கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனித உரிமைகள், அரசியல் மோதலும் இணக்கப்பாடும்

Page 1
நீலன் தி ஞாபகார்த்த
இயன்
கிழக்கு திமோருக்கான ஐக்கிய முன்னாள் விசேட பிரதிநிதி, முன்னாள் செயலாளர் நாயகம்
இனத்துவ ஆய்வுகளுக்
 

ருச்செல்வம்
5 சொற்பொழிவு
மார்ட்டின்
நாடுகள் செயலாளர் நாயகத்தின்
சர்வதேச மன்னிப்புச் சபையின்
(G) (S.
QN الطح2
க்கான சர்வதேச நிலையம்

Page 2

H
நீலன் திருச்செல்வம்
3 T 5-TGI If - - - ) யூலை լ է) :) էյ

Page 3

நீலன் திருச்செல்வத்தின் முதலாவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்ட ஞாபகார்த்தச் சொற்பொழிவில், கிழக்கு திமோருக்கான ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் முன்னாள் விசேட பிரதிநிதியும், சர்வதேச மன்னிப்புச் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமுமான இயன் மார்ட்டின் ஆற்றிய உரை.

Page 4

மனித உரிமைகள், அரசியல் மோதலும் இணக்கப்பாடும்
நலன் திருச்செல்வத்தின் நினைவாக ஆறு மாதங்களுக்கு முன்பு கொழும்பில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றிய மனித உரிமை வாதிகள், சட்ட அறிஞர்கள் ஆகியோரில் நானும் ஒருவனாகக் கலந்து கொண்டதில் பெருமை அடைகின்றேன். எல்லாருக்கும் துயர் மிக்க நிகழ்வாக அமைந்து விட்ட அந்த நாள் பற்றி, நீலனின் ஞாபகார்த்தமாகக் கொழும்பில் விரிவுரையொன்றை ஆற்றுவதற்கு என்னை அழைத்தமையை எனக்களித்த ஒரு பெருங் கெளரவமாக நான் கருதுகின்றேன். கடந்த வருடம் இச்சம்பவம் நடைபெற்ற தினமன்று நான் கிழக்கு திமோரில் ஐக்கிய நாடுகள் சார்பில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். வன்முறைகள், அடக்குமுறைகளுக்கு மத்தியில் கிழக்கு திமோர் மக்களுக்கு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சுய நிர்ணயத்துக் கான அவர்களது மனித உரிமையைச் செயற்படுத்துவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்மக்களுக்கு உறுதிப்படுத்தும் வகையில், தேர்தலை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சார்பில் கிழக்கு திமோரில் கடந்த வருடம் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒரு மாதத்தின் பின்னர் ஓர் அமைதியான நாளன்று இந்தத் தேர்தல் நடைபெறுமென நாம் எதிர்பார்த்தோம். ஆனால் தேர்தலின் பின்னர் அழிவுகளே நிகழ்ந்தன. நூற்றுக்கணக்கான கிழக்கு திமோர் மக்கள் கொல்லப்பட்டனர். மக்கள் அனைவரும் இடம் பெயர்ந்தனர். கட்டிடங்கள் தரைமட்டமாகின. உண்மையில் இதற்கு முன் இத்தகையதொரு அழிவு நிகழவே இல்லை என நான் நினைக்கிறேன்.
பல லாயிரக் கணக்கான கிழக்கு திமோர் மக்கள் இந்தோனேசியாவிலும், மேற்கு திமோர் எல்லையிலும் குவிந்து இருக்கும் சந்தர்ப் பத்தில் இந்தக் குற்றங்களினால்

Page 5
பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு நீதி வழங்குவதென்பதும், அதே வேளை அவர்களை அமைதியான, சுதந்திர கிழக்கு திமோரில் இக் குற்றங்களைப் புரிந்தவர்களுடன் எவ்வாறு ஒன்றிணைப்பது என்பதுமே இன்று அந்நாட்டினை எதிர் நோக்கும் பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
பல வேறு வழிகளில் இநீ தோனேசிய இராணுவ அதிகாரிகளினால் உருவாக்கப்பட்ட கிழக்கு திமோரியன் இராணுவத்திலும் பார்க்க மிக அதிகமாகக் குற்றங்களைப் புரிவதற்குக் காரணமாக இருந்த இந்தோனேசிய இராணுவ அதிகாரிகளை, நீதியின் முன் நிறுத்துவதே இந்தோனேசியா இன்று எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினையாக உள்ளது. இந்தோனேசிய மாகாணங்களில் பல தசாப்தங்களாக, அதன் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதிவழங்கவும், உண்மையை நிலைநிறுத்தவும் வேண்டுமென்பது பாரிய பிரச்சினையின் ஒரு முக்கிய அம்சமாகும்.
ஐக்கிய நாடுகள் பணியில் நான் சேர்ந்து கொள்வதற்கு முன்பு சர்வதேச மன்னிப்புச்சபையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது நீலனை முதன்முதலில் சந்தித்தேன். மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றங்களைப் புரிவோரை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பதை, இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான அத்தியாவசியமானதொரு வழியாகவும், ஒரு தத்துவமாகவும் அன்றும் சரி, இன்றும் சரி சர்வதேச மன்னிப்புச் சபை உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது. இத்தத்துவம் சர்வதேசச் சட்டத்தில் உறுதியாகப் பேணப்பட்டு வருகின்றது. இத்தகையதொரு முன்னேற்றம் ஏற்படுவதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை மாத்திரமன்றி, அரசு சார்பற்ற மனித உரிமை இயக்கங்களும் பங்களிப்புச் செய்துள்ளன. மனித உரிமை மீறல்களைப் புரிவோர் என்றாவது ஒரு நாள் நீதியின் முன் நிறுத்தப்படுவதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது இங்கு குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதொரு விடயமாகும்.
1990 வரையும் சிலி நாட்டினி அப்போதைய சனாதிபதியாகவிருந்த பினோசே (President Pinochet) அதிகாரத்துக்கு
4.

