கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்

Page 1
Gas TGTLou இலங்கையின்
பேராசான் மு.
 
 


Page 2

பேராசான் மு. கார்த்திகேசன் நினைவுப் பேருரை
கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்
Guara áffudi. Fuar. GguulaaaFar
கல்வியியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
கார்த்திகேசன் நினைவுக்குழு

Page 3
பேராசான் மு. கார்த்திகேசன் நினைவுப் பேருரை
நூல் கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்
6) 1609ඒ5 நினைவுப் பேருரை ஆசிரியர் பேராசிரியர் சபா. ஜெயராசா
வெளியீடு : இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை
-- கார்த்திகேசன் நினைவுக்குழு 1ம் பதிப்பு : ஐப்பசி 2006 அச்சு டெக்னொ பிரிண்ட்
55, ஈ.ஏ.குரே மாவத்தை, கொழும்பு - 06. தொ.பே. 0777-301920
விலை ரூபா. 4000

பேராசான் மு. கார்த்திகேசன்

Page 4

கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்
சமகாலத்தில் வாழ்ந்து ஆசிரியத்துவத்தின் உன்னதங்களை வெளிப்படுத்தியவர் கார்த்திகேசு மாஸ்ரர் அவர்கள். மார்க்சிய இயலை திரிபு இன்றித் தெளிவாக விளங்கிக் கொண்டவர். மார்க்சிய இயலை அடியொற்றிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். தமது சுய இலாபங்களுக்காகக் கொள்கையை விட்டுக் கொடுக்காதவர்.
உன்னத ஓர் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய அறிவுப் பலத்தைக் கொண்டிருந்ததுடன், கால வளர்ச்சியோடு திரட்டிய அறிவைப் புதுப்பித்தவண்ணம் வாழ்ந்தவர். தமிழியல் சார்ந்த புலக்காட்சியை வளம்படுத்துவதற்குத் தமது வளமான ஆங்கில அறிவையும் மார்க்சிய அறிவையும் பிரயோகித்தவர். இந்த அணுகுமுறை அவரது மாணவராகிய பேராசிரியர் கைலாசபதியால் மேலும் ஆழமாக முன்னெடுக்கப்பட்டது.
எதிர்ச் சவால்களைக் கண்டு சளைக்காது பிரதிகூலம் எய்திய மாணவர்க்காகவும், ஆசிரியர்களுக்காகவும் இறுகிய கல்வி நிர்வாகப் பிடிக்குள் இருந்தவாறு குரல் கொடுத்தும், வினைப்பட்டும் வாழ்ந்து காட்டியவர். நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பிலும், மத்தியதரவகுப்பிலும் காணப்பட்ட போலித்தனமான பெறுமானங்களை ஆழம் மிக்க நகைச்சுவையினால் வெளிப்படுத்தியவர். கல்வி பற்றிய தெளிவான தரிசனத்தைக் கொண்டிருந்த அவரை நினைவு கூறும் வகையில் இந்த ஆய்வுத்தலைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-5-

Page 5
கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும்
உலகின் சமகாலக் கருத்து வினைப்பாட்டில் (Discourse) 'கோளமயம்' என்பது முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. சமூகமும், கல்வியும், பண்பாடும் பற்றிய மீள்சிந்தனைக்கு இதன் தாக்கங்கள் இட்டுச் செல்கின்றன. கோளமயத் தோடு இணைந்த எண்ணக் - கருக்களாக பின் - நவீனத்துவம், தொழில்நுட்ப முதலாளித்துவம் (Techno Capitalism) g5656).6ù f56O)6oi (OLIC565éFT6O)6u (Information Super Highway) உலகளாவிய பெருஞ் சந்தை புதிய வறுமை, கோள. வெகுசனப்பாடு (Global popular) முதலியவை மேலெழுகின்றன. பல்வேறு பிரச்சினைகளும், எழுநிலைகளும் (ISSues) கோளமயமாக்கலால் தோன்றியுள்ளன. இந்நிலையில் அடிப்படையான கருத்தியல் சார்ந்த தெளிவின்றி, "கோள நோக்கில் சிந்தியுங்கள், பிரதேச நோக்கில் செயற்படுங்கள்" என்ற சுலோகமும், "பிரதேச நோக்கில் சிந்தியுங்கள், கோளநோக்கில் செயற்படுங்கள்" என்ற சுலோகமும் (p67606) disabil Gd56öp607. (Think localy and act globly)
உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சியையும், உலகை நோக்கிய சந்தையின் விரிவால் ஏற்படக்கூடிய விரிவான இலாபமீட்டலையும், விஞ்ஞான பூர்வமாக விளக்கிய கோட்பாடாக அமைந்த மார்க்சியம் அறிகை நிலையில் புதிய தரிசனத்தை வழங்கிய வண்ணமுள்ளது.
கார்ல் மார்க்ஸ் விசைகொண்ட சிந்தனைகளை வழங்குவதற்கு முன்னதாக அடம் சிமித் தாம் எழுதிய "தேசங்களின் செல்வம்" என்ற நூலில், நாடுகளிடையே நிலவும் கட்டற்ற வணிகத்தின் அனுகூலங்களை விளக்கி ஒரு வகையிலே எழுச்சி பெற்ற முதலாளித்துவத்துக்குச் சார்பான கருத்துக்களை வலிமைப்படுத்தினார். உலக வர்த்தகத்துக்குச் சாதகமான முறையில் அவரால் மேற்கொள்ளப்பட்ட எழுத்தாக்கங்கள், முதலாளித்துவக் கருத்தியலுக்குச் சாதகமாகவே அமைந்தன.
முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியானது, கவர்ச்சி. யூட்டப் பெற்ற பல்வேறு எண்ணக்கருக்களால் முலாம் பூசப்பட்டுள்ளது. நுகர்வோர் பொருளாதாரம் (Consumer Economics) நுகர்வோர் இறைமை, உலக சந்தைக்கான பொருளாதார நடவடிக்கைகள், என்றவாறான விபரிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. மனிதவளம், இயற்கைவளம் முதலிவற்றைத் தீவிர சுரண்டலுக்கு உள்ளாக்கி மிகை இலாபமீட்டும் தொழிற்பாடுகளிலே பல்தேசியக்கம்பனிகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில் மிகை இலாப மீட்டும் பொருளாதாரச் செயற்பாடு
-6-

களினால் மனிதவாழ்க்கை அவலங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றது. சாமானியர்கள் பருகும் பானங்களிலே கிருமி நாசினிகள் கலந்து விற்கப்படுமளவுக்கு இலாபம் பெருக்கும் நடவடிக்கைகள் விரிவாக்கம் பெற்று வருகின்றன. நுகர்வோர் இறைமை, நுகர்வோர் மேலாண்மை நுகர்வோரே உற்பத்தி பற்றிய தீர்மானங்களை எடுக்கும் விசைகளாக இயங்குகின்றனர் என்று விளக்கும் பொருளாதார நிபுணர்கள், நுகர்வோரின் உயிர்களே சுரண்டப்படுகின்ற அவலங்களை வெளிக்காட்டாதிருத்தல் வியப்பானது அன்று!
நவீன முதலாளித்துவ விரிவையும் சந்தைப் பொருளாதாரத்தையும், நுகர்ச்சிக் கோலங்களையும், சுரண்டலையும் கோட்பாட்டு நிலையில் நியாயப்படுத்தும் தத்துவமாக பின்னவீனத்துவம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிரதான குறிக்கோள்களாக மார்க்சியத்தின் மீதும் அதன் சமூகம் பற்றிய தீவிர விளக்கத்தின் மீதும் சந்தேகங்களை எழுப்புவதுடன் தொழிலாளர்கள், ஒடுக்குமுறைக்கு உட்பட்டோர் ஆகியவர்களை ஒன்றுதிரட்டும் முறைகளை (Totalising Methods) மறுதலிப்பதுமாகும். நவீன முதலாளித்துவத்துக்கு எதிரான வலுக்கள் ஒன்றுதிரள்வதைச் சிதறடிப்பதற்கும், உதிரிகளாக்குவதற்கும் பின்னவீனத் துவக் கருத்தியல் முண்டுகொடுக்கின்றது. பெரும் உரையங்கள் (Metanarratives) விரிந்த கோட்பாட்டு ஆக்கங்கள் (Grand Theories) என்றவாறு பின்னவீனத்துவாதிகளால் சிறப்பு எண்ணக்dB(5Ġ5đ56it 2 (56)ATTébátói JLJ (B6ÍT6T6IOT. (Fox, N.F (2003) The new Sartre, Explorations in post Modernism, London, Continuum) (3bg5 6760ii 600Td5கருக்களின் உட்பொருளாகவும் மறைபொருளாகவும் அமைவது சுரண்டலுக்கு உள்ளாகிய மக்கள் அனுபவ நிலையிலும் கருத்தியல் நிலையிலும் ஒன்றிணைதலைத் தடுத்தலாகும்.
கோளமயமாக்கலுக்கு அனுசரணையான பல எண்ணக்கருக்கள் பின்நவீனத்துவ வாதிகளால் முன்வைக்கப்படுகின்றன. அவை:
(1) வர்க்கம் என்ற நிலையில் சமூகத்தைச் சுருக்கி விடுதல் (Class
Reductionism) என்றவாதம் பொருத்தமற்றது என்று கூறுதல்.
(2) சமூக நிர்ணயிப்பில் பொருண்மிய வாதம் (Economism) பொருந்
தாது என்று முன்மொழிதல்.
(3) மாறிவரும் பொருளாதார நிலமைகளில் ஒருவரது வாழ்க்கைத் தெரிவுகளில் (Life Choices) உறுதியற்ற நிலையும் தளம்பும்
-7-

Page 6
நிலையும் காணப்படுவதனால் தொழிலாளி வர்க்கம் என்பதைத் திட்டவட்டமாக வரையறுக்க முடியாது என்று குறிப்பிடுதல்.
பின் - நவீனத்துவவாதிகளின் மேற்கூறிய வாதங்களில் பல அடிப்படையான கருத்து வறுமை காணப்படுகின்றது. சுரண்டுவோர், சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவோர் என்ற தெளிவான பாகுபாடு காணப்படுதல் யதார்த்தமானது. இந்நிலையில் தெளிவாக இனங்காணக் கூடிய ஒரு தோற்றப்பாட்டினை "சுருக்கல் வாதம்" என்ற சொற்கோவையினால் வலுவிழக்கச் செய்து விடமுடியாது. கல்வி வர்க்கக் கோடுகளினுள்ளே அசைவுகளை ஏற்படுத்துமன்றி, வர்க்கங்களை மீறி ஒருவரை சமூக நிரலமைப்பின் சிகரத்துக்கு மேலுயர்த்திக் கொண்டு செல்லாது. உதாரணமாக ஜப்பானில் எழுத்தறிவு உச்சநிலையில் இருந்தாலும் அது வர்க்கக் கட்டமைப்புக்களைச் சிதைக்காது, மேலும் வலுவூட்டி வருவதாகவே காணப்படுகின்றது. வர்க்க எல்லைகளுக்கு உட்பட்ட நிலையிலேதான் அங்கு வாழ்க்கைத் தெரிவுகளிலும் தொழில் தெரிவுகளிலும் மாற்றங்கள் நிகழ்ந்தவண்ணமுள்ளன. இச்சந்தர்ப்பத்தில் பிறைட்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரொம் ஹிக்கி (Tom Hickey, 2000) கூறிய கருத்து இங்கே குறிப்பிடத்தக்கது. தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் கடினமுயற்சியின் பின்னர் ஒருபல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுவிட்டால் அது அவரை வர்க்க நிலையில் இருந்து மேலுயர்த்தி விடமாட்டாது. மாறாக அவரை சம்பளம் பெறுகின்ற தொழிலாளியாக உயர்மட்டத்திறன் கொண்டவராக மட்டுமே மாற்றும். (A degree will not transport them out of the working class, but rather transform them into wage labourers with high level skills)
இந்நிலையில் கல்வி வழங்கலும் விரிவும், உழைக்கும் வர்க்கத்தின் உயர் மட்டத்திறன்களைச் சுரண்டும் நடவடிக்கையாக அமைதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கோளமயமாக்கல் தொடர்பான இன்னொரு கருத்தும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
கார்டியன் பத்திரிகை வெளியிட்ட செய்தி ஒன்றில் (Guardian, 9 September, 1998) பிரித்தானியாவின் செல்வப்பங்கீட்டில் பெருமளவு வேறுபாடு காணப்படுதல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் செல்வந்தவர்களுக்கும் வறியவர்களுக்கு மிடையேயுள்ள வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் செல்லுதலும் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக மயமாக்கலின் எதிர் விளைவை ஆதார
-8-

