கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையில் உயர்கல்வி: பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்

Page 1


Page 2

இலங்கையில் உயர்கல்வி: பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
சோ.சந்திரசேகரம் பேராசிரியர், கல்விப்Uடம் கொழும்புப் பல்கலைக்கழகம்
இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை

Page 3
ΕΠού இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக்
Sebelluloids 66Trféfth Téfleocorassif
ஆசிரியர் பேராசோ.சந்திரசேகரண்டு
GoAoffS இலங்கை முற்போக்கு கலை இலக்கியப்பேரவை
வெளியீட்டுதிகதி 27.O.9.2OO 9
பக்கங்கள் 2
அச்சுப்பதிப்பு 86 gšā
யுஜி. 50. பீப்பள்ளப் பார்க், கொழும்பு - 11. G5IT 8: O777 545 666
6eope : 25O/-
ISBN 978-955-1810-08-5
eaguooooTULð 6a5&u Tespiñ :
பூபாலசிங்கம்புத்தகசாலை
2O2. செட்டியார் தெரு, கொழும்பு 11
GST8: Oil-2422.52 / 65T b :Oll-255753
Title
Author
Publication
Date of Publication:
Pages
Printers
Price
ISBN
High Education in Sri Lanka:
Development and Problems of University Education
PrO.S.Santhirasekaran C)
Ceylon Progressive Art and Literary Council
27.09.2009
112
Chemamadu Pathippakam U.G. 50, People's Park, Colombo - 11 T: O777 345 666
250/-
978-955-1810-08-5

Сшптағпт6яir கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்

Page 4

பொருளடக்கம்
முன்னுரை பதிப்புரை
1.
இலங்கையின் பல்கலைக்கழக கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பல்கலைக்கழக வளர்ச்சியின் சில பிற அம்சங்கள் மாகாண ரீதியாகப் பல்கலைக்கழகங்கள் பட்ட மேற்படிப்பு
விசேட துறைகளுக்கான பல்கலைக்கழகங்கள் பாலினமும் பல்கலைக்கழகக் கல்வியும் கற்கை நெறிகள் பல்கலைக்கழக வகைப்படி மாணவர் தொகை
வெளிவாரிப் பட்டங்கள்
பல்கலைக்கழகங்களுக்கான அரசாங்கச் செலவு பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை உயர்கல்வியின் பொருளாதாரப் பயன் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வன்செயலும் விரயமும் பல்கலைக்கழகக் கல்வியின் தராதரமும் பொருத்தப்பாடும்
O7
10

Page 5
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
தரமேம்பாட்டுக்கான அண்மைக்காலச்சீர்திருத்தங்கள் 60
பல்கலைக்கழகக் கல்வியின் தர
உறுதிப்பாட்டுக்கான நடவடிக்கைகள் 63 பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிப் பணிகள் 65 பல்கலைக்கழக - வெளிஉலகத் தொடர்புகள் 70 பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புகள்
தொடர்பான பிரச்சினைகள் 76 திறந்த பல்கலைக்கழகம் 86 பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் 88 சிறுபான்மையினரின் உயர்கல்வி வாய்ப்புகள் 98
முடிவுரை 109
-6-

முன்னுரை
இன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமன்றி வளர்ச்சிய டைந்துவரும் நாடுகளிலும் உயர்கல்விக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. பிரதானமாக, இன்று இவ்விரு வகைப் பட்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வீதம், மொத்த தேசிய உற்பத்தி (GNP), தனிநபர் வருமானம், வாழ்க்கைத் தராதரம், மக்க ளின் கல்விநிலை என்பவற்றில் பல ஏற்றதாழ்வுகள் காணப்பட்ட போதிலும், சகல நாடுகளும் தமது பொருளாதாரமுறைகளை"அறிவுப் பொருளாதாரமாக” (Knowledge Economy) மாற்றுவதில் முனைப்புடன செயற்பட்டு வருகின்றன. அறிவுப் பொருளாதாரத்தில், பிரதான உற்பத்திக்காரணி அறிவு; எனவே அறிவுப்பொருளாதாரங்கள் உலக ளாவிய அறிவை உள்வாங்குதல், நாட்டின் பொருளுற்பத்திக்கேற்ற அறிவை உருவாக்குதல், அறிவை முழுச் சமூகம் மத்தியில் பரப்புதல், அறிவைப் பொருளுற்பத்திக்குப் பயன்படுத்துதல் என்னும் பணி களில் ஈடுபடல் வேண்டும்.
இவ்வாறான பணிகளில் ஈடுபட வெறும் எழுத்தறிவும் இடை நிலைக் கல்வித்தகுதிகளும் போதாது. உயர்தரமான, வலுவான ஒரு உயர்கல்வி ஏற்பாடுகள் இன்றி, மேற்கண்ட பணிகளில் ஈடுபட முடி யாது. இதன் காரணமாக உயர்கல்வியின் விரிவிலும் தராதரத்திலும் மிகுந்த அக்கறை செலுத்தப்படுகின்றது.
உயர்கல்வியை வழங்குவதிலும் ஆராய்ச்சிப் பணியிலும் தீவிர மாக ஈடுபட்டுவரும் பிரதான உயர்கல்வி நிலையங்கள் பல்கலைக் கழகங்களாகும். இவை நீண்டகாலமாக உயர்கல்வித் துறையில் ஏக போக உரிமை செலுத்தி வந்தவை. இன்று உயர்கல்வியை வழங்கும் பல்கலைக்கழகமல்லாத உயர்கல்வி நிலையங்கள், கல்லூரிகள், உயர்
தொழில் (Professional)கல்லூரிகள், தொழில்நுட்பக்கல்லூரிகள் என்பன

Page 6
ஏராளமாக உருவாகி உள்ளன. ஆயினும் பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவம் இன்னும் குறைந்துவிடவில்லை.
இன்று உலகளாவிய பல நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள், உலகப் புகழ்பெற்ற சஞ்சிகை நிறுவனங்கள்) உலகில் சிறந்த பல் கலைக்கழகங்களைத் தெரிவு செய்வதில் அக்கறையுடன் செயற்பட் டுத் தெரிவுகளைச் செய்து அவற்றை வரிசைப்படுத்தியுள்ளன (Ranking). ஏனைய உயர்கல்வி நிலையங்கள் இவ்வாறான மதிப்பீட்டுக்கு உள்ளாகவில்லை. இன்று சீன அரசு உலகிற் சிறந்த பல்கலைக்கழகங் களை ஏற்படுத்த முயன்று வருகின்றது; இந்தியப் பிரதமர் 30 உலகிற் சிறந்த பல்கலைக்கழகங்களை அமைப்பதாகக் கொள்கைப் பிரகட னம் செய்துள்ளார். இவ்வாறான தரமான பல்கலைக்கழகங்களின்றி இந்தியாவும் சீனாவும் மேல்நாடுகள் போன்று சிறந்த அறிவுப் பொரு ளாதாரங்களாக மாற்றம்பெற முடியாது.
இலங்கையின் உயர்கல்வி முறைமையில் பல்வகை உயர்கல்வி நிலையங்களை இனங்காண முடியுமாயினும், அம்முறைமையில் பல் கலைக்கழகங்கள் ஒரு பிரதான இடத்தைப் பெற்றுள்ளன. ஏறத்தாழ 2000 கோடி ரூபாயை ஆண்டுதோறும் அரசாங்கம் பல்கலைக்கழகக் கல்விக்கு ஒதுக்குகின்றது. சமூகத்திலும் பல்கலைக்கழகக் கல்விக் கான சமூக அந்தஸ்து அதிகம். பல்கலைக்கழகக்கல்வி வாய்ப்புக ளைப் பெற மாணவர் மத்தியில் போட்டியும் அதிகம் உயர்கல்வி என்பது பல்கலைக்கழகக் கல்வியையே கருதும் என்ற சமூக சிந்தனையும் வலுப்பெற்றுள்ளது. இன்று இலங்கையில் சிறந்து விளங்கும் அறிஞர் கள், உயர் அரசாங்க நிர்வாக அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியிய லாளர்கள் அனைவரும்பல்கலைக்கழகப்பட்டதாரிகளே! தென்னாசிய, தென்கிழக்காசியப் பிராந்தியத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத் துக்கு ஒரு காலத்தில் சிறந்த மதிப்பும் இருந்தது.
இன்று அறிவுப்பொருளாதாரம் பற்றிய சிந்தனை வலுத்துவரும் நிலையில் பல்கலைக்கழகங்கள் வழங்கும் உயர்கல்வியின் தராதரங்க ளையும் பொருத்தப்பாட்டையும் (Quality and Relevance) மேம்படுத்த ஒரு புதிய செயற்திட்டம் (IRQUE)நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின றது. உயர்கல்வி பற்றிய உலக வங்கியின் ஆய்வொன்றும் தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கையொன்றும் அண்மையில் வெளிவந்துள் ளன. பல்கலைத் தராதரங்களை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் விளைவாக அதற்கென ஒரு பேரவை (Council) அமைக்கப்பட்டுள் ளது. பல்கலைக்கழகங்கள் “நிறுவனங்கள்" என்ற முறையிலும் பாடத் துறைகள் கற்கைநெறிகள் என்ற வகையிலும் வெளிநிலைப்
-8-

Lutfidavá0607d566iratirds a codilatip607. (Subject and Institutional Review). பல்கலைக்கழகங்களின் எதிர்கால விரிவு, அமைப்பு (Size and Structure), நிர்வாக முறைமை (Governance), தராதர உறுதிப்பாடு, எதிர்கால செலவுகள் முதலிய விடயங்கள் பற்றிய நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையொன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பின்புலத்தில், உயர்கல்வித் துறையில் ஆர்வமுள்ள ஆசிரி யர்கள், மாணவர்கள், பொதுவாசகர்கள் ஆகியோரின் நன்மை கருதி பல்கலைக்கழகம் பற்றிய இந்நூலை எழுதியுள்ளோம். இதனை எழுதுமாறு தொடர்ச்சியாக ஊக்குவித்த திரு.நீர்வை பொன்னையன் அவர்களுக்கு எமது நன்றிகள். அவருடைய அழைப்பின் பேரில் “இலங்கையில் உயர்கல்வி பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்" என்ற தலைப்பில் யான் ஆற்றிய கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் ஞாபகார்த்த உரையின் விரிவாக்கமே இந்நூலாகும்.
கல்விப்பீடம் பேரா. சோ.சந்திரசேரகன்
கொழும்புப் பல்கலைக்கழகம் 27-08-2009
-9.

Page 7
பதிப்புரை
தோழர் மு.கார்த்திகேசன் ஒரு மார்க்ஸிசவாதி. இலங்கையில் வடபுலத்தில் மார்க்ஸிச இயக்கத்தின் முன்னோடித் தலைவர்களில் முதன்மையான தலைவன் கார்த்திகேசு.
சிறந்த கல்விச் சிந்தனையாளன். அற்புதமான ஆசிரியன். ஆயிரக் கணக்கான மாணவர்களின் உள்ளம் கலந்த பேராசான். சமூக உணர்வுகள் எண்ணற்ற மனித நேயர்களை உருவாக்கியவன். மனித நேயம்மிக்க மகத்தான தலைவன். இதனால்தான் அவன் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதிமிக்க ஊழியனாய் உழைத்தான்.
இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டி வளர்த்த மகத்தான தலைவனவன். முற்போக்கு இலக்கியத்தின் முனைப்பான வழிகாட்டி. அதனால்தான் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் கார்த்திகேசன் நினைவுப் பேருரையை நடத்தி வருகின்றது. இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை நான்கு ஆண்டுகளில் பதினைந்து காத்திரமான கலை இலக்கிய நூல்களையும் பேராசிரியர் சபா.ஜெயராசாவின் தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும் கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும் நூலையும், முதுநிலை விரிவுரையாளர் தை.தனராஜாவின் ஒடுக்கப்பட்டோரின் கல்வி மலையகக் கல்வி பற்றிய ஆய்வு ஆகிய மூன்று நூல்களையும் இ.மு.க.இ.பேரவை வெளியிட்டுள்ளது.
சென்ற ஆண்டின் (2008) கார்த்திகேசன் நினைவுப் பேருரை பேராசிரியர் சோ.சந்திரசேகரனால் ஆற்றப்பட்டது.
அப்பேருரையின் மகுடம் “இலங்கையில் உயர்கல்வி பல்கலைக்கழக வளர்ச்சியும் பிரச்சினைகளும்" இப்பேருரையை பேராசிரியர் அவர்களே விரிவாக்கம் செய்து தந்துள்ளார்.
-10

பேராசிரியர் சந்திரசேகரன் பேர் பெற்ற கல்வியியலாளன். அவர் மாணவ சமூகத்தையும் மானுடத்தையும் நேசிப்பவர். இருபத்தைந்து நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவரது எழுத்துக்களும் செயற் பாடுகளும் இதனை உறுதி செய்கின்றது. பேராசிரியர் சந்திரசேகர னால் ஆற்றப்பட்ட கார்த்திகேசன் நினைவுப் பேருரையை இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை நூல் வடிவில் வெளியிடு வதில் பெருமை கொள்கின்றது.
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
-II

Page 8

இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
நவீன கால உயர்கல்வி முறைமையின் ஒரு பிரதானஅம்சம் பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி பல்கலைக்கழக அந்தஸ்தற்ற கல்வி நிலையங்களும் உயர்கல்வியை வழங்கி வருவதாகும். பல்கலைக் கழகங்கள் மட்டும் உயர்கல்வியை வழங்கி வந்த ஏகபோக உரிமை இன்று அவற்றிடம் இல்லை எனலாம். இதனால் இன்று "பல்கலைக் கழகமல்லாத உயர்கல்வி நிறுவனங்கள்” என்ற ஒரு வகையான உயர் கல்வியும் பிரதானமாகக் கருத்திற் கொள்ளப்படுகின்றது. இலங்கை யில் இன்று 15 பல்கலைக்கழகங்களோடு சட்டக்கல்லூரி, தொழில் நுட்பக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் போன்ற அரசாங்கக் கல்வி நிறுவனங்களும் ஏராளமான பல்வகைப்பட்ட தனியார் கல்வி நிறு வனங்களும் உயர்கல்வியை வழங்கி வருகின்றன. இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள்; இருந்தபோதிலும் 17000 க்கும் மேற்பட்ட கல்லூரிகளே பிரதானமாக உயர்கல்வியை வழங்கு கின்றன.
எவ்வாறாயினும் பல்கலைக்கழகங்கள் உயர்கல்வி அமைப்பி னுள் சில தனித்துவமான பண்புகளைக் கொண்டு விளங்குகின்றன. பல்கலைக்கழகங்களுக்கு நீண்டகால வரலாறும் தனித்துவமான சமூக அந்தஸ்தும் உண்டு. பல்கலைக்கழகங்கள் அனைத்துமே பட்டங் களை வழங்கும் கல்வி நிறுவனங்களாக விளங்குகின்றன. இளநிலைப பட்டங்களையும் முதுநிலைப்பட்டங்களையும் கலாநிதிப் பட்டங்க ளையும் பல்கலைக்கழகங்களே வழங்க முடியும். இலங்கையில் இயங்கும் சட்டக்கல்லூரியும் கல்வியியல் கல்லூரிகளும் தொழில்நுட் பக் கல்லூரிகளும் பட்டங்களை வழங்குவதில்லை. இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்கள், அக்கல்லூரிகள் எப்பல்கலைக்கழகங் களுடன் இணைக்கப்பட்டுள்ளனவோ அப்பல்கலைக்கழகங்களி லிருந்தே பட்டங்களைப் பெற முடியும்.
- 13

Page 9
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பிரதானமாக, பல்கலைக்கழகங்கள் பட்டக்கற்கை நெறிகளை வழங்குவதோடு ஆராய்ச்சிப் பணியையும் மேற்கொள்ளுகின்றன. இளநிலை அல்லதுழுதற்பட்ட நிலையில் மாணவர்களுக்கு ஆராய்ச்சித திறன்கள் கற்பிக்கப்படுகின்னபட்டப்பின்படிப்புக் (முதுகலைமாணி -MA-கலாநிதி-Ph.d) கற்கை நெறிகளின் ஒரு பிரதான அம்சம் அம்மா ணவர்கள் எழுதிச் சமர்ப்பிக்க வேண்டிய நீண்ட ஆய்வேடுகளாகும் (Thesis). அத்துடன், பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது ஆய்வுப் பட்டங்களின் (Research Degree) அடிப்படையிலேயே பதவி உயர்வு களைப் பெறமுடியும். பேராசிரியர் பதவியைப் பெறக் குறிப்பிட்ட அளவு ஆய்வுகளை அவர்கள் பிரசுரித்திருக்க வேண்டும். அவை பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்து வரிசைப்படுத்துவதற்கான ஒரு பிரதான தகுதிவிதி (Criterian). பல உலக நாடுகளில் ஆராய்ச்சி யில் மட்டுமே ஈடுபடும் “ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்கள்" உண்டு. ஏனைய உயர்கல்வி நிலையங்கள் கற்பித்தல் பணியை மட்டுமே செய்வன. அவை ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனை எதுவுமில்லை.
இப்பின்புலத்தில், உயர்கல்வி அமைப்பில் செல்வாக்கும் சமூக அந்தஸ்தும் நிறைந்ததாகப் பல்கலைக்கழகங்கள் விளங்குவதில் எதுவித ஐயமுமில்லை. எவ்வாறாயினும் 1800ஆம் ஆண்டுவரை ஐரோப்பியப் பல்கலைக்கழகங்கள் கற்பித்தல் பணியை மட்டுமே மேற்கொண்டு வந்தன. பல்கலைக்கழக ஆசிரியர்களின் அந்தஸ்து பாடசாலை அதிபர்களின் அந்தஸ்துக்கு சமமானதாகவே இருந்தது. 1800களில் ஜெர்மனிய Hombolt பல்கலைக்கழகமே ஆராய்ச்சியை ஒரு பிரதான பணியாக அறிமுகம் செய்தது. அப்பல்கலைக்கழகப் பேராசிரியர்களேதாம் செய்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் திரட்டிய அறிவைப் பயன்படுத்திப் பாடங்களை நடாத்தினர். இது “கற்பித்தல் ஆராய்ச்சி" என்பவற்றின் ஒருங்கிணைப்பு என்ற ஒரு புதிய பல்கலைக்கழகத் தத்துவம் தோன்றக் காரணமாக இருந்தது. இதன் பின்னரே பல்கலைக்கழக ஆசிரியர்களின் சமூக அந்தஸ்து அதிகரிக்க ஆரம்பித்தது.
ஜெர்மனியப்பேராசிரியர்களும்பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சிப பணியைப் புதிதாக மேற்கொள்ளத் தொடங்கிய பின்னர், ஜெர்மனி யப் பல்கலைக்கழகங்கள் ஐரோப்பிய அமெரிக்க அறிஞர்களைப் பெரிதும் கவரத் தொடங்கின. அக்காலத்தின் உலகளாவிய பல்கலைக் கழகத் சீர்திருத்தங்கள், ஆராய்ச்சிப் பணியை அறிமுகம் செய்வதை யும் உள்ளடக்கின. பிரதானமாக பிரித்தானிய, பிரஞ்சுப் பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட ஜெர்மனியப் பல்கலைக்கழகங்கள்
-14

பேராசிரியர் சோசந்திரசேகரனி
முன்மாதிரியாக அமைந்தன. அவர்கள் ஜெர்மன் பல்கலைக்கழகங்க ளுக்குச் சென்று ஆய்வு நெறிமுறைகளில் பயிற்சி பெறத் தொடங் கினர். 1942இல் இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது பல்கலைக்கழகம் இத்தத்துவங்களை உள்ளடக்கி அமைந்தது.
அத்துடன், நாட்டிலிருந்த பல்கலைக்கழகக் கல்வியை மேற் பார்வை செய்து ஒன்றிணைக்கும் பணியைச் செய்வதற்காக ஒரு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் (1978) அமைக்கப் பட்டது. பல்கலைக்கழகங்கள் தவிர்ந்த ஏனைய உயர்கல்வி நிலை யங்கள் ஏனைய அமைச்சுக்களின் (கல்வி அமைச்சு, தொழில்சார் கல்வி அமைச்சு) கீழ் வந்தன. ப.மா ஆணைக்குழுவின் கீழ் இயங்கிய பல்கலைக்கழகங்களுக்கு ஒரு தனியான அந்தஸ்தும் கிடைத்தது. பொதுக்கல்விமுறைக்கு அப்பால் பல்கலைக்கழகங்களுக்குப் பொறுப பாக தனியான உயர்கல்வி அமைச்சும் இன்று இயங்கி வருகின்றது. அத்துடன், பல்கலைக்கழகக் கல்விக்கென ஒரு தனியான சட்டமும் இருந்து வருகின்றது. (1978ஆம் ஆண்டுப் பல்கலைக்கழகக் கல்விச் சட்டம்). இச்சட்டமானது பல்கலைக்கழகக் கல்விஅமைப்பு பற்றிய விரிவான சட்டவிதிகளைக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக மானி யங்கள் ஆணைக்குழு, பல்கலைக்கழகப் பேரவை (Council), செனற் மன்றம், பாடத்துறைகள் என்பவற்றின் அமைப்பு, அதிகாரங்கள் பற்றி யும் துணைவேந்தர், பீடத்தலைவர், துறைத் தலைவர் போன்றோர் தெரிவு செய்யப்பட வேண்டிய முறை, அவர்களுக்குரிய அதிகாரங் கள் இச்சட்டத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, சர்வதேசப் பல்கலைக்கழக முறை மையைப் பின்பற்றி இலங்கைப்பல்கலைக்கழகங்கள் பெருமளவுக்கு சுயாதீன அமைப்புகளாக (Automomous)விளங்குகின்றன. பல்கலைக்கழக ஆசிரியர்கள் கல்வி சுதந்திரம் உடையவர்களாகவும் காணப்படுகின் றனர். இவர்களுடைய சம்பளங்கள் ஏனைய ஆசிய நாடுகளின் பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடக்கூடியவை அல்ல; ஆயினும், உள்நாட்டின் ஏனைய அரசாங்கத்துறை ஊழியர்களின் சம்பள அமைப்புகளுடன் ஒப்பிடும்போது இலங்கைப் பல்கலைக்கழக ஆசிரியர் சம்பளங்கள் உயர்ந்தவையாகும்.
மேற்கூறப்பட்ட அம்சங்கள், பல்கலைக்கழகக் கல்வியை ஏனைய உயர்கல்வி நிலையங்களிலிருந்து வேறுபடுத்துவதுடன் ஒரு தனிச் சிறப்பான அந்தஸ்தையும் வழங்குகின்றன. மிகப் பிரதானமாக ஏனைய அரசாங்க உயர்கல்வி நிலையங்கள் எல்லாமே பட்டம் வழங்கும் அதிகாரத்தையோ அல்லது சுயாதீனமாக இயங்கும் உரிமையையோ கொண்டவையல்ல.
-15

Page 10
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
இலங்கையின் பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சி
1942ஆம் ஆண்டில் முதலாவது இல்ங்கைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட முன்னர் ஒரு பல்கலைக்கழகக் கல்லூரியும் ஒரு மருத்து வக் கல்லூரியும் உயர்கல்வி நிறுவனங்களாக விளங்கிவந்தன. இவை அனைத்தும் இணைக்கப்பட்ட நிலையிலேயே முதலாவது பல்கலைக கழகம் தொடங்கப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவில் 19ஆம் நூற் றாண்டிலேயே மூன்று பல்கலைக்கழகங்கள் (பம்பாய், கல்கத்தா, சென்னை) தோற்றுவிக்கப்பட்டன. ஆனால், இலங்கையில் மிகத் தாமதமாகவே (1942இல்) முதலாவது பல்கலைக்கழகம் தோற்றுவிக் கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இலங்கை சற்று விரிவான இடைநிலைக்கல்வி முறையை ஏற்படுத்தியிருந்த போதிலும் பல்கலைக்கழகத்துக்கான இலங்கையர்களின் கோரிக் கையை குடியேற்ற அரசு ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.
இலங்கையில் முழுமையான ஒரு பல்கலைக்கழகத்தைக் கோரிய பல்கலைக்கழக இயக்கம் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது. குடியேற்ற ஆட்சியாளர்கள் தமது தாய்நாட் டின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கிக் கல்விக்கொள்கைகளை வகுத்தமையால், அவர்கள் இலங்கையர்களின் உயர்கல்வியில் அக்கறைக்கொள்ள வேண்டிய அவசியமிருக்கவில்லை. அவ்வாட்சி யாளர்களின் தேவைகளுக்கு அவர்கள் ஏற்படுத்தியிருந்த ஆங்கிலப் பாடசாலைகளே போதுமானதாக இருந்தது. அரசாங்க அலுவலகங் களில் பணியாற்றத் தேவையான ஆங்கில அறிவுடையவர்களை அப்பாடசாலைகள் வழங்கின. அத்துடன் முதலாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில், பல்கலைக்கழகத்தை அமைக்கும் சிந்தனை யில் ஈடுபடும் நிலையில் ஆங்கில ஆட்சியாளர்கள் இருக்கவில்லை. தமிழர் பங்களிப்பு
மிகப் பிரதானமாக, இலங்கைக்கு முழுமையான அம்சங்களைக் கொண்ட பல்கலைக்கழகமொன்றின் தேவை பற்றிக் குடியேற்ற அரசுக்கு எடுத்துரைத்த, இலங்கைப் பல்கலைக்கழக இயக்கத்தில் இலங்கைத் தமிழ் அறிஞர்கள் பிரதான ஒரு பங்கு வகித்தனர் என் பதைக் குறிப்பிட வேண்டும். சுருங்கக்கூறின், சேர்.பொன்னம்பலம் இராமநாதன், சேர்.பொன்னம்பலம் அருணாசலம், கலாயோகி. ஆனந்தகுமாரசாமி ஆகியோர் இலங்கையின் கலாசார மறுமலர்ச் சிக்கு ஒரு பல்கலைக்கழக அமைப்பொன்று தேவை என அக்கால
- 16

பேராசிரியர் சோசந்திரசேகரனி
ஆங்கில அரசுடன் வாதிட்டனர். இலங்கைப்பல்கலைக்கழகக் கல்வி யின் தோற்றத்துக்காகப் பாடுபட்ட இத்தமிழ்ப் பெருந்தகைகள் பற்றி இந்நினைவுப் பேருரையில் நினைவுகூருவது பொருத்தமுடைய தாகும்.
1942இல் அமைக்கப்பட்ட இலங்கைப்பல்கலைக்கழகம் இன்று 15 பல்கலைக்கழகங்களாக வளர்ச்சி பெற்றுள்ளது. 66 ஆண்டுகாலப் பகுதியில் ஏற்பட்ட இவ்வளர்ச்சி நிச்சயமாகப் போதுமானதன்று. 1942 முதல் அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல்கலைக்கழகக் கல்வியில் தனது ஏகபோக உரிமையைவிட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இந்தியா, மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் முதலிய நாடுகள், மற்றும் உலக ளாவிய போக்குகளுடன் இணைந்து செல்லாது, பல்கலைக்கழகக் கல்வியில் தனது ஏகபோக உரிமையை இலங்கை அரசு பேணி வந்துள்ளது. 1901இல் பொ.அருணாசலம் தமது குடிசன மதிப்பீட்டு அறிக்கையில் (Census Report) இலங்கையில் உயர்கல்விக்கான வசதி கள் இல்லாமை குறித்துக் கவலை தெரிவித்தார். அதனை ஒரு “பாரதூரமான தேவை” என அவர் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் அவர் பிரித்தானியப் பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெறுவதற்கு மாண வர்கள் ஆயத்தப்படுத்தப்படல் வேண்டும் என்றுவிரும்பினார். ஆயினும் விரைவில் அவர் இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்படல் வேண்டும் என்று கூறித் தனது முன்னைய கருத்தினை மாற்றிக் கொண்டார். அவருடைய தலைமையின் கீழ் 1906ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம் நிறுவப்பட்டது.
இச்சங்கம் ஆரம்பித்த சஞ்சிகையொன்றில் இலங்கையில் பல் கலைக்கழகம் ஒன்றிற்கான தேவைப் பற்றி அருணாசலம் பலவாதங் களை முன்வைத்தார். “ஆரம்பக் கல்வியானது தேசிய முன்னேற்றத் தில் ஒரு இன்றியமையாத காரணி; அதன் உண்மையான பயனை அடைய உயர்தரமான இடைநிலைக் கல்வியும் உயர்கல்வியும் அமைதல் வேண்டும்" என்ற கருத்தை அவர் முன்வைத்தார். கேம் பிரிட்ஜ் சிரேஷ்ட பரீட்சைக்கப்பால் இடைநிலைக் கல்வி நாட்டில் விரிவடைந்து செல்லவில்லை. அதற்கு அப்பால் பயிலும் வாய்ப்புகள் அப்போது வெளிநாடுகளிலேயே கிட்டின. பல்கலைக்கழக இயக்கத் தின் நோக்கம், பிரித்தானிய அரசாங்கத்தைப் பல்கலைக்கழக அமைப்பொன்றை ஏற்படுத்த ஒத்துக்கொள்ளச் செய்வதாகும் என்று அருணாசலம் தெரிவித்தார்.
இந்தியாவில் 1857ஆம் ஆண்டில் கல்கத்தாப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. "இது அரசாங்கம் இயல்பாக வழங்கிய சன்மானமல்ல.
-I7

Page 11
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பல்கலைக்கழகம் தேவை என்ற முறையில் கிளர்ச்சி செய்த இந்திய நாட்டுப் பற்றாளர்களின் கோரிக்கை காரணமாகவே கல்கத்தாப்பல் கலைக்கழகம் அமைக்கப்படலாயிற்று" என அருணாசலம் வாதிட் டார். அக்காலத்தில் கேம்பிரிட்ஜ், லண்டன், சென்னைப் பல்கலைக் கழகங்களுடன் இணைந்த முறையில் இலங்கையில் உயர்கல்வி ஏற் பாடுகள் செய்யப்பட்டாலும் “அவை இடைக்கால ஏற்பாடுகளாகவே அமைதல் வேண்டும்; இறுதியாக இலங்கைப் பல்கலைக்கழக மொன்று அமைக்கப்படல் வேண்டும்" என்பது அவருடைய வாத மாக இருந்தது.
அக்காலத்தில் இலங்கைக்கான பல்கலைக்கழகமொன்றில் தேசிய மொழிகள் ஆற்றக்கூடிய பங்கு பற்றியும் அருணாசலம் அவர்கள் சிந்தித்தார். மேலைநாட்டுப்பாட ஏற்பாட்டைக் கற்றவர்கள் தாய்மொழி அறிவின்றி வளர்ந்தவர்கள். மேலைநாட்டுக் கல்வியைப் பயிலும் அதேவேளையில் எமது இளைஞர்கள் தமதுமொழி, வரலாறு, மரபு கள் என்பவற்றுக்கு அந்நியமானவர்களாக வளரக்கூடாது. இது இலங் கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரதான நோக்கமாக வேண்டும். இங்கு அவர்கள் தமது தாய்மொழியைச் சிறப்புறவும் இலகுவாகவும் பயன்படுத்தப் பயில வேண்டும். தாம் ஒரு சிறந்த பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் என்பதையும் தமது மொழிகளினதும் இலக்கியங்க ளினதும் பெருமைகளையும் உணர வேண்டும் என்ற முறையில் அருணாசலம் தமது அரிய கருத்துக்களை வெளியிட்டார்.
உள்ளூர் பல்கலைக்கழகமொன்றில் விஞ்ஞானக்கல்வியின் பங்குபற்றியும் அருணாசலம் கருத்து வெளியிட்டார்: "விஞ்ஞானமா னது நவீன வாழ்க்கை முறையில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு பிரதான காரணி முறையான விஞ்ஞானக் கல்வி எவ்வாறு வாழ்க்கையைப் புரட்சிகரமாக மாற்றும் என்பதற்கு ஜப்பானிய மறுமலர்ச்சி ஒரு முக்கிய உதாரணம். எமது கல்வி அதிகாரிகள் (பிரித்தானியர்) விஞ் ஞானம் பற்றி அறியாதவர்கள். ஓரளவு இலத்தீன், கிரேக்க மொழி களை எமது இளைஞர்கள் கற்றால் போதும் என நினைப்பவர்கள்" என்று அவர் கூறினார். இலங்கைக்குப் பல்கலைக்கழகம் ஒன்றினை வழங்கச் சரியான கால நேரம் இன்னும் வரவில்லை; ஒரு சில மாண வர்களே அனுமதி பெற முடியும் என்ற ஆங்கில ஆட்சியாளரின் கருத்துக்களையும் அவர் சாடினார்; கேம்பிரிஜ், இலண்டன், ஒக்ஸ் போர்ட் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களோடு ஒப்பிடும் போது இலங்கைப் பட்டங்களுக்கு உரிய மதிப்பு இருக்கமாட்டாது என்ற ஆட்சியாளர் கருத்தையும் அவர் மறுத்து வாதிட்டார்.
- 18