வந்தபின் அவரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை, கொலைகள், காணாமல் போதல் ஆகியவற்றுக்கு நீதி வேண்டி அனுப்பப்படும் சர்வதேச மன்னிப்புச் சபையின் கடிதங்களில் நானே கையொப்பம் வைத்துள்ளேன். ஆனால் ஒரு தசாப்தத்தின் பின்னர், எனது சொந்த நாட்டில் அவர் கைது செய்யப்படுவார் என்பதை அப்பொழுது நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இன்று சிலி உயர் நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்குவது பற்றிச் சிந்தித்து வருகின்றது.
முன்னைய யூகோஸ்லாவியா, ருவாண்டா தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசேட விசாரணை மன்றங்களில் ஆரம்பிக்கப்பட்ட பணிகளைப் பொதுமைப்படுத்துவதற்கு ஒரு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றினை உருவாக்கும் இறுதிக் கட்ட நிலையில் நாம் இருக்கின்றோம். கிழக்கு திமோரில் வன்முறைகளைத் தடுப்பதற்கு ஒரு சர்வதேசப் படையை அனுமதிப்பதற்கு இந்தோனேசியா அரசாங்கம் கடந்த செப்ரெம்பரில் தனது இணக்கத்தினைத் தெரிவித்தது. ஆரம்பத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பைப் காட்டிய இந்தோனேசியாவை இணங்க வைக்கப் பல நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டன. வன்முறைகள் தொடருமாக இருந்தால் மனிதத்தன்மைக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களுக்கான பொறுப்புக்களிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் மற்றும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரினால் விடுக்கப்பட்ட அறிவிப்புக்களே இணக்கத்துக்குக் கொண்டுவருவதற்கான காரணிகளில் ஒன்றாக இருந்தது. இவை பாரிய முன்னேற்றங்களாகும். அரசியல் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையின் நடைமுறை அம்சங்களைப் பொறுத்தவரையில் மனித உரிமைகளைப் பேணி, நீதியை நிலை நாட்டுவதென்பது பாரதூரமான பிரச்சினைகளைக் கொண்டிருந்தது. மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்வதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பங்களிப்புச் செய்ய முடியும். அரசியல் மோதல்களினால் ஒரு பக்கத்தில் அல்லது இரு பக்கங்களிலும் இருந்து மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகங்களினால் மோதல்கள் மேலும் ஆழமாவதுடன் கசப்புணர்வையும் அவை தூண்டி விடுகின்றன என்பது இலங்கையர்களாகிய உங்களுக்கு தெளிவாகத்
5

Page 6
தெரியும். மனித உரிமை மீறல்கள் யாவும் முற்றாகவே நோக்கமற்றது எனக் கூற முடியாது. அரசியல் அதிகாரத்துக்கான போராட்டம் அல்லது பொருளாதார வளங்களின் மீதான கட்டுப்பாடு தொடர்பான போராட்டத்தின் குறியீடாகவே இந்த மனித உரிமை மீறல்கள் அமைகின்றன.
மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பிரசாரங்கள் மூலம் அவற்றினைக் கட்டுப்படுத்த முடியும். எனினும் இப்பிரச்சினைகளை முற்றாகத் தீர்த்து வைக்க வேண்டுமாயின் அடிப்படையான மோதல்களுக்குத் தீர்வு காண்பதே ஒரேயொரு வழியாகும். இம் மோதல்களில் மனித உரிமைவாதிகளின் நிலைப்பாட்டினை மேற்கொள்ளும் நாம் அவற்றினைத் தீர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்பவர்களுக்கு உரிய கெளரவத்தை வழங்க வேண்டும். 1993 இல் "மனித உரிமைகள்: கொள்கை மற்றும் ஆய்வுக்கான ஒரு வீயன்னா நிகழ்ச்சி நிரல்" (Human Rights a Post - Vienna Agenda for Policy and Research) 6T6,750Lib தலைப்பில் வீயன்னாவில் நடந்த மனித உரிமைகள் பற்றிய சர்வதேச மகாநாட்டினையடுத்து 1994 இல் கலாநிதி நீலன் திருச்செல்வத்தினால் எழுதப்பெற்ற கட்டுரையில் இவ்விடயம் பிரதிபலிக்கப்பட்டதை நான் அவதானித்தேன். "மிக அண்மைக் காலத்தில் மனித உரிமை மீறல்களை ஊக்குவித்தவர்களின் வகைகூறும் தன்மை" பற்றியும், மேற்கொண்டு ஆய்வு செய்வதற்கான ஒரு விடயமாக அவர் அதனை இனம் கண்டார். இப்பிரச்சினை பற்றி அவர் எழுதியதாவது:
"இப் பிரச்சினை ஒழுக்கம், சட்டம் என்பவற்றின் பாற்பட்டது. உண்மை, நீதி என்பவற்றுக்கான தேவை உள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புக்களைத் திருத்தியமைக்கும் தேவை, இத்தகைய அட்டுழியங்கள் மீண்டும் நடைபெறாதவாறு தவிர்க்கும் தேவை என்பவற்றுடன் இப்பிரச்சினை தொடர்புடையது. அதே வேளை இப்பிரச்சினையில் ஓர் அரசியல் அம்சமும், ஒரு நடைமுறை அம்சமும் இருக்கின்றது. எமது நாட்டினை இணைந்து தொழிற்படுகின்ற ஓர் அலகாக

உருவாக்கும் தேவையொன்று உள்ளது. வெவ்வேறு இயல்புகளைக் கொண்ட பல்வேறு நாடுகள், கடந்த காலத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல் பிரச்சினைகளைக் கையாணி டதல் LU 6M) அனுபவங்களைப் பெற்றிருக்கின்றன. இவ் அனுபவங்களைத் தொகுத்தெடுத்துப் பிறரும் அறிந்து கொள்வதற்கு வகை செய்தல் வேண்டும்."
எனவே, கடந்த வருடங்களில் நான் பணிபுரிந்த நாடுகளில் காணப்பட்ட மூன்று பிரச்சினைகளை இங்கு விளக்க விரும்புகின்றேன்.
(1)
(2)
(3)
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் மோதல்களுக்கு தீர்வைக் காண்பதற்காக மனித உரிமைத் தத்துவங்களின் GuTDL Las sin (DILó (accountability) g56i 60 LD 6ou விட்டுக்கொடுப்பது எந்தளவுக்கு தேவையானது, நியாயமானது.
மோதல்கள் நிறுத்தப்பட்டதன் பின் இணக்கப்பாட்டைக் கொண்டு வருவதற்கு இந்தத் தத்துவங்களை விட்டுக் கொடுத்தல் எந்தளவுக்கு அவசியமானது? நீதியை நாடிச் செல்வதென்பது அமைதிக்கு அச்சுறுத்தலா அல்லது அதனைப் பேணுவதற்கு உதவுமா?
மோதல்களின் பின்னர் மனித உரிமைச் சமவாய்ப்புத் தத்துவங்கள் தமக்குள் முரண்படும் போது செய்ய வேண்டியது என்ன?
மனித உரிமைகளுக்கான கெளரவம், சமரசப் பேச்சுவார்த்தை, தொடர்ந்து நீடிக்கக் கூடிய சமாதானம் ஆகியவற்றுக்கிடையிலான உடன்பாடான தொடர்பானது இரு விடயங்களில் மிகத் தெளிவானது. அத்துடன், அதனால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படுவதற்கில்லை. மோதல களில் ஈடுபட்டிருக்கும் சகல தரப் பினரும் மனிதாபிமானத்துக்கும், மனித உரிமைத் தத்துவங்களுக்கும் மதிப்பளிக்கும் கடப்பாட்டினைக் கொண்டிருப்பதன் மூலமே
7

