கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வைத்தியர். அலிஸ் டி புவர் மற்றும் முன்னோடிகளான சில பேகர் பெண் வைத்தியர்களும்

Page 1
வைத்தியர். அ
மற்றும் முன்னோடி
O , பெண் வைத்
&Tで 9തി) SL PR எழுதி
டிலோரெயின்
 

லிஸ் டி புவர்
d56TIT60 dje) (8 15i
த்தியர்களும்
யெவர்
புறோஹியர்

Page 2


Page 3

இலங்கையில்
வைத்தியர் அலிஸ்டி புவர்
மற்றும் முன்னோடிகளான சில பேகர் பெண் வைத்தியர்களும்
ஆங்கிலமூலம் டிலோறெயன் புறோஹியர்
தமிழாக்கம் கந்தையா சர்வேஸ்வரன்
சமூக விஞ்ஞானிகள் சங்கம் 1997

Page 4

:
இளம் வயதில் மரியன் டி புவர் புறோஹியர்
சமர்ப்பணம்
ஒர் கதையை எவ்வாறு சொல்வது என்பதைத் தெரிந்து ஒர் குழந்தைக்குச் சொல்வது போல் பல நாட்கள் எனக்கு மாலை நேரங்களில் கதை சொன்ன- எனது பாட்டி மரியன் டி புவர் புறோஹியருக்கு.

Page 5

பெண்களின் வரலாற்றை மீட்டெடுத்தல்
கடந்த 150 ஆண்டுகளாக இலங்கைப் பெண்களின் வரலாற்றை ஆய்வு செய்யும் பொருட்டு 1993 இல் சமூக விஞ்ஞானிகள் சங்கமானது பால் வேறுபாடு தொடர்பான ஓர் திட்டத்தைச் செயற்படுத்தியது. இவ் வேலைத்திட்டத்தின் நோக்கம் யாதெனில் சமுதாயத்தில் பெண்களின் பங்களிப்பை மட்டுமனி றி, பாரபட்சத்திற் கெதிராகவும் , ஒடுக்குமுறைக்கெதிராகவும், அவர்களது விடாப்படியான எதிர்பையும் அவற்றை மறைக்கும் வகையிலான ஆண்கள் சார்பான வரலாற்று ரீதியான ஆய்வினைத் திருத்தியமைப்பதுமேயாகும்.
பொருளாதார படிநிலையிலும் சமுதாய படிநிலையிலும் மிகவும் கீழ் நிலையிலுள்ள சில உத்தியோகங்கள் மட்டுமே பெண்களுக்கும் கிட்டக்கூடிய ஓர் காலகட்டத்தில், மிகவும் கெளரவமானதும் தனித்துவமானதுமான மருத்துவதி தொழிற்துறைக்குள் 19ம் நுாற்றாண டில் பெண்கள் பிரவேசித்ததென்பது ஒர் திருப்புமுனையாகும். ஒவ்வோர் நாடும் தமக்கேயுரிய வரலாற்றைக் கொண்டுள்ளன. சிலவற்றில் பெண்கள் மருத்துவத் தொழிலுக்கு வரக்கூடிய நிலையை எய்துவதற்கு கடும் மோதல்களைச் சந்திக்கவேண்டி இருந்தது. ஏனையவற்றில் இது இலகுவானதாக இருந்தது. ஆனால் ஒவ்வோர் நிலையிலும் மருத்துவத்துறை பெண்களுக்குப் பொருத்தமானதா? இல்லையா? என்கிற வாதம் எழுந்தது.
இலங்கையைப் பொறுத்தவரை 1870 இல் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பெண்கள் மருத்துவக் கல்லூரிகளில் 1892 இலேயே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இத்துறையில் பெண்களின் பிரவேசம் பற்றிய விபரங்கள் மிக அரிதாகவே உள்ளன. நாம் வைத்தியர் அன்ட்றெஸ் நெல் இன் சாதனைகளைப்பற்றி அடிக்கடி படித்திருக்கின்றோம். ஆனால் 1890 இன் ஆரம்பப்பகுதியிலேயே மருத்துவரானவரும் தனது உயர் கல்வியை வெளிநாட்டில் முடித்தவருமான வைத்தியர் அன்ட்றெஸ் நெல் இன் சகோதரி வினிபிரெட் நெல் ஐப் பற்றி யார் கேள்விப்பட்டிருக்கிறார்கள்? அதேபோன்றே நாம் வைத்தியர் ஆர்.எல்.ஸ்பிட்டெல் (Dr.R.L.Spitel) அவர்கட்கு அடிக்கடி அஞ்சலி செலுத்துகிறோம். ஆனால் முன்னோடியான இன்னொரு பெண் டாக்டரும் அவரது மனைவியுமான வைத்தியர் கிளாரிபெல் வான் டோட் ஸ்பிட்டெல்ஐ மறந்துவிட்டோம். அண்மைய ஆய்வுகள் பெண்கள் வரலாற்றின் இம் முக்கிய பகுதிகள் தொலைந்து போவதற்கு முன்னால் மீட்டெடுத்து வெளிக் கொணர வாய்ப்பாக அமைந்தது. அத்துடன் அதிஷ்டவசமாக இலங்கையின் முதற் பெண் மருத்துவரான அலிஸ் டி புவரின்

Page 6
ஒன்றுவிட்டபேத்தி (அலிஸ் டி புவரின் சகோதரியின் பேத்தி) டிலோரெய்ன் புரோகியர் அவர்களை முன்னோடிகளான பெண் மருத்துவர்களின் கதைகளை மீட்டெடுத்து வெளிக்கொணரும்படி கேட்கவும் முடிந்தது. ஆங்காங்கே துண்டுதுண்டாகக் கிடக்கும் விடயங்களை ஒன்றாக்குதல் என்பது இலகுவானதல்ல. ஆனால் 19ம் நூற்றாண்டில், நவீன இலங்கையை. உருவாக்கிய பேகள் சமூகம், முதல் பெணமருத்துவர்களை உருவாக்கி, வழிகாட்டியாக இருந்தமை தொடர்பான டிலோரெய்ன் இன் பெறுமதிமிக்க ஆய்வினை வெளியிடக் கூடியதாக உள்ளது.
இன வரலாற்றுக்கு பங்களிக்கிறது என்ற வகையிலும் இப்புத்தகம் முக்கியமானது. பேகர் சமூகம் பற்றிய முன்னைய ஆய்வுகள் பேகர் பெண்களின் சிறப்பான சாதனைகளை அலட்சியம் செய்துவிட்டது. அத்துடன் மக்களின் விழிப்புணர்வு தொடர்பாக ஒரே தன்மை வாய்ந்த அவ்வாய்வுகள் முக்கியமான விடயங்களை அலட்சியம் செய்வதன் மூலம் பொறுப்பற்ற வகையில் செய்யப்பட்டுள்ளது. இப்புத்தகமானது நிலவிவரும் வெற்றிப் பெருமிதத்தனத்திற்கெதிரான போராட்டங்களை நடத்தியவர்களும் கல்வி வேலைவாய்பில் தமது சமத்துவ உரிமையை வலியுறுத்தியவர்களும், தமது உதாரணத்தை மற்றைய இனப்பெண்களும் பின்பற்றும் வகையில் அன்றய பேகர் பெண்களின் கடுமையான உழைப்பையும் இப்புத்தகம் வெளிப்படுத்தி நிற்கிறது.
குமாரி ஜெயவர்தனா இணைப்பாளர் -பால்வகை வேறுபாட்டு வேலைத்திட்டம் சமூக விஞ்ஞானிகள் சங்கம்.

அறிமுகம்
ஆண்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட தொழிற்துறைகள் என்ற கருத்தை உடைத்து அத்துறைகட்குள் பிரவேசிப்பதில் துணிவுடன் செயற்பட்ட பெண்களைப்பற்றியே இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. துர்அதிஸ்டவசமாக இம் முன்னோடிப் பெண் மருத்துவர்கள் பற்றிய ஆவணங்கள் அரிதான சிறுதுணிடுகளா மருத்துவத்துறைப் பதிவேடுகளிலிருநீது சேர் கப்பட்டவைகளும் , தேசிய ஆவணக்காப்பகத்திலிருந்து சேர்க்கப்பட்டவைகளுமாகும். ஆனால் பெரும் பாலானவை அவர்களது குடும்பத்தினரின் மறக்கமுடியாத நினைவில் நின்ற நிகழ்சிகளில் இருந்து பெறப்பட்டனவயாகும். எனினும் எமது நோக்கத்தை ஈடுசெய்ய கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் இருந்து ஒர் விடயம் புலப்படுகின்றது. முன்னேடிகளில் பெரும்பாலோர் பேகர் எனப்படும் சிறியளவினரான மேற்கத்திய சமூகத்திருந்து வந்த இலங்கையராவர் கடும் கட்டுப்பாடுகளுக்குள் அல்லது அடிமைத்தனத்திற்குள் வாழ்ந்த இலங்கையின் ஏனைய சமூகப் பொண்களுடன் பார்க்கும்போது பேகர் பெண்களுக்கு நவீன கல்விக்கான வாய்புகளும், சமூகத்தளைகளிலிருந்து சுதந்திரமும் உடையவர்களாக இருந்தனர். நவீன உத்தியோகங்களை நோக்கி இம் முன்னோடிகளான பேகர் பெண்களை நகர்த்துவதில் இக்காரணியே முக்கிய பங்குவகித்தது.
இம் முன்னோடிகளைப்பற்றிப் புரிந்து கொள்வதற்கும், இலங்கைச் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு எத்தகைய வலிமையானது என்பதை மதிப்பீடு செய்வதற்கும் நாம் 19ம் நூற்றாண்டில் நிலவிய பொதுவான சமூகக்கல்வியின் சிறப்பியல்புகளை மட்டுமன்றி, இம் முன்னோடிப் பெண்களின் சமூகமான பேகர் சமூகத்தின் குறிப்பான சில சிறப்பியல்புகளையும், அச்சமூகத்திற்கும் மேற்கத்திய சமூகத்திற்குமிருந்த தொடர்பையும் புரிந்து கொள்ளவேண்டும்.
இலங்கையில் மேற்கத்திய மருத்துவத்தின் ஆரம்பங்கள்
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் வருகையின் தொடர்ச்சியாகவே இலங்கையில் மேற் கதி திய மருத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1505 தொடக்கம் 1656 வரை கரையோரப்பகுதிகளை ஆட்சி செய்த போர்த்துக்கீசரின் வருகையின் பின் மேற்கத்திய மருத்துவத்தின் முதற் தொடர்பு ஏற்பட்டது. ஆனால் உள்நாட்டு மருத்துவத்தினைப் பொறுத்தவரை அதனை பின்தங்கிய மருந்து முறை என்ற கருத்தினையே
3

Page 7
அவர்கள் ஏற்படுத்தினர். 1656 தொடக்கம் 1796 வரையான ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்பிலிருந்த காலத்திலேயே இக்கருத்தின் தாக்கம் மிகப்பெரியதாக இருந்தது. காலனிகளை ஆட்சி செய்து வந்த டச்சு கிழக்கிந்தியக் கொம்பனி, டச்சு வைத்தியர்களையும் உதவியாளர்களையும் வைத்து வைத்திய சேவையை வெற்றிகரமாக ஸ்தாபித்தது. 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கொழும்பிலும் காவலரண்கள் அமைந்திருந்த வெளிநகரங்களிலும் வைத்திய சாலைகள் இருந்தன. கொழும்பிலிருந்த ஒல்லாந்தரின் வைத்தியசாலையில் 300 பேர்கள் தங்கி வைத்தியம் செய்யக்கூடிய வசதி கொண்டதாகவும், அதேவேளை யாழ்பாணம், காலி வைத்தியசாலைகள் 100-500பேர் தங்கி வைத்தியம் செய்யக் கூடியதாகவும், திருகோணமலை வைத்தியசாலை 60-80 பேர் வைத்திய வசதி பெறக் கூடியதாகவும் இருந்தது. மருந்துகள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு கம்பனியின் பண்டக சாலைகளில் பெரிய பெட்டிகளில் சேமிக்கப்பட்டது.மேற்கத்திய மருந்துவகைகளுக்கு துணையாக அல்லது மேலதிகமாக சில உள்நாட்டு மருந்துகளும் பயன்படுத்தப்பட்டன என்பதும் கவனத்திற்குரியதாகும்.
அவர்களது ஆட்சிக் குட்பட்ட கடலோர மாகாணங்களில் உள்ளவர்களின் மருத்துவத் தேவைகளைக் கவனிக்க போதிய மருத்துவர் இல்லாத போது, கிராம மட்டங்களில் உள்ளூர் மருந்துகளை ஊக்கப்படுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினர். loud val வசதி, பொது சுகாதாரம் போன்றவையும் டச்சுக்காரர்களால் வலியுறுத்தப்பட்டதுடன், அவர்கள் நோய்கள் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். சாக்கடை நீரை வெளியேற்றுதல், தண்ணிர் வசதியுடனான தனிக்கழிப்பறை வசதி ஆகியவற்றையும் அவர்கள் இலங்கைக்குஅறிமுகப்படுத்தினர்.
1796 இலிருந்து தொடங்கிய பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் ஆரம்ப மருத்துவ துறை முக்கியமாக இராணுவத்துறைக்கு சேவை செய்வதற்காகவே அமைக்கப்பட்டது. பிரித்தானிய இராணுவத்தினருக்காக கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை பின்னர் காலி ஆகிய இடங்களில் இராணுவ வைத்திய சாலைகள் அமைக்கப்பட்டன. இதற்கு பெரும்பாலும் டச்சு வைத்தியசாலைக் கட்டிடங்களே பயன்படுத்தப்பட்டன. இவற்றில் பிரித்தானிய இராணுவ மருத்துவர்களே பணி புரிந்து வந்தனர் எனினும் அதிகரித்து வந்த வேலைப்பழுவைக் கையாள மருத்துவர்கள் போதுமானதாக இல்லை என விரைவிலேயே உணர்ந்தனர். இராணுவ முகாம்களில் மலேரியாக் காச்சல் பெருமளவு உயிர்களைப் பலி கொண்டதுடன் 1802 இலும் 1812 இலும் சின்னம்மை தொற்றுநோய் பெருமளவுக்குப்பரவி மருத்துவத்துறைக்கு மேலும் பெரும் சிக்கலை ஏற்ப்படுத்தியது. உள்நாட்டுத் துணைமருத்துவர்களுக்கு

மருத்துவப்பயிற்ச்சிகொடுப்பதற்காக பரந்துபட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் தகுதி வாய்ந்த இராணுவ மருத்துவ அதிகாரிகளின் கீழ் வேலைசெய்யவேண்டி இருந்தது. இது உள்நாட்டு மருத்துவ நிறுவனம் என அழைக்கப்பட்டது. இங்கு உள்நாட்டு அல்லது சுதேச எனக்குறிப்பிடப்படுபவர்கள், டச்சுக்காரர்கள் சரணடைந்தபின் தொடர்ந்தும் இலங்கைத் தீவில் வாழ விரும்பி வாழ்ந்து கொண்டிருந்த டச்சுக்காரர்களும் பேகர்களுமேயாவர். இவ் உத்தியோகத்தர்களுக்கு மருத்துவத்துணைஉதவியாளர்கள் என்ற பதவிப் பெயர் வழங்கப்பட்டது. இவர்களில் சிலரான வைத்தியர்கள் எஸ். வான்டே, லான் ஜான் லோறன்ஸ், ஜேயி. மிஸ்ஸோ பேமர், (Fermer) இசிடோர், கீகல் மற்றும் ஜானைஸ்கியூ ஆகியோர் யாழ்ப்பாணத்தையும் பீற்றெஸ் மாத்தறையையும் லுடோவிசி காலியையும் டிஹோஎடிற் களுத்துறையையும் சேர்ந்தவர்கள்.
பிரிதி தானிய ஆட்சியின் ஆரம்பகாலங்களில் இராணுவ வைத்தியசாலைகளிலேயே இக்கல்வி கற்பிக்கப்பட்டது. இதில் நோயாளிக்கு மருத்துவம் செய்யும் செய்முறைப் பயிற்சிகளும் அடங்கும். வைத்தியர் கேவெற் என்ற சிறந்த வைத்தியரைப் பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். அவரே 1835 இல் இளம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததன் மூலம் ஓர் பயிற்சிக்கல்லூரியை ஆரம்பித்தவராவர். அவரிடம் முதல் பயிற்சி பெற்று வெளியேறிய 7 மாணவர்களில் 5 பேர் பேகர்களாவர் பின்னர் 1839 இல் இளைஞர்களைப் பயிற்றுவிப்பதற்கான ஓர் திட்டத்தை கல்கத்தாவில் உள்ள பெங்கால் மருத்துவக்கல்லூரியில் ஆரம்பித்தனர். 1870 இல் கொழும்பு மருத்துவப் பாடசாலை ஆரம்பிக்கப்படும் வரை இத்திட்டம் தொடர்ந்தது. 1880 இல் இப்பாடசாலை, பாடசாலை தரத்திலிருந்து கல்லூரித்தரத்திற்கு உயர்த்தப்பட்டது. 19ம்நூற்றாண்டின் மருத்துவ வரலாற்றைப் படைத்தவர்களில் பெரும்பாலோனோர் ஆணி பேகர் மருத்துவர்களாவர். இலங்கை மருத்துவக்கல்லூரிக்கு 1892 இலேயே முதன் முதலில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் ஆரம்ப முன்னோடிப் பெண் மருத்துவர்கள் பேகர்களேயாவர் என்பதைப் பின்னர் பார்க்கலாம்.
சுகாதார சேவைகளில் பெண்கள்
முன்னோடிகளான பேகர் பெண் மருத்துவர்கள் பற்றிய கதையின் பின்னணி என்ற வகையில் காலனித்துவக் கொள்கை பற்றிய சில கலந்துரையாடல்களையும் பெண்கள் மருத்துவர்களாவது தொடர்பான சர்ச்சைகளையும் தெரிந்து கொள்வது முக்கியமானதும் சுவாரசியமானதுமாகும். பிரித்தானிய காலனித்துவவாதிகளைப் பொறுத்தவரை சுகாதாரம் ஓர்

Page 8
முக்கியவிடயமாகப் பார்க்கப்பட்டது. ருட்யாட் கிப்ளிங் என்ற ஏகாதிபத்தியத்தின் பெருங்கவிஞர் தனது நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறபொழுது, நாகரிக மயமாக்கும் பணியினை கையிலெடுத்து நோய்நொடிகளை ஒழித்துக் கட்டுங்கள் எனக்கூறுகின்றார். காலனித்துவ நாடுகட்கு சுகாதார நடைமுறைகள் தொடர்பான விடயங்கள் எடுத்துச் சொல்லப்படுவதற்கு முன்னால் 19ம் நூற்றாண்டில் பிரித்தானியாவின் பெரிய நகரங்களில் இது தொடர்பான அங்கீகரிப்புகளை வெளிப்படையாக காணக்கூடியதாக இருந்தது . தூய்மை சுகாதாரம் தொடர்பாக மக்கள் எப்போதும் அக்கறையாக இருந்தனர். ஓர் நாட்டில் அசுத்தமும் பஞ்சமும் எந்தளவுக்கு மக்களைப் பாதிக்கக்கூடியதாக உயர்ந்துள்ளது என்பது பற்றியும் பெரு வாரியாக எழுதப்பட்டு வெளியிடப்பட்டன.
மத்தியதர வகுப்புப் பெண்கள் வீட்டுக்கு வெளியே சுகாதாரம் தொடர்பாகவும் சமூக சீர்திருத்தம் தொடர்பாகவும் மிகவும் சுறுசுறுப்புடன் செயற்பட ஆரம்பித்தனர். இந்த எண்ண ஓட்டம் பெஸ்சி ரெய்னெர் பார்க்ஸ் அவர்களால் முன்மாதிரியான ஓர் அமைப்பாக வடிவம் பெற்றது. அவர் 1859 இல் பிரித்தானியப் பெண்களுக்கு (" கழிவுக் குவியலின் மேல் "வாழ்ந்த பெண்கள்). தூய நீரினதும், தூய காற்றினதும், சவற்காரத்தினதும் தேவை பற்றிய அறிவை ஊட்டுவதற்காக பெண்கள் ஆரோக்கியச் சங்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். ஆரோக்கியத்துடனும் திடகாத்திரத்துடனும் வாழ்வதற்கான வழிமுறைகள் பற்றியும் தாதி வேலைகளை தொழில் துறையாக்குவதற்கும் , மருதீது விச் சிகளை பயிற்றுவிக்கவும் , பெண்மருத்துவர்களின் தேவைகளை எடுத்துக்காட்டுவதிலும் பெண்களுக்கான தனியான வைத்தியசாலைகளின் தேவைபற்றியும் மக்கள் மத்தியில் பரந்த பிரச்சாரத்தினை மேற்கொண்டார். விக்டோரியா மகாராணி அவரது அரசியல்வாதிகள், அதிகாரிகள் தொடக்கம், மேரிகாப்பென்ரர், எலிசபேத்ஃ பிறை, ஜேசப்பின் பட்லர், மற்றும் புளோரன்ஸ் றைட்டிங்கேல் ஆகியோர் முன்னோடிகளான பெண் மருத்துவர்களின் துணையுடன் பிரித்தானிய சமுதாயத்தின் எல்லாமட்டங்களிலுமுள்ள மக்களும் அணிதிரட்டப்பட்டதுடன், உள்நாட்டிலும் வேளிநாட்டிலும் சீர்திருத்தத்திற்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. பிரித்தானிய அரசியல் வாதிகள், அதிகாரிகள் நெருக்குதல் காரணமாக அவர்களின் சீர்திருத்தங்களின் குடியேற்ற நாடுகளும் திடகாத்திரமான சமூதாயத்தை கட்டியெழுப்பும் இவ்விடயத்தில் அக்கறை காட்டின. உதாரணமாக இலங்கையிலிருந்த மருத்துவ உத்தியோகத்தர்கள் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கினர். தாதிகள், மகப்பேற்று மருத்துவப்பெண் உதவியாளர்கள், தடுப்பூசி ஏற்றும் பெண்கள், மருந்து செய்பவர்கள், விற்பவர்கள் ஆகியோருக்குப் பயிற்சி கொடுப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

இலங்கை மருத்துவக்கல்லூரியில் பெண்களும் அனுமதி பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் மருத்துவ வசதி செய்யக்கூடிய வகையில் அரசாங்க, தனியார் வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டன.
1870 ஆணியில் மருத்துவப் பாடசாலை கவர்னராலி ஆரம்பித்துவைக்கப்பட்டது. பின்னர் சட்டவாக்கசபையின் உத்தியோகபூர்வ உறுப்பினரும், கொழும்பு நகரசபை உறுப்பினருமாகிய பிரதம பொதுசன வைத்திய அதிகாரி டாக்டர் W.R. கீன்சி அவர்களின் சிபார்சின் பேரில் மருத்துவக்கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டது. 1887 இல் வைத்தியம் மற்றும் அறுவைச்சிகிச்சையை மேற்கொள்ளுவதற்கான இலங்கை மருத்துவக்கல்லூரிச் சான்றிதழ் பிரித்தானியாவால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டது. அத்துடன் இலங்கை மாணவர்கள் இத்துறையில் மேற்படிப்புக்காக பிரித்தானியாவில் பதிவுசெய்து படிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதேவேளை மருத்துவத்துறையின் நுணுக்கங்களளைப் பெண்களும் பெருமளவில் தேடிக்கொண்டனர். சின்னம்மைக்கான தடுப்பூசி போடவேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டது. தமது பெண்களுக்கு ஆண்கள் தடுப்பூசி போடுவதை முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தடுப்பூசி போடும் வேலையில் பெண்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
1877 இல் மருத்துவக்கல்லூரிகளில் 2ம் தர மருத்துவக்கல்விக்கு பெண்கள் அப்போதிக்கரிகளாக அனுமதிக்கப்பட்டனர். அத்துடன 2 ம் நூற்றாண்டின் முற்பகுதில் மிசஸ் மொறிறா, சைபெல், கனகசபை ஆகியோர் முன்னணி வைத்தியசாலைகளில் மருத்துவராக இருந்திருக்கின்றனர்
19ம் நுாற் றாணிடில் மகப்பேற்று மருததுவப் பணியும் தனித்தொழிலாக்கப்பட்டது. அத்துடன் 1880இல் டிசோசாவின் லைங்-இன்ஹோம் ஆரம்பித்ததில் இருந்து மருத்துவிச்சிகளுக்குப் பயிற்சி கொடுப்பதும் அங்கு ஆரம்பிக்கப்பட்டது. மகப்பேற்று மருத்துவிச்சிகளில் பல்வேறு தரங்கள் இருந்தன. ஐரோப்பியர்களும், பேகர்களும் "பெண்கள் மாதாந்ததாதிகள்" (Ladies Monthly Nursses) என அழைக்கப்பட்டதுடன், ஏழைகளுக்கு எட்டாத அளவு அதிக சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. மறுபுறம் பயிற்சிப் பெறாத கிராமத்து மகப்பேற்று மருத்துவிச்சிகளின் இடங்கட்கு, பயிற்சி பெற்ற உள்நாட்டு மகப்பேற்று மருத்துவிச்சிகள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் ஐரோப்பிய மருத்துவிச்சி முறை கிராமங்கட்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1904 இல் 8 சிங்களவர்களும் 3 தமிழர்களும் மருத்துவிச்சிகளாகப் படித்து

Page 9
வெளியேறினர். உள்நாட்டுதுணைபெண்மருத்துவ உத்தியோகத்தர்களின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 1911 இல் மருத்துவத்துறை 2019 ஆண்களையும் 424 பெண்களையும் கொண்டதாக இருந்தது. 10 ஆண்டுகளுக்குள் ஆண்கள் 40% ஆலும் பெண்கள் 76% ஆலும் அதிகரித்தது.
தாதிகள் சேவை
படித்த பெண்களுக்குளிருந்து தாதிகள் சேவைக்கு ஆளெடுப்பது மிகவும் சிரமமானதாகவும் சம்பளம் குறைவாகவும் இருந்த காரணத்தால் 1870 இற்கு முன் பயிற்சி பெற்ற தாதிகள் பற்றாக்குறை பெருமளவிற்கு இருந்தது. எனவே 1877 இல் கொழும்பு பொது மருத்துவமனையில் தாதிகள் பயிற்சிப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதன் மேற்பார்வையாளரான பிரிட்டனைச்சேர்ந்த செல்வி பி. வின்னும், பயிற்சி பெற்ற தாதியான ஜேன் ஹோல்டரும், இத்தாதிகள் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை ஏற்றனர். 1881 இல் திருமதி மொத்தாவு என்ற பேகர் பெண்மணியைத் தலைமைத்தாதியாக நியமிதத்துடன், சிறந்த கல்வியறிவும் புத்திக்கூர்மையும் உள்ள ஆறு இளம் பெண் மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இப்பள்ளி புளோரன்ஸ் நைட்டிங் கேல் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றியது. உள்நாட்டிலிருந்து தெரிவுசெய்ப்பட்ட தாதிகளைப் பொறுத்தவரை நோயாளிகளைக் கையாள்வதில் சாதி வேற்றுமைப் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது என டாக்டர் டபிள்யூ ஆர். கீன்சி கூறினார். இதனால் அரசு கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த பெண்துறவிகளைத் தாதிகள் பயிற்சிக்காக தேர்ந்தெடுத்தது. 1886 இல் மேரியின் பிரான்சிஸ்கான் மிசனறீஸ் முதல் தொகுதி பெண் துறவிகளுடன் தனது வேலையை ஆரம்பித்தது.
பெரிய பிரித்தானியாவிலும், இந்தியாவிலும் பெண்களின் மருத்துவ தாதிப்பயிற்சிக் கல்வி வளர்ந்து கொண்டிருந்தது. இம் முன்னேற்றத்தால் கவரப்பட்ட டாக்டர் ஜேம்ஸ் லூஸ் இவ் விடயங்கள் தொடர்பாக ஓர் பிரச்சாரத்தை நடத்தினார்.இவ்விடயம் தொடர்பாக 1880 இல் தொடர் விரிவுரைகளை நடத்தியும், பத்திரிகைகளில் அடிக்கடி எழுதியும், இதன் மூலம் இவ்விடயம் தொடர்பாக பொது மக்கள் அதிகம் விவாதிக்க தூண்டியும், பத்திரிகையில் எழுதப்பட்டவை தொடர்பாக அபிப்பிராயம் எழுதத்தூண்டியும் பெரும் பங்காற்றினார். டாக்டர் லூஸ் அவர்கள் 1822 இல் பிறந்தார். 1843 இல் கல்கத்தாவில் தனது மருத்துவப் படிப்பை முடித்தார. பின்னர் ஸ்கொட்லாந்தில் பட்டமேற்படிப்புத் தகுதிகளைப் பெற்றார். M.D.(St Andrew) MRCP (Edinburgh). 36 si60s, Ln(C5556).jid,.69riffsi (p56 T6...g5

