கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் இனங்கள்

Page 1
ஆக்கியே எச். C 왕g O
தமிழா
af. SFJ 66
 
 

ான் :
புளுவர்
AG DR
னழுத்து

Page 2


Page 3

பென்நூலக ஆறு பென்சுப்பதிப்பு இல. 113.
மக்கள் இனங்கள்
ஆக்கியோன்:
எச். ஜே. புளுள்ர்
தமிழாக்கம்:
ச. சரவ ணமுத்து
驻964
அரசகரும மொழித்திணைக்கள வெளியீட்டுப் பிரிவினரால் இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டது.

Page 4
TBE RACES OF MANKIND
by
Professor E. J. Fleure
Translated and Published by the Government of Ceylon
by arrangement with
Ernest Benn Limited, Bouverie House, Fleet Street,
London, E. C. 4.
இலண்டனிலுள்ள எணெத்து பென் (வரைவுள) கம்பனியாரின்
இசைவுபெற்று இலங்கை அரசாங்கத்தாரால் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.
எல்லா உரிமையும் இலங்கை அரசாங்கத்தார்க்கே.
முதற்பதிப்பு 1964

முன்னுரை
பேராசிரியர் எச். ஜே. புளூவர் ஆக்கிய “ மக்கள் இனங்கள் ” எனும் இந்நூல் இத்திணைக்களத்தினல் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட நூல் களின் தொடரில் ஒன்ருகும். மனிதனின் கூர்ப்பும், பின்னர் புவியியற் றடைகள் அல்லது வாய்ப்புக்களினல் தீர்மானிக்கப்பட்டனவும் ப்ல்வேறு திசைகளிற் சென்றனவுமான நகர்வுகளும், கற்றுப் பயனடையக்கூடிய கவர்ச் சியான ஒரு விடயமாயிருந்து வந்திருக்கின்றன; இவை என்றும் இவ்வாறு தொடர்ந்திருக்கும். உலகிலுள்ள முக்கிய இனங்களின் கூறுகள் தோற்று வதற்குக் காரணமாயிருந்த இந்த நகர்வுகள் பற்றிச் சுருக்கமாக விளக்கு வதே இந்நூலின் நோக்கமாகும்.
இந்நூலை மொழிபெயர்க்கும் உரிமையை எமது திணைக்களத்திற்கு அளித்தமைக்காக இதன் வெளியீட்டாளர்களாகிய இலண்டன், ஏனெத்து பென் (வரைவுள) கம்பனியாருக்கு இத்திணைக்களம் பெரிதும் கடமைப் பட்டுள்ளது.
இப்பதிப்பினைத் திருத்துவதற்கு உதவக்கூடிய கருத்துரைகளையும் யோசனைகளையும் வரவேற்கிருேம்.
ஆணையாளர், அரசகருமமொழித்திணைக்களம்.
அரசகரும மொழித்திணைக்களம், (வெளியீட்டுப் பிரிவு), ܐ கொழும்பு 7,
1962.

Page 5

உள்ளுறை
அதிகாரம் பக்கம்
1 மனித இனங்கள் a ... 1 2. ஆபிரிக்காவிலுள்ள இனம் ... 18
3. தென் ஆசியாவுக்கூடாகப் பசுபிக்கு வரை ... 30
4. ஆசியாவில் வடக்கு, வடமேற்கு நகர்வுகள் ... 37
5. ஆசிய பருவக்காற்று நிலங்களிலும் USFLS)disg)
முள்ள மக்கள் 0. .. . . 46
6. அமெரிக்கா 8 m ... 53
7. ஐரோப்பாவும் மத்தியதரைப் பிரதேசமும் ... 58

Page 6

மக்கள் இனங்கள்
1 ஆம் அதிகாரம்
மனித இனங்கள்
பெரிய அளவிற் பயன் படுத்தக்கூடிய வகையில், யேமிசு உவர்ட்டு என் பார் கண்டு பிடித்த நீராவி எந்திரமானது பல்வேறு இனங்களையும் பிர தேசங்களையுஞ் சேர்ந்த மக்களிடையே தொடர்புகளைப் பெருக்கியுளது. இன்று, நாம் கறுத்தவராயிலென், மஞ்சணிறத்தவராயிலென், வெள்ளைய ராயிலென், எல்லோரும் ஒரு குலத்தவர் என்ற உணர்வு நாம் விரும்பி லென் விரும்பாவிடிலென்-முன்னரிலும் நன்கு வேரூன்றியுளது. பெரிய அளவிற் கைத்தொழில் வலு பயன்படுத்தப்படுவதன் விளைவாக வெப்ப நிலங்கள் மூலப் பொருள்களை, கைத்தொழிலிலீடுபட்டிருக்கும் மக்களுக் காக, முக்கியமாக இடைவெப்பப் பிரதேசங்களிற் பெருகியிருக்கும் மக்களுக் காக, உற்பத்திசெய்யும் நிலங்களாக மாறுகின்றன. இவ்விடயம் இந்திய அரசியற்றலைவர்களுக்குப் பெரும் பிரச்சினையாகவிருக்கிறது. குடித்தொகை பெருகியுள்ள அந்நாடு இவ்வேலையிலிடுபட வேண்டுமா என்ற போராட்டம் அவர்கள் மனதில் எழுந்துள்ளது. சிலவேளைகளில் அந்நாட்டின் விலை மதித்தற்கரிய பண்பாட்டுப் பாரம்பரியங்களும் இதனுல் பாதிக்கப்படுகின்றன. இது இப்பிரச்சினையின் ஒரு முக்கிய அமிசமாகும். யேமிசு உவாட்டுக் கண்டு பிடித்ததைத் தவிர, உலூயி பாச்சர், யோசேப்பு இலித்தர் என் பாரும், அவர்களைத் தொடர்ந்து வேறுபலரும் கையாண்ட எனைய கண்டு பிடிப்புக்களும் ஐரோப்பியர் தூர இடங்களுக்கு, முக்கியமாக மத்திய கோட்டு நாடுகளுக்குச் செல்லும்போது எதிர்ப்பட வேண்டியிருந்த அபாயங் களைக் குறைத்துவிட்டன; இதன் விளைவாக மனிதன் இயற்கையை நம் பிக்கையுடன் பெரிய அளவிற் கட்டியாளக்கூடிய நிலை எற்பட்டது. ஆயி னும் நரம்புக்கோளாறுகள் எற்படுவதையும், உடல் நலக்குறைவு காரண மாக ஐரோப்பியக் குழந்தைகள் ஐரோப்பாவுக்குத் திரும்பக் கொண்டு வரப்படுகின்றனர் என்பதையும் அறியும் பொழுது, எதிலும் வெற்றி யையே எதிர்பார்ப்பவர்கள் கூட, மனிதன் இயற்கையை வென்றுவிட்டான் தான எனச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஆனல் பல்வேறு இன மக்களுக்கிடையிலுள்ள தொடர்புகள் கூடிக்கொண்டும், முக்கியமாக ஐரோப்பியர் தாம் நினைத்தவாறு சென்று வெப்ப நாடுகளிலுள்ள வெள்ளையரல்லாத மக்களின் இடங்களில் அமர முடியாமலும் இருக்கிற தாயின், அப்பிரதேசங்களிற் காணப்படும் இடர்ப்பாடான சூழ்நிலைகளில்

Page 7
2
வாழ்ந்து வரும் மக்களைப் பற்றி எம்மாலியன்ற அளவு நன்கு அறிந்து கொள்ள வேண்டியது எமது கடமையாகும். இவ்வாறு அறிந்துகொள்வதன் மூலம் ஒருவர்க்கொருவர் நன்மை விளைவிக்கக்கூடியவாருன ஒரு செய் முறை ஒத்துழைப்பை வகுத்துக் கொள்ளக்கூடியதாயிருக்கும். இத்தொடர் புகள் ஒரு சாராருக்குத் தீங்கு விளைவிப்பனவாயின் மறுசாராருக்கும் தீங்கு விளைவிப்பனவாகும் என்பதை நாம் நம்பலாம். ஆகையினல் மக்கள் இனங்கள் பற்றிய ஆராய்ச்சி மூலாதாரமான முக்கியத்துவம் வாய்ந்ததும் பெரும் பயன் தரக் கூடியதுமாகும் ; விஞ்ஞானவியல் நன்மையும் அதனல் உண்டு.
இயற்கைக்கும் மனிதனுக்குமுள்ள ஒற்றுமை பற்றிய சாள்சு இடாலினின் அகக்காட்சி மனிதனின் எண்ணங்களில் எழும் பெரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவுவதாயிருக்கிறது ; சமூக, மத, கல்வி சம்பந்தமான விடயங்களில் எமக்குள்ள மனநிலைகளை அது மாற்றுகிறது ; பொதுவாக மனித இனப் பிரச்சினைகளுக்கு அதனைப் பிரயோகிப்பது நாளுக்கு நாள் கூடிக்கொண்டும் வருகிறது.
இப்பொழுதுள்ள மனிதவகைகள் யாவும் மனித இயல்புகளையே பெற்றி ருந்த ஒருவகைப் பூர்வீக மனிதரிலிருந்தே வந்தவை என்பதில் இப் பொழுது சந்தேகமில்லை ; உலகில் இங்குமங்குமாக நகருங்கால் கூர்தல் முறையாக அப்பூர்வீக மனிதவகையினரிலிருந்து தோன்றியவர்களே இப் பொழுதுள்ள மனித வகையினர். அவ்வகையான நகர்வில் இப்பொழு துள்ள ஆபிரிக்க நீகுரோவர், ஐரோப்பிய “ வெள்ளையர் ’, வட சீனவி லுள்ள “மஞ்சள்’ நிற மக்கள், மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை அறியக் கூடியவாறு அந்நகர்வுகள் பற்றி ஆராய்வதே எமது கடமையாகும்.
கூர்தல் பற்றிய ஆராய்ச்சிக்கு எமது பூர்வ கால முன்னேரின் மாதிரி வடிவங்கள் மிகச் சிலவே எமக்கு இப்பொழுது கிடைக்கக் கூடியனவா யிருப்பது எமது துரதிட்டமே. கிடைக்கும் மாதிரி வடிவங்களும் தொடர்ச்சி யானவையாயில்லை. சிலவற்றுக்கிடையில் பெரும் வித்தியாசங்களுண்டு. இதன் காரணமாக இவ்வாராய்ச்சியில் எத்தனையோ விடயங்களை, இப்போ தைக்காயினும், ஊகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எனினும் இப் பொழுது கிடைக்கும் பழைய எலும்புக் கூடுகளில் அரைப்பங்குதானும் ஒரு தலைமுறை காலத்துக்குமுன் கிடைக்கக் கூடியனவாயிருக்கவில்லை யாதலாலும், மனிதன் உபயோகித்த கருவிகள், எனைய ஆதாரங்கள் முதலியன இடையருதும் கூடிய சித்தியுடனும் தேடப்பட்டு வருதலினலும் வருங்காலத்தில் மேலும் பல விடயங்கள் வெளிவருமென நாம் எதிர் பார்க்கலாம்.

3
பூர்வ மனிதனைப்பற்றி இதுவரை எதுவும் தெரியாதிருப்பதனல் மனி தரை “இனங்கள் ” எனும் தொகுதிகளாக வரைப்படுத்தியும், உட்பிரிவு களாகப் பிரித்தும் ஆராய்ச்சி செய்யத் தொடங்குவது இயற்கையே ; அத்துடன் இரு இனங்கள் ஒன்றேடொன்று நெருங்கிய இனத் தொடர் புள்ளனவாயிருப்பதேயன்றி, அவை வேறென்றுடன் இனத்தொடர்புடை யனவாகாவென்பதையும், அவை ஒரு பொதுவான பரம்பரை அல்லது தொகுதியான பரம்பரையினரிலிருந்து வந்தவர்களேயென்பதையும் கருத் தில் வைத்திருத்தல் வேண்டும். உண்மையில், மனிதரிடை இனம் எனப்படும் பாகுபாட்டுக்கும் மிருகங்கள் அல்லது தாவரங்களிடை இனம்" எனப்படும் பாகுபாட்டுக்கும் உள்ள ஒத்த தன்மைகளை மிகைப்படுத்திக் கூறும் இயல்பு சிலரிடமுண்டு. இவ்வாறு மிகைப்படுத்திக் கூறுவதில் அபாயமுண்டா ? ஆம். மனிதன் மிருகங்களிலிருந்து பெரிதும் வேறு பாடுடையவனக விளங்கக்கூடிய திறைமைகளைப் பெற்றுள்ளமையினல் அபாயமுண்டு. மிருகங்கள் ஒருவகையான காலநிலையுள்ள இடத்திலிருந்து வேறுபட்ட ஒரு காலநிலையுள்ள இடத்துக்குப் பெயர்ந்து சென்றல் அக்கால நிலைக்கேற்ப அவை தம் உடலை மாற்றிக் கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக, சூடான இடத்திலிருந்து குளிரான இடத்துக்குச் சென்ருல் குளிரைத் தாங்குவதன் பொருட்டுத் தம் உடலில் அடர்த்தியாக உரோமத் தைப் பெறுதல் வேண்டும். இதனலேயே மிருகங்கள் இடம்விட்டு இடம் பெயர்வதற்குப் பல தலைமுறைகளாகும் ; அவ்வளவு தாமதமாகவே பெயர்கின்றன. ஆனல் மனிதனே அவ்வாறு சூடான இடத்திலிருந்து குளிரான இடத்துக்குப் பெயரவேண்டுமாயின் தன் உடலில் மேலதிகமான ஒரு தடித்த மேற்சட்டையோ, போர்வையோ அணிந்துகொண்டு அல்லது தன் தோலில் எதாவது என்ணெய்ப்பசை பூசிக்கொண்டு மிக விரைவாகச் சென்று விடுகிறன்.
சுருக்கமாகச் சொல்வதானல், மனிதர் மிருகங்களிலும் பார்க்க எளிதாக வும், காலநிலைகள், மற்றும் காரணங்களால் அதிகம் தடைப்படுத்தப் படாமலும் இடம் பெயர்ந்துவிடுவர் ; மனிதர் தம் உண்டி, உடைகள், உதவிக்கு வேண்டிய கருவிகள், மிருகங்கள் ஆகியவற்றைத் தேவைக் கேற்றவாறு மாற்றிக் கொள்வர். இத்தகைய திறமையும் வாய்ப்பும் மிருகங்களுக்கு இல்லை. அநேகமாக, வெவ்வேறு உபகரணங்களும் அமைப்பு களுமுள்ள தொகுதியான மனிதர் உலகில் ஆட்டிக்குக் கண்டம் தவிர்ந்த எனைய பகுதிகளிலெல்லாம் வசிக்கின்றனர். ஆஞல் மிருகங்களும் இவ்வாறு எங்கும் பரந்துள்ளனவென்று சொல்லமுடியாது. மனிதருடன் சென்ற ஒரு சில மிருகங்கள் மாத்திரம் பரந்துள. மிருக வகைகள் தனிப்பட்ட இயல்புகளுள்ள தாயகங்களில் மாத்திரம் வசிக்கின்றன. மனித இனங்கள் பெயர்ந்து செல்லும் ஆற்றல் காரணமாக, உலகமெங்கும் பரந்தும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் கலந்தும் பின்னிப்பிணைந்து விடுகின்றன.

Page 8
மிருக இனங்களின் சில தரத்தின வேறு தரத்தினவற்றுடன் சில வேளைகளிற் சேரக்கூடும், ஆனல் அவ்வாறு சேர்ந்தால் அவற்றை வேருகத் தெரிந்துகொள்ளலாம் ; அத்துடன் அவை அநேகமாகக் கலந்த உருப் பெறுவதில்லை. ஆனல் மனிதரில் வகைகள் அல்லது இனங்கள் பொது வாகக் கலந்து உருவாகக்கூடியன. இவ்வாறு இனங்கள் கலப்பதனல் மலட்டுத்தன்மை எங்காயினும் உண்டாவதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட பலர் வெவ்வேறு இனப்பெற்றர் கலப்புற்றுப் பிறந்தவர்களேயென்பதை இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறிருப்பதனல் மனித இனங்களை வகுத்து அவ்வகுப்புகளை ஆதார மாகக்கொண்டு எமது ஆராய்ச்சியை நடத்தும் யோசனைக்கு முழுமதிப்பும் கொடுக்கமுடியாது. வட-மேற்கு ஐரோப்பா, வெப்ப ஆபிரிக்கா, வடசீன ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்களில் ஒரு பிரதேசத்தினர் மற்றைப் பிர தேசத்தினரிலிருந்து பெரும் வித்தியாசமுள்ளவர்களாகக் காணப்படுவது உண்மையே; “ தெளிவாக வேறுபட்ட மாதிரி' களை வகுப்பதனல் (மேற்கூறிய மூன்று மாதிரிகளும் இவற்றுள் அடங்கும்) பிரயோசன முண்டெனினும் இவையும் ஒன்றுடனென்று இணைகின்றனவெனக் கூற லாம். மனிதன் தம் ஆதித்தாயகங்களிலிருந்து நகர்ந்தமை பற்றிச் சிந்தித்து, அந்நகர்வு ஒவ்வொன்றும் எத்தன்மையது என்பதையும், காலப்போக்கில் அந்நகர்வின் தன்மையிலுண்டாய மாற்றங்களையும் தீர் மானிக்க எத்தனிப்பது நன்றகும். நகர்வுகள் நீண்ட காலமாகத் தொடர்ந்து நடைபெற்றதோடு பல மாதிரிகள் கலப்புற்று மிருக்கலாம் ; அதனல் இவ்விடயம் மிகவும் சிக்கலானதே ; ஆயின் வெப்ப ஆபிரிக்கா, அவுத்தி ரேலியா, அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா ஆகிய பெரும் பிரதேசங்களுக்கு மனிதர் நகர்ந்தது அப்பிரதேசங்களிலுள்ள காலநிலை, வாய்ப்புக்கள் ஆகியவற்றின் வசப்பட்டேயாகும். இவ்வாறு நகர்ந்து சென்ற மக்கள் தம்முடன் கொண்டு சென்ற சாதனங்கள்-அச்சாதனங்கள் எண்ணங் களாகவோ, கருவிகளாகவோவிருக்கலாம்-காலத்துக்குக் காலம் வேறுபட்டு அவ்வவர்களுடைய ஊழையும் வேறுபடுத்தின. உலோகங்களோ, வீட்டு மிருகங்களோ, பயிர்வகைகளோ இல்லாது வட-மேற்கு ஐரோப்பாவுக்கும் அவுத்திரேலியாவுக்கும் பூர்வகாலத்தில் நகர்ந்தவர்களுக்கும், உலோக காலத்தின் முற்பகுதியில் மேற்கு ஐரோப்பாவுக்கு நகர்ந்தவர்களுக்கும், கமத்தொழிலும் மற்றும் பல தொழிற்றிறமைகளும் தெரிந்துகொண்டு அவுத்திரேலியாவுக்குச் சென்ற நவீன குடியேற்ற வாசிகளுக்குமிடையில் இவ்வித்தியாசங்கள் பெரிய அளவிலுண்டு. இதிலிருந்து, ஒரே பிரதேசத் துக்குப் பல்வேறு அனுபவங்களுடன் செல்லும் தொகுதியினருக்குப் பல வகைப்பட்ட சூழ்நிலைகள் தென்படுவதைக் கவனிக்கலாம். மனிதன் சூழ் நிலைகளால் ஆக்கப்பட்டவனென இலகுவிற் சொல்லிவிட முடியாது ; அவனுடைய உளவாற்றலும் பொருளாற்றலுமே, இவ்வாற்றல்களை அவன் மிகத் தூரத்திலிருந்தோ, பல காலமாகவோ ஈட்டியிருக்கலாம், கடைசி

முடிவைப் பெரிய அளவில் தீர்மானிக்கின்றன. ஒரு பிரதேசத்திற் பல சாத்தியக் கூறுகள், வாய்ப்புக்கள், இடர்கள் ஆகியன இருக்கலாம்; இவற்றை மனிதன் பலவழிகளிற் கையாளலாம் அல்லது அவற்றுட் புதியனவற்றைப் புறக்கணித்துப் பழைய முறைகளையே பின்பற்றலாம்.
புராதன எலும்புக்கூடுகளை ஆராய்ந்து பார்த்தபொழுது முன்னிருந்த சில மனிதவகையினர் இப்பொழுது வாழும் மனிதவகையினரிலிருந்து சில முக்கிய விவரங்களில் மாறுபடுவதாகக் காணப்பட்டது. அத்தகைய மனிதர் இப்பொழுது எங்காயினும் வசிப்பதாகத் தெரியவில்லை ; அத் துடன் அவர்களுடைய குருதியிற் பெரும்பகுதி இப்பொழுதுள்ள மனித வகையினர் உருவாகுவதிற் கலந்துள்ளது எனவும் கொள்ள முடியாது. இப்பொழுதுள்ள மனிதர், அவர்கள் எசுக்கிமோவர், சியூலு, கந்திநேவியர் ஆகிய எவராயினும் சரி, ஒரு பொதுவான பரம்பரைத் தொகுதியிலிருந்து, ஆனல் பலவித மாற்றங்களடைந்து, வந்தவர்களென்று தெரிகிறது. இப் பரம்பரைத்தொகுதி நியாந்தோல் இனம் எனப்படும் வகைக்கோ, உண் மையான எலும்புக்கூடுகளிலிருந்து இதுவரை அறியப்பட்ட பிலிதுடவுன் அல்லது வேறு எவ்வகைக்கோ சேர்ந்ததாகக் காணப்படவில்லை. அழிந்து விட்ட மனித உருவங்களின் பழைய எலும்புக்கூடுகள் நியாந்தோல் இனத்தைச் சேர்ந்தவை. வருங் காலத்திற் புதிய வகைகள் கண்டுபிடிக்கப் படும் என எதிர்பார்க்கலாம்.
நியாந்தோல் இனம் எனப் பரும்படியாகத் தொகுத்துக் கூறப்படும் பிதகந்துரோபுசு, பிலிதுடஷன் பெண், ஈதெல்பேக்கு அலகு, உரொடேசிய மனிதன் ஆகிய பல மாதிரிகள் மிகப் புராதன மனிதவகை அல்லது சரியான மனிதர் என்று சொல்லமுடியாத ஒருவகையின் சிலபகுதிகளையே குறிக்கும் மாதிரிகளாகும். இவ்வகைகள் யாவும் அழிந்து விட்டமையினல் இவை பற்றி ஆராய்வதை விடுத்து, நவீன மனிதனின் பொதுவான பரம்பரையினர் பற்றிய பொதுப்படையான விரவங்களை முதலில் அறிய முற்படுவோம்.
பின்வருமாறு ஒரு கருதுகோளை வகுத்துக்கொள்வது பயனுடைத் தாகும். மனிதர் தோன்றுவதற்குமுன், இது மிகத் தொலைவான காலத் திலாயிருக்கலாம், வாலில்லாக் குரங்கு இனத்திலொன்று மரத்திற் சீவிப் பதைக் குறைத்துப் பெரும்பாலும் நிலத்திலேயே வசித்து, உருவத்திலும் பருத்துவந்தது. இதேகாலத்தில் காட்டிலேயே தங்கியிருந்த அவ்வினத்தின் சந்ததியினரே இப்பொழுது மத்தியகோட்டுக் காடுகளிற் காணப்படும் கொரில்லா, சிம்பன்சீ, ஒராங்கூட்டாங்கு, சிபன் எனப்படும் வகைகளாகும். மனிதனுக்கு முன்னேடிகளாகவிருந்த குரங்கு வகையின புற்றரை மிருகங் களாக மாறின. ஆதி மனிதன் காடுகளை அழிக்கத் தெரியும்வரை, அல்லது இப்பொழுது கந்திநேவியாவிலும் சேர்மானிய நிலங்களிலும்

Page 9
நடைபெறுவதுபோல் மனிதன் அவற்றைத் தன் கட்டுப்பாட்டுட் கொண்டு வரத் தெரியும்வரை, அவை அவனுக்கு எதிரிகளாகவேயிருந்திருத்தல் வேண்டும் ; அவ்வினத்தின் பருமன் கூடியதாலும், அனேகமாக நிலத் திலேயே அவை வசித்துவந்தமையாலும் கருத்தரித்திருக்கும் காலம் எழு மாதத்திலிருந்து ஒன்பதுமாதமாகக் கூடியது ; இவற்ருல் மேற் கூறப்பட்ட குரங்கினங்களிற் சில அல்லது எல்லாமே பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் ; இது மனிதனின் வரலாற்றில் ஒரு முக்கிய உண்மையாகும். இதனல் பிரசவகாலப் பொறுப்புக்கூடிப் பெரும் விளைவுகளுமேற்பட்டன.
வாலில்லாக் குரங்குகள் இறைச்சியுணவு சிறிது உண்கின்றன ; ஆனல் அவை பெரும்பாலும் தாவர உணவிலேயே தங்கியிருக்கின்றன. புன் னிலங்களில் வசித்த பூர்வ மனிதர் பெரும்பாலும் விலங்கு உணவையே, நெடுங்காலமாகப் பச்சையாக, உண்டுவந்தனர். மிருகங்களை, அவை பெரி யனவாயினும் சிறியனவாயினும், வேட்டையாடியே அவ்வுணவைப் பெற்ற னர். பெண்கள் இவ்வேலைகளில் முன்னரிலும் பார்க்கக் குறைவாகவே ஈடுபடக் கூடியதாயிருந்தது ; இதற்கு மேற்கூறிய பொறுப்பு ஒரு காரணமாகும். மற் ருென்று, பிரசவத்துக்கு முன்னுள்ள மேலதிக இரண்டுமாத காலமானது குழந்தை தலை நிமிர்த்தப் பழக நீண்டகாலமெடுக்கச் செய்வதோடு, நிமிர்த்துவது கடினமானதாக ஆக்கியும் விடும். பின்னர் ஆண்களுக் கும் பெண்களுக்குமிடையில் தொழிலைப் பிரித்துக் கொள்ளும் இயல்பு ஏற்பட்டது. வேட்டையாடுவதும் பொருள் சேகரிப்பதும் ஆண்களின் வேலை களாகும். உணவு திரட்டுதல், பிள்ளைகளைப் பேணுதல் முதலிய வேலைகளோடு வேட்டையாடிப் பெற்ற பொருள்களைத் தயாரிப்பதிலும், மிருகங்களின் தோலைப் பிள்ளைகளும் கணவனும் தானும் உடையாகப் பயன்படுத்தப் பழகிக்கொள்வதுடன் கணவனுக்குத் துணையாகவுமிருந்து சமூக முக்கியத் வம் பெறுவதே பெண்ணின் வேலைகளாகும். இத்தகைய தொழிற்பிரிவு காரணமாகவும் உணவுப் பொருள்கள் ஒழுங்காகக் கிடைத்துவந்தமை யினலும் குழந்தைகள் கூடியகாலம் பேணப்பட்டு வந்தனர். அதனல் குழந்தைகளின் தலையோடு கடினமாவதிற்ருமதமேற்பட்டு மூளை கூடிய அளவு வளர்வதற்கும், அவர்கள் கூடிய அளவு விளையாடுவதற்கும் வசதி யேற்பட்டது. இவற்றின் பலனய்த் தீக்கல் பொளிதல், தீ உண்டாக்கலும் தீயைத் தொடர்ந்து வைத்திருத்தலும் போன்ற கலைகளைக் கற்றுக்கொள்ள வும், கூடிய அளவு நிமிர்ந்து நடக்கவும் வழி பிறந்தது. தீக்கல் பொளி தலுக்கு வேட்டுவரின் ஒய்வுநேரங்கள் பெரிதும் உதவின. வாழ்க்கையி லுள்ள இவ்வியல்புகள் யாவும் மேற்கூறப்பட்ட அழிந்துபோன மனித வகையினரிடமும் இருந்திருக்கலாம். மனிதன் இவ்வாறு கூர்தலுற்றது ஒரு குறித்த காலத்தில் அல்லது பிரதேசத்தில் நிகழ்ந்தது என்று கூற நாம் துணியவில்லை. அவன் முதலில் புன்னிலத்தில் வாழ்ந்தவன் என்று மாத்திரம் கொண்டு, பின் நவீன மனிதவகைகள் எவ்வாறு தோன்றின என்பதை விளங்கிக்கொள்ள முனைவோம். இவ்வகையினரில் ஒரு சில

மாதிரியினர் தவிர்ந்த ஏனையோர், நிமிர்ந்த நிலையுடையவர்களாகவோ, ஏறக்குறைய அந்நிலையடைந்தவர்களாகவோ இருந்ததோடு, எதியற்றுசி மிது அவர்களின்படி, திண்மத்தோற்றங் காணத்தக்க திருத்தமான பார் வையுடையவர்களாகவும் கைகள் வாய்க்குக் கிட்டக் கொண்டு வரும் பொருள்களின் தோற்றத்தை மனதிற் பதித்துக்கொள்ளும் ஆற்ற லுள்ளவர்களாகவும் இருந்தனர். இதன் காரணமாகவும் மேற்குறிப் பிட்ட கூடிய பராமரிப்புக் காரணமாகவும் மூளை வளர்ச்சி, முக்கியமாக முன் மூளையின் வளர்ச்சி, கூடியது. இவ்வளர்ச்சி பின்னர் தலையோட்டு வளர்ச்சிக்கு உதவியது. நவீன மனிதரின் மிகமுந்திய மாதிரிகளிலிருந்து இதனையறியலாம். வளர்ந்த தலையோடு, அலகை மேலுங்கீழுமாய் அசைக் கும் பெரும் கன்னத்தசைகள் இருபக்கமும் தொடுத்திருப்பதற்கு உதவு கிறது. பருத்த அலகுகளுடைய நவீன மனிதனின் முன்னேடிகளின் பாலிய வாழ்க்கையிலிருந்தே இக்கன்னத் தசைகள் மிகவும் முக்கியமான வையாயிருந்தன ; அவர்கள் அரைப்பங்கு பச்சையாகவோ, முழுதும் பச்சையாகவோவுள்ள இறைச்சியுணவைக் கடித்திழுத்து உண்ண இவை பெரிதும் உதவின. கூடிய வளர்ச்சியுற்ற மூளையைச் சுற்றியுள்ள தலையோட் டின் அகலம் தடையின்றிக்கூட முடியாதுபோக நீளப்பக்கமே பெரும் பாலும் வளர்ச்சியடைந்தது. அதனல், நவீன மனிதவகையைச் சேர்ந்த முந்திய மனிதரில் நீண்ட தலையுள்ளவர்களும், கன்னம் செங்குத்தாகச் சரிந்திருக்குமாயின் அத்தலை ஒடுங்கி உயர்ந்துள்ளவர்களும், அதாவது முக்கோணச் சுவர் முகடுபோன்ற தலையுள்ளவர்களும், பலர் வசித்திருக் கின்றனர். சில வேளைகளில் இவர்களின் தலைப்பக்கங்கள் தலையோட்டின் நடுக் கோட்டிலிருந்து சிறிது தூரத்தில் செங்குத்தாகச் சரிந்து செல்கிறது. அதன் பின்தலையோடு அதிக உயரமில்லாதும் ஒடுக்கமாகவும் இருக்கும். ஆனல் இவற்றிற்கு முந்திய வகைகளில் தலையோடு வழக்கமாக அதிக நீளமாகவிருந்திருக்கிறது.
எனினும் சில மனிதவகையினர், விகித சமப்படியிருக்க ஒலிண்டியதிலும் பார்க்கக் குறைந்த நீளமுள்ள சிறு தலைகளுடன், டித்கோட்டுக் дѣп09 களில் வசிக்கும் சில குறள் மனிதர்போன்று, பூேஜ்கூறியவாறு மேலதிக நீளமில்லாது எஞ்சியிருந்தவர்களின் వ్యక్ష அழிந்து விட்ட மனிதவகைகளைச் சேர்ந்த தனிப்படிள்ே பலர் ஒடுங்கிய
தலையுடையவர்களாயிருந்தனரென அடித்தி, அதிக மின்றி, கூறப் படுகிறது. ஆனல் அளவுகளை ஒப்பி ர்ர்க்க வுேண்ூாயின் அவ்வகை களின் பெரும் கட்புருவ அளிகிகளை நீக்குதிவேண்டும் ; அவ்வாறு
நீக்கிவிட்டுப் பார்த்தால் அழிந்துவிட்ட வகையிலுமனிதர், பெரும்பாலான வாலில்லாக் குரங்கினங்கள் போல, ஆனல் திக்ாரில்லா வகைகளில் ஒரு வகை நீங்கலாக, ஏறக்குறைய வட்டத் தலைகளையுடையவர்களாகவே காணப் படுவர். எப்படியாயினும், தகுதியான தற்கால மனித வகையினருள் நீண்டு, அநேகமாக ஒடுங்கிய, உயர்ந்த தலைகளையுடைய சிலரும், அறு

Page 10
8
கூலமற்ற சூழ்நிலைகளில் வாழ்ந்து இவர்களிலும் பார்க்கச் சிறியனவும் வ்ட்ட வடிவுடையனவுமான தலைகளையுள்ள வேறு சிலரும் இருந்திருக் கின்றனர் என்பதைக் கருத்திற் கொள்ளவேண்டும். கைகளை அதிகம் உபயோகிக்கவும், ஏறக்குறைய நிமிர்ந்த நிலையில் நடக்கவும் பழகிய தோடு உணவு சமைத்துண்ணவும் பிள்ளைகளைப் பேணவும் தொடங்கவே அலகுகளும் கட்புருவங்களும் வளர்வது குறையைத் தொடங்கியிருக்கிறது. முன்னர் இவ்வளர்ச்சி பிற்காலத்திலேயே காணப்பட்டது. பெண்களுக்கு இவ்வளர்ச்சி இல்லாமலே போய்விட்டது. ஆண்களிலும் பார்க்கப் பெண் களில் இவ்வளர்ச்சி குறைவாகவேயிருக்கும். ஆண்களில் இவ்வளர்ச்சி மிகச்சிறிய அளவிலேயே இப்பொழுது காணப்படுகிறது.
தற்கால மாதிரியான மனிதன் எங்கே தோன்றினன் ? எப்பொழுது தோன்றினன் ? இக்கேள்விகளுக்கு விடை காணுதல் வேண்டும். மனித இனங்களைப் பற்றிய உண்மைகளை அறிவதற்கு உதவியாக இவ்விடயம் பற்றிச் சில கருதுகோள்களை வகுத்துக் கொள்ளுவது அவசியமாகும். மனிதனின் மிகமுந்திய அடையாளங்கள் தென்-மேற்கு ஐரோப்பாவிலும் வட-மேற்கு ஆபிரிக்காவிலுமே காணப்பட்டன. இவை, பனிக்கட்டித் தகடு களிலிருந்து ஐரோப்பா கடைசியாக விடுபட்டுக் கொண்டிருந்த காலத்தைச் சேர்ந்தவையாகும். நியாந்தோல் இனம், பனிக்கட்டியுடன் கூடிய நிலை மைகளிற் பிழைத்திருந்து பணிக்கட்டி நீங்கவே அழிந்து விட்டதாகத் தோற்றுகிறது. புதிய மாதிரிகள் ஆபிரிக்காவிலிருந்தே ஐரோப்பாவுக்கு வந்திருத்தல் வேண்டும். பனிக்கட்டித்தகடுகள் ஐரோப்பாவைக் குளிராக்கி வைத்திருக்க, அவற்றிற்கு மேலிருந்த குளிர்வளி மேற்குக் காற்றுக்களை அங்குவரவிடாது தள்ளிவிட, அக்காற்றுக்கள் சகாரா, அரேபியா என இப்பொழுது சொல்லப்படும் நிலப் பரப்பில் வீசின; அப்பொழுது மாரிகால மழையும் புல்லுமுள்ளதாகவிருந்த இப்பிரதேசமே தற்கால மனிதனின் தாயகம் அல்லது பிறப்பிடமாக இருந்திருக்க வேண்டுமெனக் கொள்ள இடமுண்டு. இப்பிரதேசமும் இடைவெப்பக்கால நிலையுடன் கோடைகாலத் தில் கடும் வெயிலுள்ளதாயுமிருந்திருத்தல் வேண்டும் ; சூரியனுக்கும் புவிக்குமுள்ள தொடர்பு அக்காலத்தில் வேறு மாதிரியாக இருந்திருக் கிறது எனக் கொள்ள இடமில்லை.
தற்கால மனிதனை உடற்றெழிலியலின்படி ஆராயும்பொழுது அவனுடைய பல்வேறு உறுப்புக்களும் ஒரளவு வெவ்வேறு வெப்பநிலைகளில் மிக நன்றகத் தொழிற்படுகின்றன வெனவும், அதனல் அவன் மாறுபடும் காலநிலையை விரும்புகிறன் எனவும் காண்கிறேம்; ஆனல் 60-65 ப.(ஏறக்குறைய 16-17 ச.) அளவான வெப்பநிலை அடிக்கடியிருந்தாற்றன் அவன் நற்சுகத்துடன் இருப்பான். வானிலை கூடிய குளிராகவிருத்தல் வேண்டும் ; இவ்வாறிருப் பது முக்கியமாக நரம்புத்தொகுதி சீராகத் தொழிற்படுவதற்கு உகந்த