Page 7
மோதலிகளுக்கு முடிவுகட்டக் கூடிய, வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்குரிய சூழலை வார்த்துக் கொள்ள முடியும். இது ஒரு கோட்பாட்டு ரீதியான விடயமன்று. எனினும் நடைமுறையில் சாத்தியமானது எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைத் தத்துவங்கள், மனிதாபிமானம் ஆகியவற்றுக்கு முழுஅளவிலான கெளரவத்தினை புரட்சிப் படைகளும், அரசாங்கமும் வழங்க வேண்டும் என்ற கடப்பாட்டின் அடிப்படையிலேயே நீண்டதும், கசப்பானதுமான சிவில் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முதலாவது பாரிய முயற்சிகள் எல்சல்வடோரிலும், குவாட்டமாலாவிலும் மேற்கொள்ளப்பட்டது. இவை வெறும் பேச்சளவிலான கடப்பாடுகள் அல்ல. ஆனால் விரிவான நடவடிக் கைகளை மேற் கொள்வதற்கான பரஸ் பர ஒத்துழைப்பேயாகும். அத்துடன் இது, நடைமுறையில் இந்த வாக்குறுதிகள் செயற்படுத்தப்படுவதை சர்வதேச ரீதியில் மேற்பார்வை செய்வதற்கான ஓர் அழைப்பாகும். சமூகமளித்திருந்த மனித உரிமை அவதானிகள், வாக்குறுதிகள் தொடர்ந்து மதிப்பளிக்கப்படுவதற்கும், குடிமக்களின் துன்பங்கள் குறைவடைவதற்கும் உதவினர். அதேவேளையில் இருதரப்பினருக்குமிடையில் நம்பிக்கையை வளர்க்கவும் உதவினர்.
இந்த வாக்குறுதிகளைக் கோருவதில் உடன்பாடுகளில் காணப்பட்ட மனித உரிமை அம்சங்களினைச் செம்மைப்படுத்த உதவுவது, அவற்றினை அமுலாக்கம் செய்ய வலியுறுத்துவது ஆகியவற்றில் சிவில் சமூகத்தின் பங்கு மிக அவசியமானது. இத்தகைய சாதகமான சூழ்நிலைகளிலேயே பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைய வாய்ப்பிருந்தது. யுத்த நிறுத்தம் மற்றும் இறுதியான, முழுமையான சமாதான இணக்கப்பாடு நோக்கிச் செல்லுதல் ஆகிய இரு விடயங்களைப் பொறுத்தவரையில் சாதகமான சூழ்நிலைகளில் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது.
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் சகல மக்கட் பிரிவினரின் மனித உரிமைகளுக்கான கெளரவத்தினை வழங்குவதிலேயே நிலைநிற்கக் கூடிய சமாதானத்தை உருவாக்க முடியும். இது மிகத் தெளிவான இரண்டாவது அம்சமாகும். இதன்
8

காரணமாகவே ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால், விசேட பிரதிநிதிகளுக்கு அவர் வழங்கிய அறிவுரைகளில் மனித உரிமைகளுக்கான உத்தரவாதமும், அவற்றைப் பேணுவதற்குத் தேவையான நிறுவனரீதியான ஏற்பாடுகளும், அவை தொடர்ந்து நிலைப்பதற்கு அவசியமானவை என்பதுடன் சமாதான உடன்படிக்கைகளில் அவை தெளிவானதொரு பகுதியாகவும் இருக்க வேண்டும்.
மோதல்களுக்குப் பின்னர், சமாதானத்தைக் கட்டியெழுப்புதலில் உள்ள மிக முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று சட்டவாட்சிக்கு (rule of law) அத்தியாவசியமான நிறுவனங்களை உருவாக்குதல் அல்லது மீளமைத்தல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும். பக்கச்சார்பற்ற நீதித்துறை, உள்ளுர் மக்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அவர்களிடமிருந்து தெரிவு செய்யப்படும் பொலிஸ் படை, மனித உரிமைகள் தொடர்பான பயிற்சியளித்தல், இராணுவம் முகாமுக்குள் முடக்கப்பட்டிருக்கும் அதே வேளையில் பாதுகாப்பு ஒழுங்குகளை நிர்வகித்தல், மனித உரிமைகளைக் கெளரவிக்கும் வகையில் கெளரவமான முறையில் தடுத்து வைத்தல் வசதிகள் என்பன இவற்றுள் பிரதானமானவை. எனவே, சமாதானத்தை மேம்படுத்தல் , மனித உரிமைகளை மேமி படுத்தல ஆகியவற்றுக்கிடையிலான உடன்பாடான தொடர்பு மிகத் தெளிவானது. தனிப்பட்ட முறையில் நான் ஈடுபாடு கொண்டிருந்த சில சூழ்நிலைகளிலிருந்து இதற்கான விளக்கங்களை வழங்க (Մ)ւգեւյլb.
மோதல்களைத் தீர்ப்பதற்கு, சமாதானத் தீர்வுக்கான பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்கு மனித உரிமைத் தத்துவங்களின் வகைகூறல் எந்தளவுக்கு அவசியமானது, நியாயமானது எனப் பார்க்கும் பொழுது - இது ஹெயிட்டியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியின் மூலம் 1991இல் சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சனாதிபதி அரிஸ்ரைட்டைப் (President Aristide) ப்தவியிலிருந்து தூக்கியெறிந்த அந்த இராணுவப் புரட்சியை முறியடிப்பதற்கான சர்வதேச முயற்சிகளின் ஓர் அம்சமாக விளங்கியது. அரசியல் யாப்பொழுங்கினைப் பேணவும், சனாதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்தவும், இராணுவத் தலைவர்களை
9.

Page 8
இணங்கவைப்பதற்குப் பல்வேறு வழிகளில் அவர்களுக்கு ஆர்வமூட்டப்பட்டது. இதில் முதலாவது முயற்சி மிகவும் பலவீனமானது.
இதன்படி விதிக்கப்பட்ட பிராந்திய ரீதியான சில தடைகள் சனாதிபதி அரிஸ்ரைட்டுக்கு வாக்களித்த வறுமை நிலையிலுள்ள பெரும்பான்மை ஹெயிட்டி மக்களை மேலும் வறுமை நிலைக்குத் தள்ளியது. இராணுவத்தினரையும், அவர்களது ஆதரவாளர்களையும் இத்தடைகள் பெரிதும் பாதிக்கவில்லை. மறுபக்கத்தில் குற்றச் செயல்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுமென்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டிருந்தது. புரட்சியின் பின் ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களைக் கொலை செய்தமைக்கு மன்னிப்பு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிப்பதில் அரிஸ்ரைட் மிகவும் தயக்கம் காட்டியதுடன், ஹெயிட்டி நாட்டின் அரசியலமைப்பு ஏற்பாடுகளைச் சுட்டியும் காட்டினார். இந்த ஏற்பாடுகளின் படி சனாதிபதி அரசியல் தொடர்பான விடயங்களில் மட்டுமே மன்னிப்பு வழங்க அதிகாரம் உடையவர். புரட்சியிலிடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்க சனாதிபதி முன்வந்தாலும், மனிதத்தன்மைக்கு எதிராகச் செய்யப்பட்ட குற்றங்களுக்கு மன்னிப்பு வழங்க அவர் தயாராக இல்லை.
பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமின்றித் தோல்வியடைந்த பொழுது இராணுவம் மூர்க்கத்தனமாகச் செயற்பட்ட பொழுது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை ஆணையின் பிரகாரம் கடுமையான உலகளாவிய தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் அந்நடவடிக்கைகளில் பிரதான பங்கினை வகித்தாலும், ஹெயிட்டி இராணுவத் தலைவர்களைப் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இராணுவத் தலையீட்டிற்கான சாத்தியப்பாட்டினைத் தொடர்ந்து தவிர்த்தே வந்தது. பரந்தளவிலான மன்னிப்புக்கு சனாதிபதி அரிஸ்ரைட்டை இணங்க வைப்பதற்கான நெருக்குதல்கள் அதிகரித்தன. சனாதிபதி மன்னிப்பு வழங்குவதென்பது அரசியல் சட்டத்தினை மீறும் செயலாக இருந்தமையால், அதனைத் தவிர்க்கப் பாராளுமன்றத்தினால் பொது மன்னிப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு சனாதிபதியினால் பிரகடனம் செய்யப்பட்டது.
இருவழி அணுகுமுறையினை இணைத்த புதிய அணுகுமுறையில் அதிகாரத்தைப் பங்கிடுதல், இராணுவத்தினரின்
10