பூர்வமாகச் சுட்டிக்காட்டும் ஆவணமாக இது அமைந்துள்ளது. இது அந்த நாட்டின் கல்வியில் நேரடியான தாக்கங்களை ஏற்படுத்தி வருதல் றிச்சாட் றிசரின் (Richard Rieser) (2000) ஆய்வுகளிலே தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் தேசிய ஆசிரியர் இணையத்தின் உறுப்பினராக இருந்து கல்வியூடான சமத்துவத்துக்குப் போராடி வரும் இவரது எழுத்தாக்கங்களில் இங்கிலாந்தின் வறிய பிள்ளைகளின் கல்வி பற்றிய இன்றைய அவல நிலைகள் குறிப்பிடப்படுகின்றன.
அதேவேளை அறிவுக்கும், வறுமைக்கும் இடையேயுள்ள தொடர்புகள் ஆராயப்படுதல் பொருத்தமற்றது என்று வாதிடும் பொய் கோனெல் (Bob Connel, 1982) போன்ற பின் நவீனத்துவக் கல்வியியலாளர்கள் மாணவர்களுக்கும் அறிவுக்குமுள்ள தொடர்புகளை மாத்திரம் ஆராய வேண்டுமெனக் கூறுதல், அடிவேர்களை மறந்த மேலோட்டமான கருத்துக்களாகும். அறிவு என்பது அதிகாரத் தொடர்புகளின் GigligiouTLTab (Knowledge is the function of power relationships) இருத்தலை இங்கே சுட்டிக்காட்டலாம். பெரும் உரையங்களின் பலத்தை சமகால விண்வெளி ஆய்வுகள் இன்னொரு கோணத்திலே வெளிப்படுத்துகின்றன. நவீன விண்வெளி ஆய்வுகள் உருவாக்கியுள்ள "கோளம்" பற்றிய பரந்த புலக்காட்சியும் லவ்லொக் என்பவரால் 66TTáä5&bi uLu' "abu JT tõ(bgb(335sTGIbb (Lovelock, J (1988) The Ages of Gaia, Boston,Ma, Lands Fame Press) பெருங்காட்சிகள், பெரும் உரையங்கள் பற்றிய எண்ணக்கருக்களை மீளவலியுறுத்தி நிற்றலும் அண்மைக் காலத்தைய எழுத்தாக்கங்களிலே பளிச்சீடு கொள்ளலைச் சுட்டிக்காட்டுதல் பொருத்தமானது. பெண்கள் மீதான ஒடுக்குமுறையைப் பற்றி ஆராய்ந்த ஜேன்கெலி பின்னவீனத்துவத்தின் கோட்பாட்டு வறுமையினையும் மார்க்சியத்தின் கோட்பாட்டுப் பலத்தையும் சுட்டிக் காட்டியிருத்தல் இச்சந்தர்ப்பத்தில் ஒப்புநோக்கினுக்கு உரியதாகும். (Mike Cole(ed) (2000) Education, Quality And Human rights, London, Routledge Falmer)
உதிரியாக கைவிடப்பட்டு நிராகரிப்புக்கு உள்ளானவர் மீது கவனத்தைத் திருப்பியுள்ள பின்னவீனத்துவம் சுரண்டல் மிக்க சமூக பொருளாதாரத் தளத்திலேதான் அவை நிகழ்கின்றன என்ற நடப்பியலைக் குறிப்பிடத் தவறிவிட்டது. கோளமாக்கலுக்கும் கல்விக்குமுள்ள தொடர்பு பால்நிலை (Gender Basis) யிலும் ஆராயத்தக்கது. பெண்களின் நிலையைப் பொறுத்தவரை தொழிற்சந்தை இருமைநிலை
-9-

Page 7
ab|T600Till (B6 g5|Tab (The Dual Labour market thesis) guilóIT67Tidb6ir வெளிப்படுத்தியுள்ளனர். (Mike Col, (2000)) சமகால நிலவரங்களைப் பொறுத்தவரை மொத்தத் தொழிற் சந்தையில் ஐம்பது சதவீதமானவர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர். ஆனால் ஆண்கள் பொறும் உழைப்பு ஊதியத்தோடு ஒப்பிடும்பொழுது அவர்கள் 72.7 சதவீத உழைப்பு ஊதியத்தையே பெற்றுக் கொள்ளும் முரண்பாடான நிலை காணப்படுகின்றது.
பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெரும்பாலான தொழில்கள் போராடி சம்பளத்தை அதிகரிக்க முடியாத தொழில்களாகவும், ஆற்றல் மிக்க தொழிற்சங்கபலத்தைக் கொண்டிராத தொழில்களாகவும் காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக இலங்கையின் முன்பள்ளி ஆசிரியர் தொழிலைக் குறிப்பிடலாம். இது பெண்களுக்குரிய uTUJub JffuuuDIT 607 Gg5(Bubu 6).Jđ#5 ushigbi 6ör (Traditional domestic Role) இணைந்தது. முற்று முழுதாகப் பெண்களால் மட்டுமே இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை வேதனம் மிகவும் குறைந்த தொழிலாக இது விளங்குகின்றது.
வர்க்க நிலைப்பட்ட சுரண்டலுடன் பால் நிலைப்பட்ட சுரண்டலும் இணைந்து செல்வதைக் காண முடியும், பொருள்களை மீள் உற்பத்தி செய்வதிலே மேற்கொள்ளப்படும் சிக்கன நடவடிக்கைகள் (Cost Effectiveness) போன்று மனிதவளத்தை மீள் உற்பத்தி செய்யும் சிக்கன நடவடிக்கையில் பெண்களே ஈடுபடுத்தப்படுகின்றனர். அதே வேளை இல்லத்துக்கு வெளியில் குறைந்த வேதனத்துக்குத் தொழில் புரியும் நிலை சமாந்தரமான இரண்டு வகையான சுரண்டலுக்குப் பெண்களை உள்ளாக்கிவிடுகின்றது.
கோளமயமாக்கலால் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் பெண்களே அதிக தாக்கத்துக்கு உள்ளாகின்றனர். வறிய பெண்கள் கல்விச் செயல்முறையில் இருந்து இலகுவாக வெளிவீசப்பட்டு விடுகின்றனர். உலகமயமாக்கல் விரிவுக்கு முற்பட்ட இலங்கையின் பாரம்பரியமான கல்வியில் நிலவுடமைப் பொருளாதாரப் பண்புகளும், காலனித்துவப் பண்புகளும் கலந்த செயல்வடிவத்தைக் கொண்டிருந்தது.
உறைந்து இறுகிய ஒருதலைப்பட்சமான வார்ப்புச் சிந்தனைகளை வளர்தல், போட்டியால் முன்னேறலாம் என்ற நம்பிக்கையை தனியார் நிறுவனங்களில் சேர்ந்து மாதாந்த ஊதியம் பெறும் கவர்ச்சியை ஊட்டுதல், தாம் தொழிற்படும் நிறுவனங்கள் எதிர் மானிடப் பண்பு
-10

களைக் கொண்டிருந்தாலும் அவற்றுக்கு விசுவாகமாக இணங்கித் தொழிற்படுதல், சமூக நிரலமைப்பை ஏற்று இசைந்து செல்லல், மத்தியதர வகுப்பினருக்குரிய உளப்பாங்குகளைக் கட்டியெழுப்புதல், தீவிர மாற்றங்களை விரும்பாத சமநிலையில் இருக்க விரும்புதல், அநீதிகளை எடுத்துரைக்காது அடங்கிவாழ முனைதல், மெளனப் பண்பாட்டைப் பராமரித்தல் உன்னதமானது என்ற உளப்பாங்கைப் பராமரித்தல், ஒடுங்கிய சுயஇலாபங்களை நோக்கிய ஊக்கல் முனைப்புடன் தொழிற்படுதல், ஆக்கச் சிந்தனைகளுக்கு வளமூட்டாது பொறி முறையாகச் சிந்திக்குச் செயல்முறைகளுக்கு வலிவூட்டுதல் முதலியவை காலனித்துவ நவகாலணித்துவ கல்வி முறைமையின்
பண்புகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.
பள்ளிக் கூட முகாமைத்துவக் கட்டமைப்பில் நிலமானியப் பண்புகள் இன்றும் தொடர்ந்த வண்ணமுள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு கிராமத்துப் பாடசாலையின் அதிபர் அந்தக் கிராமத்து மேட்டுக்குடியினரைப் பிரதிபலிப்பவராக இருக்கும் பொழுதுதான் முகாமைத்துவத்தை இசைவுபட முன்னெடுக்க முடிகின்றது. ஆண்களும் பெண்களும் கலந்துகற்கும் கல்லூரிகளுக்கு ஆண்களே அதிபர்களாக இருப்பதற்கு பொருத்தமானவர்கள் என்று கருதப்படுதல் பெண்கள் ஆற்றல் குறைந்தவர்கள் என்ற நிலப்பிரபுத்துவப் பெறுமானங்களின் மீள வலியுறுத்தலாக அமைகின்றது.
நிலப்பிரபுத்துவக் கல்விமுறைமையின் இன்னொரு பரிமாணமாக அமைவது "ஒருபக்கத் தொடர்பாடல்" ஆகும். காலனித்துவ மற்றும் நவகாலனித்துவக் கல்வி முறை இந்த செயற்பாட்டினை மேலும் மீளவலியுறுத்தியது. அதாவது மாணவரிடமிருந்து முகிழ்த்தெழும் தொடர்பாடலுக்கு இங்கு முக்கியத்துவம் தரப்படுதல் இல்லை. மாணவர் அறிவின் நுகர்ச்சியாளராக இருப்பார்களேயன்றி அறிவின் உற்பத்திச் செயற்பாட்டிலே பங்கெடுக்காத நிலை ஒருவகையிலே ஒடுக்குமுறைக்குச் சாதகமாக அமைந்து விடுகின்றது.
கோளமயமாக்கற் சூழலில் அறிவு என்பது ஒரு பண்டமாக (Commodity) மாற்றப்பட்டுள்ளது. அறிவுச் செயற்பாட்டில் ஈடுபடும்நிலையங்கள் பண்ட உற்பத்தி செய்யும் "வேலைத்தலங்களாக" நிலை மாற்றம் பெறுகின்றன. வேலை நிலையங்களுக்குரிய இலாப மீட்டும் செயற். பாடுகள் அடிப்படை மனிதப் பண்புகளையும், கூட்டுறவு மனப்பாங்கையும் எளிதில் நிராகரித்து சுயநலப் போக்குகளைத் தூண்டி விடுகின்றன.
-ll

Page 8
கோளமயமாக்கலின் விசைகள் கட்டணம் செலுத்திக் கற்கும் நடவடிக்கைகள் மீது அதீத ஊக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
வேலையை அடிப்படையாகக் கொண்ட கற்றல் (Work Based Learning) என்ற எண்ணக் கரு ஒருபுறம் செயல் அனுபவங்களை உள்ளடக்கிய கற்றலையும், மறுபுறம் வேலை உலகை நோக்கிய பெறுமானங்களை வலியுறுத்தும் கற்றலையும் குறிப்பிடுகின்றது. நவீனசந்தைப் பொருளாதாரச் செயற்பாடு கல்வியை நலன்புரி (welfare) நடவடிக்கை என்ற மரபு வழிநிலையிலிருந்து மாற்றி சந்தையின் தேவைகளுக்குரிய கல்வியாக செயற்பட வைக்கின்றது. கல்வி வழங்குனரும் கல்வி பெறுனரும் சந்தைத் தேவைகளின் அடிப்படையாகவே தமது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். கட்டமைப்பு இசைவாக்கல் (Structural adjustments) என்ற பொருளாதார நடவடிக்கைகள் அணுகுமுறைகள் கல்விக்கென அரசு வழங்கும் நிதியை வெட்டிக் குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இதன்காரணமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோரும் பிரதிகூலம் எய்தியவர்களும் கல்வி நிராகரிப்புக்கு உள்ளாகும் நிலை பெருக்கமடையத் தொடங்கியுள்ளது. பொருளாதார நிலையில் அனுகூலம் பெற்றவர்களே கல்வி நிலையிலும் மேம்பாடு பெறுதல் மேலும் மேலும் வலுவூட்டப்பெற்று வருகின்றது. குறைந்த உற்பத்திச் செலவு, குறைந்த விலையில் ஆற்றலுள்ளவர்களை வேலைக்கு அமர்த்துதல், சந்தையை உலகளாவிய நிலைக்கு விரிவாக்குதல் போன்ற செயற்பாடுகளைக் கொண்ட கோளமயமாக்கல் இன்றைய நிலையில் தமக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் கல்வி விசையாகவும் (Educational Force) விரிவடைந்துள்ளது.
கைத் தொழிற்சாலை மனிதரைப்பற்றி என்ன புலக் காட்சி கொள்ளுகின்றதோ அத்தகைய ஒருபுலக்காட்சியை கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. கல்விநிலையங்கள் தொழிற்சாலைகள் என்ற அணுகுமுறைகளுக்குள் கொண்டுவரப்படுகின்றன.
அறிவை முகாமை செய்தல் மற்றும் அறிவைப் பரிமாற்றம் செய்தல் முதலாம் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு "குறியீட்டுப் பகுப்பாய்வாளர்" (Symbolic analysts) என்ற பெயர் புதிய தொழிற்சந்தையிலே சூட்டப்பட்டுள்ளது. தம்மைப் பராமரிக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்குரிய அறிவுத் தேவையை உடனுக்குடன் வினையாற்றலுடன்
-12

