கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை ஜீவா

Page 1


Page 2


Page 3
முதற் பதிப்பு : ஜூன் 1988 இரண்டாம் பதிப்பு: செப்டெம்பர் 1999 உரிமை பதிவு:
MAllikAi JEEVA - A Collection of
BiographicAl ARticles ANd VERSEs
விலை ரூபா 110/=
அச்சிட்டோர் :
லக்சு கிறயிக் பிரைவேட் லிமிடெட் 98, விவேகானந்தா ஹில் கொழும்பு - 13.

முன்னோட்டம்
1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களின் 'மணிவிழா இவ்வருடம் கொண்டாடப்படுகிறது. அந்த நடவடிக்கைகளின் ஓர் அம்சமாக இந்த நுாலை மணிவிழாக் குழுவினர் தமிழ் மக்களுக்குத் தருகின்றனர்.
அவரது சஞ்சிகையின் பெயரைச் சேர்த்து மல்லிகை ஜீவா என்று போற்றப்படும் 'மணிவிழா நாயகன் பலரால் பல விதங்களில் நேசிக்கப்படுபவர், பாராட்டப்படுபவர் அவரைப் பற்றிய தமது கருத்துக்களை ஒரு குறிப்பிட்ட சிலரிடம் கேட்டு எழுதியிருந்தோம்.
ஜீவாவின் அரிய நண்பர்களும், ஆதரவாளர்களும், ரசிகர்களும் எத்தனையோ பேர் இதில் இல்லை. இத்தகைய ஒரு சிறு நுாலில் எல்லோரையும் பங்கு கொள்ளச் செய்வது என்றுமே சாத்தியமாகாது.
மூன்று கவிதைகளும் 29 கட்டுரைகளும் இந் நுாலில் சேர்க்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர்களுக்கு நாம் எவ்வித விதிகளையோ நிபந்தனைகளையோ முன் வைக்கவில்லை. அவர்கள் உள்ளத்திலிருந்து எழும் கருத்துக்கள் முழுமையாக மலர இது வாய்ப்பளித்தது. எனினும் இவற்றில் சில கட்டுரைகள் மனப்பதிவு, சந்திப்பு, செய்திகளை மட்டும் கொண்டவையாகவும், சில விமர்சனப் பாங்கு கொண்டவையாவும் இருப்பது கண்கூடு. இதை வைத்து ஓரளவு வரிசைப்படுத்தியுள்ளோம். நந்தி, தெணியான், சோமகாந்தன் ஆகியோரின் கட்டுரைகள் மட்டும் சில செய்திகளைச் சேர்க்க விரும்பி எழுதப்பட்டவையாகும்.
ஆயினும், இந்த நுால் ஜீவாவின் தமிழ் இலக்கியப் பங்களிப்பினை முழுமையாகப் பேசுகிறது என்று சொல்வதற்கில்லை. ஐம்பதுகளில் ஆரம்பித்து இற்றைவரை வெளிவந்துள்ள ஜீவாவின் ஆக்க இலக்கியங்கள் முறையான ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, படைப்பாளி ஜீவாவின் இலக்கிய , வரலாற்று முக்கியத்துவம் தெளிவாக நிறுவப்படுதல் வேண்டும். 1989-ல் வெள்ளி விழாக் காணும் மல்லிகையின் தமிழ் இலக்கியப் படைப்பினை நெறியான ஆய்வுக்குள்ளாக்கி சஞ்சிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவை
"மல்லிகை ஜீவா" 1.

Page 4
இனங் காணப்படுதல் வேண்டும். அப்பொழுதுதான் ஜீவாவின் ஆளுமை முழுமையான புரண தரிசனத்துக்குள்ளாகும். இப் பாரிய பொறுப்பினை, குறுகிய கால இடைவெளியில் - சகஜமாகிய வாழ்வு நிலை இல்லாது
அமைதியற்றுப் போன ஒரு சுழ்நிலையில் - செய்து முடிக்க இயலாது போயிற்று.
எனினும் இந்த நுால் பரந்த இலக்கிய ஈடுபாடு கொண்ட ஒருவரின் ஆளுமையைத் தமிழ் மக்கள் ஒன்று சேர்த்துப் பெருமளவு உணர்வதற்கு உதவும் என நம்புகிறோம்.
இறுதியாகக் கவிதைகள், கட்டுரைகள் வழங்கிய எழுத்தாளர், நண்பர்களுக்கும், அட்டைப் படம் வரைந்து உதவிய பூரீதர் பிச்சையப்பா அவர்களுக்கும், அதை அழகாக 'ஒவ்செற் றில் உருவாக்கித் தந்த தவம் அவர்களுக்கும், அழகாக அச்சிட்டு உதவிய லக்சு கிரபிக் பிரைவேட் லிமிடெட் அச்சகத்தினருக்கும்,
நமது நன்றிகள்,
- நந்தி - தெணியான்
தொகுப்பாசிரியர்
மணிவிழாக் குழு
தலைவர் டாக்டர் எம்.கே.முருகானந்தன், செயலாளர் திரு.என்.சோமகாந்தன், கூட்டுப் பொருளாளர்கள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் , திரு.என். மனோகரபுபன், மணிவிழா மலர் தயாரிப்பு: பேராசிரியர் நந்தி, தெணியான். செயற்குழு உறுப்பினர்கள் வணயிதா ஆர்எம்சிநேசநாயகம், திருவாாளர்கள சி.வி.கே.சிவஞானம் (மாநகர ஆணையாளர்)எஸ்.விதம்பையா, புgதரசிங், வெளியுர்ப் பிரதிநிதிகள் - கொழும்பு - திரு.மு.ரெங்கநாதன், மேமன்கவி திருமதி யோகா பாலச்சந்திரன், கண்டி- திருஅந்தனி ஜீவா, புண்டுலோயா - திரு சாரல்நாடன், பண்டாரகம - திக்குவல்லை கமால், கல்முனை, மருதுாக் கொத்தன், மன்னார் - அன்பு ஜவஹர்ஷா, ஹட்டன், - திரு.எஸ்.இதயராஜா,
2 "மல்லிகை ஜீவா"
 

வல்லவர், மனிதர், தோழர்
இமுருகையன்
மல்லிகை டொமினிக் ஜீவா மணிவிழாக் காணுகின்றார் பல்கலை நிபுணர் சேர்ந்து பாராட்டும் தகுதி பெற்றார். வல்லவர், மனிதர், தோழர் வறுமைக்குப் பகையாய் வந்த நல்லவர் ஆதலாலே நாங்களும் போற்றுகின்றோம்.
ஈழத்துத் தமிழருக்கோர் இலக்கிய மரபு வேண்டும் வாழ்வுக்குப் பொருத்தமான வாசனை வீசுமாறு சூழலைத் திருத்த வேண்டும் சொற்களைப் புதுக்க வேண்டும் ஏழைகள் செழிக்க வேண்டும் என்பன இலக்காய்க் கொண்டார்.
விடாப்பிடியான கொளகை வேகமும் வீறும் கொண்டால் குடாச்சிறு நாடு கூடக் கொடுக்கின்ற நாடாகாதோ? அடாத்துக்கள் எதிர்க்கும் சொல்லால் ஆணிபோல் அறைந்து பேசும் திடீர்ப் புது மூச்சு வீரம் செயல்களை முடித்தல் கண்டோம்.
இளைஞரோ டொன்றாய் நிற்பார் எழுதுவோர் யார் என்றாலும்
|"மல்லிகை ஜீவா" இ. முருகையன் 3.

Page 5
அளவிலா நேயம் கொண்டே அருகிலே அணைந்து நிற்பார் விளைவிலே நன்மை தோன்றும் விருப்பத்தால் நுாறு செய்வார் எளிமையே வடிவாய்ப் பெற்றார் இவர் எங்கள் இனிய தொண்டர்.
அரசியற் சீர் வாய்ந்தோரின் அருகிலே நிற்பார் எந்தத் துறைகள்தான் எதிர்த்த போதும் சோஷலிசத்தைப் பற்றும் உறுதியைத் தளர்த்த மாட்டார் உண்மையை மறக்க மாட்டார்
குறுகிய நோக்கள் கொள்ளும்
கொள்கையைப் பொறுக்க மாட்டார்.
இந்திய நாட்டில் எங்கள் இலங்கையின் புகழை நாட்டும் சிந்தனையுடனே சென்று செயற்படும் கரும வீரர் வந்தனை செய்யத் தக்க மக்களின் இலக்கியத்தை தந்திடும் தமிழர்க் கெல்லாம்
தமையன்போல் அமைந்தார் ஜீவா,
அறுபது வயதா? இல்லை அப்படித் தெரியவில்லை இருபது வயதின் ஊக்கம் இன்னமும் உள்ளதன்றோ! நிறை முழுப்பேறு யாவும் நேர்படப் பெறுக ஜீவா மறுபடி வாழ்த்துகின்றோம் வாழிய,
வாழ்க ஜீவா,
4 匣 முருகையன்
"மல்லிகை ஜீவா"

தனித்துவத்திந்கு ஒரு சாண்று 23-U/r 6rakóuar
நா.க.சண்முகநாதபிள்னை
இளமை முதல் உற்சாகம் உறுதி ஊக்கம் உளத்தெளிவு மிகத் தெளிந்தோர் உறவு நேர்மை பழமைகளில் புதுமைகளைப் புகுத்தும் ஆர்வம் பட்டறிவு நடையுடையிற் பண்பில் கீர்த்தி நிலைமைகளை வசமாக்கும் நிதானம் கொள்கை நிலைநாட்டும் செயல்வீரம் செஞ்சொல்வாக்கு தலைமையினைப் பின்பற்றும் தகைமை சால்பு தனித்துவத்திற்கு ஒருசான்று ஜீவா என்பேன்
சொல் ஏரைத் துணைகொண்டு கருத்துப்புட்டி (த்) துணிவாக எழுத்துலகை உழுது ஆங்கே கல்கோரைகளை உவர்ப்புக் களைந்து பொல்லாக் காலநிலை கட்டுண்டு கருமம் செய்து பல்லோரின் ஆசியெனும் பசளை இட்டு(ப்) பான்மைமிகு அனுபவமாம் நீரைவார்த்து வல்லோனாய் மல்லிகை"யிற் பதிவம் செய்து வளமாக மணம் பரப்ப வைத்தான் ஜீவா,
தீவகத்தில் சரவணையை நயினை தன்னைத் திருவுடைய தாய் தந்தை நாடாய்ப் பெற்ற நாயகமாய் யாழ் நரம்பை மீட்டுநாதம் நன்கறிந்தோர் செவி குளிரப் பண்கள் பாடி, ஆயபல எடுப்பெடுத்துத் தொடுத்த ராகம் அனுபவிக்கப் பாவமொடு தாளம் சேர்த்துத் துாயவனாய்த் தமிழ் உலகில் மல்லிகையின் தொடர்பந்தல் வீற்றிருந்து முடித்தான் ஜீவா,
"மல்லிகை ஜீவா" 甄町。选 சண்முகநாதபிள்ளை

Page 6
எழுத்துலகில் எழுந்த பெரும் புயலை மாற்றி இளந்தென்றல் மல்லிகையிற் புகுத்தி வாசம் இருந்து வர எல்லோரும் அதனை மாந்தி, இன்புறவே இலக்கியத்திற் புதுமைசெய்து அழுத்தமுறப் பொதுவுடமைத் தத்துவத்தை ஆக்கமுறும் தொழிலாளர் மகத்துவத்தை முழுத்துணிவாய் மல்லிகையின் பயனாய்த் தொண்டாய் முகை அவிழ்த்து முற்போக்கில் முகிழ்ந்தான் ஜீவா,
கொடி சுரந்த அரும்புகளை நிறையச்சூட்டிக் கொண்டு பல படைப்புகளை ஆக்கிவந்து அடியிருந்து தவங்கிடந்து ஐயா! எம்மை ஆதரியும் என்போர்க்கு அபயந் தந்து முடியணிந்து பலர் திறனை வெளிப்பாடாக்கி முத்தமிழால் வைதாரை வாழவைத்து நெடிதுயர்ந்து மணிவிழாக் காணும் ஜீவா நீ வாழ்க ! நின்பணியும் நினைப்பும் வாழ்க!
உறுவ தெது வந்தாலும் உளம் சோரா நல் உறுதியோடு பொறுதி மிகக் கொண்டு நின்று விறுவிறெனப் “பதினாறு’ இளைஞன்போல வீதிவழி நாள் நடக்கும் உனக்கு இன்று அறுபதென ஒருகணக்கா? “கணக்குவிட்டாய்” அருந்தமிழ் போல் என்றும் நீ இளமை நலம் பெறுவதொடு தமிழ் உரிமைக் குழந்தைக்கான பிரசவத்தில் கைகொடுத்துப் பேணி வாழ்க
6 நா.க.சண்முகநாதபிள்ளை "மல்லிகை ஜீவா"

கரையை உடைதத அலை!
வாசுதேவன்
52(5 வியர்வைத் துளி படிப்படியாக மாறி பளிங்குக் கல்லாயிற்று முகம் சுழித்தவர்களே! வந்து முகம் பார்த்துக் கொள்ளுங்கள்!
பாவித்த கைக்குட்டையால் இவனை கணக்கெடுத்தவர்களே! தொடவேண்டாம்ந் துவாலையின் புனிதம் கெட்டுவிடும்!
தோட்டத்தில் குரோட்டன்களெல்லாம் கொக்கரிக்கையில் கீச்சிடாமல் நிற்கிற கீரை மரம் நீ!
முளையில் ஆயிரம் பேரை முறித்துப் போட்டு விட்ட சூறாவளி கூட இந்தப் படகைக் கண்டுதானே பயப்பட்டது!
வாழ்க்கையின் ஜன்னல் வழியாக இலக்கியத்தின் இடுக்குகள் வாழ்க்கையைப் பார்க்கிறான்! மாதாமாதம்
மல்லிகை யாகி
பாதையில்
சின்னச் சின்னதாய்
"மல்லிகை ஜீவா" - வாசுதேவன்

Page 7
வாழ்க்கையின் ஜன்னல் வழியாக இலக்கியத்தைப் பலர் எட்டிப் பார்க்கிறார்கள். இவனோ இலக்கியத்தின் இடுக்குகள் வழியாகத்தான் சொந்த வாழ்க்கையைப் பார்க்கிறான்!
மாதாமாதம்
மல்லிகையாகி பாதையில் சின்னச் சின்னதாய் தன்னை சிந்திச் செல்கிறான். கடைசியில்
மனம் வருந்தப் போவதென்னவோ
மரணம்தான்!
பத்திரிகைச் சந்தையில் UJ6).j6)T3, அநியாய விலைக்கு மது! உன்னிடமோ சகாய விலைக்கு பால் எங்கள் மைத் துளிகள் உன் கருப்பையில் வளர்கின்றன.
ஊராருக்கெல்லாம் தொட்டிலாக
உன்னோடு உரையாடிய பிறகுதான் நானொரு சிசுதான் என்ற சிந்தனை வந்தது!
%ه ب?** ** பலரின் வரலாற்றில் இலக்கியம் வரவுவைக்கப் படுகிறது . இவனைப் போன்ற ஒரு சிலரால்தான் இலக்கியத்தின் வரலாற்றில் தங்களை வரவு வைக்க முடிகிறது!
உன் குழந்தையல்லவா அசைகிறது!
தெரியாமல் பின்னால் இருக்கிறது திரிபலரின் சுடர் முகங்களைச் சுமந்து கொண்டு
என்னை
கைக் குழந்தை என்றுதான்
கணக்கெடுத்திருந்தேன் .
8 - வாசுதேவன்
"மல்லிகை ஜீவா"

மனித நேயம் நிறைந்த ஜீவா எண்ணும் இலக்கிய சிநஞ்சம்
சு. வித்தியானந்தனர்
இலக்கியம் என்பனவற்றின் இன்றியமையாத பண்புகளிலொன்று மனித நேய உணர்வாகும். இவற்றைப் படைக்கும் கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோர் தம்மளவிலும் இவ்வுணர்வை உடையவர்களாகவே திகழ்வர் எனச் சமுதாயம் எதிர்பார்ப்பது இயற்கையே, ஆயினும் பெரும்பான்மையான கலைஞர், இலக்கியக்காரர் ஆகியோரிடம் இவ்வுணர்வை நிறைவாக நாம் கண்டுகொள்ள முடிவதில்லை. ஒரு சிலரிடம் அதனை நாம் முழுமையாக அவதானிக்க முடிகிறது. அத்தகைய மிகச் சிலருள் ஒருவர் நம் மத்தியில் வாழும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா அவர்கள்,
கடந்த நாற்பதாண்டுகால ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிலே தன்னைப் பின்னிப் பிணைத்துக்கொண்டுள்ள ஜீவா அவர்கள், எழுத்திலும் பேச்சிலும் மட்டுமன்றி, நடைமுறை வாழ்க்கையிலும் மனித நேய உணர்வை நிறைவாக வெளிப்படுத்தி வருபவர். அவ்வகையில் அவர் பொதுவான இலக்கியக்காரர், இலக்கியவாதி என்னும் சுட்டுநிலைக்கு அப்பால் மனித நேயம் நிறைந்த இலக்கிய நெஞ்சம் என்று பெயர் சூட்டப்படத்தக்க தகுதியுடையவராகின்றார். அந்த இலக்கிய நெஞ்சத்தின் உணர்வுத் துடிப்பைக் கடந்த முப்பதாண்டு காலத்திற்கு மேலாக என்னால் அருகிருந்து உணர முடிந்தது. அவரைப்போலவே நானும் கலை வாழ்வில் ஈடுபட்டுத் திளைத்தவன் என்ற வகையில் 'பாம்பின் கால் பாம் பறியும் என்பதற்கேற்ப, அவரது சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் என்னால் உரிய வகையிலே உணர முடிகிறது. அந்த நெஞ்சத்தைப் பற்றி என் உள்ளத்திலே எழும் பசுமையான உணர்வுகளை இம் மணிவிழா மலரில் நினைவில் மீட்க விரும்புகிறேன்.
"மல்லிகை ஜீவா" சு. வித்தியானந்தள் 9

Page 8
1927-ம் ஆண்டு பிறந்த டொமனிக் ஜீவா, 1946-ம் ஆண்டில் நவீன இலக்கியத் துறையில் அடியெடுத்து வைத்தவர். ஏறத்தாழ இருபதாண்டு காலம் ஈழத்தின் முதல் வரிசைப் படைப்பாளியாக - சிறந்த சிறுகதை எழுத்தாளனாகத் - தொடர்ந்து இயங்கியவர், தமது தண்ணீரும் கண்ணிரும் என்ற சிறுகதைத் தொகுதிக்குச் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றவர். அவரது அத்தகைய செயற் திறனையும் சிறப்புக்களையும் அருகிருந்து கண்டு உவகை கொண்டவர்களில் யானும் ஒருவன், தன்னை ஒரு சிறந்த படைப்பாளி என்று நிரூபித்துக்கொண்ட ஜீவா தொடர்ந்து அத்துறையிலே ஈடுபட்டிருப்பின் இன்று பல சிறு கதைத் தொகுதிகளையும், நாவல்களையும் வெளியிட்டுத் தன்னை ஒரு தலையாய படைப்பிலக்கிய கர்த்தா என்று வளர்த்துக் கொண்டிருக்கலாம். அதற்குத் தேவையான நெஞ்சுரமும் கைவண்ணமும் அவரிடம் இயல்பாகவே இருந்தன. ஆனால் அந்த ஆற்றலை அவர் தனி எழுச்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ள முற்படாமல், தான் வாழும் சமுதாயத்தினதும் நாட்டினதும் எழுச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டார். எழுத்தாளர் பலரும் உருவாகி வளர்வதற்கேற்ற ஓர் இலக்கிய சஞ்சிகைத் தளத்தைக் தோற்றுவித்தார். அதுதான் மல்லிகை. ஒரு படைப்பிலக்கியவாதி தன் சுயவளர்ச்சியைத் தியாகஞ் செய்து, ஏனைய இலக்கியக்காரருக்கு அமைத்துக் கொடுத்த இலக்கியக் களம் அது அச்செயற்பாடு ஜீவா என்ற இலக்கிய நெஞ்சத்திற் பூத்துக் குலுங்கும் மனித நேய உணர்விற்குத் தக்கதொரு சான்றாகும்.
ஒரு சஞ்சிகையாள ன் என்ற வகையிலே ஜீவாவை நோக்கும்போது ஏனைய சஞ்சிகையாளர் பலரிலுமிருந்து வேறுபட்டதொரு தனித்தன்மையுடையவராக அவர் திகழ்ந்துள்ளார் என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதோர் அம்சமாகும். கதிரையில் இருந்துகொண்டு விடயங்களைப் பெற்றுத் தொகுத்து அச்சுக்கு அளிக்கும் நிர்வாகியாக அவர் அமையவில்லை. அவரே விடயதானங்களைத் தேடிப் பெற்றார். தாமே அச்சுக் கோப்பாளராக அமைந்து வடிவமைத்தார். பின்னர் அதனைத் தானே சுமந்து கொண்டு வந்து வாசகரிடம் கொடுத்துப் பணம் பெற்றார். இவ்வகையிலே ஒரு சஞ்சிகையின் முப்பெரும் செயற்றுறைகளான எழுத்தாளர் தொடர்பு, அச்சு அமைப்பியல், வாசகர் தொடர்பு ஆகிய மூன்றையும் தனியொருவராகவே, எந்தவித மனித வேறுபாடுமின்றிச் செய்து விடுகிறார். இதனாலேயே சென்ற ஆண்டு நடைபெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டிலே தொடக்கவுரை நிகழ்த்தும் போது ஜீவாவை தனிமனித நிறுவனம்' என்று குறிப்பிட்டேன், ஜீவா அவர்களின் செயற்றிறன்தான் அவரின் இன்றைய ஆளுமையின் உண்மையான அடிப்படையாகும். ஈழத்திலே வடமுனையான பருத்தித்துறை முதல் தென் கோடியான திக்குவலை வரை மேற்கே கொழும்பு முதல் கிழக்கே
10 சு. வித்தியானந்தன் "மல்லிகை ஜீவா"

மட்டக்களப்புவரையுள்ள படைப்பாளிகள், கலைஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர் ஆகிய அனைவராலும் நன்கறியப்பட்ட ஒருவராக ஜீவா திகழ்கிறார் என்றால், அதற்கு முக்கிய காரணம் அவரது இந்த வகையான படைப்பாளி, வாசகர் ஆகியோருடன் நேரடித் தொடர்பு வகையிலான அணுகுமுறை என்பது யாவருக்கும் ஒப்ப முடிந்த கருமமாகும். இச்சிறப்பால் ஈழத்திற்கப்பாலே தமிழகமுட்படப் பிற நாடுகளிலும் நன்கறியப்பட்டுள்ளார் என்பதும், சிங்கள மக்கள் மத்தியிலும் மதிக்கப்பட்ட தமிழ் இலக்கியவாதியாகவும் இவர் திகழ்கிறாரென்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியவை.
ஜீவாவின் மேற்படி செயற் திறனால் வெளlவந்து கொண்டிருக்கும் மல்லிகை தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றிலே நிறுவன பலமில்லாது தனி மனித முயற்சியாக நீண்ட கால - இருபத்திரண்டு ஆண்டுகட்கு மேலாக - இலக்கியப் பணியாற்றி வந்துள்ளது. ஆற்றி வருகின்றது. இத்தகு சிறப்புத் தமிழில் வேறெந்தச் சஞ்சிகைக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. மல்லிகையின் கடந்த இருபத்திரண்டு ஆண்டு நிகழ்வு இதழ்களையும் தொகுத்து நோக்கும்போது, ஈழத்துச் சமகால இலக்கிய வரலாற்றின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியின் வளர்ச்சிப்போக்கை அது பிரதிபலித்து வந்துள்ளது தெரிகிறது. அதில் இடம்பெற்ற விடயங்கள், முன் வைக்கப்பட்ட கருத்துக்கள் என்பன தொடர்பாக உயர்நிலை ஆய்வுகள் எதிர்காலத்தில் நிகழும்போது, அதன் இலக்கியப் பங்களிப்பின் பெறுமதி உணரப்படும். ஆனால் அவ்வகையில் ஆராய்பவர்களுக்கு ஜீவா அவர்கள் மேற்படி விடயங்களையும் கருத்துக்களையும் பெற எத்தனை பேரிடம் எத்தனை தடவை நடந்திருப்பார் - எத்தனை பேரால் இன்று போய் நாளை வா என ஏமாற்றப்பட்டிருப்பார் என்பது தெரியப்போவதில்லை. ஏனெனில் அவை ஜீவா அவர்களின் ஆத்மா மட்டுமே அறிந்த உண்மைகளாகும், இயல்பாகவே பல்வேறு காரணங்களாற் படைப்பிலும் ஆய்விலும் சோம்பியிருந்து இலக்கியத்துறையிலிருந்து விலகி விட்டிருக்கக் கூடிய சிலர், ஜீவாவின் துாண்டுதலினாலே இலக்கியத் துறையிலே தொடர்ந்து இயங்கியதுண்டு. எனவே ஜீவா தாம் சஞ்சிகையாளனாக இயங்கியதோடு மட்டுமன்றி, ஏனைய இலக்கியக்காரரை இயக்கியவராகவும், அதன், மூலம் ஈழத்தின் அண்மைக்கால இலக்கிய வரலாற்றுப் போக்கினை நெறிப்படுத்தியவராகவும் திகழ்ந்து வருவது கண்கூடு. இப்பண்புகள் யாவற்றிற்கும் அடிப்படை அவரது மனித நேய உணர்வு நிறைந்த இலக்கிய நெஞ்சமாகும்.
ஜீவா அவர்கள் ஈழத்து எழுத்தாளரின் தரம் பற்றி அதிக அக்கறை உடையவர். கடந்த முப்பதாண்டுக் கால கட்டத்திலே, ஈழத்து எழுத்தாளரின் ஆக்க இலக்கியங்கள், திறனாய்வுகள், ஆய்வுகள் பெரிதும் வளர்ச்சி பெற்றுப் பல துறைகளில் தமிழகத்து எழுத்தாளரையும்மிஞ்சும்
"மல்லிகை ஜீவா" சு. வித்தியானந்தள் 11

Page 9
வகையில் முன்னேறியிருக்கின்றன. என்ற அசைக்கமுடியாத கொள்கையும் நம்பிக்கையுமுடையவர். இதனை அவர் தமிழ்நாட்டு எழுத்தாளர் கூட்டங்களிலும், பேச்சுக்களிலும், எழுத்திலும் ஆணித்தரமாக நிலைநாட்டி வருவது தமது நாட்டு எழுத்தாளர் மீது அவருக்கிருக்கும் இலக்கிய மனித நேயத்தை எடுத்துக் காட்டும்.
ஜீவா அவர்கள் தமக்கெனத் தனியானதொரு இலக்கியக் கோட்பாட்டை உடையவர். ஈழத்தின் கடந்த முப்பதாண்டு காலமாக முனைப்புப் பெற்று வந்துள்ள முற்போக்குச் சிந்தனையில் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளவர். ஆயினும் அச் சிந்தனை வட்டத்தில் இணையாதவர்களையும், கலைஞர், இலக்கியக்காரர் என்ற வகையில் அன்புடன் நேசித்து வந்தவர். மல்லிகையில் விடயதானம் செய்த எழுத்தாளர்களில் முற்போக்கு என்ற வட்டத்திலே தம்மை இணைத்துக்கொள்ளாதவரையும் நாம் காணமுடிகின்றதென்றால் அதற்கு ஜீவாவின் பரந்த மனப்பான்மை சார்ந்த நேசிப்புத்தான் காரணம்
ஜீவாவுடன் எனக்கு நட்பு இருப்பதற்குக்கூட அவரது இந்த நேசிப்பே காரணம். தனிப்பட்ட முறையில் ஒரு நண்பனாக, உற்றவிடத்து ஆறுதல் கூறுபவராக, தன் கருத்தோடு முரண்படுமிடத்து உரிமையோடு வாதிட்டுத் தம் நிலைப்பாட்டை மெய்ப்பிக்க முயல்பவராக, அவரது நிலையை நான் பலமுறை அவதானித்துள்ளேன். அதேபோலத் தான் சென்ற வழி தவறு என்று உணரும்போது நான் பிழை செய்துவிட்டேன்’ எனத் தவறை ஒப்புக் கொள்பவராகவும் அவர் திகழ்ந்தமையையும் நான் அனுபவத்திற் கண்டிருக்கிறேன்.
நாம் 1974-ம் ஆண்டு நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை நடத்த முற்பட்டபோது, அன்று அதனைத் தடைசெய்த ஆட்சியாளருடன் , முற் போக்கு வாதிகளும் ஒட்டியிருந்தமையால், ஜீவாவும் எனது அன்புக்குரிய மாணவர் பலரும் அதிற் பங்குகொள்ளவில்லை. மாநாடு முடிந்தபின் ஒருநாள் பூபாலசிங்கம் கடையில் என்னைச் சந்தித்தபோது, தாம் நின்ற தளம் தவறானதென்பதை அவர் ஒப்புக்கொண்டபோது அவருக்குள் அமைந்த உண்மையான மனித நேயமுள்ள இலக்கிய நெஞ்சத்தை என்னால் நன்கு அறிந்துகொள்ள முடிந்தது. அவ்வகையில் அவர் Ջ(b உண்மையான முற்போக்காளராக - வெறும் வாய்க்கொள்கைகளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு இருப்பவராகவன்றி - சமுதாய நடைமுறை இயக்கத்துடன் தன்னை இணைத்து வழிநடத்திச் செல்பவராகவே திகழ்கின்றார்.
ஜீவா அவர்களுக்கும் எனக்குமுள்ள தொடர்பைப்பற்றி எத்தனையோ கூறலாம். 1969-ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மல்லிகை
12 சு. வித்தியானந்தள் "மல்லிகை ஜீவா"

இதழில் முன் அட்டையில் எனது படம் வெளியிடப்பட்டது. அதில் முதன் முதலில் சந்தித்தேன்’ என்ற தலைப்பிலே கலைப்பேரரசு ஏரி, பொன்னுத்துரை என்னைப் பேராதனையில் எனது இல்லத்திற் சந்தித்தது பற்றி எழுதியிருந்தார். அதில் அட்டைப்பட அறிமுகமாக ஜீவா எழுதியவற்றின் ஒரு சில பகுதிகளைத் தருகிறேன். 'இந்த அட்டைப் படத்தை அலங்களிப்பவர் கலாநிதி சுவித்தியானந்தன் அவர்கள் வித்தி என்று அன்பர்களாலே செல்லமாக அழைக்கப்படும் இவர் சதா இயங்கிக்கொண்டிருப்பவர். இப்படி நாடு பூராவும் தாம் நேசிக்கும் கலைக்காகச் சிரமப்பட்டு உழைப்பவர்களை நம் நாட்டிலே காண்பதரிது கலையுலகில் நமது பாரம்பரியக் கலைக்குப் புத்துருவம் அமைத்துவரும் இந்த வித்தியானந்தன்' தான். கலையுலகிலும் இலக்கியவுலகிலும் சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் செய்யப்படும் இருட்டடிப்பை ஒழித்துக்கட்டியவர் வித்தி. தனிப்பட்ட முறையிலும் அன்னாரது படத்தை அட்டையிற் பொறித்துப் பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ இதனைப் படித்தபோது அவரின் அணிசார்ந்த ஒரு சில பிரமுகள், சமூகக் காரணங்களால் அவரைப் படலைக்கப்பால் அனுமதிக்காத சிறப்புப் பண்பு எனது ஞாபகத்திற்கு வந்தது. ஜீவா அவர்களை, அவர் சார்ந்து நின்றவர்கள் நேசித்ததை விட, நான் நேசித்தேன் என்பதற்கு அவர் குறிப்புக்கள் சான்றாகும். இக்குறிப்புக்கள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதியவை. இப்போது என்ன எழுதுவாரோ? தெரியாது.
நான் மூன்று ஆண்டுகளாக மினிவானிலே வேலைக்குப் போய் வந்தேன். இன்றைய பிரச்சனைகளின் நெருக்கடியின் மத்தியிலும் உயிரையும் மதியாது கடமையில் நான் கொழும்பு சென்று மீள்வதுண்டு, இவற்றையெல்லாமே அவதானிக்கும் அவர், பூபாலசிங்கம் புத்தகசாலைப் பக்கமாக நான் மினி வண்டிக்கு அவசரப்பட்டுச் செல்லும்போது - மறித்துச் சுகம் விசாரித்து வாரப்பாட்டுடன் கேட்பார், ‘எப்படி இந்தக் கஷ்டங்களுக்கிடையிலே உத்தியோகப் பளுவுடன் பிள்ளைகளையும் கவனித்து வருகிறீர்கள்? அம்மா இல்லாமல் எப்படி சமாளிக்கறிர்கள் அப்போது நான் சொல்வேன், 'பிள்ளைகள் என்னை நன்றாகப் பார்க்கிறார்கள். நான் அவர்கள் நலனுக்கு என்னதான் செய்தாலும், தாயில்லாக் குறையை நிவர்த்தி செய்ய முடியவில்லை. எதையும் இழக்கலாம், யாரையும் இழக்கலாம், தகப்பனையும் இழக்கலாம், ஆனால் பிள்ளைகள் தாயை இழக்கக்கூடாது' என்பேன். அப்போதெல்லாம் அவரின் கண்கள் கலங்கும். என் மேலுள்ள மனித நேயத்திற்கு இது ஒரு சான்று.
அவரின் மனித நேயத்திற்கு ஓர் அரிய எடுத்துக்காட்டாக இறுதியாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட வேண்டும் சில மாதங்களுக்கு முன் அமரர் அமரதாஸவுக்கு முற்போக்கெழுத்தாளர் சங்கம்
"மல்லிகை ஜீவா" சு. வித்தியானந்தள் 13

Page 10
அஞ்சலிக்கூட்டம் ஒழுங்கு செய்திருந்தது. அதற்கு அவர்கள் என்னை அழைக்கவில்லை. அமரதாஸ் அவர்கள் என்னோடு மிக நெருங்கிப் பழகியவர். முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்பு எங்களிடையே உண்டு கொழும்பில் - கொழும்புத் தமிழ்ச் சங்கம் எனக்கு மணிவிழா எடுத்தபோது, அவர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமையால், அவ்விழாவிலே தானும் வாழ்த்துக் கூற வேண்டுமென அங்கு வந்து, என்னை வாழ்த்தியவர். மறைந்துகொண்டு வரும் தமிழ் - சிங்கள நட்புதலுக்கு பாலமமைத்தவர்களில் அவரும் ஒருவர். எனவே அழைப்பில்லாது விட்டாலும் கூட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்ற முடிவுடன் அஞ்சலிக் கூட்டத்திற்கு ஆட்டோவிற் சென்றேன். என்னைக் கண்டதும் ஜீவாவிற்கு ஆச்சரியமும் அளவிடாத மகிழ்ச்சியும். அழைக்காது விட்டு விட்டோம் - தவறு- நீங்கள் கட்டாயம் பேசவேண்டும் என்று அன்போடு அழைத்துச்சென்றார். அஞ்சலியுரைகள் முடிந்ததும், நன்றி கூறிய ஜீவா, நாங்கள் பேராசிரியரைத் துணைவேந்தர் என்பதற்காகப் பாராட்டவில்லை, வித்தியானந்தன் என்ற மனிதனை அவரின் மனிதாபிமானத்திற்காக எப்போதும் மதிக்கினறோம். இன்று இவ்வஞ்சலிக் கூட்டத்திற்கு அழையா விருந்தினராக வந்து, கூட்டத்தினை நிறைவு செய்தமைக்கு அவருக்குப் பெரிதும் கடமைப் பட்டுள்ளோம் என்று கூறினார். அவரின் மனிதநேயத்திற்காக நான் அவரை மதிக்கின்றேன்.
ஜீவா என்ற இலக்கிய நெஞ்சம் ஓர் இலக்கியப் படைப்பாளி என்ற வகையிலும், சஞ்சிகையாளரென்ற வகையிலும், ஆற்றி வந்த பணியைக் கெளரவிக்கு முகமாக நாவலர் சபையால் அவருக்கு ‘இலக்கிய மாமணி’ப் பட்டம் வழங்கப்ட்டபோது, அப்பட்டத்தை அவருக்கு வழங்கி மாலை அணிவிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதை இந்தச் சந்தர்ப்பத்தில் மன நிறைவோடு நினைவு கூருகினறேன்.
மல்லிகை, சங்க இலக்கியங்களில் மதுரையிலே ஆராயப்படுகின்ற தமிழுக்கு நேராகக் குறிக்கப்படுகின்றது. பத்துப் பாட்டில் மதுரைக் காஞ்சியின் இறுதியில் வெண்பா ஒன்று பின்வருமாறு கூறுகின்றது:-
'சொல்லென்னும் பும்போது தோற்றிப் பொருளென்னும் நல்லிருந் தீந்தாது நாறுதலால் - மல்லிகையில் வண்டார் கமழ்தாம மன்றே மலையாத தண்டாரான் கூடற் தமிழ்'
ற்கமைய மல்லிகை மகாையில் ாயப்படுகின்ற தமிழுக் gua 蠶 :*: ရှိုးရှီဂျိုရှ် ရှီးမြို့မှီ மல்லிகை மலரும் தமிழுக்கு ஒப்புடையதாகக் கொள்ளப்படும் ஜீவா அவர்களின் மல்லிகை வாடா மல்லிகையாகவும் அவரது - வாழ்க்கை வாடாத வாழ்க்கையாகவும் - அமைய வேண்டுமென்று ஆடவல்லானை வேண்டி நிற்கின்றேன். இ
14 சு. வித்தியானந்தன் "மல்லிகை ஜீவா"

W/rst BöF5 -3-U/T?
- ಹ, 9454»೯/೯ಕ್¢Ú
49
ந்த மண்ணில் எத்தனையோ துன்ப துயரங்களைப் பட்டிருக்கிறேன். அவமானப் படுத்தப் பட்டிருக்கிறேன். எனது ஆத்மாவே கசப்புணர்ச்சியால் நிரம்பி வழிந்ததுண்டு ஒரு காலத்தில், அத்தனை துாரம் என் உணர்வுகள் நொந்து போயிருந்தன. ஆனால் இன்று அவைகளைப் பின்னோக்கி அசை போட்டுப் பார்க்கும்போது பதப்படுத்தவே செய்யப்பட்டது போல எனக்குப் படுகிறது (மல்லிகை ஜனவரி 1982. பக்.56 ) எத்தகையதொரு சுழ் நிலையில் ஜீவா உருவாகினார் அல்லது உருவாக்கப்பட்டார் என்பதை மேற் கண்ட அவரது கூற்று வெளிப்படுத்துகின்றது. பாரதி, புதுமைப்பித்தன் முதலிய பல இலக்கிய கர்த்தாக்களது வாழ்க்கைப் பின்னணியைப் பெருமளவு ஒத்ததாகவே ஜீவாவின் வாழ்க்கைப் பின்னணியும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜீவா எழுத்துத் துறையிற் பிரவேசித்த காலகட்டம் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே மிக முக்கியமான மாற்றங்கள் பல ஏற்படத் தொடங்கியிருந்த காலகட்டமாகும். இத்தகைய மாற்றங்களுக்கு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதனைச் சார்ந்தவர்களும் மிக முக்கியமான பங்களிப்பை நல்கினர். இவற்றுள் ஜீவாவும் அவரது மல்லிகையும் ஆற்றிய பணி மதிப்பிடற்கரியது.
1972 ஆம் ஆணடு, அதுவரை நான் ஜீவாவை நேரிற் பார்த்ததுமில்லை, பழக்கமுமில்லை. ஆயின் மல்லிகைத் தொடர்பு மட்டும் ஏற்பட்டிருந்தது. முதுகலைமானிப் பட்ட ஆய்வின் பொருட்டு ஜீவாவின் 'தண்ணீரும் கண்ணீரும் கதைத் தொகுதி ஒன்றினை விலைக்கு வாங்குவதற்காக யாழ் மாநகரப் புத்தகக் கடைகள் பலவற்றில் விசாரித்துக் கொண்டு இறுதியாகப் பிரபலமான ஒரு புத்தகக் கடைக்குச் சென்று கேட்டேன். கடையின் உரிமையாளர் முதியவா, சாமிக் கோலம், சிவப்பழம்,
"மல்லிகை ஜீவா" Eń. 69HEGEMITIEF GWh 15

Page 11
"தண்ணீரும் கண்ணிரும் பார் எழுதிய நூல் எனச் சாதகமாகக் கேட்டார். 'டொமினிக் ஜீவா’ என நான் கூறினேன். உடனே என்னை அவர் வெறித்துப் பார்த்தார். அவர் முகத்தில் நிலவிய சாந்தம் அகன்று மூர்க்கம் குடிகொண்டது. மிகுந்த எரிச்சலுடன் 'உந்தக் கண்ட நிண்ட சாதியள் எல்லாம் கிறுக்கித்தள்ளித் தங்களுக்கும் ஏதோ தெரியும் எனப் பம்மாத்துப் பண்ணி புத்தகம் போட்டால் அவற்றை விற்பனை செய்ய நாங்கள் என்ன மடையரா? ஏன் இஞ்சைபாரும், சோமு, சாண்டில்யன், மணியன், லட்சுமி, கோதைநாயகி அம்மாள், வடுவுள் துரைச்சாமி ஐயங்கள், எனப் பெரியதொரு பெயர்ப் பட்டியலைக் கூறி அவர்களது கதைப் புத்தகங்கள் எல்லாம் இருக்கின்றன. அவற்றில் விருப்பமானவற்றை வாங்குமன் என்றார் எனக்கு நீங்கள் கூறியவர்களது நுால்கள் தேவையில்லை. தண்ணீரும் கண்ணீரும் நுால்தான் தேவை. 'எனக் கூறி முடிப்பதற்குள் சிவப் பழம் துள்ளி எழுந்து கொக்கரிக்கத்தொடங்கிவிட்டது. அப்பொழுது நான் 25 வயதும் நிரம்பாத இளைஞன். மிக எளிய உடையில் சாதாரணமாக வேட்டியும் சேட்டும் அணிந்திருந்தேன். ஒருவகையில் அப்போது நான் யாழ் மாநகரத்துக்குப் புதியவன். எனினும் ஜீவா சில சமயம் குமுறுவது போல் நானும் அன்று சிவப்பழத்திற்கெதிராகக் குமுறினேன். அக்கம் பக்கத்துக் கடைக்காரர்கள் சிலரும் அங்கு கூடிவிட்டார்கள் அளவு கடந்த மனப் பொருமலுடன் நெஞ்சு முட்டிய வேதனையுடனும் அவ்விடத்தை விட்டு வெளியேறினேன். வெளியேறும்பொழுது கூடி நின்றவர்களைப் பார்த்துச் சிவப்பழம், உவனும் ஒரு எளியன் சாதியாகத்தான் இருக்க வேணும் அதுதான் என்னுடன் இந்த அளவிற்கு வாயை நீட்டியிருக்கிறான். எளிய வடுவாக்கள், உவங்களையெல்லாம் இருந்த இடமும் இல்லாமல் துலைக்க வேண்டும் எனச் கூறியது என் காதில் விழுந்தது.
இன்றுவரை இச்சம்பவம் என் நெஞ்சில் மாறாத வடுவாக ஆழமாகப் பதிந்து விட்டது. இச்சம்பவம் நடந்த அன்றிரவு முழுவதும் எமது சமூகத்தின் இழி நிலையை எண்ணி, எண்ணி மனங் குமுறி, நித்திரையின்றி உணவின்றித் துடித்தேன். ஆத்திரமுற்றேன். ஆழமாகச் சிந்தித்தேன். அதுவரை ஜீவாவைப் பற்றி அதிகம் தெரிந்திராத நான், யார் இந்த ஜீவா என அறிய முற்பட்டேன். அதன் பின் ஜீவாவின் மீது தனி மதிப்பும் பிடிப்பும் ஏற்பட்டது. இச் சம்பவம் நடந்து சில வாரங்கள் கழித்து ஜீவாவை நேரிற் சந்தித்து முதன் முதலாக மனம் திறந்து பழகினேன். அதனைத் தொடர்ந்து ஜீவாவுடன் எனக்கு நெருக்கம் ஏற்பட்டது.இன்றுவரை நான் மேற்கூறிய சம்பவத்தை அவரிடம் கூறியதேயில்லை. காரணம், ஜீவாவின் உள்ளம் இதனாற் புண்படக்கூடாது என்பது ஒன்று மற்றையது, ஜீவா சில சமயம் எரிமலையாகக் குமுறுபவர் இச்சம்பவத்தை அறிந்தாற் சில சமயம் சம்மந்தப்பட்ட சிவப்பழத்துடன் நேரடியாக மோதிக்கொள்ளவும் கூடும். அதற்கு நான் காரணமாக இருக்கக்கூடாது என்ற அச்சம்
16 e. 5garrថាបាល "மல்லிகை ஜீவா"
 

இச்சம்பவம் பற்றி நான் இங்கு குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம்-1970களிலேயே இத்தகைய சாதிவெறி சிவப்பழங்களிடம் கூடக் காணப்பட்டதென்றால், ஜீவா எழுத்துலகில் பிரவேசித்த 1940 களில் நிலவிய சுழ்நிலை எத்தகையது என்பதை நாம் சிந்திக்கவேண்டும் என்பதற்காகவே, மேலும் சிவப்பழங்களின் மதிப்பீடில் சாண்டில்யன், மணியன், சோமு, கோதைநாயகி அம்மாள் முதலியோர் சிறந்த எழுத்தாளர்கள் ஜீவா மட்டுமல்ல, பொதுவாக இலங்கை எழுத்தாளர்கள் எல்லோருமே தரக்குறைவானவர்களே என்பதே ஆகும்.
ஜீவா தனது சிறு பராயத்தில், பள்ளிப் பருவத்தில் பாடசாலை, ஆசிரியர் ஒருவரால் தனக்கு ஏற்படுத்தப்பட்ட நீங்காத மன வடுவையும் இதயக் குமுறலையும் அந் நிகழ்ச்சியே காலப் போக்கில் தன்னை ஓர் எழுத்தாளனாக உருவாக்கியதாகவும், எமது சமூகத்தின் இழி நிலைகளையும், அவலங்களையும், ஏமாற்றுத்தனங்களையும், அவற்றை அகற்றும் வழி வகைகளையும் பற்றி ஆழமாகச் சிந்திக்கவும், அவற்றுக்கெதிராக, செயற்படவும் வைத்ததாகவும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல்வேறு வடிவிலும் வெளிப்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக அவரே ஒரு சந்தர்ப்பத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். பிறப்பால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சவரத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவன் ஐந்தாம் வகுப்புவரை படித்தேன். அந்தக் காலத்தில்தான் என்னை வெகுவாகப் பாதித்த அந்த நிகழ்ச்சி நடந்தது. என்னுடைய இலக்கியத்துறைப் பிரவேசத்திற்கே இந்த நிகழ்ச்சிதான் காரணம், நான் அப்போது தொடக்கப்பள்ளி மாணவன். அந்த பிஞ்சுப் பருவத்திலேயே என் இதயத்தில் விழுந்த அடி, அதன் வடு, என் பிறப்பை, என்னை வளர்த்த என் தந்தை செய்த தொழிலைச் சுட்டிக்காட்டிய பொழுது, என் இதயத்தில் விழுந்த காயந்தான் கனன்று கனிந்து காலப்போக்கில் இலக்கியமாக என் எழுத்தில் எரிகிறது. (ஈழத்திலிருந்து ஒரு இலக்கியக்குரல், 1982, பக், 63-64 ).
அவரது இக்கூற்றுக்குச் சிறந்த இலக்கணமாக அவரது எழுத்துக்கள் விளங்குகின்றன. ஒரு வகையில் யாழ்ப்பாணச் சமூகப் பொருளாதார அமைப்புகளும், சூழ்ச்சிகளுமே ஒரு ஜீவாவை உருவாக்கியதெனலாம் ஜீவாவை மட்டுமன்றி டானியல், தெணியான், ரகுநாதன், போன்ற பலரையும் உருவாக்கியது .
புத்தர் முதல் மகாத்மா காநதிவரை உலகில் வேறெந்தப் பகுதியிலும் தோற்றாத அளவிற்கு இந்தியத் துணைக் கண்டத்திலே பல்வேறு துறைகளைச் சார்ந்த மாபெரும் அறிஞர்களும், மகா கவிகளும், பெரியார்களும் தலைவர்களும், தொண்டர்களும் தோன்றியமைக்கு முக்கிய
"மல்லிகை ஜீவா" tii. 8tijбитrercijih 17

Page 12
காரணம் இந்தியாவின் இலக்கிய சமுதாய அவலங்களும் சமூக பொருளாதார சுழ்நிலைகளுமே எனலாம்.
எழுத்துத் துறையில் ஜீவா பிரவேசித்தபோது, கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்த சாதிக்கொடுமைகளே அவரது எழுத்துகளில் முக்கியத்துவம் பெற்றன. அவருள் எப்பொழுதுமே இடைவிடாது கனன்று கொண்டிருக்கும், இடைவிடாத தேடல் முயற்சி, அயராத கடின உழைப்பு, தீவிர ஆர்வம் முதலியன அவரை வெகு வேகமாக வளர்த்துக் கொண்டன. தன்னுள் தானே போராடிக்கொண்டும், சுற்றுப்புற சூழ்நிலைகளோடும் , தம் மீது சேற்றை வாரிப்ப,ச நினைத்தவர்களோடும் போராடிக்கொண்டும் தமது உள்ளத்தை புடமிட்டு பதப்படுத்தி மேதா விலாசத்தை வளர்த்துக்கொண்டார். ஆரம்பத்தில் அவர்களது சாதி உணர்வு மேலோங்கி இருந்தபோது, வெகுவிரைவிலேயே தான் வாழும் சமூகத்தின் சமூகப் பொருளாதார ஒடுக்குமுறைகளைத் தெரிந்து கொண்டார். மாக்ஸிய தத்துவமும், சார்ந்திருந்த ஈழத்து முற்போக்கு இலக்கிய இயக்கமும் அவருக்குத் தெளிவான பார்வையையும் பரந்துபட்ட அறிவையும் ஏற்படுத்தின.ப.ஜீவானந்தம் போன்றோரின் நெறிப்படுத்தலும் அவருக்குக் கைகொடுத்துதவிற்று.
ஜீவாவின் எழுத்துலக வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் அவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளனாக மட்டுமே மிளிர்ந்தார். பல சிறந்த சிறுகதைகளையுந் தமிழுக்குத் தந்தார். அவரது கதைகள் பல, உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டுதல்களையும் பெற்றுள்ளன.
ஜீவாவினது வளர்ச்சியின் அடுத்த கட்டம் மல்லிகை என்னும் மாதாந்த சஞ்சிகை வெளியீட்டுடன் ஆரம்பமாகிறது. உண்மையிலே ஜீவாவுக்கு ஒப்பற்ற புகழைத் தேடிக் கொடுத்ததும், கடல் கடந்த நாடுகளில் எல்லாம் ஜீவாவின் புகழ் பரவியதும், ஜீவாவின் மேதா விலாசம் வெளிப்பட்டதும், அவரது இலக்கிய, சமூகப் பணிகள் பரந்து விரிந்ததாக அமைந்ததும், மல்லிகையின் மூலமேயெனலாம். சுருங்கக் கூறின் ஜீவா தமதும், தமது குடும்பத்தினரதும் சுக போகங்களையெல்லாம் தியாகம் செய்து, மிக அரும்பாடு பட்டு மல்லிகையை வளர்த்துக் கொண்டார், வளர்த்து வருகின்றார். அதன் மூலம் தானும் நாளுக்கு நாள் விஸ்வரூபமாக வளர்ந்து வருகின்றார்.
எத்தகைய இடையுறுகளுக்கும் போட்டி பொறாமைகளுக்கும் மத்தியில் ஜீவா மல்லிகையை வளர்த்து வருகின்றார் என்பதை விபரிக்கப்புகின் அதுவே ஒரு கண்ணிர்க் காவியமாக மலரும்,
18 க. அருணாசலம் "மல்லிதை ്വr" )

எமது சமூகப் பொருளாதாரச் சுழலில் ஒரு தரமான கலை இலக்கிய சஞ்சிகையை ஆரம்பித்து குறித்த நோக்கத்திலிருந்தும், இலட்சிய பாதையிலிருந்தும், தடம் புரளாது இருபத்து மூன்றாவது வருடத்தையும் கடந்து தொடர்ந்து வெளியிடுவது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு அசுர சாதனையே எனலாம். அதிலும் எத்தகைய பொருளாதார வசதியோ சந்தைப்படுத்தும் வசதியோ அற்ற நிலையில், ஜீவாவின் குடும்பப் பொருளாதார சூழலில் அவரது இலட்சியமும் வெற்றியுடன் கூடிய அப்பழுக்கற்ற இடைவிடாத கடின உழைப்பும் ஒன்றையே மூலதனமாக கொண்டு மல்லிகை இத்தனை ஆண்டு காலம் வெளிவருகின்றது என்றால் அது ஜீவாவின் மாபெரும் சாதனை எனக் கூறுவதில் தவறேதும் இல்லை. அதுவும் கடந்த மூன்று நான்கு வருடங்கள் பொதுவாகத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் குறிப்பாக யாழ்ப்பாணக் குடா நாட்டிற்குள்ளும் நிலவும் அவலம் மிக்க சுழ்நிலை உலகம் முழுவதும் அறிந்ததே எங்கும் மரண ஒலங்கள், வேதனைக் குரல்கள், துன்பங்கள், துயரக் கோலங்கள், போர் விமானங்களின் இரைச்சல்கள், குண்டு வெடிக்கும் சத்தங்கள், துப்பாக்கி வேட்டுக்கள், கூச்சல் குழப்பங்கள், மனித உணர்வுகளே மரத்து வாழ்க்கையே வெறுத்துப்போய்விட்ட சுழ்நிலைகளின் மத்தியில் அதே யாழ் மாநகரத்தின் ஒரு பகுதியிலிருந்து மல்லிகை மாதா மாதம் வெளிவந்து கொண்டிருக்கின்றதென்றால் அசுர சாதனையென்றே கூறவேண்டும்.
மல்லிகையினது வளர்ச்சியின் பொருட்டு ஜீவா மட்டுமா தியாகம் புரிந்தார்? பல சமயங்களில் மல்லிகையை வெளியிட முடியாத அளவிற்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டவிடத்து, மனைவியின் நகைகளே கை கொடுத்துதவின என ஜீவா அடிக்கடி கூறியுள்ளார். பாரதியும் அவரது குடும்பமும் போன்றே ஜீவாவும் அவரது குடும்பமும் நாளாந்த உணவுக்கே மல்லுக்கட்டிக் கொண்டு, “நான்படும் பாடு தாளப்படுமோ? தறிபடுமோ? யார் படுவார்?’ என்ற நிலையில் மல்லிகையின் வளர்ச்சியின் பொருட்டு இலட்சிய வேள்வித் தீயிலே தமது சுகபோகங்களை அர்ப்பணித்துள்ளார்.
மல்லிகையின் மூலம் ஜீவா தமிழ் உலகிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. ஒரு சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.இது காலவரை - மல்லிகையில் வெளிவந்தவை சிறு கதைகள் , புதுக் கவிதைகள், பல்வேறு துறைகள் சார்ந்த கட்டுரைகள், திறனாய்வுகள், உலகச்செய்திகள், துணுக்குகள், வாதப்பிரதிவாதங்கள் என ஏராளம், இவை எல்லாவற்றுக்கும் மகுடமாக அமைவது மலர்தோறும்
அறிந்ததே. சுருங்கக்கூறின் மல்லிகை ஈழத்தின் சமகால வரலாறாகவே
"மல்லிகை ஜீவா" சு. அருணாசலம் 19

Page 13
விளங்குகின்றது எனலாம். இதுவரை மல்லிகையின் மூலம் உருவாகிய எழுத்தாளர்கள், புதுக்கவிதையாளர்கள் முதலியோர் கணக்கற்றவர்கள், எழுத்துத்துறையிற் காலடி எடுத்து வைத்தவர்கள், முது பெரும் எழுத்தாளர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள் எனப்பலதரப்பட்டவர்களுக்கும் மல்லிகை களம் அமைத்துக் கொடுத்தது. இதுரை வெளிவந்த ஆண்டு மலர்களுக்கும் சிறப்பு மலர்களும் தனித்துவமானைைவ, விதந்தோதத்தக்கவை.
மல்லிகை பற்றிக் குறிப்பிடும் இடத்து அதன் ஆசிரியர் தலையங்கத்தையும், துாண்டிலையும் யாருமே மறந்துவிட முடியாது. ஜீவாவின் மேதா விலாசத்தையும், இரத்தினச் சுருக்கமாகவும், சுவையாகவும் எழுதும் ஆற்றலையும், நடைச் சிறப்பையும், அவரது இதய சுத்தியையும். அசுரதுணிச்சலையும் மதிப்பிட அவர் எழுதியுள்ள ஆசிரியர் தலையங்கங்களே போதும்,
எதனையும் நான் சகித்துக்கொண்டாலும், மாதாமாதம் மல்லிகையைப் பார்க்காமல், வாசிக்காமல், என்னால் இருக்கவே இருக்க முடியாது. கடந்த பதினேழு வருடகாலமாக மல்லிகையை வாசித்துவந்துள்ளேன். ஆயின் ஓர் உண்மையை வாய் விட்டே கூறுகின்றேன. அன்று தொட்டு இன்றுவரை மாதா மாதம் மல்லிகை கிடைத்ததும் முதலில் ஆசிரியர் தலையங்கத்தையும் துாண்டிலையுமே மிகுந்த ஆர்வத்துடன் கருத்துான்றிப் படிப்பேன், தேவையானால் இரண்டாம் முறையும் அப்பகுதிகளை வாசிப்பேன். அதன் பின்னே ஏனையவை. அந்த அளவிற்கு அவை கருத்தாழம்மிக்கவை. கவர்ச்சி மிக்கவை. அறிவிற்கு விருந்தளிப்பவை. பலதுறை சார்ந்தவை. சில இதழ்களில் அசுரத்துணிச்சலுடன் அவர் வெளியிடும் கருத்துக்கள் மெய் சிலிர்க்க வைப்பவை. எடுத்துக்காட்டாக 1982 யனவரி, 1986 பெப்ரவரி, மே, ஒக்டோபர் 1987 யனவரி, ஏப்பிரல் மல்லிகை இதழ்களை குறிப்பிடலாம்.
விதந்து கூறத்தக்க இன்னோர் அம்சம், கடந்த பல ஆண்டுகளாக மல்லிகை தனது தடம் புரளாத செல் நெறியின் மூலம் தரமான வாசகள் கூட்டத்தை உருவாக்கி வருவதே மனிதப் பலவீனங்களை, பயன்படுத்தி இலக்கியம் என்ற பேரில் சொகுசான வியாபாரம் பண்ணிக்கொண்டிருக்காமல் வாசகர்கள் எதனை விரும்புகிறார்கள் என்பதை விடுத்து எதனை விரும்ப வேண்டும் என்பதை வற்புறுத்தி அவற்றை மல்லிகை நடைமுறைப்படுத்தித் தரமான வாசகள் கூட்டத்தை பெருக்கியுள்ளது. இன்று கடல் கடந்த நாடுகள் பலவற்றிலும் மல்லிகை வாசகர்கள் பெருகி வருகின்றமை கண்கூடு.
20 க. அருணாசலம் "மல்லிகை ളഖr" |
 