முதல்வர் இவரேயாவார்.அத்துடன் மத்திய மாகாணத்தின் காலனித்துவ அறுவைச்சிகிச்சை நிபுணராகவும், கண்டி கொழும்பு மாநகரசபைகளின் உறுப்பினராகவும் திகழ்ந்தார். தான் ஒய்வு பெறுற்றதற்குப் முன்னரும், ஒய்வு பொறுவதற்கு பின்னரும் மருத்துவத்துறையிலும், தாதிகள் சேவையிலும், பெண்கள் என்ற விடயம் தொடர்பான விவாதத்தை முன்னெடுத்து செல்லவே தனது பேனாவைப் பயன்படுத்தினார். டாக்டர் லூஸ் அவர்கள் தனது வாழ்நாளில் ஓர் உண்மையான தாராளவாதியாக வாழ்ந்தார். வெளிநாட்டு விடயங்களில் நன்கு பரீட்சையமும், அறிவும் பெற்றராக இருந்தார். சர்சைக்குரிய விவாதங்களில் பங்கேற்பதில் நாட்டமுள்ளவராக இருந்தார். இவ்விடயத்தில் பழமை வாதிகளான டாக்டர்கள் தவித்திருப்பார்கள். பிரித்தானியாவுக்கு சென்ற போது அங்கு பெண்களுக்கான லண்டன் மருத்துவக்கல்லூரி திறப்புவிழாவில் கலந்து கொண்டார். இந்திய பெண் மருத்துவர்களின் தொழிற் திறமைபற்றி தெழிவாகத் தெரிந்திருந்தார். பத்திரிகைகள் பலவற்றிற்கு அவர் எழுதிய எழுத்துக்கள் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் வழிகாட்டுதலின் மீது தனக்குள் மதிப்பையும், இந்திய பெண்கள் தொடர்பான தனது அக்கறையை மட்டும் வெளிப்படுத்தவில்லை, பெண்விடுதலைக்கான பிரித்தானியப் பிரச்சாரகர்களின் நோக்கு தொடர்பான அறிவையும் கூட வெளிப்படுத்தினார்.
கண்டியில் 1887இல் ஆர்வமிக்க 30 இளம் பெண்களுக்கு விரிவுரையாற்றினார். இங்கு தனது விரிவுரையில் 1877இல் காலியில் அநாதைப்பெண்களுக்கு தாதிகள் பயிற்சி கொடுக்க முயற்சிக்கப்பட்டதையும், "உள்ளூரில் கிடைக்கும் பொருட்கள் திருப்தியில்லாமல் இருந்ததால்" இம் முயற்சி தோல்வியடைந்ததையும் குறிப்பிட்டார். தாதிகட்கு பற்றாக்குறை இருப்பதாகவும், தாதிகள் துறைத் தலைவராக இருப்பவர் இந்நாட்டில் முன்னரே வாழ்ந்து வருபவராகவும் மக்களுடனும் அவர்களது மொழியுடனும் பரிட்சயம் உடையவராகவும் இருக்கவேண்டும் எனக்கூறினார். இக்கருத்தானது மறைமுகமாக வெளிநாட்டுத்தாதிகளை முக்கியபதவிகளில் அமர்த்தும் வழக்கத்திற் எதிரான விமர்சனமாகும். லாபகரமான தொழிலாக இருக்குமிடத்து, மதிப்புமிக்கதும் பயனுள்ளதுமான உத்தியோகத்தை அல்லது வாழ்க்கைக்கான தொழிலை, படித்த இளம் பெண்கள் தெரிவு செய்ய வாய்ப்பாக இருக்குமென நம்பினார். பெண்கள் உறுதியானவர்களாகவும், சுறுசுறுப்பு மிக்கவர்களாகவும், சோம்பலை வெறுப்பவர்களாகவும், தங்கி வாழ்வது தொடர்பாக மிகவும் சுயகெளரவமுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதுடன் தாதிச்சேவை என்பது ஓர் கெளரவமான வாழ்க்கைக்கான வழியாக அமைவதுடன், அது அறிவிலும் ஆற்றலிலும், பயன்பாட்டிலும் அவர்கள்ை உன்னதமானவர்ளாக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Page 10
1880களில் டாக்டர் லூஸ் போன்ற சீர்திருத்த வாதிகள் பெண்கள் ஆண்களைச் சார்ந்து அவர்களில் தங்கிவாழும் நிலைக்காக வருத்தப்பட்டது மட்டுமன்றி, பெண்கள் உத்தியோகம் பார்க்கும் உரிமைக்காகவும் வாதாடினார்.பெண்களுக்கு உயர் கல்வியும், தொழில் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டியதன் அவசியம்பற்றி பிரித்தானிய டாக்டர்களும் பெண்நிலைவாதிகளும் வைக்கும் தர்க்கங்களை டாக்டர் லூஸ் மிகவும் திறமையாக முன்வைத்தார். எனினும் அதற்கு ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை அவர் குறைத்து மதிப்பிடவில்லை. அவரது உரைகளில் ஒன்றில் டாக்டர் விதேர்ஸ் மூர் அவர்களின் கருத்தான பெணிகள் டாக்டர்கள், சட்டத்தரணிகள், கணிதவிஞ்ஞானிகள், வானசாஸ்திரர்கள், பேராசிரியர்கள், வெளியீட்டாளர்கள், நாட்டின் மந்திரிகள் என வருவது மனித குலத்தின் வீழ்ச்சிக்கான அறிகுறியாகும் என எச்சரித்தமையைக் கூட மேற்கோள் காட்டினார்.ஆனால் டாக்டர் விதேர்ஸ் மூர் அவர்களின் பெண்கன் மனைவியாவதும், தாயாவதுமே ஒரேயொரு கருத்தாக இருக்கவேண்டும் என்ற பழைய தவறான பிரச்சாரத்தை மறுத்துரைக்கும் பெண்ணுரிமைப் பிரச்சாரவாதியான மில்லிசென்ட் வ்வோவ்செற் அவர்களின் வாதங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். பெண்ணிலைக்கு எதிரான வாதங்களில் காலிலே(Carlyle) தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களை அவர் மேற்கோள் காட்டினார். அக்கடிதத்தில் பெண்களை அற்ப விடயங்களில் காலங்கடத்தும் பழக்கத்திலிருந்தும், பொம்மைபோல் ஆட்டுவிப்பதற்கெல்லாம் ஆடும் கட்டுப்பாட்டுத் தளைகளிலிருந்து விடுவிக்கப்படவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இவை அனைத்தும் உள்நாட்டுப் பத்திரிகைகளில் வெளிவந்ததுடன் மக்களின் அபிப்பிராயங்களிலும் செல்வாக்கு செலுத்தியது என்பதில் சந்தேகமில்லை.
டாகடர் லூஸ் பெண் மருந்தாளர்களையும், மருத்துவர்களையும் தாதிகளையும் ஆதரித்துப் பேசினார். அவர் தாதிச்சேவையில் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் சேவையின் பிரகாரம் ஒவ்வோர் பெண்ணும் ஒரு தாதியாவாள் என்ற அவரது கருத்தை மேற்கோள் காட்டியும், வால்டர் ஸ்கொட் இன் பிரபல வாக்கியமான "பெண் என்பவள் சேவை செய்யும் தேவதை" என்பதை மேற்கோள் காட்டியும் விபரித்துப் பேசினார். நோயாளிகள் அன்பான பராமரிப்புக்காக படிப்பறிவற்ற, முரட்டுத்தனமான பெண்களிடம் விடப்பட்டனர். இப்போது படித்த இளம்பெண்கள் இத்தாதிச் சேவைக்கு தெரிவுசெய்யப்படுவதுடன், தூய்மை துப்பரவு மென்மையான கவனிப்பு என்பதன் வடிவமாக இத் தாதிகள் அமைந்துவிட்டனர் என்றார்.
1882 இல் கொழும்பு பொது வைத்தியசாலை தாதிகள் பாடசாலையிலிருந்து 13 பேர் சித்தியடைந்தனர். இவர்களில் சிலர் கண்டி
10

காலி மருத்துவ மனைகட்கு சேவைக்கு அனுப்பட்டனர். அவர்களுடைய சிறந்த சேவை அறிக்கையாகப் பதிவு செய்யப்பட்டது. 1898 இல் பொது வைத்தியசாலையின் தலமை மருத்துவர் இது பற்றிக் கூறும்போது என்னைப் பொறுத்தவரை அவர்களது வேலைகள் தொடர்பாக மிக அதிக புகழ்ச்சி இருப்பதாக சொல்லமுடியாது என்றார். 1904 இல் 27 உள்ளுர் செவிலியர்களும் 38 உள்ளுர் தாதிகளும் 27 ரோமணி கத்தோலிக்க, அங்கிலிக்கன் கன்னியாஸ்திரிகளும் கொண்ட அணி தாதிச்சேவையில் இருந்தது. 1911 இல் 119 தாதிகள் அரசாங்க சேவையில் இருந்தனர். செல்வி யான்சேயும், திருமதி கீன் ஆகியோர் மாத்தளை வைத்திய சாலையில் இந்நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தாதியக வேலைசெய்தனர் ஆனால் குறைந்த ஊதியம் குறைந்த அந்தஸ்த்துமுள்ள தொழிலாக இருந்ததால் இத்தொழிலுக்கு தேவையான அளவு தாதிகள் இருக்கவில்லை. பற்றாக்குறை தொடர்ந்து நிலவியது. 1900 ஆண்டில் பயிற்சியிலிருக்கும் தாதிகளுக்கு இலவச இருப்பிடம், உணவு சீருடை, வேலையாள் போன்றவற்றுடன் மாதம் பத்து ரூபா சம்பளமாகப் பெற்றனர். அவ்வாண்டின் ஆண்டறிக்கையின்படி இலங்கையின் இளம் பெண்களால் தாதிகள் சேவை தொடர்பாக ஒர் தவறான அபிப்பிராயம் நிலவியது மட்டுமல்ல தாமாகவே வேலைதேடும் பெண்கள் கடைகளில் இதைவிட அதிக ஊதியத்தில் வேலைபெற்றுவிடுகின்றனர் எனக் குறிப்பிடப்படுகின்றது. தென்னாபிரிக்காவில் புவர் யுத்தம் (Boer war) நடைபெற்றபோது தியத்தலாவையில் போர்க்கைதிகள் முகாம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் இலங்கையில் பணிபுரிந்து வந்த பல வெளிநாட்டுத்தாதிகள் அம்முகாம் வைத்தியசாலையில் பணிபுரிவதற்காக 1900இல் அனுப்பப்ட்டனர். இவர்களுள் கண்காணிப்பதிகாரியாக தாதிகள் கண்காணிப்பாளர் சகோதரி லூசி மற்றும் தாதிகள் கிரெக்சன், (Gregson) வான்டெ டல்சண், கிரே போல்ட்வின் ஆகியோரும் அடங்குவர். இந் நூற்றாண்டு முடிவில் இலங்கைத்தாதிகள் சங்கத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு இவர்களுடைய தொகை அதிகரித்தது.
பெண்களுக்கான வைத்தியசாலைகள்
1880 களில் கொழும்பில் பெண்களுக்கான இரண்டு அரசாங்க வைத்தியசாலைகள் இருந்தன. இதில் ஒன்று பெண்கள், குழந்தைகள் நோய் தொடர்பான சிறப்பு வைத்தியசாலை இன்னென்று சாள்ஸ் கென்றி டி சொய்சா என்ற முன்னனி வர்த்தகின் அன்பளிப்பாக 1880 ல் 24 படுக்கைகளுடன் கூடிய வைத்தியசாலை திறக்கப்பட்டது. இவ் வைத்தியசாலையில் வேலைசெய்தவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாவர். அதே வேளை
11

Page 11
தலைமைச் செவிலியாக இங்கிலாந்தைச்சேர்ந்த எமிலி பார்மர் இருந்தார். 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் இருந்து குடியேற்ற நாடுகளுக்கு ஒரு செய்தி அனுப்பப்பட்டது. அதாவது குடியேற்ற நாடுகளில் உள்ள இங்கிலாந்து உயர்அதிகாரிகளின் மனைவிமார் தனிப்பட்டமுறையில் பெணிகளுக்கான மருத்துவக்கல் கவியையும், பெண் களுக்கான வைத்தியசாலைகளையும் மேம்படுத்துவதற்கு உழைக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்தியாவில் அன்றய ராஜப்பிரதிநிதியின் மனைவியான சீமாட்டி டஃபரின் இதற்கு தலைமைப் பொறுப்பேற்று 1885 ல் பெண் டாக்ார்கள் அடங்கிய பெண்கள் வைத்தியசாலைக்கான டஃபரின் நிதியத்தை ஆரம்பித்தார். இதே போன்று இலங்கையைப் பொறுத்தவரை அன்றைய ஆளுனரின் மனைவியான சீமாட்டி ஹெவ்லொக் துரிதமாகச் செயல்ப்பட்டார். 1893 கார்த்திகை மாதம் கொழும்பையும் வெளிப்பிரதேசங்களையும் சேர்ந்த சீமாட்டிகள் பெண்களுக்கான வைத்தியசாலையை உருவாக்குவதற்கான நிதியைச் சேகரிப்பதற்கு ஒரு குழுவை அமைப்பதற்காக அவர்களை ராணி மாளிக்ைககு அழைத்திருந்தார். இக்குழுவில் தலைமை சமூக வைத்திய அதிகாரியின் மனைவியான திருமதி கீன்சியும், மேரி மாக்கிரட் லீற்ச் ஆகியோரும் அடங்குவர். மாக்கிரட் லீற்ச் அமெரிக்கன் மதச்சபையைச் சேர்ந்தவர். இவர் யாழ்ப்பாண பெண்கள் மருத்துவ சபையை ஆரம்பித்ததுடன் வெளிநாடுகளில் இருந்து டாக்டர் லூசியா கிறீவ் டாக்டர் மேரி ஸ்கொட் ஆகியோர் உட்பட பல பெண் டாக்டர்களை இலங்கைக்கு அழைத்தார். அத்துடன் சீமாட்டி ஹெவ்லொக் குழுவில் டாக்டர் அலிஸ் வான் இன்ஜென் இருந்தார். இவர் 1892 ம் ஆண்டு டஃபிரின் நிதியத்தின் கீழ் பெண்களுக்கு ஏற்படக் கூடிய நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தால் இந்தியாவில் இருந்து தெரிவுசெய்யப்பட்டவராவார். இவருக்கு ஆண்டுக்கு ஊதியமாக 4200 ரூபாவும் வீட்டு வாடகைக்காக வருடம் 600 ரூபாவும் வழங்கப்பட்டது.
சீமாட்டி ஹெவ்லொக் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கத் தொடங்கிய நாட்கள் முதலே பெண்களின் சுகாதாரப்பிரச்சனைகள் தொடர்பாக அதிக ஆர்வம் காட்டிவந்தார். அவர் இலங்கைத் தீவுக்கு வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே இங்கிருந்த தாய் சேய் சிறப்பு மருத்துவமனைக்கு போய்வர ஆரம்பித்தார். இவ்வேளையில் டாக்டர் அலிஸ் வான் இன்ஜென் அவ்வைத்தியசாலையை நிர்வகித்ததுடன் பெண் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்துக் கொண்டு பெண்களுக்காக வெளி நோயாளர் மருந்தகம் ஒன்றையும் நடாத்தினார். 1892 ம் ஆண்டு 10 மாதங்களில் 4500 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இவ் வெளிநோயாளர் மருந்தகத்தில் வைத்தியம் பார்க்கப்பட்டது. சீமாட்டி ஹெவ்லொக் அவர்களது விஜயமானது இத்தகைய
12

நடவடிக்கைகளை குறிப்பிடத்தக்க அளவு உற்சாகப்படுத்தியது. சிலோன் 36oig. Gusoi GL6i (CEYLON INDEPENDENT) luggif60) 5uoi Luuq வைத்தியசாலைக்கு அவரது விஜயங்களானது, வழக்கமான அவரது சமூக நடவடிக்கைகள் அல்ல. மாறாக பெண்களுக்கான வைத்தியசாலை வசதிகளுக்காகவும் மருத்துவக் கல்வியை பெண களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் போராடுபவர்களுக்கு தமது உத்தியோகபூர்வ ஆதரவைத் தெரிவிப்பதே இதன் நோக்கமாகும். ஏனெனில் இவ்விடயங்கள் அக்காலகட்டத்தில் சர்ச்சைக்குரியதொன்றாக விளங்கின.
சீமாட்டி ஹெவ்லொக்கின் கன்னிப் பெயர் ஆன் மொறிஸ் ஆகும். அவரது கணவர் சீமான் ஆதர் ஹெவ்லொக் 1890 ம் ஆண்டில் இருந்து 1895 வரை இலங்கையின் ஆளுனராக இருந்தார். இலங்கையில் தேயிலை காரியம் ஏற்றுமதிகள் மூலம் உறுதியான வருமான அதிகரிப்பு ஏற்பட்டு வந்த காலத்திலேயே அவர் பதவியில் இருந்தமை என்பது சுகாதாரத்திற்கும், கல்விக்கும் பெருமளவு பணத்தை செலவு செய்ய வாய்ப்பாக அமைந்தது.சாதிமத பிற்போக்கு எண்ணங்களால் தமது மருத்துவ உதவிக்காக டாக்டர்களை நாடமுடியாமல் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஐரோப்பிய மருத்துவ வளர்ச்சியின் பலாபலன்களை மேலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதில் சீமாட்டி ஆதர் ஹெவ்லொக் ஆழமான அக்கறை கொண்டிருந்தார் என்று டாக்டர் கீன்சி அவர்கள் கூறுகின்றார்.
பெண் டாக்டர்களால் நடாத்தப்படும் பெண்களுக்கான ஒரு நவீன வைத்தியசாலையை ஆரம்பிப்பதற்கு நிதியுதவி கோரி பகிரங்கமாக விடுக்கப்பட்ட ஒரு வேண்டுகோள்மூலம் 46000 ரூபா சேகரிக்கப்பட்டது. முன்னணியிலுள்ள உள்நாட்டு வர்த்தகர்களும், பெருந்தோட்ட முதலாளிகளுமே இத்தொகையை அன்பளிப்பாக வழங்கினர். 1896 ம் ஆண்டு ஓர் ஆங்கிலத் தலைமைத்தாதியை பொறுப்பாகக் கொண்ட தாதிகள் பயிற்சிப்பள்ளி இணைந்த பெண்களுக்கான சீமாட்டி ஹெவ்லொக் வைத்தியாசலை திறந்துவைக்கப்பட்டது. இப் புதிய வைத்தியசாலை முழுக்க முழுக்க பெண் அலுவலர்களைக் கொண்டதாகவும், 40 படுக்கை வசதிகளைக் கொண்டதாகவும், ஒரு பெணி வெளிநோயாளர் மருந்தகத்தைக் கொண்டதாகவும் இருந்தது. இதில் பல வெளிநாட்டு, உள்நாட்டு பெண்டாக்டர்கள் பணியாற்றினார்கள். இவ்வேளை தலைமை டாக்டராக டாக்டர் லுசிலி லெஸ்லி ஒரு வருடம் பணியாற்றினார். பின்னர் 1900 ம் ஆண்டில் டாக்டர் மேரி சார்மன் இப்பொறுப்பை ஏற்றார். இவருடன் டாக்டர் அலிஸ் டி புவர் பணிமனை வைத்திய அதிகாரியாக பொறுப்பேற்றார்.
13

Page 12
பெண் மருத்துவர் சர்ச்சை
பெண் மருத்துவர் தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில் 1892 ம் ஆண்டு இலங்கை மருத்துவக் கல்லூரிக்கான பெண்கள் அனுமதி அமைதியாவே நடந்தது. உலகம் அடங்கிலும் ஆண் ஆதிக்கம் நிறைந்த மருத்துவத் தொழில்துறைக்குள் பெண்கள் நுழைவதென்பது வெவ்வேறு அளவுகளிலான எதிர்ப்புக்களும் பகைமைகளுக்கும் ஊடாகவே சாத்தியமாக இருந்தது. இவ் எதிர்ப்புக்களானது உடலூறு விளைவித்தல், தொடக்கம், மிரட்டல் அச்சுறுத்தல் ஏனையவகைத் துன்புறுத்தல்கள் வரை சந்திக்கவேண்டியிருந்தது. 1889 ம் ஆண்டு எடின்பரோவில் ஐந்து பெண்கள் மருத்துவக்கல்விக்காக அனுமதிக்கப்பட்டனர். சில டாக்டர்களும் ஆண்
மருத்துவ மாணவர்களும் இவ் அனுமதிக்கெதிராக குழப்பம் விளைவித்தனர். அம் மாணவிகள் நுழையும் வாசலுக்கு தடுப்புப் போட்டு அவர்களுக்கு எதிராக கோஷம் போட்டார்கள். இப் பெண் மாணவிகள் ஏனைய மாணவிகளையும் ஐரிஸ் தொழிலாளர்களையும் தமது பாதுகாப்பிற்காக சேர்த்துக் கொண்டனர். இருந்தும் கூட அவர்கள் கல்வியைத் தொடர அனுமதிக்கப்படவில்லை. இவர்கள் லண்டனுக்கு சென்று தாராள மனப்பான்மையுடைய மேலும் பல ஆண் டாக்டர்களின் ஆதரவுடன் 1874 ம் ஆண்டு பெண்களுக்கான விஞ்ஞான மருத்துவப் பள்ளியை (LONDON SCHOOL OF MEDICINE) 95 List3556O75. g6, 9,600i46) இந்தியாவில் சேவைபுரிந்து வந்த பிரித்தானிய டாக்டர்கள் சிலரின் எதிர்ப்பையும்மீறி சென்னையில் மருத்துவப் பயிற்சிக்காக பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். 1880 களில் மருத்துவப் படிப்புக்களுக்காக இந்தியப் பெண்கள் வெளிநாடு சென்றனர்.
1891 ம் ஆண்டு பெண்களை மருத்துவக் கல்லூரிக்கு அனுமதிக்க அரசாங்கம் முன்வைத்த திட்டத்தை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உள்ளூர் பத்திரிகைகள் பிரசுரித்தன. இலங்கை தேசாபிமானி (THE CEYLON PATRIOT) என்ற பத்திரிகை "மருத்துவப் பெண்கள்" என்ற தலைப்பில் இதுபற்றிக் குறிப்பிடுகையில்
இலங்கை முன்னோக்கி போகிறது என்பதை விட இலங்கைப் பெண்கள் முன்னோக்கிப் போகிறார்கள். இலங்கை மருத்துவக் கல்லூரியில் பெணிகளுக்கான வகுப்புகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்பதை உரிமையுடன் அறியத்தருகின்றேன். அவர்களது கல்வி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகின்ற அதேவேளை
14

ஆண்மாணவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் உங்களது கடுமையான நிலைப்பாட்டை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் அவர்கள் உங்களை முந்திவிடப் போவதில்லை.
இலங்கையின் மருத்துவக்கல்லூரிக்கு மாணவிகள் அனுமதிக்கப்பட்ட பின்னரும் கூட, பத்திரிகைகள் இது தொடர்பான விவாதத்தை மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்தனர். கெக்டர் வான் குயிலின் ப்போர்க் என்ற முன்னணி பேகர் ஒருவரால் நடாத்தப்படும் சிலோன் இன்டிப்பென்டன் (CEYLON INDEPENDENT) 6Tsiigth Lujálfsos, Gu600i,65d(5 656).jlis ஆதரவாக செயற்பட்டது. டாக்டர் ஜேம்ஸ் லூஸ் இப்பத்திரிகையில் பெண்களுக்கான மருத்துவக் கல்வி தொடர்பான பிரச்சனையை இக்கருத்துப்பரிமாற்றத்தில் விவாதித்தமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது, இவர் தனது கட்டுரையில் 1890 ம் ஆண்டு தான் கல்கத்தா சென்றிருந்தமையும் தான் அங்கு பல மருத்துவ மாணவிகளை சந்தித்ததாகவும் அவர்களது கல் விக்கான செலவை டஃபரின் பொறுப்பேற்றுள்தையும் விபரித்திருந்தார். இலங்கை பற்றிக் குறிப்பிடும்போது பெண்கள் இத்துறையின் சில பிரிவுகளில் மட்டுமே ஈடுபட்டு உழைப்பதாவும் ஆனால் விதிவிலக்காக ஒரு சில பெண்கள் தவிர்ந்த வேறு எவரேனும் சத்திரசிகிச்சை செய்யும் அளவுக்கு ஆற்றல் உள்ளவர்களாக இருக்கிறார்களா என்பது சந்தேகமே என லூஸ் அவர்கள் கூறினார். (Ceylon Independent 4th March 1893)
லூஸ் அவர்களின் கட்டுரைபற்றி த சிலோன் இன்டிப்பென்டன்ற் பத்திரிகை தனது கருத்துக்களைத் தெரிவிக்கும்போது, இலங்கையில் உள்ள செல்வமிகுந்தவர்கள் இந்தியாவில் உள்ள செல்வந்தர்களைப் போல் பெண்டாக்டர்கட்கு ஆதரவு காட்டுவது இல்லை எனவே இத்தைகய நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்தின் முன்னெடுப்பு அவசியமானது எனத் தெரிவித்தது. பெண்கள் தமது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே உள்ளது. ஏனெனில் உலக அளவில் நாகரீகமடைந்த மனிதன் ஆண்களை முதன்மைப்படுத்தி சிந்திக்கும் காலாச்சாரத்திலே பழக்கப்பட்டிருக்கிறான். அதனால் எந்த உரிமைகளையும் பெண்களுக்கு மறுக்கிறான். இதற்கு உதாரணமாக இங்கிலாந்தில் உள்ள தலைசிறந்தபெண் கணிதமேதையான சோமர்வில்லே என்பவரே முதன்முதலில் கணிதம் பயின்றவராவார். இவர்தனது சகோதரரின் ஆசிரியரிடமே கணிதம் பயின்றார் என்பதை ஆதாரம்காட்டி சிலோன் இன்டிப்பென்டன் பத்திரிகை 6Tufugi. (Ceylon Indepedent 20th March 1893).
15

Page 13
த சிலோன் றிவியூ (The Ceylon Review) எனப்படும் சஞ்சிகையும் கூட பெண்டாக்டர்கள் தொடர்பான எண்ணற்ற கருத்துப்பரிமாறல்களின் களமாக விளங்கியது. 1893 இல் இச்சஞ்சிகை பிரசுரித்த இலங்கைப் பெண்களும் மருத்துவமும் என்ற தலைப்பிலான கட்டுரையில் இங்கு நடைபெற்ற கேம்பிறிட்ஜ், கல்கத்தா பல்கலைக்கழகங்களின் பரீட்சையில் மாணவிகளின் சாதனையைக் குறிப்பிட்டு அதனை வரவேற்று மருத்துவக்கல்வி இனிமேலும் இலங்கையில் ஆண்களுக்கு மட்டுமே உரிய சிறப்புரிமையாக இருக்கவோ மருத்துவக்கலை இரகசியங்களை பொறாமை காரணமாக ஆண்கள் மறைத்து வைப்பதோ முடியாது. பழைய மரபுக்கும் கருத்துக்களுக்கும் சவாலாக அவர்களது பாதையில் குறுக்கிடும் தடைகளையும், தடுப்புக்களையும் மீறி பெண்கள் வெற்றி கொள்வார்கள். அதன் மூலம் மனிதகுலத்திற்கு சேவைபுரியும் தமது பிரிக்கமுடியாத உரிமையைப் பெற்றுக் கொள்வார்கள் என குறிப்பிட்டிருந்தது. (Ceylon Review 15th May 1893 Voli No.2)
ஆனால் ஆண்-பெண் சமத்துவம் நோக்கி வளர்ந்துவரும் போக்கிற்கு எதிரான வேறு எச்சரிக்கைக் குரல்கள் ஒலித்தன. ஒஸ்வின் ஈ மாட்டினஸ் (Oswin E Martinus ) என்ற ஒருவர் பெண்கள் உயர்கல்வி கற்பதற்கு எதிரான வழமையான வாதங்களை முன்வைத்ததுடன், மருத்துவக்கல் விக்கு பெணிகளுக்கு அனுமதி வழங்கியதானது நகைப்பிற்கிடமான தவறு, மற்றய நாடுகளின் முட்டாள்தனங்களையும், தவறுகளும், அடிமைத்தனமாக பின்பற்றப்படுகிறது என்றும் புலம்பினார். முஸ்லீம் பெண்கள் ஆண்களைப் பார்பதற்கு மறுக்கிறார்கள் எனவேதான் பெண் வைத்தியர்கள் பயிற்றப்படுகிறார்கள் என்றால் இப்பிரச்சனைக்கு தீர்வு காண சிறந்த பேறுகால உதவியாளர் போதும் என அவர் அறிவித்தார். கடுமையான மருத்துவக்கல்வியைக் கற்பதற்கு உடல் ரீதியாக பெண்களால் முடியாது எனக் கூறிய மாட்டினஸ் இது நாசத்தையே விளைவிக்கும் என்ற அச்சமூட்டும் எச்சரிக்கையையும் விடுத்தார். ஒல்லியான கொடுரமான முகத் தோற்றம் உடையவர்களும; கூனல் விழுந்ததவர்களும் மூக்குக் கணிணாடிகளைப் போட்டுக் கொணி டு பக்குவப்படாத வயதுத்தோற்றத்துடன் தாம் ஓர் புத்தியீவி என்ற நினைப்பில் மிதந்து கொண்டும் இருப்பர் என்பதே அவரது எச்சரிக்கையாகும்.
கேம் பிரிட்ஜ் பரீட் சைகளினி வழக்கமான விளைவுகள் இதீத கையனவாயிருந்தால் மிகவும் கடுமையான மருத்துவக்கல்வியானது எத்தகைய விதிவசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கற்பனை பண்ணிப் பார்க்கவேண்டும். ஆண்களுக்கு இணையாக பெண்களை உயர்த்துதல் தவிர இவ்வுலகில் பெண்கள் ஓர் நோயுற்ற இனத்துடன் வேறெந்த
16

உதீ தரவாதமுள்ள வழிமுறையையும் கணி டுபிடிக்க முடியாது.புத்திஜீவிகளான தாய்மார்களுடைய ஈடிணையற்ற வழித்தோன்றல்களான பெண்களின் ஒரே குறிக்கோள் அறிவுரீதியாக ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்பதை உலகிற்கு நிரூபிப்பதேயாகும்.
நாணம் தன்னடக்கம் போன்ற பெண்களின் சுபாவங்களை காரணம் காட்டி மாட்டினஸ் வழக்கம் போல் நிராகரித்தார் என அவர் எழுதுகிறார். சமுதாயத்தின் பல்வேறு பதவிகளுக்காக உருவாக்கப்படும் எமது இளம் பெண்களுக்கு இதன் தாக்கங்கள் அவர்களின் ஒழுக்கம் தொடர்பாக எந்தளவுக்கு பயனுள்ளவை நாம் துணிந்து கேட்கின்றேம். பெண்களுக்கும் பயிற்றுவிக்கும் வசதியுடன் கூடிய பெண் பேராசிரியர்களுக்குமனான ஒர் தனியான வைத்தியசாலை நிறுவப்படாவிட்டால் ஆர்வத்தோடிருக்கும் இலங்கைப் பெண்களுக்கு இத்தொழிலைக் கொடுப்பதற்கு ஒருவரும் கனவுகூடக் காணமாட்டார்கள் என அவர் மேலும் கூறினார்.
இவ்வாதங்கள, இளம் பெண்ணான அலிஸ் ஆசீரப்பாவின் கோபத்தைத் தூண்டியதுடன், இவரையும் இச் சச்சரரவுக்குள் இணைத்துவிட்டது. காலத்திற்கொவி வாத இப்பழைய கருத்து பலதடவைகளுக்கு மேல் திரும்பத் திரும்பக் கூறப்பட்டும், திரும்பத் திரும்ப மறுக்கப்பட்டும் வந்துள்ளது என்பதற்காக வருத்தப்பட்டதுடன், உடல் ரீதியாக பெண்கள் பலவீனமானவர்கள் என்ற மாயையைப் போக்குவதற்காகவும் உழைத்தார். ஆண்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் இதுவரை அவர்கள் தனியாதிக்கம் செலுத்திய ஓர் துறைக்குள் அவர்களது ஆதிக்கத்தை பங்கு போடும் வகையில் நுழையும் புதியவர்கள் தொடர்பாக அவர்கட்கு பக்கச்சார்பான நிலைப்பாடு இருக்கக்கூடும், ஆனால் அத்தகைய ஆண்களே, பொது அரங்குகளில் பயிற்றப்படுமிடத்து ஆண்களைப் போலவே கடும் மூழையுடன் பெண்களாலும் ஈடுபட முடியும் என ஏற்றுக் கொள்கின்றனர் என வாதிக்கின்றார். பெண்களுக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில் பெண்ணின் புனிதத்தன்மை, அவளது பணிவு, கூச்ச சுபாவம் போன்றவை பெண் மருத்துவ வேலை செய்தால் இல்லாமல் போய்விடும், என்ற கருத்துக் கெதிராக வாதிடுகையில், "ஓர் கனவான்" அவர் விரிவுரைகளில் பங்குபற்றிவிட்டு அதே வைத்தியசாலையின் வாட்டுக்களுக்குள் பெண் மாணவிகளுடன் நடந்து சென்றபோது என் வாழ்கையில் நான் சந்தித்த பெண்களுக்குள்ளேயே மிக அன்பு கனிந்த பெண்களாக அவர்களைக்கண்டேன் என்று கூறிய கருத்தை மேற்கோள்
காட்டினார். சிலோன் றிவியூ பத்திரிகையின் ஆசிரியர் செல்வி ஆசீரப்பாவின்
17