பேராசிரியர் சோசந்திரசேகரனி
அக்காலத்தில் இலங்கையின் உயர்கல்வி லண்டன் பல்கலைக் கழகத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான தொடர்பு "கீழைநாட்டு நாகரிகச் சார்பற்றதாய், பிரதானமாக மொழி விடயத் தில் (சிங்களம், தமிழ்) இருத்தலால், உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி யாக்கவல்ல ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென அருணாசலமும் அவருடைய சகபாடிகளும் கேட்டனர். இத்தேசியவாதிகள் இலங் கைக்கான புதிய பல்கலைக்கழகமானது தேசிய மறுமலர்ச்சியின் ஒரு பிரதான அங்கமாகுமென வாதிட்டனர்.
இவ்விடத்து இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தோற்றத்துக்கு ஆனந்தகுமாரசாமி அவர்களின் பங்களிப்புப் பற்றிக் கூறவேண்டும். 1900மாம் ஆண்டுகளில் பல்கலைக்கழக இயக்கம் வெளியிட்ட இலங் கைத் தேசிய சஞ்சிகையில் கீழைநாட்டு மொழிப் புலமையாளரும் கலாசார மறுமலர்ச்சிவாதியுமான ஆனந்தக்குமாரசாமி இலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி வெளியிட்ட கருத்துக்களை இவ்விடத்து எடுத்துரைப்பது பொருத்தமானது. அதன்படி இப்பல்கலைக்கழகம் மக்களை ஆங்கிலமயமாக்கும் நிறுவனமாக அமைதல்கூடாது. மாறாக, கலாசாரத்தையும் சிந்தனைத் திறனையும் வளர்க்கும் நிறுவனமாக அமைதல் வேண்டும். இப்பல்கலைக்கழகம் கீழைத்தேச மொழி களின் விருத்திக்காகத் தன்னை அர்ப்பணித்தல் வேண்டும் என்றும் அன்னார் வற்புறுத்தினார். இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி யின் பிரச்சினைகள் பற்றிய இவ்வுரையில், முதலாவது இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தோற்றத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்த தமிழ்ப் பெரியார்களின் கருத்துக்களைச் சற்று விரிவாக எடுத்துரைப் பது முக்கியமானது எனக் கருதுகின்றேன். இப்பெரியார்கள் அக்கால கட்டத்தில் பரந்த மனப்பாங்குடன் செயற்பட்டு, நாட்டுமக்கள் அனை வரும் பயனடையும் வகையில் இலங்கைக்கான பல்கலைக்கழகம் ஒன்றுக்கான போராட்டத்தில் தலைமை தாங்கி உழைத்தனர்; ஒரு மாபெரும் தேசிய பணியை ஆற்றினர் என்பதை இவ்விடத்து வலி யுறுத்த விரும்புகின்றோம்.
உலகளாவிய ரீதியில், அரசாங்கங்கள் சுயமாகப் பல்கலைக் கழகக் கல்வியை விரிவுசெய்யும் அளவுக்குப் போதிய நிதிவசதிகளைக கொண்டிருக்கவில்லை. இது செல்வந்த நாடுகளுக்கும் பொருந்தும். இதனால் தனியார் துறைப் பல்கலைக்கழகங்களுக்கு இடமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரசாங்கப் பல்கலைக்கழகங்களை மட்டுமே கொண்டிருந்த இந்தியா அண்மைக் காலங்களில் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின்
--19 سے

Page 12
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியம் பிரச்சினைகளும்
வளாகங்களுக்கும் இடமளித்தது. மலேசியாவில் அவுஸ்திரேலிய,
இங்கிலாந்துப் பல்கலைக்கழகங்கள் தமது வளாகங்களை அமைத்
துள்ளன. சிங்கப்பூரும் தாய்லாந்தும் கூட இவ்வாறான வழிமுறைக ளைக் கையாளுகின்றன. ஆனால், இலங்கையில் இவ்வாறான ஏற்பா
டுகளுக்கு இடமில்லை. தாய்மொழிக்கல்வி
இலங்கையின் பல்கலைக்கழக வளர்ச்சியில் மற்றொரு பிரதான அம்சம், கலைத்துறை, சமூக அறிவியல் துறை, கல்வியியல், வணிக வியல், முகாமைத்துவம் என்பன தாய்மொழியில் கற்பிக்கப்பட்டு வருவதாகும். பாடசாலைகளில் சகல நிலைகளிலும் தாய்மொழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங் களும் இத்துறைகளில் தாய்மொழிக் கல்விக்கு இடமளித்தன. கலைத் துறைப் பாடநெறிகளில் (உதாரணமாக: பொருளியல், புவியியல்) உயர்பட்டப்படிப்புகளைக் கூட தாய்மொழியில் பயில அனுமதி கிடைத்தது. தாய்மொழியில் முதுகலைமாணி மற்றும் கலாநிதிப் பட்ட ஆய்வேடுகள் சமர்ப்பிக்கப்பட்டன. இன்று இவ்வாறான உயர் பட்டங்களைப் பெற்ற பலர் தமது தாய்மொழியிலேயே ஆய்வேடு களை எழுதினர். கல்வியியல் துறையில் சமர்ப்பிக்கப்படும் பெரும் பாலான ஆய்வேடுகள் தாய்மொழியில் எழுதப்பட்டவை.
எவ்வாறாயினும் அண்மைக்காலங்களில் கோளமயமாக்கம், அதன காரணமாக ஆங்கிலமொழி பெற்றுவரும் உலகளாவிய முக்கியத்து வம் காரணமாக, இலங்கைப்பல்கலைக்கழகங்களில் இதுவரை தாய் மொழிக் கல்வியை வழங்கிய பலதுறைகள், தற்போது ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகம் செய்து வருகின்றன. உலகளாவிய ரீதியில் நெதர்லாந்து, ஜப்பான், சீனா, தாய்லாந்து மலேசியா முதலிய ஆங்கிலம பேசாத நாடுகளின் பல்கலைக்கழகங்கள் ஆங்கிலமொழி பெற்று வரும் முக்கியத்துவம் கருதி பல துறைகளில் ஆங்கிலவழிக் கல்வியை நாடும் வெளிநாட்டு மாணவர்களைக் கவரும் நோக்குடன் இவ்வா றான மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. உதாரணமாக, ஆங்கிலமொழிப் பாரம்பரியமற்ற சீனா மருத்துவக் கல்வியை ஆங்கிலமொழியில் வழங்கி வருவதும் இந்திய மாணவர்கள் அங்கு அனுமதி பெறுவதும் இன்றைய ஒரு பிரதான செல்நெறியாகும்.
இலங்கைப் பல்கலைக்கழகங்களில் உள்ள சமூக அறிவியல், கலை, கல்வியியல் துறைகளில் 1960களில் அகற்றப்பட்ட ஆங்கில வழிக்கல்வி தற்போது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு வருவது ஒரு பிரதான மாற்றம்.
-20

பேராசிரியர் சோசந்திரசேகரனி
பல்கலைக்கழக வளர்ச்சியின் சில அம்சங்கள்
1921ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இலங்கைப்பல்கலைக்கழகக் கல்லூரியும் அதனைத் தொடர்ந்து1942இல் நிறுவப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகமும் ஆரம்பத்தில் மேன்மக்களுக்கான (Elite) உயர் கல்வி நிறுவனங்களாக அமைந்தன. உயர்தரமான நகர்ப்புற ஆங்கிலப பாடசாலைகளில் கல்விபயின்றவர்களே அங்கு அனுமதி பெற்றனர். மேலைநாட்டுப் பாணியில் அந்நிறுவனங்கள் ஆங்கில மொழிவழி யில் சமூகத்தின் மேன்மக்களுக்கான உயர்கல்வி நிறுவனங்களாக அவை விளங்கின.
1942ஆம் ஆண்டில் 904 மாணவர்களுடனும் 55 ஆசிரியர்களுட னும் இலங்கைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அப்போது கலை, விஞ்ஞானம், மருத்துவம் முதலிய துறைகளே இருந்தன (கலைத்துறை மாணவர் 43%, விஞ்ஞான மாணவர் 18%, மருத்துவ மாணவர் 38%). பிற்காலத்தில், 2000மாம் ஆண்டின் பின்னர் ஏற் பட்ட பல்கலைக்கழக வளர்ச்சியை விளங்கிக்கொள்ள, 1965ஆம் ஆண்டுக்குரிய புள்ளிவிபரங்களை நோக்குவோம்;அப்போதுமாணவர் தொகை 10,423 ஆசிரியர் தொகை 318. 1958இல் வித்தியோதய வித்தி யாலங்காரப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தப்பட்டமையால் இத்தொகை அதிகரிப்பு - 24 ஆண்டுகாலப்பகுதியில் 10 மடங்கு அதிக ரிப்பு உள்வாங்கப்பட்டது. அத்துடன் இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பு, பேராதனை என இரு பல்கலைக்கழகங்களாக்கப்பட்டது.
இப்பின்புலத்தில், 2006ஆம் ஆண்டளவில் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியில் ஏற்பட்ட வளர்ச்சி அடுத்துவரும் அட்ட வணையில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.

Page 13
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
அட்டவணை - 1
இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி (2006)
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
(10)
(11)
பல்கலைக்கழகங்களின் தொகை
போதனா பீடங்களின் தொகை
துறைகளின் தொகை
ஆசிரியர்கள் தொகை
ஊழியர்கள் தொகை
பட்டம் பெற்றவர்கள் தொகை
அ. முதல்பட்டம்
ஆ. பட்ட மேற்படிப்பு
அனுமதி பெற்றோர் தொகை (2009 இல் 20000 வரை)
ஆசிரியர் - மாணவர் விகிதம்
க.பொ.த உ/நி பரீட்சைக்கு அமர்வோரில் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெறுவோர்
அவர்களில் அனுமதி பெறுவோர்
உயர்கல்வி வயதெல்லையில் (20-24 வயது) உள்ளோரில் பல்கலைக்கழகக் கல்வி பயிலுவோர் சதவீதம் (2006)
1980இல் இச்சதவீதம்
1. 15 பல்கலைக்கழகங்களாலும்
(திறந்த பல்கலைக்கழகம் உட்பட) பயிலும் மொத்த மாணவர் தொகை
அ. பட்டதாரி மாணவர்
15
78
425
3818
13859
12067
3401
16598
15.2
58.21%
13.9%
3.4%
1.2%
96000
-22

பேராசிரியர் சோசந்திரசேகரனி
ஆ. அவர்களில் திறந்த பல்கலைக்கழக
மாணவர் 24000
11. பட்ட மேற்படிப்பு நிறுவகங்களில் பயிலும மாணவர் தொகை (மருத்துவம், விவசாயம், பாளி, பெளத்தம், தொல்பொருளியல்,
முகாமைத்துவம், விஞ்ஞானம் தொடர்பான நிறுவகங்கள்) 2492
III. பிற நிறுவகங்களில் பயிலும் மாணவர் தொகை (மனித வளமேம்பாடு, சுதேச மருத்துவம், கணினிப் பள்ளி, கம்பஹா ஆயுள்வேத நிறுவகம், நூலக, தகவல் நிறுவகம், மொறட்டுவ தகவல் தொழில்நுட்ப நிறுவகம், சுவாமி விபுலானந்தர் அழகியற் கல்வி நிறுவகம்) 93OO
(12) பல்கலைக்கழகக் கல்விக்கான மொத்த செலவு 1000கோடி இதில் மூலதனச் செலவு 300கோடி
நடைமுறைச் செலவு 700கோடி
தொகை ரீதியாகப் பல்கலைக்கழகங்கள் தற்போது 15 ஆக அதிகரித்துள்ளன. மாணவர் தொகை 1942 உடன் ஒப்பிடும்போது 60 மடங்காக உயர்ந்துள்ளது. போதனா பீடங்கள், பாடத்துறைகள், ஆசிரியர்தொகை என்பனவும் அதிகரித்துள்ளன (பார்க்க அட்டவணை 1)

Page 14
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
மாகாண ரீதியாகப் பல்கலைக்கழகங்கள்
பல்கலைக்கழக வளர்ச்சியின் மற்றொரு பிரதான அம்சம் மேல் மாகாணத்தையும் மத்திய மாகாணத்தையும் மையமாகக் கொண்டி ருந்த பல்கலைக்கழகக் கல்வி மாகாணங்கள் தோறும் விரிவுபடுத்தப் பட்டமையாகும். இறுதியாக, கல்வியில் பின்தங்கியிருந்த ஊவா மாகாணத்திலும் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. தற்போது மேல்மாகாணத்தில் 5 பல்கலைக்கழகங்கள்; கிழக்கில் 2 பல்கலைக் கழகங்கள், வட மாகாணம், தென்மாகாணம், சப்பிரகமுவா மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம், மத்திய மாகாணம் என்பவற்றில் தன்னாட்சித் தன்மை வாய்ந்த ஒவ்வொரு பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. மாகாண ரீதியான இப்பல்கலைக் கழகங்கள்தொடங்கப்பட்ட, ஆண்டு, அங்கு பயிலும் மாணவர் தொகை, அங்கு இயங்கும் போதனா பீடங்கள் பற்றிய விபரங்கள் மற்றொரு அட்டவணை II இல் தரப்பட்டுள்ளன.
மாகாண ரீதியான பல்கலைக்கழகங்கள், தாம் அமைந்துள்ள மாகாண சமூகத்தின் உயர் கல்வித் தேவைகளையும் அவ்வப்பகுதி களின் உயர்மட்ட மனித வலுத்தேவைகளையும் கருத்திற் கொண்டு இயங்க வேண்டிய அவசியம் உண்டு. இச்சகல பல்கலைக்கழகங் களும் “தேசிய பல்கலைக்கழகங்கள்” என்ற முறையில் அதிகாரபூர்வ மாக சகல இன மாணவர்களுக்கும் இடமளிப்பவை. தேசிய அம்சத் துடனும் குறிக்கோளுடனும் இயங்கும் அதேவேளையில் தமது பிராந் தியத்திற்குரிய அடையாளங்களை மேம்படுத்தும் நோக்குடனும் செயற்படுபவை.
இதற்கு ஒரு முக்கிய உதாரணத்தைக் கூறலாம் கிழக்கிழங்கைப் பல்கலைக்கழகத்தில் விபுலாநந்தர் அழகியற் கற்கை நிறுவகம், யாழ். பல்கலைக்கழகத்தில் இராமநாதன் நுண்கலை அக்கடமி, தென்கிழக் குப்பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கை, அரபுமொழிப்போதனா பீடம் என்பன முறையே தமிழர், முஸ்லிம்கள் ஆகியோருக்கான பண பாட்டுக் கல்விக்கான நிறுவனங்களாக வளர்ச்சி பெற்றுள்ளமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சுருங்கக்கூறின், இவ்வாறு மாகாண ரீதியாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், மேலதிகமாக உயர்கல்வி வாய்ப்புகளை தேசிய ரீதியாக விரிவு செய்துள்ள அதேவேளையில், தாம் அமைந்துள்ள பிராந்தியங்களின் சமூக, கலாசார அபிவிருத்தியைக் கருத்திற்கொண்ட முறையிலும் இயங்கி வருகின்றன.
-24

பேராசிரியர் சோசந்திரசேகரனி
போதனா பீடங்கள், துறைகள் என்பன 1942இன் பின் அதிகரித்து தற்போது முழுப் பல்கலைக்கழக அமைப்பிலும் தற்போது (2007) 78 போதனா பீடங்களும் 449 துறைகளும் காணப்படுகின்றன. (1942இல் கலை, கீழைத்தேய மொழிகள், விஞ்ஞானம், மருத்துவம் ஆகிய நான்கு போதனா பீடங்களும் 17 துறைகளும் இருந்தன).
மாணவர் தொகை 1942இல் 1000மாக இருந்து, 2007இல் 65000மாக அதிகரித்தது. அத்துடன் மேலதிகமாக அமைக்கப்பட்ட திறந்த பல்கலைக்கழகத்தில் 25000 மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். பட்ட மேற்படிப்பு
பல்கலைக்கழக வளர்ச்சியின் மற்றொரு முக்கிய அம்சம் பட்ட மேற்படிப்பு (Postgraduate) நிறுவகங்களாகும். பல்கலைக்கழங்கள் அடிப்படையில் முதற்பட்டக் கற்கை நெறிகளையே வழங்கி வந்தன. 1974 தொடக்கம் மருத்துவம், விவசாயம், பாளி, பெளத்தம், தொல் பொருளியல், முகாமைத்துவம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற துறைகளில் பட்ட மேற்படிப்பு நிறுவகங்கள் உருவாக்கப்பட்டன. 1964 மாணவர்கள் பயிலும் இந்நிறுவகங்களுக்கு 17 கோடி ரூபா ஒதுக்கப்படுகின்றது. பிரதானமாக மருத்துவத் துறையில் 934 மாண வர்களும் பயிலுகின்றனர். முகாமைத்துவ நிறுவகமானது சுயநிதியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இவற்றைவிட, 1975இன் பின்னர் மனிதவள மேம்பாடு, சுதேச மருத்துவம், கணினிக்கல்வி, நூலக தகவல் துறை விஞ்ஞானம், உயிர்ரசாயனம், உயிர்தொழில்நுட்ப வியல், மனிதப்பண்பியல், சமூக அறிவியல், அழகியல் கல்வி ஆகிய துறைகளுக்கான நிறுவகங்கள் ஏற்படுத்தப்பட்டன. 7051 மாணவர் பயிலும் இந்நிறுவகங்களுக்கு 75கோடி ரூபாய் உதவுதொகை வழங் கப்படுகின்றது. மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தில் 3705 மாணவர் களும் கணினிப் பள்ளியில் 983 மாணவர்களும் கல்வி பயிலுகின்
ஆண்டுதோறும் பட்டம் பெற்று வெளிவரும் பட்டதாரிகளின் தொகையிலும் அதிகரிப்பைக் காணமுடியும். 1942-1965 காலப்பகுதி யில் 23 ஆண்டு காலப்பகுதியில் வெளியேறிய பட்டதாரிகளின் தொகை 10,858; இதில் 54% கலைத்துறைப் பட்டதாரிகள்; 20% மருத்துவப் பட்டதாரிகள். தற்போது ஒரு ஆண்டுக்கு 16,812 பட்ட தாரிகளும் 3071 பட்ட மேற்படிப்புப் பட்டதாரிகளும் வெளியேறும் நிலை காணப்படுகின்றது (2006)
-25

Page 15
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
அட்டவணை 11 இலங்கைப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்ட ஆண்டும் மொத்த மாணவர் தொகையும் (2006)
பல்கலைக்கழகங்கள் தொடங்கப் மொத்த
பட்ட ஆண்டு மாணவர்
தொகை
கொழும்புப் பல்கலைக்கழகம் 1942 10870
பேராதனைப் பல்கலைக்கழகம் 1942 11445
பூரீ ஜயவர்த்தனபுரப்பல்கலைக்கழகம் 1959 8959 களனிப் பல்கலைக்கழகம் 1959 9469
மொறட்டுவைப் பல்கலைக்கழகம் 1972 4003
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் 1974 5981
ருகுணு பல்கலைக்கழகம் 1978 7221
திறந்த பல்கலைக்கழகம் 1981 23992
கிழக்கிழங்கைப்பல்கலைக்கழகம் 1981 2122 தென்கிழக்குப் பல்கலைக்கழகம் 1995 1096
ரஜரட்டைப் பல்கலைக்கழகம் 1995 2598
சப்பிரகமுவ பல்கலைக்கழகம் 1995 2553
அரங்கியல் கலைப்பல்கலைக்கழகம் 2005 2864
ஊவா வெல்லச பல்கலைக்கழகம் 2008 161
ஆதாரம்: ப.மா.ஆணைக்குழு ஆவணங்கள்

பேராசிரியர் சோசந்திரசேகரனி
அட்டவணை II இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றோர் கற்கைநெறி வகைப்படி (2005-2007)
கற்கை நெறிகள் பட்டம் பெற் பட்டம் பெற் I பட்டம் பெற்
Ggpnrif றோர் றோர் தொகை தொகை தொகை (2005) (2006) (2007) கலைத்துறைப்பட்டங்கள் 2410 4405 4350
முகாமைத்துவம்/வர்த்தக வியல் பட்டங்கள் 2357 21.98 2020
சட்டவியல் பட்டம் 345 327 300
விஞ்ஞானம் பட்டம் 1402 2348 2460 பொறியியல் பட்டம் 755 809 810
மருத்துவப்பட்டம் 593 896 900
பல்மருத்துவப்பட்டம் 74 123 75
விவசாயப்பட்டம் 554 430 435
விலங்கு மருத்துவப்பட்டம் 74 64 60 கட்டடக்கலை/தொகை அளவீட்டுத்துறைப்பட்டம் 95 13 70 கணினி விஞ்ஞானப்பட்டம் 100 2OO
அட்டவனை IV உயர்கல்வித்துறைச் செலவு
ஆண்டு தொகை (ரூபா)
மில்லியன்களில் 2005 8,178
(6,045)
2006 12,607
(9,791)
2007 12,281
(9,302)
* அடைப்புக்குறிக்குள் நடைமுறைச் செலவு
-27

Page 16
இலங்கையில் உயர்கல்வி பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும் விசேட துறைகளுக்கான பல்கலைக்கழகங்கள்
இலங்கையில் பல்கலைக்கழக வளர்ச்சியின் மற்றொரு பிரதான அம்சம், சில விசேட துறைகளுக்கான பல்கலைக்கழகங்கள் நிறுவப் பட்டமையாகும். மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் யாவும் கலை, மனிதப் பண்பியல், விஞ்ஞானம், மருத்துவம் போன்ற போதனா பீடங்களைக் கொண்டிருந்தவிடத்து, 1972இல் நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் மொறட்டுவையில் ஒரு தொழில்நுட்பப்பல்கலைக கழகமாக நிறுவப்பட்டது. கட்டடக்கலை, பொறியியல், தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த போதனா பீடங்கள் மட்டுமே அங்கு அமைக்கப்பட்டன. அத்துடன், 2005ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் அரங்கக் கலைப் பல்லூடகக்கலை, கலைகளின் கொள்கை, வரலாறு, கண்டிய நடனம், இந்திய, ஆசிய நடனம், சப்ர கமுவ நடனம், வட இந்திய இசை, பிரயோக இசை, கர்நாடக இசை, மேல்நாட்டு இசை ஒப்பியல் இசை போன்ற அழகியல் துறைகளைக் கொண்ட விசேட பல்கலைக்கழகமாக ஏற்படுத்தப்பட்டது. வெளி நாடுகளில் கல்வியியல் பல்கலைக்கழகங்கள், கல்வித்திட்டமிடல், பல்கலைக்கழகம், விளையாட்டுத்துறைப் பல்கலைக்கழகம் என “மரபை மீறிய" விசேட பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவதும் குறிப்பிடதக்கது.
மேலும் வயம்பப் பல்கலைக்கழகம், ஊவா வெல்லச பல்கலைக்கழகம் என்பன கலை, சமூக அறிவியல் போன்ற“கட்டாய மரபுவழி" போதனா பீடங்களை ஏற்படுத்தி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வயம்பாப் பல்கலைக்கழகப் ஊவா வெல்லச பல்கலைக் போதனா பீடங்கள் கழகப் போதனா பீடங்கள்
(1) விவசாயம், பெருந்தோட்ட (1) விஞ்ஞானம், தொழில்நுட்பவியல்
முகாமைத்துவம் (2) பிரயோக விஞ்ஞானம் (2) முகாமைத்துவம் (3) வியாபார, நிதிக்கற்கைநெறி (3) விலங்கு விஞ்ஞானம், ஏற்றுமதி
விவசாயம் (4) கால்நடை, போஷாக்கு, கடற்
றொழில்
-28

பேராசிரியர் சோசந்திரசேகரன்
பாலினமும் பல்கலைக்கழகக் கல்வியும்
மாணவர் சேர்க்கை என்னும் விடயத்தைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகங்கள் மட்டுமன்றி பாடசாலை முறைமையிலும் மற் றொரு சிறப்பம்சம் உண்டு. 2004-2006 வரையான புள்ளிவிபரங் களின்படி பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதிபெறும் மாணவர் தொகையில் ஆண்களைவிடப் பெண்களின் தொகை அதிகம்; அவ் வாறே அனுமதி பெறும் மாணவர்களில் பெண்களின் தொகை ஆண் களைவிட அதிகம்; அதனால் இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வி யில் பாலின சமத்துவம் சிறப்பாகப் பேணப்படுவதோடு, பெண்கள் அனுமதியில் எதுவித பாகுபாடும் இல்லை என்பது ஒரு முக்கிய மான சாதனை (பார்க்க அட்டவணை IV ). 2006ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மாணவரில் 57% மானவர்கள் பெண்களாவர்.
கலை, மனிதப் பண்பியல் துறைகளில்தான் பெண்கள் தொகை அதிகம் எனக் காலங்காலமாக நம்பப்பட்டது. ஆனால் இலங்கையில் நிலைமை சற்று வேறுபட்டது. பொறியியல் மற்றும் இத்துறை தொடர்பான கணிதம், பெளதீகம் துறை தவிர்ந்த ஏனைய துறை களில் பெண்கள் கணிசமான அளவு பங்குகொள்வது குறிப்பிடத் தக்கது. (விவசாயத்துறையில் 53%, மருத்துவத்துறையில் 53%, பொறியியல் துறையில் 22%, மனிதப் பண்பியல் துறையில் 60% பெண்களாவர்).
உயர்கல்வி, இடைநிலைக்கல்வி என்பவற்றைப் பொறுத்தவரை யில், பெண்கல்வியில் இலங்கையின் சாதனை, இலங்கையோடு ஒத்த பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளுடனும் வளர்ச்சியடைந்த நாடுகளுடனும் ஒப்பிடும்போது சிறப்பாக உள்ளதாக உலக வங்கி யின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன (அவ்வாறான நாடுகள் - பொருளா தார ரீதியாக ஒப்பிடக்கூடிய நாடுகள்-இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, ஆர்மீனியா). உயர்கல்வித்துறையில் பாலின சமத்துவத்தை நிறுவுவதில் இலங்கை நாடு வியட்னாம், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, ஈரான் ஆகிய நாடுகளை விட முன்னிற்கின்றது. அத்துடன் பாடசாலை நிலையில் தரம் 9 தொடக்கம் பல்கலைக் கழகக் கல்விவரை பெண்களின் சதவீதம் அதிகரித்துக் காணப்படுவ தாகக் கல்வி அமைச்சினதும் பல்கலைக்கழக ஆணைக்குழுவினதும் தரவுகள் தெரிவிக்கின்றன. (தரம் 9-11 வரை பெண்கள் சேர்க்கை சதவீதம் 51, தரம் 12-13 வரை 57%, பல்கலைக்கழகக் கல்வி நிலையில் 57%).
-29

Page 17
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
அட்டவணை -V பல்கலைக்கழகக் கல்விக்குத் தகுதி பெறுவோரும் அனுமதி பெறுவோரும்
ஆண்டு தகுதி அனுமதி
பெற்றோர் பெற்றோர் சதவீதம்
2004 111725 14520 13.0%
2005 118770 16598 13.9%
2006 119955 17196 14.3% தகுதி அனுமதி பெற்றோரில் பெற்றோரில் ஆண்கள் ஆண்கள்
2004 43740 6851
பெண்கள் பெண்கள்
67985 7669
2005 ஆண்கள் ஆண்கள்
45.505 7843
பெண்கள் பெண்கள்
73268 9337
2006 ஆணகள ஆணகள
45310 74.71
பெண்கள் பெண்கள்
74645 9725

(Supinaffluff (8&navigg(88&sj60
கற்கை நெறிகள்
இலங்கையின் பல்கலைக்கழகக் கல்வியின் மற்றொரு அம்சம், வேலைவாய்ப்புக் குறைந்த கலை/சமூக அறிவுத் துறையில் பயிலு வோரின் சதவீதம் படிப்படியாக வீழ்ச்சியடைந்தமையாகும். 1968இல கலைத்துறை மாணவரின் சதவீதம் 73% (3650 மாணவர்), மருத்து வத்துறை மாணவர் சதவீதம் 20% (926 மாணவர்), விஞ்ஞானத்துறை மாணவர் 08% (384 மாணவர்). இவ்வாறான நிலை 1968 தொடக்கம் நீடித்துக் காணப்பட்டது. ஆனால், அண்மைக்காலங்களில் விஞ்ஞா னம் சார்ந்த கற்கை நெறிகளில் மாணவர் சதவீதம் அதிகரித்தமை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். எவ்வாறாயினும் பிற்காலத்தில் தொடங்கப்பட்ட வர்த்தகவியல், முகாமைத்துவம் போன்ற சார்பள வில் இலகுவான (Soft) கற்கை நெறிகளிலும் மாணவர் தொகை அதிகரித்துள்ளது. மொத்தத்தில் கலை, முகாமைத்துவம், சட்டம், முகாமைத்துவம் போன்ற துறைகளில் 57 சதவீதமானவர்கள் பயிலு வது குறிப்பிடத்தக்கது. (பார்க்க அட்டவணை-VI) கலை, மனிதப் பண்பியல் போன்ற துறைகளின் அவசியம் பற்றிய உலக வங்கியின் கருத்து பின்வருமாறு அமைகின்றது:
"கலை பாடங்களும் மனிதப் பண்பியல் கற்கை நெறி களும் (மொழிகள், சமய நாகரிகங்கள்) ஒரு நாட்டின் கலாசாரத்தைப் பேணுவதிலும் வளர்ப்பதிலும் (புதிய தலைமுறையினருக்கு) வழங்குவதிலும் பிரதான பங்கை வகிக்கின்றன. அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு இக்கற்கை நெறிகளுக்கு உரிய இடம் வழங்கப்படல் வேண்டும்"
எவ்வாறாயினும், வரிப்பணத்தைக் கொண்டியங்கும் அரசாங் கப் பல்கலைக்கழகங்களில் 60% மாணவர்கள் கலைப்பாங்கான துறைகளிலும் 40% மாணவர்கள் விஞ்ஞான, தொழில்பாங்கான - நாட்டின் பொருளாதாரத் தேவைகளுடன் தொடர்புடைய துறை களில் பயிலுவது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. இப்பொரு ளாதார தேவைகள், நாட்டின் மனிதவலுத் தேவைகள் என்பவற்று டன் தொடர்பற்ற கலைத்துறைகளில் அதிக மாணவர் பயிலுவது பெரிதும் விமரிசிக்கப்படும் அம்சமாகும்.
ஏற்கனவே கூறியதுபோல, விஞ்ஞானம், பொறியியல், மருத்து வம் போன்ற துறைகளில் மாணவர் சேர்வு அதிகரித்து வருவது ஒரு
-31

Page 18
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
9|L6.60600T VI கற்கைநெறி வகைப்படி அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர், 2006
கற்கைநெறி மாணவர் தொகை சதவீதம்
5686)|GRO 21,786 34%
முகாமைத்துவம்
வர்த்தகம், சட்டம் 14,802 23%
விஞ்ஞானம், பொறியியல்
கட்டடக் கலை,
கணினி விஞ்ஞானம் 17,253 27%
ம், பல்
விலங்கு மருத்துவம் 6,398 10%
விவசாயம் 3,736 O6%
மொத்தம் 63,975 100%
நல்ல அறிகுறியாகும். பல்கலைக்கழகக் கல்வி கூடிய அளவுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச தொழிற்சந்தைகளின் மனித வலுத் தேவைகளை நோக்கி இணங்கிச் செல்வதை இது குறிக்கின்றது. அனுமதிபெறும் மாணவர்களில் 38 சதவீதமானவர்கள் இத்தகைய கற்கை நெறிகளை நாடுகின்றனர். மாணவர் சேர்வில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.(பார்க்க அட்டவணை VII)
உலகப் பொருளாதாரத்தில் சிறப்பாகச் செயலாற்றி வரும் பல நாடுகளின் புள்ளி விபரங்களின்படி, அந்நாடுகளின் உயர்கல்வி முறைமையில் விஞ்ஞான, தொழில் நுட்பக்கற்கை நெறிகளில் மாணவர் சேர்வு அதிகரித்து வருகின்றது. இலங்கையும் தற்போது இந்நாடுகளைப் பின்பற்றி, விஞ்ஞானக் கற்கை நெறிகளில் மாணவர் அனுமதி அதிகரித்து வருகின்றது.
-32