9
தாகும். வானிலை சூடு கூடியதாயும் நீண்டகாலத்திற்கும் இருக்குமாயின் அதனல் எவ்வித நன்மையும் எற்படாது ; சிலவேளைகளில் தீங்குதான் விளையும். இவ்வெப்பநிலையில் வேலை செய்யும் ஒரு சுறுசுறுப்பான கைத் தொழிலாளி நாளொன்றுக்கு ஏறக்குறைய 3,200 கலோரி அளவான வெப்பத்தை இழந்துவிடுவான் ; அதனல் அவன் வளர்ச்சியடைவதற்கு நீண்டநாட் செல்வதுடன் அவன் பாலுணர்ச்சிகளும் பூரணமாகத் தொழிற் படக் காலதாமதமாகும். வேறு நிலைமைகளில் வசிக்கும் மனிதர், அதா வது மத்தியகோட்டு ஆபிரிக்கா, கோபி, தண்டரா போன்ற நாடுகளிலுள்ள வர்கள், வெவ்வேறு விதமாகத் தம்மை இசைவுபடுத்திக் கொள்வர். மத்தியகோட்டு ஆபிரிக்க நாட்டினர் வெப்பத்தை வெளியிட, மற்றைய இரண்டிடங்களிலுமுள்ளவர்கள் அதை வெளியேறவிடாது காத்துக் கொள் வர். மேற்கு ஆபிரிக்க நாட்டினன் ஒருவன் வட-மேற்கு ஐரோப்பியன் ஒருவன் வெளியிடும் வெப்பத்தில் அரைப்பங்கு மாத்திரந்தான் வெளிவிடு வான் என்பது குறிப்பிடத்தக்கது. வெப்பம் வெளியிடுவதைக் கூட்டும் பொருட்டு இனத்திற்குரிய உறுப்புக்களில் விருத்தியும் வளர்ச்சியில் மாற்றங் களும் ஏற்பட்டிருந்தபோதிலும் அவ்வளவுதான் வெளியிடமுடிகிறது. இத னைக் கவனிக்கும்போது மனிதன் இடைவெப்ப நிலங்களுக்குரியவனேயன்றி, வெப்ப நிலங்களிலும், உறைபனி நிலங்களிலும் வாழ்வதற்குத் தகுதி யானவனல்லன் எனக் கூறலாம். குளிரான நிலைமைகள் நரம்புத்தொகுதி வளர்ச்சிக்குப் பேருதவிபுரிகின்றன வென்பதிலிருந்து மூளையின் முன் பாகம் குளிரான காலத்திலேயே வளர்ந்திருக்க வேண்டுமெனக் கொள்ளப் படுகிறது ; வேறு காரணங்களாலும் இது சாத்தியப்படும் என்பதை முன் னரே கண்டுள்ளோம்.
தற்கால மனிதரின் உடலில் மயிர் அதிகமில்லாதிருப்பதினல் இது மனித வகையினரின் பொதுவான இலக்கணம் என்பது தெளிவு ; மேலும் தற்கால மனிதரின் தோலில் கபிலநிறப்பொருள் சேருந்தன்மையிருப் பதனல், இது சுவீடனிற் காணப்படுவது போன்று எவ்வளவு சிறிதா யிருந்தபோதிலும், மனித வகையினர் கபிலநிறத் தோலுடையவர்களா யிருந்திருக்கின்றனர் எனக் கொள்ளலாம். பரம்பரையாக மயிரிலுள்ள நிறப்பொருளே தோலிற் செறிவதாயிருக்கலாம்; எவ்வாருயினும் 20-30 அகலக்கோட்டுப் பிரதேசத்தில், வெப்பநிலை வீச்சு எவ்வாறிருப்பினும், இடைக்கிடை ஏற்படும் மேலதிக ஊதாக்கடந்த கதிர்களிலிருந்து பாதுகாப் பளிப்பதன் பொருட்டு ஓரளவான கபிலநிறப்பொருள் தோலிற் சேர்ந்திருப் பது அவசியமாகும்.
எமக்குக் கிடைக்கக்கூடிய மிக முந்திய எலும்புக்கூடுகளில், தற்கால வகைகள் எவற்றிலும், ஐந்து அடிக்குக் குறைந்த உயரமுடைய முதிர்ந்த ஆண்களுக்குரியது எதையும் காணவில்லை ; ஆயின் எத்தனையோ எலும்புக்

Page 11
10
கூடுகள் அரக்கருக்குரியனபோன்று மிக உயர்ந்தனவாகக் காணப்படு கின்றன. மனித இனத்துக்குரிய பெரும் மூளைவளர்ச்சியைப் பெற்றிராத, தற்கால மனிதனின் மாற்றுருக்களின் பிரதிநிதிகள் எனச் சொல்லக்கூடிய, மத்திய கோட்டுக் காடுகளிலிருந்த குறளர்பற்றி முன்னரே குறிப்பிட்டுள் ளோம். முன்னிருந்தவர்களிலும் பார்க்கத் தற்கால மனிதர் உயர்ந்தவர் களாகவும், குறளர் முழு வளர்ச்சி பெருதவர்களாகவும் இருக்கலாம். மத்தியகோட்டுக் காடுகளிற் காணப்படும் பொறுக்கமுடியாத நிலைமைகளின் காரணமாகவும் தோற்றம் குறைந்திருக்கலாம். குறளர் சிறு வயதிற் பெறும் மென்மயிர் அநேகமாக அவர்களின் வாழ்க்கை முழுவதும் இருப்பது கவனிக்கத்தக்கது.
இங்கே நாம் கடைசியாகக் கவனிக்க வேண்டியது தோலினதும் தலை மயிரினதும் தன்மைகளையே. உரத்த தோலுடைய ஒரு ஐரோப்பியன் வெளிவிடும் சராசரி வெப்பத்துடன் மத்தியகோட்டு மேற்கு ஆபிரிக்க மக்களும் கோபி, வடசீன ஆகிய பிரதேச சுதேசிகளும் வெளிவிடும் வெப்பத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பின்னவர்கள் வேறுவகையான தனித் தன்மை வாய்ந்த தோலுடையவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறே மத்தியகோட்டு ஆபிரிக்கரின் சுருண்ட மயிரும், கோபி, வடசீன, தண்டரா மக்களின் நேரான முரட்டு மயிரும் தனித்தன்மை வாய்ந்தவை. ஆபிரிக்க, ஆசிய மக்கள்பற்றிப் பின்னர் விரிவாக ஆராயும்பொழுது இவ்வேறுபாடுகள் விளக்கப்படும்.
தற்கால மனித வகையின் முக்கிய தன்மைகள் பற்றி மேற்கூறப்பட்ட சுருக்கமான தொகுப்புடன், பூர்வகால சமூக நிலைமைகள் பற்றியும் சில குறிப்புக்கள் கொடுத்தல் வேண்டும். நியாந்தோல் இனத்தைச் சேர்ந்த பழையகால மக்கள் சிலர் பிணத்தைத் திட்டமிட்டுப் புதைத்து வந்தனர் என்பதும், பின்னர் தற்கால மனிதர் தோற்றியபின் புதைத்தல் ஒரு வழக்கமாகிவிட்டது என்பதும் தெரிய வருகிறது ; அவ்வாறு புதைக்கப்பட்ட சடலங்கள் சில இப்பொழுதுகூட அழியாதிருக்கின்றன. இவை அநேகமாகச் சென்ற அரை-நூற்றண்டுக் காலத்திற் கண்டுபிடிக்கப்பட்டன. இதிலிருந்து இறந்தபின் ஒரு வாழ்க்கை உண்டு, இறந்த மாந்திரீகர் தப்பிப் பிழைப் பதற்குச் சத்தியுடையவர்கள் என்ற சில எண்ணங்கள் மனிதரின் மன நிலையைப் பாதித்திருந்தன வென்பது ஓரளவு தெரிகிறது. மனிதரின் கனவுகள், உண்மைக்கு அப்பால் அவர்களைக் கொண்டு சென்று, “ இவ் வாழ்க்கைக்கு முன்னும் பின்னும் என்னவுண்டு ’ என்பதைப் பார்க்கவும், உண்மையில் இல்லாதவொன்றை அடைய ஆசைகூரவும் செய்தன.
தற்கால மனித வகையினர் தோன்றுவதற்கு முந்திய காலத்துக் கருவிகள் மிக அழகிய அமைப்புடையனவாய்க் காணப்படுகின்றன; ஆனல்

அவற்றில் அதிக வகைகள் இருந்திருப்பதாகத் தெரியவில்லை. கைத் தொழிலாளர் வழக்கப்படியான கருவிகளையே செய்து வந்தனர்; எனினும் அவர்களுடைய வளர்ச்சியுற்றுவந்த உற்சாகமானது கருவிகளை நேர்த்தி யாகவும் நுண்ணியதாகவும் செய்ய உதவியது. தற்கால மனிதனின் வருகையோடு தீயுண்டாக்கும் கருவிகளிற் பல வகைகள் செய்யப்பட்டதைக் காண்கிருேம். அக்கருவிகள் அநேகமாகச் சிறியனவாயிருந்தமையால், அவை சேதமடைந்துவிடின் ஈடுசெய்வதன் பொருட்டு, சொந்தக்காரனிடம் இன்னும் அக்கருவிகள் பல இருந்தன என்று நம்பலாம்.
மேலும் அவன் சில பிரதேசங்களிலாயினும், தீக்கற்களை மரத்துண்டின் மேற் பொருத்தக் கற்றிருந்தானகையால் அவன் நெம்புகோலின் பயனை யும் அறிந்திருந்தானெனக் கொள்ளல்வேண்டும். இவற்றையும் வேறு பல விடயங்களையும் கவனிக்கும்போது அக்கால மனிதனின் உணர்ச்சிகள் பழைய வழிகளை விடுத்து முன்னேறத் தலைப்பட்டனவெனத் தெரிகிறது; பழைய கால வேடர் கையாண்ட முறைகளிலிருந்தே இதனை அறியலாம். அவர்கள் நெருப்பை உபயோகித்தார்கள் என்பது எமக்குத் தெரியும் ; அதனை உண்டாக்கவும் அவர்கள் அறிந்திருந்தார்கள் என்றே கொள்ளுதல் வேண் டும். அவர்கள் பயிர்ச் செய்கை பற்றியோ, மிருகங்களை வளர்ப்பது பற்றியோ, மட்பாண்டம் செய்வது பற்றியோ, சாணைபிடிப்பது பற்றியோ எதுவும் அறிந்திருத்தவர்களாகத் தெரியவில்லை.
அவர்கள் முன்னர் வாழ்ந்த இடம் பெரும்பாலும் பாலைவனமாயிற்று. ஆறுகளுக்கு அண்மையில் அவர்கள் இருந்த சில இடங்கள் மனித முன்னேற்றத்தின் அடுத்தபடிக்கு உதவிய இடங்களாயின. இவற்றிலிருந்து பூர்வ வேடுவர்களும் அவர்களுடைய வாழ்க்கை முறையும் பழைய பிர தேசங்களிலிப்பொழுது இல்லையென்பது தெளிவு. இத்தகைய வாழ்க்கை முறைகள் துர்ர இடங்களுக்கும், சிலவேளைகளில் மிகப் பாதகமான கால நிலையுள்ள இடங்களுக்கும் பரவின. இவ்வாறு பரவினவர்களின் வழித் தோன்றல்களாகக் காணப்படுவதுடன், வேட்டையாடுவதும் உணவுப் பொருள் சேகரிப்பதுமே தொழிலாகக் கொண்டுமுள்ள இக்கால மக்களைப் பொதுவாக இரு தொகுதிகளாய் வகுக்கலாம். சிறுதோற்றமும் வட்டமான சிறுதலையு முடையவர்களாய் ஆபிரிக்காவிலும் ஆசியாவிலுமுள்ள மத்தியகோட்டுக் காடுகளில் வசிப்பவர்களை ஒரு தொகுதியாகவும், கிரீனிலந்து எசுக்கிமோவர், சில பியூச்சியர், சில தென் ஆபிரிக்கத் தொகுதியினர், அவுத்திரேலிய முதற்குடிகள், இலங்கையிலுள்ள வேடர், தென் இந்தியாவிலுள்ள சில காட்டுச் சாதியார் போன்று நீண்டு ஒடுங்கி உயர்ந்த தலைகளையுடையவர் களாய்ப் புவியின் நாலாபக்கமும் சிதறுண்டுள்ளவர்களை மற்றெரு தொகுதி யாகவும் வகுக்கலாம். தென் ஆபிரிக்க புதர்மனிதரும் சமீபத்தில் மறைந்து விட்ட தாசுமேனியரும் மேற்சொல்லப்பட்ட இரு தொகுதிகளுக்கும். இடைப்

Page 12
2
பட்டவர்கள் எனலாம். இங்கு குறிப்பிடப்பட்ட தாசுமேனியரும் ஆபிரிக்கரும் முறுகிவளைந்த மயிருடையவர்களாயும், வேடுவரும் அவுத்திரேலியரும் அலை போன்ற அல்லது சுருண்டமயிருடையவர்களாயும், எசுக்கிமோவரும் பியூச்சி யரும் நேரான மயிர் உடையவர்களாயுமிருக்கின்றனர். தோலைப்பொறுத்த வரையிலும் நிறத்திலும் மற்றும் விவரங்களிலும் வேறுபாடுகளுண்டு. இத்தூர இடங்களில் பழைய-மாதிரியான தலைகள் இன்னும் இருக்கின்றன வென்பதை நாம் மறந்து விடக்கூடாது. பழைய மாதிரியான தலைகள், முக்கியமாக நீண்டு ஒடுங்கி உயர்ந்தவை, பிரித்தானியர், பிரான்சியர், போத்துக்கீசர், கந்திநேவியர் போன்றபல மக்களிடையிலும் காணப்படு கின்றன. இத்தகைய தலைகளையுடையோர் அம்மக்களோடு கலந்து வாழினும் அசாதாரண ஆற்றல் படைத்தவர்களுள் கூடிய தொகையினராகக் (ஆனல் வழமையிலும் பார்க்கச் சிறிது கூடிய பருமனுடையவர்களாகக்) காணப் படுவர். எனினும் வேட்டையாடுதலையும் உணவு சேகரித்தலையும் தொழிலாக வுடைய மக்கள் தற்கால ஐரோப்பிய வர்த்தகத்தையும் அதன் விளைவுகளை யும் எதிர்க்க முடியாதவர்களாயிருக்கின்றனர். தாசுமேனியர் மறைந்து விட்டனர். புதர்மனிதர், அவுத்திரேலியர், குறளர் ஆகியோர் விரைவில் மறைந்துவிடுவர் போலத்தெரிகிறது ; கடும் நடவடிக்கைகள் சில எடுக்கப் பட்டதன் பயணுக எசுக்கிமோவர் அழியாதுகாக்கப்படுகின்றனர்; உலகத்துக்குப் பயனுடைய மக்கள் எனக் கருதிக் கிரீனிலந்தில் இவர்களைப் பாதுகாத்து வைக்க எத்தனிக்கப்படுகிறது; இவர்கள் இல்லாவிடில் ஆட்டிக்குப் பிர தேசத்தின் மதிப்புக் குறைந்துவிடும். பல்வேறு பிரதேச மக்களைப் பற்றி ஆராயும்போது மீண்டும் இவ்வகைகளைப் பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்னர் இப்பழைய மாதிரியான தொகுதிகளை நெருக்கித் தள்ளி, அவற்றின் உண்மையான பிரதிநிதிகள், மேற்குறிப்பிட்ட தூரமான அல்லது சென்றடைவது கடினமாயிருக்கும் பிரதேசங்களில் மாத்திரம், தப்பிப் பிழைக்கக் கூடியவாறு செய்த வகைகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுதல் வேண்டும்.
பனிக்கட்டித்தகடுகள் பின்னடைந்தமையும், அதன் விளைவாக மேற்குக் காற்றுகளின் வலயம் வட ஆபிரிக்காவிலிருந்து வட-மேற்கு ஐரோப்பாவுக்கு நகர்ந்தமையும் மனித வரலாற்றில் மிகப் பெரிய நெருக்கடியை உருவாக் கின. முதலாவதாக மேற்கு ஐரோப்பாவில் காடுகள், முதலில் பைன மரங்களும் பின்னர் ஒக்கு மரங்களும், பரவிப் பெரும் மந்தைக் கூட்டங்கள் சுற்றித்திரிந்த புல் வெளிகள் பெரிதும் குறைந்தன. இதன் காரணமாகப் பழைய வேட்டுவத் தொழில் புரிந்தோருக்கு நெருக்கடியேற்பட்டு அவர்கள் தம் பழைய வாழ்க்கையை நடத்த முடியாது போயினர். அவர்கள் பயிர்ச்செய்கையையோ வேளாண்மை விலங்கு வளர்ப்பையோ தாமாகப் பயின்ருரில்லை ; இத்தகைய வாழ்க்கைக்கு அவசியம் தேவையான தானியப் பயிர்கள் மேற்கு ஐரோப்பாவில் இயற்கையாக வளராமையே இதற்குக்

13
காரணமாகவிருக்கலாம். அவர்கள் கடற்கரைப் பகுதிகளிலும், மரங்க ளில்லாத சிலநிலப் பகுதிகளிலும் இக்கட்டான நிலைமைகளில் வாழ்ந்து வந்தனர் எனத் தெரிகிறது.
இரண்டாவதாக, கருங்கடல் வழியாகவும் கசுப்பியன் வழியாகவும் மத்திய ஆசியாவுக்குக் கடும் மழைப்பனியை முன்பு கொண்டுவந்த மழை வலயம் அதன் முக்கியத்துவத்திற் குறைந்தும், முன்பு கடும் ஈரமாகவிருந்த துருக்கித்தானின் பாகங்கள் உலர்ந்து வசிக்கக் கூடியனவாயும், மலையி லுள்ள பனிக்கட்டி உருகி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் புன்னிலங்களை ஈரமாக்கியும் இருந்தன. இவற்றின் காரணமாக மனிதர், அவர்கள் மேற்கிலிருந்து வந்தவர்களாயினும் சரி தெற்கிலிருந்து வந்தவர்களாயினும் சரி, பெரும் கடல்போன்ற புன்னிலங்களை நம்பி வாழ்வதற்கு வழியேற்
• لال-ا-Lلا
மூன்றவதாக, முன்னர் சகாராவிலும் அரேபியாவிலும் வாழ்ந்த மக்கள் ஒருபுறம் மத்தியதரைப் பிரதேசப் பக்கமாகவும் நைல், சீரியா, மெசப் பொத்தேமியா ஆகிய நதிகள் பக்கமாகவும், மறுபுறம் வெப்ப ஆபிரிக்கா, இந்தியா ஆகிய பிரதேசங்கள் பக்கமாகவும் தள்ளப்பட்டனர். ஈற்றில் நைல், சீரியா, மெசப்பொத்தேமியா ஆகிய நதிப்பிரதேசங்களிற் குடித் தொகை பெருகியதன் விளைவாக இப்பிரதேசங்களில் பயிர்ச் செய்கை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன : பயிர்ச்செய்கைக்கு உதவியாக இப்பிர தேசங்களிலுள்ள மண்ணை ஒழுங்கான பருவகால வெள்ளம் வண்டற் படிவுகளைக் கொண்டுவந்து வளமாக்கியது. மண் வளங்குன்ருதிருந்தமை யினல் பயிர்ச்செய்கை தொடங்குவதற்கு வாய்ப்பாகவிருந்தது. மேலு முள்ள ஆதாரங்களைக் கவனிக்கும்பொழுது பூர்வக்குடிகள் எகித்திலல்லாது மெசப்பொத்தேமியாவிலேயே இருந்தனவெனக் கொள்ளவேண்டியிருக் கிறது. பொளிந்த கல்லை நிலத்தில் உராய்வதனல் அக்கல்லு மழமழப் பாகிறதென்பது பயிர்ச்செய்கை தொடங்கப்பட்டபின்னர் தெரியவந்தது ; அதாவது, கல்லைத் தேய்க்கத் தெரிந்தபின் மனிதர் தீக்கல்லில் அதிகம் தங்கியிருக்கவில்லை. கடினமாயிருக்கும் எக்கல்லையும் தேய்க்கலாம். பின்னர் முறையான அடுப்புகள், வீடுகள், கிராமங்கள் ஆகியனவும், இவற்றைத் தொடர்ந்து நகரங்கள், வனைதற்றெழில், உலோகவேலைகள், மற்றும் பல கண்டுபிடிப்புகள் முதலியனவும் தோன்றி நாகரிக வாழ்க்கை தொடங் கலாயிற்று.
நாகரிகம் முன்னேறவே, பழைய வகையான நீண்டு, ஒடுங்கி உயர்ந்த தலைகள் தொடர்ந்திருந்தபோதிலும், அவை அகலத்தாலும் நீளத்தாலும் கூடிய தலைகளின் தொகைகளிலும் பார்க்கக் குறைந்து வந்தன ; இதன் விளைவாக இப்பொழுது மட்டான நீளமுள்ள தலை அல்லது சிலவேளைகளில்

Page 13
14
அகன்ற தலையெனச் சொல்லக்கூடியவாறு தலைகளின் பருமன் அமைந்து விட்டது.
பழைய வகையெனச் சொல்லப்படும் நீண்டு, ஒடுங்கி உயர்ந்த தலைகளின் அகலம் தலையோட்டின் நீளத்தில் 72 சதவீதம் அல்லது அதற்குக் குறை வானதாய் (சிலவற்றின் அகலம் 63 சதவீதம் வரை குறைந்திருப்பதும் காணப்பட்டது) இருக்கலாம் ; இது உயிர்த்தலையின் நீளத்தில் ஏறக்குறைய 735 சதவீதமாகும். மட்டான நீளமுள்ள வகைகளின் அகலம் தலையோட் டின் நீளத்தில் 72 சதவீதம் தொடக்கம் 775 சதவீதம் வரை, அல்லது உயிருள்ள தலையின் நீளத்தில் 735 சதவீதம் தொடக்கம் 78°5 சதவீதம் வரையிருக்கும். மட்டான அகலமுள்ள வகைகளின் அகலம் தலையோட்டின் நீளத்தில் 775 சதவீதம் தொடக்கம் 805 சதவீதம் வரை, அல்லது உயிர்த்தலையின் நீளத்தில் 785 சதவீதம் தொடக்கம் 815 சதவீதம் வரை யிருக்கும். இவ்வீதம் கூடுமாயின் அத்தலைகளை அகன்ற தலைகள் எனக் கூறலாம். பழைய நூல்களில் இவ்வாறு நீள அகலங்கள் கணிக்கப்பட வில்லை. அவற்றில் 75 அல்லது அதற்குக் குறைந்த விகிதம் (கபால அட்ட வணை) உள்ள வகைகளுக்கு நீளக் கபாலமென்றும், 75-80 விகிதம் வரை யுள்ள வகைகளுக்கு இடைநிலைக்கபாலமென்றும், 80 க்கு மேலான விகிதமுள்ள வகைகளுக்குக் குறுங்கபாலமென்றும் குறிக்கப்பட்டுள. இந்தக் கணக்கெல்லைகளைச் சிலவேளைகளில் தலையோட்டுத் தொடர்புகளுக்கும், சில வேளைகளில் உயிர்த்தலைகளுக்கும் பயன்படுத்தும்பொழுது சில தடுமாற்றம் எற்படுகிறது. இந்தக் கணிப்பு முறையைத் திருத்தியமைக்க வேண்டும். கபால வகைகளை ஆராய்ந்து அனுபவமடைந்தவர்கள் இந்தக் கணிப்பை 75-775 வரையும், 775 - 805 வரையுமென வைத்துக்கொள்ளுவது சிறந்தது எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வகுத்தல், முக் கியமான உருவவியல் வேறுபாடுகளுடன் அண்ணளவாகப் பொருந்துகிறது. தலையோட்டில் 72 விகிதமுள்ள தலைகளின் மத்திய கோடு வழியே உயர்ந்த உச்சியிருப்பது மிக அரிதாயிருக்கும். குறைந்த விகிதமுள்ள தலைகளின் உயரம் வழக்கமாக அதன் அகலத்துக்குச் சமமாக அல்லது கூடியதாக விருக்கும் ; மற்றும் வேறுபாடுகள் மேற்காட்டப்பட்ட தொகுதிகளைக் குறிப் பிட்டுக் காட்டுவனவாகும். நிலத்திற் பயிர்செய்யவும், கிராமங்களையும் நகரங் களையும் அபிவிருத்தி செய்யவும் பழகிக்கொண்ட மக்களுட் பெரும்பாலோர் 73-78 வரையான விகிதமுள்ளவர்கள், அதாவது அகலம் அவ்வளவு கட் டுப்பாடின்றி வளர்ச்சியடைந்து வந்த நீண்ட தலைகளையுடையவர்களாயிருந் திருக்கின்றனர் என நினைப்பதற்குக் காரணமுண்டு. தலையோடு கடினமா வதையும், இறைச்சி கடித்திழுப்பதற்குப் பயன்படும் கன்னத்தசைகள் (தலை யோட்டின் முன் பாகத்தின் பக்கங்களையும் கீழுள்ள அலகுகளையும் பிணைக்கும் தசைகள்) உறுதியும் பலமும் பெறுவதையும் தாமதப்படச் செய்வனவாய வீட்டுவசதிகள், சமையல், பிள்ளைகளுக்குப் பால் கொடுத்தல் ஆகியன அபி

15
விருத்தியடைந்தமை ஒரு காரணமாயிருக்கலாம். அகன்ற தலையுடைய மக்கள் சிலர் முற்காலத்திலிருந்தே அனத்தோலியாவில் வசித்தனர் எனக் கொள்வதற்கு ஆதாரங்களுண்டு ; தலைகள் ஒடுங்கிய நிலைமையிலிருந்து மாறி இந்த அகன்ற நிலையடைந்திருக்கலாம் ; ஆனல் அனத்தோலியா வில், தற்கால மனிதவகையினரின் முன்னேர் மத்திய கோட்டுப் பக்கத்தில் இருந்ததுபோல, முன்னர் தலையின் நீளம் வளர்ச்சியடைந்தபோது அவ் வாறு வளர்ச்சிபெருது, குறளர் வளர்ச்சியடையாதிருந்தது போலன்றிப் பிற்காலத்தில் வளர்ச்சியடைந்து, குறளரின் தலைகளிலும் பார்க்கப் பெரிய தலைகள் பெற்று அகன்ற தலைகளுடையவர்களாயிருந்தனர் எனக் கொள் வது கூடிய பொருத்தமாயிருக்கும். பின்னர், நாகரிகம் வளர்ச்சியடைந்த காலத்தில், மட்டான நீளமுள்ள தலைகளையும், ஒரளவில் அகன்ற தலைகளை யுமுடைய மக்கள் அக்கம் பக்கமாகவும் அவ்விரு வகையினர்க்கிடையில் உயர்ந்து ஒடுங்கி நீண்ட தலைகளையுடைய மிக்க சிலரும் ஒருமித்து வாழக் காணப்படுகின்றனர். மெசப்பொத்தேமியா, நைல் பகுதிகளில் வாழ்ந்த பழைய நாகரிககால மக்களின் தலைகளின் தோற்றத்தைப் பொதுவாக மேற்கண்டவாறு விவரிக்கலாம். இப்பிரதேசத்திலிருந்து தூர இடங்களுக்கு நாகரிகம் பரவுவதற்கு நீண்ட காலம் சென்றிருத்தல் வேண்டும். மனிதர், முக்கியமாக நீண்ட தலையினர், காலத்துக்குக் காலம் இமாலயத்துக்குத் தெற்கே கிழக்கு இந்திய தீவுகளின் பக்கமாக அல்லது இந்துக்கூசுக்கு வடமேற்காகத் துருக்கித்தான், சைபீரியா, அமெரிக்கா ஆகிய இடங்களுக் கும் அல்லது இரானிலும் அனத்தோலியாவிலுமிருந்து வட-மேற்காகத் தென் இரசியாவுக்கும் திரேசுக்கும், அவ்வாறே நுண்மண் படிவு (காடு அதிகமின்றி இறுக்கமில்லாதிருக்கும் மண்) வலயம் வழியே மேற்கு ஐரோப்பாவுக்கும் அல்லது தெற்கு, தென் - மேற்குப் பக்கமாக வெப்ப ஆபிரிக்காவுக்கும் பரவியிருப்பர் எனக் கொள்ளலாம். ஏறத்தாழ கி. மு. 3,000 ஆண்டுக்கு முந்திய காலத்தில் பழைய ஆற்றுப் பிரதேச நிலங்களி லிருந்து கமத்தொழில் அதிகம் பரவவில்லையெனக் கொள்வது தற்போ தைக்கு மிகவும் பயன்தரக்கூடிய ஒரு கருதுகோளாகும். இவ்வாறு கொள் ளுவதற்கும் பெரும்பாலும் எதிர்ச்சான்றுகளே உதவியாயிருக்கும். இக் காலத்திற்குப் பின்னர் மனித வரலாற்றில் மற்றுமொரு பெரும் நெருக்கடி யேற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மெசப்பொத்தேமியாவிலும் எகித்திலும், ஒரு நீண்டகால அபிவிருத்திக்குப் பின்னர், பழைய உலக நாரிகத்திற்கு இடையூறு ஏற்பட்டு ஏறக்குறைய கி.மு. 2,500 ஆண்டளவில் அது மிகவும் சீர்குலைந்தது. ஆயினும் இவ்வாறு சீர்குலைவதற்கு முன்பே பிற் காலத் திரோய் (Hissarlik I.) இருந்த இடத்திலும் நொசெசு, கிறீற்று ஆகிய இடங்களிலும் நகரங்கள் அபிவிருத்தியடைந்தன; இந்து நதிப் பிரதேசத்திலுள்ள மொகெஞ்சதாரோ, அரப்பா முதலிய இடங்களிலும், வட-மேற்குச் சீனவிலும் இதே காலத்திலேயே நகரங்கள் உண்டாயிருத்தல் வேண்டும். எவ்வாருயினும்.இப்பிரதேசங்களிலும் எனைய

Page 14
16
இடங்களிலும் (தென் இரசியா முதலியன) நாகரிகம், முக்கியமாக மெசப் பொத்தேமிய நாகரிகத்தோடு தொடர்புடைய நாகரிகம், வளர்ச்சியுற்றி ருந்தது என்பது தெரிகிறது. பின்னர் குதிரைகளைப் பயன்படுத்தத் தெரிந்த மக்கள் அம்மிருகத்தைப் பயன்படுத்தத் தெரிந்திராத பழைய நாடுகளைச் சீர்குலைத்து, பல நாடுகளை அடிமைப்படுத்தித் தமது பண்பாட்டைத் தூர இடங்களுக்குப் பரப்பினரெனக் கொள்வதற்குக் காரணங்களுண்டு.
இக்காலமளவில் தியான்சன் மலைகளுக்குக் கிழக்கேயுள்ள உயர் மேட்டு நிலப்பிரதேசத்தில், கோபி உட்பட, மனிதர் வசிக்கத் தொடங்கி யிருத்தல் வேண்டும் ; இவ்விடங்களில் கமத்தொழிலுக்குரிய மிருகங்களை யோ, வீட்டு மிருகங்களையோ பயன்படுத்தத் தவறிய மனிதர் சிலர் எற் கனவே இப்பிரதேசங்களிற் குடியேறியிருந்தார்களெனத் தெரிகிறது.
இதுவரை நாம் ஆராய்ந்த அளவில், மனித வரலாற்றில் மக்கள் உலகத் தின் நாலாபக்கங்களுக்கும் பரந்து சென்று ஆங்காங்கு முக்கிய இனங்களாக நிலைபெறும் கட்டத்தை நாம் அடைந்துவிட்டோம். அடுத்த பிரிவில் இவ் வியக்கங்கள், பெரும்பாலும் புவியியற் றடைகளாலும் வாய்ப்புக்களாலும் தீர்மானிக்கப்பட்டு, பின்வரும் முக்கிய திசைகளில் எவ்வாறு பரவினவென் பதைக் கவனிப்பதே எமது கடமையாகும். இவ்வாறு கவனிக்கும்போது பயிர்ச்செய்கைக்காரர் எவ்வாறு பரந்து சென்றனர் என்பதைப் பற்றி மாத் திரமன்றி அவர்களுக்கு முன் நடைபெற்ற நகர்வுகளைப் பற்றியும் நாம் ஆராய்தல் வேண்டும்.
பழைய ஆற்று நிலங்களிலிருந்து மக்கள் பரந்து சென்ற திசைகள் பொதுவாகப் பின்வருமாறு :-
1. வெப்ப ஆபிரிக்காவுக்கும் அதற்கூடாகவும் நடைபெற்ற நகர்வுகள். அக்காலத்திய சகாராப் புன்னிலத்திலிருந்த முந்திய தாயகத்தின் தென் பாகத்திலிருந்து சென்ற நகர்வுகளும், பின்னர் நைல்நதி, செங்கடல், பாடெல்மான்டெப்புத் தொடுகடல் ஆகியன வழியாகச் சென்ற நகர்வுகளும் இவற்றுள் அடங்கும்.
2. இந்தியா, மலாசியா, கிழக்கிந்திய தீவுகளும் அவற்றுக்கு அப்பா லுள்ள இடங்களும் ஆகிய பிரதேசங்களுக்குச் சென்ற நகர்வுகள், இப் பொழுது எறக்குறைய நூறு பாகமாகக் காணப்படும் கோடு கடற்கரை யோரமாகவிருந்தபொழுது ஏற்பட்ட முந்திய நகர்வுகள் ; பிற்காலத்தில் எற்பட்ட பயிர்ச் செய்கைக்காரரின் நகர்வுகளும் பசிபிக்குக் கடலருகிலேற் டிட்ட நகர்வுகளும் இவற்றுள் அடங்குவனவாகும்.

