கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகத்தான மாஓசேதுங் சிந்தனை

Page 1
எழுதிய 5 T. J.)II பொதுச் செயலாளர், இல
o
 
 

பவர்:
முகதாசன் ங்கை கம்யூனிஸ்ட் கட்சி

Page 2


Page 3

எது யுகத்தின் மகத்தான பார்க்சிஸ்ட்-லெனினிஸ்டான்
-
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது தேசிய மாநாட்டில் முக்கிய ாத்துவமிக்கதோர் சொற்பொ ழிவையாற்றுகின்று
தோழர் ராஜசேதுங் அண்மையில் நன பெற்ற

Page 4

மக்கள் சீனுவின் 20வது ஆண்டு நீறைவு விழா
மகத்தான
மாஒசேதுங் சிந்தனை
எழுதியவர் : A. sGig8gisi
பொதுச் செயலாளர், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி வெளியீடு.

Page 5

புரட்சியா? சீர்திருத்தமா?
கிடந்த காலத்தின் குறிப்பிட்ட மிச்ச சொச்சங்களே, உதா ரணமாக, முடியாட்சி, நிரந்தரப் படை முதலியவற்றை சார்ந் திருப்பது முதலாளி வர்க்கத்துக்கு சாதகமானது பாட்டாளி வர்க்கத்துக்கு பாதகமானது. முதலாளி வர்க்கப் புரட்சி கடந்த காலத்தின் மிச்ச சொச்சங்கள் அனைத்தையும் அவ்வளவு உறுதி யாகத் துடைத்தெறியாமல், அவற்றில் சிலவற்றை விட்டுச் சென்ருல், அதாவது, இந்தப் புரட்சி பூரண உறுதிப்பாட்டுடன் நடைபெருவிட்டால், சம்பூரணமாக நடைபெருவிட்டால், இது திடசங்கல்பத்துடனும், இடையீடு இன்றியும் நடைபெருவிட் டால், . அது முதலாளி வர்க்கத்துக்கு சாதகமானது. முத லாளித்துவ ஜனநாயகத் திசையில் தேவையான மாற்றங்கள் புரட்சி மூலம் நடவாமல், சீர்திருத்தங்கள் மூலம் மெது மெது வாக, படிப்படியாக, மேலும் அபாயமின்றி, மேலும் மென்மை யாக நடைபெற்ருல். இந்த மாற்றங்கள் பொது மக்க ளின், அதாவது விவசாயிகளினதும், சிறப்பாக தொழிலாளர் களினதும் க்தந்திரமான புரட்சிகர நடவடிக்கை, முன்முயற்சி, ஆற்றல் ஆகியவற்றை சாத்தியமான அளவு சிறிது சிறிதாக வளர்த்தால், அது முதலாளி வர்க்கத்துக்கு மேலும் சாதகமா னது; அவை துரிதமாக வளர்ந்தால், தொழிலாளர்களைப் பொறுத்தவரையில், பிரெஞ்சு மக்கள் கூறுவதுபேரல, துப்பாக் கியை ஒரு தோளிலிருந்து மறு தோளுக்கு மாற்றுவது வெகு சுலபமாகும்; அதாவது, முதலாளித்துவ புரட்சி தமது கைகளில் கொடுக்கும் துப்பாக்கிகளை, புரட்சி தமக்கு வழங்கும் சுயா தீனத்தை, அடிமைமுறை இல்லாத அடிப்படையிலிருந்து தோன் றும் ஜனநாயக உரிமைகளை, முதலாளி வர்க்கத்துக்கு எதிராகத் திருப்புவது வெகு சுலபமாகும். மறுபுறம், முதலாளித்துவ ஜன நாயகத் திசையில் தேவையான மாற்றங்கள் சீர்திருத்தங்கள் மூலம் நடவாமல், புரட்சி மூலம் நடைபெறுவது, தொழிலா ளர் வர்க்கத்துக்கு மேலும் சாதகமானதாகும். காரணம், சீர்

Page 6
திருத்த வழி என்பது தாமத வழியாகும்; காலத்தைக் கடத்தும் வழியாகும்; தேசிய சேதனப் பொருள்களின் துர்நாற்றம் வீசும் பகுதிகளின் நசிவை கஷ்டப்பட்டு தாமதமாக்கும் வழியாகும். அவை வீசும் துர்நாற்றம் முதன்முதலாகவும், எல்லாவற்றுக் கும் மேலாகவும் பாட்டாளி வர்க்கத்தையும், விவசாயி வர்க்கத் தையும்தான் துன்புறுத்தும். புரட்சி வழி என்பது விரைந்து துண்டிக்கின்ற, பாட்டாளி வர்க்கத்துக்கு மிகக் குறைந்த கஷ்ட முடைய வழியாகும். ஒற்றையாட்சிக்கும் அதோடு சம்பந்தப் பட்ட மிக வெறுக்கத்தக்க, இழிந்த, உழுத்துப்போன, நோய் பரப்புகின்ற நிறுவனங்களுக்கும் மிகக் குறைந்த அளவு சலுகை கொடுக்கின்ற, மிகக் குறைந்த அளவு அக்கறை செலுத்துகின்ற
வழியாகும்.
- லெனின்
மக்கள் படை ஒன்று இல்லாவிட்டால், மக்களுக்கு ஒன்றுமே இல்லை.
- மாஓசேதுங்
ஆயுதங்களின் உபயோகத்தை அறிந்துகொள்ள, ஆயுதங் களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்காத ஒரு அடக்கி ஒடுக்கப் பட்ட வர்க்கம் அடிமைகளாய் நடத்தப்படுவதற்கு மாத்திரம் தகுதியானது. நாம் முதலாளித்துவ சாந்திவாதிகளாய், சந்தர்ப்ப வாதிகளாய் இருந்தால் ஒழிய, நாம் வர்க்க சமுதாயத்தில் வாழ் கின்ருேம், வர்க்கப் போராட்டத்தின் மூலமன்றி இந்த சமுதா யத்திலிருந்து வெளியேற வழியே இல்லை, இருக்கவும் முடியாது என்பதை நாம் மறக்க இயலாது. ஒவ்வொரு வர்க்க சமுதா யத்திலும், அது அடிமை முறை, பண்ணை அடிமைமுறை, அல்லது இன்றுபோல கூலி உழைப்பு-இவற்றில் எதை அடிப் படையாகக் கொண்டிருந்தாலும் சரி, அடக்கி ஒடுக்கும் வர்க்கம் எப்பொழுதும் ஆயுதபாணியாகவே இருக்கின்றது. 'பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்கி, முதலாளி வர்க்கத்தை நிராயுத பாணியாக்குவது' என்பதே நமது சுலோகமாகும்.
- Gavaus
V

மார்க்ஸிஸம்-லெனினிஸ தத்துவத்தால் ஆயுதபாணியாக்கப் பட்ட, சுயவிமர்சன முறையைப் பயில்கின்ற, பொது மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய, சிறந்த கட்டுப்பாடுடைய ஒரு கட்சி; இத்தகைய கட்சியின் தலைமையிலுள்ள ஒரு ராணுவம்; இத்த கைய கட்சியின் தலைமையிலுள்ள புரட்சிகர வர்க்கங்கள், புரட்சி காக் குழுக்கள் எல்லாவற்றினதும் ஒரு ஐக்கிய முன்னணி - இந்த மூன்றும்தான் நாம் எதிரியைத் தோற்கடித்த மூன்று பிரதான ஆயுதங்கள்.
-மாஒசேதுங்
பிழை திருத்தம்
பக்கம் வரி: பிழை: Ff:
59 14 1976 1967

Page 7

அத்தியாயம்:
2
5
26s GTL&SLD:
மrஒசேதுங் சிந்தனை
மாபெரும் வாதப்பிரதிவாதம்
மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார
Lur .3
பார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளாசசிக்கு
Pாஒசேதுங் வழங்கிய சாதனை
கட்சி பற்றி
மக்கள் யுத்தமும், மக்கள் படையும் பற்றி
ஐக்கிய முன்னணி பற்றி
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீர்த்திமிக்க
9வது தேசிய மாநாடு.
VI

Page 8

:
: : : :
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மீத்திய கமிட்டியின் தஃலவரும், 7) கோடி
Wáጎ; மக்களின் 1கத்தாை முதல்வருமான தோழர் மாஓசேதுங்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோ ழர் என். சண்முகதாசனே டியன் மென் சதுக்கத்தில் வரவேற்கின்மூர்,

Page 9

இவ்வாண்டு, 1969, அக்டோபர் 1ல் நாம் மக்கள் சீன குடியரசு ஸ்தாபகத்தின் 20வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகின்ருேம். இது எழுபது கோடி சீன மக்களுக்கு மாத்திரமல்ல, உலகம் பூராவுமுள்ள புரட்சிவாதிகள் அனைவருக் கும் உண்மையில் மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்ச்சியாகும்.
இவவிழா, மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி ஈட்டிய பன்முக வெற்றிக்குப் பின்னர், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒன்பதாவது தேசிய மாநாட்டின் வெற்றிகர முடிவால் இது அரசியல் ரீதியில் மேலும் ஸ்திரப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெறுவதால், மேலும் முக்கி யத்துவம் வாய்ந்து விளங்குகின்றது.
இந்த வெற்றிகள் அனைத்தும், நமது சகாப்தத்தின் மாபெ ரும் மார்க்ஸிஸம்-லெனினிஸவாதியாகத் திகழும் தோழர் மாஒ சேதுங் அவர்கள் நேரடியாகக் கொடுத்த விவேகமுள்ள, சரி யான, மார்க்ஸிஸம்-லெனினிஸ் வழிகாட்டலின் விளைவுகள். வர்க் கப் போராட்டம் என்ற பயங்கரப் புயல்கள் அனைத்துக் கூடாக வும் சீன கம்யூனிஸ்ட் கட்சி என்ற கப்பலைச் செலுத்தி, பாது காப்பாகக் கரைசேர்த்த மாபெரும் மீகாமன் அவர்.
எனவே, புரட்சிவாதிகள் அனைவரும், சிறப்பாக இன்னும் விடுதலை அடையாத நாடுகளின் புரட்சிவாதிகள் அனைவரும், தத்தம் நாட்டின் ஸ்தூலமான புரட்சி அனுஷ்டானத்தில் பிர யோகிப்பதற்காக, மாஒசேதுங் சிந்தனையைப் படிப்பதும், அதில் தேர்ச்சி பெறுவதும் அவசியம். இந்நூலில் அடங்கியுள்ள கருத் துக்கள் பெரும்பாலும், ஆசிரியர் பல்வேறு காலங்களில் எழுதிய கட்டுரைகளின் வடிவில் வெளிவந்தவை. இன்றைய முயற்சி யாதெனில், இந்த கருத்துகள் எல்லாவற்றையும் தொகுத்து,
ΙΧ

Page 10
ஒரு முழுமையான வடிவில் உருவாக்கித் தருவதேயாகும். சில இடங்களில் அவை மேலும் விரிவாக்கி, விளக்கப்படுகின்றன. சில அம்சங்களில், அவை மீண்டும் மீண்டும் இடம்பெற்றுள்ளன. இது தவிர்க்க முடியாதது. நமது சகாப்தத்தின் மிகவும் புரட்சி கரமான தத்துவத்தை, மாஓசேதுங் சிந்தனையை, சராசரி வாச கர் ஒருவருக்கு இயன்ற அளவு எளிதாக விளக்கும் முயற்சி இது.
இது கலைத்துறைப் பொழுதுபோக்கில் எழுதிய ஒரு பயிற்சிப் பாடம் அல்ல. இது புரட்சிவாதிகள் அனைவரையும் சரியான தத்துவத்தால் ஆயுதபாணிகள் ஆக்கும், நமது பிரதான எதிரி களை - அந்நிய ஏகாதிபத்தியத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும், ஐக்கிய தேசிய கட்சி, சமஷ்டி (தமிழரசு) கட்சி முதலியவை போன்ற அவற்றின் வேட்டை நாய்களையும் - தூக்கியெறிந்து, நமது நாட்டின் சமுதாய அமைப்பில் ஒரு புரட்சிகர மாற்றத் தைக் கொண்டுவர அவர்களுக்குத் துணை புரியும் என்ற நம்பிக் கையில் எழுதப்பட்டது.
நம்மைப் பொறுத்தவரையில், தத்துவம் என்பது வரட்டு வேதாந்தம் அல்ல. அது செயலுக்கு ஒரு வழிகாட்டி, 'இது வரையில் தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் மாத்திரம் செய்துள்ளனர். நமது கடமை அதை மாற்றுவதாகும்** என்று மார்க்ஸ் அவர்கள் கூறினர். ‘புரட்சிகரத் தத்துவம் இல்லா விட்டால், புரட்சிகர இயக்கம் என்பது இருக்க முடியாது’ என்று லெனின் அவர்கள் நமக்குப் போதித்துள்ளார்.
அதேவேளையில், நமது மூளைகள் வெற்றிடமாக ஒருபோதும் இருக்கமாட்டா என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதில் முதலாளித்துவ சிந்தனை இருக்கும், அல்லது பாட்டாளி வர்க்க சிந்தனை இருக்கும். நமது மூளைகளுக்குள் இந்த இரண்டு சித் தாந்தங்களுக்கும் இடையில் சர்வசதா போராட்டம் நடந்து கொண்டிருக்கும். 'நமது மூளையில் இரண்டு சித்தாந்தங்களுக் கும் இடையில் நீண்டகாலம் சமாதான சகவாழ்வு இருக்க முடி யாது. இறுதியில் முதலாளித்துவ சித்தாந்தம் வெற்றிபெறும், அல்லது பாட்டாளி வர்க்க சித்தாந்தம் வாகைசூடும்’ என்று தோழர் மாஓசேதுங் அவர்கள் கூறியதாகச் சொல்லப்படுகின் றது.
நாம் பிறந்தது முதல், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்தியாலமும், ஒவ்வொரு நிமிடமும், பழைய சமுதாயத் தின் மூலம், அதன் பிற்போக்கு சமூக பழக்க வழக்கங்கள் மூலம், பாடசாலைகள் மூலம், பாதிரிமார்கள் மூலம் திரைப்படம்,
X

வானெலி, (இலங்கையில் வெகுஜனங்களை ஊழல்படுத் தும் செல்வாக்கு மலிந்த) முதலாளித்துவ பத்திரிகைகள் மூலம், அரைப்பாவாடை, பைத்தியக்கார சிகை அலங்காரங் கள் போன்ற நவ நாகரிகப் பாவனைகள் மூலம், டுவிஸ்ட் முத லிய நடனங்கள் மூலம் பரவும் முதலாளித்துவ எதிர்ப் புரட்சிக் கருத்துகளால் நமது மனம் தாக்கப்பட்டவண்ணம் இருக்கின் றது. நாம் முதலாளித்துவ கருத்துகளின் அழுத்தமான விற் பனையால் தாக்கப்படுகின்ருேம். அவை மக்கள் மீது, சிறப்பாக வாலிபர், யுவதிகள் மீது வெற்றிகரமாகச் செல்வாக்கு வகித்து, அவர்களை எதிர்நோக்கியுள்ள உண்மையான பிரச்சினைகளிலிருந்து அவர்களுடைய மனதைத் திருப்பி, அவர்களை ஊழல்படுத்து கின்றன.
நாம் இதை எதிர்த்துப் போரிடவேண்டும். நாம் பாட் டாளி வர்க்க சித்தாந்தத்தின் மேம்பாட்டுக்காக, மார்க்ஸிஸம்லெனினிஸம்-மாஒசேதுங் சிந்தனையின் மேலாதிக்கத்துக்காக போராடவேண்டும். எல்லாக் கஷ்டங்களும் நமக்கெதிராகவே உள்ளன. உண்மை மாத்திரம் நம் பக்கத்தில் உண்டு. இங்கு தான் புரட்சிகர தத்துவத்தில் தேர்ச்சிபெறுவதன் முக்கியத்துவம் புதைந்து கிடக்கின்றது. முன்பு கூறியதுபோல, நமது தோழர் களை புரட்சிகர தத்துவத்தால் ஆயுதபாணிகளாக்க இது துணை செய்யும், சாத்தியமான அளவு விரைவில் சமுதாயத்தில் புரட்சி கர மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அவர்கள் இதை உபயோகிப் பர் என்ற நம்பிக்கையுடன் இந்நூல் எழுதப்பட்டது.
சடப்பொருள், சிந்தனை இரண்டில் சடப்பொருள் முதன்மை வகிப்பதுபோல, நடைமுறை, தத்துவம் இரண்டில், நடைமுறை முதன்மையானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆணுல், (சிந்தனை அல்லது) மனம் சடப்பொருளின் அதியுயர்ந்த வடிவமாக விளங்கு வதுபோல, தத்துவம்கூட நடைமுறையிலிருந்தே எழுகின்றது. இருந்தும், தத்துவத்தின் பிழையின்மை, அதன் மீண்டும் செழு மைப்படுத்துகின்ற நடைமுறையில் தான் பரீட்சிக்கப்பட முடி եւյւD.
ஆகவே, தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்கா கவேநாம் தத்துவத்தைப் படிக்கின்ருேம். தோழர் மாஒசேதுங் அவர்கள். ஒருகால் குறிப்பிட்டது போல, மார்க்ஸிஸம்-லெனினி ஸம் என்பது அம்பு போன்றது. ஆனல், அது ஒவ்வொரு நாட்டின தும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்
X

Page 11
தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடியாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது.
ஆகவே, தத்துவத்தையும் நடைமுறையையும் யந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது. சொந்த நாட்டின் ஸ்தூல மான நடைமுறையைப் படிக்க மறுக்கும் அதேவேளையில், தத்து வத்தின் முக்கியத்துவத்தை யார் மிகைப்படுத்திக் கூறுகிருரோ, அவர் வரட்டுவாதியாவர், அல்லது இலங்கையில் நாம் அழைப் பதுபோல ‘பொத்தே குரு'வாதி ஆவர். யார் (அனுபவத்தில்) நடைமுறையில் மாத்திரம் அக்கறை செலுத்தி தத்துவத்தின் முக்கி யத்துவத்தை மறக்கிருரோ, அவர் அனுபவவாதியாவர்.
வரட்டுவாதம், அனுபவவாதம் இரண்டும் தவருனவை. நடைமுறை இல்லாத தத்துவம், தத்துவம் இல்லாத நடைமுறை இரண்டும் பயனற்றவை. இரண்டினதும் ஐக்கியம்தான் நமக்கு வேண்டும்.
- ஆசிரியர்
10. 6.69.
XII

அத்தியாயம் 1
மாஓசேதுங் சிந்தனை
கிழக்கு சிவக்கிறது, சூரியன் உதிக்கிறது, சீனுவில் மாஓசேதுங் தோன்றுகிருர்,
இவை தலைவர் மாஒசேதுங் அவர்களையும், சீன கம்யூ னிஸ்ட் " கட்சியையும் பாராட்டி, சாதாரண சீன விவசாயி ஒருவர் பாடிய எளிய பாடலின் முதல் அடிகளாகும். இப்பாடல் இன்று ஏறக்குறைய சீனுவின் தேசிய கீதமே ஆகிவிட்டது. காரணம் என்னவென்றல், இந்த சாதாரண வரிகளின் பின்னே ஆழ்ந்த உண்மை ஒன்று புதைந்து கிடக்கிறது.
சீனு ஒரு மகத்தான நாடு. உலகில் ஜனத்தொகை கூடிய நாடு. இந்த ஜனத்தொகை 70 கோடியைத் தாண்டிவிட்டது. சீனு, 5000 ஆண்டுகளுக்கு மேலான, உலகில் மிகப் பழைய ஒரு நாக ரிகம் படைத்த நாடு. அச்சடிக்கும்முறை, வெடிமருந்து போன்ற பல புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கிய நாடும் சீனுவே தான.
ஆணுல், இன்று அது நமது சகாப்தத்தின் மிகப்பெரும் மார்க்சிஸ் - லெனினிஸவாதியாக விளங்கும் தோழர் மாஒ சேதுங் அவர்களை உலகுக்கு வழங்கியதுதான் கொடைகளில் மிகப் பெரிய கொடை என்பதை யாரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மனித குலத்தின் தலைவிதியில் தமது அழியாத அடிச்சுவட்டை விட்டுச்சென்ற மேதாவிலாசம் படைத்த கிடைத்தற்கரிய மனித மாணிக்கங்களில் தோழர் மாஒ சே துங் அவர்கள் ஒரு வராவர். கார்ல் மார்க்ஸ் அவர்கள் ஜெர்மனியர்களுக்கு மட்டும் சொந்தமில்லாதது போல, லெனின் அவர்கள் ரஷியர்களுக்கு

Page 12
மட்டும் சொந்தமில்லாதது போல, தோழர் மாஓசேதுங் அவர்க ளும் சீனர்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. இம்மேதைகள் அகிலம் முழுவதற்கும் சொந்தமானவர்கள். இவர்கள் எல்லாரும் மாபெரும் சர்வதேசியவாதிகள். இவர்களுடைய சிந்தனையும், செயல்களும், செல்வாக்கும் இவர்கள் தோன்றிய நாடுகளின் எல்லைகளைத் தாண்டிச்சென்று சர்வலோகமும் வியாபிப்பவை. இங்குதான் மா ஒ சே துங் சிந்தனையின் சர்வதேசிய முக்கியத்து வம் புதைந்து கிடக்கின்றது.
நமது சகாப்தத்தின் புரட்சிகர நடவடிக்கைகள் பூராவிலும் மாஒ சேதுங் சிந்தனையின் ஆதிக்கமும், செல்வாக்கும் இருக்கத் தான் செய்கின்றன. நமது சகாப்தம் என்பது மாஒசேதுங் சகாப்தம் என்ற தீர்ப்பு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.
கார்ல் மார்க்ஸ், பிரெட்றிக் ஏங்கெல்ஸ் இருவரும் விஞ்ஞான சோஷலிஸத்தின் சிருஷ்டி கர்த்தாக்கள் ஆவர். அவர்கள் முத லாளித்துவம் வளர்ச்சியடையும் காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்து, அவற்றை தொழிலாளி வர்க்கம் புரிந்து, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்காக, அவ்விதிகளை தொழிலாளி வர்க்கத்துக்கு போதித்தனர். மார்க்ஸும், ஏங்கெல்ஸும் வர்க்கப் போராட் டம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதி காரம் ஆகியவற்றின் விதிகள் பற்றியும், அரசு பற்றிய தத்து வத்தையும் நமக்குப் போதித்தனர். ஆனல், அவர்கள் தமது கனவு நனவாவதைக் காண, தமது தத்துவங்கள் நடைமுறையா தைக் காணக்கொடுத்து வைக்கவில்லை. அவர்களுடைய கருத்து கள் பின்னர் மார்க்சிஸம் என அழைக்கப்படுகின்றது.
லெனின் அவர்கள், முதலாளித்துவம் அதன் இறுதிக் கட்ட மான ஏகாதிபத்திய கட்டத்திற்கு வளர்ந்த காலத்தில் புரட்சி இயக்கத்தின் ஊக்கமாக உழைத்த ஒரு மார்க்சிஸவாதியாவார். வேறுவார்த்தைகளில் சொன்னல், அவர் ஏகாதிபத்திய யுத்த சகாப்தத்தில், சோஷலிஸ் புரட்சி சகாப்தத்தில் வாழ்ந்தார். தமது காலத்தின் மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப அவர் மார்க்சி ஸத்தைப் பிரயோகித்தார். இவ்வாறு, அவர் மார்க்சிஸத்தைலெனினிஸம் என்ற உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தார்.
லெனின் அவர்கள் தமது முதல் கடமையாக, மார்க்ஸும், ஏங்கெல்ஸும் மறைந்த பின்னர், அவர்களுடைய வாரிசுகள் தாம் என்று தம்மைத்தாமே கூறிக்கொண்ட காட்ஸ்கி, பர்ன்ஸ்
2

டீன் போன்ற இரண்டாவது சர்வதேசியத்தின் தலைவர்களுடன் ஒரு ராட்சஸ் சித்தாந்தப் போரை நடத்தினர். ஆனல், யதார்த் தத்தில் அவர்களுக்கும் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருக்கும் சம்பந்தா சம்பந்தமே கிடையாது. அவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இரு வரின் புரட்சிப் போதனைகளைத் திரித்துப் புரட்டி எழுதினர்கள். விஞ்ஞான சோஷலிஸத்தின் இம்மாபெரும் பிதாமகன்களின் புரட்சிகர உள்ளடக்கத்துக்கு முழுக்குப் போட்டு, அவற்றுக்குப் பதில் காட்ஸ்கி, பர்ன்ஸ்டீன் என்ற இந்த அற்பர்கள் பாராளு மன்றப் பாதை மூலம் சோஷலிஸத்துக்குச் செல்லும் சமாதான மாற்றத் தத்துவங்களை விளம்பரம் செய்தார்கள். அவர்கள் புரட்சிகரக் கட்சிகளாக இருந்த இரண்டாவது சர்வதேசியத் தின் கட்சிகளை பாராளுமன்றக் கட்சிகளாக மாற்றி விட்டார்
öGT。
வேறு வார்த்தைகளில் கூறிஞல், அவர்கள் மார்க்ஸ், ஏங் கெல்ஸ் இருவரின் புரட்சித் தத்துவங்களைத் திரித்து விட்டனர். எ ன வேதா ன் லெ னி ன் அ வர் க் ளை தி ரி பு வா தி க ள் என்று அழைத்தார். ஆக, மார்க்சிஸத்தின் அடிப்படை புரட்சி கர உண்மைகளைக் கண்டுபிடித்து, அவற்றை உறுதியாகவும், ஒளியுடனும் புனர்ஸ்தாபனம் செய்வது லெனினின் முதல் கட மையாக இருந்தது. இந்தக் கடமையை, இன்றும் பிரசித்தி பெற்று புகழுடன் விளங்கும் மார்க்சிஸத் தொன் னுால்களான 'அரசும் புரட்சியும்', 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும், துரோகி காட்ஸ்கியும்' போன்ற பிரகாசமான பல வாதப்பிரதிவாதப் படைப்புகள் மூலம் நிறைவேற்றினர்.
லெனினிஸம்
ஆணுல், லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல. அவர் ஒரு செயல் வீரனும் கூட, மார்க்சிஸக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில் புதிய ரகக் கட்சியொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும். இதன் பிரகாரம் அவர் ஸ்தாபித்த பொல்ஷிவிக் கட்சி, அக்டோபர் புரட்சியை நடத்தும் ஆயுதமாகச் சேவை செய்தது, இது உருக்குப்போன்ற கட்டுப்பாடுடைய, புரட்சிகர மார்க்சிஸ் உண்மைகளால் ஆயுதபாணியாகிய, சந்தர்ப்பவாதத் திலிருந்து விடுதலைபெற்ற, ஜனநாயக மத்தியத்துவக் கோட் பாடுகளால் வழிநடத்தப்படுகின்ற, சுயவிமர்சனத்தை ஆயுத மாகக் கொண்ட பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய ஒரு புரட்சிகரக் கட்சியாகும்.

Page 13
இத்தகைய ஒரு கட்சியின் உதவியுடன், லெனின் அவர்கள் உலகின் முதலாவது தொழிலாளர் வர்க்கப் புரட்சியை வெற்றி கரமாக வழிநடத்தி, உலகின் முதலாவது சோஷலிஸ் அரசை சிருஷ்டித்தார். அது அடக்கி ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அனை வருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. இப்படிச் செய் வதன் மூலம் லெனின் தத்துவத்தை நடைமுறையாக்கினர்; கனவை நனவாக்கினர். இத்துடன், முதலாளித்துவ சமுத்திரத் தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகா ரத்தை ஸ்தாபித்து, பாதுகாப்பது சம்பந்தயான பல பிரச்சினை களுக்கும் தீர்வு கண்டார். ஆனல், படித்தறிய முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சிஸத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி விட்டார். அதுமுதல், மார்க்சிஸம் என்பது மார்க் சிஸம்-லெனினிஸம் என அழைக்கப்பட்டது.
ஸ்டாலின் அவர்கள் லெனினின் கடமைகளைத் தொடர்ந்து செய்தார். அவர் சில தவறுகள் இழைத்த போதிலும், ஹிட்ல ரின் பாசிஸ் ஆக்கிரமிப்பின் மிலேச்சத்தனத்தை, எதிர்த்து, ஒரு நாட்டில் சோஷலிஸத்தைக் கட்டிவளர்த்து, அதைப் பாதுகாப் பதில் பெரும்பணி புரிந்தார். ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியனில் சோஷலிஸத்தைக் கட்டியமைப்பதில் ஈட்டிய வெற் றியும், உலக பாசிஸத்தை நிர்மூலமாக்குவதில் அது வகித்த முக்கிய பாத்திரமும் சோஷலிஸம் ஒரு தனிநாட்டின் எல்லைக்கு அப்பால் பரவுவதற்கு துணைசெய்தது மாத்திரமல்ல, உலகத்தில் முற்றிலும் புதிய ஒரு நிலைமையையும், அதாவது, சோஷலிஸம் புரட்சி இவற்றிற்காக நிற்கும் சக்திகளுக்குச் சாதகமான ஒரு பலாபல நிலைமையையும் தோற்றுவித்தது. இந்த தீர்க்கமான மாற்றம், 1949ல் சீன புரட்சியின் வெற்றியுடன், மனித குலத் தில் நாலில் ஒரு பகுதி ஏகாதிபத்தியம், பிரபுத்துவம், அதிகார முதலாளித்துவம் ஆகிய மூன்று மலைகளையும் தூக்கி வீசிவிட்டு, சோஷலிஸத்தை நோக்கி முன்னேறத் தொடங்கியதுடன், மேலும் தீர்க்கமானதாக மாறியது. இவ்வாறு உலகப் புரட்சி யின் வெற்றிக்கு மேலும் சாதகமான ஒரு புத்தம் புதிய சூழ் நிலை உருவாகியது.
மாஒசேதுங் சிந்தனை
தோழர் மாஒசேதுங் சீன புரட்சியின் ஸ்தூலமான நிலைமை களுக்கு ஏற்ப மார்க்சிஸம் - லெனினிஸத்தைப் பிரயோகித்தார்.
4.

வெளிநாட்டு ஏகாதிபத்தியம், உள்நாட்டு நிலப்பிரபுத்துவம், அதி கார முதலாளித்துவம் இவற்றுக்கு எதிரான நீடித்த போராட்டத் தின் வளைவுசுளிவுகளுக்கு ஊடாகச் சீன புரட்சி வெற்றிபெற வழிகாட்டி, தலைமை கொடுப்பதன் மூலமும், சீனுவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதன் மூலமும், தோழர் மாஓ சேதுங் அவர்கள் மார்க்சிஸம் - லெனினிஸத்தின் பொது உண்மைகளை சீனுவின் ஸ்தூலமான புரட்சி நிலைமைக்கு இனங் கப் பிரயோகிப்பதில் தமது ஈடுஇணையற்ற திறமையைக் காட்டி ஞா.
தோழர் மாஒசேதுங் அவர்கள் சீன புரட்சியை வெற்றிக்கு வழிநடத்தி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபித்தது மாத்திரமல்ல, தமது காலத்தில் லெனின் அவர்கள் தீர்வு காணுது விட்டுச்சென்ற, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்பட்ட பின் எழுந்த பல பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் 56or L-frff.
தவறற்ற தீர்க்க தரிசனத்துடன், தோழர் மாஒ சேதுங் அவர் கள், முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிஸத்துக்கு மாறிச் செல் லும் வரலாற்றுக் காலகட்டம் பூராவும் வர்க்கங்கள் தொடர்ந்து இருக்கும், ஆகவே, சோஷலிஸ்ப் புரட்சியின் பின்னர்கூட வர்க் கப் போராட்டங்கள் தொடர்ந்து இருக்கும் என்று சுட்டிக் காட்டி யுள்ளார். காணற்கரிய மேதாவிலாசத்துடன், மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சியை தாமாக ஆரம் பித்து தலைமை தாங்குவதன் மூலம், அவர் பாட்டாளி வர்க்க சர் வாதிகாரத்தின் கீழ் புரட்சி நடத்துவது எப்படி, சோவியத் யூனியனில் ஏற்பட்டதுபோல் சீனுவில் முதலாளித்துவ மீட்சி ஏற்படாமல் தடுப்பது எப்படி, சீனவில் பாட்டாளி வர்க்க சர்வா திகாரத்தைப் பாதுகாத்து, ஸ்திரப்படுத்துவது எப்படி, புரட்சியை இறுதிவரை தொடர்ந்து நடத்துவது எப்படி, இறுதியில் சீனவை உலகப் புரட்சியின் தளமாக்கப் பேணிவைத்திருப்பது எப்படி என்று நடைமுறையில் காட்டினர்.
அதேவேளையில், தோழர் மாஓசேதுங் அவர்கள் நவீன திரிபு வாதத்தின் நச்சுத் தத்துவங்களுக்கு எதிராகவும், மார்க்சிஸம்லெனினிஸத்தின் தூய்மையைப் பாதுகாக்கவும் மாபெரும் சித் தாந்தப் போர் ஒன்றை நடத்தினர். மார்க்சிஸம்-லெனினிஸத்தின் உண்மைகளை குருசேவ் நவீன திரிபுவாதிகள் திரித்துப் புரட்டி, அவற்றின் புரட்சிகர ஆத்மாவை திருடிவிடாமல், அவ் வுண்மைகளைக் கண்டுபிடித்து; மீண்டும் வரைந்தார். இவ்வாறு
5

Page 14
லெனின் அவர்கள் தமது காலத்தில் செய்த அதே கடமையை, இன்று தோழர் மாஒசேதுங் அவர்கள் செய்தார். நாம், சீன கம் யூனிஸ்ட் கட்சி, அதன் மாபெரும் தலைவர் தோழர் மாஒசேதுங் அவர்கள் தலைமையில், நவீன திரிபுவாதத்துக்கு எதிராக நடத்திய சித்தாந்தப் போராட்டத்தின் மகோன்னதமான வரலாற்று முக் கியத்துவத்தையும், மகோன்னதமான சர்வதேசிய முக்கியத்துவத் தையும் உணர வேண்டுமானல், ரஷியாவைப் பின்பற்றி சீனுவும் திரிபுவாத முகாமில் சென்றுவிட்டால், சர்வதேசிய புரட்சி இயக் கத்திற்கு என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வியை நமக்குள் கேட்டுப் பார்த்தாலே போதும். இந்த மகத்தான சிந்தாந்தப் போராட்டம் மார்க்சிஸம் - லெனினிஸத்தை வாகை குட வைத் தது மட்டுமல்ல, சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கம் முழுவதுக்கும் புதிய தெம்பை ஊட்டியுள்ளது. உலகப் புரட்சியின் இறுதி வெற் றியை நிச்சயமாக்கியுள்ளது. உலக ஏகாதிபத்தியத்தின் இறுதித் தோல்வியையும், அதன் முண்டாக விளங்கும் நவீன திரிபுவாதத் தின் தோல்வியையும் கூட நிச்சயமாக்கியுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் போக்கில் தோழர் மாஒசேதுங் அவர் கள் மார்க்சிலம்-லெனினிஸத்தை செழுமைப்படுத்தி, அதை ஒரு புதிய கட்டத்துக்கு ஆக்கபூர்வமாக வளர்த்துள்ளார். அதையே நாம் மாஒ சேதுங் சிந்தனை என்று அழைக்கின்ருேம். மாஒசேதுங் சிந்தனை என்பது மார்க்சிஸம்-லெனினிஸத்தின் சிகரம். ஆகவே, அதை மார்க் சிஸ் ம் - லெனினி ஸ்த் தி விருந்து வேறுபட்டதா கவோ அல்லது பிரிந்ததாகவோ கருதக்கூடாது. இன்னும், அது மார்க்சிஸம்-லெனினிஸத்துக்கு விரோதமானது என்று கூட சொல் வது தவறு. லெனின் அவர்கள் மார்க்சிஸத்தை ஆக்கபூர்வமாக லெனினிஸம் என்ற கட்டத்துக்கு வளர்த்தார். தோழர் மாஓசேதுங் அவர்கள் மார்க்சிஸம்-லெனினிஸத்தை மாஓசேதுங் சிந்தனை என்ற கட்டத்துக்கு ஆக்கபூர்வமாக வளர்த்துள்ளார். மார்க்சிஸம்-லெனி னிஸம், மார்க்சிஸத்தின் வளர்ச்சியாக விளங்குவது போல, மாஒ சேதுங் சிந்தனை, மார்க்சிஸம்-லெனினிஸத்தின் மேல் வளர்ச்சி யாக விளங்குகின்றது.
எனவேதான், லெனினுடைய காலத்தில், யார் லெனினிஸத் தை எதிர்த்தாலும், அவர் உண்மையில் மார்க்சிஸத்தை எதிர்த் தார் என்று கருதப்பட்டது. அதுபோல, இன்று யார் மாஓசேதுங் சிந்தனையை எதிர்த்தாலும், அவர் உண்மையில் மார்க்சிஸம்-லெனி னிஸத்தை எதிர்க்கின்றர் என நாம் கருதுகின்ருேம். இன்று, மார்க்சிஸம் - லெனினிஸத்தை ஆதரிக்கும் ஒருவர்.அந்த ஆதரவை மார்க்சிஸம் - லெனினிஸ வளர்ச்சியின் சிகரமாக விளங்கும்
6

மாஓசேதுங் சிந்தனையை ஆதரிக்கும் அளவுக்கு விஸ்தரிக்கா விட் டால், அதற்கு அர்த்தமே இல்லை. மார்க்சிஸம் - லெனினிஸம் மாஒ சேதுங் சிந்தனை என்பது இன்றைய காலத்தில் உலகில் மிக முன்னேறிய புரட்சிகரத் தத்துவமாகத் திகழ்கிறது. இது ஒன்று தான் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரினதும் புரட்சி இயக் கத்துக்கு சரியான வழிகாட்டியாகும்.
தோழர் மாஒசேதுங் அவர்களின் போராட்ட நண்பராக விளங் கும் தோழர் லின் பியெள அவர்கள் சரியாகத் தொகுத்துக் கூறி யது போல, 'தோழர் மாஒசேதுங் அவர்கள் நமது சகாப்தத்தின் மாபெரும் மார் க் சி ஸ ம் - லெ னி னி ஸ வா தி யா வர். தோழர் மாஒசேதுங் அவர்கள் மேதாவிலாசத்துடனும், ஆக்கபூர்வமாகவும், பன்முகங்களிலும் மார்க்சிஸம் - லெனினிஸத்தைக் கையேற்று, பாதுகாத்து, வளர்த்து, அதைப் புத்தம் புதிய ஒரு கட்டத்துக்கு உயர்த்தியுள்ளார். மாஒசேதுங் சிந்தனை என்பது ஏகாதிபத்தியம் அதன் பூரண அழிவை நோக்கிச் செல்லும் அதேவேளையில், சோஷ லிஸம் உலகரீதியான வெற்றியை நோக்கி முன்னேறும் சகாப்தத் தின் மார்க்சிஸம்-லெனினிஸம்."
எனவே தான், உலகம் பூராவுமுள்ள புரட்சிவாதிகள் அனைவ ரும் சீன மக்களுடன் சேர்ந்து,
'கடல்களில் கப்பலைச் செலுத்துவது மீகாமனைச் சார்ந்தது; புரட்சி நடத்துவது மாஓசேதுங் சிந்தனையைச் சார்ந்தது" என்று பாடுகிருர்கள்.

Page 15
அத்தியாயம் 11
மாபெரும் வாதப்பிரதிவாதம்
ஏறக்குறைய 10 ஆண்டுகளாக சர்வதேசிய கம்யூனிஸ் இயக் கத்திலும், புரட்சி இயக்கத்திலும் நெருப்பென நிகழ்ந்த மகத் தான சித்தாந்தப் போரை, அரசியலில் அக்கறை இல்லாதவர்கள் கூட அவதானிக்காமல் இருந்திருக்க முடியாது. ஆனல், விவாதிக் கப்படுகின்ற அடிப்படை விஷயங்களை பலர் தெளிவாக அறிந்தி ருக்க மாட்டார்கள். இந்த மாபெரும் வாதப்பிரதிவாதம் இலங் கை புரட்சி இயக்கத்துக்குள்கூட எதிரொலிகளைக் கிளப்பிய படி யால், நமது நாட்டிலுள்ள உண்மையான புரட்சிவாதிகள் அனைவ ரும் விவாதத்திலுள்ள அடிப்படை விஷயங்கள் யாவை என அறிந்து கொள்வதும், இதில் சரி எது, பிழை எது என தெரிந்து கொள்வதும் இன்றியமையாதது.
முதலாளித்துவப் பத்திரிகைகளும், பல்வேறு விதமான பிற் போக்குவாதிகளும், நமது காலத்தில் நிகழும் இந்த மகத்தான சித் தாந்த மோதலை ஒரு தேசியச் சச்சரவு, சீனு, ரஷியா ஆகிய இரு நாட்டு நலன்களின் மோதல் என்று சுருக்கிக்காட்ட வீண் முயற்சி செய்து வந்தார்கள். நமது சகாப்தத்தின் மிகப் பெரும் மார்க்சி ஸம்-லெனினிஸவாதியாக விளங்கும் தோழர் மாஒ சேதுங் அவர் களைத் தலைமையாகக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சி ஸ்ம் - லெனினிஸ் இயக்கத்துக்கு தலைமை கொடுப்பது உண்மை தான். அதேபோல, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நவீன திரிபு வாதத்தின் பிரதான மையமாக இருப்பதும் உண்மைதான். ஆனல், இந்தப் போராட்டம் தேசிய நலன்களின் மோதலை asylgll படையாகக் கொண்டு சீனுவும் ரஷியாவும் நடத்தும் ஒரு தேசியப்
8

போராட்டம் அல்ல. இது, ஒருபுறம் சீன கம்யூனிஸ்ட் கட்சி, அல் பேனிய தொழில் கட்சி, உண்மையான இதர மார்க்சிஸம் - லெனி னிஸக் கட்சிகள், குழுக்கள் அனைத்தும் பிரதிநிதித்துவப்படுத்தும் மார்க்சிஸம்-லெனினிஸம், மாஒசேதுங் சிந்தனைக் கருத்துகளுக் கும், மறுபுறம், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை தலைமைக் கேந்தி ரமாகக் கொண்ட நவீன திரிபுவாதக் கருத்துகளுக்கும் இடை யில் நடைபெறும் ஒரு பூகோள ரீதியான சிந்தாந்தப் போராட்ட மாகும்.
ரஷியாவுக்கு நேர்ந்தது போல, சீனுவையும் முதலாளித்துவ மீட்சிப் பாதையில் இழுத்துச்செல்ல விரும்பும் லியூ ஷெள-சி போன்ற நவீன திரிபுவாதிகள் சீனுவிலும் இருப்பதை மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி அம்பலப்படுத்திக் காட்டிய உண்மை ஒன்றே, இது எவ்விதத்திலும் ஒரு தேசியப் போராட் டம் அல்ல, ஒரு சித்தாந்தப் போராட்டமே என்பதை நிரூபிக்கின் றது. இது சீனு, ரஷியா என்ற இரு நாடுகள் மட்டுமல்ல, சர்வ தேசிய புரட்சி இயக்கம் முழுமையும் சம்பந்தப்பட்ட ஒரு சித்தாந் தப் போராட்டமாகும்.
இத்தகைய ஒரு சித்தாந்த மோதல் தோன்றியதை ஒட்டி, இது சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கத்தில் ஒரு பிளவை ஏற்படுத்தி யதை ஒட்டி, உற்சாகம் இழந்து, வருத்தமும், விரக்தியும் அடை யும் ஒரு சிலரும் இல்லாமல் இல்லை. சீனுவுக்கும், ரஷியாவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிராவிட்டால், ஏகாதிபத்திய-எதிர்ப்பு சக்திகள் எவ்வளவு பலமுடையனவயாய் இருக்கும் என அவர்கள் எண்ணுகின்றனர்.
இதில் அரைவாசி உண்மை இருக்கின்றது. சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியும் அதனேடு சேர்ந்த இதர கட்சிகளும் நவீன திரிபு வாதம் என்ற நச்சுத் தத்துவங்களுக்கு இரையாகாவிட்டால், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் இன்று மேலும் பலம் பெற்றிருக் கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனல், நாம் இன்னெரு மாற் றுக் கேள்வியையும் போட்டுப் பார்க்க வேண்டும். சீன கம்யூ னிஸ்ட் கட்சியும் சோவியத் கட்சியைப் பின்பற்றி, திரிபுவாத முகாமில் தஞ்சமடைந்திருந்தால், சர்வதேசிய கம்யூனிஸ் இயக் கத்துக்கு, புரட்சி இயக்கத்துக்கு என்ன கதி ஏற்பட்டிருக்கும்? இதன் விளைவு நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்ருகும்.
அதே சமயத்தில், முரண்பாடுகள், போராட்டங்கள் மூலம் தான் எல்லாம் முன்னேறி, விருத்தியடைகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தோழர் மாஒ சேதுங் அவர்கள், முரண்
9

Page 16
பாடுகள் சர்வவியாபகமானவை என்றும், அதனல் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பல்வேறு கருத்துக்களுக்குமிடையில் எதிர்ப்பும், போராட்டமும் நிகழ்கின்றன என்றும் நமக்குப் போதித்துள் ளார். சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கத்திலும் இது நிகழ்கின்றது. ஒரு தனி நபரில்கூட. இது நிகழவே செய்கின்றது. இதில் விபரீதம் ஒன்றும் இல்லை. காரணம் இவை: வெளியே உள்ள வர்க்க முரண் பாடுகளும், பழையது, புதியது இரண்டுக்கு மிடையில் நிகழும் போராட்டமும் உள்ளே பிரதிபலிப்பதே யாகும்.
எனவே, சரியான கருத்துகளுக்கும், பிழையான கருத்துக ளுக்கும் இடையிலுள்ள முரண்பாடுகளும், அவற்றுக்கிடையில் நிக ழும் போராட்டங்களும்-ஒரு தனி நபரிலாயினும் சரி, ஒரு தேசிய கட்சியிலாயினும் சரி, அல்லது ஒரு சர்வதேசிய இயக்கத்திலாயி னும் சரி-தவிர்க்க முடியாதவை; தடுக்க முடியாதவை. நமது கடமை இந்த முரண்பாடுகளை மூடிமறைப்பதல்ல; கம்பளிக்குக் கீழ் தள்ளி விடுவதல்ல. மாருக, இந்த முரண்பாடுகளை வெளியே கொண்டு வந்து, சரியான கருத்துகளையும் தவருன கருத்துகளையும் மோதவிட்டு, இதன் மூலம், சரியான கருத்துகளை வெற்றி பெறச் செய்து, முன்னேற விடுவது நமது கடமையாகும்.
இதனல், இருக்கின்ற ஐக்கியத்துக்குச் சிறிது பங்கம் ஏற்படு வது உண்மைதான். இது தவிர்க்க முடியாதது. அழிவு இல்லா விட்டால் ஆக்கமும் இல்லை. அக்டோபர் புரட்சிக்குப் பின், லெனின் அவர்கள் இரண்டாவது சர்வதேசியத்தின் பழைய, உழுத்துப் போன, திரிபுவாதக் கட்சிகளில் தோன்றிய புதிய இடதுசாரிக் குழுக்களைச் சேர்த்து மூன்ருவது சர்வ தேசியத்தை உருவாக்கிய போது, அவர் இரண்டாவது சர்வதேசியத்தின் ஐக் கியத்தை அழித்தார் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனல், அது மேலும் பலம் வாய்ந்த, மேலும் ஐக்கியமுடைய புரட்சிகர இயக் கத்தால், முதலில் லெனின் தலைமையிலும், பின்னர் ஸ்டாலின் தலைமையிலும் இருந்த மூன்றுவது சர்வதேசியத்தால் பதிலியாக்
கப் பட்டது.
இன்று, ஒரு காலத்தில் மூன்ருவது சர்வதேசியத்தில் இருந்த பெருந்தொகையான கட்சிகள் இரண்டாவது சர்வதேசியத்தில் இருந்த பழைய கட்சிகள் சென்ற அதே பாதையில் சென்று விட் டன. அவை தொழிலாளி வர்க்கம், புரட்சி இவற்றின் துரோகிக ளாக, அவற்றைக் காட்டிக் கொடுப்பவையாக மாறிவிட்டன. லெனின் காலத்தில் இருந்தது போன்ற 'புதிய முரண்பாடு ஒன்று இன்று தோன்றியுள்ளது. பழைய ஐக்கியம் தவிடுபொடியாகிக்
10

கிடக்கின்றது. ஆனல், இந்த மகோன்னதமான சித்தாந்த விவா தத்தின் விளைவாக, மார்க்சிஸம்-லெனினிஸம்-மாஓசேதுங் சிந் தனை வாகை சூடியதன் விளைவாக, மேலும் புதிய, மேலும் மகத் தான, மேலும் உயர்ந்த புரட்சிகர ஐக்கியம் ஒன்று சர்வதேசியரீதி யில் உருவாக்கப்படுவது நிச்சயம். இது ஒரு நல்ல விஷயம் அன் றித் தீய விஷயம் அல்ல.
சர்வதேசிய கம்யூனிஸ இயக்கத்தில் நிகழும் முதல் விவாதம் அல்ல இது என்று சில தோழர்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக் கின்றது. உண்மையில் இது சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கத்தில் நிகழும் மூன்ருவது பெரும் வாதப் பிரதிவாதமாகும்.
முதலாவது விவாதம் லெனின் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தது. மார்க்ஸும், ஏங்கெல்ஸும் விஞ்ஞான சோஷலிஸத் தின் சிருஷ்டிகர்த்தாக்கள் ஆவர். அவர்கள் வர்க்கப் போராட் டம், புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகியவற்றின் விதிகள், அரசு பற்றிய தத்துவம் முதலியவைபற்றி தொழிலா ளர் வர்க்கத்துக்குப் போதித்தார்கள். ஆனல், தமது கருத்துகள் நடைமுறையாவதைக் காண அவர்கள் நெடிது வாழவில்லை.
முதலாவது சர்வதேசியம் மார்க்ஸ் அவர்கள் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. விஞ்ஞான சோஷலிஸத்தின் கருத்துகளை ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் ஜனரஞ்சகமாக்குவது அதன் பிரதான கடமையாக இருந்தது. இதன் விளைவாக, இக் கடமைக்கு மிக விசுவாசமான சிறிய பல குழுக்கள் இந் நாடுகளில் தோன்றின. 1871ல் பாரிஸ் நகரத் தொழிலாளர் வரலாற்றில் முதல் தடவையாக அதிகாரத்தைக் கைப்பற்றி, எல்லா விதமான கஷ்டங்களையும் எதிர்த்து, அவ்வதிகாரத்தை மூன்று மாத காலம் நிலைநிறுத்தியிருந்த பிரசித்திபெற்ற பாரிஸ் கம்யூன் தோன்றி யது. ஆனல், பிரெஞ்சு முதலாளி வர்க்கமும், ஜெர்மன் முதலாளி வர்க்கமும் கையும் மெய்யுமாக ஒத்துழைத்து, தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிய இம் முதலாவது முயற்சியை முறி யடித்து விட்டனர்.
பாரிஸ் கம்யூனை மிலேச்சத்தனமாக நசுக்கிய பின், ஒரு குறிப் பிட்ட காலம் வரை ஐரோப்பாவில் அடக்குமுறை தலைவிரித்தாடி யது. முதலாவது சர்வதேசியத்தின் தலைமை அலுவலகம் வட அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டது. அத்துடன் அது செயலற்று விட்டது.
அதன் பின் மார்க்ஸ் அவர்களும் மறைந்து விட்டார். அவரு டைய மகோன்னதமான சக தோழரும், சகபாடியுமான ஏங்
11