பேராசிரியர் சோசந்திரசேகரனி
9-Leni6UO6UUT VIII கற்கைநெறி வகைப்படி அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் மாணவர் அனுமதி (2005/2006)
கற்கைநெறி மாணவர் தொகை சதவீதம்
566) 5,100 33.3%
முகாமைத்துவம்
வர்த்தகவியல், சட்டம் 3,550 22.9%
விஞ்ஞானம், பொறியியல்
கட்டடக் கலை,
கணினி விஞ்ஞானம் 4,050 26.5%
மருத்துவம், பல் மருத்துவம்
விலங்கு மருத்துவம் 1,750 11.4%
விவசாயம், உணவு விஞ்" 900 5.9%
மொத்தம் 15,300 100%
இலங்கைப் புள்ளிவிபரங்களின்படி 2001-2006 காலப்பகுதியில் கலைத்துறை மாணவர் தொகை 27% த்தால் அதிகரித்தவிடத்து விஞ்ஞானம், பொறியியல் துறை மாணவர் தொகை 50% த்தாலும் மருத்துவத்துறை மாணவர் தொகை 28% த்தால் அதிகரித்தது; முகா மைத்துவ மாணவர் தொகை 16%த்தாலும் விவசாயத்துறை மாணவர் தொகை 26% த்தாலும் அதிகரித்தது. மொத்தத்தில் இக்காலப்பகுதியில் பொருளாதாரத்திற்குப் பயனுள்ள, வேலைவாய்ப்பில் சாதகமான நிலைமைகளைக் கொண்ட கற்கை நெறிகளைப் பயில்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கலைத்துறையில் ஏற்பட்டுள்ள 26% அதிகரிப்பு அத்துறையில் கற்பதற்கு மாணவர்களிடமிருந்து எழுந்த சமூக கேள்வியின் (Deman) விளைவாகும்.
-33

Page 19
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பல்கலைக்கழக வகைப்படி மாணவர் தொகை
இலங்கையில் உள்ள 15 பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சமமற்ற முறையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் (பார்க்க அட்டவணை) இவற்றில் ஐந்து பெரிய பல்கலைக்கழகங்களில் முழுநேர மாணவர்களில் 50% க்கு அதிகமானோர் பயிலுகின்றனர். இவ்வொவ்வொரு பல்கலைக்கழகங்களில் 7000க்கும் அதிகமான மாணவர்கள் பயிலுகின்றனர். மொத்த மாணவர்களில் (73,491 - 2007) 33% மானவர்கள் கொழும்பு மற்றும் பேராதனைப் பல்கலைக் கழகங்களில் உள்ளனர். ஏனைய பல்கலைக்கழகங்களில் IOOO-5OOO மாணவர்கள் வரை பயிலுகின்றனர். ஐந்து பெரிய பல்கலைக் கழகங்கள் பல தசாப்தங்களாக இயங்கி வருபவை. கொழும்புப் பல் கலைக்கழகக் கல்லூரியுடன் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்; பேராதனைப் பல்கலைக்கழகம் 1952இல் நிறுவப்பட்டது. களனி, ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்கள் 1950களின் இறுதிப்பகுதியில் தொடங்கப்பட்டவை. ஏனைய சிறிய, புதிய பல்கலைக்கழகங்கள் 1990களிலும் புதிய நூற்றாண்டின் முதலாம் தசாப்தத்திலும் நிறுவப்பட்டவை. ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு பல்கலைக் கழகம் என்ற முறையில், நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகக் கல்வியைப் பரப்பும் அரசாங்கக் கொள்கையின் விளைவாக இவை ஏற்படுத்தப்பட்டன. அண்மைக்காலங்களில் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகங்களே சிறியவையாகக் காணப்படுகின்றன. தமிழ்ப் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்கு மாகாணங் களில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களில் எல்லாமாக9549 மாணவர்கள் பயிலுகின்றனர் (யாழ் - 6084, கிழக்கு - 2242, தென்கிழக்கு 1223; இது மொத்த பல்கலைக்கழக மாணவரில் 13%).
-34

பேராசிரியர் சோசந்திரசேகரன்
g|L6.606OOT VII தேசியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மொத்த மாணவர் தொகை (2007)
பல்கலைக்கழகங்கள் மாணவர்தொகை சதவீதம்
கொழும்பு 12158 17%
பேராதனை 11736 16%
பூரீ ஜயவர்த்தனபுர 9291 13%
களனி 8071 11%
மொறட்டுவை 4718 O7%
யாழ்ப்பாணம் 6084 O8% ருகுணை 7203 10%
கிழக்கு 2242 O3%
தென்கிழக்கு 1223 O2%
ரஜரட்டை 3269 05%
சப்பிரகமுவா 2668 O4% ஊவா வெல்லச V 362 O1%
வயம்பா 1833 O3%
கட்புலக்கலைகள் 2633 O4%
மொத்தம் 73491 100%
ஆதாரம் : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆவணங்கள்
-35

Page 20
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
வெளிவாரிப்பட்டங்கள்
சில பல்கலைக்கழகங்கள் தமது பட்டப்படிப்புகளுக்குச் சமூகத் தில் உள்ள தேவையைக் கருத்திற் கொண்டு வெளிவாரிப் பட்ட நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்தி வருகின்றன. குறிப்பிட்ட தகுதிக ளைக் கொண்ட மாணவர்கள் சில பல்கலைக்கழகங்களில் வெளிவாரி மாணவர்களாகப் பதிவு செய்து பரீட்சைகளுக்கு அமர்ந்து பட்டங்க ளைப் பெற முடியும். தற்போது எட்டுப் பல்கலைக்கழகங்கள் கலை, வர்த்தகமும் முகாமைத்துவமும், விஞ்ஞானமும் தகவல் தொழில்நுட் பமும் ஆகிய துறைகளில் இவ்வெளிவாரி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்திவருகின்றன."முழுநேரக் கற்கையுடன் ஒப்பிடும்போது இவை இரண்டாந்தரக் கல்வியை வழங்குகின்றன; இவற்றின் கல்வித்தராத ரங்கள் குறைவு; மாணவர்களுக்குக் கற்பதற்கான உதவி எதுவும் வழங்கப்படுவதில்லை; அவற்றுக்கான நிதிவசதிகளும் ஒழுங்கமைப்பு ஏற்பாடுகளும் போதுமானவையல்ல" என்பது உலக வங்கி ஆய்வா ளர்களின் கருத்து. * 2007இல் இந்நிகழ்ச்சித் திட்டங்களில் சேர்ந்து கொண்ட
மொத்தமாணவர் தொகை 226,000
&
&
2007இல் புதிதாகப் பதிவு செய்து கொண்ட மாணவர் தொகை 42,277
* இவர்களில் கலைத்துறைக் கற்கை நெறிகளில் பதிவு செய்து
கொண்ட மாணவர் தொகை 166,000
* மொத்த மாணவர்களில் 80% மானவர்கள் பேராதனை, களனி, பூரீஜயவர்தன பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பதிவு செய் துள்ளனர். கலைத்துறை தவிர்ந்த வர்த்தகம், முகாமைத்துவம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளி லும் மாணவர் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
எவ்வாறாயினும் வெளிவாரிப்பட்டங்களுக்குப்பதிவுசெய்துள்ள மாணவர் தொகைக்கும் (225,000) வெளிவாரிப் பட்டங்களைப் பெறுவோர் தொகைக்கும் (5,324) இடையில் உள்ள வேறுபாட்டைக் காண்க; ஏராளமானோர் சித்தி பெறுவதில்லை அல்லது பரீட்சை களுக்கு அமர்வதில்லை அல்லது இடையில் கல்வியைக் கைவிட்ட வர்கள் என்றே கொள்ளப்படல் வேண்டும். ஆயினும், இன்று உயர் கல்வியில் மாணவர் சேர்வு பற்றிய மொத்த விகிதத்தைக்
-36

பேராசிரியர் சோசந்திரசேகரனி
கணக்கிடுவோர், வெளிவாரிப்பட்டத்துக்குப் பதிவு செய்தோரையும் (225,000) உயர்கல்விபயிலும் மாணவர்களாகவே கருத்திற் கொள் கின்றனர் (உலக வங்கி ஆய்வாளர்கள் உட்பட)
“வெளிவாரிப் பட்டக்கற்கை நெறிகளை நடத்தும்) “தொழிற்சாலைகளைக் (தனியார் போதனை நிலையங்களை) கண்காணித்து ஒழுங்குபடுத்த விதி முறைகள் உருவாக்கப்படும். தேசிய பல்கலைக்கழகங் களின் வெளிவாரிப்பட்டக்கற்கை நெறிகள் தொடர்பாக ப.மா. ஆணைக்குழு கவலை கொண்டுள்ளது. களனிப் பல்கலைக்கழகத்தில் 70,000 பேர் வெளிவாரிக் கற்கை நெறிகளில் பதிவு செய்துள்ளனர். குறைந்த வளங்க ளுடன் இம்மாணவர்களுக்கு இக்கற்கை நெறிகளை எவ்வாறு நடத்துவது? இதனைக் கட்டுப்படுத்தாவிடில் உள்வாரிக் கற்கை நெறிகள் பாதிப்படைய நேரிடும்.
தனியார் போதனை நிலையங்கள் மாணவர்களைச் சுரண்டுகின்றன.
வெளிவாரி மாணவர்கள் பயிலும் பாடங்கள் வேலைவாய்ப்புக்குப் பொருத்தமற்றவை"
பேராசிரியர் விஸ்வவர்ணபால
(Daily. Mirror, July 29, 2009)
-37

Page 21
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
அட்டவணைIX பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்துள்ள மொத்த வெளிமானவர் தொகையும் (2007) பட்டம் பெற்றவர்கள் தொகையும் (2006)
பல்கலைக்கழகங்கள் 2006இல்பட்டம் 2007 பதிவு
பெற்றவர்கள் செய்தவர்கள்
பேராதனை 1889 25,435
பூரீ ஜயவர்த்தனபுர 1587 97,244
களனி 1089 58,360 கிழக்கு 52 '5.325 *لاش
ருகுண 592 20,527
யாழ்ப்பாணம் 15,489
சப்பிரகமுவா 406
மொறட்டுவை 89
கணினிப்பள்ளி 115 2,289 (கொழுபல்கலைக்கழகம்
மொத்தம் 5,324 225,208
அட்டவணை X பல்கலைக்கழக வகைப்படி வெளிவாரிக் கற்கை நெறிகள், மொத்த மாணவர் தொகை
பல்கலைக்கழகங்கள் கற்கைநெறி 2007
பேராதனை 56069 25435
பூரீ ஜயவர்த்தனபுர 566) 48933
முகாமைத்துவம் 38.188
வர்த்தகவியல் 5293
97244
களனி 356δ. 69 54377
வர்த்தகம் 1784
-38

பேராசிரியர் சோசந்திரசேகரனி
விஞ்ஞானம் 600
முகாமைத்துவம் 1599
கிழக்கு 5836O
வர்த்தகம், முகாமைத்துவம் 1323
விஞ்ஞானம் 351
விவசாயம் 219
கலை கலாசாரம் 3430
ருகுணை se 20573
யாழ்ப்பாணம் 563)6S 12900
வர்த்தகம் 2337
நுண்கலை 252
15489
சப்பிரகமுவா See 4O6
விவசாயம்/முகாமைத்துவம்
கணனிப்பள்ளி
(கொழு.பல்கலை) கணினித் தொழில்நுட்பம் 2289
மொத்தம் 225119
பல்கலைக்கழகக் கல்விக்கான அரசாங்கச் செலவு
பல்கலைக்கழகக் கல்விக்கான வாய்ப்புகளை விரிவு செய்யவும் உயர்கல்வித் தராதரங்களில் மேம்பாடு காணவும் உயர்கல்வியில் பொருத்தப்பாட்டை ஏற்படுத்தவும் ஏராளமான வளங்கள் தேவை. அண்மைக்காலங்களில் அரசாங்கத்தின் உயர்கல்விச் செலவு ரூ.2008 கோடியாக அதிகரித்துள்ளது (2007இல் ரூ.1510 கோடி). இதில் வெளிநாட்டு நிதி உதவியும் அடங்கும் (2007இல் ரூ 184 கோடி, 2008இல் 279 கோடி). இத்தொகைகள் 2011இல் ரூ 2323 கோடி ரூபாவாக அதிகரிக்கப்பட உள்ளன.
-39

Page 22
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
முக்கிய ஒரு குறிப்பு என்னவெனில் பல்கலைக்கழகங்களில் பயிலும் 70,000 மாணவர்களுக்கான செலவு 2007இல் ரூ 1345 கோடி, அதாவது அவ்வாண்டில் ஒரு மாணவருக்கான (அலகுச்) செலவு ரூ.203,011; அதேவேளையில் பாடசாலைக் கல்வியைப் பொறுத்த வரையில் ஒரு மாணவருக்கான (அலகுச்) செலவு ரூ 15082 மட்டுமே. பல்கலைக்கழகக் கல்வி எந்த அளவுக்குச் செலவுமிக்கது என்பதை இப்புள்ளி விபரம் காட்டுகின்றது.
இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் செலவு மிக்க பல்கலைக்கழகங்கள் கொழும்புப் பல்கலைக்கழகம் (ரூ 121கோடி), பேராதனைப் பல்கலைக்கழகம் (ரூ 216 கோடி), பூgஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் ரூ 103 கோடி, களனி பல்கலைக்கழகம் (ரூ.115 கோ) பிற பல்கலைக்கழகங்களுக்கான செலவுகளை உரிய அட்டவணை ளயில் காண்க.
பல்வேறு உலகநாடுகள் உயர்கல்விக்குச் செலவிடும் நிதியுடன் ஒப்பிடும்போது இவ்விடயத்தில் இலங்கையின் பின்தங்கிய நிலை புலப்படும். மொத்த தேசிய உற்பத்தி (GNP),மொத்த அரசாங்கச் செலவு என்பவற்றில் உயர்கல்விக்குச் செலவிடும் சதவீதம் இவ்விடயத்தில் கருத்திற் கொள்ளப்படுகின்றது. இலங்கை தனது மொத்த தேசிய உற்பத்தியில் 2.8% த்தையும் அரசாங்கச் செலவில் 8.3% த்தையும் கல்வியில் செலவிடுகின்றது. ஆனால், மலேசியா, தாய்லாந்து, ஈரான், இந்தோனேசியா முதலிய நாடுகள் கல்விக்காகச் செலவிடும் சதவீதம் இதனைவிட அதிகம். அரசாங்கச் செலவைப் பொறுத்தவரையில் கல்விக்கு இலங்கை செலவிடும் சதவீதம் 8.3 எனின் பாகிஸ்தான் (12.2%) இந்தோனேசியா (17.2%), பிலிப்பைன்ஸ் (15.2%), ஈரான் (18.6%), தாய்லாந்து(15%), மலேசியா (25%) ஆகிய நாடுகள் கல்விச் செலவில் முன்னணியில் நிற்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த கல்விச் செலவில் உயர்கல்விக்கு இலங்கை ஒதுக்கும் செலவு 11.5%மாக இருக்குமிடத்து மலேசியா (34%), ஈரான் (19.9%), பிலிப்பைன்ஸ் (13.8%), இந்தியா (19.3%) ஆகிய நாடுகள் அதிக நிதி வளங்களை ஒதுக்குவது குறிப்பிடத்தக்கது. எல்லா வகையிலும், இலங்கையில் பொதுக்கல்வி, உயர்கல்வி என்பவற்றுக்கான அரசாங்க நிதி ஒதுக்கீடுகள், ஒப்பீட்டளவில் திருப்திகரமாக இல்லை.
-40

பேராசிரியர் சோசந்திரசேகரனி
அட்டவணை X பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கிடு - 2007
பல்கலைக்கழகங்கள் தொகை கொழும்பு ரூ.121 கோடி பேராதனை ரூ.206 கோடி பூரீ ஜயவர்த்தனபுர ரூ.103 கோடி களனி ரூ.115 கோடி மொறட்டுவை ரூ.100 கோடி யாழ்ப்பாணம் ரூ.82 கோடி ருகுணை ரூ.113 கோடி திறந்த பல்கலைகழகம் ரூ.55 கோடி கிழக்கு ரூ.56 கோடி தென்கிழக்கு ரூ.37 கோடி ரஜரட்டை ரூ.55 கோடி சப்பிரகமுவா ரூ.56 கோடி வயம்பா ரூ.46 கோடி அரங்கக்கலை ரூ.28 கோடி ஊவா வெல்லச ரூ.46 கோடி
அட்டவணை XII
அரசாங்க உயர்கல்விச் செலவு (கோடி ரூபாய்களில்)
". 2007 2008
மூலதனச் செலவு 543 870 நடைமுறைச் செலவு 966 11383 மொத்தம் 1510 2009 உள்நாட்டு நிதி 1326 1730 வெளிநாட்டு நிதி 184 279
(இச்செலவுகள் சகல பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்கள், பட்டப்பின் படிப்பு நிறுவகங்கள் உட்பட)
-41

Page 23
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை
1970கள் வரை க.பொ.த உ/த பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்சித்தி பெற்றவர்களின் மொத்தப் புள்ளிகளைக் கொண்டு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்னர், விஞ்ஞான கற்கைநெறிகளில் (குறிப்பாக, மருத்துவம், பொறியியல்) தமிழ் மாணவர்கள் தமது இனவிகிதாசாரத்துக்கு அதிகமாக இத்தொ ழில்வாய்ப்பு மிக்க கற்கை நெறிகளில் சேரும்நிலை ஏற்பட்டதால், பல்கலைக்கழ அனுமதியில் இன விகிதாசாரத்தைப் பேணும் முகமாக அனுமதிக் கொள்கைகள் மாற்றம் பெற்றன. "திறமை சித்தி” என்னும் தகுதிவிதி கைவிடப்பட்டு, பெரிதும் கண்டனத்துக்கு உட்பட்ட “புள்ளிகளைத் தரப்படுத்தும்" முறை பின்பற்றப்பட்டது. சிங்களமொழி மூல மாணவர்களுக்கும் தமிழ்மொழிமூல மாணவர்களுக்கும் வெவ் வேறு வெட்டுப்புள்ளிகள் (முறையே 229,250) தீர்மானிக்கப்பட்டன. 1970-1978வரை இவ்வாறான தரப்படுத்தல் முறையானது, தமிழ் மாணவர் அனுமதியைப் பெரிதும் குறைத்தமையால், அவர்கள் தாம் இன ரீதியாகப் பாரபட்சமாக நடத்தப்படுவதாகத் தமது விரக்தியைத் தெரிவித்தனர். இவ்விரக்தியும் ஏமாற்றமும் வடபகுதியில் ஆயுதம் ஏந்திய இளைஞர் போராட்டம் தீவிரமடைய ஒரு பிரதான காரணம் எனப் பல ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
1978இல் இத்தரப்படுத்தல் முறை கைவிடப்பட்டு, திறமை சித்தி யின் அடிப்படையில் 30% மாணவர்களும் மாவட்ட அடிப்படையில் 55% மாணவர்களும் தெரிவு செய்யப்படும் ஒரு புதிய ஏற்பாடு அறிமுகம் செய்யப்பட்டது;15% அனுமதி சில கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது. (1979) பின்னர் 1990இல் திறமை சித்தி 40%, மாவட்ட அனுமதி 55%, பின்தங்கிய மாவட்டங்களுக்கு 5% என அனுமதிக் கொள்கை சற்று மாற்றி அமைக்கப்பட்டது. படிப் படியாக கலைத்துறைக்கு சகல மாணவர்களும் திறமை சித்தியின் அடிப்படையில் தெரிவு செய்யப்படலாயினர். ஏனைய துறைகளில் திறமை சித்தியின் அப்படையிலான அனுமதி பின்வருமாறு அமைந்தது (முகாமைத்துவம் 38%, வர்த்தகம் 37%, சட்டம் 32%, பெளதீக விஞ்ஞானம் 52%, உயிரியல் விஞ்ஞானம் %, மருத்துவம் 38%, பொறியியல் 31%, மொத்தத்தில் 55.5% மாணவர்கள் திறமை சித்தி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர்.
1970களின் இறுதிப் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்ட திறமைச்சித்தி, மாவட்ட அனுமதி முறை இன்றும் தொடர்கின்றது.
-42

பேராசிரியர் சோசந்திரசேகரன்
கலை தவிர்ந்த ஏனைய துறைகளில் திறமை சித்தியால் அனுமதி பெறுபவர்களை விட மாவட்ட ரீதியாக அனுமதி பெறுவோர் தொகையே அதிகம்.
g|L66D6DOT XIII பிரதான கற்கை நெறிகளில் மாணவர் அனுமதி (திறமை சித்தி, மாவட்ட அனுமதி) 2006-2007
கற்கை நெறி திறமை LOTSAILL
சித்தி அனுமதி
4,187 104.7
முகாமைத்துவம் 1055 1697
வர்த்தகம் 132 223 சட்டம் 85 131
பெளதீக விஞ்ஞானம் 701 1166
உயிரியல் விஞ்ஞானம் 399 807
மருத்தவம் 433 678 விவசாயம் 333 545
பொறியியல் 473 747
கல்வி வசதிகளில் மாவட்டங்களுக்கிடையே காணப்பட்ட ஏற்ற தாழ்வுகளைக் கருத்திற் கொண்டே மாவட்ட அனுமதி அறிமுகம் செய்யப்படுவதாகக் கூறப்பட்டது. 1976 தொடக்கம் தெரிவுசெய்யப் பட்ட பின்தங்கிய மாவட்டங்களுக்கு (1990இல் அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, அனுராதபுரம், பதுளை, அம்பாந் தோட்டை, மன்னார், மொனராகலை, வவுனியா, திருகோணமலை, பொலனறுவ்ை, நுவரெலியா ஆகிய 12 மாவட்டங்கள்) 5% அனுமதி ஒதுக்கப்பட்டது. பின்னர் யாழ்ப்பாணம், புத்தளம், இரத்தினபுரி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களும் இப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. (மொத்தமாக 16 மாவட்டங்கள்).
மாவட்ட அனுமதிமுறை அறிமுகம் செய்யப்பட்டபோது (1978) அது தற்காலிகமானது; பின்தங்கிய பிரதேசங்களில் கல்வி வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும் வரை மட்டுமே இவ்வனுமதி முறை நடை முறையில் இருக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், தற்போது "சமூக
-43

Page 24
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
நீதியை" நிலைநாட்டும் நோக்குடன் இவ்வனுமதிமுறை நிரந்தரமாகி விட்டது போலத் தெரிகிறது.
1970களில் இடம்பெற்ற மொழிவாரியான தரப்படுத்தல் முறை யாழ்.மாவட்டத் தமிழ் மாணவர்களைப் பாதித்தவிடத்து, மாவட்ட அனுமதிமுறை தென்மாவட்ட மாணவரையும் பாதித்தது. மாவட்ட ரீதியான அனுமதி முறையில் சகல மாவட்டங்களைச் சேர்ந்த மாண வர்களையும் அனுமதிக்க வெவ்வேறு வெட்டுப் புள்ளிகள் தீர்மா னிக்கப்பட்டன. இதனால் அப்பாதிப்பு ஏற்பட நேர்ந்தது. உதாரணமாக: * 1993/94இல் மருத்துவத்துறைக்கு கொழும்பு மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி271; மொனராகலைக்கான வெட்டுப்புள்ளி210. இடைவெளி 61புள்ளிகள். இந்நிலையில் 210-271க்கிடையிலான புள்ளிகளைப் பெற்ற 662கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு அனுமதி கிட்டவில்லை. 210 புள்ளிகள் பெற்ற 10 மாணவர்கள் மொனராகலையிலிருந்து அனுமதி பெற்றனர். * யாழ்ப்பாணத்துக்கான வெட்டுப்புள்ளி 266; 210 புள்ளிகளுக்கு அதிகம் பெற்ற 247 யாழ். மாணவர்களுக்கு அனுமதி கிட்டவில்லை.
இவ்வாறான நிலைமை “கல்வியில் முன்னேற்றங்கண்ட” மாவட் டங்களில் வாழ்ந்த பெற்றோர்கள், மாணவர் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியது. தற்போதும் இதே நிலை தொடர்கின்றது.
தற்போதைய அனுமதிக் கொள்கை (2008) பின்வருமாறு அமைகின்றது: * 40% பல்கலைக்கழக அனுமதிகள் நாடளாவிய அடிப்ப
டையில் Z புள்ளிகளின்படி வழங்கப்படல்;
* 55% மான அனுமதிகள், மாவட்டங்களில் வாழும் சனத்தொகை
வீதாசாரத்துக்கேற்ப மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படல். * 5% அனுமதிகள் பின்தங்கிய 16 மாவட்டங்களுககு ஒதுக்கப்
படல்.
இவ்வாறான அனுமதிக் கொள்கை பலவாறு விமரிசிக்கப் பட்டது.
* முன்னேறிய மாவட்டங்களில் பயிலும் உயர் சித்தி பெற்ற
மாணவர்கள் பலருக்கு அனுமதி மறுக்கப்படுகின்றது;
-44

பேராசிரியர் சோசந்திரசேகரனி
* “முன்னேறிய மாவட்டங்களிலும்" பின்தங்கிய பாடசாலைகள் உண்டு; வெளிமாவட்டங்களில் இவற்றைவிட சிறந்த பாட சாலைகள் உண்டு. உயர்ந்த வெட்டுப்புள்ளி இப்பாடசாலை மாணவர்களுக்குப் பொருத்தமற்றது. * அதாவது, முன்னேறிய மாவட்டத்துக்குள்ளேயே பல பாட சாலைகளில் காணப்படும் வளப்பற்றாக்குறையானது மாவட்ட அனுமதி முறையை அர்த்தமற்றதொன்றாகின்றது. * மேலும், இம்மாவட்ட அனுமதி முறையானது பின்தங்கிய பாடசாலைகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாயில்லை.
இப்பின்புலத்தில் 2003ஆம் ஆண்டின் தேசிய கல்வி ஆணைக் குழுவின் அறிக்கை திறமை சித்தி அனுமதியானது 2006இல் 80 சதவீதமாகவும் மாவட்ட அனுமதி 20 சதவீதமாகவும் ஆக்கப்படல் வேண்டும் என திறமை சித்தி அனுமதிக்குச் சாதகமாகப் பரிந்துரை செய்தது. மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையை விடுத்து, க.பொ.த உ/த பரீட்சைக்கு அமரும் மாணவர் தொகையின் அடிப் படையிலேயே ஒவ்வொரு மாவட்டத்துக்குமான பல்கலைக்கழக இடங்கள் தீர்மானிக்கப்படல் வேண்டும் என்ற மற்றொரு பரிந்து ரையையும் தே.க.ஆணைக்குழு செய்திருந்தது. பல்கலைக்கழக அனுமதிக் கொள்கைகள் 1965 முதல் 2002 வரையிலான ஒர் தொகுப்பு * 1965க்கு முன்னர் :
பல்கலைக்கழகங்கள் புகுமுகப் பரீட்சைகளைத் தாமே நடத்தின.
கோட்பாடு, செய்முறை என்பவற்றைக் கொண்ட பரீட்சையுடன்
ஒரு நேர்முகப் பரீட்சையும் இருந்தது. மாணவர்கள் முற்றாகவே
திறமை சித்தியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டனர். * 1966 முதல் 1970வரை:
தேசிய உயர்கல்விப் பேரவையொன்று அமைக்கப்பட்டது. பல்கலைக்கழக அனுமதிகளை இவ்வமைப்பு கட்டுப்படுத்தியது. செயல்முறைப் பரீட்சைகள் அகற்றப்பட்டன. க.பொ.த உ/நிபரீட் சையில் பெற்ற மொத்தப் புள்ளிகளின் அடிப்படையில், திறமைச் சித்தியின் அடிப்படையில் அனுமதிகள் வழங்கப்பட்டன.
-45

Page 25
இலங்கையில் உயர்கல்வி பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
1970
புள்ளிகள் போதனாமொழி அடிப்படையில் தரப்படுத்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. புள்ளிகள் ஒரு சீரான அளவுத்திட்டத் திற்கு குறைக்கப்பட்டு, ஒரு போதனா மொழியில் தகுதிபெறு வோர் தொகை, அம்மொழியில் பரீட்சைக்கு அமர்ந்தவர் தொகை யுடன் தொடர்புபடுத்தப்பட்டது. 1970ல் சிங்கள மாணவர்கள் 229 புள்ளிகளுடனும் தமிழ் மாணவர்கள் 250 புள்ளிகளுடன் அனுமத பெறலாம் என விதிக்கப்பட்டது. 1971ல் புள்ளிகள் பாடவாரி யாகவும் போதனா மொழி வாரியாகவும் தரப்படுத்தப்பட்டன.
1974 :
மாவட்ட அடிப்படையில் அனுமதி வழங்கும் முறை (District Quota basis) அறிமுகம் செய்யப்பட்டது. தரப்படுத்தப்பட்ட புள்ளிகளைக் கொண்டு திறமை அடிப்படையில் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மாவட்டங்களின் சனத்தொகைக்கேற்ப அவற்றுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
1976 :
தரப்படுத்தப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் திறமை சித்திக்கு இடமளித்து 70% இடங்கள் ஒதுக்கப்பட்டன. 30% இடங்களில் 50% இடங்கள் சலுகை குறைந்த பின்தங்கிய 10 மாவட்டங் களுககு ஒதுக்கப்பட்டன.
1978 και
தரப்படுத்தல் முறை கைவிடப்பட்டது. மூலப்புள்ளிகளின் (Ra% marks) அடிப்படையில் 1970க்கு முன்னர் போல் மாணவரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. எனினும், புள்ளிகள் தரப் படுத்தப்பட்டிருந்தால், அனுமதிபெற்றிருக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். பின்தங்கியமாவட்டங்களின் தொகை 11 ஆகியது.
1979
மூலப்புள்ளிகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. 30% திறமை சித்தி அடிப்படையில்;
55% இடங்கள் சனத்தொகை அடிப்படையில் மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டன;

பேராசிரியர் சோசந்திரசேகரன்
1980 :
பின்தங்கிய மாவட்டங்களின் தொகை 13ஆக உயர்த்தப்பட்டது.
1985 :
மாவட்ட அனுமதி 55% இல் இருந்து 65% ஆக உயர்த்தப் பட்டுள்ளது. பின்தங்கிய மாவட்டங்களுக்கு 5% இடம் மட்டும் ஒதுக்கப்பட்டன.
அனுமதிக்கொள்கை - சில ஆலோசனைகள்
(1)
(2)
(3)
க.பொ.த உ/த பரீட்சையில் பெறும் மூலப் புள்ளிகளை வைத்து மட்டும் அனுமதி வழங்கக்கூடாது. பல்கலைக்கழகக் கல்வியை நாடுவோருக்கு ஒரு உளச்சார்புப் பரீட்சை நடாத்தப்பட வேண் டும். பொது உளச்சார்புடன் மருத்துவம், பொறியியல், விஞ்ஞா னம், விவசாயம் என்பனவற்றைப் பயில விசேட உளச்சார்பு கள் உண்டா என மாணவர்கள் பரீட்சிக்கப்படல் வேண்டும். மாவட்ட அனுமதி முறையில் பல குறைபாடுகள் உள்ளன. வளர்ச்சியடைந்த மாவட்டங்களில் பயிலும் திறமைமிக்க மாணவர் பலருக்கு அனுமதி கிடைப்பதில்லை. மாவட்டங் களுக்குள்ளும் (IntraDistrict) ஏற்றத்தாழ்வுகள் உண்டு. இவ்விட யம் கவனிக்கப்படுவதில்லை. அதாவது, முன்னேறிய மாவட் டங்களுக்குள்ளும் பின்தங்கிய பாடசாலைகள் காணப் படுகின்றன. திறமை சித்திக்கு முதலிடம் வழங்கி வசதிகளற்ற பாடசாலை களில் இருந்து பரீட்சைக்கு அமர்வோருக்கு சில சலுகைகளை வழங்கலாம். திறமைசித்திஅடிப்படையில் வழங்கப்படும் 40% அனுமதி மேலும அதிகரிக்கப்படல் வேண்டும். 2002இல் 60 சதவீதமாகவும் உயர்த்தப்படல் வேண்டும். வசதிகளும் சலுகைகளும் குறைந்த பாடசாலைகள் இனங்காணப்படல் வேண்டும். அதற்கான அளவுகோல்கள் வகுக்கப்படல் வேண்டும். உதாரணமாக ஆசிரியர் வளம், ஆய்வுகூட வசதிகள், மாணவர்களின் செய லாற்றுச் சுட்டெண் (Performance Index) என்பன கருத்தில் கொள்ளலாம்.
அனுமதிக் கொள்கைகள் 3 ஆண்டுக்கு ஒருமுறை பரிசீலனை செய்யப்படல் வேண்டும். இறுதியில் திறமை சித்தி மட்டுமே கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.
-47

