டுநின்று 'அரோஹரா என்று கோஷமெழுப்பினார்கள். நாம் மட்டக்களப்பில் செய்தது போலவே சாமி காவுவோர் பிள்ளையாருக்கு முன்பாகச் சிவிகையை முன்னும் பின்னும் ஆட வைத்தனர். இதன் பின்னர் பிரதான ஆலயத்துக்குத் திரும்பிச் சென்றனர். இக்காட்சி
2癸

Page 17
மட்டக்களப்பில் எனது அனுபவங்களை மகிழ்ச்சிக் கலப்புடன் நினைவூட்டியது. அது ஓர் இனத்துவ ஆய்வாளர் என்ற வகையிலும், இலங்கையன் என்றவகையிலும் நான் அனுபவித்த மறக்கமுடியாத சம்பவம் என்பதும், பெரும் கெளரவம் என்பதும் இப்பொழுது உறுதியாகத் தென்பட்டது. பரவசம் கொண்ட ஜனத்திரள் முருகக்கடவுள் தனது மூத்த சகோதரனுக்கு வணக்கம் செலுத்தி விட்டு வீடு திரும்பியதைக் கண்டு உணர்வோடு 'அரோஹரா என்று ஒலி எழுப்புகையில் இந்தச் சிந்தனைகள் என் மனதில் தோன்றின.
சுவாமி பவனி நிகழ்ச்சி முடிவடைந்ததும் விறாந்தையில் புனிதமான தீ மட்டும் எஞ்சியிருந்தது. யாத்திரிகர்கள் காற்றில் அசைந்தாடும் சுவாலையில் மலர்களையும், கற்பூரக்கட்டிகளையும் வீசியெறிந்தனர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. கூட்டமும் கலைந்தது. நான் படுத்துறங்க அறையொன்று கிடைக்குமாவென்று திருவிழா உதவியாளர் ஒருவரைக் கேட்டேன். இது உடனடியாகவே வழங்கப்பட்டது. ஓர் அறையில் மரப்பெட்டிகள் மற்றும் அலுமாரிகளிடையே நிலத்தில் பாய்விரித்துப் படுக்கையைத் தயார் செய்தேன். வெகுநேரம் கழித்து இரவில் வெளியே சென்று பார்த்தேன். கடலைத்தவிர அனைத்தும் அமைதியாகவிருந்தன.
ஆகஸ்ட் 1
நான் நாலரை மணிக்கு எழுந்து, நாம் முன்பே தீர்மானித்திருந்தவாறு சுப்பிரமணியத்தின் தேநீர்க் கடைக்கு விரைவாகச் சென்றேன். சின்னத்துரை ஏற்கெனவே அங்கு வந்திருந்தான். சுப்பிரமணியம் தேநீர் தயாரிக்கத் தண்ணிர் கொதிக்க வைக்க ஆரம்பித்துவிட்டார், சின்னாவும், நானும் முகங்கழுவக் கிணற்றடிக்குப் போனோம். தேநீர் தயாராகியதும் இராஜரத்தினம் வந்து சேர்ந்தான். நாம் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது வேலுப்பிள்ளையும், சிவமும் வந்து சேர்ந்தனர். எம்மை வழியனுப்பி வைக்க விரும்பினார்கள். நாங்கள் கதிர்காமத்தில் சந்திப்பதாக வாக்களித்தோம். நான் அவர்களுக்கு என் ஹோட்டல் விலாசத்தைக் கொடுத்தேன். நாம் ஒன்றாகக் கோயிலுக்குப்போய்க் கற்பூரம் கொளுத்தி முருகனை வணங்கினோம். எனது கோஷ்டிச் சகபாடிகள் கடவுளை ஆராதிக்கத் தொடங்கினர். நானும் ஸ்கந்தன் - முருகனுக்கு வணக்கம் செலுத்தினேன்.
ஹரிஏ கராப்பிரணவாஸ் வருப்பலாஹரா ஏ ரீ கார்த்திகேய ஏ பஜே'
காலையில் 5.30 மணிக்கு உரத்த குரலில் 'அரோஹரா’ என்று கூறியவாறு
யாலவினுடாக எமது நடைப்பயணத்தை ஆரம்பித்தோம். பல்வேறு குழுக்கள்
யால சரணாலயத்தினுடான தமது நடைப்பயணத்தை ஏற்கெனவே ஆரம்பித்திருந்தன.
26

நாங்களும் யாத்திரிகர் வரிசையில் இணைந்து கொண்டோம். விடியும் வரையும் பாதை கண்ணுக்குத் தெரியவில்லை. காட்டு மிருகங்கள் குறித்த அபாயம், குறிப்பாக யானைகள், கரடிகளிடமிருந்து எழும் அபாயம் இருளில் இன்னமும் இருந்தது. தேசிய வனவிலங்கு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட கிரவல் வீதி இந்த இடர்வரவைக் குறைத்தது. ஒவ்வொரு குழுவும் ஒரு சுதந்திரமான சமூகமாக முன்னேறினாலும், அனைவரும் ஒருவரிலொருவர் தங்கியிருந்தனர். 'எண்ணிக்கைகளால் பாதுகாப்பு’ என்பது இந்தச் சூழமைவிலேயே அர்த்தம் பொதிந்ததாகும். ஆகவே ஒவ்வொரு குழுவும் ஏனையவற்றிலிருந்து சிறிது விலகியிருக்கவே முயன்றபோதிலும், எவருமே அதிக தூரத்தில் இருக்க விரும்பவில்லை.
எப்பொழுது பொழுது விடிந்ததென்றே எனக்குத் தெரியவில்லை. முகில் முடிய வானமும், தலைக்கு மேலே காட்டுமரங்கள் வழங்கிய மறைப்புமே இதற்கான காரணங்களாகும். படிப்படியாகப் பகற்பொழுது வந்து கொண்டிருந்ததென்பதும், வானம் தெளிவடைகின்றது என்பதும் எனக்குத் தெரிந்தது. சூரிய உதயத்தின் பின்னர் நிலத்தின் அமைப்பை மேலும் தெளிவாகக் காண முடிந்தது. இப்பொழுது அடர்ந்த காட்டைவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தோம். இப்பொழுது பாதை எனது இடதுபுறத்தில் குமண பறவைகள் சரணாலயத்தின் பரந்த நீர்ப்பரப்புகளுக்கும், வலதுபுறத்தில் பற்றைக்காடுகளுக்குமிடையில் சென்றது. துரிதமாகக் காலை புலர்ந்துவருகையில் இருண்ட காடுகுறித்த ஆரம்பப் பீதிகள் இல்லாமற்போயின. ஒவ்வொரு குழுவும் தனது சுற்றுப்புறம்குறித்து மேலும் நம்பிக்கை கொள்ளத்தொடங்கியதும், அவற்றுக்கிடையிலான தூரங்களும் அதிகரித்தன.
ஒக்கந்தவில் நான் இக்குழுக்களில் இடம்பெற்றுள்ளோர் குறித்துத் தீவிரமாகச் சிந்தித்தேன். நான் முன்பே கூறியவாறு, அவர்களுள் பெரும்பாலானோர் வாழைச்சேனையிலிருந்து அக்கரைப்பற்று வரையிலான கடற்கரைப் பிரதேசப் பகுதியிலிருந்தே வந்திருந்தனர். கலாசாரரீதியில் ஒரு சில ஆயிரம் ஆண்டுகளாக இப்பிராந்தியம் தீவை நோக்கிய புலம் பெயரலுக்கும், தீவிலிருந்து புலம்பெயரலுக்கும் வழிசமைப்பதாகவும், கடலோரமாக அமைந்திருந்த சிறிய துறைமுகங்களுடாகக் கடல் வாணிபத்துக்கும் வழிசமைத்தது. இதில் மட்டக்களப்பே பாரிய மத்திய நிலையமாக அமைவதாகும். ஆயினும், 16வது நூற்றாண்டிலிருந்து, போத்துக்கீசர் மட்டக்களப்பில் ஒரு கோட்டையையும், ரோமன் கத்தோலிக்க ஜனசமூகத்தையும் ஏற்படுத்தி, அனுமதியற்ற குடியேற்றத்துக்கான துறைமுகங்களை மூடிய போது, தீவுக்குள் சுதந்திரமாக வந்துபோகும் நிலை முடிவுக்கு வந்தது. அதன் பின்னர், பிரித்தானிய காலப்பகுதியூடாக, ஐரோப்பிய சமூகங்கள் இப்பிராந்தியத்தின் இனத்துவ, கலாசார, மத, மொழி மற்றும் பொருளாதார அம்சங்கள்மீது செல்வாக்குச் செலுத்தின. இவ்வாறாக, தமிழ் ஹிந்து சமூகத்தினுள் தமிழ் கிறிஸ்தவ, முஸ்லிம்,
27

Page 18
பரங்கியர் மற்றும் சிங்கள பெளத்த மக்களும் வாழும் நிலை ஏற்பட்டது. இது இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த எனது சக யாத்திரிகர்களை ஏனைய பல்வேறு இனத்துவ, கலாசாரச் செல்வாக்குகளுக்கு உள்ளான ஒரு தமிழ், இந்து தனிக்கலாசாரத்தின் அங்கத்தவர்களாக்கியது."
எவ்வாறாயினும், இந்தத் தனிக்கலாசாரம் இப்பிராந்தியத்துக்கு விசேடமான ஒன்றாகும். இனத்துவரீதியில், அவர்கள் தமிழைப் பேசினாலும், ஒரு தமிழ், சமூக, கலாசார மற்றும் அரசியல் அடையாளத்தைக் கொண்டிருந்தாலும், அவர்களுள் அனேகமானோர் கேரளாவிலிருந்து வந்து குடியேறியவர்களின் வழித்தோன்றல்களாவர். அவர்கள் வடபுலத் தமிழர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்துகின்றனர். வடபுலத் தமிழர்களும் தமது முறைக்கு கிழக்குக்கரைத் தமிழர்களை வித்தியாசமான தமிழர்களாக நோக்குகின்றனர். எவ்வாறாயினும், அவர்களின் மொழி மற்றும் உள்மைய மத நம்பிக்கைகளைப் பொறுத்த வரையில் அவர்கள் வடபுலத் தமிழர்களுடன் ஒரு பாரிய பொதுவான கலாசாரத்தைப் பகிர்ந்து கொள்ளுகின்றனர். இவர்கள் முருக பக்தர்களாக விளங்குவதற்கான காரணமும் இதுவேயாகும்.
1983இல் யுத்தம் ஆரம்பிக்கு முன்னர், வடக்கு-கிழக்குப் பிராந்தியத்தினுள், தமிழ் இந்து மக்கள் ஒரு பொதுவான இனத்துவ-கலாசார அடையாளத்துடன் சுதந்திரமாகப் பயணம் செய்தனர். இவ்வாறாக, உதாரணமாக, வேலுப்பிள்ளைக்குப் பாணமையிலிருந்து வாழைச்சேனைவரை இரத்த உறவுகள் உள்ளனர். இந்தத் தமிழர்கள் ஒரு பல்கலாசாரச் செல்வாக்கு மிக்க, தனிக்கலாசாரரீதியில் பகிரப்பட்ட தார்மீக சமூகத்துக்குச் சொந்தமானவர்களாவர். இச்சமூகம் ஒரு வழியில், அவர்களின் சமூக நியமங்களைத் தீர்மானிக்கின்றது. அவர்களுக்கு முறையான நடத்தைகுறித்த உணர்வையும், சமூக அழகியல் உணர்வையும் வழங்குகின்றது. இந்த உணர்வுகளின் ஒரு பகுதி தர்ம சூத்திரங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையிலான இந்துக் கலாசாரத்திலிருந்தும், ஏனைய பகுதிகள் மலையாளக் கலாசாரத்திலிருந்தும், தமிழ்க் கலாசாரத்திலிருந்தும் வருகின்றன. தமிழ்க் கலாசாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக முருக வழிபாடு தனிநபர்கள் மீதும், குழுக்கள் மீதும் பாரிய தார்மீக அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது. ஒரு தார்மீக சமூகமென்றவகையில் முருக வழிபாடு கதிர்காமத்துக்கான யாத்திரைகளின் போது வழிநடத்துகின்றது. இவ்வாறாக, இந்துப் பாரம்பரியத்தின் தார்மீகக் கட்டளைகளுக்கு மேலதிகமாக, கதிர்காம யாத்திரிகர்கள் வழிபாட்டின் குறித்துரைப்பான கட்டளைகளுக்கும் கீழ்ப்படிதல் வேண்டும். செம்மொழித் தமிழ் இலக்கியம், புராதன தமிழ்நாட்டில் அனங்கு என்று அழைக்கப்படும் பண்பு புனிதமாக மதிக்கப்பட்டதென்று எடுத்துரைக்கின்றது. அனங்கு என்பது குறிப்பிட்ட இடங்கள், காலங்கள், உயிர்கள் மற்றும் செய்கைகள் கொண்டுள்ள அனுகூலமான, ஆயினும்
28

ஆபத்தான பண்பாகும். அனங்கு என்பது சில சூழ்நிலைகளின் கீழ் தீமை விளைவிக்கும் சக்தியாகும். ஆயினும் அது நன்மை பயக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது. தீமை செய்வதால் ஆட்கள் அனங்குக்கு ஆட்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட நடத்தையில் எது சரி மற்றும் எது பிழை, அதாவது ஒரு செய்கையின் தார்மீகப் பண்பு, அனங்கை நல்ல முறையில் அல்லது மோசமான முறையில் ஊக்கப்படுத்தியது. அனங்கு எனும் பண்பு முருகனிடம் இருந்தது. தவறான நடத்தை கடவுளின் கோபத்துக்கு வித்திட்டது. அனங்கின் சக்தியால் அல்லது பண்பினால் அவர் தீமை செய்வோரைத் தண்டித்தார்.
இன்று, இலங்கையில், அனங்கு என்னும் எண்ணக்கரு அறியப்படாத ஒன்றாகவுள்ளது. அனேகமாக, இலங்கையில் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இது குறித்து அறிந்திருந்தனர். காலப்போக்கில் அது வழக்கொழிந்தது. ஒருவேளை அது தெய்வகோபம் என்னும் எண்ணப்பாட்டினால் முக்கியமிழந்திருக்கலாம். முருகனின் சக்தி மற்றும் கோபம் குறித்த பயம் இந்துச் சமூகத்தில் ஊறிப்பரவியுள்ளது. புராதன அணங்கு குறித்த தற்காலிக இலங்கை சமஸ்கிருதப்பதம் தெய்வகோபம் என்பதாகும் அனங்கு என்பதே முருக வழிபாட்டுக்கு ஒரு தார்மீக சமூகம் என்னும் அடிப்படையை வழங்குவதாகும். முருகன் முழுக்கமுழுக்க ஒரு நெறிமுறைக் கடவுளாக மதிக்கப்படுகின்றார். அவர் நெறிபிறழ்வான நடத்தையைச் சகித்துக் கொள்வதில்லை. அவரின் தண்டனை விரைவானதும், பயங்கரமானதுமாகும். இத்தார்மீகப் பின்னணியிலேயே கதிர்காம யாத்திரைகள் இடம் பெறுகின்றன. இது இந்துத் தார்மீகப் பின்னணியையும், குறிப்பாக முருக வழிபாட்டுத் தார்மீகப் பின்னணியையும் உள்ளடக்குகின்றது. யாத்திரை முருகனின் தற்போதைய வாசஸ்தலமாகிய கதிர்காமத்தை நோக்கி இடம் பெறுவதால் முருக வழிபாட்டுத் தார்மீகப் பின்னணியே முன்னிலை வகிக்கின்றது. யாத்திரிகர்களின் ஒவ்வொரு குழுவும், கூட்டாக நோக்குகையில் சகல குழுக்களும், இத்தார்மீகச் செல்வாக்கின்கீழ் வருபவையாகும்.
ஒரு சிங்கள இடைக்காட்சி
ஒரு தார்மீகச் சமூகம் குறித்த இதே போன்ற உணர்வு சிங்கள மக்கள் மத்தியிலும் நிலவுகின்றது. இது பெளத்த வணக்கத்தலங்களுக்கு அவர்கள் யாத்திரைகளை ஒழுங்கு செய்யும் முறையில் தெளிவாகின்றது. அவர்களின் யாத்திரைகளில் பெரும்பாலானவை அருகிலுள்ள பெளத்த கோயில்களுக்கானதாகும் (விகாரைகள், பன்சல). குடும்பங்கள், இரத்த உறவுக் குழுக்கள் அல்லது அயலவர் குழுக்கள் முழுமதி (போயா) நாட்களில் இக்கோயில்களுக்கு நடந்துசென்று வணக்கச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இக்காலத்தில் நகர்ப்புற மக்கள், நகர்ப்புறத்
29

Page 19
தமிழ் இந்துக்கள் கோயிலுக்குச் செல்வது போலவே, கோயில்களுக்குக் காரில் செல்லுகின்றனர். எனது பிள்ளைப்பருவத்தில் தென் மாகாணத்தில் காலிக்கு அருகிலிருந்த எனது கிராமத்தைச் சேர்ந்த முதியவர், தமது முன்னோர்கள் அனுராதபுரம், பொலனறுவை போன்ற வடக்குப் பிரதேசங்களுக்கு மேற்கொண்ட மகத்தான யாத்திரைகள் குறித்துப் பேசுவது வழக்கமாகவிருந்தது. இரு பிரதான யாத்திரைச் சுற்றுகள் இருந்தன: அட்டமஸ்தனி (சிறப்பான எட்டு ஸ்தானங்கள்) மற்றும் தொளொஸ்மஸ்தனி (சிறப்பான பன்னிரண்டு ஸ்தானங்கள்). பின்னர் கூறப்பட்டது முன்னராக வருவதையும், மேலும் நான்கு ஸ்தானங்களையும் உள்ளடக்குவதாகும். இதற்கும் மேலதிகமாக வேறு இரண்டு சுற்றுகள் சிவனொளிபாதம், கதிர்காமம் என்பவை - உள்ளன. இவையிரண்டும் தொளொஸ்மஸ்தனியில் உள்ளடக்கப்பட்டவை யாயினும், தனியான யாத்திரைத் தலங்களாகவும் விளங்குகின்றன."
சிங்கள மக்களின் இந்த யாத்திரைகள் ஒரேவிதமான கட்டமைப்பைக் கொண்டிருந்தன. தென்மாகாண யாத்திரிகர்கள் இன்னும் நடே' என்று அழைக்கப்படும் குழுவாகச் சென்றனர். இப்பதம் குறிப்பாகத் தென் மாகாணத்துக்கு உரிய ஒன்றல்ல. நடே என்பது வழக்கமாக உறவினர்கள் அல்லது ஒரே ஜாதியைச் சேர்ந்த அயலவர்கள் மற்றும் பரக்கரத்தே என்று அழைக்கப்படும் தொடர் மாட்டு வண்டிகளை உள்ளடக்குவதாகும். ஒவ்வொரு வண்டியையும் ஒருசோடி மாடுகள் (கொன்பானா) இழுத்தன. மாட்டு வண்டிகளில் முதியோர், சிறுவர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவசியமான பொருட்கள் ஏற்றப்பட்டதுடன், ஆண்களும், பெண்களும் நடந்து சென்றனர். அவர்கள் களைத்த போதும், நோய்வாய்ப்பட்ட போதும் வண்டிகளில் ஏறிச் சென்றனர்." ஒவ்வொரு நடே யாத்திரையிலும் வழக்கமாக முதியவரான, அனுபவமுள்ள யாத்திரிகரொருவர் இருப்பார். இவர் நடே ஒன்றை ஒழுங்கு செய்வது, செல்லும் வழி, இடையில் வரக்கூடிய பிரச்சினைகள் மற்றும் யாத்திரை ஒழுக்கநெறி என்பவற்றை நன்கு அறிந்திருப்பார். அவர் நடே குரா அல்லது குழுவின் வழிகாட்டியென்று அழைக்கப்பட்டார். இன்னும் அவ்வாறே அழைக்கப்படுகின்றார். யாத்திரையின் ஒழுக்கநெறியில் நடே குராவுக்குக் கீழ்ப்படிதல் என்பது உள்ளடங்குகின்றது. அவரே யாத்திரை குறித்த அதிகாரம் கொண்ட நபராவார். உள்ளகக் கருத்து வேறுபாடுகள் மகிழ்ச்சியின்மையையும், தொல்லைகளையும் ஏற்படுத்துவதால், நடே அங்கத்தவர்கள் ஒரு தனியமைப்பாக நடந்து கொள்ள வேண்டும். ஓர் ஒழுக்கமற்ற நடே கடவுளுக்குக் கோபத்தை உண்டு பண்ணி யாத்திரை தோல்வியடைவதில் முடியும். வழியிலுள்ள ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்குக் கடவுளின் பாதுகாப்பு அவசியம். நடே கிராமத்தைவிட்டுப் புறப்பட்ட கணத்திலிருந்து, திரும்பி வரும்வரையில் ஒவ்வோர் அடியிலும் அபாயம் காத்திருக்கும். பாரம்பரியமாக, இந்த அபாயங்கள் வனவிலங்குகள், நோய்,
30