Page 17
கெல்ஸ் அவருடைய வேலையை தொடர்ந்து செய்தார். அவரு டைய தலைமையில் இரண்டாவது சர்வதேசியம் தோன்றியது. இந்த சர்வதேசியத்தில் அங்கம் வகித்த சில கட்சிகள் இன்று வரை இருக்கின்றன. உதாரணமாக பிரிட்டிஷ் தொழில் கட்சி, பிரெஞ்சு, இத்தாலிய சோஷலிஸ் கட்சிகள், ஜெர்மன் சமூக ஜன நாயக கட்சி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஆணுல், ஏங்கெல்ஸ் இந்தக் கட்சிகளின் சீரழிவைக் கண்ணுல் காண்பதற்கு முன் மறைந்து விட்டார். இந்த போக்கு அவர் மறைவுக்குப் பின் நிகழ்ந்தது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருக்கும் பின், மார்க்சிஸ் இயக்கத்தின் தலைமை காட்ஸ்கி, பர்ன்ஸ்டீன் போன்ற அசல் சந்தர்ப்பவாதிகளின் கைகளில் வீழ்ந்தது. அதே வேளையில் காட்ஸ்கியும், பர்ன்ஸ்டீனும் இரண்டாவது சர்வதேசிய காலத்தில் பலம்பெற்று விளங்கிய ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் இருவரின் போதனைகளில் உள்ள புரட்சிச் சாராம் சத்தை நீக்கி விட்டு, அவர்களுடைய தத்துவங்களை திரித்துப் புரட்டி, எழுதி வைத்தார்கள். அவர்கள் பாராளுமன்றப் பாதை மூலம் சோஷலிஸத்துக்குச் செல்லும் சமாதான மாற்றம் பற்றி உபதேசம் செய்து வந்தார்கள். இந்த நோக்கத்துடன் இரண்டா வது சர்வதேசியத்திலிருந்த கட்சிகளை பாராளுமன்றக் கட்சிகளாக மாற்றினர்கள். முதலாவது உலக யுத்தத்துக்கு முன் இந்த ஜெர் மன் கட்சியில் 100க்கு மேலானேர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தனர். இந்த கட்சி 1912ல் நிகழ்ந்த பஸில் சர்வதேசிய மாநாட்டில் எல்லா ஏகாதிபத்திய யுத்தங்களையும் எதிர்க்கும் தீர் மானம் ஒன்றை விசுவாசமாகவும், ஏகமனதாகவும் அங்கீகரிக்க உழைத்த கட்சி. ஆஞல், இதே தீர்மானத்துக்கு எதிராகச் செல்லுமளவுக்கு அக் கட்சி பின்னர் சீரழிந்து, புரட்சிகரக் கோட் பாடுகள் அனைத்தையும் கைகழுவி விட்டது. இக் கட்சியில் இருந்த ஒரே ஒரு கம்யூனிஸ்ட், கார்ல் லீப்நெக்ட்தான் வில்லி யம் கெய்ஸருக்கு யுத்தக் கடன்கள் வழங்குவதை எதிர்த்து வாக் களித்தவர் ஆவர். w
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சிகர தத்துவங்களைத் திரித்துப் புரட்டிப் பொய்மைப்படுத்தும் இந்த முயற்சிக்கு எதி ராகத் தான், லெனின் அவர்கள், ரஷிய புரட்சி இயக்கத்தின் உற் சாகமான தலைமைக்கு வந்த பின்னர், பிரமாண்டமான சிந்தாந் தப் போராட்டத்தை நடத்தினர். ஆனல், இந்தப் போராட்டம் எவ்விதத்திலும் ரஷிய எல்லைக்குள் கட்டுப்பட்டு நின்றுவிடவில்லை
12

u9gil (PGA ஐரோப்பாவின் புரட்சி இயக்கத்திற்குள்ளும் சூருவளி போல வீசியது.
காட்ஸ்கி, பர்ன்ஸ்டீன் முதலியோருக்கு எதிராக, லெனின் அவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சிகர மூல போத னைகளை திரும்பக் கண்டு பிடித்து உறுதியாகப் பிரகடனம் செய் தார். இன்றுவரை அழியாத தொன்னுரல்களாக விளங்கும் 'அர சும் புரட்சியும்', 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும், துரோகி காட்ஸ்கியும்' போன்ற பல ஒளி வீசும் வாதப் பிரதிவாதப் படைப்புகள் மூலம் லெனின் அவர்கள் இந்தக் கைங்கரியத்தை நிறைவேற்றினர்.
இவ்வாறு சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கத்தில் லெனின் அவர் களுக்கும் அவருடைய கால திரிபுவாதிகளுக்கும் இடையில் முத லாவது மகத்தான வாதப் பிரதிவாதம் நடைபெற்றது. குரு சேவிலிருந்து கெனமன் வரையுள்ள இன்றைய திரிபுவாதிகள் ஆரம்பத்தில் காட்ஸ்கி, பர்ன்ஸ்டீன் இருவராலும் முன்வைக்கப் பட்டு, லெனின் அவர்களால் அப்பொழுதே நெருப்பெழ மறுத்து ரைக்கப்பட்ட தத்துவங்களுக்கு எவ்வித சீர்திருத்தமும் செய்து விடவில்லை. இவர்கள் அந்த பழைய சரக்குகளை கிளிப்பிள்ளை போல ஒப்புவிக்கிருர்கள் மட்டுமே. இவர்களை நவீன திரிபுவாதி கள் என்று அழைப்பதற்கு காரணம் லெனினுடைய காலத் திரிபு வாதிகளிலிருந்து இவர்களைப் பிரித்துக் காட்டுவதற்காகவே.
கடைசியாக, லெனின் அவர்கள் தமது காலத் திரிபுவாதிக ளுக்கு எதிராக நடத்திய சித்தாந்தப் போராட்டமும், குறைந்த பட்சம் அது ரஷிய புரட்சி இயக்கத்தில் ஈட்டிய வெற்றியும் தான் 1917ம் ஆண்டு ரஷியாவில் அக்டோபர் புரட்சியின் வெற்றியைச் சாத்தியம் ஆக்கின என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். திரிபுவாதிகளுக்கு எதிராக லெனின் ஒய்வு ஒழிச்சலின்றி நடத்திய சிந்தாந்தப் போராட்டமும், ரஷியாவில் அது ஈட்டிய வெற்றியும் இல்லாவிட்டால், அக்டோபர் புரட்சி நடந்திருக்கவே முடியாது
அக்டோபர் புரட்சியின் பின், உலகின் முதலாவது தொழிலா ளர் அரசு ஸ்தாபிக்கப்பட்ட பின், லெனின் நீண்டகாலம் உயி ரோடிருக்கவில்லை. எனவே, முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட நிலையில், முதலாவது பாட்டாளி வர்க்க சர்வாதிகா ரம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் எழுந்த பல பிரச்சினைகளுக்கு அவ ரால் தீர்வு காண முடியவில்லை.
கொலைகாரன் ஒருவனின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 1924 ல் லெனின் அவர்கள் அகால மரணமடைந்த பின், தனி ஒரு
13

Page 18
நாட்டில் சோஷலிஸத்தை நிர்மாணிக்க முடியுமா என்ற அதே பிரச்சினையை ட்ருெஸ்கி, புகாரின், ஸினேவியெவ், றடெக் முத லிய சந்தர்ப்பவாதிகளும், மென்ஷிவிக்குகளும் எழுப்பினர்கள்.
லெனின் இந்தக் கேள்விக்கு ஏற்கெனவே 1915ல் எழுதிய **ஐக்கிய ஐரோப்பிய நாடுகள்' என்ற கட்டுரையில் பதில் கூறி வி ட் டா ர். அக் க ட் டு ரை யி ல் அ வர் தெ ஸ்ரி வாகக் கூறியதாவது:- "அசமத்துவ பொருளாதார, அரசியல் வளர்ச்சி என்பது முதலாளித்துவத்தின் மாரு விதியாகும். ஆக, சோஷலிஸம் முதலில் ஒரு சில முதலாளித்துவ நாடுகளில் அல்லது தனி ஒரு நாட்டில் வெற்றிபெறுவது சாத்தியம். வெற்றிபெற்ற பாட்டாளி வர்க்கம் அந்த நாட்டு முதலாளிகளின் உடைமை களைப் பிடுங்கி எடுத்த பின், அதன் சொந்த சோஷலிஸ் உற்பத்தி முறையை ஸ்தாபித்து, அதன் லட்சியத் தால் இதர நாடுகளின் அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை ஆகர்சித்த வண் ணம், அந்த நாடுகளில் முதலாளிகளுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தூண்டிய வண்ணம், அத்தியாவசியமானபோது சுரண்டும் வர்க்கங் களுக்கும், அவர்கள் அரசுகளுக்கும் எதிராக ஆயுத பலாத்காரத்தில் ஈடுபடவும் தயங்காமல், ஏனைய உலகுக்கு எதிராக, முதலாளித்துவ உலகுக்கு எதிராக, நிமிர்ந்து நிற்கும்'.
லெனினுக்குப் பின் பொல்ஷிவிக் கட்சியின் தலைடைக்கு வந்த ஸ்டாலின், லெனினுடைய கருத்துகளை ஆதரித்தார். பொல்ஷி விக் தலைவர்கள் அனைவரும் முன்னேறிய ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் புரட்சி வெடித்தெழும் என எதிர் பார்த்திருந் தது உண்மைதான். லெனின் உண்மையில் இதற்காக உழைத் தார். அப்பொழுது யுத்தத்தால் களைப்படைந்த மத்திய ஐரோப் பிய படை வீரர்கள் வீடு திரும்பியதும், தமது சொந்த நாட்டு முதலாளி வர்க்கத்துக்கு எதிராக தமது துப்பாக்கிகளை நீட்டுவர், லெனினுடைய் கனவு நனவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஹங்கேரி, பவேரியா முதலிய நாடுகளில் புரட்சிகள் வெடித்தன. ஜெர்மனியில் தொழிலாளர், படைவீரர், விவசாயிகளின் சோவி யத்துக்களின் வலைப் பின்னல் ஒன்று விரிக்கப்பட்டது. ஆனல், பிற் போக்குவாதிகள் இவற்றை ஒவ்வொன்ருகத் திருகிக் கொன்று விட்டார்கள்.
ரஷியாவில் மாத்திரம் பொல்ஷிவிக்குகள் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்தின் தலையீடு, உள்நாட்டு பிற்போக்கு சக்திகளின் யுத்தம் இவற்றிலிருந்து தமது புரட்சியைப் பாதுகாத்தனர். பின் னர் அவர்கள் யாது செய்வது? தமது ஐரோப்பியத் தோழர்கள்
14

தயாராக இல்லை என்பதை ஆதாரமாகக் கொண்டு, அதிக" ரத்தை முதலாளிகளிடம் ஒப்படைப்பதா? ட்ருெஸ்கியும் அவரு டையநண்பர்களும் முன்வைத்த ஆலோசனைகளின் அர்த்தம் அதுவே தான்.
இல்லை. இது ஸ்டாலினும், அவர் தலைமையிலிருந்த பொல்ஷி விக் கட்சியும் அளித்த பதில். அவர்கள் பிரகடனம் செய்ததா வது :- வரலாறு நாம் விரும்பிய திசையில் எப்பொழுதும் செல்ல மாட்டாது. நாம் நமது நாட்டில், அதிர்ஷ்டவசமாக பரப்பில் பெரிய, கணிப்பொருள் செல்வாதாரங்களில் செழித்த ஒரு நாட் டில், புரட்சியில் ஆட்டமசைவின்றி நிற்கிருேம். நமது நாட்டில். சோஷலிஸத்தை நிர்மாணித்து, உலகில் ஏனைய பகுதித் தொழிலா ளர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் நாம் அதைச் செய்வோம். இந்த புரட்சி ஊற்று புரட்சிப் பெருக்காக மாறும்வரை நாம் காத் திருந்து, நமது நாட்டின் சோஷலிஸ நிர்மாண வெற்றிகளைக் கொண்டு உலகப் புரட்சிக்கு உதவி செய்வோம்.
இது ஒரு துணிகரமான தீர்மானம். எதிர்காலத்திலும், தமது நாட்டு தொழிலாளர், விவசாயிகள் மீதும் உறுதியான நம்பிக்கை யுடைய துணிகரமானவர்களால்தான்; இத்தகைய துணிகரமான தீர்மானத்தை எடுக்க முடியும். நம்பிக்கை இல்லாத, சிறப்பாக அன்றைய ரஷிய ஜனத்தொகையில் ஏகப் பெரும்பான்மையின ராக விளங்கிய விவசாயிகள் மீது நம்பிக்கையில்லாத ட்ருெஸ்கி, உலகப் புரட்சி என்ற அரங்கில்தான், சர்வதேசிய பாட்டாளி வர்க்கம் அதற்கு உதவிக் கரம் நீட்டினல்தான், ரஷியப் புரட்சி யைக் காப்பாற்ற முடியும் என்று ஆரவாரத்துடன் பிரகடனம் செய்தான். ஒரு நாட்டில் சோஷலிஸத்தை நிர்மாணிப்பது அசாத் தியம் என்றும் அவன் கூறினன்.
சோஷலிஸத்திலும், தொழிலாளர் வர்க்கத்திலும் நம்பிக்கை யற்ற மென்ஷிவிக்குகள் அனைவரும் ட்ருெஸ்கியின் இந்த நிலைப் பாட்டை ஆதரித்தனர். வெற்றிபெருத 1905 ரஷிய புரட்சியின் போது லெனின் முன்வைத்த 'ஒரு தொழிலாளர், விவசாயிகளின் அரசாங்கம்' என்ற சுலோகத்துக்கு எதிராக, "ஜார் வேண்டாம், தொழிலாளரின் அரசாங்கம் வேண்டும்' என்ற ஒரு முனைவாத சுலோகத்தை ட்ருெஸ்கி தானகவே முன் வைத்து, விவசாயிகள் மீது தனக்கு ஒரு போதும் நம்பிக்கையே இல்லை என்பதை காட்டி விட்டான்.
தனி ஒரு நாட்டில் சோஷலிஸத்தை கட்டியமைக்கலாமா இல் லையா என்னும் பிரச்சினை பற்றி ஒரு புறம் ஸ்டாலின் தலைமை தாங்
15

Page 19
கிய பொல்ஷிவிக் கட்சிக்கும், மறுபுறம் ட்ருெஸ்கிக்கும் அவனு டைய சகபாடிகளுக்கும் இடையில் நிகழ்ந்த சித்தாந்தப் போரின் பெரும் பிரபல்யம், பின்னே ஸ்டாலினுடன் சச்சரவு நடத்தியது போல, முன்னே ட்ருெஸ்கி லெனினுடன் இடையறது சச்சரவிட்டு வந்த வரலாற்று உண்மையை பலர் மறந்து விடும்படி செய்கின்
Dile
ட்ருெஸ்கி அக்டோபர் புரட்சிக்கு சுமார் இரண்டு மாதங்க ளுக்கு முன் தான் பொல்ஷிவிக் கட்சியில் சேர்ந்தான். அரசியல் ரீதி யில் இடைவிடாது லெனினை எதிர்த்து வந்தான் என்ற உண்மை யைக் கூடப் பொருட்படுத்தாமல், ஏகாதிபத்தியவாதிகளும், ட்ருெக்ஸ்கியவாதிகளும், ட்ருெஸ்கியும் லெனினின் நெருங்கிய சகபாடி என்று கட்டுக்கதை பரப்ப முழுமூச்சாக வேலை செய்து வந்தார்கள்.
லெனின் அவர்களே ட்ருெஸ்கி பற்றி மிக மறக்க முடியாத குறிப்பு ஒன்றை விட்டுச் சென்றுள்ளார். அவர் கூறியதாவது:- 'மார்க்சிஸ் இயக்கத்தில் முன்பு பங்கு பற்றியவர்கள் ட்ருெஸ்கி யை நன்கு அறிவர். அவர்களின் நன்மைக்காக அவரைப் பற்றி விவாதிப்பது அவசியமற்றது. ஆனல் தொழிலாளரில் இளம் சந்ததி யினர் அவரை அறிய மாட்டார்கள். எனவே தான் அவரைப் பற்றி விவாதிப்பது அவசியம். காரணம், வெளி நாட்டிலுள்ள ஐந்து கூட் டாளிகளிலும் பார்க்க இவர் ஒரு மாதிரியானவர். உண்மையில் எல் லாரும் விலக்குவாதிகளுக்கும் கட்சிக்கும் இடையில் நின்று ஊச லாடுபவர்கள்.”* عطیہ
பழைய இஸ்க்ரு கால கட்டத்தில் (1001-1903) 'பொருளா தார வாதி'களுக்கும், "இஸ்க்ரு வாதி'களுக்குமிடையில் நின்று மீண்டும் மீண்டும் கொப்பு மாறிய இந்த ஊசலாடிகள் "டவிஞே துரோகிகள்' எனக் குறி சுடப்பட்டனர். (இது ஒரு முகாமிலிருந்து இன்குெரு முகாமுக்கும், திரும்ப மறுமுகாமுக்கும் மாறி மாறிச் சென்ற படைவீரர்களுக்கு றஸ் "டர்புலென்ட் டைம்ஸ்" இட்ட பெயராகும்.)
விலக்குவாதம் பற்றி விவாதிக்கும் போது, ஒரு நீண்ட காலப் போக்கில் வளர்ந்து வந்த குறிப்பிட்ட ஒரு சித்தாந்த ஓட்டம் பற்றி நாம் விவாதிக்கின்ருேம். இதன் வேர்கள் மார்க்சிஸத்தின் 20 ஆண்டு கால வரலாற்றில் "மென்ஷிவிஸம்", "பொருளாதார வாதம்" இவற்றுடன் இழையோடி இருக்கின்றது. இதன் கொள் கையும், சித்தாந்தமும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்துடன், விபரல் முதலாளி வர்க்கத்துடன் தொடர்பு உடையவை.
16

'டவினே துரோகிகள்" தாம் கோஷ்டிகளுக்கு அப்பாற்பட் டவர்கள் என்று உரிமை பாராட்டுவதற்குரிய ஒரே ஒரு ஆதாரம், இன்று ஒரு கோஷ்டியிடமிருந்து, நாளை இன்னுெரு கோஷ்டியிட மிருந்து தமது கருத்துக்களை அவர்கள் "கடன் வாங்கினர்கள்." 1901-03ல் ட்ருெஸ்கி ஒரு தீவிர 'இஸ்க்ருவாதி’ ஆவான். றியஸனேவ் 1903 காங்கிரஸில் அவனுடைய பாத்திரத்தை வரு னித்த போது "லெனினின் தண்டாயுதம்’ எனக் கூறினர். 1903 இறுதியில் ட்ருெஸ்கி ஒரு தீவிர மென்ஷிவிக்காக மாறிவிட்டான். அதாவது, இஸ்க்ருவாதிகளிடமிருந்து "பொருளாதாரவாதி'களி டம் போய்ச் சேர்ந்து விட்டான். 'பழைய இஸ்க்ருவாதிகளுக்கும் புதிய இஸ்க்ருவாதிகளுக்கும் இடையில் ஒரு வேறுபாடு" உண்டு என அவன் கூறினன். 1904-05ல் அவன் மென்ஷிவிக்குகளை விட்டு நீங்கி, ஒருகால் (பொருளாதாரவாதி) மார்டினேவுடன் ஒத்து ழைப்பதும், மறுகால் தன்னுடைய கடைகோடி இடதுசாரி "இடையீடற்ற புரட்சி" என்ற தத்துவத்தை பிரகடனம் செய்வ துமாக ஊசலாடத் தொடங்கினன். 1906-07ல் பொல்ஷிவிக்குகளை அணுகினன். 1907 வசந்த காலத்தில்தான் ருேஸா லக்ஸம்பர்க்கு டன் உடன்பாடு உடையவன் எனப் பிரகடனம் செய்தான்.
‘ஒரு நீண்ட கால 'கோஷ்டியில்லா' ஊசலாட்டத்தின் பின், சீர்குலைவுக் காலகட்டத்தில், அவன் மீண்டும் வலது பக்கம் சென் முன். 1912ல் விலக்குவாதிகளின் கூட்டணியைச் சேர்ந்தான். பின் னர் சாராம்சத்தில் அவர்களுடைய அற்ப கருத்துகளை உச்சரித்த போதிலும், அவர்களை விட்டு மீண்டும் பிரிந்தான்.
‘ரஷியாவில் வெகுஜன தொழிலாளர் இயக்கம் வெளிப்படாது மறைந்திருந்த காலத்தில், ஒவ்வொரு கூட்டத்திற்கும், நபர்களுக் கும், ஒரு கருத்தோட்டமாக, குழுவாக அல்லது கோஷ்டியாக, சுருக்கமாகச் சொன்னல், இன்னெரு கூட்டத்துடன் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தும் ஒரு ‘*சக்தி'யாக நடிப்பதற்கு **போதிய வசதி’’ இருந்த காலத்தில், வரலாற்று உருவாக்கங் களின் அழிவு இத்தகைய குணம்சங்களைத்தான் பெற்றிருந்தது.
*" 1908 முதல் விலக்குவாதம் பற்றிய நமது மனுேபாவத்தை வரையறுத்துக் கூறி, ஸ்தாபித்த நமது கட்சி தீர்மானங்களையோ அல்லது, முற்கூறிய தீர்மானங்களை பூரணமாக அங்கீகரிக்கும் அடிப்படையில் பெரும்பான்மையின் ஐக்கியத்தை உண்மையில் உருவாக்கிய இன்றைய கால ரஷிய தொழிலாளர் இயக்கத்தின் அனுபவத்தையோ ஏற்றுக்கொள்ள முற்ருக மறுக்கும் அதே வேளை யில், நம்பத்தகாத போலி வேஷமணிந்த நபர்கள் தம் முன்வரும்
17

Page 20
போது, தொழிலாளர்களின் இளம்சந்ததி, தாம் யாருடன் էմ Ա)&5 கின்றனர் என்பதை பூரணமாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.'
இன்று ஒரு நாட்டில் சோஷலிஸத்தை நிர்மாணிக்க முடியுமா இல்லையா என்பது விவாதத்துக்கு உரிய ஒரு பிரச்சினையல்ல. இது ரஷியாவில் பொல்ஷிவிக்குகளால் செய்யப்பட்டுவிட்டது. வரலா றும் அதன் தீர்ப்பைப் பதிவு செய்து, அங்கீகரித்து விட்டது. ட்ருெஸ்கியவாதிகள் தலையாலே துரும்பெடுத்த போதிலும், சோவி யத் யூனியனில் - முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளால் சூழப் பட்ட ஒரு நாட்டில்-சோஷலிஸம் அமைக்கப்பட்டது என்ற உண் மையைப் புரட்ட முடியாது. இன்று இந்த தகராறு செத்து புதைத்த இடத்தில் புல்லும் முளைத்து விட்டது. ஆனல், 1930ம் ஆண்டுகளில் இப் பிரச்சினை காரசாரமாக விவாதிக்கப்பட்ட காலத் தில், தனி ஒரு நாட்டில் சோஷலிஸத்தை நிர்மாணிக்க முடியுமா என்று உண்மையான புரட்சிவாதிகள் பலர் கூட சந்தேகித்தார் கள். ஆனல், குறுகிய காலம் சென்ற பின், ட்ருெஸ்கியவாதம் தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் காணும் ஒரு தவருண சித்தாந் தம் என்பது போய், அது எதிர்ப் புரட்சியின் ஒரு ஏஜண்டாக மாறி யது. ட்ருெஸ்கியவாதம் என்ற இந்த எதிர்ப் புரட்சித் தத்துவத் துக்கு எதிராகத்தான் ஸ்டாலினதும், பொல்ஷிவிக் கட்சியினதும் தலைமையில், உண்மையான மார்க்ஸிஸம் - லெனினிஸவாதிகள், புரட்சிவாதிகள் அனைவரும் இரண்டாவது உலக யுத்தத்துக்கு முந் திய காலத்தில் மாபெரும் சிந்தாந்தப் போர் ஒன்றை நடத்தினர் கள். இவ்வாறு இது சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கத்தில் நிகழ்ந்த மகத்தான இரண்டாவது வாதப்பிரதிவாதமாக திகழ்கிறது. இது இலங்கையில் கூட எதிரொலித்தது; லங்கா சமசமாஜக் கட்சியில் முதல் பிளவை உண்டாக்கி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தோன்று வதற்கு வழிகோலியது.
தனது காலத்தில் லெனின் திரிபுவாதிகளுக்கு எதிராக நடத்திய சித்தாந்தப் போராட்டமும், ரஷியாவில் அது ஈட்டிய வெற்றியும் அக்டோபர் புரட்சியை சாத்தியமாக்கியது போல, ஸ்டாலின் ட்ருெஸ்கியவாதத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் வெற்றி சோவியத் யூனியனில் சோஷலிஸம் நிர்மாணிப்பதையும், மிலேச்சத்தனமான ஹிட்லரின் பாசிஸ் ஆக்கிரமிப்புக்கு எதிராக அதைப் பாதுகாப்பதையும் சாத்தியமாக்கியது. இவ் வெற்றி தனி ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்து, சோஷலிஸம் வியாபிப்பதை யும், அது ஒரு உலக சக்தியாக மாறுவதையும், இவ்வாறு உலக புரட்சியின் எதிர்கால வெற்றிக்கு அடிக்கல் நாட்டுவதையும் சாத் தியமாக்கியது.
18

இன்று சர்வதேசிய கம்யூனிஸ, புரட்சி இயக்கத்தில் நிகழும் மூன்றுவது மகத்தான வாதப்பிரதிவாதத்தின் மத்தியில் நாம் வாழ் கின்ருேம். இந்த மாபெரும் சித்தாந்தப் போராட்டம் ஒருபுறம், தமது சகாப்தத்தின் மிகப் பெரும் மார்க்ஸிஸம்-லெனினிஸவாதி யாக விளங்கும் தோழர் மாஒசேதுங் அவர்கள் தலைமையிலுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி, மாபெரும் மார்க்சிஸம்-லெனினிஸவாதி தோழர் என்வர் ஹோஜா அவர்கள் தலைமையிலுள்ள அல்பேனிய தொழில் கட்சி, இதர மார்க்ஸிஸம்-லெனினிஸ கட்சிகள், குழுக் கள் அனைத்தும் தலைமை தாங்கும் மார்க்ஸிஸம்-லெனினிஸம் மாஓசேதுங் சிந்தனைச் சக்திகளுக்கும், மறுபுறம், சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியை பிரதான மையமாகக் கொண்ட நவீன திரிபுவாத சக்திகளுக்கும், நவீன திரிபுவாதிகளின் பல்வேறு கோஷ்டிகளுக்கும் இடையில் நிகழும் ஒரு மாபெரும் போராகும்.
இரண்டாவது உலக யுத்த முடிவில் சர்வதேசிய கம்யூனிஸ இயக்கமும், தொழிலாளர் வர்க்க இயக்கமும் ஈட்டிய மகத்தான வெற்றிகளோடு, அவற்றுக்குள் ஒரு எதிரோட்டமும் தோன்றியது. இதை முதலில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளராக இருந்த ஏர்ல் பிருெளடர் பிரதிநிதித்துவப்படுத்தினன். அவன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதற்காக வர்க்க ஒத்துழைப்புக் கருத்துகளை உபதேசம் செய்து வந்தான். ஆனல், சகோதரக் கட்சிகளின் உதவியால் அவனுடைய முயற்சிகள் விரைவில் முறியடிக்கப்பட்டுவிட்டன. இதைத் தொடர்ந்து டீட் டோவின் திரிபுவாதக் கருத்துகள் அம்பலத்துக்கு வந்தன. உட்டோ நீண்ட காலமாக கம்யூனிஸ் இயக்கத்துக்குள் மறைந்தி ருந்த, ஏகாதிபத்தியம், முதலாளி வர்க்கம் ஆகியவற்றின் ஏஜண்டு ஆவான். ஆனல், தோழர் ஸ்டாலின் அவர்களின் சக்திமிக்க தலைமையில் இருந்த சர்வதேசிய கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து அவன் தூக்கி வீசப்பட்டான்.
ஸ்டாலின் அவர்களின் மறைவுக்கு பின்னர், சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் அபகீர்த்திமிக்க எதிர்ப் புரட்சி 20வது, 22வது காங்கிரஸ்"களில் தான், குருசேவ் என்பவன் பழைய கால திரிபுவா தத் தத்துவங்கள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி, முழுமையான ஒரு தத்துவமாக்கி, உலகத்துக்குக் காட்டினன். ஹிட்லர் பாசிஸத் துக்கு எதிரான கீர்த்திமிக்க சாதனைகளால் சோவியத் யூனியன் பெற்றிருந்த மலைபோன்ற புகழை தவருகப்பயன்படுத்தி, லெனின், ஸ்டாலின் ஆகியோரின் நாடு, அக்டோபர் புரட்சியின் தாயகம், முதலாவது தொழிலாளர் அரசின் பிறப்பிடம் என்ற பெருமை யைத் துஷ்பிரயோகம் செய்து, குருசேவ் தனது தவருன நவீன
19

Page 21
திரிபுவாத தத்துத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவற்றின் மீது திணிக்க சோவியத் ஆணைக்கோலை உபயோகித்தான். தனது நோக் கம் பலிக்காத இடங்களில் பிளவுகளை உண்டாக்கினன். ஸ்டாலின் காலம் முதல் இருந்து வந்த சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கத்தின் ஒற்றைப் பாதை போன்ற ஒற்றுமையை உடைத்தெறிந்தான்.
பெரும் சந்தடியுடனும், ஏகாதிபத்தியவாதிகளும், முதலாளித் துவப் பத்திரிகைகளும் கொடுத்த மறைமுக ஆதரவுடனும், அவன் ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வு, முதலாளித்துவத்து டன் சமாதானப் போட்டி, சோஷலிஸத்துக்கு பாராளுமன்றத்தின் மூலம் சமாதான மாற்றம் ஆகிய தத்துவங்களை எக்காளத்துடன் பிரசாரம் செய்தான். மானங்கெட்ட தனது அமெரிக்க விஜயத்தின் மூலம் அவன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அரசியல் ரீதியில் கூட்டுச் சேரும் சகாப்தம் ஒன்றைத் தொடக்கி வைத்தான். இதன் விளைவாக தேசிய விடுதலை இயக்கங்கள் அனைத்தையும் காட்டிக் கொடுத்தான். பொருளாதார ரீதியில், சோவியத் யூனியனிலும், நவீன திரிபுவாதிகள் ஆட்சி செலுத்தும் இதர நாடுகளிலும் இன்று முதலாளித்துவ மீட்சிக்கு வழிகோலிய கொள்கைகளைத் தொடக்கி வைத்தான்.
இன்று சோவியத் யூனியனும், நவீன திரிபுவாதிகள் ஆளும் இதர நாடுகளும் சோஷலிஸ் நாடுகள் அல்ல. அங்கெல்லாம் முதலா ளித்துவம் மீட்கப்பட்டு விட்டது; புதிய ரக முதலாளி வர்க்கம் தோன்றி விட்டது.
கூட்டுறவு விவசாயிகளுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இரட்டி மடங்காகி விட்டன. இவ்வாறு நாட்டுப் புறத்திலும் முத லாளித்துவ வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றது. தொழில் துறையில் லாபத் தூண்டுதல், பொருளாயத நலன்கள் என்ற முத லாளித்துவ கோட்பாடு புகுத்தப்பட்டு, அதன் விளைவாக வேலை நிறுத்தங்களும், தொழில் குழப்பங்களும் தலைவிரித்தாடுகின்றன.
அந்நிய ஏகபோக முதலாளித்துவம் சோவியத் மக்களைச் சுரண் டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத் திய வங்கிகளின் பின்பலமுடைய, இத்தாலி பியட் கம்பெனி போன்ற ராட்சஸ சர்வதேசிய ஏகபோகங்கள் சோவியத் யூனியனில் தொழிற்சாலைகள் திறப்பதற்கும், சோவியத் தொழிலாளரைச் சுரண்டுவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. யப்பானிய ஏக போக நலன்கள் சைபீரியாவின் செல்வாதாரங்களைக் கொள்ளை யடிக்கவும் பச்சை விளக்குக் காட்டப்பட்டுள்ளது.
20

யூகோஸ்லாவிய பொருளாதாரம் அமெரிக்க, பிரிட்டிஷ் மூல தனமின்றி ஒருநாள் கூட இயங்க முடியாது என்பது உலகப் பிர சித்தமான ஒரு இரகசியம். ராட்சஸ அமெரிக்க ஏகபோக முதலா ளித்துவம்-உதாரணமாக ஹில்டன் கம்பெனி-ஹங்கேரியில் பலாட் டூன் வாவிகளில் அதன் பிரசித்தமான ஹோட்டல் வரிசையில் ஒன்றைக் கட்டுகின்றது. குறுப்ஸ் கம்பெனி போலந்தில் தொழிற் சாலை ஒன்றை நிர்மாணிக்கின்றது. இப்படி ஏராளமான உதார ணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த நாடுகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மக்கள் அனைவரின் சர்வாதிகாரம் என்ற சுலோகத்தின் கீழ் புதிய முதலா ளித்துவ சர்வாதிகாரமாக மாற்றப்பட்டு விட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரம் கைவிடப்பட்டு விட்டது. பாராளு மன்றம், பல கட்சி முறை ஆகிய அலங்காரங்களுடன் முதலாளித் துவ ஜனநாயக முறையைப் புகுத்துவதற்கும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டு விட்டன.
கலாசாரத்துறையில், நசிந்து உழுத்துப்போன மேலை நாட்டு முதலாளித்துவ கலாசாரம் அனைத்துக்கும் கதவுகள் அகலத் திறந்து விடப்பட்டுள்ளன. ஜாஸ் இசை, டுவிஸ்ட் போன்ற பைத்திய நட னங்கள், துர்நாற்றம் வீசும் திரைப்படங்கள், இலக்கியங்கள், மக ளிர் அலங்கார அணி வகுப்புகள், அழகு ராணிப் போட்டிகள் முத லியவை எல்லாம் காலத்தின் கோலமாகி விட்டன.
அமெரிக்க ஏகாதிபத்தியம், இதர பிற்போக்கு சக்திகள் எல்லா வற்றுடனும் கள்ளக் கூட்டுச் சேர்ந்து, புரட்சி இயக்கங்கள் அனைத் தையும் காட்டிக் கொடுக்கும் வெளிநாட்டுக் கொள்கை, உள்நாட் டில் சகல துறைகளிலும் முதலாளித்துவ மீட்சியை அடிப்படை யாகவும், அதன் விளைவாகவும் அமைந்துள்ளது.
ஆனல், குருசேவின் காட்டிக் கொடுப்பும், துரோகமும் சர்வ தேசிய கம்யூனிஸ் இயக்கத்தில் சவாலை சந்திக்காமல் இல்லை. ஆழ்ந்த கருத்துகளுக்கும். சிந்தனைத் தெளிவுக்கும் பிரசித்திபெற்ற பிரகாசமான வாதப்பிரதிவாதப் படைப்புகள் பலவற்றில், சீன கம்யூனிஸ்ட் கட்சி, குருசேவும், மேற்கு ஐரோப்பிடி கம்யூனிஸ்ட் கட்சிகளின் சில தலைவர்களும் எடுத்த போலியான நவீன திரிபு வாத நிலைகளை கண்டித்து, நிராகரித்துள்ளது. வீரமிக்க சின்னஞ் சிறு அல்பேனியா 1957 மாஸ்கோ மாநாட்டிலும், 1960 புக்கா றெஸ்ட் மாநாட்டிலும் குருசேவ் மீது காரி உமிழ்ந்துள்ளது.
சித்தாந்த வேற்றுமைகளை நாட்டு உறவுகளுக்குள் விஸ்தரித் ததுதான் இவற்றுக்குக் குருசேவ் கொடுத்த பதிலாகும். அவன் அல்
2.

Page 22
பேனியாவுடன் வைத்திருந்த சகல தொடர்புகளையும் துண்டித் தான். பொருளாதார உடன்படிக்கைகள் அனைத்தையும் கிழித் தெறிந்தான். சோவியத் நிபுணர்கள் எல்லாரையும் திருப்பி அழைத்தான். ராஜிய தந்திர உறவுகளைக் கூட முறித்தான்.
என்வர் ஹோஜா அவர்கள் தலைமை தாங்கும் அல்பேனிய அரசாங் கத்தைத் தூக்கி எறியும்படி பகிரங்கமாக குரல் எழுப்பினன்.
**குருசேவுக்கு முழந்தாளிட்டு அடி பணிவதிலும் பார்க்க, நாம் புல் லைப் புசித்து வாழ்வோம்" என்பது அல்பேனிய மக்கள் கொடுத்த வீரம் கொப்புளிக்கும் பதிலாகும். தோழர் என்வர் ஹோஜா அவர் கள் முன்னிலும் பார்க்க மேலும் உறுதியாக தமது பதவியில் அமர்ந்திருக்கும் அதே வேளையில், இத்தகைய அர்த்தமற்ற அச்சு
றுத்தல்கள் விடுத்த கோமாளி குருசேவ் மானங்கெட்ட முறையில் அதிகார பீடங்களிலிருந்து உதைத்து, உருட்டிக் கவிழ்க்கப்பட்டது உண்மையில் விகடத்துக்கு ஒரு துணுக்காக விளங்குகின்றது.
அல்பேனியாவுக்கு எதிராக தனது மிரட்டல் தந்திரோபாயங் கள் பலன் அளிக்கத் தவறியதைக் கண்டு குருசேவ் சும்மா இருக்க வில்லை. சில ஆண்டுகளின் பின்னர் பொருளாதார நிர்ப்பந்தங்கள் மூலம் அரசியல் ரீதியில் ராட்சஸ் சீனவை அடிமைப்படுத்தும் வீண் முயற்சியில், இதே தந்திரோபாயங்களை மீண்டும் பாவித்தான். மீண்டும் மண் கவ்வினுன் குருசேவ். தோழர் மாஓசேதுங் அவர்க ளின் விவேகமான வழிகாட்டலில் தீய விஷயத்தை நல்ல விஷய மாக மாற்றி, சீன கம்யூனிஸ்ட் கட்சி, தம் மீது நம்பிக்கை வைக்கு மாறும், சுயசார்பு மூலம் ஆற்றலின் பிரமாண்டமான ஊற்றைத் திறக்குமாறும் 70 கோடி சீன மக்களுக்கும் போதனையளித்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி, அல்பேனிய தொழில் கட்சி இரண்டி னதும் உறுதியான மார்க்ஸிஸம்-லெனினிஸ் நிலைப்பாடு, சோவியத் யூனியனுக்கு அடி பணிய மறுத்த இதர சகோதர கட்சிகளின் ஆதர வையும் பெற்றது. இவற்றில் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி, தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி, பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி, மலாயா கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முதலிய வற்றை விசேஷமாகக் குறிப்பிடலாம். ஆரம்பத்தில் மார்க்ஸிஸ்ம்லெனினிஸ நிலைப்பாட்டை எடுத்த, ஆனல் பின்னர் பல்வேறு வித மான சோவியத் மிரட்டல்களுக்குப் பலியாகி, நவீன திரிபுவாதத் தின் போலி நிலைகளில் தஞ்சம் புகுந்த சில கட்சிகளும் இல்லாமல் இல்லை. ஆணுல், நவீன திரிபுவாதிகளின் ஆதிக்கத்துக்கு உள்ளான ஏறக்குறைய எல்லா கட்சிகளிலும், மார்க்ஸிஸம்-லெனினிஸம்மாஒசேதுங் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட புதிய புரட் சிகரக் குழுக்கள் அல்லது கட்சிகள் இன்று தோன்றி விட்டன. ஆஸ்
22

திரேலிய (மார்க்ஸிஸம்-லெனினிஸ) கம்யூனிஸ்ட் கட்சி, இத்தாலி (மார்க்ஸிஸம்-லெனினிஸ்) கம்யூனிஸ்ட் கட்சி, பிரெஞ்சு (மார்க்ஸி ஸம்-லெனினிஸ) கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய சிலவற்றை இதற்கு
உதாரணம் காட்டலாம்.
நமது காலத்தின் மிகப் பெரிய இந்த விவாதத்தில் சம்பந்தப் பட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் நாம் சிறிது ஆழமாய்ச் செல் வோமாக. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாஒ சேதுங் ஆகிய சர்வதேசிய கம்யூனிஸ் புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களின் போதனைகளை நாம் சுருக்கிக் கூறினல், பின்வருமாறு தொகுக்கலாம்:-
நாம் எல்லாரும் வர்க்க சமுதாயத்தில் வாழ்கிழுேம். சமு தாயத்தில் ஒரு வர்க்கம் இன்னுெரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்கு கின்றது; சுரண்டுகின்றது. இன்னுெரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி, நசுக்கும் ஒரு வர்க்கம் அதன் ஒடுக்குமுறைக்கும் சுரண் டலுக்கும் உதவியாக ஒரு யந்திரத்தைப் பெரும் செலவில் கட்டியமைத்திருக்கிறது. இந்த யந்திரம் அரசு யந்திரம் என அழைக்கப்படுகின்றது. இதன் பிரதான பகுதி ஆயுதப் படை கள். அரசு யந்திரத்தின் பிரதான பணி சுரண்டலைப் பாது காப்பது சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக அடக்கி ஒடுக்கப் பட்ட வர்க்கங்கள் கொந்தளித்து எழும்போது அவற்றைத் தடுத்து நசுக்குவது. சுரண்டும் வர்க்கங்களின் காவல் நாய் களின் கரங்களில் துப்பாக்கிகள் இல்லாவிட்டால், சுரண்டல் ஒரு கனம் கூடத் தொடர்ந்து நடக்க முடியாது. ஆகவே, டக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் தம்மை விடுதலை செய்து கொள்ள விரும்பினல், தம்மை நசுக்குகின்ற அடக்குமுறை அரசு யந்திரத்தை ப்லாத்காரத்தால் சுக்கு நூருக்கவேண்டும்; அதாவது, அவர்கள் புரட்சியை நடத்தி, அடக்குமுறை முத லாளித்துவ அரசு யந்திரத்துக்குப் பதிலாக தொழிலாளர் வர்க் கத்தின் அரசு யந்திரத்தை அமைக்க வேண்டும். இதைத்தான் மார்க்ஸ் அவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று வருணித்தார்.
கடைசியாக, இதைப் புரட்சியால் அன்றி, பாராளுமன்ற வழிகளில் சமாதான மாற்றத்தின் மூலம் செய்ய முடியாது. பாராளுமன்றம் என்பது மூலதனத்தின் அம்மணமான சர் வாதிகாரத்தை அலங்கரிக்க, நமது வர்க்க உணர்வை மழுங் கடிக்க, நம்மைக் குழப்பிப் பேய்க்காட்ட, ஆயுதப் படைகள் என்ற உண்மையான அதிகாரபீடத்திலிருந்து நமது கவனத்
23

Page 23
தைத் திசைதிருப்பு, பிற்போக்குவாதிகள் கண்டுபிடித்த ஒரு ஆயுதம். இது ஆயுதப் போராட்டத்துக்குப் பதில் சொற் போராட்டத்தை வைக்கும் ஒரு முயற்சி. எனவே, இந்தப் பாராளுமன்ற மாயைகளால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. நாம் பாராளுமன்றப் பாதையை உறுதியுடன் நிராகரித்து, புரட்சிப் பாதை ஒன்றே அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் அளிக்கும் பாதை எனக் கொள்ளவேண்டும்.
இந்த கருத்துகளை யார் ஏற்றுக்கொள்கிருர்களோ, அவர் கள் புரட்சிவாதிகள்; மார்க்ஸிஸம்-லெனினிஸவாதிகள். யார் ஏற்றுக்கொள்ளவில்லையோ, யார் எதிர்க்கிருர்களோ அவர்கள் திருத்தல்வாதிகள்; திரிபுவாதிகள், இதுதான் மார்க்ஸிஸம்லெனினிஸவாதிகளையும், நவீன திரிபுவாதிகளையும், புரட்சிவாதி களையும், திருத்தல்வாதிகளையும் பிரித்துக் காட்டும் எல்லைக் கோடாகும். メ
இவற்றிற்குப் பதில், ஒரு மத்திய பாதையைக் காண, நடு வழியைக் காண முயல்கின்ற, பாலங்கள் அமைக்க, மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மாஒசேதுங் சிந்தனைக்கும், நவீன திரிபு வாதத்துக்கும் இடையில் சமரசம் கொண்டுவர முயல்கின்ற சிலரும் இருக்கின்றனர். இது சந்து செய்ய முடியாதவற்றை சந்து செய்ய முயல்கின்ற, நீரையும் நெய்யையும் கலக்கின்ற ஒரு முயற்சியன்றி வேறல்ல.
நவீன திரிபுவாதம் என்பது மார்க்ஸிஸம்-லெனினிஸம் மாசேதுங் சிந்தனையின் எதிர்த் தத்துவமாகும். எனவே, ཞི་ டுக்குமிடையில் எவ்வித சமரசமும் ஏற்பட முடியாது. ஆரர் பத்தில் சரியான மார்க்ஸிஸம்-லெனினிஸ் நிலைப்பாட்டை எடுத்த ய்ப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி, கொரிய தொழிலா ளர் கட்சி போன்றவையும், வியட்நாம் தொழிலாளர் கட்சி யின் சில தலைவர்களும்கூட இன்று ‘ஐக்கியம்’ கொண்டு வரு வது பற்றிப் பிதற்றுகின்றனர். இது யதார்த்தத்தில் நவீன திரிபுவாதத்துக்குச் செல்லும் சரிவுப் பாதையில் ஏற்கெனவே அடி எடுத்து வைத்துவிட்ட தைக் காட்டுகின்றது.
நவீன திரிபுவாதம் என்பது உலக ஏகாதிபத்தியம் தான் அழியும் காலத்தில் ஒரு முண்டாகச் சேவை செய்ய தொழி லாளர் வர்க்க இயக்கத்திலிருந்து இழுத்தெடுத்த இறுதிப் பல மாகும். உழுத்துப்போன மரத்துக்கு ஒரு முண்டு தேவைப் படுவது அதன் பலத்தின் அறிகுறியல்ல, பலவீனத்தின் அறி குறியாகும். அந்த முண்டை வெட்டி வீழ்த்தும் முயற்சி மரத்தை
24

வீழ்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஆகவேதான், நவீன திரிபுவாதத்தை எதிர்த்துப் போராட்டாத அதேவேளையில், உலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடுவது அசாத்தி யம். யார் நவீன திரிபுவாதத்தை எதிர்க்கவில்லையோ, அவர் இன்றே நாளையோ ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை நிறுத்து வது நிச்சயம். இந்த விஷயத்தில் மயக்கம் இருக்கக்கூடாது. லெனின் தமது காலத்தில், திரிபுவாதம் என்பது தொழிலா ளர் வர்க்க இயக்கத்தில் முதலாளிவர்க்க இயக்கத்தின் செல் வாக்கே என்று தெளிவாக விளக்கியுள்ளார்.
உலக ஏகாதிபத்தியத்தைப் போல, நவீன திரிபுவாதமும் அழிவது திண்ணம். நவீன திரிபுவாதிகள் எவ்வளவுதான் காட்டிக் கொடுத்த போதிலும், உலகப் புரட்சி இயக்கம் தொடர்ந்து முன்னேறுகின்றது. மரம் அமைதியை விரும்பு கின்றது; ஆனல் காற்று ஒய்வதில்லை. அதேபோல நவீன திரிபு வாதிகள் சமாதான சகவாழ்வு, சமாதான போட்டி, சோஷ லிஸத்துக்கு சமாதான மாற்றம் ஆகியவை பற்றி எவ்வளவுக் குச் செபம் செய்தாலும், வர்க்கப் போராட்டத்தின் உண்மை கள் வாழ்வை வேறு திசையில் செலுத்துகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான உலக ஏகாதிபத்தியம், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை பிரதான மையமாகக் கொண்ட நவீன திரிபுவாதம், பிற்போக்குவாதம் இவற்றுக்கெதிரான புரட்சிப் போராட்டங்களின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.
இவை நவீன திரிபுவாதிகள் மத்தியிலே அக முரண்பாடுகளை மீண்டும் கொண்டு வருகின்றன. அவர்கள் இன்று ஒன்றுபோல ஐக்கியப்பட்டிருக்கவில்லை. அல்பேனிய தொழில் கட்சியின் ஐந்தா வது மாநாட்டிற்குச் சமர்ப்பித்த தமது அறிக்கையில் தோழர் என் வர் ஹோஜா அவர்கள் துலாம்பரமாகச் சுட்டிக்காட்டியதாவது:- ‘இன்று திரிபுவாத முன்னணி அதன் அத்திவாரத்திலேயே தகர்ந்து விட்டது. அது ஒன்றை ஒன்று கீறிக் கிழிக்கத் தயாராக உள்ள பசித்த ஒநாய்க் கூட்டம் போல் இருக்கின்றது. இசையாசிரி யனின் ஆணைக்கோல் இனிமேல் திரிபுவாதக் கூட்டிசையை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது." அவர் மேலும் கூறியதா வது:- 'திரிபுவாதத்தின் பல்வேறு ரகங்கள் செல்வாக்குப் பிராந்தி யங்களுக்காக பரஸ்பரம் சண்டையிடுகின்றன. டாலரைச் சார்ந் திருப்பதற்காக, ரூபிள்களிலிருந்து இயன்ற அளவு சுதந்திரமும் சுயாதீனமும்பெறக் கோருகின்றன.'
25

Page 24
சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் அதன் சகபாடிகளும் செக் கோஸ்லவாக்கியா மீது தொடுத்த ஆக்கிரமிப்பு இந்தச் சச்சரவை மேலும் உயர்த்தி, நவீன திரிபுவாதத்தின் வீழ்ச்சியை கிட்டிவரச் செய்துள்ளது. சட்ட விரோதமான கம்யூனிஸ்ட் கட்சிகளின் சர்வ தேசிய மாநாட்டைக் கூட்ட எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இந்த உடைவைச் சீர்செய்ய முடியாது. மார்க்ஸிஸம்-லெனினிஸத் தின் இறுதி வெற்றி நிர்ணயமாகி விட்டது.
லெனின் அவர்கள் தமது காலத்தில் திரிபுவாதிகளுக்கு எதி ராக நடத்திய சித்தாந்தப் போராட்டத்தின் வெற்றி அக்டோபர் புரட்சியின் வெற்றியைச் சாத்தியமாக்கியது போல, ஸ்டாலின் அவர்கள் ட்ருெஸ்கிய வாதத்துக்கு எதிராக நடத்திய போராட் டத்தின் வெற்றி சோவியத் யூனியனில் சோஷலிஸ் நிர்மாணத் தைச் சாத்தியமாக்கியது போல, இன்றைய மகத்தான சித்தாந் தப் போராட்டத்தில் மார்க்ஸிஸம்-லெனினிஸவாதிகளின் வெற்றி உலகப் புரட்சியின் வெற்றியைச் சாத்தியமாக்குவது நிச்சயம்.
26

அத்தியாயம் II
மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி
மக்கள் சீன குடியரசின் (தைவான் மாகாணம் தவிர, சகல மாகாணங்களிலும் சுயாட்சிப் பிரதேசங்களிலும் புரட்சிகர அதி கார நிறுவனங்களை ஸ்தாபித்ததுடன் பன்முக வெற்றி ஈட்டிய, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்பதாவது தேசிய மாநாட்டின் வெற்றிகரமான முடிவுடன் அரசியல் ரீதியில் ஸ்திரப்படுத்தப் பட்ட, மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி, அக் டோபர் புரட்சியிலும் பார்க்க ஆழ்ந்த செல்வாக்குடைய, மிகப் பெரும் சகாப்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சம்பவம் என்ப தில் சந்தேகமே இல்லை.
இந்த மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி காலத்தில் இரண்டு தடவை சீனுவுக்கு விஜயம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எனவே, உலகரீதியில் நண்பர்களின் கவ னத்தையும், எதிரிகளின் கவனத்தையும் கவர்ந்த இந்த மகத் தான புரட்சியை நோட்டமிட்டுப் பார்க்க நான் சலுகைபெற்ற வன் என்றுதான் எவரும் சொல்லக்கூடும். கான்டனிலுள்ள டாக்டர் சுன் யட் ஸன் வைத்தியக் கல்லூரி செங்காவலர்களை நான் சந்தித்தேன். தத்துவஞானத்துறை விரிவுரையாளர் நியெ யு வன்செ என்ற பெண் புதிய பீக்கிங் பல்கலைக் கழ கத்தை நான் சுற்றிப்பார்வையிட உதவினர். இவர் மற்றும் ஆறுபேருடன் சேர்ந்து 25, மே, 1966ல் முதலாவது கொட்டை எழுத்துச் சுவரொட்டியை எழுதியவராவர்.
எனது அடுத்த பயணத்தின்போது, பீக்கிங் நிலவியல் கல் லூரியைச் சேர்ந்த கிழக்கு சிவப்பு கம்யூனின் 5000 செங்காவ
27

