கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை

Page 1


Page 2

XX
- උ> S.
དུ་
2
逐*鷲 تھی؟ &S g డ్రైవ్లో స్ట్రే
S2%-
s
ஒரு விரிவான பார்வை
கே. எஸ். சிவகுமாரன்
மணிமேகலைப் பிரசுரம்
தபால் பெட்டி எண் : 1447 7. தணிகாசலம் சாலை, (மின் வழங்கு நிலையம் எதிரில் பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை - 600 017.
தொலைபேசி :0091-044-24342926, 24346082 மின் அஞ்சல் e-mail manimekalai 1 Cdataonein, manimekalai2020Oyahoo.com,
Web Site : www.tamilvanan. COssi

Page 3
நூல் தலைப்பு
ஆசிரியர் மொழி
பதிப்பு ஆண்டு
பதிப்பு விவரம்
2f6pLo
தாளின் தன்மை
நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
விலை
இலங்கை விலை
அட்டைப்பட ஓவியம் லேசர் வடிவமைப்பு அச்சிட்டோர் நூல் கட்டுமானம் வெளியிட்டோர்
இலங்கையில்
கிடைக்குமிடம்
حه 一汀
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை கே. எஸ். சிவகுமாரன்
தமிழ்
2009
முதற் பதிப்பு
ஆசிரியருக்கு
11.6 é).é8.
கிரெளன் சைஸ் (12% x 18% செ.மீ)
11 புள்ளி
160
ლნ. 65.00
ரூ. 200
ஒவியர் ஜமால் என். டி. கிராபிக்ஸ் 9710933307 ஸ்கிரிப்ட் பிரிண்டர்ஸ்
தையல்
Daof6udaöap60Ü ógörgyűb
கே. எஸ். சிவகுமாரன் 21, முருகன் பிளேஸ், ஹவ்லொக் வீதி வழியாக கொழும்பு - 06. இலங்கை

உள்ளடக்கம் ཛོད༽
1. திறனாய்வு : சில விளக்கங்கள். 5 2. முப்பது வருடங்களுக்கு முன்னர் மார்க்சியம். 13 3. ஈழத்தில் இலக்கியத் திறனாய்வு. 18 4. அழகியல் : ஒரு விளக்கம் . 5. அ. ந. க. என்ற ஆய்வாளர். 31 6. ஏ.ஜே. கனகரத்னாவின் திறனாய்வுப் பங்களிப்பு. 37 7. மற்றொரு முதுநிலை முற்போக்காளரின் ஆளுமை . 43 8. மனமெனும் தோணி : உளவியல் கட்டுரைகள் . 50 9. நாட்டிய நாடகம் என்றால் என்ன? . 58 10. நயினா தீவிலிருந்து ஓர் ஆய்வாளர். 65 1. கலாநிதி துரைமனோகரனின் இரு நூல்கள். 71 12. நாட்டாரியல் ஆய்வாளர் பாராட்டும் எஸ். முத்துமீரான் .77 13. முதுமையடையாமல் மறைந்த படைப்பாளி. 83 14. ஆய்வறிவாளரின் அறிவுத் திரட்டல். 15. திறனாய்வாளர் : மு. பொன்னம்பலம் . 91 16. திருத்தி விரிவாக்கப்பட்ட பதிப்பு நூல் ஆசிரியர்
பேராசிரியர் நா. சுப்பிரமணிய ஐயர். 99 17. நாச்சியா தீவு பர்வீன் : கவியுள்ளம்
கொண்ட சமூகப்பார்வையாளன். 107 18. விறைப்புற்ற மாணவனும் கனிவான ஆசிரியையும் . 112 19. பட்டறிவுப் படிப்பு படிப்பித்தல் முறை . 118 20. பொருள் முதல்வாத அடிப்படையில் திறனாய்வு. 126 21. நீர்வையின் நிமிர்வுதிறனாய்வுக் குறிப்புகள். 132 22. முன்மாதிரியான ஆய்வு அணுகுமுறை . 136 23. தெய்வத்திருமகளின் வாழ்வும் பணிகளும் . 143 24. கொழுந்து /பண்பாடு / கோபுரம். 149
الر" .)நழுவிச் செல்லும் கவிதை (Poetry Elusive ܓ

Page 4
Gheerfluft இந்நூலாசிரியரின் இதர நூல்கள்
Blfilliam BuTU-3 595 gigSTITijBUTbilisleit BevóówÖ UTsïEDR
j5luj-öbvrijabb Ebvid6lub: Eug 5görögDTÜLb gigs Triby Big Blaire? ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் (பாகம்-] ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் (பாகம்-2 ஈழத்து எழுத்து - нуј прimiti-Bj наћали иiим
 
 
 
 
 
 
 

திறனாய்வு :
சில விளக்கங்கள் వడ్ల
அந்நாட்களில் இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கு நயங்காணல்' என்ற ஓர் அப்பியாசத்தை ஆசிரியர்கள் கொடுப்பது 6 pias b. e56060T &rtisaoisei) LITERARY APPRECIATION என்றார்கள்.
அவ்வாறான பயிற்சி கொடுக்கப்படுவதற்கான காரணம் இதுவாகத்தான் இருந்தது: குற்றம் குறை காணுமுன்னர், சரி பிழை பார்க்கு முன்னர், ஒரு படைப்பை முதலிலே 'சுவைக்கப் பழக (β6,16οστOSLib.
ஒரு படைப்பாளி என்ன நோக்கத்திற்காக ஒரு படைப்பைப் படைத்திருக்கிறானோ, அந்த நோக்கில் நின்று நாம் அப்படைப்பை முதலில் அணுக வேண்டும் என்பது ஆசிரியர்களின் நோக்கமாக இருந்தது.
அதற்காகவே முதலில் நயங்கண்டு பின்னர் அப்படைப்பாளியின் திறனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்

Page 5
6 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
என்பது சொல்லாமற் சொல்லும் கோட்பாடு. ஆசிரியர்கள் இலக்கிய மாணவர்களை அவ்வாறே வழிப்படுத்தினர்.
இலக்கிய அணுகுமுறையின் அடுத்த படியிலேயே திறனாய்வு மேற்கொள்ளப்படுகிறது என்பர். அதாவது, இலக்கியம் கற்றலுடன் திறனாய்வுப் பண்பும், பணியும் இணைந்துள்ளன.
ஒரு நல்ல இலக்கியத்தையோ, 'இலக்கியம்' எனக் கூறிக்கொள்ளப்படும் ஓர் ஆக்கத்தையோ நாம் ஆராயும்போது அந்த இலக்கியத்தை நாம் ஒன்றில் மேலும் சுவைக்கிறோம்; அல்லது அதன் சிறப்பின்மையை அறிந்து கொள்கிறோம். இது இலக்கியம் கற்றலுக்குப் பெரிதும் உதவுகிறது.
LL LLL LLL Y LLL LLL LLL L0L Y LLL LLL LLL L0 LL L L0 L0 L L L L LSL L LLL LLL LLL LLL LLLL LSLLLLL LLLL LLLL LLL LLL 0L L 0L LL LLSLS
மேலை நாடுகளில் திறனாய்வு என்ற பெயரில் பற்பல வாதங்கள், கருத்தியல்கள் (ISMS) காலத்துக்குக் காலம் வெளிவந்து ஓய்ந்தும் போயுள்ளன. அது காரணமாகவே, அத்தகைய முறைகளில் திறனாய்வு செய்வதை நான் கூடியவரை தவிர்த்து வந்துள்ளேன்.
6Tarsupoorly 6lump55LDupaio ORGANIC CRITICISM 6T6OT LIGub முறைமை பொருத்தமானதாகவும், வசதியானதாகவும் இருக்கிறது.
ஆயினும், இந்த முறைமை (அலசிப் பார்க்கும் முயற்சி) மாத்திரமே முழுமையானதென்றோ, சரியானதென்றோ நான் கூறவில்லை.
மேலைநாடுகளில், பல்கலைக்கழக மட்டங்களில் திறனாய்வு எத்தகைய நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது என்பதனைப் LTCurtb.

கே.எஸ். சிவகுமாரன் 7
STRUCTURALISM (sLL6dLDLSuso 6 insib), DECONSTRUCTION POST - STRUCTURALISM (5. LsoUDůL e6ílupůL 6ungub அல்லது கட்டமைப்பு முறைக்குப் பிற்பட்ட வாதம்), FEMINIST CRITICISM GuéooTeoofus Spotmlij6), NEW HISTORICISM (5u வரலாற்றியைவு வாதம்) போன்றவை அண்மைக்காலத் திறனாய்வுப் போக்குகளாக இருந்து வந்தன.
காலந்தாழ்த்தி தமிழ்நாட்டுச் சிற்றேடுகளுக்கு அறிமுகமான இந்த 'இஸம் கள் ஈழத்திலும் ஓரிருவரினால் இன்றும் Sailip LGBssip6OT. &6gibsop6íL MARXIST CRITICISM (Dmiddu நோக்குத் திறனாய்வு) பெருமளவு அர்த்தம் நிரம்பியதாக இருக்கிறது எனலாம். இது ஏனெனில் நூற்றுக்கு எழுபத்தைந்து விழுக்காடு மார்க்சியப் பார்வை கொண்ட படைப்புகளாகவே இலங்கையில் இதுகாலவரையும் இருந்து வந்துள்ளன. எனவே, மார்க்சியத் திறனாய்வு இந்நாட்டில் அதிக கவனம் பெற்று வந்துள்ளது.
சமூகப் பார்வை கொண்ட எந்தவொரு திறனாய்வாளனும், மனிதாபிமானத்திற்கு நெருங்கிய மார்க்சிய அணுகுமுறையைத் தன்னையறியாமல் உள்வாங்கிக் கொள்கிறான். ஆயினும், மார்க்சியப் பார்வை மாத்திரமே முழுமையானது என்பதற்கில்லை. இது ஏனெனில் 'மார்க்சியம்' என்பது கூட இயற்கையின் நியதி என்பது போல காலத்துக்குக் காலம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டு மாறிவருவது கண்கூடு.
இதனாலேயே அமரர் கனகசபாபதி கைலாசபதி வலியுறுத்திய MULTI-DISCIPLINARY CRITICISM Cu66lbsartrips 6D6OTITtius அணுகுமுறை) என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது. ஒரு படைப்பின் gd 66 Läb (CONTENT) "D566cdDü (STRUCTURE)"

Page 6
8 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
6L600T60DLub eleod junfidelb ORGANIC CRITICISM 6T6öTugbgs அழுத்தம் கொடுத்து வந்துள்ளேன்.
‘அமைப்பியல் ஆய்வு' என்பதற்கு விளக்கம் தரும் ஆய்வாளர் திருமதி கலாநிதி செல்வி திருச்சந்திரன் இவ்வாறு விளக்கம் கொடுக்கிறார்:
"ஒரு இலக்கியத்தின் அமைப்பினை அல்லது பூரண உருவத்தை ஆய்வு செய்தலையும், / அதன் கூறுகளையும், அதன் பரிமாணங்களையும் / ஆய்வு செய்தலையும் குறிக்கும்". இதனைத்தான் ‘அமைப்பியல் ஆய்வு' என்பதற்குப் பதிலாக 'ORGANIC CRITICISM' 6T6TD prisiT and C3psit.
5 LL60DLDSuso வாதக் (STRUCTURALISM) கோட்பாட்டின்படி, படைப்பாளியின் பங்களிப்பு முக்கியமானதல்ல. படைப்பாளி ஒரு பொருட்டுக்குரியவன் அல்லன்.
அதே வேளையில், TEXT எனப்படும் வாசகம் ஒன்றில் இடம்பெறக்கூடிய இலக்கியத்தன்மையில்லாத எழுத்திலும் ஒருவித இலக்கியத் தன்மையை இனங்காண முடியும் எனக் கூறுபவர்களில் நானும் ஒருவன்.
ஒரு வேடிக்கை என்னவென்றால், கட்டமைப்புவாதிகளின் கண்ணோட்டத்தில் இலக்கியம் என்பது வாழ்க்கையின் பிரதிபலிப்பு அல்ல, இலக்கியம் என்பது MIME எனப்படும் 'பாவனையுமல்ல', புற உலகின் யதார்த்தம் முக்கியமல்ல.

கே.எஸ். சிவகுமாரன் 9
இவ்வாறு கூறும் கட்டமைப்புவாதிகள் CODE எனப்படும் 'சங்கேதத்தில் அடுத்தடுத்து உட்படும் பண்புகளுடன் கொண்ட உறவு, அல்லது குறித்துணர்த்தும் முறைமை உறவு மிக முக்கியம், என்கிறார்கள். அதாவது, மொழியே இலக்கியத்தைப் படைத்து இலக்கியத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடுகிறது. இது as L60LDL6)ingSasafeit (STRUCTURALISTS) 666Taisastb.
6airies60615 65Tliigi 6 is POST-STRUCTURALISTSமொழியின் இலக்கியப் பயன்பாடு அல்லது ஏனைய பயன்பாடுகள் சொற்களையே மையாகக் கொண்டுள்ளன என்றார்கள்.
இலக்கியத்தின் அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் பங்கு வாசகனுடையது என்று இந்தக் கட்டமைப்பு அவிழ்ப்புவாதிகள் (DECONSTRUCTIONISTS) anpéairport. இவர்கள் கூறுவது என்னவென்றால், இலக்கிய ரீதியான மொழியின் 'ஆக்க கர்த்தா' இந்த வாசகனே என்கிறார்கள்.
இத்தகைய கருத்தோட்டம் கொண்டவர்கள் கூறுவதிை இவ்வாறும் நாம் பொருள் கொள்ளலாம்.
வாசகன் நவில்தொறும் புதுப்புது அர்த்தங்களை இலக்கியத்தில் இனங்காண்பதனாலும், ஒவ்வொரு வாசகனின் பார்வையும் ஆளுக்கு ஆள் வேறுபடுவதனாலும், இலக்கியம் இறுதி ஆய்வில் என்ன கூறுகின்றது என்பதை அறிந்துகொள்ளல் பின் போடப்பட்டே வரவேண்டும். இது கட்டவிழ்ப்புவாதிகளின் தீர்ப்புக்

Page 7
10 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
பெண்ணியம் நோக்கிலமைந்த திறனாய்வு என்ன கூறுகிறது என்றால், இலக்கிய மொழிப் பிரயோகத்தில் கூட ஆணாதிக்கம் மேலோங்குகிறது என்ற அவதானிப்பாகும்.
எனப் பெண்ணியத் திறனாய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
பெண்ணியவாதம், மார்க்சிய வாதம் இரண்டினையும் இணைப்பதை NEO-HISTORISM (நவ வரலாற்றியைவு வாதம்) என்கிறார்கள். எனது ORGANIC CRITICISM அணுகுமுறையில், நவ வரலாற்றியைவு வாதக் கோட்பாடுகளையும் சில வேளைகளில் இணைந்துக் கொள்ள முயன்றிருக்கிறேன்.
LSL LSL SSL LSL LSL LLL LLL LLLS0 LL LSL LSL SLL S LL LLL LLLL LSL LL L LLL LL LSLL SL S LSS LSL LSSL LSS LLLL LLLL LL LLL LLL LLLL LSL S S LSL L L
இக்கட்டுரையாளரின் திறனாய்வு நோக்கு (விமர்சனம் அல்ல) எவ்வாறு அமைகிறது என்பதை நமது வாசகர்கள், குறிப்பாக இலக்கிய மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமாயின், 'ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை' என்ற நூலின் 189-272 பக்கங்களைப் படித்துப் பார்க்கும்படி தயவாய் கேட்டுக்கொள்கிறேன். (D6oofG3 Da56oo6oü pergub)
இலக்கியம் என்பது படிப்பவருக்கு இன்ப நுகர்ச்சியை மாத்திரம் தருவதல்ல, வாழ்க்கையின் பல்வேறு கோணங்களையும் நாம் தரிசிக்க வைக்கிறது. பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ள வசதி வாய்க்கிறது.

கே.எஸ். சிவகுமாரன் 11
களிப்பூட்டச் செய்யும் இலக்கியம் (ENTERTAINING) படிப்பவருக்கு இன்ப நுகர்ச்சியைத் தருகிறது. படிப்பவர் குறிப்பிட்ட படைப்பைத் தொடர்ந்து வாசிக்கிறார். அவ்விதம் செய்யும்பொழுது அவர் மனதும், மெய்ப்பாடுகளும் விரிவடைகின்றன. அவர் புளகாங்கிதம் அடைகிறார். அவருக்குப் புதிய செய்திகள் கிடைக்கின்றன. புதிய அனுபவங்களைப் பெற்றுக் கொள்கிறார். எனவே, அவர் புத்தறிவையும், புத்தனுபவங்களையும் பெற்றுக்கொள்கிறார். அந்தக் கணமே அவர் வியப்பிலாழ்கிறார். சிந்திக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக வாசகரின் கற்பனை விரிகிறது. கற்பனை, விரிவடைய விரிவடைய புதிய இலக்கிய உத்திகளையும். புதிய பரிசோதனைகளையும் அவர் கற்றுக்கொள்வதுடன், அவற்றைத் தமது எழுத்தில் பிரயோகிக்கவும் முற்படுகிறார்.
அவை மாத்திரமல்ல, விழுமியங்கள், உன்னத எண்ணங்கள் போன்றவை எவை என்று அறிந்து தனது அனுபவத்தையும், அறிவையும் நெறிப்படுத்திக் கொள்கிறார்.
இவ்வாறு பல்வேறு பயன்தரும் பாதிப்புகளைப் படிப்பவர் பெற்றுக்கொள்கிறார்.
இலக்கியம் என்பது படிப்பதற்குக் களிப்பூட்டும் அதே வேளையில், பயன்பாடுகளையும் வழங்கி வாசகனின் மனோநிலையைச் செழுமைப்படுத்துகிறது.
நல்ல இலக்கியம் என்று சொல்லப்படும் ஒன்றைப் படிப்பதனால் பயனடையும் ஒருவன் அந்த இலக்கியம் ஏன் இலக்கியத்தன்மை கொண்டதாக அமைகிறது என்பதனைத் தானே அறிந்துகொள்கிறான்.
LL LLL LLLL LL LLL LLL LLL 0L LLLL LLL 0L L L L LY0L LL0LL YYYLLLLLL0LLLL ... a e s a 8

Page 8
12 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
26past) GlurgiscDLD (UNIVERSALISM), 66(D6003up6DL6OLD (PERMANANT VALUES), 6aoistu buriassiT (LITERARY TASTE), abucodot 6is or (IMAGINATIVE RANGE), as 6O15ust 60T விஷயங்களையும் சுருதி கெடாமல் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல் (PRECISION), மனுக்குல மேம்பாட்டுக்கு மேலும் 905up a g656) (UPLIFTING HUMAN CONDITION) (Surgit D பண்புகளும் ஓர் இலக்கியப் படைப்பு தரமான அல்லது உயர்தர படைப்பு என மதிப்பிடக்கூடியது என்பேன்.
 

கே.எஸ். சிவகுமாரன் 13
மூப்பது வருடங்களுக்கு općiТАЈТči čDлñčћčlačio
கலாநிதி ரவீந்திரன் (பெப். 28, 2OOS), "துரைவி" (துரை விஸ்வநாதன்) ஞாபகார்த்தமாக ஓர் அருமையான, முக்கியமான உரையை நிகழ்த்தினார். யாழ்ப்பாணத் தமிழ் சமுதாயம், சாதியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்பதும், சைவசித்தாந்தம் அங்குள்ள பெருவாரியான மக்களிடையே மேலாதிக்கம் செலுத்தியதென்பதும். தமிழ்நாட்டு மார்க்சிய விமர்சகரிடையே கேசவன், முத்துமோகன், அ. மார்க்ஸ்) சாதியம் பற்றிய முரண்பாடான கருத்துகள் நிலவியது என்பதும் நமது நாட்டில் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்ற ஆய்வறிவாளர்கள் இதனை எவ்வாறு நோக்கினரென்பதும் சங்ககாலம் தொடக்கம் இற்றைவரை தமிழ் இலக்கியத்தில் சாதியம் எவ்வாறு காலத்துக்குக் காலம் மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதும் ஆய்வு ரீதியாக அவர் நிகழ்த்திய பேச்சின் சாராம்சம் எனலாம். இது ஒரு சிறு நூலாக வெளிவருமாயின் ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உட்பட்டு மேலும் நாம் தெளிவுற உதவும்.

Page 9
14 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
இந்தப் பின்னணியிலே கடந்த முப்பது வருடங்களுக்கு முன் மார்க்சிய மெய்ஞானம்' எவ்வாறிருந்தது என இரைமீட்டேன், "மாற்றமே இயற்கையின் நியதி" போன்று மார்க்சியமும் சமுதாய மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உட்பட்டது என்பதனை நாம் அறிவோம். ஆயினும், மார்க்சியம் ஒரு தத்துவநெறி என்று நாம் எடுத்துக்கொண்டாலும், அந்தக் கருத்தியல் கூட மாற்றத்துக்கு உட்பட்டதா என்பதை நாம் எண்ணிப் பார்த்தால் "ஆம்" என்றும் "இல்லை" என்றும் கூற முடியும்.
இன்று பலவிதமான மார்க்சிய சிந்தனைகள் உலகின் பல பாகங்களிலும் ஏற்பட்டு வருவதையும், அதே வேளையில் வறண்ட, விடாப்பிடியான (Dogmatic) மார்க்சியம் சிலரிடையே இருப்பதையும் நாம் காண்கிறோம்.
இது இவ்வாறிருக்க, 1970ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் வெளிவந்த "Modern Age" என்ற ஏட்டிலே கார்ள் ஏ வில்பிஜில் என்பவர் எழுதிய கட்டுரையொன்று எனது ஞாபகத்திற்கு வந்தது. அந்நாட்களில் அறிவுத் தேடலுக்காக, சாமி சிதம்பரனார் முதல் ஜெயகாந்தன் வரையிலுமான மார்க்சிய எழுத்தாளர்களை விரும்பித் தேடிப் படித்து வந்தேன்.
மேற்குறிப்பிட்ட கட்டுரையிலே "புதிய இடதுசாரி இயக்கம்" (The New Left) பற்றிய ஒரு குறிப்பும் இருந்தது. இந்த இயக்கத்தை விளக்குகையில், இத்தகைய இடதுசாரிகள் புரட்சிகரமானவர்கள் என்றும், அடிவாறான (Radical) சமூக, அரசியல் மாற்றங்கள் உடனடியாக ஏற்படவேண்டும் என்று தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் வன்முறையை அவர்கள் தமது நோக்கத்திற்காகப் பயன்படுத்தினர் என்றும், நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம், மனிதர்களுக்கு எதிரான போராட்டமாகவும்

கே.எஸ். சிவகுமாரன் 15
அமைவது தவிர்க்க முடியாதது எனவும் "புதிய இடதுசாரிகள்" நம்பினர். அவ்வாறு சிந்தித்தவர்களுள் மார்ஹினோ, மார்க்சியூஸ், சேகெவேரா, டெப்ரே, ரூடி டுட்ச்கி, மா ஓ சேடுங், ஹோ சீமின் போன்றோர் அடங்கினர்.
இந்த இயக்கம் 1950 களின் இறுதியில் தலைதூக்கியது. புதிய இடதுசாரித் தீவிரவாதிகள், மார்க்சிய வாதிகள் அல்லர். ஆனால், பொதுவுடைமைவாதிகள் எனவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுவுடைமைவாதிகளாக இல்லாமல், தீவிர, புரட்சிகர அராஜகவாதிகளாக விளங்கினர்.
பக்குனின், மக்ஹற்னோ, டுருதி, மார்க்ஸ், ரோஸா லக்ஸம்பேர்க் போன்றவர்களின் பாரம்பரியத்தில் இந்தப் புரட்சிகர புதிய இடதுசாரிகள் உருவாகினர். ஸ்பானிய உள்நாட்டுக் கலவரத்தின்போது ஆரம்பக் கால கட்டத்தில் டுருத்தி கழிவிரக்கமற்ற அராஜகத் தீவிரவாதியாக விளங்கினான் என்றும் இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொஹற்ன், நபென்டிட் சகோதரர்கள், புதிய இடதுசாரி இயக்கத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர்.
முக்கிய புரட்சிகர சோசலிச இயக்கமாக தனியொரு இயக்கம் இயங்கவில்லை. மார்க்ஸிய பொதுவுடைமை வாதத்துடன், அராஜகவாதமும் செயற்பட்டது. அராஜகவாதத்திலும்கூட இரண்டு வகையினர் செயலாற்றினர். சீர்திருத்த அராஜகவாதிகள், புரட்சிகர அராஜகவாதிகள்.
மேற்சொன்ன கட்டுரையிலே, செக்கஸ்லோவாக்கியாவில் இடம்பெற்ற சதிப்புரட்சி பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Page 10
16 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
அல்பேனியா, புல்கேரியா, ஹங்கரி, போலாந்து, கிழக்கு ஜேர்மனி, யுகோஸ்லாவியா, ருமேனியா ஆகிய ஏழு கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தனது செல்வாக்குக்குள் சோவியத் யூனியன் உட்படுத்தியது.
அல்பேனியா, புல்கேரியா ஆகிய இரு நாடுகளையும் உட்படுத்தி தபோல்கன் சம்மேளனத்தை மார்ஷல் டிட்டோ உருவாக்க விரும்பினார். ஸ்டாலினின் கட்டளைகளையும் மீறி டிட்டோ செயற்பட்டார்.
செக்கஸ்லோவாக்கியாவில் வெற்றிகரமாக அமைந்த பொதுவுடைமைச் சதிப்புரட்சியை அடுத்து மேற்கு ஐரோப்பிய நாடுகள் வட அத்லாந்திக் ஒப்பந்த ஸ்தாபனத்தை (NATO) உருவாக்கின.
1945 அளவில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ருஷ்யா ஆகிய நான்கு நாடுகள் ஜேர்மனியைக் கைப்பற்றின. 1945இல் செய்துகொள்ளப்பட்ட யால்டா / பொட்ஸ்டெம் உடன்படிக்கையின்படி ஜேர்மனி நான்கு வலயங்களாகவும், மேற்கு ஐரோப்பிய நாடுகள் மூன்று வலயங்களாகவும், சோவியத் யூனியன் ஒரு வலயமாகவும் கணிக்கப்பட்டன. சோவியத் வலயத்தினுள், கிழக்கு ஜேர்மனியின் முன்னைய தலைநகரமான பேர்ளின் அடங்கியபோதும், பேர்ளின் கூட நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
செக்கஸ்லோவாக்கியாவைத் தனது ஆளுகைக்குள் சோவியத் யூனியன் கொண்டுவந்ததும் 1948ஆம் ஆண்டளவில், பேர்ளினின் மேற்குப் பக்கத்தின் மீது ஸ்டாலின் நெருக்குவாரத்தை ஏற்படுத்தினார். மூன்று மேற்கு ஐரோப்பிய வலயங்கள் பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசாக மாறியது. பொன் தலைநகராக மாறியது. ஜேர்மனியின் கிழக்குப் பிராந்தியம் சோவியத் யூனியனின் அடிவருடியாக மாறியது.
1961இல் பேர்ளின் சுவர் கட்டியெழுப்பப்பட்டது. வட கொரியா சோவியத் ஆளுகைக்கும் தென்கொரியா அமெரிக்க

கே.எஸ். சிவகுமாரன் 17
ஆளுகைக்கும் உட்பட்டன. 1953இல் வடகொரியா சீனச் செல்வாக்குக்கு உட்பட்டது.
இந்தோனீசியாவின் நான்கு நாடுகள் 1954இல் புதிதாக உதயம் பெற்றன. வட வியட்னாம், தென் வியட்னாம், லாவோஸ், கம்பூஜ்ஜியா ஆகியன. அமெரிக்கா, பிரிட்டன், ஒஸ்ரேலியா, பிரான்ஸ், நியூஸிலாந்து, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகியன SEATO எனப்படும் தென்கிழக்காசிய ஒப்பந்த ஸ்தாபனமாக ஒன்றை அமைத்தன.
1962இல் கியூபா ஏவுகணை நெருக்கடி காரணமாக ருஷ்யாவும் சீனாவும் வெளிப்படையாகவே மோதிக்கொண்டன. சீனா இந்தியாவைத் தாக்கியது. 1914இல் ருஷ்ய ஜனாதிபதி க்ருஷோவ் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
இவ்வாறு மார்க்சியம் தொடர்பாகவும் உலக அரசியல் போக்குகள் மாற்றத்திற்கு உட்பட்டன என்று முன்னர் குறிப்பிடப்பட்ட கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கிறது.
இளைய பரம்பரையினர் உலக வரலாற்றுப் போக்குகளை அறிந்து கொள்வதற்கு இச்சிறு குறிப்புகள் உதவியிருக்கலாம் என நம்புகிறேன்.

Page 11
18 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
புது டில்லியிலிருந்து "சுடர்மலர்' என்றொரு ஏடு முன்னர் வெளிவந்தது. அந்த ஏட்டிலே ஆய்வறிவாளர் அமரர் கனகசபாபதி கைலாசபதி "ஈழத்தில் இலக்கிய திறனாய்வு" என்றொரு விபரக் கட்டுரையை எழுதியிருந்தார். இன்றைக்கு 35 வருடங்களுக்கு முன்னர் (1974) இக்கட்டுரை வெளியாகியிருந்தது. இன்று 2009இல் ஈழத்து இலக்கியத் திறனாய்வுப் போக்கிலே பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவது நிதர்சனம்.
எனினும், க.கை. குறிப்பிட்டிருக்கும் சில விபரங்கள் முக்கியமானவை. குறிப்பிட்ட இக்கட்டுரை அமரரின் எந்தவொரு தொகுப்பினும் இடம் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.
எனவே, ஆய்வாளர் நலன்கருதி, குறிப்பிட்ட அக்கட்டுரையிலிருந்து பெறப்பட்ட சில தரவுகளை இங்கு தருகிறேன்.
"அணியிலக்கணத்தை நுணுக்கமாக வகுத்தமைத்தனர் அணியிலக்கண நூலாசிரியர்கள்.
 

கே.எஸ். சிவகுமாரன் 19
அழகைச் சுவைப்பதுடன் அதனோடு பிரிக்க இயலாதவாறு பிணைக்கப்பட்டிருக்கும் செய்திகளையும் சிந்தனைகளையும் கருத்துருவங்களையும் கண்டு கொள்வதும் அவற்றை மதிப்பிடுவதும், அவற்றுக்கு விளக்கம் உரைப்பதும் திறனாய்வின் பண்பும், பயனும் ஆகும்.
இன்றைய திறனாய்வு விவரித்து விளக்கும் முறையைப் பற்றுக்கோடாய்க் கொண்டது என்பதில் தவறில்லை.
இடைக்கால உரையாசிரியர் மரபு எமது நாட்டிலும் செழித்து வளர்ந்தது. இத்தகைய முயற்சிக்கு எடுத்துக்காட்டாக மா.
பீதாம்பரம் எழுதிய "ஈழ நாட்டு உரையாசிரியர்கள்"
(கணேசையர் நினைவு மலர். 1960) என்னும் கட்டுரையைக் குறிப்பிடலாம்.
சித்தியாருக்கு உரை கண்ட ஞானப்பிரகாச முனிவரிலிருந்து சங்க நூற் செல்வர் க. அருளம்பலவாணர் வரை இம்
மரபு குறிப்பிடத்தக்க விதத்தில் ஈழத்தில் நீடித்துள்ளது.
பண்பு நலன்களையும் கால அடைவை அடிப்படைகளாய்க் கொண்டு பார்த்தால் மூன்று முக்கியமான திறனாய்வுப் போக்குகள் 20ஆம் நூற்றாண்டிலேயே கிளைத்தெழுந்துள்ளமை புலனாகும்.
"பண்டிதமுறைத் திறனாய்வு"களின் பயனாக வெளிவரும் நூல்களைப் புதுவிளக்க நூல்கள் என்றும் கூறலாம்.
சி. கணேசஐயர், வ.மு. இரத்தினேஸ்வர ஐயர், விபுலானந்த அடிகள், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை,

Page 12
20
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
சோ. இளமுருகனார் முதலியோர் அவ்வப்போது எழுதியுள்ள நூல்களையும் கட்டுரைகளையும் இவ்வாய்வு முறைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாய்க் கருதலாம்.
ஆயினும் விபுலானந்த அடிகள், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகியோர் G8 6d. Di LuLLஅணுகுமுறைகளையும் கையாண்டிருக்கின்றனர்.
இந்த இடத்திலே ஒன்றை வலியுறுத்த நான் விரும்புகிறேன். எனது கணிப்பின்படி, "ஈழத்துத் தமிழ்த் திறனாய்வு முன்னோடி" சுவாமி விபுலானந்தர் என நிறுவியுள்ளேன். தயவு செய்து இக்கட்டுரையை எனது "ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை.” (2OO8சென்னை மணிமேகலைப் பிரசுரம்) என்ற நூலில் காண்க.
அற நோக்கையே முதன்மைப்படுத்தாது சுவையுணரும் நோக்குத்திறனாய்வாளர் என க.ச. அருள்நந்தி, தி. சதாசிவ ஐயர், அ.வ. மயில்வாகனன், மா. பீதாம்பரம் முதலியோருடன் சி. கணபதிப்பிள்ளையும் செயற்பட்டார்.
கணபதிப் பிள்ளை அவர்கள் ஈழத்துக் கவி மரபில் வரும் சின்னத்தம்பிப் புலவர் போன்ற இடைக்காலத்தவர் சிலரையும் சோமசுந்தரப் புலவர் போன்ற புதியவர்களையும் கவி முன்னவர்களாக அரியணையில் ஏற்றினார்.
கனக செந்திநாதன் இம்மரபில் வருபவரே. கா.பொ. இரத்தினம், அருள்நந்தி, பொ. கிருஷ்ணபிள்ளை ஆகியோர் இம்மரபில் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
 
 
 

கே.எஸ். சிவகுமாரன் 21
ஈழத்துச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளாய் விளங்கும் இலங்கையர் கோன், சி. வைத்தியலிங்கம், சோ. சிவபாத சுந்தரம், சம்பந்தன் ஆகியோருள் முதல் மூவரும் திறனாய்வுத் துறையிலும் முதன் முயற்சியாளராய் இருந்தனர்.
மற்றொரு பகுதியும் திறனாய்வுக் கலைக்கு அரண் செய்வதாகவும் வளமூட்டுவதாகவும் வந்தமைந்தது. இலக்கியத்தை மட்டுமின்றிச் சிற்பம், ஓவியம், நடனம் முதலிய கவின் கலைகளையும் கிராமியக் கலைகளையும், விளக்கிக் கூறும் போக்கே இதுவாகும். கலைப்புலவர் க. நவரத்தினம், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, மு. இராமலிங்கம் ஆகியோரின் பல்வேறு கட்டுரைகள் இது தொடர்பாகக் குறிப்பிடத்தக்கன. இம்முயற்சிகளின் விளைவாகக் கலைப்படைப்பின் தன்மையையும் உளவியல் பகுதிகளையும் அவற்றோடு தொடர்புடைய சமூகக் காரணிகளையும் கணக்கெடுக்கும் ஆய்வு நெறி மெல்ல மெல்ல உருவாகியது.
தனிப்பட்ட இலக்கியப் படைப்புகளைப் பற்றி மட்டுமின்றிப் பொதுவாக இலக்கியத் தொடர்பான பல்வேறு செய்திகள் குறித்தும் கொள்கையடிப்படையிலும் உண்மை விளக்கம் தரும் நோக்கிலும் சிலர் எழுதினர். கே. கணேஷ், அ.ந. கந்தசாமி ஆகியோர் இத் தொடர்பில் விதந்துரைக்கப்பட வேண்டியவர்கள். இவர்களிற் சிலர் முற்போக்குத் தத்துவத்தைத் தழுவியிருந்தனர் என்பதும் நினைவுகூரவேண்டிய செய்தியாகும்.