திருடர்கள், கெட்ட ஆவிகளின் செல்வாக்கு மற்றும் தேவர்களின் கோபம் என்பவற்றை உள்ளடக்குவனவாகும். யாத்திரிகர்கள் மாசுபடிவதிலிருந்து’ தவிர்த்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், இது தேவர்களால் கைவிடப்படுவதற்கும், கெட்ட ஆவிகளினால் பாதிக்கப்படுவதற்கும் இட்டுச்செல்லும். இவையிரண்டும் முழு நடேயும் பயணத்தில் வேறு பல தடைகளை எதிர்நோக்க வழிசெய்யும். மாசுபடுவதற்கான பல காரணங்கள் உள்ளன. குடும்பத்தில் மரணம், மரணவீடுகள், மாதவிடாய், திருமணமின்றி ஒன்றாக வாழுதல், மகப்பேறு, மாமிசம் புசித்தலும் மதுபானம் அருந்துதலும் என்பவை பாரதூரமான மாசு ஏற்படுத்தும் சூழமைவுகளாகும். மரணமே மிகவும் பாரதூரமானதாகும். யாத்திரையில் செல்லவுள்ளோர் இச்சூழமைவுகளைத் தடுக்கும் வகையிலேயே யாத்திரையைத் திட்டமிட வேண்டும். எவ்வளவு கவனமாக இருந்த போதிலும் அவை இடம் பெற்றால், யாத்திரையைக் கைவிட்டு, வேறொரு நல்ல சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்க வேண்டும்.
உடலாலும், மனதாலும் ஒவ்வொரு யாத்திரிகளினதும் தனிப்பட்ட ‘துய்மைக்கு மேலதிகமாக, ஒழுக்கமான சமூக நடத்தை மிக அவசியமாகும். இவ்வாறாக ஒவ்வொரு நடேக்கும் மரியாதை செலுத்த வேண்டும். மற்றவரின் ஜாதி, இனம், பிராந்தியம் மற்றும் மதம் எதுவாகவிருப்பினும், அவர்கள் பொருத்தமான வார்த்தைகளைக் கூறி, ஒருவரையொருவர் ஆசீர்வதிப்பர். உதாரணமாக, சிவனொளிபாதத்தில் ஒவ்வொரு நடேயும், ஏனைய ஒவ்வொரு நடேயையும் கவிகள் பாடி ஆசீர்வாதம் செய்கின்றனர். கீழே இறங்கி வருபவர்கள் மேலே ஏறிச்செல்பவர்களையும், மேலே ஏறிச்செல்வோர் சக யாத்திரிகர்களையும் ஆசீர்வதிக்கின்றனர்.
ஆராதிக்கச் செல்லும் இக்குழுவுக்கு சுமண சமன் கடவுளின் ஆசீர்வாதம்!
ஏறுவோர், இறங்குவோருக்குப் பின்வரும் முறையில் ஆசீர்வாதம் வழங்குவர்:
வணங்கி இறங்கிவரும் இக்குழுவுக்கு சுமண சமன் கடவுளின் ஆசீர்வாதம்!
இதேபோன்று, கதிர்காம யாத்திரிகர்களும் 'அரோஹரா’ என்று சொல்லி ஒருவருக்கொருவர் ஆசீர்வாதம் வழங்குவார்.
நடே குரா தனது நடே அங்கத்தவர்கள் ஒவ்வொருவரும் மேற்கூறிய நிபந்தனைகளுக்கு இணங்கியொழுகுவதை உறுதிசெய்தல் வேண்டும். ஏனெனில் யாத்திரை விக்கினங்கள் நிறைந்த ஒன்றாகும். (அனுபவே அல்லது அனுஹசே).
31

Page 20
அனுபவே அல்லது அனுஹசே என்பது துறவிகள், இடங்கள், பொருட்கள் மற்றும் செய்கையின் குணாம்சங்களை விளக்கும் ஒரு புராதனச் சிங்கள எண்ணக்கருவாகும். இதை அனங்கு என்னும் தமிழ் நம்பிக்கைக்கு ஒப்பிடலாம். இப்பதத்தின் அண்ணளவான கருத்து மத விடயங்கள் சம்பந்தமான சக்தியாகும். செய்கைகள் முறையாக அமையும் வரை இந்தச் சக்தி அனுகூலமானதாகும். அவ்வாறு அமைகையில் அது செத் சாந்தியை, அதாவது நலனையும், மன அமைதியையும் கொண்டு வரும். இது புனிதமானவரின் சக்தியிலிருந்து கிட்டும் வெகுமதிகளாகும். இல்லையேல், அது தீமைபயப்பதாக மாறி, அழிவையும், துரதிருஷ்டத்தையும் கொண்டுவரும் (வஸ்தொஸ்). இது மத விடயங்களின் சக்தியிலிருந்து வரும் தண்டனையாகும். ஒவ்வொரு யாத்திரிகர்களினதும் நோக்கம் யாத்திரையிலிருந்து செத் சாந்தியைப் பெற்றுக் கொள்வதாகும். ஆயினும் நெறிமுறைகள் மற்றும் யாத்திரை ஒழுக்கம் (சிரித் விரித்: பண்டைக் காலத்தின் நல்ல வழக்கங்கள்)" என்பவற்றின் மீறல் சம்பந்தமான தவறான ஒழுக்கம் வஸ் தொஸ் என்பதை ஏற்படுத்தி (மாசுறுதல்) யாத்திரிகர்களுக்கு, யாத்திரையில் சகலவிதமான ஆபத்துகளையும், தோல்வியையும், கடவுளர்களின் கோபத்தையும் கொண்டுவரும்.’ இவ்வாறாகச் சிங்கள மக்களின் யாத்திரைகுறித்த அனுபவே அல்லது அனுஹசே (அனங்கு) ஒவ்வொரு யாத்திரிகர் குழுவையும் தமிழ் யாத்திரிகர் குழுக்களுக்குச் சமமான தார்மீகச் சமூகமாக மாற்றுகின்றது.*
மதச்சார்பு எதுவாகவிருந்தாலும், இலங்கையில் யாத்திரைகளின் இன்னுமோர் அம்சம் யாத்திரை தொடங்கும் கணப்பொழுதிலிருந்தே புனிதமானவற்றின் அதிகாரமும் ஆரம்பிப்பதாகும். இந்த அர்த்தத்தில், யாத்திரை மத்திய நிலையங்கள் நெகிழ்ச்சியான எல்லைகளைக் கொண்டுள்ளன. எங்கே யாத்திரை ஆரம்பிக்கின்றதோ அதுவே எல்லையாகும். யாத்திரை புனிதப் பிரதேசத்தை மீள ஒழுங்குபடுத்துகின்றது அல்லது மீள் வரைவிலக்கணப்படுத்துகின்றது - விரிவாக்கம் செய்கின்றது அல்லது சுருக்குகின்றது - இது யாத்திரிகர் இருக்கும் இடத்தைப் பொறுத்ததாகும். அவர் எனது சொந்தக் கிராமமாகிய பாணகமுவையிலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரையில் புறப்பட்டால், கதிர்காமத்தின் பரிதி அவரையும், யாத்திரையையும் பொறுத்த வரையில் பாணகமுவை வரை விஸ்தரிப்புப்பெறும். இவ்வாறு எல்லை விரிவடைவது கடவுளின் நியாயாதிக்கம் விரிவடைவதாகும். யாத்திரிகர் திரும்பி வரும் வரையில் இந்த நிலைமை நீடிக்கின்றது. இவ்வாறு, அவர் திரும்பி வரும்வரையில், அவர் மாத்திரமன்றி, கிராமத்திலிருக்கும் அவரது குடும்பத்தில் இருப்போர் அனைவருமே கடவுளின் நியாயாதிக்கத்திலும், கதிர்காம தார்மீக சமூகத்தினுள்ளும் வருகின்றனர். அவரின் யாத்திரை வெற்றியளிக்கவேண்டுமெனில், அவரின் நடத்தையைப்போலவே வீட்டிலிருப்போரின் நடத்தையும் முக்கியமானதாகும். அவரது குடும்பத்தவர்கள் யாத்திரையில் அவருடன் செல்லாவிடினும், உடல்ரீதியாக
32

அன்றாட சமூகத்திலிருந்து பிரிந்து செல்லாவிடினும், அவரைப்போலவே அவர்களும், விக்டர் மற்றும் எடித் டேர்னரின் எண்ணக்கருவின் பிரகாரம், பக்தியுணர்வின் வாசலில் நிற் போராவர். வீட் டில் மாசுறல் யாத் திரையைக் கருமப்பாடற்றதாக்குமென்பதால், யாத்திரிகரின் குடும்பமும், அன்றாடச் சமூகத்திலிருந்தும், அதன் மாசுறுத்தும் சூழ்நிலைகளிலிருந்தும் விலகியிருக்கின்றது. இதற்கான காரணம் அவரின் வீடும் யாத்திரையின் ஒழுக்கநெறிகளுக்கு உட்பட்டதும், யாத்திரிகளின் இலட்சியத்தலத்தின் தார்மீக சமூகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதுமாகும்.
நாவலடி
நாம் மணிக்கு நாலு கிலோ மீற்றர் வேகத்தில் நடந்திருக்கவேண்டும். ஏனெனில் நாம் யால சரணாலயத்தினுள்ளிருக்கும் வண்ணாத்தி வாய்க்காலுக்குக் காலை 8.30 மணிக்கே போய்ச் சேர்ந்துவிட்டோம். ஏற்கெனவே அங்கிருந்த அடுப்பு ஒன்றில் எனது சமையற்காரன் சின்னத்துரை பால் தேநீர் தயாரித்தான். முன்பே போயிருந்த யாத்திரிகர்கள் இந்த அடுப்பை விட்டுவிட்டுப் போயிருக்கவேண்டும். நாம் லெமன் பவ் பிஸ்கோத்துகளுடன் தேநீர் அருந்தினோம். இவற்றை நாம் பொத்துவிலில் குணரத்தினத்திடமிருந்து வாங்கியிருந்தோம். இராஜரத்தினம் இன்னமும் வேலுப் பிள்ளையுடன் கோபமாக விருந்தான். தனக்குக் கட்டளையிடுவதற்கு வேலுப்பிள்ளைக்கு எந்த உரிமையும் கிடையாதென்று திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் மேலும் எம்முடன் இல்லாத காரணத்தாலேயே நாம் இவ்வளவு தூரம் வரமுடிந்ததென்று சொன்னான். தனது முட்டாள்தனத்தால் எமது பயணத்தின் வேகத்தைக் குறைத்திருப்பானென்றும் சென00ான். ஆயினும் அவனும், சிவமும் எம்முடன் இருந்திருந்தால் நன்றாகவிருந்திருக்குமென்று நான் நினைத்தேன். மெதுவாக நடந்து கூடுதலான நேரம் இளைப்பாறிய எனது சக யாத்திரிகர்களின் அதிருஷ்டம் எனக்கும் கிட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்குமென்றும் நினைத்தேன். அனைவருடனும் மரியாதைக்குறைவாகக் கதைப்பதாலும், அவனது சமூகப் பாதுகாப்பின்மை உணர்வாலும் வேலுப்பிள்ளை மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொண்டான். அவன் வேடிக்கையாகவும், விநோதமாகவும் பேசக்கூடியவன் என்பதும் உண்மையாகும்.
நாம் இளைப்பாறி, தேநீர் குடித்துக்கொண்டிருக்கையில், பல யாத்திரிகர் குழுக்கள் 'அரோஹரா’ என்று கூறிக்கொண்டு எம்மைக் கடந்து சென்றன. நாமும் அவ்வாறே அவர்களுக்குப் பதில் வழங்கினோம். ஒன்பது மணியளவில் எமது பாதயாத்திரையைத் தொடர்ந்தோம். நாம் உடனடியாகப் போய்ச்சேரவேண்டிய இடம் பன்னிரண்டு கிலோ மீற்றர் தொலைவிலிருந்த நாவலடி என்னும் இடமாகும். வழியில் நாம் பல சேறுநிறைந்த நீரோடைகளைக் கடக்கவேண்டியிருந்தது. நாம்
33

Page 21
மாறிமாறி, அடர்ந்த காடாகவும், திறந்த வெளிகளாகவுமிருந்த நிலப்பகுதிகளைக் கடந்துசென்றபோது வெயில் உஷ்ணம் அதிகரித்தது. மதியப்பொழுதில் நாவலடிக்குப் போய்ச்சேர்ந்தோம்.
நாவலடியென்பது காட்டில் ஏரிக்கரையிலிருந்த ஓர் எரிந்த கட்டிடமாகும். அது ஒரு காலத்தில் வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஒரு சுற்றுப்பங்களாவாகும். தரைத்தோற்றம் அழகாகவிருந்தாலும், கட்டிடம் பயமூட்டுவதாகவிருந்தது. சிதிலமடைந்த கருங்கல் கட்டமைப்பில் LTTE சுலோகங்கள் எழுதப்பட்டிருந்தன. LTTE தாக்குதல் ஒன்றில் எழுந்த தீயினால் அவை கருமையாகக் காட்சியளித்தன.
நாவலடியில் ஏற்கெனவே யாத்திரிகர்கள் நிறைந்திருந்தனர். யாத்திரிகர் கூட்டங்கள் தமது பொருட்கள் மற்றும் உடைமைகள் நிறைந்திருந்த சாக்குகளைப் பெரிய மரங்களின் கீழ் வைத்தனர். பானைகள் அடுப்பில் வைக்கப்பட்டிருந்தன. பகலுணவு தயாராகிக் கொண்டிருந்தது. நாங்களும் இரு யாத்திரிகர் குழுக்களிடையில் ஓரிடத்தைக் கண்டு பிடித்தோம். சின்னத்துரை உடனடியாகவே மதிய உணவு தயாரிக்கத் தொடங்கினான். அவனுடைய சோறு, பருப்பு மற்றும் உருளைக்கிழங்குக் கறி தயாராகையில் நான் அங்குமிங்கும் நடந்து ஜனக்கூட்டத்தையும், அந்த இட அமைவையும் நோட்டமிட்டேன்.
நான் ஏற்கெனவே அனைவருக்கும் தெரிந்த ஒருவனாகிவிட்டேன். இராஜரத்தினமும் சின்னத்துரையும் இடைவிடாமல் யாத்திரிகர்களுக்கு என்னைப் பற்றிய தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள். நான் தமிழ் பேசாமையால் யாத்திரிகர்கள் என்மீது அக்கறைகாட்டினார்கள். நான் ஒரு சிங்கள யாத்திரிகனென்று அறிந்துகொண்டதும் என்மீது மிகவும் மரியாதையாக நடந்து கொண்டு. உதவி செய்தனர். பலர் என்னைப் பகல் உணவுக்கு வருமாறு அழைத்தனர். எவ்வாறாயினும், இது ஒரு பொதுவான நடைமுறையாகும். யாத்திரிகர்கள் எப்பொழுதும் தமக்குப் பழக்கமானவர்களை உணவுக்கோ, தேநீர் குடிக்கவோ அழைப்பார்கள். எண்ணற்ற காரணங்களுக்காக அனேகமான யாத்திரிகர்கள் மரியாதையாக மறுத்து விடுவார்கள். ஜாதி ஒரு பிரதான காரணமாகும். அறியாதோருடன் உணவருந்துவது சமூகரீதியில் மாசுறுதலை ஏற்படுத்தும். அது அவர்களின் சொந்தக் குழுக்களின் சமூக ஒழுக்கநெறிகளை மீறும் செயலாகும். இந்த விடயத்தில், யாத்திரிகர்கள் தம்மைப் பூரணமாகவே வீட்டுச் சமூக அடையாளங்களிலிருந்து பிரித்துக் கொள்வதில்லையென்பது தெளிவாகியது. அதைவிட, பக்தர்களிடையே வேறுபாடுகளை அங்கீகரிக்காத கடவுளின் தார்மீக அதிகாரம் வீட்டுச் சமூக அடையாளங்களை ஒடுக்கிவைக்கின்றது. இவ்வாறாக, ஒவ்வொரு யாத்திரிகரும் ஒன்றையொன்று தொடரும் இரண்டு உலகங்களுக்கிடையிலான தார்மீகக் கட்டளைகளின் முரண்பாட்டுடனேயே வாழ்கின்றனர். யாத்திரிகர் வீட்டு
34