17
3. வட கிழக்காக துருக்கித்தான், சைபீரியா, கோபி, சீன, யப்பான், அமெரிக்கா ஆகிய பிரதேசங்களுக்குச் சென்ற நகர்வுகள். இந்நகர்வுகள் இந்துக்கூசு மருங்காகச் சென்றிருத்தல்கூடும்.
4. ஐரோப்பாவுக்குச் சென்ற நகர்வுகள். சில நகர்வுகள் முந்திய தாய கத்தின் வட பக்கமாகத் தியூனிசுக்கும் சிசிலிக்குமிடையிலுள்ள நிலப் பாலங்கள் வழியாகவும், சில வேளைகளில் இரிவுக்கும் சிபெயினுக்கு மூடாக வும், சில அனத்தோலியா, திரேசு வழியாக அல்லது ஈசியன் வழியாக வும், சில துருக்கித்தான் அல்லது கோக்கேசசு மருங்காகவும் தென் இரசி யாவுக்கும் அதற்கு அப்பாலும் சென்றன.

Page 15
2 ஆம் அதிகாரம்
ஆபிரிக்காவிலுள்ள இனம்
தற்கால மனிதவகையினரில், ஆதிகாலந் தொடக்கம் இருந்த இன வகைகள் சகாரா-அரேபியா வலயத்திலோ, அதற்கண்மையிலோ இன்னும் வட ஆபிரிக்காவில் பிழைத்திருக்கின்றன, அல்லது மத்திய தரைப் பக்க மாகப் புலம்பெயர்ந்திருக்கின்றன. கொலிக்குனன் என்பார் வட ஆபிரிக் காவில் நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலையுள்ள ஒரு "கெத்தூலியென் வகை ”யைப் பற்றி விவரித்துள்ளார். அத்தகைய தலையுள்ள ஒரு வகை யினர் படிமுறையாக மிக நீளாத தலையுள்ள ஒரு வகையாக வட ஆபிரிக்காப் பிரதேசத்தின் பல பாகங்களிலும் வாழக் காணலாம். இவ் வகையினர் எகித்திய பெலாகீன் சாதியாரிடையில், மிக ஆதிகாலம் தொடக் கம் இற்றைவரை, தொடர்ந்து காணப்படுகின்றனர் என எலியற்று சிமிது என்பார் அழுத்திக் கூறியுள்ளார்; இவர் முற்காலத்திய சவக்குழிகளைத் தீர ஆராய்ந்தே இம்முடிவுக்கு வந்தார். சராசரி வட ஆபிரிக்க வகை நீளத்தலைகள் அமைற்று (Hamite) எனும் பெயரால் அடிக்கடிஅழைக்கப் படுகின்றன. இவ்வகையின் தோல் நிறம் வேருகத் தெரிவதனுல் இதை மத்தியதரை வகைகளுடன் சேர்க்க முடியாது (7 ஆம் அதிகாரம் பார்க்க). இதே சொல், எறத்தாழ ஒன்றேடொன்று தொடர்புடைய வட ஆபிரிகக மொழிகளை, அரபு நீங்கலாக, குறிப்பதற்கும் அடிக்கடி பயன்படுத்தப் படுகிறது. இவ்வாறு இரு நோக்கங்களுக்கு ஒரே சொல்லைப் பயன்படுத்து வது தடுமாற்றம் விளைவிப்பதாகும். ஆனல் இதிலும் பார்க்கக் கூடிய தடுமாற்றத்தைத் தருவது “ கெல்திக்கு ’ (Celtic) எனும் சொல். அச்சொல் ஒரு இனத்தையும் ஒரு மொழிவாரித் தொகுதியையும் குறிக்க உபயோகிக்கப்படுவதோடு இன்னும் வேறு கருத்தையும் தரப் பயன் படுத்தப்படுகிறது. எலியற்று சிமிது கபிலநிற இனம் (Brown Race) எனும் சொற்றெடரை வட ஆபிரிக்காவிலுள்ள நீளத் தலையினரையும், அரேபியாவிலும் அதன் எல்லைப்புறங்களிலுமுள்ள நீளத் தலையினரையும் குறிப்பிடப் பயன்படுத்தியுள்ளார். இச் சொற்ருெடர் சில வேளைகளில் மேற்கு மத்திய தரையிலுள்ள நீளத் தலையினரையும், இந்தியாவிலுள்ள தக்கணப் பிரதேசத்தின் பெரும்பகுதியிற் பரந்துள்ள நீண்ட தலையுடைய குடிகளையும் குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இப்பெயர் முக்கியமாக வட ஆபிரிக்காவிலும் அரேபியாவிலும் அதன் எல்லைப்புறங்களிலுமுள்ள நீளத்தலை மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுமாயின் அது பொருத்த மாயிருக்கும். இங்குள்ளவர்களின் தோல் அநேகமாகச் செந்நிறங்கலந்த கபிலநிறமாயும் தலைகள் நீண்டும் இருக்கும் ; ஆனல் பல வித்தியாசங்
18

9
களுண்டு. பொதுவாகச் சொல்லுமிடத்து, அரேபிய எல்லைப்பிரதேச நீண்ட தலைமக்களுக்கு, வட ஆபிரிக்காவிலும் நைல் பிரதேசத்திலுமுள்ள நீண்ட தலைமக்களிலும் பார்க்க, கூரான பக்கத் தோற்றமும், ஒழுங்காயும் முனைப் பாயும் ஒடுக்காமாயுமுள்ள மூக்கும் உண்டு : இவற்றைக் கவனிக்குமிடத்து முன்னேயவருக்கு சீமைற்றர் (Semites) எனும் மொழிவாரிப் பெயரை யிட்டது பொருத்தமாகக் காணப்படவில்லை. வட ஆபிரிக்க மக்களின் மூக்குக் குறுகியதாயும், மூக்குத்துவாரங்கள் அகன்றனவாயும் உள ; இவ்வுறுப்புக்கள் வெப்ப ஆபிரிக்க மக்களின் உறுப்புக்கள் போன்று விளக்கமாகத் தெரியாவிட்டாலும் அரேபிய இனங்கள் வட ஆபிரிக்க மக்களை, முக்கியமாகக் கிழக்கில், வெவ்வேறு காலத்திற் பாதித்துள. மயிர் அலைபோன்று அல்லது சுருண்டதாய், அத்துடன் தனிக் கறுப்பாயு மிருக்கும் ; ஆனல் பேர்பர் மக்களைச் சேர்ந்த கூடிய வெண்ணிறமுடைய மக்கள் சிலர் அல்சீரியா, மொறேக்கோ மலைப்பிரதேசங்களில் காணப் படுகின்றனர். வட ஆபிரிக்காவில் இவ் வெண்ணிற மக்கள் பண்டைய எகித்திய நினைவுச் சின்னங்களிலிருந்து மாத்திரமன்றி தற்காலச் சின்னங் களிலிருந்தும் தெரிய வருகின்றனர். ஐரோப்பாவிலிருந்து மக்கள் தென் பக்கமாக நகர்ந்து சென்றனர் என்பதை இம்மக்களிலிருந்து அறிந்து கொள்ளலாமெனச் சிலர் கருதுகின்றனர். பொதுவாக வட-ஆபிரிக்க நீளத்தலையினர் மட்டான உயரமும் மெலிந்த உடலுமுடையவர்கள். அங்கு மிங்கும் அகன்ற தலையினரும் காணப்படுகின்றனர். தியூனிசுவுக்கு அப் பாலுள்ள சேர்பாத் தீவிலுள்ள மக்கள் இதற்கு உதாரணமாவர் : அகன்ற தலையுள்ள மக்கள் நான்காம் அரச வமிச காலத்திலேயே கி. மு. 3000-2700 இடையான காலம்-பண்டைய எகித்திய குடிகளுட் சேர்ந்தனர் என எலியற்று சிமிது அவர்கள் கூறுகின்றனர். சில சகாரா வகைகளில் தற்கால மனித வகையின் மிக முந்திய காலத்திய (ஒறிக்குனேசியன் காலம்) குருே மானேன் எலும்புக்கூட்டிற் காணப்பட்ட இயல்புகள் காணப் படுகின்றனவென உருெட்டு என்பார் அபிப்பிராயப்படுகிருர். குறளர் எனப் படுவோர் பண்டைய எகித்திலிருந்திருப்பதாகவும் தெரியவருகிறது. அவர் கள் வெப்ப ஆபிரிக்காவிலிருந்து எகித்துக்கு வந்திருக்கலாம். குவாடபூய் முனையை நுனியாகக் கொண்ட கிழக்கு ஆபிரிக்காவின் கிழக்குக் கொம்பு போன்ற உலர்ந்த பிரதேசத்திலுள்ள மக்கள் மத்தியகோட்டு ஆபிரிக்க மக்களிலும் பார்க்க வட ஆபிரிக்க மக்களுடன் கூடிய ஒற்றுமையுள்ளவர் களாகக் காணப்படுகின்றனர். இவர்களுள் கறுத்ததோல், அலையமைப்பான அல்லது சுருண்ட மயிர், நீண்ட தலை, மட்டான உயரம், பெரும்பாலும் நன்கு விரிந்த பக்கத் தோற்றம் முதலியவற்றுடன்கூடிய கல்லா இனத் தவர் அடங்குவர். அபிசீனியாவில் இத்தகையவர்கள் மிக அதிகமுளர்; ஆனல் தென் அரேபிய மக்களைப் போன்ற, கூடிய அகலமான தலையுள்ள ஒரு வகையினரும் இங்கு காணப்படுகின்றனர். எனினும் ஆபிரிக்காவின் கிழக்குப் பக்கத்திலுள்ள மக்களுட் பெரும்பாலோர் வெப்ப ஆபிரிக்க

Page 16
20
மக்களோடு பொதுவாகச் சேர்த்துப் பார்க்கக்கூடியவாறன இயல்புகளை யுடையவர்களாகக் காணப்படுகின்றனர்; இவர்களை இனிக் கவனிப்போம்.
முதல் அதிகாரத்தில், ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பனிக்கட்டிக் காலத்தின் கடைசி முக்கிய கூற்றில் சகாராப் பிரதேசம் புன்னிலத்தன்மை யுடையதாகவிருந்திருக்க வேண்டுமெனச் சொல்லப்பட்டிருக்கிறது. அப் பொழுது பாலைநிலவலயம் இல்லையென்பது கருத்தன்று ; பாலைநிலவலயம் மிகத் தெற்கே, ஒடுக்கமாக இருந்தது. இவ்வலயத்துக்கப்பால் மத்திய கோட்டுப் பக்கமாக உயர்ந்த புல் வலயமொன்று இருந்தது. அதனை யடுத்து மழைக்காடு, ஏறக்குறைய இப்பொழுதுள்ளதுபோல, இருந்தது : ஆனல் காடுகள் இப்பொழுதிருப்பனவற்றிலும் பார்க்கக் குளிர்ச்சி கூடியன வாயிருந்தமையினல் இப்பொழுதுள்ள பரப்பிலும் பார்க்க, காலநிலை காரணமாக, கூடிய பரப்பிலிருந்திருத்தல் வேண்டும். காடுகள் பரம்பு வதும் சுருங்குவதும் இலைகளிலிருந்து நீர் ஆவியாகும் வீதத்தைப் பொறுத் திருக்கும். வெப்ப ஆபிரிக்காவின் சுதேச கமத்தொழிலின் பொருட்டுக் காடு கள் எரிக்கப்படுவதனல் மழைக்காடுகள் அழிந்து விடுகின்றன ; அக்காடுகள் புவிச்சரிதவியற் காலங்களுக்கூடாக அவ்வவ்விடங்களிலும் அவ்வக்காலங் களிலும் இருந்த சிக்கலான நிலைமைகளுக்கேற்ப வளர்ந்தனவாகும். அத்துடன் ஒருமுறை எரித்த பின்னர் வளருங்காடு முன்னுள்ளதிலும் பார்க்கப் பெரிதும் வேறுபட்டதாயிருப்பதோடு, அடிக்கடி எரிப்பதும் ஒழுங் கற்ற முறையிற் பயிர்செய்தலும் நிலத்தைப் பெரும்பாலும் பாலைநிலமாக ஆக்கிவிடும். சூழல் காரணமாக ஏற்படும் மற்றேர் இடர்ப்பாடுமுண்டு. அழுகிப்போகும் தாவர வகைகள் கடும் வெயிலினற் காய்ச்சப்படாவிடின் மிகச்சிறந்த பசளேயாகும் ; ஆனல் மத்திய கோட்டுப் பிரதேசத்தில் வெயி லில் நீண்டகாலமாகக் காய்வனவாயின் சூரிய கிரணங்களின் இரசாயன ஆற்றல் கரையுந்தன்மையுள்ள இரும்புக் கூறுகளை மேற்கொணர்ந்து ஆவியாக மேலெழும் ஈரப்பற்றிருந்தவிடத்தில் படியச்செய்யும் ; இதன் பயனக, முன்னர் மத்திய கோட்டுக் காடுகளால் நிறையப்பெற்ற ஒரு பிரதேசம் இருப்புக் காப்புத்தகட்டினல் மூடப்பட்ட வனந்தரமாக ஈற்றில் மாறிவிடும். எனினும் இவ்வாறு நிகழ்வது மிக அருமையாகவேயிருக்கும். இந்நிகழ்ச்சிகள் ஆபிரிக்க மக்கள் பற்றிய சில உண்மைகளை அறிவதற்கு உதவியாயிருக்கும். அக்காலத்தில் சகாராப் புன்னிலத்திலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்த தற்கால மனிதனின் முந்திய வகையினர் மிகத் திறமை வாய்ந்தவர்களென்றே, துணிவுள்ளவர்களென்றே சொல்லமுடியாது ; இவர்கள் பாலைவனப் பிரதேசத்திலும் மத்திய கோட்டுக் காடுகளிலும் வாழ வகையின்றி இடர்ப்பட்டுச் சோர்வடைந்தவர்களெனவே கொள்ளுதல் வேண்டும். மேலும், தற்கால மனிதன் இடைவெப்பக் கால நிலைப் பிரதேசத்திலேயே வாழ்வதற்குத் தகுதி வாய்ந்தவன் ; இத்தகையினர் மத்திய கோட்டுப் பக்கமாக நகர்வதால் வெப்பம் வெளியேறுதலிலுள்ள

2.
இடர்ப்பாடு காரணமாக மனத்தினதும் உடலினதும் ஆற்றலும், சில வேளைகளில் வளர்ச்சியும், குன்றிவிடும்.
வெப்ப ஆபிரிக்க மக்களின் தோலின் இயல்புகள் பெரிய அளவில் வேறுபடுவனவாகும் ; ஆனல் பொதுவாக வெப்பம் வெளியேறுவதற்கும் இத்தகைய பிரதேசத்திலுள்ள எனைய இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொள்ளு வதற்கும் எற்றனவாகக் காணப்படுகின்றன. முதலில், தோல் காய்ந்து கடினமானதாயிருப்பதற்குப் பதிலாகப் பொதுவாக மென்மையானதாயிருக் கிறது. சுரப்பிகள் உயிர்க் கலங்களை விரைவில் உலரவிடாது, தளர்ந்த நுண் துவாரங்களோடு கூடிய வியர்வைச் சுரப்பிகளிலிருந்து பெரிய அளவில் வியர்வை ஆவியானபோதும், வைத்திருக்கின்றன. பெரிய அளவில் ஆவி யாதலும், தடித்துக் காய்ந்த படலமில்லாதிருப்பதும் உள் வெப்பம் வெளியேறுவதற்கு உதவியாகும் ; வியர்வைச் சுரப்பிகள் விருத்தியடைவது மிகச் சூடான நிலைமைகளில் நன்கு தொழிற்படாத சிறு நீரகங்களுக்கு உதவிபுரிவதாகும்.
தோல் இவ்வாறு தொழிற்படுவதன் காரணமாக அதிலுள்ள குருதிக் கலன்கள் (மயிர்த்துளைக் குழாய்கள்) அநேகம் பெரிதாகியிருக்கின்றன. பெரிதாகிய காரணத்தினுல் சதைப்பற்றுள்ள மேற்பரப்பை ஒரு விரலினல் அழுத்திவிட்டு விரலை எடுத்தால் விரல் பள்ளமாக்கிய பாகம் உடனே நிரம்பிவிடுவதில்லை ; மயிர்த்துளைக் குழாய்கள் மீண்டும் குருதியினல் நிரம்பவே பள்ளம் படிப்படியாக நீங்கும். குருதிக் கலன்களும் சுரப்பி களும் நிரம்பிய தோல் குறிப்பிடத்தக்கவாறு மயிர் வளர்வதற்கு இட மளிப்பதில்லை ; சுரப்பிகளிலிருந்து வியர்வை ஆவியாவதே மிக முக்கிய மாகும். உடம்பின் பல பாகங்களில் மயிர் மிகக் குறைவாகவே வளரும், சில விடயங்களில் குழந்தையின் இயல்புகளையுடைய குறளர் பாலியப் பருவத்திய மென்மயிர் அதிகமுள்ளவர்களாயிருக்கின்றனர்; அவர்கள் வாழ்க்கை முழுவதிலும் இம்மயிர் அவ்வாறே இருக்கக்கூடும். குரங்கு களினதும் வாலில்லாக் குரங்குகளினதும் மயிர், மனித உடலிலுள்ள மென் மயிர், அலைபோன்ற மயிரும் நேரான மயிருமுள்ள மக்களின் முதிர்ந்த மயிர் ஆகியன தோலின் ஆழமான பாகத்திலிருந்து சாய்வாக மேற் பரப்பை நோக்கி, ஏறத்தாழ நேரான வழியில்வரும் வேரிலிருந்தே வளர்கின்றன. மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய சில அவதானங் களின்படி, வெப்ப ஆபிரிக்க மக்களிடையில் பிறப்பின் பின்னரே தலை மயிரின் வேர்கள் குறிப்பிடக் கூடியவாறு வளைந்து தோலின் மேற்பரப்புக் கண்மையில் வருகின்றன. வேர்கள் வளைந்திருப்பதும், மயிர்த் துவாரங்கள் தளர்ந்திருப்பதுமே இவர்களுடைய மயிர்களின் தனித்தன்மையான தோற் றத்துக்குக் காரணமாகும். இம்மயிர் ஓரளவு தட்டையான முட்டையுருவுள்ள தாகவும், துவாரங்களின் வடிவத்தின் விளைவாக வெட்டு முகத்தின் ஒரு

Page 17
22
விட்டம் மற்றதின் முப்பது வீதம் தொடக்கம் எழுபது வீதம் வரையான தாகவும், வேர்களின் வடிவம், துவாரங்கள் தளர்ந்திருத்தல் என்பன பேருகக் குறிப்பிடத்தக்க வளைவுகளும் பல முறுக்குகளுமுடையதாகவும் இருக்கின்றது. பல வகைகளில் அருகருகாகவுள்ள மயிர்கள் ஒன்றே டொன்று மின்னிப் பிணைந்து விடுவதனல் தலையில் இடையிலுள்ள வெளிகளை மயிரின் அடிப்பகுதியே மூடவேண்டியிருக்கும். இந்த ஒழுங்கைச் சிலவேளைகளில் * மிளகுக்கொத்து மயிர் ” எனச் சொல்வதுண்டு. தோலின் நிறமும் பெரிய அளவில் வேறுபடும். சிலவகையினரின் தோல், உதாரண மாகக் காட்டுக் குறளரின் தோல், மஞ்சள் நிறமாகவும் வழக்கமாக மத்திய கோட்டு ஆபிரிக்காவிற் காணப்படுவதிலும் பார்க்க உலர்ந்த தாகவும் இருக்கும். இம்மக்களின் கருமையான நிறப் பொருள் குறை வாயிருப்பதற்குக் காரணம் அவர்கள் காட்டு நிழலில் வாழ்வதோ, அவர் களின் “ குழந்தைத் தன்மை ’ களில் இதுவுமொன்றே என்பது தெளி வாகத் தெரியவில்லை. வேறிடங்களிலுள்ளவர்களின் தோல் சொக்கலேற்று நிறத்திலிருந்து கலப்பற்ற கரிய நிறம்வரை வேறுபடும் ; சிலவேளைகளில் வெவ்வேறு நிறத் தோலுடைய மக்கள் ஒரே கிராமத்தில் அருகருகாக வாழ்வதையும் காணலாம். எனினும் தோலின் நிறங்கள் சூழ்நிலைகளுக் கேற்ப வேறுபடுவனவாகத் தெரிகிறது. பழைய குடிகள் தஞ்சம் புகுந்த சில இடங்களிலேயே மிகக்கரிய நிறம் காணப்படுகிறது. இது ஒரோவழிக் காணப்ப்டும் பழைய தன்மையெனக் கொள்ளலாம். ஆனல் இந்த முடி வினல் எதாவது பயனுண்டோவென்பது சந்தேகமே. ஏனெனில் மிகக் கரிய நிறமக்கள் வாழும் பிரதேசங்கள் பொதுவாக மிகத் தாழ்வானவை யாயும் நீண்ட வறட்சிப் பருவமுடையனவாயும் இருக்கின்றன ; அத்துடன் அத்தகைய இடங்கள் யாவற்றிலும் மிகக் கரிய மக்களே இருக்கிருர்கள் என்றும் சொல்லமுடியாது. நாட்டை அடிப்படுத்திய வெண்ணிற மக்களுடன் அதிகம் கலவாதிருப்பவர்களே மிகக் கரிய தோலுள்ள தொகுதியான மக்கள் எனக் கொள்வது தற்போதைக்குப் பயனுடைத்தாகும். இவ்வகை யினர் நீண்ட காலமாக வறண்டிருக்கும் ஒதுக்கப் பிரதேசங்களிலும், ஆடுமாடுகள் வளர்வதற்கே தகுதியற்ற சிலவிடங்களிலும் வாழ்கின்றனர். வேட்டையாடுவதே இவர்களின் முக்கிய வாழ்க்கைத் தொழிலாகும். நாட்டை அடிப்படுத்துவோர் பொதுவாக இத்தகைய பிரதேசங்களிற் குடியிருப்பதை, சாத்தியமாயின், விலக்குவர். மிகக் கரிய தோலுடைய இத்தகைய மக்களுட் சிலர் மிக உயர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது ; இவர்களுடைய உயரம் அதிகம் மெலிந்து, மிக நீளமான கால்களைப்பெற்றுள்ள வகையைச் சேர்ந்தது. இவ்வாறன உறுப்புகள் இவர்களுக்கிருப்பதற்கு இவர்கள் வளரும்போது கபச் சுரப்பிகளிலிருந்து உண்டாகும் சுரப்பே காரணமென்ச் சிலவேளைகளிற் காணப்பட்டிருக்கிறது. மிகக்கரிய, உயர்ந்த மெலிந்த மக்கள் முன்புறம் நீண்ட பலமான வாயுமுடையவர்களாகவே காணப்படுவர். வேறு பிரதேசங்களில் இது ஒரு அசாதாரணமான இயல்பாகவிருக்கும் போது இதற்கும் காரணம் மேலதிகமான கபச் சுரப்பாகும்.

23
ஆபிரிக்காவிலுள்ள மிக உயர்ந்த மனிதரிற் பெரும்பாலோர் நீண்ட தலையுடையவர்களாகவும் காணப்படுகின்றனர். இதற்கும் கபச் சுரப்பே ஓரளவு காரணமாகவிருக்கலாமெனக் கருதப்படுகிறது. நல்ல சொக்கலேற்றுக் கபில நிறங்கள் இடையருது ஈரம் சேர்ந்த வெப்பமாயுள்ள பிரதேசங்களி லேயே குறிப்பாகக் காணப்படுகின்றன ; தோலிலுள்ள குருதிக் கலன்கள் பெரிதும் விரிவடைவதும் கரியநிறமூட்டக் கூடியவாறு கபிலநிறப் பொருள் அடர்த்தியாயில்லாதிருப்பதும், குருதியின் நிறமும் இதற்குக் காரணங் களாயிருக்கலாம். ஓரளவு நிறப்பொருள் இருப்பது இரசாயனமுறையிற் ருெழிற்படும் சூரிய கதிர்களின் தாக்கத்தைத் தாங்க உதவியாயிருக்கலாம் ; ஆனல் அப்பொருள் அத்தேவைக்கு வேண்டிய அளவில் மிக அதிகமாக வேயுள்ளது. இந்நிறப் பொருள் சூரியனின் கதிர்களைத் தோலின் உட்பாகத் துக்குச் செல்லவிடாது மேற்பரப்பிலேயே உறிஞ்சுவதற்கு உதவிபுரிவதா யிருக்கிறது. வேறு பிரதேசங்களிலுள்ள வேறின மக்களின் தோல்களின் நிறம் மங்குவதற்கு உடனலங் குன்றுவதும் ஒரு காரணமாகும். ஆகையால் ஆபிரிக்க மக்களின் தோல் மிகக் கரிய நிறமாயிருப்பதற்கு மனித உடம்பு வெப்ப நிலைமைகளுக்கேற்றவாறு முற்றய்த் தன்னை இசைவு படுத்திக் கொள்ளாமையே காரணமெனக் கொள்ளலாம். இப்பிரச்சினை களுக்குக் கலாநிதி சாச்சுபி நடத்திய ஆராய்ச்சிகள் சில புதிய முடிவுகளைத் தெரிவிக்கக்கூடும் ; சில கடல் விலங்குகளின் கரிய நிறப் பொருள் அமைந்துள்ள மாதிரியிலிருந்து தோலின் குருதிக்கலன்கள் அமைந்துள்ள மாதிரியை அறிந்து கொள்ளலாம்; நிறப் பொருள் குருதிக்கலன் மேலுள்ள தோலிலிருப்பதனலேயே இது சாத்தியமாகும். கருங்கபில நிறப்பொருள் வெப்பநிலங்களில் வியர்வைச் சுரப்பிகள் வெளிவிடும் கழிவுகளிலிருந்துவரும் ஒரு உபபொருளாகவுமிருக்கலாம். எப்படியாயினும், கரியநிறம் ஆபிரிக்க வெப்பநிலைமைகளின் காரணமாகத் தோலிலேற்படும் பல்வகை மாற்றங் களிலொரு பகுதியெனக் கொள்வது சிறந்தது ; ஆனல் வேறுவகை மக்களுக்கிடையிற் காணப்படும் கரிய தோல்களுக்கு இம்முடிவு பொருந் 35fᎢᏯ5l.
வெப்ப ஆபிரிக்கா மேற்பலர் படையெடுத்தனர். இவர்கள் வடக்கிலிருந்து சகாராவுக்கூடாகவும், அதன் எல்லைப்புறம் வழியாகவும் சென்றனர்; அத்துடன், மேற்கூறியவாறு, ஏறக்குறைய கலப்பற்ற வடஆபிரிக்க வகை யினர் வடமேற்கிலிருந்து கீழ்நோக்கி, குவாபூய் முனைக்குப் பின்புறமாக ஆபிரிக்காவின் கொம்பு போன்றுள்ள பிரதேசத்தின் வறண்ட நிலங் களுக்கும் பரவினர். கிழக்கிலுள்ள வறண்ட நிலங்களின் தென் மேற்கு எல்லைப்பக்கமாகவும் சூடானின் தென் எல்லை வழியாகவும் வட ஆபிரிக்கத் தன்மைகள் சிலவற்றுடன் வெப்ப ஆபிரிக்க வகையின் பெரும் பாலான தன்மைகளும் பெற்றுள்ள மக்கள் பலரைக் காணலாம். வெப்ப ஆபிரிக்கத் தன்மைகளை முறுகிய மயிர், ஒரளவு தட்டையான அகன்ற மூக்கு, பொதுவாக உட்புறம் வெளித்தோன்றும் உதடுகளோடு கூடிய

Page 18
24
முன் நீண்டுள்ள வாய் ஆகியவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். வாய் உதடுகளின் உட்புறம் வெளித்தோன்றியிருப்பது வெப்பத்தைத் தவிர்க்கும் நோக்கத்திற்காயிருக்கலாம். வட ஆபிரிக்கத் தன்மைகள் கூடி யிருக்கும்போது பொதுவாகப் பக்கத்தோற்றம் கூராயும், மூக்கும் அதற் கேற்றவாறு ஒடுங்கிக் கூராயும் இருக்கும். நைசீரியாவிலுள்ள ஒசா வகை யினர் பொதுவாக வெப்ப ஆபிரிக்கத் தன்மைகளுள்ளவர்களாகவும், பியூலா வகையினர் முக்கியமாக வட ஆபிரிக்க இயல்புகள் உள்ளவர் களாகவும் காணப்படுகின்றனர். ஒசா வகையினர் பெரும்பாலும் பயிர்ச் செய்கையாளராக இருப்ப, பியூலா வகையினர் படையெடுத்துச் சென்றவர் களாகவும் பெரும்பாலும் ஆயர்த் தொழிலாளர்களாகவும் இருந்தனர். பொதுவாகச் சூடானில், அஃதாவது சகாராவின் தென் எல்லை வழியே, மொழி, மத விடயங்களில் வட ஆபிரிக்கத் தன்மைகளே மேலோங்கு கின்றன ; ஆனல் மேலும் தெற்கே, கூரிய பக்கத் தோற்றமுடையவர்களா யிருக்கும் மக்களுக்கிடையிற்கூட, வழங்கப்படும் மொழிகள் பந்து எனும் பெயருடைய பெருந் தொகுதியைச் சேர்ந்தனவாகும் ; இம்மொழிகள் மத்திய கோட்டு ஆபிரிக்காவிலுள்ள மிகப் பழைய சில தன்மைகளைக் குறிக்கும் பல தனிப்பட்ட ஒலிகள் (“கிளிக்” போன்ற ஒளிகள்) உடையன வாயிருக்கின்றன. பந்து மொழிகள் பேசப்படும் பிரதேசத்தின் வடவெல்லை ஏறத்தாழக் கலபாரிலிருந்து கிழக்கு நோக்கிக் கெனியா மலைக்கும், அங்கிருந்து தெற்கு நோக்கி மொம்பாசா வரைக்கும் கீறப்படும் ஒரு கோடாகும். பந்துப் பிரதேசத்தில் வழக்கமாக ஆடுமாடு வளர்ப்போரே நாட்டை அடிப்படுத்தியவராவர்; அவர்கள் அடிப்படுத்திய நாட்டு மக்களைக் கொண்டு தங்களுக்குப் பெரும்பாலும் வலிந்து பயிர் செய்வித்தனர். அடிப்படுத்தப்பட்ட மக்கள் சிலவேளைகளில் ஈ வலயத்திற்கு அல்லது காடுகளுக்குட் கலைக்கப்பட்டனர். ஈ வலயத்தில் ஆடுமாடுகளை வைத்திருப்பது, ஈக்களின் தொல்லை காரணமாக, மிகக் கடினமாகும். மிகப் பெரிய மந்தைக் கூட்டத்தைச் சிலவேளை வைத்திருக்கக்கூடும். நைலுக்கு மேற்கே யுள்ள பகரல்-கசால் அடர்சேற்று நிலப்பிரதேசத்திற் பல ஆதித் தொகுதி கள் வசிக்கின்றன ; இவர்களுட் சிலர் மிக நீண்ட தலையுடையவர்கள், அத்துடன் ஆபிரிக்கர்களுள் மிக உயர்ந்தும் மிகக் கரிய நிறமுடையவர் களாயுமுள்ள வகையைச் சேர்ந்தவர்களாயுமிருக்கின்றனர். இவை பெரும் மத்திய கோட்டுக் காடுகள், தென் கிழக்கை நோக்கியுள்ள கோல் கோசின் சில பாகங்கள் தவிர்ந்த, கின்னிக் கரை நிலங்கள் வழியாகவும் கொங்கோ வடிநிலத்திலும் இப்பொழுதும் காணப்படுகின்றன. இப்பிரதேசத்தில், ஏற் கெனவே குறிப்பிடப்பட்ட குறளருடன் பல ஆதி வகைகளும் காணப் படுகின்றன. சில குறளர் மஞ்சள் நிறமானவர்களாயும், வேறு சிலர் மிகக் கரியநிறமானவர்களாயும் காணப்படுகின்றனர்; பெரும்பாலான குற ளர் வட்டமான சிறிய தலைகளும் மிளகுக் குலைபோன்ற தலைமயிரும், உடலிற் சில மென்மயிர் அல்லது உடலின் சில பாகங்களில் மாத்திரம்