Page 26
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
மாணவர்கள் இருமுறைகள் மட்டும் பரீட்சைக்கு அமர்ந்து அனுமதியைப் பெற வேண்டும். மூன்றாவது சந்தர்ப்பம் வழங் கப்படமாட்டாது. ஒவ்வொரு அரசாங்க சேவகர்ப் பிரிவிலும் நல்ல வசதிகளை உடைய ஒரு 1AB பாடசாலை உருவாக் கப்படல் வேண்டும்.
(4)
பாட ஏற்பாட்டுக்கப்பால் பல்வேறு தேசிய ரீதியான செயற் பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு விசேட இடம் ஒதுக் கப்படலாம்.
(5)
அனுமதிக் கொள்கைகள் பற்றிய புதிய சிந்தனைகள் திறமை சித்திக்கு மீண்டும் (1970க்கு முன்னர் இருந்தது போல்) முதலிடத்தை வழங்குவதில் முனைப்பாக உள்ளன. 80 சதவீத மான மாணவர்கள் அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் ஏனைய
(6)
20 சதவீத இடங்களில் 5 -10 சதவீத இடங்கள் Preferential
Policy (PP) இன் அடிப்படையில் மலையக மாணவர்களுக்கும் வடக்குக் கிழக்கு பின்தங்கிய மாவட்டங்களில் வாழும் மாண வர்களுக்கும் ஒதுக்கப்படலாம். இதன்படி (PP) ஒரு குறிப்பிட்ட இனப்பிரிவினரைப் பின்தங்கிய வர்கள் என அரசு பிரகடனம் செய்து அரசே அவர்களுக்கு விசேடமாக அனுமதி வழங்கும் முறை ஐக்கிய அமெரிக்காவி லும், இந்தியாவிலும் (முறையே கறுப்பர்கள், தலித் மக்கள்) பின்பற்றப்பட்டது. சர்வதேச ரீதியாக இது ஒரு ஏற்றுக்கொள் ளப்பட்ட நடைமுறையே ஆகும். அதாவது முன்னுரிமைக் கொள்கையாவது:
(7)
"Preferential Polices are government mandated preferences for government - designated groups... affirmative action/ Preferential Police are international Phenomena..."
"Societies contain ethnic... groups at such varying degrees of economic and social development that state intervention is required to help some of them to overcome their disadvantages."
"Indian affirmative action polices designed to benefit backward class people had... a clear caste orientation, in the policies pursued it ameliorate the condition of untouchables.
-48

பேராசிரியர் சோசந்திரசேகரன்
Sri Lankas affirmative policies originally designed to provide preferential treatment to students of Sinhalese majority"
K.M. de Silva in Ethnic Studies reports Lolume XV No - 02 July 1997. Page 129-131
இந்த அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மலையக தமிழர்களுக்கு உதவக் கூடும்.
(8) தற்போது மாணவர்கள் பெறுகின்ற மூலப் புள்ளிகள் Z புள்ளி உத்தியால் மாற்றப்பட்டு எல்லாப் பாடங்களிலும் பெறப்பட்ட புள்ளிகள் ஒப்பிடத்தக்க அளவாக மாற்றப்படுகின்றது. இவ் வாறு மாற்றப்பட்ட புள்ளிகளின் (3 பாடங்களில்) கூட்டுத்தொ கையின் அடிப்படையில் மொத்தப் புள்ளிகள் வரிசைப்படுத் தப்படுகின்றன.
உயர்கல்வியின் பொருளாதாரப் பயன்
கட்டாயக் கல்விநிலை (தரம் 1-9), சிரேட்ட இடைநிலைக் கல்வி (தரம் 10:13), பல்கலைக்கழகக்கல்வி ஆகிய பிரதான மூன்று கல்வி நிலைகளும் தாராளமாகப் பொருளாதார நன்மைகளை வழங்கு வதாக, உலகவங்கியின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாய்வுகள் இக்கல்வி நிலைகள் தனியாளுக்கும் சமூகத்துக்கும் எவ்வாறு நன்மை Lušejb (Pricate and Social Returns) 676igob 65 lub Lub5 Ja முடிவுகளைத் தந்துள்ளன. (வெவ்வேறு கல்வி நிலைகளுக்குச் செய் யப்பட்ட செலவுகளையும், வெவ்வேறு கல்வித் தகுதி பெற்றவர்களின் வருமானங்களையும் கருத்திற்கொண்டு இவ்வாய்வு நுணுக்கமான புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுவது)
இவ்வாய்வுகளின்படி ஆண்களுக்கான சமூகப்பயன்: கட்டாயக் கல்விநிலை 15%; சிரேட்ட இடைநிலை 20%; பல்கலைக்கழகக் கல்வியின் சமூகப்பயன் 11%
பெண்களுக்கான சமூகப்பயன் கட்டாயக்கல்வி 20%, சிரேட்ட இடைநிலைக் கல்வி 18%; பல்கலைக்கழகக்கல்வி 10% (2002).
பல்கலைக்கழகக் கல்வியினால் ஆண்கள் பெறும் தனியாளுக் கான பயன் 26%, பெண்களுக்கான தனியாள் பயன் 24%; பல்கலைக் கழகக் கல்விக்கு செலவு அதிகம் என்பதால் அதன் சமூகப் பயன் தனியாள் பெறும் பயனைவிடக் குறைகிறது.
-49

Page 27
இலங்கையில்உயர்கல்வியல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
அட்டவணை XIV கல்விமட்டம் கல்வியின் சமூகப் கல்வியின்
ULJ60 % தனியாள் பயன்%
கட்டாயக் கல்வி 15 20 19 25
சிரேட்ட இடைநிலைக்கல்வி 20 18 25 22
பல்கலைக்கழகக்கல்வி 11 10 26 24
இம்முடிவுகளின்படி, கல்வியானது சமூகப் பயனை அதிகம்
கொண்டது; கல்வியின் மீதான முதலீடானது பொருளாதார ரீதியாகப் பயன் தருவது. எனவே கல்வியின் மீதான முதலீட்டை அதிகரிப்பது சிறந்தது. ஆயினும், பல்கலைக்கழகக் கல்வியின் சமூக விளைவும் பயனும் முன்னைய இரு கல்வி நிலைகைளவிடக் குறைவு என்ப தால் வள ஒதுக்கீட்டில் பல்கலைக்கழகக் கல்வி முன்னுரிமை பெற முடியாது. பல்கலைக்கழகக் கல்வியின் ஒரு பிரதான அம்சம், அதனால் தனியாள் பெறும் அதிக பயனாகும் (பார்க்க அட்டவணை XIV) இதனை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏராளம் உள்ளன. இவ்வாறான ஒரு முடிவின் காரணமாகவே, உலக வங்கியின் ஆய் வாளர்கள் பல்கலைக்கழகக் கல்வியானது தனியார் முதலீட்டைக் கொண்டு வளர்ச்சி பெறல் வேண்டும் என்ற கருத்தை முன்வைக் கின்றனர்.
கல்வியறிவற்றவர்களை விடப் பட்டதாரி ஆண்கள்
மாதத்துக்கு 28% அதிகமாக உழைக்கின்றனர்; பெண்
பட்டதாரிகள் 215% அதிகமாக உழைக்கின்றனர்; பட்
டப்பின் படிப்புப் படித்தவர்கள் (M.A.ph.d) கல்வியற்
றவர்களை விட 262% அதிகம் உழைக்கின்றனர்.
"உலக வங்கி ஆய்வுகள்
-50

பேராசிரியர் சோசந்திரசேகரனி
பல்கலைக்கழக ஆசிரியர்கள்
பல்கலைக்கழகங்களில் உயர்ந்த கல்வித் தராதரங்களைப் பேணு வதற்கு உயர்ந்த கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களைக் கவருந் தன்மை பல்கலைக்கழகங்களுக்கு இருத்தல் வேண்டும். குறைந்த சம்பள மட்டங்களின் காரணமாக அப்படிப்பட்ட தகுதியுடையவர் களை ஈர்க்கும் நிலையில் பல்கலைக்கழகங்கள் இல்லை. கலாநிதிப் பட்டம் பெற்ற விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சம்பளங்கள் (300-350 டொலர்வரை) ஏனைய அரச ஊழியர்களின் சம்பளங்களுடன் சற்று ஒத்துச் சென்றாலும் தனியார்துறை சம்பளங் களை விடக் குறைந்தவை. உயர்ந்த கல்வித் தகுதிகளை உடையோர் (கலாநிதிப்பட்டம்) அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் உயர்ந்த சம்பளங்கள், சிறந்த வேலைச்சூழல், ஆராய்ச்சி வசதிகள் காரணமாக அவற்றை நாடுகின்றனர். விரிவுரையாளர் ஒருவர் இலங் கையில் பெறும் ஓராண்டுச் சம்பளத்தை மேல்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் ஒரு மாதத்தில் பெற்றுவிட முடியும் என உலக வங்கி யின் ஒரு ஆய்வேடு தெரிவிக்கின்றது. இவ்வாறான சம்பள வேறுபா டுகளின் காரணமாக, இலங்கைப் பல்கலைக்கழகங்கள் உயர்ந்த கல்வித் தகுதிகளை உடைய ஆசிரியர்களை காலப்போக்கில் இழக்க நேரிடுகின்றது.
இது பல்கலைக்கழகங்களுக்குப் பொதுவான பிரச்சினையாயி னும் தூரப் பிரதேச பல்கலைக்கழகங்களின் நிலை இதனை விட மோசமாக உள்ளது. பிரதான நகரங்களான கொழும்பு, கண்டி தவிர்ந்த ஏனைய இடங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழகங்களில் பணி புரிய ஆசிரியர்கள் தயக்கங் காட்டுகின்றனர். ரஜரட்டை, கிழக்கு, கிழக்கிழங்கை, வயம்பா, சப்பிரகமுவா, ஊவா, வெல்லச பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களும் சிரேஷ்ட விரிவுரையாளர்களும் மிகக் குறைந்த தொகையில் காணப்படுகின்றனர். இதனால் இப்பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகின்றன.
உதாரணமாக :
&
* கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 128 ஆசிரியர்களில் பேராசிரியாகள் 5 பேர்; சிரேஷ்ட விரிவுரையாளர்கள் 54 பேர். * தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 87 ஆசிரியர் களில் 50 பேர் விரிவுரையாளர்கள் 26 பேர் சிரேஷ்ட விரிவு ரையாளர்கள்;
-51

Page 28
இலங்கையில்உயர்கல்வியல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
* ரஜரட்டைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 76 ஆசிரியர் களில் 40 பேர் விரிவுரையாளர்கள்; 29 பேர் சிரேஷ்ட விரிவுரை யாளர்கள் 3 பேராசிரியாகள்.
பல்கலைக்கழக முறைமையில் பணியாற்றும் 4134 ஆசிரியர் களில் 1554 பேர் விரிவுரையாளர்கள், 450 பேராசிரியர்கள்; 1800 சிரேஷ்ட விரிவுரையாளர்கள். ஏறத்தாழ 38% மான ஆசிரியர்கள் இளம் விரிவுரையாளர்கள்; மேலும் உயர் கல்வித் தகுதிகளைப் பெற்று சிரேஷ்ட விரிவுரையாளராக வேண்டியவர்கள். அதற்காக மேலும் படிக்க வேண்டியவர்கள். ஆனால் பல்கலைக்கழகக் கற்பித் தல் பணியில் பிரதானமாக அவர்களே ஈடுபட வேண்டியுள்ளது. பல கற்கை நெறிகளில் ஆசிரியர் பதவி வெற்றிடங்களும் காணப் படுகின்றன.
பல்கலைக்கழக ஆசிரியர்களில் பேராசிரியர்களின் சதவீதம் மிகக்குறைவு; விரிவுரையாளர்களின் சதவீதம் அதிகம் (பார்க்க அட்டவணை)
அட்டவணை XV பல்கலைக்கழக ஆசிரியர் விபரம் 2007 ஆசிரியர்தரம் தொகை மொத்தத்தின் %
GềLugnráìfluử 377 9.9
இணைப்பேராசிரியர் 93 2.4
சிரேஷ்ட விரிவுரையாளர் 1801 47.1
விரிவுரையாளர் 1554 40.6
மொத்தம் 3825 100
வன்செயலும் விரயமும்
இன்றைய பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுவரும் மாண வர் வன்செயல், அதன் விளைவாக ஏற்படும் சொத்தழிவு, காலவிர யம் ஒரு பெரும் பிரச்சினையாக உள்ளது. மாணவர்களின் ஒழுக்காற் றல் பிரச்சினை காரணமாக ஏற்படும் வன்செயல்கள், படிப்புப் புறக்கணிப்பு என்பன காரணமாக இவ்விரயம் ஏற்படுகின்றது.
-52

பேராசிரியர் சோசந்திரசேகரனி
இவ்வுரையை விரிவாக்கி எழுதும்போது மூன்று பல்கலைக்கழகங் கள் வன்செயல் நிகழ்வுகளால் சரியாக இயங்கவில்லை.
மாணவர் நெறிபிறழ்வுடன் இணைந்த இளைஞர் கலாசாரத்தில் அரசியல் பின்புலமும் உண்டு. 1950 களிலும் 1960களிலும் மாணவர் போராட்டங்கள் இடம்பெற்றனவாயிலும் 1971இன் பின்னர் இம்மா ணவர் போராட்டங்கள் அராஜகத்தன்மையையும் பெற்றன. இவை பல்கலைக்கழகக் கல்வியில் உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தின. கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் மாணவர்கள் கிளர்ச்சியா னது வலுவடைந்து அழிவுப் பாதையை நோக்கிச் சென்றமையும் அதில் அரசியல் காரணிகள் தொடர்புபட்டமையும் பிரதான அம்சங்களாகும்.
1950களிலும் 1960களிலும் இடம்பெற்ற மாணவர் கிளர்ச்சி களில் மாக்சிய விவாதங்களும் இளைஞர் இயக்கங்களுக்குரிய அம் சங்களும் சர்வதேசப் பரிமாணங்களும் காணப்பட்டன; இளைஞர் இயக்கங்களில் ஒரு சனநாயகப் பண்பாடும் காணப்பட்டது. ஆனால், இன்றைய மாணவர் இயக்கங்களில் முற்றாகவே அராஜகத் தன்மை யும் பாசிஸ போக்குகளும் காணப்படுவதாகவும் ஒருதரப்பட்ட சித்தாந்தமொன்றைத் திணிக்கும் முயற்சிகளும் இருப்பதாக ஆய்வா ளர்கள் கருதுகின்றனர். இவ்வாறான இளைஞர் இயக்கங்கள் பல் கலைக்கழக முறைமையை கிளர்ச்சித் தளங்களாக மாற்றியுள்ளன; மாணவர்கள் வன்செயலில் ஈடுபடத் தூண்டுகின்றன; சிறு சிறு விடயங்களையும் பிரச்சினைகளையிட்டும் மாணவர்கள் ஒன்று திரட்டப்படுகின்றனர். சர்வதேசப் பிரச்சினைகள் எவையும் விவாதிக் கப்படுவதில்லை; பட்டதாரி மாணவரிடம் புலமைசார் சிந்தனை களுக்கு இடமில்லை என்பதையே இது காட்டுகின்றது. மாணவர் வேலை நிறுத்தங்களுக்கு அப்பால் கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பும் அடிக்கடி நிகழ்கின்றது. இதனால் பல்கலைக் கழக வளங்கள் விரயமாக நேரிடுகின்றன என அவ்வாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு மதிப்பீட்டின்படி, பல்கலைக்கழகங்கள் அடிக்கடி மூடப்படு வதன் காரணமாக, 195 வேலை நாட்கள் இழக்கப்பட்டன. இவற்றில் 185 நாட்கள் மாணவர்களின் பணிப்புறக்கணிப்பின் காரணமாக இழக்கப்பட்டவை. (சப்பிரகமுவா 69 நாட்கள், ரஜரட்டை 66 நாட் கள், பேராதனை 61 நாட்கள், வயம்பா 41 நாட்கள்) இதே மதிப்பீட் டின்படி, பல்கலைக்கழகங்களுக்கான வருடாந்த நடைமுறைச் செலவில் 2.5% விரயமாகின்றது. இவ்வாறான விரயமானது,
-53

Page 29
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
உயர்கல்வியின் தராதரங்கள் வீழ்ச்சியடையக் காரணமாகின்றது. இவ் வாறான நிலைமைகள் பல்கலைக்கழகங்களின் புலமைசார் சூழலைப பாதிக்கின்றது; பல்கலைக்கழகங்கள் தமது கால அட்டவணைக் கேற்ப இயங்க முடிவதில்லை. சுதந்திரமான சிந்தனைக்கும் ஆக்கத் திறன்மிக்க பணிகளுக்கும் ஒவ்வாத சூழ்நிலையே பல்கலைக் கழகங்களில் காணப்படுகின்றது என்ற முறைப்பாடும் உண்டு. பல்கலைக்கழகக் கல்வியின்தராதரமும்பொருத்தப்பாடும்
உலகளாவிய ரீதியில் உயர்கல்வி முறைகள் துரிதமாக வளர்ச்சி பெறும்போது தராதரங்கள் வீழ்ச்சியடைவதாகக் கூறப்படுகின்றது. இலங்கையின் உயர்கல்வித் தராதரங்கள் வீழ்ச்சி கண்டுவிட்டதாக ஒரு பொதுக் கருத்து உண்டு. ஊடகங்களும் உயர்கல்விமுறையைப் பெரிதும் விமரிசிக்கின்றன. நாடுகளின் பொருளாதார நிலை வளர்ச் சியடைந்து உறுதியடையும்போது, உயர் கல்வித் தராதரங்களும் மேம்பாடடைய வாய்ப்புண்டு என்ற கருத்தும் தெரிவிக்கப்படுகின் றது. பொருளாதார வளர்ச்சியானது, உயர் கல்வியின் தராதர மேம் பாட்டுக்கான வளங்களைத் தருவதால் இத்தகைய நிலை ஏற்பட லாம். இலங்கையின் பல்கலைக்கழகங்கள் தராதர ரீதியாக வேறுபடு கின்றன. மருத்துவக் கல்வி, தகவல் தொழில்நுட்பக் கற்கை நெறிக ளில் சிறந்த தராதரங்கள் பேணப்படுகின்றன. மொறட்டுவப் பல் கலைக்கழகத்துக்கும் தராதரங்களைப் பொறுத்தவரையில் உயர்ந்த அந்தஸ்து உண்டு. ஆயினும், மாகாணங்களில் உள்ள புதிய பல் கலைக்கழகங்களின் கல்வித் தராதரம், பொதுவாக கலைத்துறைப் பாடத்துறைகளின் தராதரங்கள் பற்றிய ஐயப்பாடுகள் பல உண்டு. உயர்கல்வித் தராதரங்களை மேம்படுத்தப் பின்வரும் காரணிகள் அவசியமானவை:
* பொருத்தமான பாட ஏற்பாடு;
* மாணவரை மதிப்பிடும் முறையான ஏற்பாடுகள்;
அனுபவமும் திறனும் மிக்க ஆசிரியர்கள்;
* தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் நூல் நிலைய
வசதிகளும்;
* சிறந்த கற்றல், கற்பித்தல் முறைகள்;
* தராதர உறுதிப்பாட்டு, தராதர மேம்பாட்டு ஏற்பாடுகள்;
-54

பேராசிரியர் சோசந்திரசேகரனி
* பல்கலைக்கழக வளாகத்தில் வசதிகளும் உட்கட்டமைப்பு
ஏற்பாடுகளும். 1ܙܡ நன்கு ஊக்கமுடன் கற்கக்கூடிய மாணவர்களுக்கு இவ் வணைத்து ஏற்பாடுகளும் முழுமையாக இருக்க வேண்டும் என் பதில்லை. ஆனால், பெரும்பாலான மாணவர்களைப் பொறுத்த வரையில் இவ்வாறான ஏற்பாடுகள் தேவை.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் வளர்ச்சியடைந்துவரும் நாடு களிலும் நாட்டின் திறன் தேவைகளுக்கேற்ப, பாட ஏற்பாடு திருத்தி அமைக்கப்பட வேண்டியுள்ளது. பல்கலைக்கழகங்களிலிருந்து வெளி யேறும் பட்டதாரிகள், தொழில்களுக்குப் பொருத்தமான வாழ்க்கைத் திறன்களைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அவ்வாறா யின் தொழில் வழங்குவோர் அவர்களை நாடி வருவர். இத்தகைய திறன்கள், உயர்கல்வித் தராதரங்கள் பற்றிய குறிகாட்டியாகவும் அமையும். எமது பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வருவோர் படித்தவை, தொழில் உலகுக்குத் தேவையான - தனியார் கம்பெனிகளுக்குத் தேவையான திறன்களை வழங்கும் முறையில் பல்கலைக்கழகக் கல்வியின் அடிப்படையான நோக்கங்களைத் தியாகம் செய்ய முடியுமா என்ற முக்கிய கேள்வியும் உண்டு (இவ்விட யம் பற்றிப் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பு பற்றிய பகுதியில் விரிவாக ஆராயப்படும்) பல பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் பட்டதாரிகள், பல ஆண்டுகளுக்காக வேலைகளுக்குக் காத்திருக்கும் நிலையும் உண்டு. இவ்விடத்து வேலை வாய்ப்புக்கான உயர்கல்வி என்ற விடயம் உயர்கல்வித் தராதரங்களை வரையறை செய்கின்றது.
மருத்துவம், பொறியியல், சில விஞ்ஞான துறைகள், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றில் பட்டம் பெறுவோர் இலகுவாகத் தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடியதாக உள்ளது. இவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளும் உண்டு. ஆயினும், சுயமொழி களில் கலைத்துறை, மனிதப் பண்பியல், சமூக அறிவியல் துறை களில் பட்டம் பெறுவோர் வேலை வாய்ப்புகளைப் பெறுவது கடினம். ஆங்கிலமொழி அறிவு, கணினித்திறன்கள் என்பன இன்றைய தொழில் உலகில் பெரிதும் வேண்டப்படுவன. சில விஞ்ஞானக் கற்கை நெறிகளைப் பயின்றவர்களுக்கும் வர்த்தகவியல், முகா மைத்துவப் பட்டதாரிகளுக்கும் கூட வேலை வாய்ப்புப் பிரச்சி னைகள் உண்டு.
-55

Page 30
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
இவர்களுடைய ஆங்கிலத்தேர்ச்சி, தகவல்தொழில்நுட்பத்தேர்ச்சி என்பவற்றில் பல குறைபாடுகள் உண்டு.
உயர்கல்வியின் பொருத்தப்பாடு என்பது உயர்கல்வி நிகழ்ச்சித் திட்டங்களும் பாட ஏற்பாடும் எந்த அளவுக்குத் தேசிய மற்றும் சமூக தேவைகளை நிறைவு செய்கின்றன என்பதை உள்ளடக்குகின்றது. பாட ஏற்பாடு இவ்வாறு அமையாவிடில், புதிய கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் வரையப்படல் வேண்டும். இவை கோட்பாட்டு அறிவை மட்டுமன்றி செயல்முறைத் திறன்களையும் உள்ளடக்குதல் வேண டும். இதனால் பட்டப்படிப்பின் இறுதிக்கட்டத்தில், உள்ளகப் பயிற்சிக்கான (Internship/Placements) வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும்.
இன்றைய நிலையில் உயர்கல்வியின் பொருத்தப்பாட்டு அம் சத்தை மேம்படுத்த ஆங்கிலமொழித் தேர்ச்சி, எழுத்துத் திறன்கள், கணினி அறிவு என்பன பாட ஏற்பாட்டில் உள்ளடக்கப்பட வேண்டி உள்ளது. சுதந்திரமான சிந்தனை, படைப்பாற்றல், புத்தாக்கச் சிந்தனை என்பனவும் விருத்தி செய்யப்படல் வேண்டும். தேசிய, பொருளாதார விருத்திக்கான சகல செயற்பாடுகளுக்கும் தகவல், தொடர்பாடல் தொழில்நுட்பம் தேவைப்படும் நிலை இன்று தோன் றியுள்ளது. இதனால் உயர்கல்விக் கற்கை நெறிகள் யாவும் இத்தொ ழில்நுட்பத்திறன்களை வளர்க்கும் நோக்கத்தையும் உள்ளடக்க வேண்டி உள்ளது. உயர்கல்விக்கற்கை நெறிகளின் பொருத்தப்பாடு தொடர்பான தேசிய கல்வி ஆணைக்குழுவின் புதிய பரிந்துரைகள் பின்வருமாறு:
“எந்தத் தொழிலைச் செய்யவும் தேவையான திறன் களில் செயல்முறை அனுபவத்தைப் போதிய அளவு வழங்குவதற்கான வாய்ப்புகளை கொண்டதாக உயர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் அமைதல் வேண்டும்" (NEC. 2008) “உயர்கல்வி முறைமையில், சுயமாக வழிகாட்டிக் கற்றல், சுதந்திரமான சிந்தனை, படைப்பாற்றல், பகுப் பாய்வுத் திறன், அறிவைப் பிரயோகிக்கும் திறன், பிரச் சினை தீர்க்கும் திறன், சிறந்த தொடர்பாடல் திறன், குழுவில் பணியாற்றும் திறன் என்பன வளர்க்கப்படல் GargoorGub." (NEC, 2008)

பேராசிரியர் சோசந்திரசேகரனி
பொருத்தமான பல்கலைக்கழகக் கல்விப் பாட ஏற்பாட்டை உருவாக்க உலக வங்கி கூறும் ஆலோசனைகள் (World Bank 2009): * போதனா பீடங்களும் கற்கைத் துறைகளும் கைத்தொழில்துறை
ஆலோசனைக் குழுக்களை நிறுவி பாட ஏற்பாட்டை நவீன
மயப்படுத்த ஊக்குவிப்பு வழங்கல்;
Ο
و&
* பல்கலைக்கழக ஆசிரியர்கள் பாட ஏற்பாட்டு மறுபரிசீல
னையில் ஈடுபடத் தேவையான நிதியம் ஒன்றை ஏற்படுத்தல்;
KD
தொழில் வழங்குனர் விரும்பும் பொதுத் திறன்களை வழங்கக் கூடிய பாடஏற்பாட்டு மாற்றங்களை செய்ய உதவும் ஆசிரியர் களுக்குச் சன்மானங்களை வழங்குதல்.
உயர்கல்வித் தராதர மேம்பாட்டுக்கான ஒரு பிரதான நிபந்தனை உயர் தகுதிகளைக் கொண்ட தரமான ஆசிரியர்களைத் தெரிவு செய் வதாகும். உலகளாவிய ரீதியில் இன்று வலியுறுத்தப்படுவது கலா நிதிப்பட்டமாகும் கலாநிதிப்பட்டப்படிப்பானது உயர்தரமான புலமை மற்றும் ஆய்வுத் திறன்களை வழங்குவதால், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்குப் பொருத்தமான கற்கை நெறியாக விளங்குகின்றது. மலேசியாவின் தற்போதைய இலக்கு 75% ஆசிரியர்கள் கலாநிதிப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதாகும். பாகிஸ்தா னும் பல புலமைப்பரிசில் ஏற்பாடுகளினூடாக கலாநிதிப் பட்டம் பெற்றவர் தொகையை அதிகரிக்க முயற்சிக்கின்றது.
* இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்த 3727 ஆசிரியர்களில் (2007) 40% (1476 பேர்) கலாநிதிப்பட்டம்
பெற்றவர்கள்;
* 33.7% முதுமாணிப்பட்டம் பெற்றவர்கள்; * 27% முதல்பட்டம் மட்டுமே பெற்றவர்கள்.
-57- .

Page 31
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
gel L6.606 -XVI பல்கலைக்கழக வகைப்படி ஆசிரியர்களின் கல்வித்தகுதிகள்
பல்கலைக்கழகங்கள் கல்வித்தகுதிகள்
கலாநிதி |முதுமாணி முதல் மட்டம்
கொழும்பு 245 138 89 பேராதனை 394 136 137 பூரீ ஜயவர்த்தனபுர 159 163 130 களனி 180 154 100
மொரட்டுவ 98 84 60 யாழ்ப்பாணம் 69 100 80 ருகுண 157 118 111 கிழக்கு இலங்கை 23 63 45 தென்கிழக்கு 09 40 31 ரஜரட்ட 17 22 31 சப்ரகமுவ 22 57 49 வயம்ப 25 36 32 கட்புல அரங்கக் கலை O6 44 32 ஊவா வெல்லச O1 O2 18 திறந்த பல்கலைக்கழகம் 71 97 52 மொத்தம் 1476 1254 997
ஆசிரியர்கள் உயர்ந்த கல்வித் தகுதிகளுடன் (Ph.d/M.A) மட்டுமன்றி உயர்கல்வி நிலையங்களில் “கற்பிக்கும் தகுதிகளையும்" பெற வேண்டும். இளநிலை ஆசிரியர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் களாகப் பதவி உயர்வு பெற இவ்விரு நிபந்தனைகளும் உண்டு. சில நாடுகளில் பதவியைப் பெறு முன்னரே ஆசிரியர்கள் இத்தகுதிக ளைப் பெற்றிருக்க வேண்டும். இலங்கையில் எட்டு ஆண்டுகளுக்குள் இவ்விரு தகுதிகளையும் பெறுதல் வேண்டும். “கற்பிக்கும் தகுதிகளை" வழங்க அதற்கென “பதவியாளர் தொழில் விருத்தி
-58

பேராசிரியர் சோசந்திரசேகரன்
நிலையங்கள் பல (Staf Development Centres) ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஆயினும் இவை வெவ்வேறு தராதரங்களையும் ஆற்றல் களையும் கொண்டவை. பல்கலைக்கழகக் கல்வித் தராதரங்களை மேம்படுத்த, ஆசிரியாகளுக்குப் பயிற்சி வழங்கும் இந்நிலையங்கள் மேலும் வலுப்படுத்தப்படல் வேண்டும் என உலக வங்கி ஆய்வாளர் கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையங்களுக்கு அப்பால் உயர்கல்வி நிலையில் கற்பித்தல் தகுதிகளை வழங்குவதற்கு ஒரு விசேட கல்லூரியை (SafColege) ஒன்றைப் பல்கலைக்கழக ஆணைக்குழுவின் கீழ் நிறுவப்படல் வேண்டும் என்ற பரிந்துரை ஒன்றுண்டு.
தேசிய கல்வி ஆணைக்குழு பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொடர்பான மற்றுமொரு பரிந்துரையைச் செய்துள்ளது. பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், தொழில்துறைக்குத் தேவையான திறன்களைக் கொண்டிருப்பதில்லை என்ற முறைப் பாடு உண்டு. இதற்கு ஒரு காரணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொழில்துறை அனுபவமற்றவர்கள்; வேலை உலகுடன் தொடர்பற் றவர்கள். இந்நிலையில் வேலை உலகுக்குத் தேவையான திறன் களை அவர்கள் மாணவர்களுக்கு வழங்க முடியாது. எனவே வேலை உலகு தொடர்பான அனுபவங்களை ஆசிரியர்கள் பெறும் நோக்கு டன், “அவர்கள் தொழில்துறையில் ஒராண்டு காலமாவது பணிபுரிய ஊக்குவிக்கப்படல் வேண்டும், ப.மா. ஆணைக்குழுவின் கட்டுப்பா டுகள் ஏதேனும் இருப்பின் அவை அகற்றப்படல் வேண்டும்" என்பது தே.க.ஆணைக்குழுவின் ஒரு பரிந்துரை. (தொழில்துறையினர் வேண்டும் திறன்கள் பற்றிய விளக்கம் - பார்க்க பெட்டி).
Sunloas misses afrasih (Ceylon Chamber of Commerce) இனங்கண்ட பட்டதாரிகளுக்கு இருக்க வேண்டியதிறன்கள் 1. 1999ஆம் ஆண்டில் கண்டறிந்தவை:
1. அடிப்படையான எண்ணறிவு,கணித்தற்திறன், உலக
விவகாரங்களில் பொது அறிவு.
11. திறந்த மனப்பாங்கு, உடன்பாட்டு மனப்பாங்கு, செயல்முறையில் ஆர்வம் என்பவற்றோடு நுணுகி ஆராயும் திறன்.
-59