உலகத்துக்கும், மத உலகத்துக்கும் இடையில் அவை ஒன்றையொன்று குறுக்கறுக்கும் இடத்திலிருந்தார். மத உலகம் மற்றவர்களுடன் அவரது சமத்துவத்தை அங்கீகரிக்குமாறு பலவந்தப்படுத்தியது. ஆயினும், அவரின் வீட்டு உலகம் அவர்களுடன் அவரின் சமத்துவமின்மையை அங்கீகரிக்குமாறு பலவந்தப்படுத்துகிறது. ஓர் அந்நியரைச் சாப்பிடவருமாறு அழைப்பது சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கல்ல. அழைப்பை ஏற்க மறுப்பது சாத்தியமான சமத் துவ மரின் மை யை உறுதிப் படுத் துவதற்காகும். சமூகத் தரில் மேல்நிலையிலுள்ளவர்கள் தமக்குக் கீழ்நிலையிலுள்ளவர்களைத் தமது சமூக மேலாண்மையைத் தியாகம் செய்யாமல் அழைப்பு விடுக்கலாம். அதே வேளையில் அவர்கள் சாத்தியமான கீழ்நிலைப்பட்டோரிடமிருந்து தமது மேலாண்மையைத் தியாகஞ்செய்யாமல் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் தன்னளவிலேயே ஓர் அழைப்பு சமத்துவத்தை எடுத்துக் காட்டவில்லை. உணவு பகிரப்படும் விதத்திலேயே சமத்துவம் நிலைநாட்டப்படுகிறது. கீழ்நிலை அந்தஸ்துள்ள ஒருவருக்கு உணவு வழங்கும் ஒருவர் அவருக்கு அருகில் அமர்ந்து சாப்பிடாமல் விடலாம், அல்லது முற்றுமுழுதாகச் சாப்பிடாமலே விடலாம். உயர் ஜாதியைச்சேர்ந்த ஒரு நபர் தாழ்ந்த ஜாதியைச்சேர்ந்த ஒரு நபர் வழங்கும் உணவை உட்கொள்ளும் போதே அல்லது அவர் தனது சொந்த உணவைத் தாழ்ந்தஜாதி நபருடன் அமர்ந்து உட்கொண்டு இவ்வாறாகச் சமத்துவத்தை எடுத்துரைக்கும்போதே ஜாதி மாசுறல் என்பது நிகழ்கின்றது. ஒருவேளை உயர்ஜாதி ஆட்களைவிடத் தாழ்ந்த ஜாதி ஆட்களே உணவைப் பங்கிடுவதில் கூடுதலான அக்கறை காண்பிப்பவர்களாக இருக்கலாம். ஏனெனில் தற்காலிகமாக என்றாலும் வீட்டில் நிலவும் சமூக அதிகாரப் படிநிலைகளைச் சமமாக்கி, ஒருவருக்கு மகிழ்ச்சி உண்டாக்கும் வகையில் சகல யாத்திரிகர்களும் சமம் என்ற யாத்திரையின் இலட்சியங்களை இது அடைவது காரணமாகவிருக்கலாம். அவர்கள் அழைப்புகளை நிராகரித்தமைக்கான இரண்டாவது காரணம் மற்றவர் கொண்டு செல்லும் பொருட்கள் வரைபுள்ளவை என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். அவர்கள் பயணத்தில் கொண்டு வந்த சிறிய அளவிலான பொருட்களை அவர்கள் பாதுகாத்துப் பேணுவதற்கு அனுமதிப்பதே முறையாகும். இந்த யாத்திரிகர்கள் ஒரு சிறிதளவு பணத்துடன் இந்த யாத்திரையில் வந்த ஏழைகள் அல்லது கீழ் நடுத்தரவர்க்க மக்கள் என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். நான் அவர்களின் அழைப்புகளை ஏற்றுக்கொள்ள மறுத்தது இரண்டாவது காரணத்துக்காகவாகும். ஆயின் நான் சாப்பிட உட்கார்ந்தபோது ஆட்கள் வகைவகையான கறிகளைக் கொண்டு வந்தார்கள். தமிழர்களின் சமையலைச் சுவை பார்ப்பதற்காக என்று இராஜரத்தினம் சொன்னார். ஒரு பூசனிக்காயும் (சாம்பார்) தேங்காய் கறியுமே (தேங்காய்த்துருவல்) பிரத்தியேகமாகக் குறிப்பிடக்கூடியதாக இருந்தன.
35

Page 22
நாம் அடுத்துத் தங்கவிருந்தது நாவலடியிலிருந்து 15 கி.மீ. தூரத்திலிருந்த கும்புக்கன் ஒயா ஆகும். மணித்தியாலத்துக்கு நான்கு கி.மீ என்ற எமது சாதாரண வேகத்தில், மூன்றரை மணித்தியாலத்தில் நாம் கும்புக்கன் ஓயாவுக்குப் போய்ச்சேர்ந்து விடலாம். பின்மதியப்பொழுது இரண்டு மணியளவில் நாங்களும் நாவலடியிலிருந்து புறப்பட்டோம்.
காட்டினுாடாக நடந்து செல்வது பகலில் அதேவேளையில் மட்டக்களப்பு - பொத்துவில் வீதியில் நடப்பதை விட மிகவும் வித்தியாசமானதாகும். கதகதப்பாகவிருந்தது. ஆயினும் வெப்பமாக இருக்கவில்லை. ஒருவேளை அஸ்போல்ட் தெரு யாலவின் அழுக்குப் பாதையை விடக் கூடுதலான வெப்பத்தை உறிஞ்சியிருக்கவேண்டும். ஒருவேளை அழுக்கிலும், புஸ்லிலும் நடப்பது அஸ்போல்ட் வீதியில் நடப்பதைவிடக் காலுக்கு இதமாக இருக்கவேண்டும். ஒருவேளை என்னநடந்தாலும் நாம் எமது உள்ளுர் முடிவிடங்களுக்குப் போய்ச்சேர வேண்டிய அவசியம் இருந்ததால் இந்தச் சூழ்நிலையின் உளவியல், உடல்வலி மற்றும் வேதனை, வெப்பம் என்பவற்றைச் சிந்திக்காது எம்மை முன்செல்லத் தூண்டியது.
கும்புக்கன் ஒயா
பின்மதியப்பொழுதின் நடுப்பகுதியில் கிழக்கு வானத்திலிருந்து இருண்ட, கரிய, அலையலையான மழை முகில்கள் திரண்டு வருவதைக் கண்டோம். அது மிகவும் பாரதுTரமான கவலையளிக்கும் விடயமாகும். மழை எங்களைத் தாமதிக்கவைக்கக்கூடும். நான் முன்னோக்கி விரைந்தோம். வானம் மேலும் இருண்டபோது குளிர்ந்த காற்று வீசியது. கும்புக்கன் ஒயாவிலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் நாங்கள் இருந்த போது ஒரு சில நிமிடங்களுக்குப் பலத்த மழை பெய்தது. மேலும் மழையைத் தவிர்ப்பதற்காக அடுத்த கி.மீ. தூரத்தை நாம் அனேகமாக ஓடியே கடந்தோம். ஆயினும் கும்புக்கன் ஒயாவில் இருந்த அம்மன் கோயில் எங்கள் கண்களில் தென்பட்டபோது மழை குறிப்பான தீவிரத்தோடு மீண்டும் ஆரம்பித்தது. நாங்கள் கோயிலுக்குள் விரைந்தோம். ஆனால் இதனால் எந்தப் பிரயோசனமும் ஏற்படவில்லை. நனைந்த யாத்திரிகர்கள் அங்கே நிறைந்திருந்தனர். இதேவேளையில் மாலைவேளைப் பூஜையும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இடதுபக்கத்தில் கும்புக்கன் ஒயா கிழக்குத் திசையைநோக்கி ஒடிக்கொண்டிருந்தது. எமக்கு வலதுபுறத்தில் தென்னோலை மற்றும் பிளாஸ்டிக் கூரை போடப்பட்ட ஒரு தற்காலிக ஏற்பாட்டுக் கடையிலிருந்து புகை சுருள்சுருளாக மேலெழுந்து கொண்டிருந்தது. அங்கும் ஆட்கள் நிறைந்திருந்தனர். பெரிய மரங்களின்கீழ் இங்கும் அங்குமாக உணவு சமைக்கப் பயன்படுத்திய தீ செம்மஞ்சள்
36

நிறத்திலிருந்து புகை நிறமாக மாறிக்கொண்டிருந்தது. கொட்டும் மழையில் சூடாக ஒரு கிளாஸ் தேநீர் என் கையில் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டேன். ஆட்கள் நிறைந்திருந்த கடைக்கு நான் விரைந்தேன். இராஜரத்தினத்துடனும், சின்னத்துரையுடனும் ஆட்களுக்கிடையே புகுந்து உள்ளே சென்றேன். இந்த ஜனத் திரள் எங்களை ஒரு சுவர் போல வெளியேற விடாமல் வைத்துக்கொண்டிருந்தது. அனைவரும் தேநீரைக் குடித்தவாறு நனைந்த காகங்களைப் போல உணர்ந்தனர். எனது உணர்வும் அவ்வாறான ஒன்றாகவே இருந்தது.
இராஜரத்தினம் கடை உரிமையாளர்களோடு பேசி, தேநீர் ஒழுங்கு செய்து கொண்டிருந்தான். பாணமையிலிருந்து வந்த சிங்களக் குடும்பமொன்றே இந்தத் தேநீர்க் கடை உரிமையாளர்களாவர். ஒவ்வொரு வருடமும் திருவிழாக் காலத்தில் அவர்கள் தேநீர்க் கடையைத் திறப்பார்கள். பாணமையிலிருந்தே தேவையான பொருட்களைக் கொண்டு வருவார்கள். காட்டில் மரங்களை வெட்டுவது சட்டவிரோதமாகையால், விறகுகள், குச்சிகளையும் பாணமையிலிருந்தே கொண்டுவந்தனர். கதிர்காமத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் வரையில் (நீர்வெட்டும திருவிழா) அவர்கள் தேநீர்க்கடையை நடத்துவார்கள். தேநீர் கேட்பி போத்தலில் அடைத்த தண்ணிர், இனிப்பு, பீடி, சிகரெட் என்பவற்றுக்கு மேலதிகமாக, அவர்கள மரக்கறி உணவுகளையும் வழங்கினர். காலப்போக்கில் இந்தத் தேநீர்க்கடையும் ஒக்கந்தவில் சுப்பிரமணியத்தின் தேநீர்க்கடையைப்போலவே நன்கு தாபிக்கப்பட்ட ஓர் இடமாகிவிட்டது. யால முழுவதும் யாத்திரிகர்கள் இதே இடத்திலேயே தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.
ஒரு முரண்பாட்டுத் தீர்வு
மழை தொடர்ச்சியாகப் பெய்தது. ஆட்கள் தேநீர்க்கடையினுள் வருவதும் போவதுமாக இருந்தனர். மழையின் ஒலியினுடாக மணி ஒலிகளும், மந்திர உச்சாடன ஒலிகளும் கேட்டுக் கொண்டிருந்தன. கற்பூரக்கட்டிகள் எரியும் புகையும் மேலெழுந்தது. இத்தகைய பெரிய மழையொன்றை எவருமே எதிர்பார்க்கவில்லை. இளைஞர் குழுவொன்று உள்ளே வந்து, உடனேயே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த இளம் பெண்களைக் கேலிசெய்யத் தொடங்கினர். வார்த்தைகளாலும், கைஜாடைகளாலும் கேலி செய்யத் தொடங்கினர். கொட்டும் மழையிலும், சேற்றுநிலத்தில் அமைந்திருந்த இந்தத் தேநீர்க்கடையிலும் காதல் உணர்வுகள் காற்றில் பிரவகித்தன. மழைநீரின் ஒசைகளுடன் சிரிப்பொலிகளும் கலந்தன. சில பையன்களிடம் கோமாளி நடிப்புத்திறமைகள் இயல்பாகவே அமைந்திருந்தன. அவர்கள் பெண்பிள்ளைகளை நோக்கி மிகவும் கேலியான
37

Page 23
சைகைகளைச் செய்தனர். படிப்படியாக இந்த ஓசைகள் அதிகரித்ததால் ஏனைய யாத்திரிகர்களும் என்ன நடக்கின்றதென்று அவதானித்தனர். முதியவர்கள் அவர்களை முகச்சுழிப்போடு பார்த்தனர். சிலர் அவர்களைப் போகுமாறு கூறினர். பையன்கள் இதை லட்சியம் செய்யவில்லை. பையன்கள் இந்தப் பெண்களை ஒக்கந்தவில் கண்டனரென்பதும், பலநாட்கள் அவர்களின் பின்னால் திரிந்தனரென்பதும், இப்போது இடம்பெறுவது அதன் தொடர்ச்சியே என்பதும் தெரியவந்தது.
இறுதியில், தேநீர்க்கடையின் உரிமையாளராகிய சிங்களவர் வெளியே வந்து, யாத்திரையில் மோசமான முறையில் நடந்துகொள்வதாகப் பையன்களை ஏசினார். யாத்திரிகர்கள் ஏனைய யாத்திரிகர்களுக்குத் தொல்லை கொடுக்கக்கூடாதென்பதே அவரின் கருத்தாகும். அவர்களுக்கு உதவி அவசியமென்பதாலேயே அவர் அவர்களை வரவேற்றார். மழையில் புகலிடம் அவசியமென்பதால் அவர்களை உள்ளேவர அனுமதித்தார். ஆனாலும், இதைத் துஷபிரயோகம் செய்யமுடியாது. முதியவர்களான தமிழர்கள் இதை ஏற்றுக்கொள்வதுபோலத் தோன்றியது. கேலியென்பது ஓரளவுக்குத்தான் பகிடியாக இருக்கமுடியும். அதன் பின்னர் அது கட்டுப்பாட்டையிழந்து ஒரு தொல்லையாக மாறிவிடுகின்றது. பெண் பிள்ளைகளுக்கு இது பாரிய தொல்லையாகின்றது. கடை உரிமையாளர் பையன்களை வெளியே போகுமாறு கூறினார். அவர்கள் இதைப்பற்றி மகிழ்ச்சியடையாவிட்டாலும், உடனடியாக வெளியேறினர். 30 - 40 வயதுள்ள ஒருவர் தான் ஒரு வங்கி ஊழியரென்று தெரிவித்தார். அவர் எனக்கு ஆங்கிலத்தில் ஓமோன்கள் ஓமோன்கள்' என்று கூறினார். இது என்னை இரு விடயங்கள்குறித்துச் சிந்திக்க வைத்தது: பாலியல் ஆர்வத்தன்மைகளும், யாத்திரையின் போது கட்டுமீறி நடத்தலுமே அவையாகும்.
ஒக்கந்தவில் இருந்த வேளையில், நான் மாலை வேளையில் வேலுப்பிள்ளை, இராஜரத்தினம், சுப்பிரமணியம் மற்றும் கோயில் உதவியாளர்களுடன், ஒக்கந்தவில் யாத்திரிகர்களின் சமூக நடத்தை கிராம ஜனசமூகங்களில் அவர்கள் இருக்கும்போது அவர்களின் நடத்தையைப் போன்றதா என்பதுகுறித்துக் கலந்துரையாடினேன். நான் முன்பு கூறியதுபோன்று, எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகப்பட்ட விடயம், பொதுவாகத் திறந்தவெளியில் குளிப்பதாகும். கிராமங்களிலும் இது இடம்பெறுகின்றதா? அப்படியல்லவென்று அனைவரும் ஏகோபித்துக் கூறினர். அப்படியானால் யாத்திரையின்போது இதை இந்த மக்கள் எவ்வாறு செய்கின்றனர்? கோயிலைச்சேர்ந்த ஒருவர் கோயில் வளவு கடவுளுக்குச் சொந்தமானதென்றும், மோசமான நடத்தையைக் கடவுள் சகித்துக்கொள்வதில்லையென்றும் தெரிவித்தார், கோயிலுக்கு வரும் ஒவ்வொருவரும் இது ஓர் உண்மையென்பதை அறிந்திருந்தனர். குளிக்கும் பெண்களைப் போன்ற, அன்றாட வாழ்க்கையில் கிட்டக்கூடிய
38

சந்தர்ப்பங்கள் எழுந்தவேளையிலும் இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதில்லை என்பதுபோன்று யாத் திரிகர்கள் நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இல்லையேல், யாத்திரைகள் சாத்தியமற்றதாகிவிடும். சகல யாத்திரிகர்களும் உதவியின்றிப்போவதே இதற்கான காரணமாகும். அவர்கள் யாத்திரையில் வருவது கடவுள் தம்மைக் கவனித்துக் கொள்வாரென்ற நம்பிக்கையிலாகும் தவறுசெய்வோருக்குக் கடவுள் மிகவும் கடுமையான தண்டனை கொடுக்கின்றார். இத்தண்டனை உடனடியாக அல்லது பிந்திக் கிடைக்கும். ஆயினும் அது நிச்சயம் கிடைக்கும். ஆகவே பிரச்சினைகள் எழுவதில்லை.
பின்னர் யாத்திரைகளின்போது இளைஞர்களான ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் கவரப்படுகின்றனராவென்று கேட்டேன். இளைஞர்களும், யுவதிகளும் குழுக்களாக அழகான ஆடைகளை உடுத்திக்கொண்டு, அங்குமிங்கும் ஒக்கந்தவில் நடந்து திரிவதை நான் கண்டுள்ளேன். எனது கேள்வி பெருமளவு நகைச்சுவையுணர்வை ஏற்படுத்தியது. சுப்பிரமணியம் மிகவும் ஹாஸ்யமாகப் பேசினார். வேலுப்பிள்ளை அது நிச்சயமாக நடக்கும் ஒன்று என்று கூறினார். ஆட்கள் ஒருவர் மீதொருவர் ஈர்க்கப்படுகின்றார். உண்மையில், இளைஞர்கள், யுவதிகள் எதிர்ப்பாலாரைத் தேடுகின்றனர். உள்ளுரில் கோயில்களுக்குப் போவது போன்று, யாத்திரைகளும் இத்தகைய சந்திப்புகளுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. வாலிப வயதினர் இத்தகைய திருவிழாக்களுக்குப் போவதே பங்காளர்களைச் சந்திக்கும் எதிர்பார்ப்பிலாகும்.
இங்கு, கும்புக்கன் ஒயாவில் விடயங்கள் சிறிது கட்டுப்பாட்டைமீறிச் சென்றுவிட்டன. பையன்கள் விதிகளுக்கெதிரான எல்லையைத் தாண்டிவிட்டனர். ஓமோன்கள் பற்றி ஒருவர் கூறியது அர்த்தம் பொதிந்த விடயமாகும். கேலியென்பது, அவர்களின் உணர்வுபூர்வமான பிரக்ஞையின்றி, பாலியலாகும் அதில் மறைமுகமான சமிக்ஞைகள் உள்ளன. வயதில் குறைந்தவராகவிருப்பதன் உயிரியல் இந்த நடத்தையின் காரணமாகவிருப்பது போலத் தோன்றியது. தார்மீக ஆதிக்கப் பிரதேசமொன்றில் பாலியல் நடத்தை மோதலுக்கு வழிவகுக்கின்றது. அங்கிருந்த வளர்ந் தோர் அனைவரும் இளைஞர்களின் நடத்தை கேலி மாத்திரமல்லவென்பதையும், அது ஒரு வக்கிரமான முறையில் பாலியல் என்பதையும் அறிந்திருந்தனர். ஆயினும் பையன்கள் காலம், இடம் என்பவை குறித்த உணர்வை மறந்தபோது விடயங்கள் அவர்களுக்கு எதிராக மாறின. கடை உரிமையாளரின் மத பக்திபூர்வமான குரலின் ஒலி அவர்களை அமைதிப்படுத்தியது. கடையினுள்ளிருந்த சமூகம் மீண்டும் தனது பழைய, மரியாதையான சமூக உறவாடல்களுக்குத் திரும்பியது. இந்த இளைஞர்கள் சமூகச் சகிப்புத்தன்மையின் எல்லைக்கு வந்ததால் அவர்கள் பின்வாங்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
39