Page 13
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
திறனாய்வு முயற்சிகள் 1950இற்கும் 1960இற்கும் இடைப்பட்ட பகுதியில் விரைவாக வளர்ந்தன. விவாதங்கள் திறனாய்வுக் கலைக்குப் புதிய ஆய்வுகளைக் காட்டின.
ஈழத்துத் தமிழிலக்கியமும் திறனாய்வும் தமிழ்நாட்டு இலக்கியப் போக்கிலிருந்து பல வகைகளில் வேறுபட்டுத் தமக்கெனத் தனிப்பட்ட இயல்புகளையும் பண்புகளையும் வகுத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
இக்கால கட்டத்திலிருந்து திறனாய்வுத் துறையில் தீவிரமாகச் செயல்பட்டு வருபவரில் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, ஏ. ஜே. கனகரத்தினா, இ. முருகையன், சில்லையூர் செல்வராசன் முதலியோர் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் அறியப்பட்டவர்கள். ஈழத்து இலக்கியங்கள் மட்டுமின்றிப் பொதுவாகத் தமிழ் இலக்கியத் திறனாய்வும் ஆழ அகலம் பெற இவர்கள் பங்களித்துள்ளமை நன்கு தெரிந்த செய்தியாகும்.
இவர்களுக்குக் காலத்தாற் சிறிது பின்னதாக கே. எஸ். சிவகுமாரன், ஆ. சிவநேசச்செல்வன், சபா. ஜெயராசா, சித்திரலேகா, மெளனகுரு, எம்.ஏ. நுஃக்மான், செ. யோகராசா, க. நவசோதி, முதலியோர் திறனாய்வுத் துறையில் ஆர்வத்துடன் உழைத்து வருகின்றனர்.
இலக்கிய உலகின் வளர்ச்சியினால் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைகளும் திறனாய்வுக்கு உரிய இடத்தை அளிக்கத் தொடங்கியுள்ளன. முற்கூறிய சிலருடன், சி. தில்லைநாதன், பொ. பூலோகசிங்கம் ஆகிய இருவரும்,

கே.எஸ். சிவகுமாரன் 23
இலக்கிய ஆய்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாகக் கடந்த நூற்றாண்டுகளிலே ஈழத்தில் இடம்பெற்ற இலக்கியங்களைத் திறனாய்வு செய்யும் முயற்சிகள் இப்பொழுது ஆழமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தாய்மொழி மூலம் உயர்கல்வி நடைபெறும் சூழ்நிலையில் பல்துறைக் கல்விப் பயிற்சி பெற்றவர்கள் இலக்கியத்; துறையில் எழுத்தாளராயும் வாசகராயும் நுழைகின்றனர்.
தமிழ் உணர்ச்சியோ, இலக்கிய இன்பமோ மட்டும் இலக்கியத்துக்குப் போதுமானவையல்ல. இவை - யாவற்றுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் அதே வேளையில், உலக இலக்கியத்தின் உயர்ந்த குறிக்கோள்களைத் தழுவியும் இலக்கிய ஆக்கம் நடைபெற வேண்டிய நிலை இன்றுள்ளது.
இதற்கும் திறனாய்வுக் கலை பக்கத்துணையாயும் சில வேளைகளில் வழிகாட்டியாகவும் பணிபுரிய வேண்டியுள்ளது."
மேற்கண்ட கருத்துகளும் அவதானிப்புகளும் மறைந்த ஆய்வறிவாளர் க. கைலாசபதியினுடையவை. இந்த முக்கியமான கட்டுரையை கைலாசபதியின் கட்டுரைகளைத் தொகுத்தவர்கள் சேர்க்கத் தவறிவிட்டது பெரிய குறைபாடுதான்.
1974இற்கும் 2OO9இற்கும் இடையில் ஈழத்துத் தமிழ் திறனாய்வுத் துறை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது கண்கூடு. அவ்வளர்ச்சியில் பங்கெடுத்தவர்களின் பெரும் பணிகளை

Page 14
24 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
பல்கலைக்கழகங்களில் பயிலும் ஆய்வு மாணவர்கள் ஆராய்ந்தால் 6τεότεσίλ
பொதுவாகவும் தனிப்பட்ட திறனாய்வாளர்கள் தொடர்பாகவும் விரிவான ஆய்வு தேவைப்படுகிறது.
படைப்பாளிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் இற்றைவரை செயற்பட்டுவரும் என் போன்றவர்கள் இந்தப் பணியைச் செய்வது அவ்வளவு எளிதானதல்ல. ஆய்வு செய்யும் மாணவர்களே இத்துறையில் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்.
காலம் சிறிது, கடமைகள் பெரிதல்லவா?
We can try. Why don't we?
 

கே.எஸ். சிவகுமாரன் 25
அழகியல் தொடர்பான கட்டுரைகளைத் தமிழில் பேராசிரியர் சபா ஜெயராசா, அமரர் பேராசிரியர் கிருஷ்ணராஜா, பேராசிரியர் சண்முகலிங்கன், கலாநிதி கிருஷ்ணவேணி போன்றோர் எழுதியுள்ளனர். அவர்களுடைய நூல்களிலும் இப்பொருள் பற்றிய அவரவர் பார்வை விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன.
இப்பொழுது கலாநிதி ஏ. என். கிருஷ்ணவேணி 'இந்திய அழகியல் பற்றிய ஒரு நூலைத் தந்துள்ளார்.
நான் அழகை விரும்புபவன். அழகு என்பது வெளித்தோற்றத்தில் மட்டுமல்ல, அக அழகும் கவர்ச்சியானதுதான். ஜோன் கீட்ஸ் (JOHNKEATS) என்ற ஆங்கிலேயக் கவிஞன் கூறியது போல ‘அழகியது நித்தம் ஆனந்தம் தருவது (ATHING OF BEAUTY' IS A JOY FOR EVER)
அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், தத்துவம், நுண்கலை போன்ற உயர்மட்டத் துறைகள் சார்ந்த நூல்களை

Page 15
26 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
வெளியிட்டு வரும் 'குமரன் புத்தக நிலையம் இந்தப் பயனுள்ள நூலை அழகாக நேர்த்தியாக வெளியிட்டுள்ளது.
கலாநிதி கிருஷ்ணவேணி (நோபர்ட்) சமர்ப்பிக்கும் பேச்சுக்கள், கட்டுரைகள், பேட்டிகள் அனைத்தும் எனக்குப் பிடித்தவை. காரணம் அவர் தாம் எடுத்துக்கொண்ட பொருளை 'வழவழாவின்றித் தெளிவாகவும் சுவாரசியமாகவும் எடுத்துக் கூறும் திறன் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழக நுண் கலைத் துறைத் தலைவராக இவர் பணியாற்றி வருகிறார். பல்வேறு கருத்தரங்குகளில் சமயம், தத்துவம், கலை, அழகியல் போன்ற பொருள்களில் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்திருக்கிறார்.
இந்திய அழகியல்' என்ற இந்த நூல் என்ன கூறுகின்றது?
ஆதாரப்பூர்வமாக நான் அதை எடுத்துக்காட்ட வேண்டும் என்றால் நூலின் சுருக்கத்தை ஆசிரியரும் வெளியீட்டாளரும் நமக்குத் தந்திருப்பது வசதியாகப் போய்விட்டதனால் அதனை இங்கு தருகிறோம்.
இந்திய அழகியல், இருக்கு வேதம் தொட்டு இற்றை வரை நீண்ட கலை, இலக்கிய வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. சமஸ்கிருதக் கவிதையியல், ரசக்கொள்கை, அலெளகீக ரசங்கள், துவனிக்கொள்கை, தமிழர் அழகியல் சிந்தனையில் தொல்காப்பியப் பொருளதிகாரம், மெய்ப்பாடு, கவிதை உத்தியாக உவமை, பெரிய புராணம் வெளிப்படுத்தும் பக்தி ரசம் தொடர்பான கருத்துகள் இந்நூலில் தரப்பட்டுள்ளன'
இந்த நூல் 128 பக்கங்களைக் கொண்டது.

கே.எஸ். சிவகுமாரன் 27
மேற்சொன்ன தலைப்புகளில் நூலாசிரியர் தாம் பொருள். கண்டு விளக்குவதை இங்கு நாம் காண்கிறோம்.
தமது அறிமுகக் கட்டுரையில் கிருஷ்ணவேணி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
.புலன் அறிவு வழியாகப் பெறப்படும் அனுபவங்களின் 6irruseomads &LGub egasusoga AESTHETIC SCIENCE OF SENSORYKNOWLEDGE என்று கொள்ளப்பட்டது
இந்த அறிமுகத்தில் ஆசிரியர் மேனாட்டுத் தத்துவ தரிசனத்துடன் தொடர்புடைய தகவல்களையும் தருகிறார். அதுமட்டுமன்றி வரலாற்றினூடாகப் பல்வேறு வளர்ச்சிப் போக்குகளையும் தொட்டுக் காட்டுகிறார்.
இயற்கையோடிணைந்த அழகும் அன்போடியந்த இன்ப வாழ்வும் தமிழர் ரசனைப் பாரம்பரியத்தைச் சொல்லாமற் சொல்லும். இசையும் இலக்கியமும் அவர்களது வாழ்க்கைக் கோலங்களில் இருந்து முகிழ்ந்தவை. தமிழருக்குத் தனி இசை வரலாறு உண்டென்பதைச் சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையால் அறியலாம். சங்க இலக்கியங்கள் கூறும் பண்வகைகளும் தொல்காப்பியம் கூறும் பண்ணத்தியும் இசை மரபை வெளிப்படுத்துவன.
இவ்வாறு சுருக்கமாகவும் தொடர்புடையதாகவும் நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார். வடமொழி, தமிழ், தத்துவம், அழகு போன்றவற்றில் அவர் அடைந்திருக்கும் உயர்மட்ட வளர்ச்சியின் பெறு பேறாக இந்நூல் அமைந்திருக்கிறது எனலாம்.

Page 16
28 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
புறப்பொருளும் அகவயமான உணர்வும் இயைந்த ஒரு பரஸ்பரச் செயற்பாடே அழகியலனுபவம்' என்ற ஆசிரியரின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன்.
இந்த நூலின் முதல் நான்கு அதிகாரங்களும் வடமொழி தெரியாத நமக்கு வடமொழி அழகியல் கோட்பாடுகளை Academic பாணியில் அறிமுகஞ் செய்கிறார் ஆசிரியர்.
ஐந்தாவது அத்தியாயத்தில் பின்வருமாறு ஆசிரியர் எழுதுவது அவதானிக்கத்தக்கது.
. தமிழர் பண்பாடு என்பது மொழியை மையப்படுத்தியது. மொழியை ஊடகமாகக் கொண்ட இலக்கியம் சமூக உணர்வுகளையும் D 600T fraid, சிந்தனைகளையும் வெளிப்படுத்துவது. அந்த வகையில் தமிழர் அழகியலுக்குத் தளமாக அமைபவை இலக்கியங்கள். ஒரு சமூகம் தன் இருப்புக்கும் பண்பாட்டுப் பேணுகைக்கும் கலை, இலக்கியங்களிலேயே தாங்கியுள்ளது' என்கிறார் ஆசிரியர்.
நூலாசிரியரின் இன்னொரு கூற்றும் "உருவம்/உள்ளடக்கம் என்ற பிரச்சினையில் ஊறிப்போய் தவித்தும் தவிர்த்தும் நமது சில எழுத்தாளர்கள் அறிய வேண்டியது எனலாம்" என கிருஷ்ணவேணி கூறுகிறார்.
"ஒரு கலைஞன் தான் பெற்ற அனுபவத்தைப் பிறரும் பெறும் வண்ணம் அதற்குரிய ஊடகத்தைக் கொண்டு தானே அதில் ஈடுபட்டு லயித்து அதனை உருவாக்கும்போது அப்படைப்பு உருவமும் உள்ளடக்கமும் கொண்ட ஓர் அழகிய கலைப்படைப்பாக

கே.எஸ். சிவகுமாரன் 29
உருவாக்கம் பெறுகிறது. அவ்வாறு உருவாக்கம் பெறும் கலைப் படைப்புகள் அழகு, உணர்ச்சி அம்சங்களைக் கொண்டனவாகவும், சுவை பயப்பனவாகவும் குறியீட்டுத்தன்மை உடையனவாகவும் செய்திப் பரிமாற்றத்தைச் செய்வனவாகவும் பார்வையாளரது கலை அனுபவ வெளிப்பாட்டிற்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றன"
புதுக்கவிதை' என்ற பெயரிலே நைந்து போன அரசியல் சுலோகங்களையும் கேள்வி எழுப்புதல்களையும் வீறாகச் சூழ் உரைத்தலையும் மேற்கொள்ளும் எழுத்தாளர்கள் தமது கவிதை நூல்களை வெளியிடும் முன்னர் இந்த நூலின் ஏழாம் அத்தியாயத்தை தயவு செய்து படித்துப் பாருங்கள். அது "கவிதை உத்தியாக உவமை" என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.
ஆசிரியர் கூறுகிறார்.
பக்தி என்பது இறைவனிடம் செலுத்தப்படும் அன்பு ஆகும். அன்பின் வழியாக இறைவனை அடையலாம் என்பது தமிழர் மதக் கொள்கை, கலை வடிவங்களிலும் வெளிப்படுத்தப்படும் பக்தி ரஸமாகவும் அமைகிறது. ரஸம் என்பதற்குத் தமிழில் ஒத்த சொல்லைக் காண்பது கடினம். எனினும் அது 'சுவை' என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது. கலை அனுபவத்தின் மூலமாகப் பெறப்படுவது சுவை ஆகும். ரஸானுபவம் என்பது இலக்கியங்களை வாசிப்பதன் மூலமும் கலை வடிவங்களைப் பார்த்தும் கேட்டும் அனுபவிப்பதன் மூலம் பெறப்படும் உயர்ந்த அழகியல் அனுபவம் ஆகும். வடமொழி மரபில் 'காவியம்' என்பது தமிழிற் காப்பியம் என்று வழங்கப்படுகிறது கலாநிதி கிருஷ்ணவேணியின் கருத்துப்படி,

Page 17
30 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
. தமிழ்க் காப்பியங்களை நோக்கும்போது பெரிய புராணமும் பக்திச்சுவையை வெளிப்படுத்தும் பெருங்காப்பியம் என்பது
புலனாகும்
இந்த இடத்திலே ஒரு தகவலை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கத்தோலிக்கரான மறைந்த ஜோசப் தளியத் என்ற பிரபல தமிழ் நாட்டு எழுத்தாளர் (ஜெகசிற்பியன்) ஓர் அருமையான நாவலைத் தந்திருக்கிறார். சேக்கிழாரின் பெரிய புராணத்தை மையமாகக் கொண்டு அவர் எழுதிய நவீனம் திருச்சிற்றம்பலம்' அருமையான அழகியல் சார்ந்த எழுத்து நடை அவருடையது.
'இந்திய அழகியல்' என்ற இந்த நூலிலே நூலுாசிரியர் உரை, வாழ்த்துரை, (அமரர் கலாநிதி தாங்கம்மா அப்பாக்குட்டி) அறிமுகம், உசாத்துணை நூல்கள் பற்றிய விபரம் ஆகியனவும் அடங்கியுள்ளன. படித்துப் பயன்பெறுவோம்.
 

கே.எஸ். சிவகுமாரன் 31
NTELLECTUAL 6T6öT6pTö ébáléŝao 6JTrigš6o5 DL6ooTO6. அகராதியொன்றின்படி
"An Intellectualls One Who Thinks and Acts Predominantly To Serve The Pursuit Of Knowledge And Appreciation Of Fine Things in Literature And the Arts, And is Less Concerned With The Mundane and Material Aspects of Life."
தமிழிலே, இந்தப் பதத்திற்குக் கொடுக்கப்பட்ட மற்றொரு அகராதியொன்றின் விளக்கம்:
"அறிவுத்திறனுடையவர், ஆய்வறிவாளர், அறிஞர்". மேலும் INTELLECTUALISM என்பதனை விளக்குகையில் அவ்வகராதி இவ்வாறு விளக்குகிறது.
"அறிவுத்திறம் வாய்ந்த ஆய்வுணர்வுக்குரிய, அறிவுக்குகந்த, அறிவுத்திறன் நோக்கிய, ஒருவரின் ஆய்வறிவுக் கோட்பாடு, எல்லா அறிவும் ஆய்வுத் திறத்தின் விளைவே எனுங்கொள்கை"
இவைதான் உண்மையான விளக்கம் என்றிருக்க ஈழத்து இதழியலாளர் பலரும் ஏனையோரும் தப்பும் தவறுமாக

Page 18
32 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
இன்டெலக்ஷ*வல் என்பதனை "புத்திஜீவிகள்" என்றே எழுதிவிடுகின்றனர். தமிழ்நாட்டு வெகுசனங்களிடையே பிரபல்யம் பெறும் சொற்கள் சிலவற்றை நாமும் பின்பற்றுவது நமது தராதரத்தை கீழிறிக்கிவிடுவது போலாகிவிடும். புத்தியை மாத்திரமே முதலாகக் கொண்டு ஜீவிப்பவர்கள்தான் "புத்திஜீவிகள்". ஆனால் அதுவல்ல INTELLECTUAL என்ற வார்த்தையின் உட்பொருள். ஆய்வறிவுடன் கூடிய அறிஞர்களே ஆய்வறிவாளர் ஆவர்.
அ.ந.க.
அமரர் அ.ந. கந்தசாமி நாம் பெருமைப்படக்கூடிய நமது மார்க்சியத் திறனாய்வாளர் / படைப்பாளி ஆவர். ebenuño உண்மையிலேயே ஓர் ஆய்வறிவாளராவர்.
இற்றைக்கு 48 வருடங்களுக்கு முன்னர் அ.ந. கந்தசாமி அவர்களை முதன்முறையாகச் சந்தித்தேன். மறைந்துபோன தீவிர மார்க்சிய இலக்கியவாதியான எம்.எஸ்.எம். இக்பால், அ.ந.க.வை அறிமுகப்படுத்திவைத்தார். அந்நாட்களில் இப்பொழுது இல்லாமலே போய்விட்ட அன்றைய உள்ளூராட்சிச்சேவை அதிகாரசபையின் அலுவலகத்திலே நான் தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தொழில் பார்த்து வந்தேன். அந்த அலுவலகம் கொழும்பு கோட்டை கபூர் கட்டடத்தில் செயற்பட்டது. எனது அலுவலகத்திற்குப் பக்கத்தில் மறைந்த எம்.எஸ்.எம். இக்பால் பணிபுரிந்த அலுவலகம் இருந்தது. அக் கட்டடத்தின் மேல் மாடியிலே மறைந்துபோன 'ரெயின்போ' கனகரத்தினம் ஓர் அலுவலகத்தில் வரவேற்பாளராகப் பணிபுரிந்துவந்தார்.
கொழும்பு கோட்டையிலே இப்போதைய கொமர்ஷல் வங்கிக்கருகிலுள்ள ஓர் சிறிய அலுவலகத்தில் அமரர் சில்லையூர்

கே.எஸ். சிவகுமாரன் 33
செல்வராசன் 'Copy writers' என்றொரு தனியார் விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இவர்களும் மற்றொரு மார்க்சியவாதியான மறைந்த இராமநாதன், ஸ்டனிஸிலோஸ், சிவதாசன் போன்றோரும் எனக்கு மார்க்சியம் சார்ந்த தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்திவந்தனர். மதியபோசன இடைவேளைகளில் நாம் அடிக்கடி சந்தித்து உரையாடுவதுண்டு.
அந்நாட்களில் (25 வயது இருக்கும்) எனக்கு ஈழத்துத் தமிழ் எழுத்து பற்றியொன்றுமே தெரியாமல் இருந்தது. முற்கூறப்பட்டவர்களே நவீன ஈழத்து / தமிழ்நாட்டு மார்க்சிய எழுத்துக்களை அறிமுகப்படுத்தி வைத்தனர்.
தமிழ் இலக்கியத்தை விட ஆங்கில / உலக இலக்கியங்கள் - பற்றியே நான் அதிகம் அறிந்து வைத்திருந்தேன். அந்நாட்களில் புறக்கோட்டை FRONT வீதியில் "பாரதி"புத்தகசாலை இருந்தது. அது இப்பொழுதில்லை. அங்கே நிறைய மார்க்சியம் சார்ந்த தமிழ் புத்தகங்கள் இருந்தன. அவற்றை வாங்கி ஆர்வத்துடன் படித்து வந்தேன்.
மேற்சொன்ன நண்பர்களுடன் நா.மு. குமாரசிங்கம், முத்துராசன், மானா மக்கீன், பாலு மகேந்திரா போன்ற மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட நண்பர்களுடனும் பழகி வந்தேன்.
இந்த உறவுகள் தவிர ஆய்வறிவாளர்கள், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, பிரேம்ஜி, செ.கணேசலிங்கன் போன்றவர்களின் வழிகாட்டல்களும் எனக்கு ஆரம்பகாலத்தில் உதவின.
அமரர் கனகசபாபதி கைலாசபதி மூலம் மறைந்த சிறந்த u60DLumet 'இளங்கீரனுடன் (சுபைர்) தொடர்பு ஏற்பட்டு வந்தது. 1960 - 61 வாக்கிலே மடிந்துபோன இதழான 'மரகதம்' சஞ்சிகையை

Page 19
34 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
இளங்கீரன் வெளியிட்டு வந்தார். el 6) dö60DLLI வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய நாவலாசிரியர்கள் சிலரை "மரகதத்தில் அறிமுகஞ் செய்து வந்தேன். அவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் மறைந்துபோன பிரென்சு எழுத்தாளரும் ஆய்வறிவாளருமான அல்(B)பேர் கெமு (ALBERT CAMUS) e6Jmfr.
இக்கட்டுரையைப் பார்த்த அ.ந.க. "மரகதம்" தொடர்பாக ஒரு மதிப்புரையை இலங்கை தகவற் திணைக்களம் நடத்திய "ழுநீலங்கா" என்ற தமிழ் ஏட்டிலே எழுதியிருந்ததுடன் எனது "மரகதம்" கட்டுரையையும் விசேஷமாகக் குறிப்பிட்டிருந்தார். அ.ந.க.வும் இன்னும் சிலரும் மறைந்துபோன முதலியார் குல சபாநாதனை பிரதம ஆசிரியராகக் கொண்ட 'ருநீலங்கா' சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
அ.ந.க. என்னைச் சந்திக்க விரும்பி, எம்.எஸ்.எம். இக்பாலிடம் அது பற்றிக் குறிப்பிட, அன்று அறியாப்பிள்ளையாக இருந்த இளைஞனான என்னை அ.ந.க.வின் அலுவலகத்துக்கு (கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் இருந்தது) இழுத்துச் சென்று அ.ந.க.விடம் அறிமுகஞ் செய்து வைத்தார்.
அவரைப் பார்த்தவுடனேயே அவருடைய ஆளுமை எனக்குப் பளிச்சென்று உணர்த்தி நின்றது, சிரித்த முகம், முத்துப் Lu6io6rfl6ODF, 85rfluußDub, yankee bump g560D6aoypg, smart dress, 6 Ju ugi வித்தியாசம் பாராமல் என் போன்றவர்களையும் சரிசமமாகப் பாவித்து சகஜமாக உரையாடல் யாவுமே என் மனத்திரையில் பதிவாகின.
பின்னர் அவருடைய "மதமாற்றம்" நாடகம் பற்றி ஆங்கில வானொலியில் மதிப்பீடு செய்ததுடன் TRIBUNE (எஸ்.பி. அமரசிங்கம் நடத்தியது) என்ற ஆங்கில வார அரசியற் சஞ்சிகையிலும் அந்நாடகம் பற்றி எழுதினேன். குறிப்பிட்ட அந்த இதழும் மார்க்சியச் சார்பு கொண்டதாகவே இருநதது.

கே.எஸ். சிவகுமாரன் 35
"9ே.ந.க. ஒரு சகாப்தம்" என்றொரு சிறு நூல் இப்பொழுது வெளியாகியிருக்கிறது. அதனை எழுதியிருப்பவர் சுயதேடல் மூலம் அறிஞராக விளங்கிவரும் படைப்பாளியும் நாடகக்கலைஞரும் பத்தி நூலாசிரியரும் எழுத்தாளருமான உற்சாகம் மிகுந்த நமது அந்தனி ஜீவா தான். அவருடைய புத்தகத்தைப் படிக்கும் முன்னர், அந.க.வை மீண்டும் நினைவுறுத்திப் பார்த்ததன் விளைவுதான் இக்கட்டுரையின் முற்பகுதியில் இடம்பெற்ற நான் சம்பந்தப்பட்ட தகவல்கள், இவை கூட வரலாற்றுச் செய்திகளடங்கியவைதான்.
LL LLL LLL LLL LLL LLL LLLS LLL LL LLLLL LL LLL LLL 0L LLL Y LLL LLSL LLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LS LLL Y LLLL LL LL 0L 0 0L LLL LLL LL
மலையக வெளியீட்டகத்தினரின் 'அ.ந.க. ஒரு சகாப்தம்' என்ற சிறு நூலின் ஆசிரியர் அந்தனி ஜீவா முன்னர் தினகரன் வாரமஞ்சரியில் எழுதிய "சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்" என்ற தொடர்கட்டுரைகளின் தொகுப்பு இது, 48 பக்கங்களைக் கொண்டது. '.
"உலகையே என் சிந்தனையால் அளந்துவிட் வேண்டுமென்று பேராசை கொண்ட காலத்தில்" வாழ்ந்த அ.ந.க. பல பரிமாணங்களைக் கொண்டிருந்தார் என்பதனை இந்நூல் எடுத்துரைக்கிறது.
தனது பேச்சின் மூலமும் எழுத்தின் மூலமும் நாடகங்கள் மூலமும் நூல்கள், சஞ்சிகை மூலமும் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வரும் அந்தனி ஜீவா ஒரு சிறந்த இதழியலாளர் என்பதற்கு நிரூபணமாக இந்தப் புத்தகத்தின் எழுத்து நடை அமைகிறது.
அ.ந.க.வை இன்றைய வாசகர்களுக்குச் சிறந்த முறையில் அறிமுகப்படுத்தும்வகையில் தமது நூலில் பின்வரும் தலைப்புகளில் ஆக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
இலக்கிய வானில் சுடர் நட்சத்திரம், துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம், எழுத்துத்துறையின் ஆரம்ப காலம், தொழிலாளர்

Page 20
36 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
நலனில் அக்கறை, தகவற் பகுதி, பத்திரிகைத் துறை, முதல் சந்திப்பு, கவிதையும் கந்தசாமியும், இலக்கிய மலடர், சிறுகதைத் துறையில் நாவல் துறை, நாடகத்துறை, இலக்கிய விமர்சனம், சீர்திருத்தத்துறை, வெற்றியின் இரகசியம், அ.ந.க. ஒரு சகாப்தம்.
அந்தனி ஜீவா அமரர் அ.ந.க.வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். உள்ளார்ந்த நட்பு அவர்களிடையே இருந்தது. அதன் வெளிப்பாடாக இந்தக் கட்டுரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான Non-academic ரீதியான நூல்கள்தான் மக்களிடையே பிரபல்யம் பெறுகின்றன. சகலருக்கும் பயனளிக்கின்றன. அந்த விதத்திலே ஆற்றல்மிகு அந்தனி ஜீவா பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். 43-48 பக்கங்களில் நூலாசிரியர் பற்றிய பல விபரங்கள் நேர்த்தியாகத் தரப்பட்டுள்ளன.
கலாபூஷணம் புன்னியாமீன் இவ்விபரங்களை எழுதியுள்ளார்.
அ.ந.க.வை மறந்துவிட்ட நாம் அவருடைய ஆய்வறிவுப் பங்களிப்புகளை நினைவுகூர இச்சிறு நூல் பெரிதும் உதவுகிறது.
 

கே.எஸ். சிவகுமாரன் 37
தர.ஜே. கனகதரத்னாவின் திறனாய்வப் பங்களிப்பு
AJ: The Rooted Cosmopolitan 6T6TD தலைப்பில் ஆங்கிலத்தில் ஒரு நூல் வெளிவந்துள்ளது. லண்டனிலுள்ள தமிழியல் என்ற நிர்வாகம் இந்த 246 பக்கங்களைக் கொண்ட (ஏ.ஜே.க. வின் நிழற்படங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன) இதழை வெளிட்டுள்ளது. அவர்களுடன் ஈ. மெயிலில் தொடர்பு கொள்ளலாம். infoG2tamiliyal.org.uk.
வேரூன்றிய பரந்த நோக்குடையவர் என்று பொருள்படும் விதத்தில் நூலின் தலைப்பு அமைந்துள்ளது. அந்த ஆங்கிலத் தலைப்பை தொகுப்பாசிரியர் (அமரர் ரெஜி சிறிவர்தன எழுதிய கட்டுரைத் தலைப்பை) நூலில் கையாண்டுள்ளார். இலங்கையின் பிறந்து கனடாவில் ஆங்கில இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரியும் செல்வா கனகநாயகம் இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகளின் தொகுப்புக்குப் பொறுப்பாளர்.
நூல் இரண்டு பிரிவுகளாகத் தரப்பட்டுள்ளது. ஏ.ஜே.க. எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் ஒரு பகுதியிலும், அவரைப் பற்றி அறிஞர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரைகள் மறுபகுதியிலும் இடம் பெறுகின்றன.

Page 21
38 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
இலங்கையிலுள்ள ஆங்கில இலக்கிய வாசகர்கள் அவரை தொடர்ந்து நன்கு அறிந்து வைத்திருக்கவில்லை, இது ஏனெனில், கொழும்பு ஆங்கில ஊடகங்களில் அவர் அதிகம் எழுதாததனால்தான். 1960 களில் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை அவர் ஆங்கிலத்தில் தந்துள்ள போதிலும், அந்தத் தசாப்த காலத்தைத் தொடர்ந்து வந்த இலக்கிய வாசகர்கள் அவரைத் தொடர்ந்து நினைவில் வைத்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழ் பேசுபவர்கள் அறிந்து வைத்துள்ள அளவிற்கு, இலங்கையின் தெற்கில், ஏ.ஜே. என்றால் பலருக்குத் தெரியாது. A.J. என்று தெற்கில் அறிமுகமாகிய மறைந்த திறனாய்வாளர் ஏ.ஜே. குணவர்தனாவைத்தான் ஆங்கில இலக்கிய வாசகர்கள் அறிவார்கள்.
ஏ.ஜே. கனகரத்ன பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாகப் படித்துப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படித்துப் பட்டம் பெற்று. ஊடகத்துறையில் பங்களித்த மற்றொரு தமிழர், கனடாவில் இப்பொழுது வசிக்கும் சி.வி. இராஜசுந்தரமாவார். வேறு சிலரும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் படித்துப் பட்டம் பெற்றவர்களாகத் தமிழ் பேசும் ஈழத்து மக்களிடையே இருக்கக்கூடும். ஆயினும், அவர்கள் எழுத்துலகில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. எம்.எம். மஹற்ரூப் என்ற இஸ்லாமியர் ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயமுள்ள பட்டதாரியாக 1960 களில் தன்னை இனங்காட்டிக் கொண்டார். இந்நூலாசிரியரும் ஆங்கில இலக்கியத்தை ஒரு பாடமாகப் படித்துப் பட்டம் பெற்றவராவர்.
தமிழர்கள் இஸ்லாமியர்கள் அறிந்திருக்கும் அளவிற்கு இக்காலச் சிங்களவர்களும், பறங்கியர்களும், இஸ்லாமியர்களும்

கே.எஸ். சிவகுமாரன் 39
ஏ.ஜே.க.வை அறிந்திருக்காவிட்டாலும், அந்நாட்களில் ஆங்கில வாசகர்கள் ஏ.ஜே.க.வை அறிந்து வைத்திருக்கக்கூடும். இது எப்படியென்றால் அவர், கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலத் தினசரியான டெயிலி நியூஸில் சிறிது காலம் இதழியலாளராகப் பணிபுரிந்தார். பின்னர் வடபகுதி கூட்டுறவுச் சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ வெளியீடான The Co-operator என்ற ஏட்டின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில இலக்கியப் பிரிவிலே ஆங்கில மொழிப் போதனாசிரியராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றார்.
இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஈழத்துச் சிறுகதைகள் dao Illustrated Weekly of India, Times of Ceylon, Ceylon Observer என்ற அந்நாளைய பத்திரிகைகளிலும், Third Eye என்ற ஆங்கிலச் சிற்றேட்டிலும் (இது நாடளாவிய விதத்தில் அறிமுகமாகிய ஏடு அல்ல) புது டில்லியிலிருந்து வெளியாகும் Little Magazine என்ற ஏட்டிலும் வெளியாகின என்று அறிகிறோம்.
இவை தவிர, ஏ.ஜே. சில ஈழத்துத் தமிழ்க் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவை Lute Song and Lament, A Lankan Mosaic, Favourite Fiction: Stories from South Asia - Part , Part II ஆகியவற்றில் இடம் பெற்றிருப்பதாகவும் நாம் அறிகிறோம்.
ஏ.ஜே. கனகரத்னா வெகு அண்மைக் காலத்திலேயே, இலங்கையின் தெற்குப் பகுதி ஆங்கில வாசகர்களிடையே ஓரளவு அறிமுகமானார். கொழும்பிலே, மனித இன ஆய்வுகளுக்கான அனைத்துலக மையம் ஒன்று (CES) இயங்கி வருகின்றது.

Page 22
40 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மூன்று தொகுதிகளை அவர் 65Te55g 666fluîlup5ăéDriff. Seo6) Neelan Tiruchelvam Commemoration Conference Papers (2004), Selected Writings of Regi Siriwardena: Volume 1: Literature and the Arts (2005), Selected Writings of Regi Siriwardena: Volume ill: Politics and Society (2006).
ஆங்கிலப் புலமை கொண்ட அமரர் ஏ.ஜே.க. தமிழிலும் எழுதக்கூடிய சிறந்த திறனாய்வாளராகவும் விளங்கினார். தமிழ்நாட்டுச் சிறுகதையாசிரியர்களுள் ஒருவரான மறைந்த மெளனி பற்றி "மெளனி வழிபாடு" என்ற தலைப்பிலே, தமிழ்நாட்டில் மறைந்துபோன "சரஸ்வதி" என்ற ஏட்டிலே ஏ.ஜே.க. எழுதிய கட்டுரை இலங்கை வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. அக்கட்டுரை தமிழ்நாட்டுச் சிற்றேடுகளில் சலசலப்பை ஏற்படுத்தியதாக நான் அறியவில்லை. தவிரவும் மெளனி ஒரு விசேஷமான எழுத்தாளராவார்.
ஏ.ஜே. கனகரத்னா தமிழில் எழுதிய நூல்கள் யாழ் வளைகுடாவில் ஆதர்ச நூல்களாக மதிப்பைப் பெற்றன. அந்நூல்களாவன, மத்து (97O, 2OOO), மார்க்சியவாதிகளும் தேசிய இனப்பிரச்சினையும் (1978), அவசரகாலம் 79 பகுதி 1 (1980), மார்க்சியமும் இலக்கியமும் சில நோக்குகள் (1981), எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும் (1980, செங்காவலர் தலைவர் ஜேசுநாதர் (2000), இவற்றிலே முதலிலும், கடைசியிலும் குறிப்பிடப்பட்ட நூல்களே என் கைகளுக்குக் கிடைத்தன.
ஏ.ஜே. கனகரத்னா மார்க்சியவாதியா என்பது எனக்குத் தெரியாது. அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக்

கே.எஸ். சிவகுமாரன் 41
கிட்டவில்லை. ஆயினும், அவரைப்பற்றி எழுதியுள்ள 15 பேரில் ஏழு பேர் வெளிப்படையாகவே மார்க்சியவாதிகள் என அறிமுகமானவர்கள். ரெஜி சிறிவர்தன, ஹர்ஷா குணவர்தன. எஸ்.வி. ராஜதுரை (தமிழ் நாட்டவர்), தமிழவன் (தமிழ் நாட்டவர்), கா. சிவத்தம்பி, எம்.ஏ. நுஃமான் (இவர் தமிழில் எழுதிய கட்டுரை ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது) ராஜன் பிலிப்ஸ் ஆகிய மார்க்ஸியவாதிகளைத் தவிர, செல்வா கனகநாயகம், எஸ். சிவநாயகம், சுரேஷ் கனகராஜா, ஏ.எஸ். பன்னிர்செல்வம், (தமிழ் நாட்டவர்), எம். புஷ்பராஜன் (இவருடைய தமிழ் கட்டுரை ஆங்கிலத்தில் மொழிமாற்றஞ் செய்யப்பட்டுள்ளது). நவாலியூர் நடேசன் (இவருடைய கட்டுரையும் ஆங்கிலத்தில் மொழிமாற்றஞ் செய்யப்பட்டுள்ளது), நிர்மலா ராஜசிங்கம், ஏ. சபாரத்தினம் ஆகியோர் ஏ.ஜே. கனகரத்தினாவை மதிப்பீடு செய்துள்ளனர்.
மறைந்த ஏ.ஜே.க. சில தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் திறனாய்வு செய்துள்ளார்.
அவ்வாறு பாக்கியம் பெற்றவர்கள் மு. பொன்னம்பலம் நோயில் இருத்தல்) தமிழ் நாட்டு ஜெயமோகன் (விஷ்ணுபுரம்), எம். புஷ்பராஜன் (மீண்டும் வரும் நாட்கள்). எஸ். பத்மநாதன் (ஆபிரிக்கக் கவிதைகள், தென்னிலங்கைக் கவிதை), சாந்தன் (The Sparks, in Their Own Worlds), 6T6io. 6egulfstaff (Tears of the Child). asm. daggubi (Being a Tamil and Srilankan), 676io. pg56O1866öT 6td. ssDeo (Tamil Vellalahs of Jaffna, Srilanka), g. flapsig,6öT (When Memory Dies), ấuumLb 6NaF6öo6augeGoog (Funny Boy), Ggm gnól6of 6gsp6T6ioLD6öT (To Do Something Beautiful), 6ps dyselfig6OT (Among my Souvenirs), 66io6so eGU(3Fasp (Bringing Tony Home),

Page 23
42 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
asurfusio alsTriduurt Driftig,666io (One Hundred Years of Solititude), & eLiSigibiTuasub (Selected Poems), 6p3 d56Irig56OT (The Pure Water of Poetry, The Protean Life of Language)
ஏ. ஜே. கனகரத்னாவின் ஆங்கில எழுத்தைப் பின்வருபவற்றிலும் காணலாம். முன்னர் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு அவர் எழுதிய முன்னுரை, அறிமுகங்கள், ஏ.ஜே.க. வே சில கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அவையாவன: Tambi and Poetry London, Some Heretical Thoughts On The Proposed Eduational Reforms, Naatsaar Veedu Vs Proscenium Stage, Annai Itta Thee: Some Impressions, Some Reflections, Kimathi's "Trial' Was No Ordeal, From Decaying Aristocrats to Lumpens: Cine Yatra - A festival of Sri Lankan Cinema, A One - Woman Show: "Rani Moorthy's Pooja, The Man Who Said "NO"
ஆங்கிலம் தெரிந்த தமிழ் பேசும் எழுத்தாளர்கள், திறனாய்வாளர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள், ஆய்வறிவாளர்கள் அனைவருக்கும் இது ஒரு அரிய நூல் மாத்திரமன்றி, ஏ.ஜே. கனகரத்னாவின் மகிமையைப் புரிந்துகொள்ளவும் வகை செய்கிறது.
 

