கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வைத்தியர் திலகம் அப்துல் அசீஸ்

Page 1


Page 2


Page 3

வைத்தியர் திலகம் அப்துல் அசீஸ்
அல்ஹாஜ். எஸ். எம். ஏ. ஹஸன்
வெளியீடு
ஒறாபி பாஷா கலாசார நிலையம் - கண்டி
1997

Page 4
Copyright Reserved-Author உரிமை: ஆசிரியருக்கே
Vaithiyar Thilagam Abdul Azeez An account of the life and Services of Sri Lanka Thilaka Ayur. Dr. Al-Haj. A.T.M.A Azeez of Beligammana, Mawanellpa
by :
Alhaj. S.M.A. Hassan
First Publication of: Orabi Pasha Cultural Centre, Kandy
Sri Lanka
Printed by: Unie Arts (Pvt) Ltd

10.
பொருளடக்கம்
முகவுரை
என்னுரை
நெஞ்சில் கனன்ற நினைவுகள்
முஸ்லிம்களின் வைத்தியப் பாரம்பரியம்
மாவாற்றின் கரையினிலே
அப்துல் அசீஸ் வைத்தியரின் மூதாதையர்
(மரக்கலவத்த பரிசு பெற்ற வரலாறு)
இளமையும் கல்வியும்
வைத்தியத்தில் பிரபல்யம்
அசீஸ் மருத்துவமனை
கொழும்பு நகரில் மருத்துவசேவை மருத்துவர்கள் பெற்ற சலுகை
பல்துறைப்பங்களிப்பு
அரசியல்
விவசாயம்
மருத்துவ சேவையும் பாராட்டுக்களும்
பூநீலங்காதிலக்க
இல்லறமும் நல்லறமும்
வபாத்தும் மக்கள் அஞ்சலியும்
VII
12
15
25
30
42
49
65
75

Page 5
வாழ்த்துச் சரம்
நினைவில் நிற்கும் நிபுணர்
மாவனல்லையை
மற்ற இடங்களில் பெயர் பெற வைத்த தடங்களில் அசீஸ் வெதமாத்தயா வைத்திய நிபுணத்துவமும் ஒன்று
கையைப் பிடித்து நாடி பார்த்து நோயைக் காணும் வல்லமை அசீஸ் வைத்திய ரிடமே நின்றதினாலே சாதி சமயம் குடி கோத்திரம்
எல்லாம் நோய் பார் ப்பதில்லை!
நோயை விரட்டும் அசீஸ் வைத்தியரும் பார்ப்பதில்லை! துார இடத்து நோயாளரை வீட்டில் வைத்து வைத்தியம் செய்து
வசதிகள் கொடுத்து உபசாரம் செய்யும் பக்குவமுள்ள வைத்தியம் செய்து பொது நவக் குணத்தால் பொறுத்திடா ஒடும் நோயை இவர்
குணப்படுத்துவதில்லை!
இவர் குணத்தினால் நோயும் குறைந்து
ஒ ப்பார்க்கும்!
மக்களை மதித்தும் மனதினை விரித்தும் இத்தவம் வாழ்ந்த அசீஸ் வெதமாத்தயா நற்குணம் அறிந்த அரசு "சிறிலங்கா திலக, சிறப்புறு அரச தரத்திலுள்ள பட்டமளித்து ஈதவ மீந்தது. மக்களும் போற்றினர் அரசும் போற்றினர்
மிக்க வுயர் புெமை மதிப்பினைக் கண்ட
அசீஸ் வைத்தியர் இத்தலமில்லை! அவர் சேவையும் அறிவும் அயராதுழைப்பும் எப்போதும் நினைக்கும் அளவு உயர்ந்தது! அந்த நிபுணத்துவம் நினைவில் நிற்பதே
"போராதனை ஷர்புன்னிளா"

*******m屬nneétagüz國國會크F니크 *"*"m*劑
| ||

Page 6

(p45G)/GO/T
கண்டியக் கலாசார மேம்பாட்டுக்கு முஸ்லிம்களும் பல்வேறு துறைகளில் தமது பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். எனினும் இது குறித்த ஆய்வுகள் நம்மிடை மிக அரிதாகவே உள்ளன. லோனா தேவராஜா, எம்.எம். எம். மஹ்றுாப் ஆகியோரின் எழுத்துக்களும், முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட கண்டி மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு (1997) எனும் நூலும் இவ்விடயம் குறித்துப் பேசுகின்றன. எனினும் நிரப்பப்படாத பகுதிகளும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படாத விடயங்களும் இன்னும் கண்டி மாவட்ட
முஸ்லிம்களின் வாழ்விலும் வரலாற்றிலும் புதையுண்டு கிடக்கின்றன.
ஆராயப்படாத விடயங்களில் முஸ்லிம்களின் வைத்தியத்துறைப்பங்களிப்பும் ஒன்றாகும். இலங்கையில் முஸ்லிம்களின் வைத்தியத் தொடர்பு 12ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பிக்கின்றது என்பது வரலாற்றப்வாளர்களின் முடிவு. பல நூற்றாண்டுகளுக்கு மேலாக கண்டிய மன்னனின் நம்பிக்கைக்குரிய வைத்தியர்களாக அவர்கள் திகழ்ந்தனர். மன்னனின் குடும்ப வைத்தியர்களாகவும் அவனது அந்தரங்க ஆலோசகர்களாகவும் அவர்கள் விளங்கினர்.
வைத்திய சேவைகளுக்காக மட்டுமன்றி வைத்தியத்திற்கு அப்பால் முஸ்லிம் வைத்தியர்களிடம் காணப்பட்ட பல்துறை அறிவுப் பயிற்சிகளுக்காவும், நற்பண்புகளுக்காகவும் கண்டி மன்னனினதும், சிங்கள மக்களினதும் நன்மதிப்பை இலகுவில் பெற்றனர். கண்டியின் கடைசி மன்னன் வரை முஸ்லிம் வைத்தியர்கள் அரசவை வைத்தியர்களாகவும் வைத்தியப் பிரதானிகளாகவும் உயர் பதவிகளை வகித்தனர். அரசன் அவர்களுக்குப் பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் சன்மானங்களையும் மனமுவந்து வழங்கி அவர்களைக் கெளரவித்ததோடு காணிகளை வழங்கி அவர்களை நிரந்தர வதிவிடக்காரர்களாவும் ஆக்கினான்.
முஸ்லிம் வைத்தியர்கள் வழங்கியுள்ள பங்களிப்புக்கள் பலதிறப்பட்டவை. இஸ்லாமிய உலகுக்குரிய வைத்திய முறையை இ ங்கைக்கு அறிமுகப்படுத்தினர். மூலிகைத் தோட்டங்களை உருவாக்கி
V11

Page 7
அவற்றைப் பராமரிப்பதிலும் அவர்கள் முன்னோடிகளாயிருந்துள்ளனர். செர்.அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டனின் குறிப்பொன்றின் படி இலங்கையின் அரச தாவரவியல் பூங்கா புகழ்பெற்ற முஸ்லிம் வைத்தியர் ஒருவர் பராமரித்து வந்த மூலிகைத் தோட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து உருவானதாகும். புகழ்பெற்ற கண்டி வாவியின் நிர்மாணப் பணிக்கு மூலகர்த்தாவாக இருந்தவர் ஹக்கீம் என்ற பெயர்கொண்ட ஒரு வைத்தியர் என வழக்காற்றுச் செய்திகள் கூறுகின்றன. இவற்றோடு எண்ணற்ற வைத்திய நூல்களையும், புதிய மூலிகைகளையும், வைத்திய முறைகளையும் இந்நாட்டு வைத்தியகலைக்கு முஸ்லிம் வைத்தியர்கள் வழங்கியுள்ளனர்.
எனினும் இவ்விடயங்கள் தொடர்பாக போதிய ஆய்வுகள் இதுவரை செய்யப்படவில்லை. இந்தப் பின்னணியில் பார்க்கும் போது அல்ஹாஜ் எஸ்.எம்.எ.ஹஸன் அவர்கள் எழுதியுள்ள இந்நூல் முக்கிய கணிப்புக்குரியதாகும். இலங்கை முழுக்கப் பரவலாக வாழ்ந்து வந்த புகழ்மிக்க வைத்தியப் பரம்பரையினர் பற்றி எழுதப்பட்ட வரலாறுகள் இல்லை என்ற கவலையை இந்த நூல் தீர்த்து வைத்திருப்பது மன நிறைவை தருவதாகும்.
வைத்தியர் திலகம் அப்துல் அசீஸ் மாவனல்லையின் புகழ்பூத்த வைத்திய பரம்பரையில் தோன்றியவர். வைத்திய சேவைக்காகவும் சுதேச வைத்தியத் துறையின் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். வைத்திய ஒழுக்கவியலின் (Medical Ethics) முடிந்த வரை எல்லா அம்சங்களையும் கடைபிடித்து பொதுமக்களின் நன்மதிப்பைத் தனது வைத்தியத் தொழிலில் நிலைநாட்டியவர்.
அப்துல் அசீஸ் புகழ்பெற்ற வைத்தியர் மட்டுமல்ல தான் பிறந்து வளர்ந்த பிரதேசத்தின் அரசியல், சமூக, கலாசார உயர்வுக்காகவும் தன்னை அர்ப்பணித்த பெரியார், ஒரு இடதுசாரியாக 'சூரியமல் இயக்கத்துடன் அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பமாவது முஸ்லிம் அரசியல் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாகும். சற்றேறக் குறைய இதே காலப் பகுதியில் புத்தளம் கற்பிட்டி போன்ற முஸ்லிம் நகரங்களிலும் பல முஸ்லிம் தலைவர்கள் சமசமாஜக் கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் கவனத்திற் கொள்ளத்தக்கது. 1950களில் தேசிய அரசியலில் முஸ்லிம் மக்களின் அல்லது தலைவர்களின் நிலைப்பாட் ைஆராய முயல்வோருக்கும் அப்துல் அசீஸிஸின் வாழ்க்கையில் கவனிப்பிற்குரிய செய்திகள் உள்ளன. நூலாசிரியர்
VI

அப்துல் அசீஸின் சுய குறிப்புக்களை ஆதாரமாகக் கொண்டு அக்கால அரசியல் சம்பவங்கள் பலவற்றை அழகாக நிரல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமாகும்.
பல்லினங்கள் வாழும் சமூகத்தில் தலைமைத்துவ அந்தஸ்த்தில் இருப்பவர்கள் இன ஐக்கிய உணர்வைக் கட்டியெழுப்ப எவ்வாறு கடமைப்பட்டுள்ளனர் என்பதற்கும் அப்துல் அசீஸிஸின் வாழ்வில் கருதத்தக்க பல உதாரணங்கள் உள்ளன. நெருக்கடி களும், இனக் கலவரங்களும் மூளலாம் என்ற இக்கட்டான சூழ் நிலைகளில் சமாதானத்தை நிலை நாட்ட அவர் எடுத்த பல முயற்சிகளை இந்த நூல் விரிவாகக்கூறுகிறது.
சிங்கள- முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்புவதற்கும் தமிழ்முஸ்லிம் உறவைப்பாதுகாப்பதற்கும் மாவனல்லைப் பகுதிகளில் அப்துல் அசீஸ் இனங்களுக்கிடையில் ஒரு சமாதானத் தூதுவராகச் செயல்பட்டுள்ளார். அப்துல் அசீஸின் வாழ்வை அலங்கரிக்கும் சிறந்த அம்சமாக இதனைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு அப்துல் அசீஸ் அவர்களை வைத்தியராக மட்டுமன்றி அரசியல் வாதியாகவும், சமூக சேவையாளராகவும், சமாதானத் தூதுவராகவும் அவரின் பன்முகத் தன்மைகளை நூலாசிரியர் ஹஸன்
காட்டியிருப்பது அவரது எழுத்தாற்றலுக்கும் தகுந்த சான்றாக உள்ளது.
அல்ஹாஜ் எஸ்.எம்.எ. ஹஸன், பேராசிரியர் அல்லாமா உவைஸ் அவர்களின் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய இயக்கத்துடன் தம்மை ஒன்றிணைத்துக்கொண்டவர். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தகவல்களை ஆராய்வதிலும் தமது காலத்தைச் செலவிட்டு வருபவர். 'கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அருள் வாக்கி அப்துல்காதர் என்ற இரு நுால்களும் அவரது எழுத்துத் திறமையை நாடறியச் செய்தது போல் வைத்தியர் திலகம் அப்துல் அசீஸ் என்ற இந்த நூலும் அவரது எழுத்தாற்றலுக்கு மற்றொரு சான்றாக அமையுமென உறுதியாகக் கூறலாம்.
எம்.எஸ்.எம் அனஸ்.
பேராதனைப் பல்கலைக்கழகம்.

Page 8
என்னுாை
முஸ்லிம்களின் வைத்தியப் பாரம்பரியம் மிகப்புனிதமானது. புராதனமானது. புகழப்பட்டது - வரலாற்று ரீதியானது. எனினும் இன்றைய நவீன தொழில்நுட்ப, விஞ்ஞான யுகத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார மருத்துவ வளர்ச்சியானது அத்துறைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாரம்பரிய மருத்துவத்துறை சார்ந்த முயற்சியிலிருந்து படிப்படி யாக முஸ்லிம்கள் விலகிச் சென்ற வண்ணமுள்ளனர். இத்தனைக்கும் மத்தியில் ஒருசிலர் இன்னமும் தமது சீரிய சிந்தனையினாலும் விடாமுயற்சியினாலும் பாரம்பரிய வைத்தியத்துறையில் நவீன உத்திகளைக் கையாண்டு புகழ் பூத்த வைத்தியர்களாகவும் வைத்தியக் குடும்பங்களாகவும் நிலைத்து நிற்கின்றனர். அது பாராட்டப்படவேண்டியது; பாதுகாக்கப்பட வேண்டியது; பரிசோதனைகள், ஆய்வு நிலையங்கள், பயிற்சிக்கூடங்கள் அமைத்து அத்துறையின் மேம்பாட்டுக்காக உழைக்க நமது சமூகம் முன்வரவேண்டும். அதனால் தொழில் ரீதியாகவும் சேவைரிதியாகவும் அதன் பாரம்பரியத்தைப் பாதுகாக்க முடியும். இதன் மூலமாக நமது கையிலிருந்து தவறிச் சென்ற திரவியத்தை நாமே தேடிப்பெறவும் முடியும்.
இந்த வகையில் நோக்கும் போது அசீஸ் வைத்தியர் தமது மூதாதையினரின் வழிநின்று இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வைத்தியத்திலகமாகக் கருதப்படுகிறார். முஸ்லிம்களின் வைத்தியத் துறையின் பாரம்பரிய வளர்ச்சிக்கு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தினார்.
அசீஸ் வைத்தியரைப் பற்றி நான் அறிந்ததும் பெற்றுக் கொண்டதுமான சில தகவல்களைக் கொண்டே இந்நுர்ல் எழுதப்பட்டுள்ளது. இது போன்ற இன்னும் எத்தனையோ சம்பவங்களும், நிகழ்வுகளும் அவரது வாழ்க்கையோடு

இணைந்திருக்கும். எனவே இந்நூலில்க்ள்ளவை மட்டுந்தான் அசீஸ் வைத்தியரின் வாழ்வைக் குறிப்பிடுவதாகக் கணித்துவிடவோ அறுதியிட்டுக் கூறவோ முடியாது. இது அவரது வாழ்க்கையின் மூலம் பெறப்பட்ட ஒரு சில சம்பவங்களாயினும் மலையக முஸ்லிம்களின் வரலாற்றுக்கு குறிப்பாக நாலு கோரளை முஸ்லிம்களின் வரலாற்றுக்கு ஒர் அடிமட்டமாக இருந்து வரும் என்பதில் ஐயமில்லை.
இதனை ஒர் அளவுகோலாக வருங்காலச் சந்ததியினர் பயன்படுத்தட்டும், அசீஸ் வைத்தியரின் வாழ்க்கை, முஸ்லிம்களின் மருத்துவப் பணி, முஸ்லிம்களின் வரலாறு, பாரம்பரியம் என்பனவற்றை முற்று முழுதாக ஆராய்ந்து அறிவதற்கு ஏதாவது ஒரு வகையில் துணைநிற்குமாயின் அதுவே இம்முயற்சியின் பெறுபோறாகக் கருதுவேன்.
அசீஸ் வைத்தியருக்கும் எனக்கும் நீண்ட நாட்தொடர்பு உண்டு. அவரது குடும்பத்தார் பலருடனும் அத்தொடர்பு மலர்ந்தது. அவரும் அவரது குடும்பத்தினரும் நான் பணிப்பாளராகப் பணிபுரியும் ஒறாபி பாஷா கலாசார நிலையத்துக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆற்றியுள்ள அரும் பணிகளுக்கு இந்நூல் ஒரு காணிக்கையாக அமையட்டும்.
அசீஸ் வைத்தியர் எழுதிவைத்திருந்த சில கையெழுத்துப் பிரதிகளிலிருந்து பெறப்பட்ட குறிப்புக்களை இங்கு அப்படியே தந்துள்ளேன். அத்துடன் அவரைப் பற்றிய பத்திரிகைச் செய்திகளும் அவரது சிரேஷ்ட புதல்வி திருமதி ஆய்வுா மஹ்ரூ ப், புதல்வர் டாக்டர் ஹமீத் அசீஸ் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட சில குறிப்புக்களும் இதனை எழுதுவதற்கு உதவியுள்ளன. அத்துடன் எனது நண்பர்களான முன்னாள் கல்வி அதிகாரி மர்ஹரசம் மக்கீன் மாஸ்டர் கேகாலை மாவட்ட சபை முன்னாள் உறுப்பினர் மர்ஹ9ம் நியாஸ்
ஆகியோரின் சில குறிப்புக்களும் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
அசீஸ் வைத்தியருக்கும் முஸ்லிம் வைத்தியப் பாரம்பரியத்துக்கும் நிறையத் தொடர்புண்டு. எனவே இலங்கையின்
ΧΙ

Page 9
முஸ்லிம் வைத்தியப் பாரம்பரியம் பற்றிய சுருக்கமான ஒர் அத்தியாயத்தை இத்துடன் இணைத்துள்ளேன். இது விரிவாக்கம் பெறவேண்டும். அப்பொழுது தான் நமது சமூகம் பாதுகாப்புப்பெறும்.
வர்த்தக சமூகமாக எம்மை அறிமுகப்படுத்திக் கொண்டாலும் இந்த நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக அபிவிருத்திக்கு தமது தனித்துவத்தைப் பாதுகாத்த வண்ணம் வாணிபம், வைத்தியம், விவசாயம், இராணுவம், இராஜகாரியம் ஆகிய பல்வேறு துறைகளில் ஆற்றியுள்ள அரும்பணிகள் இன்னும் சரியான முறையில் ஆய்வுக்குட்படுத்தப்படவில்லை. இதுவரை ஆயிரம் ஆண்டு கால வரலாற்றுக்குட்படுத்தப்பட்டுள்ள நாம் எமது வளரும் சமூதாயத்தினருக்கு இதனை ஒரு சவாலாக விட்டுவைப்போம்.
இந்நூலை எழுதுவதற்கு சகல வகையிலும் துணை நின்ற அசீஸ் வைத்தியரின் குடும்பத்தினருக்கும், நூல் வெளிவருவதற்குத் தேவையான ஒத்துழைப்பும் முகவுரையும் வழங்கிய பேராதனை பல்கலைக்கழக மெய்யியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், பன்னூலாசிரியருமான ஜனாப் எம். எஸ். எம். அனஸ் அவர்களுக்கும், நூலை மிகக் குறுகிய காலத்தில் அச்சிட்டுதவிய அச்சகத்தார் யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் ஆகியோருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்ஹாஜ். எஸ். எம். ஏ. ஹஸன்
பணிப்பாளர்
ஒறாபி பாஷா கலாசார நிலையம், 26, ஜோர்ஜ் ஈ. டீ. சில்வா மாவத்தை, கண்டி.
14. O3. 1997.
X

1
நெஞ்சில் கனன்ற நினைவுகள்
(எச். எம். முத்துபண்டாவின் அனுபவக் குறிப்பு)
“ரஜகம நெத்னம் வெதகம” என்பது ஒரு சிங்களப் பழமொழி. 'அரசபதவி இன்றேல் வைத்தியப்பதவி” என்பது அதன் அர்த்தம். வைத்தியத்துறையில் ஒர் அரசனைப் போல் உயர்ந்து செல்வாக்குடன் வாழ்ந்தவர் தான் A.T.M.A அசீஸ் அவர்கள். இற்றைக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னாரை முதலில் சந்தித்த நினைவுகள் இன்றும் என்னுள்ளத்தில் பசுமையாகப் பதித்துள்ளன. அன்று எனக்கு ஏற்பட்டிருந்த சுகவீனத்தை அன்னார் பரீட்சித்த விதமும், அதனைச் சுகப்படுத்திய விதத்தையுமே எந்த நேரமும், நினைக்குமளவுக்கு என் நினைவில் அது ஆழமாகப் பதிந்துவிட்டது.
இதனை நான் சுருக்கமாக எடுத்துக் கூறினாலும் எனக்கேற்பட்டிருந்த
உயிருக்கே ஆபத்தான அந்த வியாதியைப் பற்றிக் கூறாமலிருக்க முடியாது. 1971ஆம் ஆண்டு, அப்போது எனக்கு வயது 21. நான் ஒரு படித்த வாலிபன். எனது முதுகந்தண்டிலும், இடுப்பிலும் தாங்கிக் கொள்ள முடியாதவாறு ஒரு வேதனை. அத்துடன் இடுப்புக்குக் கீழே இரண்டு கால்களும் உயிரற்ற நிலையில் 26 நாட்களாக எழுந்திருக்க முடியாமல் முடங்கிக்கிடந்தேன். சிங்கள வைத்தியம் செய்து ஒரளவு குணமடைந்தாலும் மீண்டும் அதே வருத்தம் தொடர்ந்து முன்னிலும் கடுமையான வேதனையைத் தந்தது.
எனது முதுகந்தண்டு எலும்பில் ஒரு தாங்கொணாத வலி உண்டாகி இரு கால்களும் முடமாகி நான் படுக்கையிலேயே தொடர்ந்தும் இருக்க வேண்டியதாயிற்று. இரண்டு ஆண்டுகளாக மேலை நாட்டு வைத்தியமும்; ஆயுர்வேதவைத்தியமும், சாந்திகருமாதி, போதிபூஜைகள் செய்தும் குடும்பத்தினரின் கையிலிருந்த பணமெல்லாம் செலவாகியும் என்னால் எழுந்து நடமாட முடியவில்லை. கால்கள் சுயநிலைக்கு வரவுமில்லை. எனது நோய் எவ்விதத்திலும் குறைந்தபாடுமில்லை. சகல வைத்தியர்களும் கைவிட்ட நிலையில் நான் வாழ்வை வெறுத்தேன். தற்கொலை ஒன்று தான் எனக்கிருந்த ஒரே வழி. இந்த நிலையில் தான் எனது நண்பனான ஒரு ஆசிரியர் என்னை மாவனல்லை அசீஸ்வைத்தியரிடம் கூட்டி வந்தார். நான் அரைமனதோடு அன்னாரிடம் வந்தேன். அவர் என்னிடம்

Page 10
எதுவுமே கேட்கவில்லை. எனது கைகளை சில வினாடிகளாகப் பிடித்துக் கொண்டு நாடிகளைப் பரீட்சித்தார். பின்னர் என்னை அப்படியே எழுப்பினார். மெதுவாக நடப்பாட்டிய வண்ணம் கண்டி ரோட்டுக்கு அழைத்து வந்தார். பின்னர் கைகளை விடுவித்தார். நிற்பதே எனக்குத் தாங்கமுடியாத வேதனை. அப்படியிருந்தும் அந்தப் பாதையில் 30 யார் தொலைவில் உள்ள ஒரு மரத்தைக் காட்டி தயக்கமில்லாமல் அது வரை நடந்து சென்று மீண்டும் வரும்படி கட்டளையிட்டார். நானும் அம்மரத்தடிக்கு மெதுவாக நடந்து சென்று வரும் வரை எனக்கு ஏற்பட்ட வேதனையை சொல்லி அளவிட முடியாது. பின்னர் எனது கைகளைப் பிடித்த வண்ணம் எனது நோயைப்பற்றி ஒரு விளக்கம் தந்தார். அதன் மூலமாக எனது மனோ நிலையைத் தேற்றினார்.
எனக்கிருந்த வேதனையின் காரணமாக நான் அவரைப் பார்த்து “வெதமஹத்தயா” எனக்கு இந்த விளக்கமெல்லாம் தேவையில்லை. உங்களால் சுகமாக்க முடியுமா? முடியாதா என்பதைக் கூறுங்கள் என்றேன். அப்பொழுது அன்னார் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்த முகத்துடன் "பயப்படாதீர்கள் - நான் சுகமாக்குவேன்” என்றார். அவரது அந்த வார்த்தைகள் என்னைப் புத்தொளிபெறச் செய்து விட்டது.
அன்னாரின் முதலாவது சிகிச்சையின் போதே எனது நோய் குணமடையத் தொடங்கியது. வேதனையும் குறைந்து விட்டது. இதனைக் கண்ட எனக்கு வைத்தியம் செய்தவர்களும் ஏனையோரும் பெரும் ஆச்சரியத்துக்குள்ளாயினர், பெருமிதம் அடைந்தனர்.
இரண்டு வாரங்களுக்கு அவர் தந்த மருந்துகளைப் பாவித்த பின்னர் மீண்டும் அவரைச் சந்தித்தேன். அதே மருந்து வகைகளுடன் வேதனையேற்படும் போதெல்லாம் பாவிப்பதற்காக ஒரு தைலத்தையும் தந்தார். இவற்றின் பயனாக நான் இரண்டு ஆண்டுகளாக அனுபவித்து வந்த வருத்தங்களில் இருந்தும் வேதனைகளில் இருந்தும் பூரணமாகவே விடுதலை அடைந்தேன். இது ஒரு அபூர்வமான நிகழ்ச்சி.
அசீஸ் வைத்தியரிடமிருந்த சுவிசேஷ வைத்திய நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டும் முகமாகவே நீண்ட விளக்கம் தரக் கூடிய இந்த நிகழ்ச்சியை மிகச் சுருக்கமாகக் கூறி வைக்கிறேன்.
என்னைப் பரீட்சித்த ஏனைய எல்லா வைத்தியர்களும் நான் இருந்த இருப்பிலோ அல்லது முடங்கிக்கிடந்த நிலையிலோ தான் பரீட்சித்தனர். என்னை

நடக்கச் செய்து நோயின் உண்மையான தன்மையைக் கண்டறிந்த ஒரே வைத்தியர் அவரே. இவ்வாறு குணப்படுத்துவதற்கு அன்னாரிடம் ஊறிப்போயிருந்த வைத்திய நிபுணத்துவமும், குணநலங்களும் இறை விசுவாசமுமே காரணமாகும் என்பது எனது நம்பிக்கை.
நோயாளிகளைக் கவனிப்பதில் அசீஸ் வைத்தியர் ஒரு விசேட கைராசிக்காரர். நோயாளி சுகமடைவதைக் காணும் போது அவரது உள்ளம்பூரிக்கும். உத்தமமான குணநலங்களும், ஆளுமையும் கொண்ட அன்னாரின் உபதேசங்களை கேட்கும் போதே ஒரு நோயாளி இரத்தக்கறைபடிந்த இதயத்தில் நின்றும் விடுதலை பெற முடியும். பல்வேறு துறை சார்ந்தவர்களையும் தன்னோடு இணைத்துக் கொள்ளத்தக்க ஒர் உயரிய மனோதத்துவம் அன்னாரிடத்தில் காணமுடிந்தது. இதனை எழுதும் நான் இப்பொழுது அனுராதபுர மாவட்ட விவசாயசேவை பிரதிக்காரியாலயத்தில் உயரிய பதவியொன்றை வகிக்கின்றேன். அவ்வாறாக பதவி வகிக்க காரணமாக இருந்தவர் அசீஸ் வைத்தியர் என்பதை என்னால் மறக்க முடியாது. எனக்கிருந்த நோயை அவர் சுகமாக்காமல் இருந்தால் நான் இன்று சீவித்திருக்க முடியாது. எனது மனைவி, மக்களுடன் குடும்ப வாழ்க்கை வாழ்ந்திருக்க மாட்டேன். இதற்கென ஆண்டவனால் அருள் புரிய வைத்த அசீஸ் வைத்தியரை நினைக்கும் தோறும் - எனது நெஞ்சத்தில் நிதமும் கனன்று வருகின்ற நினைவுகளின் போதெல்லாம் அன்னாருக்காகப் பிரார்த்தனை செய்கின்றேன். அன்னார் இவ்வுலக வாழ்வை நீத்ததைக் கேள்விப்பட்டவுடன் நான் பிறந்த ஊரான கல்கமுவையில் ஆயிரம் ரூபாச் செலவில் எனது குடும்பத்தாருடன் இணைந்து ஏழைகளுக்கு அன்னதானமும் - தர்மமும் வழங்கினேன். இதைவிட நான் ஏதேனும் செய்ய வேண்டுமென அவரது குடும்பத்தாருடன் கலந்துரையாடிய போது தான் அசீஸ் வைத்தியரின் பெயரால் ஒரு நூல் வெளியிடவிருப்பதை அறியலானேன். அதற்கென எனது காணிக்கையாக எனது சொந்த உழைப்பில் ஒரு மாத ஊதியத்தை அன்பளிப்புச் செய்ய நான் முன்வந்தேன்.
என்னைப் போன்று இன்னும் எத்தனை ஆயிரம் பேருக்கு அவர் வாழ்வு அளித்துள்ளார். இயற்கை நியதிக்கு அமைய எம்மை விட்டு மறைந்தாலும் விலைமதிக்க முடியாத ஒரு மனித மாணிக்கத்தை நாம் இழந்துவிட்டோம். ஆண்டவன் அவரது மகத்தான மக்கள் சேவைக்காக நற்பதவியை அளிப்பானாக.
எச். எம். முத்துபண்டா விவசாய சேவை பிரதிக் கமிஷனர் காரியாலயம், அநுராதபுரம்
1996 - 11 - 08

Page 11
2
முஸ்லிம்களின் வைத்தியப் பாரம்பரியம்
"பாவமும் புண்ணியமும் செய்யும் நாமெல்லாம் உன்மீது அசையாத நம்பிக்கை பூண்டுள்ளோம் ஏனெனில் இறையே! நின் பேரருள் நிலவும் போது செய்யாதது செய்தவையாகவும்
செய்தவை செய்யாதவையாகவும் மாறிவிடும்"
இபுனு ஸினா
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை உற்று நோக்கும் போது வர்த்தகத்திற்கு அடுத்ததாக வைத்தியத் துறையில் அவர்கள் ஆற்றியுள்ள சேவைகள் அளப்பரியன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புகழ்மிக்க முஸ்லிம் வைத்தியர்கள் இந்நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
கி.பி. 800 ஆம் ஆண்டு சின்னாசியா கோனியாவைச் சேர்ந்த சுல்தான் ஆப்தீனின் மைந்தர் இளவரசர் ஜெமாலுத்தீன் என்பவர் பேருவளையில் குடியேறி வைத்தியத்துறையில் ஈடுபட்டுள்ளார். இவரது புகழ் வாய்ந்த வைத்திய முறைகளைக் கண்ணுற்ற அக்காலத்து சிங்கள மன்னனான மூன்றாவது தாப்புல ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவினான் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 3வது தாப்புல மன்னன் அனுராதபுர ஆட்சிக் காலத்தில் பெரம்மனிய என்ற இடத்தில் இருந்து ஆட்சி புரிந்துள்ளான். கி.பி. 828 - 844 வரை 16 வருடங்கள் ஆட்சி செய்துள்ளான்.
அக்காலத்தில் அறாபிய வர்த்தகர்கள் கீழைத்தேச வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போது பாரிய பாய்க் கப்பலில் அல்லது மரக்கலத்தில் பலர் ஒன்று கூடிப் பயணஞ் செய்வது வழக்கம். இவர்களுள் அனேகமானோர்

செல்வந்தர்களாகவே இருந்தனர். சொந்த நாட்டிலிருந்து புறப்படும் இவர்கள் பல நாட்களுக்குக் கடலில் பயணஞ் செய்தனர். பல மாதங்களுக்கு வெளி நாடுகளில் தங்கியிருந்து பொருட்களைப் பண்டமாற்றுச் செய்தனர். இவ்வாறாகப் பல மாதக் கணக்காக வெளிநாடுகளில் தங்கியிருப்பவர்கள் இடையிலே சுகவீனம் ஏற்படும் பட்சத்தில் சுதேச வைத்தியர்களையும் தம்முடன் அழைத்து வருவது வழக்கம். அத்துடன் கீழைத்தேய வாசனைத்திரவியங்கள், வைத்திய மூலிகைகள் என்பவற்றை வாங்குவதிலும் இத்தகைய வைத்தியர்களின் அறிவும் அனுபவமும் அந்த வர்த்தகர்களுக்குப் பயனுடையதாயமைந்தன. இவ்வாறாக அறாபிய வர்த்தகர்களும் யாத்திரீகர்களும் எப்பொழுதும் தம்முடன் வைத்தியத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒருவரையோ பலரையோ அழைத்து வந்தனர். பயணகாலத்திற்கு ஏற்றாற்போல் தேவையான மருந்துவகைகள், எண்ணெய்கள், குளிசைகள், லேகிகங்கள், சூரணங்கள் என்பன போன்றவற்றைப் பல நாட்களுக்குப் பழுதுபடாவண்ணம் கூட வந்த வைத்தியர்கள் தம்முடன் எடுத்து வந்தனர். அதே நேரத்தில் தேர்ச்சி பெற்ற வைத்தியர்கள் பலர் தமது சொந்த கப்பல்களில் இந்த நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
அறாபிய, கீழைத்தேய வர்த்தகத் தொடர்பு மேற் கொள்ளும் காலத்தில் யூனானி வைத்திய முறை இஸ்லாமிய உலகில் பிரபல்யம் பெற்றுத்திகழ்ந்தது. இயற்கைச் சுற்றாடலுக்கமைய இவ் வைத்திய முறைகள் கண்டு பிடிக்கப்பட்டன. விஞ்ஞான ரீதியாக மூலிகைகைளக் கொண்டு தயாரிக்கப்பட்ட இவ் வைத்திய முறையானது அறாபியக் கடலோடிகளினால் கீழைத்தேய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதற்கான பல வரலாற்றுச்சான்றுகள் உள்ளன. 1345ல் இலங்கைக்கு விஜயம் செய்த இப்னுபதுரதாவின் குறிப்பொன்றின் படி கொழும்பிலும் இலங்கையின் ஏனையபாகங்களிலும் வாழ்ந்த முஸ்லிம்களின் சிகிச்சை முறைகள் யூனாணி முறைகளைச் சார்ந்தவையாகும் என குறிப்பிட்டுள்ளார்.
அறாபிய வர்த்தகர்களுடனும் யாத்திரீகர்களுடனும் வந்த வைத்தியர்கள் பலர் உள்ளூர் மக்களினதும் மன்னர்களினதும் தேவையின் பொருட்டு இங்கு தங்கியிருந்து வைத்தியஞ் செய்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் வர்த்தகக் குடியேற்றங்கள் துறைமுகங்கள் ஆகிய இடங்களிற் தங்கியிருந்து வைத்தியஞ் செய்த இவர்கள் படிப்படியாக மன்னர்களினதும் மக்களினதும் சேவைகளுக்காக உள்ளூரிற் பிரவேசித்தனர். இவ்வாறாக வருகை தந்த இன்னுஞ் சில வைத்தியர்கள் இந்த நாடுகளின் மொழிப்பரிச்சயமில்லாத காரணத்தினால்
5