Page 24
இச்சூழ்நிலையில் சுவாரஸ்யமான விடயம் சிங்கள, பெளத்த கடை உரிமையாளர் ஒருவர் பெரும்பான்மைத் தமிழ் இந்துக்களுக்கிடையிலான விதிகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தலையீடு செய்ததும், அவர்கள் அதை ஏற்றுக்கொண்டதுமாகும். வழக்கமாக முதியவர்களான தமிழர்கள் தமது இரத்த உறவினர்களான இளைஞர்கள் மீது அதிகாரத்தைக்கொண்டிருந்தபோதிலும், அந்நியர்களான இளைஞர்கள் மீது அவர்களுக்கு அதிகாரமில்லையென்பதாலும், வேறொருவரின் வளவில் இது இடம்பெற்றதாலும் அவர்கள் தலையிட மனதின்றியிருந்தனர். அவர்கள் சிங்களவரான ஒருவரின் இடத்தில் இருந்தனர். பையன்களுடனோ, பெண்களுடனோ அவர்களுக்கு எந்தவிதமான சமூகத் தொடர்புகளும் இருக்கவில்லை. பெண்கள் வேறொரு யாத்திரிகர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். மழை காரணமாகவே இந்தக் கடையில் அகப்பட்டிருந்தனர். ஏனைய யாத்திரிகர்களின் விடயங்களில் தலையீடு செய்யாமை என்ற பொதுவிதி இங்கும் செயற்பட்டது. இதனால் முதியோராகிய தமிழர்கள், இச்சம்பவத்தால் தர்மசங்கட நிலைக்கு ஆளாகிய போதிலும், மனம்வருந்திய போதிலும் மெளனமாகவிருந்தனர்.
நடத்தை சமபநதப| ைவிதிகளை நடைமுறைக்கிடுவதில் சிங்கள நபரின் அதிகாரம் நான்கு மூலங்களைக் கொண்டிருந்தது. முதலாவதாக, அவரின் அதிகாரம் அந்த இடம் குறித்த அவரின் ‘சொத்துணர்வு' காரணமாக எழுந்ததாகும். அவரது இடத்தில் விடயங்களைச் சரியாக்குவது அவரின் கடமையாகும். இரண்டாவதாக, அவர் ஜனங்களுக்குப் புகலிடம் அளித்தமையால், அவர்கள் அவரின் விருட்பத்தின் பிரகாரம் நடந்துகொள்ள வேண்டும். அவர் ஒரு வசதியை வழங்கிய கொடையாளர். ஏனையோர் நன்றியுடன் இந்த வசதியைப் பெற்றுக் கொண்டோராவர். புகலிடத்தை வழங்கியது அத்துடன் ஒரு பரஸ்பரத் தன்மைக் கோட்பாட்டையும் உள்ளடக்கியிருந்தது. இதன் கருத்து அகைப் பெற்றுக்கொண்டோர் அவரின் அதிகாரத்திகீைழ் வந்தனர் என்பதாகும். மூன்றாவதாக, அவரின் பேச்சு அவர்களை விமர்சிககும் ஒன்றாகவிருந்தபோதிலும், அவமானப்படுத்துவதாக இருக்கவில்லை. அதில் மத ஈடுபாட்டுத் தொனியொன்றே ஒலித்தது. இதனால் அது ஏனையோரின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டது. இறுதியாக அவர், கும்புக்கன் ஒயாவில் இருப்பது ஒரு புனிதமான அனுபவமென்றும், யாத்திரிகர்கள் என்ற வகையில் அவர்களின் தார்மீகக் கடமையை நினைவூட்டுவதாகவும் தெரிவித்தார். கடை உரிமையாளரின் சொத்துணர்வு, கடப்பாடு, பேச்சின் பொருத்தமான தொனி, மற்றும் பொருத்தமான சூழமைவு என்னும் பண்புகள் அவரது சொற்களுக்கு மரியாதைக்குறைவாக நடந்துகொண்ட பையன்களைக் கட்டுப்படுத்தும் தார்மீக வலுவைக் கொடுத்தன. இந்தப் பண்புகளில் ஏதாவதொன்று மாத்திரமே இருந்திருக்குமெனில், அது அவரது அதிகாரத்தை நிலைநாட்ட உதவியிருக்காது.
40

உதாரணமாக, யாழ்ப்பாணத்திலிருக்கும் கடை உரிமையாளரான ஒரு சிங்களவர், அல்லது காலியிலிருக்கும் கடை உரிமையாளராகிய ஒரு தமிழர் இவ்வாறு செய்திருப்பின், அவர் தனது இனத்துவ நிலை காரணமாகப் பாரதூரமான பிரச்சினையொன்றில் மாட்டியிருப்பார். குறிப்பாக இனத்துவக் கலவர காலங்களில் சொத்துவம்குறித்த உரிமைகளை யாரும் மதிப்பதில்லை. இனத்துவ மீறல்களின் போது தனிப்பட்ட இலாபங்கள் முன்னுரிமை பெறும்போது நன்றியை மறந்துவிடுவர். தனிப்பட்ட மற்றும் அரசியல்-சமூக நோக்கங்களுக்காகச் சூழமைவுகள் நிர்மாணிக்கப்பட்டு, திரிபுபடுத்தப்படுகின்றன. பேச்சின் தொனி சூழமைவுப் பொருத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, கேலிக்குள்ளாக்கப்படுகின்றது. ஆயினும் இவையனைத்தும் ஒருங்கமையும்போது, யால வனத்தின் நடுவில் இத்தேநீர்க் கடையிலாவது, அவை தார்மீக அதிகாரத்தைப் பிறப்பித்தன.
ஒக்கந்தவில் நான் உருவாக்கிய எண்ணப்பாடுகளுக்கு எதிராக, யாத்திரிகர்கள் முரண்படும் சூழ்நிலைகளை எதிர்நோக்குகின்றனர். இந்த யாத்திரையின் சாதாரண, வரன்முறையான கட்டமைப்புகள், யாத்திரிகர்களின் சமூக நடத்தை குறித்த தேவ கட்டளைகளாகவிருப்பினும், இவ்வாறு எப்பொழுதாவது ஒருமுறை மீறப்படும் தருணங்களும் உள்ளன. இங்கு நான் இனத்துவம், சமூகவர்க்கம், ஜாதி, மதம் அல்லது தனிப்பட்ட அல்லது கூட்டு அபிலாஷை சமூக முரண்பாட்டை உருவாக்கியதைக் காணவில்லை. பால்நிலையை ஒரு காரணமாகக் காணலாம். ஏனெனில் பையன்களின் முரட்டுத்தனமான நடத்தை ஏனையோர் எவரையும் அன்றி, பெண் பிள்ளைகளை நோக்கியதாகவே இருந்தது. அவர்களின் இந்த முரட்டுத்தன்மை வெளிப்படையான பாலியல் தன்மையைக் கொண்டிருக்கவில்லை - உடல்ரீதியாக யாரும் எவரையும் தொடவில்லை. அத்தோடு அவர்களின் மொழியில் வெளிப்படையான பாலியல் கருத்துக்கள் இருக்கவில்லையென்றும் இராஜரத்தினம் தெரிவித்தார். அந்த சமூகச் சூழமைவில் பெண்களுக்குப் பையன்களைத் திருப்பிக் கேலி செய்வதற்கோ அல்லது அதை நிறுத்துமாறு கூறுவதற்கோ சந்தர்ப்பம் இருக்கவில்லை. அவர்கள் முகத்தைக் கோணலாக்கினர், அல்லது வெறுமனே பயந்து ஒதுங்கினர். இது கேலியை இன்னமும் மோசமாக்கியது. பொது இடங்களில் பெண் பிள்ளைகள் சம்பந்தமான நடத்தை விதிகள், அவர்கள் இந்தக் கேலியை எதிர்த்து வலுவாக ஏதாவது செய்வதை முறையற்றதாக்கின. இந்த நாடகத்துக்குப் பின்னால் பொது இடங்களில் நேர்த்தியாக நடந்துகொள்வதை வலியுறுத்தும் தமிழ்க் கலாசாரமும் (தெற்காசிய கலாசாரமும்), பெண்கள், பிரத்தியேகமாக திருமணமாகாத பெண்கள் சமூகரீதியில் சுயமதிப்போடு நடந்து கொள்வதைத் தடுக்கும் சமூக ஒழுக்கநெறிகளும் இருந்தன. ஒப்பீட்டுரீதியில் பெண் பிள்ளைகளை அனுகூலமற்ற பலவீனமான நிலையில் வைக்கும் இந்தச் சமூக ஒழுக்கநெறிகளிலிருந்து பையன்கள் பயன் பெற்றுக்கொண்டனர்.
41

Page 25
மாலை ஏழரை மணியளவில் மழை நின்றுவிட்டது. நான் கோவிலையும் யாத்திரிகர்களையும் பார்ப்பதற்காக வெளியே நடந்து சென்றேன். மழை பெய்த வேளையில் நெருப்பு அணைந்து விட்டதால், பல யாத்திரிகர் குழுக்கள் சமையலைக் கைவிட்டனர். சமைக்கும் பானை சட்டிகளைப் அவசரமாகப் பிளாஸ்டிக் துணிகளால் மூடிக்கொண்டு அவர்கள் பெரிய மரங்களின்கீழ் திரண்டுநின்றனர். ஆற்றினில் சென்று விழும் வெள்ளம் அவர்களின் முகாம்களையும், கோயிலையும் தண்ணிரால் நிரப்பிவிட்டது. தேநீர்க்கடையில் ஒருசிலரே நிற்கக் கூடியதாகவிருந்தது. முதியோர்கள் மற்றும் சிறுவர்களை உள்ளடக்கும்வகையில் அநேகமானோர் ஆற்றிலிருக்கும் மீனைப்போல் நனைந்திருந்தனர். நெருப்பை மீண்டும் எரியச் செய்வதற்குப் பலர் முயன்றனராயினும் விறகு ஈரமாகிவிட்டதுடன், நிலமும் சேறாகவிருந்ததனால் அது சாத்தியப்படவில்லை. கடையிலும் உணவு இல்லை. நாம் எம்மிடம் எஞ்சியிருந்த ஒருசில ரொட்டிகளைச் சாப்பிட்டோம். பலருக்கு உணவு இருக்கவில்லை.
கடை உரிமையாளர் நாங்கள் நித்திரை செய்வதற்கு ஓர் இடத்தை ஒழுங்கு செய்வதில் இரக்கத்தோடு உதவி செய்ய முன்வந்தார். கடை நூற்றுக்கணக்கான வெற்றிலைபோடும் யாத்திரிகர்களின் எச்சில்களால் அழுக்காகியிருந்தபோதிலும், அந்த இடமே மிகவும் பாதுகாப்பானதும், காய்ந்திருந்ததுமாக விளங்கியது. அவர்கள் நிலத்தைப் பெருக்கி, பிளாஸ்டிக் பைகளை ஒன்று சேர்த்துத் தைத்த ஒரு பெரிய பாயைக் கொண்டுவந்து அதில் விரித்தார்கள். அதன்பின்னர் அதற்குமேல் வேறொரு பிளாஸ்டிக் துணியை விரித்தார்கள். நடைமுறையில் யாத்திரிகர்களின் ஒவ்வொரு குழுவும் சேற்றில் படுத்து நித்திரை செய்வதற்குத் தம்மாலான முயற்சிகளைச் செய்தார்கள். தொடர்ச்சியாக 'அரோஹரா ஒலி எழுந்தவண்ணமிருந்தது. இதன் நோக்கம் யானைகளைப் பயமுறுத்தி விரட்டுவதாகுமென்று கடை உரிமையாளர் கூறினார். காட்டு யானைக் கூட்டங்கள் அடிக்கடி கும்புக்கன் ஓயாவுக்கு வருவது வழக்கமென்பது தெளிவாகியது. திருவிழாக் காலத்தில் இடத்துக்கிடம் மாறும் மனிதர்களுக்குப் புகலிடமாக விளங்கிய காட்டின் இந்தப்பகுதிக்குள் காட்டு யானைகளும், பன்றிகள் போன்ற ஏனைய வனவிலங்குகளும் வராமல் தடுப்பதற்கு யாத்திரிகர்கள் பயன்படுத்திய ஆயுதம் அரோஹரா’ என்ற ஒலியேயாகும்.
இந்த வாழ்விடமும், அதன் ஒலி முறைகளும் எனக்கு மீண்டும் ஒக்கந்தவை நினைவூட்டின. அங்கு நான் கூறியது போலவே, யாத்திரிகர்களின் ஒவ்வொரு குழுவும் ஒரு சுயாதீனமான சமூக அலகாகவே தமது சொந்தத் தனிச்சிறப்பான உள்ளக அமைப்புகளையும், வரன்முறையான ஒழுங்கையும் கொண்டவர்களாகத் தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆயினும் ஒவ்வொரு குழுவும் ஏனைய குழுக்களுடன் அனைவருக்கும் ஒரு பொதுவான நோக்கத்தையும் இந்த நோக்கத்தை அடைவதற்கான பொதுவான வரன்முறைச் சட்டகங்களையும் வழங்கிய
42

அனைத்துமடங்கும் தார்மீக ஒழுங்கைப் பகிர்ந்துகொண்டனர். இங்கு ஒப்பீட்டுரீதியில் சுயாதீனமான பல சமூக அலகுகள் பொதுவான நடத்தை சம்பந்தமான விதிகளினுள் ஒன்றுசேர்ந்து கருமமாற்றுகின்றன. வித்தியாசம், யாத்திரிகர்களின் அனைத்துமடங்கும் ஜனசமூகம் யாத்திரை இடம்பெறும் தலத்தில் தொடர்ந்தும் மாறிக்கொண்டே இருப்பதாகும். அன்றாட வாழ்வில் ஜனசமூகங்கள் ஒப்பீட்டு அடிப்படையில் மேலும் நிரந்தரமானவையும், ஒரே உள்ளுர்ச் சூழலில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவருபவையும், நிரந்தரமான பொருளாதார மற்றும் அரசியல் அத்திவாரங்களைக் கொண்டவையுமாகும். இவ்வாறாக, நீண்டகாலம் ஒன்றிணைந்து வாழுதல் காரணமாக இச்சமூக அலகுகளின் சுயாதீனம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் சமூகக் கடப்பாடுகள் பாரியவையாகும். சமூகம் ஒவ்வொருவரினதும் நடத்தையை விதிமுறையற்ற முறையில் கண்காணிக்கின்றது, மேற்பார்வை செய்கின்றது. ஆயினும் இங்கு பாரிய பெரும்பான்மையான யாத்திரிகர் குழுக்கள் ஒருவரையொருவர் அறியாதவர்களாவர். இவர்கள் மீண்டும் சந்திக்கும் நம்பிக்கையற்றவர்களாவர். உதாரணமாக, நேற்று ஒக்கந்தவில் இருந்தவர்கள் அவர்களோடு அங்கிருந்தவர்களை இனியொருபோதும் மீண்டும் சந்திக்கமாட்டார்கள். ஆகவே, அவர்களின் பரஸ்பர கடப்பாடுகளும், எதிர்பார்ப்புகளும் அவர்களின் அன்றாட ஜனசமூகங்களைப் போலவன்றி, ஆகக் குறைவானவையாகும். எந்தக் குழுவுக்கும் வேறொரு குழுமீது மேற்பார்வை அதிகாரமோ, அறிவுரைகூறும் அதிகாரமோ கிடையாது. இந்தச் சூழ்நிலைகளின்கீழ், ஒவ்வொரு குழுவும் ஏனையவற்றின் வசதிகளைக் கருத்திற் கொள்ளாது, தனது சொந்த நலன்களை மாத்திரம் அதிகளவில் வலியுறுத்துவதனால் குழப்பநிலைகளே எஞ்சும். ஆயினும் இது நடைபெறவில்லை. அன்றாட உறவுகள் இல்லையென்று அவர்களை முழுக்கமுழுக்கச் சுயாதீனமாக்கி, ஏனையவர்கள் குறித்துப் பொறுப்பற்றவர்களாக்கி விடவில்லை. அவர்களின் பரஸ்பர உறவாடல்கள் கட்டமைப்புப் பெற்றவையாகவும், கட்டுப்படுத்தப்பட்டவையாகவும் விளங்கின. சமூகக் கட்டமைப்பின் நிலையிலாப் பண்பு, அல்லது விக்டர் டேர்னர் கூறுவதன் பிரகாரம் ஒரு யாத்திரிகர் நிலையத்தின் எதிர்க்கட்டமைப்பு அதை எந்தவிதத்திலும் பலவீனமாக்கிவிடவில்லை.
இங்கு, கும்புக்கன் ஒயாவில் நான் அதே பாங்கை அவதானித்தேன். தேநீர்க்கடையில் இடம்பெற்ற சம்பவத்திலும் இந்த ஒழுங்கமைவு தெளிவாகியது. இப்பொழுது, இந்தச் சமூகப் பரிமாணத்திலான 'அரோஹரா’வில் இது மேலும் தெளிவாகியது. இந்த அமைப்பின் மூலம் ஒக்கந்தவில் இருந்ததை ஒத்ததாகவே தோன்றியது. இது முருக வழிபாடாகும். சமூக உறவாடல்களில் யாத்திரிகர்களுக்கிடையில் சமத்துவத்தை ஏற்படுத்திய தார்மீக ஒழுங்கமைப்பு ஒவ்வொரு யாத்திரிகரையும், அவரது குழுவையும் முருகனின் அதிகாரத்தின்கீழ் கொண்டுவருகின்றது. முருகனின் அதிகாரம் தமிழ்நாடு, ருகுணை, குறிப்பாகத்
43

Page 26
தமிழ்நாட்டில் அவரின் ஆறுபடைவீடுகளில், கதிர்காமத்தில், நல்லூரில், ஏனைய கிராமங்கள் மற்றும் பட்டினங்களில் மற்றும் தீவுமுழுவதும் சிதறலாகக் காணப்படும் முருகன் ஆலயங்களில் செறிவாகக் காணப்படுவதாகும். முருக யாத்திரிகர்கள் திரளும் இடங்களும் அவரின் நேரடி அதிகாரத்தின்கீழ் வருகின்றன. யாத்திரிகர் செல்லுமிடங்கள் அனைத்தும் யாத்திரையின் பரிதியினுள் வருகின்றன. வணக்கக் குழுக்களின் தார்மீக ஒழுங்கை உள்ளடக்கும் கடவுளின் கட்டளைகளை எதிர்க்கும் துணிவு எவருக்கும் கிடையாது. வெறுமனே கடவுளின் அதிகாரத்தைத் துணைக்கழைப்பதே முரட்டுத்தனமான எந்த நபரையும் அமைதிப்படுத்துவதற்குப் போதுமானதாகும். 'அரோஹரா ஒலி கடவுள் அதிகாரத்தை மாத்திரமன்றி அவரின் அருளையும், பாதுகாப்பையும் வேண்டிநின்றது. ஒரு குழு அழைத்தபோது ஏனைய குழுக்கள் உடனடியாக உதவிக்கு விரைந்தன. கும்புக்கன் ஒயாவில் கேட்கும் ’அரோஹரா ஒலிகள் ஒவ்வொரு யாத்திரிகருக்கும் கடவுளுக்கான கடப்பாடுகளையும், ஏனைய யாத்திரிகர்களுக்கான கடப்பாடுகளையும் நினைவூட்டின. வேறு ஒருவரின் 'அரோஹரா ஒலிக்குப் பதிலளிப்பதற்கான தேவை வழக்கத்தால் வரும் ஒன்றாகும். நம்பிக்கையினூடாகத் தானாகவே பதில் நடவடிக்கை இடம்பெறுகின்றது. இரவு நேரத்தில் தூரத்திலிருக்கும் ஒரு குழுவின் 'அரோஹரா’ ஒலி சகல யாத்திரிகர்கள் குழுக்களினதும் கவனத்தை ஈர்க்கும். இது ஒரு தேவையாக, ஆபத்தாக அல்லது அந்தக் குழு முகங்கொடுக்கும் வேறேதாவது சூழ்நிலையாக இருக்கலாம். 'அரோஹரா’ என்பது ஒருவருக்கொருவர் தெரிவிக்கும் ஓர் ஆசீர்வாதம் என்பதற்கு மேலதிகமாக, ஒரு சிக்கலான மொழியியல் வழிமுறையுமாகும். இது முருகனின் ஆதிக்கப் பிரதேசத்தினுள் வித்தியாசமான குழுக்களுக்கிடையே தொடர்பாடலை ஏற்படுத்தி, அவர்களை வாழவைப்பதாகும். இந்த நிலைமைகளின்கீழ், தேள்கள் அருகில் நகர்ந்து செல்லும்வேளையில், நித்திரை செய்வது இலகுவானதல்ல. எனது ஆடைகள் நனைந்திருந்தன, குளிர்காற்றும் வீசியது. என்னுடைய தோழர்கள் விரைவாக ஆழ்ந்த நித்திரைசெய்தபோது நான் விழித்திருந்து அருகிலிருந்த ஒரு குழுவில் பெண்ணொருத்தி பாடுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்பாடலில் இறுதிச்சந்த ஒலிகள் எதுவும் இருக்கவில்லை. ஒவ்வொரு வரியும் 'முருகா’ என்ற வார்த்தையோடு முடிவுற்றது. அவள் இதைக் கடைசி "ஆ.." சத்தம் நீண்டு ஒலிக்கும்வகையில் ஒவ்வொரு வரியாகப் பாடினாள். அவளின் குரல் ஒரு தீர்க்கமான, வேண்டுகோள்விடுக்கும் சோகத் தொனியில் ஒலித்தது. ஒவ்வொரு வரியும் பாடி முடிந்தபோது அவளின் குழுவைச் சேர்ந்தோர் 'அரோஹரா’ என்று பதில் ஒலி எழுப்பினர். இந்த ஒலியை அவளது குழுவுக்கு அருகிலிருந்த ஏனைய யாத்திரிகர் வட்டமும் பின்பற்றியது. இதற்கு அடுத்த வட்டத்திலிருந்தோரும் பின்னர் இந்த ஒலியை எழுப்பினர். இவ்வாறு இது குழுவுக்குக் குழு சென்று, இறுதியில்
44

