கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொப்புள் கொடி

Page 1


Page 2
துரங்கள் அதிகமானாலும், உறவுகள் மாறுவதுமில்லை உள்ளங்கள் தூங்குவதுமில்லை டாவுகள் மறைவதுமில்லை
 
 


Page 3


Page 4

தெ. நித்தியகீர்த்தி

Page 5
தொப்புள்கொடி
நாவல்
ஆசிரியர் - தெ. நித்தியகீர்த்தி
முதற்பதிப்பு-சித்திரை 2009 பதிப்புரிமை டு நித்தியகீர்த்தி மெனஓசை பதிப்பகம் யேர்மனி
அட்டை வடிவமைப்பு - மூனா
THOPEPULIKODY NAVAL
Author: T. Nithyakeerthy First Edition: April 2009 (C) Nithyakeerthy
email: atnithy(agmail.com
Cover Design - Muunaa
Production: Chuvadi, Chennai - 600 005, India
Phone: +91-044-28441672 Printed by: Chennai Micro Print (P) Ltd, Chennai- 29 Official Distributors in India: Sudharsan Book Processors and Distributors, New No. 257, Triplicane High Road,
Chennai - 600 005, India
Price: Rs. 175.00
(C) by Manaosai Verlag
Germany ISBN: 978-3-9813002-2-2

என் அம்மாவுக்கு

Page 6

மெல்பேர்ன் ஆஸ்திரேலியா 04 சித்திரை 2009
அன்புள்ள வாசகரே,
தொப்புள்கொடியைக் கையில் எடுத்துக் கண்களை ஒடவிடும் உங்களுக்கு என் நன்றிகள்.
ஒடும் கண்களின் ஊடாக என் கதாபாத்திரங்கள் உங்கள் உள்ளத்தில் உட்புகுந்து பேச ஆரம்பித்தால் எனக்குப் பாதி வெற்றி அவர்களின் மெளன மொழிகள் உங்கள் மன ஓடையில் சில சலனங்களை ஏற்படுத்துமானால் நான் மகிழ்ச்சி கொள்வேன்.
சிறியதொரு சலனமே தென்றலாகவோ புயலாகவோ மாறுகின்றது.
இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்களின் சாயல் கொண்ட நல்லவர்கள் மனந்திறந்து தங்கள் வாழ்க்கையின் சில பக்கங்களை நானும் படிக்கத் தந்தார்கள். அவர்களுக்கு என் அன்பான நன்றிகள். பல உண்மைச் சம்பவங்கள் இந்த ஆக்கத்திற்கு அடிப் படையாக அமைந்தாலும், இது கற்பனை கலந்த ஒரு நாவல் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எனது முதல் நாவலான "மீட்டாத வீணையை’ மீட்டிய என் தொப்புள் கொடி உறவுகளின் ஊக்கம், இந்த நாவலையும் வெளியிடக் காரணமாக இருந்தது. அவர்கள் அன்பு என் அழியாத சொத்து.
அட்டைப் படத்தை வரைந்த அன்புத் தம்பி மூனாவும் சளைக்காத எழுத்தாளர் அவன் மனைவி சந்திரவதனாவும் குறை, நிறைகளைக் கூறி இந்நாவல் நிறைவடையப் பெரிதும் உதவினர். இதைப் பதிவாக்கும் முழு வேலையையும் என் தம்பியிடமே சுமத்திவிட்டேன்.
இனி பக்கங்களைப் புரட்டுங்கள். எங்கோ ஓரிடத்தில் உங்கள் உணர்வுகளும் இழையோடும்.
அன்புள்ள
தெ. நித்தியகீர்த்தி
தொப்புள்கொடி 7

Page 7

பிக்கு அன்று தன்னை அறியாத மகிழ்ச்சி. துள்ளிக் குதிக்க வேண்டும் போலிருந்தது. புதிதாகப் பூட்டிய சவரில் இருந்து நீர், பூ மழை போல் கொட்டியது. அளவான வெப்பம். ஒரு மணி நேரமாகக் குளித்துக் கொண்டிருக்கிறாள். அதற்குள் எத்தனை பாட்டுகள் ?
"கன்னத்தில் முத்தமிட்டால் கண்ணம்மா கள் வெறி கொள்ளுதடி" அவள் பாடலை முணுமுணுக்கவில்லை. பெரும் சத்த" மாகவே பாடினாள். அந்தச் சிறிய சவரில் நின்று அபிநயம் வேறு. அடிக்கொரு தடவை தன் வயிற்றைத் தடவிக் கொண்டாள். சவரில் இருந்து ஒருவாறு வெளியே வந்தவள், குளியலறைக் கண்ணாடியில் தன்னைப் பார்க்க முயன்றாள். நீராவி படிந்ததால் அவள் உருவம் தெளிவாகத் தெரியவில்லை. கைகளால் நீராவியைத் துடைத்தாள். சிறிது சிறிதாகத் தெரிய ஆரம்பித்த தன் உருவத்தைப் பார்த்ததும் ஆரபிக்குச் சிரிப்பு வந்தது. மெல்லிய நீட்டு பலூனை' ஊதும்போது, அது நடுவில் மாத்திரம் பொங்கி மற்ற இடமெல்லாம் காற்றே புகாதது போலிருக்குமே, அது போல்தான் அவள் இருந்தாள். ஊதினால் ஒடிந்துவிடும் அவள் உடலில், வயிறு மாத்திரம் பெருத்திருந்தது. மீண்டும் தன் வயிற்றை அன்போடு தடவிக்
கொண்டாள்.
என்றும் இல்லாத அன்றைய அவள் துள்ளலுக்குக் காரணம் இருந்தது. அவளுக்கு அது ஒரு அதிசயம். அன்று மதியந்தான் அந்தப் புது அனுபவம். வயிற்றில் ஏதோ வாய்வு செல்கிறது என்று முதலில் எண்ணினாள். "மைக்கிரோவேவில்" சோளம் பொரிவதுபோல் சிறிய அதிர்வு. அது சிறிது நேரம் தொடர்ந்த போதுதான், தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவு என்பதைப் புரிந்துகொண்டாள். தனக்குள் இன்னோர் உயிர் வளர்வது அவளுக்குத் தெரிந்ததே. முதல் தடவையாக அது அசைந்து, தான் இருப்பதை உணர்த்தியபோது உடல் சிலிர்த்துக் கொண்டது. அவளுக்கு ஒரே பரபரப்பு. தான் கருத்தரித்ததை வைத்தியர் கூறியபோது வந்த மகிழ்ச்சியைவிட இது வித்தியாசமான இன்பம். இந்த இன்பத்தில் ஒரு புது உணர்வும் புகுந்திருந்தது.
தொப்புள்கொடி 9

Page 8
சிறிது நேரம் மலைப்போடு நின்றாள். சிரிப்பு வந்தது. ஒருவித கர்வம் தோன்றியது. ஒடிச்சென்று தொலைபேசியை எடுத்தவள், “இப்படி வேகமாக ஓடக் கூடாது" எனத் தன்னைத் தானே கடிந்துகொண்டாள். தன் வயிற்றில் உருவான அந்த உயிருக்குத் தானல்லவா பொறுப்பு என்று எண்ணும்போது ஒரு பெருமிதம். மாதவன்மீது அவள் கொண்ட காதலின் அடையாளச் சின்னம் என்று நினைக்கையில் அளவில்லாத பூரிப்பு.
மாதவனுடன் அந்த இனிய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆவல் துருதுருத்தது. தொலைபேசியை அழுத்தி னாள். செல்லிடத் தொலைபேசியின் மறுமுனையில் ஒலித்தது அவள் குரல்தான்.
“திஸிஸ் மாதவன்ஸ் போன். பிளிஸ் லீவ் எ மசேஜ்'
மாதவனுக்காக எப்பொழுதோ அவள் தன் குரலில் பதிவு செய்த செய்தி அது தன் குரல் என்று தெரிந்தும், "வையடி போனை" என்று எரிச்சலோடு சொன்னவள், குளியலறையில் அதை நினைத்துத் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.
தானே ஒரு நாள் தாயாவேன் என்ற எண்ணம் துள்ளித் திரிந்த நாட்களில் வந்ததில்லை. துள்ளித் திரிந்த நாட்கள் என்பது பருவம் வந்து பட்டப் படிப்பு நாட்களிலேயே உதயமாகின. அதுவும் மாதவன் அவள் வாழ்வில் இணைந்த போதுதான் இப்படியொரு இனிய உலகம் இருப்பதை உணர்ந்தாள். எப்படியெல்லாம் தன் குழந்தையை வளர்க்க வேண்டும் என்று பல திட்டங்கள். சின்னஞ்சிறு வயதில் தாயன்பை அவள் அதிகம் அனுபவிக்கவில்லை. ی
படுக்கை அறைக்குள் ஆரபி நுழைந்தாள். குளியலறையும் அவர்கள் படுக்கை அறையும் இணைந்தே இருந்தன. படுக்கை அறையில் அலங்காரமான கண்ணாடி மேசை. அதன்மீது அவளது சிக்கனமான அழகு சாதனங்கள். மெல்லிய ரோசா வண்ணத்தில் சின்னச் சின்னப் பூக்களுடன் பெரிய கட்டிலில் மடிப்புக் கலையாத படுக்கை விரிப்பு. அதற்கு ஒத்த வெண்சிகப்பு நிறத்தில் தொங்கும் சாளரத் திரைச் சேலைகள். அவள் உபயோகிக்கும் ‘எஸ்டி லோடா' வாசனைத் திரவியத்தின் மென்மையான மல்லிகை மணம் அறையில் ஓர் இனிய சுகந்தத்தைப் பரப்பியிருந்தது. ஆரபி எதிலும் அழகையும் சுத்தத்ததையும் காண்பவள். அதனால் எந்தப் பொருளும் வைத்த இடத்திலேயே இருக்கும். அது அவள் தந்தையிடம் கற்ற பாடம். ஆனால் மாதவனோ அதற்கு எதிர்மாறு. கலைந்த உடையைக் கட்டிலில் போட்டுவிட்டுப் போய்விடுவான். ஆரபி இப்பொழுது சீப்பைத் தேடுகின்றாள். அவனுக்கு என்று ஒரு சீப்பு இருந்தாலும் அதைத் தொலைத்து விட்டு இவள் சீப்பை எடுத்துவிடுவான். அதையும் எங்கேயாவது
1 0 தொப்புள்கொடி

வைத்துவிட்டுப் போய்விடுவான். சின்னச் சின்னக் கோபம் அவளுக்கு வரும். சிரித்து மயக்கிவிடுவான். ஒரே ஒரு முறை மாதவன் அவள்மீது சீறிப் பாய்ந்தான். அதை அவள் எதிர்பார்க்க வில்லை. பயந்துவிட்டாள். ஒரு சின்ன விடயந்தான். சீப்பினால் தான். அதற்கு ஏன் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது என்று இன்னும் அவளுக்குப் புரியவில்லை. இதுதான் நடந்தது. அன்று மெல்பேர்ன் இன்னிசைக் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி. இவர்களின் இசை நிகழ்ச்சிக்கு மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்கள் பெரும் ஆதரவு வழங்குவார்கள். நிகழ்ச்சி விளம்பரப்படுத்தப்பட்ட சில வாரங்களிலேயே நுழைவுச்சீட்டுகள் யாவுமே விற்பனையாகிவிடும். இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் இருந்தன. இந்த நிகழ்வில் வசூலாகும் நிதி முழுவதும் ஈழத்தில் வாடும் தமிழ் உறவுகளின் புனர்வாழ்வுக்கு வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் கலைஞர்கள் மிகுந்த அர்ப்பணிப் புடன் உழைத்து இனியதோர் இரவை இரசிகர்களுக்கு வழங்கி விடுவார்கள். பொதுப் பணிக்காகச் செய்யப்படும் எந்தத் தமிழ் நிகழ்விலும் மாதவனின் பங்கு நிச்சயமாக இருக்கும். அன்றும் பகல் முழுவதும் ஜோர்ஜ் வூட் மண்டபத்தில் இரவு நிகழ்வுக்கு வேண்டிய ஒலி, ஒளி, மேடை அலங்காரங்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்துவிட்டு வந்திருந்தான். வந்தவன் அவசர, அவசரமாகக் குளித்து, புறப்படத் தயாரானான்.
ஆரபியோ தந்தை இளங்கோவன் வாங்கித்தந்த காஞ்சிபுரம் பட்டுச் சேலையைக் கட்டுவதற்குப் போராடிக் கொண்டிருந்தாள். கொய்யம் வைத்துச் சேலையைத் தொப்புளுக்கு அருகில் செருகிய வுடன், அது நழுவி முழுச் சேலையும் விழுந்து விடும். தப்பித் தவறி ஒரளவு சேலை இடையில் நின்றாலும் சேலையின் ஒரு பகுதி தரையைத் தட்டும். இன்னொரு பகுதியோ நிலத்தோடு கோபித்து அவள் பாதங்களுக்கு ஆறு அங்குலம் மேல் நின்று முரண்டு பிடிக்கும். மெல்பேர்னில் இளம்பெண்கள் தமிழ் கலை விழாக்களுக்குப் போகும்போது சேலை கட்டுவார்கள். ஆரபிக்குத் தாய்தான் அநேகமாக சேலை கட்டிவிடுவாள். தாயும் இல்லை யானால் தந்தை இளங்கோவன் உதவுவார். திருமணத்துக்குப் பின் எல்லாம் அவள்தான். மாதவனிடம் கேட்க அவளுக்கு வெட்கம். ஏற்கெனவே தமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரியாது என்று “மெல்பேர்ன் டமிஸ்" என்று அவளைக் கேலி செய்வான். ஒருவாறு சேலை கட்டும் முயற்சியில் பாதி வெற்றி கண்டு, இது போதும் என்று தலைவாருவதற்குச் சீப்பைத் தேடினாள். அதை எங்கும் காணவில்லை.
சேலையோடு மாரடித்த எரிச்சலோடு, “எங்க மாதவன் சீப்பு வைச்சீங்கள்?” என்று கத்தினாள்.
"அங்கதான் இருக்கும் பாருங்கோவன்”
தொப்புள்கொடி 1

Page 9
அவன் தொலைபேசியில் யாரோடோ கதைத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு அது மேலும் எரிச்சலூட்டியது.
"ஒழுங்காக அப்பா அம்மா வளர்த்திருந்தால் சாமான்கள் அந்தந்த இடத்திலே இருக்கும்" அவள் முணுமுணுத்தது அவன் காதில் விழுந்துவிட்டது.
“என்னடி சொன்னாய்? தொலைபேசியை வைத்துவிட்டு அவன் கத்தினான். அவன் கண்கள் சிவந்து விட்டன. கைகள் கோபத்தால் நடுங்கின. "அப்பாவைப் பற்றி இன்னொரு வார்த்தை சொன்னாய்." அவன் பல்லை நெருமினான்.
ஆரபி பயத்தால் அப்படியே தரையில் இருந்துவிட்டாள். இப்படி அவனை அவள் எப்போதுமே பார்த்ததில்லை. அவனுக்குள் இப்படி ஒன்றா? இந்தக் கோபக்கார மாதவன் இத்தனை நாள் எங்கே ஒளிந்திருந்தான்? ஆரபிக்கு நெற்றி வியர்த்தது. அவன் நெற்றிச் சுருக்கம், வேகமாகத் துடித்த கைகள், பொறி பறக்கும் விழி. அது மாதவன்தானா? அப்படி எவருமே அவளிடம் பேசியதில்லை. அவளை அறியாது காஞ்சிபுரம் சேலை நனைந்தது. அதையும் உணராது மூலையில் இருந்து அவள், முழங்காலைக் கட்டிக் கொண்டு விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். மாதவன் கதவை அடித்துச் சாற்றி, கார் எடுத்துச் செல்லும் ஓசை கேட்டது. ஆரபிக்குத் தலை சுற்றியது. அப்படியே தரையில் சாய்ந்துவிட்டாள். அப்பொழுது நேரம் மாலை ஐந்து மணி இருக்கும்.
O
மாதவன் முற்றாகத் தன் நிதானத்தை இழந்திருந்தான். அவர்கள் வீடு மெல்பேர்னில் தென்கிழக்குப் பகுதியில் தமிழர் நிறைந்து வாழும் கிலன் வேவர்லி எனும் இடத்தில் ஒரு முச்சந்தியில் இருந்தது. அவன் வெகு வேகமாக சந்தியில் காரைத் திருப்பியபோது இரண்டு வாகனங்கள் அவனை நோக்கி வந்ததைக் கவனிக்கவில்ல. பிரேக்கின் பலத்த ஒசையுடன் இரண்டு வாகனங் களும் ஒன்றோடு ஒன்று பட்டும்படாமலும் நின்றன. மாதவன் தனது வாகனத்தை முன்னூற்றறுபது பாகையில் திருப்பி, பிரேக்கை அழுத்தினான். அவனது வாகனம் தெருவைத் தாண்டி, மனிதர் நடப்பதற்கு ஒதுக்கப்பட்ட சிமெந்துப் பாதையில் ஏறி நின்றது. மற்ற இரண்டு வாகனத்திலும் இருந்த வெள்ளை ஆஸ்திரேலியர் இருவர் இறங்கி அவனை வாய்க்கு வந்தவாறு வைதார்கள். வாகனத்துக்குள் இருந்த பெண்களும் கார்க் கதவுக் கண்ணாடியைத் தாழ்த்தி அவனைக் கோபித்துப் பார்த்தார்கள்.
தனது வாகனத்தில் இருந்து இறங்கிய மாதவன் "ஐ ஆம் சாரி" என்று நூறு தடவை சொல்லியிருப்பான். ஆனாலும் வீட்டிற்குத் திரும்பி ஆரபியிடம் மன்னிப்புக் கோர அவன்
12 தொப்புள்கொடி

மனம் இடம் கொடுக்கவில்லை. ஆரபியைத் தனியே விட்டு மெல்பேர்ன் இன்னிசை இரவுக்குப் போனான்.
இசையில் அவன் மனம் ஈடுபடவில்லை. இதயத்தின் பாரத்தை இசையாலும் குறைக்க முடியவில்லை. அவனது இதய இரணத்தை அவனை அறியாது ஆரபி கிளறிவிட்டாள். மேடையில் வண்ண விளக்குகள் மாறி மாறி ஒளிவீசின. சிவப்பு வண்ண விளக்கு மேடை முழுவற்கும் செவ்வண்ணம் பூசியது. வெள்ளைத் திரை சிவந்தது. மாதவன் கண்களை மூடினான். ஆனால் அந்த இரத்தத்தின் சிவப்பு மிக வலிமையானது. மூடிய கண்களுக்குள்ளும் இரத்த நிறத்தால் செல்ல முடிந்தது. அவனுக்கு ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. ஆனால் முடியவில்லை. தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போல் ஓர் உணர்வு. எவ்வளவோ நேரம் இந்தப் போராட்டம் நடந்தது. இசைத் துளிகள் மணித்துளிகளை மெல்ல மெல்ல விழுங்கின.
மாதவன் தன்னிலைக்கு வர ஆரம்பித்தபோது இடைவேளை என்று அறிவித்தார்கள். அவன் ஆரபிமீது இரக்கமின்றித் தான் நடந்துகொண்டதை எண்ணி வருந்தினான். இரவிரவாக விழித் திருந்து, பல தொண்டர்கள் கொத்து ரொட்டி செய்திருந்தார்கள். அவை மண்டபத்தில் விற்பனைக்கு பிளாஸ்டிக் பெட்டிகளில் இருந்தன. அதில் வரும் வருவாயும் ஈழத் தமிழர் புனர்வாழ்வுக்கே. மாதவனும் அந்தத் தொண்டர்களில் ஒருவன். ஆனாலும் பணம் கொடுத்து இரண்டு பெட்டிகளை வாங்கிக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டான்.
வீட்டை அடைந்தபோது இரவு ஒன்பது மணி. வீட்டில் விளக்குகள் எரியவில்லை. அவன் மனம் டிக், டிக் என அடித்தது.
"ஆரபி, ஆரபி” என்றான்.
பதிலில்லை. வேகமாகப் படுக்கை அறைக்குச் சென்று விளக்கு விசையைத் தட்டினான். காஞ்சிபுரம் சேலை நழுவ மூலையில் சுருண்டு படுத்திருந்தாள் ஆரபி அவன் வரும் ஒசை அவளுக்குக் கேட்டிருந் தது. ஆனாலும் அவள் எழுந்திருக்க முயலவில்லை. கண்களை இன்னும் இறுக மூடிக் கொண்டாள். மாதவன் அவளை வாரி அணைத்துத் தூக்கினான். நெஞ்சோடு கட்டிக்கொண்டான்.
குலுங்கிக் குலுங்கி அழ வேண்டும் என்று அவள் நினைத்தாள். குமுறிக் குமுறி அவன்தான் அழுதான். “மாதவன், மாதவன்” அவள் அவனைத் தேற்ற முடியாது
தடுமாறினாள். அவன் முகத்தைத் தன் மார்பகத்தில் புதைத்துக் கொண்டாள்.
தொப்புள்கொடி 13

Page 10
“மாதவன் ஏன்? ஏன் ? ஐ ஆம் சாரி" ஆரபி அவன் தலையைக் கோதினாள்.
இருவரும் கட்டிலில் அமர்ந்தார்கள். அவன் அவளது இரு கரங்களையும் பிடித்துக்கொண்டான்.
"ஆரபி என்னைத் திட்டுங்கோ. அம்மாவை வேணுமென்டாலும் பேசுங்கோ ஆனால் அப்பாவை மாத்திரம்." மாதவன் முடிக்கவில்லை. அவள் குறுக்கிட்டாள்.
“உங்கடை அப்பா..?”
“ஒன்றும் கேட்க வேண்டாம்” அவன் விரல்கள் அவள் வாயை மூடின.
அந்தச் சம்பவத்திற்குப் பின் அவளும் அவன் தந்தையைப் பற்றிக் கேட்டதில்லை. அவனும் அது குறித்துப் பேசியதில்லை. அடுத்த நாளே ஒரு பெட்டி நிறைய சீப்புகள் வாங்கி அலங்கார மேசையின் ஒரு புறத்தில் வைத்திருந்தான்.
Ο
ஒராண்டு கடந்துவிட்டது. அந்தச் சம்பவம் ஆரபியின் மனதிலிருந்து முற்றாக அகலவில்லை. மாதவனின் மனதை, தான் முழுதாக ஆக்கிரமித்திருப்பதாகவே அவள் இதுவரை எண்ணினாள். அவனுக்குள் தனக்குத் தெரியாத பல விடயங்கள் இருக்கலாம் என்று அவள் அறிவாள். ஆனால் தன்னோடு பகிர்ந்துகொள்ள முடியாத அளவிற்கு அப்படி என்ன இருக்க முடியும் என்ற எண்ணம் அடிக்கடி வர ஆரம்பித்தது. ஆரபி கருத்தரித்ததை அறிந்த நாள் முதல் மாதவன் அவள்மீது மேலும் அன்பைச் சொரிந்தான். முன்பெல்லாம் சமூக சேவை என்று இரவு பகலாக அலைந்தவன், இப்பொழுது கூடியவரை வீட்டிற்கு வரவே விரும்பினான். அவன் தன்மீது அளவுக்கு மீறிய காதல் கொண்டுள்ளான் என்பதில் அவளுக்குச் சந்தேகம் இல்லை.
கார் வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தில் அது மாதவன்தான் என்பதை ஆரபி அறிவாள். அவர்கள் முதலில் ஒரு சிறிய கார்தான் வைத்திருந்தார்கள். சமீபத்தில்தான் "ப்வோர்ட் டெரிட்டரி எனும் பெரிய வாகனம் ஒன்றைத் தங்கள் சேமிப்பு முழுவதையும் செலுத்தி வாங்கியிருந்தார்கள். எல்லாம் பிறக்கப்போகும் அவர்கள் குழந்தைக்காகத்தான். வாகனம் ஒரு முறை கம்பீரமாகக் கனைத்துவிட்டு நின்றது. மாதவன் வாகனத்தைவிட்டு இறங்குவதை அவளால் பார்க்க முடிந்தது. ஆறு அடியை எட்டுகின்ற உயரம், விரிந்த தோள்கள். கனிந்த பார்வை. மெல்லிய மீசை, நீண்ட அவன் கையில் ஒரு கறுப்பு நிற 'பிரீவ் கேஸ்"
1 4 • தொப்புள்கொடி

ஆரபி ஆவலோடு சென்று கதவைத் திறந்தாள். தன் வயிற்றில் நடந்த அந்தச் சின்ன நடனத்தை அவனுக்குச் சொல்ல வேண்டும் என்ற அளவில்லாத துடிப்பு. மாதவனோ அவள் வாய் திறக்கக் காத்திருக்கவில்லை. 'பிரீவ் கேஸைக் கையிலிருந்து நழுவ விட்டு அவளை வாரி, தலைக்கு மேலே தூக்கினான். இது வழமையாக நடக்கும் ஒன்றல்ல.
"அய்யோ விடுங்கோ. என்ன உங்களுக்கு? அவள் சிணுங்கிய படி நீண்டு கறுத்திருந்த அவன் தலை முடியை இழுத்தாள். அப்பொழுதும் மாதவன் அவளை விடவில்லை. தன் இரண்டு கைகளையும் தொட்டிலாக்கினான்.
ஆரபி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, “விடுங்கோ, இன்றைக்கு."
அவள் வாய் திறக்க முடியாது, அவன் இதழ்கள் அவள் இதழ்களை மூடிக்கொண்டன. ஒருவாறு அவனிடமிருந்து விடுபட்டுத் தரையில் கால் வைத்தபோது அவளுக்கு மூச்சு வாங்கியது.
“முரடா, என்ன உங்களுக்கு நடந்தது?" அவள் செல்லமாகக் கோபித்துக்கொண்டு அவன் நெஞ்சில் இரண்டு கைகளாலும் குத்தினாள். "சப்பாத்தும் கழட்டாமல் வீட்டுக்குள்ள வந்திட்டியள்." மாதவன் ஏதும் பேசாது தன் காலணிகளைக் கழட்டி வைத்தான்.
அவன் மெளனம் அவள் பொறுமையைச் சோதித்தது. மாதவன் அவள் தோள்களில் கையைப் போட்டு, அவளை அணைத்தவாறு வீட்டினுள் நடக்க முற்பட்டான். அப்பொழுது தான் வீட்டு வாசல் கதவு திறந்திருப்பதையும், தெருவில் இரண்டு சிறுமிகள் இவர்களது விளையாட்டைப் பார்த்துச் சிரிப்பதையும் ஆரபி கண்டாள். அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது.
"ஆரபி எனக்குப் பெரிய புறமோசன் கிடைச்சிருக்கு. இந்த வருடச் சம்பள உயர்வு பத்தாயிரம் டொலர், எல்லாம் உங்கடை வயித்தில வளரிர குட்டியின்ரை அதிர்ஷ்டம்."
அவள் வயிற்றை அவன் மிக மென்மையாகத் தடவினான். மாதவன் ஒரு கட்டட நிறுவனத்தில் மேற்பார்வையாளனாக வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்களே ஆகின்றன. கடுமையான உழைப்பாளி என்று ஆரபி அறிவாள்.
"கெட்டிக்காரா” என்று சொல்லியபடி அவன் கன்னத்தில் அவள் ஒரு முத்தமிட்டாள். அவனது கரம் இன்னும் ஆரபியின்
வயிற்றிலேயே இருந்தது. அவள் அதனைத் தன் கையால் வயிற்றோடு இறுக்கிக்கொண்டாள்.
தொப்புள்கொடி 15

Page 11
"ஏதாவது சத்தம் கேட்கிதே ?” "ஏன் சாப்பிட இல்லையே?” "அய்யோ. அது இல்லையப்பா. பிள்ளை..?”
இருவரும் இப்போது வெள்ளை வண்ண சோபாவில் இருந்தார்கள். ஆரபி தொடர்ந்தாள்.
"இன்றைக்கு வயித்துக்குள்ள பிள்ளை அசைஞ்சது. காலால உதைச்ச மாதிரி"
"உண்மையாவே. எங்க பாப்பம் ?”
மாதவனும் ஆவலோடு காதை அவள் வயிற்றில் வைத்தான். "கடலிரைஞ்ச மாதிரியில்லோ கேட்கிது.”
"இப்பயில்லை மாதவன். வெள்ளன" ஆரபி ஏமாற்றத்தோடு சொன்னாள். அவனிருக்கும்போது குழந்தை அசையவில்லையே என்ற ஆதங்கம்.
அப்போது தொலைபேசி அலறியது. இருவருக்கும் அதை எடுக்க மனம் வரவில்லை. பள்ளிக்கூட உணவு இடைவேளையில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருக்கும்போது வகுப்பு மணி அடித்தது போலிருந்தது. மாதவன்தான் தொலைபேசியை எடுத்தான். அவன் முகத்தில் சிரிப்பு மறைந்தது. “சரியண்ணை. சரியண்ணை" என்று பலமுறை சொன்னான்.
அவன் பணிவோடு ‘சரியண்ணை’ சொல்லும் விதத்தில் தொலைபேசியின் மறுபக்கத்தில் வெற்றிவேலர் இருப்பதை ஆரபி புரிந்துகொண்டாள்.
"ஆரபி, அவசியமாக ஒரு அரசியல் கூட்டமாம். வெற்றி வேலண்ணை வரட்டாம் போயிட்டு வாறன்” மாதவன் நடந்தான்.
ஆரபி சோபாவில் அப்படியே இருந்தாள். இது ஒன்றும் அவளுக்குப் புதிதல்ல. எவ்வளவுதான் காதல் கொண்டிருந்தாலும் மாதவனது சில செயல்களை அவள் தடுக்க முயல்வதில்லை. அது முடியாது என்பதால் மாத்திரமல்ல. தன்னால் செய்ய முடியாத பல விடயங்களை அவன் செய்ய வேண்டும் என்பதாலும் கூட. அவை அவசியமானவை என்பதில் இருவருக்கும் கருத்துப் பேதம் இருந்ததில்லை.
ஆனாலும் அவன் பிரிந்துசெல்லும் ஒவ்வொரு வேளையும் ஒரு சோகம் அவளுள் படரும்.
அவள் வாசல்வரை வந்து அவனை வழி அனுப்பினாள். கதவைச் சாத்தும்போது தூரத்தில் நின்ற பச்சை வர்ணக் காரைக் கவனித்தாள். அது அடிக்கடி அதே இடத்தில் நிற்பதை முன்பும்
6 தொப்புள்கொடி

பார்த்து இருக்கின்றாள். கார் தனியாக இருந்தால் அவள் அதைப் பொருட்படுத்தி இருக்க மாட்டாள்.
எந்த நேரமும் அந்த வாகனத்தில் ஒருவன் இருந்தான். அவனுக்கு வேறு வேலையில்லாமல் இருக்கலாம். வீடும் இல்லையா? அவன் தங்கள் வீட்டை நோட்டம் இடுகின்றானா?
ஆரபிக்கு ஒருவித பயம் தோன்றியது.
அது ஒரு கொமொடோர் கார்.
ஆரபி சாளரத்தின் திரையைச் சிறிது விலக்கி அந்த வாகனத்தை நோக்கினாள். கார்க் கதவைத் திறந்து ஒருவன் வெளியே இறங்கினான்.
அவனொரு ஆஸ்திரேலிய வெள்ளையன். உயரமானவன். அவன் சிகரட்டைப் பற்றவைத்தான்.
அவன் பார்வை அவர்கள் வீட்டையே நோக்கி இருந்தது.
தொப்புள்கொடி 17

Page 12
வெற்றிவேலரின் நெற்றி சுருங்கிச் சுருங்கி விரிந்தது. தலை குனிந்திருந்தது. சுருண்ட தலைமுடி நெற்றியில் புரண்டு சுருக்கத்தை மறைக்க முயன்றது. கண்ணாடியைப் பல தடவை துடைத்து மீண்டும் அணிந்துகொண்டார். கண்கள் சிகப்பேறியிருந்தன. அவர் ஐம்பது வயதைத் தாண்டியதற்கு அடையாளமாக வெள்ளிச் சுருள்களாகச் சில தலைமுடிகள். அந்த அறையின் இரண்டு பக்கங்களும் பல நாற்காலிகள் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. அதில் பத்துப் பேர் அளவில் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் மாதவனும் ஒருவன். ஆரபியின் தந்தை இளங்கோவன் சற்றுத் தள்ளி இலங்கையிலிருந்து வந்த ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தார். மெல்லிய உருவம். காதடியிலிருந்து வரும் குறுகிய சிறிய தாடி. சின்ன மீசை. அவரது கறுப்பு நிறத்தோடு தாடி, மீசை சேர்ந்துவிடுவதால் அவை இருப்பது தெளிவாகத் தெரிவதில்லை. சாந்தமான கண்கள்.
வெற்றிவேலரின் தலைக்கு மேல் விரிவுரையாளர் மாமனிதர் எலியேசரின் பெரிய புகைப்படம் ஒன்று மாலையுடன் தொங்கிக் கொண்டிருந்தது. சுவர்களிலே ஈழ மண்ணின் விடுதலைப் போரில் விதையாகிவிட்ட பல மாவீரரின் படங்கள் “எங்கள் பங்கு முடிந்தது. உங்கள் பங்கு என்ன?” என்று கேட்பதுபோல் காட்சி யளித்தன. அந்தப் படங்கள் எடுக்கப்பட்டபோது, மக்களுக்காக மரணத்தைத் தழுவிக்கொண்ட, அந்த மாவீரரின் மன நிலை எப்படி இருந்திருக்கும் என்று மாதவன் எண்ணினான்.
வெற்றிவேலர் தொண்டையைச் செருமினார். புரிந்து கொண்டதுபோல் ஒருவர் எழுந்தார். எல்லோரும் தொடர்ந்து எழுந்து நின்றனர்.
"ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரருக்கும் பொது மக்களுக்கும் அக வணக்கம் செலுத்துவோம்”
ஒரு குரல் அமைதியைக் கிழித்துக் கம்பீரமாக ஒலித்தது. தொடர்ந்து அமைதி.
“நிறைவு செய்வோம்” மீண்டும் அந்தக் கம்பீரமான குரல். எல்லோரும் அமைதியாக அமர்ந்தார்கள்.
18 தொப்புள்கொடி

வெற்றிவேலர் தலையை நிமிர்த்தினார். நேரம் இரவு ஏழு மணியைக் காட்டியது.
"ஏன் இந்தக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டினேன் என்று யாருக்காவது தெரியுமோ ?”
ஒருவரிடமிருந்தும் பதில் வரவில்லை.
"நாட்டில என்ன நடக்கிது என்றாவது யாருக்காவது தெரியுமோ ?”
மீண்டும் பதிலில்லை. இப்பொழுது மயூரன் தட்டத்தில் தேனீருடன் வந்தான்.
குழந்தையைப் போல் களங்கமில்லாத முகம். அழகாக அரும்பும் மீசை, வெள்ளையர் வெயிலில் இருந்து பெற்றுக் கொள்ள விரும்பும் ‘டான்' நிறம் அவனுக்கு இயற்கையாகவே இருந்தது. ஒரு மல்யுத்த வீரன் போன்ற உடலமைப்பு. அதிக உயரம் இல்லாவிட்டாலும் நிமிர்ந்த நடை, நேரான பார்வை.
“அவை எங்கேயண்ணை பார்த்திருப்பீனம் ? அவைக்கு கிரிக்கட்டும் பாங்க் கணக்கும் பார்க்கத்தான் நேரம் சரி”
'உன்னை இப்ப ஆரும் ஏதும் கேட்டவையே? வெற்றிவேலரின் பார்வையின் கேள்வியைப் புரிந்துகொண்டு மயூரன் நிலத்தைப் பார்த்தான். வெற்றிவேலர் தொண்டையைச் செருமிக்கொண்டார்.
"நாட்டில நிலைமைகள் படுமோசமாகப் போகுது. சமாதானம் வரும், வரும் என்று நீங்கள் எல்லாரும் கனவு கண்டியள். சிங்கள அரசு தானாக உவந்து தமிழருடைய பிரச்சனையைத் தீர்க்கப்போறதில்லை. இதை நாட்டிலே உள்ள எங்கடை மக்கள் படிச்சிட்டீனம். ஆனால், வெளியில வந்த எங்களுக்குத்தான் ஒரு நப்பாசை. உலக நாடுகளுக்கு இது இன்னும் விளங்கவில்லை. உள்நாட்டிலேயும் வெளி நாட்டிலேயும் எங்கடை வாயை அடைக்க சிறீலங்கா வேகமாக வேலைசெய்யிது. பத்திரிகை நிருபர்களை, ஆசிரியர்களைப் பயமுறுத்திது. கொலையும் செய்யிது. தராக்கி சிவராமை ஏப்பிரலில கொலை செய்திட்டிது. அதுக்கு முதல் நிருபர் நடேசன், பிபிசி நிர்மலராஜன் கொலைகள் உங்களுக்குத் தெரியாததில்லை. போன மாசந்தான் கொழும்பில சுடரொளி பத்திரிகைக்குக் குண்டெறிஞ்சு, அதிலேயும் ஒருவர் செத்தவர். புலம்பெயர்ந்த தமிழர்களைக் கொலைசெய்ய முடியல்லை. அதால எங்கடை குரல் வளையை நெரிக்குது. சிறிலங்கான்ரை இரத்தக் கறை படிஞ்ச கை நீளமானது. கொடூரமானது. அது இப்ப வெளிநாட்டு அரசாங்கங்களையும் பொய்ப் பிரச்சாரத்தால தங்கடை கைக்குள்ள போடுது. தமிழர்களுடைய பிரச்சனைகளை உலகுக்குச் சொல்லுகின்ற அமைப்புகளுக்குப் பல கட்டுப்பாடுகள்
தொப்புள்கொடி 19

Page 13
வந்திருக்கு. அதனால நாங்கள் இன்னும் வேகமாக எங்கடை பிரச்சாரங்களை முடுக்கிவிட வேணும்.”
வெற்றிவேலர் பேச்சை நிறுத்தியபோது நீண்ட அமைதி நிலவியது.
மீனாதான் முதலில் பேசினாள். அவள் கண்ணனின் வண்ணம். நடுத்தர வயது. எதையும் கூர்மையாக ஆராயும் அறிவுபூர்வமான கண்கள். அழகிய முக வெட்டு. உடல் சிறிது பருமன், நடையில் ஒர் அழகு தொனிக்கும். ஆங்கிலம், தமிழ், சிங்களம் என மூன்று மொழிகளிலும் சரளமாக எழுதப் பேசத் தெரிந்தவள்.
“எத்தனை தடவை வெளிநாட்டு அமைச்சருக்கு எழுதிட்டம்? எங்கடை பிரச்சனையை எங்களோட சந்திச்சுப் பேச மறுக்கிறார். இவரைத் தாண்டி பிரதமரைச் சந்திக்க முடியாது.” மீனா மற்றவர்கள் ஏதாவது சொல்வார்களா என்று ஆவலோடு பார்த்தாள்.
"அவேக்கு என்னக்கா?-சிறீலங்கான்ரை மந்திரிமார் வரேக்க அவேயோட இருந்து சிவப்பு வைனைக் குடிச்சு, சிரிச்சுப் பேசத்தான் நேரம். இவேன்ரை வைனும் அங்க எங்கடை சனம் சிந்திற இரத்தமும் சிவப்புதான்.” மயூரன் சிறிது ஆவேசமாகவே பேசினான்.
"தம்பி சும்மா சத்தம் போடாதேயும். நேற்று ஆஸ்திரேலியா வுக்கு வந்த உமக்கு என்ன விளங்கும்? அவேயோட கோவிச்சு நாங்கள் என்ன செய்ய முடியும்? 83 கலவரத்தில இருந்து இப்பவரைக்கும் இஞ்ச இருக்கிற எங்கடை சனந்தான் குரல் குடுக்கிது. ஒரு காலத்தில தமிழ் அகதிகளுக்குக் கதவு திறந்துவிட்டது இந்த நாடுதான். அதை மறக்கக் கூடாது. நாங்கள் முயற்சியைக் கைவிடக் கூடாது. ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்துவம்.” அங்கிருந்த ஒரு பெரியவர் சிறிது சத்தமாகவே சொன்னார்.
"முதலில ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தில எங்கடை பிரச்சனை எடுக்கப்பட வேணும். பாராளுமன்ற உறுப்பினர்களோட தொடர்புகொள்ள எங்களில மூன்று பேர் சேர்ந்து வேலைசெய்வம். என்ன சொல்லுறியள் மீனா?” என்றார் இளங்கோவன்.
வெற்றிவேலர் சிறிது நேரம் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். இடையில் பல தடவை அவரது தொலைபேசி அலறும். உள்ளே சென்று பலரோடு மாறி மாறி ஏதோ பேசினார்.
“ஒரு முக்கியமான விசயம்” வெற்றிவேலர் எல்லோரது முகத்தையும் உற்றுநோக்கினார்.
எல்லோரும் வெற்றிவேலர் என்ன சொல்லப்போகிறார் என்பதை உன்னிப்பாகக் கவனித்தனர்.
20 தொப்புள்கொடி

"ஆஸ்திரேலியான்ரை புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவை என்ரை நடவடிக்கைகளை கண்காணிக்கீனம்." வெற்றிவேலரின் பார்வை சுழன்று எல்லோரையும் மீண்டும் ஒரு முறை நோட்டமிட்டது.
எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். சிலர் முகங்களில் பிரமிப்பு. சிலர் முகங்களில் பீதி, மாதவன் முகத்தில் சலனமில்லை.
"அது மாத்திரமில்லை. அவங்களோட நான் நேருக்கு நேர பேசியிருக்கிறன், நாங்கள் என்ன செய்யிறம் என்றதைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறன். சிலதுகளைச் செய்யலாமா என்றுகூடக் கேட்டிருக்கிறன். இந்தப் பயங்கரவாதச் சட்டங்களுக்குக் கீழ எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்றதிலே அவங் களுக்கும் தெளிவில்லை. தமிழருடைய இயக்கம், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இந்த நாட்டிலே தடைசெய்யப்படவில்லை என்றது எங்களுக்குத் தெரியும்.” வெற்றிவேலர் நிறுத்தி மீண்டும் எல்லோரையும் பார்த்தார்.
"அண்ணே, நாங்கள் செய்யிறதொன்றும் சட்ட விரோத மில்லை. என்ன அழுத்தம் வந்தாலும் சட்டத்தை மீறாத வகையில நாங்கள் நடந்தால் ஒரு அரசும் ஒன்றும் செய்ய முடியாது." மாதவன் சொன்னான்.
"நானும் நாங்கள் செய்யிற எல்லாவிசயத்திலேயும் சட்ட ஆலோசனையைக் கேட்டுத்தான் செய்யிறன். இப்ப உள்ள சட்டப்படி நாங்கள் போருக்கு பண உதவி செய்தால் குற்றம். ஆனால் எங்கடை மக்களுக்குச் சாப்பாட்டுக்கு, சுகாதாரத் தேவைகளுக்கு, இருப்பிட வசதிகளுக்கு உதவுகிறது குற்றம் என்று சொன்னால் ரெட் குரொஸ் தொடக்கம் எல்லா தொண்டு நிறுவனங்களையும் மூட வேண்டியதுதான். சுனாமி நேரத்தில உலகம் குடுத்த நிதி எங்கடை மக்களுக்குச் சேர சிறீலங்கா அரசாங்கம் விடயில்லை. எங்களைமாதிரி அமைப்புகள் சேர்த்த பணந்தான் சுனாமியால பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, ஏன் சிங்கள மக்களுக்கும் உதவியிருக்கு. நான் சொல்லுறதைக் கேட்டுப் பயப்படாதேங்கோ. எங்களைப் பயப்படுத்திறதுக்குத்தான் இதைச் செய்யிறாங்கள்.”
“பொலீஸ்காரன் எங்கடை வீட்டையும் வந்திருக்கிறான். அப்ப நான் வீட்டை நிற்கயில்லை. ஆரபிதான் நின்றவள். ஆனால் அவள் பயப்படயில்லை. அவள் இந்த நாட்டில வளர்ந்தவள். எங்களைப் போல, ஒரு குற்றமும் செய்யாமலே பொலிசுக்கும் ஆமிக்கும் பயந்து, பயந்து வாழாதவள். நான் அந்தப் பொலிஸ் காரனைப் பிறகு சந்திச்சனான். தேசியத் தலைவரின்ரை படம் போட்ட கலண்டரும், சிடிக்களும் கஸ்டம்சில் முதல் நாள்
தொப்புள்கொடி 21

Page 14
கிளியர் பண்ணினனான். அதைத்தான் என்னன்று கேட்டவன். இதென்ன களவே? மறைச்சே கொண்டு வந்தனாங்கள்? தடை செய்யப்பட்ட சாமான்கள் என்றால் கஸ்டம்சிலேயே நிற்பாட்டி யிருக்க வேணுமில்லோ. பார்த்திட்டுப் பேசாமல் போயிட்டான்."
மாதவன் வார்த்தையை முடிக்கும் முன் இளங்கோவன் குறுக்கிட்டார்.
“மாதவன், இதையேன் எங்களுக்கு முதலில சொல்லயில்லை? ஆரபி பிள்ளைத்தாச்சி. இந்த நேரத்தில...”
வெற்றிவேலர் இடைமறித்தார்.
"நான்தான் அப்ப சொல்ல வேண்டாம் என்று மறிச்சனான். இந்தச் சின்ன விசயங்களைக் கேட்டாலே எங்கடை சனம் பயப்படும்.”
இதுவரை பேசாது இருந்த பெரியவர் இப்பொழுது பேசினார்.
“எங்கடை சனம் பயப்படுந்தான். சண்டைக் காலத்தில அங்க இருந்தவைக்குத்தான் அந்தப் பயந் தெரியும். இப்பிடித்தான். ஊரில விடிய இரண்டு மணிக்கு வீட்டில வந்து கதவைத் தட்டினவங்கள். உள்ள வந்து ஒன்றும் அறியாத என்ரை மகனைப் பிடிச்சு, நாங்கள் கதறக் கதற இழுத்துக் கொண்டு போனவங்கள். இன்றைக்கு வரைக்கும் அவனுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது." பெரியவர் கண்களைத் துடைத்துக்கொண்டார்.
“இது சின்ன விசயமில்லை. என்ரை மகள் சம்பந்தப்பட்ட விசயம்” சாதாரணமாகவே உணர்ச்சிவசப்படாத இளங்கோவனின் பரபரப்பு வெற்றிவேலரைத் தடுமாறச் செய்தது.
“மன்னிச்சுக் கொள்ளுங்கோ. நான் பொது நன்மையைக் கருதித்தான் அப்படிச் செய்தனான். நிச்சயமாக உங்களுக்காவது அதைச் சொல்லியிருக்க வேணும். வெற்றிவேலர் கையைப் பிசைந்தார்.
“உங்களுக்குத் தெரியாத கன விசயங்கள் என்ரை வாழ்க்கை யிலேயும் இருக்கு. நான் ஆரபியை இப்பப் பார்க்க வேணும்." பாதிக் கூட்டத்தில் இளங்கோவன் இப்படி நடந்து கொண்டது இதுவே முதற்தடவை. மிகவும் சாந்தமாகப் பேசும் அவரது செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் எழுந்தார்.
“என்னிலை பிழைதான் அண்ணே. நான் அதை உங்களுக்குச் சொல்லியிருக்க வேணும்.”
ஆரபியைக் காதலித்துத் திருமணம் செய்யும் முன் மாதவன் இளங்கோவனை அண்ணா என்றே அழைத்து வந்தான். அந்தப் பழக்கத்தை அவன் மாற்றவில்லை.
22 தொப்புள்கொடி

மாதவனின் செல்லிடத் தொலைபேசி அலறியது.
O
ஆரபிக்கு தனிமை வாட்டியது. பச்சை வாகனத்தின் நினைவு அடிக்கடி வந்து தொல்லை கொடுத்தது. மீரா அக்காவோடு பேசினால் ஒரளவு ஆறுதலாக இருக்கும் என்று எண்ணினாள்.
மீரா, வெற்றிவேலரின் மனைவி. அவர்கள் வீடு அதிக தூரமில்லை. பல சின்ன தெருக்களைச் சுற்றி வளைந்து செல்ல வேண்டும். தெருவின் கடைசி வீடு அவர்களது. அந்தத் தேருக்கள் மிகவும் குறுகியவை. இரண்டாவது தெருவைக் கடந்தபோது, அவள் கண்களை நம்ப முடியவில்லை. தனக்குப் பின்னால் வந்த வெள்ளைக் காரைத் தொடர்ந்து ஒரு பச்சைக் கார். அது தங்கள் வீட்டின் முன்னே நின்ற கார்தானா என்று அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் பயம் பீடித்துக்கொண்டது. ஏன் இவன் என்னைத் தொடர வேண்டும்? அது அவன்தானா? நெற்றி வியர்த்தது. பச்சைக் கார் சற்று தூரத்திலேயே வந்துகொண்டிருந்தது. அந்தப் பாதை அவளுக்கு நன்கு பழக்கம். அடுத்தது ஒரு சிறிய தெரு. அதற்குள் அவள் திரும்பினால், பச்சைக் கார் அந்தத் திருப்பத்துக்கு வர முப்பது விநாடிகளாவது எடுக்கும். திரும்பும் சைகை விளக்கையும் போடாது காரைத் திருப்பினாள். பின்னால் வந்த வெள்ளைக் கார்க்காரி பிறேக்கை அழுத்தி நிறுத்தும் சத்தம் ஆரபிக்குக் கேட்டது. அந்தத் தெருவில் மூன்றாவது வீட்டின் பெரிய வெளிவாயிற் கதவு எப்போதும் திறந்திருப்பது அவளுக்கு நினைவுக்கு வந்தது. எந்தவிதத் தயக்கமும் இன்றி அந்த வீட்டிற்குள் தன் வாகனத்தைத் திருப்பினாள். பூஞ் செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்த வயோதிபர் திடுக்குற்று கையிலிருந்த இறப்பர் குழாயை நழுவ விட்டார். ஆரபி ஏதும் நடக்காதது போல் வாகனத்தின் கண்ணாடியைப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போல் பச்சைக் கார் வாயிலைக் கடந்து சென்றது.
அது கொமொடோர் கார்தான்.
சாகவசமாக அவள் தன் வாகனத்தைவிட்டு இறங்கினாள். இறப்பர் குழாய் தன் எண்ணம் போல் அங்குமிங்கும் தண்ணிரை அடித்துத் தரையில் துடித்துக் கொண்டிருந்தது. அதை அவள் கையில் எடுத்தாள்.
வெள்ளைக்கார வயோதிபரிடம் அவள் ஆங்கிலத்தில் பேசினாள்.
“மன்னித்துக்கொள்ளுங்கள். பாதை தெரியாமல் உங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டேன்."
தொப்புள்கொடி 23

Page 15
"வீடு தெரியாததை மன்னிக்கலாம். வேகம் கூடவா தெரியாது? என்னைக் கொன்றால் என் மனைவி உன்னைச் சும்மா விட மாட்டாள்.”
“மன்னித்துக்கொள்ளுங்கள். நான் செய்தது பெருந் தவறு."
வயோதிபர் சிரித்தார்.
"என் மனைவி உனக்குப் பெரிய விருந்தே வைத்திருப்பாள் என்று சொல்ல வந்தேன். நான் எப்போது கல்லறைக்குள் போவேன் என்று காத்துக்கொண்டிருக்கின்றாள்.” என்றார் பெரியவர்.
ஆரபியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தன் மேல் சட்டைப் பையில் கையை விட்டாள். 'மார்ஸ்' சொக்கிலட் பார் ஒன்று கையில் வந்தது. அதை அவரிடம் நீட்டினாள்.
குழந்தையைப் போல் அவர் அதைப் பறித்துக்கொண்டு தன் வீட்டு வாசலைத் திரும்பிப் பார்த்தார். காற்சட்டைப் பைக்குள் சொக்கிலட்டை வைத்தார்.
"நன்றி. என் மனைவி சொக்கிலட் சாப்பிட விட மாட்டாள். எனக்கு சலரோகம்."
"நான் அதைத் தந்திருக்கக் கூடாது" ஆரபி வருத்தத்தோடு சொன்னாள்.
"நீ ஏன் கவலைப்படுகிறாய்? செத்த பிறகு சாப்பிட முடியாது. சாப்பிட்டுச் சாவது அதைவிட மேல்" என்று சொல்லிப் பெரியவர் பெரிதாகச் சிரித்தார்.
ஆரபி புன்னகையோடு அவரிடமிருந்து விடை பெற்றாள்.
“மீண்டும் வா. வயிற்றில் பிள்ளை. மெதுவாகக் காரை ஒட்டு.” பெரியவர் விடைகொடுத்தார்.
ஆரபி வாகனத்தைத் திருப்பி மீரா வீடு நோக்கி ஒட்டினாள்.
வெற்றிவேலரின் வீட்டைச் சுற்றிப் பெரிய மதில் சுவர்களோ வேலியோ கிடையாது. பலவிதமான பூஞ்செடிகளும் ரோசா மரங்களும் வேலி போல் அழகாக வளர்ந்திருந்தன. அழகிய கற்களால் பதிந்த சிறிய வழி வீட்டு வாசல் வரை சென்றது. தாழ்வாரத்திலே தொங்கிய சின்னப் பூந்தொட்டிகளில் சின்னச் சின்னப் பூக்கள் மலர்ந்து அழகான சிகப்பு, மஞ்சள், நீல வண்ணங்கள் காட்டிச் சிரித்தன. வாசலில் மின்சார மணியில்லை. செப்பு வளையம் தொங்கியது. ஆரபி அதை எடுத்து கதவோடு தட்டினாள். சில விநாடிகள் நகர்ந்தன. யாரும் வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. ஆரபி மீண்டும் தட்டினாள்.
“மீராக்கா” என்றாள்.
24 தொப்புள்கொடி

இப்பொழுது மெதுவான காலடி ஓசை கேட்டது.
கதவு திறந்தது. மீரா சிரிக்க முயன்றாள். ஆனால் அவளது அழுது சிவந்த கண்களை மறைக்க முடியவில்லை.
"வா ஆரபி"
வயிற்றைத் தள்ளிக் கொண்டு நடந்த ஆரபி சோபாவில் அமர்ந்தாள். எதிரே உயிரோடு இருப்பது போன்ற புலித் தலை சுவரில் இருந்தது. அதனருகே ஒர் அழகான பொம்மை புள்ளி மான் கண்ணாடிக் கூண்டில் இருந்தது. துள்ளி ஒடும் சின்ன மீன்கள் உள்ள பச்சை நிற மீன் தொட்டி. அதில் தண்ணீர் ஒடும் ஓசை மெதுவாகக் கேட்கும். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக மெல்பேர்னில் வசிக்கும் பெரும்பான்மையான தமிழர் களின் வீடுகள் பெரிய மாளிகை போலவே காட்சி அளிக்கும். அந்த வீடோ மிக எளிமையாக இருந்தது. சிறிய அறை. நெருக்க மாகப் போடப்பட்ட நாற்காலிகள். தமிழ் மக்களோடு நெருக்கமாகப் பழகும் வெற்றிவேலரின் குணத்தை அவை பிரதிபலித்தன. மீராவும் ஆரபியும் முழங்கால்கள் ஒன்றோடு ஒன்று முட்டும் அளவிற்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார்கள்.
“மீராக்கா அழுதணிங்களே? என்ன நடந்தது?” ஆரபி, மீராவின் மடியில் கைவைத்துக் கேட்டாள்.
மீரா எதையோ கண்டு பயந்தவள் போல் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவள் முழங்கால் வரை மெல்லிய வெள்ளைப் பாவாடை அணிந்திருந்தாள். மென்மையான மஞ்சள் வண்ணச் சட்டை. அதன் கை முழங்கை வரை நீண்டிருந்தது. மெல்லிய உடல், சிறிய அழகான முகத்தில் நீண்டு விரிந்த கண்கள். அவற்றில் எந்நேரமும் சாந்தமும் கருணையும் தவழும். 'லேடி வித் த லாம்ப்' என்று போற்றப்படும் 'ப்புளொரன்ஸ் நைட்டிங்கேலை" அவள் நினைவூட்டினாள்.
"யாரோடையாவது கதைக்காட்டால் என்ரை தலை வெடிச்சிடும். போல இருக்கு. ஆரபி, இஞ்ச கதைக்க ஏலாது.”
ஆரபி மீராவை அதிசயமாகப் பார்த்தாள். தன்னுடைய வீட்டில் கதைக்க முடியாது என்று சொல்கிறாளே. மீரா ஏதோ ஒரு பயத்தில் இருக்கின்றாள் என்பதை அவள் புரிந்துகொண்டாள். ஆரபி சாளரத்தின் வெளியே பார்த்தாள். அவள் தலை சுற்றியது. பச்சைக் கார் சற்று தூரத்தில் நின்றது. அவள் கால்கள் பலமிழந்தன. நிலத்தில் மெல்லச் சாய்ந்தாள்.
தொப்புள்கொடி 25

Page 16
Tெடிய மல்லிகைப்பூ மாலை போல் கட்டிலில் ஆரபி படுத்திருந்தாள். வெண்ணிறப் போர்வை அவள் கழுத்து வரை விரிந்திருந்தது. அந்த அறையில் அவளைவிட இன்னும் மூன்று நோயாளிகள் இருந்தார்கள். பச்சை நிறத் திரைச் சேலை ஒன்று அவள் கட்டிலைச் சுற்றியிருந்தது. ஆங்காங்கே தெரிந்த இடைவெளி யினுரடே சக நோயாளிகள் அவளை நோட்டமிட முயன்று கொண்டிருந்தார்கள். வைத்திய சாலைக்கே உரிய திரவக உணவூட்டும் சிறிய குழாய்கள், மருந்து நெடிகள் மலிந்திருந்தன. ஒரு குழாய் அவளது முழங்கையின் மத்தியில் செலுத்தப்பட்டு இருந்தது. குழாயும் கையும் சேரும் இடத்தில் ஒரு ஊசி. அதன் மேல் பிளாஸ்டர். ஊசியைச் செலுத்தும்போது ஏற்பட்ட இரத்தக் கறை காய்ந்திருந்தது.
இளங்கோவனால் அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அவர் வெளியே வந்து வானத்தை வெறிச்சிட்டுப் பார்த்தார்.
மாதவன் வைத்த விழி வாங்காது ஆரபியின் மூடிய கண்களைப் பார்த்தான். அவன் அமர்ந்திருந்த சிறிய நாற்காலி ஆரபியின் தலையருகே இருந்தது. மிகக் குறுகிய இடமாதலால் பச்சைத் திரைச் சேலை அவன் தோளை அணைத்தபடி தொங்கியது. மாதவன் ஆரபியின் நெற்றியைத் தடவினான். அவளிடம் எந்தவிதச் சலனமும் இல்லை.
"ஆரபி” என்று மெதுவாக அழைத்தான். அவளுக்கு அது கேட்டதாகத் தெரியவில்லை. அவள் கையைத் தன் கையில் வைத்து மெதுவாக அழுத்தினான். அவள் அசையவில்லை. அவன் மனதில் என்றுமில்லாத சஞ்சலம். அவளுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற குழப்பம். வயிற்றில் வளரும் குழந்தையை நினைத்ததும் மேலும் கவலை.
தாதிமாரின் குரலும் வைத்தியரின் குரலும் அவன் காதில் விழுந்தன். திரையை விலக்கி ஒரு தாதியும் ஓர் இளம் டாக்டரும் ஆரபியின் கட்டில் அருகே வந்தனர். மாதவன் எழுந்து நின்றான். மாதவனைப் பார்த்து ஆஸ்திரேலிய வெள்ளை நிற இளம் வைத்தியர் புன்னகைத்தார்.
26 தொப்புள்கொடி

"கவலைப்படாதே அவளுக்கு எந்தவிதப் பிரச்சனையும் இல்லை. பலம் குன்றி இருக்கின்றாள். சாப்பிடவில்லை போலும். பயப்படுவதற்கு ஏதும் இல்லை. மயக்கம் வந்து இரத்தப் போக்கும் இருந்தால்தான் யோசிக்க வேண்டி இருக்கும். அப்படி ஒன்றும் ஆரபிக்கு இல்லை. சில பேருக்கு உடலின் அடிப்பாகத்தில் இருந்து இரத்தத்தை இதயத்துக்கு எடுத்துச் செல்லும் நரம்பு, குழந்தையின் எடையால் அழுத்தப்படும்போது இரத்த ஓட்டம் தடை செய்யப்படுகின்றது. அதனால் மயக்கம் ஏற்படலாம். ஆரபி அதிக நேரம் எழுந்து நின்றிருக்கக் கூடும். அதுவும் நல்லதல்ல. அவளுக்கு இப்போது ஒரு வருத்தமும் இல்லை. அவள் நித்திரையால் எழுந்ததும் நீங்கள் கூட்டிச்செல்லலாம். அவளுக்கு ஒய்வு தேவை. மீரா உன்னுடைய மனைவியைச் சரியான நேரத்துக்குக் கொண்டுவந்தார்."
பெண் தாதியரின் மேற்பார்வையாளராக மீரா அதே வைத்திய சாலையில் வேலைசெய்கின்றார்.
வைத்தியரின் வார்த்தைகள் மாதவனுக்கு ஆறுதல் அளித்தன. அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவளது நெற்றியில் புரண்ட தலை மயிரைக் கோதிவிட்டான். அவனது விரல்கள் பட்டதும் அவள் விழித்துக்கொண்டாள். மாதவனின் முகம் அவளது முகத்துக்கு மிக அருகிலேயே இருந்ததது. ஆரபி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவள் கடைக் கண்களில் நீர் துளிர்த்தது.
“மாதவன் மீராக்கா வீட்டுக்குப் போயிருந்தன். அங்கே அப்பிடியே மயங்கி விழுந்திட்டன். பிள்ளைக்கு ஏதும் ஆயிடுமோ?"
ஆரபி வார்த்தைகளை முடிக்குமுன் அவன் விரல்களால் அவள் இதழ்களை மூடினான். வார்த்தைகள் வராது அவன் குரல் கம்மியது.
"உனக்கும் பிள்ளைக்கும் ஒன்றும் நடக்காது” அப்பொழுது பச்சைத் திரையைப் பிரித்து உள்ளே இளங்கோவன் வந்தார்.
"இரண்டு பேரும் என்ன குழந்தைப் பிள்ளையன் மாதிரி? டொக்டரோட கதைச்சனான். ஆரபிக்கு ஒரு வருத்தமும் இல்லையாம். பலகீனம் தானாம். அவளுக்கு நல்ல ரெஸ்ட் வேணும். மாதவன், உங்கடை வீட்டில எந்த நேரமும் ரெலிபோனும், ஆட்கள் வந்தபடியுந்தான். அவளைக் கொஞ்சம் தனியாக, இரண்டு நாள் என்றாலும் ஹோட்டலிலை கூட்டிக்கொண்டுபோய் வைச்சிருங்கோ. நான் ஒரு மொட்டேல் ஒழுங்கு பண்ணுறன்."
"இன்றைக்கு ஏலாதண்ணே. நாட்டுச் செய்திகள் எல்லாம் தொகுத்து எங்கடை வானொலிக்குக் குடுக்க வேணும். நான்தான் இன்றைக்கு ரேடியோவும் நடத்த வேணும். ரவியைக் கேட்கலாம்.
தொப்புள்கொடி 27.