Page 12
இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களின் பள்ளிவாசல் கதிப்மார்களின் துணையுடன் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டு வைத்தியஞ் செய்து வந்துள்ளனர். இவர்களை “ஹகீம்கள்’ என அழைப்பதுண்டு. இந்தியாவில் சுல்தானிய, மொகலாய ஆட்சிக் காலத்தில் இத்தகைய வைத்தியர்கள் பலர் இங்கு வந்துள்ளனர். இவர்களுட் பலர் பிற்காலத்தில் இந்த நாட்டில் குடும்ப வைத்தியர்களாகவும் இருந்து வந்துள்ளனர். சொந்த நாட்டின் வைத்திய அனுபவத்திற்கேற்ப மருந்து வகைகளுக்குத் தேவையான மூலிகைகளை இந்த நாட்டில் பெற்றுக் கொள்ள முடியாமற் போன சந்தர்ப்பங்களில் அவற்றிற்கு ஈடுசெய்யும் வகையில் இந்த நாட்டு மூலிகைகளைக் கையாண்டு சுதேச வைத்தியர்களாக மாறினர். இதனடிப்படையிலேதான் முஸ்லிம்கள் வைத்தியத் துறையில் செல்வாக்குப் பெற்று புதுப்புது ஆய்வுகளின் மூலமாகப் பல சிகிச்சை முறைகளைக் கண்டு பிடித்தனர். ஆங்கில வைத்திய முறை அறிமுகமாவதற்கு முன்னர் இந்நாட்டினர் ஆயுர்வேத வைத்திய முறையில் ஆர்வம் குன்றியிருந்த காலத்தில் இந்த முஸ்லிம் வைத்தியர்களே இந்த நாட்டின் வைத்திய துறையின் மூல பிதாக்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் இவர்களது வைத்திய சேவைக்கு தனியானதொரு செல்வாக்கு இருந்து வந்ததென்பதற்கு ஐயமில்லை.
போர்த்துக்கேய ஒல்லாந்த ஆட்சிக்காலத்தில் அவர்களது ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டனர். முஸ்லிம்களின் வர்த்தக பொருளாதார நடவடிக்கைகளை கவிழ்ப்பதற்காக பல கடுமையான சட்டங்களை அமுல் செய்தனர். முஸ்லிம்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்றி வர்த்தகத்தைக் கைப்பற்றுவதோடு கிறிஸ்தவ மதத்தைத் திணிக்கவும் அத்தகைய சட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடுமையான கட்டுப்பாடுகளும் கடுந்தண்டனைகளுங் கூட அமுலில் இருந்தன. டச்சு ஆதிக்கத்தின் போது கவர்னர் ‘ரைக்லொப் வென்கோவன்’ தனது அதிகாரிகளுக்கு விடுத்த அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்தியாவிலுள்ள மகா தேசாதிபதியின் கட்டளைப் பிரகாரம் இலங்கையில் முஸ்லிம்களுக்கென குறிப்பிட்டுள்ள சில பகுதிகளைத் தவிர்ந்த அதற்கு வெளியே அவர்கள் எத்தகைய வியாபார நடவடிக்கைக்கும் இடமளிக்கக் கூடாது. குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கும் முஸ்லிம்களின் பெயர்பட்டியலொன்று - அவர்களது தொழில், பெயர், நடவடிக்கைகள் குறித்து தனித்தனியான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்படல் வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு எதிராக

அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாத வண்ணம் விசேட கவனஞ் செலுத்தப்படல் வேண்டும். விவசாயம் மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு எந்த தொழிலிலும் ஈடுபடாத வண்ணம் கவனித்துக் கொள்ள வேண்டும். நேர்முகமாகவோ மறைமுகமாகவோ எமக்குரிய பிரதேசத்தில் வர்த்தகத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும். வெளியிடங்களிலிருந்து முஸ்லிம்கள் டச்சுப் பிரதேசத்துக்குள் புகுந்தால் கடுந்தண்டனை விதிக்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் தண்டனையானது ஏனையோருக்கு ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும்.”
இவ்வாறெல்லாம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு கஷ்டப்படுத்திய போதிலும் முஸ்லிம் வைத்தியர்கள் தமது செல்வாக்கைப் பாவித்து வந்துள்ளதையும் அதனால் அவர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகிறது. 1515ம் ஆண்டு வைத்தியர் மின்னா மரைக்கார் பஸ்தாமியார் போர்த்துக்கீச அரசக் குடும்பத்தின் வைத்தியராக நியமிக்கப்பட்டிருந்தார். வைத்தியர் உதுமாலெப்பை மரைக்கார் 1640ல் டச்சு அரசாங்க வைத்தியராகப் பணியாற்றியுள்ளார். வைத்தியர் பஸ்தாமியார் மீராலெப்பை மேஸ்திரியார் இக்காலத்தில் சிறந்தவொரு மூரிஸ் வைத்தியராகத் திகழ்ந்துள்ளார். பஸ்தாமிலெப்பை மரைக்கார் மீராலெப்பை மேஸ்திரியாரின் மூத்த புதல்வர். இப்பொழுது மருதானை பள்ளிவாசல் அமைந்துள்ள காணியும் இக்குடும்பத்தினர் வாழ்ந்த இடமாகக் கருதப்படுகிறது. 1744ல் இக்காணி முஸ்லிம் சமூக நலனுக்காக உயில் எழுதப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் வைத்தியக் குடும்பம் ஒன்றைப் பற்றி ஸர் அலக்ஸான்டர் ஜோன்ஸ்டன் 1827.02.02 அன்று எழுதியுள்ள ஒரு குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பேருவலையில் வாழ்ந்த பெரும் வணிகக் குடும்பம் ஒன்றிற்கு எக்காலத்திற்கும் உரித்துடையதாக - பாரம்பரியமாக அறுநூறு எழுநூறு வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் சிங்கள அரசர்களில் ஒருவர் வழங்கிய மிகப் புராதனமானதும் புதுமையானதும் ஆன செம்புபட்டயமொன்றின் நகல் ஒன்று என்னிடமுள்ளது. இந்தியாவிலிருந்து புடவை நெய்வோரை முதன் முதலாக இந்த நாட்டுக்கு இவர் அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். அதற்காக சில சிறப்புரிமைகளும் சலுகைகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த

Page 13
நெசவாளர்களே இலங்கையின் பழங்குடி நெசவாளர் ஆவர். இந்தப் பட்டயத்தின் காரணமாக அவரது நேரடிச்சந்ததியினர் அவர் பெற்ற சிறப்புரிமைகளையும் சலுகைகளையும் இன்றும் அனுபவித்து வருகின்றனர், இவை போர்த்துக்கேய, டச்சு, ஆங்கில அரசாங்கங்களால் உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இந்தக் குடும்பத்தலைவர் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் படி 1806 ஆம் ஆண்டு மருத்துவத் திணைக்களத்தின் சுதேச அத்தியட்சகராக என்னால் நியமிக்கப்பட்டார். தீவிலுள்ள சுதேச வைத்தியர்களில் மிக்க அறிவுள்ளவர் என நாட்டின் குடிமக்களால் கருதப்படுகிறார். மிகச் சிறந்த சுதேச வைத்திய நூல்கள் அவரிடம் உள்ளன. அவற்றை அவரது குடும்பத்தினர் எழுநூறு எண்ணுாறு ஆண்டுகளாகப் பாதுகாத்துவந்துள்ளனர். இக் காலப்பகுதியில் அவரது குடும்பத்தின் ஒருவரே இம்மருத்துவத் தொழிலை மேற்கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. இலங்கையில் முஹம்மதிய சுதேசிய வைத்தியர்களால் மருத்துவ நோக்கங்களுக்காக மிகப் பழங்காலந் தொட்டுப் பாவிக்கப்பட்ட இத்தீவின் எல்லா மருந்து மூலிகைகளைப் பற்றிய விரிவான ஓர் அறிக்கையை அவர் எனக்குச் சமர்ப்பித்துள்ளார். 1810 ஆம் ஆண்டில் மாட்சிமை தங்கிய மன்னரின் அரசாங்கம் எனது ஆலோசனையின் பேரில் இலங்கையில் ஒரு தாவரத் தோட்டத்தை அமைப்பதற்கான பெரும் நோக்கங்களில் இந்த மூலிகைகளையும் உணவுக்காகவோ வர்த்தக நோக்கங்களுக்காகவோ உபயோகிக்கக் கூடிய தீவின் மற்றைய எல்லாச் செடிகளையும் மரக்கறி வகைகளையும் பயிரிடுவதும் இதன் முக்கிய குறிக்கோளாக அமைந்துள்ளது. (ஆதாரம் நம்முன்னோர் - பக். 8,9)
இவற்றை ஆதாரமாகக் கொண்டு இலங்கை முஸ்லிம்களின் வைத்தியத்துறை வரலாற்றை நோக்கும் போது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் முஸ்லிம் வைத்தியப் பரம்பரையினர் வாழ்ந்துள்ளதை நோக்கலாம். அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ள மருத்துவ நூல்களிற் பிரதானமானது அபூசீனாவின் மருத்துவ நூலாகும். அவ்வாறே அரிஸ்டோடில், பிளேற்றோ, யூக்லிற், கலென், டொல்மி ஆகியோரின் நூல்களின் மொழிபெயர்ப்புகளையும் அவர்கள் இங்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். உலகப் புகழ் பெற்ற அபூசீனாவின் உருவப்படத்தை இவர்கள் எல்லோரும் தம்மிடம் வைத்துள்ளனர். இவர்களது வைத்தியத்தின் மூல பிதாவாக அன்னாரை மதித்துப் போற்றுகின்றனர்.

போத்துக்கேய ஒல்லாந்த ஆட்சிக் காலத்தை விடவும் கண்டி மன்னரின் ஆட்சிக்காலத்திலேயே முஸ்லிம் வைத்தியர்களுக்கு அரச - குடிமக்கள் மட்டத்தில் பெரும் மதிப்பும் வரவேற்பும் இருந்து வந்துள்ளது. முஸ்லிம் வைத்தியர்களின் கைதேர்ந்த வைத்திய முறைகளால் அரச பரம்பரையினர் அவர்களுக்கு மதிப்பளித்து தக்க மரியாதையுடன் சன்மானங்களும் வழங்கினர். அவர்களைக் கண்டிப் பிரதேசத்தில் நிரந்தரமாகக் குடியேற்றினர். அதற்கான நிலங்களையும் வழங்கினர். சிங்களப் பிரதாணிகளுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை விடவும் எவ்வித குறைவுமின்றி முஸ்லிம் வைத்தியப் பரம்பரையினர் கெளரவிக்கப்பட்டுள்ளனர். கண்டி இராச்சியத்திற்கு முஸ்லிம் வைத்தியர்கள் வழங்கி வந்த சேவையே அத்தனைக்கும் காரணமாகும்.
பன்னிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து கண்டிக்கடைசி மன்னன் பூரீ விக்ரம ராஜசிங்கன் வரை முஸ்லிம்கள் ராஜ வைத்தியர்களாகவும் நாட்டின் வைத்தியத்துறைத் தலைவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். 12வது நூற்றாண்டில் 2வது பராக்கிரமபாகுமன்னன் தம்பதெனியாவிலிருந்து ஆட்சி செலுத்திய போது வைத்தியரத்ன கோபால முதலிகே அன்சார் இபுனுதுபால் உடையார் என்பவர் ராஜ வைத்தியாராக இருந்துள்ளார். 1590-1604 வரை ஆண்ட முதலாம் விமலதர்மசூரியன் காலத்தில் ராஜகருணா வெகம்பொல அவேகொட முதியான்சேலாகே ஷேக் சல்தீன் பின் அத்தாஸ் துபால் உடையார் அரசசபை வைத்தியராக இருந்துள்ளார். 2ஆம் இராஜசிங்கன் காலத்தில் சேக்முஹம்மது உடையார் இபுனு அலி இபுனுதுபால் என்பவரும் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹஜ்ஜி முஹந்திரம் கோபால முதியான்சலாகே முஹம்மது உடையார் ஆகியோரும் அரச சபை வைத்தியர்களாக இருந்துள்ளனர். 1782 - 1792 ஆம் ஆண்டு வரை பூவலிக்கடையைச் சேர்ந்த வைத்தியரத்ன முதியன்சேலாகே அபூபக்கர் புள்ளே என்பவருக்கு செனரத் மன்னன் கெளரவப் பட்டமும் சன்னஸ’ எனப்படும் பட்டயமும் வழங்கினான். இவருக்கு உடுநுவரை தஸ்கரையில் காணிகளும் வழங்கிச் சிறப்பித்தான். இதே போன்று உடுநுவரைவெலம் பொடையைச் சேர்ந்த கோபால முதியான்சேலாகே சேகு முஹம்மது உடையாருக்கு கீர்த்தி பூரீ மன்னரால் சன்னஸ’ என்னும் பட்டயமும் வழங்கப்பட்டது. இவருக்கு வட்டதெனியாவில் தோட்டங்கள், வீடுகள், வயல்கள் என்பனவும் அன்பளிப்புச் செய்யப்பட்டன. அத்துடன் ஒரு யானையும் பரிசாக வழங்கப்பட்டது. இவ்வாறான வைத்தியர்களது சந்ததியினரைச் சேர்ந்த பலருக்கு

Page 14
ஆங்கில ஆட்சிக் காலத்திலும் வைத்திய திலக, வைத்திய ரத்ன போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. 1954ல் உடுநுவர ஹந்தஸ்ஸையைச் சேர்ந்த
முஹம்மது லெப்பை வெதராளைக்கு வெதமுஹந்திரம் பட்டம் வழங்கப்பட்டது.
இவ்வாறே நாலு கோரளைப் பகுதியான மாவனல்ல - ஹெம்மாதகம - அரனாயக-தல்கஸ்பிடிய ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்ற உடையார் பரம்பரையினரும் சிங்கள மன்னர் காலந் தொட்டு வைத்தியத்துறையில் ஈடுபட்டுவந்த முஸ்லிம் வைத்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்த வைத்தியர்களாவர். அக்காலத்தில் உடுநுவரை நாலுகோரளை முஸ்லிம்களுக்கிடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தன. கோரளைகள் வேறுபடினும் ஒரே மன்னனின் ஆட்சிக்குட்பட்டே இவை இருந்து வந்தன. அதனால் இவ்வுடையார் பரம்பரையினருக்கும் வெலம்படை, பூவலிக்கடை, வட்டதெனிய, தஸ்கரை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த வைத்தியர்களுக்கிடையில் நிலபுலத் தொடர்புகளும், விவாக பந்தத் தொடர்புகளும் இருந்து வந்துள்ளன. 1855 ஆண்டில் தேசாதிபதியாக இருந்த ஸர் ஜோஜ் வில்லியம் அண்டேசன் என்பவரால் நாலுகோரளை உடையார் பரம்பரையினருக்கு வழங்கப்பட்ட ஒரு பட்டயம் இன்னும் அவர்களது குடும்பத்தினரிடையே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தல்துவையைச் சேர்ந்த தம்பி வெதமஹத்தையா என அழைக்கப்படும் வைத்தியப் பரம்பரையினர் இன்றும் இத்துறையில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று ஏழு கோரளை குருநாகல் பகுதியிலும் முஸ்லிம் வைத்தியப் பரம்பரையினர் குடியமர்த்தப்பட்டிருந்தனர். மிரிகம்பிட்டிய என்னும் சிறப்பான நிலப்பரப்பு இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இவர்களது பழைமையான வைத்தியச் சுவடிகளும் இவர்களால் உபயோகிக்கப்பட்ட உபகரணங்களும் இக்குடும்ப வாரிசுகள் இன்றுவரை பாதுகாத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேற்கத்திய வைத்திய முறைகள் இந்த நாட்டுக்கு அறிமுகமாவதற்கு முன்னர் நிபுணத்துவம் பெற்ற முஸ்லிம் வைத்தியர்களிடையே சர்வாங்க வைத்தியர்கள். குஷ்டரோக வைத்தியர்கள், விஷக்கடி வைத்தியர்கள், கட்டி வைத்தியர்கள் என பலதுறை வைத்தியர்களும் இருந்து வந்த அதே வேளையில் சகல வைத்தியத்துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்களும் இருந்துள்ளனர். இவர்களால் செய்யப்பட்ட லேகியம், சூரணம், எண்ணெய் வகைகள், குளிசைகள் என்பன பிரபல்யம் அடைந்து காணப்பட்டதால் உடனுக்குடன் வைத்திய சிகிச்சைகளைப் பொது மக்கள் இலகுவாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை

பெற்றனர். இவர்களிற் பலர் விஷம் நீக்கிய கத்திகளையும் - மிருக எலும்புகளையும் - முள்ளாயுதங்களையும் உபயோகித்து புண்கள் - கட்டிகள் - விஷமேறிய தோல்கள் - நரம்புகள் - பழுதடைந்த எலும்புகள் போன்றவற்றை அறுவைச் சிகிச்சை மூலம் குணப்படுத்தும் வல்லமையும் பெற்றிருந்தனர். தூர இடங்களில் இருந்து சிகிச்சை பெறுவோரின் வசதிக்காக தமது சிகிச்சை நிலையங்களுக்கு அருகாமையில் குடிசைகள், மண்டபங்கள் அமைத்து அவர்களுக்கு வைத்தியஞ் செய்துள்ளனர்.
உலக மருத்துவத்தின் பிதாவெனப் போற்றப்படுபவர் இப்னுஸினா. இவரது ஆயிரமாம் ஆண்டு அண்மையில் உலகலாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. இவரது “கிதாபுஸ்ஸிபர்” நோய் தீர்க்கும் நூல் இன்றைய மருத்துவ உலகுக்கு ஆதார நூலாக மதிக்கப்படுகிறது. இவரால் எழுதப்பட்ட கிரந்தங்கள் 276 எனக் கணக்கிடப்பட்டுள்ளன. இவரது மருத்துவ நூல்களுள் பல பிற மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. ஐ.நா. பொருளியல் கலாசாரப் பிரிவு இதற்கான பொருளுதவி வழங்கியுள்ளது.
அறபு மொழியில் மருத்துவத்துறையின் பெரும் பங்களிப்புச் செய்தவர்கள் இப்னு ஸினா, அத்தப்ரீ, அர்ராஸி, அல்மஜாளி போன்றவர்களாவர். உலக மருத்துவ வரலாற்றில் மறக்க முடியாத இவர்களுள் இப்னு ஸினா, அர்ராஸி ஆகியோரின் படங்கள் இன்றும் பாரிஸ் பல்கலைக்கழகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இவர்கள் பெருந்தத்துவ, சன்மார்க்க, விஞ்ஞான மேதைகளாகவும் இருந்துள்ளனர். இப்னு ஸினா ஹிஜ்ரி 428ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். சோவியத் ரஷ்யாவின் 'ஹமதான்' என்னும் இடத்தில் இவரது சமாதி இன்றுமுள்ளது.

Page 15
3 மாவாற்றின் கரையினிலே
கொழும்பு கண்டி பிரதான வீதியில் 56ஆம் 57ஆம் மைல் கற்களுக்குட்பட்ட பிரதேசத்தில் மாவனல்லையும் அதனைச் சார்ந்துள்ள கிராமங்களும் அமையப் பெற்றுள்ளன. மாவனல்லை நகரத்தையும் அதனைச் சூழவுள்ள முஸ்லிம்கள் சேர்ந்து வாழும் கிராமங்களையும் நோக்கும் போது, அது மலையக முஸ்லிம்களின் வரலாற்றில் ஒருபடிக்கல்லாக அமைந்துள்ளது. 14ஆம் நூற்றாண்டின் கங்கசிரிபுர (கம்பளை) ஆட்சிக்காலத்தைத் தொடர்ந்து மலையக முஸ்லிம்களின் வரலாற்று ஆய்வுக்கான பல சாசனங்களும் காணப்படுகின்றன. மாவனல்லை நகரத்தை அண்மித்துச் செல்லும் மகாஒயா ஆறும் அதனை வந்தடையும் ஹிங்குலோய ஆறும் சூழவுள்ள மலைகளும் கணவாய்களும் முஸ்லிம்களின் வரலாற்றுக்கோர் புவியியல் அங்கமாக அமைவதோடு அந்நகரையும் சூழவுள்ள கிராமங்களையும் செழிப்புறச் செய்யும் பாதுகாப்பு அரண்களாகவும் அமைந்துள்ளன. மகாஒயா ஆற்றை முஸ்லிம்கள் 'மாவாறு
என்றழைக்கின்றனர்.
இந்த மாவாறு அரனாயக திப்பிட்டிய மலைச்சாரல்களினூடாகவும் கவில்பிற்றிய பரண குரு (ஹேம்மாதகம) ஊடாகவும் மாவனல்லலையை வந்தடைந்து அங்கிருந்து ரம்புக்கனைப் பக்கமாகத் திரும்பி பின்னர் சரிமுடக்காக வளைந்து வடக்கே நோக்கிச் சென்று சிலாபத்திற்கு
அருகாமையில் கடலில் சங்கமமாகின்றது.
உடுநுவரை மலைச்சாரலில் ஆரம்பமாகி கடுகன்னாவை கனேதன்னை ஒவத்தை ஊடாக வரும் ஹிங்குலோய ஆறு மாவனல்லையில் மாவாற்றுடன் கலக்கின்றது. இவ்வாறு ஒன்று சேரும் இடம் தான் தொட்டபொல’-(துறைமுகம்) என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகாலத்தில் இவ்விடம் மலை நாட்டுக்கும் கரைநாட்டுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மத்திய தலமாகவும் விளங்கியுள்ளது. இங்கு பொருட்கள் பண்ட மாற்றுச் செய்யப்பட்டன. பாதைகள்
2

பாலங்கள் இல்லாத அக்காலத்தில் மகாஒயா ஆற்றின் வழியாகவும் வள்ளங்கள் மூலமாகவும் ஆற்றங்கரை வழியாகத் தவளங்கள் மூலமாகவும் முஸ்லிம்கள் இங்குள்ள பொருட்களைப் புத்தளம், சிலாபம் போன்ற நகரங்களுக்கு கொண்டு சென்று பதிலாக அங்குள்ள பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இதே போன்று களனி கங்கையைத்தாண்டி கொழும்புத் துறைமுகப் பட்டணங்களைச் சேர்ந்த வர்த்தகர்களும் பண்டமாற்றுக்கான வியாபாரப் பொருட்களுடன் இங்கு வருவதுண்டு. இவ்வாறு வர்த்தகர்கள் தங்கிச் செல்வதற்கான முஸ்லிம் குடியிருப்புகளும் விசாலமான நிலப்பரப்பும் இங்கு காணப்பட்டன. இதுபற்றி அப்துல் அசீஸ் வைத்தியரின் குறிப்பொன்று பின்வருமாறு கூறுகின்றது. “மாவாற்றின் திருப்பு முனையின் மேற்குப் பக்கமாக 'கோணிகொடை (சாக்குக்குவியல்) என்ற ஒரு மேட்டுச் சமதரை உள்ளது. சுற்றி வர வயல் சூழ்ந்த ஒரு வட்டமான மேடையாக இம்மேட்டு நிலம் அமைந்துள்ளது. அக்காலத்தில் முஸ்லிம் வியாபாரிகள் பாக்கு, மிளகு, ஏலக்காய், கராம்பு, கருப்பட்டி போன்றவைகளை தவளங்களில் ஏற்றி மாவாற்றின் கரையோரம் வழியாக சிலாபம், புத்தளம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்வர். இவற்றுக்குப் பண்டமாற்றாக உப்பு, கருவாடு, உடுதுணி போன்றவைகளை வாங்கிக் கொண்டு வருவார்கள். இவர்களது பயணம் மாதக் கணக்கில் நீடிக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சரக்கு கோணிகளை (சாக்குகளை) அடுக்கி வைப்பதற்கும் வெற்றுச் சாக்குகளை மாவாற்று நீரில் கழுவிக் காய வைப்பதற்கும் இந்த மேட்டு நிலத்தைப் பயன்படுத்தினர். இதனால் தான் இதற்கு “கோணிகொடை” என்ற பெயர் உண்டானது. இங்கு பல நாட்களுக்குத் தங்கியிருக்கும் வியாபாரிகள் பளனை - அம்புலுவாவை மலைகளில் ஏறி மலைநாட்டு வியாபாரத்திற்காகப் பொருட்களை சுமந்து செல்வார்கள். அக்காலத்தில் முஸ்லிம்கள் சிங்கள ராஜாக்களினதும் கோரளை திசாவை அதிகாரிகளினதும் நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்து வந்தார்கள். அதனால் அவர்களுக்கு காணி நிலங்களும் கெளரவப் பட்டங்களும் வழங்கியுள்ளனர். மாவனல்லலைக்கு அருகாமையில் இருக்கும் உதுவன்கந்த உதுமான் கந்தை' என அழைக்கப்பட்டதாக எனது அப்பாமார் கூறக்கேட்டுள்ளேன். அக்காலத்தில் அலிஉதுமான் என்பவருக்கு வழங்கப்பட்ட பகுதியே அது. ‘உதுமான்கந்த' என்ற பெயரே இப்பொழுது ‘உதுவங்கந்த' என்று அழைக்கப்படுகின்றது.
பிற்காலத்தில் அலி உதுமானின் மக்களே இப்பிரதேசத்தின் சொந்தக்காரர்களாக இருந்திருக்கின்றார்கள். ரம்புக்கனை ரோட்டில்
13

Page 16
தொட்டப்பொலைவயிலிருந்து கிம்புலாவக - தனாகம - பூதாவ - சர்தியல்வாழ்ந்தகம்மல் கலே (கொல்லன்காடு) வரை அலி உதுமானின் குடும்பத்தினருக்கே உரித்தாக இருந்தது. உள்ளூர் வியாபாரிகள் தங்களது தூரப்பயண வியாபாரத்தை முடித்துக் கொண்டு அலகல்லை மலையின் கீழ்ப்பக்கமாக சொந்த ஊர் திரும்பி வருவார்கள். அவ்வாறு வரும் போது மலைப்பாங்கான இடத்திலிருந்து சங்கு ஊதுவார்களாம். வியாபாரிகள் ஊர்திரும்பும் செய்தியறிந்ததும் உணவு சமைத்துத் தயாராக வைப்பார்களாம். இப்படியாக ஊர்மக்கள் எதிர்பார்த்திருந்த ஒருநாள் வியாபாரத்தில் சென்ற ஒருவர் புத்தளத்தில் காலமாகி அவரை அங்கேயே நல்லடக்கஞ் செய்து விட்டு வந்து ஊரவர்களுக்கு விஷயத்தைச் சொன்னார்களாம். அதனால் அன்று ஊரார் சமைத்த எல்லா உணவுகளையும் ஒன்று சேர்த்து எல்லோரும் ஒன்று கூடி மெளத்தானவர் பேரில் கத்தம் பாத்திஹா ஒதித் தமாம்செய்து சாப்பிட்டார்களாம். இந்த மலையடி வாரத்தில்தான் எங்களது குடும்பத்துக்கு பாரம்பரியமாக வழங்கப்பட்ட "மரக்கலவத்த”எனும் பெருந்தோட்டமும் வயல் நிலமும் அமைந்துள்ளது. “இவ்வாறாக அசீஸ் வைத்தியர் எழுதிவைத்துள்ள குறிப்பேடுகள் பல பாரம்பரிய வரலாற்றுச் சம்பவங்களை அறிய உதவியாக
உள்ளன.
உதுவங்கந்தையின் நாமம் இலங்கையின் “ரொபின்ஹாட்’ "Robinhood of Ceylon', என்ற சர்தியலின் நாமத்தோடு தொடர்புற்று வந்துள்ளது. சர்தியலின் இணைபிரியாத நண்பனே மம்மலிமரைக்கார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நாட்டையே கலங்கவைத்த பயங்கர வழிப்பறிக் கொள்ளைக்காரர்களாக திகழ்ந்த இருவரும் 1864-05-07ம் திகதி கொலைக்குற்றச் சாட்டுக்காக தூக்கிலிடப்பட்டனர். இவர்களைக் கைப்பற்ற வந்த போதுதான் பொலிஸ் வீரர் துவான் சபான் என்பவர் மம்மலிமரைக்காரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி 21-03-1864 மரணமானார். சார்ஜன்ட் அஹ்மத் மயிரிழையில் உயிர் தப்பினார். சபான் என்பவரே சேவையிலிருந்த போது முதன்முதலாக உயிரிழந்த பொலிஸ் வீரராகும். இதனால் ஆண்டு தோறும் மார்ச் 21ம் திகதி பொலிஸ் பகுதியினரால் சபான் ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

4.
அப்துல் அசில் வைத்தியரின் மூதாதையர்
மனைவி வழி
ஒரு காலத்தில் உதுமான் கந்தையின் நிலச்சுவாந்தராக விளங்கிய வரக்காபொல முஹந்திரமலாகே உதுமான் லெப்பைக்கும் அவரது மனைவியான அலித்தம்பி வெதராளையின் சகோதரி ஹவ்வா உம்மாவுக்கும் நான்கு ஆண்களும் நான்கு பெண்களுமாக எட்டு பிள்ளைகள். ஆண்கள் மஹ்மூது லெப்பை, முஹம்மது லெப்பை, ஹமீது லெப்பை, அஹ்மது லெப்பை என்போராவர். பெண்கள் ஸெய்னத்உம்மா, ரஹமா உம்மா, ஆசியா உம்மா, மரியம் என்பவர்களாகும். இவர்களுள் கடைசி மகனான அஹமது லெப்பை ஒரு பிரபல வர்த்தகராக விளங்கி வந்துள்ளார். கேகாலை, வரக்காப்பொலை, ரம்புக்கனை ஆகிய இடங்களில் இவருக்கு வர்த்தக நிலையங்கள் இருந்து வந்தன. சொந்த மாட்டு வண்டிகள் மூலமாக வர்த்தகப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். அக்காலத்தில் வர்த்தக சந்தைகளுக்கும் இவர் பொருட்களை அனுப்பி வைப்பார். மாட்டு வண்டிகள் செல்ல இவர் தனது குதிரை வண்டியில் பயணஞ் செய்வார். இது பற்றி அசீஸ் வைத்தியரின் குறிப்பையும் நோக்குவோம்.
“ஏற்கனவே எனது தகப்பனாரின் மாமாவாகிய வரக்காப்பொல முஹாந்திரம்லாகே அலி உதுமான் லெப்பையின் கடைசி மகனான அஹ்மது லெப்பை ஒரு வியாபாரியாகவும் நிலச் சொந்தக்காரராகவும் இருந்தார். ரம்புக்கனையில் புகையிரத நிலையம் அமைக்கப்பட்ட காலத்தில் மாட்டு வண்டிகளில் சரக்குகளை ஏற்றி அனுப்பி விட்டு தனது சொந்தக் குதிரை வண்டியில் வியாபாரத்தைக் கவனிப்பதற்காக ரம்புக்கனைக்குச் சென்று வருவார். பிற்காலத்தில் இவரது மூத்த மகளாகிய மரியமுத்து நாச்சியையே நான் 1934ம் ஆண்டு திருமணஞ் செய்து கொண்டேன்.
அக்காலத்தில் எந்தவொரு நல்ல காரியத்திற்கும் வெற்றிலை வைத்து அழைப்பதுதான் வழக்கம். இது சிங்கள மக்களின் கலாசாரத்தில் இருந்து வந்த
15

Page 17
ஒரு வழக்கம்; இந்த வழக்கம் அவர்களிடம் இன்றும் இருந்து வருகிறது. மலைநாட்டு முஸ்லிம்களிடத்திலும் இந்த வழக்கம் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது. நல்ல காரியத்திற்கு ஒருவரை அழைக்கும் போது சிங்களவர்கள் வெற்றிலை கொடுத்து கும்பிடுவார்கள். ஆனால் முஸ்லிம்கள் வெற்றிலையைக் கொடுப்பார்கள். கும்பிடமாட்டார்கள். எனது திருமணச் சடங்குக்கு சிங்கள மக்கள் பிரதானிகளும் அழைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு என்று விசேட சாப்பாட்டு விருந்து ஒழுங்கு செய்ய வேண்டும். அதனால் எனது தந்தை எல்லோருக்கும் பொதுவாக ஒரு அழைப்பிதழை அச்சடித்து அனுப்பி வைத்தார். சிங்களவர்களுக்கென விசேட மேசைச் சாப்பாடும் முஸ்லிம்களுக்கு சஹன் சாப்பாடும் ஒழுங்கு செய்யப்பட்டது. எனது தகப்பனாரின் யோசனைப்படி சிங்கள மக்கள் விரும்பும் வெற்றிலையையும் முஸ்லிம் கலாசாரச் சின்னமான பிறை நட்சத்திரம் "பிஸ்மில்” ஆயத்துக்களை உள்ளடக்கிய 786 எனும் இலக்கமும் பொறிக்கப்பட்டே அந்த அழைப்பிதழ் பின்வருமாறு அச்சடிக்கப்பட்டது. எமது விவாகத்தின் பின்னர் நான்காவது ஆண்டில் எனது மனைவியின் தந்தையாரான எனது மாமனார் அஹமது லெப்பை காலமானார்.
அல்-ஹாஜ் ஏ. டி. எம். ஏ. அசிஸ் அவர்களின் பரம்பரை
தந்தை வழிப்பரம்பரை
ராஜாதி ராஜசிங்கனால் மாலியத்தே வெத முகாந்திரம் பட்டம் பெற்ற முதல் வைத்தியர்-மரக்கல வெத மஹத்தயா என அழைக்கப்பட்ட
1. மாலியத்தே வெதமுகாந்திரம் - அஹமது லெப்பை வெதரால
மாலியத்தே வெதமுகாந்திரமலாகே - அலித்தம்பி வெதரால மாலியத்தே வெதமுகந்திரமலாகே - தம்பிக்கண்டு வெதரால
மாலியத்தே வெதமுகாந்திரமலாகே - மஹ்மூது லெப்ப வெதரால மத்திசம்
5.
மாலியத்தே முகந்திரமலாகே - அல்-ஹாஜ் ஏ. டி. எம். ஏ. அசீஸ் 6. மாலியத்தே வெதமுகந்திரம்லாகே
அல்-ஹாஜ் டாக்டர் ஹமீத் ஏ. அஸிஸ்

w
w V` ....-- ، ، w
ན་ i ،نجف آ\ دو பாகிய
ಓ Èáæ । မှုံကြီးခိ၃k
\ w ዞ ፻፺ u ar afà ܐܘ எrது அருமை புதல்வர் வைத்இWாட்ை w ^
N or rash \
AT r. M. திப்துல் அசீசு மனவலருக்கு,
/ கிகாங் செய்ய அன்று (༣་ཤིང་ کوله
மணி முதல் மணி வரை -பெரும் சட்கு மஜ்னிசு
سمبر
-a-........ kత:తెచవిసోఫ9షaజీ
யூனியன் கண்டி,

Page 18
தாய் வழிப்பரம்பரை
ராஜதிராஜசிங்க மன்னனால் கி. பி. 1782 விடரமாத 11ந் திகதி
வெள்ளிகிழமை -முகந்திரம் பட்டம் கிடைத்த முதல் வைத்தியர்
கருணா சிங்ஹ் வைத்தியரத்ன முகாந்திரம் - யூசுப் லெப்பை வைத்தியர்- அவரது புதல்வர் வைத்தியரத்ன முகந்திராமலாகே - அஹமது லெப்பை கதீப் வைத்தியர்- அவரது புதல்வர் வைத்தியரத்ன முகாந்திரமலாகே - முகம்மது லெப்பை கதீப் வைத்தியர்- அவரது புதல்வி வைத்தியரத்ன முகாந்திரமலாகே - முகம்மது லெப்பை - ஆமினா, உம்மா வைத்தியரத்ன முகந்திரம்லாகே- ஆமினா உம்மா அவர்களின் மகன் தான் வைத்தியரத்ன முகாந்திரமலாகே அல்-ஹாஜ் ஏ. டி. எம். ஏ. அசீஸ் வைத்தியர்
தகவல்: வைத்தியரத்ன முகாந்திரமலாகே முஹம்மது இப்ராஹிம்
முஹம்மது சரிப் வைத்தியர் இல, 117,மஹவத்த,
மாவனல்னல.
மரக்கலவத்த பரிசு பெற்ற வரலாறு
அசீஸ் வைத்தியரின் முன்னோர்கள் கண்டி மன்னரால் பரிசாக
வழங்கப்பட்ட மரக்கலவத்த' என்ற இடத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். இக்காணி
நிலம் 2வது இராஜசிங்கன் 1634-1687 காலத்தில் வழங்கப்பட்டதாக அறிய முடிகிறது.
17ஆம் நூற்றாண்டில் நாலு கோரளையைச் சேர்ந்த கல்பொட
கோரளையின் அதிகாரத்திற்கு உட்பட்ட மொல்லிகொட பிரிவில் ஒரு பெரும் வயல்
18

