கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மார்க்சிய உளவியலும் அழகியலும்

Page 1
வெளியீடு இலங்கை முற்போக்குக் கலை &
 


Page 2

மார்க்சிய உளவியலும் அழகியலும்
виши 6lagшJлат
வெளியீடு இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்
கலாநிதி சபா ஜெயராசா

Page 3
  

Page 4
நூலாசிரியர் உரை
பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின்
தெளிந்த மார்க்சிய நோக்கும், கலை இலக்கியங்களை மார்க்சியக் கருத்தியலை அடியொற்றி ஆய்வு செய்த முறைமையும் தமிழியலிலே புதிய புலக்காட்சிகளைத் தோற்றுவித்தன. அவர் உருவாக்கிய ஆய்வு வழித் தடம் பலமும் உறுதியும் கொண்ட அறிகைச் செழுமை பெற்றிருந்தமையாற் பின்னைய ஆய்வாளர் களுக்கு அது வினையாற்றல் மிக்க தேர்ச்சியை அளித்தவண்ணமுள்ளது.
அவர் மேற்கொண்ட ஆய்வுப் பரப்புக்களுள் ஒன்றாக அழகியல் அமைந்தது. மார்க்சிய அழகியல் பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப் படும் அறிபொருளாக எமது சூழலால் மேலெழுந் துள்ள நிலையில் அதன் பல்வேறு பரிமாணங்
களையும் நோக்க வேண்டியுள்ளது. அழகியலாக் கத்தின் ஒரு சிறப்பார்ந்த பெருங்கூறாக அமைவது உளவியல்ாகும். மார்க்சிய உளவியற் பரப்பும்
அழகியல் விளக்கங்களும் இந்நூலிலே அணுகப் படுகின்றன. இந்நூலாக்கத்துக்கு உற்சாகம் தந்த இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத் தினருக்கும் உளமார்ந்த நன்றி.
gur Gogugment
மார்க்சிய உளவியலும் அழகியலும்

பதிப்புரை
பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களது கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும், தாய் மொழிக் கல்வியும் கற்பித்தலும், பின்நவீனத்துவத்தை விளங்கிக் கொள்ளல் ஆகிய மூன்று நூல்களையும் எமது முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
பேராசிரியர் கைலாசபதி தமிழ் இலக்கியத்தில் மார்க்சியக் கருத்தியலில் கொண்ட ஈடுபாட்டினால் தமது தமிழியல் ஆய்வில் மார்க்சிய அணுகு முறையைக் கையாண்டு தமிழ் சமூக, அரசியல், பொருளாதாரம் பின்னணியைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
கைலாசபதி அவர்களது மறைவின் 27வது ஆண்டு நினைவாக, மார்க்சிய உளவியலும் அழகியலும் என்ற பேருரையை சபா ஜெயராசா நிகழ்த்தியுள்ளார். இப்பேருரையை எமது முற்போக்குக் கலை இலக்கிய (பேரவை என்ற பதம் மன்றம் என அண்மையில் மாற்றப் பட்டுள்ளது) மன்றம் இன் நூலாக வெளியிடுகின்றது. மார்க்சிய உளவியலும் அழகியலும் என்ற இவ் நூல் இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றத்தின் இருபதாவது நூல் என்பதில் எமது மன்றம் பெருமை கொள்கின்றது.
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் 18-6/1, கொலிங்வூட் பிளேஸ்,
கொழும்பு 06,
இலங்கை,
21.03.2010
கலாநிதி சபா ஜெயராசா

Page 5
பொருளடக்கம்
அழகியல் பற்றிய பொதுவிளக்கம் அழகியல் அறிக்கை மார்க்சிய அழகியலின் தளம் மார்க்சின் உற்றுணர்வுக் கோட்பாடு மார்க்சிய உளவியலின் தளம் சோசலிச நடப்பியல்
மார்க்சிய உளவியல்
வைக்கோட்சி
எரிக்புரோம் அலெக்சாந்தர் லுரியா மற்றும் அலெக்சி லியோண்டிவ் ரூசிய போமலிசம் - வரன் முறைவாதம் லூகஸ்
கெர்பட் மார்க் யூஸ்
அந்தோனியோ கிராம்சி
அடோர்னோ
பேற்றோட் பிரெச்ர்
பியர்மாஷெறி வால்டர் பென்ஜமினும் கிறிஸ்தோபர் கொட்வெல்லும் புதிய இடதுசாரி அழகியல் லுசியன் கோல்டுமன் மிசேல் பூக்கோவில் மார்க்சியச் செல்வாக்கு ஹேர்ப்பமஸ் தந்தபின்னைய மார்க்சிய நோக்கு அமைப்பியலும் அழகியலும் தெறித்தல் வினைப்பாடு
மார்க்சிய அழகியல்
நிறைவாக.
உசாத்துணை நூல்கள்.
11
15
25
27
30
37
43
46
52
56
59
62
65
68
73
78
79
82
86
90
94
99
OI
மார்க்சிய உளவியலும் அழகியலும்

அழகியல் பற்றிய பொது விளக்கம்
1. அழகியல் பற்றிய பொது விளக்கம்
மெய்யியல், திறனாய்வியல், கல்வியல் முதலாம் துறைகளில் உள்ளடங்கிய ஆய்வுப் பொருளாக அழகியல் அமைந்துள்ளது. கலைகள் மனித உணர்வுகளைத் தூண்டி அவர்களைக் கேடுறுத்தி (Corrupt) விடும் வலிமையுடையது என்ற பிளேட்டோவின் முன்மொழிவுடன் அழகியல் பற்றிய ஆய்வு அறிகை நிலையில் எழுச்சி கொள்ளலாயிற்று.
கலையின் மெய்யியலும், அழகியலும் ஒரே பொருள் குறித்து நிற்கின்றன. சோக்கிரதீஸ் (கி.மு. 469 - 399) பிளேட்டோ (கி.மு. 427 - 347) அரிஸ்ரோட்டில் (கி.மு. 384 - 322) முதலியோர் அழகியலை
மெய்யியற் கண்ணோட்டத்தில் நோக்கலாயினர். ஊகங்களின் அடிப்படையில் அழகியலை விளக்கும் மரபு அக்காலத்தில் மேலோங்கியிருந்தது. அனைத்து அழகிய பொருட்களுக்கும்
அழகுபற்றிய சில பொதுப்பண்புகள் இருந்ததாக வேண்டுமென அவர்கள் ஊகித்தனர். அதனை அடியொற்றிய தேடல் பின்னர் தொடர்ந்து வளரலாயிற்று.
அழகு என்பது தூய வடிவம் என்று குறிப்பிட்ட பிளேட்டோ, அது கேத்திரகணித வாயிலாக வெளிப்பாடு கொள்வதாகக் குறிப் பிட்டார். அழகு பற்றி எண்ணமுதல்வாத அடிப்படையில் விளக்கு கையில் அது அழியாப் பெறுமானம் கொண்ட நித்தியமான பொருள் என்று குறிப்பிட்டார். ஆயினும் அதன் பாவனைப் பாங்கும், புலன் உணர்ச்சிகளைத் தூண்டும் பாங்கும் இறைவழிபாட்டிற்கூட ஏற்றுக் கொள்ளப்படமுடியாதவை என்றுதாம் எழுதிய குடியரசு என்ற நூலிலே குறிப்பிட்டார்.
அதற்குமாறுபாடான கருத்து அரிஸ்ரோட்டிலிடத்துக் காணப் பட்டது. துன்பியல் நாடகங்களை அடியொற்றி அவர் அழகுபற்றிய கருத்துக்களை முன்வைத்தார். மனித வாழ்வில் ஏற்படக்கூடிய
கலாநிதி சபா ஜெயராசா 7

Page 6
அழகியல் பற்றிய பொது விளக்கம்
அவலங்களையும் துன்பங்களையும் தாங்கிக் கொள்வதற்குரிய உணர்ச்சி கலந்த அனுபவத்தைத் தருவதாக அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கையின் அவலங்களை எதிர் கொள்வதற்குரிய கத்தாசிஸ் (Catharsis) எனப்படும் உணர்வேற்றம் அவருடைய கலைக் கோட்பாட்டின் மையப் பொருளாக அமைந்தது.
இடைக்காலத்து அழகியல் பற்றிய சிந்தனைகள் அழகியலை இறையியல் நோக்கில் விவரிக்கும் வகையில் அமைக்கப்படலாயின. நிலப்பிரபுத்துவ சமய அமைப்புக்களிலே சமயம் வலிமை மிக்க தீர்மானிப்பு வலுவாய் அமைந்தது. இடைக்காலத்து இந்தியமரபிலும், ஐரோப்பிய மரபிலும் இக்கருத்து மீள வலியுறுத்தப்படலாயிற்று. இந்திய மரபிலே ஆலயங்களே வழிபாட்டு நிலையங்களாகவும் அழகியல் நிலையங்களாகவும் அமைந்தன.
ஐரோப்பிய மரபில் அழகை விளக்கவந்த தோமஸ் அக்கு வினாஸ் அழகை இறைவன் உள்ளத்திலிருந்து தோற்றம் பெறும் கதிர் வீச்சுக்களாகக் குறிப்பிட்டார். அதனாற்தான் அவற்றைக் காணும் பொழுது உள்ளம் கவர்ச்சிப்படுகின்றது என்று விபரித்தார்.
அழகியல் பற்றிய மெய்யியல் அறிக்கையை விளக்குவதற்கு பவும் கார்தென் என்பார் ஆழகியல் என்ற எண்ணக் கருவை 1750 ஆம் ஆண்டிலேயே முன்மொழிந்தார். அழகு புலக்காட்சிவழியாக உரு வாக்கப்படும் கிரேக்க மரபினை அடியொற்றி அந்த எண்ணக் கருவாக்கம் முகிழ்த்தது.
அழகியலை சுவை எண்ணக்கருவை அடியொற்றி டேவிட்
கியூம் விளக்கலானார். கலைப் பொருளின் தரம் சுவையால் நிர்ணயிக்கப்படுகின்ற தென்று அவர் கருதினார். சுவை புலன்கள் வழியாகப் பெறப்படுகின்றது - திரட்டிக் கொள்ளப்படகின்றது.
கலையின் சிறப்பும் தர வேறுபாடுளும் சுவையை அடியொற்றியே விளக்கப்படுதல் பொருத்தமுடையது. நுகர்வோரைக் கலையில் ஈடுபாடுகொள்ளச் செய்வதற்கு சுவையே அடிப்படையாகின்றது. கலைக்குரிய தனித்துவமும் அதனைச் சுவைத்து மதிப்பீடு செய்தலும் சுவையுடன் இணைந்த செயற்பாடுகளாகின்றன.
8 மார்க்சிய உளவியலும் அழகியலும்

அழகியல் பற்றிய பொது விளக்கம்
சுவைபற்றிய கோட்பாடு அழகியலிலே பல்வேறு கருத்து வளர்ச்சிகளை ஏற்படுத்தலாயிற்று. தெளிவான அளவை முறைமைக் குள் சுவையை உள்ளடக்க முடியாதிருத்தல் அதற்குரிய பிரதான அறிகை மட்டுப்பாடாகக் காணப்படுகின்றது.
இமானுவேல் கான்ற் (1724 - 1804) அவர்கள் அழகை ஒருதூய வடிவமாகக் கருதினார். மனிதரின் உயிரியல் மற்றும் தனியாள் விருப்புக்கள் நடைமுறைகள் முதலியவற்றிலிருந்து விடுபட்ட கட்டற்ற பொருள் என அழகைக் கண்டார். இதனை அடியொற்றி அழகு என்பது கற்பனை விளையாட்டு என்ற கோட்பாட்டை கேபேட்ஸ்பென்சர் (1820 - 1903) உருவாக்கினார். அழகு பற்றிய விளையாட்டுக் கோட்பாடு மேலும் விரிவுபெறலாயிற்று. அழகு என்பது அதன் வடிவமைப்பிலே கவர்ச்சியுடையதாயிருத்தலை தியோடர் லிப்ஸ் (1851 - 1914) வலியுறுத்தியதுடன் மனிதருள்ளே பொதிந்துள்ள மனவெழுச்சிகளையும் செயற்பாடுகளையும் வெளிப்படுத்துவதற்குரிய வெளிப்பாதையாகக் கலைவடிவம் இருத்தலை விளக்கினார். உள்ளமைந்தவை கலை வடிவங்கள் வழியாக வெளிப்பாய்ச்சல் செய்யப்படுகின்றன அல்லது எறிவு செய்யப்படுகின்றன. அழகியலை விளையாட்டுக் கோட்பாட்டுடன் விரிவுபடுத்தியவர்களுள் பிரெட்றிக் செச்சில்லர் (1759 - 1805) சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்.
அழகியல் பற்றிக் கூறவந்த நிட்சே தாம் 1872 ஆம் ஆண்டில் எழுதிய "துன்பியலின் பிறப்பு" என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். மானிடரிடத்து டைனேசியன் வலு மற்றும் அப்பொலொனியன் வலு என்ற ஆவிகள் உள்ளன வென்றும் முன்னையது உணர்வுகளைத் தூண்டியும் மயக்கத்தை தூண்டியும் வருகின்றது என்று குறிப்பிட்டார். அதே வேளை பின்னையது சாந்தமான பகுத்தறிவுப் பாங்கினையும் நியாயித்து அறியும் பாங்கினையும் கொண்டுள்ளது என்றும், கலைகள் அவற்றை நேர் நிலையிலே அரவணைத்து நிற்கின்றன என்றும் விபரித்தார்.
அழகுபற்றிய சமகால ஆய்வை குரோசே (1866 - 1950) அவர்களிடமிருந்து ஆரம்பிக்கும் ԼDՄԼվ ஆய்வாளரிடம் காணப்படுகின்றது. கெஹலின்முன் மாரியைக் கொண்டு இவரும் கலையை ஒரு வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டார். வடிவமே
கலாநிதி சபா ஜெயராசா 9