மல்லிகையின் ஒவ்வொரு மலரும் தாங்கிவரும் அட்டைப்படம் பற்றி விசேடமாகக் குறிப்பிடல் வேண்டும். சினிமாக்காரிகளின் இடையையும், தொடையையும், கூந்தலையும், கணிணையும், மூக்கையும், மார்பையும், காட்டிச் சுலபமாக வியாபாரம் பண்ணும் பல சஞ்சிகைகளின் போக்குக்கு மாறாக அன்றாடம் உழைத்துண்ணும் தொழிலாளர்களையும், தொணி டர்களையும், அறிஞர்களையும் , எழுத்தாளர்களையும் தாங்கி மல்லிகை வெளிவந்துள்ளது. வெளிவருகின்றது.இதுகாலவரை இருட்டில் மறைக்கப்பட்டிருந்த பலரை வெளிச்சத்திற்குச் கொண்டு வந்துள்ளது.
இலட்சிய வெறியும் மன வைராக்கியமும் அசுரத்தனமான உழைப்பும், பாட்டாளிகளின் பால் அளவு கடந்த நேசமும் கொண்டுள்ள ஜீவா, கடந்த மூன்று சகாப்தங்களுக்கு மேலாக முற்போக்கு இலக்கியத்துடனும் , மாச்க் சியத்துடனும், தன்னை இறுகப் பிணைத்துக்கொண்டு, இன்றுவரை தமது இலட்சியப் பாதையிலிருந்து தடம் புரளாமல் இதய சுத்தியோடும், சுயலாபம் கருதாமலும் உழைத்து வருபவர். ஆரம்பத்தில் ஜீவாவை தப்புக்கணக்கு போட்டவர்களும், அலட்சியமாக நோக்கியவர்களும், எரிச்சல் கொண்டு சேற்றை வாரிப் புத முயன்றவர்களும், எத்தனித்தவர்களும், காலப்போக்கில் ஜீவாவிடம் குடிகொண்டிருந்த சிறப்பம்சங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டனர்.
ஜீவாவின் வாழ்வு முழுவதும் பெரும் போராட்டமாகவே அமைந்துள்ளது. தன்னுள் தானே போராடிக் கொணர் டும் , சிந்தித்துககொண்டும், தன் உள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவா, சாதி ஒடுக் குமுறைகளுக் கெதிராகவும் , வர்க்க முரண்பாடுகளுக்கெதிராகவும் நச்சிலக்கியங்களுக்குக்கெதிராகவும், தனது குடும்ப வறுமைக்கெதிராகவும், தன்னை எதிர் நோக்கி வந்த சவால்களுக்கெதிராகவும், இடைவிடாது போராடித் தமது இலட்சியப் பாதையில் முன்னேறி வந்துள்ளார். “சரித்திரத்தில் எனது உழைப்பின் பெறுபேறு நிச்சயம் பதியப்படும்” (மல்லிகை ஜனவரி 1982 பக். 35) எனத் தன்நம்பிக்கையோடும், துணிச்சலோடும் ஜீவா ஓரிடத்தில் கூறியுள்ளார். அவரது அசுரத்தனமான உழைப்பின் பெறுபேறுகள், எதிர்காலத்தில் அல்ல, இப்பொழுதே நன்கு பதியப்பட்டு விட்டன. தமிழும், இலக்கிய வரலாறும் உள்ளவரை ஜீவாவின் நாமமும் அவரது மல்லிகையின் பணிகளும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.
எனினும் தன்னடக்கம மிகுந்த ஜீவா என்ன கூறுகிறார் தெரியுமா? எனக்குத் திருப்தியில்லை. நான் நம்பிய, விரும்பிய தாக்கத்தை இன்னும்
|"மல்லிகை ஜீவா" 21

Page 14
என்னாலும் மல்லிகையாலும் ஏற்படுத்த முடியவில்லையே? என்ற மன ஆதங்கம் என்னிடம் நிறைய உண்டு. எனவே எனது மனத்திருப்திக்கு நான் இன்னும் நிறைய நிறைய உழைக்க வேண்டியிருக்கின்றது." (மல்லிகை ஆகஸ்ட் 1984 ஆண்டு மலர்)
யார் இந்த ஜீவா?
குறைபாடுகள் எதுவுமேயற்ற ஒரு மனிதனை நான் இது வரை என் வாழ்விற் சந்தித்ததேயில்லை. ஜீவாவிடமும் குறைபாடுகளும் பலவீனங்களும் இருக்கலாம். ஆயினும் நிறைகளும் பலமுமே நிச்சயம் மேலோங்கி நிற்பதை எவரும் மறுக்க முடியாது. ஆரம்பத்தில் ஆசாட புதிகளாலும், சாதி வெறியர்களாலும் எள்ளி நகையாடப்பட்ட ஜீவாவின் நாமம் இன்று இலட்சோப லட்சம் மக்களது நாவிலே செல்லப் பெயராக உச்சரிக்கப் படுகின்றது. யாழ்ப்பாணத்தில் மட்டுமா? ஈழம் முழுவதிலும் மட்டுமா? தமிழகத்தில் மட்டுமா? கடல் கடந்து அனைத்திந்தியாவிலும் ஏன் அனைத்துலகிலுமே இன்று ஜீவா எனும் நாமம் ஒலிப்பதை அவதானிக்கலாம்.
ஜீவா அவர் ஒரு படிக்காத மேதை. உன்னதமான மனிதாபிமானி, முற்போக்காளன், தலைசிறந்த பத்திரிகையாளன், தலைசிறந்த எழுத்தாளன், திறனாய்வாளன், சிறுமைகளைக் கண்டு குமுறும் எரிமலை, கனல் கக்கும் பேச்சாளன், போலிகளைச் சுட்டெரிக்கும் அக்கினி, உக்கிரம் மிக்க போராளி, நின்றும் இருந்தும் கிடந்தும் என்றும் உழைப்பு உழைப்பு என்பதையே தாரக மந்திரமாகக் கொண்ட கடின உழைப்பாளி, தன் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தனது முன்னேற்றத்திற்காகவோ, சுகபோகங்களுக்காகவோ, தனது குடும்பத்திற்காகவோ அல்லாது, புதியதோள் சமூகத்தை உருவாக்கும் பொருட்டுத் தன் வாழ்வை அர்ப்பணித்துப் பெரும் நிறுவனங்களும் செய்து முடிக்க முடியாதவற்றைச் செய்து முடித்த கர்மவீரன், திசைகாட்டி, நவீன தமிழ் இலக்கியத்தின் வற்றாத ஜீவன், ஈழத்தின் சமகால இலக்கிய வரலாறு
ஜீவாவினது அசுரத்தனமான உழைப்பின் பெறுபேறுகளுள் ஒன்றாக இன்று நுால் வெளியீட்டுத் துறையும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜீவாவின் எழுத்துக்களும் பிறரது எழுத்துக்களும், மல்லிகைப் பந்தல் வெளியீடுகளாக வெளிவந்துள்ளமையும் மேலும் வெளிவர இருப்பதும் இலக்கிய நெஞ்சங்களுக்குப் பேரானந்தம் அளிக்கும் செயலாகும்.
இத்தகைய ஜீவாவுக்கு மணிவிழா அதுவும் யாழ்ப்பாணத்தில், உயர் குழாத்தினரும் விழாவினை முன்னின்று நடத்துகின்றனர். மனமுவந்து
22 க. இருணாசலம் "மல்லிகை ஜீவா"

செயற்படுகின்றனர். ஆம்! யாழ்ப்பாணம்'இன்று மிக வேகமாகத் தான்
திருந்திக் கொண்டு வருகிறது. திருந்தத்தானே வேண்டும் ஜீவாவும் அவரது மல்லிகையும் பல்லாண்டு வாழவேண்டும். அவரது பணிகள் தொடர வேண்டுமென இதய சுத்தியுடன் வாழ்த்துகின்றோம்.
இறுதியாக இககட்டுரையின் முடிவுரையாக 1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜீவா கூறியுள்ள சில வாசகங்களை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
'எனது பிரதேசத்து மக்களிற் சிலர் எனது இளமைப் பருவக்
காலங்களில் மிக நீதி கேடாக என்னிடம் நடந்து கொண்டார்கள். ஒரு சாதாரண தொழிலாளியாக யாழ்ப்பாண நகரத்தில் பலருக்கு அறிமுகமானேன். பின்னர் எழுத்தாளனாகிச் சஞ்சிகை ஆசிரியராக இப்போது மிளிர்பவன். நான் யாழ்ப்பாணத்தைத் தவிர வேறெங்குமே கடமை புரிந்தவனல்ல. எனது ஒவ்வொரு அசைவும் மக்களுக்குத் தெரியும் என் ஆத்மாவைப் புண்படுத்தி என்னைக் கொச்சைப் படுத்திய பலர் இன்று தெருவில் என்னைப் பார்க்கும் பொழுது எனக்குத் தரும் ஆத்மார்த்த கெளரவத்தைப் பார்க்கும் போது மனம் கம்பீரமாகச் சிலிர்க்கின்றது. மனதிற்குள் அவர்கனை வணங்குகின்றேன். யாழ்ப்பாணத்து மக்கள் இலேசாகவும் வெகு சுலபமாகவும் ஒரு திறமையை அங்கீகரித்து விடவும் மாட்டார்கள். பயங்கரச் சோதனை நெருப்பாற்றினுாடே முகிழ்ந்து வருபவர்களை அவர்களுக்குரிய சரியான கெளரவத்தைத் தரத் தயங்கவும் மாட்டார்கள். இதுவே எனது அநுபவ அபிப்பிராயம் ஒரு ஜீவாவை உருவாக்கியதற்காக யாழ்ப்பாணத்து மக்களுக்குத் தலைவணங்குகின்றேன்.(மல்லிகை ஜனவரி 1982 பக். 56)கு
"மல்லிகை ஜீவா" க. இருணாசலம் 23

Page 15
ஜீவா சமூகத்திண் மாணவன்
- ចចំ)
,சமூகத்திலே இரண்டறக் கலந்து வாழ்ந்து اوقادری அதனைப் பார்த்தும், கேட்டும், அனுபவித்தும், ஆராய்ந்தும், கல்வி கற்றவர் டொமினிக் ஜீவா அவர்கள்,
பிறந்தது 60 வருடங்களுக்கு முன், இதே பிரபவ ஆண்டு, ஜூன் 27 ஒரு திங்கட்கிழமை, ரோஹினி நட்சத்திரம், பிறந்த நேரம் சரியாகத் தெரியாததால், சாதகக் குறிப்பு எழுதி, இப்போது புழுகி, சோதிடக் கலைக்குப் பெருமை சேர்க்க முடியவில்லை. ஆனால், பிறந்த காலத்திலே யாராவது சோதிடர் பலன் பார்த்திருந்தால், ஆகக்கூடிய உயர்வு நவிற்சியாகப் பையன் நாவன்மை உடையவன், எல்லோரையும் வசீகரிப்பவன், நன்றாகத் தொழில் செய்து ஒரு குடும்பத்தை நடத்தக்கூடியவன் என்றே கூறியிருப்பார்.
படிக்கக்கூடிய பையன் என்ற ஆலோசனை கூறுவது கூடத் தந்தை அவிராம்பிள்ளை ஜோசப்புக்கு அவசியமில்லாததாகத் தோன்றியிருக்கும் நவீன தமிழ் இலக்கிய நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசு பெறுவான் - யாழ், நகர முதல்வரால் மாலை அணிவித்து வரவேற்கப்படுவான்- ஈழத்துத் தமிழ் இலக்கியச் சிந்தனையாளருக்கு ஓர் ஆசிரியராவான்- அரசாங்க அழைப்புடன் உலகத் தலைநகர்களின் ஒன்றான மொஸ்கோ போவான் - இவற்றில் ஒன்றையாவது அதன் சாயல் படக்கூடச் சோதிடர் அன்று கூறியிருக்க மாட்டார். 20-ஆம் நூற்றாண்டின் கால்வாசி கழிந்தும் கூட யாழ்பொருளாதார நிலையை அறிந்தவர் எவரும் அப்படிக் கூறியிருக்க மாட்டார்கள். ஜோசப்-மரியம்மா தம்பதிகள் அதை நம்பவும் மாட்டார்கள். அப்படியான காட்சிகள் அவர்கள் கனவில் கூடத் தோன்றுவதற்குச் சூழ்நிலை இல்லை,
ஜோசப்பின் குடும்பம் பெரியது. நான்கு மகன்மார், ஒரு மகள். ஜீவா மக்கள் வரிசையில் இரண்டாவது, பிறந்த போது குடும்பத்தில்
24 க. அருணாசலம் "மல்லிகை ஜீவா"

பொருளாதாரக கஷ்டம் இருக்கவில்லை. சமூகத்தின் பிற்போக்கு சிந்தனையும், அமைப்பும், குடும்பத் தலைவரின் அசிரத்தையும்தான், பல இடையுறுகளை இளம் வயதில் தோற்றுவித்தது. ஜோசப் யாழ் நகரில் சலுான் நடத்தியவர்களில் முதன்மையானவர். 1933-ஆம் வருடக் காலகட்டத்தில் 2002 மொடல் பஸ் வைத்து யாழ்-கீரிமலைப் பாதையில் ஒட்டியவர் நாடகரசிகர் யாழ் தகரக்கொட்டகையில் நடைபெற்ற கூத்துக்களை ஒழுங்காகத் தரிசித்தவர் முக்கியமாக இந்திய நாடகக் குழுவினர் வந்தபோதெல்லாம் நாடக வெறிபிடித்து அலைந்தவர். மரியம்மாவுக்கு சரவணையில் போதிய வயல் நிலம் இருந்தது. அவர் நாட்டுப் பாடல்களை - அதிகமாக அரிவி வெட்டுப் பாடல்களை மிகவும் உணர்ச்சியுடன் பாடிக் காட்டுபவர். ஆகவே, ஜீவா தரிசு நிலத்தில் பிறக்கவில்லை. பெற்றோரின் பாரம்பரியப் பேற்றிலே கலைஞானம் இருந்தது. இதனை ஜீவா, பிற்காலத்தில் நேர்த்தியாக விருத்திசெய்து பல விசேஷ குணாம்சங்களைப் பெற்றிருந்தார்.
பள்ளிப் பருவம் வாழ்வின் சோதனைக் காலமாகவே இருந்தது. குடும்பத்தின் பொருளாதாரமும், சகல முன்னேற்றங்களும் தலைவனின் மது போதையில் தடுமாற்றம் கண்டன. ஜீவாவின் பள்ளிப்படிப்பு சென்ற் மேறிஸ் பாடசாலையில் ஐந்தாம் வகுப்புடன் அகாலமாக முடிவுற்றது. இதற்கு அன்றைய சமூகத்தின் உபத்திரவத் தாக்கமும், தகப்பனாருக்குக் கல்விமேல் இருந்த அலட்சிய மனப்பான்மையும் - மதகுருமாரும், ஆசிரியர்களும், கைகொடுக்காத நிலையும் முக்கிய காரணிகளாகும். இதே காரணிகளும் சூழ்நிலையும், ஜீவாவிற்குப் பிற்காலமெல்லாம் சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும், பேசுவதற்கும், கருவாகவும், கருவியாகவும், இருந்தன. அடிப்படையான அனுபவத்தை அளித்தன. அவரின் அரசியல் சமுதாய கொள்கைகளுக்கு வழி வகுத்தன.
கசப்பான நிகழ்ச்சிகளும், சூழலின் முட்டுகையும் தந்த அனுபவம் அறிவாக முதிரும் வேளையில், அரசியல் சிந்தனையாளரின் கருத்துப் பரிமாறலும், ஆரோக்கியமான நட்புகளும் கூடியது. இயல்பாக இருந்த படிக்கும் ஆர்வமும், எழுதும் ஆற்றலும் வளர்ந்தன, சமயோசிதமாகநுால்களைப் படிக்கக் கொடுப்பதற்கு அருமந்த நண்பர் புபாலசிங்கம் இருந்தார். அவர் பல அரசியல் இலக்கிய அறிஞர்களை அறிமுகப்படுத்தி அறிவுத் தொடர்புகளையும் ஏற்படுத்தினார். நுால்கள் மூலம் விந்தன், சரச்சந்திரர், கோர்க்கி ஆகியோர் அறிமுகமானார்கள். கோர்க்கியின் தாக்கம் ஜீவாவின் எழுத்தில் நிலையானது என்பதை இப்போது உணரக் கூடியதாக உளளது.
ஆரம்ப எழுத்திற்கு, 1950-களில் சுதந்திரன் இடம் கொடுத்தது. அந்தக் காலத்திற்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப, உணர்ச்சிகளுக்கு
"மல்லிகை ஜீவா" ܚ IEHE5 25

Page 16
அதிகப்படியான அழுத்தம், நோக்கத்திலே லட்சியப் பாதை, அதீத தமிழ் உணர்வு, தி. மு. க வின் நடை மோகம் அவர் எழுத்தில் காணக்கிடைக்கிறது.
ஆனால், மிக விரைவில எழுத்தின் உடலும், உயிரும், உணர்வும் பக்குவமடைந்தன. அரசியல் அறிவு புகட்டியவர்களான கார்த்திகேசன் மாஸ்டர், பொன். கந்தையா, அவைத்திலிங்கம், ராமசாமி ஐயர், எம். சி. சுப்பிரமணியம் ஆகியோரும்- எழுத்துத் தோழர்களான அ. ந.கந்தசாமி, கேடானியல, எஸ் பொன்னுத்துரை, தராஜகோபாலன், செ.கணேசலிங்கன் ஆகியோரும் இந்த வளர்ச்சியின் பங்காளராவர்.
1955 அளவில கணிசமான முதிர்ச்சி, சமுதாயத்தை ஜீவா நன்றாக புரிந்து கொண்ட காலம், சிந்தனையிலும் பக்குவம் படைப்புக்கள் தாமரையிலும் சரஸ்வதியிலும் வந்தன. தற்போது எழுத்துலகும் நட்புலகும் அவரில் காணும், நட்பு, சமரசபார்வை, இளைஞரை ஊக்குவிக்கும்மணம், இயக்க ஆற்றல் ஆகியன நிலைகொண்ட காலம், சமூகத்தின் மாணவராக இருந்தவர், அதன் ஆசிரியராக தகுதிபெற்ற காலம்,
1961 இல் இந்த ஆசிரியருக்கு ஒரு டிப்லோமா கிடைத்தது. பறலங்கா சாகித்ய மண்டலத்தில் முதலாவது இலக்கியப் பரிசு பெற்றதன் மூலம் அவருடைய சொந்த வாழ்விலும், எழுத்துலகிலும் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகியது. பரிசு பெற்று வந்த ஜீவாவை யாழ் புகையிரத நிலையத்தில், செப்ரெம்பர் பதின்மூன்றாம் திகதி, மலர் மாலை அணிவித்து வரவேற்றார் யாழ் நகர முதல்வர் திரு. ரி. எஸ். துரைராசா அவர்கள். 30ம் திகதி சாகித்திய மண்டலத்தில் வேறு பரிசு பெற்றவர்களான திருவாளர்கள் கி.லட்சுமணன், அருளம்பலவனார் ஆகியோருடன் ஜீவாவிற்கு யாழ்ப்பாணத்துத் தேவன் தலைமையில் ஒரு பிரமாண்டமான வரவேற்புக் கூட்டம், மத்திய கல்லூரியில் நடைபெற்றது. கே. டானியல், இராசநாயகம், கனகசெந்திநாதன், நந்தி ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள் 1960 ஆம் ஆண்டில் புகையிரத நிலைய வரவேற்பும், மத்திய கல்லூரியின் பாராட்டுவிழாவும் ஜீவாவின் வாழ்வில் மட்டுமல்ல, எழுத்துலகின் சரித்திரத்தில் மட்டுமல்ல அவை சமூக வளர்ச்சியில் மைல் கற்களாகும்.
இனி, கடந்த இருபத்தைந்து வருடங்கள், ஜீவாவின் வாழ்வில் பல அத்தியாயங்கள். கு
26 ܢܝ IHHE57 "மல்லிகை اومتی rr" |

ólustruída fa5 236 var
- நீல பத்மநாபன்
ವ್ಹಿ. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என்று நினைக்கிறேன். சென்னை ஷி.எல்.எஸ். ஸின் நண்பர் வட்ட இலக்கியக் கூட்டத்தில் பங்கெடுக்கக் காலை சென்ட்றலில் வந்து இறங்கி, தங்க எங்கே வசதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளப் பெட்டிபடுக்கையுடன் புங்காவிலிருக்கும் ஸி.எல்.எஸ். காரியாலயத்திற்கு வந்தேன். முந்திய நாள் மதியம் பன்னிரண்டு மணியிலிருந்து இரவு புராச் செய்த ரெயில் பயணத்தில் களைத்துத் துவண்டு போயிருந்தேன். ஸி.எல். ஸில் நண்பர் பாக்கியமுத்து முகம் மலர அன்புடன் வரவேற்றபோது என் களைப்பெல்லாம் போன இடம் தெரியவில்லை. அப்போது அறையில் உட்கார்ந்திருந்த ஒருவரை- வெள்ளை வேட்டி, ஜிப்பா, மெலிந்த உடல், எண்ணெய் மினுமினுக்கப் பின்பக்கம் வாளிவிடப்பட்ட கறுத்தத் தலைமயிர், அறிமுகம் பண்ணி வைத்தார்.
இவர்தான் மல்லிகை ஆசிரியர், இலங்கையின் டொமினிக் ஜீவா,
நேரில் அப்போதுதான் பரஸ்பரம் பார்க்கிறோம் என்றாலும் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே மல்லிகை மூலம் அவரை எனக்கும், என் எழுத்துக்கள் மூலம் என்னை அவருக்கும் நன்றாய் அறிமுகமாய் இருந்தது.
வெளியே போகக் கிளம்பிக் கொண்டிருந்தேன, நீங்க வருவதாக தெரிஞ்சதால் உங்களை பார்த்துவிட்டுப் போகலாமுன்னு காத்திருந்தேன். எங்கே தங்கப் போகிறீர்கள்,ஜீவாவின் யாழ்ப்பாணத் தமிழ், தமிழ் நாட்டுத் தமிழை விட எனக்கு நெருக்கமாய் இருப்பதைப்போன்ற ஓர் உணர்வு.
நீங்க எங்கே தங்கியிருக்கிறீங்க
இங்கே மேலே பாக்கியமுத்து வசதியான தனி அறை வேறெங்கோ ஏற்பாடு செய்திருந்தும்,
"மல்லிகை ஜீவா" - நீல பத்மநாபன் 27

Page 17
நானும் மேலே ஹாலில் ஜீவா, கே. டானியல், நா. வானமாமலை இவர்கள் கூடவே தங்கினேன்.
உங்களுக்கு வேறொரு நோக்கமொன்றும் இல்லாட்டி குளிச்சுவிட்டு வாங்கோ, நான் வெயிட் பண்ணுகிறேன். சும்மா சென்னை நகரைச் சுற்றிவிட்டு வருவோம். நான் கடல் கடந்து வந்திருக்கேன், நீங்களும் தமிழ் நாட்டிற்கு வெளியே இருந்து வந்திருக்கீங்க
ஜீவாவின் எளிமை எனக்குப் பிடித்தது. தமிழ் நாட்டில் - குறிப்பாக தலை நகரில் பேசுகிறவர்கள், பழகிறவர்கள் இங்கே எடுக்கும் தமிழ்ப் தமிழ்ப் படங்களில் வருகிறவர்களைப் போல பட்டிமன்றப் பாணியில் தனிப்பட்ட உரையாடல்களின் - சம்பாஷணைகளின் போதும் கைகால் ஆட்டி நாடகப் பாணியில் முற்றிலும் செயற்கையாய் இயங்கும்போதும், ஜீவாவின் அந்த எளிமை- மனம்விட்டு இயற்கையாய் பேசிப்பழகும் முறைஎன்னைக் கவர்ந்தது.
மல்லிகை இதழ்கள் வழக கமாய்ப் பார்க்க எனக்குக் கிடைப்பதில்லை. நான் பார்த்தவரையில் ஆசிரியர் என்ற முறையில் குறுக்கிடாமல், மாறுபட்ட கருத்துக்களுக்கும் களம் அமைத்துக், கொடுக்கும் ஒரு முதிர்ச்சி இந்தப் பத்திரிகைக்கு இருப்பதாய்த் தெரிய வருகிறது. தமிழ் நாட்டுக்குள்ளிருந்து வெளிவரும் பல இலக்கியச் சிறிய பத்திரிகைகளிலும் தென்படாதிருந்த பண்பு - பத்திரிகைத் தர்மம் - இதுவாகும். இலங்கையில் தமிழ் புத்திலக்கியத்திற்கு செழிப்பையும் ஆக்க உணர்வையும் ஏற்படுத்தியுள்ளார்.
பிரபல மலையக எழுத்தாளரான எம். டி வாசுதேவன் நாயர், மாத்ரு புமி மலையாள வார இதழின் ஆசிரியராக இருந்தபோது ஏன் நீங்க உங்க பத்திரிகையில் அதிகமாய் எழுதுவதில்லை? என்று கேட்டபோது ஒரு பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில் நான் சொந்தமாக எழுதி வெளியிடுவதைவிட பிறரை எழுதத் துாண்டி என் பத்திரிகையில் வெளியிடுவதே மேலான கடமை என்று நான் எண்ணுகிறேன்’ என்று பதிலளித்தது இங்கே ஞாபகம் வருகிறது. தமிழ் நாட்டில் சின்னப் பத்திரிகை ஆசிரியர் உட்பட எத்தனை பேருக்கு இந்த நல்ல பண்பு இருக்கிறது? ஆனால் இலங்கை மல்லிகை ஆசிரியருக்கு இயல்பாகவே அமைந்த பண்பு இது, எல்லாவித சோதனை எழுத்திற்கும் தன் பத்திரிகையில் இடம் கொடுப்பதோடு தனி மரம் தோப்பாகாது என்று அந்த எழுத்தாளர்களுக்காக வாதிடவும், அவர்களுக்கு உரிய உரிமையான புகழை அடைய வைப்பதிலும் அவர் ஒரு போதும் பின்வாங்குவது இல்லை.
28 - நீல பத்மநாபன் "மல்லிகை ஜீவா"
 

தமிழ் நாட்டில் வெளியாகும் நல்ல புத்தகங்களை இங்குள்ள பத்திரிகை ஆசிரியர்கள் உதாசீனம் பண்ணுவதுபோல் மல்லிகை ஆசிரியர் பணி னுவதில்லை. விரிவான விளக்கமான மதிப்பீடுகள் அப்போதைக்கப்போது மல்லிகையில் வெளிவருகின்றன. இக்கட்டுரை ஆசிரியரின் பல புத்தகங்களுக்கு இங்கே தமிழ் நாட்டு சின்ன, பெரிய பத்திரிகைகள் தீண்டாமை கற்பித்து ஒதுக்கியபோது, மல்லிகையில் அவைகளைப் பற்றி நுணுக்கமான கட்டுரைகள் வெளியாகின, என்பதை நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
செந்தமிழ் நாட்டிலிருந்து இங்கே திருவனந்தபுரம் வருகை தரும் தமிழ் மொழிக் காவியங்களைப் பலர் மேலோட்டமாய்ச் செந்தமிழில் செப் பி , இங்குள் ளவர்களின் இதயங்களில் கலக் காமல் சென்றுவிட்டிருக்கிறார்கள். ஆனால், டொமினிக் ஜீவாவின் யாழ்ப்பாணப் பேச்சும், பழகும் முறையும் அவரை நம்மவன் என்ற உரிமையை ஏற்படுத்துவதாய்ப் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
இலங்கையிலிருந்து கலவரச் செய்திகள் வந்தபோது டொமினிக் வா உட்பட அங்குள்ள பல எத்தனை எத்தனையோ அாமை இலக்கிய
கு தத (b. நண்பர்களை எண்ணி என் மனம் துயரத்தால் துடித்தது.கு
"மல்லிகை ஜீவா" - நீல பத்மநாபன் 29

Page 18
ஜீவா விண்கிண்ற விசுபடுமண்
- மருதூார்க் கொத்தனர்
|In ၏၍၈၈# ஆசிரியர் நண்பர் டொமினிக் ஜீவா அவர்கள் மணி விழாக் காணும் வயசை அடைந்துவிட்டார்கள். ஆச்சரியமாக இருக்கின்றது. நம்பமுடியாமலும் இருக்கின்றது.
தலைநிமிர்ந்த மிடுக்கும், சுறுசுறுப்பும், உழைப்புமாக சதாவும் ஆரோகண கதியில் உலாவரும் யுவன் அல்லவா அவர்! நல்லன நினைக்கின்ற மனமும், நல்லன செய்கின்ற உடலும் அமைந்துவிட்ட மனிதனுக்கு வயது ஒரு சவாலாக அமைவதில்லைத்தான், ஆனாலும் மாற்றொனா இயற்கை நியதியின் விளைவான மாமூல் நிகழ்வாக நண்பர் திரு.டொமினிக் ஜீவா அவர்கள் அறுபதாவது வயதை அடைந்து விட்டார்கள்.
இந்த இருபதாம் நுாற்றாண்டில், மக்கள் மரணத்துள் வாழ்கின்ற யமதாண்டவ யுகத்தில், தமிழுக்காகத் தொண்டு செய்தான் என்ற காரணத்திற்காக இலங்கைத் தமிழ் இனத்திலிருந்து ( தமிழ் பேசும் என்பதும் இங்கு அடங்குமாக) ஒருவரை மாத்திரம் தேர்ந்தெடுத்து பாராட்டவேண்டுமென்று முடிவெடுத்தால் அந்த ஒருவர் மல்லிகை மாசிகையின் ஆசிரியர் திரு. டொமினிக் ஜீவாவாகத்தான் இருப்பார். தனபாக்கியம் வாய்க்கப் பெறாத சாமானியனாக ஒரு மனிதன் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மல்லிகையை அதுவும் இந்த இலங்கை மண்ணில் தொடர்ந்து நடத்த முடிந்தது, எவ்வளவு பெரிய சாதனை,
-* தமிழ் நாட்டின் ஆறுகோடி மக்களையும், மலேசியா, சிங்கப்புர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களையும் உள்ளடக்கிய வாசகப் பெருங் கூட்டத்தைக் கொண்ட 'கல்கி', 'ஆனந்த விகடன் சஞ்சிகைகள் கூட
30 - மருதுார்க் கொத்தன் "மல்லிகை ஜீவா"
 

கால் தடுக்கி விழுந்ததையும், தற்சமயத்திற்கு மூச்சுத் திணறிக் கொண்டிருப்பதையும் (சினிமாவை கணிசமான அளவு அரவணைத்த நிலையிலுங் கூட) நாமறிவோம். சினிமாச் சிங்காரிகளின் தள -தள உடலைச் சிக்கென்ற ஆடைச் சிக்கனத்துக்குள், விம்மிப் பிதுங்க வைத்து ஏற்ற இறக்கங்களை துல்லியப்படுத்திக் காட்டும் போஸ் களிலான வர்ணப் படங்களைத் தாங்கிச் சினிமா உலகத்தின் அர்த்தமற்ற செய்திகளைக்கூட விட்டுவைக்காமல், சினிமாவுக்காகவே பக்கங்களின் கணிசமான பகுதிகளை ஒதுக்குகின்ற தமிழ்ச் சஞ்சிகைகள்தான் இன்று சக்கை போடு போடுகின்றன.
இந்தப் பின்னணியில் தான் இன்று மல்லிகையின் வளர்ச்சியையும் அதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் சாதனையையும் நாம் மதிப்பீடு செய்யவேண்டும், சமூகத் தேவைக்கு முன்னுரிமையின் அடிப்படையில் முக்கியத்துவம் அளித்து, சமூக விஞ்ஞானக் கண்ணோட்டத்திலமைந்து, மக்கள் தம் வாழ்வியலில் சகல கூறுகளையும், பிரச்சனைகளையும் பிரதிபலிக்கின்ற, விமர்சிக்கின்ற, வழிகாட்டவும் செய்கின்ற உள்ளடக்கங்களை உடைய, கலை மயப்படுத்தப்பட்ட கதைகள், கவிதைகளும், ஆய்வுப்பாங்கான கட்டுரைகளையும் தாங்கி வந்த மல்லிகை இதழ்களை மனக் கண்முன் நிறுத்தி பார்க்கவேண்டியிருக்கின்றது. சமகாலக் கலை இலக்கியப் பிரச்சனைகளை அலசுகின்ற விஷய நயம் மிக்க கட்டுரைகளுக்காகவே மல்லிகையை வாங்கிப் படிக்கின்ற வாசகர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.
எரிக்குவான் ரொமினிககல் என்பவரின் விண்வெளி ஆய்வு சார்ந்த நுால் திரு.ஏ.ஜேகனகரெட்னா அவர்களால் தமிழாக்கப்பட்ட சுருக்கம், விண்மீன்களுக்கு யாத்திரை’ என்ற தலைப்பில், மல்லிகை ஆண்டு மலர் 73- இல் பிரசுரமாகியிருந்தது. கல்வி அமைச்சினால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சேவைகள் 5ம் வகுப்புக்கு ஆட்சேர்ப்பிற்காக போட்டிப் பரீட்சைக்குத் தோன்றிய நான், நவீன விண்வெளி விஞ்ஞானம் பற்றிய வினா ஒன்றிற்காக எழுதப்பட்ட கட்டுரைக்கான மேற்படி மல்லிகைக் கட்டுரையைப் பெருமளவில் பயன்படுத்தினேன். பரீட்சையிலும் தேறினேன். மல்லிகைக் கட்டுரைகளின் தரச் சிறப்பிற்கு இது ஓர் உதாரணம்
மல்லிகையில் அவ்வப்போது பிரசுரமான ஒரு சில கதைகளையும், கவிதைகளையும் படித்துவிட்டு இவற்றையெல்லாம் ஜீவா ஏன் பிரசுரிக்கிறார் என்று அலுத்துக் கொண்ட சந்தர்ப் பங்களுமுண்டு, அவற்றை எழுதியவர்களின் பிற்காலப் படைப்புகளைப் படிக்கின்ற போது ஜீவாவின் ஆசிரியத் திறமை மிக்க தளத்தின் சிறப்பு விளங்கியது. படைப்பாளி ஒரு
"மல்லிகை ஜீவா" - மருதுமார்க் கொக்கள் 31

Page 19
பறவைக் குஞ்சு என்பதனையும் இனங்கண்டு, இது அதன் முதற் பறப்பு என்பதனையும் நிதானித்து, முதற் பறப்பு இல்லாமல் முழுமையான பறப்பை எப்படி எட்ட முடியும் என்ற துாரப் பார்வையோடு எடுத்த முடிவுகளவை, ஆள் பிடிப்பதற்காகச் செய்த காரியம் என்று கொச்சைப்டுத்தமுடியாத முடிவுகளவை அவ்வாறு ஜீவாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் இன்று உயர்ந்த படைப்பாளிகளாகப் பரிணமித்துமிருக்கிறார்கள்.
அவர், இலங்கைக் கம்யுனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்.மத்தியில் சித்தாந்தப் பிளவு ஏற்பட்டபோது மொஸ்கோ சார்புக் கம்யுனிஸ்டாய்ச் செயல்பட்டவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளளர் சங்கத்தைச் சேர்ந்தவர்.
ஆனால் கம்யுனிஸ்டுக்கள் அல்லாதவர்களுக்கும், சித்தாந்த ரீதியாக மாறுபட்ட கம்யுனிஸ்டுகளுக்கும், சனாதனிகளுக்கும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும், பெளத்தர்களுக்கும் தன்னைப் பேச்சிலும், எழுத்திலும் திட்டியவர்களுக்கும் மல்லிகையில் உரியபோது உரிய மதிப்பைக் கொடுத்தார் என்பதற்கு எஸ்.பொவை அட்டைப் படச் சித்திரமாகச் சித்தரித்த ஒரு உதாரணமே போதும்,
யார் மல்லிகையில் எழுதினாலும் கலை இலக்கிய அக்கறையும், அடிப்படை மனித நேயமும் உள்ள படைப்புகளையே அவர்கள் எழுதினார்கள் மாற்றணியைச் சேர்ந்தவர்களையும், மாற்றுக் கருத்துக்களையும் கொண்டவர்களையும்கூட, உளவியல் ரீதியாக மல்லிகையின் இலக்கியக் கோட்பாட்டின்பால் ஜீவா ஈர்த்தெடுத்தார். அவர்களும் பத்திரிகையின் கொள்கைக்கேற்ப எழுதி பிரசுரகளம் அவாவி நின்றவர்களுமல்லர்.
மாற்றுக் கருத்துடையவர்களும் மல்லிகையைப புத்திபுர்வமாகப் பயன்படுத்தினார்கள், ஜீவாவும் அவர்களை அறிவு புர்வமாகப் பயன்படுத்தினார்கள் பெறுபேறு, உணர்வுபர்வமான ஒரு இலக்கியப் பாரம்பரியமும், எல்லோரும் தலை நிமிர்ந்து தருக்கி மகிழத்தக்கதாக மல்லிகை என்ற மாசிகையும், நம்மிடையே தழைத்து விட்டன. நிலைத்தும் விட்டது,
தனி மனித உழைப்பையும் தன் நம்பிக்கையையும் மூலதனமாகக் கொண்டு, கட்சி முரண்பாடு, வர்க்க முரண்பாடு, சாதி, சமய முரண்பாடுகளுக்கு மத்தியிலும், கலை இலக்கிய ஒருமைப்பாடு கண்டு, உயர்ந்து நிற்கின்ற விசுவரூபன்தான் மதிப்பிற்குரிய டொமினிக் ஜீவா அவர்கள்,
முதன் முதலாக சறுகதைக்காக இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர். 22 வருடங்களாக மல்லிகை என்ற கலை இலக்கிய இதழைத்
32 மருதுார்க் கொத்தன் "மல்லிகை ്വr" |

தமிழில் நடாத்திக்கொண்டிருப்பவர் - பத்திரிகை ஆசிரியர், மல்லிகைப் பந்தல் என்ற வெளியீட்டு நிறுவனத்துாடாக நான்கு தமிழ் நூல்களை வெளியீடு செய்திருப்பவர், முரண்பாடுகளுக்குள்ளும் ஒருமைப்பாடு காணத் தெரிந்த பரந்த மனிதன்,
இறுதியாக இந்த ஒரு விஷயத்தை நான் சொல்லித்தான் ஆகவேண்டும் 1973 ம் ஆண்டின் பிற்கூற்றில் நண்பர் டொமினிக் ஜீவா அவர்கள் கல்முனைக்கு வருகை தந்து ஒரு வாரகாலம் தங்கியிருந்தார். பல இலக்கியச் சந்திப்புகளும், கருத்தரங்குகளும் பொதுக் கூட்டங்களும் பல இடங்களில் நிகழ்ந்தன. நண்பர்கள் தனிப்பட்ட வகையில் தத்தம் வீடுகளில் விருந்தளித்து கெளரவித்தார்கள் இறுதியானதும் , பொதுவானதுமான நிகழ்ச்சியாக, விருந்து வைபவமும் பொதுக் கருத்தரங்கும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் நடந்தது. கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் அனுசரணையுடன் நடந்த வைபவமாதலால் அன்றைய நிகழ்ச்சிக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் என்ற வகையில் நானே தலைமை தாங்கினேன்.
இத்தனை விருந்துகளையும் வாங்கி விழுங்கிய மனிதன், தனது உரையின்போது திட்டுக்கள் மூலம் நன்றி கூறி எம் அனைவருக்கும் அதிரடி விருந்தளித்தாரே! இவர் ஒரு கட்டத்தில் சொன்னார்:
“எங்களது யாழ்ப்பாணத்தனம் பற்றி அனைவரும் குறைகூறுவது, எனக்குத் தெரியும், ஆனால் நாங்கள் வெறும் வாய்ப்பேச்சு வீரர்களல்ல. ஏதோ செய்து கொண்டுதான் இருக்கிறோம். கதைத் தொகுதிகள், கவிதைத் தொகுதிகள் என்று எத்தனையோ நுால்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் உங்களின் தொகுதிகள் எங்கே.? நீலாவணன், அஸ், கொத்தன் ஆகிய மூத்தவர்களின் தொகுதிகளையாவது போடக்கூடாதா? நீலாவணன் அழகான புதிய வீட்டைக் கட்டியுள்ளார். இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டே என்ற குறளுக்கு இலக்கணமாக, வீட்டிற்கு வேளாண்மை’ என்றும் பெயர் வைத்துள்ளார். வீட்டில் தடல்புடலான விருந்தளித்து என்னைக் கெளரவித்தார். அந்த வீட்டைக் கட்ட ஐம்பதினாயிரம் ரூபாவைச் செலவு செய்திருப்பார். அவரது கவிதைத் தொகுதிக்கு மிஞ்சிப்போனால் இரண்டாயிரந்தான் ஆகும். வீட்டில் காட்டிய அக்கறையைத் தனது தொகுதியை வெளியிடுவதில் ஏன் அவர் காட்டவில்லை? உங்களது படைப்புகளும், பத்திரிகை நறுக்குகளும் பைல்களுக்குள் முடங்கிக் கிடந்தால் மாத்திரம் காணுமா..?
இப்படிப் பேச்சுத் தொடர்ந்தது. எங்கள் முகங்களில் அசடு
"மல்லிகை ĝ2 yar" - மருதுர்க் கொக்கள் 33

Page 20
வழிந்து கொண்டிருந்தது. அசமந்தத்துக்குத் தான் எதிரி என்பதையும், ஊக்கமும் உழைப்புமே தனது மூலதனம் என்பதையும் உரத்த குரலில் அடித்துக் கூறி, நட்புரிமையோடு எங்களைக் கடிந்து கொண்டார். அதை நாம் ஏற்றுக்கொண்டோம்,
தமிழர்களாகிய எங்களின் மத்தியிலே இலக்கிய சனாதனிகளும், பண்டிதப் பரம்பரையினரும் இருக்கிறார்கள். தங்களால்தான் தமிழ் வாழ்கிறது என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு நானொன்று சொல்வேன். இன்று இலங்கையிலே முஸ்லிம் பெருங்குடி மக்கள் தான் பட்டி தொட்டிகளிலெல்லாம் தமிழை வாழ வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சிங்களவர் மத்தியிலும் துணிந்து தமிழைப் பேசுகிறவர்களும், வவுனியாவுக்கப்பால் தமிழ் பத்திரிகைகளைத் துணிந்து கையிலே கொண்டு செல்பவர்களும் முஸ்லிம்களே கல்முனையில் மாத்திரமல்ல, அனுராதபுரத்தில், திக்குவெல்லை, கல்ஹின்னை, பதுளையிலெல்லாம் முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள புத்தெழுச்சி பெற்ற படைப்பாளிகள் தமிழை வளர்த்துக் கொணி டிருக்கிறார்கள் இம் மணி டபதி தில் பெரும்பான்மையினராக இருக்கின்ற முஸ்லிம் நண்பர்களின் திருப்திக்காக நான் இதைச் சொல்லவில்லை. என் ஆத்ம உணர்வோடு கலந்த உண்மையைத் தான் சொல்லுகிறேன். உண்மையைப் பேசுவோம். ஊக்கத்துடனும் இலட்சியப் பற்றுடனும் உழைப்போம். இப்படி அவருடைய பேச்சு முடிந்தது. உண்மையைத் திறந்த மனதோடு கூறும் அவரது பண்பும், நெஞ்சுரமும் எம்மை வியக்க வைத்தது. அவர் மீது வைத்திருந்த மதிப்பை மேலும் பன்மடங்கிற்கு உயர்த்தியது.
திரு. டொமினிக் ஜீவா மக்களை நேசிப்பவர். அந்த மக்கள் தமிழர்களென்றால் என்ன? சிங்களவர்கள் என்றால் என்ன? முஸ்லிம்கள் என்றால் என்ன? எல்லாரையும் நேசிப்பவர். அதே போல அந்த மக்களுக்காக, சமூகக் கொடுமைகளுக்காக ஏழை எளிய மக்களுக்காக எவர் எழுதுகிறாரோ அவர்களையெல்லாம் ஒரு சேர நேசிப்பவர்,
சித் தம் அழகியனான, செயல் வீரனான, உண்மை உழைப்பாளியான, முரண்பாடுகளுக்கு ஒருமைப்பாடு காணமுனைந்து அதில் வெற்றியும் பெற்ற சாதனை வீரனாக, பெருமதிப்பிற்குரிய நண்பர் டொமினிக் ஜீவா அவர்கள் திகழ்கிறார்கள்கு
34 - மருதுமார்க் கொத்தன் "மல்லிகை ஜீவா"

ஜீவாவின் மனமும் மல்லிகையினர் மணமும்
- ஈழத்துச் சிவானந்தனர்
pii ஈனநிலை கண்டு துள்ளும் உள்ளம் கலையுள்ளம் இசைவும் ஈடுபாடும் இதனுடைய குறித்த இயல்புகள், ஓர் இலக்கியவாதியின் இதயம் துள்ளலாலும் பிறருடைய எள்ளலாலும் புண்பட்டுப் புண்பட்டு பண்படுவது பண்புடையர்ப் பட்டுண்டு உலகம் என்ற வள்ளுவர் வாக்கில் ஆழ்ந்த அனுபவச் செறிவுள்ளது. தன் நிலையை மன்பதை காக்கும் பணியே இலக்கிய மனமும், இந்த மனம் வளர்த்தெடுக்கப்பட்டு விட்டால் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் ஆகலாம்.
பரந்த உலகின் பண்பட்ட இலக்கியவாதிகள் தமது கண்ணில் படாதிருந்தும் மனத்தாகத்தில் குடிகொண்டு விடுகின்றார்களே இது எப்படி? அவர்கள் பண்பும் பயனும் மனக் கண்ணால் கண்டுபிடிக்கப்படுவதாற்தான். ஒரு நிகழ்ச்சியில் அல்லது சூழலில் மனக்கண் பதித்து வைத்திருப்போர் உணர்வோரும், அறிவோரும் உரையாடி, சூழ்நிலையைச் சமன் செய்வதை அல்லது சுகப்படுத்துவதை அனுமானிக்கலாம். கற்றறிந்தோர் காணும் உலகமும், காக்கும் வாழ்க்கையும், புண்பட்டுப் பணிபற்றோர் காட்டுதலினால் விளைந்த பயன்தான் எனலாம்.
மனம் ஒரு கொள்கையை ஏற்றுக்கொண்டு அதனோடு ஊறித் தேறி விளக்கமுறும்போது குறுகிய கோடுகள் அழிந்து பரந்தகன்ற மனப்பான்மை வளர்கிறது. விரிந்த விசாலித்த எண்ணங்கள் குற்றம் பார்க்கில் சுற்றமில்லை, வேற்றுமையிலும் ஒற்றுமை, எதிர்க்கருத்து என்பது எதிரிக் கருத்து அல்ல, கருத்து நிலைகளில் - கலப்பில் காத்திரமான பயன்பாடுகள் தோன்ற முடியும் என்ற போதத்தினைப் பெறுகிறது. இதுவே இயற்கை, இயங்கியல் , இலக்கியத்தின் இரகசியங்களில் இன்று வரை ஆச்சரியத்திற்குள்ளாகி நிற்கும் அம்சமுமாகும்.
| "மல்லிகை ஜீவா" -ஈழத்துச் சீவானந்தள் 35

Page 21
இலக்கியத்தின் இரகசியங்களை நண்பர் டொமினிக் ஜீவா அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் கண்டு கொள்வர். மனத்திற்கு எப்போதுமே வேலி போட முயன்றவனல்ல நான் என்று கூறும் மல்லிகை ஜீவாவின் மன நிலைகளில் கருத்துநிலை, கலைநிலை, கண்டிப்புநிலை, கடமைநிலை , முயற்சிநிலை, முதலியவற்றோடு வெகுன்றெழும் சினநிலையையும் அணுகுவோர் அவதானித்திருப்பர்.
ஜீவாவிற்கு சிறுகதையும் சரியாக வரும், சினமும் சரியாக வரும் இவருடைய சினம் சேர்ந்தவரைக் கொல்லும் சினமன்று வெல்லும் சினம், ஈழத்து இலக்கிய உலகத்தில் செப்பிடுவித்தை காட்டியோர் காலமும் ஒன்றிருந்தது. ஆங்கில இலக்கியத்திலிருந்து மேற்கோள் காட்டுவதுதான் படிப்பின் தரத்திற்கு அடையாளம் என்று நிறுவியர்களும் இருந்தார்கள். அவர்கள் பரப்பிய மொழி மாயை தமிழ்ப் பரம்பரையைப் பீடித்து இருந்த காலத்தில் அதனை விலக்கி நற்றமிழ் இலக்கியங்களை எடுத்துக் காட்டவேண்டிய தேவை உண்டான காலகட்டத்தில் வீறு கொண்டெழுந்த கூட்டத்தில் ஜீவாவும் ஒருவராக எண்ணப்பட்டவர். நவீன தமிழ் இலக்கியப் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்றிருந்த இவருடைய சேவை பலராலும் விரும்பப்பட்டது.
யாழ் மாநகர சபை மண்டபத்தில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் ஒருவர் ஆங்கிலப் புத்தகம் ஒன்றை கொண்டுவந்து படித்துக்காட்டி ஆங்கில எழுத்தாளனின் சொல் வீச்சை, சொல்லால் அடிக்கும் வேகத்தை, சொல்லால் சுவைஞர்களை பிடிக்கும் தந்திரத்தை மிடுக்குடன் எடுத்துக் காட்டினார். கேட்போர் சபையிலிருந்தே இதனைக் கூறினார். அவருக்குப் பக்கத்திலிருந்த ஜீவா எழுந்து சினந்து “நீங்கள் தமிழ்க் கதைகளை, கட்டுரைகளை, கவிதைகளையும் படித்துப் பார்க்கவேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் சொல்லால் ஏசுவதும், அடிப்பதும், பிடிப்பதும், ஏன்? அரவணைப்பதும் தெரிய வரும், உங்கள் ஆங்கில மோகம், தமிழ் மொழி ஆற்றலைக் காணவிடாது தடுத்திருக்கின்றது. தமிழில் வந்தவைகளைப் படித்துப் பாருங்கள். அம்மொழியின் வல்லமையும், வளமும் உங்களை நிமிர்ந்து நிற்கச்செய்யும்” என்றார். சேர்ந்தாரை வென்ற சினம் இது.
'மண்புழுவாக இருந்து மனிதனாக உருவாகியவர்களில்
நானும் ஒருவன்’ என்று எழுதிய ஜீவா, மனிதத்துவத்தை மதிப்பதும், மனித சமுதாயத்தை நேசிப்பதும், தமது எண்ணத்தால், எழுத்தால் மக்கள்
36 -ஈழத்துச் சீவானந்தன் "மல்லிகை ஜீவா"

சமுதாயத்தை மேன்மையுறச் செய்யவேண்டும் என்று துடிப்பவர். இவருடைய அனுபவ வாக்கியங்களிலிருந்தும், செயற்பாட்டிலிருந்து, இதனைக் கணிக்க முடிகிறது என்னுள் கிளர்ந்தெழுந்த தனித்துவமான தார்மீக ஆவேசம் என்னைக் குடைந்து குடைந்து எழுதத் துாண்டியது. என்னால் எழுதாமல் இருக்கவே முடியவில்லை. அப்படி மனசில் ஒரு உண்மை வேதனை! என்னை இச் சக்திக்கு ஆட்படுத்தியது, சுழ்நிலையின் சுற்றுப்புறங்களின் துன்பம் மிகு தாக்கங்களாகவும், அதை நான் ஊன்றி அவதானித்ததாகவும் இருக்கலாம். அல்லது வெகுசனத் தொடர்பின் வெளிப்பாடகவும் இருக்கலாம்.
என்னுள் கிளர்ந்தெழும்பும் இச்சிருஷ்டிச் சக்தியை செம்மைப் படுத்தி - பிரகாசமாக்கி - மகிமை பெற்றுத் துலங்கச் செய்வதற்காகவே நான் இயங்கி உழைத்து வருகின்றேன். நேற்று இருந்த நான் இன்றோ, இன்றுள்ள நான் நாளையோ இல்லாமல் புதிய புதிய வளர்ச்சி கண்ட படிக்கட்டுகளில் முன்னேறி நடைபோடவும் தினசரி புதுப்புது வழிகளில் உழைக்கின்றேன் என்றார்.
எழுதுவதிலேயே நான் இன்பம் காண்கின்றேன். எழுதும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியும், இதய எழுச்சியுமே என்னைப் பொறுத்தவரை சொர்க்க சுகந்தமாகும் எழுத எழுதத்தான் எனக்கு வாழ்வே சுவை நிரம்பியதாகவும், அர்த்த புஷ்டியுடையதாகவும், புரண பொலிவு நிறைந்ததாகவும் விளங்குகின்றது. ஈழத்தில் பேனா பிடிப்பவன், போர்க்கள வீரனுக்கு சமமானவன் என்னும் இவர் வெளிப்படுத்திய வாக்குமூலங்கள் இவருடைய அந்தராத்மாவைப் பகிரங்கப்படுத்துகின்றன. இலக்கிய சிருஷ்டி கருத்தாவான இவர் தன்னைப்போன்ற ஏனைய படைப்பாளிகளுக்கும் நேரும் இடர்களைப் பார்த்துக் கொண்டு இருக்காது தன்னால் இயன்ற உதவிகளை செய்வதற்கு முந்துபவர்.
எழுத்து வாழ்வோடு, சஞ்சிகை நடத்தும் போராட்ட வாழ்வினையும் ஏற்றுத் திறம்பட இயங்கும் நெஞ்சுரம் ஜீவாவின் நெஞ்சுரம் பாராட்டுக்குரியது. சகல பின்னணிகளும் வாய்ப்புக்களும் மிகுந்த சென்னை மாநகரிற்கூட சில எழுத்தாளர்கள் பத்திரிகை நடத்தி நட்டப்பட்டு “நொடிந்து போனோமே, நொந்து போனோமே” என்று ஓலமிட்டுடிருக்கிறார்கள், எத்தகைய அனுசரணையுமற்ற யாழ்ப்பாணத்தில் துணிச்சலுடன் ‘உழைப்பேதான் வெற்றிக்குரிய குறுக்குவழி என்று சொல்லிக்கொண்டு மல்லிகை இதழை நடத்தி வருவது வியப்பிற்குரிய நிகழ்வாகும். இந்த நாட்டில் சஞ்சிகை நடத்துவது என்பது ஒரு வேள்வி நடத்துவதற்கு ஒப்பாகும்’ என்று கூறும் இவர் வாய்மொழியில், மல்லிகையை நடத்தும் கடினமும் பாரமும் தெரிகின்றது.
"மல்லிகை ඒෂිණJ/r" -ஈழத்துச் சீவானந்தன் 37

Page 22
மல்லிகை மகளை, இவர் பிள்ளை என்று சொல்வது பிழை இருக்காது மகளிற்கு வயது வந்து புப்பு நீராட்டும், வெள்ளிவிழா ஆண்டு நெருங்கிக்கொண்டு இருக்கும்போது, தந்தைக்கு அநுபவம் பழுத்து மணி விழாக் காண்பது இலக்கிய உலகிற்கு உவப்பான செய்தியாகும். மல்லிகை தொடங்கிய காலத்திலிருந்து அதன் வாசகனாக உள்ளவனில் நானும் ஒருவன் அதனைக் காசுகொடுத்து வாங்க வேண்டும் என்பதும் சொற்ப பிரதிகளை விற்றுக் கொடுக்கவேண்டும் என்பதும் என்னை அறியாமலேயே என்னுள்ளத்தில் ஊற்றெடுத்த உணர்வுகள். இதற்கு அகிலன் எழுதிய கலையும் வயிறும் என்ற கட்டுரை என் உணர்வுக்கு உறைப்புத் தந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது மல்லிகையை அங்கு தருவித்துப் பலருக்கு வழங்கியுமிருக்கின்றேன். மாதாமாதம் பத்துப் பதினைந்து பிரதிகள் சிதம்பரம் புகையிரத நிலையத்தில் விற்பனைக்கு கொடுத்திருக்கின்றேன். தமிழகத்தில் வெளியாகிய தாமரை இதழின் விற்பனையை மாணவர் மத்தியில் அதிகமாக்கிக்கொண்டிருந்த நண்பன் டாக்டர். மே, து, இராசகுமார் எனது இந்த உணர்விற்கு உந்துசக்தியாகவும் திகழ்ந்தது உதவியாகியது. இத்தனைக்கும் மத்தியிலும் ஓர் உண்மையை நான் சொல்லியாகவேண்டும். நான் ஜீவாவின் சில கொள்கைகளோடும், கருத்துக்களோடும் உடன்பாடு உடையவன் அல்லன், இலக்கியம் என்ற ஒன்றே எங்களை உடனாக்கி உறவாட வைத்தது,
மல்லிகையிடத்தில் பெருமதிப்பு வைத்திருந்தவர்களில் கே.பாலதண்டாயுதமும் ஒருவர். அண்ணாமலை நகருக்கு அவர் வரும் வேளைகளில் மல்லிகையைக் கேட்டு வாங்கிக்கொள்வார். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் தாமரையோடு மல்லிகையும் மணம் வீசியது. ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் கே. காமராஜ் அண்ணாமலை நகரிற்கு கட்சி வேலைகளுக்காக வந்திருந்தார். மாணவர் அணியோடு கலந்துரையாடினார், மாணவர் மத்தியில் பரவும் பத்திரிகைகள் பற்றிக்கேட்டார். தாமரை இதழ் பற்றி அவர் கட்சி மாணவர்கள் சொன்னார்கள், அண்ணாமலை நகரிலும் சிதம்பரத்திலும் மே, து, இராசகுமார் அதன் விற்பனையை பெருக்கியிருந்தார். எத்தனை பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றது என்று பெருந்தலைவர் கேட்டார். கணிசமான பிரதிகள் விற்பனையாவதாகச் சொன்னார்கள்.
“எப்படி இது வளர்ந்ததென்கிறேன், இது நமது கட்சிக்கு கூடாதென்கிறேன். காஞ்சி முரசொலி வளர்ச்சி நம்மை பாதிக்கா துங்குகிறேன், தாமரை பாதிக்குமென்கிறேன்’ என்றார். தாமரையோடு மல்லிகை என்ற இதழும் இங்கு உலவுகின்றது என்றார்கள், “என்னப்பா
38 -ஈழத்துச் சிவானந்தன் "மல்லிகை ஜீவா"
 

மல் லிகையும் அவங்க பேப் பரா? எந் தாணி டை இருந்து வருகுதோங்கிறேன்’ சிலோன் பக்கமாயிருந்து யாழ்ப்பாணத்திலிருந்து சார் எங்க பாப்பம் பிரதி, இருக்கா? என்கிறேன்."
“கைவசம் இல்லீங்க, அப்புறமாக காட்டுவோமுங்க என்றார்கள்.” இத்தோடு கலைந்தார்கள்.
சிதம்பரத்தில் வாழ்ந்துகொண்டிருந்த எழுத்தாளர் மெளனியும் மல்லிகை வாசகர்களில் ஒருவர். அப்பொழுது வெளியிட்ட மெளனி கதைகள் பிரதியொன்றை எனக்குத் தந்ததோடு ஜீவாவிற்கு அனுப்பும் படியும் ஒரு பிரதியில் கையெழுத்தை இட்டுத் தர அனுப்பியிருந்தேன்.
தமிழர் சுயாட்சிக் கழகத்தின் ஏடான விடுதலையில் நான் பிரதம ஆசிரியராய் இருந்தபோது இந்த மல்லிகைக்கு விடுதலையின் முன்பக்க முகப்பில் இலவச விளம்பரம் செய்து இருந்தேன். கழகக் குழுக் கூட்டத்தில் இது பெரிய பிரச்சனையாய் ஆராயப்பட்டது. வேறொரு கட்சிக்காரரின் மாத இதழுக்கு இவர் எப்படி முக்கியத்துவம் கொடுக்க முடியும்? இது கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய செயலாகாதா? என்றெல்லாம் கேள்விக் கணைகள் எழுந்தன.
மல்லிகை ஒரு இலக்கியப் பத்திரிகை. அதன் ஆசிரியர் ஒரு படைப்பு இலக்கிய கர்த்தா, அவர் அரசியற் கொள்கை வேறாக இருக்கலாம். இலக்கியம் என்ற வகையில் அவர் எல்லோரையும் நேசிப்பவர், எல்லோரதும் கருத்திற்கும் களம் அமைத்துக் கொடுப்பவர், கட்சி அடிப்படையில் சிந்தித்தாலும் இனங்களில் சுயாட்சி, சுயநிர்ணயம் ஆகியவற்றை அவர் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்த நிலைப்பாட்டில் அவர் எங்களுக்கு இணக்கமானவரும் ஆவார். மெல்லிய அபிப்பிராய பேதத்தால் துல்லியமான விளக்கங்களை வீணடித்து விடக்கூடாது' என்றேன் நான் கழகத் தலைவர் நவரத்தினம் அவர்கள் இக்கூற்றினை ஆமோதித்து திரிரோசெஸ் சிகரெட்டை ஊதியவாறு தலையை ஆட்டி அப்பிரச்சனையையும் உதறித் தள்ளிவிட்டார். இது மல்லிகையின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நண்பர் ஜீவா மானுடன் வெல்லவொரு மாசிகை நடத்துபவர், வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பொதுமைப்பாட்டின் விழுமியங்களை மக்கள் சமுதாயத்திற்கு வழங்க விரும்புபவர்கள், ஜீவாவோடும் மல்லிகையோடும் ஒத்தோடுவது தவிர்க்க முடியாதது. “மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” என்றார் அறிஞர் அண்ணா, ஜீவாவின் மனமும் மல்லிகையின் மணமும் தமிழ் இலக்கிய உலகில் பரப்பி விட்ட வாசனைகள், எல்லைகளைக் கடந்து எண்ணங்களைக் கவர்ந்தும் மனிதத்தின் உய்விற்கு உதவியமை நன்றிக் குன்றின்மேல் வைத்து மெச்சுதற்குரியவைணு
"மல்லிகை ஜீவா" -ஈழத்துச் சீவானந்தன் 39