அமைந்திருந்தது. இந்த வயல் பரப்புக்கு நீர்ப்பாய்ச்சுவதற்காக பாரிய நீர் தேக்கமொன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த நீர்த் தேக்கத்தின் அடியில் ஒர் ஒட்டை ஏற்பட்டதனால் நீர்பல வழிகளிலும் வழிந்து செல்ல நீரைச் சேகரிக்க முடியாமல் போனது. அதனால் அந்த வயல் பரப்பின் விவசாயம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நீரோடையாக வந்து சேரும் அந்த நீருக்கள் மூழ்கிச் சென்று கற்பாறைகளின் அடித்தளத்தில் ஏற்பட்டிருந்த நீரொழுக்கைத் திருத்தும் முயற்சியில் பலர் முயன்றும் முடியாமற் போயிற்று. இந்த முயற்சியில் பலர் உயிரிழந்தனர். அதனால் எவரும் இந்த நீர்த்தேக்கத்தின் திருத்த வேலையில் ஈடுபட மறுத்தனர். இது கோரளை ஆட்சியாளருக்கு ஒரு பெரும் பிரச்சினையாக மாறிவிட்டது. மூச்சுப் பிடித்த வண்ணம் நீரில் நீண்ட நேரம் தங்கியிருக்க கூடியவர்கள் மட்டுமே இந்த முயற்சியில் ஈடுபட முடியும். அதனால் மன்னன் ஆணைப்படி திசாவை தனது ஏவலாளரைக் கொண்டு அக்காலத்து முறைக்கேற்ப பறையடிப்போரைக் கொண்டு சூழவுள்ள கிராம மக்களுக்கு "இந்த நீர்த்தேக்கத்தின் நீர் ஒழுக்கைத் திருத்துபவனுக்கு அரசனால் சன்மானங்கள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.”
அவ்வாறு அறிவித்த போதும் அந்த நீர்த்தேக்கத் திருத்த வேலைக்காக கிராம மக்கள் எவரும் முன்வரவில்லை. இச் சந்தர்ப்பத்தில் தான் கட்டுவன்’ என்ற ஒரு சிங்கள வாலிபன் தனக்குத் தெரிந்த ஒரு தகவலைக் கூறினான். வைத்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வாலிபன் உடரட கொத்மலையில் இருப்பதாகவும் அவன் சுழியோடுவதில் பேர் பெற்றுத் திகழ்வதாகவும் ஆற்றில் சுழியோடி பல இறந்த சடலங்களையும் மூழ்கியவர்களையும் மீட்டியிருப்பதாகவும் அந்த வாலிபன் வந்தால் இதனை நிச்சயம் செய்து முடிப்பான் எனவும் தெரிவித்தான். அந்த கட்டுவன் என்பவனும் ஒரு நீர் மூழ்கியாவான் என்று அறிந்த சிலர் அவனை திசாவையிடம் அழைத்துச் சென்றபோது அவன் திசாவைக்கு அந்த முஸ்லிம் வாலிபன் ஒரு வைத்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் வைத்தியத் தொழிலோடு ஒய்வான நேரத்தில் நண்பர்களுடன் இடுப்பில் ஒரு கயிற்றை இறுக்கிக் கட்டிக் கொண்டு எம்மைக் கயிற்றைப் பிடித்த வண்ணம் கரையில் இருக்கும் படிசொல்லி நீருக்குள் குதித்து கற்குகைகளுக்குள் புகுந்து நீண்ட நேரமாகும் வரை அங்குள்ள மீன்களைப் பிடித்து வாழைநாரில் கொடி போலக்கட்டிக் கொண்டு வந்து பலருக்கும் மீனைப் பங்கிட்டுப் கொடுப்பான் என்றும் கூறினான். இதனைக் கேட்டு ஆச்சரியமுற்ற திசாவை அவன் எவ்வளவு நேரத்திற்கு நீருக்குள் இருப்பான் எனக் கேட்க கட்டுவன் என்ற அந்த வாலிபன்
19

Page 19
நான் நீருக்கள் மூச்சுப் பிடிக்கும் நேரத்தை விட இருபது மடங்குக்குக் குறையாத நேரத்திற்கு நீரில் இருப்பான் என தெரிவித்ததும் திசாவை தனது செயலாளனான குருனான்சே மூலம் ஓர் ஒலை எழுதி அந்த முஸ்லிம் வைத்தியன் வாழ்ந்த கொத்மலைப் பகுதி திசாவைக்கு தனது குருனான்சேயையும் கட்டுவனையும் சேர்த்து அந்த நீர்மூழ்கி இளைஞனை அழைத்து வர அனுப்பி வைத்தான். இவ்வாறு திசாவைகளின் மூலமாக விஷயங்களைத் தெரிந்து கொண்ட துணிச்சல் மிக்க சுழியோடியான அஹமது லெப்பையின் விருப்பத்திற்கு அவரின் தாயாரின் தயக்கம் ஒரளவுத் தடையாக இருந்தது. எனினும் எப்படியும் வெற்றியோடு திரும்புவதாக நீச்சல் வீரன் தாயாரின் அனுமதியோடு மறுநாட்காலை கொத்மலையிலிருந்து நாலுகோரளைக்குப் புறப்பட்டுச் சென்றான்.
இந்த முயற்சியில் பலர் பிணமானதையறிந்த திசாவையுட்பட ஊர்மக்களும் பிரதாணிகளும் நீச்சல் வீரர் அஹமது லெப்பையின் முயற்சியைக் காண நீர்த்தேக்கத்தைச் சுற்றிவரத்திரண்டிருந்தனர். முதலில் அந்த நீரோட்டத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக அஹமது லெப்பை குளத்தினுள் குதித்துச் சென்று சற்று நேரத்தில் மேலே வந்து தனது சிஷ்யனிடம் வைக்கோல், களிமண், வரல்லகோடு - கபரஸ்ஸ கொடி போன்ற திருத்த வேலைக்குத் தேவையானவற்றைப் பெற்றுத் தரும்படி கேட்டார். அவ்வாறே தேவையான அனைத்தும் சேகரித்துக் கொடுக்கப்பட்டது. மீண்டும் அவற்றை எடுத்துக்கொண்டு குளத்தின் அடித்தளத்திற்கு நீந்திச் சென்றான். அக் காலத்தில் “நாளிசைவட்டில்’ எனப்படும் மணிக்கூட்டின் மூலமாக மூச்சுப்பிடித்திருக்கக் கூடிய நேரம் அளவிடப்படுவதுண்டு. குறிப்பிட்ட நேரம் கடந்து விட்டது. அஹமது லெப்பை இன்னும் வெளியேறவில்லை. அச்சமும் ஆச்சரியமும்கொண்ட மக்கள் இனிப்பிணந்தான் மேலே வரும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் அந்த வாலிபனோ குளத்தின் ஒட்டையை அடைத்தது மல்லாமல் குளத்தின் அடியிற்சிக்கியிருந்த இன்னுமொரு பிணத்தையும் இழுத்துக் கொண்டு மேலே வந்து கரை சேர்ந்தான். கூடியிருந்தோர் ஆச்சரியத்துடன் ஆனந்தக் களிப்பெய்தினர். சந்தோஷத்தால் ஆரவாரஞ் செய்தனர். பின்னர் அந்த நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் உயர்ந்து வருவதையும் அவதானித்தனர். இத்தகு வியக்கத்தக்க சாதனையைக் கேட்டறிந்த மொல்லி கொடை அதிகாரம் அந்த வாலிபன் கேட்கும் பரிசினைவழங்குமாறு கட்டளையிட்டான். ஆனால் அந்த வாலிபனோ, தான் எந்த பரிசினையும் எதிர்பார்க்கவில்லை என்றும் தனது முயற்சியால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுவதால் ஆண்டவனுக்கே துதி
20

கூறுவதாக அமைதியானான். அதன் பின்னர் அந்த நீச்சல் வீரனை அதே ஊரில் குடியேற்றுவதற்கும் அதற்கான நிலபுலன்களை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் அரசனின் ஆணையைப் பெற்றுக் கொண்ட திசாவை அலகல்ல மலைக்குக் கீழே மாலியவத்தைக்கு அருகாமையில் ஒரு பலாமரத்தில் இரும்புக் கண்டாரம் ஒன்றைக் கட்டி தனது ஏவலாளர்களின் மூலம் அதனை அடிக்கச் செய்து அதன் சப்தம் எந்த அளவு தூரத்திற்கு கேட்கப்படுகிறதோ அந்த அளவு நிலத்தை "மரக்கலவத்த” என்ற பெயரிட்டு நீச்சல்வீரன் அஹமது லெப்பைக்கு வழங்கியதோடு அவர் வீடு கட்டி வாழ்வதற்குத் தேவையான சகல உதவிகளையும் கொடுத்து உதவினர். அதனால் அஹமது லெப்பை மாலியத்த - மரக்கலவத்தை என்ற பிரதேசத்தில் தனது தாயாருடன் வந்து குடியேறினார். அங்கிருந்து தனது நிலபுலன்களைக் கவனித்தவாறே தமது மூதாதையரின் வைத்தியத் தொழிலையும் மேற்கொண்டார்.
இதே நீச்சல் வீரர் அஹமது லெப்பை வெதரால “கிம்புல் ஆவக' என்ற நீர்த்தேக்கத்தில் பலர் முயன்றும் கொன்று விட முடியாமலிருந்த ஒரு பயங்கரமான ஆள்கொல்லி முதலையைக் கொன்று மக்களின் அச்சத்தை நீக்கி உள்ளார்.
இவரது மகன் தம்பிக்கண்டு வெதராலை தனது மனைவி மக்களுடன் மரக்கலவத்தைக்கு அருகாமையில் ஹிங்குலோயா ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள ஒவத்தை' என்ற இடத்தில் வீடுகட்டிக் குடியேற்றினார். இதனைத் தொடர்ந்து மேலும் சில முஸ்லிம்கள் அப்பகுதியில் குடியேறத் தொடங்கினர். அதனால் ஆற்றின் எதிர்க்கரை மேட்டு நிலத்தில் தென்னோலையால் வேயப்பட்ட ஒரு பள்ளிவாசலை இன்னுஞ் சிலருடன் சேர்ந்து அமைந்துள்ளார்.
இதிலிருந்து அசீஸ் வைத்தியரின் தந்தை வழியாக வாரிசு பின்வருமாறு அமைந்துள்ளது.
முஹம்மது லெப்பை வெதராளையின் மகன், நீச்சல்வீரர் அஹமது லெப்பை வெதராளை அவரது மகன், அலித்தம்பி வெதராலை அவரது மகன் மஹ்மூது லெப்பை வெதராளை மத்திசம் - அவரது மகன் அப்துல் அஸிஸ் வெதராளை.
21

Page 20
தாய்வழி வாரிசு
அப்துல் அசீஸ் வெதராளையின் தாய் ஆமினா உம்மா. ஆமினா உம்மாவின் தந்தையார், வைத்தியரத்ன முதியான்சேலாகே அஹமது லெப்பை வெதராள, ஆமினா உம்மாவின் தந்தையின் தாயாரும் உடுநுவரை வைத்தியப்
பரம்பரையைச் சார்ந்தவர்கள்.
இவ்வாறாக அசீஸ் வைத்தியரின் குடும்ப பாரம்பரியத்தை நோக்கும் போது அம்மருத்துவ பாரம்பரியம் மிகத் தொன்மை வாய்ந்ததாக உள்ளது. வைத்தியர்களின் கடமைfதியான ஒழுக்கக்கட்டுப்பாடுகள் நிறைந்தவர்களாக அவர்கள் விளங்கினர். மனித இனத்தின் மேம்பாடு மருத்துவளர்ச்சியில் தங்கியுள்ளதால் அக்குடும்பத்தினரின் சேவை வரலாற்று ரீதியானது. 'மக்கள் நாகரிகத்துடன் பல நூற்றாண்டுகள் வாழ்ந்தனரென்றால் இந்த வைத்தியர்கள் அதிசக்தி வாய்ந்த மருத்துவமுறைகளைக் கையாண்டுள்ளனர்” என்பதே அதற்கான முக்கிய காரணமெனலாம். நோயினால் கஷ்டப்படுபவர்களுக்குச் சேவை செய்வதென்றால் அதற்குரிய அறிவியல் ஞானம், தொழில்நுட்பத் திறமை, விவேகத்துடன் சேவையாற்றும் பண்பு என்பனவும் அவர்களிடத்தில் இருந்திருக்க வேண்டும். சமூகத்தில் இன்னல் படுவோரைக் கைதுக்கி விடும் இப்பணியானது இறைபணிக்கு நிகரானது என வைத்திய மூதாதையினர் கூறிவந்துள்ளனர்.
இலங்கையில் பல நூற்றாண்டுகளாக இம்மருத்துவர்கள் உள்ளூர் மூலிகைகளைக் கொண்டும் தமது ஆய்வு அறிவு ஞானத்தைக் கொண்டும் அதிசத்தி வாய்ந்த மருந்துகளைத் தயாரித்து இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மனம் நொந்து தம்மை நாடி வரும் நோயாளியின் குணமறிந்து மனிதாபிமானத்துடன் ஆறுதல் அளிக்க வல்ல சிகிச்சைமுறைகளை இக்காலத்திற் போல் வைத்தியப் பயிற்சி பெற்று தொழில் ரீதியான உழைப்பாக அதனைச் செய்யாது பாரம்பரிய வைத்திய ஏடுகளையும் குடும்ப வைத்திய முறைகளையும் யூனாணி ஆயுர்வேத வைத்திய முறைகளையும் கற்றுத்தேறி வைத்திய நீதிக்கும் நெறிமுறைக்கும் உகந்த வகையில் சேவையாற்றியமையின் காரணத்தினால் இத்தகையோர் மக்களும் மன்னரும் போற்றுமளவுக்கு இந்த நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
இக்காலத்தில் காணப்படும் நவீனமருத்துவப் பயிற்சி முறைகளையோ மருத்துவ ஆலோசனைகளுடன் தயாரிக்கப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்து
22

இலகுவாக மனித சமுதாயத்திற்கு வழங்கக் கூடிய அறிவையோ கண்டும் கேட்டும் அறியாத அக்காலத்து வைத்தியர்கள் நாடிபார்த்தறிந்து - நோய் விசாரித்து சொந்தமாகவே மூலிகைகளைக் கொண்டு தாமே தயாரித்து ஒவ்வொரு தனிநோயாளருக்கும் தேவைப்படுகின்ற ஒவ்வொரு மருந்து வகைகளை உற்பத்தியாக்கி சிகிச்சையளித்தனரென்றால் அவர்களது உயரிய சேவை நோக்கும் மனிதாபிமானமும் உவந்து போற்றப்பட வேண்டியுள்ளதை இக்காலத்துச் சமுதாயம் மறந்து விடுவது முறையன்று.
இன்று வைத்தியத்துறையில் பயிற்சி பெற்று வெளியேறுபவர்கள் வைத்திய ஒழுக்கமுறைகளையும் - சட்டப்பிரமாணங்களையும் - தாம் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணங்களையும் கருத்திற் கொண்டு ஆராய்ந்து பார்த்தால் அதனால் பெற்றுக்கொள்ளக் கூடிய தொழில் வருவாய் - அந்தஸ்து - சமூக நலன் என்பன எந்த அளவுக்கு அமைந்துள்ளன என்பதை ஒப்பியல் முறையில் கண்டு கொள்ள முடியும். வைத்தியப் பட்டப் படிப்பில் ஏற்பட்டுள்ள போட்டி முறைகளையும் இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

Page 21
-
மாவாய்பஸ் ஹிங்ருபோய ராஹிராக் கல்லூரியிள் இடாப்பிங் பதியப்பட்டமுநல் மாணவனைக் கொரவிக்குமுகமாக நடைபெற்றாபவத்தில் சப்ரகமுவ மகாசபை உறுப்பிளர் நியாஸ் - ர-மஜித் அவர்கள் உரையாற்றுபுதையும், நல்லூரி அதிபரும் எனைய பிரமுகர்களும் வீற்றிருப்பாதயும் காணலாம். 1991
ES ২২ ২ క్రై
E.
ইষ্ট చై 拂
E. ইয় ই
Š
 
 

5 இளமையும் கல்வியும்
சிங்கள மன்னர் காலத்தில் இந்த நாட்டின் வைத்தியத் துறைக்கு முன்னோடியாக விளங்கிய வைத்தியக் குடும்பத்தின் பாரம்பரியத்தைச் சேர்ந்த வெதமுஹாந்திரமலாகே மஹ்மூது லெப்பை வைத்தியருக்கும் உடுநுவரை வைத்தியரத்ன முதியான்சேலாகே வெதராலாஹாமிகே அஹ்மது லெப்பை வைத்தியரின் மகள் ஆமினா உம்மாவுக்கும் மகனான அப்துல் அசீஸ் 1908ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ந் திகதி பிறந்தார். இவரது மூத்த சகோதரர் ஹாஜி அப்துல் மஜித் மரைக்கார் 1901 ஆம் ஆண்டு பிறந்தார். அன்னார் 86 வயதில் காலமானார். அப்துல் மஜீத் அவர்களின் மகன் டாக்டர் எம்.ஏ. லதீப்ஹோமியோபதி வைத்தியத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். இவரது வைத்திய நிலையத்தில் பல நூற்றுக்கணக்கானோர் வைத்தியத்துறையில் பயிற்சி பெற்று வெளியேறியுள்ளனர். அப்துல் அசீஸுக்கு இரு சகோதரிகளும் இருந்துள்ளனர். ஹிங்குளோயா ஒவத்தை என்னும் இடத்தில் தமது பாரம்பரிய இல்லத்திலேயே பிறந்தார். குழந்தை சீரும் சிறப்புடனும் வளர்ந்து வந்தது. "விளையும் பயிரை முளையிற் தெரியும்' என்பதற்கொப்ப அன்னை தந்தையரின் அன்பிலும் அரவணைப்பிலும் உற்றார் உறவினரின் அன்புப் பாசத்தாலும் வளர்ந்து வந்த அப்துல் அசீஸ் இளம் வயதிலேயே கல்வி கேள்விகளில் ஆர்வமுடையவராகக் காணப்பட்டார். பெற்றோர் சொற்கேட்டலும் மற்றோருக்கு உதவிகள் புரிவதும் இவரது இளமைப் பருவத்திற் காணப்பட்ட நற்பண்புகளென பலரும் உரைப்பதுண்டு.
இஸ்லாமிய சன்மார்க்க நெறிகளின் கட்டமைப்புக்குட்பட்டு வாழ்ந்த இவரது பெற்றோரைப் போலவே அப்துல் அசீஸும் இளவயதில் சன்மார்க்க நெறிகளுக்கமைய வளர்க்கப்பட்டார். முதன் முதல் ஆரம்பக் கல்வியைக் குர்ஆன் மத்ரஸாவில் ஆரம்பித்தார். தனது மாமனாராகிய அப்துல்றலுறமான் லெப்பை கதீப் அவர்களிடம் பரிசுத்த குர்ஆன் சரீபை ஒதிக் கொண்டதோடு இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களையும் கற்றுக் கொண்டார். மத்ரஸாக் கல்விபயிலும் காலத்தில் வெகு விரைவில் திருக்குர்ஆனை ஓதிமுடித்ததோடு மத்ரஸாவில் கற்பித்துக்கொடுத்த

Page 22
அறபு, தமிழ், பைத்துக்களையும், பாடல்களையும் சன்மார்க்க கிரியைகளுக்காக மனனஞ் செய்ய வேண்டிய துஆக்களையும் போதனைகளையும் மிக எளிதில் கிரகித்துக் கொண்டு மனனஞ் செய்து கொள்பவராகத் திகழ்ந்தார். இதனால் இவரது துணைமாணவர்களுக்கு இவர் பாடஞ் சொல்லிக் கொடுப்பவராகவும் இருந்து வந்துள்ளார்.
மத்ரஸாக் கல்வியை முடித்துக் கொண்ட அப்துல் அஸிஸ் தாய் மொழியான தமிழ் மொழியைக் கற்றுக் கொள்வதில் ஆர்வங் கொண்டிருந்தார். சுயமாகவே தமிழ் மொழி கற்க வேண்டியிருந்தது. அதனால் தனது மாமனாரின் உதவியுடன் ஒரளவுக்கு எழுத வாசிக்கக் கற்றுக் கொண்டார். என்றாலும் அதனால் பூரண பயனைப் பெறமுடியவில்லை எனவே தான் 1921ம் ஆண்டு ஹிங்குளயில் ஆரம்பமான முஸ்லிம் வித்தியாலயத்தில் முதல் மாணவராகக் சேர்ந்து அங்கு தமது தமிழ் மொழிக் கல்வியை ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 13. திரு. சாமுவேல் ஆசிரியரிடம் தமிழ்மொழிக் கல்வியைக் கற்கத் தொடங்கினார். வயது கூடிய நிலையில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கினாலும் அவர் அதனை ஒரு பொருட்டாகக் கொள்ளவில்லை. கல்வியில் ஆர்வமே அதற்குத் காரணமாகும். அத்துடன் வயது கூடியமாணவர் பலரும் அவருடன் சேர்ந்து படித்தனர்.
சிறுவயதிலேயே அவர் தமது பெற்றோரின் மருத்துவ தொழிலின்பால் நாட்டங்கொண்டு அதில் சிரத்தையுங் கொண்டார். மருந்து மூலிகைகளைச் சேகரிப்பது அவற்றைப் பக்குவப்படுத்துவது, எண்ணைமாத்திரைகளைச் செய்வது போன்ற சகல வேலைகளிலும் பெற்றோருக்கு உடந்தையாக இருந்து வந்தார். இத்தகைய செயல்பாடுகளின் மூலம் இவரது மருத்துவப் பணியின் ஆர்வத்தை பெற்றோர் புரிந்து கொண்டனர். அதனால் அத்துறையில் மேலும் பயில்வதற்கும் பயிற்சி பெறுவதற்குமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க அப்துல் அசீஸின் தந்தையார் முன்வந்தார்.
இவர்களது 17வது வயதில் தந்தையாருடன் வைத்தியத் தொழிலைச் செய்து வந்த போது கண்டியைச் சேர்ந்த சேகுமுஹம்மது என்ற சீனடி வாத்தியாரிடம் சீனடி வித்தைகளைக் கற்றுக் கொண்டார். சேகு முஹம்மது வாத்தியார் சீனடி, மல்யுத்தம், கம்படி போன்ற பயிற்சி வகுப்புகளை கண்டி கட்டுகளையில் நடத்தி வந்த போது கண்டியையும் அதனைச் சூழவுள்ள முஸ்லிம்
26

கிராமங்களிலிருந்தும் துணிச்சல் மிக்க முஸ்லிம் வாலிபர்களையே அவர் தெரிவு செய்வது வழக்கம். அவர் அப்பயிற்சி முறைகளை ஒரு தொழிலாகவே செய்து வந்ததனால் மலைநாட்டுப்பிரதேச முஸ்லிம் கிராமங்கள் தோறும் அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் இருந்தனர். கண்டிக்கூடு நடைபெறும் சமயத்தில் சந்தனக் கூடு ஊர்வலத்தின் போது சேகுமுஹம்மது வாத்தியார் தலைமையில் அவரது சிஷ்யர்கள் சீனடி, சிலம்படி, கம்படி எனப்பல பிரிவுகளாகப் பிரிந்து விளையாட்டுக் காட்டிய வண்ணம் ஊர்வலத்தில் செல்லுங்காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அவ்வாறே முக்கியமான முஸ்லிம்களின் வைபவங்களின் போது இத்தகைய ஒத்திகைகள் நடைபெறும். இக்காட்சிகளைக் காண்போர் முஸ்லிம்கள் தற்காப்புக் கருதிப்பெற்றுள்ள இப்பயிற்சியைக் கண்டு அதிசயிப்பது உண்டு. அக்காலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக பொலிஸ் பாதுகாப்பு படையில் சேர்ந்து கொள்வதற்கும் இத்தகைய பயிற்சி முறைகள் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. ஏனெனில் சேகுமுஹம்மது வாத்தியாரே அடிக்கடி பொலிஸ் பயிற்சி பெறுபவர்களுக்கு மல்யுத்தப் பயிற்சியும் அளித்துள்ளார்.
இத்தகைய வித்தைகளைக் கற்ற அப்துல் அசீஸ் அதனைத் தனக்காக
மட்டுமன்றி மற்றவர்களும் பயன்பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்துடன் தமது கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம் இளைஞர்கள் பலரை ஒன்றுதிரட்டி அவர்களுக்குத் தான் பெற்ற வித்தைகளைக் கற்பித்தார். இத்தகைய தற்பாதுகாப்பு பயிற்சி அக்காலத்தில் முஸ்லிம் கிராமங்கள் தோறும் இருந்து வந்துள்ளது. எனவே தனது சொந்தக் கிராமத்தில் வாழும் முஸ்லிம்களும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்வதற்கு இத்தகைய பயிற்சி அவசியமென்பதை உணர்ந்ததனாலேயே அவர் அவ்வாறு செய்ததாகக் கூறிக்கொள்வார்.
இவர் தமது வாலிப வயதை எட்டும்போது சன்மார்க்கக் கல்வி, தாய் மொழிப்பயிற்சி, சீனடி வித்தைபோன்ற பல்வேறு துறைகளிற் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திய போதும் வைத்தியத்துறை சார்ந்த கற்கை நெறிகளிலும் பயிற்சி முறைகளிலும் அவரது கவனம் ஈர்க்கப்பட்டிருந்ததை பிற்காலத்தில் அவர் மேற்கொண்ட கற்கை முறைகளைக் கொண்டு அவதானிக்க முடியும். தமது மூதாதையினர் மேற்கொண்டு வந்த பாரம்பரிய வைத்திய முறைகளுடன் பல்வேறுதுறை வைத்தியங்களிலும் நிபுணத்துவம் பெற வேண்டுமென ஆவல் கொண்டார். சுதேச வைத்தியதுறையில் அத்தகைய நிபுணத்துவத்தைப் பெறவேண்டுமாயின் சிங்களம்-பாலி-சமஸ்கிருதம் போன்ற மொழிகளைக் கற்க
27

Page 23
வேண்டியதன் அவசியத்தையும் அதனால் சித்த ஆயுர்வேத யூனானி வைத்திய முறைகளிற் காணப்படும் பழைய ஏடுகளையும் நூல்களையும் கற்றுத் தோறி கைதேர்ந்த வைத்தியசிகிச்சை முறைகளைக் கையாளலாம் என்றும் அவர் கருதினார்.
அக்காலத்தில் இத்தகைய பயிற்சி முறைகள் பெளத்த விகாரைகளில் பெளத்த பிக்குகளால் நடத்தப்பட்டு வந்தன. இவற்றில் சேர்ந்து கற்றுத் தேறிய பல வைத்தியர்களும் அக்காலத்தில் இருந்தனர். இத்தகைய மொழிப் பயிற்சியை சில முஸ்லிம் வைத்தியர்களும் பெற்றிருந்தனர். பெளத்த விகாரைகளில் கல்வி பயின்ற பல முஸ்லிம் பிரமுகர்கள் அரசியல் சமூக பொருளாதாரத் துறையிலும் முன்னணி வகிப்பதை அப்துல் அசீஸ் அவதானித்தார். அத்தகையவர்கள் சிங்கள மக்களிடையேயும் முஸ்லிம் மக்களிடையேயும் செல்வாக்குப் பெற்றிருந்ததையும் இன ஒற்றுமைக்கும் சமூக ஒருமைப்பாட்டுக்குமான நல்லெண்ணத்தை அவர்கள் ஏற்படுத்தி வந்துள்ளதையும் அறிந்திருந்தார். அசீஸ் வைத்தியரின் இத்தகைய எண்ணங்கள் பிற்காலத்தில் அவரே மத்தியஸ்தராக இருந்து ஏற்படுத்திய சமூகங்களுக்கிடையிலான சமாதான முயற்சிகள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.
போதிமலு விஹாராதிபதியிடம் கல்விப் பயிற்சி
வைத்திய துறையில் நிபுணத்துவம் பெற்ற தமது வைத்தியப் பரம்பரையினரின் நாமத்தை நிலை நாட்ட வேண்டுமென்ற அசீஸ் வைத்தியரின் ஆவலை உணர்ந்து கொண்ட அவரது தந்தையார் தமது வீட்டுக்கு அருகாமையில் தமது குடும்பத்துடன் நல்லுறவுகொண்டிருந்த ஹிங்குல போதிமலு விஹாராதிபதியிடம் தனது மகனை கல்வி பயில அனுப்பி வைத்தார்.
இது பற்றி அசீஸ் வைத்தியர் எழுதிவைத்துள்ள குறிப்பொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “எனக்கு வயது 17ஆக இருக்கும்போது எனது தகப்பனாராகிய மஹ்மூது லெப்பை வெதராளையுடன் சேர்ந்து வைத்தியத் தொழிலைச் செய்து வந்தேன். அத்தோடு கண்டியைச் சேர்ந்து சேகுமுஹம்மது என்பவரிடம் சீனடி கம்படி வித்தைகளையும் கற்றுக் கொண்டேன். அதனை நமது ஊர் வாலிபர்களுக்கு கற்றுக் கொடுத்தேன். இந்தக் காலத்தில் நான் வைத்தியத் துறையில் மேலும் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். எனது விருப்பத்தை
28

எனது தோழர்களுக்குத் தெரிவித்தேன். தோழர்களின் தூண்டுதலினால் எனது தகப்பனார் என்னை பெலிகம்மனை பொத்குள் பிரிவினாவில் சேர்த்தார். நான் அதிற் சேர்ந்து சிங்களம், சமஸ்கிருதம், பாளி ஆகிய மொழிகளைக் கற்றுக் கொண்டேன். பரம்பரையாக இருந்து வந்த முறிவு வைத்திய முறைகளோடு சர்வாங்கரோகம், வாதரோகம், என்பவற்றில் நிபுணத்துவம் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதால் எனது தகப்பனாரின் சிங்கள நண்பரான அக்காலத்து ரட்டே மாத்தாயாவின் தூண்டுதலின் பேரால் பிரபல வைத்திய நிபுணரான ஹிங்குல போதிமலு விகாராதிபதி பூரீ ரேவத சுவாமியின் வைத்தியக் கல்லூரியிற் சேர்க்கப்பட்டேன். இவரது வைத்தியக் கூடத்தில் படித்த அத்தனை பேரும் பெளத்த பிக்குகளும் பெளத்த இளைஞர்களுமாகும். நான் ஒருவன் மாத்திரமே முஸ்லிமாக இருந்தேன். எனது குருவானவர் கடைசிவரை என்னிடம் அளவற்
நம்பிக்கையும் நல்லெண்ணம் கொண்டிருந்தார்.”
இவ்வாறாக அசீஸ் வைத்தியர் மருத்துவக் கல்வியைக் கற்கும் காலத்தில் பாலி, சிங்களம் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்கும் காலத்திலும் தனது ஆசான்களான பெளத்தகுருமாரிடத்தும் சக மாணவரிடத்தும் நட்பும், கெளரவமும் பெற்றுத் திகழ்ந்தார். இவர் மூன்று ஆண்டுகள் சிங்களம், பாலி, சமஸ்கிரதம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேறி பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு வைத்திய துறையில் பயிற்சி பெற்றுள்ளார். இவ்வாறாகத் தமது 25ஆவது வயது வரை தந்தையாருடன் இணைந்து வைத்தியத் தொழிலைச் செய்ததோடு அத்துறைக்கான வைத்தியக் கல்வியையும் கற்றுத் தேறிய அப்துல் அசீஸ் இலங்கையின் புகழ் பெற்ற ஒரு வைத்தியராகத் தன்னை உருவாக்கிக் கொண்ட அதே சமயம் தனது வைத்தியப் பாரம்பரியத்தினருக்கு ம் ஒரு வரலாற்றையும் புகழையும் உருவாக்கிக் கொண்டார்.
29

Page 24
6 வைத்தியத்தில் பிரபல்யம்
“ஓ! உண்மை மனிதனே, நீ வாளைப் போல் கூர்மையுடையவனாக இரு உன் உலகுக்கு நீயே தலை விதியாகவும் இரு”
அல்லாமா இக்பால்
ஹிங்குல போதிமலு விகாராதிபதியும் வாதநோய் நிபுணருமான ரேவத சுவாமிகளின் மருத்துவ பீடத்தில் பயிற்சி பெறுங் காலத்திலேயே பல பிரபல பெளத்த பிக்குமார்களினதும் பெளத்த, தமிழ், முஸ்லிம் பிரமுகர்களினதும் அரசியற் தலைவர்களினதும் அறிமுகத்தைப் பெற்றுக் கொள்ளும் அளவுக்கு இவர் ஒரு கைதேர்ந்த வைத்திய நிபுணராக மாறிக் கொண்டிருந்தார். இவரது வைத்தியத் திறமையை உணர்ந்து கொண்ட ரேவத சுவாமியார் இத்தகைய பிரமுகர்களின் நோய்களைத் தீர்ப்பதற்கு தனது சிறந்த மாணவராகக் கருதப்பட்ட அசீஸ் வைத்தியரை அனுப்பி வைப்பது வழக்கம். அசீஸ் வைத்தியரும் தமது திறமையான சிகிச்சை முறைகளால் விரைவில் நோய்களைத் தீர்த்து வைப்பதால் தனக்கென தனியானதொரு புகழை பெற்றுக் கொண்டதோடு தனது நல்லாசானின் புகழையும் நாடெங்கும் பிரகாசிக்கச் செய்தார். இதனால் 1932ஆம் ஆண்டு வைத்தியப் பட்டமும் சான்றிதழும் பெற்று வெளியேறும் தினத்தன்று இவரது ஆசானால் ஒரு விசேட பெரகராவும் கெளரவமும் ஏற்பாடு செய்து அதில் கண்டி, கேகாலை மாவட்டங்களைச் சார்ந்த சமூக அரசியற்துறை முக்கியஸ்தர்களைச் சார்ந்த சகல சமூகத்தையும் உள்ளடக்கிய முக்கிய பிரமுகர்களை அழைத்து அசீஸ் வைத்தியரை ஊர்வலமாக அழைத்துச் சென்று கெளரவித்தனர். இது பற்றி அசீஸ் வைத்தியர் எழுதிவைத்திருப்பதாவது:
“1932ஆம் ஆண்டு எனது வாழ்க்கையின் முக்கியமானதோர்
ஆண்டாகும். நான் எனது மருத்துவப் பயிற்சியை முடித்துக் கொண்டு சான்றிதழ் பெற்று வெளியேறும் போது எனது குருவான ரேவத சுவாமி அவர்கள் எனக்காக
30

ஒரு பெரகரா ஊர்வலத்தை ஏற்பாடு செய்து என்னை அந்தப் பெரகராவில் ஊரறிய அழைத்துச் சென்று கெளரவித்த மகிமையை என்னால் மறக்க முடியாது. அன்று எடுத்த புகைப்படத்தில் கண்டியைச் சேர்ந்த பல பிரமுகர்கள் இருப்பதைக் காணலாம். ஒரு முஸ்லிமுக்காக சிங்கள மக்களால் ஏற்பாடு செய்த இந்தப் பெரகரா சரித்திரத்தில் இடம் பெற வேண்டும். இப்பிரதேசத்தின் பெளத்த மதத்தின் சங்க நாயக்கரும், வாத நோய் நிபுணரான எனது குரு போதிமலு விகாராதிபதியும் பெளத்த பிக்குகளும், ஊர்மக்களும், சொந்தக்காரர்களும், குடும்பத்தவர்களும் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டு என்னை கெளரவித்தனர்.” இவ்வாறு பெரஹரா நடத்தி ஒரு முஸ்லிமை கெளரவித்தது இதுவே முதற் தடவையாகும். இந்தப் பெரஹரா ஊர்வலத்தை ஒழுங்கு செய்து நடத்தி வைத்த யாருமே இன்று உயிருடனில்லை. ஆனால் அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றும் அதனை நினைவுபடுத்துகிறார்கள். அவர்களைக் காணும் போது நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். “அவர்கள் சிங்களவர்களாக இருந்தாலும் முஸ்லிம்களை கண்ணியப்படுத்திய பரம்பரையினரல்லவா” என்று நான் நினைத்து சந்தோசப்படுவேன்.
நான் ஆரம்பத்தில் பிரபல்யம் பெறுவதற்கும் எனது குருவானரேவத சுவாமியே காரணமாகும். நான் அவரிடத்தில் மருத்துவப் பயிற்சி பெற்ற போது, கொழும்பில் அக்காலத்தில் வாழ்ந்த பிரபல்யம் மிக்க தனவந்தரான பி.பி. உம்பிச்சி முதலாளி வாதநோயால் பீடிக்கப்பட்டு பல வைத்தியர்களாலும் சுகமாக்கிக் கொள்ள முடியாமல் கடைசியாக எனது குருவின் பேர்போன சிகிச்சைகளைக் கேள்வியுற்று அவரிடம் வைத்தியத்துக்காக வந்தார். அவரைச் சோதித்துப் பார்த்த எனது குருவானவர் அவருக்குச் சில காலத்துக்குத் தொடர்ச்சியாக வைத்தியஞ் செய்ய வேண்டும் என்றும் அதற்காக அவரிடம் மருத்துவம் பயிலும் மிகக் கெட்டித்தனமான ஒரு மாணவனை ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். அந்தச் சிகிச்சைக்கு எனது குருவானவர் என்னையே சிபார்சு செய்தார். என்னிடம் அதனைத் தெரிவித்த போது நான் ஆச்சரியமடைந்தேன். அப்போது நான் மிகத்தயக்கத்தோடு எனது குருவை நோக்கி, “என்னைவிட மூத்தவர்களும் நீண்டகாலமாகத் தங்களுடன் சிகிச்சை அளிப்பவர்களும் இருக்கும் போது எதற்காக என்னைத் தெரிவு செய்தீர்கள் எனக் கேட்டேன். அவர் எனக்குச்
சொன்னார்.'அப்துல் அசீஸ் நீங்கள் வைத்திய சிகிச்சை முறையில் மற்றவர்களை
31