நிறைவேற்றுதல் குறியீட்டுப் பகுப்பாய்வாளரின் சிறப்பார்ந்த செயற்பாடாகவுள்ளது. உயர்நிலை மனித ஆற்றலைச் சுரண்டுவதற்கு ஏற்ற ஒரு நவீன உபாயமாக இது அமைந்துள்ளது.
சமகால அறிவுப் போக்கிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. வேறுவகைப்பட்ட அறிவு வேறுவகைப்பட்ட விசையுடனும் வேகத்துடனும் செயற்படத் தொடங்கியுள்ளன. உதாரணமாக தொழில்நுட்ப அறிவின்வேகம் இலக்கிய அறிவின் வேகத்தை விஞ்சும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அறிவின் செயற்பாடுகள் சார்பு நிலைக்கு உட்பட்டவை. ஆற்றுகையை (Performativity) அடிப்படையினை மதிப்பீடு செய்ய முடியும் என்பது பின்னவீனத்துவவாதிகளுள் ஒருவராகிய லியோராட்டின் கருத்து (Lyotard, (1984) The post modern condition, Manchester univarsity press, Manchester) இதனால் குறிப்பிட்ட சந்தர்ப்பத்திலும் நேரத்திலும் மட்டுமே அறிவு உண்மைத்தன்மை கொண்டதாக இருக்கும் என்பது அவரது வலியுறுத்தல்.
ஆனால் மார்க்சிய கண்ணோட்டத்தில் அறிவு சமூக இருப்பின் வெளிப்பாடாக மேலெழுதலும், அறிவுக்கும் கருத்தியலுக்குமுள்ள தொடர்புகளும் வலியுறுத்தப்படுகின்றன. உதாரணமாக சுரண்டுவோர் தமக்குச் சார்பான அறிவுப் பலத்தைக் கட்டியெழுப்புதலும், சுரண்டப்படுவோர் அவற்றுக்கு அறைகூவல் விடுக்கும் அறிவுப்பலத்தை உருவாக்குதல் நடப்பியல் வெளிப்பாடுகளாகவுள்ளன.
மார்க்சிய அறிகையில் அறிவை இனங்காணலில் கருத்து வினைப்பாடு (Discourse) என்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது.
சமூக இருப்பால் மனித உணர்வுகள் உருவாக்கப்படுகின்றன. அறிவின் ஆக்கத்தில் உழைப்பின் முக்கியத்துவத்தை மார்க்சியம் வலியுறுத்தியுள்ளது. சுரண்டலுக்கு அறிவு கருவியாக்கப்படுதலை போலோ பிறேறி, மிசேல் பூக்கோ போன்றோர் விரிவாக விளக்க முயன்றனர். ஒடுக்குமுறைக்கு அறிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதை போலோ பிறேறி "ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆசிரியம்" (Pedagy of the oppressed) 6T6öp (b. 65(86) 667Tóibó607 Tii. 915,635(gib அதிகாரத்துக்குமுள்ள தொடர்புகளை மிசேல் பூக்கோ தாம் எழுதிய நூல்களிலும் கட்டுரைகளிலும் பலகோணங்களிலே விளக்கியுள்ளார்.
-13

Page 9
சமூக இருப்பே அறிவின் இருப்பாக மாற்றமுறுகின்றது. கல்வியில் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற தரமேம்பாட்டுத்திட்டங்கள், தரவுறுதி நடவடிக்கைகள் முதலியவை அமைப்பு நிலையிலும், பயன்பாட்டு நிலையிலும், நுகர்ச்சி நிலையிலும் மேட்டுக்குடியினருக்கே அனுகூலம் தரக்கூடியவை. அண்மைக்காலத்து ஆய்வாளர்கள் "சமூக மூலதனம்' (Social Capital) என்ற ஓர் எண்ணக்கருவை முன்வைத்g576i57T60Tii (Giddens, (1998) The Thirdway, Polity press, Cambridge) gotpat மூலதனம் என்பது சமூக அடிமட்டத்து மக்களை, சமூக நிராகரிப்புக்கு ஊள்ளான மக்களை, குவியப்படுத்தும் ஒர் அறிகை முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும் சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் நடத்தை உருவாக்கத்துடன் இணைந்ததாக இக்கருத்து வலியுறுத்தப்படுகின்றது. தொடர்பாடல் இணைப்பு, பொதுநியமங்கள், பொது நோக்கங்களுக்குரியவாறு இணக்கமுறும் தொழிற்பாடுகளை முன்னெடுக்கும் செயற்பாடுகள் சமூக மூலதனத்தை ஏற்படுத்தும் என விளக்கப்படுகின்றது. சமூக நியமங்களின் அடிப்படையில் சமூக மூலதனம் விளக்கப்படும் பொழுது நியமங்களைக் கல்விச் செயல் முறையால் உருவாக்கி வரும் உயர் மத்தியதர வகுப்பினரே அனுகூலங்களைப் பெற்றுக் கொள்வார்கள் என்பதை மனங் கொள்ள வேண்டியுள்ளது.
9in.6dB 60)&Bg5 (ogbirgsbab6ft (Knowledge Industries) 9.stj6) (pób/T60Dudgågöl6)Ib (Knowledge Management) (1p356)7b 6760ö607db – கருக்கள் சந்தைப் பொருளாதார வளர்ச்சியினதும், கோள மயமாக்கலினதும் வெளிப்பாடுகளாகவுள்ளன. பெரும் கம்பனிகள் தாமே பல்கலைக்கழகங்களை இயக்கத்தொடங்கியுள்ளன. கூட்டிணைப்புப் பல்கலைக்கழகங்கள் (Coorporate Universities) என்ற புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உலகசந்தையில் வெற்றிகரமாகத் தொழிற்படவும், இலாபமீட்டவும் கம்பனிகளதும் பல்கலைக்கழகங்களினதும் கூட்டிணைப்பு வலிமையான கட்டமைப்பாக மாறியுள்ளது.
பல்கலைக்கழகக் கற்கை நெறிகளிலும், பாடத்திட்ட ஆக்கங்களிலும் கம்பனிகளினது நேரடியான தலையீடு வலுப்பெறத் தொடங்கியுள்ளது. தமக்குத் தேவைப்படும் தொழில்களுக்குரிய ஆற்றல் மிக்கோரை உருவாக்குவதற்கு கம்பனிகள் பல்கலைக்கழகங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அனைத்துப் பட்டதாரிகளுக்கும் கம்பனிகள் பற்றிய நேர்க்காட்சிகளை உருவாக்
-14

கும் வகையில் கலைத்திட்டம் நெறிப்படுத்தப்படுகின்றது. புதிய பண்டங்களை உருவாக்குவதற்குரிய ஆராய்ச்சிகள், புதிய பொறிகளை வடிவமைப்பதற்குரிய ஆராய்ச்சிகள், நுகர்ச்சியாளரைச் சென்றடைவதற்குரிய புதிய அணுகுமுறைகள் பற்றிய ஆராய்ச்சிகள் முதலியவற்றை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழகங்கள் தூண்டிவிடவும், உற்சாகமளிக்கவும் படுகின்றன.
உலக சந்தையின் விரிவாக்கத்தின் நேர்க்காட்சிகளை வளர்க்கும் நடவடிக்கைகளுள் ஒன்றாக "கோளமய வியாபார எழுத்தறிவு" (Global Business literacy) என்ற கல்விச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தகவல் சமூகத்தில் எவ்வாறு கற்றுக்கொள்ளல் என்ற விடயம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டவர்கள் தகவலும் தொடர்பாடலும் தொடர்பான தொழில்நுட்பவியல் (ICT) என்ற இயலை உருவாக்கியுள்ளனர். கற்கும் தொடர்பாடல் இயல்புகளை மாற்றுதல், கற்றலுக்கான பல புதிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருதல் முதலியவை இந்த 3u856i (p67 (O607GBó535i Lil' (B6itó77607. (Peter Jarvis, (2001) The Age of Learning, London, Kogan Page) đ56ù6îới GáFuusi) un (BȰd6Mngö g56ofu uT6ñT மயப்படுத்தலில் மேற்கொள்ளப்பட்ட புரட்சியாக தகவலும் தொடர்பாடலும் தொடர்பான நுட்பவியல் (ICT) கருதப்படுகின்றது. நன்கு வழிப்படுத்தப்பட்ட முறையிலே தனியாள் ஒருவர் கற்றல் 96)gdb6061Tás GabiToito)16076), Gafuiju JGuTib. (Purchasing Units of Learning) என்று கூறப்படுகின்றது. (இந்தச் சொற்றொடரே கல்வியின் வர்த்தகமயமாக்கப்பட்ட பண்பை புலப்படுத்துகின்றது)
மேற்கூறிய கற்பித்தல் நடவடிக்கை கல்விக்கான செலவைக் கட்டுப்படுத்தும் உபாயமாகின்றது. கோளமயமாக்கலின் நேரடியான தாக்கம் கல்விக்கான ஆசிரியர் செலவுகளைக் குறைத்து கல்வி நிறுவனங்களின் இலாபமீட்டலை அதிகரித்தலுமாகும். தகவலும் தொடர்பாடலும் தொடர்பான நுட்பவியல் ஓர் ஆசிரியர் முன்னரிலும் கூடுதலான எண்ணிக்கை கொண்டவர்களான மாணவர்களுக்குக் கற்பிக்கக் கூடிய ஏற்பாட்டைச் செய்கின்றது. இந்த அனுகூலம் ஆசிரியர்களுக்குச் சென்றடையவில்லை. ஆசிரியர்களுக்குரிய கொடுப்பனவுகள் இந்நிலையில் சமாந்தரமாக அதிகரிக்கவில்லை இந்த நுட்பவியல் (ICT) ஆள்புல எல்லைகளையும் கடந்த வகையில், உலகளாவிய முறையில் கல்வியை முன்னெடுத்துச் செல்கின்றது.
-5-

Page 10
இணையத்தளங்களுக்குக் கட்டணம் செலுத்தி அறிவை நுகர்ந்து கொள்ளும் முறை வளர்ச்சியடைந்து செல்லல் கல்வியை நுகர்வோருக்குரிய செலவுகளை அதிகரிக்கச் செய்கின்றது. அனுகூலம் மிக்கோருக்கே தரமான கல்வி என்ற நடைமுறை மேலும் வலிமையாக்கப்படுகின்றது. கடன் அட்டைகளைச் செலுத்தியே இணையத்தளங்களில் அறிவை நுகர வேண்டியுள்ளது.
இச் செயல்முறையின் உளவியல் மயப்பட்ட இன்னொரு விளைவு மாணவர் மத்தியில் 'Dot.Com Hysteria"என்ற உளத்தாக்கத்தை ஏற்படுதலாகும். விரைந்து வளரும் கல்விச் சந்தையிலே நின்று நிலைப்பதற்கு இணையத்தளங்கள் உடனடி உடனடியான புத்தாக்கங்களை அறிமுகப்படுத்தவேண்டியுள்ளது. இந்நிலையில் புத்தாக்கங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பித்து (Mania) என்ற நிலைக்கும் மாறி விடுகின்றது.
தரமேம்பாடுடைய ஒர் இதவடிவத்தை (Module) உருவாக்கிக் கணனிப் பதிவாக மாற்றும் பொழுது அதன் உற்பத்தி செலவு அதிகரிக்கின்றது. இந்த அதிகரித்த செலவு இலாப எல்லைகளுடன் நுகர்ச்சியாளராகிய மாணவர் மீது சுமத்திவிடப்படுகின்றது. கல்வி நிறுவனங்கள் வர்த்தகமாக்கலின் தீவிர பிடிக்குள் அகப்பட்டு "அறிவுக்கம்பனிகள்" (Knowledge Companies) ஆக மாறிவிடுகின்றன.
கோளமயமாக்கற் செயற்பாடுகளும், நவீன சந்தைப் பொருளாதாரமும் ஆபத்து (Risk) என்ற பாரம்பரியமான எண்ணக்கருவில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. முதலாளிகளுக் கிடைக்கும் இலாபம் ஆபத்தைத் தாங்குவதற்கான வெகுமதி என்பது பாரம்பரியமான பொருளாதார நிபுணர்களின் கருத்து. இன்று 'ஆபத்து' என்பது இலகுவாக நுகர்ச்சியாளர் மீது சுமத்திவிடப்படும் செயற்பாடாக மாறியுள்ளது.
சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சிந்தனையாளர்கள் '6760gbulb gib60)gbé5g 67(Birilab6it" (Leave it to the market) 6T6örp sp65,160L கல்வி, மருத்துவம் என்ற மானிட சேவைத் துறைகளிலும் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் வறுமைக்குரிய சுரண்டற் காரணிகள் மூடி மறைக்கும் அறிகைச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒடுக்கு முறைக்கும் வறுமைக்கும் உட்பட்டவர்கள் சோம்பேறித்தனம் (LaZy) உடையவர்கள், வேலை செய்யக் கூச்சப்படுபவர்கள் (Work Shy) என்ற வாறான
-6-