Page 7
அழகியல் பற்றிய பொது விளக்கம்
வெளிப்பாடு ஆகின்றது. (Form AS Expression) அது நுண்மதி சார்ந்த நடைமுறைகளுக்கு மாறுபாடானது என்று மேலும் தொடர்ந்தார். ஜோன் டுயி (1859 - 1952) கலையை வாழ்க்கையின் ஏனைய துறைகளில் இருந்து பிரிக்க முயல்வதை மறுத்தார். கலை கலைக்காக என்பதை அவர் தமது பயன்கொள்வாதக் கண்ணோட்டத்தல் நிராகரித்தார். மனிதவாழ்க்கையோடு கலையின் தொடர்ச்சியை ஒன்றிணைக்கும் கருத்தாக்கத்தை முன்வைத்தார்.
அழகியல் தொடர்பான மிகப் பரந்த எண்ணக் கரு வாக்கத்தை மக்ஸ் திசொயிர் (1867 - 1947) முன்மொழிந்தார். அழகியல் என்ற எண்ணக்கரு பொருத்தமற்றது என்று குறிப்பிட்ட அவர் அதற்கு கலை upbriju Gurg, G5656 brigoTL b (General Science of Art) 6T65 ind Ligu பெயரை வழங்கினார். மெய்யியல், அறிவியல், கல்வியியல், உளவியல், சமூகவியல், மானிடவியல், பண்பாட்டியல், வரலாறு, திறனாய்வியல் முதலிய பல புலமைத்துறைகள் சார்ந்த ஆய்வுப் பொருளாக அது மாற்றம் பெற்றுவருகின்றமையால் இந்தப் புதிய பெயரே பொருத்தமானது என்று குறிப்பிட்டார்.
மேற் கூறிய வளர்ச்சியிலிருந்து விஞ்ஞானம் சார்ந்த அழகியல் (Scientific Aesthetic) என்ற மேலும் ஓர் எண்ணக்கரு அறிமுகமாயிற்று. அழகியற் செயற்பாடுகளை விஞ்ஞான பூர்வமாக ஆராய்தலும் புத்தாக்க வடிவங்களை உருவாக்குவதற்கு அழகியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்துதலும் இப்பிரிவிலே சிறப்பிடம் பெறுகின்றன. தோமஸ் மன்றோ (1897-1974) இத்துறையில்விரிவான அறிகை பங்களிப்பைத் தந்துள்ளார்.
10 மார்க்சிய உளவியலும் அழகியலும்

அழகியல் அறிக்கை
2. அழகியல் அறிகை
அழகும் சுவையும் பற்றிய கற்கை அழகியலாகின்றது. கலை பற்றிய மெய்யியல் அழகியல் என விளக்கப்படுத்தலும் உண்டு. அழகும் சுவையும் முற்றிலும் அகவயப்பாங்கான தீர்மானிப்புக்கு உள்ளாவதால் புறவய அணுகுமுறைகள் சாத்தியமற்றவை என்ற விவாதம் தொடர்ந்த வண்ணமுள்ளது.
அழகியல் பற்றிய அணுகுமுறைகள் பொதுவாக மூன்று நிலைகளில் முன்னெடுக்கப்படுகின்றன. அவை வருமாறு
(1) அழகியல் பற்றிய எண்ணக்கருக்களைத் தெளிவு படுத்தி விளங்கிக் கொள்ளல் வழியாக, தருக்க நிலைப்பட்ட நியாயப்பாட்டை முன்னெடுத்தல்.
(2) அழகியல் அனுபவத்தை முகிழ்த்தெழச் செய்யும் உள நிலை, தூண்டி - துலங்கல், மனவெழுச்சி உளப்பாங்கு முதலியவற்றை ஆய்வுக்கு உட்படுத்துதல்.
(3) அழகியற் பொருட்களைக் கற்றலும் விளங்கிக்
கொள்ளலும் வேறுபிரித்தறிதலும.
1832 ஆம் ஆண்டில் கெஹல் வெளியிட்ட அழகியல் தொடர்பான விரிவுரைகளில், கலை என்பது குறிப்பிட்ட வடிவத்தை அல்லது தோற்றத்தை அடியொற்றி மேலெழுகின்றது என்று குறிப் பிட்டார். கலைநுகர்ச்சி புலன்சார்ந்து மேலெழுவதால் வடிவம் அல்லது உருவம் முக்கியத்துவம் பெறுவதாக அவர் வலியுறுத்தினார். அந்நிலையிலே கலையை விளங்கிக் கொள்ளலில் அறிகை அல்லது நுண்மதியும் பங்குகொள்வதைக் குறிப்பிட வேண்டியுள்ளது. தனித்து வடிவம் மட்டும் அழகியல் எழுச்சியைத் தூண்ட மாட்டாது. அதனில் பிரிக்க முடியாத உறவுடன் கலந்து நிற்கும் உள்ளடக்கமும் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒன்று மற்றையதை விட்டுப் பிரிந்து நிற்க முடியாது.
கலாநிதி சபா ஜெயராசா 11

Page 8
அழகியல் அறிக்கை
கலை நுகர்ச்சியில் உள்ளம் சம்பந்தப்படுகின்றது என்று கூறும் பொழுது கற்பனை என்ற செயற்பாடு முக்கியத்துவம் பெற்று மேலெழுகின்றது. இதனைமேலும் கூர்மையாகக் கூறுவதனால் அழகியற்படைப்புக் கற்பனையைத் தூண்டவல்லதாயிருத்தல் வேண்டும் என்பதாகும். மெய்யியலாளர் கான்ட் அவர்களில் இக்கருத்து முக்கிய்ததுவம் பெறத் தொடங்கியது. டேவிட் கியூம் கற்பனையை அழகியலுடன் இணைந்த செயல் முறையாகக் (ASSociative Process) குறிப்பிட்டார். அதாவது கற்பனை வழியாக அழகுநுகர்ச்சி தூண்டிவிடப்படுகின்றது.
அழகியல் அனுபவத்தில் கற்பனை என்பது சிறப்பார்ந்த பாத்திரத்தை புரிகின்றது. கலைப்பொருளும் கற்பனையும் ஒன்றி ணைந்து கொள்கின்றன. கலை அனுபவத்திலே கற்பனை சுயாதீன மாகத் தொழிற்படுவதாக கான்ட் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கற்பனை
ஆக்க மலர்ச்சிக் கற்பனையாகின்றது.
அழகியல் அனுபவத்தைச் சாதாரண அனுபவங்களிலிருந்து பிரித்து நோக்குவோர், அழகியல் விருப்பு சுயாதீனமானது என்ற தளத்திலிருந்து நோக்குகின்றனர். கலையின் சுயாதீனப்பாடும் அழகியல் அனுபவத்தின் சுயாதீனப்பாடும் அங்கே சங்கமிக்கின்றன. அந்த அணுகுமுறையின் விரிவே கலை கலைக்காக என்ற எழுபொருளாகும்.
அழகியல் அனுபவத்தை மேம்பட்ட வகையிலே பெற்றுக் கொள்வதற்கு முன் விளக்கம் அவசியம் என்றகருத்தும் உண்டு. உதாரணமாக இந்து சமயம் மற்றும் தொன் மக்கள் பற்றிய அறிவு, பரத நாட்டிய அழகியல் அனுபவத்தை மேம்பட்டவையிலே பெற்றுக் கொள்வதற்கு அடிப்படையாகக் கூறப்படுகின்றது. முன்விளக்கம் கோட்பாட்டு நிலையில் மட்டுமல்ல குறிப்பிட்ட கலையாக்கத்திலே
பயன்படுத்தப்படும் குறியீடுகளைப் பொறுத்தவரயிலும் முக்கியத்து
12 மார்க்சிய உளவியலும் அழகியலும்

அழகியல் அறிக்கை
வம் பெறுகின்றது. அதாவது குறிப்பிட்ட கலைவடிவம் ஆக்கப் பெறும் மொழியைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
சமகால அழகியலில் பிரதிநிதித்துவப்படுத்தல் (Represention) வெளிப்படுத்தல் (Expression) ஆகிய எண்ணக்கருக்கள் வேறு பிரித்து ஆராயப்படுகின்றன. குரோசே மற்றும் கொலிங்வூட் முதலானோர் இத்துறையில் தீவிர ஈடுபாடுகாட்டினர். வெளிப்பாடு என்பது கலையாக்கத்தின் விபரணப் பரிமாணங்களை உள்ளடக்கியது. ஆடலில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகபாவனை வெளிப்பாடா கின்றது. அது மனவெழுச்சிகளுடன் தொடர்புடையது. ஒரு கலைப் படைப்புக்கும் அதன் பொருளுக்குமுள்ள இணைப்பு பிரதிநிதித்துவப் படுத்தல் என்ற எண்ணக் கருவினாற் புலப்படுத்தப்படும்.
அழகியலின் மொழி பற்றிய நூல் ஒன்றினை நெல்சன் குட்மன் என்பார் 1968 ஆம் ஆண்டில் வெளியிட்டார். கலைபற்றிய பல வினாக்களுக்குரிய விடைகள் அந்நூலிற் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
(l) கலை என்பது என்ன? அது குறியீடுகளின் ஒரு
செயலமைப்பு
(2) பிரதிநிதித்துவப்படுத்தல் என்றால் என்ன? அது
எழுகுறிப்படுத்தல் (Denotation) ஆகின்றது.
(3) வெளிப்படுத்தல் என்றால் என்ன? அது ஒருவகை
உசாத்துணை
(4) கலையின் பெறுமானம் என்ன?
அது நடப்பியலை குறியீட்டுப்படுத்துகின்றது.
(5) கலைக்கும் விஞ்ஞானத்துக்குமுள்ள வேறுபாடு என்ன? குறியீட்டுத் தொகுதியினால் அவை வேறுபடு கின்றனவேயன்றி அவை வெளிப்படுத்தும் பொருள்
களால் அல்ல.
கலாநிதி சபா ஜெயராசா 13

Page 9
அழகியல் அறிக்கை
அவர் மொழியியல் தளத்தில் நின்று கலைகளை விளக்கியமை துல்லியமாகப் புலப்படுகின்றது. அழகியலும் மொழியும் தொடர் பான ஆய்வுகள் இருபதாம் நூற்றாண்டிலே பலநிலைகளில் எழுச்சி கொள்ளலாயின. அத்துறையில் ஆய்வுகளை மேற்கொண்ட வர்களுள் லான்ஜர் சிறப்பாகச் சுட்டிக்காட்டத் தக்கவர்களுள் ஒருவர். சாதாரண மொழி விதிகளை அடியொற்றிக் கலையாக்க மொழியை விளக்க முடியாது என்பது அவரின் முன் மொழிவு. அளிக்கை முனைப்புக் குறியீடுகள் (Presentational Symbols) வாயிலாகவே கலையாக்கம்
உருவாக்கப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
சமகாலத்தைய அழகியலின் வளர்ச்சியில் சுவை என்ற பொருள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. சுவை பின்வரும் பரிமாணங்களில் அணுகப்படுகின்றது.
(1) அதனை புலன்நிலையிலே காணல்
(2) அதனை வேறுபிரித்தறியும் மனவெழுச்சித் தூண்ட
லாகக் கருதல்
(3) நன்கு செப்பனும் செழுமையும் செய்யப்பட்ட நல்ல
மனவொழுக்கமாகக் கொள்ளல்.
மேலும் உடல் சார்ந்த சுவைக்கும், உளம் சார்ந்த
சுவைக்குமிடையேயுள்ள பொதுமைகளைக் காணும் முயற்சிகளும்
மேற்கொள்ளப்பட்டன.
14 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சிய அழகியலின் தளம்
3. மார்க்சிய அழகியலின் தளம்
மார்க்சின் எழுத்தாக்கங்கள் அவரது வாழ்நாள் முழுவதும் நிடித்துச் சென்றன. அவற்றை அடியொற்றி ஆராயும் மேலைப்புலத் திறனாய்வாளர்கள் மார்க்சின் ஆக்கங்களை வாசித்தல் தொடர்பான இரண்டு இடர்களை முன்வைக்கின்றார்கள். அவை.
(l) அவர் தனது கருத்துக்கள் அனைத்தையும் தொகுத்து ஒரு பெரும் தொகுதியாக வெளியிடவில்லை என்ற அவதானிப்பு.
(2) பெரும்பாலான அவரது ஆக்கங்கள் அவர் வாழும் போதே வெளியிடப்படவில்லை என்னும் அவரது இறப்புக்குப் பின்னரே வெளியிடப்பட்டன என்பது மான உற்று நோக்கல்.
மார்க்சின் சில ஆக்கங்கள் அவர் இறந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரே வெளிவந்தன. உதாரணமாக அவர் 1844 ஆம் ஆண்டில் எழுதிய பொருளியல் மற்றும் மெய்யியல் ஆய்வுப் பிரதி 1932 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
மேலைப்புல ஆய்வாளர்கள் இவ்வாறான இடைவெளிகளைச் சுட்டிக் காட்டியவேளை மார்க்சின் எழுத்தாக்கங்களிலிருந்து அவரது சிந்தனையின் சாரம்சத்தைத் தரிசிப்பதற்கு எடுத்த முயற்சிகளிலே பல இடைவெளிகள் காணப்படுகின்றன. மே 1848 ஆம் ஆண்டிலே மார்க்ஸ் வெளியிட்ட கமியூனிச கொள்கைப் பிரகடனத்தை மேலை புல ஆய்வாளர்கள் ஒரு பிரசாரப் பிரசுரமாகக் கருதினார்களேயன்றி அதில்உள்ளடங்கிய சமூக நோக்கையும் மானிடதரிசனத்தையும் அவர்களாலே கண்டுகொள்ள முடியாமற் போய் விட்டது.
மார்க்ஸ் மேற்கொண்ட பல்வேறு அறிவுத்துறைகளின் ஒன்றிணைப்பையும் அவை கலை இலக்கியப் புலக்காட்சியிலே ஏற்படுத்தப்படக் கூடிய வளமான காட்சியையும் கருத்திலே கொள்ளாது அவரது சிந்தனையும் அணுகுமுறைகளும் பொருண்மியம் பற்றிய தெனச் சுருக்கிவிடும் நடவடிக்கைகளும் மேற்குலகின்
கலாநிதி சபா ஜெயராசா 15