காதுக்குக் கேட்காத அளவுக்குப் பலவீனமாக ஒலித்தது. பின்னர் அவள் அடுத்த வரியைப் பாடினாள். முழுச்செயல்முறையும் மீண்டும் ஒருமுறை நிகழும். இந்தக் கோரஸ் செயற்பாடு நள்ளிரவு வரை தொடர்ந்தது. அதன்பின்னர் ஒரு மரத்தின் உச்சியில் இருந்த நனைந்த பறவையொன்றின் ஒலி மாத்திரமே கேட்டது.
ஆகஸ்ட் 2
சூரியன் உதிக்குமுன்னர் நாங்கள் எழும்பி விட்டோம். பாதி இருட்டில் ஏனைய யாத்திரிகர்கள் புறப்படத் தயாரானதைக் கண்டேன். நான் ஆற்றுக்குச் செல்ல முயற்சி செய்தேன். ஆயினும், ஒடுக்கமான ஒரு பாதையைத்தவிர ஆற்றங்கரைக்குச் செல்ல இடமிருக்கவில்லை. யாத்திரிகர்கள் எல்லா இடங்களிலும் மலம் கழித்திருந்ததே இதற்கான காரணமாகும். ஆற்றின் மறுகரையிலும் நான் யாத்திரிகர்களைக் காண முடிந்தது. அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள், அல்லது புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். நான் தேநீர்க்கடைக்குத் திரும்பிவந்த வேளையில் இராஜரத்தினமும், சின்னத்துரையும் எங்கள் படுக்கையைச் சுருட்டிக்கட்டிக் கடை உரிமையாளரிடம் திருப்பிக்கொடுத்து விட்டனர். நான் போத்தலிலிருந்த தண்ணிரை உபயோகித்து வாயைக் கழுவினேன். ஆயினும் ஆற்றங்கரையிலிருந்த அருவருக்கத்தக்க காட்சிகளால் வயிறு குமட்டியது. ஆற்றைக் கடப்பதற்கு எவவாறு இந்த அழுக்கான நீருள் இறங்குவது என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். வாயினுள் பற்பசை சென்றதும் வயிறுகுமட்டி வாந்தி எடுத்தேன். ஆயினும் இந்தப் பிரச்சினைகுறித்து என்னால் எதையுமே செய்ய முடியவில்லை. அழுக்குத் தண்ணிரின் மேலாகப் பாலமெதுவும் இருக்கவில்லை. இராஜரத்தினமும், சின்னத்துரையும் எனக்குப் பின்னால் வர நான் கலங்கிய நீரினுள் அடியெடுத்து வைத்தேன். ஆழமற்ற ஆறு மழை காரணமாக இப்பொழுது நீர் நிறைந்திருந்தது. ஆழம் கூடிய இடத்தில் தண்ணிர் எனது அக்குள்மட்டத்தில் விரைந்து சென்றது. ஒடும் தண்ணிருள் சென்றதும் எனது ஆரம்ப அருவருப்புணர்வு குறைவடைந்தது. வானத்தில் முகில்களுக்கூடாகச் சூரியன் எட்டிப்பார்த்தபோது நான் ஆற்றின் குறுக்காக நடந்து கொண்டிருந்தேன். விரைவிலேயே முகில்கள் மேற்குத்திசையாக நகர்ந்துசென்றன. சூரியனின் பிரகாசமான ஒளி எங்கும் நிறைந்தது. இக்காட்சி மிகவும் அழகாக இருந்தது. திருவிழாக் காலத்தின் பின்னர், ஒருசில தடவைகள் பலத்த மழை பெய்தபின்னர் கும்புக்கன் ஓயாவும், உயரமான மரங்களின் கீழிருந்த சிறிய அம்மன் கோவிலும் ஒய்வெடுப்பதற்கான சிறந்த, அழகான இடமாக விளங்கும்.
நான் கும்புக்கன் ஒயாவிலிருந்து 14 கி.மீ. தொலைவிலுள்ள நியால என்னும் இடத்தை நோக்கி நடந்தோம். நியாலவுக்கான பாதை அநேகமாக
45

Page 27
வரண்ட ஏரிகள் மற்றும் பற்றைக் காடுகளைக்கொண்ட திறந்தவெளியாக இருந்தது. சேற்று நீரோடைகளைக் கடந்து சென்றோம். அதைவிட வேறு முக்கியமான நிகழ்வுகள் எதுவுமே இடம்பெறவில்லை. மிகவும் நல்லமுறையில் நிர்மாணிக்கப்பட்ட கிணறுகள் மற்றும் யாத்திரிகர் தங்குமிடம் என்பவற்றுடன் நியால பிரசித்திபெற்று விளங்கியது. காலையில் கும்புக்கன் ஒயாவிலிருந்து புறப்படுவோர் மதியப்பொழுதில் நியாலவைச் சென்றடையலாம். அங்கு அவர்கள் மதிய உணவைச் சமைத்து, குளித்து, தண்ணிர்க் கொள்கலன்களையும் நிரப்பிக்கொள்ளலாம்.
ஆயினும் எம்மைப்பொறுத்தவரையில் இது நடைபெறவில்லை. கிணறுகளில் ஓடாது நிற்கும் கலங்கிய தண்ணிரே இருந்தது. என்னுடன் வந்த யாத்திரிகர்கள் இதைப் பொருட்படுத்தாது இந்தத் தண்ணிரைப் பயன்படுத்தினர். என் கைவசமிருந்த தண்ணிர் விரைவாகக் குறைவடைந்துவந்ததால், என் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டிருந்தது. நியாலவுக்குப் பிறகு தண்ணிர் கிடைக்கக்கூடிய அடுத்த இடம் 13 கி.மீ. தொலைவில் இருந்த கட்டகமுவ ஆகும். எம்மூவர் மத்தியிலும் மூன்று போத்தல் தண்ணிர் மாத்திரமே இருந்தது. நாம் கருக்கல்பொழுதில் கட்டகமுவவைப் போய்ச்சேருவது அவசியமாக இருந்தது. நாம் நேரகாலத்தோடு புறப்பட்டால் போய்விடலாமென்று எண்ணினோம். சின்னத்துரை விரைவாகச் சோற்றையும், உருளைக்கிழங்குக் கறியையும் சமைத்தான். நாம் பின்மதியம் ஒரு மணியளவில் புறப்பட்டோம். சின்னத்துரைக்கு இந்த விடயம் குறித்துத் திருப்தி ஏற்படவில்லை. அவனது அனுபவத்தில் நியாலவினுடாகச் சிறு குழுக்களாகச் செல்வது புத்திசாலித்தனமான காரியமல்ல. இப்பிரதேசத்தில் வன விலங்குகள் அலைந்துதிரிவதாக அனைவரும் நம்பினர். குறிப்பாக, இப்பிரதேசத்தில் பல குழுக்கள் ஒன்றாகச் செல்லுவதே வழக்கமாகும். நாம் வருவது வரட்டுமென்று புறப்பட்டோம்.
உயரங்குறைவான பற்றைக்காடுகள், மணல் திட்டிகள், நிலையாக நிற்கும் நீரைக்கொண்ட பெரிய குளங்கள் என்பவற்றைக் கடந்து சுமார் இரண்டு கி.மீ. தூரம் சென்றோம். எமக்கு இடதுபுறத்தில் நீர்க்குளங்களும், வலதுபுறத்தில் அடர்ந்த காடும் இருந்தன. பின்னர் ஐம்பது மீற்றர் தூரத்தில் பல காட்டெருமைகளைக் கண்டோம். உண்மையில் ஓர் அசட்டுத் துணிச்சலில் புறப்பட்டுவிட்டோமென்ற உணர்வு ஏற்பட்டது. பலம்வாய்ந்த ஆண் எருமையொன்று அங்குமிங்கும் அலைந்துதிரிந்தது. நாம் இருந்த இடத்திலிருந்து பார்க்கும்போதே அதன் தோற்றம் தாக்குவதற்குத் தயாராகவிருப்பதுபோலிருந்தது. அவை தெருவுக்கு மிகவும் சமீபமாக நின்றதால், நான் முன்னோக்கிச் செல்ல முடியவில்லை. அவை எம்மைத் தாக்கக்கூடுமென்று பயந்தோம். விரைவில் அவை எம்மைக்கண்டு, தெருவுக்குக் குறுக்காக எமது வலதுபக்கத்திலிருந்த காட்டினுள் ஓடின, அவை ஒரேயடியாக ஓடிவிட்டனவென்று ஒரு கணப்பொழுது எண்ணினோம். ஆனால் அவை மீண்டும்
46

தெருட்பக்கம் வந்து புல்மேயத் தொடங்கின. நாம் கும்புக்கன் ஒயாவில் கேள்விப்பட்ட விடயம் நினைவுக்கு வந்ததால், 'அரோஹரா’ என்று பலமாகக் கத்தினோம். அவை கவனிக்கவேயில்லை. சின்னத்துரை முன்னுக்குச்சென்று ‘போய்விடுங்கள்' என்று சொல்வதுபோல் கீச்சுக்குரலில் 'அரோஹரா’ என்று கத்தினான். ஆயினும் எதுவும் நடக்கவில்லை. நாம் ஒரு மரத்தடிக்குத் திரும்பிச்சென்று, நிலையான நீர்த்தேக்கமொன்றிலிருந்து எடுக்கப்பட்ட சேறுகலந்த நீரில் தேநீர் தயாரிப்பதில் சிறிது நேரத்தைச் செலவிடத் தீர்மானித்தோம். இந்த மோசமான சுவைகொண்ட தேநீரை நாம் பருக ஆரம்பித்ததும், பல எருமைகள் காட்டுக்குள்ளிருந்து ஓடிவந்து எமக்கு இருபது மீற்றர் தொலைவிலிருந்த மண்திட்டியைநோக்கி வந்தன. நாம் மீண்டும் மீண்டும் 'அரோஹரா’ என்று கத்தினோம். ஆயினும், ஓடிவிடுவதற்குப் பதிலாக, அவை எம்மை நோக்கி வரத்தொடங்கின. இப்பொழுது என்ன செய்வது? ஓடுவது அல்லது மரத்தில் ஏறுவதைத் தவிர செய்வதற்கு வேறெதுவுமில்லை. அவை எம்மைத் துரத்திவரக் கூடுமென்பதால் ஓடுவது புத்திசாலித்தனமாகத் தெரியவில்லை. நாம் மரத்தில் பாதுகாப்பான உயரத்துக்கு ஏறினோம். எனது “கமெரா பை போன்ற முக்கிய பொருட்களையும் எடுத்துக்கொண்டு ஏறினோம். 'அரோஹரா என்று தொடர்ந்து கத்தினோம். ஐந்து எருமைகள் மரத்தை நெருங்கிவந்து, தலையைக் குனிந்துகொண்டு அரைவட்டமாக நின்றன. அடிக்கடி தலையை ஆட்டுவதும், முன்னங்கால்களால் நிலத்தில் உதைப்பதுமாக நின்றன. இராஜரத்தினம் இதை ஒரு தாக்குதல்தொடுக்கும் நிலைப்பாடென்று எண்ணினான். சின்னத்துரை ஒருசில வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைக் கூறினான். ஓர் எருமைக்கூட்டம் பலரைத் தாக்கிப் பாரதூரமாகக் காயப்படுத்தியது. அவர்களைக் கொன்றுமிருக்கக்கூடும். இது எமது சூழ்நிலையில் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கவில்லை. நாங்கள் அவ்வளவு உயரமற்ற அந்த மரத்தில் பலவீனமான கிளைகளில், வேறு பலவீனமான கிளைகளைப் பிடித்தவாறு நின்றோம். வியர்த்துக் கொட்டியது. பயத்தில் எதுவுமே செய்யத்தோன்றாமல், நியாலவிலிருந்து தனியாகப் புறப்பட்டதற்காக எம்மையே நொந்து கொண்டோம்.
இவ்வாறு காத்திருக்கும் விளையாட்டு தொடர்ந்தது. எருமைகள் சிலவேளையில் தலையை ஆட்டிக்கொண்டும், முன்னங்கால்களால் நிலத்தில் உதைத்துக்கொண்டும், சில வேளைகளில் அவ்வாறு எதுவும் செய்யாமல் சிலைகள் போலவும் நின்றன. சிறிது நேரத்தின் பின் பயம் குறைந்ததால், நாம் எருமைகள்குறித்துக் கேலியாகப் பேசத் தொடங்கினோம். பல்வேறு பயமுறுத்தும் தொனிகளில் 'அரோஹரா’ என்று கூறிப் பார்த்தோம். எமது ஒலிகளை அவை பூரணமாக உதாசீனம்செய்யுமென்பது எமக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. பின்மதியம் மூன்றரை மணியளவில் சமவெளியில் தூரத்தில் எதுவோ அசைவது தெரிந்தது. விரைவில் அது ஒரு வரிசையின் வடிவத்தை எடுத்தது. 'அரோஹரா ஒலிகளும்
47

Page 28
மங்கலாகக் கேட்டன. உலகில் வேறெந்தக் காட்சியோ, ஒலியோ அந்தவேளையில் எமக்கு அவ்வளவு ஆறுதலைக் கொடுத்திராது. சுமார் இருபத்தைந்து பேரைக்கொண்ட பல யாத்திரிகர் குழுக்கள் வந்துகொண்டிருந்தன. சுமார் முப்பது எருமைகள் மணல்திட்டியின் அடுத்த பக்கத்திலிருந்து காட்டைநோக்கி வேகமாக ஓடி வந்தபோது பெரும் குழப்பநிலை தோன்றியது. இந்தக் குழப்பநிலைகுறித்து எதுவுமே அறியாத யாத்திரிகர்கள் 'அரோஹரா’ என்று கத்திக்கொண்டு வந்தனர். ஆயினும் எமது சிறிய ஒலிகள் யாத்திரிகர்களின் இரைச்சலில் அடங்கிவிட்டன. நாங்கள் மரத்தில் இருப்பதை அவர்கள் கவனிக்கவேயில்லை. அவர்கள் அருகில் நெருங்கிவந்தபோது நாம் கீழே குதித்தோம். மரத்திலிருந்து திடீரென்று மனிதர்கள் கீழே குதிப்பதைக் கண்டு அவர்கள் திடுக்குற்று நின்றனர். 'எருமை! எருமை!” என்று சின்னத்துரை தமது கீச்சுக் குரலில் கத்தினான். இதைக்கேட்டுக் கூட்டத்தில் இருந்தவர்கள் உரத்தகுரலில் 'அரோஹரா’ என்று கத்தினர். இராஜரத்தினமும், சின்னத்துரையும் எமது ஆபத்தான நிலைமையை அவர்களுக்கு விளக்கியபோது அவர்கள் பலமாகச் சிரித்தனர். எங்களுக்கும் அது இப்பொழுது நகைச்சுவையாகத் தோன்றியது. ஒருசில நிமிடங்களுக்கு முன்னர் மிகவும் பயங்கரமாகத் தோன்றிய நிலைமை இப்பொழுது மீண்டும் நகைச் சுவையாக நடித்துக்காட்டப்பட்டபோது வேடிக்கையாக இருந்தது. ஒரு விடயம் உரை செய்யப்பட்ட பின்னர் எவ்வளவு வித்தியாசமானதாகத் தோன்றுகின்றது! இராஜரத்தினம் இந்த விடயம் சம்பந்தமான தனது கருத்தை வெளியிட்டார். முருகன் சரியான நேரத்தில் ஆட்களை அனுப்பி எங்களை இரட்சித்தார், அபாயத்திலிருந்து பாதுகாத்தார். எங்களில் ஒருவர் கால்தவறி மரத்திலிருந்து கீழே விழுந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? முருகன் எங்களைக் கதிர்காமத்தில் சந்திக்க விரும்புகிறார். ஆகவே நாங்கள் ஒருபோதும் விழமாட்டோம். ஜனக்கூட்டம் 'அரோஹரா’ என்று ஒலியெழுப்பியது. விரைவில் நாம் பாதையில் நடந்துகொண்டிருந்தோம். நீண்ட தூரத்திலிருந்த ஒரு நீரூற்றினருகில் ஐம்பதுக்கு மேற்பட்ட எருமைகள் நின்றன. காற்றில் வந்துசேரும் இந்த எதிர்பாராத இரைச்சலுக்குக் காதுகொடுப்பதற்காக அவை தலைகளை உயர்த்தின.
நாம் கருக்கல் பொழுதுவரை காட்டினுள் குறுக்காக நடந்தோம். நாம் நியாலவிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரம் வந்துவிட்டோமென்று அனைவரும் கூறியபோது, நாம் ஒரு பெரிய திறந்த வெளியில் பிரவேசித்தோம். இதன் நடுவில் ஒரு பாரிய தனிமரம் நின்றது. இரவை இந்த மரத்தின்கீழ்க் கழிப்பதென்று அனைவரும் முடிவுசெய்தோம். இளைஞர்கள் விறகுக் குவியல்களைக் கொண்டுவந்து மரத்தைச்சுற்றி நான்கு இடங்களில் பெரிய தீயை மூட்டினார்கள். இதன் நடுவில், கும்புக்கன் ஒயாவில் செய்ததுபோலவே, மனிதர்கள் படுத்துறங்குவதற்கு இடமிருந்தது. தீ வனவிலங்குகளுக்குப் பீதியூட்டி, அவற்றை நெருங்க விடாமல் செய்தது. இது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்பதுகுறித்து
48