பெயர்சூட்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை மேற்கூறிய கருத்தை வலியுறுத்துகின்றது.
இலங்கையின் கிராமப்புறத்து வறிய மாணவர்கள் இந்த வீச்சினுள் கூடுதலாக ஆகப்பட்டுக் கொள்கின்றனர். பாடசாலை பற்றிய பாரம்பரியமான எண்ணக்கருவில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பாடசாலைகளையும் தொழில் துறைகளையும் நெருங்கிய இணக்கத். துக்குக் கொண்டுவருதல், வேலை உலகினுக்குப் பொருந்தக் கூடியதாகக் கல்வியைத் திறந்துவிடுதல், பாடசாலைகளுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்குமிடையேயுள்ள கூட்டிணைப்பை வளர்த்தெடுத்தல் என்றவாறு ஐரோப்பிய ஆணையம் முன்வைத்த கருத்gölőb&B6it (European Commission (1995) Teaching And Learning Brussels, European Commission) கோளமயமாக்கலின் விசைகளால் உலகம் தழுவிய கருத்துக்களாக இவை மாற்றப்படுகின்றன. "வீடும் LITT LớFIT60D6Uuqib" (Home School Links) 6T6öymp LJITJüDLJifu JLDT607 g60D600Ti JL இன்று கம்பனியும் பாடசாலையும் என்ற இணைப்பாக (Company School Links) மாற்றப்பட்டுள்ளது. கம்பனிகளோடு கூடுதலான தொடர்புகளை வைத்திருக்கும் பாடசாலைகளே மேம்பட்ட செயற்பாடுகளைக் கொண்டவை என்ற படிமம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பெரும் பாடசாலைகள் ஏற்கனவே இந்நடவடிக்கைகளில் இறங்கிச் செயற்படத் தொடங்கிவிட்டன.
கோளமயமாக்கலின் அழுத்தங்கள் கல்வி என்ற நிலையிலிருந்து பயிற்சி என்பதை (Trining) நோக்கித் திரும்பியுள்ளது. தொழில்களை மத்தியாகக் கொண்ட கற்கை நெறிகள் பட்டப்படிப்பு மட்டத்தில் மட்டுமன்றி பட்டப்பின்படிப்பு மட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன. அறிவுச் சமூகம் (Knowledge Society) என்ற நவீன தொடர் குறித்த தொழிலுக்குரிய பயிற்சியைப் பெற்ற சமூகமாகவே கருதப்படுகின்றது. தொடர் கல்வி என்பது தொடர் தொழிலுக்குரிய கல்வியாக மாற்றப்பட்டு வருகின்றது. மாணவர் என்ற பழைய எண்ணக்கரு கைவிடப்பட்டு துணை வேண்டுனர் (Clients) என்ற புதிய எண்ணக்கரு முன்மொழியப்படுகின்றது. கற்றல் என்பது தனிநபர் ஒருவரின் நுகர்ச்சிச் செயற்பாடு என வலியுறுத்தப்படுகின்றது. கற்றல் சந்தை கற்கும் சமூகத்தின் குறியீடாக ஆக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் மயப்பட்ட கற்றலே யதார்த்தமான கற்றல் என்ற மாற்றத்துக்கு (Certificated Learning Becomes Real Learning) Cup67 (G60TITGB355i Lil' (B6i571g).
-17

Page 11
அறிவதற்குக் கற்றல், அறிவுக்குக் கற்றல், மனநிறைவுக்குக் கற்றல், என்பவை புறந்தள்ளப்படுகின்றன. கற்கும் அறிவின் ஆழம் முக்கியமல்ல சான்றிதளே முக்கியம் என்பது வலியுறுத்தப்படுகின்றது சான்றிதழ் பித்து (Certificate Mania) (3LD(36 Tiflá6(bá56öingl.
வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை மானிடப்பண்பு பாடங்கள் மற்றும் கலைப்பாடங்களைக் கற்றுப் பட்டம் பெற்றவர்கள் வேண்டப்படாதவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். உயர்கல்விக்கான கொள்கைத் திட்டங்களை உருவாக்கும் பொழுது தனியார் உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்தவர்களின் மதியுரை. களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.
உயர்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, தொழில் சார்கல்வி, வாண்மைக்கல்வி முதலியவை வயது வேறுபாடின்றி, சமூக அந்தஸ்து வேறுபாடின்றி அனைவருக்கும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் சமூகத்தின் தாழ்மட்டங்களில் உள்ளவர்கள் இந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி கற்று மேலுயர முடியும் என்று கூறப்படுவதிலே ஒரு பெரிய பெய்ம்மை உட்பொதிந்துள்ளது. உயர் பட்டங்கள், சான்றிதழ்கள் முதலியவற்றைப் பெற்றுக்கொள்வதற்குக் கல்விச் சந்தையிலே அதிக பணத்தைச் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் சான்றிதழ்களும் பட்டங்களும் பெறுதல் சாமானியர்களுக்கு நடைமுறையில் எட்டாதவையாகவே அமைகின்றன. பண வசதியுடையோரே இந்தப் பன்முகப்பட்ட அனுகூலங்களை அனுபவிக்கும் வளமான நிலையில் உள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.
உற்பத்தி நிறுவனங்களின் வேகத்துக்குக் கல்வி நிறுவனங்கள் ஈடுகொடுக்க முடியாத நிலையில் உள்ளன என்ற குற்றச்சாட்டும் நிறுவனங்களால் முன்வைக்கப்படுகின்றது. இதன் பொருட்டு கற்பிப்போரின் வினைத்திறன்களை அதிகரிப்பதற்கான திட்டம், (Staff development Programme) பட்டப்படிப்பின் பொருத்தப்பாட்டையும் தரத்தையும் முன்னேற்றுவதற்கான திட்டம், தர உறுதிப்பாட்டுத் திட்டங்கள் முதலிய பல திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் கூட்டுமொத்தமான பெளதிக வளங்கள், மனிதவளம், வருமான பங்கிட்டில் சமத்துவம், சுரண்டல் அற்ற சமூகத்தின் உருவாக்கம், யாதார்த்த நிலையில் தேசிய இனங்களின் முழுமையான பங்குபற்றல், முதலியவற்றைப் பரந்த நோக்கில், அணுகாது கம்பனிகளுக்கு

உடனடியான அனுகூலங்களை ஏற்படுத்தக் கூடிய நோக்கங்களே உயர்கல்வியில் இலங்கையிலே அமுலாக்கம் செய்யப்படுகின்றன.
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கலைத்திட்டங்களில் மேலைத்தேய கலாசாரத்தின் செல்வாக்கு படிப்படியாக ஊட்டப்பட்டுவருகின்றது. உதாரணமாக பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொடர்தொழில் ஆற்றுப்படுத்தற் சேவையில் (Career Guidance) பெரிய கம்பனிகளில் நுழைவு உன்னதங்கள் பற்றி விளக்கப்படுகின்றதேயன்றி, இலங்கையின் மூலவளங்களின் பயன்பாட்டை முன்னெடுக்கும் தொழில்கள் பற்றியும், சமூக நன்மைகளை முன்னெடுக்கும் தொழில்கள் பற்றியும் விளக்குதல் வறிதாகவுள்ளது. ஆங்கில அறிவுக்கும் தகவல் தொழில்நுட்ப அறிவுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், இலங்கையின் வளம்சார் தொழில்களுக்கும் சமூக நீதிக்குமுள்ள தொடர்புகளுக்கு வழங்கப்படுவதில்லை.
பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்மியம் (Counselling) முற்றுமுழுதாக மேலைத்தேய புலக்காட்சியினூடாக வளர்க்கப்படும் நிலையே காணப்படுகின்றது. தியானமும் ஆசனங்களும் கூட மேலைத்தேய நூல்களினுடான புலக்காட்சி வழியாகவே முன்னெடுக்கப்படுகின்றன. சீர்மியமேலைத் தேய அணுகுமுறைகளின் ஊடுருவல் ஏற்கனவே ஆய்வாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (Intervention, (2005) Wil3 No -2) புதிய சிந்தனைகளை, புத்தாக்கம் தரும் கருத்துக்களை, முன்வைக்கும் ஒருபட்டதாரி மாணவன் சிறப்புச் சித்தியினை (Class) பெறாது வெளிவீசப்படுவதற்குரிய சந்தர்ப்பங்களே அதிகமாகக் காணப்படுகின்றன. அதே வேளை மேலதிக தேடல்களை மேற்கொள்ளாது வழங்கிய பாடக் குறிப்புக்களை அப்படியே மீள ஒப்புவிக்கும் திறன் கொண்டவர்கள் சிறப்புச் சித்திகளை ஈட்டி அவர்களே அறிவு வழங்கலை முன்னெடுக்கும் வாரிசுகளாக நியமிக்கப்படுகின்றனர். இந்த இறுகிய கட்டமைப்பை பல்தேசிய கம்பனிகளும் உள்ளுர்க் கம்பனிகளும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கும் பொழுது அவர்கள் பரீட்சைகளிலே உயர்ந்த புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் நிரந்தர நியமனங்களை வழங்காது ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வேலையில் அமர்த்தப்படுகின்றனர். தொழிற்பாடுகளில் வினைத்திறன் காட்டப்படாதவிடத்து அவர்களின் சான்றிதழினைக் கருத்திற்
-19

Page 12
கொள்ளாது வெளியேற்றப்படுகின்றனர். இது "அமர்த்துதலும் துரத்துதலும்" என்ற தொடரால் கோளமயப் பொருளாதாரத்திலே கூறப்படுகின்றது.
கோளமயமாக்கலின் நேர்விளைவுகளாக இன்று இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளும் இணைப்பு நிறுவனங்களும் திறக்கப்படுகின்றன. இவற்றுக்குச் சமாந்தரமாக சர்வதேசப் பாடசாலைகளைத் திறத்தலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கோளமயமாக்கற் செயற்பாடுகள் 1978 ஆம் ஆண்டில் இலங்கையில் உருவாக்கப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கைகளுடன் விரிவாக்கம் பெறலாயின. இவற்றோடு இணைந்த வகையில் ஆங்கிலமொழி மூலக்கல்வி காலனித்துவ ஆட்சிக்கால நிலையில் பெறப்பட்ட அந்தஸ்தை மீண்டும் ஈட்டத் தொடங்கியுள்ளது.
சர்வதேசப் பாடசாலைகளிலே கற்பதும், சர்வதேச இணைப்புப் பல்கலைக்கழகங்களிலே கற்பதும் சமூக உயர் அந்தஸ்தின் சின்னங்களாக மாறியுள்ளன. சர்வதேசப் பாடசாலைகள் இலண்டன் பரீட்சைகளுக்குரிய கலைத் திட்டத்தை உள்ளடக்கிச் செயற்படுவதனால், இந்தநாடு பற்றிய பரவலான அறிவைப் பெற முடியாத அன்னியமாதல் நிலைக்கு மாணவர்கள் மாற்றப்படுகின்றார்கள். இம்மாணவர்களே எதிர்காலத்தில் இலங்கையின் தலைமைத்துவப் பொறுப்புக்களைக் கூடுதலாகப் பெறும் வாய்ப்பைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சர்தேசப் பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளின் செல்வாக்கு இலங்கையின் தேசிய கலைத்திட்டத்திலும் ஊடுருவத் தொடங்கியுள்ளது. வசதிமிக்க தேசிய பாடசாலைகள் ஏற்கனவே ஆங்கில மொழி ஊடகக் கற்கை நெறிகளை ஆரம்பித்துவிட்டன. ஆங்கிலமொழி மூலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளிலே பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பும் மேட்டுக் குடியினருக்கே அனுகூலமாகவுள்ளது. அவர்களே ஆங்கில மொழிமூலத் தூண்டல்களைத் தமது இல்லங்களிலே வழங்கக்கூடிய நிலையில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செயற்பாடுகள் தமிழ், சிங்களம், முதலிய தாய்மொழிகளிலே கற்கும் மாணவர்களிடத்துத் தாழ்வுச்சிக்கலை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தாய்மொழி வழிக்கல்வி கற்றோரின் உத்தியோக வாய்ப்புக்கள் ஒடுக்கப்படுதல் அவர்களிடத்து உளவியல் தாக்கங்களை மேலும்
-20