எதிர்காலத்துக்கான உத்தரவாதம் ஆகிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டன. இராணுவத் தலைவர்கள் பதவியிலிருந்து விலகிக் கொள்ள இவ் ஏற்பாடுகள் போதுமானதாக இருக்கவில்லை. இராணுவத்தினரை நிதானப்படுத்தவும், தொழில்முறையாக இயங்கச் செய்யவுமான பயிற்சிகளை வழங்க, ஐக்கிய அமெரிக்க இராணுவத்தினர் அனுப்பிவைக்கப்பட்ட பொழுது, அவர்களை அவமானப்படுத்துவதற்குக் காடையர் கூட்டம் ஈடுபடுத்தப்பட்டதினால் 1993 இல் சர்வதேச முயற்சிகள் தோல்வியடைந்தன. சர்வதேச ரீதியான நடவடிக்கைகள் தளர்வடைந்தமையினால் அரிஸ்ரைட் மற்றும் அவரது ஆதரவாளர்களை இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நெருக்குதல்கள் அவர்கள் மீது மேலும் அதிகரித்தன. ஹெயிட்டிக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி அலுவலகம் ஏனைய நாடுகளிலிருந்து மன்னிப்பு வழங்கும் சட்டங்களைப் பெற்று மாதிரியாக வைத்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான மன்னிப்பு வழங்கும் மசோதாவைத் தயாரித்தது. இவ் அரசியல் சட்டத்தினை ஏற்றுக்கொள்வதற்கான நெருக்குதல்கள் சர்வதேச ரீதியாக அதிகரித்த அதேவேளை அரசியல் யாப்புச் சட்டத்தை இயற்றுபவர்கள் இராணுவத்தினரின் பயமுறுத்தல்களுக்கு உள்ளாகிய சந்தர்ப்பத்தில் அச்சட்டத்தினை ஏற்றுக் கொள்ளுமாறு சர்வதேச நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சிலர் நாட்டை விட்டு ஓடினர். வேறு சிலர் சொந்தப் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பங்குபற்ற முடியாதிருந்தனர். சட்டரீதியற்ற முறையில் தெரிவு செய்யப்பட்ட இராணுவ ஆதரவாளர்கள் பேரவையில் (Senate) மீண்டும் பங்கு கொள்ளத் தொடங்கினர். புரட்சியின் பின் மேற்கொள்ளப்பட்ட எல்லாக் குற்றச் செயல்களையும் உள்ளடக்கக் கூடிய ஒரு சட்டவரையினை வெளிநாட்டு இராஜதந்திரிகள் சமூகமளித்திருந்த வைபவத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை மிகவும் வெட்கக்கேடான நிகழ்வாக அமைந்திருந்தது. இச்சந்தர்ப்பத்தில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்தன. இவை மேலதிக நடவடிக்கைகளிலிருந்து விலக்குப் பெறச் சந்தர்ப்பம் இருந்தன.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மற்றும் ஹெயிட்டி அரசியலமைப்பின் படி அமைந்த அரசாங்கத்தின் ஆதரவுடன் இராணுவத் தலையீடு மேற்கொள்ளப்படும் என்ற அச்சுறுத்தல்
11

Page 9
அறிவிப்பை ஐக்கிய அமெரிக்கா விடுத்ததன் பின் ஹெயிட்டி இராணுவம் தான் கைப்பற்றி வைத்திருந்த அதிகாரத்தை மீண்டும் கையளித்ததுடன் சட்டப்படியான சனாதிபதி மீண்டும் பதவிக்கு வந்தார். எனினும் பலாத்காரத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாக இருந்தது. மிகக் கூடியளவிலான மன்னிப்பு வாக்குறுதிகளைக் கொண்ட கவர்ச்சிகரமான தூண்டுகோல்கள் வெற்றி பெற பலாத்காரத்தையும் பயன்படுத்த வேண்டியதாயிற்று. மன்னிப்பு வழங்குதலுக்கு எதிரான சிலர், இத்தகைய நடவடிக்கைகள் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒர் உள்ளார்ந்த தடையாக அமையும் என அதன் முக்கியத் துவத்தைக் குறைத் து மதிப்பிட்டிருந்தனர்.
ஹெயிட்டி அனுபவத்திற்குப் பின்னர் ஐக்கிய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயத்தினை இங்கு குறிப்பிட வேண்டும். மனிதத் தன்மைக்கு எதிரான குற்றங்கள், இனஅழிப்பு, போர்க் குற்றங்கள், உடன்பாட்டின் கடப்பாடுகளை மீறும் குற்றங்களுக்கான மன்னிப்பு ஆகியவற்றுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிக்க முடியாது. 1999 இல் செயலாளர் நாயகம் கோபி அனான், சமரசப் பேச்சுவார்த்தைகளிலிடுபட்டிருக்கும் தனது பிரதிநிதிகளுக்கு மனித உரிமை விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய வழிகாட்டல்களை வழங்கியிருந்தார்.
ஒரு பக்கத்தில் தண்டிக்கப்படக் கூடிய மனித உரிமை மீறல்களை அடையாளம் செய்ய வேண்டிய தேவைக்கும், மறுபுறம் யுத்தத்தினை அவசரமாக நிறுத்த வேண்டியதன் அவசியத்திற்கும் இடையில் உள்ள பதட்டங்களைக் குறிப்பதாக அவ் வழிகாட்டல்கள் அமைந்தன. அத்துடன் இவ் வழிகாட்டல்களினுடாக ஐக்கிய நாடுகள் சபை சட்டத்திற்கு அமைய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள உதவுவனவாயும், நிரந்தரமான அமைதிக்கான அடிப்படையை வழங்குவதாகவும் அமைந்தது.
அண்மைக்காலங்களில் சீராலியோனில் ஐக்கிய நாடுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமாதான முயற்சிகளும், 1999 யூலையில் "லோம்" (Lome) என்னுமிடத்தில் கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கையும் மிகக் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகியது. இவ்வுடன்படிக்கையின் படி போடே சங்கோவின்
12