Page 14
கடிதத்தில் புரட்டுத்தனமான ஒர் குறிப்புரை கொடுத்திருந்தார். அதாவது மருத்துவத்தொழிலைச் செய்வதற்கு பெண்களுககு இருக்கும் உடல் வலு ஆண்களுக்கு உண்டா என்பதே அவரது நையாண்டியான குறிப்புரையாகும்.
அலிஸ் ஆசிரப்பா மேற்கோள் காட்டிய அக்கனவான் தாராளவாதச் சிந்தனை கொண்ட கொழும்பில் வாழும் செட்டி சமூகத்தினரண உலக வழக்கம் தெரிந்த சமூக வட்டத்தைச் சேர்ந்த உறவினர்களில் ஒருவராக இருக்கலாம். அலிஸ் ஆசிரப்பாவின் தந்தையாரான சொலமன் லூயிஸ் ஆசீரப்பா ஓர் சட்டத்துரணியாவார். டாக்டர் சைமன் மெலோ டி ஆசிரப்பா உட்பட அவரது குடும்பத்தில் பல டாக்டர்கள் இருந்தனர். இவரது மகள் டோரா ஆசீரப்பா டாக்டர் எஸ். சி போல் அவர்களின் மனைவியாவார். போல் அவர்கள் ஆரம்பத்தில் பெண் மருத்துவர்களை ஆதரித்தவர்களில் பிரபலமானவராவார். தவிரவும் டோரா ஆசீரப்பா அவர்கள் டாக்டர் மேரி ரட்ணம் அவர்களின் கருத்துக்களாலும் நடைமுறைகளாலும் ஆதரிக்கப்பட்டு (ஜெயவத்தனா 1993) இலங்கைப் பெண்கள் மன்றம் (1904) தமிழ் பெண்கள் மன்றம், (1909), ஆகியவற்றுடன் தம்மை நெருக்கமாக இணைத்திருந்தார்.
அலிஸ் ஆசீரப்பா கூறிய அன்புகனிந்த பெண் மருத்துவ மாணவிகள் யாரென்பதை அதிர்ஷ்டவசமாக நாம் கண்டுபிடிக்கக் கூடியதாகவிருந்தது. 1892 வைகாசி 2ம் திகதிய இலங்கைப் பரீட்சகர் ஆவனத்தின்படி :
மருத்துவக்கல்லூரி தனது கோடைக்காலக்கல்வித் தொடரை இன்று ஆரம்பிக்கிறது. கல்லூரியின் வரலாற்றில் முதன் முறையாக செல்விகள் கீற் டேவிற்சன் ஆகியோர் மாணவர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.
பெண் மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என முன்கூட்டியே எதிர்பார்த்து அவர்கட்கென தனியாக உடல்களை அறுத்தாய்வு செய்வதற்கான தனி அறைக்கும், தனி ஆசிரயருக்கும் படிப்பதற்கான தனியறைக்கும் அரசு அதிகாரமளித்துவிட்டது.
18

வெஸ்லி மிசன் புறக்கோட்டை டாம் வீதி வீடுகளும்(1816)
PP பான் ஹொட்டன் ஆல்வரையப்பட்டது. (புறோஹியரிடமிருந்து மாறிவரும் கொழும்பு)
1860 இல் பேகர் புத்திஜீவிகள் இருப்பவர்கள் (வ:இ) லியே/போல்ரு லுடோவிசி ச7ள்ளல் லேறன்ஸ் பிரான்சிஸ் பிவென் நிற்பவர்கள் (வ:இ) சாமுவேல் கிறிேயர் ஜேம்ஸ் ஸ்ருவாட் ட்றைபேர்க் (B.R. பிளாசிடமிருந்து 1948 லேறன்சின் வாழ்க்கை)

Page 15
'r$të fë i ri i arrosi're is 'i'; , i ci,
A frts of r:
District Hospital, Matale, with is Professional Staff.
磷*
Asisäsi sisääSargessa . جڑی ۔ مخلو۔‘‘)۔ & & &ھی لغت...
WAT RHYokna
' ` ':› _ ,፥•§ #.ሃሪ ̇f•i&oጾrá፤ጶ(s &X, ‰`.} .ጳ፻. ነi፫; .. r ia &&arg.
Nero to reare . .issanc.
Medical Assistanti-t, W. Perera.
Apoiecaries oririah & tineskere.
ke ண்ைண்ேண்ண்ேை
JAMES LOOS, .E. St. Andrews. i.R.C.S.Ed., M.R.C.P.Ed.,
Born 17th July, té22 at Colombo.
#ఖజీవtశిణి a { Bengai edisi రశీజ్జటి జీ
ÁPoesínted africais A. ##--్య,
శీజిణీ, భీధి, చిr, ##్య-te ఃఖ్యణి,్క
Cacoxisai Sirgen, R.P. a. శీe, tā,బి,్యఖ్య
setia šařig. W. F. s. ##భట్టణ స్త్ర
Medieal Schoo! isrs.
seeiki Surg., C.P. tags. Retired get t, కట్ట
asted As P.C.M.0, and I.G.H. sak-sa waited the topitals in Great Britain భāర్కీ
o*pi; #ణీళ్ల-భీళ్ళ
Re-vfited esicutta tas, irá se.
Reported on the Ebepopulation of the Wasai Erict , , hypergilises is asy--- 蓬数 y tk sérnsf ír e.sxnei, and - జీted ## နို်ဂွါးမျိုး to estasis a
く ببینیم .ium tagsهٔ جهت Wళీణిణీ స్ట్రీట్ర్య భ# siitäplitiesästäy #జీ భelate, R&a.
* * * *seet lege, rari Pies, cei
U.L. வான்டெஸ்ற்றாற்ரன் இடமிருந்து பிரதி செய்யப்பட்டவை (1901) இலங்கையின் மருத்துவ விஞ்ஞானம்
 
 
 
 

வைத்தியர் அலிஸ் டி புவரின் தாயார் எலிசா வான் கெய்சல் (அமர்ந்திருப்பவர்) அவரது மகளொருவருடன.

Page 16
வைத்தியர் அலிஸ் டி புவர் 1909 இல்,
 

1909 இல் வினிபிரெட் நெல்லும் அவரது சகோதரரான போலின் குடும்பத்தினரும் பின் வரிசை (வ:இ) எலிஸ் (மருமகள்) வைத்தியர் நெல், அக்கெஸ் நெல் டி சில்வா (மருமகள்) அவரது கணவர் ஜோர்ஜ் ஈ.டி.சில்வா, கிரேஸ் நெல் (மருமகள்) இருப்பவர்கள் போல் நெல், அலிஸ் நியூமன் நெல் தரையில் : மெல்வில்லே, மார்க் நெல் (மருமகன்கள்) ஆயாவின் மடியில் மார்சியாடி சில்வா (சகோதரன்வழிப்பெத்தி)

Page 17
நடுவில் அலிஸ் டி புவர் பெறாமகன் றெக்கம் பெறாமகள் எஸ்ஸியும்
அலிஸ் டி புவர் தனது சகோதரி வழிப்பெரப்பிள்ளைகள் சாள்ஸ், ஜோண்டி புவர் மற்றும் இரு இங்கிலாந்து நண்பர்களுடன்
 
 

இங்கிலாந்தில் தனது வீட்டில் அலிஸ் டி புவர் (வஇ) அல்மா புரோஹியர் (ஒர் தாதி), எஸ்ஸி டி புரோஹியர் பெறாமகள் வைத்தியர் ஹென்றி டி புவர் (1951)

Page 18
உத்தியோகத்தர்களகவும், நவீனமயப்படுத்துபவர்களகவும் 19 ம் நூற்றாண்டில் பேகர் மக்கள்
1982 ம் ஆண்டு இலங்கை மருத்துவக்கல்லூரி தனது கதவுகளைப் பெண்களுக்காக திறந்துவிடப்பட்ட தென்பதும், இரண்டு இளம் பெண்கள் அதன் வசலுக்குள் நுழைந்தமையானது எதிர்காலச் சந்ததியினரான பெண்மருத்துவ உத்தியோகஸ்தர்கட்க்கு பாதையினை அமைத்துவிக் கொடுத்தது எனலாம். இப் புரட்சிகரக் கடமையினை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு செல்வி டேவிற்சன், செல்வி கீற் ஆகியோர் தீர்மானித்தற்கு பொதுவான ஓர் அடிப்படை உண்டு. ஆனால் அவர்கள் இன்னோர் அம்சத்திலும் ஒன்றுபடுகிறார்கள். மருத்துவராகத்தகுதிபெற்ற அலிஸ்டி புவர் என்ற வாய்த முதல் பெண்மணியை இங்கையில் வழங்கிய சமூகமான பேகர் சமூகத்தை சார்ந்தவர்களே இவ்விருவருமாவர் மருத்துவத்துறையில் வெற்றிகரமாக கற்றுத் தேறிய பெருமளவு பெண்களைக் கொண்ட சமூகம் என்ற வகையில் பேகர் சமூகம் தனித்துவம் வாய்ந்தது. செல்விகள் ஹென்றிற்ரா கீற். ஈவ்லின் டேவிற்சன், வினிபிரட் நெல், கிலாறிபெல் வான் டொற், ரச்சல் கிறிஸ்ரோபெல்ஸ், ஊர்சுலா வான் றுாயென், சில்வியா ஏபேட், ஆகியோரும் ஏனய அனைவரும் பேகர் சமுதாயத்தை சேந்தவர்கள் என்பது மட்டுமன்றி, மருத்துவத்துறை பெணிகளைப் பொறுத்தவரையில் இவர்கள் முன்னோடிகளுமாவர். 1892-1912 க்கு கிடைப்பட்ட தசாப்தங்களில் பெண் மருத்துவர்களுள் இச்சமூகத்தினரே பெரும்பான்மையாக இருந்தனர். இச் சமூகத்தின் பலமும், சிறப்புத்தகுதிகளுமே, இத்தகைய நவீன கல்விமீதான நல்ல ஈடுபாட்டுக்கு அடிப்படையாக அமைந்தது.
இச் சமுதாயத்தை சேர்ந்த பெண்களே மருத்துவ கல்வியை பொறுத்தவரை. முன்னணியில் இருந்தனர். இலங்கையின் ஏனெய சமூகங்களை சேர்ந்தவர்கள் மிக நீணி ட காலத்தின் பின்னரே மருத்துவத்துறையில் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1902ல் முதலாவது சிங்கள பெணிமணியான லூசி டி அப்ரூ மருத்துவக் கல்லூரிக்கு அனுமதிபெறுவதற்கு பத்தாண்டுகாலமாகியது (1892) இவரை தொடர்ந்து இவரின் உறவினர்களான வெரோனா வீரசேகராவும், மே டி லிவேராவும் மருத்துவக் கல்லூரி அனுமதி பெற்றிருந்தனர். மருத்துவத் தொழிற் துறையில் பேகர் பெண்களின் ஆதிக்கத்திற்கான காரணம் என்ன என்று ஆர்வமான கேள்விளை இது ஏற்படுத்துகிறது. சிறப்பாக பேகர் பெண்கள் இத் துறையில் தனியாதிக்கம் செலுத்திய காலமாக 1892 தொடக்கம் 1902 வரையான காலகட்டத்தைக் குறிப்பிடலாம். இப்பகுதியைப் பொறுத்தவரை இக் கேள்விக்கு பதில் சொல்ல நான் முனைகின், முயற்சியில், எனது மதிப்புக்குரிய அத்தையான அலிஸ் டி புவர் அவர்களின் ஆய்வுக் குறிப்குகள், குடும்ப
19

நாட்குறிப்பேடுகள், கடிதங்கள், புகைப்படங்கள் மேலும் அவரது ஞாபகத்தில் உதித்த விடயங்கள் ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளேன். இவரது வாழ்க்கையைச் சுற்றியே இவ்வத்தியாயம் வடிவமைக்கப்பட்டது.
பெரும்பாலான பேகர் குடும்பங்களில் மூதாதையர் பற்றிய விடயங்களை, 1856-1796 வரையான காலகட்டங்களில் கரையோர மகாணங்களில் டச்சுக்காரர் ஆட்சி செய்த கால கட்டத்தில் காணமுடியும். 1802ம் ஆண்டு Amiens ஒப்பந்தத்தின்படி இத்தீவின் பகுதிகள் மீதான அதிகாரங்கள் டச்சுக் கம்பனியிடமிருந்து பிரிட்டிஸ் காரருக்கு கை மாறிய போது டச்சுஆட்சியாளர்களின் கீழ் சேவைபுரிந்த டச்சு, ஐரோப்பிய சந்ததியினரான சமூகத்தினர் தமக்கு பாதுகாப்பில்லாத ஓர் நிலையை உணர்ந்தனர். சிலர் தமது மூலதனங்களுடன் ஹோ லன்ட்டுக்குச் சென்று விட்டார்கள். வேறு சிலர் யாவாவிற்கு குடிபெயர்ந்தார்கள். ஆனால் பெரும்பாலோனோர் தொடர்ந்தும் இங்கேயே இருந்தார்கள். பிரிட்டிஸ் காரருக்கு சேவை புரிவதைத் தவிர அவர்கட்கு உருப்படியான மாற்று வழி எதுவும் இருக்கவில்லை. வெளியேறாமல் இங்கு தங்கி இருந்த ஐரோப்பிய பரம்பரையினரே பேகர் என இன அடிப்படையில் அழைக்கப்பட்டனர். சுதந்திரப் பிரஜை என்ற அர்த்தத்தைக் கொண்டதே பேகர் (Burgher) என்ற இந்த டச்சுப் பதத்தின் மொழிபெயர்ப்பாகும். (Brohier 1984 40). இம்மாற்றம் இச் சமூகத்திற்கு சமூக பொருளாதார எதிர்காலம் தொடர்பான நம்பிக்கைமீனத்தையும் உறுதியின்மையையும் ஏற்படுத்தியது.
பேகர் எனப்படுவோர் டச்சு,ஜேர்மன்,பிரான்சு, வம்சாவழியைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் ஆசிய, ஐரோப்பியர் (யூரோ ஏசியன்) எனப்படும் ஓர் சிறு குழுவும் இருந்தது. இவர்கள் ஆங்கிலேயரதும், ஆசியர்களதும் வழிவந்தவர்கள் ஆவர். இன்னோர் குழுவினர் போர்த்துக்கீச கலப்பின் வழி வந்தவர்களாவார். இவர்கள் அவர்களின் தந்தை வழியை வைத்து பேகர் என்ற பிரிவிலும் ஆசிய ஐரோப்பியர் (யூரோ ஏசியன்) என்ற பிரிவிலும் கணிக்கப்பட்டனர். மேலும் பெரும்பாலும் ஆசிய ஐரோப்பியர்கள் பேகர் என்றே குறிப்பிடப்பட்டு வந்தனர். 1871ம் ஆண்டில் பதினையாயிரம் பேராக இருந்த இக்குழுவினர். 1911ல் இருபத்தி ஏழாயிரம் பேராக உயர்ந்தனர். பிரித்தானிய ஆட்சிக் காலத்தின் ஆரம்ப வருடங்களில் பேகர் இன மக்கள் ஆங்கிலக்கல்வியை மேற்கொண்டதுடன் பிரித்தானியரின் காலனித்துவ நிர்வாகத்தை நடத்துவதற்கு பெரிதும் உதவி புரிந்தனர். அவர்களுள் மிகப்பெரும் வீதத்தினர் கல்வி அறிவு பெற்றிருந்தனர். உதாரணமாக 1881ம் ஆண்டு இத்தீவில் எழுத்தறிவு பெற்றோர் விகிதாசாரம் 25% ஆகவும் பெண்கள் 25% ஆகவும் இருந்த போது பேகர், ஆசிய ஐரோப்பியரது எழுத்தறிவு விகிதமானது முறையே ஆண்கள் 60% ஆகவும் பெண்கள் 50% ஆகவும் இருந்த நிலையில் இருந்து 1911ம் ஆண்டு
20

Page 19
இது முறையே 70% ஆகவும் 67% ஆகவும் உயர்ந்தது.(Denham 1912:401).
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்நாட்டின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த உயர் குடியினர் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கத்தொடங்கினர். சிலர் வீடுகளிலும் ஆங்கிலத்திலே பேசத்தொடங்கிவிட்டனர். பலர் மருத்துவம், சட்டம் போன்ற துறைகளில் உத்தியோகம் பெற்று மேற்படிப்புக்காகவும் சிறப்புத் தேர்ச்சிக்காகவும் வெளிநாடு சென்றனர்.
ஆனால் பேகர் இன மக்கள் மேற்கத்தியராகவே இருந்ததனால் இயற்கையாகவே ஏனைய சமூகங்களை விட அதிகவாய்ப்புக்களை கொண்டு இருந்தனர். பேகர் இன மக்களின் எழுத்துக்கள் தொடர்பாக யஸ்மின் குணரட்ன அவர்கள் குறிப்பிடும் போது
அவர்கள் தம்மை மேலும் மேலும் ஆங்கிலேய நடை முறைகளுடனும் பழக்க வழக்கங்களுடனும் இனம்காட்டிக் கொண்டனர் ஆங்கில இலக்கியத்தை இலகுவாக பயின்றுகொண்டதுடன் அரசியல் சமூக முன்னேற்றத்திலும் எழுத்தறிவுப் ஆய்விலும் இலங்கை வம்சாவழியைச் சேர்ந்தவர்களுக்குத் வாக்குறுக்குத் தலைமைதாங்கினர் இக் குழுவினர் தொடர்ந்தும் டச்சுப் பாரம் பரியங்களை தமது வாழ்க்கை முறையாக பாதுகாத்து பின்பற்றிவந்தனர். சமூக நடைமுறைகளிலும் , பழக்கவழக்கங்களிலும், சமயற்பாணியிலும், உருவாக்கும்முறைகளிலும் அவர்கள் டச்சுப்பாரம்பரியத்தையே பின்பற்றினர்.(Gooneratne 1968:40)
உள்நாட்டில் எழுச்சி பெற்று வந்த ஏனைய சமூகங்களைச் சேர்ந்த உயர் குடியினருக்கு பேகர் இனமக்களே மேற்கத்திய வாழ்க்கை முறைகளையும், கலாச்சாரங்களையும், கொள்கைகளையும் பரப்பினர். இருந்த போதும் உண்மையில் பேகர் சமூகமானது டச்சு. ஆங்கில மற்றும் போர்த்துச்சீச வம்சாவளி அடிப்படையில் பல தனியான சமூகப் பிரிவுகளை கொண்டிருந்தனர் என்பது தெரிந்ததே. சமுதாய பொருளாதார அடிப்படையிலும்கூட இவர்களிடையே வித்தியாசம் காணப்பட்டது.
டச்சுவம்சாவழியைச் சேர்ந்ததாகக்கூறிக் கொள்ளும் பேகர்கள் பெரும்பாலும் டச்சு சீர்திருத்த தேவாலயத்தைச் சேர்ந்த கல்வினிஸ் புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்தவர்களாவர். டச்சு ஆட்சியின் கீழ் இருந்ததைப்போலவே அவர்கள் பிரிட்டிஸ் ஆட்சியின் கீழும் முக்கிய பதவிகளை வகித்தனர். நவீன மயமாக்கல் கொள்கையில் நாட்டமுடைய,
21

மத்தியதர வர்க்கத்தைச்சேர்ந்த ஒப்பீட்டளவில் சிறிய குழுவினராகிய இவர்கள் தமது பொருளாதார வளங்களை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் படிப்பதற்குச் செலவிட்டனர். அதன் மூலம் அரசாங்க உத்தியோகத்திற்குச் சென்றனர் அல்லது உத்தியோகக் கல்வியாகிய சட்டம், மருத்துவம் போன்ற துறைகட்குச் சென்றனர். இந்த வகுப்பைச்சேர்ந்தவர்களிலிருந்தே இலங்கை மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவான முதற் பெண்மணிகள் உருவாகினர்.
முன்னர் குறிப்பிட்டது போன்று 19ம் நூற்றாண்டில் காலனித்துவ மருத்துவ சேவைத்துறையில் பேகர்களே ஆதிக்கம் செலுத்தினர். அரசாங்க சேவையில், அல்லது தனியாக பெருமளவு புகழ்பெற்ற வைத்தியர்கள் பலர் இருந்தனர் இவர்களுள் ஜேம்ஸ்லூஸ், TF கார்வின், லூசியன் டி சில்வா, R.L.ஸ்பிட்டல், E.L.கோச், J.L. வன்டெஸ்ற்றாற்ரன், E.L. சொக்மன், Pஒல்மஸ் R.C.அல்டொன்ஸ், W.G. வான் டொட், W.E.லீம்பிறகென் இன்னும் பலரும் அடங்குவர். 1870இல் முதன் முதலில் அலங்கை மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதல் தலைமை ஆசிரியர்களாக இருந்த லூஸ் , கோச வணி டெஸற்றாறி ரணி ஆகியோரும் பேகர்களே. மொத்தசனத்தொகையில் 1% க்கும் குறைவாகவே பேகர் சமூகம் இருந்தபோதும் 1875இல் ஒரு வருடத்திய 33 மருத்துவப்பட்தாரி மாணவர்களில் 16 பேர் பேகர்களாக இருந்தனர் இது மொத்த மருத்துவ மாணவர் தொகையின் 48% ஆகும். (ibid :119);
இதற்குப் பல காரணங்கள் உண்டு. கல்வியை முதலில் தொடங்கியவர்கள் அவர்களே. முன்னர் குறிப்பிட்டதைப்போன்று இலங்கையின் மக்கள் சமுதாயத்தில் அதிகம் கல்விPவு பெற்ற சமூகமாக அவர்கள் விளங்கினர். தோற்றத்தில் நவீனமானவர்களக இருந்தனர், 19ம் நூற்றாண்டில் ஆங்கிலத்தைத் தமது தாய்மொழியைச் சுவீகரித்துக் கொண்டனர். அரசாங்க சேவையில் வழங்கப்படும் பாதுகாப்பு விடயங்களில் இவர்கட்கு மிகுந்த முன்னுரிமை வழங்கப்பட்டது, அவர்கள் பொதுவாக ஊகத்தின் அடிப்படையிலான முயற்சிகளைத் தவிர்ப்பவர்களாவர். நிலமோ, வியாபாரமோ சொத்துக்களை இழப்பதன் மூலம் பெரும்பாதிப்குபுக்குள்ளாகக் கூடிய ஒருவருக்கு இவ்விழப்பென்பது சமுதாயத்தில் தனிமைப்பட்டுப்போகும் நிலமையை ஏற்பத்தும் என்கிகிறார் F.G.அந்தோனிசிஸ் (Journal of the D.B.U, Volxvii.July 1927 No. 1: 10)
மேற்படிப்புக்குச் செல்ல முடியாதவர்கள் அரசாங்க, தனியார் துறைகளில் எழுதுவினைஞர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தினர். திறைமையானவர்களும், சந்தர்ப்பம் உள்ளவர்களும் மிக கெளரவமான பதவிகட்குச் சென்றனர். காலனித்துவ சமுதாயத்தில் மருந்துவமும், சட்டமுமே ஆரம்பத்தில் புகழ்மிக்க தொழில்களாக இருந்தன. இவையே மத்தியதரத்தினர்
22

Page 20
ஆர்வத்துடன் விரும்பக் கூடியதாக இருந்தது. வசதிவாய்ப்பற்ற பேகர்ளுக்கு, குடும் பங்களிடமிருந்தோ, நண பர்களிடமிருந்தோ, அரசாங்க புலமைப்பரிசில்மூலமோ உதவி பெற்று சமூதாயத்தின் உயர்ந்தவரிசைக்குச் செல்வதற்கான தடைகளை உடைப்பதற்கு மருத்துவத்துறை வழிவகைகளை ஏற்படுத்தியது.
19ம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பகுதி பேகர் சமூகத்தின் பொற்காலம் என வர்ணிக்கப்படுகிறது. இச்சிறுபகுதியினரான மக்கள் இலங்கைச் சமுகத்தில் ஓர் பன்மொழிச்சமுதாயக்கலப்பை அமைத்தனர் தமது சாதனைகளுக்காக உயர்ந்த மதிப்பையும், கெளரவத்தையம் பெற்றனர். மருத்துவர்கள், சட்டவல்லுனர்கள், பொறியியளாளர்கள், அரசாங்க சேவையாளர்கள் என பெருமளவு பிரபலமிக்க பிரஜைகளை இந்நாட்டுக்கு இச் சமூகம் வழங்கியள்ளது. 1901 குடித்தொகைப் புள்ளிவிபர அறிக்கையில் P. அருணாசலம் அவர்கள் எழுதும்போது, இலங்கைச்சமூகத்தில அதிகம்படித்தவர்களுக்குள்ளும், அதிகம் பயனுள்ள அங்கத்தவர்களுக்குள்ளும் டச்சுப்பரம்பரையைச் சேர்ந்த பேகர்கள் அடங்குவர் என்கிறார். அவர்களது உறுதியான நடத்தைக்காக மற்றவர்களால் அடிக்கடி புகழப்படுபவர்களானார்கள். அதேபோன்றே அவர்களது நோக்கும் உறுதியானது. 1920இல் F.G. அந்தோனீசிஸ் குறிப்பிட்டதைப் போன்று பேகர் இன மக்கள் நேர்மை, ஒற்றுமை, விசுவாசம், தனித்துவம், . மற்றும் சுயகெளரவம் ஆகிய நற்பணிபுகளைக் கொண்டிருந்தனர். ஏனைய சமூகத்தினருடன் ஒப்பிடும்போது அவர்களுக்குள்ள குறைவான வசதி வாய்ப்புக்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். இதுபற்றிக்குறிப்பிடுகையில்:
செல்வச்செழிப்பான பெற்றோர்களின் பிள்ளைகளல்ல, மாறாக குறைந்த வசதியுள்ளவர்களின் பிள்ளைகளே, பல்வேறு இடையூறுகளால் தடை செய்யப்பட்டவர்கள் தமது பாதையில் முன்னோக்கிச் சென்றனர். 9lig/L.67.6TLog Gu(5d(5, 596fly ig Sri. (The journal of the D.B.Vol. xvii. No4 April 1929 : 188-9)
ஆனால் மிகக்குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், உண்மையில் பேகர்கள் அவர்களது காலத்தில மாபெரும் நவீனத்துவதிகளாக இருந்தமையே. மத்தியதரவர்க்க பேகர்கள் அறிவுபூர்வமானவர்கள், மேலும் ஐரோப்பிய வம்சாவழியினர்க்கு இயல்பாகவே உள்ள சுபாவமான ஜனநாயக இயக்கங்கள்தாராண்மைவாதம், ஆகியவற்றை வரித்துக்கெள்ளல் மற்றும் 11ம் நூற்றாண்டின் முற்போக்கு கொள்கைகள், சுய உதவி ஆகியன அவர்களின் மரபாக இருந்தது.மேலும் உள்நாட்டுப் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், நிலப்பிரபுத்துவ சமுதாய கட்டமைப்புகளான சாதி ஆகியன அவர்களது
23

வாழ்க்கையில் பதிப்புக்களை ஏற்படுத்தவில்லை. இது அக்காலத்தின் தாரண்மைக் கருத்துக்களான தகுதி, சமவாய்ப்பு என்வற்றின் அடிப்படையில் அவர்களை முன்னோக்கி நகர்ந்தியது. றிச்சாட் மோர்கன் (Richard Morgan). A. E. LusiyōGo96örö6vić (A. E. Buultjens), #ff6ö675 66uoi'r Gypsöi67ć (Charles LoreneZ) உட்பட பல தாராண்மைவாத, தீவிரவாத அரசியற் கருத்து முரண்பாடுகள் உடைய பேகர்களும் 19ம் நூற்றாண்டில் இருந்தனர். இதில்பின்னால் குறிப்பிடப்பட்டவர் 19ம் நூற்றாண்டிர் பேகர் சமுதாயத்தில் ஓர் முன்னணி உறுப்பினராவர். இவர் இலங்கை சட்டவாக்க சபையில் 1856-1868 வரை உறுப்பினராக இருந்தார். ஓர் சட்டத்தரணியான இவர் எழுத்தாளருமாவார். லோறென்ஸ் "இளைய இலங்கை" (Young Ceylon), என்ற உள்நாட்டு இலக்கியச்சஞ்சகையை உருவாக்கி வளர்த்தவராவர் (18501852). 1859 இல் லோறென்சும் ஓர் குழுவும்,"பரிசோதகர்" (The Examiner) என்ற பதிரிகையை விலைக்கு வாங்கினர். இதுவே இலங்கையின் முதற் செய்திப் பத்திரிகையாகியது. 1871 இல் அவர் இறக்கும் வரை. சமூகசீர்த்திருத்திற்கும், ஐனநாய நடைமுறைகட்கு ஆதரவளிப்பதற்கும், அத்துடன் துணிச்சலுடன் காலனித்துவ அரசை விமர்சிப்பதற்கும் தமது பேனாவின் சக்தியை மிகுந்த தாக்கமுடையதாகப் பயன்படுத்தினார்.
பேகர்களின் இத்தாராண்மைவாத மரபானது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையிலிருந்து உடைத்துக்கொண்டு "புதிய பெண்களாக" அவர்களது காலத்தில் எழுவதற்கு பேகர்பெண்களுக்கு வழிகோலியதாக இருந்தது. அவர்களுடைய சமுதாயத்தின் ஆண்கள் சிலரின் ஆதரவும் அவர்கட்கிருந்தது. உதாரணம்: லோறென்ஸ் இன் மருமகனான அல்பிரட் லோறென்ஸ்ட்றை பேர்க் (இவர் 1856 இல் இங்கிலாந்து பள்ளிக்கூடத்தில் கல்விகற்கச்சென்று 1861 இல் கேம்பிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார் ) தமது சகோதரிகளான பஃன்னி (FANNY), அக்னெஸ் ஆகியோரையும் கல்விகற்பதற்காக இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டும் என தனது தந்தைக்க எழுதினார் மேலும் அக்கடிதத்தில், கல்வியினால் பெறப்படும் நல்ல விடயங்களை அவர்கள் அங்கே பெற முடியும், "ஆண்களை மட்டும் கல்வி கற்க வெளிநாடு அனுப்புவது சரியானது அல்ல என நான் நினைக்கின்றேன், ஏன் கல்விகற்க பெண்களை வெளி நாட்டுக்கு அனுப்பக்கூடாது?" என்ற கேள்வியையும் எழுப்பினார், எனக்குறிப்பிடும் றொபேட்ஸ் இன் குறிப்புகளைப் பொறுத்தவரை, ட்றைபேர்க் தனது காலத்தில் முன்னோடியாக இருந்தார் எனக் கூறுகின்றது. (198962) சம உரிமைக்காகப் போரடிய பிரிட்டன் பெண்களின் போராட்டம் அதிகம் முன்னேறத் துடிக்கும் பேகர்ப் பெண்களில், தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும், அவர்கள் மேற்கத்தைய பெண்கள் மருத்துவர்களாவதற்குரிய உரிமைக்காக நடத்திய ஆக்ரோசமான
24