கே.எஸ். சிவகுமாரன் 43
தென்கிழக்கின் அக்கரைப்பற்றில் பிறந்து தென்மேற்கின் பேருவளையில் நிலைகொண்டு தனது சுயதேடலினால் ஆய்வாளர்களுக்குப் பயன்தரும் கட்டுரைகளையும், அபிப்பிராயங்களையும் 55 வருடங்களுக்குக் குறையாமல் தந்துகொண்டிருப்பவர் ஏ. இக்பால் (1.12.1938) எனப்படும் முதுநிலை முற்போக்காளராவர். இவரை ஒரு மார்க்சியவாதி எனவும் சிலர் உரிமை கொண்டாடுவர். இவரைக் கவிஞராகவே பலர் காண்பர். சிலர் திறனாய்வாளர் என்றும் மதிப்பிடுவர்.
ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் தன்னாலியன்ற பங்களிப்புகளைச் செய்துள்ளார் என்பது வரலாற்றுச் செய்தி. அண்மையிலே இவருடைய சேவைகளையும் வாழ்க்கை முன்னேற்றங்களையும் பதிவு செய்யுமுகமாக தடித்த அட்டையுடன், நிறைய நிழற்படங்களுடன் ஒரு நூல் 192 பக்கங்களைக் கொண்டு வெளிவந்திருக்கிறது.

Page 24
44 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
நூலகர் பெயர் : ஏ. இக்பால், அயிம்பது வருட இலக்கிய ஆவணம், தர்காநகர் பாப்பு வட்டம் இதனை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ் / ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் ஏ. இக்பாலின் ஆளுமையை வெளிக்கொணர்கின்றன.
இந்த நூலிலே, ஏ. இக்பால் அவர்கள் பற்றிய பிரமுகர்களின் கணிப்பு O7-152 பக்கங்களில் வெளியாகியுள்ளன. ஏனைய பக்கங்கள் இக்பால் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் நிழற்படங்கள், எழுதிய நூல்கள், தொகை நூல்கள், பெற்ற பரிசுகள், பெற்ற விருதுகள், ஆக்கங்கள் பற்றிய ஆய்வுகள், பத்தி எழுத்துக்கள் (இந்த வகையான எழுத்து அங்கீகாரம் பெறுவது குறித்து எனக்கு மகிழ்ச்சி), ஆய்வுகள், கவியரங்குகள், கவிதைகள், பொழிவுகள், தொலைக்காட்சிப் பங்களிப்பு, சேவைகள் என்ற தலைப்புகள் மூலம் இவருடைய பங்களிப்புகளை நாம் அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
ஈழத்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் பற்றிய மதிப்பீடுகள் அடங்கிய பிரத்தியேக நூல்கள் இப்பொழுது வெளிவரத் தொடங்கியுள்ளன. இவற்றின் பெறுபேறு என்னவென்றால் இவை ஆவணங்களாகப் பலருக்கும் உதவுகின்றதென்பதாகும். வசதி படைத்தவர்கள் தாமே தமது பங்களிப்புகளை ஆவணமாகப் Jörfäs 56oT Lb. அவ்வாறு செய்ய இயலாதவர்கள் பிறர் முயற்சியினால் தமது பங்களிப்புகள் வெளிவரக் காத்திருக்க வேண்டியுள்ளது.
LL LLL LLLL L0 LL L0L LLLLLzLLLLYLLLL 0L L L L L L TL LL0L LLL LLL LLL LLLL LSL LLL LL LYLLLSLLLLLYLzLY LLLL LLLLLL

கே.எஸ். சிவகுமாரன் 45
இந்த நூலிலே என் மனதில் பதிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
O பல நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு ஒன்று திரட்டப்பட்ட அறிவுத் தொகுதிக்குச் சமமான அறிவுத் தொகுதி 19 O O - 2 O Ο Ο 85 st6D பகுதியில் தனியே திரட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
O அறிஞர் சித்திலெப்பை 1882 இல் தொடங்கிய ‘முஸ்லிம் நேசன் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினார். இலங்கை முஸ்லிம்களின் எழுத்துத்துறை முன்னோடி அவருடைய "அசன்பேயின் கதை" என்ற நாவல் தமிழில் நமக்குக் கிடைத்த முதல் நாவலாகும்.
இக்பாலின் கவிதைகளில் உணர்வைவிட சிந்தனைக் கதை முனைப்பாக இருக்கும். சிறுகதை வடிவத்தில் அவருக்குள்ள தேர்ச்சியை அவருடைய "மாயத்தோற்றம்" கதைகள் காட்டுகின்றன.
சமூகத்தைப் பற்றிய அவரது பார்வை விசாலமானது. அவர் சமூக அவலங்களை நினைத்து கவலைப்படுத்துவதற்குப் பதிலாக அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கொள்கையோடு இலக்கியம் படைத்தார்.
o ஏ. இக்பாலின் முதலாவது நூல் "முஸ்லிம் கலைச்சுடர் மணிகள்" இலக்கிய உலகின் தகவல் களஞ்சியங்களாக மூவர் இருப்பதாக முன்னர் ஏ. இக்பால்

Page 25
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
சொல்வார். அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், பி. ராமநாதன் இன்று தகவல் களஞ்சியமென்று சொல்வதாயின் ஏ. இக்பாலையே சொல்லவேண்டும்.
பேராசிரியர் சிவத்தம்பி, இளங்கீரன், வன்னியகுலம், அப்துஸ் ஸமது, ஞானசேகரன் போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகளை ஆய்வு செய்ததோடு, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தமிழிலக்கியப் பணிகள், கலைப்பணிகள் பற்றியும் பல ஆய்வுக் கட்டுரைகளை இக்பால் அவர்கள் எழுதியுள்ளார்.
O விமர்சனம் வேறு, ஆய்வு வேறு என்ற வித்தியாசத்தை இக்பால் நன்கு தெரிந்து வைத்திருந்தார். கே. விஜயனின் "மனநதியின் சிறு அலைகள்" என்ற நாவலை சிதம்பர ரகுநாதனின் பஞ்சும் பசியும் நாவலுடன் ஒப்பிட்டு நோக்குகிறார் ஏ. இக்பால், ஏ.எம்.நஜிமுதீன் எழுதிய "முஸ்லிம்களும் கலவரச் சூழலும்" என்ற நூலின் ஆய்வுகளே இக்பாலின் ஆய்வுரைகளில் குறிப்பிடத்தக்கது.
O இலங்கையில் ஆகக் குறைந்த வயதில் சாகித்திய மண்டலப் பரிசிலை வென்ற எழுத்தாளர்களுள் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் முதலிடம் பெறுகின்றார்.
O இக்பாலை நாட்டின் கலைமுதுசங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தி வைத்திருக்கின்றேன்.
O கவிதைகள், சிறுகதைகளுக்கும் அப்பால் இலக்கியத் தேடல்களில் தன்னை Lólas 6 Lb

கே.எஸ். சிவகுமாரன் 47
ஆழ்த்திக்கொண்டவர் இவர். இந்த இலக்கியத் தேடல்கள் இவரை ஒரு வரலாறு தேடும் இலக்கியவாதியாக மாற்றிவிட்டுக் கொண்டு வந்துள்ளது. அதற்கான மூலம், ஊற்றுக்கண் இவருடைய வாசிப்பின் சக்தியே ஆகும்.
நண்பர் இக்பால் ஏனைய இடதுசாரி முஸ்லிம் எழுத்தாளர்களைவிட தனித்துவமானவர். இடதுசாரிக் கவிஞர்களான தோழர்கள் பசுபதி, இ. முருகையன், சில்லையூர் செல்வராஜன், மருதூர்கனி, சுபத்திரன், சாருமதி ஆகிய படைப்பாளிகளிலிருந்து நண்பர் இக்பால் படைப்புத் திறனில் வேறுபட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய பேரவை என்ற பெயரில் சில மூத்த எழுத்தாளர்கள் புனரமைத்தனர். இது முற்போக்கு இலக்கிய வரலாற்றின் ஒரு தொடர்ச்சியே.
அக்கால முற்போக்கு எழுத்தாளர்களில் அதிகமானோர் இடதுசாரிப் போக்குடையவர்களாக இருந்ததால் இக்பாலை ஒரு மார்க்சியவாதியாகப் பலர் பிழையாக அடையாளப்படுத்தினர். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவர் ஒலித்தார். இஸ்லாத்தில் அவர் மிகுந்த அறிவும் பற்றும் மிக்கவர் என்பதை அவரது நண்பர்கள் நன்கறிவார்கள்.
1960 களில் கல்முனையில் ஏ. இக்பால், மருதூர்க் கொத்தன், எம்.ஏ. நுஃமான், மருதூர்க்கனி, சண்முகம் சிவலிங்கன், சி.பி. சத்தியநாதன், மருதூர் வாணன்,

Page 26
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
மு. சடாட்சரம், மருதமுனை மஜீட் ஜின்னா ஷரிபுத்தீன், யு.எல். ஆதம்பாவா எனப் பலர் சிறுகதைத் துறையில் ஈடுபாடு காட்டியமை குறிப்பிடத்தக்கது.
O இக்பால் தோற்றத்தில் கடினப் போக்குடையார் போல் காட்சியளித்தாலும் உள்ளத்தில் ஆழமான அன்பு நெஞ்சம் GasmedioTL6ft. (A ROUGH DAMOND)
'எல்லோரும் வாழப் பிரார்த்திப்போம் இதுவே அவரது சுலோகம்.
எச்.எம்.பி. முகைதீன், கா. சிவத்தம்பி, எஸ். பொன்னுத் துரை, அண்ணல், அந்தனிஜீவா, மு. முகமது சமீம், அ.ஸ. அப்துஸ்ஸகமது, ஏ.ஆர்.எம். மஹ்ரூப் போன்ற ஈழத்து எழுத்து சாம்ராஜ்ஜியத்தின் ஜாம்பவான்களால் இக்பால் ஒரு சிறந்த கவிஞர் என்றும் விமர்சகர் என்றும் 70, 80களிலேயே புகழப்பட்டார்.
O கல்வி சார் நிகழ்ச்சியைக் கற்பவர், கற்பிப்பவர் காதில் விழ வானொலியைப் பயன்படுத்திய பாங்கு வியந்து கூற வேண்டிய ஒன்று.
பல்கலைக்கழகங்களில் இவரது இலக்கியம் பாடத்திட்டத்தில் புகுத்தப்படல் வேண்டும்.
() திக்குவலை கமால், தர்காநகர் ஸபா ஹைருன் பஷார், சுபியான் எம்.ஸாலி, அரும்பு ஹாபீஸ், தர்காநகர் றம்சியா போன்றோர் இவரது பண்ணையில் வளர்ந்த கவிஞர்களும் எழுத்தாளர்களும்.

கே.எஸ். சிவகுமாரன் 49
இலங்கை அரசின் அனுசரணையுடன் தான் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அரச செல்வாக்கு மிக்க முஸ்லிம் முற்போக்கு எழுத்தாளர்கள் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டதை அவதானித்து ஏ. இக்பால் எரிமலையெனக் குமுறி எழுந்தார்.
உபகாரம் என்பது பொருளைக் கொடுப்பது மட்டுமா என்ன? அறிவை, அதற்கான தேடலைத் தருவதும் உபகாரம்தான். அந்த வகையில் இக்பால் சேர் சிறந்ததோர் e Lastf. -
வாழ்க்கையில் எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிக்காத இக்பால் அவர்கள் இன்னும் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.
கவிஞர் இக்பால் வார்த்தைகளுக்குள் அடங்காதவர்.
மேற்சொன்ன மேற்கோள்கள் யாருடையவை என்பதறியவும் இந்தத் தகவற் களஞ்சியத்தைப் படித்துப் பயன்பெறவும் இந்த நூலை இலக்கியவாதிகள் அவசியம் படித்துப் பயனடையலாம் eleibeo6T.

Page 27
50 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
'cDóUIó)vogU)Jüb Gðja&UUfl' உளவியல் கட்டுரைகள்
இந்த நாட்டின் முக்கிய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான கோகிலா மகேந்திரன் எழுதிய 17 கட்டுரைகளைக் கொண்டது மனமெனும் தோணி என்ற உளவியல் சார்ந்த நூல். 132 பக்கங்களைக் கொண்ட இந்தப் பயனுள்ள நூலை சேமமடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. மனநல மருத்துவர் வைத்திய கலாநிதி எஸ். சிவதாசன் அணிந்துரை எழுதியிருக்கிறார். நூலாசிரியரின் திறனை மெச்சி அவர் எழுதியிருப்பது பயனளிக்கத்தக்கது. நூலாசிரியரின் 'என்னுரையும் வாசகர் அவதானிக்கத்தக்கது.
அணிந்துரையில் ஒரு பகுதி: ‘ஒரு விஞ்ஞான ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, அதே கல்விப்புலத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளராக உயர்ந்து, தனது தொழிலில் உச்ச நிலையை அடைந்த பெண்மணி என்ற அளவில் திருமதி கோகிலா மகேந்திரன் குறிப்பிடத்தக்கவர்.
 

கே.எஸ். சிவகுமாரன் 51
'கல்வித் துறைக்குச் சமாந்தரமாக அவர் உளவியல் பற்றியும் உளவளத்துணை பற்றியும், மனவடுவுக்கு அளிக்கப்படும் உளச்சிகிச்சை பற்றியும் கற்று, அவற்றில் பயிற்சி பெற்றுத் தன்னை வளர்த்துக் கொண்டார் என்பது இங்கு முக்கியமான விடயம். உளவியல் பற்றிய விளக்கங்களைப் பலரும் பலவிதமாக முன்வைக்கும் இன்றைய கழலில், தனது தொழில் துறையுடன் மட்டும் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளாமல் அதற்குமப்பால் நெருக்கீடுகள் இருந்ததும் இடம்பெயர்வுகளை வாழ்வின் அங்கமாகக் கொண்டதுமான ஒரு சமூகத்தில் இருந்து கொண்டு உளவியலோடு தொடர்புபட்ட விடயங்களைக் கற்றுத் தேர்ச்சியும் பெறுவது மிக முக்கியமான விடயம்
இவ்வாறு சிவதாஸ் குறிப்பிட்டிருப்பதுடன் கோகிலா, புனைகதையாளர், நாடக கலாவித்தகர், ஆசிரியர், உளவள ஆலோசகர், பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆகியன அவருடைய ஆளுமைக்கூறுகள் என்கிறார்.
கவித்துவமாக அமைந்த மனமெனும் தோணி'யைப்பற்றி நூலாசிரியர் எழுதுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எமது இந்து சமயத்தில் குறிப்பிட்டபடி மனம் எனும் தோணியை உறுதியாகப்பற்றிக் கொள்ளாவிட்டால் வாழ்வு எனும் பெருங்கடலை மகிழ்வுடன் கடக்க
(Uppulungs.
மற்றொரு மேற்கோள் : "ஒருவரோடு பேசுகிறபோது அவரது முகத்தைப் பார்த்துப் பேச வேண்டும். வேறு எங்காவது

Page 28
52 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
பார்த்துக்கொண்டு பேசுவது கள்ளத்தனத்தைக் குறிக்கும். அவரை நோக்கி சற்று அறிந்து கதைப்பது நல்லது. நீங்கள் சொல்வதை நான் மிகுந்த அக்கறையுடன் செவிமடுக்கின்றேன்' என்ற தகவலை அது தரும். ஒத்துணர்வு பதில்களை வழங்கவேண்டும். ஒத்துணர்வு என்பது ஒருவரது தனிப்பட்ட அலகில் புகுந்து அதைத் தனக்குப் பழக்கமான இடமாக்கிக் கொள்வது என்று சொல்வார்கள்' என்கிறார் கோகிலா. இதனைத்தான் EMPATHY என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள்.
நிற்க: எனது சொந்த அனுபவம் ஒன்றை இங்கு கூறவிரும்புகிறேன்.
என்னை நண்பர்கள் என்று கூறிக்கொள்ளும் பலர் என்னுடன் தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் நண்பர்களாக நான் கருதுவதில்லை. ஆயினும் Acquaintance என்ற முறையில் அவர்களுடன் நட்பாகவே நான் உரையாடுவேன். சிலரிடம் கைகுலுக்கும்பொழுது அவர்கள் தமது பாதி விரல்களைத் தான் என் கைகளுடன் இணைப்பார்கள். இதிலிருந்து அவர்களுடைய கள்ளத்தனம் எனக்குப் புரிந்துவிடும். நானும் எச்சரிக்கையுடன் அவர்களுடன் பழகுவேன்.
இனி, நூலாசிரியரின் 'விழிப்பு மாற்ற நிலை தூக்கம்' என்ற கட்டுரைக்கு வருவோம்.
நித்திரை என்பது ஒரு தனிப்பட்ட கலப்பில்லாத உடற்தொழிலியல் நிலையில்லை' என்கிறார் கோகிலா. நித்திரையின் படிமுறைகளை ஆதாரங்களுடன் விளக்கும் அவர் Non-Rem நித்திரையின் போது உண்மையான அர்த்தமுள்ள சிந்தனைகள் தொடருகின்றன என்கிறார்.

கே.எஸ். சிவகுமாரன் 53
அதன் பின்னர் Sigmund Freud இன் கூற்றை விளக்குகிறார். அதாவது 'கனவுகள்' என்பவை எமது சாதாரண பிரக்ஞை நிலையில் பாவிக்கப்படும் மொழி அல்லாத இன்னொரு குறியீட்டு மொழியில் ஆழமான அர்த்தமுள்ள செய்திகளைத் தருவன' என்பதே Freud இன் கூற்றாகும்.
இன்னுமொரு அம்சத்தை கோகிலா இவ்வாறு அழகாக எடுத்துச் சொல்கிறார்:
தடை, கட்டுப்பாடு, அமுக்கம், பயம் ஆகியவை காரணமாக எமது வாழ்வுப்பாதையில் சிதறிஇருக்கும் பகுதிகளை மறுத்து மறந்து எமது அடி மனதில் புதைத்து வைத்துள்ளோம். இவை யாவும் மீண்டும் எமது வாழ்வில் நுழைய அனுமதி கேட்கின்றன. பகல் வெளிச்சத்தின்போது மனமானது எண்ணங்களையும் இயல்பூக்கங்களையும் பார்க்க மறுத்துத் தணிக்கை செய்து கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. இவை இரவின் தூக்கத்தில் மாறுபட்ட உருவத்தின் நிழல்களாக வருகின்றன. எமது பயங்களும் தீர்க்கப்படாத ஆசைகளும் எமது வாழ்வின் கதைகளாக எம்மை மையப் பாத்திரமாகக் கொண்டு எழும்' என்பது கோகிலாவின் 666. Taisals b.
இந்த இடத்திலே இன்னொரு தகவலை இங்கு பதிவு 68 tilusort b. இன்றைக்கு அரை நூற்றாண்டுக்கு முன் கண்டியிலிருந்து ஒரு வார இதழ் வெளிவந்து இடையில் நின்று போனது. அந்த இதழிலே உளவியல் சம்பந்தமாகக் குறிப்பாக Sigmund Freud இன் வியாக்கியானங்களை விளக்கி ஒரு கட்டுரைத் தொடர் 'பிரம்மஞானி' என்பவரால் எழுதப்பட்டது. அந்தப்

Page 29
54 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
புனைபெயருக்குச் சொந்தக்காரராக இருந்தவர் வேறு யாருமல்லர். LD60DigiGSungor Anton S. Balasingam 6Tairus(p.
நிற்க, அருமையான பல தகவல்களைத் தரும் இந்த நூலிலே பல கட்டுரைகள் எனக்குப் பயன்தருபவையாய் இருந்தன.
கவர்ச்சியான எழுத்து நடை கொண்ட கோகிலா மகேந்திரன் தமது புனைகதை எழுதும் ஆற்றலையும் பயன்படுத்தி மிக சுவாரஸ்யமாகத் தமது முதலாவது கட்டுரையை ஆரம்பிக்கிறார்.
இரண்டாவது கட்டுரை குறிப்பாகப் பெண்களாலும் உண்மை நிலையை அறிய ஆண்களாலும் அவசியம் வாசித்து அறிய வேண்டியதொன்று.
மூன்றாவது கட்டுரையும் குழந்தை வளர்ப்பு எப்படியமைய வேண்டுமென்பதை உதாரணங்களுடன் விளக்குகிறது.
'கல்வி ஒரு பயனுள்ள ஆயுதம்' என்ற கட்டுரையில்
நூலாசிரியர் குறிப்பிடும் ஒரு பகுதியை மின்னியக்க ஊடகத்தினர் கவனத்திற்குக் கொண்டு செயற்பட வேண்டும். 41ஆம் பக்கத்தில் இவ்வாறு கூறுகிறார் ஆசிரியர்.
'தொலைக்காட்சி நிலையங்கள் வன்முறை நிரம்பிய படங்களைக் காட்டி குழந்தைகளில் மனவடுவை ஏற்படுத்துவதை விடுத்து கல்விசார் நிகழ்வுகளை ஒளிபரப்பும் நிலையும் அதை மாணவர்கள் விரும்பிப் பார்க்கும் மனப்பாங்கும் தோற்றம் பெறவேண்டும். இன்னொரு வகையில் சொன்னால் மாணவர்களின் சூழல் பெளதீகச் சூழல், தகவல் சூழல், அரசியல் சூழல், ஒழுக்கவியற் கழல் ஆகியவை கற்பதற்குப் பொருத்தமாய் அமைய வேண்டும்.'

கே.எஸ். சிவகுமாரன் 55
இவ்வாறு ஒவ்வொரு கட்டுரையும் பயனளிக்கக் கூடிய தகவல்களையும் விளக்கங்களையும் அறிவுறுத்தல்களையும் தருகிறது.
சுயகணிப்பு என்றால் என்ன என்பதை ஆறாவது கட்டுரையில் 44 ஆம் பக்கத்தில் கோகிலா மகேந்திரன் இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்:
‘எங்களைப் பற்றி நாங்கள் கொண்டிருக்கும் எண்ணம் - எமது தோற்றம், நுண்மதி, செயற்திறன், எண்ணங்கள், உணர்வுகள், ஆற்றல்கள், நடத்தை, புகழ், உடல்நலம், வலிமை, உளநலம், சமூகத்துடனான இசைவாக்கம், ஆன்மீக நிலை என்று ஒட்டுமொத்தமாக நாம் யார் என்று நாமே நினைக்கிறோம் என்பது உன்னத ஆளுமை உள்ளவர்களிடம் இந்தச் சுயகணிப்பு மிக உயர்வாக இருக்கும் என்கிற அதேநேரம், அது உண்மையாகவும் இருக்க வேண்டும்' எனக் கட்டுரையாசிரியர் வலியுறுத்துகிறார்.
45ஆம் பக்கத்தில் நூலாசிரியர் எழுதும் பகுதிகளை நானும் ஏற்றுக் கொள்கிறேன். அவர் கூறுகிறார்:
நல்ல ஆளுமை உடைய மேதைகள், சான்றோர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களிடம் உண்மையில் உயர்வான சுயகணிப்பு இருக்கும். ஆனால், அவர்கள் மற்றவர்கள் செய்யும் தவறுகளைப் புரிந்து கொள்கிறார்கள். அந்தந்தத் தவறுகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். நாம் தவறு செய்யும்போது பொருத்தமான இடத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறார்கள். திரும்பவும் அந்தத் தவறு நேராதபடி பார்த்துக் கொள்கிறார்கள். தமது எண்ணங்கள், உணர்வுகள், நடத்தை

Page 30
56 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
ஆகியவற்றுக்கு அவர்களே பொறுப்பு ஏற்றுக்கொள்கிறார்கள். மற்றவர்கள் தமக்குத் தீமை செய்ய முடியாது பாதுகாப்பான இடத்தில் தம்மை வைத்துக்கொள்கிறார்கள்.
இது தவிர,
'அன்பு என்றால் என்ன?" என்று 73ஆம் பக்கத்தில் இவ்வாறு நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 'ஒருவரது வளர்ச்சி, விருத்தி, மகிழ்ச்சி ஆகியன இன்னொருவருக்கு மிக அவசியமாக இருக்கும் நிலையே அன்பு எனப்படும்.'
இன்னொரு கூற்று - "சமூகத்தில் ஒரு மனிதர் வகிக்கும் இடம் குடும்பத்தில் அவர் வகிக்கும் இடத்ைைதவிட முக்கியம் பெறுவது குடும்ப முறிவுக்கு ஒரு காரணமாகலாம்.'
1Oஆவது கட்டுரையின் கடைசிப் பகுதி நல்ல ஆலோசனையைத் தருகிறது. நீங்களே படித்துப் பாருங்கள்.
இன்னுமொரு கட்டுரையில் மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை நூலாசிரியர் தருகிறார். அவை ஆளுமை பற்றியது.
Personality என்ற சொல்லுக்கு ஆளுமை என்ற சொல் பயன்பட்டு வருவதை நாம் அறிவோம். ஆசிரியர் கூறுகிறார், 'ஆளுமை என்பது ஒருவரின் ஆற்றல்கள், நம்பிக்கைகள், மனப்பாங்குகள், கொள்கைகள், பழக்க வழக்கங்கள், உணர்ச்சித் தூண்டற்பேறுகள், மனநிலைகள், அவரிடத்திற் செயற்படும் சக்தி மட்டங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகவே கருதப்படுகிறது.

கே.எஸ். சிவகுமாரன் 57
இந்த நூலிலே அடங்கியுள்ள கடைசி மூன்று கட்டுரைகளும் கோகிலா மகேந்திரனின் வியத்தகு அறிவையும் கையாண்ட பொருள்கள் தொடர்பான புலமையையும் அவற்றை எடுத்துக்கூறும் விதமும் அவருடைய ஆளுமையையும் மேலும் காட்டிநிற்கின்றன.

Page 31
58 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
மேனாட்டில் Ballet(B) 'பலே' என்றொரு வகை நடனம் அரங்கேற்றப்படுவது உண்டு. பலே வேறு. தமிழில் நாட்டிய நாடகம்' வேறு என்று காரண காரியத்துடன் விளக்கியிருக்கிறார்
காலஞ்சென்ற நமது இ. இரத்தினம். அது தொடர்பாகவும் பரத நாட்டியம் போன்று ஏனைய நடன வகைகள் தொடர்பாகவும் அவர் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதியவை தமிழில் முன் மாதிரியானவை.
அவற்றை நீங்கள் அவருடைய நாட்டிய அரங்கு' என்ற நூலில் படித்துப் பார்க்கலாம். இந்த நூலைத் தொகுத்திருப்பவர் அவர் துணைவியாரான ஞானம் இரத்தினம். சென்னையிலுள்ள மித்ர ஆர்ட்ஸ் என்ட் கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆமாம், யார் இவர்கள் என்று இன்றைய இளம் வாசகர்கள் வினவக்கூடும்.
 

கே.எஸ். சிவகுமாரன் 59
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினி போன்ற ஊடகங்களில் உயர் பதவி வகித்த ஞானம் இரத்தினம் தனது கணவரை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்.
பிரித்தெடுக்கப்பட்ட பகுதிகள்:
"இசைவேளாளர் பரம்பரை வேரூன்றிய இணுவில் கிராமத்தில் பிறந்தவர் இளையதம்பி இரத்தினம். தமிழும் சைவமும் தன்னை ஈர்த்தது போல் தன் பிறந்த மண்வாசனையால் இசை ரசனையும் தனக்கு வசமாகியது என்பார். இதன் பலனாகவே அவர் வானொலியிலே பல இசைச் சித்திரங்களும் இசை நாடகங்களும் எழுத முற்பட்டார். இதைத் தொடர்ந்து நாட்டியங்களுக்கு ஏற்ற பிரதிகள் தேவைப்பட்டபோது மிகுந்த ஆர்வத்துடன் அப்பணியில் ஈடுபட்டார். அவர் எழுதியவற்றுள் காலத்தால் அழிவுறாது எமக்குக் கிடைத்த 12 நாட்டியங்களின் பிரதிகளை இத் தொகுதியிலே சேர்த்துள்ளோம்"
சளி, இனி இ. இரத்தினத்தின் பார்வைக்கு வருவோம். அவர் எழுதுகிறார்.
"Ballet என்னும் பதம் சுத்த நிருத்தத்தையும் குறிக்கின்றது. அதை அடிப்படையாகக் கொண்டு இசை, ஊமை நடிப்பு, ஓவியம் முதலியவற்றினால் சொல்லி ஒரு கதையைக் கூறுவதையும் குறிக்கின்றது."
பரத நாட்டியம் என்னத்தைக் குறிக்கின்றது? "நாட்டியம், நிருத்தம், நிருத்தியம் எனும் சொற்களை உற்று நோக்கின் நாட்டியம் என்பது ஒரு நாடகம் என்பதும் அந்நாடகம் ஆடலால் ஆற்றப்பட்டது என்பதும் புலனாகும்."

Page 32
60 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
பலேயையும் பரதநாட்டியம் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்த இரத்தினம் இரண்டிலும் இசை, சுத்த நிருத்தம், ஊமை நடிப்பு ஆகியன உண்டு என்று விளக்குகையில் ஆங்கில அபிநயமும் சாத்வீக அபிநயமும் சேர்ந்து ஊமை நடிப்பாகின்றன என்றும் பலேயின் ஓவியம் பரத நாட்டியத்தில் ஆகார்ய அபிநயம் (ஆடை, அணி) ஆகின்றது என்றும் குறிப்பிடுகிறார்.
Balet (பலே) பற்றி எழுதும் ஆசிரியர் பொருத்தமான முறையில் விளக்குகிறார். பரத நாட்டியம் கால்கள் தவிர்ந்த மேற்பகுதிகளுக்கு அதிகம் அப்பியாசம் கொடுக்கின்றது. பலே கால்களுக்கு அதிகம் அப்பியாசம் கொடுக்கின்றது. பரத நாட்டியத்தில் கால்கள், கைகள், கண்கள், உடலின் அங்கம், உபாங்கம், பிரத்தியங்கம் முதலியவை ஒன்றிணைந்து தொழிற்படும். ஆயின் பலேயில் அங்க நிருத்தம் முக்கியமாகக் கால் தொழிலில் தலையெடுத்து நிற்கும். இதில் துள்ளல், சுழலல், பாய்தல், அமைதியாகக் குதித்தல், ஒரு கால் விரல்களில் நின்று சுழல் ஆகியன முக்கிய இடம் வகிக்கின்றன.
நாட்டிய நாடகம் பற்றி மேலும் அறிய இந்நூலில் இ.
இரத்தினம் எழுதிய கட்டுரையைக் குறிப்புகளுடன் கூடிய அவர் எழுதிய பின்வரும் நாடகப் பிரதிகளையும் படித்துப் பாருங்கள்.
இரதி பூசை, ஆச்சியர் குரவை, மணிமேகலை, சிவதாண்டவம், அமரகீதம், கண்வழி நுழைந்த கள்வன், பராசக்தி மகிமை, தூபுர நாதம், தெய்வத் திருமணம், முத்தமிழின் தோற்றம், உழவர் நாட்டியம், மார்கழி மங்கையர் ஆகியன இவர் எழுதிய நாடகங்களாகும்.
LL LLL LLL LLLLYYLLLL LLL L0L 0L L0 LL LSL LLL LLL LLL LLLL LSL 0 L0L LLL LLL Y 0L L LL0SL LL LLL LLLL LL LLL LLLL LL L L

கே.எஸ். சிவகுமாரன் 61
அமரர் இ. இரத்தினம் எழுதிய மற்றொன்றையும் மேற்சொன்ன அதே நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். நூலின் பெயர் நாடக அரங்கு' இதுவும் ஞானம் இரத்தினத்தினால் தொகுக்கப்பட்டுள்ளது. பதிப்பாளர் பொன் அநுர குறிப்பிட்டது போல Oedipus Rex (FFIpůLu6io LD6öT6oT6ör), Othello, Lady Widemere ébáßuu மூன்று நாடகங்களில் தமிழாக்கம் ஒரு நூலில் கிடைப்பது தமிழுக்குக் கிடைக்கும் அரிய சொத்தாகும்.
எளிமையான தோற்றத்தில் தமிழனாக (வேட்டி, இந்திய பாணியில் 'பாலாமணி' பெனியன் ஆகியவற்றை அணிந்து வந்தவர்) உத்தியோக அலுவல்கள் மொழித் திணைக்களத்தில் உயர் பதவி வகித்தவர்.
'பா' என்ற கவிதை இதழை முருகையனுடன் இணைந்து நடத்தியவர். தமிழில் வேரூன்றி பிறமொழி இலக்கியங்களில் பரிச்சயம் கொண்டவர். அவருடைய சமஸ்கிருத, ஆங்கில மொழியறிவு அவர் பார்வைகளை விரித்துப் பகுத்தாய்வு செய்யும் இலக்கியத் திறனாய்வாகவும் அமைந்தது.
அந்நாளைய சாகித்திய அகடமி நடத்திய கவிதை அரங்கிலே அந்நாட்களில் நான் ஈடுபாடு கொண்டிருந்த புதுக்கவிதைகளைப் படிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு நான் இணங்கியிருந்தேன். இரத்தினம் அவர்கள் புதுமையிலும் பழமையிலும் தெளிவான கருத்துக்களைக் கொண்டிருந்தார். 1916 இல் பிறந்து 1981இல் மறைந்துவிட்டார். அவர் இழப்பு ஈழத்து தமிழ் இலக்கிய உலகுக்குக் கையொடிந்த நிலையை உண்டு பண்ணியிருக்கிறது எனலாம்.

Page 33
62 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
இந்த நாடகத் தொகுப்புக்கு நாடக வசனம்' என்ற தலைப்பிலே முன்னுரை போன்று ஞானம் இரத்தினம் ஒரு கட்டுரையை வரைந்துள்ளார். அதுவும் கவனத்திற்குரியது. அதிலிருந்து சில பகுதிகள் உங்கள் அவதானிப்பிற்குரியவை.
"எடுத்த நாடகத்தின் கதையை, கருவைப் படிப்படியாக விரிய வைக்கும் சாதனமாக வசனம் அமைய வேண்டும். உண்மையில் நாடகத்தின் செம்பாகம் சூழ்ச்சியும் (Plot) உரையாடலுமே சூழ்ச்சி உரையாடல் என்று இரண்டையும் விதந்து கூறும்பொழுது உரையாடல் மூலமாகவே சூழ்ச்சி புல்ப்படும் என்பதையும் உரையாடல் இன்றிச் சூழ்ச்சி மலராதென்பதையும் நாம் மனதில் பதிய வைத்தல் வேண்டும்.
நடையும் பாணியும் அவ்வுரையாடலை யார் மேடையில் கையாளுகின்றாரோ அவரின் குணாதிசயத்தையும் பொறுத்தது. சம்பாஷணையோடு இயைந்தவர் மூவர். எழுத்தாசிரியர், நடிகர், கலைஞர் என்போர். இவர் நான்காவது ஆள் நெறியாளர்"
மேலும் விபரங்களறிய இந்நூலைப் படித்துப் பாருங்கள்.
அயர்லாந்தைச் சேர்ந்த ஆங்கில நாடகாசிரியரான Oscar Wilde எழுதிய நாடகங்களுள் ஒன்றான 'வின்டதர் மெயரின் விசிறி என்ற நாடகத்தை 'மேகலையின் விசிறி' என்ற தலைப்பிலே இ. இரத்தினம் தமிழாக்கம் செய்தார். அந்நாடகம் 1964இல் கொழும்பில் மேடையேற்றப்பட்டது. நான் பார்த்து மகிழ்ந்து மதிப்புரையையும் எழுதியிருந்தேன்.