Page 25
லர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றில் பேசும் பெரும் வாய்ப் புக் கிடைத்தது. இது நான் என்றென்றைக்கும் மறக்க முடி யாத ஒரு அனுபவமாகும். நான் பல செங்காவலர் ஆர்ப்பாட் டங்களைப் பார்த்தேன். மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் நூற்றுக்கணக்கான கொட்டை எழுத்துச் சுவரொட்டிகளைப் படித்தேன். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி உறுப்பி னர்களுடனும், அதன் கீழுள்ள கலாசார புரட்சி கமிட்டி உறுப் பினர்களுடனும் நீண்ட உரையாடல்கள் நடத்தினேன். கடைசி யாக, மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சியை தாமாகவே தொடக்கி வைத்து, தலைமை தாங்கும் தோழர் மாஒசேதுங் அவர்களை சந்திக்கும் அரிய சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்தது. இப்புரட்சி பற்றியும் சம்பந்தப்பட்ட இதர விஷ யங்கள் பற்றியும் நான் அவருடன் உரையாடினேன்.
எனவே, இம் மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சியின் அர்த்தம் என்ன? இதன் நோக்கம் யாது? உலகில் இது வகிக்கும் செல்வாக்கு எத்தகையது? என்பவற்றை இயன்ற அளவு எளிதாக விளக்குவது எனது கடமை என நான் எண்ணு கிறேன். சமீப காலங்களில் சீனுவின் மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி போல் தூவிக்கப்பட்ட இன்னுெரு சம் பவம் நிகழ்ந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த கலா சார புரட்சியின் தலைவரும் தொடக்க புருஷருமான தோழர் மாஒசேதுங் அவர்கள் மீது அள்ளி வீசாத வசைமொழியே வேறு இல்லை என்று கூடக் கூறலாம். மேலைநாட்டு ஏகாதிபத் திய, முதலாளித்துவ பத்திரிகைகள் முதல், சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியை பிரதான மையமாகக்கொண்ட நவீன திரிபு வாதிகளின் தூற்றல்கள்வரை, பல்வேறு விதமான பிற்போக்கு வாதிகள் அனைவரும் மக்கள் சீனுமீதும், அதன் மகத்தான தலை வர் மீதும் சேற்றை அள்ளிப் பூசி, உலகரீதியான சீன - எதிர்ப்பு கோஷ்டி கானம் ஒன்றை நடத்த பகீரதப் பிரயத்தனம் செய்த off.
ஆனல், தோழர் மாஒசேதுங் அவர்கள், எதிரியால் தாக்கப் படுவது ஒரு நல்ல விஷயம் அன்றி, தீய விஷயம் அல்ல; கார னம், நாம் சரியான பாதையில் முன்னேறுகின்ருேம் என்பதை அது காட்டுகின்றது என்று நமக்குப் போதித்துள்ளார். தோழர் மாஓசேதுங் அவர்கள் கூறியதாவது:- ‘எங்களைப் பொறுத்த வரையில், ஒரு தனிநபர், ஒரு அரசியல் கட்சி, ஒரு படை, அல்லது ஒரு பாடசாலை எதிரியால் தாக்கப்படாவிட்டால், அது தீயது. ஏனென்ருல், அது எதிரியின் மட்டத்துக்கு நாம் தாழ்ந்து
28

விட்டோம் என்று உண்மையில் அர்த்தமாகும் என நான் கருது கின்றேன். நாம் எதிரியால் தாக்கப்பட்டால் அது சிறந்தது. காரணம், எதிரிக்கும், நமக்கும் இடையில் நாம் ஒரு தெளிவான எல்லைக்கோட்டை வரைந்துள்ளோம் என்பதை அது நிரூபிக்கின் றது. எதிரி நம்மை பிசாசுபோல தாக்கி, நம்மை முற்றிலும் இருண்டவர்களாக, ஒரு நற்குணமேனும் இல்லாதவர்களாக வரைந்து காட்டினல், அது இன்னும் சிறந்தது. எதிரிக்கும் நமக் கும் இடையில் நாம் ஒரு தெளிவான எல்லைக்கோட்டை வரைந் திருக்கிருேம் என்பதை மாத்திரமல்ல, நமது வேலையில் பெரும் சாதனைகளை ஈட்டியுள்ளோம் என்பதையும் அது காட்டுகின்றது.”*
தோழர் மாஒசேதுங் அவர்கள் ‘எதிரி எதை எதிர்க்கி ருனே, அதை நாம் ஆதரிக்கவேண்டும். எதிரி எதை ஆதரிக்கி ருனே, அதை நாம் எதிர்க்கவேண்டும்" என்றும் நமக்குப் போதித் துள்ளார். ஆகவே, ஏகாதிபத்தியவாதிகளும், நவீன திரிபுவாதி களும், சகலவிதமான பிற்போக்குவாதிகளும் மகத்தான பாட் டாளி வர்க்க கலாசார புரட்சியையும், அதன் மாபெரும் தலைவர் தோழர் மாஒசேதுங் அவர்களையும் மண்ணள்ளித் திட்டும்போது, உலகெங்குமுள்ள புரட்சிவாதிகள் அனைவரும், சீனவில் நடந்தது நல்ல விஷயம், தோழர் மாஒசேதுங் அவர்கள் நமது சகாப்தத் தின் மிகப் பெரும் மார்க்ஸிஸம்-லெனினிஸவாதி, புரட்சிவாதி என்று இயல்பாகவே உணர்ந்து கொள்ளவேண்டும். எனவேதான், அவர்கள் நேரத்தைச் செலவழித்து இந்த கலாசார புரட்சிபற்றி படிக்கவேண்டும்; அதன் படிப்பினைகளைப் புரிந்துகொள்ள வேண் டும். இந்த மகத்தான சம்பவத்தின் தாக்கம் சீனுவில் மட்டு மல்ல, உலகம் முழுவதிலும் உணரப்படும் என்றும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கம் முழு வதையும் பொறுத்தவரையில், இது மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களையுடையது என்ற உண்மையையும் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
சீனுவின் மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி என் பது மக்களின் மனதைக் கொள்ளைகொள்ளும் ஒரு புரட்சி. இது சீனவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக நீடித்திருந்த, சோவு லிஸ் புரட்சி அடிப்படையில் வெற்றி பெற்ற பின்னர் கூட தொடர்ந்தும் நீடித்திருக்கின்ற பழைய நிலப்பிரபுத்துவ, முதலா ளித்துவ சித்தாந்தத்தை-அதாவது பழக்க வழக்கங்களையும், சிந் தனைகளையும்-வேரோடு பிடுங்கி எறியும் ஒரு முயற்சி; அதற்குப் பதில் பாட்டாளி வர்க்க, அதாவது தொழிலாளர் வர்க்க சித் தாந்தத்தை நிலைநாட்டும் ஒரு முயற்சி. இது உலகம் என்றும்
29

Page 26
கண்டிரரத மிக மகோன்னதமான அறிவுக் கொந்தளிப்பாகும் இது 70 கோடி சீன மக்களும் பழைய உலகின் விமர்சகர்களாக, பழைய சுரண்டும் அமைப்புடன் தொடர்புடைய பழைய கருத் துகளின் விமர்சகர்களாக, “ ‘உழைப்பாளி மக்களின் மனங்களுக்கு நஞ்சூட்ட ஏகாதிபத்தியவாதிகளும், சுரண்டும் வர்க்கங்களும் உபயோகித்த பழைய பழக்க வழக்கங்களின்’ விமர்சகர்களாக மாறும் ஒரு வெகுஜன இயக்கம். இது மாறிய சோஷலிஸ பொரு ளாதார அடிப்படைக்கு இசைவாக மேலமைப்பை மாற்றும் ஒரு பிரயத்தனம். இதன் பூரணமான பாதிப்பை உணர பல நூற் ருண்டு காலம் கழியலாம்.
நமது சகாப்தத்தின் மாபெரும் மார்க்ஸிஸம் - லெனினிஸ் வாதியாக விளங்கும் தோழர் மாஒசேதுங் அவர்கள் தலைமை தாங்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர் வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒரு ஆரம்பம் மாத்திரமே என் பதைச் சரியாக புரிந்துகொண்டது. மார்க்ஸிஸம் - லெனினிஸப் பொக்கிஷத்துக்கு தோழர் மாஓசேதுங் அவர்கள் வழங்கிய விசேஷ சாதனைகளில் ஒன்று, சீனுவிலும் இதர நாடுகளிலும் நடைபெற்ற புரட்சிகளின் அனுபவங்கள் பற்றிய அவருடைய தொகுப்பும், சோஷலிஸத்திலிருந்து கம்யூனிஸத்துக்கு மாறிச் செல்லும் வரலாற்றுக் காலகட்டம் பூராவும் வர்க்கங்களும் வர்க் கப் போராட்டமும் நிலவும்; முதலாளித்துவ மீட்சிக்கான அபாய மும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இழக்கப்படும் அல்லது கவிழ்க்கப்படும் அபாயமும் இருக்கும் என்ற அவருடைய முடி வும் ஆகும்.
தோற்கடிக்கப்பட்ட எந்த வர்க்கமும், அது அதிகார பீடத் திலிருந்து அகற்றப்பட்டதை அன்போடு ஏற்றுக்கொள்ள மாட் டாது. அது அதிகார அரங்கிற்கு மீள சூழ்ச்சிகள் செய்யும்; திட்டங்கள் வகுக்கும். இந்த முயற்சியில், அதன் பிரதான நேச சக்திகளில் ஒன்று என்னவென்றல், மக்களின் மனதில் நீடித் திருக்கும் பழைய வழக்கங்களும், சிந்தனைகளும் ஆகும். மக்க ளின் சித்தாந்தத்தை புனருருவாக்கவும், பழைய முதலாளித்துவ சித்தாந்தத்தை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் களையவும் ஒரு தீவிரமான, வெற்றிகரமான முயற்சி எடுக்கப்படாவிட்டால், அது முதலாளி வர்க்கம் தனது அதிகாரத்தை மீட்கும் முயற்சி யில் வாகை சூடுவதற்குச் சாதகமான நிலைமைகளைச் சிருஷ்டித் துக் கொடுப்பதற்கு சமமாகும்.
லெனின் அவர்கள் அக்டோபர் புரட்சி வெற்றிபெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பின், முதலாளி வர்க்கம் தூக்கியெறி
30

யப்பட்ட பின், அதன் எதிர்ப்பு பன்மடங்கு பெருகியிருக்கும்; அதன் பலம் அதைத் தூக்கியெறிந்த பாட்டாளி வர்க்கத்தின் பலத்திலும் பார்க்க பெரிதாக இருக்கும்; முதலாளி வர்க்கத்தி டம் இன்னும் பணம், அறிவு, அதிகார, நிர்வாகப் பயிற்சி, அந்நிய மூலதனத்துடன் தொடர்பு ஆகியவையும் இருக் கும்; அத்துடன், மக்களின் மனங்களிலுள்ள பழக்கவழக்க சக்தி என்பது மிகப் பிரமாண்டமான ஒரு சக்தியாகும். மக்களின் மனங் களிலும், பழக்க வழக்கங்களிலும் மாற்றம் ஏற்படாத வரை யில், புரட்சியைப் பாதுகாக்க முடியாது என்று கூறினர்.
லெனின் அவர்களின் உண்மையான மேற்கோள் பின்வரு 11று:-"முதலாளி வர்க்கம் தூக்கியெறியப்பட்டதனுல் (அது / ஒரு நாட்டிலாயிருந்தாலும் கூட) அதன் எதிர்ப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது; அதன் பலம் சர்வதேசிய மூலதனத்தின் பலத் தில், முதலாளி வர்க்கத்தின் சர்வதேசிய தொடர்புகள் நீடித் திருக்கும் தன்மையில் தங்கியிருக்கின்றது; பழக்கவழக்க சக்தி களிலும், சிறு உற்பத்தி முறையின் பலத்திலும் கூட இருக்கின் றது. துர்அதிர்ஷ்டவசமாக சிறு உற்பத்திமுறை உலகில் மிக மிக விரிந்த அளவில் நிலவுகின்றது. சிறு உற்பத்திமுறை முத லாளித்துவத்தையும், முதலாளி வர்க்கத்தையும் தொடர்ச்சியாக, நாளுக்கு நாள், மணிக்கு மணி, இயல்பாகவே பெருமளவில் தோற்றுவிக்கின்றது'.
ஸெரி ஐ பொப்புலிட் என்ற (அல்பேனிய) பத் திரிகையின் கட்டுரை ஒன்று இவ்வாறு கூறியுள்ளது:- "ஆளும் வர்க்கத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற விழையும் எல்லா வர்க்கங்களும், முதன் முதலில் மனிதனின் சிந்தனையைப் பின்னிழுத்து, சித்தாந்தத் துறையில் தயாரிப்புகள் செய்து, பின்னர் இவற்றைச் சாதகமாகக்கொண்டு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றன என்பதை பல நூற்ருண்டுகால வரலாற்று அனுபவம் காட்டுகின்றது. சோவு லிஸ் சமுதாயக் காலகட்டத்திலும் இந்தவிதி பூரணமாக செயல்படுகின்றது. சித்தாந்த - எதிர்ப் புரட்சி என்பது அரசி யல்-எதிர்ப் புரட்சியின் முன்னேடியாகும்.' 1956ல் ஹங்கேரி யில் நிகழ்ந்த எதிர்ப் புரட்சிச் சம்பவத்துக்கு முன்னேடியாக, பெற்ருேபி கிளப்பைச் சேர்ந்த திரிபுவாத எழுத்தாளர் கோஷ்டி ஒன்று இந்தப் பாத்திரத்தைத் தான் நடித்தது. சோவியத் யூனியனில் குருசேவ் கும்பல் அதிகாரத்தை அபகரித்த வர லாற்று உண்மையும் இதுவேயாகும்.
3.

Page 27
இது தவிர, ஏகாதிபத்தியவாதிகளும் பிற்போக்குவதி களும் பொறுமையானவர்கள். அவர்கள் இந்தச் சந்ததியில் வெற்றி பெறவில்ஃபென்ருல் அடுத்த சந்ததிவரை காத்திருக் கத் தயாராயிருக்கின்றனர். சோவியத் யூனியனைப் பொறுத்த வரையில் அவர்கள் இவ்வாறு தான் செய்தார்கள். முதலில், அவர்கள் அப்பட்டமான தஃபீட்டில் இறங்கி, தோல்வி கண் டார்கள். அடுத்து, ஏறிட்லர், சோவியத் யூனியனே வெற்றிகொள்வி முயன்று, தோல்வி கண்டான். ஆணுல், ஏகாதிபத்தியவாதிகளும், பிற்போக்குவாதிகளும் தமது முயற்சியைக் கைவிட்டுவிடவில்ஃ. லெனின், ஸ்டாவின் காலத்தில் தாம் நிறைவேற்ருத ஒன்றை, சோவியத் யூனியனில் அதிகாரத்திலிருந்த குருசேவ், இன்றுள்ள திரிபுவாதக் கும்பல் ஆகியோரின் காலத்தில் அவர்கள் வெற்றி கரமாக நிறைவேற்றிவிட்டார்கள்,
இதர வரலாற்று உதாரணங்களும் இல்லாமல் இல்லே. அெ ரிக்க நிருபர் அன்னு லூயிஸ் ஸ்ட்ருேங் இதை வெகு அழகாக எழுதியிருக்கிருர்-" கடந்த காலப் புரட்சிகள் அனேத்தும் காலப் போக்கில் பின்னடித்து, அவை சாதித்ததில் பெரும் பகுதி கொள்ஃளயடிக்கப்பட்டதை சீன மக்கள் அவதானித்துள்ளனர். பிரிட்டனில் கிருெம்வெல் முதலாவது சார்ல்ஸ் மன்னனின் தன் யைக் கொய்தான். மன்னர்குலம் படிந்ததுபோல் காணப்பட்டது ஆணுல் 30 ஆண்டுகளின் பின்னர் இரண்டாவது சார்ல்ஸ் மன் னன் ஒரு எதிர்ப் புரட்சிப் படையின் தேவைகூட ஏற்படாமல் மீண்டும் அரச கட்டில் ஏறினுன் பல பிரபுத்துவ மனுேபாவங் களும் பிரிட்டனில் இன்றுவரை நிலத்திருக்கின்றன. பிரான்சில் நிகழ்ந்த புரட்சி பல ஏற்றத் தாழ்வுகளின் பின், பொனபார்ட் சாம்ராட்சியத்துக்கு வழிவிட்டுக் கொடுத்தது. அமெரிக்காவில் மக்களின் கைகளில் ஆட்சியை வைப்பதாகக் கூறிய சுதந்திரப் பிரகடனத்தின் தேன் மொழிகளே , 'ஜனக் கும்பலின் ஆட்சிக்கு எதிராக தடைகளும் சமநிலைகளும்' நிறுவிய அரசியல் சட்ட வழமை விரைவில் வெற்றிகொண்டது. பின்னர் அமெரிக்க உள் நாட்டு புத்தம் நீகிரோ பக்களே விடுதலே செய்து, அவர்களுக்கு அரசாங்கத்தில் ஒரு பங்குகூடக் கொடுத்தது. ஆணுல், 10 ஆண்டு களுக்குள் அவர்கள் ஒரு புதிய வடிவில் அடிமைப்படுத்தப்பட்ட uক্তত্ব / ** ,
அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது ஒரு விஷயம். அதை ஸ்திரப்படுத்துவது இன்னுெரு விஷயம். இது மிக கஷ்டமான ஒரு கடமை. சீன மக்கள் விடுதலைச் சேனே தினசரி கூறியது போல:-"எல்லா புரட்சிகளிலும் அடிப்படை பிரச்சினே அரசு
32

அதிகாரம் தழுவியது என்பதை பாட்டாளி வர்க்கப் புரட்சியின் வரலாற்று அனுபவத்திலிருந்து நாம் அறிகின்ருேம். நாம் நாட் டிலுள்ள எதிரியை வெற்றிகொண்டோம். துப்பாக்கியால் அதி காரத்தைக் கைப்பற்றினுேம், ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்து வம், அதிகார முதலாளி வர்க்கம் எதுவாயிருந்தாலும் சரி, எல் வாரையும் தூக்கிவீச முடியும், லட்சாதிபதிகள், கோடீஸ்வரர் கள், குபேரர்கள் யாராயிருந்தாலும் சரி, அனேவரையும் அடித்து விழ்த்தமுடியும். அவர்களுடைய சொத்துகளேப் பறிமுதல் செய்ய முடியும் ஆணுல், அவர்களுடைய உடைமிைசுளேப் பறிப்பது அவர்களுடைய மனங்களிலுள்ள பிற்போக்குக் கருத்துகளேப் பறிப்பதாகாது. நாளிலும் பொழுதிலும், மணித்தியாலத்துக்கு மணித்தியாலம், அவர்கள் அரங்கிற்கு மீள கனவுகண்ட வண் னம் இருப்பர். இழந்த தாது 'சுவர்க்கத்தை மீட்கக் கனவு காண்பர். முழு ஜனத்தொகையிலும், அவர்கள் ஒரு அற்ப பகுதியினராக விளங்கியபோதிலும் அவர்களுடைய அரசியல் ஆற்றல் ஓரளவு கணிசமானது. அவர்களுடைய எதிர்ப்புப் பலம் எண்ணிக்கை விகிதாசாரங்களேக் கடந்தது.
"சோவுவியை சமுதாயம் பழைய சமுதாயத்தின் கருப்பை பிவிருந்து தோன்றியது. வர்க்க சமுதாயத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக உருவாக்கப்பட்டுவந்த தனியுட்ைமை பற்றிய கருத் துகளே ஒழித்துக்கட்டுவது எளிதில்ல. தனியுடைமை முறை புடன் சம்பந்தப்பட்ட சுரண்டும் வர்க்கங்களின் பழக்கவழக்க சக்திகளேயும், சித்தாந்த கலாசார செல்வாக்கையும் ஒழித்துக் கட்டுவது சுவபமல்ல. நகரிலும், நாட்டுப்புறத்திலும் உள்ள குட்டி முதலாளி வர்க்கத்தின் இயல்பான சக்திகள் புதிய முத லானித்துவ அம்சங்களே சர்வசதா பிறப்பிக்கின்றன. அளவிலும் பருமனிலும் தொழிலாளர் அணிகள் பெருகப் பெருக, அவை சிக்கலான பின்னணியின் சில அம்சங்களே உட்கொள்கின்றன. பின்னர் கட்சி அணிகள், அரசாங்க நிறுவனங்கள் ஆகியவற்றி லுள்ள பல நபர்கள் அரசு அதிகார வெற்றிக்குப் பின்னர், சாதான சூழ்நிஃகளில் வாழும்போது சீரழிகின்றனர்".
இது மிக அழகாக விளக்கப்பட்டுள்ளது. எதிரி நடக்கு எதிராக எப்பொழுதும் இரட்டைத் தந்திரங்களே உபயோகிக் சின்ருன், முதல்ாளி வர்க்கமும், பிற்போக்குவாதிகளும் தர ராணுவம், பொளின் முதலியவை உட்பட்ட அடக்குமுறை பந் திரத்தால் அப்பட்டமாகவும், நேரடியாகவும் தாக்குகின்றன்ர். அதேவேளே யில், உள்ளேயிருந்து தொழிலாளர் 3ர்க்கத்தைக்
கவிழ்க்கவும், பலவீனப்படுத்தவும் முயல்கின்றனர். ருது ஏஜன்
33

Page 28
டுகளை, சம்பளம் கொடுத்தும் கொடாமலும், தொழிலாளர் வர்க்கத்துக்குள் அனுப்புகின்றனர். இது ஸ்பெயின் உள்நாட்டு யுத்தத்தின்போது பிருங்கோ என்பவன் வகுத்த ஐந்தாம் படைத் தந்திரமாகும். எதிரேயுள்ள எதிரியை இனம்கண்டு கொள்வ தும், எதிர்த்துப் போரிடுவதும் வெகு சுலபமாகும். ஆனல், நமது அணிகளுக்குள் பல முயற்சிகள் எடுத்துப் பதுங்கியுள்ள எதிரியை எதிர்ப்பது மேலும் கஷ்டமாகும்.
தோழர் மாஒசேதுங் அவர்களின் ஈடிணையற்ற விவேகம் எங்கிருக்கிறது என்ருல், அவர் குறிப்பாக இந்த வளர்ச்சியை சீனு விடுதலை பெறுவதற்கு முன்பே தீர்க்கதரிசனமாகக் கண்ட திலும், இதற்கெதிராக மக்கள் விடுதலைச் சேனைப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததிலும் ஆகும். என்றும் மனதில் வைத்தி ருக்கவேண்டிய அவருடைய வார்த்தைகள் பின்வருமாறு:-
‘'எதிரி ஆயுத பலத்தால் நம்மை வெல்லமுடியாது என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இருந்தும், முதலாளி வர்க்கத்தின் முகஸ்துதி நமது அணிகளிலுள்ள உறுதிப்பாடு குன்றியவர்களை வெற்றிகொள்ளலாம். துப்பாக்கிகள் ஏந்திய எதிரிகளால் ஒரு போதும் வெல்லப்பட முடியாத, இந்த எதிரிகளுக்கு முன்னல் வீரர்கள் என்ற பெயருக்குத் தகுதியான, ஆனல், சீனியில் பொதிந்த ரவைகளுக்கு நின்றுபிடிக்க முடியாத கம்யூனிஸ்டுகள் சிலர் இருக்கலாம். அவர்கள் சீனியில் பொதிந்த ரவைகளால் தோற்கடிக்கப்படுவார்கள். இத்தகைய நிலைமைக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.’’
தமது மாபெரும் தலைவர் தோழர் மா ஒசேதுங் அவர்களின் விவேகமான வழிகாட்டலில் சீன கம்யூனிஸ்டுகள் தமக்கு முன் உள்ள அச்சுறுத்தலை உணர்ந்துகொண்டார்கள். அவர்கள் இந்த எச்சரிக்கையை, குறிப்பாக ஒரு சூடுகூட இல்லாமல் சமாதான மாக முதலாளித்துவம் மீட்கப்பட்ட சோவியத் யூனியனின் அவல நிகழ்ச்சியிலிருந்து பெற்ற எச்சரிக்கையை எடுத்துக் கொண்ட னர். ஆகவே, அவர்கள் தம் மத்தியில் ஒரு குருசேவ் தோன்று வதைத் தடுக்கும் நடவடிக்கைகளை உணர்வுபூர்வமாக எடுத்த னர். லியூ ஷெள-சி தலைமையிலான துரோகிகளின் ஒரு அற்ப கும்பல், சோவியத் யூனியனில் நிகழ்ந்ததுபோல, சீனவையும் முதலாளித்துவ மீட்சிப் பாதையில் இழுத்துச் செல்ல எடுக்கும் முயற்சிகளை மக்கள் தாங்களாகவே எதிர்த்துப் போராடுவதற் காக, 70 கோடி சீன மக்களையும் மார்க்ஸிஸம்-லெனினிஸம்
34

மாஒசேதுங் சிந்தனையால் ஆயுதபாணிகளாக்கத் தீர்மானித்த ଘot fit.
இந்தப் புரட்சி கலாசாரத்துறையில் வெடித்தெழுந்த கார ணம் என்னவென்றல், நாம் முன்பு பார்த்ததுபோல, சித் தாந்த-எதிர்ப் புரட்சி அரசியல்-எதிர்ப் புரட்சியின் முன்னுேடியாக எப்பொழுதும் விளங்குவதே ஆகும்.
இதைத்தான் சீனவில் திரிபுவாதிகளாக மாறியவர்கள், முத லாளித்துவப் பாதையில் செல்லத் தீர்மானித்தவர்கள், செய்ய எத்தனித்தார்கள். இவர்களில், சிலர் கட்சியிலும் அர சாங்கத்திலும் அதிகார பீடங்களில் ஏறியிருந்தார்கள். அவர் களுடைய பிரதான கேந்திரம் முன்னுள் பீக்கிங் மாநகரசபை கட்சிக் கமிட்டியாகும்.
பீக்கிங் மாநகரசபையின் முன்னுள் துணை மேயர் வூ ஹான் வரிசை வரிசையான பல கட்டுரைகளிலும், நாடகங்களிலும் கலாசார எதிர்ப் புரட்சிக்கு அத்திவாரம் இடத் திட்டம் வகுத் தான். இவனுடைய நாடகங்களில் ‘ஹாய் றுய் பதவியி லிருந்து நீக்கப்பட்டார்’ என்பது பலரும் அறிந்த ஒன்று. 400 ஆண்டுகளின் முன் மிங் வம்சத்தில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு பிரபுத்துவ அதிகாரியின் கதை இது. தற்காலத்தை எள்ளி நகையாட வூ ஹான் இக்கதையை உபயோகித்தான். இந்தக் கதை மூலம் அவன், 1959ல் ஒரு சில வலதுசாரிகள் வெளி யேற்றப்பட்டது பிழை என்று tCக்களுக்குச் சொல்ல முயன்ருன். அந்தத் தீர்ப்பு மாற்றப்படவுேண்டும் என அவன் விரும்பினுன்.
கட்சியின் தலைமை நிறுவனங்கள் வூ ஹானின் பிற்போக்கு இயல்பை அம்பலப்படுத்தும்படி தீர்மானித்தன. ஆனல், முன் சூள்ை பீக்கிங் மாநகரசபை கட்சிக் கமிட்டி இதை ஒட்டி ஒன் றுமே செய்யவில்லை. பின்னர் 1965, நவம்பர் 10ந் தேதி **வென் ஹ"வெ பெள' என்ற ஷங்காய் தினசரி ‘ஹாய் றுய் பதவி யிலிருந்து நீக்கப்பட்டார்’ என்ற புதிய வரலாற்று நாடகம் பற்றி யாஒ வென் யுவன் எழுதிய கட்டுரையைப் பிரசுரித்தது. இக்கட்டுரை வூ ஹானின் கட்சி எதிர்ப்பு, சோஷலிஸ்-எதிர்ப்பு இயல்பைப் புட்டுக் காட்டியது.
பீக்கிங் பத்திரிகைகள் ஒன்றுமே இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யவில்லை. பின்னர், நெருக்கடி வளர்ந்தபோது இக்கட்டுரை யும், முன்னர் இருட்டடிப்புச் செய்யப்பட்ட இது போன்ற இதர கட்டுரைகளும் பிரசுரிக்கப்பட்டன. ஆனல், இந்த தகராறை
35

Page 29
வெறும் கலைத்துறை விவாதமாக்கவும், வூ ஹானின் கட்சிஎதிர்ப்பு, சோஷலிஸ-ஏதிர்ப்பு இயல்பை அம்பலப்படுத்துவ தைத் தடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமர் ஆரம்பமாகியது. 1966, பெப்ரவரி நடுப்பகுதி முதல் மார்ச் இறுதி வரை இவ்விவாதம் மிகக் கசப்பாக இருந்தது. முன்பு வெளி வராது நசுக்கப்பட்ட மேலும் பல கட்டுரைகள்-வெளிவந்த பிற்போக்குக் கட்டுரைகளை விபர்சனம் செய்யும் கட்டுரைகள்வெளிவரத் தொடங்கின. .
1966, மே 10ல் விடுதலைத் தினசரியும், ‘வென் ஹாவெ Guu 6:wT ʼ ʼ என்ற ஷங்காய் தினசரியும் அ ர சி ய ல், கலாசார சித்தாந்த, துறைகளில் மாபெரும் கலா சார புரட்சி ஒன்றை நடத்தும் பிரச்சினையை எழுப்பின. இப்பிரச்சினையை கட்சியின் தலைமை பாரதூரமாக விவாதித் தது. மே 25ல் பிற்போக்கு முதலாளித்துவ கலைத்துறை **மேதைகளை' விமர்சித்து பீக்கிங் பல்கலைக் கழகத்தில் முதலா வது கொட்டை எழுத்து சுவரொட்டி வெளிவந்தது. பீக்கிங் பல்கலைக் கழகத்தின் அதிபர் ஒரு திரிபுவாதி என அம்பலப்படுத் தப்பட்டான். ஜூன் 2ந் தேதி பீக்கிங் வானெலி நிலையம் இந் தச் சுவரொட்டியை ஒலிபரப்பியது. ** மக்கள் தினசரி'யும், *செங்கொடி’யும் இதைப் பாராட்டி, தலையங்கங்கள் தீட்டின.
இது போர் முரசாக ஒலிக்க, பகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி ஆரம்பமாகியது. அதிகாரத்திலிருந்துகொண்டு முதலாளித்துவப் பாதையை மேற்கொண்ட நபர்களை எதிர்த் துப் போராடி, தூக்கி வீசுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுக் கப்பட்டது. பூதங்கள், பிசாசுகள் அனைத்தையும் விரட்டி அடிக் கும்படியும், பிற்போக்கு முதலாளித்துவ கலைத்துறை அதிகாரி களை விமர்சனம் செய்து, நிராகரிக்கும்படியும், சோஷலிஸ் பொருளாதார அடிப்படைக்குப் பொருந்தாத மேலமைப்பின் சகல விஷயங்களையும் விமர்சிக்கும்படியும் அறைகூவல் வேண்டி யது. நான்கு பழையவற்றை - அதாவது, எல்லா சுரண்டும் வர்க்கங்களினதும் பழைய கலாசாரம், பழைய கருத்துகள், பழைய பழக்கங்கள், பழைய வழக்கங்கள் ஆகியவற்றை-பெரு மளவில் ஒழிக்கும்படியும், நான்கு புதியவற்றை - அதாவது, பாட்டாளி வர்க்கத்தின் புதிய கலாசாரம், புதிய கருத்துகள், புதிய பழக்கங்கள், புதிய வழக்கங்கள் ஆகியவற்றை - பெரு மளவில் ஸ்தாபிக்கவேண்டும் என்றும் அறைகூவல் மக்களை வேண்டியது.
36

1966, ஆகஸ்ட் 8ந் தேதி சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி பற்றிய 16 அம்ச தீர்மானத்தை அங்கீகரித்தது. அப்பொழுது இயல் பாகவே சில கல்லூரிகளில் செங்காவலர்கள் தோன்றி விட்டனர். இந்த செங்காவலர் ஸ் த ரா ப ன த் தி ன் மூலம் பாட்டாளி வர்க்க கலாசார புரட்சியை நடத்த முடியும் எனக்கண்டது, தோழர் மாஒ அவர்களின் மேதாவிலாசத்துக்கு ஒரு சான்ருகும். ஆகஸ்ட் 18ந் தேதி தோழர் மாஒசேதுங் அவர்கள் புரட்சிகர மாணவர்களையும், ஆசிரியர்களையும் பீக்கிங் ாவில் பார்வையிட்டார். செங்காவலர் கைநாடாவைத் தாமே அணிந்து, செங்காவலர் ஸ்தாபனத்துக்கு பகிரங்க அங்கீகாரம் வழங்கினர்.
அன்று தொடக்கம், கலாசார புரட்சி என்பது எதிர்ப்பு கள் அனைத்தையும் வாரி அடித்துக்கொண்டு, காட்டாற்று வெள்ளம்போல் கரைபுரண்டு ஓடியது. இந்தச் செங்காவலர்கள் பல தசாப்தங்களில் செய்யமுடியாத விஷயங்களை ஒருசில நாட் களில், ஒரு சில வாரங்களில் சாதித்துவிட்டார்கள். அவர்கள் இக்காலாசார புரட்சியில் முன்னணிப் படையாக நடித்தார் கள். முதலாவதாக, அவர்கள் போராட்டங்களையும், சீர்திருத் தங்களையும் தமது சொந்தப் பாடசாலைகளிலும், கல்லூரிகளி லும் நடத்தினர். இந்தக் கல்லூரிகள் பலவற்றில் முதலாளித் துவ கலா “மேதைகள்' கொலுவீற்றிருந்தனர் என்பது இங்கு சொல்லித்தான் ஆகவேண்டும். அவர்கள் தொழிலாளர், விவ சாயிகள் மத்தியிலிருந்து வரும் மாணவர்கள் மீது இகழ்ச்சி மனுே பாவம் காட்டி வந்தனர். இந்த மாணவ, மாணவிகளால் ‘கன வாட்டிகளைப் பேசிப் பேசி, 'கன வாட்டி வின்மெயரின் விசிறி?* போன்ற நாடகங்களே நடிக்க முடியாவிட்டால், அவர்கள் தகாத வர்கள் என்று வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிடுவர்.
இந்த அதிகாரிகள், தோழர் மாஒ அவர்கள் நச்சுத்தன மான அமைப்பு என்று வருணித்த பரீட்சை முறைகளை வழி பாட்டுக்குரியதாகக் காட்டினர். இந்த அமைப்பின் சாராம்சம், மாணவன் எதிர்பாராத நிலையில் அவன்மீது திடீர்த் தாக்குதல் தொடுப்பதே என்று தோழர் மாஒ அவர்கள் கூறியதாகவும் தெரிகின்றது. X
செங்காவலர்கள் பாடசாலைகள், கல்லூரிகளிலிருந்து போராட்டத்தை சமுதாயத்துக்கு, வீதிகளுக்கு கொண்டு வந்தார் கள். ஆயிரம் ஆயிரமாண்டு காலமாக இருந்துவந்த பழைய சமு
*

Page 30
தாயம் விட்டுச்சென்ற குப்பைகூளங்களே கூட்டித் தள்ளினர். ஏகாதிபத்தியம் விட்டுச்சென்ற தீய விஷயங்களையும் தீமூட்டி எரித்தனர்.
பந்தோபஸ்து நிறுவனங்களால் கண்டுபிடிக்க முடியாதபடி பதுங்கியிருந்த எதிர்ப் புரட்சிவாதிகளை அம்பலப்படுத்தியும் அவர் கள் மாபெரும் சேவை செய்தனர். இவர்களில் பலர் நகரங் களுக்கு ஓடி, அங்கு மறைவாக வாழ்ந்து, எதிர்ப் புரட்சியின் வெற்றிக்காகக் காத்திருந்த நிலப்பிரபுக்களாவர். இந்தப் பிர புக்கள் இரகசியமாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த தமது நிலங்களின் உறுதிகளை மாத்திரமல்ல, வெள்ளி, தங்கப் பாளங் கள், துப்பாக்கிகள், கத்திகள், பழைய நாணயங்கள் முதலிய வற்றையும் செங்காவலர்கள் தோண்டி எடுத்தனர். கான்டன், பீக்கிங் நகரங்களில் நிகழ்ந்த பொருட்காட்சிகளில் நான் அவற் றைப் பார்வையிட்டேன். ஏகாதிபத்தியவாதிகளும், திரிபுவாதி களும் தமது ஏஜண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதும், எப்படி ஊளையிட்டனர் என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.
பாட்டாளி வர்க்கத்தின் தரத்துக்கு இசைவற்ற பாவனை களையும், உடைகளையும் உடைய நபர்களுக்கு எதிராக சுமார் மூன்று நாட்கள் செங்காவலர்கள் பலாத்காரம் பாவித்தது உண் மைதான். ஆனல், இந்தக் கட்டம் நீடித்திருக்கவில்லை. மக்கள் விடுதலைச் சேனையை தமது ஆதர்சமாகக் கொள்ளும்படி தோழர் லின் பியெள அவர்கள் அறைகூவல் விடுத்தார். பலவந்தத்துக் குப் பதில், அறிவுறுத்தி இணங்க வைக்கும்படி அறிவுரை கூறி ஞர். பலாத்காரம் உடலைமட்டும் தாக்கும்; ஆனல், அறிவுறுத் துவது உள்ளத்தையும் சென்று தொடும் என்றும் அவர் செங் காவலர்களுக்குக் கூறினர்.
ஆனல், செங்காவலர்கள் உபயோகித்ததைவிட பன்மடங்கு பலாத்காரம் அவர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டதை நாம் சுட்டிக் காட்டித்தான் ஆகவேண்டும். செங்காவலர்கள் ஒருவரையேனும் கொல்லவில்லை என்பது நிச்சயம். ஆனல், செங் காவலர் பலர் எதிர்ப் புரட்சிவாதிகளால் வதை செய்யப்பட்ட 6እ】 fዝ ̆.
செங்காவலர் என்பது ஒரு வர்க்க ஸ்தாபனம் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். தொழிலாளர், வறிய, கீழ் மத்திய விவசாயிகள், புரட்சிகர ஊழியர்கள், மக்கள் விடுதலைச் சேனை யினர், புரட்சித் தியாகிகள் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள் தான் செங்காவலர் அணியில் சேர்க்கப்பட்டனர். இது உறுதி
38

யான பாட்டாள் வர்க்க அடிப்படையைக் கொண்ட, புரட்சிகர சீன மக்கள், அனைவரினதும் ஆதரவைப்பெற்ற ஒரு ஸ்தாபனம்.
செங்காவலர் பழையவை அனைத்தையும் அழித்துவிட்டனர்; நிறுத்துவதற்கான நிறச் சின்னம் இனிமேல் சிகப்பு அல்ல என்று முதலாளித்துவ, திரிபுவாத பத்திரிகைகள் எழுதிய அசம்பாவித மான கதைகளை, பீக்கிங் சென்றிருந்தபடியால் நான் மறுத்து ரைப்பதும் அவசியம் எனக் கருதுகின்றேன். போக்குவரத்து வெளிச்ச அமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. அது போல, சமயச் சித்திரவதை பற்றிய கதைகள், முஸ்லீம்கள் பன்றி இறைச்சி புசிக்கும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என் பவை எல்லாம் வெறும் கற்பனையாகும். மதம்பற்றிய மனே பாவம் மிகத் தெளிவானது. யார் எந்த மதத்தை அனுஷ்டிப்ப தற்கும் அரசியல் சட்ட உரிமை உண்டு. ஆணுல், மதப் போர் வையில் எதிர்ப் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட எவரும் அனு மதிக்கப்படமாட்டார். இவற்றிற்கு எதிராகத்தான் செங்காவ லர்கள் தமது ஈட்டிமுனையைத் திருப்பி விட்டனர்,
இலங்கையின் முதலாளித்துவ தினசரி ஆசிரியர் தலையங்கம் ஒன்று தீட்டியதுபோல, சீனவில் நிகழ்ந்தது ‘பைத்தியத்தின் எல்லையில் நிகழும் கேலி நாடகம்' என்று ஒருவர் தீர்மானிக் கிமுரா? அல்லது அது மிகப் பெரும் அறிவுக் கொந்தளிப்பு என்று எண்ணுகின்ருரா? என்பது அவருடைய வர்க்க நிலைப் பாட்டைச் சார்ந்ததாகும். ஏனென்றல், சீனுவில் நிகழ்ந்தது ஒரு வர்க்கப் போராட்டமாகும். இந்த வர்க்கப் போராட்டத்தில், போரிடும் வர்க்கங்கள் நேருக்குநேர் பார்க்கும் என்று எதிர் பார்க்க முடியாது. இது இயற்கையானதே.
இந்த கலாசார புரட்சியால் சீன தன்னைத்தானே தனி மைப்படுத்திவிட்டது என்று சில முதலாளித்துவ, திரிபுவாதப் பத்திரிகைகள் எழுதிக் குவித்தன. இதன் அர்த்தம் யாதெனில், ஏகாதிபத்தியவாதிகள், நவீன திரிபுவாதிகள், பல்வேறுவிதமான பிற்போக்குவாதிகள் ஆகியோரிடமிருந்து சீன தன்னைப் பிரித் துக்கொண்டுவிட்டது என்பதேயாகும். ஆனல், இந்த மாபெரும் புரட்சிப் பெருக்கின் மூலம், சீன அனைத்துலக மக்களுடனும் அன்னியோன்யமாகிவிட்டது. இவர்கள்தான் உலக ஜனத்தொ கையில் 90 வீதத்துக்கு மேலானவர்களாக விளங்குகின்றனர்.
சீன கலாசார புரட்சி என்னும் பொருள்பற்றி: விரோத நலன்கள் ஒரு பொது மொழியில் சம்பாஷணை நடத்துவது சாத் தியமல்ல. காரணம், நாம் எதிர்த் துருவங்களில் நிற்கின்ருேம்.
39

Page 31
ஆனல், ஒரு விஷயத்தை புரிந்துகொள்வது நல்லது. கலா சார புரட்சி என்பது "பொருளாதார கஷ்டங்களிலிருந்து மக்க ளைத் திசை திருப்பிவிடும் ஒரு முயற்சியல்ல. சீனுவின் பொரு ளாதாரம் சிறப்பாக உள்ளது. அவர்கள் அமோக அறுவடை கள் செய்கின்றனர். அவர்கள் எந்த ஒரு நாட்டுக்கும் ஒரு சத மேனும் கொடுக்குமதி இல்லை. பல துறைகளில் அவர்கள் முன் னேற்றப் பாய்ச்சலை எதிர்நோக்குகின்றனர். ஒரு மகத்தான தொழில் புரட்சியின் போக்கில் உள்ளனர் என்பதில் சந்தேக மில்லை. அவர்கள் தொழில் நுட்பவியலில் தமது முன்னேற் றத்தை ஏற்கெனவே காட்டிவிட்ட்டனர்.
சீன கலாசார புரட்சி அழகுப் பொருட்கள், உடைகள், சிகையலங்காரம், வீதிப் பெயர்கள் முதலியவற்றில் அக்கறை செலுத்துவது ஏன் என்று சிலருக்குப் புரியவே இல்லை. ஆஸ்தி ரேலிய பத்திரிகை 'வான்கார்ட்" சுட்டிக் காட்டியதுபோல, ‘அழகுப் பொருட்கள், பைத்தியக்காரத்தனமான உடைகள், நாகரிகப் பாவனைகள், கடைகோடி சிகையலங்காரங்கள் எல் லாம் முதலாளிகளால் தீவிர ஊக்கமளிக்கப்படுகின்றன. இப் பொருட்கள் லாபங்களின் ஊற்று மூலமாகும். அதேவேளையில் பாரதூரமாகச் சிந்திப்பதைத் தடுப்பதற்காக, வாழ்க்கையின் அற்ப விஷயங்களில் மக்களின் கவனத்தை இழுக்கும் அசுர சாதனங்கள் ஆகும். இவ்விஷயங்கள் மக்களைப் பெருமளவில் பீடிக்கின்றன. இவை மக்களை முதலாளித்துவத்துடன் பிணைப் பதற்கு உதவுகின்றன. இவை முதலாளித்துவத்தின் உழுத்துப் போன இயல்பின் வெளிப்பாடாகவும், அதேவேளையில் முத லாளித்துவத்தையும் அதன் செல்வாக்கையும் பேணிக்காக்கும் முறையாகவும் விளங்குகின்றன. சீன மக்கள் இந்த பாதிப்பு களை எதிர்த்துப் போரிடுவது சரியானதே. இருந்தும், "எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை' என்பது பழைமையான முது மொழியாகும்.
கல்வித்துறையில் பல சீர்திருத்தங்கள் நிகழ்வதற்கு இக் கலாசார புரட்சி காரணமாய் இருந்திருக்கின்றது. புரட்சி நடைபெற்று இத்தனை ஆண்டுகள் கழிந்த பின்னும், தொழிலா ளர், விவசாயிகளின் பிள்ளைகள் போதிய விகிதம் சர்வகலா சாலைகளிலும், இதர உயர்தர கல்விக் கழகங்களிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதை சீன உணர்ந்துகொண்டது. முன் ள்ை முதல்ாளிகள், நிலப்பிரபுக்களின் பிள்ளைகளுக்கு இன்னும் சலுகைகள் கிட்ைடத்து வந்தன. அவர்கள் வாழ்வில் நல்ல ஆரம் பத்தைப் பெற்றனர். எனவே, குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு பாட
40

சாலைகளும், பல்கலைக் கழகங்களும் மென்மேலும் அதிகப்படியான தொழிலாளர் விவசாயிகளின் பிள்ளைகள் அங்குசென்று படிப்ப தற்கான பிரவேச முறையில் சீர்திருத்தங்கள் செய்வதற்காக மூடப்பட்டன. இவ்வாறு அன்ன லூயிஸ் ஸ்ட்ருேங் கூறியது போல, “வரலாற்றில் முதன்முதலாக சிவில் சேவைக்கு கலா நிபுணப் பரீட்சையை பூர்வாங்க நிபந்தனை ஆக்கிய சீனு, பரீட்சை முறை என்பது படிப்பாளி வர்க்கத்துக்கும், தொழிலாளர் வர்க்கத் துக்கும் இடையில் எழுப்பப்பட்ட நிலப்பிரபுத்துவ, முதலாளித் துவச் சுவர் என்று கருதி, அதை உடைத்தெறிகின்றது.
மாணவர்கள் பகுதிநேரம் வேலைசெய்து, பகுதிநேரம் படிக் கின்ற ஒரு புதிய முறையை, பகுதிநேர வேலை, பகுதிநேர படிப்பு முறையை சீனு பரிசீலனை செய்து கொண்டிருக்கின்றது. அறிவுப் படிப்பில் செலவழிக்கப்படும் நேரம் பெரு மளவில் வெட்டப்பட்டுவிட்டது. கல்வி உற்பத்தியுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. ஆலைகளும், கம்யூன்களும், பாடசாலைகளை நடத்தும்படி ஊக்கமளிக்கப்படுகின்றன. ஆலையிலுள்ள குறிப் பிட்ட அளவு தொழிலாளர்கள் சுமார் 6 மாதம் விவசாய கம் யூன்களில் வேலைசெய்யும் அதேசமயத்தில் அதே அளவு விவசாயி கள் அதே ஆலையில் அதே அளவு காலத்துக்கு வேலைசெய்யும் முறைகூட இன்று பரீட்சிக்கப்படுகின்றது. இவை தொலைதுாரம் செல்வாக்கு வகிக்கக்கூடிய சீர்திருத்தங்களாகும். இவை எல் லாம் மூளை உழைப்புக்கும், உடலுழைப்புக்கும் இடையிலுள்ள, தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையிலுள்ள , நகரங் களுக்கும் நாட்டுப்புறங்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசங்களை ஒழித்துக்கட்ட எடுக்கும். முயற்சிகளாகும்.
பழையவை அனைத்தையும் கலாசார புரட்சி தாக்குகின் றது, அழிக்கின்றது என்ற தவருன கருத்தை முதலாளித்துவ வர்க்க பத்திரிகைகள் பரப்பி வருகின்றன. இது உண்மையல்ல. தியென் அன் மென் சதுக்கத்தின் பெயர்கூட மாற்றப்பட்டு விட் டது என்பதுகூட ஒரு கயிறுதிரிப்பேயாகும். நடைபெற்றது என்னவென்முல், பழையவை அனைத்தும் விமர்சன ரீதியில் ஆராய்ந்து மதிப்பீடு செய்யப்படுகின்றன; நல்லவை நீடித்திருக்க அனுமதிக்கப்படுகின்றன. கலாசார புரட்சி கூறியதாவது:- 'தமது அறிவின் ஏகபோகத்தைக் கொண்டு உங்கள்மீது ஆதிக் கம் செலுத்தும் பண்டிதர்கள் ஒழியட்டும். தொன்னூல்களை, வேண்டுமானுல் படியுங்கள். ஆணுல், அவை கூறுவதைப்போல நடவாதீர்கள். பழையதிலிருந்து புதியது தோன்றியது எப்படி என்பதை அவற்றில் நீங்கள் படிக்கலாம். நீங்கள் வாழ்வது இன்
41

Page 32
றைய சகாப்தத்தில் ஆகும். அவற்றின் ஆணிவேர் வரை சென்று, அவற்றை சிருஷ்டிக்கும் விவசாயிகள், படையினரிடமிருந்து கற் றுக்கொள்ளுங்கள். உங்களுடைய வீர கதாநாயகர்களை கண்டு பிடித்து, இன்றைய வடிவங்களில் விளக்கம் கொடுங்கள். பிதோ வன் இன்றைய மக்களுக்கு கூறக்கூடியவற்றை பெற்றிருந்தால், அவன் வாழ்வான், வரவேற்கப்படுவான். ஆணுல், உங்கள் கடம்ை பிதோவனை பிரதிசெய்வதல்ல; ஜார் மன்னர்களின் நடன நாட கங்களைக் "காப்பி அடிப்பதல்ல. உங்களுடைய கடமை, உங்க ளைச் சூழ்ந்துள்ள வாழ்வுக்கு புதிய தாள இசைகளை சிருஷ்டிப்ப தாகும். '
**விவசாயிகளின் சேற்ருல் உங்களை மூடிக்கொள்ளுங்கள்’’ என்பதன் அர்த்தம், மக்களை நன்முகப் புரிந்து, அவர்களிட மிருந்து கற்றுக்கொள்வதற்காக, மக்கள் மத்தியில் செல்லும் முக் கியத்துவத்தை, மக்களோடு மக்களாய் வாழ்வதன் முக்கியத்து வத்தை, வலியுறுத்துவதேயாகும். தொழிலாளர்களும், விவசாயி களும்தான் உலகச் செல்வங்கள் அனைத்தையும் சிருஷ்டிக்கிருர் கள். ஆகவே, கலையும் இலக்கியமும் அவர்களுக்கு சேவைசெய்ய வேண்டும். அவர்களுக்குச் சேவைசெய்ய வேண்டுமானல், கலை இலக்கிய ஊழியர்கள் தொழிலாளர், விவசாயிகள் மத்தியில் சென்று, அவர்களுடைய வாழ்வைப் புரிந்துகொள்ளவேண்டும். இக்கடமையை ‘விவசாயிகளின் சேற்ருல் தங்களை மூடினல்"தான் அவர்களால் நிறைவேற்றமுடியும். ஆனல் ஒன்று, விவசாயி களின் கால்களில் படிந்துள்ள சேற்றை நீரால் கழுவிவிட முடி யும். முதலாளி வர்க்க புத்திஜீவிகளின் மூளையிலுள்ள சேற் றைக் கழுவ நீண்டகாலம் செல்லும், சிலரைப் பொறுத்த வரையில், கழுவிச் சுத்தம் செய்யவே முடியாது.
விடுதலைக்கு முந்திய சீனுவில் கதை ஒன்று வழங்கி வந்தது. பல்கலைக் கழகத் தோழர்கள் சில விவசாயிகள் மத்தியில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்கள். அவர்கள் வறிய விவசாயிகளு டன் தங்கவேண்டும் என்று கட்சி எப்பொழுதும் வலியுறுத்தி யது. இந்த புத்திஜீவிகள், விவசாயிகளின் வீடுகளில் தங்களால் தூங்கமுடியவில்லை என்றும், அங்கு பேணும். மூட்டைப் பூச்சி யும் நிறைந்திருக்கிறதென்றும் தோழர் மாஒசேதுங் அவர்களி டம் முறையீடு செய்தனர். அவர்கள் மீண்டும் சென்று, பேன்களிடமும் மூட்டைகளிடமும், நன்ருக கடிவாங்க வேண்டும் என்றும், அப்பொழுதுதான் அவர்கள் விவ சாயிகளின் வாழ்வைப் புரிந்து கொள்வர் என்றும் தோழர் மாஒ பதில் கூறினராம். இவ்வாறு தோழர் மாஒசேதுங் அவர்கள்
42.