LJålsj gäsasu (p6ö676osuusT6Tg (Foday Sankoh's Revolutionary United Front) கடந்தகால அதன் செயற்பாடுகளுக்கு மன்னிப்பு என்ற உத்தரவாதத்துடன் ஆயுதங்களைக் கைவிடுவதற்கு இணங்கியது.
அத்துடன் புதிய கூட்டணி அரசாங்கத்தில் அவர்களை உள்ளடக்கவும், நாட்டின் வைரச் சுரங்கங்கள் மீது சாங்கோவின் கட்டுப்பாட்டினை அங்கீகரிக்கவும் இணக்கம் காணப்பட்டது. இவ்வுடன்படிக்கையை உருவாக்குவதில் ஐக்கிய நாடுகள் சம்பந்தப்படவில்லை. தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தினைப் பதவியிலிருத்துவதற்கு தமது இராணுவத்தைப் பயன்படுத்த விரும்பாத அரசாங்கங்களினாலேயே இவ்வுடன்படிக்கை உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை இந்த ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் மன்னிப்பு வழங்கும் விடயத்தில் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளவில்லை.
இன்று சீராலியோனில் இராணுவத் தலையீட்டுக்கும், மனித உரிமை மீறல்களுக்கான மன்னிப்புக்கும் இடையில் வேறொரு தீர்வே நாடப்பட்டதாக தெரிகிறது. சாங்கோ தடுப்புக் காவலில் உள்ளார். அரசாங்கம் அவரை விசாரணை செய்ய விரும்புகின்றது. அதே நேரம் ஐக்கிய நாடுகளின் படை மிகவும் உறுதியான பங்கினை வகித்து வருகின்றது. ஒரு விடயம் தெளிவுபடுத்தப்படல் வேண்டும். இராணுவத் தலையீட்டினை இறுதிக் கட்டத்திலேயே பின்பற்ற நாம் விரும் புகின்றோம் . எம் மை ப் பொறுத் தவரையில் பேச்சுவார்த்தையினூடாக அமைதியை ஏற்படுத்துவதே சிறந்த வழியாகும். இவ்வாறு சிந்திக்கும் எமக்கு மேற்கண்ட தீர்வு அதிகம் விரும்பத்தக்கது. எனினும் வகைகூறல் (Accountability) தத்துவத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்ளுமிடத்து இராணுவ நடவடிக்கையில் அதிகம் தங்கியிருப்பதாகவே அமையும். மறுபுறம் அமைதித் தீர்வொன்றினை விரும்புவதென்பது வகைகூறும் தத்துவத்தினை உறுதி செய்ய முடியாத ஒரு நிலைமையினைச் சுட்டிக் காட்டுவதாக அமையும்.
இதிலிருந்து நான் இரண்டாவது பிரச்சினைக்கு செல்ல விரும்புகிறேன். மோதல்கள் நிறுத்தப்பட்ட பின்னர் சமரசத்தினைக் கொண்டு வருவதற்கு, மனித உரிமைத் தத்துவங்களில் இணக்கம்
13

Page 10
காண்பதென்பது எவ்வளவு தூரம் அவசியமானது? நீதியினை நாடுதல் சமாதானத்தை நிலைநாட்டுகின்றதா? அல்லது அதற்கு அச்சுறுத்தலாக அமைகின்றதா? கிழக்கு திமோர் இன்று எதிர் நோக்கும் இத்தகைய இரண்டக நிலையை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன்.
கிழக்கு திமோரில் இடம் பெற்று வரும் மோதல்கள், பல தசாப்தங்களாக இந்தோனேசியாவினால் உருவாக்கப்பட்டவை. அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் கடந்த வருடம் இந்தோனேசியப் படைகள் இறங்கியிருந்தன. இந்நிலைமை உண்மைக்கு அப்பாற்பட்டதாகும். போர்த்துக்கலில் "பூக்களின் புரட்சி" (Carnation Revolution) இயக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொழுது கிழக்கு திமோரின் விடுதலைக்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டன. பிரதேசத்தினை இறுதியாக ஒன்றிணைத்துக் கொள்ளும் நோக்குடன் இந்தோனேசியாவில் உள்ள சிலர் இதனை ஊக்குவித்ததுடன் திமோரியர்களிடையே காணப்பட்ட மோதல்களையும் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால் 1970 களில் உருவாகிய அரசியல் பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்கள் உண்மையானவை. இரத்தக் களரியினூடாக இம் மோதல்கள் வெளிப்படுத்தப்பட்டன. சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்டனர். மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றன. இந்த அரசியல் ரீதியான பிரிவினைகள் இன்றும் காணப்படுகின்றன. இவற்றுடன் இந்தோனேசியாவின் 24 ஆண்டுகால கைப்பற்றல் முயற்சிகளின் விளைவுகளும் சேர்ந்து கொண்டன. ஒரு சில குழுக்கள் இந்தோனேசியாவுடனான இணைப்புக்கு ஆதரவு தந்தன. இதில் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர். வேறு சில குழுக்கள் தீவிரமாகவோ அல்லது அமைதியாகவோ இத்தகைய இணைப்பை எதிர்த்தனர்.
கிழக்கு திமோருக்கு புதிய சந்தர்ப்பங்களைத் திறந்து விட்ட சனாதிபதி சுகார்டோவின் (President Suharto) வீழ்ச்சியின் பின்னர் இத்தகைய பிளவுகள் மேலும் தீவிரமடைந்தன. வழங்கப்பட்ட பெருமளவான அரசியல் சுதந்திரம் சுதந்திரத்தை அடைவதற்கான பிரசாரத்துக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக ஒன்றிணைப்புக்குச் சார்பாக, இராணுவப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. உள்நாட்டு
14