Page 10
மார்க்சிய அழகியலின் தளம்
மார்க்சிய எதிர்ப்புச் சிந்தனா கூடங்களிலே இடம் பெற்று வருகின்றன.
அழகியல் பற்றி அதிக அளவில் மார்க்ஸ் எழுதவில்லை யாயினும் அவர் எழுதிய பொருண்மிய மெய்யியற் கையெழுத்துப் பிரதிகள் என்பதில் உட்பொதிந்த சிந்தனைகளையும் அவர் எழுதிய ஏனைய நூல்களில் இடம்பெற்ற கருத்துக்களையும் அடியொற்றி மார்க்சிய அழகியல் கருத்துக்கள் மேலெழலாயின.
கால்மார்க்சின் சிந்தனைகள் வழியாக முகிழ்த உற்பத்திச் செயற்பாடு (Productive Activity) கலை இலக்கிய ஆக்கங்களில் ஏற்படுத்திய ச்ெலவாக்குகள் விரிவான ஆய்வுகளுக்கு உட்பட்டவை. உற்பத்திக்குரிய புதிய கருவிகள் உருவாக்கம் பெறும் வேளை பாவனையிலிருந்த பழையன, காட்சிப் பொருளாகவும் பழைமையின் இயல்புகளையும் நினைவுகளையும் மீட்கும் அழகுப் பொருளாகவும் மாறுகின்றன. காலங்கடந்த பெருண்மியத்தளங்களில் உருவாக்கம் பெற்ற கலை இலக்கிய வடிவங்கள் காலங்கடந்த கருவிகளுக்கு ஒருவகையில் ஒப்பானவை.
மார்க்ஸ் எழுதிய மூலதனம் என்ற ஆய்வில் சுயபடைப்பு (Selfcreation) என்ற எண்ணக்கரு முன்வைக்கப்படுகின்றது. தன்னை உருவாக்கிக் கொள்ளும் காட்சியே கலை இலக்கிய உருவாக் கத்துக்குரிய காட்சியாகின்றது. அவ்வாறான சுய படைப்பாக்கத்தின் தொடர்ச்சியே வரலாற்றின் எழுகோலமாகின்றது.
உற்பத்திக்குரிய பொருள் சார் வழி முறைகள் (Material Means Of Production) பற்றிக் குறிப்பிடும் மார்க்ஸ் உற்பத்திக்குரிய sp.6Tub gFTi 6) y5)oup6op56it (Mental Means Of Production) up5uyub குறிப்பிட்டமை மார்க்சிய அழகியலின் விளக்கத்துக்குத் துணை செய்யும். முதலாளியம் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள உற்பத்திக்குரிய உளம் சார் வழி முறைகளைப் பயன்படுத்தலை அவர் தொடர்புபடுத்திக் காட்டினார். பின்னைய மார்க்சிய சிந்தனை யாளராகிய போலே பிரேரி ஒடுக்கு முறை ஆசிரியம் பற்றிய எண்ணக்கருவை முன்னெடுப்பதற்கு மார்க்சின் முன்னோடிச் சிந்தனையே வழிவகுத்தது.
மார்க்சிய சிந்தனை என்பது மார்க்சின் இறப்போடு முடிந்து விடவில்லை. அவற்றுக்கு வலுவூட்டலும் பன்முகப் பொருள் கோடலும் தொடர்ந்தன. அச் சிந்தனைகளின் தொடர்ச்சியும்
16 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சிய அழகியலின் தளம்
விலகலும் என்ற எண்ணக்கரு விரிக்கம் பெறலாயிற்று. ஏங்கெல்ஸ் மார்க்சிய சிந்தனைகளை அடியொற்றி வடிவமைத்த உலகுபற்றிய நோக்கு என்பதற்கு இயங்கியல் பொருள் முதல்வாதம் என்ற பெயர் ரூசியமார்க்சிய சிந்தனையாளராகிய ஜோர்க்கி பிலிகனோவ் (Georgy Plekhanov) (1895-1918) அவர்களால் வழங்கப்பட்டது.
மார்க்சின் சிந்தனைகளை அடியொற்றிய பின்வரும் அறிகைக் கிளைபரப்பல் வளர்ச்சி பெறத் தொடங்கியது.
(l) தீவிரமான புரட்சிகளை மீள வலியுறுத்தும்
மேலெழுச்சி அறிகை
(2) மென்போக்கு அல்லது சீர்திருத்த நோக்குடைய
அறிகை.
(3) பொறிமுறையானதும் வாய்ப்பாடுகளுக்கு உட்படுத்து
வதுமான அறிகை.
(4) முதலாளிய செயற்பாடுகளோடு இணைந்த தொழி லாளர் நலன்களை வென்றெடுக்க முடியும் என்ற அறிகை. இந்த அறிகையை அடியொற்றியே ஐரோப்பிய பொதுவுடைமை வாதம் (Euro Communism) வளரலாயிற்று. அதன் செல்வாக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றது.
(5) தேசிய தேவைகளை அல்லது சுயநிர்ணயிப்பை (Self Determination) மார்க்சியத்தோடு இணைந்த அடையாளமாகக் கருதல்.
(6) மார்க்சியத்தைத் திரிபுபடுத்திச் செல்லும் அறிகைத்
தொழிற்பாடு.
மார்க்சிய சிந்தனைகளின் தொடர்ச்சியும் வளர்ச்சியும் லெனினுடைய (1870-1924) ஒன்றிணைந்த பங்களிப்பும் மார்க்சியம் - வெனினிசம் என்ற எண்ணக்கருவை உருவாக்கியது. மார்க்சியத்தை அடியொற்றிப் பல்வேறு ஆய்வுத்துறைகள் தழுவிய எழுத்தாக்கங்கள் லெனினால் முன்வைக்கப்பட்டன. அரசு என்ற கட்டமைப்பின் உருவாக்கம் செயற்பாடு மற்றும் உதிர்வு முதலாம் அறிகை முறைமையில் மார்க்சும் லெனினும் ஒருநோக்கு உடையவர்களாகவே காணப்பட்டனர்.
மார்க்சிய அறிகை முறைமையிலிருந்து மேலெழுச்சி கொண்ட இருவேறுபோக்குகளை ரொஸ்கியிடத்தும் ஸ்டாலினிடத் தும் காண முடியும். ஸ்டாலின் குறிப்பிட்ட அரசின் பலத்தை ஓங்கச் செய்யும்
கலாநிதி சபா ஜெயராசா 17

Page 11
மார்க்சிய அழகியலின் தளம்
வழியில் உருவாக்கிய ஒரு நாட்டில் சோசலிசம் என்ற எண்ணக்கரு ஒருகோணப்படுத்தியது. ரொஸ்கியின் புரட்சியை தொடர்ச்சியான, குறுக்கீடுகள் அற்ற செய்ல முறையாகத் தரிசித்தலும, அகிலப் புரட்சி எண்ணக்கருவும் பன்முகச் சிந்தனைப் போக்குகளை உருவாக்கின. ஸ்டாலினுடைய சிந்தனைகளும் செயற்பாடுகளும் மார்க்சிசம் தொடர்பான தனித்துவமான புலக்காட்சிகளுக்கு இட்டுச் சென்றன. மேலும் மார்ச்சிய சிந்தனைத் தளத்தை அடியொற்றி மேலெழுந்த லூகஸ், கிராம்சி , மார்க்யுஸ் அல்துஸ்ஸர், மாசேதுங் என்பவரக்ளை அடியொற்றிய அறிகைக்கிளைகளை (Cognitive Branches) பரப்பல்கள் மேலெழுந்தன.
மார்க்சியக் கருத்தியலில் இடம் பெற்ற அடிக்கட்டுமானமும் அதன்மேல் மேவிய அமைப்புக்களும் என்பது கட்டுமானவாதம் அல்லது கட்டுமானவியல் (Structuralism) சிந்தனைகளுக்கு இட்டுச் சென்றன. 1960 ஆம் ஆண்டவிஸ் பிரான்சில் எழுச்சி கொண்ட ஆய்வறிவுச் சிந்தனையாக அது எழுச்சி கொண்டது. சமூகம் மற்றும் பண்பாட்டுத் தோற்றப்பாடுகளின் அடிப்படைக் கட்டுமானங்களைக் கண்டறியும் புலமைச் செயற்பாடுகள் அங்கே முதன்மை பெற்றன. பின்வருவோர் இத்துறையில் ஈடுபாடு காட்டினர்.
1. அல்துஸ்ஸர் (1918 & 1990) மெய்யியல் (2) சசூர் (1857 - 1913) மொழியியல்
3) ஜக்கோப்சன் (1896 - 1982) மொழியியல்
(4) லிவிஸ்டாற்றஸ் (1908 - ) மானிடவியல்
(5) ரோலண்பார்த் (1915 - 1980) இலக்கியத்திறனாய்வு (6) ஜீன்பியாசே (1896 - 1980) குழந்தை உளவியல்
(7) மிசேல் பூக்கோ (1926 - 1984) அறிவு வரலாறு
(8) ஜே. லகான் (1901 - 1981) உளப்பகுப்பு உளவியல்.
மொழி யியல் அமைப்பியல் பற்றி விளக்க வந்த முன்னோடியாக சசூர் விளங்கிக்னறார். மொழி என்பது அமைப்பியல் தொகுதி என்பது அவரது கருத்தாகும். அதன் உள்ளமைந்த கூறுகள் ஒன்றுக்கும் மற்றையதற்குமுள்ள தொடர்புகளால் நிர்ணயிக்கப் படுகின்றன. ஒன்றுக் கொன்று வித்தியாசப்படுத்திக் காட்டும் குறிவடிவிலான அமைப்பே மொழி யாகின்றது. உதாரணமாக மாமரம் என்று குறிக்கும் குறிக்கும் நிஜமான மாமரத்துக்கும் தொடர்பில்லை. ஒவ்வொரு மொழியிலும் மாமரம் என்று குறிக்கும் குறிக்கும் நிஜமான சொல்லுக்கும் மாமரத்துக்கும் தொடர்பில்லை. ஒவ்வொரு மொழியிலும் மாமரம் என்ற தாவரத்தைக் குறிக்கும்
18 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சிய அழகியலின் தளம்
ஒவ்வொரு விதமான குறிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அமைப்பியலின் முதன்மை ஏற்றங்களாக (Principles) பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
(II) சமூகம் மற்றும் பண்பாட்டுத் தோற்றப்பாடுகள் -
தமக்கென சாராம்சத்தை (Essence) கொண்டிருப் பதில்லை. ஆனால் அவை உள்ளார்ந்த கட்டமைப்பி னால் வரையறுக்கப்படுகின்றன. உள்ளார்ந்த கட்ட மைப்பு என்று கூறும் பொழுது, அதன் பகுதிகளுக் கிடையேயுள்ள தொடர்புகளே குறித்துரைக் கப்படு
கின்றன.
(2) கலைப் படைப்புகளின் கட்டமைப்பு பல்வேறு விதமான பொருள் கோடல்களுக்கு இட்டுச் செல்லக் கூடியது.
மார்க்சின் சிந்தனகைள் எவ்வாறு அறிகை விரிவாக்கங்களுக்கு இட்டுச் சென்றன என்பதை அந்தோனியா கிராம்சியின் கருத்துருவாக்கம் வெளிப்படுத்துகின்றது. அரசு என்பது பறிப்பை அல்லது சுரண்டைைல மேற்கொள்ளும் வர்க்கத்துக்குச் சார்பானது என்றும் அதனோடு இணைந்த நிறுவனங்கள் அப்பணியைக் கச்சிதமாக முடித்தும் வைக்கின்றன என்றும் குறிப்பிட்டு அக் கருத்தை மேலும் விரிவாக்குகின்றனர். மார்ச்சின் கருத்தை வலுப்படுத்தி கிராம்சி குடிசார்சமூகம் (Civil Society) என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தார்.
மார்ச்சின் கருத்திலே பொருள் மியத்தளம் அடிக்கட்டுமானம் ஆகின்றது. அதன் மேலமைந்த கட்டுமானமாகிய அரசியற் கட்டுமானம் வன்முறையின் வழியாக்கச் சுரண்டலையும் பறிப்பையும் வெளிப்படையாகவும் வன்முறையாலும் மேற்கொள்ளுகின்றது. அதே வேளை கிராம்சி குறிப்பிடும் குடிசார் சமூகம் குடும்பம், கல்வி நிறுவனங்கள், சமய நிறுவனங்கள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்கள் வழியாக ஆளும் வர்க்கத்தினருக்கு ஆதரவான, இசைவுள்ள உளப்பாங்குகளை உருவாக்கிய வண்ணமுள்ளது. பொதுவான சம்மதம், பொதுவான மனச்சான்று , அரசு சொல்பவற்றை மறுப்பின்றி ஏற்றல், ஒத்துமேவும் பண்பாட்டின் ஆக்கம், ஏற்புடைமை (Passivity) தவறான உள்ளுணர்வாக்கம் முதலியவை அவற்றிலே குறிப்பிடத்தக் கவை. அந்நியமான உணர்வாக்கம், தன்னெழுச்சி கொண்ட அடங்கிச்
கலாநிதி சபா ஜெயராசா 19