Page 25
“Ho-osoɛsɛsiriwsaes? 'Ipse suae qisn'gl, sult riņāsựwisse sirol-ijās sai "월남하 확월확법 하는확TTT, wur高等學高n學的星도長mu南道도 *&#upt활에 활활書FIF學역nn學mm Eu통改定軍官. SYYLLL LLLLSLLKYYYKL ZTYYKZYYzK SLlLK KSLLS KKKKK LLLLK KZKKK KK
 

விட மிக திறமையானவர் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். இந்த முதலாளியின் நோயை நீங்கள் நிச்சயமாக குணப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதனால் எனது வேண்டுகோளை மறுக்காமல் இதனை ஏற்றுக் கொள்ளுங்கள். தேவையேற்படும் போது எனது ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று கூறியது மாத்திரமன்றி "ஒரு காலத்தில் நீங்கள் என்னை விடச் சிறந்த வைத்தியனாக வர முடியுமென்றும் எனக்கு உற்சாகம் ஊட்டினார்." அன்னாரின் வேண்டுகோளைத் தவிர்க்க முடியாமல் நான் அந்தப் பணியை மேற்கொண்டேன். அடிக்கடி கொழும்புக்குச் சென்று உம்பிச்சு முதலாளிக்கு சிகிச்சையளித்து மிகக் குறுகிய காலத்தில் அவரது நோயைக் குணப்படுத்தினேன். உம்பிச்சு முதலாளிக்கு சுகம் கண்டதும் பரிசுப் பொருள்களுடன் வந்து எனது குருவைச் சந்தித்து நன்றி கூறி எனது சிகிச்சைத் திறமை பற்றியும் குணநலன்கள் பற்றியும் எடுத்துக் கூறவே, நான் எனது குருவின் பாராட்டுதலையும் நல்லாசிகளையும் பெற்று கொண்டேன்.
என்மீது அளவற்ற அன்பு கொண்ட உம்பிச்சு முதலாளி எனக்கு எதை வேண்டுமானாலும் செய்ய முன் வந்தார். கொழும்பில் நான் வைத்தியஞ் செய்வதற்காக சொந்தமாகவே ஒரு கட்டடத்தைத் தர முன்வந்தார். அப்போது நான் கொழும்பில் எனக்கு எந்தச் சொத்தும் தேவையில்லை என்றும் எனது தகப்பனாரும் அப்பா- பாட்டன்மாரும் செய்து வந்த அதே வைத்தியத் தொழிலை மேலும் திறம்பட எனது சொந்த ஊரிலே செய்ய விரும்புகிறேன் என்று கூறினேன். நான் அவரது அந்திமகாலம் வரை அவரின் அத்தியந்த நண்பராகவும் குடும்ப வைத்தியராகவும் விளங்கி வந்தேன். கொழும்பில் அவருக்குத் தெரிந்த முக்கியபிரமுகர்களுக்கெல்லாம் என்னை அறிமுகப்படுத்தியதனால் நான் பலரது குடும்ப வைத்தியராகவும் இருந்து வந்துள்ளேன். உம்பிச்சு முதலாளிக்குக் பிள்ளைப் பாக்கியம் இல்லாத காரணத்தினால் கொழும்பில் அவருக்கிருந்த பெறுமதியான சொத்துக்கள் பலவற்றை தர்மஸ்தாபனங்களுக்கு உயில் எழுதிக் கொடுத்த போதும் நான் அவரது எந்தச் சொத்துக்கும் ஆசைப்படவில்லை."
இவ்வாறாக அப்துல் அசீஸ் வைத்தியர், மனிதாபிமானம், வைத்திய ஒழுக்கக் கட்டுப்பாடு, சீர்தூக்கி ஆராய்ந்து செயலில் இறங்குதல் போன்ற உயரிய இலட்சியங்களுடன் தமது வைத்தியத் தொழிலை ஆரம்பித்துள்ளதை அவதானிக்கலாம். தமது வைத்தியத்துறைப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதே
33

Page 26
அவரது முதலாவது குறிக்கோளாக அமைந்திருந்தது. மேலைநாட்டு வைத்திய முறைகாரணமாக மந்த நிலை அடைந்து வந்து முஸ்லிம் மூதாதையரின் பாரம்பரிய வைத்திய முறைகளைப் பாதுகாப்பதற்காகவும் சுதேச வைத்திய முறையில் இருந்து வந்த செல்வாக்கை இழக்கச் செய்யாமல் இருப்பதற்காகவும் அத்துறை சார்ந்த பல்வேறு ஆய்வுகளையும் பயிற்சிகளையும் அவர் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள போர்த்துக்கேய ஒல்லாந்த, ஆங்கில, ஆட்சிக்காலங்களில் பெற்று வந்த முஸ்லிம் வைத்தியத் துறையின் செல்வாக்கை இருபதாம் நூற்றாண்டின் நவீன விஞ்ஞான யுகத்தில் புதுப்பொலிவுடன் அறிமுகஞ் செய்து வைப்பதும் அவரது இலட்சியங்களில் ஒன்றாக கருதப்பட வேண்டியுள்ளது. தமது மூதாதையரின் வழி வந்த பாரம்பரிய வைத்தியக் குடும்பத்தினர் பலர் படிப்படியாக அத்துறை சாராத வேறு தொழில்களில் நாட்டங் கொண்டிருந்த வேளையில் தான் அசீஸ் வைத்தியர் அத்துறைக்கு புதியதொரு திருப்பத்தைக் காண முயன்றுள்ளார். அரசின் ஆதரவுடன் சுதேச வைத்திய முறைகளான ஆயுர்வேத -யூனாணி வைத்திய முறைகளிற் பயிற்சியும் வைத்தியசாலை வசதிகளும் ஏற்படுவதற்கு முன்னரே அத்துறையில் பல்வேறு பிரிவுகளில் மிகச் சிறந்த வைத்தியராக விளங்கி சுதேச வைத்தியத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதில் முன்னின்று வைத்தியப் பெருந்தகைகளில் ஒருவராக அசீஸ் வைத்தியரும் இடம் பெற்றுள்ளார் என்றால் அது மிகையாகாது. இதற்காக அவர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்த காலத்தில் கூட அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சர்வாங்க நோய் நிபுணராகவும் - வாதநோய் நிபுணராகவும் முறிவு வைத்திய நிபுணராகவும் இலங்கையில் புகழ் பெற்று விளங்கிய இவரை “மாவனல்லை அசீஸ் வெதமஹத்தயா’, ‘முறிவு வைத்தியர் அசீஸ் வெதமஹத்தயா” “பரியாரி மாமா” என்றெல்லாம் தாம் பிறந்த மாவனல்லைக்கு சிறப்பும் புகழும் பெறத்தக்க வகையில் தன் குடும்பத்தோடு மாத்திரமன்றி தன்னோடு வாழ்ந்த மக்களுக்கும் அப்புகழ் உரித்தாகும் வகையில் பணியாற்றினார். அப்பணியினிைப் புனிதமானதாகவும் மேற்கொண்டார்.
இருபதாம் நூற்றாண்டுக்கு ஏற்புடையதாகப் பாரம்பரிய வைத்திய முறைகளை மாற்றியமைத்துக் கொண்ட ஒரு சில வைத்தியர்களுள் அசீஸ்
வைத்தியரும் ஒருவராவார். இக்காலத்தில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சியும் அதனால்
34

மக்கள் மத்தியில் பிரதிபலித்த சுத்தம், சுகாதாரம், சுகாதாரக்கல்வி, நோய்க்காரணிகள், நோய்தடுப்பு, தொற்று நோய்கள் பரவுதல் போன்ற பல்வேறு அம்சங்களையும் தொலைக்காட்சிகள், விவரணச் சித்திரங்கள், சுகாதாரப் பகுதியினரால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள், தொலைத்தொடர்பு சாதனங்களின் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் என்பவற்றால் மக்கள் பெற்றுக் கொண்டிருந்த அறிவு வளர்ச்சிக்கேற்பவும் தமது சிகிச்சை முறைகளை மாற்றியமைத்துக் கொண்டார். இக்காலத்தில் மக்கள் தாமாகவே முன் வந்து மிக எளிதிற் பெறக்கூடிய மருந்துவகைகளைக் கையாண்டு சாதாரண நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளக் கூடிய அளவுக்கு மருத்துவ அறிவு வளரத் தொடங்கியது. அதற்கேற்றாற் போல சுதேச மேல் நாட்டு மருந்துகளும் அவற்றிற்கான விளம்பரங்களும் “பார்மஸி’ எனப்படும் மருந்து விற்பனை நிலையங்களும் தோன்றின. இவற்றையெல்லாம் அறிந்து கொள்வதற்கு முன்னர் "வைத்தியரே சகலமும்” என்ற நிலையில் வாழ்ந்த மக்கள் தாமும் சில நோய் நிவாரணிகளைப் பற்றி அறிந்து வைத்திருந்தனர்.
1937ம் ஆண்டு ஏற்பட்ட மலேரியாக் காய்ச்சல் பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பலிகொண்ட போது அந்நோய் நிவாரணத்துக்கும் நுளம்புகளை அழிப்பதற்கும் ‘குயினைன்’ என்ற மேற்கத்தைய மருந்தை அறிமுகஞ் செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் சுதேச வைத்தியர்களின் நவீன வைத்தியத்துறைக்கு ஒரு வழி காட்டியாக அமைந்தது. இத்தகைய நவீன வைத்திய முறைகளிற் காணப்பட்ட சில உத்திமுறைகளையெல்லாம் அசீஸ் வைத்தியர் மிக அவதானத்துடன் பாரம்பரிய வைத்திய முறைகளுடன் இணைத்துக் கொள்வதில் கண்ணுங்கருத்துமாக இருந்தார்.
மேற்கத்தைய வைத்தியர்கள் எவ்வாறு தமது 'டிஸ்பென்சரிகளை’ அமைத்துக் கொண்டனரோ அவ்வாறே தனது மருத்துவ மனையையும் மாற்றியமைத்தார். தாயாரிக்கப்பட்ட மருந்து வகைகளை மக்களுக்கு உடனுக்குடன் பெறக்கூடிய வகையில் மருந்து போத்தல்கள், குப்பிகள், டப்பாக்கள் என்பவற்றில் பழுதுபடா வண்ணம் தமது டிஸ்பன் சரியில்
வைத்திருந்தார். முறிவு, காயம், கட்டிகள் போன்றவற்றை சரியான முறையில்
35

Page 27
அறிந்து வைத்தியஞ் செய்வதற்காக தனது அனுபவரீதியான நாடி பரீட்சித்து கையினால் அசைந்துணர்ந்து கொள்வார். மனித உடற்கூறு சம்பந்தமான படங்கள் மனித எலும்புகள், வைத்திய ஏடுகள் போன்றவைகளும் தனது டிஸ்பென்ஸரியில் வைத்திருந்தார். அதே நேரத்தில் தமது பாரம்பரிய வைத்தியத்திற்கு இவற்றால் எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் சிகிச்சைகளைச் செய்து வந்தார். பழைமையும் புதுமையும் கலந்து இத்தகைய மருத்துவ சிகிச்சைகளிலும் வைத்தியர் நோயாளருடன் கலந்துரையாடி மனிதாபிமானத்துடன் சிகிச்சைகளை அளிக்கும் முறையிலும் மக்கள் நம்பிக்கை கொள்ளத் தொடங்கினர்.
அசீஸ் வைத்தியர் அத்துறையில் பிரகாசிப்பதற்கு மக்கள்பால் அவர் கொண்டிருந்த அருங்குணங்களே காரணமெனலாம். யாருடனும் எளிமையாகவும் அன்பாகவும் பழகும் அதே நேரத்தில் கல்வி ஞானமுள்ளோரை எப்பொழுதும் மதித்துப் போற்றும்தன்மையும் அவரிடம் இருந்தது. கல்வி ஞானத்தை யாரிடம் பெற முடியுமோ அவரிடம் சென்று தனக்குத் தேவையான அறிவுரைகளைப் பெற்றுக் கொள்வார். இதற்கு உதாரணமாக ஒன்றைக் கூறலாம். அக்காலத்தில் “சமூகநோய்’ எனக்கூறப்பட்ட பாலியல் நோய்களுக்குச் சிகிச்சையளிக்க வல்லவரொருவர் இருந்தாராம். அவர் இந்தியாவில் தமிழ்நாடு காலக்காடு ஜில்லாவைச் சேர்ந்தவர். பாலியல் வைத்திய நிபுணர் நம்பிப் பண்டிதர் என்பது அவரது பெயர். இதனைக் கேள்விப்பட்ட அசீஸ் வைத்தியர் அவரைத்தேடிச் சென்று அங்கு பல நாட்கள் தங்கியிருந்து அவரிடம் அதற்கான சிகிச்சை முறைகளைக் கற்றுத் தேறினார். அதன் இரகசியத்தை அசீஸ் வைத்தியர் பிற்காலத்தில் இவ்வாறு கூறுவார். “பாலியல் நோய் குணப்படுத்த முடியாத நோய் எனக்கருதப்பட்டது. அதனால் அத்துறையில் பயிற்சி பெற்ற சுதேச வைத்தியர் எவரும் எனக்குத் தெரிந்த வரை இந்நாட்டில் இருக்கவில்லை. இன்றும் அதனை “எயிட்ஸ்’ எனக்கூறி அதற்கு சிகிச்சை முறைகள் இல்லையென வைத்திய உலகம் திணரிக்கொண்டுள்ளது. எனினும் நான் பெற்ற பயிற்சியினால் இத்துறையில் பலரது நோய்களைக் குணப்படுத்தியுள்ளேன். இது நோயாளியின் இரகசியத்தைப் பேண வேண்டிய ஒரு சிகிச்சை முறையாகும். வைத்தியப் பிரமாணங்களில் நோயாளியின் இரகசியத்தைப் பேணுவதும் முக்கியமாகும். நான் வைத்தியத் துறையில் பிரகாசிப்பதற்கு இத்தகைய சிகிச்சை முறையும் ஒரு முக்கிய காரணமாகும்.”
36

அசீஸ் வைத்தியர் இந்தப் பயிற்சியைப் பெற இந்தியா சென்ற சமயத்தில் அந்த நாட்டின் வைத்திய நிபுணர்கள் பலருடன் தொடர்பு கொண்டிருந்தார். அதனால் இலங்கையில் பெற முடியாத பலமருந்து வகைகளை அவர்களிடமிருந்து கேட்டறிந்தவைகளை தானே தயாரித்து பரிகாரஞ் செய்துள்ளார். அத்தகைய வைத்தியர்கள் இலங்கைக்கு வரும் போதெல்லாம்
அப்துல் அசீஸ் வைத்தியரைச் சந்திப்பது வழக்கம்.
அசீஸ் வைத்தியரின் மூதாதையரின் காலத்தில் இலங்கைக்கு விஜயஞ் செய்த இமாலய மலைச்சாரலைக் சார்ந்த வைத்திய முனிவர் ஒருவர் இவரது பாட்டனாருக்குக் கூறியதாகக் குறிப்பிடப்படும் ஒரு குறிப்பில் பின்வருமாறு எழுதியுள்ளார். “இலங்கை நாட்டின் சிறுநீர்கழிக்கக் கூட ஓரிடத்தைதேடிப்பிடிப்பது கஷ்டமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் நோய் தீர்க்கும் மருந்துகளுக்குத் தேவையான மூலிகைகளையே காண்கிறேன். சூழலினால் அசுத்தமுறா வண்ணம் இந்த மூலிகைகள் பாதுகாக்கப்பட்டால் இந்த நாட்டு மக்களுக்கு இலகுவில் நோய் தொற்றிக் கொள்ளாது இலங்கை மக்கள் சுகதேசிகளாக வாழ முடியும்” என்றாராம்.
அசீஸ் மருத்துவ மனை
கொழும்பு கண்டி பிரதான வீதி, 57வது மைல்கல்லுக்கு அருகாமையில் அமைதி தாண்டவமாடும் ஓர் இடம். ரொம்பவும் அமைதி, நெடுங்சாலைக்கு முன்னால் ஒரு வயல் வெளி, அதற்கு எதிர்ப்பக்கமாக கொழும்பிலிருந்து கண்டி நோக்கி வரும் போது இடது பக்கத்தில் ஒரு மேட்டு நிலம். அதற்குள்ளே தான் (பிற்காலத்தைய) மருத்துவமனை அமைந்துள்ளது. பண்பொழுக அதற்குள் அமர்ந்திருப்பார் அசீஸ் வைத்தியர். கட்டுக்கட்டாகத் தமது மூதாதையினரும் தானுமாகச் சேகரித்த வைத்திய ஒலைச்சுவடிகளும் பழைமை வாய்ந்த நூல்களும் ஒரு பக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இன்னோர் பக்கத்தில் சிதைந்த, காய்ந்த, மனித எழும்புக் கூட்டின் பகுதிகள் பக்குவமாக வைக்கப்பட்டிருக்கும். உடனடிச் சிகிச்சைக்காகத் தயாரித்து வைக்கப்பட்ட மருந்து வகைகள், எண்ணெய்கள், சூரணங்கள் என்பன போத்தல்களிலும் குப்பிகளிலும், டப்பாக்களிலும், அடுக்கடுக்காக தட்டுத்தட்டாக அலுமாரிகளில் வைக்கப்பட்டிருக்கும். பிரதான பாதைகளிலிருந்து வாகனங்கள் செல்லக் கூடிய
37

Page 28
இன்னுமொரு பிரத்தியேகப் பாதை அவரது வீடு வரை செல்லும். அங்கிருந்து சில படிகள் இறங்கினால் இந்த மருத்துவமனை. மாவனல்லையிலிருந்து எவரும் சிரமமின்றி பஸ்ஸிலோ, காரிலோ நடந்தோ மருத்துவமனையைச் சென்றடையலாம். வைத்திய சாலையின் சுற்றாடல் புனிதமானது. உள்ளே செல்லும் முன்னரே தென்னை மரங்களும் செங்குரும்பை மரங்களும் மருந்துச் செடிகளோடு மலர்ச் செடிகளும் இளந்தென்றல் காற்றில் ஆடி அசைந்த வண்ணம் வந்தாரை வாழவைப்பது போன்று காட்சிகள் அளிக்கும். மருத்துவமனைக்குட் புகுந்தால் வைத்தியரின் இன்முகமும் அங்கு தவழ்கின்ற மருந்து வகைகளின் நறுமணமும் ஒன்று சேர்ந்து நோயாளியின் வருத்தத்தில் ஒரு பகுதியைக் குணமாக்கி விடும். மிகுதியே வைத்தியரின் பரிகாரமாகும்.
கல்விமான்கள்- செல்வந்தர்கள் - சாதாரண பொது மக்கள் எல்லோருமே வைத்தியர் முன் சமமானவர்கள். எத்தனை ஆயிரம் பேர்தான் அந்த மருத்துவ மனைக்குள் ஏறி இறங்கியிருப்பார்கள். வைத்தியத்திற்கு விலைபேச முடியாது. பெற்றால் சன்மானம் இன்றேல் இலவசம் இப்படித்தான் அசீஸ் வைத்தியரின் மருத்துவ மனை இயங்கிவந்தது.
அண்மைக்காலத்தில் அவரது மகனால் திருத்திக் கட்டப்பட்ட புதிய இல்லமும் அந்த மருத்துவ மனையுடன் இணைந்ததாக அமைந்துள்ளது. காலையில் எழுந்து கடமைகளை முடித்துக் கொண்டு "சுபுஹ்” தொழுகையை முடித்த பின்னர் திருக்குர்ஆனின் சில பகுதிகளைப் பாராயணஞ் செய்வார். இது அவரது நாளாந்தப் பழக்கத்தில் ஒன்று. அப்பொழுதும் அவசர நோயாளிகள் வாசற்படியிற் காத்து நிற்கின்றனர். பின்னர் இயந்திரமாக இயங்க வேண்டியதுதான். அவசர சிகிச்சை என்றால் அதிகாலை, ஜாமம் என்ற வித்தியாசம் இன்றி இயங்குவார். இவ்வாறாக இயந்திரமாகச் சேவையாற்றிய ஒரு காலம் அசீஸ் வைத்தியருக்கு இருந்தது; இத்தனைக்கும் இவரது சிகிச்சை முறைகளில் மக்கள் கொண்டிருந்த பெரும் நம்பிக்கையே காரணமெனலாம்.
இவரது தற்போதைய மருத்துவ நிலையம் அமைக்கப்படுவதற்கு முன்னர் தூர இடங்களில் இருந்து வருகின்ற கடுமையான முறிவு நோய், வாதநோய்கள் பலவற்றிக்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்க வேண்டிய பொறுப்பும் இவருக்கு இருந்து வந்தது. அத்தகைய கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக கண்டி ரோட்டில் நாதெனிய என்ற இடத்தில்
38

சிறியதொரு ஆஸ்பத்திரியும் நிறுவியிருந்தார். கடுமையான நோய் பீடித்தவர்களும் முறிவு நோயாளர்களும் இங்கு வசதியாகத் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுச் சென்றுள்ளனர். இது பற்றி அசீஸ் வெதமஹத்தயா இவ்வாறு கூறுகிறார்.
“இக்காலத்தில் பாலியல் வியாதிக்கு என்னிடம் கைகண்ட மருந்து இருந்தது. அது நான் இந்தியாவில் எஸ். நம்பிப்பாண்டிய வைத்திய நிபுணரிடம் கற்றுக் கொண்டதாகும். இலங்கையில் இத்தகைய வைத்தியம் என்னிடம் இருப்பதை அறிந்து பலர் இந்த வைத்தியசாலை வார்ட்டில் தங்கியிருந்து வைத்தியம் பெற்றுள்ளனர். அவர்களுட் பலர் பெருஞ் செல்வந்தர்களாகவும் இருந்தனர். பிற்காலத்தில் சமூக சேவை அரசியல் என்பவற்றில் நான் ஈடுபடுவதை மக்கள் விரும்பினதால் அத்தகைய ஒரு வைத்திய சாலையைத் தொடர்ந்து நடத்த முடியாமற் போயிற்று. அதை நான் தொடர்நது நடத்தியிருந்தால் நல்ல வருமானம் கிடைத்திருக்கும். என்றாலும் மக்கள் நலன் கருதி சமூக அரசியல் சேவைகளில் ஈடுபடலாயினேன். இப்பொழுது எனது வீட்டுக்கருகாமையில் உள்ள இந்த டிஸ்பன்ஸரியும் கூட சில சகாப்தங்களாக ஒரு சிகிச்சை நிலையமாக மட்டுமன்றி பல சமூக கிராம அபிவிருத்திச் சேவைகளுக்கும் குடும்ப சமூக விவகாரங்கள் காணிப்பிரச்சினைகள் போன்ற பல முக்கிய பிரச்சினைகளைப் பேசித்தீர்ப்பதற்குமான ஒரு மத்திய நிலையமாகவும் உபயோகித்து வந்துள்ளேன்.”
மஹ்மூது லெப்பை வெதராளை மத்திசம்
அசீஸ் வைத்தியர் தனது தந்தையாரான “மஹ்மூது லெப்பை வெதராளை மத்திசம்’ என்ற தலைப்பில் பின்வருமாறு இரு முக்கிய சம்பவங்களை எழுதி வைத்துள்ளார். இதில் 1886ஆம் ஆண்டு பளணையில் ரயில் தடம்புரண்டதால் மஹ்மூது லெப்பை எவ்வாறு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளித்துள்ளார் என்பதைக் குறிப்பிடும் ஒரு சம்பவமும், 1915ல் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது மராட்டியர்களுக்கு எங்ங்ணம் உதவினார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
1886ம் ஆண்டு கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று கொண்டிருந்த ரயில் வண்டி ஒன்று எனது பெற்றோர் வாழ்ந்து கொண்டிருந்த ஒவத்தை
39

Page 29
கிராமத்திற்குப் பின் பக்கமாக உள்ள பலன மலைப்பகுதியில் பீலி பாய்ந்து தடம் புரண்டதனால் பல பிரயாணிகள் காயமுற்றனர். பலருக்கு எலும்பு முறிவுகளும் ஏற்பட்டிருந்தன. அப்பகுதி மக்களுக்கு எனது தந்தையாரின் முறிவு வைத்தியம் பற்றி நன்கு தெரியும். அதனால் அந்தக் கிராமவாசிகள் முறிவு ஏற்பட்ட சிலரைத் தூக்கிக் கொண்டு எனது தந்தையாரிடம் வந்தனர். முறிவு வைத்தியத்துறை நிபுணரான எனது தந்தையார் அவர்களைத் தனது வீட்டிலேயே வைத்து முறிவுகளைத் தனது கையால் அசைத்துச் சரிப்படுத்தி பச்சிலை மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளித்துள்ளார். இவ்வாறு காயமடைந்தவர்களில் சில ஆங்கிலேயர்களும் இருந்தனர். மூன்று நாட்களில் குணப்படுத்தி பின்னர் அதற்குத்தேவையான எண்ணெய்களையும் பூசி-மருந்தென்ணெய்களைக் கொடுத்து அனுப்பிவைத்தாராம். இது பற்றி அக்காலத்தில் வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையொன்றில் மஹ்மூது வெதராளையின் நிபுணத்துவம் பற்றியும் எழுதப்பட்டதாம். அப்பத்திரிகையின் பிரதியொன்று என்னிடமும் தந்திருந்தார்.”
1915ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது எனக்கு வயது ஏழு. அப்போது எனது தந்தையாரான மஹ்மூது லெப்பை வைத்தியர் நாவலப்பிட்டியில் ஒருவருக்கு ஏற்பட்ட எலும்பு முறிவுக்காக வைத்தியஞ் செய்யச் சென்றிருந்தார். இனக்கலவரத்தின் காரணமாக நாங்களெல்லோரும் கவலையோடிருந்தோம். ஹிங்குளோயாவிலிருந்து கடுகண்ணாவைக்குச் சென்று அங்கிருந்து ரெயிலில் தான் நாவலப்பிட்டிக்குச் செல்ல வேண்டும். வரும்போதும் அப்படித்தான் வர வேண்டும். இராணுவச் சட்டமும் அமுல் செய்யப்பட்டது. வாகனங்கள் மிகக் குறைவாக இருந்தன. அதனால் எனது தந்தையார் நாவலப்பிட்டிக்கு அரிசி ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு மாட்டு வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவ்வாறு வரும் போது அவரிடத்தில் பல மருந்துகள் அடங்கிய ஒரு மருந்துப்பை இருந்தது. இடையில் மராட்டிய இராணுவ வீரர்கள் இவரைப் பரிசோதித்து மருந்து வகைகள் இருப்பதால் சந்தேகங் கொண்டு இவரைப் பொலிஸில் ஒப்படைத்தனர். மறுநாள் கண்டி நீதிமன்றத்தில் இவர் ஆஜர் செய்யப்பட்டார். இதனைக் கேள்வியுற்ற இவரிடம் வைத்தியம் பெற்றுக் கொண்டிருந்தவர் ஒரு சட்டத்தரணியை ஏற்பாடு செய்து, மஹ்மூது லெப்பை ஒரு முறிவு வைத்தியர் என்றும் அவர் எனக்கு வைத்தியஞ் செய்வதற்காகவே வந்தவரென்றும் அவரிடம் இருந்தவை மருந்து மூலிகைகள் தான் என்றும் தானே சாட்சியங் கூறினான். இதனை அடுத்து எனது தந்தையார் விடுதலையானார்.
Alsh

அவர் விடுதலை செய்யப்பட்டபோது, நீதிபதி, நீர் முறிவு வைத்தியரானபடியினால் மாராட்டிய வீரர்களுக்கு முறிவுகள் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு வைத்தியஞ் செய்யும் படியும் கேட்டுக் கொண்டார். இதனால் மாவனல்லைப் பகுதியிலுள்ள மராட்டியர்கள் பலர் எனது தந்தையாரிடம் வைத்திய உதவியை மட்டுமன்றி அவர்களின் சில உணவுத் தேவைகளுக்கும் உதவி செய்து சினேகமாகி இருந்ததனால் அவர்கள் எமது பள்ளி வாசல் உட்பட முஸ்லிம்களுக்குப் பல வகைகளிலும் பாதுகாப்பளித்தனர். சில வேளைகளில் அவர்களது உணவுக்காக இறைச்சித்தட்டுப்பாடு ஏற்பட்டால் எனது தகப்பனார் மான், மரை, முயல் போன்றவற்றை வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுப்பார். மராட்டியருடன் ராணுவத்தில் முஸ்லிம்களும் இருந்தனர். அவர்களுக்கு ஹலாலான முறையில் அறுக்கப்பட்ட இறைச்சிகளைக் கொடுப்பார்.
இக்காலத்தில் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பழவகைகள் வரும் அவற்றில் சிலவற்றை எங்களுக்கும் தருவார். அவர்கள் தந்த பழவகை விதைகளை எனது தகப்பனார் தோட்டத்தில் நாட்டியதால் புதுவிதமான மாமரம், தூரியான்மரம் போன்றவை எமது தோட்டத்தில் வளர்ந்து இன்று வரை நாம் அவற்றினால் பிரயோசனம் பெற்று வருகிறோம்.
41

Page 30
7
கொழும்பு நகரில் மருத்துவசேவை
அசீஸ் வைத்தியரின் பிரபல்யமான வைத்திய சேவையின் நிமித்தம் கொழும்பு நகரிலும் சூழவுள்ள வெளியூர்களிலுமுள்ள முக்கியமான பிரமுகர்களின் வைத்திய சேவைக்கான அழைப்பை இவரால் நிராகரிக்க முடியாத அளவுக்கு நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கின. இதனால் அடிக்கடி தனது சொந்த டிஸ்பன்சரியை மூடி விட்டு வெளியிடங்களுக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்படலாயிற்று. இவ்வாறு செல்வதால் இவரைத் தேடி மாவனல்லைக்கு வருவோருக்குப் பல கஷ்டங்களுக்கு உள்ளாக வேண்டியேற்பட்டது. இதனைப்பற்றியும் அவர் பின்வருமாறு எழுதி வைத்துள்ளார்.
“என்னோடு முஹப்பத்தான குடும்பங்கள் வெளியூர்களிலும் இருந்தன. அவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்கள, தமிழ் குடும்பங்களுமாகும். நீதிபதிகள் வக்கீல்கள், மந்திரிமார்கள் கூட இருந்தார்கள். அவர்களது வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு “நீங்கள் எனது வைத்திய மனைக்கு வந்தால் தான் சிகிச்சை செய்ய முடியும்” என்று கூறுமளவிற்கு எனக்கு தைரியம் இருக்கவில்லை. அவர்களது வீடுகளுக்குச் சென்றுசிகிச்சை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவே தனது வாழ் நாளிற் பெரும் பகுதி பிரயாணம் என்றும் வெளியூரென்றும் செலவாகியது. இதனால் கொழும்பை மத்தியாகக் கொண்டு கொழும்பிலுள்ளவர்களுக்கும் கொழும்பைச் சூழவுள்ளவர்களுக்கும் வாரத்திற்கு ஒரு நாளில் டிஸ்பென்சரி ஒன்று அமைத்து வைத்தியஞ் செய்வதென முடிவு செய்தேன். ஒவ்வொரு திங்கட் கிழமையும் கொழும்பிலிருந்து வைத்தியஞ் செய்தேன். தொடர்ந்து 45 ஆண்டுகளுக்கு மேலாக இப்படி வைத்தியஞ் செய்து வந்தேன்.
மர்ஹ"ம் எஸ்.எம்.சஹாப்தீனின் நட்பு
"சஹாப்தீன்காக்கா” என்று எல்லோரும் அன்புடன் அழைக்கும் மர்ஹும் எஸ்.எம்.சஹாப்தீன் ஒரு பிரபல சமூக சேவையாளராவார். இவர் வர்த்தகத்தில்
42

பிரபல்யம் பெற்றிருந்த போதும் சன்மார்க்க இலக்கிய கலாசாரத்துறைகளிலும் சமூக சேவைகளிலும் கொழும்பு முஸ்லிம் வர்த்தகர் மத்தியிலும் அறிஞர்கள்கலைஞர்கள் மத்தியிலும் செல்வாக்குடையவராகத் திகழ்ந்தவர். இந்தியாவிலிருந்து இலங்கை வரும் பிரபல முஸ்லிம் அறிஞர்கள் முஸ்லிம் தலைவர்கள் இவர் மூலமாகவே இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அறிமுகமாகி வந்தனர். இவரது அத்தியந்த நண்பராக விளங்கியவர் அசீஸ் வைத்தியர். மர்ஹும் சஹாப்தீன் அவர்களும் அசீஸ் வைத்தியரும் வர்த்தக நிலையமான கொழும்பு, குமார வீதி, 96ஆம் இலக்கக் கட்டடத்தில் ஒன்றாக இருந்ததோடு அசீஸ் வைத்தியர் தமது வைத்திய சிகிச்சைகளை அதில் செய்து வந்தார்.
இந்த இடத்தில் இவர் வைத்திய சிகிச்சையை ஆரம்பித்ததனால் கொழும்பில் உள்ளவர்களும் கொழும்பை வந்தடையக் கூடிய ஊர்களில் வாழ்ந்தவர்கள் பலரும் இவரது வைத்திய நிலையத்தில் சிகிச்சை பெற வருவது வழக்கம். குறிப்பாக பேருவலை, அலுத்கமை, கலுத்துறை, பாணந்துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த நோயாளர்கள் வசதியாக வந்து இவரிடம் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். இதே நேரத்தில் வெளிநாட்டார் பலருக்கும் இது வசதியாக இருந்தது. மாலைதீவைச் சேர்ந்த பலர் இவரிடம் அடிக்கடி கொழும்புக்கு வந்து வைத்தியம் பெற்றுச் சென்றுள்ளனர். புரையோடிப் போன முறிவு காயம் என்பவற்றைச் சுகப்படுத்த வேண்டுமாயின் அவ்வுறுப்புப் பகுதிகள் வெட்டப்பட்டே சுகமாக்கப்பட வேண்டுமென அரசாங்க ஆஸ்பத்திரிகளினால் தீர்மானம் எடுக்கப்பட்ட சில முறிவு, காயங்களை அவ்வாறு செய்யாமலே சிகிச்சையளித்து குணப்படுத்திய காரணத்தினால் தான் மாலைதீவில் மாலேயில் இவரது பெயர் பிரகாசித்தது. அதனால் தான் மாலைதீவைச் சேர்ந்த பலர் இத்தகைய சிகிச்சை முறைகளுக்காக இவரை நாடி வந்தனர்.
இதே போன்று 1983ம் ஆண்டு இலங்கையிலிருந்த எகிப்திய ஸ்தானிகர் மாண்புமிகு கமால் அப்துல்கையும் அவர்களின் புதல்வனின் கையிலேற்பட்ட முறிவொன்றினை ஆங்கில வைத்திய முறையிற் குணமாக்க முடியாத சந்தர்ப்பத்தில் இவர் குணப்படுத்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்த எகிப்திய தூதுவர் மாண்புமிகு சஈத் அல் பன்ஹாவி இவருக்களித்த வரவேற்பொன்றின் போது”
43