Page 21
போராட்டங்களை வரவேற்றனர். கல்விக்கு முதன்முதல் சென்றவர்கள் பேர்க்ப்பெண்களே, சமயப்பணி அமைப்பினர் நடத்தும் பாடசாலைகளின் ஆரம்ப மாணவர்களும், ஆசிரியர்களும் பேகர்களே. பேகர்கள் வீட்டுவேலைகளிலும் இசை, பாடல்போன்றவற்றிலும் மிகுந்த திறமையுடையவர் என்பது நாடறிந்த விடயமாகும. இது இவர்களிற் பலர் தையற்கலை இசைத்துறை, சமையற்கலை, போன்றவற்றிலும் வீடுகளில் பிள்ளைகட்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களாக வர ஏதுவாக இருந்தது. அவர்கள் செயலாளர் வேலைகள், சுருக்கெழுத்தாளர்கள், எழுதுவினைஞர்கள், தாதிகள், ஆசிரியர்கள் பின்னால் மருத்துவர் என இத்துறைகளில் இந்நாட்டில் முன்னோடிகளாக இருந்தனர். s
வசதிவாய்ப்பு மிக்க குடும்பங்களைச் சேர்ந்த ஏனைய உள்ளுர்ப் பெண்களான தமிழ், சிங்களப் பெண்கள் நல்ல மேன்நிலைப் பள்ளிகளில் கல்விகற்று வேலைவாய்ப்புக்களில் இத்தகைய வளர்ச்சியைப் பெற்றனர். ஆனால்பல சமுதாய நிர்ப்பந்தங்கள் இருந்தன, குறிப்பாக பழைமைவாதப் போக்கு மத்தியதரப்பெண்கள் படித்த மனைவியாகவும், படித்த தாயாகவும் இருக்கவேண்டும் என்பதையே வெளிப்படுத்துகிறது. உதாரணமாகப் சிலோன் றிவியூ (Ceylon Review) பத்திரிகையின் ஆசிரியர் 1893 இல் "தெழிலாளர்களாக இலங்கைப்பெண்கள" என்ற தலைப்பில் எழுதும்போது படித்த சிங்கள, தமிழ் ஆணிகளை படித்த சிங்கள, தமிழ்ப் பெண்களிடமிருந்து வேறுபடித்துக்காட்டினார். இப் பெண்கள் ஆண்களினால் தொடர்ச்சியாக அலட்சியப்படுத்தப்பட்டனர், அவர்களின் அதிக உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகட்குத் தமது பிரதிபலிப்புக்களைக் காட்ட முடியாதவர்களாகவும் இருந்தனர். ஆனால் ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் உறுதியாக நின்றனர். படித்த சிங்கள, தமிழ்ப் பெண்களில் ஒர் சிறுபகுதியினரே தாம் சார்ந்த பிரிவினரில் தாம் உயர்தவர்கள் எனக்கருதினர். கூட்டுப்புழுவாக இருக்கும் பெண்களே வண்ணத்துப்பூச்சிச் சீமாட்டிகளாக தம்மை வணர்த்துக் கொள்ள முடியும். மாறாக லாபகரமான வகையில் பயிற்றப்பட்ட "பேகர் இனத்தைச்சேர்ந்த" இளம் பெண்கள ஏனையோர்க்கு வழிவிடவேண்டிய பொறுப்பு இருந்தது. இவர்களது தமிழ், சிங்கள சகோதரிகளிடம் இருந்து எதிர்பார்கப் பட்டதைவிட பேகள் இனப் பெண்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்கப்பட்டது. எதிர்பார்தது அவர்களுக்கு கிடைத்தது. (The Ceylon review, Auguest 1896 vol. No.5) (as 656. (5iosus Gui (Cuylenberg) இன் குறிப்பிடத்தக்க இன்னோர் உதாரணமும் உண்டு. பிரிட்டனின் மருத்துவக்கல்லுரி மாணவியான இவர் 1896 இல் தாய்மார் சங்கத்தின், காலி பிரதேச கிளையில் ஓர் உரையாற்றினார். இவ்வுரையில் பேகர் சமூகம் பெண்களை வளர்க்கும் வழமையான முறையை விமர்சித்தார். இம்முறையில்
25

திருமணம் என்பது ஓர் முடிவும், திருமணமே பெண்ணினத்தின் இருப்பினதும், கல்வியினதும் குறிக்கோள் ஆகும். உணவுக்காக ஆண்களில் தங்கியிருக்கும் முறையில் ஓர் ஆண் இறந்து விட்டால், மனைவி அனாதரவாக எதற்கும் வழியற்றவளாகி வாழும் சம்பவங்களை விளக்கினார். ஏனெனில் அவர்கட்கு பயிற்சியளிக்கப்படவில்லை, எனவே தமது உயிர் வாழ்வுக்குத் தேவையானதை உழைக்க்ககூட முடியாதவர்களாகி விடுகின்றனர். உங்கள் ஆண்பிள்ளைகள் வேலைக்கு சேர்வதைப் போல் பெண்களையும் அவர்களது வாழ்வுக்காக வேலைக்கு ஏன் சேர்க்கக் கூடாது? என அவர் கேள்வியெழுப்பினார். மேலும் திருமணம் என்பது ஓர் வாழ்க்கையில் ஓர் சந்தோசமான விபத்தாக மட்டுமே இருக்கவேண்டும் என்றும் கூறினார். (The ceylon mirror 28 Nov 1896).
புறக்கோட்டையில் போகர்களின் வாழ்க்கை முறை
19ம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பகுதியில் பேகர்களின் உயர்ச்சிக்குக்காரணம் அவர்களது கல்வியறிவின் அளவும், கல்வியின் தரங்களும், கற்ற தொழில்களில் அவர்கட்கு இருந்த பற்றுமே காரணமாகும். ஏனைய காரணிகளில் அவர்களது வாழ்க்கை முறையும், இச்சமூகத்தின் கலாச்சார நடை முறைகளும் முக்கியமானவையாகும்.
பேகர்களின் வீட்டு வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங்கள், சமூகப்பின்னணி ஆகியன தொடர்பாக ஏராளமான விபரங்கள் உண்டு. இச் சமூகத்தின் வார்ச்சியினி உள்ளார்ந்த பார்வையை இவை நமக்குத்தருகின்றன. 19ம் நூற்றாண்டில் பேகர்கள் உத்தியோகரீதியிலும், அறிவாளிகளாகவும் சமூகத்தில் முக்கியபாத்திரம் வகித்தகாலகட்டத்தில் கொழும்பில் மக்களின் வதிவிடமாக விழங்கியது பழைய நகரமாகும். இதில் சிறந்து விழங்கிய 500 மத்தியதர பேகர்க்குடும்பங்கள் இருந்தன. இவர்கள் இருந்த இடமே ஆரம்ப பிரிட்டிஸ்காரர் காலத்திலிருந்து பெற்ரா (Pettah) என அழைக்கப்பட்டு வருகின்றது. பெற்றாவில் வீட்டுச் சொந்தக்காரர்களாக இருந்தவர்களில் பெலிங் (Beling), அல்பிறெச் (Albrecht) டி வொஸ் (De vos), Qa Toi Lo6i (Schokman), qéfQp67öJñ (Dekrester), Qu760776îLff (Foenander), சிபெல் , கிரினியர் (Gremier), வண் டெஸ் ராற் ரெண் (Vanderstruaten), 6ổhip@a56ði (Leenbruggen), GJITfuliữ (Brohier), qபுவர் (De Boer). ஆகியோரும் அடங்குவர்.
பல்வேறு இன மதக் குழுக்களைச்சார்ந்த மக்கள் கொழும்பில் குவியத்தொடங்கினர். அவ் வேளையில் கொழும்பு மேற்கத்தியநாடுகட்கும்
26

Page 22
கீழத்தேச நாடுகட்குமிடையிலான வியாபாரத்தை இணைக்கும் துறைமுகமாக வளர்ச்சிபெற்று வந்தது. தாம் மேற்கத்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறும் போத்துக்கீச, டச்சு, பிரிட்டிஷ்காரர் அக்கம் பக்கமாக சிங்களவர், கொழும்புச் செட்டிமார், மூர் இனத்தவர், மலாயர், பார்சியர், போராஸ், மற்றும் வடக்கிலிருந்து ஆரம்பத்தில் வந்து குடியேறிய தமிழர் ஆகியோருடனும் வாழ்ந்தனர். புறக்கோட்டையிலும், அதனைச்சுற்றியுள்ள LIS:fils61ITSOI LMé 6öf) (Dam street) +ssöi GerL16óflusi (San sebastian), ஹல்ஸ்ட்ரொப் (Hultsdrop), பின்னால் முகத்துவாரம் (Mutwal) ஆகிய பகுதிகளிலும் இந்தப்பன்மொழி பேசும் மக்களின் கூட்டம் சிதறியிருந்தது. பல்வேறு இனக் குழுக் களக் கிடையே கலந்து பழகியிருதலும் சமூகநல்லிணக்கமும் காணப்பட்ட காலம் அது என ஆர்.எல்.ப்ரோகியர் அதனை நினைவு கூறுகின்றார்.
அனேகமான கதைகள் எனது முனி னோரால் எனக் குக் கூறப்பட்டவையாகும். செட்டிமார், முஸ்லீம் மக்களின் டாம்பீகமான திருமணவிழாக்களில் தாம் விருந்தினராகக் கலந்து கொண்டது பற்றியும் கூறியுள்ளனர். இத்திருமணவிழாக்கள் எப்போதும் அவர்களது தனி பங்களாக்களிலேயே நடந்துவந்தன. அவர்களது பட்டொளிவீசும் அலங்கரிப்புகளும், கண்கவரும் பட்டாசு, வாணவேடிக்கைகளுடன் அவர்கள் விழாவை முடிப்பதும், சுவையிலும், நயத்திலும் ஒன்றுடன் ஒன்று போட்டியிடும், ஆனால் மிக இலகுவானதும், நட்புரீதியிலமைந்ததுமான சர்வசமூக நட்புக்கலப்பை மேலுயர்த்துவது என்ற பொது நோக்கமும் இதில் இரண்டறக்கலந்திருந்தது. (Brohier 1984:57)
டச்சுக்காரர் பழைய நகரத்தைக் கம்பிவலைச்சட்டம் போன்று குறுக்கு-நெடுக்குத் தெருக்களால் உருவாக்கியிருந்தனர். உறுதியான கறுத்தக் காபுக் (Kabook) கல்லுகள் வீதிகளில் பதிக்கப்பட்டு இருமருங்கும் நிழல் மரங்களைக்கொண்டதாக இருக்கும், எல்லோராலும் விரும்பப்படுகின்ற மரம் சூரியா (Suriya) மரமாகும், இது பரவலாக "இலங்கை ரியூலிப் மரம்" 66 அழைக்கப்படும். காலையிற் பொழுது புலர்ந்ததும் ஒருதரமும் மீண்டும் மாலையில் சூரியன் மறைவதற்கு முன்னரும் ஒடுக்கமான அத்தெருக்களில் தண்ணிர் வண்டிகள் உருளும். தூசியையும் வெப்பத்தையும் தணிப்பதற்காக காபுக் கற்களில் தண்ணிர் தெளித்துச்செல்லும். அந்நேரத்தில புறக்கோட்டை "குளிர்மையாகவும், தூய்மையாகவும், நிழல்மிக்கதாகவும்" இருந்தது என்பதை ப்ரோஹியர் நினைவு கூர்ந்தார் பிராதான வீதி கொனிங்ஸ் (கிங்ஸ்) தெரு, கெய்சர் தெரு (keyzer Street) என்றும் அழைக்கப்பட்டது.
27

மேலும் பிரின்ஸ் தெரு (Prince street) தொடந்தும் தனது பழைய பெயரையே கொண்டுள்ளது, தற்போதைய 1வது, 2வது, குறுக்குத் தெருக்கள் முறையே சந்தைத்தெரு (Market street) ஆகவும், ஹாலெமெர் தெரு (Harlemmer street) ஆகவும் இருந்தன. ஆடம்பரமான தோட்டங்களுடன் பல வசதியான சிறந்த வீடுகள் வரிசையாக இருந்தன. கூரைகள் ஓரிடத்தில்ருந்து (முகட்டிலிருந்து) இருபுறமும் கிழ் நோக்கிசரிந்துவந்து பரந்ததிண்ணைக்கு மேல்பதிவாக முடியும், இது புறக்கோட்டைக்கு ஓர் கெளரவத்தைக் கொடுத்தது. என்கிறார் (ibid 59).
ஒடுக்கமான தெருக்களும், பொதுவான கூரை முகடுகளும் வீடுகளுக்கிடையே ஓர் தொடர்பை ஏற்படுத்தியதுடன், ஓர் சமுதாய வாழ்க்கை முறையைக்காட்டும் கட்டமைப்பையும் கொடுத்தன. தெருவின் அடிப்பகுதியை நோக்கினால், அதன் அடிப்பக்கம் நோக்கி பார்வையைச் சுழற்றினால் பழையதும் புதியதுமான வீடுகள் தாறுமாறாக இருப்பதைக் காணலாம். சிவந்த ஒடுகளாலான கூரைகள் மீது பெரிய மரத்தின்கிளையின் அடர்ந்த இலைகள் தழுவிக் கொண்டிருக்கும், தெரு நீளத்திற்கும் சமாந்தரமாக மரத்தினாலான மெல்லிய தூண்கள் அல்லது வட்டமாக செதுக்கப்பட்ட மரத்தினாலான பதிந்த தூண்கள் வேலிபோல் அமைந்து திண்ணையையும் கீழேயுள்ள தெருவையும் பிரிக்கும்.(bid).
வீடுகள் தடித்த காபுக் கற்களாலான மதிற் சுவர்களைக் கொண்டிருந்தன. சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்படடிருந்தன. ஆழமாக உட்புறமாக அமைக்கப்பட் கதவுகளும் யன்னல்களும் எதிர்எதிரே அமைக்கப்பட்டு காற்று இலகுவாக உள்ளே வந்து வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. வெள்ளை அங்கி உடுத்தது போல் நிலத்திற்குப்பதிக்கப்பட்ட ஒடு வெய்யில் காலங்களில் மத்தியானங்களில் தண்ணீர் தெளிக்கப்பட்டதாலும், உயரமான கூரை இரட்டை அடுக்கில் வட்ட நாட்டு ஒடுகளால் வேயப்பட்டு இருப்பதாலும் மேலும் குளிர்ச்சியை தந்தன. தளபாடங்கள் பெரும்பாலும் கருங்காலி அல்லது கருங்காலி வகையைச் சார்ந்த மரங்களாலானதாக இருந்தன. சில தளபாடங்கள் பெருமளவு சிற்பங்கள் செதுக்கப்பட்டு அழகியவேலைப்பாடுடையனவாக இருந்தன. சாப்பாட்டு அறைகள் அமர்ந்து சாப்பிடக்கூடியவகையில் நீண்ட மேசைகளைக் கொண்டதாக இருந்தது.
பல வீடுகள் பின்வராந்தாக்கள், வேலையாட்களுக்கான விடுதிகள்,
குசினி ஆகிய வற்றால் சூழப்பட்ட சிறிய தோட்டங்களைக் கொண்டிருந்தது. பல வீடுகளில் சொந்தமாக கிணறுகள் இருந்தன. அவை சீமெந்தினால்
28

Page 23
பூசப்பட்டு, குறுக்குச் சட்டங்களுடன் கப்பி போடப்பட்டு இருந்தது. விதிவிலக்காக ஓர் கிணறு பக்கத்து பக்கத்து வீடுகளுக்கு, எல்லைச் சுவரால் பிரிக்கப்பட்டு பயன் படுத்தக்கூடியதாக இருந்தது. மிகவும் சாந்த கூரைவழியாக வரும் மழை நீர் அகலமான பீலி வழியாக நிலத்தடி நீர்த் தொட்டிகளுக்கு செல்லக் கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிரந்தது. அப்போதும் கூட நீர் வழங்கள் அவசியமான வீட்டுப் பாவனைகளுக்கும். பற்றாக்குறையாகவே இருந்தது. புறக்கோட்டையில் உள்ள பல வீட்டுக் காரர்கள் கப்டன் தோட்டத்தில் இருந்து வண்டியில் தண்ணீர் கொண்டு வரும் தண்ணீர் காரனிடம் இருந்தே மேலதிக தண்ணீரை பெற்றுக் கொண்டனர். −
முதலில் பேகர்கள் ஒன்றாக புறக்கோட்டையிலேயே இருந்தனர். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சிலர் இதன் எல்லைகளைத்தாண்டி disboys(I) (Hill street), LITuit (0.505 (Baber street), gli ULLIT Ogb(5 (Jampettah Street), g), afu 3 15 5 6f6j Lip 5 65 Tl 60)Luf Goi புறளல்லைகளிலும், குன்றின் உச்சியிலமைந்த பழைய டச்சுத் தேவாலயமான வோல்வென்டால் தேவாலயத்தைச்சுற்றியும் பரந்து தனிமையான வீடுளில் வாழத்தொடப்கினர். புறக்கோட்டை பெருமளவுக்கு வர்த்தகஸ்தானமாக மறியதும், இங்கிருந்த பேகர்களும், ஏனைய இனத்தைச்சோந்தவர்களும் வளர்ச்சியடைந்வரும் புறக்கோட்டையின் வெளிப் பகுதிகளான காலிவீதியை ஒட்டிய பகுதி கட்கோ, அல்லது பெய்ரா குளத்திலிந்து பொரள செல்லும் வாயிற்பகுதிகட்கோ, அல்லது கறுவாக்காட்டிற்கோ இடம்பெயர்ந்தனர். புறக்கோட்டையிலிருந்து பின்தங்கிய கிராமியப் பகுதியான பொரளைக்கு மாறியதை பெயர் தெரியாத ஓர் "வயோதிபர்" தெளிவாக வர்ணிக்கின்றார்.
அமைதியான நிழல் மிக்க கொட்டா வீதி வழியே தினமும் நடந்து நாம் பாடசாலைக் குச் செல்வோம். இருபுறமும் பெரிய தோட்டங்களுக்குள்ளே நீண்ட இடைவெளிக்கொரு வீடாகச் சில வீடுகளே இருந்தன. இவர்களில் வான்டெண் ட்ரீசென்ஸ் (Vanden Driesens), FAT66ů G5ITLd6ů (Charles Thomarz), győULAT6îáf6ů (Ludovicis), சீபெல்ஸ் (Siebels) மற்றும்பலர் இருந்தனர். வாட் இடம் கூட பெரிய தனியான பங்களாக்களைக் கொண்டிருந்தது. அங்கு வான்றுயென்ஸ் (VAN ROOYENS) G5)psif, G5TLD6Ú (Henry Thomasz) G56éLIté, 96óLD5Y6ó (Ohimouse), மாட்டென்ஸ்ரின்ஸ் (Martenstyns), மற்றும் வான் கெய்செல்ஸ் (VAN GEYZELS) ஆகியோர் வாழ்ந்தனர், இங்விதிகளில் மிகக்குறைந்த போக்குவரத்தே இருந்தன. சில குதிரைவண்டிகள் அல்லது மாட்டுவண்டிகளே இவ் வீதிகளில் போய்வந்தன.
(Journal of the D.B.UVol.39, No,3July 1949).
29

பக்கம் பக்கம்மாக வீடுகளைக் கட்டிவாழ்ந்தல், நியாயமான வசதியான வாழ்க்கை முறை ஆகியன ஓர் குறிப்பிடத்தக்க கலாச்சாரமுறையாகும். இது ஓர் சமுதாயத்தின் எண்ணப்பாங்கிலேயே தங்கி இருக்கிறது. இத்தீவின் சிறுபான்மையினரிலும் எண்ணிக்கையில் குறைந்த மிகச்சிறு பகுதியினராக இருந்தமையே அவர்கள் ஒன்றாக வாழவும், தமது தனித்துவத்தைப் பாதுகாக்கவும் மேலும் ஓர் காரணமாகும். அதாவது இக்குடும்பங்கள் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தன. குடும்ப உறவும், கடமைப்பாடுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமாக இருந்தது. டாக்டர் அலிஸ் டி புவரின் கூற்று இதனை எடுத்துக்காட்டுகிறது. நெருக்கமான சமூக உறவென்பது குடும்பங்கட்கிடையேயான திருமணங்களையும் குறிக்கிறது. மேலும் வளங்களைக் கொண்டிருத்தலையும் அவற்றை பாவித்தலையும் கூட நெருக்கமான உறவு என்பது குறிக்கிறது. இவ்வளங்களே கல்விக்கும், பலசந்தர்ப்பங்களில் வெளிநாடுசென்றுகல்விகற்கவும், கெளரவமான தொழிலில் நுழைந்துகொள்வதற்கும் வழிவகுக்கிறது. கல்வியும், கற்றலும் தாராண்மை வாதப்போக்கை விரும்பக்கூடிய ஓர் புத்திஜீவிச்சூழலை ஏற்படுத்துகிறது. பெண்களுக்குக் கல்விகற்கும் உரிமை இருக்கிறது. அவர்கள் கற்கவேண்டும். வாழ்க்கைத்தொழிலை அவர்களும் செய்யவேண்டும என்ற பரவலான விருப்பமும் அங்கீகாரமும் இருந்தது. பேகர்ப்பெண்கள் ஊக்கமும் துனிச்சலுமுடையவர்கள் இலங்கையில் துவிச்சக்கரவண்டி. மகிளுர்ந்து ஒட்டிய முதற் பெண்கள் இவர்களே. 1899இல் அவர்களிடம் பெண்கள் துடுப்பாட்டக்குழு (Cricket Team) கூட இருந்தது. இது மட்டக்களப்பு ஆண்கள் குழுவுக்கெதிராக மட்டக்கிளப்பு திறந்த வெளியில் விளையாடியது. (The Ceylon mirror, 14 Jan 1899) அன்றிருந்த இத்தகைய சமூகப்பின்னணியிலிருந்து தான் இலங்கையின் முதல் பெண்வைத்தியர் அலிஸ் டி புவர் எழுந்தார்.
வைத்தியர் அலிஸ் டி புவர் (1872 - 1955)
அலிஸ் டெல்சியா டி புவர் 1872ம் ஆண்டு மாசிமாதம் 22ம் திகதி திரு. ஹென்றி அர்னோல்ட்டி புவருக்கும் (1836 - 1903) எலிசா ஜோசெலினா வான் கெய்செல் (1842 - 1911) ஆகியோர்க்கு கடைசி மகளாகப்பிறந்தார். அலிஸின் தாய், ஜொஹன்னெஸ் ஐஸ்ரினஸ் வான் கீசெல் இன்மகளாவர். இவர் 1815 இல் பிறந்தார். இவரது மூதாதையர் பெல்ஜியத்திலிருந்து 1879 இல் இலங்கைக்கு வந்தனர். அலிஸின் தந்தை ஹென்றி டி புவர், லோறென்ஸ் டி புவரின் பேரனாவார். லோறெனஸ்
30

Page 24
டி புவர் 1776இல் அம்ஸ் ரெடாமில் பிறந்தார். 1796இல் இலங்கைக்குவந்த இவர் பிரதம ஊதிய அதிபர் அலுவலகத்தில் கணக்குப் பதிவாளராக (Book keeper) வேலைசெய்தார். 1805இல் இவர் என்கெல்பேட்டினா சோபியா ஜான்ஸ்ஐத் திருமணம் செய்ததன் மூலம் இரண்டு ஆண்பிள்ளைகள் பிறந்தனர். இதில் ஒருவர் ஹென்றி அர்னோல்ட் டி புவராவர். இவருக்கும் இவரது மனைவிக்கும் 5 பெண்குழத்தைகள் பிறந்தனர். றோசா பிரெடெரிக்கா (Rosa fredrica), 6T65FIT 05:06, fibJIT (Eliza Henrietta), 6HTSuit Frost IT'. (Sophia Charlotte), infusif -916 ify T (Marian Almeera), 560L5uJITs, 9.656) டெல்சியா (Alice Deicia), இவ்வைந்துபேரும் 1863 க்கும் 1872 க்குமிடையிற் spig56) is 3,61T6) ini, (Journal of D.B.U. Jan 1947,Vol.XXXVI No.3).05)06i5 (q. புவர் காலனித்துவ மருத்துவத் திணைக் களத்தில் பணிபுரிந்தார். புறத் கோட்டையில் வாழ்ந்துவந்தார். இக் குடும்பம் பொருளாதார அடிப்படையிலும், வாழ்க்கை முறையிலும் ஓர் மத்தியதரக்குடும்பமாகவே இருந்தது.
டி புவரின் சகோதரிகளின் குழந்தைப்பருவம் பற்றி மிகக்குறைந்த தகவல்களே கிடைத்தன. ஆனால் அவர்கள் பெண்கள் கல்விக்கூடமான புறக்கோட்டை பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கோ அல்லது குன்றின் மீது அமைந்திருக்கும் பெரிய பழைய வொல்வென்டால் தேவாலயத்தையொட்டி இருக்கும் வொல்வென்டால் பெண்கள் கல்லூரிக்கோ தான் கல்விகற்கப் போனார்கள் என்பதை எவரும் ஊகித்துத் கூறலாம். பலபத்தாண்டுகளாக இந்தப்பள்ளிக்கூடங்களே இப்பகுதியில் உள்ள பெண்கள் கல்விகற்பதற்கான இடமாக இருந்து வந்தது. பிரபலமான சில தனியார் ஆசிரியர்களும் இருந்தனர் இவர்களே புவர் சகோதரிகளுக்கு மூன்று " Rகளின்" ஆரம்ப அறிவைக் கொடுத்திருக்கலாம். முன்னர் கூறிய "அந்த வயோதிபர்" அலிஸ் சென்ற பள்ளிக்கூடம் ஒன்றைப்பற்றிக் கூறினார்
இரண்டு இளம் பெண்களால் நடத்தப்பட்டது. இவர்கள் கல்வியாளரான செல்வி சறாலூஸ் இன் முன்னாள் மாணவர்கள். இவ்விரண்டு இளம் ஆசிரியைகளும் திருமணம் செய்து கெண்டபோது, எமது அடுத்த பாடசாலையை ஓர் ஆண் நடத்திவந்தார். அவருக்கு உதவியாக பல ஆசிரியைகள் இருந்தனர். இக்கல்வி மிக உயர்த்த பங்களித்தது. இப் பாடசாலையில் ஆண்களும், பெண்களும் கல்விகற்றனர். எமது தலைமை ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர். சிலேற்றைக் கையிற் பிடித்துக்கொண்டு இதயம் படபடக்க அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்போம். நல்ல கல்விக்கு அத்திவாரமிட்டதற்கு அவருக்கு நான் நன்றிக்கடன் L'iq(bjd.6D6i. (Joumal of the D.B.U. Vol 39 No.3, July 1949).
31

இங்கு விபரிக்கப்பட்ட பாடசாலை ஓர் பெண்கள் கல்விக்கூடம். இங்குதான் அலிஸ் டி புவர் கல்விகற்றார் என்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லாவிட்டாலும் கூட அக்காலத்தில் சிறந்த பாடசாலைக்கு எடுத்துத்துக்காட்டாக விளங்கியது இந்தப் பாடசாலைதான். இதன் தலைமை ஆசிரியர் ஓர் பிரபலமான பேகர் ஆசிரியராவார். இவர் பெயர் றொபேட் லீம்பிறகென் (Robert Leembruggen) இவர் 1844 இல் பிறந்தார். மாத்தறை அரசாங்க பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் என்ற வகையில் குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை சாதித்தார். இவரது மனைவி ஹென்றிற்ரா கொச் (henrittakoch) மாத்தறை பெண்கள் பாடசாலைத் தலைமை ஆசிரியையாக இருந்தார். லீம்பிறகெனின் மாணவர்களில் டாக்டர் அன்ட்றீஸ் நெல் (Dr. Andreas Nel), A.E. புல்ற் Ggsistö (A.E. Buult Jens) Löpith LTöLi W.E. éb p|6056ö (Dr. W.E. Leembruggen)ஆகியோர் அடங்குவர். 1879 இல் றொபேட் லீம்பிறகென் டாம் வீதியில் உள்ள பெணிகள் கல்விக்கூடத்தின் தலமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இப்பாடசாலை மிகுந்த வெற்றிகளைசாதித்ததுடன, யொழும்பிலுள்ள முன்னணிக் குடும்பங்களின் பெண்பிள்ளைகளையும் கவர்ந்தது. ஓர் மாணவியான செல்வி ஹெற்றி ட்றை பேக் கேமீ பிறிட்ஜ் கீழ்நிலைப்பரீட்சையில் 2ம் வகுப்புச் சிறப்புத்தேர்ச்சி பெற்றார் "அக்காலத்தில் இத்தேச்சியானது ஓர் பெண்ணுக்கு சிறப்புக்குரிய வெற்றியாகும்.(Journal of the D.B.U. Vol. XIX, No. 1, July 1929)
பாடசாலைக்காலம் முடிந்ததும் பொருத்தமான இளம் பேகர் ஆணைத்திருமணம் செய்து கொள்வதென்பதே அக்கால மரபாக இருந்தது. அலிஸ் டி புவரின் சகோதரிகள் உட்பட பெரும்பாலான அப்போதைய பெண்களின் வழக்கம் இதுவாகவே இருந்தது. ஆனால் அலிஸ் தனக்கு இப்பாரம்பரிய முறையைத் தேர்வு செய்யவில்லை. அவர் பாரம்பரியங்களை உடைத்தெறிந்து தனது நேரங்களைப் புத்தகங்கள், படிப்பதற்கும், தொழிலுக்கும் அர்ப்பணித்தார். இவரது பெற்றோர் தமக்கு ஓர் மகன் பிறக்கவேண்டுமெனப் பெரிதும் விரும்பினர் எனவே அலிசை தம் குடும்பத்தின் மகன் எனறே அவர்கள் கருதினர். அதனால் இப்பாரம்பரியங்களை மீறி அவர் நடந்துகொள்வது சாத்தியமாயிற்று. அவர் கல்விகற்பதற்கும், அவரது துறையில் வளர்வதற்கும் அவருக்குப் பெற்றோர் முழுச் சுதந்திரம் வழங்கியதுடன, அவருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தும் வந்தனர். அக்காலத்தில் பெண்களுககு உயர்கல்விக்கான வசதிகள் இருக்கவில்லை. ஆனால் ஓர் பெண் இயற்கையான வரமாகிய கூர்மையான அறிவும் உள்ளத்தில் விழிப்பும் மேலும் ஓர் புத்திஜீவிக்கல்வி வளம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளாகவும் இருப்பின் அவள் மேலும் தனது கல்வியைத் தொடரும் லட்சியத்தை சிலவேளை அடைய முடியும். அலிசும்கூட அதிஸ்டக்காரி தான், ஏனெனில்
32