அதிகரிக்கச் செய்துவருகின்றது. தாய்மொழி கல்வியை விருத்தி செய்த இலங்கையின் பல்கலைக்கழகங்கள் இப்பொழுது ஆங்கில மொழி வழிக்கல்விக்குப் படிப்படியாக மாறத் தொடங்கியுள்ளன. எமது நாட்டில் தாய் மொழிவழிக் கல்வியை அமுல் நடத்தியமையில் விடப்பட்ட பாரியதவறுகளும் இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது. சிங்களம் தமிழ் முதலாம் தாய்மொழிவழிக் கல்வியை இலங்கையில் வளர்த்தெடுத்தவேளை இரண்டாம் மொழியாகிய ஆங்கிலத்தை வினைத்திறனுடன் வளர்த்தெடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையினால் ஆங்கில மொழியறிவு வீழ்ச்சியடையத் தொடங்கியதுடன், ஆங்கில மொழி வாயிலாகப் பெறப்படத்தக்க அறிவுச் சுரங்கத்தை அணுக முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். இதனால் அவர்கள் "காலாவதியானவர்கள்" என்ற நிலைக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் ஜப்பானிய அனுபவங்களும், சீனாவின் அனுபவங்களும் இணைத்து நோக்கப்படத்தக்கவை. கோளமயமாக்கல் ஜப்பானைப் பலகோணங்களிலே தாக்கி வருகின்றது. ஜப்பானிய dfgypabgb60pgb g,UTLilibgb g, Lil6).JT6IIiab6it (Masako Kamija, (1994) Education In Japan, Tokyo. Gyosei) கோளமயமாக்கலால் "உருகும்நிலையில்" உள்ள ஒரு சமூகமாக (Melting Society) மாறியுள்ளது என்று குறிப்பிடுகின்றனர். வாழ்க்கை, உண்மை, ஒருவரைப் பற்றிய ஐதிகம், நேரப் பெறுமானம், பால்நிலைவேறுபாடு முதலிய நிலைகளில் உருகும் சமூகமாக ஜப்பான் மாறியுள்ளது. அமெரிக்க ஐரோப்பிய அலைகள் அங்குவேகமாக வீசினாலும் தாய்மொழிக் கல்வியை அனைத்துமட்டங்களிலும் வீரியத்துடன் அங்கு வளர்த்து வருகின்றனர். உலகில் வளர்ச்சிபெற்றுவரும் எந்தத்துறையைச் சார்ந்த அறிவும் உடனடியாக ஜப்பானிய மொழியிலே வழங்கப்படுகின்றது. தாய்மொழிக் கல்வி ஆங்கிலத்துக்கு இணையான உயர்ந்த தரத்துடன் அங்கு வளர்க்கப்படுகின்றது.
வளர்ந்து வரும் உலகமயமாக் கலை சீனா எவ்வாறு கல்வி நிலையில் எதிர்கொள்ளுகின்றது என்பதை அடுத்து நோக்கலாம். பொருளாதார நிலையிலும் அரசியல் நிலையிலும் நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாட்டிலே கல்வியின் முக்கியத்துவம் சீனாவில் மீள வலியுறுத்தப்படுகின்றது. பொருளாதார நவீனமயப்பாட்டுக்குரிய திறன்களைக் கல்வியால் வளப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள்
-21

Page 13
முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள உழைப்பு வலுவை விஞ்ஞான நிலையிலும் தொழில்நுட்ப நிலையிலும், வாண்மைநிலையிலும் மேம்படுத்துவதற்குரிய பொறுப்பு கல்வி நிறுவனங்களிடம் விடப்பட்டுள்ளது.
சீன கமியூனிசக் கட்சியினால் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள சோசலிச தேசிய அடையாளத்தை பிரசைகளிடத்து வளர்த்தெடுக்க வேண்டிய பணியில் கல்வியின் செயற்பணி வலியுறுத்தப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டின் மக்கள் தேசிய காங்கிரஸ் ஐம்பெரும் பொருட்களிலே காதலையும் (Five Loves) ஐம்பெரும் தத்துவங்களிலே பற்றுதியை வளர்த்தலையும் ஐந்து பெறுமானங்களை நிராகரித்தலையும் சுட்டிக் காட்டியுள்ளது. ஐந்து காதல்களாக தாய்நாட்டுப் பற்று, மக்கள்பற்று, உழைப்புப் பற்று, விஞ்ஞானப் பற்று, சோசலிசப் பற்று ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. ஐம்பெருந்தத்துவங்களாக நாட்டுப்பற்று, கூட்டுறவு, சர்வதேசியம், கமியுனிசம், இயங்கியலும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் குறிப்பிடப்பட்டுள்ளன. நிராகரிக்க வேண்டிய பெறுமானங்களாக முதலாளித்துவம், நிலமானியம், மற்றும் அவற்றிலிருந்து தோற்றம் பெற்ற பிற்போக்கான கருத்துக்கள் முதலியவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. படித்தவர்கள் தொழிசார் திறன்கள் பெற்றவர்களாயும் அரசியல் நிலையில் நம்பகத்தன்மை கொண்டவர்களாயும் இருத்தல் வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி தொடர்பான பின்வரும் ஆறு பிரதான பண்புகள் வலியுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
(1) அடிப்படைக் கல்வியைப் பிரபலியப்படுத்தல். (2) கல்வியைத் தொழில்மயப்படுத்தல். (3) கல்விக்குரிய நிதிவழங்கலைப் பன்முகப்படுத்தல் (4) வளங்களை உருவாக்கும் முரண்பாடுகளைச் செறிவுடைய
தாக்குதல்.
(5) தனியார் கல்வியை மீள்முகிழ்ப்புக்கு உள்ளாக்குதல். (6) கருத்தியற் கல்வியையும் அரசியற் கல்வியையும் திரட்டுதல்.
சிக்கலாக நிகழும் சமூக நிலை மாற்றத்திலும் தேசிய அடையாளங்காணலிலும் மேற்கூறிய ஆறுபண்புகளும் முக்கியமானவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. மார்க்சிய, லெனினிச, மற்றும் சீன சோசலிசம்
-22

ஆகியவை கல்வியை ஆற்றுப்படுத்தும் கோட்பாடுகளாகக் கொள்ளப்UGBa56ip607. (National Peoples Congress, 1995) (3a5ft6IIDLLLDITabab60)6u ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் எதிர்கொண்ட விதம், காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த இலங்கை போன்ற நாடுகளுக்குப் பயனுள்ள அனுபவங்களாக இருக்கின்றன.
உலகமயமாக்கலின் ஊடுருவல் இலங்கையின் பாலர்கல்வித்திட்டங்களில் இருந்து பல்கலைக்கழகப் பட்டமேற்படிப்புவரை பல நிலைகளில் வியாபித்துப் பரந்து வருகின்றது. பாலர் பாடசாலைகளில் தாய் மொழி வாயிலான இசையும் அசைவும் தொழிற்பாட்டுக்குப் பதிலாக ஆங்கில மொழிமூல பாலர் ஒத்திசைப் பாடலைக் கற்பிப்பதும், மேலைத்தேய ஆடைநியமங்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிந்து ஆடுதலும் மேலான செயற்பாடுகளாக முன்னெடுக்கப்படுகின்றன. தேசிய அடையாளங்களும் பண்பாட்டு அடையாளங்களும் படிப்படியாகக் கைவிடப்படுகின்றன. இவற்றின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் இடைநிலை மற்றும் உயர்நிலை மட்டங்களுக்கு நீண்டு செல்கின்றன. தேசிய அடையாளங்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அறநெறிப் பாடசாலைகளுக்குச் செல்ல கவர்ச்சியற்ற நிலையென்ற தோற்றப்பாடு மேலெழுந்துள்ளது. அவ்வாறே தேசிய மொழி மூலக்கற்றல் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கவர்ச்சிகுன்றிய செயற்பாடாக இருப்பதுடன் கற்கும் மாணவரிடத்து உளவியல் நிலைப்பட்ட மனப்பாதிப்புக்களையும் ஏற்படுத்தி விடுகின்றது.
கோளமயமாக்கலின் உளவியல் நெருக்கிடுகள் தனித்து ஆராயத்தக்கவை. தொழில்நுட்ப ஆற்றலில் மேலெழுந்த நாட்டினர் தொடர்பான உயர்நிலை (Superiority) மனோபாவம் வளர்ச்சியடைந்து வருகின்றது. தொழில்நுட்ப ஆற்றலில் மேலுயர்ந்ததோரே மேலும் முன்னேறிச் செல்வதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமாகவும் பரந்த அளவிலும் காணப்படுவதனால் உயர்நிலை மனோபாவம் தொடர்ந்து மீள வலியுறுத்தப்படும் வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன.
தொழில்நுட்ப அறிவிலும், பிரயோகத்திலும் பின்தங்கிய நாடுகள் பெருநிலைப்போட்டியை எதிர்கொள்ள முடியாதநிலை தோன்றியுள்ளது. அதிநுட்பம் வாய்ந்த தொழில்நுட்ப அறிவு ஏகபோக உரிமையாக இருப்பதனால் மூன்றாம் உலகநாட்டு மக்களிடத்து தாழ்வு உணர்ச்சி. யையும் தாழ்வுச் சிக்கலையும் ஏற்படுத்தி வருகின்றது.

Page 14
இது ஒரு வகையிலே ஒடுக்கு முறைக்கு உட்பட்ட கறுப்பு இனமக்களிடத்திலே தோன்றிய தாழ்வுச்சிக்கலுடன் ஒப்பிட்டு ஆராயத்தக்கது. கறுப்பின மக்களின் பொருளாதாரம் பின்தங்கிய நிலையிலே காணப்பட்டமை, தொழில்நுட்ப அறிவிலே அவர்கள் வெகுவாகப் பின்தங்கியிருந்தமை போன்ற காரணிகளுடன், ஒப்பு நோக்கி ஆராயும் பொழுது சுரண்டலின் பரிமாணங்களை மேலும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
உலக சந்தைக்கு விடப்படும் பொருள்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு நடிகர்கள் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் முதலியோர் தெரிவு செய்யப்படுவதுடன், குறித்த பல்தேசிய நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு மட்டுமே பங்குபற்றல் வேண்டும் என்ற தனியுரிமைப் பணிப்புக்கும் உள்ளாக்கப்படுகின்றார்கள். இவ்வகையான வீரத்துவம் (Heroism) பெரும் விஞ்ஞானிகளுக்கோ கண்டுபிடிப்பாளர். களுக்கோ வழங்கப்படுவதில்லை. இவற்றினால் பாடசாலை மாணவர்களின் சிந்தனையும், காட்டுருவாக்கமும் (Modelling) அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் நோக்கித் திருப்பப்படுவதற்குரிய வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன.
அறிகை இடர்ப்பாடு, நடத்தை இடர்ப்பாடு முதலாம் உளவியல் நிலைத் தாக்கங்களைப் பாடசாலை மாணவர்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். உள்ளுர் உணவு வகைகள், உடை அணியும் முறைமை தொழில்நுட்பம் முதலியவை தாழ்ந்தவை என்ற பண்பாட்டுத் தாழ்வு மனப்பாங்கும். (Cultural Inferiority) மாணவரிடத்தே வளர்ந்து ஓங்கும் சாத்தியக் கூறுகள் அதிகரித்து வருகின்றன. தமது பண்பாடு தொடர்பான தாழ்ந்த மனப் படிமங்கள் மாணவர்களிடத்தே வளர்ச்சியடைகின்றன. தம்மிடம் ஏதோ குறைபாடு உள்ளது என்ற தாக்கங்கள் மேலெழுகின்றன. இதன் உச்சநிலை உளவியல் வளர்ச்சியாக தனிநபர் diTiffibg5 g5/66thu Jisi (Personal Tragedy) 6Til IGB356.jpg5!.
உலக நுகர்ச்சிச் சந்தையில் மென்பானங்கள், ஆடைஅணிகலன்கள், அழகு சாதனப் பொருட்கள், தனிநபருக்குரிய போக்குவரத்து ஊர்திகள், வீட்டுப்பாவனைச் சாதனங்கள் பொழுது போக்குச் சாதனங்கள், முதலிய பொருட்களே மேலோங்கிய நிலையிற் காணப்படுகின்றன இவை உற்பத்தியை நோக்கித்திசை திருப்பாத செயலூக்கம் குன்றிய நுகர்ச்சியாளராக (Passive Consumers) மாற்றிவிடுதல் குறிப்பிடத்தக்கது. இதனை வேறு விதமாகக் கூறுவதானால், நுகர்வோர் 'ஊனமுற்ற' நுகர்ச்சியாளராகவே மாற்றப்படுகின்றார்கள்.
-24