Page 32
இலங்கையில் உயர்கல்வி: பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்'ಶಿ பிரச்சினைகளும்
11. பல்வகைப்பட்டவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ளும்
மனப்பாங்கும் விருப்பமும்,
IV. சிறந்த தனியாள் தொடர்புகள்,வெவ்வேறு குழுக்களில் வெவ்வேறு நபர்களுடன் இணைந்து பணியாற்றும் ஆற்றல்.
V ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள், ஒரு அணிக்குத் தலைமைத் தாங்கி, சிறந்த பெறுபேறுகளைப் பெறல்; பயனுள்ள முறையில் நேரத்தைப் பயன்படுத்துதல்.
(2) 2007ஆம் ஆண்டு இவ்வமைப்பு இனங்கண்ட பட்டதாரி
களுக்குரிய இயல்புகள்:
s
S
சிறந்த தொடர்பாடல் திறன்; ஆங்கில மொழியில் உரையா டும் திறன்; சிறந்த தனியாள் தொடர்புத் திறன்கள்; மாறும் வேலைச் சூழலுக்கேற்பத் தம்மை இசைவாக்கிக் கொள்ளல்; வெவ் வேறு குழுக்களில் வெவ்வேறு நபர்களுடன் பணியாற்றும் ஆற்றல்; குறுகிய காலத்தில், பெறுபேறுகளைப் பெறும் வகையில் குழுக்களுக்குத் தலைமை தாங்கும் ஆற்றல்; நேரத்தைப் பயனுள்ள முறையில் பயன்படுத்தல்; ஆபத்துக்களை (Risk) எதிர்நோக்க ஆயத்தமாக இருத்தல்; பல்வேறுபட்டவர்களிடமிருந்து புதிய விடயங்களைக் கற்க ஆயத்தமாக இருத்தல். பொது அறிவு (உலக விவகாரங்களில்)
Φ
X
Ko
XХ•
Ο
X
0.
0.
கணினி அறிவும் எண்ணறிவும்
தரமேம்பாட்டுக்கான அண்மைக்காலச் சீர்திருத்தங்கள்
1990களில் பல்கலைக்கழகங்களில் இரு வகையான சீர்திருத்
தங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை தராதர மேம்பாட்டை
இலக்காகக் கொண்டவை.
(1) “புதிய" பல்கலைக்கழகங்களான ரஜரட்டை, வயம்பா, சப்பிரகமுவா, ஊவா வெல்லச என்பவற்றில் வழமையான கற்கை நெறிகளுக்குப் பதிலாகப் பல புதுவகைக் கற்கை
-60

(2)
பேராசிரியர் சோசந்திரசேகரனர்
நெறிகள் (non-standard) அறிமுகம் செய்யப்பட்டன. இவை வழமையான கலை, சமூக அறிவியல், விஞ்ஞானக் கற்கை நெறிகளிலிருந்து வேறுபட்டவை. செயல் முறைப் பண்பும் பிரயோக அம்சமும் கொண்டவையாக அவை விளங்கின. உதாரணமாக:
1. ரஜரட்டை Zபல்கலைக்கழகம்
விவசாயக் கற்கை, பெருந்தோட்ட விவசாயம், Horticulture என்பன.
II. لوی ZزzJPEGهمIT //ல்கலைக்கழகம்
கணக்கியலும் நிதியும், உல்லாசப் பயண முகாமைத்துவம், ஏற்றுமதி விவசாயம், விவசாய வியாபார முகாமைத்துவம், பெளதீக விஞ்ஞான தொழில்நுட்பம், உணவு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், கால்நடை உற்பத்தி இயற்கை வளங்கள். புவியியல் தகவல் முறைமை (GIS), Remote Sensing முதலிய கற்கை நெறிகள்.
கற்கைநெறிஅலகுமுறை (Course unit System) அறிமுகம் செய்யப்பட்டது. இதன் நோக்கம் கட்டுப்பாடான முறையில் கற்பிக்கப்படும் ஒரு சில பாடங்களுக்குப் பதிலாக (உதாரண மாக கலைத்துறையில் புவியியல், வரலாறு, அரசியல், பொருளியல், மொழி) நெகிழ்ச்சியான பாட ஏற்பாட்டு முறையை அறிமுகம் செய்தல், ஏராளமான தெரிவு பாடங்களை வழங்கல்;பட்டதாரிமாணவர்கள் ஏராளமான பாடநெறிகளைக கற்க வாய்ப்பளித்து, பரந்த பொது உயர்கல்வியை வழங்குதல், முன்னைய முறையில் ஒரு சில பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி முறையைக் கைவிட்டுவிரிவான பொதுக் கல்வியை வழங்குதல்; உயர்கல்வி ஆண்டு இறுதிப் பரீட்சையுடன் தொடர் மதிப் பீட்டைக் கையாளல் (ஒப்படைகள், வகுப்பறைப் பரீட்சைகள், குழு ஒப்படைகள், மாணவர் சமர்ப்பிப்புகள்); தொடர் மதிப் பீடடுக்கு 30 புள்ளிகள், இறுதிப் பரீட்சைக்கு 70 புள்ளிகள் வழங்கல்; அரையாண்டில் கற்பித்தவற்றுக்கு அரையாண்டு முடிவில் பரீட்சை வைத்தல்; மாணவர்கள் முழுக் கல்வி காலத்திலும் படிப்பில் அக்கறை செலுத்தச் செய்தல் என்பன புதிய சீர்திருத்தத்தின் அம்சங்களாகும். புதிய சீர்திருத்தங்கள் பழைய உயர்கல்வி முறையிலிருந்து வேறுபடுவதைக் கீழ்வரும் அட்டவணை எடுத்துக்காட்டும்.
-61

Page 33
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பழைய முறை
புதிய சீர்திருத்தங்கள்
பாடங்களைத் தெரிவதில் கட்டுப் urrG (Limited Choise)
மாணவர்கள் தமது கல்வி நிகழ்ச்சித் திட்டத்தைத் தாமே திட்ட முடியாத அளவுக்கு நெகிழ்ச்சி குறைவு (காலம், சுகவீனம், பரீட்சையில் சித்தியின்மை) பல்வேறு கற்கைநெறிகள் தொடர் பான பொதுவான அடிப்படைக் கல்வி (Core) இல்லாமை பரந்த கல்வியில்லாமை, கற்கைநெறி களை ஆழமாகக் கற்றல்;திட்டவட்ட மாக வேறுபடுத்தப்பட்ட பாடங்கள்
பாடத்திட்டத்தை மாற்றுவது, இற் றைப்படுத்துவது (Updating) கடினம் ஆசிரியர்களுக்குப் பொறுப்புக்கூறும் தன்மை குறைவு குறைந்த பாடத்தெரிவு:எனவே அதிக மாணவர்களைக் கொண்ட பெரிய வகுப்புகள் மனனம் செய்து கற்றல் சாத்தியம்; வகுப்பறைக்கு சமூகமளிக்காது கற்க முடியும்
ஏராளமான கற்கைநெறிகள்; வெவ்வேறுகற்கை நெறிகள் (More Choise and diversity)
மாணவர்கள் தமது கற்றல் சுமையைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்; கற்றல் காலத்தையும் திட்டமிட (Մ)ւգսյւb
சகல பட்டதாரி மாணவர்களுக்கும்
வலுவான அத்திவாரக்கல்வி
பன்னெறிக் கற்கைநெறிகளுக்கான (Multidisciplinary Courses) சாத்தியங்கள், போதனா பீடங்களுக கிடையிலான கற்கை நெறிகள்
நெகிழ்ச்சியான கற்கைநெறிகள்; அவற்றை விரிவுரையாளர்கள் விரிவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு
கற்கை நெறியை விரிவுபடுத்த வேண்டும் என்பதால், பொறுப்புக் கூறும் தன்மை அதிகரிப்பு
ஏராளமான தெரிவுகள்; எனவே சிறிய வகுப்புகள்; ஆசிரியர் - மாணவர் தொடர்பு சாத்தியம் தொடர்மதிப்பீடு, பங்கேற்றுக் கற்கும் சாத்தியம்
மாணவர்
-62- .

பேராசிரியர் சோசந்திரசேகரனி
O க்கல்வியின்தரஉறுதிப்பாட்டு
பல்கலைக்கழகங்களின் தராதரங்களைப் பேணும் நோக்கில்
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சில நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளன. 2001ஆம் ஆண்டில் துணைவேந்தர்கள், பணிப்பா ளர்களின் குழுவானது (CVCD), ப.மா.ஆணைக்குழுவின் அனுமதி யுடன் தர உறுதிப்பாட்டுக்கான சட்டகம் ஒன்றைத் தயாரித்தது. இவ்விடயத்தில் மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகை யில் உயர்கல்வி அமைப்பின்கீழ் இரு செயற்றிட்டங்கள் இயங்கி வந்தன. அவையாவன:
(1)
(2)
பட்டதாரி மாணவர் கல்வியின் பொருத்தப்பாட்டையும் தராதரத்தையும் மேம்படுத்தல்; (Improving Relevance and Quality of undergraduate Education - IRQUE Project)
தொலைக்கல்வியை நவீனமயமாக்கும் செயற்றிட்டம்; 2005ஆம் ஆண்டில் ப.மா. ஆணைக்குழுவின் கீழ் ஒரு தர உறுப்பாட்டு, அங்கீகார பேரவையொன்று (Quality Assurance and Accreditation Council) ya)LDdisilul L-5. y Guy வையின் தொழிற்பாடுகளாவன:
exo
X
O
&
புதிய பாடஏற்பாடு, கற்கை நெறிகள், புதிய பட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் என்பவற்றை (தொலைக்கல்வி உட்பட) மதிப்பீடு செய்தல்; புதிய துறைகள், போதனா பீடங்கள், பட்டப்பின் படிப்பு நிறுவனங்கள் உட்பட்ட நிறுவனங்கள், நிலையங்கள், பள்ளிகள் என்பவற்றை நிறுவுதல்; பட்டம் வழங்கும் அந்தஸ்துடைய நிறுவகங்கள் என் பவற்றை மதிப்பீடு செய்தல்; அவற்றுக்குப் பட்டப்பின் படிப்பு அந்தஸ்தை வழங்குதல்; புதிய பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கு வதற்கான தகுதி விதிகள், நடைமுறைகள் என்பவற்றை உருவாக்குதல்; வெளிநாட்டுப் பட்டங்களின் தராதரங்களை மதிப்பீடு செய்தல்; அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்வி நிலையங்களில் வெளியக தரக் கணிப்பீடுகளைச் செய்தல்;
-63

Page 34
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
Ο
Х•
பாடநெறிகளுக்கு அளவைக்குறிக் (Benchmark) கூற்றுக் களைத் தயாரித்தல்;
Κ
* அரசாங்க பல்கலைக்கழகங்களிலும் மற்றும் தனியார் உயர்கல்வி நிலையங்களிலும் உள்ளகத் தரக்கட்டுப் பாட்டு அலகுகளை ஏற்படுத்தல்.
தற்போது இலங்கையின் தரஉறுதிப்பாட்டுச் சட்டகம் பின்வரும் நான்கு கூறுகளைக் கொண்டது:
(1) செயல்முறைக் கோவை (2) பாட அளவைக்குறி (3) மதிப்பெண், தகுதிச்சட்டகம்
(4) வெளிநிலைத் தர மதிப்பீடுகள் (நிறுவனப் பரிசீலனையும்
பாடவகைப் பரிசீலனையும்)
இவற்றில் பாடவகைப் பரிசீலனையானது ஒவ்வொரு பாடத் துறையையும் (Departments) ஆராயும். மாணவரின் கற்றல் அனுபவம், மாணவரின் சித்திகள் என்பவற்றின் தராதரம் ஆராயப்படும்.
குறிப்பிட்ட பாடத்துறையினர் தயாரிக்கும் சுய மதிப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் இப்பரிசீலனை நடைபெறும். அதில் பாடத்தின் நோக்கங்கள், கற்றல் விளைவுகள் (learning outcomes) என்பன பாடத்துறையினால் குறிப்பிடப்படும். வெளிநிலைப் பரிசீலனையாளர்கள், இச்சுயமதிப்பீட்டுத் திட்டத்தை வைத்து, இரு அல்லது மூன்று நாட்களில், பாடத்துறையின் முன்னேற்றத்தை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பர்.
பாடத்துறைக்குரிய பாடஏற்பாடு, கற்பித்தல் முறைகள், மதிப் பீட்டு (பரீட்சை) முறைகள், மாணவர் தராதரங்கள், அவர்களுடைய முன்னேற்றம், கல்விச்சித்தி, மாணவர் பின்னூட்டல் களைப் பயன்படுத்தல், விரிவுரையாளர்களின் கற்பித்தல் பற்றிய சகபாடிகள் அவதானம், மாணவர் திறன் விருத்தி, அவர்களுக்கான கல்வி வழிகாட்டல், ஆலோசனை கூறல் முதலிய விடயங்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.
பரிசீலனைக் குழுவினர் தமது முடிவுகளை அறிக்கையாகத் தருவர்; அதில் நன்று, திருப்தி, திருப்தியின்மை என்ற மூன்றில் ஒன்றை எடுத்துக்கூறுவர்.
-64

பேராசிரியர் சோசந்திரசேகரனி
2004இல் தொடங்கப்பட்ட பாடத்துறைப் பரிசீலனை 2008இல் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அடுத்து நிறுவனப் பரிசீலனை (Institutional Review) பல் கலைக்கழகத்தை உள்ளடக்குவது ஒவ்வொரு பல்கலைக்கழகமும் எவ்வாறு கல்வித் தராதரங்களைப் பேணுகின்றது என்னும் விடயம் பரிசீலனை செய்யப்படுகின்றது. நிறுவனப் பரிசீலனை உள்ளடக்கும். ஏனைய அம்சங்கள்:
பல்கலைக்கழகத்தின் குறிக்கோள்கள், முன்னேற்றத்துக்கான திட்டம், நிதிவளங்களும் முகாமைத்துவமும், முகாமைத்துவத் தராதரங்கள், கற்றல் வளங்கள், மாணவர்களுக்கான உதவிகள், வெளிவாரிப் பட்ட கற்கை நெறிகள், சமுதாயத் தொடர்புகள், கைத் தொழில் நிலையத் தொடர்பு போன்றன. ஏற்கனவே சில பல்கலைக் கழகங்களில் நிறுவனப் பரிசீலனை நடைபெற்றுவிட்டது (பேராதனை, மொறட்டுவை, திறந்த பல்கலைக்கழகங்கள்). 2009ஆம் ஆண்ட ளவில் 15 அரசாங்கப் பல்கலைக்கழகங்களும் இப்பரிசீலனைக் குள்ளாகி விடும்.
இவ்வாறு பல்கலைக்கழகங்களும் அங்குள்ள பாடத்துறைகளும் பரிசீலனைக்குள்ளாகும் நடைமுறை அண்மைக்காலத்தது; சர்வதேச பல்கலைக்கழகங்களின் நடைமுறைகளை இது பின்பற்றுகின்றது; பல்கலைக்கழகங்களில் சிறந்த முகாமைத்துவத்தையும் கற்பித்தல் முறைகளையும் ஊக்குவிப்பது;
. .
தற்போது ப.மா.ஆணைக்குழுவின் கீழ் இயங்கிவரும் தராதர உறுதிப்பாட்டுக்கான பேரவையினிடத்தில் பாராளுமன்றச் சட்டப் படியான ஒரு புதிய பேரவை சுதந்திரமான அமைப்பாக ஏற்படுத்தப் படல் வேண்டும்; நாட்டின் ஜனாதிபதியினால் அதன் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அவருக்குக் கீழ் இயங்கிவர வேண்டும் என்ற ஒரு பிரதான கொள்கையை தேசிய கல்வி ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிப் பணி
நூலின் ஆரம்பத்தில் கூறியதுபோன்று பல்கலைக்கழகங்கள் உயர்நிலை அறிவைக் கற்பிப்பதுடன் ஆராய்ச்சி நிறுவனங்களாகவும் விளங்குதல் வேண்டும். இலங்கைப் பல்கலைக்கழகங்கள் முதல் பட்ட நிலையில் பட்டதாரி மாணவர்களுக்கு ஆராய்ச்சித்
-65

Page 35
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
திறன்களை வழங்குகின்றன. உயர்பட்ட நிலையில் (M.A,Ph.d) மாணவர்களுக்கு ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டுகின்றன; ஆராய்ச்சி முறையியல் என்ற பாடத்தைக் கற்பிக்கின்றன; பல்கலைக்கழக இளம ஆசிரியர்கள் பெறுகின்ற ஆராய்ச்சிப் பட்டங்களின் அடிப்படையில் அவர்களுக்குப்பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன. உலகில் சிறந்த பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்யும்போது ஆராய்ச்சிப் பணிக ளுக்குப்பிரதான இடம் வழங்கப்படுகின்றது. உலகில் பல பல்கலைக் கழகங்கள் கற்பித்தலைத்தவிர்த்து ஆராய்ச்சியில் மட்டும் ஈடுபடுகின்றன. இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியானது, தொழில்துறைக ளுக்குத் தேவையான கல்வியை வழங்கும் முறையில் ஒழுங்குபடுத்தப் படுவதாக இல்லை; புதிய அறிவை உருவாக்குகின்ற பட்டதாரிக ளுக்குத் தேவையான பயிற்சியை வழங்குவதில்லை என்ற முறைப் பாடு உண்டு. புதிய பல்கலைக்கழகக் கல்விச் சீர்திருத்தங்கள் உயர் கல்வியின் “பொருத்தப்பாட்டிற்கும்" தராதரத்துக்குமே முக்கியத்துவம் அளிக்கின்றன; ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் நோக்கு முக்கியத்துவம் பெறவில்லை; அவை பட்டதாரி மாணவர்களுக்குக் கல்வி வழங்குவதில் மட்டுமே கூடிய அக்கறை செலுத்துகின்றன என்று இம்முறைப்பாடு விரிந்துசெல்லுகின்றது.
இன்று வளர்ச்சி பெறும் "அறிவு சார் பொருளாதாரம்" புதிய அறிவு ஆராய்ச்சிகள் மூலமாக உருவாக்கப்படல் வேண்டும் எனக் கோருகின்றது. உலகளாவிய அறிவை உள்வாங்குதல், நாடு முழுவதும அதனைப் பரப்புதல், உள்வாங்கிய அறிவை முகாமைப்படுத்தல், சேமித்தல், உற்பத்திக்குப் பயன்படுத்தல் என்பவற்றோடு புதிய அறிவை ஆராய்ச்சிகளினூடாக உருவாக்குதல் என்பன அறிவுசார் பொருளாதார முறையின் பிரதான பண்புகள்; இவ்வாறான பணி களைப் பல்கலைக்கழகங்களே செய்ய முடியும் என்பதால், பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிப் பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சமூக அறிவியல், இயற்கை அறிவியல், மனிதப் பண்பியல் போன்ற துறைகளில் நீண்டகாலமாக ஆராய்ச்சிகளைச் செய்து வந்துள்ளன; சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் புகழ்பெற்ற ஆராய்ச்சிகளை உருவாக்கி வந்துள்ளன (தமிழ் அறிஞர்களைப் பொறுத்தவரையில் நீண்ட பட்டியல் உண்டு. சமூக அறிவியல் துறையில் சின்னப்பா அரசரத்தினம், ஜெயரத்தினம் வில்சன், இந்திரபாலா, பஸ்தியாம்பிள்ளை, பத்மநாதன், சிற்றம்பலம், சிவசாமி, பாலகிருஷ்ணன், சின்னத்தம்பி, குலரத்தினம்,
-66

பேராசிரியர் சோசந்திரசேகரனி
தம்பையாப்பிள்ளை, செல்வநாயகம், தமிழ்த்துறையில் விபுலானந்தர், கணபதிப்பிள்ளை, செல்வநாயகம், வித்தியானந்தன், தனஞ்செயராஜ சிங்கம், வேலுப்பிள்ளை, சதாசிவம், சிவத்தம்பி, நுக்மான், சண்முகதாஸ், தில்லைநாதன் என நீண்ட பட்டியல் ஒன்றைத் தர முடியும். இது சரியான பட்டியல் அல்ல; பலருடைய பெயர்கள் விடுபட்டிருக்கலாம்)
பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆய்வுகள் பற்றிய ஒரு ஆய்வின்படி (1991-2001) 592 ஆய்வுச் சன்மானங்களில் 65% மானவை (385) பல்கலைக்கழக ஆய்வாளர்களுக்கே சென்றன. எவ்வாறாயினும், பல்கலைக்கழகங்களின் ஆய்வுப்பணி குறித்துப் பல விமரிசனங்கள் உண்டு;
அண்மைக்காலங்களில் தொகை ரீதியாகவும் தராதர ரீதியாகவும் பல்கலைக்கழக ஆய்வுகள் வீழ்ச்சி கண்டுள்ளன என்ற முறைப்பாடு உண்டு.
பல்கலைக்கழக ஆணைக்குழுவின் ஒரு பிரதான முன்னை நாள் உறுப்பினரான பேராசிரியர் சேபண்டாரனாயக்கா பின்வரும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றனர்.
* அண்மைத் தசாப்தங்களில் பல்கலைக்கழக ஆராய்ச்சிகள்
வீழ்ச்சி கண்டுள்ளன; * ஆராய்ச்சிப் பணி பற்றிப் பல்கலைக்கழகங்கள் பெரிதும் வலியுறுத்தினாலும், அப்பணிக்குப் போதிய முன்னுரிமையும் அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை; பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிப் பண்பாடு பலவீனமானது; தராதரமும் குறைந்தது; ஒரு சிலரே இப்பணிகளில் ஈடுபடு: கின்றனர்; * பல்கலைக்கழக வாழ்க்கையில் ஆராய்ச்சிப் பணி முக்கியத்துவம பெறவில்லை; அவை பற்றிய பாராட்டும் வரவேற்றும் இல்லை. பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சிப் பணி தற்போது வேறு நிறுவனங்களாலும் செம்மையாகச் செய்யப்படுகின்றன என்றும் கூறப்படுகின்றது. ஆராய்ச்சி செய்யும் பணியில் திறமை மிக்கவர்கள் வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லுகின்றனர். அப்படிப்பட்ட வர்களை கவர்ந்திழுக்கும் நிலையில் பல்கலைக்கழகங்களும் இல்லை.
-67

Page 36
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மேற்பட்டப்படிப்புக் கற்கை நெறிகளே பிரதானமாக ஆராய்ச்சிப் பணியை வலியுறுத்து வன. ஆயினும் இக்கல்வி நிலையில் இடம்பெறும் ஆராய்ச்சிப் பற்றிச் சரியான தகவல்கள் இல்லை. இவ்வாராய்ச்சிகள் பிரசுரிக்கப்படுவது பற்றியும் அவை ஏதேனும் பிரதான சங்கங்களில் சமர்ப்பிக்கப்படுவது பற்றியும் சரியாகத் தெரியவில்லை.
இன்றுள்ள சமூக - பொருளாதார நிலை, வேலைவாய்ப்புக்கள் என்பவை காரணமாக, முதல்பட்டம் பெறுவோர் தொழிலுக்குச் செல்லுகின்றனர். வெளியேறும்போது வயதும் 26ஐ நெருங்கி விடுகின்றது. இதனால் பட்டமேற்படிப்புக்கு வருவோர் அனைவரும் பகுதிநேர மாணவர்களாக உள்ளனர். (இந்தியாவில் தொடர்ந்து கல்வி பெறும்நிலை உள்ளதால் 25-26 வயதில் (உயர் பட்டங்களை (M.A.ph.d) பெற முடிகின்றது. ஆராய்ச்சிகளைத் தவிர்க்கும் பட்டமேற்படிப்புக் கற்கை நெறிகள் பல இலங்கையில் உண்டு. பல்வேறு பாடத்துறைகள் சார்ந்த அறிவில் ஏற்பட்டு வரும் விரிவு, சிறப்புத் தேர்ச்சியின் தேவை, முதற்பட்டக்கற்கை நெறிகளில் உள்ள குறைபாடுகள் முதலிய காரணங்களால் ஆராய்ச்சியைத் தவிர்க்கும் பட்டப்பின் படிப்புக் கற்கை நெறிகள் தேவைப்படுவது உண்மையே. ஆயினும் பட்டப்பின் படிப்பு நிலையில் ஆராய்ச்சிகள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.
ப.மா. ஆணைக்குழுவானது தனது எதிர்காலத் திட்டத்தில் ஆராய்ச்சிப் பணிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அத்திட்டத்தில் உள்ளடங்குவன: * ஆராய்ச்சிப் பணிக்கு அதிகநிதி ஒதுக்கீடு;
ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆராய்ச்சிப் பிரசுரங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கல்; முதற்பட்ட நிலையிலும் மேற்பட்ட நிலையிலும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இடமளித்தல்;
w
Х•
O
Х•
ΚΧ
Х•
பல்கலைக்கழகப் பாடத்துறைகளில் ஆராய்ச்சியாளர் பதவிகளை ஏற்படுத்தல்; உயர்தரமான ஆராய்ச்சித்திறன் கொண்ட மாணவர் குழு வொன்றை உருவாக்கத் தேவையான நிறுவன ஏற்பாடுகளைச் செய்தல்; அவர்களை இளம் விரிவுரையாளர் பதவிகளுக்கு நியமித்தல்;
C
X
-68

பேராசிரியர் சோசந்திரசேகரனி
ஆராய்ச்சிப் பணியை மேற்பார்வை செய்ய விசேட பேராசிரியர் பதவிகளை உருவாக்குதல்; பல்கலைக்கழகங் களுக்கு வெளியே உள்ள சிறந்த ஆராய்ச்சியாளர்களின் சேவைகளை உள்வாங்குதல்; சகல பல்கலைக்கழக ஆராய்ச்சிகளை உள்ளடக்கும் தகவல் முறைமையை உருவாக்கி, புலமைசார் சமூகத்துக்குக் கிட்டச் செய்தல்.
தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கையிலும் (2008)
பரிந்துரைகள் காணப்படுகின்றன. அவையாவன:
O &P
சகல பட்டக்கற்கை நெறிகளினூடாகவும் ஆராய்ச்சிக் கலா சாரத்தை வளர்த்தல்; விரிவுரையாளர்கள், ஆராய்ச்சிகளை மேற்பார்வை செய்யவும் வழிகாட்டவும் தேவையான பயிற்சியை வழங்கல்; ஒவ்வொரு பாடத்துறையிலும் போதனா பீடத்திலும் பல்கலைக்கழகத்திலும் ஆராய்ச்சிப் பணிகளின் முன்னேற் றத்தை மேற்பார்வை செய்யவும் பரிசீலிக்கவும் குழுக்களை அமைத்தல்; ஆசிரியர்களைத் தெரிவு செய்யும்போது அவர்தம் ஆராய்ச்சித் திறனைக் கருத்திற் கொள்ளுதல்; ஆராய்ச்சி தொடர்பற்ற பின்பட்ட கற்கை நெறிகளுக்கு ஊக்கமளிக்காதுவிடல்; தேசிய அபிவிருத்தியுடன் தொடர்புடைய பிரச்சினைகளை இலக்காகக் கொண்ட ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரையில் பல்கலைக்கழகம்- தனியார்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தல்; பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சிநிலையங்கள், தனியார் துறை சார்ந்த ஆய்வாளர்களைக் கொண்ட பன்னெறி ஆய்வுக் குழுக்களை ஏற்படுத்தல்;
-69

Page 37
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பல்கலைக்கழகம் - வெளி உலகத் தொடர்புகள்
மரபுவழிப் பல்கலைக்கழகம் எதுவித வெளி உலகத் தொடர்பும் அற்றது. கொள்கை அளவில் பல்கலைக்கழகங்கள் சமூகத் தொடர்பின்றி, சமூகப் பிரச்சினைகளில் அக்கறை கொள்ளாது “உண்மையைத் தேடுவதை" முழுமுதல் நோக்கமாகக் கொண்டு "தந்தக் கோபுர" (Irony Tower) நிறுவனமாக இயங்க வேண்டும் என்பது எழுத்திலிடப்படாத ஒரு பல்கலைக்கழக மரபு. ஆனால், கால ஓட்டத்தில் இன்று பல்கலைக்கழகங்கள், பொது மக்கள் பணத்தில் (Public Support) இயங்குவதன் காரணமாக, சமூக மேம் பாட்டையும் சமூகப் பிரச்சினைகளையும் கருத்திற் கொண்டு இயங்க வேண்டிய நிலையில் உள்ளன. இதன் காரணமாக, அவை தமக்கு அப்பால் உள்ள நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. இலங்கைப்பல்கலைக்கழகங்கள் தமக்குள்ளும் தொழில் துறையுடனும் உயர்தொழில் (Professional) சங்கங்களுட னும் ஏனைய உயர்கல்வி மற்றும் தொழில்சார் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளல் வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்தப்படுகின்றது. அதற்கான கொள்கைகளும் இன்று வகுக் கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகளும் இதில் உள்ளடங்கும். இத்தொடர்புகளை ஏற்படுத்தக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒரு விசேட பிரிவு (Unit) ஏற்படுத் தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில பல்கலைக்கழகங்களைத் தவிர மற்றயவை கைத் தொழில்துறையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை; பாட ஏற்பாட்டு விருத்தி, கற்பித்தல் என்னும் விடயங்களில் கைத்தொழில்துறையின் பங்களிப்பு எதுவுமில்லை. பல்கலைக்கழக அதிகாரிகள், ஆசிரியர்களுடனான பேட்டிகளின்போது, கைத்தொழில் துறையின் பங்களிப்பு, பாட ஏற்பாட்டு விருத்தியில் பொதுவாக இல்லை எனக் கண்டறியப்பட்டது. இதனால் பல பல்கலைக் கழகங்கள் வழங்கும் கற்கை நெறிகள் கைத்தொழிலின் மனித வலுத் தேவைகளுடன் தொடர்பற்றவையாய் உள்ளன. இதனால் கலை, சமூக அறிவியல், மனிதப் பண்பியல் ஆகிய கற்கைத் துறைகளைப் பயின்ற பட்டதாரிகள் மத்தியில் வேலை வாய்ப்பின்மை அதிகம். இவ்விடயம் “பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினை" என்ற பகுதியில் விரிவாக ஆராயப்படும்.
-70

பேராசிரியர் சோசந்திரசேகரனர்
பல்கலைக்கழக கைத்தொழில் தொடர்புகள் ஏராளமான செயற்பாடுகளை உள்ளடக்கும். உதாரணமாக:
* கற்பித்தல், பாட ஏற்பாடு விருத்தி, (கைத்தொழில் மாண வர்களுக்கு உள்ளகப் பயிற்சி, பாட ஏற்பாட்டு விருத்தியில் கைத்தொழில் துறையின் பங்களிப்பு);
* கைத்தொழில் துறைக்குப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் முகா
மைத்துவம், பொருளுற்பத்தி போன்ற துறைகளில் ஆலோசனைப
Lu6Oofuurtjöpaio (Consultancies); * ஆராய்ச்சி - அபிவிருத்திப் (Research and Development) பணிகள (ஒப்பந்த அடிப்படையிலான ஆராய்ச்சிகள், கூட்டு (joint) ஆராய்ச்சிகள், கைத்தொழில் நிலையங்களின் அனுசரணை ஆராய்ச்சிகள், பல்கலைக்கழக ஆராய்ச்சிகளை வணிக மயப்படுத்தல்) பல்கலைக்கழக ஆளுகை அமைப்புகளில் தனியார் அமைப்பு களுக்கு இடமளித்தல்.
உலக வங்கியின் அறிக்கையின்படி (2009) மொறட்டுவைப் பல்கலைக்கழகம் கொண்டுள்ள கைத்தொழில் துறைத் தொடர்பு களாவன; vn
Ο
X
“மொறட்டுவைப் பல்கலைக்கழகம் பல வழிகளில் கைத்தொழில் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. பட் டப்பின் படிப்புக் கற்கை நெறிகள், சிறு கற்கைநெறிகள், உயர்தொழில் (Professional) விருத்தி, போதனாபீட - கைத்தொழில்துறை ஆலோசனைச் சபைகள் என இப்பணிகள் பலவகைப்படும். இப்பல்கலைக்கழகம் “பல்கலைக்கழக - கைத்தொழில் நிலைய இடைத் தொடர்பு அலகு (Cel) ஒன்றையும் அமைத்துள்ளது (2002).
Ο
0.
O
* இப்பல்கலைக்கழகம் தன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தக்கூடிய பொதுத்துறை, தனியார்துறை நிறுவனங்களை இனங்காண விரும்புகின்றது. * கூட்டு ஆராய்ச்சி, ஆலோசனை வழங்கல் மூலமாக கைத்தொழில்துறையுடன் தொடர்புகளை ஏற்படுத் தியுள்ளது.
-71