25,
கரிய முதிர்ந்த மயிரும் உடையவர்களாயிருக்கின்றனர். மத்திய கோட்டுக் காட்டு மக்களிற் சிலர் வாலில்லாக் குரங்கின் தோற்றமுடையவர்களாயு மிருக்கின்றனர். தென் மேற்கு ஆபிரிக்காவிலுள்ள புதர்மனிதர், உடலைப் பொறுத்தவரையிற் சிலவழிகளில், மத்திய கோட்டுப் பிரதேசக் குறளரை. ஒத்தவர்களாயிருக்கின்றனர்; அவர்களுடைய தலைகள் சிறிய அளவுத் தலைகள் உட்பட, நடுத்தர விகித சம அளவான வகைத்தலைகளிலிருந்து நீளமான வகைத்தலைகள்வரை வேறுபடுவனவாகும். அவர்கள் மஞ்சட் சாம்பல் நிறமுள்ளவர்கள். அவர்களுடைய உயரம் கட்டையாயும், மூக்குத் தட்டையாயும் இருக்கும்; ஆனல் வாய் எப்பொழுதும் முன் நீண்டதாயிருக்கு மென்பதில்லை. இவர்கள் பிட்டம், முக்கியமாகப் பெண்களினது, மிகக் கொழுத்ததாயிருக்கும். ஒறேஞ்சு ஆற்றின் சில பாகங்களிலுள்ள கொருன இன மக்களுள், மிக நீண்ட தலையும் முனைப்பான புருவங்களும் உடைய மனிதர் காணப்படுகின்றனர்; அவர்கள் வட ஆபிரிக்காவின் தொடர்பில் விளக்கப்பட்ட தற்கால மனிதனின் முந்திய வகையைச் சேர்ந்தவர்கள் போன்றுளர்.
மேற்கு ஆபிரிக்கக் காட்டுப் பிரதேசத்தில் கட்டைக் கால்கள், நீண்ட கை கள், நீண்ட தலை, ஆனல் முனைப்பான புருவங்களுக்குப் பதிலாகப் புடைத்த நெற்றி ஆகியனவற்றுடன் கூடிய உயர்ந்த, வலிமைமிக்க நீகிரோவர் காணப்படுகின்றனர்; அவர்களுடைய வாய் முன் நீண்டிருப்பதுடன் உதடு கள் உட்புறம் வெளித்தோன்றுவனவாயும், மூக்கு அகன்று தட்டையாயும் இருக்கும். இவற்றிலிருந்து ஆபிரிக்காவில் பழைய மனிதரிற் பல வகையி னர் இருந்திருக்கின்றனரென்பதும், இவர்களுடன் வட ஆபிரிக்காவைச் சேர்ந்த இடையர் வந்து புகுந்து அடிப்படுத்திய பெண்களுடன் கலந்தன ரென்பதும் தெரிகிறது. அடிப்படுத்தப்பட்ட மக்களின் தொழில் முக்கிய மாகப் பயிர்ச் செய்கையாகும் ; அதனல், பயிர்ச்செய்கைக்கு நிலம் மண் வெட்டியாலேயே பண்படுத்தப்படும் வழக்கம் தொடர்ந்திருந்ததில் ஆச்சரிய மில்லை. பயிர் வகைகள் பெரும்பாலும் வடக்கிலிருந்தும், சென்ற சில நூற்றண்டுகளாக அமெரிக்காவிலிருந்தும், தருவிக்கப்பட்டனவாகும். வடக் கிலுள்ள சமூக அமைப்பு புன்னிலப் பிரதேசங்களிலுள்ள ஆய்த் தொழி லாளரின் பிதாவழித் தாயமுறையை ஒத்ததாயிருக்கும் ; ஆனல் வெப்ப வலயத்தில் இத்தகைய குலமுறைகள் தூய்மையான உள்நாட்டு முறை களுடன் கலந்திருக்கின்றன. தென் புன்னிலங்களில், அஃதாவது கொங் கோக் காட்டுக்குத் தெற்கே-பல தொகுதியினர் போர்த்தொழிலை மேற் கொண்டுள்ள கூட்டங்களாக-ஆண்கள், பெண்கள், சிறுவர் யாவரும் மதிப் புக்குரிய ஒர் போர்வீரனைச் சார்ந்து வாழ்பவர்களாகக் காணப்படுகின்றனர் ; வீரனின் மதிப்பு மாறும்பொழுது அடிக்கடி கலைந்து மீண்டும் தொகுதி களாகக் கூடியுள்ளனர். ஆபிரிக்காவின் கிழக்குப் பக்கத்தில் நீர்ப்பாய்ச்சல் வசதிகளுடன் கூடிய கமத்தொழில் முக்கியமானதாகும், மேற்குப் பாகத்
3-R. 4596 (9162)

Page 19
26
தின் பல பகுதிகளில் ஆய்த்தொழில் நிலைமைகளே மேலோங்கியிருக்கின் றன. தெற்காகவும் தென் மேற்காகவும் நடைபெற்ற பெயர்ச்சிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையும் அடிக்கடி நிகழ்ந்தவையுமாகும் ; ஆனல் நாட்டை அடிப்படுத்திய கூட்டங்கள், முக்கியமாக அமாசூலூக் கூட்டம், வடக்காகவும் பரந்திருக்கின்றன ; இவை வட ஆபிரிக்க இயல்பு களைச் சிறப்பாகக் காட்டுவனவாயுள்ளன. இக் கூட்டங்கள் தெற்குப் பாகத் திற்கு நான்கு அல்லது ஐந்து நூற்றண்டுகளுக்கு முன் பரவின வெனச் சொல்லப்படுகிறது.
வெப்ப ஆபிரிக்காவின் பல பகுதிகளில், உதாரணமாகச் சூடானிலும், கொங்கோப் பிரதேசத்தின் தென் பகுதியிலும், குறளரின் கலப்புத் தன் மையைப் பெருத கன்ற தலையுள்ளவர்கள் இருக்கின்றனர்; இவர்கள் பெரும்பாலும் நெட்டையானவர்கள். சென்ற சில நூற்றண்டுகளில் அடி மைகளைப் பிடிப்பவர்கள் ஆபிரிக்காவுக்குப் பெரும் தீங்கு விளையக் காரண மாயிருந்திருக்கின்றனர்; இவர்கள் சிலவேளைகளில் தென் அரேபியாவி லிருந்து வந்தனர். தென் அரேபியர் நெடுங்காலமாகவே ஆபிரிக்காவிற் றலையிட்டு வந்திருக்கின்றனர். அகலத் தலையினர் சூடானில் அங்குமிங்கு மாகவும், நைல் நதியைச் சேர்ந்த பாரெல்கசாலின் மேற்பகுதியின் சில பாகங்கள் வழியேயும், கொங்கோப் பிரதேசத்தில் அங்குமிங்குமாகவும் (இங்கே பெரும்பாலும் கட்டையானவர்களாயிருக்கின்றனர்) காணப்படுகின் றனர்.
ஆபிரிக்காவில் சகாராவுக்கும் அபிசீனியாவுக்கும் தெற்கேயுள்ள, பத் தொன்பதாம் நூற்றண்டிற் புகுந்தவர்கள் தவிர்ந்த, மக்களில் எறக் குறைய ஒவ்வொருவரும் முறுகி வளைந்த தலைமயிர் உடையவர்களாகவும் பெரும்பான்மையோர் உட்புறம் வெளித்தோன்றும் உதடுகளையுடையவர்க ளாகவும் இருக்கின்றனர்; ஆனல் பக்கத்தோற்றம், உயரம், நிறம் ஆகியன பெரிதும் வேறுபாடுடையனவாயிருக்கின்றன. காலநிலை வலயங்கள், ஈவல யங்கள் ஆகியவற்றின் காரணமாகவும், நாகரிகமடைந்த பெரும் மையங் களிலிருந்து துண்டிக்கப்படுதல் காரணமாகவும் பிரதேசமெங்கும் ஏற்படும் சமூக அமைப்பு இக்கட்டுக்கள், அடிமைகளைப் பிடித்தற்கு நீண்டகாலமாக நடத்தப்படும் தாக்குதல்களினல் பெரிதும் சிக்கலாக்கப்பட்டன; அடிமை களைப் பிடித்தற்காய தாக்குதல்கள் இன்னும் நின்ற பாடில்லை. பெருந் தொகையான மக்களின் உடனலம் மிகக் குறைவான நிலையிலுளது. வைத் தியர் ஒருவர், 1914-1918 இல் வழக்காற்றிலிருந்த சொற்றெடரைப் பயன் படுத்தி, இவர்களில் அநேகர் சீ 3 (C 3) அன்றி இசற்று 10 (Z 10) தொகுதியிலுளர் என்கிருர், பல பகுதிகளில் கமத்தொழில் இப்பொழுதும் பூர்வமுறையில் நடைபெறுவதன் காரணமாகக் கிராமங்கள் சில ஆண்டு களுக்கொருமுறை இடம் பெயர்கின்றன ; இத்தகைய நிலைமைகள் சரித்திர காலத்துக்கு முற்பட்ட ஐரோப்பாவிலேயே காணப்பட்டன. மத்திய இந்தி

27
யாவின் மலைநாடுகளில் இப்பொழுதும் இத்தன்மையான சில நிலைமை களைக் காணலாம். இக் குடிகளின் வாழ்க்கை, குடியிருப்புகள் ஆகியவற்றை உறுதியாக்கவும், நோய்களைக் குறைத்துக் குழந்தைகள் நலனை விருத்தி செய்யவும், சிற்றின்ப உணர்ச்சிகளின் முழு வளர்ச்சியைத் தாம தப்படுத்த உதவக்கூடிய கல்வியையும் மற்றும் அக்கறைகளையும் புகட்டவும் செய்யும் உதவிகள் ஆபிரிக்க சுதேசிகளின் இனத்தைச் செம்மையாக்கி ஒரு நூற்றண்டிலோ, இரண்டு நூற்றண்டிலோ பெரும் மாற்றங்களை உண்டாக்கக்கூடும். ஐரோப்பிய எண்ணங்களையும் பழக்கங்களையும் அப்படியே புகுத்த முடியவில்லை. ஆபிரிக்க மக்களின் உடற்றெழிலியலையும், சமூக வியலையும் பற்றி, முக்கியமாக அவர்கள் நில ஆட்சித் திட்டங்களைப் பற்றி, ஆராய்வது செய்முறை முக்கியத்துவமும் விஞ்ஞான முக்கியத்துவமும் பயப்பதாகும்; ஒர் இனத்தை முன்னேற்றமடையச் செய்யும் முயற்சிகள் நிலையான பயனளிக்க வேண்டுமாயின் சுதேச பாரம்பரியங்களை இயன்றஅளவு பயன்படுத்தவேண்டும். மலைகளுக்கிடையிலுள்ள அபிசீனியா புறம்பான பிரச்சினையையுடையதாயிருக்கிறது ; அது வட ஆபிரிக்க அடிப்படையை யுடைய குடிகளையும், கரிய ஆபிரிக்காவிலும் பார்க்கக் கூடிய கிக்கலான சமூக அமைப்பையும் கொண்டுள்ளது. கி. மு. சில நூற்றண்டுகளுக்கு முன்னரே அந்நாடு ஓரளவு உயர்ந்த பண்பாடுடையதாய் விளங்கிற்று. தென் அரேபியா, நைல் பிரதேசம் ஆகிய இடங்களின் பண்பாடுகள் இங்கு பரவின. அந்நாட்டின் உட்பகுதிகளை ஆராய்ந்தால் தொல் வகைகளோடு கூடிய பல் வேறு வகைகளைக் காணக்கூடியதாயிருக்கும். அடிமைத் தொழில் மத்திய கோட்டு ஆபிரிக்காவிலுள்ள பல இயல்புகளை அபிசீனிய மேட்டு நிலங் களுக்குக் கொண்டு வந்திருத்தல் வேண்டும்.
வெப்ப ஆபிரிக்காவுக்குச் சென்ற நகர்வுகளைக் கருவிகள் முதலியன வற்றிலிருந்து அறியக்கூடிய பல்வேறு பண்பாடுகளுடன் தொடர்பு படுத்தக் கூடிய காலம் இன்னும் வரவில்லை. புதர் மனிதனின் தொழிற்றிறமை களும் வாழ்க்கை முறையும் பலவழிகளில் தென்-மேற்கு ஐரோப்பாவின் பழைய கற்காலத்தின் பிற்பகுதி நிலைமைகளை ஒத்தனவென்பதில் ஐய மில்லை; இவ்விரண்டு வகைகளும் வட ஆபிரிக்காவிலிருந்தே வெவ்வேறு திசைகளிற் பரம்பின. பல கண்டுபிடிப்புகளிலிருந்து பழைய கற்கால முடிவில் மனிதர் சிலர் நகர்ந்து தென்பக்கமாகச் சென்றனரென்று, சகாரா உலர்ந்ததிலிருந்து, தெரிகிறது. ஆனல் இந்த நகர்வு வடக்கிலிருந்து தொடங்கிய காலத்தைக் கொண்டு அது தென் ஆபிரிக்காவில் வந்தடைந்த காலத்தைத் தீர்மானிக்க முடியாது. மேற்கு ஆபிரிக்காவுக்கும் கொங்கோப் பிரதேசத்துக்கும் பெரும் நகர்வுகள் ஏற்பட்டமை பற்றி, முக்கியமாக கி. மு. மூவாயிரம் ஆண்டளவில் ஏற்பட்ட பொதுப் பரம்பல் பற்றிப் போதிய ஆதாரங்களுண்டு. கமத்தொழில் முறைகள், சாணை பிடித்தல், செம்பு அல்லது வெண்கல உலோகத்தொழில் ஆகியவற்றிலிருந்து இப்பொதுப் பரம்பல் பற்றி அறியலாம். இத்தொழில்களில் மட்பாண்டத் தொழிலே

Page 20
28
முந்தியதாயிருத்தல் வேண்டும். தொழில் வகைகள் பரம்பத் தொடங்கிய காலத்தில் பழைய கற்கால முடிவிலிருந்த கருவி வகைகளின் உதவி யோடு வேட்டையாடும் மக்களே பரவியிருந்தனர். கி. மு. மூவாயிரம் ஆண் டளவில் நடைபெற்ற நகர்வுகள் இந்தியாவில் மாநகரங்களையும், சீனவில் வரலாற்றையும், மத்தியதரைப் பிரதேசத்திலும் தானியூப்பு நதிபாயும் ஐரோப்பிய பிரதேசத்திலும் முறையே நகர நாகரிகத்தையும் கிராம நாக ரிகத்தையும் உண்டுபண்ணின. வெப்ப ஆபிரிக்காவில் இந்நகர்வுகள் மிகக் குறைவாகவிருந்ததோடு அவை ஏற்படுத்திய மாற்றங்களும் பெரும்பாலும் மறைந்துவிட்டன; ஆயின் இவை கலப்பையைப் பயன்படுத்தலோ மாநகரம் அமைத்தலோ பற்றிய அறிவைப் பரப்பாது கமச் செய்கை பற்றிய அறிவை மாத்திரம் சிறிது விட்டுச் சென்றன. ஆபிரிக்காவைத் தொடர்ச்சியாகக் கைப்பற்றிய ஆயர் பெரும்பாலும் பிதாவழித்தாய முறையைச் சேர்ந்த வர்களாகவே முதலில் இருந்தனர் ; இவர்கள் கமத்தொழிலை வெறுத்து, பழமையப் பேணுவதில் ஆழ்ந்த விருப்பமுடையவர்களாகவும் அடிக்கடி போரிடும் கூட்டங்களாகவும் இருந்தனர். தாம் அடிப்படுத்திய மக்களைத் தமக்கு வேலை செய்விக்க முயன்றனர். அக்காலத்தில் மாநகரம் பற்றிய எண்ணம் இல்லாமையினல் பல பகுதிகளில் உலோக வேலையாளரும் கைப்பணியாளரும் இப்பொழுதும், ஐரோப்பாவிலுள்ள பரம்பரைத் தகர வேலையாளர் போல, சமூக அமைப்புக்குட் சேராத நாடோடிகளாகவே காணப்படுகின்றனர். இதுவே மத்தியகோட்டு ஆபிரிக்காவில் நாகரிகம் அதிகம் முன்னேறதிருப்பதற்கு மற்றெரு காரணமாகும். இதன்பின்னர், சகாராவுக்கூடாகவும் சூடான் வழியாகவும் முகம்மதியர் தாக்கங்கள் வரும் வரை, ஆபிரிக்காவுக்குள் வந்த நகர்வுகள் பற்றி இதுவரை எமக்கொன்றும் தெரியவில்லை. பதினரும், பதினேழாம் நூற்றண்டுகளில் நடைபெற்ற நாடுகாண் பிரயாணங்கள் ஆபிரிக்காவின் வரலாற்றிற் பெரும் நெருக்கடியை உண்டாக்கின. முந்திய நூற்றண்டுகளில் அராபிய அடிமை வியாபாரிகள் காரணமாக உண்டான குழப்பங்களுடன் போர்த்துக்கேய, ஆங்கிலேய அடிமை-வியாபாரிகளும் மேலும் குழப்பங்கள் உண்டாவதற்குக் காரண மாயிருந்தனர். இதுவுமன்றி ஆபிரிக்க மக்களை ஐரோப்பிய மயமாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள்-இம்முயற்சிகள் சிலவேளைகளில் நன்மை பயப்பன வாயும் ஆனல் உண்மையான நிலைமைகள் பற்றிய அறிவின்மை காரண மாகத் தீமை பயப்பனவாயுமிருந்தன-விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கின. ஒரு. பெரும் நன்மையென்னவெனில் வெப்ப அமெரிக் காவிலுண்டாக்கப்பட்ட ப்ல பயிர்வகைகள் ஆபிரிக்காவிற் பரப்பப்பட்டமை யாகும். இப்பயிர்வகைகள் உண்டாக்கப்பட்டதன் விளைவாக ஆபிரிக்காவின் நிலை மிக உயர்ந்திருக்கும், ஆனல் அதற்கிடையில் அடிமை-வியாபாரம் சமூக உறுதிப்பாட்டைக் கெடுத்துவிட்டது. பத்தொன்பதாம் நூற்றண்டில் மற்றெரு நெருக்கடி ஏற்பட்டது. கைத்தொழிலுக்கும் மிருக உணவுக்கும் வேண்டிய மூலப் பொருள்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதில் பேரரசுகளுக்கிடையிலேற்பட்ட போட்டியே இதற்குக் காரணமாகும். இந்த

29
நெருக்கடி காரணமாகச் சுதேச அபிவிருத்தி தடைப்பட்டது. இதனல் சில நன்மைகளும் விளைந்தன. ஆனல் நில உடைமைக்கும் சமூகத்துக்குமுள்ள தொடர்பை விளங்கிக்கொள்ள முடியாமையினல் தீமைகளே அதிகம் உண் டாயின. நாட்டுக் கூட்டவையின் பொறுப்பாணை முறைமையே நாடுகளை விருத் தியடையச் செய்வதற்குச் சருவதேச அடிப்படையிற் பொறுப்பெடுப்பதற் காய முதற் பரிசோதனையாகும். இவற்றிலிருந்து பல்வகைக் காலநிலை களுக்கும் மக்களுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு திட்டங்களை, வல்லுனர் களின் மேற்பார்வையில், நடைமுறைக்குக் கொண்டு வருவது சாத்தியமாகு மெனத் தெரிகிறது. ஆபிரிக்காவில் குடித்தொகை குறைவாயிருக்கிறது; சுதேசிகள் தொகுதியாக நில உடைமையாளராகவிருப்பதை மதித்தும், சுதேச சமுதாய முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு வியாபாரிகளினதும் எற்றுமதியாளரினதும் செல்வாக்கை மட்டுப்படுத்தியும் வந்தால், மருத்துவ உதவியும் சுகவழிக் கல்வியும் குடித்தொகையின் எண்ணிக்கையைக் கூட் டித் தரத்தையும் உயர்த்தும், சிறந்த பந்து இனத்தவர்கள் தகுந்த ஐரோப்பிய உதவி பெறுவார்களாயின் நன்கு விருத்தியடைவார்களென் பது பலரின் நம்பிக்கையாகும் ; ஆயின் ஐரோப்பிய தொடர்புகள் கூடவே வேடுவர் முதலிய குறைந்த நிலைமக்கள் தொடர்ந்து அவ்வாறிருப்பார்கள் எனச் சொல்லமுடியாது. ஆபிரிக்க சமூகம் உறுதியாகவும் சீருடையதாக வும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும் ; உலக நாகரிகத்தின் வருங் காலம் அயன மண்டல நாடுகளிலிருந்து கிடைக்கும் பொருள்களிற் பெரி தும் தங்கியிருக்கின்றது; இப்பொருள்களை அத்தகைய காலநிலைகளிற் சுதேச மக்களே உற்பத்தி செய்யக் கூடியவராவர்.

Page 21
3 ஆம் அதிகாரம்
தென் ஆசியாவுக்கூடாகப் பசுபிக்கு வரை
தற்கால மனித வகைகள் இப்பக்கமாக நகர்ந்தமை பற்றி விளங்கிக் கொள்வதற்கு, பனிக்கட்டிக் காலத்திற் கடைசியாகப் பெரிதாகக் காணப் பட்ட கூற்றில், இமாலயத்திலுள்ள பனிக்கட்டித் தகடுகளிலிருந்து மேலும் தெற்கேயுள்ள மத்தியகோட்டு நிலைமைகளுக்குப் படிமுறையாக ஏற்பட்ட மாற்றம் விரைவாக உண்டாகியிருக்க வேண்டுமென்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். இதிலிருந்து மழைப் பணியும் பனிக் கட்டியும் உருகி இப்பொழுது கங்கையும் இந்து நதியும் பாயும் தாழ் நிலங்களுக்கு வெள்ளப் பெருக்கெடுத்தன என்பதை அனுமானித்துக் கொள்ளலாம். அடுத்ததாக, பனிக்கட்டிக் காலத்தின் அக்கூறு நிலத்தின் மேல்நோக்கிய அசைவுடன் தொடர்புற்றிருந்திருக்கக் கூடுமென நாம் கருத்திற் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு அக்கூறு தொடர்புடையதா யிருந்திருப்பின் கடற்கரையோரம் இப்பொழுதுள்ள நூறு பாகக் கோட் டுக்கு அண்மையில் இருந்திருத்தல் வேண்டும். இந்த அசைவு நெடுங் காலமாக அடுத்தடுத்து எற்பட்ட அலைவுகளின் கடைசிக் கூறுகளில் ஒன்ரு கும் ; அலைவுகள் அல்பிசு, ஆமேனியா மேடுகள், இமாலயம், மேற்கு இந்தியத் தொடர்கள் ஆகிய மலைகள் வழியே எற்பட்டன. இந்த மலை களைப் புவிவரலாற்றியலார் புடைக்காலத்துக்குரிய மலைத்தொடர்களைச் சேர்ந்தவையென்பர். அலைவுகள் மலைத்தொடர்கள் உருவாகிய காலத்தில் ஒழிந்துவிட்ட அசைவுகளைக் குறிப்பனவாகும். மேற்கூறிய கடற்கரையோரம் பாரசீகக் குடாவை நிலமாக்கி, மேற்கு இந்தியாவின் வட பகுதியில் மேலும் அதிக நிலம் சேர்த்திருக்கும். சுமாத்திரா, யாவா, பாலி ஆகிய நாடுகள் மலாயாத்தீபகற்பத்தின் பகுதிகளாகவிருந்திருக்கலாம் ; மலாயாத் தீபகற்பம் மாக்கொங்கிலிருந்து போணியோ, பாலாவான் வரை நீண்டிருக் கும். இந்தப் பரந்த நிலத்திணிவை ஒரு பெரும் தீவிலிருந்தும், (இத்தீவின் எஞ்சின பாகமே பிலிப்பைன் தீவுகளாகும்) மற்ருெரு நீண்ட தீவிலிருந்தும், (இத்தீவின் எஞ்சின பாகமே உலொம்பொக்குத் தொடக்கம் ஒம்பயாவரையான தொடர்நிலம்) ஒடுங்கிய தொடுகடல்கள் பிரித்திருத்தல் வேண்டும். வட அவுத்திரேலியாவும் நியூக்கினியும்கூட இணைந்திருந்திருக்க லாம். விவரங்களை மேலும் ஆராயாமலே பின்வரும் முடிவுக்குவரலாம். ஏறக்குறைய மேற்கூறிய நிலைமைகள் இருக்கும்போதே, மக்கள் மெசப் பொத்தேமியாவிலிருந்து தென் இந்தியா, கிழக்கிந்தியத் தீவுகள் ஆகிய இடங்களுக்கூடாக மலனிசியாவின் சில பகுதிகளுக்கும் அவுத்திரேலியா வுக்கும் நகர்ந்தபோது அவர்கள் நெடுங்கடல்களைக் கடக்க வேண்டியிருக்க
30

3.
வில்லை என்பதே அம்முடிவாகும். இந்தப் பக்கமாகச் சென்ற நகர்வுக் கும் தென் பக்கமாக ஆபிரிக்காவுக்குச் சென்ற நகர்வுக்கும் சில ஒப்புமை யிருப்பது இயற்கையே. குறள் மனிதர் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கி யும் நகர்ந்திருக்கின்றனர். தெற்கு நோக்கி நகர்ந்தவர்கள் சிறிய, வட்டத் தலைகளும், ஆபிரிக்காவிற் காணப்படுபவர்கள் போன்று, முறுகி வளைந்த, மிளகுக்குலைபோன்ற மயிரும் உடையவர்களாகவும், ஆனல் கிழக்கு நோக்கி நகர்ந்தவர்கள் கரிய அல்லது கருமைகலந்த கபிலநிற மயிருள்ளவர்களாக வும் காணப்பட்டனர். கிழக்கு நோக்கி நகர்ந்த குறளரில் எஞ்சியுள்ளவர்களை அந்தமானியர், மலாவாசியாவிலுள்ள செமாங்கர், நியூகினியிலுள்ள தப்பி ரோவரும் எனையோரும், பிலிப்பைன் தீவுகளிலுள்ள ஈத்தாமக்கள், மலனி சியாவிலுள்ள சில மக்கள் ஆகியோரிடையே இப்பொழுதும் காணலாம். இவர் கள் வேடுவர்களாகவும் உணவு சேகரிப்பவர்களாகவும் அடர்ந்த காட்டுப் பகுதி களிற் காணப்படுகின்றனர். நியூகினியிலுள்ள சிலர் ஒரளவு கமத்தொழில் செய்யவும், அந்தமான் தீவுகளிலுள்ள சிலர் உயர் தொழில்கள் சில செய்யவும் பழகியுள்ளனர் எனத் தெரிகிறது. இப் பிரதேசத்திலுள்ள குறளர், உதாரணமாக அந்தமானியர் அல்லது செமாங்கர், உடலில் மயிரில்லாதவர்களாக, அல்லது தப்பிரோவரும் ஈத்தரும் போன்று, நிறைய மயிருள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். செமாங்கரும் ஈத்தரும் அகன்ற, தட்டையான மூக்குள்ளவர்களாகவும், தடித் தனவாயிருந்தபோதும் உட்புறம் வெளித்தோன்றுவனவாயில்லாத உதடு களுள்ளவர்களாகவும் விளங்குகின்றனர். முழு வளர்ச்சியடைந்தவர்களின் உயரம் பொதுவாக ஐந்து அடிக்கு உட்பட்டதாயிருக்கும். சிறு வட்டத்தலை தொடக்கம் மிக நீண்ட தலைவரையுள்ள புதர்மனிதர் ஒரு வகைக் குற ளரைச் சேர்ந்தவர்களெனினும், ஆபிரிக்காவைப் பொறுத்தவரையில் மத் திய கோட்டுக் காடுகளுக்குத் தெற்கே பரந்து சென்றவர்கள், பொதுவாகக் குறளர் வகையைச் சேர்ந்தவர்களாகத் தெரியவில்லை. அவ்வாறே கிழக் கிந்திய தீவுகளின் மத்தியகோட்டுக் காடுகளுக்கு அப்பால் தென் கிழக் காகப் பரந்தவர்களில், குறளரைப் போன்று முறுகி வளைந்த கரிய மயிருள்ளவர்களும், ஆனல் கூடிய உயரமும் சிறிய வட்டத்தலை தொடக்கம் மிக நீண்ட தலை வரையுள்ளவர்களுமாகிய தாசுமேனியர் இருந்தனர். தாசுமேனியர் பற்றி எமக்குத் தெரிந்தவரையில் அவர்களின் தன்மைகள், முக்கியமாக அவர்கள் தென் ஆசியாவுக்கும் கிழக்கிந்திய தீவுகளுக்கு மூடாக நகர்ந்த காலத்தில் விருத்தியடைந்தவையாகும். அவர்கள் கூடிய உயரமுள்ளவர்களாகவிருந்தமைக்கு நீண்டகாலமாகத் தாசுமேனியாவின் குளிரான காலநிலைகளில் வாழ்ந்தமையே காரணமாயிருக்கலாம் ; ஆனல் அவர்களின் கரியதோலின் நிறத்தையோ, அகன்ற மூக்கின் உருவத் தையோ மாற்றக்கூடியவளவான காலம் அவர்கள் அங்கு வாழவில்லைப் போலும். தாசுமேனியர் பற்றிய முழு விவரங்களையும் சேகரிக்குமுன்னர், அவர்கள் சென்ற ஐம்பது ஆண்டுகளுக்கிடையில், மறைந்துவிட்டமை வருந்துதற்குரியது.

Page 22
32
ஆபிரிக்காவைப் பொறுத்தவரையில், ஒறேஞ்சு ஆற்றுப் பிரதேசத்தி லுள்ள கொருன மக்களும் வேறு சிலரும் வலிமையுள்ள உடலும் உயர்ந்த தோற்றமும், உறுதியான உயர்ந்த புருவமுமுடைய ஒரு வகையைச் சேர்ந்தவர்களாவர். ஆபிரிக்க மக்களின் புருவம் பொதுவாக அதிகம் உயர் வதில்லை. இத்தகைய நீண்ட தலையும் உயர்ந்த புருவமுமுடைய மக்கள் தென் ஆசியாவுக்கூடாகப் பசிபிக்குக்கு நகர்ந்தவர்களில் இருந்திருத்தல் வேண்டும். ஆபிரிக்க மக்கள் பொதுவாக, குறளர்போன்று, கைகளில் முறுகி வளர்ந்த மயிருள்ளவர்கள் ; இளமையிலுள்ள மென்மயிர் அலை போன்றும் ஆழத்திலிருந்து நேராகவும், மனிதரினதும் வாலில்லாக் குரங்கினதும் மயிர் அடிபோன்றும் இருக்கும். தென் ஆசியா, மலாவா சியா, அதற்கு அப்பாலுள்ள நாடுகள் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் மெலனிசியாவிலும் பப்புவாவிலுமுள்ள நீண்ட தலை மக்களும் குறளரும் முறுகிவளைந்த மயிருள்ளவர்களாகவிருக்கின்றனர்; ஆயினும் ஆபிரிக்கா விலுள்ளதுபோல் அவ்வளவு பொதுப்படையாகவில்லை. பப்புவாவிலும் மெலனிசியாவிலும் இவ்வாறிருப்பதிலிருந்து, மக்கள் பழைய காலத்துக் கடல்சாராப் புலப்பெயர்ச்சி வலயத்தின் முடிவுக்கு வந்துவிட்டனர் எனவும், அவர்கள் அப்பிரதேசம்வரை தள்ளப்பட்டனரெனவும், ஆனல் ஆபிரிக்கா வுக்கூடாகத் தெற்குநோக்கி நகர்ந்த முறுகி வளைந்தமயிருள்ள மக்கள் போன்று அவ்வளவு பெருந் தொகையாகவிருக்கவில்லையெனவும் தெரி கிறது. இதிலிருந்து தற்கால மனிதரின் பூர்வ தாயகத்தின் தென் பக்கத்தி லிருந்த மக்கள் முக்கியமாக முறுகி வளைந்த மயிருள்ளவர்களாகவிருந் தனர் எனக் கொள்ளலாம். இவர்களே தெற்குநோக்கி நகர்ந்தமையால் அப்பக்கமாகவுள்ள மக்கள் பெரும்பாலும் முறுகிவளைந்த மயிருள்ளவர் களாகவிருக்க, பூர்வ தாயகத்தின் கிழக்குப் பக்கத்திலிருந்து இந்தியாவுக் கும் மலாவாசியாவுக்குமூடாக நகர்ந்தவர்களிற் சிறுபான்மையோரே அத் தகைய மயிருள்ளவர்களாகவிருக்கின்றனர். இத்தகைய முறுகி வளைந்த மயிருள்ள மக்கள் சிலர் வரலாற்றுக் காலத்தில் தென் ஆசியாவில் இங்கு மங்குமாக இருந்தனரென நம்பப்படுகிறது (பாரசீகத்திலுள்ள சில நினைவுச் சின்னங்கள் இதைக்குறிக்கின்றன) ; ஆனல் இத்தகைய நகர்வுகள் இப்பொழுது பெரும்பாலும் நீரில் அமிழ்ந்திவிட்ட கரையோரச் சமவெளிகள் வழியாகவே நிகழ்ந்திருத்தல் வேண்டும். நிலம் நீரில் அமிழ்ந்தியமையே இத்திசையில் முறுகி வளைந்த மயிருள்ள மக்கள் பெயர்ந்து சென்றது மிகக் குறைவாயிருந்தமைக்குக் காரணமாயிருக்கலாம். பப்புவாவிலும் மெலனி சியாவிலும் வசிக்கும் முறுகிவளைந்த மயிருள்ள மக்களிற் பெரும்பாலோர் நீண்ட தலையுள்ளவர்களாயும் உயரம் குறைந்தவர்களாயுமிருப்ப, குறள ரைச் சேர்ந்தவர்கள் எனப்படும் அகன்ற தலையுள்ளவர்களும் அங்கு காணப்படுகின்றனர். இவர்களின் மூக்கு அகன்றதாய், ஆனல் ஆபிரிக்காவி லுள்ளவர்களின் மூக்குப்போல அவ்வளவு தட்டையாயில்லாது இருக்கின் றது. பப்புவாவினரிற் பெரும்பாலோரின் புருவம் உயர்ந்ததாயிருக்க மெல னிசியரின் புருவம் அவ்வளவு உயர்ந்ததாயில்லை. நீண்டதூரம் கடலிற்

33
பிரயாணம் செய்யக்கூடிய கலங்கள் பயன்படத் தொடங்கிய பின்னர் மெல னிசியன் வகையினர் பசிபிக்குச் சமுத்திரப பிரதேசத்தில் பரந்துள்ளனர் ; ஆனல் அவர்கள் வேறு வகைகளுடன் கலப்புற்றமையால் அவர்களின் குணவியல்புகள் மாற்றமடைந்துள்ளன. அவர்களிற் சிலர் உயர்ந்த தோற்ற முள்ளவர்களாயுமிருக்கின்றனர்.
தென் ஆசியாவிற் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அலைபோன்ற மயிருள்ள மிக நீண்ட தலையுள்ளவர்களாயும் (அகலம் பெரும்பாலும் நீளத்தில் 72 அல்லது அதற்குக் குறைந்த சதவீதமாயிருக்கும்), பொது வாகக் குட்டையாய்ச் சராசரி உயரமுள்ளவர்களாயுமிருப்பர். இவர்களுட் பலர் வட ஆபிரிக்கா, தென்-மேற்கு ஐரோப்பா ஆகிய இடங்களிலுள்ள தற்கால மனித வகையினரின் ஆதிவகையினர் போலவும் தென் ஆபிரிக்காவிலுள்ள கொருன மக்கள் போலவும் நன்கு உயர்ந்த புருவமும் வலிமைமிக்க அலகு எலும்புகளும் உடையவராயிருக்கின்றனர். இவ்வகையினர் எவ்வாறு நகர்ந்தனர் என்பதைக் கண்டுபிடிப்பது முறுகிவளைந்த மயிருள்ள மக்கள் நகர்ந்தமையைக் கண்டுபிடிப்பதிலும் பார்க்க இலகுவாகும் ; ஏனெனில் இவ்வகையினர் அடர்காடுகளிலுள்ள கூட்டத்தினரிடையிலும் தென் இந்தி யாவிலுள்ள நாகரிகமடைந்த மக்களிடையிலுங்கூட இப்பொழுதும் காணப் படுகின்றனர் ; இலங்கையிலுள்ள வேடுவரும் மலாயாத்தீபகற்பத்திலுள்ள சகாயரும் இவ்வகையைச் சேர்ந்தவர்களே ; கிழக்கிந்திய தீவுகளிலும், முக்கியமாகச் செலிபீசிலுள்ள தொவாலரிடையிலும், அவுத்திரேலிய சுதேசி களிடையிலும் இவ்வகையினர் காணப்படுகின்றனர். இவ்வகை மக்களின் மயிர் அலைபோன்று அல்லது சுருண்டதாயிருக்கும். மயிரின் வெட்டு முகத் தின் விட்டம் மற்ற மயிரின் விட்டத்தில் 55 சதவீதம் முதல் 75 சதவீதம் வரையானதாயிருக்கும் ; மென்மையான நீண்ட மயிரும் சில வேளைகளில் காணப்படுகின்றது. மூக்குப் பொதுவாக அகன்றும் தட்டையாயும், நாட்டின் மத்தியில் அல்லது தெற்கிலுள்ள பந்து வினரல்லாத ஆபிரிக்கரின் மூக் கிலும் பார்க்கக் கூடிய முனைப்புடையதாயும் இருக்கிறது ; இலங்கை வேடரின் மூக்கு மட்டாகவே நீண்டிருக்கும். உதடுகள் உட்புறம் வெளித் தோன்றியிருக்கவில்லை, ஆனல் மொத்தமாயுள்ளது. வாய் பொதுவாக முன் நீண்டுள்ளது ; சில வகைகள், உதாரணமாக அவுத்திரேலிய வகை, பின்னடைந்த நெற்றியுடன் கூடிய உயர்ந்த உச்சியுள்ளனவாயிருக்கின்றன.
மிக நீண்ட தலையுள்ள மக்களுக்கும் மட்டான நீளத் தலையுள்ள மக் களுக்குமிடையிலுள்ள வேறுபாடுகள் பற்றித் தொடக்க அதிகாரத்திற் குறிக் கப்பட்டது. மட்டான நீளத்தலை மக்கள் தென் இந்தியக் குடிகளில் அதிகம் காணப்படுவதோடு, தக்கணம் முழுவதும், அதற்கு வடக்கே சில பாகங்கள், கிழக்கிந்திய தீவுகள், இந்தோசீன ஆகிய இடங்களிலும் உளர். இந்தோ சீனுவிலுள்ளவர்கள் கலப்புக்காரணமாகச் சில மாற்றங்களுடன் காணப்படு கின்றனர். தக்கணத்திலுள்ளவர்களின் தோல் கபிலநிறமாயும், பழைய