விவசாயிகளின் சேற்றில் தமது பாதத்தை நன்கு ஊன்றியிருந் தார். வேறு எந்த ஒரு தலைவரும் புரிந்துகொள்ளாத அளவில் அவர் விவசாயிகளைப் பற்றி அறிந்திருந்தார். எனவேதான், அவர்கள் புரியக்கூடிய எளிய மொழியில் அவரால் பேச முடிகின் றது. ஆகவேதான், அவர் என்றும் கனம் பண்ணப்படுகின்ருர்,
ஏகாதிபத்தியவாதிகளும், முதலாளி வர்க்கமும் மக்கள் மன தைக் கவர்வதற்காக, நாள்தோறும், மணிதோறும் உயர்ந்த செலவிலும், ஒழுங்கான முறையிலும் பிரசார இயக்கம் ஒன்றை செய்து வருகின்றனர். நாம் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் முதலாளித்துப் பிரசாரத்தால் தாக்கப்படுகின்ருேம். . முதலாளி வர்க்கத்தின் பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானெலி, திரைப்படம், மதபீடம், பாடசாலைகள், கலை-இலக்கியம் முத லியவற்றின் பிரசாரத்தால் பாதிக்கப்படுகின்ருேம். நமது மூளை ஒருபோதும் வெற்றிடமாக இருப்பதில்லை. அதில் முதலாளித் துவ சித்தாந்தம் அல்லது பாட்டாளி வர்க்க சித்தாந்தம் இருக் கும். தோழர் மாஒ அவர்கள் ஒருகால் சுட்டிக்காட்டியது போல, நமது மூளையில் இரண்டு சித்தாந்தங்களும் நீண்டகாலம் சமாதான சகவாழ்வு நடத்தமுடியாது. முதலாளித்துவ சித்தாந் தம் அல்லது தொழிலாளர் வரிக்க சித்தாந்தம் இறுதியில் வெற்றி யடையும். மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி என் பது சீன மக்களின் மனதில் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை தீர்க்கமான வெற்றிபெறச் செய்யும் ஒரு முயற்சியே ஆகும்.
இவ்வாறு, மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி என்பது, தோழர் மாஓசேதுங் அவர்களும், அவருடைய நெருங் கிய போராட்ட நண்பர் தோழர் லின் பியெள அவர்களும் தலைமைதாங்கும் பாட்டாளி வர்க்க ஆணைப்பகுதியின் கீழுள்ள புரட்சி சக்திகளுக்கும் , தம்மை ஏகாதிபத்தியவாதிகளுக்கும், நவீன திரிபுவாதிகளுக்கும், சியாங்கை-ஷேக் கும்பலுக்கும் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டட், சோவியத் யூனியனிலும், நவீன திரிபுவாதிகள் ஆளுகின்ற இதர நாடுகளிலும் நேர்ந்ததுபோல, சீனவிலும் முதலாளித்துவத்தை மீட்க விரும்பிய, லியூ ஷெள-சி தலைமைதாங்கும் விரல்விட்டெண்ணக் கூடிய ஒரு சில கருங்காலி கள், துரோகிகளுக்கும் இடையில் நடைபெறும் ஒரு பெரும் வர்க்கப் போராட்டமேயாகும்.
பயங்கரமான இந்த வர்க்கப் போராட்டம் உண்மையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகார நிலைமைகளின் கீழ் நடைபெறும் ஒரு புரட்சியாகும், பல கட்டங்களில் அது உக்கிர வடிவங்களை எடுத்தது. இது புரிந்துகொள்ளக் கூடியது. காரணம், ஏகாதி
43

Page 33
பத்தியவாதிகளும், திரிபுவாதிகளும், சகலவிதமான பிற்போக்கு வாதிகளும், சீனுவிலுள்ள அவர்களின் ஏஜண்டுகளும், புரட்சிப் பாதையிலிருந்து சீனுவைத் திசைதிருப்பிச் செல்ல சதி செய்தார் கள். எந்த முறைகளைக் கையாள்வதற்கும் அவர்கள் சித்தமா யிருந்தார்கள்.
தோழர் லின் பியெள அவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது மாநாட்டில் கூறியதுபோல, ‘முதலாவது புரட்சிகர உள் நாட்டு யுத்த காலத்திலேயே லியூ ஷெள-சி கட்சியைக் காட்டிக் கொடுத்தான்; எதிரியிடம் சரணடைந்தான்; மறைந்திருக்கும் துரோகியும் கருங்காலியுமாக மாறினன்; அவன் ஏகாதிபத்திய வாதிகள், நவீன திரிபுவாதிகள், கோமிந்தாங் பிற்போக்குவாதி கள் ஆகியோரின் குற்றத்தில் ஊறிப்போன அடிவருடி அதிகா ரத்திலிருந்துகொண்டு முதலாளித்துவப் பாதையை மேற்கொள் ளும் நபர்களின் ஏகப் பிரதிநிதி என்பது இப்பொழுது பரிசீலனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. ’’ u
புரட்சி சக்திகளுக்கும், எதிர்ப்புரட்சி சக்திகளுக்கும்.இடையில் நிகழ்ந்த இப்பெரும் போராட்டத்தில், தோழர் மாஒசேதுங் அவர்களின் மகோன்னத மேதாவிலாசம்தான் புரட்சி சக்திகளை வெற்றிக்கு வழிநடத்தும் சரியான கொள்கைகளையும், தந்திரோ பாயங்களையும் வகுத்துக் கொடுத்தது. அவர் மேலிருந்து எடுக் கும் அதிகார நடவடிக்கைகள் மூலம் இந்த சித்தாந்தப் போராட் டத்துக்குத் தீர்வுகாண முயலவில்லை. மாருக, அவர் வெகுஜனங் களை இதில் பங்குபற்றுமாறு அழைத்தார். காலப்போக்கில் இது உலகம் என்றுமே காணுத மிகப்பெரும் வெகுஜனப் போராட் டமாக மாறியது. இதன்மூலம் பரந்துபட்ட பொதுமக்கள் மீது தாம் கொண்டுள்ள பெரும் விசுவாசத்தையும், நம்பிக்கையை யும் காட்டிவிட்டார். ‘மக்கள், மக்கள் மட்டுமே, உலக வர லாற்றைச் சிருஷ்டிக்கும் உந்து சக்தியாவர்' என்ற தமது வார்த்தைக்கிணங்க வாழ்ந்து காட்டியுள்ளார். அவர் வெகு ஜனங்கள் மீது எல்லையற்ற விசுவாசம் உடையவர்.
ஒரு சில முதலாளித்துவ பாதையினரைத் தனிமைப்படுத்து வதற்கு, உண்மையான புரட்சி சக்திகளில் ஏகப் பெரும்பான் மையை ஐக்கியப்படுத்தும் தந்திரோபாயங்களை வகுத்தார். புரட்சிகர ஊழியர்கள், மக்கள் விடுதலைச் சேனை, புரட்சிகர பொதுமக்கள் ஆகியோரின் பிரதிநிதிகளின் ஐக்கியத்தைக் கொண்ட புரட்சிகர ஒன்றில்-மூன்று இணைப்பை ஆதரித்தார். சரியான தருணத்தில் பரந்துபட்ட பொதுமக்களில் இடதுசாரி
44

களுக்கு ஆதரவளிக்குமாறு மக்கள் விடுதலைச் சேனைக்கு அறை கூவல் விடுத்தார். மக்கள் விடுதலைச் சேனை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் தூண் என்பதும் உண்மையில் நிரூபிக்கப்பட் டது. தகுதியான சமயத்தில், சகல துறைகளிலும் தொழிலா ளர் வர்க்கம் தலைமை தாங்கவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். இந்த உத்தரவின் பிரகாரம்தான் , தொழிலாளர் வர்க்கமும், வறிய, கீழ்மத்திய விவசாயிகளும் பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் புகுந்து, புரட்சிகர ஐக்கி யத்தை உருவாக்கி, போராட்டம் - விமர்சனம் - மாற்றம் - இவற் றினை அமுல் நடத்தினர்.
இவ்வாறு பொதுமக்களைச் சார்ந்திருப்பதன் மூலம், தோழர் மாஓசேதுங் அவர்கள் "பூரணமான பொருள்முதல்வாதிகள் அச்சமற்றவர்கள்" என்ற தமது போதனைக்குத் தக வாழ்ந்து காட்டினர். வர்க்க எதிரிகள் தொல்லைகளைத் தூண்டினல், மக் களைத் தட்டியெழுப்பி, எதிரிகளை அடித்து வீழ்த்துவதுதான்.
எதிரிக்கு எதிரான போராட்டத்தில் பெரிதும் குறிப்பிடத் தக்கது என்னவென்ருல், தோழர் மாஒசேதுங் அவர்கள் எப் பொழுதும் கூறிவந்த 'முரண்பாடுகளைப் பயன்படுத்தி, பலரை வென்றெடுத்து, சிலரை எதிர்த்து, நமது எதிரிகளை ஒவ்வொரு வராக நசுக்கும் தந்திரோபாயமேயாகும்.”* தோழர் மாஓசேதுங் அவர்கள் மீண்டும் மீண்டும் நமக்குப் போதித்ததாவது:- *போதனையளிப்பதன் மூலம் மேலும் அதிகப்படியாணுேருக்கு உதவிசெய்து, தாக்குதலின் இலக்கைச் சுருக்கவேண்டும்'; 'முழு மனித வர்க்கத்தையும் விடுதலை செய்வதன் மூலம்தான் பாட் டாளி வர்க்கம் அதன் சொந்த இறுதி விடுதலையைப் பெறமுடி யும் என்ற மார்க்ஸின் போதனையை நடைமுறைப்படுத்த வேண்டும்.'"
அதுபோல, எதிரிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய மானது என்னவென்றல், சுயநலத்தை எதிர்ப்பதற்கும், திரிபு வாதத்தை விமர்சிப்பதற்கும் உள்ள உறவுபற்றிய தோழர் மாஒ சேதுங் அவர்களின் விளக்கமாகும், திரிபுவாதம் தோன்றுவதற் குரிய காரணங்களில் ஒன்று என்னவென்ருல், பொது நலத்துக்கு மேல் சுயநலத்தை வைக்கின்ற, சொந்த நலன்களுக்கு முக்கி யத்துவம் கொடுக்கின்ற, புகழ், கீர்த்தி, பொருளாயத நலன், லேசான சொகுசு வாழ்வு இவற்றுக்குப்பின் ஒடுகின்ற முதலாளித் துவ சித்தாந்தத்தை சோஷலிஸ் சமுதாயம் பெற்றிருப்பதாகும். இந்த சுயநலக் கருத்தை எதிர்க்காவிட்டால், திரிபுவாதத்தை எதிர்ப்பது அசாத்தியம். இங்குதான் தோழர் மாஓசேதுங் அவர்
45

Page 34
களின் மாபெரும் விவேகம் புதைந்து கிடக்கின்றது. அதாவது, கலாசார புரட்சியின் இரண்டாவது ஆண்டில் ‘சுயநலத்தை எதிர்த்து, திரிபுவாதத்தை விமர்சிப்பது' என்ற இரட்டை சுலோகத்தை வெளியிட்டார். உண்மையில், இந்த இரண்டு சுலோகங்களும் ஒன்ருேடொன்று பின்னிப் பிணைந்தவை. தனி நலத்துக்கு மேல் கூட்டுநலத்தை வைக்காவிட்டால், சொந்த நலன்களைத் தூக்கி வீசாவிட்டால், சீனுவின் நலன்களை தந்தை வழி நலன்களுக்கு மேல் வைக்காவிட்டால், உலகம் முழுவதன் நலன்களை சீனவின் நலன்களுக்கு மேல் வைக்காவிட்டால் திரிபு வாதத்தைத் தோற்கடிப்பது அசாத்தியம்.
உலகப் பெரும் மதங்கள் அனைத்தும், சுயநலத்தை எதிர்க் கும்படி மக்களுக்கு அறிவுறுத்த பல்லாயிரம் ஆண்டுகளாக முயன்று வந்துள்ளன. ஆனல், அவை ஒரு அற்ப அளவிலேனும் வெற்றிபெற்றது கிடையாது. இன்று, உலகில் முதல் தடவையாக, மாஒசேதுங் சிந்தனையின் வழிகாட்டலின் கீழ், சுயநலத்தை எதிர்த்துப் போராடத் தெரிந்த, தனியார் நலனுக்கு மேல் கூட்டு நலனை வைக்கக் கற்றுக்கொண்ட, தான் கஷ்டமான கட மையைச் சுமந்துகொண்டு, பிறருக்கு லேசானதைக் கொடுக் கின்ற, சொந்தப் புகழ், கீர்த்தி, பொருளாயத நலன், லேசான சொகுசு வாழ்வு இவற்றை நாடி ஓடாமல், கூட்டு நலன்களுக் காக உழைக்கின்ற, சொந்த மாவட்டம் அல்லது மாகாணத் தைச் சிந்திப்பதற்குப் பதில், முழு சீனவையும் பற்றிச் சிந்திக் கின்ற சீனுவில் புரட்சியும், சோஷலிஸமும் வெற்றி பெறுவதை மாத்திரம் எண்ணுமல், உலகரீதியில் அவை வெற்றி பெறுவது பற்றிச் சிந்திக்கின்ற, புத்தம் புதிய மக்கள் சந்ததி ஒன்று சீன வில் தோன்றி வளர்கின்றது. உலகின் இத்தகைய ஒரு பெரும் பரப்பில், மக்களின் சிந்தனையில் ஏற்பட்ட ஒரு புரட்சி உண் மையில் மிகப்பெரும் புரட்சியாகும்.
சீனவில் எழுந்த மாபெரும் புரட்சி எழுச்சியின் மிக முக் கியமான விளைவுகளில் நம்மைப் பெரிதும் கவர்ந்த ஒன்று யாதெ னில், சீன புரட்சி மட்டும் வெற்றிபெற்ருல் போதாது; மேலை நாடுகளுடன் போட்டியிட்டு, தமது வாழ்க்தைத் தரத்தை மட் டும் உயர்த்தினல் போதாது; உலகப் புரட்சியும் வெற்றிபெற வேண்டும்; இன்னும் விடுதலை பெருத மக்களின் தலைவிதியை தாம் தெளிவாக மனதில்கொண்டு, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சீனவின் பரந்துபட்ட பொதுமக்கள் தெளி வாக உணர்ந்து, விழிப்புற்றதாகும். தோழர் மாஒ அவர்கள் 1968ல் கூறியதை தெளிவாக உணர்கிருர்கள். அதாவது:- "லெனினிஸ கண்ணுேட்டத்தின் பிரகாரம் ஒரு சோஷலிஸ நாட்
46

டின் இறுதி வெற்றிக்கு உள்நாட்டு பாட்டாளி வர்க்கத்தினதும், பரந்துபட்ட பொது மக்களினதும் முயற்சிகள் இன்றியமையா தவை; அது மட்டுமல்ல, மனித குலம் முழுவதையும் விடுதலை செய்யும் உலகப் புரட்சியின் வெற்றியும், உலகம் முழுவதிலும் மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பின் அழிவும் சம்பந்தப்பட்ட ஒன்ருகும். எனவே, நமது நாட்டுப் புரட்சியின் இறுதி வெற்றி பற்றி லேசாகக் கதைப்பது தவருகும். அது லெனினிஸத்துக்கு விரோதமானது. உண்மைகளுக்கு புறம்பானது" . உலகில் இன் னும் விடுதலை அடையாத மக்கள் பகுதியைச் சேர்ந்த நாம், இதுபற்றி இவ்வளவு தெளிவாகவும், உணர்வு பூர்வமாகவும் சொல்லப்பட்டதை இதற்குமுன் கேட்டதேயில்லை. சீன விடுதலை பெறுவதற்கு முன், சீனுவின் விடுதலைப் பிரதேசங்கள் விடுதலை செய்யப்படாத பிரதேசங்களுக்கு எவ்வாறு விளங்கியதோ, அவ் வாறு இன்றையச் சீன விடுதலை பெருத உலகப் பகுதிக்கு அவ்வாறு விளங்குகின்றது.
மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி பன்முக வெற்றிகளை ஈட்டியதன்மூலம், சீனவின் நிறம் மாறுவதை தடை செய்துள்ளது. சீனவில் முதலாளித்துவ மீட்சியை தடுத்துள்ளது. லியூ ஷெள-சி தலைமையிலிருந்த துரோகிகளையும் கருங்காலிகளையும் அம்பலப்படுத்தியுள்ளது. சீனுவில் பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தை பாதுகாத்து, பலப்படுத்தியுள்ளது. புரட்சியை இறுதி வரை நடத்துவது எப்படி என்று காட்டியுள்ளது. சீனவை உலகப் புரட்சியின் தளமாகப் பேணி வைத்திருக்கிறது. ஏகாதி பத்தியவாதிகள், திரிபுவாதிகள், பலவிதமான பிற்போக்குவாதி கள் அனைவருக்கும் தலையடி கொடுத்துள்ளது. மகத்தான பாட் டாளி வர்க்க கலாசார புரட்சியின் காரணமாக, சீன புதுப் பலம்பெற்ற ராட்சஸன்போல் கம்பீரமாக விளங்குகின்றது. பிற் போக்கு உலகம் அதைக்கண்டு ஏற்கெனவே பீதியடையத் தொடங்கிவிட்டது.
கிறெம்ளின் செவ்வொளி அணைந்துவிட்டது. தியென் அன் மென் சதுக்கத்தின் சிவப்பு விளக்கு மென்மேலும் சிவப்பாகவும் பிரகாசமாகவும் துலங்குகின்றது; உலகம் பூராவுமுள்ள அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக காட்சி யளிக்கின்றது.
47

Page 35
அத்தியாயம் IV
மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சிக்கு மாஓசேதுங் வழங்கிய சாதனை
சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கத்தில் இன்றுள்ள நிலை0ை சில அம்சங்களில் 1917 மகத்தான அக்டோபர் புரட்சியை அடுத்த காலத்தில் இருந்த நிலைமைபோல் இருக்கின்றது. ரஷியா வில் லெனினும் போல்ஷிவிக்குகளும் புரட்சிக்கு தலைமைதாங்கி ஈட்டிய வெற்றி, புரட்சியை எதிர்த்த-அதற்கு பதிலாக பாராளு டான்றப் பாதை மூலம் சமாதான மாற்றம் பற்றி உபதேசம் செய்துவந்த-பழைய கால சமூக ஜனநாயகவாதிகளை இயற்கை யாகவே அவமானத்திற்கு உள்ளாக்கிவிட்டது
S2 *
இரண்டாவது சர்வதேசியத்தைச் சேர்ந்த பழைய சமூக ஜனநாயக கட்சிகள் எல்லாவற்றுக்குள்ளும் ஒரு மகத்தான் புரட்சிகர அறிவுப் பிரகாசம் தோன்றியது. லெனின் அவர் களின் வழிகாட்டலில், இந்த சமூக ஜனநாயகக் கட்சிகளி லிருந்த புரட்சிகர இடதுசாரிகள் இரண்டாவது சர்வதேசியத் தலைமைப் பீடத்தின் திரிபுவாதத் தத்துவங்களை உதறித்தள்ளி விட்டு, புதிய மூன்ருவது சர்வதேசியத்தை அமைக்க முன்வந் தார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக இன்றைய சர்வதேசிய கம்யூ னிஸ் இயக்கத்திலும் அத்தகைய ஒரு பிரகாசம் தோன்றி வருகின்றது. நமது சகாப்தத்தின் மிகப் பெரும் மார்க்ஸிஸலெனினிஸவாதியான தோழர் மாஒசேதுங் அவர்களின் வழி காட்டலில், சீன புரட்சியும் அதுபோல மகத்தான பாட்டாளி
48

வர்க்க கலாசாரப் புரட்சியும் ஈட்டிய வெற்றிகளால் உற்சாகம் எய்தி, பழைய கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்த புரட்சிகரக் குழுக்கள், இந்தக் கட்சிகளின் திரிபுவாதத் தலைமையை அரசி யல் ரீதியிலும் ஸ்தாபனரீதியிலும் உடைத்து வெளியேறிக்கொண் டிருக்கின்றன. சமீப காலங்களில் பல புதிய 10ார்க்ஸிஸம்லெனினிஸ குழுக்களும் கட்சிகளும்கூடத் தோன்றியுள்ளன.
இந்த புதிய மார்க்ஸிஸம்-லெனினிஸ கட்சிகளைக் கட்டி வளர்ப்பதற்கு மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மாஒசேதுங் சிந் தனைப் படிப்பு முக்கியமானது. இந்தக் கட்சிகள் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற வகையில் தமது கடமை களை நிறைவேற்றுவதற்கு மிக முக்கியமான தேவை என்ன வென்ருல், அவை மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மாஓசேதுங் சிந் தனையால் ஆயுதபாணிகளாக்கப்படவேண்டும். இந்தப் பிரச்சினை **ஒரடி முன்னே, ஈரடி பின்னே,' " "யாது செய்வது?’ என்ற தமது மகத்தான படைப்புகளில் லெனின் அவர்களாலும், **சோவியத் யூனியன் (பொல்ஷிவிக்குகளின்) கம்யூனிஸ்ட் கட்சி யின் சுருக்க வரலாற்றில் ஸ்டாலின் அவர்களாலும் அழுத் தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே, புதிதாகத் தோன்றி வளரும் மார்க்ஸிஸம்-லெனி னிஸ் கட்சிகளைப் பொறுத்த வரையில், தம்மை சரியான தத்துவத் தால் ஆயுதபாணிகளாக்கிக் கொள்வது மிக முக்கியமான கடமை யாகும். இதன் அர்த்தம் அவற்றை மார்க்ஸிஸம் - லெனினிஸத் தால் ஆயுதபாணிகள் ஆக்குவதாகும். ஆனல், இன்று, மார்க்ஸி ஸம்-லெனினிஸப் படிப்பு என்பது இன்றைய சகாப்தத்தின் மார்க் ஸிஸம்-லெனினிஸமாக விளங்கும் மாஒசேதுங் சிந்தனைப் படிப்பை யும் உள்ளடக்கியதாகும். வேறு வார்த்தைகளில் சொன்னல், மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சிக்கு தோழர் மாஒசேதுங் அவர்கள் வழங்கிய சாதனை பற்றி நாம் படிக்க வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாத்திரமல்ல, இதர மார்க்ஸிஸம்-லெனி னிஸக் கட்சிகள் அனைத்துக்கும் இது முக்கியமானதாகும்.
மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சிக்கு தோழர் மாஒசே துங் அவர்கள் வழங்கிய செழிப்பான, பலதரப்பட்ட சாதனைகள் அனைத்தையும் ஒரு கட்டுரையில் விபரமாக விளக்குவது சாத்தியம் என்று யாரும் எண்ணி விடக் கூடாது. இத்தகைய ஒரு பூரண 10ான ஆராய்வுக்கு கூடிய காலமும், நீடிய உழைப்பும், ஆராய்ச்சி யும் தேவை. எனவே, இக் கட்டுரை அந்தத் திசையில் முதலடி எடுத்து வைப்பதாகவே இருக்கும்; இது பூரணமானது அல்லவே அல்ல.
49

Page 36
லெனின் கூறிய பிரகாரம் மார்க்ஸிஸம் என்பது (1) தத்துவ ஞானம், (2) அரசியல் பொருளாதாரம், (3) வர்க்கப் போராட் டம் பற்றிய தத்துவம் என்ற மூன்று பகுதிகளை உடையது. நாம் மாஒசேதுங் சிந்தனையை ஆராய்ந்து பார்த்தால், மார்க்ஸிஸத் தின் இம் மூன்று பகுதிகளையும் எவ்வாறு வளர்த்துள்ளார் என்ப தைக் காண முடியும்.
தத்துவ ஞானத்தைப் பொறுத்தவரையில், ஏராளமான பிரச்சினைகளைக் குறிப்பிடலாம். உதாரணமாக, தோழர் மாஓசே துங் அவர்களின் 'யென் ஆன் கலை இலக்கிய கருத்தரங்கு உரை’’ களை எடுத்துக் கொள்வோம். தோழர் மாஒசேதுங் அவர்கள் படைப்புகளில் இவ்வுரைகள் மிக முக்கியமான ஒன்ருகும். இந்த படைப்பு பாட்டாளி வர்க்க கலை இலக்கியக் கோட்பாடுகள் சம் பந்தமானது; பாட்டாளி வர்க்க கலை இலக்கியம் பற்றிய தத்து வத்தை ஆக்கபூர்வமாக வளர்த்து, ஒழுங்கான முறையில் விளக்கு கின்றது என்பது உண்nைதான்.
இருந்தும், தோழர் மாஓசேதுங் அவர்கள் தமது படைப்பில் கலை இலக்கியம் பற்றி மாத்திரம் குறிப்பிடவில்லை; மார்க்ஸிஸம்லெனினிஸம் சம்பந்தமான வேறு பல பிரச்சினைகளையும் இதில் விளக்குகின்ருர். இந்தப் படைப்பை நாம் ஒரு தத்துவ ஞானக் கோணத்திலிருந்து படித்தால், இப்படைப்பு முழுவதிலும் மார்க் ஸிஸ் மெஞ்ஞானம் வியாபித்திருப்பதையும், இது வாழ்வுக்கும் சிந்தனைக்கும் இடையில், சடப்பொருளுக்கும் மனத்துக்கும் இடை யில் உள்ள உறவு பற்றி விளக்குவதையும் காணலாம். கருத்துகள் எங்கிருந்து வருகின்றன? என்ற முக்கியமான தத்துவஞான கருத்தை இது விளக்குகின்றது. தனி நபரும் பொது மக்களும் பற் றிய பிரச்சினை, அரசியலும் இயக்கமும் பற்றிய பிரச்சினை, நோக்க மும் விளைவும் பற்றிய பிரச்சினை ஆகியவை பற்றியும் இது விளக்கு கின்றது.
தோழர் மாஒசேதுங் அவர்கள் மார்க்ஸிஸ் இயங்கியலின் உத வியுடன் இப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். இவ்வாறு மார்க்ஸிஸ் இயங்கியல் பற்றி ஒரு முக்கியமான விளக்கம் கொடுத் துள்ளார். நோக்கத்துக்கும், விளைவுக்கும் உள்ள உறவை அவர் விப ரமாக வலியுறுத்தியுள்ளார். கருத்துமுதல்வாதிகள் நோக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி, விளைவைப் புறக்கணித்து விடுகின்ற னர். யந்திரீகப் பொருள்முதல்வாதிகள் விளைவில் மட்டும் கவனம் செலுத்தி நோக்கத்தை மறந்து விடுகின்றனர். ஆனல், கம்யூ னிஸ்ட் கட்சிகளும், மார்க்ஸிலம்-லெனினிஸவாதிகளும் நோக் கம், விளைவு இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.
O
5

**யென் ஆன் கலை இலக்கிய கருத்தரங்கு உரைகள்’’ என்ற "படைப்பில், தோழர் மாஒசேதுங் அவர்கள் புரட்சிகரக் கலை இலக் கிய ஊழியர்களுக்கு உரிய ஐந்து யோக்கியதாம்சங்களை முன் வைத் துள்ளார். (1) வர்க்க நிலைப்பாடு, (2) அணுகுமுறை, (3) ரசிகர் கள், (4) வேலை, (5) மார்க்ஸிஸம் - லெனினிஸப் படிப்பு என்பன வாகும்.
வர்க்க நிலைப்பாடு என்னும் போது அவர் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை குறிப்பிடுகின்ருர். நமது வர்க்க நிலைப்பாடு தவரு னல், நமது கருத்துகள் அனைத்தும் தவருகி விடும். அணுகுமுறை என்பது நமது எதிரி, நமது நேச அணிகள், நPது சொந்த மக்கள் ஆகியோர் மீது நாம் மேற்கொள்ளும் மனுேபாவம் ஆகும். இந்த மூன்று பகுதியினரையும் பொறுத்தவரையில் நாம் வேறு வேறு மனுேபாவத்தை மேற்கொள்ள வேண்டும். எதிரியைப் பொறுத்த வரையில் நமது அணுகுமுறை அவர்களைப் பூரணமாக அம்பலப் படுத்துவதும், அவர்களை உறுதியாகத் தூக்கியெறினதும் ஆகும். நமது நேச அணிகளுக்கு நாம் கடைப்பிடிக்கும் மனேபாவம், நாம் அவர்களுடன் ஐக்கியப்படும் அதே வேளையில், அவர்களுக்கு எதி ராக பொருத்த ப்ான போராட்டங்களையும் நடத்த வேண்டும். நமது நேச அணியில் முற்போக்கான அம்சங்களைப் பொறுத்த வரையில், நாம் அவர்களுடன் ஐக்கியப்பட வேண்டும்; தவருன அம்சங்களைப் பொறுத்த வரையில் நாம் அவர்களுடன் போராட வேண்டும். ܫ
புரட்சிகரப் பொது மக்களைப் பொறுத்த வரையில் நமது அணுகுமுறை அவர்களைப் போற்றிப் பாராட்டுவதும், புகழ்ந்து பாடுவதும் ஆகும். அவர்களிடம் குறைபாடுகளும், தவறுகளும் காணப்படலாம். இருந்தும் நமது மனுேபாவம் பொறுமையாக இருந்து, நல்லெண்ணத்துடன் அவர்களுக்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும். இவ்வாறு, தோழர் மாஒசேதுங் அவர்கள் இந்த மூன்று தரப்பினருக்கும் மூன்றுவித அணுகு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெட்டத் தெளிவாகக் கூறியுள்
fift.
- இது மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் பொதுத் தத்துவமாகும். இது வர்க்கப் போராட்டத்தில் ஒரு முக்கியமான கோட்பாடு சம் பந்த Dான விஷயம் மாத்திரமல்ல, சீனுவின் மகத்தான கலாசாரப் புரட்சியிலும் பெரும் முக்கியத்துவம் வகித்தது. கட்சியில் அதிகா ாத்திலிருந்து கொண்டு முதலாளித்துவப் பாதையை மேற் கொண்ட ஒரு சில நபர்களுக்கு எதிராக புரட்சிகர நேச அணியை
5

Page 37
அமைக்கவும், அவர்களை எதிர்த்துப் போரிடவும் இது யதார்த்த முக்கியத்துவம் வாய்ந்து விளங்கியது.
மாஒசேதுங் சிந்தனை உண்மையில் மார்க்ஸிஸம்-லெனினி ஸத்தை ஆக்கபூர்வமாக வளர்த்துள்ளது. அது ஒரு உயர்ந்த மட் டத்துக்கு உயர்த்தப்பட்டது. ஆகவே, ‘யென் ஆன் கலை இலக்கியக் கருத்தரங்கு உரைகள்' நிகழ்த்தப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்( ல்ே கடந்து விட்டது. இப் படைப்பு கலை இலக்கியம் தழுவிய தாக இருந்த போதிலும், அதில் மார்க்ஸிஸம்-லெனினிஸ இயங்கி யலும் வியாபித்திருக்கின்றது.
இப்பொழுது நாம் தோழர் மாஒசேதுங் அவர்களின் 'முரண் பாடு பற்றி, "" என்ற அதி முக்கியமான தத்துவக் கட்டுரையை நுணுக்கமாக ஆராய்வோம். இது 30 ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்டது. இந்த கட்டுரையில் தோழர் மாஒசேதுங் அவர்கள் மார்க் ஸிஸம் - லெனினிஸ இயங்கியலை ஆக்கபூர்வமாக விளக்கியுள்ளது மிகப் பிரத்தியட்ச பாகும்.
இக் கட்டுரையின் முதல் வாக்கியத்தை எடுங்கள். 'விஷயங்க ளில் உள்ள முரண்பாடு சம்பந்தமான விதி, அதாவது, எதிர்மறை களின் ஒற்றுமை சம்பந்தமான விதி பொருள்முதல்வாத இயங்கிய லின் அடிப்படை விதியாகும். ** இது ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாக்கியம். இது மிகச் சிறிய ஒரு வாக்கியமாக இருந்த போதிலும் இதை விளக்குவதற்கு ஒரு நாள் பிடிக்குப்
சாதாரணமாக, இவ் விதியின் அர்த்தம் யாதெனில், சடப் பொருளின் சகல வடிவங்களிலும் இயக்கம் என்பது எப்பொழுதும் பிரசன்னமாயிருக்கும் முரண்பாடுகளின் வளர்ச்சியின் அல்லது, மோதலின் ஒரு விளைவாகும்; மேலும், பிரதான முரண்பாடுகளுக் கிடையிலும், ஒவ்வொரு முரண்பாட்டின் இரு வேறு அம்சங்களுக் கிடையிலும் அபேதமும், போராட்டமும் நிலவுகின்றன; முரண் பாடுகளின் வளர்ச்சிப் போக்கிற் கூடாக ஒரு விஷயம் அல்லது, தோற்றம் அதன் எதிர்மறையாக மாறுகின்றது. இவ்வாறு தோழர் மாஒசேதுங் அவர்கள் இந்த ஒரு வசனத்திலேயே பொருள்முதல் வாத இயங்கியலின் அடிப்படை விதியை விளக்குகின்றர்.
மார்க்ஸிஸ் இயங்கியலின் மிக ஒழுங்கான ஒரு விளக்கம், விஞ்ஞான சோஷலிஸத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான ஏங்கெல்ஸின் மிகப் பிரசித்திபெற்ற ‘டூரிங்-எதிர்ப்பு' என்ற நூலில் காணப்படுகின்றது. ‘டூரிங்-எதிர்ப்பு’’ என்பது மிக
52

முக்கியமான ஒரு நூல். ஏனெனில், டூரிங் என்பவர் பகீரதப் பிரயத்தனம் செய்து பரப்பிய சகலவிதமான அபத்தங்களையும் இது மறுத்துரைக்கின்றது. டூரிங்கின் மிகப் பெரிய தவறு யாதெனில், அவர் முரண்பாடு சம்பந்தமான விதியை மறுத் தார். முரண்பாடு (இயற்கையானதல்ல) செயற்கையானது என்று கருதினர் அவர், ஏங்கெல்ஸ் டூரிங்கை பூரணமாக விமர் சனம் செய்து, அவருடைய தவருன கருத்துகளை மறுத்துரைத்
ளின் புறநிலை விதி என்ற உண்மையை ஏங்கெல்ஸ் ஸ்தாபித் தார். இயக்கம் என்பது முரண்பாடு; அதாவது சொல்லின், முரண்பாடுகள் இயல்பாகவே இருப்பதன் காரணமாக பொருட் கள் இயங்குகின்றன, வளர்ச்சி அடைகின்றன; முரண்பாடு சம் பந்தமான விதி என்ருல், எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்த மான விதி என நாம் கருதுகின்ருேம் என்று அவர் கூறினர்.
ஆகவேதான், தோழர் மாஒசேதுங் அவர்கள் முரண்பாடு சம்பந்தமான விதியை பொருள் முதல்வாத இயங்கியலின் இன் னெரு விதி என்று கூருமல், அதுவே மிக அடிப்படையான விதி என்று விளக்கியுள்ளார். தனது கட்டுரையின் 9 இரண்டாவது வாக்கியத்தில், தோழர் மாஒசேதுங் அவர்கள், ‘இயங்கியல் என்ப்து, அதன் முறையான அர்த்தத்தில், பொருட்களின் சாராம்சத்துக்குள்ளேயே இருக்கும் முரண்பாட்டை ஆராய்வ தாகும்’ என்ற லெனினின் கூற்றை மேற்கோள் காட்டியுள் ளார். எனவே, நம்மைப் பொறுத்த வரையில், முரண்பாடு சம்பந்தமான விதி, அதாவது, எதிர்மறைகளின் ஒற்றுமை சம் பந்தமான விதிதான் பொருள்முதல்வாத இயங்கியலின் மிக அடிப்படையான விதி என்பதைப் புரிந்துகொள்வது மிக முக் கியம்.
ஹெகல் என்ற தத்துவஞானி தனது 'தர்க்க விஞ்ஞானம்' என்ற நூலில், இயங்கியலில் மூன்று அடிப்படை விதிகள் உண்டு என்று கூறியுள்ளார். அவையாவன: (1) அளவு மாற்றமும் குணும்ச மாற்றமும் ஒன்றை ஒன்று தோற்றுவிக்கும் என்ற விதி, (2) எதிர்மறைகளின் ஒற்றுமை என்ற விதி; (3) நிராகரணத் தின் நிராகரணம் என்ற விதி.
இவைதான் ஹெகல் முன்வைத்த இயங்கியலின் மூன்று அடிப்படை விதிகள். மார்க்ஸ"ம், ஏங்கெல்ஸும் இந்த மூன்று அடிப்படை விதிகளையும் அங்கீகரித்து, ஊர்ஜிதம் செய்தனர். ஆணுல், அவற்றை நேரெதிராக வரிசைப்படுத்தினர்.
53

Page 38
ஹெகல் இந்த மூன்று விதிகளையும் புறநிலை இயங்கியலின் விதிகளாகக் காட்டாமல், அகநிலை இயங்கியலின் விதிகளாகக் காட்டினர். அதாவது, இந்த விதிகள் புறநிலை விஷயங்களில் இயல்பாக உள்ளன என்று அவர் கருதவில்லை. மாருக, இவை மனித சிந்தனையை ஆளும் விதிகள் மட்டுமே. அதாவது, மனித சிந்தனையின் தர்க்கவியலில் உள்ள விதிகள் மட்டுமே என்று அவர் கருதினர். வேறு வார்த்தைகளில் சொன்னல், ஹெகல் இயங்கியலை ஒரு கருத்துமுதல்வாக கண்ணுேட்டத்திலிருந்து வியாக்கியானம் செய்தார்.
இருந்தும், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் பிரகாரம், முரண்பாடு சம்பந்மான விதி, எதிர்மறைகளின் ஒற்றுமை சம் பந்தமான விதி என்பது புறநிலை விஷயங்களில் இயல்பாகவே உள்ள ஒரு விதி; அதேவேளையில் முரண்பாடு பற்றிய மனித னின் அறிவு என்பது மனித சிந்தனையில் தோன்றும் இப் புற நிலை விதியின் பிரதிபலிப்பே அன்றி வேறல்ல. எனவே, மார்க் ஸ"சம், ஏங்கெல்ஸும் ஹெகலை எள்ளி நகையாடி, அவர் உண் மையைத் தலைகீழாக நிறுத்தியுள்ளார் என்று சுட்டிக்காட்டினர்.
மார்க்ஸும், ஏங்கெல்ஸும் இந்த நிலையை மறுபுறமாக மாற்றி, இயங்கியலின் இந்த விதிகள் புறநிலை விஷயங்களில் இயல்பாகவே உள்ளன என்று சுட்டிக்காட்டினர். இதை ஏங் கெல்ஸ் அவர்கள் தனது ‘டூரிங்-எதிர்ப்பு', 'இயற்கையின் இயங்கியல்' என்ற படைப்புகளில் தெளிவுபடுத்தியுள்ளார்.
லெனினுடைய காலத்தில் புதிய வளர்ச்சி ஒன்று தோன்றி யது. இயங்கியலின் இந்த மூன்று விதிகளிலும் மிக அடிப்படை யானது எது என்ற கேள்வி எழுந்தது. தோழர் மாஒசேதுங் அவர்கள் இக்கட்டுரையின் மூன்ருவது வசனத்தில், ‘இயங்கிய லின் பிரச்சினைபற்றி' என்ற லெனின் கட்டுரையை எடுத்துக் காட்டி, **லெனின் இந்த விதியை (அதாவது, முரண்பாடு சம்பந்தமான விதியை) இயங்கியலின் சாராம்சம் என அடிக் கடி அழைத்தார்; இதை இயங்கியலின் உட்கரு எனவும் குறிப் பிட்டார்?" என்று சுட்டிக்காட்டுகின்ருர்.
லெனின், இந்த விதியை இயங்கியலின் உட்கரு என்று சுட் டிக் காட்டிய போதிலும், இந்த உட்கருவுக்கும் இயங்கியலின் மற்றைய இரண்டு விதிகளுக்கும் உள்ள உறவை விளக்க அவர் நீண்டநாள் வாழவில்லை.
பின்னர், சோவியத் யூனியனிலிருந்த தத்துவஞான வட்டா ரத்தினர் இந்த விஷயங்களை எடுத்தாண்டபோது, அவர்களும்
54

இந்த மூன்று விதிகளையும் சுட்டிக் காட்டினர்; ஆனுல் அவற் றின் வரிசைக் கிரமித்தை மாற்றிவிட்டனர். அவ் ஒழுங்கு பின் வருமாறு:- (1) எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதி: (2) அளவு மாற்றமும், குணம்ச மாற்றமும் பற்றிய விதி; (3) நிராகரணத்தின் நிராகரணம் என்ற விதி.
இதுதான். சோவியத் யூனியனில் நீண்டகாலமாக வழக்கி லிருந்த ஒழுங்கு முறையாகும்.
1938ல், **சோவியத் யூனியன் (பொல்ஷிவிக்குகளின்) கம் யூனிஸ்ட் கட்சியின் சுருக்க வரலாறு' என்ற நூலில் ஸ்டாலின் இயங்கியல் முறையின் நான்கு குணதிசயங்களை முன்வைத்தார்:- (1) எல்லாத் தோற்றப்பாடுகளும் பரஸ்பரம் தொடர்புடை யவை; பரஸ்பரம் சார்புடையவை. (2) சடப்பொருள் அனைத் தும் சர்வசதா இயங்குகின்றன; அசைகின்றன; வளர்ச்சியடை கின்றன. (3) அளவு மாற்றங்கள் குணம்ச மாற்றங்களுக்கு வழி கோலுகின்றன. (4) எதிர்மறைகளின் போராட்டத்தின் அடிப் படையில் எல்லாம் வளர்ச்சியடைகின்றன.
இவ்வாறு ஸ்டாலின் எதிர்மறைகளின் ஐக்கியமும் போராட் டமும் சம்பந்தமான விதியை முதல் இடத்தில் வைப்பதற்குப் பதிலாக, கடைசியில் வைத்தார். சோவியத் யூனியனில் தத் துவஞான வட்டாரங்கள் இயங்கியலின் மூன்று விதிகளையும் கைய்ாண்ட போதும்சரி, ஸ்டாலின் இயங்கியல் முறையின் நான்கு குணதிசயங்கள் பற்றி எழுதியபோதும் சரி, இரு சாரா ரும் முரண்பாடு சம்பந்தமான விதியை, எதிர்மறைகளின் ஐக் கியம் சம்பந்தமான விதியை, பொருள்முதல்வாத இயங்கியலின் அடிப்பட்ை விதி என்று கருதாமல், இதர விதிகளுடன் சமநிலை யில் தான் வைத்தனர்.
தோழர் மாஒசேதுங் அவர்கள் மார்க்ஸிஸம்-லெனினிஸ் இயங் கியலின் விதிகளை ஒழுங்காக ஆராய்ந்து, லெனினின் 'இயங்கிய லின் பிரச்சினைபற்றி** என்ற படைப்பில் அடங்கியுள்ள அவருடைய தத்துவத்தை மேலும் விருத்தி செய்துள்ளார். தோழர் மாஒ சேதுங் அவர்கள் அளவு மாற்றமும் குணம்ச மாற்றமும் பற்றிய விதியையோ, அல்லது நிராகரணத்தின் நிராகரணம் என்ற விதி யையோ மறுக்கவில்லை. ஏங்கெல்ஸ் அவர்கள் இவ் விஷயங்கள் எல்லாவற்றையும் தமது ‘டூரிங்-எதிர்ப்பு’’ என்ற நூலில் விளக்கியுள்ளார். ஆனல், தோழர் மாஒசேதுங் அவர்கள் செய் தது என்னவென்றல், இந்த விதிகளில், முரண்பாடு சம்பந்த Pான விதி, எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதிதான்
55

Page 39
மிக அடிப்படையான விதி என்பதை தெளிவாகச் சுட்டிக்காட் டியதாகும். இவ்வாறு அவர் இப்பிரச்சினையை ஒருமைவாத முறையில் விளக்கியுள்ளார். இந்த மூன்று விதிகளையும் ஒரு சமாந்தர நிலையில் வைக்கும் தத்துவத்தை மறுத்துரைத்துள்ளார்.
உதாரணமாக, ஸ்டாலின் இயங்கியல் முறையில் இரண்டா வது குணதிசயம், இயக்கம் அல்லது வளர்ச்சி பற்றிய விதியா கும் என்று கூறுகிருர். உண்மையில், இயக்கம் அல்லது அசைவு என் பது முரண்பாட்டில் இயல்பாகவே உள்ளது; இதை ஏங்கெல்ஸ் தனது ‘டூரிங்-எதிர்ப்பு’’ என்ற படைப்பில் 'இயக்கம் என்பதே ஒரு முரண்பாடுதான்' என்று கூறியபோது சுட்டிக் காட்டியுள் ளார். நாம் முரண்பாடு சம்பந்தமான விதி, அதாவது, எதிர் மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதிதான் பொருள்முதல் வாத இயங்கியலின் மிக அடிப்படையான விதி என்பதை கிர கித்துக்கொண்டால், பின்னர் இயங்கியலின் இதர விதிகள் எல் லாம் இந்த அடிப்படை விதியிலிருந்தே தோன்றுகின்றன என்ப தைப் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு, முரண்பாடு சம்பந்தமான விதியின், எதிர்மறை களின் ஒற்றுமை சம்பந்தமான விதியின் முதன்மையை வலி யுறுத்துவதன் மூலம், தோழர் மாஒசேதுங் அவர்கள் மார்க் ஸிஸம்-லெனினிஸத் தத்துவஞானத்தையும் இயங்கியலையும் ஆக்கபூர்வமாக வளர்த்துள்ளார் என்பது தெளிவு.
தோழர் மாஒசேதுங் அவர்களின் 'முரண்பாடு பற்றி*என்ற கட்டுரை மார்க்ஸிஸத் தத்துவஞானத்துக்கு அவர் வழங்கிய மிக முக்கியமான சாதனையாக இருந்தபோதிலும், அவர் தமது வேறு பல படைப்புகளிலும் மார்க்ஸிஸ் தத்துவஞானத்தை வேறு பல துறைகளில் விருத்தி செய்துள்ளார்.
தோழர் மாஒசேதுங் அவர்களின் 'மக்கள் மத்தியில் முரண் பாடுகளை சரியாக கையாள்வது பற்றி' என்ற கட்டுரை அவரு டைய இன்னெரு தத்துவஞானப் படைப்பாகும். இந்தப் படைப் பில் அவர், எதிரிக்கும் நமக்கும் இடையிலுள்ள முரண்பாடு களைக் கையாள்வது எப்படி என்பதற்கு மாருக, மக்கள் மத்தி யிலுள்ள முரண்பாடுகளை கையாள்வது எப்படி என்ற பிரச்சி னையை விளக்குகின்ருர், வேறு வேறு இயல்புடைய முரண்பாடு களில், ஒன்று இன்னென்ருக மாற்றப்பட முடியும் என்பதை யும் அவர் விளக்குகின்ருர். கட்சிக்குள் வேறுபட்ட கண்னேட் டங்கள், கருத்துகளுக்கு இடையில் நிகழும் போராட்டத்தைக்
56

கையாள்வது எப்படி என்பதை விளக்கவும் அவர் முரண்பாடு சம்பந்தமான விதியை உபயோகிக்கின்றார்.
தோழர் மாஓசேதுங் அவர்கள் தமது 'முரண்பாடுபற்றி" என்ற கட்டுரையில் ஏற்கெனவே சுட்டிக்காட்டியதாவது:- "கட் சிக்குள் பல்வேறு விதமான கருத்துகளுக்கிடையிலும் இ!ை விடாது எதிர்ப்பும் போராட்டமும் நிகழ்கின்றன. இவை சமு தாயத்தில் வர்க்கங்களுக்கிடையிலும், புதியவை பழையவை இரண்டுக்குமிடையிலும் உள்ள முரண்பாடுகள் கட்சிக்குள் பிரதி பலிப்பதே ஆகும். கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லா விட்டால், அவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட் டங்கள் இல்லாவிட்டால், கட்சியின் வாழ்வு நின்றுவிடும்.'
தோழர் மாஒசேதுங் அவர்கள் கட்சிக்குள் வேறுபட்ட கருத் துகளுக்கிடையில் நிலவும் எதிர்ப்பும் போராட்டமும் பற்றிய பிரச்சினையை விளக்க, முரண்பாடு சம்பந்தமான விதியை, எதிர் மறைகளின் ஒற்றுமை சம்பந்தமான விதியை உபயோகித்தது இதுவே முதல் தடவையாகும். இது மார்க்ஸிஸம்-லெனினிஸத் தின் ஒரு ஆக்கபூர்வமான வளர்ச்சியாகும்.
கடந்த காலத்தில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றி லும், இதர கட்சிகளின் சில தோழர்களைப் பொறுத்தவரையில் கூட, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் முரண்பாடான கருத்துகளுக்கிடை யில் நிலவும் எதிர்ப்பும் போராட்டமும் பற்றிய அணுகு முறை யில் தவருன கருத்துகள் இருந்தன. சில தோழர்கள் கட்சிக்கு வெளியிலுள்ள விஷயங்களைக் கையாளும்போது முரண்பாடு சம் பந்தமான விதியை ஒப்புக்கொண்டனர். கட்சிக்குள் நிலவும் முரண்பாடான கருத்துகளை எதிர்நோக்கியபோது, அவர்கள் இயங்கியல் முறையை உபயோகிக்கத் தவறிவிட்டனர். அதற்கு விரோதமாக நிலையியல் முறையை உபயோகித்தனர். வேறு வார்த் தையில் சொன்னுல், அவர்கள் முரண்பாடுகள் சர்வவியாபகமா னவை; கட்சிக்கு வெளியே உள்ள முரண்பாடுகளின் பிரதிபலிப் பாக அவைகட்சிக்குள்ளும் இருக்கின்றன என்பதை உணரவில்லை. எனவே, இந்தத் தோழர்கள் கட்சிக்குள் முரண்பாடுகளையும் போராட்டங்களையும் எதிர்நோக்கியபோது, இது பயங்கரமா னது, தீயது என்று எண்ணினர்.
இத்தகைய நிலையியல் அணுகுமுறைக்குப் பதில் கொடுக்குமுக மாகத்தான், தோழர் மாஒசேதுங் அவர்கள் முரண்பாடுகள் சர்வ வியாபகமானவை, ஆகவேதான் கட்சிக்குள்ளும் வேறுபட்ட கருத்துகளுக்கிடையில் எதிர்ப்பும் போராட்டமும் ஓய்வு ஒழிச்ச
57

Page 40
லின்றி நிகழ்கின்றன என்று சுட்டிக்காட்டினர். இது அபூர்வமான றல்ல. காரணம், இது கட்சிக்கு வெளியிலுள்ள வர்க்க முரண் பாடுகளும், பழையது புதியது இரண்டுக்குமிடையில் நிகழும் போராட்டமும் கட்சிக்குள் பிரதிபலிப்பதேயாகும். கட்சிக்குள் இந்த முரண்பாடுகளும் இவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்களும் இல்லாவிட்டால் பின்னர் கட்சியின் வாழ்வே நின்றுவிடும்.
வாழ்ந்து, வளர்ந்துவரும் எந்த ஒரு கட்சியிலும் உட்கட்சிப் போராட்டத்தின் இந்த இயல்பையும், அதன் தவிர்க்கமுடியாத் தன்மையையும் நாம் புரிந்துகொண்டால்தான், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் லியூ ஷெள-சிக்கும், அவனுடைய கைக்கூலிகளுக்கும் எதிராக வளர்ந்த போராட்டத்தை நாம் புரிந்துகொள்ள முடி யும்.
ஏகாதிபத்தியவாதிகள் சீனுவில் கலாசாரப் புரட்சி வெடித் தெழுந்ததையும், லியூ வுெள-சியும், அவனுடைய கருப்புக் கும் பலும் அம்பலப்படுத்தப்பட்டதையும் கண்டபோது, சீன கம்யூ னிஸ்ட் கட்சி முடிந்துவிட்டது என எண்ணினர்கள். இதே நிகழ்ச்சியை சோவியத் திரிபுவாதிகள் கண்டபோது, சீன கம்யூ னிஸ்ட் கட்சி தகர்ந்துவிடும், தோழர் மாஒசேதுங் அவர்களின் தலைமை தூக்கி வீசப்பட்டுவிடும் என்று அவர்களும் எண்ணி ஞர்கள்.
சில நண்பர்கள் கூட இப்பிரச்சினையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், மனம் வருந்தி, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஒன் றும் சீராக இல்லை என்று நினைத்தார்கள். இத்தகைய முரண் பாடுகளும், அவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட் டங்களும் இல்லாவிட்டால், கட்சியின் வாழ்வே அஸ்தமித்து விடும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
இந்த தோழர்கள் இத்தகைய தவருன கருத்துகளுக்கு வந்த தன் காரணம், அவர்கள் இந்த சித்தாந்தப் போராட்டங்களே இயங்கியல்வாத கண்ணுேட்டத்திலிருந்து பார்க்கவில்லை. ஆகவே தான், கலர்சாரப் புரட்சியின் அதி ஆரம்பத்திலேயே, தோழர் மாஒசேதுங் அவர்கள், கலாசாரப் புரட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி யின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஒரு அறிகுறி என்று கூறினர்.
ஆகவே, தோழர்களும், நண்பர்களும் சீன கலாசாரப் புரட் சியை இந்த மார்க்ஸிஸம்-லெனினிஸ் இயங்கியல் நிலைப்பாட்டி லிருந்து நோக்கவேண்டும். அப்பொழுது, இது நல்ல விஷயமன்றி,
58