Page 38
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
* கைத்தொழில்துறையில் பணிபுரிவோரின் தொழில்
விருத்தியில் அக்கறை காட்டி விடுகின்றது.
- World Bank, The Towers of Learning (2009)
அரசாங்கத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் (மொத்தத்தில் 15% மட்டுமே) "தனியார்/ கைத்தொழில் துறையுடன் பல்கலைக்கழகங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என்பது தேசிய கல்வி ஆணைக்குழுவின் கருத்து. ۔
தனியார்துறையானது தேசிய வளர்ச்சிக்கான பொறிமுறையாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இத்துறைக்கான தலைமைத்துவத்தை வழங்குபவர்கள் உருவாக்கப்படல் வேண்டும். இத்தனியார் துறைக் கைத்தொழில்/வர்த்தக நிறுவனங்கள் எதிர்காலத்தில் போட்டியையும் சவால்களைத் தரக்கூடிய தொழில்நுட்பங்களையும் எதிர் நோக்குகின்றன. இவ்வாறான தனியார்துறை/ கைத்தொழில் நிறு வனங்களில் வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கும் இளைஞர்க ளுக்கும் பயிற்சியையும் கல்வியையும் வழங்கும் பல்கலைக்கழகங்கள், தனியார்/கைத்தொழில் நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தொடர்புகள் பற்றியும் இன்று சிந்திக்கப்படுகின்றது. வேறொரு மட்டத்தில் சகல பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியம், கல்விசாரா ஊழியர் களுக்கிடையிலான ஒன்றியம் என்பன சற்று வலுவாக உண்டு. பல்கலைக்கழகங்கள் இலகுவாக இயங்குவதில் இவ்வமைப்புகள் பல தடைகளை ஏற்படுத்துகின்றன;இவை அரசியல் மயப்படுத்தப்பட்ட அம்சமும் பிதானமானது. ஒருவகையில் இவை எதிர்மறைத் தன்மை வாய்ந்த தொடர்புகளாகும். மற்றொரு மட்டத்தில் ஆசிரியர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சந்தர்ப்பங்களும் உண்டு. வருகைதரு விரிவுரையாளர்கள், பரீட்சகர், நேர்முகப் பரீட்சைக் குழுவின் உறுப்பினர் என்ற முறையில் பல பங்களிப்புகள் உண்டு. இவ்விடத்து வலியுறுத்தப்படும் அம்சங்களாவன:
* அறிவையும் நிபுணத்துவத்தையும் பல்கலைக்கழகங்கள் பகிர்ந்து கொள்ளுதல்; கூட்டுச் செயற்பாடுகளை நடாத்துதல்;
-72

பேராசிரியர் சோசந்திரசேகரனி
I
Ko
* சில துறைகளில் சிறப்புத் தேர்ச்சி வாய்ந்த பல்கலைக் கழகங்கள் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு உதவுதல்;
«Ο
பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் நிபுணர்குழு ஒன்றில் பணியாற்றல்; இது வெகு அருமையா கவே நடைபெறுகின்றது. உதாரணம்: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சமூக விஞ்ஞான, மனிதப் LIGOil jugs islaogoufugi) (5Cup (Standing Committee)
O
O
ஆசிரியர் பற்றாக்குறையுள்ள பல்கலைக்கழகங்களின் பாட ஏற்பாட்டு விருத்தியில் பிற பல்கலைக்கழக ஆசிரியர்கள் பங்குகொள்ளல்; ஆசிரியர்களின் தொழில்விருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள்: உதாரணமாக கொழும்புப் பல்கலைக்கழகக் கற்கை நெறிகளில் (Staff Development Programme) Lug Gag), Lucijasaadidsgps ஆசிரியர்கள் பங்குகொள்ளல்;
O
Ο
Х•
மாணவர்களைப் பொறுத்தவரையில் விளையாட்டுப் போட்டிகள்; விஞ்ஞான கருத்தரங்குகள் போன்றன;
o
கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் (முதுமாணி), கிழக்கிழங்கைப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்களுக்குக் குறுங் கற்கைநெறிகள் நடாத்தப்பட்டுள்ளன.
0.
இப்பின்புலத்தில் “பல்கலைக்கழகங்கள் தமக்குள்ளும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்துதல் ஒரு பிரதான உயர்கல்விக் கொள்கை. அவ்வாறே பல்கலைக்கழகங்களும் ஏனைய தொழில்நுட்ப, தொழில்சார் உயர்கல்வி நிலையங்களுக் குமிடையே தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும் என்னும் புதிய உயர்கல்விக் கொள்கைக்குப் பெரும் ஆதரவு உண்டு.
பல்கலைக்கழகங்களிலிருந்து சித்திபெற்ற பல துறையினரும் மற்றவர்களும் உயர்தொழில் சங்கங்களை ஏற்படுத்தியுள்ளனர். பொறியியலாளர்கள், இரசாயனத் துறையினர், கணக்காய்வாளர்கள், தொழில்நுட்பவியலாளர், சந்தையியலாளர், கணினித் துறை வல்லுனர் எனப் பலதரப்பட்டவர்களின் சங்கங்களுடனான தொடர்புகளும் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கு உதவ முடியும்.
-73

Page 39
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பிராந்திய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்கள்/ உயர்கல்வி நிலையங்களுடனான தொடர்பும் பல்கலைக்கழகக் கல்வித் தராதர மேம்பாட்டுக்கு அவசியமானது. இதற்காக ஆசிரியர்களின் வெளி நாட்டுக் கல்விக்கென படிப்பு விடுமுறையும் ஒரளவு நிதி உதவியும் வழங்கப்படுகின்றன. ஆயினும் வெளிநாட்டு உயர்கல்வி நிலையங்க ளுடனான முறையான தொடர்புகள் மற்றொரு விடயம். அதற்கான செயற்றிட்டங்கள் தேவை என்று இன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது (NEC, 2008)
வெளிநாட்டுப் பேராசிரியர்களின் வருகைக்கான ஏற்பாடுகள், வெளிநாட்டு ஆராய்ச்சித் திட்டங்களில் ஆசிரியர்களைப் பங்கு கொள்ளச் செய்தல், ஆசிரியர்களும் மாணவர்களும் நிர்வாக அலு வலர்களும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் குறுங்காலப் பயிற்சி பெறுதல் - இவ்விடயங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு W
1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டமானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை ஏற்படுத்தப்பட்டது. பிரித்தானிய மாதிரியைப் பின்பற்றிய ஏற்பாடு இதுவாகும். அரசாங்கத்துக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் நேரடித் தொடர்பு ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் நோக் குடன் ஒரு இடைநிலை ஏற்பாடாக (Bufer) இவ்வாணைக்குழு ஏற்படுத்தி அரசாங்கத்தின் அல்லது அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லாமையால் பல்கலைக்கழகங்கள் சுயாதீனமாகவும் (Automomous) ஆசிரியர்கள் கல்வி சுதந்திரத்துடனும் (Academic Freedom) இயங்க உதவுவதற்காகவே ப.மா. ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் உறுப்பினர்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் சிரேஷ்ட பேராசிரியர்களாவர்.
பல்கலைக்கழகச் சட்டப்படி (1978) ப.மா. ஆணைக்குழுவின் பணிகளாவன:
(1) உயர்கல்வி நிலையங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்தல்;
(2) உயர்கல்வி நிலையங்களுக்கிடையில் கற்பித்தலையும்
ஆராய்ச்சிப் பணிகளையும் ஒருங்கிணைப்புச் செய்தல்;
(3) உயர்கல்வி நிலையங்களுக்கான மாணவர் அனுமதி, பயிற்றுமொழி முதலிய விடயங்களில் தேசிய ரீதியாக
-74

பேராசிரியர் சோசந்திரசேகரனி
ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை ஏற்று நடைமுறைப் படுத்தல்; (4) ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தெரிவு, பதவி உயர்வு, சம்பளங்கள் தொடர்பான தேசிய நியமங்களைத் தீர்மானித்தல்; (5) துணைவேந்தர்களின் தெரிவில் மட்டுப்படுத்தப்பட்ட முறை
யில் ஆலோசனை வழங்குதல்; (6) நிறுவகங்களின் பணிப்பாளர்களை நியமித்தல்; (7) கல்விசாரா அதிகாரிகளை நியமித்தல்; (8) பல்கலைக்கழகங்களின் ஆளணியினர் (Cadre) தொகை பற்றித் தீர்மானித்தல்; பல்கலைக்கழகங்களின் கோரிக்கைகள் இவ்விடயத்தில் கருத்திற் கொள்ளப்படும்; (9) பல்கலைக்கழக செனட்மன்றமும் பேரவையும் (Council)
பரிந்துரைக்கும் கற்கை நெறிகளுக்கு அங்கீகாரம் வழங்கல்; (10) புதிய பல்கலைக்கழகங்களை அமைக்கத் திட்டமிடுதல்; (11) பல்கலைக்கழகங்கள் இயங்குமாற்றுப் பரிசீலனை செய்தல்;
கண்காணித்தல்; ப.மா.ஆணைக்குழுவின் இலக்குகளாவன: * தேசியக் கொள்கைக்கேற்ப பல்கலைக்கழகக் கல்வியைத்
திட்டமிடலும் ஒருங்கிணைத்தலும்; * உயர்கல்விக்குப் பாராளுமன்றம் வழங்கும் நிதியைப்
பல்கலைக்கழகங்களுக்கு ஒதுக்குதல்; * உயர்கல்வி நிலையங்களின் கல்வித்தராதரங்களைப் பேணுதல்; * உயர்கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தல்; * உயர்கல்வி நிலையங்களுக்கான மாணவர் அனுமதியை
ஒழுங்குபடுத்தல்; * ப.மா.ஆணைக்குழுவானது காலத்தின் தேவைகளுக்கேற்ப எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது
பற்றி ஆராய்ந்து வருகின்றது. இது பற்றி சேனக்க பண்டாரநாயக்கா (2007) கூறும் கருத்துகள் பின்வருமாறு:
-75

Page 40
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
O
ப.மா.ஆணைக்குழுவின் கீழ் சுதந்திரமான தராதர உறுதிப்பாட்டுப் பேரவை ஒன்றை ஏற்படுத்தல் (இப்பேரவை தற்போது இயங்கி வருகின்றது); நிர்வாக ஊழியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை தெரிதல், நியமித்தல், பதவி உயர்வு வழங்கல் போன்ற விடயங்களில் ப.மா. ஆணைக்குழுவின் பங்கினைப் பல்கலைக்கழகங் களிடம் ஒப்படைத்தல்;
Ο
X
* மாணவர் அனுமதிக்கான பொறுப்பை ப.மா.ஆணைக்குழு வின் கீழ் சுதந்திரமான, பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய சபை ஒன்றை ஏற்படுத்தல்; சகல பல்கலைக்கழகங்களும் நிறுவகங்களும் இச்சபையில் பிரதிநிதித்துவம் பெறும். இச்சபை அரசாங்கத்தின் பொதுக் கொள்கைக்கேற்ப அனுமதிக் கொள்கையை உருவாக்கும்.
பட்டதாரிக் கல்வி தவிர்ந்த ஏனைய கற்கை நெறிகளுக்குக் கட்டணம் அறவிடப் பல்கலைக்கழகங்களுக்கும் நிறுவகங்க ளுக்கும் அனுமதி வழங்கி அவற்றின் வருமானத்தைப் பெருக்க உதவுதல்; இக்கொள்கை தற்போது நடைமுறையில் உள்ளது.
பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புகள் தொடர்பான பிரச்சினை
காலப்போக்கில் நாட்டில் விரிவடைந்த பாடசாலைக் கல்வி யைத் தொடர்ந்து, பல்கலைக்கழகக் கல்விக்கான தேவை அதிகரித் தது. 2002-2006 காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் க.பொ.த. உ/நி பரீட்சைக்கு அமர்ந்தனர்; அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 92000 முதல் 112,000 மாணவர்கள் வரை பல்கலைக்கழக அனுமதிப் பெறத் தகுதி பெற்றனர். இவர்களில் 13000-18000 மாணவர்கள் வரையே பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றனர். இதிலிருந்து பல்கலைக் கழகக் கல்வி எந்தளவுக்குப் போட்டிமிகுந்தது? எந்த அளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது? என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.
O
Х•
பல்கலைக்கழகக் கல்விக்கான சமூகக் கேள்வி/ தேவையின் அதிகரிப்புக்குப் பல காரணங்களைக் கூற முடியும்.
-76

Κ
X
பேராசிரியர் சோசந்திரசேகரனி
பல்கலைக்கழகப் பட்டங்கள் வழங்குகின்ற சமூக அந்தஸ்தும் தொழில் கிடைத்தால் கிட்டக்கூடிய உயர்ந்த வருமானங்களும்; உயர்கல்வியின் தனியாள் விளைவு வீதம் (Rate of Return 25%);
முதலாம்தரம் முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி வழங்கப்படுவதாலும் அனுமதி பெறும் மாணவர்களுக்குப் புலமைப் பரிசில் வசதிகள் இருப்பதாலும் பின்தங்கிய, தூரப்பிரதேச மாணவர்களும் உயர்கல்வி வாய்ப்பினைப் பெறலாம் என்ற நிலைமை;
மாவட்ட ரீதியான அனுமதி முறையானது பின்தங்கிய மாண வர்களும் முயற்சித்தால் பலன் கிட்டும் என்பதால் உயர்கல்வி அபிலாஷைகளை ஏற்படுத்திக் கொள்ளும் நிலைமை; பார்க்க egy "LG)J6060T (XVIII)
காலப்போக்கில் க.பொ.த. உ/த கல்வியை வழங்கக்கூடிய பாடசாலைத் தொகுதியொன்று, முழுநாட்டிலும் விரிவாக ஏற்படுத்தப்பட்டமை; 2007இல் இத்தகைய கல்வியை வழங் கிய பாடசாலைகளின் தொகை 2564 (681 IAB பாடசாலை கள், 1883 1C பாடசாலைகள்).
அரசாங்கக் கல்விக்கொள்கையானது பின்தங்கிய பிரிவினருக் குக் கல்வி வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் நடவடிக் கைகளை மேற்கொண்டமை (இலவசக்கல்வி, மத்தியப்பாடசா லைகள், இலவச பாடநூல், இலவசச் சீருடை, ஐந்தாம் வகுப்புப் புலமைப்பரிசில், மாவட்ட ரீதியான பல்கலைக்கழக அனுமதி, பின்தங்கிய மாவட்டங்களுக்கு விசேட அனுமதி பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புலமைப்பரிசில் வசதிகள்)
பதின்மூன்று ஆண்டு பாடசாலைக் கல்வியின் பின்னர் சிறந்த தொழில்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் தொடர்கல்வியில் செலுத்தப்பட்ட நாட்டம்.

Page 41
இல்ங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
DeLaGOOGOOT -XVI
ஆண்டு க.பொ.த அனுமதிக்குத் அனுமதி சதவீதம்
உ/நிஅமர் தகுதி பெற்றோர் பெற்றோர்
ந்தோர்
தொகை
2002 208503 922.26 12431 12.6
2003 213201 93292 13396 14.1 2004 199652 108357 14520 14.3 2005 203688 118770 17287 14.6
2006 201398 119869 17196 14.3
சதவீதம் : அனுமதி பெறத் தகுதி வாய்ந்தவர்களில் அனுமதி
பெற்றோர் சதவீதம்.
ஆதாரம்: ப.மா.ஆணைக்குழு ஆவணங்கள்
geLaGUDGURUT -XVIII
மாவட்ட ரீதியான மானவர் அனுமதி 2006-2007 மாவட்டம் மாணவர் தொகை கொழும்பு 2046 கம்பஹா 1075 களுத்துறை 714 மாத்தளை 284 கண்டி 1121 நுவரெலியா 351 காலி 1289 மாத்தறை 890 அம்பாந்தோட்டை 585 யாழ்ப்பாணம் 869 கிளிநொச்சி 109
-78

பேராசிரியர் சோசந்திரசேகரனி
மன்னார் 113
முல்லைத்தீவு 116 வவுனியா 172 திருகோணமலை 233
மட்டக்களப்பு r 391 அம்பாரை 511 புத்தளம் 422 குருனாகல் 1398 அனுராதபுரம் 517 பொலநறுவை 22
பதுளை 52.5 மொனராகலை 269
கேகாலை 6
இரத்தினபுரி 857 விசேட அனுமதி 1066 மொத்தம் 1769
இலங்கையின் இலவசக் கல்விமுறையின் ஒரு முரண்பாட் டினை ஒரு ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றார் (Chandrasiri, 2008), பாடசாலைகளில் தரம் 1முதல் தரம் 13 வரை இலவசக்கல்வி; இறுதி வகுப்பில் பயிலும் அனைவரும் பல்கலைக்கழகம் நுழையும் முயற்சியில் க.பொ.த உ/நி பரீட்சைக்கு அமர்கின்றனர்; இதன் பின்னரான பல்கலைக்கழகக்கல்வி இலவசமாயினும், அனுமதி பெறும் மாணவர் தொகையும் இலவசக் கல்வியும் சுருங்குகின்றது. பரீட்சைக்கு அமரும் 218000 பேரில் (2005) 16600 பேர் மட்டும் (ஏறத்தாழ 8%) பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர். பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெறத்தகுதி பெறுவோரின் 85% மாணவர்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை.
-79

Page 42
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
متح667ھ /Zترzثر7z//62 7گoے تع6ھ //4zھ 607 7/sھی تھی 629 76//60?
(X
0.
தனியார் உயர்கல்வி நிலையங்களை நாடுதல்; (ஆண்டு தோறும் 9,500 மாணவர்கள்) உயர் தொழில் நிறுவனங்களை நாடல் (கணக்கியல், கட்டடவியல், தகவல் தொழில்நுட்பம், வங்கியியல் போன்ற துறைகளில் (ஆண்டுதோறும் 25,000 பேர் வரை சேருகின்றனர்) பல்கலைக்கழகங்கள் வழங்கும் வெளிவாரிக் கற்கை நெறிகளிலும் திறந்த பல்கலைக்கழகத்தையும் நாடுதல் (திறந்த பல்கலைக்கழகத்தில் மொத்த மாணவர் 25,000 பேர்) வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பெறச் செல்லல் (ஆண்டுதோறும் 5000 பேர்) அரசாங்கத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெறல்.
தொழில்களை நாடுதல் (41208 பேர்)
திறந்த பல்கலைக்கழகக் கற்கைநெறிகளும் வெளிவாரிக் கற்கை
நெறிகளும் முழுநேரக்கற்கை நெறிகள் அன்று; அத்துடன் சித்தி பெறுவோர் தொகையும் குறைவு; முறையே 10%, 1.2% மானவர் களே கற்று முடிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். படிப்பை இடையில் நிறுத்துவோரும் அதிகம். இக்கற்கை நெறிகளின் கல்வித் தராதரம் பற்றி ஐயம் தெரிவிக்கின்றவர்கள் உள்ளனர். பல்கலைக் கழக உள்ளகக் கற்கை நெறிகளின் தராதரத்தையும் பொருத்தப்பாட் டையும் மேம்படுத்த உலக வங்கியின் உதவியுடன் செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் வெளிவாரிக் கற்கை நெறிகள் தராதரமானவையாக இருக்க முடியுமா எனப் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
-80

பேராசிரியர் சோசந்திரசேகரனி
09922 soợ93?
Įuoợesfilolo) ‘ævelgi
qiu@godfò
(çZŽIË)- 4yiJają)(9zzog) soợ93? Ģmæcertog) ogsựlloợesfilolo) yuregysīrilo)ælgesi qofiuslo) "Iquaĵ199ơfè
000g Useợeo
ș@řílišụereo | ṣaḥ
0000Þ Hıratırı çı-ı ırı
IŲureŲore(o)
a909oqørı
86.g9I Hıçıtırı IŲureņe-æ ogif@so 99ഴer
(gZg‘901) \logÒLaoqesnī£®© $æợ990 a9c9oqørı
(969'021) yurtegyōrilo)
$@@ șæợ990 a9c9oqeri
00091.g. ņure@@gif@ @șowo-Tyrı (goog) grelogouqi (gi/-ae ourilo) so
hņuimoso polynų9ọsoņm-aş çeų motosipute($
-81

Page 43
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பல்கலைக்கழக மானியங்களால் நிதி உதவி வழங் கப்படாத பல உயர்கல்வி நிலையங்களுக்குப் பட்டம் வழங்கும் அந்தஸ்து ப.மா. ஆணைக்குழுவால் வழங்கப் பட்டுள்ளது. அவையாவன:
* சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு அக்கடமி * தொழில்நுட்பவியல் கற்கைநிறுவனம் * அளவீட்டு படமாக்கல் நிறுவனம்
(X இலங்கைத் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் * இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் * தேசிய கடற்றொழில், கடற்றுறைப் பொறியியல்
நிறுவனம்
சமூக அபிவிருத்தி நிறுவனம் அக்கியுளாய் உயர்கல்வி நிறுவனம்
0.
X
Ο
Х•
இவ்வாறான ஏற்பாடுகள் பல்கலைக்கழக உள்ளகக் கற்கை நெறிகளுக்குச் சரியான மாற்று ஏற்பாடல்ல என்பது பலரது கருத்து. இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்புகள், மாணவர் தேவைக்கேற்ப விரிவுபடுத்தாத நிலையில் சர்வதேசக் கல்வி (வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கல்வி) இலங்கையில் பிரசித்தி பெற்று வருகின்றது. இவ்வாறான கல்வி முறைமையில் இருவகையான மாணவர் குழுக்களை இனங்காண முடிகின்றது. (1) வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறுவோர்; (2) வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட உள்ளூர் கல்லூரிகளில் சேர்ந்து வெளிநாட்டுப்பட்டங்களைப் பெறுதல்.
2001ஆண்டில் 4803 மாணவர்களும் 2003இல் 7271பேரும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றனர் (2003இல் பிரித்தானியாவில் அனுமதி பெற்றோர் 1574 பேர், அவுஸ்திரேலியா வில் 1132பேர், ஐக்கிய அமெரிக்காவில் 1000 பேர் வரை) இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளுக்குச் செல்வோரும் உண்டு.
-82

பேராசிரியர் சோசந்திரசேகரனி
செலவாணிக் கட்டுப்பாட்டாளரின் தரவுகளின்படி வெளி நாட்டுக் கல்விக்கான ஆண்டுச் செலவு 700 கோடி ரூபாய் டொலர் கள் ஆயினும் குறைந்த மதிப்பீடு என்றே கூறவேண்டும்; உயர்கல்வி அமைச்சுக்காகத் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றின் படி, இலங்கையில் உயர் கல்விக்கான நடைமுறைச் செலவு ரூ.1000 கோடி. உள்நாட்டில் வெளிநாட்டுப்பட்டக் கல்வியை மேற்கொள்ளு வோர் ரூ.600000 முதல் ரூ.9,00000 வரை செலவிட வேண்டி யுள்ளது.
இவ்வாறு வெளிநாட்டுக் கல்விக்காக இழக்கப்படும் வெளி நாட்டுச் செலவாணி, உயர்கல்விக்கான சமூகத் தேவை/ கேள்வி பொருளாதார துறைகளின் எதிர்கால மனித வளத்தேவைகள் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, பல்கலைக்கழகங்களில் அனுமதி பெறும் மாணவர் தொகையை அதிகரிக்கும் திட்டமொன்றை உயர்கல்வி அமைச்சின் புதியவறிக்கை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் பிரதான அம்சங்கள் பின்வருமாறு:
* பல்கலைக்கழக மொத்த மாணவர் தொகை 65000 இலிருந்து
(2006) 174,000 மாக அதிகரிக்கும் (2016); * கலைத்துறை மாணவர்கள் தொகை 21,000 இலிருந்து (2005), 19,000 மாகக் குறையும் (2016); வர்த்தகவியல் துறை மாணவர் எண்ணிக்கையும் குறையும் (2317 இலிருந்து 1608 ஆக (2016இல்). சட்டத்துறை மாணவர் தொகையில் சிறிய அதிகரிப்பே இருக்கும் (1024 இலிருந்து 1313வரை - 2016) மருத்துவத்துறை மாணவர் தொகையில் கணிசமான அதிகரிப்பு (5366 இலிருந்து 57000 வரை) * பல்மருத்துவம் 395 இலிருந்து 3814வரை (2016இல்) * பொறியியல் 5016 இலிருந்து 15000 வரை) * விவசாயம் 3400 இலிருந்து 6060 வரை)
* கணினிக் கல்வி/தகவல் தொழில்நுட்பம் 1099இலிருந்து 21670
வரை - 2016 இல்)
0.
O
象
* அவ்வாறே உணவு விஞ்ஞானம், உள்நாட்டு மருத்துவம், துணை மருத்துவக்கல்வி போன்ற துறைகளிலும் கணிசமான அதிகரிப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-83

Page 44
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
* இப்பரிந்துரையின்படி பல்கலைக்கழக ஆசிரியர்கள் தொகை 5585இலிருந்து (2006) 18923 ஆக (2016) இல் அதிகரிக்கப்படல் வேண்டும்.
Κ
Ο
* கலைத்துறை, வர்த்தகவியல் துறை ஆசிரியர்கள் தொகை குறைய நேரிடும். ஏனைய கற்கைத் துறைகளில் மாணவர் அதி கரிப்பிற்கேற்ப ஆசிரியர்கள் தொகை கணிசமாக அதிகரிக்கும். 2006-2016க்கிடையிலான அதிகரிப்பிற்குச் சில உதாரணங்கள்.
- மருத்துவம் : 807 இலிருந்து 8140 - பொறியியல் : 540 இலிருந்து 1501 - விஞ்ஞானத்துறை : 959 இலிருந்து 1435 - துணை மருத்துவத்துறை : 36 இலிருந்து 989 வரை - உள்நாட்டு மருத்துவம் : 41 இலிருந்து 538 வரை இப்பரிந்துரைகளைச் செய்த நிபுணர் குழுவினர் பல்கலைக் கழகக் கல்வி வாய்ப்புகளைக் கணிசமாக விரிவு செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதேவேளையில் எதிர்கா லத்தில் எத்துறைகளில் தேவைகளும் வேலைவாய்ப்புகளும் அதிகமோ அவ்வாறான துறைகளிலேயே அதிகரிப்பைப் பரிந்துரை செய்துள் ளனர். கலைத்துறையில் எதுவித அதிகரிப்பும் தேவை இல்லை என்பது அவர்களுடைய முடிவு. பல்கலைக்கழகக் கல்வி வாய்ப் புகளில் அரசாங்கம் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்த மைக்கு சில காரணங்களைக் கூற முடியும்.
* பாடசாலைக் கல்வி போலன்றி பல்கலைக்கழகக் கல்வி செலவு மிக்கது. ஒரு பாடசாலை மாணவனுக்கான ஆண்டுச் செலவு ரூ. 12,668 என்றால் ஒரு பல்கலைக்கழக மாணவனுக்கான ஆண்டுச் செலவு ரூ.185000; (2005) வேறுவகையில் கூறுவதா யின் 40 இலட்சம் மாணவர்களுக்கான ஆண்டுச் செலவு ரூ. 8000 கோடி, 65,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஆண்டுச் செலவு ரூ.1000 கோடி (2006). இந்நிலையில் இலவசமாகப் பல்கலைக்கழகக் கல்வி வழங்கப்படுவதால் மாணவர் தொகையை அதிகரிக்கும் போது செலவுகளும் அதிகரிக்கும். அரசாங்க நிதி ஒதுக்கீடுகளில் பல மட்டுப்பாடுகள் உண்டு.
-84

O
0.
பேராசிரியர் சோசந்திரசேகரனி
* பல்கலைக்கழக மாணவர் தொகையை சமூக தேவைக்கேற்ப அதிகரிக்கும்போது - தகுதி பெறும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பினை வழங்கும்போது தீர்வு காண முடியாத வேலை வாய்ப்புப் பிரச்சினையை அரசாங்கம்
எதிர்கொள்ள வேண்டி வரும்.
இதனால் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல நெருக் கடிகளுக்கு உள்ளாக வேண்டிவரும் (தற்போது கிழக்கு மாகாணத் தில் வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் போராட்டம் ஒரு
உதாரணம்)
பல்கலைக்கழகக் கல்வியை விரிவாக்க இன்று பல புதிய ஆலோசனைகள் கூறப்படுகின்றன. அவையாவன:
令
O
«Ο
8
உயர்கல்வியை வழங்கப் பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் பல்வகை ஏற்பாடுகளைச் (Multiple Modes) செய்தல்; உதாரணமாகப் பல்கலைக்கழகங்கள் தொலைக்கல்வி ஏற்பாடுகளைச் செய்தல்;
பல்கலைக்கழகங்களுடனான இணைப்புக் கல் லூரிகளை ஏற்படுத்தல்; மாணவர்கள் இக்கல்லூரி களில் பயின்றாலும் பல்கலைக் கழகங்கள் பட்டங் களை வழங்கும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேற்பார்வைக்கு அப்பால் பட்டம் வழங்கும் நிறுவனங்களை ஏற்படுத்தல், ப.மா.ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ள அத்தகைய நிறுவனங் கள்; (கொத்தலாவல (பாதுகாப்பு) பல்கலைக் sup5lb, 9.d5(5cupolatitas saignif, SLIDA, ITS, SLITநிறுவனம், தேசிய கல்விநிறுவனம், பெளத்த பாளி பல்கலைக்கழகம்)
-85

Page 45
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
திறந்த பல்கலைக்கழகம்
1980ஆம் ஆண்டில் இலங்கையில் நிறுவப்பட்ட திறந்த பல் கலைக்கழகம் பெருமளவுக்கு மரபுவழிப் பல்கலைக்கழகங்களால் நிறைவு செய்ய முடியாத உயர்கல்விக்கான கேள்வியை நிறைவு செய்யும் நோக்குடன் அமைக்கப்பட்டது. மரபுவழி பல்கலைக்கழ கங்களில் இடம்பெற முடியாத ஒரு இலட்சம் மாணவர்களுக்குத் திறந்த பல்கலைக்கழகம் உயர்கல்வி வாய்ப்புகளை ஒரளவுக்கேனும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர்களுக்கு மட்டுமன்றி, சமூகத்தில் வாழ்கின்ற வயதுவந்தவர்கள், தொழில் புரிவோர் போன் றவர்களுக்கும் திறந்த பல்கலைக்கழகம் உயர்கல்வி பெறுவதற்கான மற்றொரு வாய்ப்பினை வழங்குகின்றது.
மரபுவழிப்பல்கலைக்கழகங்கள் முதலாம் ஆண்டில் வழங்கும் அனுமதிகள், சில அனுமதிக் கட்டுப்பாடுகளைக் கொண்டவை. க.பொ.த. உ/நிபரீட்சையில் உயர்ந்த கல்விச் சித்தி ஒரு பிரதானமான கட்டுப்பாடு; வயதுக்கட்டுப்பாடு முறையாக விதிக்கப்படாவிட்டா லும் 18-19 வயது மாணவர்களே பெரும்பாலும் அனுமதி பெறுகின் றனர். தேசிய ரீதியான திறமைச் சித்தி, மாவட்ட ரீதியான திறமைச் சித்தி, Zபுள்ளி எனப்பல கட்டுப்பாடுகள் உண்டு. இந்நிலையில் ப.மா. ஆணைக்குழுவே அனுமதிகளைத் தீர்மானிக்கின்றது. இவற்றுக்கு மாறாக, திறந்த பல்கலைக்கழகம் சில அடிப்படைத் தகுதிகளை உடைய உயர்கல்வி ஆர்வலர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளை வழங்கி வருவது ஒரு பிரதான விடயம்.
மரபுவழிப் பல்கலைக்கழகங்கள் போன்று, பல்கலைக்கழகப் பேரவை, செனட் மன்றம், போதனா பீடங்கள் போன்ற அமைப்புகள் திறந்த பல்கலைக்கழகத்தில் உண்டு; அரசாங்க நிதி உதவியும் வழங் கப்படுகின்றது. (2007 இல் 55கோடி ரூபாய் அதில் நடைமுறைச் செலவு 45 கோடி ரூபாய், மூலதனச் செலவு 10 கோடி ரூபாய்) பல சிறிய பல்கலைக்கழகங்களுக்கு ஈடான அரசாங்க உதவியைத் திறந்த பல்கலைக்கழகம் பெறுகின்றது (உதாரணமாக ரஜரட்டைப் பல்கலைக்கழகம் - 55 கோடி ரூபாய், சப்பிரகமுவ பல்கலைக்கழகம் -55கோடி ரூபாய்,தென்கிழக்குப்பல்கலைக்கழகம் 37 கோடி ரூபாய்) அரசாங்கம் திறந்த பல்கலைக்கழகக் கல்வியில் அக்கறை கொண் டுள்ளதை அதன் நிதி உதவி எடுத்துக் காட்டுகின்றது.
திறந்த பல்கலைக்கழகத்தின் ஒரு பிரதான அம்சம், மரபுவழிப் பல்கலைக்கழக மாணவர் தொகையைவிட அங்கு மாணவர் சேர்வு
-86.