Page 17
ரவியும் மெல்பேர்ணில இல்லை. ஆரபியை இப்பிடித் தனிய வீட்டிலை விட்டிட்டுப்போக எனக்கும் மனமில்லை. ஏலுமென்றால் நீங்கள் அவளைக் கூட்டிக்கொண்டு போங்கோ. நான் இரவைக்கு அங்க வாறன்.”
இளங்கோவன் மாதவனின் வார்த்தைகளைக் கேட்டு, சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை. ஆரபி திருமணமானதில் இருந்து அவளோடு தனிமையில் மனம் விட்டுப் பேசும் சந்தர்ப்பங்கள் அவருக்கு அதிகம் கிடைக்கவில்லை. இதுவரை காலமும் சொல்லாத பல விடயங்களை அவளுக்குச் சொல்ல வேண்டிய காலம் வந்துள்ளது என்று எண்ணினார். துரித கதியில் தொலைபேசி மூலம் வேண்டிய ஏற்பாடுகள் செய்தார். மீராவைக் கண்டு பேச அவர்களால் முடியவில்லை. ஒரு மணி நேரத்துள் இளங்கோவனும் ஆரபியும் 'மரைன் கெட் எவே' எனும் பட்டர்சன் லேக் என்ற இடத்தில் அமர்ந்திருந்த அழகான தங்கு விடுதியை நோக்கிச் சென்றனர்.
O
ஓர் ஏரிக் கரையோரத்தில் பச்சைப் புல்வெளியின் மத்தியில் அந்த விடுதி அழகாக இருந்தது. வசதியான இரண்டு பெரிய அறைகள். நடுவே இளைப்பாற சோபாக்கள், தொலைக்காட்சிப் பெட்டி, ஒரத்தில் மிக நேர்த்தியான திறந்த சமையல் அறை. ஊதா வண்ணத் திரைச் சேலைகள் சாளரங்களில் தொங்க அதற்கு ஏற்ற மெல்லிய சிகப்பு நிறப் படுக்கைகள். எல்லாமே ஆரபிக்கு ஒரு வித சுகத்தைக் கொடுத்தன. அங்கு ‘ஸ்பா' என்று சொல்லப்படும் இதமான வென்னீர்த் தொட்டியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் குளித்தாள். தந்தை தனியாக இருக்கின்றார் என்பதையும் மறந்துபோனாள்.
அவள் உடை மாற்றி வந்தாள். ஊதா நிற சோபாவிலே ஒரு குழந்தையைப் போல் அவர் தூக்கத்தில் இருந்தார். அவரைச் சிறிது நேரம் கண் வெட்டாது பார்த்தாள். தன்னை எத்தனை தடவை தமிழ்ப் பள்ளிக்கூட வகுப்புகள், பரத நாட்டிய வகுப்புகள் என்றெல்லாம் கூட்டிச்சென்று காரிலேயே அவர் தூங்கியிருப்பார். அன்பை நேரடியாகக் காட்டத் தெரியாவிட்டாலும் அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அவரைப் பார்க்கும்போது பாசம் சுரந்தது. ஒருவிதத்தில் அவர்தான் பல ஆண்டுகளாக அவளது தாயாகவும் தந்தையாகவும் இருந்தார் என்று சொல்லி விடலாம். இளங்கோவனின் மூடியிருந்த கண்களின் இரு பக்கத்திலும் கண்ணிர் வடிந்து காய்ந்திருந்ததை அப்பொழுதுதான் கவனித்தாள்.
இளங்கோவன் அழுததை அவள் ஒருபோதும் பார்த்ததில்லை. அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்ற கேள்வி அவள்
28 தொப்புள்கொடி

இதயத்தைக் குடைந்தது. கண்களைத் திறந்த இளங்கோவன் அவளை அன்போடு பார்த்தார். மெல்ல அவர் கண்கள் நீரில் மூழ்குவதை ஆரபி அவதானித்தாள். அவள் உடல் பதறியது. அப்படியே நிலத்தில் அவர் காலடியில் அமர்ந்தாள். அவர் கால்களைக் கட்டிக் கொண்டாள். அவர் முழங்காலில் முகத்தைப் புதைத்தவாறு,
"ஏனப்பா?” என்றாள்.
"ஆரபி” என்ற இளங்கோவன், "நீ ஹொஸ்பிட்டலிலை என்ற உடன நான் கொஞ்சம் பயந்திட்டன். உன்ரை அம்மாக்கு நடந்த மாதிரி உனக்கு நடந்திடுமோ என்று நினைச்சன்." அவர் தேம்பினார்.
"அப்பா, எனக்கு ஒன்றும் நடக்காது அப்பா. அம்மாதான் சுகமாக இருக்கிறாவே. ஏன் இப்ப கவலைப்படுறியள்?”
"நீ சின்னப் பிள்ளை. நாங்கள் பட்ட கஸ்டம் உனக்குத் தெரியாது. கஸ்டம் தெரியாமலேதான் உன்னை வளர்த்தன். காயங்கள் எங்களோட காய்ஞ்சு போயிட வேணும் என்றுதான் விரும்பினன். ஆனால் நீயும் இதுகளைத் தெரிஞ்சுகொள்ள வேணும். நெஞ்சுக்குள்ள இருந்து, புற்றுநோய் மாதிரி இந்த நினைவுகள் என்னைத் தின்னுது. அதுகளை உனக்குச் சொல்லுறதால நோ கொஞ்சம் குறையுமோ என்னவோ? நீ பலமாக உறுதியோட இருக்க வேணும். நீ வாழுகிற இந்த நாடு மாதிரியில்லை நாங்கள் வாழ்ந்த நாடு."
இளங்கோவன் அவள் தலையைக் கோதினார். கதை கேட்கும் சின்னக் குழந்தை போல் ஆரபி அவர் முகத்தைப் பார்த்தாள்.
அவர் சொல்லச் சொல்லச் சொல்ல விரிந்த அந்தக் காட்சிகள் அவளைத் திக்குமுக்காடச் செய்தன. இத்தனை ஆண்டுகள் கழிந்து தன் தாய், தந்தையைப் பற்றி இன்றுதான் அவள் முழுதாக அறிந்துகொண்டாள்.
O
இளங்கோவன் பிறந்து, வளர்ந்தது சுதுமலை என்னும் சிறிய கிராமம். இதற்கு அருகில் இருக்கும் இன்னோரு ஊர் மானிப்பாய். இதை யாழ்ப்பாணத்தின் கறுவாத் தோட்டம் என்றும் சொல்வார்கள். கறுவாத் தோட்டம் கொழும்பின் பரீஸ் என்று சொல்லலாம். நகர வாழ்க்கையின் நாகரிகங்களை மானிப்பாய் வாழ் மக்கள் வெகுவிரைவில் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனாலும் அதற்கு அருகில் சுதுமலையில் வாழ்ந்த இளங்கோவனின் தாய், தந்தையர் தம் பூட்டன், பாட்டன் வழக்கங்களைத் தவறாது கடைபிடித்தனர். இளங்கோவனின் தந்தையார் பொன்னம்பலம் வாத்தியார் மிகவும் கட்டுக்கோப்பாக
தொப்புள்கொடி 29

Page 18
வாழ்பவர். நெற்றி நிறையத் திருநீறு, வெள்ளை வேட்டி, நீண்ட வெள்ளை மேலணி, அதன் மேல் மடிப்புக் கலையாமல் தொங்கும் சால்வை. அவரது ஒரு பார்வையில் மாணவர் பயந்து நடுங்குவார்கள். அவர் நடந்துவரும் செருப்போசை கேட்டால் போதும் எல்லோரும் பயந்து ஒளிந்துகொள்வார்கள்.
மாணவர்கள் இப்படியென்றால் அவரது மூத்த மகன் இளங்கோவனும், இளைய சகோதரிகள் மூவரும் தந்தையின் முன் தலைநிமிர்ந்து பேசமாட்டார்கள். தாயார்கூட எட்டடி நின்றே பேசுவார். இந்த வழக்கம் இளங்கோவன் பல்கலைக்கழகம் புகுந்து, ஒரு பொறியிலாளனாகக் கொழும்பில் வேலையான பின்பும் தொடர்ந்தது. எத்தனைக் கட்டுப்பாட்டுக்குள் வளர்ந்தாலும் காதலுக்கு வேலி போட முடியவில்லை. இளங்கோவன், திலகா காதல் பல்கலைக்கழகத்தில் மலர்ந்து கொழும்பில் தொடர்ந்தது. அவன் காதல் கதை பொன்னம்பலம் வாத்தியாரின் காதுக்கு எட்டியபோது வாத்தியார் கொதித்தார். இளங்கோவனின் முகத்தைப் பார்க்கவே மறுத்தார். தந்தையை எதிர்க்கவும் துணி வின்றி, தன் காதலைத் துறக்கவும் முடியாது இளங்கோவன் தவித்தான். இத்தனைக்கும் திலகா நல்லதொரு குடும்பத்தைச் சேர்ந்த பெண். ஒரு நீதிபதியின் மகள். செல்வச் செழிப்பான வாழ்க்கை. அன்பும் அழகும் நிறைந்தவள். இளங்கோவனை இழக்க அவள் தயாராக இல்லை.
யாழ்ப்பாணத்து வாலிபர்களுக்கு எழுதாத சட்டம் ஒன்று இருந்தது. தன் சகோதரிகளின் திருமணத்தை முடிக்காது அவர்கள் தங்கள் குடும்ப வாழ்வை ஆரம்பிக்கக் கூடாது. அன்றைய காலத்தில் சீதனம் இன்றிப் பெண்கள் திருமணத்தை நினைத்தும் பார்க்க முடியாது. ஏழை வாத்தியாரிடம் மூன்று பெண்களுக்குச் சீதனம் கொடுக்க வழியில்லை. அவரது நம்பிக்கை நட்சத்திரமே இளங்கோவன்தான். இதனை இளங்கோவன் அறிவான். இளங்கோவனுக்குக் கிடைக்கும் சீதனத்தில் இரண்டு பெண் களுக்குத் திருமணம் செய்துவிடலாம் என்பது வாத்தியாரின் கனவு. திலகாவின் குடும்பத்தினரோ நல்ல சீதனம் கொடுத்துத் தங்கள் மகளின் காதலை நிறைவேற்றத் தயாராக இருந்தனர். ஆனால் இளங்கோவனோ ஒர் இலட்சியவாதி. சீதனம் வாங்குவதே தவறு என்று கருதுபவன். உள்நாட்டில் உழைத்துப் பணம் சேர்க்க முடியாது என்பதை அவன் அறிவான். தனிச் சிங்களச் சட்டம் சிறீலங்காவில் நடைமுறையில் இருந்தது. ஊதிய உயர்வுக்காகச் சிங்களம் படிக்க இளங்கோவன் தயாராக இல்லை. இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிகளாக வாழும் நிர்ப்பந்த நிலை உருவாகிக் கொண்டிருந்தது. அவர்கள் வாழும் நிலங்கள் சிங்களக் குடியேற்றங்களால் சுவீகரிக்கப்பட்டன. பல்கலைக்கழக அனுமதி இன அடிப்படையில் கொடுக்கப்பட்டது.
30 தொப்புள்கொடி

சிறுபான்மையினரான தமிழர், சிங்கள அரசுக்கு எதிராக சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவை மிலேச்சத்தனமாக தடியடிகளால் அடக்கப்பட்டன. இனக் கலவரங்கள் அடிக்கடி நடந்தன. அவற்றிற்குச் சிங்கள அரசு துணைபோயிற்று. விரக்தியுற்ற தமிழ் இளைஞர் சிலர் ஆயுதப் போரட்டத்தில் இறங்கத் துணிந்தனர்.
இந்த நிலையில் இளங்கோவனும் திலகாவும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர். இரண்டு வருடங்கள் திலகா பொறுத்திருக்கத் தயாரானாள். இளங்கோ வெளிநாடு சென்று உழைத்துத் தன் தங்கையரின் திருமணத்தை முடித்த பின்னர் தில்காவை மணப்பதாக உறுதியளித்தான். தந்தையின் தடையை முதன்முதலாக மீறி அவன் சம்பியா சென்றான். அங்கே 'என்டோலா’ என்னும் செப்புச் சுரங்கத்தில் நல்ல வேலையில் அமர்ந்தான். தன் சொல்லைத் தட்டிய மகனை, தான் கண்ணெடுத்தும் பார்க்கப் போவதில்லை என்று பொன்னம்பலத்தார் சபதம் எடுத்தார்.
இளங்கோவன் தன் வார்த்தை தவறவில்லை. தனது இரண்டு சகோதரிகளுக்கும் சீதனத்திற்கு பணம் அனுப்பி வைத்தான். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு அவன் வருவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. பொன்னம்பல வாத்தியார் தன் மகனின் முகத்தில் விழிப்பதில்லை என்ற வைராக்கியத்கை விட்டுக் கொடுக்கத் தயாராகவில்லை. மூத்த மகன் தன் சொல்லைத் தட்டி நடந்ததைத் தாங்க முடியாத வாத்தியாருக்கு அடுத்து இன்னோர் அதிர்ச்சி இளைய மகள் அவரது பள்ளிக்கூடத்திலேயே படித்த ஒரு இளம் ஆசிரியரைக் காதலித்து, பெற்றோரின் அனுமதி இன்றி இரகசியத் திருமணம் செய்துகொண்டாள். அது பொன்னம்பலம் வாத்தியாரைப் பெரிதாகத் தாக்கியது. ஆசிரியர் சேவையிலிருந்து இளைப்பாறிய அவர், வீட்டிற்குள் அடங்கிக் கொண்டார். ஒரு சில நண்பர்களோடு மாத்திரமே பழகினார். தேவாரம், திருவாசகம், புராணங்கள் எனறு கோயிலில் பாடுவதைத் தனது முக்கியத் தொண்டாகக் கொண்டார்.
இளங்கோவனின் கடிதங்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை. திலகாவோ, இளங்கோவன் திரும்பி வந்து தன்னைத் திருமணம் செய்யாவிடில் தான் தற்கொலை செய்யப்போவதாகப் பயமுறுத் தினாள். தந்தைக்குத் தெரியாது தாயின் அனுமதி பெற்று இளங்கோவன் கொழும்புக்கு வந்து திலகாவைத் திருமணம் செய்து, அவளோடு மீண்டும் சம்பியா சென்றான். தன் திருமணம் தாய், தந்தையின்றி நடந்ததில் அவனுக்கு மிகவும் கவலை. தந்தையின் பிடிவாதம் தெரிந்ததால் வேறு வழி அவனுக்குத் தோன்றவில்லை.
இத்தனை கவலைகளுக்கு மத்தியிலும் சம்பியாவில் இளங்கோவன், திலகா இல்லற வாழ்வு இனிதாக இருந்தது.
தொப்புள்கொடி 31

Page 19
அங்கு இளங்கோவனுக்குப் பல நண்பர்கள் இருந்ததால் ஓர் இனிய சூழல் நிலவியது. ஒவ்வொரு இரவும் வெவ்வேறு நண்பர்கள் வீட்டில் குடும்பங்கள் ஒன்று கூடும். மது அருந்துபவர்கள் அருந்துவார்கள். சீட்டாட்டம் ஆடுவார்கள். கேலியும் கிண்டலு மாகப் பொழுதுகள் மகிழ்ச்சியோடு கழிந்தன. தாயிடம் இருந்து மாதத்திற்கு ஒரு கடிதம் இளங் கோவனுக்கு வரும். திலகாதான் அவற்றிற்குப் பதில் எழுதுவாள். இளங்கோவனின் தந்தையின் நலம் குறித்து ஒவ்வொரு கடிதத்திலும் கேட்பாள். திலகாவுக்கும் அவளது மாமியாருக்கும் இடையில் நல்லதொரு உறவு மலர்ந்தது. திலகா மிகுந்த தெய்வ பக்தியுள்ளவள். அவள் கடிதங்களைப் பொன்னம்பலம் வாத்தியாரும் பார்ப்பதாக அறிந்து கொண்டாள். ஒவ்வொரு கடிதத்தையும் பிள்ளையார் சுழியோடு ஆரம்பித்து, ஓம் நமச்சிவாய என்று முடிப்பாள். தனக்குத் தேவாரப் புத்தகங்கள் வாங்கி அனுப்புமாறு மாமியாரிடம் கேட்டிருந்தாள். இந்த வேளையில் ஆரபி அவள் வயிற்றில் கருவானாள். தேவாரப் புத்தகங்கள் பொன்னம்பல வாத்தியாரே வாங்கி அனுப்பினார். தேவாரங்களுக்கு விளக்கங்களையும் அவர் நேரடியாக திலகாவுக்கு எழுத ஆரம்பித்தார். ஆனால் இளங்கோவனுடன் எந்தவிதத் தொடர்பையும் வைத்துக்கொள்ள அவர் தயாராகவில்லை. காலம் ஓடியது. ஆரபி பிறந்தாள். மூன்று வருடங்கள் ஓடிவிட்டன. பொன்னம்பலம் வாத்தியார் வீட்டில் தொலைபேசி இல்லை. அஞ்சல் அலுவலகத்துக்குச் சென்று ஒரு நாள் பொன்னம்பலம் வாத்தியாரும் அவரது மனைவியாரும் திலகாவுடன் தொலைபேசி யில் பேசினார்கள். அவர்களுக்குத் தங்கள் பேத்தியுடன் பேச வேண்டுமென்று ஆசை. தாய் கற்றுக் கொடுத்ததைப் போல் ஆரபியும் தன் மழலையில்,
“பாட்டா, பாட்டி என்றாள்"
பொன்னம்பலம் தம்பதியரின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இது போதாதென்று "தோடுடைய செவியன்' தேவாரத்தைத் தாயிடம் கற்றது போல் அவள் மழலையில் பாடியபோது பொன்னம்பலத்தார் பெரும் மகிழ்ச்சி கொண்டார். ஆரபியைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வயது முதிர்ந்த அந்தத் தம்பதிகளை ஆட்கொண்டது.
திலகா மீண்டும் கருத்தரித்திருந்தாள். சுதுமலைக்கு அவளையும் ஆரபியையும் வந்து செல்லுமாறு மாமன், மாமியர் கேட்டுக்கொண்டனர். அங்கு வர தான் ஆவலாயிருப்பதாகவும் இளங்கோ இன்றித் தாங்கள் வர முடியாது என்றும் திலகா பதிலளித்தாள். அடிமனத்தில் தன் மகனைக் காண வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், இதுவரை காலம் தன் வறட்டுப் பிடிவாதத்தால் உறுதியாக நின்ற பொன்னம்பலம் வாத்தியார் இளக ஆரம்பித்தார். இளங்கோவன் வர அனுமதியளித்த அவர்,
32 தொப்புள்கொடி

தன் போலிக் கெளரவத்தை விட்டுக்கொடுக்காது அவன் வந்தாலும் தான் அவனை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்’ என நிபந்தனை விதித்தார்.
செய்தி கேட்டு இளங்கோவன் திலகாவைக் கட்டியணத்து மகிழ்ந்தான். தன் மனைவியின் அயராத முயற்சி தன்மீது அவள் கொண்ட அன்பின் பிரதிபலிப்பு என்பதை அவனால் உணர முடிந்தது. தாய், தந்தையைக் காணும் ஆவல் மிகுந்தது. சொந்த மண்ணில் கால் வைத்து எத்தனை ஆண்டுகள் என்று எண்ணினான். தான் ஓடி விளையாடிய அந்த மண்ணில் மீண்டும் கால் வைக்கும் அந்த நாளை எண்ணி மகிழ்ச்சி கொண்டான்;.
O
லுசாக்கா விமான நிலையத்திலிருந்து அவர்கள் விமானம் புறப்பட்டது. ஆரபிக்கு அது முதல் விமானப் பயணம். அவளது முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் மாறி மாறி விரிந்தன. திலகா ஆறு மாதக் கர்ப்பிணி. வயிறு நன்கு பெருத்திருந்தது. விமானப் பயணத்தில் பாதி நேரம் அவள் இளங்கோவனின் தோளில் சாய்ந்து தூங்கிவிட்டாள். ஆரபியும் அவனது மடியில் தூங்கினாள். தாய், தந்தையரின் நினைவுகளில் இளங்கோவன் திளைத்தான். தந்தையின் கண்டிப்பு தன் கல்விக்கு எவ்வளவு உதவியது என்பதை நினைத்துக்கொண்டான். தந்தையார் தன் அன்பை வெளிப்படை யாகக் காட்டாவிட்டாலும், ஒவ்வொரு வேளையும் தாயிடம் வந்து 'அவன் சாப்பிட்டானா?” என்று மெதுவாகக் கேட்பதை அறிவான். பத்து வயதில், தனது காலில் ஒரு முறை முள் தைத்த போது, "நோகுதா, நோகுதா?’ என்று கேட்டு, மடியில் தன்னை வைத்து மெதுவாக அந்த முள்ளை எடுத்ததை நினைத்துக் கொண்டான்.
கொழும்பு விமான நிலையத்தில் அவர்களுக்காக திலகாவின் தம்பி தயாபரன் வந்திருந்தான். தயாபரன் கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் முகவர். ஒரு கறுப்பு "பேஜோ 304 அவர்களுக்காகக் காத்துநின்றது. அதை ஒட்டுவதற்கு வயதுவந்த ஒரு சிங்கள ஓட்டுனர் இருந்தார். ஆரபி மாமனிடம் உடனேயே ஒட்டிக் கொண்டாள். தயாபரனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவர்களது தந்தையார் பல ஆண்டுகளுக்கு முன் வாங்கிய வீடு, வெள்ளவத்தை டபிள்யு ஏ சில்வாமாவத்தை இலக்கம் 60ல் இருந்தது. அந்தத் தெரு வுக்கு முன்னைய பெயர் "ஹை ஸ்டீரிட் எல்லாம் சிங்களமயமாகியபோது அந்தப் பெயரும் மாறியது. ஆனால் டபிள்யு ஏ’ என்ற ஆங்கிலம் ஒட்டிக்கொண்டது. வெள்ளவத்தை தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி.
வீட்டின் பெரும் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து அங்கு வந்து வேலைசெய்யும் பல வாலிபர்கள் வாடகைக்கு
தொப்புள்கொடி 33

Page 20
இருந்தார்கள். இரண்டு படுக்கை அறைகளையும், ஒரு சமைய லறையையும் தங்களுக்கு என்று தயாபரன் வைத்திருந்தான். தனியாக குளியலறையும் இருந்தது. ஒரு சுவர் வாடகைக்கு இருப்போரது பகுதிக்கும் இவர்கள் வாழும் பகுதிக்கும் இடையில் இருந்தது.
ஒரு வாரம் கொழும்பில் தங்கி பின்னர் யாழ்ப்பாணம் செல்வதாகத் திட்டம். நாட்கள் கலகலப்பாக ஓடின. கடலைக் காணாத ஆரபி வெள்ளவத்தை கடலோரமே கதியென இருக்க விரும்பினாள். டேகிவலை மிருகக் காட்சி சாலை அவளைக் கவர்ந்தது. ‘கோல் ரோட் சந்தியில் இருந்த கடையிலே சாப்பிட்டு வந்த தயாபரனுக்கு, அக்காவின் சமையல் நாவுக்கு மீண்டும் சுவையைக் கொடுத்தது. திலகா கர்ப்பிணி என்பதால் அவன் அவளை அதிகம் வேலைசெய்ய விடமாட்டான். தானே வெங்காயம் நறுக்கி, தேங்காய் துருவிக் கொடுப்பான். திலகாவும் தம்பிக்குப் பிடிக்கும் என்று ஆலங்காய்ப் பிட்டு, ஒடியல் கூழ் எல்லாம் ஆக்கிக் கொடுப்பாள்.
ஆரபி மாமனின் தோள்களில் கட்டிக்கொண்டு தொங்குவாள். அவன் மெல்லிய மீசையை இழுத்து சேட்டை செய்வாள். அவனைக் குதிரையாக்கி முதுகில் ஏறிக் கொள்வாள். தயாபரன் இன்னொரு குழந்தை போல் ஆரபியோடு சேர்ந்து விளையாடி னான். திலகாவோ அவர்கள் இருவரையுமே தன் குழந்தைகள் போலவே பார்த்தாள். தயாபரன் இளங்கோவனது வாசிப்பு இரசனை அறிந்து மு.வரதராஜனார், ஜெயகாந்தன் புத்தகங்களை வாங்கி வருவான். இளங்கோவனுக்கு இராமகிருஷ்ண மிசனில் இருந்த விவேகானந்தரின் புத்தகங்களும் அறிவுத் தீனியிட்டன.
அன்று திங்கட்கிழமை. இரவு கெஜி. கோச் வண்டியில் யாழ்ப்பாணம் செல்ல அவரகள் ஏற்பாடு செய்திருந்தார்கள். தயாபரன் அடுத்த வாரம் சுதுமலை வருவதாக ஏற்பாடு. திலகா தன் மாமன், மாமியருக்குக் கொழும்பில் இருந்து வாங்கிச் செல்ல ஒரு பட்டியல் போட்டிருந்தாள். சம்பியாவிலிருந்து செப்புத் தகட்டில் செய்யப்பட்ட பிள்ளையார், நடனமாடும் நடராஜப் பெருமாள் எனப் பலவற்றைத் தன் மாமாவுக்கு என்று கொண்டுவந்திருந்தாள். அதைத் தவிர அந்த நாட்டிலிருந்து கொண்டுவருவதற்குப் பெரிதாக ஒன்றும் இருக்கவில்லை. அவள் பட்டியலில் மாமியாருக்குச் சேலைகள், தோடு, காப்பு, சங்கிலி, மாமனாருக்கு வேட்டி, சட்டை, சால்வை எனப் பல இருந்தன. முதலில் நால்வரும் புறக்கோட்டைக்குச் சென்று பொருட்களை வாங்குவதாகவே இருந்தது. ஆயினும் ஆரபியோடு திலகாவால் நடந்து திரிவது சிரமம் என்று கருதி, இளங்கோவனும் தயாபரனும் மாத்திரம் பொருட்களை வாங்கி வரத் தீர்மானித்தனர். ஆரபியோ தானும் வருவதாக அடம்பிடித்துத் தயாபரனின் கழுத்தைக்
34 தொப்புள்கொடி

கட்டிக்கொண்டாள். அவளுக்குப் போக்குக் காட்டிவிட்டு அவர்கள் புறப்பட்டார்கள். ஆரபியின் அழுகுரல் தெரு வரை கேட்டது.
இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் வண்டி ஒன்றிலேயே அவர்கள் பயணம் செய்தார்கள். தனது காரை தயாபரன் எடுத்து வரவில்லை. இருவரின் நெற்றியிலும் திலகா பூசிவிட்ட திருநீற்றுக் கோடுகள் இருந்தன. வண்டியிலிருந்த ஏனைய பயணிகள் தங்களையே நோக்கு வதை அவர்கள் கவனித்தார்கள். பாதை எங்கும் இராணுவம், காவல் துறையினரின் நடமாட்டங்கள் தெரிந்தன. மக்கள் கூட்டம், கூட்டமாகப் பெருத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஏதோ அசம்பாவிதம் நடப்பது போல் உணர்வு. ஆனாலும் அவர்கள் புறக்கோட்டை சேலைக் கடைக்கு வந்து சேர்ந்தார்கள். காலை பத்து மணி. திறந்திருந்த தமிழ்க் கடைகளெல்லாம் அவசர அவசரமாகப் பூட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு வாரமாக தங்கள் கூட்டுக்குள் வாழ்ந்த இளங்கோவன், தயாபரனுக்குத் தங்களைச் சுற்றி நடக்கும் விபரீதங்கள் தெரியவில்லை.
“தம்பியவையள், வீட்டுக்குக் கெதியாகப் போங்கோ. தமிழரின்ரை வீடெல்லாம் கொளுத்திறாங்களாம். யாழ்ப்பாணத் தில பதின்மூன்று ஆமியைச் சுட்டுப் போட்டாங்களாம். இனக் கலவரம் வெடிக்கப்போகுது. வீட்டை போய்ச் சேருங்கோ"
கடையைப் பூட்டிக்கொண்டிருந்த ஒருவர் சொன்னார். இளங்கோவனும் தயாபரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் மனதில் முதலில் ஓடியது திலகா, ஆரபியின் பாதுகாப்பே. வந்துகொண்டிருந்த ஒரு பஸ்ஸில் அவசரமாக ஏறிக்கொண்டனர். அந்த பஸ்ஸிலே வெளிறிப் பயந்த முகங்கள் எல்லாம் தமிழர்களுக்குச் சொந்தம். தயாபரன், இளங்கோவனின் நெற்றியிலிருந்த திருநீற்றைத் தன் கைகளால் துடைத்தான். பின்னர் தன் நெற்றியையும் துடைத்துக் கொண்டான். இளங்கோவனின் உடல் வியர்த்து நீராக ஓடியது. அவனது சட்டை உடலோடு ஒட்டிக் கொண்டது.
யூலை 83. திங்கட்கிழமை 25ஆந் திகதி. காலை 11 மணி. தெருவெங்கும் தமிழ்க் கடைகள் எரிந்துகொண்டிருந்தன. கைகளில் கத்திகள், பொல்லுகள் சகிதம் சாரத்தை முழங்கால் வரை மடித்துக்கட்டிய சிங்கள இனவாதக் காடையர் வேட்டைக்குச் செல்லும் நாய்களைப் போல் தமிழர்களை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
பாதை ஒரங்களில் எரியும் டயர்கள். எரிந்த வாகனங்கள். அதன் உள்ளே பாதி எரிந்தும், எரியாத உடல்கள்.
ஒரு தமிழன் கிடைத்துவிட்டால் அவனைச் சுற்றிக்
கொக்கரிக்கும் காடையர்கள்.
தொப்புள்கொடி 35

Page 21
பஸ்ஸின் ஜன்னல் ஊடாக அக்காட்சிகளைப் பார்க்கவும் பயந்து, அதைத் தவிர்க்கவும் முடியாது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பயங்கரமான மெளனம் பஸ்ஸில். வெளியிலோ கோபக் குரல்களும் கதறும் ஒலங்களும், பஸ் பம்பலப்பிட்டியைத் தாண்டி வந்து கொண்டிருந்தது. இன்னும் சிறிது தூரந்தான். வெள்ளவத்தைக்கு அவர்கள் வீட்டருகில் வந்துவிடும்.
ஆனால் வெள்ளவத்தை நெருங்க, நெருங்க கூக்குரல்கள் அதிகம். எரியும் வீடுகள் அதிகம். இராணுவம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வீட்டுக்குள் இருந்த தமிழர் ஆண், பெண் என்ற பேதமின்றி வெளியே இழுக்கப்பட்டு அடித்து நொறுக்கப்படுகின்றனர். இரத்தம் சிந்தச்சிந்த சிலர் ஒடினர். அவர்கள் வீட்டுக்குள் இருந்த பொருட்கள் எல்லாம் எடுத்துச் செல்லப்படுகின்றன. தெருவில் கூட்டம் அதிகம்.
திடீரென பஸ் குலுங்கி மெதுவாக நகர்ந்தது. இளங்கோவனும் தயாபரனும் பஸ்ஸின் கடைசி ஆசனத்தில் இருந்தார்கள். படபட வென ஒரு காடையர் கூட்டம் பஸ்ஸின் முன் பக்க வாசலால் உள்ளே புகுந்தது.
"தமிழன் இங்கே இருக்கிறானா? அவர்கள் இரத்தத்தை நாங்கள் குடிக்க வேண்டும்.”
நீண்ட கத்தியைக் கையில் வைத்திருந்த ஒரு காடையன் ஒருவன் உரக்கக் கத்தினான். அவன் முன்னால் நெற்றியில் குங்குமம், கழுத்தில் தாலியோடு ஒரு பெண். இன்னொருவன் அப்பெண்ணின் தாலியை உருவினான். அவள் தடுமாறி பஸ்சுக்குள் விழுந்தாள். அவளைக் காப்பாற்ற குனிந்த இன்னொரு தமிழ் இளைஞனின் கழுத்தில் கத்தி பாய்ந்தது. இளங்கோவன் தன்னையறியாது எழுந்தான். தயாபரன் அவன் கைகளைப் பற்றி இழுத்தபடி ஒடும் பஸ்ஸின் பின் பக்க வாசலால் குதித்தான். "அத்தான் ஒடுங்கோ. ஒடுங்கோ” த்யாபரன் குரல் கொடுத்தான்.
இருவரும் வேகமாக பம்பலப்பிட்டி கோயிலைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தார்கள்.
ஒரு பெரிய கூட்டம் கத்தி, பொல்லுகளோடு அவர்களைத் துரத்தியது.
தெருவோரம் எங்கும் மக்கள் கூட்டம் அங்கும், இங்கும் ஒடிக்கொண்டிருந்தார்கள். அந்த நெரிசல்களின் ஊடாக இளங்கோவன் ஓடினான். அந்தக் கூட்டத்துக்குள் தயாபரனை
அவன் தவறவிட்டான். ஒரு கதவு திறந்திருந்த, இஸ்லாமிய உணவு விடுதியின் ஒரமாக ஒடியபோது, ஒருவர் அவனைக்
36 தொப்புள்கொடி

கடையின் உள்ளே இழுத்தார். கதவையும் உடனே மூடினார். தலையில் இஸ்லாமியரின் குல்லாவைப் போட்டிருந்த அவர், இளங்கோவனை ஒர் அறைக்குள் தள்ளிப் பூட்டினார்.
"தம்பி, அந்தச் சாரத்தை எடுத்துக் கட்டுங்க. அல்லா உங்களைக் காப்பாத்தட்டும். பிசாசுகள் மாதிரி திரியிறாங்க. இந்த லேஞ்சியைத் தலையில கட்டுங்க. அல்லா, அல்லா" அந்தப் பெரியவர் அவசரப்படுத்தினார்.
கடையின் கதவுகள் பலமாகத் தட்டப்பட்டன. ஆனால் பெரியவர் அமைதியாக இருந்தார்.
"கதவைத் திறவடா” என்று சிங்களத்தில் பல குரல்கள் கேட்டன.
இளங்கோவன் தன் காற்சட்டையைக் கழட்டி எறிந்து. சாரத்தைக் கட்டிக்கொண்டான்.
கதவு இப்பொழுது இன்னும் பலமாகத் தட்டப்பட்டது. பெரியவர் கைக்குட்டை ஒன்றை எடுத்து அவன் தலையில் கட்டினார். பின்பு நிதானமாகச் சென்று கதவைத் திறந்தார். “என்ன வேணும் உங்களுக்கு? நாங்கள் இஸ்லாமியர். எங்கடை கடை." என்று சிங்களத்தில் சொன்னார்.
கூட்டத்தின் மத்தியில் ஒரு முணுமுணுப்பு. “இங்கே ஒரு தமிழன் வந்தானா?” என்று ஒருவன் உரத்துக் கேட்டான்.
“என் தம்பி ஒருத்தன்தான் இங்கே இருக்கிறான். டேய் தம்பி, இங்கே வாடா" என்று மீண்டும் சிங்களத்தில் அவர் சத்தமிட்டார்.
இளங்கோவன் மெதுவாக வெளியே வந்தான். இதற்குள் கூட்டம் மெல்ல விலக ஆரம்பித்தது.
இளங்கோவன் பெரியவரின் கைகளைப் பிடித்து, "நீங்கள் இல்லை யென்றால்...?”
"அல்லாதான் உங்களைக் காப்பாற்றினார். இந்தக் கலவரம் முடியும் மட்டும் நீங்க இங்கேயே தங்கலாம்."
“என் பெஞ்சாதி, பிள்ளைக்கு என்ன நடந்ததோ தெரியாது. நான் போக வேணும்"
“தம்பி இந்த உடுப்போட வெளியில போனாப் பயமில்லை. போங்க. அல்லா உங்களை நிச்சயமாக் காப்பாத்துவார். கொஞ்சம் பொறுங்க. நான் வெளியிலே என்ன நடக்குது என்று பார்க்கிறன்”
இருவரும் கதவின் இடைகளுக்கு ஊடாகப் பார்த்தார்கள்.
தொப்புள்கொடி 37

Page 22
அங்கே அவன் கண்ட காட்சி . . .
இளங்கோவன் கண்களை மூடிக் கொண்டு விம்மி வெடித்து அழுதான்.
பெரியவர் "அல்லா, அல்லா” என்றவாறு முழந்தாளில் நிலத்தில் அமர்ந்தார்.
வெளியே. . .
நால்வர் பிடித்திருக்க இன்னொருவன் தயாபரன்மீது பெற்றோலை ஊற்றிக்கொண்டிருந்தான்.
38 தொப்புள்கொடி

"Each soul is a circle whose circumference is nowhere (limitless) but whose centre is in some body. Death is but a change of centre. God is a circle whose circumference is nowhere, and whose centre is everywhere. When we get out of the limited centre of the body, we shall realize God, our true Self
- Swami Vivekananda
நேரம் மாலை 2 மணி.
இளங்கோவன் பைத்தியக்காரனைப் போல் விவேகானந்தரின் தத்துவத்தைச் சபித்தபடி வெள்ளவத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.
கோடு போட்ட சாரமும் தலையில் கட்டிய கைக்குட்டையும் அவனை முழுக்கமுழுக்க ஒரு முஸ்லிமாகவே காட்டின. எதுவுமே நடக்காதது போல் அவன் நடந்தான். அச்சம் என்பது அவனை விட்டுப் போய்விட்டது. எரியும் வீடுகளோ வாகனங்களோ பேய் பிடித்தவர் போல் அலையும் அந்த வெறியர்களோ ஆங்காங்கே கேட்கும் ஒலக் குரல்களோ அவனுக்குக் கேட்கவும் இல்லை. பார்வையில் படவும் இல்லை. அவன் கொலைகாரர்களோடு சேர்ந்து நடந்தான். கொலையுண்டவர்களைக் கடந்து போனான். இயந்திரத்தால் இயக்கப்பட்ட ஒரு மனிதனைப் போல் அவன் நடந்தான். அவன் வெறுங்கையோடு நடப்பதைச் சகிக்க முடியாத ஒருவன், தான் கொள்ளை அடித்த சிறிய வானொலிப் பெட்டி ஒன்றை இளங்கோவனின் கையில் திணித்து விட்டுச் சென்றான்.
டபிள்யு ஏ சில்வாமாவத்தை.
இலக்கம் 60. அந்த வீடு அங்கில்லை.
எரிந்து, கருகிய கட்டிடம் ஒன்று புகைந்தது. அருகிலிருந்த இன்னும் சில வீடுகள் எரிந்து கருகிக்கொண்டிருந்தன. இளங்கோவன் வெறிச்சிட்டிருந்த அந்தக் கருகிய கட்டடத்துக்குள் திலகா, ஆரபியின் எரிந்த உடல்களைத் தேடினான். சாம்பலும்,
தொப்புள்கொடி 39

Page 23
கரியுமே தெரிந்தன. தெருவோரமாக நடக்க ஆரம்பித்தான். அவன் நடந்த தெரு எது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. எங்கே போகிறான் என்றும் அவனுக்குப் புரியவில்லை. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம்கூட அவனிடம் இல்லை. இருளில் பிறந்து, இருளில் நடந்து, இருளோடு கலந்தது போல் அவன் கரைந்து கொண்டிருந்தான். அவன் கண்களும் மெல்ல மெல்ல இருண்டன. கால்கள் பின்னின. தெருவோரத்தில் விழுந்தான்.
O
மீண்டும் இளங்கோவன் கண் விழித்தபோது, தான் ஒரு மென்மையான கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தான். தனது உயிர் பிரிந்துவிட்டதாகவே அவன் முதலில் எண்ணினான். தானிருப்பது வேறோர் உலகிலா என்று புரியாது விழிகள் சுழன்றன. பெரியதொரு கட்டில். அழகிய திரைச் சேலைகள் தொங்கும் சாளரங்கள். அலங்காரமான கண்ணாடி மேசை,
ஒரு மென்மையான கை அவன் நெற்றியைத் தடவியது. நரைத்த தலை முடி அவன் கன்னத்தில மெதுவாக உரசிச் சென்றது. வெண்ணிறச் சேலை, கருணை பொங்கும் முகம், சுருங்கிய கன்னங்களோடு, அன்பாகப் பார்க்கும் விழிகள். முதிர்ச்சியிலும் பால் வண்ண அவள் முகத்தில் ஒர் ஒளி வண்ணம் தெரிந்தது.
"மகனே, உனக்கொன்றும் நடக்கவில்லை. கவலைப்படாதே" சிங்களத்தில் அந்த வயோதிப மூதாட்டி பேசினாள்.
"இந்த நாட்டுக்கு என்ன நடந்ததோ தெரியல்லை. நல்லதும், கெட்டதும் தெரியாமல் திசைமாறிப் போகுது. கடவுளே, இந்த மக்களைக் காப்பாற்று. உன்னை தெருவோரத்தில என்ரை மகன் கண்டிருக்காட்டால் என்ன நடந்திருக்கும்? இதைக் குடி மகனே"
அவள் இளங்கோவனை அணைத்தபடி ஒரு கண்ணாடிக் குவளையில் இருந்த பழரசத்தை அவனுக்குப் பருகக் கொடுத்தாள். அப்பொழுது யாரோ நடந்துவரும் ஓசை கேட்டது.
"ஒ நீங்கள் எழுந்துவிட்டீர்களா? நல்லது.” என்று கூறியபடி வெண்ணிற நீண்ட காற்சட்டையும் மேலங்கியும் அணிந்த ஒருவர் இளங்கோவனை நோக்கி வந்தார். மூதாட்டியின் மறு அச்சாகவே அவர் காட்சி அளித்தார். அவர் ஆங்கிலத்தில் பேசினார்.
"நான் செனிவிரத்தினா. ஒரு டொக்டர். உங்களுக்கு நடந்த கொடுமைக்காக வருந்துகிறேன். அரசியல் இலாபங்களுக்காக சமயம், மொழியென்று மக்களுக்கு வெறியூட்டிவிட்டார்கள் அரசியல்வாதிகள். நாடு கண்டறியாத கொடுமைகள் நடக்கின்றன. அதற்குப் பின்னணியில் இந்த நாட்டின் தலைவர் முதல், அமைச்சர்
4 O தொப்புள்கொடி

வரை எல்லோரும் இருக்கின்றார்கள். எல்லோருடைய கைகளிலும் அழிக்க முடியாத இரத்தக் கறை. என் இனத்தின் செயலுக்காக நான் வெட்கப்படுகிறேன். என்னால் உங்களுக்கு என்ன செய்ய முடியும்? சொல்லுங்கள். சகோதரனே, இந்த வீட்டில் நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தங்கலாம்” என்றார்.
இளங்கோவன் கண்களை மூடிக்கொண்டான். நடந்து முடிந்த காட்சிகள் மெல்ல, மெல்ல அவன் மனத்திரையில் ஒட ஆரம்பித்தன. கண்ணிர் வடிந்து அவன் காதுவரை சென்றது. அந்தத் தாயின் மென்மையான கரம் அவன் கண்ணிரைத் துடைத்தது.
"அழாதே மகனே" என்றாள்.
இளங்கோவன் அவளது கையைப் பற்றிக்கொண்டு எழுந்து அவள் மார்பில் முகம் புதைத்து அழுதான். அவளும் அவனைத் தன் மார்போடு சேர்த்து இறுக அணைத்துக் கோண்டாள்.
ஒரு சில விநாடிகளில் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு இளங்கோவன். ஆங்கிலத்தில்,
"நன்றி அம்மா. நன்றி டாக்டர். என் மனைவி, பிள்ளைக்கு என்ன நடந்ததோ தெரியாது. நான் அவர்களைப் பார்க்க வேண்டும்.” என்றான்.
"கடவுள் சித்தத்தால் அவர்களுக்கு ஒன்றும் நடந்திருக்காது” என்றாள் தாய்.
"கவலைப்படாதீர்கள் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்போம். உங்கள் பெயரென்ன ? அவர்கள் பெயர் என்ன ? பல அகதி முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் விசாரித்துப் பார்க்கலாம்." என்றார் செனிவிரத்னா.
தாயார் அவர்களுக்கு உணவு பரிமாறினாள். இளங்கோவ னிடம் முழு விபரங்களையும் அறிந்துகொண்ட பின், தொலைபேசி மூலம் பலரைத் தொடர்புகொண்டு திலகா, ஆரபியைப் பற்றி செனிவிரத்னா விசாரித்தார். ஆனால் எந்தப் பயனும் இருக்க வில்லை அவர் சளைக்கவில்லை. தனது வாகனத்தில் அகதி முகாம்களைப் பார்வையிடப் புறப்பட்டார். இன்னும் கலவரங்கள் உச்ச நிலையில் இருந்ததால் இளங்கோவனை அவர் அழைத்துச் செல்லவில்லை. அகதி முகாங்களில் ஆயிரக்கணக்கானோர் இருந்தார்கள். அதைவிடப் பல்லாயிரக் கணக்கானோர் தங்கள் உறவுகளைத் தேடி அங்கு குவிந்தார்கள். முழுமையான பெயர் பட்டியல்களைப் பார்ப்பது சுலபமாக இருக்கவில்லை.
நல்ல செய்தி அன்றிரவு அவர்களுக்குக் கிடைத்தது. திலகாவும், ஆரபியும் இரத்மலானை இந்துக் கல்லூரியில் இருப்பதாக ஒரு
தொப்புள்கொடி 4

Page 24
நண்பர் மூலம் செனிவிரத்னா அறிந்து கொண்டார். சென்ற உயிர் மீண்டது போன்ற மகிழ்ச்சி. ஊரடங்குச் சட்டம் கொழும்பில் இருந்ததால் அடுத்த நாள் காலை வரை அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை.
திலகா, ஆரபி இனக் கலவரத்தில் இரையாகாமல் இருந்ததற்கு அவர்கள் வீட்டில் வாடகைக்கு இருந்த தமிழ் இளைஞர்களே காரணம். பிரச்சன்ைகள் பெரிதாவதைத் தெரிந்துகொண்ட அவர்கள், திலகா, ஆரபியையும் அழைத்துக்கொண்டு அகதி முகாமுக்கு முதலிலேயே போய்விட்டார்கள். அவர்கள் வீட்டி லிருந்து சென்ற சில நிமிடங்களிலேயே அந்த வீடு சூறையாடப் பட்டுத் தீக்கிரையானது.
வயிற்றில் பிள்ளை, கையில் மூன்று வயதுக் குழந்தை, கணவனின், தம்பியின் கதை தெரியாத நிலை திலகா திக்குமுக்காடினாள். கந்தசஷ்டி கவசம் ஒன்றே அவள் வாய் முணுமுணுத்தது. கால் நீட்டி இருக்கக்கூட இடமில்லாத அகதி முகாம். எழுந்தால் இருந்த இடம் போய்விடும் என்ற அச்சத்தில் ஒரே இடத்தில் அசையாது இருக்க வேண்டிய நிலை. இயற்கையின் தேவைகளைக் கட்டுப்படுத்த முடியாத தவிப்பு. அழுது அழுது களைத்துப் போய் மடியில் தூங்கும் ஆரபி. இனி அழுவதற்குக் கண்ணிர் இன்றி, அழுவதை நிறுத்திக்கொண்டாள் திலகா.
பொது இடங்கள் கழிவறைகளாக, தாங்க முடியாத துர்நாற்றம் மூச்சடைக்க வைத்தது. அகதிகளுக்கு ஒரு முகாம். ஈக்களோ அகதிகளின் உடல்களைத் தங்கள் முகாமாக்கிக் கொண்டன. ஒரு பாண் துண்டுக்குப் பல மணி நேரம் நிரையில் நின்று வாங்குவதற்கு உடலில் வலுவின்றி உண்ணாமலே இருந்தோர் சிலர். களைப்பு மேலிட்டுக் கண்ணுறங்க இடமின்றி, கடவுளை வேண்டவும் சக்தி இல்லாமல், மரணம் வராதா என்று நினைப்பில் சிலர். சொந்தங்களுக்கு என்ன நடந்தது என்ற ஏக்கத்தில் புதிதாக வருபவர்களை ஆவலோடு பார்த்து ஏமாறும் இன்னும் சிலர்.
'உங்கள் கணவரை வெட்டிக் கொன்றுவிட்டார்கள். அதைக் கண்ணால் கண்டேன்’ என்ற செய்தி கேட்டுக் கதறியழும் பெண்கள். சிவனின் கழுத்தில் தங்கிய விசம் போல் துன்பங்கள் எல்லாம் இங்கே ஒரு இடத்திலேயே குடிகொண்டன.
அகதி முகாமுக்கு இளங்கோவன் வந்தான். மயக்கமா தூக்கமா என்ற தெரியாத நிலையில் துவண்டு கிடந்த ஆரபியைத் தோளில் போட்டு மறுகையால் திலகாவை அணைத்துக் கொண்டான். அவனைக் கண்டதின் மகிழ்ச்சியாலோ தாங்கள் படும் துன்பத்தின் நெகிழ்ச்சியாலோ திலகா கண்களில் மீண்டும் கண்ணிர் சுரந்தது. நெஞ்சை அடைத்த தயாபரனின் மறைவை திலகாவுக்குச் சொல்லும் தைரியம் இன்றி வேதனையைத் தனக்குள்
42 தொப்புள்கொடி

புதைத்து, புகைந்துகொண்டிருந்தான் இளங்கோவன். முகாமில் இருந்த எல்லோர் மனதிலும் இருந்த ஒரே ஒரு கேள்வி எவ்வாறு, எப்போது அகதி முகாமில் இருந்து வெளியேறுவது?
இலங்கை அரசு, இந்தியாவிடம் வாங்கிய இரவல் கப்பலில் அகதிகளைச் சொந்த நாடான ஈழத்திற்கு அனுப்பி வைத்தது. 'சிதம்பரம்' என்ற கப்பலில் சிலர் சென்றனர். இளங்கோவன் குடும்பத்தினருக்கு அதில் இடம் கிடைக்கவில்லை. "லங்கா கலியாணி’ எனும் சரக்குக் கப்பலில்தான் அவர்களுக்கு இடம் கிடைத்தது. அறுநூறுக்கும் மேற்பட்ட நலிந்து, மெலிந்து, யாவற்றையும் இழந்து, ஆட்டு மந்தைகள் போல் அகதி முகாமில் அடைக்கப்பட்ட அந்த மக்கள் உப்புக் கடற் காற்றைச் சுவாசிக்கும் நிலையில் இல்லை. மாற்ற ஆடை இன்றி, அழுக்குத் துணிகளால், அவர்கள் நீர் காணாத உடலை மறைத்திருந்தனர். பெண்களின் நிலையோ பரிதாபம். கட்டிய சேலைகளைக் கிழிக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் அவர்களுக்கு இருந்தது.
கடல் காற்று வழமையாகத் தரும் சுகத்தைத் தரவில்லை. நடுக்கடலில் கப்பலின் மேல் தட்டத்தில் திலகா. அவள் உடலோ உள்ளமோ எதையும் தாங்கும் நிலையைக் கடந்தது. நிலத்தில் கால் வைக்க முடியாத அளவுக்குப் பலர் வாந்தி எடுத்தார்கள். இதில் திலகாவின் பங்கும் குறைந்ததல்ல. கப்பலில் ஏறிய பின்னரே இளங்கோவன் தயாபரனுக்கு நடந்த கதியை அவளுக்குச் சொன்னான்.
அதன் விளைவு, அவனாலும் தாங்க முடியவில்லை.
திலகா மயங்கி ஒரு மூலையில் விழுந்துவிட்டாள். அவளைச் சுற்றி இரத்தம் ஓட ஆரம்பித்தது. அங்கிருந்தவரகள் தங்களால் இயன்ற மட்டும் துணிகளை அவளைச் சுற்றி விரித்தார்கள். அகதியாகிவிட்ட ஒரு பெண் வைத்தியர் அவளைப் பரிசோதித் தார்.
மனித இனத்தின் அகோர தாண்டவத்தைப் பார்க்காமலே அவள் வயிற்றில் இருந்த கரு கடல் நீரில் கரைந்தது. அழிந்து போய்விட்ட பலவற்றில் அதுவும் ஒன்றானது.
இளங்கோவன் காதலித்து, வாழ்க்கை நடத்திய திலகாவை இழந்தான். திலகாவின் உயிர் போகவில்லையே அன்றி, அவள் பழைய திலகாவாக இல்லை. திலகா மெளனியானாள். ஆரபியின் 'அம்மா, அம்மா’ என்ற அழைப்பு அவள் காதுகளில் விழவில்லை. சேலை நழுவுவது அவளுக்குத் தெரியவில்லை. அவள் மனம் வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. இளங்கோவனின் கழுத்தை ஆரபி இறுகப் பற்றிக்கொண்டாள். ஒரு கணங்கூட அவனைப் பிரிய மறுத்தாள்.
தொப்புள்கொடி 43

Page 25
கப்பல் காங்கேசன்துறையில் கரை தட்டியது. ஊரே திரண்டு அவர்களை வரவேற்றது. பாதை எங்கும் தண்ணிர்ப் பந்தல்கள். ஒடியோடி தொண்டர்கள் கப்பலில் வந்தவர்களுக்கு உணவு உடைகள் என வழங்கினர். சொந்தங்களைத் தேடிப் பலர் காத்திருந்தனர். தன் பிள்ளை உயிரோடு அந்தக் கப்பலில் வருவானா என்று ஏங்கும் தாய்மார்கள் பலர். தன் செல்வங்களைக் கண்டு பெரும் ஆறுதல் கொண்ட பெற்றோர் சிலர். இளங் கோவனை அடையாளங்கண்ட நண்பன் ஒருவன் ஒடி வந்தான்.
இடிமேல் இடியென்பார்கள். பட்ட காலிலே படும் என்பார்கள். எல்லாம் இளங்கோவனுக்குப் பொருந்தின.
பொன்னம்பலம் வாத்தியார் ஒரு வாரத்துக்கு முன் மாரடைப்பில் இறந்துவிட்டாராம்.
போதும், போதும் என்றாகிவிட்ட நிலையில், கிடைத்த முதல் விமானத்திலேயே இளங்கோவன் குடும்பம் சம்பியா திரும்பியது.
இழந்த நிம்மதி திரும்பவில்லை. இளங்கோவனுக்கு, திலகாவும் ஒரு குழந்தையானாள். தலை இழுத்துப் பின்னி விடுவது முதல் உணவு ஊட்டுவது வரை அவனே செய்ய வேண்டியதாயிற்று. நண்பர்களின் மனைவியர் ஆரபியைப் பராமரிக்கும் தாயாகினர். துன்பங்கள், துயரங்கள் மத்தியிலும் மனம் என்பது மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் நிற்பதில்லை. தன்னையே பராமரிக்க முடியாத திலகா ஒரு மகனுக்குத் தாயானாள். இனப்படுகொலையின் விளைவாகத் தன் குடும்பம் சிதறுண்டு போவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நாங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். அரசியல் அடாவடித்தனங்களால் ஓர் இனத்தை அழிக்க முடியாது என்பதைச் சிங்கள அரசுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இளங்கோவன் மனதில் தோன்ற ஆரம்பித்தது. தன் பிள்ளைகளின் பாதுகாப்பு, கல்வி, எதிர்காலம் என்பனவற்றை எல்லாம் எண்ணியபோது, வேறு நாட்டிற்குப் போவதே ஒரே வழி எனத் தீர்மானித்தான். இளங்கோவன் வெவ்வேறு நாடு களுக்குச் செல்ல விண்ணப்பிக்க ஆரம்பித்தான். அவனது கல்வித் தகைமைகளும், வேலை அனுபவங்களும் ஆஸ்திரேலியாவுக்கு வர வழிவகுத்தன.
மெல்பேர்னில் அவன் காலடி வைத்தபோது ஆரபிக்கு ஐந்து வயது. இளையவன் சம்பந்தனுக்கு ஒன்பது மாதம். மனித உரிமைகளை மதிக்கும் ஒரு சுதந்திர நாட்டிலே தான் காலடி வைத்ததாக எண்ணினான். எதுவரினும் அதை எதிர்கொள்ளும் நம்பிக்கை அவன் நெஞ்சிலே உறுதி பெற்றது.
44 தொப்புள்கொடி

இ: தரையில் இருந்த ஆரபியின் நாடியைப் பிடித்து
ர்த்தினார். அவள் கண்கள் பனித்திருந்தன.
"ஆரபி, நீ அழுகிறதுக்காக எங்கடை கதையைச் சொல்ல யில்லை. உன்ரை அம்மா ஆறு மாதக் கர்ப்பிணியாக இருந்த போதுதான் இதெல்லாம் நடந்தது. அப்ப நடந்த சம்பவங்களால எந்த உறுதியான பெண்ணும் உருக்குலைஞ்சு போயிருப்பாள். அது உனக்கு நடக்கக் கூடாது." அவர் நீண்டதொரு பெரு மூச்செறிந்தார்.
"அப்பா, அவ்வளவு நடந்தும் நீங்கள் இன்றைக்கு நிமிர்ந்துதான் நிற்கிறியள். நான் இனி கவனமாக இருப்பன். எனக்கொன்றும் நடக்காது பயப்படாதேங்கோ, களைச்சுப் போனிங்கள். கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளுங்கோ. இப்ப நாலு மணியாகுது. மாதவன் இன்னும் ஒரு மணித்தியாலத்தில வந்திடுவார். நானும் கொஞ்சம் படுக்கப் போறன்" என்ற ஆரபி, தனது படுக்கை அறை நோக்கி நடந்தாள். தன் தந்தையின் வாழ்க்கையில் இத்தனை விபரீதங்களானால், அவருக்குப் பின்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்த மாதவன் வாழ்வில் என்னவெல்லாம் நடந்திருக்கும் என்ற எண்ணம் நிழலாடியது. அவன் தன் இளமைக் காலத்தைப் பற்றி வாய் திறப்பதில்லை.
மெதுமையான படுக்கையில் படுத்தபடி ஆரபி அறையின் முகட்டைப் பார்த்தாள். வாழ்க்கையில் எதிர்நீச்சலிட்டுத் தன்னை இன்று ஆளாக்கிவிட்ட தந்தையை நினைத்த போது மனதில் ஒரு நெகிழ்ச்சி. தாயைவிடத் தந்தையிடமே அவள் ஒட்டிக் கொண்டவள். சில சமயங்களில் தாய்மீது சினங்கொண்டுள்ளாள். எத்தனை பெரிய சோகங்களைத் தன் தாய் சுமந்தாள்? சுமக் கின்றாள் என்று எண்ணும் போது மனம் வருந்தியது. இப்பொழுது என்றுமில்லாத அளவு பாச உணர்வு தாய்மீது பெருகியது. தாய் மனக் குழப்பத்துடன் பல ஆண்டுகளாகப் போராடியதை அவள் அறிவாள். சுவாமி படங்களின் முன்னே மணிக்கணக்கில் கந்தசஷ்டிக் கவசமும் தேவாரமும் பாடிக்கொண்டே இருப்பாள். சிறிய ஒரு அசம்பாவிதத்திற்கும் பயந்து அழுவாள். பள்ளிக்
தொப்புள்கொடி 45