நான் சிந்தித்தேன். பலவீனமான விலங்குகளை ஒலியெழுப்பியும், பலமான விலங்குகளை ஓரிரு இடங்களில் தீ மூட்டியும் துரத்துகின்றனர். ஆயினும் யானைகளும், எருமைகளும், காட்டுப்பன்றிகளும் உள்ளேவரத் தீர்மானித்தால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படாது. ஆயினும், அவை ஒருபோதும் அவ்வாறு வருவதில்லை. கிழக்கிலிருந்துவரும் பலமான காற்று குளிராகவும், இதமாகவும் வீசியது. இதனால் நெருப்பு அழகாகவும், தீவிரமாகவும் எரிந்தது.
யாரும் உணவு சமைக்கவில்லை. எவரிடமும் அதற்கான தண்ணிர் இருக்கவில்லை. எல்லோரும் தாம் வைத்திருந்த சிறிய அளவிலான நீரைப் பாதுகாத்தனர். இப்பொழுது ஒரு கோப்பை தேநீரும், காலையில் இன்னுமொரு கோப்பை தேநீரும் அவசியமாகும். நாம் எமது லெமன் பவ் பிஸ்கட்டுகளையும், எமது அக்கரைப்பற்று நண்பர் சுப்பையா கொடுத்த அரிசி மாவையும் சாப்பிட்டோம்? அதன் பின்னர் பால் தேநீரையும் அருந்தினோம். எவரோ ஒருவர் ரேடியோவைப் போட்டார். ஏனையோர் பெரிதாக ஆட்சேபித்ததால் அது உடனடியாக நிறுத்தப்பட்டது. கடலோர வானத்தில் பாரிய கருமுகில்கள் நிறைந்து, மழை வருமோவென்ற அச்சமும் ஏற்பட்டது. காற்றில் அவை கலைந்து சென்றுவிடுமென்று நம்பினோம். மேற்கு வானம் செம்மஞ்சள் ஒளியில் பிரகாசித்தது. எம் தலைக்கு மேலாகவிருந்த வானம் தெளிவாகவிருந்தது. பால்வெளியை நாம் கண்டோம். ஆழமான, நீலநிறப் பின்னணியில் எசல வளர்பிறையின் நான்காவது தோற்றம் மிகவும் அழகாகக் காட்சியளித்தது.
ஆகஸ்ட் 8
அதிகாலை ஐந்து மணிக்கு என் தோழர்கள் எழுந்து, சுறுசுறுப்பாக வேலைகளில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் எரிந்துகொண்டிருந்த நெருப்பு இப்பொழுது படிப்படியாக அணைந்து கொண்டிருந்தது. ஒரு கோப்பை தேநீர் அருந்திய பின்னர் சிறிது உலாவிய வேளையில், மட்டக்களப்பைச் சேர்ந்த நடுத்தர வயதான ஜோடியைச் சந்தித்தேன். தங்கவேலு-மீன்பிடிப்பவர். அவரின் மனைவி செல்வமணி வீட்டைக் கவனித்துக் கொண்டாள். இரு பையன்களும், இரு பெண்களுமாக அவர்களுக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். பையன்களும் மீனவர்கள் ஆவர். இரு பெண்களும் மீனவர்களையே திருமணம் செய்திருந்தனர். அவர்களுக்குப் பல பேரப்பிள்ளைகளும் இருந்தனர். தங்கவேலு சிங்களத்தில் சரளமாக உரையாடினான். செல்வமணிக்கு எதுவுமே புரியவில்லை. அவன் தெற்கின் மீனவர்களிடமிருந்து சிங்களத்தைக் கற்றுக்கொண்டான். அவர்கள் தங்கவேலுவைப் போன்ற மீனவர்களிடமிருந்து தமிழைக் கற்றுக்கொண்டனர். அவர்கள் கடலிலும், கரையிலும் அடிக்கடி சந்தித்தனர். அவசியமான வேளைகளில் ஒருவருக்கொருவர் உதவியும் செய்தனர்.
49

Page 29
தங்கவேலுவுக்குத் தெற்கில் பல நல்ல நண்பர்கள் இருந்தனர். இவர்கள் அம்பாந்தோட்டை, மாத்தறை, வெலிகமை, காலி மற்றும் அம்பலாங்கொடையைச் சேர்ந்தோராவர். V
இராஜரத்தினமும், சின்னத்துரையும் எமது மூட்டைமுடிச்சுக்களோடு வந்தனர். நாம் சிகரெட் புகைத்தவாறு செல்வமணியின் அடுப்பைச் சுற்றி அமர்ந்து அவள் கொடுத்த தேநீரை அருந்தினோம். விடிந்து சிறிது நேரத்தில், பகற்பொழுது தெளிவாகும்போது நாம் புறப்பட்டுவிடுவோம். அதுவரையில் காட்டினுள் குறுக்காகச் செல்லும் பாதை பாதுகாப்பாக இருக்காது. தங்கவேலு அறிந்திருந்த மீனவர்களைப்பற்றிக் கூறுமாறு கேட்டேன். அவன் பல சிங்கள மீனவர்களையும், பல முஸ்லிம் மீனவர்களையும் அறிந்திருந்தான். அவர்களிடையே நல்ல உறவு நிலவியது. அவனது அனுபவத்தில் அவர்களிடையே மொழி மற்றும் மதத்தைத் தவிர, வேறு எந்தவிதமான வேறுபாடுகளும் கிடையாது. கடலில் இதையெல்லாம் மறந்துவிட்டு, கஷ்டமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்கும் போது, அவர்கள் ஒன்றாகப் பணியாற்றுகின்றனர். ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயற்படுகின்றனர். ஒருவர் சிங்களவரா, தமிழரா அல்லது முஸ்லிமா என்பது பொருட்டல்ல. நாம் இப்பொழுது அனுபவிக்கும் பிரச்சினைகள் அனைத்தும் அரசியல்வாதிகளின் வேலையாகும். அவர்கள் பதற்ற நிலைகளை உருவாக்கி, அவற்றின் அடிப்படையில் பாராளுமன்றத்துக்குத் தெரிவு பெறுகின்றனர். கொழும்புக்குச் சென்றதும் இதையெல்லாம் மறந்துவிட்டுப் பணம் சம்பாதிக்கத் தொடங்குகின்றனர். பதற்றங்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர். மக்களின் உண்மையான பிரச்சினைகள்குறித்து ஒரு வார்த்தையும் கூறுவதில்லை. இளைஞர்கள். யுவதிகளுக்கு வேலையில்லை. விலைவாசிகள் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டேபோகின்றன. ஆஸ்பத்திரிகளில் ஒரே ஜனக்கூட்டம். தெருக்கள் மிகவும் மோசமாக, பயன்படுத்தப்பட முடியாத நிலையிலுள்ளன. போக்குவரத்துச் செலவுகள் தொடர்ச்சியாக அதிகரிக்கின்றன. யுத்தம் நாட்டின் ஏனைய இடங்களிலுள்ள சந்தைகளை அழித்துவிட்டதால், மீனவர்கள் பிடிக்கும் மீனுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. இந்த உண்மையான பிரச்சினைகளைப்பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, அவர்கள் தாமே உருவாக்கிய யுத்தத்தை எவ்வாறு நிறுத்துவது என்பது குறித்துப் பேசிக் காலங்கடத்துகின்றனர்.
ஒரு சுயாதீனமான தொழில் முயற்சியாளரென்ற வகையில் தங்கவேலு இலங்கையில் யுத்தம், இனத்துவ உறவுகள் மற்றும் அரசியல்குறித்த தனது சொந்தக் கருத்துக்களை வெளியிட்டான். தான் எவ்வளவுதான் அரசியலைத் தவிர்த்துக்கொள்ள முயன்றாலும், தனது பொருளாதார சேமநலம் முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் கைகளிலேயே தங்கியுள்ளதென்பதை அவன் பூரணமாக அறிந்துள்ளான். அவன் கூறுவதுபோன்று, அரசியல் ஒரு பனிமூட்டம்போன்று ஒருவரை ஆக்கிரமிக்கின்றது. அவனது கருத்துக்கள் முழுக்க முழுக்கச்
50

சரியானவையென்று நான் ஏற்றுக்கொண்டேன். எவ்வாறாயினும், பனிமூட்டம் போலன்றி, இது அகன்றுவிடுவதில்லை. அது தன் அயலில் அனைத்தையும் ஊழல் மயமாக்கித் தொடர்ந்தும் அங்கேயே தங்கியுள்ளது.
காலையில் ஆறு மணியளவில் எமது பாதயாத்திரையைத் தொடங்கினோம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நடந்தோம். பல இளைஞர்கள் எமக்கு முன்னால் சிறிது வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். 'அரோஹரா'வைப் பலமாக, விரைவாகச் சொல்லிக்கொண்டு போனார்கள். இரண்டாவது அசையிலும், நான்காவது அசையிலும் உச்சரிப்பு வலியுறுத்தல் இடம்பெறாதவகையில் இதை ஒலித்தனர். இக்குழுக்களின் கொத்தணியிலிருந்த ஏனையோர் வழக்கமான ஸ்தாயியில், வழக்கமான உச்சரிப்புமுறையில் ஒன்றாகச் சேர்ந்து ஒரே குரலில் 'அரோஹரா’ என்று கூறினார்கள். விரைவில் இக்குழுக்கள் இரண்டாகப் பிரிந்து சுமார் பதினைந்து மீற்றர் இடைவெளியில் சென்றனர். இப்பொழுது 'அரோஹரா" ஒலி மேலும் நாடகபாணியில், கும்புக்கன் ஒயா ஆற்றின் சலசலப்பைப் போன்று கேட்டது. இந்த ஒலிகள் ஒரு சங்கிலிபோன்று முன்னும் பின்னுமாக அசைந்தன. விரைவில் சொற்கள் பல்வேறு நிலைமாற்றங்களுக்கு உள்ளாகின.
அரோ ஹரா அரோ ஹரா! அரோ ஹரா அரோ ஹரா! அரு ஹொரா அரோ ஹரா! அரோ ஹரா அரு ஹொரா! கவுத ஹொரா அரோ ஹரா! அரு ஹொரா அரோ ஹரா!
இறுதியாகக் குறிப்பிட்ட சமயோசிதச் சேர்க்கை கதிர்காமத்துக்கு வரும் சிங்களப் பக்தர்களிடமிருந்து இரவல் பெற்றுக்கொண்டதாகும். இவர்கள் வேடிக்கையாக "யார் ஏமாற்றுப்பேர்வழி? அவன்தான்" என்னும் செவிப்புலச் சிலேடையைச் சேர்த்துக் கொள்ளுகின்றனர். இது சூழமைவில் ஒரு சந்த இணைவான ஸ்தாயி மாறுபாட்டைத் தவிர, வேறு எதையும் குறிக்கவில்லை. ஆயினும், இந்த விடயத்தில் என்னால் எதையும் நிச்சயமாகக் கூறமுடியவில்லை. இந்த ஜனக்கூட்டத்தில் நான் பொருத்தமற்ற, வெளியாளாக இருந்ததே இதற்கான காரணமாகும். நான் ஒரு சிங்களவன் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. இந்த அம்சத்தை அவர்கள் என்னைக் கேலிசெய்யும் வகையில் சேர்த்துக் கொண்டார்களா அல்லது சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் நிலவும் வழக்கமான சந்தேக உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அதைச் செய்தார்களாவென்பதை இன்னமும் என்னால் தீர்மானிக்க முடியாதுள்ளது. அது நான் முதலில் கூறிய
51

Page 30
காரணத்துக்காகவே என்று எண்ணுவதையே நான் விரும்புகின்றேன். அது என்னைப்பற்றிய ஒரு விடயமல்லவென்றும், வேடிக்கையாக என்னைக் கேலிசெய்யவே இடம்பெற்றதென்றும் தங்கவேலு விளக்கமளித்தான். ஒருவேளை அவன் மரியாதைக்காக இதைக் கூறியிருக்கலாம் அல்லது நான் அளவுக்கதிகமாகச் சுய உணர்வை வெளிப்படுத்தி, எதிலும் குறைகாணும் சந்தேக மனப்பான்மையோடு நடந்துகொண்டேனா?
காலையின் முதற்பகுதியில் நான் வனவிலங்குகள் குறித் துப் பீதியடைந்திருந்தேன். ஆகவே வேறொருவர் கூறிய 'அரோஹரா’ என்பதற்குப் பதிலாக நானும் இயன்றளவுக்கு உரத்த குரலில் 'அரோ-ஹரா’ என்று கத்தினேன். இதை மற்றவர்களும் கேட்டு எதிரொலித்தார்கள். இது என்னிடமிருந்து தானாகவே பலமாக வெளிப்பட்ட ஒலியாகும். இந்த 'அரோஹரா’ ஒலிகள் நிச்சயமாகவே பயனுறுதிமிக்கவையாக இருந்தன. வெகுதூரத்தில் நின்ற ஒரு காட்டெருமையை விட வேறு எந்த மிருகங்களுமே தென்படவில்லை.
எனது குழுவிலுள்ளோரின் எண்ணிக்கை பெருகியிருந்தது. தங்கவேலுவும் செல்வமணியும் எம்முடன் மிகவும் நட்புணர்வு கொண்டு எங்களோடு ஒரு குழுவாக நடந்துவரத் தீர்மானித்தார்கள். அவர்களுக்கிடையில் வேறொரு பாடலும் இருந்தது. செல்வமணியின் பாடல் இவ்வாறு அமைந்திருந்தது:
முருகனுக்கு பிள்ளையாருக்கு
வள்ளியம்மனுக்கு தெய்வானை அம்மனுக்கு
வேலனுக்கு மயிலனுக்கு
முருகனுக்கு வள்ளியம்மனுக்கு
ஒவ்வொரு வரியின் இறுதியிலும் தங்கவேலு 'அரோஹரா’ என்று ஒலிப்பார். நாங்கள் மூவரும் தங்கவேலுவின் பாணியைப் பின்பற்றினோம். ஒரு பாடகர்கள் குழுவைப் போன்று நாம் முன்னேறினோம்.
முருகனுக்கு பிள்ளையாருக்கு
அரோ ஹரா! வள்ளியம்மனுக்கு தெய்வானை அம்மனுக்கு அரோ ஹரா!
வேலனுக்கு மயிலனுக்கு
அரோ ஹரா! முருகனுக்கு வள்ளியம்மனுக்கு அரோ ஹரா!
ஆறுமுகனுக்கு கந்தசாமிக்கு
52

அரோ ஹரா! வேலனுக்கு மயிலனுக்கு அரோ ஹரா!
சிலவேளைகளில் செல்வமணி தனது பாடல் தொடரைச் சிறிது மாற்றினார்:
அரோ ஹரா! அடோ ஹரா! அடோ ஹரா! அரோ ஹரா!
இவ்வாறாக எமது நடைப்பயணம் முன்னேறியது. விரைவிலேயே தாகமெடுத்ததால் எம்மிடம் எஞ்சியிருந்த தண்ணிரையெல்லாம் குடித்திருந்தோம். இந்த இடத்திலிருந்து 3 கிமீ தூரத்திலுள்ள மாணிக்க கங்கைக்குப் போய்ச் சேரும்வரை நாம் தாகத்தோடு இருக்க வேண்டும். நான் ஆற்றுக்கு ஓடிச்செல்ல விரும்பினேன். ஆயினும் தங்கவேலுவையும், செல்வமணியையும் அழைத்துப்போகவேண்டுமென்பதால், மணிக்கு 4 கி.மீ. என்னும் என்னுடைய வழமையான வேகத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டி ஏற்பட்டது. நடப்பதில் சிறந்த வீரனென்று நிரூபித்த இராஜரத்தினமும் மெதுவாக நடந்தான். அனைவரையும் விடச் சிறந்து விளங்கியது மெலிந்த தோற்றமுள்ள, உருவத்தில் சிறியவரான சின்னத்துரையாவான். அவன் எமது பொருட்களைத் தலையிலும், மடித்துக் கட்டிய ஒரு சாரத்தில் முதுகிலும் சுமந்துகொண்டு துரிதமாக முன்னால் நடந்தான். ஒருசில மரங்களோடு கூடிய பற்றைக்காடு இப்பொழுது அழகான, பெரிய மரங்களைக் கொண்ட அடர்த்தியான காடாக மாற்றமடைந்தது. ஒற்றையடிப் பாதை, தார் போடாத ஓர் அகலமான தெருவாக மாறியது. பின்னர் எமக்கு ஆற்றின் ஒலி கேட்டது. சலசலத்து ஓடும் தண்ணிர், ஆட்கள் கதைக்கும் ஒலி மற்றும் இலைகளின் சரசரப்பு ஒலி என்பவை கலந்த ஒன்றாக அது இருந்தது. நாம் விரைவாக நடந்தோம். பின்னர் நாம் ஆற்றை எமக்கு இடதுபுறத்தில் கண்டோம். தங்கநிறமான சரளைக் கற்கள்மீது பளிங்கு போன்ற தெளிவான தண்ணிர் மெதுவாகப் பிரவகித்து ஓடிக்கொண்டிருந்தது. அதன் அகலமான கரைகளில் ஆட்கள் நிறைந்திருந்தனர். பல சிறுவர்கள் ஆழமற்ற நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அடுப்புகளைச் சுற்றியிருந்த புகையினால் சமையல் பானைகளைத் தெளிவாகக் காணமுடியவில்லை. எனக்கு மிகவும் பசியாகவிருந்தது. பல குழுக்கள் சிறுவர்களுடனும், முதியவர்களுடனும் இங்கு நாட்கணக்காகத் தங்கி இளைப்பாறிக் கொண்டிருக்க வேண்டுமென்று தங்கவேலு கூறினான். அவர்கள் பல தினங்கள், ஒருவேளை ஒருவார காலம்,
53

Page 31
சரணாலயத்தினூடாக நடந்து வந்திருக்க வேண்டுமென்றும், அவர்களின் வெப்பமேறிய, களைத் த உடல் களுக்குக் கங்கையும், காடும் இதமளிக்கின்றனவென்றும் நான் எண்ணினேன். நாம் ஆற்றங்கரையில் மேலும் முன்னேறிச்சென்று ஒரு வளவில் திரும்பி, ஆட்கள் இல்லாத ஓரிடத்தில் ஒரு சுத்தமான இடத்தைக் கண்டோம் இங்கு எவரையும் காணவில்லை. எவரது ஒலிகளும் கேட்கவில்லை. மூட்டைமுடிச்சுகளைக் கீழே போட்டபின்னர் ஆற்றுக்குச்சென்று உடலில் தண்ணிரை வாரியிறைக்கத் தொடங்கினோம். உணர்ச்சிவசப்பட்ட செல்வமணி தலையில் கைகளை வைத்துக்கொண்டு பாடினான்:
முருகனுக்கு வள்ளியம்மனுக்கு!
நாங்களும் அவருடன் இணைந்து கொண்டோம்.
அரோ ஹரா! வள்ளியம்மனுக்கு தெய்வானை அம்மனுக்கு அரோ ஹரா! வேலனுக்கு மயிலனுக்கு அரோ ஹரா! முருகனுக்கு பிள்ளையாருக்கு அரோ ஹரா! ஆறுமுகனுக்கு கந்தசாமிக்கு அரோ ஹரா! வேலனுக்கு மயிலனுக்கு அரோ ஹரா!
இராஜரத்தினமும்,சின்னத்துரையும் எங்கள் மூட்டை முடிச்சுகளைத் திறந்து கொண்டிருந்த அதே நேரத்தில், தங்கவேலு இரண்டு அடுப்புகளைச் செய்வதற்கு உதவி செய்தான். எங்கள் உணவை ஒன்றாகச் சமைப்போமென்று நான் ஆலோசனை தெரிவித்தேன். அனைவரும் இதை உற்சாகமாக வரவேற்றனர். விரைவிலேயே செல்வமணியும், சின்னத்துரையும் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தனர். தங்கவேலு ஒரு விசேடமான அலுவலரில ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவன் முதுகுப் பையிலிருந்து கட்டாகவிருந்த ஒரு பொருளை வெளியே எடுத்தான். அதனுள்ளே சில சுருட்டுகள், ஒரு சிகரெட் பைக்கற் மற்றும் ஒரு கஞ்சா பைக்கற் என்பவை இருந்தன. சப்பாணிகட்டி உட்கார்ந்து அவன் ஒரு சுருட்டை விரித்து, அதனுள்ளிருந்த புகையிலையை
54