Page 31
"We wish to place on record our appreciation of your treating the Son of His Excellency gamal abdul Guyoum the former ambassador of Egypt during his tenure of office in this Country. Your selfless Service to the betterment of your
fellow being is invaluable"
(Sayeed al Bonhavi)
என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
காலத்திற்கு காலம் இலங்கைக்கு விஜயஞ் செய்யும் வெளிநாட்டு மார்க்க அறிஞர்கள் பலர் சுகவீனமுற்ற போது இவரது முஸ்லிம் நண்பர்களின் சிபார்சின் பேரில் சிகிச்சையளித்துள்ளார். அதனால் பல முஸ்லிம் பெரியார்களின் நல்லாசியும் மதிப்பும் இவருக்கு கிடைத்ததுண்டு. ஒரு முறை மக்காவைச் சேர்ந்த மீர்கானிமெளலானா இலங்கை விஜயத்தின் போது சுகவீனமுற்று இவரிடம் சிகிச்சை பெற்றுத் தேறியதற்காக அவர் வழங்கிய எந்தச் சன்மானத்தையும் பெறமறுத்து விட்டதோடு அவரின் நல்லாசியைக் கோரி நின்றார். இவ்வாறே இந்திய முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப், அல்ஹாஜ் ஆ.கா. அஅப்துஸ்ஸமத், பிரபல மார்க்க அறிஞர் மணிமொழி மெளலானா கலீலுர் ரஹ்மான், அஜ்மீரைச் சேர்ந்த ஞானியார் கேத்தல் பாவா, சாலி தைக்கியா சாலிஹ் ஹாஜியார் உட்பட இன்னும் பல பெரியார்கள் இவரிடம் மருத்துவமும் மருத்துவ ஆலோசனைகளும் பெற்றுச் சென்றுள்ளதோடு அவர்கள் இவரது இல்லத்திற்கும் விஜயஞ் செய்து விருந்தினராகவும் இருந்துள்ளனர். இத்தகைய பெரியார்களின் நட்புக்கெல்லாம் கொழும்பில் இவர் மேற்கொண்ட சிகிச்சைகள் தான் காரணமென
இவர் அடிக்கடி கூறிக் கொள்வார்.
முறிவு வைத்தியம்
தனது தந்தையாரின் வழிவந்த முறிவு வைத்தியத் துறையில் அசீஸ் வைத்தியர் நாடு போற்றும் அளவுக்குப் பேரும் புகழும் பெற்றுத் திகழ்ந்த போதும் நாடி பார்த்தும் எலும்புகளைத் தொட்டுப் பார்த்தும் அசைத்துப் பார்த்துமே முறிவுகளைக் கண்டறியும் வல்லமை பெற்றுத் திகழ்ந்தார். இயற்கை மூலிகைகளைக் கொண்டு தாமே தயாரிக்கும் பசைகள் - பத்துகள் - எண்ணைகள் என்பவற்றைக் கொண்டே நோய்களைக் குணமாக்குவார். முறிவு
44

சம்பந்தபட்ட எல்லாவித வைத்தியங்களுக்கும் இயற்கை மூலிகைகளையே வைத்திய முறைகளுக்கு கையாண்டார். முறிவு வைத்தியத்துறையில் தேர்ச்சி பெற்ற மேற்கத்தைய வைத்திய முறைகளைக் கையாண்ட பலர் அசீஸ் வைத்தியரின் சிகிச்சை முறைகளைப் பாராட்டியுள்ளதோடு பல நோயாளர்களையும் அசீஸ் வைத்தியரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.
16.191ல் வெளியான தினகரன் பத்திரிகைக்கு அசீஸ் வைத்தியர் அளித்துள்ள பேட்டியொன்றின் ஒரு பகுதியில் பின்வருமாறு கூறியுள்ளார். “வைத்தியத்துறையில் நான் பெற்ற அனுபவங்களைப் கூறுவதென்றால் ஏராளமான அனுபவங்களைப் பற்றிக்கூற முடியும். நவீன வைத்திய முறைகளும் வசதிகளும் இருந்த காலத்திலும் கூட நாடி பார்த்தே வைத்தியஞ் செய்வேன். எவ்வகையான முறிவுகளென்றாலும் தொட்டு அசைத்துப் பார்ப்பதன் மூலம் எலும்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்டறிந்து வைத்தியஞ் செய்வேன்.” “எக்ஸ்ரே” மூலம் ஆங்கில வைத்தியர்களால் கண்டறிய முடியாமற் போன முறிவுகளைக் கூட நான் சுகமாக்கியுள்ளேன். வைத்திய நிபுணர்களான டாக்டர் தாம்புகல, டாக்டர் சிரிவர்தன, டாக்டர் சுலைமான் போன்றவர்கள் என்னிடம் பல நோயாளர்களை அனுப்பி வைத்துள்ளனர். இவற்றை அவர்களால் சுகமாக்க கூடியதாக இருந்திருக்கலாம். எனினும் ஆங்கில வைத்திய முறையில் நீண்டகாலம் செல்லும் என்ற காரணத்தினால் அத்தகைய நோயாளிகள் என்னிடம் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களை நான் மிகக் குறுகிய காலத்தில் சுகமாக்கியுள்ளேன். அத்துடன் சுகமாக்க முடியாதென்று வெளியேற்றப்பட்ட மேக நோயாளிகள் பலரை நான் சுகமாக்கியுள்ளேன். கொழும்பைச் சேர்ந்த ஒரு பிரபல செல்வந்தர் நா. சுப்பரமணியம் என்பவர் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டு எல்லா வைத்தியர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் தனது வாழ்க்கையையே முடித்துக் கொள்ள எத்தனித்தவேளையில் நான் அவரை எனது மருந்துகளினால் பூரண குணமடையச் செய்தேன். இது எனது மருத்துவத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியென்று கருதுகிறேன்.”
கத்னா செய்பவர்களுக்கான மருத்துவப் பயிற்சிகள்
இஸ்லாத்தில் 'கத்னா’ சுன்னத் செய்து கொள்வது முஸ்லிம்களின் வழக்கமாகவும் கடமையாகவும் கருதப்படுவதொன்றாகும். தற்காலத்தில்
அதிகமானோர் ஆங்கில வைத்திய முறைப்படியும் இதனைச் செய்து
45

Page 32
கொள்கின்றனர். அளால் சமீப காலம் வரை இதனை ஒரு விசேட வைபவ மூலமாகவே நடத்திவந்துள்ளனர். உற்றார் உறவினர் ஒன்று சேர்ந்து விருந்து படைத்து கத்னா செய்யப்படவுள்ள ஆண் பிள்ளைகளைக் குளிப்பாட்டி, புத்தாடை புணையச் செய்து சின்னமாப்பிள்ளை எனக் கூறி ஊர்வலமாக அழைத்துச் சென்று ஒரு வகையான மதிப்போடு கூடிய மகிழ்ச்சியை அளித்ததன் பின்னரே இத்தகைய சுன்னத் செய்தல் என்ற கடமை நிறைவேற்றப்படும். கத்னாச் செய்யும் இத்தொழிலை ஒரு பாரம்பரியத் தொழிலாகவே அக்காலத்தில் சில குடும்பத்தினர் செய்து வந்துள்ளனர். கத்னாச் செய்யப்பட்ட உறுப்புக்கு பாரம்பரிய முறையிலான சிகிச்சையும் செய்யப்பட்டு வந்தது. இஸ்லாமிய வாழ்க்கை அமைப்பின் படி சுத்தம் மிக முக்கியமாகப் பேணப்பட வேண்டியதொன்றாகும். அதன் அடிப்படையிலும் இக்கிரியை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகைய பாரம்பரியச் சிகிச்சை முறைகளினால் சில வேளைகளில் கத்னாச் செய்யப்பட்ட உறுப்பானது காயமாகவும் புண்ணாகவும் மாறினால் பிள்ளைகள் பல நாட்களுக்கு வேதனைப்
படவேண்டி ஏற்படும். அசீஸ் வைத்தியருக்கு இதுவும் ஒரு பிரச்சினைதான்.
ஏனெனில் அப்படியான சந்தர்ப்பங்களில் அசீஸ் வைத்தியரை அழைத்துச் செல்ல பலர் வருவார்கள். இந்த நிகழ்வினால் அசீஸ் வைத்தியர் அடிக்கடி சிகிச்சை செய்தவதற்காக பல இடங்களுக்கும் செல்ல வேண்டி நேர்ந்தது. அதே நேரத்தில் இதற்காக உஸ்தாமார்கள் பாவித்து வந்த மருந்துகளின் குறைபாடுகளையும் அசீஸ் வைத்தியர் அறிந்து கொண்டார். இந்த நிலையை நிவர்த்திக்கும் பொருட்டு அசீஸ் வைத்தியர் ஒரு திட்டத்தை தயாரித்து அத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கத்னாச் செய்தவுடன் அதற்குப் பொருத்தமான மருந்து வகைகளைப் பற்றியும் புண்கள் ஆறும் வரை அதனை எவ்வாறு உபயோகிப்பது - கத்னாச் செய்யும் போது உறுப்பின் எந்த அளவு நீக்கப்படுவது - இரத்தப்பெருக்கு ஏற்படாமற் காப்பாற்றுவது என்பன போன்ற பல விடயங்களில் அவர்களுக்கு ஆலோசனை கூறியதுமல்லாமல் அதனைச் செய்பவர்களுக்கு உற்சாகமும் ஊட்டி வந்துள்ளார். இந்த இரகசிய ஆலோசனைகள் பிற்காலத்தில் பெரும்பயனையளித்துள்ளதை அசீஸ் வைத்தியர் பின்வருமாறு எழுதிவைத்துள்ளார்.
"அக்காலத்தில் கம்பளை உஸ்தாவும் இன்னும் பலரும் கத்னா சுன்னத்
செய்து சில சமயங்களில் புண்கள் ஆறாமல் போய்விடும். அப்படியான
46

சந்தர்ப்பங்களில் அவர்கள் என்னிடம் வந்து மருந்து போடும்படி சிபாரிசு செய்வார்கள். என்னை வந்து கூட்டிப் போவார்கள். புண்ணேற்பட்டால் அதனைச் சுகமாக்க அந்த மருந்து முறைகளைக் சொல்லித் தர முடியுமா? என்று என்னிடம் கேட்பார்கள். நான் மறுக்காமல் அதனைச் சொல்லிக் கொடுப்பேன். அத்துடன் அவர்கள் கத்னாச் செய்யும் போது எவ்வாறு அதனைச் சரியாக செய்ய வேண்டுமென்றும் இரத்தக் கசிவுக்கு எப்படியான மருந்து பாவிக்க வேண்டுமென்றும் சொல்லிக் கொடுப்பேன். இவ்வாறு அவர்களுக்கு கொடுத்த படிப்பினைகளினால் இரண்டு விதமான நன்மைகள் ஏற்பட்டன. ஒன்று, கத்னாச் சுன்னத் செய்து புண்ணாகி விட்டால் என்னைக் கூட்டிப் போவதில் பெற்றோருக்கு இருந்த சிரமமும் எனது கால விரயமும் இல்லாமற் போயிற்று. இரண்டு, உஸ்தாவிடம் இதற்கான மருந்துகள் இருந்ததால் என்னிடம் இருப்பதை விட முழு முஸ்லிம் சமுதாயத்துக்கும் அது உதவியாக இருந்தது. இன்றும் இம்மருந்து முறைகளை அவர்களின் வாரிசுகள் பயன்படுத்தி வருகின்றனர்.
47

Page 33
இடமிருந்துவமாக முதலில் போக் குழந்தையுடன் நிற்பவர் அப்துல் அசீஸ் வைத்தியர்,அம்ராஜ் அகாசு.அப்துஸ் எமது தற்போதய முஸ்லிங்,தலைவர் தமிழ்நாடு) காயிதே மின்ந் இஸ்தாயின் ராஹிப், மருமகள் ஸ்டார்.ாம். மஹ்ரூப் ஆகியோர் வைத்தியரின் வீட்டிங் எடுத்துக் பொண்ட படம்
மணி மொழி மெளலானா அல்ஹாபிஸ் கலீலூர் ரஹ்மான் அசீஸ் வைத்தியரின் இவ்வத்தில் மார்க்க உபந்நியாசம் செய்கிறார்கள்.
 
 

8 பல்துறைப்பங்களிப்பு
மேகம் தன் பெருமையையும் வலிமையையும் இடி முழக்கத்தால் அண்டம் அதிரச் செய்யும் மின்னல் கீற்றும் தன் ஆத்ம பலத்தை-எத்தனை பிரகாச மென ஜொலித்துக் காட்டும் இவற்றின் ஆத்ம முழக்கம் கேட்டாவது ஒ மனிதா- நின் ஆத்மா விழிப்படைய வேண்டாமா?
- அல்லாமா இக்பால்
அரசியல் சேவை
அசீஸ் வைத்தியரின் அரசியல் வாழ்விற்கு அவர் பெற்றிருந்த செல்வாக்கே காரணமெனலாம். ஏறக்குறைய 50 ஆண்டுகள் அரசியல் வாழ்க்கையில் செல்வாக்குடனிருந்த போதும் தனது பிரதேச மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு சேவை செய்வதையே இலட்சியமாகக் கொண்டிருந்தார். தான் ஆதரித்த கட்சியை தனது பிரதேசத்தில் வெற்றியடையச் செய்வதால் தனது சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றும் நோக்கமே அவரிடம் காணப்பட்டது. ஆனால் கட்சி அரசியலில் எப்போதும் எல்லாரையும் திருப்திபடுத்த முடியாது என்தையும் அவர் உனாாமல் இல்லை. எனினும் தான் ஆதரித்த கட்சிப் பிரமுகரை வெல்ல வைப்பதில் சகல முயற்சிகளையும் மேற்கொண்டார். அதற்காக தனது நேரத்தையும் பொருளையும் அர்ப்பணித்துச் செயற்படவும் தயங்கவில்லை. காலத்தையும் மக்களின் நோக்கத்தையும் தேவைகளையும் மனதிற் கொண்டு தான் பற்றி நின்ற கட்சிக்காக உழைத்தாரே அன்றித் தன்னை ஒரு அரசியல்வாதியாக்கிக் கொள்ளவோ, அதனால் பெரும் புகழும் பொருளும் ஈட்டிக் கொள்ளவோ அவர் முற்படவில்லை.
4)

Page 34
“காலஞ் சென்ற உதவி அமைச்சரும் மாவனல்ல தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினருமான திரு. சி. ஆர். பெலிகம்மனை சிறுவயதிலிருந்தே என்னையும் எனது குடும்பத்தையும் மதித்து நடந்துள்ளார். நான் இப்போது இருக்கும் வீட்டில் குடிவரும்போது அவருக்கு 15 வயதிருக்கும். 1938ம் ஆண்டு நான் இவ்வீட்டுக்கு வரும்போது அவர் வாழ்ந்த வீடும் பக்கத்திலேயே அமைந்திருந்தன.”
பெலிகம்மனையில் எனது இப்போதைய வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் காணியை அங்கு அமைந்துள்ள பெளத்த விகாரைக்காக அவரது பாட்டனரான பெலிகம்மனை நிலமே ரடேமஹத்தயா அன்பளிப்பாகக் கொடுத்தார். இவரது குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. 1915ம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரம் மாவனல்லையில் தீவிரமடையாமல் கவனித்துக் கொண்டவர்கள் இவர்கள்.
1949ம் ஆண்டு என நினைக்கிறேன். அக்காலத்தில் ஒரு முஸ்லிம் வாலிபனை பெளத்த குருவாக்கியதை விடுவிப்பதற்காக பெளத்த மகா சபையினரிடம் கதைத்தோம். பெளத்த சாசனத்தின்படி தாயின் அனுமதியின்றி ஒருமகனை பிக்குவாக்க முடியாது. தாயோ அழுது கொண்டிருக்கிறாள். இதனால் இனக் குழப்பங்கள் ஏற்படும் சாத்தியக் கூறுகளும் இருந்தன. மகா சங்கத்தினரை இவ்விடயத்தில் இனங்கச் செய்யும்மாறு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் எச். எல். ரத்வத்தையின் வீட்டுக்குச் சென்றோம். அவர் கூறிய வார்த்தை என்ன திகைக்க வைத்தது. "இதில் தலையிட்டால் சிங்கள வாக்காளர் என்னை வெறுப்பார்கள் என்றார். ஏன் உங்கள் தலைவர் ஏ. ஆர். ஏ. ராஸிக்கிடம் போய்ச் சொல்லுங்களேன்’ என்றதும் நான் பொறுமையிழந்தேன். இனிமேல் நீங்கள் மாவனல்லை தொகுதியில் எங்களது ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம். எங்களுக்கு தேவையான ஒருவரை அடுத்த தேர்தலில் நிறுத்தியே தீருவோம் என்று சொல்லிக் கொண்டு வெளியேறினேன். பின்னர் எங்கள் பிரயாசையின் காரணமாக அந்த பெளத்த பிக்குவை மாவனல்லை மருந்துக் கடை புகாரி ஆலிமின் மூலமாக இந்தியா அதிரம்பட்டினத்து மத்ரஸாவுக்கு அனுப்பி ஓர் ஆலிமாக உருவாக்கினோம். இந்தக் கைங்கரியத்திற்கு உதவியவரும் என்னிடம் சிகிச்சை பெற்ற ஒரு சிங்களவர் தான் அவரது பெயரை குறிப்பிட விரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து தான் திரு. எச். எல். ரத்வத்தைக்கு எதிராக இயங்க ஆரம்பித்தேன்.
அடுத்து வரும் தேர்தலுக்கு யாரை நிறுத்துவது என ஆலோசித்தோம். கடைசியாக எங்கள் முன் தோன்றியவர் தான் இளமையும் துடிப்பும் முற்போக்குக்
50

கொள்கையும் கொண்ட சி. ஆர். பெலிகம்மனை. எனது யோசனையை எனது சகாக்கலான ஹாசிம் மச்சான், திலகரத்ன போன்றோர்களிடம் சொன்னேன். அவர்களும் அதனை ஏகமானதாக ஏற்றுக் கொண்டனர். நான் இந்த யோசனையை திரு. பெலிகம்மனவிடம் கூறினேன். அப்போது அவர் பிரசார வேளைகளுக்கு பணம் இல்லையென்றும் அவர் செய்யும் தொழிலை விட்டுவிட வேண்டி வரும் என்றும் கூறிப் பின்வாங்கினார். அவற்றை எல்லாம் நாம் கவனித்துக் கொள்கிறோம் என்று இணங்க வைத்தோம். அடுத்த தேர்தலும் ஆரம்பமானது. பிரசார வேலைகளுக்காக என்னிடம் இருந்த ஒரே ஒரு “போர்ட் பிரிபெட்’ கார் தான் பாவிக்கப்பட்டது. அதைப்பயன்படுத்தியே தேர்தல் பிரசார வேலைகளை ஆரம்பித்தோம். தேர்தல் கூட்டங்களில் நானும் இன்னும் இரண்டு அல்லது மூன்று பேர் மட்டும் தான் பேச்சாளராக இருந்தோம். அத்தேர்தலில் பெலிகம்மனை தோல்லியுற்றாலும் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகளைப் பெற்றோம். இந்த தேர்தல் காலத்தில் என்னுடன் ஒத்துழைத்த ஹாசிம் மச்சான் வி. சி. ஹனிபா, திரு. திலகரத்ன, ரபீக் மரைக்கார், புஹாரி ஹாஜியார், மக்கீன் மாஸ்டர் ஆகியோர் உட்பட பலரை நான் என்றும் நினைப்பதுண்டு.
1951ம் ஆண்டு திரு. எஸ். டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்க பூரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பித்தார். அதுவரை சூரியமல் இயக்கத்தைக் கொண்ட சமசமாஜக்கட்சியில் நான் ஒரு உறுப்பினராக இருந்தேன். அது ஒரு சோசலிசக் கட்சி என்பதனாலேயே தான் நான் அதில் சேர்ந்தேன். திரு. பண்டாரநாயக்காவின் கட்சியும் சோசலிச பாதையில் உருவானதாலும் அதனால் ஒரு அரசாங்கம் அமைக்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதாலும் நான் அதில் சேர்ந்தேன்.
உள்ளூராட்சி மன்றத்தில் ஏற்கனவே உறுப்பினராக இருந்த நான் இக்கால கட்டத்தில் தேர்தலில் பூரீ லங்கா சுதந்திரக்கட்சி அங்கத்தவனாக போட்டியிட்டேன். ஹிங்குலோயா, கிருங்கதெனிய, மாவனல்ல டவுன், மஹவத்தை, மாஹவ, பெலிகம்மனை, மாவான, நாதெனிய, வல்பல்தெனிய தெல்கஹகொட ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய கிருங்கதெனிய சபைக்கு நான் அங்கத்தினராக தெரிவு செய்யப்பட்டேன்.
இதனைத் தொடர்ந்து 1952ம் ஆண்டு பொதுத் தேர்தல் வேலைகள் ஆரம்பமானது. இதற்காக கண்டி இம்பீரியல் மோடர்ஸாரிடம் சென்று E.Y.
51

Page 35
8941 புத்தம் புதிய “போர்ட் பிரிபெக்ட்” கார் ஒன்றை வாங்கினேன். அந்தப் புதுக் காரை சி. ஆர். பெலிகம்மனாவுக்கு தேர்தல் வேலைக்காக கொடுத்தேன். எனது கார் பலத்த சேதங்களுக்கு உள்ளானது. கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. ஆனால் அடுத்த தேர்தலில் எஸ். எல். எப். பி. அங்கத்தவர் திரு. பெலிகம்மனை வெற்றியீட்டினார். அதுவே எனக்கு பெரும் திருப்தி, எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அக்கட்சியில் எமது அங்கத்தவர் பெலிகம்மனையும் ஒருவர். இதன் மூலம் மாவனல்ல தொகுதிக்கு துடிப்புள்ள ஓர் அங்கத்தவர் மூலம் எனது சவாலில் வெற்றி கண்ட ஒரு சாதனையை நிலைநாட்டினேன்.
1953ம் ஆண்டு திரு.பண்டாரநாயக்க பஞ்சமஹாபலவேகய’ என்ற ஆயுர்வேத வைத்தியர், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெளத்த பிக்குகள் ஆகியோரை 'பஞ்சசக்தி' என்ற கூட்டணித் திட்டமொன்றை முன்வைத்தார். இந்த திட்டத்தின் அடிப்படையில் தான் கேகாலை மாவட்ட ஆயுர்வேத வைத்தியர் எஸ். எல். எப். பி. கிளையின் தலைவராக என்னை நியமித்தார்.
1956ம் ஆண்டு தேர்தலின் போது சிங்கள மொழியை அரசரும மொழியாக்குவது என பிரசாரம் செய்த போது மாவனல்லையைச் சேர்ந்த ஐ. தே. க. முஸ்லிம் ஆதரவாளர்கள் என் மீது பலத்த கண்டனங்களைச் சுமத்தினர். நான் பெளத்த விகாரையில் கல்வி கற்றதால் சிங்களத்திலும் தேர்ச்சி பெற்றிருந்ததால் பெளத்த குருமாருடன் தொடர்பு கொண்டிருந்ததால் எஸ். எல். எப். பி. ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களை பெளத்த மதத்திற்கு மாற்றுவதற்கு உடந்தையாக இருப்பேன் என்று பிரச்சாரம் செய்து வந்தனர். அதற்காக நான் கொடுத்த பதிலில் அத்தகைய நிலையொன்று ஏற்படாமல் பாதுகாக்கத் தான் முஸ்லிம்கள் அக்கட்சிக்கு அதரவும் வழங்கவேண்டும் என்றும் இது ஒரு சோசலிசக் கட்சியாக இருப்பதால் ஒருபோதும் மதமாற்றத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் பதியுத்தீன் மஹமூத், சி. ஏ. எஸ். மரைக்கார் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு காவலாக இருப்பார்கள் என்றும் வீடு வீடாகவும் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் பிரசாரம் செய்தேன்.
இந்தப் பிரசாரப் போட்டியினால் எனது குடும்பத்திலும் பிரிவினை ஏற்பட்டது. எனது சமூக சேவைக்கும் தேர்தல் வேலைக்கும் உடந்தையாக இருந்த பலர் என்னை விட்டுப் பிரிந்து சென்றனர். எதிர்கட்சிக்காரர் உருவாக்கிய இந்தக் கருத்து வேறுபாடு காரணமாக எனது மனைவியின் மாமனாராகிய எனது வாலிப காலத்திலிருந்து ஒற்றுமையாய் இருந்த அல்ஹாஜ்
52

ஏ. எம். எஸ். மரிக்காருக்கும் எனக்கும் இடையில் பகைமை மூண்டு ஒரு பாதை விஷயமாக பத்து வருடங்களாக வழக்காடி பின்னர் சமாதானமாகி மீண்டும் நாம் ஒற்றுமையானோம். அல்ஹாஜ் ஏ. எம். எஸ். மரிக்கார் அவர்கள் கிராம சபை அங்கத்தவராக இருந்தும் மேலும் பல பதவிகளை வகித்தும் ஹிங்லோயாவின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டவர். அந்த நாட்களில் அவருக்கிருந்த ஆங்கில அறிவும் சேவை மனப்பான்மையும் எனக்கிருந்த சிங்கள மொழிப் பாண்டியத்தியமும் வைத்திய பிரபல்யமும் ஒன்று சேர்ந்ததால் பல அபிவிருத்தி வேலைகளை எமது ஊருக்கு செய்து வந்துள்ளோம். அவரை நமது மக்களுட் பலர் மறந்து விட்டாலும் அவரது சேவைகள் நிலைத்து நிற்கின்றன.
1956 ம் ஆண்டு திரு. எஸ். டப்ளியு. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கூட்டணிக்கட்சி அமோக வெற்றியீட்டியது. திரு. சீ. ஆர். பெலிகம்மனை எமது தொகுதியில் அமோக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றதும் கச்சேரியிலிருந்து வரும்வழியில் முதலில் எனது வீட்டுக்குத் தான் வந்தார். “என்னை அரசியலுக்கு இழுத்து வந்தது நீங்கள் தான். என்னை ஆசிர்வதியுங்கள்’ என பணிவாகக் கேட்டுக் கொண்டார். அவரது கண்களிலிருந்து கண்ணிர் மல்கியது. அவரது மனைவியும் கூடவே இருந்தார். எனக்கும் பெருமையாக இருந்தது. ஏனெனில் நாம் விட்ட சவாலை நிறைவேற்றியவர் அல்லவா? சோபனம் கூறி அனுப்பி வைத்தேன்.
இச் சந்தர்ப்பத்தில் எங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்த பலர் தங்களுக்கு என்ன நடக்குமோ என அச்சங்கொண்டிருந்தனர். அவர்களுட் பலர் அரசாங்க உத்தியோகத்தர்கள். இடமாற்றம் கிடைக்கலாம் என்றும் அஞ்சினர். எல்லாவற்றிக்கும் மேலாக முஸ்லிகளே முஸ்லிம்களுக்கு எதிரான வதந்திகளையும் தப்பபிப்பிராயங்களையும் பரப்பத் தொடங்கினர். இவை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டிருந்த நான் இரண்டு நாட்கள் கழித்து திரு. பெலிகம்மனையின் இல்லத்திற்கு சென்று முஸ்லிம்களின் மத்தியில் பரப்பப்பட்டுள்ள வதந்திகளைக் கூறி யார் எதைச் சொன்னாலும் எங்களுக்கு எதிராக இருந்த எந்த ஒரு அரசாங்க உத்தியோகத்தருக்கோ, ஏனையவர்களுக்கோ எதிராக எத்தகைய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என வேண்டிக் கொண்டேன். ' உங்களது சொல்லை மீறி நான் எதையும் செய்யமாட்டேன்.” என்று அப்போது எனக்கு உத்தரவாதம் தந்தார். இவ்வாறாக எனது ஊர் மக்களுக்கும் ஏனையோருக்கும் என்னால் ஆன உதவிகளை அரசாங்கத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தேனே தவிர எனக்கோ அல்லது எனது குடும்ப அங்கத்தினருக்கோ எந்த ஒரு பயனையும் நான் எதிர்பார்க்கவில்லை.
53

Page 36
இதுவே எனது அரசியல் இலட்சியமாகவும் இருந்தது. 1957ம் ஆண்டு மாவனல்லை ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டேன். அவ்வளவுதான் அங்கும் இரு முஸ்லிம் டாக்டர்களுக்கிடையிலிருந்து வந்த தகராரை தீர்த்து வைத்தேன்.
1959ம் ஆண்டு (திரு . பண்டாரநாயக்க படுகொலைசெய்யப்பட்டபின்) சுதந்திரக்கட்சியில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அதனால் திரு. பெலிகம்மனை தனக்கென ஒரு கட்சியை உருவாக்கிக் கொண்டு அதன் தலைவராகவும், தெளிவுசெய்யப்பட்டதால் அவருடைய அரசியற் கட்சியை சாராமல் இருந்தேன். வழக்கமாக இருந்து வந்த நட்பை மாத்திரம் வைத்துக் கொண்டு திரு. பி. ஆர். ரத்னாயக்காவை எங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட வைத்து வெற்றியீட்டினோம்.
1962ம் ஆண்டு ஹிங்லோயா முஸ்லிம் மஹா வித்தியாலய பெற்றார் ஆசிரிய சங்க அங்கத்தவராக இருந்த போது எமது பாடசாலைக்கு தரப்படவிருந்த விஞ்ஞான ஆய்வு கூடம் வேறோர் பாடசாலைக்கு கொடுப்பதற்காக கல்வி அமைச்சு முடிவி செய்து விட்டதாக பவர் எம்மிடம் வந்து முறையிட்டனர். அப்போது கல்வியமைச்சராக இருந்தவர் கலாநிதி. பதியுத்தீன் அவர்கள். கிடைத்ததை இல்லாமற் செய்யலாமா? அதுவும் ஒரு நண்பர் கல்வி அமைச்சராக இருக்கும் போது முஸ்லிம்களுக்காகக் கிடைத்த விஞ்ஞான ஆய்வுக்கூடத்தை இன்னுமொரு சாராருக்கு தாரைவார்க்கலாமா? இப்படியான எனது மனதில் தோன்றிய கவலையை வெளிக்காட்டாமல் உடனேயே அமைச்சரை சந்திக்க தீர்மானித்தேன். மஃரிபுக்கு பின்னால் முக்கியமான நபர்களுடன் எனது காரில் புறப்பட்டு இரவோடிரவாக அமைச்சரின் வாசல் தலத்தை சென்றடைந்தேன். அன்று ஏதோ காரணமாக அவர் வாசஸ்தலத்திற்கு இராணுவ பொலிஸ் காவல் பலப்படுத்தப்பட்டிருந்தது. அவர்கள் உள்ளே செல்ல அனுமதி தர மறுத்து விட்டனர். அப்போது "நான் அவரது வைத்தியர் என்றும் வைத்திய சிகிச்சைக்காக வந்துள்ளேன் என்றும் கூறி எனது ஊர் பெயர் என்பவற்றைக் குறித்து ஒரு கடதாசி துண்டில் எழுதி கொடுத்து இதனை அமைச்சரிடம் கொடுங்கள்' பொலிஸ் பாதுகாவலர் ஒருவரிடம் கொடுத்தேன். சற்று நேரத்தில் என்னை மாத்திரம் உள்ளே அனுப்ப முடியுமென இராணுவ வீரர்கள் கூறவே, நான் அவரது வீட்டிற்குள் புகுந்த சமயம் அவர் படுக்கைக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தார். "என்னவெதமஹத்தயா இந்தராவயில" இது தான் அவர் கேட்ட கேள்வி' "வைத்தியணுக்கு ராவும் பகலும் ஒன்று தான் ஹாஜியார்” இது எனது பதில்,
39 008

என்னிடம் எதோ ஒரு வழமைக்கு மாறாக மனவருத்தமும் ஆத்திரமும் இருப்பதை அவர் அறிந்து கொண்டார். "என்ன நீங்கள் ஒரு நாளும் இல்லாமல் இப்படி அவசரமாக" என்று மீண்டும் கேட்டார். அப்போது தான் நான் வந்த செய்தியைப் பற்றி பதட்டதுடன் கூறினேன். "வெதமஹத்தயா நீங்க ஒண்டுக்கும் பயப்படவனாம் நீங்கள் கட்சிக்கும் குடும்ப வைத்தியத்திற்கும் செய்துள்ள சேவைக்கு இது ஒரு சின்ன வேலை. நீங்க பயப்படாம போங்க ஒரு டொலிபோன் முடிக்கிற வேலைக்கு நீங்க என்னத்துக்கு இந்த ராவையிலே என்னை தேடி வந்தது" என்று எனக்கு தைரியம் ஊட்டி ஹிங்குல முஸ்லிம் மஹா வித்தியாலயம் சயன்ஸ் லெப் வேளையை ஆரம்பிக்க நாளைக்கே ஒடர் போடுவேன் என்றார். எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. உடனே விடாப்பிடியாக நீங்கள் தான் அடிக்கல் நாட்ட வேண்டும் என்று திகதியையும் பெற்றுக் கொண்டு இந்த அடிக்கல் நாட்டும் விழா மிக சிறப்பாக நடந்தேறியது. அதற்கு வந்த சகல பிரமுகர்களும் எனது இல்லத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்டமை எனக்கு கிடைத்த பெரும் மதிப்பென்றே நினைக்கிறேன். இன்று எமது ஸாஹிரா விஞ்ஞானக் கூடத்தை தந்துதவிய அன்னாருக்கு நாங்கள் நன்றி கடன்பட்டுள்ளோம். இன்று எத்தனை பேர் அதில் படித்து விஞ்ஞானப் பட்டம் பெறுவதைக் காணும் போது நாம் சந்தோசப்படாமல் இருக்க முடியுமா?
55

Page 37
இவரது பொதுச் சேவை ஒரு கண்ணோட்டம்
1944-1948 - கோகாலை மாவட்ட மண்வளப்பாதுகாப்பு சபையின் அங்கத்தவர்
1949-1962 - கல்பொடை கோரளை, மாவனல்லை கிராமக்கமிடி அங்கத்தவர்.
1952 - கோகாலை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசங்கத்தின் தலைவர்
1959 - ஹிங்குல ஸாஹிரா வித்தியாலய பெற்றார் ஆசிரியசங்க தலைவர்.
1959 - ஹிங்குல கிராம அபிவிருத்தி சங்க தலைவர்
1959 - ஹிங்குல மஸ்ஜிதுல் ஹ"தா பள்ளி வாசல் தலைவர்
1949-1959 - பெலிகம்மனை பொஸன்பெரகரா கமிட்டியின் அங்கத்தவர்
1949 - இலங்கை சோனகசங்கத்தின் மாவனல்லைக்கிளைத் தலைவர்
1951 - சூரியமல் இயக்க உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்
1951 - பூரீ லங்கா சுதந்திரகட்சியின் ஆரம்ப உறுப்பினர்களில்
ஒருவராதல்
1951 - மாவனல்லை அரசாங்க ஆஸ்பத்திரி மேற்பார்வையாளராக நியமனம்
1953 - திரு.எஸ்.டப்ளியு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் பஞ்சபலவேகல
இயக்கத்தில் மும்முரமாக ஈடுபடல்.
1962ஆம் ஆண்டுமுதல் அரசியல் துறையில் மும்முரமாக ஈடுபடா விடினும் முதலாவது மாவட்ட சபையில் கோகாலை, மாவட்டத்துக்கு அவரது ஒரேமகனான, டாக்டர் ஹமீது அசீஸ் உறுப்பினராக நியமனம் பெற்றதால் அத்தகைய பணிகளை அவரது மகனிடமே ஒப்படைத்தார்.
மருத்துவர்கள் பெற்ற சலுகை
அப்துல் அசீஸ் வைத்தியர் 45 ஆண்டுகளுக்கு மேலாக திங்கட்கிழமை தோறும் கொழும்பிலுள்ள வைத்திய நிலையத்தில் வைத்தியஞ் செய்து விட்டு மஃரிப் வேளையாகும் போது வீடு திரும்பி வருவது வழக்கம். ஆனால் 1957ஆம் ஆண்டு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போது அவருக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்றை பின்வருமாறு எழுதிவைத்துள்ளார்.
1957ம் ஆண்டு ஒருநாள். ‘மாலை 7 மணிக்கு ஊடரங்குச் சட்டம் அமுலுக்கு வரும்,"இது வானொலி அறிவிப்பு. அன்று நான் கொழும்பில் வைத்தியஞ்
56