Page 26
கூடத்தில் இருந்து ஆரபி ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் பதறிவிடுவாள்.
O
திடீரென ஒரு துர்நாற்றம் தன் மூக்கில் நுழைவது போல் ஆரபி உணர்ந்தாள். அருவருப்போடு முகத்தைத் திருப்பினாள். நிச்சயமாக அது அவள் தங்கியிருக்கும் விடுதியில் இருந்து வரவில்லை. அந்த மணம் மிகப் பரிச்சயமானது. அவள் அதிகம் வெறுத்தது. சிகரட் புகை, பியர், சலம் எல்லாம் சேர்ந்து வயிற்றைக் குமட்டும் நாற்றம். பனிப்புகையின் ஊடாக ஏதோ படிக்கட்டுகள் தெரிவது போல் இருந்தது. மெல்ல, மெல்ல அந்த நினைவுகள் திரும்ப ஆரம்பித்தன.
ஒரு கையில் தம்பி சம்பந்தனைத் தூக்கி, மார்போடு அணைத்தவாறு இளங்கோவன் ஒவ்வொரு படியாக ஏறிக் கொண்டிருந்தார். ஐந்து வயது ஆரபி, மறுகையைப் பிடித்தவாறு அவர் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது தாவித் தாவி படிகளில் ஏறுவாள். அவர்கள் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளில் பழைய பத்திரிகைகளும், குடித்துவிட்டுப் போட்ட 'பியர்' போத்தல்கள், 'கோக் தகரக் குப்பிகள் செறிந்து இருக்கும். சில சமயங்களில் போத்தல்கள் உடைந்து சிதறியிருக்கும். அங்கு வரும் துர்நாற்றந்தான் அது. 'பொக்ஸ் கில்' எனும் இடத்தில், மூன்று மாடிக் கட்டடத்தில், இரண்டாவது மாடியில் அவர்களின் வாழ்விடம். இரண்டு சிறிய அறைகள், அவற்றைவிடச் சிறிய சமையலறை.
அதிகாலையில் தன்னைத் தட்டி எழுப்பி, "பள்ளிக்கூடம் போக வேணும். கெதியாகப் பல்லுத் தீட்டு.” இளங்கோவன் சொல்வது அவளுக்கு நினைவில் இருந்தது.
ஐந்து வயதிலேயே தன் தலையைத் தானே வாரி, உடை மாற்றி, புத்தகங்கள் எடுத்துப் பள்ளிக்கூடம் செல்லத் தயாராவது மனதில் நிழலாக ஓடியது. அந்த வேளையில் இளங்கோவன், ஆரபி பள்ளிக்கூடம் கொண்டு செல்லவும் காலை நேரத்துக்கும் உணவு தயாரிப்பார். சம்பந்தனுக்கு உடை மாற்றி, அவனுக்கு வேண்டிய உணவையும் எடுத்துக் கொண்டு, மூவருமாக வீட்டை விட்டுப் புறப்படுவார்கள்.
ஆரபிக்குச் சட்டென்று தம்பி சம்பந்தனைப் பராமரித்த வெள்ளைக்காரப் பெண்ணின் முகம் ஞாபகத்தில் வந்தது. மஞ்சள் படிந்த பற்கள். இடுக்கில் புகையும் சிகரட் அவள் பேசும்போதும் சிகரட் வாயில் இருக்கும். அவள் உடல் வேர்வை நாற்றத்தில் இரவு குடித்த மதுவின் மணம் கலந்து வீசும். ஆரபி மூக்கைப் பிடித்துக்கொள்வாள். இளங்கோவன் அப்படிச் செய்வது நல்ல பழக்கமல்ல என்று கண்டித்தாலும், அந்த ஒரு விடயத்தில் தன் செய்கையை அவள் மாற்றவில்லை. வேலை முடிந்து
46 தொப்புள்கொடி

மாலையில் வரும்போது இளங்கோவன் ஆரபியை பள்ளிக்கூடத் திலிருந்து கூட்டிக்கொண்டு, சம்பந்தனையும் அந்தப் பெண்ணிடம் இருந்து காப்பாற்றிக் கொண்டு வருவார். காலையில் சுத்தமாகப் போனவன், மாலையில் தொட முடியாத அளவு அழுக்கோடு வருவான். இளங்கோவன் மூவருக்கும் இரவு உணவு தயாரிப்பார். வழமையாகச் சோறும், பருப்பும் அவர்கள் உணவாக இருக்கும். இரவு உணவு முடிந்ததும் திலகாவைப் பார்க்க மூவரும் பூட்ஸ் கிரே மன நோயாளர் வைத்தியசாலைக்குச் செல்வார்கள்.
தாயைக் காண்பதில் ஆரபிக்கு ஆவல் இருப்பதில்லை. ஒர் அச்சம் இருந்தது. தந்தையின் பின்னால் மறைந்து கொள்வாள் பிள்ளைகளைக் கண்டதும் திலகாவின் முகம் மலரும். அதே சமயம் கண்ணிரும் வடியும். திலகா எப்படி அழைத்தாலும், ஆரபி தாயை நெருங்கமாட்டாள். சம்பந்தனோ தாயைக் கட்டிக் கொண்டு முத்தம் கொடுப்பான்.
சில ஆண்டுகளில் திலகா குணமாகி அவர்கள் புதிய வீட்டிற்குப் போன பின்னும், அவளை அறியாது ஆரபிக்கு அந்தத் துர்நாற்றம் நினைவில் வரும்.
O
ஆரபியின் செல்லிடைத் தொலைபேசி அலறியது. அப்பொழுது தான் தான் விடுதியில் படுக்கையில் இருப்பதை உணர்ந்து, இன்றைய உலகுக்கு மீண்டும் வந்தாள்.
இரவு ஒன்பது மணி, மாதவன்தான் கதைத்தான். "ஆரபி, எப்படி இருக்கிறீங்கள் ?” “எனக்கு நல்ல சுகம். எப்ப வாlங்கள் ?” "அதைச் சொல்லத்தான் எடுத்தனான். இரவு தமிழ் பேப்பர் அடிக்க வேணும். இப்ப வர ஏலாது. காலைமை வெள்ளென வந்திடுவன். கோபமே?”
மாதவனின் வார்த்தைகள் ஆரபிக்கு மிகுந்த ஏமாற்றத்தைக் கொடுத்தன. அவளுக்கு அவன் மடியில் சிறிது தலைவைத்துப் படுக்க வேண்டும் போலிருந்தது. தன்னைப் பற்றியோ தன் குழந்தை பற்றியோ அவனுக்கு அக்கறையே இல்லையா என்ற எண்ணத்தை அவளால் தடுத்துநிறுத்த முடியலவில்லை.
“என்ன பேச்சைக் காணம் ? கோவமா ? புரிஞ்சுகொள் ளுங்கோ” மாதவன் வேண்டினான்.
“காலையில சந்திப்பம்." என்றாள்.
அவளுக்குக் கோபமாக இருந்தது. ஆனாலும் காட்டிக் கொள்ளவில்லை. பல்லைக் கடித்தாள்.
தொப்புள்கொடி 47

Page 27
தான் அவனைக் காதலித்தது பிழையா? தெரிந்தும் அவனை மணந்தது பிழையா? அவளுக்கும் புரியவில்லை. இத்தனைத் துன்பங்களையும் கடந்து தன்னை ஆளாக்கிய தந்தையை நினைத்தாள். அவரைப் போல் தன்னையும் வயிற்றில் வளரும் தன் குழந்தையையும் மாதவன் காப்பாற்றுவானா? குழம்பினாள் ஆரபி.
O
அவள் குழம்பியபோதுதான் காதல் அரும்பியது. அப்போது அவளுக்குப் பதினைந்து வயதுதான். முதன் முறையாக மேடை ஏறுகின்றாள். தனியாக அல்ல. அவளது தோழிகள் பலர் சேர்ந்த குழு நடனம.
"பரத நாட்டியம் என்பது சுலபமாகக் கற்றுக்கொள்ளக் கூடிய கலையல்ல. இசையோடும் பாட்டின் கருத்தோடும் உடலும், உள்ளமும் முற்றாகக் கலந்து ஒவ்வொரு அங்கமும் அழகுற ஆடும் அற்புதக் கலை."
ஆசிரியை அரங்கத்தின் ஒப்பனை அறையில் இருந்து பிரசங்கம் செய்கின்றாள்.
1995ஆம் ஆண்டு கார்த்திகை மாதம். மெல்பேர்னில் பார்க்வில் யூனிவேர்சிட்டி பள்ளிக்கூடத்தில் மாவீரர் நாள். ஆரபி தன் சக மாணவிகளோடு மண்டபத்திற்கு வந்த போதே மலைத்துப் போனாள். மஞ்சள், சிகப்பு வர்ணங்களால் மண்டபம் மிக அலங்காரமாக இருந்தது. பிரம்மாண்டமான சோடனைகள். வெள்ளம் போல் தமிழ் மக்கள். அறுநூறு மாவீரரின் படங்கள் அங்கே அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தன. அன்றைய நிகழ்வுக்குப் பொறுப்பான மாதவன் மேடையில் தோன்றியபோது பலத்த கைதட்டல். தானே எழுதிய கவிதையை உணர்வோடு அவன் படித்தான். ஒடியோடி எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்தான். ஒலிபெருக்கியைச் சரியாக இணைப்பது முதல், ஒளியமைப்பைக் கவனித்தவாறு, பேச்சாளர் குரல் அடைக்கும் போது மேடையில் தண்ணிர்க் குவளையோடு வருவது வரை எல்லாவற்றிலும் அவனைக் காணக்கூடியதாக இருந்தது.
முதல் மேடை. ஆரபி நடுங்கிக்கொண்டிருந்தாள். அவள் தோழிகள் எல்லோருமே முன்னர் மேடையேறியவர்கள். அவளுக்குத் தொண்டை அடைத்தது. வந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்த போது தலை சுற்றியது. மாவீரரைப் போற்றும் பாடல் ஒன்றுக்கு ஆடுவதற்கு அவர்கள் பயிற்சி செய்திருந்தார்கள். 'இன்னும் பத்து நிமிடங்களில் உங்கள் நிகழ்ச்சி என்று மாதவன் நாட்டிய ஆசிரியைக்குச் சொன்னான். ஆரபியின் கால்கள் அப்பொழுதே தாளமின்றி நடனமாடின. அழ ஆரம்பித்தாள். ஆசிரியை பதறிப் போனாள். என்ன செய்வது என்று அவருக்கும் புரியவில்லை.
48 தொப்புள்கொடி

"தம்பி, எங்கடை நாட்டியத்தைக் கொஞ்சம் தள்ளிப் போடுங்கோ. இந்தப் பிள்ளை அழுது கொண்டிருக்கு” ஆசிரியை வேண்டினாள்.
“இவ்வளவு சனம் பார்த்துக்கொண்டிருக்கு. அப்பிடி நிகழ்ச்சியை மாத்த ஏலுமே? ஆர் பிள்ளை ? ஏன் அழுகிது?" மாதவன் கேட்டான்.
"ஒ எங்கடை இளங்கோவன் அண்ணனின்ரை மகளே ? என்ன பேர் உங்களுக்கு ?”
"ஆரபி" அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.
“கொஞ்சம் சத்தமாகச் சொல்லுங்கோ பாப்பம்"
அவள் மீண்டும் " ஆரபி” என்றாள்.
"ஆரபி, இது என்ன நிகழ்ச்சி தெரியுமோ? மாவீரர் நாள். எதிரிகளின்ரை குண்டுகள் மழை மாதிரி பெய்யேக்க, அதுக்குள்ள போய், எதிரிகளை வீழ்த்தி, வீரத்தோட தங்களுடைய உயிரைக் கொடுத்தவையை நினைக்கிற நாள். நீங்கள் ஆடுற நாட்டியம் இங்குள்ளவைக்கு வீரத்தைக் கொடுக்க வேணும். இந்தாங்கோ, இதைக் குடிச்சிட்டுத் தயாராகுங்கோ.” மாதவன் ஒரு 'கோக்" பானத்தை நீட்டினான்.
அவன் பார்வை, உணர்வோடு சொல்லியவிதம் ஆரபியைச் சிலிர்க்க வைத்தன. விறைத்திருந்த கால்களில் இரத்தம் ஒட ஆரம்பித்தது. அப்பொழுது ஒரு பத்து வயது சிறுமி மாவீரரின் வீரத்தை உணர்ச்சி பொங்க மேடையில் முழங்கிக்கொண்டிருந்தாள். மேடையில் ஏறிய ஆரபியின் கண்களுக்குப் பார்வையாளர்கள் படவில்லை. பாட்டுக்கு ஏற்பக் கால்கள் அசைந்தாடின.
"எக்சலண்ட்" என்று ஆசிரியை அவளைக் கட்டியணைத்த போது, மனம் மாதவனுக்கு நன்றி சொல்லியது.
அதன் பின் கலை விழாக்கள், தமிழர் விடுதலையோடு தொடர்புள்ள நிகழ்வுகளில் பங்குகொள்ள அவள் விரும்பினாள்.
கலைமீது கொண்ட காதல் அல்ல.
அவனைக் காண்பதற்காக. ஆடும்போது சுழலும் அவள் விழிகள் தேடுவது அவனைத்தான்.
அவளைக் காணும் போதெல்லாம், 'ஆடப் பயந்து அழுத பிள்ளை' என்று மாதவன் கேலி செய்வான்.
வாரந்தோறும் தமிழ் வானொலியில் ஈழத்துச் செய்திகளை விளங்காதபோதும் அவள் கேட்டாள்.
தொப்புள்கொடி 49

Page 28
மாதவன் அதை வாசிப்பதால்.
1987 களில் இருந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற அமைப்பு தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக மெல்பேர்னில் செயற்பட்டு வந்தது. இளங்கோவன் அதில் ஒரு முக்கிய உறுப்பின ராக இருந்தார். தந்தை எத்தனை முறை கேட்டும் அந்தப் பக்கம் தலைவைத்தும் படுக்காத ஆரபி, அவர்கள் அலுவலகத்திற்குச் சென்று உதவ ஆரம்பித்தாள்.
மாதவனும் அங்கிருப்பான்.
ஒரு தொலைபேசி இலக்கத்தை பலமுறை அழுத்தினாள்.
அந்நாட்களில் இணையதளங்கள் பரந்திருக்கவில்லை. குறிப்பிட்ட இலக்கமுள்ள தொலைபேசிகளில் செய்திகளைப் பதிவுசெய்வார்கள்.
அதில் மாதவன் குரல் கேட்கும். 1999இல் தமிழில் ஈழ முரசு பத்திரிகை வெளியாயிற்று. எழுத்துக்கூட்டி அதைப் படிக்க ஆரம்பித்தாள்.
பத்திரிகையின் பின்னணியிலும் மாதவன் இருந்தான்.
O
கலை அவர்கள் காதலை உறுதி செய்தது. ஆரபியின் பரத நாட்டிய அரங்கேற்றம் 2001ஆம் ஆண்டு நடந்தது. அதற்கு அறிவிப்பாளனாக மாதவன் இருந்தான். ‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா’ என்ற பாடலுக்கு ஆரபி மிகவும் அழகாக ஆடினாள். 'ஜோர்ஜ் வூட்' என்று ஒரு கலை அரங்கில் அது நடந்தது. இங்குதான் பெரும்பாலான மெல்பேர்ன் தமிழர்களின் அரங்கேற்றங் கள் நடைபெறும். அரங்கேற்றம் முடிந்ததும் பலரும் வந்து மேடையில் கலைஞரைப் பாராட்டிப் பரிசு வழங்குவது வழக்கம். எல்லோரும் வந்தார்கள். அவர்களின் பாராட்டுதல்கள் அவள் காதில் விழவில்லை.
ஆரபியின் கண்கள் மாதவனைத் தேடின. மாதவனைக் காணவில்லை. அவளுக்குப் பலத்த ஏமாற்றம். இப்படித்தான் அவன். சிட்னியில் கூட்டம், கன்பாராவில் அமைச்சர்களைச் சந்தித்து ஈழப் பிரச்சனையை அவர்களுக்குத் தெளிவாக்க வேண்டுமென்று சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவான்.
வெற்றி வேலரோடு வெள்ளி இரவு சிட்னி நோக்கிப் புறப்படுவார்கள். நட்ட நடு நிசியில் காரை வழியில் நிறுத்திச் சிறிது நேரம் தூங்குவார்கள். பின்பு பயணம் தொடரும். சனிக்கிழமைக் கூட்டங்களில் கலந்து மீண்டும் இரவு மெல்பேர்ன் நோக்கி வருவார்கள்.
50 தொப்புள்கொடி

அரங்கேற்றம் முடிந்து மகிழ வேண்டிய ஆரபிக்கு அழுகையே வந்தது. எத்தனை பேர் வந்து பாராட்டினாலும் அவனில்லாததைத் தாங்கிக்கொளளக் கடினமாகவே இருந்தது. அந்த ஒரு நாளையாவது தனக்காக அவன் ஒதுக்கி இருக்கக் கூடாதா? முதலில் அவனைக் காதலித்ததே தவறு என்று நினைத்தாள். இவன் கணவனானால் தன் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்ற பயம் அவளைக் கவ்விக்கொண்டது.
இரவு 12 மணியாகிவிட்டது. அவள் தன் உடைகளை மாற்றுவதற்கு ஒப்பனை அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டாள்.
"ஆரபி, உடுப்பைக் கழட்டாதேங்கோ நான் நிற்கிறன்" ஓர் ஒரத்தில் அமர்ந்திருந்த மாதவன் குரல் அவளைத் தடுமாற வைத்தது.
“மாதவன்” என்றவள், அவன் அணைப்பில் கட்டுண்டாள்.
அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், "நல்லா ஆடினிங்கள்” என்று கூறி, கதவைத் திறந்து மறைந்தான்.
'தீராத விளையாட்டுப் பிள்ளை' என்று வாயில் சிரிப்போடு ஆரபி அபிநயித்தாள்.
தொப்புள்கொடி 5

Page 29
"பைத்தங்காயும் பலாக் கொட்டையும் கட்டாயம் வேணும். இறால், நண்டு, கணவாய்.”
டொக்டர் கணபதிப் பிள்ளை எம்பிபிஎஸ் பேசிக் கொண்டே ஆரபியின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்தார்.
"பேர்பக்ட். இது அவள் இரத்த அழுத்தத்திற்கு), அதோட முள்ளில்லாத மீன் போடலாம். முசுட்டை இலை அல்லது முருங்கை இலை கட்டாயம் வேணும். நாக்கைக் கொஞ்சம் நீட்டுங்கோ.”
ஆரபி நாக்கை நீட்டிக் குடும்ப வைத்தியர் கணபதிப் பிள்ளையைப் பார்த்தாள். அவர் நாவில் இப்போது நீர் ஊறி அவள் மடியில் விழுந்துவிடும் போலிருந்தது.
"ஆரபி, ஆச்சி செய்யிற ஒடியல் மா கூழ் மாதிரி. இச்.”
நாவின் நுனியில் உமிழ்நீர்த் துளி குதிப்பதற்குத் தயாரானது.
நல்ல வேளை வடிந்த வீண் நீரை டொக்டர் துடைத்தார். ஆரபி ஆறுதலாகப் பெருமூச்சு விட்டாள்.
இரண்டு வாரத்துக்கு ஒரு முறை அவள் டொக்டரைச் சந்திக்க வேண்டியிருந்தது.
டொக்டர் மேலை நாட்டுப் பெண் போல் வெள்ளைக் காற்சட்டையும் நீண்ட வெள்ளை கோர்ட்டும் அணிந்திருந்தார். மாநிறம். மங்களகரமான முகம். கூந்தலை வெட்டியிருந்தார். தோற்றத்தில் எப்படி இருந்தாலும் பேச்சில் மண் வாசனை வீசும். கூழ் மணக்கும். ஆலங்காய்ப் பிட்டு இனிக்கும். பனங்காயைப் பிசைவார். தன்னாட்டுப் பெண்கள் வந்துவிட்டால் போதும். வெளியில் எத்தனை நோயாளிகள் காத்திருந்தாலும் ஊர்க் கதையை விடமாட்டார்.
ஆரபியின் வயிற்றில் இப்போது 'ப்வெட்டஸ் கோப்பை' வைத்தார்.
"இப்ப பிள்ளையின்ரை இதயத் துடிப்பைப் பார்க்கிறன். சலரோகம் இருக்கிதா என்று பார்க்க பிளட் டெஸ்டும் செய்ய வேணும். ஹார்ட் பீட் ஒகே. கூழுக்குப் பிள்ளை, சில பேர்
52 தொப்புள்கொடி

கடலையும் போடுறவை. பிள்ளையின்ரை எடை கூடிக் கொண்டே போக வேணும். எடை பார்த்தனிங்களே? தேங்காய்ச் சொட்டும் போடலாம்."
"கிளினிக்" போய் வரும்போது ஆரபிக்கு எல்லாமே கூழாகிவிட்டது. டொக்டர் தன் கருவைப் பற்றி என்ன சொன்னார் என்பது புரியவில்லை. களைத்துவிட்டாள். மெதுவாகக் காரை நோக்கி நடந்தாள். இந்த நேரத்திலும் மாதவனை மனம் தேடியது. கார் ஒட்டக்கூடச் சக்தி இருக்கவில்லை. ஆரபி என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
அவளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அவள் உயிர்த் தோழி அஞ்சலி. அவளோடு ஒன்றாகப் படித்தவள். நல்ல சிகப்பு நிறம். நாட்டியத்துக்கு என்றே அமைந்த அழகான உடலமைப்பு. அவர்கள் தனியார் பெண்கள் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். பருவமடைந்த இளம்பெண், ஆண்களுடன் பழகும் கலாச்சாரத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள திலகாவுக்கோ இளங்கோவனுக்கோ முடியாதிருந்தது. "போய் ப்ரண்ட், கேர்ள் ப்ரண்ட்' என்று அவர்கள் கருதிய நோய் ஆரபியிலும் தொத்திவிடக் கூடாது என்பதில்; முழுக் கவனமாக இருந்தார்கள். படிப்பிற்காக மாத்திரமன்றி கட்டுப்பாடுகளுக்காகவும், தங்கள் வரவுக்கு மீறியிருந்தும், அந்தச் செலவை ஏற்றுக்கொண்டார்கள். அஞ்சலி பணக்கார வீட்டுப் பெண். அவள் வீட்டில் இந்தளவு கட்டுப்பாடு கள் இல்லை.
கட்டுப்பாடுகளை உடைக்க அஞ்சலி உதவினாள். தன்னோடு படிக்கும் சக மாணவிகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்குப் போக அனுமதி கிடைப்பதில்லை. அஞ்சலி வீட்டில் படிக்கப் போகிறேன் என்று ஏமாற்றி, இருவரும் கொண்டாட்டங்களுக்குப் போவார்கள். அவர்கள் கல்லூரியில் படித்த மாணவிகள் அணியும் ஆடை முழங்காலுக்கு மேலிருந்தது. திலகாவோ அது முழங்காலுக்கு மேலே போவதை அனுமதிக்கவில்லை. தான் ஒருத்தி மாத்திரம் அப்படி ஆடை அணிவதை ஆரபி வெறுத்தாள். அதனால் பஸ்ஸில் செல்லும்போது சட்டையை உயர மடித்து அஞ்சலி, ஊசி நூலால் தைத்துவிடுவாள். வீடு வரும்போது ஆரபி அதைக் கழட்டி முழங்காலுக்குக் கீழ் விடுவாள்.
அந்தப் பள்ளி வாழ்க்கையை நினைத்தபோது ஆரபிக்குச் சிரிப்பு வந்தது.
அவர்கள் உறவு அத்தோடு நிற்கவில்லை வெள்ளிக்கிழமை கல்லூரியால் வந்ததும் குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற கட்டுப்பாடு ஆரபிக்கு இருந்தது. அஞ்சலிக்கு இல்லை. சனி காலை 9.30 க்குத் தமிழ்ப்
தொப்புள்கொடி 53

Page 30
பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். அன்றிரவே ஏதாவது தமிழ் கலை நிகழ்ச்சி இருக்கும். அது முடிந்து வீடு வர இரவு 11 மணியாகிவிடும். அடுத்த நாள் ஞாயிறு காலை பரத நாட்டிய வகுப்புகள். ஆரபி எல்லாவற்றையுமே முதலில் வெறுத்தாள். நாளடைவில் நாட்டியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அதற்கு அஞ்சலியும் ஒரு காரணம். கல்லூரி தரும் வீட்டு வேலைகள் செய்வதற்கு நேரம் கிடைப்பது அரிதாகிவிடும். நாட்டிய வகுப்பில் கின்டக்கும் இடை நேரங்களில் அவற்றைச் இருவரும் சேர்ந்து செய்வார்கள்.
முதலில் கசப்பாக இருந்த தமிழ் எப்படித் தங்கள் நாட்டியத்துக்கு உதவியது என்று இருவரும் பேசிக் கொள்வார்கள்.
"என்னடி வண்டி நல்லாப் பெருத்திட்டிது?" என்று சிரித்தாள் அஞ்சலி, "உனக்கென்னடி கலியாணம் கட்டி, பிள்ளையும் பெறப்போறாய். நான் இன்னும் 'ஆசை முகம் மறந்து போச்சே, இதை, யாரிடம் சொல்வேனடி தோழி என்று பாடிக்கொண்டு திரியிறன்”
"என்னடி? காதலா? எங்கேயடி நடந்து போறாய்?” ஆரபி கேட்டாள்.
"ஒரு கிலோ எடை கூடிட்டிது. அதுதான் சின்ன வோக்' என்னடி, உன்னைக் கண்டு எத்தனை நாள்? 'கிலன் மோலிலை’ கோப்பி குடிச்சிட்டுப் போவம். உன்னோடை கதைக்க எவ்வளவோ கிடக்கு” என்று அஞ்சலி ஆரபியின் கையைப் பிடித்தாள்.
"நான் களைச்சுப் போனன். நீதான் கார் ஒட்ட வேணும். வா." என்று கார்ச் சாவியை அஞ்சலியிடம் கொடுத்தாள் ஆரபி, அஞ்சலி லாகவமாக வாகனத்தைத் திருப்பி 'ஸ்பிரிங்வேல்' தெருவில் 'கிலன் நோக்கி ஒட்டினாள்.
சற்றுத் தொலைவில் நின்ற இன்னொரு பச்சை கொமடோர் கார் அவர்களைப் பின் தொடர்வதை இருவரும் முதலில் கவனிக்கவில்லை. தங்கள் வாகனத்தின் பக்கக் கண்ணாடியில் தெரிந்த பச்சை வாகனத்தை ஆரபி பார்த்தாள்.
"கிலன்' பல கடைகள் நிறைந்த வியாபார நிலையம். அங்கே எப்பொழுதுமே வாகனங்கள் நிரம்பி வழியும். ஆனால் அன்று வாகனங்கள் நிறுத்தத் தாராளமாக இடம் இருந்தது. பச்சைக் காரும் அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் வந்து நின்றது. அதை ஒட்டும்வரை ஆரபியால் பார்க்க முடியவில்லை. ஆரபியும் அஞ்சலியும் வாகனத்தைவிட்டு இறங்கி நடந்தபோது, ஆரபி திரும்பி வாகனத்தைப் பார்த்தாள். யாரும் அதிலிருந்து இறங்கவில்லை.
ஒரு சிறிய அழகான காப்பிக் கடையில் பல சின்ன மேசை களும் சுற்றி நாற்காலிகளும் இருந்தன. அவர்கள் ‘கப்வே
54 தொப்புள்கொடி

லாட்டேக்கு சொல்லிவிட்டு, இரண்டு நாற்காலிகள் போடப்பட்ட மேசைக்கு அருகில், எதிரும் புதிருமாக அமர்ந்தார்கள. மதியத்தை நெருங்கும் நேரம். அதிக சன நடமாட்டம் அங்கில்லை. அஞ்சலி முன்பைவிட அழகாக இருந்தாள். அடர்த்தியான கரிய சுருண்ட கேசம். இடையிடையே பொன் வண்ண இழையோட மை பூசியிருந்தாள். ஆடையில் மிக எளிமை. வெள்ளைப் பருத்தி மேலாடையும் நீல ஜீன்சும் அணிந்திருந்தாள். அவர்கள் சந்திக்கும் சமயத்தில் அநேகமாக ஆங்கிலத்திலேயே உரையாடுவார்கள். அவர்கள் வந்து அமர்ந்த சிறிய மேசைக்கு அடுத்த மேசையில் ஒரு வெள்ளை ஆஸ்திரேலியன் வந்து அமர்ந்தான் அவன் தங்களையே நோக்குவதுபோல் ஆரபிக்குத் தோன்றியது. நல்ல உயரம். கறுப்புத் தலை மயிர். தடித்த அவன் முகத்தோலில் பெரிது பெரிதாகப் பருக்கள் இருந்த அடையாளம். அவன் கையிலிருந்த கார்ச் சாவியைத் தனது மேசையில் வைத்தான். ஆரபி துணுக்குற்றாள்.
சாவிக் கொத்தில் ‘கொமடோர்' என்று எழுதியிருந்தது.
மேசைமீது நீண்டிருந்த ஆரபியின் கையைப் பிடித்த அஞ்சலி, “எனக்கொரு உதவி செய்வியாடி?” என்றாள்.
அஞ்சலியின் முகத்தில் சிறு வாட்டம் தெரிந்தது. "நான் ஒருத்தரைக் காதலிக்கிறன்” “நீ காதலிக்கிறது அவனுக்குத் தெரியுமா ?” "தெரியும். சொல்லிட்டன்” "அஞ்சலி, எனக்குத் தெரிய உனக்குப் பின்னால எத்தனைபேர் அழைஞ்சவங்கள் ? அப்ப எல்லாம் எனக்கு உன்னிலே பொறாமையாக இருக்குமடி நீ சொல்லியும் ஒருத்தன் உனக்குப் பின்னால வரயில்லை என்றால். சம் திங்க் ரோங்க். அவனை விட்டிடு.”
“போடி அப்பிடி விடுகிற விசயமில்லை. அவனுக்கும் என்னில விருப்பம் இருக்கு. ஆனால் ஏனோ தயங்கிறான். ஏனென்று எனக்குப் புரியல்லை. அவனுக்கு முன்னால வேணுமென்றே நான் வேற பெடியங்களோட தொட்டுச் சிரிச்சு கதைச்சன். ஆரபி, அது அவனுக்குப் பிடிக்கல்லை. எத்தனையோ சந்தர்ப்பம் கிடைச்சாலும் தானா தொட்டுக் கதைக்கப் பயப்படுறான். பயமா, தயக்கமா தெரியல்லை."
"அப்ப நீ தொட்டுக் கதைக்கிறதுதானேடி" "போடி, நீயொரு வம்பு" “சரி, சொல்லடி நானென்ன செய்ய வேணும்?” ஆரபி
கேட்டாள்.
தொப்புள்கொடி 55

Page 31
அவர்களுடைய கோப்பி மேசைக்கு வந்தது. கோப்பியோடு இரண்டு பிஸ்கட்டுகளும் வந்தன. பசியோடு இருந்த ஆரபி பிஸ்கட்டைக் கடித்தாள். அஞ்சலி தன் பிஸ்கட்டையும் ஆரபியிடம் நீட்டினாள். ஆரபி மறுக்காது அதையும் மென்றுகொண்டு கோப்பியை அருந்தினாள்.
“பிள்ளைத்தாச்சி என்றதால பயமில்லாமல் என்னைத் தூதனுப்பிறியா?” ஆரபி சிரித்தாள்.
“ ‘பீஸ் டோக்குக்குப் போய்க் கழுத்தறுத்த கருணான்றை கதை மாதிரி போகக் கூடாது பார்.” என்று சிரிப்போடு கூறிய அஞ்சலி, "அவன் மாத்திரம் ஒழுங்கா இருந்திருந்தால் எனக்கும் கலியாணம் நடந்திருக்கும். எத்தனையோ தமிழ்ப் பெண்களின்ரை தாலியும் கற்பும் காப்பாற்றப்பட்டிருக்கும்." என்று கவலையோடு சொன்னாள்.
“அஞ்சலி, எங்கேயோ போறாய்? என்னடி, இந்த ராதையின்ரை கண்ணன் யாரோ?” என்றாள் ஆரபி.
"ராதையில்லையடி. இந்த வள்ளியுடைய முருகன்..” என்று நிறுத்தி அஞ்சலி மெளனமானாள்.
ஆரபிக்கு ஆவலாக இருந்தது.
"மயூரன்” என்று அஞ்சலி சொன்னதும், ஆரபி குடித்துக் கொண்டிருந்த காப்பி மூச்சுக் குழாய்க்குள் சிக்கி வாயில் சிதறியது.
அதை ஆரபி எதிர்பார்க்கவே இல்லை. மயூரனை அவள் நன்கு அறிவாள். மாதவனின் மிக நெருங்கிய நண்பன். அவள் காதலுக்கு உறுதுணையாக நின்றவன்.
திருமணம் ஆகுமுன், ஒரு முறை அவள் மாதவனைத் தேடிப் போயிருந்தாள். அந்த சமயம் மாதவன், மயூரன் இன்னும் சில வாலிபர்கள் ஒரு வீட்டிலேயே வாடகைக்கு இருந்தார்கள். மயூரன் அவளுக்கு நன்கு பழக்கம். அவள் பேருந்தில் வந்திருந்தாள். மழை கொட்டிக்கொண்டிருந்தது. மெல்பேர்னின் ஆனி மாதப் பனிக் குளிர். அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டினாள்.
மயூரன்தான் கதவைத் திறந்தான். “மாதவன் இல்லை ஆரபி” என்றான். "அவன் இன்னும் பத்து நிமிடங்களில் வந்துவிடுவான். அதுவரை உள்ளே வந்து இருக்கின்றேன்." என்றாள் ஆரபி.
“இல்லை ஆரபி. இது கலியாணங் கட்டாத ஆம்பிளைகள் இருக்கிற இடம். இங்கே எல்லாம் உன்னை மாதிரி இளம் பெண்கள் வரக் கூடாது. சாரி" என்றவன் கதவைச் சாத்தினான்.
56 தொப்புள்கொடி

வாசலில், கொட்டும் மழையில், குளிரில் தனியாக நின்றதை ஆரபி மறக்கவில்லை. அவனுக்குத் தன்மீது சந்தேகமா அல்லது தன் நண்பர்களின் கண்ணியத்தில் சந்தேகமா என்று அவளுக்கு விளங்கவில்லை. ஆரபிக்கு அவன்மீது கோபமே வந்தது. திருமணம் முடிந்தபின், மயூரனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் கிடைத்தன. மாதவன் முன்னிலையில் ஆரபி அவனிடம் விளக்கம் கேட்டாள். "ஆரபி, உன் நடத்தையிலோ என் நண்பர்களுடைய கண்ணியத்திலேயோ சந்தேகப்பட்டு அப்பிடி நான் செய்யல்லை. நீ தனிய அங்க வந்திட்டுப் போறதை எங்கடை நாலு தமிழ்ச் சனம் கண்டால் உன்னைப் பற்றி கதை கட்டிவிடும்." ள்ன்றான் மயூரன்.
ஈழத்தில் வளர்ந்தவர்களுக்கும் மேலைத் தேசங்களில் வளரும் தன் போன்றவர்களுக்கும் இடையில் இருக்கும் ஓர் அடிப்படை வித்தியாசம் இது என்று ஆரபி எண்ணிக் கொண்டாள்
“என்னடி ஆரபி யோசிக்கிறாய்?" அஞ்சலி கேட்டாள்.
“மடைச்சி, மடைச்சி. பஞ்சு விற்கிற கடையில நெருப்புக் குச்சு ஆராவது கேட்பாங்களே? மயூரன் நாட்டுக்காகப் பிறந்தவன். நாட்டுக்காகவே வாழுறவன். அவனிட்டை போய் காதலா? ஏனடி, இந்த உலகத்தில உனக்கு வேறொருத்தனும் கிடைக்க யில்லையே?” ஆரபியின் வார்த்தை சிறிது காரமாகவே இருந்தது. "நீ மாதவனைக் காதலிக்கேக்க நானும் இப்பிடித்தான் சொன்னனான். நீ கேட்டியா? அதுக்காக இப்ப நீ கவலைப் படுறியா?”
அஞ்சலியின் கேள்வி ஆரபியைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. பதில் தெரியாமல் தடுமாறினாள். அவனோடு வாழுகிற ஒவ்வொரு கணமும் அவளுக்கு இனிமைதான். ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற பயம், கருத்தரித்த பின் அடிக்கடி வருவதைத் தன் உயிர்த் தோழிக்கும் அவளால் சொல்ல முடியவில்லை. "இப்பவும் சரி, எப்பவும் சரி மாதவன்தான் என் கணவன், காதலன். அஞ்சலி, இப்படியான காதல் எப்பவும் இனிமையாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்காதே. இவேன்ரை வாழ்க்கை வித்தியாசமானது. மயூரனுக்கும் உன்னில விருப்பம் என்று உனக்கெப்படித் தெரியும்?” ஆரபி கேட்டாள்.
"ஜானக பெரேராவுக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஞாபகம் இருக்கே?” அஞ்சலி தொடர்ந்தாள்.
O "கிரிசாந்தியைக் கொன்றவனே திரும்பிப் போ" "ஆஸ்திரேலியா ஜானக பெரேராவைத் திருப்பி அனுப்பு"
தொப்புள்கொடி 57

Page 32
கத்திக்கொண்டிருந்த பல குரல்களோடு அஞ்சலியின் குரலும் கேட்டது.
செப்டெம்பர் 2, 2001ஆம் ஆண்டு. பிரிகேடியர் ஜானக பெரேரா சிறீலங்காவின் ஆஸ்திரேலியத் தூதுவராக நியமிக்கப் பட்டதை எதிர்த்துத் தமிழ் மக்கள் மெல்பேர்ன் கிலைடன் நகரசபை மண்டபத்திற்கு முன்னால் பெரும் எதிர்ப்பு ஆர்ப் பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
அஞ்சலி மயூரனிடந்தான் ஜானக பெரேராவைப் பற்றித் தெரிந்துகொண்டாள். இவர் தமிழ்ப் பகுதியில் பொறுப்பதிகாரியாக இருந்தபோது கேள்வி முறையின்றி தமிழ்ப் பெண்கள் பலர் கற்பழிக்கப்பட்டார்கள். பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். கிரிசாந்தி குமாரசாமி என்னும் 18 வயது இளம்பெண்ணின் கொடுரமான கற்பழிப்பும் கொலையும் ஆஸ்திரேலியாவில் பல மாணவிகளின் மனதை மிகவும் பாதித்தன. பரீட்சை எழுதியபின் வீடு நோக்கி வந்த இந்தப் பெண்ணை, ஒன்பது இராணுவத்தினர், கற்பழித்துக் கொலைசெய்தார்கள். மகளைத் தேடிச்சென்ற அவரது தாயார் 59 வயது இராசம்மாவும் 16 வயது மகன் பிரணாபனும், உதவிக்குச் சென்ற 35 வயது கிரி சிதம்பரம் என்பவரும் பின்னர் வீடு திரும்பவில்லை. ஜானக பெரேராவின் இராணுவம் அவர்களை யும் கொன்று புதைத்துவிட்டது. மனித உரிமைகளை மதிக்கும் ஆஸ்திரேலியாவில் இப்படிப்பட்ட இராணுவ அதிகாரியை அனுமதிப்பது நியாயந்தானா என்று கேட்கவே அஞ்சலியும் அங்கு நின்றாள்.
மயூரன் இல்லாவிட்டால் அஞ்சலிக்கு இந்தக் கதையே தெரிந்திருக்காது. அன்று நடந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் உள்ளரங்க பட்மின்டன்’ விளையாட்டில் பங்கு கொள்ளவே அவள் வந்திருந்தாள். அங்குள்ள இளம் பெண்களுக்கெல்லாம் இந்தக் கண்ணிர்க் கதையைச் சொல்லி, அவர்களுக்கு வாகன வசதிசெய்து, மயூரனே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அவர்களை அழைத்து வந்திருந்தான். இதன் பின்னர் அஞ்சலியும் தமிழ் இன ஒழிப்புக்கு எதிராக மெல்பேர்னில் நடக்கும் எல்லா நடவடிக்கைகளிலும் உதவ ஆரம்பித்தாள்.
மயூரனின் நட்பு, காதலாக மாறுவதை அவள் உணர சில காலம் சென்றது.
O
தனது காதல் கதையைச் சொல்லிக்கொண்டிருந்த அஞ்சலி திடீரென மெளனமாகிப் பின் தொடர்ந்தாள்.
"ஆரபி, அவனும் என்னைக் காதலிக்கிறன் என்றுதான் சொன்னான். எனக்கு எத்தனையோ பரிசுப் பொருளெல்லாம்
58 தொப்புள்கொடி

வாங்கித் தந்திருக்கிறான். நான் ஒரு நாள் அவனுக்காக அழுவன் என்று தெரிஞ்சோ என்னவோ, இந்த லேஞ்சியும் அவன்தான் வாங்கித் தந்தவன். ஆனால் ஒருநாள்கூட என்னைத் தொட்டிருக்க மாட்டான். இப்ப முந்தினமாதிரி இல்லை. என்னைத் தவிர்க்கிறான். என்னோட பேச மறுக்கிறான். டெலிபோன் எடுத்தாலும் கட் பண்ணுறான். ஏதோ நடக்கிது. அதை அவன் சொல்லத் தயங்கிறான். ஆரபி என்ன செய்யிறது? எனக்குத் தெரியல்லை."
அழகான பூக்கள் பின்னப்பட்ட ரோசா நிறக் கைக்குட்டை யால் அஞ்சலி தன் கண்ணிரைத் துடைத்தாள்.
காதலிலே விழுந்துவிட்ட ஒரு பெண்ணின் மனதை மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல என்பதை அனுபவத்தில் கண்ட ஆரபி, சிறிது நேரம் பேசாதிருந்தாள்.
"அழாதேயடி, மயூரனைக் காணுகிற நேரம் அவன் ரை மனசை அறியப் பார்க்கிறன். என்னோட வீட்டை வா. சாப்பிட்டுப் போகலாம்."
ஆரபி தன் பையைத் திறந்து காப்பிக்குக் காசைப் போட்டு, அஞ்சலியோடு கைகோர்த்துக் காரை நோக்கி நடந்தாள்.
இதுவரையும் அவள் மறந்திருந்த அந்த வெள்ளைக்காரனின் நினைவு மீண்டும் வந்தது. திரும்பிப் பார்த்தாள். தங்கள்ை யாரும் பின்தொடரவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டாள்.
ஆரபிதான் காரை ஒட்டினாள். 'ஸ்பிரிங்வேல்’ தெருவில் ஒரே நேரத்தில் மூன்று வாகனங்கள் போவதற்கானப் பாதைக் கோடுகள் இருந்தன. தன் பின்னால் வரும் வாகனங்களைக் கண்ணாடியில் மீண்டும் பார்த்தாள். நிச்சயமாக அந்த பச்சைக் கார் தங்கள் பின்னால் வரவில்லை என்று தெரிந்தது. ஏதோ வீண் கற்பனை என்று எண்ணினாள். அடுத்துவந்த சந்தியில் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சிகப்பு வண்ணத்தைக் காட்டியது. வாகனத்தை நிறுத்திப் பக்கவாட்டில் பார்வையைச் செலுத்தினாள். அவளால் நம்ப முடியவில்லை.
அந்த பச்சைக் கார் பக்கத்துப் பாதைக் கோட்டில் நின்றது. அந்த மனிதன் அவர்களையே நோக்கினான்.
பச்சை விளக்கு மாறியது. எல்லா வாகனங்களும் நகர்ந்தன. ஆரபி நகரவில்லை. தனது கார் என்ஜினை நிறுத்தினாள். முக்கோண வடிவத்தைக் காட்டிய அபாய எச்சரிக்கை மஞ்சள் விளக்கு விசையை அழுத்தினாள். வாகனத்தின் முன்னும் பின்னும் மஞ்சள் அபாய விளக்குகள் மாறி மாறி அணைந்தும் எரிந்து கொண்டும் இருந்தன. அவள் பின்னால் நின்ற வாகனங்கள் அவளைச் சுற்றிக் கடந்து சென்றன. பலர் ஹார்னை அழுத்தித் தங்கள் கோபத்தைக் காட்டினர்.
தொப்புள்கொடி 59

Page 33
  

Page 34
ஈமெயில்களைப் பார்க்கிறாங்கள். எங்கடை வீட்டுக்குள்ள நாங்கள் கதைக்கிறதைக் கூட அவங்களால கேட்க முடியிது. வீட்டுக்குள்ள நாங்கள் சைகையால கதைக்க வேண்டியிருக்கு. கன நேரம் கதைக்க ஏதும் இருந்தால் வெளியில போய்த்தான் கதைப்பம். இது எங்க போய் முடியுமோ எனக்குத் தெரியல்லை. ஆரோடையும் இதைப் பற்றிக் கதைக்காதே." மீரா தன் தலையை ஆரபியின் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
"அக்கா, இது உங்களோட முடியல்லை. உங்களுக்குப் பின்னால சுத்திற பச்சைக் கார் மாதிரி ஒன்றுதான் எங்களுக்குப் பின்னாலேயும்.”
மீரா குறுக்கிட்டாள். "கொமடோர் தானே? அவன்தான் எங்கடை தெருச் சந்தியில நின்று எப்பவும் ஆர் வருகீனம் போகீனம் என்று பார்த்துக்கொண்டு நிற்கிறான். பார்த் ரூமுக்குப் போனாலும் ஆராவது நிற்கீனமோ என்று எனக்குப் பயமா இருக்கும்.”
"நாங்கள் என்ன பிழை செய்திட்டம் ? எதுக்குப் பயப்பட வேணும்? ஏன் இவங்கள் இப்படிச் செய்யிறாங்கள்?” ஆரபி கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.
“எனக்கென்னடி தெரியும் ? நல்லதைத்தான் நாங்கள் நினைக்கிறம். நல்லதைத்தான் நாங்கள் செய்யிறம். நோயாளிகளைப் பராமரிக்கிறது என்ரை தொழில். அதை மனத் தூய்மையோட, அன்பா, ஆதரவா, சந்தோசமாகத்தான் செய்யிறன். அப்பிடித்தான் வெற்றிவேலரும். தமிழ்ச் சனம் அங்க படுகிற வேதனை தீர அவரால ஆனதைத்தான் அவரும் செய்யிறார். தொண்டு செய்யிற எங்களுக்கு முட்டுக்கட்டை போடுறதை விட்டிட்டு, அங்க நடக்கிற சண்டையை நிற்பாட்ட சிறீலங்கா அரசுக்கு அழுத்தங் குடுக்க ஏன் இவேயால முடியல்லை? ஆரபி, நீயும் மாதவனும் கொஞ்சம் கவனமாக இருக்க வேணும்."
"அக்கா, நீங்கள்தான் வீணாகப் பயப்படுறிங்கள்." "இல்லையடி. நீ இப்பதான் வாழ்க்கையில காலடி எடுத்து வைச்சிருக்கிறாய். உன்னை மாதிரித்தான் நானும் எத்தனையோ கனவுகளோட வாழ்க்கையில காலடி வைச்சன்..."
மீரா தன் கண்களைத் துடைத்தாள். பேசிக்கொண்டிருந்த ஆரபியையும் மீராவையும் ஐயரின் மணியோசை தட்டி எழுப்பியது. ஐயர் மீண்டும் பூசை ஆரம்பித்திருந்தார். கைகளைக் குவித்து இறைவனைக் கும்பிட்ட இருவர் மனதிலும் இனந்தெரியாத பயம் பரவியது. நெஞ்சுக் கூட்டுக்குள் அது நிலையாக இடங்கண்டது.
62 தொப்புள்கொடி

அந்தப் பயத்தைப் போக்கி பரம்பொருளை அங்கே குடியமர்த்த முடியாது இருவரும் தோற்றார்கள்.
O
கார்த்திகை மாத வெப்பம் மெல்பேர்னில் கடுமையாக இருந்தது. ஆரபி மெல்லியதோர் வெள்ளை ஆடையை அணிந்திருந் தாள். அன்று வழக்கத்துக்கு மாறாக மாதவன் மாலை ஐந்து மணிக்கே வேலையால் வந்தான். ஆரபிக்கு அளவில்லாத மகிழ்ச்சி. அவன் வரும் போதே இரவு உணவுக்கு, அவளுக்குப் பிடித்தமான பிரியாணி வாங்கி வந்தான். சமையல் வேலை இல்லாததும், அவனோடு நேரத்தைக் கழிக்க முடியும் என்பதும் அவளுக்கு ஆனந்தம் அளித்தது. கார்த்திகையில் வரும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு விளம்பரங்கள் சேகரிக்க வேண்டும் என்றே அவன் விரைவில் வீடு வந்தான். ஆனால் ஆரபி விடவில்லை. அதிலும் அன்று அவள் வயிற்றில் இருந்த சிசுவின் அசைவுகள் அதிகமாக இருந்தன. அவனை வற்புறுத்தி, அவனது காதைத் தொப்புளில் வைத்து கேட்க வைத்தாள். அவனுக்கு அது குழந்தையின் அசைவா அல்லது வேறு ஏதாவது ஒசையா என்று புரியவில்லை. ஆனால் அதில் ஒர் ஏகாந்த இன்பம் இருந்தது. இரவு படுக்கும்போது தனது முதுகு வலிப்பதாக ஆரபி கூறினாள். அவன் இரப்பரால் செய்யப்பட்ட வெப்பப் போத்தலில் வென்னிர் ஊற்றி, அவளுக்கு ஒத்தடம் கொடுத்தான். அவனுக்குத் தூக்கம் வந்தது. இரவு 11 மணியைக் கடந்தது. அவளோ விடுவதாக இல்லை. வரப்போகும் குழந்தையைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். எப்பொழுது அவர்கள் தூங்கினார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
அடுத்த நாள் காலை 7 மணி. அவர்களது படுக்கை அறை வீட்டு வாசலோடு இருந்தது. அங்கு மனித நடமாட்டத்தை ஆரபியால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இந்த நேரத்தில் யார் வரக்கூடும் என்று அவளுக்கு ஆச்சரியம். மாதவன் புரண்டு படுத்தான். கதவில் பலமாகத் தட்டும் ஓசை கேட்டது. மின்சாரக் கதவு மணி இருக்கும் போது ஏன் தட்ட வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஒட, ஆரபி இரவு மேலாடையை அணிந்து கதவைத் திறக்கச் சென்றாள்.
O
காலை 7 மணி. மீரா, தன்னருகில் படுத்திருந்த வெற்றி வேலரைப் பார்த்தாள். ஒரு குழந்தையைப் போல் அவர் கால்களைக் குறுக்கி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். பலமாகக் கதவு தட்டும் ஒசை கேட்டது. மீரா எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
O
தொப்புள்கொடி 63

Page 35
கதவைத் திறந்த ஆரபிக்குத் தலை சுற்றியது. அவள் முன்னால் பத்துப் பன்னிரண்டு பொலிசார் நின்றனர். அதில் இரண்டு பெண் பொலிசார் அடங்குவர். அவள் வாய் திறக்கும் முன்னர் அவர்கள் உள்ளே நுழைந்தனர். உயர்ந்த அவர்களின் தோற்றம், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள், அவர் களது காலணிகளின் ஒசை, யாவும் அவளை நிலைகுலையச் செய்தன.
"நாங்கள் ஆஸ்திரேலிய பொலிசைச் சேர்ந்தவர்கள். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் இந்த வீட்டைச் சோதிக்கவும் தேவையெனக் கருதுவதை எடுத்துச் செல்லவும் வீட்டில் உள்ளோரை விசாரிக்கவும் எங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த வீட்டில் வேறு யார் இருக்கின்றார்கள்?" மிக உயரமாக இருந்த ஒருவன் கேட்டான்.
சத்தங்கேட்டு எழுந்த மாதவன் அப்போது அங்கே வந்தான். "நாங்கள் இருவருந்தான்” என்றான் மாதவன். "உட்காருங்கள்” என்றான் அந்த பொலிஸ் அதிகாரி. ஒரு பெண் பொலிசையும் அவனையும் தவிர மற்றவர்கள் வீட்டின் அறைகளுக்குள் நுழைந்தனர்.
"இது எங்களுடைய தேடுதல் ஆணைப் பத்திரம். படித்துப் பாருங்கள்." என்று பத்திரத்தை நீட்டினான்.
"நீ கர்ப்பிணியாக இருப்பதை நாங்கள் அறிவோம். பயப்படத் தேவையில்லை.” என்றாள் அந்த பெண் பொலிஸ்.
அந்த ஆணைப் பத்திரத்தில் தனது பெயரும் மாதவனின் பெயரும் இருப்பதைப் பார்த்தாள் ஆரபி. அதற்கு மேல் அவளால் அதனைப் படிக்க முடியவில்லை.
"நாங்கள் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. நீங்கள் தாராளமாக வீட்டைச் சோதனை இடலாம்." என்றான் மாதவன்.
அவர்கள் மூலைமுடுக்கெல்லாம் தேடினார்கள். அங்கிருந்த கணினி, குறுந்தட்டுகள், ஆவணங்கள், புகைப்படங்கள் எல்லாவற்றையும் பெட்டிகளில் போட்டு நிரப்பினார்கள்.
அவர்கள் இருவரையும் உடைமாற்றித் தங்களோடு காவல் நிலையத்துக்கு வருமாறு கேட்டுக்கொண்டார்கள்.
ஆரபி தனது அறையைச் சென்று பார்த்தபோது அழுகையும் கோபமும் ஏற்பட்டது. ஓர் அழகான பூந்தோட்டத்துள் புகுந்து, யானைகள் அதைத்துவம்சம் செய்தது போலத் தோற்றமளித்தது, அவளது படுக்கை அறை, தனது ஆடையணிகளை அவர்கள் தொட்டுக் கிளறியது மேலும் அருவருப்பைக் கொடுத்தது. மாதவன்
6 4. தொப்புள்கொடி

மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் இருந்தான். அயலவர் களின் வீடுகளில் தலைகள் எட்டிப் பார்ப்பதும், ஒரு குற்றவாளியைப் போல் தான் நிற்க வேண்டிய நிலையும் அவனுக்குக் கடினமாகவே இருந்தன. ஆனாலும் இந்த சோதனைக்குப் பின் எல்லாமே தெளிவாகிவிடும் என்று எண்ணித் தன்னைத் தேற்றிக்கொண்டான். ஆரபியை எண்ணியே அவன் அதிகம் கவலைப்பட்டான்.
இரண்டு வெவ்வேறு கார்களில் அவர்கள் 11 மணியளவில் காவல் நிலையத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார்கள். ஊடகத் துறையினர் சுற்றி வளைத்து நின்றதால் மாதவன் தன் தலையை மறைத்துக்கொண்டான். அவர்களை விசாரித்த நேரத்தைவிட விசாரணைக்குக் காத்து நின்ற நேரம் அதிகமாக இருந்தது. காவல்துறையினர் பண்போடு நடந்தனர். நட்புறவோடு பேசினர்.
Ο
மீராவுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. எது நடக்கக் கூடாது என்று எண்ணினாளோ அது நடந்து விட்டது. அவளுக்கு முன்னால் பன்னிரண்டு பொலிசார் நின்றார்கள். சிறு புள்ளி மானைச் சுற்றிப் பல புலிகள் நின்றது போல் ஒரு தோற்றம். அவர்கள் தடதடவென உள்ளே நுழைந்தார்கள். அவளுக்கு மூச்சு முட்டியது. ஒரு யானையின் கால் அவள் நெஞ்சிலே வைத்து அழுத்துவது போல் இருந்தது. அந்த வீடு அவர்களுக்கு முன்பே பரிச்சயமானது போல் ஐவர் வெற்றிவேலரின் படுக்கையைச் சுற்றி நின்றார்கள். வெற்றிவேலர் நல்ல உறக்கத்தில் இருந்தார். அந்நிய இராணுவம் ஒன்று தங்களின் சொந்த நாட்டை ஆக்கிரமிப்பதற்கும் இதற்கும் அதிக பேதம் இருப்பதாகத் தெரியவில்லை.
மீராவோடு நின்ற ஒரு காவல் துறை அதிகாரி தன்னிடம் இருந்த ஆணைப் பத்திரத்தை நீட்டித் தங்களுக்குத் தரப்பட்ட அதிகாரத்தை விளக்கினான். வீட்டின் ஒர் அங்குலங்கூட விடாது தேடுதல் நடத்தினார்கள். வெற்றிவேலரைப் படுக்கையறையில் வைத்துப் பல மணி நேரம் விசாரித்தார்கள். அவர்களது கடவுச் சீட்டுகளைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
இத்தனைக்கும் மத்தியில் மீரா தான் வைத்திய சாலைக்குக் கடமைசெய்யச் செல்ல வேண்டும் என்பதை அவர்களுக்கு நினைவூட்டினாள். அங்கு நோயளிகளைக் கவனிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தாள். அவளைப் போக அனுமதித்தார் கள். அவள் குளித்து, மகன் குருபரனோடு புறப்பட்டாள். குருபரன் இப்போது இருபத்தொரு வயது வாலிபன். வெற்றிவேலரையும் குளிக்க அனுமதித்தார்கள். ஆனால் குளியலறைக் கதவை முற்றாக மூட அனுமதிக்கவில்லை.
தொப்புள்கொடி 65

Page 36
புறப்பட்டுக்கொண்டிருந்த மீராவைப் பார்த்து வெற்றிவேலர் σε όσοτητή.
"நீ செய்வது சரியானதுதான் என்னும் தெளிவு உனக்கிருந்தால் நீ அஞ்சுவதற்கு எதுவும் இல்லை." என்றார்.
வெற்றிவேலரின் கணினியைக் குடைந்தார்கள். அந்த ஆவணக் கோப்புகளை அவர்களால் திறக்க முடியவில்லை. வெற்றிவேலரின் உதவியைக் கேட்டார்கள்.
வெற்றிவேலர் காவல் நிலையத்துக்கு கூட்டிச் செல்லப் Lμι Ιι πή.
O
"நீ செய்வது சரியானதுதான் என்னும் தெளிவு உனக்கிருந்தால் நீ அஞ்சுவதற்கு எதுவும் இல்லை.டு
மீராவின் காதில் அந்த வார்த்தைகள் ஒலித்துக்கொண் டிருந்தன.
குருபரன் காரை ஒட்டினான். அவள் எண்ணங்கள் பின்னால் ஓடின.
மீரா இலண்டனில் தாதிப் பயிற்சி பெற்றவள். அண்ணன் மெல்பேர்னில் இருந்ததால், அவள் ஆஸ்திரேலியாவுக்கு 1981 களிலேயே வந்துவிட்டாள். அவளது சகோதரியும் மெல்பேர்னில் இருந்ததால் இலண்டனில் இருந்த தனிமை கழிந்து, மகிழ்ச்சிகரமாக நாட்கள் ஓடின. 1982 களில் வெற்றிவேலர் இலண்டனில் இருந்து மெல்பேர்ன் வந்தார். அப்போது அவர் இளம் வாலிபர் வாழ்க்கை வாழ்வதற்கே என்று இளமையின் இனிமைகளை சுவைத்து வாழ்பவர். அணிவது லெதர் ஜக்கட் ஒடுவது பெரிய மோட்டோர் சைக்கிள். விலை உயர்ந்த கறுப்புக் கண்ணாடி அவர் முகத்திலே, சனி, ஞாயிறு தவறாது எங்கேயாவது இளைஞர்களுடன் 'பார்ட்டி' கழுத்தில் தொங்கும் "கிட்டார்’.
கிட்டாரை வாசித்து அவர் ஆடும் அழகில் மீரா கவரப் பட்டாள். புன்னகை பூத்த மீராவின் முகமும் அன்பான பேச்சும் வெற்றிவேலரை அவளிடம் தோற்க வைத்தன. எத்தனையோ தமிழர்களைத் தம் சொந்த மண்ணில் இருந்தும், சொந்தங்களிடம் இருந்தும் பிரித்த 1983 இனக் கலவரந்தான், இந்த இளஞ்சோடியைச் சேர்த்து வைத்தது.
அப்போது மெல்பேர்னில் நாற்பது தமிழ்க் குடும்பங்களே இருந்திருக்கும். இனக் கலவரம் வெடித்தபோது இவர்களில் பலர் மீராவின் அண்ணன் வீட்டிலேயே கூடுவார்கள். மீரா எல்லோருக்கும் தேநீர், உணவு பரிமாறுவாள். கன்பராவுக்குச் சென்று சிறிலங்காவின் இனப்படு கொலையைக் கண்டித்து
66 தொப்புள்கொடி