கோளமயமாக்கலின் இன்னொரு செயற்பாடு, பாரம்பரியமான பொருட்களைக் கொள்வனவு செய்யாது, சந்தைக்கு விடப்படும் புதிய பொருட்களை வாங்குகின்ற "புதிய நுகர்ச்சியாளரை" உருவாக்குதலாகும். பெருந்தொகைப் பணத்தை உள்ளிடாகக் கொண்ட நவீன தொடர்பாடல் உபாயங்களைப் பயன்படுத்தி இந்தப் புதிய நுகர்ச்சியாளர் உருவாக்கப்படுகின்றார்கள். நுகர்ச்சியாளர் உருவாதல் இல்லை - உருவாக்கப்படுதல் என்ற நிலைக்கு மாற்றப்படுகின்றார்கள். நுகர்ச்சி என்பது மனிதரின் தேவைகளுக்கும் முன்னேற்றத்துக்கும் என்ற நிலை மாற்றப்பட்டு "நுகர்ச்சி நுகர்ச்சிக்காக" என்ற ஒடுங்கிய பாதையினுரடாகச் செல்கின்ற அவலமான நிலை ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
நுகர்ச்சியாளர் "பகுத்தறிவுடன் தொழிற்படுகின்றனர்" என்பது தலைகீழாக மாற்றப்பட்டு பதகளிப்புடன் (Anxiety) தொழிற்படும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பதகளிப்புக்கு உள்ளான நுகர்ச்சியாளரை ஒன்றிணைப்பதற்காக அதி உயர் சந்தைகள், நுகர்வோர் நகரங்கள், முதலிய விற்பனை நிறுவன அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான நவீன விற்பனை நிறுவனங்களுக்குள் செல்வோரின் உளவியல் பதகளிப்பு மேலும் தூண்டப்படும் நிலையே காணப்படுகின்றது.
பாடசாலைகளுக்குக் கற்கவரும் மாணவரும் மேற்கூறிய நுகர்ச்சிப் பின்னணியில் உருவாக்கம் பெற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். ஆசிரியர் வழங்குவதை வாங்கும் நிலையில் இருக்கும் செயலூக்கம் குன்றிய (Passive) நிலையில் அவர்களது இயல்புகள் அமைந்திருத்தல் வியப்பானதன்று. அறிவை நுகர்ச்சிப் பொருளாகக் கருதும் மாணவர்கள், அதன் தெறித்தல் நிலை பலத்தையும், பிரயோகத்தையும், விளைவை ஏற்படுத்தும் பரிமாணங்களையும் அறியத் தவறிவிடுகின்றனர். இது ஆற்றலின் வறுமைக்கு இட்டுச் செல்கின்றது.
அறிவை ஏற்றத்தாழ்வான முறையிலே கையளிப்பதற்கு கோளமயமாக்கல் வழியமைக்கின்றது. விற்பனைப்பண்டமாக கல்வி மாற்றப்பட்டுள்ளமை மேற்கூறிய செயற்பாட்டைத் துரிதப்படுத்துகின்றது. இந்நிலையில் பொருளாதார இருப்பு, சமூக அந்தஸ்து, அரசியல்வலு, கல்வி வழங்கல் ஆகியவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகள் மேலும் வலுவடைகின்றன. இந்தப் பரிமாணங்களுக்கு ஏற்றவாறு ஒருவரது வாழ்க்கைக் கோலங்களும் உருவாக்கப்படுகின்றன.

Page 15
கோளமயமாக்கலின் கல்வி சார்ந்த நன்மைகளை சிலர் சிலாகித்துப் பேசுதல் உண்டு. கல்விச் செயற்பாட்டிலும், அணுகுமுறைகளிலும் காணப்படும் சோம்பலை உருவாக்கும் நடவடிக்கைகள் உடைத்தெறியப்படுகின்றது. தரமேம்பாட்டுக்குக் கூடிய அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. கற்றல் கற்பித்தலிலே வினைத்திறன் முன்னெடுக்கப்படுகின்றது. புதிய கற்பித்தற் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புதிய மதிப்பீட்டு உபாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இணையத்தளங்கள் வாயிலாக புதிய அறிவு உடனுக்குடன் கையளிக்கப்படுகின்றது. உலகம் என்ற பெரும்பொருள் "கோளமயக் கிராமம்" என்றவாறு சுருக்கப்படுகின்றது. மருத்துவத்துறையின் புதிய கண்டுபிடிப்புக்கள் மனிதவாழ்க்கை நீட்சியை முன்னெடுக்கின்றன. தொடர்பாடலின் வளர்ச்சி வீட்டின் உட்புற அறைகளுக்குள் உலகைக் கொண்டுவந்து விடுகின்றது. தர உயர்ச்சி கொண்ட சான்றிதழ்களை உருவாக்கும் நடவடிக்கைகளைக் கல்விநிலையங்கள் முன்னெடுக்கின்றன. படித்தவர்கள் தமது நாட்டின் ஆள்புல எல்லைகளைக் கடந்து உலகத் தொழிற் சந்தைக்குள் நுழைய முடியும், என்றவாறு விதந்தும் புகழ்ந்தும் பேசலாம். இந்த அனுகூலங்களை சமூகத்தின் மேட்டுக்குடியினரே அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் அவலத்தை அவர்கள் சுட்டிக்காட்டுதல் இல்லை.
கல்வி வசதிகளில் மட்டுமல்ல, மருத்துவ வசதிகளையும் நோக்கும் பொழுது, சமூகத்தின் மேட்டுக்குடியினரே நவீன மருத்துவ வசதிகளையும், புதிய மருந்து ஆக்கங்களையும் நுகரக்கூடியவர்களாக இருக்கின்றனர். பல்தேசியக் கம்பனிகளின் கட்டுப்பாட்டிற் செயற்படும் மருந்து உற்பத்தி நிறுவனங்களும், நவீன மருத்துவ நிலையங்களும், மிகை இலாப மீட்டும் "தொழிற்சாலைகளாக" இயங்குகின்றன.
தரமான கல்வி சாமானியர்களுக்கு எட்டாத பொருளாக இருத்தல் போன்று தரச் சிறப்புமிக்க மருத்துவ வசதியும் அவர்களுக்கு எட்டாதவையாக இருத்தல் தெளிவாகப் புலப்படும் யதார்த்தமாகும். கல்வித் துறையிலும் மருத்துவத்துறையிலும் சமூக ஏற்றத் தாழ்வுகளை கோளமயமாக்கல் தீவிரப்படுத்தி வருகின்றது. கோளமயமாக்கலின் உரைத்துப் பார்க்க வேண்டிய உட்பொருளைக் நடப்பியற் கல்வி வெளிப்படுத்த வேண்டிய தேவை மேலெழுகின்றது.

பல்வேறு நிலைகளிலும் பல்வேறு தளங்களிலும், கோளமயமாக்கல் முரண்பாடுகளை ஏற்படத்திய வண்ணமுள்ளது. இந்த முரண்பாடுகளைத் தெளிவாக உய்த்து உணர்வதற்கான ஏற்பாடுகளை வளம் பெற வைத்தல் கல்வித் திட்டத்தின் முக்கிய பணியாக மாறுகின்றது. சுரண்டலையும் ஒடுக் குமுறைகளையும் அணுகாத கல்விச் செயற்பாடுகள் ஒரு தலைப்பட்சமானதாகவே அமையும். அறிவும் உண்மையும் பற்றிய அதிகார அணியைப் பெரும் தொடர்பாடற் சாதனங்கள் இன்று உருவாக்கி வருகின்றன. அவற்றால் உருவாக்கப்படும் தனிமனித வாத ஓங்கலில் இருந்து விடுபடுவதற்குரிய கருத்துவினைப்பாடு (Discovrse) சமகாலத்தில் உடனடியாக வேண்டப்படுகின்றது.
அறிவுக் கைத் தொழிலின் சமகால வளர்ச்சியை விளங்கிக் - கொள்ளல் புதிய கல்வித்திட்டங்களையும், கலைத்திட்டங்களையும் உருவாக்கிக் கொள்வதற்குரிய தேவையாகவுள்ளது. இலங்கையின் பரந்துபட்ட மனிதவளம், மற்றும் இயற்கைவளம், பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டுக்கோலங்கள், வளமான தேசிய மொழிகள் என்ற அனைத்தையும் சமகால உலக விசைகளையும் கருத்திலே கொண்டு செறிவும் செழுமையும் மிக்க கல்வித்திட்டத்தை அனைத்து உருவாக்குதல் வேண்டும்.
உசாத்துணை நூல்கள்
1. Cole, M. (ed) (2000) Education, Quality and Human Rights, London:
Routledge Falmer,
2. Fox, N.F. (2003) The new sartre, exploations in Post Modernism, Lon
don, Continum
Gidders (1998) The Third way, Pility Press: Cambridge
Jarvis, P (2001) The age of learning, London: Kogan Page.
Kamja, M.(1994) Education in Japan Tokyo: Gyosei.
Love lock, J (1988) The ages of Gasia, Boston M.A: Ladisfame Press.
Lyotard, (1984) The postmodern condition, Manchester University Press: Manchester,
-27

Page 16
பின் இணைப்பு
கல்வி -வர்க்க சமுதாயத்தில் அதன் அடிப்படையும் நோக்கமும்
I
சரி பிழைகளைச் செய்வதற்கு தமக்கு அதிகாரம் உண்டு என ஒவ்வொருவரும் கருதுகின்ற விடயம் கல்வியாகும். அது சட்டமாக இருந்தாலென்ன, மருத்துவமாக இருந்தாலென்ன, பொறியியலாக இருந்தாலென்ன அல்லது கலையாக இருந்தாலென்ன அங்கு ஒரு கருத்தை வெளியிடுவதற்கு ஒரே விதமான உற்சாகமும் உறுதியும் இருப்பதில்லை. அவைகள் நிபுணர்களால் மட்டும் கருத்துக்கள் சொல்லப்படும் தலைப்புகளாக கருதப்படுகின்றன. ஆனால் கல்வித்துறையைப் பெறுத்தவரை எவராயினும் தமது கருத்தை வெளியிடக்கூடிய ஒரு துறையாகக் கருதப்படுகின்றது.
இது ஏனெனில் கல்வி சிறு பிள்ளைகளுடன் சம்பந்தப்படுவதாலும் அத்துடன், எந்த வயது வந்தவனும் சிறு பிள்ளைகளுக்கு எது நல்லது என்பதைச் சொல்வதற்கு ஏற்ற முதிர்ச்சி உள்ளவன்தான் என்று கருதுவதாலுமாக இருக்கலாம். இன்று கல்வி சர்வ வியாபகமானதாகக் கருதப்படுகிறது என்ற உண்மையும் சிலவேளைகளில் வேறு காரணமாகவும் இருக்கலாம். ஆகவே கல்வி சம்பந்தமாகச் சரி பிழைகளைக் கூறவதற்கு எவராயினும் போதியளவு கற்றுள்ளார்கள்.
ஆனால் பிரச்சினை என்னவென்றால், கருதப்படுவதைப்போன்று கல்வி சர்வ வியாபகமானதா? இல்லையா? என்பதே. கூடுதலாக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கல்வி சர்வவியாபகமானதாக மட்டுமல்ல, கட்டாயமானதாகவும் கருதப்படுகின்றது. பரந்த அளவிற்கும் ஒரு உயர்ந்த மட்டத்திற்கும் கல்வியை வலியுறுத்தக்கூடிய நாடு என்று கருதப்படும் இலங்கையை எடுத்துக்கொண்டால் இந்த
–28