Page 12
மார்க்சிய அழகியலின் தளம்
செல்லும் உளக்கோலம் என்பவற்றைக் குடிசார் சமூகம் உருவாக்கிய வண்ணமுள்ளது.
மரபுவழிவந்த கலை இலக்கிய ஆக்களின் சாராம்சமாக மேற்குறித்த உள்ளடக்கம் உருவாகியது. அத்தகைய உள்ளடக்கக் கனதியே அழகின் பரிமாணம் என்று கருதும் மரபுவழித் திறனாய்வுகளும் நிடித்து நிலவுதலையும் இச்சந்தர்ப்பத்திலே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
குடிசார் சமூகத்தின் வழியாகவே ஆளும் வர்க்கம் தமது பண்பாட்டு மேலாதிக்கத்தை வலியுறுத்தியும், நிலை நிறுத்தியும் வருகின்றது என்பது கிராம்சியின் கருத்து. அதன் வழியாக அரசு நீதியாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்கின்றது என்ற தோற்றப்பாடு நம்பவைக்கப்படுகின்றது. அரசின் வன்முறையும், இரும்புக் கரங்களும் அதனால் இலாவகமாக மறைத்து வைக்கப்படுவதாக கிராம்சி குறிப்பிட்டார். அதன் வழியாகவே அரசு நீதியும், பொதுநலவுறுதியும் கொண்ட நிறுவனமாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது.
ஏறத்தாழ இதே கருத்துக்கள் மார்க்சிய வழித்தோன்றல்கள் பலரிடத்து வெவ்வேறு வடிவங்களில் மலர்ச்சி கொண்டுள்ளமையைக் காணமுடியும். சில எடுத்துக்காட்டுகள்.
அல்துஸ்ஸர் - கருத்துருவ அரசுப் பொறிக் கருவி (Ideolo Gical State Appratus)
லூகஸ் - திரட்டிய ஒரு முகமாக்கப்படுதல் (Totalising) கேர்பட் மார்க்யுஸ் - ஒற்றைப் பரிமாண மனிதன் மிசேல் பூக்கோ - அறிவும் அதிகாரமும் போலோ பிரேரி - ஒடுக்குமுறைக்கான கல்வி
கிராம்சி மேலும் தமது முன்மொழி வை வளர்த்துச் செல்கின்றார். சுரண்டலையும் வன்முறையையும் மேற்கொள்ளும் வர்க்கத்தின் குடிசார் சமூக மேலாதிக்கத்தினுள்ளே மார்க்சிய சிந்தனையாளரும் வினைப்பாட்டாளரும் உறுதலையீடுகளை மேற் கொள்ளல் வேண்டும். இந்நிலையில் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் மானிட நோக்குடைய ஆய்வறிவாளர்களோடு இணைந்து ஒரு பரந்த வினைப்பாட்டுத் தளத்தை ஏற்படுத்தல் வேண்டும் மென்று அவர் வலியுறுத்தினார். அவர் மார்க்சிய சிந்தனைகளுக்கு வலுவூட்டி யவர் என்ற ஒரு கருத்தும் அவரால் மார்க்சியம் சிதைக்கப்பட்டது
20 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சிய அழகியலின் தளம்
என்ற திறனாய்வுகளும் தொடர்ந்த வண்ண முள்ளன. ஆனாலும் சமூகமும் அரசும் பற்றி அவர் தோற்றுவித்த நுண்ணிய புலக்காட்சி கலை இலக்கியங்களை விளக்குவதற்கும் அவற்றின் நுண்பொருள் களின் நேர் - எதிர்விசைகளைக் கண்டறிவதற்கும் துணை நிற்பதை மறுக்க முடியாது.
முதலாளியம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் உற்வுகளை யும் கலையாக்கங்கள் வழியாக உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது. அதை தென்படாத வகையில் நிலைநிறுத்து வதற்கு கலையின் உலகம் எதற்கும் அடங்குவதில்லை என்ற போர்வையை விரித்து விடுகின்றது. பூர்சுவாசமூகம் தமது நலன் களைத் தூய அழகியல் என்ற கருத்தியலால் மூடி விடுகின்றது.
முதலாளித்துவத்தால் உருவாக்கப்படும் பொருள் உறவின் ஆதிக்கம் உளவியல் உறவின் ஆதிக்கமாக நிலை மாற்றப்படு கின்றது. அதாவது உற்பத்திப் பண்டங்களுக்கு அடிமையாகும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் நீட்சியிலே மனிதரின் சுயம் அல்லது தன்னிலை இழக்கப்படுகின்றது. அத்தகைய இழப்பு நிலையைத் தனக்குச் சாதகமான அழகியல் ஆக்கங்கள் வழியாக முதலாளியம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
மார்க்சிய அழகியல் உளவியல் நிலையில் பாட்டாளிகளுக் குரிய அழகியலாகின்றது. அந்த அழகியற் கூறுகள் பூர்சுவாக்களுக்கு அழகற்றவையாகத் தோன்றுதல் தவிர்க்க முடியாதது.
கலைவழியான அறிவூட்டல் அழகியலின் சிதைவு என்ற கருத்தாக்கம் முதலாளியவயப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தின் அழகியற் சுவையும் வர்க்க உணர்வும் வேறுபிரிக்க முடியாதவை. கலை இலக்கியங்கள் வர்க்க உணர்வின் நீர்த் தேக்கங்களாக இருத்தல் மார்ச்சிய அழகியலின் சிறப்பார்ந்த பரிமாணமாகின்றது.
அழகியல் தளத்தில் மார்க்சியப் படைப்பாளிகளின் பணி மாக்சிய அரசியலாளர்களிலிருந்தும் வேறுபட்டது. அரசியல் நேரடியான தூண்டி - துலங்கலுக்குரியது. ஆனால் கலை இலக்கியப் படைப்பாளிகள் அவ்வாறான நேரடித் தந்திரங்களை வகுப்பவர்கள் அல்லர் அவர்களுக்குரிய தூண்டிகள் தனித்துவமான கலைச்செயல் முறைகளுக்கு உட்பட்டே துலங்கலாக வெளிவருகின்றது.
கலாநிதி சபா ஜெயராசா 21

Page 13
மார்க்சின் உற்றுணர்வுக் கோட்பாடு
4. மார்க்சின் உற்றுணர்வுக் கோட்பாடு
மெய்யியலிலும் உளவியலிலும் பேசப்பட்டுவந்த உற்றுணர்வு (Consciousness) என்ற எண்ணக்கரு இன்று விஞ்ஞானத்திலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் பொருளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விஞ்ஞான பொருள் முதல்வாத அடிப்படையில் உற்றுணர்வை நோக்கிய முதல் ஆய்வறிவாளராக கார்ல் மார்க்ஸ் அவர்களே விளங்குகின்றார்.
அண்மைக்காலங்களில் நரம்பியல் சார் உயிரியலாளர், நரம்பியல் விஞ்ஞானிகள் அறிகை உளவியலாளர் மற்றும் செயற்கை நுண்மதி தொடர்பான ஆய்வாளர்கள் இத்துறையிலே ஆழ்ந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே எண்ணமுதல் வாதிகளும் சமய மெய்யியலாளரும் இலட்சிய நிலையில் இறைவன், ஆன்மா, மனம் (உற்றுணர்வு) ஆகிய எண்ணக்கருக்களை முன்வைத்தனர்.
பெளத்த மெய்யியலாளர் சிலர் கார்ல் மார்க்சுக்கு முன்னரே அதாவது இற்றைக்கு 2550 ஆண்டுகளுக்கு முன்னர் பொருள் முதல் வாத அடிப்படையில் அல்லது சடவாத நோக்கில் உற்றுணர்வு விளக்கப்பட்டுவிட்டதென்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் மார்க்சின் பொருள் முதல்வாதம் அதிலிருந்த வேறுபட்டது. மார்ச்சியம் இயங்கியல் தருக்கத்தை அடியொற்றி நிற்பதனால் முன்னைய பொருள் முதல்வாதம் அல்லது சடவாதம் எனப்திலிருந்து அடிப்படையில் வேறுபட்டு நிற்பதை மனங்கொள்ள வேண்டி யுள்ளது.
மேலும் பெளத்தமரபில் உற்றுணர்வை விளக்கிய கச்சாயனா அவர்கள் புறநிலைவாதத் தளத்தில் நின்று அதனை அணுகினார். பெளத்தமரபில் புராண காசப அவர்களும் வினைப் படாவாதம் (Inactivism) அல்லது அக்கிரியா வாதத் தளத்தில் நின்று விளக்கியமை குறிப்பிடத்தக்கது- இவை அனைத்தும் மார்க்சிய நோக்கிலிருந்து அடிப்படையில் வேறுபாடு கொண்டவை. 22 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சின் உற்றுணர்வுக் கோட்பாடு
உற்றுணர்வு என்பது பொருட் கூறுகளில் இருந்து விடுபட்ட அருவநிலையான அல்லது சூக்கும நிலையான ஆக்கம் என்பதை மார்க்ஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. அல்லது மரபுவழியான சட்டவாதிகள் குறிப்பிடுதல் போன்று குரூரமான பொருள் அடைப்புக்குள் உற்றுணரவைக் கொண்டு செல்லவில்லை. அதாவது உற்றுணர்வை வெறுமனே ஒரு சடப் பொருள் என்று குறுக்கியும் அவர் வரையறை செய்யவில்லை.
உற்றுணர்வு பற்றிய தெளிவான முன்மொழிவுகளை மார்க்ஸ் மூலதனம் என்ற நூலிலே தந்துள்ளார்.
மனிதரின் பொருண்மிய நடவடிக்கைகளுடனும், நடப்பு வாழ்க்கையுடனும், வாழ்க்கை மொழியுடனும் இடைவினையும் ஊடு தொடர்பும் கொண்டு உருவாக்கம் பெற்றவரும் பொருளாக உற்றுணர்வை அதாவது மனிதமனத்தை அவர் குறிப்பிடுகினற்ார். பொருள்சார் உலகின் தெறிப்பு வினைப்பாடாகவே உற்றுணர்வு உருவாக்கம் பெறுகின்றளது. அதனை அடியொற்றியே சிந்தனையும் கட்டுமை செய்யப்படுகின்றளது.
மூளையின் ஊடுதொடர்பு இன்றி உற்றுணர்வு சாத்தியப்படாது. புலன்சார் உணர்வுகளம் பதிவுகளும் சாத்தியப்படமாட்டா. இயற்கையுடன் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் இடை வினைகள் வாயிலாக மனித இனத்தின் மூளைபடி மலர்ச்சியடைந்து வந்துள்ளது. அது ஆற்றலும் திறனும் மிக்கதாய் மேலெழுந்துள்ளது. பொருட் கூறுகளின் அசைவில் ஏற்பட்ட ஒரு முன்னேற்றகரமான வடிவமாகவே உற்றுணர்வு உருவாக்கம் பெற்றுள்ளது.
மூளையின் தொழிற்பாட்டினாலும், விளைவாக்கத்தினாலுமே உற்றுணர்வு தோற்றம் பெறுகின்றது. என்ற கருத்தை மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் ஆகியோர் பல நிலைகளிலே விளக்கி யுள்ளனர்.
மூளையின் தொழிற்பாட்டின் விளைவாகவே உற்றுணர்வு தோற்றம் பெறுதலை அண்மைக்காலத்தைய அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. இத்துறையில் ஆழ்ந்த ஆய்வுகளை மேற் கொண்டுவரும் அறிகைக் கற்கை மையத்தின் பணிப்பாளர் டானியல்
கலாநிதி சபா ஜெயராசா 23

Page 14
மார்க்சின் உற்றுணர்வுக் கோட்பாடு
டெனத் அவர்களின் முடிவுகள் உற்றுணர்வின் இருக்கையானது மூளை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. அதாவது மூளையுடன் சம்பந்தப்படாத சூக்குமமான பொருளாக உள்ளமோ உற்றுணர்வோ அமைதல் இல்லை.
உற்றுணர்வை மூளை எவ்வாறு உருவாக்கிக் கொள்கின்றது என்பதை ஆராய்ந்தவர்களுள் சசன்கிறீன்பீல்டு அவர்களும் சிறப்பாகச் சுட்டிக்காட்டப்படத் தக்கவர். மூளை எத்தனை யநுண்பொருட்களால் ஆக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்து அவரது ஆய்வுகள் மேலெழாயின. இத்துறையில் பற்றீசியா சேர்ச்லாந், ஜோன் சியர்லே, கார்ல் பொப்பர் முதலிய மெய்யியலாளரும் கவனம் செலுத்தியுள்ளனர்.
மேலும் அண்மைக்காலத்தில் ஐகொர் அலஸ்ஸாண்டர் அவர்கள் நிகழ்த்திய ஆய்வுகளும் உற்றுணர்வு தொடர்பான மார்க்சிய விளக்கங்களுக்கு உறுதுணையாகவுள்ளன. அவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் மூளை நரம்பியற் பொறியியற் பேராசிரியர் மூளை நரம்புகளின் செயற்றொகுதி அமைப்பை அடியொற்றி அவர் ஆய்வுகளை மேற்கொண்டார். அவ்வாறான செயற்கை வலைப் பின்னற் செயற்றொகுதி அமைப்பு மக்னுஸ் (Magnus) என அழைக்கப்ப்டடது.
பொறிகள் நிஜமூளைக்கு ஒப்புமையான செயற்நபாடுகளை மேற்கொள்ளலை தனது ஆய்வுகளில் இருந்து அவர் வெளிப் படுத்தினார்.
அதாவது உற்றுணர்வு என்ற செயற்பாட்டைச் செயற்கைப் பொறிகள் மேற்கொள்ளல் மனிதம் பற்றிய மார்க்சிய விளக்கத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது.
நுண்பொருட் கூறுகளின் அமைப்பாலும், இயக்கத்தினாலுமே உற்றுணர்வுகளும் உள்ளுணர்வுகளும் தோற்றம் பெறுகின்றன என்ற மார்க்சிய இயங்கியற் பொருள் முதல்வாதத் தருக்கம், மூளைநரம் பியளல் தொடர்பான அண்மைக்காலத்தைய ஆய்வுகளினால் மேலும் பலம் பெறத்ததொடங்கியுள்ளது. அண்மைக்காலத்தைய விஞ்ஞான
வளர்ச்சிபோன்ற நிலை கார்ல் மார்க்சின் காலத்தலே காணப்படவில்லை. ஆயினும் அவரது சிந்தனைகள் காலத்தை விஞ்சி நின்றன.
கார்ல்மாரக்ஸ் மறுதலிக்கப்படவில்லை. அவரது முடிவுகள் விஞ்ஞான ஆய்வுகளினால் மேலும் உறுதிபெறத் தொடங்கியுள்ளன.
24 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சின் உளவியலின் தளம்
5. மார்க்சிய உளவியலின் தளம்
ஆங்கிலத்தில் அழகியல் (Aesthetics) என்ற எண்ணக்கரு கிரேக்க மொழிச் சொல்லாகிய Aistheton என்பதிலிருந்த தோற்றம் பெற்றது. புலன்களாற் காட்சி கொள்ளத்தக்க ஆற்றலுடையது என்பது அதன் பொருளாகும். அந்த எண்ணக்கருவை 1750 ஆம் ஆண்டில் பவும்காட்டன் (1714 - 1762) என்பார் முதலில் மெய்யியல் ஆய்வுகளிளேல எடுத்தாண்டார். புலன்களால் உருவாக்கம் பெற்ற விஞ்ஞானம் என அவர் அதனை வரையறைப்படுத்தினார். அழகியல் பற்றிய நவீன விளக்கங்கள் அவரைத் தொடர்ந்து விரிவாக்கம் பெறலாயின. தொடக்க காலங்களிலே கலையாக்கத்துக்கும் கைவினை (Craft) ஆக்கத்துக்குமிடையே வேறுபாடு காணப்படாத நிலையே தோற்றம் பெற்றிருந்து. பதினேழாம் நூற்றாண்டிலே ஏற்பட்ட கல்வி வளர்ச்சியும் நுண்ணிய வகைப்படுத்தும் அறிகை முறைமையும் கவின்கலை உயர்கலை முதலாம் எண்ணக்கருக்களைத் தோற்றுவித்தன.
இயற்கையிலே காணப்படும் அழகுக்காட்சிகளுக்கும் மனிதரால் தோற்றுவிக்கப்படும் அழகுக்குமிடையே வேறுபாடு உண்டு. மனிதரால் தோற்றுவிக்கப்படும். கலையாக்கங்களிலே உணர்ச்சிகளும் கருத்தும் உட்பொதிந்திருக்கும். தொடர்பாடல் நோக்கம் அதன் உட்கிடக்கையாக அமைந்திருக்கும். மார்க்சிய அழகியலை விளங்கிக் கொள்வதற்கு இது ஒரு முக்கியமான படிநிலையாகும்.
உளப்பாங்கு என்பது அழகியல்உளவியலிலே வலியுறுத்தப் படும் ஒரு சிறப்பார்ந்த எண்ணக்கருவாகும். பொருத்தமான உளப்பாங்கு(Attitude) இன்றி அழகைச் சுவைக்க முடியாது.
அழகியல் உளவியலிற் புலக்காட்சி கொள்ளலிலே சிக்கனம் (Perceptual Economy) வலியுறுத்தப்படுகின்றளது.
கலாநிதி சபா ஜெயராசா 25