பாராளுமன்ற முன்னிலையில் ஆர்ப்பாட்டம் செய்வதாகக் கூடி யோர் தீர்மானித்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மெல்பேர்னில் இருந்து இருபது பேர் சென்றார்கள். மீராவும் அவளது மூத்த சகோதரியுமே, அதில் கலந்து கொண்ட இரண்டு பெண்கள். ஆர்ப்பாட்ட இறுதியில் ஒரு விண்ணப்பம் பிரதமரிடம்
கையளிக்கப்பட்டது.
அப்பொழுதுதான் மீரா வெற்றிவேலரின் அன்பான இதயத்தைப் புரிந்துகொண்டாள். விளையாட்டுப் பிள்ளை போல் இருந்த வெற்றிவேலர் தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி தன் சொந்தக் குடும்பத்துக்கு நடந்ததாகவே எடுத்துக் கொண்டார். பத்திரிகையில் செய்திகள் படிக்கும்போது கண்கள் கலங்கிவிடும். இந்தக் காலகட்டத்திலேயே மீனாவும் இலண்டனில் இருந்து வந்தாள். மீனா, மீரா, வெற்றிவேலரின் நட்பு உறுதியாக வளர்ந்தது. எல்லோரையும் தமிழரின் துயர் துடைக்க வேண்டும் என்ற குறிக்கோள் ஒன்று சேர்த்தது. தொலைபேசி செய்திச் சேவை ஒன்றை ஆரம்பித்தார்கள். மாமனிதர் எலியேசரின் முயற்சியால் உருவான தமிழ் வானொலியில் வெற்றிவேலரின் குரலும் ஒலிக்கும். மீனாவும் தளராத உழைப்பாளி. அப்பொழுது பல இயக்கங்கள் தமிழருக்காகப் போராடிக்கொண்டிருந்தன. இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலமது. அந்த இயக்கங்களுக்கு இந்தியா இராணுவப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்தது. பல அகதிகளும் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்தனர். மீனாவின் உந்துதலால் முதன்முறையாக மெல்பேர்னில் பெருந்தொகையான பணம் சேர்க்கப்பட்டது.
அகதிகளுக்கு உதவ இந்தியாவில் பல தொண்டு நிறுவனங்கள் பணியில் இறங்கி இருந்தன. பெருந் தொகையாகச் சேர்க்கப்பட்டப் பணத்தை யாருக்கு அனுப்புவது என்பதில் வெவ்வேறு கருத்துகள். இது குறித்து ஒரு கூட்டத்தில் கதைத்தபின் இந்த மூவரோடு வேறும் இரண்டு ஆண் நண்பர்கள் காரில் வந்துகொண்டிருந்தார் கள். அவர்கள் கலந்தாலோசனை காரில் தொடர்ந்தது. இரவு இரண்டு மணி வரை கதைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவ்வழியே சென்ற ஒரு காவல்துறை வாகனம் சந்தேகங்கொண்டு அவர்களை விசாரித்தார்கள்.
ஒரு காவல்துறையினன் மீராவைப் பார்த்துச் சிரித்தவாறு கேட்டான்.
"அழகான பெண்ணே, இந்த ஆண்களால் உனக்கு ஒரு தொல்லையும் இல்லையே?”
மீரா பதில் சொல்லுமுன் வெற்றிவேலர் முந்திக்கொண்டார்.
“உங்களுக்குக் கவலை வேண்டாம். இந்தப் பேரழகியை நான்தான் கலியாணம் செய்யப்போகிறேன்." என்றார்.
தொப்புள்கொடி 67

Page 37
அப்படித்தான் வெற்றிவேலர் தன் காதலை மீராவுக்கு முதலில் வெளிப்படுத்தினார். வெற்றிவேலர்தான் அவர்கள் குடும்பத்தில் இளையவர். தன் சகோதரர்களிடம் அளவில்லாத அன்பு கொண்டவர். வெற்றிவேலர் சொல்வதை அவர் அண்ணன், அண்ணியர் எல்லோருமே கேட்டு நடப்பார்கள். அவரது மூத்த அண்ணர் தம்பியைத் தன் செல்லப் பிள்ளையாகவே எண்ணினார். அவர்கள் எல்லோருடைய நல்லாசிகளுடன், 1984இல் வெற்றிவேலர், மீரா திருமணம் 'ஸ்பிரிங்வேல்' நகர மண்டபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர், நண்பர்கள் புடைசூழ மங்களகரமாக நடந்தேறியது.
திருமணம் முடித்துப் போருக்குப் புறப்பட்ட போர் வீரனின் கதை போன்றதுதான் மீரா, வெற்றிவேலர் வாழ்க்கை. அவர்களது முதலிரவு அன்றுதான் 'ஆஸ்திரேலிய ஆசிய தமிழர் சம்மேளனம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்தக் கூட்டம் மிக முக்கியமானது என்று கூறி, வெற்றிவேலர் முதலிரவில் மீராவைத் தனியாக விட்டுச்சென்றார். தமிழர் பால் அவர் கொண்ட அன்பைப் புரிந்துகொண்டாலும் இளமைக் கனவுகளோடு இருந்த மீரா ஒர் உண்மையைத் தெரிந்துகொண்டாள். வெற்றிவேலர் தனக்குச் சொந்தமாகும் முன் ஈழத் தமிழருக்கு சொந்தமாகிவிட்டார்.
வெற்றிவேலர் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியில் படிப்பித்துக் கொண்டிருந்தார். அவர் மாலை வகுப்புகளே எடுத்தார். வகுப்புகள் முடிந்ததும் மெல்பேர்ணில் இருந்த ஒவ்வொரு தமிழ் வீடாகச் செல்வார். அவர் செல்லும் வீட்டார் எல்லாம் அவருக்குச் சொந்தமானார்கள். ஈழப் பிரச்சனையை அவர்களோடு விரிவாகப் பேசுவார். பலரது குடும்பப் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பார். மீராவின் குடும்பத்திற்கு அவர்; தலைவனோ இல்லையோ, மெல்பேர்ன் வாழ் தமிழர் மதிக்கும் தலைவன் ஆனார். சிறீலங்கா அரசு மருந்துகளோ அத்தியாவசியப் பொருட்களோ தமிழர் பகுதிக்குச் செல்வதற்குத் தடைவிதித்திருந்தது. பொருட்கள், நிதிகள் என்று சேர்த்து நாட்டுக்கு அனுப்புவதில் முழு மூச்சாக உழைத்தார். எந்த நிதியானாலும் தானே முதலில் பணம் போடுவார். தன்னிடம் வசதியில்லாத நேரங்களில் கடன் வாங்கியேனும் தன் பங்கைக் கொடுப்பார்.
அவர்கள் சிறிய வீட்டிலேயே ஓர் அறை கூட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது. நாளும் பொழுதும் கூட்டங்கள் நடந்தன. வெளிநாட்டிலிருந்து வரும் தமிழருக்கு இருக்க இடமும் விருந்தும் வழங்கப்பட்டன. எந்த நாட்டிலிருந்து எவர் வந்தாலும் அவர்களை வெற்றிவேலர் சந்திக்கத் தவறமாட்டார். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும் தயங்க மாட்டார். அதனால் அவர் உள்நாட்டில் மாத்திரமன்றி வெளி நாடுகளிலும் பிரபலமானார்.
68 தொப்புள்கொடி

ஊதியமற்று விடுமுறை எடுத்துப் பல நாடுகளுக்கும் சென்று தமிழ்ப் பற்றாளரோடு கலந்து ஆலோசிப்பார்.
மீரா பகலில் வேலை செய்தாள். இரவு வேளைகளில் வெற்றிவேலர் தன் தொண்டுகளை முடித்து வர நடுநிசியைக் கடந்துவிடும். மீரா அவரோடு பேசும் நாட்கள் குறைந்தன. அவள் தாயான பின்பும் வெற்றிவேலரின் நாளாந்த தொண்டுகளில் மாற்றம் ஏற்படவில்லை. மீரா வேலைக்குப் போய்விடுவாள். குழந்தை குருபரனைச் சுற்றித் தலையணைகளை அடுக்கி வைத்து விட்டு அவர் தன் வீட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்வார். வேறு இடங்களில் கூட்டம் நடந்தால் பிள்ளையையும் கூட்டிச் செல்வார். கூட்டத்தில் நடந்த சர்ச்சைகளில் தன்னை முழுதாக ஈடுபடுத்திய வெற்றிவேலர், ஒரு முறை பிள்ளையையும் மறந்து தனியாக வீடு திரும்பிவிட்டார். மீராவின் சகோதரி அடிக்கடி வந்து பார்த்துக் குழந்தையைக் குளிப்பாட்டிச் செல்வாள். மனைவி, குழந்தைமீது எவ்வளவு அன்பு இருந்தாலும், முன்னுரிமை தமிழ் மக்களுக்கே இருந்தது.
1987இல் தமிழரின் நலம் கருதித் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அதன்பின் மீரா எப்பொழுதாவது தன் கணவனுடன் சில நிமிடங்கள் பேசக்கூடியதாக இருந்தது. குருபரன் அயலில் வாழ்ந்த தமிழர்களாலேயே ஒருவகையில்
offic.
கிடைக்கும் சொற்ப நேரத்தில் வெற்றிவேலர் தன் குழந்தை மீதும், தன்மீதும் காட்டும் அன்பு ஒன்றே மீராவுக்குச் சொர்க்கமாக இருந்தது. தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் வெற்றிவேலர் தனக்குக் கணவனாகக் கிடைத்தாரே என்று மீரா பெருமை கொள்வாள். தன்னோடும் இன்னும் சில மணித்துளிகளைச் செலவழிக்கமாட்டாரா என்று ஏங்குவாள். நல்ல உணவு உண்ணாது, ஒழுங்காக உறங்காது தன் உடல் நலத்தைக் கெடுக்கின்றாரே என்று கவலை கொள்வாள்.
O
அன்று மாலை மூன்று மணிவரை மாதவனும் ஆரபியும் வெற்றிவேலரும் வெவ்வேறு அறைகளில் வைத்து விசாரிக்கப் பட்டார்கள். மாலை நேரத் தொலைக்காட்சிகள் இதைச் செய்தியாக வெளியிட்டன. ஈழத்தில் நடக்கும் பயங்கர இன வெறியாட்டத் திற்கு, ஆஸ்திரேலியத் தமிழர்கள் எதிர்ப்பு அணி நடத்தும் போதெல்லாம் கண்டுகொள்ளாத ஊடகங்கள் இதனைப் பெரிய செய்திகளாக வெளியிட்டன.
திலகா கதறி அழுதாள். இளங்கோவன் சட்ட வல்லுநர்களைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆரபியின் உடல் இந்த அழுத்தங்
தொப்புள்கொடி 69

Page 38
களை எல்லாம் தாங்கிக்கொள்ளுமா? திலகா பட்ட வேதனைகள் போல் அவளும் துன்பப்படுவாளா? தாய், தந்தையர் தவித்தார்கள்.
அவர்கள் பயந்தது போல் விபரீதமாக ஏதும் நடக்கவில்லை.
விசாரணைகளின் முடிவில் அவர்கள் மீது எந்தக்
குற்றத்தையும் சுமத்த முடியவில்லை. இது ஒரு விசாரணையே என்று சொல்லப்பட்டது.
அவர்கள் எல்லோரும் வீடு திரும்பினார்கள்.
அது அவர்கள் வீடுதானா என்ற சந்தேகமும் அவர்களோடு திரும்பியது.
சிறையில் அவர்களை வைக்கவில்லை.
ஆனால் அன்றோடு அவர்களது வாழ்க்கையின் அமைதியும் மகிழ்ச்சியும் மெல்பேர்னின் காவல் நிலையத்திலே சிறைப்படுத்தப் பட்டன.
70 தொப்புள்கொடி

கிTர்த்திகை 2005. காவற் துறையின் திடீர் சோதனை நடந்து சில நாட்கள் கழிந்தன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வழ்மையான வாழ்க்கைக்குத் திரும்ப முயன்றார்கள். பூத்து, இதழ் விரித்த அழகான மலரை ஒரு முறை கசக்கிவிட்டால், அதை மீண்டும் புது மலராக்க முடிவதில்லை. காற்றில் சாளரக் கதவின் ஒசை கேட்டாலும் காவல் துறையினர்தான் வருகின்றார்களா என்ற எண்ணம் ஏற்படும். வீட்டின் ஒவ்வொரு சுவரிலும் பல காதுகள் இருந்து, தாங்கள் கதைப்பதை செவிமடுப்பது போலிருக்கும். உடை மாற்றும் போதும், யாரோ ஒளித்திருந்து தங்களைப் பார்ப்பது போல் உணர்வு தோன்றும். பாதி உடை மாற்றும் போது பயத்துடன் ஆரபி அங்குமிங்கும் பார்ப்பாள். தூக்கத்தில் விழித்துக் கொள்வார்கள். இரவு வழமைபோல் வரும் தூக்கம் அவர்களைப் பிரிந்து தூர நின்று வேடிக்கை பார்க்கும்.
ஆரபி தவறு செய்யாதவர்கள் எந்த அச்சுறுத்தலுக்கும் பயந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள். எது நடந்தாலும் தன் பிள்ளைக்கு ஏதும் நடக்கவிடப் போவதில்லை என்று திட சங்கற்பம் கொண்டாள். அவள் இப்போது ஏழு மாத கர்ப்பிணி முன்பு போல் அவளால் ஒடியாடி வேலைசெய்ய முடியவில்லை. இளங்கோவன், திலகா தவறாது கோயிலுக்குச் சென்று அவளுக்காக அர்ச்சனை செய்தார்கள்.
மாமனிதர் எலியேசரின் படத்தின்கீழ் மீண்டும் அரசியல் குழு கூடிற்று. ஆஸ்திரேலிய சட்டங்களை மீறாத வகையில் வழமைபோல் தமிழரின் விடுதலைப் போராட்டத்ததை எடுத்துச் செல்வதில் எவ்விதத் தயக்கமும் இருத்தல் ஆகாது என்ற கருத்து மேவி நின்றது. மாவீரர் நாளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதில் எல்லோரும் முனைப்போடு ஈடுபட்டனர். வழமையாக விழாவுக்கு வரும் தமிழ் அன்பர்கள், இம்முறையும் வருவார்களா என்ற கேள்விக்குறி பலர் மனதில் இருந்தது. விழா ஒரு வேலை நாளில் இருந்ததால் பலருக்கும் இது குறித்துப் பலத்த சந்தேகம். எதிர்பார்த்ததையும் விடத் திரளாக மக்கள் வந்து மாவீரருக்கு அஞ்சலி செய்தனர்.
O
தொப்புள்கொடி 71

Page 39
அது யேசுநாதர் பிறந்த நாள். 2005 மார்கழி 25 வெற்றிவேலரும் மீராவும் இரவு உணவுக்கு ஆரபி வீட்டிற்கு வந்திருந்தார்கள்.
மீராவின் கைவண்ணத்தில் மலேசிய வாசனையோடு பல கறி வகைகள். மாதவன் நல்ல காரமாக வைத்த ஆட்டிறைச்சிக் குழம்பு. ஆரபி தாய் சொல்லிக்கொடுத்தது போல் கத்தரிக்காய் பொரித்துக் குழம்பு வைத்திருந்தாள். ஊரரிசி மாவில் சிவந்த குழல் பிட்டு. நடுநடுவே தேங்காயும் கலந்து புதுச் சுவை கொடுத்தது. போதாது என்று ஆரபி அதில் சிறிது உழுத்தம் மாவும் கலந்திருந்தாள்.
வெற்றிவேலர் உணவைச் சுவைத்து உண்பவர். கலகலப்பான பேச்சுகளுக்கும், சிரிப்புகளுக்கும் நடுவே பிட்டுப் பாத்திரம் காலியாகிக்கொண்டிருந்தது.
தொலைபேசி அலறியது. அதற்குக்கூட நல்ல செய்தி, கூடாத செய்தி என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றதோ ?
ஒரு கையில் குழைத்த பிட்டோடு, மறு கையால் மாதவன் தொலைபேசியை எடுத்தான். கையிலிருந்த பிட்டு நழுவி, தரையில் விரித்த கம்பளத்தை அழுக்காக்கியது. அவன் முகத்திற்கு இரத்த ஒட்டம் பரவுவதை நிறுத்திக் கொண்டது.
அவன் முகம் வெளுத்தது. ஒரு வாரத்துக்கு முன்னர்தான் அந்த நல்ல மனிதருக்கு நத்தார் வாழ்த்து அட்டை அவன் அனுப்பியிருந்தான்.
மயூரன் சொன்ன செய்தி இதுதான்.
நத்தார் தினமன்று காலை 1.20 மணியளவில் சென்ற் மேரீஸ் தேவாலயத்திலே பிரார்த்தனையில் தன் மனைவியுடன் ஈடுபட்டிருந்த வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்தச் செய்தி அவர்கள் எல்லோருக்கும் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுத்தது. இரண்டு மாதங்களுக்கு மேல் மெல்பேர்னில் அவர் களோடு ஒரு குடும்ப உறுப்பினர் போல் பழகியவர். புன்னகை பூத்த முகம், இனிமையாக எல்லோரோடும் பழகும் சுபாவம். அவர் ஒட்டு மொத்தமாகத் தமிழரின் உயிர்த் தோழர். பாராளு மன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் மெல்பேர்ன் வந்திருந்த சமயம் பல ஆஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தமிழரின் அவல நிலை குறித்து விளக்கி இருந்தார். தெளிந்த நடையில் சரளமான ஆங்கிலத்தில் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
"ஐயா, கிழக்கில இன்றைக்கு சிறீலங்காவோட சேர்ந்து இயங்கிற ஆயுதக் குழு எத்தனையோ தமிழ்ப் பற்றாளர்களைக் கொன்றிட்டிது. நீங்கள் கவனமாக இருக்க வேணும்.”
72 தொப்புள்கொடி

மாதவன் அவருக்கு இப்படிக் கூறியபோது, அவரது முகத்தில் பரந்த அந்த மந்தகாசப் புன்னகையை அவனால் மறக்க முடியவில்லை.
"ஆயுதம் தூக்காத எங்களைக் கொல்லுறது அவங்களுக்குச் சுகம். ஆயுதங்கள் இல்லாத எங்கடை சனமும் தங்களைக் காப்பாற்ற எங்களை மாதிரி ஆக்களைத்தானே நம்பியிருக்கு. நாங்கள் செத்தாலும் எங்கடை பேச்சுகள், எழுத்துகள் உலகத்தின்ரை மனச் சாட்சியை உறுத்தத்தான் போகுது. எங்கடை கண்மூடினால் பரவாயில்லை. உலகத்தின்ரை கண் திறக்க வேணும்.”
அவரது உறுதியான வார்த்தைகள் எங்கும் எதிரொலித்தன.
மீரா கண்களைத் துடைத்தாள். மறைந்த அந்த மாமனிதருக் காக மாத்திரமல்ல, அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி சுகுணத்தை நினைத்தபோது அவள் கண்கள் நனைந்தன. அவரின் பாதுகாப்புக்காக ஒரு கணங் கூடத் தன் கணவனைச் சுகுணம்
பிரிந்திருக்கமாட்டார்.
மீரா ஏக்கத்தோடு வெற்றிவேலரைப் பார்த்தாள்.
O
ஆரபியின் பிரசவத்திற்கான நாட்கள் நெருங்கிக் கொண் டிருந்தன. அடிக்கடி வைத்தியரிடம் சென்றுவந்தாள். அவளது இரத்த அழுத்தமே அவர்களுக்குச் சிறிது கவலை தந்தது. நாட்கள் நெருங்கத் தூக்கம் கலைந்தது. வயிற்றில் பிள்ளை உதைப்பதை நிறுத்தி உருளுவது போல் இருந்தது. மாதவன் ஒவ்வொரு இரவும் அவளது நாரி நோவுக்கு வென்னிர் ஒத்தடம் கொடுத்தான். கால், கைகளில் வீக்கம் தெரிந்தது. எதை அவள் செய்ய முனைந் தாலும் அது கடினமாக இருந்தது. களைப்பு மேலிட்டது. அடிக்கடிச் சிறு நீர் கழிக்க வேண்டியிருந்தது.
இளங்கோவனும், திலகாவும் இந்தியாவுக்குக் கோயில் யாத்திரை சென்றனர். ஈழத்தின் நல்லூர், சந்நிதி, வல்லிபுர ஆழ்வார் கோயில்களுக்குச் சென்று பிரார்த்திக்க விரும்பினார்கள். ஈழம் போக முடியாத காலகட்டம். சிதம்பரம், மதுரை மீனாட்சி, பழநி, திருச்செந்தூர் தலங்கள் எல்லாம் சென்று ஆரபியின் குழந்தை சுகமாகப் பிறக்க வேண்டுமெனப் பிரார்த்தித்தார்கள். காசி, வர்ணாசி சென்றார்கள். விடியற் காலை ஏழு மணிக்குக் கங்கையில் குளித்தார்கள்.
அந்த நாள் வந்தது. 2006 மாசி ம்ாதம் 7ஆம் திகதி. இரவு ஒன்பது மணி. வைத்தியர்கள் சொன்னது போல் குழந்தை பிறக்க வேண்டியதற்கான அடையாளங்கள் ஆரபிக்குத் தெரிந்தன. பிரசவ வேதனையை அவளால் உணர முடிந்தது. வைத்திய சாலைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய பொருட்களை ஏற்கனவே
தொப்புள்கொடி 73

Page 40
பெட்டியில் எடுத்து வைத்திருந்தாள். மாதவன் தனது வாகனத்தில் பின்தொடர, ஆரபி முதலுதவி வண்டியில் கிளைடன் வைத்திய சாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டாள்.
இயற்கை முறையில் குழந்தையைப் பெற அவளால் முடிய வில்லை. வயிற்றில் இருந்த குழந்தையின் இருதயத் துடிப்பு பலம் குன்றுவதை வைத்தியர்கள் அவதானித்தார்கள். அறுவை சிகிச்சை பிரசவம் செய்யப்பட்டது. பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பலவீன்மாக இருந்ததால் அடைவு காக்கும் கருவியில், நான்கு வாரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டாள்.
கலைந்த கேசம், களைப்பின் முத்திரைகள் முகத்தில் கோலமிட்டிருந்தன. ஆரபியின் கண்கள் மூடியிருந்தன. கழுத்துவரை வெள்ளைப் போர்வை மூடியிருந்தது. வைத்தியசாலை ஏனோ மெளனமாகிவிட்டது. நோயாளிகளின் முனகல் ஒலிகூடக் கேட்கவில்லை.
மாதவன் வைத்த விழி வாங்காது ஆரபியின் மூடிய கண்களைப் பார்த்தான். அவன் அமர்ந்திருந்த சிறிய நாற்காலி ஆரபியின் தலையருகே இருந்தது. மிகக் குறுகிய இடமாதலால் கட்டில்களைப் பிரிக்கும் திரைச் சேலை அவன் தோளை அணைத்தபடி தொங்கியது. மாதவன் ஆரபியின் நெற்றியைத் தடவினான். அவளிடம் எந்தவிதச் சலனமும் இல்லை.
"ஆரபி” என்று மெதுவாக அழைத்தான். அவளுக்கு அது கேட்டதாகத் தெரியவில்லை. அவள் கையைத் தன் கையில் வைத்து அழுத்தினான். அவள் அசையவில்லை. அவன் மனதில் என்றுமில்லாத சஞ்சலம். அவளுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற குழப்பம். தாதிமாரின் குரலும் வைத்தியரின் குரலும் அமைதியைக் கிழித்தன. திரையை விலக்கி ஒரு தாதியும் ஒர் இளம் டாக்டரும் ஆரபியின் கட்டில் அருகே வந்தனர். மாதவன் எழுந்து நின்றான். மாதவனைப் பார்த்து ஆஸ்திரேலிய வெள்ளை நிற இளம் வைத்தியர் புன்னகைத்தார்.
"பயப்பட ஏதும் இல்லை. ஆரபி பலவீனமாக இருக்கின்றாள். இன்னும் சில நாட்களில் தேறிவிடுவாள். அழகான பெண் குழந்தைக்குத் தந்தையாகி இருக்கின்றீர்கள். என் பாராட்டுக்கள்." என்றார் அந்த இளம் வைத்தியர்.
நான்கு வாரங்கள் தாயும் மகளும் வைத்தியசாலையில் இருந்தபோது மாதவன் தவித்துப்போனான். ஆரபி குழந்தை நிலாவோடு வீடு வந்த பின்னரே அவர்கள் வாழ்வில் இன்னொரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகியது.
நிலாவின் சிரிப்பில், அழுகையில் தங்கள் கசந்த அனுபவங் களைச் சிறிது மறந்திருந்தார்கள்.
74 தொப்புள்கொடி

வெ ற்றிவேலர் அரசியல் குழுக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அவரது முகம் கவலையால் வாடியிருந்தது. மாமனிதர் எலியேசரின் படத்தின் கீழ் அவர்கள் கூடினார்கள். இளங்கோவன், மீனா, மாதவன், மயூரன், பெரியவர், இன்னும் நான்கு பேர் அங்கு வந்திருந்தனர். வழமையான அக வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பமானது.
ஈழத்தில் சிறீலங்கா அரசால் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு வெறியாட்டங்கள், உலகம் கண்ணை மூடிக் கொண் டாலும், தமிழர் உள்ளங்களை உலுப்பின. 2006ஆம் ஆண்டு, மே 13ம் திகதி மண்டை தீவில் தங்கியிருந்த சிறீலங்காவின் கடற் படையினரின் துப்பாக்கி வேட்டையில் அனக்ஸ் எஸ்டர் எனும் 23 வயது தாய், அவள் கணவன், 4 வயது மகன், நான்கு மாதக் குழந்தை உட்பட ஒன்பது பேர் அல்லப்பிட்டி என்னும் இடத்தில் பலியானார்கள். கொலைசெய்யப்பட்ட தாய், தந்தை யருக்கு நடுவே நான்கு மாதக் குழந்தை பரிதாபமாக இறந்த காட்சியை இணையதளங்களில் பார்த்தவர்கள் பதைத்தார்கள்.
அல்லைப்பிட்டியைத் தொடர்ந்து வங்காலை, மன்னாரில் அதே ஆண்டு யூன் மாதம் 9ஆம் திகதி சிறீலங்கா இராணுவம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரைத் தன் வெறிக்குப் பலியாக்கியது.
அந்தப் படத்தை வெற்றிவேலர் கையில் வைத்திருந்தார். எல்லோரும் அவரைச் சூழ்ந்து நின்று படத்தைப் பார்த்தனர். "கடவுளே” என்றார் அங்கிருந்த ஒரே ஒரு பெண்மணி மீனா.
"ஓ மை கோட்” என்றனர் சிலர். நீண்டதொரு சோகப் பெருமூச்செறிந்தனர் வேறு சிலர். மெளனமாகக் கண்ணிர் வடித்தோர் இன்னும் சிலர்.
படத்தைப் பார்த்த மாதவன் சாளரத்துக்கு வெளியே உலகை வெறித்து நோக்கினான். வங்காலையில் சிறீலங்கா இராணுவம் நடத்திய வெறியாட்டம் நிழல் படத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. படத்தில் மூன்று கயிறுகளில் கழுத்தில் முறுக்கேற மூன்று உடல்கள் தொங்கின. அவர்கள் உடல்களில் வெறி நாய் கடித்துக் குதறியது போல் இரத்தக் காயங்கள்.
தொப்புள்கொடி 75

Page 41
நீல நிறக் காற்சட்டையோடு ஏழு வயதுச் சிறுவன் ஆன் நிக்சன்.
"நான் ஒன்றும் செய்யவில்லையே, என்னை ஏன் கொன்று விட்டாய்?" தலை சரிந்து, விழிதிறந்து கேட்பது போல் அவனது ஒன்பது வயதுச் சகோதரி ஆன் லக்சிகா.
"என்னால் இதைத் தடுக்க முடியவில்லையே” என்பது போல் கழுத்தொடிந்து தொங்கும் அவர்களது முப்பத்தைந்து வயதுத் தந்தை மூர்த்தி மார்ட்டின்.
"இறைவா எங்கே போய்விட்டாய்?" என்று கேட்பது போல் கற்பழிக்கப்பட்டுக் கொலையுண்டிருக்கும் இருபத்தேழு வயது மேரி மர்லின் சித்ரா,
படங்கள் பேசவில்லை. மானிடத்தைத் தலைகுனிய வைத்தன.
உலகம் முழுவதையும் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி ஆயிரம் கேள்விகள் கேட்டன.
சில மணித் துளிகள் எவரும் ஏதும் பேசவில்லை. இப்படிப் பல அகோரமான படங்களை அவர்கள் பார்த்திருக்கின்றார்கள். ஆனால் இவை அவர்கள் இதயங்களைக் குடைந்தன.
"என்னண்ணை செய்யலாம்?” மாதவன் குரலில் வெறுப்பும் கோபமும் கொப்பளித்தன.
"இந்தப் படத்தைப் பார்த்த பிறகாவது வெளிநாட்டுச் சனங்களுக்கு விளங்க வேண்டாமே ஆர் பயங்கரவாதிகள் என்று? இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடுகிறவன் பயங்கரவாதி. கொடுமையைச் செய்யிறவன் சனநாயகவாதியாம். எங்க போயிட்டிது நியாயம். ?”
மீனா கண்ணிரைத் துடைத்தாள்.
"அதுகளைக் கொன்றிட்டாங்கள். இனி அதுகள் கதைக்க ஏலுமே? அதுகள் குரலை நாங்கள்தானே உலகுக்குக் கேட்கச் செய்ய வேணும். உலகத்துக்குச் சொன்னால்தானே உண்மை விளங்கும். இப்பிடி அநியாயம் எவ்வளவு காலமாகச் செய்யிறாங் கள் ?” மயூரன் சிறிது ஆவேசமாகவே பேசினான்.
"அழுகிறதாலேயோ ஆத்திரப்படுகிறதாலேயோ ஒன்றும் நடக்கப்போறதில்லை. நாங்கள் செய்யக்கூடியது ஒன்றுதான். இந்த உலகத்தின்ரை மனச்சாட்சியைத் தட்டி எழுப்ப வேணும். அதுக்கு என்ன செய்யலாம் என்று யோசியுங்கோ” வெற்றிவேலர் G&EIT6676OTITri.
இப்படி ஒவ்வொருவரும் என்ன செய்யலாம், என்ன செய்தோம் என்பது குறித்துப் பல்வேறு கருத்துகளை எடுத்துச்
76 தொப்புள்கொடி

சொன்னார்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆவேசம் எல்லோரிடமும் இருந்தது. வெற்றிவேலர் சிறிது நேரம் எல்லா வற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார். இடையில் பல தடவை அவரது தொலைபேசி அலறும். உள்ளே சென்று பலரோடு மாறி மாறி பல முக்கிய விடயங்களைப் பேசினார்.
“என்ன முடிவு எடுத்தியள்?” வெற்றிவேலர் தனக்கே உரிய மென்மையான குரலில் கேட்டார். எல்லோரும் மாறி மாறி ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தனர்.
"பேசிக்கொண்டிருக்கிறதில அர்த்தமில்லை. தமிழன்; தவளை கள் மாதிரி கத்திப் பேசியே செத்துப்போனான். இஞ்ச பாருங்கோ சிட்னியில இருந்துதான் போன் வந்நது. தலைநகர் கன்பராவில பாராளுமன்றத்துக்கு முன்னால ஒரு பகிரங்க உரிமைக் குரலை எழுப்புவோம். சிட்னி கிளை ஏற்பாடுகளைச் செய்யும். இங்கே உள்ள நீங்கள் அவேயோட சேர்ந்து இதை வெற்றிகரமாக நடத்த வேணும். எல்லா மாநிலத்தில இருக்கிற எங்கடை சனம் அங்க வந்து குவிய வேணும். எங்கடை குரல் ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்துக்குக் கேட்காட்டிலும் அந்த பரமசிவனுக்குக் கேட்கப் பலத்து ஒலிக்க வேணும்”
பேசி முடித்த வெற்றிவேலர் சிறிது மூச்சிழுத்தார். அவருக்கு இரத்த அழுத்தம் அதிகம். இந்த வேலைகளின் அழுத்தங்களில் மருந்துக் குளுசை போட மறந்துவிட்டார்.
"எப்ப அண்ணை இது?” மாதவன் கேட்டான்.
"இன்றைக்கு வெள்ளிக்கிழமை. திங்கள் காலை ஒன்பது மணிக்கு அங்க சனம் நிற்க வேணும்” வெற்றிவேலர் முடிக்கும் முன் ஒரு பெரியவர் குறுக்கிட்டார்.
“இது நடக்கிற விசயமே. அவ்வளவு சனத்தைத் திரட்ட ஏலுமே? வேலைக்குப் போற சனம் லீவெடுக்க வேணுமில்லே”
“ஒரு நாள் வேலைக்கு லீவெடுக்க ஏலாதே? அங்க சனம் நிரந்தரமா வாழ்க்கைக்கே லீவு குடுக்கிது. வயலில விதைக்க ஏலாது. லான்ட் மையின்ஸ் விதைச்சிருக்கிறாங்கள். மீன் பிடிக்கப் போக ஏலாது. டோராவில சுத்திறாங்கள். கடலுக்குப் போறதுக்குத் தடை பெண்டு பிள்ளையளின்ரை வெறும் வயிற்றைப் பார்த்து, வேற வழியில்லாமல் கடலுக்குப் போனால் சூடு, வள்ளம், வலை பறிமுதல். பள்ளிக்கூடத்துக்குக் குண்டு. வாத்திமாருக்கு வேலையில்ல. பிள்ளையஞக்குக் காயம். சாவு. ஆஸ்பத்திரிக்குப் போக அமடலன்ஸ் இருக்காது. தப்பித் தவறி இருந்த்ால், போற பாதையில தடை. ஆஸ்பத்திரியில மருந்தில்லை. கட்டிலும் இல்லை. பாயும் இல்லை. குண்டுக்குத் தப்பிக் கட்டிடம் எத்தனை நாளைக்கு இருக்கும் என்று சொல்ல ஏலாது. டாக்குத்தர்,
தொப்புள்கொடி 77

Page 42
நேர்ஸ்மாரின்ரை நிலைமை சொல்லத் தேவையில்லை. டாக்குத்தர் வைச்சிருக்கிற ஊசி சிறீலங்காவுக்கு மெசின்கண் மாதிரி தெரியுது. இங்க ஒரு நாள் வேலைக்கு லீவு போட முடியாதே?” மயூரன் பொழிந்து தள்ளினான்.
பெரியவர் சிறிது வெலவெலத்துப் போனார். “சரி தம்பி. இப்பிடி நீ கதைச்சால் வாற சனமும் வராது. முதியோர் சங்கம் என்ரை பொறுப்பு. அதுகள் மண்ணோட ஒட்டி வாழ்ந்ததுகள். அங்கே ஒன்றெண்டால் முன்னுக்கு நிற்கிறது இதுகள்தான். தொண் ணுாறு வீதம் அதுகள் வரும். நடக்க ஏலுமென்றால் நூறு வீதமும் வரும். நடக்க ஏலாததுசுட நாலு நல்ல வார்த்தை சொல்லும்."
"ஏன் எங்கடை இளம்பெடியள் ஏதும் குறைவே? இங்கிலிசில படிச்சாலும் தமிழிலதான் அதுகள் மூச்சு விடுகிதுகள். முன்னுக்கு நின்று கத்திறது ஆர்? பிரதம மந்திரியென்றாலும் துணிஞ்சுபோய் எங்கடை நிலையை அதுகள்தானே சொல்லுதுகள். நீங்களெல்லாம் நாளைக்கு மெளத்தாயிடுவியள். இதைக் கொண்டுபோறது நாங்கள்தான்." இதுவரை பேசாதிருந்த இளைஞன் மணிவண்ணன் பெரியவரைப் பார்த்துச் சொன்னான். பெரியவர் நெஞ்சைத் தடவிக்கொண்டார்.
எல்லாத் தலைகளும் கூடி என்னென்ன செய்ய வேண்டு மெனத் தீர்மானித்தன. மீனா சிட்னியுடன் இணைந்து பதாதைகள் எழுதுவதற்கும், கன்பராவில் உள்ள அரசியல் பிரமுகர்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளுக்கும் பொறுப்பு எடுத்தாள். மணிவண்ணன் வானொலித் தொடர்புகளுக்கும் இளைஞர் வட்டத்தை அழைத்துவரும் வேலைகளையும் ஏற்றுக் கொண்டான். மயூரன் மெல்பேர்ன் வாழ் தமிழ் மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேரணிக்கு வரவழைக்கும் கடமையை எடுத்தான். மயூரனுக்கு மக்களோடு நேரடித் தொடர்பு இருந்தது. மெல்பேர்னைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவரைப் பொறுப்பாக நியமித்திருந்தான். அதனால் அதனை அவனால் செய்யக் கூடியதாக இருந்தது.
மாதவன் போக்குவரத்தை ஒழுங்குசெய்யும் பொறுப்பை ஏற்றான். உடனடியாக எல்லோரும் தங்கள் கடமையில் குதித்தார் கள். தொலைபேசிகள் அலறின. தலைக்கு மேலே வேலை. கோச் வண்டிகளை ஒழுங்குசெய்யும் முன் எத்தனை பேர் வருவார்கள் என்று தெரிய வேண்டும். அதைச் சொல்லக்கூடிய நிலையில் எவரும் இல்லை. இரவு நேரமாதலால் கோச் வண்டி அலுவலகங் கள் பல காலையில் அழைக்குமாறு பதிவுசெய்த செய்தியில் சொல்லின.
வங்காலை அல்லைப்பிட்டி அரச பயங்கரவாதம் மெல்பேர்ன் தமிழர் நெஞ்சிலே அனலைக் கொட்டிவிட்டது. படங்களில்
78 தொப்புள்கொடி

பார்த்த பிஞ்சுக் குழந்தையின் முகம் அவர்கள் நெஞ்சக் கதவுகன்)ளத் தட்டி எதையோ கேட்கின்றது. "பேச முடியாத சிறுவர்களுக்காகப் பேசுங்கள். அப்பாவி மக்களின் அநியாயச் சாவிலே கொக்கரிக்கும் கொடூர சிறீலங்காவின் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுங்கள்” என்று இரத்த வெள்ளத்தில் இருந்த அந்தக் குடும்பத் தலைவனும், தலைவியும் கதறுவது காதில் ஒலிக்கின்றது. அதனாலோ என்னவோ கன்பராவில் உரிமைக் குரல் ஒலிக்கப்போகின்றது என்று கேள்வியுற்றதும் மெல்பேர்ன் மக்கள் திரண்டு எழுந்தனர்.
மாதவன், மயூரனின் குரல்கள் தொலைபேசிகள் ஊடாக ஒலித்துக்கொண்டே இருந்தன. அடுத்தடுத்த நாட்கள்’இரவு, பகலாக வேலை. ஆரபியும் தன் பங்கிற்குத் தேநீர், உணவு தயாரிப்பது முதல், தொலைபேசி தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தாள். ஊடகத் தொடர்புகளை ஏற்படுத்த மீனாவுக்கும் தந்தை இளங்கோவனுக்கும் உதவினாள். தமிழ் வானொலிகள் நிமிடத்துக்கு ஒரு தடவை கன்பராவில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து அறிவித்துக் கொண்டிருந்தன. நான்கு கோச் வாகனங்களுக்கு ஆட்கள் பதிவுசெய்துகொண்டனர். வேறு கோச்சுகள் கிடைக்கவில்லை. வர விரும்புவோர் பலர் தொடர்ந்தும் தொலைபேசியில் அழைத்துக்கொண்டிருந்தனர்.
"அண்ணே பஸ்ஸில இடமில்லை. உங்கடை காரைச் கொண்டு வாறிங்களே ? உங்களோட இன்னும் நாலு பேர் வருவீனம்”, உரிமையோடு மாதவன் கேட்பான்.
"அதுக்கென்ன தம்பி? இதுக்கில்லாத காரே?” பதில் வரும். இன்னொரு குடும்பத்தில் வயது போன தந்தை கேட்கிறார். “தம்பி நானும் வரப்போறனடா”
"அப்பா, 700 கிலோ மீட்டரப்பா. உங்களால ஏலாது.
விடுங்கோ”
"அப்பா சொல்லுறார். கூட்டிக்கொண்டு போவன்” தாயார் கண்டிப்போடு உரத்த குரலில் சொல்லி, மெதுவாக "நானும்
வாரனடா" என்கின்றாள்.
இயலாத வயது. இருவருமே தொடர்ந்து ஒரு இடத்தில் அரை மணி நேரத்துக்கு மேல் இருக்க முடியாதவர்கள். ஆனாலும் மகனால் மறுக்க முடியவில்லை.
இன்னுமொரு வீட்டில்,
"இஞ்ச பாரும். கன்பரா சரியான குளிரான இடம். சொல்லுறதைக் கேளும். பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு போக ஏலாது. அவனுக்கு ஒன்றரை வயசு, மற்றவன் இப்பதான் மூன்று
தொப்புள்கொடி 79

Page 43
மாதம். இதுகளைக் கூட்டிக்கொண்டு பஸ்ஸிலை போக ஏலுமே?” கணவன் கடிந்துகொள்கின்றான்.
"நாங்கள் வரத்தான் போறம். அல்லைப்பிட்டியில செத்தது எங்கடை வயதுப் பிள்ளையன். நானும் ஒரு தாய்தானே. இந்தக் கொடுமையைப் பார்த்துக்கொண்டு நாங்கள் இருக்க ஏலுமே?” மனைவி பிடிவாதம் பிடித்தாள்.
“நல்லாய் சொன்னாய் பிள்ளை. நானும் வாறன் மகள்” ஆஸ்மா இருமலோடு ஒரத்தில் இருந்த பெரியவர் முனகினார். மருமகன் தலையில் கை வைத்தபடி தரையில் உட்கார்ந்து விட்டார்.
சிறிது நேரத்தின் பின், “இன்னும் ஏன் இருக்கிறியள் வெளிக் கிடுங்கோ” என்று அவர் சொன்ன பின்னரே அந்த வீட்டுக்காரி புன்னகைத்தாள். N
ஞாயிறு இரவு ஒன்பது மணி மாதவன் கோச் வண்டி ஒட்டுநருக்கு எங்கெங்கு எத்தனை பேரை ஏற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறான். மயூரன் கோச்சில் போக இருப்போர் குறித்த நேரத்தில் எங்கு நிற்க வேண்டுமெனும் விபரங்களைத் தன் இளநண்பர்கள் மூலம் அறிவிக்கின்றான். கோச் வண்டிகள் இளசுகள் பழசுகள் என்று பேதமின்றி நிரம்புகின்றன. கார் வண்டிகள் தொடர்கின்றன. இளங்கோவன் தன் மெல்லிய தாடியைத் தடவியபடி தொலைபேசியில் கன்பராவில் உள்ள நண்பர்களிடம், அங்கு வரவிருக்கும் மெல்பேர்ன் தமிழர்களை விடியற் காலையில் சந்தித்துத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு வேண்டிக் கொண்டிருந்தார். அடிக்கடி அவர் விழிகள் மாதவனை நோக்கின. மனம் ஆரபியை நினைத்துக் கொண்டது. மாதவன் தனது வேலையில் முற்றாக மூழ்கியிருந்தான்.
ஆரபியையும் நிலாவையும் தனியாக விட்டு அவன் கன்பரா போவான் என்பது அவருக்குத் தெரியும். முன்பெல்லாம் அவன் வெளியூர் செல்வதையிட்டு அவர் அதிகம் அலட்டிக் கொள்வ தில்லை. ஆனால் இப்பொழுது, அதுவும் காவல் துறையின் திடீர் சோதனைக்குப் பின்னர், அவள் தனித்து இருப்பதை அவர் விரும்பவில்லை. திலகா மிகவும் பயந்தவள். அவள் ஆரபிக்குத் துணையாக மாட்டாள்.
நேரம் ஒடிக்கொண்டிருந்தது. இரவு மணி பத்து. எல்லாப் பயணிகளும் கோச்சில் ஏறிக்கொண்டார்கள் என்பதை மாதவனும் மயூரனும் உறுதிசெய்து கொண்டார்கள்.
இளங்கோவன் இருவரது மேசைக்கும் அருகில் வந்தார். "என்ன தம்பியள் களைச்சுப்போனியளே ?”
80 தொப்புள்கொடி

“என்னண்ணை இது? இப்பிடி எத்தனையைச் செய்திட்டம்? இன்னும் எவ்வளவு செய்யக் கிடக்கு? உங்களை மாதிரி என்ன எங்களுக்கு வயசு போயிட்டுதே?” மயூரன் சிரித்துக்கொண்டு கேட்டான். மிகக் குறுகிய நேர அறிவித்தல் மத்தியிலும் இத்தனை மக்கள் கன்பரா போவதில் அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி.
"நீங்கள் குருத்தோலைகள் சிரிப்பியள். மாதவன், நான் கன்பரா வரயில்லை. ஆரபியும் தனிய?” இளங்கோவன் முடிக்கும் முன் மாதவன் குறுக்கிட்டான்.
"ஆர் சொன்னது அண்ணே நாங்கள் தனிய என்று? ஆரபிக்குத் தலையிடிச்சாலே எங்கடை தமிழ்ச் சனமெல்லாம் தைலத்தோட வந்திடும். நீங்களும் வாங்கோ கன்பராக்கு”
“எதுக்கும் ஆரபியையும் கேட்பம். எங்கே வெற்றிவேலர் ? ஆளைக் காணயில்லை?” இளங்கோவன் கேட்டார்.
"அந்த மனுசன் நேற்றில இருந்து மூலை அறைக்குள்ளதான். தேத்தண்ணியைத்தான் குடிக்கிது. சாப்பாடும் இல்லை. நித்திரையும் இல்லை. பல்லைத் தீட்டி டொய்லட்டுக்குப் போறாரோ தெரியல்லை." மயூரன் சிறிது கவலையோடு சொன்னான்.
"நாங்கள் கிட்டப் போனால் சத்தம் போடுறார். நீங்கள் போய்ப் பாருங்கோ” மாதவன் ஆமோதித்தான்.
"என்ன அங்க அப்பிடிப் பெரிசாச் செய்யிறார் ?” இளங்கோவன் கேட்டவாறு மூலை அறையை நோக்கி நடந்தார். மாதவனும் மயூரனும் அவரைத் தொடர்ந்தார்கள். கதவு பாதி திறந்திருந்தது. அறைக்குள் வெற்றிவேலரின் கோலத்தைப் பார்த்தபின், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
உள்ளே வெற்றிவேலர் கதிரையிலேயே தூங்கிவிட்டார். அவரது கையில் செல்லிடைத் தொலைபேசி இருந்தது. கண்ணாடி கழன்று, மூக்கு நுனியில் தொங்கியது.
இளங்கோவன் உள்ளே நுழைந்து மெதுவாக "வெற்றி” என்றார். திடுக்கிட்டு விழித்துக்கொண்ட வெற்றிவேலர் "அட நித்திரை யாய் போனனே ? கன்பராவில எம்பியைச் சந்திக்கிர விசயமா சிட்னி பராவோட கதைச்சனான்." அவர் கண்ணாடியைச் சரிசெய்துகொண்டு தன் மேசையிலிருந்த வெள்ளைத் தாள்களைப் புரட்டினார்.
இளங்கோவன் தன் நண்பனை அதிசயமாகப் பார்த்தார். கண் விழித்தாலும் மூடினாலும் நடந்தாலும் இருந்தாலும் நாட்டையும் மக்களையும் தவிர வேறு எதுவும் இவன் மனதில் ஒடுவதில்லையா? ஆரபி, திலகா என்று என் மனம் என்னதான் நடந்தாலும் அவர்களை நினைக்கத் தவறுவதில்லையே.
தொப்புள்கொடி 8

Page 44
வெற்றிக்குந்தான் நல்லதொரு மகன். அன்பும் அழகும் கொண்ட மனைவி.
"வெற்றிவேலண்ணை. நேரமென்ன தெரியுமே? இரவு 10 மணி. பஸ்ஸெல்லாம் வெளிக்கிட்டிட்டுது. இப்ப வெளிக்கிட்டால்தான் காலையில கன்பராவுக்குப் போய்ச் சேரலாம். இல்லையென்றால் சனம் அங்க நிற்கும். நாங்கள் இஞ்ச நிற்பம்" மாதவன் சொன்னான்.
“என்னாலேயே மினக்கேடு? வாங்கோ வாங்கோ போவம். ஒருக்கால் டொய்லட்டுக்குப் போயிட்டு வரட்டே?”
"அதுக்கெல்லாம் நேரமில்லை" என்று சொல்லிவிட்டு மயூரன் சிரித்தான். தந்தை போல் தங்களை வழி நடத்தும் வெற்றிவேலர், ஒரு பள்ளி மாணவன் ஆசிரியரிடம் அனுமதி கேட்பது போல் பேசியது அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது.
"அண்ணே, நீங்கள் வெளிக்கிட்டு நில்லுங்கோ. நான் போய் ஆரபிக்குச் சொல்லிட்டு வாறன்.” மாதவன் புறப்பட்டான். அவர்கள் வீடு அலுவலகத்திலிருந்து அதிக தூரம் இல்லை.
வீட்டை அடைந்த மாதவன் வாசலுக்குச் செல்லும் முன் கதவு திறந்தது. ஆரபி கழுத்தில் தொங்கும் ஒரு பையுடனும் கையில் இன்னொரு பையுடனும் குழந்தையோடு தயாராக நின்றாள்.
“என்ன இவ்வளவு நேரம்?” பையோடு காரை நோக்கி ஆரபி நடந்தாள்.
மாதவன் இதை எதிர்பார்க்கவில்லை. "ஆரபி, என்ன நீங்களும் வாற நோக்கமே ?”
“என்ன, என்னை விட்டிட்டுப் போற எண்ணமோ ?” "இது என்ன ? விளையாடவே போறம்? பச்சைக் குழந்தை. கன்பரா குளிருக்க.என்ன யோசிக்கிற இல்லையே?”
"எல்லாரும் போகீனம்” "சின்னப் பிள்ளை மாதிரி கதைக்காதேங்கோ. எனக்கு நேரமாகுது”
மாதவன் பொறுமையை இழந்துகொண்டிருந்தான். ஆரபி பிடிவாதக்காரி என்பது அவனுக்குத் தெரியும். தான் சரியென நினைத்ததை நடத்தியே தீரும் உறுதி கொண்டவள். இல்லை யென்றால் அவர்கள் காதல், திருமணத்தில் முடிந்திருக்காது.
"நாட்டில இப்படி ஒன்று நடந்தால் நானுந்தான் குரல் குடுக்க வேணும். இது என்ன உங்கடை தனிப்பட்ட போராட்டமே.
82 தொப்புள்கொடி

செத்ததுகள் தாயும் பிள்ளைகளும். உங்களை விட அந்த வேதனை எங்களுக்குத்தான் தெரியும்."
மாதவன் செய்வதறியாது நின்றான். அப்போது இளங்கோவ னின் கார் வந்து நின்றது. காரால் இறங்கிக் கதவைச் சாத்துமுன் ஆரபியும் கன்பரா போகத் தயாராக இருப்பதை அவர் புரிந்து கொண்டார். அவருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"என்ன மாதவன் உனக்குப் புத்தியில்லையே? கைக் குழந்தையோட ஆரும் இந்த நேரத்தில இவ்வளவு தூரம் கூட்டிக்கொண்டு போவீனமே?” அவர் தெருவில் நின்றே கத்தினார்.
"நானில்லையண்ணே, உங்கடை மகள்தான். சொன்னால் கேட்கிறாள் இல்லை. நேரம் போகுது."
"ஆரபி, உனக்கு விசரே. போ உள்ள கொம்மாக்கு நடந்தது தெரியாதே." இளங்கோவன் தந்தைக்குரிய அதிகாரத்தோடு பேசினார். “மாதவன், நீ காரை எடு, போவம். அங்க எல்லாரும் காத்துக்கொண்டிருக்கீனம்."
ஆரபி கோபத்தோடு, பலமாகக் கதவைச் சாத்தி உள்ளே சென்றாள். நிலா அழ ஆரம்பித்தாள். ஆரபிக்கு மாதவன் மீதும், தன் தந்தைமீதும் கோபங்கோபமாக வந்தது.
“பாரடி, இரக்கம் இல்லாததுகள்” தன் நிலாவைப் பார்த்துச் சொன்னாள். "நீ அழாதே. பொம்பிளைகள் அழுத காலம் போயிட்டிது, நாங்கள் செய்துகாட்ட வேணும்."
அவள் பேசிக்கொண்டிருக்கும் போது வாகனம் வந்து நிற்கும் ஓசை கேட்டது. மனம் மாறி மாதவன்தான் வந்திருப்பான் என்று எண்ணிக் கதவைத் திறந்தாள்.
அஞ்சலி தனது பிஎம்டபிள்யூவில் இருந்து இறங்கினாள்.
"என்னடி என்னை மறந்திட்டியா? எனக்கு சிட்னியில
ஆறு மாதம் வேலை. நேற்றுத்தான் வந்தனான்? எப்படி இருக்கிறாள் ј56uт ?”
அஞ்சலியின் அந்த நேர வருகை ஆரபிக்கு ஆறுதலாக இருந்தது. வீட்டினுள் சென்று அமர்ந்துகொண்டார்கள். அஞ்சலி குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து தகரக் குவளையில் இருந்த 'கோக்' பானத்தைக் குடிக்க ஆரம்பித்தாள்.
"போடி இந்த ஆம்பிளையஸ் ஒரு நாளும் மாற மாட்டீனம். விடுதலை, விடுதலை என்று கத்துவீனம். பெண்களுக்குத்தான் விடுதலை இல்லை. எனக்கும் ஆசை இருக்கும் தானே. என்னையும் நிலாவையும் விட்டிட்டு எல்லாரும் கன்பரா போயிட்டீனம்." ஆரபி நொந்து கொண்டாள்.
தொப்புள்கொடி 83

Page 45
“என்ன மயூரனும் போயிட்டானே ?” அஞ்சலி கேட்டாள்.
"உனக்கு கனவிலேயும் நினைவிலேயும் அது ஒன்றுதான். சிறீலங்காவில் பிள்ளையளையும் கொன்று குவிக்கிறாங்களாம். பிள்ளை பெத்த எனக்கு எதிர்ப்புக்காட்ட சுதந்திரம் இல்லையோ?” ஆரபிக்குக் கோபமாக இருந்தது.
“ஒரு ஐடியா. எனக்கு மயூரனைச் சந்திச்சு இரண்டிலொரு முடிவு கேட்கவேணும். உனக்கு கன்பரா போய் உன் எதிர்ப்பைக் காட்ட வேணும். சரி வா. என்ரை காரில போகலாம்." அஞ்சலி உற்சாகத்துடன் சொன்னாள்.
"நானும் நீயுமோ? அதுவும் நிலாவையும் கூட்டிக் கொண்டோ?” ஆரபி தயங்கினாள்.
"என்னடி பெரிய பெண் விடுதலை கதைச்சாய்? இப்ப பயந்து சாகிறாய். இதாலதான் எங்கடை பெண் இனத்துக்கு விடுதலையே இல்லை.” அஞ்சலி சலித்துக்கொண்டாள்.
"நிலா நித்திரை கொண்டிடுவாள். எழுநூறு கிலோ மீட்டர். இரவு நேரம். மாறி மாறி ஒட்டலாம்.” ஆரபி அடுக்கி வைத்த பெட்டிகளைப் பார்த்தாள். “இவேக்கும் ஒரு பாடம் படிப்பிக்க வேணும். நிலாவின்ரை நப்பியை மாத்திட்டு வாரன். போவம்.” என்றாள்.
"அதுதானடி புதுமைப் பெண்” சிரித்தாள் அஞ்சலி, "ஆரபி, நப்பி கட்டிறது நானும் ஒரு நாள் பழகத்தானே வேணும்? நான் கட்டட்டே?”
"ஒ. தாராளமாகக் கட்டு. நிரந்தரமா வேணுமென்றாலும் உனக்கு அந்த வேலையைத் தரலாம். பிள்ளை பெறுகிறதைவிட அது தானடி கஷ்டமான வேலை." ஆரபி நப்பியை எடுத்து அஞ்சலியிடம் கொடுத்தாள்.
அஞ்சலி நிலாவைத் திருப்பி நப்பியைக் கழட்டும்போது அவள் சிணுங்க ஆரம்பித்தாள்.
அஞ்சலி தன் மூக்கைப் பிடித்துக்கொண்டாள்.
"என்னடி இந்த மணம் மணக்கிது ?"
"பின்னை என்ன ? உன்றை ஹை கிளாஸ் பெர்ப்பியூம் என்று நினைச்சியே. மூக்கால கையை எடுத்திட்டு கட்டடி” என்றாள் ஆரபி.
84 தொப்புள்கொடி

10
10Tதவன் வாகனத்தை ஒட்டிக்கொண்டிருந்தான். அவன் அருகே மயூரன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேறு வாகனங்கள் தெரியவில்லை. அவனது வாகனத்து முன் விளக்கின் வெளிச்சத்ததைத் தவிர பக்கங்கள் எல்லாம் இருளில் மூழ்கிக் கிடந்தன. குறுந்தட்டில் விடுதலைப் பாடல் மென்மையாகப் பாடிக்கொண்டிருந்தது. அதற்குத் தாளம் போடுவது போல் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த வெற்றிவேலரினதும் இளங்கோவ னதும் குறட்டைச் சத்தங்கள் இருந்தன. நேரம் நடுநிசியைத் தாண்டிக்கொண்டிருந்தது.
"மயூரன், தண்ணிப் போத்தலை எடு" மாதவன் கேட்டான். மயூரன் தன் காலடியிலிருந்த பையிலிருந்து தண்ணீர்ப் போத்தலை எடுத்துக் கொடுத்தான்.
"என்னடா, புதுப் போத்திலா இருக்கு?” மாதவன் கேட்டான் “நீ கடையில வாங்கியிருக்க மாட்டாய்”
மயூரன் சிரித்தான். “என்ன, வெக்கமான சிரிப்பா இருக்கு?”
"சும்மா இரடா” மயூரனின் சிரிப்பில் மேலும் வெட்கம் கலந்திருந்தது. மயூரன் தானும் பெரிய வேங்கையைப் போல் அடித்துப் பேசினாலும். மிகுந்த கூச்ச சுபாவம் உள்ளவன். எல்லோரோடும் எளிதாகப் பேசிப் பழக மாட்டான். இளம் பெண்கள் என்றால் எட்டியே நிற்பான். ஆனாலும் அவன் வாழ்விலும் ஒரு சிறு சலனம்.
"என்னடா, அஞ்சலி வாங்கித் தந்த மாதிரி இருக்கு. இந்தப் போத்தலிலை நானும் குடிக்கலாமோ ?”
“டேய், சத்தம் போடாதேடா. பின்னால அண்ணன்மார்."
"அவேன்ரை குறட்டையில பாட்டே கேட்கயில்லை. நீ வேற. என்னவாம் அஞ்சலி ?”
"சும்மா இரு, ஆரபிக்குப் பின்னால நீ திரிஞ்ச மாதிரி நான் ஒன்றும் திரியல்லை”
தொப்புள்கொடி 85

Page 46
அவர்கள் மிக மெதுவாகவே பேசினார்கள்.
"அதுதான் வோட்டர் பொட்டில் வாங்கித் தந்தவளோ ?” மாதவன் சீண்டினான்.
"அவளொன்றும் வாங்கித் தரல்லை. அது அவளின்ரை” மயூரன் சடக்கெனப் பதிலளித்தான்.
"அவள் வாய் வைச்சது எனக்கொன்றும் வேண்டாம். இந்தா பிடி, உனக்குத்தான் அது ருசிக்கும்” மாதவன் தண்ணிர்ப் போத்தலை அவன் மடியில் போட அது திறந்து, மயூரன் காற்சட்டையில் தண்ணிர் ஓடியது.
“மடையா, என்ரை காற்சட்டையெல்லாம் தண்ணி” மயூரன் ஓங்கி மாதவன் துடையில் அடித்தான்.
அது ஒரு தெரு வளைவு. மாதவன் தட்டுத் தடுமாறி வாகனத்தை நேராக்கி ஒட்டினான்.
"இஞ்ச பார். தண்ணி எல்லாத்தையும் ஊத்திட்டாய். கன்பரா போகுமட்டும் உனக்கும் எனக்கும் தண்ணியில்லை. அண்ணையவைக்குத்தான்.” மயூரன் சிடுசிடுத்தான்.
"சரி விடு. வழியில மக்டொனல்ட்ஸ் வரும். நான் கோக் வாங்கிக் குடிக்கிறன். உனக்கு அஞ்சலியின்ரை போத்திலை எறிஞ்ச கோபம். என்றாலும் மடியிலைதானே விழுந்தது" மாதவன் மேலும் சீண்டினான்.
"இஞ்ச பார். காதல், கீதல் என்று நான் ஒன்றும் விழ மாட்டன். எனக்கு நாடுதான் முக்கியம். எங்கடை சனத்தின்ரை பிரச்சனை எப்பத் தீருதோ அதுக்குப் பிறகுதான் எனக்கென்று ஒரு வாழ்க்கை. இதுதான் அஞ்சலிக்கும் சொன்னனான். உனக்கும் சொல்லுறன். வீண் கதை கதைச்சு என்ரை மனசைக் குழப்பாதே" மயூரன் சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான்.
"சரி விடடா. கோச்சுகள் எங்க நிற்கிதோ தெரியல்லை. எல்லாக் கோச்சுக்கும் போன் பண்ணிப் பார்”
முன்னால் நீண்டதொரு வாகனம் போய்க் கொண்டிருந்தது. அதன் பிற்பக்கம் வர்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊர்க் கோயில் சப்பறத் திருவிழாவை நினைவூட்டியது. மாதவன் நீண்டதொரு பெருமூச்செறிந்தான். இழந்துவிட்ட அந்த நாட்கள் மீண்டும் வராதா? வாகனம் ஒடிக்கொண்டிருந்தது. அவன் எண்ணங்களோ தான் பிறந்த மண்ணில் தவழ ஆரம்பித்தன. அவன் அமைதியானான். மயூரன் கோச் வண்டிகளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு எல்லாம் ஒழுங்காகச் செல்கின்றன என்பதை உறுதிசெய்துகொண்டான்.
86 தொப்புள்கொடி