Page 23
தேசாபிமான, வர்க்காபிமானச் சிந்தனைகளால் இலக்கியத்துக்கு உரம் பாய்ச்சும்
6lust bafe5 2.32 st
குணசேன விதான தமிழில்: பெரி சண்முகநாதன்
■」 சிங்கள இனங்களைச் சார்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் முற்போக்குப் புத்திஜீவிகள் மத்தியில், இவ்வினங்களின் இலக்கியங்களை ஓர் இணைப்புப் பாலமாக உருமலர்த்துவதே தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமிடையில் நல்லுறவு ஏற்படுவதைச் சாத்திய மாக்கும் என்பதே, ஜீவாவின் எண்ணமாயிருந்தது.
எமது நாட்டில் தேசிய ஐக்கியப் பாலத்தை அமைப்பதற்கும், அதைப் பேணிக் காப்பதற்கும் தமது அறிவையும் ஆற்றலையும் அர்ப்பணித்து வந்த, வருகின்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவானதே இவர்களின் வட்டத்தில் அதிகமானோர் இல்லாமைக்குக் காரணம் அப்பணி எல்லா வகையிலும் கஷ்ட நஷ்டங்கள் நிரம்பியதாக இருப்பதேயாகும் எமது நாட்டில் ‘தேசிய ஐக்கியப் பாலத்தை அமைப்பது பொறியியல் துறைசார்ந்த பணியல்லாதவிடத்தும், அதைப் பேணிக் காக்க முன்வருபவர்களும் பல இடைஞ்சல்களுக்கு முகம் கொடுக்கக் கூடய ஆத்ம சக்தி புரணமாய் வாய்க்கப்பெறாதவர்களாயிருப்பதுடன், அவர்கள் எவ்வகையிலும் வெற்றியெதையும் சாதிப்பதும் சாத்தியமில்லை, இலங்கைத் தேசாபிமானத்தை ஆதாரமாகக் கொண்டே எமது நாட்டில் தேசிய ஐக்கியப் பாலத்தை நிர்மாணிக்க முடியும்.தமிழ் இலக்கியப் பரப்பில் இத்தகைய தேசாபிமான கருத்துக்களை விதைப்பதில் பல காலமாகத் தம்மை அர்ப்பணித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான டொமினிக் ஜீவா இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அறுபது வயது புர்த்தி விழாவைக்
40 -பெரி சண்முகநாதன் "மல்லிகை ളഖ" |
 

கொண்டாடுகிறார். இது தமிழ் வாசகர்களுக்கு மட்டுமன்றி சிங்கள எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் மகிழ்ச்சி தருகின்ற நிகழ்ச்சியாகும்.
நாமெல்லாம் ஜீவா என அன்புடன் அழைக்கும் அந்த மனிதருடன் எனக்கு அறிமுகம் கிடைத்ததை எனது பேரதிஷ்டம் என்றே நான் கருதுகிறேன். நான் ஏறத்தாழ மூன்று தஸாப்த காலமாக அவருடன் நெருங்கிப் பழகி வருகிறேன். நான் அவரைச் சந்திக்கச் சில தடவைகள் யாழ்ப்பாணம் சென்றிருக்கிறேன். யாழ்ப்பாணப் பொது நுால் நிலையத்தைச் சிங்களப் பயங்கரவாதிகள் பரிநாசப்படுத்திய விதத்தை நேரில் கண்டறிய நான் அவருடன் கூடச் சென்றமை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அதற்கு முன்னர் நான் சில சிங்கள எழுத்தாளர்களுடன் யாழ்ப்பாணம் சென்ற சந்தர்ப்பத்தில், டொமினிக் ஜீவாவும் மற்றைய சகோதர எழுத்தாளர்களும் யாழ் ரெயில் நிலையத்தில் மிக அன்பாக வரவேற்பளித்தனர். சிங்கள எழுத்தாளர்களுக்கு வரவேற்பு உரையளிக்கும் முகமாக யாழ் நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜீவா, சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே நல்லெண் ணத்தையும் நட்புறவையும் வளர்ப்பதற்கான ஒரே மார்க்கம் அவ்விரு இனங்களையும் சார்ந்த தொழிலாளிகள், விவசாயிகள், முற்போக்குப் புத்திஜீவிகள் ஆகியோர் மத்தியில் அவ்வினங்களின் இலக்கியங்களை ஓர் இணைப்புப் பாலமாக உருமலர்த்துவதே எனக் குறிப்பிட்டார். ஜீவா தனக்குள்ள பாரிய அனுபவத்தின் அடிப்படையிலேயே அவ்வாறு குறிப்பிட்டார். தமிழில் வெளியாகும் பிரபல இலக்கியச் சஞ்சிகையான மல்லிகையின் ஆசிரியராகவுள்ள ஜீவா, அச்சஞ்சிகையைச் சிங்கள மக்களின் சிந்தனை மற்றும் அபிலாஷைகளைத் தமிழ் மக்கள் தரிசிக்கக்கூடிய ஒரு சாளரமாக அமைத்துக் கொண்டார். இச்சஞ்சிகை அவருக்கு ஒரு இலக்கியக் கள மாகத் திகழ்கிறது. மாட்டின் விக்கிரமசிங்ஹ முதல் பல சிங்கள எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டுமன்றி அவர்களைப் பற்றிய விவரணக் கட்டுரைகளையும் மல்லிகை வாயிலாகத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகஞ்செய்து வைத்த அவர், தமிழர் சிந்தனையில் மேற்கூறிய இலங்கைத் தேசாபிமான உணர்வினை உறையச் செய்வதற்கு பெரும்பாடு பட்டுள்ளார்.
டொமினிக் ஜீவாவின் படைப்புகளில ஒரு சிலவற்றையே படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எனினும், அவரது படைப்புகள் பற்றி அன்புக்குரிய பேராசிரியர் கைலாசபதி மற்றும் பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாயிலாக அதிகம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
"மல்லிகை ஜீவா" - ն]Սif சண்முகநாதன் 41

Page 24
ஜீவாவின் சமுதாய இலக்கியப் பிரக்ஞைச் சிறப்புப் பற்றி அவர்கள் பல தடவைகள் விதந்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன், ஜீவாவின் அரச சாகித்ய மண்டலப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதியிலடங்கிய கதைகளில் ஒன்றான தண்ணீரும் கண்ணீரும் தமிழ் மக்களின் சமுதாயத்தில் சிந்தப்படும் கண்ணீரின் ஒருசில துளிகளைச் சிங்களவர்களாகிய நாம் கண்டுகொள்ள உதவும் ஓர் அற்புதமான படைப்பாகும். அவர் சமுதாயத்தின் அடிமட்ட மக்களினது உணர்வுகளையும், இதயத் துடிப்பையும் நெருங்கிப் புரிந்து கொண்டுள்ள விதத்தை தண்ணீரும் கண்ணிரும் சிறுகதை நன்கு புலப்படுத்துகிறது. சாதிப் பிரச்சன்ை, தண்ணீர்ப் பிரச்சனை ஆகியவற்றால் அனாதைகளாக்கப்பட்ட யாழ்ப்பாணத்துத் தாழ்த்தப்பட்ட மக்களை அனுதாபத்துடன் நோக்கும் கதாசிரியர், அவர்களை அந்த இருண்ட அந்தகாரத்திலிருந்து வெளிக்கொணர மேற்கொள்ளும் பிரயத்தனத்தைப் பிரத்தியட்சமாகத் தரிசிக்க முடிகிறது. சாதியபிமானத்தால் சிந்தனைத் தடம்புரண்ட தொழிலாளியான சுவாமிநாதனால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட அவனது வர்க்கத்தைச் சார்ந்த ரிக்ஷா ஒட்டி பண்டாரியே.
வடக்கிலுள்ள சாதிமான்களுக்கு மரண அடி கொடுப்பதாய் அமைந்த இச் சிறுகதையானது வடக்கிலுள்ள ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் இருக்க வேண்டிய வர்க்காபிமானத்தை வலியுறுத்துகிறது. டொமினிக் ஜீவா ஒரு பிறவி எழுத்தாளன் என்ற வகையில் தனது படைப்புக்கள் மற்றும் விமர்சனங்கள் மூலம் வாய்க்கப்பெற்ற பன்முக அறிவுத்திறனைத் துணை கொண்டு மல்லிகையைச் சஞ்சிகையை தமிழ்ப் புத்திஜீவிகளின் காத்திரமானதொரு களமாக ஆக்கியுள்ளார். எல்லா இனத்தவரும் சுயநிர்ணயம் எனப்பட்ட தர்ம நியாயமான உரிமைப் பேறுடன் ஐக்கிய இலங்கையில் வாழ வேண்டும் என உரத்த குரலில் எப்போதும் முழங்கி வந்த ஜீவா, தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இனவாத வேஷத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் காட்டியதில்லை. சிங்கள முதலாளித்துவ சக்திகள் பால் கிஞ்சித்தேனும் அனுதாபம் காட்டாத ஜீவா தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் மத்தியில் மிகச் சிறப்பான அந்தஸ்தை ஈட்டிக் கொண்டதற்கான காரணம் யாதெனில், அவர் சர்வதேசிய விஞ்ஞான புர்வ நெறியான மார்க்சிய - லெனிஷளயத்தை அடி அத்திவாரமாகக் கொண்டு, தனது அறிவைப் பட்ட்ை தீட்டிக் கொண்டமையும், அப்பழுக்கற்ற ஆப்த நேசனாய் திகழ்ந்தமையும், ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களின் வாழ்கையுடன் பரிச்சயப்பட்டுக் கொள்ள ஆத்மார்த்தமான முறையில் விழைந்தமையுமே எனலாம்.
தனது உழைப்பாலும் தான் பாடுபட்டுச் சேமிக்கும் பணத்தாலும் தனது உயிரென நேசிக்கும் 'மல்லிகையை ஜீவா தொடர்ந்து நடாத்தி வருகின்ற சாதனை, நாட்டுக்கு அவர் வழங்கியுள்ள பேராதர்ஸத்தைப் பின்பற்ற எம்மால் இன்னும் இயலாதிருப்பது பற்றி நான் மனச்
42 -பெரி சண்முகநாதன் "மல்லிகை இவா

சங்கடப்படவே செய்கிறேன். அவர் எமது சிங்கள எழுத்தாளர் பலரைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்திருந்த பொழுதிலும், தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அயராது போராடுகின்றார். ஒரு தூய்மையான தேச தரிசனத்துக்காகச் சேவை புரிகிறார்.
யாழ்பாணத் தமிழ் மக்களின் சோதர உணர்வினைத் தனது 'மல்லிகையில் சிறைப்பிடித்துக் கொண்டு கொழும்புக்கு வருகின்ற ஜீவா சிங்கள - தமிழ் தோழர்களின் கூட்டுறவுக்கு எதிர்காலத்திலும் உழைப்பார் என உறுதியுடன் நம்புகின்றேன்கு
"மல்லிகை 23-2.J/т” -பெரி சண்முகநாதன் 43

Page 25
டொமினிக் ஜீவாவின் குழந்தையுள்ளம் வெற்றியின் இரகசியம்
- (ణిగా,676m.d6Uగ్రాtD/tyat
SI மினிக் ஜீவா முறைப்படி படித்துப் பட்டம் பெற்றவர் அல்லர். அதே சமயம் நிறையப் படித்தவர். சுயமாகப் படித்துச் சிந்தித்து, விவாதித்து, தகவல்களைக் கிரகித்துப் பகுத்தாரயப் பழகிக் கொண்டவர். தமிழ் மொழி மூலம் உலக அறிவை வளர்த்துக் கொண்டவர், நாட் செல்ல, நாட்செல்ல வரட்டுத்தனங்களை விலக்கி, பன்முகப் பார்வையை விருத்தி செய்து கொண்டவர். தமிழுடன் பழகப் பழக, தமிழ்மொழி அவருக்கு இலகு கருவியாக அமையத் தொடங்கியிருக்கிறது. நன்றாகவே, பொருத்தமாகவே அவர் வார்த் தைகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார், டொமினிக் ஜீவா கீழ்மட்ட வாழ்க்கை அனுபவங்களை இளமையிலேயே எதிர்கொண்டவர். சுயநம்பிக்கை, விடா முயற்சி, அறிவுத்தாகம், பிரயாசை, கடின உழைப்பு, ஜீவகாருண்யம், சிறுமைகண்டு வெகுண்டெழும் தார்மீகக்கோபம், வரித்துக்கொண்ட அரசியல் தத்துவார்த்தக் கோட்பாடு போன்றவை அவர் தளத்தை உயர்த்தியிருக்கிறது.
டொமினிக் ஜீவா, இன்று பல மட்டங்களிலும் பரிச்சயமுள்ளவர், - சமுதாய மட்டங்களில் மாத்திரமல்ல, வாழ்க்கையின் இதர மட்டங்களிலும், தளங்களிலும் பழகும் பரிச்சயமுங் கொண்டவர்.
டொமினிக் ஜீவா, ஏனையோரைப போலவே பலவீனங்களும் கொண்ட ஒரு ஓமனிதர், கோபம், சீற்றம், திமிரான பேச்சுப் போன்ற கரடு முரடான வெளிப் புச் சுக்குள் உள்ளே , இதயத் துடிப் பான, மனிதாபிமானமுள்ள ஈவிரக்கமான மனிதன் ஒருவனும் அவரிடம் குடிகொண்டிருக்கிறான்.
டொமினிக் ஜீவா வாழ்க்கை என்ற பல்கலைக் கழகத்திலே சிறப்புப் பட்டம் பெற்ற பேராசிரியர். அவர் கல்வித் தகைமைச் சான்றிதழ் நோக்கிலே
44 -கே.எஸ்.சிவகுமாரன் "மல்லீதை روميf" |
 

எதுவாயிருந்தாலும் அறிவுத் தகைமையும், பணிவும் பல்கலைக் கழகத்தினரைக் கவராமல் போயிராது. டொமினிக் ஜீவா போன்ற பொதுநல சேவையாளரைக் கெளரவிக்கும் கடப்பாடு உயர் கல்விக் கழகங்களுக்கு உண்டு
டொமினிக் ஜீவாவின் பொதுநலச் சேவை பலவாக இருக்கலாம். அவற்றுள்ளே ஒன்று எழுத்துப்பணி, சிறுகதை எழுத்தாளனாக ஆரம்பித்து, இலக்கிய ஏடொன்றின் ஆசிரியனாக மலர்ந்து, இன்று நுால் வெளியீட்டாளனாகவும் பரிணமித்திருக்கிறார், டொமினிக் ஜீவா, இந்த விதமான எழுத்துப் பணியிலே சுய நலத்தைவிடப் பொது நலத்தையே நாம் காண முடிகிறது.
இவருடைய நூல்கள் சிலருடைய தரிசனத்தின் விளக்கங்கள். இவருடைய சிறுகதைத் தொகுதிகள் தொடர்பாகத் திறனாய்வாளர் தமது மதிப்பீடுகளை வெளிப்படுத்தியுள்ளனர். இவருடைய ஏனைய நூல்களும், இவரையும், இவருடைய எண்ணங்களையும் பிரபல்யப்படுத்தியுள்ளன. தமிழ் கூறும் நல்லுலகில் மாத்திரமன்றி, சிங்கள உயர் பண்பாட்டு குழாத்தினரிடையேயும் இவர் நன்கு அறிமுகமானவர் ஒரு எழுத்தாளனாக டொமினிக் ஜீவா ஈழத்து உடனிகழ்கால இலக்கிய வரலாற்றிலே ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுவிடுகிறார்.
டொமினிக் ஜீவா வெளியிட்டுவரும் மல்லிகை ஏட்டிலே, அனேகமாக, எல்லாவிதமான போக்குடைய எழுத்தாளர்களும், கலைஞர்களும் (அவர்கள் எத்தகைய சார்புடையவர்களாக இருப்பினும்) கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள் வெளிப்படையாகப் பிரகடனம் செய்யாத போதிலும், டொமினிக் ஜீவாவும், மல்லிகையில் எழுதும் பெரும்பாலானவர்களும் சோவியத் சார்புடைய முற்போக்காளர் என்பது வெளிப்படை ஆயினும் டொமினிக் ஜீவாவின் கலை இலக்கியப் பரிமாணம், அகன்று விரிந்தது. தி ஜானகிராமன் ஓர் அற்புதமான எழுத்தாளர் என்பதைப் பல தடவை மல்லிகையில் எழுதியிருப்பது ஓர் உதாரணம் மல்லிகை, அமைப்பிலும், தரத்திலும் இன்னுஞ் சிறப்பாக வெளியிடக் கூடிய ஓர் ஏடாயினும் ஈழத்துச் சஞ்சிகைகளிலே, பல்லாண்டுகளாகத் தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பது பாராட்டுக்கும், வியப்பிற்குமுரியது. ஆசிரியரின் முயற்சி, கடின உழைப்பு, தரமான விஷயங்கள் ஆகியன எழுத்தாளர்கள் மத்தியிலும், ஆய்வறிவாளர் மத்தியிலும் மல்லிகைக்கு உரிய இடத்தை அளித்துள்ளன.
டொமினிக் ஜீவாவின் மல்லிகைப் பந்தல் வெளியீடுகள் பரந்த வாசகர் கூட்டத்தையும், கவனத்தையும் பெறவைத்துள்ளமையால்,
"மல்லிகை ஜீவா" -B២. Dr. சிவகுமாரன் 45

Page 26
மல்லிகையும், டொமினிக் ஜீவாவும் மேலும் பிரபல்யமும், மதிப்பும் பெற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
டொமினிக் ஜீவா என்ற பெயரே தமிழிற்குப் புதுமையானதொரு பெயர். சுதந்திரன் வார இதழிலே இவருடைய மொழிச் சாயலுடைய டொமினிக் என்ற பெயர் இவருடைய எழுத்துக்களைப் படிக்க ஆர்வத்தை ஏற்படுதியது. இவர் ஒரு கத்தோலிக்கத் தமிழர் என்றும், சிகையலங்காரத் தொழிலில் ஈடுபட்டவர் என்றும் , ஓர் இடதுசாரி என்றும் கேள்விப்பட்டபோது, இவரைச் சந்தித்துப் பேசவேண்டுமென்று ஆவல் கொண்டேன்.
இவருடைய பாதுகை என்ற சிறுகதைத் தொகுதி வெளிவந்தபோது, கொழும்பிலே நடைபெற்ற ஒரு பாராட்டுக் கூட்டத்திலே முதலில் நான் இவரைச் சந்தித்து உரையாடினேன். அழகாகவும், உள்ளம் திறந்து பேசுபவராகவும், கலகலப்பாகவும் இவர் தோற்றமளித்தார். கவர்ச்சியாக இருந்தது, இருபதுக்கும் மேற்பட்ட வருஷங்களாக டொமினிக் ஜீவாவுடன் நான் பழகி வருகிறேன்.
டொமினிக் ஜீவாவிலே குழந்தைத் தன்மை இயல்பாய் அமைந்திருக்கிறது. இதுவே இவருடைய வெற்றியின் இரகசியம்.உ
46 ]-Bܗ. எஸ்.சிவகுமாரன் "மல்லிகை ஜீவா
 

εξ ου (τ 325 δείου υ αστυ (τριτά
சிகாமா. கோதண்டம்
இலங்கை நாட்டில் ஒரு மலர் மலர்ந்தது. அது தமிழகம் எங்கும் மணம் பரப்பியது, ஏன் உலக அரங்கில் பரப்பியது. ஆம்! என்றும் வாடாத இலக்கிய வாசகர்களில் மல்லிகையின் மணம் நுகராதோர் யாருமில்லை என்ற அளவுக்கு பிரபலமான இலக்கிய இதழ் அது, மல்லிகை இதழை இலட்சிய தாகத்துடன் நடத்தி வருபவர் டொமினிக் ஜீவா அவர்கள்.
கூர்ந்த திறனாய்வு நோக்கத்துடன் விருப்பு வெறுப்பின்றி விமர்சிக்கும் ஆற்றலுடைய அவர், இலங்கை தமிழ் இலக்கியத்திற்கும், இந்திய தமிழ் இலக்கியத்திற்கும் ஓர் உறவுப் பாலமாக மிளிர்கின்றார். நவீன இலக்கியத்தின் கூறுகளை நன்கறிந்து சரியான மதிப்பீடுகளுடன் துல்லியமாக விமர்சிக்கும் திறன் அவருக்குண்டு எல்லோருடனும் எளிதாகவும், இனிமையாகவும் பழகும் அவரது தொண்டுள்ளம் இந்திய எழுத்தாளர்கள் அனைவரையும் கவர்ந்தது. தமது கொள்கையில் அசைக்க முடியாத ஆணித்தரமான பற்றும், தெளிவும் அவருக்குண்டு அதேசமயம் மாற்றுக் கருத்தினரையும் மதித்துப் பழகும் மனப் பரிபக்குவமும் அவருக்கு உண்டு. -
இருபத்து மூன்று ஆண்டுகளாகவும், வெள்ளி விழாவை நோக்கியும் சென்றுக் கொண்டிருக்கும் இந்த இதழ் , ஏழை விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தொண்டாற்றி வருகின்றது. சராசரி வாசகர்களை இலக்கியத் தரத்திற்கு உயர்த்தும் பணியைச் செய்து வருகின்றது. இனவிரோதம், சாதி உணர்வுகளற்ற சமுதாயப் பணிகளோடு உலகளாவிய நோக்கங்களை இளைஞர்களுக்கு உணர்த்தி வருகின்றது.
"மல்லிகை ஜீவா" -கொமா.கோதணிடம் 47

Page 27
ஒரு தனி மனிதன் இவ்வளவு தரமுடனும் சிறப்புடனும் நடத்தும் இலக்கிய இதழ் தமிழில் வேறு இல்லை எனும் அளவுக்கு மல்லிகையின் பெருமை உயர்ந்திருக்கின்றது. இன்றுள்ள காகித விலையேற்றம், பொருளாதாரச் சிக்கல் மற்றும் பலவிதமான நெருக்கடிகளுக்கிடையே, லாப நோக்கமின்றி இதழ் நடத்துவதோடு, தலையங்கம் எழுதுவது முதற்கொண்டு அச்சுக் கோர்ப்பது வரையில் பங்கெடுத்து ஆக்கபுர்வமான பணிகளைச் செய்து வருகின்றார், டொமினிக் ஜீவா அவர்கள்.
எத்தனையோ எழுத்தாளர்களின் முன்னேற்றத்திற்கு ஏணியாகத் திகழ்ந்து வருகிறார். இன்று சிறந்த தமிழ் எழுத்தாளராகத் திகழ்பவர்கள் பலர் அவரால் வளர்த்து விடப்பட்டவர்களில் அடங்குவர்.
ஜீவா அவர்களின் படைப்புக்கள், மல்லிகையில் வந்த பிறபடைப்புக்கள், மல்லிகையில் ஜீவா அவர்களின் தலையங்கங்கள் ஆகிய இவைகளை தமிழக பல்கலைக் கழகங்கள் ஆய்வுக்காகத் தற்போது எடுத்துக்கொண்டுள்ளன.
ஜீவா அன்பே உருவானவர். அவர் முகத்தில் எப்போதும் அன்பே மலர்ந்திருக்கும் அவர் ஆர்வம், உழைப்பு இவற்றின் உறைவிடம் இவர் தனி மனிதரல்ல, ஒரு இயக்கம் பல்கலைக்கழகம் செய்யவேண்டிய செயல்களைச் செயல் திறனுடன் செய்து வருகின்ற பெரியவர். அவர் தமிழகம் வரும்போதெல்லாம் இராஜபாளையம் வந்து இங்குள்ள இலக்கிய அன்பர்களிடம் அளவளாவி விட்டுச் செல்வார்.
பன்மொழிப் புலவர் மு. கு. ஜகந்நாதராஜா, த பீ செல்லம், பு ஆ. துரைராஜா, அமரர் கொ. ச. பலராமன் ஆகியோரிடம் மிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தாலும், ஒரு பஞ்சாலைத் தொழிலாளியாகவும் இருந்து, இலக்கியவாதியாகவும் இருப்பதால், என்னைப்பற்றி மற்றையவர்களிடம் பேசும் போது “கொ. மா. கோதண்டம் என் உயிர்த் தோழர்' என்றும் கூறுவார்.
இராஜபாளையம் மணிமேகலை மன்ற இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு இரு தடவை சொற்பொழிவுகள் செய்துள்ளார். முதல் தடவை அவர் பேசியதை இராஜபாளையம் இளைஞர்கள் இன்றும் நினைவுபடுத்திச் சொல்கிறார்கள்.
ஒவ்வொரு இளைஞனும் தன் நாட்டைப்பற்றியும் மொழி, இலக்கியம் பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால்
48 -கொமா.கோதண்டம் "மல்லிதை ஜீவா
 

இன்றைய இளைஞர்களின் உள்ளங்கள் சினிமாக்காரர்களின் பின்னால் சுற்றித் திரிகின்றது. இது மாறவேண்டும் அறிவினைப் பெறும் தேடல் முயற்சியில் ஈடுபடவேண்டும் ஞானத் தாகம் கொண்டு அலைய வேண்டும். புதியவற்றைக் கற்பதிலும், செய்வதிலும் ஆர்வத்துடன் செயல்படவேண்டும் ஓர் உருசிய இளைஞனிடம் ‘உன் எதிர்காலத் திட்டம் என்ன?’ என்று கேட்டால் அண்டத்தை அளப்பது என்பான். ஆனால் ஒரு தமிழ் இளைஞன் ஒரு சினிமா நடிகராக வரவேண்டும் என்று கூறுவான். அல்லது ஒரு நடிகையின் ரசிகர் மன்றத் தலைவராக வரவேண்டும் 6T63LT6ST,
இந்த அழுக்கு எண்ணங்களை இன்றைய தமிழ்ப் பத்திரிகைகள் தான் வளர்த்து வருகின்றன. விஞ்ஞானத்தின் புதிய பரிமாணங்களை உலகப் பத்திரிகைகள் அலசிக் கொண்டிருக்கும் கால கட்டத்தில், தமிழ்ப் பத்திரிகைகள் இந்த நடிகையின் மூக்கைப்பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதி இளைஞர்களைத் திசை திருப்புகின்றன.
சினிமா விஞ்ஞானத்தின் அருமையான கண்டுபிடிப்பு, ஆனால் தமிழ்ச் சினிமா? சினிமா, உலகின் அவமானச் சின்னம். இதனை இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
ஜீவா அவர்களின் இந்த ஆவேசப் பேச்சு இங்கே ஓரிரு இளைஞர்களை மனமாற்றம் செய்து உணர வைத்துள்ளது என்பதை நான் அறிவேன். இதுபற்றி நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்வோம்,
84 மார்ச் மல்லிகை இதழில் (முல்லைச் சிறப்பிதழ் ) இராஜபாளையத்தில் ஓர் இலக்கியக் குடும்பம் என்ற கட்டுரை வெளியிட்டார். அதில் இலங்கையிலிருந்து தமிழகம் போகும் எழுத்தாளர்களுக்கு நுழை வாயிலே இராஜபாளையம்தான் பயணக் களைப்பு, அந்த ஊரின் உபசரிப்பால் பஞ்சாய்ப் பறந்துவிடும், இலக்கியவாதிகள் என்றால் அந்த ஊர் என்னமாய் குதுாகலித்து விடுகிறது" என்று தொடர்கிறது.
84 ஜூன் ல் காண்டில் பகதியில் கேள்விக்கப் பதில் அளிக்கும்திே ಛೀ.: ဖွံ့ဖြိုး #ಸಿ முயற்சி பற்றி எழுதியிருந்தார். (இடையில் எழுந்த சிக்கல் காரணமாக அம்முயற்சி இன்னும் நிறைவேறவில்லை)
இவைகளிலிருந்து இராஜபாளையம் இலக்கிய நண்பர்களின் பால் அவர் எவ்வளவு பாசமும், அன்பும் வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறதல்லவா !
"மல்லிகை ஜீபா" ட கொ.மா.கோதண்டம் 49

Page 28
மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு சமயத்தில் பேராளராக ஜீவா வந்திருந்தார். ராஜபாளையம் நண்பர்களும், இலங்கை நண்பர்களும், சோவியத் எழுத்தாளர்களுமாக ஒரு நாள் புகைப்படமொன்று எடுத்துக் கொண்டோம் மாநாட்டில் கலந்துகொண்ட பேராளர்களுக்குச் சிறப்பான உணவு வகைகள் தயாரித்து அளித்தார்கள். ஆனால் அன்று அங்கு சாப்பிட வர இயலாதென்று என்னிடம் ஜீவா கூறினார்கள் எதற்கு? எனக் காரணம் கேட்டேன்.
'காரமில்லாமல் நாலு நாளாய் ச் சாப்பிட்டு நாக்குச் செத்துவிட்டதையா’ என்று கூறிவிட்டு மதுரை டவுண்ஹால் ரோடில் உள்ள இலங்கை - இந்திய ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்று விட்டார்.
“இலங் ைககாரர்களுக்கு அதிக காரம் வேண்டும் போலிருக்கிறது” என்று நினைத்துக் கொண்டேன்.
அடுத்த முறை ராஜபாளையம் வந்திருந்தபோது மதியம் என் வீட்டில் சாப் பிட வேணி டுமென்ற எனது வேணி டுகோளை ஒப்புக்கொண்டார்கள். நானும் வீட்டில் எல்லாவற்றிலும் காரம் அதிகமாக இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டேன்.
ஜீவா உணவு அருந்திக் கொண்டிருந்தபோது "இது என்ன? என்று இலையிலிருந்த ஒரு "ஐட்டத்தை சுட்டிக் கேட்டார்.
அது வெறும் மிளகாய் , அப்படியே அரைத் து வைக்கப்பட்டுள்ளது. எனக் கூறியதும் அவர் கல கலவெனச் சிரித்துவிட்டார்.
"என்னய்யா இது, இலங்கைக்காரர்கள் அதிகமாகக் காரம் சாப்பிடுவார்கள் என்பதற்காக வெறும் பச்சை மிளகாயையுமா அரைத்து வைப்பது?’ என்று அவர் கூறியதும் நாங்கள் அனைவரும் சிரித்துவிட்டோம்.
ஜீவா அவர்கள் என்னுடன் பேசும்போதெல்லாம் உழைப்பின் சிறப்பையும், தொழிலாளர்கள் படும் இன்னல்களையும், வர்க்க உணர்வு பற்றியும் தெளிவாக எடுத்துரைப்பார். இலக்கியவாதிகள் படைப்புத்திறன் எவ்வாறு அமையவேண்டும், சிறுகதைகளுக்கான கருக்களையும், களங்களையும், கதா பாத்திரங்களையும் எவ்வெவ்வாறெல்லாம் செய்யலாம் என்று கூறுவதோடு, நல்லவற்றையும் தேடும்படி வாசகர்களுக்கு எவ்வாறு
50 -கொமா.கோதண்டம் "மல்லிகை ஜீவா"
 

ஊக்கம் கொடுக்கலாம், இளம் எழுத்தாளர்களுக்கு எப்படியெல்லாம் உற்சாகம் தந்து வழி காட்டலாம் என்றெல்லாம் ஆழமான சிந்தனையுடன் கூடிய கருத்துக்களை மிக எளிமையாகக் கூறுவார்கள்
அந்தச் சமயத்தில் அவரைப் பார்க்கும்போது மிகப் பிரமாண்டமான விஸ்வரூபக் காட்சிதான் நினைவுக்கு வரும், முதலில் மல்லிகை இதழ்களைச் சிறிது காலம் யாழ்ப்பாணம் நண்பர்- சட்டக் கல்லூரி மாணவர் தேவன் ரெங்கன் எனக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். இந்த இதழ்களைப் படிக்கும் போது எனக்குப் பொற்குவியலைக் கண்ட உற்சாகம்தான் ஏற்படும். எனது சோவியத் எழுத்தாள நண்பர் வித்தாலி புர்ணிக்கா அவர்களின் கடிதங்கள் அப்போது அதில் வந்திருந்தன.
ஜீவா அவர்களின் தண்ணீரும் கண்ணீரும் சிறுகதைத் தொகுதியிலிருந்து சில கதைகள் உருசிய மொழியில் வர இருப்பதாக அறிந்து பெரிதும் மகிழ்ந்தார். புர்ணிக்கா, 'ஜீவா அவர்கள் நவீன தமிழ் வசன நடையில் வல்லவரே என்று கூறுவார்.
ஒவ்வொரு மல்லிகை இதழ் வெளிவந்த உடனே ஒரு அழகிய குழந்தையைப் பெற்றெடுத்த தாயின் உணர்வு எனக்கு ஏற்படுகிறது! என்பார் ஜீவா,
ஒரு குழந்தையைப் பார்த்ததும் அதன் ஆரோக்கியம், உடல்வாகு, உடைகள் இவைகளைக் கண்டு தாயின் வளர்ப்புத் திறனை உணர்வது போல, மல்லிகையைப் படிக்கும் போது ஜீவாவின் கைவண்ணம் என்னை மெய்சிலிர்க்க வைக்கும்.
எங்கள் சந்திப்பிற்குப் பின்னர் தமழக சந்தாதாரர்களுக்கு இதழ்கள் அனுப்புவதிலுள்ள சிரமங்களை அவர் என்னிடம் கூறினார். நீங்கள் மொத்தமாக எனக்கு அனுப்பி விடுங்கள். நான் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அனுப்பிவிடுகிறேன்" என்றேன். சிறிது காலம் அப்படியே நடந்தது. பின்னர் கப்பல் சர்விஸ் நிறுத்தப்பட்டதும், இதழ்கள் வருவதும் நின்றுவிட்டது.
இப்போதும் மல்லிகை இதழ் பற்றியும், ஜீவா அவர்களைப்பற்றியும் எங்காவது சிலர் கூடிப் பேசினார்கள் என்றால் அங்கு எனது பெயரும் குறிப்பிடப்படுகிறது. எனக்குக் கடிதங்கள் வருகின்றன. இப்படி வாசக, எழுத்தாள, ஆராய்ச்சி நண்பர்களை மல்லிகை அதிகமாகவே எனக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
தற்போதுகூட டொமினிக் ஜீவா அவர்களுக்கு மணிவிழா நடக்க இருக்கிறது என சில நண்பர்களுக்கு நான் கடிதம் எழுத, இது பரவி மல்லிகைக்குச் சந்தாதாரராகச் சேர வேண்டும், மணிவிழா மலர்களைப்
.51 εξαυτ" -Gir. Ir. RanggarLih و «همه ایوtp"|

Page 29
பெற்றுத்தர வேண்டும் என்று கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
தஞ்சாவுரைச் சேர்ந்த மு. செல்வராசு என்ற நண்பர் ஜீவாவின்
படைப்புகள் பற்றிய பல்கலை ஆய்வுக்காக என்னைப் பார்க்க வர
விரும்புவதாகக் கடிதம் எழுதியுள்ளார்.
13 - 2 - 81 முதல் 4 - 3 - 81 முடிய நானும் ஆசான், பன்மொழிப் புலவர் மு. கு. ஜகந்நாதராஜா அவர்களும் இலங்கை நாட்டில் ஒரு இலக்கியச் சுற்றுலா மேற்கொண்டோம் ஜீவா அவர்கள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மல்லிகைப் பந்தல் கூட்டம் ஏற்பாடு செய்து சிறப்பளித்ததோடு, பல்வேறு இடங்களுக்கும் எம்மை அழைத்துச் சென்று பெருமைப் படுத்தினார்கள்.
81 மார்ச் மல்லிகை இதழில் இலக்கிய ராஜாக்கள் என்ற கட்டுரையும் வெளியிட்டுச் சிறப்பித்தார்கள். இவைகள் - நாங்கள் என்றும் மறக்க முடியாத சம்பவங்கள்.
ராஜபாளையத்தில் 81 ஏப்ரலில் வரவேற்பு விழாவில் நான் பேசினேன். "தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தனித்துவமுள்ள இதழ் மல்லிகை தமிழ் எழுத்தாளர்களில் மிக உயர்ந்த பண்பாடுகளை உடையவர் டொமினிக்
ஜீவா.
ஈழத்து இளைஞர்கள் தமிழக இளைஞர்களைக் காட்டிலும் பொறுப்புணர்ச்சி வாய்ந்த தெளிந்த குறிக்கோள் உடையவர்கள், ஈழத்து எழுத்தாளர்களில் தமிழகத்தைப் போல காசுக்கு எதை வேண்டுமானாலும் எழுதும் கழிசடைத்தனம் இல்லை. ஈழத்து இதழ்களுக்குச் சினிமாத்தனமே குறிக்கோளாய்க் கொண்ட அநாகரிகம் இல்லை.
அந்த மக்கள் விருந்தோம் பலில் வள்ளுவத்தை நினைப்புட்டுபவர்கள், நட்புக்கு, இலக்கணமாகத் திகழ்பவர்கள்
எனது அன்புக்கும் - வணக்கத்திற்கும் - மரியாதைக்கும் உரிய பெரியவர் அருமைத் தோழர் ஜீவா அவர்கள்கு
52 |- clasir. மா. கோதண்டம் "மல்லிகை ஜீவா
 

ജ്ഖങിങ്ങ് ജബ്
ச. முருகானந்தனர்
மணிவிழாக் காணும் டொமினிக் ஜீவாவை ஒரு பொதுவுடமைவாதியாக, எழுத்தாளனாக, மேடைப் பேச்சாளனாக, இலக்கியச் சஞ்சிகை ஆசிரியனாக, சீர்திருத்தவாதியாக, நல்ல நண்பனாகப் பலரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் நான் அவரை ஒரு குருவாக, வழிகாட்டியாகத் தான் முதலில் இனங்கண்டேன்.
எழுத்துலகில் காலடி எடுத்து வைத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக, சிறு கதைகள் எழுதிக்கொண்டிருந்த காலம், மல்லிகையில் எனது படைப்பு ஒன்று வெளிவந்தால் தான் எனது இலக்கிய உலகப் பிரவேசம் முழுமையடையுமென்று எனக்குள்ளேயே ஒரு எண்ணம் ஈழத்து அனைத்துப் பத்திரிகை சஞ்சிகைகளிலும் எழுதிய பின்னரும், பல பரிசில்கள் பெற்ற பின்னரும், சென்னை இலக்கிய சிந்தனையினரின் பரிசிலைப் பெற்ற பின்னரும், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் எனது கதைகள் மொழி பெயர்க்கப்பட்ட பின்னரும், கைலாசபதி, சிவகுமாரன் முதலான விமர்சகர்களின் கவனிப்பைப் பெற்ற பின்னரும், மல்லிகையில் எனக்கு இடம் கிடைக்கவில்லை என்பதில் எனக்குப் பெரிய ஏமாற்றமே. நான்கைந்து எழுத்தாக்கங்கள் நிராகரிக்கப்பட்ட பின்னர் எனது சமகால அதிவேக எழுத்தாள நண்பனிடம் எனது மனக்குறையைச் சொல்லி அழுதேன். தொடர்ந்தும் நீ எழுதவேண்டும், ஜீவாவுடன் அறிமுகமாகவேண்டும் என்று அமரராகிவிட்ட அந்த நண்பர் ஆலோசனை கூறினார். ஆனால் ஏனோ என்னால் முடியவில்லை எனினும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் மல்லிகைக்கு எனது ஆக்கங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன்.
"மல்லிகை ஜீவா" ச. முருகானந்தன் 53

Page 30
எழுபதுகளின் பிற்பகுதியில் உருவான எனது தலைமுறை எழுத்தாளர்களில் பலரும் இனப்பிரச்சினையைத் தமது படைப்புகளில் அணுகி, சமகாலப் போராட்டத்தை, அடக்கு முறைக்கெதிரான ஒரு போராட்டமாக இனம் காட்டி எழுதி வந்தோம் அந்த நிலைப்பாடு சரியாகப் பட்டதால் நான் தொடர்ந்து அதே ரீதியில் எழுதிவந்தேன். எனினும் அப்போதைய சூழ்நிலையில் பலதையும் இலைமறை காய்களாக எழுத முடிந்தது. அப்படியானாற்றான் பத்திரிகைகளும் பிரசுரிக்கும்.
மல்லிகை ஈழத்தின் தலைசிறந்த இலக்கியச் சஞ்சிகையாக இருந்ததாலும், அதன் அபிமான வாசகன் என்பதாலும், ஜீவாவின் மீது ஏற்பட்டிருந்த துரோணர்-ஏகலைவன் போன்ற குருபக்தியினாலும் எனது மனக்குறைகளை எல்லாம் கடிதமாக வடித்து, ஜீவா ஒரு அணியைச் சேர்ந்தவர்களைத் தான் வளர்க்கிறார் என்றும், இளைய தலைமுறையினரை முகம் கொடுத்துப் பார்ப்பதில்லை என்றும் ஒரு பாட்டம் அழுது, அத்துடன் எனது சிறுகதை ஒன்றையும் அனுப்பிவைத்தேன். கடிதம் அடுத்த மல்லிகையில் பிரசுரமானது. கதை அதோகதிதான்! பின்னர் யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட மாணவனாக இருந்தபோது, அதாவது எழுத்துலகில் பிரவேசித்து ஐந்து வருடங்களின் பின்னர், மல்லிகையில் எனது கதை ஒன்று பிரசுரமானபோது எனது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அடுத்த வருடமும் மல்லிகை ஆண்டு மலரில் ஒரு சிறுகதை பிரசுரமானது. ஜீவாவைச் சந்திக்க வேண்டும் என்ற அவர் அதனையும் மீறி ஒரு தயக்கம் தாழ்வுச் சிக்கல்! இலக்கியக் கூட்டங்களில் தரிசிப்பதோடு सौिी.
அப்படியான ஒரு இலக்கியக் கூட்டத்தில் தான் ஜீவாவுடன் ஏற்பட்ட கருத்து மோதலோடு எனது அறிமுகம் ஆரம்பமானது அதற்குப் பின்னர்தான் ஜீவாவின் ஆத்ம சுத்தியை என்னால் முழுமையாக அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. மல்லிகையில் ஏற்பட்ட மாறாக் காதலினால் நானும் மல்லிகையின் நிரந்தர எழுத்தாளர்களில் ஒருவனாகி மனநிறைவு பெற்றேன். என்னையும் வளர்த்துக் கொண்டேன்.
இலங்கையில் எத்தனையோ தரமான இலக்கிய சஞ்சிகைகள் வெளிவந்தபோதிலும் அவையனைத்தும் காலத்தால் அடிபட்டுப் போக, மல்லிகை மட்டும் இரு தசாப்தங்களுக்கு மேலாக நறுமணம் பரப்பிக்கொண்டிருக்கின்றது என்றால், ஜீவாவின் தனிமனித முயற்சியும், அயராத உழைப்பும் தான் காரணம் எனலாம். இலங்கையின் தமிழ்ச் சிறுகதைக்கான முதலாவது சாகித்திய மண்டலப் பரிசிலைப் பெற்ற எழுத்தாளரான ஜீவா, தண்ணீரும் கண்ணிரும் பாதுகை' சாலையின்
54 ச. முருகானந்தன் "மல்லிதை مسمیه"[
 

திருப்பம் வாழ்வின் தரிசனங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும்,
அனுபவ முத்திரைகள், ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் ஆகிய சுவையான நுால்களையும் படைத்துள்ளார்.
நாறிப்போன சாதிவெறி மிக உக்கிரமமாக வடபகுதியில் தலைவிரித்தாடிய காலகட்டத்தில் தனது பேனாவையும், பேச்சையும் அதற்குகெதிராகச் சாதுரியமாகப் பாவித்ததோடு ஒரு போராளியாகவும் செயற்பட்ட ஜீவா, எப்பொழுதுமே தனக்குச் சரி என்று படுவதைச் செயற்படுத்தத் தயங்கியதில்லை. 1984-ம் ஆண்டு மல்லிகையில் எனது ஒரு கட்டுரையில் மல்லிகையும், முற்போக்கு எண்ணம் கொண்ட எழுத்தாளர்களும் தேசிய ஒருமைப்பாடு என்ற போர்வைக்குள் இனப் பிரச்சினையின் உண்மை நிலையை எழுதத் தவறிவிடுவதாகக் குற்றம் சாட்டினேன். ஜீவா அந்தக் கட்டுரையைப் பிரசுரித்ததன் மூலம் என் மனதில் இன்னும் ஒருபடி உயர்ந்தார். இரண்டு வருடங்களின் பின்னர் மல்லிகையும் இன ஒடுக் கலை எதிர் க்கும் ஒரு சஞ்சிகையாக, இன்றைய போராட்டத்தினைச் சரிவரப் புரிந்து கொண்ட ஒரு சஞ்சிகையாக, அதே சமயம் இனத்துவேஷமோ, இனவெறியோ அற்ற ஒரு சஞ்சிகையாக, 1986 -ம் ஆண்டின், ஆண்டு மலர் மூலம் தன்னை இனம் காட்டிக்கொண்டது. காலத்தின் தேவையை ஒட்டிய ஆரோக்கியமான இம்மாற்றத்தை ஜீரணிக்க முடியாத ஒருசிலர், ஜீவா மீதும், மல்லிகைமீதும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர்கள் மீதும் கண்டனக் குரல் எழுப்பினார்கள், ஆனால் ஜீவா பெருந்தன்மையாக நடந்துகொண்டார்.
தனது அணியைச் சேர்ந்தவர்களாயினும் சரி, பிறராயினும் சரி, இலக்கிய நேர்மையுடன் செயற்பட்டால், ஜீவா அவர்களுக்கு உரிய இடத்தைத் தந்து அன்புடன் பழகும் இயல்பு கொண்டவர். பல சந்தர்ப்பத்தில் விமர்சகர்களினதும், பிறரினதும், கடும் விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் ஜீவா ஆளாகியபோதிலும், அவர், தனிமனித வசைபாடும் போட்டியில் இறங்கியதில்லை. தனது இலக்கிய நேர்மையின் மூலம் காலப்போக்கில் தன்னைப் புரிந்துகொள்ள வைத்து விடுகிறார்.
இன்று ஜீவா என்றதும் மல்லிகை தான் நினைவுக்கு வரும், அவ்வளவு துாரம் மல்லிகையோடு சங்கமமாகிவிட்டவர், ஜீவா, அவரது முழு உழைப்பும் மல்லிகைக்காகத்தான் என்றால் அது மிகையாகாது. இன்று மல்லிகைப் பெண்ணாள் மல்லிகைப் பந்தல் வெளியீடு என்ற ஆரோக்கியமான குழந்தையும் ஈன்று விட்டாள். ஈழத்து எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு இது ஒரு வரப்பிரசாதம் பிரசுர வாய்ப்புக்களின்றித் தவிக்கும் எழுத்தாளர்கள் இதனால் - அதிக பயனை எதிர்காலத்தில் பெறமுடியும் என்று நம்புகிறேன்.
"மல்லிகை ஜீவா" ச. முருகானந்தன் 55

Page 31
இன்று வேரோடிக் கிளைவிட்டு, படர்ந்து பந்தலாகிப் புத்து, மணம் சொரியும் மல்லிகை இன்னும் பல ஆண்டுகள் புத்துச் சொரியும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஜீவாவின் பேச்சு, மூச்சு, உழைப்பு எல்லாமே மல்லிகை தான். ஜீவாவின் ஜீவன், ஜீவிதம், எல்லாமே மல்லிகைதான்! டொமினிக் ஜீவாவின் மல்லிகைக் குழந்தைக்கு வெள்ளி விழா நெருங்கி வருகிறது.கு
56 ச. முருகானந்தன் "மல்லிகை ஜீவா"

ஒரு சாதனையாளருக்கு uDæk-Sup/r
- வரதர்
5. ண்பர் ஜீவாவுக்கு மணி விழா நடத்தப் போகிறார்கள் என்று அறிந்ததும் மிகவும் மகிழ்ந்து போனேன்.
ஜீவா பாராட்டுக்குரியவர் - நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டியவர்.
ஜீவா என்ற நல்ல மனிதனைப் பாராட்டலாம்.
ஜீவா என்ற சிறந்த எழுத்தாளனைப் பாராட்டலாம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஜீவா என்ற சாதனையாளனைப் பாராட்ட வேண்டும்!
சான்றோர்களால் பழித்துரைக் கப் பட்ட கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட்டு நிற்பவர், ஜீவா,
அதனால் அவருடைய உள்ளம் பரிசுத்தமானது.
அந்தப் பரிசுததமான உள்ளத்திலிருந்து வரும் எழுத்துக்கள் ஒளிமிக்கவை. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்.
57 ஜீவா" - வரதர் وجوههم ناصعة" )

Page 32
|
|
|
|
தம்மால் சரியென்று உணரப்பட்ட ஒரு அரசியல் கருத்தைத் தமது இளமைக் காலத்திலிருந்து இன்றுவரை நெறிபிறழாமல் கடைப்பிடித்து வரும் ஒரு நேர்மையான அரசியல்வாதி ஜீவா, இந்தக் காலத்தில் இது பெரிய சாதனையென்றே சொல்ல வேண்டும் பல்வேறு விதப்பட்ட காரணங்களுக்காகத் தமது அரசியல் கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்களே பலராயிருக்கையில், நேர்மைத் திறமிக்க ஒரு சிலரில ஜீவாவும் ஒருவராக விளங்குகிறார். இது அவருடைய சிந்தனைத் தெளிவையும், சந்தர்ப்பங்களால் அடிப்பட்டுப் போகாத அவரது நெஞ்சுரத்தையும் காட்டி நிற்கிறது.
ஈழத்தில் நல்ல எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள், நேர்மையான அரசியல்வாதிகளும் சிலர் இருக்கிறார்கள்,
ஆனால் ஜீவாவைப் போன்ற அருமையான இலக்கியப் புரவலர்கள் யார் இருக்கிறார்கள்? -தேடியும் கண்டு பிடித்தல் அரிது.
ஈழத்து இலக்கிய நண்பர்களிடையே மல்லிகைச் சஞ்சிகை ஒரு தனிக் கவனிப்புக்குரியதாக விளங்குகிறது.
மல்லிகையும் அதன் ஆசிரியர் ஜீவாவும் பிரிக்க முடியாதவை. டொமினிக் ஜீவா வை விட, மல்லிகை ஜீவா வெகு பிரசித்தம்
ஈழத்தில் ஒரு இலக்கிய சஞ்சிகையைத் தொடர்ந்து நடத்துவது எவ்வளவு சிரமமான வேலை என்பதை நிரூபிக்க இங்கே பல அனுபவசாலிகள் இருக்கிறார்கள். -அவர்களில் நானும் ஒருவன்.
சொந்த வாழ்க்கையையும் தொழிலையும் வைத்துக்கொண்டு,
அவற்றுக்கு வெளியே நின்று, எந்த ஒரு கொம்பனாலும் இங்கே ஒரு சஞ்சிகையை நடத்த முடியாதென்பதே அனுபவம்
வருவாய்க்குரிய தனது தொழிலை மட்டுமன்றி முழு வாழ்க்கையையுமே தியாகம் செய்தால்தான் இங்கே ஒரு சஞ்சிகையை நிலை நிறுத்த முடியும்,
58 - வரதர்
"மல்லிகை ஜீவா"
 
 

இந்த உண்மையை நன்கு உணர்ந்து, அந்தத் தியாகத்தைச் செய்து வெற்றி கண்டிருப்பவர் ஜீவா,
சென்ற நுாற்றாண்டில் ஆறுமுக நாவலர் பெருமான் தனித்து நின்று சைவத்துக்கும், தமிழுக்கும் தமது வாழ் நாளைத் தியாகம் செய்து அவற்றைக் காத்து நின்றார்.
ஓரளவு அதே போன்று, இந்த நுாற்றாண்டில் மல்லிகை ஜீவா தமது வாழ்க்கையைத் தியாகம் செய்து, ஈழத்து இலக்கியத்தை வளர்த்து வருகிறார்.
அன்று நாவலரை விட்டால் அந்தப் பணிக்கு வேறு ஆளில்லை. -
இன்று ஜீவாவை விட்டால் இந்தப் பணிக்கு வேறு ஆளில்லை.
நாவலரை ஈழமும் தமிழகமும் அறிந்திருந்தது. ஜீவாவையும் ஈழமும் தமிழகமும் அறிந்து வருகிறது.
கடந்த இருபத்தியிரண்டு ஆண்டுகளாக மல்லிகை மூலம் ஈழத்து இலக்கியத்துக்கு ஜீவா செய்து வரும் சேவை அளப்பரியது.
மல்லிகை தோற்றுவித்த ஈழத்து எழுத்தாளர்கள் பலர்
மல்லிகை வளர்த்துவிட்ட ஈழத்து எழுத்தாளர்கள் பலர்.
மல்லிகை ஊக்குவத்த ஈழத்துப் பழைய எழுத்தாளர்களும் பலர்.
மல்லிகையை நுகர்ந்து பயன்பெறும் ஈழத்து இலக்கிய நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஜீவாவைக் கெளரவிக்க விரும்பினார்கள்.
அதுவே ஜீவாவுக்கு எடுக்கப்படும் மணிவிழா !கு
"மல்லிகை ஜீவா" - வரதர் 59

Page 33
ólsrudøfaió ésy (røởør தமிழகத் தொடர்புகளும் அதன் விளைவுகளும்
தெணியான்
- g എ இலக்கிய ஆய்வாளர்களின் ஐயப்பாடுகளுக்கு மத்தியிலும் ஈழத்துப் புதந்தேவனார் என்னும் சங்கப் புலவரே தமிழ் நாட்டுக்கும் ஈழத்துக்குமிடையேயுள்ள இலக்கியத் தொடர்பு - ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு என்பவற்றின் முதல்வராகப் பெருமையுடன் கொள்ளப்படுவது இன்று எமது இலக்கிய மரபாகிவிட்டது. ஆயினும் இலக்கியம் என்னும் பற்றுணர்வின் வித்தானது பத்தொன்பதாம் நுாற்றாண்டின் பிற்பகுதியிலே ஈழத்தவர்கள் மத்தியில் முளைவிட ஆரம்பித்ததெனலாம். இவ்வுணர்வானது இருபதாம் நுாற்றாண்டின் நடுப்பகுதியிற்றான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்து வெகு வீச்சுடன் மேலெழுந்து வந்த ஒரு சில படைப்பாளிகளுள்ளே தமிழ் நாட்டுடன் மிக நெருக்கமாகத் தொடர்பினை வளர்த்துக்கொண்ட ஒருவராகச் சிறப்பாகக் குறிப்பிடத் தகுந்தவர் டொமினிக் ஜீவா அவர்கள், ஜீவா அவர்களின் தமிழக இலக்கியத் தொடர்பின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கான காரணிகள், அவற்றின் அடிப்படையில் உண்டான விளைவுகள் என்பன பற்றிச் சுருக்கமாக நோக்குவோம்.
ஜீவா அவர்களின் தமிழகத் தொடர்பின் கால் கோளாக 1948 - ம் ஆண்டு அமைந்ததெனலாம். இவ்வாண்டிலேயே ப.ஜீவானந்தம் அவர்கள் தலைமறைவு வாழ்வின் பொருட்டு யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அச்சமயம் ஜீவா, பொன்னுத்துரை போன்ற அன்றைய இளைஞர்கள் ப.ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்து, அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுத் தமது இலக்கிய, சமூக, அரசியல் நோக்கினையும், வாழ்வினையும் மிகச் சரியான திசைவழியில் நெறிப்படுத்திக் கொண்டார்கள் என்பதனை ஜீவா அவர்களே பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
60 - தெணியாள் "மல்லிகை శ్లోar" |
 

1948 - ல் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட தோழர் ப. ஜீவானந்தத்தை நான் இலங்கையில் சந்தித்தேன். அப்போது அவரால் நாங்கள் நெறிப்படுத்தப் பட்டோம். சமூகக் கொடுமைகளுக்கு வெறும் சாதிய உணர்வு காரணமல்ல என்பதை உணர்ந்தோம் மார்க்சீயக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவானது,
(ஜனசக்தி)
1948-ம் ஆண்டு ஜிவா அவர்களின் வாழ்வில் மிக முக்கியமான ஓர் ஆண்டாகும். இவ்வாண்டிற் ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்தது மாத்திரமன்றி, எழுத்துலகில் காலடி எடுத்துவைத்த ஆண்டும் இதுவே ஆகும். இதன் பின்னர் ஜீவா அவர்களின் தமிழ் நாட்டு உறவின் நுழைவாயிலாக அமைந்தது விஜயபாஸ்கரனின் சரஸ்வதி என்னும் இலக்கியச் சஞ்சிகை ஆகும், ஜீவா அவர்களின் சிறுகதைகளுக்கு இச் சஞ்சிகையே பெருமளவு களம் அமைத்துக் கொடுத்தது. ஜெயகாந்தனுக்கு அடுத்த படியாக ஜீவா அவர்களின் படைப்புக்களை நிறையவும் நிறைவாகவும் சரஸ்வதி வெளியிட்டு வந்தது. உண்மையில் ஜீவா அவர்களை "சரஸ்வதி’யினால் வளர்த்தெடுக்கப்பெற்ற சரஸ்வதி மைந்தன் என்று குறிப்பிடுவது மிகையாகாது. சரஸ்வதியைத் தொடர்ந்து தோழமைக்குரிய தாமரை, ஜீவா அவர்களின் சிருஷ்டிகளை உவந்தேற்றுப் பிரசுரித்து வந்தது. சரஸ்வதி 10-11-58 இதழில் ஜீவா அவர்களின் நிழற் படத்தினை அட்டையில் பதித்துப் பெருமைப்படுத்தியது. 1968 ஜூலையில் வெளிவந்த தாமரையின் சிறுகதை மலர் ஈழத்து எழுத்தாளரான ஜீவா அவர்களின் உருவத்தை அட்டையில் தாங்கி வந்ததன் மூலம் ஜீவா அவர்களை மாத்திரமின்றி, ஈழத்து எழுத்தாளர்களையும் உழைப்பாளி வர்க்கப் படைப்பாளிகளையும் கெளரவித்து எழுத்துலகில் முதன்மைப் படுத்தியது. இலங்கை சாகித்திய மண்டலப் பரிசினைப் பெற்ற ஜீவா அவர்களின் தண்ணீரும் கண்ணிரும் சிறுகதைத் தொகுதியும் சரஸ்வதி வெளியீடாகவே 1960 ஜூலையில் வெளிவந்ததென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
ஜீவா அவர்கள் தமிழகச் சஞ்சிகைகளான சரஸ்வதி, தாமரை என்பவற்றில் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்திலும் அதற்கு முன்னரும் கலைமகள் போன்ற தமிழகச் சஞ்சிகைகளில் கதைகள் எழுதிக் கொண்டிருந்த ஈழத்து எழுத்தாளர்கள் பலர் இருந்திருக்கிறாகள். இந்த எழுத்தாளர்கள் எவருக்கும் கிடைக்காத ஆழமானதும் உறுதியானதுமான
"மல்லிகை ஜீவா" - தெணியான் 61

Page 34
|
தமிழகத் தொடர்பு ஜீவா அவர்களுக்கு கிடைத்தமைக்கு ஜீவா அவர்களின் படைப்பாற்றல் மாத்திரம் காரணமல்ல, கலைமகள் போன்ற சஞ்சிகைகளில் எழுதிக் கொண்டிருந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களாக மட்டுமே விளங்கின. அவை ஈழத்து மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் ஈழத்து இலக்கியங்களாக அமைந்தனவென்று பெரும்பாலும் குறிப்பிட முடியாது. ஆனால் ஜீவாவினதும், ஜீவாவைப் போன்ற முற்போக்கு அணியைச் சார்ந்தவர்களினதும் படைப்புக்கள், ஈழத்தில் வாழும் அடக்கி ஒடுக்கப்பட்ட அடிநிலை மக்களின் வாழ்வின் சரித்திரங்களாகக் கூர்மையான வர்க்கப் பார்வையுடன் அவர்கள் பேனாவிலிருந்து பிறந்தன. மனித நேயம் மிக்க ஈழத்து மண்வாசனை கமழும் சிருஷ்டிகளாக மிளிர்ந்தன. குழப்பம் ஏதுமற்ற தெளிவான அரசியற் கொள்கைப் பற்றுறுதியுடன் விளங்கின. இதனால் இப்படைப்புகளுக் கூடாகத் தமிழ் நாட்டு இலக்கிய வாசகர்களுக்கு, தமிழ் நாட்டுக்கு வெளியே, வாழ்ந்த ஈழத்து மக்களின் வாழ்வினையும், வாழ்க்கைப் போராட்டங்களையும் அறிய முடிந்ததோடல்லாமல், சிறந்த இலக்கியச் சிருஷ்டிப்புகளையும் படிக்கும் வாய்ப்பினையும் அக்கால கட்டத்திற் பெற்றார்கள்.
சரஸ்வதி, தாமரைக் கூடாக ஜீவா அவர்களின் தமிழக இலக்கியத் தொடர்பு அரும்பி வந்தபோதும, அதன் மலர்ச்சிக்கான பிரதான காரணிகளில் ஒன்று ஜீவா அவர்களின் அரசியற் கோட்பாடென்றே கூறலாம் மார்க்ஸிற்ரான ஜீவா அவர்களைத் தமிழ் நாட்டு முற்போக்குச் சக்திகள் மிகச் சரியாக இனங் கணிடு கொணி டதால் நெருக்கமான உறவுக்குரியவராகவும் கொள்ளப்பட்டார். இத்தோழமையையும், இதன் வலிமையையும் சரிவரப் புரிந்து கொண்ட ஜீவா அவர்கள், பல ஆயிரம் பிரதிகள் வெளியிடும் தமிழ்நாட்டுப் பிரபல சஞ்சிகைகளில் அன்று முதல் இன்று வரை எழுதாது சரஸ்வதி தாமரை ஆகிய சஞ்சிகைகளுடன் மாத்திரமே தமது தொடர்பினை வைத்துக்கொண்டார். ஜீவா அவர்களைப் போன்றே தோழமைக்குரிய சஞ்சிகைகளுக்கூடாக வளர்ந்து, பின்னர் தம்மைச் சீரழித்துக் கொண்டவர்கள் போலல்லாமல், ஜீவா அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொண்டார். அரசியற் கொள்கை சார்ந்த இந்த உறுதியே தமிழ் நாட்டில் ஜீவாவின் நண்பர் குழாத்தினை இற்றைவரை பேணி வளர்த்து வந்திருக்கின்றது.
ப. ஜீவானந்தம் அவர்களின் சந்திப்பின் பின்னர் சரஸ்வதி வழிவந்த தமிழக அறிமுகமானதும் , கொள்கை சார்ந்த தோழமையின் பின்னணியில் மலர்ந்து, அதன் பின்னர் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெற்றமைக்கான காரணிகளாக, ஜீவா அவர்கள் தமது நுால்களைத் தமிழ் நாட்டுப்
62 - தெணியாள் "மல்லிகை ஜீவா
 