Page 15
மார்க்சின் உற்றுணர்வுக் கோட்பாடு
அடுத்து வலியுறுத்தப்படும் முக்கியமனா கருத்து அழகியல் தூரம் (Aesthetic Distance) பற்றியது. ஒருவரின் உள அமைப்புக்கும் கலைப் பொருளை அறிகை கொள்வதற்குமிடையேயுள்ள இடை வெளியை அது குறிப்பிடுகின்றது. நியமநேரத்துக்கும் அழகியற் படைப்பு உருவாக்கும் நேரத்துக்குமிடையேளள்ள இடைவெளி யாலும் அது விளக்கப்படும்.
அழகியல் அனுபவம் என்பது அழகியல் உளவியலிலே வலியுறுத்தப்படும் ஒரு சிறப்பார்ந்த எண்ணக்கருவாகும். புலன் தூண்டிகளை அடியொற்றி உருவாக்கப்படும். அந்த அனுபவம் ஒரு முனைவில் திருப்தியையும் மறுமுனைவில் அங்கலாய்ப்பையும் ஏற்படுத்த வல்லது. ஒரு புறம் நேர் உளப்பாங்குகளையும் மறுபுறம் எதிர் உளப்பாங்குகளையும் உருவாக்கவல்லது. அவற்றுடன் இணைந்து எழுச்சிகொள்வது அழகியல் மகிழ்ச்சி யாகும். அனுபவத்துடன் இணைந்ததே மகிழ்ச்சியென உளவியலிலே விபரிக்கப்படுகின்றது. அழகு அறிகை சார்ந்த வெகுமதியைத் தருகின்றது. அத்துடன் அது தீர்ப்புக் கூறலுக்கும் (Judgement) இடமளிக்கின்றது.
அழகியல் உளவியல் அழகியலால் விரிந்தெழும் அறிவு (Aesthetic Knowledge) upstSulb 6 JaSupggs/Sailps. -glgiugilb ஈடுபாடு - கற்றல் முதலியவை கலைப்படைப்புக்களால் உருவாக்கம் பெறுகின்றன.
எல்லாக் கலைப்படைப்புக்களும் எல்லாரைலயும் திருப்திப் படத்தக் கூடியவை அன்று. இதன் அடிப்படையிலிருந்து விருப்பற்ற நிலையின் விருப்பெழல் (Disinterestedly. Interesting) உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுக்குத் தெரிந்திருக்கத் தேவையில்லை எனப்வற்றையும் கண்டு நாம் விரும்பும் மகிர்ச்சியும் கொள்கின்றோம். இவ்வேளையில் விருப்பற்ற நிலையும் விரும்பும் முரண்பட்ட எண்ணக்கருக்களாக அமைவதில்லை.
26 மார்க்சிய உளவியலும் அழகியலும்

சோசலிச நடப்பியல்
6. சோசலிச நடப்பியல்
பொழ்க்கையைப் பொய்ம்மையின்றி அழகியல் வழிவெளிப் படுத்துதல் சோசலிச நடப்பியல் (Socialist Realism). கலை வரலாற்றில் ஓர் உன்னத நிலையாக இது கருதப்படுகின்றளது. சமூக நோக்குடைய கலைச் சிந்தனையை அது புலப்படுத்துகின்றது.
விஞ்ஞான அறிகை தனித்துவமான கணிதக் குறியீடுகளை அடியொற்றி எழுதல் போன்று நடப்பியற் சமூகத்தைக் கலைப் படிமங்களை அடியொற்றி அழகியல்தனித்துவங்களுடன் வெளியிடல் சோசலிச நடப்பியலில் முன்னெடுக்கப்படுகின்றது. படிமங்கள் வழியான வெளிப்பாடு மனித அறிகை வளர்ச்சியோடு ஏற்பட்டஒரு நிகழ்ச்சியாகும். அது கலையாக்கத்தின் உயிர்ப் பொருளாகின்றது.
கலைமுறை (Method) என்பதும் எழுநடை(Style) என்பதும் வேறுபட்டவை. சோசலிச நடப்பியல் ஒருமுறையாகும். sglgil பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய பரந்த எண்ணக்கரு. உறுநடை என்பது கலை முறையோடு இணைந்த தனித்துவ மாகின்றது.
சோசலிச நடப்பியல் சமூக உண்மையோடு தொடர்புடையது. அது வகைமாதிரியான திரிபுபடுத்தப்படாத பாத்திரங்களாலும் வகைமாதிரியான சூழமைவினாலும் வெளிப்படுத்தப்படும்.
கோர்க்கியின் எழுத்தாக்கங்களில் இருந்து 1932 ஆம் ஆண்டளவிலே தோற்றம் பெறத் தொடங்கிய சோசலிச நடப்பியல் அதன் வளர்ச்சிப் பாதையிலே சமூக அசைவியங்களோடும் மாற்றங்களோடும் இணைந்த புதிய பரிமாணங்களை உட்கொண்டு
வருகின்றது. சோசலிச நடப்பியலுக்கு ஆரம்ப காலங்களிலே பாட்டாளிகளின் நடப்பியல் என்ற பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவியது. நடப்பியலையும் கோட்பாட்டையும்
கலாநிதி சபா ஜெயராசா 27

Page 16
சோசலிச நடப்பியல்
இணைத்து நோக்கும் அகல்விரி எண்ணக்கருவாக சோசலிச நடப்பியல் தோற்றம் பெற்றது. உலகநோக்கையும் படைப்பியலையும் அந்த எண்ணக்கருசங்கமிக்கச் செய்கின்றது. நடப்பியல் உலகு தழுவிய பொருண்மை நிலையை அது வெளிப்படத்தி நிற்கும். சோசலிச நடப்பியல் பற்றிய தெளிவற்ற நிலையில் அது படைப்பாளியின் கட்டற்ற சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திவிடுகின்றது என்று குறிப்பிடுகின்றனர். சமூகத்தைப் பகுத்தறிதலும், கலைச்சுவை யுடன் வெளிப்படுத்தலும் முடிவிலியாகிய செயற்பாடு என்பதை மனங்கொள்ளல் வேண்டும்.
சோசலிச நடப்பியல் கலை மொழியின் கட்டற்ற பரிமாணங் களை ஏற்றுக் கொள்கினற்து. வெளிப்பாட்டு வகைகளின் பன்முகப் பாடுகளுக்கு உற்சாகமளிக்கின்றது. பொருண்மிய வாதத்துக்கும் எண்ண முதல்வாதத்துக்குமுள்ள மோதலின் மறுவடிவமாகவே நடப்பியலும் எதிர்நடப்பியலும் தொடர்ச்சிபெறுகின்றன. கலைப் படைப்பை வர்த்தக தேவைகளுக்குரிய கனவுத் தொழிற்சாலையாக மாற்றுவதற்கு சமகாலத்தைய எதிர் நடப்பியல்வரிந்து முன்நிற்கின்றது.
சோசலிச நடப்பியல் தனிமனித முகிழ்ப்புக்கு ஆதரவு தருதல் இல்லை என்பதும் தவறான பொருள் கோடலாகின்றது. சமூக விடுதலையிலேதான் தனிமனித முகிழ்ப்பு நீடிக்கும்.
நடப்பியல் என்பது ஒரு படைப்பு மலர்ச்சி முறை. படைப் பாளியின் தரிசனத்தை எதிர்பாராத அளவுக்கு அதுவிரிவாக்கியுள்ளது. ஆழப்படுத்தியுமுள்ளது. தனித்த ஓர் எழுநடையுள் அது கலைப் படைப்பைச் சிறைப்பிடிக்க முயலவில்லை
நடப்பியல் வாழ்வில் நிகழும் இணக்கல் (Improvisation) முறைமை புதிய கண்டுபிடிப்புக்களுக்கு இட்டுச் ச்ெலகின்றது வாழ்வின் இருப்பு கருவிகளின் கண்டுபிடிப்புக்கு மட்டுமன்றி கலை வெளியீட்டு வகைகளின் கண்டுபிடிப்புக்களுக்கும் இட்டுச் செல்கினற்து. வாழ்க்கை பற்றிய தவறான மெய்யியற் கருத்துக்களை மறுதலித்தே சோசலிச நடப்பியல் எழுச்சி கொண்டது.
28 மார்க்சிய உளவியலும் அழகியலும்

சோசலிச நடப்பியல்
சோசலிச நடப்பியலின் ஆக்க முறையில்பின்வரும் பண்புகள் மேலோங்கி நிற்கும்.
l.
2.
s.
உலகின் நேர் மாற்றத்தை நம்பிக்கையுடன் நோக்கல். வாழ்க்கையைப் பொருண்மை கொண்ட வகையிலே தரிசித்தல் .. கலையின் உள்ளடங்கிய மனவெழுச்சி வலுவி னுாடாக வாசகரை வினைப்பாட்டு நிலைக்குத் தூண்டுதல்.
அதாவது வாசகர் நுகர்ச்சியாளராக இராது துலங்குவோராக உணர்ச்சி பெறுதல்,
4.
6)
இவ்வாறுதான் எழுத வேண்டும் என்று சோசலிச நடப்பியல் வலியகட்டுப்பாட்டை விதிக்கவில்லை எவ்வாறும் எழுதலாம் அதில் பொருண்மை பொதிந்திருத்தல் வேண்டும். சமூக மனச்சான்று சோசலிச நடப்பியலின் எழுபொரு ளாகின்றது. (போலோ பிரேரியின் எழுத்தாக்கங்களின் மனச்சான்று என்ற எண்ணக்கரு விரிவாக விளக்கப் படுகின்றது) m சோசலிச நடப்பியல் ஒர் ஆக்க மலர்ச்சி முறையாகு மேயன்றி அது ஒரே வார்புடைய எழுநடை (Style) அன்று கலைஞரின் ஆக்கமலர்ச்சியைத் துலங்கச் செய்யும் எண்ணிலடங்கா நுண் அலகுகளைத் துழாவி நோக்கும் சமூகத் தரிசனத்தை சோசலிச நடப்பியல் கூர்ம்மைப் படுத்துகின்றது.
கலாநிதி சபா ஜெயராசா 29

Page 17
மார்க்சிய உளவியல்
7. மார்க்சிய உளவியல்
இனைய உளவியல் சிந்தனா கூடங்களிலிருந்து மார்க்சியச் சிந்தனா கூடம் அடிப்படையில் வேறுபட்டு நிற்கின்றது. உளப்பகுப்பியல், நடத்தை இயல், அறிக்கை இயல், மானிடவியல் முதலியவை சமூக வரலாற்றையும், சமூக இருப்பையும் கருத்தற் கொள்ளாது, தனிமனிதர் என்ற பிரிநிலை யிலேதான் உளவியலைக் கட்டியெழுப்பி வருகின்றன. உளப்பகுப்பியல், அறிகை இயல் முதலியவை சமுக இடைவினைகளுக்கு (Interactions) முக்கியத்துவமளித்தாலும் அதற்குமேல் அவற்றால் நகர்ந்து செல்ல முடியவில்லை.
ஆரம்பகாலத்து உளவியல் வரைவிலக்கணங்கள் ஆன்மா பற்றிய இயல் என்பதை அடிப்படையாகக் கொண்டு விளக்கப்பட்டன. கிரேக்க மொழி யில் Psyche என்பது ஆன்மாவைக் குறித்தது Logos என்பது தருக்க வழியாகக் கற்கும் செயற்பாட்டைச் சுட்டி நின்றது. ஆன்மா என்பதற்குத் தருக்க வழியாக விளக்கம் தருதலும், எவ்வாறு அதனைக் கற்றுக் கொள்ளலும் என்பவை தொடர்பான பிரச்சினைகள் எழுந்த நிலையில் உளவியல் என்பது ஆன்மாபற்றிய ஆய்வை விடுத்து மனம் பற்றிய ஆய்வு என்ற நிலைக்கு நகர்த்திச் செல்லப்பட்டது. மனம் என்றால் என்பது பற்றிய வரையறை செய்தலும், அதனைக் கற்பதும் புதிராகவும் இடராகவும் இருந்தமை ஆய்வுநிலையில் பலசிக்கல்களை ஏற்படுத்தியது.
உளமருத்துவத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் சிக்மன் பிராட்டின் (1856 - 1939)ஆய்வுகளும் உளப்பகுப்புச் சிந்தனா கூடத்தைத் தோற்றுவித்தது. நனவு உள்ளம், நனவடி உள்ளம், நனவிலி உள்ளம் என்ற மூன்று அடுக்குகள் கொண்ட அமைப்பை விளக்கிய அவர் உளவியலில் நனவிலி உள்ளத்தின் அதீத முக்கிய்ததுவத்தை வலியுறுத்தினார். சமூகத்தின் ஏற்புடைமைகளுக்கு
30 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சிய உளவியல்
உள்ளாகாத உணர்வுகள் நனவிலி உள்ளத்திலே அடக்கியும் அழுத்தியும் வைக்கப்படுகின்றன. அதுவே மனித நடத்தைகளை உருவாக்கும் பலம் மிக்க விசையாகத் தொழிற்பட்டு மனிதரை ஆட்டிப்படைப்பதாகவும் குறிப்பிட்டார்.
கனவுகளைப்பகுத்தாராய்தல், ஆழ்மனத்துடன் கட்டற்ற இணைப்புக்களை ஏற்படுத்தி அதன் இருப்பின் இயல்புகளை அறிந்து கொள்ளல் முதலாம் ஆய்வு முறைகளை பிராய்ட் பயன்படுத்தினார். ஆயினும் உயிரியல் விசைகளக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை சமூக விசைகளுக்கு அவரால் கொடுக்க முடியாமற் போய்விட்டது. மேலும் அவர்பாலியலுக்கு அதீத முக்கியத்துவத்தைக் கொடுத்து ஏனைய விசைகளைக் கைநழுவ விட்டுவிட்டமையும் குறிப்பிடத் தக்கது. அத்துடன் மனநோயாளிகளிடமிருந்து பெற்ற அனுபவங் களை ஏனையோருக்கும் பொதுமைப்படத்தியமையும் பொருத்தமற்ற பொதுமையாக்கலாயிற்று. அந்நிலையில் மீண்டும் புதிய முயற்சி களும் வரைவிலக்கணங்களும் உளவியற்புலத்திலே தேடப்பட லாயின.
வில்லியம் ஜேம்ஸ் என்பார் 1890 ஆம்ஆண்டில் எழுதிய உளவியற் கோட்பாடுகள் என்ற நூலில், உற்றுணர்வின் (Consciousness) அடிப்படையாக உளவியலை விளக்க முயன்றார். உற்றுணர்வு பற்றி விபரணமும் விளக்கமுமே உளவியல் என்று அவர் வரையறை செய்தார். வில்கெம்வூண்டு (1832 - 1920) என்பார் உளவியலுக்குரிய ஆய்வு கூடத்தை ஜேர்மனியிலுள்ள லெப்சிக் பல்கலைக்கழகத்தில் அமைத்து உளவியல் என்பது உற்றுணர்வு பற்றிய விஞ்ஞானம் என்ற வரைவிலக்கணத்தை வழங்கினார். ஆனால் அவர்கள் உளவியலை அகநோக்கல் (Introspection) அடிப்படையிலும் அகவயமாகவும்(Subjective) ஆய்வு செய்தமை யால் அறிவியல் பூர்வமாக அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அந்நிலையில் புறவயமாக அறிந்து கொள்ளப்படத்தக்க நடத்தைகளின் அடிப்படையில் உளவியலை வரைவிலக்கணப் படுத்தும் முயற்சிகள் மேலெழலாயின. வில்லியம் மக்டுகல் 1905 ஆம் ஆண்டில் வெளியிட்ட உடற்கூற்றியல் உளவியல் என்ற நூலில் அந்தக் கருத்து முகிழ்த் தெழலாயிற்று. 1911 ஆம் ஆண்டில் பில்ஸ் பெரி என்பார் உளவியலுக்கு மனித நடத்தைகள் பற்றிய விஞ்ஞானம்
கலாநிதி சபா ஜெயராசா 31