நேரம் காலை நான்கு மணி விடியலின் அறிகுறிகள் தெரிந்தன. கன்பரா நெருங்கும்போது, தெருவோரங்கள் எங்கும் பனிக்கட்டிகள். மெல்பேர்ன் போல் நீண்ட தெருக்கள் அல்ல. மலைக் குன்றுகளில் வளைந்து செல்லும் பாதை. இதுவரை அவர்கள் கண்களில் ஒரு கோச் வண்டியும் தெரியவில்லை. சிறீலங்கா இராணுவம் தமிழ் மண்ணின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது போலப் பணியும் குளிரும் பாதையைத் தம்வசப்படுத்தியிருந்தன. மேல் நோக்கிச் செல்லும் பாதை. வாகனம் ஒட்டுவதில் மாதவன் முழுக் கவனத் தையும் செலுத்த வேண்டியிருந்தது. தெரு உச்சியில் ஒரு வாகனத் தின் அபாய மஞ்சள் விளக்குகளின் ஒளி தோன்றி மறைவது தெரிந்தது. மாதவன் தன் வேகத்தைக் குறைத்துக்கொண்டான். வெற்றிவேலரும் இளங்கோவனும் விழித்துக்கொண்டனர்.
“எங்க தம்பி நிற்கிறம் ?” வெற்றிவேலர் கேட்டார்.
"கிட்ட வந்திட்டம் அண்ணே. கார் ஒண்டு நிற்கிது. ஹசார்ட் லைட் எரிஞ்சு நூருது. எங்கடை ஆக்களோ தெரியல்லை". மயூரன் பதிலளித்தான்.
எல்லோரது பார்வைகளும் தெருவின் உச்சியில் நின்ற வாகனத்தை நோக்கின. அவர்களது வாகனம் இப்பொழுது மற்ற வாகனத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.
"ஆரா இருந்தாலும் காரை நிப்பாட்டி என்ன என்று பாருங்கோ” இளங்கோவன் சொன்னார்.
இவர்களது வாகனம் இப்பொழுது மற்ற வாகனத்தை மிக நெருங்கிவிட்டது. வாகன முன் விளக்குகளின் வெளிச்சத்தில் மற்றைய வாகனத்தை அவர்கள் தெளிவாகப் பார்த்தார்கள்.
"அது எங்கடை குமார் அண்ணையின்ரை கார்” மயூரன் பரபரப்புடன் சொன்னான்.
"அடப் பாவங்கள். தாயும் தகப்பனும் தாங்களும் வரப்போறம் என்று பிடிவாதம் பிடிச்சில்லே வெளிக்கிட்டவை. மத்தியானம் பன்னிரண்டு மணிக்கு வெளிக்கிட்டவை. அதுகள் வயசு போனதுகள். வருத்தங்கள் வேற. நின்று, நின்றுதான் போக வேணுமென்று வெள்ளன வெளிக் கிட்டவை. என்ன நடந்திதோ தெரியல்லை.” மாதவன் வருத்தத்தோடு சொன்னான்.
"நல்ல மனசு அதுகளுக்கு. ஒன்றும் நடக்காது. இந்த வயசிலேயும், வருத்தத்திலேயும் தாங்களும் நாட்டுக்கு ஏதும் செய்ய வேணுமென்று வெளிக்கிட்டிதுகள். பாவங்கள்” இளங்கோவன் சொன்னார்.
ஒரு வாகனம் வருவதைக் கண்ட குமார் தனது வாகனத்திலிருந்து இறங்கி நிறுத்துமாறு கைகளை வீசினார்.
தொப்புள்கொடி 87

Page 47
மலையின் இரண்டு பக்கங்களிலும் பெரிய பள்ளத்தாக்குகள். தெரு வளைந்து செல்லும் பகுதியில் வாகனம் நின்றது. மாதவனின் வாகனத்தைக் கண்டதும் குமாரின் முகம் மலர்ந்தது. குமார் சுத்தத் திராவிடன் என்று சொல்லிவிடலாம். நல்ல கறுப்பு நிறம். சாதாரணமான உயரம், முகத்தை அழகு செய்யும் கண்ணாடி அவர் இருட்டில் சிரித்தபோது பற்கள் பளிச்சிட்டன. பெரிய பிரச்சனை இல்லை என்பதைப் புரிந்துகொண்டதால் மற்றவர் களுக்கு மன நிம்மதி.
“என்ன குமாரண்ணை ? என்ன பிரச்சனை?" வாகனத்தி லிருந்து கதவைத் திறந்த வண்ணம் மாதவன் கேட்டான். வெளியே குளிர் உடலைக் கிழித்து ஊசி போல் குத்தியது. காதுகள் விறைத்தன. பற்கள் ஆர்மோனியம் வாசித்தன. கைகளை எல்லோரும் ஜக்கட் பையில் ஒளித்து வைத்திருந்தனர்.
“பின் டயர் வெடிச்சிட்டிது” குமார் பதிலளித்தார்.
"டயர் வெடிச்சால் மாத்திறதுதானே. நீங்கள் பெரிய எஞ்சினியர்” மயூரன் தன்னுடைய வழமையான சிரிப்போடு கேட்டான்.
“ஏலுமென்றால் நீங்கள் வருமட்டும் பார்த்துக் கொண் டிருக்கப் போறனே? அப்பாவும், அம்மாவும் காருக்க வெளியில குளிரில நிற்க மாட்டீனம். அவேயே காருக்க விட்டு ஜக் அடிக்கப் பயமாயிருக்கு. சரிஞ்சுதென்றால் அங்கால பள்ளம். எஞ்சினியர் என்றபடியால்தான் யோசிச்சு செய்யிறன். நீயென்றால் இப்ப பள்ளத்துக்குள்ளதான் எங்களைத் தேட வேணும்” குமார் சிரித்தார்.
“ஒரு சொல்லுக்குச் சொன்னால் விடமாட்டியள். பிஎச்டி எம்எஸ்ஸி எல்லாம் டயர் மாத்தக் காணாது. மண்ணுக்கு வாங்கோ. மண்ணெண்ணெயில கார் ஒடுவீனம். என்ன பார்ட்ஸ் வேணும். இறக்குமதியில்லை. அங்கேயே செய்து போடுவீனம். எல்லாம் சொந்த புத்தி." சொல்லியவாறு மயூரன் டயரையும் ஜக்கையும் பின் டிக்கியில் இருந்து எடுத்தான்.
வெற்றிவேலரால் வாகனத்தை விட்டு இறங்க முடியவில்லை. களைத்துப் போயிருந்தார். கார்க் கண்ணாடியைச் சிறிது இறக்கி அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். இளங்கோவன் குமாரின் கார் அருகில் வந்து பெரியவர்களைக் கைத்தாங்கலாகத் தங்கள் காருக்குக் கூட்டிச் சென்றார்.
"தம்பி ஒண்டுக்கு வருகிது” பெரியவர் மெதுவாகச் சொன்னார்.
"இவ்வளவு நேரமும் அடக்கிக்கொண்டிருந்தனான். நீயும் போகப் போறியே?” அவர் மனைவியைப் பார்த்துக் கேட்டார்.
88 தொப்புள்கொடி

"இந்தக் குளிருக்கையோ? எல்லாம் உறைஞ்சு போச்சு” என்றபடி இயற்கையைக் கட்டுப்படுத்திக் கொண்ட மனைவியார், மாதவனின் காரின் முன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.
இளங்கோவன் பெரியவரை ஒதுக்குப் புறமாகக் கூட்டிச் சென்றார். வெள்ளை மல்லிகைப் பூக்கள் போல் வெண்பனி கொட்டிக் கொண்டிருந்தது. பெரியவரின் கரம் விறைத்து விட்டது. காற்சட்டை "சிப்பை கீழே இறக்க முடியவில்லை. பல முறை முயன்றும் தோற்றுவிடுகிறார். ‘சிப் இழுக்கும் முன் ஏதாவது நடந்துவிடுமோ என்ற பயம் வேறு. முதுமையால் நடுங்கும் கை, பயத்தாலும், குளிராலும் சொன்னதைக் கேட்காது அடம்பிடித்தது.
அவர் தயக்கத்துடன் இளங்கோவனை நோக்கினார்.
“என்னால முடியல்லை தம்பி. கோபிக்காமல் இந்த சிப்பைக் கொஞ்சம் இழுத்துவிடுறீங்களே?” பெரியவர் தயக்கத்துடன்
கேட்டார்.
"அதிலை என்ன ? என்ரை அப்பாக்கு நான் செய்ய மாட்டனே ?” இளங்கோவன் சொல்லியவாறு 'சிப்பை கீழே இழுத்துவிட்டார்.
கைகள் விறைக்க மயூரன் 'ஜக் அடித்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் மாற்று டயரின் மேல் மாதவன் அமர்ந்திருந்தான். “என்னடா அங்க நடக்கிது?” என்று சொல்லி இளங்கோவனும் பெரியவரும் சிப் இழுக்கும் காட்சியைப் பார்த்து இருவரும் சிரித்துக்கொண்டனர்.
“டேய் மொபைல் கமராவில எடடா. ஆரபிக்குக் காட்டிச் சிரிக்கலாம்” என்றான் மயூரன்.
இவர்கள் உரையாடலைக் காரிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த வெற்றிவேலர், "உங்களுக்குச் சிரிப்பா இருக்கு. இந்த வயசில இப்படி வர தலைவிதியே? அதுகளின்ரை நாட்டுப் பற்று. அங்க சனத்தின்ரை துன்பத்தைக் கேட்டுப் பொறுக்க முடியாத மனம். நீங்கள் வேலையைப் பாருங்கோ" என்றார் சிறிது கடுகடுப்பாக.
மயூரனும் மாதவனும் வாயை மூடிச் சிரித்துக் கொண்டனர்.
கீழே வந்த “சிப்பை பெரியவரால் மேலே இழுக்க முடிந்தது. அவருக்குத் தன்னை ஆயாசப்படுத்திக்கொண்ட சுகம். சிரித்தார்.
“ஊரிலையென்றால் சாரத்தைத் தூக்கிக் காத்திலதான் மூத்திரம் பெய்வம். காத்தடிக்க ஒரு சுகம். இஞ்ச, இந்தக் குளிருக்க அப்பிடி செய்யேக்கையும் ஒரு சுதந்திரம் இருக்கு." என்றார் சிரிப்போடு.
தொப்புள்கொடி 89

Page 48
இதற்குள் கார் டயர் மாற்றப்பட்டுவிட்டது. அவர்கள் பயணங்கள் தொடர்ந்தன.
காலைக் கதிரவனின் ஒளிக்கீற்றுகள் மெல்லப் பணித்திரையைக் கிழிக்க ஆரம்பித்தன. “எங்கடை சனம் சிறிலங்கான்ரை முகத் திரையைக் கிழிச்சு அவர்களது பயங்கரவாதத்தை உலகுக்குக் காட்டத்தான் போகுது” என்று நினைத்துக்கொண்டார் வெற்றிவேலர்.
90 தொப்புள்கொடி

11
கன்பராவில் அன்று தமிழர் நாளென்றுதான் கூற வேண்டும். 2006ஆம் மே 29 திங்கட்கிழமை. அன்றைய தினம் கன்பரா கதிரவனைக் காணுமுன் ஈழத் தமிழர்களையே கண்டது. அடுத்தடுத்த கோச்சு'களில் அலை அலையாக மக்கள். அங்கு வாழ்ந்த ஏறக்குறைய எல்லாத் தமிழ் மக்களின் வீடுகளும் மெல்பேர்ன், பிரிஸ்பேர்ன் தமிழ் மக்களை வரவேற்றன. 'கோச்' வண்டிகளிலும் கார்களிலும் வந்தவர்கள் அதிகாலை வேளையில் அவர்கள் வீடுகளுக்குச் சென்று தங்கள் காலைக் கடன்களை முடித்தார்கள். நாட்டுப் பற்றுக்கும் தமிழரின் விருந்தோம்பலுக்கும் தாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லையென்பதைக் கன்பரா தமிழ் மக்கள் தெளிவாகக் காட்டினார்கள். பனி கொட்டும் காலை வேளையில் தேனிக்கள் போல் திரண்டுவந்த மக்களைத் தங்கள் சொந்தமெனக் கொண்டு, புன்னகை பூத்த முகத்தோடு வாசல் கதவைத் திறந்து வரவேற்றனர். காலை உணவளித்துப் பசி தீர்த்தார்கள்.
காலை ஒன்பது மணியளவில் பாராளுமன்றத்திற்கு முன்னா லிருந்த மைதானம் தமிழரால் நிரம்பி வழிந்தது. கைக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், கைலாகு கொடுத்து நடக்கும் வயோதிபர் கள், துடிப்போடு நிற்கும் இளவயதினர் . . . கண்கொள்ளாக் காட்சி. தமிழர் பேரலை பாரளுமன்றக் கட்டிடத்தை மோதி நின்றது. ஒன்று, இரண்டு என்று எண்ண முடியாத அளவுக்கு அடுத்தடுத்து எறும்பு ஊர்வது போல் கோச் வண்டிகள் இன்னும் வரிசையாக வந்து கொண்டிருந்தன. அண்ணாவியார் இளைய பத்மநாதன் அவர்கள் அல்லைப்பிட்டிப் படுகொலையைக் காட்சி அமைப்பாகச் செய்திருந்தார். அது காட்சிப் பொருளாக அன்றிக் காண்போர் கண்களைக் கலங்க வைத்தது. பாலசிங்கம் பிரபாகரனின் 24 மணி நேர இன்பத்தமிழ் வானொலி முதல் சிகரம் தொலைக்காட்சி வரை ஊடகவியலாளர்கள் சுறுசுறுப்பாக செய்திகளை உடனுக்குடன் ஒலி, ஒளி பரப்பினார்கள்.
"கொல்லாதே கொல்லாதே தமிழர்களைக் கொல்லாதே எனும் கோசம் வானை முட்டி எதிரொலித்தது.
தொப்புள்கொடி 9

Page 49
பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழருக்காக மனமுருகிக் குரல் கொடுத்தார்கள். அவர்களுக்குள் டொன் மேர்பி எனும் பாரளுமன்ற உறுப்பினரின் பேச்சு தமிழர்களுக்கும் ஒரு நண்பர் இங்கு இருக்கின்றார் என்று உறுதி செய்தது. “தமிழருக்குத் தனி நாடே தீர்வு” என்று டாக்டர் பிறையன் செனிவிரத்தின பேசும் போது, இப்படி ஒருவர் சிறிலங்காவின் தலைவராக ஏன் வர முடியவில்லை என்று பேசிக்கொண்டனர் சிலர். சாதரணமாகவே மெல்லிய குரல் கொண்ட சிட்னி அமைப்பாளர் கத்திக் கத்தி இன்னும் குரல்வளையைக் கிழித்துக்கொண்டார்.
“இது ஒரு சனநாயக நாடு. இங்கே எங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பது குற்றமல்ல. குரல் கொடுக்காது இருப்பதே தமிழருக்கு இழைக்கப்படும் குற்றம்” என்று ஒரு குட்டிப் பெண் அழகாக ஆங்கிலத்தில் உணர்ச்சி பொங்கப் பேசியபோது கைதட்டி வரவேற்காதவர் எவரும் இல்லை.
வெற்றிவேலர் ஒரு ஒரத்தில் நின்று எல்லாவற்றையும் ஊக்கப்படுத்தினார். அல்லைப்பிட்டி அகோரக் காட்சியைத் தபாலட்டையில் அச்சேற்றி எல்லோருக்கும் விநியோகிக்கும் பணியினைச் செய்வதில் சிரத்தை எடுத்தார். ஒவ்வொருவரும் கையெழுத்திட்டு அதனை அன்றைய பிரதமர் ஜோன் கவார்டுக்கு அனுப்பும்படி வேண்டப்பட்டார்கள். இளங்கோவனும் மீனாவும் சிட்னி நண்பர்களுடன் இணைந்து பல அரசியல் பிரமுகர்களை நேரில் சந்தித்துப் பேசும் நடவடிக்கைளில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த எல்லோருக்குமே உணவுப் பொட்டலங்கள்
வழங்க சிட்னி தமிழர் குழு ஒழுங்கு செய்திருந்தது. குடிநீர், உணவுப் பொட்டலங்களை வழங்க மாதவனும் மயூரனும் உதவினர். இரவு முழுவதும் தூங்காது வந்தவர் பலர். அவர்கள் முகங்களில் களைப்புத் தெரியவில்லை. எல்லோரும் உற்சாகமாக உயரக் குரல் எழுப்பினர்.
“எனக்கும் ஒன்று" உணவுப் பொட்டலத்துக்கு ஒழுங்கு தவறி ஒரு கை நீண்டது.
“வரிசையில வாரீங்களே?” கேட்ட மாதவன் நிமிர்ந்து பார்த்தான்.
ஆரபி புன்னகையோடு நின்றாள்.
"ஆரபி” அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. "எங்க நிலா ?”
என்றான்.
ஆரபிக்குப் பின்னால் நின்ற அஞ்சலியின் தோளில் நிலா அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
மாதவனுக்கு அழுவதா, சிரிப்பதா, ஆத்திரப்படுவதா என்று தெரியவில்லை.
92 தொப்புள்கொடி

“கோபிக்காதேங்கோ, அஞ்சலி துணைக்கு வந்ததாலதான் வந்தனான். நீங்கள் இவ்வளவு செய்யேக்க நான் ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலயாவது கலந்துகொள்ளக் கூடாதா?” ஆரபி மெதுவாகக் கொஞ்சலாகக் கேட்டாள்.
அப்பொழுது அங்கு வந்த வெற்றிவேலர், "இதுதான் உண்மை யான மனித உணர்வு. இளம்பிள்ளைகள் இதில பங்குபெறேக்கதான், எங்களுடைய போராட்டம் எங்களோட முடியாது. அதை எடுத்துச்செல்ல இன்னொரு தலைமுறை இருக்கு என்ற நம்பிக்கை வருகிது. அஞ்சலி உன்னைப் பார்க்கச் சந்தோசமாக இருக்கு” என்றார்.
மாதவன் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்துக் கொண்டே ஆரபியைப் பார்த்தான். அவள் கேள்வியில் நியாயம் இருந்தது. அதே சமயம் குழந்தையைப் பார்க்க வேண்டியவள் குழந்தை போல் நடக்கின்றாளே என்ற தாபமும் இருந்தது.
“சரி வந்திட்டியள். நிலாவுக்குக் குளிரும். காரில கொஞ்ச நேரம் கொண்டுபோய் வைச்சிருங்கோ. இந்தாங்கோ சாப்பாடு. எல்லாம் குடுத்து முடிய நான் வந்து பார்க்கிறன்.” மாதவன் சொன்னான்.
மயூரன் சுறுசுறுப்பாக இன்னொரு பந்தலில் தண்ணிரும் பழ இரசங்களும் வழங்கிக்கொண்டிருந்தான். அஞ்சலி அவனை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தாள். அவனோ அவளைக் கவனிக்க வில்லை.
வெற்றிவேலர் நிலாவை வாங்கித் தன் தோள்மீது வைத்து அஞ்சலி, ஆரபியோடு சேர்ந்து நடந்தார். தனது மறு தோளில் யாரோ தட்டுவதை உணர்ந்தார். ஆறடிக்கு மேல் உயரமான ஒரு வெள்ளை ஆஸ்திரேலியன் அவர் கண்களை உற்றுப் பார்த்தபடி நின்றான். வெற்றிவேலர் அவனை வெறித்துப் பார்த்தார். அவன் கறுப்பு நிறக் கோட்டும், ஜக்கட்டும் அணிந்திருந்தான். கழுத்தில் இரத்த நிறத்தில் ஒரு 'டை' அடர்ந்த நெற்றிப் புருவங்கள். மடிப்புக் கலையாத வெள்ளை நிற 'சேர்ட்டும்', கரிய வண்ணத் திலேயே நீண்ட காற்சட்டை.
"என்ன வேண்டும் உனக்கு ?" வெற்றிவேலர் கேட்டார்.
"நான் உன்னோடு பேச வேண்டும்" அமைதியாகச் சொன் னான் அவன்.
"நீ யார்? நிருபரா? அரசியல்வாதியா?" புன்னகையோடு வெற்றிவேலர் கேட்டார்.
"இரண்டும் இல்லை. உன்னை எனக்கு நன்கு தெரியும்?" என்றான் அவன்.
தொப்புள்கொடி 93

Page 50
"நல்லது. நீ யாரென்று எனக்குத் தெரிய வேண்டாம். இப்போது உன்னோடு பேச எனக்கு நேரமில்லை.” வெற்றிவேலர் சொன்னார்.
ஆரபி அவரிடம் இருந்து பிள்ளையை வாங்கிக் கொண்டாள். அந்த மனிதனை உற்றுநோக்கினாள். ஏனோ அவனைப் பார்க்க அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவன் தன் பையிலிருந்த அறிமுக அட்டை ஒன்றை எடுத்தான்
"நீ அடையாள அட்டை காட்ட வேண்டிய அவசியமில்லை. நீ ஆஸ்திரேலிய இரகசிய பொலிசைச் சேர்ந்தவன் என்பதை உன் பேச்சிலேயே தெரிந்து கொண்டேன்" கோபப் புன்னகையோடு வெற்றிவேலர் சொன்னார்.
ஆரபியின் காதில் அந்த வார்த்தைகள் விழுந்தன. முடிந்ததாக அவள் நினைத்த திடீர்ச் சோதனை ஓர் ஆரம்பந்தான் என்று எண்ணியபோது, அவள் முகம் இருண்டது.
“தெரிந்துமா இப்படிப் பேசுகிறாய்? உனக்குப் பயம் வரவில்லையா ?” அவன் ஆச்சரியத்தோடு கேட்டான்.
"குற்றம் புரிபவன்தான் சட்டத்துக்கு அஞ்ச வேண்டும். நீயும் ஒரு மனிதன் தானே. உன்னைக் கண்டு நானேன் பயப்பட வேண்டும்?" வெற்றிவேலர் அவன் கண்களை நேருக்குநேர் பார்த்தவாறு கேட்டார்.
"உன்னிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்." அவன் அதிகாரத்தோடு சொன்னான். -
"இப்பொழுது அவற்றிற்குப் பதில் சொல்ல நான் தயாராக வில்லை என்று ஏற்கனவே உனக்குச் சொல்லியிருக்கிறேன். இங்கே நாங்கள் ஏன் கூடியிருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொண்டு, அதற்கு நீ மதிப்பு கொடுக்க வேண்டும்." வெற்றிவேலர் சிறிது காரமாகவே பேசினார்.
“சரி, உன்னை நான் சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திக்கின்றேன்.” என்றவாறு அவன் திரும்பி நடந்தான்.
ஆரபியின் முகம் வெளிறியது. அவள் குழந்தையோடு அஞ்சலி யின் வாகனத்தை நோக்கி நடந்தாள். அஞ்சலி வாகனத் திறப்பை ஆரபியிடம் கொடுத்து, தான் சிறிது நேரத்தில் வருவதாகச் சொன்னாள்.
அஞ்சலியின் கண்கள் மயூரனை மீண்டும் நோக்கின. அவள் மயூரன் பானங்கள் கொடுக்கும் பந்தலை நோக்கி நடந்தாள். அந்த சமயம் பந்தல் அருகில் சனம் குறைந்திருந்தது. அஞ்சலியைக்
94 தொப்புள்கொடி

கண்டதும் அவன் முகம் மலர்ந்ததை அவள் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் அடுத்த கணமே அவன் தன் உணர்வுகளை மறைக்க முயல்வதையும் நன்கு கவனித்தாள்.
“அஞ்சலி, நீயும் வந்தது சந்தோசமாக இருக்கு. குடிக்க என்ன வேணும்? " அவன் கேட்டான்.
"நீ எதைத் தந்தாலும் அதை நான் குடிக்கத் தயார். அது விசமாக இருந்தாலும்கூட." அஞ்சலி மெதுவாகச் சொன்னாள்.
“அஞ்சலி, பிறகும் அந்தக் கதை வேண்டாம். சிநேகிதம் இருக்கட்டும். அதை இன்னொரு உறவாக்கிச் சிதைக்க வேண்டாம்" அவனும் மெதுவாகச் சொல்லியபடி தோடம் பழச்சாற்றை ஒரு கண்ணாடிக் குவளையில் இட்டு நீட்டினான்.
"மயூரன், இன்றைக்கு உன்னோட நான் கதைக்க வேணும். ஒரு முடிவு எடுக்க வேணும். இஞ்ச இருந்து மெல்பேர்னுக்குப் போறதுக்கு முன்னால உன்னுடைய நேரத்தில எனக்குக் கொஞ்சந் தா." அஞ்சலி கேட்டாள்.
"அஞ்சலி, இது முடிஞ்ச உடன நாங்கள் போக வேணும. என்னோட நாலஞ்சு பேர் வந்தவை. அவைய காக்க வைக்க முடியாது.” மயூரன் சொன்னான்.
"இன்றைக்கு ஒரு முடிவு எடுக்காமல் நான் போக மாட்டன்" என்று சொல்லி அஞ்சலி தன் வாகனத்தை நோக்கி நடந்தாள்.
மனதில் குழப்பத்தோடு மயூரன் இன்னும் உரத்த குரலில் கோசம் எழுப்பும் மக்கள் கூட்டத்தைப் பார்த்தான். அந்த மக்களின் குரல் அவனுக்குத் தெம்பைக் கொடுத்தது.
"என்ன அஞ்சலியைக் கண்டவுடன் தண்ணிப் பந்தல் மறந்து போச்சு" என்று சொல்லியவாறு மாதவன் அவன் தோளில் தட்டினான். f
“போடா, ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகி, வேண்டாம் இந்த வம்பு. ஆளை விடு. எங்களுக்கு இதுதான் இப்ப இல்லாத குறை." அலுத்துக் கொண்டான் மயூரன்.
அன்றைய போராட்டப் பொழுது வெகுவிரைவாக முடிந்து கொண்டிருந்தது. மாலை மூன்று மணியளவில் பேருந்துகள் எறும்புகள் போல் வரிசையாக மெல்பேர்ன், சிட்னி என்று களைத்திருந்த மக்களை ஏற்றியவாறு திரும்பின. வாகனங்களில் வந்தோர் புறப்பட்டார்கள். வெற்றிவேலர் சிட்னியில் ஒரு கூட்டம் என்று அங்கு செல்லும் நண்பர் களின் வாகனம் ஒன்றில் ஏறிக்கொண்டார். இறுதியாக அஞ்சலியின் வாகனமும் மாதவனின் வாகனமுமே நின்றன.
தொப்புள்கொடி 95

Page 51
இளங்கோவனுக்கு ஆரபிமீது மிகுந்த கோபம். போராட்டத்தில் கலந்துகொள்வதை அவர் விரும்பினாலும், பொறுப்போடு அவள் நடக்கவில்லை எனப் பொருமிக் கொண்டிருந்தார். அவர் மாதவனின் வாகனத்தில் அமர்ந்து கொண்டார். மாதவனுக்கோ ஆரபி, அஞ்சலி, நிலா மூவரும் தனி வாகனத்தில் மெல்பேர்ன் செல்வதில் விருப்பமில்லை. அவனுடைய சஞ்சலத்துக்கு அஞ்சலியே தீர்வு ஒன்று வைத்திருந்தாள். அவளுடைய வாகனத்தில் தான் ஆரபியும், நிலாவும் இருந்தார்கள். தூக்கம் கலைந்த நிலா இப்போது துடிதுடிப்பாக இருந்தாள். அஞ்சலியின் வாகனத் தின் பின் சக்கரங்களில் ஒன்றில் காற்றுப்போயிருந்தது. மயூரன் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய வண்டிச் சக்கரத்தை எடுத்து மாற்ற முயன்றான். அதிலும் காற்று இல்லாதது அவனுக்கு எரிச்சலை மூட்டியது.
“இவ்வளவு தூரம் குழந்தைப் பிள்ளையோட வாரியள். ஸ்பெயர் வீலிலை காத்திருக்குதோ என்று கூடப் பார்க்கிற தில்லையா?" அவன் எரிச்சலோடு கேட்டான்.
அஞ்சலி ஆரபியைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தாள். காற்றைத் திறந்து விட்டதே அவர்கள்தானே.
"சரி, இனி என்ன செய்யிறது? வா என்ரை காரில போய் இரண்டு சில்லுக்கும் காத்தடிச்சுக் கொண்டு வருவம்.” ஆண்கள் மூவரும் அருகில் இருந்த வாகனப் பணிமனை ஒன்றுக்குச் சென்று சக்கரங்கள் இரண்டிற்கும் காற்றடித்துக் கொண்டு வந்தார்கள்.
சக்கரம் திரும்பவும் மாட்டப்பட்டது. "நாங்கள் இரண்டு பேரும் பொம்பிளையன். வழியில காத்துப் போனால் என்ன செய்யிறது?” அஞ்சலி கையைப் பிசைந்தாள். "அதை நீங்கள் வெளிக்கிடேக்க இல்லோ யோசிச்சு இருக்க வேணும்?” என்று சினந்தார் இளங்கோவன்.
"அண்ணே, இதுகள் காத்துப் போன கேசுகள்.” மயூரன் ஒத்து ஊதினான்.
ஆரபி மாதவனைப் பார்த்து, ஜாடையாக மயூரனையும், அஞ்சலியையும் காட்டினாள். அவர்களுக்குப் புரியாத காதல் மொழியா?
புரிந்துகொண்ட மாதவன், "சரி அப்ப, மயூரன் நீ அந்தக் காரில வா. நானும் இளங்கோவன் அண்ணனும் என்ரை காரில வாறம்.” என்றான்.
ஆரபி உடனே, "நிலாவும், நானும் உங்களோடை வாறம். அஞ்சலியும் மயூரனும் இந்தக் காரிலேயே வரட்டும்.” என்று தங்கள் திட்டத்தின் கடைசிக் கட்டத்தை அமுல்படுத்த முயன்றாள்.
96 தொப்புள்கொடி

“கொப்பர் அங்க கோவமா இருக்கிறார். வழி முழுக்க அர்ச்சனை இருக்கு. சம்மதமோ ?” என்றான் மாதவன்.
ஆரபி ஒரு கணந் தயங்கினாலும், அஞ்சலியின் கெஞ்சல் பார்வைக்குப் பணிந்து "அப்பாதானே நான் சமாளிப்பன்." என்றாள்.
“டேய், மாதவா என்னை விடு. அஞ்சலியோட அவ்வளவு தூரம் தனிய வர ஏலாது.” மயூரன் மறுத்தான்.
“வேற வழியில்லையடா” என்று கண்ணடித்தவாறு மாதவன் குழந்தையின் இருக்கையையும், குழந்தைக்கான பொருட்களையும் தனது வாகனத்தில் ஏற்றினான்.
மயூரனுக்கு அஞ்சலியோடு தனியாகப் போவதில் ஆசை இருந்தாலும், தயக்கமும் இருந்தது. அஞ்சலிதான் வாகனத்தை ஒட்டினாள். அவன் மெளனமாகப் பக்கத்தில் இருந்தான். மாதவனின் வாகனம் அவர்களைப் பின் தொடர்ந்தது. முன் இருக்கையில் இளங்கோவன் கண்களை மூடிக் கொண்டார். அவர் தூங்குகின்றாரா அல்லது தியானத்தில் இருக்கின்றாரா என்று தெரியவில்லை. பின் ஆசனத்தில் ஆரபியும் நிலாவும் இருந்தார்கள். வாகனத்தை ஒட்டிக் கொண்டிருந்த மாதவனின் கேசத்தையும் செவிகளையும் ஆரபி உருட்டி வேடிக்கை செய்து கொண்டிருந்தாள்.
வழியில் நிலாவின் கட்டுத் துணி மாற்ற வேண்டி இருந்தது. தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் மாதவன் வாகனத்தை ஒரு மக்டொனல்ட்ஸ் அருகில் நிறுத்தினான். அஞ்சலியின் வாகனம் நிற்காது அவர்களைக் கடந்து வெகு வேகமாகச் சென்றது. கன்பரா நகரின் வாசலை அவர்கள் கடந்து கொண்டிருந் தார்கள். மக்டொனல்ட்சின் அருகில் ஆபோர்ஜின்ஸ் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஆதிக் குடிவாசி ஒருவர், தெருவோரத்தில் இருந்து தங்களது டிடிஜெரிடோ எனும் இசைக் கருவியை வாசித்துக் கொண்டிருந்தார். கரிய உருவம். உடலெங்கும் சைவ சமயத்தைச் சேர்ந்த தமிழர்கள் திருநீறு அணிவதுபோல் வெண்ணிறப் பூச்சு. சுருண்ட பரட்டைத் தலை. நாதஸ்வரம் போல் நீண்ட இசைக் கருவி. நாதஸ்வரம் போல் இதுவும் வாயால் ஊதும் வாத்தியம். யூக்கிலிப்ஸ் மரத்தண்டில் செய்யப் பட்ட அந்தக் கருவியில் அழகான ஒவிய வேலைப் பாடுகள் இருந்தன். ஆபோர்ஜின்ஸ் மக்கள் அதனை 'யிடக்கி’ என்று சொல்வார்கள். ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் வாழும் 'யொலிங்கு மக்களிடையே அது உருவானது என்று சொல்வார்கள். அந்த ஆதி மனிதர் கால்களை மடக்கி உட்கார்ந்து அதை வாசித்தபோது ஓர் இதமான சுகம். அன்று நாதஸ்வர கானம் காற்றில் தமிழ் மண்ணில் தவழ்ந்து வந்த சுகம்.
தொப்புள்கொடி 97

Page 52
அவரைப் பார்க்கையில் மாதவனுக்கு மாமனிதரான குமார் பொன்னம்பலம் 1996 யூன் மாதம் கன்பராவில் நடந்த "நீதியான சமாதானம்" என்ற மகநாட்டில் கலந்து கொண்டபோது சொன்ன விடயமொன்று நினைவில் வந்தது. தன்னை விமான நிலையத்தில் கண்ட ஒர் ஆபோர்ஜினியன், அவரையும் தங்களில் ஒருவர் என்று எண்ணி ஆபோர்ஜினிய மொழியிலேயே பேசியதைச் சிரிப்புடன் கூறியிருந்தார். தங்கள் சொந்த மண்ணிலேயே என்றோ ஒரு வெள்ளையர் இனம் இழைத்த கொடுமையால் இன்றும் ஏதுமற்ற அகதிகள்போல் வாழும் இந்த ஆதி குடிவாசிகளிடம் நல்ல இதயம் கொண்ட ஆஸ்திரேலியர்கள் மன்னிப்புக் கோருகின்றார்கள். ஆனால் இன்று ஈழத்திலே இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியாத உலக சமூகம், இன்னும் நூறாண்டுகளின் பின் மன்னிப்புக் கோருவதில் அர்த்தம் இருக்குமா? மாதவனின் மனதில் பல எண்ணங்கள்.
குமார் பொன்னம்பலம் கொழும்பில் ஒரு பெரும் பிரமுகர். பெயரும் புகழும் பெற்ற சட்ட வல்லுநர். அவர் தந்தையின் பெயரைச் சொல்லியே வாழ்ந்திருக்க முடியும். பரம்பரைப் பணக்காரர். இத்தனை இருந்தும் அவர் தமிழருக்காகக் குரல் கொடுக்க வேண்டிய அவசியந்தான் என்ன ? நினைத்துப் பார்க்கும்போது அந்த மனிதர்மீது மாதவனுக்குப் பெரு மதிப்பு ஏற்பட்டது. எல்லாம் இருந்தும் தன் உயிரைத்துச்சமென மதித்து சிறீலங்காத் தமிழர்களுக்குச் செய்யும் கொடுமைகளை உலகெங்கும் கேட்க உரத்துச் சத்தமிட்டார் குமார் பொன்னம்பலம். தன் வீட்டு வாசலில் நடக்கும் கொடூரங்களைக் கண்டும் காணாதது போல் வாழ அவரால் முடியவில்லை. அப்படி இருந்திருந்தால் இன்றும் ஒரு கனவானாக வாழ்ந்திருப்பார். தன் சொந்த வாழ்வை எண்ணிக் கனவு காணாது தன் சொந்தங்களின் பரிதாபமான நிலையைக் கண்டு அவர் மனம் துடித்திருக்க வேண்டும். பாவம். அவர் உயிரை எடுத்துவிட்டார்கள்.
எத்தனை ஊர்வலங்கள்? எத்தனை சமாதான மகாநாடுகிள்? எத்தனை அரசியல் பிரமுகர்களைச் சந்தித்தார்கள்? ஏன்தான் சமாதானம் நம் நாட்டில் வரவில்லை ? என்ற எண்ணங்கள் மாதவன் மனதில் மோதின. தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட்டிருந்தால், மயூரன், அஞ்சலியை நிச்சயமாகக் காதலித்து மணம் முடித்திருப்பான். இன்றைய நிலையில் மயூரன் என்ன செய்வான் என்ற கேள்விக்குப் பதில் அவனுக்குத் தெரியவில்லை. அவர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணம் ஒரே நேரத்திலே மாதவன், ஆரபி மனதில் உதித்தன.
9 8 தொப்புள்கொடி

12
அஞ்சலி வேகமாக வாகனத்தை ஒட்டினாள். அதிகபட்சம் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ஒட வேண்டிய தெரு அது. அவளோ 140 கிலோ மீட்டரில் போய்க்கொண்டிருந்தாள்.
"ஏன் இவ்வளவு வேகமாக ஒட்டுகிறாய்? மாதவன், மக்டொனல்ட்சில நிற்பாட்டினவன். நீ ஏன் நிற்கல்லை?” மயூரன் கேட்டான்.
ஒன்றும் பேசாது வேகமாக வாகனத்தை ஒட்டியவள், கிளைவிட்ட சிறிய பாதை ஒன்றில் அதே வேகத்துடன்; திருப்பி னாள். வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது வாகனம் அங்குமிங்கும் சுழன்று, ஒரு பெரிய மரத்தின் அருகில் பட்டும் படாமலும் நின்றது.
"என்ன நடந்தது உனக்கு? ஏணிப்படி விசரி மாதிரி ஒடுறாய்?" மயூரன் கோபத்தோடு கேட்டான். “ஏன் இதுக்குள்ள திருப்பினனி?”
“மயூரன் உனக்குக் காதல் என்றால் என்னன்று தெரியுமோ? ஒரு பெண்ணை ஆசைப்பட வைச்சிட்டு, ஒன்றும் சொல்லாமல் கொள்ளாமல் வெட்டிறது உனக்கு விளையாட்டு. நான் படுகிறபாடு உனக்குத் தெரியாது. ஏன் என்னைச் சந்திக்க மறுக்கிறாய்? பேச விரும்பிறாயில்லை." கோபமும் சோகமும் தொனித்தது அவள் குரலில்.
"அதைக் கேட்க இந்த இடமா உனக்குக் கிடைச்சிது? அஞ்சலி நீ பிறந்தது, வளர்ந்தது இந்த நாட்டிலே. நான். . ."
அஞ்சலி குறுக்கிட்டாள். "அதை நீ என்னைக் காதலிக்க முன்னம் சொல்லியிருக்க வேணும்.”
“சொன்னனான். நீ அதைக் கேட்கயில்லை. என்ரை மனமும் என்னையும் மீறி உன்னிலை ஆசைப்பட்டது உண்மைதான். ஆசைகள் யோசிச்சு வாறத்தில்லை. அதிலேயும் ஆண் பெண்களுக்கு இடையில வருகிற உறவு, முகிலைக் கிழிச்சு வருகிற மின்னல் மாதிரி. தடுத்துநிறுத்த ஏலாது. காதலுக்காக வேணுமென்றால், இப்பக் கொஞ்ச காலம் இரண்டு பேரும் அழுவம். என்னைக் காதலிச்சிட்டு வாழ் நாள் முழுக்க அழப்போறியே ?” மயூரன்
கேட்டான்.
தொப்புள்கொடி 99

Page 53
அஞ்சலி கண்களில் நீரோட அவனைத் தன் மார்போடு அணைத்துத், தன் கன்னத்தை அவன் தலையில் வைத்தாள். அவள் கண்ணிர்த் துளிகள் அவன் உச்சந்தலையை நனைத்தன.
"மயூரன் ஐ லவ் யூ நீயில்லாமல் என்னால வாழ முடியாது.”
"அஞ்சலி" என்றவனின் குரல் கரகரத்தது. அவள் மார்பகம் அவன் கண்ணிரில் நனைந்தது.
அவன் கண்ணீர்த் துளிகளில் ஒரு வெம்மை, அதைவிட அவனது உடலின் கதகதப்பான வெப்பம், அவளை, அவனிடமிருந்து பிரிந்துசெல்ல விடாது தடுத்தது.
"மயூரன் ஏன் நாங்கள் அழ வேணும்? நீ என்னை விரும்புறாய். நான் உன்னை விரும்புறன். ஏன் நாங்கள் சந்தோசமாக இருக்க முடியாது?” அவள் விம்மினாள்.
மயூரன் விருப்பமின்றி அவள் அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டான்.
"அஞ்சலி வாழ்க்கையில திரும்ப முடியாத தூரத்துக்கு நான் வந்திட்டன். இப்ப நீ அணைக்கேக்க இருந்த இன்பம், அமைதி என்ரை அம்மான்ரை மடியில படுத்திருந்த நாட்களிலே தான் கிடைச்சிருக்கு. இந்த நாட்டில எனக்கு ஆர் இருக்கீனம்? ஒருவிதத்தில நான் ஒரு அநாதையாகத்தான் வாழுறன்."
சிறிது நேரம் இருவரும் ஏதும் பேசவில்லை.
மயூரன் அமைதியை உடைத்தான்.
"அஞ்சலி, நான் கார் ஒடுறன். நீ இஞ்சால வா. என்ரை வாழ்க்கையையும் யாராவது தெரிஞ்சுகொள்ள வேணும். அது நீயாகவே இருக்கட்டும். நான் சொல்லுறதைக் கேட்டுக் கொண்டு வா. அதுக்குப் பிறகும் நீ என்னைக் காதலிச்சால் அது உன்னுடைய கஷ்ட காலம்.” என்றவன் வாகனத்தை விட்டு இறங்கினான். இருவரும் இடம் மாறினார்கள். மயூரன் காரை ஒட்டினான். வீதியை நோக்கியவாறே பேச ஆரம்பித்தான்.
O
மயூரனுக்குத் தெரிந்த இனிமையான நாட்கள் வெகு குறைவு. ஆனால் அவை அவன் மனதில் ஆழப் பதிந்தவை. சிவந்த தண்டுகளுடன் அழகான பச்சை இலைகள் செழித்து நிற்கும் மரவள்ளித் தோட்டம் சூழ்ந்த பெரியதொரு பங்களா அவர்கள் வீடு. மரவெள்ளி இலையின் பச்சை ஒருவித நிறம், சிறிது மஞ்சள் படிந்த திராட்சைக் கொடிகள் ஒரு புறம், வெள்ளைப் பூக்களோடு வெள்ளிச் சிரிப்பைக் கொட்டும் வெங்காயத் தண்டுகள் மறுபுறம், சின்னச் சின்ன இலைகளோடு பச்சை, சிகப்புத் தோரணங்
100 தொப்புள்கொடி

கட்டும் மிளகாய்ச் செடிகள். இவை அவர்கள் வீட்டின் சுற்றாடல். தலையை இன்னும் சற்று நிமிர்ந்தால் குலைசாய்த்த வாழைகள், குருத்துவிடும் குட்டிகள், பச்சைக் கிளி கொத்த, சிகப்பைச் சிந்தும் கறுத்தக் கொழும்பான், விலாட் மாமரங்கள், மணம் பரப்பும் பலாமரங்கள். இன்னும் கொஞ்சம் தள்ளி நோக்கினால் இம்மண்ணின் இராஜாக்கள் நாங்கள் என்று, விண் தொட தன் முடி அசைத்து நிற்கும் பனை மரங்கள். இந்தத் தோட்டத்தின் நடுவே நீரூற்ற இரண்டு சூத்திரக் கிணறுகள்.
அந்த தோட்டத்தில் அடுத்தடுத்து மூன்று பங்களாக்கள். அங்குதான் மயூரனின் தாய், தந்தையர், மாமா, சித்தி, வெள்ளைப் பெரியம்மா குடும்பங்கள் எல்லாம் வாழ்ந்து வந்தார்கள்.
அவனுக்கு ஓர் ஆருயிர் சிநேகிதி இருந்தாள். அவளின் எடை ஐம்பத்தைந்து இறாத்தல். உயரம் இருபத்தாறு அங்குலம். கூர்மையான மூக்கு. மெல்லிய சிகப்பு நிறம். விஜயநகரப் பேரரசுகளின் வேட்டை நாய் வகையைச் சேர்ந்த இராஜபாளையம் சாதி. பெயர் டைகர்’. அவள்தான் ஒன்பது வயது மயூரனின் உயிர்த் தோழி. அவளுக்குப் பல வண்ணங்களில் பன்னிரண்டு அழகிய குட்டிகள். அவற்றைக் குளிப்பாட்டுவது அவனது பொழுது போக்கு.
பல பெரிய வியாபாரங்களுக்கு முதலாளியான மாமனின் லாரிகள், கார்கள், வான்கள் என வாசலை மறைக்கும் வாகனங்கள் பல இருந்தாலும், அவன் ஏறி அமர்வது தன் உந்துருளியில்தான். அதில் துள்ளி ஏறித் தன் நண்பர்களுடன் சைக்கிள் ஒட்டப் போட்டிகள் செய்வது இனிமையான பொழுதுபோக்கு. துடுப் பந்தாட்டம், கால்ப் பந்தாட்டம் என விளையாடுவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் அவன் இடுவதில்லை. அதனால் தந்தையின் தண்டனையாக நாற்காலியில் பல மணி நேரங்கள் இருந்தாலும், அடுத்த நாளும் அதே தவறைச் செய்ய அவன் தவறுவதில்லை. சிறீலங்காவின் அன்றைய சிங்கள துடுப்பந்தாட்ட வீரர் டிலிப் மென்டிஸ் தன் சகாக்களுடன் வந்து கள்ளுக் குடித்த கதையைச் சொல்லித் தன் நண்பர்களுடன் சிரிப்பான்.
"தம்பி, அந்தப் பக்கம் சைக்கிளிலே போகாதேடா"
"தம்பி, அந்த ஒழுங்கையில கிரிக்கட் விளையாடக் கூடாது. அங்கே எல்லாம் சிங்கள ஆமி வந்து பெடியளைப் பிடிச்சுக் கொண்டு போகுதாம்."
வெள்ளைப் பெரியம்மா சொல்லும்போது மயூரனுக்கு முதலில் விளங்கவில்லை.
1983 யூலை இன ஒழிப்புக் கலவரம். கொழும்பில் இருந்து புறப்பட்ட கப்பல் கடலில் மிதந்தது. அதில் பயணம் செய்தவர் களோ கண்ணிரில் மிதந்தனர். அவர்களில் வாளால் வெட்டப்பட்டு,
தொப்புள்கொடி 101

Page 54
உயிர் தப்பி வந்த மயூரனின் மாமனும் ஒருவர். மாலை நேரங்களில் அவர் கண்ணிரோடு மற்றவர்களுக்குச் சொன்ன கதைகளை அவன் ஒரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்தான். அவன் பிஞ்சு நெஞ்சிலே கோபமும் குரோதமும் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தன.
1984 களில் யாழ் நகரில் இராணுவத்தின் வன்முறைகள் தலைவிரித்தாடின. சட்டமும் ஒழுங்கும் துப்பாக்கிச் சன்னங் களுக்குப் பலியாகின. இராணுவத்தின் அராஜகங்களை எதிர்த்துப் போராடப் பல தமிழ் இயக்கங்கள் செயற்பட்டன. ஒரு இராணுவத் தினன் கொல்லப்பட்டால் பல அப்பாவி மக்கள் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டார்கள். சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் சித்திரவதையைத் தாங்க முடியாததால், சிறைச்சாலையில் வைத்துத் தங்களைக் கொலைசெய்யவில்லையே என்று கவலைப்பட்டவர் பலர். இராணுவம் வெறிபிடித்தாடியது.
காட்டிக்கொடுக்கும் துரோகிகள் என்று பலர் பல் வேறு தமிழ் இயக்கங்களால் கொலைசெய்யப்பட்டார்கள். சில இயக்கங்களால் தனியார் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கட்டுப்பாட்டுடன் இயங்கிய இயக்கம் வாங்கிய வாகனத்தைத் திருப்பிக் கொடுத்தது. அப்படியான இயக்கத்துக்கு மனமுவந்து மக்கள் உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தார்கள். மற்ற இயக்கங்கள் பலாத்தகாரமாக மக்களிடம் இருந்து உணவுப் பொட்டலங்களைப் பறித்துக்கொண்டன. வங்கிக் கொள்ளைகள், வீடுகளில் புகுந்து திருடுதல் செய்திகளாகத் தெரியவில்லை. போராடும் இயக்கங்களின் மோதலில் இளைஞர் பலர் கொல்லப் பட்டார்கள்./கோயில் மணிகள், தேவாரம், திருவாசகம் ஒலித்த தெருக்களில் எல்லாம் செல்லடிகளும் குண்டுச் சத்தங்களும் கேட்டன. கோயில்கள் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயின. தெல்லிப்பழை துர்க்கை அம்மன், தாவடி வீரகாளி அம்மன், நந்தாவில் அம்மன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். பாடசாலைகள் ஒழுங்காக நடக்க முடியாத நிலை, வன்முறைகளின் நடுவிலே மயூரன் வளர்ந்தான்.
மயூரனுக்குப் பன்னிரண்டு வயதானாலும். அவன் வெள்ளைப் பெரியம்மாவின் செல்லப் பிள்ளை. அவள்தான் கன்ன உச்சி பிரித்து, தலைவாரி, நெற்றியில் திருநீறு இட்டுப் பள்ளிக்கூடம் அனுப்பிவைப்பாள். சனி நீராடு என்பதைச் சரியாகவே கடைப்பிடிப்பவள். சனிக்கிழமை காலை வேளை மயூரனுக்கு நல்லெண்ணெய் தலையில் தப்பி, உடம்பெல்லாம் பூசுவாள். மயூரன் எப்படி மறுத்தாலும் சனிக்கிழமைகளில் ‘சம்பூ உபயோகிக்க விடமாட்டாள். தானே சீயாக்காய் அவித்து, அரைத்து அவன் தலையைக் கழுவுவாள்.
102 தொப்புள்கொடி

அப்படித்தான் அந்த சனிக்கிழமையும். கிணற்றடியில் மயூரனும் வெள்ளைப் பெரியம்மாவும் குளித்துக் கொண்டிருந் தார்கள், எண்ணெய் பூசி முடிந்தது. பெரியம்மா சீயாக்காயும் தலையில் தேய்த்துவிட்டாள். இனி தண்ணிரை அவன் தலையில் வார்க்க வேண்டும். கண்ணில் எண்ணெய், சீயாக்காய் கசிந்து விழாதிருக்க மயூரன் கண்களை மூடியிருந்தான்.
"கண்ணெரியுது பெரியம்மா. தண்ணியை ஊத்துங்கோ" என்று அவன் சிணுங்கினான்.
"பொறு குஞ்சு. அது தானேடா எடுக்கிறன்” என்று சொன்ன வள் தண்ணீர் எடுக்கும் ஒசை அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
அவன் இப்பொழுதும் கண்களை மூடியவாறு தலை குனிந்து தயாராக நின்றான். தண்ணிர் தொடர்ந்து ஊற்றும் போது மூச்சு முட்டும். அத்தோடு கண்ணுக்குள் சீயாக்காய் போய்விடக் கூடாது. கண் எரியும். அவன் கண்களைத் திறக்கவில்லை.
ஆனால் தண்ணிர் தலையில் விழவில்லை. பெரிதாகக் செல் சத்தம் ஒன்று அருகில் கேட்டது. அவன் உடலோடு உரசிக்கொண்டு ஏதோ சென்றது.
பின்னர் அமைதி.
“பெரியம்மா, பெரியம்மா” என்றான்.
பயமும், அழுகையும் வந்தன. எரியும் கண்களைத் திறந்து பார்த்தபோது வெள்ளைப் பெரியம்மா சிவப்பு இரத்தத்தில் தோய்ந்துபோய்க் கீழே கிடந்தாள். கண்ணில் விழுந்த சீயாக்காயில் அவன் கண் எரியவில்ல. கண்ட காட்சியில் இதயம் எரிந்தது. "ஐயோ பெரியம்மா” என்று அவன் பெரிதாகக் கத்தினான். அவனது ஒலம் கிணற்றுச் சுவரில் மோதி எங்கும் எதிரொலித்தது. அன்றோடு அந்தக் கூட்டுக் குடும்பம் சிதறியது. சொந்த வீடு இனிச் சொந்தமில்லை. அங்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் வேறு இடத்திற்குச் சென்றார்கள்.
சிறீலங்கா அரசின் விமானக் குண்டு வீச்சுகள் தீவிரமடைய ஆரம்பித்தன. பள்ளிக்கூடங்களிலும் பதுங்கு குழிகள் தோண்டப் பட்டன. படிப்புக்கும் குண்டு வைத்தார்கள்.
ஒரு நாள் தன் நண்பர்களோடு "டியூசன்’ வகுப்பு முடிந்து வந்துகொண்டிருந்தான். மாலை 3.30 மணி. அந்த இடத்திலே விடுதலைப் புலிகள் இருப்பதாக அறிந்து ஏழு கெலிகொப்டரில்
தொப்புள்கொடி 103

Page 55
200 இராணுவத்தினர் வந்து இறங்கினார்கள். மரவெள்ளித் தோட்டத்தில் மறைந்திருந்து இந்தக் காட்சியை மயூரனும் நண்பர் களும் பார்த்தார்கள். தரையில் இருந்த விடுதலைப் புலிகளால் 18 இராணுவத்தினர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.
திரும்பி வந்த இராணுவம் நான்கு குண்டுகளை வீசிதும்புத் தொழிற்சாலை ஒன்றை முற்றாக எரித்தது.
சந்தியில் ஒரு தேநீர்க் கடை இருந்தது. அது மயூரனோடு படிக்கும் இராசனின் தந்தையின் கடை. இராசன் மிக அமைதி யானவன். போலியோவால் பாதிக்கப்பட்டவன். விளையாட்டுகளில் அதிகம் பங்குகொள்ள மாட்டான். ஆனால் மயூரனைப் பெரிதும் ஊக்கப்படுத்துவான். மயூரன் 'கோல்’ அடித்தால் சொக்கிலேட் வாங்கிக்கொடுப்பான். அந்தக் கடையிலும் குண்டு வீழ்ந்தது. இராசனின் போலியோ நண்பன் பலியானான்.
"தம்பி, மயூரன் இது உனக்காக அவன் வாங்கி வைச்சிருந் தவன்"
இராசனின் தந்தை தன் கண்ணிரோடு, அவனது சட்டைப் பையில் தண்ணிராய்க் கரைந்திருந்த சொக்கிலேட்டை எடுத்து மயூரனிடம் நீட்டினார்.
கரைந்திருந்த சொக்கிலேட்டில் இராசனின் இரத்தத் துளிகளும் சேர்ந்திருந்தன.
கொக்குவில் இந்துக் கல்லூரியில் மயூரனுக்குப் பிடித்தவர் ரோகினி எனும் இளம் ஆசிரியை. குண்டு போடும் விமானங்கள் வரும் ஓசை கேட்டதும் பிள்ளைகள் எல்லாம் பதுங்கு குழிகளுக்குள் போய் விட்டார்களா என்பதை அவர் தீவிரமாகக் கண்காணிப்பார்.
அப்படித்தான் ஒரு நாள். எல்லோரையும் கவனித்த அவர், தன்னைக் கவனிக்கவில்லை. பாவம்.
அதன் பின்னர் அந்தப் பள்ளிக்கூடத்திற்குப் போகவே மயூரனுக்குப் பிடிக்கவில்லை.
அவன் பார்த்தது சிதறிய உடல்களும் இரத்தமுமே. தூங்க முடியாத இரவுகள் அவனுக்கு அதிகம். வெள்ளைப் பெரியம்மாவின் வெள்ளைச் சிரிப்பை மறந்தான்.
இரத்த வெள்ளத்தில் அவள் இறந்து கிடந்தது ஏனோ இன்னும் இறக்கவில்லை.
ரோகினி டீச்சரின் மண்ணால் மூடிய முகம் கண் முன்னே வந்து நிற்கும். கனிவான அவரது பார்வை கண்களுக்குத் தெரிய வில்லை. கண்களை மூடியிருந்த மண்தான் தெரிந்தது.
104 தொப்புள்கொடி

துப்பாக்கி வேட்டுச் சத்தங்களும் குண்டு போடும் விமானத் ன் இரைச்சலுந்தான் காதில் கேட்டன. கோயில் மேளங்களும் தின் இ லுந்த தி ளு நாதஸ்வரமும் அந்த ஒசையில் அமுங்கின.
பயம். அழுகை, தூங்கும் பாதி நேரத்திலும், பாதித் தூக்கத்தில் எழுந்து பயத்தோடு யன்னலைத் திறந்து வானத்தைப் பார்ப்பான்.
அவனை அறியாது சாரம் நனைந்திருக்கும். சில சமயம் நனையும் என்று தெரிந்தாலும் வெளியே செல்லப் பயந்து சாரத்தை நனைத்துவிடுவான்.
இத்தோடு முடியவில்லை சிறுவன் மயூரனின் சித்திரவதை, இந்திய சமாதானப் படை வந்தது. சுதுமலையில் வரலாற்றில் பொறிக்கப்பட்ட பேச்சு.
இந்தியாவின் பதில் கிடைக்காமல் பதிமூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் என்னும் இளைஞன் மிக மெதுவாக உயிர்நீத்த காட்சியை மயூரன் நேரில் கண்டான்.
மீண்டும் போர். இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே. அப்படித்தான் சொன்னார்கள்.
ஆனால் இறந்தவர்களில் அதிகமானோர் அப்பாவி மக்களே. கோரமான கொடுமைக்கு உள்ளானோரும் அவர்களே.
பயணங்கள் தடைப்பட்டன. மூலைக்கு மூலை தெருத்தடை கள். நட்ட நடு வெயிலில் மக்கள் மணிக்கணக்கில் நிறுத்திவைக்கப் பட்டு விசாரிக்கப்பட்டார்கள்.
அகதி முகாமில் இருபது பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள்.
அவன் படித்த கொக்குவில் இந்துக் கல்லூரியில் 57 பேர் செல்லடிக்குப் பலியானார்கள். யாருக்குந் தெரியக் கூடாது என்று அங்கேயே புதைக்கப்பட்டார்கள்.
1990இல் அவர்களின் உடல்கள் கிண்டி எடுக்கப்பட்டன.
இரண்டு சங்கிலி போட்ட டாங்கிகள் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தை நிர்மூலமாக்கின. உயிரோடு உள்ளே இருந்து பிரார்த்தித்தவர்களின் உடல்கள், சுவரில் சதைத் துண்டுகளாக அறையப்பட்டன. கண்ணைக் கொடுத்தார் கண்ணப்ப நாயனார். சிலுவையில் மடிந்தார் யேசுநாதர். அவர்களைப் போல்தான் இவர்களும்.
விரும்பிக் கொடுக்கவில்லை. கோயில்ச் சுவரை அழகுபடுத்த அவர்களின் உடலும், இரத்தமும் எடுக்கப்பட்டன. மயூரன் மண்வெட்டியால் சிதறிய உடல்களை வாரி எடுத்து எரிப்பதற்கு உதவினான்.
தொப்புள்கொடி 105

Page 56
அயலாருக்குப் பதுங்குகுழிகள் வெட்ட உதவுவான். மரங்கள் நட்டு கெலி கொப்டர்கள் தரை இறங்குவதைத் தடைசெய்ய வழிசெய்வான். இரவு நேரங்களில் ரோந்து வரும் இராணுவத்திடம் இருந்து தங்கள் அயலாரைக் காப்பாற்றும் பணிகளில் விழிப்புக் குழுக்களில் சேர்ந்து காவல் செய்வான். காயமுற்றோருக்கு முதலுதவி செய்வான். தெல்லிப் பழையில் இருந்த தங்கம்மா அப்பாக்குட்டியின் அநாதைச் சிறுமிகள் ஆதரவு மையத்திற்கும் சென்று உதவிகள் புரிவான். அப்பொழுது அங்கே 170 அநாதைச் சிறுமிகள் இருந்தார்கள்.
O
இதுவரை தெருவையே பார்த்து வாகனத்தை ஒட்டியபடி தன் சிறு வயது உலகை அஞ்சலிக்குச் சொல்லிவந்த மயூரன், அவளைத் திரும்பிப் பார்த்தான். அவன் நெஞ்சில் சுமை சிறிது குறைந்தது போல் உணர்வு.
இருண்ட நீண்ட தெருவிலே அவர்களது வாகன விளக்கைத் தவிர வேறு வெளிச்சம் இருக்கவில்லை. அஞ்சலி இருட்டுக்குள் தான் இழந்துவிட்ட எதையோ தேடிக் கொண்டிருந்தாள். இதயம் கனத்தது.
"என் கதையைக் கேட்டு நீ நித்திரையாகிட்டியோ?” என்றான் மயூரன்.
"இப்பிடி நான் கதைகளிலேயும் படங்களிலேயும் கூடப் பார்த்ததில்லை. உனக்குப் பின்னால இவ்வளவு சோகம் இருக்கு என்று எனக்குத் தெரியாது." அஞ்சலி சொன்னாள்.
"அதை அனுபவிச்சவையைத் தவிர மற்றவைக்கு அதின்ரை ஆழம் விளங்காது. அஞ்சலி, பள்ளிக்கூடம், பரத நாட்டியம், சங்கீதம், பார்ட்டிகள், டெலிவிசன் இதுகள்தான் உன்னுடைய உலகம். ஆழமான கிணற்றில இருந்து வெளியில வர நான் அங்குலம் அங்குலமா ஏறுறன். என் காலைப் பிடிச்சு ஏதோ ஒன்று கீழதான் இழுக்குது. அது நான் விரும்பி ஏற்காத கடந்த காலம். சிலந்தி வலையில சிக்கின சின்னப் பூச்சி மாதிரி என்னால முடியல்லை. என்னுடைய கடந்த காலம் இன்றைக்கும் எங்கடை நாட்டிலே பலருடைய நிகழ்காலமாக இருக்கு. அது மாறியிருந்தால் சில நேரம் நானும் மாறியிருக்கலாம். மரத்துப்போன இந்த உள்ளத் தில காதல் வருமா ? சிவந்து அழகாக இருக்கிற உன் மேனியை நான் தொட்ட உடன் அது சிதறிடுமோ என்ற பயந்தான் வருகுது. சிதறி, இரத்தம் சிந்திற உடல்தான் கண்ணுக்குத் தெரியிது. சித்திர வதையைக் கண்ட மனத்தால் சித்திரத்தை இரசிக்க முடியல்லை. உன்னோட ஒரு சில மணி நேரமாவது என்னால சந்தோசமாக இருக்க முடியும் என்றுகூட எனக்குத் தெரியாது. எப்படி உன்னை மனைவியாக்கி வாழ்நாள் முழுக்க சந்தோசத்தைத் தருவன்?."
106 தொப்புள்கொடி