அரசாங்கத்தின் தூண்டுதல் மட்டுமன்றி, பிராந்தியத்திலுள்ள இந்தோனேசியா இராணுவத்தின் முழு ஈடுபாட்டுடனான ஆதரவும் இதற்குக் காணப்பட்டது. இந்தோனேசியாவுக்குள்ளே விசேட தன்னாட்சி என்று தன்னால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தை கிழக்கு திமோர் நிராகரித்தால் உடனடியாக சுதந்திரத்தைப் பரிந்துரை செய்வேன் என்ற அறிவிப்பை சனாதிபதி ஹபீபீ (President Habible) அறிவித்த பின்னர் இராணுவம் கண்மூடித்தனமான கலவரங்களில் ஈடுபட்டது. சுதந்திரத்துக்குச் சார்பான தலைவர்களையும் ஆதரவாளர்களையும் கொலை செய்தனர். 1999 இல் சனவரி தொடக்கம் ஏப்ரல் வரை மிகப் பயங்கரமான மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றன.
கிழக்கு திமோரில் ஐக்கிய நாடுகள் குழுவின் தலைவராகப் பணியாற்றுவதற்கான ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்ததுடன், சர்வதேச தொடர்பு சாதனங்கள் மற்றும் ஏனையவர்களும் பிரசன்னமாக இருந்த மே தொடக்கம் ஆகஸ்ட் வரைப்பட்ட காலத்தில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்களைத் தடுக்கும் முயற்சிகளிலிடுபட்டிருந்தாலும் வன்முறைகள் முடிவுக்கு வரவில்லை. பெரும்பான்மையான மக்கள் சுதந்திரத்தையே வேண்டி நிற்பதனால் வன்முறைக்கான அச்சுறுத்தல்கள் குறைவடைந்து வருகின்றன. தேர்தல் குழப்பப்படுவதற்கான சூழ்நிலை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டாலும் வாக்களிப்பு அமைதியாக நடைபெற்றது. வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டாலும் கூட பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 98.6 வீதமானவர்கள வாக்களித்தனர். வாக்களித்தவர்களில் 78.5 வீதமானவர்கள் சுதந்திரத்துக்கு ஆதரவாக உள்ளனர் என்ற அறிவிப்பையடுத்துப் பரவலாக, ஆனால் ஒழுங்கு முறையில் வன்முறைகளும், அழிவுகளும் அலை அலையாக இடம் பெற்றன. இவை பற்றி நான் வெளிப்படையாகவே கருத்துக்கள் தெரிவித்துள்ளேன்.
கொலைகள் பெருமளவில் இடம் பெறவில்லை. ஐக்கிய நாடுகளின் மதிப்பீட்டின் படி கிழக்கு திமோரில் 1000-1200 இடையிலான எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் கட்டிடங்கள், சேவை வசதிகள் மீதான அழிவுகள் மிக மிக அதிகமாக இருந்ததுடன் சகல மக்களும் இடம் பெயர நேரிட்டது.
15

Page 11
மலைக் குன்றுப் பகுதிகளை நோக்கிச் சென்றவர்கள் நீண்ட காலத்தின் பின் தமது வீடுகளைத் திருத்தியமைப்பதற்கு திரும்பி வந்தனர். ஆனால் பெருமளவு எண்ணிக்கையான சிறுபான்மையினர் இந்தோனேசியாவின் மேற்கு திமோருக்கு இடம் பெயர்ந்து சென்றனர். அவர்களில் 165,000 பேர் கிழக்கு திமோருக்குப் படிப்படியாகத் திரும்பி வந்தனர். ஆனால் 125,000 பேர் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையாளரின் அனுமதியுடன் மேற்கு திமோரிலேயே தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் முன்னைய இராணுவ அங்கத்தவர்களாக இருந்ததினால் அவர்களது குடும்பங்கள் திரும்பி வர விரும்பவில்லை. ஆனால் காரணமேதுமினி றித் தங்கியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கிழக்கு திமோரின் அரசியல் தலைமைத்துவத்தின் சார்பில் குஷ்மாவோவும், திருச்சபையின் சார்பில் பிஷப் பெலோவும் வன்முறையில் ஈடுபட்ட திமோரியருடன் சமரசம் காண்பதற்கான விருப்பத்தினைப் பெரிதும் வெளிப்படுத்தினர். தமது சமூகங்களை மீண்டும் வந்தடைந்தவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் ஒரு சிலவே இடம் பெற்றன. பெரும்பாலான மக்கள் இணக்கத்தை ஏற்படுத்தும் கருத்தை ஏற்றுக்கொண்டனர். மேற்கு திமோரில் வாழ்ந்த இராணுவ உறுப்பினர்களைப் பொறுத்தவரை திரும்பி வருவதற்கு சில நடைமுறைத் தேவைகள் இருந்தன. இதற்குக் குறுங்கால, நீண்டகாலக் காரணங்களும் இருந்தன. குறுங்காலத்தில் இடம் பெயர்ந்து சென்றவர்கள் திரும்பி வரும் பொழுது அவர்கள் மீது தமது விருப்பமின்மையைக் காட்ட வேண்டி இருந்தது. நீண்ட காலத்தில் கிழக்கு திமோருக்கு அப்பால் இருந்த பிரதேச எல்லையில் இருந்து அதனை குழப்பத்திற்குள்ளாக்கும் முயற்சிகளுக்கான காரணத்தை அகற்றிக் கொள்ள வேண்டி இருந்தது. நீதி கிடைக்க வேண்டுமென்ற மக்களின் உணர்வுகள் உண்மையாகவே காணப்பட்டது. ஆகக் கூடிய குற்றங்களை இழைத்தவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்கள் எதிர்காலத்தில் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்ற உணர்வினை அவர்கள் மத்தியில் சமூகங்கள் ஏற்படுத்தும் நிலையும் காணப்பட்டது. நீதி நிலை நாட்டப்படாவிட்டால், மன்னிப்பு வழங்குவதை அதிகம் விரும்பாத சமூக உறுப்பினர்கள், நீதியைத் தாமே நிலைநாட்ட முயலும்
16

நிலையும் காணப்பட்டது. இந்நிலையில் கிழக்கு திமோர் தனது சொந்தத் தீர்வை முன்வைக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தச் சிக்கலை எவ்வாறு தீர்த்து வைப்பது என்பது பற்றி கிழக்கு திமோர் இனிமேல் தான் முடிவு செய்ய வேண்டும். முன்னணியில் பரந்தளவு அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சிகள், சி. என். ஆர். ரி. (CNRT) போன்றன ஐக்கிய நாடுகளுடன் இணைந்து தேசிய இணக்கத்துக்கான ஆணைக் குழுவொன்றை உருவாக்க உதவுவதாக அறிவித்துள்ளன. மேற்கு திமோரில் உள்ள நான்கு வெவ்வேறு வகையான நபர்களைப் பொறுத்தவரையில் வெவ்வேறு திறமுறைகளை மேற் கொள்ள வேணி டும் எனவும் ஆலோசிக்கப்பட்டது.
(1) படுகொலை, மானபங்கப்படுத்தல் அல்லது வன்முறையை ஒழுங்குபடுத்தல் அல்லது தலைமைதாங்கி நடத்துதல் போன்ற கடுமையான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள்.
(2) எரித்தல், கொள்ளையடித்தல், தாக்குதல்கள் போன்ற
கடுமையற்ற குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள்.
(3) கடந்த காலத்தில் இந்தோனேசிய பாதுகாப்புப் படைகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததினால் நன்மைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், ஆனால் குற்றமெதுவும் புரியாதவர்கள்.
(4) மேற்கு திமோருக்குப் பல வந்தமாகக் கொணர் டு செல்லப்பட்டவர்கள் அல்லது பயம் அல்லது அச்சுறுத்தல் காரணமாக ஓடியவர்கள்.
இங்கு முதலாவது வகையினர் நீதியுடன் தொடர்புபடுத்தப் படுத்தப்படுகின்றனர். ஏனைய வகைக் குற்றங்களுக்கு சமூக அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒழுங்குகளுக்கு ஆணைக்குழு உதவி வழங்கும். இரண்டாவது வகைக் குற்றங்களைப் புரிந்தோர் தாம் செய்த தவறுகளுக்கு வருந்தி அவற்றினை ஏற்றுக் கொண்டு,
17