Page 23
34
மிகநீண்ட தலைகளுடன் கலந்தவிடங்களில் மிகக் கறுத்தும் காணப்படும் ; தலைமயிர் அடர்த்தியாயும் சுருளற்றன்மையுடையனவாயும் இருக்கும். மூக்கு மட்டான அளவுள்ளதாய், அஃதாவது மிகநீண்ட தலையுள்ளவர்களிற் பெரும்பாலும் காணப்படுவது போன்று அவ்வளவு அகலமில்லாததாய், இருக்கும். இந்தோசீன, தென் சீன, கிழக்கிந்திய தீவுகள் ஆகிய இடங் களில், முக்கியமாக முதல் இரண்டு இடங்களிலும், உள்ள மக்கள் வடசீன இனங்களுடன் கலப்புற்றிருப்பதாகத் தெரிகிறது; இதுபற்றி அடுத்த பிரிவில் ஆராய்வாம். இதை ஆராய்ந்தபின் தென் ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய பருவக்காற்று நிலங்களிலுள்ள மக்கள் பற்றி, பிரதேசம் பிரதேசமாகவும் சுருக்கமாகவும் கூறும் ஒரு அதிகாரம் சேர்க்கப்படும்.
தக்கணப் பிரதேசத்தில் மட்டான நீளத்தலையும், மட்டான மூக்கும் கறுத்த தோலுமுடைய மக்கள் திராவிடர் என அழைக்கப்படுகின்றனர்; தக்கண மக்களின் மொழிகளும் இப்பெயரால் அழைக்கப்படுவதனல் இப் பெயர் சில தடுமாற்றத்தையுண்டு பண்ணுவதாகவிருக்கிறது. திராவிட மொழிகளும் தக்கண நாகரிகத்தின் பல கூறுகளும் தோன்றிய இடங்கள் பரந்து சென்ற திசைகள், விருத்தியடைந்த விதங்கள், தக்கணப் பிரதேசத் தில் வந்து சேர்ந்த காலம் ஆகியவற்றுக்கும் தக்கணத்தின் குடிகளில் முக்கிய பகுதியினர் எனச் சொல்லப்படும் மக்கள் தோன்றிய இடங்கள், வந்து சேர்ந்த காலம், நகர்ந்து சென்ற மண்டலங்கள் என்பவற்றுக்கும் நேரடித் தொடர்பிருப்பதாகக் கொள்ளமுடியாது. பலுக்கித்தானில் வழங் கும் பிராகுயி மொழி திராவிட இனத்தைச் சேர்ந்ததாகும் ; இதிலிருந்து இம்மொழிகள் மேற்குத் திசையில் எங்காயினும் ஓரிடத்திலிருந்து வந் திருக்கலாமெனக் கொள்ள இடமுண்டு. சேர் யோன் மார்சல் அண்மையில் இந்து நதிக்குக்கிட்டவுள்ள அரப்பா, மொகெஞ்சதாரோ ஆகிய புராதன நகரங்களைக் கண்டுபிடித்தார் ; இந்நகரங்களின் நாகரிகம் கி. மு. மூவா யிரம் ஆண்டளவில் விளங்கிய சுமேரிய நாரிகத்தையொத்ததாகத் தெரி கிறது. சுமேரியா சிறந்து விளங்கிய காலத்திலேயே நகரங்கள் பற்றிய அறிவு இந்தியாவுக்குப் பரவியிருக்கலாம். இந்நகரங்கள் போன்ற சில இடங்கள் பலுக்கித்தானிலிருந்து வரும் ஒரு கணவாயிலும் காணப்படுகின்றன ; இதனல் நிலப்பக்கமாகவும் நகரங்கள் பற்றிய அறிவு பரவியிருக்கிற தெனக் கொள்ளலாம். இவற்றிலிருந்து அக்காலத்தில் மட்டான நீண்ட தலையுடைய மக்கள் ஐரோப்பாவிலும் மற்றுமிடங்களிலும் பரவிவந்தனர் எனக் கொள்ள இடமுண்டு ; ஆனல் நகரங்கள் பற்றிய அறிவு பரம்பிய காலத்தைத் திராவிட மொழிகள் பரம்பிய காலத்துடனே, தக்கணத்தில் மட்டான நீளத்தலைகள் பரம்பிய காலத்துடனே இணைத்தல் பொருந்தாது ; முக்கியமாக, இந்நகரங்கள் எதிலும் காணப்படும் சிலைகளிலுள்ள தலைகள் அகன்றனவாயிருப்பதனல் இவ்வாறு இணைத்தல் பொருந்தாதென்க.

35
ஆசிய பருவக்காற்று நாடுகளும், கிழக்கிந்திய தீவுகளிலுள்ள சாவகமும் பல்வகையான செல்வங்களையுடையனவாயிருந்தமையால், மக்களின் கவ னம் அத்திசையில் இழுக்கப்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட பல படை யெடுப்புக்களும், பிற்காலத்தில் நிகழ்ந்த திருத்தமான சாதனங்களுடன் கூடிய நகர்வுகளும் அப்பிரதேசத்தின் குடித்தொகையைக் கூட்டி விட்டன; இந்நாடுகளுக்கு அப்பாலுள்ள பொலினீசியாவுக்கும் பிற்கால நகர்வுகள் சென்றன ; இந்நகர்வுகள் தோணிகள் மூலமே ஏற்பட்டன. நல்ல சாதனங் களுடனும் அமைப்புகளுடன் சென்ற மக்களின் பெயர்ச்சிகள் பெளதிக வுறுப்புக்களினல் அதிகம் தீர்மானிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆசிய பருவக்காற்று நாடுகள், கிழக்கிந்திய தீவுகள், பொலினிசியா ஆகிய நாடு களுக்கு இந்துக்கூசுக்கும் இமயத்துக்கும் வடக்கே விருத்தியடைந்தன வாகக் காணப்பட்ட தன்மைகளுள்ள மக்கள் சென்றனர். இவ்வாறிருப் பதஞல் மனிதர் வடக்கு-வடகிழக்கு நோக்கிச் சென்ற நகர்வுகள் பற்றியும் அம்மக்களுக்கிடையில் விருத்தியடைந்த உறுப்புக்கள் பற்றியும் ஆராய்ந்த பின்னர் தென்-கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய தீவுகள், பசுபிக்குப் பிர தேசம் ஆகிய இடங்களின் குடிகள் பற்றி ஆராய்வது புத்தியாகும்.
எனவே, எடுத்துக்கொண்ட பொருளை நிறைவுறக் கூருது இந்த அதிகா ரத்தை முடிக்க வேண்டியிருக்கிறது; தொடர்பில்லாத சில விடயங்கள் பற்றி மாத்திரம் இன்னும் குறிப்பிடுதல் வேண்டும். பம்பாய் மாநில மக் களுட் பெருந்தொகையானேர் அகன்ற தலையுடையவர்களாயிருக்கின்றனர். நாகர பிராமணர், பிரபு மக்கள், மராட்டியர், குடகர் ஆகியோரும் இம்மா நில மக்களுள் அடங்குவர். இங்குள்ள அகன்ற தலை மக்கள் கிழக்கு இம யத்திலும் மத்திய ஆசியாவிலுமுள்ள அகன்ற தலையினருடன் எவ்வகை யிலும் கலப்புள்ளவர்களல்லர் ; ஆயின் பெரும்பாலும் மேற்கு ஆசியா விலும் தென் கிழக்கு ஐரோப்பாவிலுமுள்ள சில அகன்ற தலை மக்களைப் போற் காணப்படுகின்றனர். இவர்கள் ஒடுங்கிய மூக்கும் உயர்ந்த தோற்ற மும் உடையவர்கள். இவர்கள் முன்னர் தற்காலிகமாக சைதோத்திராவிடர் என அழைக்கப்பட்டனர், ஆனல் அடனும் ஏனையோரும் இப்பெயர் அவர் களுக்குப் பொருத்தமில்லையெனக் கருதி அதை வழக்கிலிருந்து நீக்கி விடும்படி கேட்டுள்ளனர். இம்மக்களும், திராவிடமொழி பேசுவதுடன் அகன்ற தலையுமுடையவர்களான பலுக்கித்தானிலுள்ள பிராகுயி மக்களும், கி. மு. மூவாயிரம் ஆண்டளவில் மேற்கு இந்தியாவுக்கு நகரங்கள் பற்றிய அறிவு பரந்தபொழுது நகர்ந்து வந்திருக்கலாம். அக்காலத்தில் நகர்ந்து வந்த இவர்களே தக்கண நாகரிக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியிருத்தல் வேண்டும். எவ்வாருயினும் இந்த முடிவு இன்னும் ஒரு ஊகமாகவே யிருக்கிறது.
பின்னர் கிழக்கு நோக்கிப் பரந்து சென்ற குடிகள் கிழக்கிந்திய தீவு களுக்கும் அதற்கு அப்பாலும், நிலம் இப்பொழுதுள்ள மட்டத்துக்குத்

Page 24
36
தாழ்ந்த பின், பெரும்பாலும் தோணிகளிலேயே சென்றன. ஒரு தீவி லிருந்து இன்னெரு தீவாகச் சென்று பரம்பியவர்கள் பொதுவாக அவுத் திரேலியாவைத் தவிர்த்தே சென்றிருக்கின்றனர். அவுத்திரேலியக் கண் டத்தின் குடிகள், எமது காலம்வரை, நியூகினியும் அவுத்திரேலியாவும் இணைந்திருந்த காலத்திலேற்பட்ட பூர்வ நகர்வுகளின்போது சென்றவர் களேயாவர். இதன்பின்னர், அங்குமிங்குமாக அலைந்து திரிந்த சிலரே அவுத்திரேலியாவுக்குச் சென்றிருக்கின்றனர். இவர்களின் கலப்புக் காரண மாக அவுத்திரேலிய சுதேசிகளின் உடலுறுப்புக்களோ, சமூக இயல்பு களோ எவ்வளவு மாற்றமடைந்தன வென்பதைத் தீர்மானிப்பது பெரும் பிரச்சினையாகும். இவ்விடயம் பற்றித் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய விரும்புவோர் பேராசிரியர் சொலசு எழுதிய “ பூர்வ வேடுவர் ” எனும் நூலிலுள்ள தேசப்படங்களையும் விளக்கப்படங்களையும் ஆராய்ந்து பார்த்தல் பயனுடைத்தாகும்.

4 ஆம் அதிகாரம் ஆசியாவில் வடக்கு, வடமேற்கு நகர்வுகள்
தற்கால வகை மனிதரின் பூர்வ தாயகமெனக் கொள்ளப்படும் பிர தேசத்திற்கு வடக்காயும் வடமேற்காயுமுள்ள அடுத்த பெரிய "தாழ்நிலம் துருக்கித்தான் புன்னிலங்களாகும். இப்புன்னிலங்களில் இப்பொழுது அகன்ற தலை மக்கள் வசிக்கின்றனர்; ஆனல் இங்கிருந்த பழைய குடிகள் மிக நீண்ட தலையுடையவர்களாயிருந்திருக்கின்றனர் எனக்கொள்ள இடமுண்டு. இது ஒரு அனுமானமேயெனினும் இம்முடிவுக்கு வருவதற்குப் பல அறிகுறிகளுள. முதலில், காலத்தைச் சரியாகக் குறிப்பிட முடியாத பிணக்குழிகளிலிருந்து நீண்டதலைகளும் வலிமையான பக்கத் தோற்றமு முடைய எலும்புக் கூடுகள் கிடைத்தன; இப்பிணக் குழிகளிற் சில கி.மு. மூவாயிரம் ஆண்டு அல்லது அதற்குப் பிந்திய காலத்தைச் சேர்ந்தன ; சில. கி. மு. மூவாயிரம் ஆண்டுக்கு முந்திய காலத்தனவாயுமிருக்கக்கூடும். இவை முக்கியமாகத் தென் இரசிய (அஃதாவது ஐரோப்பிய) தெப்பு வெளிகளிற் காணப்பட்டன; இவ்விடயம் பற்றி ஆசிய தெப்பு வெளிகளி லிருந்து செய்திகள் அதிகம் கிடைக்காமைக்கு வருத்தப்பட வேண்டியிருக் கிறது. இரண்டாவதாக, அனேவில் நடைபெற்ற முந்திய அடக்கங்களி லிருந்து அக்காலத்தில் நீண்ட தலை வகைகளிருந்தனவெனத் தெரிகிறது; அவ்வடக்கங்களின் காலத்தைச் சரியாகத் தீர்மானிக்க முடியாவிடினும் அவை முந்திய காலத்தனவென, ஏறக்குறைய கி. மு. நான்கு அல்லது ஐந்து ஆயிரம் ஆண்டளவான காலத்தன வெனக் கொள்ள இடமுண்டு. மூன்றவதாக, சைபீரியாவிற் காணப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட காலத் திய எலும்புக்கூடுகள் சில மிக நீண்ட தலையினவாகும். நான்காவதாக, ஆசியாவுக்கூடாக வடகிழக்கு நோக்கி நடைபெற்ற மனித நகர்வுகளுள், பீரிங்குத் தொடு கடல், உலூசியன் தீவுகள், ஆட்டிக்குப் பணிக்கட்டி ஆகியவற்றைச் சுற்றி அமெரிக்காவுக்கும், பீரிங்குப் பிரதேசத்திலிருந்து மிகத் துரவுள்ள அமெரிக்கப் பகுதிகளுக்கும் சென்ற வகையினருள் மிக நீண்ட தலையுடையவர்கள் காணப்படுகின்றனர். உதாரணமாகப் பல வகைகளைக் காட்ட முடியுமாயினும், கிரீனிலந்து எசுக்கிமோவரையும், பிறேசில் மேட்டு நிலத்திலுள்ள சில வகைகளையும், முக்கியமாக இரி வெற்று அவர்களால் விவரிக்கப்பட்ட இலகோவா சாந்தாப் பிரதேசத்தி லுள்ளவர்களை, குறிப்பிட்டாற் போதுமானது. இங்கு தருக்க முறையிற் காட்ட முயலுவதென்னையெனின், மிக நீண்ட தலையுள்ள வகையினர் இந்தப் பக்கமாகவுள்ள மிகத்தூர இடங்களுக்கு (அஃதாவது, வடகிழக்கு ஆசியா வழியாக) நகர்ந்தனராயின், அவர்கள் தம் பிரயாணத்தை மிக முந்திய காலத்திலேயே தொடங்கியிருக்க வேண்டுமென்பதும், அதன்
37

Page 25
38
காரணமாக, தற்கால மனிதனின் ஆதித் தாயகமென ஈங்குக் கருதப்படு மிடத்துக்கு வட கிழக்கேயுள்ள பிரதேசக் குடிகளின் முன்னேரைச் சேர்ந்த வர் என்பதுமேயாகும். மத்திய ஆசியாவில் மனிதன் தோன்றியமை பற்றிப் பல கூற்றுக்களிருப்பமையினல் இக்கருதுகோள் பற்றி இங்கு வாதம் செய்யப்படவில்லை; தற்கால மனித வகைகளின் தோற்றம் பற்றியே ஈங்கு ஆராயப்படுகிறது. ஈங்கு தரப்படும் கருத்துக்கள் பெரும்பாலும் கலா நிதி அடன் அவர்களின் கருத்துக்களுடன் ஒத்தனவாகும். மத்திய ஆசியா வில், புவிச்சரிதவியலின்படி மிகப் பழைய காலத்தில் ஆதிமனிதனின் தோற்றம் பற்றியும் தற்கால மனித வகைகளின் தோற்றம் பற்றியும் கலாநிதி ஆபுதன் தெரிவித்த கருத்துக்கள் ஈங்கு ஆராயப்படவில்லை ; அவருடைய கருத்துக்களுக்குப் போதிய ஆதாரமில்லாதிருப்பதோடு அவற் றைக் கற்பனை செய்வதே கடினமாகும். ஐந்தாவதாக, துருக்கித்தானிலும் தென் இரசியாவிலுமுள்ள தெப்பு வெளிகளில் நீண்ட தலை மனிதர் முன்னெரு காலத்திற் பெருந்தொகையாக விருந்தனர் எனத் தெரிகிறது ; எனெனில் நீண்ட-தலை ஆரியர் அல்லது வட-மேற்கு இந்தியாவிலுள்ள இந்தோ-ஆரியர் மலைகளுக்கப்பால், ஆய்த் தொழில் மரபுடன் கூடிய புன்னிலத்திலிருந்து வந்திருக்க வேண்டுமென்பதே பொதுவான அபிப் பிராயமாகும். அத்துடன் தென் இரசியாவிலிருந்து நீண்ட-தலையுள்ள தெப்புவெளி மனிதர், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில், போற்றிக்குப் பக்கமாக நகர்ந்து, பழைய பிணக்குழிகளிற் காணப்பட்ட சடலங்களுக்குரிய வகையினரும் இப்பொழுது உலோக காலத்தின் முற்பகுதிக்குரியவர்களெனக் கொள்ளப்படுபவர்களுமாகிய மக்களின் ஒரு முக்கிய பகுதியினர் ஆயினர் எனவும் காணப்படுகிறது. இக்கருத்துக்கள் முற்ற முடிந்தவையெனக் கொள்ள முடியாவிடினும் இவற்றை ஒன்று சேர்த்துப்பார்க்குமிடத்து, மிக நீண்ட தலையுடையவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உயரமான, நீண்ட தலையுள்ள ஒரு வகைக் குடிகள் பல காலத்திற்குமுன் ஐரோப்பியஆசியத்தெப்பு வெளியில் வாழ்ந்தனர் எனத் தற்காலிகமாகக் கொள் வதற்குப் போதிய இடமுண்டு. இக்குடிகள் அவற்றின் ஆதித் தாயகத்தின் கிழக்குப் பாகத்திலிருந்து வடக்கு நோக்கி, மேற்கு ஆசியாவில் மித மிஞ்சியிருந்த ஈரம் பனிக்கட்டிக் காலத்தின் பிற்பகுதியில் நீங்கிவிட்டமை யினுற்போலும், பரந்துவிட்டனவெனக் கொள்ளலாம். பின்னர் துருக்கித் தான் மிகப் பரந்த புன்னிலமாக, முன்னிருந்த பனிக்கட்டித் தகடுகளின் எஞ்சிய பாகம் உருகியதன் மூலம் பல நூற்றண்டுகளாக நீர் வசதியுள்ள தாய், மாறியிருத்தல் வேண்டும். எனினும் காலம் செல்லச் செல்ல இப் பிரதேசத்தில் வசிப்பதற்குரிய வசதிகள் பொதுவாகக் குறைந்து கொண்டே வந்திருக்கலாம். காலநிலையும் மற்றும் நிலைமைகளும் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கு மென்பதில்லை ; ஆனல் அத்தகைய மாற்றங்கள்

39
ஒரு திட்டமான முறைப்படி நிகழுமென அல்சுவோது அண்டிந்தன் தன் “ ஆசியாவின் துடிப்பு’ எனும் நூலிலும், மற்றைய பிற்கால நூல்களிலும் கூறியிருப்பது வியப்பாகவிருக்கிறது.
இமயப் பிரதேசத்தின் பனிக்கட்டிக் காலம் பொதுவாக ஐரோப்பிய பனிக்கட்டிக் காலமடைந்த அதே நிலைமைகளில், அவ்வளவு துல்க்கமாகத் தெரியாத முதல் உயர்வு நிலைமை (கன்சு) நீங்கலாக, மற்றை யாவற்றுக்கு மூடாகச் சென்றிருக்கிறதென்பது இத்தாலிய புவியியலறிஞர் ஆற்றிய ஆய்வுகள்மூலம் இப்பொழுது தெரிகிறது. இதிலிருந்து, ஐரோப்பாவில் பனிக்கட்டித் தகடுகள் பின்னடைந்து கொண்டிருக்க மத்திய ஆசியாவின் மேட்டு நிலம், முக்கியமாகத் திபேத்தின் பெரிய மலை நிலம், பனிக்கட்டி யாற்றினற்றக்கப்பட்டுக் கொண்டிருந்ததெனக் கொள்ளலாம். எதிர்ச் சான்றுகளிலிருந்து முடிவுகளுக்கு வருவது புத்தியாகாது ; ஆனல் இதுவரை பழைய கற்காலத்தின் பிற்கூற்றுக்குரிய (இது ஐரோப்பாவில் ஒறேஞ்சிய, சொலுத்திரிய, மகதலேனிய கூறுகளெனப்படும்) மனிதரையும் பண்பாடுகளையும் பற்றிய தெளிவான அறிகுறிகள் இதுவரை காணப்பட வில்லை. எனினும் பிரதேசமாராய்வோர் பழைய கற்காலத்தின் கடைசிக் கூற்றுக்குரியதெனச் சொல்லக்கூடிய சில உடல்களைக் கண்டுபிடித்தனர். பழைய கற்காலத்தின் கடைசிக்கூறே, முந்திய ஓர் அதிகாரத்தில், காலநிலை வலயம் பெரிது நகர்ந்த காலம் என விவரிக்கப்பட்டுளது. இது ஒரு செய்முறைக் கருதுகோளாக மாத்திரமே கொள்ளப்படுவதாயின், ஆசியா வின் மத்திய உயர்நிலம் படிப்படியாகவே தற்கால மனித வகையினர் பயன்படுத்தக்கூடியதாயிற்றெனவும், அண்மை நூற்றண்டுகளிலிருந்த திலும் பார்க்க மிகுதியான நீர் அவர்களுக்கு கிடைக்கக் கூடியதாயிருந்த தெனவும் கொள்வதற்கு இப்பொழுது போதிய ஆதாரங்களுண்டு. இக்கருது கோளிலிருந்து, ஆசியாவின் மத்திய உயர்நிலங்களுக்கும் அதற்கு அப் பாலும், காலநிலை வலயம் மாறியதற்கும் உலோகப் பிரிப்பியலுடன் சம்பந்தப்பட்ட கலைகள் பரவுவதற்கும் இடைப்பட்ட காலத்தில், மனித நகர்வொன்று இருந்திருத்தல் வேண்டுமென நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பரந்தவர்கள் மெசப்பொத்தேமியாவுக்கு வடக்கிலுள்ள உயர் நிலங்களிலிருந்து சென்ற அகன்ற-தலை மக்களேயன்றி (1 ஆம், 7 ஆம் அதிகாரங்களைப் பார்க்க) ஆதித் தாயகங்களிலிருந்து சென்ற நீண்ட-தலை மக்களல்லர் எனக் கருதிக் கொள்வது மேலும் பயனுடைத்தாகும். இது எவ்வாறிருந்தபோதிலும், மத்திய ஆசியாவே நெடுங்காலமாக அகன்றதலை வகையினரின் தாயகமாகவிருந்து வருகிறது; பெரும் உயர் நிலங் களுக்குரியனவெனச் சொல்லக்கூடிய சில முக்கிய தன்மைகளும் இம்
1. “Pulse of Asia' by Ellsworth Huntington.

Page 26
40
மக்களிற் காணப்படுகின்றன. மத்திய ஆசியாவைப் பற்றி ஆராயும்பொழுது இந்துக்கூசு மலைப் பள்ளத்தாக்குகளையும் பாமீர்ப் பள்ளத்தாக்குகளையும் மொங்கோலியாவிலுள்ள பெரும் மேட்டு நிலத்திலிருந்தும் திபேத்து மலை நாட்டிலிருந்தும் வேறு பிரித்துப் பார்ப்பது நன்று. இந்துக்கூசுப் பள்ளத்தாக்குகளிலும் பாமீர்ப் பள்ளத்தாக்குகளிலும், சீனத் துருக்கித் தானின் மேற்குப் பகுதியிலும் காணப்படும் அகன்ற-தலைகளிற் பல, பொது உருவமாதிரிகளில், பெரும்பாலும் ஐரோப்பாவின் அல்பிசுப் பிர தேசத்திலுள்ள அகன்ற-தலைகளைப் போன்றன ; இவ்வகைகள் மேற்கூறிய இரு திசைகளிலும் அனத்தோலியாவிலிருந்து வரும் உயர்நில வலயம் வழியாகச் சென்ற நகர்வுகளெனக் கொள்ளலாம் ; அனத்தோலியாவில் அகன்ற-தலைகள் மேலும் விசேட விருத்தியடைந்தன. குறித்த மேட்டு நிலத் தின் காலநிலை இயற்கையாகவே உலர்ந்திருக்கும் ; மாரிகாலம் கடுங் குளிரா யும் கோடைகாலம் கடும் வெயிலுடையதாயும் இருக்கும்; வளி மண்டலம்; வறட்சியடைவதற்கும் குளிரடைவதற்கும் கடுங்காற்றுக்கள் உதவுகின்றன. பாரமானி மாரிகாலத்தில் பலநாட்களாக மிக உயர்ந்திருக்கும். இந்நிலைமை கள் காரணமாக, மனிதனின் தோல் வெப்பம் இழத்தலைக் கட்டுப்படுத்து வதற்கிசைவாக மாற்றமடைந்திருக்குமென்பது தெரிகிறது. உலர்ந்த படை கள் தடிப்பாயும் குருதிக்கலன்கள் ஆழமாயும் இருக்கின்றன ; இதனல் தோல் மஞ்சள் நிறங் கலந்ததாய்த் தெரிகிறது ; ஆயின் கடும் ஒளியுள்ள பிரதேசங்களிற் கபிலநிறமுண்டாகி மஞ்சள் நிறம் மாற்றமடைந்து விடுகிறது. மஞ்சளும் கபிலநிறமும் கலந்த நிறமுடைய உலர்ந்த தோலே அதிகமாகக் காணப்படுகிறது. இதன் பலகை வியர்வை சுரப்பிகள் குறைந் தும், உறுதியாக மூடுபடக்கூடியவாறு வியர்வைத் துவாரங்களும் மயிர்த் துவாரங்களும் வலுவடைந்துமிருக்கின்றன. மயிர்த்துவாரங்கள் உறுதியா யும் வட்டமாயுமிருப்பதனல் மயிரின் வெட்டுமுகம் சீராயும் ஏறத்தாழ உருளை வடிவிலும் இருக்கிறது ; மயிர் நேரானதாயும் பொதுவாகக் கரடு முரடாயும் காணப்படுகிறது. இவர்களின் உடல் மயிரும் தாடி மயிரும் பெரும்பாலும் மிகக் குறைவாயிருக்கிறது; நீளத்தலையுடன் கூடிய மயிருள்ள சில வகைகளுடன் கலந்தவர்களாகக் காணப்படும் சில வகையினரில் மாத் திரம் கூடிய மயிர் உண்டு ; இவ்வகையினர் பற்றிப் பின்னர் ஆராயப்படும். மற்றும் சில தன்மைகள் மத்திய ஆசியாவின் உயர் மேட்டுநிலத்திற் காணப்படுகின்றன. மாரிகாலத்தில் கடும் முரண்குருவளியுள்ள பிரதேச மக்களிற் பலர் பக்கவாட்டில் நன்கு வளரும் போக்குள்ள கன்னவெலும் புடையவர்களாயிருக்கின்றனர். சில வகைகளின் மூக்குத் துவார்ங்கள் ஆழ்ந்து செல்வனவாயிருப்பதால் முகம் தட்டையாகத் தெரிகிறது ; ஆனல் பியூரியர் சிலர் நன்கு அமையப்பெற்ற பக்கத்தோற்றமுடையவர்களாகக் காணப்படுகின்றனர். மேற்கண்ணிமையின் வெளிப்பக்கம் கீழ் மடிந்திருப்ப தனல் கண் திறந்துள்ள நிலையில் அது சரிந்திருப்பது போலத் தெரிகிறது;

4.
தட்டையான முகமுள்ளவர்களில் இவ்வாறு காணப்படினும் அப்பிரதேச மெங்குமிப்படியிருக்குமென்பதில்லை. முகம்பற்றிய இந்த முடிவுகள் முக்கிய மாக உத்தேசமானவையே. ஐரோப்பாவிற் காணப்படும் இயற்கைக்கு மாருன வளர்ச்சிகளும் கபச்சுரப்பிகளிலுள்ள குறைபாடும் காரணமாக முகம் தட்டையாயும் காணப்படுவதனல் கபத்தின் சில பகுதிகள் வளர்ச் சிக்கு, ஐரோப்பாவிலும் பார்க்க மத்திய ஆசியாவில், குறைந்த அளவான உதவியே புரிகின்றனவெனக் கருதப்படுகிறது. மத்திய ஆசியாவிலுள்ள நிலைமைகளுக்கு எதிர்மாருகக் காணப்படும் நிலைமைகளையுடைய ஆபிரிக்கா, வில், உயர்ந்தும் மெலிந்தும், முன்னிண்ட வாய்களுடனும், காணப்படும் வகைகள் கபச் சுரப்பிகளின் இயற்கைக்கு மாருக மிகுந்த செல்வாக்கின்கீழ் வருதல்கூடும். மூக்குத் துவாரங்கள் ஆழ்ந்திருப்பது வளி சுவாசப்பைக்குச் செல்லும் போது அதைச் சூடாக்க உதவுவதாகும். கண்ணிமை தட்டை யாயிருப்பதன் காரணமாக அது மடிந்துமிருக்கலாம் ; அம்மடிப்பு கண் கூசுமொளியிலிருந்து காப்பளிப்பதனல் அதன் முக்கியத்துவம் கூடியிருக் கும். கன்னவெலும்புகள் அகன்றும் மூக்குத் துவாரங்கள் ஆழ்ந்தும் இருப்பதனல் தலை, தட்டையான உச்சியையுடைய தன்மையிருந்தபோதும், விசேட அகலமுடையதாய் வருவதற்கு உதவியாயிற்று. குறித்த சில தொகுதியினரின் கபால குணகங்கள் பொதுவாக 86, 87 சராசரியுடையன வாயிருக்கின்றன ; வேறு பகுதிகளிலுள்ள தலைகளின் அகலத்துக்கும் நீளத்துக்குமுள்ள விகிதம் இவ்வளவு உயர்ந்த அளவுக்கு வருவதில்லை. அகன்ற தலைகள் எவ்வாறு பரம்பியுள்ளன என்பது பற்றி மற்றெரு சிறு அதிகாரத்திற் பின்னர் விவரிக்கப்படும்.
மொங்கோலியாவிலிருந்து வட-வட-கிழக்காக ஆட்டிக்கு, அல்லது கிழக் காக வடசீனவுக்கும் யப்பானுக்கும், அல்லது தென்-கிழக்காகத் தென் சீனவுக்குச் சென்று பார்த்தால், தலைகளின் அகலம் பெரும்பாலும் குறையாதிருப்பதை அவதானிக்கலாம் ; நீளத்தலைகள் குறைய அகலத் தலைகள் கூடியிருப்பதாகத் தெரிகிறது. கலப்பு மணங்கள் காரணமாகவோ, குடிசனம் ஒன்றையொன்று நெருக்குவதன் காரணமாகவோ அகலத் தலைகள் மேலோங்க நீளத்தலைகள் சுற்றுப்புறங்களுக்குப் பரவியுள்ளன. சில ஒழுங்கீனங்களும் விலக்குகளும் இருந்தபோதிலும் இக்கூற்று, பரும்படி யாகப் பார்க்கும்பொழுது, உண்மையாகும். ஆட்டிக்குப் பக்கமாக, கிழக்குக் கோபிக்குக்கு வடக்கே, நடுத்தரமான தலைகளையுடைய, ஆனல் பலமுள்ள கன்னவெலும்புகளும், எற்கெனவே குறிப்பிட்ட தட்டையான முகங்களும், சரிவான கண்வெட்டுக்களுமுடைய, மக்கள் காணப்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் மஞ்சள் கலந்த கபிலநிறம் அல்லது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத் தோலுடையவர்களாயிருக்கின்றனர். வட பகுதிச் சீனர் நடுத்தரத் தலையும், சரிவான கண்வெட்டும், பெரும்பாலும் தட்டையான முகமுடையவர்களாயுமிருக்கின்றனர். இவர்களுடைய தோல் மஞ்சள் நிற
4-R. 4596 (9162)

Page 27
42
முடையதாய், ஆனல் மொங்கோலியாவிற் காணப்படுவதிலும் பார்க்கக் குறைந்த கபில நிறமுடையதாயிருக்கிறது. தென்சீனவில் அகன்ற தலை வகைகளும் நீண்ட தலைவகைகளும் கலந்து காணப்படுகின்றன ; இதனைப் பரோவிய வகையென அடன் குறிப்பிடுகிறர். சிலர் சரிவான கண் வெட்டுக்களும், அகன்ற கன்னவெலும்புகளும் தாழ்ந்த மூக்குமுடைய வர்களாயிருக்கின்றனர். இவர்களின் தோல் வடக்கில் மஞ்சள் நிறமுடைய தாயும் தெற்கில் கபிலநிறமுடையதாயும் வேறுபடுகிறது ; சிலவிடங்களில் கபிலநிற மக்கள் நேரான கண்களும் தாழாத மூக்குமுடையவர்களாகக் காணப்படுகின்றனர்; இதனல் இவர்கள் இந்தோ-சீனவையும் கிழக்கிந்திய தீவுகளையும் பற்றிக் கூறிய பிரிவிற் காட்டிய மட்டான நீளத்தலை மக்களுடன் தரப்படுத்தப்பட வேண்டியவர்களாவர். எனினும், இப்பிரதேசம் முழு வதிலும் தென்சீனவிலுள்ள அகன்ற தலைமக்களும் காணப்படுகின்றனர் ; கிழக்கிந்திய தீவுகளில் காணப்படும் அகன்ற தலையும், கபிலநிறத்தோலும், நீண்ட தலைக் கலப்பும் உள்ள வகையினரை அடனும் ஏனையோரும் பூர்வமலாயர் என அழைத்தனர். இப்போதுள்ள சிறந்த கருத்தென்னையெனின் மத்திய ஆசியாவிற் பொதுவாகக் காணப்படும் அகன்ற தலைவகை தென் மேற்காகத் தென்சீன, இந்தியா, கிழக்கிந்திய தீவுகள் ஆகியவை வழியாக நகர்ந்து, தெற்கு நோக்கி வந்த சில நீளத்தலைகளுடன்-இத்தலைகள் முந்திய பிரிவொன்றிற் காட்டியவாறு இந்தியாவழியாக வந்தனவாயிருக் கலாம்-விரவி, ஆனல் அவற்றை அடிப்படுத்திப் பரவினவென்பதே. வட சீனவிலும் யப்பானிலும் நிலைமை வேருகும் , இங்கேயுள்ள நீண்டதலை வகைகள் அகன்றதலை வகைகளால் வெளித்தள்ளப்பட்டுவிட்டனவாகத் தெரிகிறது ; இவ்வகைகளில் எஞ்சிய சிலர் யெசோ, தென் சகாலின் ஆகிய இடங்களிலும் அயற் பிரதேசங்களிலுமுள்ள எயினு மக்களுட் காணப்படுகின்றனர். இம்மக்கள் வெண்மை கலந்த கபிலநிறமுடைய தோலுள்ளவர்களாகவும், சில சமயங்களில், புடைத்திருக்கும் கன்ன வெலும்பின்மேல் குருதிநிறம் உடையவர்களாகவும் இருக்கின்றனர். இம் மக்களுட் கலப்புவமிசாவழியினரல்லாத ஏனையோரில் சரிவான கண்களோ, மேற் குறித்த மற்றத்தன்மைகளோ காண்பதரிது. பொதுவாக இவர்கள் நடுத்தரமான தலையுடையவர்களாயினும் நீளத்தலையும், அதி நீளத் தலையும் உள்ளவர்களும் காணப்படுகின்றனர். இவர்களிற் காணப்படும் முக்கிய அமிசம் உடம்பில் அதிக மயிர் இருப்பதே ; இதுவே இவர்களை மத்திய ஆசிய மக்களிலிருந்து நன்கு வேறு பிரித்துக்காட்டுகிறது.
யெனிசேயுக்கு மேற்கிலும் தூர கிழக்கிலும் உள்ள ஆட்டிக்கு மக்கள் வழக்கமாக மிக அகன்ற தலையுடையவர்களாவர்; இவர்கள் ஆசியாவில் சமோயீட்டினர், யெனிசியர், ஒசித்தியாக்கர் எனவும் ஐரோப்பாவில் வெண் கடலுக்கு மேற்கே இலப்பர் எனவும் அழைக்கப்படுவர்.