அகற்றி, அதைத் தனது வலது தொடையில் வைத்தான். பின்னர் அவன் கஞ்சாப் பைக்கற்றைத் திறந்து, குச்சிகளையும், இலைகளையும் வேறாக்கி இலைகளை விரல்களில்வைத்து நசித்தான். ஒரு சிகரெட்டை வெளியே எடுத்து, அது இணைப்புற்ற இடத்தில் நாக்கினால் நக்கி அதைத் திறந்தான். உள்ளேயிருந்த புகையிலையை எடுத்துப் பின்னர் அதைக் கஞ்சாவுடன் கலந்து, இந்தக் கலவையைச் சிகரெட் கடதாசியிலும் புகையிலை மீதும் வைத்துப் பின்னர் அதை மிகவும் கவனமாக ஒரு கூம்புவடிவமான சுருட்டாகச் சுருட்டினான். சிகரெட் வடிகட்டியை ஒடுக்கமான முனையில் ஒரு நிபுணரைப்போல வைத்தான். பின்னர் என்னைநோக்கி ஒரு பேராசிரியர் போன்று பார்வையை வீசி “பில்ரர் முனை கொண்டது!" என்று கூறினான்.
இதேவேளையில் இராஜரத்தினம் எனது ஆடைகள் சிலவற்றைக் கழுவத் தொடங்கியிருந்தான். நான் ஆற்றினுள் நடந்துசென்று ஆழமற்ற நீரில் உருண்டு புரண்டேன். காலைச் சூரியனின் கதிர்கள் பாரிய கும்புக் மரத்தின் இலைகளினூடாக வந்து அமைதியான ஆற்றின் சிறிய அலைகளில் பிரதிபலிப்பதைக் கண்டேன். கரையில் இருந்த அடர்த்தியான மரங்களின் இலைகளைச் சுற்றியிருந்த கறுப்புநீலத் திரை மெதுவாக அகன்றதும் அவற்றை நன்றாகப் பார்க்கமுடிந்தது. விரைவிலேயே எல்லோரும் குளித்துக் கொண்டிருந்தனர். நாம் ஆற்றினுள் மூழ்கிக் குளிப்பதற்காக ஆழமான இடங்களைக் கண்டுபிடித்தோம். ஆழம் குறைந்த நீரில் நீந்தியபோது சிறிய, வெண்ணிறமான, பெயர் தெரியாத மீன் கூட்டங்கள் நீரோட்டத்துக்கு எதிராக அசையாமல் நிற்பதற்கு முயலுவதைக் கண்டோம்.
நாம் கரைக்குத் திரும்பினோம். குளிர்ந்த நீர் உடலில்படுவது இதமாகவிருந்தது. நாம் உட்கார்ந்த போது தங்கவேலு தனது "சுருட்டை" வெளியே எடுத்து ஒருசில தடவைகள் புகையை உள்ளே இழுத்துவிட்டு, அதை இராஜரத்தினத்திடம் கொடுத்தான். அவர் அதைச் சின்னத்துரையிடம் கொடுத்தான். சின்னத்துரை அதைத் தங்கவேலுவிடம் திருப்பிக் கொடுத்தார். இது பல சுற்றுகளாக இடம்பெற்றது. இதில் வழக்கத்துக்கு மாறான எதையுமே காணமுடியவில்லை. அனேகமான ஆண்களும் ஒருசில பெண்களும் பாத யாத்திரையின்போது தசைநார் மற்றும் உடல்மூட்டு வலிகளைக் குறைப்பதற்குக் கஞ்சாவைப் புகைத்தார்கள். ஒக்கந்தவில் நான் சந்தித்த ‘சாமியாரை'ப் போன்றவர்கள் புனிதர்களிடம் பேசுவதற்கும், "ஆழமான உண்மைகளை"க் காண்பதற்கும் கஞ்சாவைப் பயன்படுத்தினர். இந்தியாவில் இந்துத் துறவிகள் பெருமளவிலான கஞ்சா இலைகளை (ஹிந்தியில் charas என்று அழைக்கப்படுவது) அல்லது சிறிய கட்டிகளான அஸிஸ் என்பதைக் கொண்டுசெல்வது வழக்கம். இவற்றை அவர்கள் களிமண்ணினால் செய்த கூக்காக்களில் வைத்துப் புகைப்பர். இந்தப் பொருட்களின் உதவியோடு ஆழமான உண்மைகளை அறிந்துகொள்வது சாத்தியமென்று
55

Page 32
அவர்களும் தெரிவிக்கின்றனர். யாரும் எதுவும் கூறவில்லை. நான் திரும்பவும் தண்ணிருக்குள்போய்ப் படுத்துக்கொண்டேன். நாம் எமது முகாமுக்குத் திரும்பிவந்தபோது சோறு மற்றும் உருளைக்கிழங்கு, பருப்புக் கறியுடன்கூடிய மதிய உணவு தயார் நிலையிலிருந்தது. முதல்நாள் மாலையிலிருந்து நாம் எதையுமே சாப்பிட்டிருக்காததால் ஒவ்வொருவரும் உட்கார்ந்து வயிறுபுடைக்கச் சாப்பிட்டார்கள். உணவின் பின்னர் மணலில் எமது விரிப்புகளைப்போட்டு நித்திரை செய்தோம்.
பின்மதியப்பொழுது மூன்று மணிக்கு நாங்கள் நித்திரைவிட்டெழுந்தோம். அப்பொழுது யாத்திரிகர்களின் பல குழுக்களைக்கொண்ட ஒரு பெரிய ஜனக்கூட்டம் உள்ளே நுழைந்தது. நேற்றிரவு இந்தக் குழுக்கள் நியாலவில் நித்திரைசெய்தனர். இன்றிரவு ஆற்றங்கரையில் நித்திரை செய்வதற்குத் திட்டமிட்டனர். பலர் தம்முடன் சாப்பிட வருமாறு அழைத்தனர். ஆயினும் நாங்கள் 5 கி.மீ. தொலைவிலிருந்த கட்டகமுவவை நோக்கிச் செல்வதற்குத் தீர்மானித்தோம். கருக்கல்பொழுதுக்கு முன்பு அங்கு போய்ச்சேர விரும்பினேன். ஆற்றங்கரையிலிருந்து சுமார் நான்கு மணிக்குப் புறப்பட்டுச் சென்றால் மாலை ஆறு மணியளவில் அங்கு போய்ச் சேர்ந்துவிடலாம். தங்கவேலுவுக்கும், செல்வமணிக்கும் அடிக்கடி ஓய்வு தேவைப்பட்டது.
நான்கு மணிக்கு ஒருசில நிமிடங்கள் கழித்து நாம் ஆற்றிலிருந்து புறப்பட்டபோது எமது சக யாத்திரிகர்களிடமிருந்து தைரியமளிப்பதற்கும், நல்லெண்ணத்தைத் தெரிவிப்பதற்குமான உரத்த ஒலிகள் எழுந்தன:
அரோ ஹரா! அரோ ஹரா!
அங்கிருந்து கட்டகமுவவுக்கான வழிமுழுவதும் இதுவே ஒலித்தது.
முருகனுக்கு பிள்ளையாருக்கு அரோ ஹரா! வள்ளியம்மனுக்கு தெய்வானை அம்மனுக்கு அரோ ஹரா! வேலனுக்கு மயிலனுக்கு அரோ ஹரா! முருகனுக்கு வள்ளியம்மனுக்கு அரோ ஹரா! ஆறுமுகனுக்கு கந்தசாமிக்கு அரோ ஹரா!
56

வேலனுக்கு மயிலனுக்கு அரோ ஹரா! அடோ ஹரா! அரோ ஹரா!
அரசாங்கத் திணைக் களங்களுக்குச் சொந்தமான வாகனங்களின் போக்குவரத்துக்காகத் தெரு நன்கு பேணிப்பராமரிக்கப்பட்டுள்ளது. மாணிக்க கங்கைக்கு மேலாக ஒரு பாலத்தைக் கடந்து சென்றோம். எமக்கு இடதுபக்கத்தில், பாலத்தின் மறுபக்கத்தில் அரசாங்கப் பாதுகாப்புப் படையினரின் பெரிய முகாமொன்று இருந்தது. எமக்கு வலது பக்கத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஒரு முதலுதவி நிலையத்தை ஏற்படுத்தியிருந்த, அவ்வேளைக்கு உதவுவதற்கான கட்டிடமொன்று இருந்தது. பல யாத்திரிகர்கள் வெட்டுக்காயங்கள், கீறல்கள், கால்களில் கொப்புளங்கள் என்பவற்றுடனும், சிலர் வயிற்றுவலி மற்றும் தடிமன் போன்ற பாதிப்புக்களுடனும் வந்துசேருவதாக ஓர் அதிகாரி எனக்குக் கூறினார். திருவிழாக்காலம் முழுவதும் அவர்கள் தமக்கென வந்த மருத்துவப் பொருட்களையும், தமது உழைப்பையும் யாத்திரிகர்களுக்கு இலவசமாக வழங்கினர். இது பதுளை மற்றும் அம்பாந்தோட்டை அரசாங்க அதிபர்களின் (கதிர்காமம் மற்றும் யால வனம் என்பவை இவர்களின் நியாயாதிக்கத்தின்கீழ் வருபவை) பிரித்தானிய குடியேற்றவாத அரசாங்கம் திருவிழாக் காலத்தில் கொலரா தொற்றுநோய்க்கு எதிராக நடவடிக்கை எடுத்ததை நினைவூட்டுவதுபோலத் தோன்றியது.* அதிருஷ்டவசமாக, அவர்களின் உதவி எமக்கு அவசியப்படவில்லை. வேலுப்பிள்ளையும், சிவமும் எங்களுடன் வந்திருந்தால் அவர்களின் உதவி எமக்குத் தேவைப்பட்டிருக்கும்.
மேலும் தெருவால் முன்னேறியபோது அடர்த்தியான பெரிய காடு குறைவடைந்து பற்றைக் காடாக மாறியது. இப்பொழுது தெரு அகலமாகவும், பாரமான மோட்டார் வண்டிகள் போய்வரக்கூடியதாகவும் இருந்தன. நாங்கள் ஓர் உயரங்குறைந்த குன்றை அடைந்தோம். உணர்ச்சியோடு தங்கவேலுவும் செல்வமணியும் மீண்டும் மீண்டும் "அடோஹரா! அரோஹரா!’ என்று ஒலியெழுப்பினர். வேறுசில யாத்திரிகர்களும் இதில் கலந்து கொண்டனர். இந்த உயிர்த்துடிப்புமிக்க நடத்தைக்கான காரணம் தங்கவேலு தூரத்தில் தெரிந்த ஒரு தொடரான குன்றுகளைச் சுட்டிக்காட்டியபோது தெளிவாகியது. அவை பின்மதியப்பொழுதின் பனிபோன்ற தெளிவின்மையூடாகத் தூரத்தில் கறுப்புநீல நிறமாகக் காட்சியளித்தன. தங்கவேலு "கதிர்காமம் கதிர்காமம்!" என்று சத்தமிட்டான்.
இந்த இடத்தில் யாத்திரிகர்கள், அவ்வேளைக்கெனப் பயன்படும் பொருட்களைக்கொண்டு பல வணக்கத்தலங்களை அமைத்திருந்தனர். இது கதிர்காமத்தை முதலில் காண்பதைக் கொண்டாடுவதை நோக்கமாகக்
57

Page 33
கொண்டதாகும். தங்கவேலுவும், மனைவியும் ஆராதனை செய்வதற்குத் தெரிவுசெய்த வணக்கத்தலத்தில் ஒருகட்டு மயிலிறகுகள், மஞ்சள் நிறமான ஒரையைக்கொண்ட, மலிவான பச்சைத் துணியினாலும், பின்னர் நாவல்நிறத் துணியினாலும் ஒரு பற்றையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. பற்றையின் அடிப்புறத்தில் இன்னுமொரு மலிவான தங்கநிறத் துணி காணப்பட்டது. தேங்காய் எண்ணெய் நிரம்பிய ஒரு கண்ணாடி ஜாடியும், அதன்வாயில் தகரத்தினால் செய்யப்பட்ட ஒரு திரி தாங்கியும் விளக்காகப் பயன்பட்டது. வேறொரு கிளையில் ஒரு தகரப் பாத்திரத்தால் செய்யப்பட்ட வாளியும் தொங்கியது. இந்த வாளியின் கைபிடி ஒரு கம்பியால் செய்யப்பட்டதாகும். பல சிறிய கற்களையும், கொங்கிரீட் துண்டுகளையும் பரப்பி ஒரு தளம் நிர்மாணிக்கப் பட்டிருந்தது. சில கற்கள் கற்பூரம் கொளுத்துவதால் கறுப்புநிறமாகியிருந்தன. இவ்வாறே கறுப்புநிறமாக மாறியிருந்த கொங்கிரீட் துண்டொன்றில் சில நாணயங்கள் கிடந்தன. மயிலிறகுக் கட்டுக்கருகில், கற்களின்மீது பூஜைக்குப் பின்னர் எச்சமாகவிருக்கும் சோறு காணப்பட்டது. பல எறும்புகள் அதில் மொய்த்திருந்தன. பல தேங்காய்ச் சிரட்டைகள் அங்குமிங்கும் சிதறிக்கிடந்தன. இது சில யாத்திரிகர்கள் கற்களில் தேங்காய் உடைத்திருப்பதைக் காட்டியது. ஏனைய சகல வணக்கத்தலங்களும் இவ்வாறே அமைக்கப்பட்டிருந்தன. நாங்கள் ஒரு கல்லில் கற்பூரங்களை வைத்துக் கொளுத்தினோம்.
அரோ ஹரா! வேலனுக்கு மயிலனுக்கு அரோ ஹரா! முருகனுக்கு வள்ளியம்மனுக்கு அரோ ஹரா!
அடோ ஹரா!
அரோ ஹரா!
தங்கவேலுவும், செல்வமணியும் சோறு சமைக்கத் தொடங்கினர். இராஜரத்தினமும், சின்னத்துரையும் விறகு சேகரித்து அவர்களுக்கு உதவினர். துருவிய தேங்காயையும் மற்றும் ஏனைய சேர்பொருட்களையும் பயன்படுத்திச் சோறு சமைத்தனர். சமைத்து முடிந்ததும் செல்வமணி ஓர் அலுமினியத்தட்டில் சிறிது எடுத்து எங்கள் முன்னால் நீட்டினார். நாங்கள் எங்கள் கைகளை அதன்மேல் வைத்து, பிறகு எங்களின் கைகளைக் கோர்த்துக்கொண்டு, ஜனசமூகப் பங்கேற்புச் செயற்பாடு என்றவகையில் அதற்கு வணக்கம் தெரிவித்தோம். இது பெளத்த கோவில்களில் மலர்த்தட்டைத் தொட்டு, கைகளைக் கோர்த்துக்கொண்டு வணக்கம் செய்வதைப் போன்றதாகும். பின்னர் செல்வமணி தட்டைச் சில கற்கள்மீது வைத்து,
58

அடோ ஹரா! அரோ ஹரா!
என்று மெதுவான குரலில் பல விடயங்களை உச்சாடனம் செய்தாள். மெளனமாக அவள் உதடுகள் அசைவதை மாத்திரமே என்னால் காணமுடிந்தது. தங்கவேலு கைகளைக் கூப்பிக்கொண்டு அருகில் நின்றார். அவருடைய உதடுகளும் அசைந்து கொண்டிருந்தன. எஞ்சியிருந்த நாங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு, வெறுமனே பார்த்துக்கொண்டு நின்றோம். என்ன சொல்வதென்று தெரியாததால், நாங்கள் எதுவுமே சொல்லவில்லை. ஆயினும் செல்வமணி "அடோஹரா’ என்று கூறிய தருணங்களில் நாங்களும் அதற்குப் பதிலாக 'அரோஹரா’ என்று கூறினோம். பூஜை முடிவடைந்தபோது செல்வமணியும், தங்கவேலுவும் எரியும் கற்பூரச்சுவாலைமீது கைகளைப் பிடித்துத் தமது உள்ளங் கைகளைத் தலையிலும், முகத்திலும் பூசிக்கொண்டனர். நாங்களும் அவ்வாறே செய்தோம் பின்னர் தங்கவேலு பிரசாதத்தை எங்கள்முன் நீட்டி அதைச் சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டார். நாம் சாப்பிட்டோம். அவர் எஞ்சியிருந்த சோற்றைச் சுற்றியெடுத்துத் தனது பையினுள் வைத்துக்கொண்டார். மீண்டும் ஒருசில தடவைகள்
முருகனுக்கு வள்ளியம்மனுக்கு அடோ ஹரா! அரோ ஹரா!
என்று கூறிவிட்டு நாம் தொடர்ந்து சென்றோம்.
கட்டகமுவவுக்கான நடைப்பயணத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் நடைபெறவில்லை. அது களைப்பூட்டுவதாகவும் இருந்தது. நன்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த ஒரு தெருவில் நாங்கள் நடந்து சென்றோம். ஆபத்துகள் நிறைந்த காடுகளினூடாக நடக்கும் இதற்குமுந்திய உணர்வு இருக்கவில்லை. ஒருவேளை நாங்கள் மிகவும் களைத்திருந்ததால் எமது மனங்கள் நாம் முன்பு அறிந்திராததும், அன்றிரவு எமது இரவைக் கழிப்பதற்கு இருந்ததுமான கட்டகமுவ கிராமத்துக்குச் சென்றிருக்கலாம். மீண்டும் எமக்குத் தண்ணிர் இல்லாத நிலை ஏற்பட்டது. கட்டகமுவவில் நிறையத் தண்ணிர் கிடைக்குமென்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்தார்கள். நாங்கள் ஓர் இராணுவ முகாமினுடாக நடந்து தடிகள், பிளாஸ்டிக் விரிப்புகள் என்பவற்றால் அமைக்கப்பட்ட ஒருசில கடைகள் இருக்கும் இடத்துக்கு வந்தோம். அங்கு பெட்டிகளில் போத்தலில் அடைக்கப்பட்ட இனிப்பூட்டப்பட்ட பானங்களும் இருந்தன. இத்தகைய பானங்களைக் குடிப்பதற்கு எவருக்குமே விருப்பமிருக்கவில்லை. எமக்குக் குளிர்ச்சியான நல்ல தண்ணிரே தேவைப்பட்டது. ஆனால் அது எங்குமே கிடைக்கவில்லை. கடைசியாக இருந்த நீர்க்குழாய்
59