Page 18
மார்க்சிய உளவியல்
என்ற வரைவிலக்கணப்படுத்தினார். ஏற்கனவே டார்வின் மேற் கொண்ட ஆய்வுகள் உயிரினங்களின் படிமலர்ச்சி தொடர்பான கருத்தை வலியுறுத்தி நின்றமையால்விலங்குகள் உள்ளிட்ட ஆய்வை நடத்தை விளக்கத்தில்உள்ளடக்கிக் கொள்ளல் வேண்டுமென ஜே.பி.வாட்சன் 1911 ஆம் ஆண்டில் முன் மொழிந்தார்.
நடத்தை ஆய்வு மட்டும் உளவியலை நிறைவித்துவைக்கப் போதுமானதன்று. அந்நிலையில் நடத்தையோடிணைந்த உளச் செய்லமுறை மற்றும் உடலியக்கச் செயல்முறை முதலியவற்றை உள்ளடக்க வேண்டுமென்ற கருத்து மேலோங்கியது.
உலகில் நிகழ்ந்து வந்த அறிவின் பிரவாகம் அறிவாற்றல் பற்றியும் அந்த ஆற்றலினால் சூழலை வென்றெடுப்பதற்கு மனிதர் மேற் கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் அறியும் தேடல்கள் மேலெழலாயின. முழுமைப்புல (Gestalt) உளவியலாளர் மேற்கொண்ட புலக்காட்சி, அகக்காட்சி முதலியவையும் புறத்தூண்டிகள் உள்ளத்திலே ஒழுங்கமைக்கப்படுதலை நோக்கிய விதமும் அறிக்கை உளவியல் வளர்ச்சிக்குத்தூண்டுதலளித்தன. மனிதரது புலக்காட்சி, சிந்தனை, ஞாபகம், மொழி, எண்ணக் கருவாக்கம், படிமவாக்கம், பிரச்சினைவிடுவித்தல், படைப்புமலர்ச்சி முதலாம் துறைகளில் அறிகை உளவியலாளர் ஊன்றிய கவனம் செலுத்தலாயினர்.
புறத்தகவல்களை ஒற்றுத்தாள் போன்று மூளை உள்வாங்கிக் கொளவ்தில்லை, உளக்கட்டமைப்புக்கு ஏற்றவாறு புறத்தகவல்கள் அகத்திலே கட்டுமை (Construct) செய்யப்படுகின்றன. தகவல்களின் உள்ளிடு, அதனைத் தொடர்ந்த நிகழும் உளச்செயல் முறை அதன் பின் நிகழும் வெளியீடு முதலியவை அறிகை உளவியலின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அறிகை உளவியலை மனித விருத்தியின் படி நிலை முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ஜீன்பியா சேவிளக்கலானார். அல்துஸ்ஸரின் மார்க்சிய அமைப்புவாதத்தின் செல்வாக்கு பியாசே அவர்களிடத்து ஆழ்ந்து வேர்பதித்திருந்தது. அவர் உருவாக்கிய விருத்திப் படி நிலைகள் (Stages Of Development) தொடர்பான மாதிரிகையில் அமைப்பியலின் நேரடியான செல்வாக்கைக் கண்டு கொள்ள முடியும்.
32 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சிய உளவியல்
உளவியலின் பிறிதொரு சிந்தனாகூடமாக மானிட உளவியல் (Humanistic Psychology) a CD56) irids b Guppg). மனித இலக்குகளை, மனிதருக்குரிய தனித்தவங்களை மனிதரிடத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டிய உன்னதங்களை வலியுறுத்தும் மானிட உளவியல் மனித உருவாக்கத்தின் சமூக இருப்பைக் கண்டறியத் தவறிவிட்டது. இந்நிலையில் மார்ச்சிய உளவியல் மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது உளவியல் பற்றிய மார்க்சிய நோக்கு பின்வருமாறு அமைகின்றது.
l. சமூக வரலாற்றின் முகிழ்ப்பாக மனித உள ஆக்கம்
நிகழ்கின்றது.
2. மனித நடத்தைகள் சமூக பொருளாதார அடித்தளத்துடன் தொடர்புபட்டு நிற்கின்றன. --
3. சமூக இருப்பு மனித உணர்வுகளுக்கு அடியாதார
மாகின்றது.
4. உற்பத்தி உறவுகள் வழியாக மனித உறவுகளும்
உணர்வுகளும் முகிழ்த்தெழுகின்றன.
5. உளவியல் அகில விதிகளின் வழியாக ஆதார
மாக்கப்பட வேண்டியுள்ளது.
6. மலினமான நம்பிக்கைகளின் அடிப்படையில்
உளவியலை விளக்க முடியாது.
7. காரணம் விளைவுகளின் தொடர்புகள் உளவியலிலே
கண்டறியப்படல் வேண்டும்.
8. புறவயமானதரவுகளின் அடிப்படையில் உளவியல்
விளக்கப்படல் வேண்டும்.
9. நடைமுறைகளில் இருந்து உளவிதிகளுக்குச் செல்வ
தாயிருத்தல் வேண்டும்.
மார்க்சிய உளவியலின் மூலவராக விளங்கும் கார்ல் மார்க்ஸ் மனிதரது அந்நியமயப்பாட்டை சமூகத்தருக்கத்தின் அடிப்படையாக விளக்கினார். மார்க்சியம் மற்றும் லெனினிச் சிந்தனைகளை உள்வாங்கி பரிசோதனைகளின் அடிப்படையில் உளவியலைக் கட்டியெழுப்ப முயன்றவர்களுள் இவான்பவ்லோவ் (1849 - 1936) சிறப்பாகச் சுட்டிக்காட்டப்படத்தக்கவர்.
féll sÉ560)GðTLJL1/TGI(Conditioning) தொடர்பான நான்கு அடிப்படையான பரிமாணங்களை பரிசோதனையை அடியொற்றி
கலாநிதி சபா ஜெயராசா 33

Page 19
மார்க்சிய உளவியல்
அவர் விளக்கினார். அவை
l. இயற்கையான தூண்டி தொழில் நுட்ப அடிப்படையில் இது நிபந்தனை அற்ற தூண்டி (US) எனப்படும்.
2. இயற்கையான துலங்கல் இதுவும் தொழில் நுட்ப அடிப்படையில் நிபந்தனையற்ற துலங்கல் (UR) எனப்படும்.
3. செயற்கையான தூண்டி (அல்லது பதிவீட்டுத்தூண்டி)
இது தொழில்நுட்ப அடிப்படையில் நிப்நதனைப் படுத்தப்பட்ட தூண்டி (CS) எனப்படும். 4. தொடர்ச்சியான நிபந்தனைப்படுத்தற் செயல்முறை.
பவ்லோவின் ஆய்வுகளை அடியொற்றி கற்றல் என்ற உளவியற் செயற்பாட்டிலே பின்வரும் கோட்பாடுகள் முன்வைக் கப்பட்டன.
I. வெகுமதிகிடைக்கப் பெறாவிடில் தூண்டி - துலங்கல் இணைப்பு வலுவிழந்து விடும் இது இயல்பு அழிதல் (Extinction) 6T60TL'il IGB) Lib. 2. தூண்டிதுலங்கல் வாயிலாகக் கற்றுக் கொண்டவை வெகுமதி இல்லாதவிடத்து அழிந்த போனாலும் அது மறக்கப்படாது தன்னெழுகையாக மீட்டெடுக்கப்பட வல்லது இது தன்னெழுகை மீட்டெடுத்தல் (Spontaneous Recovery) at 60T LIG) b. 3. தூண்டிப் பொதுமையாக்கல் அதாவது தூண்டி ஒத்த பண்புடன் வேறுபட்டதாக இருப்பினும் துலங்கல் வழங்கப்படுதலை இது குறிப்பிடும். 4. தூண்டிவேறுபிரித்தறிதல்.
விளைவுதரக்கூடிய பொருத்தமான தூண்டியை ஏனைய தூண்டிகளிலிருந்து வேறு பிரித்தறிதல் தூண்டிவேறு பிரித்தறி தலாகின்றது.
தூண்டி - துலங்கல் தொழிற்பாடு பற்றிய பரிசோதனகைளை அடிப்படையாகக் கொண்ட பவ்லோவ் அவர்களின் விளக்கம் உள
34 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சிய உளவியல்
வியலைப் பொறுத்தவரை பொருண்மை கொண்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. அவ்வாறான ஆக்கத்தை முகிழ்த் தெழச் செய்வதற்கு மார்க்சிய லெனினிச சிந்தனைகள் பின்விசைகளாக அமைந்தமையை மேலைப்புல உளவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடத்தவறி விடுகின் றனர். பன்முகமான அறிவியல் ஆக்கச் சிந்தனைகளை முகிழ்த்தெழச் செய்வதில் மார்க்சியத்தின் பண்பை இணைத்து நோக்கவேண்டியது அவசியமாகின்றது. ஏனெனில் மார்க்சியம் ஒற்றைப் பரிமாணச் சிந்தனைகளையே ஆக்கமலர்ச்சியில் வலியுறுத்துகின்றது என்ற எதிர்வாதம் பலமிழந்து நிற்றலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
நடத்தையிலே சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பவ்லோவின் சிந்தனைகளை நிராகரித்த அமெரிக்க உளவி யலாளராகிய ஸ்கின்னர் என்பார் மனிதர்தாமாகவே தொழிற்பட வல்லவர் என்ற அடிப்படையில் தொழிலி நிபந்தனைப் பாடு என்ற கோட்பாட்டை முன்வைத்தார். ஆழ்ந்து நோக்கும் பொழுது எந்தவொரு தொழிற்பாடும் சூழலிலிருந்து பிரிந்து இயங்க முடியாது என்பது தெளிவு.
மார்க்சிய உளவியல் இயங்கியல் பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டது மனிதன் உள்ளிட்ட அனைத்தும்
இயங்கிய வண்ணமுள்ளன. அந்த இயக்கம் மாற்றத்தையும் வளர்ச்சியையும் உருவாக்கிய வண்ணமுள்ளது. ஒன்று மற்றொன்றாக மாறுகின்றது அல்லது வளர்ச்சியடைகின்றது. அல்லது
உயர்நிலையைநோக்கி உந்திச் செல்கின்றது. ஒரு பொருளின் சில கூறுகள் அழியும் பொழுது அவற்றிலிருநந்து புதிய பொருள்கள் தோற்றம் பெறுகின்றன. இவை மனிதன் உடல் உளவிருத்தியை விளக்குவதற்குரிய பலம்மிக்க தருக்கமாகின்றன.
பிரபஞ்சத்தில் உள்ளடங்கிய மனிதர் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தன்னிச்சையாக இயங்குவதல்லை. அவற்றுக்கிடையே தொடர்புகளும் ஒன்றன் மீது மற்றையதன் செல்வாக்குகளும் பாதிப்புக்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. அவை மாற்றங் களுக்கும் வளர்ச்சிகளுக்கும் இட்டுச் செல்கின்றன.
பொருள்களுக்கிடையே மட்டுமன்றி பொருள்களுக்கு உள் ளேயும் முரண்பாடுகள் காணப்படுகின்றன. மனிதருக்குள்ளேயும் உயிரியல் மற்றும் உளவியல் முரண்பாடுகள் உட்பொதிந்துள்ளன.
கலாநிதி சபா ஜெயராசா 35

Page 20
மார்க்சிய உளவியல்
இயங்கியல் பொருள் முதல் முதல்வாதம் மூன்று முக்கியமான விதிகளை முன்வைக்கின்றது அவை.
1. எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமும் 2. அளவுமாற்றம் பண்புசார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தல் 3. நிலை மறுப்பின் நிலைமறுப்புப்பற்றிய விதி
l. ஒன்றுக்கொன்று எதிர்ப்பண்புகள் கொண்ட அலகுகளும்,
வலுக்களும், செயற்பாடுகளும் எதிர்மறைகளாகின்றன. ஒன்று மற்றையதன் மீது ஊடுருவுகின்றளது. செல்வாக்குச் செலுத்துகின்றது. ஒன்றுமற்றொன்றின் காரணமாக இருக்கின்றது. இவை முரண்பாடுகளின் அல்லது எதிர்மறை களின் ஒற்றுமை எனப்படும். இந்த எதிர்மறை களின் முரண்பாடுகளை ஆராய்வதே இயங்கியலாகின்றது என்று லெனின் குறிப்பிட்டார். முரண்பாடுகள் பலவகைப்பட்ட பன்மை நிலை கொண்டவை. உட்கட்டமைப்பைத் தீர்மானிக் கும் முரண்பாடு அடிப்படையான முரண்பாடு என்றும் @Tഞങ്ങTu ഞഖ தற்காலிக முரண்பாடுகள் என்றும் குறிப்பிடப்படும். வர்க்கமுரண்பாடு சமரசப்படுத்த முடியாத அடிப்படை முரண்பாடாகின்றது.
2. அளவுமாற்றம் என்பது எண்ணளவு கொள்ளளவு, கனஅளவு, கால அளவு வே அளவு, என்றவாறு பலவகைப்படும். மாற்றம் தொடர்ச்சியாக நிகழலாம் அல்லது திடீர் முறிப்புப் பாய்ச்சலாக அமையலாம்.
3. பழையனவற்றிலிருந்து புதியன தோற்றம் பெறுதலை மூன்றாவது விதி விளக்குகின்றது. பழையது இன்றிப் புதியது இல்லை. பழையதை மறுத்துப் புதியவை தோற்றம் பெறும் பொழுது பழையவற்றின் ஏற்புடைய நல்லவற்றைத் தக்கவைத்துக் கொள்கின்றது. இவற்றின் அடிப்படையாகவே கருத்து - எதிர்க்கருத்து என்பவற்றின் அடிப்படையாக செழுமைப்படுத்திய புதியகருத்து தோற்றம் பெறுகின்றது.
மார்ச்சிய வழியாக உருவாக்கப்பட்டுள்ள விதிகள் மனிதவளர்ச்சி, மனிதவிருத்தி, மனித ஊடாட்டங்கள், ஆளுமை, படைப்பு மலர்ச்சி, மன வெழுச்சிகள் உளப்பாங்குகள் கற்றல் முதலாம் பல்வேறு உளவியற் பரிமாணங்களை விளக்குவதற்குத் துணையாகவுள்ளன.
36 மார்க்சிய உளவியலும் அழகியலும்