Page 25
இந்தத்தடவை மருத்துவக் கல்வி பெண்களுக்கும் ஆரம்பிக்கப்பட்து. 1829 இல் ஆய்வில் ஆர்வம் கெண்டவர்கள் சிலராலும், பிரதானமாக பேகர்களாலும் சேர்ந்து நடத்தப்பட்ட பிரபலமான கொழும் புறக்கேட்டை நூலகமும், வாசிப்பு மணி டபமுமே பெரும்பாலும் அவரால் பயன்படுதத்தப்பட்டிருக்கவேண்டும் (Roberts et al 1989 : 95)
அலிஸ் டி புவரின் பாடசாலைக் கல்விச்சாதனைகள் பற்றிய ஆவணங்கள் இல்லை. எனினும் கேம்பிறிட்ஜ் கீழிநிலை மேல்நிலை பரீட்சைகளின் மூலம் தனது உயர் நிலைப் பள்ளிப்படிப்பை நிறைவு செய்திருத்க வேண்டும். அக்காலத்தில் பெரும்பாலான மத்தியதர வகுப்புப் பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு முன்போ, இளைஞர்கள் தாம் விரும்பிய ஓர் தொழிலைத் தேடிக் கொள்வதற்கு முன்போ அவர்கள் பெற்றுக்கொள்ளும் அவசியமான சான்றிதழ்கள் இவைகளேயாகும். அலிஸ் தனது கேம்பிறிட்ஜ் பரீட்சைச் சான்றிதழிகளைப் பெறும்போது அவர் 17 க்கும் 19க்கும் இடைப்பட்ட வயதுடையவராக இருந்திருக்க வேண்டும். இந்த ஆரம்பத்தகுதிகளுடன் அவர் மருத்துவக்கல்லூரிக்குச் சென்றார். முதன்முதல் மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற பெண்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் முதன்முதலில் எல்.எம்.எஸ் ஐ (Licentiate in Medicine and Surgery) 1898 இல் பெற்றுக் கொண்ட பெண் இவரே. 5 ஆண்டுகளாப் படிப்பை முடித்து இதனைப் பெற்றார். மருத்துவக்கல்வியின் ஆரம்ப காலங்களில் இலங்கையில் பட்டமேற் படிப்புக்கான வசதிகள் இருந்திருக்கவில்லை. வெளிநாடு சென்று கல்விகற்கும் குறிக்கோளும் அதற்கான வசதிவாய்ப்புக்களும் உள்ள துணிச்சலான வைத்தியர்கள் மட்டும் வெளிநாடு சென்றனர்.
அரசாங்கம் மிகச்சிறந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர் ஒருவருக்கு வருடாவருடம் பிரிட்டன் பல்களைக் கழகம் சென்று கல்விகற்பதற்குப் புலமைப்பரிசில் வழங்கிவந்தது. அலிஸ் டி புவர் அவரது தர மாணவர்களுள் முதலாவதாக வந்ததன்மூலம் அரசாங்கப் புலமைப்பரிசிலை வென்றார். இதன்மூலம் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்ற முதலாவது 96UT5l60)5ü Gu60ziLD60zifuUTSOTRTin (Typescript by Dr. Mary Rutman in the Anita captin Collection)
பிரிட்டனின் பல்கலைக்கழக பட்டங்களே அதன் காலனித்துவநாடுகள் முழுதும் அங்கீகரிக்கப்பட்டது என்பதனால, பெரும்பாலான மாணவர்களைப் பொறுத்தவரை பிரிட்டனே அவர்களின் தெரிவாக இருந்தது. இக்காலகட்டத்தில் ஸ்கொட்டிஸ் பல்கலைக்கழகத்துடனும் குறிப்பிடத்தக்க உறவு காணப்பட்டது.
33

அபெர்டின் பல்கலைக்கழகம் (Aberdean University) இலங்கை மருத்துவக்கல்லூரிச் சான்றிதழிகளை முழுமையாக அங்திகரிக்கவில்லை. ஓரளவு அங்கீகாரம்மட்டுமே அளித்தது. எடின் பேர்க் பல்கலைக்கழகமும் (Edinburgh University), đì6IIII6mỏ(ểöff6ủ Li6ủ36öo6II89,ịp95(uptỏ (Glusgow University), இலங்கைப் பல்கலைக்கழகச் சான்றிதழ் பெற்றமாணவர்கள் பலரை பட்டப்பின் படிப்புத்தகுதிகட்கு அனுமதித்தன. பிரிட்டனில் தான் தங்கியிருந்த ஒருவருடகாலத்தில் அலிஸ் டி புவர் மருத்துவர்கட்கும், அறுவைச்சிகிச்சை யாளர்கட் குமான றோயல் கல்லூரிச் சான்றிதழை எடினி பர் க்பல்களைக்கழகத்திலும்கிளாஸ்கோ பல்கலைக்கழகத்திலும் 1899 இல் பெற்றிருந்தார். அவர் 1900 ம் ஆண்டு இலங்கைக்குத்திரும்பி வரும் போது அவருக்கு வயது 28. கொழும்பிலுள்ள தனது குடும்பத்திடம் வைத்தியர் அலிஸ் டி புவர் வரும் போது அவரது தந்தையார் தனது 60 களின் நடுப்பகுதியில் இருந்தார். பின் 1903 இல் குறுகியகாலத்திலேயே இறந்து விட்டார். பிரிட்டனிலிருந்து திரும்பிவந்தபின் அலிசின் தாயாரான எலிசா ஜோசெலினாவுடனேயே பெரும்பாலும் வாழ்ந்திருக்கவேண்டும் ஆனால் 1911 ல் அவரும் இயற்கை சத்திரசிகிச்சை எய்தினார். 1900 ம் ஆண்டு லேடி ஹெவ்லொக் வைத்தியசாலையில் செய்யும் வைத்தியராக நியமிக்கப்பட்டதுடன் வைத்தியசாலையின் மருத்துவக்கல்லூரியில் கற்பித்தும் வந்தார். கொழும்பில் அவர் அத்தொழிற்துறையில் இருக்கும்வரை இந்த வைத்திய சாலையுடன் இணைந்திருந்தார். பெண்களுக்கும், குழந்தைகட்குமான லேடி வெலிங்டன் வைத்தியசாலையில் அவரது பல அனுபவங்கள்பற்றி மீட்பதற்கு தனது ஒய்வுகாலத்தில் கடந்துவந்தபாதை நோக்கி தனது சிந்தனைகளைச் செலுத்தவேண்டி இருந்தது. அவ்வேளையில் அரசாங்க நிறுவனங்களில் தொழில்புரியும் வைத்தியர்கள் தனியாகத் தொழில் செய்யவும் அனுமதி இருந்தது, இதன்பின் அலிஸ் டி புவரின் சேவை பெரிதும் நாடப்பட்டது. பெண்கள் அவரை அழைத்தனர். குறிப்பாக முஸ்லிம் சமூகப் பெண்கள் அவரை அழைத்தனர். துணைநிபுணரும் அறிவுரை உதவிகோரப்படும் மருத்துவராகவும் லேடி ஹெவலொக் வைத்தியசாலையிலேயே தங்கியிருந்து பணிபுரியும் வைத்தியராகவும் இருந்ததனால் இடமாற்றம் பற்றிய பிரச்சனை இவருக்கிருக்கவில்லை, அத்துடன் அரசாங்க மருத்துவத் திணைக்கள சேவைக்காக எல்லா இடங்களும் சுற்றிவந்தார். இவரது பெண் சினேகிதிகள் பலர் இந்த அதிர்ஸ்டத்தைப் பெற்றிருக்கவில்லை. மருத்துவத் திணைக்களம் பெரும்பாலும் தமது பெண் வைத்தியர்களை கொழும்பிலேயே வைத்திருந்தது, மருத்துவப் பதிவுகளின் படி அவர்கள் சில வேளைகளில் மென்மையான, அல்லது வலு குறைந்த பிறப்பு இறப்புக்களைப்பதிதல் போன்ற வேலைகளைச்
செய்யவும் பணிக்கப்பட்டனர். -- -- ܝܝ - ܀ - - -- - ܀
34

Page 26
தனது குடும்பம்பற்றி அலிஸ் டி புவரின் வயதான காலத்திலான மீள்சிந்தனையூடான தகவல்கள் தவிர அவரின் வாழ்க்கைக்குள்ளான விடயங்கள் பற்றி துணி டுதுணி டான சில தகவல்களும் அதிர்ஷ்டவசமாகக் கிடைத்தன, இது அவரது வேலை, அவரது பழக்கவழக்கம், மனப்பான்மை போன்றவை பற்றி ஏனைய மூலங்களிலிந்து கிடைத்தவையாகும். எடுத்துக்காட்டாக, 1912 இல் பெண்கள் கல்விபற்றி ஓர் சிறப்பு ஆணைக்குழு ஒர் மதிப்பீடு மேற்கொண்டது. இம்மதிப்பீட்டில் பல பாடசாலை தலைமை ஆசிரியர்களும், பிரபலமான தனிமனிதர்களும் உள்ளடங்கியிருந்தனர். இவர்களுள் வைத்தியர் டி புவர் பெண்கள் கல்விதொடர்பாக ஏராளமான பிரச்சனைகள் பற்றி தன் குரலை உயர்த்தியதை நாம் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. படித்த, நவீன, பல தொழிற்துறைகளிலும் இருக்கும் பெண்களுக்கு ஆதரவாக அவர் தெளிவாகப்பேசினார். பெண்களுக்கு உயர்நிலைப்பள்ளியில் போதிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்ற கேள்விக்கு, பெண்கள் மனைவியாகவும், தாயாகவும் வாழ்வதற்குத் தேவையான பயிற்சியை நோக்கமாகக் கொணடிருக்க வேணடும் என்பதற்கு முன்னுரிமை கொடுத்து பதிலளித்தவர்கட்கு மாறாக, பெண்களுக்கான கல்வியானது அவர்களது ஒழுக்கத்தையும், பணி பையும் முன்னேற்றவும், அறிவுபூர்வமாக சிந்திக்கப்பயிற்சியளித்தலும், அதன் மூலம் இன்றைய பிரச்சனைகளைத்தீர்க்க ஆர்வத்துடன் ஈடுபடவும், அவர்களது வாழ்க்கைக்குத்தேவையானவற்றை உழைப்பதற்கான ஓர் தொழிலை மேற்கொள்ளத்தேவையான சிறப்பான அறிவை அவர்கள் பெற்றுக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.
பெண்களைக் குடும்பவாழ்க்கைக்குத் தயார்ப்படுத்த வேண்டியதன் தேவைபற்றிய ஓர் கேள்விக்கு சமையறி கலை, வீட்டை அலங்காரமாவைத்திருத்தல் ஆகிய வகுப்புகளை ஆரம்பிக்கவேண்டும். பாட்டு, பேச்சுத்திறமைகளை வளர்க்கும் வகையில் சிறந்த கற்பித்தல் முறையையும் அறிமுகப்படுத்த வேண்டும் எனப்பரிந்துரைத்தார். பெண்களுக்கான நல்ல துறைகள் பற்றிய ஓர் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் மருத்துவம், சங்கீதம், ஆசிரியர், தாதி, கணக்கெழுத்தாளர், தட்டச்சு, சுருக்கெழுத்து போன்றதுறைகள் பொருத்தமானவை எனப்பதிலளித்தார். பாடசாலைகளில் சுதேச மொழியைக் கற்பித்தல் தொடர்பான ஓர் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் அவரவர் தாய் மொழிகளை ஆரம்பப்பள்ளிகளில் கற்பிககவேண்டும், ஒவ்வோர் பெண்ணும் அல்லது ஆணும் அவளது அல்லது அவனது தாய்மொழியில் எழுதவும், வாசிக்கவும் தெரிந்திருக்கவேண்டும். உயர்நிலைப்பள்ளிகளின் கீழ் நிலை வகுப்புகளில் இவை மிகப்பயனுள்ளதக
35

இருக்கலாம் என்றார், லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆகிய மொழிகளை கற்பிப்பது தொடர்பான ஓர் கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் இவை உயர்நிலைப்பள்ளிகளிலேயே கற்பிக்கப்பட வேண்டும். இம்மொழிகளிலுள்ள சிறந்த ஆக்கங்களை வாசிக்கவும் அதனைப்போற்றவுமான அளவுக்கு கற்பிக்கப்பட வேண்டும். எனினும் புதிய ஐரோப்பிய மொழிகட்குப் பதிலாக தாய்மொழியிலேயே உயர்நிலைப்பள்ளிகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தை அவர் நியாயப்படுத்தவில்லை. (கல்விக் குழு அறிக்கை 1911 - 12. கூட்டத்தொடர் விடயதானம் XX 1912, வலியுறுத்தல் சேர்க்கப்பட்டுள்ளது.)
அலிஸ் டி புவர் அவர்களுக்குப் பின்னால் வந்த பெண் டாக்டர்கள், தொழிலில் அவருக்கிருந்த அர்ப்பண உணர்வு பற்றி மிக உயர்வாகக் கூறியுள்ளனர் டாக்டர் மே டி லிவேரா (பின்னர் ரட்நாயக்க) ஒர் டாக்டராகவும், சந்திரசிகிச்சையாளராகவும் இருந்த தனது ஆரம்பகாலத்தை ஞாபகப்படுத்தி எழுதியுள்ளார். தனது வெற்றிக்கு அலிஸ் டி புவரே காரணமென நன்றியுடன் நினைவுவுரும் அவர் மேலும் அலிஸ் டி புவர் சுறுசுறுப்பானவர், வல்லமை மிக்கவர், பெரும் ஆளுமைமிக்கவர்.தனது நோயாளிகளைப் பெரிதம் நேசித்த ஓர் வித்தியாசமான நிர்வாகி எனக் கூறுகின்றார்.
1921 இல் லேடி ஹெவ்லொக் மருத்துவமனை டாக்டருக்கான வேலைகாலியாக இருந்தது. அப்பதவிக்கு நான் தகுதியடிப்படையில் மிக மூத்தடாக்டராக இருந்தபோதும், சத்திரசிகிச்சை டாக்டர் காதரின் அன்டர்சனுடன் வேலை செய்வதில் இருந்த விருப்பத்தினால் அப்பதவியை ஏற்க முடிவு செய்தேன். காதரின் அன்டர்சன் மிகத்திறமையான ஓர் சத்திரசிகிச்சை நிபுணராவார் பரந்தமனப்பான்மை உள்ள அலிஸ் டி புவர். அடுத்த ஆண்டே தனது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி எனக்காக உதவிப் பெண் மருத்துவ அதிகாரி என்ற பதவியையும், வெளிநேயாளர் மருத்துவப்பிரிவையும், உருவாக்கினார். மருத்துவமனைக்கு வெளியே மருத்துவம் பார்ப்பதற்கும் அனுமதியளித்தார். காதரின் அன்டர்சனதும், அலிஸ் டி புவரினதும் தயாளகுணமும், அன்புமே எனது சத்திரசிகிச்சை அனுபவத்தை தொடர வழிவகுத்தது. சனக் கூட்டம் மிக்க வெளிநோயாளர் பிரிவிலிருந்து, என்னை 1 மணி நேரம் விடுவிப்பது கூட சாதாரண தியாகமல்ல, ஆனால் வாரத்தில் 2 நாட்கள் வெளியே சொந்தமாக தொழில் செய்ய விடுவிக்கப்பட்டேன்.
அலிஸ் டி புவர் தனது சகோதரியின் பேரப்பிள்ளைகள் இருவரை இங்கிலாந்தில் படிபபிப்பதற்காகவே வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.
36

Page 27
அவரது பதவியை நான் பொறுப்பேற்றேன், மிகவும் தாராளமனதுடனும், அன்புடனும், தன்னிடம் தனிப்பட்ட முறையில் வைத்தியம் செய்து கொள்ளும் நோயாளர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். (Ratnayake in Barhydt et al 1978: 97):
அலிஸ் டி புவரின் கடுமையான உழைப்பு, அவரது தினசரி கடமைகள் குடும்பப் பொறுப்பு பற்றி பெறுமதி மிக்க சிறு சிறு எண்ணப்பாடுகளை டாக்டர் ரத்னாயக்க எமக்குத்தருகிறார்.
நிலத்தில் கால் முட்டாதளவுக்கு வெளிநோயாளர் மருத்துவ பிரிவில் சுழன்று சுழன்று பணியாற்றியதற்கப்பால், பரந்தளவுக்கு செந்தமாகவும் தொழிலை மேற்கொண்டார். அவரது சகோரியும் கணவரும் திசவேவ ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த, அந்த துன்பகரமான மரணத்தின் பின், அவர்களின் மூன்று குழந்தைகளும் அலிஸ் டி புவரின் கைகளில் விடப்பட்டன. எனவே அவர் தனியாகத் தொழில் செய்தாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
டாக்டர் டி புவர் மிகச் சுறு சுறுப்பான பெண்மணியாவார். காலை 7 மணிக்கு வீட்டைவிட்டுக் கிழம்பும் அவர் தனது தனிப்பட்ட நோயாளர்களை பொரளை முதல் மவுண்லவேனியா வரை சென்று பார்த்து விட்டு நீண்டதும் மிகுந்தகளைப்புறச் செய்வதுமான வெளிநோயாளர் பிரிவில் பணியாற்றிவிட்டு வீட்டுக்குச் செல்வார். அங்கும் பெருமளவு நோயாளர்கள் அவருக்காகக் காத்திருப்பர். மாலையில் அவர் ஒரு போதும் ஒய்வெடுத்ததில்லை. ஓர் சாய்மனைக்கதிரையில் இருப்பார் காலை ஓய்வாக வைத்துக்கொண்டு தனது சகோதரிகளின் பேரப் பிள்ளைகளுக்கு அழகாக ஏதாவது தைப்பார். அவரது மத்தியானம் 4மணிக்குத் தொடங்கி 7 மணிவரை தொடரும், ஆனால் அவசர சிகிச்சைகட்காக எப்போதும் இரவில் அவர் அழைக்கப்படுவார். ஆனால் சலிப்புறாமல் விருப்பத்துடன் அவற்றை வரவேற்பார், அவ்வாறு இரவில் அழைக்கப்படாவிட்டால் தனக்கு அது நீண்ட இரவாகத் 65/TSigis 6T6LTDIT.E. (Sunday Times 22 July 1962)
ஓய்வற்ற கடுமையான இவ்வேலையிலிருந்து ஓர் தற்காலிக விடுமுறை தேவைப்பட்டது. 1918 இல் அவர் தனது விடுமுறை காலத்தை ஆஸ்திரேலியா கண்டம் பூராகவும் சுற்றிப்பார்க்க செலவிட்டார். அக்காலத்தில் பிஅன் ஒ அன்ட் சரத்மோர் லைனர் சேவிசஸ் விடுமுறைக்கான பயணச்
37

சேவையை நடத்திவந்தனர். இது பயணிகளுக்கு விடுமுறையை நல்ல ஒய்வாகக்கழிக்க உதவியது. அவுஸ்ரேலியாவுக்கான பயணத்தில் இக்கப்பல்கள், பாதையிலுள்ள பேர்த், அடெலெய்ட், மெல்போர்ன், சிட்னி என எல்லாத் துறைமுகங்களிலும் தரித்துச்சென்றது. அவர்கள் அவுஸ்ரேலியாவின் தென்கிழக்குக் கரையோரமான பிறிஸ்பேன் வரைக்கும் கூடச்சென்றனர். இவ்விடுமுறையை அநாதையாகிவிட்ட தனது சகோதரி எலிசா ஹென்றிற்ராவின் மகஎஸ்ஸியுடன் சேர்ந்தே களித்தார். அலிஸ் டி புவர் இயற்கையான காரணங்களினாலேயே ஒய்வு பெறுவதுபற்றி சிந்தித்திருப்பார், ஆனால் பல திடீர்ச் சம்பவங்கள் அவரது வழக்கமான வாழ்க்கைமுறையையே மாற்றியமைக்கும் முடிவுகளை அவர் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. அரச சேவையிலிருதுை ஓய்வு பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டகாலத்திற்கு ஒருவருடம் முன்னதாகவே 1925 இல் மருத்துவகாரணங்களின் அடிப்படையில் ஓய்வு தேவை என்ற ஒய்வுவிண்ணப்பத்திரத்தை அனுப்பிவிட்டார். உரியகாலத்திற்கு முன்பாகவே மருத்துவக்காரணங்களுக்காக அவருக்கு ஒய்வு வழங்கப்பட்டதற்குக் காரணம் Filarial Lymphangitis என்ற நோயால் அவர் பாதிக்கப்பட்டது தான் என அவரது குடும்பத்தகவல் மூலம் அறியப்படுகிறது. இன்னோர் சாத்தியமான காரணம் டாக்டர் டி புவரின் கணிபார்வை குறைந்து விட்டமையாகவும் இருந்திருக்கலாம். சிறுவயதிலிருந்தே படத்திலுள்ளதுபோல் தடித்த வில்லைக்கண்ணாடியே அணிந்து வந்தார்.
1926 இல் ஓய்வு அனுமதிக்கப்பட்டு குறுகியகாலத்தின் பின் அலிஸ் டி புவர் பிரிட்டனுக்குச்சென்று அங்கேயே அவரது மீதி வாழ்க்கையைக் களித்தார். பார்த்துவிட்டுக்செல்வதற்குவேனும் அவர் மீண்டும் இலங்கைக்கு வரவில்லை. அவர் தனது ஓய்வுகாலத்தையும், வயோதிபத்தையும் இன்னோர் நாட்டிற் கழிக்கவேண்டிய அளவுக்கு அவர் பிறந்தமண்ணிலிருந்து வேரோடு யெர்த்தெடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன? அவர் மிக நெருக்கமான உறவு கொண்டிருந்ததும், மிகுந்த பாசம் வைத்திருந்தவர்களுமான அவரது சகோதரிகளைப்பிரிந்து செல்ல எது காரணமாக அமைந்தது அவர் இந்த முகி கியமான முடிவை எடுதி தபோது அவருக்கு வயது 53. சொந்தப்பொறுப்புகளும், குடும்பத்திற்குச் செய்யவேண்டிய கடமைகளுமே அலிஸ் டி புவர் தன்னில் ஏற்படுத்ததிக்கொண்ட பெரிய மாற்றத்திற்குக் காரணமாகும். தனது மூத்தசகோதரியின் மகனான ஹென்றியின் பிள்ளைகளான இரண்டு ஒன்றுவிட்ட பேரன்களுக்கும் தனது இரு மருமகன்களுக்கும் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டது. அதாவது அவர்களுக்கு பிரிட்டனில் கல்விகற்பிப்பதற்காகவே அலிஸ் டி புவர் பிரிட்டனுக்கு இடம்பெயரும் முடிவை எடுத்தார். இவ்விருசிறுவர்களில்
38

Page 28
ஒன்றுவிட்ட பேரன்களுக்கும் தனது இரு மருமகன்களுக்கும் சிறந்த சந்தர்ப்பத்தை வழங்குவதற்காகவே இம்முடிவு எடுக்கப்பட்டது. அதாவது அவர்களுக்கு பிரிட்டனில் கல்விகற்பிப்பதற்காகவே அலிஸ் டி புவர் பிரிட்டனுக்கு இடம்பெயரும் முடிவை எடுத்தார். இவ்விருசிறுவர்களில் சாள்ஸ் டி புவருக்கு 5 வயதும், ஜோன் டி புவருக்கு 2 வயதுமாகும். இவர்கள் டாக்டர் ஹென்றி ஸ்பெல்டுவின்ட் டி புவரின் பிள்ளைகளாவர் இவர்களே அலிஸ் டி புவரின் தத்துப் பிள்ளையாவார்.
டி புவர் சகோதரிகள்
அலிஸ் டி புவர் கடைசித் தங்கையாவார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது சகோதரிகளதும் அவர்களதுகுடும்பத்தினதும் நன்மை, தீமைகளுடன் இவரது வாழ்க்கை நெருக்கமாகப்பின்னப்பட்டிருந்தது. இவரது மூத்த சகோதரியான றோசா பிரெடெரிக்கா, சாள்ஸ் ஜெரால்ட் ஸ்பென்டுவின்ட்ஜத் திருமணம் செய்து பெரியகுடும்பத்தைப் கொண்டவராக இருந்தார். றோசா நீண்டகாலம் வாழ்ந்து, சட்டத்தரணியாக இருந்து, பின்னர் வருமானவரித்துறையில் மதிப்பீட்டாளராக இணைந்து அத்துறையின் தலைவராக பதவியுயர்வுபெற்ற தனதுமகன் செசில் அலெக்சாண்டர் ஸ்பென்டுவின்ட்டுடன் தனது இறதி நாட்களைக் களித்தார்.
இவரது இரண்டாவது சகோதரியான எலிசா ஹென்றிற்ரா 1885 இல் தனது 21 வது வயதில் முதற் திருமணவாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் இவரது கணவர் ஃபிரெடெரிக் லீம்பிறகென் 1889 இல் இறந்துவிட்டார். அப்போது அவர்களுக்கு ஒருமகன் இருந்தான். எலிசா மனைவியை இழந்தவரான டாக்டர் ஒலிவர் பார்தோலோமியூஸ் என்பவரை இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்கட்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இவர்களில் எதெல் பிரான்செஸ் (எஸ்ஸி) ஒலிவர் அகிநியு ரெஜினால்ட் (ரெக்ஸ்) லிண்ட்சே ஆகியமூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். ஒலிவர் பார்தோலோ மியூஸ் மருத்துவத்துறையில் உயர்ந்த தகுதிகள் படைத்தவரானார். தனது பட்டங்களை இலங்கை, எடின்பேகர்க், கிளாஸ்கோ ஆகிய பல்களைக்கழகங்களில் பெற்றிருந்தார். இவர் இலங்கைப் பொது மருத்துவத்துறையில் உதவிக் காலனித்துவ சத்திரசிகிச்சையாளராக (Assiatant Colonio Surgeon) ஆக பதவி உயர்வுபெற்றார். ஆனால் அவர்கள் திருமணம் செய்து 8 ஆண்டுகளில் 1901 இல் இருவரும் அனுராதபுரத்தில் திசவேவா ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டபோது அக்குடும்பத்தைத் துயரம் தாக்கியது. அப்போது அலிஸ் டி புவர் லண்டனிலிருந்து இலங்கை வந்து 1 வருடமே ஆகியிருந்தது. இப்பேரிழப்பின் பின் பெற்றோரை இழந்து தவித்த அக்குழந்தைகட்கு டாக்டர் அலிஸ் டி புவரே உதவி செய்து ஆதரித்து வந்தார். அலிஸ் டி புவரின் வாழ்க்கைமுழுவதும் இக்குழந்தைகளின் நெருக்கமான தொடர்பு இருந்தது.
39

அவரது மூன்றாவது சகோதரி சோபியா ஆவார். இவர் மலர்த்தோட்டம் வைத்து மலர்வியாபாரத்தில் பிரபலமான P.D. சீபெல் என்பவரை மணந்தார். இவரது பெயர் அக்கால சஞ்சிகைகளில் அடிக்கடி குறிப்பிடப்படும் கொழும்பில் வாழந்த பிரித்தானிய, இலங்கை உயர் குடிமக்கள் தமது வரவேற்பு விழாக்கள், நிகழ்ச்சிகட்குத் தேவையான மலர்களை சீபெல் தோட்டத்திலிருந்தே வாங்குவது வழக்கம். பத்திரிகை அல்லது சஞ்சிகைகளில் புடவைகள், அல்லது ஆடைகள் பற்றி விபரணம் அல்லது விளக்கம் கொடுக்கப்படும் போது சிலவேளைகளில் மலர்க்குஞ்சம் சீபெல் தோட்டத்திலிருந்து பெறப்பட்டது எனவும் குறிக்கப்பட்டிருக்கும், சோபியா கணவனுக்கு வியாபாரத்தில் பக்கபலமாக வேலை செய்தார். 1925 அவர் இறந்தபோது சோபியா அப்பொறுப்பை தானேற்று வெற்றிகரமாகநடத்தினார். அவர்களது வீடும் தோட்டங்களும் அண்மைக்காலம் வரை பிளவர் றோட் (Flower Road) எனஅழைக்கப்பட்டு வந்த றோட்டை
எல்லையாகக் கொண்டிருந்தது.
டி புவர் சகோதரிகளில் 4 வது மரியன் அல்மீரா டி புவர் ஆவார். இவர் அனெஸ் லே புறோகீயர் ஜீனியர் (Annerley Brohier Jr) ஐதீ திருமணம்செய்தார். இவர் உதவித் தாபாலதிபர் நாயகமாகவும், இலங்கை மென்காலட்படை, (Ceylon Light infantry) யின் கெளரவ மேஜர் ஆகவும் பணிபுரிந்தார். இவருக்கு 3 ஆண் பிள்ளைகளும் 4 பெண்பிள்ளைகளும் இருந்தனர். புறோகியர் தனது 49 வது வயதில் சிறு சத்திரசிகிச்சையால் ஏற்பாக்கி இறந்தார். அவரது ஓய்வுதியத்தில் குடும்பத்கை நடத்துவது மரியன் புறேகியருக்கு மிகச்சிரமமாக இருந்தது. இங்கும் டி புவர் சகோதரிகளில் இளையவரான டாக்டர் அலிஸ் அவர்களே தேவைப்படும் போதெல்லாம் உதவமுன்வந்தார். இவ்வகையில் அலிஸ் டி புவர் றோசா, எலிசா, மரியன் ஆகிய தனது மூன்று சகோதரிகளின் பொறுப்புக்களையும் தோழிற் போட்டுக்கொண்டார். இதனால் அக்குடும்பம் மிக நெருக்கமாகப் பின்னிப்பினைந்த ஒன்றாக ஆகியது.
அலிஸ் டி புவரின் “வளர்ப்பு மகன்’
ஹென்றி ஸ்பெல்டுவின்ட் அலிஸ் டி புவரின் மூத்த சகோதரியான றோசாவின் 4 வது பிள்ளையும் மூத்த மகனுமாவார். 1889 இல் அலிஸ் டி புவருக்கு 17 வயதாக இருக்கும் போது அவர் பிறந்தார். மூத்த ஆண்மகன் என்பதால் அலிஸின் விருப்பத்திற்குரிய பெறாமகனாகவும் இருந்தார். பாடசாலைப்படிப்பு முடிந்ததும் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள
40

Page 29
பாடசாலைப்படிப்பு முடிந்ததும் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள விரும்பும் தனது ஆவலைத் தெரிவித்தார். மருத்துவத்துறையில் அவருக்கேற்பட்ட விருப்பத்திற்கு அவரது சித்தியான டாக்டர் அலிஸ் டி புவரின் சாதனைகளும், அவரது சித்தப்பா டாக்டர் ஒலிவர் பார்தோளோமியூன், தாயின் உடன்பிறந்த சகோதரியின்மகன் எரிக் புறோகியர் ஆகியோரே காரணம் என்பதில் ஐயமில்லை. எரிக் புறோகியரே பின்னர் ஹென்றியின் சகோதரியான அலிக்ஸ்ஐத் திருமணம் செய்து கொண்டார். பிரிட்டனில் ஹென்றி பென்டுவின்ட்சின் படிப்பு, கல்வி, மருத்துவப்புத்தகச்செலவுகளை அலிஸ் டி புவரே பொறுப்பேற்றார். அலிஸ் டி புவரின் ஒரே ஒரு வேண்டுகோள் ஹென்றிதனது பெயரை டி புவர் என மாற்றி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். டி புவர் குடும்பத்தில் எல்லோரும் பெண்களாக இருந்ததால் இலங்கையில் டி புவர் என்ற பெயர் மறைந்து போய்விடும் அபாயம் இருந்ததனாலேயே அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.
ஹென்றி ஸ்பெல்டுவின்ட் டி புவர் பிரிட்டனிலுள்ள லண்டன் மருத்துவ மனை மருத்துவக்கல்லூரியில் MRCS மற்றும் LRCP பட்டங்களைப் பெற்றார். சிறிது காலமாகத் தொழில்புரிந்து வந்த அவர் முதலாம் உலகயுத்தத்தின்போது இராணுவ மருத்துவராக இணைந்தார். அவர் கல்லிப்போலியில் பணியாற்றினார் (இங்கு அவருக்கு இராணுவச்சிலுவை விருது வழங்கப்பட்டது) பின்னர் பலஸ்தீனத்தில் ஒட்டகப்படையில் பணிபுரிந்தார். இவர் வரண்ட காலநிலைச் சுகாதாரம், பொது சுகாதாரம் ஆகியவற்றிலும் தகுதிப்பத்திரம் பெற்றிருந்தார். 1925 இல் கென்யாவில் காலனித்துவ மருத்துவசேவை வேலைக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் வடக்கு றொடிசியாவில் (சிம்பாவே) தொழில் புரிந்தார். உகண்டாவில் மருத்துவ சேவை இயக்குனராக இருந்து தன் மருத்துவத்துறை வாழ்விலிருந்து ஓய்வு பெற்றார். அவர் ஒய்வுபெற்ற பின் CMG விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். தன்தாயின் உடன்பிறந்த சகோதரியின் மகளான எதெல் பார்தோலோமியுஸ்ஐ (இவரே டாக்டர் பார்த்தோலோமியுஸ் எலிசா தம்பதிகளின் அநாதை மகளாவார்) லண்டனில் 1920 இலி திருமணம் செய்துகொண்டதன்மூலம் குடும்பப்பிணைப்பை மேலும் இறுக்கமாக்கினார். இவர்கட்கு இரண்டுமகன்கள் பிறந்தனர் 1921 இல் நைரோயில் சாள்ஸ் ஹென்றியும் 1925 இல் மொம்பாசவில் ஜான் ரெஜினால்ட்டும் பிறந்தனர். இருவரும் டி புவர் பெயரையே பயன்படுத்தினர்.
டாக்டர் அலிஸ் டி புவருக்கும் அவரது சகோதரிகட்கும், அவர்களது பிள்ளைகட்கும், பேரப்பிள்ளைகட்குமான உறவு மிக நெருக்கமான
ஒன்றாகும். ஒரு சந்தர்ப்பத்தில் டாக்டர் ஹென்றி ஸ்பெல்டுவின்ட் டி புவரும்
41.