 

பிரசுராலயங்களுக்கூடாக வெளியிட்டமை, தமிழ் நாட்டுக்குப் பல தடைவைகள் பிரயாணஞ் செய்து படைப் பாளிகளுடனும் , தோழர்களுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டமை, மல்லிகையின் ஆசிரியராக மலர்ந்தமை என்பவற்றைக் குறிப்பிடலாம். ஜீவா அவர்களின் நுால்கள் யாவுமே (முதற் பதிப்பு இலங்கையில் வெளிவந்த நுாலும்) தமிழகத்துப் பிரசுராலயங்கள் மூலம் வெளிவரும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டன.
தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுதிகளும் அனுபவ முத்திரைகள் என்னும் கட்டுரைத் தொகுதியும, ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் என்னும் பேட்டிகள, கட்டுரைகள் அடங்கிய தொகுதியும் தமிழகத்திலேயே வெளிவந்தவையாகும். தமிழகம் தனது நாட்டு எழுத்தாளனுக்கு வழங்கும் வாய்ப்பினையும் கெளரவத்தினையும் கடல் கடந்த இன்னோர் நாட்டு எழுத்தாளரான ஜீவா அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இத்தகைய ஒரு வாய்ப்பு ஜீவா தவிர்ந்த இன்னோர் எழுத்தாளருக்கு இன்றுவரை கிடைக்கவில்லை என்பதே பெரும் உண்மை, மிக அதிகமான மறுபதிப்புக்களாக வெளிவந்த ஈழத்து நூல்களும் ஜீவா அவர்களின் நுால்களே இவற்றால் நீண்ட காலத்துக்கு முன்னரே தமிழகத்தில் மிகப் பிரபல்யம் படைத்த ஓர் ஈழத்துப் படைப்பாளியாக விளங்குகின்றவரும் ஜீவா அவர்கள்தான்.
ஈழத்து எழுத்தாளர்களுக்குள்ளே தமிழகத்துக்குப் பல தடவைகள் சென்றதன் மூலம் தமது உறவினை நெருக்கமாக வளர்த்துப் பலப்படுத்திக் கொள்வதற்கும் ஜீவா அவர்கள் தவறவில்லை. பிரபல எழுத்தாளரான ஜெயகாந்தனோடும் தமிழ் நாட்டில் வாழக்கூடிய கொள்கை சார்ந்த தோழர்களோடும் தமது உறவினை வைத்துக்கொண்டிருந்த ஜீவா அவர்கள், பல தடைவைகள் அங்கு போய் வந்ததன் மூலம் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, இராஜபாளையம் போன்ற இடங்களுக்கும் சென்று அங்கு வாழும் எழுத்தாளர்களுடனும், இலக்கிய ஆர்வலர்களுடனும், கொள்கை சார்ந்த தோழர்களுடனும் நேரிற்கண்டு பழகித் தமது உறவினை மேலும் விரிவுபடுத்தி வந்திருக்கின்றார். கேரளத்தின் தலை நகரான திருவனந்தபுரம் வரை சென்று நீல பத்மநாபன், ஆ.மாதவன், சுந்தரராமசாமி, பொன்னீலன் போன்ற படைப்பாளிகளை நேரிற் சந்தித்துப் பேசிக் கருத்துப் பரிமாறி இருக்கின்றார், என்னும்போது ஜீவா அவர்களின் எழுத்தாளர்களோடு உறவை வளர்த்துக்கொள்ளும் மனப்பாங்கும் புலப்படுகின்றதல்லவா?
"மல்லிகை ஜீவா" - தெணியாள் 63

Page 35
இன்னும் இரண்டு ஆண்டுகளில் வெள்ளிவிழாக் காணப்போகும் மல்லிகையின் ஆசிரியராக, ஜீவா அவர்கள் இருந்து வருவதும், தமிழ் நாட்டோடு அவருக்குள்ள தொடர்பானது மேலும் வளர்வதற்குரிய வேறொரு காரணமெனலாம். மல்லிகை தமிழ் நாட்டு இலக்கிய வாசகர்களுக்குப் பரவலாக கிடைத்து வரும் ஒரு சஞ்சிகையல்ல. ஆயினும் பரவலாக தமிழ் நாட்டு வாசகர்களால் அறியப்பட்ட ஒரு சஞ்சிகையாக இருந்து வருகிறது. குறிப்பிட்ட சில தமிழ் எழுத்தாளார்களும் இலக்கிய ஆர்வலர்களும் மல்லிகையைத் தொடர்ந்து படித்து வருகின்றனர். தமிழ் நாட்டுப் படைப்பாளிகளான மேத்தா, வானமாமலை, வல்லிக்கண்ணன், தி.க.சி, சமுத்திரம், அசோக மித்திரன், நீல பத்மநாபன் ஆகியோர் மல்லிகையில் அவ்வப்போது எழுதியும் வருகிறார்கள். தமிழ் நாட்டு எழுத்தாளர் பலரின் உருவங்களை அட்டையில் தாங்கி மல்லிகை இதழ்கள் பல வெளிவந்திருக்கின்றன.
ஜீவா அவர்கள் தமிழ் நாட்டுடன் வளர்த்துக்கொண்ட உறவின் காரணமாக உண்டான விளைவுகள் பல எனலாம். தமிழகத் தொடர்பின் வளர்ச்சிக் கட்டத்தின்போதே, இவ்விளைவுகள் இன்னொரு புறம் உருவாக ஆரம்பித்துவிட்ட, 1960 -ஆம் ஆண்டிலேயே இதன் வெளிப்பாட்டினைக் கண்டு கொள்ள முடிகின்றது. அவ்வாணடில் சரஸ்வதி வெளியீடாக தமிழகத்தில் வெளிவந்த தண்ணீரும் கண்ணிரும் சிறுகதைத் தொகுதியின் முதற் பிரதியில் க.நா.சு, லா.ச.ரா. தி.ஜர, உட்பட நுாற்றுக்கணக்கான தமிழகத்துப் பிரபல எழுத்தாளர்கள் தமது கைச்சாத்தினை மிக்க கெளரவத்துடன் இட்டுப் பெருமைப்படுத்தியுள்ளார்கள்.
ஜெயகாந்தன், ஜீவா அவர்களின் நெருக்கமான நட்புக்குரியவர். இருவரும் இலக்கியத்துறைக்கு வந்து சேர்ந்த வழிமுறைகளிலும் குறிப்பிடத் தகுந்த பெரும் ஒற்றுமைகள் பல உண்டு ஜீவா அவர்களின் மூன்றாவது சிறுக்கதைத் தொகுப்பு நுாலான சாலையின் திருப்பம் ஜெயகாந்தனின் முன்னுரையுடனேயே வெளிவந் நிருக்கிறது. முதற்றொகுதியான தண்ணீரும் கண்ணிரும் தொகுதியில் பின்வருமாறு எழுதி (25 - 11 - 81) ஜெயகாந்தன் கைச்சாத்திட்டுள்ளார்.
"எழுத்து ஒரு தொழிலோ பிழைப்போ அல்ல. நமக்கு அது ஒரு யோகம், இந்த யோகமே நமது ஜீவிதம் நண்பர் ஜீவாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்"
அமரர் ப. ஜீவானந்தம் அவர்கள் அத் தொகுதியில் 27 -11-61ல் தமது கைச்சாத்தினை இடும்போது
64 - தெணியாண் "மல்லிகை ஜீவா"
 

நண்பர் டொமினிக் ஜீவாவுடன் உரையாடிக் கொண்டேன். அவரும் அவர்போன்ற இலங்கைத் தமிழ் எழுத்தாள நண்பர்களும் தக்க திசைவழியில் உறுதியாகச் செல்வதை நன்கு அறிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. எனது கலை இலக்கிய உடம்பிலும் புது இரத்தம் பாயும் பேறு பெற்றேன். வாழ்க அவர் பணி, வளர்க அவர் தம் கலைத்திறன்' எனக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.
இன்று மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. பட்டப் படிப்புக்கான நூல்களுள் ஜீவா அவர்களின் தண்ணீரும் கண்ணீரும் சிறுக்கதைத் தொகுதியும் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. 1981 ஜனவரி 17, 18-ஆம் திகதிகளில் தமிழ் நாட்டில், "வறுமையும் சாதியமும்" என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சிறுகதையும் சாதியமும்' என்னும் பொருளில் உரையாற்றுவதற்கு அழைப்புப் பெற்றவர் ஜீவா அவர்கள். அக் கருத்தரங்கு உரைகள் இன்று நுால் வடிவம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.
மல்லிகையின் 16-வது ஆண்டு மலரின் வெளியீட்டு விழா தமிழகத்திலே நடைபெற்றது. அவ் விழாவில் குமரி அனந்தன், வல்லிக் கண்ணன், ரகுநாதன் ஆகியோர் கலந்து கொண்டு, மல்லிகையின் காத்திரமான இலக்கியப் பணியினையும் ஜீவா அவர்களின் அயராத இலக்கியப் பணியினையும் பாராட்டிப் பேசினர். மதுரைப் பல்கலைக் கழகம் ஒரு தடவை ஜீவா அவர்களைக் கெளரவ விருந்தினராக அழைத்துப் பெருமைப்படுத்தி இருக்கிறது. சென்னை வானொலி ஜீவா அவர்களை அழைத்துப் பேட்டி கண்டு ஒலிபரப்பி இருக்கிறது, இதயம் பேசுகிறது சார்பில் குமரி அனந்தனுடன் நடைபெற்ற பேட்டியினை உள்ளட்டைப் படங்களுடன் அச் சஞ்சிகை வெளியிட்டிருக்கிறது. ஈழத்து எழுத்தாளர்களுக்கு மாத்திரமன்றி தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கே வழங்காத பெரும் வாய்ப்பினை தமிழ் நாட்டுப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் ஜீவா அவர்களுக்கு வழங்கி இருக்கின்றன.
தாமரை (மூன்று தடவைகள்), சமூக நிழல், கணையாழி, கல்கி, மக்கள் செய்தி, ஜனசக்தி (இருதடவைகள்), தீபம், சகாப்தம், ஜீவா, தீக்கதிர், இதயம் பேசுகிறது, சாவி ஆகியவை ஜீவா அவர்களின் கருத்துக்களையும், பேட்டிகளையும் அவ்வப்போது வெளியிட்டு வந்திருக்கின்றன.
குமுதம் போன்ற ஜனரஞ்சக சஞ்சிகைகள்கூட, ஜீவா அவர்களின் பக்கம் தமது பார்வையைத் திருப்புவதற்குத் தவறவில்லை, குமுதம்
"மல்லிகை ஜீவா" - தெணியான் 65

Page 36
தீபாவளிச் சிறப்பிதழுடன் (6 - 11 - 80) ஜீவா அவர்களின் அனுபவ முத்திரைகள்" என்ற நூலின் ஒரு பகுதியினை அனுபவங்கள் விசித்திரமானது" எனத் தலைப்பிட்டு அனுபந்தமாக வெளியிட்டுள்ளது.
ஜீவா அவர்களிடத்தில் ஒரு தனிச் சிறப்புண்டு தாம் மாத்திரம் வளர்ந்தாற் போதாது, தமது சகோதர எழுத்தாளர்களும் வளரவேண்டுமென்ற பரந்த மனப்பாங்கே அது. இத்தகைய மனப்பாங்கின் வெளிப்பாடாக தமிழ் நாட்டில் தமக்கிருக்கும் தொடர்பினையும் செல்வாக்கினையும் தருந்த வாய்ப்பாகக் கொண்டு, தெணியான், மேமன்கவி, திக்வல்லைக் கமால், சாந்தன், ஆப்டீன், செங்கையாழியான், கே. ஜயதிலக ஆகியோர்களின் நுால்கள் தமிழ் நாட்டுப் பிரசுராலயங்களுக்கூடாக வெளிவரத் தகுந்த ஏற்பாட்டினைச் செய்திருக்கின்றார்.
இவ்வாறெல்லாம் தமிழகத்துடன் தமது தொடர்பினை ஏறத்தாழ முப்பது ஆண்டு காலம் ஈழத்தின் இலக்கியக் குரலாக ஒலித்துவரும் ஜீவா அவர்கள் அதன் பேறாக நல்ல விளைவுகள் பலவற்றைப் பெற்று, இன்று வலிமையாக வேரூன்றி நிற்பதற்கான நியாயப்பாட்டினை ஜீவா அவர்களின் ஆணித்தரமான கருத்துக்களிலேயே காணலாம்.
ஆரோக்கியமான கருத்துக்கள் மக்களிடம் சென்றடைவது சற்றுச் சிரமந்தான். அக் கருத்துக்களின் அடிப்படை வித்துக்கள் மக்கள் மனதில் வேரூன்றி விட்டால் இறுதியில் அது மாபெரும் சக்தியாக உருவெடுத்துவிடும்.
(முன்னுரை: ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல்)
ஈழத்தின் இன்றைய நெருக்கடிகள் காரணமாக இலங்கை எழுத்தாளர்கள் சிலர் தமிழகத்தினைத் தமது புகலிடமாகக் கொண்டுள்ள போதிலும், இரு நாடுகளுக்குமிடையேயுள்ள இலக்கியப் பாலமாக இன்றும் விளங்குகின்றவர் ஜீவா அவர்கள்தான். தமிழக-ஈழத்து இலக்கியத் தொடர்பின் வரலாறே மிகத் தெளிவானதும், உறுதியானதுமாகும்.
66 ܚ ][anfirJnffir "மல்லிகை انبوہ' [

மல்லிகையும் ஆசிய முறைமையும்
- āourt. 6lagшул6*/х
மல்லிகையின் பெளதீக ஆக்கம் அதன் உள்ளடக்கம் ஆகியவற்றுக்கும், ஆசிய முறைமை என்று சமூகவியலாளர் குறிப்பிடும் ஒழுங்கமைப்பிற்கு மிடையே நெருங்கிய தொடர்பு உண்டு. சமூகக் கட்டமைப்புக்களின்படி மலர்ச்சியில் ஒரு சமூகக்கட்டமைப்பு முற்றாக நிர்மூலமாகிய, அடுத்த கட்டமைப்பு வளர்ச்சி கொள்ளாத நிலையை ஆசிய முறைமை எடுத்துக்காட்டும். இதனை மேலும் விளக்கலாம். அடிமை முறைச் சமூக அமைப்பிலிருந்து, நிலமானிய சமூக அமைப்பு, முதலாளித்துவ சமூக அமைப்பு என்றவாறு ஒன்று முற்றாக அழிந்து மற்றையது புரணமாகத் தோன்றிய நிலையினை ஆசிய முறைமையிலேயே காணமுடியாது. முன்னைய சமூக அமைப்புக்களின் எச்சங்கள் வலுவுடன் தொழிற்பட்டு வருவதன் காரணமாகப் பல்வேறு தாக்கங்களை அவதானிக்க முடியும்.
சாதிமுறைமை பல்வேறு தளங்களிலே தொழிற்படுதல் - குடும்ப உறவுகள் தனிநபர் நடத்தைகளிலே அதீத தாக்கங்களை விளைவித்தல்விஞ்ஞானமும், கல்வியும் ஊடுருவிப் பரவுகின்ற பொழுதிலும், காலத்துக்கொவ்வாத கருத்துக்கள் நீறு புத்த நெருப்பாகச் சுடர்விடல், முதலிய பல்வேறு பண்புகளை ஆசியமுறைமையிலே காணலாம்.
மேற்கூறிய ஆசிய முறைமையின் பன்னணில் மல்லிகையின் இலக்கிய உற்பத்தி முறைமையை நோக்கவேண்டியுள்ளது. இலக்கிய உற்பத்தி முறைமைக்குரிய வலு, பொருள் உற்பத்தி முறைமையிலிருந்து பெறப்படுகின்றது.
"மல்லிகை ஜீவா" ーFum 回四u『I浮I 67

Page 37
அதாவது பொறிகளின் றிப் பெருமளவு உடல் உழைப் பிலே சம்பந்தப்பட்டதாய்க் காணப்படுதலும் ஆசிய முறைமையின் பிரசுர வெளிப்பாடுகளாயுள்ளன.
சந்தை வளர்ச்சியின் காரணமாக இலக்கியம் ஒரு நுகர் பொருளாக மாற்றப்படுகின்றது. இலக்கியம் நுகள் பொருளாக மாற்றப்பட, மேலை நாடுகளிற் கேள்வி நிரம்பல் என்ற இரு வலுக்களினதும் செயற்பாடுகள் பகுத்தாரயப்படுகின்றன. கேள்வி நிரப்பலும், இலாப நோக்கமும் ஒன்றிணைந்து வெகுசன வாக்கத்தை மேலைப் புலத்திலே தோற்றிவித்துள்ளன.
வெகுசன இலக்கியம் என்பது வெகுவாக மலினமடைந்த ஆக்கத்தைக் குறிப்பிடும். நுண் உணர்ச்சிகளைத் துாண்டுதல், ஆபாசத்தையும், திகிலையும் முன்வைத்தல், குறித்த சில வாய்ப்பாடுகளுக்கு அமைந்து எழுதுதல் முதலியவை வெகுசன இலக்கியப் பண்புகளாகும். மல்லிகை போன்ற சிறுசஞ்சிகைகள் மேற்கூறிய மலினப் போக்கை முறியடிக்கும் எதிர் நீச்சலை மேற்கொண்டுள்ளன. ஆயினும் அறிந்தோ அறியாமலோ சந்தைச் செயற்பாடுளுக்கும் இடமளித்தல் புரட்சி எதிர்ப்புரட்சி என்பவற்றுக்கிடையே சமாதானம் காணல் என்பவற்றையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சமாதானம் காண முனையும் இருமுனைகளை மேலும் விளக்கலாம். பொருளாதார, சமூக அணுகு முறைகளில் இருந்து இலக்கிய அணுகு முறைவேறுபட்டது என்றும், தனிச்சிறப்பான விதிகளுக்கு அது உட்படுகின்றது என்றும் நவமார்க்சியவாதிகளும், எதிர்ப் புரட்சியாளரும் கருதுகின்றனர். மார்க்சிய அணுகு முறை அந்தக் கருத்தை அடியோடு நிராகரிக்கின்றது. மார்க்சியவாதிகளுக்கு ஒரு தளமும் ஒரு வரையறையும் சிலர் குறிப்பிடுவது போல ஒரு பிறேமும் இருக்குமென்றால் மார்க்சியத்தை நிராகரிக்கும் எழுத்தாக்கங்களைத் தருவோருக்கும் ஒரு தளமும் வரையறையும் பிறேமும் உண்டு மல்லிகை போன்ற சிறு சஞ்கிகைகள் அதுவும் ஜீவா போன்ற சமூக அடுக்கு நிரையாற் சுரண்டப்பெற்ற ஓர் உழைப்பாளியின் உதிரத்தில் உருவாகிய சிறு சஞ்கிகைகள் தொடர்ந்தும் மேற்கூறிய கருத்து முனைகளுக்குமிடையே சமாதானம் காணவேண்டுமா? என்பது ஆய்வுக்குரியது.
ஆசிய முறைமையோடு பெருமளவிலே தொடர்பு கொண்ட இலக்கிய வாதங்களாக தொல்சீர்வாதமும், புனைவு நிலை வாதமும் விளங்கும். இவ்விரு வாதங்களும், மேற்குலகின் குறித்த வரலாற்றுச்
68 - FUIT, GliguUU ITTFIT "மல்லிகை ஜீவா
 

சூழல் களிலே தோன்றினாலும் இந்நாட்டு எழுத் தாக்கங்களிற் பெரும்பான்மையானவை மேற்குறிப்பிட்ட கோட்பாடுகளுக்குடபட்டவையாகவே விளங்கும் தொல் சீர்வாதம் பாரம்பரியங்களை வழுவாது பின்பற்ற முயல்வது. பொதுப்பண்புகளை காட்டும் கதா பாத்திரப் புனைவுகளையும் தருவது, புனைவு நிலை வாதம் பொதுவியல்புகளைக் கடந்த தனி மனிதப் பன்புகளுக்கும், தனிமனித மனவெளிச்சிகளுக்கும் நுண்ணுணர்ச்சிகளுக்கும் முதன்மையளிக்கின்றது.
எமது எழுத்தாக்கங்களின் வளர்ச்சி தொல் சீர்வாதத்தில் புனைவுநிலை வாதப் பணி புகளை நோக்கிய பெயர்ச்சியாகவே காணப்பட்டது. சோஸலிச யதார்த்தவாதப் பாங்கைக் கொண்ட கலை இலக்கிய ஆக்க முயற்சிகளுக்கு உரிய தவிர்க்க முடியாத சமூகத் தேவை, மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுது, அவசியமற்றது போலத்தோன்றலாம். ஆயினும் சமூக முரண்பாடுகள் குறிசுடுவன போன்று செயற்பட வல்லன. இன்னிலையில் நலிவடையாத ஒரு சமூக நிருமாணத்திற் பங்கு கொள்ள வேண்டிய ஓர் இலக்கியப் பணியை மல்லிகை நம்பிக்கையுடன் நிறைவேற்றி வைக்கவுள்ளது.
படிமங்கள் வாயிலாக சிந்தனையை உள்ளடக்கிய நுண்மதிச் செயற்பாடுகள் கலைச் சிருஷ்டிச் செயல்முறையிலே சிறப்பிடம் பெறுகின்றன. புறவுலக நிகழ்ச்சிகளிலே சிந்தனைப் பரப்பிலே படிமங்களை உருவாக்கத் துணை நிற்கின்றன.
மெய்ம்மையை நேரடியாகப் பிரதிநிதித்துவப் படுத்துவது கலையாகமாட்டாது. மெய்ம்மையிலிருந்து சுயாதீனப்படும் செயற்பாடாகவும் கலையாக்கம் திகழ்வதுண்டு கலையாக்கத்துக்குரிய தனித்துவமும், சுய செயற்பாடுகளும் உள. இவ்வாறு கூறும் பொழுது மெய்ம்மையை நிராகரித்து விடுவதாகக் கொள்ள முடியாது எவ்வகைப் படிமங்கள் தோன்றுவதற்கும் மெய்மையே அடிப்படையாக உள்ளது என்பதை மனங்கொள்ள வேண்டியுள்ளது. மெய்ம்மையோடு இணைப்புக் கொண்ட எண்ணக் கருவின்றிச் சொற்கள் வாழ முடியாது.
வரலாற்றுக் காலம் தொடக்கம கலைகள் மனிதனின் நம்பிக்கைக்குரிய தோழமையைக் கொண்டிருந்தன. மனித மனத்தை வளர்ப்பதற்கும், பண் படுத்துவதற்கும் அவை துணைசெய்து வந்துள்ளன. இந்நிலையில் கலையின் பண்புகனை வெறும் பொழுது போக்குப் பணியாக மட்டும் சுருக்கிவிட முடியாது,
"மல்லிகை ஜீவா" - சபா, ஜெயராசா 69

Page 38
கலை, இலக்கியங்களின் பணிகள் இருமைத் தன்மைகள் கொண்டவை. அறிகையும், அழகும் என அவை குறிப்பிடப்படும் அறிகையும், அழகும் பிரிக்க முடியாத ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. மனித விருத்திக் கூர் முனைகளின் நுண்ணுணர்வுகள் கலை இலக்கியங்களின் வழியாக வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆண்டான் - அடிமை முறைச் சமூகத்தின் தொடர்ச்சியாக விளங்கிய சாதி ஒடுக்கு முறையின் சோக நிகழ்ச்சிகள் முற்றாகத் தளர்ந்து விடாத நிலையைக் குறிப்பிடும் ஆசிய முறைமையின் முரண்பாடுகள் தீவிர கவனத்தை ஒரு காலக்கட்டத்திலே ஈர்த்து நின்றன.
வரலாற்று நிகழ்ச்சிகளினுாடாகத் தோன்றிய மனித நுண்மதி விருத்தி யதார்த்தம் என்ற முறையியலைக் கண்டறிந்துள்ளது. நெருக்கடிகளையும், அவலங்களையும் உய்த்துணர்ந்து கொள்ள இம்முறை வலுவான ஒரு கருவியாயிற்று, சமூகச் செயல் முறை பற்றிய ஒரு தெளிவைக் கலை இலக்கியங்களிலே காட்டுவதற்கும் இது உறுதுணையாயிற்று.
ஆனால், யதார்த்த வாதம் ஆசிய நாடுகளிலே தீவிர எதிர்ப்பை முகம் கொடுக்க நேரிட்டது. சமூகத்தைப் பகுத்தாராய முற்பட்டமை குடும்ப வழியாக அனுகூலம் பெற்றோருக்குக் கசப்பானதாகவும் விளங்கிற்று.
இந்நிலையில், சமூகத்தின் நிலை மாற்றத்துக்குப் புதிய சவால்களுக்கும் மல்லிகை எவ்வாறு முகம் கொடுத்தது, என்பது நோக்கப்படல் வேண்டும்.
சுதந்நிரமான எழுத்தாக்கம் அனைத்துக் கருத்துக்களுக்கும் சந்தர்ப்பம் அழித்தல்' என்பவை முதற்கண் முனைப்படைகின்றன. மேற்கு நாடுகளில் யதார்த்த இலக்கியங்களுக்கு எதிரான கோஷங்கள் மனிதன் சுதந்திரமாகப் பிறக்கின்றான். ஆனால் அவன் மீது அடிமைச் சங்கிலிகள் எங்கும் தொடுக்கப்பட்டுள்ளன. என்ற குரல்களுடன் எழுத்து வடிவில் எழுச்சி கொண்டன. ஆசிய முறைமையில் ஒருவன் பிறக்கும் பொழுதே பிணைப்புகளுடன் பிறக்கின்றான்.
தனிமனித சுதந்திரத்தின் வற்புறுத்தல் , ஒன்றுபட்ட கூட்டுழைப்பிலிருந்து விடுப்பட்ட மனித உதிரி நிலைகளைப் புலப்படுத்தின. எவ்விதத்திலும் அடாத்துச் செய்யமுடியாத ஒரு சமூக அமைப்பின்
70 - FUIT. GliguUyir:Fir "மல்லிகை ஜீவா
 

வழியாகவே தனிமனித சுதந்திரம் ஈட்டப்பட முடியும் என்ற யதார்த்த அணுகு முறை பிரதியீடுகள் அற்றது. தனிமனித சுதந்திரம் பற்றிய எழுத்தாக்கங்கள் தனிமனிதச் சொத்துரிமையின் எழுச்சியோடு தொடர்பு பட்டிருந்தன. தனிமனித ஆக்கம் வாயிலாகவே சமூக ஆக்கம் என்பதை இக் கொள்கைகள் வலியுறுத்தின. இக்கருத்து ஆசிய முறைமையின் அற ஒழுக்கங்கள் வாயிலாகவும் சமய இலக்கியங்களினுாடாகவும் வற்புறுத்தப்பட்டது. இவைப்பற்றிய தெளிவும் தேடலும் மல்லிகை போன்ற சஞ்சிகைகளுக்கு அவசியமானவைகு
"மல்லிகை ஜீவா" - FUIT. GligguUTCržFIr 71

Page 39
சிடாமினித் ஜீவா
முந்போக்கு முகாமில் ஒரு முண்னோடி
-ஜ. ஆர். அரியாத்தினம்
இ ந்த 88 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறுபது வயதை முடிக்கின்ற டொமினிக் ஜீவா, இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழ் நாட்டவர்கள் மத்தியிலும், தமிழ் இலக்கியத்தைப் புதிய வழியில் மறுமலர்த்துவதற்கு ஆற்றிய பங்களிப்பு மிகக் கணிசமான அளவு முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும்,
பல்வேறு அந்நிய ஏகாதிபத்தியங்களின் அடக்கு முறை காரணமாகத் தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்கிளுக்கும் இந்திய உபகண்டத்திலுள்ள பெரும்பான்மையோரும் பல நூற்றாண்டுகளாகத் தமது புராதன கலைமற்றும் இலக்கியங்களுடன் தொடர்பறுத்த நிலையிலிருந்தனர். கடந்த நுாற்றாண்டின் கடைசிப் குதியிலேயே ஏறத்தாழ விடயங்கள் எல்வாவற்றிலுமே மறுமலர்ச்சி முகிழத் தலைப்பட்டது. இவ்வாறுதான் யாழ்ப்பாணத்தில் தோன்றிய ஆறுமுகநாவலர் இங்குள்ள தமிழ் மக்களை மட்டுமன்றித் தென்னிந்தியாவிலுள்ள தமிழ் மக்களையும் தட்டியெழுப்பிவைத்தார். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் தான் தெற்கில் தோன்றிய அநாகாரிக தர்மபாலா இவ்வாறான பணியைத் தெற்கில் மேற்கொண்டார். ஆனால் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் இன்னும் இலங்கைத் தீவில் நிலைத்திருக்கும் போதே இவர்களின் வாழ்வு முடிந்து விட்டது. எனவே இவர்களின் மறுமலர்ச்சிப் பிரயத்தனங்கள் இடை நின்று போயின. வாஸ்தவத்தில் இவர்கள் காலமாகிப் பல காலத்தில் பின்னரையே மறுமலர்ச்சிக்கு இவர்கள் ஆற்றிய பங்குப் பணியை மக்கள் புரிந்து கொள்ளத் தலைப்பட்டனர்.
"மல்லிகை ஜீவா" -ஐ ஆர். அரியாக்ரீனம் 72
 

சுதந்திரத்தையடைந்த நாள் முதல், தமிழ் மொழியில் சிருஷ்டி எழுத்து முயற்சிகளுக்குப் புத்துயிரளிக்க வேண்டுமென்ற ஒரு முனைப்பான ஆர்வம் தமிழ் அறிஞர்கள் மத்தியில் இருந்து வந்தது. தமிழ் நாட்டில், ஒரு பாரிய சமூக அரசியல் சக்தியாக அண்ணாத்துரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தலையெடுத்தமை, எமது நாட்டிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை. முதல் தடவையாக, இங்குள்ளவர்களுக்குச் சொந்த மற்றும் மக்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இலக்கியம் படைப்பது பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தனர். அம் முயற்சிகளின் போது கடந்த காலப் பிடியிலிருந்து விடுபட வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழுஞ் சரி, அதற்குப் பின்னருஞ் சரி நீண்டகாலாமாகக் கடந்த காலத்தை ஏற்றிப் போற்றுவதும், மாணவர்கள் மத்தியில் தமக்கெனச் சொந்த இலக்கியமொன்றினைச் சிருஷ்டிக்கும் உணர்வை ஊட்டாமல், கடந்த கால இலக்கிய விற்பன்னர்களின் நுால்களை மட்டும் வியாக்கியானித்து விளக்கஞ் செய்வது மட்டும் தமிழ் அறிஞர்களின் போக்காக இருந்தது.
இலக்கியம் எனப்படுவது வாசகர்களின் கருத்தைக் கவரும் விதத்தில் வாழ்க்கை அனுபவத்துக்கு எழுத்தாளர்கள் புனர் சிருஷ்டி அளிக்கின்ற ஒரு பிரயத்தனமே. வரலாற்றின் எல்லாக் காலகட்டங்களுமே அக் காலகட்டங்களில் வாழ்ந்த சிருஷ்டி கர்த்தாக்களின் ஆக்க இலக்கியத்தால் சிறக்கச் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கிரேக்க சகாப்தம், அதனது சக்கரவர்த்திகள் மற்றும் மன்னர்களின் பெயர்களாலன்றி சோக்கிரடீஸ், பிளட்டோ, அரிஸ்ரோட்டில் போன்ற அக்கால கலாசார, தத்துவத்துறை மேதைகளாலேயே நினைவு கூரப்படுகின்றது. அதே போலத்தான் தென்னிந்தியாவில் தமிழ் செழித்து வளர்ந்த காலகட்டமும், அக்கால மன்னர்களின் வீரதீரச் செயல்களாலன்றி, அத்தருணம் ஆக்கப்பட்ட இலக்கியங்களை மேற்கோள் காட்டியே நினைவு கூரப்படுகிறது. இந்த வெளிச்சத்தில்தான் இலக்கியத்தின் தமிழ் மக்கள் மத்தியில் சிருஷ்டி இலக்கியத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கு டொமினிக் ஜீவா ஆற்றிய பங்குப்பணியை நாம் ஆராய வேண்டும்.
டொமினிக் ஜீவா ஒரு மிக வறிய குடும்பத்தில் பிறந்தவர் என்பதை எவருமறிவர் ஒரு சலுானில் வேலைசெய்து பெற்ற சிறு வருமானமே அவர்களது ஜீவனோபாயமாக இருந்தது. சமூகரீதியில பாகுபாட்டுக்குட்படுத்தப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தையும் சார்ந்தவர் ஜீவா, இந்தச் சூழ் நிலைமைகள் அவர் ஒரு ஆக்க இலக்கிய கர்த்தாவாக உருவாகி மலருவதற்கு முட்டுக்கட்டைகளாக இருந்தன. சில சமயம் இந்த அனுபவங்களே அவரது சாதனைகளுக்கான பலத்தையும், பணித்
73 围 ஆர். இரியரத்திரம் "மல்லிகை ஜீவா"

Page 40
திறத்தையும் கொடுத்திருக்கக் கூடும். பாகுபாடு காட்டப்பட்ட ஒரு சமூகத்தைத் சார்ந்தவரென்பதினால் அவர் இயல்பாக இந்த கேடுகெட்ட நடைமுறைகளுக்கெதிராக கிளர்ந்ததுடன், இந்தச் ஏற்றத் தாழ்வுகளை இல்லாதொழிப்பதற்கான வழி மார்க்கங்களையும் கண்டறியப்பட்டார். இது அவரை அரசியல் வழிபட்ட கிளர்ச்சிக்கு இட்டுச் சென்றதுடன், இறுதியில் கம்யுனிஸ்ட் கட்சி அங்கத்தவராயும் ஆக்கியது. இன்று, தமிழ் ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் மத்தியில் குறிப்பாக அவதானிக்கப்படக் கூடிய அம்சம் என்னவெனில், இவர்களிற் பெரும்பாலானோர் கம்யுனிஸ்ட் கட்சிக்கு அல்லது ஏதோ ஒரு அளவிலான இடதுசாரி அரசியல் இயக்கத்திற்குச் சார்பானவர்களாக இருப்பதுதான். இதற்கான காரணத்தைக் கண்டறிவது இலகுவானது, சமுதாயத்தில் தவறென்பதைச் சரி செய்யவும், மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தவுமென மேற்கொள்ளப்படும்
பிரக்ஞை புர்வமாக முயற்சிகளிலிருந்துதான் சிருஷ்டி முகிழ்கிறது.
தீமைகளுக்கும் அடக்கு முறைக்கும் எதிராகப் போராடுவதற்கான ஒரு மார்க்கம் என்னவெனில், மக்களின் அனுபவங்களுக்கு நேரடி அரசியல் கிளர்ச்சியைக் காட்டிலும் மேம்பட்ட வகையில் - குறிப்பிட்ட பிரச்சினையைத் தார்ப்பரியத்தை வாசகர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் கலை வடிவங் கொடுப்பதே. சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைப் பாடுகின்ற ஒருவர் இந்திய விடுதலைக்கும், சமூக நீதிக்குமான கோஷத்தின் தர்ம நியாயப் பாங்கினை உடனடியாகவே புரிந்து உணர்வுட்டம் பெற்றுவிடுகிறார். இதனால்தான், சமுதாயத்தில் முற்போக்கான மாற்றங்களை ஏற்படுத்துவதில் முற்போக்கு எழுத்தாளர்களின் பங்குப்பணி அளப்பரியதாக உள்ளது. இவ்வாறுதான், பிரெஞ்சுப் புரட்சியிலீடுபட வால் டயர், ரூஸோ போன்றவர்களின் எழுத்துக்கள் மக்களுக்கு உத்வேகமளித்தன. மாபெரும் ருஷ்ய அக்டோபர் புரட்சிக் காலத்திலும், மாக்ஸிம் கார்க்கி, மிஹாயில் ஷொலோகோவ் போன்றோரின் படைப்புக்கள் ருஷ்ய மக்களுக்கு உள்ளுணர்வும் உத்வேகமும் அளித்தன.
மற்றைய எழுத்தாளர்கள் பலரைப் போலவே டொமினிக் ஜீவாவும் மிக இளம் வயதிலேயே எழுத்துலகில் பிரவேசித்தவர். சலுகை மறுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்களாயிருந்தும், இதே காலத்தில் எழுத்துலகில் பிரவேசித்த இவரது சமகால சகாக்கள் பலர், நவீன தமிழிலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு இளங்கீரன், டானியல் போன்ற பெயர்கள் மிகவும் பரிச்சயமானவை . இவர்களுக்கும் ஐம்பதுக்களின் இறுதியிலும் அறுபதுக்களின் ஆரம்பத்திலும் எழுதிய வேறு பலருக்கும் பொதுவான அம்சமாக இருந்தது என்னவெனில், அவர்கள் அக்காலத்தில் கம்யுனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களாக இருந்தமைதான். இதன் முக்கயத்துவத்தை
"மல்லிகை ஜீவா" -ஜ. ஆர். அரியரத்தினம் 74
 

எவரும் உதாசீனம் செய்ய முடியாது. 1930-களின் நடுப்பகுதியிலிருந்து தமிழ் இனத்தைப் பேணுவதற்குத் தாம் மட்டுமே போராடுவதாக ஜீஜீபொன்னம்பலமும், தமிழ் காங்கிரஸினரும் உரிமை பாராட்டி வந்தனர். 1948 -ல் பொன்னம்பலம் இழைத்த துரோகத்தைத் தொடர்ந்து தாமே இப் போராட்டத்தைத் தொடர்ந்து நடாத்துவதாக சமஷ்டிக் கட்சி உரிமை பாராட்டி வந்தது. ஆனால், கடந்த ஐந்து தஸாப்தங்களில் ஒரு ஆக்க இலக்கிய கர்த்தாவையும் நாம் உருவாக்கினோம் என இக் கட்சிகளால் பெருமை பீற்றிக்கொள்ள முடியவில்லை. இவையிரண்டாலுமே சிங்களக் கட்சி என வர்ணிக்கப்பட்ட கம்யுனிஸ்ட் கட்சி, தனது அணிகளில் பல ஆக்க இலக்கிய கர்த்தாக்களை உருவாக்கியது. இதற்கான காரணத்தையும் எவராலும் உதாசீனஞ் செய்துவிட முடியாது. சமுதாயத்தில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்க விழைபவர்கள் கம்யுனிஸ்ட்டுகள் சமுதாயத்திலுள்ள முனைப்பான முரண்பாடுகள் மற்றும் அநீதிகளின்பால் அவர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். அவ்வாறு செய்யும்போது அவர்கள் தமது நிலைப்பாட்டின் பிசகின்மையை உணர்ந்து கொள்ளும் சிந்தனை வளமுள்ளோரைத் தம்மால் ஆகள்ஷித்துக்கொள்கிறார்கள். பின்னர், தமது ஆக்க இலக்கியங்களின் மூலமாகப் பாடுபடும் மக்களின் அபிலாஷைகளுக்கு இவர்கள் வாயிலாகப் புனர்வடிவம் கொடுக்கிறார்கள். இவ்வாறுதான் ஜீவாவும் அவரது சமகால சகாக்கள் பலரும் கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக மாறினர் காங்கிரஸ் மற்றும் சமஷ்டிக் கட்சிகளினது அணிகளில் பலநுாறு மக்கள் இருந்தபோதிலும், அவற்றால் எந்தவொரு ஆக்க இலக்கிய கர்த்தாவையும் ஏன் உருவாக்க முடியாது போயிற்று என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ள முடியும், சமுதாயத்தில் எதுவித திருப்பங்கள் மாற்றங்கள் ஏற்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. அக்காலத்திலிருந்த வர்க்கம் வழிப்பட்ட சமநிலையைத் தொடர்ந்து பேணவே அவர்கள் முயன்றனர். இதனால் பொது மனிதனது அபிலாஷைகளால் கிளர்த்தப்பட்ட சிந்தனையாளர்கள் இவர்கள் பக்கம் திரும்பவில்லை .
ஜீவாவினதும், அவரது சமகால சகாக்களினதும் எழுத்துக்களின் பிரதான தொனிப் பொருட்களில் ஒன்று தமிழ்ச் சமுதாயத்தில் பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்களை இல்லாதொழிப்பதுதான் அண்மைக் காலம்வரை தமிழ்ச் சமுதாயத்தில் பிரபுத்துவம் ஏறத்தாழ தொடர்ந்து பேணப்பட்டு வந்தது. பிரபுத்துவத்தை இல்லாதொழிப்பதற்குப் போர்த்துக்கேய, டச்சு ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை. பிரிட்டிஷார் கூடத் தகர்ந்து விழும் நிலையிலிருந்த பிரபுத்துவ சமுதாய அமைப்பின் மீதே தமது ஆட்சியதிகாரத்தை நிறுவினர். பிரபுத்துவம் பல பொருளாதாரக் காரணிகளை அதிகம் ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை. சாதியமைப்பும்
75 | -g| eligir. Girfiu Jigarh "மல்லிகை ஜீவா"

Page 41
- ஒரு பகுதி மக்கள் மீதான சமூக ஏற்றத் தர்ழ்வு பிரிப்பதுவுமே தமிழ்ச் சமுதாயத்தில் பிரபுத்துவத்துக்கு மிண்டு கொடுக்கும் காரணிகளாக இருந்தன. ஜீவாவைப் போன்று முற்போக்கு எழுத்தானர்கள் பிரபுத்துவத்திற்கு எதிராகப் போராடி வந்த அதே வேளையில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை போன்ற ஸ்தாபனங்கள் சமூகப் பாகுபாட்டிற்கும் அநீதிக்கும் எதிராக நேரடியாகப் போராட்டம் நடத்தின. (உ-ம் ஆலயப் பிரவேசம் மற்றும் தேநீர்க்கடை பிரவேசம் போன்ற போராட்டங்கள்) முற்போக்கு எழுத்தாளர்கள் இதே போராட்டத்தைப் பிறிதொரு பரிமாணத்தில் தொடர்ந்து நடாத்தி வந்தனர். கிராமப்புற வாழ்வின் காட்சிகளைக் கருத்தும், கவர்ச்சியும் மிக்க கதைகளாக வடித்ததன் மூலம் காலாவாதியாகிப் போன நடைமுறைகளையும் பாகுபாடுகளையும் விட்டொழிப்பதற்குக் காலம் வந்துவிட்டது என்ற உண்மையைச் சமுதாயத்திலுள்ள பல்வேறு தரப்பினருக்கும் உணர வைப்பது அவர்களுக்குச் சாத்தியமானது.
பிரபுத்துவ சமுதாயத்துக்கு மிண்டு கொடுக்கும் இன்னுமொரு துாணாயிருந்தது, பெண்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்பட்ட இழிமுறையே நீண்ட காலமாகப் பெண்களுக்குக் கல்வி கற்கும் வசதி மறுக்கப்பட்டிருந்தது, தொழில் செய்யும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இளம் வயதில் குறிப்பாகப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முறைமை, அவர்கள் தமது சொந்தத் துணைவர்களைத் தேடிக்கொள்ளும் சுதந்திரத்தையும் நிராகரித்திருந்தது. இதுவும் பிரபுத்துவ சமுதாயம் ஆதாரமாகக் கொண்டிருந்த பிறிதொரு அத்திவாரமாகும். இந்த முறைமைக்கு எதிராகவும் முற்போக்கு எழுத்தாளர்கள் போராடினர். இன்றும் அவர்களின் போராட்டம் தொடருகிறது. முற்போக்கு எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பல பெண்களும் ஆக்க இலக்கியப் பரப்பில் அடியெடுத்து வைக்க அவர்களுக்கு உத்வேகம் அளித்தன.
1960 -களின் ஆரம்பத்தில், முற்போக்கு, இடதுசாரிச் சிந்தனைப் போக்கினைக் கொண்ட பல இளம் சிருஷ்டி இலக்கிய கர்த்தாக்கள் தோன்றினர். தமது புதிய ஆக்க இலக்கியங்களுடன் மக்களைப் பரிச்சயப்படுத்திக்கொள்ள அவர்களுக்குப் போதுமான உதவி கிடைக்கவில்லை. ஒரு சில தினசரிப் பத்திரிகைகளே இவர்களின் சிறு கதைகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்தன. அத்தகைய ஒரு ஆற்றல் மிக்க ஆக்க இலக்கியக்காரர்களுக்கு அன்று சிறு வாய்ப்புக்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இக்கால கட்டத்தில்தான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றொரு ஸ்தாபனம் உதயமாகியது. இந்த ஸ்தாபனத்தை உருவாக்குவதில் ஜீவா மிக முக்கிய பாத்திரம் வகித்தார். சில காலமாக இந்த ஸ்தாபனம் வளர்ந்து வரும் எழுத்தாளர்களின்ஆக்கங்களைப் போற்றி வரவேற்றவர்கள் மத்தியில் மட்டுமன்றிப், பொதுமக்கள் மத்தியிலும்
"மல்லிகை ஜீவா" -ஐ ஆர். அரியாக்ரீனம் 76
శాఖ t
 

பெரும் மனப்பதிவை ஏற்படுத்தியது. அண்மையான கடந்த காலத்தில் சக்தி வாய்ந்த ஒரு புதிய வலுவான ஸ்தாபனமாக இது பரிணமித்தது. தமிழ் பேசும் பிரதேசங்களில் மட்டுமன்றி, கொழும்பில் கூட, இது பல கருத்தரங்குகளையும் மாநாடுகளையும் நடாத்தியது. சமுதாய விவகாரங்களிலும் முன்னேற்றத்திலும் ஒரு எழுத்தாளன் வகிக்கக்கூடிய பாத்திரத்தை இது தமிழ்ப் பேசும் மக்களுக்கு பிரக்ஞை புர்வமாக உணர்த்தியது. இது தெற்கிலுள்ள சிங்கள எழுத்தாளர்களுடன் பல பயனுள்ள தொடர்புகளை ஸ்தாபித்துக் கொண்டதுடன் இத்தொடர்புகளின் வாயிலாக இந்நாட்டிலுள்ள தமிழர்களுக்கு ஒரு சொந்தமான, பிரத்தியேகமான கலாசாரமும், வேறுபட்ட நடையும் உள்ளடக்கமும் கொண்ட ஓர் இலக்கியமும், கலையும் உண்டென்பதையும், இவை சுயாதீனமாக வளர்ச்சி பெற வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டுமென்பதையும் உணர்த்தியது. இது திருமதி பண்டாரநாயக்காவின் கூட்டரசாங்கத்திற்கும் தமிழ் மக்களின் சில பகுதியினருக்குமிடையே ஒரு பரஸ்பர நல் விளப்பத்தை ஏற்படுத்தும் துணிச்சலான முயற்சியிலும் இறங்கியது. ஆனால் அம்முயற்சி எதிர்பார்த்த அளவு பலிதமாகவில்லை. இந்த ஸ்தாபனத்தினது உருவாக்கத்தில் கம்யுனிஸ்டுக்கள் முக்கிய பங்கு வகித்த காரணத்தினால் கம்யுனிஸ்ட் கட்சியின் ஒரு சித்தாந்த வழிப்பட்ட பிளவு ஏற்பட்ட தருணத்தில் அது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினையும் பாதிக்கவே செய்தது. ஆனால், செயற்பாடு இழந்திருந்த சில காலத்தின் பின்னர், இந்த ஸ்தாபனம் மீண்டும் புத்துயிர் பெற்று இயங்கக் தொடங்கி, தொடர்ந்து தமிழ் மக்களினது விவகாரங்களில் ஒரு முக்கிய பாத்திரத்தை வகித்து வருகிறது. ஜீவா தொடர்ந்தும் இதன் முக்கிய துாணாக நின்று பணியாற்றி வருகிறார்.
ஜீவா தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய மிக பங்குப் பணியாதெனில் மல்லிகை என்ற மாத சஞ்சிகையை ஆரம்பித்து அதைக் கடந்த இரு தலாப்தங்களாகத் தொடர்ந்து நடாத்தி வருவதுதான். குறிப்பிடத்தக்க நிதி வசதிகள் ஏதுமற்ற ஜீவா, தமிழ் நாட்டிலிருந்து வரும் சஞ்சிகைகள் தொடுக்கும் போட்டிகளின் மத்தியிலும் இத்துணை நீண்டகாலமாக இச்சஞ்சிகையைத் தொடர்ந்து நடாத்தி வருகின்றாரெனின், அது அவரது அசாத்திய ஆற்றலையும் தளரா முயற்சியையுமே காட்டுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக இச்சஞ்சிகை வெளியிடுவதில் ஜீவா பெரும் கஷ்ட நஷ்டங்களுக்கு முகம் கொடுத்த பொழுதிலும், அவர் படிப்படியாகத் தமது வாசகர் தொகையையும் ஏஜண்டுகளின் எண்ணிக்கைகளையும் திறமையாகக் கட்டி வளர்த்துக் கொண்டு வருகிறார். நாட்டின் எட்டுத் திக்குகளும் இன்று மல்லிகையையும் ஜீவாவையும் நன்கறியும். தமிழ் நாட்டிலும் மல்லிகைக்கென ஒரு வாசகர் கூட்டமும், ஜீவாவுக்கென ஒரு ரசிகள் கூட்டமும் உண்டு ஜீவா அங்கு நடைபெற்ற பல இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.
77 -ஜ. ஆர். அரியரத்தினம் "மல்லிகை سمكيةn" |

Page 42
தமிழ் ஆக்க இலக்கியத்தின் வளர்ச்சிக்கு மல்லிகை ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பு என்னவெனில் வளரும் இளம் எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்குத் தனது பக்கங்களில் களம் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தமைதான். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் நிலவிய் சூழ்நிலைமைகளில் எமது தமிழ் வாசகர்கள் தமிழ் நாட்டிலிருந்தே வரும் சஞ்சிகைகளின் தயவிலேயே தங்கியிருக்க வேண்டியிருக்கிறது. இச் சஞ்சிகைகளை வாசித்து மகிழ்ந்தவர்கள் இத்துறையில் தமது சொந்தக் காலை ஊன்றி நிற்கப் போராடிய ஒரு ஆசிரியரைப் பற்றி சிந்திக்கவில்லை தமிழ் நாட்டிலும் இலங்கையிலுமுள்ள வாழ்க்கை நிலைமைகள் வேறுபட்டவை இறக்குமதியாகும் இச் சஞ்சிகைகளை வாசிப்பதன் மூலம் இங்குள்ள ஒருவர் தம்மைச் சூழவுள்ள வாழ்க்கையைச் சித்தரித்து ஆக்கபுர்வமான இலக்கியத்தைப் படைப்பதற்கான உள்ளுணர்வோ உத்வேகமோ பெற்றிருக்கமாட்டார். உள்நாட்டில் பிரசுரமாகும் ஒரு சஞ்சிகையாலேயே இத்தகைய ஒரு வாய்ப்பினை நல்கி இருக்க முடியும். மல்லிகை இப்பணியைத் திறம்படச் செய்தது. செய்து வருகிறது. மல்லிகை வாயிலாகப் பலப்பல இளம் ஆண், பெண் எழுத்தாளர்கள். தங்களைப் பரஸ்பரம் பரிச்சயம் பண்ணிக் கொண்டுள்ளனர் மல்லிகை முற்போக்கு எழுத்தாளர்களை, ஓரணியில் அரவணைத்து நிற்கிறது. அவர்களின் சங்கத்தை வலுப்படுத்துகிறது.
ஜீவா தனது அறுபதாவது வயது பூர்த்தித்தினத்தைக் கொண்டாடுகிறார். அவரது எழுத்துக்களைப் படித்து மகிழ்ந்தவர்களும், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தனது சக்திகளனைத்தையும் மனித மேம்பாட்டுக்கென்ற பணிக்கு அர்ப்பணித்த அவரது அசாதாரண ஆற்றலை அறிந்து கொண்டவர்களும் - அவரை என்றும் போற்றுவர்.கு
"மல்லிகை ஜீவா" -ஐ ஆர். அரியரத்தீனம் 78
 

மணிவிழாக் காணும் மல்லிகை ஜீவாவும் மலையக இலக்கியமும்
- சிதளிவத்தை ஜோசப்
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை, அதிலும் குறிப்பாக முற்போக்கு இலக்கியத்தின் வளர்ச்சியை அறியப்படுத்துவதும் அதற்காக உழைப்பதையுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிவரும் மல்லிகையின் ஆசிரியர் ஜீவா, தனது இலக்கியப் பயணத்தில் மலையக இலக்கியத்துக்கு ஆற்றியுள்ள பங்களிப்பைப் பற்றி நோக்கு முன் மலையக இலக்கியம் பற்றிய ஒரு சிறு முன்னோட்டமும் அவசியமானதெனவே கருதிகிறேன்.
ஈழத்து இலக்கிய உலகில்- மலையக இலக்கியம்- என்னும் பதம் சற்று அழுத்தமாக விழுந்தது 1960-க்குப் பின்னர்தான். அறுபதுக்குப் பின் எழுந்த இந்தப் புது உத்வேகத்துக்குக் காலாய் நின்ற மூத்த தலைமுறை எழுத்தாளர்களும் இதை மனப் புர்வமாகவே ஒத்துக்கொள்வர்.1820-க்குப் பிறகே ஆரம்பித்த மலையக சரித்திரத்தில் 1920-க்குப் பிறகே, கோநடேசய்யர், அப்துல் காதிரிப் புலவர் போன்ற ஓரிருவர் எழுத்துத் துறையில் ஈடுபட்டனர். அதன் பின், 1930-க்குச் சற்று முன் பின்னாக திருவாளர்கள் கே.கணேஷ் சி.வி.வேலுப்பிள்ளை, டிஎம்பீர்முகம்மது, சிதம்பரநாத பாவலர் போன்றவர்கள் மலையக மக்களைப் பற்றி எழுதத் தொடங்கினர். இவர்களுக்குப் பிறகு மலையக எழுத்தாளர்கள் என்று ஈழத்து இலக்கிய உலகில் கணிப்பும் கவனிப்பும் பெற்றவர்கள் அனைவருமே 1960-க்குப் பின் வந்தவர்களே. அதாவது இலக்கியச் சிற்றேடான மல்லிகை ஈழத்து இலக்கிய உலகில் பயணம் செய்யத் தொடங்கியதற்கு ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாக,
"மல்லிகை ஜீவா" - தெளிவத்தை ஜோசப் 79

Page 43
ஈழத்து இலக்கியம் என்பது மலையக இலக்கியத்தையும் உள்ளடக்கியதுதான் என்றாலும் மலையகம் என்பது மற்ற தமிழ்ப் பிரதேசங்களைப் போலல்லாது தன்னளவில் தனித்துவமான மக்களின் வாழ் நிலைகளும், தனக்கெனத் தனித்துவமான நோக்கும், பிரச்சனைகளையும் கொண்டது.
ஆரம்ப காலக் கோப்பித் தேயிலைத் தோட்டங்களில் கூலிகளாக வேலை செய்வதற்கெனத் தென்னிந்தியாவின் தஞ்சாவுர் மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் சரித்திரமே மலையகத்தின் சரித்திரம், இந்தியாவின் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து வந்து இங்கு குடியேறிய இவர்களைப் பற்றிய இலக்கியம் ஈழத்தின் மற்றைய தமிழ்ப் பிரதேச இலக்கியத்திலிருந்து இயல்பாகவே வேறுபடுகிறது. இந்த மக்களின் ஆசை அவலங்கள், தேவை விம்மல்கள், கோப தாபங்கள், பிரச்சினைகள், விடிவுகள், மகிழ்ச்சிகள் ஆகியவற்றை இரத்தமும் சதையுமாக எழுதிக் காட்ட இவர்கள் மத்தியில் இருந்தே படைப்பாளிகள் தோன்றி உருவாக ஒன்றரை நுாற்றாண்டுகள் பிடித்ததற்கு, இவர்களுக்குக் கல்வி வசதி மறுக்கப்பட்டு வந்ததே காரணமாகும் எத்தனை தலைமுறைகளானாலும், தோட்டத்தொழிலாளியின் மகன் தோட்டத் தொழிலாளியாகவே இருக்கவேண்டும் என்று தாங்கள் ஏற்படுத்திக்கொண்ட நியதியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆங்கிலேயர் என்னவெல்லாமோ செய்தார்கள். அதில் முதன்மையானது கல்வி பாடசாலைகளுக்குச் சென்று எழுதக் கற்றுக்கொண்டான், ஒரு மாணவன் என்பதற்காக அம் மாணவனுக்குக் கற்பித்த ஆசிரியரைத் தண்டிக்கவும் அவர்கள் தயங்கவில்லை மலையகத்துக்குப் பொதுவாகக் கல்வி வசதி ஏற்பட்டதே 1930-க்குப் பிறகுதான் என்பதையும் கவனத்தில் கொண்டு பார்த்தால் 1960-ல் ஏற்பட்ட இலக்கிய விழிப்புணர்ச்சி அத்தனை தாமதமானதல்ல என்பதனையும் நாம் ஒத்துக்கொள்ளலாம்.
மலையகம், மலைநாடு என்ற சொற்பதங்கள் எல்லாம்-1946க்குப் பிறகே புழக்கத்துக்கு வந்தன. அதற்கு முன்பெல்லாம் இந்தப் பிரதேசம் *தோட்டக்காடு என்றும், இம் மக்கள் தோட்டக் காட்டான் அல்லது வடக்கத்தியான் என்றுமே மற்றப் பிரதேசத் தமிழ் மக்களால் கூறப்பட்டு வந்தமை மறக்கமுடியாத ஒன்று. இலங்கைக்கு வடக்கே உள்ள தமிழ் நாட்டிலிருந்து வந்து தேயிலை, றப்பர் தோட்டங்களில் கூலிகளாக அமர்த்தப்பட்ட இப்பாவப்பட்ட மக்கள் கூட்டத்தை இலங்கையின் புர்வகுடித் தமிழர்கள் வடக்கத்தியான் - தோட்டக்காட்டான்கள் என்றே வழங்கினர். தாங்கள் இந்த நாட்டின் தமிழர்கள், இவர்கள் கொண்டுவரப்பட்ட அடிமைத் தமிழர்கள் என்னும் எண்ணம் பெரும்பான்மையான மற்றப் பிரதேசத் தமிழ் மக்கள் மனதில் ஆழமாகவே இருந்தது.
80 -தெளிவக்கை ஜோசப் "மல்லிகை ஜீவா"
 
 