தீய விஷயமல்ல என்பதை உணர்வர். அதன் பின்னர், லியூ ஷெளசிக்கும் அவனுடைய தவருன கருத்துகளுக்கும் எதிரான போராட் டத்தின் மகோன்னத முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வர். இந் தப் போராட்டம் நடத்தப்படாவிட்டால், சீனுவில் திரிபுவாதம் வாகை சூடியிருக்கும்; முதலாளித்துவம் மீட்கப்பட்டிருக்கும்; சீனு நிறம் மாறியிருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்வர். இது சோவியத் யூனியனின் அனுபவத்தால் நிரூபிக் கப்பட்டுவிட்டது.
தோழர் மாஒசேதுங் அவர்கள் வர்க்கப் போராட்டம் பற் றிய மார்க்ஸிஸம்-லெனினிஸத் தத்துவத்த்ை எப்படி வளர்த்துள் ளார்? இவ் விஷயம் பீக்கிங் மக்கள் தினசரி 'மகத்தான வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தஸ்தாவேஜ" என்ற தலைப் பில் வெளியிட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மிகத் துலாம்பரமாக விளக்கப்பட்டுள்ளது. (இது 1976 பீக்கிங் றிவியூ 21வது இத ழில் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.)
தோழர் மாஒசேதுங் அவர்கள் மார்க்ஸிஸம்-லெனினிஸத்தை எவ்வாறு வளர்த்துள்ளர் என்பதை ஆராய்ந்த முயற்சியின் விளைவே இந்த கட்டுரை. மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சி வரலாற்றில் மிக முக்கியமான பிரச்சினை ஒன்று இக்கட்டுரை யில் எழுப்பப்பட்டுள்ளது.
இக்கட்டுரை மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சி வர லாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்து, அவற்றை மூன்று மைல்கற்களாக வருணிக்கின்றது. அக் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள்:- ‘மார்க்ஸும், ஏங்கெல்ஸும் விஞ்ஞான சோஷ லிஸ தத்துவத்தை ஸ்தாபித்தனர். லெனினும், ஸ்டாலினும் மார்க்ஸிஸத்தை வளர்த்து, ஏகாதிபத்திய சகாப்தத்தில் பாட் டாளி வர்க்கப் புரட்சி சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர்; ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பது சம்பந்தமான தத்துவ நடைமுறைப் பிரச்சினைக ளுக்கு தீர்வு கண்டனர். தோழர் மாஒசேதுங் அவர்கள் மார்க் ஸிஸம்-லெனினிஸத்தை வளர்த்து, இன்றைய சகாப்தத்தில் பாட்டாளி வர்க்கப் புரட்சி சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டார்; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் புரட் சியை தொடர்ந்து நடத்துவது பற்றிய தத்துவ, நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டார். இவை மார்க்ஸிஸத்தின்
59

Page 41
வளர்ச்சி வரலாற்றில் என்றும் அழியாத மூன்று மைல்கற்களாக விளங்குகின்றன". 1.
சோஷலிஸத்தின் கீழ் வர்க்கங்களும் வர்க்கப் போராட்ட மும் இருக்கின்றனவா, இல்லையா என்ற கேள்விக்கு, இருக்கின்றன என்று பதிலளித்ததுதான், தோழர் மாஒசேதுங் அவர்கள் வர்க் கப் போராட்டம் பற்றிய மார்க்ஸிஸம்-லெனினிஸத் தத்துவத் தின் வளர்ச்சிக்கு வழங்கிய விசேஷ சாதனையாகும்.
மேற்குறிப்பிட்ட கட்டுரை இக்கேள்வியை பின்வருமாறு தெளிவாகப் போடுகின்றது:- " "சோஷலிஸ் சமுதாயத்தில், குறிப்பாக உற்பத்தி சாதனங்களின் உடைமை முறையில் சோவு லிஸ் மாற்றம் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பின்னர், இன்னும் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் இருக்கின் றனவா? சமுதாயத்தில் நிலவும் வர்க்கப் போராட்டங்கள் எல் லாம் இன்னும் அரசியல் அதிகாரத்துக்காகப் போரிடும் பிரச்சி னையை மையமாகப் கொண்டிருக்கின்றனவா? பாட்டாளி வர்க்க சர்வாதிகார நிலைமைகளில் நாம் இன்னும் புரட்சி நடத்த வேண்டுமா? யாருக்கு எதிராக நாம் புரட்சி நடத்தவேண்டும்? இந்தப் புரட்சியை நாம் எப்படி நடத்தவேண்டும்?
மார்க்ஸும், ஏங்கெல்ஸும் தமது காலத்தில் இந்த வரிசை வரிசையான, முக்கியமான தத்துவப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சாத்தியமல்ல. பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தூக்கியெறியப்பட்ட முதலாளி வர்க்கம் இன்னும் பாட்டாளி வர்க்கத்திலும் பார்க்க பலமுடையதாகவே இருக்கும்; அதிகார அரங்கிற்கு மீள எப்பொழுதும் முயன்ற வண்ணம் இருக்கும் அதேவேளையில், சிறு உற்பத்தியாளர்கள் முத லாளித்துவத்தையும், முதலாளி வர்க்கத்தையும் இடைவிடாது தோற்றுவித்துக் கொண்டே இருப்பர்; இவ்வாறு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒரு அச்சுறுத்தல் எதிர்நோக்கியபடியே இருக்கும்; இந்த எதிர்ப் புரட்சி அச்சுறுத்தலை சமாளித்து, வெற்றிபெற வேண்டுமானல், ஒரு நீண்ட கால கட்டத்துக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பலப்படுத்துவது அவசி யம்; இதற்கு வேறு வழியில்லை என லெனின் அவர்கள் தீர்க்க தரிசனமாகக் கண்டார். இருந்தும் லெனின் அவர்கள் நடை முறையில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுன் மறைந்து விட்டார்.
* ஸ்டாலின் ஒரு மாபெரும் மார்க்ஸிஸ்-லெனினிஸ வாதி யாவர். ட்ருெஸ்கி, லினேவியேவ், கமனேவ், றடெக், புக்கா
60

ரின், றிகோவ் ஆகியோரும், அவர்களைப் போன்றவர்களும் உட் பட, கட்சிக்குள் ஊடுருவிய முதலாளி வர்க்கத்தின் பெருந் தொகையான எதிர்ப் புரட்சி பிரதிநிதிகளை உண்மையில் வெளி யேற்றியவர். ஆணுல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வரலாற்றுக் காலகட்டம் பூராவும் சமுதாயத்தில் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் இருக்கின்றன; புரட்சியில் யார் வெல் வர் என்ற பிரச்சினை இன்னும் முடிவாகத் தீர்க்கப்படவில்லை; வேறு வார்த்தைகளில் கூறினல், இவையனைத்தும் சரியாகக் கையாளப்படாவிட்டால், முதலாளி வர்க்கம் மீண்டும் அதிகா ரத்துக்கு வரும் சாத்தியப்பாடு உண்டு என்பதை அவர் தத்துவ மட்டத்தில் ஏற்றுக்கொள்ளத் தவறிவிட்டார். தாம் இறப்ப தற்கு முந்திய ஆண்டில் அவர் இவ்விஷயத்தை அறிந்துகொண் டதும், சோஷலிஸ் சமுதாயத்தில் முரண்பாடுகள் இருக்கின்றன; சரியாகக் கையாளப்படாவிட்டால் அவை கை முரண்பாடு களாக மாறலாம் என்று கூறினர்.
** தோழர் மாஒசேதுங் அவர்கள் சோவியத் யூனியனின் வரலாற்று அனுபவம் முழுவதிலும் பூரண கவனம் செலுத்தி னர். இந்த வரிசை வரிசையான பிரச்சினைகளுக்கு, எண்ணற்ற மகத்தான படைப்புகளிலும், உத்தர்வுகளிலும், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தஸ்தாவேஜிலும் (இது சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் 1966 மே 16 கற்றறிக்கையை குறிக்கின்றது.) தாமே நேரடியாகத் தொடக்கிவைத்து, தலைமை தாங்கும் மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சியின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அனுஷ்டானத்திலும் அவர் சரியான தீர்வு கண்டுள்ளார்.
**இது 12ார்க்ஸிஸம் முற்றிலும் புதிய ஒரு கட்டத்துக்கு வளர்ந்துவிட்டது என்பதைக் காட்டும் மிக முக்கியான ஒரு அறிகுறியாகும். 20ம் நூற்ருண்டின் ஆரம்ப ஆண்டுகளில், 1ார்க்ஸிஸம், லெனினிஸம் என்ற கட்டத்துக்கு விருத்தியடைந்து இன்றைய சகாப்தத்தில் அது மாஒசேதுங் சிந்தனை என்ற கட் டத்துக்கு மேலும் வளர்ந்துவிட்டது".
மார்க்ஸும், ஏங்கெல்ஸாம் பாட்டாளி வர்க்கப் புரட்சி பற் நிய பிரச்சினையை எழுப்பினர்; பாட்டாளி வர்க்க சர்வாதிகா ரம் பற்றிய பிரச்சினையையும் அவர்கள் எழுப்பினர். லெனின் இத்தத்துவத்தை வளர்த்து, மகத்தான அக்டோபர் புரட்சியை நடத்துவதன் மூலம் நடைமுறைப்படுத்தினர். சோவியத் யூனி யன் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் யதார்த்தம் ஆகிய முதல் நாடாயிற்று.
6.

Page 42
தோழர் மாஒசேதுங் அவர்கள் புரட்சியும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் சம்பந்தமான இந்த மார்க்ஸிஸம்-லெனி னிஸ தத்துவத்தை வளர்த்து, தமது சொந்த நாட்டிலும் பாட் டாளி வர்க்கப் புரட்சியை நடத்தினர். பாட்டாளி வர்க்க சர் வாதிகாரம் சீனவில், 70 கோடி ஜனத் தொகை உடைய ஒரு நாட்டில் யதார்த்தமாகியது. ஏகாதிபத்தியம் அதன் பூரண அழிவை நோக்கி விரைகின்ற, சோஷலிஸம் உலகரீதியான வெற் றியை நோக்கி முன்னேறுகின்ற இன்றைய சகாப்தத்தில் எப்ப டிப் புரட்சியை நடத்துவது என்ற பிரச்சினைக்கும் தீர்வு கண் டார். பாட்டாளி வர்க்க சர்வாதிகார நிலைமைகளில் புரட்சியை எப்படி நடத்துவது என்ற பிரச்சினைக்கும் கூட அவர் தீர்வு J56öörtrř.
ஆகவே, இந்த நிலைமையை பின்வருமாறு தொகுத்துக்கூற லாம்:- மார்க்ஸும், ஏங்கெல்ஸும் பாட்டாளி வர்க்க புரட்சி யும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமும் பற்றிய பிரச்சினையை முன்வைத்தனர். லெனின் சோவியத் யூனியனில் இதை யதார்த்த மாக்கினர். தோழர் மாஒசேதுங் அவர்கள் சீனவில் இதை யதார்த்தமாக்கியது மாத்திரமல்ல, பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தின் கீழ் புரட்சியை எப்படி நடத்துவது என்ற பிரச்சி னைக்கும் தீர்வு கண்டார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அதன் நிறத்தில் மாருமல் தடுப்பது எப்படி, முதலாளித்துவ மீட்சியைத் தடுப்பது எப்படி, பாட்டாளி வர்க்க சர்வாதிகா ரத்தை ஸ்திரப்படுத்துவது எப்படி என்ற பிரச்சினைக்கும் அவர் தீர்வு கண்டார். எனவே, தோழர் மாஒசேதுங் அவர்கள் இடை யீடற்ற புரட்சி என்ற மார்க்ஸிஸம்-லெனினிஸத் தத்துவத்தை ஆக்கபூர்வமாக வளர்த்துள்ளார் என்பது தெளிவாகின்றது.
வர்க்கப் போராட்டத்தின் கேந்திரப் பிரச்சினை அரசு அதி காரம் தழுவிய பிரச்சினையாகும். பாட்டாளி வர்க்கப் புரட்சி யின் நோக்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது. மார்க் ஸும், லெனினும் வர்க்கப் போராட்டத்தை tட்டும் அங்கீகரிப் பவர் இன்னும் ஒரு மார்க்ஸிஸவாதி ஆகமாட்டார்; வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பது மாத்திரமல்ல, இவ் அங்கீகா ரத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வரை யார் விஸ்தரிக் கிருரோ அவர்தான் உண்மையான மார்க்ஸிஸவாதி ஆவர் என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.
பாட்டாளி வர்க்கம் அரசு அதிகாரத்தை கைப்பற்றிய பின் னர்-பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்பட்ட பின் னர்-வர்க்கப் போராட்டத்தின் கேந்திரப் பிரச்சினை இன்னும்
62

அரசு அதிகாரம் சம்பந்தமர் ன பிரச்சினை என்று சொல்வது சரியா என்பதே இன்றுள்ள பிரச்சினை ஆகும்.
10ார்க்ஸும், ஏங்கெல்ஸும் தம்முடைய காலத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண்பது சாத்தியமல்ல. நாம் ஏற் கெனவே காட்டியதுபோல, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், தோற்கடிக்கப்பட்ட முதலாளி வர்க் கம், அதைத் தோற்கடித்த பாட்டாளி வர்க்கத்திலும் பார்க்க பலமுடையதாக இருக்கும்; அது அதிகார அரங்கிற்கு மீள முயன்றவண்ணம் இருக்கும்; சிறு உற்பத்தியாளர்கள் இடை விடாது முதலாளித்துவத்தையும் முதலாளி வர்க்கத்தையும் தோற்றுவிப்பர் என்பதை லெனின் உணர்ந்திருந்தார்.
லெனின் 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காட்ஸ் கியும்’ என்ற தமது நூலில் இப்பிரச்சினையை மிகவும் தெளிவு படுத்தியுள்ளார். இந் நூலில் லெனின் அவர்கள், முதலாளித் துவத்திலிருந்து கம்யூனிஸத்துக்குச் செல்லும் காலகட்டம் என் பது ஒரு முழுமையான வரலாற்று சகாப்தம்; இந்த வரலாற்று சகாப்தம் பூராவும், கம்யூனிஸம் ஸ்தாபிக்கப்படுவதற்கு முன், தோற்கடிக்கப்பட்ட முதலாளி வர்க்கம் அதிகார அரங்கிற்கு மீள முயல்வது திண்ணம்; இந்த முயற்சிகளை செயலாக்க முயல்
வதும் நிச்சயம் என்று கூறினர்.
இது ஒரு மகோன்னதமான மார்க்ஸிஸம்-லெனினிஸ் தீர்க்க தரிசனம். தோழர் மாஒசேதுங் அவர்கள் செய்தது, லெனினின் இந்த ஆழ்ந்த அனுமானத்தை மேலும் வளர்த்தது மட்டுமே. முதலாளித்துவத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் இடையில் ஒரு முழு மையான வரலாற்று சகாப்தம் இருக்கின்றது என்ற லெனினின் கூற்றை எடுத்துக் கொள்வோம். தோழர் மாஒசேதுங் அவர்கள் குறிப்பாக இதைக் கருத்தில் வைத்துத்தான் சோஷலிஸ் சமுதா யம் ஸ்தாபிக்கப்பட்ட பின், கம்யூனிஸம் ஸ்தாபிக்கப்படுவதற்கு ஐம்பது ஆண்டுகள், நூறு ஆண்டுகள் அல்லது அதற்கு கூடிய காலம் எடுக்கலாம் என்று கூறினர்.
தோழர் மாஓசேதுங் அவர்களின் இக்கூற்று ட்ருெஸ்கிய வாதம் என்று அவதூறு செய்யப்பட்டது. ஆனல் யதார்த்தத்
தில், இது லெனினிஸம் ஆகும்.
பர்ன்ஸ்டீன், காட்ஸ்கி முதலிய பழைய காலத் திரிபுவாதி கள் சோவியத் யூனியனில் சோஷலிஸப் புரட்சி நடத்துவதை எதிர்த்தார்கள். அவர்களுடைய தத்துவம் உற்பத்தியே அனைத்
63

Page 43
தும் என்ற தத்துவம் என அழைக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கள் ரஷியாவில் முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி யடையாத காரணத்தால், சோஷலிஸப் புரட்சி அசாத்தியம்; அக்டோபர் புரட்சி ரஷியாவில் முதலாளித்துவத்திற்கு மாத்திரம் வழியமைக் கும்; ரஷியாவில் முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் ஒரு குறிப் பிட்ட மட்டத்தை அடைந்த பின்னர்தான், அது இயற்கையாக வும், சமாதானமாகவும் சோஷலிஸ்மாக மலரும் என்று வாதாடி னர். இதுதான் சோஷலிஸத்துக்குச் செல்லும் சமாதான மாற் றம் பற்றிய அவர்களுடைய தத்துவமாகும்.
இந்த அபத்தமான தத்துவத்தை காட்ஸ்கி 1918ல் 'பாட் டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி" என்ற தனது பிரசுரத்தி லும், ரஷிய கட்சிக்குள் ‘நிர்க்கதியான நிலையிலுள்ள பொல்ஷி விக்குகள்' என்ற தனது கட்டுரையிலும் தெளிவாக வெளிப் படுத்தியுள்ளார். V
பின்னர், ஸினேவியேவ், ட்ருெஸ்கி, புக்காரின் ஆகி Gurrri சோஷலிஸ் புரட்சியையும், சோஷலிஸ் நிர்மா ணத்தையும், ஒரு நாட்டில் சோஷலிஸம் கட்டிய மைக்கப்பட முடியும் என்ற தத்துவத்தையும் எதிர்க்க, இந்த பழைய காலத் திரிபுவாதிகளின் தத்துவத்தை உபயோகித்தனர், கம்யூனிஸ்ட் சர்வதேசியத்தின் செயல் கமிட்டியின் 7வது கூட் டத் தொடரில், ரஷியாவில் சோஷலிஸ் உற்பத்தியின் மேம் பாட்டை இன்று அல்ல, 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு பின் னர்தான் காட்டமுடியும் என்று கூறினன் ட்ருெஸ்கி.
இந்த அபத்தத்தை ட்ருெஸ்கி பிரகடனம் செய்தபோது ஸ்டாலின் அவனைப் பாரதூரமாக மறுத்துரைத்தார். காரணம், முதலாளித்துவ நாடுகளில் காணும் தனியுடைமை முறையிலும் பார்க்க சோஷலிஸ உடைமை முறை மேலானது, சிறந்தது என்பது அதி ஆரம்பத்திலேயே-புரட்சியின் பின் தனியுடைமை முறை ஒழிக்கப்பட்டு, பொது உடைமை முறை ஸ்தாபிக்கப் பட்ட உடனேயே-நிரூபிக்கப்பட்டுவிட்டது.
ட்ருெஸ்கியின் போலித் தத்துவம், உற்பத்தி நன்கு வளர்ச்சி அடையாத காரணத்தால், அக்டோபர் புரட்சி சோஷலிஸத் துக்கு அல்ல, முதலாளித்துவத்துக்குத் தான் வழிகோலும் என்று சமூக ஜனநாயக பொருளாதாரவாதி சுகானேவ் முன்வைத்த அதே தத்துவம்தான் என்று ஸ்டாலின் சுட்டிக் காட்டினர். எனவே, ட்ருெஸ்கியின் நிலை சோஷலிஸ் புரட்சிக்கும், சோஷ நிர்மாணத்துக்கும் எதிரானது என்பது தெளிவு.
64

ட்ருெஸ்கியின் போலித் தத்துவத்துக்கும், முதலாளித்துவத் துக்குச் செல்லும் காலகட்டம் என்பது ஒரு முழுமையான சகாப்தம் என்று லெனின் முன்வைத்த தத்துவத்துக்கும் எவ் வித சம்பந்தமுமே கிடையாது. அதுபோல, ட்ருெஸ்கியின் தத்துவத்துக்கும் இக்காலகட்டம் பல தசாப்தங்களை, அல்லது ஒரு நூற்ருண்டை, அல்லது ஒரு சில நூற்றண்டுகளைக் கொண் டது என்று தோழர் மாஒசேதுங் அவர்கள் முன்வைத்த தத்து வத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. லெனின், தோழர் மாஓசேதுங் இருவரும் முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிஸத் துக்குச் செல்லும் காலகட்டம் எவ்வளவு நீண்டதாக இருக்கும் என்பதையே விவாதித்தனர்.
இந்த உண்மைகளைத் திரித்துப் புரட்டி, தோழர் மாஒ சேதுங் அவர்களின் கருத்துகளையும் ட்ருெஸ்கியின் கருத்துகளையும் ஒன்முகக் காட்டுவதன் மூலம் தோழர் மாஓசேதுங் அவர்களை தூவிக்க முயல்பவர்கள் உண்மையில் ட்ருெஸ்கியைத் தாக்க வில்லை; மாருக, அவர்கள் அவனை அழகுபடுத்தவே முயல்கின்ற னர். அவர்கள் ஒன்றில் அறியாமையால் இப்படிச் செய்கின்ற னர்; அல்லது, லெனின் தோழர் மாசேதுங் இருவரையும் வேண்டுமென்றே தூஷிக்கும் நோக்கத்தோடு இப்படிச் செய் கின்றனர்.
ட்ருெஸ்கியின் இந்த ப்ோலித் தத்துவத்தை ஸ்டாலின் ஏற் கெனவே ஆராய்ந்து அதற்கும், ரஷியாவில் சோஷலிஸப் புரட்சி யும் சோஷலிஸ் நிர்மாணமும் வெற்றிபெற மாட்டா என்ப தற்கு இரண்டு காரணங்கள் காட்டிய சமூக ஜனநாயகவாதி சுகானேவ் முன்வைத்த தத்துவத்திற்கும் வித்தியாசமே இல்லை என்று காட்டிவிட்டார். சுகானேவின் காரணங்கள் பின்வரு மாறு:- ஒன்று, ரஷியாவில் முதலாளித்துவ உற்பத்தி போது மான அளவு வளர்ச்சி அடையவில்லை. இரண்டு ரஷிய, விவசாயி கள் பின்தங்கியவர்கள்; அவர்களுடைய கலாசாரந் தரம் தாழ்ந் தது.
லெனின் "நமது நாட்டுப் புரட்சி பற்றி' என்ற தமது படைப்பில், ரஷிய விவசாயி வர்க்கத்தின் கலாசாரத் தரம் தாழ்ந்ததாயினும், அது பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து புரட்சி நடத்தியது; சோஷலிஸத்தை ஆதரிக்கின்றது என்று கூறினர். சில ஐரோப்பிய நாடுகளில் இருப்பதுபோல, ரஷியாவில் முத லாளித்துவ உற்பத்தி அவ்வளவு வளர்ச்சியடையவில்லை என்பது உண்மைதான் என லெனின் ஏற்றுக்கொண்டார். ஆனல், பாட் டாளி வர்க்கப் புரட்சியின் பின்னர், பாட்டாளி வர்க்க சர்வாதி
65

Page 44
காரத்தின் கீழ் உற்பத்தியை பெருமளவில் ஏன் அபிவிருத்தி செய்ய முடியாது? இப்படிச் செய்ய முடியாது என சுகானேவ் எந்த நூலில் படித்தார்? ** யுத்தத்தின் விளைவைப் பார்க்க வேண்டுமானல், முதலில் யுத்தத்தில் குதிக்க வேண்டும்’ என்று நெப்போலியன்தான் கூறினன்.
முதலாளிகளிடமிருந்தும் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் உற்பத்தி சாதனங்களையும், நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களை யும் பறிமுதல் செய்தபின் உற்பத்தியைப் பெருமளவில் விருத்தி செய்வது சாத்தியம் என்று லெனின் உறுதியாகக் கூறினர்.
தோழர் மாஓசேதுங் அவர்கள் ஆரம்பித்து வைத்த மகத் தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சி குறிப்பாக சோஷ லிஸப் பாதையில் செல்வதை ள்திர்த்து, முதலாளித்துவப் பாதை யில் செல்வதை ஆதரிக்கும் காட்ஸ்கி, சுகானேவ், ட்ருெஸ்கி, புகாரின் ஆகியோரின் போலித் தத்துவத்திற்கு எதிராகவே, செலுத்தப்படுகின்றது.
சீனுவில் இந்த கருத்துகளின் பிரதிநிதி லியூ ஷெள-சி ஆவன். 1949 கோடைகாலத்தில், சீனு அப்பொழுதுதான் விடுதலைபெற் றிருந்தபோது, சீனவில் முதலாளித்துவ உற்பத்தி போதுமான அளவு வளர்ச்சியடையாத காரணத்தால், சோஷலிஸப் பாதை யில் செல்வது சாத்தியமல்ல என்று லியூ ஷெள-சி கூறினன். சீனவில் உள்ள பிரச்சினை இங்கு கூடுதலாக முதலாளித்துவம் ” இருப்பதல்ல, குறைவாக இருப்பதுதான்; முதலாளித்துவச் சுரண்டல் ஒரு குற்ற மல்ல, அது பாராட்டுதற்குரியது; தொழி லாளர் சுரண்டலை எதிர்க்கவில்லை, வரவேற்கின்றனர் என்று லியூ ஷெள-சி கூறினன். ஆகவே, விடுதலைக்குப் பின் சீன சோஷலிஸப் பாதைக்குப் பதில் முதலாளித்துவப் பாதையில் செல்லவேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தான்.
இது, கடந்த காலத்தில் சோவியத் யூனியனைப் பொறுத்த வரையில், காட்ஸ்கி, சுகானேவ், ட்ருெஸ்கி முதலியோர் முன் வைத்த, உற்பத்தியே அனைத்தும் என்ற அதே தத்துவம்தான். மாஒசேதுங் சிந்தனையும், தோழர் மாஒசேதுங் ஆதரித்த மார்க்க மும் இந்த நபர்களின் தத்துவத்தைக் கூர்மையாக எதிர்ப்பவை, நேர் எதிரானவை.
மாஒசேதுங் சிந்தனையும், அக்டோபர் புரட்சியின் பின், முத லாளித்துவப் பாதையில் செல்வதை உறுதியாக எதிர்த்து, சோஷலிஸ்ப் பாதையில் உறுதியுடன் முன்னேறவேண்டும் என்று சுட்டிக்காட்டிய அதே லெனினின் சிந்தனை அன்றி வேறல்ல.
66

மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சியில் போராடு கின்ற இரண்டு மார்க்கங்களுக்கும் உள்ள அடிப்படை வித்தியா சம் யாது? பிரதான பிரச்சினை என்னவென்ருல், சீனு முதலா ளித்துவப் பாதையில் செல்வதா? அல்லது சோஷலிஸ் பாதை யில் செல்வதா? என இரு பாதைகளுக்கிடையில் நிகழும் போராட்டம் இது. இந்த இரண்டு மார்க்கங்களுக்குமிடையில் கடந்த காலத்தில் போராட்டம் நடைபெற்றது, இன்று நடை பெறுகின்றது, எதிர்காலத்தில் நடைபெறுவதும் திண்ணம்.
எனவேதான் தோழர் மாஒசேதுங் அவர்கள் இன்றைய கலாசார புரட்சி முதலாவது புரட்சி மாத்திரமே எதிர்காலத் தில் மேலும் பல புரட்சிகள் நிகழும் என்று கூறினுர்.
காரணம் என்னவென்ருல், இது பழைய சுரண்டும் வர்க்கங் களை தூக்கியெறிந்துவிட்டு, புரட்சியை என்றென்றைக்குமாக முடித்துவிடும் ஒரு பிரச்சினை மட்டுமல்ல. புதிய சுரண்டும் நபர் கள் எப்பொழுதும் தோன்றிக்கொண்டே இருப்பர். புதிய முத லாளி வர்க்கம் எப்பொழுதும் சிருஷ்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும் துரோகி காட்ஸ்கி யும்' என்ற தமது நூலில் லெனின் இதை விளக்கியுள்ளார். முதலாளித்துவத்திலிருந்து சோஷலிஸத்துக்கு மாறிச் செல்லும் வரலாற்றுக் காலகட்டம் பூராவும், தூக்கி வீசப்பட்ட சுரண் டும் வர்க்கங்கள் அதிகார அரங்கிற்கு மீள முயன்றவண்ணம் இருக்கும், தமது முயற்சிகளை செயலாக்க முயன்றவண்ணம் இருக்கும் என்று லெனின் அதில் சுட்டிக்காட்டியுள்ளார். இங்கு லெனின் தூக்கியெறியப்பட்ட பழைய சுரண்டும் வர்க்கங்களைக் குறிப்பிடுகின்ருர்,
ஆனல் 'இடதுசாரி கம்யூனிஸம், ஒரு சிறுபிள்ளைத்தனக் கோளாறு' என்ற படைப்பில் அவர், பழைய சுரண்டும் வர்க் கங்கள் அதிகார அரங்கிற்கு மீள முயல்வது மாத்திரமல்ல, சோஷலிஸ் சமுதாயத்தில் புதிய முதலாளி வர்க்கமும் சிருஷ் டிக்கப்படுகின்றது என்று சுட்டிக்காட்டினர். நாம் முன்பு விளக் கியதுபோல, லெனின் அவர்கள் இந்தப் பிரச்சினைகளை எழுப் பியபோதிலும், அவற்றிற்கு தீர்வு காண்பதற்கு முன் அவர் மறைந்துவிட்டார்.
முன்பு எடுத்துக் காட்டிய மக்கள் தினசரி ஆசிரியர் தலை யங்கம் சுட்டிக் காட்டியதுபோல, ஸ்டாலின் அவர்கள் ஒரு மார்க்ஸிஸம்-லெனினிஸவாதியாவர்; அவர் பாட்டாளி வர்க் கப் புரட்சியும், ஒரு நாட்டில் சோஷலிஸத்தை கட்டி அமைக்
67

Page 45
கும் பிரச்சினையும் சம்பந்தமான பல தத்துவ, அனுஷ்டானப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டார். ஆனல், வர்க்கப் போராட் டம் பற்றிய தத்துவத்தில் அவர் தவறு இழைத்து விட்டார்.
அக்டோபர் புரட்சியின் பின், ஸ்டாலின் வர்க்கப் போராட் டப் பிரச்சினையை முற்ருகக் கைகழுவி விட்டார் என்று கூறுவது சரியல்ல. உண்மையில் 1928க்கு முன், சோவியத் யூனியனில் வர்க்கப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று அவர் பெரி தும் வலியுறுத்தினர். 1928க்கு முன் அவர் கொம்சொமொல், கட்டுப்பாட்டு கமிஷன் ஆகியவற்றில் ஆற்றிய சொற்பொழிவு களில் இப்பிரச்சினையை விளக்கியுள்ளார். சமாதான காலங் களில் வர்க்கப் போராட்டத்தை மறப்பதற்காக சில நபர்களை யும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
ஆனல், அவருடைய குறைப்ாடு யாது? 1928க்குப் பின், குலாக்குகளின் பிரச்சினை தீர்க்கப்பட்ட பின்னர், விவசாயம் கூட்டுறவு மயமாக்கப்பட்ட பின்னர், முதலாவது 5 ஆண்டுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சோவியத் யூனியனில் வர்க்கங்கள் முற்ருக ஒழிக்கப்பட்டு விட்டன; அங்கு வர்க்கங்கள் இல்லை என்று அவர் கூறினர். இந்த பிழையான கருத்து 1936ல் சோவியத் அரசியல் சட்டம் பற்றி ச ர்ப்பித்த அறிக்கையில் தெளிவாக வெளிப்பட்டது.
ஸ்டாலினுடைய குறைபாடு யாதெனில், முதலாளித்துவத்தி லிருந்து கம்யூனிஸத்துக்கு மாறிச் செல்லும் வரலாற்று கால கட்டம் பூராவும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழும், சமுதாயத்தில் வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் இருக்கும் என்பதை அவர் தத்துவரீதியில் அங்கீகரிக்காததுதான்.
ஆணுல், உண்மை என்னவென்முல், விவசாயம் கூட்டுறவு மயமாக்கப்பட்ட பின்னர், புதிய சோவியத் அரசியல் சட்டம் அமுலுக்கு வந்த பின்னர்கூட, முதலாளிகளுக்கு எதிரான வர்க் கப் போராட்டம் இன்னும் நடைபெற்றது; முதலாளித்துவ மீட் சியின் அபாயம் இன்னும் நிலவியது; உண்மைகள் ஸ்டாலினுக் குப் போதனையளித்தன. அவருடைய கடைசி ஆண்டுகளில் சில வழிகளில் இதை உணர்ந்து கொண்டார்.
ஸ்டாலின், தாம் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன், வ்ர்க் கங்களும் வர்க்கப் போராட்டமும் நிலவுகின்றன என்ற உண் மையை கிரகித்துக் கொண்டார். பின்னர் அவர் சோஷலிஸ் சமுதாயத்தில் முரண்பாடுகள் இருக்கின்றன என்றும், சரியாகக்
68

கையாளப்படாவிட்டால், அவை பகை முரண்பாடுகளாக மாறும் என்றும் கூறினர். இந்த கருத்து ‘சோவியத் யூனியனில் சில பொருளாதாரப் பிரச்சினைகள்’’ என்ற அவருடைய கடைசிப் படைப்பில் காணப்படுகின்றது.
ஆணுல், இந்த நூலில் கூட, ஸ்டாலின் இப்பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்று கூறத் தவறியது மாத்திரமல்ல, இப் பிரச்சினை பற்றி தெளிவான ஒரு விளக்கமும் கொடுக்கத் தவறி விட்டார் என்பதை கூறித்தான் ஆகவேண்டும்.
இன்றைய சகாப்தத்தில், தோழர் மாஒசேதுங் அவர்கள் சோவியத் யூனியனின் வரலாற்று அனுபவம் முழுவதிலும் கவ னம் செலுத்தி வருகின்ருர், சோவியத் யூனியனில் திரிபுவாதி கள் அதிகாரத்தை கைப்பற்றி, முதலாளித்துவத்தை மீட்டுள்ள நிலைமைகளில், அக்டோபர் புரட்சியின் 50வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இது மார்க்ஸிஸம்-லெனினிஸவாதிகள் அனைவரும் பாரதூரமான கவனம் செலுத்தி, ஆராய்ந்து படிக்க வேண்டிய ஒரு கசப்பான அனுபவமாகும். இதைவிட சீன புரட்சியின் அனுபவங்களும் நமக்கு இருக்கின்றன.
இந்த அனுபவங்களை ஆராய்ந்து படித்ததன் விளைவாகத் தான் தோழர் மாஒசேதுங் அவர்கள், சோஷலிஸ் சமுதாயத் தில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ், வடிவத்தில் வேறுபட்ட போதிலும், வர்க்கங்களும் வர்க்கப் போராட்டமும் நிலவுகின்றன என்று கூறினர். தோழர் மாஓசேதுங் அவர்கள் தமது படைப்புகளில் இந்த தத்துவத்தை விரித்துரைத்தது மாத் திரமல்ல, மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சியை தாமாகவே தொடக்கி வைத்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகா ரத்தின் கீழ் எவ்வாறு புரட்சியை நடத்துவது என்பது சம்பந்த மான முழுக்கோவை கோவையான பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார்.
இது மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சிக்கு தோழர் மாஒசேதுங் அவர்கள் வழங்கிய சாதனையைக் காட்டும் ஒரு முக் கியமான மைல்கல்லாகும். இது மார்க்ஸிஸம்-லெனினிஸம் முற் றிலும் புதிய ஒரு கட்டத்துக்கு வளர்ந்துவிட்டது என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது. மார்க்ஸிஸம் முதலில் லெனினிஸம் என்ற கட்டத்துக்கு வளர்ந்து, இன்று மாஒசேதுங் சிந்தனை என்ற கட்டத்துக்கு மேலும் வளர்ந்து விட்டது.
69

Page 46
சீன கம்யூனிஸ்ட் கட்சி 8வது மத்திய கமிட்டியின் 11வது பிளினக் கூட்டம் 1966 ஆகஸ்ட் 12ல் அங்கீகரித்த அறிக்கை இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:-
"தோழர் மாஓசேதுங் அவர்கள் நமது சகாப்தத்தின் மாபெ ரும் மார்க்ஸிஸம்-லெனினிஸவாதியாவர், தோழர் மாஒசேதுங் அவர்கள் மேதாவிலாசத்துடனும், ஆக்கபூர்வமாகவும் பன்முகங் களிலும், மார்க்ஸிஸம்-லெனினிஸத்தை கையேற்று, பாது காத்து, வளர்த்து, அதை புத்தம் புதிய ஒரு கட்டத்துக்கு உயர்த்தியுள்ளார். மாஒசேதுங் சிந்தனை என்பது ஏகாதிபத்தி யம் அதன் பூரண அழிவை நோக்கிச் செல்லும் அதேவேளை யில், சோஷலிஸம் உலகரீதியான வெற்றியை நோக்கி முன்னே றும் சகாப்தத்தின் மார்க்ஸிஸம்-லெஸினிஸம். மாஒசேதுங் சிந் தனை என்பது எல்லா வேலைகளிலும் நமது கட்சிக்கும், நாட் டுக்கும் வழிகாட்டும் ஒருகோட்பாடு.”*
70

அத்தியாயம் V
kl.* LIss)
தோழர் மாஒசேதுங் அவர்கள் நிறைவேற்றிய வரலாற்றுக் கடமைகளில் ஒன்று யாதெனில், தொழிலாளி வர்க்கத்தை வழி நடத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி ஒன்று அவசியம் என்ற லெனி னிஸப் போதனையை மிகத் தெளிவாக ஊர்ஜிதம் செய்ததாகும். மார்க்ஸிஸ்க் களஞ்சியத்துக்கு லெனின் வழங்கிய சாதனைகளில் ஒன்று என்னவென்ருல், ஒரு ராணுவத்துக்கு பொது அதிகாரி ஒரு வர் இருப்பது எப்படி அவசியமோ அப்படி தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு தலைமை தாங்க புதிய ரக அரசி யல் கட்சி ஒன்று இருப்பது அவசியம் என்ற அவருடைய போதனை யாகும். லெனின் அவர்களின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கப் பட்ட பொல்ஷிவிக் கட்சி, மார்க்ஸிஸத்தால் ஆயுதபாணி ஆக்கப் பட்ட, ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட உருக்குப் போன்ற கட்டுப்பாடுடைய வெகுஜனங்களுடன் நெருங் கிய தொடர்புகளைக் கொண்ட பொல்ஷிவிக் கட்சி, இத்தகைய ஒரு புதிய ரகக் கட்சியாகும். இந்தக் கட்சி தான் மாபெரும் அக் டோபர் புரட்சியை நடத்திய கட்சி.
தோழர் மாஒசேதுங் அவர்கள் இப் பொருள் பற்றிய லெனி னின் போதனைகள் அனைத்தையும் மீண்டும் ஊர்ஜிதம் செய்துள் ளார். 'நமது லட்சியத்துக்குத் தலைமை தாங்கும் கேந்திர சக்தி சீன கம்யூனிஸ்ட் கட்சி. நமது சிந்தனைக்கு வழிகாட்டும் தத்துவ அடிப்படை மார்க்ஸிஸம் - லெனினிஸம்" என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ** புரட்சி நடைபெற வேண்டுமானல், புரட்சிகர கட்சி ஒன்று இருக்க வேண்டும். புரட்சிகரக் கட்சி ஒன்று இல்லா
71

Page 47
விட்டால், மார்க்ஸிஸம் - லெனினிஸ புரட்சிகர தத்துவத்தின் அடிப்படையில், மார்க்ஸிஸம் - லெனினிஸ புரட்சிகர நடையில் அமைக்கப்பட்ட கட்சி ஒன்று இல்லாவிட்டால், ஏகாதிபத்தியத் தையும் அதன் வேட்டை நாய்களையும் தோற்கடிப்பதில் தொழிலா ளர் வர்க்கத்துக்கும் பரந்துபட்ட ப்ொது மக்களுக்கும் தலைமை அளிப்பது சாத்தியம் ஆகாது' என்று அவர் மேலும் கூறியுள் 6YTITIT .
சீன கம்யூனிஸ்டுகள் தமது எதிரியைத் தோற்கடித்த மூன்று பிரதான ஆயுதங்கள் பற்றியும் அவர் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். இது, புரட்சிவாதிகள் அனைவரும் பாரதூரமா கப் படிக்க வேண்டிய ஒரு மேற்கோளாகும். அவர் கூறியதாவது :- 'மார்க்சிஸம்-லெனினிஸத் தத்துவத்தால் ஆயுத பாணியாக்கப்பட்ட, சுய-விமர்சன முறையைப் பயில்கின்ற, ப்ொது மக்களுடன் தொடர்புடைய, சிறந்த கட்டுப்பாடுடைய ஒரு கட்சி, இத்தகைய ஒரு கட்சியின் தலைமையிலுள்ள ஒரு ராணுவம்; இத்தகைய கட்சியின் தலைமையிலுள்ள புரட்சிகர வர்க்கங்கள், புரட்சிகரக் குழுக்கள் எல்லாவற்றினதும் ஒரு ஐக்கிய முன்னணிஇந்த மூன்றும் தான் நாம் எதிரியைத் தோற்கடித்த மூன்று பிர தான ஆயுதங்கள். ’’
தோழர் மாஒசேதுங் அவர்கள் எப்பொழுதும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் பற்றி பெரிதும் வலி யுறுத்தி வந்துள்ளார். அவர் கூறியதாவது: "நாம் கட்சியின் கட் டுப்பாட்டைப் புதிதாக ஊர்ஜிதம் செய்ய வேண்டும். அதாவது, (1) தனி நபர் ஸ்தாபனத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும்; (2) சிறு பான்மை பெரும்பான்மைக்குக் கீழ்ப்படிய வேண்டும்; (3) கீழ் மட் டம் மேல்மட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் (4) உறுப்பினர் அனைவரும் மத்திய கமிட்டிக்குக் கீழ்ப்படிய வேண்டும். யார் கட் டுப்பாட்டின் இந்த விதிகளை அத்துமீறுகிருரோ, அவர் கட்சி ஐக்கி யத்தைச் சீர்குலைப்பவராவர்."
அவர் மேலும் குறிப்பிட்டதாவது: 'கட்சிக் கட்டுப்பாட்டின் ஒரு அம்சம் சிறுபான்மை பெரும்பான்மைக்குக் கீழ்ப்படிவதாகும். சிறுபான்மையின் அபிப்பிராயம் நிராகரிக்கப்பட்டால், அது பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். தேவையானல், அடுத்த கூட்டத்தில் அவ் விஷயத்தை அது புனராலோசனைக்குக் கொண்டு வரலாம். ஆனல், இதை விட்டு எவ்விதத்திலும் தீர்மானத்துக்கு எதிராகச் செயல் படக் கூடாது. ’’
72

ஸ்தாபனக் கட்டுப்பாட்டை உதாசீனப்படுத்தி, விமர்சனம் செய்வதால் ஏற்படும் தீமை பற்றியும் அவர் சுட்டிக் காட்டியுள் ளார். உள் கட்சி விமர்சனம் என்பது கட்சி ஸ்தாபனத்தைப் பலப் படுத்துவதற்கும், அதன் போராட்ட ஆற்றலைப் பெருக்குவதற்கும் உரிய ஒரு ஆயுதம். எனவே, விமர்சனங்கள் கட்சிக்குள்ளே செய் யப்பட வேண்டுமே தவிர, வெளியே செய்யப்படக் கூடாது.
கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படை யாகக் கொண்டு இயங்குகின்றது. ஜனநாயக மத்தியத்துவம் என் பது ஜனநாயகம், மத்தியத்துவம் என்ற இரண்டின் சேர்க்கையா கும். ‘ஸ்தாபனத் துறையில், மத்தியத்துவப் படுத்தப்பட்ட வழி காட்டலின் கீழ் நாம் ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்ய வேண் டும்' என்று தோழர் மாஓசேதுங் அவர்கள் நமக்குப் போதித் துள்ளார். *
அவர் மேலும் சுட்டிக் காட்டியதாவது: “ஜனநாயகம் மத்தி யத்துவத்துடன் தொடர்புடையது. சுதந்திரம் கட்டுப்பாடுடன் தொடர்புடையது. அவை ஒரே முழுமையான அம்சத்தின் இரண்டு எதிர்மறைகள். அவை முரண்பாடும், அதே சமயத்தில் ஐக்கியமும் உடையவை. நாம் ஒருதலைப்பட்சமாக ஒன்றை வலி யுறுத்தி, மற்றதை மறுக்கக் கூடாது.’’ மீண்டும் அவர், ‘நாம் சுதந்திரம் இல்லாமல் இருக்க முடியாது; கட்டுப்பாடும் இல்லா மல் இருக்க முடியாது. ஜனநாயகம் இல்லாமல் இருக்க முடியாது; மத்தியத்துவமும் இல்லாமல் இருக்க முடியாது. ஜனநாயகம், மத் தியத்துவம் இரண்டின் ஐக்கியம், சுதந்திரம், கட்டுப்பாடு இரண் டின் ஐக்கியம்-இதுவே நமது ஜனநாயக மத்தியத்துவக் கோட் பாடாகும்" என்றும் கூறியுள்ளார்.
தோழர் ம்ாஒசேதுங் அவர்கள் சகல கம்யூனிஸ்ட் கட்சிகளும் விமர்சனம், சுய-விமர்சனம் - இவற்றை அனுஷ்டிக்கும் அவசியம் பற்றிய லெனினிஸ் போதனையை எப்பொழுதும் வலியுறுத்தி வந் துள்ளார். அவர் சுட்டிக் காட்டியதாவது: “கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனத்துக்கு அஞ்சுவதில்லை. காரணம், நாம் மார்க்ஸிஸ்டுகள்; உண்மை நம் பக்கத்தில் இருக்கின்றது; அடிப்படை மக்கள், தொழிலாளரும், விவசாயிகளும் நம் பக்கத்தில் இருக்கின்றனர். * மேலும் அவர் கூறியதாவது " "விமர்சனம், சுய-விமர்சனம் என்ற மார்க்ஸிஸம் - லெனினிஸ் ஆயுதம் நம்மிடம் உண்டு. கூடாத நடையை நீக்கி, நல்ல நடையை நாம் வைத்திருக்க முடியும்."
அவர் மேலும் விளக்கியதாவது: “உணர்வுபூர்வமாக சுயவிமர்சனம் செய்து கொள்வது, நமது கட்சியை இதர அரசியல் கட்சிகள் எல்லாவற்றிலுமிருந்து பிரித்துக் காட்டும் இன்னெரு
73

Page 48
தெளிவான எல்லைக் கோடாகும், அறை அடிக்கடி ஒழுங்காகக் கூட்டப்பட வேண்டும்; ஒரு அறை ஒழுங்காகக் கூட்டப்படா விட் டால், அங்கு தூசி படிந்து விடும்; முகம் அடிக்கடி ஒழுங்காகக் கழுவப்பட வேண்டும்; நமது முகங்களை ஒழுங்காகக் கழுவாவிட் டால், அவை அழுக்குப் பிடித்து விடும் என்று நாம் கூறுவதுண்டு. நமது தோழர்களின் உள்ளங்களிலும், நமது கட்சியின் வேலையி லும் கூட தூசி பிடிக்கலாம்; அவையும் கழுவிச் சுத்தம் செய்யப் பட வேண்டும். "ஒடும் நீர் ஊசிப் போகாது, கதவுப் பிணைச்சல் கறள் பிடியாது’ என்ற பழமொழியின் அர்த்தம், இடைவிடாத இயக்கம் கிருமிகளும் சேதனப் பொருள்களும் நுழையும் வாயிலைத் தடுக்கும் என்பதாகும். நமது வேலையை அடிக்கடி ஒழுங்காசப் பரி சோதனை செய்வது, அதன் போக்கில் ஜனநாயக வேலை ஒன்றை விருத்தி செய்வது, விமர்சனத்துக்கோ, சுய-விமர்சனத்துக்கோ அஞ்சரீமலிருப்பது, ‘அறிந்தவை எல்லாவற்றையும் பேசுவது, ஒன்றையும் ஒழிக்காமல் பேசுவது”, “பேச்சாளனைக் குறை கூருதே, பதிலுக்கு அவர் வார்த்தையிலிருந்து எச்சரிக்கை பெற்றுக் கொள்”, “தவறுகள் இழைத்தால் அவற்றைத் திருத்து, இழைக்கா விட்டால் அவற்றுக்கெதிராக ஜாக்கிரதையாய் இரு" என்பவை போன்ற சிறந்த ஜனரஞ்சகமான சீன முது மொழிகளைப் பிரயோ கிப்பது-நமது தோழர்களின் சிந்தனைகளும், நமது கட்சியின் உட லும் அரசியல் தூசிகள், கிருமிகள் எவற்ருலும் பாதிக்கப்படாமல் தடுக்கும் பயனுள்ள ஒரே ஒரு வழி இதுவேயாகும்.'
மீண்டும் அவர் விமர்சனம், சுய-விமர்சனம் செய்யும் நோக் கம் பற்றியும், அதை எப்படி செய்வது என்றும் தெளிவாக விளக் கியுள்ளார். அவர் கூறியதாவது:- **மானசீகவாதம், ஒருமுனை வாதம், வாய்ப்பாட்டு கட்சி எழுத்து நடை ஆகியவற்றை எதிர்க் கும்போது, நாம் இரண்டு நோக்கங்களை மனதில் வைக்க வேண் டும்:- ஒன்று, ‘கடந்த காலத் தவறுகளிலிருந்து படிப்பினை பெற்று எதிர்காலத்தில் தவறுகளைத் தவிர்ப்பது , இரண்டு, ‘நோயாளி யைக் காப்பாற்ற நோய்க்குச் சிகிச்சை செய்வது" . எவருடைய உணர்வு மேம்பாட்டையும் பொருட்படுத்தாமல் கடந்த காலத் தவறுகள் எல்லாம் அம்பலப் படுத்தப்பட வேண்டும். எதிர்கால வேலையை மேலும் கவனமாகவும் சிறப்பாகவும் செய்வதற்காக, கடந்த கால வேலையில் உள்ள தீய அம்சங்களை ஒரு விஞ்ஞானக் கண்ணுேட்டத்தில் ஆராய்ந்து, விமர்சனம் செய்வது அவசியமா னது. இதுவே "கடந்த காலத் தவறுகளிலிருந்து படிப்பினை பெற்று, எதிர்காலத்தில் தவறுகளைத் தவிர்ப்பது என்பதன் அர்த்தமாகும். ஆனல் பிழைகளை அம்பலப்படுத்தி, குறைபாடுகளை விமர்சனம் செய்வதில் நமக்குள்ள நோக்கம், வைத்தியர் ஒருவர்
74

நோய்க்குச் சிகிச்சை அளிப்பது போல, நோயாளியைக் காப்பாற் றுவதன்றி, அவர் இறப்பதற்குச் சிகிச்சை அளிப்பதல்ல. குடல் வால் நோயுடைய ஒருவர், அறுவை வைத்தியர் அவருடைய குடல் வாலை அகற்றியதும் காப்பாற்றப்படுகிறர். தவறுகள் இழைத்த ஒருவர் சிகிச்சைக்கு அஞ்சித் தனது நோயை மறைக்காத வரை யில், அல்லது சிகிச்சை செய்ய முடியாமல் போகுமளவுக்குத் தனது பிழைகளில் அழுத்தி நிற்காத வரையில், அவர் உண்மையா கவும், விசுவாசமாகவும் குணப்படுத்தப்பட விரும்பி, தனது தவ றுகளைத் திருத்தும் வரையில், நாம் அவரை வரவேற்று, அவர் நல்ல ஒரு தோழராய் மாறுவதற்காக, அவருடைய நோய்க்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, அவரை விளாசித் தாக்குவோமேயானல், நாம் ஒரு போதும் வெற்றிபெற முடியாது. ஒரு சித்தாந்த, அல்லது அரசியல் நோயைக் குணப் படுத்தும் போது, நாம் கடினமாகவும் மூர்க்கத்தனமாகவும் நடந்து கொள்ளக் கூடாது. பதிலுக்கு ‘நோயாளியைக் காப் பாற்ற நோய்க்குச் சிகிச்சை அளிப்பது என்ற அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதுவே சரியான, பயனுள்ள ஒரே ஒரு வழியாகும்.
அவர் மேலும் விளக்கியதாவது: **உட்கட்சி விமர்சனம் சம் பந்தமாகக் குறிப்பிட வேண்டிய இன்னுெரு குறிப்பும் இருக்கின் றது. அதாவது, சில தோழர்கள் விமர்சனம் செய்யும் போது பிா தான பிரச்சினைகளை மறந்து, சிறிய விஷயங்களில் தமது கவனத் தைச் செலுத்துகின்றனர். விமர்சனத்தில் பிரதான கடமை அரசி யல், ஸதாபனப் பிழைகளைச் சுட்டிக் காட்டுவதே என்பதை அவர் கள் புரிந்து கொள்ள்வில்லை. தனிநபரின் குறைபாடுகளைப் பொறுத்தவரையில், அவை அரசியல், ஸ்தாபனப் பிழைகளுடன் தொடர்புடையவையாய் இருந்தாலொழிய, கூடுதலாக விமர்ச ணம் செய்வது அணுவசியமாகும். அப்படிச் செய்தால் சம்பந்தப் பட்ட தோழர்கள் யாது செய்வது என்று அறியாமல் தடுமாறி விடுவர். இன்னும் இத்தகைய விமர்சனம் ஒருகால் வ்ளர்ந்தால், கட்சிக்குள் சிறிய தவறுகளில் பிரத்தியேகக் கவனம் செலுத்தப் படும்; ஒவ்வொருவரும் அஞ்சி, மிகமிஞ்சிய எச்சரிக்கையால், கட் சியின் அரசியல் கடமைகளை மறந்து விடுவர். இது மிகப் பெரிய அபாயமாகும்."
அவர் தொடர்ந்து சுட்டிக் காட்டியதாவது: 'சீன கம்யூ னிஸ்டுகளாகிய நாம் பரந்துபட்ட சீன மக்களின் அதி உயர்ந்த நலன்களை நமது செயல்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை யாகக் கொண்டவர்கள். நமது லட்சியம் நீதியானது என்பதில்
75