செய்து கொண்டிருந்தேன். ஊரடங்குச் சட்டம் அமுலாவதற்கு முன்னர் வீடு வந்து சேர வேண்டும். நாலு மணியவில் கொழும்பிலிருந்து புறப்பட்டேன். எனது காரில் இன்னும் மூவர் ஏறிக் கொண்டனர். எல்லோரும் தெரிந்தவர்கள். என்னுடன் வருவதால் அவர்களுக்கு ஊர் சென்றடையலாம் என்ற ஒரு நம்பிக்கை. மாலை 6.50க்கெல்லாம் மாவனல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம். மாவனல்லை நகர் நெருங்கியதும் திடீரென இராணுவ அதிகாரிகள் எம்மைத் துப்பாக்கி முனையில் நிறுத்தினர். நான் அவர்களிடம் இன்னும் பத்து நிமிடங்களில் எனது வீட்டைச் சென்றடையலாம். நான் ஒரு வைத்தியன் என்றெல்லாம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர்கள் கேட்கவில்லை. எம்மைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பொலிஸ் நிலையத் தலைவருக்கு எங்களைப் பற்றித் தெரியும். ஆனால் இராணுவ அதிகாரிகளுக்கு மாறாக அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பொலிஸார் எமக்கு ஆறுதல் கூறினார்கள். அடுத்த நாள் நீதிமன்றத்தில் விடுதலை பெறலாம் என்றும் தெரிவித்தனர். இச்செய்திமாவனல்லை எங்கும் காட்டுத்தீயாகப் பரவிவிட்டது. அவர்களால் என்ன செய்ய முடியும். வெளியே வர முடியாது பொலிஸ் இன்ஸ்பெக்டர் மூலம் எமது நிலையை எனது வீட்டாருக்குக் கூறச்செய்தேன். அவர் சென்று எனது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அடுத்த நாள் விடுதலையாவார்கள் எனத் தெரிவித்தார்.
அடுத்த நாள் எங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கே ஆஜராகியிருந்த பரிஸ்டர் ஹாசிம், சட்டத்தரணி மெளஜுத் போன்றவர்கள் எனக்காக எவ்வளவோ வாதாடினார்கள். ஆனால் நீதிபதி சட்டத்தை அலட்சியம் செய்ததாகக் குற்றம் சாட்டி ஒருவருக்கு ஆயிரம் ரூபா வீதம் எம்முடன் இருந்த 21 பேருக்கு 21 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக நியமித்தார். அதனைக் கட்டி வெளியே வந்தோம்.
என்றாலும் இந்த நடவடிக்கை என்னை ஊறுத்தியது. நான் உடனடியாக கொழும்புக்குச் சென்று நண்பர் மந்திரி பெலிகம்மனவிடம் கூறினேன். வைத்தியஞ் செய்யச் சென்றதனால் இத்தகைய விளைவு ஏற்பட்டதையும் விளக்கி என்னை அப்போதைய பிரதமர் எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்கவிடம் அழைத்துச் செல்லும் படி கூறினேன். அவ்வாறே நாம் அவரைச் சந்தித்து பஞ்சபல வேகய ஆசிரியர்-வைத்தியர் விவசாயி போன்றவர்களின் ஒத்துழைப்புடன் உருவான ஒர் ஆட்சியில் என்னைப் போன்ற வைத்தியர்கள் ஊரடங்குச் சட்ட காலத்தில் எவ்வாறு தொழில் செய்ய முடியும் என்பதையும்

Page 38
எனக்கேற்பட்ட அவமானத்தையும் எடுத்துக் கூறினேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அன்றைய மகா தேசாதிபதியான சர். ஒலிவர் குணதிலகாவையும் சந்தித்தோம். விஷயத்தைக் கேட்டுவிடவே அவரும் நடவடிக்கை மேற்கொண்டார். உடனே பகல் வானொலியில் வைத்திய சேவை செய்வோருக்கு ஊரடங்குச் சட்டத்தில் விதிவிலங்கு அளிக்கப்படும் எனத் தெரிவித்ததோடு எம்மிடம் தண்டப்பணமாக கட்டப்பட்ட பணமும் மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனது இந்தக் கோரிக்கை வெற்றியளித்ததன் காரணமாக சுதேச வைத்தியர்கள் மட்டுமன்றி ஆங்கில வைத்தியர்களும் நன்மையடைந்தனர். அப்போது நான் ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தேன். எனது இந்த முயற்சியைக் கேள்விப்பட்ட பல வைத்தியர்கள் தந்திகளும் பாராட்டுக் கடிதங்களும் அனுப்பி வைத்தனர். இதுவும் எனது வைத்தியத் துறைக்கு என்னால் கிடைக்கப் பெற்ற மகத்தானதோர் வெற்றியென நினைக்கிறேன். இதனால் தான் இக்காலத்திலும் ஊரடங்குச் சட்ட நேரத்தில் வைத்தியர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது.
விவசாயத்துறையில்
எனக்கு ஒய்வு கிடைக்கும் நேரங்களில் நான் எனது தோட்டத்திலும்
வயலிலும் விவசாயம் செய்து வருவேன். 1944ம் ஆண்டு முதல் சில காலம் நான் மண்வள பாதுகாப்பு சபையில் அங்கம் வகித்தேன். அதுவும் எனது விவசாய முயற்சிக்கு ஊக்கமளித்தது. எந்த மரஞ்செடிகளையும் தக்க காரணமின்றி வெட்டித் தள்ளுவதை நான் விரும்பவில்லை. உணவுக்கும், நிழலுக்கும், மருந்துக்கும் உதவக் கூடிய மரஞ்செடிகளை அழிப்பது பாவமான செயலாம். இன்று சுற்றாடல் பாதுகாப்பு' எனப்பிரசாரம் செய்வதை நான் அன்றே ஒரு வைத்தியன் என்ற முறையில் உணர்ந்து கொண்டேன். காடுகளும், மலைகளும், நீரோடைகளும் நிறைந்துள்ள நமது நாட்டில் அவை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தால் தான் சுத்தமான உணவுப் பயிர்களையும் சுத்தமான குடிநீரையும் பெற்று மக்கள் சுகமாக வாழமுடியும்.
1946ம் ஆண்டு எனது மனைவி மக்களுடன் இந்தியாவுக்குச் சென்ற போது இலங்கையில் காணமுடியாத சீரகத்தின் அளவிலான ஒருவகை
58

நெல்லைக் காணமுடிந்தது. அதற்கான விதை நெல்லில் என்னால் கொண்டுவரக் கூடிய அளவுக்கு வாங்கி வந்து பரீச்சார்த்தமாக எனது வயலின் ஒரு பகுதியில் விதைக்கச் செய்தேன். அதிலிருந்து கிடைத்த அறுவடையைக் கொண்டு மீண்டும் விதைத்தேன். இவ்வாறாக இந்த நெல்லினத்தை எமது பிரதேசத்தில் அறிமுகமாக்கிப் பிரபல்யப்படுத்தினேன். அக்காலத்தில் உணவு உற்பத்திக்கான போட்டியொன்றும் இருந்தது. இப்பிரதேசத்தில் எனது நெல் உற்பத்தி தேர்ந்தெடுக்கப்பட்டு அப்போதைய பிரதமராக இருந்த திரு.டி.எஸ்.சேனநாயக்க என்னைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இச்சான்றிதழ் எனக்கு 1950ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் திகதி வழங்கப்பட்டது. இதே போன்று கேகாலை மாவட்டத்தில் நடைபெற்ற மண்வளப் பாதுகாப்பு போட்டியிலும் கலந்து கொண்டு 1944.12.22 அன்று அதிலும் பரிசு பெற்றேன். சான்றிதழும் கிடைத்தது.
சன்மார்க்க சமூக சேவைகள்
அசீஸ் வைத்தியரின் சன்மார்க்க சமூக சேவை இரண்டு வகையாக நோக்கப்பட வேண்டியுள்ளது. ஒன்று இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களின் சன்மார்க்கத்துக்குமான சேவை. அடுத்தது முஸ்லிம்களதும் இந்த நாட்டின் ஏனைய சமூகங்களினதும் இன ஐக்கியத்துக்காக செய்துள்ள சேவை. பெளத்த விகாரைகள், பெளத்த பிக்குகள், பெளத்த சங்கங்கள், இந்து மதக் கோயில்கள் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்புகள் வைத்துக் கொண்டிருந்த போதும் தன்னை ஒரு முஸ்லிமாகவே எல்லா இடங்களிலும் இனங்காட்டிக் கொள்ள தவறவில்லை. தனது உடை நடை பாவனைகள் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் இஸ்லாமிய அடிப்படையிலான வாழ்க்கை முறைகளுக்கு ஒப்பவே நடத்தி வந்ததால் அந்நியர் மத்தியில் தான் பெற்றுக் கொண்ட செல்வாக்கினால் முஸ்லிம் சமூகத்தினரின் சன்மார்க்க நெறிமுறைகளுக்கான நன்மதிப்பைப் காப்பாற்றி வந்துள்ளார். அதே நேரத்தில் ஒரு முஸ்லிமாயினும் இஸ்லாத்திலிருந்து வழிதவறிச் செல்வதை சகிக்காதவராகவும் காணப்பட்டார்.
1945ம் ஆண்டு ஒரு முஸ்லிம் வாலிபர் பெளத்தமதத்தை தழுவியதோடல்லாது பெளத்த பிக்குவாகவும் தன்னைப் பிரகடப்படுத்திக் கொண்ட ஒரு சம்பவத்தனால் முஸ்லிம் சமூகத்தினால் ஏற்க முடியாது கவலை கொண்டிருந்த வேளையில் தனது சாணக்கியத்தையும், ஆழ்ந்த அனுபவத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி சமூகங்களிடையே பகைமை உருவாகாதவாறு
59

Page 39
சுபைர் என்ற அந்த இளைஞரை அணுகி நல்வழிப்படுத்தி அவரை தென்னிந்தியாவிலிருந்த ஒரு மத்ரசாவுக்கு அனுப்பி வைப்பதில் மும்முரமாகக் செயல்பட்டுள்ளார் மத்ரசாவில் கல்விபயின்ற அந்த வாலிபர் பேஷ்இமாமாகி பதுளை, மன்னார் ஆகிய பள்ளிவாசல்களில் கடமையாற்றி ஈமானுடன் வபாத்தானார்.
ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹதா பள்ளிவாசலின் பரிபாலன சபையின் தலைவராக இருந்த காலத்தில் இவரால் செய்யப்பட்டுள்ள சேவைகளை இன்றும் மக்கள் நினைவு கூறுகின்றனர். இவருடன் பரிபாலனக் குழுவில் மெளலவி ஏ.எம்.சரீப், எம்.சீ.எம். காசிம், தாஜுதீன், மரிக்கார், நியாஸ். ஏ.மஜித், டீ. ஏ. சேகு முஹம்மது, எம்.எல். முஹம்மதுதீன் ஆகியோர் கடும் பங்களிப்பைச் செய்துள்ளதாக அவரது குறிப்புகளிலிருந்து தெரியவருகிறது. பள்ளிவாசல் இட நெருக்கடி காரணமாக மேல்மாடி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று பரிபாலன சபை தீர்மானித்தது. உள்ளூரில் சேகரித்த பணம் போதாமையால் அசீஸ் வைத்தியர் கமிட்டி அங்கத்தவர்களுடன் தனக்குத் தெரிந்த வெளியூர் முஸ்லிம் தனவந்தர்களிடம் பணமும் கட்டிடப் பொருட்களையும் பெற்று வந்து பள்ளிவாசலை புனருத்தாரணஞ் செய்தார். அத்துடன் "ஒவத்தை மத்ரசாக் கட்டிடத்துக்கான நிலத்தையும் அன்பளிப்புச் செய்துள்ளார். முஸ்லிம்கள் சூழவுள்ள பகுதியான தனது அங்குருவான காணியிலிருந்து பொது சுகாதார நிலையம் ஒன்றுக்கான நிலத்தையும் அன்பளிப்புச் செய்தார். புதிதாக இஸ்லாத்தை தழுவிய பல குடும்பத்துக்காக தனது பாரம்பரியக் காணிகளில் வசிப்பிட வசதியும் தொழில் வாய்ப்புகளும் வழங்கியுள்ளார்.
முஸ்லிம் சமூகநலன் கருதி 1951ம் ஆண்டு மாவனல்லையிலே சில விஷமிகளால் தூண்டிவிடப்பட்ட இனக்கலவரத்தின் போது கிராமக்கமிட்டி அங்கத்தவர் என்ற முறையிலும் "பொசன்பெரகரா கமிட்டி அங்கத்தவர் என்ற முறையிலும் தான் பெற்றிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சிங்களத் தலைவர்களுடன் இணைந்து முஸ்லிம்கள் பாதிப்படையாதவாறு கருமமாற்றி சமாதானத்துக்காகப் பாடுபட்டுள்ளார். இதுபற்றி அவரது குறிப்பு இவ்வாறு கூறுகிறது.
“மாவனல்லையில் முஸ்லம்களுக்கு எதிராக இனக்கலவரமொன்றைத் தூண்டிவிட்டுக் கூத்தாடிகளாக இருந்து ஒரு சில அயோக்கியர்களின்
60

விசமத்தனமான செயலினால் முஸ்லிம்கள் பீதியடைந்து காணப்பட்டனர். அப்போது நான் கிராமக்கமிட்டியில் மாவனல்லை நகரப்பகுதிக்கு அங்கத்தவராகவும் பொசன் பெரகரா கமிடியின் அங்கத்தவராகவும் இருந்தேன். பூதாகரமாக உருவெடுத்த பத்தாம்பிட்டி சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தை திரு.சீ.ஆர். பெலிகம்மனை, பொலிஸ் இன்ஸ்பெக்டர்; பெரகரா கமிட்டி அங்கத்தவர் ஆகியோருடன் கலந்துரையாடி மிக அவதானமாக செயல்பட்டு சமரசமாகத் தீர்த்து வைப்பதில் கருமமாற்றினேன். இதன் காரணமாகத்தான் அந்தச் சந்தர்ப்பங்களின் போது நடைபெற்ற சில பெரகராக்களில் நானும் பொகரா நடுவில் சென்ற முக்கிய பிரமுகர்களுடன் சேர்ந்து நடந்தேன். சிங்கள முஸ்லிம் இன ஒற்றுமையைக் காண்பிப்பதற்காகவே இவ்வாறு செய்தேன். இதனை எனது சமூகம் எவ்வாறு நோக்கினாலும் நான் அதுபற்றிக் கவலைப்படவில்லை. இதனைத் தொடர்ந்தாற் போல் மீண்டும் முஸ்லிம் வியாபாரிகள் சிங்களக் கிராமங்களுக்குச் செல்லும் போது மேலும் சில அசம்பாவிதங்கள் ஏற்படத் தொடங்கின. உடனே திரு. பெலிகம்மனவைக் கொண்டே துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்டு கிராமங்கள் தோறும் விநியோகித்து நிலைமையினைக் கட்டுப்படுத்தினேன். ஒன்றை மட்டும் அறுதியிட்டுக் கூறமுடியும். அரசியல் சமூக சேவைகளின் போது குறைகூறுவோர் இருக்கத்தான் செய்வர். குற்றச்சாட்டுகளும் தோன்றத்தான் செய்யும். இதற்காகச் சில சமரச முயற்சிகளில் இருந்து ஒதுங்கிவிட முடியுமா?”
தமிழ் மக்களின் நலன் பேணல்
1949ம் ஆண்டு மாவனல்லை நகருக்கு மேற்பக்கமாக பாழடைந்த நிலையிலே இருந்த இந்துக்களின் கோயிலைப் புனர்நிர்மாணஞ் செய்ய இந்துப் பொதுமக்கள் எத்தனித்த போது கோயிலுக்குரித்தான காணியில் வேறுசிலர் உரிமை பாராட்டத் தொடங்கியதனால் கோவில் வேலைகள் தடைப்படத் தொடங்கியிருந்ததோடு பெரும் கைகலப்புகளும் ஏற்படத் தொடங்கின. இதனால் அன்று பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்த கே.கந்தையா அவர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது. இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைக்குமாறு திரு.கந்தையாவும் இந்து பரிபாலன சபை அங்கத்தவர்களும் அசீஸ் வைத்தியரை வேண்டிக் கொண்டனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு முகங்
கொடுத்து சமரசம் செய்து வைப்பதற்கு அசீஸ் வைத்தியர் எப்பொழுதும் தயக்கம்
61

Page 40
கொள்வதில்லை. உடனடியாக சம்பந்தப்பட்ட இரு சாராரையும் ஒன்று கூட்டி ஒரு சமரச உடன்பாட்டுக்கு வரச் செய்ததனாலே தான் இன்றும் காட்சி தருகின்ற மாவனல்லை பூரீகதிரேசன் கோவில் புதுப் பொலிவுடன் திகழ்வதைக் காணலாம். கோயிலை அழகாகக் கட்டி கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட போது மலை போன்ற பிரச்சினையைத் தீர்த்து வைத்தமைக்காக அசீஸ் வைத்தியரை ஏனையத் தமிழ் சிங்களத் தலைவர்கள் மத்தியில் மாலைசூடி வரவேற்று மங்கள வாழ்த்தும் பாடினர்.
இதுபற்றி மாவனல்லை யூரீ கதிரேசன் கோயில் இந்து பரிபாலன சபையின் தலைவரும் பிரதம குருவுமான பிரம்மபூரீ கெ.கெ.வி.ஆனந்தசர்மா அவர்கள் 29.06.95ல் 'மனிதருள் மாணிக்கம்’ என்று மகுடமிட்டு அசீஸ் வைத்தியரைப் பற்றி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்தள்ளார்.
“மாவனல்லைமாநாகரின் அண்மையில் உள்ள ஒவத்தைக் கிராமத்தில் பிறந்து வைத்தியத் துறையிலும் சமயத்துறையிலும் பொது வாழ்விலும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அல்ஹாஜ்.அப்துல் அசீஸ் என்னும் பெருமகனார் மக்களுக்கு ஆற்றியுள்ள சேவை கடலிலும் பெரிது. நான் ஒரு இந்து மதக்குரு என்ற வகையில் அவர் எமது மக்களுக்கு ஆற்றியுள்ள சேவையை மறக்க முடியாது. அவர் தம்மதம் போல் பிறர் மதத்தையும் இனத்தையும் நேசித்த ஒரு பெரியவர் அக்காலத்தில் அவர் இந்து மதத்தலைவர்களுக்குச் செய்த சேவை மறக்க முடியாது.
1949ம் ஆண்டு கோயில் காணிப்பிரச்சினை எழுந்த போது அன்றையக் கிராமக்கமிட்டி மெம்பராக இருந்த அஸிஸ் வைத்தியர் அவர்கள், அன்றைய மாவனல்லை பொலிஸ் அதிகாரியாக இருந்த திரு.கே. கந்தையா அவர்களுடன் இணைந்து இரு சாராருக்கும் இடையில்பேசி சுமுகமான முடிவு எடுத்தார்.
எனக்குத் தெரிந்த வரையில் தற்காலத்தில் ஏற்பட்ட எந்தவொரு பொதுப்பிரச்சினைகளிலும் தன்னலங் கருதாது இரவு பகலென்று பாராது சமரசம் பேசி நல்ல முடிவுகளை எடுத்துள்ளார். குறிப்பாக 1950ம் ஆண்டு எமது ஆலயம் புனர் நிர்மாணம் செய்த வேளையில் எம்முடன் ஒருவராக இருந்து எமது ஆலயம் புனர்
62

நிர்மாணம் செய்த வேளையில் எம்முடன் ஒருவராக இருந்து எமது ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டிய சம்பவத்தை எந்த ஒரு தமிழ் மகனும் மறக்கமாட்டார். அது மட்டுமல்ல எமது மக்கள் துன்பப்படும் போது அவர்களுக்கு எத்தனையோ விதத்தில் பல உதவிகள் புரிந்த ஒரு கொடை வள்ளல்.
"அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம்” என்ற பெருமை எமக்கும் உண்டு. வைத்தியத்துறையில் சமயத்துறையில் தேசிய ஒற்றுமையில் அன்பாய் பண்பாய் எம்மை நேசித்த ஒரு பெருமகனாவார்.
பிரம்மபூரீ கே. கே. வி. ஆனந்தசர்மா பிரதமகுரு, கதிரேசன் கோவில் இந்துபரிபாலனசபை
மாவனல்லை
செய் நன்றி மறவாமை
இவர் தமது வாழ் நாள் பூராவும் தமது குடும்ப மூதாதையரையும் அன்னை தந்தையரையும் எப்பொழுதும் மதித்துப் போற்றும் பண்புள்ளவராகத் திகழ்ந்தார். முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் தன்னைச் சந்தித்து தனக்காக துஆச் செய்யும் போது தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அன்னை தந்தையருக்கு துஆ இறைஞ்சுமாறு வேண்டிக் கொள்வார். அதே போல் ஆண்டு தோறும் அவர்களுக்கு நன்றிக்கடனாக அவர்களின் மறுமை சுகபோக வாழ்வுக்காக
துஆப் பிராத்தனைகள் செய்வார்.
தனது குடும்பத்தைச் சார்ந்தவர்களைப் போன்றே தன்னைச் சார்ந்தவர்கள் அயலவர்கள் ஆகியோர் மீது அன்பும் பரிவும் கொண்டவராகவும் இருந்து வந்துள்ளார். இவரது சன்மார்க்க சமூக சேவைகளில் ஒத்தாசை புரிந்தவர்களை கடைசி வரை செய் நன்றி மறவாத நிலையில் அவர்களின்
சுகதுக்கங்களில் முக்கிய பங்கு கொண்டிருந்தார். அத்தகையோருக்கும் அவரது
63

Page 41
சந்ததியினருக்கும் கூட இலவச வைத்திய சிகிச்சைகளை கடைசிவரை செய்து
வந்துள்ளார்.
வைத்தியத்துறையில் தனக்குப் பயிற்சியளித்த தனது குருவான பூரீ ரேவத சுவாமியின் மீது அளவற்றப்பற்றுக்கொண்டவராக இருந்துள்ளார். தனது குருவுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு ஆண்டு ஞாபகார்த்த வைபவத்தின் போதும் உணவுவகைகளைத் தயார் செய்து கொண்டு சென்று தானே அதனைப்
பங்கிட்டுக் கொடுப்பதை ஆண்டு தோறும் தவறாமல் செய்து வந்தார்.
சுதேச வைத்தியர்களின் நலன் பேணல்
ஆயுர்வேத வைத்தியத்தின் முன்னேற்றத்திலும் வைத்தியர்களின் நல உரிமைகளிலும் அதிக அக்கறை காட்டி வந்தார். 1952ம் ஆண்டு கேகாலை மாவட்ட ஆயுர்வேத வைத்திய சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக சேவை புரிந்துள்ளார். இக்காலத்தில் இவர் பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக இருந்த காரணத்தினால் 'பஞ்சபலவேகய’ என்ற திரு.பண்டாரநாயக்காவின் ஐம்பெரும் சக்திகளில் ஒன்றாக ஆயுர்வேதவைத்தியர்களும் இணைக்கப்பட்டிருந்ததனாலேயே இவர் அக்கட்சியில் சேர்ந்து உழைப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்து. ஆயுர்வேத வைத்தியத் துறையை புனர் நிர்மாணஞ் செய்வதிலும் ஆயுர்தேவ வைத்தியர்களைப்பதிவு செய்தல்அவர்களது வைத்திய அத்தாட்சிப்பத்திரங்களை அரசாங்கம் அங்கீகரித்தல்ஆயுர்வேத சபை-ஆயுர்வேதக் கல்லூரி உருவாக்கல்போன்ற பல்வேறு துறைகளில் இவரது ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வைத்தியத் துறையிலும் சமூக அரசியற் துறையிலும் இவர் பெற்றிருந்த செல்வாக்கே இதற்குக் காரணமாகும். இத்துறையில் இவர்மேற் கொண்ட முயற்சிகள் தனியாகவே மதிப்பீடு செய்தல்
வேண்டும்.
64

9
மருத்துவ சேவையும் பாராட்டுக்களும்
நல்லவர்கள் உலகத்தில் மிகவும் சொற்பம் நடிப்பவர்கள் பெருகிவரும் கலிகாலத்தில் எல்லையின்றி நீபுரிந்த, சேவை மாண்பை இதயமுவந்தெடுத்துரைக்க மனிதருண்டோ இல்லை யென்று சொல்லாமல் உம்மைப் போலும் எடுத்துரைக்கும் எம்மவர்கள் கூட்டமொன்று குறிஞ்சி மலர்மாலை சூடி உண்மை அன்பின்
மோகனமே! வாழ்கவென வாழ்த்தக் காண்போம்
பூனி லங்கா திலக
இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாகக் கடமையாற்றிய ஐ.டி.மூணமலே அவர்கள் மருத்துவர் அசீஸ் அவர்களைப் பற்றி,
“என்னை மிகவும் வருத்திய புரோஞ்சியல் அஸ்மா’ என்னும் கொடிய நோயிலிருந்து மிகவும் வெற்றிகரமான முறையில் காப்பாற்றிய மாவனல்லை பெலிகம்மனையைச் சேர்ந்த அல்ஹாஜ் வைத்திய கலாநிதி ஏ.டீ.எம்.அசீஸ் அவர்களின் ஆயுர்வேத சிகிச்சைக்காக எனது நன்றி கலந்த உள்ளார்ந்த உணர்வுகளை பதிய வைப்பதில் நான் இச்சந்தர்ப்பத்தில் பெரு மகிழ்வுடன் பயன்படுத்துகிறேன்.
நான் 1972 முதல் 1975 வரையும் பின்னர் 1979 முதல் 1981 வரையும் கண்டியிலும் 1976 முதல் 1979 வரை அனுராதபுரத்திலும் நீதிச் சேவையில் நீதிபதியாக கடமையாற்றியுள்ளேன். இக்காலத்தில் எனது சுகவீனத்துக்கு மேற்கொள்ளப்பட்ட மேற்கத்தைய வைத்திய சிகிச்சை ஒரு தற்காலிகமான சுகத்தையே தந்தது.
65

Page 42
முன்னால் எளைபஸ் நீதிக்கமிஷனராக இருந்த காலஞ் சென்ற வால்ட்டர் தலகொடபிட்டிய அவர்களின் ஆலோசனைக்கமைய 1981ம் ஆண்டுதான் அசீஸ் வைத்தியரிடம் மருத்துவம் பெறமுற்பட்டேன். அவரது ஆலோசனையை ஆரம்பத்தில் பெறாமல் பல வருடங்கள் கழித்து பெற முன் வந்ததையிட்டு நான் கவலைப்படுகிறேன். அசீஸ் வைத்தியரிடம் மருத்துவம் பெற்ற மிக குறுகிய காலத்தில் எனது கடுமையான சுகவீனத்தைக் சுகப்படுத்திக் கொள்ள முடிந்ததையிட்டு நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
இரவில் நீண்ட நேரம் நித்திரை இன்மையாலும் நீங்காத மன நோயினாலும் கஷ்டப்பட்ட நான் பூரண சுகமும், தேகாரோக்கியமும் பெற்றுக் கொண்டேன்.
அசீஸ் வைத்தியர் நீண்ட ஆயுளும் நித்திய சுகமும் பெற்று அவரது வைத்தியத்துறையினால் மேலும் பலர் நன்மையும் பெற்று வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
(ஒப்பம்), .ேI.T, மூனமலே [} -II) = || அப்பில் நீதிமன்ற நீதிபதி
"அசீஸ் வெதமஹத்தயா' என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் மாவனல்லை அசீஸ் வைத்தியர் நாடளாவிய ரீதியில் சிங்கள - தமிழ் -முஸ்லிம் மக்களின் நன்மதிப்பையும் பாராட்டையும் பெற்றவர். நாட்டின் தலைவர்கள் உயர் பதவி வகிப்போர் கல்விமான்கள் -முதல் சாதாரண பொது மக்கள் வரை அன்னாரின் அரிய சேவைகளினால் பெரும் பயன் எய்தியுள்ளனர். சகல துறைகளிலும் கைதேர்ந்த வைத்தியராக குறிப்பாக முறிவு வைத்திய நிபுணராக விளங்கிய அன்னார் சமூக சன்மார்க்க, கலாசார முன்னேற்றப்பணிகளில் பெரும் பங்காற்றியுள்ளார். தான் வாழ்ந்த பிரதேச மக்கள் மத்தியில் பல்வேறு பிரச்சினைகள் உருவான போது சமூக ஒற்றுமையும் சமாதானமும் நிலவச் செய்வதில் முதன்மையாக முன்னின்று செயல்பட்டதை இன்றும் மக்கள் மறந்து விடவில்லை.
வாழ்நாள் பூராவும் சமூகசிந்தனையுடன் இனஐக்கியத்துக்காவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் உழைத்து வந்த காரணத்தினால்-அன்னாரை தேசிய
հի

ம் 1991ம் ஆண்டு "பூரீலங்கா திலக"
եցil
தித்து இலங்கை அரசாங்க திபதி விருது வழங்
வீரர் வரிசையில் ம
கி கெளரவித்
எனற ஜனா
ள்
uffi
ஸ் பைத்திபர்
ப்துல் அசீ
ட்டத்துடன் அ
ங்கா திலக
Tit. T
பூநிஸ்
ம் என்ற
பிரஜை என்ற
மலையகத்தின் முதலாவது முஸ்
தி
றற
மபரகமுவ மாகாணத
ஜனாதிபதி விருது பெ
ទាំងលំ
Ար தின
ஸ் முதலாவது
Lqat; 8#höib LII LI TIJ ITL—
வகையிலும் ச
து மககளும
LIT
ԱնIn
தலைவாகளும பகா சங்கத
விப்
Լի (Լիճiմ
வகையிலு
க்களும்
டு
血
அளித்த மகத்தான வரவே
அனனாருகது
இதற்கொரு சான்றாக விளங்குகின்றது.

Page 43
Laith Ath Llathudai P. C. M. P.
L.A. Aziz,
I Write Lo congratulate youl on Ille conferment of national honours by His Excellency the President.
This award is undoubtedly a richly deserved one and a recognition of your dedication and service to the country.... with best wishes.
Yours sincerely,
LSLSLLLLLYS SLLLLLLCCCLCLGLL SS LLLLLS LLLLLLLLS 0S000S0aSS
கண்டி ஒறாபி பாஷா கலாசார நிலையத்தில் 3-8-1991 ல் நடத்தப்பட்ட மகத்தான வரவேற்புக் கூட்டத்தில் மர்ஹும் டாக்டர் ஏம்.சி.எம்.கலில், எகிப்திய, பாகிஸ்தானிய, மலேசிய, சுவீடன் ஆகிய நாடுகளின் தூதுவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கண்டி ஒறாபிபாஷா காசார நிலையத்தில் அசீஸ் வைத்தியருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு எகிப்தியத் தூதுவரும் அல்ஹாஜ் 3.M.A. ஹஸனும் ஏனையோரும்
∎ኑና
 

Dr.M.C.M. Kaleel, President, All Ceylon Muslim League
"Your selfless service to the betterment of your fellow beings is invaluable. During the period of your service as a member of the Village Council of Mawanella, your successful effort to bring about mutual goodwill and understanding between the two Major Communities in the area namely Sinhalese and Muslims are appreciated by the people to this
day.......
Dr. M.C. M. Zubair, President, Orabi Pasha Welfare Association
"You are one of those who fought for the rights of Ayurvedic Physicians for registration as Medical Practitioners. You are well versed in the Sinhala language and beer a good
orator. Your life had be:e:11 a Il illustri Couls ( 311 C:........
Former Egyptian Ambassador- Saeed El Banhavi
Dı. Alhaj A.T.M.A.Azeez of Belligam mana, Mawan alla who was conferred the National Honour of "Sri Lanka. Thilaka" by his excellency the President of Sri Lanka on National Heroes Day 1991. I oil behalf of the members of Orabi Pasha Welfare Association and very happy to have you in our midst this Iloining. We note with pride that you are the
first Muslim in the upcountry to receive a Presidential Award.
We feel proud to record that for the last 65 years of your practice your services have been availed of not only by those living the length
and breadth of Sri Lanka, but also by those living beyond its shores.
ht)

Page 44
We also wish to place on record our appreciation of your treating the son of His Excellency Gamal Abdul Oyum, the Former Ambassador of Egypt, during whose tenure of office in Sri Lanka
Saeed EI Banhavy 3. 08. 91
இவ்வாறே அன்னார் பிறந்த நாலுகோரளை மக்களும், மகா சங்கத்தினரும் ஏற்பாடு செய்த பாராட்டு வைபவங்களும் அன்னார் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் பெற்றிருந்த பெருமதிப்பை எடுத்துக் காட்டுகின்றன.
ஜனாதிபதி விருது பெற்றமைக்காக கண்ட ஒறாபி பாஷா
கலாசார நிலைய பாராட்டு வைபவத்தில்:
Former Egyptian Ambassador- Saeed El Banhavi
Dr. Alhaj A.T.M.A.Azeez of Belligammana, Mawanalla who was conferred the National Honour of "Sri Lanka Thilaka" by his excellency the President of Sri Lanka on National Heroes Day 1991. I on behalf of the members of Orabi Pasha Welfare Association and very happy to have you in our midst this morning. We note with pride that you are the first Muslim in the upcountry to receive a Presidential Award.
We feel proud to record that for the last 65 years of your practice your services have been availed of not only by those living the length
and breadth of Sri Lanka, but also by those living beyond its shores.
We also wish to place on record our appreciation of your treating the son of His Excellency Gamal Abdul Oyum, the Former Ambassador of Egypt, during whose tenure of office in Sri Lanka
Saeed EI Banhavy 3. 08. 91
70

மாவனல்லை மயிராபாத வித்தியாலயத்தில் நடைபெற்ற வரவேற்பின் போது:
அப்போதைய மாவனல்லைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு. சந்ரா ரணதுங்க.
“அசீஸ் வைத்தியரின் சமூக சேவையானது தன்னலமற்றதும் ஏனையோருக்கு முன்மாதிரியானதுமாகும். சாதி மத பேதமற்றவர். சகலரையும் சகோதரராக மதிக்கும் ஒரு மனிதப்புனிதர்-தான் பற்றியுள்ள மதக்கடமைகளில் தவறாதவர். இந்த உணர்வு மக்கள் மத்தியில் படருமாயின் இந்த நாடே சுபீட்சம் நிறைந்த ஒரு நாடாக மாறிவிடும். எமக்கெல்லாம் முன்மாதிரியாக விளங்கும் இவரை உலகமக்கள் பின்பற்றினால் உலகமே பிரச்சினைகள் இன்றி சுபீட்சம் பெறமுடியும். இவரது மனைவியிடத்தில் அற்புதமான அன்பும் கருணையும் உபசரிப்பும் உண்டு. தன் அடியொட்டி வாழ்ந்த மகனையும் பெண் மக்களையும் வளர்ந்துவிட்ட புதுமையும் ஒரு குடும்பம் எப்படி வாழ வேண்டுமென்பதையும் காட்டித்தந்துள்ளார்.”
கேகாலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான அல்ஹாஜ் யு.எல்.எம்.பாரூக்
அசீஸ் வைத்தியரின் புதல்வர் டாக்டர் ஹமீத் அசீஸ், மாவட்ட அபிவிருத்தி சபை அங்கத்தவராக தந்தையின் அடியொட்டிச் சேவையாற்றி வருபவர்; அவரது நேர்மையும் நற்பண்புகளும் மக்களைக் கவர்ந்துள்ளன. தந்தை
y
மகற்காற்றியுள்ள பணியை நான் பாராட்டுகிறேன்.
நாலு கோரளை பெளத்த சங்க நாயக்கர் பெலிகம்மனை பொத்துகுல் பிரிவினாதிபதி கஹவத்த பூணிரத்ன ஜோதி தேரர்
“பெளத்த சங்கத்தினர், சிங்கள முஸ்லிம், தமிழ், மக்கள் பெருந்திரளாக ஒன்று கூடி அசீஸ் வைத்தியரைப் பாராட்டும் இது போன்ற வைபவமொன்றை எங்கும் காண்பது அரிது. பண்டைய ரிசிகள் தம் உயிரினும் மேலாக மதித்துப் பாதுகாத்து வந்த ஆயுர்வேத வைத்தியத் துறையைத் தம் வயோதிபக் காலம் வரை பாதுகாத்தவர். அதனைத் தொடர்ந்தும் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே
71

Page 45
தமது அருந்தவப் புதல்வர் ஹமீத் அசீஸ் அவர்களை அத்துறையில் ஈடுபாடு கொள்ளச் செய்து தனது வைத்தியப் பாரம்பரியத்துக்கும் ஆயுர்வேதத்துறைக்கும் நிரந்தரமான பெருமை அளித்துள்ளார். அவரது வழித்தோன்றல்கள் அவரது நல்லெண்ணத்தை வழியெடுத்துச் செல்ல பிரார்த்திக்கின்றேன்."
கேகாலை மாவட்ட பள்ளி பரிபாலன சபைகள்
அங்கத்தவர்களின் தலைவர் அல் ஹாஜ் M.T.M. யூஸுப் அலி
அரச விருது இவருக்கு புதிய விருதல்ல, இவர் பூட்டனாரும் சிங்கள மன்னரால் "மாக்கல வத்த" என்ற பிரதேசத்தை கொடுத்து கெளரவிக்கப்பட்டவர். ஒரு நாள் அப்பிரதேசத்துக்கு நான் போக நேர்ந்தபோது இன்றும் அங்குள்ள மக்கள் "மரக்கல வத்த" என்றே அழைக்கின்றதை கண்டேன்.
இன்று ஒவ்வொரு அங்கத்திலுமுண்டாகும், நோய்களுக்கு வெவ்வேறு வைத்திய நிபுணர்களிடம் அலைய வேண்டியுள்ளது. போக்குவரத்து, மற்றும் வசதிகலற்ற எமது இள வயதில், எமது மக்களிடையே உண்டாகிய சகல சர்வாங்க நோய்களையும் கெட்டித்தனமாக, சுயநலம் பாராது, சுகமாக்கியவர், இந்த சமூக சேவையாளராக, ஜனாதிபதி விருது பெற்றுள்ள, அஸிஸ் வெத மஹத்தயா என்ற
இந்த வைத்திய நிபுணர்தான் என்பதை நாம் என்றும் மறக்க முடியாது.
கேகாலை மாவட்ட சபை அங்கத்தவர் மர்ஹ"ம் அல்-ஹாஜ்
நியாஸ் ஏ. மஜித்
சிறு பராயம் தொட்டு அசீஸ் வைத்தியருடன் சமூக சேவைகளுக்கு உதவியாக இருந்து வந்தேன். அவ்வாறு நான் அவரது பாதையைப் பின்பற்றியதனால் தான் இன்று நான் இப்பதவியை வகிக்கின்றேன். அன்னார் சேவையெனப் புறப்பட்டால் இரவு பகலென்றோ, வெய்யில் மழையென்றோ, ஏழை ஏந்தல் என்றோ நினைத்தும் பார்ப்பதில்லை. தனக்கெனத் தனியானதொரு இலட்சியத்துடன் எவர் எதைக்கூறினாலும் தனக்கு எது சரியெனப்படுகின்றதோ அதைத் துணிவுடன் செய்யத் தவறவில்லை."