கே.எஸ். சிவகுமாரன் 63
தலைசிறந்த உலக நாடகங்கள் வரிசையில் Sophocles எழுதிய Oedipus Rex என்ற கிரேக்க நாடகம் தலைசிறந்த துன்பீற்று நாடகங்களிலொன்று.
ஈடிப்பஸ் Complex என்பது உளவியலில் குறிப்பிடத்தகு ஒரு முக்கிய போக்கின் வெளிப்பாடு ஆகும். ஈடிப்பஸ் என்ற மன்னன் விபரமறியாது தனது தந்தையைக் கொன்று தாயை மணம்புரிந்தான் என்பது கதை. இதனை ncest (ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கிடையிலான தகாத பாலுறவு) என்பர்.
இந்த நாடகத்தை ஆங்கிலம் வழியாக இரத்தினம் தமிழாக்கம் செய்திருந்தார். அது 1969இல் நூலாக வெளிவந்தது. அந்நூலுக்கு மறைந்த மற்றொரு தமிழறிஞர் செ. வேலாயுத பிள்ளை அருமையான விளக்கத் திறனாய்வே எழுதியிருந்தார். அதிலிருந்து சில பகுதிகள்:
"இரத்தினம் மூல நூலின் பழமைப் பண்பு ஓரளவு புலப்படுமாறே தமது செய்யுளை யாத்துள்ளார். இதனால் இயற் சொற்களோடு திரி சொற்களும் ஆங்காங்கே பயின்று வருகின்றன. செய்யுள்ளதலின் தொடை நயம் நோக்கியும் நடை நயம் நோக்கியும் ஒரேநா வழித்திரி சொற்களை ஆளுவதும் வேண்டற்பாலதே. ஆயின் நாடகத்தைப் பார்க்கும் அவையோர் இத்தகைய திரிசொற்களைக் கேட்ட மாத்திரத்தே பொருளுணர்ந்து கொள்வார்களோ என்பது ஐயத்திற்கிடமானது. ஆயினும் கேட்போரின் பொருளுணர்ச்சிக்கு உதவுமாறு ஆசிரியர் சொற்களையெல்லாம் தனித்தனியே பிரித்தே அச்சிட்டுள்ளார்."

Page 34
64 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
ஷேக்ஸ்பியர் என்ற ஆங்கிலேய நாடக மேதையின் கவித்துவம் நிறைந்த நாடகங்களுள் துன்பீற்று (Tragedy) நாடகங்கள் மேலும் சுவையளிப்பன. Othelo என்ற அத்தகைய நாடகத்தை வானொலி நாடகமாக இ. இரத்தினம் தமிழாக்கித் தந்தார். இது 1980இல் ஒலிபரப்பப்பட்டது.
நாடகத் தன்மை மிகுந்த உளவியல் சார்ந்த இந்த நாடகத்தின் தமிழாக்கம் வானொலி ஊடகத்தின் தன்மைக்கேற்றவாறு அச்சிடப்பட்டுள்ளது. இந்த வானொலி நாடகத்தைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. பிரதியை இத் தொகுப்பில் படிக்கலாம். ஆய்வாளர்கள் இ. இரத்தினத்தின் பங்களிப்புகளை ஆராய்ந்து சிறு நூலாகுதல் ஒன்றை எழுத வேண்டும்.
அரசியல் மயப்பட்ட இன்றைய திறனாய்வு முயற்சிகளில் இலக்கியம் மறக்கப்பட்டு அரசியலே மேலோங்கி நிற்பதனால் பல உண்மைத் தரவுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு வருவது வருந்தத்தக்கது.
 

கே.எஸ். சிவகுமாரன் 65
பல்கலைக்கழக ஆசிரியர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க ஓர் ஆசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன். அவருடைய பெயருடன் சேர்ந்து பல அடைமொழிகள். அவற்றுள் ஒன்று "வாகீசகலாநிதி". அத்தனையும் பொருத்தமானவைதான். அத்தனை துறைகளில் அவர் பாராட்டும்படியான பங்களிப்புகளைச்
செய்திருக்கிறார்.
பேராசிரியர் க. அருணாசலம் எடுத்துக் காட்டியிருப்பது போல நாகேஸ்வரன் "இலக்கிய ஆய்வாளர், கவிஞர், கலைஞர், கல்விமான், இன்னிசைச் சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், நேர்முக வர்ணனையாளர், பண்ணிசைக் கலைச்செல்வர், கதாப்பிரசங்கி எனும் பன்முகப்பட்ட உன்னத ஆளுமைகளின் திருவுரு"
'கலாநிதி' என்று அழைக்கத்தக்க தகைமையுடைய நாகேஸ்வரன் தற்பொழுது சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக, விஞ்ஞான மொழிகள் பீடத்தின் மொழித்துறை, தரம் - 1 முதுநிலை விரிவுரையாளராகச் சேவை செய்து வருகிறார்.

Page 35
66 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
அறிஞர்கள் பலரினதும் பாராட்டைப் பெற்றுள்ள கனகசபாபதி நாகேஸ்வரனின் பெருமைகளையும் அவர் எழுதிய நூல்கள், கட்டுரைகள் போன்ற விபரங்களையுமறிய இவருடைய "யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பிரபந்தம் இலக்கியங்கள்" என்ற நூலைப் படித்துப் பாருங்கள். நாகேஸ்வரனின் புலமையும் எழுதும் ஆற்றலும் ஆய்வுத் திறனும் அவ்வாய்வில் நன்கு புலப்படும்.
இந்நூலில் எவ்விதமான ஆய்வை ஆசிரியர் மேற்கொண்டுள்ளார் என்று அடுத்துப் பார்ப்போம். g
ஈழத்து நல்லூர், மாவிட்டபுரத் தலங்கள் மீது பாடப்பட்டவை குறித்த முதுகலைமாணிப்பட்ட இலக்கிய ஆய்வு' என்ற உபதலைப்புடன் வெளிவந்துள்ளன. இந்த 250 பக்க நூலில், நிழற்படங்கள், வரைபடங்கள், அடிக்குறிப்புகள், நூல் விபரப் பட்டியல் ஆகியன அடங்கியுள்ளன. இவை பல்கலைக்கழகச் சிறப்பு மாணவர்களுக்குக் குறிப்பாகவும் ஏனைய இலக்கியவாதிகளுக்கு நிறையத் திறனாய்வு சார்ந்த தகவல்களைப் பொதுவாகவும் தருவன.
ஆசியுரை : கலாநிதி தங்கம்மா அப்புக்குட்டி, வாழ்த்துரை பேராசிரியர் அ. சண்முகதாஸ், அணிந்துரை: பேராசிரியர் வி. சிவசாமி, வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பு : பேராசிரியர் க. அருணாசலம், வெளியீட்டுரை: க. இராஜபுவனேஸ்வரன், முகவுரை: கனகசபாபதி நாகேஸ்வரன் ஆகியன அடங்கியுள்ளன. இந்நூல் பின்வரும் பொருள்களைக் கொண்டுள்ளது. s
நல்லூர் மாவிட்டபுரம் கோவில் வரலாறும் ஐதீகங்களும், பிரபந்த இலக்கியம் e sólup 85 lb, பிரபந்தங்களிலே பக்திப்பாடல்களுக்குரிய இடம், பிரபந்தங்களிலே கவித்துவ வளம்.

கே.எஸ். சிவகுமாரன் 67
"பிரபந்தங்கள்" எனும்பொழுது இலக்கிய மாணவனாகிய எனக்கு நினைவில் முதலில் வருவது "நாலாயிரத் திவ்ய பிரபந்தம்" தான்.
"பிரபந்தம்" என்றால் என்ன?
"பிரபந்தம்" என்பது வடசொல். இதன் பொருள் தொடர்ந்த பொருள் பற்றிய இலக்கியம் என்பது; நன்கு ஆக்கப்பட்டது என்றும் அடிவரையின்றிப் பல தாளத்தாற் புணர்ப்பது என்றும் செய்யுள், நூல்களைப் பிரபந்தம் என்னும் பெயராற் பிரபந்த மரபியல் என்னும் நூல் முதல் முறை குறிப்பிடுகிறது என்றும் நூலாசிரியர் ஆதார அடிக்குறிப்புகளுடன் எழுத்துரைக்கிறார். (பார்க்க 46ஆம் பக்கம்)
வேறு விளக்கங்களும் அடுத்துவரும் பக்கங்களில் தரப்படுகின்றன. பிரபந்தம்' என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்ட நூல் என்பது பொருள் என்றுங் கூறுவர் செயராமன் என்கிறார் நூலாசிரியர்.
கட்டுரையாளர் 48ஆம் பக்கத்தில் தரும் முதலாவது பந்தி விளக்கம் கருதி இங்கு மீளத் தருகிறேன்.
"ஈழத்துத் தமிழ் நூல் வரலாறு" என்னும் நூலிலே ஈழத்து இலக்கிய வரலாற்றுக் கட்டங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. "போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலப்பிரிவிலே போதாகிய இலக்கிய வடிவங்கள் ஆங்கிலேய காலப்பிரிவிலே மலர்ந்தனவெனலாம்"
"பிள்ளைத்தமிழ், தூது, உலா, கோவை, கலம்பகம், மடல், குறவஞ்சி, அந்தாதி, இரட்டை மணிமாலை, மும்மணிக் கோவை, நான்மணிமாலை, சதகம், அம்மானை, பதிகம், ஊஞ்சல் ஆகிய

Page 36
68 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
பிரபந்த வகைகளும் புராணங்களும் ஆங்கிலேயர் காலப் பிரிவிலே பெருமளவிற் தோன்றின" என்று அந்நூல் கூறுகின்றது.
"பிரபந்தங்களையே பிரதான இலக்கிய வடிவங்களாகவும் தொடர்நிலைச் செய்யுள்ளை அளவுகொண்டு அகலக் கவியாகவும் பார்த்த ஒரு இலக்கியக் கோட்பாட்டின் பின்னணியிலே தோன்றினவே ஈழத்தின் முதற்கட்டக் கவிதை இலக்கியங்கள்" என்றுரைக்கிறார் பேராசிரியர் கா. சிவத்தம்பி.
நூலாசிரியர் தரவுகளை மேற்கோள்கள் மூலம் விளக்கிக் கூறுவதுடன், திறனாய்வு நோக்கில் தனது அவதானிப்புகளையும் தருவது அவரது ஆய்வின் ஒரு பகுதியாக அமைகிறது. உதாரணமாக 64 ஆம் பக்கத்தில் புராண காவியங்கள் பற்றி விளக்குகையில் நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"தமிழ் இலக்கிய வடிவப் பகுப்பிலே புராணங்களும் காவியங்களும் ஒன்றாகக் கருதப்படுவதற்கான காரணம் தமிழில் எழுந்த பெரியபுராணம், கந்தபுராணம் போன்ற நூல்கள் காவியமுறையில் எழுதப்பட்டிருந்ததாலேயே எனக் கருதலாம். வடமொழியாளர் அவற்றை இருவேறு இலக்கிய வடிவங்களாகவே கொள்வர். வடமொழிப் புராண அமைப்பைத் தழுவியே தமிழிலும் புராணங்கள் எழுந்தன. ஆயின் வெண்பாப் பாட்டியலும் சிதம்பரப் பாட்டியலும் புராணத்தையும் காப்பியத்தையும் ஒருவகை இலக்கியமாகவே காண்கின்றன. எனினும், பெரும்பான்மையான புராணங்களின் அமைப்பும் காப்பியங்களின் அமைப்பும் வேறுவேறாக இருக்கக் காண்கிறோம். எனவே, புராணங்களையும் காப்பியங்களையும் ஒரே வகை இலக்கியமாகக் கொள்வது பொருந்துமா என்பதனையும் ஆராய்ந்து நோக்கலாம்."

கே.எஸ். சிவகுமாரன் 69
இந்த நூலிலே, பிரபந்தப் பாடல்கள் நிறையச் சேர்க்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
"பிரபந்தங்களிலே கவித்துவ வளம்" என்ற கட்டுரை நூலாசிரியரின் திறனாய்வுப் பாங்கைத் தெளிவாக்குகிறது.
நூலின் 140 ஆம் பக்கத்திலே "மாவை மும்மணிமாலை" என்ற ஆக்கம் தொடர்பாக நூலாசிரியர் எழுதும் பாங்கை அவதானியுங்கள்.
"நூலில் வரும் பாடல்கள் கோவிற் சிறப்பைக் கூறுவனவாகவும் முருகன் பெருமை பேசுபவனாகவும் நெஞ்சத்துக்கு அறிவுறுத்துவனவாகவும் அமைந்துள்ளன. கோவிற் சிறப்புக் கூறுமிடங்களிற் பதிச் செழிப்பும் பேசப்படுவதனால் நாட்டின் இயற்கை எழில் சித்தரிக்கப்படுகின்றது. இவ்வாறு இயற்கையெழில் ஓவியமாய் அமைந்த அகவற்பாக்கள் சங்ககாலச் செய்யுள் போன்று சொற்கோப்பும் பொருட்செறிவுங் கொண்டு இயங்குவன. கற்பனைப் பண்பு பிற்காலத்திலேயே பிரபந்தங்களிலே செல்வாக்குப் பெற்றுள்ளது. உயர்வு நவிற்சி, தற்குறிப்பேற்றம் என்னும் அணிச் சிறப்புகள் காலத்தால் முந்திய பிரபந்தங்களிலே இடம் பெறுகின்றன."
"முற்றிப் பழுத்த பலாக்கனி உடைந்துவிழ அதன் வழிப்பாயுந்தேன், வாய்க்கால் வழியோடு நெல்வயலிற் பொருந்த அந்த ஈரத்தாற் செழிக்கும் செந்நெல் வளம் பொருந்திய மாவைப்பதி எனவும், தாமரையிற் கண்ணயரும் அன்னங்கள் பயினும் தடாகம் மலிந்து வளர்ந்திகழ் மாவையெனவும் இயற்கை வனப்பினைப் பாராட்டுவர். இத்தகைய பாடல்களில் குறித்த வருணனைகள் ஓரளவுக்குக் கவிஞரதியல்பை ஒட்டி அமையும். உயர்வு

Page 37
70 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
நவிற்சியாயினும் முற்றாகப் புனைந்துரையல்ல வென்பது கமுகு, தென்னை, வாழை, ஆதியாம் தருக்களின் நெருக்குறு காட்சியாலும் பச்சிளம் பயிர்கள் பச்சைப் பசேலெனத் தோன்றும் மாட்சியாலும் தெளிவாகும். இத்தகைய வளங்கொழிக்கும் பதியில் வனப்பின் உறைவிடமான முருகன் அலங்காரப் பிரியனாகக் கோவில் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை அல்லவா?"
நாகேஸ்வரன் 1970களில் இலங்கை வானொலியின் தமிழ்ச் சேவையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், பகுதிநேர அறிவிப்பாளராகவும் பணிபுரிந்தபொழுது அந்த நிலையத்தின் செய்திப்பிரிவின் தமிழ்ப் பகுதியில் நானும் வேலை பார்த்ததனால் நாகேஸ்வரன் அவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அக்கால கட்டத்தில் பேராசிரியர் 'சித்திரலேகா மெளனகுரு, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் சண்முகலிங்கன் ஆகியோரும் பணிபுரிந்தனர்.
நல்ல குரல், சங்கீத ஞானம், மொழிவளம், கதாப்பிரசங்கம், a plumaoT (3Ludor (3um 6Tp u6öTupas (MULTIFACETED) ஒலிபரப்பாளராகவும் அவர் சுடர்விட்டார். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அவர் அவ்வப்போது ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
உடல் நலம் தேறித் தொடர்ந்து அவர் எமது. கலை, இலக்கிய உலகுக்குப் பங்களித்தல் வேண்டும்.
 

கே.எஸ். சிவகுமாரன் 71
பேராதனப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகத் தற்சமயம் பணிபுரிந்து வரும் கலாநிதி துரை மனோகரன் Academic பாணியிலும் எழுதுவார், பேசுவார், இதழியலாளர்
போன்று ஜனரஞ்சகமாகவும் பேசுவார், எழுதுவார். சினிமா உட்பட நுண்கலைகளிலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. கொழும்பிலிருந்து வரும் ஞானம்' என்ற இலக்கிய ஏட்டிலும் அவர் விட்டுவிட்டு 'பத்தி என்ற தலைப்பில் எழுதிவருவார். ஒலிபரப்புத் துறையிலும் பளிச்சயம் பெற்ற அவர் மத்திய மாகாண ஒலிபரப்பு நிலையமொன்றிலும் தமது பங்களிப்புகளைச் செய்து வருகிறார் என்றறிகிறோம்.
அவர் எழுதிய நூல்கள் சில உள்ளன. அவற்றுள்ளே என் பார்வைக்குக் கிடைத்தவை இரண்டு. அவையாவன: "ஈழத்து இலக்கிய தரிசனம்" (2004), "பழம் புனலும் புது வெள்ளமும்".
முதலிலே முதலாவது புத்தகம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். நூலாசிரியரின் நோக்கம் என்ன என்று நாம் அறிந்து கொள்வது எமது முதற்பணியாக இருக்க வேண்டும்.

Page 38
72 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
"ஈழத்து இலக்கியங்களைத் தனித்தனியாகவும் வாசகர் முன் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆவல் நிறையவே எனக்குண்டு அதன் பிரதிபலிப்பே இந்நூலாகும்" என்கிறார் ஆசிரியர்.
"இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகள் யாழ்ப்பான மன்னர் காலம் முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான சில ஈழத்து இலக்கியம் பற்றிய ஒரு வெட்டு முகத்தோற்றத்தை இந்நூல் வாசகருக்கு அளிக்கும் என எதிர்பார்க்கலாம். ஈழத்து இலக்கியம் பற்றிப் பயில்வோர்க்கும் பொது வாசகருக்கும் இந்நூல் பயன்படும் என்று நம்பிக்கை எனக்குண்டு " என்று விளக்கமளிக்கும் ஆசிரியர் பின்வரும் பொருள்கள் பற்றி எழுதியிருக்கிறார்.
ஈழத்துத் தமிழ் இலக்கியம் ஒரு பொதுப்பார்வை, அரச கேசரியின் இரகுவம்சம், ஈழத்துப் பள்ளு நூல்கள், வெருகல் சித்திரவேலாயுதர் பற்றிய 17 ஆம் நூற்றாண்டு இலக்கியம், வரத பண்டிதரின் இலக்கிய சமய நூல்கள், இணுவை சின்னத்தம்பிப் புலவரின் பஞ்சவண்ணத்தூது ஒரு நோக்கு. இரு பெரும் புலவர்கள், சம்பந்தனின் சிறுகதைகள் ஒரு நோக்கு, மலையகத்தில் இரு சிறுகதைகள் ஆகியனவாம்.
இவற்றிலிருந்தே துரை மனோகரன் அவர்கள் பல்வேறு இலக்கியப் பொருள்கள் பற்றிச் சிறிதளவாயினும் ஆய்வு செய்து மாணவர்கள் அறிய வேண்டிய முக்கிய செய்திகளைத் திறனாய்வு நோக்கில் வெளிப்படுத்தியிருப்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
நூலாசிரியர் சுட்டிக்காட்டும் முக்கிய செய்தியொன்று நமது கவனத்தை ஈர்க்கிறது. அவர் எழுதுகிறார்.

கே.எஸ். சிவகுமாரன் 73
சங்க இலக்கியத்தில் இடம்பெறும் ஈழத்துப் பூதந்தேவனார் காலம் முதல் ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் வரையிலான ஈழத்து இலக்கிய வரலாறு தெளிவின்றிக் காணப்படுகிறது. ஈழத்துப் பூதந்தேவனார் ஈழத்தவர்தானா என்ற சர்ச்சை முதல் ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் வரைக்கும் ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சி எத்தகையதாக இருந்தது என்ற பிரச்சினை வரையில் சிக்கல் நிறைந்ததாகவே ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு காணப்படுகிறது."
இந்த நூலின் முதல் 15 பக்கங்களும் மிக முக்கியமான வளர்ச்சிப் போக்குகளைத் திறனாய்வுக் குறிப்புகளுடன் தருகின்றன. பயனுள்ள கட்டுரை.
இரண்டாவது கட்டுரையில் அரசியல் வரலாற்றுத் தகவல்கள். ஆதாரங்களைக் காட்டிக் கருத்துக்களை வெளியிடல், ஒப்புநோக்கில் அமைந்த அவதானிப்பு, சிருங்காரச் சுவை தொடர்பாக பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை கூறியுள்ள பார்வையை மறுதலித்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஈழத்துப் பள்ளு நூல்கள் தொடர்பாக நிபுணத்துவம் வாய்ந்த முறையில் எழுதும் கலாநிதி துரை மனோகரன் திறனாய்வு சார்ந்த சுவையான இரசனைக் கட்டுரையைத் தந்துள்ளார்.
நூலாசிரியர் கிழக்குப் பகுதி இலக்கியங்களிலும் கவனம் செலுத்துவது வரவேற்கத்தக்கது. 'திருகோணமலைக்குத் தெற்கேயுள்ள வெருகலிற் கோயில் கொண்டிருக்கும் சித்திரவேலாயுதர் மீது பாடப்பட்ட இலக்கியத்தை "தம்பலகமம் வீரக்கோன் முதலி இயற்றினார்" என்று தகவல் தருகிறார். 'உலா என்ற வகைக்குள் அடங்கும் இந்த இலக்கியத்தை விபரிக்கும் நூலாசிரியர்,

Page 39
74 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
"தமிழகத்தில் தோன்றிய காதல் இலக்கியங்களில் காணப்படும் அம்சங்களுக்கு மேலாகக் குறத்தி குறி சொல்லல், கிளி தூது செல்லல், சித்திரவேலாயுதர் தம் மாலையைக் கொடுத்தனுப்புதல் முதலான புதிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் உலா, தூது, குறவஞ்சி ஆகிய சிற்றிலக்கியங்களுக்குரிய அம்சங்களும் இணைந்துள்ளன" என்ற அவதானக் குறிப்பையும் தருகிறார்.
"ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு கி.பி. 14ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ச்சியான வளர்ச்சி பெற்று வந்துள்ளன" என்று தெரிவிக்கும் நூலாசிரியர் அடுத்து வரத பண்டிதரின் இலக்கிய சமய நூல்கள் பற்றிய தமது ஆய்வுக் குறிப்புகளைத் தருகிறார்.
மற்றுமொரு சுவையான கட்டுரை இணுவை சின்னத்தம்பி புலவரின் பஞ்சவண்ணத் தூது பற்றியது.
பெரும் புலவர்களில் இருவரை - ஒரு தமிழர் மற்றையவர் இஸ்லாமியர் என இனங்காண்கிறார் நூலாசிரியர். உடுப்பிட்டி சிவசம்புப் புலவரும் யாழ்ப்பாணம் பதுறுத்தீன் புலவரும் இவ்விருவருமாவர். இதுவும் வரவேற்கத்தக்கதோர் கட்டுரை.
நவீன இலக்கியத்துக்குள் பிரவேசிக்கும் கலாநிதி துரை மனோகரன் சம்பந்தனின் சிறுகதைகள் பற்றிய திறனாய்வுப் பார்வையைச் செலுத்துகிறார். அவர் தரும் தகவலின்படி,
"20ஆம் நூற்றாண்டில் இலங்கைத் தமிழர் சிறுகதைத் துறைக்கு மூலவர்களாக விளங்கியவருள் காலத்தால் முந்தியவர் கோ. நடேசய்யர் ஆவார். அவரது திரு. இராமசாமி சேர்வையின் சரிதம்' என்ற சிறுகதை 1931 இல் எழுதப்பட்டது.

கே.எஸ். சிவகுமாரன் 75
'சம்பந்தன் தமது கதைகளிலே சம்பவங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. மன அசைவுகளுக்கே அழுத்தம் கொடுப்பதுண்டு என்ற அவதானிப்பு சரியானதே என்பது எனது நிலைப்பாடுமாகும்.
துரை மனோகரனின் மலையகத்தையும் புறக்கணிக்காது அப்பகுதியில் வெளிவந்த இரு சிறுகதைகள் பற்றி ஆராய்கிறார். தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். இராமையா ஆகிய இருவரும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களில் முதலிடம் பெறுவோர் வரிசையில் இடம்பெறுபவர்கள் என்பதைத் தீவிர வாசகர்கள் அறிவர். மலையக இலக்கியப் பங்களிப்பாளர்கள் பற்றிய விபரங்களும் இக்கட்டுரையில் அடங்கியுள்ளன. இந்த நூலே பெரும் பயனுள்ளது. இலக்கிய மாணவனாகிய எனக்கும் திறனாய்வுக்கான ஆதாரங்களைத் தருகிறது. படித்துப்பாருங்கள்.
அடுத்த நூல், "பழம்புனலும் புது வெள்ளமும்." இதுவும் ஒரு முக்கியமான திறனாய்வு நூல். பெரும்பாலும் பாத்திரங்களை மதிப்பீடு செய்யும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக எஸ். பொன்னுத்துரையின் தீ', 'சடங்கு ஆகியன தொடர்பாக துரை மனோகரனின் பார்வை பிறர் வெளிப்படுத்தாத விதத்தில் அமைந்துள்ளது.
அதே போல சிலப்பதிகாரத்தில் சிறு பாத்திரங்கள், திருப்பாவையும் திருவெம்பாவையும் - ஒரு ஒப்பீடு ஆகிய கட்டுரைகளும் நவீனத்துப்பாணியில் அமைந்துள்ளன.
இவைதவிர, திரைக்குவந்த நாட்டார் இலக்கியமும் கட்டுரையாளரின் ஈடுபாட்டு நீடிப்புகளைக் காட்டி நிற்கின்றது.
ஏனைய கட்டுரைகளில், தமிழ் நாவல் வளர்ச்சி - ஒரு பொது நோக்கு என்பது இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்கலாம். நூலாசிரியர் கூறுவது போன்று மாற்றமுற்று வரும் சமூக மரபுகளுக்கேற்ப இலக்கிய மதிப்பீடுகளும் புத்தம் புது உருவம் பெறுவது மரபு. ஒரு மொழியின் கால் நூற்றாண்டின் பொதுவான

Page 40
76 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
இலக்கிய வளர்ச்சியையோ அதன் துறைகளில் ஒன்றின் வளர்ச்சியையோ மதிப்பீடு செய்வது காலத்தின் தேவைக்கும் இலக்கிய உணர்வுக்கும் கைகொடுத்துதவுவதாக அமையும்.
தமிழ் இலக்கிய வரலாற்றில் ஐரோப்பியர் காலம் பற்றி எழுதும் நூலாசிரியர், 'ஐரோப்பியர் வருகையின் காரணமாகத் தமிழ் நாட்டில் மூன்று முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன எனலாம். கிறிஸ்தவ சமயத்தின் அறிமுகம், அச்சு இயந்திரத்தின் பயன்பாடு, ஆங்கில மொழிப்பயிற்சி ஆகியவையே அம்மூன்றுமாகும். இவை தமிழ் இலக்கிய வளர்ச்சியினும் தாக்கத்தை ஏற்படுத்தின' என்கிறார்.
இந்திய மொழிகளிலேயே முதன்முதல் தமிழிலேயே அச்சுவடிவில் நூல் 1577இல் வெளிவந்தது என்ற தகவலையும் அவர் தருகிறார்.
இறுதியாக ஒல்லாந்தர் கால இலக்கியம் தொடர்பாக துரைமனோகரன் எழுதுகையில், 'கி.பி. 17ஆம் நூற்றாண்டு முதலாக இலங்கையில் தமிழ் நாடக முயற்சிகள் முனைப்புப் பெறத் தொடங்குவதைக் காணலாம். அந்நூற்றாண்டிலிருந்து வடமோடி, தென்மோடி மரபுக் கூத்து நூல் இலங்கையில் தமிழ்க் கூத்து நூல்களின் பிதாமகனாகக் கணபதி ஐயர் கருதப்படுகின்றார்' எனவும் தகவல் தருகிறார்.
இவ்வாறு பல தகவல்களைப் பகுப்பாய்வு செய்து எளிமையான நடையில் துரைமனோகரன் அவர்கள் தந்திருப்பது பாராட்டுக்குரியது.
 

கே.எஸ். சிவகுமாரன் 77
gtjautuadalab odhalatarä διατρΙατώ
ழெக்கறிஞரும் புனைகதை எழுத்தாளரும் கவிஞரும் கட்டுரையாளரும் திறனாய்வாளருமான எஸ். முத்துமீரான் அவர்கள் சிரேஷ்ட ஈழத்து எழுத்தாளர்களுள் ஒருவர். திறனாற்றல் கொண்ட இந்த இஸ்லாமியரை ஈழத்து பிரதான நீரோடைத் திறனாய்வாளர்களும் விமர்சகர்' களும் அதிகம் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை. இவர் முஸ்லிம் ஆகவும் கிழக்கிலங்கையைச் சேர்ந்தவராகவும் இருப்பதனால் இவரைப் பற்றி அதிகம் தெரிந்துவைத்திருக்கவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. ஆயினும் தமிழ் நாட்டில் இவருடைய பாரிய முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது திருப்தியளிக்கிறது.
எஸ். முத்துமீரான் பல நூல்களை எழுதியிருந்தாலும் இவருடைய தனிச்சிறப்பு கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டாரியல் துணை பகுப்புகளிற் கவனம் செலுத்துவதாகும்.

Page 41
78 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
தமது ஆக்கங்களுக்காகப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் இந்தப் படைப்பாளியின் இரு நூல்களை வாசகர்கள் கவனத்திற்கொண்டு வர விரும்புகிறேன். அவையாவன:
"இலங்கை கிராமத்து முஸ்லிம்களின் பழமொழிகள்', 'இலங்கை முஸ்லிம்களின் தாலாட்டுப் பாடல்கள்'
பழமொழிகள் என்று வரும்போது தமிழ் நாட்டு ஆய்வாளர்கள் இந்த நூலில் தெரிவித்திருக்கும் சில தகவல்கள் வாசகர்களுக்குப் பயனளிக்கத்தக்கவை. தே. லூர்து என்ற ஆய்வாளரின் சேகரிப்பின்படி பீற்றர் பேர்சிவல் பாதிரியார் முதன் முதலில் தமிழ் பழமொழித் தொகுப்பைத் திருத்தாங்க சங்கிரகம் என்னும் பெயரில் 1843இல் அச்சிட்டு வெளிக்கொணர்ந்தார். இத் தொகுப்பில் 1863 பழமொழிகள் காணப்படுகின்றன.
'பழமொழி என்றால் என்ன?
ஹ.மு. நத்தர்ஷா என்ற ஆய்வாளர் பின்வருமாறு தெரிவிக்கிறார்:
'பழமொழி என்பது பொருளுடையது. அளவில் சிறியது. மோனை ஒலி இயல்பு உடையது. எளிதில் நினைவில் நிற்பது. கூர்மையான வார்த்தைகளால் வார்த்தெடுக்கப்படுவது. பொதுவான உண்மையின் அடிப்படையில் பிறப்பது. புகழ் பெற்றது. கவர்ச்சிமிக்க நடையுடையது. அன்றாட வாழ்வில் தொடர்புடையது. சமூகத்தில் நன்மதிப்பு உடையது. உருவகத் தன்மையுடன் கூடியது. மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்துவது, உணர்ந்து கூறும் கருத்துடையது. தனித்தன்மை வாய்ந்தது, எல்லோரின் புகழ்ச்சிக்கும் ஏற்புக்கும் உரியது என்றொரு வரைவிலக்கணத்தைத் தருகிறார் முனைவர் க. சாந்தி

கே.எஸ். சிவகுமாரன் 79
க. சண்முகசுந்தரம் இவ்வாறு பாராட்டுகிறார்:
"இவர் ஏற்கனவே 'கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் (1991), "கிழக்கிலங்கை முஸ்லிம்களின் நாட்டார் பாடல்கள்' (1997) என இரு நூல்களை நாட்டுப்புறவியல் துறையில் நல்ல முறையில் செய்து முடித்துள்ளார். இது மூன்றாவது முயற்சி. பேச்சுமொழியை வட்டார வழக்குடன் சிந்தாமல் சிதறாமல் தொகுத்துள்ளது மிகச்சிறப்பிற்குரிய ஒன்றுதான்.'
நூலின் தொடக்கத்தில் 6 தலைப்புகளில் பழமொழியைப் பொருள் அடிப்படையில் பாகுபடுத்தியுள்ளார். அத்துடன், 6 பின்னிணைப்புகளையும் தந்துள்ளார். எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளன.
எஸ். முத்துமீரான் தமது பங்காக 17 முதல் 172 ஆம் பக்கம் வரை அருமையான ஓர் ஆய்வுக்கட்டுரையைத் தந்துள்ளார். பல்கலைக்கழக ஆசிரியர்களும் மாணவர்களும்தான் ஆய்வுக்கட்டுரைகள் எழுதவல்லவர் என்பதற்கும் மேலாக அக்கல்வி நிலையங்களுக்கு வெளியே இருந்தும் ஆய்வுக்கட்டுரைகளை எழுத முடியும் எனபதனை எழுத்தாளர் நிரூபித்திருக்கிறார். சுவையான் தகவல்கள். இரசனைக் குறிப்புகள், பகுத்துப் பார்க்கும் பண்பு போன்றவற்றை இந்நூலில் காணலாம். நான் இவற்றை விளக்கிக் காட்டுவதிலும் பார்க்க நீங்களே படித்தறியுங்கள்.
பின்னிணைப்புகள் மேலும் பயனளிப்பன. சுருங்கக் கூறி விளங்க வைக்கும் இப்பத்தியிலே மற்றுமொரு நூலையும் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.