43
இவர்கள் யெனிசு வழியாக அல்லது அப்பக்கமாக வடக்கு நோக்கியும், பின்னர் மேற்கு நோக்கியும் நகர்ந்தவர்களைக் குறிப்பர் எனக் கருதப் படுகிறது ; அவ்வாறு நகர்ந்தவர்களுக்குப் பெரும் கந்திநேவியப் பணித் தகடு பின்னிடைந்தமை உதவியாயிற்று. மற்ற நகர்வுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இந்நகர்வு பிந்தியதாயினும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத் தின் முற்பகுதியிலேயே நடந்திருக்கிறது. இவர்கள் தட்டையான முகமும், சரிவான கண் வெட்டும் உடையவர்களாய், ஆனல் ஆழத் தாழ்ந்த மூக்கில்லாதவர்களாயிருக்கின்றனர்.
ஆசியாவின் வட-கிழக்கின் அந்தத்திலுள்ள சில மக்கள், இவர்களுட் சுக்கேகியரும் அடங்குவர், குறிப்பிட்ட பொதுத் திட்டத்தில், அஃதாவது, மொங்கோலிய மேட்டுநிலத்தில் அகலத்தலையுடைய மக்களாயும் ஆசியா வின் வடக்கு, கிழக்குச் சுற்றுப் புறங்களை நோக்கிச் செல்லச் செல்லக் கூடிய நீளமான தலையுள்ளவர்களாயுமிருக்கும் திட்டத்தில், அடங்காதவர் களாக முதலில் தோன்றும் ; ஆனல் இப்பகுதி சரியான அந்தமன்று. ஆசியாவின் வட-கிழக்கின் அந்தம் வட-மேற்கு அமெரிக்காவுக்குச் செல்லும் பாதையிலுள்ளது ; அக்கண்டத்து மக்களைப் பற்றிப் பார்க்கும்பொழுது அவர் கள் ஆசியாவிற்றேன்றியவர்களின் அடிப்படையை யுடையவர்களென நம்பு வதற்குப் போதிய காரணங்களைக் காணலாம் ; தூர இடங்களில் மிக நீண்ட தலையுள்ளவர்களும், இடைப்பட்ட தானங்களில் நடுத்தர அளவான தலையுள்ளவர்களும், பெரும் மேற்கு மலைத் தொடர்ப் பிரதேசத்திற் பெரும்பாலும் அகன்றதலையுள்ளவர்களும் உளர் ; அகன்ற தலையினர் கரையோரப் பக்கமாகவும் பீரிங்குக் கடற்றிவுகளிலும் தெளிவாகக் காணப் படுகின்றனர்.
பனிக்கட்டிக் காலம் சென்றபின்னரும் திபேத்துப் பிரதேசத்தில் பணித் தகடுகள் இருந்தமையாற்போலும் திபெத்து நாட்டுக்கு மனிதன் நெடுங் காலமாகச் செல்ல முடியாமலிருந்தது. இந்நாட்டுக் குடிகளிற் பெரும பகுதியினர் உயர்ந்த மொங்கோலிய மேட்டு நிலத்திலிருந்து வந்தன ரெனத் தெரிகிறது ; வேறு வகைகளும் சில இங்கு வந்தன. இவர்களுட் சிலர் நீண்டதலைகளும், அலைபோன்ற, சுருண்ட, மென்னிற மயிரும் உடையவர்கள் ; இவர்கள் துருக்கித்தான் தெப்பு வெளிகளிலிருந்து வந் திருக்கலாம் ; இவ்வகைகளிற் சில திபேத்தைக் கடந்து கிழக்குச் சீனவுக் கும் சென்றன. r
பாமீர், இந்துக்கூசு முதலிய இடங்களிலுள்ள மக்களைப்பற்றி எற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுட் கோபிப் பாலைநிலத்திற் பொதுவாகக் காணப்படும் மஞ்சள் நிறத் தன்மையான தோலும் தட்டையான முகமு மில்லாத அகன்ற தலையுடைய தொகுதியினர் காணப்படுகின்றனர். கன்ன வெலும்புக்கு மேலுள்ள தோல் மிக்க நிறமுடையதாயிருக்கலாம். துருக்

Page 28
44
கித்தானின் பெரும்புல் வெளிகளிலுள்ள குடிகள் மிக அகன்ற தலை யுடையவர்களாயும், உயர்ந்த தலையுடையவர்களாகுந் தன்மையுடையவர் களாயுமிருக்கின்றனர்; இவ்விடயம் மத்திய தரைப்பிரதேசமும் ஐரோப்பா வும் பற்றிய பிரிவில் மேலும் ஆராயப்படும். தோல் வெண்ணிறமாயும் மஞ்சள் நிறம் கலப்பதுபோன்றும் இருக்கும் ; கன்னவெலும்பு பெரும் பாலும் பலமுள்ளதாயும், பக்கத்தோற்றம் முனைப்புள்ளதாயுமிருக்கும். கண்ணிமை மடிப்புச் சிறிது வளர்ச்சியடைந்ததாயிருக்கும், ஆனல் கண் வெட்டுச் சரிவுற்றிராது. அடன் இவர்களைத் துருக்கியர் எனக் கூறியிருக் கிருர் ; இவ்வகையினர் ஐரோப்பா மேற்படையெடுத்த பல்கேரியரிடையிலும் துருக்கியரிடையிலும் காணப்பட்டனர் ; மக்கியாரிடையிலும் இவர்களைக் கண் டிருக்கலாம். ஒபு நதிக்கும் ஊறல் மலைகளுக்குமிடையிலுள்ள பிர தேசத்தில் ஓரளவு நீளத்தலையுள்ள மக்கள் தொட்டந் தொட்டமாக வாழ்கின்றனர் ; மேற்குச் சைபீரியாவிலும், ஐரோப்பிய இரசியாவிலுமுள்ள வடக்குப் பைன் காடுகளுக்குப் பரம்பிய இவர்களுள், ஆட்டிக்குப் பிரதேச அகன்ற தலையினரும் நீண்ட தலைவகையினருடன் நன்கு கலந்திருத்தல் வேண்டும். சில உக்கிரிய அல்லது பினிலாந்து வகைகளைப் பற்றிய இந்தக் கருத்தே, தற்காலிகமாக, மிகச் சிறந்ததாகும் ; இவர்களுக்குப் பொது வாகச் சிவப்பு நிறமயிர் இருப்பது கவனிக்கற்பாலது ; வேறுபட்ட குணங் களுடன் கூடிய செந்நிற வகைகளும் கரியநிறவகைகளும் கலப்புற்ற பொழுது இத்தன்மைகள் ‘உண்டாயிருத்தல் வேண்டும். பெரிய பிரித் தானியாவின் சில பகுதிகளில், முக்கியமாகக் கரியநிறமும் மிக நீண்ட தலையுமுடைய மக்களிடையிற் செந்நிறமும் அகன்ற தலையுமுடைய மக்கள் வந்து புகுந்து முடியுமிடங்களில், சிவப்பு நிறமயிர் காணப்படுகிறது. சிவந்த நிறப் பினிலாந்து மக்களைப் பொறுத்தவரையில், கூடிய கருமையான அகன்ற தலையினர் மென்னிற நீண்ட-தலையினருடன் கலப்புற்றவர்களாகக் காணப்படுகின்றனர். துருக்கித்தானின் அகன்றதலை வகையினர், இப்பிரி வின் முற்பகுதியிற் கூறியதுபோல, அவர்களுக்கு முந்தியவர்களும் தெப்பு வெளியினருமான ஒருவகை நீண்ட-தலைக் குடிகளின் இடத்தையெடுத்துள்ள னர். முதலில் இவர்கள் அனத்தோலிய ஆமேனிய பிரதேசத்திலிருந்து கிழக்கு நோக்கியும் வட-கிழக்கு நோக்கியும் குன்றுப்பக்கங்களிலிருந்து நகர்ந்திருக்கலாம்; ஆனல் இவர்கள் எவ்வாறு அந் நீண்ட தலைக் குடிகளில் இடத்தையெடுத்தனரென்பது தெரியவில்லை. காலப்போக்கில் துருக்கித்தான் சமவெளிகளில் மனித வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகள் குறைந்து போகவே நீண்ட தலைக்குடிகள் ஐரோப்பா, இந்தியா, மெசப்பொத்தேமியா முதலிய தேசங்களுக்கு, அந்நாடுகளை அடிப்படுத்தும் பொருட்டு, பரந்து சென்றன ; இவர்களிற் பிற்பகுதியினராயினும் குதிரைகளுடன் சென் றிருத்தல் வேண்டும். இவ்வாறு துருக்கித்தானிலிருந்த நீண்டதலை மக் கள் தொகை அருகிற்று ; அவர்கள் அருகிப்போவதிற் குன்றுப்பக்கங்களி லிருந்த மக்கள் பெரும் பங்கெடுத்தனர்; சில பிரதேசங்களிலுள்ள

45
நாடோடி மக்கள் பருவகால மாற்றத்துக்கேற்றவாறு சமவெளிகளுக்கும் குன்றுப் பக்கங்களுக்குமாக இடம் பெயர்ந்தமை இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும் துருவி ஆராய்ந்தால் இப்பொழுது தெப்புவெளிகளி லிருப்பதாகத் தெரிந்த நீளத்தலை மக்களைவிட வேறு நீளத்தலையினர் வசிப்பதையும் அறியக்கூடும் ; ஆனல் அறிவது சந்தேகமே.

Page 29
5 ஆம் அதிகாரம்
ஆசிய பருவக்காற்று நிலங்களிலும் பசுபிக்கிலுமுள்ள மக்கள்
ஆசியாவில் கிழக்குப் பக்கமாக இமயம், திபேத்து மலைத் தொடர்களுக்கு வடக்கிலும் தெற்கிலும் நடைபெற்ற மனித நகர்வுகள் பற்றி இரண்டு வெவ்வேறு அதிகாரங்களில் விவரிக்கப்பட்டுளவெனினும், இவ்விரண்டு நகர்வுகளும் ஒன்று கலந்துள்ள பிரதேசங்களில் ஒன்றைப்பற்றியேனும் போதியவளவு அவ்வதிகாரங்களில் இணைத்துக் கூறப்படவில்லை. ஆகை யினல் ஆசியாவின் பருவப்பெயர்ச்சி நாடுகளின் குடிகள் பற்றிச் சுருக்க மாகச் சில குறிப்புக்கள் கூறுவது பயனுடைத்தாகும் ; உலகத்திலேயே மிகக் கூடிய குடித்தொகை, எறத்தாழ உலக குடித்தொகையிற் பாதி, இந்நாடுகளிலிருப்பதிலிருந்தும், இந்நாட்டுத் தொல்பொருள்களிலிருந்தும் தத்துவஞானக் கருத்துக்களும் நன்னெறி முறைகளும் நிறைந்த நாகரிகங் கள் நெடுங்காலமாக நிலைத்திருப்பதிலிருந்தும், உயர்தரக் கைப்பணிகளி லிருந்தும் இந்நாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். மேலும், எமது மேற்கு நாடுகளின் கைத்தொழில் நாகரிகம் மூலதனச் செலவிற்றங்கியிருப்பதுடன் சண்டைகளும் பிணக்குக்களும் கூடிய சூழ் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்க, கிழக்கு நாடுகளின் நாகரிகம் நிலைபெற்றி ருப்பதன் பொருட்டு வளர்க்கப்பட்டதாயிருக்கிறது; எனினும், கிழக்கு நாடு களின் நாகரிகம் தற்பொழுது காணப்படும் “ வெள்ளை அபாயத் ’திலிருந்து தப்பிப்பிழைக்குமோவென்பது சந்தேகமே.
இந்தியா
முதலில் இந்தியாவைப் பார்ப்போம். இங்கே சாதி முறைமை எழுந் தமைக்குரிய பல காரணங்களுள் இன வேற்றுமையும் ஒன்றகும். காட்டு மனிதரிடையிலும் பறையர் அல்லது தீண்டாச் சாதியாரிடையிலும் மிக நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலைகளும், தட்டையான அகன்ற மூக்கும், மிகக் கறுத்த தோலும் உடைய பெருந் தொகையான மக்கள் காணப் படுகின்றனர். ஆயின், இவ்வகையான மக்களைச் சமூகத்திலுள்ள கற்றறிந்த தலைவர்களிடையிலும், முக்கியமாக மிகத் தென்பாகத்தில், காணலாம். இந்தியாவில், மேற்கு ஐரோப்பாவிலும் தெற்கு ஐரோப்பாவிலும் போல, மிக நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலைகளுள்ள பழைய வகை மக்களுட் சிலர் பின்வந்த கூடிய கலப்புள்ள சமூகங்களுடன் கலந்துவிட, வீரியம் குறைந்த ஏனையோர் அவ்வாறு கலக்கமுடியாது சமூக எணியின் கீழ்ப் படிகளில் இன்னும் தங்கி நிற்கின்றனர். இத்தகைய கீழ் நிலையிலுள்ள வகையினர் மத்திய இந்திய குன்றுகளிடையிலும் காணப்படுகின்றனர் ;
46

47
இவர்களுட் சிலர் இந்திய நாகரிகங்களோடு தொடர்புள்ள மொழிகளிலும் பார்க்க ஆதியான கொலேரியன் மொழிகள் பேசுகின்றனர் ; சிலர் காடு களில், அல்லது முன்னேற்றமடையாத வேளாண்மையிற்றங்கியிருப்பதன் காரணமாகச் சில ஆண்டுகளுக்கொருமுறை இடம் பெயரும் கிராமங்களில் வசிக்கிருர்கள். தக்கணத்திலுள்ள குடிகள் பொதுவாக, சில அரச பரம் பரைக் குடும்பங்களும் உயர்குடிக் குடும்பங்களும் வட-மேற்கிலுள்ள மக் களும் நீங்கலாக, கறுத்த தோலும் உடம்பிற் சிறிதளவு மயிரும் மட்டான மூக்கும் நீண்ட தலையும் உள்ளவர்களாயிருக்கின்றனர். இவர்கள் திராவிட மொழிகள் பேசுபவர்கள்; திராவிட மொழிகள் ப்ேசுவதனல் இவர்கள் திராவிடர் என அழைக்கப்படுவர். திராவிட மொழிகளுள் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்றுமே மிக விருத்தியடைந்தவையாகும் ; திராவிட மொழிகள் வெளியிலிருந்து நாட்டை அடிப்படுத்த வந்தவர் களிடமிருந்து கற்றறியப்பட்டனவா இல்லையாவென்பது தெரியவில்லை. மிகத் தென்-மேற்கில், மேற்கூறிய வகையினர் மலாவாசியாவிலும் மேற்கிலு மிருந்து நாடோடிகளாக வந்தவர்களுடன் கலந்து மலையாளம் எனும் மொழியை விருத்தி செய்தனர்; இவர்கள் இந்தியாவின் வரலாறு முழு வதிலும், பெரும்பாலும் இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் கலவாது புறம்பாகவேயிருந்திருக்கின்றனர் ; இவர்கள் கரையோர வர்த்தகத்திலேயே பெரும்பாலும் ஈடுபட்டுளர். தக்கணத்துக்கு வட-மேற்கிலுள்ள மட்டான நீளத்தலைக் குடிகள் பிரபையான தோலும், ஒடுங்கிய ஆனல் தோற்றமான மூக்குடைய ஒருவகை அகன்ற தலை மக்களுடன் கலப்புற்றுளர். இந்த அகன்ற தலையினர் எங்கிருந்து வந்தனரென்பதைச் சரியாகத் தீர்மானிக்க முடியவில்லை ; ஆனல் கி. மு. மூவாயிரம் ஆண்டளவில் நகரங்கள் பற்றிய அறிவு சியூமரிலிருந்து (மெசப்பொத்தேமியா) இந்தியாவுக்குப் பரவிய காலத்தில் இவர்கள் வந்திருக்கக்கூடும். இந்நாட்டின் மேற்படையெடுத்த சைதியரைச் சேர்ந்தவர்களே இவர்களென்ற பழைய கொள்கை பொருத்த மற்றதாகும்.
இமயச் சாய்வுகளிலும் அடிவாரங்களிலுமுள்ள மக்களிலும், கிழக்கில், தாழ்நிலங்களிலுள்ள மக்களிற் பெரும்பகுதியினரிலும் மத்திய ஆசிய உயர்நிலங்களின் சில பகுதிகளிற் காணப்படுபவரைப் போன்று அகன்ற தட்டையான முகமுள்ள அகன்ற தலை மக்கள் காணப்படுகின்றனர். இன்னும் தூரவுள்ள கிழக்குத் தாழ்நிலங்களிலுள்ள மக்கள் மட்டான நீளத்தலை மக்களுடன் கலந்துளர் ; இவர்கள் மொங்கோலிய-திராவிட இனம் எனப்படுவர். இக்கூட்டுப் பெயர் பொருத்தமில்லையென எதிர்ப் பவர்களும் உளர். இவ்வினத்தவர்களுட் பலர் இப்பொழுது மட்டான் நீளத்தலேயுள்ளவர்களாயிருக்கின்றனர். மிக நீண்ட தலையுள்ளவர்களும் அங்குமிங்குமாக இப்பொழுதும் தப்பிப் பிழைத்திருக்கின்றனர். வட-மேற்கு இந்தியாவில் பிரபையான நிறமும், உயர்ந்த தோற்றமும், மிக நீண்டு

Page 30
48
ஒடுங்கிய தலையும், தெளிவான பக்கத் தோற்றமுமுள்ள மக்கள் காணப் படுகின்றனர்; இவ்வகை மக்கள் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் உயர்குடிக் குடும்பங்களிடையிலேயே வழக்கமாகக் காணப்படுவர். இவ்வகையினர் இராசபுத்தனத்தின் சில பகுதிகளிலும், தென் இந்தியாவில் உயர்குடிக் குடும்பங்களிலும் மாத்திரம் கலப்பின்றிக் காணப்படுகின்றமையினல் இவர் களே இந்தியாவை அடிப்படுத்திய ஆரிய இனத்தவரெனவும், இந்த இனத்தவரே இந்தியாவுக்குச் சமக்கிருத மொழிகளையும், வேத நூலறிவை யும் கி. மு. இரண்டாயிரம் ஆண்டளவிற் கொணர்ந்தனரெனவும் இப் பொழுது கருதப்படுகிறது. இக்கருத்துப் பொதுவாகச் சரியாகவிருக்கலாம். ஏனெனில் தோற்றத்தில் இவர்கள் இந்நாட்டை அடிப்படுத்தியவர்களின் ஆதித்தாயகமெனக் கருதப்படும் இரசிய-ஆசிய தெப்பு வெளிகளில் அடக் கஞ் செய்யப்பட்டிருந்த பிரேதங்களைப் பல வழிகளில் ஒத்திருக்கின்றனர் ; அத்துடன் நாட்டை அடிப்படுத்திய ஆரியரின் தெய்வங்கள் கி. மு. இரண்டாயிரம் ஆண்டளவில் வசித்த அனத்தோலிய மக்களின் தெய்வங் களுக்கிடப்பட்டிருந்த அதே பெயர்களைக் கொண்டுள்ளனவாகவும் இருந்தன. தெப்பு வெளிகளிலிருந்து பரந்து வந்த மக்கள் ஏற்கெனவே வட-மேற்கு வழியால் இந்தியாவுடனும் பாரசீகம் அல்லது திரேசு வழியாக அனத்தோலி யாவுடனும் சிலவேளைகளில் இனத்தொடர்பு கொண்டிருந்திருக்கக்கூடும். கபால குணகங்களிலிருந்து மாத்திரம் பார்த்தால் நாட்டை அடிப்படுத்திய வர்களெனக் கருதப்படும் இந்த ஆரியர் இவ்வநுபந்தத்தின் முற்பகுதி யிற் கூறப்பட்ட பழைய வகைகளுடன் ஒன்று சேர்த்துப் பார்க்க நேரிடும் ; ஆனல் இவ்விரு பழைய வகைகளும் வட-மேற்கு இந்தியாவிலுள்ள மக்களும் பெரும்பாலும் எழுபத்திரண்டுக்குக் கிட்டிய, அஃதாவது மிகக் குறைந்த, கபாலக் குணகம் (அகலம் நீளத்தின் எத்தனை சதவீதமெனக் கணிப்பது) உடையவர்களாயிருப்பதனல் இவ்வாறு சேர்த்துப் பார்ப்பது சரியாயிருக்குமெனச் சொல்ல முடியாது. வட-மேற்கு இந்தியாவிலும் அபுகானித்தானிலும் காணப்படும் மிக நீண்டு ஒடுங்கிய உறுப்புக்கள் நடுத்தர வளர்ச்சி பொதுவாகக் கூடுவதைக் குறிப்பனவாகும் ; உயர்ந்த தலை, பலமான பக்கத்தோற்றம், கூரிய ஒடுங்கிய மூக்கு, மெலிந்து உயர்ந்த தோற்றம் ஆகியவற்றிலிருந்து இவ்வளர்ச்சி கூடுவதை உணரலாம். இவ்வாறு நடுத்தர வளர்ச்சி கூடுதல் அனத்தோவியா உட்பட்ட மேற்கு ஆசியாவின் பல பாகங்களிற் காணப்படும் ஒரு தன்மையாகும். சில துருக்கி வகைகளின் பலமான பக்கத்தோற்றம் பற்றி முன்னர்க்கூறிய பொழுதும் இதைக் கவனிக்கக் கூடியதாயிருந்தது. வட-மேற்கு இந்தியா வைப் பிற்காலத்தில் அடிப்படுத்தியவர்களிடையில் துருக்கி வகைகளும் சேர்ந்திருந்ததாகத் தெரிகிறது. பலமான பக்கத் தோற்றத்துடன் கூடிய பிரபையான நிறமுள்ள வகைகள் ஐக்கிய மாகாணங்களுக்குக் கிழக்கே, அஃதாவது தெல்லிக்கும் காசிக்குமிடைப்பட்ட பிரதேசத்தில், குறைந்து போவதை அவதானிக்கலாம். இப்பிரதேசத்திலேயே வட-மேற்குப் புல்

49
வெளிகள் அருகி, கிழக்குப் பக்கமாகவுள்ள ஆதியான காடுகள் கூடத் தொடங்கின ; நாட்டை அடிப்படுத்திய ஆரியர் இப்பிரதேசக் காட்டு வெளி களிலேயே பிரிந்து சுதேசிகளுடன் கலந்தனர். இதனலேயே இப்பிர தேசம், இந்தியாவின் பூர்வகால வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறது. இங்கே நாட்டை அடிப்படுத்திய மூர்க்க குணம்படைத்தவர்களில் கூடிய நகர நாகரிகத்துடன் கலந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. இப்பிர தேசத்திலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செமீன்களும் அரச மாநகரங்களும் உள; இங்கே சிக்கலான மிகப்பல சாதிப்பாகுபாடுகளும் காணப்படுகின்றன. காசிநகரம், இப்பிரதேசத்தின் கிழக்கெல்லையில், பிரா மணர்களால் கடைப்பிடிக்கப்படும் சுதேச பாரம்பரியங்கள் யாவும் நிலைத் துள்ள தானமாகக் காணப்படுகிறது.
சீனு
இந்தியாவில் பல்வேறு இன வகைகளும் சாதிப்பாகுபாடுகளும் இருப்ப, சீனவில் இன வகைகள் மிகக் குறைவாயும் பரம்பரையாக வரும் பெரும் சமூக வேறுபாடுகள் இல்லாமலும் காணப்படுகின்றன. கபால குணகம கோபிப் பிரதேசத்தில் 86 அல்லது 87 வரை காணப்படுகின்றது. ஆனல் சீனுவுக்குள் வரவர இந்த அளவு ஒரளவு குறைந்துகொண்டு போகிறது. அகன்ற தலையுடைய தன்மை கோபிப்பிரதேசத்திலும் மத்திய ஆசிய உயர்மேட்டு நிலங்களிலும் கூடிய அளவு அபிவிருத்தியடைந்திருக்க, இப் பிரதேசங்களிலிருந்து சீன, கொறியா, யப்பான் ஆகிய இடங்களுக்குப் பர விய பழைய நகர்வுகளில் இத்தன்மை அவ்வளவு அபிவிருத்தியடையாம லிருந்திருக்கிறது போலத் தெரிகிறது. சீன எங்கும் உள்ளவர்களின் தலை மயிர் கறுப்பாயும் நீண்டு மெலிந்தும் இருக்கிறது ; உடலில் மயிர் மிகக் குறைவு. கோபியிலும் தென் சீனவிலுமுள்ளவர்களின் தோல் கபிலநிற மாயிருக்க, அது வடசீனவில் பெரும்பாலும் மஞ்சள் கலந்த ஒலிவு நிற மாக மாறியிருக்கிறது. கன்ன எலும்புகள் நன்கு பருத்தும், மூக்குத் துவா ரங்கள் தாழ்ந்தும் இருக்கின்றன. பெரும்பாலும், முக்கியமாக வட பாகத் தில், கண்மடலில் மேலதிக மடிப்பும், சரிந்தகண் வெட்டுமுள. தென் சினரில் மட்டான நீளத்தலையுள்ளவர்கள் காணப்படுகின்றனர்; இவர்கள் மேற்கூறப்பட்ட மத்திய ஆசியா வழியாக வந்த நகர்வுகளின் முற்பகுதி யைச் சேர்ந்தவர்களாகவிருக்கலாம் ; இவர்கள் தென்-கிழக்கிலிருந்து பரந் திருக்கக்கூடும் (கீழே பார்க்க) ; இவர்கள் பொதுவாக, கபில நிறத்தோ லும், கறுத்த, சில வேளைகளிற் செந்நிறமான சுருண்ட மயிரும், பெரும் பாலும் ஆழ்ந்த மூக்குத் துவாரங்களும் முன்னிண்ட கன்னவெலும்பு களும் உடையவர்களாகக் காணப்படுவர். இவர்களுடைய மூக்கையும் கன்ன வெலும்புகளையும் கவனிக்கும்போது இவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த நகர்வின் முற்பகுதியைச் சேர்ந்தவர்களென எண்ணத் தோன்று கிறது; இவர்களுக்குப் பின் வந்தவர்கள் கூடிய அகலமுள்ள தலையும்,

Page 31
50
செறிந்த மஞ்சள் நிறத்தோலும் உடையவர்களாவர். நகர்வுகள் தொடர்ச்சி யாக இருந்ததோடு, முற்பகுதி நகர்வில் நீண்ட தலையுடையவர்களும் பிற் பகுதி நகர்வில் அகன்ற தலையுடையவர்களும் இருந்தனர் எனவும், இந் நகர்வுகள் உயர்மேட்டு நிலத்திலிருந்தே தொடங்கின எனவும் முடிவு செய்துகொள்ளுதல் அமெரிக்காவின் இனங்களை ஆராய்வதற்கு உபயோக மாகவிருக்கும் ; ஆட்டிலிக்கா என்பாரும் இக்கருத்தையே கொண்டுள்
ளனர்.
இந்தோசீனுவும் கிழக்கிந்திய தீவுகளும்
இப்பிரதேசம் முழுவதிலும் நீண்ட தலையும், கபிலநிறத்தோலும், அல்ை போன்ற மயிருமுடைய குறைந்த தரத்திலுள்ள ஒரு வகை மக்களும் (இவ்வகையினரையே அடனும் பச்சுதனும் “ நெசியொற்றியர் ’ எனக் குறிப்பிட்டுளர்), தென் சீனவிற் காணப்படுபவர்களுக்கு ஒப்பான கபில நிறத்தோலும், நேரான மயிரும், அகன்ற தலையுமுடைய ஓர் உயர்தர வகை மக்களும் காணப்படுகின்றனர்.
முன்னர் ஒரு சாதியைக் குறிக்கும் மலாயர் எனும் பெயர், மலாயாத் தீபகற்பத்தையும் அதற்கண்மையிலுள்ள தீவுகளையும் பொறுத்த வரையில், மேற்கூறப்பட்ட இரு வகைகளுக்குமிடையே ஒரளவு பரந்துள்ள வகை களைக் குறிக்கும் பெயராகும் ; இவ்வகைகள் பேசும்மொழி மலாய் எனப் படுவது பொருத்தமானதெனலாம். குறளர் போன்று, முறுகி வளைந்த மயிரும் சிறிய அகன்ற தலையுமுள்ள வகையினர் சிலரைப் பற்றியும், நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலையுள்ள சில மக்களைப்பற்றியும் முதலாம் அத்தி யாயத்தில் விளக்கப்பட்டுள. பிற்கூறப்பட்ட வகையினர், கிழக்கிந்திய தீவுக்
முக்கியத்துவம் பெறுதல்கூடும்.
நியூ கினியும் மெலனீசியாவும்
நியூ கினியில், சகாராவுக்குத் தெற்கேயுள்ள ஆபிரிக்காவிற் போன்று, முறுகி வளைந்த மயிருள்ள வகைகள், தென்கிழக்கு மாவட்டம் போன்ற சில பகுதிகள் தவிர்ந்த எனைய இடங்களிற் பரவியுள. தென் கிழக்கு மாவட்டம் கடற்கரைப் பக்கமாக வந்துசேர்ந்த குடிகளால் நிரம்பப் பெற் றுள்ளதென அடன் காட்டியுள்ளார். நியூ கினியின் முதற் குடிகள் முக்கிய மாகக் குறளராகவே இருக்கின்றனர்; ஆனல் கூடிய உயரமும் மிக நீண்ட தலையுமுள்ளவர்களும் அதிகமாகவுளர் ; ஆபிரிக்காவிலுள்ள மக்களும் முறுகி வளைந்த மயிருடன் கூடிய மிக நீண்ட தலையுடையவர் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நியூ கினி மக்கள் ஒழிந்து போன தாசுமேனிய மக்களினத்தவர் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டதே. நியூ கினிக்குக் கிழக்கே, நிலம் உயரமாயிருந்தபொழுது ஒன்று சேர்ந்திருந்தனவெனக்

5.
கருதப்படும் தீவுத் தொகுதிகளில், நியூ கினியிலுள்ள அதே தன்மை மீண்டும் காணப்படுகிறது. பசிபிக்குப் பக்கமாகத் தூரவுள்ள தீவுகளிலும் கடற்கரைப் பக்கமாக, வந்து குடியேறியவர்கள் காரணமாக இத்தன்மை, கூடிய அளவிற் காணப்படுகிறது.
பொலினீசியா
இந்துக்கள் (இந்தோ-ஆரியத் தலைவர்களும் இவர்களுள் இருந்திருக்க லாம்) இந்தோசீனவுக்கு, எறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் (பாழடைந்த அங்கோர் நகரத்திலிருந்து இதனை அறியலாம்) , யாவாவுக்கு, அங்குள்ள பல புராதன கோயில்களிலிருந்து தெரிவதுபோல, கிறித்துவ சகாத்தத் தொடக்கத்திலிருந்தும் குடிபெயர்ந்து சென்றுளர் என்பதற்குப் பல ஆதாரங்களுண்டு. இவர்கள் கடல் வழியாகக் கிழக்கிந்திய தீவுகளுக்கும் அங்கிருந்து பசிபிக்குக்கும் சென்ற பெயர்ச்சிகளில் ஒரு பகுதியினராவர் ; பசிபிக்குக்குச் சென்ற இவர்கள் ஒலிவு நிறத் தோலுடையவர்களும் ஐரோப் பியரின் தோற்றமுடையவர்களுமாவர். இவர்கள் பொலினிசிய மக்களில் ஒரு பிரிவினராய் விளங்குகின்றனர். பொலினீசிய மக்களில் மற்றெரு பிரி வினர் தென்சீனக் குடிகளுக்கு இனமானவர்கள் ; பொலினீசியாவின் வட பாகத்தில் இவர்கள் முக்கியமானவர்கள். பிரபையான தோலும் ஒடுங் கிய மூக்குமுள்ள அகன்ற தலை மக்களும் காணப்படுகின்றனர் ; இவர்களுட் சிலர் ஐரோப்பியர் போன்ற தோற்றமுடையவர்கள். பொலினிசியாவுக்குப் பெயர்ந்து சென்றவர்கள் ஏறக்குறைய மெலனீசியத்தன்மைகள் வாய்ந்த வராவர் ; மெலனீசியத்தன்மைகள் பசிபிக்குப் பிரதேசமெங்கும், முக்கிய மாகப் பீச்சித்தீவுகளில், பரந்து காணப்படும். மெயோரி மக்கள் மெல னிசியத் தன்மைகளுடன்கூடிய பொலினீசியரின் பிரிவைச் சேர்ந்தவர்க ளெனக் கொள்ளலாம்.
uu 'Lu T6öT
இங்கு ஆதியில் நகர்ந்தவர்களின் சந்ததியினரே எயினு மக்கள் ; இவர் கள் இப்பொழுது யெசோ, சகாலின் ஆகிய தீவுகளில் மாத்திரமே காணப் படுகின்றனர். இவர்களிற் சிலர் மிக நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலைகளுடைய வர்களாயும் ஏனையோர் மட்ட ன நீளத்தலைகளுடையவர்களாயுமிருக்கின் றனர்; இவர்களே மனித வர்க்கத்தினருள் மிகக் கூடிய மயிருள்ளவர்க ளாவர் ; இவர்களுடைய மயிர் அலைபோன்று அல்லது சுருண்டும், தோல் வெண்-கபில நிறமுடையதாயும், முகம் அகன்றும், மூக்கு மட்டமான தாய் அல்லது ஒடுங்கியதாயும் இருக்கும் ; கன்னவெலும்புக்கு மேலுள்ள தோல் பெரும்பாலும் பிரபையான நிறமுள்ளதாயிருக்கும். இவர்கள் ஆதியில் சைபீரியா வழியாக அல்லது ஆசியாவின் மத்திய உயர் நிலங்கள் வழியாக நகர்ந்துவந்த வகையினரின் சந்ததியாரே ; இவர்களிலிருந்து,

Page 32
52
இவர்கள் அழித்துவிட்டவர்களும் இவர்களிலும் பழமையானவர்களுமான ஓர் இனம் பற்றியும் சில செய்திகள் அறியக்கூடியதாயிருக்கிறது. இவர் களுக்குப்பின் நாட்டை அடிப்படுத்தியவர்களுடன் இவர்கள் அதிகம் கலந் திருப்பதாகத் தெரிகிறது; இவர்களுள் கரு மஞ்சள் சேர்ந்த கபிலநிறத் தோலும், கட்டை மூக்கும், சரிவான கண்ணும் உடைய ஒரு அகன்ற தலை வகையினரும், மிக விளக்கமான பக்கத்தோற்றமும், புடைத்த மூக்கும், பிரபையான நிறமும், அகன்ற தலையுமுள்ள பிரபுத்தன்மைவாய்ந்த மற் ருெரு வகையினரும் காணப்படுகின்றனர். பிற் சொல்லப்பட்ட வகையினர் கொறியா, மஞ்சூரியா, கோபி ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றனர்; இவர்கள் சாதாரண சீன வகையினரிற் காணப்படுவதிலும் பார்க்கக் கூடிய உடல் மயிரும் முக மயிருமுடையவர்களாவர்; இவர்களின் தன்மைகளைப் பார்க்கும்போது இவர்கள் நீண்ட தலையுடைய வகைகளுடன் ஒரளவு கலந் துள்ளனர் போலத் தெரிகிறது.