தோட்டக்காரன்கள் என்னும் இந்த அலட்சியப்போக்கே அதுவும் குறிப்பாக இந்தத் தமிழ் மக்கள் மீது மற்றப் பிரதேசத் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் கூட, கடைப்பிடித்த இந்த அலட்சியப் போக்கே, இந்தத் தோட்டத்துக் கூட்டத்தை, அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய சகல துறைகளிலும் அனாதைகளாகவே ஆக்கி வைத்துக்கொண்டிருந்தது.
பரம்பரைத் தமிழர் - பதிவுத் தமிழர் - படித்தவர்கள் - படியாதவர்கள் உத்தியோகத்தர்கள் - கூலிக்காரர்கள் என்று இவ்விரு சாராரிடையே இருந்து வந்த பேதம், இலக்கியம் என்று வந்தபோதும் வேறொரு உருவில் தலைகாட்டத் தவறவில்லை.
ஈழத்தின் பெரிய ஏடுகளில் தென்னிந்திய எழுத்தாளர்களின் ஆதிக்கமே இருந்து வந்த நாட்கள் அவை(தென்னிந்திய எழுத்தாளர்கள் என்றால், மணிக்கொடி சரஸ்வதி எழுத்தாளர்கள் அல்ல) அந்த ஆதிக்கத்தை முறியடித்து எங்கள் பத்திரிகைகளில், எங்கள் மண்வாசனை மிளிரும் எங்கள் எழுத்தாளர்களின் படைப்புக்களே வெளிவரவேண்டும் என்று போராடி வெற்றி பெற்றவர்கள் யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களே, அவர்களின் அப்போதைய இந்த எழுச்சி மிக்க போராட்டத்தினால்தான் ஈழத்துப் படைப்புக்களுக்குக் களம் கிடைத்து, புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றினார்கள் ஈழத்து எழுத்துக்கு ஒரு விடுதலையே கிடைத்தது. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மை இது.
ஈழத்து எழுத்துக்குக் கிடைத்த இந்த விடுதலையே ஈழத்தின் ஒரு பிரதேசமாகிய மலையக எழுத்துக்கும் ஒரு விதத்தில் விலக்காகவும் சில காலம் விளங்கியது. மாயாவி ரக இந்திய எழுத்தாளர்களின் பிடியிலிருந்து படைப்பிலக்கியம் அப்போதுதான் விடுதலை பெற்றிருக்கிறது. உரை நடைக்கு வலுச் சேர்க்கும் பிரதேசப் பேச்சு மொழிப் பாவனைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
இவை அனைத்தும் 1950-க்கும் 60-க்கும் இடைப்பட்ட காலத்து நிகழ்ச்சிகள், மலையகத்திலிருந்து, செந்துாரன், என்.எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன், தமிழோவியன் என்று இளைஞர் கூட்டம் படைப்பிலக்கியத்துக்குள் நுழைந்த காலம் அது. படைப்புகளின் எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்கப் பத்திரிகைகள் இல்லாத காரணத்தால் இருக்கும் பத்திரிகைகளை கூடுமானவரை சில படைப்புகளை ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின.
"மல்லிகை aჭz? J/r” -தெளிவத்தை ஜோசப் 81

Page 44
தமிழர்கள், இவர்கள் கொண்டு வரப்பட்ட அடிமைத் தமிழர்கள் என்னும் எண்ணம் பெரும்பான்மையான மற்றப் பிரதேசத் தமிழ் மக்கள் மனதில் ஆழமாகவே இருந்தது.
மலையகத்துப் பேச்சுமொழி ஈழத்தின் மற்றைய பிரதேசப் பேச்சு மொழிகளிலிருந்து வேறுபட்டிருந்தாலும் இந்தியத் தமிழின் ஒலியையே
கொண்டிருந்தது. மலையகத் தமிழின் இந்த சப்த ஒற்றுமை பத்திரிகை
ஆசிரியர்களுக்கு ஒரு மருட்சியை ஏற்படுத்தியது, தென்னிந்திய, ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட களம், அதே மொழியில் எழுதும் இன்னொரு சாராருக்குக் கொடுபட வேண்டுமா? என்பதே அந்த மருட்சி,
தோட்டக்காட்டான்கள்' என்றே வழங்கினர். தாங்கள் இந்த நாட்டின்
அது வேறு இது வேறு. மலையகத்து மண் இந்நாட்டின் மண், அந்த மண்ணின் மணம் இந்த நாட்டு மண்ணின் மணம், மலைநாட்டு இலக்கியம் இந்த மண்ணின் இலக்கியம்' என்பது பத்திரிகைகள் மட்டத்தில் நிலைநாட்டப்பட சிறிது காலம் பிடித்தது. இந்த நிலைநாட்டலுக்கு முதற் குரல் கொடுத்தவர்கள் எஸ். பொ வும் கனக செந்தி அவர்களுமே ஈழத்து இலக்கியத்துக்குப் புது இரத்தம் பாய்ச்சுகிறவர்கள் மலைநாட்டு எழுத்தாளர்கள்' என்று மேடையேறிக் கூறியவர் எஸ். பொ. அவர்கள்தான்.
வடக்கத்தயான்கள், படியாதவன்கள், கூலிக்காரர்கள் என்று ஒரு சிலர் மலையக எழுத்தாளர்களை மாசு படுத்தியதும்- நான் அறிந்ததே,
இத்தகைய இடிபாடுகளுக்கும் மத்தியில் - வளர்ந்துவரும் மலையக இலக்கியத்தை ஒரு படைப்பாளி என்னும் நேசத்துடனும்ஒரு இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியர் என்ற அக்கறையுடனும் கவனித்து வந்தவர். முற்போக்கு அணியினைச் சார்ந்தவரும்-முற்போக்கு இலக்கிய ஏடான மல்லிகையின் ஆசிரியரும்- படைப்பிலக்கியத்துக்கான சாகித்திய மண்டலப் பரிசை முதன் முதலாக 1960-ல் பெற்றவருமான திரு. டொமினிக் ஜீவா அவர்களே.
1966 ஆகஸ்டில் மல்லிகை இலக்கிய மணம் பரப்பத் தொடங்கியது. முற்றிலும் ஒரு போக்கு இலக்கிய ஏடாகவே தோன்றி வளர்ந்த மல்லிகையில் முற்போக்கு இலக்கிய அணியினைச் சார்ந்தவர்களே கூடுதலாக எழுதினர், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் துணையுடன், முற்போக்கு எழுத்தாளர்களுக்காக, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவராக திரு. டொமினிக் ஜீவாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த மல்லிகை முற்போக்கு மாத இதழ் என்று பொறித்துக் கொண்டேதான் வந்தது.
ஆனாலும் மல்லிகையின் ஜீவநாடியாகத் திகழ்ந்த திருடொமினிக்
82 -தெளிவக்கை ஜோசப் "மல்லிகை ஜீவா"
 

ஜீவா, ஒரு சில முற்போக்குவாதம் கொண்டிருந்த முக்கியஸ்தர்கள் போலல்லாது மனித வளர்ச் சிக்கு உருவமைக்கும் சகல எழுத்துக்களையும்- எழுத்தாளர்களையும் - அரவணைத்துக்கொள்ளும் நேர்மை- ஒரு தைரியம் கொண்டவராய் இருந்தார்.
மலையக எழுத்துலகில் முன்னோடிகளில் ஒருவரான திரு. கே. கணேஷ் அந்தக் காலத்திலேயே கம்யுனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர். 1946-லேயே பிரேம்ச்ந்த் போன்றோருடன் இணைந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர். கம்யுனிச அரசியல் இயக்கமே மக்களிடையே பரவாமல் இருந்த அந்த நாட்களில், எழுத்தாளர் சங்கம் எப்படி விரிவடையும்? ஆரம்பிக்ப்பட்டது போலவே இருந்ததது. 1954-ல் அரசியல் விழிப்புணர்வுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது பணியை துரிதப்படுத்தியும், விரிவுபடுத்தியும் கொண்டபோது கே. கணேஷைக் காணவில்லை, முற்போக்கு இலக்கியத்துக்கென்றே அவர் நடாத்திய பாரதி பற்றிய ஒன்றையும் காணவில்லை.
ஆனால் இன்று மணிவிழாக் காணும் ஜீவாவே, திரு.கே கணேஷின் படத்தை அட்டையில் பிரசுரித்துக் கெளரவம் பண்ணியதுடன் அவரைப் பற்றிய கட்டுரையில் பின்வருமாறு குறித்துள்ளார். 1948-ல் மலையகம் தந்த கலைப் புதல்வர்களுள் ஒருவரான திரு.கே.கணேஷ் யாழ்ப்பாணப் பட்டணத்தில் மூன்று மாத காலம் தங்கி இருந்தார். அப்போது பல இளைஞர்கள் இவரை இவர் தங்கியிருந்த இல்லத்தில் சந்திப்பார்கள். இலக்கியப் பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெறம், பல புதிய இலக்கியக் கருத்துக்களை இவர் எடுத்து விளக்குவார். அடிப்படையில் அக்கருத்துக்கள் அத்தனையும் முற்போக்கு அம்சம் மிகுந்ததாகவே இருக்கும். தன்னுடைய கவிதைகளை வாசித்துக் காட்டுவார். விமர்சனம் நடைபெறும் அப்படி அக்காலத்தில் இவருடன் தொடர்பு கொண்டு இலக்கியப் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரையாடித் தெளிவு பெற்றதுடன் சரியான பாதையை இனம் கண்டு கொண்டவர்களில் நானும் ஒருவன், திருகே. ராமநாதனும் இவரும் இன்னும் சிலரும் சேர்ந்து பாரதி' என்றொரு முற்போக்குச் சஞ்சிகையை வெளியிட்டார்கள், இம்மாசிகையில் பல புதுமைகளைச் செய்ததுடன் ஈழத்து முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்டு வைத்த பெருமையம் இதையே சாரும். (ஏப்ரல் 97)
இப்படி மனம் திறந்து கூறுவதற்கு ஒரு துணிவும், இலக்கிய நேர்மையும் வேண்டும். அது மல்லிகை ஜீவாவிடம் இருந்திருக்கிறது.
மலையகத்தின் மூத்த எழுததாளர் முன்னோடியாகத் திகழ்ந்தவர், தனது ஆங்கில எழுத்துக்கள் மூலம் மலையகத்தை வெளியுலகிற்குக் காட்டிய கவிஞர், தனது கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் மூலமும்
|"மல்லிகை ஜீவா" -தெளிவத்தை ஜோச 83

Page 45
அரசியல் - தொழிற்சங்கப் பணிகள் மூலமும் மலையகச் சமுதாயத்துக்காக பெருந்தகை அமரர் சி. வி. வேலுப்பிள்ளை, மல்லிகை அவரையும் அட்டையில் போட்டுக் கனம் பண்ணியுள்ளது. இது சி.வி. என்ற தனி மனிதனைக் கனம் பண்ணுவதில்லை. மலையகம் என்று மற்றவர்களால் கவனிக்கப்படாமிலிருந்த ஒரு சமூகத்தைக் கனம் பண்ணியதாகிறது.
1961-ல் தனது "ஒரு கூடைக் கொழுந்து மூலம் படைப்பிலக்கியத்திற்குள் பிரவேசித்தவர் என். எஸ். எம். ராமையா, குறைவாக எழுதி கூடுதலானவர்களின் கவனிப்பைப் பெற்றவர் ராமையா, எழுதிக் குவிக்கத் தெரியாத - எழுத்தை வியாபாரமாக்கத் தெரியாத இந்த இலக்கியவாதியைப்பற்றி முற்போக்கு விமர்சகர்கள் மூச்சே காட்டவில்லை. கேட்டால் உதிரியாக ஒன்றிரண்டை வாசித்துள்ளேன்.சரியாகன்டை போட முடியவிலலை என்று கூறிவிடுவார்கள். இந்த இலக்கிய முதலாளிகள் 'எடை' போடாமலே மலையக எழுத்தாளர்களின் வளர்ச்சியை ஜீவா கவனித்ததை நான் நிறைய நேரங்களில் உணர்ந்துள்ளேன்.
வாசகர் வட்டத்தினர் 1968-ல் அக்கரை இலக்கியம் என்ற நுாலை வெளியிட்டனர்.அதில் இலங்கை-மலேசியச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியன இடம் பெற்றுள்ளன. இருபத்தி ஏழு இலங்கை எழுத்தாளர்களில் மலையக எழுத்தாளர்கள் மூவர், அதில் என்.எஸ்.எம்.ராமையாவும் ஒருவர். இந்த அக்கரை இலக்கியம் நூல் பற்றி மஞ்சரி' (மார்ச் 1969) இப்படி எழுதியுள்ளது:
இலங்கையிலும் மலாயாவிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் அந்த பிரதேசங்களின் மண் மணம் வீசும் அரிய சிறு கதைகளையும், கட்டுரைகளையும் படைத்து வருகின்றார்கள். அவற்றில் தமிழ் பண்பாடு பளிச்சென்று பிரதிபலிக்கிறது. நாம் அவற்றைப் பற்றிப் பெரிதும் அறியாதிருப்பது எவ்வளவு பெரிய நஷ்டம், அதை ஈடு செய்யும் வகையில் அக்கரை இலக்கியம் என்ற தலைப்பில் வாசகர் வட்டத்தினர் ஒரு நூல் வெளியிட்டுள்ளனர். அதிலிருந்து மாதிரிக்காக ஒரு சிறு கதையை எடுத்து இங்கே தருகின்றோம் என்று கூறி ராமையாவின் வேட்கையை மறு பிரசுரம் செய்துள்ளனர்.
இது முதலாவதாக ஈழத்து இலக்கியத்துக்குக் கிடைத்துள்ள பெருமை, அடுத்ததாக மலையகத்துக்கு - கடைசியாகத்தான் ராமையா என்ற தனிமனிதனுக்கு
இதை நான் பெருமையாகவே நினைத்தேன். ராமையாவை விடக் கூடுதலாக நான் மகிழ்ச்சியடைந்தேன். என்னைச் சந்தித்த அல்லது நான்
84 -தெளிவக்கை ஜோசப் "மல்லிகை ஜீவா"
 

சந்தித்த எல்லா இலக்கியக்காரர்களிடமும் இது பற்றிக் கூறினேன், முற்போக்கு எழுத்தாளர்களின் கொடுமுடியாகத் திகழும் ஒருவரிடமும் கூறினேன், அப்படியா?" என்று கூட, அவர் கூறவில்லை. ஏன்? ராமையா அவருடைய அணியைச் சேராதவர். அப்படியானால் அவருடைய அந்த அல்ட்சியத்திற்குக் காரணம்தான் என்ன? இதே விஷயத்தை நான் ஜீவாவிடமும் கூறினேன். தெணியானின் "விடிவை நோக்கி வெளியீட்டு விழா நீர்கொழும்பில் நடந்தபோது இதைக் கூறியதாக ஞாபகம் ஆனால் அதே முற்போக்கு இயக்க முங்கியஸ்தரான ஜீவா அதைப்பற்றி அறிந்திருந்தார், பாரட்டினார், மகிழ்ச்சி தொவித்தார். ராமையாவைப் பற்றி - மலையக இலக்கியம் பற்றி அக்கறையுடன் பேசினார். 1971 டிசம்பர் மல்லிகையின் அட்டையை அலங்கரித்தவர் என் எஸ். எம். ராமையா,
தன்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்கிக் கொள்ளாமல் பரந்துபட்ட தேசிய இலக்கியப் பார்வையுடன் வளர்ந்து வருபவர் என்று ராமையாவைப் பற்றிக் குறித்துள்ளார், ஜீவா இத்தனைக்கும் என். எஸ். எம். மின் ஒரு படைப்புக் கூட மல்லிகையில் இடம் பெற்றதில்லை. எங்கள் சங்கத்தில் இல்லாதவன், என்னுடைய ஏட்டுக்கு எழுதாதவன் என்னும் குறுகிய எண்ணங்களற்று, ஒரு இலக்கியவாதியை அவனுடைய திறமைகளுக்காக மதிக்கும் ஜீவாவின் பெருந்தன்மை மலையக இலக்கியத்திற்கு அதன் கவனிப்பிற்கு ஒரு உந்து சக்தியாக விளங்கியுள்ளது.
ராமையாவைத் தொடர்ந்து மலையக எழுத்துலகில் பிரவேசித்த சிலருள் நானும் (தெளிவத்தை) ஒருவன் 1968-ல் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் வீரகேசரியின் தோட்ட மஞ்சளி மூலம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்று அறிமுகமானவன், நான் வீரகேசரியில் தொடர்ந்து எழுதினேன். மலையகத்துக் கல்வி நிலைபற்றி-யாழ்ப்பாணத்து வாத்திமார்கள் தோட்டத்தில் உத்தியோகம் செய்யும் முறை பற்றி-சோதனைஎன்றொரு கதை எழுதியிருந்தேன். எல்லாப் பத்திரிகைகளும் திருப்பித் தந்து விட்டன. ஜீவா அவர்கள் என்னைக் காணும்போதெல்லாம் கதை தரும்படி கேட்பார். சோதனை கையில் இருக்கும் போதும் கேட்டார். கொடுத்துவிட்டேன். போடமாட்டார் என்றே எண்ணினேன். ஆனால் ஜீவாவோ தனது இலக்கிய நேர்மையைத் துணிச்சலைக் காட்டிவிட்டார். இதே கதை எனது 'நாமிருக்கும் நாடே. தொகுதியில் வந்திருந்தது. விமர்சனம் செய்ய வந்திருந்த முற்போக்குப் பெரியவர்கள் இத்தக் கதையை வெகுவாக விமர்சித்து மலைநாட்டுத் தெளிவத்தை யாழ்ப்பாணத்து வாத்தியை வில்லனாக்கியிருக்கும் விதத்தைப் பெரிதுபடுத்தி, எனக்கு ஒரு புது நிறம் புச எத்தனிக்கும்வேளை, ஜீவா எழுந்து தனக்கே உரித்தான
"மல்லிகை ஜீவா" -தெளிவத்தை ஜோச 85

Page 46
ஆக்ரோஷத்துடன் யாழ்ப்பாணச் சாதிமான் வாத்தி மலையகத்தில் மட்டுமல்ல இங்கும் வில்லன்தான். கல்வி இவர்களுக்கெல்லாம் ஒரு முதுசச் சொத்து, அந்தச் சொத்து உழைப்பாளிகளுக்கும், ஏழைகளுக்கும், தாழ்ந்தவர்களுக்கும் போய்விடாமல் பார்த்துக் கொள்வதில் சில யாழ்ப்பாணச் சட்டம்பிமார்கள் கெட்டிக்காரர்கள்' என்று பதிலடி கொடுத்தார், 79 டிசம்பரில் நடந்தது இது. 1973, ஏப்ரல் இதழின் அட்டைப் படம் என்னுடையது.
ஆசிரியர் ஜீவா தனது குறிப்புரையில் தகழி என்ற கேரளத்து கிராமப் பெயர் கேட்டவுடன் சிவசங்கரப்பிள்ளை ஞாபகம் வருவது போல், தெளிவத்தை என்ற மலையகத்துப் பெயரைக் கேட்டதும் ஜோசப்பின் ஞாபகம் வரச் செய்யும், இனியவர், பண்பாளர், இலக்கியத்துடன் எழுதுபவனையும் நேசிப்பவர். கருத்தாழம் மிக்கவர், மலையகப் படைப்பாளர் வரிசையில் மதிக்கத் தக்க இடத்தை வகிப்பவர்' என்றெழுதுகிறார்.
கலைச் செல்வியில் எழுதினேன். தேனருவியில் எழுதினேன். எம்.ஏ.ரஹ்மான் வெளியிட்ட காந்தீயக் கதைகளில் ஒரு கதை வந்தது. எஸ்.பொ.பாராட்டுகிறார் போன்ற காரணங்களுக்காகப் பெரியவர்களால் ஒதுக்கப்பட்டுவிட்ட என்னைப்பற்றி ஜீவா எழுதியுள்ள இக்குறிப்பு அவரைப் பற்றிய எனது கணிப்பை மேலும் உயர்த்தியது. அவர் மேலிருந்த மதிப்பைக் கூட்டியது.
மலையக முன்னோடிகளில் ஒருவரான மாத்தளை அருணேசரையும், மல்லிகை கெளரவித்துள்ளது. (பெப்ரவரி 85 அட்டையில்) இது தவிரவும் மல்லிகை, மலையகத்து இளம் எழுத்தாளர்களுக்குக் களம் அமைக்கவும் தவறவில்லை, மல்லிகை சி. குமார், நுாரளை சண்முகநாதன் பரிபுரணன், நாவல் நகர் மாகாலிங்கம், ராம்ஜி உலகநாதன் என்று நிறையவே மலையக எழுத்தாளர்கள் மல்லிகையில் எழுதுகின்றனர்.
ஜீவா ஒரு மலைநாட்டு மலரும் வெளியிட்டுள்ளார். மல்லிகை வெளியீட்டுத் துறைக்குள் நுழைந்துள்ளதை அறிவிக்கும் முதல் நுாலான அட்டைப்பட ஓவியங்களில் முப்பத்தைந்து எழுத்தாளர்களைப் பற்றிய தகவல் குறிப்புக்கள் இடம் பெறுகின்றன. நுாற்றுக்கு மேலானஅட்டைப்பட எழுத்தாளர்களிலிருந்து முப்பத்தைந்து பேரைத் தெரிவுசெய்யும்போதுகூட திரு. ஜீவா மலையக எழுத்தாளர்களையும் அந்த முப்பந்தைந்துக்குள் தெரிவு செய்துகொண்டுள்ளார்.
குறுகிய எண்ணங்களற்ற விாவான மனம் - தைரியம் - இலக்கிய நேர்மையாகியன திரு. டொமினிக் ஜீவாவின் சிறப்பியல்புகளாக எப்போதுமே
86 -தெளிவத்தை ஜோசப் "மல்லிகை ஜீவா"
 

øluDistus/rør 425 இலக்கிய சிநஞ்சம்
- δώρτώνες
5. ண்பர் ஜீவா ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின், குறிப்பாக
முற்போக்கு இலக்கியத்தின் ஜீவ வலுவாக கடந்த மூன்று சகாப்தங்களுக்கு மேலாகத் திகழ்ந்து வருகிறார்.
இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி, வரலாற்றின் பிரதிபலிப்பு, ஆத்மாவின் வெளிப்பாடு, மனச்சாட்சியின் குரல் என்ற வரையறுப்புகளின் ஒட்டுமொத்தமான உருவகமாக ஜீவாவின் இலக்கியப் படைப்புகளும், தனிமனிதனான ஜீவாவின் - ஒரு இலக்கிய நிறுவனமான ஜீவாவின் இலக்கியப் பணிகளும் ஒளிர்விடுகின்றன என்று துணிந்தும் நிதானித்தும் கூறலாம்.
சமூகத்தின் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஒரு பகுதியின் விழுப்புணிகளை ஏந்திய மைந்தனாகப் பிறந்த ஜீவா, அடக்கப்பட்ட எந்தவொரு மக்களுக்கும் இருக்கும், இருக்கவேண்டிய தர்மாவேசத்தை, அக்கிரமித்தை எதிர்த்து எரிசரமாக சாடும் ஆத்மாவின் கொதிப்பை, தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் எதிரான அனைத்துக் கொடுமைகளையுயம் எரித்துப் பொசுக்கத் துடிக்கும் உள்ளக் குமுறலை, புதிய புரட்சிகர வீறு முழுமையாகவும் தன்னுள் மூர்த்திகரித்து நிற்பது தற்செயலானதல்ல.
ஜீவாவின் மூச்சின் ஒவ்வொரு துளி சுவாசத்திலும், அவரது படைப்பின் ஒவ்வொரு எழுத்திலும் இந்த அனல், அக்கினி சுவாலை மூண்டெரிவதை எவராலும் உணர முடியும் காணமுடியும். அதே தர்மாக்கினியால் வசப்படுத்தப்பட்டு அதில் சங்கமமாக முடியும்,
"மல்லிகை ஜீவா" ( -ឃិghឆ្នា 87

Page 47
|
|
|
p
ஜீவா தன்னை அறிந்த நாள் முதல், தனது ம்க்களையும் சமூகத்தையும் அறிந்த நாள் முதல், தன்னை மக்களுக்குள் ஒருவனாக பிணைத்துக்கொண்டு, அந்த மக்களின் துன்பங்கள, துயரங்கள், வேதனைகள், அவலங்கள் அனைத்தையும் தனதாக்கியதோடு இந்தப் பீடைகளிலிருந்து மக்களின் மெய்விடுதலையைக் காண்பதற்கான தேடலில் ஈடுபட்டார்.
இந்தத் தேடல் தான் அவரை தனி னைச் சேர்நீத்த மற்றவர்களிலிருந்து மாறுபட்டவராக மாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களினது மட்டுமல்ல, சுரண்டப்படும், நசுக்கப்படும், அடிமைப்படுத்தப்படும் மானுடம் முழுவதினதும் மெய்யான விமோசனத்திற்கு வழிகாட்டிய ஒரு சத்தியத்தின் பக்கம், சமூக தர்மத்தின் பக்கம், சமூதாய விஞ்ஞானத்தின் பக்கம் அவரை அணிவகுத்து நிற்கச் செய்தது.
அன்று முதல் இன்று வரை எத்தனையோ சோதனைகள் விஷப்பர்ட்சைகள், மோதல்கள், வெடிப்புகளுக்கு மத்தியிலும் ஜீவா தன்னை ஆட்கொண்ட, தன்னை ஒரு படைப்பாளியாக வரித்துக்கொண்ட அந்த உலகளாவிய மகாசக்திக்கு மெய் விசுவசிப்புடன் நின்றுள்ளார். பணி செய்துள்ளார். இதில்தான் அவரது ஆத்மாவின் சுத்தமும், அவரது வெற்றிகளின் - சாதனைகளின் சூட்சுமமும் உள்ளது.
இந்த சித்தாந்தத்தின வழி நின்று இலக்கியம் படைக்க ஆரம்பித்த ஜீவா, இதே சத்திய தரிசனத்தை இலக்கிய அரங்கில் பாய்ச்சிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவான காலம் முதல் அதன் அணியில் ஒருவராக நின்று இலக்கியப் பணியும், இயக்கப் பணியும் புரிந்துள்ளார். இ.மு.எ.ச வின் யாழ். கிளைச் செயலாளராக உத்வேகத்துடனும் ஆக்கபுர்வமாகவும் நண்பர் ஜீவா இயங்கிய வீச்சை, செயற்பட்ட பாங்கை இ.மு.எச என்றும் நன்றிப் பெருக்குடன் பார்க்கிறது.
இ.மு.எச சில அகநிலைக் காரணிகளால் தன் செயற்பாட்டை நிறுத்திவைத்த காலப் பகுதியிலும் அதன் பின்னரும் முற்போக்கு இலக்கியப் பதாகையை நண்பர் ஜீவா தனது 'மல்லிகை மூலம் முன்னெடுத்துச் சென்றுள்ளார். முற்போக்கு இலக்கியக்காரர்களினதும், ஏனைய எல்லா எழுத்தாளர்களினதும் பொது அரங்கமாக அவர் 'மல்லிகையை பொதுமைப் படுத்திய பக்குவம் இலக்கிய முதிரிச்சியின் ஆத்ம நிறைவின் சத்திய வெளிப்பாடாகும் வர்க்கப் பகைவர்களைத் தவிர ஏனைய அனைத்து எழுத்தாளர்களையும் இலக்கியக்கியக்காரர்களையும் அவர்களின் கருத்து நிலை வேறுபாடுகளைப் பொருட்படுத்தாது ஐக்கியப்படுத்தும் இ.மு.எ.ச. வின் உன்னத மரபுக்கும் இலக்கிய தர்மத்துக்கும் மல்லிகை மூலம் ஜீவா வலிமையுட்டியுள்ளார்.
88 —ហិមិព្វាវ៉ាថ្លុំ "மல்லிகை ஜீவா"
ܙܵܵ
 

இரு தசாப்தங்களுக்கு மேலாக ஒரு இலக்கிய சஞ்சிகையைத் தவறாது வெளியிட்டு, சொல்லொணா இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இடைவிடாது வெளிக்கொண்டு வந்து இலக்கிய உலகில் ஒரு வரலாற்றை சாதித்த கர்மவீரனாக அவர் தன்னை உயர்த்திக்கொண்டுள்ளார்.
சஞ்சிகை அமைப்பின் புதிய உத்திகள், விஷயத்தெளிவும் தேடுதலும், நிறுவன முகாமைத்துவத் திறன், தரகாத்திரம் ஆகிய நவீன சஞ்சிகை நுட்பங்கள் உரிய பிரக்ஞையுடன் கையாளப்படாத பலவீனங்களுக்கு மத்தியிலும் தன்னேரில்லா அர்ப்பணிப்பை, அயராத உழைப்பை, நேர் நிகரற்ற சங்கல்பத்தைத் தனது பலமாகக் கொண்டு ஜீவா மல்லிக்ை 'யை ஒரு வேள்வியாக - சத்திய சோதனையாகநடத்திவருவது ஒரு புண்ணிய கைங்கரியம்தான்.
தனிமரம் தோப்பாகாது’ என்ற சத்தியத்தை அடிக்கடி வலியுறுத்தும் ஜீவா, தனிமனித உழைப்பை, ஊக்கத்தை மல்லிகை"யின் பசளையாக, தனது சாதனைகளின் அடிச்சரடாகக் கொண்டு வெற்றிகண்டு வருவதை கூட்டுத்துவம் தனித மனித முயற்சியுடன் ஒத்திசைவாக இணைக்கப்படும் புதிய சிந்தனையின் மெய்த் தோற்றமாகக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. எனினும் இந்தச் சாதனைகளுக்கு சாஸ்வதத்துவம் வழங்கக் கூட்டு முயற்சியும், நிறுவனஸ்திரப்பாடும் அவசியம் என்ற உண்மையை உதாசீனப் படுத்த முடியாது.
இலக்கியத்தை சமூக தர்மத்திற்கான போராட்டத்தின் ஒரு போர்க் கருவியாக எல்லா எழுத்தாளர்களையும் போலவே ஜீவாவும் கருதிய போதிலும், கையாண்ட போதிலும் இலக்கியத்தைப் பவித்திரமாக நேசிக்கும் ஒரு இலக்கிய நெஞ்சம் அவருக்கு இருக்கிறது. இது அனைத்து எழுத்தாளர்களுக்கும் எடுத்துக் காட்டாகும் என்பதுடன், இலக்கியம் பற்றிய சமூகப் போராளிகளின் ஒரு புதிய பார்வையின் - அணுகு முறையின் நவவெளிப்பாடுமாகும்.
ஜீவாவின் இலக்கியப் பணிகள் பற்றிச் சிந்திக்கும்போது சமகால இலக்கியத்தில், சிந்தனைப் போக்கில் அவை ஏற்படுத்திய, ஏற்படுத்திவரும் தாக்கங்கள் பற்றிய தனித்தனி ஆய்வுகளை நடத்துவது சுவாரஸ்யமாகவும் பயன்பாடுள்ளதாகவும் ஓர் இலக்கிய தேவையாகவும் இருக்கும்.
மானுடத்தை அதன் எல லாப் பெறுமதிகளுடனும் விழுமியங்களுடனும் நெஞ்சார நேசிக்கும் ஜீவா, அதே சமயம் சில மானுடப் பலவீனங்களைக் கடந்தவருமல்ல. எனினும் கால முதிர்வோடு, ஆத்மப் பக்குவத்தோடு இந்த ஆவேசங்கள், அவசரங்கள், இசகு பிசகான சச்சரவுகள்,
| “pztz၆၈ဇာ ஜீவா" -UThឆ្នា 89

Page 48
தன்னிலைப் புலப்பாடுகள் அகன்று அமைதியும், நிதானிப்பும், நிர்சலனமும் ஆத்மா முழுவதும் வியாபித்துச் செல்வது மேலும் முழுமையையும் மேலும் கனதியையும் வழங்கும்.
‘என்னை உருவாக்கியது. நெறிப்படுத்தியது நாம் சார்ந்து நிற்கும் சித்தாந்தமும் இலக்கிய இயக்கமான இ. மு. எ. ச வும் தான்’ என்று நண்பர் ஜீவா தனது ஆத்மாவின் அடிநிலையிலிருந்து அடிக்கடி கூறும் மெய்வாக்கும் வளர்ந்தோங்கும் எழுத்தாளர்களின் புதிய தலைமுறைக்கு - ஜீவாவால் உரமும் ஊட்டமும் அளித்துப் போசிக்கப்படும் தலைமுறைக்கு - ஒரு சத்திய தரிசனமாகும்.
ஜீவா அற்புதமான மனிதர், சுத்தமான ஒரு ஆத்மா, மெய்யான ஒரு இலக்கிய நெஞ்சம், மனிதனுக்காக, இலக்கியத்திற்காக ஓயாது துடிக்கும் அவரது இதயம் பல்லாண்டு பல்லாண்டுகளாகத் தனது இயக்கத்தை நிறுத்தாது மானுடத்தின் வெற்றிக் காகச் சதா துடித்துக்கொண்டே இருக்கட்டும். அந்த உஷ்ணமும் குளிர்மையும் கொண்ட ஜீவ மூச்சுப் புதுப் புது இலக்கியங்களை, இலக்கிய சாதனைகளைப், புஷ்ப்பிக்கப்படும். கு
"மல்லிகை ஜீவா"
90 -បថិព្វាវ៉ាដ្យា
 
 
 
 

தொழிலாள வர்க்க இலக்கியத்தின் மீகாமன்
- சி. வண்ணியகுலம்
20-ம் நுாற்றாண்டின், பின் அரை நுாற்றாண்டு காலத் தமிழிலக்கிய வரலாற்றிலே டொமினிக் ஜீவாவினதும் மல்லிகையினதும் தோற்றப்பாடும், வளர்ச்சியும், விதந்து போற்றப்படுவதற்குரியவை. தமிழிலக்கிய வரலாற்றிலே ஜீவாவினது பங்களிப்பு ஒரு நாணையத்தின் இருபக்கங்களைப் போன்றது. ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து நிற்க முடியாது. ஒன்றின் வளர்ச்சியிலே மற்றது சார்ந்து நிற்பது.
ஈழத்திற்கெனத் தனித்துவமான இலக்கியப் பாரம்பரியத்தை உருவாக்கி, அதனைப் பேணிப் பாதுகாத்து வளம் பெறச் செய்வதிலே மல்லிகையினுாடாக ஜீவா அசுர முயற்சியுடன் செயலாற்றி வருகிறார் என்பது புதிய கருத்தன்று. இந்த அரிய முயற்சி தனி மனித செயற்றிறனுக்கு அப்பாற் பட்டதேயாயினும், தமிழிலக்கிய உலகில் அவருக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பு, ஒத்துழைப்புக் காரணமாகவே அது தொடர முடிகிறது. ஈழத்தின் தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக ஒலித்து வரும் மல்லிகையின் சாதனைகளைத் தமிழிலக்கிய வரலாற்றுப் பின்னணியில் வைத்து ஆராயும் போதே துல்லியமாக விளக்கமுறும்,
தமிழிலக்கிய வரலாற்றை ஆராயவும் எழுதவும் முனைந்த பல்வேறு ஆய்வாளர்களும், இக்காலத்தில் எமது கைகளுக்கு எட்டும் இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்கின்றனர். தற்போது எமது கைக்குக் கிட்டும் இலக்கியங்கள் மட்டுமே சமுதாயத்தில் தோற்றம் பெற்றவையா என்ற வினா இங்கு தவிர்க்கவியலாது எழுகின்றது. இந்த வினாவுக்குக் கிடைக்கும் இரண்டு விதமான விடைகளுமே எமது இலக்கிய வரலாற்றை மறுபரிசீலனை செய்யத் துாண்டுபவையாக
"மல்லிகை ஜீவா" — គឺ ចាវផrយfយញថា វ៉ា 91.

Page 49
அமைந்து விடும் ஆமென்ற பதிலில், சங்ககாலத்திலிருந்தே எமது இலக்கியங்கள் நிலமானிய சமூக அமைப்பை அடிச்சரடாகக் கொண்டு விட்டன என்ற இழிவு தொக்கி நிற்கும். இக்கருத்து மறுக்கப்படின் அது எல்லையற்ற ஆய்வு முயற்சிகளுக்கு எம்மை இட்டுச் சென்றுவிடும். இவை மட்டுமே தோற்றம் பெற்ற இலக்கிங்கள் அன்று எனின், ஏனைய இலக்கியங்பகள் யாவை? அவை ஏன் உயிர் வாழவில்லை? அவற்றிற்கு நேர்ந்த கதி யாது? போன்ற வினாக்கள் விரியும், இவையே தமிழிலக்கிய வரலாற்றில் இன்று மேற்கிளர்த்தப் படவேண்டிய வினாக்களுமாகும்.
நிலமானிய சமூக அமைப்பின் தவிர்க்கவியலாத ஒரு வர்க்க நிறுவனமாகப் பண்ணை அடிமை முறை அமைந்து விடுகிறது, எமது கைகளுக்கு கிடைப்பவை அரச நிறுவனங்களின் அபிலாஷைகளைப் புலப்படுத்தும் இலக்கியங்களே. அவை அடிமை நிறுவனங்களின் போராட்டங்களையும், உண்மையான வாழ்வியலின் யாதார்த்தங்களையும் புலப்படுத்துவனவன்று. நிலமானிய சமூக அமைப்பில், அச்சமூக அமைப்பை உடைத்துக்கொண்டு மேற்கிளம்பும் இன்னொரு சமூகமும், அதற்குச் சார்பான இலக்கியத் தோற்றப்பாடும் தவிர்க்க இயலாதவை. ஆதிக்கம் வாய்ந்த அரச நிறுவனங்களுக்கெதிரான சமூகமும் அதன் இலக்கியங்களும் அக்காலத்தில் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்பட்டன. அவ்வகை இலக்கியங்கள் ஏடுகளில் கூட, இடம்பெற முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குள்ளாயின. இலக்கியத்தைப் படைப்பவனே அடிமையாக நிலத்துடன் பிணிப்புண்டு உழலும்போது, அவன் சிந்தனைகளும் செயற்பாடுகளும்கூட அடக்கப்பட்டுவிடுகின்றன.
இந்தப் பண்ணை அடிமைகளின் இலக்கியங்கள் வயல் வெளிகளிலும், வண்டியோடும் காட்டுப்பிரதேசங்களிலும் இதர தொழில் நிலையங்களிலும் காற்றோடு காற்றாகக் கலந்து விட்டன, ஏட்டிலெழுதாத வாய்மொழி இலக்கியங்களாகி விட்டன, ஏட்டில் வராத வாய்மொழி இலக்கியங்களாகி விட்டன. வாய்மொழியாகவே வழங்கி வந்த கண்ணகியின் கதையைக் காவியமாக்கும்படி, சேரன் செங்குட்டுபவன் பணிக்க, தம்பி இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைப் பாடியது போல, இந்தப் பண்ணை அடிமைகளின் வாழ்க்கையை இலக்கியமாக்கும்படி எந்த அரசனும் பணிக்கவில்லை, எந்தப் புலவனும் பாடவுமில்லை. அவ்வாறின்றித் தற்செயலாகவேனும் ஏட்டில் இடம்பெற்றுவிட்ட இப்பணிணை அடிமைகளின் இலக்கியங்கள் பிற்காலத்திலே அகநாநூறு புறநானுாறு போன்ற தொகை நூல்களை தொகுப்பித்த, அரச நிறுவனங்களாலும், அறிஞர்களாலும் துாக்கியெறியப்பட்டன. அவர்களின் வர்க்க நலன் காப்பவையே இலக்கிய அந்தஸ்தைப் பெற்றன.
92 டசி வன்னியகுவம் "மல்லிகை ஜீவா"

ஜீவாவினதும், மல்லிகையினதும் இலக்கியப் பங்களிப்புப் பற்றி ஆராயும் போது, இந்தப் பட்டறிவினையும் மனங்கொள்ளல் அவசியமாகிறது. சங்க காலத்திலிருந்து, பாட்டாளி வர்க்க நலம்பேணும் ஒரு சமூக நிறுவனம் இல்லாமையே அவ்வர்க்க இலக்கியம் முனைப்புடன் திகழ முடியாது போனமைக்கும், பேணப்படாது அழிக்கப்பட்டமைக்கும் காரணமாகிறது. ஏட்டறிவும் எழுத்தறிவும் இன்மை, இந்த ஒதுக்கு மனப்பான்மைக்கு மேலும் சாதகமாகிவிட்டது. இந்த நிலை 20-ம் நுாற்றாண்டின் நடுப்பகுதிவரை நீடித்தே வந்துள்ளது. இக்காலப் பகுதிவரை பாட்டாளி வர் க்க இலக்கியங்கள் திரைமறைவு இலக்கியங்களாகவே திகழவேண்டி நேர்ந்தது.
ஆரம்பகாலத்து ஈழத்து நாவல்களும் (1885) சிறுகதைகளும் அவற்றைப் படைத்தோரின் வதிவிடங் காரணமாக ஈழத்துக்குரியவையன்றிப் பொருள் நோக்கில் அவை எவ்வகையிலும் ஈழத்தால் உரிமை கோரப்பட முடியாதவை. ஈழத்தின் மணி வாசனையை மணம் பெறச் செய்யவேண்டுமென்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஈழகேசரி, மறுமலர்ச்சி இதழ்களில் எழுதியோரும், இந்திய மண்ணில் மலர்ந்த கலைமகளையும், ஆனந்த விகடனையுமே இலக்கியப் பத்திரிகைகளாக கொண்டு விட்டனர். கலைமகளையும், ஆனந்த விகடனையும் இலட்சியப் பத்திரிகைகளாக வைத்துக் கொண்டு எழுதிய தன்மையை கவனிக்க முடிகிறது. யதார்த்த இலக்கியக்காரர்களின் பொருளாகிவிட்ட பசி, முதலாளி தொழிலாளி போராட்டங்கள் சூசமாகவே கையாளப்பட்டன. பிரசாரத்தில் வேகம் கலைக்குள் மட்டுப் படுத்தப்பட்டிருக்கின்றன, என ஈழத்து முன்னோடி எழுத்தாளர்களிகன்படைப்புக்கள் பற்றி கனக செந்திநாதன் குறிப்பிடுவது கவனத்திற்குரியது.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோற்றத்துடன் இந்த நிலையில் மாற்றங்கள் நிகழ்வதை அவதானிக்கலாம் வர்க்க அடிப்படையில் அல்லது உற்பத்திக்கும் சமுதாய உறவுகளுக்கும் இடையேயான தொடர்புகளின் அடிப்படையில் சமூகப் பிரசினைகள் அணுகப்பட வேண்டிய தன் அவசியம், இச்சங்கத்துடன் இணைந்த எழுத்தாளர்களின் படைப்புக்களில் துலக்கம் பெறுவதை அவதானிக்கலாம். இந்த மாற்றத்திற்கு யார் காரணமென்பது பிரச்சினையன்று. இந்த மாற்றத்தின் துாண்டு விசையாக டொமினிக் ஜீவா திகழ்ந்தாரென்பதே முக்கியமானது. 1960-ல் டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் சிறுகதைத் தொகுதிக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைதத்தமை அக்காலப் பின்னணியில் வைத்து நோக்குகையில், ஒரு பெரும் சாதனையாகவும் இலக்கிய ஓட்டத்திலோர் திருப்பு முனையாகவுமே கொள்ளப்படவேண்டும்.
|"மல்லிகை ஜீவா" -ច.៣៨raffយញចាលh 93

Page 50
| |
அது ஜீவாவுக்குக் கிடைத்த கெளரவம் மட்டுமன்று, தொழிலாள வர்க்கத்தினரின் இலக்கியப் பிரவேசந்துக்குக் கிடைத்த வெற்றிச் சமிக்ஞையாகவே கொள்ளப்படவேண்டும். இந்தக் காலப்பகுதியிலேயே இளங்கீரன், செ. கணேசலிங்கன், என். கே. ரகுநாதன், நீர்வை பொன்னையன், அகஸ்தியர், அ. ந. கந்தசாமி, கே. டானியல் போன்றோரும் தொழிலாள வர்க்க சார்புடைய இலக்கியங்களைப் படைக்கலாயினர்.
ஆயினுங்கூட, இக்கால கட்டத்தில் தொழிலாள வர்க்க இலக்கியப் பிரசுர களம் வறுமையடைந்தே கிடந்தது. செ. கணேசலிங்கனின் நல்லவன், ஒரே இனம், சங்கமம், கே. டானியலின் டானியல் கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்திருப்பினும், அவை தொழிலாள வர்க்க இலக்கியத் தொடர்த் தேர்ச்சியான பேணுகைக்குத் தளமாக அமைந்துவிட முடியவில்லை. அக்காலத்தில் வெளிவந்த சுதந்திரன் இனஉணர்வு ஆக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க, தினகரன், வீரகேசரி ஆகியவை பெரும்பாலும் வர்க்க நோக்கற்ற இலக்கியங்களுக்கே முதலிடம் வழங்கின. எனவே, வீறு கொணி டெழுந்த தொழிலாள வர்க்க இலக்கிய சிருஷ்டிகளுக்குத் தகுந்த ஒரு வடிகால் தேடிக்கொள்வது இன்றியமை யாததாயிற்று.
இந்த நிலையிலேயே 1966-ல் ஜீவா மல்லிகையை ஆரம்பித்தார். இஃது காலத்தின் தேவை கருதிச் செய்யப்பட்ட மிகத் தீர்க்கதரிசனமான ஒரு முயற்சியேயாகும். ஈழத்தில் தொழிலாளி வர்க்க இலக்கியத்தின் தொடர்ச்சியையும் மாட்சியையும் பேணிப் பாதுகாக்கும் நிறுவனமாகவும் மல்லிகை அமைந்து விட்டது. இன்றும் ஈழத்தின் கொடுமுடிகளாகத் திகழும் எழுத்தாளர்களும், விமர்சகர்களும், சஞ்சிகை ஆசிரியர்களும் மல்லிகையால் உருவாக்கப்பட்டவர்கள், வளர்க்கப்பட்டவர்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. மல்லிகையென்றொரு சஞ்சிகை தோன்றாவிடின் வாய்மொழி இலக்கியங்களாகவே தொழிலாளி வர்க்க இலக்கியங்கள் இன்றுவரை விளங்கியிருக்கும்.
அரச நிறுவனங்கள் எத்தகைய இலக்கியங்களை வரவேற்கின்றன, பேண முயற்சிக்கின்றன என்பதற்கு அவற்றின் அண்மைக்கால வெளியீட்டு முயற்சிகள் கட்டளைக் கல்லாகின்றன. அ.ந.கந்தசாமி, கேடானியல், கவிஞர் பசுபதி போன்றோரின் ஆக்கங்கள் நுாலுருப் பெறுவதற்கு மல்லிகை போன்ற நிறுவனங்களே கைகொடுக்க வேண்டும் ஏனெனில் அவை இந்தச் சமுதாய அமைப்பையே மாற்றியமைக்கப் புறப்பட்டன. இத்தகைய அரிய கடமைகள் பல ஜீவாவை எதிர்நோக்கி நிற்கின்றன. கு
94 -சு. வண்ணியகுலம் "மல்லிதை ஜீவா |

ஜீவா என்ற மனிதன்
- எம்.கே. முருகானந்தண்
வா - ஈழத்து இலக்கிய வரலாற்றில் தனது தனித்துவத்திை நிலை நிறுத்தியது மாத்திரமன்றி அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் வித்திட்ட - ஒரு நல்ல எழுத்தாளர்.
ஜீவா - ஈழத்தில் ஒரு சஞ்விகையை, அதுவும் ஓர் இலக்கிய சஞ்சிகையைக் கடந்த இருபத்திமூன்று வருடங்களாகச் சிறப்பாகத் தொடர்பு அறாமல் நடத்திவரும் - ஒரு வெற்றிகரமான சஞ்சிகை ஆசிரியர்,
ஜீவா- யாழ் குடாநாட்டின் மிக அசாத்தியமான சூழ்நிலை நிலவிய கடந்த ஒன்றரை வருட காலத்திற்குள், ஐந்து சிறந்த இலக்கிய நூல்களை மல்லிகைப் பந்தல் அமைப்பினுாடே வெளியிட்ட - ஒரு துணிகரமான நுால் வெளியீட்டாளன்.
ஜீவா மகோன்னதமானது என்று தான் நம்பிய உலகளாவிய அரசியல் கோட்பாட்டை மனதார ஏற்றுக்கொண்டு ஆரம்பம் முதல் இன்றுவரை அதனோடு ஐக்கியப்பட்டுக்கொண்ட - ஒரு தடம்புரளாத அரசியல்வாதி.
ஜீவா - ஆக்ரோஷ உணர்வுடனும், உரத்த குரலுடனும், ஆனால் தெளிவான வார்த்தைகளால் உரையாற்றி முழுக் கூட்டத்தையுமே தன்னோடு உணர்வு புர்வமாக ஒன்றச் செய்யும் - ஒரு சிறந்த மேடைப் பேச்சாளன்.
ஜீவா - சமூகத்தின் கேவலமானதும், நியாயப்படுத்த முடியாததும் , ஆனால் தமிழ் ச் சமுதாயத்தில் ஆழமாகப் புரையோடிப்போயுள்ளதுமான சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பியதுடன் மாத்திரமன்றி, அதற்காக முன்னின்று போராடிய - சத்திய ஆவேசம் கொண்ட போராளி.
|"மல்லிகை ஜீவா" எம்.கே.முருகானங்கள் 95

Page 51
- என்று பலரும் ஜீவாவைப் பல கோணங்களிலிருந்து பார்த்து ரசிக்கலாம், பெருமைப்படலாம், அதிசயிக்கலாம், பாராட்டலாம் ஏன் நானும் தான். ஆனால் அந்தப் பெருமைகளுக்கும், அசாத்தியத் திறமைகளுக்கும் மூலகாரணமான மனிதன் - அந்த மனித நேயம் கொண்ட இனியவன் - நயமான குண இயல்புகளும், மென்மையான மனமும், பண்பட்ட உள்ளமும், மற்றவர்கள் பிரச்சனைகளைத் தானாகவே விளங்கிக் கொள்ளும் புரிந்துணர்வு கொண்ட மனிதன் - அந்த மனிதன்தான் என்னை மலைக்க வைக்கிறான். -
ஜீவா என்ற மனதனைப் பற்றிப் பேசுவதற்குப் போதிய தகுதியில்லை என்பது உண்மைதான். ஏனென்றால் ஜீவாவுடன் இலக்கியத் தொடர்பு மாத்திரமன்றி, நெருக்கமான நட்புறவையும் கடந்த 20-30 வருடங்களாகக் கொண்ட பலர் இருக்கும்போது, அவருடன் 5-6 வருடங்களே நேரடித்தொடர்பும், நட்பும் கொண்ட என்னால் எதைப் பெரிதாகச் சொல்ல முடியும்? ஆயினும் இந்தக் குறுகிய காலத்திற்குள்ளேயே ஜீவாவின் நேச உணர்வு என்னைப் பல முறை அதிசயிக்க வைத்திருக்கிறது.
இலக்கியக் கூட்டங்களுககுப் போகிற பலருக்கும் பரிச்சயமான ஒரு விஷயம். பேச்சாளர்கள் தாங்கள் ஆயத்தப்படுத்திக்கொண்டு வந்தவை யாவற்றையும் பேசி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டே இருப்பார்கள். நேரம் என்ன என்பது பற்றியோ, இன்னமும் எத்தனைபேர் பேச இருக்கிறார்கள் என்பது பற்றியோ அவர்கள் யோசித்துப் பார்ப்பதில்லை. ஆனால் பார்வையாளர்களுக்குப் பல கவலைகள் இந்தப்போர் அடிக்கும் பேச்சு எப்போ முடியும் எனச் சிலர் எண்ணுவார்கள்.
கடைசி பஸ்ஸுக்கு நேரமாகுது. அதைத் தவற விட்டால் வீடு போய்ச் சேர்வது எப்படி?’ என்ற கவலை மற்றவர்களுக்கு
வடமாராட்சிப் பகுதியிலிருந்து வரும் எங்களுக்கோ இரட்டிப்புக் கவலை! வல்லை வெளியில் gலங்கா ஹெலியின் வருகைக்கும், தொண்டமானாறிலிருந்து ஏவப்படும் ஷெல்லுக்கும் தப்பி இருளுமுன் எப்படி வீடு போய்ச் சேர்வது என்ற கவலை,
இதையெல்லாம் யார் புரிந்து கொள்கநார்களோ, இல்லையோ, ஜீவா நிச்சயம் புரிந்து கொள்வார். கூட்டத்தை நேரத்திற்கு முடித்து வைப்பதற்காக நடவடிக்கைகளை எடுப்பார். இதற்காகவே பல சந்தர்ப்பங்களில் தனது உரையை மிகமிகச் சுருக்கமாக முடித்து விடுவார். துார இடங்களில் இருந்து வரும் எம் போன்றவர்களை எல்லாம் ’பிரச்சினைக்கு முன்னர் நேரத்தோடு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்துவிடுங்கள்’ என்று அன்பாக, ஆனால் கண்டிப்பாகப் பிடித்து அனுப்பிவிடுவார்.
96 எம்.கே.முருகானங்கள் "மல்லிகை ஜீவா"
 

இவ்வளவு வேலைகளுக்கு இடையில் இவரால் எப்படி ஒவ்வொருவரது பிரச் சனைகளையும் புரிந்து கொணி டு, மனிதாபிமானத்தோடும், ஆதரவாக நடந்துகொள்ள முடிகிறது என்று நான் யோசிப்பதுண்டு காரணம் - அவர் எவ்வளவு பிரபல்யம் அடைந்தபோதும் மக்களைவிட்டு விலகவில்லை என்பதுதான்.
ஜீவாவின் வார்த்தையிலேயே சொல்வதானால் மக்களுடன் அவர்களுள் ஒருவனாகவே கலந்து பழகுகிறேன். அவர்களின் போராட்டங்களை, வாழ்க்கைப் பிரச்சனைகளை எனக்கு நன்றாகத் தெரிந்து கொள்ள முடிகிறது என்பதுதான்.
ஜீவா என்ற அந்த இனிய மனிதனின், தற்பெருமை பார்ப்பதில்லை, தான் செய்யும் வேலைகள் தனது அந்தஸ்திற்கு உகந்ததா? என்று கவனிப்பதில்லை. தெரிந்தவர்களையும், நண்பர்களையும் உபசரிக்கத் தயங்குவதில்லை.
சென்ற வருடம் இனப பிரச்சனையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிலைப்பாடு பற்றிய மாநாடு நடந்தது அல்லவா? அந்தக் கூட்டத்தில் அவர் ஒரு முக்கியஸ்தர், மேடையில் அமர்ந்திருக்க வேண்டியவர். ஆனால், அவர் அப்படித் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு சாதாரண ஊழியன்போல், வந்தவர்களை வரவேற்பதும், இருக்கைகளில் அமர்த்துவதும் போன்ற பற்பல வேலைகளைச் சுழன்று சுழன்று செய்தார்.
கூட்டத்திற்கு வந்தவர்களுக்குத் தானே தனது கையால் குளிர்பானங்களையும், சிற்றுண்டிகளையும், கதிரை கதிரையாகக் சென்று மென்முறுவலுடன் அன்புடன் கொடுத்தார். இதைப் பார்த்துப் பலரும் அதிசயித்துக் கதைத்தார்கள், ஆனால் எனக்குத் தெரியும் இதுதான் உண்மையான ஜீவா என்று. -
ஜீவா தனது நண்பர்களை ஆத்மார்தமாக நேசிப்பவர், அவர்களுடன் இலக்கிய ரீதியில் மாத்திரமின்றி, அவர்களுடைய சொந்த வாழ்க்கையின் இன்பதுன்பங்களிலும் மனசாரப் பங்கு கொள்பவர். லிபெரேஷன் இராணுவ நடவடிக்கையின் போது வடமராட்சிப் பகுதி மக்கள் பட்ட இன்னல்களும் பல நாட்களாக அவர்கள் மற்றைய பகுதிகளோடு எதுவித தொடர்பும் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டதும் எல்லோரும் அறிந்ததே.
ஆயினும் கிடைத்த சந்தாப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, மிக விரைவிலேயே நண்பர்கள் மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். அப்பொழுது அவர் என்னையும் எனது குடும்பத்தையும் பற்றி மாத்திரம்
|"மல்லிகை εξου/τ. எம்.கே.முருகானங்கள் 97

Page 52
விசாரிக்கவில்லை, இப்பகுதியில் உள்ள இலக்கிய நண்பர்கள் அனைவரைப் பற்றியுமே விசாரித்திருந்தார்.
உடலாலும், மனத்தாலும் சோர்வுற்று, விரக்தியில் இருந்த எங்களுக்கு அந்த உளப் புர்வமான, மனிதாபிமான விசாரிப்பு புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுத்தது. எம்மைப் பற்றியும் விசாரிக்க ஒரு ஜீவன் இருக்கிறதே என்ற எண்ணம், எமது இழப்புக்களை எல்லாம் மறக்கவைத்து, வாழ்க்கையில் புதிய சவால்களைத் துணிவுடன் எதிர் கொள்ளும் திடமனத்தைக் கொடுத்தது.
பின் நான் தமிழ்நாடு செனறுவிட்டேன். நான் நாடு திரும்பவும், ஜீவா மாஸ்கோ புறப்படவும் சரியாக இருந்தது. அவரைச் சந்திக்க முடியவில்லை. நான் நாடு திரும்பி விட்டதை எப்படியோ அறிந்துவிட்ட ஜீவா 10,000 மைல்களுக்கு அப்பால், யால்டா விலிருந்து, நான் நாடு திரும்பி விட்டதற்காக மகிழ்ச்சி தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்.
இவ்வளவு துாரத்திற்கு அப்பால் இருநது, அதுவும் நெருக்கமாக அமைக்கப்பட்ட பிரயாண ஒழுங்குகளுக்கும், அடுத்தடுத்து செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் நடுவே, என்னை நினைக்கவும் அதுவுமல்லாமல் கடிதம் எழுதவும் இந்த மனிதனுக்கு எப்படி முடிந்தது. என்று எண்ண எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த நல்ல உள்ளத்தின் அன்பு என்னைப் புல்லரிக்க வைத்தது.
ஜீவாவின் தமிழ் நாட்டுப் பயணங்கள் வெறும் இலக்கியப் பயணங்களாக மட்டும் இருப்பதில்லை. நண்பர்களுக்கு உதவுவதற்கு இப்பயணங்களைப் பயன்படுத்திக்கொள்வார். அவருடன் அவரது நண்பர்கள் சிலரின் கையெழுத்துப் பிரதிகளும் பயணமாகும் தனது செல்வாக்கைப் பிரயோகித்து நண்பர்களின் படைப்புகளைத் தமிழ் நாட்டின் பிரபல வெளியீட்டாளர்கள் மூலம் வெளியிட்டு வைப்பார். இதனால் அந்த நண்பர்களின் கைப்பணம் கிணற்றில் போட்ட கல்லாக முடக்குவதைப் தவிர்ப்பதோடு, அந்த நுால் கள் தமிழ் நாட்டில் வெளியான பெருமைமையையும் அவர்களுக்குப் பெற்றுத் தருவார்.
ஜீவாவின் இந்த இனிய குணநலன்கள்தான் அவரை மற்றைய எழுத்தாளர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்டுகிறது. அவரால் நண்பர்களை ஆத்மார்த்தமாக அன்பு செலுத்தவும் எல்லா மனிதர்களையும் மனிதனாக நேசிக்கவும், ஏன் எதிரணியினரையும், பகைவர்களையும் கூட உள்ளன்போடு நேசிக்கவும் முடிகிறது.
இதனால்தான் போலும் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் மனித நேயம் நிறைந்த இலக்கிய நெஞ்சம் என்று அவர்களைக் குறிப்பிட விரும்புகிறேன் என்று சொல்ல வைத்தது. கு
98 எம்.கே.முருகானங்கள் "மல்லிகை జోar" |
 

பேனா வைத்திருக்கும்
- சாரல் நாடன்
லக்கியச் சஞ்சிகை என்பது வெறுமனே படித்து எறிந்து விடும் சஞ்சிகை அல்ல, எதிர்கால இலக்கியத் தேவைக்காக இன்றே வழி சமைக்கும் இதழ்.
நுாறு ஆண்டுகளுக்குப் பின்னாலும் இதன் பெருமை பேசப்பட வேண்டும் என்ற திடசங்கல்பத்தில் -
சிலுவை சுமக்கும் பாரிய திருப்பணியாக தான் கருதும் இலக்கிய வெளியீட்டு முயற்சிகளில் -
ஈடுபடுவதற்கு முன்னரேயே படைப்பிலக்கியத் துறையில் இவரது சிறுகதைத் தொகுதி சாகித்திய மண்டலப் பரிசை வென்றிருந்தது. இக்கொளரவத்தை எய்திய முதல் தமிழ்ப் படைப்பிலக்கியவாதி தானாகவே இருந்தும் -
மல்லிகை ஆரம்பிக்கப்பட்டபோது இலக்கியச் சூழ்நிலைக்கு ஒத்ததாக இருக்கவில்லை, ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆவலே தன்னை இத்துறையில் ஈடுபடவைத்தது என்று துாண்டில் வாசகருக்கு இவர் கூறுவது
ஆசைபற்றி அறையலுற்றேன் என்று இலக்கியம் படைக்க வந்த கம்பனின் ஆர்வமும் ஓர்மமும் இணைந்த குரலைப் போல் ஒலிக்கிறது.
"மல்லிகை ஜீவா" டிசாரால் நாடன் 99