Page 12
தமது செயற்பாடுகளுக்கு மன்னிப்புக் கேட்டு, சமூக சேவைகள் சிலவற்றைச் செய்வதற்கு இணங்க வேண்டும். சமூகத்தின் பாரம்பரிய தலைவர்கள் அல்லது கெளரவமிக்க உறுப்பினர்களினால் இவ்வுடன்படிக்கை உருவாக்கப்படும். இதற்கு ஆணைக்குழுவின் உதவிகள் வழங்கப்படுவதுடன் உள்ளுர் நீதிமன்றத்தினால் அவை பின்னுறுதிப்படுத்தப்படும். இதனால் குற்றமிழைத்தோர் அவர்கள் இழைத்த குற்றங்களுக்கு இனி மேல் பொறுப்பு வகிக்க வேண்டியதில்லை. 1970 ஆம் ஆண்டு தொடக்கம் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மையை நிலைநாட்டும் நோக்குடன் அவர்கள் மீண்டும் திரும்பி வருவதை இலகுபடுத்தும் நடவடிக் கை தொடர்புபடுத் தப் படும் . அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்படும் எதிர்காலத்தில் துஷ பிரயோகங்கள் செய்யப்படுவது தவிர்த்துக் கொள்ளப்படும். கிழக்கு திமோரில் உள்ள இன்றைய சிந்தனை பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. பாரிய மோதல்களின் போது குற்றங்கள் இழைத்த யாவருக்கும் எதிராக நீதித்துறை நடவடிக் கையை மேற் கொள்வது சாத்தியமானதல ல, விரும்பத்தக்கதுமல்ல. இச்செயற்பாட்டில் உள்ளுர் சமூகங்கள் FF(6UL 6ù வேணி டும் . சட்டத் தை முழு அளவில நடைமுறைப் படுத்துவதற்குப் பதிலாகக் குறைந்தபட்ச தண்டனைகளை விதிப்பதற்கு இந்த ஏற்பாடு உதவும்.
எனது மூன்றாவது பிரச்சினையை மிகத் தீவிரமான முறையில் நான் ருவாண்டாவில் எதிர் கொள்ள நேர்ந்தது. மோதலுக்குப் பின்னர், சம சந்தர்ப்பம் வழங்கும் மனித உரிமைத் தத்துவங்கள் ஒன்றுக்கொன்று முரண்படும் போது என்ன செய்யலாம் என்பதே இம் மூன்றாவது பிரச்சினையாகும். ருவாண்டாவில் இடம் பெற்ற இனப் படுகொலைக் குற்றங்களிலிருந்து அந்நாட்டு நெருக்கடியின் தீவிரத்தன்மை புலனாகின்றது. இப்பாரிய குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம். குறுகிய கால இடைவெளியில் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அநாகரிகமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். 1994 ஏப்ரல்-மே மாதத்துக்கிடையிலான ஆறு கிழமைகளில் இடம் பெற்ற நாளாந்தக் கொலைகள், நாஜி
18

படுகொலை முகாம்களில் இடம் பெற்றவைகளிலும் பார்க்க ஐந்து மடங்கு அதிகமானது என ஒரு விமர்சகர் மதிப்பீடு செய்திருந்தார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட, லட்சத்துக்கும் அதிகமான ஹட்டு (Hutu) விவசாயிகளை அயலவர்களான டுட்சி (Tutsi) இனத்தவர்கள் தமது சொந்தக் கைகளினால் படுகொலை செய்வதில் ஈடுபட்டனர். இக்குற்றமிழைத்தவர்களின் தொகையும் பல்லாயிரக்கணக்கில் அடங்கும். ஹட்டு இனத்தவர்களும் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். இனப்படுகொலைக்கு உத்தரவிட்ட அரசியல் தலைவர்களே அவர்களை இடம் பெயர்ந்து செல்லுமாறு கூறினர்.
ருவாண்டாவில் மீண்டும் இனப்படுகொலைகள் நிகழ்வதற்கு அகதி முகாம்களே தளமாக மாறின. ருவாண்டா இராணுவத்தினரே படுகொலைகளைப் புரிபவர்களாக மாறினர். இவர்களது செயற்பாடுகளினால் யுத்தம் எல்லைகளைக் கடந்து சயர் (Zaire) நாட்டுக்கும் பரவியது. இன்று கொங்கோ சனநாயகக் குடியரசு என அழைக்கப்படும் சயரேயின் எல்லைக்குள் இப்போர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அகதி முகாம் களை உடைத்து, ருவாண்டாவுக்குத் திரும்பிச் செல்லாதவர்களை சயரின் உட்பகுதி வரை விரட்டிச் சென்று மேலும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுமளவுக்கு வந்துள்ளது. இனப்படுகொலைகளைத் தூண்டியவர்கள் எனக் கருதப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் சிறைகளில் அடைக் கப் பட்டுள்ளதுடன் , தடுப் புக் காவலி களிலும் வைக்கப்பட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டவர்களின் நிலைமைகள் மோசமடைந்ததினால் பலர் இறந்து விட்டனர். இத்தகைய மனிதாபிமானமற்ற நிலைமைகளை விபரிப்பது எளிதான விடயமன்று. வன்முறைக்குத் தூபமிட்டவர்களைக் குற்றவியல் நீதிமுறைமையின் எல்லைகளையும் மீறிக் கைது செய்தமை பற்றிக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அநாகரிகமான தடுப்புக் காவல் சூழலில், விசாரணை ஏதுமின்றி நீண்டகாலம் தடுத்து வைத்திருந்தனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நீதி முறைமையின் கீழ் விசாரணைகள் படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டாலும், நீதியான விசாரணைகளை நடத்துவதற்கான நியமங்களிலிருந்து அவை தவறி விட்டன. மேலும் இந்நியமங்களின் படி மனித இனத்துக்கு எதிராகக் குற்றமிழைத்தவர்கள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆயுதமேந்தி
19