Page 49
பூரண நம்பிக்கை உடையவர்கள். தனிப்பட்ட தியாகங்கள் எதற்கும் தயங்காதவர்கள். லட்சியத்துக்காக நமது உயிர்களை யும் எந்தச் சமயத்திலும் அர்ப்பணிக்க சித்தமாய் இருப்பவர் கள். எனவே, மக்களின் தேவைகளுக்குப் பொருந்தாத எந்தக் கருத்தையும், எந்த கண்ணுேட்டத்தையும், எந்த அபிப்பிரா யத்தையும் அல்லது வழிமுறையையும் நாம் . புறக்கணிக்கத் தயங்கலாமா? அரசியல் தூசிகளும், கிருமிகளும் நமது சுத்த மான முகத்தை அழுக்குப்படுத்த அல்லது ஆரோக்கியமான நமது உறுப்புகளை அரித்துத் தின்ன நாம் அனுமதிக்கலாமா? எண்ணற்ற புரட்சித் தியாகிகள் மக்களின் நலன்களுக்காகத் தமது உயிர்களை அர்ப்பணித்துள்ளனர். வாழுகின்ற நாம் அவர் களைப் பற்றி எண்ணும்போது, நமது இதயங்களில் துன்பம் பெருகி ஓடுகின்றது-அப்படியானல், நாம் தத்தம் செய்ய விரும் பாத எந்த ஒரு தனிப்பட்ட நலனும், அல்லது நாம் வீசி எறிய விரும்பாத எந்த ஒரு தவறும் இருக்க முடியுமா?"
அவர் மேலும் தொடர்ந்து குறிப்பிட்டதாவது: “ ‘எந்த ஒரு வெற்றியையும் ஒட்டி, நாம் இறுமாப்பு அடைந்துவிடக் கூடாது. அழுக்கை அகற்றி, தூய்மையாய் வைத்திருப்பதற்கா கத் தினந்தோறும் நமது முகங்களைக் கழுவுவது போலவும், நிலத்தை கூட்டுவது போலவும், நமது இறுமாப்பை நாம் கட் டுப்படுத்தவேண்டும்; நமது குறைபாடுகளை நாம் அடிக்கடி விமர் சனம் செய்யவேண்டும்.’’ ‘விமர்சனத்தைப் பொறுத்த வரை யில், அது சரியான சமயத்தில் செய்யப்படவேண்டும். சம்பவம் நிகழ்ந்த பின்னர் மாத்திரம் விமர்சனம் செய்வதைப் பழக்க மாக்கிவிடக்கூடாது’ ‘தவறுகள், பின்னடைவுகளால் போதனை பெற்று, நாம் ஓரளவு விவேகம் பெற்றுள்ளோம், நமது விவகா ரங்களை மேலும் சிறப்பாகக் கையாளுகின்ருேம். எந்த ஒரு அரசியல் கட்சியையும், அல்லது தனி நபரையும் பொறுத்த வரையில், தவறுகளைத் தவிர்ப்பது கஷ்டமானது. ஆனல், நமது தவறுகளை இயன்ற அளவு குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கால் தவறு இழைக்கப்பட்டதும், நாம் அதைத் திருத்த வேண் டும்; அதை எவ்வளவுக்கு விரைவாக, பூரணமாகச் செய்கி ருேமோ, அவ்வளவுக்கு நல்லதாகும் ".
கட்சியைப் பொறுத்தவரையில், அது ஒரு கதவடைத்த ஸ்தாபனமாகத் தன்னை மாற்றிக்கொள்ளாமல், மக்கள் மத்தி யில் எப்பொழுதும் சென்று, அவர்களைச் சார்ந்திருக்கவேண்டிய தேவைபற்றி தோழர் மாஒசேதுங் அவர்கள் எப்பொழுதும் அழுத்திக் கூறிவந்துள்ளார். 'மக்கள், மக்கள் மட்டுமே, உலக
76

வரலாற்றைச் சிருஷ்டிக்கும் உந்துசக்தியாவர்' என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது: **பொதுமக்கள்தான் உண் மையான வீரர்கள். ஆனல், நாம் அடிக்கடி சிறுபிள்ளைத்தை முடையவர்களாகவும், நகைக்கத் தக்கவர்களாகவும் இருக்கின் ருேம். இதை விளங்கிக் கொள்ளாவிட்டால், மிக ஆரம்ப அறி வைக் கூடப் பெறுவது சாத்தியமாகாது.”*
அதேவேளையில் அவர், 'பொதுமக்கள் இன்னும் விழித்து எழாத நிலையில் நாம் தாக்குதலில் செல்ல முயன்ருல், அது துணிச் சல்வாதம்; பொதுமக்கள் தாம் விரும்பாத ஒரு விஷயத்தைச் செய்யும்படி நாம் அவர்களை வழிநடத்துவதில் பிடிவாதமாய் நின் முல், நாம் நிச்சயம் தோல்வியடைவோம். பொதுமக்கள் முன்னேற்றத்தைக் கோரும்போது, நாம் முன்னேருவிட்டால், அது வலதுசாரி சந்தர்ப்பவாதமாகும்' என்றும் நமக்குப் போதித்துள்ளார்.
சரியான தலைமைமுறை பற்றி அவர் பின்வருமாறு கற்பித் துள்ளார்: 'பொதுமக்களின் கருத்துகளைத் தொகுத்து, ஒன்று கச் செறித்து, பின்னர் பொதுமக்கள் மத்தியில் சென்று, இக் கருத்துகளில் அழுத்தமாக நின்று, அவற்றை அமுல்நடத்தி தலை  ைமயின் சரியான கருத்துகளை உருவாக்குவது-இதுவே தலைமை முறையின் அடிப்படையாகும்.'
மேல் கூறியவற்றிலிருந்து, தோழர் மாஒசேதுங் அவர்கள் வெகுஜனங்கள் மீது நிரம்பிய விசுவாசம் உடையவர் என்பது மாத்திரமல்ல, சகல விதமான துணிச்சல்வாதங்களுக்கும் அவர் எதிரானவர் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகும். கட்சி யானது பொதுமக்களை லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தட்டி எழுப்பவேண்டும்; வெகுஜன ஆதரவற்ற கட்சி மாத்திரமல்ல, சரியான ஒரு அரசியல் தலைமையில்லாத வெகுஜன நடவடிக்கை கூட பயனற்றது என்று அவர் எப்பொழுதும் போதித்துள் ளார். இக்கருத்தை அவர் பின்வரும் மேற்கோளில் தெளிவு படுத்தியுள்ளார்:- " "தலைமைக் குழு எவ்வளவு உற்சாகமாய் இருந்தபோதிலும், அதன் நடவடிக்கை பொதுமக்களின் உற் சாகத்துடன் இணைக்கப்படாவிட்டால், அது ஒரு சில நபர்களின் பயனற்ற முயற்சியாகவே இருக்கும். மறுபுறம், பரந்துபட்ட பொதுமக்கள் மட்டும் ஊக்கமாக இருந்து, பொதுமக்களின் நடவடிக்கையைத் தகுதியான முறையில் ஒழுங்குசெய்ய ஒரு பலமான தலைமைக் குழு இல்லாவிட்டால், அந்த உற்சாகம்
77

Page 50
நீண்டகாலம் நீடித்திருக்க முடியாது சரியான திசையில் செலுத் தப்படமுடியாது; ஒரு மேல் மிட்டத்திற்கு உயர்த்தப்பட முடி யாது’’.
கட்சியானது பொதுமக்களைச் சரியான முறையில் பிரித்து. ஆராயவேண்டும், அவர்களுடைய அரசியல் விழிப்புணர்ச்சித் தரத்தைச் சரியாக கணித்துக் கொள்ளவேண்டும், அதன்பிரகா ரம் அவர்களை ஐக்கியப்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் கூறுவதாவது:- 'குறிப்பிட்ட எந்த இடத்துப் பொதுமக்கள் மத்தியிலும் ஒப்பீட்டுவகையில் உற் சாகிகள், நடுநிலையாளர், ஒப்பீட்டுவகையில் பின்தங்கியவர்கள் என்ற மூன்று பகுதியினர் இருப்பர். எனவே, தலைவர்கள் சிறிய தொகையினராக உற்சாகிகளைத் தலைமையைச் சூழ ஐக்கியப் படுத்தி, அவர்களை முதுகெலும்பாகக் கொண்டு, மத்திய பகுதி யினரின் தரத்தை உயர்த்தி, பின்தங்கியவர்களை வென்றெடுப் பதில் தேர்ச்சி பெறவேண்டும். ? ?
கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் விஷயம்பற்றி, ஒரு சில பகுதியினர் மத்தியில் தவருன, குட்டி பூர்ஜுவா வர்க்கக் கருத்துக்களும், மார்க்ஸிஸம்-லெனி னிஸத்துக்கு விரோதமான கருத்துகளும் நிலவுகின்றன. இக் கருத்துகள் சே குவேவராவின் பெயருடன் அல்லது வேறு பெயரில் சொன்னல் கியூபா மார்க்கத்துடன் சம்பந்தப்பட்டவையாகவும் காணப்படுகின்றன. ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் வர்க்கத்துக்கு த்லைமைதாங்க வேண்டிய அவசியம்பற்றி தோழர் மாஒசேதுங் அவர்கள் கூறிய மேற்காணும் கருத்துகளை இன்றைய காலப் புரட்சி இயக்கம் நன்ருகக் கிரகித்துக்கொள்வது அத்தியாவசியமாகும்.
சே குவேவராவின் அல்லது கியூபா மார்க்கத்துடன் சம்பந் தப்படுத்தப்பட்ட இந்தத் தத்துவத்தின் அடிப்படை நோக்கம் நாளிலும் பொழுதிலும் வளர்ந்துவரும் மாஒசேதுங் சிந்தனையின் செல்வாக்கை எதிர்ப்பதாகும். இந்தத் தத்துவம் ஒரு புரட்சி கரக் கட்சியின் தேவை, (புரட்சி இயக்கத்தில்) மக்களின் பங்கு இரண்டையும் எதிர்க்கின்றது. சில கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிபு வாதக் கட்சிகளாய் மாறிய உண்மையைக் காரணமாகக் கொண்டு, தொழிலாளர் வர்க்கத்துக்கு வழிகாட்ட புரட்சிகரக் கட்சி ஒன்று தேவை என்ற லெனினிஸ தத்துவத்தை நிராகரிப்பதற்கு எடுக் கும் முயற்சி இது, குழந்தையைக் குளிப்பாட்டிய அழுக்கு நீரை வீசும்போது, ஒருவர் குழந்தையையும் வீசியெறிவாரா? ஒருபோ தும் எறிய மாட்டார். அதுபோல, குறிப்பிட்ட சில கம்யூனிஸ்ட்
78

கட்சிகள் தீயவையாக அல்லது திரிபுவாதக் கட்சிகளாக மாறிய ஒரேகாரணத்துக்காக, கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தை யாரும் நிராகரிக்க மாட்டார். எந்த ஒரு நாட்டிலாயினும் ஒரு கம்யூ னிஸ்ட் கட்சி திரிபுவாதக் கட்சியாய் மாறிவிட்டால், அந்த நாட்டுப் புரட்சிவாதிகளின் கடமை உண்மையான, புரட்சிகர மான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க வேண்டுமே யன்றி, கட்சியின் தேவையை நிராகரிப்பது அல்ல.
இந்த தவருண தத்துவம் குறிப்பாக ஒரு புதுமைவாத, குட்டி பூர்ஜாவா வர்க்க சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் சிறப்பியல்பு யாதெனில் பொதுமக்கள் மீது நம்பிக்கை இன்மையாகும். இது மிகப் பயங்கரமான நிலைமை களிலும் பெரும் சாதனைகளை செய்வர் என்று ஒரு கூட்டம் தான்தோன்றித்தனமான வீரசிகாமணிகள் மீது பிரதானமாக நம்பிக்கை வைக்கின்றது.
ஒரு நாட்டில் புரட்சிக்கான சூழ்நிலை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அச்சூழ்நிலை பக்குவப்பட் டிருந்தாலும் சரி, பக்குவப்படாதிருந்தாலும் சரி, அதா வது, ஒரு நாட்டு மக்கள் புரட்சிக்கு தயாராய் இருக்கிருர்களா இல்லையா என்பதை பாராமல், மக்களுக்குத் தலைமை தாங்க ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாமல், மனுேதிடம் கொண்ட ஒரு சில புரட்சிவாதிகளால் அந்த நாட்டு அரசாங்க யந்திரத்தை தூக்கி எறிய முடியும், அதிகாரத்தைக் கைப்பற்றமுடியும், அதன்பின்னர் மக்களைத் தம்பக்கம் வென்றெடுக்க முடியும் என்ற கருத்தை இந்த சே குவேவரா தத்துவம் ஜனரஞ்சமாக்க முயல் கின்றது.
வெகுஜன ஆதரவில்லாமல் ஒரு சில தனிநபர்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை, பாட்டாளி வர்க்க வெகுஜனங்களின் ஆதரவைப் பெருமல் எதிரிக்கு நஷ்டம் விளைவிக்கக்கூடிய 15t. வடிக்கைகளை இத்தத்துவம் ஆதரிக்கின்றது. ‘இதுதான் குட்டி பூர்ஜ"வாக்கள் பிரியப்படக்கூடிய ஒரு ரகப் போராட்டமாகும். இது அவர்களுடைய தனிநபர்வாத இயல்பையும், பாட்டாளி வர்க்கம் போராட்டத்தில் பங்குபற்றி அவர்கள் கொண்டுள்ள தவருண கண்ணுேட்டங்களையும் பிரதிபலிக்கின்றது.”*
இந்தத் தத்துவத்துக்கும், பொதுமக்களைப் பூரணமாகச் சார்ந்திருப்பதை அடிப்படையாகக் கொண்ட மக்கள் யுத்தம் பற்றிய் தோழர் மாஓசேதுங் அவர்களின் தத்துவத்துக்கும் எவ் வித சம்பந்தமும் கிடையாது. மாஓசேதுங் அவர்களின் மக்கள்
79

Page 51
யுத்தம் பற்றிய தத்துவம் வெகுஜனங்கள் மத்தியில், சிறப்பாக விவசாயிகள் மத்தியில் சென்று வேலை செய்யும்படி புரட்சிவாதி களைத் தூண்டுகின்றது. வெகுஜனங்களுடன் ஒன்றிணைந்து, கிராமியத் தளப் பிரதேசங்களை ஸ்தாபித்து, மக்கள் படை ஒன் றைக் கட்டி வளர்த்து, நீண்டகால மக்கள் யுத்தத்தை நடத்தி, இறுதியில் நாட்டுப் புறங்களைக்கொண்டு நகரங்களைச் சுற்றி வளைத்து, விடுதலை செய்யும்படி புரட்சிவாதிகளைத் தூண்டுகின் றது.
தோழர் மாஓசேதுங் அவர்கள், ‘புரட்சி யுத்தம் என்பது பொதுமக்களின் யுத்தம். பொதுமக்களைத் தட்டியெழுப்பி, அவர்களைச் சார்ந்திருந்தால்தான் இந்த யுத்தத்தை நடத்தமுடி யும்' என்று தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார். இவ்வாறு, மக்கள் யுத்தம் பற்றிய தத்துவம் ஒரு மார்க்ஸிஸம்-லெனினிஸக் கட்சியின் தலைமையில், பொதுமக்களைப் புரட்சிகரமான முறை யில் தட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்ட, அதிகா ரத்தைக் கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஒரு தத் துவமாகும். இத்தத்துவம் மக்களைத் தட்டியெழுப்புவதை விரும்பு கின்றது. அவர்களை ஸ்தாபனப்படுத்தி, அணிதிரட்ட உதவு கின்றது. ஆரம்பத்தில் வெகு பலம்வாய்ந்த எதிரியுடன் துணிந்து போராடவும், அப்போராட்டத்தின் போக்கில் எதிரியை தீர்க்க மாகத் தோற்கடிக்கக் கூடிய பல மேம்பாடு பெறும்வரை தமது படைகளை வளர்க்கவும் போதனை அளிக்கின்றது.
தோழர் மாஒசேதுங் அவர்களின் இத் தத்துவத்துக்கும், தொழிலாளர் வர்க்கக் கட்சியின் பாத்திரத்தையும் பொது மக் களின் பாத்திரத்தையும் நிராகரித்து, ஒரு சில தனி நபர்கள் மீது அல்லது ஒரு சில தனிநபர்க் கும்பல்கள் மீது நம்பிக்கை வைக்கும் கியூடன் மார்க்கத்துக்கும் சம்பந்தா சம்பந்தமே கிடை யாது.
மார்க்ஸிஸ்-லெனினிஸ் வாதிகள் அனைவரும் சித்தாந்த ரீதி யில் சர்வசதா விழிப்போடிருக்க வேண்டும்; உண்மையான கருத்துகளையும் நவீன திரிபுவாதிகள் விற்பனை செய்ய முயலும் போலிச் சரக்குகளையும் வேறுபடுத்திப் பார்க்கக் கூடியவர்களாக, இருக்கவேண்டும்.
தமக்கு முன் லெனின் அவர்கள் செய்ததுபோல, தோழர் மாஓசேதுங் அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி என்பது நமது சகாப்தத்தின் மிக முன்னேறிய புரட்சிகரத் தத்துவத்தால்மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மாஒசேதுங் சிந்தனையால் ஆயுதபாணி
80

யாக்கப்பட வேண்டும் என்ற உண்மையை பெரிதும் வலியுறுத்தி யுள்ளார். ஒரு வீட்டுக்கு உறுதியான ஒரு அத்திவாரம் எப்படி அவசியமோ, அப்படி ஒரு புரட்சி இயக்கத்துக்கு - ஒரு கட்சிக் கும் கூட ஒரு உறுதியான சித்தாந்த அடிப்படை அவசியம், இல்லாவிட்டால், அந்த வீடு தகர்ந்துவிடும். 'புரட்சிகர தத்து வ்ம் இல்லாவிட்டால் புரட்சிகர நடைமுறையே இருக்க முடி யாது’ என்று லெனின் நமக்குப் போதித்துள்ளார்.
தோழர் மாஒசேதுங் அவர்கள் போதித்ததாவது: 'நமது நாட்டில் புரட்சியும் நிர்மாணமும் ஈட்டிய வெற்றிகள் மார்க் ஸிஸம்-லெனினிஸத்தின் வெற்றிகள் ஆகும். நமது கட்சி இடை விடாது பின்பற்றி வரும் சித்தாந்தக் கோட்பாடு யாதெனில், சீன புரட்சியின் அனுஷ்டானத்துடன் மார்க்ஸிஸம்-லெனினிஸ் தத்துவத்தை நெருக்கமாக இணைப்பதாகும்.'
ஆகவேதான், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு உறுப்பின ரும் மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மர்ஒசேதுங் சிந்தனையால் தம்மை ஆயுதபாணிகள் ஆக்கிக்கொள்ள வேண்டும். பல கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிபுவாத கட்சிகளாக சீரழிந்ததற்கு அநேக காரணங் கள் உண்டு. அவற்றில், பிரதான காரணங்களில் ஒன்று என்ன வென்ருல், அவற்றின் அங்கத்தவர்களுக்கு சரியான சித்தாந்தப் பயிற்சி இன்மையாகும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயர்ப் பல கையைத் தொங்கவிட்டால் மட்டும் போதாது. இதை யாரும் செய்யலாம். முக்கியமானது யாதெனில், ஒவ்வொரு கட்சி உறுப்பினரையும் சரியான மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மாஒசேதுங் சிந்தனை தத்துவத்தால் ஆயுதபாணியாக்கி, அவர்கள் அனைவ ரையும் உண்மையான புரட்சிவாதிகள் ஆக்கவேண்டும். மார்க் ஸிஸம்-லெனினிஸம்-மாஓசேதுங் சிந்தனைப் படிப்பில் நாம் கடைப் பிடிக்கும் மனுேபாவம் கட்சியை கட்டி வளர்ப்பதில் முக்கியமான ஒரு அம்சம். இப்படிப்பு யந்திரீக முறையில் செய்யப்படக் கூடாது. எந்த ஒரு குறிப்பிட்ட கட்டத்திலும் நின்றுவிடக் கூடாது. நமது தத்துவம் மனப்பாடம் செய்து, மீண்டும் மீண் டும் உச்சாடனம் செய்யும் சூத்திரம் அல்ல, இது செயலுக்கு ஒரு வழிகாட்டி, மார்க்ஸ் அவர்கள், 'இன்று வரையில் தத்துவ ஞானிகள் உலகை வியாக்கியானம் மட்டுமே செய்துள்ளனர், நமது கடமை அதை மாற்றுவதாகும்' என்று கூறினர்.
குறிப்பாக, முதலாளி வர்க்கம் பத்திரிகைகள், தொலைக் காட்சி, திரைப்படம், மதபீடம், பாடசாலைகள், விசர்த்தனமான முடியலங்காரங்கள், ‘டுவிஸ்ட்’ போன்ற பைத்திய நடனங் கள், நவீன உடைகள் போன்ற சாதனங்கள் மூலம் மக்களின்
8

Page 52
மனங்களை, சிறப்பாக இளைஞர்களின் மனங்களைப் பாதித்து, திசை திருப்ப பகீரதப் பிரயத்தனம் செய்யும் நிலையில், முத லாளித்துவ கருத்துகள், முதலாளித்துவ செல்வாக்கு-இவற் றின் ஊடுருவலுக்கு எதிராக, சித்தாந்தத் துறையில் உறுதியான எதிர்த் தாக்குதல் தொடுப்பது அவசியம்.
நமது மூளைகள் ஒருபோதும் வெறுமையாக இருக்கமாட்டா. குறிப்பாக கட்சிக்குள்ளும் கூட, ஒன்றில் முதலாளித்துவ சித் தாந்தம் வெற்றிபெறும்; அல்லது பாட்டாளி வர்க்க சித்தாந் தம் வாகைசூடும். ஆனல், இதை, இடைவிடாத, ஓய்வு ஒழிச் சல் அற்ற சித்தாந்தப் போராட்டத்தின் மூலமும், தத்துவத்தை நடைமுறையுடன் இணைப்பதன் மூலமும்தான் செய்ய முடியும். நடைமுறையற்ற தத்துவம், தத்துவம் அற்ற நடைமுறை இரண்டும் பயன் அற்றவை. கட்சி இல்லாவிட்டால் போராட் டங்கள் இல்லை. ஆணுல், போராட்டங்கள் இல்லாவிட்டால் கட்சியும் வளர முடியாது.
தோழர் மாஒசேதுங் அவர்கள் போதித்துள்ளதாவது:- *சீனவில் ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால், பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு அந்தஸ்து கிட்ையாது, மக்களுக்கு ஒரு அந் தஸ்து கிடையாது; கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு அந்தஸ்து கிடையாது; புரட்சியும் வாகை சூடாது. இந்த காலத் தில் (கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின் இந்த 18 ஆண்டுகளில்) நமது கட்சியின் வளர்ச்சியும் ஸ்திரப்பாடும், போல்ஷிவிஸ மய மாக்கமும் புரட்சி யுத்தங்களின் மத்தியில்தான் முன்னேற் றம் அடைந்தன. ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால், கம் யூனிஸ்ட் கட்சி இன்றுள்ள நிலையில் இருக்க முடியாது. இந்த இரத்தம் சிந்திப்பெற்ற அனுபவத்தை கட்சித் தோழர்கள் ஒரு வரும் மறந்துவிடக் கூடாது.”*
நமது சொல்லுக்கும், செயலுக்கும் இடையில், தத்துவத்துக் கும், நடைமுறைக்கும் இடையில் உள்ள வெளி பெரிதாக வளர் வதை நாம் அனுமதிக்கக் கூடாது. தத்துவத்தை, நடைமுறை ஆக்கி, நடைமுறையின் போக்கில் அதைப் பரீட்சிக்கவேண்டும். சரியான அரசியல் முடிவு ஒன்றை எடுத்தவுடன், அதற்கிசை வான ஸ்தாபன முடிவும் எடுத்து, அதை அமுல்நடத்த வேண் டும். தோழர் மாஒ ஒருகால் சுட்டிக் காட்டியதுபோல, நாம் ஆற்றைக் கடக்க முடிவுசெய்தால், அதற்கு ஒரு பாலத்தை அமைக்கவேண்டும், அல்லது ஒரு வள்ளத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
82

இதை நிறைவேற்ற வேண்டுமானல், நாம் புரட்சிவாதிகளின் கட்சி ஒன்றை கட்டியமைக்க வேண்டும். அதாவது, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அர்ப்பண சிந்தை உடையவர்களாக, சுய நலம் அற்றவர்களாக, புகழும் கீர்த்தியும் விரும்பாதவர்களாக, பொருளாயத நலன்களையோ அல்லது செளகரிய வாழ்க்கை யையோ நாடாதவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் தமது சொந்த நலன்களை புரட்சி இயக்கத்தின் பொதுநலன்களுக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். அவர்கள் 'உறுதியாக இருந்து, தியா கங்களுக்கு அஞ்சாமல், கஷ்டங்களைக் கடந்து, வெற்றிபெற வேண்டும். ? ?
தோழர் மாஒசேதுங் அவர்கள் கூறியதாவது :- 'கம்யூ னிஸ்டு ஒருவர் விசால உள்ளம் படைத்தவராக இருக்கவேண் டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர்போல் கருதவேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன் களுக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். எங்கும் எப்பொழுதும் அவர் சரியான கோட்பாட்டின் வழி ஒழுகி, தவருன கருத்துகள், செயல்கள் எல்லாவற்றுக்கும் எதிராக சளையாத போராட்டம் நடத்தவேண்டும். இவ்வாறு கட்சியின் கூட்டு வாழ்வை ஸ்தி ரப்படுத்தி, கட்சிக்கும் பொதுமக்களுக்கும் இடையிலுள்ள தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒரு தனி நபரிலும் பார்க்க கட்சியிலும் மக்களிலும் கூடுதலான அக்கறை யும், தன்னைவிட ப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவரை ஒரு கம்யூனிஸ்டு என்று கருதமுடியும்."
உறுதியான சித்தாந்த அடிப்படை ஒன்றை அமைத்துவிட் டால், பின்னர் வீடு கட்டுவதற்கு நல்ல செங்கற்களை நாம் பெறமுடியும், கட்சி சார்ந்திருப்பதற்கு தேவையான உருக்குச் சட்டங்கள் போன்ற ஆற்றலுடைய, சிறந்த ஊழியர்களை நாம் பயிற்றவேண்டும். அவர்கள்தான் கட்சியின் கொள்கையை பொதுமக்களுக்கு விளக்கிக் கூறுபவர்கள். 'நமது கட்சியும் நமது நாடும் அவற்றின் நிறம் மாருமல் இருப்பதை உத்தரவா தம் செய்ய வேண்டு மானுல், நாம் ஒரு சரியான மார்க்கத்தை யும், சரியான கொள்கைகளையும் பெற்றிருப்பது மாத்திரமல்ல, பாட்டாளி வர்க்கப் புரட்சி லட்சியத்தை முன்னெடுத்துச் செல் லும் லட்சோப லட்சம் வழித்தோன்றல்களையும் பயிற்றி வளர்க்க வேண்டும்' என்று தோழர் மாஒசேதுங் அவர்கள் நமக்கு ப் போதித்துள்ளார்.
83

Page 53
அவர் மேலும் கூறியதாவது:- "பாட்டாளி வர்க்கப் புரட்சி லட்சியத்தின் தகுதியான வழித் தோன்றல்களுக்குரிய நிபந்தனைகள் யாவை?
**அவர்கள் உண்மையான மார்க்ஸிஸம்-லெனினிஸ் வாதிக ளாக இருக்கவேண்டும். மார்க்ஸிஸம்-லெனினிஸப் போர்வை அணிந்த குருசேவ் போன்ற திரிபுவாதிகளாய் இருக்கக்கூடாது.
'அவர்கள் ஏகப் பெரும்பான்மையான சீன மக்களுக்கும் ஏகப் பெரும்பான்மையான உலக மக்களுக்கும் முழு மனதுடன் சேவைசெய்யும் புரட்சிவாதிகளாக இருக்கவேண்டும். உள்நாட் டில் சலுகைபெற்ற பூர்ஜ"வா வர்க்கத் தட்டைச் சேர்ந்த ஒரு சில நபர்களின் நலன்கள், வெளிநாட்டில் ஏகாதிபத்தியம், பிற் போக்கு-இவற்றின் நலன்கள் இரண்டுக்கும் சேவை செய்யும் குருசேவைப்போல் இருக்கக்கூடாது.
* ஏகப் பெரும்பான்மையான மக்களுடன் ஐக்கியப்பட்டு வேலை செய்யக்கூடிய பாட்டாளி வர்க்க அரசியல் வாதிகளாக இருக்கவேண்டும். அவர்கள் தமக்கு உடன்பாடானவர்களுடன் ஐச்கியப்படுவது மாத்திரமல்ல, தமக்கு உடன்பாடில்லாதவர் களுடன், தம்மை முன்பு எதிர்த்து, இன்னும் நடைமுறையில் பிழை என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் கூட ஐக்கியப்பட வேண்டும். ஆனல், அவர்கள் குருசேவ் போன்ற பதவி வேட் டைக்காரரையும் சதிகாரர்களையும் விசேஷமாகக் கவனித்து, இத்தகைய தீய பிரகிருதிகள் எந்த மட்டத்திலும் கட்சி-அர சாங்கத் தலைமையை அபகரித்துவிடாமல் தடுக்கவேண்டும்.
* "அவர்கள் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை அமுல் நடத்துவதில் ஆதர்சமாக விளங்கவேண்டும். "பொது மக்களிட மிருந்து பொது மக்களுக்கு என்ற தலைமை முறையில் தேர்ச்சி பெறவேண்டும். பொதுமக்களின் அபிப்பிராயங்களை நன்ருகக் கேட்கும் ஜனநாயக நடையை வளர்க்க வேண்டும். அவர்கள் குருசேவைப்போல் கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தை அத்துமீறி, கொடுங்கோலர்களாய் விளங்கக்கூடாது. தோழர் கள்மீது திடீர்த் தாக்குதல்கள் தொடுக்கவோ, நியாயமற்ற முறையிலும் யதேச்சாதிகாரமாகவும் நடக்கவோ கூடாது.
**அவர்கள் அடக்கமும் ஜாக்கிரதையும் உடையவர்களாக இருக்கவேண்டும். இறுமாப்பும் அவசர புத்தியும் இல்லாதவர் களாக இருக்கவேண்டும். அவர்கள் சுய-விமர்சன உணர்வில் ஊறித் திளைத்து, தமது வேலையில் காணும் தவறுகளையும் குறை பாடுகளையும் திருத்தும் துணிவுடையவர்களாய் இருக்கவேண்
84

டும். அவர்கள் குருசேவைப் போல் தமது தவறுகளே மூடி மறைத்து, புகழ் எல்லாவற்றையும் தமக்கே உரித்தாக்கி, பிழை அனைத்தையும் பிறர்மீது சுமத்தக்கூடாது.
‘பாட்டாளி வர்க்க புரட்கி லட்சியத்தின் வழித்தோன்றல் கள் வெகுஜனப் போராட்டங்களில் தோன்றி, பெரும் புரட்சிப் புயல்களில் புடம்போட்டெடுக்கப்படுகின்றனர். நீண்டகால வெகு ஜனப் போராட்டங்களில் ஊழியர்களைப் பரீட்சித்து மதிப்பீடு செய்வதும், வழித்தோன்றல்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்று வதும் அவசியமானவை. **
ஊழியர்களைத் தகுதியான முறையில் தேர்ந்தெடுத்து, பயிற்றி, மேல்மட்டங்களுக்கு உயர்த்துவது, ஒரு புரட்சிகரக் கட்சியின் கடமைகளில் மிக முக்கியமான ஒன்ருகும். சரியான வழிகாட்டல் கொடுத்து, அவர்களுடைய நடவடிக்கைகளைப் பரி சீலனை செய்வதும், அவர்கள் தவறுகள் இழைப்பதற்கு முன் அவற்றைத் திருத்துவதும், ஒரு கட்சி அதன் ஊழியர்கள் மீது கடைப்பிடிக்கும் சரியான மனுேபாவமாகும்.
கம்யூனிஸ்ட் கட்சி என்பது தொழிலாளர், விவசாயிகள், புரட்சிகரப் புத்திஜீவிகள் ஆகியோரின் தலைசிறந்த புதல்வர் புதல்வியர்களைக் கொண்டதாக இருக்கவேண்டும். தோழர் மாஒ சேதுங் அவர்கள் போதித்தாவது:- " " கட்சி ஸ்தாபனம் பாட் டாளி வர்க்கத்தின் முன்னேறிய பகுதிகளைக் கொண்டது. அது வர்க்க விரோதிக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க் கத்துக்கும் புரட்சிகரப் பொதுமக்களுக்கும் தலைமை தாங்கக்கூடிய ஒரு விறுவிறுப்பான முன்னணிப் படை ஸ்தாபனமாக இருக்க வேண்டும். ' கம்யூனிஸ்ட் கட்சியில் நாம் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அல்ல, தரத்தில்தான் கவனம் செலுத்தவேண் டும் என்பதை நாம் மனதில் பதித்துக்கொள்ள வேண்டும்.
சிலராயிருந்தாலும் கூட, தரத்தில் சிறந்த தோழர்கள் போராட்டத்தின் போக்கில் மேலெழுகின்றனர். அவர்கள் புத்தி பூர்வமான திட நம்பிக்கையுடையவர்கள். போராட்டத்தால் உற் சாகம் பெறுபவர்கள். பயிற்சிபெற்று, தரம் அடைந்த பின் ஒரு தோழரைக் கட்சியில் சேர்க்க வேண்டுமா, அல்லது கட்சியில் சேர்ந்த பின் பயிற்றுவதா என்ற பிரச்சினைபற்றி சிலர் வாதாடு கின்றனர்.
இப்படிப் பிரச்சினையை எழுப்புவது இயற்கையானதல்ல, செயற்கையானது, தவரு?னது. முன்னேறிய நபர்கள்தான் கட்சி
85

Page 54
யில் சேர்க்கப்பட முடியும் என்ற தோழர் மாஓசேதுங் அவர் களின் போதனைப் பிரகாரம் இதில் பிரச்சினையே இல்லை. கம் யூனிஸ்ட் கட்சி என்பது யாரும் எளிதில் பிரவேசம் பெறக் கூடிய ஒரு ஸ்தாபனம் அல்ல. அதில் சேரும் கெளரவத்தைப் பெறுவதற்கு முன் எவரும் அதற்குரிய யோக்கியதாம்ஸத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நமது அணிகளுக்குள் ஒற்றர்களும் எதிரி ஏஜண்டுகளும் நுழையாமல் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.
ஆனல், அதேவேளையில், தோழர்களை வகுப்பறைகளிலோ அல்லது விரிவுரை மன்றங்களிலோ வைத்துப் போதனையளித்து விட முடியாது. அவர்கள் வர்க்கப் போராட்டப் புயல்களில் தான் புடம்போட்டெடுக்கப்பட முடியும். ஆகவே, ஒரு தோழ ரின் போதனையும், பொல்ஷிவிஸ் மயமாக்கமும் அவர் போராட் டங்களில் பங்குவற்குவதன் மூலம்தான் சாத்தியமாகும். தங்கத் தின் தரம் தணலில் பரீட்சிக்கப்படுவது போல, ஒரு தோழரின் புரட்சி உணர்வும் போராட்ட சுவாலையில்தான் சோதிக்கப்பட முடியும். எனவே, சித்தாந்த போதனையை ஸ்தூல மற்ற முறை யில், அருவமாக நடத்த முடியாது. போராட்டங்களில் பங்கு பற்ருமல் நடத்த முடியாது.
தீய நபர்கள் கட்சிக்குள் நுழைவது பற்றி சிலர் கவலை கொள்கின்றனர். சீர்குலைவாளரும் கட்சி-எதிர்ப்புப் பிரகிருதி களும் மீண்டும் மீண்டும் நடத்திய சீர்குலைவு வேலைகள் பற்றிய கசப்பான நினைவுகள் அவர்கள் மனதில் பதிந்துள்ளன. தோழர் மாஒசேதுங் நமக்குப் போதித்ததுபோல, ' கட்சிக்குள் பல்வேறு விதமான கருத்துகளுக்கு இடையிலும் இடைவிடாது எதிர்ப்பும் போராட்டமும் நிகழ்கின்றன. இவை சமுதாயத்தில் வர்க்கங் களுக்கிடையிலும், புதியவை பழையவை இரண்டுக்குமிடையி லும் உள்ள முரண்பாடுகள் கட்சிக்குள் பிரதிபலிப்பதேயாகும். கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லாவிட்டால், அவற் றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்கள் இல்லாவிட் டால், கட்சியின் வாழ்வு நின்றுவிடும்"
ஆகவே, கட்சிக்குள் நிகழும் சித்தாந்தப் போராட்டங் களுக்கு நாம் அஞ்சவோ, ஊக்கமிழக்கவோ கூடாது. பதிலுக்கு அவை அரசியல்ரீதியில் போராடித் தீர்க்கப்படவேண்டும். பாட் டாளி வர்க்கத்திலிருந்தும், இதர உழைப்பாளி மக்களிலிருந்தும் துணிகரமாகக் கட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், பாட்டாளி வர்க்கத்தைச் சேராத அணிகளிலிருந்தும் உறுப்பினர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாட்
86

டாளி வர்க்க அணிகளைச் சேராத பகுதிகளிலிருந்து வரும் உறுப் பினர்கள் நீண்ட அபேட்சக உறுப்பினராக இருந்தபின் கட்சி யில் சேர்க்கப்படவேண்டும்.
கட்சி இடைவிடாது அதன் அணிகளுக்குப் புதிய இரத்தத் தைச் செலுத்தி, பெயரளவில் மாத்திரம் அங்கத்தினராக உள்ள பயனற்ற தோழர்களை வெளியேற்றவேண்டும். தோழர் மாஓ சேதுங் அவர்கள் துலாம்பரமாகச் சுட்டிக் காட்டியதாவது:- 'மனிதனுக்கு இரத்தக் குழாய்களும் நரம்புகளும் உள்ளன. அவற்றினூடாக இருதயம் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகின் றது. சுவாசப் பைகளினுல் அவன் சுவாசிக்கின்றன். கரியமில வாயுவை வெளியேற்றி, பிராணவாயுவை உட்கொள்ளுகிருன். அதாவது, அவன் அழுக்கானவற்றை வெளியேற்றி, சுத்தமான வற்றை உட்கொள்கிருன், ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியும் அது போலவே பழையவற்றை வெளியேற்றி, புதியவற்றை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது உயிர்த்துடிப்புடையதாய் இருக்கும். கழிவுப் பொருட்களை வெளியேற்றி, புதிய இரத்தத்தை உட் கொள்ளாவிட்டால், கட்சி விறுவிறுப்புடையதாக இருக்காது."
புரட்சிகர ஊழியர்களும், எழுச்சிமிக்க உறுப்பினர்களும் இருப்பதோடு, கம்யூனிஸ்ட் கட்சி, அதன் சொந்த நாட்டின் ஸ்தூலமான புரட்சி நிலைமையுடன் மார்க்ஸிஸம்-னெனினிஸம்மாஒசேதுங் சிந்தனையின் பொது உண்மைகளை இணைக்கக்கூடிய, பரீட்சித்துப் புடம்போட்டெடுக்கப்பட்ட தலைமையையும் பெற் றிருக்கவேண்டும். சரியான தலைமையின் முக்கியத்துவத்தை தாம் எவ்விதத்திலும் நிராகரிக்கவோ, சிறுமைப்படுத்தவோ கூடாது: சரியான தலைமை இல்லாவிட்டால், சுக்கான் இல்லாத ஒரு கப் பல் கடலில் தத்தளிப்பதுபோல, கட்சியும் தத்தளிக்கும்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகம், சகல சாய்வுப் போக்குகளுக்கும் எதிராக நடத்திய போராட்டம், வளைவு சுளி வான பாதைகள் எல்லாவற்றிற்கு ஊடாகவும் சென்று சீன புரட்சி வெற்றிபெறுவதற்கு அளித்த சரியான தலைமை, நீண்ட கால மக்கள் யுத்தத்தை ஆழமாக உணர்ந்து, அதற்கான, யுத்த தந்திர, தந்திரோபாயங்களை வகுத்தது, சோஷலிஸ் புரட்சியின் பின்னர் கூட சீனவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாத்து, பலப்படுத்தியது-இவை அனைத்திலும் தோழர் மாஒசேதுங் அவர்கள் வகித்த பாத்திரம் முழுவதும் , ஒரு கம் யூனிஸ்ட் கட்சிக்கு சரியான புரட்சிகரத் தலைமை ஒன்று இருப் பது எவ்வளவு அவசியம் என்பதைக் காட்டுகின்றது.
87

Page 55
கடைசியாக, ஸ்தாபன முறையிலும், வேலை நடையிலும் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி திரிபுவாதக் கட்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. லெனின் அவர்கள் தமது காலத்தில் இரண்டாவது சர்வதேசியத்தைச் சேர்ந்த பழைய கட்சிகளில் தோன்றிய புதிய இடதுசாரிக் குழுக்களை திரிபுவாதத்திலிருந்து தம்மை அரசியல்ரீதியில் மாத்திரமல்ல, ஸ்தாபனரீதியிலும் துண் டித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
திரிபுவாத கட்சிகள் அனைத்தும் பாராளுமன்றக் கட்சிகளே. அவற்றின் ஒரே நோக்கம் பாராளுமன்றத்தில் இயன்ற அளவு கூடுதலான ஆசனங்களைப் பெறுவதாகும். எனவே, தமது வேலை கள் அனைத்தையும் வெளிப்படையாக, சட்டரீதியாக செய்கின் றன. ஆனல், புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம் புரட்சி நடத்துவதாகும். இதைப் பொலீஸாரின் கண்காணிப் பின் கீழ் செய்ய முடியாது. எனவே, ஒரு முதலாளித்துவ நாட் டில்-அதன் அரசாங்க வடிவம் எதாயிருந்தாலும் சரி-உள்ள எவ்வொரு கட்சியும் இரகசியக் கட்சியாகவே இயங்கவேண்டும். அதன் ஊழியர்களையோ, உறுப்பினர்களையோ அது பூரணமாக அம்பலப்படுத்தக் கூடாது, அதன் திட்டங்களையும் பகிரங்கப் படுத்தக் கூடாது. இரகசியக் கட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து, அது பாராளுமன்ற ஆசனங்கள் சிலவற்றில் போட்டியிடுவது, சில தோழர்களை தொழிற் சங்க வேலைகளில் ஈடுபட விடுவது, பத்திரிகைகள் நடத்துவது முதலியவை போன்ற, குறிப்பிட்ட சில சட்டரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
ஆணுல், இதுதான் நமது பிரதான வேலையல்ல. இத்துறை யில் நமது ஆற்றல், நேரம், பணம்-இவற்றையோ மிக முக் கியமான ஊழியர்களையோ விரையமாக்கக்கூடாது. நமது பிர தான வேலை பொறுமையுடன் நமது புரட்சி சக்திகளை சேக ரித்து, புரட்சிக்குத் தயார் செய்வதாகும்.
முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகம் பற்றி நமக்கு எவ்வித மயக்கமும் இருக்கக்கூடாது. முதலாளித்துவ ஜனநாய கத்தை பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்காக நாம் இயன்ற அளவு பயன்படுத்தவேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. அதேவேளையில், முதலாளி வர்க்கம் புரட்சிவாதிகளை கண்கா ணிப்பில் வைக்கக்கூடிய ஒரு பொறிதான் முதலாளித்துவ ஜன நாயகம், அது தேவையானபோது நமது தலைகளை ஒரேயடியில் வெட்டிவிடும் என்பதையும் நாம் மனதில் வைத்திருக்கவேண்டும். இதுதான் இந்தோனேஷியாவில் நிகழ்ந்தது; இந்த அவல நிகழ்ச்சி யிலிருந்து நாம் படிப்பினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
88.

மார்க்ஸிஸம்-லெனினிஸ் கட்சிகள் அனைத்தும் சிறந்த முறை யில் சட்டரீதியான நடவடிக்கைகளை சட்டவிரோத நடவடிக் கைளுடனும், பகிரங்க வேலையை இரகசிய வேலையுடனும் இணைத் துச் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனல் பிரதானமாக அவை பொலீஸாரை ஏமாற்றி, புரட்சியை, வெற்றிக்கு வழி நடத்தக்கூடிய, இரகசிய ஸ்தாபனத்தை கட்டி வளர்க்கும் அடிப் படையிலிருந்து வேலை செய்ய வேண்டும்.
லெனின் அவர்கள் நமக்குப் போதித்த, தோழர் மாஒசே துங் அவர்கள் நமக்குத் திட்டவட்டமாகக் கூறிய, கட்சியமைப் புப் பற்றிய சில கோட்பாடுகள் இவையேயாகும்; தோழர் மாஒ சேதுங் அவர்கள் நமக்கு பின்வருமாறு போதித்துள்ளார்:- ‘ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம், கட்சி அமைப்பு இம்மூன்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று " மந்திராயுதங் கள்"; சீன புரட்சியில் எதிரிகளை தோற்கடிப்பதற்குரிய மூன்று பிரதான மந்திராயுதங்கள்.'
விவேகமான இந்த வார்த்தைகளில், எந்நாட்டுப் புரட்சி யிலும் வெற்றி பெறுவதற்கான திறவுகோலை நாம் காண்கின் ருேம்.
8R 9) ,

Page 56
அத்தியாயம் VI
மக்கள் யுத்தமும் மக்கள் படையும் பற்றி
Iர்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சிக்கு தோழர் மாஓ சேதுங் அவர்கள் வழங்கிய மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று என்னவென்றல், மக்கள் யுத்தம் பற்றிய தத்துவத்தை அவர் வகுத்ததும், வர்க்க எதிரிகளை வெற்றி கொள்ள விரும்புவர்கள் மக்கள் படை ஒன்றைக் கட்டியமைக்கும் அவசியம் பற்றிய அவரு டைய போதனையுமாகும்.
இன்று, ஏகாதிபத்திய நாடுகள், நகர-நாகரிக நாடுகளில் மாத்திரமல்ல, சார்பு-நாடுகள் அல்லது அரை-சார்பு நாடுகளில் கூட, ஏகாதிபத்தியவாதிகள், நிலப்பிரபுக்கள், முதலாளிகள் ஆகி யோரின் அடக்குமுறை அரசு யந்திரம் - பிரதானமாக ஆயுதப் படைகள் - மென்மெலும் ராணுவமயமாக்கப்பட்டும், மிருக பலாத்காரமயமாக்கப்பட்டும் வருகின்றது. நாம் இதை சென்ற ஆண்டு பிரான்சில் நிகழ்ந்த மே மாதப் 'புரட்சி'யின் போது கண்டோம். அமெரிக்க இன வெறியர்கள் நீகிரோ மக்கள் மீது மென்மெலும் அதிகப்படியாகப் பிரயோகித்து வரும் மிருக பலாத் காரத்தில் இதைக் காண்கின்ருேம். ஏறக்குறைய இந்தியாவின் எல்லா ராஜ்யங்களிலும் ராணுவத்தினரும், பொலீஸாரும் படு மிலேச்சத்தனமாகக் கொன்று குவிக்கும் கொலைகளிலும் இதைப் பார்க்கின்ருேம்.
இலங்கையில் 1947 பொது வேலைநிறுத்தத்தின் போதும், 1953 ஹர்த்தாலின் போதும், 1958 மே-ஜுன் மாதங்களில் தணி யார் துறை, அரசாங்கத் துறை ஊழியர்கள் நடத்திய வேலை
90

நிறுத்தத்திலும், வெகு அண்மையில் 1967 டிஸம்பரில் நிகழ்ந்த தனியார்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம், 1968 நவம்பர்டிஸம்பர் மாதங்களில் அரசாங்க ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தம் ஆகியவற்றிலும் நாம் இதைக் கண்டோம். அப்பொழு தெல்லாம் கவச மோட்டார்கள் வீதிகளில் வலம் வந்தன. துருப்பு களும், டாங்கிகளும் பவனி வந்தன. ஆயுதப் பொலீஸாரும், ராணுவத்தினரும் முக்கியமான சந்திகள் எல்லாவற்றிலும் நிறுத் தப்பட்ட்னர். வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட எல்லா முத லாளிமாருக்கும் ஆயுதப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கூட்டங் கள், ஊர்வலங்கள், வேலைநிறுத்தத்தில் காணும் கண்டன ஆர்ப் பாட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. பல மாதங்கள் தொடர்ந்து அவசரகால நிலைமையின் கீழ் ஆட்சி நடத்தப்பட் டது. அபகீர்த்திமிக்க பொது பந்தோபஸ்து சட்டம் பிரகடனம் செய்யப்பட்டது. இவ்வாண்டு மே தினத்தில் நிகழ்ந்தது போல, ஊர்வலங்களைக் கலைக்க பொலிஸார் மிருகபலாத்காரத்தை கட்ட விழ்த்து விட்டனர். ஹர்த்தாலின் போதும், 1966 ஜனவரி 8 வேலைநிறுத்தத்தின் போதும் நடந்தது போல மக்களை கொலை செய் வதற்கு துப்பாக்கிப் பிரயோகம் கூடச் செய்தார்கள். இத்தகைய செயல்கள் அனைத்தும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக நடத் தும் ஒரு வேலைநிறுத்தத்தின் போது கூட சர்வ சாதாரண நிகழ்ச்சி கள் ஆகத் தொடங்குகின்றன.
பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் தமது அடக்குமுறை அரசு யந்திரத்தை முன்னென்றும் கண்டிராத அசுர வேகத்தில் பலாத் கார மயமாக்கியும், ராணுவ மயமாக்கியும் வருகின்ற இச் சூழ்நிலை களில், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் யாது செய்ய வேண்டும்? சென்ற ஆண்டு பிரான்சில் நிகழ்ந்த மே மாத 'புரட்சி'யின் போது, பிரான்சிலுள்ள ஒரு கோடியே நாற்பது லட்சம் தொழி லாளர்களில் ஒரு கோடி பேர் இரண்டு வாரங்களுக்கு மேலாக, வேலைநிறுத்தம் செய்தனர். யதார்த்தத்தில் பிரெஞ்சு பொருளா தாரமே ஸ்தம்பித்து விட்டது. இளம் தொழிலாளர்களும் மாணவர் களும் பெரும் நெஞ்சுரத்தையும் வீரசாகசத்தையும் வெளிப்படுத்தி பொலீஸாருடன் போரிட்டனர். ஆனல் டீ காலின் கலகத்தை அடக்கும் படைப் பிரிவுகள் முன்னென்றும் கண்டிராத, ஈவிரக்க மற்ற மிலேச்சத்தனத்தை கையாண்டு அவர்களைச் சமாளித்த னர். இவற்றைக் கண்டு முதலாளித்துவ பத்திரிகையாளர்கள் கூட அதிர்ச்சியடைந்தனர். கடைசியில் டீ கால் பிரெஞ்சு திரிபுவாதிக ளின் உதவியுடன் இந்த மகத்தான போராட்டத்தை ஒரு தேர்தல் கேலிக் கூத்தாக மாற்றுவதில் வெற்றி கண்டான்.
91

Page 57
அப்படியென்றல், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் யாது செய்ய வேண்டும்? சீனவின் அனுபவத்தைப் பரிசீலனை செய்ததன் விள்ை வாக, தோழர் மாஒசேதுங் அவர்கள் இந்தக் கேள்விக்குச் சரியான பதில் அளித்துள்ளார். ஏகாதிபத்தியவாதிகள், அவர்களுடைய அடிவருடிகள் அனைவரும் 'தமது கைகளில் வாள்களை ஏந்திய வண்ணம் மக்களை கொல்ல நிற்கின்றனர். மக்கள் இதைப் புரிந்து கொண்டு, அதே மாதிரிச் செயல்படுகின்றனர்.’’ என்று அவர் கூறியுள்ளார். வேறு வார்த்தைகளில் சொன்னல், ஆயுத எதிர்ப் புரட்சியை ஆயுதப் புரட்சியால் தான் சமாளித்து, வெற்றி கொள்ள முடியும் என்று அவர் போதித்துள்ளார்.
சீன புரட்சிக்கும், அதற்கு முன் நிகழ்ந்த அக்டோபர் புரட்சிக் கும் உள்ள அடிப்படை வித்தியாசம் இதுவேயாகும். ஸ்டாலின் சுட்டிக்காட்டியது போல, சீன புரட்சியில், அதி ஆரம்பத்தி லிருந்தே ஆயுத எதிர்ப் புரட்சியை ஆயுதப் புரட்சி எதிர்த்துப் போரிடுகின்றது. இது சீன புரட்சியின் சிறப்பியல்புகளில் ஒன்றும், அதன் சாதகமான அம்சங்களில் ஒன்றும் ஆகும் என்றும் அவர் கூறினுர். சீன புரட்சி என்பது உண்மையில் மகத்தான அக்டோபர் புரட்சியின் நீடிப்பேயாகும். அக்டோபர் புரட்சி ஒளியேற்றிச் சென்ற புரட்சிப் பாதை அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்தும் எல்லாப் புரட்சிகளுக்கும் ஒரு பொதுப் பாதை. ‘மக்கள் யுத்தத் தின் வெற்றி நீடூழி வாழ்க’’ என்ற தமது நூலில் தோழர் லின் பியெள சுட்டிக்காட்டியது போல, "இறுதியில் ஆராய்ந்து பார்த் தால், பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய மார்க்ஸிஸம்-லெனினிஸ் தத்துவம் என்பது, புரட்சிப் பலாத்காரத்தைக் கொண்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவது, மக்கள் யுத்தத்தைக் கொண்டு மக்கள்-எதிர்ப்பு யுத்தத்தை எதிர்ப்பது பற்றிய தத்துவமாகும். 10ார்க்ஸ் அவர்கள் சுட்டிப்பாகக் கூறியது போல், பலாத்காரம் என் பது புதிய சமுதாயம் ஒன்றைக் கருவிலே கொண்டிருக்கும் ஒவ்வொரு பழைய சமுதாயத்தினதும் மருத்துவத் தாதியாகும்.'
தோழர் லின் பியெள சுட்டிக் காட்டியதாவது: 'சீனுவின் மக்கள் யுத்தங்களிலிருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படை யில் தோழர் மாஒசேதுங் அவர்கள் மிக எளிதான, மிக தெளி வான வார்த்தைகளில் "துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியல் அதிகா ரம் வளர்கிறது" என்ற தமது பிரசித்தி பெற்ற தத்துவத்தை முன் வைத்தார்.”*
'ஆயுத பலாத்காரத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, யுத்தத்தால் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, புரட்சியின் கேந்திரக்
92