மயூரன் தங்களைக் கடந்து செல்லும் மாதவனின் வாகனத் துக்குக் கை அசைத்தான்.
அஞ்சலி மெளனமானாள். அந்தக் கணம் காதலைப் பற்றி அவளால் நினைக்க முடியவில்லை. அவனை அணைத்து ஆறுதல் சொல்ல எண்ணம் வரவில்லை. தன்னை யாராவது அணைத்துக் கொள்ள மாட்டார்களா என்றே குழம்பினாள். இருட்டில் உயர்ந்த மரங்கள் எல்லாம் அவளை விட்டுத் தூரத்தூரச் சென்று கொண்டிருந்தன. மயூரனின் இடது கையைத் தன் கையால் அழுத்திப் பிடித்தாள். வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள் சிக்கிக்கொண்டன. அரை மணி நேரம் இருவரும் ஏதும் பேசவில்லை. அஞ்சலியின் கண்ணில் நீர் சொரிந்துகொண்டே இருந்தது. மயூரன் தெருவையே வெறித்துப் பார்த்தவாறு வேகமாகக் காரை ஒட்டினான். அஞ்சலிதான் மெளனத்தைக் கிழித்தாள்.
"மயூரன், என்ன சொல்லுறது என்று எனக்குத் தெரியல்லை. உன்னுடைய சிரிச்ச முகத்தை நான் எப்போதும் இரசிச்சன். சிரிப்புக்குப் பின்னால நீ ஒரு நெருப்பில வெந்து கொண்டிருக்கிறாய். இப்ப நெருப்பில நடந்த உன்னுடைய வாழ்க்கையைப் பார்க்கிறன். இதுவரை எனக்காகத்தான் உன்னை நான் காதலிச்சன். இப்ப உனக்காக உன்னை நான் காதலிக்கிறன். இனியாவது உன்னுடைய வாழ்க்கையை இனிமையாக்க முடியாதா என்றுதான் என் மனம் கேட்கிது.” அஞ்சலியின் நா வறண்டு ஒலித்தது. அதில் உயிர் இல்லை. உணர்வு இல்லை.
அவன் விரக்தியாகச் சிரித்தான்.
"அஞ்சலி, எவ்வளவு தடுத்தாலும் என்னை அறியாமல் உன்னை நான் நினைக்கிறன். இந்தப் புதுவிதமான உணர்வு, காதல் என்று எனக்கு விளங்கிது. கிட்ட வராதே என்று வாய் சொன்னாலும் மனம் வா வா என்றுதான் சொல்லுது. ஆனால் இது நடக்கக் கூடியதில்லை என்றும் எனக்கு நல்லாத் தெரியும். கனவுகளை வளர்க்க வேண்டாம் விட்டிடுவம்.”
அவள் மீண்டும் மெளனமானாள்.
“என்ன நடந்தாலும் உன்னோட நான் வாழ விரும்புறன்" என்று அவள் சொல்லமாட்டாளா என அவன் அடி மனம் ஏங்கியது. அவள் தன்னோடு வாழா விட்டாலும்கூட.
அவள் பேசவில்லை.
மெளனம் அவர்களை விழுங்கிக்கொண்டது.
தொப்புள்கொடி 107

Page 57
13
பூலை 83 கறுப்பு யூலையானால் யூன் 2006 சிகப்பு யூலை ஆயிற்று. மன்னார், வங்காலை என்னும் இடத்தில் ஒரு கண்ணிர்க் கதை அரங்கேறியது. முப்பத்தைந்து வயது மூர்த்தி மார்ட்டின் ஒரு தச்சுத் தொழிலாளி. பல முறை வீடு வாசலை இழந்து இந்தியாவில் அகதியாகக் குடும்பத்தோடு தஞ்சம் புகுந்தார். உலக நாடுகள் சமாதானம் பேசிய போது தன் தாயகத்தில் மீண்டும் தன் வாழ்வைத் தொடங்க, இனிய கனவுகளோடு ஈழம் திரும்பினார். அழகான மனைவி 27 வயது, சித்ரா மேரி மெடலின். கண்கள் போல் இரண்டு பிள்ளைகள். மகள் ஆன் லக்சிகாவுக்கு 9 வயது. மகன் நிக்சனுக்கு வயது 7
சமாதானம் பேசிப் பத்திரிகையின் முன்பக்கங்களில் படங் களோடு தங்களை விளம்பரம் செய்த பெரிய நாடுகள் ஏனோ, அவர்கள் பேச்சில் நம்பிக்கை கொண்டு நாடு திரும்பிய இந்த அப்பாவி மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவில்லை.
யூன் 9ஆம் திகதி 2006 கத்திகள் சகிதம் வீட்டுக்குள் நுழைந்த சிறீலங்கா இராணுவத்தினர், நம்பிக்கையோடு வந்த இளங்குடும் பத்தை வெட்டிக் கொன்றார்கள். தங்கள் ஆயுதம் போதாது என்று மார்ட்டினது தச்சு ஆயுதங்களையும் உபயோகித்து அக்குடும்பத்தைக் குதறித் தள்ளினார்கள். கோழிகளைக் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டு உரிப்பது போல் இரண்டு அப்பாவிக் குழந்தைகளும், தந்தையும் கழுத்தில் கயிறு கட்டித் தூக்கப்ட்ட காட்சி தமிழ் இணையதளங்களில் அடுத்த நாள் வெளிவந்தன. தாயோ பரிதாபமாக இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.
வெற்றிவேலரும் அரசியல் குழுவும் அப்படங்களைப் பார்த்துக் குமுறினார்கள். வழமையாகக் கறுப்பு யூலை, இரத்ததானங்கள், கோயில்களில் பிரார்த்தனைகள் என்றே ஈழத் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் நினைவுகூரப்படும். பொறுப்பற்று சமாதானம் பேசி, பாதி வழியில் அப்பாவி மக்களைப் பலிகடாக்கள் ஆக்கி விட்ட இணைய நாடுகளை இடித்துரைக்க வேண்டிய நேரமிது என்று மெல்பேர்ன் தமிழ் மக்கள் வேதனைப்பட்டார்கள். இருபத்து நான்கு மணி நேரக் கண்விழிப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை மெல்பேர்ன் பெடரேசன் சதுக்கத்தில் ஒழுங்கு செய்தார்கள்.
108 தொப்புள்கொடி

கறுப்பு யூலையை நினைவுகூர்ந்து, இன்றும் நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகளையும் கண் திறந்து பாருங்கள் என்று கூறிச் சதுக்கத்தில் கண் மூடாது இருந்தார்கள். உண்ணாவிரதம் வணக்கத்துக்குரிய பிரேமராஜா, மனமோகன், சர்மா ஐயர் ஆகியோரின் பிரார்த்தனைகளோடு யூலை 24 மால்ை 8 மணிக்கு ஆரம்பமானது. கொட்டும் பனிக் குளிரில், 40 சதுர அடிக் கூடாரத்தில், இளையோரும் முதியோரும் இணைந்து உண்ணாது கண் விழித்து அடுத்த நாள் மாலை 8 மணி வரை நீதியையும் சமாதானத்தையும் வேண்டி பிரார்த்தித்தார்கள்.
இளங்கோவன் இதில் முக்கியப் பங்கெடுத்து ஒழுங்குகள் செய்தார். ஆரபி குழந்தையோடு இரவு வந்து சிறிது நேரம் இருந்து வீடு சென்றாள். மாதவன், மயூரன், வெற்றிவேலர், மீனா ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.
சமாதானப் பறவையின் சிறகொடித்த பின்னர் கழுகுகளின் கொட்டம் எல்லை கடந்தது. சமாதானம் பேசிய இணைய நாடுகள் கை கட்டி நின்று சிறீலங்காவின் தமிழினக் கொலையைக் காணாதது போல் கண்களை மூடிக்கொண்டனர். ஒருவிதத்தில் அவர்களும் பங்காளிகள் ஆகினர். குடும்பங்களைக் கத்திகளாலும் துப்பாக்கிகளாலும் கொன்றுகுவித்த மிலேச்ச இராணுவம், குஞ்சுகளைக் கொல்ல, நான்கு கிபீர் ஜெட் குண்டு விமானங்களை அனுப்பிவைத்தது.
ஆகஸ்ட் 2006, 14ஆம் திகதி திங்கள் காலை. யுத்தச் சூழ்நிலையில் பாதிக்கப்படும் தங்கள் சமூகத்திற்கு உதவும் நோக்கோடு அவசரகாலச் சிகிச்சைப் பயிற்சிக்கு 400 இளம் மாணவிகள் செஞ்சோலை என்னும் குழந்தைகள் இல்லத்தில் கூடியிருந்தார்கள். பொறுக்கவில்லை அந்தப் போர் வெறியருக்கு. ஒன்றல்ல, இரண்டல்ல 16 குண்டுகளை அந்தப் பச்சிளம் பிள்ளை கள்மீது போட்டுப் பார்த்து இரசித்தது சிறீலங்கா அரசு. 61 இளந்துளிர்களின் பிரேதங்கள் அடுக்கடுக்காக இருக்கும் படங்கள், உலகத்தின் மனச் சாட்சியை உறுத்தவில்லை. அவர்களைப் பெற்றவர்களின் கண்ணிர் கல்லிதயங்களை ஏனோ கரைக்கவில்லை. படுகாயங்களுடன் இன்னும் 129 பிள்ளைகள். உலகைப் பற்றி மாறாத ஒரு காயத்தை, அந்த நாள் தமிழர் மனதில் விட்டுச் சென்றது.
வழமைபோல் மெல்பேர்ன் தமிழர் கலங்கினர். வெற்றிவேலர், மாதவன், மயூரன் அனுதாபக் கூட்டங்களைக் கூட்டினார்கள். தமது வயது ஒத்தவரின் அநியாயக் கொலைகளுக்கு நீதி கேட்ட இளைஞர் குழாம் மெல்பேர்ன் நகரத்தின் மத்தியில் கூடி கோசம் எழுப்பியது. இதில் அஞ்சலி முன்னின்று கலந்துகொண்டாள். ஓங்கிக் குரலெழுப்பினாள்.
தொப்புள்கொடி 109

Page 58
கொலைகள் இத்தோடு முடியவில்லை.
இணையதளத்தில் செய்தியைப் படித்த மயூரனுக்குப் பொறுக்கவில்லை. படத்தில் அவர் அணிந்திருந்த கோர்ட்டைப் பார்த்தான். குறும்புப் புன்னகை தவழும் முகம். அவரை, பல அரசியல் பிரமுகர்களைச் சந்திப்பதற்காக அவனே அழைத்துச் சென்றிருந்தான். குழந்தையைப் போல் 'மையர்ஸ்’ அங்காடியில் தனக்கு ஒரு 'சூட்' வாங்குவதற்கு எத்தனை வெவ்வேறு 'சூட்களை அணிந்து அழகு பார்த்திருப்பார். தானும் அவரும் அருகருகே இருந்து உணவுண்ட கடைகள் நினைவில் வந்தன.
"தமிழ்த் தேசிய அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா இரவிராஜ் நொவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குக் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்."
கதிரவெளி என்னும் மட்டக்களப்பை அண்டிய கடலோரக் கிராமம். அங்கே விக்னேஸ்வரா வித்தியாலயம் என்ற சிறிய பள்ளிக்கூடம், மூதூர் கிழக்கு, ஈச்சிலம்பற்றுக் கிராமங்களில் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மக்கள் போர்ச் சூழலால் விரட்டி அடிக்கப்பட்டு அந்தப் பள்ளிக்கூடத்திலே தஞ்சம் அடைந்திருந்தார்கள், கல்லாறு இராணுவத் தளத்தில் இருந்து ஏவப்பட்ட ரொக்கட்டுகள் அவர்களில் 47 பேரைக் கொன்று குவித்தன. 160 பேர் காயமடைந்தனர்.
“கொலையுண்டவர்களுக்காகக் குரல் கொடுத்தால் நீயும் கொலை செய்யப்படுவாய்” என்ற புதிய தத்துவத்தை இரவிராஜ் மூலம் உலகுக்குப் புகட்டியது சிறீலங்கா.
வியாழக்கிழமை இரவிராஜ், கதிரவெளியில் பரிதாபமாகக் கொலையுண்ட மக்களுக்காக ஒர் ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கொழும்பில் பங்குபற்றினார். ஆங்கிலம், தமிழ், சிங்களம் என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடிய இரவிராஜ், சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களை உலகுக்கும் சிங்கள மக்களுக்கும் தோலுரித்துக் காட்டினார். தங்கள் சொந்த சிங்கள மொழியிலேயே அவரோடு தர்க்கம் செய்ய முடியாத சிறீலங்கா அரசு, அவர் வாயை அடைக்க, அவர்களுக்குப் பரிச்சயமான வன்முறையையே கட்டவிழ்த்துவிட்டது. அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுப்பதற்குப் புறப்படும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். m
மீண்டும் நினைவுக் கூட்டங்கள். மலர் அஞ்சலிகள். பிரார்த்தனைகள். பேச்சுகள். எத்தனை நடத்திவிட்டோம் என்று எண்ணிப்பார்த்தார்கள் வெற்றிவேலரும் அவரது தொண்டர்களும். நல்லதைச் செய்வோருக்குத் தான் இந்த உலகில் தண்டனையோ? கொலைசெய்பவன் நாட்டின் தலைவனாகினால் சிகப்புக் கம்பள வரவேற்பு. விருந்து உபசாரம். சட்டங்களைப் போட்டுவிட்டு,
1 1 0 தொப்புள்கொடி

சீருடை அணிந்து செய்யும் கோரக் கொலைகளுக்கு யார் கொடுப்பார் தண்டனை? கொன்று குவித்து, வென்றுவிட்டான் என்று கைகொட்டும் உலகப் பேரரசுகள், கொன்றது யாரை என்று கேட்பதில்லையா? ஏழைகளை, அநாதைகளை, ஆயுதம் அற்றவர்களை, குழந்தைகளை, பெண்களை, வயோதிகர்களை ஒர் அரசு அழிக்கும்போது, ஒரிரண்டு அறிக்கைளில் தங்கள் மனச்சாட்சியை மறைக்கப் பேரரசுகளால் எப்படி முடிகின்றது? அதுதான் பேரரசுகளுக்கு உரிய இலக்கணமோ ?
மாறி மாறித் தங்களுக்குள் வெற்றிவேலரும் தொண்டர்களும் தர்க்கித்துக் கொண்டார்கள்.
வடக்கில் தமிழர் திறந்த வெளிச் சிறையில் அடைக்கப் பட்டார்கள். கடலில் மீன்பிடிக்கச் செல்வதற்குத் தடை தோட்டம் செய்பவர்களுக்கு உரம் வாங்கத் தடை பெற்றோல் தட்டுப்பாடு. மின்சாரத் தடை விலைவாசி ஏற்றம் கொழும்பில் 30 வீதம் என்றால் வடக்கில் 100 வீதம் ஆகியது. அன்றாட உணவுக்கு வழியின்றிப் பல பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை.
கிழக்கில் சொந்த நாட்டிலேயே அகதிகளாகிவிட்டோர் உணவு, உடை, தங்க இடமின்றித் தவித்தார்கள். உதவிய உலக அற இயக்கங்கள், சிறீலங்காவின் கெடுபிடிகள் தாங்காது ஒவ்வொன்றாக வெளியேறின.
பேரிடிகள் ஒன்றின் பின் ஒன்றாகத் தமிழர்மீது வீழ்ந்தன.
தொப்புள்கொடி 1 11

Page 59
14
தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் காலமானார் என்ற செய்தி கேட்டு வெற்றிவேலர் இடிந்துபோய்விட்டார். தன்னை முற்றாகத் தமிழ் ஈழ விடுதலைக்குக் கொடுத்த பெருந்தகை அவர். மேலைநாட்டிலே, தான் மணமுடித்த மெல்பேர்னைச் சேர்ந்த அடேலுடன் இனிமையான வாழ்வை அவர் நடத்தி யிருக்கலாம். தாங்கொணாத துன்பங்கள் மத்தியிலும், உயிர் அச்சுறுத்தல்கள் இருந்தபோதும் தன் மனைவியோடு முப்பது வருடங்களாகத் தன் தாய்மண்ணுக்காக வாழ்ந்தவர். நோய்வாய்ப் பட்ட நேரத்திலும் நாட்டின் சமாதானப் பேச்சுகளில் தன் உயிரையும் பணயம் வைத்துப் பணிசெய்தவர். மரணப் படுக்கை யிலும் தன் மண்ணை மறக்காதவர். அடேலும் அன்டனும் வெற்றிவேலரின் இனிய நண்பர்கள். மீரா எப்படி மருத்துவத் தாதியாக இருந்தாளோ அதே போல் அடேலும் ஒரு மருத்துவத் தாதி.
2006 டிசம்பர் 14, அன்டன் இலண்டனில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வெற்றிவேலர் விரும்பினார். திடீர்ச் சோதனையின்போது பறிக்கப்பட்ட அவரு டைய கடவுச் சீட்டு பொலிசாரால் திருப்பிக் கொடுக்கப்பட வில்லை. அதனால் அவர் பயணம் செய்ய முடியாத நிலை. அன்டன் அவர்கள் மிகுந்த நோய்வாய்ப்பட்டு இருந்தார். புற்றுநோய், சலரோகம், மாற்று கிட்னி பொருத்தப்பட்டு பலவித நோய்களுடன் போராடிக்கொண்டிருந்தார். இத்தனைக்கும் மத்தியிலும் அவர் சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தன.
"என் வருத்தங்கள் எனது துர்பாக்கிய சோகம். ஆனாலும் எனது மக்கள் கூட்டாக அனுபவிக்கும் துன்ப சமுத்திரத்துடன் ஒப்பிடும்போது எனது நோய் ஒரு சிறு கூழாங்கல் போன்றதே. எனது ஆழ்ந்த கவலை எங்கள் மக்களின் அளப்பரிய துன்பங்களை யும் அடக்குமுறையையும் நீக்க என்னால் உருப்படியாக ஒன்றைச் செய்ய முடியாது, நான் இந்நோயால் ஊனமாகிவிட்டேன் என்பதே"
வெற்றிவேலர் எப்படியாவது மாமானிதர் அன்டன் பால சிங்கத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வது எனத் தீர்மானித்
12 தொப்புள்கொடி

தார். காவல் நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அவர்களோடு பேசித் தான் இலண்டன் போக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
மனிதாபிமானம் ஆஸ்திரேலியக் காவல் துறையினரிடம் இருந்தது. அவர்கள் கடவுச் சீட்டை அவரிடம் கொடுத்தார்கள்.
இதே மனிதாபிமானம் இலங்கையின் முன்னாள் தலைவர் சந்திரிகா குமாரதுங்காவிடமோ அல்லது காலஞ் சென்ற அவரது அமைச்சர் கதிர்காமரிடமோ இருந்திருந்தால் அன்டன் இன்று உயிரோடு இருந்திருப்பாரோ என்று வெற்றிவேலர் சிந்தித்தார்.
ஒரு கால கட்டத்தில் வன்னியில் இருந்த அன்டன் பாலசிங்கம் மிகுந்த நோய்வாய்ப்பட்டார். அவரது கிட்னி மிகவும் பழுதடைந்த நிலை. அவசர சிகிச்சை பெற வேண்டியது அத்தியாவ சியம். அவரை வைத்திய சேவைக்காக வெளிநாடு அனுப்ப விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நோர்வே அரசின் உதவியை நாடினார். நோர்வே சந்திரிகா குமாரதுங்காவிடம் உதவுமாறு வேண்டியது. இரக்கமற்ற சந்திரிகாவும் கதிர்காமரும் அன்டனின் உயிரைத் தங்கள் அரசியல் சதுரங்கத்திற்குப் பகடையாக்கிப் பல நிபந்தனைகளை விதித்தனர். "எங்கள் விடுதலைப் போராட்டத்தைப் பலமிழக்கச் செய்வதைவிட தான் உயிர் இழப்பேன்" என்றார் அன்டன். சிறிது காலத் தாமதம், ஆனாலும் அவர் இரகசியமாக வேற்று நாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டார். இதை அடேல் பாலசிங்கம் எழுதிய புத்தகம் ஒன்றில் வெற்றிவேலர் படித்திருந்தார்.
தமிழர் வெள்ளம் போல் இலண்டனில் கூடி மாமனிதர் அன்டன் பாலசிங்கத்திற்கு விடைகொடுத்தனர். அந்த மக்கள் மத்தியில் வெற்றிவேலர் தனது இறுதி உரையை நிகழ்த்தினார். காலம் வெற்றி வேலருக்கும் கணக்குப் போட்டிருந்தது. சிங்கப்பூர் விமான நிலையத்திலும் தான் கண்காணிக்கப்படுவதை அவர் உணர்ந்தார்.
12 பெப்ரவரி 2007 நிலாவின் முதலாவது பிறந்த நாள் கோலகலமாகக் கொண்டாடப்படுகின்றது. புன்சிரிப்போடு வருவோரை வரவேற்று அன்பாகப் பேசுகின்றார் வெற்றிவேலர். அவர் சாப்பிட்டாரா, இவர் சாப்பிட்டாரா என்று எல்லோரையும் கவனிக்கின்றார். நாட்டுக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்று மூச்சு விடாது பேசுகின்றார். சிட்னியிலுள்ள தமிழ் வானொலிகள் தங்களுக்குள் பேதங்களை வளர்ப்பதை நிறுத்தி, எங்கள் மக்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும் என்று சொல்கின்றார். நிலாவைத் தூக்கி முத்தம் இடுகின்றார்.
தொப்புள்கொடி 113

Page 60
25 மார்ச் 2007 சிட்னியில் ஒரு மகாநாட்டை முடித்து வந்து என்றும் இல்லாதவாறு மீராவை வேலைத்தளத்தில் இருந்து தன் வாகனத்தில் கூட்டி வருகின்றார். அன்பாகப் பேசுகின்றார். அணைத்துக்கொள்கின்றார். தோள் வலிக்கின்றது என்கிறார். மீரா டாக்டரைப் பார்ப்போம் என்கின்றாள். மறுக்கின்றார்.
26 மார்ச் 2007 சைகையால் வீட்டில் கதைக்கின்றார். தங்கள் பேச்சைக் காவல் துறையினர் கேட்பதற்கான கருவிகள் வீட்டில் இருக்கின்றன என்கின்றார். எந்த நேரமும் நான் கைதுசெய்யப்படலாம் என்று சொல்கின்றார். இவர்கள் கையில் நான் சிக்கமாட்டேன் எனச் சிரிக்கின்றார். மீராவின் காதில் மென்மையாகச் சொல்கின்றார்.
"நீ செய்வது சரியானதுதான் என்று நீ கருதினால் அதை ஒருபோதும் செய்வதற்குப் பயப்படாதே."
மீரா ஒரு திருமணத்திற்காக நியூசிலாந்து போகின்றாள். வழியெல்லாம் வெற்றிவேலர் எடுக்க வேண்டிய மருந்துகளை அவருக்கு நினைவூட்டுகின்றாள்.
அடுத்தடுத்த நாட்கள் அடிக்கொருதரம் வெற்றிவேலரின் தொலைபேசி அடிக்கும். மீரா அவர் சுகத்தைப் பற்றிக் கேட்பாள்.
28 மார்ச் 2007 தனது நெஞ்சு சிறிது வலிக்கின்றது. பெரிதாக ஒன்றும் இல்லை என்று தொலைபேசியில் மீராவிடம் சொல் கின்றார். அவள் உடனடியாக டாக்டரைக் காணுமாறு கூறுகின் றாள். அவரும் அப்படியே செய்கின்றார். மீண்டும் மீரா தொலை பேசியில் டாக்டரைப் பார்த்தாகி விட்டது என்பதை உறுதி செய்கின்றாள்.
29 மார்ச் 2007. மெல்பேர்ன் தமிழினம் கண்ணீர் வடித்தது. ஆஸ்திரேலியத் தமிழர் வாடி நின்றார்கள்.
வழிகாட்டிய ஒளிவிளக்கு யாருக்கும் சொல்லாது ஒரு விடியலில் விழிகளை மூடிக்கொண்டது.
கலங்கும் மீராவின் கண்ணிர்த் திரையால், காலத்தால் அழியாத அவள் காதலன், கணவன், நண்பன், தலைவன் நினைவுகளை மறைக்க முடியவில்லை.
வெற்றிவேலரின் மறைவு மாதவன், ஆரபி, மயூரன் வாழ்க்கை யில் ஏற்பட்ட பெரிய இழப்பு. அவரது வழிகாட்டல், உரிமையோடு கடிந்துகொள்ளும் குணம், அவர்கள் வாழ்வில் காட்டிய அக்கறை, அன்பு, இவையாவும் திடீரென அவர்களிடம் இருந்து பறிக்கப் பட்டன. அவரைப் பற்றி முடிவில்லாது நாட்கணக்கில் பேசினார் கள். அவர் மறைவுக்குச் சில நாட்களுக்குமுன் சொன்ன வார்த்தை கள் வேறு அவர்களைத் துன்புறுத்தின.
114 தொப்புள்கொடி

"பொலிஸ் கெடுபிடி முடிஞ்சதாக நினைக்காதேங்கோ. அமரிக்கவில, பிரான்சில, இங்கிலாந்தில எல்லாம் இதே பிரச்சனை. சிறீலங்கா அரசின்ரை உந்துதலுக்கு மேலை நாடுகள் பலியாகிட்டுது கள். எதுக்கும் தயாராக இருங்கோ."
வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ள இன்னும் எத்தனையோ இருந்தன.
O
அது ஒரு திங்கட் கிழமை. ஏப்பிரல் 30, 2007 மாதவன் தமிழ்க்குரல் வானொலி ஒலிபரப்புக்கு உதவியபின் வீடு நோக்கித் தன் வாகனத்தில் வந்தான். இரவு 9.00 மணி. ஆரபி, நிலாவோடு வாசலில் அவன் வருவதை எதிர்பார்த்துக் காத்து நின்றாள். அன்று அவர்களுக்கு ‘பனானா லீவ்ப்' எனும் தென்னிந்திய உணவகத்தில் இரவு விருந்து. அது முடிந்து வீடு வந்து சேரும்போது இரவு 12 மணியாகிவிட்டது. நிலா வாகனத்திலேயே தூங்கி விட்டாள். படுக்கையில் இருந்த மாதவனுக்கும் ஆரபிக்கும் தூக்கம் வரவில்லை. வெற்றிவேலரின் வார்த்தைகள் காதில் ரீங்காரம் செய்தன.
மாதவன் இருவருக்கும் நடுவே அயர்ந்து தூங்கும் நிலாவைப் பார்த்தான். ஆரபி ஏக்கத்தோடு ஒரு பெருமூச்செறிந்தாள். எல்லோர் வாழ்க்கையிலும் தாங்கள் எண்ணுவதெல்லாம் நடப்பதில்லை. விரும்பியவனைத் திருமணம் செய்துகொண்டாள். அழகான பெண் குழந்தை அவளைப் பற்றிய இனிய கனவுகளோடு வாழ்க்கை நடக்கலாம். நடக்குமா என்ற கேள்வி அடிக்கடி வர ஆரம்பித்தது. பச்சைக் கார், கன்பராவில் கண்ட அந்த உயரமான மனிதன், வெற்றிவேலரின் வார்த்தைகள், நடந்து முடிந்த திடீர் சோதனைகள். ஒவ்வொன்றும் பூதாகரமாகத் தோன்றி அவளை அச்சுறுத்தின. அவள் எழுந்து மாதவன் அருகில் சென்று அவன் மார்பை அணைத்தபடி படுத்தாள். அவனை இறுகக் கட்டிக்கொண்டாள். அவன் பலம் நிறைந்த கைகளின் பாதுகாப்பு அவளுக்குத் தேவைப்பட்டது. நாம் பிரிந்துவிடக் கூடாது என்று அவள் மனம் பிரார்த்தித்தது.
அவன் மனதிலும் ஆயிரம் போராட்டங்கள். ஆரபி, நிலா இவர்களைப் பிரிந்து ஒரு வாழ்க்கையைக் கற்பனை செய்ய முடியவில்லை. அவர்களுடைய எதிர்காலம் எப்படி அமையும் என்ற சஞ்சலம் நெஞ்சை அடைத்தது. உடலின் சோர்வும் இதயத்தின் களைப்பும் ஒருவாறு அவர்களைக் கண் மூட வைத்தன.
காலையில் மாதவன் ஆறு மணிக்கே எழுந்து கொண்டான். ஆரபியும் நிலாவும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். நிலா தாயின் கழுத்தை இறுகத் தழுவியவாறு இருந்தாள். மாதவன் விடுதலைப் புலிகளின் படங்களுடன் இருந்த நாட்காட்டியில்
தொப்புள்கொடி 115

Page 61
அன்றைய தினத்தைப் பார்த்தான். மே முதலாந் திகதி, செவ்வாய்க்கிழமை. அன்று கட்டடத் தளத்திற்குத் தேவையான பொருட்களை ‘எப்பிங்' எனும் இடத்திலிருந்து எடுத்து வர வேண்டும். வேலையாட்கள் வரும் முன் அவற்றை வேலைத் தளத்துக்குக் கொண்டு வருதல் அவசியம். அவசரமாகப் புறப்பட்ட அவன்,துரங்கிக்கொண்டிருந்த நிலாவின் கன்னத்திலும் ஆரபியின் நெற்றியிலும் முத்தமிட்டுச் சென்றான். அப்பொழுது நேரம் 645 வாகனத்தைப் பின்புறமாகச் செலுத்தித் தெருவில் இறக்கினான். தெருவோரத்தில் இன்னொரு வாகனம் நிறுத்தப்படுவதைப் பார்த்தான். "அது அவர்களாக இருக்குமோ ?” என்ற கேள்வி மனதில் எழுந்தது. ‘எப்பிங்கை நோக்கி அவன் வாகனம் சென்றது. அவன் புறப்பட்ட ஒசையில் ஆரபியின் தூக்கம் கலைந்தது. நிலா சிணுங்கினாள். ஆரபி அவளுக்குப் பாலூட்டி மீண்டும் தூங்கவைத்தாள். எழுந்திருக்க மனமின்றிக் கண்களை மூடிக்கொண் டாள். கதவருகில் சிறு சத்தங்கள் கேட்டன. ஆரபியின் இதயம் படபடவெனத் துடிக்க ஆரம்பித்தது. கதவில் பலமாகத் தட்டும் ஒசை. அவளுக்கு நன்றாகத் தெரியும் இது அவர்களாகத்தான் இருக்கும். ஆனாலும் நம்ப மறுத்தாள். தாய் தினம், தினம் பாடும் கந்தசஷ்டி கவசத்தை அவளை அறியாது வாய் முணு முணுத்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
பன்னிரண்டு காவல்துறையினர், ஒரு மொழி பெயர்ப்பாளர் தட தடவெனக் காலணிகளின் ஒசையுடன் உள்ளே புகுந்தனர். ஆளுக்கொரு பக்கமாய் வீட்டை நிரப்பினர். ஒரு சின்னக் கோழிக் குஞ்சை ஒரே நேரத்தில் பல பருந்துகள் சுற்றி நின்றது போலிருந்தது. ஆரபியின் உடல் நடுங்கியது. அவள் தன்னை ஒரு நிலைக்குக் கொண்டுவரப் போராடினாள்.
"எங்கே உன் கணவன் ?” என்றான் ஒருவன். "அவர் வேலைக்குப் போய்விட்டார்." என்றாள் அவள்.
அவர்கள் ஏமாற்றத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஒருவன் தன் கையிலிருந்த ஆணைப் பத்திரத்தைப் படித்தான். "உன் கணவனைக் கைதுசெய்ய வந்திருக்கின்றோம்" இடிபோல் அவள் காதில் அவனது வார்த்தைகள் விழுந்தன.
அந்தக் கட்டத்திலும் நிலா கட்டிலில் இருந்து உருண்டு விழுந்துவிடுவாள் என்று தாய் மனம் கூறியது. அவள் அதை அவர்களுக்குக் கூறி, படுக்கை அறை நோக்கி விரைந்தாள். இரண்டு பெண் பொலிசார் அவளைத் தொடர்ந்தனர். மற்றையோர் வீடு பூராவும் முன்பு போல் தேடுதலை ஆரம்பித்தனர். ஆரபி தான் உடை மாற்ற வேண்டும் என்றாள். அவள் உடை மாற்றும் வரை இரண்டு பெண் பொலிசாரும் அவளோடு நின்றனர்.
1 16 தொப்புள்கொடி

“எப்படி உன் கணவனுடன் தொடர்புகொள்ளலாம்?” ஒருவன் கேட்டான்.
“என்னால் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியும்." என்றாள் ஆரபி.
"அந்தத் தொலைபேசி இலக்கத்தைக் கொடு. நாங்களே பேசிக் கொள்கின்றோம்.” என்றான் அவன்.
இரண்டு காவல் துறையினர் வெளியேறினர். அவர்கள் மாதவனைத் தேடிச் செல்கின்றார்கள் என்று ஆரபி ஊகித்தாள்.
O
‘எப்பிங்கில் இருந்து எடுத்துவந்த கட்டிடப் பொருட்களை வேலைத்தளத்தில் ஒழுங்குசெய்து கொண்டிருந்தான் மாதவன். தொலைபேசி ஒலமிட்டது.
"நாங்கள் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். உன்னோடு பேச வேண்டும். எங்கே உன்னைச் சந்திக்கலாம்?” ஒருவனது குரல் ஒலித்தது.
மாதவன் ஒரு கணம் மெளனமானான்.
"என் வேலைத்தளத்திற்கு வாருங்கள்" என்று தன் முகவரியைக் கொடுத்தான்.
மனம் குழம்பியது. இன்னொரு விசாரணை என்றே எண்ணினான். தான் காவல் நிலையத்திற்குப் போக வேண்டி வரலாம் என்பதையும் புரிந்துகொண்டான். தனது நண்பன் சபாவைத் தொடர்புகொண்டு, நிலமையை விளக்கினான், தன்னை அவர்கள் கூட்டிச்சென்றால் தனது வாகனத்தை எடுத்துச்செல்லு மாறு கூறினான்.
மாதவன் வீட்டில், ஆரபியை எவரோடும் தொலைபேசியில் தொடர்புகொள்ள காவற் துறையினர் அனுமதிக்கவில்லை. அவர்கள் தேடுதல் 10.30 மணி வரை நீண்டது. கணினி, குறுந்தட்டு கள், புத்தகங்கள் எனத் தங்கள் பெட்டிகளை நிறைத்துக்கொண் டனர். அறுவடைக்குக் காத்து நின்ற வயலை, யானைக் கூட்டம் மிதித்தது போல் மீண்டும் வீடு காட்சி அளித்தது. அவர்கள் வெளியேறினார்கள். மடியில் அழும் குழந்தையின் குரல் கேளாது தரையில் சில கணங்கள் சிலை போல் ஆரபி அமர்ந்துவிட்டாள். தன்னைச் சுற்றி வீடு சுழலுவது போல் இருந்தது.
தொலைபேசி அலறியது. அந்த அலறலில் நிலாவின் அழுகை நின்றது.
மறுபக்கத்தில் மாதவன்.
தொப்புள்கொடி 117.

Page 62
அவள் விம்மல் தொண்டைக் குழியில் அடைத்தது. பேச முடியவில்லை.
"ஆரபி, ஆரபி” என்றான் அவன். "ஆ" என்றாள். அவள். அதற்கு மேல் பேச முடியவில்லை. மீண்டும் "ஆரபி” என்றான். "அவங்கள் போயிட்டாங்கள். உங்களைத் தேடி வாராங்கள்."
“தெரியும். போன் பண்ணினவங்கள். பயப்படாதேங்கோ. இது இன்னொரு விசாரணையாகத்தான் இருக்கும். பின்னேரம் வீட்டை வந்திடுவன். யோசிக்காதேங்கோ."
அவள் அழுகையே பதிலானது. அவன் சொன்னது எதுவும் அவள் காதில் விழவில்லை. அவள் அழு குரலைத் தாங்கிக்கொள்ள அவனால் முடியவில்லை. அவன் தொலைத்தொடர்பைத் துண்டித்தான்.
ஆரபி தன் தலையைப் பிடித்துக்கொண்டாள். மெல்ல எழுந்தாள். இளங்கோவனின் அலுவலகத் தொலைபேசி எண்ணை அழுத்தினாள்.
அவரது உதவிச் செயலாளர் பெண்ணே மறு பக்கத்தில் பதிலளித்தாள்.
இளங்கோவன் ஒரு முக்கிய அலுவலகக் கூட்டம் ஒன்றில் இருப்பதாகக் கூறினாள். நகரத்திற்குப் பேரழிவு வரும் வேளையில் எடுக்க வேண்டிய அவசரகால நடவடிக்கை பற்றிய கூட்டம் என்றும், அதில் கலந்துகொள்ளப் பல துறையிலும் விசேடப் பயிற்சி பெற்றவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொள் வதாகவும் கூறினாள். இந்த வேளையில் அவரைக் குழப்பக் கூடாது என்றாள்.
"அவள் மகளுக்குப் பேரழிவு வந்திருக்கின்றது. அவரோடு நான் அவசரமாகப் பேச வேண்டும்." என்று தன்னை அடக்க முடியாது ஆரபி அழுதாள்.
வேறு கேள்விகள் ஏதும் கேளாது, அந்தப் பெண் “நான் அவரை உடனே உங்களோடு தொடர்புகொள்ளச் சொல்கின்றேன்" என்று தொலைபேசியைத் துண்டித்தாள்.
தாயின் மனநிலையைப் புரிந்துகொண்டாளோ என்னவோ நிலா அவளது சட்டையைப் பிடித்து விளையாடினாள். சில நிமிடங்கள் சென்றன. ஆரபி வேறு யப்ாருக்காவது சொல்லலாமா என்று எண்ணினாள்.
அதற்குள் தொலைபேசி மீண்டும் அலறியது. இம்முறை இளங்கோவன்.
1 18 தொப்புள்கொடி

"அப்பா” என்றவள், விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். "என்னம்மா? ஆரபி என்னம்மா?” என்று அவர் பதறினார்.
"அப்பா, நீங்கள் உடன வாங்கோ. என்னால முடியல்லை. அவரை அரெஸ்ட் பண்ணப்போறாங்கள்." ஆரபி அழுதாள்.
நாடியைத் தடவியவாறு நாற்காலியில் நன்றாகச் சாய்ந்தார் இளங்கோவன். மேவி வந்த உணர்வலைகளை அழுத்தி உள்ளே தள்ளி, இனி என்ன செய்வது என்று சிந்தனையைத் தட்டினார்.
"பயப்படாதே நான் இதோ வெளிக்கிட்டன். லோயரை ஒழுங்குபண்ணிட்டு அங்க வாறன்."
இளங்கோவன் தனது நெருங்கிய நண்பர்கள் சிலருக்கும், சட்டத்தரணிக்கும் தொலைபேசி மூலம் நிலைமையை விளக்கினார்.
எப்படியும் மாதவனைப் பிணையில் வெளியே எடுத்து விடலாமென இளங்கோவன் ஆரபிக்கு ஆறுதல் கூறினார்.
ஆரபி மீராவுக்கும் அஞ்சலிக்கும் செய்தி சொல்லி இருந்தாள். அவர்கள் இருவரும் உடனே அவளைத் தேடி வந்தார்கள். நிலாவை அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டார்கள். நிலா ஏதோ விபரீதம் நடக்கின்றது என்று புரிந்துகொண்டாளோ, என்னவோ தாயே தூக்க வேண்டுமென அடிக்கடி அடம்பிடித்து அழுதாள்.
வேலைத்தளத்தில் மாதவனுக்கு மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. காவற்துறையினரின் வாகனச் சில்லு ஒன்றுக்கு வழியில் காற்றுப் போய்விட்டதாகவும் தாங்கள் வர சிறிது தாமதமாகும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
அவர்களுக்காகக் காத்திருக்கும் நேரம் மாதவனுக்கு சித்திரவதையாக இருந்தது.
பச்சை நிற கொமொடோர் வந்து நின்றது. மூவர் வாகனத்தில் இருந்து இறங்கினார்கள். அவர்கள் சீருடை தரித்திருக்கவில்லை. ஒருவன் ஆணைப் பத்திரத்தை நீட்டினான். அவர்கள் இடையில் துப்பாக்கி இருந்தது.
"உன்னைக் கைதுசெய்கின்றோம்." என்றான் ஒருவன். மற்றவன் மாதவனிடம் ஆயுதங்கள் ஏதாவது இருக்கின்றதா என்று பரிசோதித்தான்.
மாதவன் அப்பொழுதுதான் தான் எதிர்பார்த்ததைவிட இது பாரதூரமானது என்பதை உணர்ந்தான்.
'மில் பார்க்' எனும் இடத்திலிருந்து, அவர்களை ஏற்றிய வாகனம் நகரத்தின் மத்திய பகுதியை நோக்கி விரைந்தது.
தொப்புள்கொடி 119

Page 63
'லொன்ஸ்டேல்' வீதியில் வாகனம் நின்றது. தெருவெங்கும் ஊடகத்துறையினர் படப்பிடிப்பு கருவிகளோடு திரண்டு நின்றனர். மாதவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. இவை எல்லாம் அவன் எதிர்பாராதவை. அவனது முகத்தை மறைத்துக்கொள்ளு மாறு காவல் துறையினர் கூறினர். அவன் காவல் துறை அலுவலகத்தின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டான். "எங்கள் மக்கள் சிறீலங்கா அரசின் இனப் படு கொலையில் இன்னலுறுவதை ஆஸ்திரேலிய மக்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல எத்தனை பேரணிகள் நடத்தி இருப்போம்? அப்போ தெல்லாம் வராத இந்த ஊடகத் துறையினர் இப்பொழுது மாத்திரம் எங்கிருந்து வந்தார்கள்?" என்ற எண்ணம் மீண்டும் அந்த இக்கட்டான நேரத்திலும் அவன் மனதில் ஓடியது.
ஒரு சிறிய அறைக்கு அவனைக் கூட்டிச்சென்றனர். அதன் அகலம் இரண்டு மீற்றர் இருக்கும். நீளம் ஐந்து மீற்றர் வரும். ஒரு சிறிய மேசை, மூன்று நாற்காலிகள். இருவர் மாதவனுக்கு எதிராக அமர்ந்தனர். அவன் குடிப்பதற்குத் தண்ணிர் ஒரு கண்ணாடிக் குவளையில் இருந்தது. ஒரு வீடியோ படக் கருவி அவர்களை நோக்கி இருந்தது. கேள்விகள் ஆரம்பமாகின.
"உன் வீட்டில் நாட்காட்டி ஒன்று பார்த்தோம். எதற்காக அதை வைத்திருக்கின்றாய்?"
அவர்கள் கேள்வியின் அர்த்தம் மாதவனுக்குப் புரிந்தது. அந்த நாட்காட்டியில் விடுதலைப் புலிகள் தலைவரின் படம் இருந்தது.
"நாட்காட்டி நாள் பார்ப்பதற்குத்தான் வைத்திருக்கின்றோம்." என்றான் மாதவன்.
கேள்வி கேட்டவனுக்கு அது எரிச்சல் ஊட்டியிருக்க வேண்டும். அவன் மற்றவனைப் பார்த்தான்.
"நீ மெல்பேர்ன் விமானத் தளத்திற்கு வந்த குறுந்தட்டுகளை எடுத்துவந்தாயா? அந்தக் குறுந்தட்டுகள் விடுதலைப் புலிகளுக்குச் சார்பானவை."
"ஆம், சட்டப்படி சுங்க இலாகாவின் ஊடாகவே அவற்றைப் பெற்றேன். அவை தடை செய்யப்பட்டவையானால் சுங்க இலாகா அப்பொழுதே அறிவுறுத்தி, அவற்றை நான் எடுத்துச்செல்லாமல் தடுத்திருக்க முடியுமே? இதை நான் முன்பும் உங்கள் அலுவல் கத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொல்லியிருக்கின்றேன்.” மாதவன் பதிலளித்தான்.
"மாவீரர் நாள் விழா ஏன் வைக்கின்றீர்கள் ?” "அவர்கள் எங்கள் சகோதரர்கள். எங்கள் மக்களைக் காப்பதற் காகத் தங்கள் இன்னுயிரைக் கொடுத்தவர்கள். ஆஸ்திரேலிய,
120 தொப்புள்கொடி

நியூசிலாந்து மக்களின் சார்பாகப் போராடி உயிர்நீத்த போர் வீரர்களுக்கு அன்சக் தினம் என்று ஆண்டுதோறும் கொண்டாடு கின்றோம் அல்லவா? அது போல்தான் இதுவும். இவர்கள் தமிழ் மக்களுக்காகப் போராடியவர்கள்.” மாதவன் பதிலளித்தான்.
"கரும்புலிகள் தினம் எதற்காக ?”
"சிறீலங்கா அரசு தனது முழு ஆயுத பலத்தையும் எங்கள் மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கும்போது, மக்களைக் காப்பாற்றச் சிலர் தங்கள் உயிரைத் தத்தம் செய்ய முன் வருகின்றார்கள். ஓர் அரசிடம் இருக்கும் ஆயுத பலம், தற்காப்புக்காகப் போராடும் தமிழ் மக்களிடம் இல்லை. எங்களுக்காக உயிர் கொடுக்கும் கரும்புலிகளை நாங்கள் எங்கள் காவல் தெய்வங்களாக எண்ணிப் போற்றுகின்றோம்." என்றான் மாதவன்.
"சிறீலங்காக இராணுவத் தளபதி சரத் பொன்சேகாமீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் குறித்த உன் எண்ணம் என்ன ?”
மாதவன் பதிலளிக்கவில்லை. அவன் வெறித்து வெளியே நோக்கினான். அவனது முகத்தில் பல மாறுதல்கள்.
"தமிழர் புனர்வாழ்வுக்கு, வைத்திய சேவைகளுக்கு எனத் திரட்டபப்டும் பணத்தை எப்படி அனுப்புகின்றீர்கள்?"
"அவற்றைச் சேர்க்கும் அமைப்புகள் அவற்றை உரியமுறையில் அப்பணிகளைச் செய்யும் அமைப்புகளுக்கு அனுப்பிவைப்பார்கள்" அவனது பதில் அவர்களுக்குத் திருப்தி தரவில்லை என்பது புரிந்தது.
“வேறு யார் உங்கள் அமைப்புகளில் இருக்கின்றார்கள்?"
"விரல்விட்டு எண்ணக்கூடியவர்களைத் தவிர இங்குள்ள பெரும்பான்மையான தமிழ் மக்கள் விடுதலைப் போரை ஆதரிக்கின்றார்கள்."என்றான் மாதவன்.
“உங்களைக் கைது செய்ததால் இங்குள்ள தமிழ் மக்கள் பெரும் எதிர்ப்புத் தெரிவிப்பார்களா ?”
"எங்கள் மக்கள் சட்டத்தை மதிப்பவர்கள். அவர்கள் போராட்டம் இங்கு அமைதிவழியிலேயே அமையும். அவர்கள் போராடுவது சிறீலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்தி, தமிழர்கள் விடுதலை பெற்று, தன் மானத்தோடு வாழ்வதற்கே. அவர்களுக்கு வேறு எதிரிகள் இல்லை.” பதிலளித்தான் மாதவன்.
கேள்விகள் தொடர்ந்தன. மாலை மூன்று மணியளவில் மாதவன் சிறைச்சாலைக்குக் கூட்டிச்செல்லப்பட்டான். சிறிது நேரத்தில் அவர்களது சட்டத் தரணிகள் அவனைச் சந்தித்துப்
தொப்புள்கொடி 121

Page 64
பேசினர். ஒரு கண்ணாடித் தடுப்புக்கு மறு பக்கத்தில் இருந்தே அவர்களைப் பேச அனுமதித்தனர். மாதவனைப் பிணையில் எடுப்பதற்கு ஆவன செய்வதாக சட்டத் தரணிக் கூறினார்.
மாதவன் கேள்விகளால் குடையப்படும் நேரத்தில் ஆரபி வீட்டில் தவித்துக்கொண்டிருந்தாள். மாதவன் நீதிமன்றத்தில் சமூகமளிப்பான் என்ற செய்தி சட்டத் தரணிகள் மூலம் கிடைத்தது. ஆரபி, நிலா, இளங்கோவன், அஞ்சலி நால்வரும் நீதிமன்றத்திற்குப் புறப்பட்டார்கள். இளங்கோவன் வாகனத்தை ஒட்டினார். நேரம் மதியம் 12 மணி, நகருக்குச் செல்லும் 'ஈஸ்டேர்ன் ப்ரி வே" திடீரென நீண்டுவிட்டது போலிருந்தது ஆரபிக்கு. வாகனம் "கிங்ஸ் வே" வழியாக நகருக்குள் புகுந்து 'லொன்ஸ்டெல்’ தெருவில் ஒரு பல மாடிக்கட்டித்தின் முன் நின்றது. பத்துப் படிக்கட்டுகள் ஏறிக் கட்டிடத்தின் வாசலுக்கு வந்தபோது ஆரபிக்கு இமயமலை ஏறியது போன்ற களைப்பு. மூன்றாவது மாடியில், பத்தாவது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்று அறிந்தே வந்தார்கள். அதே கட்டிடத்தில் கடைசித் தரையில்தான் மாதவன் சிறைவைக்கப்பட்டிருந்தான்.
விநாடிக் கம்பி மணித்தியால வேகத்தில் ஓடுவது போலிருந்தது. மணிக் கம்பியோ அசைவதாகத் தெரியவில்லை. அவர்கள் வழக்கு இன்னும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
நேரம் மூன்று மணி. ஆரபி களைத்துப்போனாள். குழந்தை களைப்பில் தூங்கியது.
மாதவன் இன்னும் காவல் துறையினரால் விசாரிக்கப்படு கின்றான் என்று அறிந்துகொண்டார்கள். இளங்கோவனும் அவருக்கு உதவியாக இருந்த பெரியவர் ஒருவரும் ஆரபியை வீட்டிற்குச் செல்லுமாறு வற்புறுத்தினார்கள். அவள் மறுத்து விட்டாள்.
இறுதியாக மாலை நான்கு மணிக்கு மஜிஸ்ரேட் நீதிமன்றம் பரபரப்பானது. பார்வையாளர்கள் பகுதியில் இளங்கோவன், ஆரபி, நிலா, அஞ்சலி, மீரா ஆகியோருடன் அவர்களுக்கு நெருங்கிய இன்னும் சில நண்பர்கள் இருந்தார்கள். மாதவனைக் கைதுசெய்த காவல் துறையைச் சேர்ந்தவர்கள் சிலர் முன் வரிசையில் இருந்தார்கள். நீதி மன்றத்தின் மத்தியில் ஒரு பெரிய மேசை. ஒரு புறத்தில் அரசாங்கத் தரப்புச் சட்டத் தரணிகளும், மறுபுறத்தில் தமிழர் சார்பில் வந்த சட்டத் தரணிகளும் இருந்தார் கள். மேசையில் பல ஆவணங்கள் நிறைந்த கோப்புகள் பரவி யிருந்தன. இரண்டு பக்கங்களிலும் இரு கூண்டுகள், ஒன்று சாட்சிகளுக்கு. மற்றையது குற்றம் சுமத்தப்பட்டவருக்கு. சிறிது உயரத்தில் நீதிபதியின் ஆசனம். உயர்ந்த உத்தரம். அந்த மன்றமே ஒரு சிறைச்சாலை போன்ற உணர்வைக் கொடுத்தது.
1 22 தொப்புள்கொடி

மாதவன் நீதிமன்றத்தினுள் அழைத்து வரப்பட்டான். மாதவனைப் பார்க்க முடியாது ஆரபியின் கண்களில் கண்ணிர் திரையிட்டது. அதனை மறைத்துக்கொள்ள முயன்று அவள் தோல்வி கண்டாள். தன் சோகத்தைக் காட்டாது, அவனுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும் என்றே அவள் முயன்றாள். அதே நிலையில்தான். மாதவனும் இருந்தான். அன்றைய விசாரணையின் பின், தான் வீடு சென்றுவிடலாம் என்றே நம்பினான்.
நீதிபதி வருவதை ஒருவன் அறிவித்தான். எல்லோரும் எழுந்து நின்றார்கள். நீதிபதி அமர்ந்ததுடன் எல்லோரும் அமர்ந்தார்கள். அவன்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள்ை ஒருவர் ஒப்பித்தார்.
மூன்று குற்றங்கள் அவன்மீது சுமத்தப்பட்டன.
பயங்கரவாத அமைப்பு ஒன்றின் உறுப்பினராக இருத்தல். தெரிந்தும் ஒரு பயங்கரவாத அமைப்பிற்குப் பொருள் உதவி செய்தல். தெரிந்தும் ஒரு பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி செய்தல் சுமத்தப்பட்ட குற்றங்களைக் குறித்து முழுவிபரமும் தங்களுக்குத் தரப்படவில்லை என்று தமிழருக்காக வாதாடிய சட்டத் தரணிகள் கூறினார்கள்.
அந்த விபரங்களைக் கொடுப்பதற்குத் தமக்கு அவகாசம் தேவை என்று எதிர்த்தரப்பினர் கூறினார்கள்.
மாதவனைப் பிணையில் விடுதலைசெய்ய வேண்டுமெனத் தமிழர் தரப்பினர் வாதாடினர். போதிய விபரங்கள் இன்னும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால், அவற்றைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வியாழக் கிழமைக்கு ஒத்திவைத்தார். அதுவரை மாதவனைத் தடுப்புக் காவலில் வைத்திருக்குமாறு பணித்தார்.
ஒருவரை ஒருவர் பார்த்தும் பேச முடியாத நிலை வேதனையாக இருந்தது. நிலா மாதவனைப் பார்த்து 'அப்பா' என்று நீதிமன்றத்தில் அழைத்தபோது இதயம் வலித்தது.
ஆரபி அவள் வாயைப் பொத்தினாள். ஏமாற்றத்துடன் ஆரபி, இளங்கோவன் வாகனத்தில் வீடு நோக்கிச் சென்றார்கள். 'மெளனம்", விரும்பாத பயணியாக அவர்களோடு பயணித்தது. ‘அப்பா' என்ற வார்த்தை காதுகளில் ஒலிக்க, ஏக்கம் நிறைந்த ஆரபியின் கண்களை மறக்க முடியாது மாதவன் தடுப்புச் சிறைக்குக் கூட்டிச்செல்லப்பட்டான்
சூன்யமான மெளனம் காரில் இருந்தாலும், இதயத்தின் பேரிரைச்சலைக் காதைப் பொத்தியும் தடுக்க முடியாது ஆரபியும் இளங்கோவனும் தவித்தார்கள்.
தொப்புள்கொடி 23

Page 65
"சுமத்தப்பட்ட குற்றங்கள் யாவும் நிரூபிக்கப்பட்டால் நாற்பது வருடங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கச் சட்டம் இடங் கொடுக்கின்றது.”
தங்கள் சட்டத் தரணி மெதுவாகச் சொன்ன வார்த்தைகள் பேரிடிகளாக அவர்கள் இதயச்சுவரில் மோதின.
24 தொப்புள்கொடி

15
தடுப்புச் சிறை. ஒரு சிறிய கூண்டு. சிமெந்தினால் கட்டப்பட்ட ஒரு வாங்கு, அவனது படுக்கை. ஒரு 'எயர் கெண்டிசன்’ வேலை செய்துகொண்டிருந்தது. திறந்த கழிவறையை ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. இரும்புக் கதவு. அதில் ஒரு சிறிய துவாரம். அதனூடாக உணவு வரும். காத்திருந்தது போல் ஈக்களும் அதை அவனோடு பகிர்ந்துகொள்ளக் கோப்பையில் வந்து உடகார்ந்துவிடும். அணையாது ஒரு விளக்கு எரிந்துகொண்டே இருந்தது. அதை அணைக்கும் விசை அந்த அறையில் இல்லை. மேலே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. பார்க்க மனம் இருக்கவில்லை. இரவை விழித்தெழச் செய்யும் அங்கே இருந்தவர்களின் ஒசை, அவனையும் தூங்கவிடவில்லை. அவர்களில் பலர் போதை மருந்தால் பீடிக்கப்பட்டுப் புலம்பிக் கொண்டிருந் தார்கள். இரவு முடிந்ததா, பகல் விடிந்ததா என்று தெரியாது ஒரு சூன்யமான மனதோடு மாதவன் இருந்தான்.
துவாய், பற்பசை, பல்துலக்கும் தூரிகை, சிறிய சவர்க்காரம் அவனுக்குக் கொடுத்திருந்தார்கள். ஓர் அகன்ற பிளாஸ்டிக் பாத்திரமும், குடிப்பதற்கு ஒரு கிண்ணமும் அறையில் இருந்தன. காலை 7.30 மணிக்குக் குளிக்க வேண்டும். குளிப்பதற்கு இரண்டு நிமிடங்கள் கொடுக்கப்படும். பலர் அங்கே குளிக்கக் காத்திருந்தார் கள். காலையில் 8 மணிக்கு 'கோர்ன் ப்பிளேக்ஸ்' கொடுப்பார்கள்.
சுற்றி அடைக்கப்பட்ட ஒரு பகுதியில் பல மனிதர்கள் இருந்தார்கள். பெரும்பான்மையானோர் போதை மருந்து சம்பந்த மாகக் கைதுசெய்யப்பட்டவர்கள் என்று தெரிந்து கொண்டான். அவன் பயங்கரவாதக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்தது ஒருவித சலசலப்பை அங்கு ஏற்படுத்தியது.
இலங்கைப் பிரச்சனை பற்றித் தெரிந்த இன்னொரு கைதி விளக்கமளித்து அவர்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தான். செப்டெம்பர் 11க்கும் இவர்களுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்றும் ஈழத் தமிழர் பிரச்சனை ஒரு விடுதலைப் போராட்டம் என்றும் அவன் விளக்கினான்.
O
தொப்புள்கொடி 125

Page 66
மாதவனை அன்று நீதிபதி வீட்டிற்குச் செல்ல அனுமதிக் காதது ஆரபிக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அவளுக்கு ஏதும் புரியவில்லை. ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றது என்று தெரியாமல் தவித்தாள். நீதிமன்றத்தில் இருந்து அவன் இல்லாத வீட்டிற்குச் செல்ல அவளுக்கு மனமில்லை. வேறு எங்குதான் அவள் செல்ல முடியும்? இளங்கோவன் வாகனத்தை அவர்கள் வீடு நோக்கி ஒட்டிக் கொண்டிருந்தார். ஆரபி தன் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். தந்தையாக இருந்தாலும் அவர்முன் அவளால் அழ முடியவில்லை. அந்த மெளனமான பயணம், கால் சுடுவதைக் காட்டிக்கொள்ளாது, நெருப்பில் நடப்பது போலிருந்தது.
அவர்கள் வீட்டைச் சுற்றிப் பல வாகனங்கள் நிறுத்தப்பட் டிருந்தன. வீடு நிறைய பல தமிழ் நண்பர்கள். ஆரபி பழகாத முகங்கள் பல. மாதவனை அன்று விடுவிக்கவில்லை என்ற செய்தி அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அவள் கதவைத் திறந்து வீட்டினுள் நுழைந்தபோது, மரண வீட்டின் மயான அமைதி அங்கிருந்தது. திடீரென அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அவள் தாய் திலகாவின் கந்தசஷ்டிக் கவசம் கணிரென ஒலித்தது. திலகா சாமி அறையில் மூடிய கண்களில் கண்ணிர் வடிய, இந்த உலகை மறந்து, இறைவனோடு ஒன்றியவளாகப் பாடிக் கொண்டிருந்தாள். ஆரபியின் கையிலிருந்த நிலாவை யாரோ வாங்கிக்கொண்டார்கள். ஆரபி தங்கள் படுக்கை அறைக்குள் சென்று கதவைச் சாத்தினாள். அவளுக்குத் தனிமை தேவைப் பட்டது. கத்தி அழத் தோன்றியது. ஆனால் அழ முடியவில்லை. தொண்டைக்குள் அழுகை அவளை மூச்சுத் திணற வைத்தது. கட்டிலில் விழுந்து கண்களை மூடினாள். மூடிய கண்களால் இருட்டை விழுங்கினாள். எவ்வளவு நேரம் அப்படி இருந்தாள் என்று அவளுக்கும் தெரியாது. நிலாவின் அழுகுரல் அவளை அறைக்கு வெளியே அழைத்தது. அவள் தன் தாயோடு ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவள் ஒருத்தியோடுதான் தான் விரும்பியவாறு பேசாது இருக்க முடிந்தது. வேறு வழியின்றி வந்திருந்தவர்களோடு ஏதோ பேசினாள். அவர்கள் தங்கள்மீது உள்ள அன்பினால் அங்கு வந்திருப்பது அவளுக்குப் புரிந்தது. ஒரே கேள்விகள். அதே பதில்கள். அவள் களைத்துப்போனாள். வருபவர்கள் எல்லோரும் சும்மா வரவில்லை. உணவு கொண்டு வந்திருந்தார்கள். குளிர்சாதனப் பெட்டி நிறைந்து, மேசையிலும் உணவு நிறைந்து இருந்தது. சிலர் பண உதவி செய்ய முன்வந்தார்கள். அவர்களது அன்பால் இளங்கோவன் நெகிழ்ந்துபோனார்.
“இது உங்கள் பிரச்சனையில்லை. எங்கள் பிரச்சனை. ஆஸ்திரேலியத் தமிழரின் பிரச்சனை மாத்திரமல்ல. இது ஈழ மக்களின் பிரச்சனை."
126 தொப்புள்கொடி