Page 42
80 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தனித்திறமைகளை வெளியுலகத்திற்கு காட்டும் முயற்சியில் ஈடுபடும் எஸ். முத்துமீரான் தாலாட்டுப் பாடல்கள் பற்றி பிரத்யேகமான நுலையும் எழுதியிருக்கிறார்.
நூலுாசிரியரே கூறுகிறார்.
'எனக்கு என் மூதாதையர்களின் நாட்டார் இலக்கியங்களான பாடல்கள், கதைகள், பழமொழிகள், தாலாட்டுகள், அம்பாப்பாடல்கள், பொல்லடிப் பாடல்கள் எல்லாம் களம் இறங்கித் தேடியெடுத்து, நூல் உருவாக்குவதில் பெரு மகிழ்ச்சியும் திருப்தியும் கூட அழிந்து சிதைந்து, இருந்த இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கும் இவர்களின் விலை மதிப்பில்லா இலக்கியப் பொக்கிஷங்களை, வருங்காலச் சமூகம் படித்துப் பயன் பெற வேண்டுமென்பதற்காக இப்பணியைச் செய்து கொண்டிருக்கிறேன்.
மெத்த நல்லது.
இந்த நூலின் சிறப்புகளுள் ஒன்று. ‘கரிசல் இலக்கியமேதை யெனக் கருதப்படும் கி. ராஜநாராயணன் எழுதியுள்ள சுவையான கட்டுரை.
ஓய்வு நிலைப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி வழக்கம் போலவே ஆய்ந்தறிந்துள்ள கணிப்பைத் தருகிறார்.
அவர் கூறுகிறார்.
'உலக நிலைப்பட்ட முஸ்லிம்களின் வாழ்வில் அச்சாணியான
அம்சம் அவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கும் வேளையில்

கே.எஸ். சிவகுமாரன் 81
பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருப்பதாகும். அவற்றுள் அரபு, பாரசீகம், உருது மொழிப் பண்பாட்டு உருவாக்கங்களில் இஸ்லாத்துக்கு முக்கியமான இடமுண்டு. இத்தொகுப்பு மொழி நின்ற சமுக - பண்பாடு மாணவன் என்கின்ற வகையில் மிக மிக முக்கியமாகின்றது.'
பேராசிரியரின் ஆய்வுக்கட்டுரை மற்றுமொரு BONUS சேர்க்கை.
தாய்மை எனும் ஆறு ஓடும்போது, தாலாட்டு இயல்பாகவே பிறக்கிறது. தாய்மை குழந்தையின் நலன், உயர்ச்சி. புகழ்ச்சி, தேவைப்பாடு, அதன் வருங்கால வாழ்வோடு, உறவினர்களின் பங்களிப்பு, அவர்களின் அன்பு, பாசம், உதவிகள், ஒத்தாசைகள் அனைத்தையும் தாலாட்டின் கருப்பொருளாக்கிப் பாடித் தன் நோக்கத்தை பூர்த்தி செய்கின்றது. இத்தோடு இளம் வயதிலேயே குழந்தையின் உள்ளத்தில் இறை நம்பிக்கையும், சமய உணர்வுகளையும் ஊட்டுவதற்காகத் தாய்மை, இறைவனின் தனித்துவம், சமய வழிபாட்டு முறைகள் என்பவைகளையெல்லாம் சிறப்பாகத் தாலாட்டில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற பண்பினையும் காண்கிறோம்' என்கிறார் நூலாசிரியர்.
தாலாட்டுப் பாடல்களைத் தந்து அவற்றிற்கான திறனாய்வுக் குறிப்புகளையும் ஆசிரியர் தருவது இப்பாடல்கள் பற்றியறிந்திராத நமக்குப் புதிய செய்தி. முத்துமீரான் அவர்கள் கள ஆய்வு செய்து திரட்டித் தரும் இந்தச் செயலுக்காக ஆகுதல் நூலாசிரியரின் பங்களிப்பை நாம் மறக்க இயலாது. மிகுந்த பாராட்டுதல்கள்.
இந்நூலிலே 10 முதல் இறுதிவரையிலுமான பக்கங்களும் குறிப்பிடத்தக்கவை. இவற்றிலே தாலாட்டும் அரபுச் சொற்களும்,

Page 43
82 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
தாலாட்டும் புலவரும், தாலாட்டுப் பாடல்களும் பேச்சுமொழியும் தாலாட்டும் சமுதாயப் பார்வையும், தாலாட்டும் ஆகியன நூலாசிரியரின் பார்வையைக் காட்டி நிற்கின்றன.
அடிக்குறிப்புகள், பயன்பட்ட நூல்கள், களப்பணிக்காகச் சென்ற இடங்கள் போன்ற விபரங்களும் ஆய்வு மாணவர்களுக்குப் பயன் தருபவை.
பேராசிரியரும், விமர்சகருமான எம்.ஏ. நுஃமானின் கூற்றுப்படி - 'யாப்பு மரபும், புதுக்கவிதை மரபும் ஒன்றிணைந்திருப்பது முத்துமீரான் கவிதைகளின் குறிப்பிடத்தக்க பிறிதொரு அம்சம் எனலாம். அகவல், கலிப்பா, விருத்தம், சிந்து வடிவங்கள் என்பன் முத்துமீரானுக்கு ஓரளவு லாவமாகக் கைவந்துள்ளன.
கவிதை, வானொலி, நாடகம் ஆகிய துறைகளிலும் சிறப்பாக எஸ். முத்துமீரான் பங்களித்திருப்பதையும் நாம் கவனத்தில் ബ66rണ8ഖങ്ങf(b,
தமிழ்நாட்டில் வெளியாகிய இந்த இரண்டு நூல்களையும் நூல் ஆசிரியருடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
 

கே.எஸ். சிவகுமாரன் 83
முதலிலே ஓர் அஞ்சலி. முதுமையடையாமலே நம்மிடையேயிருந்து பிரிந்து போனார் ஒரு படைப்பாளி. கடுமையான சுகவீனம், அதன் மத்தியிலும் குடும்பத்துடனும், சமூகத்துடனும் அக்கறையாய் செயல்படல், அறிவுத்தாகம், புதியதைக் கற்கும் ஆவல்கொண்டவராக விளங்கிய மாவை வரோதயன் (சத்தியகுமாரன்) இவ்வுலகைவிட்டு நீங்கினார். அவருக்கும் எனக்குமிடையில் ஒருவித பரஸ்பர அபிமானம் இருந்தது.
கவிஞர், கட்டுரையாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், தொலைக்காட்சியில் பங்கெடுப்பவர், திரைப்படத்துறையில் நாட்டம் கொண்டவர், கூட்டங்களின் அமைப்பாளர், தொகுப்பாளர் என்றெல்லாம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த மாவை வரோதயன் சிரித்த முகத்துடன் யாவருடனும் இயல்பாகப் பழகுவார்.
அவரை நான் 1980 களில் முதற்தடவையாகச் சந்தித்துள்ளேன். எனது துணைவியார் பரீட்சைத் திணைக்களத்தில்

Page 44
84 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
உதவி ஆணையாளராகப் பணிபுரிந்தபோது அங்கு பணியாற்றிய மாவை வரோதயன் என்னிடமும் அறிமுகமானார்.
திறனாற்றல் மிக்க புதிய இளைஞர்களின் நட்பைச் சம்பாதிக்க எனக்குப் பெரும் அவா. அவர்களிடமிருந்து என் போன்ற முதியவர்கள் கற்றுக்கொள்ள நிறைய உண்டென்பது எனது
&g|UGjub.
நவமணி' என்ற வாரப் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராக நான் சிறிது காலம் பணிபுரிந்த பொழுது இளைய அப்துல்லாஹற். மாவை வரோதயன், சபாரத்தினம் போன்றவர்கள் தமது ஆக்கங்களுடன் வந்து என்னைச் சந்தித்துப் போவதுண்டு. புதியவர்களின் ஆர்வத்தைக் கண்டு அவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு அவர்கள் எழுதியவற்றுள் சிறந்தவையென நான் தீர்மானித்ததைப் பிரசுரித்து வந்தேன்.
பின்னர், சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் நீர்வை பொன்னையனின் விருப்பப்படி திரைநாடகம் எழுதுவது எப்படி?’ என்றொரு வகுப்பை நடத்தினேன். அப்பொழுது பொன்னையன் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் ஒரு முக்கிய பதவி வகித்து வந்தார். நாட்டின் தலைவரின் மறைந்த கணவரான விஜய குமாரதுங்கவின் நினைவாக இந்தப் பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டது. மாவை வரோதயன் உட்பட ஓரிரு பயிற்சியாளர்களின் எழுத்துப் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆயினும், அவை திரைவடிவம் காணாமலே போய்விட்டன.
ஒருமுறை மறைந்த கவிஞரும் பல்கலை வேந்தருமான சில்லையூர் செல்வராசனின் துணைவியாரும் பலவற்றில்

கே.எஸ். சிவகுமாரன் 85
திறமைசாலியுமான (வானொலி, தொலைக்காட்சி, நடிப்பு, சிறுகதை, மேடைப்பேச்சு, கட்டுரை எழுதுதல், வானொலி அறிவிப்பு. தொலைக்காட்சி Presenter) கமலினி செல்வராசன், ரூபவாஹினியில் மாவை வரோதயனைப் பேட்டி கண்டார். அச்சந்தர்ப்பத்தில் கலையகத்தில் நானும் இருந்தமையினால் கமலினியும் நானும் வரோதயனைப் பேட்டி கண்டோம்.
திடமான கொள்கைகள், அறிவுத் தெளிவு, சொல்வளம் போன்றவற்றை உடைமையாகக் கொண்ட மாவை வரோதயன் அப்பேட்டியில் மிக நன்றாகச் சோபித்தார்.
மாவை வரோதயன் எழுதிய நூல்களைப் படித்து எனது அபிப்ராயத்தைத் தெரிவிக்க வேண்டுமென்று நான் அடிக்கடி நினைத்தாலும் வேலைப்பளுக்கள் காரணமாக அவர் உயிர்வாழ்ந்த காலத்தில் எழுத முடியாமல் போனதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.
நல்ல உள்ளமும் திறனாய்வு ஆற்றலும் கவிதை புனையும் ஆற்றலும் கொண்ட மாவை வரோதயன் மேலும் உடல் - மனத் துன்பம் அனுபவிக்காமல் இறைவனடி சேர்ந்தது ஒருவித ஆறுதலைத் தருகிறது. இருந்தும் சீக்கிரமாய்ப் பிரிந்தது உள்ளத்தை வாட்டுகிறது.

Page 45
86 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
ÖÐdial&oldÓla)l(IGTdflör அறிவுத் திரட்டல்
கிந்தையா சண்முகலிங்கம் தன்னையொரு தீவிர வாசகர் என்று பணிவுடன் கூறிக்கொள்வார். அவரைத் திறனாய்வாளர், ஆய்வாளர் என்ற படிகளில் வைத்துப் பார்க்காமல் அவரை ஒரு ஆய்வறிவாளராகவே (Intellectual) நான் காண்கிறேன். வெறுமணமே ஆய்வுடன் நின்றுவிடாது அதற்கு மேலும் சென்று கூரிய சிந்தனையாளராகவும் இருப்பது நமக்குத்தான் நன்மையும் பெருமையும்.
இவருடைய பங்களிப்புகள் இன்னமும் தொகுத்து வழங்கப்படவில்லை. அண்மையிலே 'குமரன் புத்தக இல்லம்' இவருடைய நூலொன்றை வெளியிட்டுள்ளது. நூலின் பெயர் "நவீன அரசியல் சிந்தனை" முன் அட்டைப்படத்தில் உலகின் முக்கிய சிந்தனையாளர்கள் சிலரின் நிழற்படங்கள் இடம்பெற்றுள்ளன. பின் அட்டையில் க. சண்முகலிங்கம் வகித்த தொழில்கள் பற்றிய விபரங்களைத் தெரிவிப்பதுடன், பின் வருவதையும் பேராசிரியர் கா. சிவத்தம்பி சுட்டிக்காட்டியிருக்கிறார்.
 

கே.எஸ். சிவகுமாரன் 87
'அரசறிவியல் துறையின் கற்றறி புலமையாளரே வியக்கும் வகையில் தமது விடயப் பொருள்களை ஒழுங்கமைத்துக் கொள்ளும் இவரது திறனை நண்பர்களும் வாசகர்களும் வியப்புடன் நோக்குவர்
இந்த நூல் என்ன கூறுகின்றது என்பதனையறிய நூலின் பின் அட்டையில் பதிப்பாளர் செம்மையாக எடுத்துக் கூறுகிறார். நீங்களே படித்துப் பாருங்கள்.
ஓர் அறிமுகமாக எழுதப்பட்ட இந்நூல் தமிழ் மாத்திரமே தெரிந்த வாசகர்களுக்குப் பல தகவல்களை எளியமுறையில் தருகிறது.
இந்த நூலில் 15 கட்டுரைகளும் உசாத்துணை நூல்களின் விபரமும் 134 பக்கங்களில் தரப்படுகின்றன.
நான் ஓர் அரசியல் மாணவனாக இல்லாதபோதும் இக்கட்டுரைகள் மூலம் பல புத்தறிவைப் பெற்றுக்கொண்டேன். அத்துடன், ALTHEUSER, GRAMMC போன்றவற்றின் கோட்பாடுகள் எவ்வளவு தூரம் மேனாட்டு இலக்கியத்தையும் பாதித்துள்ளன என்பதையும் அறிந்துகொண்டேன்.
இந்தப் புத்தகம் 'விழுது ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து குமரன் புத்தக இல்லத்தினால் வெளியிடப்பட்டது என்பதை நாம் மறக்கலாகாது. "விழுது ஏட்டின் ஆசிரியர் நண்பர் மதுசூதனன் என்பது நாம் அறிந்ததே. க. சண்முகலிங்கம் எழுதிய கட்டுரைகள் சில "விழுது ஏட்டில் முன்னர் வெளிவந்தவை என்பதையும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

Page 46
88 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
'INTELLECTUAL என்பதனைப் 'புத்திஜீவி' என்று கூறுவது தப்பு எனவும் சரியான பதம் 'ஆய்வறிவாளர்' என்பதுதான் எனவும் இதுவரை எழுதிவந்துள்ளேன்.
அதேவேளையில், 109 ஆம் பக்கத்தில் நூலாசிரியர் க. சண்முகலிங்கம் இவ்வாறு எழுதுகிறார்.
"ஆய்வறிவாளன் என்ற தமிழ்ப்பதம் அறிவுத்துறைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோரைக் குறிக்கும். இவ்வகையில், இது மூளை உழைப்பாளிகளின் ஒரு பிரிவினரையே குறிக்கும். கிராம்சி 'இன்டலெக்சுவல்' என்பதை விரிந்த பொருளில் உபயோகிக்கிறார். இதனால் 'புத்திஜீவி' என்ற சொல் பொருத்தமானது. சிந்தனை, ஆராய்ச்சி என்பன தான் ஒரு புத்திஜீவியின் முக்கிய இயல்புகள் எனக் கூற முடியாது. ஒருவனின் செயல்தான் அவனை புத்திஜீவி ஆக்குகிறது. உற்பத்தி, அரசியல், கலாசாரம் ஆகிய துறைகளின் அமைப்பாளர்கள் யாவரும் புத்திஜீவிகளே. எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள், பொறியியலாளர்கள், தொழில் நுட்பவியலாளர், சிவில் உத்தியோகஸ்தர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர் ஆகியோரும் புத்திஜீவிகள்தாம்".
நாம் என்னத்தைத்தான் கூறினாலும் பொதுவாகவும் பரவலாகவும் பயன்படுத்தப்படும் சொற்பிரயோகங்களை முற்றாகவே மாற்ற முடியாதிருப்பது கண்கூடு. 'விமர்சனம்' என்பது மற்றொரு சொல். எனவே, இவ்வாறு இந்தியப் பாணியில் சில சொற்களை அந்நாட்டு உச்சரிப்புடன் எழுதப்படுவதை நாம் கண்டு கொள்ளாமல்" இருப்பதுதான் நல்லது போலிருக்கிறது. அதே வேளையில், எமக்குச்

கே.எஸ். சிவகுமாரன் 89
சரியானது எனப்படுவதை நமது பாணியில் எழுத்துக்கூட்டி உச்சரிப்பது உசிதமானதுதான். பிறமொழிப் பெயர்களின் கருத்தியல் பதங்களை வேறுவிதமாகத் தமிழில் எழுதுபவர்கள் இருவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் சி. சிவசேகரம் ஒருவர். மற்றறையவர் கே.எஸ். சிவகுமாரன்.
LLLL LL LLL LLL LLL LLL LLLL LSL LLL LLLL L LL LL LLL LLL LLLS LL LSL LLSL LLL LLLL L LL LLL LLL LLL LLS LSL LLL LLL LLLL LL LLL LSL LS LSL LLS LL LL LLL
ல்ெலாவற்றிலும் அரசியல் இருப்பது உண்மையே. ஆயினும், வெறும் அரசியலின் அடிப்படையில் அல்லது அரசியல் கோட்பாடுகளின் அடிப்படையில் கலை, இலக்கியங்களைப் படித்துச் சுவைப்பது எனக்கு உடன்பாடாயில்லை. நான் இலக்கியத்தைச் சமூகப் பின்னணியில் அதன் உறுதிப் பொருள்களின் அடிப்படையில் நுகர விரும்புகிறேன். தவிரவும் Academic பாணியில் விரிவாக, ஆழமாக, மேற்கோள்கள், அடிக்குறிப்புகள் சகிதம் நீண்ட 'விமரிசனக் கட்டுரைகளை எழுத நம்மிடையே பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் அந்தப் பணியை விட்டுவிட்டு அவர்களுக்கும் சாதாரணமாகவே விபரம் தெரியாதவர்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப சுருங்கச் சொல்லி விளக்கும் முறையில் எளிமையாக 'பத்தி எழுத்து என்ற வடிவத்தை நான் பயன்படுத்துகிறேன்.
ஆயினும், இந்தப் பத்தி எழுத்து முற்றாகவே வெறும் தகவல்களின் தொகுப்பாக இல்லாமல், திறனாய்வு அடிப்படையிலும் நான் எழுதுவதாகப் பல்கலைக்கழக அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது மனதுக்கு இதமளிக்கிறது.
LL LLLL LL LLL LLLL LL0 LSL 0SS LL LSL LLLL LL LLL LLLS LLS LLSL SSL SLL LSL LLL LLL LLLL LL LLLLL LSS SL 0 LL LL L0 L0 LLLL LL LS LS LL LSL 0 LL

Page 47
90. ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
Tெழுத்தாளர்கள், திறனாய்வாளர்களுக்கும் ஓய்வு தேவை. இப்பொழுதெல்லாம் பல புதிய திறனாய்வாளர்கள், விமர்சகர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வாளர்கள், ஆய்வறிவாளர்கள் என நம்மிடையே பலர் உதித்துள்ளனர். இவர்களுக்குத்தான் நாம் கூடிய இடம் கொடுக்க வேண்டும்.
இப்படியிருந்தும், நாடெங்கிலுமிருந்து எழுத்தாளர்கள் தமது நூல்கள் பற்றி எழுதும்படி நம்மைக் கேட்டுக்கொள்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்கள் மாத்திரமல்ல, ஆங்கிலத்தில் எழுதுபவர்களும் கூட நமக்குப் புத்தகங்களை அனுப்பிவைக்கிறார்கள். இந்த நூல்கள் தவிர, நூல் அறிமுக விழாக்களில் எழுத்தாளர்களுக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு சில நூல்களை நாம் வாங்குகிறோம். இவ்வாறு நிறையப் புத்தகங்கள் எம் அறையில் குவிந்துவிட்டன. இவற்றுள் பெரும்பாலானவை சிறுகதை, கவிதைத் தொகுப்புகள். சிறுகதைகள் ஒவ்வொன்றையும் படித்து மதிப்புரை எழுதுவது என் செயல்.
ஓய்வாக இளைப்பாற முடியாமல் கடமை வற்புறுத்துகிறது. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கூறியது போல ‘காலம் சிறிது, கடமைகள் பெரிது’ என்றாகிவிட்டது.
இவை தவிர, சினிமாப் படங்களைப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் வந்துவிடுகிறது. 73 வயதுடைய நான் 'போதுமய்யா போதும்' என்று ஒதுங்கியிருக்கவே விரும்புகிறேன்.
 

கே.எஸ். சிவகுமாரன் 91
διαιρόυταταδιά)Ιατόπά மு. கிபான்னம்பலம்
மு.பொ என்று அவருடைய நெருங்கிய நண்பர்களால் அழைக்கப்படும் மு. பொன்னம்பலம் என்ற எழுத்தாளர், இந்த நாட்டில் மட்டுமல்ல தமிழர்கள் வாழும் உலக நாடுகளின் சில இலக்கியவாதிகளிடமும் பிரபல்யம் பெற்றவர். "காலச்சுவடு" போன்ற தமிழ் நாட்டுச் சிற்றேடுகள் சில மு.பொ.வை முக்கியஸ்தராகக் கருதி அவரைப் பேட்டி கண்டுள்ளன.
மு.பொ. வைக் கவிஞன் என்பர் சிலர். சிறுகதையாசிரியர் எனச் சிலர் இனங்காண்பர் வேறு சிலர் அவரை வலுவான விவாதக் கட்டுரைகளை எழுதுபவர் என்பர். வேறு சிலர் அவரை மறைந்த மு. தளைய சிங்கத்தின் இளவல் என்பதனால், அன்னாளின் தத்துவச் சிந்தனைகளை வெளிப்படுத்துபவர் எனக் கொள்வர். சிலர் ஒரு சிறந்த வசன நடைப் புனைகதையாளர் என்றும் கூறுவர்.

Page 48
92% ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
அதேவேளையில், மு.பொ. வை ஒரு முக்கிய 'விமர்சக ராகவும் சிலர் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், திறனாய்வு சார்ந்த பார்வைகளைக் கொண்டவர் என்றே நாம் இங்கு இனங்கண்டு கவனம் செலுத்துவோம்.
விமர்சகராக அல்ல.
தவிரவும், திறனாய்வு சார்ந்த பார்வைகள்' என்ற தலைப்பிலேதான் வேறு ஒரு புத்தகத்தை இவர் வெளியிட்டுள்ளார். இந்த 74 பக்க நூல் 2OOOஆம் ஆண்டு. 'இலங்கை தேசிய நூலக சேவைகள் சபையின் சலுகையுடன் அச்சிடப்பட்டுள்ளது இவ்விதமான சலுகைகள் சில எழுத்தாளர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது போலும்!
திறனாய்வாளன் என்ற முறையில் இந்த நூல் எனது கவனத்தை ஈர்த்தது. இந்தத் தொகுப்பிலே ஐந்து சுவாரஸ்யமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அவையாவன:
வட இலங்கைத் தமிழ்ச் சிறுகதை, யாழ்ப்பாணப் பிரதேச கவிதை இலக்கியம், 1950களுக்குப்பின் ஈழத் தமிழர் கவிதைகள், மீண்டும் ஒரு சத்திமுத்தப் புலவர், தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கு.
குறிப்பிடத் தகுந்த அண்மைக்காலச் சிறுகதையாளரும் திறனாய்வாளருமான எஸ். ரஞ்சகுமார் இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை வழங்கியிருக்கிறார். இதுவும் முக்கியமான செய்தி.
அவருடைய கூற்றுகள் இரண்டு புறக்கணிக்க முடியாதவை.

கே.எஸ். சிவகுமாரன் 93
"உண்மையில் தமிழ்ச் சமூகத்தின் ஏனைய பண்பாட்டு கலாசார, அறிவியல் துறைகளிலும்கூட பகுத்தாராயும் திறனும், ஆர்வமும் பல நூற்றாண்டுகளாக அருகியே காணப்பட்டு வந்துள்ளது. அதன் விளைவாகவே வானசாஸ்திரம், வைத்தியம் முதலாய துறைகள் சோதிடம், தலைவலித் தைலம் போன்றவையாகக் குறுகிப்போயுள்ளன".
"சுதந்திரத்துக்குப் பின்னரும் கூட மோசமான அரசியல் முன்னுதாரணங்களைத் தமிழர்களே முதலில் ஏற்படுத்திக் கொண்டார்கள். தமிழ்ச் சினிமாவைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்."
LL LLLL L0 LL LSS LS LLLLL LLLL LL LS LS LS LLL LL LLL LLLL LL LSS LS LLL LL LS LL LSL LLL LLL LLLL LL LS LS LLLLL LLL LLLL L0 LL LSL S LSL L LL
மு.பொ. எழுதிய நூல்கள் எவை? அது (கவிதை) யதார்த்தமும் ஆத்மார்த்தமும் (விமர்சனம்), விடுதலையும் புதிய எல்லைகளும் (கவிதை), கடலும் கரையும் (சிறுகதை), காலிலீலை (கவிதை), நோயில் இருத்தல் (நாவல்).
இவற்றுள்ளே, "கடலும் கரையும்", "நோயில் இருத்தல்" ஆகிய இரண்டும், ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குப் புது மெருகைத் தரும் அருமையான படைப்புகள் என்பது என் கணிப்பு. ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயம் பெற்ற மு.பொ. அதன் காரணமாக இந்நூல்கள் மூலம் புதுப் பரிமாணங்களைத் தமிழிற் கொண்டு வந்துள்ளார்.

Page 49
94 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
"பூரணி" என்ற சிற்றேடு, "திசை" என்ற Tabloid வடிவிலான கலை / இலக்கியம் / அரசியல் சார்ந்த பத்திரிகை போன்றவை மூலம் பத்திரிகையாசிரியராகவும் அனுபவம் பெற்ற மு.பொ.வின் "திறனாய்வு" எத்தகைய வடிவம் பெற்றுள்ளது என்று அடுத்துப் UTTG8 uTb.
முதலிலே, 13 பக்கங்களை உள்ளடக்கும் "தமிழ் இலக்கிய விமர்சனப்போக்கு" என்ற மு.பொ.வின் கட்டுரையின் முக்கிய கருத்து வெளிப்பாடுகளைப் பார்ப்போம். அவற்றுள் எனக்கு உடன்பாடானவற்றை மாத்திரமே இங்கு தெரிவு செய்துள்ளேன்.
O எஸ். வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கியத் தொன்மைக்கு எதிராக முன்வைத்த காரண அழுத்தங்கள் சரியோ, பிழையோ அந்த அழுத்தங்களில் தொனிக்கும் பற்றின்மை, விஞ்ஞான (3.bridsdiligrfu upriseodeo estiue (OBJECTIVE ANALYSIS) ஆகியவற்றை தமிழ் இலக்கிய விமர்சனத் துறையின் ஆரம்பக் கருக்கூட்டல்களாகக் கொள்ளலாம்.
O கல்வியியல் சார்ந்தவர்களது விமர்சன முயற்சிகள், தனி இலக்கியத்தை முழு மூச்சாகக் கொண்ட இலக்கியவாதிகளின் விமர்சன முன் வைப்புகள், மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட விமர்சனப் போக்குகள்
O இவை மூன்றும் ஆரம்பத்தில் தனித் தனியாகச் சுயவியக்கம் பெற்று தொழிற்பட்டு வந்தபோதும், கால அடைவில் ஒன்றோடொன்று கலந்து ஊடாட்டம் பெற்ற போக்கே, தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சனமாகும்.

கே.எஸ். சிவகுமாரன் 95
O கல்வியியல் விமர்சனத்துறையில் இருந்து மார்க்சிய கருத்தியல் நோக்கினால் ஆற்றுப்படுத்தப்பட்டு நவீன இலக்கிய விமர்சனத்துறைக்குள் புகுந்தவர்களாக, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, முருகையன், வானமாமலை நிற்கின்றனர். இவர்களில் இளந்தலைமுறையினரான கே.எஸ். சிவகுமாரன், எம்.ஏ. நுஃமான், மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு. சிவசேகரம், செ. யோகராசா ஆகியோர் நிற்கின்றனர்.
O மு. தளையசிங்கம் இலக்கியவியல் பிரிவிலிருந்து விமர்சனத்துறைக்குள் பிரவேசித்தவராயினும் இவர் ஏற்கனவே இப்பிரிவிலிருந்து க.நா.சு. சி.சு. செல்லப்பா, தருமு சிவராமு, வெங்கட் சாமிநாதன், எஸ். பொன்னுத்துரை, ஏ.ஜே. கனகரத்தினா ஆகியோரிலிருந்து தனது கருத்தியல் ரீதியான பார்வையால் வேறுபடுகிறார்.
O இலக்கியத்திறனாய்வு பற்றி க.கைலாசபதியும், முருகையனும் கூட்டாக எழுதிய விமர்சனம் மேற்கத்தைய கருத்து முதல்வாதம் வழிவந்த விமர்சனமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
O மு. தளையசிங்கம், க. கைலாசபதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் 1970களில் இலங்கையில் கலை, இலக்கிய விமர்சனத்துறையில் ஓர் வெற்றிடம் ஏற்பட ஆரம்பிக்கிறது.
O எனினும், 1980 ஐ ஒட்டிய காலப்பகுதியில் எம்.ஏ. நுஃமான், மெளனகுரு. சித்திரலேகா மெளனகுரு ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து வெளியிட்ட "இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்" (1979), கே. எஸ். சிவகுமாரன் எழுதிய "கலை இலக்கியத்

Page 50
96 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
திறனாய்வு" என்னும் நூலும், மு. பொன்னம்பலம் எழுதிய "யதார்த்தமும் ஆத்மார்த்தமும்" என்ற நூலும் குறிப்பிடத்தக்கவை.
இளைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் இன்னும் வைதீக மார்க்சிய எல்லைகளுக்குள்ளேயே சுழன்றுவர கா. சிவத்தம்பி, வைதீக மார்க்சியத்தின் போதாமைகளை உணர்ந்தவராய் கிராம்சி, அல்துாஸர், றேமன்ட் வில்லியம்ஸ், ஈகல்டின் என்பவர்களின் நூல்கள் தொடர்பான பரந்த வாசிப்பினாலும் தனது சுய சிந்தனை வியாபிப்பினாலும் மார்க்சிய விமர்சனத்திற்குப் புதிய இரத்தம் பாய்ச்சுகிறார் என்றே கூறலாம்.
மு.பொ. மேற்சொன்ன கட்டுரை போன்று தொடராக 1990 முதல் 2009 வரையிலுமான அவதானிப்புகளைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பிட்ட மு.பொ.வின் இந்த நூலிலே இடம்பெறும் வரலாறு அடிப்படையிலான பொதுப்பண்புகளை எடுத்துக்காட்டும் ஏனைய கட்டுரைகளும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட
ഖങ്ങpuങ്ങഖ.
1990களுக்குப் பின் "ஈழத்தமிழ்க் கவிதைகள்" என்ற கட்டுரையை நமது புதிய பரம்பரைக் "கவிஞர்கள்" ஒரு தடவை படித்துப் பார்க்க வேண்டும்.

கே.எஸ். சிவகுமாரன் 97
21 ஆம் நூற்றாண்டு ஈழத்து இலக்கியப் போக்குகள் பற்றியும் மு.பொ. ஒரு திறனாய்வுக் கட்டுரையை எழுத வேண்டும் என்று விழைகிறேன்.
"னெக்கு தருமு சிவராமுவை நினைக்கும் ஒவ்வொரு சமயமும் கைவிடப்பட்ட கலைஞனின் அநாதைத் தனமே என் முன் எழும்" என்ற மு.பொ.வின் கவிதைத் தன்மை வாய்ந்த கூற்று அற்புதமாக வேலணையில் பிறந்து திருகோணமலையில் வாழ்ந்து தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த தருமு சிவராமின் நிஜ உருவத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது. கட்டுரையின் பெயர் "மீண்டும் ஒரு e(ഗ്രgള ബഖ."
"வட இலங்கைத் தமிழ்ச் சிறுகதை" என்ற கட்டுரையை எழுதிய மு.பொ. "கிழக்கிலங்கை சிறுகதை" பற்றியும் எழுதினால், நாடு பூராவையும் கருத்திற்கு எடுத்துக்கொள்ளும் திறனாய்வாளனாக நாம் ஏற்றுக்கொள்ளலாம் அல்லவா? அது போன்றே மலையகத் தென்மேல் பகுதி எழுத்தாளர்களின் பங்களிப்புகளையும் &JTuj6om D606O6rt?
இது போன்று வட இலங்கைத் தமிழ்ச் சிறுகதையும் பிரதேச அடைப்புக்குள் வந்துவிடுகிறது. பார்வையை இன்னும் 6affeo DTissaomb eleiosobi.T

Page 51
98 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
மு. பொன்னம்பலம் இதுவரை கவனிக்கப்படாத நுண்ணிய பார்வையுடைய ஒரு திறனாய்வாளர். அவரை "விமர்சகர்" என்ற குறுகிய வட்டத்துள் அடக்க முடியாது.
படித்துப் பயனடைய இந்நூலாசிரியரின் "திறனாய்வு சார்ந்த சில பார்வைகள்" என்ற புத்தகத்தை நாடுங்கள்.
 

கே.எஸ். சிவகுமாரன் 99
திருத்தி விfவாக்கப்பட்ட ělůe Sáb 9ěHctlač :
GugJarðfdflauči தா. சுப்பிரமணிய ஐயர்
ஆய்வறிவு சார்ந்த அருமையான நூல்களை வெளியிட்டு வரும் 'குமரன் இல்லம் அண்மையிலே "ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் (கலாநிதி நா. சுப்பிரமணியம் எழுதியது) என்ற 31O பக்க பெறுமதியான நூலை வெளியிட்டிருக்கிறது.
இதன் பெறுமதியை உயர்கல்வி மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், திறனாய்வாளர்கள் (விமர்சகர்கள் கூட) நாவலாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள், நூல்களைத் தேடி வாசிப்பவர்கள் அனைவரும் அறிவர்.
1978ஆம் ஆண்டில் வெளிவந்த நூலின் மீள் பதிப்பு பிற்பட்ட காலகட்ட வரலாற்றுச் செல்நெறிகளை இனங்காட்டும் பின்னிணைப்புகளுடன் வெளிவந்த இந்த நூலின் ஆசிரியர் பற்றியும் ஒரு தகவல்:

Page 52
100 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
கலாநிதி நா. சுப்பிரமணியம் முன்னர் (நா.சு. ஐயர்) முன்னாள் பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர். தற்சமயம் கனடாவில் வாழும் ஆசிரியர் நா. சுப்பிரமணியம் பல்கலைக்கழக ஆசிரியர்களிடையே நெடுநாட்களாக ஆய்வில் ஈடுபட்ட ஆய்வாளரும் திறனாய்வாளருமாவார்.
இலக்கிய வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் திறனாய்வாளர்கள், இலக்கியவாதிகள், ஆய்வு மாணவர்கள் அனைவருக்கும் இந்நூல் பெரிதும் பயன்படும்.
"ஈழத்திலும், ஈழத்தவர் புலம் பெயர்ந்துறையும் நாடுகளிலும் உருவாகும் தமிழிலக்கிய ஆக்கங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இலக்கிய நெஞ்சங்களுக்கு" இந்நூல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பேராசிரியர் சு. வித்தியானந்தன் 1978இல் எழுதிய முன்னுரை, அதே ஆண்டில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் எழுதிய அணிந்துரை, கலாநிதி வித்துவான் சு. சொக்கலிங்கம் (சொக்கன்) எழுதிய பதிப்புரை, முதலாம் பதிப்பிற்காக நூலாசிரியர் எழுதிய முகவுரை ஆகியனவற்றுடன், அவரே இரண்டாம் பதிப்பிற்காக எழுதிய முகவுரையும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
நூலின் பொதுவான மதிப்பீடு போன்றவை இடம்பெற்றிருப்பதனால் இவையும் வாசகருக்குப் பல விடயங்களைத் தெளிவுபடுத்துகின்றன.
நூலாசிரியர் கூறுகிறார்:
"முதற்பதிப்பிலே இடம்பெற்றிருந்த சில தவறான கணிப்புகள், கருத்துத் தெளிவற்ற வாக்கியங்கள் மற்றும் தகவல்சார்

கே.எஸ். சிவகுமாரன் 101
குறைபாடுகள் என்பவற்றை மட்டும் இப்பதிப்பில் இயன்ற அளவுக்குக் களைய முற்பட்டுள்ளேன். இவை தவிர முன்னைய நூலின் அடிப்படை அமைப்பில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை" இது முக்கியமான விபரம்.
இந்த நூளின் பொருளடக்கம் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது?
ஈழத்துத் தமிழ் நாவலின் தோற்றம், சமுதாய சீர்திருத்தக் காலம், எழுத்தார்வக் காலம், சமுதாய விமர்சனக் காலம், பிரதேசங்களை நோக்கி நிறைவுரை.
(i) பின்னிணைப்புகளாக - 1977க்குப் பிற்பட்ட வரலாற்றுச் செல்நெறிகள் (அ) 1978-88 காலப் பகுதியின் ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம், (ஆ) 1988க்குப் பிற்பட்ட ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியம்.
(i) தனிக்கவனத்தைப் பெற்ற இரு நாவல்கள் பற்றிய ஆய்வுகள்: (அ) மங்கள நாவல்கள் பற்றிய ஆய்வுகள் (அ) மங்கள நாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம், (ஆ) தேவகாந்தனின் கனவுச் சிறை.
(i) ஈழத்துத் தமிழ் நாவல்கள் (பட்டியல்) (அ) 1977 வரையிலான நாவல்கள், (ஆ) 1977க்குப் பின்னர் வெளிவந்த நாவல்கள்
(iv) ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வுகள் (அ) 1977 வரை (ஆ) 1977க்குப் பின் உசாத்துணை நூல்கள் முதலாம் பதிப்பில் இடம்பெற்றவை மட்டும்) சுட்டி.

Page 53
1Ο2 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான U(Goss
இந்நூலாசிரியரின் அரிய பணியை நாம் வெகுவாகப் பாராட்டும் அதே வேளையில் அறிந்தோ அறியாமலோ 'séoorG6asreitelTITGOLD" (A PRETENCE OF NOT HAVING NOTICED) கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்களிடம் செயற்பட்டு விட்டது என்றே நாம் கருத வேண்டியுள்ளது.
இது ஏனெனில் 1960கள் தொடக்கம் இற்றைவரை ஆங்கிலத்திலும் தமிழிலும் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றி ஒருவர் எழுதி வருகிறார். கே. எஸ். சிவகுமாரனே ஆவார். அக்கட்டுரைகளையும் திறனாய்வுகளையும் நூலாசிரியர் தமது ஏனைய சோலிகளுடன் படித்திருக்காமல் போயிருக்கலாம்.
தவிரவும் எல்லாருமே எல்லா விடயங்களையும் படித்திருக்க வேண்டும் என்றும் இல்லை. இருந்தபோதிலும் 'ஆய்வு' என்று வரும்போது 'தேடல் அவசியமாகிறது அல்லவா? தேடலின் போதுதான் குறிப்பிட்ட காலத்தில் படித்துப் பார்க்க முடியாதவற்றையும் படிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.
ஒருவேளை, "பத்தி" எழுத்துக்கள் தானே என்றொரு "மேதாவி"தனத்தினாலும் பத்திகளை (ஆழமற்றவை என்று கருதியபோதிலும்) படிப்பதில்லை. இவர்களுடைய கருத்தியலின்படி ஆழமானவை என்பது நீண்டவையாக (கூறியுள்ளவை கூறல், வழவழா எழுத்து நடை, மேற்கோள்கள், அடிக்குறிப்புகள் கொண்டவையாக) இருக்கவேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
இங்கு நான் கலாநிதி நா. சுப்பிரமணியனை மனதில் வைத்துப் பேசவில்லை. பொதுவான போக்கைத் தான் எடுத்துக் கூறுகின்றேன். இவ்வாறான இருட்டடிப்புகள் இடம்பெறும்பொழுது.