Page 53
பாதியில் நின்றுபோன தமிழ்கத்தப் புகழ்மிக்க சிற்றேடுகளையும் இலங்கையில் ஒளிவீசிய சிற்றேடுகளையும் போலன்றித் 23 ஆண்டுகளாகக் தொடர்ந்தும் நடத்தப்படும் ஒரு சஞ்சிகையின் ஆசிரியரான இவர் தமிழ் இலக்கிய வரலாற்றின் ஒரு மைல் கல்லாக கா. சிவத்தம்பியால் கணிப்பிடப்பட்டவர்.
சஞ்சிகை ஆசிரியனாகவும், படைப்பு இலக்கிய கர்த்தாவாகவும் தனது பணியைத் தொடர்ந்து வரும் இவர் நான் பேனா வைத்திருக்கும் போராளி என்று கூறுவதில் பெருமிதம் கொள்பவர்.
இன்றும் தெருத் தெருவாகச் சஞ்சிகையை சுமந்து விற்பதில் பெருமை கொள்ளும் தனது உழைப்பு எதிர்காலத்தில் வரப்போகும் ஒரு சஞ்சிகை ஆசிரியனுக்குப் பசளையாக அமையும் என்ற இவரது நம்பிக்கை கம்பீரம் நிறைந்த எதிர்பார்ப்பு ஆகும்.
அழிவுக்கு மத்தியில்தான் ஆக்கம் பிறக்க முடியும்,
இன்றைய இக்கட்டான இருள் சூழ்ந்த காலகட்டத்தில் மக்களின் நம்பிக்கையை வளர்த்தெடுக்கும் பெரும்பணி எழுத்தாளனினுடையதே.
எனவே -
தங்களின்
அறிவை விசாலப் படுத்தவும் - அனுபவங்களைச் செழுமைப்படுத்தவும் - பார்வையை நவீனப்படுத்தவும் - தமது
சமகாலத்து இலக்கிய கர்த்தாக்களை வேண்டி நிற்கிறார்.
இதழ்களின் முகப்பில் இலக்கிய கர்த்தாக்களையும் - கொள்கை வீரர்களையும் தாமரை வழிநின்று தமது இதழில் பாராட்டுக்குரியவர்களைக் கெளரவித்து வெளி உலகத்தின் கவனிப்புக்கு உள்ளாக்கியவர்.
வர்க்கப் பார்வையோடு இலங்கையின் இலக்கியக் குரலைத் தமிழகத்தில் அழுத்தமாக ஒலித்த இவர், சரஸ்வதி காலத்திலேயே சிறந்த எழுத்தாளராகத் தமிழகத்தில் ஏற்றுக் கெளரவிக்கப்பட்டவர். பிரயாணஞ் செய்து புதிய இடங்களையும் காட்சிகளையம் காண்பதில் அவருக்குச் சலிப்பில்லை. மனிதர்கள் என்று பார்க்கவும், பேசவும் துடித்து தாம் போகுமிடமெங்கும் பிணைப்பை ஏற்படுத்துவதில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு
100 - சாரல் நாடன் "மல்லிகை ஜீவா"
 

அறுபதுக்குப் பிறகு ஏற்பட்ட மலர்ச்சியின்போது தனது புரண பங்களிப்பைச் செலுத்தவேண்டி மலைநாட்டுக்கு நேரில் சென்று இலக்கிய கர்த்தாக்களைச் சந்தித்து வர்க்க இலக்கியம் வளர்த்தெடுப்பதற்கு வழிவகைகள் கண்டவர். இலங்கையில் இலக்கியம் வளர்வதும் - நலிவதும் தேசியப் பத்திரிகைகளால் தாம் என்றிருந்த நிலைமையில் - அப்பத்திரிகைகளின் தரத்தை உயர்த்தி இலக்கியக் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் அசாத்திய வேலையை அயராது செய்வதில் முன் நிற்கும் இவருக்கு - தனி வாழ்க்கை என்ற ஒன்று இருப்பதாகக் காணோம்.
எழுத்து, இலக்கியம், இயக்கம் என்று ஒன்றாய் இணைந்து செயல்படும் இவரது குரல் - ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் என்று கருதப்படுவது - விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தவிர்க்க முடியாத வளர்ச்சியாகும்.
தாய் மொழியைச் செழுமைப்படுத்த உதவுவதற்கன்றி, ஒரு படைப்பாளிக்குத் தெரிந்த வேற்றுமொழி அப்படைப்பாளியின் மொழிப் புலமை வெறுமனே பிரகடனப் படுத்துவதாக மட்டும் அமையக்கூடாது என்று எழுபதுகளிலேயே சாடிநின்ற டொமினிக் ஜீவா தனது 37-வது வயதில் (1966 மல்லிகையை ஆரம்பித்து - நின்று, நிதானித்து வளர்ந்து - சஞ்சிகையை வளர்த்து நம்மில் இலக்கிய மாமணியாய் மிளிர்ந்து நிற்கிறார்.
அவரது வாழ்வும் - வளமும்
படைப்பும் - பங்களிப்பும்
இலக்கியப்போராளியாக அவரை இனம் காட்டத் தவறவில்லை.கு
"மல்லிகை ஜீவா" - சாரல் நாடன் 101

Page 54
ମୁଁ ୟj(t4nd ஈழத்து இலக்கிய வரலாறும்
- சிசங்கை ஆழியான்
டொமினிக் ஜீவாவிற்கு வயது அறுபது, ஈழத்து சிறுகதைத் துறைக்கும் வயது அறுபதுதான். யாழ்ப்பாணத்து ஏழைத்தொழிலாளக் குடும்பத்தில் 27-06-1927 -இல் ஜீவா பிறந்தபொழுது, ஈழத்துச் சிறுதைத் துறையின் மூல மூவர் எனக் கொள்ளப்படும் சி. வைத்தியலிங்கம், சம்பந்தர், இலங்கையர்கோன் என்போர் சிறுகதை பற்றிச் சிந்திக்கவும் எழுதவும் ஆரம்பித்தனர்.
ஜீவாவிற்கு மூன்று வயது நடக்கும்போது, தமிழில் சிறுகதைத் துறைக்கு இலக்கிய அந்தஸ்தை ஏற்படுத்தத் தமிழ்நாட்டில் மணிக்கொடி எழுத்தாளர்கள் அயராது முயன்று போராடினர். 1930-ம் ஆண்டு தொடக்கம் சிறுகதை ஈழத்தில் உருவப் பிரக்ஞையுடன் எழுதப்படலாயிற்று இந்த உருவப் பிரஞ்ஞையானது ஆங்கிலக் கல்வியினாலும் தென்னிந்திய இலக்கியச் செல்வாக்கினாலும் அமையலாயின (கா. சிவத்தம்பி - 1967) தென்னிந்திய இலக்கிய செல்வாக்கின் பிடியினின்றும் ஈழத்துச் சிறுகதைத் துறை விலகாத காலகட்டத்தில், 1946 - ஆம் ஆண்டில், முதன் முதல் டொமினிக் ஜீவா எழுதத் தொடங்கினார். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 80 சிறுகதைகளை எழுதி ஈழத்து இலக்கியத் துறைக்கு தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.
புத்தெழுச்சிக் காலம்
ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக
அல்லது புத்தெழுச்சிக் காலமாகக் கருதப்படும் 1956-ஆம் ஆண்டில் சுதந்திரன் பத்திரிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் டொமினிக் ஜீவாவின்
102 -செங்கை ஆழியான் "மல்லிகை ارومیه rr" |
 

சிறுகதை முதற் பரிசைப் பெற்றுக்கொண்டது. 1956-ல் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளால் இலங்கைத் தமிழரிடையே தேசிய உணர்ச்சி பிறந்ததுடன், வர்க்க உணர்வுகள் தீர்க்கமடைந்தன. தேசிய விழிப்பும், வர்க்கப் போராட்டங்களும் சுதந்திரத்திற்குப்பின் மக்களிடையே பெரியதொரு சிந்தனை மறுமலர்ச்சியை ஏற்படுத்தவே, இலக்கியமும் அவ்வழியே திசை திரும்பியது. நாட்டின் பிரச்சினைகளை இலக்கியங்கள் முன்னிறுத்த வேண்டும் என்ற துடிப்பில் தேசிய இலக்கியக் கொள்கை தீவிரமடைந்தது. இப்பின்னணியை நன்குணர்ந்தவரான க. கைலாசபதி 1957-ல் தினகரன் ஆசிரியராக விளங்கியபோது இவ்வெழுச்சியை துாண்டி வளர்த்தார். புதியதொரு எழுத்தாள பரம்பரையையும் தோற்றுவித்தார். இக்காலகட்டத்தில் எஸ்.பொன்னுத்துரை, கே. டானியல், செ. கணேசலிங்கள், என்.கே ரகுநாதன், காவலுார் ராசதுரை, டொமினிக் ஜீவா போன்றவர்கள் தரமான சிறுகதைகளைப் படைத்தனர். (செம்பியன் செல்வன் - 1973)
1960-ஆம் ஆண்டு ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தளவிலும் டொமினிக் ஜீவாவைப் பொறுத்தளவிலும் முக்கியமான ஓராண்டாகும். 1960 தொடக்கம் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி, தாய்மொழி மூலம் போதிக்கப்படலாயிற்று சிறப்பாகக் கலைத் துறைப் பாடங்கள் தமிழிலும் சிங்களத்திலும் கற்பிக்கப்படவே, பல்கலைக் கழக மாணவர்கள் பலர், பிறமொழிச் சிறுகதைகளையும், அவற்றின் ஆய்வுகளையும் படித்ததோடு அமையாது, தாமும் எழுத ஆரம்பித்தனர். மலையாளம், ருஷிய, வங்காள நவீன எழுத்துக்களுடன் தமிழகச் சிற்சில நவீனத்துவப் போக்குகளும் இவர்களுக்கு ஊக்கியாக அமைந்தன. இவர்களில் செ.யோகநாதன், செ, கதிர்காமநாதன், செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், துருவன், குந்தவை, மு. பொன்னம்பலம் போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள் க. கைலாசபகி -1972), இவர்கள் எழுத ஆரம்பித்த அக் காலவேளையில் டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணிரும் என்ற முதலாவது சிறுகதை தொகுதி, சரஸ்வதி வெளியீடாக சரஸ்வதி சஞ்சிகையின் ஆசிரியர் வ, விஜயபாஸ்கரனால் வெளியிடப்பட்டு, ஈழுத்துச் சிறுகதைத் துறையைத் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது. ஈழத்தின் நவீன தமிழிலக்கியம் தென்னிந்திய தமிழிலக்கியத்தின் பிரதியாக அமையாது, ஈழத்தின் மண்வாசனையையே பிரதிபலிப்பதாக இருத்தல் வேண்டும். (கா. சிவத்தம்பி-1975) என்பதற்கு எடுத்துக்காட்டாக, டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணிரும் சிறுகதைத் தொகுதி அமைந்தது.
LDUL, GLTUTILLLò
1961-ஆம் ஆண்டு ஈழத்து இலக்கியத்தில் (மரபு போராட்டம்) என்ற எரிமலை ஒன்று வெடித்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் மிக உச்சமான
"மல்லிகை ஜீவா" ܢ] ܚܡ[sHIGnt5 ஆழியாள் 103

Page 55
ஒரு தர்க்கமாக இது அமைந்தது. இந்த இலக்கிய தர்க்க எரிமலை உயிர்ப்பித்து கக்கவைத்த நிகழ்விற்கு டொமினிக் ஜீவாவே காரணமாயினர். அவரது சிறுகதைத் தொகுதியான தண்ணிரும் கணிணிரும் அவ்வாண்டின் இலங்கையின் மிகப் பெரிய விருதாயும் பரிசாயும் கருதப்பட்ட சாகித்திய மண்டல பரிசினைப் பெற்றது. ஈழத்தின் முதல் முதல் நவீன புனைக்கதை இலக்கியத்திற்கான சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற பெருமை ஜீவாவிற்கே உரியது என்பது குறிப்பிடத்தக்க ஈழத்து இலக்கிய வரலாற்று நிகழ்வு ஜீவா பெற்ற சாகித்திய மண்டல பரிசு ஈழத்து மரபுகளின் இலக்கிய கருத்தாக்களை விழித்திடச் செய்தது. ஈழத்தின் தமிழிக்கிய பாரம்பரியம் தங்கள் கைகளில் இருந்து பிடுங்கப்படுவதையும் எதிர்காலத்திலும் தமது முதன்மைத்துவம் பறிக்கப்பட்டு விடும் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொண்டனர். எனவேதான் ஒன்று சேர்ந்து மரபு போராட்ட அணி ஒன்றை உருவாக்கினர் (சி.வன்னியகுலம் -1986) சிறுகதைகளும் வசனகவிதையும் இலக்கியமாகா, இன்றைய சிறுகதை படைப்பில் இழிசினர் வழக்கே அதிகரித்து விட்டது. பேச்சுத் தமிழுக்கு இடமளிக்கும் பொது உடமைவாதிகள் தமிழைக் கொலைசெய்கிறார்கள் (ஆ. சதாசிவம்-1963) எனக்குரலிட்டனர், ஜீவாவின் சிறுகதை தொகுதிக்கு கிடைத்த சாகித்திய மண்டல விருது, மக்களை இலகுவில் சென்றடையும், நவீன உரைநடை புனைக்கதை இலக்கியத்தை ஆக்க இலக்கியமாக ஈழத்தில் அங்கீகரிக்க வைத்தது.
மல்லிகை
1966-ஆம் ஆண்டு டொமினிக் ஜீவா மல்லிகை சஞ்சிகையை வெறும் உழைப்பையும், தன்நம்பிக்கையையும் மூலதனமாகக் கொண்டு ஆரம்பித்தார். ஆரம்பித்த சூழ்நிலை முக்கியத்துவம், ஜீவாவின் இலக்கிய வேட்கைக்கும், இலக்கிய நேர்மைக்கும் சான்றாகின்றன. தென்னிந்தியத் தமிழ்ச் சஞ்சிகைகள் வர்த்தக ரீதியாகக் கணக்கற்று இங்கு வந்து குவிந்த காலவேளை அது அவற்றின் மீது இறக்குமதிக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் வாசகரின் தேவையை நிறைவுசெய்ய உள்நாட்டில் சஞ்சிகைகள் தோன்றவேண்டியது அவசியமாகியது முன்னைய இலக்கிய சுரண்டலுக்குக் குரல் தந்து வெற்றியீட்டிய ஜீவாவே, பின்னைய தேவையைப் புர்த்திசெய்ய மல்லிகை சஞ்சிகையை ஆரம்பிக்க வேண்டியவரானார். வெள்ளிவிழா ஆண்டை நோக்கி நடை பயிலும் மல்லிகை ஈழத்து நவீன இலக்கியத் துறைக்கு ஆற்றியுள்ள செழுமையான பங்களிப்பு இலக்கிய வரலாற்றில் குறைவாக மதிப்பிட முடியாதது. முதிரா இளமையின் அனுபவக் குறைவு, தன்னலம், கோட்பாடு ரீதியான வேறுபாடுகளை மனிதநேய பகைமையாகக் கருதுமியல்பு என்பன நீங்கிய காலக்கட்ட வயதில் ஜீவா மல்லிகையின் இலக்கியம் கம்பீரமாகவும்
104. |-செங்கை ஆழியான் "மல்லிதை ്വr" |
 

கலையழகுடனும் சமூகப்பயன் நல்குவதாகவும் விறுநடைபோட கடந்த இரு தசாப்தங்களாக உதவியுள்ளன.
ஜீவாவின் சிறுகதைகள்
டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள், தண்ணீரும் கண்ணிரும், சாலையின் திருப்பம் பாதுகை வாழ்வின் தரிசனங்கள் என நான்கு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இந்த நான்கு தொகுதிகளும் வெளிவந்துள்ளன; இந்த நான்கு தொகுதிகளும் ஈழத்திலும், தமிழகத்திலும் நன்மதிப்பையும் வரவேற்பையும் பெற்றன. ஜீவா இலங்கையின் சகல சஞ்சிகைகளிலும் எழுதியுள்ளார். ஆரம்பத்திலிருந்து அவரை வளர்த்து, ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரென நிலைப்படுத்திய பெருமை எஸ். பொன்னுத்துரை என்.கே. ரகுநாதன், கே. டானியல் முதலான பொதுவுடமைத் தத்துவார்த்த எழுத்தாளர்களை உருவாக்கிய அதே சுதந்திரன் பத்திரிகைக்கே உரியது. வீரகேசரி, தினகரன் பத்திரிகைகளில் அதிக சிறுகதைகளை ஜீவா நிறைவாக எழுதினார். ஜீவாவின் கருத்துக்களையும், எழுத்துக்களையும் செழுமைப்படுத்தத் தளமமைத்துக் கொடுத்தவை தமிழக இலக்கிய ஏடுகளான சாந்தி சரஸ்வதி , தாமரை ஆகியவையாகும். இவற்றின் மூலம் தமிழக இலக்கியத்தின் புத்துணர்ச்சி துாண்டப்பட, புனைகதை இலக்கிய ஆக்க கர்த்தா ஜீவாவின் ஆக்கங்கள் கணிசமானவளவு எண்ணிக்கையில் சரியத் தொடங்கின. ஈழத்து இலக்கியம், பற்றிக் கவலைப்படத் தொடங்கிய ஜீவா, தன்னளவில் தன் ஆக்கத்திறனை ஒடுக்கிக்கொண்டவரானார். அதன் பின் மல்லிகையில் ஆண்டிற்கொரு சிறுகதையாகவே ஜீவாவின் புனைகதையைக் காண நேர்ந்ததது. 1964 -ஆம் ஆண்டின் பின் மல்லிகை ஜீவா வளர்ந்து ஈழத்திலக்கியத்திற்கு நன்னீர் பாய்ச்சிய சம்பவம், சிறுகதை எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் பரிபரண ஆக்க வெளிப் பாட்டிற்கு அணைகட்டியதெனலாம்.
இலக்கியத் தேடுதல்
மார்க்ஸிசச் சித்தாந்தங்களினால் கவரப்பட்ட ஒரு முற்போக்கு எழுத்தாளராக டொமினிக் ஜீவா காட்சி தருகிறார், என அவரும் அவர் சார்ந்த இயக்க விமர்சகர்களும் அவரை இனம் காண்கின்றனர். கட்டுக்கோப்பான, சக்திமிக்க, தார்மீக நேர்மையுள்ள இயக்கத்திலும் நீண்டகாலமாக என்னையும் ஒரு கணிணியமாக இணைத்துப் பிணைத்துக் கொண்டு தினசரி வாழ்வில் இயங்கி வருகின்றேன்’ என ஓரிடத்தில் ஜீவா தன்னை இனங்காட்டுகிறார். ஜீவாவின் கதைகளில் வரும்
"மல்லிகை ஜீவா" - செங்கை ஆழியாள் 105

Page 56
பாத்திரங்களெல்லாம் இன்றும் யாழ்ப்பாணப்பகுதியில் உயிருடன் நடமாடும் ஜீவன்களே (வ, விஜயபாஸ்கரன்-1960) அவருடைய கதைகளில் வரும் பாத்திரங்கள் இன்றைய மனிதர்கள், நாளைய புதிய சமுதாயத்தின் இன்றைய பிரதிநிதிகள் தபால்காரர், கார்க்காரன், பத்திரிகை நிருபர், துறைமுகத் தொழிலாளி ஆகியோரின் கதைகளில் தாம் இவை (டொமினிக் ஜீவா 1982) மக்களுடன் மக்களாக மிக நெருங்கி நின்று, தொழிலாளி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து அவருடைய கதைகள் கூடுதலாக எழுதப்பட்டன. அவருடைய சிறுகதைகளில் அவரால் வரித்துக்கொள்ளப்பட்ட, மார்க்சீச சிந்தாந்தங்களின் அடியொற்றிய, மனுக்குல விடிவிற்கான கருத்துக்கள் கூடுதலாகத் தொக்கி நின்றாலும், அவை யாவற்றிற்கும் அப்பால் புதியதொரு இலக்கியத் தேடுதல் காணப்படுகிறது, ஜீவா தன்னை மார்க்சீச சித்தாந்தங்களுள் சிறைப்படுத்திக் கொண்டாலும், அவருடைய படைப்புகளில் அத்தத்துவ விசாரங்களுக்கும் அப்பால், காலதேச வர்த்தமானங்களுக்குப் பொருத்தமான கருத்துச் சிதறல்கள் நிறையக் காணப்படுகின்றன. ஜீவாவின் அண்மைக்காலக் கதைகள் இலங்கையின் பேரினவாதத்தைப் புரிந்துக்கொண்ட, தமிழ்த் தேசியவாதத்தைப் புரிந்துக்கொண்ட, தமிழ்த் தேசியவாதத்தை அரவணைக்கும் கருத்துக்களைக் கொண்டனவாய் உள்ளமை இக் கூற்றை வலியுறுத்தும், அண்மைக்காலக் கதைகள் மாத்திரமல்ல, 1964ஆம் ஆண்டிற்கு முன்னெழுதிய வெண் புறா, தீர்க்கதரிசி, முற்றவெளி’, ‘கரும்பலகை முதலான பல கதைகளில் சித்தாந்தத்தை மீறிய கருத்துக்கள் நமது தேசத்துப் பிரச்சினைகளினதும் சமூக உறவுகளனைத்தினதும் உருவமாகவும், உலக இலக்கியத்தின், பொது நோக்கோடு பொருந்துவனவாயும் இருப்பதால் தான், டொமினிக் ஜீவா ஏனைய மார்க்சீச எழுத்தாளர்களினின்றும் வேறுபட்டு, புதியதொரு இலக்கியத் தேடுதலைச் செய்பவராகத் தெரிவதோடு, ஆக்க இலக்கிய கர்த்தா என்ற தகுதிக்குமுரியவராகிறார்.
தன்னைச் சுற்றி நிகழும் நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்ட மன அவசத்திற்கு அவர் உருக் கொடுக்கும் போது, அவருக்குப் பிறப்புரிமையாகக் கிடைத்துள்ள கலையுணர்ச்சியும் கலந்து அவரது கதைகளில் பிரசாரத்தன்மை குறைந்தும் இலக்கிய அம்சம் மேம்பட்டும் நிற்கும்படி செய்து விடுகின்றன. (வ, விஜயபாஸ்கரன்-1960) ஆம் ஜீவாவினால் பல சந்தர்ப்பங்களில் பல்வேறு சமூக அரசியல் சூழ்நிலைகளில் நின்று எழுதியுள்ள பல வகைப்பட்ட கதைகள், மயங்கும் கற்பனை உலகத்தைக் காட்டுவனவாக அமையாது, மண்ணில் கால்பதித்து, அழுத்தமான மனப்பதிவுகளை ஏற்படுத்துவனவாகவும், கூர்மையான மனச்சாட்சி உள்ளவர்களின் இதயங்களின் ஒரு மின்னல் சுடரொளியைய்த்
106 |-செங்கை ஆழியான் "மல்லிகை ஜீவா"

துடிக்கவைக்கும் ஒரு ஆற்றல் கொண்டவராயும் (டொமினிக் ஜீவா -
1982) எல்லாவற்றிற்கும் மேலாக கலாபுர்வமாகவும் ஆக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் மண்டலச் சிந்தனை
டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் மூன்றாம் மண்டல நாடுகளுக்குரிய இலக்கியப் போக்கினைக் கொண்டவை. முதலாம் மண்டல நாடுகளான ஜனநாயக சோஷலிச நாடுகளின் முதலாளித்துவ நாடுகள் என்பது இனிப்பொருந்தா) வாழ்க்கைத்தர உயர்வும், சமூக நலச்சேவைகளில் காணப்படும் நிறைவும் இந்த நாட்டு இலக்கியங்கள் வீரம், வியப்பு, விஞ்ஞானம், சமூகம் தழுவிய ஆக்கங்களாக வெளிவர வைத்துள்ளன. அதேவேளை இரண்டாம் மண்டல நாடுகளான சமதர்ம சோஷலிச நாடுகளின் வாழ்க்கைத்தர உயர்வும், குறைவும், சமூக இடர்பாடுகளை வெற்றிகொள்ள நடந்து வரும் போராட்டங்களும் வர்க்க பேதமற்ற, சுரண்டலற்ற மனுக்குலத்தின் விடிவிற்கான இலக்கியங்களை வெளிக் கொணர வைத்துள்ளன. இந்த இரு மண்டல நாடுகளின் சமூக பொருளாதார, அரசியல் அணுகுமுறைகளின் விதைப்பு நிலங்களாக விளங்கும் மூன்றாம் மண்டல நாடுகளின், இலக்கிய விளைச்சல், முற்றிலும் புதிதான சித்தாந்த வெளிப்பாடுகளாக அமைந்துவிடுகின்றன. ஜீவாவின் கதைகள் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை.
டொமினிக் ஜீவாவின் சிறுகதைகளில் சமூக நோக்கு சமநிலையானது ஏழையையும் செல்வந்தனையும், தொழிலாளியையும் முதலாளியையும், சாதிவெறியினரையும் அடிமை குடிமைகளையும் ஜீவா நோக்கும் போது, பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகக் குரல் தந்து, அத் தாங்கொணாத் துயரிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கத்தைக் கூறுகின்ளற அதே வேளை, அத்துயரிற்குக் காரணமான மனிதரும் அதே சமுதாயக் களத்தின் அங்கம் என்ற மனித நேயத்தால் அவர்மீது போர்க்கணை தொடுக்காது, மனமாற்றத்திற்கான தடத்தைக் காட்டுவதைக் காணலாம். இரு பகுதியினரதும் அறியாமைக்காக அவர் உள்ளம் அக்கதைகளின் அழுகிறது தண்ணீரும் கண்ணீரும் கொச்சிக் கடையும் கறுவாக்காடும் ஞானம் ஆகிய சிறுகதைகள் இவ்வாறானவையாகும். இவ்விடத்தில்தான் கே. டானியலிருந்து ஜீவா வெறுபடுவதோடு, தனித்துவமான சமூக நிலை நோக்கையும் கொண்டவராகின்றார்.
"மல்லிகை ஜீவா" -செங்கை ஆழியான் 107

Page 57
கருத்து வேகம்
பொதுவாக கம்யுனிச எழுத்தாளர்களின் சிறுகதைகளில் கருத்தின் வேகம் பிரதானமாகக் கொள்ளப்பட்டு, வார்த்தைகள் வெறும் ஊடகமாகப் பயன் னடுத்தப்படுவதைக் காணலாம். வார்த்தைகள் தேர்ந்து பயன்படுத்தாதபோது, அவை கலாபுர்வமான இலக்கியப் பண்பை இழந்துவிடுகின்றன. டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள், அனுபவக் குறிப்புகள், மல்லிகைத் தலையங்கங்கள் என்பனவற்றில் கருத்தின் வலிமையை வெளியிட அவர் கைக் கொள்ளும் வார்த்தைகள் தனித்துவமானவை கலாபுர்வமானவை.
உறவுநிலை
டொமினிக் ஜீவாவின் சிறுகதைகள் அனைத்தும் ஒருங்கே சேர்க்கப்பட்டு, ஒரு பெருந் தொகுதியாக வெளிவர வேண்டும். அவ்வாறு தொகுக்கப்படும்போது, காலவரன் முறை கவனிக்கப்பட வேண்டும் ஜீவா ஈழம் பெற்ற ஓர் அரிய எழுத்தாளர், அற்புதமான மானுடன், தன்னம்பிக்கையும் எவருக்கும் அஞ்சாது தன் கருத்தைக் கூறும் வலிமையும் மனிதரின் துயர்கண்டு கலங்கும் உளப்பாங்கும் கொண்டவர்.
புதுமைப்பித்தன் குறித்து மீ.ப.சோமசுந்தரம் ஓரிடத்தில் குறிப்பிடப்படும் பின்வரும் வாக்கியங்கள், டொமினிக் ஜீவாவிற்கும் எனக்கும் மிகப் பொருத்தமானவை:
முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில், முற்றிலும் வேறுபட்ட ஒரு குழுவில் உருவாகிய என்னிடம் அவருக்கு இருந்த அன்பும் மதிப்பும் பலருக்கு வியப்புட்டின், சிலருக்குக் குழப்பத்தைத் தந்தன, என்றாலும், நாங்கள் இருவரும் ஒருவரையெருவர் மதிக்கவும் வாஞ்சையோடு பார்க்கவும் எங்கள் இதயத்தில் ஓர் அதிசயமான தொடர்பு ஏற்பட்டிருந்ததுகு
108 |-செங்கை ஆழியான் "மல்லிகை ஜீவா

ஜீவ மனிதம்
- எஸ். திருச்சிசல்வம்
தமிழ் மக்களுடைய பாரம்பரிய ஆண்டுக் கணிப்பு அறுபது வருடச் சுழல் வட்டத்தைக் கொண்டது. இப்போது உத்தியோகபுர்வமாகவுள்ள மேல்நாட்டு வருடக் கணிப்பைப் போன்று நேர்க்கோட்டு முறையானதன்று. இது சுழல் வட்டமானது,
தமிழ்ப் பஞ்சாங்கத்தில் அறுபதுக்கு மேல் வருடங்கள் இல்லை. பிரபவ வருடம் தொடங்கி அட்சய வருடம் வரையான அறுபது வருடங்களைக் கொண்டது, ஒரு சுழல் வட்டம் அறுபதுக்கு மேல் புதிய சுழலுக்குள் செல்கின்றோம்.
அறுபது முடிந்த அறுபத்தொன்று ஆரமபிக்க, நாமும் மீண்டும் பிறந்த அதே ஆண்டுக்குள் புகுகின்றோம்.
இதனால்தான், சஷ்டியப்த புர்த்தி என்று வழங்கப்பெறும் அறுபதாண்டுப் பூர்த்தி ஒருவனுடைய வாழ்க்கையில் முதன்மையானதாக மதிப்புப் பெறுகின்றது. அறுபதாண்டுச் சுழல் வட்ட முடிவில், ஒரு மனிதனின் ஆளுமையின் முமூப் பொலிவையும் கண்டுகொள்ள முடிகின்றது.
அறுபது வருட வாழ்க்கை எந்த மட்டததில், யார் யாருக்கு ஏற்புடையதோ, அந்த வகையில் அது கொண்டாடப் பெறுகின்றது. பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள், துணைவேந்தர் பேராசியளிர் சு. வித்தியானந்தன், நடிகமணி வி.வி.வைரமுத்து, பிரபல எழுத்தாளர் கே. டானியல் (மறைவுக்குப் பின்னர்), துர்க்கா துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி பேராசிரியர் நந்திஆகியோர் இவ்வகையில் அண்மைக் காலத்தில் மணிவிழாக்கண்ட ஈழத்துப் பிரமுககர்கள்.
"மல்லிகை ஜீவா" -எஸ்.திருச்செல்வம் 109

Page 58
டொமினிக் ஜீவா அவர்களின் மணிவிழா மலருக்கு ஒரு கட்டுரை அனுப்புங்கள் என்று மணிவிழாக் குழுவினரிடமிருந்து கடித அழைப்பு வந்தபோது, எழுதவேண்டும் என்று எண்ணினேன். குழு உறுப்பினர்கள் பல தடவை நேரில் சந்தித்து கட்டுரையை விரைவில் தாருங்கள் என்று கேட்டபோது விரைவாகவே எழுதவேண்டும் என்று முடிவெடுத்தேன். எனது விரைவான காலம் எட்டு மாதங்கள் என்பதை இங்கு குறிப்பிட்டேயாகவேண்டும் மலர் அச்சடிப்பு வேலை முடிவடையும் காலகட்டத்திலேயே எனது கட்டுரையைக் கிடைக்கச் செய்தேன்.
பேச்சாளர், எழுத்தாளர், சஞசிகையாளர், புத்தக வெளியீட்டாளர், சிறந்த விற்பனையாளர், சாகித்திய பரிசு பெற்ற இலக்கியக்காரர் என்றெல்லாம் போற்றப் பெறும் நண்பர் டொமினிக் ஜீவா பற்றிய கட்டுரை எவ்வகையானதாக அமைய வேண்டுமென்பதில் எனக்குள்ளே இடம்பெற்ற பலத்த மோதல் இந்தத் தாமதத்திற்கு ஒரு காரணமாகும்,
ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு மேலாக எனக்கும் ஜீவாவுக்கும் இடையே நிலவி வரும் தோழமையான அன்பு எங்கள் இதயம் கலந்தது என்பதால், மற்றைய எழுத்தாளர்களோ, இலக்கியக்காரர்களோ, நண்பர்களோ பார்க்கும் இலக்கியக் கண்ணோட்டத்திலன்றி, கொஞ்சம் வித்தியாசமானதாக இதனை எழுத விரும்புகின்றேன்.
இது சவரக் கடையல்ல எனது சர்வகலாசாலை என்று மனந்திறந்து, மிகுந்த பெருமையுடன் தனது தொழிற் கூடத்தைப் பற்றி எழுதிய - பேசிய டொமினிக் ஜீவாவின் உள்ளே ஒளிந்திருக்கும் மனிதத்துவம் மட்டுமே என்னையும் ஜீவாவையும் இத்தனை ஆண்டுகளாக இணைத்து வைத்திருக்கின்றது, என்பதை இங்கு மனம் திறந்து குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஜீவாவின் மல்லிகை, ஜீவாவின் எழுத்து, ஜீவாவின் கருத்து, ஜீவாவின் அரசியல் நடைமுறை, ஜீவாவின் போக்கு ஆகியவைகளுடன் முற்று முழுதாக ஒப்புதல் இருக்கின்றதோ, இல்லையோ என்பது ஒரு புறமிருக்க, மற்றவாகளின் பேச்சு, எழுத்து, கருத்து, போக்கு, அரசியல் செயற்பாடு ஆகியவைகளுக்கு ஜீவா அளிக்கின்ற மதிப்பு இருக்கின்றதே, அதுதான் ஜீவாவை நேசிக்கத் துாண்டிய சங்கதிகள்.
1965-ம் ஆண்டில் நான் ஈழநாடு பத்திரிகையல் கடமையாற்ற ஆரம்பித்த காலத்தில், முதன்முதலாக ஜீவாவை கஸ்துாரியார் வீதியில் (வண்ணான் குளம் அருகில்) அமைந்திருந்த அவரது தொழிற் கூடத்தில், ஒரு தொழிலாளியாகவே சந்தித்தேன். நண்பர் பாமா ராஜகோபாலே எமது சந்திப்புக்குக் காரணகர்த்தா,
110 -எஸ்.திருச்செல்வம் "மல்லிதை ஜீவா
 
 
 
 
 
 
 
 
 

ஜீவாவின் பரிசுபெற்ற தண்ணிரும் கண்ணிரும் சிறுகதைத் தொகுதியை வாசித்த ஈரம் முற்று முழுதாக என் மனதிலிருந்து காய்வதற்குள் இச் சந்திப்பு நிகழ்ந்ததால் என்னையுமறியாத ஏதோவொரு துாண்டல் அடிக்கடி அங்கே செல்ல வைத்தது.
இலக்கியச் செல்வர் கனக செந்திநாதன், ஏ.ஜேகனகரட்னா, யாழ் வாணன் உட்பட பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை ஜீவாவின் சர்வகலாசாலையில் தான் நான் முதல் முதலாகச் சந்தித்தேன், என்று கூறுவது புகழ்ச்சிக்குரிய தன்று அப்போது எனக்கு இருபது வயது,
எனது மதிப்புக்குரிய ஆசான் சிற்பியின் கலைச் செல்விப் பண்ணையில் வளர்ந்த நான், ஜீவாவின் மல்லிகைப் பந்தலில் பல இலக்கியக்காரர்களைச் சந்திக்கவும், அறிந்து கொள்ளவும் முடிந்தது.
ஈழநாட்டில் ஆரம்பமான எனது பத்திரிகைத் தொழில் என்னைக் கொழும்பு வாசியாக்கி, தினகரன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்றெல்லாம் கொண்டுசென்று, 1983 ஜூலை கலவரத்துடன், மீண்டும் யாழ்ப்பாணம் வந்து ஈழமுரசுவின் ஸ்தாபக ஆசிரியராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், 1987 நவம்பரில் முரசொலியை ஆரம்பித்து, அதன் பிரதம ஆசிரியராகிய ஒவ்வொரு கட்டத்திலும் ஜீவாவின் மனிதத்துவ நட்பு என்னை வளர்த்த காரணிகளில் ஒன்றாகும்.
தினகரன் பத்திரிகையில் 1972-ம் ஆண்டில் நான் எழுதிய எஸ்.பொ. வின் பேட்டிக் கட்டுரையொன்று எனக்கும் ஜீவாவுக்குமிடையே சில ஆண்டுகள் தொடர்பற்ற இடை வெளியினை ஏற்படுத்தியதென்பது உண்மையே,
அந்தக் கட்டுரையில் எஸ். பொ. என்ன சொல்லியிருந்தார் என்பதை இப்போது எண்ணிப் பார்க்கும்போதுதான் எனக்கே அதன் ஆழம் எத்துணை கோபத்தை ஏற்படுத்துகின்றது என்றால், அப்போது ஜீவாவுக்கு அது எத்துணை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை என்னால் நன்கு உணர முடிகின்றது.
எஸ். பொ, குறிப்பிட்ட ஒரு கருத்தை அவ்வாறே நான் கட்டுரையில் எழுதியிருந்த போதிலும், ஜீவா எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது என்னைக் கண்டித்தோ, தாக்கியோ எங்கும் பேசவோ, எழுதவோ இல்லையென்பதையும், அன்றி, குறைபட்டுத் தன் மனவேதனையை
|"மல்லிகை ஜீவா" -எஸ்.திருச்செல்வம் 111

Page 59
வெளியிடவோ இல்லை யென்பதையும் நான் அறிந்தபோது, ஜீவாவைப் பற்றிய எனது மதிப்பு மேலும் அதிகரித்தது.
ஜீவாவின் மனிதத்துவத்தை நான் முதலாக அன்றுதான் மதிப்பிட்டேன்.
ஜீவாவுக்கும் எனக்குமிடையே சில ஆண்டுகள்-ஒரு சில ஆண்டுகள் மட்டுமே-இது காரணமாகத் தொடர்பு குறைந்திருந்தது என்று குறிப்பிட்டிருந்தேனல்லவா?
ஆனாலும், மல்லிகை மாதா மாதம் தவறாமல் தபாலில் வந்து கொணி டேயிருந்தது. என் னைத் தெரிந்தவர் களைச் சந்தித்தபோதெல்லாம் திரு சுகமாயிருக்கிறாரா? என்று கேட்க ஜீவா தவறவில்லை. தனது புதிய நூல்கள் வெளிவந்தபோதெல்லாம் அவைகளை எனக்குக் கிடைக்கச் செய்யவும் ஜீவா தவறவில்லை.
1970 களின் பிற்பகுதியில் நான் கொழும்பு வாசியாக இருந்த காலம் ஜீவாவை அடிக்கடி சந்தித்தால் பேசும் உறவு நிலை மீண்டும் ஏற்பட்டது. நான் பத்திரிகையாளன் என்பதாலோ, அல்லது மல்லிகை வாசகன் என்பதாலோ மட்டும் ஏற்பட்ட தொடர்பல்ல, இதுவும் கூட வித்தியாசமானதே.
ஜீவாவைப் பற்றிப் பலர் என்னிடம் தாறுமாறாகச் சொன்னதுண்டு என்னைப் பற்றியும் வாய்க்கு வந்தவாறாகப் பலர் ஜீவாவிடம் சொன்னதுண்டு. அவர்களில் பலர் இன்றும் கூட எங்கள் இருவருடனும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.
இவர்களை இனங்கண டு வைத் திருக்கும் ஜீவா, சில வேளைகளில் ஆவேசமாகப் பேசுவதை மட்டுமே நான் கண்டிருக்கிறேன். ஆனால் வேஷம் போட்டு நடித்ததைக் கண்டதில்லை.
1985-ல் மல்லிகை ஆண்டு மலர் வெளியீட்டு விழாவில் ஒருவர் பேசிய, புரிந்ததும் புரியாததும் - தெரிந்ததும் தெரியாததும் பற்றிய முன்னுக்குப் பின் முரணான பேச்சுத் தொடர்பாக, ஈழமுரசுவில் நான் ஆசிரியராக இருந்த போது கருத்து மோதல் இடம்பெற்றது. சந்தர்ப்ப வாத இலக்கியவாதிகளை இனம் காட்ட வேண்டுமென்பதால் அதற்கு நான் பத்திரிகையில் களம் அமைத்துக் கொடுத்தேன். சில எழுத்தாளர்கள் தங்களுடைய வழக்கமான சிண்டு முடியும் பணியை அப்போது சிரம்மேல் கொண்டு செயற்பட்டனர் என்பதையும் அறிந்திருந்தோம்.
112 |-எஸ்.திருச்செல்வம் "மல்லிதை ஜீவா

கருத்து மோதல் உச்சக் கட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த வேளையிலும்கூட, தினம் தினம் என்னைச் சந்திக்கும் ஜீவா, இது பற்றி ஒரு வார்த்தை கூட அளவளாவியது கிடையாது.
மல்லிகை ஆண்டுமலர் விழாவுடன் சம்பந்தப்பட்ட கருத்து மோதல் என்பதால், அது பற்றிப் பேசும் உரிமை இருந்தபோதிலும் கூட, ஜீவா இன்றுவரை அது பற்றி எதுவுமே பேசியதில்லை.
ஓ ! ஜீவாவும் ஒரு பத்திரிகையாளன், அந்தச் சுதந்திரத்தில் கைபோடக்கூடாது என்று பணி புடன் ஒதுங்கியிருந்த ஜீவா, இவ்விடயத்தில் தன்னையும் ஒரு வாசகனாக மட்டுமே ஆக்கிக்கொண்டார்.
ஒவ்வொருவரின் தொழிலையும் மதிக்கப் புரிந்த ஜீவா, அவரவரது தகுதிக்குரிய கொளரவத்தையும் வழங்க என்றுமே பின்நின்றதில்லை.
ஜீவாவின் மனிதத்துவம் பற்றி முன்னே குறிப்பிட்டிருந்தேனல்லவா? -
ஒருவர் பெயருடனும், புகழுடனும், செல்வச் செருக்குடனும் இருக்கும்போது மட்டுமே மதிப்பும் மரியாதையும் வழங்குபவர்கள் மலிந்து கிடக்கும் எங்கள் சமூக அமைப்பில், ஜீவா வித்தியாசமான ஒரு மனிதர்.
1983 ஜூலைக் கலவரத்தால் நான் அகதியாக யாழ்ப்பாணம் வந்து எனது குடும்பத்துடன், திருநெல்வேலி விட்டில் இருந்தபோதும், என்னைத் தேடி வந்து, எனது சுகதுக்கங்களை விசாரித்த முதல் நண்பர்களில் ஒருவர் ஜீவா, அடுத்தடுத்து மாலை வேளைகளில் வீடுதேடி வருவார். தார்மீக ஆதரவு என்று சொல்வார்களே! அதுதான் அப்போது எனக்குத் தேவையாக இருந்தது.
அதனை ஜீவா எனக்கு வழங்கி வந்தார் என்பதை எனது மனது மட்டுமே அறியும், அவ்வாறாக அடிக் கடி எனது வீட்டுக்கு வந்துகொண்டிருந்த வேளையில், ஒருநாள், நண்பர் கவிஞர், ஈழவாணன் கொழும்பில் மரணமான செய்தியைக் கொண்டுவந்தார்.
மரணம் மனிதனுக்கு நிச்சயமானது என்பது உண்மை தானென்றாலும், இலக்கியக்காரன் ஒருவனின் மரணச் சடங்கை எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாது, நாங்கள் நான்கு பேராவது சமூகம்
"மல்லிகை ஜீவா" -எஸ்.திருச்செல்வம் 113

Page 60
கொடுத்து ஈழவாணனைக் கெளரவிக்க வேண்டும் என்று சொன்ன ஜீவா, ஈழவாணனின் புதவுடல் கொழும்பிலிருந்து வந்த நேரத்திலிருந்து அங்கேயே தங்கியிருந்து, அஞ்சலியுரை நிகழ்த்தி, மயானம்வரை சென்று, ஒராயிரம் இலக்கியக்காரர்கள் சார்பில் தனது கடமையை மேலாகவே செய்து முடித்தார்.
ஜீவா உயிருடன் இருக்கும்வரை இலக்கியக்காரன் அஞ்சாமல் சாகலாம்! என்று நண்பர் ஒருவருக்கு நான் அன்று சொன்னதாக ஞாபகம்.
இலக்கிய, அரசியற் கருத்து வேறுபாடுகள் சொந்த நட்பைப் பாதிக்கக்கூடாதென்பது ஜீவாவின் சித்தாந்தங்களில் ஒன்று.
பல்கலைக் கழக வட்டத்தினர் கலாநிதிகள் கைலாசபதியையும், சிவத்தம்பியையும் இரட்டையர்கள் என அழைப்பர். அதேபோன்று ஈழத்து இலக்கிய உலகின் இரட்டையர்களாகத் திகழ்ந்தவர்கள் ஜீவாவும், டானியலும்,
இவர்களுக்கிடையே ஏற்பட்ட அரசியல் பின்னணியைக் கொண்ட நுண்ணிய கருத்து வேறுபாடு, அவர்களை வெளியுலகில் மட்டுமே பிரித்து வைத்ததேயன்றி, உள்ளத்தால் பிரித்து வைத்திருக்கவில்லை என்பதை இருவருடனும் சமகாலத்தில் நட்பாகப் பழகிய என்னைப் போன்ற ஒரு சிலரால் மட்டுமே புரிந்திருக்க முடியும்,
முற்போக்கு எழுத்தாளர் சங்க பாரதி நுாற்றாண்டு விழா எழுத்தாளர் புகைப்படக் கண்காட்சியில் (1982) டானியலின் படம் கட்டாயம் இடம்பெற வேண்டுமென்று விரும்பிய ஜீவா, பின்னர் மல்லிகை அட்டையில் டானியலின் புகைப்படத்தைப் பிரசுரித்து, வாழும்போதே அவரைக் கெளரவித்தார்.
ஜீவாவின் 58-வது பிறந்த நாளன்று அவரது மல்லிகை அலுவலகத்துக்கு வாழ்த்துக் கூற நான் புறப்படுகின்றேன். எனது வீட்டுக்கு வந்த டானியல் துாரத்துக்கோ? என்று கேட்டார்.
எனது நண்பர் ஒருவருடைய பிறந்தநாளுக்குச் செல்கிறேன். வருகிறீர்களா?' என்று அழைக்கிறேன்.
உம்முடைய நண்பர் என்றால். எனக்கு நண்பரில்லையோ?
114 |-எஸ்.திருச்செல்வம் "மல்லிகை ஜீவா"
 

என்று தமது பாணியில் கேட்கிறார். ஜீவாவின் பிறந்தநாள் வாருங்கள்! என அழைக்கின்றேன்.
எந்தப் பேச்சுமின்றி எனது மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறுகின்றார். இருவரும் மல்லிகைக் கந்தோருக்குச் சென்றபோது அனைவருக்குமே ஆச்சரியம்,
ஜீவா அகமும் முகமும் மலர, டானியலை அனைத்து வரவேற்ற அந்தக் காட்சி.
சில மாதங்களின் பின்னர் தனது, அடிமைகள் நாவல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பை டானியலே ஜீவாவுக்கு வழங்கி, அவரையும் தனது விழாவில் கலந்து கொள்ளச் செய்தார்.
தமிழ் நாட்டிலிருந்து டானியல் அவர்களின் மரணச் செய்தி வந்தபோது சிறகொடிந்த பறவைபோன்று ஜீவா துடித்த துடிப்பைக் கண்டு நானே கலங்கிவிட்டேன்.
ஆத்மார்த்தமான நட்பின் பிரிவுத்துயரை ஜீவாவிடம் மட்டுமே என்னால் காணமுடிந்தது, என்பது வெறும் புகழ்ச்சிக்குரிய வார்த்தையல்ல.
கடந்த ஆண்டு அக்டோபர் பத்தாம் திகதி முரசொலி அலுவலகம் குண்டு வைத்துத் தாக்கப்பட்ட பின்னர், ஜீவா அடிக்கடி என்னைச் சந்திக்க வருவார். இதுவும்கூட எனக்குத் தேவையாகவிருந்த ஒரு தார்மீக ஆதரவுதான்.
இப்போது வார்த்தைகளை நிதானமாகவே பயன்படுத்த நன்கு பழக்கப்படுத்திக்கொண்டுள்ள ஜீவா, முரசொலிக்கு நேர்ந்த அநியாயத்தைக் கண்டு, மிகமிக வேதனையடைந்திருந்தார். ஓரிரு வார்த்தைகள் மூலம் தனது வேதனையைத் தெரியப்படுத்தினார்.
நவம்பர் - டிசம்பர் மாதங்களில் இந்தியப் படையினரால் நான் அழைத்துச் செல்லப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நாட்களில், எனது இல்லத்திற்கு வந்து, மனைவி, மகன், உறவினர்களுக்கு நிரம்பவே தைரியமூட்டினார்.
திரு ஒரு பத்திரிகை ஆசிரியன், அவருக்கு எதுவும் நடக்காது, அப்படி நடந்தால் பெரிய பிரச்சினை ஏற்படும், நாங்கள் சும்மா பார்த்திருக்க
|"மல்லிகை ஜீவா" -எஸ்.திருச்செல்வம் 115

Page 61
மாட்டோம். நீங்கள் பத்திரிகையாளனின் மனைவி என்ற வகையில் தைரியமாக இருங்கள்! என்று எனது மனைவிக்கு அவர் கூறிய உற்சாக அறிவுரைகள் .
யாழ்ப்பாணம் கச்சேரியில் நடைபெற்ற அதிகாரிகள் - பொதுமக்கள் பிரதிநிதிகள் கூட்டமொன்றில் முரசொலி ஆசிரியரை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று ஆக்ரோஷமாக ஜீவா விடுத்த வேண்டுகோள்.
இவை வெறும் இலக்கியக்காரனிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியவைக்கும் மேலானவை. மிகமிக உறுதியானவை,
மனிதத்துவம் மிகுந்த ஒருவரால் மட்டுமே இவ்வாறு செயற்பட (Ulqugh.
அதனை ஒரு தடவை, இருதடவைகளல்ல. பலதடவைகள் என்னால் ஜீவாவிடம் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது.
இறுதியாக -
என் அன்புக்கினிய ஜீவாவிடம் ஓர் வேண்டுகோள் -
சில வருடங்களுக்கு முன்னர் உங்களுடைய ஏதோவொரு கட்டுரையில் படித்ததாக ஞாபகம்,
அறுபதாண்டு புர்த்திக் காலத்தில் உங்கள் சுயசரிதை நுாலாக வெளிவரும் என்று அங்கு குறிப்பிட்டிருந்தீர்களல்லவா?
அதனை நீங்கள் வெளியிட்டே ஆகவேண்டும். அது நிச்சயம் டொமினிக் ஜீவா என்கின்ற ஒரு தனிமனிதனின் - இலக்கியக்காரனின் சுயசரிதமாக இருக்காது - ஈழத்து இலக்கிய உலகின் அரை நுாற்றாண்டு காலத்துக் கதையாகவே அது அமையும்,
இன்றைய பரம்பரைக்கும், நாளைய தலைமுறைக்கும் உங்கள் கதை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்.
இது காலத்தின் தேவை !
நிச்சயமாகச் செயற்படுத்துவீர்கள் என்று நம்புகின்றேன்.இ
| 116 (-எஸ்.திருச்செல்வம் "மல்லிகை ஜீவா
 

ஜீவா பற்றிச் சில ஆய்வுகள்
- துரை மனோகரன்
ஈழத்துத் தமிழ் இலக்கியவுலகில் சுவடுகள் பதித்த ஆளுமைகளில் ஒன்றாக டொமினிக் ஜீவா என்னும் பெயர் விளங்குகின்றது. ஜீவா எனச் சுருக்கமாவும், பொதுவாகவும், அன்புணர்வுடனும் குறிக்கப்படுகின்ற இப்பெயர், அறுபதுகளிலிருந்து தன்னைச் சரியாக இனங்காட்டி வந்துள்ளது. இதே ஆளுமைக்கு அறுபது ஆண்டுகள் நிறைவுபெறப்போகின்றன என்னும்போது புரிப்பாகவும், மலைப்பாகவும் இருக்கின்றது.
ஈழத்தின் தரமான சிறுகதை எழுத்தாளருள் ஒருவர் என்ற முறையில் அறுபதுகளில் தம்மைப் பெரிதும் இனங்காட்டிக் கொண்ட டொமினிக் ஜீவா - இன்று தமது அறுபதுகளில், ஈழத்தின் பழம்பெரும் எழுத்தாளரில் ஒருவர் என்ற பெருமையால் நிமிர்ந்து விளங்குகின்றார். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சியில் டொமினிக் ஜீவாவுக்குத் தனியிடம் உண்டு. அவரது சிறுகதைகளே அவரது திறமையைத் தமிழ் இலக்கியவுலகுக்குப் புலப்படுத்தி வைத்தன. படைப்பிலக்கியத் துறையில் அவர் பதித்த சுவடுகள், ஈழத்தின் சிறந்த எழுத்தாளருள் ஒருவராக அவரை உயர்த்தி வைத்தன.
இன்றைய நிலையில், டொமினிக் ஜீவா என்றதுமே, மல்லிகையின் நினைவுதான் வாசகருக்கு வரும். அந்த அளவுக்கு மல்லிகையோடு ஜீவா இணைந்துவிட்டார். அவரின் ஜீவன் இரு தசாப்தங்களுக்கு மேலாக, மல்லிகையுடன் சங்கமமாகி விட்டது. ஈழத்தின் தரமான இலக்கிய சஞ்சிகைகளில் ஒன்றாகவும், நீண்டகாலமாகத் தொடர்ந்து வெளி வருவதாகவும் மல்லிகை அமைவதற்கு ஜீவாவே வேரும், பசளையுமாக
"மல்லிகை ஜீவா" மதுரை மனோகரன் 117

Page 62
விளங்குகின்றார், ஒப்பீட்டு முறையில் நோக்கும்போது, தமிழ் இலக்கியத்துறையிற் சிறுகதையாசிரியர் டொமினிக் ஜீவாவைவிட, மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஏற்படுத்திய தாக்கம் அதிகமானது என்றே குறிப்பிடத் தோன்றுகிறது.
இரு தசாப்தங்களுக்கு மேலாக, ஈழத்தில் ஓர் இலக்கியச் சஞ்சிகையை நடாத்துவது என்பது சாதாரண மனித இயல்புக்கு பொருந்துவதன்று. அதற்கு மனம் தளராமையும், கடின உழைப்புமே மூலவேர்கள். அவை ஜீவாவிடம் நிறையவே உண்டு. அவைதாம் ஒருவகைத் தனித்துவ ஆளுமையை அவரிடத்து ஏற்படுத்தியுள்ளன என்று அத்தகைய இயல்புகளைக் குறைத்து மதிப்பிட மாட்டார்கள், சுருங்கக் கூறின், உழைப்பின் மறுபெயர் டொமினிக் ஜீவா என்று துணிந்து குறிப்பிடலாம்.
ஈழத்து முற்போக்குப் பாசறையில் வளர்ச்சி பெற்ற டொமினிக் ஜீவா, அதன் பலத்திலும், பலவீனங்களிலும் பங்கு கொண்டவராகவே விளங்கி வந்துள்ளார். அவரிடம் சில தனித்துவப் பண்புகள் உண்டு, அவற்றுட் குறிப்பிடத்தக்கது மண்ணைப் பெருமிதப் படுத்தும் பண்பு, இத்தகைய பண்பின் காரணமாக, இந்த மண் என்ற சொற்றொடர் அடிக்கடி அவரது நாவிலும், எழுத்திலும் இடம்பெறுவதுண்டு. ஈழத்து எழுத்தையும், எழுத்தாளரையும் வியந்து போற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டதாக அவரின் இத்தகைய பண்பு விளங்குகின்றது. ஒரு காலகட்டத்தில், ஈழத்து எழுத்தை விதந்து போற்றவேண்டிய தேவை விமர்சகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இருந்ததுண்டு.ஆனால் இன்றைய நிலையில் சர்வதேச நிலையிலே ஈழத்தின் எழுத்தைப் பொருத்திப் பார்க்கவேண்டும். அதற்குரிய பொருத்தமான கட்டத்தை ஈழத்தின் எழுத்து அடைந்து வருகின்றது. அதனால், சிலவேளைகளில், மண்ணைப் பெருமிதப்படுத்தும் ஜீவாவின் பண்பு,S அளவுக்கு அதிகமாக அவரிடத்து அமைந்து விட்டதோ எனவும் எண் ணத் தோன்றுவதற்கு இடமுண்டு. ஆயினும், அவரின் நன்னோக்கத்தைக் குறைத்து மதிப்பிட முடியவில்லை.
மனிதனது வாழ்வில் அறுபது ஆணிடுகள் என்பது பெறுமதியானது, பலரது அறுபதாவது ஆண்டு, அவர்கள் அறுபது ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே குறிக்கும். ஆனால், மிகச் சிலரது அறுபதாம் ஆண்டுகளே, அவர்களின் சாதனைகளைக் குறிக்கும் குறியீடுகளாக விளங்குவதுணி டு, அத்தகையவர்களின் ஒருவராகவே டொமினிக் ஜீவாவும் விளங்குகின்றார்.
118 |-துரை மனோகரன் "மல்லிகை رمټهrr" |
 

அவரைப் பொறுத்த வரையில், அவரது அறுபதாம் ஆண்டு என்பது, அவரின் வயதைக் குறிப்பதே தவிர, மனத்தைக் குறிப்பது அன்று. மனத்தாலும், தோற்றத்தாலும் ஜீவா பத்தாண்டுகள் இளமையானவராகவே தோன்றுகின்றார். அவரின் இளமை எண்ணங்களே இலக்கியவுலகில் அவரைச் சாதனையாளராக்கிக் காட்டுகின்றன எனலாம்.
ஜீவா வரி ன ப னரி , அ வ ர து அறுபது க ளே " டு அடங்கிவிடக்கூடியதன்று. அவரின் அறுபதாம் ஆண்டு, இதுவரையிலான அவரது சாதனைகளைச் சீர்துாக்கவும், அவர்தம் பங்களிப்பினை மறுமதிப்பீடு செய்வதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எதிர்காலப் பணிகளைத் திட்டமிட்டுச் செயலாற்றுவதற்கும், தமிழ் இலக்கியத் துறைக்கு மேலும் பங்களிப்புச் செய்வதற்கும் அவரின் அறுபதாவது ஆண்டு அவருக்கு துாண்டுகோலாக அமையும் என எதிர்பார்க்கலாம். டொமினிக் ஜீவாவின் வாழ்வு, எதிர்காலத்திலும் ஈழத்து இலக்கியத்துறையோடு பொருத்திப் பார்க்கத்தக்கதாக அமையவேண்டும் என்பதே இலக்கிய ஆர்வலர்களின் வேணவாவாகும்.கு
"மல்லிகை ஜீவா" -துரை மனோகரன் 119

Page 63
மானுடம் சிவன்றதம்மா
- இ.சிஜயராஜ்
மினிக் ஜீவா ஆம் மரபு வழித் தமிழில் ஊறிவந்த எனக்கு, இந்தப் பெயர் பற்றித் தொடக்க காலத்தில் தரப்பட்ட விளக்கம் சற்றுக் கடுமையானதுதான், ஜீவாவுடன் பழக்கமோ, பரிச்சயமோ ஏற்படு முன் என்னுள் அவர் பற்றிப் பகை விதைக்கப்பட்டது, உண்மை. மரபுவழித் தமிழ் இளைஞர்கள் ஜீவாவைப் புரிந்துகொள்ளாதது ஏன் என்பது இன்றுவரை எனக்கு விளங்கவில்லை. ஆனால் ஜீவாவுடன் பழகிய பின், ஒன்று மட்டும் நிச்சயமாக எனக்கு புரிகிறது. ஜீவா என்ற இந்த மனிதர் மரபுவழி அறிஞர்களால் போற்றப்படுகின்ற உயர்ந்த கருத்துக்கள் எதற்கும் எதிரானவரல்ல என்பது மட்டுமல்ல, அந்தக் கருத்துக்களின் இரசிகனாகவும் விளங்குபவர் என்பது சத்தியமான உண்மை, வீதியில், உச்சிவெயிலில் சந்தித்தாலும், என்னை நிறுத்தி, எப்போ கம்பன் விழா? நல்லதொரு கம்பன் பேச்சைக் கேட்டுக் கனநாளாய்ப் போச்சு என்று அவர் ஏக்கத்துடன் கேட்கும்போது இதைத்தான் நான் நினைத்துக் கொள்வேன்.
எங்கள் நாட்டு அறிஞர்களுக்கு ஒரு சாபக்கேடு I கற்கும் காலத்திலேயே குறிப்பிட்ட ஒரு அணியில் சேர்ந்துவிட வேண்டுமென்பது இங்கு சட்டம் நான் மரபுவழித் தமிழறிஞனென்றோ, முற்போக்காளனென்றோ, மார்க்லீயவாதியதென்றோ சைவ சித்தாந்தியென்றோ முத்திரை குத்திக் கொள்வதும், அப்படி முத்திரை குத்திக் கொண்டவரை அந்த அந்த அணியினர் தலையில் துாக்கிக் கொண்டாடுவதும் துாக்கப்பட்டவர் பிழையாக எதைச் சொன்னாலும், அவர் சார்ந்த அணியினர் அதை நியாயப்படுததுவதும், மாற்று அணியினர் சொல்லும் கருத்து சரியென்றாலும் அதை எதிர்ப்பதுதான், தான் சார்ந்த அணிக்குக் காட்டும் விசுவாசம் என எண் ணி நடப்பதும் , மாற்று அணியினரின்
| 120 -இ.ஜெயராஜ் "மல்லிகை ஜீவா
 

கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் முயற்சி எதையும் எடுக்க மறுப்பதும், எள்ளவேனும் தெரியாத மாற்று அணி, முற்றும் பிழையானது என அடித்து மறுப்பதும், பரலாகச் சொல்லப்படுகின்ற மாற்று அணியினரின்ஓரிரு கருத்துக்களைப் பிடித்துக் கொண்டு அதைச் சொல்வதன் மூலம், மாற்று அணியின் கருத்துக்களிலும் தான் தேர்ந்தவன் எனக் காட்டிக் கொள்ளும் முயற்சியும், தங்களைத் தாங்களே தட்டிக் கொள்வதாலும், மாற்று அணியினரோடு முட்டிக் கொள்வதாலுமே அறிஞராகிவிடலாம் என நினைப்பதும் ஒரு சிலர் தவிர்ந்த மற்றைய அறிஞர்களால் இங்கு கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகளாக உள்ளன.
இந்த அமைப்பில், அதிர்ஷ்டமோ என்னவோ, மரபு வழிக்காரன் என்று என்னில் முத்திரை குத்தப்பட்டபோது, என்னை வழிப்படுத்திய என் ஆசிரியர் சிலர், எந்த அணியில் இருப்பவரும் ஆழமான கருத்துக்களைச் சொல்லலாம் என்பதையும், புரணமாக அறியாமல் கண்மூடிக்கொண்டு எந்தவொன்றையும் பிழை யென்றோ, சரியென்றோ சொல்வது அறிவு சார்ந்த வாதமாகாது என்பதையும் என் நெஞ்சில் ஆழ விதைத்துப் போயினர். அதனால் தான் ஜீவா என்ற அந்த மனிதன் மேல் மற்றவர்கள் பகைமையுட்டி இருந்த போதிலும் என்னால் அந்த மாமனிதனை அணுக முடிந்தது. அவரின் ஆழ- நீள அகலத்தைக் கண்டு ஆச்சரியப்பட முடிந்தது. நானும் கண்மூடிக் கொண்டு எதிர்க்க முற்பட்டிருந்தால் எத்தகைய ஒரு வரலாற்று மாமனிதனைச் சந்திக்கும் வாய்ப்பை இழந்திருப்பேன் என எண்ணுணம்போது, என் நெஞ்சம் என்னை வழிப்படுத்திய ஆசிரியர்களை நன்றியோடு நினைத்து வணங்கவே செய்கிறது.
1980-ஆம் ஆண்டென்று நினைக்கிறேன். ஜீவாவை நான் அணுகிய முதல் சந்தர்ப்பம் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தன் மாநாட்டுக்காகத் தமிழக அறிஞர் சிலரை அழைக்கும் செய்தியைப் பத்திரிகையில் பார்த்தேன். அப்படி அழைக்கப்பட்ட அறிஞர் ஒருவர் எனக்கு ஏற்கனவே காரைக்குடியில் பரிச்சயமானவர் கம்பனைத் துறைபோகக் கற்றவருமாகிய பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் என்று அறிந்தபோது, அவரை எங்கள் கம்பன் கழகத்திற்கும் அழைத்து ஒரு சொற்பொழிவாற்றச் செய்தாலென்ன? என்று தோன்றியது. அன்று மாலை பு:பாலசிங்கம் புத்தகசாலை வாசலில் ஜீவாவைச் சந்தித்தேன். இந்த மனிதன் என்ன சொல்வாரோ என்று மனம் தயங்கியபோதும், ஆசை விடவில்லை. மெல்ல அவரை அணுகித் தயங்கித் தயங்கி என்னை அறிமுகப் படுத்தி, என் ஆசையை வெளியிட்டேன். என்ன ஆச்சரியம்! சரிதான் ஒரு நல்ல இராமாயணப் பேச்சும் கேட்கிறதாகுது என்று ஒரே வார்த்தையில் அந்த
"மல்லிகை ஜீவா" -இ.ஜெயராஜ் 121

Page 64
மனிதன் சம்மதித்ததும் நான் வியந்து போனேன். இதைப் பலரிடம் நான் சொல்ல அவர்கள் சீச்சீ! இதில் விஷயமிருக்கும் உங்களை ஏமாற்றப்ப போகிறார்கள் என்று பலவிதமாய் என்னை மிரட்டினர்.
குறித்த அந்த நாளும் வந்தது. பருத்தித்துறையிலிருந்து பேராசிரியரை எங்கள் விழாவிற்கு அழைத்து வருவதாய் ஒழுங்கு நுாற்றுக் கணக்கான இரசிகர்களுடன் சபை காத்திருக்கிறது. நேரமோ ஒன்பது, பத்து, பதினொன்று என்ற ஏறிக்கொண்டிருக்கிறது. பேராசிரியரைக் காணவில்லை. நான் பதறுகிறேன். என்னுடன் நின்று ஜீவாவும் பதறுகிறார். எனக்குப் புத்தி சொன்னவர்கள் என்னைப் பார்த்து நையாண்டியாகச் சிரிக்கின்றனர். நேரம் பன்னிரண்டாகச் சபை மெல்லக் கலைய, அதன் பின் தான் முதல் நாள் நிகழ்ச்சியில் மாற்றம் நிகழ்ந்ததும், பேராசிரியர் முதல் நாளே யாழ்ப்பாணம் வந்துவிட்டதும் தெரிய வருகிறது. எனக்குப் புத்தி சொன்னவர்கள் என்னை அணுகுகின்றனர். பார்த்தாயா-முதலே சொன்னோம். அவர்களாவது உங்கள் சபையில் பேராசிரியரைப் பேசவிடுவதாவது, எல்லாம் நடிப்பு என்று சொல்லச் சற்றுக் குழப்பத்துடன் துார நின்ற ஜீவாவைப் பார்த்தேன். அவர் முகத்தில் தெரிந்த பதட்டம், இப்படி நடந்துவிட்டதே! என்று அவர்படும் ஏக்கம்- மற்றவர்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர் தவித்த தவிப்பு இவையனைத்தும் அந்த மனிதன் நடிக்கவில்லை, உண்மையாகவே இது சந்தர்ப்பவசத்தால் நடந்துவிட்ட ஒரு தவறுதான் என்பதை வடிவாக எனக்கு உணர்த்திற்று. பின்னர் பேராசிரியர் வந்திருந்து கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
அதன்பின் பலகாலம் ஜீவாவை நான் சந்திக்கவில்லை. எங்கள் கழகக் கவிஞர், அரியாலை வே ஐயாத்துரை அவர்கள் சுகவீனமுற்றிருந்தது அறிந்து, அவர் நலத்திற்காக, அரியாலை சரஸ்வதி கோயிலில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்திற்கு ஒழுங்கு செய்திருந்தோம் கூட்டம் நடைபெற இருந்த அன்று காலை தாவடியில் பொம்பர்கள் தாக்குதல் நடத்தின. அதனால் கூட்டத்திற்கு வருவார்கள் என நான் எதிர்பார்த்த பல அறிஞர்கள் வராமல் நின்றுவிட்டனர். எப்படியும் கூட்டத்தை நடத்தியே தீர்வது என்ற முடிவுடன் கூட்டம் நடக்க இருந்த கோயிலுக்கு வந்திருந்த அனைவரும் சென்றோம். என்ன ஆச்சரியம்! அங்கு ஜீவாவும் அவர் அணியைச் சேர்த்த ஓரிருவரும் நிற்கிறார்கள், இறைவன்மேல் நம்பிக்கையுள்ள பலபேரும் வராமல் நின்றுவிட, நம்பிக்கையில்லாத இவர்கள் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்களே என்று நான் ஆச்சரியப்பட்டேன். அன்றைய கூட்டத்திற் பேசிய ஜீவா எங்களுக்கு இறைவன்மேல் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ- எங்கள் மண்ணில் வாழும் ஒரு கவிஞனின் உடல் நலம் வேண்டிச் சில உள்ளங்கள் பிரார்த்தனை '
122 -இ.ஜெயராஜ் "மல்லிகை ஜீவா
 
 

செய்யும்போது, அதில் இணைந்து கொள்ள வேண்டியது எங்கள் கடமை என்று பேசியபோது தத்துவங்களையும், சம்பிரதாயங்களையும் மீறி ஒரு மனிதனாய் விசவரூபம் கொண்டு நின்ற ஜீவா என் மனத்தின் ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார். இது இரண்டாவது சந்திப்பு
எங்கள் மூன்றாவது சந்திப்பு, கம்பன் கழகத்திற்குக் கட்டடம் அமைக்க நல்லுார் தேவஸ்தானத்தால் காணி அன்பளிப்புச் செய்யப்பட்ட செய்தி பத்திரிகையில் வந்த அன்று, யாழ், ஆஸ்பத்திரிப் பின் வீதியில் நிகழ்ந்தது. வழியில் என்னை மறித்துக் கொண்ட ஜீவா, பத்திரிகையில் செய்தி பார்த்தேன். நீங்கள் வரலாற்றுச் சாதனை படைக்கப் போகிறீர்கள் கம்பன் கழகம் வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிறது, தமிழுக்கென்று ஒரு பொது இடம் அமைவதால் இனி நாங்கள் எல்லோரும் தலை நிமிர்ந்து நிற்கலாம் என்று, நாம் நின்று கொண்டிருப்பது வீதியில் என்பதையும் மறந்து உணர்ச்சிவசப்பட்டு. சத்தம்போட்டு எங்களை வானளாவ அவர் பாராட்டிய போது, அந்த உண்மையான பாராட்டுதலில் மெய்சிலிர்த்தது. நான் கண் கலங்கிப் போனேன். கம்பன் கழகம் கோட்டமமைப்பது பற்றி மரபுவழித் தமிழறிஞர் ஒருவர்கூட எங்களைத் தேடிவந்து பாராட்டாத அந்த நேரத்தில், இந்த மனிதன் ஏதோ தனக்கே பரிசு கிடைத்துவிட்டது போல் மகிழ்ந்த மகிழ்ச்சியும், குழந்தை போலக் கொண்ட குதுாகலமும் இவர் ஓரணியையோ, ஒரு தத்துவத்தையோ மட்டும் சார்ந்தவரல்ல, எங்கள் மண்ணின் மைந்தன் என்பது தெரிந்து, என்னுள்ளம் அவர்மேல் பக்தியே கொண்டு விட்டது. அந்தப் பக்தியினால் அவரை அடிக்கடி சந்தித்ததும், அந்தச் சந்திப்புகள் அவரின் விசுவரூபங்களை விளங்கப்படுத்தியதும், அதனால் நான் வியந்து போனதும் நிதர்சனமான உண்மைகள்,
ஒருநாள் மாலை என்னைச் சந்திக்க வருகிறார் வரும்போதே, தம்பி யாழ்ப்பாணத்தான் சிவபெருமானைக் கும்பிட்டுக் கும்பிட்டு, சிவபெருமானாகவே மாறிவிட்டான்." என்கிறார், ஏன் இவர் இப்படிச் சொல்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. ஏன் இப்படிச் சொன்னீர்கள்? என்று அவரிடமே கேட்டேன். தம்பி, இந்தச் சிவபெருமானை அவரது அடியார்கள் எவ்வளவு உண்மையாகக் கும்பிட்டாலும், இலேசில் அவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார். அவர்களுக்குச் சோதனைக்குமேல் சோதனை வைத்து அதில் அவர்கள் வெற்றி கண்ட பின்புதான். அவர்களுக்கு அருள் புரிவார். அருளத்தொடங்கினாலோ நேராக முக்திதான்! அதேபோலத்தான் யாழ்ப்பாணத்தானும் நாங்கள் எவ்வளவு உண்மையாக உழைத்தாலும் இலேசில் நம்பான், சோதனைமேல் சோதனை வைத்துப் பார்ப்பான். இலேசில் எதையும் அங்கீகரியான். அங்கீகரித்தாலோ கடைசிவரை
|"மல்லிகை ஜீவா" -இ.ஜெயராஜ் 123

Page 65
கைவிடான். அதனால் என்ன சோதனை வந்தாலும் பொறுமையாய் அதை வெல்லப் பாருங்கோ என்று அவரிடமிருந்து பதில் பிறக்கிறது. அவருடைய இந்த விளக்கத்தால் நான் வியந்து போகிறேன். இந்த மணிணை எவ்வளவு விளங்கிக் கொண்டிருக்கிறார், என்பது தெரிந்துபோது அவருடைய அநுபவத்தை விளங்கி ஆச்சரியப்படுகிறேன்.
வேறொரு நாள் அன்று நல்லுார்த் தேர்த் திருவிழா நாட்டுச் சூழ்நிலை காரணமாக தேர் வீதி சுற்றி வந்தவுடனேயே சுவாமியை இறக்கி உள்ளே கொண்டுபோய் விட்டனர். பதினொரு மணியிருக்கும். ஜீவா கோபத்துடன் வருகிறார். இவங்கள் நினைத்தால் என்னவும் செய்யலாமோ? கேட்க ஆளில்லை. அவரிடமிருந்து வார்த்தைகள் வெடிக்கின்றன. அவரை ஆறுதற்படுத்தி, கோபத்திற்கான காரணத்தை கேட்கிறேன். பின்ன என்ன தம்பி இந்த ஆறுமுக சுவாமியைத் தேரால் இறக்குகிற அந்த அருமையான காட்சியினைக் காண எத்தனை ஆயிரம் சனங்கள் வருகுது. அந்தக் காட்சியைக் காணலாமென்று வந்தால். அவர்கள் சுவாமியை வெள்ளனவே உள்ளே கொண்டுபோய் விட்டார்கள் என்று கோபமாகச் சொல்லுகிறார். எனக்குள் எல்லையில்லாத வியப்புப் பிறக்கின்றது. பக்தர்கள் என்று சொல்லிக் கொள்கின்ற ஆயிரக் கணக்கானவர்களிடம் காணாத அந்த உண்மை ஏக்கத்தை ஜீவாவிடம் கண்டபோது, என் அறிவால் விளங்கிக் கொள்ள முடியாதவர் இவர், என்பது தெளிவாக எனக்குப் புரிந்து போயிற்று. கடவுளை நம்புகிறவர்களைவிட, நம்பாத இந்த மனிதர் மிக உயர்ந்தவர் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
மற்றொரு நாள், தென்னிந்திய அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொள்கிறோம் என்னை வியப்பிலாழ்த்திய பலவற்றைப் பற்றி அவரிடம் சொல்கிறேன். ஆறுதலாக எல்லாவற்றையும்கேட்ட அவர், "என்னதான் சொல்லுங்கோ, தம்பி ஆயிரமிருந்தாலும் அந்த மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நிகராக எதுவும் வராது. அந்தக் கோயிலமைப்பும், அந்தக் கோபுரங்களும், அந்தத் துாண்களும், அதுல இருக்கிற ஈர்ப்புச் சக்தியும் ஆ சொல்ல முடியாது! ஆயிரம் விஞ்ஞானக் கண்டு பிடிப்பிற்குச் சமமான, அந்த வேலையைத் தமிழன் செய்து, வரலாற்றுப் பெருமையைத் தேடிப்போட்டான் என்று பெருமிதத்தோடு கூறுகிறார். அவர் சொல்லச் சொல்ல அவ்வளவு நாளும் ஆயிரம் சமயவாதிகளின் வாயால் சொல்லக் கேட்டும், மதுரை மீனாட்சியம்மன் பற்றி வராத ஒரு பெருமிதம் எனக்குள்ளும் தொற்றிக் கொண்டபோது ஆச்சரியப்பட்டுப் போனேன்.
124 —ិ. បង្អួយr "மல்லிகை ஜீவா"
 

இன்னொருநாள் மூன்று நாட்கள் கம்பன் விழா வெற்றிகரமாக நடந்து முடிக்கின்றது.நான்காம் நாள் நான் களைத் துப்போப் இருக்கிறேன்.முதல் மூன்று நாட்களும் விழாத் தொடங்கிய அதே மாலை நேரம், ஜீவா வந்து இறங்குகிறார். தம்பி அடுத்தமுறை விழாவை ஐந்து நாளாய் வைக்க வேணும், மூன்று நாளும் போனது தெரியவில்லை. மூன்று நாளும் இதே நேரம் விழாவுக்கு வந்து வந்து பழகி, இன்றைக்கு என்னால் அங்க இருக்க முடியவில்லை. அதனால்தான் உங்களைப் பார்த்தாவது கதைப்பம் என்று வந்தேன். என்கிறார். அவர் வார்த்தைகளில் பெரும் செல்வத்தை இழந்த ஏக்கம் தெரிகிறது. தமிழின்பால் கொண்ட பற்றுத் தெரிகிறது. இந்த மனிதனா மரபுத் தமிழின் எதிரி? என்ற கேள்வி என் மனதில் நிரம்பிப் போகிறது. நான் குழம்பிப் போகிறேன்.
மற்றொரு நாள், சோர்ந்து விழுந்து ஜீவா வருகிறார், அந்தத் தோற்றத்தில் அதுவரை அவரைச் சந்திக்காத, எனக்குப் பெரும் வியப்பு! என்ன ஐயா! ஏதாவது சுக மில்லையா? என்று கேட்கிறேன். சீச்சீ அப்படியொன்றுமில்லை. இந்த நாட்டுப் பிரச்சனைதான் என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை. எதிர்காலம் பற்றி ஒரு தெளிவில்லாமல் இருக்கு, நாங்கள் பட்ட கஷ்டமெல்லாம் வீணாப்போயிடுமோ என்று பயமாயிருக்கு என்று சொல்லி கண் கலங்குகிறார். ஒன்றுக்கும் அசையாத அந்த நெஞ்சம், தன் இனத்திற்காகக் கலங்குவதைக் கண்டு, இவர்தான் உண்மையான இலக்கியவாதி என்று தெரிந்து கொள்கிறேன்.
இப்படிப் பல சந்திப்புக்கள், ஒவ்வொரு சந்திப்புக்களிலும் ஜீவாவின் ஒவ்வொரு கோணங்களைத் தரிசிக்கிறேன். பிற்பட்ட சமூகமென்று சொல்லப்படுகின்ற ஒரு சமீபத்தில் பிறந்து, வளர்ந்து அந்தச் சமூகத் தொழிலைக் கேவலமாக நினைத்து ஒதுங்காமல், அந்தத் தொழிலில் இருந்து கொண்டே இலக்கியம் படைத்து, தான் அனுபவித்த இலக்கியத்தைச் சமூகத்திடம் செலுத்தவும், வளர்க்கவும், ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தளராது முயற்சித்து மல்லிகை என்ற மாத இதழைத் தொடர்ந்து இருபத்திரண்டு வருடங்களாக நடத்தி, மல்லிகை மூலம் பல இலக்கிய கர்த்தாக்களை உருவாக்கி, வேறு பல இலக்கிய கர்த்தாக்களைக் கண்டு பிடித்து, இலக்கியத்தின் ஊடே சமூகக் குறைபாடுகளுடன் போராடி, பல பிரச்சினைகளுக்குத் துணிந்து முகம் கொடுத்து, அதிலே வெற்றி பெற்று, இந்தப் போராட்டங்களினாலே வக்கிரப்பட்டுப் போகாமல், இன்றும் துாய ஒரு மனிதனாகவும், இலக்கியவாதியாகவும் வாழுகின்ற ஜீவா எங்கள் வருங்கால சந்ததிக்கு ஒரு ஆதர்சனமான வழிகாட்டி
| "Dశశివారి ஜீவா" -இ.ஜெயராஜ் 125

Page 66
வருங்கால மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஜீவாவின் வாழ்க்கைக் குறிப்புகள் சேர்த்து கொள்ளப்பட வேண்டும் ஜீவா என்ற தனிமனிதனின் உழைப்பின் வெற்றி, வருங்காலச் சந்ததிக்கு இலட்சியமாக்கப்பட வேண்டும். சரித்திரத்தில் குறிப்பிடப் போகின்ற ஈழத்தவர்களில் ஜீவாவும் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை, ஜீவாவின் ஆக்கங்களை மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. எங்கள் மண்ணின் மைந்தராகிய இவரை யாழ். பல்கலைக் கழகம் இதுவரை கெளரவிக்காதது வியப்பிற்கும், வேதனைக்கும் உரியதொன்று ஜீவாவைக் கெளரவிப்பதன் மூலம் ஒரு சரித்திர மனிதனை நாமும் இனங்கண்டிருந்தோம் என யாழ் பல்ககைக் கழகம் ஒரு காலத்தில் பெருமைப்படலாம். வெளிநாட்டவரையும், இறந்தவர்களையும் கெளரவிப்பதோடு நின்று விடாமல் இந்த மண்ணோடு மண்ணாய்க் கலந்து வாழ்ந்த ஜீவா என்கின்ற இந்த இலக்கியவாதியை உரிய முறையில் கெளரவிக்க வேண்டியது யாழ், கல்கலைக் கழகத்தின் கட்டாய கடமையும்கூட
கவிதை நமக்குத் தொழில் என்றான் பாரதி, அந்தப் பாரதியைச் சந்திக்க வேண்டுமென்ற என் ஏக்கம் எழுத்து எனக்குத் தொழில் என்று வாழ்கின்ற ஜீவாவைச் சந்தித்ததால் நீங்கிற்று. ஜீவாவைச் சந்திக்கும் போதெல்லாம் கம்பனுடைய மானுடன் வென்றதம்மா என்ற வரிகள் என் நெஞ்சில் நிழலாடுவது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறதுளு
126 -8.ួយprឆ្នា "மல்லிகை يوgمurr" |
 

ஜீவா விண்சிறாரு சமூக நிறுவனம்
- யோகா பாலச்சந்திரன்
so, இலக்கியம் ஏன்? சமயமும் கூடத்தான் முற்று முழுதாக வர்த்தக மயமாகிவிட்ட இந்த யுகத்தில், தனி நபர்களின் அந்தரங்கம் பற்றிய மட்டரகமான கிசுகிசுப்புக்கள், மூன்றாந்தரச் சினிமா அலட்டல் கள் , இயற்கையில் அற்புதமான பாலியலைக் கூட அசிங்கப்படுத்தும் கொச்சைத்தனமான கவர்ச்சிப் படங்கள் ஆகியனவற்றை ஒதுக்கிவிட்டு, காத்திரமான இலக்கிய- கலை வளர்ச்சியினுாடாக மானுடத்தை மேன்மைப்படுத்துதல் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒருவர் சஞ்சிகையோ, பத்திரிகையோ நடத்த முன்வந்தால், அவரை உலகம் எப்படிப் பார்க்கும்?. ஒன்றில் அந்தப் பிரகிருதி நடைமுறை வர்த்தமானம் புரியாத முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது யாரோ, எப்படியோ கஷ்டப்படாமல் உழைத்த பணத்தைக் கரைக்க வழிதேடும் பொறுப்பற்ற பேர்வழியாக இருக்கலாம் இல்லையேல், செயற்கரிய காரிய சாதனை செய்யத்துடிக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட மானுட நேயனாக இருக்கவேண்டும். இந்த கடைசிக் வர்க்கத்துக்குள் சேரும் மிகச் சிலருள் எமது யாழ் மண்ணில் முகிழ்ந்து மணம் வீசும் மல்லிகை ஜீவாவும் ஒருவரென்றால், மறுக்கும் திராணி எவருக்கும் வராது.
அன்றாட மனித சீவியமே திண்டாடித் தெருவில் ஷெல்லடியும் குண்டடியும் பட்டு திசை கெட்டு நிற்கும் நிலையில், தமிழ் இலக்கிய வளர்ச்சி ஒன்றையே பிரதான குறிக்கோளாகக் கொண்டு மல்லிகை
"மல்லிகை ஜீவா" -BUTI 127

Page 67
மாசிகையினைத் தொடர்ந்தும் வெளியிட்டு வரும் அந்த அபார நெஞ்சுரம், சத்தியாவேசம், வள்ளுவன் விதந்த வினைத்திட்பம், டொமினிக் ஜீவா என்ற சராசரி மானுடனை, சாதாரண மாந்தரிலிருந்து பல படிகள் உயர்த்திச் செல்கிறது, பணச் செல்வாக்குப் பஞ்சம் மட்டுமன்றி, அர்த்தமற்ற சமூக அந்தஸ்து வறுமையும் அத்தோடு வழமையாய் இயைந்த சமுதாய வக்களிப்புத் தொந்தரவுகளும் கொடுந்தளைகளாய் அழுத்தி வதைத்த சூழலில் சனித்து, அச்சுடு மணற் பரப்பிலேயே இலக்கியப் பசுமையைப் புக்க வைத்த ஜீவா, கடந்த கால் நுாற்றாண்டு காலமாக மல்லிகையை வளர்த்தெடுக்க எத்துணை கஷ்டங்களை அனுபவித்திருப்பார் என்றறியப் புதாகர ஆராய்ச்சியொன்றும் தேவையில்லை. அச்சடித்த சஞ்சிகைக் கட்டைக் கைகளில் சுமந்து கொண்டு இலக்கிய வாசகர்களைத் தேடி ஒரு காலத்தில் வீதிகளில் அலைந்த ஜீவாவுக்கு இன்று கல்விமான்களிடையே இலக்கிய இரசிகர்கள் பலர் உண்டு தமது கனமான படைப்புக்களை மல்லிகையில் பிரசுரிக்க ஆழமான சமூகப் பார்வைமிக்க சிருஷ்டி கர்த்தாக்களும் ஆவல் கொண்டுள்ளனர். ஆம், நம் மண்ணில், நமது முற்றத்து மல்லிகையும் திவ்யமாக மணக்கிறது. என்று சொல்ல வைத்த டொமினிக் ஜீவாவின் இலக்கியப்பணி ஜீவன் மிக்கதுதான்.
அறுபது ஆண்டுகள் ஜீவா உலகில் வாழ்ந்திட்ட முத்திரை மல்லிகையினுாடாக இங்கு மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகமெங்கணும் பதிந்து விட்டது. தனிமனிதனின் வாழ்க்கையில் அறுபது ஆண்டுகள் கணிசமான காலம் ஒருவர் எத்தனை காலம் வாழ்ந்தார்? என்பதைவிட, தான் வாழ்ந்த காலத்தில் எதனைச் செய்தார், என்பதுதான் கேள்வி, தன் வீடுவாயல், குடும்பம் குட்டி என்று சுயலாபமாக ஒருவன் நூறாண்டு வாழ்வது அவன் மட்டில் சரி. ஆனால் தனது மக்கள், கலை, இலக்கியம் பிறர் நலம் என ஒரு சிறிதேனும் தன் வாழ்நாளில் செய்ய முனையும் ஒருவனது வாழ்க்கையே அர்த்தபுர்வமானதாக, வள்ளுவன் கூறிய வாழ்வாங்கு வாழ்ந்து வானுறை தெய்வத்துள் வைத்துப் போற்றப்படும் தகைமை பெறுவான். இப்படி ஒரு சிறப்பினைப் பெறும் ஜீவாவுக்கு இம் மணிவிழா போதுமானதல்ல.
மல்லிகை யினுாடாக கடந்த இரண்டரை தசாப்தகால தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கினை மட்டுமல்ல - இந்த நாட்டுத் தமிழ்ப் பேசும் மக்களின் சமகால வாழ்க்கை நிலை மாற்றங்கள் கூட வருங்காலச் சரித்திர ஆய்வுகளுக்கான ஆதாரபுர்வமான தரவுகளாக அமையும், இந்த நாட்டுத் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளிடையே, ஆழ்ந்த சமூகப் பார்வையோடு எழுதவேண்டுமென்ற ஆர்வத்தை வளர்த்ததிலும், தார்மீகப் பொறுப்புணர்வோடு எழுதவேண்டுமென்ற துடிப்பை ஏற்படுத்தியதிலும்
128 -யோகா Urថាច់ចម្ល៉ោះហ៊ុំផារ៉ា "மல்லிகை ஜீவா
 

மல்லிகைக்கும் ஜீவாவுக்கும் கணிசமான பங்குண்டு. தமிழ் நாட்டு இலக்கிய மேடையில், இலங்கை எழுத்தாளர்களை மதிப்பார்ந்த இடத்தில் வைப்பதிலும் கலாநிதி கைலாசபதி, கலாநிதி சிவத்தம்பி ஆகியரோடு ஜீவாவும் தன் பங்கினைக் காத்திரமாகவே செய்துள்ளார்.
ஜீவாவுக்கென்று தனிப்பட்ட இயக்கரீதியான கொள்கை ஒன்று இருப்பினும், பிறரது மனோதர்மங்களுக்கும் மல்லிகையில் இடம் அளிக்கும் பெருந்தன்மை, இலக்கிய நேர்மை ஜீவாவிடம் நான் வியக்கும் உயர்ந்த பண்புகள், அவரது தார்மீக கோபாவேசம் கூட எனக்குப் பிடிக்கும் அதில் போலித்தனமில்லை. படபடப்பாகப் பொரிந்து தள்ளும் அவரது கோபாவேசத்தில் அவரது ஆத்மாவின் சத்திய ரூபத்தினைத் தரிசிக்கலாம். இலக்கியக் களத்திலும் போலிகள் மலிந்துவிட்ட காலமிது. பொறுப்பற்றவர்கள், சந்தர்ப்பவாதிகள், எத்தர்கள் இலக்கியத்தையும் விட்டுவைக்கவில்லை எழுதும் எழுத்துக்கும் அவர் தம் செயலுக்கும் வாழ்வுக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாத பிரகிருதிகள் மலிந்துவிட்ட நிலையில் - எழுத்தின் யதார்த்தமே வாழ்வின் நிதர்சனமாக வாழும் எளிமையான மனிதர் ஜீவா. அதற்காகவே அவரை நான் பெரிதும் நேசிக்கிறேன்.
அவரது ஜீவ யாத்திரைப் பாதையில், அவர் வளர்த்த தமிழ் இலக்கிய மல்லிகை மலர்களின் திவ்விய மணம், நிரந்தர சுகம், சுகந்தம் இரண்டும் தரட்டும் ஜீவாவின் கனவு - மல்லிகைக்கு ஸ்திரமான ஆழமான அச்சுக்கூடம் அமைதல், நன்றி மிக்க இந்நாட்டு இலக்கிய நேசர்கள், மானுடப் பிரியர்களால் மனம் வைத்தால் அதைக்கூடவா ஜீவாவுக்குச் செய்ய முடியாமல் போகும்?
டொமினிக் ஜீவா என்ற தனிமனிதன் இப்போது ஒரு நிறுவனமாகவே மாறிவிட்டார்கு
"மல்லிகை ஜீவா" 一Burör பாலச்சந்திரன்) 129

Page 68
όι (τιβαστό είδου (ταχύ இளைய தலைமுறையினரும்
- ćupu oot abost
ਉy படைப்பாளி தான் தோன்றிய காலகட்டத்தைக் கடந்து, ஒரு தேர்ச்சியான நிலைக்கு வந்தபின் - அவன் தனது ஊக்குவிப்பால் சில நல்ல படைப்பாளிகளை கலை, இலக்கிய உலகுக்கு அடையாளம் காட்டி வருகிறான். ஆனால், அப்படைப்பாளியினால் குறைந்த பட்சம் ஒரு தொகைப் படைப்பாளிகளை மட்டுமே அடையாளம் காட்டித்தர முடியுமே தவிர, ஒரு படைப்பாளிகளின் இயக்கமாக மாறமுடியுமா? என்பது கேள்விக்குரியதே ஆனால், ஒரு படைப்பாளியே ஒரு பத்திரிகைக்காரனாகவோ, சஞ்சிகைக்காரனாகவோ மாறும் பொழுது அவனே ஓர் இலக்கியமாக மாற்றம் பெறுகிறான். அவ்வாறு அவன் ஒரு கலை, இலக்கிய இயக்கமாக மாற்றம் பெற்ற பின் அந்தந்தக் காலகட்ட இளைய படைப்பாளிகளை இனங்கண்டு தனது வெளியீட்டுக் களத்தில் பிரகாசிக்க வைக்கிறான். அத்தகைய ஓர் உயர்ந்த படைப்பாளியாகவே மணிவிழா காணும் டொமினிக் ஜீவா அவர்கள் திகழ்கிறார்கள்.
இக்கட்டுரையினுாடாக ஜீவா அவர்கள் இளைய சிருஷ்டி கர்த்தாக்களின் வளர்ச்சியில் மல்லிகை மூலமும் தனிப்பட்ட செயற்பாடுகள் மூலமும் எவ்வாறு பங்கேற்றார்கள் , என்பதையும் , இளைய படைப்பாளிகளினுாடாக அவரது தொடர்புகள் எவ்வாறு அமைந்தன என்பதையும் தொட்டுக் காட்டுவதே எனது நோக்கமாகும்.
130 - மோண் கவி "மல்லிகை ஜீவா"
 

2
டொமினிக் ஜீவாவும் இளைய தலைமுறையினரும் என்ற தலைப்பிலான இக்குறிப்புரைக்கான குறிப்புகளில் பெரும்பாலானவை ஜீவா அவர்களுடன் நேரடியாக நான் பழக ஆரம்பித்த பின் கிடைத்தன என்பதனால், ஜீவாவுடன் எனக்கு ஏற்பட்ட முதல் சந்திப்பு அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.
பாடசாலைக் காலம் தொடக்கம் மல்லிகையைப் பரிச்சயமாகக் கொண்டாலும், எனக்குப் பல இலக்கியக் கூட்டங்களில் ஜீவா அவர்களின் உரையைச் செவிமடுத்ததன் காரணமாக, அவர் மீது பயம் கலந்த மரியாதை எப்பொழுதுமே இருந்தது உண்டு பல இலக்கியக் கூட்டங்களில் அவரை நேரில் கண்டிருந்தாலும், அவரோடு பேசப் பயந்து கொண்டு, அவர் வேறு பல இலக்கிய கர்த்தாக்களுடன் கதைத்துக் கொண்டிருப்பதை ரசித்துக் கொண்டிருப்பேன். என்று இவருடன் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த எனக்குத் தற்செயலாக ஒரு சந்தர்ப்பம் கிட்டியது.
அந்த நாட்களில் (அதாவது 70களின் ஆரம்பத்தில்) ஜீவா அவர்கள் கொழும்புக்கு வருவதாயின், மலிபன் வீதியில் அமைந்துள்ள திருஆகுருசுவாமி கடையில் தங்குவார். அவ்வாறு அங்கு தங்கியிருந்த நாட்களில் ஒரு பகற்பொழுதின்போது மலிபன் வீதியிலிருந்து இரண்டாம் குறுக்குத் தெருவுக்கு வந்து கொண்டிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில்தான் என்னை நானே அவரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டேன். மிகவும் சந்தோஷப்பட்டார், அழகாகக் கதைத்தார். அன்று தொடக்கம் நான் அவர்மீது வைத்திருந்த பயம் கலந்த மரியாதை என்ற உணர்வில் பயம் கலந்த என்ற நிலை விடைபெற்றுக்கொண்டது. ஆனாலும் மரியாதையின் தரம் இன்னும் உயர்ந்தது என்றே சொல்லலாம்.
என்னை நானே அறிமுகப்படுத்திய ஒரு மாத இடைவெளிக்குள் என எண்ணுகிறேன். என்னுடைய புகைப்படம் ஒன்றையும் என்னைப் பற்றிய குறிப்புகளையும் கேட்டு 1974-ம் ஆண்டு, மல்லிகை இதழ் ஒன்றில் இளந்தளிர் என்ற தலைப்பில் ஒரு குறிப்பு எழுதி தமிழ் கலை, இலக்கிய உலகுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ஏதோ கவிதையென்ற பெயரில் நாலுபடைப்புக்கள் மட்டுமே படைத்திருந்த என்னை, இலங்கை மண்ணின் தரமான ஓர் இலக்கிய சஞ்சிகையான மல்லிகையில் அறிமுகப்படுத்தி இருக்கிறாரே என்ற பயம் என்னில் ஒட்டிக் கொண்டது.
"மல்லிகை gays" ... ឱហ្មញ្ញgh a 131

Page 69
னால் இளந் தளிர் என் லைப்பிலான மல்லிகையின் ஆ இளந ற த
அக்குறிப்பு என்னில் ஏற்படுத்திய உற்சாகமும் உந்துதலுமே இற்றை வரையிலான என் வளர்ச்சி என்றால் மிகையாகாது.
அன்று தொடக்கம் முற்போக்கு இலக்கியச் சக்திகளைப் பற்றிய அறிவையும் அறிமுகத்தையும் ஜீவா அவர்கள் மூலம் பெற்றுக் கொண்டேன். இவ்வாறாக, இன்றுவரையிலான எனது இலக்கிய வளர்ச்சியில் ஜீவா அவர்களின் பங்கு அளப்பரியது. அத்தோடு, அன்று தொடக்கம் (அதாவது முதல் சந்திப்புத் தொடக்கம் இன்றுவரை) அவர் கொழும்பு வரும்போதெல்லாம் என்னை அவரோ, அவரை நானோ தேடிச் சந்திக்கத் தவறுவதில்லை. அவரைவிட வயதில் நான் சின்னவனாக இருந்தாலும் ஒரு தோழனின் நேச உணர்வுகளுடன் பலவித கருத்துக்களைப் பரிமாறி என் வளர்ச்சிக்கு உதவி வருகிறார். அந்த நேச உணர்வே டொமினிக் ஜீவாவும் இளைய தலைமுறையினரும் எனும் இக்கட்டுரை எழுதும் தைரியத்தைக் கொடுத்தது, எனலாம்.
3
66களில் மல்லிகையைத் தொடங்கிய காலம் முதல் கால் நுாற்றாண்டை நோக்கிய வரையிலான வரலாற்றை நோக்கும்பொழுது, 60களில் வெவ்வேறு வெளியீட்டுக் களங்களில் தங்களது முதலாவது படைப்புகளை வெளியிட்டு அறிமுகமாகி இருந்தாலும், மல்லிகை மூலம் வளர்ந்த (அதாவது பிரகாசமடைந்த) பல இளைய தலைமுறை எழுத்தாளர்களை நாம் இன்று இனங்காட்டலாம். சாந்தன், ப.ஆப்டீன், முபவர், முருகபுபதி, ராஜ பூரீகாந்தன், நெல்லை க. பேரன், கோகிலா மகேந்திரன், திக்குவல்லை கமால், மேமன் கவி ( இது புரண பட்டியல் அல்ல)இவ்வாறாகப் பல இளைய தலைமுறை எழுத்தாளர்களைச் சொல்லலாம்.இன்று இளைய படைப்பாளிகள் மல்லிகை எழுத்தாளர்கள் என்ற முத்திரைக்காரர்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைபவர்கள். அத்தோடு, ஜீவா அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிட்டும் வேளையெலாம் பல பிரதேசச் சிறப்பு மலர்களை வெளியிட்டு, அம்மலர்களில் அந்தந்தப் பிரதேசத்தைச் சார்ந்த கனதியான பல புதிய படைப்புகளையும், அவர்களது படைப்புகளையும் அறிமுகப்படுத்தி வந்துள்ளார். அந்தவகையில், திக்குவல்லை, நீர்கொழும்பு, மலையகம், முல்லைத் தீவு, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களைச் சார்ந்த பல இளைய தலைமுறைப் படைப்பாளிகளை மல்லிகை மூலம் நாம் அறிந்து கொண்டோம் என்பதே உண்மையாகும்,
132 -BហL៣៨ ថាបារី "மல்லிகை ஜீவா
 

மேலும், இளைய படைப்பாளி நல்ல முறையில் எழுதுகிறார் என்பதை வேறொருவர் மூலமாகவோ, அல்லது அவராகவோ இனங்காணும் பட்சத்தில் அந்த இளைய படைப்பாளிக்கு ஊக்கம் கொடுப்பதோடு, மல்லிகைக்கு எழுதுங்கள் என்று கூடச் சொல்லி வருவார். கொழும்பு வரும்வேளையெலாம் பல இளைய தலைமுறைப் படைப்பாளிகளின் பெயர்களைச் சொல்லி - அவர்களைச் சந்திக்க வேண்டும், என்பதோடு புதிய படைப்பாளி எல்லோரையும் மல்லிகைக்கு எழுதச் சொல்லு! என்ற்ெலலாம் எனக்கு வேண்டுகோளை முன்வைத்துப் போவார்.
முதிய எழுத்தாளர்கள் பலரும் மல்லிகையில் எழுதியும்
உள்ளார்கள், எழுதியும் வருகிறார்கள். ஆனாலும், பல்வேறு வாழ்வுப்
பிரச்சினைகளைக் காரணங்காட்டி எழுதாமலிருக்கும் முக்கிய எழுத்தாளர்கள் மீது ஜீவா அவர்கள் என்றும் கோபம் கொண்டவராகத் திகழ்ந்து வருகின்றார். ஏதோ பழைய படைப்பாளி என்ற மரியாதையில், எழுதுங்கள் என்று சில தடவை கேட்பார், அவர்கள் மல்லிகைக்கு எழுதவில்லை என்றால் தளரமாட்டார். மல்லிகைக்கான விஷயதானங்கள் அவரால் பிரகாசிக் கப்பட்ட இளைய தலைமுறைப் படைப் பாளிகளிடமிருந்து வரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருப்பார். இந்த நம்பிக்கை முதிய எழுத்தாளர் மீதான அபிமானத்தையே காட்டுகின்றது.
இந்த அபிமானத்தின் காரணமாகத் தான் சமகாலத்தில் கிழக்கிலங்கை, தென்னிலங்கை போன்ற பிரதேசப் பகுதியிலிருந்து அசுர வேகத்துடன் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வரும் இளைய தலைமுறை சார்ந்த முஸ்லிம் படைப்பாளிகளைப் பற்றி ஆச்சரியத்துடன் என்னிடம் கூறுவார். இக்கூற்றை நிரூபிக்கும் வகையில் மல்லிகை இதழொன்றில் துாண்டில் பகுதிக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கும் வகையில் முன் வைத்த கருத்து முக்கியமானதாகும்.
இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த இலக்கிய இரசனையாளர்களில் முஸ்லிம் நண்பர்கள் பிரமிக்கத்தக்க ஆர்வம் காட்டி வருவதை நான் உணர்கிறேன். அநேகமாக எனக்குத் தெரிந்த முஸ்லிம் இளைஞர்கள் அத்தனை பேரும் இலக்கிய ஆர்வ உந்தலினால் கவரப்பட்டு வாசிப்புப் பசி கொண்டவர்களாக புத்தகங்களுக்கு அலைவதையும் தாங்கள் படித்து ரசித்த நுால்களைப்பற்றி நண்பர்களுக்கு சொல்லி மகிழ்வதையும்
நான் கண்டு இரசித்திருக்கிறேன். இவ்வாறாகப் பதில் அளித்துச் செல்கிறார்.
"மல்லிகை ஜீவா" - BLũLngẩI (ö0ử 133

Page 70
மேலும், கொழும்புக்கு வரும் வேளையெல்லாம் தான் சுமந்து வரும் 'மல்லிகை இதழில் யாரேனும் புதிய படைப்பாளியின் கனமான படைப்பு இடம் பெற்றிருந்தால் அந்தப் படைப்பாளி பற்றியும் படைப்புப் பற்றியும் மிகவும் விதந்து கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பார்,
இவ்வாறாக ஜீவா அவர்களால் விதந்துப் பாராட்டப் பெற்றவாகளாக எனக்குத் தெரிய ஏ. ஆர். ஏ. ஹஸிர் (இவர் தற் பொழுது வெளிநாட்டில் இருக்கிறார். இப்பொழுது இவர் எழுதுவதில்லை என்பது ஜீவாவுக்குக் கோபமான விடயம்தான்) வாசுதேவன், இப்னு-அஸுமத், gதள் பிச்சையப்ப்ா போன்ற இளைய படைப்பாளிகளைச் சொல்லலாம். இவர்கள் மட்டுமல்ல, வேறு பல இளைய படைப்பாளிகளையும் சொல்லலாம். அவர்களில் பலர் அன்று ஜிவா சொன்ன கருத்துக்கிணங்க இன்று புதிய வீச்சுக்காரர்களாகத் திகழ்கிறார்கள். ஆனால், நான் மேற்குறிப்பிட்ட படைப்பாளிகளைப் பற்றி ஜீவா அவர்கள் கூறிய கருத்துக்கள் வீண் போகவில்லை என்பதை அவர்களின் வளர்ச்சியை நேரில் காண்பவன் என்ற முறையிலும், அவதானிப்பவன் என்ற ரீதியிலும் இங்கு குறிப்பிட்டேன் என்பதே காரணங்களாகும்.
பூgதர் Lfnji 675) 3 LLI Li Lu IT 6ĵ65i ஓவியங்களை நான் அறிமுகப்படுத்திவிட்ட காலத்திற்குப் பின் - gதர் வெவ்வேறு களங்களில் வரையும் படங்களைப் பார்த்து என்னிடம் பாராட்டுவார். பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் ரீதரின் ஒவியங்களை மல்லிகையின் அட்டையில் வெளியிட்டதோடு, சமீபத்தில் வெளிவந்த மல்லிகைக் கவிதைகள் தொகுதிக்கு பூரீதரின் ஒவியத்தை அட்டைப் படமாக வெளியிட்டுமுள்ளார். அவ்வாறே இப்னு-அஸுமத்தின் சிங்கள மொழிபெயர்ப்புப் பணியைப் பாராட்டியும், ஊக்குவித்தும் வருகிறார். இந்த ஊக்குவிப்பின் அடையாளமாக மல்லிகைளில் தொடர்ந்து இப்னு -அஜுமத்தின் மொழிபெயர்ப்பு படைப்புகளை வெளியிட்டு வருகிறார்.
அடுத்தது, வாசுதேவன் -பத்திரிகைகளிலும், மல்லிகை இதழ்களிலும் எழுதிய கவிதைகளைப் படித்து, ஜீவா அவர்களிடம் நான் கூறிய பொழுது, தானும் கவனித்து வருவதாகவும், அற்புதமாக எழுதுகிறார் என்றும் பாராட்டினார். இந்தப் பாராட்டுச் சிந்தனையோடு யாழ் சென்றவள் கடந்த கால் நுாற்றாண்டு நெருங்கிய நிலையில் - இலங்கை இலக்கிய உலகில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய மல்லிகையின் உழைப்பில் உருவான மல்லிகை பந்தல் பதிப்பகம் மூலம் வாசுதேவனின் என்னில் விழும் நான் புதுக் கவிதை தொகுதியை வெளியிட்டு வைத்தார். ஆனால் மல்லிகை பந்தல் பதிப்பகம் அமைத்து இங்கு பல இளைய படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடும் பணியை ஆரம்பிக்கும்
| 134 -மேன் கவி "மல்லிகை ஜீவா
 

முன்பே ஜீவா அவர்கள், இலங்கையின் பல இளைய படைப்பாளிகள்ான சாந்தன், திக்குவலை கமால் போன்ற படைப்பாளிகளினதும் - எனது புத்தகங்களையும் தமிழகத்தில் வெளிவரப் பின்னணியாக உழைத்தார். இன்று அவரது உழைப்பால் இங்கு பல இளைய இளம் படைப்பாளிகளினது புத்தகங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக மல்லிகை மூலம் பிரகாசம் அடைந்து மல்லிகை எழுத்தாளர் என்ற முத்திரை குத்திய ப. ஆப்டீனின் சிறுகதை தொகுதியொன்றை மல்லிகைப் பந்தல் வெளியீடாக சமீபத்தில் வெளிவந்துள்ளது என்பதோடு, சமீபத்தில் வெளிவந்த மல்லிகைக் கவிதைகள் தொகுதியில் கணிசமான தொகை இளம் கவிஞர்களின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
இளைய படைப்பாளிகளினது படைப்புகளை மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளியிட வேண்டும் என்ற இந்த உணர்வின் உந்துதலால்தான், சமீபத்தில் அவர் கொழும்பு வந்த பொழுது வகவம் செயற் குழு உறுப்பினர்கள் சிலரும் , நானும் அவருடன் பேசிக்கொண்டிருந்தவேளை வகவ கவிஞர்களின் கவிதைகளை ஒரு தொகுப்பாக வெளியிடப்போகிறோம் என்றதும் உடனடியாக ஜீவா அவர்கள் அத்தொகுதியைத் தான் மல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளியிட்டுத் தருகிறதாக உரைத்தார்.
4.
இவ்வாறாக, காலம் - காலமாக எங்கெங்கு இளைய படைப்பாளிகள் இருக்கிறார்களோ அவர்களை ஊக்குவித்தும் வளர்த்தும் வந்துள்ளார், ஜீவா அவர்கள். இன்று காத்திரமான இளைய படைப்பாளிகள் என்று ஒரு பட்டியல் போட்டால் நிச்சயமாக அவர்களில் பெரும்பாலானோர் ஒன்று மல்லிகை மூலம் அறிமுகமாகியவராக இருப்பார்கள் அல்லது மல்லிகை மூலம் பிரகாசித்தவர்களாக இருப்பார்கள்,
அன்று மல்லிகை மூலம் பிரகாசமடைந்த அல்லது அறிமுகமான சில படைப்பாளிகள் இன்று வாழ்க்கைப் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டு எழுதாமல் விட்டமைக்கு ஜீவா அவர்கள் மனஞ் சஞ்சலப்பட்டுக் கூறுவார். அத்தோடு மல்லிகை மூலம் அறிமுகமாகிய முற்போக்குச் சிந்தனையுடைய பல இளைய படைப்பாளிகள், இன்று பல பிற்போக்குச் சக்திகளுக்குப் பின்னால் அலைந்து தங்களை அழித்துக் கொண்டிருப்பதையும் அனுதாபத்துடன் என்னுடன் கதைப்பார்,
அதனால் தான் இளைய தலைமுறைப் படைப்பாளிகள் தொடர்ந்து ஒரு நிலையான சிந்தனையில் இருப்பது அவசியம் எனக் கூறியதோடு, இளைய தலைமுறைப் படைப்பாளிகளிடம் இருக்கவேண்டிய
"மல்லிகை ஜீவா" -Bយោធា ២០ 135

Page 71
பண்புகளைப் பல தடவை, பல இடங்களில் காத்திரமான கருத்துக்களாய்
முன்வைக்கிறார்.
மல்லிகை டிசம்பர் - 87, இதழில் துாண்டில் பகுதியில் இளந் தலைமுறையினரிடம் நீங்கள் எதிர்பார்ப்பவை என்ன? என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில் ஆழமான கட்டுப்பாட்டை, தேடல் முயற்சியை, அனுபவப்பட்டவர்களின் அனுபவங்களைத் தேடிப் பெற்று தமது அனுபவங்களுடன் உரைத்துப் பார்ப்பதை எல்லாவற்றையும் விட
எதிர்காலத்தைப்பற்றித் துல்லியமாக மதிப்பிட்டுத் திட்டம் தீட்டுவதை
என்று பதில் அளித்துள்ளார். அத்தோடு சகாப்தம் என்ற தமிழக சஞ்சிகையில் கலாமணிக்கு அளித்த பேட்டியில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்பொழுது முன் வைத்த கருத்து இளைய படைப்பாளிகள் ஒவ்வொருவரும் மனங் கொள்ளவேண்டிய கருத்தாகும்.
ஜீவா சொல்லுகிறார் :
இன்றைய நிலையில் இலக்கிய வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு ரொம்ப முக்கியமானது. அவர்களிடம் எழுச்சி ரொம்ப அதிகமாக இருக்கிறது.அதே சமயத்தில் முதிர்ச்சியின்மையும் காணப்படுகிறது. படைப்பாற்றல் உள்ள இளைஞர்கள் ஸப்தாபன ரீதியாக ஒன்று திரளவேண்டும் சிதறிப்போய்த் திரிபுகளாக -உதிரிகளாக மாறிவிடக்கூடாது. மக்களைப் படிக்கவேண்டும் - அதன் மூலம் அவர்கள் படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும.
ஆக, இளைய தலைமுறைப் படைப்பாளிகளது வளர்ச்சியில் அக்கறை கொண்டு கால் நுாற்றாண்டு நெருங்கிய நிலையில் மல்லிகை மூலம் உழைத்து இன்று மணிவிழா காணும் டொமினிக் ஜீவா அவர்களுக்கு இளைய தலைமுறைப் படைப்பாளிகள் செய்யவேண்டிய பணிகள் பின்வருவனவாகும்:-
1. மல்லிகையைத் தொடர்ந்து படிப்பது, அத்தோடு கடந்த கால மல்லிகை இதழ்களைத் தேடிப் படித்து மல்லிகை யுகத்தை அறிந்து கொள்வதோடு, எதிர்கால மல்லிகை வளர்ச்சிக்கான ஆக்கபுர்வமான கருத்துக்களை அனுப்பி வைத்தல், 2. புதிய வீச்சான படைப்புகளை மல்லிகைக்குப் படைத்தளித்தல் 3. மல்லிகையை வளரும் புதிய தலைமுறைப்
படைப்பாளிகளிடம் கொண்டு செல்லுதல்கு
136 — BL៣៣៨r oបា "மல்லிகை జోar" |

நாண் கண்ட ஜீவா
- 668. முருகபூபதி
1964 - ஆம் ஆண்டு
அப்போது நான் யாழ்.ஸ்ரான்லி கல்லுாரியில் படித்துக் கொண்டிருக்கிறேன்.
எங்கள் விடுதி மாணவர் மன்றம், ஒழுங்கு செய்த கூட்டம் ஒன்றில் டொமினிக் ஜீவா என்பவர் பேசவிருக்கிறார் என்ற தகவல் என் காதுக்கும் எட்டியது.
நாளும் வந்தது.
நானும் போனேன்.
வெள்ளை வேட்டி, வெள்ளை நாஷனல் அணிந்த உருவம் மேடையில் தோன்றிப் பேசியது. தலைமை தாங்கிய தலைவர் முதலில் இவர்தான் டொமினிக் ஜீவா என அறிமுகப் படுத்தினார்.
ஜீவா அன்று பேசியவை இப்போது என் ஞாபகத்தில் இல்லை. ஆனால், அவரது கருத்துக்களை ஆமோதித்தும் ஆட்சேபித்தும் பல உயர்தர வகுப்பு மாணவர்கள் - அவர் போனதன் பின்பு பேசிக்கொண்டதைக் கேட்டேன்.
"மல்லிகை ஜீவா" --வெ.முருகபூபதி 137

Page 72
ஏப்ரில் கிளர்ச்சி முடிந்து, இரவானதும் சில மணி நேரங்கள் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்திய காலம் அது வெளியே திரிய முடியாமல் வீட்டினுள்ளே முடங்கிக்கிடந்து புத்தகங்களைப் படிப்பதையே பொழுது போக்காக்கிக் கொண்டிருந்தேன்.
ஒருநாள்
நண்பர் ஒருவர் வந்து - மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா - நீர்கொழும்புக்கு வந்துள்ளார். இன்று மாலை அவரைப் பார்க்கப் போவோம் என்றார்.
நானும் சென்றேன்.
1964-ஆம் ஆண்டு நான் மேடையில் பார்த்த அந்த உருவம் - அதே போன்ற வெள்ளை வேட்டி, வெள்ளை நாஷனலுடன் - வெற்றிலையைக் குதப்பியவாறு கரம் கூப்பி வணங்கி வரவேற்றது.
1971-இல் ஏற்பட்ட இச்சந்திப்பு - என்னை, என் வாழ்வை திசை திருப்பும் என்று நான் என்றைக்குமே எதிர்பார்த்திருக்கவில்லை.
நண்பர்களுடன் அரட்டை அடித்து ஊர் சுற்றித் திரிந்த நானும் ஒரு எழுத்தாளன் ஆனேன்.
ஜீவாவுடனான சந்திப்பு - தரமான வாசகனாக - எழுத்தாளனாக என்னை மாற்றியது.
1972-ஆம் ஆண்டு மலலிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழ் வெளியிட்டபோது எனது சிறிய கட்டுரை பிரசுரமாகியது. அதன்பின்பு எனது முதலாவது - சிறுகதையான கனவுகள் ஆயிரம் (இந்தப் பொருத்தமான தலைப்பை இட்டதே ஜீவாதான்) 1972 ஜூலையில் வெளியாகியது.
என்னை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதோடுதொடர்ந்தும் எனது ஆக்கங்களுக்குக் களம் அமைத்தும் தந்தது மல்லிகை தான் என்பதைக் கூறிக்கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். அந்த வகையில் எனது நன்றி மல்லிகைக்கு மட்டுமல்ல - அதன் ஆசிரியர், நண்பர் டொமினிக் ஜீவா அவர்களுக்கும் உரியது என்று 1975-ஆம் ஆண்டு நான் வெளியிட்ட சுமையின் பங்காளிகள் சிறு கதைத் தொகுதியின் முன்னுரையில் குறிப்பிட்டதை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
138 - វិចារៈ ប្រាញ់បីបួបប្រាំ "மல்லிகை ஜீவா
 

அதன் பின்பு 1971-ஆம் ஆண்டு.
1971-ஆம் ஆண்டு ஏற்பட்ட இலக்கியச் சந்திப்பு - இன்று வரையில் நீடித்து - நிலைத்த இலக்கிய நட்பாகத் தொடர்கின்றது.
இப்பொழுது ஜீவா எனக்கு இலக்கிய நண்பர் மட்டுமல்ல - குடும்ப நண்பராகவும் திகழ்கின்றார் என் குடும்பத்தவர் மத்தியில் இன்றும் இவருக்கு தனி மதிப்பும் மரியாதையும் உண்டு
எனது மாமன்மார் தொ. மு. பாஸ்கரதொண்டமான், தொ. மு. சிதம்பர ரகுநாதன் ஆகியோரைப் போன்றல்லா விடினும் - யாராவது ஒரு பிள்ளை எழுத்தாளனாக வரவேண்டும் என்று தந்தையார் என் இளமை பருவத்தில் அடிக்கடி சொல்வது நினைவுக்கு வருகிறது. அதேபோன்று பிறிதொரு சந்தர்ப்பத்தில், மகனே - உன்னை ஒரு எழுத்தாளனாக்கியது மல்லிகை - உனது முதலாவது சிறுகதைத் தொகுதியை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தியது மல்லிகைப் பந்தல் - எனவே - மல்லிகையையும் மறந்து விடாதே - ஜீவாவையும் மறந்துவிடாதே, மறந்தாயானால் - பேனையைப் பிடிப்பதையும் மறந்துவிடு - என்று என் தந்தை சொன்னார்.
இன்று அவர் இல்லை.
ஆனால் - அவர் அன்று சொன்ன வாசகங்கள் இன்றும் என் மனதில் பதிந்திருக்கிறது.
என் அருமை மனைவி சொல்வாள் -
"அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் - பத்து வயதுப் பராயத்தில் தான் இழந்துவிட்ட தந்தையை மீண்டும் பார்க்கின்றேன் - என்று. ஆம், அவளுக்கும் தந்தை இல்லை.
ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், கடல் கடந்து வந்து - அவுஸ்திரேலியாக் கண்டத்திலிருக்கும்போது, நண்பர் சோமகாந்தன் அனுப்பி வைத்த கடிதம் - மேலே குறிப்பிட்ட சம்பவங்களையெல்லாம் இரை மீட்டிப் பார்க்க வைத்தது.
கடந்த 15 வருட காலததில் - எனக்கும் ஜீவாவுக்கும் இடையே இருந்த இலக்கிய உறவு எனக்குப் பல்வேறு அனுபவங்களைத் தேடித் தந்துள்ளது.
"శశిఖరా ஜீவா" --வெ.முருகபூபதி 139