வைக்கோட்சி
8. வைக்கோட்சி
மார்க்சிய உளவியலில் வைக்கோட்சியின் (1896 - 1934) பங்களிப்பு சிறப்பாகச் சுட்டிக் காட்டப்படுகின்றது. உளவியல் ஆய்வுகளிலே பெருமளவிலே புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட உற்றுணர்வு (Consciousness) பற்றிய ஆய்விலே இவர்தீவிர கவனம் செலுத்தலானார். அறிகைத் தொழிற்பாட்டின் அடிப்படையில் உற்றுணர்வை விளக்கும் ஆய்வுகள் அவரால் முன்னெடுக்கப்பட்டன. சிந்தித்தல், உணர்வு கொள்ளல், தொழிற்படல் முதலாம் அறிகை அமைப்புக்களின் அடிப்படையில் உற்றுணர்வை விளக்க முயன்றார். மனித உணர்வுகளும் நடந்ததைகளும் நனவு மனத்தினால் நெறிப்படுத்தப்படுகின்றன. நடத்தைவாத உளவியலாளர் உற்று ணர்வை ஒர் ஆதர்ஸ்க்கற்பனை என்று கூறுவதை வைக்கோட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.
தாழ்நிலையான உளச் செயற்பாட்டுக்கும் உயர் நிலையான உளச் செயற்பாட்டுக்குமிடையே நிகழும்இடைவினைகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் அவரிடத்துக் காணப்பெற்ற சிறப்பார்ந்த எழுபொருளாயிற்று. தாழ்நிலையான உளச் செயற்பாடு புலக்காட்சி, நினைவு, கவனம் முதலியவற்றுடன் இணைந்தது. உயர்நிலையான உளச்செயற்பாடு ஒவ்வொருவருக்குமுரிய தனித்துவமான சிந்தனைக் கோலங்களுடன் இணைந்தது.
மரபு வழி உளவியலாளர் தாழ் நிலையான உளச் செயற்பாடும் உயர்நிலையான உளச் செயற்பாடும் எண்ணளவில் வேறுபட்டவை எனவிரித்துரைத்தனர். அதனை மறுத்துரைத்தவை கோட்சி அவை பண்பளவில் வேறுபட்டவை என்ற கருத்தை முன்வைத்தார்.
புதிதாகப் பிறந்த குழந்தைகளிடத்து தாழ் நிலையான உளச் செயற்பாடுகளே மேலோங்கியிருக்கும். அதாவது இயற்கையான
கலாநிதி சபா ஜெயராசா 37

Page 21
வைக்கோட்சி
உளத் தொழிற்பாடுகளாகிய கவனம், புலக்காட்சி, ஞாபகம் முதலியவை இடம்பெறும். ஆனால் விலங்குகளைப் போலன்றி மனிதர்கள் பண்பாட்டையும் உள்வாங்கிக் கொள்கின்றனர்.
உயர் நிலையான உளத்தொழிற்பாட்டைக் கண்டறிவதற்கு அவர் சிறப்பான ஒரு பரிசோதனை முறையை உருவாக்கினார். அதற்கு அவர் இரட்டைத்தூண்டல் முறை (Method Of Dual Stimulation) 6Taipi (6). Jurfil l-IIri. அது வினையாற்றல் மிக்க கவனத்தையும் தன் விருப்பான மீள அழைத்தலையும் (Recal) கொண்டது. அந்த ஆய்விலிருந்து அவரால் பெற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள் வருமாறு.
(1) குழந்தையின் வளர்ச்சியோடு குறிப்பிட்ட சொல்லுக் குரிய பொருள் கோடல் மாறறமடைகின்றது. அதாவது சொற்பொருள் மாற்றமடைகின்றது.
(2) குறிப்பிட்ட சொல் நடப்பியலைப் பிரதிபலித்தலிலே வெவ்வேறு வகையான கருத்துருவ மேற்றலையும் கண்டறிந்தார். அதாவது சொல்லின் நடிபங்கு மாற்றமடைகின்றது.
(3) குழந்தையின் விருத்திப்படி நிலைகளோடு குறிப்பிட்ட சொல்லானது. உளத் தொழிற்பாட்டை உற்றி ணைப்புச் செய்தலும் (MeDiation) கண்டறியப் பட்டது.
மேற்கூறிய ஆய்வுகளை அடியொற்றி வைக்கோட்சி அண்மை விருத்தி வலயம் என்ற மிக முக்கியமான உளவியல் எண்ணக்கருவை உருவாக்கினார். சிறார் சுயாதீனமாகப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய நிஜமான விரத்தி மட்டத்துக்கும், பிறரின் உதவியுடன் பிரச்சினை களைத் தீர்க்கக்கூடிய ஆற்றலைக் கொண்டதுமான உளமட்டத்துக்கு முள்ள இடைவெளியை அவர் அண்மை விருத்திவலயம் என்று பெயரிட்டார். உளவியலில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப் பாகும்.
கற்றலின் செயல் முறையையும் விளைவையும் கணிப்பீடு செய்தல் மட்டும் முக்கியமானது அன்று. கற்பதற்கு ஒருவரிடத்தே
38 மார்க்சிய உளவியலும் அழகியலும்

வைக்கோட்சி
நிறைந்துள்ள ஆற்றலும் கணிப்பீடு செய்யப்படுதல் வேண்டும். அதாவது ஒருவரிடத்தே மறைநிலையிலுள்ள ஆற்றல் கண்டறியப் படல் வேண்டும். அதற்கும் வளர்த்தெடுக்கப்படக்கூடிய ஆற்றலுக்கு மிடையேயுள்ள இடைவெளி அறியப்படுதல் முக்கியமானது.
பொருத்தமான கற்றல் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் வாயிலாகவும், உரியபின்னூட்டல்களை வழங்குதல் வாயிலாகவும் ஒருவருக்குரிய கல்வியை முன்னோக்கி நகர்த்திச் செல்ல முடியும். தவறான ஒரு கருத்தை அல்லது பிழையான ஓர் எண்ணக் கருவை மாணவர் முன்வைக்கும் பொழுது அதனதுடன் ஆசிரியர் இடைவினை கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வலியுறுத்தப்படு கின்றது.
வைக்கோட்சியின் அண்மை விருத்தி வலயம் என்ற எண்ணக்கரு அழகியல் அறிக்கைக்கும் பிரயோக்கப்படத் தக்கது. ஒருவரின் இயல்பான அழகியல் ஆற்றலுக்கும் ஆற்றுனர் உதவியுடன் அவரிடத்தே வளர்தெடுக்கப்படக்கூடிய ஆற்றலுக்குமிடையேயுள்ள தூரம் முக்கியமானது அது கலை இலக்கியங்களை ஆக்குவோருக்கும், சுவைப் போருக்கும் பொருந்தும். கலைஞர்களிடத்து உட்பொதி யவைக்கப்படும் சமூகம் பற்றிய அறிவு அவர்களது தொழிற்பாடுகளில் நேர்விளைவுகளை ஏற்படுத்தவல்லது. கற்பித்தலின் வழியாக சுவைஞரின் சுவைமட்டங்களும் உயர்த்திச் செல்லப்படலாம்.
கலை அழகை உயர்த்திச் செல்லல் சுவைமட்டங்களை உயர்த்திச் செல்லல் முதலியவற்றுக்குரிய உளவியல் அடிப்படையை விளங்கிக் கொள்வதற்கு அண்மைவிருத்திவலயம் துணை செய் கின்றது.
கலாநிதி சபா ஜெயராசா 39

Page 22
எரிக்புரோம்
9. எரிக்புரோம்
மார்க்சிய அழகியற் சிந்தனை வளர்ச்சியில் எரிக் புரோம் (Erich Fromm) (1900-1980) தனித்துவம் மிக்க ஆளுமை கொண்ட வராகக் கருதப்படுகின்றார். மார்க்சியத்துக்கும் உளப்பகுப் பியலுக்குமுள்ள பொதுத் தளங்களைக் கண்டறியும் அறிகை முயற்சிகள் அவரால் மேற்கொள்ளப்பட்டன. பிராய்டிசம் மற்றும் மார்க்சியம் ஆகியவற்றின் சாராம்சங்களை இணைத்து உளவியலில் ஒரு மாதிரிகையை உருவாக்க முயன்றார்.
ஒருவரது உள்ளார்ந்த மனம் அவர் வாழும் சமூக பண்பாட்டுச் சூழமைவினால் உருவாக்கப்படுகின்றது என்று வலியுறுத்தியவேளை தூய உளப்பகுப்புவாதிகள் அவரது கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். சிக்மன் பிராய்ட் தமது உளப்பகுப்புக்கோட்பாட்டில் சமூகப் பண்பாட்டுப் பரிணாமவளர்ச்சியைக் கருத்திலே கொள்ளத் தவறியுளார் என்பதைப் புரோம் சுட்டிக்காட்டினார். 1970 ஆம் ஆண்டில் அவர் விெயிட்ட உளப்பகுப்பியலின் நெருக்கடி (The Crisis Of Psychoanalysis) 6 TGðIAD ABITGS)Gav Gudfög5stógš5 55QB53605 வலியுறுத்தினார். சமூகக் கட்டமைப்பினால் உருவாக்கப்படும்
வலிமையான நியமங்களே ஒவ்வொருவரும் நடப்பியலைத் திரிபுபடுத்திச் சித்திரிக்க முயலும் செயற்பாட்டைத் தூண்டிவிடுவதாக பிராய்ட் குறிப்பிட்டார். அந்தவகையில் மார்க்சியத்துக்கும்
பிராய்டிசத்துக்குமிடையே பொதுவான தளம் தோற்றம் பெறுதலை புரோம் கண்டறிந்தார். ஆனால் பிராய்ட் அதன் வெளிப்பாட்டைப் பாலியல் என்றள குறுகிய சுருக்கத்துள் அடக்கிவிட்டதாக புரோம் வலியுறுத்தினார். பிராய்டின் தவறைத் திருத்திக்கொள்ள மார்க்சியம் கைகொடுக்கும் என்பது அவரது நம்பிக்கை.
மார்க்சும் பிராய்டும் மனித நடத்தைகள் பற்றிய கோட் பாட்டை உருவாக்கியவேளை அதனை முற்றிலும் உயிரியல் கண்ணோட்டத்தில் மட்டுமே பிராய்ட்டு விளக்கினார். அதேவேளை மார்க்ஸ் சமூக பொருளியற் கண்ணோட்டத்தில் அதனை
40 மார்க்சிய உளவியலும் அழகியலும்

எரிக்புரோம்
விளக்கியதோடு உயிரியல் காரணிகள் சமூக நிலையில் ஒழுங்கமைக்கப்படுதலையும் சுட்டிக்காட்டினார்.
மனித சிந்தனைகளின் தனித்துவம், உணர்வுகள், மனச்சான்று, பொறுப்புணர்ச்சி மற்றும் விடுதலை முதலியவை சமூக வரலாற்று வளர்ச்சியோடு பரிமாண உய்ப்பைப் பெற்றுவந்துள்ளமை புரோமால் வெளியிடப்பட்டது. நவீன வாழ்க்கையின் தனிமைப்பாடும் அந்நிய மயப்பாடும் விடுதலையைக் கடினம்ான சவாலாக்கி வருகின்றன. அவற்றை அடியொற்றி விடுதலையிலிருந்து தப்புதல் (Escape From Freedom) என்ற எண்ணக்கருவை முன்மொழிந்தார்.
சமூகப் பரிமாணவளர்ச்சியின் வழியாக உருவாக்கம் பெற்ற குடும்பங்களின் இயல்பு விடுதலையிலிருந்து தப்பும் முறையைத் தெரிவு செய்தலை உருவாக்கிய வண்ணமுள்ளது. குடும்பங்களின் இயல்புகளை அடியொற்றி குறியீட்டுக் குடும்பங்கள் என்றும் பின்வாங்கும் குடும்பங்கள் என்றும் அவர் வகைப்படுத்தினார்.
குறியீட்டுக் குடும்பங்களில் சில உறுப்பினர்கள் ஏனைய உறுப்பினர்களின் ஆற்றலை விழுங்கிவிடுவதால் அவர்கள் தங்களது ஆளுமையை வளர்த்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின் றார்கள். உதாரணமாகப் பெற்றோர் தங்களது விருப்பப்படியே தமது வாரிசுகளை வளர்த்தெடுக்கின்றார்கள். குறியீட்டுக் குடும்பங்கள் விடுதலையிலிருந்து தப்பும் செயற்பாட்டை எதேச்சாதிகார முறையில் மேற்கொள்கின்றன. இவ்வகையிலே கலை இலக்கியங்களில் இடம் பெறும் குடும்பத் தொடர்புகளை விளங்கிக்கொள்வதற்கு புரோமின் சிந்தனைகள் ஒருவகையிலே துணைநிற்கின்றன.
பின்வாங்கும் குடும்பங்கள் இருவகையாகத் தம்மை வெளிப் படுத்திக் கொள்கின்றன. இவ்வகையான குடும்பங்கள் அண்மைக் காலத்திலே தான் படிமலர்ச்சி கொண்டன. இவ்வகைக் குடும்பங் களின் ஒருவகையான வெளிப்பாடு தமது பிள்ளைகள் பற்றிய உயர்வான இலட்சியங்களைக் கொண்டிருத்தலும், அதற்குரிய உயர்வான நியமங்களை அமைத்துக் கொள்ளலுமாகும். இன்னொரு வகையான வெளிப்பாடாக அமைவது அவர்கள் தமது மனவெழுச் சிகளை இறுகக்கட்டிக் கொண்டு பிள்ளைகளிடத்து அமைதி வெளிப்பாட்டை வெளிக்காட்டி நிற்றலாகும். .
கலாநிதி சபா ஜெயராசா 41