கே.எஸ். சிவகுமாரன் s 103
பத்தியாளர் (Columnist) தம்மைப் பற்றி விடுபட்ட தகவல்களைத் தாமே எடுத்துச் சுட்டிக்காட்டும் போது அது. "சுயபுராண"மாக்கப்படுகின்றது. இதுவும் ஒரு நியாயமோ? போகட்டும்.
இன்னுமொன்று. ஆய்வு செய்பவர்கள் சிலர் தமது சொந்த முயற்சியின்றி வேறு ஒருவர் எழுதியதை Acknowledgement இன்றித் தாமே எழுதுவதாகப் பாசாங்கு செய்கின்றார்கள். என்னே! இவர்களின் அநியாயம்.
மேலே குறிப்பிட்ட கே.எஸ். சிவகுமாரன் 1690களிலிருந்து தமிழினும் ஆங்கிலத்திலும் ஈழத்துத் தமிழ், சிங்கள, ஆங்கில இலக்கியங்கள் பற்றியும் தாம் உண்மையிலேயே திரைப்பட விழாக்களில் பார்த்த அனைத்துலகத் திரைப்படங்கள் பற்றியும் திறனாய்வு ரீதியில் பத்திகள் எழுதிவருபவர்.
அவர் 1963 முதல் 1995 வரை தாம் தமிழில் மாத்திரம் எழுதிய ஈழத்து நாவல்கள் பற்றியும் சிறு குறிப்புகளையும் மாத்திரம் தொகுத்து (ஆங்கிலக் கட்டுரைகள் சேர்க்கப்படவில்லை 1999லே ஒரு நூலை வெளியிட்டார். அந்த நூலின் பெயர் "ஈழத்து நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள்" 1996 முதல் இற்றை வரையிலுமான ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றியும் தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் எழுதிவருகிறார். மேலே குறிப்பிட்ட நூலில் தமிழில் எழுதப்பட்டவை மாத்திரமே சேர்க்கப்பட்டுள்ளன என்பதை அவதானியுங்கள்.
வாசகரின் தகவல்களுக்காகவும் குறிப்பாகக் கலாநிதி நா.சு.வின் கவனத்திற்குமாக அந்த நபர் யாருடைய நாவல்கள்

Page 54
104 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
பற்றி எழுதியிருக்கிறார் என்றும் பார்ப்போம். இந்தப் பட்டியலிலே நா.சு.வின் கண்களுக்கும் படாத நாவல்களும் இடம் பெற்றிருக்கலாம் ©66ാഖ?
அந்த நபரின் மேற்சொன்ன நூலில் திறனாய்வு ரீதியில் எழுதப்பட்ட பின்வரும் நாவல்கள் பற்றிய பத்திகள் இடம் பெற்றுள்ளன.
குட்டி (பெனடிக்ட் பாலன்), வீடு யாருக்கு (காவலூர் ராசதுரை), நிலக்கிளி (அ. பாலமனோகரன்), வயது வந்துவிட்டது (அருள் சுப்பிரமணியம்), ஒளி நமக்கு வேண்டும் (செ. யோகநாதன்), if (elass6ioßuuri). LD600Dupăšgösó (f. ởgöb6JJTET), FLřág (6T6io. பொன்னுத்துரை), மீட்டாத வீணை (ஏ.ரி. நித்திய கீர்த்தி), அக்கரைகள் பச்சையில்லை (அருள் சுப்பிரமணியம்), ஒட்டுமா (ஜ. சாந்தன்), ஒரு வெள்ளைப் பூ சிரிக்கிறது (எம். பி. முஹமது ஜலீல்), நாணயம் (புலோலியூர் க. சதாசிவம்), சில நாவல்கள் (செங்கை ஆழியான்), பஞ்சமர் (கே. டானியல்), சரித்திரம் தொடர்கிறது (எம். பி. முஹம்மது ஜலில்), நெருப்பு மல்லிகை (செம்பியன் செல்வன்), காட்டாறு (செங்கை ஆழியான்), கதைகள் ஆயிரம் (செ. யோகநாதன்), பனிமலர் (அ.ஸ். அப்துஸ் சமது). இரவில் தாய்நாடு (செ. யோகநாதன்), மூட்டத்தினுள்ளே (புலோலியுர் க.சதாசிவம்), துயிலும் ஒரு நாள் கலையும் (கோகிலா மகேந்திரன்), ஷர்மிலாவின் இதயராகம் (ஜெத்தியா ஜுனைதீன்).
தூவானம் கவனம் (கோகிலா மகேந்திரன்), நான் நீதியின் பக்கம் (அருள் சுப்பிரமணியம்), பூலான் தேவி (மொழிவாணன்), பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (தெனியான்), புதிய பாதை (சுமதி

கே.எஸ். சிவகுமாரன் 105
அற்புதராஜா), சொந்தம் எப்போதும் தொடர்கதைகள் (செ. குணரத்தினம்), இரண்டாவது சாதி (செ. கணேசலிங்கன்), லயத்துச் சிறைகள் (தி. ஞானசேகரன்), சில நாவல்கள் பற்றிய சிறு குறிப்புகள் அதிகம் அறியப்படாத ஈழத்து நாவல்கள் ஆகியனவாகும்.
சில நாவல்கள் பற்றிய சிறு குறிப்புகள் என்ற பகுதியில் பின்வரும் நாவல்கள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன.
எரி நெருப்பில் கிடை பாதையில்லை (எஸ். அகஸ்தியர்), கிட்டி (செ. யோகநாதன்), காளை விடு தூது (கதைவாணன்), யோகராணி கொழும்புக்குப் போகிறேன் (சோ. ராமேஸ்வரன்), வழி பிறந்தது (மாத்தளை கார்த்திகேசு), பாதை மாறிய பயணங்கள் (மண்டூர் அசோகா), ஊமை நெஞ்சின் சொந்தம் (ஓ.கே. குணநாதன்), தந்தைவிடு தூது (ந. பாலேஸ்வரி), பூவிதழில் புன்னகை (ஜமுனாராணி நடராஜா), வரலாறு அவளைத் தோற்றுவிட்டது (கே.ஆர். டேவிட்), மண்ணில் தெரியுதொரு தோற்றம் (எஸ். அகஸ்தியர்), குருதி மலை (தி. ஞானசேகரன்), ஒரு கோடை விடுமுறை (ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்), கழுகுகள் (தெணியான்), வீடற்றவன் (சி.வி. வேலுப்பிள்ளை), பூமரங்கள் கே. டானியல்), கோபுரங்கள் சரிகின்றன (எஸ். அகஸ்தியர்), முற்றுப் பெறாத முடிவுகள் (மண்டை தீவு கலைச்செல்வி).
அதிகம் அறியப்படாத ஈழத்து நாவல்கள் என்ற பகுதியில் பின்வரும் நாவல்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெறுகின்றன.
கொழுகொம்பு (வ.சு. இராசரத்தினம்), மலைக்கொழுந்து (செ. சிவஞானசுந்தரம் - நந்தி), சொந்தக்காரன் (யோ. பெனடிக்பாலன்). செல்லும் வழி இருட்டு கே. சொக்கலிங்கம் -

Page 55
106 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
சொக்கன்), காலங்கள் சாவதில்லை (தெளிவத்தை ஜோசப்), போடியார் மாப்பிள்ளை (எஸ். முரீ ஜோன்ராஜன்), புரியாத தலைமுறைகள் (வை. அஹற்மது), புதிய பூமி (ஞானரத்ன), வளைவுகளும் கோடுகளும் (நெல்லை கே. போன்).
இவை தவிர ஆங்கிலத்தில் மாத்திரம் ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏராளமுண்டு. அந்த நபர் தொடர்ந்தும் ஈழத்து நாவல்கள் பற்றி மாத்திரமல்ல, ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள், ஆங்கிலப் புனை கதைகள் தொடர்பாகவும் இன்றும்கூட தமிழிலும் ஆங்கிலத்தினும் எழுதி வருகிறார்.
ஆமாம், அந்த நபர் யார் தெரியுமோ? அவர் பெயர் கே.எஸ். சிவகுமாரன்.
 

கே.எஸ். சிவகுமாரன் 107
நாச்சியா தீவு பர்வீன் கவியுள்ளம் 40காண்ட சமூகப் பார்வையாளன்
Uெரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலக்கிய ஏடாக விளங்கும் 'மல்லிகை யும் அண்மைக் காலமாகப் புதுப்புனைவான எழுத்துகளை நூல் வடிவில் தரும் "மல்லிகைப் பந்த"லும் நமது பாராட்டுக்குரியவை. அவற்றின் நிர்வாகி நமது ஈழத்து இலக்கிய உலகம் பெருமை கொள்ளும் படிக்காத மேதை டொமினிக் ஜீவா அவர்களே. இது மிகைப்படக் கூறிய கருத்தல்ல.
மு. தயாபரனின் (பரனின்) "நினைவழியா நாட்கள்", நாச்சியா தீவு பர்வீனின் "பேனாவால் பேசுகிறேன்" ஆகியன எமது கூற்றுக்குச் சான்று பகரும்.
பர்வீன் கூறுவது போல, பர்வீன் மனிதர்களை வாசிக்கிறார். அதன் பின் தனது பேனாவால் நம்முடன் உரையாடுகிறார். இந்த உரையாடல் விவரணையாகவும், கவிதை சார்ந்த உரைநடையாகவும் அமைகிறது. தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற இடங்களிலிருந்து அவர் நினைவுக் குமிழ்களை நேர்த்தியாய் u56 6&tiuápmi. 6b5 bor(36JT6OL (STREAM OF CONSCIOUS

Page 56
108 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
NESS) இரண்டு இடங்களைப் பிரதானமாகக் கொண்டு நமக்குப் படம் பிடித்துக் காட்டப்படுகிறது - நாச்சியா தீவு / கத்தார்.
அநுராதபுர மாவட்டத்தில் சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம் கிராமமாக இருந்து வரும் அப்பிரதேச வரலாற்றின் சில பகுதிகளையும் அங்குள்ள ஆளுமைகளையும் தமது இளமைக்கால நினைவுகளையும் சுவையாக எடுத்துக் கூறுகிறார் பர்வீன்.
அது மட்டுமல்லாமல் தமது முதல் விமானப் பயணம் முதல் திருமணம் வரையிலான தமது இரண்டரை வருட கதார் வாழ்க்கையை மனிதாபிமான நோக்குடனும் ஆய்வாளன் ஒருவனின் ஆழ, அகலப் பார்வையுடனும் சொல்லோவியமாக பர்வீன் படம் பிடித்திருக்கிறார்.
ஒரே சலிப்பாக ஒரே இடத்தையும் இடம் பெற்ற சம்பவங்களையும் விபரிக்காது. மாறி மாறி நம்மை கத்தாருக்கும். நாச்சியா தீவுக்கும் தமது கமராக் கண்காளால் அழைத்துச் செல்கிறார். அவருடைய எழுத்து நடை 'அலம்பல் சிலம்பல்' இல்லாதது. தயாபரனுடைய நடை போன்று வசீகரமானது.
நாச்சியா தீவு பர்வீனின் இந்த 20 மடல்கள் கொண்ட "பேனாவால் பேசுகிறேன்" முதிர்ச்சியனுபவமும், விமர்சனப்பாங்கும் (CRITICAL) கொண்ட சமூகப் பிரக்ஞையுடைய சீர்மிகு எழுத்தாளனின் படைப்பாகும்.
இந்தப் புத்தகத்தை முற்றிலுமே சுயசரிதை என்றோ, பத்தி எழுத்து என்றோ மதிப்பிடமுடியாதெனினும் இதனை "மெமுவா" (MEMOIR) 6Ter(Susit.

கே.எஸ். சிவகுமாரன் 109'.
அதாவது "வாழ்க்கைக் குறிப்பு: வாழ்க்கை நிகழ்ச்சிக் கோவை; ஒருவரது சுருக்கமான வாழ்க்கைச் சரித்திரம்" என்று &lasping sing&pg). (A record of events from a person's life; a short biography)
பர்வீன் வெறுமனே report பண்ணவில்லை. சுவையான சம்பவங்களுடன், அநியாயங்கண்டு 'விமர்சனமும் கண்டனமும் செய்கிறார்.
சுபாவத்தில் மிகவும் நேர்மையாளன் என்பதனால், விவாதிக்கும் இடங்களில் விவாதித்து தனது கருத்தை நிலை நாட்டும் சம்பவங்களும், தான் பிழையாகப் புரிந்து கொண்டவற்றை உடனடியாகவே அதனை ஏற்று மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்வதுமான பண்பு பாராட்டத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பான சர்ச்சைகள் இதற்கு உதாரணம்.
கீழ் மட்டத் தொழிலாளர்களின் அவல நிலையை பர்வீன் கருணைக் கண்களுடன் பார்த்து ஆறுதல் கூறுகிறார். அவர்களுள்ளும் தனித்தனி ஆளுமையுடையவர்களின் உளப்பாங்குகளை உளவியல் ரீதியாக ஆராய்கிறார்.
சின்னஞ்சிறு தீவான இலங்கையில் இருந்து கத்தார் போன்ற ஐரோப்பிய / அமெரிக்க மயப்பட்ட டோஹா போன்ற நகரங்களில் வாழும் பிறநாடுகளைச் சேர்ந்த உடன் உழைப்பாளிகளுடன் பழகும் வாய்ப்பும், அவ்வுறவுகளின் விளைவான அவர் கணிப்புகளும், பர்வீனை ஓர் முதிர்ச்சி பெற்ற எழுத்தாளனாக நமக்குக் காட்டுகிறது. அவருடைய நூலில் இருந்து சில பகுதிகளைப் பார்ப்போம்.

Page 57
110 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
முதலாவது அத்தியாயத்தில் அவர் பிரயோகிக்கும் தொடர்கள்
இராட்சத அலுமினியப் பறவை, எதிர்காலம் அரக்க உருவில் என் முன் தோன்றும், இமைப்பூட்டுகளால் என் கண்களை இறுக மூடிக்கொண்டேன், மனசுக்குப் பூட்டுப் போட முடியவில்லை, மனசு அசைபோட்டது, ஒரு வண்டி மாட்டைப் போல, ஒய்வில் நிற்கும் ஒடம் போல விமானம் தரித்து நின்றது, நிமிடங்கள் விரயமாக விமானம் தரையிறங்கியது. விமான நிலையம் துடைத்துவிட்ட கண்ணாடி போல பளிச்சென்று இருந்தது, அரைமணி நேரம் எங்கள் ஆயுளில் கடந்திருந்தது, வெயிலில் வாடிய வெற்றிலையாய், நான் உள்ளுக்குள் உடைந்து போனேன், ஓரக்கண்ணில் ஈரம் ஒட்டியிருந்தது. புத்தகம் இல்லாமலே புதுப்பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். ஒரு அவலம் சுமந்த வாழ்க்கை இங்கே அறியப்படாமலே நகர்கின்றது.
முதல் அத்தியாயத்திலேயே இவ்விதமாகச் சுயமாக எழுதும் பர்வீனின் வசீகர எழுத்துநடையின் சுவையை ஏனைய அத்தியாயங்களிலும் நாம் காணலாம்.
அரபு இலக்கியம், கவிதை, கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை ஒப்பீடு அடிப்படையில் பர்வீன் விமர்சிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நூல் தரும் தகவல்கள் நம்மில் பெரும்பாலானோர்க்குப் புதிதாக இருக்கக் கூடும். எதிர்காலத்தில் மேற்காசிய நாடுகளுக்குச் செல்லவிருப்பவர்கள் இந்தப் புத்தகத்தையும் ஒரு வழிகாட்டியாகக் 6.asReite|TeosTib.

கே.எஸ். சிவகுமாரன் 111
அக்கிரமங்கள், ஊழல்கள், இலஞ்சங்கள், வினோத சாப்பாடுகள், விசித்திரமான மனிதர்கள், மேற்குலக ஜொலிப்புகள், கிராமியப் பண்புகள் போன்ற பல விடயங்களை பர்வீனின் பார்வையிலிருந்து நாம் கற்றுக் கொள்கிறோம். ...
அவரே கூறுவது போல தனது மெளனங்களை அவரே மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார் - இந்தச் சுவாரஸ்யமான படைப்பு eup60lb.
கெக்கிராவ ஸஹானாவும், டொமினிக் ஜீவாவும் நூலாசிரியரின் பங்களிப்பைச் சரியாகவே கணித்துள்ளனர்.
நூலின் பின் அட்டையில் நாச்சியா தீவு பர்வீனின் இலக்கிய அந்தஸ்தை திக்குவல்லை கமால் விபரிக்கையில்:
வேலை வாய்ப்புப் பெற்று கத்தார் சென்றபோது அந்த மக்களின் கலாச்சாரக் கோலங்களை உராய்ந்து பார்த்து, 'பேனாவால் பேசுகிறேன்' என்ற பொது மகுடத்தில் தொடர்ச்சியாக வெளிப்படுத்திய பாங்கு மிக அலாதியானது. பல தரத்தவர்களதும் கவன ஈர்ப்பைப் பெற்றது' என்கிறார்.
நீங்கள் அவசியம் இந்த நூலைப் படித்துப் பாருங்கள்.

Page 58
112 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
S
* விறைப்புற்ற மாணவனும்
čћđutlolarao dočildflapalačio
இந்த வாரம் உளவியல் சார்ந்த சுய அனுபவக் கதை ஒன்றைப் பார்ப்போம். RICHARDWRIGHT என்பவர் ஓர் ஆங்கில எழுத்தாளர். ஆப்பிரிக்க அமெரிக்கர். BLACKBOY என்ற தனது சுயசரிதையிலிருந்து ஒரு பகுதியை லண்டன் GCE-O/L பாட நூலில் சேர்த்திருந்தார்கள். இந்தப் பகுதியை மாணவர்களுக்கு விபரித்துக் கூறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ரிச்சர்ட் றைட்டின் ஆக்கத்தை வாசகர்களுக்காகத் தமிழில் இங்கு தருகிறேன்.
"மனிதக் கும்பல்களுக்கு மத்தியில் நான் இன்னமும் சங்கோஜியாகவும் பாதி செயலற்றுப்போய் விடுபவனாகவும் இருக்கிறேன். எனது புதிய பள்ளிக்கூடத்தில் சேர்ந்த முதல் நாளே எனது வகுப்பின் பழிப்புப் பொருளானேன். (LAUGHING STOCK) கரும்பலகையில் எனது பெயரையும் முகவரியையும் எழுதும்படி பணிக்கப்பட்டேன். என்னுடைய பெயரும், முகவரியும் நான்
 

கே.எஸ். சிவகுமாரன் 113
அறிந்ததே. எவ்வாறு எழுதுவது, எவ்வாறு எழுத்துக் கூட்டுவது என்பதும் நான் அறிந்தவைதான். இருந்தபோதிலும் கரும்பலகையில் எழுத நான் நின்ற போது எனது முதுகைப் பல இளம் பெண்களும் பையன்களும் கண்கொண்டு பார்ப்பதுபோல் உணர்ந்தேன். அதனால் எனக்குள்ளே உறைந்து (FREEZED) போனேன். எனது பெயரின் எந்தவொரு எழுத்தையும் என்னால் எழுத முடியாமற் போய்விட்டது."
'உமது பெயரை எழுதும்' என்று ஆசிரியை கேட்டுக்கொண்டார்.
கரும்பலகையில் எழுதுவதற்காக வெண்கட்டியை எடுத்து உயர்த்திய போதும் எழுத முற்பட்டபோதும் எனது நினைவாற்றல் (MIND) வெறுமையானதாகவும் ஒன்றுமில்லாததாகவும் இடக்குச் செய்தது. எனது பெயரையோ, பெயரின் முதலெழுத்தைத்தன்னும் நினைவுக்குக் கொண்டுவர முடியாமற் போய்விட்டது. யாரோ கொக்கரித்தனர். நான் விறைப்படைந்தேன்.
‘எங்களை மறந்துவிட்டு உமது பெயரையும் முகவரியையும் மாத்திரம் எழுதவும் என ஆசிரியை இனிமையாகப் பேசி என்னை S6ovTráias6oo6nuášas upibuLLITr. (COAXED)
எழுத வேண்டும் என்ற உந்தல் என்னூடாக திடீரென எழும். ஆயினும் எனது கை அசைய மறுத்தது. பிள்ளைகள் அடக்கமாகச் சிரிக்கத் தொடங்கினர். உடம்பு உஷ்ணமாகிச் சிவந்து போனேன்.
'உமது பெயரை அறிய மாட்டீரோ?' என்று ஆசிரியை C3a5LLTrr.

Page 59
114 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
நான் அவரைப் பார்த்தேன். ஆனால், பதில் கூற முடியவில்லை. ஆசிரியை தமது ஆசனத்தில் இருந்து எழுந்து என்னருகே புன்சிரிப்புடன் வந்தார். இது எனக்குத் தன்னம்பிக்கையைத் தந்தது. எனது தோளில் தனது கையைப் பரிவோடு வைத்தார்.
'உமது பெயரென்ன? என்று ஆசிரியை கேட்டார்.
ரிச்சர்ட் என்று இரகசியமாய் உச்சரித்தேன்.
'என்ன ரிச்சர்ட்?
ரிச்சர்ட் றைட்"
எழுத்துக் கூட்டும்
வேகமாக அவசர அவசரமாய் எனது பெயரை எழுத்துல் கூட்டினேன். விறைப்பாக எளிதில் அஞ்சுகின்ற எனது நிலைமையிலிருந்து விடுபடத் தீவிரமாக முயன்றேன்.
'உமது பெயரை நான் கேட்கும் விதத்தில் மெதுவாக எழுத்துக் கூட்டிச் சொல்லும் என்று ஆசிரியை பணித்தார்.
அவ்வாறு நான் செய்தேன்.
'இப்போது பெயரை எழுத முடியுமா?
ஆம், அம்மையே
அப்போ எழுதும்

கே.எஸ். சிவகுமாரன் 115
மீண்டும் கரும்பலகைக்கு நான் திரும்பினேன். எழுத எனது கையை உயர்த்தினேன். ஆயினும் மீண்டும் வெறுமையற்றவனாகவும் என்னுள்ளே ஒன்றுமில்லாதவன் போலவும் மாறினேன். எனது உணர்வு நிலையை என்னிடம் திரட்ட வெறிப்பிடித்தவன் போல முற்பட்டேன். ஆயினும் ஒன்றையுமே நினைத்துப் பார்க்க முடியவில்லை.
எதனையும் விட எனக்குப் பின்னாலுள்ள பெண்களும் ஆண்களும் பற்றிய உணர்வே என்னில் மேலோங்கி நின்றது. முற்றிலுமாக நான் தோல்வியடைவதை உணர்ந்தேன். நான் பலவீனமடைவது போல் தோன்றியதால் குளிர்மையாயிருந்த கரும்பலகையில் எனது வெப்பமுற்ற நெற்றியைச் சாய்ந்து வைத்தேன். பெரும் சத்தத்துடனும் தொடர்ச்சியாகவும் ஏற்பட்ட சிரிப்பொலி அறை முழுவதும் நிரம்பியிருந்தது. எனது தசைநார்கள் உறைந்தே போயின.
உமது ஆசனத்தில் நீர் சென்று அமரலாம்' என்று ஆசிரியை
கூறினார்.
நான் அமர்ந்துகொண்டு என்னையே சபித்துக் கொண்டேன். கும்பல்கள் மத்தியில் எதனையும் செய்யும்படி நான் கேட்கப்படும்பொழுது நான் ஏன் எப்பொழுதுமே மடையனாக மாறிவிடுகிறேன்?
வகுப்பில் உள்ள எந்த மாணவ / மாணவி போல நானும் நன்றாய் எழுதுவேன். அவர்களைவிட மேலும் சிறப்பாக என்னால் வாசிக்க முடியும். என்னில் நம்பிக்கை வரும்பொழுது சரளமாகவும் தெளிவுப்படுத்தும் முறையிலும் என்னால் பேசமுடியும்.

Page 60
116 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிரிவான பார்வை
ஆனால், முன்பின் தெரியாத முகங்கள் முன்னிலையில் நான் ஏன் உறைந்து போக வேண்டும்?
எனது காதுகளும் கழுத்தும் தலையாய் கொதிக்கும் விதத்தில் நான் உட்கார்ந்தேன். மாணவர்கள் என்னைப் பற்றியே இரகசியமாய்க் கதைத்துக் கொண்டிருந்தனர். நான் என்னையே வெறுத்தேன். அவர்களையும் வெறுத்தேன்."
LL LLL LLL LLLL LSL LLLLS L L L L L L L L L L L L L L L L LL LSLL LLLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LL LLLLL LSL
வெள்ளை, கருப்பு, சொக்லேட் நிறத்தோல்கள் கொண்ட இளம் மாணவ / மாணவியர் மத்தியில் புதிய பாடசாலை ஒன்றில் சேர்ந்த ரிச்சர்ட் றைட்டின் அனுபவக் கதை இது.
இது உளவியல் சம்பந்தப்பட்டதுடன் இன உணர்வு சம்பந்தப்பட்டதும் எனலாம்.
இந்த எழுத்தாளர் அமெரிக்க வெள்ளையரிடையே வாழ்ந்த கருப்பு நிறத்தவர் என்பதும் உண்மை. பள்ளிக்கூடத்தில் தன்னைச் சக மாணவர்கள் ஒரு தினுசாகப் பார்ப்பதாக அவர் உணர்ந்திருக்கக்கூடும்.
ரிச்சர்ட் றைட் (1908-1960) அமெரிக்காவின் தலைசிறந்த ஆங்கில எழுத்தாளர். பல நூல்களை புனைகதை/அல்லாதவை எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவம் வகித்த பின்னர் விலகிக் கொண்டவர். அடிமைக்குலத்தில் பிறந்து நாடளாவிய, உலகளாவிய விதத்தில் முன்னுக்கு வந்த ஆங்கில வசனநடை வல்லாளன். அவருடைய வசீகரமான நடை எனக்கு மிகவும் பிடித்ததொன்று.

கே.எஸ். சிவகுமாரன் 117
மேலே தரப்பட்ட தமிழாக்கத்தில் ரிச்சர்ட் றைட்டின் சங்கோஜ மனோபாவமும் அவருடைய அந்தரிப்பும் சொல்லப்பட்டிருந்தாலும், ஆசிரிய மாணவ உறவு கனிவுடன் மலர முதற்படியாக இந்த அவருடைய முதல் அனுபவம் அமைந்தது எனலாம்.
மேற்சொன்ன கதையில் அவர் உபயோகிக்கும் வினைச் சொற்களும் ஏனையவையும் உரிய இடத்தில் உரிய முறையில் சொல்லப்பட்டதாக அமைவதை நாம் காண்கிறோம்.
D grgeOOTLDITEs (FREEZE, STIFFENED, REFUSETENDERLY, WILD, PROLONGED, PARALYSED easugorajib.
AN OBJECT OF MOCKERY, SPOKE INVITINGLY AND ENCOURAGINGLY போன்றவையும் உடனடியாகவே தாக்கத்தை எம்மனதில் ஏற்படுத்தக்கூடியவை.
நீேங்கில இலக்கியம் பயில விரும்பும் மாணவர்கள் RCHARD WRIGHT 6Tup;Su BLACKBOY 6Tap Tapao eladu Jub படித்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
e(35 (3Urso SIR WINSTON CHURCHILL 6tp:Su MY EARLY LIFE, JAWAHARLAL NEHRU 6tp:Su LETTERS TO MY DAUGHTER, GLIMPSES OF WORLD HISTORY easuadaluid ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற உதவும்.

Page 61
118 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
பூேசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் சம்பந்தப்படும் உளவியல் சார்ந்த உறவுகளைச் சித்திரிக்கும் சிறுகதைகளடங்கிய ஒரு தொகுப்பு பற்றி அறிந்து கொண்டோம். (முன்னைய கட்டுரை).
இதன் தொடர்ச்சியாக மாணவர்கள் சம்பந்தப்படும் எனது ஆசிரிய அனுபவங்களில் சிலவற்றை மாத்திரம் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பயிற்றப்பட்ட ஆசிரியனாகவோ COUNCELOR ஆகவோ நான் இல்லாதிருந்த போதினும் ஊடகத்துறையின் தொடர்பாளன் என்ற முறையில் பள்ளிக்கூடப் பட்டதாரி ஆசிரியனாகவும் அனுபவம் பெற்றவனாகவும் உள்ளேன். மஸ்கட் (ஒமான்), மாலே (மாலைதீவு). சின்சினாட்டி (அமெரிக்கா), கொழும்பு (இலங்கை) ஆகிய இடங்களில் ஆங்கில / ஆங்கில 6aois&uu &ArflueOTmas HIGH SCHOOLS (INTERNATIONAL) as6.f6) பயிற்றுவித்த அனுபவம் எனக்குச் சிறிது உண்டு. இந்த
 

கே.எஸ். சிவகுமாரன் 119 −.
அனுபவங்கள் சுவாரஸ்யமாகவும் பயன்பெறக் கூடியதாகவும் இருந்ததனால் உங்களுக்கும் இது பயன்படலாம்.
மாலைதீவின் தலைநகராகிய மாலேயில் மஜீதியா ஆண்கள் பாடசாலை அங்கு பெயர் பெற்ற பள்ளிக்கூடம். அப்பள்ளிக்கூடத்தில் அதிபராக இலங்கையரான கல்விமானும் தமிழருமான S.G. சாமுவேல் பணிபுரிந்த சமயம் (1990 களில்) எட்டாம் வகுப்பு பொறுப்பாசிரியராகவும் லண்டன் பல்கலைக்கழக G.C.E (O/LEVEL) வகுப்புகளுக்கான ஆங்கில, ஆங்கில இலக்கிய ஆசிரியனாகவும் பணிபுரிந்தேன். அந்தப் பாடசாலையில் பெரும்பான்மையான மாணவர்கள் அந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் பேசும் மொழி தி வேஹி (Dl-VEHI). அவர்கள் ஆங்கில மொழி மூலமே கற்றார்கள். சில மாணவர்கள் இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
பொதுவாகவே நல்ல குணமுடைய படிப்பில் ஆர்வம் காட்டுபவர்களாக அவர்கள் இருந்தபோதிலும் சிலர் சூழல் காரணமாக GupüLup &muffæ6nneb (INDISCIPLINED) SCBjögmfæst. மாலைத்தீவு சமூக, குடும்ப வாழ்க்கைப் போக்குகளை இங்கு விபரிப்பதற்கு இடமில்லை. எனவே, அதனை விடுத்து ஒரேயொரு அனுபவத்தை மாத்திரம் இங்கு எடுத்துரைக்கிறேன்.
குடும்ப கழல் காரணமாகப் பெற்றோரிடையே நல்லுறவு இல்லாமல், நித்திரை செய்வதற்கு இடமின்மை, வீட்டில் குடும்பத்தினர் எண்ணிக்கை அதிகம் போன்ற அசெளகரியங்கள் காரணமாக மாணவன் ஒருவன் படிக்கும்பொழுது வகுப்பில் “கலாட்டா' செய்துகொண்டிருந்தான். ஆனால் வெளியே அவன் விளையாட்டில் சிறந்த வீரனாக இருந்தான். ஏனைய மாணவர்கள் அக்கறையாக

Page 62
120 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
நான் படிப்பதைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும்பொழுது இவன் மாத்திரம் அட்டகாசமாக நடந்துகொண்டான்.
இவனின் இந்தப் போக்கை நிறுத்தி அவனை நல்வழிப்படுத்த நானும் ஓர் உபாயத்தைக் கைக்கொண்டேன்.
ஷேக்ஸ்பியரின் "ஜூலியஸ் ஸிஸர்'நாடகத்தில் வரும் ஒருவரி "LEND ME YOUR EARS' 6T6öTugs). urub plbgoalsTeootprisGurg நான் சடுதியாகப் படிப்பிப்பதை நிறுத்திவிட்டு சிலைபோல ஒரு நிமிடம் மெளனமாய் நின்றேன். இந்த 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அம்மாணவன் உட்பட அனைவரும் அமைதியாக இருந்ததால் என்ன நடந்தது என்ற அவர்களின் திகைப்பு முடிவதற்குள் LEND MEYOUREARS (எனக்குச் செவிசாயுங்கள்) என்று உரத்த குரலில் கூறினேன்.
மாணவரிடையே சிறிது சிரிப்பொலி கேட்டது. நானும் சேர்ந்து பலமாகச் சிரித்தேன். மாணவர்கள் RELAXED ஆனார்கள். அவர்கள் சிரிப்பதற்கான காரணம், அந்தப் பிரயோகத்தை அவர்கள் முன்பு கேட்டிருக்காததே. அத்துடன் காதை எப்படி கடன் கொடுப்பது 6T6öTD FUNNY SITUATION earrassir albu6060T usdorsoof unfriss முடியாதும் போயிற்று.
சிறிது நேரத்துள் மாணவர்கள் அமைதியானார்கள். குறிப்பிட்ட அந்த மாணவனை எனது மேசைக்கருகே அழைத்தேன். அவன் சிறிது தயக்கத்துடன் வந்தான். அவனைப் பார்த்து முறுவலித்தேன். அவனை அருகே அழைத்து அவன் முதுகைத் தடவிக்கொடுத்தேன். அவன் கூச்சமடைந்தான். ஆசிரியன் ஒருவன் தன்னை அன்புடன் தொட்டுத் தடவியது அவனுக்கு இது முதற் தடவையாக இருந்திருக்கலாம்.