Page 73
தமிழ் இலக்கிய உலகில் ஜீவாவின் பெயரும், மல்லிகையும் நிலைத்திருக்கின்றதென்றால் - அதற்கு காரணங்கள் பலவுண்டு
அவருக்குரிய தனித்துவம் பிரதான காரணமாக அமைகின்றது
எவர் என்ன சொன்ன போதிலும் தனக்குச் சரியெனப் பட்டதை எந்த இடத்திலும் - எந்தச் சந்தர்ப்பத்திலும் - பகிரங்கமாகப் பேசுவார். யாழ்ப்பாணத்திலும் - கொழும்பிலும் மட்டுமல்ல - அவருடன் நான் கலந்துகொண்ட - சில சிங்களப் பிரதேசக் கூட்டங்களிலும் அதனை அவதானித்துள்ளேன். இதனால் - பல தமிழ் அபிமானிகளான சிங்களவர்கள் மத்தியிலும் அவரைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயம் உண்டு.
மினுவாங்கொடை என்ற ஊருக்கு அருகாமையில் வசிக்கும் வண. ரத்னவன்ஸதேரோ என்ற பெளத்த பிக்கு அடிக்கடி சொல்வார் - தமிழைப் படிக்கவும் - தமிழைப் பேசவும் என்னைத் துாண்டியது மல்லிகையும் - ஜீவாவின் கருத்துக்களும்தான் என்று.
மார்டின் விக்ரமசிங்காவின் மகள் - மல்லிகையைப் பார்த்துவிட்டு - பாராட்டியதையோ - சரத் அமுனுகம என்ற உயர் அதிகாரி மல்லிகை புரிந்த பணிகளை மனந்திறந்து பாராட்டியதையோ - காலஞ்சென்ற அமரதாஸவும் - அவரது குடும்பமும் - மல்லிகை மீதும் ஜீவாமீதும் கொண்டிருந்த பாசத்தையோ - பலர் அறிந்திருக்க முடியாதுதான்.
ஆனால் அவர்களிடம் மட்டுமல்ல - பல சிங்கள எழுத்தாளர்கள் - வாசகர்கள் மத்தியில் - மொழி பெயர்ப்பு உதவிகளுடன் - தமிழ் மக்களின் உரிமைகளுக்காக - ஜீவா குரல் கொடுத்தார் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
தேசிய ஒருமைப்பாடு என்பது ஒருவழிப்பாதையல்ல - தமிழ் மக்களுக்குள்ள உரிமையை வழங்க மறுத்தால் - சிங்கள மக்களும் தமது
உரிமையை இழந்தவர்கள் ஆகிவிடுவார்கள் என்றும் அந்தத் தமிழ் அபிமானிகளான சிங்களவர்கள் மத்தியில் கூறியவர் ஜிவா,
ஜீவா - ஒரு இலக்கியவாதி,
ஜீவா - ஒரு படைப்பாளி,
140 -லெ. முருகபூபதி "மல்லிகை ஜீவா"
 
 
 

ஜீவா - ஒரு பத்திரிகையாளன்.
ஜீவா - ஒரு முற்போக்கு இயக்கத் தொண்டன்,
ஜீவா - ஒரு மனித நேயம் மிக்க பணியாளன் !
- இப்படித் தோற்றங்களில் காட்சியளிக்கும் ஜீவாவிடம் பலமும் உண்டு - பலவீனமும் உண்டு உரத்துப் பேசுவது அவரது பலமாக இருக்கலாம், மற்றையவர்களின் பார்வை, பலவீனம் என்று சொல்லலாமா?
மல்லிகை நுாறாவது ஆண்டு மலரையும் நிச்சயம் வெளியிடும் - அப்போது நானோ நீங்களோ இருக்கமாட்டோம் என்று ஜீவா கூட்டங்களில் சொல்வதுண்டு.
அந்த நுாறாவது ஆண்டு மலரை மட்டுமல்ல, அதன் பின்பும் பல மலர்களை மல்லிகை வெளியிட, ஜீவாவுக்குச் சிறந்த அடித்தளத்தை உருவாக்க அவருக்கு எடுக்கப்படும் மணிவிழா வழியமைக்க வேண்டும்கு,
| "மல்லிகை ஜீவா" --வெ.முருகபூபதி 141

Page 74
மல்லிகை ஜீவாவும் திக்குவல்லை தமிழ் இலக்கியமும்
- திக்குவல்Aை கமால்
圈。 ஈழத்து இலக்கியத்தோடு இரண்டறக் கலந்து விட்ட ஒரு ஜீவன், இலக்கிய நெஞ்சங்களில் நிலைத்துவிட்ட ஒரு நாமம், அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு அறுபது வயதென்றால், இக்கால கட்டத்துள் அவரது அறுவடைகள் என்ன என்று பல கோணங்களில் பார்ப்பது பயனுடையதாகும்
ஜீவா ஒரு முற்போக்குப் படைப்பாளி, யாழ்ப்பாணச் சாதியமைப்புக்கு எதிரான ஒரு போராளி, வீறு மிக்க இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியஸ்தர், இந்தப் பின்னணியின் வளத்திலும் பலத்திலும் மலர்ந்ததுதான். மல்லிகை.
இந்த மல்லிகை சுமார் கால் நுாற்றாண்டுகளாக மணம் பரப்பி வருகிறது. இதன் மூலமாக ஜீவாவின் சாதனைகள் ஒன்றல்ல, இரண்டல்ல, அதில் ஒரு சில கூறுகளை மாத்திரம் தொட்டுக் காட்டுவதே எனது நோக்கமாகும்.
தமிழ்ப் பிரதேசங்களுககு அப்பாலிருந்தும் , தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிலிருந்தும் மகிழ்கின்ற படைப்பாளிகள் ஜீவாவின் விசேடமான கவனிப்பைப் பெற்றனர். அவர்களைத் தட்டிக் கொடுத்து, தைரியமூட்டி அவர்கள் வளர்வதற்குப் பெரும் வாய்ப்பினை தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளார். அதன் முதிர்ச்சியை இலக்கிய உலகு கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது.
142 Lதிக்குவல்லை LOrgù "மல்லிதை لوماتیr" |
 

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத மேமன் கவி, ப. ஆப்டீன் போன்றவர்களும், சிங்களப் பிரதேசங்களைச் சேர்ந்த அநுராதபுரம் அன்பு ஜவஹர்ஷா, மினுவாங்கொடை மு. பசீர் போன்வர்களும் இத்தகையவர்களே,
இவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வளர்த்ததோடு நின்று விடாது, இத்தகையவர்களின் முக்கியத்துவத்தை யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் மட்டுமல்ல, தமிழகப் பயணங்களின் போதுகூட பல்வேறு கூட்டங்களில் எடுத்துரைத்து வந்துள்ளார்.
இனி ஜீவாவின் சிறப்பான கவனத்தைப் பெற்ற திக்குவல்லையைப் பற்றிச் சற்றுப் பார்ப்போம். மல்லிகை மூலம் திக்குவல்லை அறிமுகமாகத் தொடங்கிய காலம் 1970, தென் மாகாணத்தில், மாத்தறை மாவட்டத்தில் முழுக்க முழுக்க சிங்களச் சூழலில் அமைந்துள்ள ஒரு கரையோரச் சிற்றுார் இது என்பது இப்போது பலருக்குத் தெரியும்,
இங்கொன்றும் அங்கொன்றுமாக எழுதிக்கொண்டிருந்த திக்குவல்லை எழுத்தாளர்கள் 1968 -ல் திக்குவல்லை எழுத்தாளர் சங்கம் மூலம் ஒன்று திரண்டனர்.மிகத் துணிச்சலுடனும் தெளிவான கண்ணோட்டத்துடனும் எழுதிக்கொண்டிருந்த இந்த இளைஞர்களை இனம் கண்டு தமிழ் இலக்கிய உலகில் நிலையான ஸ்தானத்தை ஏற்படுத்திய தனிநபர் ஸ்தாபனம்தான் ஜீவாவும் மல்லிகையும்,
இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்ட திக்குவல்லைப் படைப்பாளிகளான சம்ஸ், கமால், நம்பி, ஹம்ஸா, செந்தீரன், இனாயாஹற் போன்றவர்கள் கவிஞர் கூட்டமாகவே மட்டும் வளராமல் விமர்சனம், மொழியாக்கம் போன்ற துறைகளையும் அரவணைத்துக்கொண்டனர்.
இக்கால கட்டத்தில்தான திக்குவல்லை எழுத்தாளா சங்கம் 1973-ல் தென்னிலங்கை தமிழ் இலக்கிய விழாவினை நடாத்தியது. இவ்விழாவிலே பல தமிழ் எழுத்தாளர்களும் ஏன் சிங்கள எழுத்தாளர்களும்கூட பங்குபற்றினர். அவர்களோடு சிறப்பு அதிதியாக டொமினிக் ஜீவா கலந்துகொண்டார். இவர் அங்கு நிகழ்த்திய சிறப்புரை இலக்கிய அபிமானிகளுக்கு மட்டுமல்ல, ஊர் மக்களுக்குமே பெரும் நம்பிக்கையுட்டியது.
"மல்லிகை ஜீவா" உதிக்குவல்வை கமால் 143

Page 75
இவ்விழாவின் முக்கிய அம்சம் பூ வெளியீடாகும். அது திக்குவல்லை எழுத்தாளர் சங்கத்தின் இரண்டாவது வெளியீடாகும். அம்மலருக்கு ஜீவா வழங்கிய மதிப்புரையின் ஒரு சில பகுதிகளை இங்கு அவருடைய வார்த்தைகளிலேயே வழங்குவது பொருத்தமாகும்.
எப்படித் தமிழக நவீன இலக்கியத்துக்கு கேரளத்தாக்கம் கொண்ட தமிழ் இளைஞர்கள் ஒரு புதிய உணர்வும் உயிர்த் துடிப்பும் கொண்ட ஜீவரத்தம் பாய்ச்ச முனைந்து, முயன்று, செயலாற்றி இன்று தமது தனி முத்திரையைத் தமிழ்ப் படைப்பு இலக்கியங்களில் பதிப்பித்து வருகின்றனரோ அப்படியே சிங்களக் கலாச்சாரம், பண்பாடு, மொழி பழக்க வழக்கங்களால் புது அனுபவம்பெற்று வளர்ந்து வந்துள்ள இந்த திக்குவல்லை இளைஞர்களும் ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு புதிய வடிவங்களையும், புதிய சிந்தனைகளையும் நல்குவார்கள் என நான் இவர்களின் எழுத்துக்களை ஊன்றிப் படித்து வருகின்றவன் என்கின்ற முறையில் நம்புகின்றேன்.நண்பர்களுடனும் இதுபற்றிச் சம்பாஷித்துள்ளேன்.
திக்குவல்லை எழுத்தாளர் சங்க வெளியீடான இந்த ஆக்கபுர்வமான முயற்சி எனது நீண்ட நாளைய அவதானிப்பை ஓரளவு கோடிகாட்டுகின்றது. இதையும் மீறிய படைப்பு ஆற்றல், பார்வைத் தெளிவு, எதிர்கால இலக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து இந்த நண்பர்களிடம் நிறைய நிறைய உண்டு, என மனப்புர்வமாக நம்புகிறவர்களின் நானும் ஒருவன்.
இப்படி திக்குவல்லை எழுத்தாளர் பற்றிய தனது மனப் பதிவை வழங்கியிருக்கிறார் ஜீவா அவருடைய எதிர்பார்ப்பு வீண்போகாது என்பதை எதிர்காலம் ஊர்ஜிதம் செய்யும்,
இத்தோடு நின்றுவிடவில்லை ஜீவா நீர்கொழும்பு சிறப்பிதழ் வெளியிட்டது போல், திக்குவல்லைச் சிறப்பிதழ் வெளியிடும் உத்தேசத்தை முன்வைத்தார். இச்செய்தியை அறிந்த எமது எழுத்தாளர்கள் மிகவும் குதுாகலமாக இயங்கினர். அதன் விளைவாக 1976 பெப்ரவரி மல்லிகை திக்குவலைச் சிறப்பிதழாக மலர்ந்தது. இது திக்குவல்லைக்கு அவர் வழங்கிய தனித்துவமான மதிப் பாகும் இலக்கிய உலகைப் பொறுத்தவரையில் அது ஒரு சம்பவம்தான். ஆனால் திக்குவல்லையைப் பொறுத்தவரையில் ஒரு பெரும் சரித்திரம். ஒரு பெரும் பாய்ச்சல்
ம் மலருக்கு வாழ்த்துரை வழங்கிய பிரபல எழுத்தாளர் வரதர்
ருககு வாழதது p ழுதத
திக்குவல்லை எழுத்தாளர்களுக்குக் கணிசமான கவனிப்புக் கொடுத்துவரும்
(5. ழுதத ளுககு துவரு
144 நீக்குவல்லை öLangst "மல்லிதை ar" |
 

மல்லிகை திக்குவல்லைச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடுவது மிகப் பொருத்தமானது - பாராட்டுக்குரியது என்றும், கலாநிதி க. கைலாசபதி திக்குவல்லைச் சிறப்பிதழ் வெளிவருவது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தேசிய இலக்கியம் என்பது பல்வேறு பிரதேச, மாவட்ட இலக்கிய ஆக்கங்களினதும் இயக்கங்களினதும் ஒட்டு மொத்தமான பரிணமிப்பு ஆகும், என்றும் கவிஞர் ஈழவாணன் நாடறிந்த எழுத்தாளர்களாக இப்பிரதேச இளைஞர்களை எழுத்துலகுக்கு கொண்டுவந்த பெருமையில் மல்லிகைக்கு கூடுதலான பங்களிப்பு உண்டு எனத் துணிந்து கூறலாம், என்றும் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ஏ. ஏ. லத்தீஃப் திக்குவல்லை எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்து வரும் மல்லிகை விசேஷ இதழ் போடுவது சரியே என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்படியாக எழுத்து முயற்சிகளுக்கு மல்லிகை வாய்ப்பளித்த வகையில் மாத்திரமன்றி, திக்குவல்லை எழுத்தாளர்களுக்குப் பாலமாய் அமைந்து மனிதாபிமானப் படைப் பாளிகளோடும் தொடர்பை வலுப்படுத்தியது. இதன் விளைவாக ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி விரிவாக அணுகப்பட வேண்டியதொன்றாகும்.
மல்லிகை எழுத்தாளரான கமாலின் சிறுகதைத் தொகுதி கோடையும் வரம்புகளை உடைக்கும், தமிழகம் என் சீ பீ எச் வெளியீடாக 1984-ல் வெளிவந்துள்ளது. இத்தொகுதி வெளிவரக் காரணமாக இருந்தவரும் இதே ஜீவா தான் என்பதை இலக்கிய உலகு நன்கறியும்.
சரி. இது, ஜீவாவுக்கு மணிவிழா ஆண்டு இந்த 1987/1988 களில் ஜீவாவின் வளர்ச்சி - உயர்ச்சி என்ன என்று சிந்திப்பது அவசியம் ஆம். இன்று சோவியத் யூனியன் வரவேற்றுக் கெளரவிக்கும் அளவுக்கு அவர் பெருவிருட்சமாக வேரூன்றியுள்ளார். தமிழபிமானிகள் இலக்கிய மாமணி மானுடச் சுடர் என்றெல்லாம் பட்டமளித்துப் பாராட்டும் நிலையை எய்தியுள்ளார். எமது சகோதர சிங்கள மக்களால் பெருமளவு அறியப்பட்டுள்ள தமிழ் எழுத்தாளராக உயர்ந்துள்ளார். மல்லிகைப் பந்தல் புத்தக வெளியீட்டாளராகத் திகழ்கிறார்.
இதையெல்லாம் ஜீவா என்ற தனி நபரின் வளர்ச்சியாக நாம் நினைத்துவிட முடியாது.இந்த வளர்ச்சியின் பகைப் புலத்தில் திக்கவல்லையில் இலக்கியமும், ஈழத் தமிழ் இலக்கியமும், ஏன் சரிவதேச இலக்கியமும்கூட, மேலும் செழுமையடையுமென நாம் நிச்சயமாக நம்பலாம்.இ
"மல்லிகை ஜீவா" -ប្រាំម៉ាញបាចចាថា estancis|| 145

Page 76
இ. மு. வி. ச. வளர்ச்சியும் ஜீவாவின் பங்களிப்பும்
- état. சோமகாந்தன்
இருபதாம் நுாற்றாண்டின் ஈழத்துத் தமிழிலக்கியத்தில், நவீன இலக்கியத் துறைகளான நாவல், சிறுகதை போன்றவற்றை ஜனரஞ்சகப்படுத்தி வளர்ப்பதில் ஈழகேசரிப் பத்திரிகையும், பின்னர் மறுமலர்ச்சிக் குழுவும் குறிப்பிடக்கூடிய பங்களிப்பைச் செய்துள்ளன. எனினும், ஈழத்து ஆக்க இலக்கியம் புதுப்பாதையில் தடம் பதித்து, வீறும் பொலிவும் கொண்டதாக பீடு நடை போடத் துவங்கியது, இந்நுாற்றாண்டின் மத்திய பகுதியை அடுத்த காலகட்டத்தில் தான் என்பதை இலக்கிய வரலாற்றை உள்வாங்கிச் சிந்திக்கும் இலக்கிய ஆய்வாளர்னகள் அவதானிக்க முடிகின்றது. இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. நான்காம் தசாப்தத்தில் இலங்கையில் இலவசக் கல்வி முறை நடைமுறைக்கு வந்ததும் தாய்மொழிக் கல்வி வளர துவங்கியதும் அதனால் அது காலம் வரை கல்வி வாய்ப்பற்றிருந்த அடி நிலை சமுதாயத்தினர் பலர் கல்வி பெறும் வாய்ப்பினைப் பெற்றனர். அந்தச் சூழ் நிலையிலே அக்கால கட்டத்தில் தேசிய சர்வதேச அரங்குகளில் இடம் பெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புணர்ச்சி, அந்த ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவுச் சக்திகளான பிரபுத்துவ - முதலாளித்தத்துவத்துக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த போராட்ட அலைகள், வர்க்கப் போராட்ட அலைகள், உலகரீதியில் விடுதலை இயக்கங்கள் வீறார்ந்த கிளர்ச்சிகள், எழுச்சிகள் என்பன ஏற்படுத்திய தாக்கங்களால் முற்போக்கு - சோஷலிச கருத்துக்கள் இப்புதிய தலைமுறையினர் மத்தியில் செல்வாக்கு பெற்றன. சிந்தனைத் தெளிவும், சமூகப் பிரச்சினையும் கொண்ட எழுத்தாளர்கள், பேனா சமூக மாற்றத்திற்கான வலிமைமிக்க ஆயுதம் என்பதனை உணர்ந்து செயலாற்றத் துவங்கினர்.
146 |-al. BöFTLnörüğar "மல்லிகை ஜீவா"
 

அன்றைய காலகட்டத்தில் ஈழத்துத் தமிழிலக்கிய அரங்கில் புதிதாகத் தோன்றிய - இன்று புகழ் பெற்றவர்களாயுள்ள எழுத்தாளர்களுள் பெரும் பாலோர், சுரண்டப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட, வறுமைப்பட்ட வெகுஜனப் பகுதிகளில் இருந்து வந்தவர்களாயிருந்ததால், இந்த உணர்வு, கருத்து, இலட்சியங்களால் அநேகர் ஈர்க்கப்பட்டார்கள். அவர்களின் படைப்புக்கள் அவற்றைத் துணிச்சலாகவும், பகிரங்கமாகவும் பிரதிபலித்தன. அப்போதே ஈழத்து இலக்கியத் துறையில் முற்போக்குச் சகாப்தம் உதயமாகிவிட்டது. இப் புதிய சகாப்தம் படைப்புகளோடு மட்டும் திருப்தி காணவில்லை. எழுத்தாளர்களுக்கும் ஈழத்து இலக்கியத்தை நெறிப்படுத்துவதற்கும் ஒரு ஸ்தாபனம் அவசியம் என்ற எண்ணத்தை வலுவாக வளரச் செய்து விட்டது
(இளங்கீரன்- புதுமை இலக்கியம் மலர் 1975)
இப்புதிய சமுதாய சக்தியின் இலக்கியக் குரலாக இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கிளர்ந்தது. அதன் இலட்சியங்களும் அமைப்பு விதிகளும் 25 - 10 - 1954 கையேடாக அச்சிட்டு வெளியிடப்பட்டது.
இ. மு. எ. ச. இன்று தனது 35-ஆவது ஆண்டை நோக்கி - பல சாதனைகளை நிலைநாட்டி விட்ட பெருமிதத்துடன், நெஞ்சை நிமிர்த்தி நடை போடுகின்றது. சங்கத்தின் இந்த நீண்ட பயணத்தில், தொடக்கத்தில் இருந்தே தன்னையும் சங்கமப் படுத்திக்கொண்டு, சோராது, துவளாது, வழுவாது, நழுவாது, சறுக்காது, தடம் புரழாது உறுதியுடன் தொடர்ந்து வந்துகொண்டிருப்பவர் திரு. டொமினிக் ஜீவா,
முற்போக்குச் சிந்தனை கொண்ட, மனிதாபிமானமுள்ள இந்நாட்டின் தலை சிறந்த தமிழ் சிருஷ்டி எழுத்தாளர்கள், அறிஞர்கள், புத்தி ஜீவிகள் முதலியோரைத் தனது அணியிலே கொண்ட இலக்கிய ஸ்தாபனமாக இ. மு. எ. ச. திகழுகின்றது. தலைமைக் குழு, செயற் குழு, தேசிய சபை என முறையான கட்டமைப்பைக் கொண்டது. ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு தெற்கு, திருகோணமலை, மன்னார், நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இதற்குக் கிளைச் சங்கங்களும் நிறுவப்பட்டன. யாழ்ப்பாணக் கிளையை நிறுவுவதிலும், அதனை இயங்கச் செய்வதிலும் திரு ஜீவா காட்டிய உற்சாகமான அக்கறையும், ஊக்கமான
"மல்லிகை ஜீவா" 5. சோமகாங்கள் 147

Page 77
உழைப்பும் ஏனைய கிளைச் சங்கங்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்தன. யாழ் கிளையின் செயலாளராகவும் பல காலம் அவர் சிறப்பாகப் பணியாற்றியவர்.
ஈழத்து இலக்கியத்தின் முன்னும் எழுத்தாளர் முன்னும் தோற்றிய சகல பிரச்சினைகளிலும் இ. மு. எ. ச. முன்னின்று பணியாற்றியுள்ளது. மக்களின் கலை, கலாச்சார, மொழி உரிமைக்காகப் பாடுபட்டது. அந்நிய இலக்கிய ஊடுருவலையும், ஏகபோக ஆதிக்கத்தையும் எதிர்த்துப் போராடியது. ஈழத்துச் சிருஷ்டி இலக்கியத்துக்கு எதிராக எழுந்த மலட்டுப் பாண்டித்தியத்தின் சூன்யக் குரலை எதிர்த்துப் போராடி முறியடித்தது. இவ்வேளையில், சங்கத்தின் முன்னணித் தளபதிகளிலொருவராக நின்று ஜீவா செயலாற்றினார்.
இ. மு. எ. ச. புதிய இலக்கியக் கருத்துக்களைப் பரப்பியது. அக்காலத்தில் எம் நாட்டு ஆக்க எழுத்தாளர்களிற் பலர், யாழ்ப்பாணம் முற்றவெளியில் உலாச் செய்த வண்ணம், சென்னை மெரீனாவைச் சுற்றியே கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டனர்.அந்த நிலையிலிருந்து விடுபட்டு, எமது மண்ணின் மணமும், எங்கள் மக்களின் ஆசாபாசங்களும், எமது இலக்கியப் படைப்புகளில் இடம் பெறவேண்டும் என்பதற்காக, ஈழத்து இலக்கியம் என்ற கோஷத்தை இ. மு. எ. ச. முன்வைத்தது. இதனை முழுமையாக ஏற்று, முழு மூச்சாகத் தமது சிருஷ்டிகள் மூலம் இக்கோஷத்தின் அர்த்தத்தினை மெய்ப்பித்துக் காட்டிவர்களில் ஜீவா முக்கியமானவர்.
நமது யுகத்தின் சிந்தனைகளை , நமது நாட்டின் சூழ்நிலையுடனும், பண்பாடுடனும், இணைத்துப் பிணைத்து, நமது இலக்கியம் தேசியப் பிரச்சினைகளோடு ஐக்கியமாக வேண்டுமென தேசிய இலக்கியம் என்னும் கோஷம் எழுப்பப்பட்டபோது - அதனைச் செயலுருவாக தமது இலக்கியப் படைப்புக்கள் வாயிலாகச் செய்து காட்டியவர்களில் ஜீவா முன்னணியில் நின்றவர்.
இலக்கியம் பொய்மையின் வெளிப்பாடாக இல்லாமல், உண்மையின் நிலைக்களனாக உயர்வதற்காக யதார்த்த இலக்கியக் கோஷத்தை இ.மு.எச முன்வைத்த போதும், ஜீவாவின் பேனா அதனைச் செயலிற் காட்டியது.
கலை, விஞ்ஞானம், தொழில்நுட்பம் - இவை எமது பண்பாட்டின் அடிப்படை, இன்பகரமான, அர்த்தமுள்ள, செழிப்பும்
148 -என். Böm血汤r始遭afr "மல்லிகை ஜீவா
 

சுபீட்சமுங்கொண்ட ஒரு வாழ்வை நாம் சிருஷ்டிக்க வேண்டுமானால், இவற்றை நாம் ஆயுதமாகக் கொள்ள வேண்டும், கலை வரலாற்றை உருவாக்குவதில் மக்களைத் தட்டியெழுப்ப வேண்டும் விழிப்புற்ற மக்களின் சக்தி என்பது மிகப் பிரமாண்டமானது, அது அடக்கப்பட்டிருக்கிறது. அது தனது சக்தி பிரகடனப்படுத்தச் சந்தர்ப்பமளிக்கப்பட வேண்டும். அது ஒன்றுதான் விமோசனம் தரும் என்கிறார் மனிதகுல விமோசனத்தின் இலக்கிய வழிகாட்டியான மாமேதை மார்க்சிம் கார்க்கி, முற்போக்கு இலக்கியம் மாபெரும் மக்கள் சக்தியின், பாட்டாளி, தொழிலாள வர்க்கச் சக்தியுடன் சங்கமமாகி, மக்கள் சக்தியின் வெகுஜன இயக்கப் பேரெழுச்சியையும் போராட்டங்களையும் பிரதிபலிக்கும் ஜனநாயக யதார்த்த இலக்கியமாக, மக்கள் போராட்டத்துக்குச் சகல பிரிவு மக்கள் சக்தியை ஒன்று திரட்டுவதிலும், போராட்டத்துக்கு வீறு கொடுப்பதிலும், மக்களுக்கு எதிர் காலத்தின் மீது நம்பிக்கையுட்டுவதிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த இலக்கிய தத்துவ தரிசனத்துக்காக இ.மு.எ.ச.வுடன் இணைந்து ஜீவாவின் நாவும், பேனாவும் என்றுமே தொடர்ந்து செயலாற்றும் என்பதில் ஐயமில்லை.
வரலாற்றின் தேவையை நிறைவு செய்யும் முகமாக இ.மு.எ.ச. காலத்துக்குக் காலம் தனது செயற்பாட்டினைப் பல வடிவங்களில் செய்துள்ளது. இவற்றிற்கு ஜீவாவின் முழுமூச்சான பங்களிப்பு கிடைப்பதில் தயக்கமே இருந்ததில்லை.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் முதற் தடவையாக 1962 ஏப்றில் 28, 29 ஆம் நாட்களில் கொழும்பு சாகிராக் கல்லூரி மண்டபத்தில் இ. மு. எ. ச. வினால் நடத்தப்பெற்ற அனைத்திலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொது மகாநாடு 1975, மே 30, 31 திகதிகளில், கொழும்பு பண்டாரநாயகா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இ. மு. எ. ச. வினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட - தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான வழிவகைகளை முன்வைத்துக் கூட்டப்பட்ட தமிழ் - சிங்கள - முஸ்லிம் எழுத்தாளர்களின் மகாநாடு ஆகியவற்றிற்கு, யாழ்ப்பாணப் பகுதியில் எழுத்தாளர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதிலும், பிரசாரத்தைச் செய்வதிலும் இ. மு. எ. ச. சார்பில் சிறப்புறச் செய்ததுடன், இம்மகாநாடுகளுக்கு இப்பிரதேசத்திலிருந்து பெரும் தொகையான இலக்கிய அன்பர்களையும், எழுத்தாளர்களையும் திரட்டி வந்த திறமையும் ஜீவாவுக்குண்டு.
ஈழத் திலக் கியத்தின் பாரம்பரியத் தினை நிறுவும் முயற்சிகளிலொன்றாக, ஈழத்தின் கடந்த கால இலக்கியப் பெரியார்களுக்கு
"மல்லிகை ஜீவா" -என். Beri 149

Page 78
இ. மு. எ. ச. விழாக்களை எடுத்து- 1961 ஜூலை மாதத்தில் யாழ். நகரமண்டபத்தில் நடத்தப்பட்ட சோமசுந்தரப்புலவர் பெருவிழா, 1963 மே 7-ல் பருத்தித்துறை வியாபாரிமூலையில் நடத்தப்பட்ட யாழ்ப்பாணத்துச் சாமி என மகாகவி பாரதியாரால் ஞானகுருவாகப் போற்றப் பட்ட மோனம் அருளம்பலம் சுவாமிகளின் ஞாபகார்த்தமாக நினைவுக்கல் நிறுவும் விழா என்பவற்றின் சிறப்பிலும் வெற்றியிலும் ஜீவாவின் உற்சாகமான பங்களிப்பு இருந்தது. 1982-ல் மகாகவி பாரதி நூற்றாண்டையொட்டி இ. மு. எ. ச. நாட்டின் பல இடங்களில் சிறப்பு விழாக்களை ஏற்பாடு செய்திருந்தது. இவ்விழாக்களில் கலந்துகொள்ள தமிழ் நாட்டிலிருந்து பாரதி ஆய்வாளர் ரகுநாதன், பேராசிரியர் இராமகிருஷ்ணன், நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணன் முதலியோர் இ. மு. எ. ச. அழைப்பின் பேரில் வருகை தந்திருந்தனர். யாழ்ப்பாண நிகழ்ச்சிகளின் இன்றியமையாத அமைப்பாளராகத் துடிப்பாக இயக்கியவர் ஜீவா,
ஏராளமான விழாக்களையும் கருத்தரங்குகளையும் யாழ் நகரில் மிகக்ச் சிறப்பாக நடத்திய இ. மு. எ. ச. காத்திரமான தனது இரு மகாநாடுகளையும் யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளது. 1963 மே 30, 31 நாட்களில் சங்கத்தின் இரண்டாவது மகாநாடு கலை இலக்கிய பெருவிழாவாக யாழ் நகர மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. யாழ். பிரதேசத்திலிருந்து, மட்டுமல்லாமல் கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், சிங்கள எழுத்தாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், உலக சமாதான சபைப் பிரதிநிதிகள், வெளிநாடுகளின் துாதுவராலயப் பிரதிநிதிகள் எனப் பல நுாற்றுக்கணக்கானோர் அதில் கலந்து கொண்டனர். மாநாட்டு அமைப்பு குழுவின் தலைவர் டாக்டர் நந்தி, நான், மாநாட்டுச் செயலாளர், ஜீவா, டானியல், இளங்கீரன், பெனடிக்ற் பாலன், செ. யோகநாதன், அட்வகேட் ஜெயசிங்கம், யாழ்ப்பாணன், வேதவல்லி கந்தையா, பத்மா ஆகியோர் அழைப்புக் குழு உறுப்பினர்கள். மாநாட்டுக்கு முன்னோடியாகக் குடா நாட்டுக் கிராமங்கள் தோறும் ஆதரவுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இ. மு. எ. ச. இலட்சியங்கள், முற்போக்கு இலக்கிய விளக்கம், ஈழத்திலக்கிய வளர்ச்சி பற்றியெல்லாம் இக்கூட்டங்களில் உரைகள் இடம் பெற்றன. சுமார் ஒரு மாசகாலம் தினமும் ஒவ்வொரு ஊரில் கூட்டம் நடந்தது. சில நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டங்களும் நடந்தன.
டாக்டர் நந்தி, நான், ஜீவா என்போர் எல்லாக் கூட்டங்களிலும் கலந்து கொண்டோம் எம்முடன் டானியல் பல கூட்டங்களிலும், இளங்கீரன் (அப்போதைய அவரின் தொழில் காரணமான நேர நெருக்கடியால்) சில
150 |- சோமகாந்தள் "datsatsoa's ஜீவா
 

கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றினர். அது காலம் வரை தேர்தல் கால அரசியல் கட்சிகளும் பிரசாரக் கூட்டங்களை மட்டுமே கண்டிருந்த கிராம மக்களிடம் இலக்கிய உணர்வைத் துாண்டி விடவும் ஈழத்து எழுத்தாளர், ஈழத்து இலக்கியம் என்பவற்றின்பால் அக்கறை காட்டவும் இ. மு. எ. க. மேற்கொண்ட முன்னோடி முயற்சியாக அமைந்த இக் கூட்டங்களில், ஆவேஷமும், குட்டிக்கதை உதாரணங்களும் கம்பீரமான தொனியுங் கொண்ட ஜீவாவின் உரை, மக்களை உசாரடையச் செய்வதற்காக இறுதியிலே இடம் பெறச் செய்வது வழக்கம். பேச்சுக் கலையிலும் பேராற்றல் மிக்க எழுத்தாளர்களில் நம் ஜீவா பிரதான இடத்தை வகிப்பவர். ஈழத்தமிழ் மக்களுக்குக் கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து, இந்த அநியாய அடக்குமுறைக்கு எதிராக ஓங்காரக் குரல் எழுப்பவும், அரசியல் தீர்வை வலியுறுத்தியும் இ. மு. எ. ச. 1986 - 10- 17-ல் நல்லுார் நாவலர் கலாசார மண்டபத்தில் பேராசிரியர் நந்தி அவர்களின் தலைமையில் எழுத்தாளர் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டிற்கான தயாரிப்பு வேலைகள், நிதி சேகரிப்பு, இடையில் எழுந்த இக்கட்டான நிலைமை இவையனைத்தையும் சமாளித்து இம்மாநாட்டை வெற்றிகரமான அர்த்தமுள்ளதாகவும் அமைப்பதில் மாநாட்டுச் செயலாளராக இருந்த எனக்குப் பக்கபலமாக மிகுந்த பொறுப்புணர்வோடும் பரிவோடும் பணியாற்றிய ஜீவாவின் கடமையுணர்வை நன்றியுணர்வுடன் நான் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இனங்களின் ஐக்கியத்திலேதான் இந்நாட்டில் சுபீட்சம் மலர முடியும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் நியாயமான முறையில், அம் மக்களின் அபிலாஷைகளுக்கு கெளரவமளித்து தீர்வு காணப்பட்டால்தான் இன ஐக்கியம் ஏற்படும் என்பதில் அசைக்க முடியாத உறுதியான நிலைப்பாட்டை ஆரம்பத்திலிருந்தே கொண்டுள்ள இ.மு.எ.ச. ஆட்சியாளர்களிடமும், செளஜன்ய உறவும், புரிந்துணர்வும் ஏற்படுத்துவதென்பது, தமிழர்களைச் சுயநிர்ணய உரிமை கொண்ட தேசிய இனமாக அங்கீகரிப்பதன் மூலமே சாத்தியமாகும் என்பதை, இன்றல்ல - அன்று, தமிழர்களின் முதுகுத்தோலில் செருப்புத் தைத்துப் போட ஆசைப்பட்டுக் கொண்டிருந்த சிங்களப் பேரினவாதிகளின் மத்தியில், 1963 செப்டெம்பர் 22-ல் கண்டி புஸ்பதான மகளிர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற மகாநுவர தருணகவி சமாஜய (கண்டி இளங்கவிஞர் சங்கம்) என்னும் சிங்கள அமைப்பின் மாநாட்டில் இ. மு. எ. ச பொதுச் செயலாளரால் உறுதியாக எடுத்துரைக்கப்பட்டபொழுது, அதனைத் தொடர்ந்து அக்கருத்துக்கு ஆக்ரோஷமான குரலில் அழுத்தங்கொடுத்து, ஆமோதித்து
"மல்லிகை ஜீவா" -எண். Beirusrhalt 151.

Page 79
உரைநிகழ்த்தியவர் ஜீவா, கம்பஹா மாவட்டத்திலுள்ள கொரஸ்ஸ என்னும் சிங்களக் கிராமத்தில், g சுதர்மாநந்த பெளத்த விகாரையில் வண ரத்னவன்ஸ்தேரர் தலைமையில், 28. 3.76-ல் நடந்த இலக்கியச் சந்திப்பில் இ. மு. எ. ச. வைச் சேர்ந்த சுமார் 20 எழுத்தாளர்கள் கலந்து கொண்டோம் இலக்கியப் பரிவர்த்தனை என்பது ஒருவழிப் பாதையல்ல; உங்கள் சிங்கள எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புக்களையும் தமிழ்ப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ள அளவுக்கு, எம் நாட்டின் தமிழ் எழுத்தாளர்களில் எத்தனை படைப்புக்களை நீங்கள் அறிந்து வைத்திருகக்கிறீர்கள்? என அன்று ஜீவா எழுப்பிய காரசாரமான, நியாயமான கேள்வி, பின்னர் சில சிங்களப் பத்திரிதைகள் ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் சிலரது படைப்புக்களை மொழிப் பெயர்ப்புச் செய்து பிரசுரிக்குமளவுக்கு ஆக்க புர்வமான செயலுருவாக அமைய வழிகோலிற்று. நீதிகேட்கும் போது, எவருக்கும் அஞ்சாமல் அதனைத் தட்டிக் கேட்கும் தைரியம் ஜீவாவுக்குண்டு. அது அவரது குணம், ஜீவாவின் குண இயல்பு என்னும்போது மகாகவி நஸிம் ஹிம்மத்தின் பின்வரும் அடிகள் நினைவுக்கு வருகின்றது.
எழுதும் போதும், பேசும் போதும், போராடும் போதும், கவிஞன் ஒரு மனிதனைப் போலவே நின்கிறான். வெறும் மேகத்தில் நீந்திச் செல்லும் வரட்டுக் காற்றாடியாக கவிஞன் கீழ்ப்படவில்லை.
இ.மு.எச வின் தாரக மந்திரம் பாரதியின் - நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல்.இத்தாரக மந்திரத்தை இறுகக் கடைப்பிடித்து அதன்படி ஒழுகி வரும் ஜீவா, சங்கப் பணிகளுக்கென, இலக்கியத்துக்கென 24 மணி நேரமும் சிந்தனையும், பேச்சும், எழுத்தும், செயலுமாகவே இருப்பவர். இதன் காரணமாகத்தான் இ.மு.எ.ச. வேறு, ஜீவா வேறு எனப் பிரித்துப் பார்த்து இனங்காண முடியாத அளவுக்கு மக்களால் அவர் மதிக்கப்படுகிறார்கு
152 -என். BEFINTLANETTüğGir "மல்லிதை ്വr" |
 

ólu forubaife5, 232 urtas2. urtarri கதை. வரலாறு
(திரு. டொமினிக் ஜீவாவின் அறுபதாவது ஆண்டு நினைவினையொட்டி எழுந்த சிந்தனைகள்)
கார்த்திகேசு சிவத்தம்பி
ஒருவருடைய அறுபதாவது ஆண்டு நிறைவு, அவரது வட்டத்துக்குமேலே, சமூக வாழ்க்கையின் யாதேனும் ஒன்றின் மட்டத்திலே, நினைக்கப்படுகின்ற தேவை ஏற்பட்டு விட்டதென்றால், அவர் வாழ்க்கை ஏதோ ஒரு வகையில் சமூகப் பிரயோசனமாக அமைந்திருந்தது என்பது உண்மை,
மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் அறுபதாவது ஆண்டுப் புர்த்தி அத்தகைய சமூக முக்கியத்துவமுடையது எனபதில், அவரை எதிர்ப்பதையே தமது ஒரே விருப்பு முயற்சியாகக் கொண்டவர்களுக்குங் கூடக் கருத்து மாறுபாடு இருத்தல் முடியாது.
யாழ்ப்பாண நகரத்துத் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஜோசேப் மகன் டொமினிக் , குடும் பத் தொழிலை மேற்கொள்ளவேண்டியிருந்த மேற்கொண்டிருந்த சூழலினுள்ளும் அதனை மீறி, ஜீவா எள்ற இணைப்புப் பெயருடன் ஈழத்தின் தமிழிலக்கிய வரலாற்றின் நவீன கால எழுச்சிகளின் ஒரு சின்னமாக முகிழ்ந்தெழுந்தமை இந்த அறுபதாண்டுப் புர்த்தியை ஈழத்தின் ஒரு முக்கியமான இலக்கிய நிகழ்வு ஆக்குகின்றது.
"மல்லிகை ஜீவா" -கார்த்திகேசு சிவத்தம்பி 153

Page 80
ஜோசப் டொமினிக், டொமினிக் ஜீவாவாக முகிழ்ந்த வரலாறு முக்கியமானது, சுவாரசியமானது. இதன் சமுக வரலாற்று உள்ளீடுகளும், ஆளுமைப் பரிமாணங்களும் சற்று நுணுகி நோக்கப்பட வேண்டியவை.
ஜீவாவுக்கு அறுபதாண்டுப் புர்த்தியாகும் இன்றைய நிலையில், ஜீவாவை, பரந்துபட்ட ஒரு மணிவிழா நாயகத்தகைமையுடைவராக ஆக்கும் சாதனை அமிசங்கள் யாவை என்பதனை நோக்குவது அவசியமாகின்றது.
பிண்டப் பிரமாணமான சாதனைகள் என நோக்கும் பொழுது, எடுத்துக் கூறப்படத் தக்கனவாகப் பின்வருவன அமைகின்றது.
(அ)ஜிவா நான்கு சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர்
தண்ணீரும் கண்ணீரும் (1960), பாதுகை சாலையின் திருப்பம் வாழ்வின் தரிசனம் (இவற்றுள் முதலாவது தொகுதிக்கு இலங்கையின் முதலாவது சாகித்திய மண்டலப் பரிசிலைப் பெற்றவர்),
இரண்டு நுால்களின் ஆசிரியர்
அநுபவ முத்திரைகள் (1980) ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் குரல் (1982) (இது ஜீவா பற்றிய ஒரு தொகுப்பு நுால் - பதிப்பு (தெணியான்)
(ஆ) கடந்த 23 வருடங்களாக, ஈழத்திலிருந்து வெளிவரும் மல்லிகை என்னும் சஞ்சிகையின் நிறுவகள் - பிரசுரகர்த்தர் - ஆசிரியர்.
(இ) இந்தச் சாதனைகள் மாத்திரமே தம்முள் தாம் முக்கியமானவையாக
அமையுமெனின், ஜீவாவையுப் பொறுத்தவரையில், இவற்றிற்குக் காரணமான, இவற்றின் ஊற்றுக் காலாக அமைந்த இரண்டு பண்புகள் மிகமிக முக்கியமானவையாகும். அவை பின்வருமாறு:
1. ஜீவா. முற்போக்கு இலக்கியம் எனக் குறிப்பிடப்பெறும் ஜனநாயக இலக்கியக் கருத்து நிலையினதும், அந்தக் கருத்து நிலையினை ஈழத்திற் பரப்பிய நிறுவனத்தினதும் (இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்) ஒரு முக்கிய செயலாளராக விளங்கியவர். விளங்குபவர்,
2. இந்த முற்போக்கு இலக்கியக் கோட்பாடு காரணமாக மேற்கிளம்பி,
தமிழிலக்கிய முழுமையினது கவனத்தையும் தரத்தாலும்,
154 -கார்த்திகேசு சிவக்கம்பி "மல்லிகை ஜீவா"
 

வன்மையாலும் ஈர்த்த ஈழத்துத் தமிழிலக்கியத்தின் பிரசாரகராக விளங்கியவர். அவ்வாறு அது மேற் கிளம்பிய பொழுது அது தன் வளர்ச்சியின் ஒவ்வொரு கூட்டத்திலும் முற்போக்குக் கருத்து நிலைக்கு எதிரான நிலைபாடுகள் சிலவற்றையும் உள்ளடக்கி நின்றது. ஜீவா, தமிழகத்தில் இந்த இலக்கியத்தின் பிரசாரகராகத் தொழிற்பட்ட பொழுது, ஈழத்தின் இலக்கிய முழுமைக்காகவே பிரசாரம் செய்தார். ஈழத்திலக்கியத்தின் காணப்பட்ட கருத்து வேறுபாடுகளை, அதன் ஆரோக்கியமான வளர்ச்சிச் சின்னங்களாகவே எடுத்துக் கூறி வந்துள்ளார்.
ஆறுமுகநாவலர் எவ்வாறு தம்மைத் தாமே சைவப் பிரசாரகர் என்று கூறிக்கொண்டாரோ, அதே போன்று ஜீவாவும் தனது மல்லிகை மூலம் தமிழக வாசகர்கள் மத்தியில் தன்னை ஈழத்திலக்கியப் பிரசாரகராகவே பிரகடனப்படுத்திக் கொண்டார்.
ஜீவா இந்தச் சாதனைகளைச் செய்வதற்குத் தளமாக அமைந்த ஒரு நிலைபாடு உண்டு அதனை மறந்து விடுதல் கூடாது. அது அவர் ஒரு கம்யுனிஸ்டாக இருந்து வந்துள்ளமையாகும் பொதுவுடமைவாதியாக மாத்திரமல்லாம்ல், அவர் பொதுவுடமைக் கட்சி அங்கத்தவராகவுமிருந்து வந்துள்ளார். இந்த அங்கத்துவம்தான் இவருக்கும், இவர் போன்ற ( ஆனால் இலக்கியத்தின் வேறு சில ஆற்றல் வெளிப்பாட்டின் முக்கியத்துவம் பெற்ற) டானியலுக்கும் குடும்பத்துக்கு மேலான குடும்பமாக அமைந்து, இலக்கியச் செயற்பாடுகளுக்கு வேண்டிய உறவினர்களை ( ஊக்குவிப்போர், கலந்துரையாடுவோர், விமர்சகர்கள் விநியோகஸ்தர்கள், வாசகர்கள் }ஏற்படுத்திக் கொடுத்தது. இந்தக் கம்யுனிஸ்ட் குடும்ப உறவுதான் தமிழகத்தின் தலைசிறந்த கம்யுனிஸ்டுகளில் ஒருவரான ஜீவானந்தம் வழியாக, ஒரு புதிய உந்துதலை, பிறப்பு நிலையில் திணிக்கப்பட்ட ஒடுக்கு முறைகளையும், இயலாமைகளையும் புறங்காண்பதற்காக உந்துதலை, இந்த உந்துதல் காரணமாகத் தோன்றிய ஒரு புதிய ஆளுமையை, அந்தப் புதிய ஆளுமையின் வெளிப்பாடாக அமைந்த ஜீவா என்ற பெயரீற்றை வழங்கியது.
டொமினிக், டொமினிக் ஜீவாவாக மேற் கிளப்பிய வரலாற்றின், ஆளுமைப் பரிமாணங்கள் மிக முக்கியமானவையாகும் ஜீவா எனும் இலக்கியக்காரனின் நடத்தை பற்றிய சர்ச்சைகளுக்கும், சர்ச்சைக்குரிய நடத்தைகளுக்கும் இந்த ஆளுமைப் பரிமாணமே திறவு கோலாகும்,
"மல்லிகை ஜீவா" - čárů šířůBřátí přijíých f 155

Page 81
ஜீவாவை விளங்கிக் கொள்வதென்பது, மேற்கூறியவற்றை நன்கு உணர்ந்து விளங்கிக் கொள்வதுடன், மேலும் இரண்டு விடயங்களையும் அறிந்து கொள்வதாகும்.
முதலாவது, டொமினிக் ஜீவாவின் வளர்ச்சியும் ஏற்புடைமை வளர்ச்சியும் (இவை இரண்டும் வேறு வேறானவை. ஒன்று ஜீவாவின் தனி நிலைப்பட்ட வளர்ச்சி, அடுத்தது ஜீவா எழுத்தாளராக, ஏற்கப்பட்டதன் வளர்நிலை) சமகால ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தில் எழுத்தாளனின் சமூக முக்கியத்துவம் உணரப்பட்டு ஏற்கப்ப்ட்டபொழுது நடந்தேறிய வளர்ச்சிகளாகும்.
சமகால ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியின் (இது 1950 களிலேயே தொடங்கிவிட்டது) தன்மையும், அதன் உற்பத்தி அமிசங்களின் (தயாரிப்பு, விநியோகம், நுகர்வு அமிசங்களின்) வேறுபட்ட தன்மையும், அந்த இலக்கிய உற்பத்தி பொருளின் வேறுபட்ட பண்புகளும், மரபுவழி இலக்கிய உற்பத்தி முறைமைக்கும், இந்த (நவீன) உற்பத்தி முறைமைக் முள்ள வேறுபாடுகளை அழுத்தம் திருத்தமாக எடுத்துக் காட்டின.
ஜீவாவும் டானியலும் இலக்கிய உற்பத்தியின் இந்த நவீனத் தன்மைகளின் வெளிப்பாடுகளாக அமைந்தால், இந்த இலக்கிய வளர்ச்சியின் சின்னங்களாகவும் கருதப்பட்டனர்.
ஜனநாயகம் என்னும் கோட்பாடு ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறையினுட் பரவியமையின் துலைவெளிப்பாடுகளாக டானியலும், ஜீவாவும் அமைந்தனர். வாக்குரிமை விஸ்தரிப்பு வந்த பொழுது அந்த ஜனநாயக நடவடிக்கையை ஏற்க மறுத்த பழைமைபேண் வாதம், இலக்கியப் பொருள், ஆளணிகளில் விஸ்தரிப்பு ஏற்பட்டபொழுதும் எதிர்த்தது. இழிசினர் என்ற இலக்கியப் பிரயோகத்தை இழிசனர் என்றே கொண்ட இலக்கிய மீட்பு வாதத்தின் சமூக உள்ளடக்கம் இதுதான்.
இந்த இலக்கிய எழுச்சியின் சின்னமாகதான் உள்ளேன் என்ற பிரக்ஞை ஜீவாவுக்கு உண்டு இது அவரது இலக்கிய ஆளுமை பற்றிய பல பிரச்சினைகளுக்கு இடம் கொடுத்துள்ளது.
ஒடுக்கப்பட்ட, ஒடுக்கு முறைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட ஒரு நிலையிலிருந்து விடுபட்டது மாத்திரமல்லாமல், விடு பட்ட நிலையின் தன்மைகள் சிலவற்றினைத் தீர்மானிக்கும் இலக்கியச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுழைத்ததன் காரணமாக (முற்போக்கு எழுத்தாளர் சங்க
156 -கார்த்திகேசு சிவத்தம்பி "மல்லிகை ஜீவா"
 

நடவடிக்கைகள், மல்லிகைப் பதிப்பு) டொமினிக்காகவிருந்த ஜீவா புதிய இலக்கிய எழுச்சியின் சின்னமாகவும் கருதப்பட்டார். இது ஜீவாவுக்கு தன்னை வரலாற்றுச் சக்கியின் வெளிப்பாடாகவே கருதிக்கொள்ளும் ஒரு நிலையினை ஏற்படுத்தியுள்ளது, மல்லிகை ஆசிரியர் தலையங்கங்களை விளங்கிக் கொள்வதற்கான திறவுகோல் இதுதான். இம்மன நிலை தன்னையின் பலத் த தாக்கத் தினை ஏற்படுத்தியுள்ளது.இலக்கியக் கருத்து நிலையொன்றின் பிரதிநிதித்துவ குரல் என்ற பிரகடனத்துடன் வரும் ஒரு சஞ்சிகை, தனது வரலாற்றுப் பிரதிநிதித்துவத்தை உணர்ந்த ஆளுமையுள்ள ஒருவராற் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றபொழுது, வெளியீட்டு மட்டத்தில் ஆசிரியரின் பண்புகளுக்கும், எழுத்தின் பதிப்பிப்பின் பண்புகளுக்குமிடையே கோடு கீற முடியாது போய்விடுகின்றது.
இந்தக் குறிப்புரை மல்லிகைன் வளர்ச்சித் தன்மை பற்றியதே. ஜீவா, ஓர் இலக்கியச் சின்னமாக அமையும் தன்மையினை மறுதலிக்காது.
ஜீவா என்ற இலக்கிய ஆளுமையின் இரண்டாவது (இது வெறும் எண் கணக்கில்தான் முக்கியத்துவ அடிப்படையில் அன்று) முக்கிய அமிசம், ஜீவாவின் கிறிஸ்தவ மனிதாயதத் தளம்,
மறுபிறப்புவாதம், கமூகக் கொடுமைகளை, அந்தக் கொடுமைகளின் உத்தரிப்புக்களை எவ்வாறு நியாயப்படுத்துகின்றது என்பது பற்றியும் அதனால், அந்த மறுபிறப்பு வாதப் பண்பாட்டினுள் வரும் மரபு தவறாத இலக்கியங்கள், எவ்வாறு வீடுபேற்றை எப்பொழுதும் மறுமைக்கே தள்ளிப் போடும் என்பது பற்றியும், இம்மைத் துயர்கள் இம்மையிலேயே அழிக்கப்பட வேண்டும் என்பது பற்றிய உணர்வையே ஏற்படுத்தாது விட்டுவிடுகின்றன என்பது பற்றியும் விரிவாக ஆராய்வதற்கு இக்கட்டுரை களமாக அமையமுடியாது. அதேபோன்று கிறிஸ்தவத்தின் சிலுவைப்பாடு புத்துயிர்ப்பு என்பன எவ்வாறு முறையே சகமனித துன்பத்தில் ஈடுபடுவது பற்றியும், அந்த ஈடுபாடு காரணமாகவே புதிய உயிர்ப்பைப் பெறுவது பற்றியும் சில கருத்து நிலைத்தளங்களை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி ஆராய்வதற்கும் இது இடமன்று, ஆனால், மனித இன்னல்களை, மனித இடையுறுகளை மனித உத்தரிப்புக்களை மார்க்க உள்ளீடாகக் கொண்டு அந்த உத்தரிப்புகளின்னுாடே மனித விமோசனத்துக்கு வழிகாணும் நிவாரண மார்க்கங்களும் தொழிற்பட வேண்டும் என்னும் கிறித்தவ நிலைபாடு, ஒரு மனிதாயத நிலைபாட்டின் தளம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மூலபாவக் கோட்பாடு இன்றைய கிறித்தவமறையியலில் அழுத்தப்படாதிருப்பது அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
"மல்லிகை ஜீவா" - EHITrirhöğGEńEi ffGJËSIHLh LT 157

Page 82
முற்போக்கு இலக்கிய வாதம், மதத்தை மறுதலிக்கும் ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் தொழிற்படுகின்றது உண்மையெனினும் பண்பாட்டுத் தளத்தில் (இது மார்கஸியத்திற்கு ஏற்புடைமையான ஒன்றே) இந்த இலக்கிய வெளிப்பாட்டின் இரு முக்கிய பிரதிநிதிகளாக அமைந்தவர்கள் - டானியலும், ஜீவாவும் - தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த கத்தோலிக்கர்கள் என்பதை எந்த ஒரு சமூக வரலாற்றாசிரியனும் புறக்கணித்து விட முடியாது. (பால போதினி மார்க்ஸிஸ்டுகளுக்கு இக் கூற்று அதிர்ச்சியைத் தரலாம் தரும், அரிச்சுவடியுடன் அறிவு புர்த்தியாகி விடுவதில்லை) டானியலில் இறுதி நாவல்களிலொன்றான கானலில் இந்தக் கிறித்தவ மனிதாயத நிலைபாட்டின் தன்மையைப் புரணமாக விளங்கிக் கொள்ளலாம்.
இந்தக் கிறித்தவ மனிதாயதம் ஜீவாவின் ஆளுமையின் முக்கிய அமிசங்களுள் ஒன்றாகும் துன் பங்கணிட விடத்து, ஏற்க முடியாதனவற்றைக் கண்டவிடத்து இதயத்தால் பேசும் ஜீவாவின் பண்பின் ஊற்றுக்கால் இதுதான்.
டொமினிக் ஜீவா என்ற இலக்கிய ஆளுமையினுள் இந்தத் தடங்கள் யாவும் உள்ளன. ஜீவாவை ஒரு மட்டத்தில் எளிமை மிக்கவராகவும். அதே வேளையில் விளங்கிக் கொள்வதற்குச் சிக்கலாளவராகவும் விளங்கும் தன்மையின் நிதி மூலங்கள் இவைதான்.
இவைதான் டொமினிக்கை ஜீவாவுக்கியுள்ளன. ஜீவாவாகியுள்ள டொமினிக்கை, டொமினிக் வழியாக வந்துள்ள டொமினிக்கை, டொமினிக் வழியாக வந்துள்ள ஜீவாவை, அவர் மொழியிலேயே கூறுவதானால், நாங்கள் நேசிப்பதற்குக் காரணம் இதுதான் ஜீவா ஒரு வரலாற்றுச் சின்னம் மாத்திரமல்ல, அவர் வரலாற்றின் உற்பத்திப் பொருளுங்கூட ஜீவாவைச் ஜீவாவுடைய பலங்களுக்காக மாத்திரமல்லாமல் , ஜீவாவுடைய பலவீனங்களுக்காகவும் நேசிக் கிறோம். ஏனெனில் ஜீவாவின் பலவீனங்களிலேதான் ஜீவாவின் மனிதாயதம் கொப்புளிக்கின்றது. கு
158 -கார்த்திகேசு BfGuğEýlih UT "மல்லிகை ஜீவா"
 

டு)
201-11,ரீகதிரேசன் வீதி KN @bI(Qh - 13, @ முலல் எழுதியவர்கள்) தொலைபேசி 2012 VōāVLāV தொலைநகல்- 870/71 இ. முருகையன்
கவிஞர், உதவி சிரேஷ்ட பதிவாளர், யாழ், பல்கலைக்கழகம்,
நா. க. சண்முகநாதபிள்ளை கவிஞர். கல்லுாரி அதிபர்
வாசுதேவன் கவிஞர். மாணவர் யாழ். பல்கலைக்கழகம்,
(கட்டுரையாசிரியர்கள்)
சு. வித்தியானந்தன்
பேராசிரியர், துணைவேந்தர் யாழ். பல்கலைக் கழகம்,
க. அருணாசலம்
விமர்சகர். விரிவுரையாளர் தமிழ்த்துறை பேராதனைப் பல்பலைக்கழகம், நந்தி - - SS எழுத்தாளர், பேராசிரியர் சமூக வைத்தியத்துறை யாழ்.பல்கலைக்கழகம்.
நீல பத்மநாதன்
எழுத்தாளர், பொறியியலாளர் கேரளா
மருதுார்க் கொத்தன் எழுத்தாளர், கல்லுாரி அதிபர்.
ஈழத்துச் சிவானந்தன்
புலவர், பேச்சாளர்
குணசேன விதான
சிங்கள எழுத்தாளர், பொதுச் செயலாளர் மக்கள் எழுத்தாளர் முன்னணி,
கே. எஸ். சிவகுமாரன் விமர்சகர் பத்திரிகையாளர்.
கொ. மா. கோதண்டம் குறிஞ்சிச் செல்வர், எழுத்தாளர், இராஜபாளையம்,
ச. முருகானந்தன் எழுத்தாளர், உதவி வைத்தியர்
வரதர்'
எழுத்தாளர் பதிப்பாளர் தெணியான்' எழுத்தாளர், கல்லுரரி ஆசிரியர்,
சபா. ஜெயராசா எழுத்தாளர், விரிவுரையாளர் கல்வியியற்புலம் யாழ். பல்கலைக்கழகம்,
159 "ஜீவா وooیمه نهto"|

Page 83
ஐ. ஆர் அரியரத்தினம்
அரசியல் பிரமுகர்.
தெளிவத்தை ஜோசப்
எழுத்தாளர்
பிரேம்ஜி எழுத்தாளர், பொதுச் செயலாளர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
சி. வன்னியகுலம் விமர்சகர், அரசாங்க ஊழியர்
எம். கே. முருகானந்தன் டாக்டர், எழுத்தாளர்
சாரல் நாடன்
எழுத்தாளர். செங்கை ஆழியான் எழுத்தாளர் உதவி அரசாங்க அதிபர்.
எஸ். திருச் செல்வம் பிரதம ஆசிரியர் முரசொலி
துரை மனோகரன் விமர்சகர், விரிவுரையாளர் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்.
இ. ஜெயராஜ்
அமைப்பாளர் அகில இலங்கைக் கம்பன் கழகம்,
யோகா பாலச்சந்திரன்
எழுத்தாளர்.
மேமன் கவி
கவிஞர். இ) லெ. முருகபூபதி
எழுத்தாளர் , பத்திரிகையாளர்
திக்குவல்லைக் கமால்
எழுத்தாளர் ஆசிரியர் Ꮳ Ꭰ என். சோமகாந்தன்
எழுத்தாளர் அரசாங்க ஊழியர்,
(3) கார்த்திகேசு சிவத்தம்பி
விமர்சகர் பேராசிரியர் யாழ். பல்கலைக்கழகம்,
160 மல்லிகை ஜீவா
 
 

- 員
— -
݂ ݂ ݂
a S

Page 84


Page 85
- Olgў ଠିତ தொழிலோபிழை
氓色 அது 0ோகம் 外戚勢 மோதமே நமது ஜீவிதம் நன்Uர் டொமினே ஜீவாவுக் மனமார்ந்த விழித்திகேசர்
。一 ஜெகார்
 

ஐப்போஅல்ல
ਉ6ਟ/
\~\'Z
LONJININIONĀLPILĪž7 NU
? ഉ