ஒவ்வொருவரும் அது தங்கள் பிரச்சனையாகக் கருதிக் கவலைப்பட்டார்கள். கோபங்கொண்டார்கள். தங்களால் ஆன உதவிசெய்ய முன்வந்தார்கள். இளங்கோவனிடம் பலர் வழக்குச் செலவுக்கென நிதி வழங்கினார்கள். ஆஸ்திரேலியா எங்கும் தமிழ் வானொலிகள் கைதினைக் கண்டித்துத் தங்கள் ஆதரவை மாதவன் குடும்பத்தினருக்குத் தெரிவித்தன.
ஆரபியின் வீட்டிற்கு வந்தவர்கள் பிரிய மனமின்றி விடைபெற்றார்கள். அஞ்சலியும், மீராவும் அன்று ஆரபியோடு தங்கினர்.
ஆரபியின் தூங்காத அந்த இரவு, விடிய மறுத்தது. மாதவனைப் பார்க்க வேண்டும், அவனோடு ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் என்ற ஏக்கம் தூக்கத்தைக் கொன்றொழித்தது.
காலையில் அவளுக்கு ஒரு ஆறுதல் செய்தி காத்திருந்தது. சிறை அதிகாரிகள் அவள் மாதவனைச் சந்திக்க அனுமதி அளித்திருந்தார்கள். அவனுக்குத் தேவையான சில ஆடைகளைக் கொண்டு சென்று கொடுப்பதற்கு ஒப்புதல் கிடைத்தது.
O
மாதவனுக்கு ஒரு இரவே இந்தத் தடுப்புக் காவல் வாழ்க்கை அன்று மதியம் மாதவனை மெல்பேர்ன் மதிப்பீட்டுச் சிறைக்குக் கொண்டுசென்றனர். இங்குதான் அவன் தனக்கோ மற்றவர் களுக்கோ ஆபத்து விளைவிக்கக் கூடியவனா என்று அனுமானிப் பார்கள். ஆனால் கொண்டுசெல்லும் முன்னர் அவன் மிக ஆபத்தானவன் என்பது போலவே கணிப்பார்கள்.
தடுப்புக் காவலுக்கு அவன் கொண்டுவரப்பட்ட போது அவர்கள் எடுத்துக்கொண்ட அவனது மோதிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுத் திருப்பிக் கொடுத்தார்கள்.
காலில் விலங்கு மாட்டப்பட்டது. கை விலங்கு இடையில் இருந்த பெல்ட்டோடு பிணைக்கப்பட்டிருந்தது. அசைவதும், நடப்பதும் அசாதாரணமான வேலை. காலணியைக் கட்டும் நூல் அகற்றப்பட்டது. அவன் ஏறிய வாகனம் இரும்புக் கூண்டு போல் இருந்தது. வெளியில் எதையும் பார்க்க முடியாது. வண்டி ஒட்டுநரைக்கூட அவனால் பார்க்க முடியாது. ஆனால் ஒசைகள் கேட்டன. கட்டடத்தின் உள்ளே உருள் கதவுகள், ஒரு கதவைக் கடந்ததும் பின் கதவு தானாகவே மூடிக்கொள்ளும். முன்னால் உள்ள கதவு திறக்கும். பயணம் சில நிமிடங்களே.
317 ஸ்பென்சர் வீதியில் அமைந்திருந்த பல மாடிகள் கொண்ட மெல்பேர்ன் மதிப்பீட்டுச் சிறைக்கு மாதவன் கொண்டுவரப்பட்டான். அங்கே அவன் பதிவு செய்யப்பட்டான்.
தொப்புள்கொடி 127

Page 67
வீடியோ படக் கருவி அவர்களைப் பார்த்தவாறு இருந்தது. பிரகாசமான விளக்கிற்கு முன்னிலையில் கையை உயர்த்துமாறு பணிக்கப்பட்டான். பின்னர் ஒரு முழுவட்டமாகத் திரும்பி நிற்குமாறு கேட்கப்பட்டான்.
பெயர், எடை போன்ற விபரங்கள் முதலில் கேட்கப்பட்டன.
புகைப்பது உண்டா?
குடிப்பது உண்டா ?
போதைப் பொருட்கள் எடுப்பது உண்டா?
மருந்துகள் எடுப்பது உண்டா?
மன நோய் ஏதாவது இருக்கின்றதா ? இந்தக் கேள்விக்கு "இதுவரை இல்லை” என்று மாதவன் சுற்றுமுற்றும் பார்த்தவாறு பதிலளித்தான்.
எப்பொழுதாவது உன்னை நீயே துன்புறுத்திக் கொண்டது உண்டா?
இப்படிப் பல கேள்விகள் கேட்டுப் படிவங்கள் நிரப்பப் பட்டன.
மாதவன் தன் கைக்கடிகாரம், மோதிரம் ஆகியவற்றை மீண்டும் கையளித்தான்.
முதலில் அவனுக்குக் கொடுக்கப்பட்டது ஓர் இலக்கம். எத்தனையோ ஆயிரம் இலக்கங்களில் இன்று அவனும் ஒன்று. அந்த இலக்கத்தில் எந்தவித அர்த்தமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.
அர்த்தமுள்ள இலக்கங்களை ஏனிந்த உலகம் அறியவில்லை என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது. பல்லாயிரம் மக்கள் ஈழப் போரில் தங்கள் உயிரை இழந்து விட்டார்கள். 20,000க்கு மேற்பட்ட மாவீரர்கள் வீரகாவியமானார்கள். 356 கரும்புலிகள் தங்கள் உயிரை, மற்றவர்கள் வாழ்வதற்காக ஈகம் செய்து விட்டார்கள்.
நீல நிறத்தில் புதிய உடையும் காலணிகளும் கொடுத்தார்கள். அவனுக்குக் கொடுக்கப்பட்ட சிறைக் கூடம் முன்னதைவிட வசதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. அறைக்குள்ளேயே குளிக்கும் வசதி இருந்தது. மூன்று மீற்றர் நீளமும் இரண்டு மீற்றர் அகலமும் கொண்ட அந்த அறையில், ஒரு நாற்காலி, கேத்தல், தொலைக் காட்சிப் பெட்டி என்பன இருந்தன. அவனுக்கு தேயிலைச் சரைகள், கோப்பித்தூள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கிண்ணம், குவளை, கரண்டி, முட்கரண்டி ஆகியவையும் கொடுக்கப்பட்டன.
128 தொப்புள்கொடி

கூரையில் ஒரு யன்னலின் ஊடாக வெளிச்சம் வந்தது. இரும்பா லான கதவுகள். அந்த மாடியில் பதினான்கு அறைகள் இருந்தன. தங்களுக்குள் பேசுபவர்களும், யாரையோ ஏசுபவர்களும் சிரிப்பும் அழுகையுமாக வந்த ஓசைகள் அவனைப் பயமுறுத்தின. அது ஒரு மன நோயாளர்களின் விடுதியாகவே எண்ணினான்.
நாளில் 23 மணிநேரம் அவன் தன் கூண்டைவிட்டு வெளியே வர அனுமதிக்கப்படவில்லை. ஒரு மணி நேரம் சிறிய தாழ்வாரத் தில் நடக்க அனுமதித்தார்கள். கதவிலிருந்த ஒரு துவாரத்தின் ஊடாக அவனுக்கு உணவு கொடுக்கப்பட்டது. காலை உணவிற்கு கோர்ன் ப்பிளேக்ஸ், 600 மில்லி லிட்டர் பால், தேயிலை, கோப்பி, சீனி ஆகியவை கிடைத்தன. பத்து நிமிடங்கள் தொலைபேசி உபயோகிக்க அனுமதி இருந்தது.
ஐரிஸ் பெண் அதிகாரி ஒருத்தி அவனோடு பேசி, அவனால் யாருக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என உறுதிசெய்தாள்.
மாதவனின் எண்ணம் அச்சிறையில் இருப்பது அல்ல. எப்படியாவது இன்னொரு இரவைக் கழித்துவிடலாம். வியாழக்கிழமை பிணையில் அவனை விடுதலைசெய்யும் விசாரணை நடைபெறும். அதையே அவன் ஆவலோடு எதிர்பார்த் திருந்தான். அப்பா' என்று அழைத்துச்சென்ற நிலாவும், ஏக்கத்தோடு போன ஆரபியும் மீண்டும் மீண்டும் அவன் நினைவலைகளில் மோதினார்கள்.
வெறுமை.
தனிமை.
இயலாமை.
அவன் சோர்ந்துபோனான். அப்பொழுது சிறை அதிகாரி ஒருவன் கதவைத் திறந்து, இன்று அவன் தன் மனைவியைச் சில மணி நேரங்கள் சந்திக்கலாம் என்று சொன்னபோது, தாகத்தால் நா வறண்டு தவித்தவனுக்கு ஒரு துளி தண்ணிர் கிடைத்தது போலிருந்தது.
ஆரபி, இளங்கோவன், நிலா வீட்டிலிருந்து மாதவனைப் பார்க்கப் புறப்பட்டார்கள். எப்படி இரவைத் தனியாகச் சிறையில் அவன் கழித்திருப்பான்? அவன் உள்ளம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? இதைப் பற்றியே வழி நெடுக அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் சிறைச் சாலையுள் சென்ற போதுதான் அந்தச் சூழல் எவ்வளவு பயங்கரமானது என்பதைப் புரிந்துகொண்டார்கள், சிறை அதிகாரிகள் நீல நிறச் சீருடை அணிந்திருந்தார்கள். செப்புத் தகட்டில் பிரகாசிக்கும் சின்னங்கள் அவர்கள் தோள் பட்டையில் மின்னின. முதலில், வந்தவர்களின் அடையாளங்களை அதிகாரிகள் உறுதிசெய்தார்கள். மாதவனுக்குக்
தொப்புள்கொடி W 129

Page 68
கொண்டுவந்த உடைகளைத் தவிர வேறு எதையும் உள்ளே கொண்டுசெல்ல அனுமதிக்கவில்லை. ஒளிவருடி மூலம் அவர்களது உடல் பரிசோதனை செய்யப்பட்டது. கண்கள் பாதுகாப்புப் படக்கருவிகளால் படம்பிடிக்கப்பட்டன. கைரேகைகள் போல் கண்களில் உள்ள இரத்த நாளங்களும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்துவமானவை. ஒரு பெரிய கதவைக் கட்ந்துசெல்லும் போது, அவர்கள் பின்னால் உள்ள கதவு மூடிக்கொள்ளும். இரண்டு மூடிய கதவுகளுக்கு நடுவே அவர்கள் நிற்பார்கள். பச்சை விளக்கு வந்ததும் முன்னே நிற்கும் கதவு திறக்கும். எங்கும் நீலச் சீருடை யுடன் அதிகாரிகள். தாங்களும் சிறைப்பட்டது போன்ற உணர்வு இளங்கோவனுக்கும் ஆரபிக்கும் ஏற்பட்டது.
கைதிகளைச் சந்திக்கும் சிறிய அறைக்குள் அவர்கள் சென்றார்கள். கதவு அவர்கள் பின்னால் மூடப்பட்டது. இன்னொரு கதவு அவர்கள் எதிரே இருந்தது. அவர்கள் ஆவலோடு அந்தக் கதவைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதனூடாகத் தான் மாதவன் வருவான் என்பது அவர்கள் ஊகம். அவர்களைத் தவிர அந்த அறையில் வேறு எவரும் இல்லை. ஒரு சிறிய மேசை. வெள்ளை நாற்காலிகள் நான்கு வெளியே இருக்கும் தோட்டத்தைப் பார்க்கக் கூடிய வகையில் கண்ணாடி யன்னல். மேலே ஒளிப்படப் பதிவுக் கருவி. அவர்கள் ஆவலோடு மாதவன் வருகைக்குக் காத்திருந்தார்கள்.
சோதனைகள் மாதவனுக்கு அதைவிடக் கடுமையானவை.
கதவு திறந்தது. ஒளியிழந்த கண்கள். நீண்ட பச்சை உடை. அவன் யாரோ ஒரு அந்நியன் போலவே ஆரபிக்கு முதலில் தோன்றினான்.
மாதவனைக் கண்டதும் நிலா, அப்பா' என்று அவன் தோளில் தாவினாள்.
மாதவன் அவளை அணைத்துக் கன்னமிரண்டும் முத்த மழை பொழிந்தான். கண்களில் மீண்டும் புதிய ஒளி.
வார்த்தைகள் யாவும் ஆரபிக்கு மறந்துபோயின. அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்தனர். பார்வைகளின் பரிவர்த்தனையில் பல சேதிகள். இளங்கோவன் கண்ணாடி யன்னலின் ஊடாகத் தோட்டத்தைப் பார்த்தார்.
அவன் நாற்காலியில் அமர்ந்தான். நிலா மேசையில் இருந்து அவன் கைவிரல்களோடு விளையாடினாள். அவன் கை விரல் களைத் தொட்டுத் தாயிடம் ஏதோ சொல்ல முயன்றாள்.
ஆரபியின் திருமண மோதிரம் மாதவன் விரலில் இல்லை.
30 தொப்புள்கொடி

அவள்தான் முதலில் பேசினாள்.
"எப்பிடி இருக்கிறியள் ?”
"இருக்கிறன்” அவன் பதில்,
சட்டென்று வந்த அந்த வார்த்தையில் வெந்த இதயத்தின் வேதனை தெரிந்தது. அவனால் எவ்வளவு முயன்றும் அதை மறைக்க முடியவில்லை.
"நான் எப்படியோ இருக்கிறேன். நான் எப்படி இருக்கின்றேன் என்பதை நீ அறிந்தால், நீ எப்படி இருப்பாய்? என்னால் சொல்ல முடியவில்லை என்பதைக்கூட, உனக்கு என்னால் சொல்ல முடியவில்லை." அவன் நினைத்தான்.
"நான் செத்துக்கொண்டிருக்கின்றேன். எப்படியாவது என்னிடம் வந்து விடு” என்று அவள் சொல்ல விரும்பினாள். ஆனால் சொன்னது,
"நாங்கள் சுகமாக இருக்கிறம். ஆக்கள் எல்லாம் எங்களுக்கு நல்ல உதவி. நீங்கள்தான் உங்களைப் பார்த்துக் கொள்ள வேணும். அப்பா, லோயர்மாரோட எல்லாம் கதைச்சுச் செய்யிறார். அவேயும் நம்பிக்கையாக இருக்கீனம். நாளை வியாழக்கிழமை கோர்ட்டில பிணையில விட்டிடுவீனம்."
"கவலைப்படாமல் நீங்களும் இருங்கோ. எல்லாம் சரி வரும்” அவனும் நம்பிக்கையோடு சொன்னான்.
“பிணை எடுக்கிறதுக்கு சிநேகிதர், சொந்தக்காரர் எல்லாம் முன்னுக்கு வந்திருக்கீனம். எங்கடை சனம் நல்ல ஆதரவு." என்றார் இளங்கோவன்.
அவர்கள் பேச்சு அவனது வேலைத்தளம் சம்பந்தமாகவும் வீட்டுச் செலவுகள் பற்றியதாகவுமே அதிகம் இருந்தது. தான் இருக்கும் நிலை குறித்துப் பேசுவதைத் தவிர்த்துக்கொண்டான். அவர்கள் பிரியும் நேரம் வந்தது. ஆரபி தன் அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். அவளுக்காகவும் சேர்த்து, நிலா சத்தமிட்டு அழ ஆரம்பித்தாள்.
முடுக்கிவிட்ட பொம்மைகள் போல் அவர்கள் சிறைச்சாலையின் வெளிக் கதவை நோக்கி நடந்தனர். வாசலை அடைந்ததும் தந்தையிடம் நிலாவைக் கொடுத்து, ஆரபி பெண்கள் ஓய்வு அறைக்குள் போனாள்.
தனியாக இருந்து ஆனமட்டும் குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
O
வியாழக்கிழமை வந்தது.
தொப்புள்கொடி 13

Page 69
சிறைச்சாலையில் அதிகாரிகளுடனும் சில கைதிகளுடனும் மாதவனுக்கு நட்புறவு ஏற்பட்டது. அன்று அவனை நீதிமன்றத் திற்குக் கூட்டிச் செல்வார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அங்கிருக்கும் ஒரு விளம்பரப் பலகையில் அன்றைய தினம் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருக்கும். மாதவன் தனது சிறிய உடைமைகளைப் பையில் கட்டிக் கொண்டான். தன்னிடம் மீதியாக இருந்த பொருட்களைச் சக கைதிகளுக்குக் கொடுத்தான். எல்லோரிடமும் பிரியாவிடை பெற்றான்.
காலையிலிருந்து எப்பொழுது தன்னை நீதிமன்றத்திற்குக் கூட்டிச் செல்வார்களெனப் பொறுமையிழந்து காத்து நின்றான். நேரம் வந்தது. அவன் நீதிமன்றத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டான். நீதிமன்றத்தில் இருந்த ஆரபியின் முகம் சிறிது மலர்ந்திருந்தது. வழக்கு ஆரம்பமாயிற்று.
ஐந்து நிமிடங்களே பேசினார்கள். அரசுத் தரப்பு வழக்கறிஞர் கள் தங்களுக்கு இன்னும் சிறிது அவகாசம் தேவை என்று வலியுறுத்தினார்கள்.
வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தொங்கிய தலைகளோடு எல்லோரும் வீடு திரும்பினர்.
எல்லோருமல்ல.
மாதவன் சிறைக்குத் திரும்பினான். இளங்கோவன் குழம்பினார்.
சட்டத்தின் முன்னிலையில் குற்றம் நிரூபணமாகும் வரை ஒருவன் நிரபராதி என்றே கருதப்படுகின்றான்.
அப்படிக் கருதும் சட்டம் எப்படி அவனையும் அவனைச் சார்ந்தோரையும் இப்படித் தண்டிக்கின்றது ? வேறு வழியில்லையோ?
அவருக்குப் புரியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் இந்த மன உளைச்சல்களைத் தாங்கிக்கொள்வது? ஒரு புறம் ஒப்பாரி வைத்து அழும் மனைவி திலகா, வெளியே அழுகின்றாளா அல்லது உள்ளே வேகின்றாளா என்று புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கும் மகள் ஆரபி. தன் விடுதலை அவர் கையிலே என்று நம்பியிருக்கும் மாதவன். மகளைத் தேற்றுவதா? சட்டத் தரணிகளோடு வழக்கைச் சர்ச்சிப்பதா? வழக்குச் செலவிற்கு வழி செய்வதா? ஆர்வமுடன் கேட்கும் அன்பர்களுக்குப் பதில் சொல்வதா? நீரில் மூழ்குபவனைக் காப்பாற்றச் சென்றவன், தானும் சிறிது சிறிதாகத் தண்ணிரில் தாழ்வதைப் போலிருந்தது, அவர் நிலை. தானும் மூழ்கினால் எல்லாமே முடிந்துவிடும்
132 தொப்புள்கொடி

என்று உணர்ந்த இளங்கோவன், மனதைத் திடப்படுத்திக் கொண்டார். உறுதியோடு நின்று இதைப் போராடி வெல்ல வேண்டும் என்று திடசங்கற்பம் செய்துகொண்டார்.
நீதிமன்றத்தில் இருந்து வீடு செல்ல ஆரபிக்கு மனமில்லை. அவர்கள் வீட்டிற்கு வந்தபோது அது வெறிச்சிட்டிருந்தது. பகல். வேலை நேரம். அவள் வீட்டில் இருப்பாள் என்று எவருக்கும் தெரியாது. அங்கு நண்பர்கள், உறவினர்கள் யாரும் வரவில்லை. செய்ய வேண்டிய வேலைகள் ஆயிரம் இருந்ததால், இளங்கோவன் ஒரு தேநீரைக் குடித்துவிட்டுப் புறப்பட்டார்.
நிலா பால் குடித்தபின் நித்திரையானாள். தனிமையில் ஆரபி தன் வாழ்வில் நடக்கும் இந்தப் புயலை எப்படி எதிர் கொள்வெதென எண்ண ஆரம்பித்தாள். இன்னும் மூன்று நாட்கள் பொறுத்தால் மாதவன் பிணையில் வெளியில் வந்துவிடுவான். பின்னர் எப்படியும் வழக்கை வென்றுவிடலாம் என்று எண்ணி னாள். அவன் வெளியே வந்தால் போதும். அவன் தரும் நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்ள முடியும் என நம்பினாள். இனி அழக் கூடாது என்று முடிவுக்கு வந்தாள்.
வாகனம் ஒன்று வெளியே வந்து நின்றது. யாரும் அந்த நேரம் வருவதை அவள் விரும்பவில்லை. ஆனால் வாகனத்தில் இருந்து இறங்கியவரைப் பார்த்ததும் குற்ற உணர்வு அவளைக் குத்தியது. இத்தனை நாட்களாக அவர் நினைவு தனக்கு வரவில்லையே என்று வருந்தினாள். இளங்கோவன் அவரோடு கதைத்தது அவளுக்குத் தெரியாது. சிட்னியில் தன் மகளோடு வாழும் மாதவனின் தாயார் வீட்டை நோக்கி வந்தார்.
பால் வடியும் முகம். அவர் நிறமும் அது போலவே. பழுத்து, வெளுத்த தலைமுடி கண்களின் கீழ் காணும் முதிர்ச்சியின் அடையாளம், பளபளக்கும் கன்னங்களில் இல்லை. உயர்ந்த, மெல்லிய தேகம். அதோடு ஒட்டியிருக்கும் அவரது மெல்லிய சேலை.
கதவைத் திறந்தாள் ஆரபி. "ஆரபி" என்று கதறியவாறு உள்ளே வந்த அவள் மாமியார், தன் தலையில் அடித்துப் பெரிதாக அழ ஆரம்பித்தார்.
"ஐயோ, என்ரை மகன். என்ன பாவம் நான் ஆருக்குச் செய்தேன்? கடவுளே, கடவுளே ஏன் எங்களை இப்பிடிச் சோதிக் கிறாய்? தெய்வமே”
அழுவதில்லை என்று முடிவுசெய்து ஒரு விநாடி கூட ஆகவில்லை. ஆரபியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. மாமியாரைக் கட்டியணைத்துப் பெரிதாக அவளும் அழுதாள்.
தொப்புள்கொடி 133

Page 70
மாமியாரின் அழுகையை அவளால் நிறுத்த முடியவில்லை. தான் வாய்விட்டு அழுவதை நிறுத்தினாள்.
“மாமி, அழாதேங்கோ. திங்கட்கிழமை அவர் வீட்டை வந்திடுவார். இருங்கோ.”
ஆரபி அவரை அணைத்து சோபாவில் அமர வைத்தாள். திடீரென அவளுக்கு ஒரு பலம் வந்தது. இன்னொருவர் துயர் காணும்போது, தன் துயர் மறந்து, சவால்களைச் சமாளிக்கும் மனோபலம் வந்துவிடுகின்றது.
"தகப்பனும் இல்லாமல் பாவம் அவன். இப்பிடியெல்லாம் கஸ்டப்படவே அவனை நான் பெத்தனான் ?” தாய் இன்னும் அழுதாள்.
மாமியாருக்கும் அவர் துணை அருகில் இருந்தால் எவ்வளது ஆதரவாக இருக்கும் என்று ஆரபி எண்ணினாள். தன் மாமனார் பற்றி அறிய அவளுக்கு அந்த நேரம் ஆவல் மிகுந்தது. ஆனாலும் ஒன்றும் கேட்கவில்லை.
அழுது களைத்து ஓய்ந்துபோனார் மாமியார். ஆரபி அவருக்குக் காப்பி போட்டுக்கொடுத்து, நடந்த சம்பவங்களை விளக்கிச் சொன்னாள். தூங்கிக்கொண்டிருந்த தன் பேத்தி நிலாவை அவர் போய்ப் பார்த்தார்.
"அவனைப் போல நீயும் தகப்பன் இல்லாமல் வளர வேண்டாம்" என்று அவர் அழுதழுது சொன்னபோது, ஆரபியின் ஆவல் மீறியது. சோகம் வாயை அடைத்தது. நாவைக் கடித்துக்கொண்டாள்.
சனிக்கிழமை மீண்டும் மாதவனைச் சிறையில் சென்று சந்திக்க இளங்கோவன் ஒழுங்கு செய்திருந்தார்.
அதுவும் ஒரு சோக சந்திப்பே. சிறைச்சாலையின் பாதுகாப்பு கெடுபிடிகளிலேயே தாய் களைத்துப் போனாள். மாதவனின் கையைப் பிடித்தவாறு கண்ணிர் சிந்தினாள். தாயையும் மகனையும் பேசவிட்டு ஆரபி, இளங்கோவன், நிலா சிறிது ஒதுங்கிக்கொண் Lirfrasait.
தாயும் மகனும் பேசவில்லை. கைகளைப் பிணைத்துக் கொண்டார்கள்.
தான் சிறு வயதில் அழும்போதெல்லாம், கண்ணிரைத் துடைத்துவிடும் தாயின் விழிகளில் இன்று கண்ணிர்.
அவன் கண்ணில் வடியாத கண்ணீர், நெஞ்சில் தேங்கியது.
34 தொப்புள்கொடி

பள்ளி செல்லும் சின்னஞ்சிறு வயதில், அவன் கையை இறுகத் தன் கையில் பொத்திப் பிடித்து அழைத்துச் செல்லும் தாயின் பாதுகாப்பு, அவனுக்கு அப்போது தேவைப்பட்டது.
தனக்கு, திங்கள் விடுதலை கிடைக்கும் என்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் மாதவன் தாய்க்கு ஆறுதல் கூறினான். திங்கட் கிழமையை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்தனர்.
அந்தச் சிறைச்சாலையிலிருந்து அவன் 'டியர் பார்க்' எனும் இன்னொரு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டான். இது நகரிலிருந்து
வெகு தூரத்தில் இருந்தது. ஒவ்வொரு முறையும் விலங்கிடப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தி, மூடிய வாகனத்தில் செல்வதே மிகவும்
கடினமாக இருந்தது.
தொப்புள்கொடி 135

Page 71
16
DTதவன் கைதுசெய்யப்பட்டது ஒரு செவ்வாய்க்கிழமை. அந்த வாரம் வெள்ளிக்கிழமை மெல்பேர்ன் சிவா விஷ்ணு கோவிலில் வழமையைவிட மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. நகரத்திற்கு வெளியே பரந்த ஒரு வெளியில் அழகாக வீற்றிருந்தது அந்தக் கோயில். ப்ரான்க்ஸ்டன் வீதி வழியே வந்து, சிறியதொரு குறுக்குத் தெருவில் திரும்பியவுடன், மெல்பேர்ன் என்னும் பெரும் நகரில் இருக்கும் எண்ணம் மறைந்துவிடும். அந்தத் தெருவின் மேடு, பள்ளங்கள் எங்கள் ஊர் ஒழுங்கைகளை நினைவூட்டும். கோயில் வீற்றிருக்கும் பெரிய காணிப் பரப்புக்குள் செல்லும் போது, எங்கள் வயற்பரப்புகள் நினைவில் முட்டும். தென்னையோ பனையோ கண்ணுக்குத் தெரியாதபோதும், நிலவொளியில் எங்கள் நிலத்தில் நடந்த நினைவுகள் மோதும். இரண்டு வாசல்களை அலங்கரிக்கும் மஞ்சள் வண்ணக் கோபுரங் களும் வெள்ளை வேட்டிக்குக் கரை கட்டியது போல் சுவரின் சாம்பல் நிறமும், வெள்ளைப் பூச்சும் கொண்ட சுவர்களும் கண்ணில் படும்போது நாம் எங்கிருக்கின்றோம் என்பதை மறந்துவிடுவோம். கோயிலின் உள்ளே மணியோசை, கற்பூர வாசனை, ஐயரின் மந்திரங்கள், தேங்காய்கள், பூக்கள், வழைப்பழத் தட்டுகள், எல்லாமே ஒரு பக்தியைக் கிளறும் சூழல். வேட்டி கட்டி நெற்றியில் திருநீறிட்ட ஆண்களும், சேலை கட்டி, மலர் சூடி நிற்கும் பெண்களும் என்று அழகிய எங்கள் நாட்டுக் கோயிலுக்குள் செல்லுகின்ற முழு உணர்வையும் கொடுக்கும்.
"ஐயா அர்ச்சனை" ஒரு இளவயதுத் தாயார் பழம், பூ நிறைந்த அர்ச்சனைத் தட்டை நீட்டினார்.
ஐயர் வாங்கிக்கொண்டு மூலஸ்தானத்தை நோக்கித் திரும்பி நடந்தார்.
"ஐயா, நட்சத்திரங் கேட்கல்லியே?” அந்தப் பெண் கேட்டாள்.
“என்னம்மா உங்கள் பிள்ளையின் நட்சத்திரம் எனக்குத் தெரியாதா? ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அர்ச்சனை செய்யிறீங் களே. மறந்திடுமா?" என்றார் ஐயர்.
136 தொப்புள்கொடி

"இன்றைக்கு என்ரை பிள்ளைக்கு இல்லை ஐயா. எங்களுடைய பிள்ளைக்கு. சிறையில வாடுற மாதவனுக்கு. பரணி நட்சத்திரம்." சொன்னவளின் கண் கலங்கியது.
“உங்களுக்கு அவர் சொந்தமா?” ஐயர் கேட்டார். “இல்லை ஐயா. கண்டிருக்கிறன். எங்களுக்காகத்தானே அந்தப் பிள்ளையும் அங்க வாடுது. அதுக்கும் ஒரு சின்னப் பிள்ளையும் பெண்சாதியும் இருக்கு." அவள் சொன்னாள்.
ஐயரின் அர்ச்சனை அன்று வழமையைவிட அதிக நேரம் எடுத்தது.
ஞாயிற்றுக் கிழமை தமிழர் செல்லும் கத்தோலிக்க, கிறிஸ்தவ கோயில்களில் எல்லாம் விசேட பிரார்த்தனைகள் அன்று நடந்தன.
ஞாயிறு இரவு. தூங்காத கண்கள் பல. திங்கள் காலை நான்கு மணிக்கே எழுந்து திலகா தேவார, திருவாசகங்கள் எல்லாம் பாடினாள். நீதிபதி இன்று மாதவனை வீடு செல்ல அனுமதிக்க வேண்டும் என அழுது மன்றாடினாள். இளங்கோவ னும் தன் பங்கிற்கு இறைவனை வணங்கினார். மாதவனின் தாயார் பல நேர்த்திக் கடன்களை இறைவனுக்கு வைத்தார். ஆரபி வீட்டில் சுவாமி அறையில் தீபம் ஏற்றி, விழுந்து வணங் கினாள். திங்கள் மாலையே மாதவனுடன் பேசன்’ பிள்ளையார் கோவிலுக்குப் போவதாகவும் வேண்டிக்கொண்டாள்.
பத்து மணிக்கு நீதிமன்றம். ஆரபி, நிலா, இளங்கோவன் நீதிமன்றத்திற்குச் சென்றார்கள். தாயார் வரவில்லை. வழமைபோல் தங்களுடைய அடையாளத்தை நிரூபித்து, கையெழுத்திட்டு நீதிமன்றத்தில் பார்வையாளர் பகுதியில் கடைசி வரிசையில் அமர்ந்தார்கள்.
மாதவனும் அன்றிரவு தூங்கவில்லை. இரவே தான் சேமித்த சிறுபொருட்களைச் சக கைதிகளுக்குக் கொடுத்தான். தன்மீது அன்புடன் நடந்த காவலாளிகளிடம் விடை பெற்றான். எதிர் காலத்தைப் பற்றிய நம்பிக்கையே வாழ்க்கையின் நிகழ்காலத்தைக் கொண்டு செல்கின்றது என்ற உண்மையைப் படிக்கச் சிறைச்சாலையே உகந்த இடம். ஆயுட்தண்டனை பெற்ற கைதியும் ஒரு நாள் விடுதலை கிடைக்கும் என்றே வாழ்கின்றான். நன்னடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுதலை கிடைக்கும் என்று நம்புகின்றான். குற்றம் சுமத்தப் பட்டவன் தன் வழக்கை வென்று விடுதலை கிடைக்கும் என்றே பெரும்பாலும் எண்ணுகின்றான். மேல் நீதிமன்றத்தில் விண்ணப் பிப்பவன் அதில் தனக்குச் சாதகமாகவே தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையிலேயே வாழ்கின்றான். மாதவன் கை, கால் விலங்கிட்டு, மூடிய வாகனத்தில் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றக்
தொப்புள்கொடி 137

Page 72
கட்டிடத்திற்குக் கொண்டுவரப்பட்டான். பின்னர் விலங்குகள் கழற்றப்பெற்று நீதிமன்றத்தினுள் அழைத்து வரப்பட்டான்.
அவனைப் பிணையில் விடக் கூடாது என்று அரசுத் தரப்பு பல மணி நேரங்களாக வாதாடியது. சிறீலங்காவில் உள்ள ஒரு பயங்கரவாத அமைப்பை மாதவன் ஆதரித்தான் என்றும், அவனைப் பிணையில் விட்டால் அவன் தப்பி ஒடிவிடுவான் என்றும் அவர்கள் வாதாடினார்கள். அவர்கள் வாதாட்டம் முடிந்ததும் மதிய போசனத்திற்கு நீதிமன்றம் இடை நிறுத்தப்பட்டது. யாருமே உண்ணுகின்ற மன நிலையில் இல்லை. மதிய இடைவேளைக்குப் பின் வாதங்கள் தொடர்ந்தன.
விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதை மறுப்பதாகவும், மாதவன் அதில் ஒரு உறுப்பினர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆஸ்திரேலிய மக்களுக்கு அவனால் எவ்வித ஆபத்தும் இருப்பதற்கான ஆதாரங்கள் அரசுத் தரப்பிடம் இல்லை என்பதாலும் அவனைப் பிணையில் விடுவிக்க வேண்டும் என்றும் சட்டத் தரணி வாதாடினார். மேலும் இதுவரை காலமும் எந்தவித சட்ட விரோத நடவடிக்கைகளிலும் அவன் ஈடுபட்டதற்கான அத்தாட்சிகள் இல்லை. அவன் ஒரு இளங்குடும்பத்தின் தலைவன். அவன் இல்லாது அந்தக் குடும்பம் அல்லலுறும். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லை. பயங்கரவாதம் என்பதற்குச் சரியான விளக்கம் கிடையாது. சிறீலங்காவில் வாழும் தமிழ் மக்களுக் காகவும் அங்கு நடக்கும் போரினால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியா வாழ் தமிழ் மக்களின் நலத்தையும் மனதில் கொண்டு செயற்படுவதால் அவனை ஒரு பயங்கரவாதியெனக் குற்றம்சாட்டக் கூடாது என்றும் அவர் தன் கருத்தை எடுத்துக் கூறினார்.
ஆனால், அறம் பிழைத்தது. செப்டெம்பர் 10ஆம் திகதி வழக்கு விசாரணக்கு எடுக்கும் வரை மாதவன் தடுப்புக் காவலில் இருக்க வேண்டுமென மஜிஸ்ரேட் நீதிபதி உத்தரவிட்டார். அவன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மாதவன் தன் காதுகளை நம்ப முடியாது சிலை போல் நின்றான். காவலர் அவனை அழைத்துச் சென்றனர்.
ஆரபியின் வீறிட்டு அழும் குரல் அவன் காதில் விழுந்தது. தன் தந்தையின் முன்னிலையிலேயே அழத் தயங்கும் அவள், முதன்முறையாகத் தன் வாழ்வில் எல்லோர் முன்னிலும் கதறி அழுதாள். பற்றற்ற துறவி போல் வாழப் பழகிய இளங்கோவனும் அவளை அணைத்துக் கண்ணிர் விட்டார். சோகத்தையும் மீறி
138 தொப்புள்கொடி

கோபமே அவருக்கு வந்தது. சட்டங்களை மீறாது நடக்கும் சாந்தமான மனிதருக்கும் தங்களால் ஏதும் செய்ய முடியாத கட்டத்தில்தான் கோபம் வருகின்றது.
அன்று அவர்களால் செய்யக்கூடியது எதுவும் இருக்கவில்லை.
முதலிரவு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தூக்கம் வரவில்லை.
அன்றைய இரவு கண்களைக் கண்ணிர் நனைத்ததால் தூக்கம் வரவில்லை.
இனி வரும் இரவுகள் ஒவ்வொன்றும் தூங்க முடியாத இரவுகளே.
தொப்புள்கொடி 139

Page 73
17
கோயில் மடங்களில் பக்தர்கள் இளைப்பாறுவதற்குக் கட்டப்பட்டிருக்கும் சிமெந்து வாங்கில் போல் ஒன்று. அதுதான் அவனது கட்டில், அதன் மேல் மெத்தை இருந்தது. மெத்தை மேல் ஒரு விரிப்பு. குளிரைத் தாங்கக்கூடிய போர்வை. ஒரளவு சொகுசு தரும் தலையணை. கைகள் இரண்டையும் தலைக்குக் கீழ் வைத்து உத்தரத்தை உற்றுப் பார்த்தான் மாதவன். எத்தனை முறை பார்த்தாலும் காட்சிகள் மாறுவதில்லை. அவன் காலுக்கு நேரே குளிப்பதற்கு "சவர்" வலது புறம் தலையைத் திருப்பினால் மறுபக்கச் சுவரில் உடைகள், உடமைகள் வைப்பதற்கு ஒரு சிறிய இடம். கட்டிலுக்குச் சமாந்தரமாகச் செல்லும் ஒரு சிமெந்து வாங்கில். அதற்குப் பக்கத்தில் முகம் கழுவ நீர்த் தொட்டி. பக்கத்திலே கழிவுக்கூடம். படுத்திருந்தால் நேரே தெரிவது பூட்டப் பட்ட இரும்புக் கதவு. கதவுக்குப் பக்கத்தில் சிறிய துவாரம். அதை மூடித் திறக்கலாம். அதனூடாகத்தான் பெரும்பாலான நேரம் அவனுக்கும் சிறைக் காவலாளிகளுக்கும் உள்ள தொடர்பு. காற்று வருவதற்கு பின்பக்கச் சுவரில் ஒரு கண்ணாடி யன்னல். அதை முற்றாகத் திறக்க முடியாது. காற்றுக் கூட உள்ளே வரக் கஷ்டப்படும் அளவு தூரத்துக்குத் திறக்கலாம். அறை அல்லது சிறை 4 மீற்றர் நீளம், 2 மீற்றர் அகலம் இருக்கும். கண்ணாடி யன்னல் ஊடாகப் பார்த்தால் ஒரு பெரிய உயர்ந்த மதில் அக்கட்டிடத்தைச் சுற்றி இருப்பதைப் பார்க்க முடியும். அந்தப் பெரிய கட்டடம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு நேரத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட கைதிகள் அங்கே தடுத்து வைக்கப்படலாம். மாதவனின் தாய் அடிக்கடிச் சொல்வது போல் "யார் செய்த புண்ணியமோ” அவனுக்குப் பதினைந்து கைதிகள் உள்ள பகுதி கிடைத்தது.
அவன் எதிர்பார்த்ததைப் போல் அந்த அறை ஒன்றும் பயங்கரமாகத் தெரியவில்லை. ஆனால் ஒருவித பயம் மனதில் ஒடுவதைத் தவிர்க்க முடியவில்லை. நீதிபதியின் முடிவு அவனைப் பிணையில் செல்ல அனுமதிக்கவில்லை. வழக்கு மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்து தீர்ப்பு வரும்வரை அவன் இந்த அறைக்குள் தானா? இன்னும் எழுபது நாட்களில் அவனுக்கு எதிராக வழக்காடப் போதிய சாட்சியங்கள் உண்டா என்பதை அறிவதற்கு
140 தொப்புள்கொடி

மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஒரு விசாரணை. பின்னர் அவன் வழக்கை மேல் நீதிமன்றத்தில் விசாரிக்க இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் ஆகலாம் வழக்கு முடிய இன்னும் பல மாதங்கள் எடுக்கும். தீர்ப்பு அவனுக்குச் சாதகமாக வராவிட்டால்.? மாதவன் நிமிர்ந்து உட்கார்ந்தான். அவனுக்கு வியர்த்தது. அப்படி ஒரு நிலையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. எதை அவன் நினைக்க விரும்பவில்லையோ அது மீண்டும் மீண்டும் வரத்தான் செய்தது. கட்டிலால் எழுந்தவன் பல்லைத் தீட்டி நீர்த் தொட்டியில் உமிழ்ந்தான். கடைப் பல்லொன்று வலித்தது. ஒரு 'பனடோல்' எடுத்தால் வலி தெரியாது என எண்ணினான். தான் இந்ப்பது சிறை என்ற உணர்வு மீண்டும் உறுத்தியது. அங்குள்ள வைத்தியர்கள் பார்த்து எழுதிக் கொடுத்தால்தான் 'பனடோலும் எடுக்க முடியும். தனக்கு வலி வந்தால் பொருட்படுத்தாத சிறை நிர்வாகம், அவன் உயிரோடு இருப்பதில் மிகுந்த கவனம் எடுத்திருப்பது, அந்த வேதனையான நேரத்திலும் அவனுக்குச் சிரிப்பை வரவழைத்தது. அவனுக்கு கொலஸ்றல்' அதிகம் என்று குளுசை எடுப்பான். அது சிறை நிர்வாகத்தினரும் அறிவார்கள். அவர்கள் தான் குளுசையை அவனுக்குக் கொடுப்பார்கள். அதை அவன் தன் வாயில் போட்டு விழுங்கிவிட்டானா என்று உறுதிசெய்யாது விலகமாட்டார்கள். ஆரபிகூட இத்தனை கவனம் எடுத்திருக்க மாட்டாள். அறையில் தேநீர் தயாரிப்பதற்கு 'கேத்தில் தந்திருந் தார்கள். அதை மின்சார விசையோடு இணைக்கும் "வயர்” ஆறு அங்குல நீளமே இருக்கும். கைதிகள் வயரினால் கழுத்தைச் சுருக்கித் தற்கொலை செய்வார்கள் என்ற பயம் இருந்தது.
தற்கொலை என்ற எண்ணம் அவனுக்கும் வரத்தான் செய்தது. இது முதன்முதல் சிறைக்குச் செல்லும் எவருக்கும் வரும் என்றே அவன் நினைத்தான். "டியர் பார்க்” எனும் இடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட சிறைச்சாலை அது. "டியர் பார்க்” என்பதைத் தமிழில் மான் தோட்டம் என்று சொல்லாம். "மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னர், உயிர் நீப்பர் மானம் வரின்" என்ற வள்ளுவரின் வாசகமே தற்கொலை எண்ணத்தைத் தூண்டியது. புள்ளி விபரங்களின் பிரகாரம் கைதிகளுக்குத் தற்கொலை உணர்வு ஆரம்ப காலங்களிலேயே அதிகம் காணப் படும் என்று எங்கோ படித்த ஞாபகம் மாதவனுக்கு வந்தது. கொலைகாரர், பெண்களின் கற்பைப் பறித்த காமுகர்கள், போதைப் பொருள் கடத்தற்காரர், கொள்ளைக்காரர் அவர்கள் மத்தியில் ஒருவனாகத் தானும் அங்கு இருப்பது தன்மானத்திற்குச் சவாலாக இருந்தது. போராட்டமே வாழ்க்கையின் நியதி என்பதைச் சிறு வயது முதல் மாதவன் படித்தவன். தனி ஒருவன் தானல்ல என்பதை அவன் அறிவான். தன் பின்னால் ஒரு சமூகம் இருப்பதையும் தமிழ் மக்களின் போராட்டத்தில் தானும் கொடுக்க வேண்டிய விலை ஒன்று உண்டு என்பதையும் அவன் தெளிவாக
தொப்புள்கொடி 14

Page 74
உணர்ந்தான். ஈழத்தில் போராளிகளும் பொது மக்களும் செய்யும் தியாகங்களை எண்ணிக் கொண்டான்.
சிறீலங்கா அரசின் விசமத்தனமான பொய்ப் பிரச்சாரங் களுக்கு எதிராகத் தாங்கள் கட்டி வளர்த்த அமைப்புகளின் அடித்தளங்கள் ஆட்டம் காணுவதே அவனுக்குக் கவலை அளித்தது. பயங்கரவாத முத்திரையைத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தின் மீது பதிக்கப்படுவதற்குத் தானும் காரணமாகி விடக் கூடாது என்று கவலைப்பட்டான். ஆரபி, நிலா, தாய் அவர்களுக்காகவும் தான் வாழ வேண்டிய அவசியத்தை அவன் மறக்கவில்லை.
சிறைக் கட்டிடம் எங்கும் காலை 7.15 மணியோசை பெரிதாகக் கேட்டது. கைதிகள் எல்லோரும் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றார்களா என்பதை 7.30 மணிக்கு சிறைக் காவலாளிகள் வந்து உறுதி செய்வார்கள். இரும்புக் கதவைத் திறவாது துவாரத்தின் ஊடாகப் பார்ப்பார்கள். கட்டிலில் கைதிகள் படுக்காது, காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருக்க வேண்டும். கால்கள் தொங்கிக் கொண்டிருந்தால் தலை இன்னும் தொங்கவில்லை என்று தெரிந்து கொள்வார்கள்.
காலை 8 மணிக்குக் கதவுகள் திறக்கப்படும். எல்லாக் கைதிகளும் கதவுக்கு வெளியே ஒழுங்காக நிற்க வேண்டும். விடுதலைக்குப் போராடுபவனுக்குச் சிறை. அவனது அடிப்படை உரிமைகள் முற்றாகப் பறிக்கப்பட்ட நிலை. பள்ளிக்கூடப் பிள்ளைகள் போல் மணி அடித்ததும் கைகட்டி நிற்க வேண்டிய கதி. அதுவும் ஒரு சித்திரவதைதான். பள்ளிக்கூட இடாப்பு கூப்பிடுவது போல் ஒவ்வொருவருடைய பெயரும் அழைக்கப்படும். பள்ளிக்கூடம் என்றால் யாராவது சக மாணவன் அன்று வகுப்புக்கு வராதவனுக்கும் சேர்த்து “இருக்கிறேன்” என்று கூறித் தப்பி விடலாம். இங்கு தப்ப வழியில்லை.
அவனது அறையில் சாப்பிடுவதற்கு சோளத் திரள்கள் 'கோர்ன் ப்ளேக்ஸ்', ஒரு சிறிய அட்டைத் தாள் பெட்டியில் பாலும் கொடுப்பார்கள். காலை எட்டு மணிக்குப் பின்னர் தாழ்வாரத்தில் அவர்கள் உலாவலாம். அவர்களுக்கு என்று ஒரு சமையல் அறையும் இருந்தது. தாராளமாக பாண், ஜாம், மார்ஜரின் இருக்கும். சுற்றிக்கொண்டே இருக்கும் 'டோஸ்டரில்" பாண் துண்டைப் போட்டு 'டோஸ்ட்' செய்துகொள்ளலாம்.
பதினொரு மணிக்கு மீண்டும் இடாப்பு கூப்பிடப்படும். அவர்கள் சுதந்திர மனிதர்கள் இல்லை என்பதை நினைவூட்ட அது மூன்று மணிக்கும் தொடரும். இடையில் மதிய போசனம். அதுகூட இராஜ மரியாதை தான். நீங்கள் விரும்பிய உணவுக்கு 'ஒடர்’ செய்வதற்கு "மெனு தருவார்கள். அதில் சோறு, கோழி,
142 தொப்புள்கொடி

பேர்கர்', 'சொசேஜ்' என்று சில இருக்கும். அதில் விரும்பியதை நீங்கள் முதலிலேயே கேட்டு வைத்திருக்க வேண்டும். மதிய போசனம் பெரிதாக இருக்காது. அதனாலோ அல்லது மனக் குழப்பத்தாலோ சில கைதிகள் ஒரு இறாத்தல் பாணை முழுவதுமாகச் சாப்பிடுவார்கள். இரவுச் சாப்பாட்டோடு 'ப்ருட் சலட், புடிங்க், சூப்பும்' கிடைக்கலாம். உணவு உங்கள் பெயரிட்ட அட்டை ஒட்டப்பட்ட ப்ளாஸ்டிக் கோப்பையில் ஒரு தள்ளு வண்டியில் கொண்டுவருவார்கள். உங்கள் உணவை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
வாரத்துக்கு ஏழு வெள்ளிகள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். செவ்வாய்க்கிழமை காலையில் அங்குள்ள உணவுச் சாலை 'கன்டீனைத் திறப்பார்கள். உங்களுக்கு வேண்டிய பொருட்களை நீங்கள் முதலிலேயே ‘ஒடர்' கொடுத்திருந்தால் வாங்கிக்கொள் ளலாம். அங்கே வாங்கக் கூடிய பொருட்களில், பற்பசை, கோர்க் பானம், ஐஸ் கிறீம், ஹாம், சொசேஜ், பிஸ்கட், டின் மீன், கார்ளிக் பேஸ்ட் என்பன அடங்கும். இருபது நிமிடம் தொலை பேசியில் கதைக்கலாம். அதற்கு நிமிடத்திற்குப் பதினெட்டு சதம். ஞாயிற்றுக் கிழமை காலையில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு துவாய்கள், படுக்கை விரிப்புகளையும் உடைகளையும் துவைப்பதற்குக் கொடுக்கலாம். மாலையில் துவைத்துத் திருப்பிக் கொடுப்பார்கள். அவன் அணிவதற்கு மூன்று ஆடைகள் வைத்திருக்க அனுமதி உண்டு.
அவன் ஒரு குற்றம் சுமத்தப்பட்ட கைதியாக இல்லாவிட்டால் அந்தக் கட்டிடத்தில் ஒரு வாரத்தையாவது சந்தோசமாகக் கழிக்க முடியும் என்றே எண்ணினான். பயங்கரமான பலவித குற்றங்களுக்காக, அங்கே தண்டனை அனுபவித்துக்கொண்டோ அல்லது தண்டனையை எதிர் பார்த்தோ இருக்கும் கைதிகளுடன் கூட, அவனால் வேறுபாடு இன்றிப் பழக முடிந்தது. அவர்களில் அநேகமானோர் தோற்றத்திலும் பழகும் விதத்திலும் சாதாரண மான மனிதர்களாகவே தோன்றினார்கள். அவர்கள் பின்னால் இருந்த கதைகள் பயத்தை உண்டாக்கின. மாதவனுக்கு இருக்கும் பயம் போலவே பயங்கரவாதியெனக் குற்றம் சாட்டப்பட்ட அவன்மீதும் மற்றைய கைதிகளுக்கும் பயம் இருந்திருக்கலாம். அன்றைய தினம் எட்டு மணிக்கான மணியோசை கேட்டது. வேண்டா வெறுப்பாக மாதவன் சிறைக்கதவின் வெளியே வந்து நின்றான். அவனைப் போல் மற்றைய கைதிகளும் வெளியே வந்து நின்றனர். பெயர்கள் கூப்பிடப்பட்டன. சகலரும் அங்கு இருப்பது உறுதி செய்யப்பட்ட பின், தாழ்வாரத்தைக் கடந்து, எல்லோரும் கூடும் சிறிய மண்டபத்தை நோக்கிக் கைதிகள் நடந்தனர்.
அநேகமானோர் வெள்ளையர்கள். ஒருவன் இந்தியனோ, லங்கையனாகவோ தோற்றம் அளித்தான். மாதவன் எவரோடும்
ற ததா 色
தொப்புள்கொடி 143

Page 75
பேசுவதற்கு அஞ்சினான். அடிக்கடி அந்த மனிதன் தன்னை நோக்குவதை மாதவன் முன்பே அவதானித்திருந்தான். மாதவன் அவனை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தான். ஒர் ஒரத்தில் இருந்த நாற்காலியில் தனியாக அமர்ந்து, கண்ணாடி யன்னலின் ஊடாக வெளியே தெரிந்த விளையாட்டு மைதானத்தையும் மரங்களையும் நோக்கினான். சின்னப் பறவைகள் மரங்களைச் சுற்றிப் பறந்தன. தூரத்தில் இருந்ததால் அவை என்ன பறவைகள் என்று தெரியவில்லை. தாங்கள் பறப்பது ஒரு சிறைச்சாலையின் மைதானம் என்பது பறவைகளுக்குத் தெரியாது. சுதந்திரமாகப் பறக்க முடிந்தது.
தனக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலி நகரும் ஒசையில் திடுக்குற்றுத் திரும்பியவன், அந்த மனிதன் தன் அருகில் இருந்த இன்னொரு நாற்காலியில் அமர்வதைப் பார்த்ததும் பயம் கவ்விக் கொண்டது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு, “ஹலோ” என்றான்.
"நீ ஒரு தமிழ்ப் புலி என்று அறிந்தேன்” என்றான் அவன். கரகரப்பான இரட்டைக் குரல் அவனுக்கு.
மாதவனுக்கு ஒரு கணம் என்ன பேசுவது என்று புரியவில்லை. துணிவை வரவழைத்துக் கொண்டான்.
"தமிழ்ப் புலிகள் ஈழத்தில்தான் இருக்கின்றார்கள். தமிழர் விடுதலையின் ஆதரவாளர்கள்தான் இங்கு இருக்கின்றார்கள்.” மாதவன் சொன்னான்.
“கோபிக்காதே. நான் வேடிக்கையாகத்தான் சொன்னேன். இங்குள்ள அநேகமானோர் தங்களை நிரபராதிகள் என்றே சொல்கின்றார்கள். நானும் அப்படித்தான் சொல்கின்றேன்.”
அவன் விரக்தியாகச் சிரித்தான்.
மாதவன் ஒன்றும் பேசவில்லை. அவன் முகத்தைப் பார்த்தான்.
"நீ என்ன செய்தாய் என்பதை நான் கேட்கப் போவதில்லை. பயப்படாதே." என்ற அவன் தொடர்ந்தான்.
"நான் சிங்களவன். நீ தமிழன் என்பதையும் நானறிவேன். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டுள்ளாய் என்பதும் எனக்குத் தெரியும்."
மாதவனை, அந்த மனிதனின் தோற்றமும் பார்வையும் அச்சுறுத்தின. அம்மைத் தழும்புகள் வந்து காய்ந்து முத்திரைகளைப் பதித்தது போன்ற முகம். கருமையான முகத்தில், துவைத்த நிறத் துணியில் வேறு நிறம் கலந்து வெளிறியது போல் ஆங்காங்கே வெண்மை. உயரமாக வளைந்து, கண்ணும் மூக்கும் சந்திக்கும்
144 தொப்புள்கொடி

இடத்தில் இறங்கி நிற்கும் கரிய புருவம். அகன்ற மூக்கு மாதவனின் நாக்கு அசைய மறுத்தது.
"தமிழரின் பிரச்சனை நானறிவேன். அது நியாயமானது என்றும் எனக்குத் தெரியும். பதவி ஆசைக்காகவும் அரசியல் இலாபத்துக்காகவும் சிங்கள அரசியல்வாதிகள் பல்லாயிரக்கணக் கான உயிர்களைப் பலி கொடுக்கின்றார்கள்." அவன் நிறுத்தினான். மாதவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.
"நீ என்னோடு பேசமாட்டாயா?" என்று கேட்டான்.
"என்ன பேசுவது என்று தெரியவில்லை. எனக்கு இந்த இடமும் சூழலும் பழக்கமில்லை. யார் நண்பர்கள், யார் எதிரிகள் என்றும் புரியவில்லை.” மாதவன் சொன்னான்.
"எதிரிகள் சிறைக்கு வெளியேதான் இருக்கின்றார்கள். இங்கே எல்லோரும் நண்பர்களே. நேற்று உன்னை நண்பன் என்று தோளில் கை வைத்துக் கதைத்தவன், நாளை நீ வெளியே சென்றால் எட்டியே நிற்பான். எனக்கும் இந்த வாழ்க்கை புது அனுபவந்தான். உனக்கு ஏதும் உதவி வேண்டுமானால் என்னைத் தயங்காமல் கேள்.” என்று கூறியவன் திடுதிப்பென எழுந்து
போனான்.
அன்று அந்தப் பகுதியில் இருந்த கைதிகள் மைதானத்திற்குச் செல்ல அனுமதியிருந்தது. சிலர் காற்பந்து விளையாடினார்கள். மாதவன் தனியே மைதானத்தைச் சுற்றி நடந்தான். இன்னொரு வனும் அவனைப் போலவே நடந்துகொண்டிருந்தான். அவனைப் போல் வேகமாக மாதவனால் நடக்க முடியவில்லை. அந்த மனிதன் இரண்டு முறை இவனைக் கடந்து நடந்தான். மூன்றாவது முறை தன் வேகத்தைக் குறைத்து, மாதவனோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தான். வழமையாக மேலைத் தேசத்தார் பேச்சை ஆரம்பிப்பதுபோல்.
“நல்ல கால நிலை இன்று. என் பெயர் டொனல்ட்” என்றான்.
“என் பெயர் மாதவன்” என்று சொன்னாலும் அவனோடு பேச மாதவனுக்கு மனநிலை இருக்கவில்லை. அவன் ஆஸ்திரேலிய வெள்ளையன். முப்பது வயதிருக்கும்.
"நீ ஏன் இங்கே இருக்கின்றாய் என்று எனக்குத் தெரியும். நீ பேசிக்கொண்டிருந்தாயே அந்த சிறீலங்காவைச் சேர்ந்தவன். உங்கள் எதிரி சிங்களவன். அவன் எதற்காக இங்கே வந்தான் என்று தெரியுமா ?” அவன் கேட்டான்.
“தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. நீ ஏன் வந்தாய் என்பதையும் நான் தெரிந்துகொள்ள விரும்பவில்லை.
தொப்புள்கொடி 45

Page 76
சிங்களவர் எங்களுக்கு எதிரிகள் அல்ல. இனவெறி பிடித்த சிங்கள அரசையும் அதற்குத் துணை போகும் பேரினவாதிகளையும் எதிர்த்தே எங்கள் மக்களின் போராட்டம்" மாதவன் சொன்னான்.
"நீ ஒரு தத்துவ ஞானிபோல் பேசாதே. அப்படியிருந்தால் நீ இங்கே இருக்கமாட்டாய். இங்கு உள்ளவர்களைப் பற்றிப் பேச யாருக்குத்தான் ஆவலில்லை. அவன் ஒரு கொலைக் குற்றத்திற்காக வந்திருக்கின்றான்."
கொலை என்றதும் மாதவனின் தலை கிறுகிறுத்தது.
“ஒன்றல்ல. இரட்டைக் கொலை. அந்த வழக்கை நான் படித்தேன்."
அவன் சொன்னவை உண்மையாக இருக்கக் கூடாது என மாதவன் நினைத்தான்.
கணவன் மனைவிக்குள் தகராறு. கணவன் தன் வாழ்வில் தலையிடக் கூடாது எனும் தடை உத்தரவை அன்றுதான் பொலிசார் அவனிடம் சேர்த்தனர். அவனும் தனது சிறு உடமை களை எடுத்து வெளியேறினான். சிறீலங்காவிலிருந்து வந்த அவன் மனைவியின் தாயும் தந்தையும் அவளோடுதான் இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் 76 வயது இருக்கும். அவன் குடும்பத்தை விட்டுப் பிரிய அவர்களும் காரணமாக இருந்திருக்கலாம். தந்தையார் தனது பேத்தியை மடியில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார். வெளியே போனவன் திரும்பிவந்து, சமைய லறையில் இருந்த இரண்டு கத்திகளை எடுத்துவந்து முதலில் முதியவரைக் குத்தினான். மனைவி பயத்தில் தன் கண்களை மூடினாள். அவள் கண்களைத் திறந்தபோது அவன் குத்தியது அவளையல்ல. அவள் தாயை.
“இது உனக்குப் பெரிதல்ல. உன் நாட்டில்தான் பல கொலை களைச் செய்தவர்கள் ஆட்சியில் இருக்கின்றார்கள். அவர்களுக்கு எங்கள் நாடுகள் சிவப்புக் கம்பளம் விரிக்கின்றன” சொல்லியவாறு அவன் நடந்தான்.
மாதவன் வேகமாகத் திரும்பி தன் அறைக்குள் போய்க் கட்டிலில் விழுந்தான். முகத்தைத் தலையணையில் புதைத்தான். தான் எங்கே இருக்கின்றோம் எவர்கள் மத்தியில் இருக்கின்றோம் என்று எண்ணியபோது, அவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தச் சூழலும் அங்குள்ள மனிதர்களின் கதை களும் அவனைப் பைத்தியக்காரன் ஆக்கிவிடும் எனப் பயந்தான். கன்னங்கரு இருட்டுக்குள் எங்கு செல்வது என்று தெரியாமல், அருகே என்ன இருக்கின்றது என்றும் புரியாமல் தவிப்பது போலிருந்தது அவனுக்கு. வழக்கு விசாரணைக்கு வர இன்னும் எழுபது நாட்கள். அதுவரை அவனால் உயிரைத் தாங்க முடியுமா?
146 தொப்புள்கொடி