அவரது மனைவியும் ஆபிரிக்காவுக்குத் திரும்பிச் சென்றனர். அப்போது இவ்விரு இளம் மகன்களையும் பார்த்திருக்கும் பொறுப்பை அலிஸ் டி புவரிடம் விட்டுச் சென்றனர். அவரது இவ்விரு ஒன்றுவிட்ட பேரப்பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதற்காக மீண்டும் ஒருமுறை லண்டனுக்குப் போகவேண்டிய தேவை ஏற்பட்டது. இலங்கை மருத்துவச் சேவையிலிருந்து மூப்புக்குமுந்திய ஓய்வு, பிறந்தமண்ணிலிருந்து வேருடன் தன்னைப் பெயர்த்துக் கொண்டது, நண்பர்களிடமிருந்தும் குடும்பத்தினிடமிருந்து பிரிந்து சென்றது, முற்றிலும் புதிய சூழலுக்கு தனினை இணைத்துக்கொண்டது அனைத்தும் அவரது வாழ்க்கையில் சந்தேகமின்றி ஓர் பெரிய படிக்கல்தான் ஆனால் இச்சவாலை ஏற்றுச் செயற்படும் உறுதி அலிஸ் டி புவரிடமிருந்தது.
இங்கிலாதந்தில் ஓய்வுகாலம்
வெற்றிகரமான தனது மருத்துவத்துறை வாழ்க்கையைக் கைவிட்டபின் இவ்விரு சிறுவர்களையும் உயர்ந்த ஸ்தானத்திற்கு உருவாக்கிவளர்ப்பதில் தன்னை அதேயளவு அர்ப்பணித்தார். டாக்டர் அலிஸ் டி புவர் தனது ஓய்வுகாலத்தைக்கழிக்க லண்டனின் சுற்றுப்புறத்திலமைந்த ஹெமெல் ஹெம்ஸ்ரெட்ஜ தெரிவு செய்தார். அங்கு ஓர் வீட்டை வாங்கி அதற்கு ஷியர்லே (Shirlay) எனப் பெயரிட்டு 1955 இல் தனது 83வது வயதில் இறக்கும்வரை தனக்குவரும் 35 மாதாந்த ஓய்வூதியத்திலேயே வாழ்ந்தார்.
இவ்விரு ஒன்றுவிட்ட பேரர்களும் தமது மதிப்புமிக்க சின்னபேத்தியைப் பற்றியும் அவரது ஓய்வுகால வாழ்க்கை பற்றியும் சிறுசிறு விபரங்களைத் தருவதில் உதவினர். ஆனால் சாள்ஸ் கூறியது போன்று பிள்ளைகட்குப் பெற்றோரைப்பற்றியும், பேரர்களைப்பற்றியும் என்ன தெரியமா? நான் அதிக தகவல்களை ஒன்று சேர்க்கக்கூடியதாக இருந்தது. இது குழம்பியிருக்கும் துண்டுத்துண்டுப்படங்களை ஒன்றுசேர்த்து உருவமாக்குவதுபோன்ற ஓர் பயிற்சியாகும். சாள்ஸ் டி புவர் எழுதும் போது ஒழுங்காக விளம்பரப்பொதிகளும், மாதிரிக்குளிசைகளும் கதவுவழியாக வந்த போதும் எவ்வகையிலேனும் அவர் மருத்துவத்தொழிலில் ஈடுபட்டதாக எனக்கு ஞாபகமில்லை எனக் குறிப்பிடுகிறார். சாள்சின் கடிதங்களிலிருந்து இரு சிறுவர்களும் பாடசாலை விடுதியில் தங்கிப்படித்தனர். விடுதலை நாட்களிலேயே விட்டுக்குத்திரும்பினர். எனவே தமது சின்னபேத்தி அலிஸ் பற்றிய அவர்களது நினைவுகள் குறைவானதே. எனினும் எனது பாடசாலை ஒவ்வோர் வாரமும் பாரிஷ் தேவாலயத்திற்கு வருவது வழக்கம், இத்திருக்கூட்டத்திற்கு
42

Page 30
சின்னபேத்தியும் ஒழுங்காகக் கலந்து கொள்வார். என சாள்ஸ் மேலும் விபரித்தார். அவர் அலிஸ்பற்றி மேலும் கூறுகையில், அவர் எப்போதும் சமைக்க வேண்டியிருந்ததில்லை. நீங்கள் என்ன செய்யவேண்டுமென்றால் புத்தகத்தைத் திறந்து அதில் கூறப்பட்டதைப் பின்பற்றி சமைக்கச் சொல்வார். தன்சகோதரி மரியனுக்கு சமையலிலோ, துணியின்னுவதிலோ, துணிவிழிம்புக் குஞ்சம்தைத்தல் ஆகியவற்றிலொ இருந்த திறமைக்கு ஈடாகத் தன்னையும் மாற்ற அவருக்கு நேரமோ, ஆர்வமோ இருக்கவில்லை என்றே தோன்றகிறது, இருந்தபோதும், லேடி ஹெவலொக் மருத்துவமனையில் அவருடன் வேலை செய்தவர்களைப் பொறுத்தவரை அவர் மிகநேர்தியான பூவேலைப்பாடுகளைத் துணியில் தைப்பதில் தேர்ந்தவர் என்றும், இதனையே தனது ஓய்வுக்கான வேலையாக அவர் தெரிவு செய்திருந்தார் எனவும் நினைவு கூறுகின்றனர். டாக்டர் அலிஸ் அவர்கட்கு ஓய்வின் அக்காலகட்டமே சந்தோசமானதாகவும் அமைதியானதாகவும் இருந்ததாக தோன்றுகிறது. இதுபற்றி சாள்ஸ் கூருகையில்; ஒய்வுகாலத்தில், இது மிகவும் அமைதியானது. தனது இரண்டு ஒன்றுவிட்ட பேரப்பிள்ளை களைப் பார்ப்பது, பிறிட்ஜ் விளையாடுவது, இவற்றைவிட ஹெமல் ஹெம்ஸ்ரெட் சமூகத்துடன் நட்புடன்பழகுதல் ஆகியனவே அவரின் வழக்கமாக இருந்தது. இது அவர் மருத்துவமனையையும், பயிற்சிக்கல்லூரியையும் நிர்வகித்தல், தனியான தனது மருத்துவத்தொழிலைக் கவனித்தல், தனது சகோதரிகளும் குடும்பத்தினரும் இடர்ப்படும் போதெல்லாம் அவர்களது இடரைத்துடைப்பதில் தோள்கொடுத்தல் என அந்த சனநெருக்கடியும் பரபரப்பு மிக்க பழைய வாழ்க்கைக்கு நேரெதிர் மாறானதாக இருந்தது.
அலிஸ் டி புவரின் வளர்ப்புமகனான (பெறாமகன்) ஹென்றி டி புவர் கென்யாவில் தனது வேலையிலிருந்து ஓய்வு பெற்றபோது அவரும் எஸ்ஸியும் இலங்க்ைகுத் திரும்பிவரவில்லை. அலிஸ் டி புவருடன் அவரது ஹெமெல்ஹெம்ப்ஸ்ரெட் இல்லமான ஷியர்லி இலேயே தங்கிவிட்டனர். ஷியர்லி இன் நிர்வாகத்தை எஸ்ஸி பொறுப் பேற்றார். எஸ்ஸியின் இளைய சகோதரனான ஒலிவரும் அவர்களுடன் இணைந்தார். அலிஸ் டி புவர் ஒன்றுவிட்ட பேரப்பிள்ளைகளில் ஜோன் டி புவரை தொழில்நுட்பவியலாளராகவும், சாள்ஸ் டி புவரை சத்திரசிகிச்சையில் சிறப்பான டாக்டராகவும், (F.R.C.S, M.R.C.O.G.) உருவாக்கினார். இக்குடும்ப பாரம்பரியத்தை தொடர்ந்து சாள்ஸ்டிபுவரின் மகளும், சாள்ஸ்சின்மகனும், டாக்டர்களானார்கள்.
43

டர்க்டர் அலிஸ் டி புவரின் மரண அறிவித்தல் (1955) வெறமெல் வெறம்ல்ஸ்ரெட் வர்த்தமானியிலிருந்து :
ஹெமெல் ஹெம்ல்ஸ்ரெட்டின் பிரபல குடியிருப்பாளர்களில் ஒருவரான வைத்தியர் அலிஸ் டி புவர், அடிபைட் வீதியிலுள்ள தமது இல்லமான வியர்லியில் கடந்தவாரம் செய்வாய்க்கிழமை தனது 83 வது வயதிற் காலமானார். அவர் சில நாட்களே சுகவீனமுற்றிருந்தார்.
இவர் இலங்கையிற் பிறந்தார். அவரது தந்தை இலங்கையில் காலனித்துவ மருத்துவசேவை அதிகாரியாக சேவையாற்றினார். தனது மருத்துவக்கல்வியை எடின்பேர்க்கில் மேற்கொண்ட இவர், L.P.C.P, LRCS ஆகியவற்றில் 1899 இல் தேர்ச்சிபெற்றார். படிப்பைமுடித்து மீண்டும் இலங்கை திரும்பிய வைத்தியர் டி புவர் அவர்களே இலங்கையின் முதற் பெண் டாக்டர் என நம்பப்படுகிறது. கொழும்பிலுள்ள லேடி ஹெவ்லொக் மருத்துபமனையில் சேவையைப் பொறுப்பேற்ற அவர் அம்மருத்துவமனைப் பொறுப்பதிகாரியாக உயர்ந்தார். அவர் அவ்வைததியசாலையின் மருத்துவக்ககல்லுரியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.
1926 இல் இங்கிருந்து திரும்பி டாக்டர் டி புவர் ஹெமெல் ஹெம்ஸ் ரெட்டிற்கு வந்து தனக்கென ஓர் வீட்டை அமைத்து, கென்யாவில் பணியாற்றிக்கெண்டிருந்த ஹென்றி புவரின் புதல்வர்களான தனது இரண்டு ஒன்றுவிட்ட பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்தார்.
மருத்துவத்துறையில் தனது சேவையை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட அவர் அதேபோன்று தனது இரண்டு ஒன்றுவிட்ட பேரப்பிள்ளைகளை மேலேகொண்டு வருவதில் தன்னை அர்ப்பணித்தார். அவர்களில் ஒருவர் இப்போ சிறந்த சத்திரசிகிச்சையாளராகவும், மற்றவர் நில அளவையாளராகவும் இருக்கின்றனர், அத்துடன் பல்வேறு உதவிஸ்தாபனங்கள் காருண்ய நிறுவனங்கட்கும் வேலைசெய்து வருகின்றனர். வைத்தியர் அவர்கள் புனித மரியாள் தேவாலயத்தின் பற்றார்வம் மிக்க ஆதரவாளரும், உன்ஞர்ப் பழைமைவாதிகள் சங்கத்தின் உறுப்பினருமாவர்.
இரண்டாம் உலகயுத்தம் வெடித்ததானது அவரது மிக்பெரும் சக்தியையும், அமைப்பாளருக்கான அவரது ஆற்றலையும் வெளிக்கொணரச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. W.V.S இன் உறுப்பினராக இருந்ததற்கப்பால் தான் ஓர் அழிவுமீட்பு நிலையத்தையும் நடத்திவந்தார். தனது வீட்டின் மோட்டார் வண்டிக்கொட்டகையை வரவேற்பு நிலையமாகப் பயன்படுத்தினார்.
எனினும் அவரது மிகப்பெரிய சாதனை என்பது தேசியசேமிப்புடன் சம்பந்தப்பட்டது. உதவியின்றி எல்லாக்காலநிலைகளிலும் அலைந்துதிரிந்து 30,000 ஸ்ரெலிங் பவுணுக்குக் குறையாத தொகையை சேர்த்த பெருமை அவரையே சாரும். இது ஓர் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
அண்மைய ஆண்டுகளில் அவர் கண்பார்வையின்மைப்பிரச்சனையால் அவதியுற்றார். இருகண்களுக்கும் சத்திரசிகிச்சை செய்யப்பட்டும் கூட சிலகாலத்திற்குள் கிட்டத்தட்ட முழுமையாகவே பார்வையிழந்துவிட்டார். இக்குறைபாட்டைக் கூட அவர் சந்தோசமாகவும், உறுதியுடனும் சந்தித்தார்.
டாக்டர் டி புவர் இலகுவில் நண்பர்களை உருவாக்கிவிடுவார் என்பதுடன. இப்பகுதியிலுள்ள குழந்தைகள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார்.
ஹெமெல் ஹெம்ஸ்ரெட்டின் சேமிப்புக் குழுத்தலைவரான திரு.ஏ.எல். செல்டன் வர்த்தமானிக்கு கூறுகையில் டாக்டர் டி புவர் உள்ளூர் சேமிப்பு இயக்கத்திற்கு மிகப்பெரும் சேவை செய்திருக்கிறார். அவருடைய முயற்சிகள் சேமிப்புத்துறையின் ஏனைய வேலை ஆட்களுக்கும் ஓர் வழிகாட்டியாக அமையும் என்றார்.
இறுதிச்சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஹெமெல் ஹெம்ஸ்ரெட்டின் புனிதமரியாள் தேவாயத்தில் தவத்திரு A மல்லே அடிகளும், தவத்திரு கினொன்.சி.சி.ஹமில்ட்டன் அடிகளாரும் திருப்பலிப்பூசையை நடத்தியதை தொடர்ந்து உடல் கோல்டேர்ஸ் கிரீனில் அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலி செலுத்தும் குடும்ப அங்கத்தவர்கள் டாக்டர் ஹென்றி டி புவர், C.M.G., M.C., folds L. Louis, fcit. Tsión) ig Houst, FRCS, MRCOG, flui, J.R. டி புவர், டாக்டர் இயன் லீம்பிறகன், செல்வி அல்மா புறோகியர்.
44

Page 31
குரும்ப அங்கத்தவர்களின் தனிப்பட்ட நினைவுகள்
அலிஸ் டி புவரின் ஒன்றுவிட்ட பேத்தியான வைவெற்ரே ஹெர்மன் (நீ புரோகியர்) எனது மூத்த சகோதரி. அவரும் டாக்டராகி நியூசிலாந்திலுள்ள வெலிங்டனில் வசித்து வருகிறார். டர்க்டர் அலிஸ் டி புவர் பற்றி உயிரோட்டமான தனது நினைவுகளை மீட்டு அவர் சொன்னார் அவர் மீது எனக்குச் மிகவும் பயம், அதனால் சின்னப்பேத்தி போகும்வரை நான் தாத்தா பாட்டியின் இரட்டைக் கடடிலுக்கடியில் ஒளிக்குகொள்வேன் (1924 இல் எனது தந்தை ஹெல்டு முல்லவில் நில அளவையாளராக இருந்தபோதே இது நடந்தது.). எனக்கு ஞாபகமிருக்கிறது சின்னபேத்தி அலிஸ் 1 வார விடுமுறையில் வந்தார். எனக்கு அப்போது ஐந்து வயது, விடுமுறைக்கு அவர் வந்துபோகும் நாட்கள் தான் எனக்கு நினைவிருக்கிறது, கனமான மண்ணிற சப்பாத்தும், தடித்த மூக்குக்கண்ணாடியும் அணிந்திருப்பார் அவரதுபடத்திலிருந்து நாம் ஊகிப்பதைப் போல அலிஸ் டி புவர் உயரமும் உடல்வாக்கும் கொண்ட தோற்றமுடையவர். நான் ஐந்த வயதுடையவளாக இருந்ததால் எனக்கு அவர் தோற்றம் அச்சம் தருவதாக இருந்திருக்கலாம். அதே ஆண்டு (1924) வைவெற்ரே ஹெர்மென் எழுதுகிறார்:
நான் மகளிர்கல்லூரியிற் படிப்பதற்காக எனது பாட்டி வீட்டிற்குச் சென்று
தங்கியிருந்தேன், எனது பாட்டியின் வீடு மழைக்கு தண்ணீர் எல்லா இடமும் ஒழுகும் அளவுக்கு பழையதாகும். இதன் பெயர் பெயஸ்பீல்ட் (Faisfield). இது கொள்ளுப்பிட்டியில் அமைந்திருந்தது. அதற்குப்போகும் பாதை மிக மோசமான நிலையில் இருந்தது. குன்றும் குழியுமான இந்தறோட்டில் ரிக்சா வண்டி பிரண்டதால் என்பாட்டிக்கு இடுப்பு முறிந்தது. சின்னபேத்தி தான் பாட்டியை லேடி ஹெவ்லொக் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று எலும்பு முறிவுக்கு வைத்தியம் செய்தார்கள். அப்பழைய வீட்டில் சறுக்கிவிழுந்து பாட்டி மீண்டும் ஒருதடவை அதே இடுப்பெலும்பை முறித்துக் கொண்டர். அந்த வீட்டின் கூரை மிக மோசமாக இருந்தது. வீட்டின் எல்லாஇடங்களிலும் ஒழுக்குகாரணமாக சட்டிகள் பாத்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். மீண்டும் ஒருதடவை சின்னபேத்தி இரவில் வந்து வீட்டில் எலும்பு முறிவைச் சரிசெய்து சிகிச்சை செய்து விட்டு இரவு முழுவதும் பாட்டியுடனேயே தங்கிவிட்டுச் சென்றார், அப்போது நான் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தேன். காலையில் வழக்கம்போல். எனக்கு குடிப்பதற்கு குப்பாவுடன் சின்னபேத்தி பாட்டியைப்பார்க்க அடிக்கடி தன் காரில் வருவார். காரை ஓர் சாரதி ஒட்டிவருவான். பாட்டியை ஓர் நல்லவீட்டுக்கு மாறி இருக்கும் படி சின்னபேத்தி வற்புறுத்தி வந்தார். அதனால் 1927 இல் இவ் வீட்டைவிட்டு மாறினோம்.
45

அலிஸ் புவர் இலங்கையிலிருக்கும் தனது சகோதரிகள், பல பெறாமகன்கள் அவர்களுடைய குடும்பங்களைப் பார்க்கத் திரும்பி ஒருபோதும் வரவிட்டாலும் கூட - இளம்சந்ததிகளிற் பலர் தொழில் நிமித்தமோ தனிப்பட்ட காரணங்கட்காகவோ இங்கிலாந்து சென்றனர். அப்போதெல்லாம் சின்னபேத்தி வீட்டுக்குப் போய்வருவார்கள்.வைவெற்ரே ஹெர்மன் 1940 இல் இலங்கை மருத்துவக்கல்லூரியில் டாக்டராக படிப்பை முடித்தார் 1951ல் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார். சியர்லியிலேயே தங்கினார். அங்கு வைத்தியர் அலிஸ் டி புவர் அவ்வேளை நன்றாக இருந்ததாகவும் தன்னை பார்த்ததில் மிகவும் அகமகிழ்ந்ததாகவும் நினைவு கூர்கின்றார்.
புத்தகத்தை ஆக்கியவரின் பழைய நினைவுகளி
டாக்டர் அலிஸ் டி புவர் எனது சின்னபேத்தியாவார். துர்ரதிர்ஷ்ட வசமாக நான்பிறக்கு முன்பே அவர் இலங்கையை விட்டுப்போய்விட்டதாக எனக்கு அவர்பற்றிய பழைய நினைவுகட்கு வாய்ப்பில்லாது போய்விட்டது. இருந்தபோதும் 1960களில் நான் லண்டனுக்குச் சென்றபோது எஸ்ஸிடனும், அவரது சகோதரர் ஒலிவரிடமும் செல்லும் வாய்ப்புகிடைத்தது. இச்சந்தர்ப்பத்தில்தான் 1926 இல் அலிஸ் டி புவர் வாங்கிய வனப்புமிக்க ஆங்கிலேய வீடமைப்பு முறையிற்கட்டப்பட்ட "ஷியர்லி"யையும் ஹெமெல் ஹெமஸ்ரெட்ஐயும் பார்க்கும் வாய்புகிடைத்தது. மாடியிலுள்ள ஓர் சிறிய அறையில் இரவைக் கழித தேனி. நன்றாக அமைக் கப்பட்டிருந்த வெளித்தோட்டத்தைாப்பார்க்கும் வகையில் அவற்றை அமைக்கப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை எஸ்ஸி என்னை தமது பாரிஷ் தேவாலயத்திற்கு என்னை அழைத்துச்சென்றார். பின்னர் நகர் வீதியில் நடந்து சென்றோம், வழிவழியே நண்பர்கள், அறிமுகமானவர்களுடன் பேசிவிட்டு ஓர் அயலவர் வீட்டுக்குச் சென்றோம்.
அலிஸ் டி புவரைப்பற்றிய இந்நூலில், அவர்பற்றி அவரைத் தெரிந்திருந்த அனைவருடைய மனதில் ஏற்பட்ட கருத்துக்களையும் தொகுத்துத் தரமுயன்றுள்ளேன். அவர்களுடைய இக்கருத்துக்களுடாக அவரது வாழ்க்கையில் வெவ்வேறு எல்லைகளைத் தொட்டுக்காட்டும் துண்டு துண்டான செய்திகளை இணைத்து அவர்பற்றிய ஓர் சித்திரத்தை உருவாக்கியுள்ளேன். எனது சகோதரியான வைவெற்ரேயிலின் குழந்தைக்கால நினைவுகளிலிருந்து அவர் உயரமும், கண்டிப்புநிறைந்ததுமான தோற்றமுடையவர் என்பதை ஒருவரால் ஊகித்துவிட முடியும். இடுக்கண் ஏற்பட்ட போதெல்லாம் அலிஸ் அவர்கள் தோள்கொடுத்து உதவியதை
46

Page 32
அவரது சகோதரிகளின் கதைகளிலிருந்தும் மற்றவர்களின் நன்மைக்காகத் தனது சொந்த நலன்களைத்தியாகம் செய்வதில் மகிழ்ச்சியுறும் பரந்தமனமும் அன்பும் கொண்டவர் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.
சிறுவர்களான அவரது ஒன்றுவிட்டபேரன்களுக்கு அது ஓர் சரணாலயம், புகலிடம் மட்டுமின்றி அவர்களை வரவேற்கும் வீடாகவும் இருந்தது, அவரது தொழில்ரீதியான நண்பர்களின் பாராட்டைப்பொறுத்தவரை அவர் முன்னோடியான சிறந்த டாக்டர், தன்வேலையில் ஈடுபாடு கொண்டவர். இவரே இலங்கையில் மருத்துவராக வந்த முதற்பெண்மணியாவர்.
ஏனைய முன்னோடிப் பேகர்ப் பெண்டாக்டர்கள்
மருத்துவர் அலிஸ் டி புவரின் வரலாற்றையும், அவரது பங்களிப்புக்களையும் வெளிக்கொணர்வதற்கு அவரது குடும்ப உறுப்பினர்களின் பழையநினைவுகளைப் பெறக்கூடியதாகவும், அவருடன் தொடர்புடைய பலரைச்சந்திக்கக் கூடியதாகவும் இருந்ததனால் இம்முயற்சி சாத்தியமாயிற்று. ஆனால் இவர்போன்று முன்னோடிகளாக இருந்த ஏனைய பேகர்ப்பெண் டாக்டர்களின் வாழ்க்கை தொடர்பான சித்திரத்தை வெளிக்கொணரும் முயற்சி வெற்றிகரமானதாக அமையவில்லை. இதற்குமுக்கியகாரணம் அவர்கள்பற்றிய குறிப்புகள் மிகவும் துணி டுதுணி டாக உள்ளதுதான். எனினும் இத்துண்டுதுண்டான தகவல்களின் அடிப்படையில் அவர்கள்பற்றிய சிறு அளவிலான சித்திரத்தைத்தருகிறேன்.
LTáLi Foragi (3Lof 565 (Dr Evelyn Davidson)
1892 இல் இலங்கை மருத்துவக் கல்லூரியிற் சேர்ந்த முதல் இரண்டு மாணவிகளில் ஒருவர். இவருக்கு அரசாங்கபுலமைப் பரிசிலாக வருடாந்தம் 500/= வழங்கப்பட்டது. இவர்கள் ஐரோப்பிய ஆசியர். பிரித்தானிய வம்சாவழியைச் சேர்ந்தவர். 19ம் நூற்றாண்டில் டேவிட்சன் என்பதனைக் குடும்பப்பெயராகக் கொண்டவர்கள் இருந்தனர் இவர்களின் எட்வேட் ஏனெஸ்ட் டேவிட்சனும் உள்ளடங்குவர். இவர் பொதுமக்கள் ஒழுங்குவிதி உதவி இயக்குளராக இருந்தவர்.
தாயகம் இலங்கை என குறிப்பிடப்பட்டவர். இவரது தந்கை டாக்டர் W.J. டேவிட்சன் இலங்கையில் நீண்டகாலம் சேவையாற்றியவர் (Wright 1907 : 110) ஈவ்லின் டேவிட்சன் இவர் வைத்தியர்க் குடும்பத்துடன் தொடர்புடையவராக இருக்கவேண்டும். 1899 இல் வைத்தியகலாநிதிப் படிப்பைமுடித்து வைத்தியரானார் பின்னர் காலியில் பெண்களின் இறப்பைப் பதிவு செய்யும் பதிவாளராக நியமிக்கப்பட்டார்.
47