கே.எஸ். சிவகுமாரன் 12
பின்னர் என்னருகில் நின்று கொண்டிருந்த மாணவனை மாணவர்களுக்கு முதற்தடவையாக அறிமுகப்படுத்தும் தோரணையில் அவனுடைய விளையாட்டுத் திறமைகளைப் புகழ்ந்து பேசினேன். சில மாணவர்கள் அதை ஏற்றுக் கொள்வது போல அவனுடைய திறமைகளை வியந்து கூறினார்கள்.
ée9iubLDIT6OOT6nu6ofl6öT upa5ib LD6oñiñ535ĝ5. “LEND ME YOUR EARS என்று கூறும்படி அம்மாணவனைக் கேட்டேன். அதற்கு அந்த மாணவன் 'என் காதைக் கடன் கொடுத்தால் என்னால் கேட்க முடியுமா?’ என்று விகடமாக ஆங்கிலத்தில் என்னிடம் திருப்பிக் கேட்டான். மாணவர்களிடையே மேலும் சிரிப்பொலி.
நல்லது. நல்ல கேள்வி கேட்டீர்.” என்று ஆங்கிலத்தில் அவனுக்குப் பதிலளித்துவிட்டு மாணவர்களிடம் கூறினேன். பார்த்தீர்களா, HAFEZ (மாணவனின் பெயர்) விளையாட்டில் மாத்திரமல்ல புத்திசாலியான கேள்விகளையும் கேட்டறியும் சிறந்த மாணவனும் கூட என்றதும் மாணவன் திகைத்துப் போனான்.
நான் பின்னர் அந்தப் பிரயோகத்தை METAPHORCALஆக எடுத்துக் கொண்டு விளங்க வேண்டும் என்று கூறினேன்.
அதற்கு ஷேக்ஸ்பியர், ஏன் அப்படிக் கூற வேண்டும் 'LISTENTOME என்று SMPLE ஆக கூறியிருக்கலாமே என்று ஏனைய மாணவர்கள் கேட்டார்கள். அதற்கு விளக்கமாக நான் அக்கால அரசமொழி வழக்கு மற்றும் கவிதை நயம் போன்றவற்றை விரிவாக விளக்கிக் கூறினேன். மாணவர்கள் திருப்தி கண்டனர். நீங்கள் நம்பமாட்டீர்கள் அந்த வகுப்பைத் தொடர்ந்து வந்த வகுப்புகளில் எல்லாம் 'குழப்படியின்றி ஆங்கில இலக்கியத்தைக் கற்பதில் HAFEZ" வெகு ஆர்வம் கொண்டான்

Page 63
122 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
ஆசிரியர்கள் கவனம் தன் மீது செலுத்தப்படாததனால் HAFEZ தன்னையும் இனங்காண வைப்பதற்கான முயற்சியாகவே 'அட்டகாசம் புரிந்து வந்தான் என்பது தெரியவந்தது. அன்பினால் எவரையும் ஆளலாம். 'அன்பே சிவம்' என்பார்கள் அல்லவா?
இன்னொரு aflbu6) (b.
இது ஓமான் தலைநகரான மஸ்கெட்டில் உள்ள பிரபல அனைத்துலகப் பாடசாலையான முறிலங்கன் ஸ்கூலில் இடம்பெற்றது. அங்கு LONDON GCE பரீட்சைக்குத் தோற்றும் ஆண் - பெண் மாணவர்கள் படித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான், லெபனன், இலங்கை மாணவர்களாயிருந்தனர்.
பத்தாம் வகுப்பில் ஆங்கிலக் கவிதைப் பாடத்தை நடத்திக் கொண்டிருந்தபோது (அனைத்து மாணவர்களும் வெகு கெட்டிக்காரர்கள்) சில பாகிஸ்தானிய மாணவிகள் ஏதோ கவனத்தினால் தமக்குள்ளே இரகசியமாகக் கதைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பாடத்தை இடையில் நிறுத்திவிட்டு அந்தக் குறிப்பிட்ட மாணவிகளைப் unfigg "I LOVEYOULIKEAPINEAPPLE' 6T6öTD singSC360T6öT. &b5 அழகிய மாணவிகளின் முகங்கள் மேலும் சிவப்பாயின. எதிர்பார்த்தது போலவே எல்லாரும் சிரித்தார்கள்.
நான் சிரிக்காமல் 'என்னைப் பிழையாக விளங்கிக் கொள்ளாதீர்கள். அது ஒரு SHOCK EFFECTஐ உங்களிடம் ஏற்படுத்தவே கூறினேன். கவிஞர்கள் புதுமையாக எதனையும்

கே.எஸ். சிவகுமாரன் 123
கூறுவார்கள். என்று விளக்கிவிட்டு ஆங்கிலக் கவிதை நயங்களை எடுத்துரைத்தேன். மானவர்கள் சுவாரஸ்யத்தை வெளிப்படுத்தினார்கள்.
ஒவ்வொரு மாணவ - மாணவியரையும் நேராக அவர்கள் கண்களைப் பார்த்துக் கதைத்தேன். அம்மாணவர்கள் அனைவருமே ஆசிரியர் தங்களுடன் நேரடியாகவே தொடர்பு கொள்கிறார் என்று அறிந்துகொண்டு கூடிய சிரத்தை காட்டினர்.
ஒன்பது வருடங்கள் கழிந்த பின்னரும் இந்த மாணவ - மாணவியர் FACEBOOK இணைத்தளம் மூலம் என்னுடன் உரையாடி வருகின்றனர். ஒரு நல்ல ஆசிரியனாக நான் : விளங்கியிருப்பதையிட்டும் உளவியல் ரீதியாக அவர்களைக் கொள்ளை கொண்டு பாடத்தில் ஈடுபாடு கொள்ள வைத்ததையிட்டு நான் பெருமை கொள்கிறேன்.
LL LLL LSL LSL LLLL LL LLL LLS LL LLL LLLL LL LLL LLL LLL LLL LLS LL LL LLLLL LSL LLS LL LLL LL LS LS LLL LL LSL S LSL LLL LLL LLL LLL LLS LL
இவ்வாறு, மூன்று இலங்கைப் பாடசாலையில் (அனைத்துலக) உளவியல் சார்ந்த அனுபவங்கள் இருந்தபோதிலும் இடநெருக்கடி காரணமாக பிறநாட்டுப் பாடசாலையொன்றில் பெற்ற அனுபவத்தைக் கூறி நிறுத்திக்கொள்கிறேன்.
அமெரிக்காவில் ஒஹையோ (OHIO) மாநிலத்தின் இரண்டாவது தலைநகரான சின்சினாட்டியில் (CINCINAT)FOREST HILL DIT6JLL HIGH SCHOOLS6so SUBSTITUTE TEACHER east பணிபுரிந்த பொழுது இரண்டு பள்ளிக்கூடங்களில் ANDRESONHIGH SCHOOL, TURPIN HIGH SCHOOL easual beio 6poor GB

Page 64
124. ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
வேறுவிதமான அனுபவங்கள் மூலம் நான் கற்றுக்கொண்டதை இங்கு பரிமாறிக் கொள்கிறேன்.
முதலாவது சம்பவம். கணித வகுப்புப் பரீட்சை மேற்பார்வை செய்வது எனக்களிக்கப்பட்ட பணி. மாணவர்கள் அனைவரும் மும்முரமாக வினாத்தாள்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆபிரிக்க அமெரிக்கச் சிறுவன் (12 வயதிருக்கும்) மாத்திரம் கேள்வித்தாளுடன் போராடிக்கொண்டிருந்தான்.
“WHAT'S YOUR PROBLEM, SON?” 6T6örgpl (Bass:GBL6öT. அவன் தந்த பதில் எல்லோரையும் சிரிக்க வைத்தளது. அவன் anglaoTIT&T: "Mr. SIVA, THIS MATH PAPER ISDAMAGING MY BRAIN". அவனுடைய புதுப்புனைவான பிரயோகத்தைப் பாராட்டி அந்தரப்படாமல் கேள்விகளை மெதுவாகப் படித்துப் புரிந்துகொண்டு, சிந்தித்து விடை எழுதும்படி கேட்டுக்கொண்டேன். உற்சாகம் காரணமாக அவன் மும்முரமாக அமர்ந்து பதில் எழுதினான். அவ்விடைத்தாளைத் திருத்தி அவன் எவ்வாறு பதிலளித்தான் என்பதை நான் அறியமுடியாமற் போனாலும் இதமான உற்சாகமூட்டும் அறிவுறுத்தல்களினால் அவன் அங்கலாய்ப்பதைத் தீர்க்க முடிந்தது.
இன்னொரு சம்பவம்: பாடம் நாடகம்' சம்பந்தப்பட்டது. எல்லா மாணவர்களும் தீவிரமாகக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டனர். ஒரு மாணவன் மாத்திரம் (தியாகராஜ பாகவதர் போன்று) தலைமுடியைப் பின்னுக்கு வளரவிட்டு அழகாக வாரியிருந்தான். அவன் ஏதோ கனவு காண்பது போலிருந்தான். அவனிடத்துக்குச் சென்று அவனை அன்பாகப் பார்த்து YOUMUST

கே.எஸ். சிவகுமாரன் 125
BEA GUITARIST Grcirc&psit. "HOW DO YOU KNOW2" sigorp 6T6T6of Lub ele6öT 505uslds (35LLT6T. "BECAUSE YOU LOOK LiKEANARTISTE" 6T6öpg|Lb el6)j6öT grflûLu60)Lj55m6öT. el6u606UT மாணவர்கள் முன்னிலையில் அழைத்து ஒரு பாட்டு பாடும்படி (3asC&Leô. el66ôT GUITAR &eboom Do CARLOS SANTANA G3UTeörp பாவனை செய்து அழகாகப் பாடினான். மானவர்கள், மாணவியர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரித்து 'COOL என்று பாராட்டினர். மாணவன் தான் ஒரு நாயகனாகக் கருதிக் கொண்டதும் உற்சாகமடைந்தான். பின்னர், வகுப்பு பாடம் தொடர்பான நாடக பாத்திரங்களை அவனும் ஏற்று நடிக்க வகை செய்ததும் அவன் நாடகப் பாடத்தில் ஆர்வம் காட்டினான்.
இவ்வாறு உளவியல் ரீதியாக மாணவர்களை வழிப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொண்டேன்.

Page 65
126 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
மறைந்த ஆய்வறிவாளர் கனகசபாபதி கைலாசபதி ஆரம்பத்தில் எழுதிய நூல்கள் பண்டைய தமிழ் சமுததாய, சமயம் தொடர்பானவை. உண்மையைத் தேடும் முயற்சியில் முன்னோடி
முயற்சி எனலாம். மக்களின் மனதைப் புண்படுத்தாது நவீன ஆய்வறிவு நுண்ணுணர்வுப் பரிவர்த்தனை செய்யும் பாங்காகத் தமது 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்' என்ற நூலை எழுதியிருக்கிறார்.
க. கை. துணிவாக இக்கட்டுரைத் தொகுப்பை எழுதியிருக்கிறார். தாம் எடுத்துக் கொண்ட பொருள்கள் தொடர்பாகத் தாம் பொருள்கொண்டு விளக்கும் வகையில் நூலாசிரியர் எழுதுகிறார். மார்க்ஸ், ஏஞ்சில், பொலிட்ஸர் போன்றவர்களின் கருத்தியல்கள் க. கைலாசபதிக்கு அடிப்படைத்தளமாகிறது.
இலக்கியம், கலையோவியம், மெய்யியல், மதம், மொழி போன்றவை எவ்வாறு உருவம் கொள்கிறது என்பதை அறிய
 

கே.எஸ். சிவகுமாரன் 127
சமுதாயத்தின் பொருளாதாரப் பின்னணியை நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்பது கைலாசபதியின் உள்ளக்கிடக்கை. இக்கட்டுரைகளைப் படிக்கும் பொழுது இது துலாம்பரமாகத் தெரிவதை நுண்ணுணர்வு வாசகர்கள் அறிந்து கொள்வர்.
கலை, இலக்கியம் போன்ற் இன்னனோரன்ன துறைகளை நன்கறிந்துகொள்ள சமூகப்பார்வையும் பிரக்ஞையும் தேவை என்பதை மாணவர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் இக்கட்டுரைகள் வடிவங்கொண்டுள்ளன.
வரலாற்றடிப்படையில் க.கை.யின் பகுப்பாய்வு செய்யும் முறைமை என்னைப் பெரிதும் கவர்ந்தது. பகுத்தறிந்து பொருள் விளங்க முயலும் மாணவர்களுக்குத் துணிவுடன் எழுதும் சிந்தனைவாதி கைலாசபதியின் கருத்துக்கள் புத்தறிவைப் புகட்டுகின்றன.
எட்டுக்கட்டுரைகளும் திறனாய்வு வகையைச் சேர்ந்தவை. தென்னிந்திய வரலாற்றின் சோழர்காலம் வரையிலான தமிழர் சமுதாயத்தை க.கை, இலக்கியத்தினூடாகப் படம் பிடிக்கிறார்.
ஆதிதமிழனின் ஆன்மீக விழிப்புணர்வை முதற்கட்டுரை விபரிக்கிறது. தாய்வழிச் சமுதாயத்தில் பெண்தெய்வ வழிபாடும் முருகன் வழிபாடும் பின்னர் சிவ வழிபாடும் இருந்தமை கூறப்படுகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் பெயரில்லா ஆண்தெய்வமே சகல வல்லமை கொண்ட தெய்வமான சிவன் எனக் கருத இடமுண்டு. சிந்துவெளிச் சிவன் கொற்றவை என்ற பெண் தெய்வத்தைத் தனது துணைவியாக ஏற்றுக்கொண்டார் என்றும் இசைக்குழுக்களின் நாயகனாக முருகனைத் தனது மகனாக ஏற்றுக் கொண்டார் என்றும் இக்கட்டுரை மூலம் அறியப்படுகிறது.

Page 66
128 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
வாய்மொழி வீரயுக கவிதை பற்றியதாக அடுத்த கட்டுரை அமைகிறது. ஆளும் வர்க்கத்தினரின் ஊது குழல்களாகக் கவிஞர்கள் செயற்பட்டதை இக்கட்டுரை விளக்குகிறது. வீரயுகக் கவிஞர்களைப் பொறுத்தமட்டில் கலை கலைக்காக என்ற நம்பிக்கை அர்த்தமற்றதாகப் போய்விடுகிறது. மன்னர்களின் பெருமைகளைப் பறைசாற்றும் பிரசாரங்களாக இக்கவிஞர்கள் செயற்பட்டனர்.
இந்த வாய்மொழி வீரராக கவிஞர்கள் லெளகீக காரணங்களுக்காக மன்னர்களின் அருமை பெருமைகளைப் பேசித் தொழிற்பட்டனர். அழகியல் பண்புகள் பின்னணிக்குத் தள்ளப்பட்டன. அக்கால கட்டத்தில் யுத்தம் அவசியமான தேவையாக இருந்தது. எனவே போர் பெருமைமிகு முக்கியத்துவம் பெற்றது. போரின் அழிவுகளில் அழகை இப்புறநானூற்றுப் பாடலாசிரியர்கள் ങ്കങ്ങLങ്ങIf. வர்க்கப்போராட்டம் காரணமாகவே பயங்கரவாதம் வேரூன்றியதென இக்குறிப்பிட்ட கட்டுரையில் தெளிவுபடுத்தப்படுகிறது.
அடுத்த கட்டுரையில் வீரயுகமும் வீர வழிபாடும் பேசப்படுகிறது. வீரநாயகர் வழிபாடும் மன்னராட்சிக்கான அத்தியாவசியத்துக்கு இட்டுச் சென்றது. மக்களின் அறியாமையும் வீரர்கள் மீதான அபிமானமும் இந்த வீரவழிபாடு நடைமுறைக்கு வருவதற்கான காரணிகளாயின. இதுவே தெய்வ வழிபாடாக வளர்ச்சி பெற்றது எனக் கட்டுரையாளர் கூறுகிறார். பின்னர் வந்த சமூக மாற்றத்திற்கு அடிப்படைக் காரணம் இந்தத் தெய்வ வழிபாடு என்கிறார் கட்டுரையாசிரியர்.
'உலகம் உயர்ந்தோர் மாற்றே" என்ற சித்தாந்தம் எழ ஏதுவாயிற்று. உயர்ந்த லட்சியங்களும் உன்னதப் பண்புகளும் ஈற்றில் தெய்வீகத்தன்மை பெற உதவும் என்ற நம்பிக்கை

கே.எஸ். சிவகுமாரன் 129
வலுப்பெற்றது. இன்னொரு விதத்தில் கூறினால், பிரித்தானிய வரலாற்றிலேயே டியூடர் (TUDORS) மன்னராட்சியின்போது Divine RIGHTOFKINGS என்ற கோட்பாடு (மன்னர்களின் தெய்வீக உரிமை) நிலவியதற்குச் சமமாக சங்கம் மருவிய காலப் பாடல்கள் அமைந்தன எனலாம்.
இந்தக் கட்டுரையில் விசேடமாகக் குறிப்பிட வேண்டியதென்னவெனில் வீரயுகக் கவிதைகளில் கிரியைகள் தொடர்பான விபரங்கள் இருந்தமையாகும். முன்னைய ஈமக்கிரியைகள் பற்றிய விபரிப்பே அதிகம் காணப்பட்டன.
நான்காவது கட்டுரை மனிதனிடத்து எழுந்த ஆன்மீகப் பிரக்ஞை எவ்வாறு எழுந்தது எனக் காட்டும் பிரயத்தனமான எத்தனிப்பு எனலாம். படிப்படியாக மனிதன் இறைவன் தொடர்பான பிரக்ஞையைப் பெறத் தள்ளப்பட்டான். கிளியைகளைத் தழுவி ஒழுகத் தலைப்பட்டான். இறுதியில் இது மனிதனின் சகல ക്രേങ്ങഖങ്കബ്ര பெண்தெய்வ வழிபாட்டினால் சாத்தியமாகும் என மனிதன் உணரத் தொடங்கினான்.
பல்லவர் காலத் தமிழ் இலக்கியம் பற்றியதாக ஐந்தாவது கட்டுரை வரையப்பட்டுள்ளது. கைலாசபதியின் பார்வையில் சைவத்தில் நம்பிக்கை கொண்ட நிலவுடைமை விவசாய வர்க்கத்தினருக்கும் ஜைன மதத்தைப் பின்பற்றிய பொருளாதார பலம் கொண்ட வணிக வர்க்கத்தினருக்குமிடையே ஏற்பட்ட போராட்டமே பல்லவர் கால இலக்கிய விளைச்சலாகியது.
சைவம், தமிழ், கல்வி ஆகியன பல்லவர் காலத்தில் வளருவதற்கு இந்த வர்க்கப் போராட்டமே காலாகியது என்கிறார் கைலாசபதி. ஆயினும் மரபு வழி சைவர்களுக்கு இந்தக் கூற்று

Page 67
130 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
ஒரு சவாலாய் அமைந்தது. இது ஏனெனில் சைவம் பக்தியை அடிப்படையாகக் கொண்டது என்பர்.
பழைய கர்ம வினையின் விளைவுகளிலிருந்து ஒருவரை விடுவிக்க பக்தி மார்க்கம் உதவுகிறது என்றும் மோட்சத்தை அடைய பக்தியே வழிகாட்டுகிறது என்பர் சைவ மக்கள். இருந்தபோதிலும் வர்க்கப் போராட்டம் காரணமாகவே சைவம் தழைத்தோங்கியது என்ற கூற்றுத் தொடர்பாக மேலும் சிந்திக்கத் தொடங்கியுள்ளது.
அடுத்த கட்டுரையிலும் வர்க்கப் போராட்ட அழுத்தமே வலியுறுத்தப்படுகிறது. தர்மம், அரசியல் ஆகியவை பற்றியதாக இது அமைந்துள்ளது. இலக்கியத்தின் துணை கொண்டு தனது முடிவுகளைக் கட்டுரையாளர் இங்கு தெரிவிக்கிறார். சிலப்பதிகாரம், LDeoofi G3LD856o 6to ஆகிய இரட்டைக் as Tufts at 6f 6ft மதிப்பீட்டடிப்படையில் அவர் நோக்கு அமைவதை அவதானிக்கலாம். அக்காவியங்கள் தீட்டும் காலச் சூழ்நிலையில் சமூகம் எவ்வாறு இருந்தது என்பதையும் தீங்குகள் எவை எனவும் அவை எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட்டன என்றும் மார்க்ஸியப் பார்வையில் கட்டுரையாளர் எடுத்துக் காட்டுகிறார்.
ஆயினும் காவியப் படைப்பாளிகள் கர்மம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகாண முயன்றதனால் அவர்கள் நோக்கம் நிறைவுறவில்லை என்று க.கை, வாதிடுகிறார். கர்மவினையோ, துறவறமோ வழியல்ல, வாக்கப் போராட்டமே தீமைகளை அகற்ற முடியுமென்பது மார்க்சியவாதி கைலாசபதியின் நம்பிக்கையாய் இருந்தது.
சோழர்கால சைவசமயம் பற்றிய அடுத்த கட்டுரையும் மக்களிடையே சைவம் பல்லவர் காலத்திலிருந்து எவ்வாறு தழைத்தோங்கியது என்பதை ஆராய்கிறது.

கே.எஸ். சிவகுமாரன் 131
பக்தி என்ற பெருவெள்ளம் எங்ங்ணம் சோழ சாம்ராஜ்யம், உருவாக வழிசமைத்தது, மன்னன் எங்ங்ணம் தெய்வப் பிரதிநிதியாகக் கருதப்பட்டான் என்பதை மேற்சொன்ன கட்டுரை ஆராய்கிறது. இந்தப் பின்னணியில் எசமான் - அடிமை உறவுகளும் நிலபிரபுத்துவ வழக்கும் நிதர்சனமாகின என்கிறார் ങ്ങാങ്കബ്,
கடைசிக் கட்டுரை பரணி இலக்கிய முறைமையின் சமூக
ஊற்றை ஆராய்கிறது. கலை, இலக்கியங்களைச் சமூக அமைப்பே தீர்மானிக்கின்றன என்பது எல்லாக் கட்டுரைகளிலும் புலப்படுத்தப்படும் கருத்தாகும்.
இனம், மதம் தொடர்பான பழமைக் கருத்துகளின் பிழையான அர்த்தங்களைக் கண்டிக்கும் போக்கில் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன எனலாம். ஆயினும் தமிழ் இலக்கிய மாணவனுக்குத் திறனாய்வின் அடிப்படை அணுகுமுறைகள் எவ்வாறு பிரயோகிக்கப்படவேண்டும் என்று காட்டப்பட்டுள்ளது. வரலாற்று மாணவன், கட்டுரைகளில் மார்க்சியப் பக்கச் சார்பு இருப்பதை இனங்கண்டு கொண்டாலும், குறிப்பிட்ட நோக்கத்துக்காக எழுதப்பட்ட நேர்த்தியான உரைநடைப் பாங்காக இக்கட்டுரைகள் elsoLDésitpeoT. DIALECTICALMATERIALIST CONCEPTION OF HISTORY IS ONLY ONE ASPECT OF UNDERSTANDING HISTORY

Page 68
132 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
ĝfóäîávDdoltwiláð ogólvólĉido" திறனாய்வக் குறிப்புகள் ఛ
இத்தொகுதிக்கு வைத்தியகலாநிதியும் சிறந்த எழுத்தாளரும் திறனாய்வாளருமான எம்.கே. முருகானந்தம் அருமையான திறனாய்வைத் தமது முன்னுரையில் தந்துள்ளார். அவருடைய அவதானிப்புகள் எனக்கும் உடன்பாடானவை. எனவே, அவற்றை இங்கு மீண்டும் தெரிவிக்காமல் ஓரிரு அவதானிப்புகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
01. மு. வரதராசன், செ. கணேசலிங்கன், கே.எஸ். சிவகுமாரன் போன்ற ஒரு சிலர் அந்நாட்களில் ஆக்க இலக்கியத்தில் பயன்படுத்திய எழுத்து நடையின் சாயலை நீர்வை பொன்னையனின் அண்மைக்கால ஆக்க இலக்கிய நடைவடிவம் கொள்கிறது எனலாம்.
O2. இத் தொகுப்பில் அருமையான உடன் நிகழ்கால படப்பிடிப்புகள் இடம்பெறுகின்றன. இடம்பெறும் 10 கதைகள்
ஒவ்வொன்றும் தனித்தனியாக முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக தனிமனித உறவுகளை வடபகுதிச் சமூகச்சூழலிலும் சில
 

கே.எஸ். சிவகுமாரன் 133
தசாப்தங்களுக்கு முன்னைய சூழலிலும் யதார்த்தபூர்வமான கதைகள் சித்திரிக்கப்படுகின்றன. இவற்றுள் ஒன்று இவை கொழும்பை பகைப்புலமாக்கிக் கொண்டது. நீர்வை பொன்னையன் முன்னர் எழுதிய கதைகளின்றும் இவை வேறுபட்டவை.
O3. இவை எவ்வாறு வேறுபட்டவை என்றால் எடுத்துக்கொண்ட கதைப்பொருளுளிலும் கதை சொல்லும் முறையிலும் உத்திப் பிரயோகத்திலும் வேறுபட்டவையாக இருப்பதுதான்.
O4. நீர்வை பொன்னையன் கையாளும் உத்திமுறைகள் பல தசாப்தங்களுக்குப் பின் செப்பனிட்ட முறையில் மீள் அறிமுகமாகின்றன. உதாரணமாக கவிதை, நாடகப்பாங்கு, சொற்செட்டு, சொல்லாமற் சொல்லும் கலை நயப் பாங்கு போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம்.
O5. பொதுவான இந்த அவதானிப்புகளைத் தெரிவிக்கும் அதே வேளையில், கதைகளின் எழுத்து நடையில் கவின்மிகு பேச்சு மொழியும் படிமங்களும் அடங்குவதை நான் இரசித்தவை.
O6. சில உதாரணங்கள்
முதலாவது கதை நிமிர்வு' புதுமைப்பித்தனின் கிண்டல் நடைபோன்று சில சின்னஞ்சிறிய வசனங்கள் 'இடுப்பில் சாயவேட்டி, பரட்டைத் தலை, நரைத்த தாடி, நெற்றியிலே திருநீற்றுப்பட்டை பெரிய குங்குமப்பொட்டு, காதில்பூ இவை இருப்பதால் அவன் பக்தனாகிவிடுவானா?, நீர்வை கையாண்ட சில பிரயோகங்கள் தாவர போஜனி, கறுப்புக்கோட்டு, தேர்தல் களத்தில், தமிழின்

Page 69
134 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
பெயரால் கறுப்புக்கோட்டு வெற்றி, அவனை அமர்த்த நினைத்தார் எம்.பி. பருவத்தின் நெருடல், கன்னி நிலம், பாழ் வெளியின் நெஞ்சில், நெற்றிப்பொட்டில் சிறிய குடியிருப்பு.
O7. அடுத்த கதை, மாயை நீவந்து இப்படி வாழ்மானம் செய்வாயெண்டு எனக்கு எப்பிடித் தெரியும்? இனி அவளுக்கும் எங்களுக்கும் எதுவித சங்காத்தமுமில்லை, எதுவித சஞ்சலமோ கோபதாபமோ இல்லாமல் தன்பாட்டில் கமலா நிர்விசாரமாயிருக்கின்றாள். இந்த அவிசாரியின்ரை துரோகத்தைப் பார்த்துக்கொண்டு என்னண்டு சும்மா இருக்கிறதுடா வெப்பிசாரமாய் கூறுகின்றாள் பாட்டி, எடியே இஞ்சேரடி எங்கட அன்னக்கிளியை.'
O8. SD6, 'சாதிவெறித் தகர்ப்பில் களம் பல கண்ட போராளி கதைச் சிங்கம் கனகத்தின் கையைப் பற்றுகின்றான் உறுதியாய்'.
O9. D-6OLL. 'கட்டுக் குலையாத மிடுக்கான உடற்கட்டு, கம்பீரமாகத் தலைநிமிர்ந்து நிற்கிறான் ஒரு விடலை, உழைப்பால் உரமேறிய உடல், விரிந்து பரந்த மார்பு, முறுகித்திரண்ட புயங்கள்.
10. வீழ்ச்சி, 'ஐஞ்சு, நாளும் இரவிலை என்னோடை தங்கிறதுக்கு ஒரு மொட்டு ஏற்பாடு செய்திருக்கிறதாய் சங்கர் சொன்னான். அந்த மொட்டுக்கு ஒரு குஞ்சு.
11. மீட்பு,
"கங்கை நதிக்கிளை ஹில்ஷா மீன் விளையும் ஹ"கிளி நதி, நதியின் இக்கரையில் வங்க மறுமலர்ச்சிக்கு வித்திட்ட வில்லியம் சேரியின் புகழ்பூத்த சரம்பூர் கல்லூரி, நதியின் அக்கரையில்

கே.எஸ். சிவகுமாரன் 135
சிப்பாய்க் கலகம் வெடித்த வீரம் விளை நிலம் பரக்பூர், விடலை வெய்யில் கொதித்து தகிப்பு இளம் புரட்சிக் கவிஞன் சுகந்தே பட்டாசாரியாவின் அஞ்சல் ஒட்டக்காரனின் சோககாவியம், வங்க தேசத்தின் புரட்சிப்புயல் குதிராம் போசின் வீரகாவியம் உத்பால்தத்தின் உழைப்பாளர் உரிமை முழக்கம், மிர்னால் சென்னின் புரட்சிக் காவியம், அதிகார வர்க்கத்தின் உடைமையாய் இருந்த இசை விடுதலை பெற்று மக்கள் மயமானது, சிறைப்பட்டிருந்த வங்கத்தின் ஆத்மா விடுதலை பெற்று விகசிப்பு.
12. வெறி,
'உன்ரை உடம்புச்சூடு எனக்கு இதமாய் கிடக்கு, நீ பேசாமல் கிடவடி, உமது அப்பன் ஒரு புடிச்சிராவி, திருமணத்தின் பின் மற்ற பெண்களுக்குக் கிடைக்கிற இன்பகரமான தாம்பத்திய வாழ்க்கை புவனத்திற்கு எட்டாக் கனியாகி விட்டது. ஒரு அவிசாரியை நீங்கள் என்ரை தலையிலை கட்டிவைச்சிட்டு இப்ப ஞாயம் கேக்க வாறியளோ? தெரிஞ்சும் சொத்துக்காக ஆண்மையில்லாத இவனை எனக்குக் கட்டி வைச்சாய், நீ என்ர வாழ்க்கையை பாழடிச்சிட்டியோ பாவி, நீயும் ஒரு தகப்பனா? இவன் ஒரு அலியடா’,
பலி, ஆரு, புதிர், ஆர்வம் ஆகிய கதைகளிலும் உள்ளடக்கச் சிறப்பு மேலோங்கி நிற்கிறது.
நீர்வை பொன்னையன் இக்கதைகள் மூலம் உடன்நிகழ்காலத்துக்ககுரிய வித்தியாசமான கதைகளைப் படைக்கும் எழுத்தாளராகத் திகழ்வது நமது வரப்பிரசாதமே.

Page 70
136 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
முன்மாதிfயான ஆய்வு அதுதமுறை
முன் மாதிரியான ஆய்வு அணுகுமுறை என்று கூறக்கூடிய விதத்தில் ஒரு நூல் வந்திருக்கிறது. 'முன்மாதிரி" ஏனெனில் பக்கச்சார்பின்றி, எடுத்துக்கொண்ட பணிக்கேற்ப கூடியவரை யாவும் உள்ளடங்கிய விதத்தில் (COMPREHENSIVE) பகுப்பாய்வு செய்யப்பட்ட நூலாக இச்சிறு புத்தகம் அமைந்திருப்பதுதான்.
நூலின் பெயர். 1990களில் மல்லிகைச் சிறுகதைகள், நூலாசிரியரின் பெயர்: மல்லிகாதேவி, நாராயணன். இது ஒரு மல்லிகைப் பந்தல் வெளியீடு. வெளியீட்டாளர் அறிஞர் டொமினிக் ஜீவா - அழகிய, பொருத்தமான கற்பனை. கவிஞர் / பத்தி எழுத்தாளர் மேமன்கவி அட்டைப்படத்தை வடிவமைத்திருக்கிறார். கணினி அச்சமைப்பின் நேர்த்திக்குப் பாத்திரமானவர். எஸ். லிகோரின் றோசி.
என்னுரை (ஆசிரியர்), முன்னுரை பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி), பதிப்புரை (டொமினிக் ஜீவா), நன்றியுன்ரி நூேலாசிரியர்)
 

கே.எஸ். சிவகுமாரன் 137
ஆகியனவற்றையும் சேர்த்து ஐந்து தலைப்புகளில், 96 பக்கங்களில் இந்நூல் வெளிவந்துள்ளது.
நூலாசிரியரின் தாய்மொழி மலையாளம், ஆயினும் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்று, களனி பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறை விரிவுரையாளராக மல்லிகாதேவி நாராயணன் விளங்குகிறார். இத்தகைமைகள் விசேடமானவை, UITprTL Gaiscessfuj6061.
இந்நூலின் விசேடத் தன்மை இன்னொன்றிலும் தங்கியிருக்கிறது. அது என்னவெனில், வெறுமனே மேற்கோள்களையும், அடிக்குறிப்புகளையும் நூற் பட்டியலையும் தராது. நூலாசிரியர் தனது சொந்த கணிப்புகளையும் தருவதுதான் வழமையாக ஆய்வு நூல்கள்' என்று வெளிவருபவற்றில், ஆய்வாளரின் தனித்துவமான 'புதுக்கண்டுபிடிப்பான ஆய்வு சார்ந்த கணிப்புகள் இருப்பது வெகு குறைவு. ஆனால், இந்த நூலில், இக்குறைபாடுகள் தவிர்க்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கிறோம். இதனை உதாரணங்கள் மூலம் நாம் விளங்கிக் கொள்வோம்.
அவ்வாறு செய்யுமுன்னர், இந்நாளிலே நூலாசிரியரின் ஆய்வுக் கட்டுரையை நெறிப்படுத்திய பேராசிரியர்களுக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவர்கள், அருமையான ஆய்வாளராகிய பேராசிரியர் க. அருணாசலம், பேராசிரியர் வி. கனகரத்தினம் ஆகியோராவர்.
இனி, நூலுக்குள் நுழையுமுன் பிரசுரிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து சில முக்கியமான கூற்றுக்களை எடுத்துரைப்போம்.

Page 71
138 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
மல்லிகாதேவி நாராயணன்
O 'மல்லிகை"யில் வெளிவரும் ஆக்க இலக்கிய இலக்கியங்களுக்குள், சிறுகதைகளுக்கு மிக முக்கியமானதோர் இடம் வழங்கப்படுகின்றது.
O குறிப்பாக, 1990களில் வெளிவந்த பெரும்பாலான மல்லிகை சிறுகதைகள் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிக்கும் வரலாற்றிற்கும் 8. Lவலுச்சேர்ப்பனவாயுள்ளன.
O ஐந்தாவது இயலில், 90களில் வெளிவந்த இம் மல்லிகைச் சிறுகதைகளின் கலைத்துவம் ஆராயப்பட்டுள்ளது. இதில், பாத்திர வார்ப்புகள், கதைப் பின்னல், நோக்கு நிலை, நடை, கதைக்கரு, தொடக்கம், முடிவுகள் போன்ற கலைத்துவ அம்சங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வெழுத்து முயற்சிகளில் தம்மை இணைத்துக் கொண்ட பல்வேறு பிரதேச எழுத்தாளர்களது பங்களிப்புகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
O 20ஆம் நூற்றாண்டுகளின் 5ஆம், 6ஆம் தசாப்தங்களில் இலங்கையில் 'முற்போக்கு இலக்கியம் இயக்க நிலையில் வளர்க்கப்பட்டது.
O மல்லிகையில் வெளிவந்த சிறுகதைகள் பல்வேறு பொருட்களை உடையவை. பல்வேறு தரமுடையவை. ஒரு பத்தாண்டு காலத்தில் வெளிவந்த சிறுகதைகள், மல்லிகையின் தரத்துக்கும் ஈழத்திலக்கிய சிறுகதை வரலாற்றுக்குமான பதச்சோறாக

கே.எஸ். சிவகுமாரன் 139
ஆராயப்படுகின்றன. சிறுகதை ஆக்கம் பற்றிய ஒரு குறிப்பினை இங்கு பதிவு செய்தல் அவசியம். ஒரு பிரதான சம்பவத்தை அல்லது மனநிலையை அல்லது பாத்திர இயக்கத்தை சித்திரிப்பதன் மூலம் சிறுகதை அது தோன்றும் உலகத்தையே படம் பிடித்துவிடுகிறது. சிறுகதையின் அமைவு, பாத்திர வார்ப்பு, இவற்றுக்குத் தளமாக அமைகின்ற மொழிநடை என்பன மிக முக்கியமானவையாகும்.
Ghy-MruNeofå såensr
இந்த ஆய்வு நூலை, இன்றைய இளம் தலைமுறையினரின் கரங்களில் சமர்ப்பிக்கும்போது, அது ஒரு நீண்ட் கால இலக்கிய உழைப்பின் பெறுபேறு என்றே கருதுகின்றேன்.
நூலாசிரியை மல்லிகாதேவி நாராயணன் தனது ஆய்வு நூலை அமைத்திருக்கும் முறைமை அவருடைய தீவிர தேடலின் விளைவாக அமைகிறது எனலாம். விளக்கம் வருமாறு:
இயல் ஒன்று
(டொமினிக் ஜீவாவின் வாழ்க்கைப் பின்புலமும், இலக்கிய முயற்சிகளும், மல்லிகை வெளியீடும் அதன் சிறப்புகள்) டொமினிக்
ஜீவாவின் வாழ்க்கைப் பின்புலம், இலக்கிய முயற்சிகள், மல்லிகை வெளியீடு, மல்லிகையின் சிறப்புகள்.
இந்த முறைமை ஆய்வுக்கான Context I (கட்டுரைப் பகுதியின் முன்பு வந்து பொருளை நிலைநாட்ட உதவும் ஒன்று - சந்தர்ப்பம்) நூலாசிரியர் தருவது அவர் ஆய்வு எந்தப் பின்னணியில் ஆராயப்படுகிறது என்பதனைக் காட்டி நிற்கிறது.