Page 34
இராணுவமுகாமில் இருந்தது. கட்டகமுவவில் நிறைய நீர் கிடைக்குமென்ற கதை வெறும் கனவாக மாறியது. கிராமத்தில் தண்ணிர் கிடைக்கும் என்று கூறினார்கள். நாங்கள் இன்னமும் கிராமத்தின் எல்லையிலேயே நின்றோம். தண்ணிர் தேடிப் போகமுடியாதளவுக்குக் களைத்திருந்தோம். நாம் ஆற்றிலிருந்து சேகரித்த தண்ணிரை வைத்துக்கொண்டு சமாளித்தோம். இது கொதிக்கவைத்த பின்னரும், சவர்க்கார நீரைப்போன்ற சுவையைக் கொண்டிருந்தது. யாத்திரிகளின் பல குழுக்கள் ஏற்கெனவே இந்த இடத்துக்குவந்து, பெரிய மரங்களின்கீழ் முகாமிட்டிருந்தார்கள். நாங்களும் அன்றிரவு ஒரு மரத்தின்கீழ் தங்கியிருந்தோம். பூஜையில் எஞ்சியிருந்த உணவைத் தங்கவேலு எங்களுக்குக் கொடுக்க முன்வந்தார். ஆயினும் எமக்குப் பசிக்கவில்லை. அக்கரைப்பற்றிலிருந்து கொண்டுவந்த அரிசிமாவில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, நான் படுத்துவிட்டேன்.
பின்னர் இரவுவேளையில் சுற்றுச்சூழலிலிருந்த பற்றைகளை யாரோ மிதிப்பதுபோன்ற ஓசைகள் கேட்டன. யானைகள் வந்துவிட்டனவென்று நாங்கள் பயந்தோம் உடனடியாக, கற்பனை யானைகள்மீது எமது ‘அடோஹரா! அரோஹரா!' தாக்குதலை ஆரம்பித்தோம். அருகிலிருந்த மரங்களின்கீழ் படுத்திருந்தவர்களும் உடனடியாக "அடோஹரா அரோஹரா' என்று சத்தமிட்டனர். அவை யானைகளல்ல, காட்டெருமைகளே! மனிதர்களின் இரைச்சல் கேட்டு திடுக்குற்று அவை ஓடிவிட்டன.
ஆகஸ்ட் 4
நான் நித்திரைவிட்டெழுந்தபோது ஏனையோர் புறப்படத் தயாராகவிருந்தனர். காலை ஆறு மணியளவில் ஏனைய பல குழுக்களுடன் நாங்களும் தெருவில் நடந்தோம். இவ்வாறாக எமது பாதயாத்திரையின் இறுதிப்பாகம் ஆரம்பித்தது. கதிர்காமம் 7 கி.மீ. தூரத்தில்தான் இருந்தது. வழியில் மிகவும் ஆறுதலாகச் சென்றாலும் காலை 9 மணியளவில் அங்கு போய்ச்சேர்ந்துவிடலாம். ஆயினும் நாம் விரைவாக நடந்தோம். கதிர்காமத்துக்கு அருகில் வந்துவிட்டோமென்ற நினைப்பே மிகவும் உற்சாகமூட்டுவதாயிருந்தது. செல்வமணியின் ‘அடோஹரா! அரோஹரா! மயிலனுக்கு வேலனுக்கு அடோஹரா! அரோஹரா!' ஒலிகள் மேலும் அடிக்கடியும் பலமாகவும் எழுந்தன. காட்டினுடாகவும், பின்னர் கைவிடப்பட்ட கட்டகமுவ குளத்தின் அணைக்கட்டின் மேலாகவும் ஒருசில கி.மீ. தூரம் நடந்த பின்னர் நாங்கள் மீண்டும் நன்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த தெருவுக்கு வந்தோம். இந்தத் தெரு மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் என்பவற்றின் சகல தோற்றங்களையும் கொண்டிருந்த கட்டகமுவ கிராமத்தினுடாகச் செல்லுகின்றது. தொழில்முயற்சியுள்ள
வெகுவிரைவிலேயே, ஒலிபெருக்கிகளில்வந்த இசையின் மங்கலான ஓசைகள் மற்றும் தானியங்கி வாகனங்களின் இரைச்சல் போன்ற, கதிர்காமத்தின் ஒலிகள்
60

காற்றில் கலந்து வந்தன. ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு புன்னகை பரவியது. இறுதியில் எமது நோக்கத்தைச் சாதித்துவிட்டோம். எமது பாதயாத்திரை முடிவடைந்தது. இந்த விடயத்தைச் சரியாக உணருமுன்னரே நாம் கதிர்காமத்தில் இருந்தோம். முருகனின் வாழ்விடத்துக்கு வந்துசேர்ந்துவிட்டோமென்னும் பரவச உணர்வே என் தோழர்களிடத்திலும் காணப்பட்டது. கண்ணிர் வடிந்தோடி, கன்னங்களை ஈரமாக்கியது. எமது முட்டை முடிச்சுகளைக் கீழே வைத்துவிட்டுக் கைகளைத் தலைக்குமேலே உயர்த்திக் கும்பிட்டோம்.
அரோஹரா! அரோஹரா! ஐயா ஆண்டவனே! ஆண்டவனே முருகா!
ஆண்டவனே! ஆண்டவனே!
அடிக்குறிப்புக்கள்:
என். சண்முகலிங்கம் http://www.kataragama.org. (திகதியிடப்படாதது).
இதற்கு முந்திய அத்தியாயத்தில் நாம் கூறியவாறு மண்டூரிலும்,
திருக்கோவிலிலும் விழுந்தன. 2 சண்முகலிங்கம் (அதே இடம்). 3. சண்முகலிங்கம் (அதே இடம்).
சண்முகலிங்கம் (அதே இடம்). இக் கதை முருகனும், வள்ளியும் வேறிடத்திலிருந்து, அனேகமாகத் தமிழ்நாட்டிலிருந்து, இங்கு வந்தனர் என்று முன்னுாகம் செய்கின்றது. சண்முகலிங்கம் (அதே இடம்). மற்றும் இராசையா (மற்றும் ஏனையோர்). தந்திர உருவப்படங்களில் ஒன்றையொன்று ஊடறுக்கும் இரு சமபக்க முக்கோணங்களின் கீழிருக்கும் ஆளைப் பிரதிநிதித்துவம்செய்யும் முக்கோணம் சக்தியைப் பிரதிநிதித்துவம்செய்யும் மேல் முக்கோணத்தைத் துளைக்கின்றது. ஒக்கந்த இந்த அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது போல் தோன்றுகின்றது. 6 சண்முகலிங்கம் (அதே இடம்). தீர்த்தம் என்பது நான் இரண்டாம் அதிகாரத்தில் குறிப்பிட்டவற்றை நினைவூட்டுவதாக உள்ளது. சமஸ்கிருதத்தில் தீர்த்தமென்பதன் கருத்து புனிதமான ஒரு நீர்நிலையின் கடக்கும் பகுதியாகும். இந்தக் கலைப்பொருட்களையோ இலக்கிய மூலங்களையோ நான் பரிசீலிக்கவில்லை. இங்கு வழங்கப்படும் தகவல் மெத்தானந்த (2005: 25-28) இலிருந்து வருகின்றது.
61

Page 35
g6'LDJLb: Ficus indica.
Mimusops hexanda.
Ficus religiosa. கிராமிய ஜனசமூகங்களில் ஆறுகளிலும், நீரோடைகளிலும் பெண்கள் குளிக்கின்றனர். இவ்வாறு குளிக்குமிடம் மூடிமறைக்கப்படுவதில்லை. எவ்வாறாயினும், வரன்முறையாக பெண்கள் குளிக்கும்போது ஆண்கள் இந்த இடங்களில் அநாவசியமாக நிற்பதோ பார்ப்பதோ தடைசெய்யப்பட்ட, விடயமாகும். இந்த நியமத்தை மீறும் ஆண்கள் சமூகத்தில் கேவலமானவர்கள் என்று மதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணக்கருவைப் பயன்படுத்திய விக்டர் டேர்னரும் ஏனைய பல ஆய்வாளர்களும் உபயோகித்த “communitas’ என்னும் பதம் குறிப்பது இதைத்தானா? டேர்னரின் எண்ணப்பாடு சமூகத்தில் வேலைப் பிரிவினை, அடிப்படை வடிவங்களிலான மத வாழ்க்கை, சமூகவியல் மற்றும் தத்துவ ஞானம் என்னும் நூலின் பயன்படுத்திய துர்க்கேய்மின் ஜனசமூகம்குறித்த எண்ணப்பாட்டிலிருந்து பிறப்பதாகும். அவர் மிகவும் அடிப்படை வடிவங்களிலான மத வாழ்க்கைகுறித்த கலந்துரையாடல்களில் கோத்திரக்குடியின் மத வாழ்க்கைகுறித்துத் தெரிவிக்கின்றார். இதுவே மிகவும் அடிப்படையான குருட்டு மரியாதைக்குரிய குலமரபு ஜனசமூகம் என்று அவரால் வர்ணிக்கப்படுகின்றது. இந்த மதத்தன்மை தனிநபரின் சுய உணர்வுக்கு மேலாகச் சமூகத்தின் சக்தியைக் குறிப்பதாகும். துர்க்கேய்மைப் பொறுத்தவரையில் குலமரபு என்பது ஒருமைப்பாடு அல்லது கோத்திரகுலத்தின் அங்கத்தவர்களுடன் ஒன்றாக வாழும் விருப்பு என்பவற்றை வெளிப்படுத்துவதாகும். இந்த ஒருமைப்பாடு இயந்திரரீதியில் இடம்பெறுவதாகும். தனிநபர்கள் தம்முள்கூட குலத்தின் ஏனையவர்களோடு தாம் ஏன் வசிக்கின்றோம் என்பதுகுறித்தோ, உயிர்களைக் கொடுத்தும் தமது குலத்தை ஏன் பாதுகாக்கவேண்டும் என்பதுகுறித்தோ வினாவெழுப்புவதில்லை. அவர்களின் சுய உணர்வும் ஒன்றாயிருப்பதும், சுயம் என்பதும், குலம் என்பதும் ஒன்றாயிருப்பதுமே இதற்கான காரணமாகும். குலத்துடன் ஒன்றாயிருப்பது என்னும் உணர்வு குலம் மத செயற்பாடுகளுக்காக ஒன்றுசேரும்போது மிகவும் செறிவானதாகும். அது அதன் முழுமையை ஆராதனை செய்வதும் குலத்தின் அடையாளச் சின்னமுமாகும். துர்கேய்ம் இத்தகைய ஒன்றுகூடல்களில் ஏற்படும் உளரீதியான ஆறுதல் உணர்வை கூட்டாக நுரை எழுதல்’ என்று அழைக்கின்றார். இந்த இடத்தில் ஜனக் கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு விடயமும் புனிதமானதாகும். புனிதக்கேடான விடயங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. புனிதக்கேடான விடயமென்று இங்கு கூறப்படுவது குறிப்பாகப் பொருளாதார நலன்கள்குறித்த தனிநபர் சிந்தனையாகும். கோத்திரகுலம் காலாந்தரமாக-நாளாந்தரம், வாராந்தம், மாதாந்தம் காலாண்டுக்கு ஒருமுறை இருவருடங்களுக்கொருமுறை வருடாந்தம்
62

அல்லது சடங்குகளின் ஒழுங்கமைப்புகுறித்த எந்த கலண்டர் சுற்றுவடிவத்திலும் - ஒன்றுகூடி திரு ஐக்கியத்தை நிறைவேற்றுகின்றன.
டேர்னரைப்பொறுத்தவரையில் மூன்று வகையான புனித சமூகங்கள் உள்ளன. அவற்றை அவர் தானாக ஏற்படும், வரன்முறை மற்றும் தத்துவார்த்த சமூகங்களென்று அழைக்கின்றார். நான் இந்த யாத்திரையில் அவதானித்தது முருக பக்தர்கள் தானாகவேற்படும் மற்றும் வரன்முறைச் சமூகங்களிலிருந்து வருகின்றனர் என்பதையாகும். ஆர்வத்துடனும், பிறர்நலம்பேணலுடனும் கூடிய தானாகவேற்படும் மத சமூகம், அந்தஸ்து வேறுபாடுகள் மற்றும் நடத்தை விதிகளைக்கொண்ட வரன்முறைச் சமூகத்துடன் ஒன்றிணைப்புப் பெறுகின்றது. பின்னர் இதுகுறித்த அத்தியாயம் கூறப்படும்.
வலன்டீன் டானியல் (1997), குறித்துரைப்பாகக் கதிர்காம யாத்திரைகள் பற்றி எழுதுகையில், 1970க்கு முந்திய யாத்திரைகள் விசுவாச முறைமையினுள் கற்பனைக்கதைசார் விடயங்களை மீளவும் ஆக்குவதன்மூலம் யாத்திரிகர் ஒரு பூரணமான மத அனுபவத்தினூடாகச் செல்வது சம்பந்தமானது என்ற வகையில் Ontic என்பதாகவுள்ளது. இத்தகைய Ontic அனுபவம்குறித்த அவரது எண்ணப்பாடு டேர்னரின் தானாகவே அமையும் சமூகங்கள் மற்றும் துர்கேய்மின் குருட்டுத்தனமான மரியாதைக்குரிய (totemic) சமூகங்கள் என்பவற்றுக்கும் சமாந்தரமாகவுள்ளது. நான் டானியலின் கருத்துடன் ஓரளவுக்கு உடன்படுகின்றேன். எவ்வாறாயினும், எனது அவதானிப்புகள் மெய்ப்பொருள் ஆய்வுத்தரம் எப்பொழுதும் இருப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டின. பூஜைகளின்போது அது இருக்கின்றது. கோயிலுக்கு வெளியில், புனிதமான சமூகம் வீட்டு வாழ்க்கைத் தொடர்புகளிலிருந்து விலகியிருக்கும்போது வீட்டுச் சமூக அடையாளங்கள் தொடர்ந்தும் இருக்கின்றன. இதுகுறித்துப் பின்னர் அதிக விடயங்கள் இடம்பெறும்.
இங்கு எனது அவதானிப்பு முருக வழிபாட்டைக் கொண்டாடுவதற்கோ, முருகனைக் கொண்டாடுவதற்கோ எவரும் இந்த யாத்திரையில் செல்வதில்லை, மக்கள் யாத்திரையில் செல்வது சுயநலனை ஈட்டிக் கொள்வதற்காகும். அவர்கள் தமது சமூக அடையாளங்களையோ தமது சமூகப் பிரச்சினைகளையோ மறந்து விடுவதில்லை. அனுபவரீதியாகப் பார்க்குமிடத்து யாத்திரை ஒரு முடிவுக்கான வழிவகையாகும். சமூகத்தில் தனிநபரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் விருப்பங்கள் பூர்த்தியாவதே இந்த முடிவாகும். ஒரு சமூகத்தில் இணைந்து பொது அடையாளத்தைப் பெறுவதற்கான தனி அடையாளங்களை இழப்பதில் அர்த்தமில்லை.
எவ்வாறாயினும், பரஸ்பர நலன்களில் சமூக உணர்வு அதிகரிப்பது முருகன்மீதுள்ள பயத்தினாலாகும். சுப்பிரமணிய பங்காரத்ன 3 (அனொன், டி சில்வா மற்றும் ஏனையோர் 81). கேரளாவிலிருந்து இலங்கையின் கிழக்குக் கரையோரத்துக்கான புலம்பெயர்வுக்கு ஒபேசேகர (1984; 523-529) மற்றும் ஹொல்ட் (2005) என்போரைப் பார்க்கவும்.
63

Page 36
22
புராதன தமிழ்நாட்டில் அணங்கு குறித்த தகவலுக்கு Zvelebil, Clothey மற்றும் Hart என்போரைப் பார்க்கவும். பன்னிரு மகத்தான இடங்களையும், மேலும் நான்கினையும் உள்ளடக்கும் பதினாறு மகத்தான இடங்கள் உள்ளன. ஆயினும் பதினாறு மகத்தான இடங்களை உள்ளடக் கும் யாத் தரைகள் அக் காலத் தரில சாத்தியமற்றவையாகவிருந்தன. இவை தீவு முழுவதும் சிதறலாகக் கிடப்பதே காரணமாகும். ஆயினும், இன்று தானியங்கி வாகனப் போக்குவரத்து வசதிகளுடன் இது சாத்தியமாகும். இப்பதம் தமிழ்மொழியின் நட' என்பதிலிருந்து வருகின்றது. கதிர்காமம், சிவனொளிபாதம் மற்றும் மடு போன்ற இடங்களுக்கான யாத்திரைகளின்போது ஏற்படும் மொழிக் குறுக்குக் கலப்புகளால் தமிழ் நட’ சிங்கள நடே' ஆகியிருக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டுப்பகுதியில் செட்டிமார்கள் கதிர்காமத்துக்கு இதுபோன்ற யாத்திரைகளை மேற்கொண்டனர். வித்தியாசம் என்னவெனில், அவர்கள் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பலரை உதவியாளர்களாகச் சேர்த்துக்கொண்டனர். தோமஸ் ஸ்டிலைப் பார்க்கவும் (1872).
ஒகேசேகர (அதே இடம்). இந்த எண்ணப்பாடுகளின் விஸ்தரிப்புக்கு ஒபேசேகர (அதே இடம் 46-47)வைப் பார்க்கவும். அனங்கு, அனுபவ மற்றும் அனுஹச என்பவை நற்சகுனம், துர்ச்சகுனம், பாதுகாப்பு மற்றும் ஆபத்து, நன்மை மற்றும் தீமை என்பவற்றுக்கிடையிலான இருநிலைத்தன்மைநிறைந்த சந்தர்ப்பத்தைக் குறிப்பதாகும். இது யாத்திரிகர் வீட்டைவிட்டுப் புறப்படுகையில் ஆரம்பித்து, அவர் வீட்டுக்கு வந்துசேருகையில் முடிவடைகின்றது. வான் கெனெப் மற்றும் (1909) மற்றும் விக்டர் டேர்னர் என்போர் (1967, 1969, 1973, 1974 (a & b), எடித் டேர்னருடன் 1978 மற்றும் 1992) கூறியவாறு இச்சூழ்நிலை ஒர் அனுமதிச் சடங்கை ஒத்ததாகும். பிரிவினை, ஒரைத்தன்மை மற்றும் மீளொருங்கிணைப்பு போன்ற வான் ஜெனெப்பின் எண் ணக் கருக்கள் பாதயாத் தரையரின் மூன்று படிநிலைகளை விளங்கிக்கொள்வதற்கு முக்கியமானவையாகும். ஒரைத்தன்மைநிலை, அபாயத்துடன் நெருக்கம் என்பவை உயிர்வாழ்க்கைப் படிகளினிடையிலான உணராநிலை என்பதை ஒத்ததாகும். அரிசிமாவின் ருசியும், நிலையான தன்மையும் சிங்கள் அல்வா போன்றதாகும். வித்தியாசம், அல்வா பகுதி இறுக்கமான வைர வடிவிலான உணவுப் பொருளாக வழங்கப்படுகின்றது என்பதாகும். எவ்வாறாயினும், இது வாயில் தூளாகிக் கரைந்து போகும். அல்வாவும் யாத்திரிகர்களின் விருப்புப் பொருளாகும். அதைக் காய்ந்த இடத்தில் வைத்திருக்கும்வரை அது கெட்டுப்
64

23
போவதில்லை. தெளிவாகவே, அரிசிமாவும், அல்வாவும் வித்தியாசமான கலாசாரச் சமர்ப்பணங்களோடு 6.ழங்கப்படும் ஒரே உணவு வகையாகும். Terminalia glabra கதிர்காம வரலாறு மற்றும் பிரித்தானிய குடியேற்றவாத ஆட்சியின் கீழ் யாத்திரைகளின் ஏற்ற, இறக்கங்கள் குறித்து அறிவதற்கு அத்தியாயம் 6ஐப் பார்க்கவும்.
65

Page 37


Page 38
UNIEARTS (PVT)LTD., C

OLOMBO-13. TEL: 2330195