டாக்டர் வெறன்றிற்ரா கித்
1892 இல் இலங்கை மருத்துவக்கல்லூரியில் அனுமதிபெற்ற இரண்டு பெண்களில் மற்வர் ஹென்றிற்ரா இசெபெல் கீத் ஆவர், இவரும் இலங்கை அரசின் புலமைப்பரிசிலாக வருடம் 500/= ரூபாயைப்பெற்றவர், இவர் 1870 மார்கழி 28 ம் தேதி காலனித்துவ மருத்துவ சேவையாளரும், கண்டியில் பிரதமமருத்துவ அலுவலராகவும் சேவையாற்றிய டாக்டர் பிரெடெரிக் தியோபால்ட் கீத் அவர்களின் மூத்தபுதல்வியாவார். பின்னைய ஆண்டுகளில் டாக்டர் ஹென்றிற்ரா கீதி, டாக்டர் நெல், டி புவர் ஆகியோர் பற்றி சமகாலத்தவர் என்ற வகையில் அடிக்கடி பேசியுள்ளார். அவரை உலகெங்கும் பரந்து வாமும் அவரது பெறாமகள்கள் இன்னும் நன்றாக நிறைவில் வைத்துள்ளானர். அவர்களில் ஒருவரிடமிருந்தே இந்த ஆசிரியர் ஹெட்டி மாமி அல்லது பெரரியம்மா பற்றி செய்திகளை சேகரித்தார். 1903 இல் திருமணம் செய்து கொள்ளும் வரை யாழ்ப்பாணத்தில் ஒர் மருத்துவக் குழுவுக்காக டாக்டர் இசபெல்லாகுர் (Dr. Isabela Curr) உடன் வேலை செய்தார் எனத் தெரிகிறது. அவரது கணவன் ஓர் ஆங்கிலேயக் குடும்பத்திற் பிறந்தார். 1907 இல் அவர் நில அளவை உயரதிகாரியாக அனுராதபுரத்திற் கடமையாற்றினார். டாக்டர் கீத்திருமணம் செய்து கொண்டதிலிருந்து மருத்துவக்குழுவிலிருந்து விலகிவிட்டார். ஏனெனில் அவர் வேலை செய்வதை கணவர் விரும்பவில்லை.
டாக்டர் வினி.ப்ரெட்நெல்(1862-1943)
சிறப்புக்குரிய ஓர் பேகர் குடும்பத்திலிருந்து வந்த நாம் அறிந்து கொள்ளவேண்டிய இன்னோர் முதன்மையான, முன்னோடிப் பெண்டாக்டர் வினிப்ஃரெட் நெல் ஆவார் இவரது தந்தை லூயிஸ்நெல் (1830 - 1922) அவர்கள் ஓர் முன்னணிச்சட்டத்தரணியும், மகாராணியின் வழக்கறிஞருமாவார். தாயார் லூசில்லா ஜீலியர் அன்ட்றீ இன்னோர் பிரபலமா பேகர்க் குடும்பத்தைச ‘சேர்ந்தவராவார். இவரது தந்தையின் சகோதரன் ஜோர்ஜ் ஃபிரெடெறிக் நெல் (1828 - 67) ஒர் பாரிஸ்டரும் மாகாரணியின் பதில் வழக்கறிஞருமாவார். நெல் குடும்பம் பிரான்ஸ் வம்சாவழியைச்சேர்ந்தவர்கள் வினிஃப்ரெட் நெல் இன் பூட்டனார் ஃபிரெடரிக் ஓகஸ்ட் நெல் இலங்கையில் டச்சுக்காரரின் ஆட்சி நிலவியபோது தென்னாபிரிக்காவிலிருந்து இலங்கைக்கு காலனித்துவ de meuron சேவையில் வந்தார். இவர் காதரின் பெற்றோநெல்லா பொன்சேகா என்ற சிங்களப்பெண்ணை 1793 இல் டச்சு சீர்திருத்த தேவாலயத்தில் திருமணம் செய்தார். இவர்கட்கு ஜோர்ஜ் என ஓர் மகன் இருந்தார், இவரே லூயிஸ் நெல் அவர்களின் தந்தையாவார். (Journal of the D.B.U April 1947 Vol. XXXVi No.4) இக்குடும்பத்தினர் புறக்கோட்டையின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள சிமோல் பாணில் வசித்துவந்தது.
48

Page 33
வினிஃபிரெட் நெல்லின் தந்தையாரும், மாமனும் 1850களில் இருந்த ஓர் இலக்கியக் குழாமின் அங்கமாக இருந்து வந்தனர். இவரது அத்தை எலீயநோர் நெல் (Eleanor Nel) பிரபல சட்டத்தரணியும் பத்திரிகையாளருமான சாள்ஸ் அம்பறோஸ் லோறென்ஸ்ஐத் திருமணம் செய்தார். எலியதோர் லோறென்சை லியோபோல்டு லுடேர்விசி (Leopold Ludovici) பின்வருமாறு விபரிக்கிறார் இலங்கையின் புதல்விகளில் பல்வகைப்பண்புகளை பெருமளவிற் கொண்டவராக ஒருவேளை இருக்கலாம். கல்வியறிவும் புத்திசாலித்தனமும் நிறைந்தவர். அவரது பேச்சிலும், திறமைமிக்க வேலைப்பாட்டிலும் அவரது பண்புகளிலும் இது தெரிந்தது. இதனையே நன்கு பண்பட்ட உள்ளம் என கூறப்பட்டது. சிலோன் ரைம் சஞ்சிகைகட்கு அடிக்கடி எழுதிவந்த ஓர் ஆற்றல் மிகு எழுத்தாளர் மட்டுமின்றி, பிரெஞ்சுப் பாஷையில் பண்டித்தியமும் பெற்றிருந்தார், இலங்கையை டச்சுக்காரரிடமிருந்து பிரிட்டிசார் கைப்பற்றும் போது 1798இல் ஏற்பட்ட சரணடைவு உடன்படிக்கை தொடர்பான பிரெஞ்சுத்தரப்பு விளக்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர், அத்துடன் அட்மிரல் ஸ்பீல்பேகென் இன் கிழக்கிந்தியப் பயணக் குறிப்புகளையும் 

Page 34
டாக்டர் கிளாரிபெல் வான் டொட் ஸ்பிட்டெல் (1876-1952)
டாக்டர் கிளாரிபெல் வான் டொட் ஸ்பிட்டெல், வசதிபாய்ப்பு மிக்க பேகர் டாக்டரான வில்லியம் கிரெகொரி வான் டொட் (1841 - 1921) L.M.S (சென்னை - கல்கத்தா) M.D (அபெர்டீன்) அவர்களுக்கு ஐரிஷ் மதகுரு ஒருவரின் மகளான சோபியா மரியன் மக்-கார்த்தி அவர்களுக்கும் சித்திரை 7 1876 இல் மகளாக பிறந்தார். டாக்டர் W.G. வான் டொட் அவரது துணிச்சலான நடவடிக்கைகளால் பிரபல்யமாக இருந்தார். குறிப்பாக கோப்பித்தோட்டங்களில் கூலியாக வேலை செய்யும் மக்களின் நிலவரம் பற்றிய அவரது அறிக்கை, அம்மக்களின் துயர்மிகு நிலவரங்கனை வெளிப்படுத்தியிருந்தது. இதன்பின்னால் இவரது துணிச்சலான செய்கை பலரது கவனத்தையம் ஈர்த்தது. அத்துடன் (சாள்ஸ் லோறென்ஸ் குறிப்பிட்டதுபோல்) அக்கூலிகட்காக கோப்பிப்பயிர்ச் செய்கையாளர் சங்கத்துடன் தனியாகப் போராட வேண்டிய நிலைக்கு இட்டுச்சென்றது (Roberts etal 1989 : 63) கிளாரிபெல் வான் டொட் இங்கிலாந்தின் கெளரவமிக்க செல்ரெனாம் மகளிர் கல்லூரியில் தன் பள்ளிப் படிப்பைமுடித்து, இலங்கைவந்ததும் டாக்டராகவரவேண்டும் என்பதில் மிகவும் விருப்பமாக இருந்தார். இவருக்கும் வினிபிரெட்நெல்லுக்கும் திருமணஉறவுமுறை ஊடாக தொடர்பு ஏற்பட்டது. வினிஃபிரெட் நெல்லின் மூத்தசகோதரியும் டாக்டர் W.E. லீம்பிறேகன்-றுத்நெல் ஆகியோரின் புதல்வியுமான லோபே லீம்பிறேகன், கிளாரிபெல் வான் டொட் சகோதரனான இவான் மொறிஸ் டொட் ஐத்திருமணம் செய்துகொண்டதனால் இத்தொடர்பு ஏற்பட்டது. எனவே அக்குடும்பத்தில் 3 டாக்டர்கள் கிளாரிபெல்லை மருத்துவக்கல்லூரிக்கு அனுமதிபெற உற்சாகப்படுத்தினர். ஆனால் ஓர் கருத்துப்படி இவரது ஐரிஷ் தயாரான சோபியா மக்கார்தி. எந்த ஓர் கெளரவமான பெண்னும் வேலைக்குப் போகமாட்டார்கள் என்ற கருத்தைக் கொணி டிருந்தார். இதனால் இக்கருத்துக்களை முறியடித்து டாக்டராவதற்கு கணிசமான மன உறுதி தேவைப்பட்டது. ஆனால் அவரதுமுற்போக்கு எண்ணம் கொண்ட தந்தை அவரை டாக்டராகுமாறு உற்சாகப்படுத்திவந்தார். (வில்சன் 1975 ; 22) கிளாரிபெல் நிகரற்றதிறமைசாலி மாணவியாகத்திகழ்ந்து L.M.S பரீட்சையிற் சித்திபெற்றதுடன், சத்திரசிகிச்சையில் தங்கப்பதக்கம்பெற்றார் (ibid 23)
மருத்துவக்கல்லுரியில் சகமாணவனான றிச்சாட் ஸ்பிற்ரெல் என்பவரைக் கிளாரிபெல் சந்தித்தார். கிளாரிபெல்லின் நடைமுறைகள் ஆங்கிலேய பாணியிலேயே இருந்தன. இது இலங்கையிலேயே பிறந்து வளர்ந்த அந்த இளைஞருக்குப் புதுமையாக இருந்தது (ibid). வான்டொட் குடும்பத்தினர் உலகியல் தெரிந்து நடப்பவர்கள். உயர்ந்த நடைமுறைகளைக்
51

கொண்டவர்கள், ஆங்கிலக் கலாச்சாரத்தையுடையவர்கள். பொருளாதாரவளம் மிக்கவர்கள். டாக்டர் வன்டொட் இன் பிள்ளைகளும் இங்கிலாந்திலுள்ள சிறந்தபாடசாலைகளிற் கல்விகற்றவர்கள், அத்துடன் அவரிடம் ஓர் வண்டியும், இரண்டு குதிரைகளும் இருந்தன. இதுவே கொழும்பில் அவர் செல்வம்மிக்கவராக, இருந்தார் என்பதற்கு எடுத்துக்காட்டாகும். ஆனால் சமுதாயத்தைப் பொறுத்தவரை, ஸ்பிற்ரெல் குடும்பத்தினர் மத்தியதர வகுப்பைசேர்ந்தவர்களாகவே இருந்தனர். R. L. ஸ்பிற்ரெலின் தந்தை டாக்டர் ஜோர்ஜ் ஸ்ப்பிற்ரெல் LMS,LRCP &S (Edin) அரசாங்க மருத்துவத்துறையில் சத்திரசிகிச்சையாளராக மாகாணங்களில் வேலை செய்தார். R. L. ஸ்ப்பிற்ரெலின் தாயார் சில்லியா அன்டரீ ஜான்ஸ்சும் ஓர் பழைய டச்சு பேகர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்பெற்றோரின் சிக்கனமும் சேமிப்பும், தியாகமும் R.L. ஸ்பிற்ரெல் ஐந்து ஆண்டுகள் லண்டனில் படிக்க ஏதுவாக இருந்தது. அங்கு அவர் F.R.C.S. பட்டம்பெற்றார். இதேவேளை எடின்பேர்க்கில் கிளாரிபெல்லும் L.R.C.R. & S பரீட்சையிற் தேறினார். இக்காலகட்டத்தில் இருவரும் கடிதமூலமும், நேரடிச்சந்திப்புமூலமும் லண்டனில் நட்பை வளர்த்து வந்தனர். பின்னர் இலங்கை வந்ததும் 1911 இல் திருமணம் செய்துகொண்டனர் (ibid 23-25). ஸ்ப்பிற்ரெல் தம்பதிகள் அரசாங்க மருத்துவமனைகளில் வேலை செய்ததுடன் தமக்கென தனியார் மருத்துவமனை ஒன்றை அமைத்து அதிலும் வேலை செய்து வந்தனர். அவரது மகள் எழுதியுள்ளது போல் இருவரும் நல்ல அணியாக இணைந்து செயற்பட்டனர். கிளாரி. விறைப்பு அல்லது மயக்க மருந்து கொடுப்பதுடன் சத்திரசிகிச்சையிலும் உதவிபுரிவார், தொலைபேசி அழைப்புக்களைப் பெற்றக்கொள்வது கணக்கு எழுதுவது போன்றவற்றையும் செய்து வந்தார்(ibid:31).
டாக்டர் R.L. ஸப் பிறிரெலி நாட்டினி மு னினணி சத்திரசிகிச்சையாளர்களில் ஒருவரானார். ஆனால் வேடர்கள் மத்தியில் அவர் செய்தவேலையும், இலங்கையின் காடுபற்றியும், காட்டுவிலங்குகள் பற்றியும் அவர் எழுதிய புத்தகமுமே மிகவும் நினைவு கூரப்படுகிறது. ஓய்வுபெற்றபின்னும், ஓர் தனியார் மருத்துவமனையான விச்சேர்லி மருத்துவமனையை (Whicherly Nursing Home) வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தினர்.அவர்களுக்கு இரு பெண்பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் ஒருவர் கிறிஸ்ரின் வில்சன், அவர் தனது தந்தையின் வாழ்க்கைச்சரித்திரத்தை எழுதினார். இப்புத்தகத்தில் தனது தாயாரை பாரம்பரிய குணாம்சம் கொண்டவராக சித்தரித்துள்ளார் மேலும், தான் திருமணம் செய்துகொண்ட அந்த ஆற்றல்மிக்க மனிதருக்கு உதவுதற்குத்தன்னை அர்ப்பணித்தார். (ibid:39) அந்த மாமனிதனின் நிழலில் அவர் எளிமையாக உடையணிவார். முக்கியமாக அமைதியானவர். தனது ஆழமான
52

Page 35
உணர்ச்சிகளையெல்லாம், தனது மயங்கவைக்கும் அமைதியின் கீழ் மறைத் துவைத் தார். அவரது எநீதப் புதிய முயற்சியையும் உற்சாகப்படுத்தியதுடன் அதில் தனது தலையீட்டைப் புகுத்தாமல் அவரை வழிநடத்தினார் (ibid:36). அவர்களது மகளான கிறிஸ்ரின் இங்கிலாந்தின் முன்னணிப் பெண்கள் பாடசாலைகளில் ஒன்றில் படிப்பதற்காகச் சென்ற போது கிளாரிபெல் இங்கிலாந்திலேயே தங்கி மகளைக் கவனித்துக் கொண்டார் என குறிப்பிட்டுள்ளார். ஸ்ப்பிற்ரெல் தம்பதிகள் சில ஆண்டுகட்கு முன்னால் லண்டனிலிருந்தபோது, குழந்தையாக இருந்த இவர்களது இன்னோர் மகள் கொழும்பில் இறந்துவிட்டார், இதுவே அவர் கிறிஸ்ரினுக்குப் பாதுபாப்பளிக்க லண்டனில் தங்கியதற்கு காரணமாகலாம்.
இரண்டாம் உலகமகாயுத்தத்தின்போது, இலங்கையில் போர் நடவடிக்கைகட்கு உதவுவதில் ஆர்வத்துடன் செயற்பட்டு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவரானார். வில்சனின் கூற்றுப்படி கிளாரிபெல் தன் கணவரின் வளர்ச்சியில் இன்பம் காண்பதில் மனநிறைவெய்தும் தன்மையுடையவராக இருந்த அவர், இப்போது தானே எழுந்துநின்றார். இலங்கையின் மிகச்சில பெண் டாக்டர்களில் ஒருவர் என்றவகையில், அவர் நிறைவேற்ற வேண்டிய சிறப்பானபணிகள் இருந்தது. (ibid:38-9). 1948 இல் ஸ்ப்பிற்ரெல் தம்பதிகள் ஸ்கொட்லாந்து சென்றனர். அங்கு 74 வயதான கிளாரிபெல்லுக்கு இழுப்புவாதம் ஏற்பட்டு அந்நோய் குணமாகாமல் 4 ஆண்டுகளின 'பின் கொழும்பில் காலமானார்.
டாக்டர் றாச்செல் சிறிஸ்ரோவ் (F) பெல்ஸ் (1885-1975)
குறிப்பிடத்தக்க பேகர்க் குடும்பங்களிருந்து வந்த ஆரம்பகால மாணவிகளில் ஒருவரான டாக்டர் றாச்செல் கிறிஸ்ரோtபெல்ஸ் 1885 ம் ஆண்டு புரட்டாதிமாதம் 29 ம் திகதி பிறந்தார். இவரது தந்தை WS.கிறிஸ்ரோபெல்ஸ் காலனித்துவ செயலாளரின் அலுவலக உதவியாளராக இருந்தவர். கவர்னர் சேர் ஹென்றி பிளாக் இவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் பெறுமதிமிக்க அரசாங்க அலுவலர் என்றார். 1906 இல் அரசாங்கத்தில், அவரது 40 ஆண்டுகால சேவையை அங்கீகரித்து அவருக்கு பேரரசின் சேவைக்கட்டளை பரிசளிக்கப்பட்டது. றாச்செல் கிறிஸ்ரோtபெல்ஸ் இன் தாய் மேரி ஆன் fபிறொற்ஸ், டச்சு கிழக்கித்தியக்கம்பனியின் கீழ் இலங்கை இருந்தபோது அதன் கவர்னராக இருந்த ஜெராட் ஜோன் விறிலண்ட்ற் அவர்களின் புதல்வியான (நீ விர்லண்ட்ற்) திருமதி fபிறெற்ஸ் இனதும், காலிக் கோட்டையின் தளபதியான டைற்றிச் தோமஸ் பிறெற்ஸ் தம்பதிகளின் பூட்டப்பிள்ளையாவார். மினா ஜோன்சன் தனியார் பாடசாலையில் கல்விகற்றதன்பின், றாச்செல் கிறிஸ்ரோtபெல்ஸ் கொழும்பு மகளிர்கல்லூரியில்
53

1890இல் சேர்ந்து, அரசாங்கப்புலமைப் பரிசில் பெற்று 1904 இல் மருத்துவக்கல்லூரி அனுமதிபெற்றார். இவரது மூத்த சகோதரனான டாக்டர் பேர்மன் கிறிஸ்ரோtபெல்ஸ் ஓர் டாக்டராவார். (பின்னர் பல்வைத்தியரானார்) இவரின்தாக்கமே றாச்செல் மருத்துவம் கற்கவும் தூண்டியிருக்கக்கூடும். 1909 இல் மருத்துவக் கல்வியை முடித்த இவர், மாநகர மருத்துவசேவைப் பிரிவில் பல ஆண்டுகளாகக் கடமையாற்றினார். குழந்தைகள் நலம் தொடர்பான 3 மாதப்பயிற்சிக்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்ட இவர் பின்னர் 1925 இல் பொது சுகாதாரத்துறையில் சுகாதாரதுணைமருத்துவ அலுவலராக குழந்தைகள் நல பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். இவருக்கு முஸ்லீம் சமூகத்திலிருந்து, குறிப்பாக மிகவசதியான பிரிவினராகிய கபூர் குடும்பத்தினர், மாக்கன் மாக்கார் குடும்பத்தினர் போன்ற தனிப்பட்ட நோயாளிகளும் இருந்தனர். இவரது வேலை நகரப்பகுதியைப் பொறுத்தவரை நகர்ப்புற ஏழைகள் மத்தியில் இருந்தது, அத்துடன் சுகாதார ஊழியர்கட்குப்பயிற்சி அளிப்பது, மாநகர மருத்துவிச்சிகளை மேற்பார்வை செய்வது ஆகியனவும் அடங்கும். சுகாதார ஊழியர்களின் எழைக் குழந்தைகளைப் பரிசோதிப்பது, குழந்தைகட்கு உணவூட்டுவது, பாலூட்டுவது தொடர்பாக தாய்மார்க்கு அறிவுரைகூறுவது, வீடுகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்ருப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்குவது ஆகிய பணிகளைச் செய்தனர்.
டாக்டர் கிறிஸ்ரோtபெல்ஸ் அவர்கள் 4 மாநாகர மருந்தகங்களில் கற்பிணித் தாய்மார்கட் கான மருந்தகங்களை (Dispensaries) நடத்திவந்ததுடன், தேவைப்படும் சிறுவர்கட்கு பால் வழங்குவதையும் மேற்பார்வை செய்து வந்தார். 1925க்கான தனது வருடாந்த அறிக்கையில் முன்னைய ஆண்டிலிருந்து குழந்தை இறப்பு குறைந்து வருவதாகவும், குடிசைப் பகுதிச் சிறுவர்களின் பொது சுகாதாரமும், நிலமையும் அபிவிருத்தி யடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் (Ceylon Sessional Papers 1926 Municipality of Colombo 81-3). அடுத்த ஆண்டறிக்கையில் மேலும் முன்னேற்றங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் 1927 இல் மோட்டார் தொழில்நுட்பவியலாளரான A. P. றோலான்ஸ்ஐத் திருமணம் செய்துகொண்டதும் ஒய்வு பெற்றுவிட்டார். றேலண்ட்ஸ் அவருக்கு கார் ஒட்டப்பழக்கியபோது முதலில் அவரைச்சந்தித்தார், அவர் வெற்றிகரமான ஓர் நிறுவனமான றோலண்ஸ் திருத்தகங்கள் (Rowlands Garages) இன் இயக்குனராகிவிட்டார். 1922இலிருந்து 1943இல் ஒப்வுபெறும் வரை இப்பதவியிலேயே இருந்தார். இவர்கட்து ஒருமகள் இருந்தாள், பெயர் கிறிஸ்ரோயெல் கரேர்லிஸ். டாக்டர் றாச்செல் 90 வயதுவரை வாழ்ந்தார். திருமணத்தின் பின் அவர் வைத்தியத்துறையில் வேலை செய்யவே இல்லை.
54

Page 36
ாக்டர் ஊர்சுலா வான் றுயன்
இவரது குடும்பத்தில் பல டாக்டர்கள் இருந்தபோதும், ஊர்சுலா சார்லொட்ரே மே வான் றுாயன் ஆரம்பகால பெண் வைத்தியர்களில் ஒருவராவார். இவர் 1896 ம் ஆண்டு பிறந்தார். இவர் டாக்டர் கிலென்விலெ. புனித கிளேயர் வான் றுாயன் (1861-1937) அவர்களின் புதல்வியாவார். கிலென்விலெயின் சகோதரர்களில் டாக்டர் சாள்ஸ் வான் றுயன், தியோடொர் சிசில் வான் றுயள் .ெC. ஆகியோரும் அடங்குவர். மேலும் ஊர்சுலாவின் தாய், ஊர்சுலா லுகில்லா வன்டெர்ஸ்ற்றாறன் (1866-1903) டாக்டரான ஜீலியன்எட்வேட் வன்டெர்ஸ்ற்றாரனின் மகளாவார். வான்றுாயன் குடும்பங்களும், வன்டெர்ஸ்றாற்ரன் குடும்பங்களும் செல்வம் மிக்கவர்களும் சமுதாயரீதியில் உயர்குடி பேகர்களுமாவர். இவர்கள் 18 ம் நூற்றாண்டின் பிரபல டச்சுக்குடிகளின் பரம்பரையினர் ஆவர். டாக்டர் கிலென்விலெ வான் றுயனின் தந்தை சாள்ஸ் றிச்சாட் வான் றுயன் (1836-1908) அத்துடன் இவரது பாட்டன் வவுட்டர் கரோலஸ் வான் றுயன் (1799-1876) டாக்டர் ஊர்சுலா வான் றுாயன் 1914 இல் தனது 18வது வயதில் மருத்துவக்கல்லூரியிற் சேர்ந்தார். சித்திபெற்று டாக்டரானதும் 1922 இலிருந்து லேடி ஹெவ்லொக் மருத்துவமனை பெண்வெளிநோயாளர் பிரிவின் மருத்துவ அலுவலராக நியமிக்கப்பட்டார்.
மேலும் பல பேகர், ஐரோ-ஆசிய, பிரிட்டிஷ் பெண்டாக்டர்கள் இலங்கையில் வாழ்ந்தனர். இவர்களில் சிறுதொகையினர் பற்றியே அறியக்கிடைக்கிறது. ஒருவர் டாக்டர் ஹெலன் கிட்டில், இவர் பிரிட்டன் வம்சாவழியைச் சேர்ந்தவர். இவரது தந்தை, காப்டன் கிட்டில் இந்தியாவிலும், பர்மாவிலும் பிரிட்டனின் இராணுவ மருத்துவப்பிரிவில் சேவைபுரிந்தவர். ஹெலன் மருத்துவப்படிப்புக்காக இலங்கை வந்தார். இங்கு தன்னுடன் படித்த சகமாணவனான காசியப்ப பெரேராவைத் திருமணம் செய்தார்.(இவர் பின்னால் பிக்கு காசியப்பா ஆனார்). இவர்கள் நுகேகொடவில் பணியாற்றினர். ஆனால் 1920 இன் முற்பகுதியிலேயே இறந்துவிட்டார். அப்போது அவரது மகன் ஆனந்தா சிறுவனாகவிருந்தான்.
பிரித்தானிய வம்சா வழியைச்சேர்ந்த இன்னோர் டாக்டர் சார்லொட் டி பெறி நுட். இவர் 1900 இல் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார் பின் கொழும்பு இறப்புப்பதிவாளரானார். இவர் 1900 ஆண்டில் காலனித்துவ உதவி சத்திரசிகிச்சையாளராக இருந்த டாக்டர் W.E. றுாட்ஐத் திருமணம் செய்திருக்கவேண்டும். இவர் பிரிட்டிஷின் றுட்குடும்ப உறுப்பினராகவே இருக்கக்கூடும். இங்கிலாந்திலிருந்து 1830 இல் இலங்கைக்குவந்த ல்லியம் தொழில்நுட்பவியலாளரான வில்லியம் றுட், பேகரான ஒட்டலின் பிரின்ஸ்ஜ
55

1939 இல் திருமணம்செய்தார். இன்னொருவர் டாக்டர் சைமண்மஸ். இவர் யாழ்ப்பாணத்தில் பெண் இறப்புப்பதிவாளராக இருந்தார். டாக்டர் சில்வியா எதெல் எபேர்ட் 1882 இல் பிறந்தார். இவரும் எனைய தனது சமகாலப்பெண்டாக்டர்கள் போல, டாக்டர் றோலாண்ட் கிளாறென்ஸ் அல்டோன்ஸஐத் திருமணம் செய்தார். கணவன் மனைவி இருவரும் மேலும் படித்து மேலும் பல பிரிட்டிஷ் சான்றிதழ்களைப் பெற்று இலங்கையில் பொது மருத்துவத்துறையில் சேவை புரிந்தனர். V
முன்னோடியான பேகர்ப் பெண்டாக்டர்களுடன் ஏனைய வெளிநாட்டு பெண்டாக்டர்களும் இணைந்து இலங்கைப் பெண்களுக்கு வழித்தடம் அமைத்துக் கொடுத்தனர், குறிப்பாக தமது மருத்துவ திறமைகளிலும் ஏனைய துறைகளிலும் அவர்களது ஈடுபாடு உள்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. டாக்டர் அலிஸ் வான் இன்ஜென் பற்றி நாம் குறிப்பிட்டிருக்கிறோம். அவர் பெண்களின் நோய்களுக்கான சிறப்பு மருத்துவ மனையின் பெறுப்பதிகாரியாக இரண்டாண்டுகள் இருந்தார் (Vander Etraaten 1901). ஆனால் அதிகமாக அறியப்பட்ட பிரபல வெளிநாட்டு டாக்டர் மேரீரட்ணம் (நீ இர்வின்) அவர்களாகும். இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர், ரொறொன்ரோவிலுள்ள ரிறினிற்ரி கல்லூரியில் கல்வி கற்றார். யாழ்ப்பாணத்தில் திருச்சபையின் வேலைத் தபிட்டப் பணி பயிற்சியில் இருக்கும் ஓர் தமிழ்க்கிறீஸ்தவரான S.C.K. ரட்ணம் அவர்களைச் 1896 இல் நியூயோர்க்கில் திருமணம் செய்து கொண டார். இவர் பிறின் செறிரேயில் படித்துக்கொண்டிருந்தார். இவர்கலப்புத்திருமணம் செய்துகொண்டதால் இவர் சார்ந்திருந்த பணிக்குழு இவரை நிராகரித்தது. பின்னர் பெண்கள், குழந்கைகட்கான லேடி ஹெவ்லொக் மருத்துவமனையிற் குறுகிய காலம் வேலை செய்தார். பிரிட்டனில் தகுதிபெற்ற டாக்டர் லூசில்லா லெஸ்லி ஓராண்டு இங்குசேவை செய்தபின் சுகவீனம் காரணமாக மீண்டும் இங்கிலாந்து சென்றார். அந்த காலி இடமே மேரிரட்ணம் அவர்களால் நிரப்பப்பட்டது. ஆனால் மீண்டும் தான் பாரபட்சமாக நடப்படுவதைக் கண்டார். நிர்வாகம் பிரிட்டனில் வழங்கப்பட்ட பட்டங்களையே அங்கீகரித்தது. எனவே இவருக்கு உத்தியோகத்தை நிரந்தரமாக்க மறுத்தனர். லேடி ஹெவிலொக் மருத்துவமனையில் இவரது தற்காலிகப் பணிக்காலத்தில் டாக்டர் அலிஸ் டி புவரும், வினிfபிரெட்நெல்லும் (See Jayawardenu 1993) உதவியாக இருந்தனர்.
இலங்கையிலிருந்த இன்னோர் பிரிட்டிஷ் டாக்டர் எலிசபேத்லிகபோர்ட் (1878- 1915) இவர் உயர்பட்டங்களை எடின்பேர்க்வில் பெற்றதுடன் தென்னிந்தியாவில் தஞ்சாவூரிலும் பணியாற்றினார். இவர் ஓர் பேகரான டாக்டர் C.I.M. டி லா போர்ப் அவர்களைத் திருமணம் செய்து இருவரும் இலங்கை
பொது மருத்துவத்துறையிற் பணியாற்றினர்.
56