Page 72
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
140
இந்த இயலில் நூலாசிரியர் தரும் பிரயோஜனமான தகவல்கள்
O தமிழிலக்கிய வரலாற்றில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தமிழிலக்கிய இதழ் செந்தமிழ் (1902), பின்னர் செந்தமிழ்ச் செல்வி (1923), தமிழ்ப்பொழில் (1925), விவேக போதினி, விவேக சிந்தாமணி, தேச பக்தன், தமிழ்நாடு, ஆனந்தவிகடன், கலைமகள், மணிக்கொடி போன்றன வெளியாகின.
தமிழகத்தில் வெளிவரும் பல சஞ்சிகைகளும் வந்த வேகத்திலேயே மறைந்துவிடக் காரணம், அவை சில புத்திஜீவி களால் (?) ஒரு சில 'புத்திஜீவிகளுக்கு மாத்திரமே நடத்தப்பட்டதனாலேயாகும்.
இயல் இரண்டு
(ஈழத்தில் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்)
- சிறுகதை விளக்கம், சிறுகதையின் தோற்றம், ஈழத்தில் சிறுகதை வளர்ச்சி, சஞ்சிகை விளக்கம்.
ஆங்கிலப் பெயர்களை தமிழ்நாட்டு உச்சரிப்புடன் எழுதியிருக்கும் பிழையைத் தவிர இந்தப் பகுதி நன்கு ஆராயப்பட்ட தகவற்தொகுப்பாக அமைகிறது.
இயல் மூன்று
(1990களில் மல்லிகைச் சிறுகதைகளில் சமுதாயப் பிரச்சினைகள்)

கே.எஸ். சிவகுமாரன் 141
ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களின் கதைகள் பற்றிய எனது இரு தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. அவை 1960கள் முதல் 1990கள் வரை நான் படித்தவை பற்றி மாத்திரமே அமைந்தன. ஆனால் இந்த நூலாசிரியர், இற்றைவரையிலுமாக வெளியாகிய கதைகள் பற்றிய திறனாய்வுக் குறிப்புகளைத் தருகிறார்.
இயல் நான்கு
1990களில் வெளிவந்த மல்லிகைச் சிறுகதைகளில் உள்நாட்டுப் போரின் அவலங்கள்?
இந்த இயலும் மிக முக்கியமான தகவல்களை ஆய்வு ரீதியாகத் தருகின்றது.
இயல் ஐந்து
(1990களில் வெளிவந்த மல்லிகைச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு) உள்ளடக்கச் சிறப்புகளுக்காகச் சில கதைகள் பாராட்டப்பட்டன. ஆனால், 'சிறுகதை ஒரு கலை' என்ற அடிப்படையிலும் திறனாய்வுகள் இங்கு வெளிவராத சூழலில், Craft எனப்படும் உறுதிப் பொருள்களை இந்நூலாசிரியர் ஆராய முற்படுவது வரவேற்கப்படவேண்டியதொன்று.
கட்டுரையாசிரியர், பின்வரும் தலைப்புகளில் தமது ஆய்வை மேற்கொண்டுள்ளார்.
பாத்திர வார்ப்புகள், கதைப்பின்னல், நோக்குநிலை, நடை சிறுகதைகளின் தொடக்கமும் முடிவும், கருப்பொருள், எழுத்தாளர்களது பங்களிப்பும் சிறுகதைத் தொகுப்பு முயற்சிகளும், புதுமை

Page 73
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
142
இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் திறம்.
இந்த நூலிலே எனக்கு அதிகம் பிடித்த, படிப்பதற்குச் சந்தோஷத்தை அளித்த இயல் இதுவேயாகும். சிறுகதையை எழுதியவர்களும், எழுத விரும்புபவர்களும் இந்த நூலை அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்.
இந்த நூலிலே ஒரு குறைபாடும் உண்டு. நூலின் அறிமுக விழாவிலே கலாநிதி ந. ரவீந்திரன் சுட்டிக்காட்டியது போல மல்லிகை கிழக்கு மாகாண எழுத்தாளர்களின் படைப்புளை அதிகம் பிரசுரிக்காததால், நூலாசிரியையும் கிழக்கு, தென்கிழக்கு சிறுகதை ஆசிரியர்களின் பங்களிப்புகளை ஆராயாது விட்டுவிட்டார்.
இருந்தபோதிலும் இந்தச் சிறு நூலிலே பல விஷயங்களை ஆராய்ந்து Research Methodology is g5 முன்னுரிமை கொடுத்தமைக்காக நூலாசிரியரை நாம் பாராட்டவே வேண்டும்.
ஈழத்துத் திறனாய்வாளர்களுள்ளே கோகிலா மகேந்திரன், வசந்தி தயாபரன், அன்னலட்சுமி ராசதுரை, பத்மா சோமகாந்தன், யோகா பாலச்சந்திரன், சற்சொரூபவதிநாதன், ம. தேவகெளரி, சூரியகுமாரி பஞ்சநாதன் போன்ற பெண் எழுத்தாளர்களுள்ளே மல்லிகாதேவி நாராயணனும் சிறப்பிடம் பெறுகிறார்.
 

கே.எஸ். சிவகுமாரன் 143
கிதய்வத் திருமகளின் Goldb8)b l60Ufleidabab
சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவாக அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் வெளியிடப்பட்ட 'தெய்வத் திருமகளின் வாழ்வும் பணிகளும்' என்ற முன்னூறுக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்தக் களஞ்சியத்தின் சிறப்புகளை அறிமுகப்படுத்தும் பணி எமக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் பெருமையையும் தருகிறது.
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் பூத உடல் எம்மிடையே இப்பொழுது இல்லாவிட்டாலும் அன்னாரின் அளப்பரிய பணிகளின் சிறப்புகளை விளக்கும் நூற்றொகுப்பாக இந்த வெளியீடு, அமைந்திருப்பது எடுத்த எடுப்பிலேயே நமக்குத் தெரிய வரும் நிதர்சனமாகும்.
ஈழத்திலே பெண்ணினத்தைச் சேர்ந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்ட பேச்சாளர்களுள் முதன்மையானவர்களுள்

Page 74
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
144
முக்கியமானவராக மறைந்த கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி விளங்கியமை நாம் அனைவரும் அறிந்ததே.
அழகிய வண்ணப் படங்கள், கறுப்பும் வெள்ளையுமான நிழற்படங்கள் ஆகியவற்றுடன் அருமையான பதிவுகளும் ஆழ்ந்த கட்டுரைகளும் அடங்கிய இத்தொகுப்பைத் தந்திருப்பவர்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், பொதுச்செயலாளர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் ஆகியோராவர்.
அணிந்துரை உட்பட 10 அதிகாரங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
சென்ற நூற்றாண்டின் 1925இல் பிறந்து இந்நூற்றாண்டின் கடந்த 2008ஆம் ஆண்டில் நம்மைவிட்டுப் பிரிந்த அறிஞரின் வண்ண நிழற்படம் அவருடைய ஆளுமையைப் பிரத்தியட்சமாகக் காட்டி நிற்கின்றது.
சிந்தனைத் தெளிவு, கருணை, ஆழ்ந்த அறிவு, நிதானம், தாய்மை உணர்வு போன்ற குணாதிசயங்களை இப்படம் மூலம் நாம் காணமுடியும் என நினைக்கிறோம்.
தொடர்ந்து பக்கங்களைப் புரட்டினால் தொகுப்பாசிரியர்கள் சார்பில் சமர்ப்பணம் சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி O7 ஆம் திகதி நெல்லிப்பழை முரீ துர்க்காதேவி தேவஸ்தான வீதியில் மறைந்த பேரறிஞரின் சிலை திறந்து வைக்கப்பட்டதை அறிந்து கொள்கிறோம்.

கே.எஸ். சிவகுமாரன் 145
சண்முகசுந்தரம், தங்கம்மா அப்பாக்குட்டியின் வாழ்க்கை வரலாற்றை 1984இல் வெளியிட்டிருந்தார் என்றும் அதனை இத்தொகுப்பில் சேர்த்துள்ளதாகவும் கந்தையா நீலகண்டன் தெரிவிக்கிறார். அது மாத்திரமல்ல; நாடறிந்த நல்லறிஞர்கள் தமது பல்நோக்குக் கண்ணோட்டமாகத் தெரிவித்துள்ள கட்டுரை வடிவான ஆய்வுகளும் சேர்க்கப்பட்டுள்ளதைச் சமர்ப்பணம் எழுதியவர் குறிப்பிடத் தவறவில்லை.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஏனையவை தொடர்பான தகவல்களையறிய கந்தையா நீலகண்டனின் சமர்ப்பணத்தைப் படித்துப் பாருங்கள்.
இத்தொகுப்பு ஒரு களஞ்சியமல்ல என்று நீலகண்டன் கூறியிருந்தபோதிலும் இந்நூல் என்ன நோக்கத்திற்காகத் தொகுக்கப்பட்டுள்ளது என்பதனை அவரே விளக்குகிறார். அவர் கூறுகிறார்,
"தெய்வத் திருமகளின் வாழ்க்கையையும், பணிகளையும் எதிர்காலச் சந்ததியினரும் அறிய வேண்டும். எனவே, அவற்றைக் காலம் தாழ்த்தாது பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்குடன் இந்த முயற்சி நிறைவேறுகிறது" என்கிறார் நீலகண்டன்.
நமது வரலாறுகள், சாதனங்கள் போன்றவை பதியப்படாது ஆவணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படாததனால் இன்று வரலாறுகள் திரித்துப் பதியப்படுகின்றன என்பது நாம் அறிந்ததே. எனவே, இந்தச் சூழ்நிலையில் இவ்விதமான தொகுப்புகள் வெளியிடப்படுவது அவசியமாகிறது. தொகுப்பாளர்கள் நமது பாராட்டுக்குரியவர்கள் என்பதும் அவர்கள் இம்மாதிரியான பல

Page 75
146 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
தொகுப்புகளை ஆக்கித்தர வேண்டும் என்பதும் நாம் எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதொன்றுதான்.
வழமை போலவே Uni Arts நிறுவன அதிபர் பொன். விமலேந்திரன் சிரத்தையுடன் நேர்த்தியாய் இத்தொகுப்பை அச்சிட்டுத் தந்துள்ளார். அ.கனகசூரியர், கா. சிவபாலன் ஆகியோரின் பங்களிப்பையும் மறக்காமல் சமர்ப்பணத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
மாமன்றத் தலைவர் மனிதநேயர் வி. கைலாசபிள்ளையின் அணிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள வசனங்கள் சில ஈண்டு அவதானிக்கத் தக்கவை. அவர் கூறுகிறார்,
"எங்கள் அம்மாவும் பல சோதனைகளும் கஷ்டங்களும் நிறைந்த காலத்தில் ஆன்மீக ஒளிபரப்பி எமது மக்களுக்கு உண்மையில் கலங்கரை விளக்கமாகவே விளங்கினார். அப்படியான பிரச்சினைகள் மிகு காலகட்டத்தில் யாழ் மண்ணின் மக்களுடன் மக்களாக இணைந்து வாழ்ந்து அவர் தன் சிறப்பை இருண்ட காலத்திலும் மின்ன வைத்தார்" இது கைலாசப் பிள்ளையின் கூற்று:
கலாநிதி தாங்கம்மா அப்பாக்குட்டி வெறும் சொல் ebel60DLDusoluJoup Tais B6öTD65L g5, feupas' uéoofuso FIGUL6)f என்பது இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என நாமும் கருதுகிறோம். இனி இந்த நூலில் இடம்பெறும் பகுதிகள் எவையென பார்ப்போம்.
(96006 UT6)6OT;
வாழ்க்கை வளம், தெய்வத் திருமகளின் பன்முகப் பணிகள், ஆசிகளும் வாழ்த்துகளும், மணிவிழாவின் வாழ்த்து மலர்களும், பாராட்டு மணிகளும், கவிமலர்கள். நினைவலைகள், தெய்வத் திருமகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள், தாங்க முத்துகள், தெய்வத் திருமகளின் வாழ்வில் சில நிகழ்வுகள் ஆகியனவாகும்.

கே.எஸ். சிவகுமாரன் 147
இவற்றுள்ளே, எம்மைக் கவர்ந்துள்ள இரண்டு பகுதிகளை மாத்திரம் விசேட கவனத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
(9606)uT660T,
தெய்வத்திருமகளின் பன்முகப் பணிகள் பன்னோக்குக் கண்ணோட்டம், தெய்வத் திருமகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்கள்.
முதலிலே பகுதி 2இல் எழுதியிருப்பவர் பெயர்களைக் கவனியுங்கள். இந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் தமது எழுத்துகள், பேச்சுகள் மூலம் தமது ஆளுமையைக் காட்டி நிற்கும், நாம் பெருமைப்படக்கூடிய சிந்தனையாளர்களும் ஆய்வாளர்களுமாவர் இவர்கள்.
இதோ பட்டியல்:
அருள் மொழியரசி, திருமதி. வசந்தா வைத்தியநாதன், சிவழுநீ ம. பாலகைலாசநாத சர்மா, கலாபூஷணம் சைவப் புலவர் சு. செல்லத்துரை, கம்பவாரிதி இ. ஜெயராஜ், கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம், முனைவர் திருநாவுக்கரசு கமலநாதன், பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன், திருமதி. பவானி முகுந்தன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், சிவாகம ரத்ன பிரம்மருநீ விஸ்வநாராயண சர்மா, செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன், நுண்கலைமாணி கலாவித்தகர் திருமதி. சுபாஸ் வடிவாம்பிகை, கந்தையா திருநீலகண்டன், ரிஷிதொண்டுநாதன். ,
இவர்களுள் ஒரு சிலரைத் தவிர ஏனையோரின் பேச்சுகளைக் கேட்டறியவும், படித்துப் பார்க்கவும் எமக்குக் கிடைத்த வாய்ப்பான நேரங்கள் பொன்னானவை என நாம் உணர்ந்திருக்கிறோம்.

Page 76
148 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு லிவான பார்வை
ஆழ்ந்த புலமையாளர்கள், தமிழ்க் கடல்கள், சொல் வளம் மிக்கவர்கள், இவர்கள் பேசும்பொழுதெல்லாம் இவர்களுடைய பேச்சைத் திறனாய்வாளன் என்ற முறையில் நாம் கேட்டு வியப்படைந்திருக்கிறோம்.
நீங்களே இக்கட்டுரைகளைப் படித்தறிந்து கொள்ளல் சிறப்பாக அமையும்.
இத்தொகுப்பின் 7ஆம் பகுதியில் மறைந்த ஆளுமையாளரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகள் தரப்படுகின்றன. தாய்மையே இறைவனின் முதல் வடிவம். தெய்வமென்பதோர் சித்தம், ஆறுமுகமான பொருள், சித்திரைப் புது வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி மகம், திருவாசக நினைப்பும், நவராத்திரி நாயகி, கேதாரகெளரி நோன்பு மகத்துவம், மார்கழி நீராடேலோ ரெம்பாவாய், தைப்பொங்கல், தமிழர்களின் பெருவிழா, தைப்பூசத் திருநாள். மகிமை மிகுந்த மாசிமகம் (கடலாட்டு), பங்குனி உத்திரப் பெருவிழா, ஆலயங்களும் ஆராதனைகளும் என்ற தலைப்புகளில் தங்கம்மா அப்பாக்குட்டி எழுதியுள்ள விளக்கங்கள் நம்மிடையே தெளிவை ஏற்படுத்துகின்றன.
இந்தத் தொகுப்பிலே Hindu Organ ஆசிரியராக விளங்கிய ஆர். என். சிவப்பிரகாசம் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த அறிவு சார்ந்த சமய தெளிவுபடுத்தும் இத்தொகுப்பைப் படித்துப் புத்தறிவு பெற்றவன் என்ற முறையில் உங்களுக்குப் பேரானந்தத்துடன் அறிமுகம் செய்துள்ளோம்.
 

கே.எஸ். சிவகுமாரன் 149
ந்ேதனி ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் மலைநாட்டுச் சிற்றிதழான கொழுந்து 27ஆவது இதழை கவர்ச்சியான தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பில் ஜுலை - ஒகஸ்ட் ஏட்டை வடிவமைப்புச் செய்துள்ளது. முகப்பில் ஈ.வெ.ரா. என்ற சுருக்கமான பெயரைக் கொண்டவரும் 'பெரியார்' என்றழைக்கப்பட்டவருமான ஈரோடு வெ. ராமசாமியின் படமும், இளஞ்செழியன் என்ற மலையகத் தொழிற்சங்கவாதியாய் விளங்கிய அறிஞரின் படமும் அச்சிடப்பட்டிருப்பதுடன் மலையக இலக்கியம் புலம்பெயர் இலக்கியமாம்.? / ஈழத்தில் பெரியார் முதல் இளஞ்செழியன் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.
இந்த 32 பக்கச் சிற்றிதழில் ஆசிரியர் எழுதுகிறார்: '. எமக்கென்று தனிப்பட்ட ஆளுமையும், தெளிவான இலக்கும் நோக்கமும் உண்டு. மலையக இலக்கியத்தை முதன்மைப்படுத்தும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்தல் எமது நோக்கமாகும். உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள்

Page 77
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
150
மத்தியில் மலையக இலக்கியத்துக்கு ஓர் அங்கீகாரத்தைத் தேடிக் கொடுப்பதே எமது தலையாயப் பணி.
நோக்கம் வெளிப்படை. இது வரவேற்கத்தக்கதொன்று. மலையகத்தில் வெளிவரும் இலக்கிய முயற்சிகள் துரிதமாக வளர்ச்சி கண்டு வருவது கண்கூடு. இறந்தவர்கள் போக இப்போது பல ஆய்வறிவாளர்களும் (பேராசியர் எஸ். சந்திரசேகரம்) ஆய்வாளர்களும் (தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன்), திறனாய்வாளர்களும், விமர்சகர்களும் (லெனின் மதிவானம்) நிறைய படைப்பாளிகளும் தமது ஆற்றலை வெளிப்படுத்தி ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இன்னமும் மலையக இலக்கிய வளர்ச்சியைப் புறக்கணிக்க (Մ» կջ եւ In 5 என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.
எஸ்.ஏ. சாமி (ஓவியம்) அனுர்ஜன் (வடிவமைப்பு) பங்களிப்புகளுடன் வெளிவந்திருக்கும் இந்த இதழை 57. மஹிந்த பிளேஸ், கொழும்பு - O6 என்ற முகவரியிலிருந்து 30/- ரூபாய்க்குப் பெற்றுக்கொள்ளலாம். தொலைபேசித்தொடர்பு : O776612315.
இந்த இதழில் வெளியாகியிருக்கும் விஷயங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்காட்டி குறிப்பெழுதுவது இங்கு சாத்தியமில்லை. ஆயினும் யார் யார் எழுதியிருக்கிறார்கள், என்ன தலைப்பில் எழுதியிருக்கிறார்கள் என்று தகவல் தருவதன் மூலம், அவற்றின் கனதியை வாசகர்கள் அறிந்துகொள்வீர்கள்.
மதுரை சி. பன்னிர்செல்வம் (கவிதை), ஆதவன் தீட்சண்யா (புலம்பெயர் இலக்கியம் விவாதத்திற்கான புள்ளிகள்), பதுளை சேனாதிராஜா - (சிறுகதை), சாரல் நாடன் (புலம்பெயர்ந்த இலக்கியத்திற்கு முன்னோடி), அந்தனி ஜீவா (மலையக கவிதை - ஓர் அவசரக் குறிப்பு). என். செல்வராஜா (புலம்பெயர்ந்த மண்ணில்

கே.எஸ். சிவகுமாரன் 151
ஈழத் தமிழர்களுக்கானதொரு ஆவணக் காப்பகம்), முகப்பு வாசகம், கொழுந்து நூலகம், தி.இரா. கோபாலன் (இலங்கை தேயிலையின் அறிமுகத் தந்தை), வ.ந. கிரிதரன் (பதிவுகள் - நூல் அறிமுகம்), அந்தனி ஜீவா (ஒரு கலைஞனின் மரணம்) ஆகியோரின் எழுத்துகளும் நிழல் படங்களும் வேறு சிறு அறிமுகங்களும் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன.
LLLLLL LSL LSL LS LL LSL LL LSL LSL LSL LLL LLLL LL LSL LSL LLL LLL LLL LLLL LSL LL LLL LLLL LSL LSL LSL LLL LLL LLL L S LSL LSL LLL LLLL LSL LSL LLL LLL LL
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் வெளியிட்டு வரும் தகவல் இதழான 'கோபுரம் அதன் வைகாசி இதழில் மாணவர்களும் மற்றோரும் அறியவேண்டிய பல விடயங்களை உள்ளடக்கி வந்துள்ளது. மலர் 10, இதழ் O1ஐ 248 1/1 காலி வீதி, கொழும்பு -O4 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். திணைக்களத்தின் ஆய்வுப்பிரிவு வெளியிடும் இந்தப் பயனுள்ள வெளியீட்டின் ஆசிரியராக, சிரேஷ்ட ஆராய்ச்சி அலுவலர் தேவகுமாரி ஹரன் செயற்படுகிறார்.
மலர் குழுவில் திணைக்களப் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசன், உதவிப் பணிப்பாளர் ம. சண்முகநாதன், ஆராய்ச்சி அலுவலர் நித்தியவதி நித்தியானந்தன் ஆகியோர் செயற்படுகின்றனர்.
கலாநிதி நடன காசிநாதன் எழுதியுள்ள - பண்டைத் தமிழர் எழுத்து ஓர் ஆய்வு தேவகுமாரி ஹரன் எழுதிய 'விஜயநகர பேரரசும் கலாச்சார மறுமலர்ச்சியும்' ஆகிய இரு கட்டுரைகளும் அவசியம் படித்துப்பார்க்க வேண்டியவை. ஏனைய விடயங்களும் தகவல் பெருக்கத்திற்கு உதவுகின்றன.
இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் ஆய்வறிவாளருமான கந்தையா

Page 78
152 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
சண்முகலிங்கம் ஆரம்பித்து வைத்த பண்பாடு' என்ற இதழின் சித்திரை 2009 (மலர் 1O இதழ் O) ஏடு தமிழ் இலக்கிய மாணவர்களுக்குப் பெருவிருந்தாய் அமைந்துள்ளது.
இந்த இதழின் ஆசிரியக் குழுவில் திணைக்கள அதிபர் சாந்தி நாவுக்கரசன், சிரேஷ்ட விரிவுரையாளர் க. ரகுபரன், கலாநிதிப்பட்ட மாணவரும் பேச்சாளருமான முரீ பிரசாந்தன், என். சண்முகநாதன், தேவகுமாரிஹரன் ஆகியோர் சம்பந்தப்படுகிறார்கள். ஆலோசனைக்குழுவில் சிரேஷ்ட பேராசிரியர்கள் சி. பத்மநாதன், கா. சிவத்தம்பி, எஸ். சுசீந்திரராஜா, வி. சிவசாமி ஆகியோர் வழிகாட்டுகின்றனர். இத்தகைய அறிஞர்களின் பங்களிப்புகள் நிறைவாக அமைவதைக் காண்கிறோம்.
ஆனந்த குமாரசாமியின் முகப்புப் படமும், ஆசிரியத் தலையங்கமும் மிகச் சிறப்பான முறையில் வெளிவந்துள்ளன.
இந்தக் கட்டுரைகளின் பட்டியலைப் பாருங்கள். ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் ஆய்வுக் கட்டுரைகள் இவை பண்பாடு தோற்றப்பட்டியல் விளக்கம் (சோ. கிருஷ்ணராசா), சோமசுந்தரப்புலவர் கவிதைகள் (Uநீ. பிரசாந்தன்), கவிஞர் அல்லையூர் மு. செல்லையாவின் கவிதைகள் - ஒரு கண்ணோட்டம் (செ. யோகராசா) சிங்கள தூதுக் காவியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் (என். ஏ. தம்மிக ஜெயசிங்ஹ), கலை அனுபவம், சாந்தம், பக்தி ரசங்களை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு (கிருஷ்ணவேணி றொபர்ட்), இந்து சமயத்தில் கிராமப்புறத்தெய்வம் (இந்திரா சதானந்தன்) செங்கையாழியானின் வட்டாரப்பண்பு, நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக்கூறுகள் ஓர் ஆய்வு (கிருஷ்ணபிள்ளை விசாகரூபன்)

கே.எஸ். சிவகுமாரன் 153
எனக்குப் பரவசமூட்டிய கட்டுரைகள் முரீ. பிரசாந்தன், கிருஷ்ணவேணி, செ. யோகராசா ஆகிய ஆய்வாளர்கள் எழுதியுள்ள திறனாய்வுகள். அவசியம் பண்பாடு இதழை இலக்கியவாசகர்கள் படித்துப் பயன் பெற வேண்டும்.
2009லே வெள்ளவத்தை தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நாய்க்கர் கால இலக்கியக் கூறுகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. தமிழ் நாட்டு, இலங்கை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், இலக்கிய ஆர்வலர்களுக்குப் பெரும் விருந்தளித்தனர். கடைசி நாளில் தான் பேச்சுக்களைக் கேட்க முடிந்தது. அதுவே பெருவிருந்து.

Page 79
154 ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான usos
'கவிதைத் தொகுப்புகள்' என்ற பெயரிலே ஏராளமான புத்தகங்கள் வந்து குவிகின்றன. இவை எல்லாவற்றிலும் "கவிதை" கள் இடம்பெறுகின்றனவா என்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு. இது எப்படியென்றால் "கவிதை"கள் என்று நான் படித்துச் சுவைத்தனபோல் புதிய கவிஞர்களின் எழுத்தாக்கங்கள் எனக்குச் சுவையளிக்காமல் போய்விடுகின்றன. இது என் கவிதையுணர்வு மரத்துப் போனதாலா அல்லது இப்புதிய கவிஞர்கள் எழுதும் சுலோகங்களிலும் கேள்விகளாலும் நான் சலிப்படைந்ததனாலா? தெரியவில்லை.
LLL 00LL LLLLL LLLL L0LL LL LLL LLLL LLLL L0L LLL LLL 0L S LLL LL LLL L LSL Y LLL LL LLL LLL L0L LL0 LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LL
இரண்டு தொகுப்புகள் பற்றிய "அவதானிப்புக்குறிப்புகளை" (Observations) DragößJLb LUTTŮIGBLuTub.
திருகோணமலை மாவட்டத்திலே கிண்ணியா என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கிருந்து "நதிகளைத் தேடும் சூரிய சவர்க்காரம்" (ஏ. நஸ்புல்லாஹற்), "இதுவும் பிந்திய இரவின் கனவுதான்" ஜே. பிரோஸ்கான்) ஆகிய இரண்டு நூல்களும் எனது கவனத்தை ஈர்த்தன.
 

கே.எஸ். சிவகுமாரன் 155
&6f 6hurraoTT600T6L6io (CLIFF FERNANDES) 6Teip F-pig 'POP' estidao unlaf 'A Little bit of soap will wash away...' 6T6örd பாடலை 50 வருடங்களுக்கு முன் பாடியிருந்தார்.
கிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ் எழுதிய கவிதையொன்றைப் படித்தபோது அப்பாடல் காட்சி என் மனதில் மீளத் தோன்றியது. ஆயினும், மிக அழுத்தமான வரிகளை நமது கவிஞர் தருகையில் பல பரிமாணங்களை அவருடைய நூல் தலைப்புக் கவிதையிலிருந்து நான் கிரகித்துக் கொண்டேன்.
அதில் ஒரு பகுதி வருமாறு:
கரிய சவுக்காரம்
கறைகளைக் கழுவ
நதிகள் தேடியது
எங்கு, எங்கும, எபப, எயபடி,
எதில், எதிலும்,
கண்ணிர் நதிகள்
பூமியின் இரத்தக் கறை
மற்றும்
அழுக்கேறிய கவலைத் துணி
நல்ல காலம். தமது கவிதைகள் "அரசியல் சார்புடையவை" என்று கவிஞரே கூறிவிட்டார். அவர் மேலும் கூறுவார் "புதிய உடைப்பாக "சர்ரியலிஸம்" கலந்து இந்தப் புனிதத் துளிகள் உங்கள் பார்வைக்கு வருகின்றன"
நல்லது தீவிரமான அரசியல் சார்பில்லாத நான் இக்கவிதைகளைப் புரிந்து கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது.
தவிரவும் தமிழ் நாட்டுச் சிற்றேட்டு 'விமர்சகர்கள் விளங்கிக் கொண்ட விதத்தில் "SURREALISM" போன்றவற்றை நான் புரிந்து கொள்ள முடியவில்லை.

Page 80
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
156
இருந்தபோதிலும், கவித்துவமான வரிகள் இவரது கவிதைகளில் இருக்கின்றனவா என்று மாத்திரம் பார்ப்போம். அவ்வாறானவை சில.
எனது தகர்க்கும் வெறுமை
இன்னும் தவிப்பு
யாவும்
தனிமையின் முற்றுப்புள்ளியாகி
மற்றுமொரு முறை
அவஸ்தையின் பதிவுகளாய்
காலம் தீர்ப்பெழுதிவிடாமல்
இருத்தல் நன்று
(பேசாக் கவிதை)
9.gjLILL
ஒரு கோழியின் வேதனைகளுடன்
வாழத் துடிக்கும்
எமதின்
உயிர் முடிச்சுக்கு
இது மிகக் கொடுரம் (எமதான.)
அதனுள் கசியும் மெளனத்தையும்.
(மற்றவை நேரில்) கிரனங்கள் பிறையாய் பொழிந்து ராகங்கள் பல்லவியை ரசிக்கும் பத்துக்கும் பதினொன்றுக்கும் இடையிலான
வயசு மீறிய அதுவொரு நிலாக்காலம்

கே.எஸ். சிவகுமாரன் 157
(மற்றவை நேரில்.)
எதிர்பார்ப்புகள்
பூப்பதும்
உதிர்ந்து விழுவதும்
தலையங்கமிடப்படாத
காலத்தின் நகர்வில் (புதிய பூப்பின் மொழிகளில்)
காற்றின் மொழியையுங் கூட
மருதாணியிடுகின்ற
முயற்சியில்
சில ஆன்மாக்களின் பெருமூச்சு (கல்மர நிழல்)
நெடுங்காலம் கசியும்
இரத்தம்
மருதாணி ஆகி
கழுகு முட்டைகளில்
வெண்புறா குஞ்சுகள்
வெளித் தள்ளலாம்
8ങ്ങി
தெரு நாய்களுக்கு
ஏமாற்றம்தான்
(மரங்களைத் தின்னும் வேர்கள்)
எனதான்மாவின்
ஆலயத்தின்
தனிமையாயிருக்கும்
புல்லாங்குழல்
(ஞாபக முட்டை உடைத்த வரலாறு)
கவிஞரே. உங்கள் கவிதைகள் "செப்பனிடப்பட்ட படிமங்களாக" அமைய வேண்டும். கவிஞர் சி.சிவசேகரத்தின் கவிதைத் தொகுதிகளைப் படித்துப் பாருங்கள்

Page 81
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விவான பார்வை
158
இந்த நூலை, கிண்ணியா பொன்நகை இலக்கிய வட்டத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
அடுத்த நூலைத் தந்திருப்பவர் கிண்ணியா ஜே. பிரோஸ்கான். இவருடைய எழுத்துக்கள் 85 பக்கங்களை நிரப்புகின்றன. இவற்றைவிட 24 பக்கங்களில் ஏனைய கவிதைப் பற்றுள்ளோர் கவிஞரையும் அவருடைய கவிதைகளையும் அறிமுகப்படுத்துகின்றனர்.
புதிய கவிஞர்கள் எழுதும் கவிதைகளில் ஒரு சிலவற்றைத் தவிர ஏனையவற்றை என்னால் புரிந்து, இரசிக்க முடிவதில்லை.
இக்கவிஞர்களின் படைப்புகளை "மறுவாசிப்பு" போன்றவற்றை மேற்கொள்ளும் ஆய்வாளர்களும், திறனாய்வாளர்களுமே இவர்களுடைய "கவிதை'களை நியாயப்படுத்த (Մուքայլb.
இவ்விதமான கவிதைகளின் உள்ளடக்கம் பெரும்பாலும் பத்திரிகைச் செய்திகளும், புலம்பல்களும், அவை தொடர்பான அனுங்கல்களுமாக அமைகின்றது.
கவிதாவுற்றுக்கு இடம் கொடுக்காமல் மனக்காயங்களை மாத்திரமே உண்டு பண்ணுகின்றன.
ஆயினும் இந்தப் போக்குக்கு நியாயம் கூறுவது போல கிண்ணியா ஏ. நஸ்புல்லாஹற் இவ்வாறு கூறுகிறார்.
1980 களில் இருந்து ஈழத்துக் கவிதைப் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. பெரும் தேசியவாதத்தினால் ஏற்பட்ட இனவாதம், பெண்ணிலை வாதம், நாளாந்த அரசியல் அனுபவங்கள், வியாபிக்கும் விளைவுகள் மாற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தன. திசைகளை நோக்கிய நகர்வுகளில் சமகால அவலங்களையும் நெருக்கீடுகளையும் ஈழத்துக் கவிஞர்கள் சமூக மாற்றம் நோக்கிக் கவிதைகள் படைக்கிறார்கள்'

கே.எஸ். சிவகுமாரன் 159
இவ்விதமான இலக்கிய வரலாற்றை என்னால் பதிவு செய்ய முடியாதிருக்கின்றது. காரணம் கவிதை செத்துவிட்டது போல இவ்விதமான போக்குகள் எனக்குக் காட்டுகின்றன. அது OTjupus(bjLSgob Carry on regardles.
கிண்ணியா ஜே. பிரோஸ்கான், கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைகளைப் படித்துப் பாருங்கள் என்று Suggest பண்ணிவிட்டு இவருடைய கவிதை வரிகள் என்னைக் கவர்ந்துள்ளனவா என்று பார்த்தால் பின்வருபவை நான் இரசித்தவை.
கனவுகளில் மட்டுமே
புன்னகையான வாழ்தல்.
நெஞ்சத்தில் வேதனையுடன்.
(நிஜத்தின் நிழலோடு அவர்கள்)
அவஸ்தைகள் தொடர்கதையாய்
அனுதாபம் வெறும் கவிதையாய்
புகழாரம் மட்டுமே
தருகிறது.
(இன்னொரு காத்திருப்புக்கு முன்)
உன் மெளனத்தின்
மொழி பெயர்ப்பு
தெரியாமலே
பிரமிட்டுக்குள்
நான் அடங்கிப் போகிறேன்! (நான் பிரமிட்டுக்குள்-அடங்கிப் போகிறேன்)
முந்தைய நாளில் உன் வீட்டுத்தோட்டத்தினுள் மலர்ந்திருந்த மலர்களை பறித்த உன் கைகள்

Page 82
ஈழத்து எழுத்தாளர்கள் - ஒரு விரிவான பார்வை
160
கந்துகள் முறிகையின் சப்தம் தோட்ட மரங்களில் தஞ்சம் புகுந்திருந்த பறவைகளை விரட்ட பறவைகள் காரணம் தேடி? ©ഖണ് 6ഖണ്...?)
SLLL LSL LLL LLL LL0L L0 Y LLL LLL LLLL LL LL L0L LLL 0 LL LLL LLLL LSL 0L LLL LSLL LLLL LL LLL LLL LLL 0LL L L0 L0 L0L LLLL LLL L0L LLL LLLL LLLL
இந்த இரு கவிஞர்களும்
கிண்ணியாவைச் சேர்ந்த ஏ. நஸ்புல்லாஹற், ஜே. பிரோஸ்கான் இருவருமே - உள்ளத்தால் கவிஞர்கள் என்பதைச் சில புதுப்புனைவுகள் மூலம் காட்டியிருக்கிறார்கள். அது எனக்கு மலர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில், சமூக, அரசியல் தனி மனித சித்திரிப்புகளைத் தரும்போது, அளவுக்கு மீறிய, கட்டுக்கடங்காத சிந்தனைகளையும் கேள்விகளையும் எழுப்பும் பொழுது கவிதைக் கட்டுக்கோப்பும், சுருங்கச் சொல்லி உணர்த்துவிக்கும் அணிகளும் பிரயோகத்தில் தடையாகிவிடுகின்றன. எனவே தான், திரைப்படக் கவிஞர்களுள் வைரமுத்து போன்று (அவர் எழுதியவை எல்லாமே கவிதைகள் என்றில்லை) ஓசை நயத்துடனும் ஒத்திசையுடனும் எழுத முயலலாம்.
மறைந்த கவிஞர் முருகையன் அவர்கள் தமது
திறனாய்வொன்றில் "வெளி ஒதுக்கிய கவிதைகள்" என Insincere கவிதைகளை எடுத்துக்காட்டி அவை போலியானவை எனக்
கூறியிருப்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும். வாழ்க.
 


Page 83
நூலாசிரியர் பற்றி
இலங்கை 'தினக்குரல்’ நாளி “நமக்கிடையே’ என்ற தலைப் நான் எழுதிவந்த பத்தி எழுத்து 27ஐத் தொகுப்பில் சேர்த்திருக்கி ஈழத்துத் தமிழ் இலக்கியம் தொட அறிய விரும்பும் மாணவர்களு ஆசிரியர்களுக்கும் இவை பெ பயன்படும் என்று நம்புகிறேன்.
நண்பர் ரவி தமிழ்வா அவர்களின் ஊக்குவிப்பு கா மணிமேகலைப் பிரசுரமாக வெ மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்
மணிமேகலைப் பிரசுரம் எனது இந்நூல்களை ஒன்றுசேர்த்துப் 1 எந்தவித அரசியல் கோட்பாட்டு நில்லாது உள்ளதை உள்ளபடி ஈழ அறிந்து கொள்வீர்கள் என நினை
உங்கள் அபிப்பிராயங்களை k Place, Off Havelock Road,
முகவரிக்கு அனுப்பிவையுங்கள் kSG)gmail.com, Mobile. C) 0
நன்றி,
 

தழில் பிலே
க்கள்
றேன். furts, க்கும் ரிதும்
OOTsit கே.எஸ்.சிவகுமாரன் ரணமாக எனது சில நூல்கள் பளிவந்துள்ளன. அவருக்கு என் டும்.
பல நூல்களை வெளியிட்டுள்ளது. படிப்பீர்களானால், பாரபட்சமின்றி, நிக்கும் முழுமையாக அடைபட்டு த்துத் தமிழ் இலக்கியம் தொடர்பாக க்கிறேன்.
.S. Sivakumaran, 21, Murugan Colombo-06, Sri Lanka 6T6ồTAD T. Lf6öT60Tö586. Sivakumaran,
\。 アデc スー2 2卒チ
அன்பன் N கே.எஸ்.சிவகுமாரன் N