ஜனாதிபதி விருது (பூங்கா நிலக கிடைந்தாமக்கு கொாவளிக்கு முகமாக சிங்கள தமிழ் முஸ்லிம் சீக இனத்தவர்களும் ஒன்று சேர்ந்து கண்டிய நடனத்துடள் கார்வமாக அழைத்துச் செல்கின்றார். 1891

Page 46
ா பாவால்ஸ் ஹிங்குயோய
கொரவிந்து ஆளிந்த பாபேற்பு (1991)
ருது வழங்கப்பட்டமேயை
|
關 활 感、 翻部 低陆 TE E
ஜாதிபதியினா சாரீராக் கல்லூ
 

10 இல்லறமும் நல்லறமும்
1934ம் ஆண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்து கொண்ட அசீஸ் வைத்தியர் தனது துணைவியாருடன் 52 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளார். தனது மூதாதையரின் பாரம்பரிய வாழ்க்கைக்கு ஒத்ததான வர்த்தக வைத்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்த தொடபொல வரகாபொல முஹாந்திரம்லாகே அலி உதுமான் லெப்பையின் மகன் அஹ்மது லெப்பையின் மூத்த புதல்வி மரிய முத்து நாச்சியை பெற்றோரின் ஏற்பாட்டின் பேரில் திருமணம் செய்து கொண்டார். நீண்டகாலமாக இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு இவர்கள் இனிதே வாழ்ந்தனர். ஒருவரையொருவர் அறிந்து கொண்டும் புரிந்துகொண்டும் மகிழ்வுடன் வாழ்ந்தனர்.
அன்பின் கிழிகிாழ்க்கை ஆற்றும் அருட் சாந்தி இன்ப விழா நெஞ்சில் சிப்பொழுதும் அருள் சேர்க்கும்
என்பதற்கொப்ப 52 ஆண்டுகள் அருள்மறைக்கு ஒப்ப வாழ்ந்து வந்துள்ளனர். ஒருவரின் வாழ்க்கையின் வெற்றிக்கு அவரது மனைவியே முதலாவது பக்கத்துணையாக அமைவதை பல பெரியார்களின் வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடியும், அசீஸ் வைத்தியரின் பிரபல்யத்துக்குத் தனது மனைவியின் பங்களிப்புப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"நான் வைத்தியத்திலும் சமூக சேவையிலும் ஈடுபட்டதால் எனது வீட்டில் தங்கியிருப்பது குறைவு. அப்படியான சந்தர்ப்பங்களில் வந்தாரை வரவேற்று உபசரித்து குடும்பத்தைக்கவனிப்பதிலும் உதவி ஒத்தாசைகள் புரிவதிலும் எனது பாரியார் அளித்து வந்துள்ள பங்கு மகத்தானது. எனக்குத் தேவையான சகல உதவிகளையும் புரியும் அதேவேளை எனது வயதான காலத்தில் கேள்விப் புலன் மந்தமான போது அவரது செவிகளே எனது செவிகளாக அமைவதுண்டு.
75

Page 47
அனாதைகளை ஆதரிப்பதிலும் தான தருமங்கள் செய்வதிலும் என்னைவிடவம் மிஞ்சியவர். இஸ்லாமிய சன்மார்க்க ஒழுக்கங்களில் தன்னையும் தன் குழந்தைகளையும் நன்னெறிப்படுத்துவதில் கண்ணுங்கருத்துமாக விளங்கியவர்; இஸ்லாத்தின் இறுதிக் கடமையான புனித ஹஜ்ஜை 1975லும் 1986லும் என்னுடன் சேர்ந்து இனிதே நிறைவேற்றியவர். "இஸ்லாத்தின் புனிதக்கடமைகளை இனிதே நிறைவேற்றித் தன் கணவனின் இன்பதுன்பங்களிற் பங்கு கொண்டு புரியும் பரிசுத்தமான ஒரு மனைவிக்கு மறுமை வாழ்வில் கவனபதி நிரந்தரமாக்கப்படும்" என்ற நபிமொழிக் கொப்ப வாழ்ந்த எனது அன்புத்துணைவியாருக்கு சுவனபதி கிடைக்க ஏக அல்லாவிடம் துஆ இறைஞ்சுகிறேன்."
இவர்களது வழித்தோன்றல்கள்;
அல்ஹாஜ் டாக்டர் எஸ்.ஹமீத். ஏ.அசீஸ் ஜே.பி
"பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவானினும் தனி சிறந்தனவே"
என்பதற்கொப்ப அன்னை தந்தையின் பாரம்பரியத்துக்கும் பிறந்த மண்ணுக்கும் சேவையாற்றும் மனப்பான்மையோடு தந்தையின் இலட்சியத்தை வழி நடத்திச் செல்பவராக விளங்குபவர் இவர் தான் பெற்று வந்த கல்வித்துறையில் முன்னேறி உயரிய பதவிகள் வசிக்கக் கூடிய வாய்ப்புகளைப் பெற்றிருந்தும் தான் கொண்ட இலட்சியத்திற்காகவே தந்தை ஆற்றிய மருத்துவ சேவையைத் தனயனும் மேற்கொண்டார். தந்தையின் சமூக பணிகளையும் தொடர்ந்து ந்ேகொண்டு மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான்" என்பதை மக்களுக்கு புரிய வைக்கும் வகையில் தம்பணிகளைத் தொடர்ந்தும் ஆற்றி வருகிறார். அதில் வெற்றியும் திருப்தியும் அடைந்து வந்துள்ளமையை அவரே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"எனக்குத் தெரிந்த காலம் முதல் எனது தந்தையார் வைத்திய, சமூக, அரசியல் பணிகளில் தமது வாழ்நாட்களைக் கழித்த வண்ணமாகவே இருந்துள்ளார்.
எனது வைத்தியப் படிப்பை முடித்துக் கொண்டதும் கொழும்பில் ஒரு டிஸ்பன்சரியை ஆரம்பிக்க எண்ணினேன். அதற்காக அனுமதிபெறும் பொருட்டு அவரிடம் கேட்டேன். அவர் அமைதியாகப் பதில் கூறினார். என் அருமை மகனே!
நான் உன்னிடம் எதிர்பார்ப்பது அதுவல்ல நான் பிறந்தமண்ணில் செய்து வந்த
7酋

நம்முன்னோர் வழி வந்த வைத்திய சேவையும் எனது சமூக நல சேவைகளையும் இனிமேல் நீ தான் மேற்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்." என்றார். இது ஆரம்பத்தில் ஒரு ஏமாற்றமாகவும் கவலையாகவும் இருந்தது. அதே நேரத்தில் 20 ஆண்டுகளாக என் அருமைத்தந்தைதயாரிடமிருந்து நான் பெற்ற அனுபவங்களும் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் விலை மதிக்க முடியாவைகளாக எனக்குத் தோன்றியது. மருத்துவத் துறையில் நான் ஒரு தேர்ச்சி பெற்ற மருத்துவராகப் படித்து வெளியேறினாலும் எனது தகப்பனார் கையாண்ட சிகிச்சை முறைகள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டன. அவரிடமிருந்து நல்ல வைத்தியருக்குரிய பல உயர் பண்புகளை நான் அறிந்து கொண்டேன்.
"ஒரு சிறந்த வைத்தியன் தானே மருந்துகளைத் தயார் செய்தல் வேண்டும். நேரடியாகவே அவற்றை அவதானித்தலும் வேண்டும். வைத்தியத்துக்காக வரும் நோயாளியின் உயிரைத்தனது உயிராகக் கருத வேண்டும்" என்று அவர் கூறிய அறிவுரைகள் என்றுமே என்னால் மறக்கமுடியாதவை. இப்பொழுது சுட்ட பல நோயாளிகள் வந்தால் எனக்குக் களைப்புத் தோன்றும், அப்பொழுதெல்லாம் நான் எனத தந்தையாரை நினைத்துக் கொள்வேன். இரவு நடுநிசியின் போதும் நோயாளிகள் வந்தால் படுக்கையிலிருந்து எழுந்து வந்து புன்முறுவல் பூத்த முகத்துடன் சிகிச்சை செய்வாரே என்று நினைத்தவுடன் என்னையறியாமலே களைப்பு நீங்கிவிடும்.
எனது தந்தையார் மிகவும் எளிமையானவர், தூய்மையானவர் ஆடம்பர வாழ்க்கை அவருக்குப் பிடிக்காது. ஏன்? என்னையும் எனது சகோதரிகளையும், பேரன் பேத்திகளையும் கூட அப்படித்தான் வாழ பயிற்சி அளித்தார். வைத்தியத் துறையில் நண்பனோ, எதிரியோ என்ற வேறுபாடு காட்டுவது கிடையாது. இது வைத்தியப் பிராமானங்களில் ஒன்று. எல்லோரையும் ஒரே விதமாக் கருத்திற் கொண்டு நோய்தீர்க்கும் ஓர் ஒளஒதமாகவே அவர் திகழ்ந்தார். எந்த ஒரு பிரச்சினை தோன்றிய போதும் மத்தியஸ்தம் வகித்து சமாதானம் படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே தான். அவரது வாழ்நாளில் ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகளை எண்ணிப்பார்க்கும் போது இத்தனையும் செய்வதற்கு அவருக்கு மனத்துணிவும் நேரமும் எப்படித்தான் கிடைத்ததோவென நானே ஆச்சரியப்படுவதுண்டு. அன்னாரின் சுயநலமில்லாத சேவையினால் பலன் எய்திய பலர் இப்பொழுதும் என்னிடம் வந்து நன்றியுடன் நினைவு கூறுகின்றனர். எனது தந்தையாரின் வெற்றிக்கு எனது தாயாரின் ஒத்துழைப்புத் தான் முக்கிய காரணமென்பதை அவர்
דל

Page 48
அடிக்கடி எங்களிடம் கூறுவதுண்டு. எனது தந்தையாரின் நினைவுகள் அடிக்கடி எங்கள் முன்தோன்றும் போதெல்லாம் இதயக்கவலையுடன் கண்கள் கலங்கத்தான் செய்கின்றன. அன்னாரின் மறுமையின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்வதைத் தவிர எம்மால் வேறு என்னதான் செய்ய முடியும்
அன்னாரின் பொய்யா மொழியையும் வழியையும் பின்பற்றியதால் தான் நான் இன்று எதிர்பார்த்ததை விட சீரிய வாழ்வு முறையில் சிறப்பாக எனது வாழ் நாளை வைத்தியத்துறையிலும் சமூக சேவைத்துறையிலும் செய்து வரும் வல்லமையைப் பெற்றுள்ளேன்.” என்று அசீஸ் வைத்தியரின் ஏகப்புதல்வனான அல்ஹாஜ் டாக்டர். ஹமீத் ஏ.அசீஸ்.ஜே.பி.அவர்கள் தனது தந்தையின் நற்பண்புகளை விளக்கிக் கூறினார்கள். டாக்டர் ஹமீத் அசீஸ் ஜே.பி. அவர்களின் சமூகப் பணிகளையும் எடை போட்டுப் பார்க்கும் போது தந்தையார் வழி நின்று எப்படிச் செயலாற்றுகின்றார் என்பதையும் மதிப்பீடு செய்து கொள்ள முடிகிறது. தந்தையாரின் வயோதிப காலத்தில் பக்கபலமாக இருந்து அவர் ஆற்றியுள்ள பணிகளே அதற்கோர் உதாரணமாகும்.
1980:- ஹிங்குளோயா கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்
1981: கேகாலை மாவட்ட அபிவிருத்திசபை (D.D.C) யின் ஒரே ஒரு
முஸ்லிம் அங்கத்தவர்.
1978: இலங்கைப்பல்கலைகழக யூனாணி வைத்தியப் பிரிவில்
பகுதிநேர விரிவுரையாளர்
1981: ஹிங்குளோயா மகாவித்தியாலய அபிவிருத்தி சபை தலைவர்
1985-93: மாவனல்ல பெளத்த இளைஞர் சங்கத்தின் பெரகராகமிட்டி
அங்கத்தவர். 1993: பயங்கரவாதிகள் சரணடையும் கமிட்டியின் அங்கத்தவர் 1986:- சப்ரகமுவ பிரதேச சபைக்காக அபேட்சகர் நியமனத்தை
இன்னுமொரு முஸ்லிமுக்கு வழங்கச் செய்தமை 1988: பாராளுமன்ற தேர்தலில் கோகாலை மாவட்ட
ஐ.தே.க.அபேட்சகராகப் போட்டியிடத் தெரிவுசெய்யப்படல். ஆயினும் தனக்குக் பதிலாக இன்னுமொரு மூத்த அரசியல்வாதியான முஸ்லிமுக்கு அந்நியமனத்தைப் பெற்றுக்கொடுத்தமை.
1991: ஏற்கனவே ஹஜ் கடமைகளை நிறைவேற்றிய பின்னரும் இலங்கை அரசாங்க ஹஜ்கமிட்டியின் வைத்தியராக புனிதமக்கா மதீனா நகர்களுக்குச் சென்று ஹஜ்கடமையையும் நிறைவேற்றி ஹஜ்ஜாஜிகளுக்கு உயர்ந்த சேவையாற்றினார்.
78

19s: அகில இலங்கை முஸ்லிம் வாலிப சங்கத்தின் கேகாலைக் கிளைத்தலைவர்; அகில இலங்கை வைத்திய சங்கத்தின் அங்கத்தவர். 1991: லிருந்து ஹிங்குளை மஸஜிதுல் ஹ"தா பள்ளிவாசல் பரிபான
சபைத்தலைவர்.
இவ்வாறாக பல பதவிகளை அலங்கரித்து வரும் இவர், மாவனல்லை சஹிரா மகாவித்தியாலயம், மயிரபாத மகா வித்தியாலயம், கேகாலை சென் மேரிஸ் கல்லூரிகொழும்பு அக்குவைனாஸ் பல்கலைக்கல்லூரிகொழும்பு, சுதேச வைத்தியக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்று தந்தையைப் போன்றே மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற வைத்தியத்துறை டாக்டர் பட்டம் பெற்று தந்தையின் விருப்பத்திற்கேற்ப தன் சொந்த ஊரிலேயே வைத்தியத்துறையிலும் சமூகசேவைத்துறையிலும் பிரகாசித்து வருகிறார். இவர் கண்டியைச் சேர்ந்த வர்தகரான அல்ஹாஜ் எம்.எம்.சித்தீக் அவர்களின் சிரேஷ்ட புதல்வியான நூருல் நஷ்மியைத் திருமணஞ் செய்துள்ளார்.
ஹஜியானி ஆயிசா மஹ்ரூப்
அப்துல் அசீஸ் வைத்தியரின் மூத்த மகள் ஹஜா ஆயிசா மஹரூப் அவர்கள் இப்பொழுது கண்டியில் வாழ்ந்து வருகிறார். இவர் ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.மஹ்ரூப் அவர்களின், பாரியாராவார். இவரது கணவரான சட்டத்தரணி அல்ஹாஜ் மஹ்ரூப் அவர்கள், அகில இலங்கை வக்பு சபைத்தலைவராகவும் - அகில இலங்கை பல்கலைகழக மானியக் குழு அங்கத்தவராகவும், மத்திய மாகாண ஹிஜ்ராக் கமிட்டித் தலைவராகவும், மத்திய மாகாண அரச சேவைக்கமிஷன் அங்கத்தவராகவும் இருந்ததோடு இன்னும் பல பதவிகளையும் வகித்தவர். சமூக கலாசார சன்மார்க்கத் துறைகளில் மிகுந்த ஆர்வத்துடன் உழைத்து வருபவர். ஜனாபா ஆயிசா மஹ்ரூப் அவர்களும் சன்மார்க்க சமூக கலாசார இயக்கங்களில் அதிக கரிசனையுடன் உழைத்து வருபவர். கண்டி ஒறாபி பாஷா நலன் புரிச்சங்கத்தின் உதவிச் செயலாளராகவும், மத்திய மாகாண முஸ்லிம் மாதர் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்து நற்பணிகள் புரிந்து வருபவர். சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சிறந்த தேர்ச்சி பெற்றுள்ள இவர் சிறந்த பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் கொண்டவர். தனது பல்வேறு சமூகப் பணிகளுக்கு மத்தியிலும் தனது குடும்பத்தைச் சீரிய முறையில் நடத்திச் செல்லும் பண்புள்ளம் படைத்தவராகவும் விளங்குகின்றார்.
79

Page 49
பெற்றோரை அன்புடன் பராமரிப்பதுடன் தனது குழந்தைகளையும் பண்புள்ளவர்களாக வளர்க்கும் பாங்கும் கொண்டவர். விருந்தினரை உபசரித்தல், ஏழைகளை ஆதரித்தல், உறவினர்களுடன் உறவாடல் போன்றவற்றால் மக்களின் நல்லன்பைப் பெற்றவர். தனது அருமைத் தந்தை அப்துல் அசீஸ் வைத்தியரைப் பற்றி எழுதியுள்ள ஒரு கட்டுரையின் சுருக்கம்.
“அன்னையும் பிதாவும் ஒரு குழந்தையின் வளர்ப்பிலும் வழிகாட்டலிலும் முன்னணியிற் திகழ்கின்றனர். அத்தகைய பெற்றோருக்கு நாம் செய்யும் கடமை யாதெனின் அவர்கள் விரும்பிய நல்வழியில் நாம் வாழ்ந்து காட்டுவதுதான். தாயோடறு சுவைபோம்; தந்தையோடு கல்விபோம்” என்பார்கள். தாயின் அறுசுவையும் தந்தையின் கல்வியின் மரபினால் உருவாக்கப்பட்ட போதனைகளும் எத்தகைய இதயம் வாய்ந்தவர்களாலும் மறந்து விட முடியாது. குடும்பம் சுற்றாடல்சமூகம் என்பவற்றிற்கு இசைந்த வகையில் என்னையும், எனது சகோதரன் சகோதரியையும் சன்மார்க்க நெறிமுறையில் வளர்த்து வாழ்வளித்த எனது தந்தையார் தனது வாழ் நாள் முழுதும் கடைப்பிடித்து வந்த சில வழி முறைகளை நினைக்கும் பொழுது அவரது அன்பிலும் அரவணைப்பிலும் வாழக் கிடைத்ததை ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன். எனது தந்தை, மக்களால் போற்றப்படுகின்றாறென்றால் அது அவர் தம் மக்களுக்குப் பெற்றுத் தந்த பேரின்பமென்பதே எனது கருத்தாகும். அத்தகைய இன்பத்துக்கு எம்மை ஆளாக்கி வைத்த என்னருமைத்தந்தையின் நற்பண்புகள் சிலவற்றைக் கூறிவைத்தலும்
என்கடமையாகும்.
வாழ்நாள் பூராவும் வாழ்வாங்கு வாழ்ந்த எனது தந்தை எப்பொழுதும் தனது வாழ்நாளை வீண்விரயங்களுக்காக ஒதுக்கவில்லை. எதையும் ஆழ்ந்த சிந்தனையோடும் சிக்கனத்தோடும் எளிமையான முறையிலும் துாய்மையான நன்னோக்குடனும் செயற்படுத்தும் நோக்கம் கொண்டவர். அவரிடம் உறுதியான ஈமான் இருந்தது. அனாச்சாரங்களை வெறுக்குந் தன்மையும் இருந்தது. அதனால் அஞ்சாமல் தனியே நின்று நற்காரியங்களை செய்து வெற்றி வாகை சூடினார். கடமையிற் கண்ணும் கருத்துமாக இருப்பார்.அதனால் வைத்தியனுக்கு இரவும் பகலும் ஒன்றே என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.
விபத்துக்குள்ளானவர்களாக- உடன் சிகிச்சை பெற வேண்டிய இருதய நோயாளர்களாக உயிருக்கு ஊசலாடுவோர்களாக நடுச்சாமத்தில் அவரை நாடி
80

வந்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களை நாம் கண்டு அஞ்சி அந்த நிலையிலிருப்பவர்களுக்கு சிகிச்சையளிப்பது ஆபத்தானது என்று நினைத்த போதெல்லாம் தனிமையிலே தன் கைகளாலே சிகிச்சை அளித்து எவ்வளவு நேரஞ்சென்றாலும் நோயாளருடனிருந்து அவர்களை திருப்திப்படுத்தக் கூடியளவுக்கு அவசர சிகிச்சைகளை வழங்கியதை நேரே கண்டும் கவனித்தும் வந்தவர்கள் நாங்கள். அந்த நேரத்திலும் எனது தாயார் கோப்பியோ தேனிரோ தயார் செய்வார். நோயாளிக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் கொடுத்து உபசரிப்பார். எனது தந்தையார் குறைந்த ஓய்வு நேரத்தையும் சிந்தனை செய்வதில் கழிப்பார். 马叫gh அவருடைய மருத்துவத்தைப்பற்றியதாகவோ சமூகச் சேவையைப்பற்றியதாகவோ இருக்கும். நாள் தவறாமல் நாட்குறிப்புகளை எழுதிக் கொள்வார். அவரே எழுதி வைத்துள்ள மருத்துவ நூல்களைப் படிப்பார். ஏதாவது எழுதி கொண்டிருப்பார். அவர் எழுதிய நூல்கள் இன்னும் நம்மிடம் உள்ளன. அதே வேளை அவர் எழுதி வைத்துள்ள குடும்பத்தின் பாரம்பரிய வாழ்க்கை சம்பந்தமான கையெழுத்துப் பிரதிகளும் நம்மிடம் உள்ளன.
“இறைவன் நோயையும் மருத்தையும் நிச்சயமாக இறக்கி ஒவ்வொரு நோய்குக்கும் ஒரு மருந்தை உண்டு பண்ணியுள்ளான். எனவே நீங்கள் மருத்துவம் செய்யுங்கள்.”
“எந்த நோயும் அதற்குரிய மருந்தை உண்டாக்காமல் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை” என்பன போன்ற நபிமொழிகளை எங்களுக்கு அடிக்கடி கூறுவார்.
எனக்கு 1960ம் ஆண்டு சொந்த ஊரிலே ஆசிரிய நியமனங் கிடைத்தது. தந்தையாருக்கு அது மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்த்தேன். எனது நியமனக் கடிதத்தைப் பார்த்து விட்டு; மகள்! நீங்கள் சிங்களத்தில் தேர்ச்சி பெற்றதால் நியமனம் இலேசாகக் கிடைத்துள்ளது. நீங்கள் என்னுடன் வாழும் வரை நான் உங்களைப் போசிக்கின்றேன் தானே! எந்தக் குறையும் உங்களுக்கு இல்லையே; அவசியமாக தொழில் செய்ய வேண்டிய நிலையில் எத்தனையோ முஸ்லிம் யுவதிகள் இருக்கிறார்கள். நீங்கள் இதை மறுத்தால் இன்னொருவருக்கு நியமனங் கிடைக்கும். அதன் நன்மை எங்களுக்குத் தானே சேரும். நீங்கள் வெளியே சென்று தொழில் பார்த்து சம்பாதிப்பதை விட ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக வாழ்வதையே நான் விரும்புகிறேன். உங்களது கல்வி உங்கள் கணவன் குழந்தைகளின் நல்வாழ்வுக்குப்
81

Page 50
பயன்பெற வேண்டும். நான் உங்களைப் படிப்பித்ததன் நோக்கம் அதுதான். திருமணமான பின்னர் உங்கள் கணவரின் சம்மதத்துடன் தொழில் செய்ய விரும்பினால் எனக்கு எவ்வித ஆட்சோபனையும் இல்லை. இவ்வாறாகக் கூறி எனது நியமனத்தை அவர் விரும்பாததால் நானும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது உபதேசத்தை இன்று நான் எனது குடும்ப வாழ்க்கையில் எனது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் கண்டு வியப்பும் சந்தோஷமும் அடைகிறேன். அவரது அந்திமக்காலகட்டத்தில் அடிக்கடி நோய்வாய்ப்படும் போதெல்லாம் "நான் வாழ்ந்தது போன்று நீங்களும் வாழ்ந்து காட்ட வேண்டும் அல்லாஹ்வின் அன்புக்குப் பாத்திரமாக வாழ வேண்டும். கடைசியாக இந்தப் படுக்கையை இன்னொரு நோயாளிக்காக விட்டுச் செல்கிறேன். எனது மெளத்தின் போதும் அதன் பின்னரும் வருபவர்களை நன்குகவனித்து உபசரிக்க வேண்டுமென்று கூறியவாறு புன்முறுவல் பூத்த முகத்துடன் இந்த இறுதி வார்த்தைகளுடன் இறுதி நித்திரையில் ஆழ்ந்தார்.
“ஒரு மூமின் அடையாளத்தை நான் சொல்லவா? மரணம் வரும்போது அவரது உதடுகள் புன்முறுவல்பூத்திருக்கும்” என்ற அல்லாமா இக்பாலின் கவிதைக் கொப்பாவே ஆவிபிரிந்தது. அல்லாஹ் அவருக்கு நற்பதவி வழங்குவானென்ற திருப்தியுடன் நிறைவு பெறுகிறேன்.
ஹாஜா ஹலீமா ராசீக்
இவர் அசீஸ் வைத்தியரின் மூன்று பிள்ளைகளில் மூன்றாமவராவர். இவரும் தனது மூத்த சகோதரியைப் போன்று கல்வி பயின்று தொழில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பிலிருந்தும் தந்தையின் ஆலோசனையின் பேரில் ஒரு குடும்பப் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் அல்ஹாஜ் எச்.எம். ராசிக் அவர்கள் ஜே.எம்.சீ.ஈ.எல். என்ற கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியிற் பயின்றார். தொழில்நுட்பத் துறையில் கரிசனை கொண்டிருந்த இவர் ஆரம்பத்தில் அம்பாரை ஹார்டி தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி பெற்றார். பின்னர் ஜேர்மனி அரசாங்கப் புலமைப் பரிசில் பெற்று அந்த நாட்டில் இரண்டு ஆண்டுகள் கடதாசித் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெற்றார். இத்தகைய பயிற்சியை இந்த நாட்டில் பெற்றவர்களுள் முதல்வராகவே இவர் கருதப்படுகிறார். அத்துடன் இவரது சிறந்த சேவையின் காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கையின் பிரதிநிதியாகப் பல மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். 1981ம் ஆண்டில் புது டில்லியில் நடந்த
82

ஜே.எம்.சி. சர்வதேச மாநாட்டின் இலங்கையின் பிரதிநிதியாகப் கலந்து கொண்டார். 1989ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டார். இவ்வாறாக இவரது தொழில்நுட்ப ஆய்வுக்கள் சர்வதேச ரீதியில் போற்றப்பட்டும் பின்பற்றப்பட்டும் வருவதை அவதானிக்கலாம்.
ஹாஜா ஹலிமா ராசிக் தனது ஆரம்பக் கல்வியை ஹிங்ளோயா சாஹிரா வித்தியாலயத்தில் பெற்றார். பின்னர் கம்பளை சாஹிராக் கல்லூரியின் விடுதி மாணவியாகச் சேர்ந்து பயின்ற இவர் கல்விப் பொதுதராதர உயர் பரீட்சையில் சித்தியடைந்ததுடன் தனது கல்வியை நிறுத்திக் கொண்டார்.
" நான் இவ்வாறு கல்வியை இடைநிறுத்திக் கொண்டதை கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் விரும்பவில்லை. நான் ஒரு பட்டதாரியாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு என்பதை அவர் பலமுறை கூறியிருந்தார். நான் படித்து விட்டு வீட்டிலிருக்கும் போது ஒருமுறை கலாநிதி பத்தியுத்தீன் மஹ்மூத் அவர்கள் எமது இல்லத்துக்கு வந்தார்கள். அவர் என்னைப் பார்த்து "படிப்பைத் தொடர வேண்டும் இல்லா விட்டால் ஏதாவதொரு தொழில் செய்ய முன் வர வேண்டும் சும்மா வீட்டில் இருப்பதால் பிரயோசனம் இல்லை.” என்று கூறினார். அதற்கு என்னால் கொடுக்க முடிந்த ஒரே பதில் எனது தந்தையார் தொழில் பார்ப்பதை விரும்பவில்லை என்றதே. அவர் எனது தகப்பனாருக்குப்புத்திமதி கூறுவார் என நினைத்தேன். அவரே எனது தகப்பனாரைப்பற்றி நன்கு அறிந்தவர். “வெதமஹத்தயாதான் பிடிவாதக்காரராச்சே! அவர் விருப்பத்துக்கு மாறாக எதுவும் பேசவொண்ணாது அவர் ஒன்றை நினைத்தால் அதைச் செய்து முடிப்பார்” என்றார்.
எனது தந்தையார் அடிக்கடி சொல்வதொன்றை நான் இன்னும் நினைவில் வைத்து மதிக்கிறேன். பணத்தைக் கொண்டு மாத்திரம் தான் சதகாச் செய்யலாம் என்று நினைக்காதீர்கள். தூய்மையான எண்ணத்தினாலும் சொல்லினாலும் செயலினாலும் கூட சதகா செய்யலாம் என்று சொல்லுவார்கள். அது எமக்குத் தந்த போதனை மட்டுமல்ல அவரது வாழ்க்கையிலும் பிரதிபலித்தது.
பிற்காலத்தில் நாம் அவரைக் கொழும்பிலுள்ள எமது இல்லத்துக்கு வந்து தங்கியிருக்குமாறு வருந்தி அழைப்போம். வந்தால் ஒரு நாள் இருப்பார். பின்னர் திரும்பி விடுவார். நாம் கவலைப்படுவதை அவர் அறிவார். மகள் இங்கு சாப்பிட்டு விட்டு மட்டும் சுகமாக இருக்கலாம். ஆனால் நான் மாவனல்லை எனது
83

Page 51
வீட்டிலிருந்தால் எத்தனையோ நோயாளிகளைக் கவனிப்பதோடு வேறுபல மருந்து வேலைகளைச் செய்யவும் முடியுமல்லவா? என்று கூறுவார். அவர் ஒரு பெரிய செல்வந்தராக ஆடம்பரமாக கெளரவமாக வாழ வேண்டுமென்று விரும்பியிருந்தால் நன்றாகப் பயிலக் கூடிய அவரது மூன்ற பிள்ளைகயையும் படிப்பித்து நல்ல அந்தஸ்த்தில் வைத்திருக்கலாம். ஆனால் அவரோ விரும்பியதெல்லாம் தனது பாரம்பரியத்தையும் பாரம்பரியக்குடும்ப வாழ்க்கையுமாகும். அவரது வழி காட்டலால் நாம் நிறைவு கண்டோமேயொழியக் குறைவு காணவில்லை.
மக்களும் பேரப்பிள்ளைகளும்
மாலியத்தே வெத முஹாந்திரமலாகே, பூரீலங்கா திலக அல்ஹாஜ் அப்துல் அசீஸ் வைத்தியரைத் தொடர்ந்து வரும் பாரம்பரியத்தினர் நன்மக்கள் மூவர்.
ஹாஜியானி ஆயிசா மஹ்ரூப் டாக்டர் அல்ஹாஜ் ஏ.ஹமீத் அசீஸ் ஹாஜியானி ஹலிமா ராசிக்
பேரப்பிள்ளைகள்
ஆண்கள் பெண்கள்
முஹம்மது இர்ஷாத் மஹ்ரூப் பாத்திமா சகீலா முஹம்மது முர்ஷித் மஹ்ரூப் பாத்திமா சிரோஷா முஹம்மது சிஹான் அசீஸ் பாத்திமா சப்னா முஹம்மது சத்ரி அசீஸ் பாத்திமா சஸ்னா முஹம்மது ரிஹாசுத்தீன் ராசிக் பாத்திமா ரஸானா
முஹம்மது ரிஸ்லி ராசிக்
ஒருவரது வாழ் நாளில் தமது நன்மக்களைப் போன்று அம்மக்களின் பிள்ளைகளான பேரன் பேத்தியரின் நற்பண்புகளையும் முன்னேற்றத்தையும் காண்பதில் பெற்றுக் கொள்ளும் பேரின்பத்தையும் அசீஸ் வைத்தியர் பெற்றுக் கொண்டுள்ளார். அவரது மூத்த மகள் ஆயிஷா மருமகன் சட்டத்தரணி அல்ஹாஜ் மஹ்ரூப் ஆகியோரின் இரண்டாவது மகன் எம்.முர்சித் மஹ்ரூப்பட்டப்படிப்புடன் ஒரு சட்டத்தரணியாகப் பதவி ஏற்பு வைபவம் அன்னாரது குடும்ப வாழ்க்கையில் பெற்றுக் கொண்ட பெரும் கெளவரமாகவே கருதி உள்ளம் பூரித்தார். பெற்றாரைப் போன்றே
84

பிள்ளைகளையும் வளர்த்த பெருமை பெரியார் அப்துல் அசீஸ் தமது பேரப்பிள்ளைகளும் அதே வழி முறைகளைப் பின்பற்றி வாழ்வதற்கான வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் அடிக்கடி வழங்கி வந்துள்ளார். ஆண்பிள்ளைகளையும் பெண்பிள்ளைகளையும் குடும்ப பாரம்பரியக் குண நலன்களின் பால் வாழ வேண்டும் என விரும்பினார். அதனால் தனது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அவரவர்களின் கல்வி ஆற்றலுக்கேற்ற வாழ்க்கை முறைகளைச் செம்மைப்படுத்துவதில் ஆலோசனைகள் கூறி வருவார். தனது குடும்ப விளக்கு என்றும் அணையாது ஒளிமயமாகப் பிரகாசிப்பதையே அவர் கருத்திற் கொண்டார்.
விருந்தோம்பல்
வந்தாரை வரவேற்று உபசரிப்பதில் அசீஸ் வைத்தியரும் அவரது குடும்பத்தினரும் பெற்றுக் கொள்ளும் பேருவகையை எவரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள் சமூகத்தலைவர்கள், சன்மார்க்க அறிஞர்கள், கல்விமான்கள் மட்டுமன்றி சாதாரண மக்களுக்கும் அன்னாரது இல்லம் எப்பொழுதும் விருந்தினரை உபசரிக்கும் இல்லமாக இருந்துள்ளது. அவர்களது விருந்தோம்பல் பண்பினை பலரும் விதந்து பாராட்டுவதுண்டு.
“எவர் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் விசுவாசம் கொண்டிருக்கிறாரோ அவர் தம் விருந்தினரை நல்லவிதமாக -மிகவும் சிறப்பாக உபசரித்துக் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்ற நபிமனியின் பொன்மொழிக் கொப்ப இவரது உபசரணைகள் அமையப் பெற்றிருந்தன.
கண்டி ஒறாபிபாஷா கலாசார நிலையத்தில் இவருக்களிக்கப்பட்ட ஒரு பாராட்டின் போது டாக்டர் எம்.சீ.எம்.கலில் அவர்கள் குறிப்பிட்ட ஒரு சம்பவம் இதற்கு உதாரணமாகும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் நானும் எனது துணைவியாரும் கொழும்பிலிருந்து கண்டிக்குச் சென்று கொண்டிருந்தோம். புனித ரமழான் மாதம்; நோன்பு திறப்பதற்கு கண்டி செல்ல முடியாது. நேரம் கடந்து விடும். அப்போது நாங்கள் மாவனல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம். அசீஸ் வைத்தியரின் நினைவு வந்தது. எமது காரை நேரே அசீஸ் வைத்தியரின் இல்லத்துக்குச் செலுத்துமாறு டிரைவருக்கு கூறினோம். காரில் நாங்கள்
85

Page 52
இருப்பதைக் கண்டதும் அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அவரது முகத்திலே கான முடிந்தது. நோன்பு திறக்கும் நேரம் வந்து விட்டது அதனால் உங்கள் வீட்டுக்கு வருகிறோம் என்றேன். அதைக் கேட்டதும் அவருக்கு மேலும் மகிழ்ச்சி அதிகரித்தது. "இது அல்லாஹ் அருளிய பாக்கியம், நோன்பு திறப்பதோடல்லாமல் பல நாட்களுக்கு எங்களோடு இருந்து நோன்பு பிடித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் எனக்குத்திருப்தியாக இருக்கும். "என்றுகூறி அவரது குடும்பத்தினரையும் பக்கத்திலுள்ள மேலும் பல முஸ்லிம்களையும் அழைத்து நோன்பு திறந்த பின்னர், இராப்போசனம் அருந்தாமல் உங்களை அனுப்ப மாட்டேன் எனக்கூறி பலரையும் கூட்டி ஒரு விருந்தையே ஏற்பாடு செய்தார். அவரை நினைக்கும் போதெல்லாம் அவரது உபசரணைகள் எனது ஞாபகத்திற்கு வரும்' என்று கூறிக் கொண்டே அசீஸ் வைத்தியரின் பாராட்டுரையை ஆரம்பித்தார்.
--
Daily News 24-8-1991: Deshamaniya Alhaj Dr. M.C.M. Kaleel hands over an address paper to Sri Lanka Rathna Ayr, Dr. A.T.M.A.Azeez of Mawanella who was honoured by Orabi Pasha Muslimi Cultural Centre, Kandly recently,
8.
 