எழுபது நாட்களின் பின் இதே மாதவன் இருப்பானா? அல்லது அவன் ஒரு முழு மன நோயாளி ஆகிவிடுவானா?
யாரோ ஒருவன் தன் அறையின் வாசலில் நிற்பதைப் பார்த்து மாதவன் எழுந்தான். அவன் இன்னொரு கைதி. கையில் பைபிளுடன் எப்போதும் அவனைக் காணலாம். யாரோடும் பேசமாட்டான். வெள்ளையன். சுத்தமாகச் சவரம் செய்த முகம். அகன்ற நெற்றி. தலையில் இரண்டு பக்கத்திலும், சரிசமனாகத் தலை மயிர் உதிர்ந்து, இரு கால்வாய்களை அமைத்திருந்தன. தலையின் பின்புறத்திலும் தட்டையான வட்டம். அவன் ஒரு பாதிரியார் போலவே இருந்தான்.
"கவலைப்படுகின்றாயா? நான் உனக்கு பைபிள் வாசிக்கவா?” அவன் கேட்டான்.
மாதவனின் பதிலுக்குக் காத்திராது அவன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தான். ஐந்து நிமிடங்கள் மூச்சுவிடாது படித்தான்.
“கோட் பிலஸ் யூ” என்று சொல்லி முடித்துப் போனான்.
மாதவனுக்கு அவனைப் பற்றி வேறொருவன் சொல்லியிருந் தான். வேகமாகக் காரை ஒட்டி, கட்டுப்பாட்டை இழந்து தெரு ஓரத்தில் நின்ற ஆறு இளம் வயதினரின் மரணத்திற்குக் காரணமானவன். இன்னும் அவன் வழக்கு முடியவில்லை.
உடலைக் களைக்க வைத்தால் உள்ளம் உறங்கிவிடும் என்று மாதவன் நினைத்து அவர்களுக்கு என்று இருந்த உடற்பயிற்சி நிலையத்திற்குச் சென்றான். இரு கைதிகள் பெரிதாகச் சத்தமிட்டு டேபிள் டெனிஸ்' விளையாடிக் கொண்டிருந்தார்கள். மாதவனும் ஆடக்கூடியவன். அவர்களோடு பழகப் பயந்து விலகி நடந்தான். இன்னொரு பக்கத்தில் 'பில்லியட்ஸ்' இன்னும் நால்வர் விளையாடி னார்கள். பச்சைக் கம்பள மேசையில் உருளும் பல வண்ணக் குண்டுகளை வெகுலாவகமாக அடித்துக்கொண்டிருந்த ஒருவனை மாதவன் பார்த்தான். அவனைப் பற்றியும் யாரோ அவனுக்குச் சொல்லியிருந்தார்கள். அவனுக்கு முப்பது வயதிருக்கும்.
அவன் ஒரு பெண்ணோடு வாழ்ந்துவந்தான். அவளுக்கு இன்னொருவன் மூலம் ஐந்து வயது மகனிருந்தான். அந்தச் சின்னஞ் சிறுவனை பெல்ட்டால் அடிப்பான். கன்னத்தைப் பதம் பார்ப்பான். காலால் உதைப்பான். ஒரு நாள் அந்தக் குழந்தை அவன் அடி தாங்காது இறந்துவிட்டது.
கொலை, கொள்ளை, வன்முறை, சித்திரவதைகள். . . இவையெல்லாம் மனநோய்களின் விளைவா? மனிதனின் பலவீனங்களா? அப்படியானால் போர் என்று இனங்களையே அழிக்க விழைபவர்கள் மன நோயாளிகளா ? அவர்கள் எப்படி அரசியல் தலைவர்கள் ஆவார்கள்? சனநாயகம் என்ற பெயரில்
தொப்புள்கொடி 147

Page 77
அவர்களைத் தெரிவுசெய்யும் மக்களும் மனநோயாளர்களா? அவர்கள் எல்லோருக்கும் தண்டனை கொடுப்பதானால் எங்கே சிறைச்சாலைகளைக் கட்டுவது? மாதவன் தலையைப் பிய்த்துக் கொண்டான். தனக்கு விசர் வருகிறது என்றே எண்ணினான்.
ஆரபி, நிலாவின் நினைவுகள் அவனை ஆக்கிரமித்தன. அந்த வேளை அவனைச் சந்திக்க யாரோ வந்திருப்பதாக சிறை அதிகாரி ஒருவன் கூறினான். ஒரு வாரத்தில் இரண்டு முறை, ஒவ்வொரு மணி நேரம், நேரடியாக அவனை இருவர் சந்திக்க அனுமதி இருந்தது. அதையுந்தவிர வாரத்தில் ஒரு முறை, ஒரு மணி நேரம் இருவர் சந்திக்கலாம். ஆனால் இந்தச் சந்திப்பு ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ள முடியாத தூரத்தில் இருந்தே பேச வேண்டும். அதாவது இருவருக்கும் இடையில் ஒரு கண்ணாடித் தடுப்பு இருக்கும். சந்திப்புகள் காலை ஒன்பது மணிக்கும் மாலை நான்கு மணிக்கும் இடையில் நடக்க வேண்டும்.
ஆரபிதான் வந்திருப்பாள் என்று மாதவன் எண்ணினான். கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்தான். தலையை நீவி விட்டான். தான் கவலையோடு இருப்பதை அறிந்தால் அவள் வேதனை கொள்வாள் என்று எண்ணினான். சந்திப்புகள் மகிழ்ச்சியைத் தந்தாலும் சந்திப்புக்கு முன்னும் பின்னும் செய்யப் படும் சோதனைகள் வேதனையானவை. அணிந்திருக்கும் உடை யோடு போக முடியாது. அவனை முற்றாகச் சோதிப்பார்கள். அவர்கள் தரும் ஆடையை அணிய வேண்டும். அது கழுத்து வரை மூடியிருக்கும். கழுத்தை இறுக்கி ஒரு சுருக்குப் போல் ஒன்றைக் கட்டுவார்கள். அதை அவர்களால்தான் கழற்ற முடியும். சந்திப்புக்குப் பின்னரும் அவன் சோதனையிடப்படுவான். சிறைக்குள் போதை மருந்துகளோ, ஆயுதங்களோ, வேறு என்ன பொருட்களானாலும் கடத்தப்படக் கூடாது என்பதே நோக்கம்.
அந்த வேதனைகளைக் கடந்து சந்திப்பு மண்டபத்திற்கு அவன் வந்தான். மண்டபத்தில் பல சிறிய மேசைகளும் அவற்றிற்கு எதிர் எதிராக நாற்காலிகளும் இருந்தன. பல கைதிகளின் வெளியுலகச் சந்திப்பு அங்கே நடந்து கொண்டிருந்தது. மாதவனைச் சந்திக்க ஆரபி வரவில்லை. வந்திருந்தவன் மயூரன். மாதவனுக்கு அவனைக் கண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
“என்னடா மாதவா, ஆரபியை எதிர்பார்த்திருப்பாய். ஏமாத்தமே?” நாற்காலியில் அமர்ந்திருந்த மயூரன் கேட்டான்.
"உன்னைக் காணுறதில சந்தோசம். இந்தச் சுவர்களுக்கு வெளியில இருந்து வார எந்த முகமும் சந்தோசத்தைத் தரும்."
மாதவன் அவனை உற்றுநோக்கினான்.
148 தொப்புள்கொடி

"நான்தான் இஞ்ச சிறையில இருந்தும், சேவ் எடுத்து வடிவாக இருக்கிறன். நீ என்ன தாடி வளர்க்கிறியே?” மாதவன் கேட்டான்.
மயூரன் முகத்தில் இளந்தாடியும் மீசையும் வளர்ந்திருந்தன். “மாதவா நீ இருக்கிற இடத்தில நானிருந்தால் நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறன். எனக்கென்ன இந்த நாட்டில குடும்பமோ குட்டியோ? ஆரபி, நிலாவைப் பார்க்கேக்க ஏன்தான்
உனக்கு இந்த நிலைமை என்று கவலையாக இருக்கு." மயூரன் சொன்னான்.
“டேய், இஞ்ச வந்து இன்னும் என்னைக் கவலைப்படுத்தாதே யாராயிருந்தாலும் உள்ள இருக்கிறது துன்பந்தான். உனக்குந்தான் அஞ்சலி இருக்கிறாள்.” மாதவன் கண்ணடித்தான்.
மயூரனின் முகம் மாறியது.
"வேண்டாம். அவளின்ரை கதையை விடு. ஆரபி, பிள்ளை எல்லாம் சுகமாக இருக்கீனம். உன்னைப் பிணையில எடுக்கிறதுக்கு இளங்கோவன் அண்ணனும் லொயர்சோட கதைச்சுக்கொண்டு இருக்கிறார்.”
"அதுதான் முடிஞ்ச கதையாச்சே, இனி என்ன அதைப் பற்றிக் கதைக்கக் கிடக்கு? இனி வழக்கை எப்பிடி வெல்லுறது என்றதைப் பற்றியில்லோ கதைக்க வேணும்?” மாதவன் கேட்டான்.
"அது இன்னொரு பக்கம் நடக்கிது. உன்னைப் போய்ப் பயங்கரவாதி என்று சொன்னால் உண்மையான பயங்கரவாதிகளே வெக்கத்தில தற்கொலைசெய்து கொள்ளுவாங்கள். உன்னால யாருக்கும் எந்தவித அபயாமும் இல்லையென்றால் நீ உள்ள இருக்கிறது நியாயமில்லை. மஜிஸ்ரேட்டின்ரை தீர்ப்பு பிழையென்று சுப்பிரீம் கோர்ட்டுக்கு விண்ணப்பிக்கப் போறம். உனக்குத் தெரியுமே, மெல்பேர்ன் பாராளுமன்றத்துக்கு முன்னால வந்துநின்ற சனம் ?” மயூரன் முகத்தில் மகிழ்ச்சியான திகைப்பு.
"ஆரபி போனில சொன்னவள். எங்கடை தமிழ்ச் சனம் என்னை மறக்கல்லை. எங்கடை போராட்டத்தையும் மறக்கல்லை" மாதவன் சொன்னான்.
“மறக்கிறதோ? மடையா. நாங்கள் நடத்திற போராட்டம் நியாயமானது. ஒரு நாளும் வராத சனமெல்லாம் பாராளுமன்றத் துக்கு முன்னால நின்று எங்கடை ஞாயத்தைக் கத்திக் கத்திச் சொல்லிச்சுதுகள். அதுகளின்ரை தவிப்பை நீ பார்த்திருக்க வேணும்.” மயூரன் சொன்னான்.
“எனக்குத் தெரியாத சனமே? அதுகள் எப்பவும், நாட்டில என்ன நடந்தாலும் கூடிவந்து குரல் கொடுக்குங்கள். நாட்டுச்
தொப்புள்கொடி 149

Page 78
செய்திகளைச் சொல்லு, சாப்பாடு இல்லாமல் கூட இருந்திடலாம். சிறைக்குள்ளேயே செத்திடலாம். இரண்டு விசயத்தைத்தான் தாங்க ஏலாமல் கிடக்கு. ஒன்று நாட்டுச் செய்திகளை உடனுக் குடன் கேட்க முடியாது. மற்றது எங்கடை மக்களுக்கு நல்லதைச் செய்யாமல் நானும் அவேக்கு ஒரு சுமையாகிட்டனோ என்ற கவலை.” மாதவன் தன் நாடியைத் தடவிக்கொண்டான்.
மயூரன் ஈழத்துச் செய்திகள் எல்லாவற்றையும ஒன்று விடாது
சொன்னான்.
"நீ வந்தது நல்லதாப் போச்சு. ஆரபி என்றால் இவ்வளவு விசயம் சொல்லமாட்டாள்."
மாதவன் பெருமூச்சு விட்டான். அவர்கள் பிரியும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
“மாதவா, நான் நெடுகலும் வருவன் என்று எதிர்பார்க்காதே" மயூரன் தயக்கத்தோடு சொன்னான்.
"என்ன, இப்ப அஞ்சலியோட குடித்தனம் தொடங் கிட்டியோ?” மாதவன் சிரித்தான்.
"பிறகும், பிறகும் அவளின்ரை கதையை எடுக்காதே. மயூரன் பேச்சை முடிக்கும் முன் நேரம் ஆகிவிட்டது என்று அறிவித்தார்கள்.
மயூரன் எழுந்து நடந்தான். மாதவனும் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
“மாதவா" என்று தூரத்தில் நின்றவாறு மயூரன் அழைத்தான்.
மாதவன் திரும்பிப் பார்த்தான்.
“மாதவா, நான் இனி வராட்டால் கவலைப்படாதே" அவனது குரல் பெரிதாக எல்லோருக்கும் கேட்க ஒலித்தது.
மாதவன் அதை எதிர்பார்க்கவில்லை.
150 தொப்புள்கொடி

18
தொலைக்காட்சியில் ஏதோ ஒடிக்கொண்டிருந்தது.
தொலைபேசி அலறி அலறி ஓய்ந்தது. நிலா நிற்காது அழுதுகொண்டிருந்தாள். கதவு மணி ஓசையிட்டது.
ஆரபிக்கு எதுவும் கேட்கவில்லை. சோபாவில் அமர்ந்திருந்த ஆரபி, பித்தம்பிடித்தவள் போல், கண்ணன் ராதையை அணைத்து நிற்கும் சிலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அஞ்சலி, ஆரபியின் திருமணப் பரிசாக இந்தியாவில் இருந்து வாங்கிவந்த அழகான சிலை அது.
இரவு, பகலைச் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருந்தது. அவள் வீட்டில் ஒளியில்லை.
கதவு மணியைப் பல முறை அழுத்திய அஞ்சலி, ஆரபி கதவைத் திறக்காததால் அச்சம் அடைந்தாள். கதவை ஓங்கிப் பலமுறை தட்டினாள். பின்னர் வீட்டைச் சுற்றி வந்து, கண்ணாடி யன்னலில் பலமாக அறைந்தாள். ஆரபிக்கு அப்போதுதான் தன்னுணர்வு வந்தது. நிலாவின் அழு குரல் கேட்டது. ஒடிச்சென்று நிலாவைத் தூக்கினாள். நிலாவோடு சென்று கதவைத் திறந்தாள்.
“என்னடி, ஆரபி?” அஞ்சலி கேட்டு முடிவதற்குள் அவள் தோளில் முகம் புதைத்து ஆரபி அழுதாள். தாயின் அழுகையை மீறி நிலா கத்தினாள்.
நிலாவை வாங்கிக்கொண்ட அஞ்சலி, மறுகையால் ஆரபியை அணைத்தவாறு அவளை சோபாவில் அமர்த்தினாள். அஞ்சலி யிடம் வந்ததும் நிலாவின் அழுகை அடங்கியது. அஞ்சலி "சுவிச்சை அழுத்தி விளக்கைப் போட்டாள்.
ஆரபி ஒவெனச் சில நிமிடங்கள் அழுது ஒய்ந்தாள். நண்பர் களும் உறவினர்களும் மாறி மாறி வந்தபோது, அடக்கிவைத்த துயரம் எல்லாம், தன் சிநேகிதியைக் கண்டதும் கட்டுப்பாடின்றி வெடித்துப் பாய்ந்தது.
தொப்புள்கொடி 151

Page 79
"எனக்கு ஏனடி இந்த நிலமை ? நான் என்ன பாவமடி செய்தனான் ? படிக்கிற காலத்தில படிப்பையும் பரதத்தையும் கோயிலையுந் தவிர வேறு எதையும் தெரிஞ்சுகொள்ளக் கூடாது என்ற மாதிரிதான் அப்பா வளர்த்தார். அம்மா விரும்பின மாதிரி மெடிசன் செய்யல்லையே தவிர, வேறென்ன பிழைவிட்டனான். தொண்ணுரற்று ஆறு தசம் ஒன்பது புள்ளிகள் எடுத்தது போதாதே? கட்டுப்பாட்டுக்குள்ளேயே வாழ்ந்தன். உங்களை மாதிரி பார்ட்டிகள் எனக்குத் தெரியாது. துடை தெரிய, இடை தெரிய உடுக்க எனக்கு அனுமதி இருக்கல்லை. என்ரை வயசுப் பெட்டைகளெல் லாம் பெடியங்களின் ரை தோளில கை போட்டு நடக்கேக்க நான் மாத்திரம் தேவாரம் பாடிக்கொண்டிருந்தன். ஒரு நல்லவனை, இரக்கமுள்ளவனைத்தானே காதலிச்சன். எனக்கு மாத்திரம் ஏனிந்த தண்டனை ?” ஆரபி விழிகளில் நீரோடக் கேட்டாள்.
"அழாதேயடி. நீ இருக்கிறது ஆஸ்திரேலியா, இங்க நீதிக்கும் சட்டத்துக்கும் மதிப்பு இருக்கு. அதுக்கு நாங்கள் போராட வேணும். உன்னைப் பார்க்க எனக்குப் பொறாமையாக இருக்கடி. இன்றைக்கு மாதவனுக்குப் பின்னால மெல்பேர்னில இருக்கிற எல்லாத் தமிழரும் இருக்கீனம். இப்படி ஒரு மதிப்பையும் அன்பையும் எல்லாராலேயும் எடுக்க ஏலாது. சுப்பிரீம் கோர்ட்டில அப்பீல் பண்ணியிருக்கு. நிச்சயமாக பிணையில விடுதலை கிடைக்கும். இந்த நேரத்தில் நீதானேயடி மாதவனுக்கு நம்பிக்கையைக் கொடுக்க வேணும். நீயே தளர்ந்தால் நிலாவுக்குச் சாப்பாடு குடுத்தியே? நீ ஏதாவது சாப்பிட்டியே ? வாடி”
அஞ்சலி, ஆரபியின் கையைப் பிடித்து, நிலாவை மறு கையால் தூக்கியவாறு சமையலறைக்குச் சென்றாள். குளிர்சாதனப் பெட்டி நிறையப் பலரும் கொண்டுவந்த உணவுப் பண்டங்கள் நிறைந்து இருந்தன.
இடியப்பம், சொதி, சம்பல், கோழிக் கறி என்பவற்றை எடுத்து "மைக்கிரோவேவில் சூடாக்கி வைத்தாள். குழந்தைக்கு இடியப்பமும் சொதியும் கலந்து ஊட்டினாள். நிலா சிரித்துக் கொண்டே தன் சிறு பொம்மைகளோடு விளையாட ஆரம்பித்தாள். சிநேகிதிகள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டார்கள். அஞ்சலி அதிகம் சாப்பிடவில்லை என்பதை ஆரபி கவனிக்கவில்லை. ஆரபி, மாதவனில்லாத தன் தனிமையைப் பற்றியும் அவன் எப்படிச் சிறைச்சாலையில் இருப்பான் என்பதைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் நிலா தூங்கிவிட்டாள். நேரம் இரவு ஒன்பது மணி ஆகியது.
“அஞ்சலி, இன்றைக்கு என்னோட இருக்கிறியே ?” ஆரபி கேட்டாள்.
152 தொப்புள்கொடி,

"நீ கேட்க மாட்டியோ என்று நினைச்சன்" அது வழமையான அஞ்சலியின் குரலல்ல.
"என்னடி நான் கேட்கிறது? எப்ப வந்தாலும் உன்னோடை தான் இன்றைய பொழுது என்று உரிமையோட சொல்லுகிற நீ, இன்றைக்கு என்ன புதுசா நான் உன்னைக் கேட்க வேணும்?” ஆரபி செல்லக் கோபத்தோடு அஞ்சலியின் தோளில் தட்டினாள்.
"நான் விரும்பி வாற நேரங்கள் வேற. இன்றைக்கு வேற வழியில்லாமல் வந்திருக்கிறன்” என்று சொல்லியவாறு அஞ்சலி கதவைத் திறந்து தன் பிஎம்டபிள்யு வாகனத்தை நோக்கிப் போனாள்.
வெளியே போனவள் கையில் பெரிய சூட்கேசோடு வந்தாள். ஆரபிக்கு ஆச்சரியமாக இருந்தது. உரிமையோடு வீட்டில் வந்து, தன்னைக் கேளாமலே தனது உடைகளை எடுத்து அணியும் அஞ்சலி பெட்டியோடு வந்திருக்கின்றாள். பெட்டியைக் கீழே வைத்து நிமிர்ந்த அஞ்சலியின் கண்கள் பனித்திருப்பதை அப்போதுதான் ஆரபி கவனித்தாள். ஆரபி பதறினாள். அஞ்சலி அழுதால் அது நிச்சயமாக பாரதூரமான விடயமாகத்தான் இருக்கும் என்று ஆரபி அறிவாள்.
"என்னடி உனக்கு?”
"ஆரபி, நான் வீட்டைவிட்டு வெளிக்கிட்டன்." அஞ்சலி தயங்கியவாறு சொன்னாள்.
"என்னடி சொல்லுறாய்?” ஆரபி கேட்டாள்.
"எல்லாமே பிரச்சனையாகப் போச்சு." பெருமூச்சோடு அவள் நடந்ததைச் சொன்னாள்.
O
அஞ்சலியின் தந்தையார் ஒரு பொறியியலாளர். ஒரு பெரிய கொம்பனியில் முகவராக வேலைசெய்கின்றார். தாயும் 'டிலொயிட்ஸ்’ எனும் பெரிய ஸ்தாபனத்தில் கணக்காளராக வேலைசெய்கின்றாள். அவர்கள் வீடு பெரிய மாளிகை போன்றது. நீச்சல் குளம் முதல் வீட்டுக் குள்ளேயே பெரிய திரையோடு அமைந்த "ஹோம் தியேட்டர்’ என எல்லா நவீன வசதிகளும் கொண்டது. அவர்கள் ஒட்டுவது பென்சும் பிஎம்டபிள்யு அவ்டியுந் தான். ஒரே பெண் அஞ்சலி. அவர்கள் விரும்பியது போல் ஆர்க்கிடெக்சர் படித்து நல்ல பதவியில் இருக்கின்றாள். ஆனாலும் பெற்றோர், மகள் தொடர்புகள் எப்போதும் சுமூகமாக இருந்ததல்ல. ஊருக்குப் பெரியவர்களாக வாழ அவர்கள் போடும் போலித்தனங் களையும், பகட்டு வாழ்வையும் அஞ்சலி வெறுத்தாள். பணக்காரர் என்பதால் எந்த விழாவிலும், கலை நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கு
தொப்புள்கொடி 153

Page 80
முன்னாசனம் கிடைக்கும். யாருக்குப் பொன்னாடை போர்த்தி னாலும் அதில் அஞ்சலியின் தந்தைக்கும் பங்கிருக்கும். தனக்கும் ஒரு பொன்னாடை போர்த்த அவர் ஒழுங்குசெய்து கொளவார். மேடையில் அடுக்கு மொழியில் அழகாகத் தமிழுக்காகத் தன்னுயி ரையும் கொடுப்பதாக முழங்குவார். அவரிடமிருந்து அன்பளிப்பு கிடைப்பதால் எல்லா மேடையிலும் பேச ஐந்து நிமிடமாவது கொடுப்பார்கள். ஐந்தை ஐம்பதாக்குவதில் வல்லவர்.
அன்று அஞ்சலி வற்புறுத்தி மயூரனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள். மயூரன் அவர்களுக்குப் புதியவன் அல்ல. பல தமிழ் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குவதற்கு அவரை அழைப்பதற்குப் பல முறை அவர்கள் வீட்டிற்கு வந்திருக் கின்றான். அப்பொழுது எல்லாம் அவனுக்குத் தடயுடல் வரவேற்பு. தந்தையார் தானே வீட்டிலிருக்கும் ‘கப்பச்சீனோ கோப்பி இயந்திரத்தில் கோப்பி தயாரித்துக் கொடுப்பார்.
ஆனால் அன்று
அஞ்சலி மயூரனை உட்காரச் சொல்லி, வீட்டிற்கு உள்ளே போய், தேநீருடன் வந்தபோது கேட்ட வார்த்தைகள்.
"யார் மயூரனே? தம்பி கோவிக்காதேயும். பொறுப்பில்லாமல் நீங்கள் நடக்கிறதாலே எங்கடை தமிழருக்கே மரியாதையில்லாமல் போச்சு. அவன் மாதவன் ஜெயிலிலை இருக்கிறான். நீர் வேற எங்கடை வீட்டை வந்தீர் என்றால் நாளைக்குப் பொலிஸ் எங்களைத் தேடி வரும், தயவுசெய்து இஞ்ச வருகிறதை நிற்பாட்டும்”
தந்தையார் முழங்கிக்கொண்டிருந்தார். தலை கவிழ்ந்தவாறு கதவைத் திறந்து மெளனமாக மயூரன் வெளியே நடந்தான். அஞ்சலியின் கையிலிருந்த தேநீர்த் தட்டம் நிலத்தில் விழுந்தது. அவர்களது பல வர்ணக் கம்பளத்தில் தேநீர் கொட்டி, கறை ஏற்படுத்தியது.
வெளியே ஓடினாள், அஞ்சலி. அதற்குள் மயூரனது கார் வேகமாகப் போய்விட்டது.
அஞ்சலியால் தன் கோபத்தை அடக்க முடியவில்லை.
"நீங்கள் ஒரு மனுசனா?” என்று கத்தினாள். தான் அவனைக் காதலிக்கிறேன் என்றும் அவன்தான் தன் கணவன் என்றும் சத்தமிட்டாள்.
முதன்முறையாக அவள் கன்னத்தைத் தந்தையின் கை பதம் பார்த்தது. தாய் சீறினாள். தன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்ட அஞ்சலி, அவர்கள் பஜனைக்குப் புறப்பட்டதும், பெட்டியோடு வீட்டைவிட்டுக் கிளம்பினாள்.
O. . .
154 தொப்புள்கொடி

ஆரபிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துன்பம் தனக்கு மாத்திரந்தான் என்று நினைத்தவள், தோழியின் நிலை கண்டு மேலும் கண்ணிர்விட்டாள். பெற்றவர்கள் தங்கள் பிள்ளை கள் நல்ல இடத்தில் சுகமாக வாழ வேண்டும் என்று நினைப்பது இயற்கை. அவர்கள் சிறிது நாகரிகமாக நடந்திருக்கலாமே என்று நினைத்தாள். தனக்கு ஏற்பட்ட கதி அஞ்சலிக்கும் வரக் கூடாது எனத் தான் நினைக்கும்போது, அவர்கள் நினைக்காமலா இருப்பார்கள்? யார் எப்படி நடந்தாலும், தமிழ், தமிழ் என்று நாளும் பொழுதும் மேடைகளில் முழங்குபவர்கள் இப்படி நடக்கலாமா என்று கவலைப்பட்டாள். மேடையில் முழங்காதவர், மாலைகள் சூடாதவர்கள், முன்பின் தெரியாதவர்கள்கூடத் தன்னைத் தேடிவந்து ஆறுதல் கூறும்போது, இவர்கள் இப்படி நடக்கலாமா என்று வேதனைப்பட்டாள். பாவம். மயூரனின் மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும்? அஞ்சலிக்கு எப்படி ஆறுதல் கூறுவது? எண்ணங்கள் அலை மோதியபோது, தனது துன்பத்தை மறந்தாள்.
அஞ்சலியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள்.
“எனக்கு என்ன சொல்லுறது என்று தெரியல்லையடி. இவ்வளவு சோகத்தையும் நெஞ்சுக்குள்ள வைச்சுக் கொண்டுதான் எனக்குச் சாப்பாடு போட்டனியே?” ஆரபி அழுதவாறு கேட்டாள்.
"நீ ஏனடி அழுகிறாய்? உனக்கு இருக்கிற துன்பம் மாதிரி எனக்கு இல்லையடி. இப்ப மயூரன் என்ன சிறையிலேயே இருக் கிறான்? எப்ப என்றாலும் அம்மா, அப்பா எங்கடை காதலை ஒத்துக்கொள்ளப் போறதில்லை. நாங்கள் என்ன யாழ்ப்பாணத் திலேயே இருக்கிறம் ? இங்க யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. அதுவும் பெண்களை அடக்கி ஆள முடியாது. ஆண் களை நம்பி இப்ப நாங்கள் வாழ இல்லை. இல்லாத, பொல்லாத கட்டுப்பாடுகளைப் பெண்கள் மேல இந்தச் சமூகம் போட முடியாது. அது ஆண்களாக இருக்கட்டும். இல்லை, பழைய பெண்ணடிமைப் புத்திகொண்ட பெண்களாக இருக்கட்டும். அதுக்குக் கட்டுப்பட நான் தயாராக இல்லை. நீ அழாதேயடி. அதுக்குப் பிறகு மயூரனை நான் சந்திக்கயில்லை. அவன் மோபைலை ஒப் பண்ணிட்டான். அவன் அப்பிடித்தான். அவனை நான் சமாளிப்பனடி. மாதவனும் வெளியிலை வந்த உடன, நீங்கள் இரண்டு பேரும் எங்கடை கலியாணத்தை நடத்தி வைக்க வேணும்"
அஞ்சலியின் பேச்சில் இருந்த நம்பிக்கையும் உறுதியும் நாளைய பொழுது நல்லதாகவே அமையும் என்று ஆரபியையும் எண்ண வைத்தது.
இரவு ஆரபி களைப்பால் நன்றாகத் தூங்கினாள். அஞ்சலி இரவு முழுதும் தூங்க முடியாது புரண்டாலும், விடியும்போது
தொப்புள்கொடி 155

Page 81
நித்திரையானாள். காலை ஆறு மணிக்கு ஆரபி எழுந்துகொண் டாள். அன்று மாதவனைப் பார்க்கப் போக வேண்டும். நிலா எழுந்திருக்கும்முன் சின்னச் சின்ன வேலைகளைச் செய்துவிட வேண்டும். அவனுக்கு வேண்டிய மாற்றாடைகள் சிலவற்றைப் பையில் எடுத்து வைத்தாள். தன்னை அறியாது அந்த ஆடைகளை முத்தமிட்டாள். -
அப்போது தொலைபேசி அலறியது. காலை வேளையில் யார் எடுப்பார்கள் என்று புரியாது அதைக் கையில் எடுத்தாள். மறுபக்கத்தில் மயூரன். அவன் குரலைக் கேட்டதும் ஆரபிக்கு மகிழ்ச்சி.
“மயூரன் எங்க நிற்கிறியள்? அஞ்சலி என்னோடதான் நிற்கிறாள். பொறுங்கோ. கூப்பிடுறன்."
படுக்கையிலிருந்த அஞ்சலிக்கு அவள் பேசுவது கேட்டது. அவசரமாக அவளும் எழுந்து வந்தாள்.
அதற்குள் மறுபக்கத்தில் மயூரன் அவசரமாகப் பேசினான். அவன் பேசியதில் ஆரபியின் காதுகளில் சில வார்த்தைகளே விழுந்தன.
"நோ நோ. யூ கான்ட் டூ தற். மயூரன் சொல்லுறதைக் கேளுங்கோ” ஆரபி கீச்சிட்டாள்.
"என்னடி?” என்று கேட்டபடி அஞ்சலி அவள் கையிலிருந்த தொலைபேசியைப் பறித்தாள்.
“திஸ் இஸ் த ப்பைனல் கோல் ப்போர் பஸஞ்சர்ஸ்” மறுபக்கம் துண்டிக்கப்பட்டது.
தூண்டிலிற் புழுப் போலத் தரையில் இருந்து ஆரபி, தன் கைகளைப் பொத்திச் சுவரில் அறைந்து அழுதாள்.
ஏதோ விபரீதம் நடந்திருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்ட அஞ்சலி, "என்னடி ? சொல்லடி” என்று கெஞ்சினாள்.
ஆரபியால் பேச முடியவில்லை. தட்டுத்தடுமாறி வார்த்தைகள் வந்தன.
“அஞ்சலி, அவன் எயர் போர்ட் டிபார்ச்சர் லவுஞ்சில இருந்து கதைச்சவன். தனக்கு இந்த நாட்டில இனி வேலையில்லை யாம். வாழ்க்கையோ, மரணமோ அது தமிழ் ஈழத்திலதானாம். உன்னோடை பேசினால் தன்ரை மனம் மாறிடுமாம். அதால பேச விரும்பல்லை. அவன் உன்னைவிட்டுப் போயிட்டானடி." அஞ்சலி அதைக் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை. அவள் மெளனமானாள். கண்ணிர் அவளுக்கு வரவில்லை. விரக்தியாகப்
1 as a தொப்புள்கொடி

புன்னகைத்தாள். தன் அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்து,
முகத்தைத் தலையணையில் புதைத்தாள்.
ஆனாலும் ஏனோ அழுகை வரவில்லை. கைப்பையைத் திறந்து, தன்னோடு எப்போதும் எடுத்துச்
செல்லும் அவன் தந்த கைக்குட்டையைப் பார்த்தாள்.
கட்டிலில் இருந்தபடியே குறிபார்த்து, அதைக் குப்பைக்
கூடையில் எறிந்தாள்.
எறிய முடியாத நினைவுகள் அவளைத் தின்றன.
தொப்புள்கொடி 157

Page 82
19
LDTதவன் அன்று காலை வேளை எழுந்துவிட்டான். ஆரபி, நிலா வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு மனதில் சிறு உற்சாகத்தைக் கொடுத்தது. அதே சமயம் சந்திப்பதற்கு முன்னும் பின்னும் நடக்கும் சோதனைகளும் கழுத்துவரை இறுக்கி அணியும் ஆடைகளை நினைத்தபோது எரிச்சலாக இருந்தது. தன்னால் ஆரபி கவலைப்படக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான். முகத்தை அழகாக சவரம் செய்தான். அன்று தலைமுடி வெட்டுவதற்கு ஒழுங்கு செய்திருந்தான்.
முடி வெட்டுபவனும் ஒரு கைதிதான். முடிவெட்டும் கருவி களை அதிகாரிகளிடம் பெற்று, வெட்டியபின் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். முடி வெட்டுபவனுக்கு இரண்டு வெள்ளிகள். தலையில் அவன் கை வைத்ததும் ஒருவிதப் பயம் உண்டாகும். அவன் இரட்டைக் கொலைகள் செய்ததற்காகக் குற்றம் சுமத்தப் பட்டவன். அளவாக, அழகாக மாதவனின் முடியை வெட்டி யிருந்தான். சிறைச்சாலைக்கு வந்தபின், தன் முடி சிறிது, சிறிதாக உதிர்வதை மாதவன் கவனிக்கத் தவறவில்லை.
வழக்கமான சோதனைகள். திறந்து மூடும் கதவுகள். ஆரபி சிறைச்சாலையில் மாதவனைச் சந்திக்கச் சென்றாள். ஒரு பக்கத்தில் இருந்து மாதவன் வந்தான். பின்னால் அவன் கதவு மூடப்பட்டது. மறு பக்கத்தில் இருந்து ஆரபியும் நிலாவும் வந்தனர். அவர்கள் கதவும் பின்னால் மூடியது. நிலா தந்தையிடம் உடனே தாவினாள். மாதவன் அவள் கன்னங்கள் சிவக்கும் வரை முத்தமிட்டான். மயூரனின் செய்தி மாதவனுக்குப் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஓர் அரிய நண்பனை இழந்துவிட்டோமே என்ற கவலையும் மனதில் படிந்தது. உணவு, உடை, சுகங்களைப் பற்றி சிறிது நேரம் பேசினார்கள். நிலா மாதவனின் தோளில் துரங்கிவிட்டாள்.
"ஆரபி, எனக்கு நடக்கப்போவது என்னென்று எனக்குத் தெரியாது. ஆனால் வருகிற நாட்கள் ஒவ்வொன்றும் கஷ்டமாகத் தான் இருக்கப்போகுது. நீங்கள் உறுதியாக இருக்க வேணும். சிறைச்சாலை கஸ்டந்தான். சிறையில இருக்கிறதைவிடக் கஷ்டம் என் நெஞ்சில இருக்கிற கவலைகள்தான். உங்களையும் நிலாவையும்
158 தொப்புள்கொடி

தனியாக விட்டு இஞ்ச இருக்கிறது பெரிய துன்பம். எங்கடை நாட்டு மக்களுக்கு உதவ முடியாதவாறு எங்களை அடைச்சுப் போட்டதும் தாங்க முடியாத கஷ்டம். என்ரை சின்ன வயசு வாழ்க்கையைப் பற்றி நான் அதிகம் உங்களோட கதைச்சதில்லை. உண்மையில அதைக் கதைக்கிறதைத் தவிர்த்தன். சிலவற்றை மறக்கத்தான் முயன்றன். முடியல்லை. உங்களுக்கு நினைவிருக்கும் உங்களோட நான் கோவிச்ச ஒரே ஒரு நாள்.” மாதவன் மென்மையாக, மெதுவாகப் பேசினான்.
“உங்களோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிசமும் இன்பமானது. அந்த நிமிசங்கள் திரும்பத் திரும்ப வர வேணும் என்றுதான் நான் விரும்பிறன். மாதவன், நாங்கள் சில்லறைச் சண்டைகள் போட்டிருப்பம். நீங்கள் கோவிச்சதாக எனக்கு நினைவேயில்லை. சின்னச் சின்னச் சண்டைகளுக்குப் பின்னால இருந்த பெரிய சந்தோசங்கள்தான் நினைவில இருக்கு. எல்லாம் சரிவரும். நீங்கள் வீட்டுக்கு வருவீங்கள். எங்கடை சில்லறைச் சண்டையும் சந்தோசங்களும் எப்பவும் போலவே இருக்கும். நீங்கள் கவலைப் படாதேங்கோ" இவ்வளவு உணர்வோடு அவள் ஒரு போதும் அவனோடு பேசியது இல்லை.
"ஆரபி, நீங்கள் என்ரை வாழ்க்கையில கிடைச்சது ஒரு பெரிய வரப்பிரசாதம். சீப்புக்காக நாங்கள் சண்டை பிடிச்சது நினைவிருக்கே?” அவன் கேட்டான்.
அவள் அந்த வேதனையிலும் சிரித்தாள். "இல்லை. அதுக்குப் பிறகு நீங்கள் என்னைத் தூக்கி அணைச்சது நினைவிருக்கு."
அவன், அவள் அறியாது கண்ணில் துளிர்த்த நீரைத் துடைத்தான்.
"அப்பாவைப் பற்றி. . .”
அவள் குறுக்கிட்டாள். "நீங்கள் சொல்ல விரும்பாததைச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.”
“என்னைப் பற்றி நீங்கள் அறிய வேண்டியது எவ்வளவோ இருக்கு. இப்ப அதைச் சொல்லாட்டால் எப்ப சொல்லுவனோ எனக்குத் தெரியாது." கண்ணாடி யன்னல்கள் ஊடாக மாதவன் வெளியில் தோட்டத்தைப் பார்த்தான்.
சிகப்பு நிறப் பூக்கள். கொத்துக்கொத்தாக எத்தனை பூக்கள்? சிகப்பு. இது எப்போதும் இரசிக்கக்கூடிய வண்ணமா?
O
சின்னச் சின்ன மலர்களாக அவன் வாழ்க்கையில் உடன்பிறவாத சகோதர்கள் 25 பேர். அவன் தாய்க்குப் பதினொரு
தொப்புள்கொடி 1.59

Page 83
சகோதரர்கள். பெரியதொரு குடும்பம். தமிழையும் தமிழ்ப் பண்பாடுகளையும் கட்டிவளர்த்த பரம்பரை. வீமன்காமம் மகாவித்தியாலயம், உடையார் மடம், காங்கேசன் துறை நடேஸ்வராக் கல்லூரி போன்ற கலைக் கூடங்களைக் கட்டிய பெருமையில் அவனது சொந்தங்களுக்குப் பெரும் பங்கு இருந்தது. அவனது பெற்றோர் ஆசிரியர்கள். அவன் தந்தையார் வீமன்காமம் மகாவித்தியாலயத்தில் அதிபர்.
தமிழ் இலக்கியம், நாடகம் அவர்கள் வாழ்வோடு இணைந்தவை. ஆனால் மாதவனின் இளமைக் காலம் தமிழின் இனிமையைச் சுவைக்கும் காலமல்ல. 1983 கலவரங்களின் எதிரொலிகள் எங்கும் கேட்டன. உடுத்த உடையோடு அகதிகளாக காங்கேசன் துறையில் கப்பலில் வந்திறங்கிய தமிழ் மக்களின் சோகம் அவன் கண்கூடாகக் கண்டது. உறவுகளை இழந்தவர்களின் கதைகள், பன்னிரண்டு வயது பாலகனின் மனதில் படமாகப் பதிந்தன. ஆசையோடு மர்ம நாவல்கள் படித்துவந்தவன், அப்பொழுதுதான் பத்திரிகைகளில் எரிக்கப்பட்டு, வெட்டப்பட்டு தென்னிலங்கையில் இருந்து விரட்டப்பட்ட தமிழரின் கண்ணிர்க் கதைகளைப் படித்தான். தென்னகத் தமிழ் சினிமாப் பாடல்களை மாத்திரம் வானொலியில் கேட்டு வந்தவன் வெரிட்டாஸ் வானொலி, பிபிசி தமிழோசை கேட்க ஆரம்பித்தான்.
அவர்களைச் சுற்றி காங்கேசன் துறை, பலாலி ஆகிய இடங்களில் சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு இராணுவம் குடி கொண்டது. சின்னக் குழி தோண்டி விக்கட் நட்டு விளையாடிய மாதவன், ஊராருக்கு, உறவினருக்குப் பதுங்கு குழிகள் வெட்டி னான். பனங்குத்திகளால், மண் மூட்டைகளால் பதுங்கும் குழிகளுக்குப் பாதுகாப்பு அரண் கட்டுவான். இத்தனையும் மீறி பொம்பர்களுக்குப் பாம்புகளும் பயந்து பதுங்கு குழிக்குள் தஞ்சம் கொண்டுவிடும். அவற்றை வேப்பமிலைப் புகையிட்டு விரட்டுவதும் அவன் வேலை. பல தமிழர் விடுதலை இயக்கங்கள் இராணுவத்தை எதிர்த்துப் போராட முளைத்திருந்தன. அவனது சக தோழர்கள், மாணவர்கள் பலர் அவற்றில் சேர்ந்துகொண்டனர். வீட்டின் கட்டுப்பாடு அவனைத் தடுத்தது.
பாடசாலைகள் ஒழுங்காக நடைபெறுவதில்லை. சிறீலங்காவின் குண்டு வீச்சுகள் ஒழுங்காக நடந்தன. அவ்ரோ விமானங்களின் ஒசை மிகவும் பரிச்சயமாகிவிட்டது. அவனை ஒத்த வயதுப் பிள்ளைகள் விமான ஓசை கேட்டு ஆகாயத்தை ஆவலோடு பார்ப்பார்கள்.
"குண்டு உருட்டுகின்றான்டா” என்று ஒருவன் கத்துவான்.
அது தரையில் வந்து விழ இரண்டு நிமிடங்கள் எடுக்கும் என்பது அவர்கள் கணக்கு. அதற்குள் ஒடிச்சென்று பதுங்கு
60 தொப்புள்கொடி

குழிக்குள் ஒளிப்பது ஒரு விளையாட்டுப் போல்தான் முதலில் இருந்தது.
ஒரு நாள் விமானம் வரும் வேளை தன்னை எப்போதும் சைக்கிளில் பின்னால் இருக்கவைத்து ஒட்டும் அருமை நண்பன் கதிரேசன் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தான்.
“டேய், கதிரேசா ஒடி வா. குண்டுபோடப் போறாங்களடா” என்று மாதவன் கத்தினான்.
கதிரேசனுக்குக் காது கேட்பது குறைவு. மாதவனின் கூக்குரல், பாவம் அவனுக்குக் கேட்கவில்லை.
சைக்கிளில் மாதவன் ஏறி அமரும் “கரியர்" தனியாக இருந்தது. மாதவனும் தன் நண்பனை இழந்து தனியாளானான்.
விமானம் வருவது வேடிக்கையல்ல என்று புரிந்துகொள்ள இன்னும் பல மரணங்கள். காயங்கள். அழிவுகள். காலையும் மாலையும் அவர்களைச் சுற்றிக் காவலிருக்கும் இராணுவத்திற்கு உணவு, கெலிகொப்டரில் வரும். ஒவ்வொரு முறையும் அவர்கள் கெலிகொப்டரில் இருந்து சுடும் பயிற்சி செய்வார்கள். அப்பாவிப் பொதுமக்கள் பலியாகும்போது அழுது, கதறுவதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை. முறையான அரசாங்கம் அங்கு இயங்கவில்லை. இருந்த கிராம சேவகர் குண்டுபட்டு இறந்து மாதங்களாகிவிட்டன. இருந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது. அவனது தந்தை பிரஜைகள் குழு என்று ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தங்கள் பிரச்சனைகளை இராணுவத்திற்கு அவ்வப்போது சொல்லிவந்தார். இராணுவத்துக்கோ அவர் மூலம் தமிழ்ப் போராட்டக் குழுக்களின் விபரங்களை அறிய முடியுமா என்ற ஆவல் இருந்ததேயன்றி மக்களின் பிரச்சனை குறித்து அக்கறை இருக்கவில்லை. அதன்பின் அங்கு போவதை அவர் நிறுத்திக்கொண்டார்.
மாதவன் அல்லலுறும் மக்களுக்கு உதவிசெய்வதில் முழு மனதுடன் ஈடுபட்டான். துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்கள் தங்களை எப்படிக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்பதை அறிவுறுத்தும் தொண்டர்களில் அவனும் ஒருவனானான். முதலுதவி சிகிச்சை செய்வதில் பயிற்சி பெற்றுக் காயமுறும் மக்களுக்கு உடன்சென்று உதவினான். கால்களை இழந்தவர் களுக்குப் பொய்க்கால் பூட்டும் சேவையில் அவனுக்குப் பெரும் அக்கறை இருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, அயலார்களை வேண்டி உணவுப் பண்டங்கள் சேகரித்துக் கொடுத்தான். வேப்பமரப் பூக்களைப் பொறுக்கி வடகம் செய்து, அதை விற்று வாழ்ந்த கதிரேசன் குடும்பத்தினருக்கு, தானே சென்று பூப்பொறுக்கி உதவினான். பள்ளிக்கூடம் செல்வ தாகப் பெற்றோருக்குப் போக்குக் காட்டி அவன் நேரங்கள் மக்கள் தொண்டிலேயே அதிகம் சென்றன.
தொப்புள்கொடி 16

Page 84
பெற்றோரிடம் பிடிபடும்போதெல்லாம் நன்றாக வாங்கிக் கட்டுவான். பள்ளிக்கூடங்கள் ஒழுங்காக இல்லாததால் ஒருவகை யில் அவன் படிப்பு தடைபட்டது. அவனது சேவை மனப் பான்மையும் படிப்பைவிட, மக்கள் தொண்டே முக்கியம் என்ற எண்ணத்தைக் கொடுத்தது.
தெருக்கள், பொது இடங்கள், மக்களின் குடிமனைகள் என்று எல்லா இடங்களையும் ஆக்கிரமித்து வந்த சிறீலங்கா இராணுவம், அவன் தந்தை அதிபராக இருந்த பாடசாலையையும் ஆக்கிரமித்துக்கொண்டது. குஞ்சுகளைச் செல்லும் இடமெல்லாம் கூட்டிச்சென்று காப்பாற்றும் தாய்க் கோழியைப் போல், அவனது தந்தை, மாணவர்களைக் கூட்டிச்சென்று வெவ்வேறு இடங்களில் படிப்பித்து வந்தார்.
O
தான் இதுவரை காலமும் எவரோடுமே மனம்விட்டுப் பேசாத விடயங்களை மாதவன் ஆரபிக்குச் சொல்லிக் கொண் டிருந்தான். தாங்கள் சிறைச்சாலை சந்திப்பு அறையில் இருக்கின் றோம் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அந்தச் சின்ன அறைக்குள் அந்தப் பெரிய கதை சொல்லப்பட்டது. ஓர் இளம் பையனின் இதயத்தில் பல ஆண்டுகளாகச் சுமந்த பாரத்தை அந்த வேளையில் இன்னொருத்தியும் சுமந்துகொண்டாள். அவுஸ்திரேலியாவில் வளர்ந்து விறுவிறுப்பான ஆங்கில நாவல் களையும் கிளுகிளுப்பான தொலைக்காட்சித் தொடர் நாடகங் களையும் பார்த்துப்பழகிய ஆரபி, மாதவன் வாழ்வில் இத்தனை வேதனைகள் இருக்கும் என்று எண்ணியதில்லை. அவ்வப்போது ஈழப் பிரச்சனைக்காக எதிர்ப்பு ஊர்வலங்களில், கூட்டங்களில், நடனங்களில் அவள் பங்கேற்றிருக்கின்றாள். ஆனால் அவை ஆழமாக அடிமனதில் பதிந்து பல நாட்களாகத் துன்புறுத்தியவை அல்ல. அவன் தந்தையைப் பற்றி அறிய அவள் ஆவலாக இருந்தாள். இதுவரை வெளியே, கண்ணாடி ஊடாகத் தெரிந்த தோட்டத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்த மாதவன் நாற்காலியில் அமர்ந்தான். அவள் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டான். திடமான அவன் கைகள் முதன் முறையாக நடுங்குவதை அவள் உணர்ந்தாள். அவள், அவன் இரு கைகளையும் எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள். அவன் கண்கள் நேராக அவளைப் பார்க்கவில்லை. குனிந்து சின்னத் தவிட்டு நிற மேசையைப் பார்த்தான்.
"ஆரபி, அப்பான்ரை பள்ளிக்கூடத்தில படிச்ச பிள்ளை யளின்ரை சேர்ட்டிபிகட் எல்லாம் ஆமி ஆக்கிரமிச்ச பள்ளிக்கூடக் கட்டிடத்திலேயே இருந்தது. சேர்ட்டிபிகட் இல்லாததால பிள்ளைகள் வேற பள்ளிக்கூடத்துக்குப் போகவோ அல்லது
162 தொப்புள்கொடி

வேலைகள் தேடவோ முடியாத நிலை. தாய், தகப்பன் வந்து, அதை எப்படியாவது எடுத்துத் தரச் சொல்லி அப்பாவை கேட்பீனம். அப்பாவும் பல முறை அதைப் பற்றி அங்கிருந்த இராணுவத் தளபதிக்கு எழுதியிருந்தார். அன்றைக்கு அவரை ஆமி இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு வந்துபார்க்க அனுமதிப் பத்திரம் வந்திருந்தது. அப்பாவுக்கு நல்ல சந்தோசம். பல பிள்ளைகளின்ரை நெடுநாளைய பிரச்சனை இதோட தீர்ந்திடும் என்று நினைச்சார். அவரோட சேர்ந்து போறதுக்கு ஒரு சிநேகிதருக்கும் அனுமதி கிடைச்சிருந்தது. அவே இரண்டு பேரும் ஆமி காம்ப் இருந்த பள்ளிக்கூடத்துக்குக் காலை 7 மணிக்குப் போச்சீனம். வழக்கமான செக்கிங்குக்குப் பிறகு, பாசெல்லாம் பார்த்து அவே இரண்டு பேரையும் அவங்கள் காம்புக்குள்ள விட்டாங்கள். பள்ளிக்கூடத்தின்ரை ஒபிஸ் அறையை அவங்கள் பாவிக்கல்லை. அதுக்குள்ளதான் எல்லா ப்பைல்சும் இருந்தன. அவேயும் தங்களால தூக்கக் கூடியதெல்லாம் இரண்டு பெட்டியில போட்டு, அவங்களுக்கும் தங்யூ சொல்லிப்போட்டு வந்தவை. இன்னொரு ஐம்பது மீட்டர்தான் காம்ப்புக்கு வெளியில வர."
மாதவன் தன் கண்களை மூடிக்கொண்டான். மூடிய கண்களிலிருந்து அருவி போல் இமைகளை உடைத்துக் கண்ணிர் 9Բւգ-Ա&l.
"அப்ப ஆமி காம்பில இருந்து வந்த சினைப்பார் ஒன்று அப்பான்றை நெஞ்சில பாய்ஞ்சுது. அப்பா அதிலேயே மயங்கி விழுந்தார்."
அவன் மீண்டும் நிறுத்தினான். ஆரபி அவன் கைகளை மேலும் தன் கன்னங்களோடு அழுத்தினாள். இப்போது அவள் கைகள் நடுங்கின. நாக்கு வறண்டு மேல் வாயோடு ஒட்டிக் கொண்டது.
அவன் ஒரு நிமிடம் நிறுத்தி மேலும் தொடர்ந்தான்.
"அப்பான்ரை சிநேகிதர் சொல்லித்தான எனக்கு இதெல்லாம் தெரியும். எப்பிடியோ அவரை யாழ்ப்பாணம் பெரிய ஆஸ்பத்தி ரிக்குக் கொண்டுபோயிட்டினம். அப்ப எனக்குப் பதினைஞ்சு வயசு, தங்கைச்சிக்கு இரண்டு வயசு, நானும் அம்மாவும் தங்கைச்சியும் காலை 11 மணிக்குத்தான் அவரைப் போய் இன்டென்சிவ் கெயர் யுனிட்டில் பார்த்தம். அப்பா எப்பவுமே வெள்ளை சேர்ட்டும் வெள்ளைக் காற்சட்டையுந்தான் போடுவார். அது பால் போல வெள்ளையாயிருக்கும். என்ரை கண்ணுக்குள்ள இருக்கிற அந்தக் காட்சியை என்னால எடுத்தெறிய முடியல்லை. அப்பான்ரை வெள்ளை சேர்ட் முழுக்க இரத்தத்தால சிகப்பாக இருந்தது. அவரை லைப்ல் சப்போர்ட்டிங் மெசினிலதான் வைச்சிருந்தவை. அங்க ஒரே ஒரு மெசின்தான் இருக்கு. அம்மா
தொப்புள்கொடி 163

Page 85
அழு அழு என்று அழுதா. பிறகு மெசினில இருந்து அப்பாவை எடுத்திட்டீனம்.”
மீண்டும் அமைதி.
"அப்பான்ரைக் காலைப் பிடிச்சு இழுத்து, தங்கைச்சி கேட்டாள், "அப்பா, எழும்பிக் கதையுங்கோ" அப்பவும் எங்களுக் காக ஒருத்தரும் கதைக்கல்லை. இப்பவும் எங்கடை சனம் சாகிறதை ஒருத்தரும் தடுக்கல்லை.” மாதவன் நிறுத்தினான்.
ஆரபி “மாதவன்” என்றாள். அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்ல முடியுமென அவள் வார்த்தைகளைத் தேடினாள். சில சோகங்களை வார்த்தையால் வடிக்கவும் முடியாது. வடியும் கண்ணிரை வார்த்தைகளால் துடைக்கவும் முடியாது.
அதைத் தெரிந்துகொண்டவன் போல் கதவைத் திறந்த சிறைக் காவலன் "உங்கள் நேரம் ஆகிவிட்டது” என்றான்.
164 தொப்புள்கொடி

20
நிTட்கள் மாதவனுக்கு நத்தை வேகத்தில் நகர்ந்தன. "நான் நான்தானா" என்ற கேள்வி மீண்டும் மீண்டும் தலைக்குள் ஒடிக்கொண்டிருந்தது. தன்னைத்தான் மெல்ல மெல்ல இழப்பதை மாதவன் உணர்ந்தான். நாளையும் இப்படி ஒரு நாள்தான். ஒரு மாற்றமும் இருக்கப்போவதில்லை என்ற எண்ணம் வரும்போது படுக்கையால் எழுந்திருக்கவும் மனம் வருவதில்லை. பள்ளிக்கூடப் பையன்போல் தான் நடத்தப்படுவது தன்னம்பிக்கையைத் தளர்த்தது. அடிக்கடி நடக்கும் சோதனைகள் அவன் தன்மா னத்தைச் சவுக்கால் அடிப்பது போலிருந்தன. கொலை, பாலியல் வன்முறைக் குற்றவாளிகள் மத்தியில் தானிருப்பது பயத்தையும் பரிதவிப்பையும் கொடுத்தன. தனது வாழ்க்கையைத் தான் நிர்ணயிக்க முடியாது, யார் யாரோ முடிவெடுக்கும் நிலை அவனைத் திக்குமுக்காடச் செய்தது. தற்கொலை எண்ணம் வரும்போதெல்லாம் நிலாவும் ஆரபியும் வரும் நாளை நினைத்து தடுத்துக்கொண்டான். தான் ஒரு குற்றவாளியாக இறுதிவரை சிறையில் இருக்கக் கூடாது, தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியமும் அவனை விட்டு விலகவில்லை.
சிறைக்கு வெளியே ஆரபியும் இளங்கோவனும் சட்டத் தரணிகளோடு நாளும் பொழுதும் வழக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். ஆஸ்திரேலியத் தமிழ் மக்கள் முழு ஆதரவையும் வழங்கினார்கள்.
மேல் நீதிமன்றத்தில் அவனைப் பிணையில் விடும் விசாரணை யூலை 18ஆந் திகதி வந்தது. கோயில்களில் பூசை மணிகள் ஒலித்தன. திலகாவின் கந்தசஷ்டி கவசம் இடைவிடாது கேட்டது. மாதவனின் தாயார் இரவும் பகலும் தெய்வத்தை வேண்டினாள். ஆரபி என்றும் இல்லாதவாறு தந்தையை வேண்டிக் கோயில்களுக்குச் சென்றாள். மாதவன் விடுதலையை வேண்டாத தமிழ் உள்ளங்கள் இல்லை என்றே சொல்லாம்.
சிறையில் அது 79ஆவது நாள்.
தீர்ப்பு வழங்கப்பட்டது. பிணையில் மாதவன் விடுவிக்கப் பட்டான். வானத்தில் பல்லாயிரக்கணக்கான மலர்கள் தங்கள்
தொப்புள்கொடி 16S

Page 86
மேனிகளில் விழுந்தது போல் மாதவனும் ஆரபியும் உணர்ந்தார்கள். பிரிந்தவர் கூடினர்.
தீர்ப்பளித்த நீதிவான் அரசியல் தலையீடுகள் நீதித் துறையில் இருக்கக் கூடாதென்றும் குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்ற அனுமானமே நீதித் துறையின் அத்திவாரம் என்றார். மாதவனால் ஆஸ்திரேலிய மக்களுக்கு எவ்விதத் தீங்கும் வர வாய்ப்பில்லை எனக் காவல் துறையினரே கருதும்போது அவனைச் சிறையில் வைத்திருப்பது தவறு என்றும் குறிப்பிட்டார்.
மாதவனுக்காக வழக்காடிய வழக்கறிஞர் குறிப்பிடுகையில் அரசியல் நோக்கங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் சிலர்மீது வழக்குத் தொடர்வதும், மிகப் பாராதுாரமான குற்றம் புரிந்தவர்கள் மீது வழக்குகள் தொடராமல் இருப்பதும் தவறு என்றார். ஓர் இன அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராக் அரசுக்கு ஆஸ்திரேலிய கோதுமைச் சபை நிர்வாகிகள் 300 கோடி டொலர் களை கொடுத்தமைக்கு ஏன் வழக்குத் தொடரவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
இன்று மாதவன் தன் குடும்பத்தோடு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கின்றான்.
அவன் குற்றவாளியா இல்லையா என்பதை விசாரிக்கும் வழக்கு இன்னும் சில மாதங்களில் விசாரணைக்கு வர இருக்கின்றது.
இன்னொரு சோகம் அவர்களுக்கு வருமா என்ற ஏக்கத்தோடு, இருக்கும் நாட்களை ஓட விடாது தடுக்க வழியின்றி, மாதவன், ஆரபியின் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது.
ஆரபி மீண்டும் கர்ப்பிணி.
தொப்புள் உறவு தொடர்கின்றது. ஆனால் அந்த உறவுகளின் கதைக்குத்தான் இன்னும். . .
முடிவில்லை.
166 தொப்புள்கொடி


Page 87


Page 88

கிழக்கை பிறப்பிடமாகக் கொண்டவர்
இலண்டன் சென்ற இவர் தொடர்சியாக வெளிநாடுகளில்
தனது வாழ்வை அாமத்துக்கொண்டார்
ாம்பிஏ பட்டதாரியான சம்பியா சிம்
இவரது முதல் நாவா
நீட்டாத நோ973இல் வெளிவந்தது.
சூானம் சஞ்சிகையில் 2008இல் பிரசுரமான போடிகள் மன்றக்காத என்ற இவரது சிறுகதை முத்திரைக் தோத்தேர்வுசெய்யப்பட்டு தமிழ்ர் கதை வட்டத்தின் தகம் முதற்பரினப் பெற்றுக்கொண்டது. ஆங்கில் மொழியில் இவர் எழுதிய CODE OF CONDUCT traig Air ஆஸ்திரேலியா மொாள் கண்டு நடாத்திய போட்டியில் பரிசைப் பெற்றும் கோன்டது. இவர் நாடகங்கள் எழுதி நெறியாள்வதிலும்
ஆற்றல் கொண்டவர். இவரது தங்கப்பதக்கம்
ாடுகளிலும் இவரது நாடா
ի որ կարեւելեր, -րրեր իւր կեա (Երենո| նրա եւ - man i
not

Page 89

ஊமையாக இருந்தவனை வைக்கின்றன. கும் சிலரின் மன ஒலங்கள் ன்றன
艮 Garribesar ဤငါ့ရှေး கீறல்களும். 滚
யத் தூண்டுமா? சாட்சியைச் சீண்டுமா ?
೨i@ತ್ತಿ 656
ISBN: 978-3-9813002-2-2
9l17 S 3 9 S 1 113 0 0 2 շ 2