Page 13
மோதல்களில் ஈடுபட்டவர்களுக்கு அகதி என்ற முறையில் பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் இனப் படுகொலைகளைச் செய்தவர்களுக்கு உணவு வழங்கியதைச் சிலர் கண்டித்தனர். ருவாண்டாவுக்கு திரும்பி வந்த அகதிகள் அங்கு பல அபாயங்களை எதிர் நோக்கியிருந்தனர். அதனால் இம்முயற்சியிலிடுபட்டதற்காக உயர் ஸ்தானிகர் கண்டிக்கப்பட்டார். மனிதாபிமான முயற்சிகளை மேற்கொண்ட அரசு சாரா நிறுவனங்கள் சில முகாம்களை விட்டு வெளியேறின. வேறு சில நிறுவனங்கள் தொடர்ந்தும் தங்கியிருந்தன.
இன அழிப்பு ஒரு முறை நிகழ்வதற்கு இடம் அளிக்கப்பட்டுவிட்டால் அதன் விளைவுகளால் ஏற்படும் நிலைமைகளுக்கு மனித உரிமைத் தத்துவங்களை முழுமையாகப் பிரயோகிப்பது சாத்தியமற்றது. இன அழிப்பினைத் தூண்டுபவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டுமென்பது மனித உரிமை நியமங்களின் படி அவசியமானது. ஆனால் அவர்கள் சட்ட முறைமையினுாடாகத் தான் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். அத்துடன் தடுத்து வைக்கப்படும் நிலைமைகளும் திருப்திகரமானதாக இருக்க வேண்டும். வழக்கு விசாரணைகளும் நியாயமான முறையில் நடைபெறல் வேண்டும். தாம் துன்புறுத்தப்படுவோம் என்ற நியாயமான அச்சுறுத்தல்களுக்கு உள்ளான அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படல் வேண்டும். அவர்கள் எவ்வித வற்புறுத்தலுமின்றி இடம் பெயர்ந்து செல்ல, தாமே தீர்மானங்களை மேற்கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என்பதையும் இந் நியமங்கள் வலியுறுத்தின. இனப் படுகொலைகளிலீடுபட்டிருக்கும் போராளிக் குழுக்கள் முழுமையாகப் பாதுகாப்புப் படையினரால் எதிர்க்கப்பட வேண்டும். மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டத் தத்துவங்களுக்கு அமைய இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய தத்துவங்களை நடைமுறையில் பேணுவது மிகக் கடினமானது. ருவாண்டாவில் இனப்படுகொலைகள் நடைபெற்ற பின்னர் இதற்கான இணக்கத்தைக் காண்பதென்பது முற்றிலும் சாத்தியமற்றது.
இப்பிரச்சினையின் சாத்தியமற்ற தன்மையை ஏற்றுக் கொள்ளாமல் மேற்கூறப்பட்ட இம் மனித உரிமை நியமங்கள்
20

வலியுறுத்தும் இந்த ஏற்பாடுகள் ஒன்றில் கூட நாம் கவனம் செலுத்த முடியாது. அத்துடன் இந்த ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமையையிட்டுக் கண்டிக்கவும் முடியாது. அதே வேளையில் முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகள் கைவிடப்படுவதையும் நாம் நியாயப்படுத்திக் கொள்ள முடியாது. நிறைவேற்றப்பட முடியாத தத் துவங்களை, ஏற்றுக் கொள்ள முடியாத முறையில் கைவிடப்படுவதைப் பிரதிபலிக்கும் பல்வேறு நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் பொறுப்பில் எமக்கும் பங்குண்டு என்பது வலியுறுத்தப்பட வேண்டியதொன்று. மிகத் தெளிவான, நேர்முறையான இரு தொடர்புகள் இலங்கையுட்பட சர்வதேச ரீதியாகப் பிரயோகிக்கக் கூடிய தன்மை கொண்டவை என நான் நம்புகின்றேன். பிணக்குகளிலீடுபட்டுள்ள சகல தரப்பினரும் மனிதாபிமான, மற்றும் மனித உரிமைத் தத்துவங்களுக்கு மதிப்பளித்தால் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு இட்டுச் செல்லும் வெற்றிகரமான சமரசப் பேச்சுவார்த்தைகளுக்குரிய சூழலை ஏற்படுத்த முடியும். ஆயுத மோதல்கள் முடிவடைந்த பின்னர் மக்களின் சகல பிரிவினரும் மனித உரிமைகளுக்கு அளிக்கும் கெளரவத்திலேயே சமாதானம் நீடித்து நிலைத்து நிற்க முடியும்.
இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நிலைமைகளுக்கு சமமானவற்றைச் சுட்டிக் காட்டவேண்டும் என்ற முறையில் இப்பிரச்சினைகளை நான் தெரிவு செய்யவில்லை. மூன்று நிலைமைகளை நான் விளக்கிக் கூறியுள்ளேன். இவை ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்ட நிலைமைகளாகும். அத்துடன் இவை யாவும் இலங்கை நிலைமைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. மனித உரிமைகளை மதித்தல் , பேச்சுவார்த்தை, அமைதியை நிலைநாட்டுதல் என்பவற்றுக்கிடையிலான இரு தெளிவான தொடர்புகளும் இலங்கையுட் பட்ட முழு உலகிற்குமே பொருத்தமானவை. மோதல்களில் ஈடுபட்டிருக்கும் சகல தரப்பினரும் மனிதாபிமான, மனித உரிமைத் தத்துவங்களுக்கு மதிப்பளிப்பதில் காட்டும் ஈடுபாடானது பிணக்கைப் பேச்சுவார்த்தைகள் மூலம் வெற்றிகரமாக முடித்துவைப்பதற்கான சூழ்நிலையை மேம்படுத்த உதவும். ஆயுதமேந்திய போராட்டமானது ஒரு முடிவுக்கு வந்த பின்னர், அனைத்து மக்களினுடைய மனித உரிமைகளும்
21

Page 14
பேணப்படுவதன் மூலம் நீடித்த அமைதியை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இவ்வமைதி இதிலேயே தங்கியிருக்கின்றது எனவும் கூறலாம். பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் இலங்கையின் நிலைமை தொடர்ந்து மோசமான பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாகவே என்னால் நிச்சயப்படுத்திக் கூற முடியும். நீலன் உலகெங்கும் நீதியையும் அமைதியையும் மேம்படுத்தப் பாடுபட்டவர். இவ்வாறே இலங்கையில் நீதியையும், அமைதியையும் நிலைநாட்டும் இலட்சியத்துக்காகத் தனது இன்னுயிரையும் ஈந்தார். ஒரு வழக்கறிஞர் என்ற முறையிலும், மனித உரிமைக்காக உழைத்தவர் என்ற முறையிலும், அவர் மனித உரிமைத் தத்துவங்களுக்காகத் தன்னையே முற்றாக அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் தத்துவங்களைப் பிரகடனம் செய்வதோடு நிற்கவில்லை. அத்தத் துவங்களை நடைமுறைப்படுத்தத் தவறியவர்களையும் அவர் கண்டித்தார். ஓர் அரசியல்வாதி என்ற முறையிலும், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் அவர் நீதியையும், அமைதியையும் ஏற்படுத்தும் செயல்முறைப் பணிகளில் ஈடுபட்டார். எத்தகைய பிரச்சினைகளையும் நாம் எதிர்நோக்கும்போது அன்னாரினை நினைவு கூருதல் முக்கியமானது. சமாதானத்துக்காக நீதியையும் அல்லது நீதிக்காக சமாதானத்தையும் தியாகம் செய்ய வேண்டிய நிலையை முற்றாகத் தவிர்த்துக் கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் அத்தகைய நிலைமை தோன்றுவதைக் குறைத்துக் கொள்ள நாம் பாடுபட வேண்டும்.
22


Page 15

Printed by Unie Arts (Pvt) Ltd.