6 ஆம் அதிகாரம்
அமெரிக்கா
அமெரிக்காவின் சுதேச குடிகள் வட-கிழக்கு ஆசியா வழியுாக வந்த பல நகர்வுகளைச் சேர்ந்தவையென்பதும், மிக முந்திய நகர்வுகளே பீரிங்குப் பிரதேசத்துக்கு அப்பாலுள்ள தூர இடங்களுக்குச் சென்றுள்ளனவென் பதும் சிறந்த முடிவுகளாகும். மத்திய ஆசியாவில் அலசுக்காவைச் சுற்றி யுள்ள பிரதேசத்திலிருந்து அமெரிக்காவின் கடைசி எல்லைவரையுள்ள குடிகள், ஐரோப்பாவிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் நீங்கலாக, கோபியிலிருந்து சீனவுக்கும் அப்பாலும் காலத்துக்குக் காலம் சென்ற நகர்வைப் போன்று, பல நகர்வுகளிலிருந்து வந்தவர்களேயாவர். இவ்விரு பக்கங்களிலும் நகர்ந்து சென்றவர்களில் மிக நீண்ட தலையினர் முக்கிய மாகத் தூரஇடங்களிலும், அகன்ற தலையினர் பெரும்பாலும் கிட்டவுள்ள இடங்களிலுமாகக் காணப்படுகின்றனர்.
பெருந்தொகையான எசுக்கிமோவரையும் எனைய ஆட்டிக்கு வகையின ரையும் பற்றி ஆராய்ச்சி செய்த ஆட்டிலிக்கா அவர்கள், கிறீனிலந்து எசுக்கிமோவர் நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலையும் ஒடுங்கிய மூக்கும் பலமான கன்னவெலும்புமுள்ளவர்களாயிருப்ப, மிகத் தூர மேற்கிலுள்ளவர்கள் ஆசிய உயர் மேட்டுநில அகன்றதலை வகையைச் சேர்ந்தவர்களாயுளரெனக் கூறியுள்ளார். எசுக்கிமோவர் நெடுங்காலத்துக்கு முன்னரே ஆட்டிக்கு நிலைமைகளுக்குப் பழக்கமாகிவிட்ட ஒரு நகர்வைச் சேர்ந்தவர்களெனத் தெரி கிறது; வெள்ளையர் தலையீட்டின் காரணமாக அவர்கள் மனப்பான்மை மாறும்வரை, தம் வாழ்க்கைமுறையிற் சித்தியடைந்தவர்களாயும் இருந் திருக்கின்றனர். ஆட்டிக்கு அமெரிக்காவில் கலைமானையும் கத்துரி எருது களையும் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவக்கூடியவாறு வளர்ப்பது பெரும்பாலும் எசுக்கிமோவரைப் பேணிக் காப்பதிற்றங்கியிருக்கிறது; எசுக்கி மோவருக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் தென்மாக்கு, ஐரோப்பிய வியாபாரிகளை அணுகவிடாது, தானேவழங்கி வருகிறது. எசுக்கிமோவருக்கும் ஐரோப்பிய அரசாங்கங்களுக்குமுள்ள தொடர்புகள் பற்றியும் தென்மாக்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மற்றுமொரு நீண்ட தலைமக்களின் நகர்வு வட காடுகளுக்கூடாகச் சென்று இப்பொழுது அமெரிக்க ஐக்கிய மாகாணங் களின் அத்திலாந்திக்கு மாகாணங்களெனப்படும் பிரதேசத்திற் குடி யேறியிருத்தல் வேண்டும். நீளத்தலையுள்ள வேறெரு நகர்வு கலிபோணி யாவையடைந்துள்ளது; இவர்களின் அறிகுறிகள் மெச்சிக்கோவிலும் காணப்படுகின்றன ; இவர்களின் தலைகள் நீண்டு, ஒடுங்கி, உயரமாயும் மூக்கு அகன்றும் இருக்கின்றன. இவற்றைவிட மற்றெரு நகர்வு மற்றே
53

Page 33
54
குறசோ மேட்டுநிலத்தையும் கிழக்கு பிறேசிலையும் அடைந்துளது ; இலகோ வா சாந்தாத் தலையோடுகளிலிருந்தும், பொற்றேகியூடோ மக்கள் சிலரி லிருந்தும், தென்-கிழக்கு பிறேசிலிற் காணப்படும் தொல் பொருள் களிலிருந்தும் இதனை அறிந்துகொள்ளலாம். தென் அமெரிக்காவின் மேற்குக் கரைப்பகுதியிலுள்ள சில ஆதிக் குடிகளும், தென் பற்றக் கோனியாவிலும் தியெரா-தெல்-வியூகோவிலுள்ள சிலரும் மிக நீளத் தலையுடையவர்கள் ; வேறு தொல் பொருள்களும் ஆங்காங்கே காணப்படுகின் றன. மேற்காட்டிய நகர்வுகள் சென்றடைந்த அந்தங்களிலிருந்து பின் நோக்கிப் பார்ப்போமேயானல் இந்நகர்வுகளிலுள்ள மக்களை மட்டான நீளத் தலையினர், மட்டான அகலத்தலையினர், அகலத்தலையினர் என மூன்று தெளிவான தரத்தினராகப் பிரிக்ாலாம். அகலத் தலையினர் பெரும்பாலோ ரின் பக்கத் தோற்றம் மிகத் தெளிவானதாயிருக்கிறது, ஆனல் அவர்களுள் தட்டையான உறுப்புக்களுள்ளவர்கள் முக்கியமாக மெச்சிக்கோ மேட்டுநிலத் திற் காணப்படுகின்றனர். பசுப்பிக்குக்கூடாக அமெரிக்காவுக்குச் சென்று குடியேறியவர்கள் காரணமாக, முக்கியமாக அவர்களின் பண்பாட்டுச் செல் வாக்குக் காரணமாக, மெச்சிக்கோ, பேரு ஆகிய இடங்களிலுள்ள குடிகளின் உடற்றேற்றமும் நாகரிகமும் மாறுபாடடைந்துள்ளனவென அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது. இவ்விடயம் பற்றி இங்கே விவாதிக்க முடியவில்லை; விரும்புவோர் பேராசிரியர் எலியற்று சிமிது அவர்கள் இவ்விடயம்பற்றி மேற்கூறிய கருத்துப்பட எழுதிய நூல், ளை பும், இறிவெற்று அவர்கள் அதற்கு மாறுபட்ட கருத்துக்கள் பொதிந்து ஆக்கிய நூல்களையும் வாசித்துப் பயனடையலாம். இவ்விரு கருத்துக் ளையும் சிலர் கடுமையாகக் கண்டனம் செய்துளர் என்பதும் ஈங்கு குறிப்பிடற்பாலது.
கனேடியக் காடுகளிலுள்ள மக்கள் பலர் மட்டான நீளத்தலையுடையவர் களாயிருந்தனர் ; வட-மேற்கு நோக்கிச் செல்லச் செல்லத் தலைகளின் அகலம் கூடிக்கொண்டு போவதாயும் காணப்பட்டது. இவர்களின் தோல் ஆசியாவிலுள்ளவர்களின் தோலிலும் பார்க்கக் குறைந்த மஞ்சள் நிற முடையதாயிருக்கிறது; மயிர் அலைபோன்றும் சீனரின் மயிர்போன்று அவ்வளவு கரடுமுரடாயில்லாமலும், பக்கத்தோற்றம் விளக்கமாகவும், கண்ணிமை மடிப்பு, முக்கியமாக முதிர்ந்தவர்களில் இல்லாமலும் காணப் படுகின்றன. பொதுவாக, அமெரிக் வுக்கு வட-மேற்கிற் காணப்படும் மட் டான நீளத்தலைகளும் அகன்ற தலைகளும் சீனமக்களின் தலைகளிலும் பார்க்கச் சைபீரிய மக்களின் தலை ளைச் சேர்ந்தனவாகும். சமவெளி களிலும் மேற்கு மேட்டு நிலங்களிலுமுள்ள சுதேசி வில் அநேகர் கட்டை யான அகன்ற தலைகள் உடையவர்களாயிருக்க, அமெரிக்க ஐக்கிய மாகா ணங்களின் தென்பக்கமாக நீண்ட தலையினர் அதிகமாகக் காணப்படு கின்றனர். மெச்சிக்கோப் பிரதேசத்தில், ஐரோப்பியர் தலையிடும்வரை, நிலவிய நாகரிகம் காரணமாகப் பலவகைகள் வந்து கலந்தன ; இதனல் ஒரு பக்கம் மிக நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலையும், மருபக்கம் அகன்ற

55
தலையும் தட்டைமுகமும் காணபபடுவதுடன் இவ்விரண்டுக்குமிடையான பல வகைகளுமுள. சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் சிலவற்றிற் குறிப்பிடப்பட்டவர்களும் பனமாவைச் சேர்ந்தவர்களுமாகிய வெள்ளை இந் தியர் வெளிறியவகையைச் சேர்ந்தவர்களே ; இவர்கள் பெரும்பாலும் கலப்பு மணங்கள் செய்து கொண்டவர்களாவர். தென் அமெரிக்க சுதேச மக்களிற் பெரும்பாலோர் அகன்ற தலையினராவர். இவர்களில் அநேகர் கட்டையானவர்களாயிருப்ப, மற்றே குறசோவிலும் பற்றக்கேள்னியாவிலு முள்ள அகன்ற தலையினர் சிலர் மிக உயர்ந்தவர்களாயிருக்கின்றனர். மேற்கிந்திய தீவுகளில் தொடக்கத்திலிருந்த சுதேசிகள் தென் அமெரிக்கா விலிருந்தே அங்கு பரவினர் எனத் தெரிகிறது. ஐரோப்பியர் வந்து சேர்ந்தபொழுது கரிப்பியர் எனும் மற்றுமொரு வகையினர் இங்கே பரந்து வந்தனர். ஐரோப்பியர், மேற்கிந்திய தீவுகளிலிருந்த இச்சுதேச குடிகள் யாவரையும் விரைவாக அகற்றி அவர்களின் இடங்களுக்கு ஆபிரிக் காவிலிருந்து நீக்கிரோவரை அடிமைகளாகக் கொண்டுவந்தனர். ஆபிரிக்க ரிடையிலும் ஆதிச்சுதேசிகளிடையிலும் ஒரளவு கலப்பு எற்பட்டது; சுதேசி கள் சிலர் இப்பொழுதும் சென். வின்சென்டிலும் தொமினிக்காவிலும் பிழைத்திருக்கின்றனர். பிரான்சிய கனடாவின் இக்கால குடிகளில் இவர்கள் பெரிய அளவிற் கலந்துளர், ஆனல் ஆங்கில-சச்சனிய அல்லது ஆங்கிலசெலுதிக்கு அமெரிக்கா எனப்படும் பிரதேசத்தின் குடிகளில் இவர்கள் பெரிய அளவிற் கலக்க வில்லையென நம்பப்படுகிறது. சிபானிய அமெரிக்கா வில், முக்கியமாக மெச்சிக்கோவிலும் பொலிவியாவிலும், பொதுவாகச் சுதேச இனம் பெரியவளவிற் ருெடர்ந்திருக்கிறது. போர்த்துக்கீச அமெரிக் காவுக்கும், கயான, மேற்கிந்திய தீவுகள், அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் ஆகிய இடங்களுக்குப் போல, நீக்கிரோவர் கொண்டு செல்லப்பட்டனர்; கிழக்கிந்திய தீவுகளிலும் கயான விலும் இப்பொழுது தென் இந்தியத் தமிழரும் குடியேறியுளர். ஆசெந்தீனக் குடியரசில் இத்தாலியரும், தென் பிறேசிலில் இத்தாலியரும் சேர்மனியரும், சில்லியில் சேர்மனியரும் கொத் துலாந்தினரும் குடியேறியுளர், இனங்கள் பல பெரிய அளவிற் கலப் புற்றமையினல் அமெரிக்காவில், முக்கியமாகத் தென் அமெரிக்காவில், உலகில் வேறெங்கும் காணமுடியாத அளவுக்குக் கலப்பு வகைகள் காணப் படுகின்றன.
அமெரிக்கக் குடிகள் பழைய உலகிலுள்ள குடிகளிலிருந்து பெரிதும் வேறுபட்டவர்களாவர் ; கடந்த சில நூற்றண்டுகளில் அமெரிக்காவுக்கு வந்து குடியேறிய ஐரோப்பியரும் அங்கு அவர்கள் கண்ட சுதேசிகள் எனப்படுவாரும், மனிதரியலின்படி பார்க்குமிடத்து, சமீப காலத்திற் குடி யேறியவர்களே. அமெரிக்க சுதேசிகளின் நாகரிகங்கள் யாவும், எசுக்கி மோவரின் நாகரிகம் நீங்கலாக, கல்தேய்க்கும் கலை, வனைதற்ருெழில், நெய்தல் ஆகியனவற்றின் அத்திவாரத்திலேயே பெரும்பாலும் கட்டி யெழுப்பப்பட்டன. இவற்றிலிருந்து, இக்கைப்பணிகள் யாவும் ஆசியாவி

Page 34
56
லிருந்தே தருவிக்கப்பட்டனவெனவும், அவை கி. மு. 3000 ஆண்டுக்கு நெடுங்காலத்திற்கு முன்னர் அமெரிக்காவுக்கு வந்திருக்க முடியாதெனவும் கொள்ளுதல் பொருந்தும். அக்காலத்தில் வேறு கைப்பணிகளும் வந் திருக்கலாமாயினும் அவை அங்குமிங்குமாகப் பரந்து ஈற்றில் அவற்றை மக்கள் மறந்திருக்கக்கூடும். vn
அமெரிக்காவிலுள்ள சுதேச சாதிகள் கையாண்ட கைப்பணிகள் யாவும் அத்தேசத்திலேயே தோற்றுவிக்கப்பட்டவை யெனக் கொள்ள முடியாது ; ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் கொண்டுவந்த சாதனங்கள் பற்றியும் அவை பரவிய வேகம் பற்றியும் எமக்கு அதிகம் தெரியவில்லை. அமெரிக்காவுக்கு வந்தவர்கள் இலாமா தவிர வேறு பழக்கிப் பயன்படுத்தக் கூடிய பெரிய மிருகங்களைக் கண்டிருக்க முடியாது; இதனல் சமூகமுன் னேற்றம், மெச்சிக்கோவிலும் பேருவிலும் தவிர, மிகவும் தடைப்பட்டது. மெச்சிக்கோவிலும் பேருவிலும் காணப்படும் நாகரிகம் மிக வினேத மானது ; இவ்விரு நாடுகளும் கைப்பற்றப்பட்டமை பற்றிய வரலாற்றை எழுதிய பிறெசுக்கொற்று அவர்கள் இந்நாகரிகம் பற்றியும் நன்கு விளக்கியுள்ளார்.
பேற்க எனும் இயற்கையியலறிஞர் அமேசன் மக்களைப் பற்றி எழுதிய நூலில், அமேசன் சுதேசிகளின் உடற்றன்மைகள் அப்பிரதேசத்தின் ஈரம் கலந்த வெப்பத்தைத் தாங்கக் கூடியனவாக வில்லையெனக் கூறியுள்ளார். வெப்பத்தை வெளியேற்றக்கூடிய உடலே இக்கால நிலைக்குப் பொருத்த மாயிருக்கும் ; ஆனல் அமேசன் சுதேசிகளின் உடல், கிழக்கு, வட கிழக்கு ஆசிய மக்களிற் பெரும்பாலாரின் உடல்போன்று, வெப்பத்தை அதிகம் வெளியேறவிடாததாயிருக்கிறது ; அமேசன் சுதேசிகளும் கிழக்கு, வடகிழக்கு ஆசியப் பிரதேச மக்களின் மரபினரே.
சென்ற நான்கு நூற்றண்டுகளிலும் அமெரிக்காவுக்குச் சென்று குடி யேறிய பல்வேறு தொகுதியினர் எவ்வாறயினர் என்பதை அறிதல் மக்கள் இனங்களின் பிற்காலம் பற்றிய ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படு மாயினும், அதனையறிதற்கு மனித இனங்கள் ஆதியில் விருத்தியடைந்த மைக்கேதுவாயிருந்த காரணங்களிலிருந்து வேறுபட்ட பலவிடயங்கள் பற்றி ஆராயவேண்டியிருப்பதனல், அப்பிரிவு இங்கே சேர்க்கப்படவில்லை. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுக்குச் சென்று குடியேறிய பலவகைகளின் மரபினர் அமெரிக்க நியமங்களுக்கியைய விரைந்து மாற்றமடைகின்றனர் எனச் சில புள்ளி விவரங்களின் துணைகொண்டு போசு அவர்கள் கூறி யுள்ளார் ; ஆனல் அந்த முடிவு பிழையானதென ஆட்டிலிங்கா அவர்கள் “பழைய அமெரிக்கர் ’ எனும் நூலிற் காட்டியுள்ளார். அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் பல்வேறு வகைகள் வந்து கலக்கும் ஓர் உறைவிடமாக விளங்குகின்றது. இங்கு அடிமைகளாக வந்த கருநிறத்தோல் மக்களின்

57
வழித்தோன்றல்கள் தம் தன்மைகளிற் பெரிதும் மாற்றமடைந்து வரு கின்றனர். பல்வேறு வகை ஐரோப்பியர் அங்குமிங்குமாகப் பரந்து, தமது இன மனச்சார்புகளிலிருந்தும் சமூக பாரம்பரியங்களிலிருந்தும் வேறுபட்டுக் காணப்படுகின்றனர். இந் நாட்டிலேற்பட்டுள்ள சிக்கலான கலப்புக்களின் பலன் எவ்வாருகுமென இப்பொழுது கூறுதல் இயலா தென்க.

Page 35
7 ஆம் அதிகாரம்
ஐரோப்பாவும் மத்தியதரைப் பிரதேசமும்
பனிக்கட்டிக் காலத்தின் கடைசிப் பெருங்கூறு நீங்கிப் போகவே ஐரோப்பாவிற் குடியேறிய ஆதி வேடரும் தொழிற்றிறனுடையோரும் முக்கிய மாக மேற்கு மத்தியதரையைச் சுற்றியுள்ள பலவிடங்களிலும், தென்மேற்குப் பிரான்சிலும், மத்திய ஐரோப்பாவிலுள்ள நுண்மணல் வலயத்திலும் வசித்தெைரனத் தெரிகிறது. குதிரைக் கூட்டங்களை வேட்டையாடுபவர்களும் தீக்கல் பொளிதலிற்றிறமை வாய்ந்தவர்களுமாகிய மக்கள், வறட்சியேற் பட்டிருந்தவொரு காலத்தில், தானியூப்பினதும் மொறவியாவினதும் நுண்மண் படிவு வலயம் வழியே மேற்குநோக்கி நகர்ந்தனரெனவும் தெரிகிறது. மீண்டும் குளிர்காலம் வந்தபொழுது அல்லது வேறு மாற்ற மேற்பட்டபொழுது இவர்கள் திரும்ப அப்பிரதேசத்திற்கு வந்துமிருக்கலாம். பின்னர் பனிக்கட்டித்தகடுகள் கடைசியாக இப்பொழுதுள்ள அளவுக்குக் குறையவே ஐரோப்பிய மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாயினர். பெரும் மிருகக் கூட்டங்கள் சுற்றித் திரிவதற்கு வசதியான பரந்த புல்வெளிகள் இல்லாது போயின; மேற்குக் காற்றுகள், குளிர் காற்றினல் பனிக் கட்டித்தகடுகளின் மேலால் வெளியிற்றள்ளப்படாது ஐரோப்பிய சமவெளி கள் நெடுக உட்பக்கமாக வீசி பைன், ஒக்கு முதலிய பெரு மரக்காடுகள் வளருவதற்கு உதவியான மழையை உண்டாக்கின; இதுவே புல் வெளிகள் மறைந்தமைக்குக் காரணமாகும். இக்காடுகளைப் பயன்படுத்த முடியாத வேடர் கடற்கரைப் பக்கமாகவும் ஆற்றேரங்களுக்கும் காடுகளால் மூடப் படாத நுண்மணற் பிரதேசங்களுக்கும் பின்னடைந்தனர். இதன் பின்னர் இவர்கள் இப்பிரதேசங்களிலேயே உணவு சேகரிப்பவர்களாக, ஒரளவு வேட்டையுமாடி, வாழ்ந்து வந்தனர். இவ்வாறு வாழ்ந்துவந்த ஆதி மக்களின் மரபினர் இப்பொழுதும் மேற்கு ஐரோப்பாவில் இத்தாலி தொடக்கம் நோர்வே ஈருகவும், கீழ் மத்திய ஐரோப்பாவில் நுண்மண் படிவு வலயங்களுக்கு அண்மையிலும் சிதறிக் காணப்படுகின்றனர். இவர் கள் தொடக்கத்தில் வட ஆபிரிக்கக் குடிகளினதும், அரேபியக் குடி களினதும் ஒரு பகுதியினராகவிருந்தனர்; அத்துடன் ஐரோப்பாவின் தூரவிடங்களிற் தொட்டந்தொட்டமாக காணப்படுவது போன்ற மிக நீண்டு, உயர்ந்து, ஒடுங்கிய தலை உடையவர்களையும் காணலாம். குதிரைக் கூட்டங் களை வேட்டையாடுவோர் சிலர் இரசிய-ஆகிய தெப்பு வெளிகளுக்குப் பின்னடைந்து அங்கு முக்கியமாக மந்தை மேய்ப்போராயினர் எனத் தெரிகிறது; இவர்கள் வட ஆபிரிக்கா, அரேபியா ஆகிய இடங்களில் மெசப்பொத்தேமிய ஆறுகள், நைல் ஆகியனவற்றின் கரைகள் வழியே
- 58

59
பயிர்ச் செய்கையாளர்களாக, தம்முள் மந்தை வளர்ப்போரையுடையராய், வாழ்ந்து வருவோரில் வேறுபட்டவராவர். பிற்காலத்தில், இரசிய-ஆசிய தெப்பு வெளிகளே அரேபியாவிலும் வட ஆபிரிக்காவிலும் வசித்த மந்தை வளர்ப்போருக்குக் குதிரைகளே வழங்கியிருக்க வேண்டும் ; குதிரை களின் உதவிகிடைக்கவே மனிதனுக்கு வாய்ப்புகள் பெரிய அளவில் உண்டாயின. நைல், யூபிரேற்றிசுப் பிரதேசங்களில் வாழும் பயிர்ச்செய் கையாளரிடையில் மிக நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலையுடையோரைக் காண லாம் ; ஆனல் இம்மக்கள் பொதுவாக மட்ட ன நீளத்தலையுடைய வகை யினராய், வழக்கமாகக் கபிலநிற அல்லது செங்கபிலநிறத் தோலுடைய ராய்க் காணப்படுகின்றனர் ; இவர்களை எலியற்று சிமிது அவர்கள் கபில நிற இனம் (Brown race) என்கிறர். அரேபியாவிலும் அதன் எல்லைப்புறங்களிலுமுள்ளவர்களின் பக்கத்தோற்றம் ஆபிரிக்கரினதிலும் பார்க்க வலிமை மிக்கதாக விருத்தியடைந்திருக்கிறது; இவ்வாறு வளர்ச்சி யடையும் தன்மை ஆசியாவின் மேற்குப் பாதியிற் பெரிய அளவிலுண்டு என்பது எற்கெனவே கூறப்பட்டுள்ளது. இவர்கள் உறுதியாகவும் ஒடுங்கி யுமுள்ள மூக்கும் சிறந்த முகத்தோற்றமும் உடையராயிருக்கின்றனர் ; ஆண்களின் உயரம் வட ஆபிரிக்கரிலும் பார்க்கக் கூடியதாயிருக்கிறது. வட ஆபிரிக்கப் பிரதேசத்தினரின் மூக்குப் பல்வேறு விதமாக, ஆனல் அகலமாயும் கட்டையாயும், இருக்கும் ; சகாராவுக்குத் தெற்கேயுள்ள ஆபிரிக்கப் பிரதேசத்தினரின் மூக்கு இதற்குக் கூடிய அகலமாயும் கட்டை யாயும் இருக்கும். அல்சீரியக் குன்றுகளில், ஏற்கெனவே கூறப்பட்டது போல, செந்நிறமான மக்கள் வாழ்கின்றனர் ; ஆனல் மத்தியதரைக் கரையோரங்களில், முக்கியமாகப் பட்டினங்களில் வறியோர் இருப்பிடங் களில், நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலைகளும், குறுகி அகன்றுள்ள மூக்கும், முன் நீண்டுள்ள வாயுமுடைய மக்கள் பலருளர் ; இவர்கள் பிரெஞ்சு இரிவேராவிலுள்ள கிரிமோல்தியிற் காணப்படும் ஒரு குகையின் கீழ்ப் படையிலிருந்து எடுக்கப்பட்ட இரு ஆதி (ஒறினேசியக்கால) எலும்புக் கூடுகளிலுள்ள தன்மைகளையுடையவராகக் காணப்படுகின்றனர். இதே பழையவகை ஐரோப்பாப் பக்க மத்திய தரைப் பட்டினங்களிற் பெரும் பாலும் காணப்படுகின்றது; இவ்வகையினருடையது போன்ற தலையும், ஆனல் வலிமைகூடிய புருவங்களும், அவ்வளவு முன் நீளாத வாயு முடைய ஒருவகையினர் வட போத்துக்கலின் தூரமாவட்டங்களிலும் சாதினியா முதலிய இடங்களிலும், பிரான்சில் தோடோன் பிரதேசத்திலும் காணப்படுகின்றனர். மேற்கு மத்தியதரையைச் சுற்றிப் பொதுவாகக் காணப் படுவன மட்டான நீளத்தலையும், முனைப்பான புருவங்களோ, கன்ன வெலும்புகளோவில்லாத முட்டை வடிவமான முகமும் கொண்ட ஒரு வகையினராகும் ; இவை வட ஆபிரிக்காவினதும் அரேபியாவினதும் பொதுவான குடிகளைச் சேர்ந்தன ; ஆனல் இவர்களின் தோல் வெண் ணிறத்திலிருந்து ஒலிவுக் கபிலநிறம் வரை வேறுபடும். இவை ஓரளவு பழைய வகைகளிலிருந்து விருத்தியடைந்தனவாகவோ, வட ஆபிரிக்க

Page 36
60
அல்லது அராபிய மாதிரிகள் போன்று தலத்திலேயே கூர்ப்படைந்தன வாகவோ இருக்கலாம். மேற்கு மத்தியதரைப் பிரதேசத்திற் காணப் படும் பொது மாதிரியினர் மத்தியதரை இனம் எனப்பெயர் பெற்றுளர். இப்பெயர் பல்வேறு தொகுதியினரைக் குறிக்கும் ஒரு பொதுவான பெயர் என்பதை நாம் உணர்தல் வேண்டும் ; ஆதித்தன்மைகளை அப்படி யேயுடைய தொகுதிகளும், மாற்றமடைந்துள்ள-முக்கியமாக வட ஆபிரிக் காவுக்கும் தென்-மேற்கு ஐரோப்பாவுக்கும் தொடர்புள்ள-தொகுதிகளும், பழைய கற்காலத்தில் மத்திய ஐரோப்பாவின் நுண்மண் வலயம் வழியே நடைபெற்ற நகர்வுகளோடு சம்பந்தப்பட்ட தொகுதிகளும் இப்பெயருள் அடங்குவனவாகும். இப்பொதுப் பெயருள் அடங்கும் பல்வேறு தொகுதி களும் முற்காலத்தில் வடக்கு நோக்கி மேற்குப்பக்கமாகக் பரந்துள ; இவ்வகையினர் பெரும்பாலும் மேற்குப்பிரான்சு, கோண்வால், தெவன், உவேல்சு, அயலந்தின் சில பகுதிகள் ஆகிய இடங்களிற் காணப்படு கின்றனர். இவர்களுட் காணப்படும் ஒரு தொகுதியினர் பொதுவாக, உயர்ந்து மெலிந்த உடலும், மிக ஒடுங்கி உயர்ந்த தலையும், நீண்டு மெலிந்து நேரான பக்கமுடைய முகமும், முனைப்பான மூக்கும் நாடியும், கறுத்த நிறமுமுடையராயிருக்கின்றனர். இத்தகையவர் மேற்குக் கொத்து லாந்து, அயலந்து, தான்பிக்குசயர்க் கரம்பை நிலங்கள், எச்சு மூர், சிபெயினிலுள்ள கசுதைல் ஆகிய இடங்களில் தொட்டந் தொட்டமாகக் காணப்படுகின்றனர். இவ்வகையினர் எல்கிறெக்கோ என்பார் பாசன் எனும் நாடகத்தில் தலைகளால் நிறைத்துத் தீட்டிய ஒரு காட்சியிற் காணப்படும் வகையைச் சேர்ந்தவராவர். −
இந்த உயர்ந்த வகை தவிர, மத்தியதரை இனம் எனும் பிரிவின் கீழ் வரும் மற்றும் வகையினர் வழக்கமாகக் கட்டையாகவும் மெலிந்துமுள்ள உடலும், ஏனைய ஐரோப்பிய வகை மக்களிலும் பார்க்கக் கறுத்த நிறமு முடையவர்களாகவிருக்கின்றனர் ; இதிலடங்காத ஒரு வகையினருமுளர் ; இவர்களைப் பற்றிப் பின்னர்க் கூறுவாம்.
ஐரோப்பாவில், பலவழிகளில் ஒன்றையொன்று வளப்படுத்திய இரண்டு நாகரிகங்கள் இருந்தனவெனப் பொதுவாகக் கூறலாம். ஒன்று கி.மு. மூவாயிரமாண்டளவிலிருந்த வியாபார நகரத்தையடிப்படையாகக் கொண்ட மத்தியதரை நாகரிகம் ; இதிற் பிற்காலத்திற் பல அபிவிருத்திக ளேற்பட்டதுடன் வெளியிலிருந்தும் பல்வேறு அமிசங்கள் வந்து கலந்தன; எனினும் நகரமே குறிக்கோளாக விளங்கிற்று. தேசிய அடிப்படையில், உதாரணமாக இத்தாலியில், பிற்காலத்திலேயே நாகரிகம் வளர்ச்சியடையத் தொடங்கியது. மத்தியதரை இனவகையினர் நகர வாழ்க்கையைப் பெரிதும் விரும்பினரெனினும் அவர்கள் மூலமாகவே நகரப் பண்பாடுகள் வளர்ந் தனவெனக் கூறமுடியாது ; ஒரு பெரும் பண்பாட்டின் வளர்ச்சியில் எப் பொழுதும் பல வகையினர் சேர்ந்து பங்குகொண்டுள்ளனர் எனக் காண்