பேராசிரியர் சோசந்திரசேகரன்
அதிகம். எவ்வாறாயினும் அவர்கள் முழுநேர மாணவர்கள் அல்லர்; அனைத்து மாணவர்களும் தொலைக்கல்வி முறைமூலம் பயிலு பவர்கள் என்பதால் அங்கு சேர்ந்து பயிலும் மாணவர்கள் தொகை மரபுவழிப் பல்கலைக்கழகங்களை விட அதிகம். தற்போது 2007 திறந்த பல்கலைக்கழகத்திலும் மாணவர் தொகை 28,600; மேலோட் டமாக நோக்குமிடத்து, இலங்கையின் 15 அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் திறந்த பல்கலைக்கழகமே அதிக மாணவர்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக இலங்கையின் “பெரிய" பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர் தொகை இதனை விடக் குறைவு (கொழும்புப் பல்கலைக்கழகம் -12,000, பேராதனைப் பல்கலைக் கழகம் 11,700). ஆயினும், திறந்த பல்கலைக்கழகத்தின் 28,000 மாணவர்கள் உள்வாரிமாணவர்கள் அல்லர். அவர்களில் பலர் உயர் கல்வியைக் கைவிட்டவர்களாகவும் இருக்கக்கூடும்; சேர்ந்து பயிலும் மாணவர்கள் 2006இல் 23,990; ஆனால், அவ்வாண்டில் பட்டம் பெற்றவர்கள் 1992பேர்; 2007இல் சேர்ந்து பயின்றவர்கள் 28,600 பேர், ஆனால், அவ்வாண்டில் பட்டம் பெற்றவர்கள் 936 பேர்
மட்டுமே.
எவ்வாறாயினும் திறந்த பல்கலைக்கழகம் சாதாரண சான்றிதழ் கற்கை நெறிகளையும் மேற்பட்ட கற்கை நெறிகளையும் வழங்கி வருவது ஒரு சிறந்த அம்சம். அத்துடன் மரபுவழிப் பல்கலைக்கழகங் களை விட நவீனமான கற்கை நெறிகளையும் வழங்கி வருகின்றது. சான்றிதழ் கற்கை நெறிகள்
அடிப்படை ஆங்கிலம், முன்பள்ளிக்கல்வி, தொழில்முறை ஆங்கிலம், கைத்தொழில் கற்கை, அடிப்படைச் சிங்களம், சுற்றாடல், விஞ்ஞானம், சிறுதொழில் முகாமைத்துவம், காட்டுவாழ்க்கைப் பாது காப்பு; இத்துறைகளில் பயில அனுமதி பெறுவோர் தொகை 5000 வரை, திப்ளோமாக் கற்கை நெறிகள்
ஆங்கில மொழி, முகாமைத்துவம், இளைஞரும் அபிவிருத்தி யும், தொழில்நுட்பவியல், கைத்தொழில் கற்கைநெறிகள்; இத்துறை களில் 2007இல் அனுமதி பெற்றோர் தொகை 4,075. முதல் பட்டக்கற்கை நெறிகள்
கல்வியியல், சட்டம், விஞ்ஞானம், தொழில்நுட்பவியல், மருத்துவத்தாதிமார் கற்கைநெறி, முகாமைத்துவம், சமூக அறிவியல்,
س-87

Page 46
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
ஆங்கிலம், கைத்தொழில் கற்கை நெறிகள்; இத்துறைகளில் 18000 மாணவர் சேர்ந்து பயிலுகின்றனர்.
(உதாரணமாக, 2007இல் அனுமதி பெற்றவர்கள் சட்டத் துறையில் 2127பேர், விஞ்ஞானம் 3970 பேர் தொழில்நுட்பவியல் 725Gui)
பட்டப்பின் படிப்பு திப்ளோமா
கைத்தொழில் பொறியியல், சுற்றாடல் விஞ்ஞானம், கல்வியியல, முகாமைத்துவம், அபிவிருத்திக் கற்கை நெறி; இவற்றில் கல்வியியல் துறையில் மட்டும் 2007இல் 2078 மாணவர்கள் அனுமதி பெற்றனர்.
உயர்பட்டங்கள்
நிர்மாண முகாமைத்துவம், கல்வியியல், கைத்தொழில் பொறியியல், ஆசிரியர் கல்வி, இரண்டாம் மொழியாக ஆங்கிலம்
பொதுநலவமைப்பு MBA கற்கைநெறி, சுற்றாடல் கற்கை நெறிபோன்ற துறைகளில் 500 மாணவர்கள் வரை சேர்ந்து பயிலுகின்றனர்.
திறந்த பல்கலைக்கழகம் கல்வித் தகுதி குறைந்தவர்களுக்குச் சான்றிதழ் கற்கை நெறிகளை வழங்குவதால் அதன் திறந்த தன்மை அதிகரிக்கின்றது. அத்துடன் மரபுவழிப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் சட்டம், விஞ்ஞானம், கல்வியியல் போன்ற துறைகளில் பயில வாய்ப்புக் கிட்டுகின்றது. ஏற்கனவே பட்டம் பெற்றவர்களுக்கான பின்பட்டக்கற்கை நெறிகளும் நடாத்தப் படுகின்றன. சமூக அறிவியல்கற்கை நெறிகள் மட்டுமன்றி, பொறியியல் கற்கை நெறிகளும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்க அம்சம்.
பட்டதாரிகளின் வேலைவாய்ப்புப் பிரச்சினை
இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியின் ஒரு முரண்பாடான அம்சம், உயர்கல்வி வயதினரில் மிகக் குறைந்த கல்வி வாய்ப்புக் கிட்டினாலும் அவர்களுக்கும் முறையான வேலைவாய்ப்புக் கிட்டாமையாகும். 1942இன் பின்னர் பொதுவாகவே அரசாங்கத்துறை வேலைவாய்ப்புகள் கிட்டிய போதிலும், 1960களில் காணப்பட்ட பட்டதாரிகள் அரசாங்க வேலை பெற்றுக்கொள்வது சிரமமாக இருந்தது. எமது சொந்த அனுபவத்தில் 1960களில் பல பட்டதாரிகள் பல ஆண்டுகள் வேலையற்ற நிலையில் கஷ்டங்களை அனுபவித்தனர்.
-88

பேராசிரியர் சோசந்திரசேகரனி
தனியார் துறையானது தற்போது போன்று விரிவடையாத காலப்பகுதியில் அரசாங்கத்துறை சகல பட்டதாரிகளையும் உள் வாங்கும் நிலையில் இருக்கவில்லை. பட்டதாரிகளின் வேலையின் மைப் பிரச்சினை தீவிரமடைந்து, அது ஒரு பெரும் சமூகப் பிரச்சி னையாக உருவெடுத்தபோது, பதற்றத்தை தணிக்கும் முறையில் பெருவாரியான பட்டதாரிகள் உள்வாங்கப்பட்டதுண்டு. 1970களில் பட்டதாரி பயிலுனர்கள் என்ற பெயரில் குறைந்த சம்பளங்களுடனும் அவர்கள் உள்வாங்கப்பட்டதுண்டு. அரசாங்கம் பல்கலைக்கழக வாய்ப்புகளை விரிவு செய்யாமைக்கு, குறிப்பாக கலைத்துறை வாய்ப் புகளை விரிவு செய்வதில் அக்கறை காட்டாமைக்கு இவ்வாறான வேலைவாய்ப்புப் பிரச்சினையும் அதனால் உருவாகும் சமூக அமைதி யின்மையும் காரணமாக அமைந்தன.
மற்றொரு காரணம், பாடசாலைக் கல்வியை விட பல்கலைக் கழகக் கல்வி பன்மடங்கு செலவுமிக்கதாகும். அதிக செலவில் வேலையற்ற பட்டதாரிகளை ஏன் உருவாக்க வேண்டும் என்று கொள்கை வகுப்போர் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
அட்டவணை XIX
பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனுக்கான அலகுச் செலவும் உயர்கல்வி வயதெல்லையில் மாணவர் சேர்வு வீதமும்
ஆண்டு 1980, 1985 1990 2000 2003 2005
பல்கலை அலகுச் செலவு ரூ 14996 32332 37544 112000|126000|185000
பாடசாலை அலகு செலவு ரூ 448 95仆 2003 6436 8504 12668
பல்கலை மாணவர் சேர்வு% 12 11 1.6 2.3 2.9 3.1
ஆதாரம் : ப.மா.ஆணைக்குழு ஆவணங்கள்
உயர்கல்வி அமைச்சின் ஆவணம் ஒன்றின்படி, 2005ஆம் ஆண்டில் வேலையற்ற/ குறைந்த தரமான வேலையிலிருந்த (underemployed) பட்டதாரிகள் தொகையானது கலை, முகாமைத் துவம், வர்த்தகம், சட்டம், மற்றும் விஞ்ஞானம், பொறியியல் பட்டதாரிகளை உள்ளடக்கி இருந்தது.
-89

Page 47
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
அட்டவணை XX வேலையற்ற/ குறைந்த தரமான வேலையிலிருந்த பட்டதாரிகள் (1999-2005)
1999 2005
கலைத்துறை 8574 25419
முகாமைத்துவம் 1546 வர்த்தகவியல் 26O7 2901
சட்டவியல் 319
விஞ்ஞானம் 2708 6337 பொறியியல் 331
விவசாயம் 16
ஆதாரம்: உயர்கல்வி அமைச்சின் ஆவணங்கள்
2005ஆம் ஆண்டில், பட்டதாரிகளின் வேலையின்மைப் பிரச்சினை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பட்டதாரிகளுக்கான பயிற்சி வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரத்துக்கு விண்ணப்பித் தவர்களின் விபரங்களைக் கொண்டு மேற்கண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டது. அவ்வாண்டின் பின்னர் சித்தி பெற்று வேலை யற்றவர்களின் தொகை 30,000 மாக இருக்கக்கூடும்.
வேலையற்ற பட்டதாரிகள் குறித்து இரு பிரதான கருத்துக்கள் உண்டு.
1. பட்டதாரிகள் இன்றைய வேலை உலகின் தேவைகளுக்கு ஏற்ற திறன்களைக் கொண்டவர்கள் அல்லர்; 40% வேலை வாய்ப்புகள் தனியார் துறையில் காணப்படும் நிலையில், பல்கலைக் கழகப்பட்டதாரிகள் தனியார் துறை வேண்டும் திறன்களை (ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பம், சமூகத்திறன்கள், தொடர்பாடல் திறன்கள், தொடர்ந்து கற்கும் ஆர்வம் போன்றன) கொண்டவர்கள் அல்லர். அவர்கள் வேலை செய்ய முடியாதவர்கள் (Unemployable)
90۔

பேராசிரியர் சோசந்திரசேகரன்
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மக்கள் ஆங்கிலக் கல்வியைப் பெரிதும் விரும்பினாலும் ஆட்சியாளர்கள் வேலை வாய்ப்புப் பிரச்சினை காரணமாக, ஆங்கிலக் கல்வியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். சுதந்திரத்துக்குப் பின் (1960களில்) சுயமொழிகளில் வழங்கப்பட்ட உயர்கல்வி கலைத்துறையில், சிந்திக்கும் திறனையும் அறிவாற்றல் உள்ளவர்களையும் உருவாக்கவில்லை. விரிவுரைக் குறிப்புகளே அவர்களது பாடநூல்; சிறந்த ஆங்கில நூல்களைப் படிக்கவும் அவர்களால் முடியாது. இதனால் பண்பட்ட படித்தவர் களையும் சமூகப் பிரச்சினைகளை நுணுகி ஆராயும் திறனுடை யவர்களையும் உருவாக்க முடியவில்லை; அதேவேளையில், தேவையான தொழில் திறன்களிலும் அவர்களிடம் இல்லை. பரந்த அறிவை வழங்கிப் பண்பட்ட மனிதனை உருவாக்குவதே கல்வியின் நோக்கமென்றால், அவ்வாறு உருவாகும் பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளை எதிர்பார்க்கக்கூடாது.
இவ்வாறான வாதத்தை முன்வைப்பவர்கள் சமூக அறிவியல் மற்றும் கலைத்துறை மாணவர்களின் தொகை குறைக்கப்படல் வேண்டும் என்பர்; அவ்வாறான கல்வியினால் மாணவனுக்கும் நாட்டிற்கும் பயனில்லை என்பது அவர்கள் கருத்து. 2007இல் கல்வி பயின்ற மொத்த பல்கலைக்கழக மாணவர்களில் (68,000) 35% கலைத்துறை மாணவர்களாவர் (24400). அவ்வாண்டு பட்டம் பெற்ற மாணவர்களில் (11,500) 37% கலைத்துறைப் பட்டதாரிகளாவர் (4400) 1981-2005 காலப்பகுதியில் கலைத்துறை மாணவர் சதவீதம் 46 இலிருந்து 35 க்கு வீழ்ச்சியடைந்தது.
2. பட்டதாரிகளின் வேலையின்மை தொடர்பான மற்றொரு கருத்து பின்வருமாறு அமைகின்றது; ஒருபுறம், உயர்கல்வியானது மனிதவளத்தைத் தொகை ரீதியாகவும் தராதர ரீதியாகவும் பாதிக்கின்றது; மறுபுறம் உயர்ந்த பொருளாதார வளர்ச்சியானது மனித வளத்தின் தேவையை அதிகரிக்கின்றது. உயர்கல்வியானது மனிதவளத்தின் நிரம்பலையும் (Supply) பொருளாதார வளர்ச்சியா னது மனித வளத்தின் கேள்வியைத் தீர்மானிக்கின்றது. அதாவது, உயர்கல்வி, பொருளாதார வளர்ச்சி, தொழிற்சந்தை என்பவை ஒன்றில் ஒன்று தங்கி உள்ளவை.
பழம்பொருளியலாளர்கள் உயர்கல்வியானது திறன்களின் தராதர வளர்ச்சிக்கு உதவும் என்னும் கருத்தை வலியுறுத்தியிருந்தனர். தற்போது சர்வதேச நாடுகளில் உருவாகிவரும் அறிவுசார் பொருளா தார முறைகளின் பிரதான தூண்களில் ஒன்று நன்கு பயிற்றப்பட்ட,
-91

Page 48
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
கல்விகற்ற மனிதவளமாகும். உயர்கல்வியானது விரிவடையும் பொரு ளாதார முறைக்குத் தேவையான மனிதவளத்தை வழங்குவதுடன், உழைப்பினரின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்த உதவுகின்றது. மறுபுறம், கேள்வியைக் கருத்திற்கொண்டு நோக்குமிடத்து, பொருளாதார முறையின் வளர்ச்சியானது, பொருளாதாரத்தின் உழைப்பினரை உள்வாங்கும் ஆற்றலை மேம்படுத்துகின்றது; பொரு ளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்கும்போது, அதிக வளங்கள் உயர் கல்வித்துறைக்கு வழங்கப்பட வாய்ப்புண்டு. இதனால் உயர்கல்வித் துறை உயர்தரமான மனிதவளத்தைப் பயிற்ற முடியும்; இதனாலும் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க இடமுண்டு.
பல்கலைக்கழகக்கல்வியானது, தொழில் பயிற்சியை விட கல்விசார் கற்கை நெறிகளில் அக்கறை செலுத்தும். அத்துடன் பல்கலைக்கழகக் கல்விப் பயிற்சி பல்வேறு தொழில் துறைகளில் இடமாற்றம் செய்யக்கூடிய திறன்களை வழங்கும், உயர்தொழில், முகாமைத்துவம், தொழில்நுட்பம் சார்ந்த திறன்களைப் பல்கலைக் கழகக் கல்வி வழங்கும் இவ்வகையில் பல்கலைக்கல்வி உயர்நிலைத் தொழில்சார் கல்வியிலிருந்து வேறுபடும். ஏனெனில் இவ்வாறான உயர்தொழிற்சார் கல்வி குறிப்பிட்ட ஒரு துறைக்குத் தேவையான (மருத்துவம், பொறியியல்) திறன்களை வழங்கும்.
இவ்வாறு நோக்குமிடத்து பொருளாதார வளர்ச்சியின் விளை வாக உழைப்பினருக்கான கேள்வி அதிகரிக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த ஐம்பது ஆண்டுகாலப்பகுதியில் தொழில் வாய்ப்புகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. * 1953இல் விவசாயத் துறையில் 53% மானவர்களுக்கு வேலைவாய்ப்பு: 2006இல் இது 32% மாகக் குறைகின்றது; கைத்தொழில் துறை வேலைவாய்ப்புகள் 10% இலிருந்து 19% மாக அதிகரித்தன; சேவைத்துறை வேலைவாய்ப்புகள் 37% இலிருந்து 49% மாக அதிகரித்தன; விவசாயத்துறையை விட கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளே பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக வழங்கும் நிலையில் உள்ளன. இவ்விரு துறைகளின் வளர்ச்சியிலேயே எதிர்காலத்தில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தங்கியுள்ளது.
Κ
Κ)
0.
Х•
-92

பேராசிரியர் சோசந்திரசேகரனி
உதாரணமாக சேவைத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக, 2007இல் 42% வேலைவாய்ப்புகள் அத்துறையில் கிடைக்கப்பெற்றன. (விவசாயம் 31%, கைத்தொழில் 27% வேலைவாய்ப்புகள் 2007) சேவைத்துறையில் இயற்கை விஞ்ஞா னங்கள், பொறியியல், மருத்துவம், வியாபார முகாமைத்துவம், தகவல் தொழில்நுட்பம், நிதியியல் போன்ற துறைகளுக்கான அறிவு ஊழியர் தேவைப்பட்டனர். அத்துடன் வழக்கறிஞர்கள், கணக்கா ளர்கள், கல்வியாளர்கள், சுகாதார ஊழியர்கள் போன்றோரும் சேவைத் துறையின் வளர்ச்சியினால் நன்மையடைந்தனர்.
கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் நாட்டின் தொழில்
அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. * உயர்தொழில், துணை உயர்தொழில், தொழில்நுட்பத்துறை,
முகாமைத்துவம், நிர்வாகம் ஆகிய துறைகளில் பணிபுரிவோ
ரின் சதவீதம் 4.7 இலிருந்து (1953), 20.1% மாக அதிகரித்தது
(2005). இம்மாற்றமும் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பை
அதிகரித்தது.
அடுத்து பிரதானமாக அரசாங்கத்துறை, தனியார்துறை வேலை
வாய்ப்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்திற் கொள்ள வேண்டும். 1960களிலும் 1970களிலும் அரசாங்கத்துறையானது பட்டதாரிகளுக்கும் பல்வேறு திறனுடையவர்களுக்கும் அதிக வேலை வாய்ப்புக்களை வழங்கியிருந்தது. 1970களில் 70% மான வேலை வாய்ப்புகள் அரசாங்கத்துறையில் காணப்பட்டன; இன்று நிலைமை மாறி13% வேலைவாய்ப்புகளே அத்துறையில் காணப்படு கின்றன. இவற்றில் அரசாங்க ஊழியர்கள் 36% பாதி அரசாங்கச் சார்புடைய அமைப்புகளில் 30% ஊழியர்கள், மாகாண மட்டத்தில் 34% ஊழியர்கள்; இவர்கள் அனைவரிலும் 4% உயர் அதிகாரிகள்; நிர்வாகிகள்; இப்பணிகளுக்கு மட்டுமே பட்டதாரிகள் தேவைப்படு கின்றனர். இந்நிலையில் தற்போது சந்தைத் தத்துவத்துக்கு ஆதரவான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தனியார் துறைக்குப் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடத்தை வழங்கியுள்ளன; வேலைவாய்ப்பு களை வழங்குவதிலும் தனியார் துறையே இன்று முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இன்று 42% வேலைவாய்ப்புகள் தனியார் துறையால் வழங்கப்படுகின்றன. (பொதுத்துறை 13.4% சுயவேலை வாய்ப்பு 33%)
-93

Page 49
இல்ங்கையில்உயர்கல்வி பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
4)
0.
1990-2006 காலப்பகுதியில் அரசாங்கத்துறை வேலைவாய்ப்பு 22% இலிருந்து 13% மாக வீழ்ச்சியடைந்தது.
இதே காலப்பகுதியில் தனியார் துறை வேலைவாய்ப்பு 34% இலிருந்து 42% மாக அதிகரித்தது. எனினும், 2006இன் இறுதியில் அரசாங்கம் 42,000 பட்ட தாரிகளுக்கு வேலை வழங்கியமையால் அரசாங்கத்துறை வேலை வாய்ப்புகள் சற்று அதிகரித்தன; தனியார்துறை வேலைவாய்ப்புகள் 44.3% இலிருந்து (1995) 42.1% சற்று வீழ்ச்சியடைந்தது.
42,000 பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வழங்கப்பட் டமை ஒரு "அரசியற் பொருளாதார” செயற்பாடு; அரசாங்கத் துறையின் மனித வளத்தேவைகளுடன் தொடர்பற்ற ஆட் சேர்ப்பு எனலாம்.
பட்டதாரிகள் வேலையின்மை தொடர்பான வேறு சில ஆய்வு
முடிவுகள் சில:
«o
0.
X
0.
பட்டதாரிகளில் ஆண்களைவிடப் பெண்களே அதிக அளவில் வேலை வாய்ப்பினைப் பிரச்சினைகளை எதிர்நோக்கு கின்றனர்; கற்கைத் துறைகளைப் பொறுத்தவரையில், கலைத்துறை மற்றும் வர்த்தகத் துறைப் பட்டதாரிகளே வேலையின்மைப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்; இப்பட்டதாரிகளில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள்;
வேலையற்றோரைக் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் நோக்குமிடத்து, அவர்களில் 26.9% (2005) சதவீதமானவர்கள் க.பொ.த உ/நிகல்வி அல்லது அதற்கு அதிகமான கல்வித்தகுதி படைத்தவர்கள். வேலையற்றவர்களில் பாடசாலை செல்லாதோர் சதவீதம் 4.6% மட்டுமே (2007);
பொதுப்பட்டதாரிகள், சிறப்புப் பட்டதாரிகள் என்று பார்க் குமிடத்து, சிறப்புப் பட்டதாரிகள் மத்தியில் வேலையின்மை அதிகம்; சிறப்புப் பட்டதாரிகள் மேலதிகமாக ஒருவருடம் (மொத்தமாக நான்கு ஆண்டுகள்) உயர்கல்வி பெறுவதால் அவர்களுடைய வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதில்லை என்பது உலக வங்கியின் ஆய்வு முடிவு (2008)
-94

e
(1)
(2)
O
பேராசிரியர் சோசந்திரசேகரன்
வேலையற்ற பட்டதாரிகளில் 20.6% மானவர்கள் 30-41 வயது டையவர்கள்; 2.6% மானவர்கள் 45 வயதுக்கு மேற்பட்ட வர்கள் (2001) என்ற ஆய்வு முடிவும் உண்டும்.
கொழும்புப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் தொடர்பான ஆய்வொன்றின்படி:
55% விஞ்ஞான, முகாமைத்துவப் பட்டதாரிகள் பட்டம் பெற்ற மூன்று மாதங்களில் வேலை வாய்ப்பைப் பெற்றனர்;
ஆயினும், 12% கலைப்பட்டதாரிகளும் 16% வர்த்தகப்பட்ட தாரிகள் மட்டுமே மூன்று மாதங்களில் வேலை பெற முடிந்தது. முதல் பட்டம் பெற்றவர்கள் தொடர்ந்து கற்று உயர்பட்டங் களைப் பெறும்போது (M.A.M.Sc) வேலைவாய்ப்புகள் கிட்டுகின்றனவா எனப்பார்த்தால், உலக வங்கியின் ஆய்வு களின்படி, இவ்வுயர் பட்டங்கள் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவில்லை; எனினும் 26% பட்டதாரிகள் இவ்வாறு உயர்பட்டம் பெறக் கல்வியைத் தொடர்ந்துள்ளனர்.
பட்டம்பெற்றுத் தொழிற் சந்தையில் நுழைந்த பின்னர் தொழில் வாய்ப்புகளைத் துரிதமாகப் பெற முடியவில்லை என்பது பட்டதாரிகளின் கவலையாகும் (ஏற்கனவே சுட்டிக் காட்டியபடி, 2005இல் வேலையற்ற பட்டதாரிகள் 42,585 பேர்; இவர்களில் 63% கலைப்பட்டதாரிகள், வர்த்தகவியல் பட்டதாரிகள் 17% விஞ்ஞானப் பட்டதாரிகள் 20%)
பட்ட மேற்படிப்புப் படித்து உயர்பட்டங்களைப் பெறுவதால் பட்டதாரிகளின் தொழிற்தகைமை கூடுகின்றது; அத்துடன் மனித மூலதன இருப்பும் (Stock) அதிகரிக்கின்றது. ஆயினும், கிடைத்துள்ள தரவுகளின்படி 27 சதவீதமான பட்டதாரிகளே பட்ட மேற்படிப்பில் ஈடுபட்டனர். இவர்களில் கல்வியியலில் மேற்பட்டங்கள்/திப்ளோமாக்களைப் பெற்றவர்கள் அதிகம். அதிகமான பட்டதாரிகள் மேற்பட்டங்களைப் பயிலுவதனால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனக் கருதவில்லை. பட்டம் பெற்று வேலையில் சேர்ந்த பின்னரே மேற்பட்டப்படிப்பை மேற்கொள்வது இலங்கைப் பட்டதாரிகளுக்குரிய ஒரு இயல்பாகும். முதல் பட்டம் பெற்றவுடன் வேலையில் சேராது மேற்பட்டப் படிப்பில் ஈடுபடுவோர் குறைவு. இதனால் பல
- 95ے

Page 50
Xo
இல்ங்கையில்உயர்கல்வி பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பல்கலைக்கழகங்கள் தொழில் புரியும் பட்டதாரிகளின் வசதி கருதி வார இறுதிக் கற்கை நெறிகளை அறிமுகம் செய் துள்ளன. w இலங்கையில் கற்றோர் வேலையின்மைக்கான பல விளக்கங் களை ஆய்வாளர் சுனில் சந்திரசிரி (2008) தொகுத்துக் கூறுகின்றார்.
ஒரு பரந்த கருத்தில், தொழில்துறை வேண்டும் திறன்களைக் கற்ற இளைஞர்கள் கொண்டிருப்பதில்லை. அதாவது கல்விமுறை வழங்கும் அறிவு, திறன்களுக்கும் தொழிற்சந்தை யின் தேவைகளுக்குமிடையில் நிலவும் பொருத்தப்பாடின்மை (Mismatch), கற்றோரின் எதிர்பார்ப்புகளுக்குப் பொருத்தமற்ற வேலை வாய்ப்புகள்; இதற்கான கல்விமுறையின் பாட ஏற்பாட்டைத் தனியார் துறையின் தேவைகளுக்கேற்ப அவர்களுடைய ஆலோசனைகளுடன் மாற்றி அமைப்பது; மற்றொரு விளக்கத்தின்படி பட்டதாரிகள் அல்லது கற்றவர்கள், தொழிற்சந்தையில் காணப்படும் வேலைவாய்ப்புகளைத் தீவிரமாக ஆராய்கின்றனர். வேலை நிபந்தனைகளைப் பொறுத்தவரையில் இலங்கையின் பொதுத்துறை, தனியார் துறைகளுக்கிடையே வேறுபாடுகள் உண்டு. பொதுத்துறைத் தொழில்களில் பாதுகாப்பு அதிகம்; உயர்ந்த நன்மைகள்; வேலைச் சிரமம் குறைவு; அதிக முயற்சி ஈடுபாடு தேவை யில்லை; அதிக மேலிடக் கண்காணிப்பும் இல்லை; கெளரவ மும் மதிப்பும் அதிகம். தனியார் துறை இதற்கு எதிர்மாறானது. எனவே பட்டதாரிகள் பொதுத்துறை வேலை வாய்ப்புகளுக் காகச் சிறிது கால்ம் காத்திருக்க (Queuing) விரும்புவர்.
மூன்றாவது விளக்கம் தொழிற்சந்தையின் நிபந்தனைகள் பற்றியது. தற்போதைய தொழிற் சட்டங்களும் ஒழுங்கு விதிகளும் கடுமையானவை; பல்வேறு கொடுப்பனவுகளை ஊழியர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது; ஊழியர்களை அவசரமாக வேலை நீக்கம் செய்ய முடியாது; இதற்கு செலுத்த வேண்டிய இழப்பீடுகள் ஏராளம். இதனால் ஊழியர் தொடர்பான செலவுகள் அதிகரிக்கின்றது; இந்நிலையில் ஊழியர்களைக் குறைந்த அளவில் பயன்படுத்தல் அல்லது ஊழியர் செலவைக் குறைத்தல், நவீன தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரித்தல் போன்ற வழிமுறைகள்
-96

பேராசிரியர் சோசந்திரசேகரன்
கையாளப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு சார்பான விதிமுறைகள் தனியார் துறையை ஊக்கமிழக்கச் செய்வதால் அங்கு வேலை வாய்ப்புக் குறைவதாக இவ்விளக்கம் நீளுகின்றது. ராமா (Rama) என்ற ஆய்வாளரின் கருத்தின்படி, இலங்கையில் வேலையின்மைப் பிரச்சினை என்பது கற்றோர் சுயமாக உருவாக்குவது (Voluntary), வேலை வாய்ப்புகளில் (இலங்கையில் 48 தொழிற் சட்டங்கள் உண்டு. இவை) பெரும்பாலும் 1970களில் உருவாக்கப்பட்டவை. அப்போது கட்டுப்பாடான, "மூடிய" பொருளாதார முறைமை இருந்தது; ஊழியர்களை விலக்க 178 கிழமைச் சம்பளங்களை வழங்க வேண்டும். சொத்தைப் பதிவு செய்ய 83நாட்களாகும். சொத்தில் 5 சதவீதச் செலவும் உண்டு. சொத்தைப் பதிவு செய்வதில் உலகில் 174ஆம் இடம் இலங்கைக்கு உண்டு; ஒரு தொழிலைத் தொடங்க 39 நாட்கள் தேவை.
)உலக வங்கியின் ஆய்வுகள் ܢܠ
பற்றாக்குறை எதுவுமில்லை. வேலை வாய்ப்புகளில் "நல்லது, மோசமானது" என்ற செயற்கையான ஒரு இடைவெளி காணப்படு கின்றது. பட்டதாரிகள் “நல்ல" தொழில்களை மட்டுமே நாடுவதால் வேலையற்றிருக்கின்றார்கள் என்ற முறையில் இவ்விளக்கம் விரிவு பெறுகின்றது.
* ஆய்வாளர் லக்ஸ்மனின் (பொருளியல் பேராசிரியர்) விளக்கமொன்றும் மிகப் பிரதானமானது. “இலங்கையின் கடந்த ஐம்பது ஆண்டுகால அனுபவத்தின்படி, மிக மோசமான வேலை யின்மைப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் பொருளாதார வளர்ச்சிமிகவும் மந்த கதியில் சென்றதுதான்" என்பது அவர் கருத்து. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மூலதனங்கள் பொருளாதார முறையை வலுப்படுத்தி, விரிவுபடுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. அதாவது கல்வி முறைகளன்றி பொருளாதார வளர்ச்சியே வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
பொருளியல் ஆய்வாளர் கருத்தின்படி 2006இல் இலங்கையின் சேமிப்பு சதவீதம் 17.1%; முதலீட்டு சதவீதம் 26%;அதாவது மொத்த
-97.

Page 51
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
தேசிய உற்பத்தியின்படி இந்த அளவு சதவீதங்கள் கணிக்கப்பட் டுள்ளன; இவை பொருளாதார வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கவும் போதுமானவையன்று; பெருகி வரும் கற்றவர்களுக் கான வேலை வாய்ப்புகளை உருவாக்க மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) 32-40% வரை முதலீடு செய்யப்படல் வேண்டும் என்பது பொருளியல் ஆய்வாளர் கருத்து.
இக்கருத்தின்படி பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டுமாயின், சேமிப்பு வீதங்கள், மூலதனத்திரட்டு, தொழில்நுட்ப முன்னேற்றம், பொருளாதாரத்தின் நவீன மயமாக்கம் முதலிய விடயங்களில் அக்கறை செலுத்தப்படல் வேண்டும்.
ஒரு சாதாரண வாதத்தின்படி, வேலையற்றிருக்கும் 30,000 பட்டதாரிகளுக்கும் தனியார் துறை விரும்பும் திறன்களை வழங்கி விட்டால் அவர்கள் அனைவரையும் உள்வாங்கும் முறையில் பொரு ளாதார முறை வளர்ச்சி பெற்று வருகின்றதா? இவ்வினாவுக்கு பொருளியல் அறிஞர் வழங்கும் விடை இல்லை என்பதாகும். இவ்வாதத்தைச் சற்று விரிவுபடுத்தினால், இன்று பாடசாலைகளில் பயிலும் 40 இலட்சம் மாணவர்களுக்கு ஆங்கில அறிவையும் கணினித் திறன்களையும் வழங்கிவிட்டால் அவர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் முறையில் இலங்கையின் பொருளாதார முறை வளர்ச்சி பெற்று வருகின்றதா? இக்கேள்விக்கும் “இல்லை" என்றே விடையே வரும்.
சிறுபான்மையினரின் பல்கலைக்கழகக்கல்வி
நாட்டில் வாழ்கின்ற 25% சிறுபாண்மையினர் அரச பல்கலைக்கழகங்களில் பெறுகின்ற கல்வி வாய்ப்புகள், அவர்களுடைய வளர்ச்சி பெரும்பான்மையினருக்குச் சமமான முறையில் ஏற்படுவதை உறுதி செய்வன. நாட்டின் உயர்மட்ட வேலை வாய்ப்புகள் கல்வித் தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படுவதால், உயர்கல்வி வாய்ப்புக்களைச் சமமாகப் பெறாத சமூகங்கள் தமது சமூக-பொருளாதார மேம்பாட்டில் பின்னடைந்து செல்ல ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக பன்மைச் சமூகங்களில் அல்லது பல இனங்கள் வாழுகின்ற நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் இனங்களுக்கிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும் விடயம் நுணுக்கமாக நோக்கப்படுகின்றது.
-98.