கடமையும், அதன் அதியுயர்ந்த வடிவமும் ஆகும். புரட்சி பற்றிய இந்த மார்க்ஸிஸம்-லெனினிஸக் கோட்பாடு சீனுவுக்கு மாத்திர மல்ல, இதர நாடுகளுக்கும் சர்வவியாபகமாகப் பொருந்திய, பூர ணமாகப் பொருந்திய ஒரு கோட்பாடு* என்று தோழர் மாஒ சேதுங் அவர்கள் தெட்டத் தெளிவாக குறிப்பிட்டார்.
மக்கள் யுத்தம் என்ற பொருள் பற்றி மார்க்ஸிஸம்-லெனினி ஸத்தின் வளர்ச்சிக்கு மாஒசேதுங் அவர்கள் வழங்கிய சாதனையை தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக அக்டோபர் புரட்சிக்கும் சீன புரட்சிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளே சுருக்கமாய்க் குறிப்பிடுவோமாக.
தோழர் லின் பியெள மேற் சொன்ன தமது நூலில் இவற்றை அட்டவணைப் படுத்தியுள்ளார். அவற்றின் பொதுப் பண்புகள் பின்வருமாறு:- ‘(1) இரு புரட்சிகளும் மார்க்ஸிஸம்-லெனினிஸ கட்சியை அதன் மையமாகக் கொண்ட தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் நடத்தப்பட்டவை. (2) இரண்டும் தொழிலாளர்விவ்சாயிகள் நேச அணியை அடிப்படையாகக் கொண்டவை. (3) இவ்விரண்டிலும் பலாத்காரப் புரட்சியால் அரசு அதிகாரம் கைப்பற்றப்பட்டு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப் பட்டது. (4) இவ்விரண்டிலும் புரட்சி வெற்றிபெற்றதும் சோஷ லிஸ் அமைப்பு நிறுவப்பட்டது. (5) இரண்டும்பாட்டாளி வர்க்க உலகப் புரட்சியின் ஒரு பகுதியாக விளங்குகின்றன.
** இருந்தும், சீன புரட்சி அதற்கே சொந்தமான சிறப்பியல்பு களை உடையது. அக்டோபர் புரட்சி ஏகாதிபத்திய ரஷியாவில் நடந்தது. சீன புரட்சி அரை-காலணி, அரை-நிலப்பிரபுத்துவ நாட்டில் வெடித்தெழுந்தது. அக்டோபர் புரட்சி ஒரு பாட்டாளி வர்க்க சோஷலிஸப் புரட்சியாகும். சீன புரட்சி ஜனநாயகப் புரட்சி யின் பூரண வெற்றிக்குப் பின் சோஷலிஸப் புரட்சியாக மாறியது. அக்டோபர் புரட்சி நகரங்களில் ஆயுதக் கிளர்ச்சியாக தொடங்கி, பின்னர் நாட்டுப்புறங்களுக்குப் பரவியது. சீன புரட்சி நாட்டுப் புறங்களிலிருந்து நகரங்களைச் சுற்றி வளைத்து, இறுதியில் அவற் றைக் கைப்பற்றியதன் மூலம் தேசிய ரீதியான வெற்றியைப் பெற் றது. ’’
சீன புரட்சியின் இந்த சிறப்பியல்பு சீனுவின் நிலைமை பற்றி தோழர் மாஒசேதுங் அவர்கள் சரியாகக் கணித்துக் கொண்டகன் விளைவாகும். அவர் சுட்டிக் காட்டியதாவது:- ‘பலம் வாய்ந்த ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களுடைய பிற்போக்குச் சீன ச. டாளிகளும் நீண்ட காலமாகவே சீனவின் கேந்திர நகரங்களை
93

Page 58
வசப்படுத்தியுள்ளனர். ஆகவே, புரட்சி அணிகள், பின் தங்கிய கிராமப் பிரதேசங்களை முன்னேறிய, ஸ்திரமான தளப் பிரதேசங் களாக, மாபெரும் ராணுவ, அரசியல், பொருளாதார, கலாசா ரப் புரட்சிக் கோட்டைகளாக மாற்றி, இவற்றிலிருந்து நகரங்க ளைப் பயன்படுத்திக் கிராமப் பிரதேசங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் பயங்கர எதிரிகளை எதிர்த்துப் போராடுவதும், நீண்ட கால போராட்டத்தின் மூலம், புரட்சியின் பூரண வெற்றியைப் படிப்படியாகப் பெறுவதும் அவசியமானது. அவர்கள் ஏகாதிபத் தியத்துடனும் அதன் அடிவருடிகளுடனும் சமரசம் செய்து கொள் ளாமல், போராடுவதில் உறுதியாக நிற்க விரும்பினல், தமது சொந் தப் பலம் வாய்ந்த எதிரிகளுடன் வெற்றி தோல்வியை நிர்ணயிக் கும் போராட்டம் நடத்துவதைத் தவிர்த்து, தமது சக்திகளைக் கட்டி வளர்த்து, புடம் போட்டெடுக்க எத்தனித்தால், அவர்கள் அப்படிச் செய்வது அவசியமானது. *
இன்று உலக ரீதியில் பிரயோகிக்கப்படத் தக்கதாக விள்ங் கும் முக்கியத்துவம் வாய்ந்த இத்தத்துவம், சார்பு - நாடுகள், அரை-சார்பு நாடுகள் அல்லது காலனி-நாடுகள், அரை-காலணி நாடுகள் எல்லாவற்றிலும், ஏகாதிபத்தியவாதிகளினதும் அவர் கள் அடிவருடிகளினதும் பலம்-ராணுவ, பொலீஸ் தலைமை அலு வலகம், வானெலி நிலையம், மத்திய தபால் நிலையம், பிரதான புகையிரத சந்திகள், அரசாங்க இலாகாக்கள், மத்திய அரசாங்க பீடம் முதலியவை எல்லாம்-பெரும் நகரங்களில் அல்லது பெரும் நகரங்களைச் சூழக் குவிந்திருக்கின்றது என்பதைச் சரியாகப் புரிந்து, அதை அடிப்படையாகக் கொண்டெழுந்ததாகும்.
ஆகவே, ஆரம்ப காலங்களில் நம்மிலும் பார்க்க எதிரி தற் காலிக படை மேம்பாட்டுடன் விளங்குகின்ற பொழுது (இது எப் பொழுதும் இப்படித் தான் இருக்கும்.) எதிரியின் பலத்த கோட் டைகளின் மீது நமது தலைகளை மோதுவது முட்டாள்தனமா னது என்று தோழர் மாஒசேதுங் அவர்கள் கூறுகின்ருர், நமக்கு பாதகமாயிருக்கும் இந்த தற்காலிக நிலையை எதிரிக்குப் பாதக மான ஒன்ருக மாற்ற நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நம்மிலும் பார்க்க எதிரி மேம்பட்டவணுக விளங்கும் இடத்தி லும் காலத்திலும் நாம், அவனுடன் போரிடா விட்டால், பதி லுக்கு, எதிரி ஒப்பீட்டு வகையில் பலவீனமாக விளங்கும் 'பின் தங்கிய கிராமப் பிரதேசங்களுக்கு நகர்ந்து, அவற்றை மக்களுக் குரிய முன்னேறிய தளப் பிரதேசங்களாக மாற்றினல், நாம் இதைச் செய்ய முடியும். பெரும் நகரங்களிலிருந்து நாம் எவ்வள
94

வுக்கு விலகிச் செல்கிருேமோ, அவ்வளவுக்கு குறைவான படைப் பிரிவுகளை, நாம் காண்போம். அவ்வளவுக்கு குறைவான பொலி சாரே சிதறுண்டு கிடக்கும் பொலிஸ் நிலையங்களை பாதுகாப்பர் என்பது யாவரும் அறிந்ததே. மக்கள் சரியான தந்திரோபாயங் களை உபயோகிக்கக் கற்றுக் கொண்டால், நாடு முழுவதிலும் எல்லா மக்களையும் ஏக காலத்தில் நசுக்குவதற்கு போதுமான அடக்குமுறை பலங்களை பிற்போக்குவாதிகள் ஒரு போதும் பெற (1pц и Јт ф!.. :
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ‘* யுத்த தந்திரக் கிராமங் கள்' என்று தாம் அழைக்கின்ற, ஆணுல் உண்மையில் அடிமை முகாம்களாக விளங்குகின்ற இடங்களில் வியட்நாம் மக்களை மந்தை அடைப்பது போல் அடைப்பதற்கு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததும், இதே முகாம்களை மக்களின் கோட்டை களாக மாற்றி, இறுதியில் அதை தவிடு பொடியாக்குவதில் வியட் நாம் மக்கள் ஈட்டிய வெற்றியும் மேற்படி கருத்தை நிரூபிக்கின் றன.
தோழர் மாஓசேதுங் அவர்களின் மக்கள் யுத்தம் பற்றிய தத் துவம் ‘விவசாயிகளைச் சார்ந்து கிராமிய தளப் பிரதேசங்களை ஸ்தாபிப்பது பற்றிய அவருடைய தத்துவத்துடன் பிரிக்க முடி யாதபடி இணைந்துள்ளது. புரட்சிவாதிகள் நகரங்களில் இரகசிய மாகவும் தலைமறைவாகவும் செய்யும் வேலையை புறக்கணிக்காமல் தொடர்ந்து செய்யும் அதேவேளையில், நாட்டுப் புறங்களுக்குச் சென்று, நாட்டுப்புற மக்களுடன் தம்மை இணைத்து, அவர்களைத் தட்டி எழுப்பி, அரசியல் மயப்படுத்தி, அணி திரட்டி, மக்கள் படையொன்றை கட்டியமைப்பதற்கும் பயிற்றுவதற்கும் தேவை யான புரட்சி தளப் பிரதேசங்களை நிறுவாவிட்டால், மக்கள் யுத் தம் என்பது சாத்தியமாகாது.
**1927 முதல் இன்று வரை, (அதாவது 1949 மார்ச் வரைஆசிரியர்) நமது வேலையின் ஈர்ப்பு மையம் கிராமங்களில் இருந்து வருகிறது. அதாவது கிராமங்களில் பலத்தைச் சேகரித்து, நகரங் களைச் சுற்றி வளைக்கக் கிராமங்களை உபயோகித்து, பின்னர் நகரங் களைக் கைப்பற்றுவதாக இருந்து வருகிறது' என்று தோழர் மாஓ சேதுங் அவர்கள் கூறும் அதே வேளையில், "கிராமத் தளப் பிரதே சங்களின் வேலையை வலியுறுத்திளுல் அது நகரங்களிலும், எதிரி ஆட்சியில் இன்னும் இருக்கின்ற விசாலமான இதர கிராமப் பிரதேசங் களிலும் நாம் செய்ய வேண்டிய வேலையை கைவிடுவது என்று அர்த்த மாகி விடாது. மாருக, நகரங்களிலும், இதர கிராமப் பிரதேசங்க
95

Page 59
ளிலும் வேலை செய்யா விட்டால், நமக்குச் சொந்தமான கிராமிய தளப் பிரதேசங்கள் தனிமைப் படுத்தப்பட்டு விடும்; புரட்சியும் தோல்வியடைந்து விடும். இன்னும் புரட்சியின் இறுதி இலட்சியம் எதிரியின் பிரதான தளங்களை-நகரங்களை கைப்பற்றுவதாகும். நகரங்களில் போதுமான வேலை செய்யாவிட்டால், இந்த லட்சியத்தை நிறைவேற்ற முடியாது’’ என்றும் கூறியுள்ளார்.
புரட்சிவாதிகள் கிராமிய மக்கள் மத்தியில் நீண்ட காலம் பொறுமையாக வேலை செய்யவும், அவர்களை நம் பக்கம் வென் றெடுக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, நகரங்களில் மேம்பாட்டுடன் விளங்கும் எதிரியின் சாதகமான நிலைமையை கிராமப் பிரதேசங்களில் மேம்பாட்டுடன் விளங்கும் நமக்குச் சாத கமான ஒன்ருக மாற்ற வேண்டும். -
இன்னும் என்னவென்றல், இப்பொழுது எதிரி நம்மைத் தேடிவர வேண்டும்; அவன் தன்னுடைய முழு இராணுவத்தையும் கொண்டு வர முடியாது. நாம் எவ்வளவுக்கு அதிகமான தளங்களை ஸ்தாபிக்கின்ருேமோ அவ்வளவுக்கு எதிரி தனது படைகளைப் பிரித்து அனுப்ப வேண்டும்; அதே வேளையில் நம் பக்கமுள்ள வெகு ஜனங்களை நாம் சரியான முறையில் அணி திரட்டினல், எதிரிக்கு எதிராக மேம்பாடான படையொன்றை நம்மால் ஒன்று குவிக்க (1Քւգ պւb.
தோழர் tா ஒசேதுங் அவர்கள் சுட்டிக் காட்டியதாவது: ‘'எதிரியை முற்முக ஒழித்துக் கட்டுவதற்காக, நாம் எதிரியை ஆழமாக கவர்ந்திழுக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண் டும்; அவனை உள்ளே வர விடுவதற்காக, நாம் சுயமாகவும், திட்ட மிட்ட முறையிலும் நாம் சில நகரங்களையும், பிரதேசங்களையும் விட்டு விலக வேண்டும். அவனை உள்ளே நுழையவிட்டால் தான், பொதுமக்கள் பல்வேறு வழிகளிலும் யுத்தத்தில் கலந்து கொள்ள முடியும்; மக்கள் யுத்தத்தின் ஆற்றலை பூரணமாக வெளிப்படுத்த முடியும்.’’
மக்கள் யுத்தம் என்பது மக்களால் தான் நடத்தப்பட முடி யும். கூறப்படும் கியூபன் மார்க்கத்தை விளம்பரம் செய்யும் நபர் கள் கூறுவது போல, விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில வீர சிகாமணிகளால் நடத்தப்பட முடியாது. "தோழர் மாஒசேதுங் அவர்கள் கூறியதாவது:- "புரட்சி யுத்தம் என்பது பொது மக்க ளின் யுத்தம், பொது மக்களை அணிதிரட்டி, அவர்களைச் சார்ந்தி ருப்பதால் தான் இந்த யுத்தத்தை நடத்த முடியும்." அவர் மேலும் சொல்லியதாவது :- 'உண்மையான இரும்புக் கோட்டை யாது? பொது மக்கள், புரட்சியை உண்மையாகவும் விசுவாசமாக
96

வும் ஆதரிக்கும் லட்சோப லட்சம் பொது மக்களே ஆவர். இது தான் உண்மையான இரும்புக் கோட்டையாகும். இதை எந்த சக் தியாலும் உடைப்பது சாத்தியமாகாது, முற்றிலும் சாத்திய மாகாது. எதிர்ப் புரட்சியால் நம்மை நசுக்க முடியாது; அதற்கு மாருக, எதிர்ப் புரட்சியை நம்மால் நசுக்க முடியும். புரட்சிகர அரசாங்கத்தைச் சூழ லட்சோப லட்சம் மக்களையும் அணி திரட்டி, நமது புரட்சி யுத்தத்தை விரிவாக்கி, எதிர்ப் புரட்சி முழுவதையும் ஒழித்துக் கட்டி, சீன முழுவதையும் நாம் கைப் பற்ற முடியும்.’’
இந்த மேற்கோள் நமக்கு ஊட்டும் நம்பிக்கை " " யுத்த தந்திர ரீதியில் எதிரியை இகழ்ந்து நோக்குவது, ஆனல் தந்திரோபாய ரீதியில் அவனை பாரதூரமாக எடுப்பது' என்ற தோழர் மாஓசே துங் அவர்களின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. யுத்த தந்திர ரீதியில் எதிரியை இகழ்ந்து நோக்கா விட்டால், இறுதி வெற்றியில் நாம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட முடியாது; போருக்கு அவர்களைத் தட்டி எழுப்பவும் முடியாது. ஆனல், அதே வேளையில், எதிரியுடன் நடத்தும் ஒவ்வொரு சமரிலும், நாம் தந்திரோபாய ரீதியில் அவனைப் பாரதூரமாக எடுத்து, அதன் பிரகார்ம் அவனுக்கு எதிராக நம் படைகளை அனுப்ப வேண்டும்.
தோழர் மாஓசேதுங் அவர்கள், எந்த யுத்தத்திலும் தீர்க்க மான அம்சம் மக்கள் அன்றி, ஆயுதங்கள் அல்ல என்று எப்பொழு தும் கருதி வந்துள்ளார். அவர் கூறியதாவது:- "யுத்தத்தில் ஆயு தங்கள் ஒரு முக்கியமான அம்சம் ஆணுல் தீர்க்கமான அம்சம் அல்ல. தீர்க்கமான அம்சம் மக்கள் அன்றி, பொருட்கள் அல்ல. பலப் போட்டி என்பது ராணுவ பலம், பொருளாதார பலம் இவற்றின் போட்டி மாத்திரமல்ல, மனித பலம், ஆத்மீக பலம் இவற்றின் போட்டியுமாகும். ராணுவ, பொருளாதார பலங்களும் மக்களால் தான் ஒச்சப்படுகின்றன.'
வேறு வார்த்தைகளில் சொன்னல், ஆயுதங்கள் முக்கியமா னவை தான். ஆனல் தீர்க்கமானவை அல்ல; காரணம் அவை மனி தனல் தான் கையாளப்படுகின்றன. இந்த மனிதனை மார்க்ஸிஸம்லெனினிஸம்-மாஓசேதுங் சிந்தனையால் ஆயுதபாணியாக்கி விட் டால், அவனை வெல்வதென்பது இயலாத காரியம்.
இதற்குரிய காரணம் என்னவென் ருல், தோழர் லின் பியெள சுட்டிக் காட்டியது போல, சில நபர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக் கும், பிற்போக்குவாதிகளுக்கும் அஞ்சி நடுங்கியதைக் கண்டதும்:
97

Page 60
தோழர் மாஓசேதுங் அவர்கள் “எல்லாப் பிற்போக்குவாதிகளும் கடதாசிப் புலிகள். தோற்றத்தளவில் பிற்போக்குவாதிகள் பயங் கரமானவர்கள். ஆனல் யதார்த்தத்தில் அவ்வளவு பலமுடைய வர்கள் அல்ல. நீண்ட கால நோக்கிலிருந்து பார்த்தால், உண்மை யில் பலமுடையவர்கள் பிற்போக்குவாதிகள் அல்ல, மக்களே யாவர்?’ என்ற தமது பிரசித்தி பெற்ற தத்துவத்தை முன் வைத் 5 FT (T .
ஏகாதிபத்தியவாதிகள் இத் தத்துவத்துக்கு அஞ்சி நடுங்கும் அதே வேளையில், நவீன திரிபுவாதிகள் இத் தத்துவம் எதிரியை குறைத்து மதிப்பீடு செய்வதாகக் கூறி, அதை தூற்றுகின்றனர். ஏகாதிபத்திய - எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தாமல் ஊக்க மளிக்கச் செய்து, மக்களின் உற்சாகத்தை மழுங்கடிக்கும் முயற்சி யில், கடதாசிப் புலிக்கு "அணு ஆயுதப் பற்கள் உண்டு என்று சொல்லியும் இத் தத்துவத்தை எள்ளி நகையாடுகின்றனர்.
ஆணுல், தோழர் மா சேதுங் அவர்களின் 'ஏகாதிபத்தியவாதி களும் சகல பிற்போக்குவாதிகளும் கடதாசிப் புலிகளே' என்ற தத்துவம் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையும் துணி வும் கொடுப்பதில், சிறப்பாக இறுதி வெற்றியில் உறுதியான நம் பிக்கை ஊட்டுவதில் மகோன்னத முக்கியத்துவம் வாய்ந்து விளங் குகின்றது.
ஆணுல் தோழர் மாஓசேதுங் அவர்கள் எதிரியின் பலத்தை ஒரு போதும் குற்ைத்து மதிப்பீடு செய்ததே கிடையாது. அவர் விளக்கியதாவது:- "உலகில் இரட்டைத் தன்மை இல்லாத ஒரு விஷயமேனும் இல்லை. (இது எதிர்மறைகளின் ஒற்றுமை சம்பந்த மான விதியாகும்.) அது போல, ஏகாதிபத்தியமும் எல்லாப் பிற் போக்கு சக்திகளும் கூட இரட்டைத் தன்மை உடையவை. அவை ஏக காலத்தில் நிஜப் புலிகளாகவும், கடதாசிப் புலிகளாகவும் இருக்கின்றன. வரலாற்றில் அடிமைச் சொந்தக்கார - வர்க்கம், பிரபுத்துவ நிலச் சுவாந்தார் வர்க்கம், பூர்ஜுவா வர்க்கம் எல் லாம் தாம் அரசாங்க அதிகாரத்தைப் பெறுவதற்கு முன்னும் , பெற்ற பின் ஒரு குறிப்பிட்ட காலம் வரையும், உக்கிரமானவை யாக, புரட்சிகரமானவையாக, முற்போக்கானவையாக இருந் தன; நிஜப் புலிகளாக இருந்தன. ஆனல் காலப்போக்கில், அவற் றின் எதிர்மறைகள்-அடிமை வர்க்கம், விவசாயி வர்க்கம், பாட் டாளி வர்க்கம் ஆகியவை-படிப்படியாகப் பலத்தில் மேம்பட்டு, அவற்றை எதிர்த்து மென்மேலும் பயங்கரமாகப் போராடியதன் காரணமாக, இந்த ஆளும் வர்க்கங்கள் படிப்படியாய் தம்மில் மTருனவையாக மாறின; பிற்போக்கானவையாக மாறின; பின்
98

தங்கிய நபர்களாக மாறின; கடதாசிப் புலிகளாக மாறின; இறு தியில் மக்க்ளால் தூக்கியெறியப்பட்டன அல்லது தூக்கியெறியப் பட இருக்கின்றன. பிற்போக்கான, பின் தங்கிய, உளுத்துப் போன வர்க்கங்கள் மக்களுக்கு எதிரான தமது ஜீவமரணப் போராட்டத்தின்போது கூட இந்த இரட்டைத் தன்மையைப் பெற்றிருக்கின்றன. ஒருபுறம் அவை நிஜப் புலிகள்; மக்களைத் தின்றன; லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் தின்றன. மக்களின் போராட்ட லட்சியம் கஷ்ட நஷ்டங்களின் காலகட்டத்துக் கூடாக சென்றது. பாதையில் வளைவு சுளிவுகள் காணப்பட்டன. சீனுவில் ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், அதிகார முதலாளித் துவம் ஆகியவற்றின் ஆட்சியை ஒழித்துக் கட்ட சீன மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் செலவழித்தனர். கோடிக்கணக்கான உயிர்க ளைப் பலி கொடுத்து, 1949ல் வெற்றி பெற்றனர். பாருங்கள்! அவை உயிர்ப் புலிகள், இரும்புப் புலிகள், நிஜப் புலிகள் இல் லையா? ஆஞல் இறுதியில் அவை கடதாசிப் புலிகள், செத்த புலி கள், மாப்புலிகள் ஆகிவிட்டன. வரலாற்று உண்மைகள் இவை. இந்த உண்மைகளை மக்கள் கண்டும் கேட்டும் அறியவில்லையா? இதற்கு பல ஆயிரம், பல பத்தாயிரம் சான்றுகள் உண்டு. ஆம் , பல்லாயிரம், பல பத்தாயிரம்! எனவே, சாராம்சத்தில் பார்த் தால், நீண்டகால நோக்கிலிருந்து, யுத்த தந்திரக் கண்ணுேட் டத்திலிருந்து பார்த்தால், கடதாசிப் புலிகள் என்ற அவற்றின் உண்மையான இயல்பில் வைத்து ஏகாதிபத்தியமும் எல்லா பிற் போக்குவாதிகளும் நோக்கப்பட வேண்டும். இந்தக் கருத்தில்தான் நாம் நமது யுத்த தந்திர சிந்தனையைக் கட்டி அமைக்கின்ருேம். மறுபுறம், அவை மக்களைத் தின்னக்கூடிய உயிர்ப் புலிகள், இரும்புப் புலிகள், நிஜப் புலிகள் ஆகவும் இருக்கின்றன. இதில் நமது தந்திரோபாய சிந்தனையைக் கட்டி அமைக்கின்ருேம்'
வ் விஷயக்ை தற்கு மேல் தெளிவாகக் கூற முடியாது.
ஷயததை AD(35 fİ0 (POL
மக்கள் யுத்தத்தின் யுத்த தந்திர, தந்திரோபாயங்கள் பற் றிய தோழர் மாஒசேதுங் அவர்களின் தத்துவத்தில் நீண்ட கால கொரில்லா யுத்தம் பற்றிய தத்துவம் பிரிக்க முடியாத ஒரு பகுதி யாகும். தோழர் லின் பியெள, 'பாட்டாளி வர்க்கத்தின் விமோ சனம் என்பது இராணுவ விவகாரங்களில் மீண்டும் விசேஷமாக வெளிப்பட்டு, அதன் விசேஷமான புதிய இராணுவ வழிமுறையை யும் சிருஷ்டிக்கும்' என்று ஏங்கெல்ஸ் கூறியதை மேற்கோள் காட் டியுள்ளார். இந்த தீர்க்க தரிசனம் சீனவில் தோழர் மாஒசேதுங் அவர்கள் வகுத்த மக்கள் யுத்தத்தின் யுத்த தந்திர, தந்திரோபா யங்களால் நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்த தத்துவம் முழுக்
90

Page 61
கோவையான மக்கள் யுத்தத்தின் யுத்த தந்திர, தந்திரோபாயங் களை உள்ளடக்கியுள்ளது, இதை துணையாகக் கொண்டு எதிரியை அவனுடைய பலவீனமான இடங்களில் தாக்க பொது மக்கள் தங் களுடைய பலமான அம்சங்களைப் பாவிக்க முடியும்.
யப்பானிய எதிர்ப்பு யுத்தத்தின் போது தோழர் மாஒசேதுங் அவர்கள் 'கொரில்லா யுத்தம் அடிப்படையானது. ஆணுல் சாதக மான நிலமைகளில் நடமாடும் யுத்தத்தை நழுவ விடக் கூடாது' என்ற யுத்தத் தந்திரக் கோட்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலிருந்த இராணுவங்களுக்காக வகுத்தார். இவ்வாறு, தோழர் லின் பியெள சுட்டிக் காட்டியது போல, தோழர் மாஓ சேதுங் அவர்கள் 'கொரில்லா யுத்தத்தை யுத்த தந்திர மட்டத் திற்கு உயர்த்தினர். ஏன் என்றல், புரட்சிகர ஆயுதப் படைகள் பலமான எதிரியை தோற்கடிக்க வேண்டுமானல், தமது"சக்திக்கும் எதிரியின் சக்திக்கும் இடையில் பெறும் அசமத்துவம் நிலவும் போது, விளைவுகளைப் பொருட் படுத்தாமல் மூர்க்கத்தனமாய் போரிடக் கூடாது. அப்படிச் செய்தால், அவர்கள் பாரதூரமான நஷ்டங்களால் பாதிக்கப்பட்டு, புரட்சிக்கும் பெறும் பின்னடைவு களைக் கொண்டு வருவர். கொரில்லா யுத்தம் என்பது வைரிக்கு எதிாாக, மக்களின் எல்லா சக்திகளையும் அணிதிரட்டி, பிரயோகிக் கக் கூடிய ஒரே ஒரு வழி; யுத்தத்தின் போக்கில் எமது சக்திகளே பெருக்கி, எதிரியை தேய்த்து, பலவீனப்படுத்தி, எதிரிக்கும் எமக்கும் இடையிலுள்ள பலாபல நிலமையை படிப்படியாக மாற்றி, கொரில்லா புத்தத்தை நடமாடும் யுத்தமாக உயர்த்தி, இறுதியில் எதிரியை தோற்கடிக்கும் ஒரே ஒரு வழியாகும். '
தோழர் மாஒசேதுங் அவர்கள் கொரில்லா யுத்தத்தின் அடிப் படை தந்திரோடாயங்களை பின் வருமாறு வகுத்துள்ளார்: "எதிரி முன்னேறும் பொழுது நாம் பின் வாங்குவோம். எதிரி முகாமிடும் போது நாம் தொந்தரவு கொடுப்போம். எதிரி கனத்திருக்கும்போது நாம் தாக்குவோம். எதிரி பின்வாங்கும்போது நாம் துரத்துவோம்."
இது மிக எளிதாக விளக்கப்பட்டுள்ளது, மிக எளிதாக புரிந்து கொள்ளக் கூடியது. கொரில்லா தந்திரேபாயங்களும் மிக விவேகமான போராட்ட முறைகளும் மேலும் பழக்கப்பட்டன. உதாரணமாக **குருவி யுத்தம்" (இதன் அர்த்தம் குருவிகள் பறப்பது போல எதிர்பாராத விதத்தில் தோன்றியும் மறைந்தும், எதிரியை கொன்றும் அழித்தும் களைப்பூட்டியும் வளைந்து கொடுக் கும் முறையில் போராடுவது.) தரைக் குண்டு யுத்தம், சுரங்கப் பாதை யுத்தம், சதி வேலை யுத்தம், ஏரிக்கரை, நதிக்கரைகளில் யுத்தம் முதலியவையாகும்.
100

யப் பா னிய - எதிர்ப்பு யுத் தத்தின் இறுதிக் காலத்தில் கொரில்லா யுத்தம் நடமாடும் யுத்தமாக மாறிய போது, தோழர் மாஒசேதுங் அவர்கள் ‘அழிவு யுத்தம்" என்ற சகல ராணுவ நட வடிக்கைகள் அனைத்துக்கும் வழிகாட்டும் அடிப்படைக் கோட் பாட்டை வகுத்தார். ‘ஒவ்வொரு சமரிலும் எதிரிப் படைகளை ஒவ்வொன்ருக துடைத்தொழிக்க மேம்பாடான படைகளை ஒன்று குவிக்க வேண்டும்." அவர் சுட்டிக் காட்டியதாவது:- ராணுவ நடவடிக்கைகளை வழிநடத்தும் எல்லா கோட்பாடுகளும் தனது சொந்தப் பலத்தைப் பாதுகாக்கவும், எதிரியின் பலத்தை அழிக்க வும் இயன்ற அளவு பாடுபடுவது என்ற அடிப்படைக் கோட்பாடு களிலிருந்து வளர்கின்றன.'
தோழர் மாஒசேதுங் அவர்கள் போதித்ததாவது :- 'எதிரியை சிதறி ஓடச் செய்யும் சமர் என்பது பலம் பொருந்திய எதிரிக்கு எதிரான போரில் தீர்க்கமான அடிப்படை அம்சமல்ல. மறுபுறம், அழிவுப் போர் எந்த எதிரியின் மீதும் மகத்தான, உடனடியான பாதிப்பை உண்டாக்குகின்றது. ஒரு மனிதனின் பத்து விரல்க.ே யும் காயப்படுத்துவது, அவற்றில் ஒன்றை வெட்டி எறிவது போல் அவ்வ ளவு பயனுன்னதல்ல. அதேபோல, பத்து எதிரி டிவிஷன்களை சித றடிப்பதிலும் பார்க்க, அவற்றில் ஒன்றை அழித்தொழிப்பது பயனுள் ளதாகும்.'
தோழர் லின் பியெள சுட்டிக் காட்டியது போல, தமது பிர சித்தி பெற்ற பத்து ஆதார ராணுவ கோட்பாடுகளில் தோழர் மாஒசேதுங் அவர்கள் போதித்துள்ளதாவது :- ‘ஒவ்வொரு சமரி லும், முற்றிலும் மேம்பாடான படைகளை (எதிரியின் பலத்திலும் பார்க்க இரண்டு, மூன்று, நாலு, சில சமயங்களில் ஐந்து, அல்லது "ஆறு மடங்கு படைகளை) ஒன்று குவிப்பது, எதிரிப் படைகளை நாலு பக்கத்தாலும் சுற்றி வளைத்து, அவற்றைப் பூரணமாகத் துடைத்தொழிக்கப் பாடுபடுவது, வலையிலிருந்து ஒருவரேனும் தப்பி ஓடாமல் பார்த்துக் கொள்வது. விசேஷ நிலைமைகளில், எதி, ரிக்கு அழிவுதரும் அடிகள் கொடுக்கும் முறையை உபயோகிப்பது; அதாவது, நமது பலம் முழுவதையும் ஒன்று குவித்து, எதிரி மீது, நேர்முகத் தாக்குதல் தொடுத்தும், அவனது விலாப்புறத்தின் ஒரு புறத்தில் அல்லது இரு புறங்களிலும் தாக்குதல் தொடுத்தும், அவ னுடைய ஒரு பகுதியை துடைத் தொழித்து, இன்னெரு பகுதி யைச் சிதறி ஓடச் செய்வது; இவ்வாறு, நமது படை இதர எதிரிப் படைகளை நசுக்குவதற்கு அதன் துருப்புகளை விரைவில் நகர்த்த முடியும் நாம் பெறுவதிலும் பார்க்கக் கூடுதலாக இழக்கின்ற, அல்
101

Page 62
லது இருதரப்பும் சமமாக இழக்கின்ற உராய்வுச் சமர்களைத் தவிர்க்கப் பாடுபடுவது. இப்படி செய்தால், முழுமையில் (எண்ணிக்கை அள வில்) நாம் தாழ்ந்தவர்களாய் இருந்தாலும், ஒவ்வொரு பகுதியி லும், குறிப்பிட்ட ஒவ்வொரு போரியக்கத்திலும் நாம் பூரண மேம் பாடுடையவர்களாய் இருப்போம். இது போரியக்கத்தின் வெற் றியை உத்தரவாதம் செய்யும். காலப் போக்கில் முழுமையிலும் நாம் மேம்பாடு உடையவர்களாக மாறி, இறுதியில் எதிரிகள் எல் லாரையும் துடைத்தொழிப்போம்.”*
தோழர் மாஒசேதுங் அவர்கள் மக்கள் யுத்தத்தின் யுத்த தற் திர, தந்திரோபாயங்களை மிகச் சிறந்த முறையில் பின்வருமாறு தொகுத்துக் கூறியுள்ளார்:- ‘நீங்கள் உங்கள் வழியில் போரிடுங் கள், நாம் நமது வழியில் போரிடுவோம். எம்மால் வெல்ல முடியும் போது நாம் போரிடுவோம். முடியாத போது அகன்று விடு வோம்.' இந்த கொள்கையை தோழர் லின் பியெள பின்வரும் வாத்தைகளில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்: ‘'வேறுவார்த் தைகளில் சொன்னல், நீங்கள் நவீன ஆயுதங்களைச் சார்ந்திருக் கிறீர்கள்; நாம் உயர்ந்த புரட்சிகர உணர்வுடைய பொது மக்க ளைச் சார்ந்திருக்கிருேம். நீங்கள் உங்களுடைய மேம்பாட்டை வெளிப்படுத்துகிறீர்கள். நாம் நம்முடையதை வெளிப்படுத்துகி ருேம். உங்களுக்கு உங்களுடைய போராட்ட முறை உண்டு; நமக்கு எம்முடைய முறை உண்டு. நீங்கள் எங்களுடன் போரிட விரும்பும் போது நாம் உங்களை அனுமதிக்க மாட்டோம்; நீங்கள் எங்களைக் காணக் கூட மாட்டீர்கள். ஆனல், நாம் உங்களுடன் போரிட விரும்பும் போது, நீங்கள் தப்பிச் செல்லாதபடி பார்த்துக் கொள் வோம். உங்கள் நாடியில் நேராகத் தாக்கி, உங்களைத் துடைத் தொழிப்போம். நாம் உங்களைத் துடைத்தொழிக்கக் கூடிய பொழுது, உங்களைத் தீவிர உணர்வோடு துடைத்தொழிப் போம். எங்களால் முடியாத போது, எங்களை நீங்கள் துடைத் தொழிக்காதபடி நாம் பார்த்துக்கொள்வோம். ஒருவர் வெல்ல முடியும்போது போரிடாவிட்டால், அது சந்தர்ப்பவாதம்; வெல்ல முடியாதபோது போரிடப் பிடிவாதம் செய்தால், அது துணிச்சல்வாதம். போரிடுவதே நமது யுத்த தந்திர, தந்திரோ பாயங்கள் அனைத்தினதும் அச்சாணியாகும். போரி டு ம் தேவையை ஒட்டித்தான் அகன்று செல்லும் தேவையை நாம் ஏற்றுக்கொள்கிருேம். நாம் விலகிச் செல்லும் ஒரே நோக்கம், போரிட்டு, எதிரியை முற்றுமுழுதாக அழிப்பதேயாகும். இந்த யுத்த தந்திரமும் தந்திரோபாயங்களும் பரந்துபட்ட வெகு ஜனங்களைச் சார்ந்திருக்கும்போது மாத்திரம் பிரயோகிக்கப்பட முடியும். இத்தகைய பிரயோகத்தால்தான் மக்கள் யுத்தத்தின்
102

மேம்பாட்டைப் பூரணமாக வெளிப்படுத்த முடியும். நுட்ப சாதனங்களில் எதிரி எத்தகைய மேம்பாடுடையவனுயினும் சரி, எத்தகைய தந்திரங்களில் ஈடுபட்டாலும் சரி, அவன் அடிகள் வாங்கும் செயலற்ற நிலையில்தான் தன்னைக் காண்பான். முன் முயற்சி என்பது எப்பொழுதும் எங்கள் கையிலேயே இருக்கும்.'
மக்கள் யுத்தத்தின் யுத்த தந்திர, தந்திரோபாயங்கள் பற் றிய மாஒசேதுங் சிந்தனையின் தலைசிறந்த விளக்கம் இது.
L-6Af
தோழர் மாஓசேதுங் அவர்கள் மக்கள் முதன்முதலாகத் தம்மைத்தான் சார்ந்திருக்க வேண்டும் என்று சர்வசதா போதித் துள்ளார். வெகுஜனங்களின் விடுதலை வெகுஜனங்களால்தான் வென்றெடுக்கப்பட் வேண்டும் என்பது மார்க்ஸிஸம்-லெனி னிஸத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். தோழர் லின் பியெள கூறியதுபோல, ‘எந்த ஒரு நாட்டின் புரட்சியும், மக்கள் யுத்த மும் அந்த நாட்டுப் பொதுமக்களுடன் சம்பந்தப்பட்டவை. முக்கியமாக அவர்களின் சொந்த முயற்சிகளால் நடத்தப்பட வேண்டும். இதற்கு வேறு வழியே இல்லை.”*
புறத்தே உள்ள சக்திகளும், சாதகமான சர்வதேசிய நிலைமை களும் அகத்தே நிகழும் சம்பவங்களின் போக்கில் செல்வாக்கு வகிக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனல், பிரதான அம் சம் அகத்தில் உள்ளதுதான். சீன கம்யூனிஸ்ட் கட்சி யப்பா னிய எதிர்ப்பு யுத்த காலத்திலும், ஆரம்ப கால உள்நாட்டு யுத்தங்களிலும், நான்கு பக்கங்களிலும் எதிரியால் முற்றுகை இடப்பட்டு, தம்மைத் தாமே சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற் பட்டபோது இந்தப் படிப்பினையைக் கற்றுக் கொண்டது. அப் பொழுது தான் அவர்கள் ** சுயசார்பு மூலம் தாராளமான 'உணவும் உடையும்,' " "பொருளாதாரத்தை வளர்த்து, சப்ளை களை உத்தரவாதம் செய்வது, ' 'சிறந்த துருப்புகள், சாமா னிய நிர்வாகம்' என்பன போன்ற கொள்கைகளை முன்வைத் தனா .
தோழர் மாஒசேதுங் அவர்கள், 'அணுதிகாலம் முதல் மனித குலம் தன்னை எப்படி உயிரோடு வ்ைத்திருக்க முடிந்தது? தமக் குத் தாமே உணவு தேடிக்கொள்ள மக்கள் தமது கைகளை உபயோகித்தார்கள் அல்லவா? அவர்களுடைய பிற்கால சந்ததி களாக விளங்கும் நமக்கு இந்த அற்ப விவேகம்கூட இல்லா திருப்பது ஏன்? நமது சொந்தக் கைகளை நாம் ஏன் உபயோ கிக்க முடியாது?’ என்று கேட்டார்.
- 103

Page 63
'யப்பானிய எதிர்ப்பு யுத்தத்தில் சீன அதன் சொந்த முயற்சிகளைச் சார்ந்திருக்க வேண்டும்" என்று அவர் கூறியதைப் பார்த்தால், அவர் சரியான தீர்க்கதரிசனத்துடன் தான் மேற் படி கேள்வியை எழுப்பியிருக்கிருர், அவர் மேலும் கூறியதாவது:- 'நாம் அந்நிய உதவியை எதிர்பார்க்கிறேம்; ஆனல் அதைச் சார்ந் திருக்க முடியாது. நாம் எமது சொந்த முயற்சிகளே, முழு ராணு வத்தினதும் மக்கள் அனைவரினதும் சிருஷ்டி ஆற்றலை சார்ந்தி ருக்கிறேம்."
நமது அடிப்படைக் கொள்கை நமது சொந்த பலத்தின் அடிப்படையில் தங்கி நிற்பதாகும். நமது சொந்த முயற்சி களைச் சார்ந்திருப்பதன் மூலம்தான் எந்த நிலைமையிலும் நாம் வெல்லப்பட முடியாதவர்களாக இருக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
துரோகி குருசேவ் பொருளாதார உறவுகளை முறித்து, பொருளாதார ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிந்து, உதவிகள் அனைத்தையும் நிறுத்தி, சோவியத் நிபுணர்கள் அனை வரையும் திருப்பி அழைத்து, சீனவை முழந்தாளிடும்படி செய்ய முயன்றபோது, இந்த விவேகமான கொள்கைதான் சீன கட்சி யையும் சீன மக்களையும் கெளரவத்தோடு தலைநிமிர்ந்து நிற்கவைத் தது. தோழர் மாஒசேதுங் அவர்களின் விவேகமான தலைமை யில் சீன சுய - சார்புக் கொள்கை மூலம், 70 கோடி சீன மக் கள் மீதும் நம்பிக்கை வைத்து, அவர்களுடைய சிருஷ்டியாற் றலை வெளிப்படுத்துவதன் மூலம் இந்த நெருக்கடியை வெற்றி. கொண்டு விட்டது.
ஏகாதிபத்தியத்துக்கும் அதன் அடிவருடிகளுக்கும் எதிரான போராட்டங்களில் உலக மக்கள் தவிர்க்க முடியாதபடி ஒரு வரை ஒருவர் ஆதரிப்பது உண்மை என்று தோழர் மாஒசேதுங் அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார். ‘வெற்றிபெற்ற நாடுகள், இன்னும் வெற்றி பெருத மக்களுக்கு உதவியும் ஆதரவும் அளிக் கும் கடப்பாடுடையவை. எப்படியாயினும் வெளிநாட்டு உதவி யால் ஒரு உதவிப் பாத்திரத்தை மாத்திரம் வகிக்க முடியும்'. பிரதானமான, அடிப்படையான அம்சம் ஒருவரின் சொந்த நாட்டிலுள்ள புரட்சி சக்திகளாகும்.
இப் பொருள் பற்றிய மாஒசேதுங் சிந்தனையை தோழர் லின் பியெள பின்வரும் வார்த்தைகளில் தெளிவாகத் தொகுத் துள்ளார்:-** புரட்சியைத் தொடங்கி, மக்கள் யுத் தத்தை நடத்தி, வெற்றி பெறுவதற்காக, சுய - சார்புக் கொள்கையை
104

உயர்த்திப் பிடித்து, அந்நியப் பொருளாயத உதவிகளனைத்தும் துண்டிக்கப்படும்போதுகூட, சொந்த நாட்டுப் பொதுமக்களைச் சார்ந்து, சுதந்திரமாகப் போரிடத் தயார் செய்ய வேண்டும். ஒருவர் தனது சொந்த முயற்சிகள் மூலம் இயங்காவிட்டால், தனது நாட்டின் புரட்சி சம்பந்தமான பிரச்சினைகளை சுயமாகச் சிந்தித்து, தீர்க்காவிட்டால், வெகுஜனங்களின் பலத்தை சார்ந்திருக்காவிட் டால், மாறக, வெளிநாட்டு உதவியில் முற்ருகச் சார்ந்திருந் தால்-அது புரட்சியில் அழுத்தமாக நிற்கும் சோஷலிஸ் நாடு கள் அளிக்கும் உதவியாயிருந்தாலும்சரி-வெற்றியென்பது ஈட் டப்பட முடியாது. ஈட்டப்பட்டால்கூட, அதை ஸ்திரப்படுத்த {ւՔւգաո Ց}. ՞ ՞
“மக்கள் படை ஒன்று இல்லாவிட்டால், மக்களுக்கு ஒன் றுமே இல்லை." இந்த சாதாரணமான ஒரே வாக்கியத்தில், தோழர் மாஒசேதுங் அவர்கள், அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறை அரசு யந்தி ரத்தின் தற்காலிக மேம்பாட்டாற்றலை எப்படிச் சமாளித்து, தோற்கடிப்பது என்ற கேள்விக்கு விடையளித்துள்ளார். இது மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சிக்கு அவர் வழங்கிய குறிப் பிடத்தக்க சாதனையாகும்.
1927ல் முதலாவது ஐக்கிய முன்னணி உடைந்த பின்னர், தோழர் மாஒசேதுங் அவர்களின் நேரடித் தலைமையில் நிகழ்ந்த இலையுதிர்கால அறுவடைக் கிளர்ச்சி மூலம் சீன புரட்சி வெடித் தெழுந்த பின்னர் உடனடியாக அவர் முன்முயற்சி எடுத்து ஹ"நான் மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், கட்சி ஊழியர்கள் ஆகியோரைக் கொண்ட சீன வின் முதலாவது செஞ்சேனையை ஸ்தாபித்தார். இதுதான் அவர் சிங் காங் மலைகளுக்குத் தலைமைதாங்கிச் சென்ற, அங்கு இதைப் போன்ற வேறு பல படைகளுடன் சேர்ந்து, எதிரிக்கு எர்திரான போர்களில் பின்னர் பிரமாண்டமான செஞ்சேனை யாக வளர்ந்து (இப்பொழுது மக்கள் விடுதலைச் சேனை எனப் புனர்-பெயரிடப்பட்டு) சீன முழுவதையும் விடுதலை செய்த ராணுவமாகும்.
தோழர் மாஓசேதுங் அவர்கள் மக்கள் படை என்பது புரட்சி யின் அரசியல் கடமைகளை நிறைவேற்றும் ஒரு ஆயுதந் தாங் கிய குழு என்று கருதி வந்துள்ளார். ஆகவேதான் 'கட்சி துப் பாக்கி மீது ஆணை செலுத்துகின்றது. கட்சி மீது துப்பாக்கி ஆணை செலுத்துவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதுவே நமது கோட்பாடு" என்று அவர் குறிப்பிட்டார்.
105

Page 64
அவர் மேலும் கூறியதாவது :- 'சீன செஞ்சேனை என்பது புரட்சியின் அரசியல் கடமைகளை நிறைவேற்றும் ஒரு ஆயுதம் தாங்கிய குழு. விசேஷமாக இப்பொழுது, செஞ்சேனை போரிடு வதுடன் மட்டும் தன்னைக் கட்டுப்படுத்தி விடக்கூடாது. போரிட்டு எதிரியின் ராணுவ பலத்தை அழிப்பதோடு, பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்வது, பொதுமக்களை ஸ்தாபனரீதியாக அணிதிரட்டுவது, பொதுமக்களை ஆயுதபாணிகள் ஆக்குவது, புரட்சிகர அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிக்கவும், கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபனங்களை நிறுவவும் பொதுமக்களுக்கு உதவி செய் வது முதலிய முக்கியமான கடமைகளுக்கும் தோள் கொடுக்க வேண்டும். செஞ்சேனை சும்மா போரிடுவதற்காக மட்டும் போரிடு வதில்லை. மாருக, பொது மக்கள் மத்தியில் பிரசாரம்செய்வது, பொதுமக்களை ஸ்தாபனரீதியாக அணிதிரட்டுவது, பொதுமக் களை ஆயுதபாணிகளாக்குவது, புரட்சிகர அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிக்க பொதுமக்களுக்கு உதவி செய்வது முதலியவற்றுக்கா கப் போரிடுகின்றது. பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய் வது, அவர்களை ஸ்தாபனரீதியாகத் திரட்டுவது, ஆயுதபாணி களாக்குவது, புரட்சிகர அரசியல் அதிகாரத்தை ஸ்தாபிப்பது ஆகிய லட்சியங்களை நிறைவேற்ரு விட்டால், அது போரிடுவ தற்கே அர்த்தமில்லை. செஞ்சேனை இருப்பதற்கே காரணமில்லை.
தோழர் மாஒசேதுங் அவர்களின் கற்பனையிலே உதித்து, அவருடைய நேரடி வழிகாட்டலில் கட்டி வளர்க்கப்பட்ட இந்த மக்கள் படை ஒரு புதிய ரகப் படையாகும். பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் படைகளைக் கண்டதும் மக்கள் அஞ்சி நடுங்கிப் பதைபதைப்பதைப் பார்க்கின்ருேம். ஏனென்ருல், இந்தப் படைகள் மக்களை இம்சித்து, அடக்கி ஒடுக்கி, அவர்களு டைய முதுகில் ஏறிச் சவாரி செய்கின்றன.
ஆனல் மக்கள் படை என்பது மக்கள் மத்தியிலே தோன்றி, மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மக்களின் நலன்களைப் பாது காக்கின்றது. அதேபோல, மக்கள் மக்கள்-படையை வர வேற்று ஆதரிக்கின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் இருந்த படைகள் வெற்றிக்குமேல் வெற்றி பெற்று வந்ததன் காரணம், அவை மக்களின் நலன்களுக்கு இதயபூர்வமாகச் சேவை செய்து வந்த படைகள்; மக்கள் படை அமைப்புப் பற்றிய தோழர் மாஒசேதுங் அவர்கள் தத்துவத்தின் பிரகாரம் ஸ்தா பிக்கப்பட்ட புதிய ரகப் படைகள் என்பதாகும்.
இந்தத் தத்துவத்தின் வழிகாட்டலின் கீழ் இந்தப் 'படை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சம்பூரண தலைமையில் இருந்து,
106