Page 37
யாழ்ப்பாணத்தில் அமெரிக்கன் மிசன் மக்கிலியொட் என்னும் பெண்களுக்கான மருத்துவமனையை இணுவிலில் கட்டியெழுப்பியது. இங்கு வைத்திய அதிகாரியாக இருந்த இசபெல்ல கர் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்தவர், "கர் அம்மா" எனப் பலராலும் அன்புடன் அழைக்கப்படும் அளவுக்கு மக்கள 'மத்தியில் நற்பெயரைச் சம்பாதித்திருந்தார். ஏனைய அமெரிக்கப் பெண்டாகடர் மேரி கபைஸ் (நீ ஷார்மன்) 1899 இல் பெண்களுக்கான லேடி ஹெவ்லொக் மருத்துவமனையின் மருத்துவப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டர்கள். டாக்டர் அலிஸ் டி புவரும், வினிஃபிரெட்நெல்லும் இவருக்கு துணைமருத்துவர்களாக செயற்பட்டனர். இவர்களுடன் பிரிட்டனைச் சேர்ந்த தலைமைச் செவிலி M.E றிச்சாட்டனும் அவருக்கு உதவியாக இருந்தார் (Wright 1907:131). இவர் டாக்டர் காதரின் அன்டர்சன் அவரது இடத்தைபிடித்தவராவார். காதரின் அன்டர்சன், டாக்டர் மே ரத்நாயக்க அவர்களால் ஓர் திறமையான சத்திரசிகிச்சையாளரும், நிர்வாகியும், கடுமையான ஒழுக்கக்கட்டுப்பாடும் கொண்டவர் என குறிப்பிடப்படுகிறார். (Times of Ceylon, 22 July 1962) உள்நாட்டுப் பெண்கள் உயர்தகுதிகளுடன் உயர்பதவிகளை எடுக்கும் நிலை வளர வளர காலனித்துவ மருத்துவ சேவைக்காக பிரிட்டிஷ் பெண்களை நியமிக்கும் நிலை படிப்படியாகக் (g60poog (Tapesed)
மருத்துவக் கல்லூரி ஆரம்பநாட்களின் நினைவுகளிலிருந்து.
ஆரம்பகால பெண மருதி துவக் கல்லுTரி மாணவிகள் மருத்துவக் கல்லூரியில் துணிச்சலுடன் பல பிரச்சனைகளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அன்று மருத்துவக்கல்லூரி காலனித்துவ சமுதாயத்தில் ஆணாதிக்கம் நிறைந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. இம்முன்னோடிகள் மருத்துவக் கல்வியைப் பெண்கள் பெற்றுக்கொள்ளும் உரிமைக்காகவும், தாம் சமத்துவமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் போராடவேண்டி இருந்தது. அலிஸ் டி புவரின் மருத்துவக் கல்லூரிக்காலகட்டத்தின் ஒரே ஒரு சிங்கள மாணவியான டாக்டர் வெரோனா வீரசேகரவின் பழைய நினைவுகளப்பெறும் வாய்ப்பு அதிர்ஷ்ட்ட வசமாகக்கிட்டியது. இவருக்கு மேல்நிலையில் கிளாரிபெல் வான் ட்ொட், சில்வியா எபெட்ஹெலென்கிடில் என சிலமாணவிகள் இருந்தனர். இவர்களுடன் ராக்செல் கிறிஸ்தோபெல்ஸ் என்றமாணவியும் இருந்தார். இவரே வெரோனாவுக்கு ஆறுதலளித்தவராக இருந்தார். பின்னால் இருவரும் இணைபிரியாத்தோழிகளானார்கள். வெரோனா வீரசேகராவின் மருத்துவக்கல்லூரி ஆரம்பகால அனுபவம் ஆண்கள் நிறைந்த ஓர் நிறுவனத்தில் ஓர் பெண்ணுக்கு ஏற்படக்கூடிய பதட்டங்களையும், அழுத்தங்களையும் பிரதிபலிக்கிறது.
57

மருத்துவக் கல்லூரியில் சேர்வதென்பது எனது விருப்பமாக இருக்கவில்லை. இந்த யோசனயை நான் வெறுத்தொதுக்கினேன் ஆனால் இது எனது தநீதையினி விருப்பமாகும். மருத்துவக்கல்லூரியிற் பதிவுசெய்து கொள்ளும் நாள் வந்தபோது நான் எதிர்கொள்ளப்போகும் ஐந்து ஆண்டுகளை நினைத்து கண்கள் கலங்கிவிட்டன.
பிரச்சனைமிகு பதிவாளரின் அலுவலகத்தைக் காட்டினார்கள், சிவந்தமுகத்துடன் கடுமையான உருவத்துடன் டாக்டர் ச்சாமெஸ் இருந்தார். அவர் பணி பாகவும் அன்பாகவும் பேசியபோதும், எப்போதையும் விட என்னை பயமூட்டுவதாகவே இருந்தது. அவர் சொன்னவற்றை உள்வாங்குவதில் மிகவும் பதற்றப்பட்டேன். ஆனால் எனது அட்டையை என்னிடம் கொடுத்டுவிட்டு நான் ஓர் ஆண் என்பதையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்காதே என்றார். ஆண்கள் பயங்கரமானவர்கள் என்றோ கொடிய மிருகங்கள் என்றோ நான் எண்ணக்கூடாது, என்னைப் போலவே எண்ணிப்பழகவேண்டும் என்பதையே அவி வாறு குறிப்பிட்டார் என்பதை நாணி புரிந்துகொண்டேன். பெண்கள் ஒய்வெடுப்பதற்கான தனி அறை உண்டு என்ற கூறியதுடன் அந்த அறையையும் காண்பித்தார்.
வெரோனா வீரேசேகரவுக்கு பதிவாளர் உற்சாகமூட்டியபோதும். மாணவிகள் ஒய்வறைப் பொறுப்பாளரான ஆயாவே அதிக ஆறுதலளிப்பவராக இருந்தார். தனக்கு முதன்முதலில் ஆறுதல் சொன்னவரே அவர்தான் எனக்கூறுகிறார்.
நான் மிரட்சியடைந்திருப்பதை அவர் கவனித்திருக்கவேண்டும், நாசுக்காக என்னை சாந்தப்படுத்தினார். மாணவர்களைப்பற்றி அலட்டிக்கொள்ளாதே. அவர்கள் கொஞசம் கொந்தளிக்கின்றவர்கள் ஆனால் அதனை லட்சியம் செய்யாவிட்டல் விரைவிலேயே பின்வாங்கி விடுவார்கள். அவர்கள் குரைப்பார்கள் கடிக்க மாட்டார்கள் என்பதைக்கேட்டபோது மிகசந்தோசமாக இருந்தது
ஆனால் அது வெறும் குரைப்பாகவே இருந்தபோதும் ஆண்மாணவர்களுடன் சமாளித்துச் செயற்படவேண்டிய புதிய அனுபவத்திற்கு ஓர் வைராக்கியம் தேவையாக இருந்தது என்பதை சொல்லத் தேவையில்லை. டாக்டர் வீரசேகரா மேலும் குறிப்பிடுகையில்; வேலைகள் ஆரம்பிப்பதற்கான மணி அடித்ததும் ஆயாவின் வழிகாட்டலின்படி விரிவுரைமண்டபத்தைத்தேடி தனியாக துணிந்து சென்றேன் (எனது பிரிவில் வேறு பெண்கள் எவரும் இல்லை). வெளிமுற்றத்தில் உயர்பிரிவு மாணவர்கள் 2வரிசைகளில் நின்றனர்.
58

Page 38
அவர்களைக் கவனித்காதது போல் கடந்து செல்லும்போது மெல்ல விசிலடித்தல், காலால் தரையில் தட்டுதல் போன்றவற்றிலீடுபட்டனரே அன்றி விமர்சனம் எதுவும் செய்யவில்லை. நான் வேகமாக விரிவுரை மண்டபத்திற்குள் சென்று முதல் வரிசையில் எனது ஆசனத்தில் அமர்ந்து குனிந்து மேசையைப் பார்த்தபடி இருப்பேன் ஆணிகள் படையாகப் பின் வரிசைகளில் உட்காருவார்கள்.
முதல் வருடத்தில் பெளதீகவியல், இரசாயனவியல், உயிரியல், மனோவியல், உடசுற்றியல், மருந்துமூலக்கூறியல் ஆகியபாடங்களே முதலாண்டில் கற்பிக்கப்பட்டது. அத்துடன் "வெட்டி ஆய்வு செய்யும் "அறை தனியாக இருந்தது.
இராச்சலும் நானும் ஓர் உடற்கூற்றியல் பாடப்புத்தகத்தையே பயன்படுத்திவந்தோம். இருவரும் அப்புத்தகத்தை பகுதி பகுதியாக படித்தோம். விரிவுரை மண்டபம் விரிவுரையாளர்வரும் வரை குறிப்பிடத்தக்களவுக்கு கூச்சலும், குழப்பமுமகவே இருந்தது. ஆனால் பயப்படும்படியோ, ஆத்திரமூட்டும் படியோ எதுவும் நடப்பதில்லை. பேப்பர்பந்துகளும், கடலைக்கொட்டைகளும் அறைமுழுவதும் பறந்துகொண்டிருக்கும். குறிப்பாக பெண்கள் வாங்குகளைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கும், ஆனால் இவையேல்லாம் எம்மைத்துாண்டும் நோக்கம் கொண்ட தாகும் முரட்டுத்தன்மை தெரிந்திருக்கவில்லை. அக் காலகட்டத்தில் எப்போதும் பணிவாகவும், ஓரளவு சம்பிரதாயபூர்வமாகவும இருந்தனர். ஆனால் நட்பாகவும், தீவிரமான உதவிசெய்யும் தன்மையுமை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனெனில் மிகக்குறைவான பெண்களே மருத்துவக் கல்லூரியில் இருந்த காரணமாக இருக்கலாம். எமக்கு உதவுவதற்காக தமது எல்லைகட்கப்பாற்பட்டுக் கூட செயற்படக் கூடியவர்களாக இருந்தனர்.
வழக்கமாக எமக்கு செய்முறைகளைச் செய்துகாட்டும் திறமையான சத்திரசிகிச்சையாளர்களுள், டாக்டர் எஸ்.சி.போல் மாணவர்களான எம்மிடம் மிகவும் ஆதரவாகவும் புரிந்துணர்வுடனும் நடந்துகொள்வார். அவரது ஒப்புயர்வற்ற ஆற்றலினாலும், மதிப்பினாலும் அவர் கடவுளைப் போன்றவராக இருந்தார். எமது விரிவுரையாளர்களுக்குள் டாக்டர் பிராங்க் கிரினயர், டாக்டர் சின்னத்தம்பி, டாக்டர் கர்வின், டாக்டர் எச்.எம்.பெனாண்டோ ஆகியோரை எனக்கு ஞாபகமிருக்கிறது.
ஆரம்பகால மருத்துவமாணவிகளுக்கு, டாக்டர்களுக்குள் சில அனுதாபிகள் இருந்தனர். அந்தநாட்களில் சத்திரசிகிச்சைக்கோ, குளந்தை பேற்றுக் கோ டாக்டர்கள் சதி திர சிகிச்சைக் கையுறைகளைப்
59

பயன்படுத்தியதில்லை என்பதை வீரசேகர, நினைவு படுத்திகுறிப்பிட்டார் இதற்குப்பதிலாக பாதரசக் கழிம்பினால் கைளைத் தொற்றுநீக்கம் செய்தனர். எக்ஸ்கதிர் வசதிகள் இருக்கவில்லை. குளோரபோமை மணக்கக் கொடுத்தே நோயாளியை மயக்கமுறச்செய்யப்பட்டது.
வீரசேர மருத்துவக்கல்லூரி வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்டாலும்,
மத்தியான விரிவுரைகளுகுச் செல்லாமல் பரிவாரமாக விரிவுரைநேரத்தில்
பகோடா உணவகத்துக்குச் செல்வது, சிலவேளைகளில் துறைமுகத்தில் படகுச் சவாரி செய்வது போன்ற குறும்புத்தனங்களிலும் ஈடுபட்டார். (வீரசேகரே 1970),
பெணிகள் மருதி துவக் கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இது மாணவர் மத்தியில் சில பிணப்ைபுகள், காதல் நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது. அவர்களிற் பலர், குறிப்பாக வான்டொட், கிடில், எபெர்ட் ஆகியோர் சக டாக்டர்களையே திருமணம் செய்து கொண்டனர். கிறிஸ்தோஃ பெல்ஸ்சும் வீரசேகராவும் கூட சகமாணவர்களின் கிண்டலுக்கும், காதலை நையாண்டி செய்யும் கேலிவிமர்சன்களுக்கும் உள்ளானார்கள். பிற்காலத்தில் ஓர் பேட்டியில் தம்மை விரும்பியவர்களை நினைவு மீட்டார். பலர் கவிதை வடிவில் சிலவரிகள் எழுதி நாமில்லாதபோது எமது புத்தகத்திற்குள் வைத்துவிடுவர் அல்லது சிலவேளைகளில் தெளிவாக அர்த்தபுஷ்டியான சிலவரிகளை அல்லது மனப்பாடம் செய்து நாம் அவர்களைக் கடந்து செல்லும்போது பாடுவர் இவற்றில் சில வரிகள் :
“காலைக் காற்றை ஒத்த என் இனிய வெரோனாவே என்னைத் தவிக்கவிடாதே
”கவர்சிமிக்க ராச்செல் கிறிஸ்சே உனது உதடுகளில் முத்தமிடுவது பேரானந்தமானது”
60

Page 39
வைத்தியர் வினிபிரெட் நெல்
வைத்தியர் கிளாரிபெல் வான் டொட் எப்பிட்டெல்
 
 

1924 றாச்செல் கிறிஸ்தோபெல்ஸ் பிரான்சில் தனது பெர்லியெற் காரில்

Page 40
●ọ9179,9ạesīgo Ģ9ae9.pl/aŭ "ą9ólo 42909aŒ9 '7/79 LLLL LLLLLLL SL0L 0LLLLL S LLLL000 ZL L0000LL LLLLLLL00 0LLSLLL
 

SLLLLLL LLLLLL LLS LL LLLL0YSLS00LLLLL LL LLL LLLLS000L LLS0(sgwr) çorodoņego svog sowań
༣༣་་་་་་་་་་་་་་་་་་་་་་ཚི་ཞི་ཐོ།
ஆதr
፩
ལྟ་
鬚

Page 41
முடிவுரை
முன்னோடிகளான பேகர் பெண்டாக்கடர்கள் பற்றியும், இலங்கை மருத்துவக்கல்லூரியில் அவர்கள் நுழைந்தமை பற்றியும் சொல்லப்படாத ஏராளமான விடயங்கள் உண்டு. கடும் சிரமத்திற்கு மத்தியில் துண்டுகளாச் சேகரிக்கப்பட்டே இது தொகுக்கப்பட்டது. ஆனால் இப்பணியைச் செய்யுமும்போது, மத்தியவகுப்பைச் சார்ந்த பேகர்களின் உயர்பதவிகள் நோக்கிய எழுச்சி, சமுதாயத்தில் பெண்கள் உயர்கல்வியில் முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டமையும், காலனித்துவ சமுதாயத்தில் உயர்ந்த கெளரவம்மிக்க துறையான மருத்தவத்துறையைப் பொறுத்தவரை ஆண்களுக்குச் சமமான இடங்களைப் பிடிக்கத் தொடங்கியமை போன்ற சுவாரசியம் மிக்க படிமுறைகள் புதிதாகப் புலப்படுவனவாக உள்ளன. இம்முன்னோடிகளின் சமூகத்தைச் சேர்ந்த டாக்கடர்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் இவர்கள் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரங்கள் உண்டு. மிகக்குறிப்பாக டாக்டர் லூஸ் என்பவர், பாரம்பரியத்தை உடைத்துக்கொண்டு டாக்டர்களான பெண்களின் ஆற்றலை எப்போதும் பாராட்டினார். மேலும் பெரும்பாலான ஆரம்பகால மருத்துவத்துறையில் வேலை செய்தவர்களாக இருந்த தென்பதும் தற்செயலான ஒன்றல்ல.
ஆனாதிக்க கருத்துக்களால் பீடிக்கப்பட்டிருந்த ஓர் சமுதாயந்தியிருந்து. எமுந்த இம்முன்னோடிகளான பேகர் பெண்டாக்டர்கள் இலங்கையின் புதுமைப் பெண்களாக விளங்கினர். கோட்டையாக இருந்த இலங்கை மருத்துவர் கல்லூரிக்குள் நுழைந்த போது பத்திரிகைகளின் விமர்சனங்கள் உட்பட பல இடைஞ்சல்களை சந்திக்கவேண்டி இருந்து, அதனால் கல்லூரியின் ஐந்தாண்டுக் கற்கை நெறியை வேலைசெய்து கற்றுத்தேறுவதற்கு கடுமையாக உழைத்தனர். அடிப்படையில் பேகர்ப் பெண்கள் தொடர்பாக ஓர் புதிய பார்வையை ஏற்படுத்தினர். கடும் உழைப்பு, பழைமைவாதத்தை எதிர்க்கும் துணிச்சல் ஆகியவற்றின்மூலம் கல்வியில் பெண்களின் சம உரிமையை உறுதிப்படுத்தினர்
61

Postscript Acknowledgements
கிடைக்கப் பெற்ற குறைந்தளவான விபரங்களிலிருந்து பெண்டாக்டர்களின் வாழ்க்கைகள் வேறுபட்டிருந்தமையும் புலனாகின்றது. சில தொடர்ச்சியாகப் பதிவாளர்களாகவே நியமிக்கப்பட்டனர், சிலர் அரசாங்கம் ஏழைகளுக்காக அமைத்த காலணித்துவ மருத்துவசேவையின் வெளிநோயாளர் பிரிவுகளில் வேலைசெய்தனர், சிலர் பெண்கள் வைத்தியசாலையிலும் தனிப்பட்ட முறையில் நோயாளர்களுக்குச்சிகிச்சை செய்வதிலும் ஈடுபட்டனர். 1903க்கு பின் மருத்துவக்கல்லூாரிக்குள் நுழைந்த ஏனைய இன மாணவிகட்கு இல் பேகர் முன்னேடிகள் உதாரண புருகூடிர்களாக விழங்கினர். சமூதாயத்தின் ஏனையபிரிவால் மாற்றப்பட்டுவிட்டாலும், இம்முன்னேடிடாக்டர்கள் தமது சந்ததியினரால் நினைவு கூரப்படுகின்றனர்
இம் முன்னோடிகளின் குடும்ப உறுப்பினர்கள், கீர்த்தி மிக்கவர்களும், அசாதாரண பெறுமைசாலிகளுமான தமது முன்னோகளின் புகைப்படங்கள், சுவையான சில நிகழ்ச்சிகள், நினைவுகளை சேகரித்தும் பாதுகாத்தும் வைத்திருந்தமையானது. எமது அதிஸ்டம் என்றே செல்லவேண்டும். இதனை எழுதியவருக்கு பெரியமனதுடன் இவற்றை வழங்கியமையால், இலங்கைத்தீவின் சமூகவரலாற்றில் இப்பெண்டாக்டர்களின் பங்களிப்பை அங்கிகரிக்கவும் நினைவுகூரவும் முடிந்தது
"டாக்டர் அலிஸ் டி புவரும் முன்னோடிகளான சில பேகர்ப் பெண்டாக்டர்களும்." கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலான இலங்கைப் பெண்களின் வரலாற்றை வெளிக்கொணருதல் என்பது சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் திட்டத்தின் ஓர்பகுதியே ஆகும். பெண்களுக்கு வீட்டைப் பார்ப்பதும் திருமணம் செய்வதும் மட்டுமே அவர்களது கடமை என அவர்களை விலக்கிவைத்திருந்த நிலையிலிருந்து அவற்றை உடைத்துக் கொண்டு வெளிவந்த பெண்களின் வாழ்க்கைக் கதைகளை பதிவு செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்,
19ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலேயே பெண்கள் நவீன கல்வியைப் பெறத்தொடங்கினர். அத்துடன் சமுதாயத்தின் பிரதான ஓட்டத்திற்குள் நுழைந்தனர், ஆரம்பத்தில் தாதிப்பயிற்சி. கல்விகற்பித்தல் என்பவற்றில் இணைந்து பின் மருத்துவம், சட்டம் என எல்லாத்துறைகளிலும் தமது தடங்களைப் பதித்தனர்
இன்றைய சந்ததியினராகிய நாம் எத்துறையுமே பெண்களுக் மறுக்கப்படாமையைக் காண்கிறோம், ஆனால் ஆண்களுக்கு மட்டுமே
62

Page 42
என ஒதுக்கப்பட்டதுறைகளுக்குள் தடைகளை உடைத்துக்கொண்டு பெண்களுக்கும் வழியேற்படுத்திவிட்ட முன்னோடிகளான பெண்களை ஞாபகமறதி காரணமாக மறந்துவிடக் கூடும். இலங்கையின் முன்னோடிகளான பெண் மருத்துவர்களைப் பற்றி எழுதப்பட்ட இந்நூல் அவர்களைப் பெருமைப்படுத்தவும், அவர்களைப்பற்றிய விடயங்கள் அழிந்து போகாமல் பதிவுசெய்யப்படவேண்டும் என்பதற்காகவும் எழுதப்பட்டது.
காலனித்துவ இலங்கையில் பெண்டாக்டர்கள் பற்றிய ஆய்வைச் செய்ய என்னைப் பணித்தனர். எனது தனிப்பட்ட விருப்பத்தினாலும், குடும்பத்துடன் தொடர்புடையவுர் என்ற காரணத்தாலும் உடனடியாக ஏற்றுக் கொண்டேன். இலங்கையில் மருத்துவப்படிப்பில் தேறிய முதலாவது பெபண்ணும், காலனித்துவ இலங்கையில் வெற்றிகரமான தன்னை உருவாக்கிக்கொண்டவருமாக அலிஸ்டி புவர் எனது தந்தை வழியிலான பெருமைக்கும் மதிப்புக்குமுரிய அத்தையாவார் சின்னப்பேத்தியாவார்.
என்னுடைய பெருமைக்குரிய சின்னபேத்தி பற்றி எனக்கு ஞாபகமில்லை, இன்று நியூசிலாந்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எனது சகோதரியான டாக்டர் வீட்டே ஹேர்மொன், இங்கிலாந்தில் வசிக்கும் மைத்துனன் சால்ஸ் டி புவர் FRCS, MRCOG, -9, 35 Gu T if Llicts (65 விபரங்களைச் சேகரித்தேன். எனது சின்னபேத்தி பற்றிய தனிப்பட்ட நினைவுகளையும் சின்னபேத்தி மீது அவர்களுக்கிருந்த மதிப்புக்காகவும். அவர்கட்கு எனது மரியாதை மிக்க நன்றிகள். அவர்கள் எனக்குத் தந்துதவிய நிழற்படங்கள் இவ்வெளியீட்டுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. ஆரம்பகால மருதி துவக் கல்லுTரிநாட்கள் சமீ பந்தமான பத்திரிகைச்செய்திகளையும், தனது தாயாரான, டாக்டர் ராச்செல் கிறிஸ்தேபெல்ஸ், மோலியொட் பற்றிய நினைவுகளைத் தந்துதவியதற்கு திருமதி கிறிஸ்தோபெல் கரோலிஸ்க்கும் பற்பல நன்றிகள்.
நெல்குடும்பம், ஸ்பிட்டெல்குடும்பம் உட்பட பலரின் குடும்ப விபரங்களைப் பெறுவதற்கு டச்பேர்கள்சங்க சஞ்சிகைகள் உதவின. இவை புறக்கோட்டையில் பேகர்களின் குடியிருப்பு, அங்கு டி புவர் குடும்பத்தினரின் வாழ்க்கை முறை, அலிஸ் அவர்களின் இளமைக்காலம் ஆகியவற்றின் சுருக்கத்தைப்பெறவும் உதவியது.
பழைய சுவடிகளிலிருந்து மறக்கப்பட்டதும், சிதறல்களாக இருந்தவையுமான விடயங்களை தேசிய சுவடிக்கூடத்திலும், மருத்துவக் கல்லூரி ஆவணங்களிலிருந்தும் மிதுந்த சிரமத்துடன் திரு அஜித் குமாரசிறியும் ஏனையோர்களும் சேகரித்தனர். அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்
63

மிகுந்த ஆர்வத்தைத் தரக்கூடிய இவ் ஆய்வைச் செய்ய எனக்கு வாய்ப்பளித்ததும், இந்நூலுக்கு தனது பங்களிப்புகளையும் வழங்கிய குமாரி ஜெயவர்த்தனாவுக்கும் என் நன்றிகள். என்னுடைய இப்பணியில் அவர்மிகுந்த ஆர்வம் காட்டினார், கையெழுத்துப் பிரதியை தொஃகுப்பதிலும் பெரிதும் உதவினார்.
இதன் முதல்வரைபை ஓர் ஆய்வுக்கண்னோட்டத்துடன், படித்து, பலமணிநேரம் செலவிட்டு தொகுப்புகளில் செய்யவேண்டிய மாற்றம் பற்றி என்னுடன் விவாதித்து பிழைகள்திருத்தல, நகல் அச்சை எடுப்பதுவரை உதவிய டாக்டர் றிஹனா றஹீம் அவர்கட்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். பழைய நிழற்படங்களைத் திரும்பவும் அழகாக உருவாக்கித்தந்த நிஹால் பெர்னாண்டோ, லக்ஸ்மன் நடராஜா, மற்றும் இந்நூலை வெளிக்கொணர்வதில் உதவிய கருணாறட்ண அச்சகஊழியர் அனைவர்க்கும் என் நன்றிகள்.
டிலோரெய்ன் புரோகியர் கொழும்பு, மார்கழி-1994.
ஆசிரியரைப் பற்றி.
டிலோறெப்ன் புரோகியர் இலங்கையின் பேகள் இனத்தைச் சேர்ந்தவர். அவரது குடும்பம் பிரான்சிலிருந்து இங்குவந்த குடியேறியவர்களின் வம்சாவழியாகும். புரோகியர் குடும்பத்தின் முதாவது உறுப்பினர் 1777 இல் இலங்கைக்கு வந்தார்.
டிலோறெப்னின் முழுக்கல்வியையும் இலங்கையிலேயே கற்றார். அவரது தந்தையார் டாக்டர். R.L புறோகியர் இடமாற்றத்திற்குள்ளாகக்கூடிய அரசாங்க சேவையான அளவையாளர் துறையில் பணிபுரிந்ததனால் டிலோறெய்னின் ஆரம்பக்கல்வி பல வெளியூர்ப் பள்ளிக்கூடங்களிலேயே நடைபெற்றது. அவரது உயர்நிலைக் கல்வியை முதலில் கொழும்பு மகளிர் கல்லூரியிலும், பின் மெதடிஸ்ட் கல்லூரியிலும் பயின்றார். இவர் இலங்கை வானொலியில் பாடசாலைக்கான ஆங்கிலச் சேவையில் வசனகர்த்தாவாகவும் பின், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் அனைத்து ஆங்கில பேச்சுவழி நிகழ்ச்சிகட்கும் பொறுப்பாகவிருந்தார். 9 ஆண்டுகள் வானொலியில் வேலைசெய்த பின் டிலோறெப்ன் ஐக்கியநாடுகள் சபையின் அபிவிருத்தித்திட்டப் பணியகத்தில் திட்ட அலுவராக இணைந்து 16 ஆண்டுகள் பணிபுரிந்தார்
64

Page 43
பரவலாக இத்தீவடங்கும், பலவெளி நாடுகட்கும் இவர் பயணம் செய்துள்ளார். சிறுவயதில் பெற்றோருடன் பல ஊர்களுக்கும் சென்ற இவர் பின்னர் தந்தையுடன் பல பாகங்கட்கும் சுற்றுலா சென்றுள்ளார். ஐக்கியநாடுகள் சபைக்கு சேவைசெய்ய இணைந்ததும் அதன் தலமையகமான நியூயோர்க்கில் பணிபுரிந்தார். பாங்கொக்கிலுள்ள ESCAP மற்றும் பல தெற்காசிய நாடுகட்கும் கூட்டங்களுக்கும், மாநாடுகட்கும், பிராந்தியத்திட்டங்களை மேற்பார்வையிடவும் பயணம் செய்துள்ளார்.
இவர் ஐக்கியராச்சியத்திற்கும்,ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, யப்பான்,
அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, ஆபிரிக்காவின் சில பகுதிகட்கும் பயணம் செய்துள்ளார். டிலோறெய்ன்க்கு எழுதுவது ஓர் பொழுதுபோக்கு, இவருடைய விருப்பமான பகுதிகள், வரலாறுகளும் விழுமியங்களும், மக்களும், சுவாரசியமான இடங்களும் ஆகியவையாகும். டிலோறெய்ன் தனது சமூகம் இலங்கையில் பேகர்களின் வரலாறும், வாழ்க்கைமுறையும், காலனித்துவ இலங்கையில் குறிப்பிடத்தக்ககாலத்தில் அவர்களின் விழுமியங்கள் ஆகியனபற்றி சிறப்பாய்வு செய்துள்ளார். இவ் ஆர்வமே இலங்கையில் பேகர் சமுகப் பெண்கள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள இவரைத்தூண்டியது அதன் விளைவே இந்நூலாகும்.
65

REFERENCE
Barhydt Sally, Gandy, Judith and Less, Martha, eds (1979) Women Physicans of the World, Washington and London, Hemisphere Publishing Corporation.
Brohier, Delorain - A.C.E. Koch Memorial Oration No.4- 1990:The physioligical Society of Sri Lanka. "Medicine in the Dutch Period and the later contributions of the Burghers".
Brohier, R.L. (1984). Changing Face of Colombo, Lake House Investments.
Denham, E.B. (1912) Ceylon at Census of 1911 Colombo, Government Press.
Gooneratne, Yasmin (1968) English Literature in Ceylon 18151878.Tisara Prakasakayo, Sri Lanka.
Hollis, Patricia (1979). Women in Public. The Women's Movement 18501990 Ondon.
Hulugalle H.A.J. (1993), Dr. Mary Rutnam, A Canadian Pioneer for Women's Rights in Sri Lanka Colombo, Social Scientists ASSOciation.
Roberts, Michael (1989), Rahim Ismeth and colin - Thome, Percy, People Inbetween Vol. 1 Ratmalana, Sarvodaya Book Publishing Services.
Uragoda, G.G. (1987). A History of Medicine in Sri Lanka, Colombo Sri Lanka
medical Association.
Wanderstraaten, J.L. (1901) Surgeon of the Wilderness. The Biography of Richard Spittel, Colombo, Lake House Investments Ltd.
Wirasekera, Verona (1970), "The Medical College in my Time" in The Colombo Medical College Centenary 1870 - 1970, Colombo
66

Page 44

The Social Scientists' Association
§ሀR/ሃ4 800ያ ያዘ08
Topical and Controversial
Books on Ethnicity, History, Economics, Nationalism, Womens' Studies
The Story of SEestina Dias iš The Story of
Selestina Dias i Manel Tampoe
RS. 125f
INERISS: - ఖArళ్ల Unmaking the Nation
The Politics of laentity and
Tea Plantations in Crisis
P.P. Manikam History in Modern Sri Lanka
Rs. 100/-
Pradeep Jeganathan & Gadri Smail
RS. 400
Newton Gumasinghe Selected Essays Ed. SaSanka Perera
RS. 40Of- Traditions Versus
Misconceptions Romila Thapar RS. 75f
- Su Rya Bookshop
425/15, Thimbirigasyaya Road, Colombo 5. Te: 5O1339 Fax: 595563

Page 45
Cover background, Pettah around 1900. Cover designed by Nelun Harasgama N
 

ISBN 955-9102-20-6
Printed by adaraja Karunaratne & Sons Ltd.