 

*
ா அப்துல் அசீஸ் அவர்களின் புதல்வர் அல்ஹாஜ் L.Aஹமீத் அளிஸ் அவர்கள்
நாது மருமகள் 8HM மற்றுப் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தானியாக சத்தியப் பிரமாாம் செய்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம்
"

Page 53
MIHI. MI JTEůli, ALITAT
போ
ನfläringlnáre
ள் ஆயர்க
ப்துல் அசி
பா. து
88,
 

11
வபாத்தும் மக்கள் அஞ்சலியும்
"அல்லாஹ் எந்த அடியாரைக் கொண்டு நன்மையை நாடுகிறானோ
அவரைக் கொண்டு நற்செயல்களை ஆற்றச் செய்கிறான்; அவன்
இறப்பதற்கு முன் நற்செயல்களை ஆற்றுவதற்கு அருள்பாலிக்கிறான்" (நபிமொழி: ஆதாரம் திர்மிதி 49-77)
மேற்கூறிய நபி மொழிக்கு ஒப்பாக 88 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு, 62 ஆண்டுகள் இல்லற வாழ்விலும் மனமகிழ்ச்சி கண்டும் மக்களால் மதிக்கப்படும் ஒரு மாமனிதராக வாழ்ந்த வைத்திய கலாநிதி பூரீ லங்கா திலக, அல்ஹாஜ் எம்.டி.எம்.அப்துல் அசீஸ் அவர்கள் 21.6.1995 ல் இறையடி சேர்ந்தார்.
தனது வபாத்திற்கு முதல் நாள் (1995.5.20) அன்று அன்னார் தனது இவ்வுலக வாழ்வின் இறுதிக்கட்டத்தை எய்தியதை உணர்ந்த போது தனது குடும்பத்தாரை அழைத்து பின்வருமாறு கூறினார். "நான் இவ்வுலக வாழ்வை நீத்ததும் எனது ஜனாசாவுக்கு சமூகந்தருவோரை நன்கு உபசரிக்க வேண்டும். அவர்களுக்கு இன்ன இன்ன கறிவகைகள் சமைத்து உண்பதற்கு கொடுக்க வேண்டும். எனக்காக எல்லோரும் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும். " தனது மரணத்தை முன்பே புரிந்து கொண்டு இவ்வாறு கூறிய அன்னார் மறுநாள் நிம்மதியாக இறையடி சேர்ந்தார். இன்னாவில்லாஹி வஜின்னா இலைஹறி ராஜிஜான்
அன்னாரின் மரணச் செய்தி நாடெங்கும் பரவியது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தியறிக்கையில் மும்மொழிகளிலும் அது ஒலிபரப்பாகியது. முஸ்லிம் நிகழ்ச்சியில் விசேட ஒலிபரப்பாக ஒலித்தது. காட்டுத்தீ போல் பரவிய இச் செய்தியால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு வைத்தியப் பேரறிஞனை - சமாதானத் தூதுவரை -மக்களின் நண்பனை- சேவையாளனை இழந்த
) -

Page 54
கைசேதத்தினால் மக்கள் கவலை கொண்டனர். மாவனல்லை நகரின் கடைகள் மூடப்பட்டன. சாஹிரா மகா வித்தியாலயம் காலநேர வகுப்புகளுடன் மூடப்பட்டது. சூழவுள்ள சிங்கள கிராமங்களிலும் வீடுகளிலும் வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்ட வண்ணம் தங்களது அனுதாபத்துயரத்தைத் தெரிவித்தனர். உலமாக்கள், பெளத்த, இந்து மதக்குருக்கள், அமைச்சர்கள், சாதாரண பொது மக்கள் , ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் அலை போல் திரண்டு வந்து தங்களது இறுதி மரியாதையை அந்த வைத்தியப் பெரியாருக்குத் தெரிவித்துக் கொண்டனர். ஜனாசாத் தொழுகையில் கலந்து கொள்ளவும்- ஜனாசாவைத் தாங்கிச் செல்லவும் முண்டியடித்துச் சென்று ஒவ்வொருவரும் அன்னாருக்கு இறுதியாகச் செய்யக் கூடிய கைம்மாறு எதுவோ அதனைச் செய்தவண்ணம் இருந்தனர். நாடெங்கிலிருந்தும் அனுதாயச் செய்திகள் வந்து குவிந்தன. இப்படியே அன்னாரது ஜனாசா பற்றிய நினைவுகளை எண்ணிப்பார்க்கும் போது ஒரு ராஜமரியாதையைக் காண முடிந்தது.
“ரஜகம நெதினம் வெதகம’ அரசபதவி இன்றேல் வைத்தியப்பதவி என்ற ஒரு சிங்களப் பழமொழி உண்டு. ஆம் அரசபதவிக்கு கிட்ட வேண்டிய அத்தனை மரியாதைகளுடன் இந்த வைத்தியரின் இறுதிக் கிரியைகள் அமைதியாக இடம்பெறலாயின. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு பிர்தவ்ஸ் எனும் கவனபதியை வழங்கி நல்லருள் பாலிப்பானாக.
அனைத்திலும் நேர்மையினை நீதியினை அணுவளவும் பிசகாமல் கடைப்பிடிக்கும் இணையில்லாப் பண்புள்ளோர் நன்னெறிகள் என்றென்றும் நெஞ்சாற மதித்திடுவோம் தினையளவும் கர்வமின்றி கனிவுடனே தென்றலென இதமாகப் பழகியரும் அன்புக்கு இலக்கணமாய் வாழ்கின்றார்.
இயல்புகளை நாமினிதாய் மதித்திடுவோம்”
என்ற கல்லூட்டுக் கவிராயர் ஹலீம்தீனின் கவிதைக்கொப்ப அன்னாரின் நல்வாழ்வை மதித்திடுவோம். உள்ளத் தேற்றம் பெற்றிடுவோம்!
90

நீத்தார் பெருமை-தினகரன் 20.08.95
முறிவு வைத்தியத்துக்கு கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் பெயர்பெற்றிருந்த ஒருவர் மர்ஹும் அப்துல் அசீஸ்-" அசீஸ் வெதமகத்தயா” என்ற பெயரால் சிங்கள,முஸ்லிம், தமிழ் மக்களால் அழைக்கப்படும் இவர் தனது 88ம் வயதில் 70 வருட வைத்திய சேவையின் பின் காலமானார். பிரபல சமூக சேவையாளரும் அரசியல் வாதியுமான அல்ஹாஜ் அப்துல் அசீஸ் பாரம்பரிய வைத்தியப் பரம்பரையை சேர்ந்தவர். 1947ஆம் ஆண்டில் அன்னார் கிராம சபை அங்கத்தவராக இருந்த போது இந்துக் கோயில் காணியொன்று தொடர்பாக முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் எழுந்த பதற்ற நிலையை சுமுகமாக தீர்த்து வைத்தார்.
எம்.எப்.பெளசுல் ஹசன்
சட்டத்தரணி எம். முர்சித் மஹ்ரூப் (எல்.எல்.பீ)
காலஞ்சென்ற எனது பாட்டனரான அப்துல் அசீஸ் வைத்தியர் எமக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார். அவரிடமிருந்து நாம் பின்பற்றக்கூடியனவை அனேகம், எப்பொழுதும் நல்ல விளைவுகளையும் தீய விளைவுகளையும் மனோத்தத்துவ ரீதியில் விளக்கி கூறி வழி நடத்துவார். அவரது ஆலோசனைகளும் தீர்மானங்களும் காலத்துக்கு உகந்ததாகவும் சரியானதாகவும் அமைந்தன. சுயநலமற்ற அவர் பின் விளைவுகளைப் பற்றி முன்னரே தெரிந்து கொள்ளும் ஞானியாக விளங்கினார்.
எத்தகைய பாரிய பிரச்சினையின் போதும் உணர்ச்சிவசப்பப்பட மாட்டார். செவிப்புலன் குறைந்தவர். ஆனால் அவர் தனது பார்வையால் ஏனையோரின் உளப்பாங்கினையும் பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார். வாக்குறுதிகளை நிறைவேற்றும் பண்புள்ளம் படைத்தவர். நான் ஒரு கத்தோலிக்க பாடசாலையில் கல்வி பயின்றேன். அப்போது அவர் தந்த உபதேசம், " மக்கள் ஒரு சமூகம், மதம் ஒருவனது அடிப்படை உரிமை என்பதை மறவாதீர்” அதனால் தான் நான் ஒரு உண்மையான முஸ்லிமாக வாழும் அதே நேரத்தில் பெளத்த இந்து, கிறிஸ்தவ இளைஞர்களையும் நண்பர்களாகப் பெற்றுள்ளேன். அவரது நல்லுபதேசங்களே என்னை இன்றைய அந்தஸ்த்திற்கு நல்வழிப்படுத்தியது.
91

Page 55
*)gwy)与吸)与卢n THW*電口월mma記 車高野日記官學的 事닝』u成的도를 흡 mm日官學高. 넓urt 노활관u드高법 hni日記 편ma_n 토도義國國T學高 역#니ug 크역un활「합 "L크un합g확**■ 역력m편T할 g1력편義高" 편법n日: #1드uit원 부T원활mgus m활u확한 활11田E-TR1E1
 
 

வைத்திய கலாநிதி "பூரிலங்கா திலகம்" அல்-ஹாஜ் அப்துல் அசீஸ் அவர்களுக்கு மாவனல்லை எாஹிரா மத்திய கல்லூரி வழங்கும்
நன்றிக் காணிக்கை (1991)
கணக்கில்லாமல் வைத்தியர்கள் கானக்கிடக்கும் இந்நாளில் தனக்கெனவே தனியிடத்தை வரலாற்றில் படைத்திட்டீர் குனம் கொண்டு வாழ்ந்திட்ட காரணத்தால் மட்டுமல்ல குணம் கொடுத்து பிறர் நோய்கள் குறைத்திட்ட காரணத்தால்
பாதி அறிவு உங்களுக்கு பரம்பரையால் வந்து சேர மீதி அறிவு நாடியதால் போதிமகான் போதகரை
Fl நாடிச் சென்நீர் அவர் நாமம் "ஹிங்குவே பூரீ ரெவத" ராம் கோடி அறிவு பெற்றாங்கே ஒடி ஒடிப் பணி கொடுத்திர்
முறிவு வைத்தியத்தில் துறை ஞானம் மிகுந்திடவே அறிவு சர்வாங்கம் அதனிடத்தும் நிறைவெய்தி குற்றுயிராய்க் கிடந்த பல மட்டில்லா சுகம் பெற்று பற்றுடனே வாழ்வதற்குப் பாதை வகுத்திட்டீர்
அமிழ்துண்ணும் தாகத்தில் வந்த நடனக்கு அள்ளி தமிழ்க் கல்வி வழங்கிற்று அன்னை ஸாஹிராப் பள்ளி ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் அவள் மகன் நின்னை சான்றோனெனக் கேட்ட ஸாஹிரா டின் அன்னை
கிசிகிெபீடடம் தனை மறந்தால் அனை மறதிதற்கொப்பாகும் நிவை கூடம் விஞ்ஞானம் மறவாமைத் துப்பாகும் கட்டிடிங்கள் பல பெறவும் நீரெடுத்த முயற்சிகள் பல மட்டிட ஈங்கெங்களுக்கோ அளவு கோல்கள் இல்
திடம் மிகுந்து கற்ற கல்வி தடம் புரண்டு போகாது இடம் தேடினி இன்னும் அறிவரின்பம் கோனாது செந்தமிழ் போல் சிங்களமும் பாலி சமஸ்கிருதமும் அந்தமில்லாக் கல்வி தனில் அறிவாகக் கொண்டிட்டீர்
நாடாளும் சனபதி சரியாக உனர்ந்தோர்ந்து ஈடாகும்"பூரீலங்கா திலகம்" அதை ஈந்தார் சப்ரகமுவ ஈன்றெடுத்த தவப்புதல்வர் மட்டுமல்ல அபர படைப்பாளி உன்னை ஈழநாடே எட்டும் மெல்ல
அல்-ஹாஜ் அஸிஸ்துநீநாமம் புகழிபாட்டு மிகைப்பாடு அல்ல அது நம்மவர் தம் கடப்பாக பவ்வாண்டு நீர்வாழ்ந்து தொடர்ந்திடுவீர் நும்தொண்டு வாழ்ந்திடுவோமி எல்லீரும் பாங்கான உளம் கொண்டு
93

Page 56
DESHAMANYA 19, St.Anthony's Mawatha AlHaj Dr.Badiudin Mahmud Kollupitiya Colombo-3
M.A.D. Litt. LL.D Phone : 573189
6th September, 1995
I was deeply grieved to hear of the demise of Ayur. Physician Al Haj A.T.M.A. Azeez of Mawanella. By his death I have lost one of my greatest friends in the Muslim Community.
I came to know him over 50 years ago when a friend of mine advised me to go to him to get treatment for my hand injury which he effortlessly cured.
From that day onwards we have been very good friends and he has treated the members of my family on several occasions. I wish to recall an incident, when I was away in Geneva, attending the U.N.O my son Irshad fractured his hand. At the request of my wife he came to Colombo all the way from Mawanella, set the fractured bone in a way that would baffle any western practitioner, and cured it.
Further he miraculously cured my sister Rafia when she suffered multiple fracturs in the ribs and legs in a motor accident. As she was bedridden he took the trouble of coming all the way to Gampola from Mawanella.
For the last several years and upto his death he was treating me. He was an adept at diagnosing ailments by feeling the pulse of the patient. By using this method he detected my health problems and has given me fatherly advice on my diet and other matters connected with my health. Even now I am using his oil. He has had patients from all over the island and his loss in not only a loss to Mawanella but to the whole
94

island. I am glad that his son, Dr. Hameed is following in his father's footsteps.
He is one of the greatest sons of Mawanella. He was very kind hearted obliging. Whatever he does he does with greatenthusiasm.
He was a founder member of the S.L.F.P and was a member of the Mawanella V.C. He was a great social worker. He worked selflessly for the benefit of his fellow beings inrespective of religion, caste or creed. He worked not only for the Muslims but also for the Buddhists & other communities. His life should be an example for others to follow.
In the year 1962s. As the president of the Parents Teachers Association of Hinguloya, Zahira College, he fought tooth & nail to get a Science Laboratory to the College. At that time I was the Minister of Education and he even quarreled & argued with me and never stopped till he achieved his objective.
I really feel the loss of this genial personality; In short I lost a sincere friend & I feel so sorry.
May Almighty Allah grant him "Jennathul Firdouse". I pray for him
A Haj Dr. Badiudin Mahmud
95

Page 57
Renowned 0hysician, Social Morker, Olanter Sri Lanka Chilaka Zyur Dr. 27 zeez”
Ayur Dr. Alhaj Wedamuhamdiramlage Abdul Azeez of Mawanella has been conferred the "Sri Lanka Thilaka" Presidential award by president Ranasinghe Premadasa
At a time when the country had a handful of well known Ayurveda Physicians, Abdul Azeez visited homes to treat patients more as a social service than merely seeking financial gain.
Abdul Azeez set up such a wide practice that patients from all parts of the country visited him for treatment. Abdul Azeez, soon received a large clientele from foreign countries as well, opened a special clinic in the Pettah for their benefit.
He is a well-known social worker. Although he is a Muslim, he learnt Pali, Sinhala and Sanskrit, not to mention and indigenous medicine, in the Buddhist environment of a "Pirivena".
He generously contributed to the uplift of both Muslim and Buddhist religious centres.
In fact, he was the only Muslim official in the "Poson Perahera Committee" of Belligammanna Pothgul Viharaya.
He has contributed lavishly towards the construction of a mosque at Hinguloya, while serving as the president of its administrative committee
Daily News Chandra Ranatunge,
1109.91 Kegalle District MP and
Minister of Construction and Building Materials
96

S.H.M.Maharoof 73, Mulgampola Road, President's Counsel Kandy
Chambers: 12, Colombo Street, Kandy. Tel: (Res) 08-32019
Whenever anyone asks me as to what I have to say about my Father-in-Law, the late Al-Haj A.T.M.A.Azeez, the simplest answer I can give is that I am proud to call myself his son in law which statement, I hope will speak volumes for him
He was one of the most honourable and sincere persons I have ever known. Very straight forward in his dealings and never minces words. He never feared to call a spade a spade.
He was a very knowledgeable person
Many a time he has helped me to arrive at correct decisions. Once, his opinion helped me to avoid a risky operation. In the year 1967 when I lost my voice all the specialists (Western) whom Iconsulted wanted me to undergo an operation, but my father-in-Law was against it and I took his advice. he treated me with his pure ayurvedic drugs and cured me completely. This cure completely baffled the specialists whom I consulted earlier.
Similarly Ihave benefited greatly in my personal life too. I have always valued and respected his guidance in several aspects of my
personal activities. \
He is no more, but his memory lives on and will be cherished and respected by those who have been near and dear to him.
Son-in-Low
97

Page 58
MARHOOM AL HADJ AYR. DR. A T M A AZEEZ
Allmighty allah guides and trains a band of virtuous men to give a new lease of life to our world inorder to make the existence of man meaningful.
Marhoom Al Hadj Dr. A T M Azeez stands out as one such person.
He was a man of strong moral fibre, tender hearted, where simplicity and duty were his guiding principles. He was entremely simple in his habits, gentle but firm. He devoted all his energy to the betterment of the community and for the good of the people.
He respected the elders and loved the poor. No man of influence or authority could hope to achieve any undeserved gain from him nor the weak ever gave up hopes of obtaining the best from him.
Wandering about both day and night to inquire and, look into the needs and condition of the sick and the poor, without any guard or court was the greatest quality possessed by him.
He entertained guests with sumptuous meals and when ever he was invited for any function he accepted and participated in same ungrudgingly. His thought arid deeds were far sighted and was thoroughly. fitted for leadership of the community.
M.H. M. Raziek
(Sоп-in-Lоиv)
98

முன்னைய சுகாதார அமைச்சரான திருமதி விமலா விஜயவர்த்தனாவின் மகளும், முன்னைய மாவனல்லை பாராளுமன்ற பிரதிநிதியும் உதவி அமைச்சரான C.R. பெலிகம்மனாவின் மனைவியுமான ருக்மனி பெலிகம்மனா
அசீஸ் வெதமஹத்தையா என்பவர் எங்கும் பிரபலமானவர். 43 வருடங்களுக்கு, முன் நான் C.R. பெலகம்மனாவை திருமணம் முடித்து பெலிகம்மனைக் கிராமத்துக்கு வந்த அன்றே, அவருக்கும் வெதமஹாத்தயாவிற்குமுள்ள நெருங்கிய நட்பை கண்டு கொண்டேன்.
அவரின் குடும்பத்துடன் , அசீஸ் வைத்தியரின் குடும்பமும் அவரின் மனைவியின் குடும்பமும் பரம்பரையாகவே சாதி மத பேதமின்றி நட்புறவோடு பழகி வந்ததையும் அறிந்தேன்.
1954 களில் பெருஞ்சனத்திரளோடு , வருடா வருடம் பெலிகம்மனை விஹாரையிலிருந்து ஆரம்பமாகி, பிரபலமாக நடத்தப்பட்ட பெரஹரா ஒழுங்குக் கமிட்டியில் உறுப்பினராகவிருந்து செய்த சேவையை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். எமது வீட்டிக்கு நேர் எதிரில் அமைந்துள்ள அவர் வைத்திய சாலைக்கு முன்னால் நிதமும் வந்து போகும் வாகனங்களைப் பார்த்தே அவர் திறமையை மதிப்பிடலாம்.
அவர் தேசிய, நம்நாட்டு மூலிகைகளைக் கொண்டே மருந்துகளைத் தயாரித்தார். எனக்குத் தெரியும், அக்கம் பக்கத்திலுள்ள எத்தனையோ குடும்பங்கள் அவருக்காக மருந்து மூலிகைகளை சேகரிப்பதிலும் தயாரிப்பதிலும் ஈடுபட்டிருந்தனர். அதனால் அக்குடும்பங்களின் பொருளாதாரப் பிரச்சினை தீர்வதற்கும் காரணமாகியது. அக்கம் பக்கத்தாருக்கு இலவசமாகவே வைத்திய சேவை செய்தார்.
நான் திருமணம் முடித்து வரும்போது C.R. பெலிகம்மனா M P யாக இருந்தார். பின் உதவி அமைச்சராக இருந்த போதும், அவர் அடிக்கடி வந்து ஏதோ ஒன்றைப்பற்றி விவாதித்துக் கொண்டிருப்பதைக் காண்பேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒவ்வொரு சமயமும் பொது வேலைகளையும் மற்றவர்களின் தேவைகளையுந்தான் வற்புறுத்திக் கொண்டிருப்பார்.
99

Page 59
“செய்நன்றி மறவாமை'
அசீஸ் வைத்தியர் தமது அந்திமக்காலத்தில் கடைசியாக எழுதி வைத்துள்ள குறிப்பொன்று, “நான் ஒரு ஆயுர்வேத வைத்தியன். ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் பல சேவைகளைச் செய்ய முடிந்தது. இவற்றிற்குத் துணை நின்றவர்கள், எனது மனைவி, என்னோடு ஒத்துழைத்தவர்கள், பக்கத்திலே இருந்த பெளத்த விகாரை, எதிர் வீட்டு பாராளுமன்ற உறுப்பினர், மாறி மாறி மாவனல்லைக்கு வந்து எனது வீட்டில் வாடகைக்கு இருந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள், ! இவர்கள் எல்லாப்பிரச்சனையின் போதும் எனக்கு உதவி வந்துள்ளனர். இவர்களை மறக்க முடியாது’ இவ்வாறு செய்நன்றி மறவாது குறித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
"இம்மை உங்கள் ஆத்மாவின் சிறைக்கூடமே இதற்கு அப்பால் திறந்த வெளித் திசை தெரியும் இம்மை ஒரு வரம்புடைய கட்டுக் கோப்பு யதார்த்தமெனும் மறு உலகு வரம்பற்றதே"
மெளலான ரூமி
100

Dr. (Ayr.) Al Haj Abdul Azeez
Born in Hinguloya to Mahumoodu Lebbe vadharala and Aamina Umma, who belonged to two families of Ayurvedic physicians. Azeez was fifth generation physician. His only brother predeceased him in 1984.
He was not only a physician, but also a psychologist, farmer, planter, economist, environmentalist, mediator and peace maker.
He and his wife had an ability to spot people in trouble and went out of their way to help and advise them. In return they were loved and respected by the people.
F. Dissonaụyake
Daily News August 2 1st 1996.
101

Page 60
உசாத்துணை
1. அப்துல் அசீஸ் வைத்தியரின் நாட்குறிப்புகள்
3.
அப்துல் அசீஸ் வைத்தியர் எழுதிவைத்துள்ள கையெழுத்துப் பிரதிகள்
3. “நம் முன்னோர்’- சோனக-இஸ்லாமிய கலாசார நிலையம்
4. பூனானி வைத்தியம் - எம். எம். எம். மஹ்றுாப்
5. விஞ்ஞானமும், சமூக விஞ்ஞானங்களும், எம். எஸ். எம். அனஸ்
6. ப்ரிய நிலா - உயன்வத்த ரம்ஜான்
7. கண்டி மாவட்ட முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம் -
எஸ். எம். ஏ. ஹஸன்
8. தினகரன், டெய்லிநியூஸ், திவயின பத்திரிகைக் குறிப்புகள்
9. கையெழுத்துப் பிரதி - மாவனல்லை எம். எம். மக்கீன்
10. சர்தியல் மம்மலிமரைக்கார் கொலை வழக்குக் குறிப்புகள்.
02

அசீஸ் வைத்தியர் பொதுமக்களுக்காக வெளியிட்டிருந்த ஒரு முதலுதவிச் சிகிச்சைச் குறிப்பிலிருந்து சில பகுதிகள்
இரத்தம் வெளியேறாத சிறு அடிக் காயங்களுக்கு
பச்சை மஞ்சளும், உப்பும் சரிசமமாக அரைத்து கொஞ்சம் நீர்விட்டு சூடாக்கி காலை மாலை மூன்று வேளைக்கும் பூசவும்
சுளிரென்று பிடிக்கும் வயிற்று வலிக்கு
1 தேக்கரண்டி சீனியை ஒரு தேனீர் கோப்பை சுடுநீரில் கரைத்துக் குடிக்கவும். நல்லெண்ணெய் கொஞ்சம் வயிற்றின் மேல் பூசவும்.
தொண்டையிலோ முரசிலோ முள்ளுச்சிக்கிக் கொண்டால்
தேங்காயெண்ணெய் கொஞ்சம் தேய்த்து சிறிது நேரத்தில் வெந்நீரினால் கொப்பளிக்கவும்.
கை விரல்களிலோ கால் விரலிலோநகத்தை சுற்றியுள்ள பகுதிவிங்கி சீல் கட்டினால்
நன்றாகப்பழுத்த வெறுகம் மட்டையை விரலைச் சுற்றிக் கட்டவும். ஒரு நாளைக்கு ஒன்றாக புண் ஆறும் வரையில் கட்டவும்
சளி பீனிசம் காரணமாக மூக்கடைப்பு தலைபாரம் காதடைப்பு
வல்லாரை இலை வேரோடு ஈரவெங்காயம் சரிசமமாக அவுன்ஸ் வீதம் இடித்து 3 வேளைசாறு குடிக்கவும். சக்கை உப்பு மிளகு விட்டு சூடாக்கி சாப்பிடவும்.
தேமல் படர்தாமரை உள்ளவர்கள்
நற்சீகரம் 2 அவுன்ஸ் இரவில் 2கோப்பை தண்ணீரில் ஊர வைத்து காலை மாலை சூடாக்கி குடிக்கவும் 2 வாரம் தொடர்ந்து குடிக்கவும். தேமல் மறைந்து விடும்.
தலை சுற்றுக்கு (பித்தத்தினால் உண்டாகும்)
"கசப்பு திப்படு” இலைகளையோ, ஆடதோடா இலைகளையோ ஒரு பிடி
சுத்தமாக கழுவி அரைத்து கொதிநீரில் சாறு பிழிந்து சோறு வடித்த கஞ்சி ஒரு கோப்பையில் கலந்து குடிக்கவும் 1 நாளைக்கு 2 வீதம் குடிக்கவும்
103

Page 61
மூல நோவிற்கு (மலவாயில்) எரிவுக்கு
தேன் பாணி 1 தேக்கரண்டி, நெய் 1 தேக்கரண்டி கலந்து சாப்பிட்டு வரவும் பழுத்த வில்வப்பழம் கொசுவிலைக்கறி அடிக்கடி சாப்பிடவும்
தொண்டையில் கபம் கட்டிக் கொண்டால்
இஞ்சிபுளிதோடங்காய் சாறு சமமாக எடுத்து அரைத்தேக்கரண்டி சீனியும் “சர்வசாதி” தைலம் 1/2 தேக்கரண்டி கலந்து கொஞ்ச கொஞ்சமாக தொண்டைக்குள் வைத்து விழுங்கவும் நாளைக்கு 2 வேளைக்கு விழுங்கவும் சரீரத்தில் உண்டாகும் விசப்புக் கட்டிக்கு
தேனும் சுண்ணாம்பும் சரிசமமாக கலந்து கட்டியில் நடு மத்தியை தவிர்த்து சுற்றி வர காலை மாலை பூசி வர கட்டி வெடித்து சீழ் வெளியாகிவிடும்.
முதலுதவி கைமருந்துகள்
எலிக்கடிக்கு
விலாங்கா இலைகளை இடித்துப் பிழிந்து சாற்றை அரிசி கஞ்சியில் கலந்து காலை மாலை குடிக்கவும்.
முறிவு ஏற்பட்டால்
முறிவு ஏற்பட்ட அவயத்தை தொங்க விடலாம். மேலும் கீழும் சீலை சுற்றிய இரு தட்டையான கம்புகளை இலேசாகக் கட்டி உடனே வைத்தியரிடம் கொண்டு போகவும். சுய நினைவுடன் இருந்தால் மஞ்சள் கொடி துண்டுகள் கொஞ்சம் பூடு சுக்கு மல்லி சேர்த்து அவித்து கொடுக்கவும்.
மின்மினிப்பூச்சிக்கடிக்கு
கீகிரிந்தை என்ற கையாந்தகரைக் கீரைச்சாற்றில் உப்பு நீரும் சேர்த்து குடிக்கக் கொடுக்கவும்.
எறும்பு சிறு பூச்சிக்கடிகளுக்கு
ஈரவெங்காயத்தை குறுக்காக வெட்டி கடித்த இடத்தில் தேய்க்கவும்.
104
 
 

மூலத்தில் எரிவுக்கு
'கழு அத்தன பூ மத்தம் 3 இலைகள் அடுக்கி மல வாயிலில் வைத்துக் கட்டவும்.
இடுப்பு வலிக்கு
பூவரசம் பட்டை மேல் தோல் நீக்கி வெட்டி இடித்து சாற்றை பிழிந்து அரிசிக் கஞ்சியில் கலந்து குடிக்கவும்.
நீர்க் கடுப்புக்கு
நண்ணாரி வேர் அவித்து நீரில் கற்கண்டு சேர்த்து குடிக்கவும்
பிரசவத்தாயின், பால் சுரக்க
தோல் நீக்கிய வெள்ளப்பூடு கொஞ்சம் பசும்பாலில் வேகவைத்து மசித்து ஏலரிசித்துாள் ஒரு துள்ளியும் சீனி கலந்து காலைச் சாப்பாட்டுக்கு முன் குடிக்கவும்.
விஷக்கடிக்கு
உடனே முதற் சிகிச்சையாக ஒரு மேசைக்கரண்டி பசு நெய் சாப்பிடக் கொடுக்கவும்.
தடிமலினால் தொண்டை கம்மல் கரகரப்புக்கு
கறுப்புக் கரும்புச்சாற்றில் சர்க்கரையோ சீனியோ பனங்கற்கண்டோ கலந்து காய்ச்சி காலை மாலை ஒரு தேக்கரண்டி சிறிது சிறிதாக குடிக்கவும்.
போதை வஸ்துக்களால் வெறி அதிகமாகி விட்டால்
கொய்யா இலைகளை இடித்து சாறு பிழிந்து கொடுக்கவும்.
மயக்கத்துக்கு
இஞ்சி ஒரு துண்டை சுத்தமாகக் கழுவி மசித்து நெற்றியில் பூசி,
மூக்குத் துவாரத்திலும் பிடிக்கவும். உடைகளை நெகிழ்த்து காற்றோட்டமான
இடத்தில் வைக்கவும்.
105

Page 62


Page 63
கன்ஸ"ல் உலூம் அல்ஹி
ஆசிரியராகப் பணி தொடங்கி, ஆசிரியர் பயி
Ꭿ5 Ꮆu) fᎢ ᏯᎭ fᎢ 60Ꭰ 6u) Ꮣ விரிவுரையாளராகவும் புரிந்து, கல்வி அதிகாரியாகப் உயர்வு பெற்றுப் பின்னர், ே பிரதம கல்வி அதிகார உயர்ச்சியடைந்து ஒய்வு ே அல்ஹாஜ். எஸ். எம். ஏ. ஹ அவர்கள் கண்டி மாநகரையடுத பேராதனையில் பிறந்தவர். இ பேச்சாளர் வானொலியி
நிகழ்த்தியுள்ளார். கலை, வி ஈடுபாடுண்டு. இலங்கை இள் உபதலைவராயிருந்த இவரின் அரிய பல பணிகள் புரிந்துள் கண்டியில் எகிப்திய விடுதலை இயங்குகின்ற கலாசார பீடத்தி
இவரின் ஏனைய நூல் நெஞ்சத் தாமரையின் இன்ப (சாகித்தியப் பரிசு பெற்ற நூல் கறுப்பு இன முஸ்லிம்கள், யசஹ
Printed by Unie Arts

ஹாஜ், எஸ்.எம்.ஏ. ஹஸன்
புரியத் விற்சிக் பி ல்
60) L
பதவி மலும் ரியாக
பெற்ற றளUன்
துள்ள வர் நாடறிந்த எழுத்தாளர். நல்ல ல் பல சொற்பொழிவுகளை மர்சனத்துறையிலும் இவருக்கு லாமிய எழுத்தாளர் இயக்கத்தின் முதுசொம் தன்னடக்கந் தான். rள ஜனாப் ஹஸன் தற்பொழுது வீரர் ஒறாபி பாஷா நினைவாக
ன் பணிப்பாளராயிருக்கின்றார்.
கள் அருள்வாக்கி அப்துல் காதர், நினைவுகள், கலாநிதி பதியுத்தீன்
), கம்பன் கவியமுதம், அமெரிக்க றாமி (சிறுவருக்கான குறுநாவல்)
ஒறாபி பாஷா நலன்புரிச்சங்கம் - கண்டி)
(Pvt) Ltd. Colombo 13,