நாட்டின் எல்லாப் பிள்ளைகளுமே பாடசாலைக்குப் போகிறார்களா? இல்லை. அவர்கள் அப்படி செய்திருந்தாலும்கூட அவர்கள் எல்லோருமே சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட கல்வியின் அடிப்படை, ஆகக் குறைந்த மட்டத்தைப் பூர்த்தி செய்கிறார்களா? இல்லை.
இன்று இந்த இருபதாம் நூற்றாண்டில் சர்வ வியாபகமான, கட்டாயமான கல்வித்திட்டத்தின் கீழ் இதுதான் நிலையென்றால் க்டந்த காலத்தின் நிலையென்ன? அன்று நிலமை மிகவும் மோசமானதாக, ஜனத்தொகையில் மிகச் சிறுபான்மையினரின் வரம்புக்குள் மட்டுந்தான் கல்வி இருந்தது. பாடசாலைக்கு அனுப்புவதற்கு, வசதி படைத்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு, அல்லது சமுதாயத்தில் தமது வேலைகளைச் செய்வதற்காகப் படிப்பிக்கப்பட வேண்டிய சமூகத்தின் பிரிவுகளைச் சேர்ந்த சாதியினருக்கு. அல்லது பாரம்பரியமாகக் கற்றுத் தந்தவர்களின் பிள்ளைகளுக்கு மட்டுந்தான் கல்வியிருந்தது.
ஆகவே வர்க்கங்கள் அல்லது சாதிகள் என்ற சமூகப் பிரிவினை. கள் தான் கல்வி யாருக்கு? என்பதை நிர்ணயித்தன. அன்று கல்வி கற்க வசதி படைத்தவர்கள் முக்கியமாக ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் அது நிலப்பிரபுக்களுக்காக இருந்தது. முதலாளித்துவ சமூக அமைப்பில் நிலப்பிரபுக்களை ஆதரவாகக் கொண்ட முதலாளிகளுக்காக இருந்தது. இதுதான் மேற்கத்திய நாடுகளின் உண்மையான நிலைமை. ஆனால் கிழக்கில் சமுதாயத் தரங்கள் ஒரு வித்தியாசமான நிலையிலிருந்தது. யப்பானிலும், சீனாவிலும் ஒரு தளர்ந்த பாரம்பரிய அடிப்படையில் கல்வி சமூகத்தின் ஒரு பிரிவுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. அதே வேளையில் இந்தியாவில் பிறப்பால் நிர்ணயிக்கப்படுகின்ற இறுக்கமான சாதி அமைப்பில் சமூகத்தில் அவரவர்களின் கடமைகளுக்கேற்ப கல்வி நிர்ணயிக்கப்பட்டது.
இந்த அடிப்படையில் படிப்பு வாசனையற்ற, கல்வியே கற்காத அல்லது மிகச் சிறிதளவு படித்திருக்கக்கூடியதான பரந்த வெகுஜனங்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் கொண்ட, அவர்களிலும் பார்க்கத் தாம் மேலானவர்கள் என்று கருதுகின்ற ஒரு படித்த பிரமுகர்கள் கூட்டம் இயற்கையாகவே தோன்றியது. உதாரணத்திற்கு பிரித்தானியாவில் பொதுப் பாடசாலைகள் என்று கூறப்படுகின்ற ஆனால் உண்மையில் தனியார் பாடசாலைகளான எற்றன், ஹரோ போன்றவைகள் ஆளும் வர்க்கங்களின் பிள்ளைகளுக்கும், வசதி
-29

Page 17
படைத்த வர்க்கங்களின் பிள்ளைகளுக்கும் மட்டுந்தான் கல்வியளிக்கின்றன. இவர்களில் சிலர் கல்வியின் உயர்ந்த மட்டத்தை அடைவதற்காக ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் ஆகிய சர்வகலாசாலைகளுக்குச் சென்றனர். இந்தியாவில் வரம்புக்குட்பட்ட குருகுல அமைப்பில் படித்த பிரமுகர்கள் பிராமணர்களாவர். அதேவேளையில் சீனாவில் "மண்டரீன்ஸ்" எனப்படுபவர்கள் படித்த பிரமுகர்களாக விளங்கினர்.
இன்று விவேகமான வாழ்வுக்கு ஒவ்வொருவருக்கும் கல்வி இவ்வளவு முக்கியமானதாகக் கருதப்படும் அதே வேளையில், கடந்த காலத்தில் இந்த வகையில் ஏன் கட்டுப்படுத்தப்பட்டது? மனிதனின் வாழ்வுக்கு இன்றியமையாத வெறும் ஒரு ஆடம்பரப் பொருளாக, ஒரு பெருமை தரும் அணிகலனாக இது கருதப்பட்டதா?
இல்லை, இது அதிகாரத்தின் ஒரு கருவி - அரசியல், பொருளாதார, இராணுவ, சமூக அதிகாரத்தின் கருவி. உலகரீதியான வாக்குரிமை, உலகரீதியான கல்வி, ஜனநாயகம், மக்களின் மக்களால் மக்களுக்காக நடத்தப்படுகின்ற அரசாங்கம் என்று சொல்லப்படுபவைகள் இருந்த போதும் கூட, இன்றும் இன்னமும் அது அதிகார வர்க்கத்தின் ஒரு கருவியாகும்.
இது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அல்லது வர்க்கங்களைக் கீழ் நிலையில் வைத்திருப்பதற்கு ஆளும் வர்க்கத்தால் பாவிக்கப்பட்ட, பாவிக்கப்படுகின்ற ஒரு கருவியாகும். உழைக்கும் வெகுஜனங்களை அடக்கிச் சுரண்டப்படுவதற்கான சட்டங்களை இயற்றியவர்களும், பொது விவகாரங்களை விவாதித்தவர்களும், சபைகளில் கூடியவர்களும் இந்தப் படித்தவர்களே. இந்தப் படித்தவர்கள் தான் ஆளுநர்கள் என்ற தோரணையில் சட்டத்தை அமுல்படுத்தியவர்கள். சுரண்டப்படுபவர்களால் சுரண்டல் அமைப்பு முறைக்கு எதிராக எங்காவது பயமுறுத்தல்கள் விடுக் கப்பட்ட போதெல்லாம், தெய்வ உதவி கோரப்பட்டது. கடவுளுடன் கூட யார் தொடர்பு கொள்ளக்கூடியவர்களாயிருந்தார்கள்? படிப்பு வாசனையற்றவர்களோ, அடிமைகளோ, விவசாயிகளோ, அல்லது அரைகுறைப் படிப்பாளிகளோ அல்ல. வேதங்களை ஒதக்கூடிய, அதன் புனிதமான பொருளைக் கூறக்கூடிய, மந்திரங்களைச் சொல்லக்கூடிய படித்தவர்கள் மட்டுமே கடவுளுடன் தொடர்பு கொண்டார்கள். அது மட்டுமல்ல, தேவைப்பட்டால் பிசாசுகளையும் கூப்பிடக் கூடியவர்களாகவும் இருந்தனர்.

"ஸ்கூல்" என்ற வார்த்தையின் மூலத்திலிருந்தே வர்க்க அதிகாரத்தின் கருவியாகக் கல்வி இருந்து வந்துள்ளது என்பது காட்டப்படுகின்றது. ஒய்வு என்று பொருள்படுகின்ற "ஸ்கொலா" என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து இந்த வார்த்தை தோன்றியது. ஒய்வு நேரத்தைக் கொண்டிருக்கக்கூடிய உயர் வர்க்கத் தட்டைச் சேர்ந்த பிள்ளைகளுக்கே கல்வி இருந்துள்ளது என்பது வெளிப்படையான முடிவாகும். தனது வேலைகள் சகலவற்றையும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அல்லது வர்க்கங்களைக் கொண்டு செய்வித்த, செய்வதற்கு தனக்கென ஒரு வேலையுமே இல்லாத சொத்துடைமை வர்க்கத்தை தவிர வேறு யாருக்கு ஒய்வு நேரம் இருந்தது? சொத்துடமை வர்க்கந்தான் ஆளும் வர்க்கமாக இருந்தது. இன்றும் இருக்கின்றது. ஆகவே கல்வி மிகச் சமீப காலம் வரைக்கும் ஆளும் வர்க்கத்திற்கே உரியது.
அடுத்த கேள்வி என்னவெனில், கல்வியின் நோக்கம் என்ன? என்பதாகும். அது ஆளும் வர்க்கத்துக்காகக் கொடுக்கப்பட்டதுடன், ஆளும் வர்க்கத்தால் மற்றைய வர்க்கங்களுக்கும் கொடுக்கப்பட்டதுடன், வர்க்க ஆதிக்கம் உள்ள சமூகத்தின் அமைப்பு, கொள்கைகள், தத்துவம், ஆகியவற்றை ஆளும் வர்க்கத்தின் பிள்ளைகளுக்குப் போதிப்பதே அதன் நோக்கமாகும். ஒரு சமூகம் எந்தளவுக்கு வேலை செய்தது, ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக எப்படி ஒரு சமூகம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதும் அவர்களுக்குப் போதிக்கப்பட்டது. மற்ற வர்க்கங்களைச் சேர்ந்த பிள்ளைகளைப் பொறுத்தவரை சர்வ வியாபகமான கல்வியின் நவீன நடைமுறையின் கீழ் வர்க்க சமூகத்தின் பண்புகளோடு அதனுடைய, கூறப்படுகின்ற விடுதலை, சமத்துவம், தோழமை, ஜனநாயகம், உலகநீதி ஆகியவற்றையும் போதித்து வர்க்க ஆதிக்க சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளவும், பாதுகாக்கவும் போதிக்கப்படுகின்றது.
ஆகவே வர்க்க சமுதாயத்தில் அடங்கி, ஒடுங்கி சுரண்டப்படுகின்ற மக்கள், வெகுஜனங்கள் கல்வியின் உண்மையான வர்க்க அடிப்படையை அறிந்து கொள்வது அவசியம். இதன் மூலம்தான் மக்களின் சகல பகுதியினருக்கும் கல்வி வசதியை விஸ்தரிப்பது வர்க்க அடக்கு முறையிலிருந்து அவர்களை விடுவிக்கும் என்ற சிந்தனை வழிநடத்தப்படாமலிருக்க முடியும்.
இன்றைய கல்வியும் வர்க்க ஆட்சி தொடர்ந்திருப்பதை சகித்துக் கொள்ளும்படி அவர்களை ஏமாற்றுகிறது.
-31

Page 18
III
சோஷலிச சமுதாயத்தில் கல்வி
வர்க்க சமுதாயத்தில் கல்வியின் அடிப்படையும், நோக்கமும் என்பதைப் பற்றி ஆராய்ந்ததின் பின் சோஷலிச சமுதாயத்தில் கல்வியின் நிலைமையும் பாத்திரமும் என்ன? என்பதைப் பற்றி ஆராய்தல் நன்று.
ஆனால் ஒரு தெளிவான கருத்தைப் பெறுவதற்காக முதலில் சோஷலிசம் என்றால் என்ன? என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். இன்று இலங்கையில், சோஷலிசம் என்றால் உண்மையில் என்ன என்பது பற்றி அதிகமான குழப்பங்கள் நிலவுகின்ற காரணத்தால் இது அவசியமாகும். உற்பத்திக் கருவிகளின் மீதான அரசின் கட்டுப்பாடோ அல்லது உற்பத்திக்கருவிகளை அரசுடமையாக்குவதோ கூட சோஷலிசமாகாது. அரசு யாருடையது? என்பதே கேள்வியாகும். அரசு முதலாளித்துவ வர்க்கத்தினுடையதாக இருந்தால், அது முதலாளித்துவ சமுதாயமாகும். அரசு தொழிலாளி வர்க்கத் திறனுடையதாக இருந்தால் மட்டுமே சமுதாயம் சோஷலிச சமுதாயமாக இருக்க முடியும்.
இவ்விரண்டு நிலைகளிலும் கல்வி சமுதாயத்தின் வர்க்க குணாம்சத்தில் இருந்து தனித்துவமுடையதாக இருக்காது, இருக்கவும் முடியாது. முதலாளித்துவத்தின் கீழ், முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் சாதனமாக கல்வி செயல்படுகிறது. சோஷலிசத்தின் கீழ், ஆளும் வர்க்கமாகிய தொழிலாளிவர்க்கத்தின் நலன்களுக்காக கல்வி சேவை புரிகிறது.
இந்நிலையில் சோஷலிசத்தின் எதிரியாகிய முதலாளி, அதாவது தன்னை ஜனநாயகவாதி என்று கூப்பிட விரும்புகின்ற இம் முதலாளித்துவவாதி, "அப்படியானால் பிறகு என்ன வித்தியாசம்? இவ் இருவிதமான கல்வி அமைப்பிலும் பாகுபாடு உண்டல்லவா? சோஷலிசக் கல்விக்காக வக்காலத்து வாங்கப்படுகின்ற மேன்மை எங்குள்ளது?" என்று கேட்கலாம். இதற்கான பதில் மிகவும் இலகுவானது. இது எண்ணிக்கையிலேயே காட்டப்படக் கூடியது. முதலாளித்துவக் கல்வி, சனத்தொகையில் 10 வீதத்தின் நலன்களுக்காக மட்டும் சேவை
-32