பேராசிரியர் சோசந்திரசேகரனர்
ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கறுப்பு இன சிறுபான்மையினர் (ஆபிரிக்க - அமெரிக்கர்), இந்தியாவில் தலித் மக்கள் ஆகியோ ருக்கான பல்கலைக்கழக வாய்ப்புகளும் வேலை வாய்ப்புகளும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டமையால் அவர்களுக்கு விசேடமாக இடங்களை ஒதுக்கும் கொள்கைகள் (Positive discrimination) அந்நாடுகளில் பின்பற்றப்பட்டன. குறைந்த பரீட்சைப் புள்ளி களுடன் சிறுபான்மையினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது சமத்துவக் கொள்கைக்கு மாறானதாயினும், காலங்காலமாகப் பின்தங்கியிருந்து வந்த மக்களுக்குக் கல்வி வாய்ப்புகளை நியாயமாக (Equity) வழங்க வேண்டும் என்பதற்கு விசேட இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. அரசியல் யாப்பிலும் அதற்கான ஏற்பாடுகள் காணப்பட்டன.
இலங்கையில் 1970 வரை திறமை சித்தியொன்றே பல்கலைக் கழக அனுமதிக்கான தகுதி விதியாக இருந்தது. தமிழ் சிறுபான்மை யினர், குறிப்பாக யாழ்.மாவட்ட மாணவர்கள் மருத்துவம், பொறியியல் மற்றும் விஞ்ஞான பீடங்களில் தமது குடித்தொகை வீதாசாரத்துக்கும் அதிகமான இடங்களைப் பெற்றனர்; இதற்கு தமிழ்மொழிவிடைத்தாள்களுக்குப்புள்ளியிட்டவர்களும் பொறுப்பு எனவே பெரும்பான்மையினரின் இன வீதாசாரம் (75%) பல்கலைக்கழக அனுமதியில் பின்பற்றப்படல் வேண்டும் எனப் பெரும்பான்மையினர் சார்பில் கருத்து வலுவாக முன்வைக்கப் பட்டது. (பார்க்க கீழ்வரும்அட்டவணை) அரசாங்கமும் இக்கருத் துக்கு அடிபணிந்து பரீட்சைப் புள்ளிகளை மொழி அடிப்படையில் தரப்படுத்தி, தரப்படுத்தப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் அனுமதிகளை வழங்கிற்று. இவ்வாறு பல்கலைக்கழக அனுமதியில் திறமை சித்தி என்ற தகுதிவிதி முற்றாக நீக்கப்பட்டு தரப்படுத்தல் மூலம்பெரும்பான்மையினரின் வீதாசாரம் பேணப்பட்டது.
ஆனால், விஞ்ஞானம், மருத்துவம், பொறியியல் துறைகளை உள்ளடக்கிய மொத்தப் பல்கலைக்கழக மாணவர் தொகையில் (1970களில்) 16% மட்டுமே தமிழர்களாகக் காணப்பட்டனர். முஸ்லிம்களின் தொகையும் எப்போதுமே 7% க்கும் குறைவாகவே காணப்பட்டு வந்தது (பார்க்க கீழ்வரும் அட்டவணை)
சில்வாவின் கருத்தின் படி 1970களிலும் 1980களிலும் இலங்கையில் இன உறவுகளைத் திட்டவட்டமாக சீரழித்து வடகிழக்குப் பகுதிகளில் தீவிரவாதத்தைக் கடுமையாக்குவதில்
-99

Page 52
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக் கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
பங்களிப்புச்செய்த காரணிகளுள் பிரதானமானது இத்தரப்படுத்தல் கொள்கையாகும். அக்கால ஐக்கிய முன்னணி அரசாங்கம் (19701977) அறிமுகம் செய்த மிகவும் வாதப்பிரதி வாதத்துக்குட்பட்டக் கொள்கை இதுவென அவர் கருதினார். இக்காலப்பகுதி வரலாற்றில் மிகவும் மோசமானது (Beakes) எனவும் அவர் கடுமையாக வர்ணிக்கின்றார். மேலும் அப்போது திறமை சித்தியைக் கைவிட்டு வேறு கொள்கைகளை நாடியது இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான விடயம். மிகவும் ஆபத்தானது (Disastrous) எனக் கடுமையாக அவர் விமரிசித்திருந்தார். (K.Mde Silva, 1995)
1977இன் பின்னர் இவ்வாறான தரப்படுத்தல் கொள்கை கைவிடப்பட்டு திறமை சித்தி, மாவட்ட அனுமதி, பின்தங்கிய மாவட்டங்களுக்கு விசேட ஒதுக்கீடு என்ற புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு இன்று தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. (பார்க்க பல்கலைக்கழக அனுமதிக்கொள்கை பற்றிய முன்னைய ւմéé)
இவை யாவும் வரலாறாகிவிட்டாலும் இப்புதிய கொள்கைகள் வேறு பெயரில் இன்னும் தொடர்கின்றன. ஆனால், இக்கொள்கை கள் தமிழ்ச் சிறுபான்மையினரால் பெரிய கண்டனங்களுக்குள்ளா வில்லை. போர் நிலைமைகள் காரணமாக யாழ்.மாவட்டக் கல்வி முறை பல பாதிப்புகளுக்குள்ளாகி, இறுதியில் கல்வியில் முன்னேறிய மாவட்டமாகக் கருதப்பட்ட யாழ்.மாவட்டம், கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக அங்கீகரிக்கப்பட்டு 5% ஒதுக்கீட்டில் இடந்தேடும் நிலை ஏற்பட்டது.
9LL6)6O)6OOT XXI இன வகைப்படியான மொத்த மாணவர் அனுமதி 2006-2007
இனம் 1975 1977 1978 1979 1980 1981 1983
சிங்களவர் 82.4 80.6 81.9 75.9 79.2 76.4 74.0
தமிழர் 13.7 15.7 14.4 19.7 17.3 19.2 22.0 முஸ்லிம்கள் 3.9 3.7 3.7 4.3 3.5 4.4 3.9
ஆதாரம்: ப.மா.ஆணைக்குழுப்புள்ளி விபரங்கள்
-100

பேராசிரியர் சோசந்திரசேகரனி
م. تطليق
தமிழர் அனுமதியானது தரப்படுத்தல் முறை கைவிடப்பட்டு, மாவட்ட அனுமதிமுறை அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து (1978 இன் பின்) சற்று அதிகரித்துச் சென்றுள்ளதைக் காண்க. - இரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லீம்களின் அனுமதி வீழ்ச்சி கண்டே காணப்பட்டது.
9|L6160600T XXII இனவகைப்படியான மாணவர் அனுமதி (1969,1971,1974)
ஆண்டு சிங்களவர் தமிழர் | முஸ்லிம்கள்
பொறியியல் % % % 1969 51.7 48.3 1971 62.4 34.7 1.8
1974 78.8 16.3 4.9 மருத்துவம் 1969 48.9 48.9 0.9 1971 56.1 39.3 2.3
1974 70.1 25.9 3.0
ஆதாரம்: பல்கலைக்கழக செனெட் மன்ற அறிக்கைகள்
- ه /التلالهى 1974க்கு முன்னர் அதிகரித்துக் காணப்பட்ட தமிழ் மாணவர் வீதாசாரம், தரப்படுத்தல் காரணமாக 1974இல் வீழ்ச்சியடைந்தது; முஸ்லீம் மாணவர் அனுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பை அட்டவணையில் காண்க.
-101

Page 53
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
இப்பின்புலத்தில் அண்மைக் காலத் தரவுகளின்படி தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினரின் பல்கலைக்கழக அனுமதிப் நோக்குவோம்:
- 2007க்கான தரவுகளின்படி பல்கலைக்கழ வரலாற்றில் முதன் முதலாக தமிழர்களின் மொத்த அனுமதி 2000 ஐயும் முஸ்லிம்களின் மொத்த அனுமதி 1000 ஐயும் எட்டி உள்ளது.
இதற்கு ஒரு காரணம் அனுமதி பெறும் மொத்த மாணவர்கள் தொகையும் அதிகரித்தமையாகும். அதற்கேற்ற வகையில் தமிழ், முஸ்லிம் மாணவர் தொகையும் ஏற்றங்கண்டுள்ளது. (பார்க்க பின்வரும் அட்டவணை).
gluL6nIGUOGOUT XXIII 2003-2007ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்
அனுமதி (இனவகைப்படி)
ஆண்டு 2001 2004 2006 மொத்த அனுமதி 1383 14459 17159 தமிழ் மாணவர்
அனுமதி 1451|12%| 2070| 14% 2626 15% முஸ்லிம் மாணவர்
அனுமதி 448 4% 896 6% 1089 5.7%
மேலோட்டமாக நோக்குமிடத்து, மொத்த மாணவர் அனுமதி யில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தமிழ், முஸ்லீம் மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் எனத் தெரிகின்றது.
2001/2002ஆம் ஆண்டு அனுமதியைவிட, வீதாசார நோக்கில் சிறிய அதிகரிப்புகளைக் காண முடிகின்றது. என்றாலும் தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினரின் அனுமதி வீதாசாரம் 20% மாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழ், முஸ்லீம் மாணவர்கள் எத்தகைய மாவட்டங்களிலிருந்து அனுமதி பெறுகின்றார்கள். என்பது பற்றிய முழு விபரங்களை யும் ப.மா.ஆணைக்குழு தரவுகளிலிருந்து பெற முடியாமல் உள்ளது. வடமாகாணத்திலிருந்து அனுமதி பெறுபவர்கள் சகலரும் தமிழர்கள். ஆனால், இப்புள்ளி விபரம் ஆய்வு நோக்கங்களுக்குப் போதாது.
- 102

பேராசிரியர் சோசந்திரசேகரன்
* முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் அனுமதி பெறும் மாணவர்கள் பற்றிய மாவட்ட ரீதியான தரவுகள் கிடைக்கப் பெறாமை ஒரு பெரும் குறையாகும். முஸ்லீம் கல்வியாளர்கள் தமது பல்கலைக்கழக அனுமதிகள் தொடர்பாக எத்தகைய மாவட்டங்களில்/வலையங்களில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்கான தரவுகளை எம்மால் தர முடியாதுள்ளது. அவற்றை அவர்கள் வேறு வழிகளில் " நேரடியாகப் பாடசா லைகளுடன் தொடர்பு கொண்டு பெற்றுகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. இது தமிழ் மாணவர்களுக்கும் பொருந்தும்.
{
தமிழ் மாணவர் அனுமதியைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய கருத்தைத் தர முடியும் அவர்கள் சார்பான தரவுகளைப் ப.மா. ஆணைக்குழு ஆவணங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். தமிழர்கள் வட பகுதி மாவட்டங்கள், மட்டக்களப்பு மாவட்டம் என்பவற்றில் செறிந்து வாழ்கின்றார்கள். எனவே அவர்கள் அனுமதி பெறும் மாவட்டங்கள் தொடர்பான சில தகவல்க ளைக் கண்டறிய முடியும். ஆனால், இம்மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய தென்மாவட்டங்களிலிருந்து எத்தனை தமிழ் மாணவர் கள் அல்லது மலையகத் தமிழ் மாணவர்கள் அனுமதி பெறுகின்றார்கள் என்பதை அறிய முடியாது. (உதாரணமாக கொழும்பு, கண்டி, பதுளை மற்றும் மாவட்டங்கள் பற்றிய தரவுகள் “பொதுவாகவே" தரப்படுகின்றன)
Xo
மாணவர்கள் அனுமதி பெறும் ஆண்டில், இனவகைப்பட்ட புள்ளி விபரங்கள் தரப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழகங் களின் மொத்த மாணவர் தொகை அவ்வாறு தரப்படுவதில்லை. அத்தரவுகள் பல்கலைக்கழக வகைப்படியே தரப்படுகின்றன. இதனால் பல்கலைக்கழகங்களில் பயிலும் மொத்த தமிழ், முஸ்லிம் மாணவர் தொகைகள், கற்கை நெறிகள் (மருத்துவம், பொறியியல்) என்பவை கிடைப்பதற்கில்லை. பட்டமேற் படிப்புப் பயிலுவோர் பற்றிய தரவுகளிலும் இவ்வாறான குறைபாடு காணப்படுகின்றது.
அண்மைக்கால அனுமதி பற்றிய இனவகைப்படியான தரவுகள் தமிழர், முஸ்லீம்களுக்கு ஏறத்தாழ 20% இடங்கள் கிடைப்பதை எடுத்துக்காட்டுகின்றன. இருசாராரும் 2004- 2005, 2006/2007 காலப்பகுதியில் சில முன்னேற்றங்களைப் பெற்றுள்ளதையும் இத்தரவுகள் காட்டுகின்றன. அனுமதித்
-103

Page 54
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
தொகைகள் இன விகிதாசாரத்தை ஒட்டி அமைய வேண்டும் என்ற பிரகடனப்படுத்தப்படாத கொள்கை இத்தரவுகளில் பிரதிபலிக்கின் றது. தற்போதைய திறமை சித்தி/ மாவட்ட அனுமதி முறையானது இயல்பாகவே அவ்வீதாசாரத்தைப் பேணக் கொள்கை வகுப்போ ருக்கு உதவுவதாகத் தெரிகின்றது. தரப்படுத்தல் ஏற்பாடுகள் பெரிதும் கண்டனத்துக்குள்ளான நிலையில் மாற்று அனுமதிக் கொள்கையும் சமமான விளைவுகளே ஏற்படுத்திய போதிலும் பலத்த கண்டனத்துக்குள்ளாகவில்லை. (பார்க்க கீழ்வரும் அட்டவணை)
9L6 hu606OOT XXIV பல்கலைக்கழகங்களில்இனவகைப்படியான அனுமதி
ஆண்டு சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் மொத்தம் 1995/96 6250-77.6% 1367-17.0% 443-5.5% 8054 2001/2002 10458-8.5% 1451-11.7% 448-3.6% 12357
2004/2005 11455-79% 2080-143% 896-6.2% 14459
2006/2007 134 10-78% 2626-15.3% 1088-6.3% 17159
ஆதாரம்: ப.மா.ஆணைக்குழு ஆவணங்கள்
* அடுத்து பிரதான கற்கை நெறிவகைப் படியான சிறுபான்மையினர் அனுமதி பற்றி நோக்குவோம். இதற்கு 2006/ 2007 ஆண்டுக்கான தரவுகளை நோக்குவோம்.
அட்டவணை XXV 2006/2007 சிறுபான்மையினர் அனுமதி பிரதான கற்கைநெறி வகைப்படி
கலை முகா வர்த் சட் பெள உயிரி மருத் பொறி சமூக மை தகம் தீகம் டம் | யல் துவம் யியல் தமிழர் 1020 i 300 44 21 232 122 143 170 முஸ்லீம்கள் 488 | 166 16 16 68 59 59 45
-104

பேராசிரியர் சோசந்திரசேகரனி
இவ்வாண்டில் அனுமதி பெற்ற மொத்த தமிழ் மாணவர்கள் 2626;இவர்களில் ஏறத்தாழ 50% கலை, முகாமைத்துவத்துறைகளில் அனுமதி பெற்றனர்;அனுமதி பெற்ற மொத்த முஸ்லிம் மாணவர்கள் 1088, இவர்களில் 60% இவ்வாறான கற்கை நெறிகளில் அனுமதி பெற்றனர்.
அடுத்து மருத்துவம், விஞ்ஞானம், பொறியியல் ஆகிய துறைகளில் தமிழ், முஸ்லீம் மாணவர்களின் அனுமதியை நோக்குவோம்:
அட்டவனை XXVI
சில விஞ்ஞான பாங்கான (மருத்துவம், பொறியியல்) துறைகளில் சிறுபான்மை மாணவர் அனுமதி (2006/2007)
பொறியியல் % மருத்துவம்|% விஞ்ஞானம் % மொத்தம் 1215 1103 3073 தமிழர்கள் 170 21%. 143 15.7%. 354 10.8% முஸ்லிம்கள் 45 5.4% 59 6.5% 145 4.4%
ஆதாரம் : ப.மா.ஆணைக்குழு ஆவணங்கள்
மேற்கண்ட அட்டவணையானது, தற்போதைய அனுமதிக் கொள்கைகளின்படி, சிறுபான்மையினரின் அனுமதி விஞ்ஞானக் கற்கை நெறிகளில் மட்டுப்படுத்தப்படுகின்றது என்பது தெளிவாகின்றது. முஸ்லீம்களின் பங்கேற்பிலும் அம்மட்டுப் பாட்டைக் காண முடிகின்றது.
- தமிழர்களின் அனுமதியில் ஒரு முக்கிய அம்சத்தைக் குறிப்பிட வேண்டும். அவர்கள் வட கிழக்கின் சகல மாவட்டங்களிலும் மட்டுமன்றி மலையக மாவட்டங்களிலும் கொழும்பிலும் பரந்து வாழ்கின்றனர். கொழும்பைத் தவிர்த்து நோக்குமிடத்து ஏனைய மாவட்டங்களில் யாழ். மாவட்டமே தமிழர் கல்வியில் சிறந்த சித்திகளைப் பெற்று வந்தது. அதன் காரணமாகவே 1960களின் இறுதியில் விஞ்ஞானப் பாங்கான துறைகளில் (மருத்துவம், பொறியியல்) 40% அனுமதியைப் பெற முடிந்தது. அத்துடன் மாணவர் அனுமதியில் சகல மாவட்டங்களிலும் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. உதாரணமாக 1995/1996இல் 993 மாணவர்களை அனுப்பி நாட்டில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. திறமை சித்தி, மாவட்ட அனுமதி என்ற இருவகை அனுமதியில் யாழ்.
-105

Page 55
இலங்கையில்உயர்கல்வி பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
மாவட்டம் திறமை சித்தியின் அடிப்படையில் 641 மாணவர்களை அனுப்பி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
மேலும் மொத்த தமிழ் மாணவர் அனுமதியை நோக்குமிடத்து, 1995/96 அனுமதியை நோக்குமிடத்து, 1995/96 இல் 63% மாண வர்கள் யாழ்.மாவட்டத்திலிருந்து அனுமதி பெற்றமை குறிப்பிடத் தக்கது (1993/94 இல் 55.4% 1994/95 இல் 55.2%) வட, கிழக்கு மாகாணங்களிலிருந்து சகல மாவட்டங்களிலிருந்து அனுமதி பெற்ற மாணவர் தொகையைவிட யாழ்.மாவட்ட மாணவர் தொகை அதிக மாக இருந்தது. அந்த அளவுக்கு யாழ்.மாவட்டக் கல்வி நிலை மேலோங்கி இருந்தது.
இனி, ஏறத்தாழ 10 ஆண்டுகளின் பின்னர், போர்நிலை மக்க ளின் உள்நாட்டு, வெளிநாட்டுக் குடியகல்வு, பல பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு - இவற்றின் பின்னர் மாணவர் செயலாற்றம் எவ்வாறு இருந்ததெனப் பார்ப்போம். 1990களிலும் பிரச்சினைகள் காணப்பட்ட போதிலும் யாழ்.சமூகம் காலங்காலமாகக் கட்டி வளர்த்த கல்விப் பாரம்பரியம் அதன் கல்விச் சாதனகளுக்கு உதவியது.
அட்டவணை XXVI) அண்மைக் காலங்களில் மாவட்ட ரீதியாகத் தமிழ் மாணவர் அனுமதி
2005/2006 2006/2007 தமிழ் மாணவர் அனுமதி (மொத்தம்) 2268 2626 யாழ்.மாவட்ட மாணவர் அனுமதி 736 869 மொத்த தமிழ் மாணவர் அனுமதி
யில் யாழ் மாணவர் % 32.4% 33.0%
ஆதாரம் : ப.மா.ஆணைக்குழு ஆவணங்கள்
இந்த இரு தரவுகளின்படி, தமிழ்ப் பிரதேச யுத்த நிலைமையும் அமைதியற்ற வாழ்க்கை நிலையும் மக்கள் குடியகல்வும் யாழ்.மாவட்டக்கல்வி நிலையில் ஏற்படுத்தியிருந்த பெருத்த பாதிப்பு நன்கு விளங்கும். பழைய நிலைமையை மீட்டெடுக்க யாழ். மாவட்டத்துக்குரிய கல்வித்தலைமைத்துவம் ஆவன செய்தல் வேண்டும். இவ்வகையில் பெரும்பணியொன்று காத்திருக்கின்றது. இது தவிர தமிழர்கள், முஸ்லீம்கள் வாழும் ஏனைய
-106

பேராசிரியர் சோசந்திரசேகரன்
gelu L6 hu606OUT XXVIII மொத்த மாவட்ட அனுமதியில் யாழ். மாவட்டத்தின் நிலை
மாவட்டங்கள் 2005/2006 2006/2007 கொழும்பு 2585 2496 கம்பஹா 1033 1075 கண்டி 1066 1189 குருநாகல் 1294 1998 காலி 1252 1289 மாத்தறை 891 890 யாழ்ப்பாணம் 736 869
ஆதாரம்: ப.மா.ஆணைக்குழு ஆவணங்கள்
மாவட்டங்களிலும் கல்வியின் மறுமலர்ச்சிக்கான செயற்றிட்டங்கள் தேவை.
மலையக இந்திய வம்சாவழித் தமிழர்கள் பெருமளவில் பல்கலைக்கழகக் கல்வியில் பங்கு கொள்ளவில்லை. இலங்கையின் கல்வி மேம்பாட்டுக்கான பல செயற்றிட்டங்கள் பின்தங்கிய பிரிவினரை இலக்காகக் கொண்டவை (இலவசக் கல்வி, மத்திய பாடசாலைகள், இலவச சீருடை, 5ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் பல்கலைக்கழகங்களில் மாகாப்பொல புலமைப் பரிசில், மாவட்ட அனுமதி முறை போன்றன) ஆனால், இவை மலையகக் மக்களின் கல்வி மேம்பாட்டில் உரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அவர்களுடைய பாடசாலைக் கல்விமுறை தேசிய கல்வி முறையுடன் நீண்ட காலமாக இணைக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகள் 1980களிலேயே தொடங்கின. க.பொ.த. உ/நி வகுப்புகளும் மெதுவாகவே தொடங்கப்பட்டன. இவ்வகையில் மிகவும் பிந்தியே தேசியக் கல்வி முறையுடன் இச்சமூகத்தவர் இணைக்கப்பட்டமையால், தேசிய ரீதியான திறமை சித்தி, மாவட்ட ரீதியான திறமை சித்தி முதலிய அனுமதிக் கொள்கைகள் இவர் களுக்குப் பொருந்தவில்லை. நீண்ட காலமாக உயர்கல்வியில் ஈடுபட்டு வந்தவர்களுடன் இச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியிட்டு வெற்றிபெற முடியவில்லை.
- 107

Page 56
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
70000 மாணவர்கள் பயிலும் 14 தேசிய பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்களின் தொகை 300-400 மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 6% மான இவர்கள், ஆண்டுக்கு 1000 மாணவரையாவது பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப வேண்டும்; பல்கலைக்கழங்களில் மொத்தமாக 4000 பேராவது பயில வேண்டும். ஆண்டுக்கு 70-100 பேர்வரை அனுமதி பெறும் நிலையில் இச்சமூகம் பெரும்பாலும் ஆரம்பக் கல்வி அல்லது இடைநிலைக்கல்வி பெற்றவர்களைக் கொண்டதாக இருக்கும். உயர்மட்ட மனித வளமேம்பாட்டுக்கேற்ற உயர்கல்வி வாய்ப்புகள் இல்லாத நிலையில், சமூக- பொருளாதார மேம்பாட்டில் இச்சமூகத்துக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையே பெருத்த இடைவெளி காணப்படுவது இயல்பே
இம்மக்களின் மொத்த தொகை 12 இலட்சம் - 14 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் 9 இலட்சம் பேர் பெருந்தோட் டங்களை வாழ்விடமாகக் கொண்டவர்கள். உயர்கல்வி வாய்ப்புகள் போதாமையால் இவர்கள் மத்தியில் சமூக நகர்வும் குறைவு.
இவர்களின் உயர்கல்வி வளர்ச்சிக்கான ஆலோசனைகள் பல்கலைக்கழக அனுமதிக்கு, இச்சமூகத்தவருக்குச் சாதகமான விசேட அனுமதிக்கொள்கை, க.பொ.த உ/நி வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு மேலதிக வளங்களை வழங்கி வலுப்படுத்தல், திறந்த பல்கலைக்கழகம் மற்றும் வெளிவாரிப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களில் சேர்ந்து பயிலுவதை ஊக்குவித்தல், உயர்கல்வியில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில் போன்றனவாகும்.
தற்போது மலையக மக்களின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் “மலையகப் பல்கலைக்கழகம்" ஒன்றின் தேவை பற்றிப் பலரும் வலியுறுத்துகின்றனர். இவ்வாறான பல்கலைக்கழகம், மலையகத்தில் வாழும் க.பொ.த உ/த பயின்று பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களுக்கு விசேட ஏற்பாட்டின் மூலம் விரிவாக்கக் கற்கை நெறிகளையும் தொடங்க முடியும். இங்கு கற்பிக்கப்படும் கற்கை நெறிகள், பிராந்தியத்தின் நிலைமைகளுக்கேற்றவாறு பெருந்தோட்ட விவசாய அறிவியல், முகாமைத்துவம், மலையக மக்களின் மொழி, கலாசாரம், வரலாறு தொடர்பானவையாக அமையலாம். இவ்வா றான பல்கலைக்கழகம் மலையகத்தில் உயர்கல் விக்கான கேள்வியையும் ஊக்கத்தையும் ஏற்படுத்திப் பிராந்திய அபிவிருத்
- 108

பேராசிரியர் சோசந்திரசேகரன்
திக்கான உந்து சக்தியாக அமைய முடியுமென மலையகக் கற்றறிவாளர்கள் கருதுகின்றனர்.
முடிவுரை
ஏழு தசாப்தகாலப் பல்கலைக்கழகக் கல்வி வளர்ச்சியில் சில சிறப்பம்சங்களையும் பிரச்சினைகளையும் இனங்காணக் கூடியதாக உள்ளது. சகல மாகாணங்களிலும் பல்கலைக்கழகங்கள், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான அனுமதி வாய்ப்பு கள், நாட்டின் உயர்நிலை மனித வளத்தேவைகளை நிறைவு செய்து வருகின்றமை, அணி மைக்காலங்களில் தேவையான கற்கை நெறிகளில் மாணவர் தொகை அதிகரிப்பு, உயர்கல்வியில் தராதரங் களையும் பொருத்தப்பாட்டையும் உறுதி செய்யும் முயற்சிகள் எனப் பல சிறப்பம்சங்களை எடுத்துக் கூறமுடியும்.
ஆயினும் பல்கலைக்கழக அனுமதிக்கொள்கையில் செய்யப் பட்ட மாற்றங்கள் காரணமாகத் தமிழ் சிறுபான்மையினர் மத்தியில் ஏற்பட்ட விரக்தி, இனரீதியான பாரபட்சம் என அவர்கள் மத்தியில் எழுந்த உணர்வுகள், உயர்கல்வியை நாடி, உரிய தகுதிகளைப் பெற்றவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் முறையாக வழங்கப் படாமை, பல்கலைக்கழகக் கல்வியை விரிவு செய்வதில் பின்பற்றப் பட்ட கட்டுப்பாடுகள், பல்கலைக்கழகக் கல்வியின் தராதர வீழ்ச்சி, அக்கல்விக்கான செலவுகள் மட்டுப்படுத்தப்பட்டமை. உயர்கல்வி வயதெல்லையில் 3% மானவர்களுக்கு மட்டுமே பல்கலைக்கழகக் கல்வி வழங்கப்பட்டாலும் அவர்களும் வேலையின்மைப் பிரச்சினையை எதிர்நோக்கும் நிலை இவை பல்கலைக்கழகம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளாகும்.
இந்நூலில் ஆராயப்பட்ட பல்கலைக்கழகக் கல்வி என்னும் விடயம் நாட்டில் இன்று இடம்பெற்று வரும் சகல உயர்கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கமாட்டாது. பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் உயர்கல்வி வழங்கும் உயர்தொழில் நுட்ப, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தனியார் உயர்கல்வி நிலையங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்யும் நிறுவனங்கள் என்பனவும் உயர்கல்வி நிறுவனங்களாகக் கருதப்படுகின்றன. உயர்கல்வி பற்றிய ஆய்வுகள் இச்சகல நிறுவனங்களையும் உள்ளடக்க வேண்டும். எவ்வாறா யினும் சகல உயர்கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகங்களே முறையான அமைப்பு, சட்டவரையறைகள், முறைப்படுத்தப்பட்ட
- 109

Page 57
இலங்கையில்உயர்கல்வி:பல்கலைக்கழகக்கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும்
மாணவர் அனுமதி, உயர்தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள், தராதர உறுதிப்பாட்டு அம்சங்கள் என்பவற்றைக் கொண்டு விளங்குவதால் தனிச்சிறப்பு வாய்ந்த, சமூக அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களாக விளங்குகின்றன. இதன் காரணமாகவே பல்கலைக்கழகங்களின் வளர்ச்சிக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் வழங்கி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
- 110

நூற்குறிப்பு
Central Bank of Sri Lanka, Economics and Social statistics of Sri Lanka, 2008.
Chandrasiri, S. The Labour Market Experience of University Graduates in Sri Lanka, Higher Education Policy, 2008, 21 (405-423)
CVCD & IRQUE, Proceedings of the Workshop on Quality in Higher Education in Sri Lanka, 2008.
Indraratna A.D. V. de Economics of Higher Education in Sri Lanka, New Delhi, Navrang, 1992.
Jayasuriya D.L. Development in University Education, 1942-65, University of Ceylon Review xxiii (16:2) pp 83153.
Jayasuriya J.E. Educational Policies and Progress, Associated Educational Publishers, Colombo.
Ministry of Education Education in Ceylon, A Centenary Vol. 1968.
National Educcation Commssion, National Policy Framework on University Technical and Vicational Education, 2008
Silva, K.M.de & Peiris G.H. The University System of Sri Lanka, Int. Centre for Ethnic studies, kandy, 1995.
-111

Page 58
10.
II.
12.
13.
இலங்கையில் உயர்கல்வி:பல்கலைக்கழக வளர்ச்சியும் பிரச்சினைகளும்
University Grunts Commission, University Statistics, 2006, 2007.
World Bank, Treasures of the Educational System in Sri Lanka 2005.
World Bank, The Towers of Learning 2009.
World Bank, Building the Sri Lankan knowledge Economy, 2007
-1 12


Page 59
பேராசிரியர் துறையில் பணியாற்றி பல்கலைக் பீடத்தலை6 கல்வியியல்
களையும் அ ஆங்கிலயெ ஆசிரியர்க: கல்வித்துை ர்கள் போன் டதாக இவ
665.
தேசிய கல் அமைச்சின் தேசிய கல் டவாக்கக்கு கழகப் பேர தொடர்பா6 பினராகப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சோ.சந்திரசேகரம் கல்வித் நான்கு தசாப்த காலமாகப்
வருபவர். தற்போது கொழும்புப் கழகக் கல்வி போதனா பீடத்தில் வராகப் பணியாற்றி வரும் இவர் தொடர்பான ஏராளமான நூல் ஆய்வுக் கட்டுரைகளையும் தமிழ், ாழிகளில் எழுதியுள்ளார். ள், ஆசிரிய பயிலுனர்கள் மற்றும் >ற ஆசிரியர்கள், பொதுவாசகறோரைக் கருத்திற் கொண் ரது எழுத்துக்கள் அமைந்துள்
வி ஆணைக்குழு, உயர்கல்வி
உயர்கல்வி ஆய்வுக்குழு, வி நிறுவகப் பேரவை, கல்விச்சட்
5ழு தென்கிழக்குப் பல்கலைக் வை போன்ற கல்வி, உயர்கல்வி ன அமைப்புகளில் உறுப் பணியாற்றியவர்.
ISBN ? - 55-, E-O-5
|
면 117 명 또 도 II, II, 1, 미 미 5