6.
கிருேம். எனினும் மத்தியதரை வகையினர் எகித்து, மெசப்பொத்தேமியா, இந்தியா ஆகிய நாடுகளிற் காணப்படும் நகரங்களிலிருந்து வேறுபட்ட நகரங் கள் ஐரோப்பாவில் உண்டாவதற்குக் காரணமாயிருந்தனர் என்பதை நாம் அறியக் கூடியதாயிருக்கின்றது.
மற்றை நாகரிகம் விசேடமாக மத்தியதரைக்கு வடக்கிலும் வடமேற்கிலு முள்ள ஐரோப்பியப் பிரதேசத்துடன் தொடர்புடையதாயுள்ளது; முக்கிய மாகப் பண்டைய அனத்தோலியா, திரேசு, தானியூப்பு நிலங்கள், கலீசி யாவும் சைலீசியாவும், மொறேவியாவும் பொகிமியாவும், பொகிமியாவுக்கு வடக்கிலுள்ள சச்சன் தாழ்நிலம், பிவால்சும் நெக்கால்சும், சேர்மனி, பெல்சியம் ஆகியவற்றின் மற்றைய பகுதிகளும், பாரிசு வடிநிலம் ஆகிய பிர தேசங்களுடன் தொடர்புபட்டுள்ளது. நுண்மண்படிவுப் பிரதேசங்களுட னேயே இது தொடர்புபட்டுக்காணப்படுகிறது; ஏற்கெனவே சொல்லப்பட்ட இந்நுண்டுகளை மணற்பிரதேசம் செழிப்பானதாயும் அடர்ந்த காடுகளில் லாததாயும் காணப்படுகிறது. இதைக் கமத் தொழிற் கிராமத்தை மைய மாகக் கொண்டு வளர்ந்த ஒரு உழவர் பண்பாடெனக் குறிப்பிடலாம் ; அத்துடன் மத்தியதரைப் பிரதேசத்திலிருந்து நகரங்கள் பற்றிய அறிவு பெறும்வரை நகரங்களும் மற்றும் சமுதாய அமைப்புகளும் விரவிய ஒரு முழு நாகரிகமாக அது வளரவில்லையெனலாம். ஐரோப்பாவின் சில பகுதி களில் உண்டான உழவர் பண்பாடு உண்மையில் கி. மு. மூவாயிரமாண் டளவில் பெரியஅளவிற் பரந்த கமத்தொழிலினதும் அதோடு தொடர்பு பட்ட ஏனைய விளைவுகளினதும் ஓர் எடுத்துக்காட்டேயாகும். நகரங்கள் பற்றிய மத்தியதரைக் கருத்துக்கள் வட ஐரோப்பாவைச் சென்றடைய மிக நீண்ட காலமாயிற்று ; இக்கருத்துக்கள் மத்திய காலம்வரை மிகக் குறைவாகவே யிருந்தன ; உரோமர் காலத்துக்கு முன்னர் இக்கருத்துக்கள் ஆங்கிருக்கவே யில்லை. இதற்குப் பழைய உழவர் வலயத்தின் வடக்கு, வட கிழக்கு ஒரங் களிலிருந்த வீரியமுடைய மிலேச்சர் ஒரளவு காரணராவர் ; அத்துடன் கமத்தொழில் பரவுவதிலுள்ள இக்கட்டுகளும் ஒரு காரணமாகும் ; நிலம் வளமிழந்துவிட்டமையினலேயே கமத்தொழில் பரவமுடியவில்லை. உழவர் இச்சூழ்நிலைகளில் வாழ, முக்கியமாகச் சீரியா, மெசப்பொத்தேமியா நாடு களுக்குரிய தானியப் பயிர்களை ஐரோப்பிய காலநிலைப் பகுதிகளில் உண் டாக்குவதில், நெடுங்காலமாகத் தொடர்ந்து பாடுபட்டு வெற்றி பெற்ற
னா. m
இந்த உழவர் பண்பாட்டுக்குரிய மக்கள் பெரும்பாலும் அகன்ற தலையின ராவர்; ஆனல் அங்குமிங்குமாகவுள்ள நுண்மணற்பகுதிகளில், முக்கிய மாக மிகத்தூரவுள்ள சில இடங்களில், நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலையு டைய ஆதி மக்களின் மரபினர் சிலர் இன்னும் இருக்கக்கூடும். இந்த அக்ன்ற தலை மக்கள் அற்பிசு இனத்தவர் எனச் சொல்லப்படுவர், இப்

Page 37
62
பெயரும், ஏனைய பெயர்களைப் போன்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டதெனக் கூறமுடியாது. இவர்கள் காடுநிறைந்த அற்பிசுப் பள்ளத் தாக்குகளுக்குட் புகுந்து, கமத்தொழில் செய்வதற்காகச் சில இடங்களை வெட்டித்திருத்தியிருப்பதாகத் தெரிகிறது; இவர்களின் தலைகள், தை ரோலிலுள்ள சில அற்பிசுத் திரட்சிகளினூடே வளர்ந்த மையாற்போலும், அகலத்தாற் கூடியிருப்பனவாகத் தெரிகின்றன. நடு-ஐரோப்பியத் தலை களையொத்த ஒரு தலை-வடிவம் இந்துக்கூசுப் பிரதேச மக்களிடையிற் காணப்படுகிறது; இவ்விரு வகைகளும் நெடுங்காலத்திற்கு முன்னர் அனத் தோலிய பிரதேசத்திலிருந்து நகர்ந்தனவேயெனக் கருதப்படுகிறது. உழவர் தென்கிழக்கிலிருந்து நடு ஐரோப்பாவுக்கூடாக நகர்ந்தமை பற்றித் தொல் பொருள் ஆதாரங்கள் இப்பொழுது மேலும் கிடைத்துள. இந்நகர்வுகளின் தொடக்கத்திற் பெருந்தொகையான மட்டான நீளத்தலையினர் இருந்தன ரெனவும் ஆனல் முடிவுக் காலத்தில் அகன்ற தலையினரே பெரும்பாலும் காணப்பட்டனர் எனவும் தெரிய வருகிறது. அனத்தோலியாவிலும் இல் லிரிய அற்பிசுப் பிரதேசத்திலும் தலையின் வடிவம் மற்றுமொரு மாற்ற மடைந்திருக்கிறது; இங்கே தலை மிக உயர்ந்தும், அளவிற் குறைந்தும், மேல் மூலைவரை மட்டத்தளமுடையதாயும் விளங்குகிறது. இம்மக்கள் பெரும்பாலும் மிகவும் புடைத்த பக்கத் தோற்றமுடையவர்களாயிருக்கின் றனர் ; சிலர் உயர்ந்த தோற்றமுடையவர்களாயுமிருக்கக் கூடும். இவர்கள் ஒன்றுக்கொன்று மறுபட்டுள்ள பெயர்களாகிய அனத்தோலிய வகையினர் எனவும் திரிைக்கு வகையினர் எனவும் குறிப்பிடப்படுவர் ; எனினும் அனத்தோலிய வகையினர் என்பதே பொருத்தமாயிருக்கும்போலத் தெரி கிறது. தினரிக்கு வகையினர் பலர் அனத்தோலியருக்கும் அற்பிசு வகை யினருக்கும் இடையான ஒரு தரத்தினராகக் காணப்படுகின்றனர். ஆமேனிய மலைப்பிரதேசத்தில் விசேடமான அனத்தோலிய வளர்ச்சியற்ற பல அகன்ற தலைகள் காணப்படுகின்றன. மத்தியதரை இனத்திலும் மத்தியதரை நகரத்திலும் காணப்படுவது போல, இங்கேயும் நடு-ஐரோப்பாவின் கிராமப் பண்பாடு ஒரு குறித்த இனவகைக்குரியதெனக் கொள்ள முடியாது. அற்பிசு இனத்தினர் பாரம்பரியமான கிராம வாழ்க்கை முறைகளிலும், கிராமக் கைத்தொழில்களிலும், முக்கியமாக நுட்பமான சிறுபொருள்களைச் செய்வதில், விருப்புடையவராயிருந்தனரெனச் சொல்லலாம். அற்பிசு இனப் பிரதேசங்களிலேயே முக்கியமாக மின் பொறிகள் வர்த்தகமுறையில் அபிவிருத்தி படைத் தொடங்கி பமையிலிருந்து அப்பிரதேச மக்களின் விசேட திறமைகளை அறிந்து கொள்ளலாம்.
நடு-ஐரோப்பிய உழவருக்கு வளம் குன்றி வந்த மண் மாத்திரமனறி, பனிக்கட்டிக் காலத்தின் பின் அவர்கள் பிரதேசத்தின் பெரும்பகுதியில் வளர்ந்த ஒக்கு மரக்காடுகளும் நீச்சு மரக்காடுகளும் நெடுங்காலமாகப் பெரும் பிரச்சினையாயிருந்தன. (மந்திய குடியிருப்புப் பிரதேசங்கள் சில வற்றில் மிகப் பழைய முறையிலேயே கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் ;

63
வீடுகள் ஒன்றேடொன்று மிக நெருங்கியும் ஒழுங்கில்லாமலும் (சேர்மன் மாணவர் பலரின் ஒபென்டோபு) இருந்தன ; ஆனல் காடுகள் வெட்டப் பட்ட சில இடங்களிற் கட்டப்பட்ட வீடுகள், முக்கியமாக வடக்கிலும் வடகிழக் கிலும் கட்டப்பட்டவை ; கூடிய ஒழுங்குமுறையுள்ள கிராமங்களை வீதி ஓரங் களில் உருவாக்கின. இவ்வகையான கிராமங்கள் இடைக்காலத்துக்கு முன் பிருந்தேயிருந்திருக்கின்றன. இவை பெரும்பாலும் சிலாவியு மொழி பேசப்பட்ட (ஒடர் வடிநிலம் போன்ற) பிரதேசங்களில் அல்லது இப்பொழுதும் பேசப்படும் (விசித்துலா வடிநிலம் போன்ற) பிரதேசங்களிற் காணப்படு கின்றன. மேலும் கிழக்குப் பக்கமாக ஊடுருவிச் சென்ற கிராமங்கள் பெரும் பிரிப்பெற்றுச் சேற்றுநிலங்களைச் சுற்றிச் செல்ல வேண்டியிருந்தன ; தென் பக்கமாகக் கீவு வழியாகப் பரம்பியவை விலுன, பெரெசின என இப் பொழுது குறிப்பிடப்படும் வடபக்க வழியாகப் பரம்பியவற்றிலும் பார்க்க முக்கியமானவையாகும். பிரிப்பெற்று அடர்சேற்றுப் பிரதேசத்துக்குக் கிழக்கே வசந்தகாலத்திலும் கோடைகாலத்திலும் போதிய அளவு மழை யில்லாமையால் பீச்சு மரங்கள் நன்றக வளர்வதில்லை. இதனல் பெரிய இரசியாவிலும் அதன் சுற்றடற் பகுதிகளிலும் ஒக்கு மரக்காடுகளே காணப் படுகின்றன ; இக்காடுகளின் அடிப்பாகம் ஆதி நொவுகொருேடு (நிசினி நொவுகொறேடு அன்று) தொடக்கம் கீவுக்குத் தெற்குவரை நீண்டிருக்க, அதன் நுனிப்பகுதி ஊறல் மலைகளின் தெற்கெல்லைவரை பரந்திருக்கிறது. இக்காட்டுப் பிரதேசத்துள் உழவர் பண்பாடும் அற்பிசு வகைகளும் சிறிது சிறிதாக ஊடுருவிச் சென்று வேறுவகைகளுடன் கலந்துள ; மற்ற வகை கள் பற்றிப் பின்னர் கூறப்படும். கீவு நகரத்தைத் தென் மேற்கிலுள்ள அதன் பிரதான நுழைவாயிலால் அடையும்போது அது ஒரு பழைய பரி சுத்தமான நகராக விளங்குகிறது ; அதன் நிலைகாரணமாக, பிற பண் பாடுகளும், கொன்சுதாந்திநோபிளிலிருந்து வெளியாகும் சமய, நகரக் கருத்துக்களும் பெரிய இரசியாவுக்குப் பரம்பும் ஒரு வழியாக அது உதவு கிறது. இந்நகரின் முக்கியத்துவத்துக்கு வரலாற்றுக்கு முற்பட்ட சில காரணங்களும் இருக்கக்கூடும். தென் கிழக்குக் கலீசியாவிலும் கீவுப் பகுதியிலும் அற்பிசு வகைகள் மாத்திரமன்றி, அனத்தோலிய இல்லிரிய வகைகளுடன் தொடர்புடைய அகன்ற தலையினரும் காணப்படுவதற்கான காரணங்களை அறிவதற்குக் கீவு நகரம்பற்றி மேற்சொல்லப்பட்ட விடயங்கள் உதவியாயிருக்கும். அத்துடன், முக்கியமாகக் காப்பேதிய மலைகளின் பக்க மாக, மத்தியதரை இனத்தவர் எனக் குறிப்பிடப்படும் நீண்ட-தலைகளுள்ள ஆதி வகையைச் சேர்ந்தவர்களும் காணப்படுகின்றனர். ஆயின் அது அத்தொடருக்கு மிக விரிவாகப் பொருள்கொள்வதாயமையும் என்க.
இல்லிரியாவிலும் தென்-மேற்கு இரசியாவிலும் (உருதேனியா) உள்ள ஐரோப்பிய அகன்ற தலையினரையும் ஆசியாவின் அனத்தோலிய அகன்ற தலையினரையும் தவிர, ஏனைய ஐரோப்பிய அகன்ற தலையினர், கலப் பில்லாதவர்களாயிருக்கும்போது, பெரும்பாலும் கட்டையாயும் இறுகிய

Page 38
64
உடலுடையவர்களாயுமிருக்கின்றனர். அவர்கள் அதிகம் கறுப்பாகவோ, செந்நிறமுடையவர்களாகவோ இல்லாது, செறிந்த வெண்ணிறமுடையவர் களாய் அல்லது கன்னவெலும்புக்கு மேல் ஒளிர் நிறமுடையவர்களாயிருக் பர். நடு-ஐரோப்பிய அகன்ற தலையினர், அவர்கள் ஆதியிலிருந்த வலயத் திற்கு அப்பாற் பரந்து சென்றனரெனத் தெரிகிறது; இப்பொழுதும் அவ் வறு பரந்து சிலவிடங்களில் கலப்பினச் சந்ததியாரைப் பொறுத்தவரை யில் நீண்டதலையினரிலும் கூடிய தொகையினராக விளங்குகின்றனர். இவ்வாறு பரவிய அகன்ற தலையினர் வேறு வகையினரின் தன்மைகளை யும் உடையவர்களாக, முக்கியமாக உழவர்களின் ஆதி வலயத்தின் வடபக்கமாக, காணப்படுகின்றனர். இவ்வாறு பெறப்பட்ட வகைகள் பின் னர்க் கூறப்படும். இவ்வண்ணமே வட இத்தாலியில் அற்பிசு அகன்ற தலையினர் உரோம நாகரிக காலத்துக்குப்பின் நாடுகளை அடிப்படுத்திய உலொம்பாட்டியரின் பொன்னிறமும் கலந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.
அகன்ற தலையினர் மற்றுமொரு வழியிலும் பரந்துளர். தென் இத் தாலியில், பாறிக்குத் தெற்கிலிருந்து சலேர்னே வரை அகன்ற தலையினர் பரவியிருப்பதை இத்தாலியத் தொழிலாளர் கவனித்துளர். இவர்கள் தியூனிசுவுக்கு அப்பாலுள்ள கேர்பாத்தீவிலும் மோற்றத் தீவுகளிலும், முக்கியமாகக் கோசோவில், சிபெயினில் தெற்கு, தென்-மேற்கு, வடக்கு கரையோரங்களிலும், முக்கியமாக உலுவார்க்காவில், காணப்படுகின்றனர். மேலும், கருணுக்குப் பிரதேசத்திலிருந்து திரெக்குயர் வரை பிரித்தனிக் கூடாகச் செல்லும் ஒரு பிரதேசத்திலும் காணப்படுகின்றனர். இவ்வகை யினர் மேற்குக் கோண்வால், உவேல்சு ஆகியவற்றின் கரையோரங்களிலும், அயலந்து, எபிரிடிசு, செத்துலாந்து, பேரோசு ஆகிய இடங்களிலும் தொட் டந் தொட்டமாக வசிக்கின்றனர். ஒல்லாந்து-சீலந்திலும் தென்மேற்கு நோர்வேயிலும் காணப்படும் கறுத்த அகன்ற தலையினர் இவ்வகையைச் சேர்ந்தவர்களாவென்பது ஆராயப்பட வேண்டியது. இக்கரையோர அகன்ற தலையினர் பெரும்பாலும் மிக உயர்ந்தவர்களாகவும், மிகக் கறுத்த மயிரும் வலிமையான மூக்குமுடையவர்களாகவும் இருக்கின்றனர். இவர் கள், பொதுவாக, அனத்தோலியருக்கும் அற்பிசு வகையினருக்கும் இடைப் பட்டவரெனலாம். அவர்களுடைய அகன்ற சதுரப்பாங்கான முகத்தால் அவர்கள் பிற்கூறிய வகையினரைச் சார்ந்தவரெனவும் பெரும்பாலும் நெடிய தோற்றத்தாலும் முனைப்பான மூக்காலும் முற்கூறியவகையினரைச் சார்ந்தவரெனவும் தோன்றுகிறது; ஆயின் முற்கூறிய வகையினரில் உச்சி யிலிருந்து அடிப்பிடரி வரையுள்ள துலக்கமான சாய்வு அவர்களிடம் காணப்படவில்லை. வடக்கிலுள்ள சிலர் பிரித்தன் அல்லது வேறு கடற் ருெழிலாளரின் வழி வந்தவர்களாகவும் ஒல்லாந்து-சீலந்திலும் தென் மேற்கு நோர்வேயிலுமுள்ளவர்கள் நடு-ஐரோப்பிய வகையினராகவும் இருக்கலாம். தலை அளவுக்குணகத்திலிருந்து மாத்திரம் பொதுப்படை யான முடிவுகளுக்கு வருபவர்களும் மேற்கூறிய பிரித்தன் கரையோரங்

65
களிலுள்ள மக்களைப் பற்றியும் அவர்கள் ஏறத்தாழ எல்லா வகையாலும் வேறு டினும் இதே முடிவுக்குத்தான் வந்துளர். தொல்பொருள்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்குமிடத்து கிறீற்று, மோற்றப் பிரதேசங்களிலிருந்து பிரித்தானிய தீவுகள் வரை கரையோரமாகச் சென்ற நகர்வுகள் உலோக காலத்தின் முற்பகுதியில் அதிகமாகவிருந்திருக்கின்றன. தென்-மேற்குப் போற்றிக்கிலிருந்து பிரித்தனிவரை அயலந்துக் கடல் வழியாகச் சென்ற கரையோர நகர்வுகள் இதே காலத்திலேயே நடைபெற்றிருக்கின்றன. இந் நகர்வுகளின் முற்பகுதி பெருங்கற்களிற் செதுக்கிய அமைப்புக்களுடன் அல்லது பெரும் கற்சின்னங்களுடன் தொடர்புடையதாயிருந்திருக்கிறது ; பிற்பகுதியில் வெண்கலத்தினல் வாள் முதலிய பொருள்கள் உருவாக்கும் தொழில் பரவியது. பழைய போக்குவரத்து முறைகள், வியாபாரம் ஆகியன பற்றி மேலும் அறிய முடியுமாயின் கரையோரங்களுக்கு அகன்ற தலை யுடைய கறுத்த நிறத்தவர் எவ்வாறு பரவினர் என்பதை நன்கு விளங்கிக் கொள்ளலாம். தொல் பொருள்களிலிருந்து பெற்ற தரவுகளிலிருந்தும் மனிதரியல் அவதானங்களிலிருந்தும் பார்க்கும்பொழுது பிரித்தன், அய லநது ஆகிய நாடுகள் பற்றிக் கதையாக வழங்கிவந்த வரலாறுகளைப் பொறுத்தவரையில், இடைக்கால வரலாற்றசிரியர்கள் பல்வேறு நோக்கங் "களுடன் அவற்றில் மாற்றங்கள் செய்திருந்தபோதிலும், அவற்றிற் பெரிய அளவு உண்மையிருப்பதாகவே தெரிகிறது. இவ்வகைகளிலுள்ள பல தொகுதி மக்கள் மீன்பிடிப்பதற்காகவேனும் வியாபாரஞ் செய்வதற்காக வேனும் தூரப் பிரயாணங்கள் செய்வதில் ஆர்வமுடையவர்களாயிருந்திருக் கின்றனர்.
தென் இரசியத் தெப்புவெளிகளில் கற்காலக் கடைசிப் பகுதிக்கும் உலோககால முற்பகுதிக்குமுரிய ஆதிப் பிணக்குழிகளில் நீண்டு, ஒடுங்கி, உயர்ந்த தலைகளை அல்லது மட்டான நீளத்தலைகளையும் தெளிவாகத்தெரியும் பக்கத்தோற்றத்தையும் கொண்ட ஒரு உயர்ந்த வகையினர் காணப படுகின்றனர்; இவர்கள் பழைய கற்காலத்தின் பிற்பகுதியில் வாழ்ந்த வேடுவர் வழிவந்தவர்களாயிருக்கலாமெனக் கொள்ளலாம்.
தொல்பொருளியல்வழி நோக்கின் இம்மக்கள் மெசப்பொத்தேமியாவில் நெடுங்காலமாக வழக்கிலிருந்த உலோகத்தாலாய போர்க் கோடரி போன்ற கோடரிகளைக் கல்லினற் செய்ய முனைந்திருக்கின்றனரெனத் தெரிகிறது. இத்தகைய கற்கோடரிகளையும் மட்குவளைகளையுமுடைய மக்கள் மேற்குப் போற்றிற்கு நாடுகளில், முக்கியமாக யத்துலாந்திலும் சீலந்திலும், கி. மு. மூவாயிரம் ஆண்டளவில் காணப்பட்டனர். இவர்களும் பெரும் கற்களிஞல் நினைவுச் சின்னங்கள் கட்டக்கூடிய அளவுக்கு நாகரிகமடைந்த ஒருவகை மக்களும் சந்தித்து ஒருவரையொருவர் பண்படுத்தினரெனத் தெரிகிறது ; இத்தகைய தொடர்புகள் பிரித்தானிய தீவுகளிலுள்ளவர்களுக்கும் பிரித்

Page 39
66
தனிலுள்ளவர்களுக்குமிடையில் ஏற்பட்டனவெனக் காணப்படுகிறது ; பூமெ ரேனியா வழியாக மத்திய ஐரோப்பாவுக்கூடாகவும் இத்தொடர்பு எற்பட் டிருக்கலாம். தென் இரசியாவிலிருந்தும் அத்திலாந்திக்குக் கரையோரங் களிலிருந்தும் பரந்து சென்றவர்கள் போற்றிக்குப் பிரதேசத்தையடைந்து அங்கு தமக்கென ஒரு பண்பாடுடையவர்களாயினர்; இப்பிரதேசத்தில் இது வரை பழைய கற்காலத்தின் பிற்கூற்றிலிருந்த உணவு சேகரிப்பவர் களிலிருந்தும் வேடுவரிலிருந்தும் எஞ்சிய சிலரே வாழ்ந்து வந்தனர். இப்பண்பாட்டை உருவாக்குவதிற் பெரும் பங்கெடுத்துக் கொண்டவர்கள் நோடிக்கு இனத்தைச் சேர்ந்தவராவர். இரசியத் தெப்பு வெளிகளில் இருந்தவர்கள் போன்று இங்கும் மிக உயர்ந்தவர்களும் நன்கு விரிந்த பக்கத் தோற்றமுடையவர்களும் இருந்தனர் ; சிலர் மிக ஒடுங்கிய தலை யுடையவர்களாயிருந்தபோதும் பெரும்பாலோர் மட்டான நீளத்தலையுடைய வர்களாயிருந்தனர். இவர்கள் தொடக்கத்தில் கரிய நிறமுடையவர்களா யிருந்திருத்தல் வேண்டும் ; குழந்தைப் பருவத்தில் அதிகரித்து வந்த நிறப்பொருள் அவர்கள் வளர்ச்சியடையவே பெரும்பாலும் அற்றுப் போய்விடுகின்றது; பொன்னிற மயிரும் நீலக் கண்களும் அதிகமாகக் காணப்படும். இவர்களின் வளர்ச்சி நெடுங்காலம் தொடர்ந்திருப்பதுடன் தசைகள் ந்ன்கு பருத்துமிருக்கும். இவ்வகையினர் தென்பக்கமாகப் பரவி யிருத்தல் வேண்டும் ; ஐரோப்பிய சமவெளிகளில் (போலந்து, வடசேர்மனி முதலிய பிரதேசங்களில்) நோடிக்கு இனத்தவரும் அற்பிசு வகையினரும் கலந்துளரெனக் கூறலாம். உலோககாலத் தொடக்கத்திலிருந்து உயர்தர மான குவளை மட்பாண்டங்களுடன் சேர்ந்த எலும்புக்கூடுகள் பலவிடங் களில் இருந்தமை பற்றி அறிந்துள்ளோம். இங்கிலாந்திலுள்ளவற்றில் அகன்ற வட்டத்தலையும், தடித்த புருவங்களும், நீண்ட அல்லது வட்டமான மூக்கும் முகமும் உடைய ஒர் உயர்ந்த வகை மக்கள் காணப்படுகின்றனர். தென்மாக்கிலுள்ள குவளை மட்பாண்டங்களைக் கொண்ட பிணக்குழிகளி லுள்ள வகைகள் பற்றி இதுவரை எதுவும் தெரியவில்லை ; ஆனல் இவை நோடிக்கு வகையையும் இப்பொழுது விவரிக்கப்பட்ட வகையையும் சேர்ந்த வர்களாயிருத்தல் வேண்டும். சேர்மனியிலும் வடகடல் நாடுகளிலும் கானப் படும் மேற்சொல்லிய கடைசி வகையைச் சேர்ந்தவர்களுள் நோடிக்கு வகையினருக்குரிய பொன்னிறமும் அற்பிசு வகையினருக்குரிய அகலத் தலையும் உண்டு ; இவற்றுடன் இவர்கள் பழைய மரபுவழிவந்த தடித்த புருவம் உடையவர்களாயும் நன்கு வளர்ச்சியடைந்தவர்களாயும் காணப் படுவர். சேர்மனியில், பொதுவாக உயர்ந்தவர்களாயும் பொன்னிறமுடைய வர்களாயும், ஆனல் பலமான புருவமில்லாதவர்களாயுமுள்ள வேறு அகன்றதலை வகையினரும் காணப்படுவர் ; இவர்கள் நோடிக்கு இனத்த வரும் அற்பிசு இனத்தவரும் கலந்த வேறு வகையினராவர். வட மேற்கு இரசியாவிலும் வடபோலந்திலுமுள்ள சிலர் கட்டையானவர் ; நோடிக்கு அல்லது பழைய தெப்புவெளி வகையினர் இரசியாவில், முக்கிய மாகக் கொசாக்கினரிடையில், கலந்துளர் எனவும் கொள்ள இடமுண்டு.

67
ஐரோப்பிய நாடுகளிலுள்ள இனக்கூறுகள் பற்றி இச்சிறு நூலில் விவரிக்க முடியவில்லை ; ஆனல் இங்கு கூறப்பட்ட கருத்துக்கள் ஒரு தலைமுறைக்குமுன் இரிப்பிளி என்டார் எழுதிய ஐரோப்பிய இனங்கள் எனும் நூலில் அவ்வினங்கள் பற்றிக் கூறப்பட்ட தரவுகளை விளக்கிக் கொள்வதற்கு உதவியாயிருக்குமென நம்புகிறேன். எனினும், இந்நூல் இங்கிலாந்தில் வெளியிடப்படுவதனலும், பிரித்தானிய தீவுகள் ஒரு தனிப் பிரச்சினை யுடையனவாதலாலும் பெரிய பிரித்தானியா பற்றியும் அயலந்து பற்றியும் சுருக்கமாக விவரிக்க வேண்டியது அவசியமாகும். இவ்விரு பிரதேசங் களும் ஆதியில் உலகின் ஒரத்தில் இருந்தனவென்பதையும் அவற்றின குடிகளில், முக்கியமாகப் பெரிய பிரித்தானியாவின் மேற்குப் பகுதியிலும் அயலந்திலும், அதிகம் மாற்றமடையாது ஆதி வகைகளிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் பெரிய அளவிலுளர் என்பதையும் முதலில் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். இத்தீவுகள் பனிக்கட்டிக் காலத்தின் பின் ஏற் பட்ட நிலத் தாழ்வின் போதே பெருநிலப் பகுதியிலிருந்து பிரிக்கப்பட்டன; அவ்வாறு பிரிக்கப்படுதற்கு முன்னரே மிக நீண்ட தலைகளையும் மட்டான நீளமுள்ள தலைகளையுமுடைய வகையினர் மாத்திரம் இப்பிரதேசத்தை அடைந்திருத்தல் வேண்டும் ; இவ்வகையினரின் நிறமும் உறுப்புக்களும் மத்திய தரை வகையினருக்கோ, நோடிக்கு வகையினருக்கோ உரியனவா யில்லாது அவ்விரண்டுக்கும் இடைப்பட்டனவாயுள்ளன. பிரித்தனில் நீண்ட சமாதி மேடுகள் கட்டப்பட்ட காலமெனக் கருதப்படும் உலோக காலத்தின் முற்கூற்றில் போற்றிக்கு நீண்ட-தலையினர் இங்கு வந்தனர்; அதே காலத் தில் அல்லது அதற்கு முன்னர் மேற்கு மத்தியதரைப் பிரதேசத்திலிருந்து மேற்குப் பிரான்சு வழியாக மற்றெரு நகர்வு வந்திருத்தல் வேண்டும். உலோக கால முற்பகுதியில் போக்குவரத்து வசதிகள் விருத்தியடைந்த போது, கரிய அகலத்தலையினர் வந்தனர் ; உலோகத்தைப் பற்றிய அறி வேற்பட்ட தொடக்க காலத்திற் கிழக்குப் பிரித்தானியாவில், ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது போல, குவளைமட்பாண்டம் செய்யக்கூடிய அகன்ற-தலை யினர் குடியேறினர் ; இவர்களுடன் சிறிது குறைந்த தோற்றமும் முனைப் பில்லாத புருவமுமுடைய வேறு அகன்ற தலையினரும், முக்கியமாக அபடின்சயர்ப் பகுதியில், வந்து சேர்ந்தனர். இவ்விரு வகையினரையும் தற் காலக் குடிகளுக்கிடையில் இப்பொழுதும் காணக்கூடியதாயிருக்கிறது. வெண் கலக் காலத்தின் பிற்பகுதியிலேற்பட்ட வெண்கல வாட்படையினரின் படை யெடுப்பின் பலனய்ப் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருத்தல் வேண்டும் ; கேலிய-செல்திய மொழிகள் இவர்கள் மூலமே பரம்பினவெனச் சிலர் கூறுவர் ; இவ்வாட்படை வகுப்பினர் பற்றி அதிகம் அறியமுடியவில்லை யாயினும் இவர்களின் வருகையினல் கொத்துலாந்திற் பல மாற்றங் களேற்பட்டனவெனத் தெரிகிறது ; அயலந்துவரை செல்வதே இவர்களின் குறிக்கோளாயிருந்திருக்கலாம். குடிவருகைகளைத் தொடர்ந்து, கிறித்து வுக்கு முந்திய சில நூற்றண்டுகாலத்தில், ஒரு வகைப் பண்பாடு பரந்திருப்பதாகத் தெரிகிறது ; இதுவே பிறைதோனிய செல்திய மொழியை

Page 40
68
எமது தீவுகளுக்குக் கொண்டு வந்ததாகக் கருதப்படுகிறது. இதன் பின்னர் உரோம, ஆங்கில-சாச்சனிய, தேனிய, நோமானிய, பிளெமிய மொழிக் கூறுகள் வந்து கலந்தன ; உரோமானியர் தம் மொழியினல் ஆதிக் குடிகளைப் பெரிதும் கவர்ந்தனர். உரோமருக்குப் பின் வந்தவர்கள் பெரும் பாலும் நோடிக்கு வகையினராவர். இவ்வாறகையினல் பிரித்தனில் மத் தியதரை, நோடிக்கு வகைகளுடன் வேறும் பல அகன்ற தலைவகையினர் காணப்படுகின்றனர்; ஆயின் பிரித்தனின் அடிப்படைக்குடிகள் முற்ருக நோடிக்கு வகையையோ, முற்றக மத்தியதரை வகையையோ சேராத ஒரு நீண்ட தலை வகையைச் சேர்ந்தவராவர். இவ்வகையினர் கறுத்த மயிரும், சாம்பல் நிறமான கண்களும், மேற்கூறிய இருவகைக்கும் இடையான ஒரு பொது நிலைமையும் உடையவராவர். இவர்கள் மேற்காட்டிய இருவகை களுடன் முற்றகச் சேராத ஒரு இனத்திலிருந்து வந்தவர்களென்பதே பொதுவான கருத்தாகும்.
மக்கட் கூட்டத்தின் இனக்கூறுகள் அரசியல், பொருளாதார மாற்றங் களுடன் மாற்றமடையுந் தன்மையன. பத்தொன்பதாம் நூற்றண்டில் பிரித்தானியப் பேரரசு வர்த்தகத் துறையிலீடுபட்டதன் விளைவாக, நோடிக்கு வகையினர் பலர் தமக்குப் பொருத்தமில்லாத காலநிலைகளுள்ள பல நாடுகளுக்குச் சென்றனர். மற்றெருபுறத்தில், கைத்தொழில் நகரங்கள் உண்டாக்கிய கடினமான சூழ்நிலைகளைத் தாங்கக்கூடியவாறு இங்குள்ளவர் களின் அடிப்படை இனக் கூறுகள் கூடிய வலிமை பெறுவனவாயின. இப்பொழுதுங் “ குவளை’ மட்பாண்டப் பண்பாட்டின் கூறு அங்குமிங்கு மாகக் காணப்படுகிறது ; ஆனல் இக்கூறு, ஆங்கில இனத்துக்கு ஏற்ற எடுத்துக்காட்டான யோன் புல் என்பாரின் சித்திரம் முதலில் வரைந்த போதிருந்தது போல, கமக்காரருக்குரியதென இப்பொழுது சொல்லமுடி யாது. இங்கிலாந்தின் குடிகளிற் காணப்பட்ட அகன்ற தலைத் தன்மை இப்பொழுது குறைந்துவிட்டதெனலாம் ; இடைக்காலத்திற்குரிய தலையோடு கள் அதிகம் கிடைக்காமையால் இவ்விடயம் பற்றி மேலும் கூறமுடிய வில்லை.
சேர்மனியிலும் தென்மாக்கிலும் பொருளாதார அபிவிருத்திகள் காரண மாக அற்பிசு வகைகள் நன்கு விருத்தியடைந்துள்ளன ; மேலும் பல மாற்றங்கள் இங்கு எற்பட்டு வருகின்றன.
தூர நாடுகளுக்குக் குடிபெயர்ந்து சென்ற ஐரோப்பிய வகைகள் அடைந்த மாற்றங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை ஆட்டிலிக்கா அவர்கள் தொடக்கி யிருக்கிருர்கள் ; ஆராய்ச்சிகள் இன்னும் தொடக்க நிலையிலேயிருப்பதனல் இவைபற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை. சில பிரதேசங்கள், குடிபெயரும் ஐரோப்பியர் தம் தோற்றங்களில் மாற்றம் எதுவும் அடையாதிருக்க உதவு வனவெனவும், வேறு சில அவர்களின் தோற்றங்களில் மாற்றமேற்படுத்தி

Ծն}
விடுவனவெனவும் தெரியவருகிறது; ஆயினும் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்து சென்ற பல வகையினர் வேகமாக மாற்றமடைந்து வருகின்றனர் என்று போவா அவர்கள் கூறுகிருர் என்பதில் அதிகம் நம்பிக்கை வைக்க வேண்டியதில்லை.

Page 41


Page 42


Page 43
||
|-
|-
|
|- |-