செய்யும். அதே வேளையில், சோஷலிசக் கல்வி, சனத்தொகையின் 90 வீதத்தினரின் நலன்களுக்காகச் சேவை செய்கின்றது.
தொகையில் மாத்திரமன்றி தரத்திலும் சோஷலிசக் கல்வி உயர்ந்தது. பத்து வீதத்தினரின் ஆட்சி ஜனநாயகமற்றது. அடக்கு முறையானது. யுத்தங்கள் நிறைந்தது. அழிவானதும் கூட. அதே வேளையில் தொண்ணுாறு வீதத்தினரின் ஆட்சி ஜனநாயகமானது. கொடுமைகளிலிருந்து விடுவிப்பது. சமாதானம் நிறைந்தது. சிருஷ்டிகரமானது. சுருக்கமாகக் சொல்வதானால் இந்த இருவகைக் கல்விக்குமிடையிலான தர வித்தியாசம் குருவிச்சைக்கும் மாமரத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைப் போன்றது. இந்த வித்தியாசம் - இன்னும் சரியாகச் சொல்வதனால் - இந்த முரண்பாடு ஒவ்வொரு விஷயத்திலும் காணப்படக்கூடியதாக இருக்கின்றது.
முதலாளித்துவத்தின் கீழ் அநேகமாகத் தனியார், பொதுப் பாடசாலைகள் என இரட்டையமைப்பைக் கொண்ட பாடசாலைகள் உண்டு. தனியார் பாடசாலைகள் நல்ல வசதிகளைக் கொண்டிருப்பதோடு பணக்காரரான ஆளும் வர்க்கத்தினரின் பிள்ளைகளுக்கு மட்டுமே உரியதாயிருக்கின்றன. பொதுப்பாடசாலைகள் கட்டிடங்கள், ஆசிரியர்கள், உபகரணங்கள், கல்வி வசதிகள் என்பவற்றைப் பொறுத்த வரையில் தனியார் பாடசாலைகளை விடத் தாழ்ந்த நிலையிலிருப்பதால் அதிகப்படியான பிள்ளைகள் இந்தத் தாழ்வான கல்வியோடு திருப்தியடைய வேண்டியிருக்கிறது. ஏழைக்கும் பணக்காரனுக்குமிடையிலான இந்த இடைவெளி ஆளப்படும் வர்க்கத்துக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலான இந்த இடைவெளி -சோஷலிசத்தின் கீழ் நீக்கப்பட்டுவிடும். தனியார் பாடசாலைகள் இல்லாமல் செய்யப்படுவதோடு சகல பாடசாலைகளையும் அரசு கையேற்று நிர்வகிக்கிறது. புதிய பாடசாலைகளையும் அரசுதான் கட்டுகிறது.
மத ஸ்தாபனங்கள் பாடசாலைகளை உடமையாகக் கொண்டிருப்பதாலும், நடாத்துவதாலும் மதத்தின் அடிப்படையிலான பாரபட்சத்திற்கு இது இன்னுமொரு மூல காரணமாகின்றது. சோஷலிசத்தின் கீழ், பாடசாலைகள் அரசுடமையாக்கப்படுகின்ற காரணத்தால் இத்தகைய பாரபட்சங்களும் நீக்கப்படுகின்றது. அது மட்டுமல்ல மத சம்பந்தமான விவகாரங்களுக்கு அங்கு எவ்விதமான இடமும் அளிக்கப்படுவதில்லை. இவைகள் பாடசாலைகளிலிருந்து நீக்கப்பட்டு, அவற்றிற்குத் தகுந்த இடங்களாகிய வீடோ, தேவாலயமோ, கோவிலோ அல்லது மசூதியோ
-33

Page 19
எதுவானாலும் அவற்றின் எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதற்குப் பதிலாகச் சகல மாணவர்களுக்கும் சமுதாய வளர்ச்சி பற்றிய விஞ்ஞானம் போதிக்கப்படுகின்றது.
அத்துடன் தற்போதைய வர்க்க சமுதாயம் ஆண் அதிகாரம் செலுத்தும் சமுதாயம் ஆகும். எனவே கல்வியிலும் ஆண்- பெண் என்ற வேறுபாடுகள் காட்டப்படுவதோடு, பெண்பாலர்க்கு எதிரான பாரபட்ச. மான போக்குகளும் நிலவுகின்றன. சோஷலிசத்தின் கீழ், கூட்டுக் கல்வியமைப்பு முறை இருபாலார்க்கும் இடையிலான பாரபட்சத்திற்கு முடிவு கட்டுவதோடு கல்வியின் சகல மட்டங்களிலும் இருபாலார்க்கும் சம சந்தர்ப்பம் அளிக்கிறது.
வர்க்க சமுதாயத்தின் இன்னுமொரு அம்சம் தேசிய சிறுபான்மை இனங்களின் மீது அடக்குமுைைய மேற்கொள்கின்ற இன, மொழி, தேசிய பாரபட்சங்களாகும். சோஷலிசத்தின் கீழ் இத்தகைய பாரபட்சம் ஒழித்துக் கட்டப்படுவது மட்டுமன்றி, அரசு கல்வி வசதி படைத்த சமூகத்தின் அல்லது இனத்தின் முன்னேறிய பிரதேசத்தின் மட்டத்தை பின் தங்கிய பிரதேசங்கள் எட்டிப் பிடிப்பதற்காக அவற்றின் கல்வியின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதில் விசேஷ கவனமும் செலுத்துகிறது.
இப்படியாக சோஷலிசம் ஒரு சர்வ வியாபகமான ஒருமுகப்படுத்தப்பட்ட, விஞ்ஞான பூர்வமான அமைப்பைக் கொண்ட கல்வியை இன, மொழி, சாதி, தேசிய அல்லது ஆண் - பெண் பாகுபாடு என்ற எவ்வித பேதமுமின்றி சகலருக்கும் சமசந்தர்ப்பங்களுடன் வழங்குகிறது.
கல்வி இளைஞர்களுக்கு மட்டுமேதான் என்ற எல்லை வரம்புகளுக்குள் உட்படுத்தப்படுவதில்லை. வயது முதிர்ந்தவர்களுக்குக் கூட கல்வி வசதி தரப்படுகின்றது. ஏனெனில் முதலாளித்துவத்தின் இன்னுமொரு சாபக்கேடான எழுத்தறிவின்மையை ஒழித்துக் கட்டுவதை தனது கடமைகளுள் ஒன்றாக சோஷலிச அரசு கையேற்கிறது.
மேற்கூறப்பட்ட மாற்றங்கள் ஆழமானவையென்றாலும், இவை மட்டும் கல்வியிலே புரட்சியை உண்டு பண்ணமாட்டா. அடிப்படையானது என்னவெனில் கல்விக்கும் உழைப்புக்கும் இடையிலான தொடர்பேயாகும். புராதன சமுதாயத்தில் ஆதிகாலக் கம்யூனிஸ் காலகட்டத்தில் வர்க்கங்கள் இருக்கவில்லை. வாழ்வதற்காக சகலரும் உழைக்க வேண்டியிருந்தது. உழைப்பது வாழ்வின் நியதியாக இருந்தது. அத்துடன் சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வதன் மூலமோ அல்லது
-34

புத்தகங்களைப் படிப்பதன் மூலமோ வேலை செய்யப் பழகிக் கொள்ளவில்லை. வேலை செய்வதின் ஊடாகவே வேலை செய்யப் பழகினார்கள். இப்படிக் கல்வி உழைப்புடன் இணைக்கப்பட்டிருந்தது. கல்விக்கும் உழைப்புக்கும் இடையிலான இந்த இணைப்பு சமுதாயத்தில் வர்க்கங்கள் தோன்றிய போது உடைந்தது.
ஆகவே சோஷலிசத்தின் கீழ் - வர்க் கங்களற்ற சமுதாயத்தையுடைய, விஞ்ஞான பூர்வமான கம்யூனிஸத்திற்கு வழி சமைக்கும் சோஷலிசத்தின் கீழ் கல்வி திரும்பவும் உழைப்புடன் இணைக்கப்படுகிறது. உழைப்பு கல்வியின் ஒரு முக்கியமான, அத்தியாவசியமான பகுதியாக வருகிறது. மாணவர்கள் தொழிற்சாலைகளிலும், வயல் வெளிகளிலும் வேலை செய்கிறார்கள். இது மட்டுமின்றி அவர்கள் உழைப்பில் ஈடுபடும்போது உழைப்பைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் உழைப்பில் ஈடுபடுவதையிட்டுப் பெருமையடைகிறார்கள். இங்ங்ணம் கல்வி உழைப்புடன் இணைக்கப்படுகிறது. புத்தி ஜீவிகளும் தம்மை உழைக்கும் மக்களுடன் இணைத்துக் கொள்கிறார்கள்.
எனவே முதலாளித்துவத்தின் கல்வி, வர்க்க வித்தியாசங்களையும், வர்க்க அடக்குமுறையையும் நிலைநிறுத்துவதற்காக உதவும் அதேவேளையில், சோஷலிசத்தின் கீழ் கல்வி, முதலாளித்துவ சித்தாந்தங்களின் அடிச்சுவடுகளை நீக்குவதற்காகவும் இறுதியாக வர்க்க பேதமற்ற சமுதாயத்தை நிறுவுவதற்காகவும் தனது பங்கைச் செலுத்துகிறது.
தோழர். மு. கார்த்திகேசன்.
-35

Page 20


Page 21
தோழர் மு.கார்த்திகேச லிசத்தின் குறியீடு. அரசியல் ஆழ்ந்த சிந்தனையாளன். தோ - லெனினிஸ் -மாஒ சேதுங் ச் களையும் இலங்கை வாழ் அ சனத்திற்கும், சுபீட்ச வாழ்விற் ஆராய்ந்து, அதன்படி தனது ஏனையோரையும் வழிநடாத் எழுத்தால், பேச்சால் ஆங்கி பெறச் செய்தவர். அவரது இலக்கிய, சமூக அறிவினை பிரயோகித்து தலைசிறந்த அ பிரசித்தி பெற்றவர்.
ငုံး
பேராசிரியர் சபா. ஜெயரா கழகத்தின் கல்வியியல் து ஜெயராசா அவர்கள் ஆணி துணிவுடன் முன்வைப்பதில் மு நுண்கலைப்பீடாதிபதியாக இ புதிய பாடநெறிகளை உரு மார்க்சியம் சார்ந்து உளவிய கலையியல் கருத்துக்களை கணக்கான கட்டுரைகளை அவரின் ஆளுமைக்குச் ச வரப்பட்டுள்ளன. ஈழத்துப் பத் களிலும் இவரது இறுக்கமான துள்ளன. பேச்சுவண்மையும் வாய்ந்த ஒரு அறிஞர். யா வளர்ச்சியில் பெரும் ஈடுபாடு மேம்படுத்தி வருகின்றார்.
 

ன் ஒரு நிறுவனம். சோஷ" தீர்க்கதரிசி. ஒரு புத்திஜீவி. ழர் கார்த்திகேசன் மார்க்ஸிச சிந்தனைகளையும் கோட்பாடு" னைத்து மக்களின் விமோகுமாக திரிபறக் கற்று, நன்கு
இயக்கத் தோழர்களையும், திச் செயற்பட்டவர். இவர்
லமும், செந்தமிழும் பெருமை
மொழியாற்றலையும், சிறந்த யும், கணிதப் புலமையையும்
ஆசிரியராகவும், அதிபராகவும்
素、
சா, யாழ்ப்பாணப் பல்கலைக் துறைப் பேராசிரியரான சபா த்தரமான கருத்துக்களைத் தன்மையானவர். இராமநாதன் ருக்கும்போது அத்துறைசார்ந்த வாக்கி வெற்றி கண்டவர். Sö, LonTesõfi-6-fluuleið 56ð6 lulujað முன்னிறுத்திப் பல நூற்றுக் எழுதியுள்ளார். பல நூல்கள் ான்றாக வெளிக்கொண்டுத்திரிகைகளிலும், சஞ்சிகை எ கட்டுரைகள் பல வெளிவந்எழுத்தாற்றலும் மதிநுட்பமும் ாழ் பல்கலைக்கழகத்தின் காட்டி கல்வியியல் துறையை