கட்சியின் மார்க்ஸிஸம்-லெனினிஸ் மார்க்கத்தையும் கொள்கை களையும் மிக விசுவாசமாக அமுல் நடத்தியது. உயர்ந்த கட்டுப் பாட்டு உணர்வும் சகல எதிரிகளையும் வெற்றிகொண்டு, சகல கஷ்டங்களையும் கடக்கும் வீரசாகச எழுச்சியும் * ၈-ပ္{ அகத்தே ஊழியர்களுக்கும் போராளிகளுக்கும் இடையில், மேல் மட்டப் பொறுப்புதாரிகளுக்கும் கீழ்மட்டப் பொறுப்புதாரிக ளுக்கும் இடையில், பல்வேறு இலாகாக்களுக்கும் இடையில், பல்வேறு சகோதரப் படை யூனிட்டுகளுக்கும் இடையில் பூரண ஒற்றுமை நிலவியது. அதுபோல, புறத்தே படைக்கும் பக்க ளுக்கும் இடையிலும், படைக்கும் ஸ்தல அரசாங்கத்துக்குமிடை யிலும் பூரண ஒருமைப்பாடு நிலவியது.'
படைவீரர்கள் அனைவரும் கட்டுப்பாடு பற்றிய மூன்று பிர தான விதிகளையும், கவனத்துக்கான எட்டு அம்சங்களையும் கண் டிப்பாகக் கடைப்பிடித்து வந்தனர். 'கட்டுப்பாடு பற்றிய மூன்று பிரதான விதிகளும் பின்வருமாறு:-
(1) நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் கட்டளைக்குக் கீழ்ப்
ւմLգ- •
(2) மக்களிடமிருந்து ஒரு ஊசியையோ, அல்லது ஒரு
துண்டு நூலையோ எடுக்காதே.
(3) கைப்பற்றிய எல்லாவற்றையும் ஒப்படை,
கவனத்துக்கான எட்டு அம்சங்களும் பின்வருமாறு:-
(1) மரியாதையாகப் பேசு. (2) வாங்குவதிலும் விற்பதிலும் நியாயமாக நடந்து கொள். (3) கடன் வாங்கியதைத் திருப்பிக் கொடு. (4) சேதங்களுக்கு நஷ்ட ஈடு செலுத்து. (5) மக்களை அடிக்கவோ நிந்திக்கவோ கூடாது. (6) பயிர்களை அழிக்காதே. (7) பெண்களிடம் ஒழுங்கீனமாய் நடவாதே. (8) கைதிகளைத் துன்புறுத்தாதே.
இத்தகைய கட்டுப்பாடுகளை அனுசரித்து வந்த ஒரு படை
திபெத்திய மக்களால் புத்தரின் படை என்று அன்பாகக் கூறி வரவேற்கப்பட்டதில் எவ்வித வியப்பும் இல்லை.
107

Page 65
மேலும், தோழர் மாஒசேதுங் அவர்கள் யுத்தத்துக்கும் ராணுவ விவகாரங்களைப் படிப்பதற்கும் கட்சி முழுவதும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என்று போதனையளித்துள் ளார். ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் எந்த சந்தர்ப்பத்திலும் ஆயுதங்கள் ஏந்தி, போர்முனைக்குச் செல்லத் தயாராய் இருக்க வேண்டும்.
தோழர் லின் பியெள அவர்கள் சுட்டிக்காட்டியதாவது:- படை அமைப்புப் பற்றிய தோழர் மாஒசேதுங் அவர்கள் தத்து வத்தின் சாராம்சம் என்னவென்றல், மக்கள் படை அமைப்பில் அரசியலுக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும். அதாவது, முதன் முதலாகவும், பிரதானமாகவும் ஒரு அரசியல் அடிப் படையில் படை அமைக்கப்பட வேண்டும். அரசியல் என்பது தளபதியாகவும் எல்லாவற்றின் ஆத்மாவாகவும் திகழ்கின்றது. அரசியல் வேலை நமது படையின் உயிர்நாடியாகும். மக்கள் படை ஆயுத தளபாடங்களையும், ராணுவ நுட்பங்களையும் இடைவிடாது விருத்தி செய்வதில் கவனம் செலுத்தவேண்டும் என்பது உண்மைதான். ஆனல், போரிடும் போது ஆயுதங் கள், நுட்பங்களை மட்டும் அது சார்ந்திருப்பதில்லை. பிரதான மாக அது அரசியல், அதிகாரிகள், படைவீரர்களின் பாட்டாளி வர்க்கப் புரட்சி உணர்வு, வீரசாகஸம், மக்களின் ஆதரவு, பின்பலம் ஆகியவற்றை சார்ந்திருக்கின்றது.
இந்தக் காரணத்தால்தான் மக்கள் விடுதலைச் சேனை சீன வில் பாட்டாளி வர்க்க சர்தாதிகாரத்தின் தூணுக விளங்கு வது மாத்திரமல்ல, மகத்தான பாட்டாளி வர்க்க கலாசாரப் புரட்சியில்கூட ஒரு தீர்க்கமான பாத்திரத்தை வகித்தது.
எந்த ஒரு புரட்சிகரக் கட்சியும் இத்தகைய ஒரு புதிய ரக மக்கள் படையைக் கட்டியமைக்கா விட்டால், அதனுல் புரட்சியை வெற்றிக்கு வழிநடத்த முடியாது. செல்வந்தர்களின் பிள்ளை களுக்கு மாத்திரம் பள்ளிகளில் ராணுவப் பயிற்சியளிக்கப் படும் இலங்கை போன்ற வளர்ச்சியடையாத நாடுகளில் யுத்த விவகாரங்கள் பற்றிப் படிப்பது எப்படி என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கு தோழர் மாஓசேதுங் அவர்களே விடையளித்துள் ளார். நீந்துவதன் மூலம் ஒருவர் நீந்தப் பழகவேண்டும். யுத் தத்தின் மூலம் யுத்தம் நடத்தப் படிக்க வேண்டும். புரட்சி செய்வதன் மூலம் புரட்சி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும்.
108

இது முதலில் படித்து, பின்னர் செய்யும் ஒரு விஷயம் அல்ல. ஏனென்ருல் செய்வதே படிப்பு குஆம்.
லெனின் அவர்கள் நமக்குப் போதித்ததாவது:- "ஆயுதங் களை எப்படி உபயோகிப்பது என்று கற்றுக்கொள்ள, ஆயுதங் களைப்பெற முயற்சிக்காத அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு வர்க்கம் அடிமைகளாய் நடத்தப்படுவதற்கு மாத்திரம் தகுதியுடையது. நாம் முதலாளி வர்க்கச் சாந்திஹாதிகள், சந்தர்ப்பவாதிக ளாய் இருந்தால் ஒழிய, நாம் ஒரு வர்க்க சமுதாயத்தில் வாழ் கின்ருேம், வர்க்கப் போராட்டத்தின் மூலம் அன்றி, இச் சமுதாயத்திலிருந்து வெளியேறும் மார்க்கம் ஒன்று கிடையாது, இருக்கவும் முடியாது என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஒவ்வொரு வர்க்க சமுதாயத்திலும், அது அடிமை முறை, பண்ணையடிமை முறை, இன்றுபோல கூலி உழைப்பு-இவற் றில் எதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் சரி, அடக்கி ஒடுக்கும் வர்க்கம் எப்பொழுதும் ஆயுதபாணியாகவே இருக்கின் றது. ‘பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்கி, முதலாளி வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவது என்பது நமது சுலோ கம் ஆகும்.'"
109

Page 66
அத்தியாயம் W11
ஐக்கிய முன்னணி பற்றி
தோழர் மாஒசேதுங் அவர்கள் சீன புரட்சியின் வெற்றிக் காக வகுத்த யுத்ததந்திர, தந்திரோபாயங்களின் அடிப்படை அம்சங்களில் ஒன்று என்னவென்றல், அவருடைய ஐக்கிய முன் னணிக் கொள்கையாகும். இது மார்க்ஸிஸம்-லெனினிஸத்தின் வளர்ச்சிக்கு அவர் வழங்கிய ஒரு முக்கியமான சாதனையாகும்.
நமது எதிரி பலம் பொருந்தியவன்; காலனி, அரை-காலணி நாடுகளில் முதலாளித்துவ வளர்ச்சி கட்டுப்படுத்தப் பட்டதன் விளைவாக, ஜனத்தொகையில் தொழிலாளி வர்க்கம் ஒப்பீட்டு வகையில் ஒரு சிறிய பகுதியாகவே விளங்குகின்றது. இந்த இரண்டு உண்மைகளின் காரணமாக, ஐக்கிய முன்னணி ஒன் றின் தேவை எழுகின்றது. ஆகவே, பாட்டாளி வர்க்கம் அதன் பிரதான எதிரிகளை-அதாவது, அந்நிய ஏகாதிபத்தியம், நிலப் பிரபுத்துவம், தரகு முதலாளித்துவம் ஆகியவற்றை-தோற் கடிக்க வேண்டுமானல், இந்த பிற்போக்கு சக்திகளுக்கு எதி ரான இதர வர்க்கங்கள், சக்திகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பை பாட்டாளி வர்க்கம் நாடவேண்டும். இதன் அர்த்தம், பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படுத்தப்படக் கூடிய எல்லா சக்தி களையும் பாட்டாளி வர்க்கம் ஐக்கியப்படுத்த வேண்டும் என்ப தாகும்.
ஐக்கிய முன்னணிக் கொள்கையும், அதன் தந்திரோபாயங் களும் பற்றிக் கூறும்போது, ஐக்கிய முன்னணிக்குள் நாம் கம் யூனிஸ்ட் கட்சியின் சுதந்திரம், முன்முயற்சி, தனித்துவம், தலை
110

மைப் பாத்திரம் ஆகியவற்றைக் கைவிடவேண்டும் என்று அர்த்த 19ாகி விடாது. கம்யூனிஸ்ட் கட்சியும், கோமிந்தாங் கட்சியும் முத லாவது ஐக்கிய முன்னணியை அமைத்திருந்த காலத்தில் சீன கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுக் காரியதரிசியாக இருந்த சென் து சியூ இந்தப் பிழையைத்தான் இழைத்தார். இது ‘எல்லாம் ஐக்கி யம், போராட்டமே இல்லை என்ற கொள்கையாகும். மறுபுறம், வாங் மிங் என்பவர் பின்னர் ‘இடதுசாரி" சந்தர்ப்பவாதக் கொள்கைக்காக, "எல்லாம் போராட்டம், ஐக்கியமே இல்லை" என்ற கொள்கைக்காக வக்காலத்து வாங்கினர்.
இந்தத் தவறுகளிலிருந்து பெற்ற, எதிர்மறை உதாரணங் களிலிருந்து படித்த அனுபவங்களைத் தொகுத்து தோழர் மாஓ சேதுங் அவர்கள் “ ‘ஐக்கியமும் போராட்டமும்’ ’ என்ற கொள் கையை முன்வைத்தார். 'போராட்டத்தின் மூலம் உருவாகும் ஐக்கியம் வாழும் விட்டுக் கொடுப்பின் மூலம் உருவாகும் ஐக் கியம் வீழும்!"
ஐக்கிய முன்னணி பற்றிய மாஒசேதுங் சிந்தனையை தோழர் லின் பியெள பின்வருமாறு விளக்கியுள்ளார்:- "ஈவிரக்கமற்ற ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்நோக்கும்போது, ஒரு கம்யூ னிஸ்ட் கட்சி தேசியப் பதாகையை உயர்த்திப்பிடிக்க வேண்டும்; ஐக்கிய முன்னணி என்ற ஆயுதத்தைக் கொண்டு, நாட்டு ஜனத் தொகையில் 90 வீதத்துக்கு மேலாக விளங்கும் பொது மக்களை யும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேச பக்தர்கள் அனைவரை யும் தன்னைச் சூழ ஐக்கியப்படுத்த வேண்டும்; இவற்றின்மூலம் சாதகமான அம்சங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி, ஐக்கியப் படக்கூடிய சக்திகள் அனைத்தையும் ஐக்கியப்படுத்தி, தேசம் முழுவ தின் பொது எதிரியை இயன்ற அளவு தனிமைப்படுத்த வேண்டும். நாம் தேசியப் பதாகையை வீசியெறிந்தால், ' கதவடைப்பு வாத' மார்க்கத்தைக் கடைப்பிடித்து, நம்மை நாமே தனிமைப் படுத்தினுல், தலைமை தாங்குவதும், மக்களின் புரட்சி லட்சி யத்தை விருத்தி செய்வதும் கேள்விக்கு அப்பால்பட்டவையாகி விடும். இது யதார்த்தத்தில் எதிரிக்கு உதவியளித்து, நமக்கு நாமே தோல்வி கொண்டு வருவதாகும் என்பதை வரலாறு காட்டுகின்றது.
'ஐக்கிய முன்னணிக்குள் கம்யூனிஸ்ட் கட்சி அதன் சித் தாந்த, அரசியல், ஸ்தாபன சுதந்திரத்தை நிலைநிறுத்தி, சுயா தீனம், முன்முயற்சி என்ற கொள்கையை உறுதியாகப் பின் பற்றி, அதன் தலைமைப் பாத்திரத்திலும் அழுத்தமாக நிற்கவேண்
11

Page 67
டும் என்பதையும் வரலாறு காட்டுகின்றது. ஐக்கிய முன்னணி யில் பல்வேறு வர்க்கங்களுக்குமிடையில் வர்க்க வேறுபாடுகள் நிலவுவதால், கட்சி முற்போக்கு சக்திகளை விருத்திசெய்து, மத் திய சக்திகளை வென்றெடுத்து, பிடிவாத சக்திகளை எதிர்ப்ப தற்கு ஒரு சரியான கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும். கட்சி வேலை முற்போக்கு சக்திகளை விருத்தி செய்வதையும், மக் களின் புரட்சி சக்திகளைப் பெருக்குவதையும் அதன் மையமாகக் கொள்ளவேண்டும். இதுதான் ஐக்கிய முன்னணியை நிலைநிறுத்தி, பலப்படுத்தும் ஒரே ஒரு வழியாகும்.’’
இந்த மேற்கோளின் பிற்பகுதியில் காணும் முற்போக்கு சக்திகள், என்பது கம்யூனிஸ்ட் கட்சியையும், அது தலைமை தாங் கும் மக்கள் ஸ்தாபனங்களையும் குறிக்கின்றது. மத்திய சக்திகள் என்பது தேசிய முதலாளி வர்க்கமாகும். பிடிவாத சக்திகள் என்பது நமது பிரதம எதிரியாக விளங்கும் பிற்போக்கு சக்தி கள் ஆகும்.
இதை மேலும் விளக்கிக் கூறினல், நாம் எந்த அளவுக்கு முற்போக்கு சக்திகளை விருத்தி செய்கிருேமோ அந்த அளவுக் குத்தான் மத்திய சக்திகளை நமது தலைமையின் கீழ் வென்றெ டுக்க முடியும். இல்லாவிட்டால் நாம் தேசிய முதலாளி வர்க் கத்தின் வாலில் செல்லவேண்டி ஏற்படும். புரட்சியும் வாகை சூடாது. மத்திய சக்திகளை (குறிப்பாக, அதன் முற்போக்கு, இடதுசாரிப் பகுதிகளை) நமது தலைமையிலுள்ள ஒரு ஐக்கிய முன்னணிக்குள் வென்றெடுக்க முடியுமா, இல்லையா என்பது முற்போக்கு சக்திகளின் பலத்திலும், ஸ்தாபன வளர்ச்சியிலும் தங்கியிருக்கின்றது. ஆகவேதான், ஐக்கிய முன்னணி ஒன்றை நாம் கட்டிவளர்க்க முயலும்போது, முற்போக்கு சக்திகளை இயன்ற அளவு விருத்தி செய்வதை மிகப் பெரிதும் வலியுறுத்து கின்ருேம்.
யப்பானிய-எதிர்ப்பு யுத்த காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி கோமிந்தாங்குடன் ஐக்கிய முன்னணி அமைத்தபோது, தோழர் மாஒசேதுங் அவர்கள், ஸ்தாபனரீதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரம் உத்தரவாதம் செய்யப்பட்டா லொழிய, யுத்தத்தை வெற்றிக்கு வழிநடத்த முடியாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினர்.
எனவேதான், எந்த ஒரு ஏகாதிபத்திய-எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணிக்கும் தொழிலாளர்-விவசாயிகள் நேச அணி அடிக்கல் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். தோழர்
112

லின் பியெள அவர்கள் விளக்கியதாவது:- "தேசிய ஜனநாய கப் புரட்சியின்போது, ஐக்கிய முன்னணியில் இரண்டு வகை யான நேச அணிகள் இருக்கவேண்டும். இவற்றில் ஒன்று, தொழிலாளர்-விவசாயிகள் நேச அணி, மற்றது, உழைப்பாளி மக்கள் முதலாளி வர்க்கத்துடனும், உழைப்பாளி மக்கள் அல் லாதவர்களுடனும் அமைக்கும் , நேச அணி. தொழிலாளர்-விவ சாயிகள் நேச அணி என்றல், தொழிலாளர் வர்க்கம் விவசாயி களுடனும், நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் உள்ள இதர உழைப்பாளி மக்கள் அனைவருடனும் கொள்ளும் நேச அணியா கும். இதுதான் ஐக்கிய முன்னணியின் அத்திவாரம். தேசிய ஜன நாயகப் புரட்சியில் தொழிலாளர் வர்க்கம் தலைமை அதிகாரத் தைப் பெற முடியுமா, முடியாதா என்பதற்கு, போராட்டத்தில் பரந்துபட்ட விவசாயிகளுக்குத் தலைமை கொடுத்து, அவர்களைத் தன்னைச் சூழ ஐக்கியப்படுத்த முடியுமா, இல்லையா என்பது திறவுகோலாக விளங்குகின்றது. தொழிலாளர் வர்க்கம் விவ சாயிகள் மீதான தலைமையைப் பெற்ருல்தான், இந்த தொழிலா ளர்-விவசாயிகள் நேச அணியின் அடிப்படையில்தான், தொழி லாளர் வர்க்கம் மேற்படி இரண்டாவது நேச அணியை ஸ்தா பித்து, ஒரு விசாலமான ஐக்கிய முன்னணியை அமைத்து, மக் கள் யுத்தத்தை வெற்றிகரமாக நடத்த முடியும். அல்லாவிட் டால், எது செய்தாலும், அது மணல் வீடுபோல அல்லது வெறும் வாய்ப் பந்தல்போல நம்பத்தகுந்தது அல்ல.
தோழர் மாஓசேதுங் அவர்கள், பொது எதிரியை தோற் கடிக்கும் நலன்களுக்காக, ஊசலாடி, தற்காலிகக் கூட்டாளி களாய் மாத்திரம் இருக்கக் கூடியவர்களைக் கூட வென்றெடுக்கப் பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பகைவனுக்கு எதிரான ஒரு கூட்டுப் போரில், கோமிந்தாங் கட்சி, யப்பா னிய-எதிர்ப்பு வர்க்கத் தட்டுகள் அனைத்தும் உட்பட, யப்பா னிய-எதிர்ப்புக் கட்சிகள், குழுக்கள் எல்லாவற்றையும் ஐக்கியப் படுத்துவதற்காக, கட்சிக் கொள்கைகளை இசைவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அக் காலத்தில் அவர் சீன சமுதாயத்தை ஆராய்ந்து (இது இலங்கைக்குக் கூடப் பொருந்திய ஒரு ஆராய்வு), தொழிலா ளர், விவசாயிகள், நகரக் குட்டி பூர்ஜுவாக்க்ள்தான் யப்பா னிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் பிரதான சக்திகள் ஆவர் என்றும், ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் கோரும் அடிப்படை மக்கள் ஆவர் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
13

Page 68
முதலாளி வர்க்கம், தேசிய முதலாளிகள், தரகு முதலாளி கள் எனப் பிரிந்திருக்கின்றது. தரகு முதலாளிகள் சரணுகதித் தன்மையுடையவர்கள். பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளுடன் இணைந்தவர்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்ப்பவர் கள்; மக்களின் வைரிகள்.
தேசிய முதலாளி வர்க்கம் இரட்டைத் தன்மை உடையது. அதற்கும் தொழிலாளர்களுக்குமிடையில் முரண்பாடுகள் உண்டு. அது அடிக்கடி ஊசலாடும் இயல்புடையது. அதேவேளையில், அது ஏகாதிபத்தியத்தை எதிர்க்க ஒரளவு தயாராக உள்ளது. அதை ஒரு நேச சக்தியாக வென்றெடுக்க முடியும். அது தற் காலிக அல்லது ஊசலாடும் தன்மையுடைய நேச அணியாயிருந் தாலும் பரவாயில்லை. தேசிய முதலாளிகளுக்கு அல்லது முத லாளி வர்க்கத்தின் ஏகாதிபத்திய-எதிர்ப்பு பகுதிகளுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. ஒன்று, நல்ல பக்கம், மற்றது தீய பக்கம். ஒன்று, முற்போக்கானது, மற்றது பிற்போக்கானது. ஒரு பக் கம் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது, மறுபக்கம் தொழிலாளர் வர்க்கத்தை எதிர்ப்பது. இவை தவிர, அது இடைவிடாது ஊசலாடும் தன் ைழ உடையது. நமது பொது, எதிரிக்கு எதி ராக ஐக்கியப்படக்கூடிய சக்திகள் எல்லாவற்றையுய் ஐக்கியப் படுத்தும் கொள்கையைக் கடைப்பிடிக்கும்போது, நாம் தேசிய முதலாளி வர்க்கத்தின் நல்ல பக்கத்தோடு ஐக்கியப்பட்டு, அதன் தீய பக்கத்தை எதிர்க்கவேண்டும். அதன் முற்போக்கான பக் கத்துடன் ஐக்கியப்பட்டு, பிற்போக்கான பக்கத்தை எதிர்க்க வேண்டும். அவர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும்போது நாம் அவர்களுடன் ஐக்கியப்படவேண்டும். தொழிலாளர் வர்க்கத்தை எதிர்க்கும்போது, நாம் அவர்களை எதிர்க்கவேண்டும். இதுதான் *ஐக்கியமும் போராட்டமும்" என்ற கொள்கையாகும்.
தோழர் மாஒசேதுங் அவர்கள் கூறியதாவது:- 'ஏகாதி பத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்தவர்கள்-யுத்த பிரபுக்கள், அதி கார வர்க்கம், தரகு முதலாளித்துவ வர்க்கம், பெரும் நிலப் பிரபு வர்க்கம், இவர்களோடு இணைந்துள்ள பிற்போக்கான புத்திஜீவிகளின் பகுதி-அனைவரும் நமது எதிரிகள் ஆவர். தொழில்துறைப் பாட்டாளி வர்க்கம் என்பது புரட்சியின் தலை மைப் பலம். அரை-பாட்டாளி வர்க்கம், குட்டி பூர்ஜுவா வர்க் கம் முழுவதும் நமது மிக நெருங்கிய நண்பர்கள். ஊசலாடும் மத்தியதர பூர்ஜ சவா வர்க்கத்தைப் பொறுத்தவரையில், அதன் வலதுசாரி அணி நமது எதிரியாகவும், இடதுசாரி அணி நமது நண்பர்களாகவும் மாறலாம். ஆனல் அவர்கள் நமது அணிகளில்
4

குழப்பம் விளைவிக்காமல், நாம் அவர்கள் மீது எப்பொழுதும் ஜர்க்கிரதையாய் இருக்க வேண்டும்.'
ஐக்கிய முன்னணித் தந்திரோபாயங்களை நாம் சரியாக' பிரயோகிக்க வேண்டுமானல், ஒவ்வொரு சமுதாயத்திலும் பல் வேறு முரண்பாடுகள் இருக்கின்றன; நாம் விவேகமாகப் பிர தான முரண்பாட்டை பகுத்தறிந்து கொள்ளவேண்டும்; இதர சிறிய முரண்பாடுகள் பெரிய முரண்பாடுகளாக வளர விடக் கூட்ாது; இவ்வாறு பிரதான முரண்பாட்டின் தீர்வுக்குக் குந்த கம் விளைவிக்கக் கூடாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்
டும்.
உதாரணமாக, இலங்கை சமுதாயத்தில் பல முரண்பாடு கள். அதாவது, ஒருபுறம் அந்நிய ஏகாதிபத்தியம், நிலப்பிர புத்துவம், அவர்களுடைய வேட்டை நாய்களான யூ. என். பி. (ஐக்கிய தேசிய கட்சி), தமிழரசுக் கட்சி முதலியவற்றுக்கும், மறுபுறம் பரந்துபட்ட சிங்கள, தமிழ், முஸ்லீம் வெகுஜனங்க ளுக்கும் இடையிலுள்ள முரண்பாடு, முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்கும் இடையிலுள்ள முரண்பாடு, சிங் களவருக்கும் தமிழருக்கும் உள்ள முரண்பாடு, பெளத்தர்களுக் கும் கத்தோலிக்கருக்கும் உள்ள முரண்பாடு, கொய்கம சாதிக் கும் கரவா சாதிக்கும் உள்ள முரண்பாடு, கூறப்படும் உயர்ந்த சாதிக்கும், கூறப்படும் தாழ்ந்த சாதிக்கும் உள்ள முரண்பாடு போன்ற பல முரண்பாடுகள் இருக்கின்றன.
ஆணுல் அந்நிய ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவம், அவற் றின் வேட்டை நாய்கள் ஆகியவற்றுக்கும் இன, மத, சாதி வேறுபாடின்றி, பரந்துபட்ட இலங்கை மக்களுக்கும் இடையி லுள்ள முரண்பாடே பிரதான முரண்பாடு ஆகும். நாம் இந் தப் பிரதான முரண்பாட்டைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரதான முரண்பாட்டின் தீர்வுக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய முறையில், சிறிய முரண்பாடுகள் பெரிதாக வளர்வதை அனுமதிக்கக் கூடாது. நாம் எல்லா முரண்பாடு களையும் ஒரே சமயத்தில் தீர்த்துவிட முடியாது. நாம் அவற்றை ஒவ்வொன்ருகத்தான் தீர்க்க முடியும். பிரதான முரண்பாடு முத லில் தீர்க்கப்பட வேண்டும்.
வேறு வார்த்தைகளில் சொன்னல், நாம் வாழும் சமுதா யத்தை சரியான முறையில் ஆராயக் கூடியவர்களாக இருக்க
வேண்டும். நமது பிரதான எதிரியை இனங் கண்டு, அவனைத் தனிமைப்படுத்தி, ஒழித்துக்கட்ட தெரிந்து கொள்ள வேண்டும்.
115

Page 69
இந்தக் குறிக்கோளுக்காக-நேச அணிகள் மத்தியில் உள்ள சிறிய முரண்பாடுகளை மறந்து-பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப் படக்கூடிய எல்லா சக்திகளையும் கொண்ட ஒரு ஐக்கிய முன் னணியை நாம் கட்டியமைக்க வேண்டும்.
நாம் நண்பனையும் எதிரியையும் இனம் பிரித்துப் பார்க்கா மல் ஒன்ருகப் போட்டுக் குழப்பினுல், அது எதிரிக்கு மாத்திரம் செளகரியம் கொடுத்து, தேச அணி ஆகக் கூடியவரை எதிரி யாக்கி விடும். இது தவருண தந்திரோபாயமாகும்.
ஆகவே, பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படக் கூடிய சகல சக்திகளையும் கொண்ட ஐக்கிய முன்னணி ஒன்றை அமைப் பதன் மூலம், நமது பிரதான எதிரியை இனங் கண்டு, அவனைத் தனிமைப்படுத்தி, தோற்கடிப்பது, ஐக்கிய முன்னணித் தந்தி ரோபாயங்களை பிரயோகிப்பதிலுள்ள அடிப்படை அம்சமாகும் என்று தோழர் மாஓசேதுங் அவர்கள் நமக்குப் போதித்துள் Trr. இதன் அர்த்தம் எதிரிக்கு எதிராக எவ்வளவு பேரை ஐக்கியபடுத்த முடியுமோ, அவ்வளவு பேரையும் ஐக்கியப்படுத்தி, எதிரியைத் தனிமைப்படுத்துவதாகும்.
கடைசியாக, தோழர் மாஓசேதுங் அவர்கள் குறிப்பிடும் இந்த ஐக்கிய முன்னணி பாராளுமன்ற தேர்தல்களில் போட்டி யிடுவதற்காக அமைக்கும் ஐக்கிய முன்னணியல்ல, மாருக, சகல பிற்போக்கு வாதிகளையும் புரட்சிகர மக்கள் யுத்தத்தால் பலாத் காரமாகத் தூக்கி வீசுவதன் மூலம், சமுதாயத்தில் ஒரு புரட்சி கர மாற்றத்தைக் கொண்டு வருவதற்குரிய ஒரு ஐக்கிய முன் னணி என்று சுட்டிக் காட்டுவது அவசியமற்றது என நாம் கருதுகின்ருேம்.
16

அத்தியாயம் VIII
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீர்த்திமிக்க 9வது தேசிய மகாநாடு
சகாப்தத்தின் மாபெரும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் يق ماله டான தோழர் மாஒசேதுங் தலைமையில் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இருபத்திநான்காம் திகதிவரை நடைபெற்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்பதாவது தேசிய மாநாடு அண்மைக் காலத்தில் நடைபெற்ற மாபெரும் அரசியல் நிகழ்ச்சியாகும்.
ஒன்பதாவது மாநாடு சீன கட்சியின் சரித்திரத்தில் மிகவும் ஆழமான செல்வாக்கை ஏற்படுத்தும் என தோழர் மாஒசேதுங் கின் நெருங்கிய போராட்ட வீரர், தோழர் லின் பியெள மாநாட்டில் தமது அறிக்கையை சமர்ப்பிக்கும்போது குறிப்பிட் டார். இச்சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாநாட்டின் புரட்சி கர செல்வாக்கு சீனத்தின் எல்லைகளைக் கடந்து பரவும் என்பது திண்ணம். தோழர் லின் பியெளவினல் சமர்ப்பிக்கப்பட்டு மாநாட்டினல் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட இவ்வறிக்கை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததோடு புரட்சிகர சாஸனமுமா கும். மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சார புரட்சி இவ்வறிக் கையில் ஆராயப்பட்டுள்ளது. மகத்தான பாட்டாளி வர்க்க கலாச்சார புரட்சிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங் களும், அதற்கு தோழர் மாஒசேதுங் அளித்த மேதாவிலாசமான வழிகாட்டலும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனத்தின் உள்ளும், வெளியேயுமுள்ள சகல புரட்சியாளர்களுக்கும் சரி யான மார்க்கத்தை அது காட்டுகின்றது. அது, சகல புரட்சி யாளர்களாலும் பல தடவை படித்து பூரணம்ாக கிரகித்துக் கொள்ளவேண்டிய முக்கியமான சாஸனமாகும்.
117

Page 70
ஏகாதிபத்திய வாதிகளும், பூர்ஜ"வாக்களும், நவீன திரிபு வாதிகளும், சகலவிதமான பிற்போக்குவாதிகளும் சீனத்தை வசைபாடுவது ஆச்சரியமானதல்ல. தமது சக திரிபுவாதிகளு டன் ஏற்கனவே ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டையும் மீறி, ருமேனியத் திரிபுவாதிகளின் வேண்டுகோளையும் உதாசீனம் செய்து சோவியத் திரிபுவாதக் கும்பலின் எஜமானனன “ ‘பிரஷ் னேவ்" தற்போது மாஸ்கோவில் நடைபெற்றுக் கொண்டிருக் கும் துரோகிகளின் மாநாட்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் அதன் மாபெரும் தலைவர் தோழர் மாஓசேதுங் மீதும் கடுமையான தாக்குதலைத் தொடுத்தது ஏதோ ஆச்சரியமல்ல.
மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சார புரட்சியினுல் சீன வின் ஐக்கியமும், ஒற்றுமையும் குலைந்துவிடும், தோழர் மாஓசே துங்கின் தலைமை தூக்கி வீசப்பட்டுவிடும் சீன பெரும் வல்லரசு என்ற அந்தஸ்தை இழந்து விடும், சர்வதேச அரசிய லில் சீன இனிமேல் முக்கிய மான பாத்திரத்தை வகிக்க முடி யாது எனப் பல தீர்க்கதரிசனங்களை ‘இக்கனவான்கள்’ கூறி யிருந்தார்கள். ஆனல், நடந்ததென்னவோ வேறு விதமானது. மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சார புரட்சிக்குப் பின்னர், சீன வில் முன்னெப்பொழுதுமில்லாததை விட ஐக்கியமும், ஒற்றுமை யும் ஏற்பட்டுள்ளது. 70 கோடிக்கு மேற்பட்ட சீன மக்கள் இன்று மார்க்சிஸம்-லெனினிஸம்-மாஒசேதுங் சிந்தனைக்குப் பின்னல் உறுதியாக ஐக்கியப்பட்டுள்ளனர். தோழர் மாஒசேதுங்கின் தலைமை உறுதியாக்கப்பட்டுள்ளது. கைத்தொழில், விவசாயம், தொழில் நுட்பம் ஆகியவற்றில் மாபெரும் முன்னேற்றப் பாய்ச் சலை அடையும் தருவாயில் சீன இன்றுள்ளது. சீனுவின் குரல் சர்வதேச அரங்கில் கெளரவிக்கப்படுவது உறுதியாகி விட்டது. சீன இனிமேல் சர்வதேச அரசியலில் தீர்க்கமான பாத்திரத்தை வகிப்பது சந்தேகமற்ற விஷயமாகும்.
எனவே, ஏகாதிபத்தியவாதிகளும், நவீன திரிபுவாதிகளும், சகலவிதமான பிற்போக்குவாதிகளும் சீனவைத் திட்டித் தீர்ப் பது ஆச்சரியமானதல்ல. அவர்களின் கால்கள் ஆட்டங்கண்டு விட்டதுதான் இதற்குக் காரணம். r
தோழர் லின் பியெளவின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கை எமது வாரப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாகப் பிர சுரிக்கப்படுவதினுலும், அது சகல மொழிகளிலும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளதினுலும் அவ்வறிக்கையிலிருந்து அதிகமாக எடுத்துக் கூற விரும்பவில்லை. ஆனல், உலகெங்குமுள்ள புரட்சியா
18

ளர்களுக்குத் தேவையான அவ்வறிக்கையிலுள்ள சில முக்கியமான அம்சங்களை எமது வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சார புரட்சி யின் தயாரிப்பு, அதன் போக்கு, அதன் கொள்கைகள் பற்றி தோழர் லின் பியெள தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப் பிட்டுள்ளார். சீனவில் புரட்சி இறுதி வெற்றியடைவதற்குத் தேவையான நிபந்தனைகளையும் அவர் அவ்வறிக்கையில் குறிப் பிட்டுள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டி வளர்த்து அதனை ஸ்திரப்படுத்துதல் பற்றியும் தோழர் லின் பியெள குறிப் பிட்டுள்ளார். வெளிநாடுகளுடன் சீனவின் உறவுகள் பற்றியும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்கட்சி முரண்பாடுகளின் இயங்கு-இயல்பற்றி தோழர் மாஓசேதுங் போதித்துள்ளதை தோழர் லின் பியெள சுட்டிக் காட்டியுள்ளார். கட்சிக்குள்ளே இரு மார்க்கங்களுக்கிடையி லுள்ள போராட்டம், எதிர்ப்பு ஆகியன வர்க்கங்களுக்கிடையி லுள்ள முரண்பாடுகளினதும், புதிய பழைய சமுதாயங்களுக் கிடையிலுள்ள முரண்பாடுகளினதும் பிரதிபலிப்பேயாகுமென அவர் குறிப்பிடுகின்ருர், கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லாவிட்டால், அவற்றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்கள் இல்லாவிட்டால், கட்சி அழுக்கை வெளி யேற்றி தூய்மையானதை எடுத்துக்கொள்ளாவிட்டால் கட்சியின் வாழ்வு நின்றுவிடும்.
தலைவர் மாஒ அவர்களின் மார்க்ஸிஸம்-லெனினிஸ மார்க் கத்திற்கும் கட்சியிலிருந்த வலதுசாரி, ‘இடதுசாரி" சந்தர்ப்ப வாத மார்க்கத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திரம் என தோழர் லின் பியெள சுட்டிக் காட்டியுள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் மாஒ அவர்கள் தலைமையின் கீழ் சென் துர-சீயின் வலதுசாரி சந்தர்ப்ப வாத மார்க்கத்தையும், சூசி யூ-பே, லிவிசான் ஆகியோரின் "இடதுசாரி சந்தர்ப்பவாத மார்க்கத்தையும், வாங் மிங்கின் முந்திய ‘இடதுசாரி பிந்திய வலதுசாரி சந்தர்ப்பவாத மார்க் கத்தையும், சாங் குவோ-டாஒவின் செஞ்சேனையைப் பிளவுபடுத் தும் மார்க்கத்தையும், பென்தே-ஹாவே, காஒ-காங், ஜாஒ சூ-சி முதலியோரைக் கொண்ட, வலதுசாரி சந்தர்ப்பவாத கட்சி விரோத கும்பலையும் தோற்கடித்ததோடு, நீண்டகாலப் போராட் டத்தின் பின்னர் லியூ ஷெள-சியின் எதிர்ப்புரட்சி திரிபுவரத மார்க்கத்தையும் நிர்மூலமாக்கியுள்ளது. இரண்டு மார்க்கங் களுக்கிடையிலான போராட்டத்தில், விசேஷமாக கட்சிக்கு மிக
119

Page 71
வும் தீங்கு விளைவித்த சென் தூ-சீ, வாங் மிங், லியூ ஷெள-சி ஆகிய மூன்று துரோகக் கும்பல்களைத் தோற்கடிப்பதற்கு நடாத் தப்பட்ட போராட்டங்களின் மூலமே கட்சி தன்னை ஸ்திரப் படுத்திக் கொண்டது; வளர்ச்சியடைந்தது; பலமடைந்தது.
மாபெரும் பாட்டாளி வர்க்க கலாச்சார புரட்சியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைத் தோழர் லின் பியெள பின்வருமாறு சுருக்கித் தந்துள்ளார்: பாட்டாளி வர்க்க கலாச் சார புரட்சியின் கீழ், நாம் கட்சி அங்கத்தவர்களுக்கு வர்க்கங் கள், வர்க்கப் போர்ாட்டம், இரு மார்க்கங்களுக்கிடையிலுள்ள போராட்டம், புரட்சியைத் தொடர்ந்து நடத்தல் ஆகியவை பற்றிப் போதிக்கவேண்டும். கட்சிக்கு உள்ளளேயும், வெளியேயு முள்ள திரிபுவாதத்தை எதிர்த்து நாம் போரிடவேண்டும். படு துரோகிகள், எதிரியின் கையாட்கள், சுரண்டும் வர்க்கங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய சக்திகள் ஆகியோ ரைக் கட்சியிலிருந்து துரத்தியடித்துவிட்டு பெரும் புயலில் புடம் போடப்பட்ட பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான முன்னேற்ற மடைந்த சக்திகளைக் கட்சிக்குள் எடுக்கவேண்டும். கட்சி ஸ்தா பனங்களின் சகல மட்டங்களிலுமுள்ள தலைமை உண்மையான மார்க்ஸிஸ்டுகளின் கையிலிருப்பதை உறுதிப்படுத்த நாம் முயல வேண்டும். கட்சி அங்கத்தவர்கள் தத்துவத்தை நடைமுறை யுடன் உண்மையில் ஒன்றுபடுத்துவதை, வ்ெகுஜனங்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதை, விமர்சனம், சுய விமர்சனம் செய்வதில் தைரியமுடையவர்களாயிருப்பதை நாம் நிச்சயப்படுத்தல் வேண்டும். கட்சி அங்கத்தவர்கள் அடக்க முடையவ்ர்கள்ாய், சிக்கனமானவர்களாய், அகங்காரம், அவ சரப்புத்தி அற்றவர்களாய் இருப்பதையும், கடுமையான போராட் டம், எளிமையான வாழ்வு உடையவர்களாய் இருப்பதையும் நாம் நிச்சயப்படுத்தல் வேண்டும். இதன் மூலமே கட்சி பாட் டாளி வர்க்கத்தையும், புரட்சிகர வெகுஜனங்களையும் சோஷ லிஸப் புரட்சியின் இறுதிவரைக்கும் இட்டுச் செல்ல முடியும்."
1949, மார்ச் மாதத்திலேயே சீன புரட்சி புதிய ஜனநாய கப் புரட்சியிலிருந்து சோஷலிஸப் புரட்சிக்கு மாற்றமடையும் தறுவாயில், பாட்டாளி வர்க்கம் நாடு பூராவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், 'தொழிலாளி வர்க்கத்திற்கும், பூர்ஜ" வாக்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடே" பிரதான உள் முரண்பாடாக இருக்குமென தலைவர் மாஒ அவர்கள் தெளிவா கக் குறிப்பிட்டாரென தோழர் லின் பியெள கட்டிக் காட்டு கின்றர்.
120

1956ம் ஆண்டளவில், விவசாயம், கைப்பணித் தொழில், முதலாளித்துவ கைத்தொழில், வர்த்தகம் ஆகியவற்றின் உற் பத்தி சாதன உரிமையின் சோஷலிஸ் மாற்றம் பூரணமாக்கப் பட்டது. அது, சோஷலிஸப் புரட்சி தொடர்ந்து முன்னேறிச் செல்லுமா என்ற பிரச்சினைக்கு முகம் கொடுத்த இக்கட்டான காலகட்டமாகும். சர்வதேச கம்யூனிஸ் இயக்கத்தில் நவீன திரிபுவாதம் வளர்ந்துவந்த அக்கால கட்டத்தில், தலைவர் மாஓ அவர்கள் ‘மக்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி" என்ற தனது மகத்தான படைப்பில் " "சோஷலிஸமா, அல்லது முதலாளித்துவமா எதுவெல்லும் என்ற பிரச்சினை உண்மையில் இன்னும் தீர்க்கப்படவில்லை எனக் கூறி ஞர். **பாட்டாளி வர்க்கத்திற்கும், பூர்ஜுவா வர்க்கத்திற்கு மிடையேயுள்ள வர்க்கப் போராட்டம்; தத்துவார்த்ததுறை யில் பாட்டாளி வர்க்கத்திற்கும், பூர்ஜுவாக்களுக்குமிடையே யுள்ள வர்க்கப் போராட்டம் நீண்ட நாளை யதாய், வளைவு சுழி வானதாய் இருப்பதோடு, சில கட்டத்தில் மிகவும் கூர்மையு மடையும்.”*
உற்பத்தி சாதன உரிமையின் சோஷலிஸ மாற்றம் ஏற்பட்ட பின்னரும் வர்க்கங்களும், வர்க்கப் போராட்டமும் தொடர்ந்து இருக்கின்றது என்பதும், பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தொடர்ந்து நடத்தவேண்டுமென்பதும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தத்துவத்திலும் நடைமுறையிலும் முதன்முதலா கத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டதெனத் தோழர் லின் பியெள கூறுகின்ருர் .
இந்த மார்க்கத்தை கழுத்தறுக்கும் துரோகி லியு ஷெள-சி எதிர்த்தான். சோஷலிஸமா அல்லது முதலாளித்துவமா எது வெல் லும் என்ற பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டு விட்டதென்ற கொள்கையை அவன் முன்வைத்தான். 'முதலாவது புரட்சிகர உள்நாட்டு யுத்தத்தின்போதே, லியூ ஷெள-சி கட்சியைக் காட் டிக் கொடுத்து எதிரிக்குச் சரண் அடைந்து, ஒழிந்திருந்த எதிரி யாகவும், கருங்காலியாகவும் மாறினன் என்பது தற்போது நடத்தப்பட்ட ஆராய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவன் ஏகாதி பத்தியவாதிகள், நவீன திரிபுவாதிகள், கோமின்தாங் பிற்போக்கு வாதிகள் ஆகியோரின் குற்றம் நிறைந்த அடிவருடி, முதலாளித் துவப் பாதையை மேற்கொள்ளும் அதிகாரத்திலிருந்த நபர்களின் முக்கியமான பிரதிநிதி. அவனுக்கு ஒரு அரசியல் மார்க்கம் இருந்தது. அதன் துணைகொண்டு சீனுவில் முதலாளித்துவத்தை மீட்பதற்கும், அதனை ஏகாதிபத்தியத்தினதும், திரிபுவாதத்தின
121

Page 72
தும் காலனியாக மாற்றுவதற்கும் வீண்முயற்சி எடுத்தான். அவனது எதிர்ப்புரட்சி அரசியல் மார்க்கத்திற்கு சேவை செய்ய ஸ்தாபனரீதியான மார்க்கமும் அவனிடம் இருந்தது. பல வரு டங்களாக விட்டோடிச் சென்றேர்களையும், வேஷதாரிகளையும் சேர்த்து, லியூ ஷெள-சி துரோகிகளையும், எதிரிகளையும், எதிரி யின் கையாட்களையும், முதலாளித்துவப் பாதையை மேற்கொள் ளும் அதிகாரத்திலிருந்தோர்களையும் கொண்ட ஒரு கும்பலைத் திரட்டினன். தமது எதிர்ப்புரட்சி அரசியல் வரலாற்றை அவர் கள் மூடிமறைத்தனர்; ஒருவரையொருவர் பாதுகாத்தனர்; தீங் கிழைப்பதற்கு ஒத்துழைத்தனர்; முக்கிய கட்சி, அரசாங்க பதவி களை அபகரித்து பல மத்திய உள்ளூர் பகுதிகளின் தலைமையைக் கட்டுப்படுத்தினர். இவற்றின் மூலம் தலைவர் மாஒ அவர்களைத் தலைவராகக் கொண்ட பாட்டாளி வர்க்கத் தலைமை ஸ்தாபனத் திற்கு எதிராக மறைவில், இரகசியமாக பூர்ஷாவா தலைமை ஸ்தாபனத்தைக் கட்டி வளர்த்தனர். ஏகாதிபத்தியவாதிகள், நவீன திரிபுவாதிகள், கோமின்தாங் பிற்போக்குவாதிகள் ஆகி யோருடன் ஒத்துழைத்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் சோவியத் திரிபுவாதிகள், பல்வேறு நாட்டு பிற்போக்குவாதி கள் செய்ய முடியாத சீர்குலைவு வேலையைச் செய்தனர்.”*
லியூ ஷெள-சியும் அவனது திருட்டுக் கும்பலும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டு, அம்பலப்படுத்தப்பட்டு முக்கிய பதவிகளி லிருந்து விலக்கப்பட்டு விட்டனர். உலகெங்குமுள்ள புரட்சி யாளர்களுக்கு இதுவொரு மாபெரும் வெற்றியாகும், ஏகாதி பத்தியவாதிகள், திரிபுவாதிகள், பிற்போக்குவாதிகளுக்குப் பலத்த அடியாகும்.
இத்திருட்டுக் கும்பலை அம்பலப்படுத்துவதற்கு தலைவர் மாஒ அவர்கள் பாவித்த தந்திரோபாயங்களைப் பற்றி தோழர் லின் பியெள கூறுகின்ருர்:-**போதிப்பதன் மூலம் பலருக்கு உதவி யளியுங்கள்; தாக்குதலின் இனக்குகளைக் குறையுங்கள்’’, ‘’மனித வர்க்கத்தை விடுதலை செய்வதன் மூலமே பாட்டாளி வர்க்கம் தனது சொந்த விடுதலையை ஏற்படுத்த முடியும் என்ற மார்க் ஸின் போதனையை செயல்படுத்துங்கள்’’ என மாஒ அவர்கள் போதித்துள்ளார். எதிரிக்கு எதிரான போராட்டத்தின்போது, ** முரண்பாடுகளைப் பாவித்து பலரை வென்றெடுக்கவேண்டும், சிலரை எதிர்க்கவேண்டும், நமது எதிரிகளை ஒவ்வொருவராக நசுக்க வேண் டும்" என அவர் கூறியுள்ளார். ‘பாட்டாளி வர்க்கம் தான் மனித வர்க்கத்தின் சரித்திரத்திலேயே மாபெரும் வர்க்கம். சித் தாந்த ரீதியிலும் சரி, அரசியல் ரீதியிலும் சரி, பலத்திலும் சரி
122

அதுவே மிகவும் பலம்மிக்க புரட்சிகர வர்க்கமாகும். விரல்விட் டெண்ணக்கூடிய எதிரிகளை ஆகக்கூடியளவு தனிமைப்படுத்தவும். தாக்கவும் அதனைச் சுற்றி பெருந்தொகையான மக்களை ஐக்கி பப்படுத்தவும் வேண்டும்" என மேலும் கூறியுள்ளார்.
கட்சியைக் கட்டி வளர்த்து ஸ்திரப்படுத்துவது பற்றி ஆராய்கையில் தோழர் லின் பியெள, தோழர் மாஒ அவர்களின் பின்வரும் மேற்கோளை எடுத்துக் காட்டுகின்ருர் - 'மனிதனுச்கு இரத்தக் குழாய்களும், நரம்புகளும் உள்ளன. அவற்றினூடாக இருதயம் இரத்த ஒட்டத்தை ஏற்படுத்துகின்றது. சுவாசப் பைகளினல் அவன் சுவாசிக்கின்றன். கரியமில வாயுவை வெளி யேற்றிப் பிராணவாயுவை அவன் உட்கொள்கின்றன். அதா. வது, அவன் அழுக்கானதை வெளியேற்றி சுத்தமானதை உட் கொள்கின்ருன். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியும் அதுபோலவே அழுக்கை அப்புறப்படுத்தி, சுத்தமானதை உட்கொள்ள வேண் டும். அப்போதுதான் அது உயிர்த்துடிப்பு நிறைந்ததாய் இருக் கும். கழிவுப் பதார்த்தங்களை அகற்றி, புதிய இரத்தத்தை உட் கொள்ளாவிட்டால் கட்சிக்கு உயிர்த்துடிப்பு இருக்காது. *
புரட்சியின் இறுதி வெற்றி பற்றிய பிரச்சினையைக் குறிப் பிடுகையில் தோழர் லின் பியெள, தோழர் மாஒ அவர்கள் கூறிய தைக் சுட்டிக் காட்டுகின்ருர் . 'நாம் பல வெற்றிகளை ஈட்டி யுள்ளோம். ஆனல், தோற்கடிக்கப்பட்ட வர்க்கம் தொடர்ந்து இருக்கின்றது. எனவே, இறுதி வெற்றி பற்றி நாம் பேச முடி யாது. இன்னும் பல தசாப்தங்களுக்குக் கூட அதுபற்றிப் பேச முடியாது. நமது விழிப்பை நாம் தளர்த்தக்கூடாது. லெனி னிஸக் கருத்தின்படி, சோஷலிஸ் நாட்டின் இறுதிவெற்றி உள் நாட்டு பாட்டாளி வர்க்கத்தினதும், பரந்துபட்ட வெகு ஜனங் களினதும் முயற்சியில் தங்கி நிற்பதோடல்லாமல் உலகப் புரட்சி யின் வெற்றியிலும், முழு பூமண்டலத்திலிருந்தும் மனிதனை மணி தன் சுரண்டும் முறையை அழித்தொழிப்பதிலும் தங்கி நிற்கின் றது. இதன் மேலேயே சகல மனித வர்க்கமும் விடுதலை செய் ulut. (upt9.tujuh.
யுத்தம் பற்றிய பிரச்சினையைக் குறிப்பிடுகையில் தோழர் லின் பியெள மீண்டும் மாஒ அவர்களைச் சுட்டிக் காட்டுகிருர். **உலக யுத்தம் பற்றிய பிரச்சினையில் இரண்டே இரண்டு சாத் தியக் கூறுகள்தான் உண்டு. ஒன்று யுத்தம் புரட்சிக்கு வழி கோலும். மற்றது: புரட்சி யுத்தத்தைத் தடுக்கும். இன்று உல கில் நான்கு பிரதான முரண்பாடுகள் இருக்கின்றன. அவை, ஒருபுறத்தில் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் மறுபுறத்தில் ஏகாதி
23

Page 73
பத்தியத்திற்கும், சமூக ஏகாதிபத்தியத்திற்குமிடையேயுள்ள
முரண்பாடுகள்: முதலாளித்துவ நாடுகளிலும், திரிபுவாத நாடு
களிலுமுள்ள பூர்ஜுவாக்களுக்கும், பாட்டாளி வர்க்கத்திற்கு
மிடையேயுள்ள முரண்பாடு; ஏகாதிபத்திய நாடுகளுக்கும், சமூக
ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையேயுள்ள முரண்பாடும், ஏகாதி
பத்திய நாடுகளுக்குமிடையேயுள்ள முரண்பாடுகள்; சோஷலிஸ்
நாடுகளுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும், சமூக ஏகாதிபத்தியத் திற்குமிடையேயுள்ள முரண்பாடு. இம்முரண்பாடுகள் நிலவு
வதும் அவை வளர்ச்சியடைவதும் புரட்சிக்கு வழிகோலுகின் றன.
நவீன திரிபுவாதத்தையும், குறிப்பாக சோவியத் திரிபுவா தத்தையும்; செக்கோஸ்லவாக்கியா மீது சோவியத் ஆக்கிரமிப் பும், சீனவிற்கு எதிராக அதன் எல்லைப் பிரதேசத்தில் சோவி யத் ஆக்கிரமிப்பும் வெளிப்படுத்திய அதன் சமூக ஏகாதிபத் திய மாற்றம் ஆகியவை இவ்வறிக்கையில் அம்பலப்படுத்தப்பட் டுள்ளன.
**யுத்தம் புரட்சிக்கு வழிகோலினுலும் சரி, புரட்சி யுத்தத் தைத் தடுத்தாலும் சரி அமெரிக்க ஏகாதிபத்தியமும், சோவி யத் திரிபுவாதமும் நெடுநாளைக்கு நிலைக்காது. சகல நாடுகளிலு முள்ள தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களும், நாடுகளும், பாட்டாளி வர்க்கமும் ஒன்றுபடுங்கள்! அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் திரிபுவா தம் அவற்றின் வால்பிடிகள் அனைத்தையும் குழிவெட்டிப் புதை யுங்கள்!” என்ற கோஷங்களுடன் அறிக்கை முடிவுறுகின்றது.
24


Page 74


Page 75
தொழிலாளி 121, யூனியன் கொழும்

அச்சகம், T பிளேஸ், }ւյ-2.
is 50 J., so