Page 23
எரிக்புரோம்
விடுதலையிலிருந்த தப்புதலின் மூன்று otes for முறைகளை புரோம் சுட்டிக்காட்டுகின்றார். அவையாவன.
(1) எதேச்சாதிகாரவகை (2) அழிவு உளப்பாங்குவகை (3) தன்னியக்கமாக இணங்கிச் செல்லும் வகை
நவீன, மேலோட்டமான தொலைக்காட்சி வகைக் குடும்பங்களில் பின்வாங்கும் இயல்புகளே மேலோங்கியுள்ளன. தன்னியக்கமாக இணங்கிச் செல்லும் செயற்பாடு அங்கே மேலோங்கியுள்ளது.
எமது பெருஞ்சமூகத்தின் இயல்பையே குடும்பங்கள் பிரதிபலிக்கின்றன என புரோம் குறிப்பிடுதல் அவரின் மார்க்சிய அறிக்கையை வெளிப்படுத்துகின்றது. பண்பாடு நனவிலி பூர்வமாக உள்வாங்கிக் கொள்ளப்படுகின்றது. அந்த வகையில் உருவாக்கம் பெறுவதே சமூக நனவிலியாகும். இது கார்ல்யுங் உள்ளிட்ட உளப்பகுப்பு உள வியலாளர் குறிப்பிடும் கூட்டு நனவிலியிலிருந்து வேறுபட்டது. எமது பொருளாதார செயலமைப்பை ஆராய்வதன் வாயிலாக சமூக நனவிலியை விளங்கிக் கொள்ள முடியும் என புரோம் குறிப்பிடுகினற்ார்.
உளப்பகுப்பு உளவியலுடன் மார்க்சியத்தை இணைத்தமை யால் ஐரோப்பிய மார்க்சிய எழுத்தாளர்கள் அவரைக் கண்டனத்துக்கு உரியவராக்கினர். ஆயினும்அவர் எழுதிய நூல்கள் நாற்பது இலட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையாகியமை அவரின் எழுத்தாக்கப் பலத்தை வெளிப்படுத்தியது.
சமூக முரண்பாடுகளை அடியொற்றி வாழ்க்கை நயப்பினர் மற்றும் வாழ்க்கை வெறுப்பினர் என மனித ஆளுமையினை அவர் வகைப்படுத்தினார். முதலாளிய சமூகத்தில்உருவாக்கம் பெறும் இலக்கியங்களில் இடம்பெறும் மனித சித்திரிப்புக்களை விளங்கிக் கொள்வதற்கு அவரின் ஆளுமைப்பாகுபாடுகள் ஒருகையிலே துணை செய்கின்றன.
42 மார்க்சிய உளவியலும் அழகியலும்

அலெக்சாந்தர் லுரியா மற்றும் அலெக்சி லியோண்டிவ்
1.O. அலெக்சாந்தர் லுரியா மற்றும்
அலெக்சி லியோண்டிவ்
மனித உளச்செயற்பாடுகளை சமூகரவலாற்று இருப்பில் விளக்கும் முயற்சிகளை லுரியாவும் (1902 - 1977) லியோண்டிவும் (1902 - 1979) விரிவாக முன்னெடுத்தனர். இவர்கள் இருவரும் வைக்கோட்சியுடன் இணைந்து பணிபுரிந்தவர்கள். இவர்களின் ஆய்வுகள் மேலைப்புலத்து உளவியல் ஆய்வுகளில் இருந்து அடிப்படையில் வேறுபட்டவை. மேலைப்புலத்து ஆய்வாளர்கள் தனிமனிதரை அவர் வாழும் சமூக இருப்புடன் இணைத்து நோக்காது தனித்த ஒரு தீவு நிலையில் நோக்கினர். மேலைப்புலத்து அழகியல் வரைவிலக்கணங்களும் அத்தகைய ஓர் ஒற்றைப்பரிமாணத்தை அடியொற்றியே எழுச்சி கொண்டன.
சமூகச் சூழமைவின் இயல்பே ஒருவருக்குரிய, புலக்காட்சி, ஞாபகம், சிந்தனை முதலியவற்றைத் தீர்மானிப்பதில்வலிய விசையாகத் தொழிற்படுதலை அவர்களின் ஆய்வுகள் புலப்படத்தின.
மனிதருக்கும் சூழலுக்குமிடையே நிகழும் தொழி ற்பாடுகளை அவர்கள் செயற்பாடு (Activity) என்ற எண்ணக் கருவாற் குறிப்பிட்டனர். அனைத்து மனிதருக்குமுரிய அகிலப்பண்பு வாய்ந்த தொழிற்பாடாக அது அமைகின்றது. அதன் வழியாகவே கற்றலும் கலையாக்கங்களும் மேலெழுகின்றன.
லியோண்டிவ் தமது ஆய்வுகளை அடியொற்றி உருவாக்கிய உள நுட்பவியல் (Psychotechnics) என்பது பிரயோக உளவியலிலே பெரும் பாய்ச்சல்களை ஏற்படுத்தியது. அதன் விரிவாக எழக்கூடிய ஒரு முக்கியமான கருத்து அழகியலின் பிரயோகத்தன்மையாகும்.
மார்க்சியம் அழகியலின் பிரயோகத்தன்மையை வலியுறுத்து கின்றது. கலைப்படைப்பு கண்டுகளிப்பு என்பதிலிருந்த பிரயோக
கலாநிதி சபா ஜெயராசா 43

Page 24
அலெக்சாந்தர் லுரியா மற்றும் அலெக்சி லியோண்டிவ்
நிலைக்கு அசைந்து செல்லல் வேண்டும். தூய அழகியல் வாதிகள் அழகியலின் பிரயோகத்தன்மையை ஏற்றுக் கொள்வதில்லை.
வேறுசில பூர்சுவா அழகியல் வாதிகள் கலையின் பிரயோகத் தன்மையை முதலாளியத்தின் இயக்கத்துக்குத் துணை நிற்பதில் ஏற்புடைமை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
மார்க்சிய உளவியலாளர் மேலைப்புலத்து புர்சுவா நுண்மதிச் சோதனைகைளத் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தினர்.
நுண்மதிச் சோதனைகளை வடிவமைத்தவரும் அவற்றிலே தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டவருமான சிறில் பேட் (1883 - 1971) அவர்கள் நுண்மதி ஆற்றல் பெருமளவிலே பிறப்புவயப்பட்ட தென வலியுறுத்தினார். (Palmer, 2004) ஒருவரின் நுண்மதி ஆற்றலில் பருமட்டாக எண்பது சதவீத அளவு நுண்மதியானது பரம்பரையால் தீர்மானிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். பூர்சுவாவர்க் கத்தினரின் மேலாதிக்கத்தை நிறுவும் வகையிலும், தொழிலாளரின் பிள்ளைகள் நுண்மதிகுறைந்தவர்கள் என்பதை வலியுறுத்தும் வகையிலும் அவரது ஆய்வுகள் உருவாக்கம் பெற்றன.
சிறில் பேட்டின் ஆய்வுகளை அடியொற்றி மேட்டுக்குடி யினருக்குச் சார்பான வகையில் இங்கிலாந்தின் பட்லர் கல்விச்சட்டம் 1944 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
சிறில்பேட்டின் ஆய்வேடுகளையும் நாட்குறிப்புக்களையும், அவரது இறப்புக்குப்பின் ஆய்வு செய்த கேர்ண்சோ என்பார் அவரது ஆய்வு புரட்டுத்தனத்தையும் ஏமாற்றுத்தனத்தையும் (Fraud) கொண்டிருந்தமையை வெளிப்படுத்தினார். பிரித்தானிய உளவியற் கழகம் அந்த ஏமாற்றுத்தனத்தை ஏற்றுக் கொண்டது. (Palmer, - பக்கம் 252)
பூர்சுவாக்களின் நலன்களைப் பயன்படுத்த உளவியல் ஆய்வுகள் எவ்வளவு தூரம் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இவ்வாறான ஒரு சில வரையறைகளையும் மட்டுப்பாடு களையும் வைத்துக் கொண்டு உளவியல் ஒரு புரட்டுத்தனமான
அறிவியல் என்று பொதுமைப்படுத்திவிடமுடியாது.
44 மார்க்சிய உளவியலும் அழகியலும்

அலெக்சாந்தர் லுரியா மற்றும் அலெக்சி லியோண்டிவ்
மார்க்சிய எதிர்ப்பு அழகியலாளர் மார்க்சிய அழகியல் உளவியலை உள்ளடக்கவில்லை என்ற அவதானிப்பை முன்வைத்தல் உண்டு. மார்க்சிய அழகியல் வெறுமனே அரசியல் தளத்திலே உருவாக்கப்பட்டுள்ளது என்ற முன்மொழிவையும் அவர்கள் முன் மொழிவதுண்டு. இந்நிலையில்மார்க்சிய உளவியலின் முக்கியத்து வத்தை மீள வலியுறுத்த வேண்டிய தேவையும் அறிவுப் புலத்தலே தோற்றம் பெற்றுள்ளது.
கலாநிதி சபா ஜெயராசா 45

Page 25
ரூசிய போமலிசம்
11. ரூசிய போமலிசம்
(உருவவரன் முறைவாதம்)
சம காலத்தைய உலகின் எழுகோலங்கள் மீண்டும் மார்க்சுக்குச் செல்லல் (Back To Marx) என்பதன் தேவையை வலியுறுத்தத் தொடங்கியுள்ளன. மார்க்சிய நாடுகள் என்று சொல்லிக் கொண்டவற்றின் தடம் புரண்டமை மார்க்சியக்கருத்தியலைத் தவறவிட்டமையினதும் திரிபுபடுத்தியமையினதும் அவலங்களாக எழுந்தன.
மனித உளக்கோலங்களும் உளச்செயலமைப்புக்களும் பரந்துபட்ட நிஜமான சமூக இருப்பிலிருந்தும் பொருண்மிய இருப்பிலிருந்தும் மேலெழுகின்றன என்று தொடர்புபடுத்தி அறிகை கொள்ளலை எளிமையாக மலினப்படுத்திவிட முடியாது. அல்லது பொறிமுறைவட்டத்துக்குள் ஒற்றைப்பரிமாணமாகக் கொண்டு சென்றுவிடமுடியாது.
மார்க்சிய அழகியல் அல்லது மார்க்சியக்கல்வி நோக்கு குறிப்பிட்ட ஒரு குறுகிய சுற்றுவட்டத்துக்குள் மட்டும் கட்டுப்பட்டு நிற்கவில்லை. இலக்கியங்கள் சமூக ஆக்கம் பெறுதல் என்ற கருத்தை மறுத்துரைத்தலில் இருந்து மார்க்சிய மறுதலிப்புத் திறனாய்வு முன்னிடுகள் வளரலாயின. சமூக விதிகளுக்குள் இலக்கியங்கள் கட்டுப்ாபட்டிருக்கமாட்டா என்றும் நடப்பியற் சமூக நிராகரிப்பிலேதான் இலக்கியங்கள் எழுகின்றன என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படலாயின. அந்நிலையில் ரோட்ஸ்கி அவர்கள் கலையாக்கம் என்பது கலைவிதிகளுக்கு ஏற்றவாறு யதார்த்தத்தை நிலைமாற்றம் செய்தல் என்ற கருத்தை வலியுறுத்தினார். ஆயினும் கலைஞர்கள் மேற்கொள்ளும் கலைத்துவ விளையாட்டுக் களைக் காட்டிலும் நடப்பியலின் முக்கியத்துவத்தோடு அவர் ஈடுபாடு காட்டினார். வடிவப் புனைவுக்கும், கருத்தியல் உள்ளடக்கத்துக்கு மிடையே உளச்சார்பள விலான முக்கியத்தும் மார்க்சிய அழகியலிலே தொடர்ந்து நீடிக்கலாயிற்று.
46 மார்க்சிய உளவியலும் அழகியலும்

ரூசிய போமலிசம்
1917 ஆம் ஆண்டு ரூசியப் புரட்சியைத் தொடர்ந்து அங்கு நிலை பேறுகொண்டிருந்த போமலிஸ்டுகள் (உருவ வரன்முறை யாளர்) மரபு வழி மார்க்சிய சிந்தனைகளை உள்வாங்கி புதிய கமியூனிச சமூகத்துக்குரிய அழகியலுக்கு அடித்தளமிட்டனர்.
ரூசிய போமலிஸ்டுகள் கலை இலக்கியக் கோட்பாடு களுக்குரிய விஞ்ஞான அடிப்பைடகளை நிறுவ முயன்றனர். அவர்களின் வரன் நிலைச் சிந்தனைகளுக்கும் மேற்குலகப் புதிய SpaOTTullard (New Criticism) சிந்தனைகளுக்கு மிடையே அடிப்படை வேறுபாடுகள் காணப்பட்டன. அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
(அ) புதிய திறனாய்வாளர் கலை இலக்கியங்களின் கருத்தியல் நிலைகளுக்கு முக்கியத்துவம் தரவில்லை. ஓர் இலக்கியப் படைப்பின் இயல்பை தருக்கக் குறிப்புகளாகச் சுருக்கிவிட முடியாது என விதந்துரைத்தனர்.
(அ) ஆனால் போமலிஸ்டகள் கலையாக்கத்தை தருக்கக் குறிப்பாகச் சுருக்குதல் என்று புதிய திறனாய்வாளர் கூறுதல் போமலிசத்தின் உள்ளடக்கத்தை கொச்சைப்படுத்துதல் எனச் சுட்டிக்காட்டினர். அழகியலாக்கம் பற்றிய தெளிவானதும் திட்ட வட்டமானதுமான அறிகை முறைமையை உருவாக்குதலே தமது குறிக்கோள் என்றும் சுருக்குதல் அன்று எனவும் விளக்கினர். அதே வேளை மனித உள்ளடக்கமாக அமையும் மனவெழுச்சிகள், உணர்வுகள் எண்ணங்கள் முதலியவை இலக்கிய வழிமுறைகளாக அல்லது எடு முறைகளாக (Literary Divices) அமைகின்றளனவே அன்றி தன்னளவிலே பொருண்மை கொண்டவை அல்ல என்றும் குறிப்பிட்டனர். ஆனால் மறுத்தவர்கள் அவற்றை முழுப் பொருளாக வும் முதன்மைப் பொருளாகவும் வலியுறுத்தினர்.
ரூசியப்புரட்சிக்கு முன்னரே போர்மலிசம் நன்கு நிறுவப்பட்ட கலைக்கோட்பாடாக நிலைபெற்றிருந்தது. கலைஞரின் தொழில் நுட்ப முறைமை மற்றும் கைவினைத்திறன் முதலியவற்றை அவர்கள் தமது அழகியல் ஆக்கங்களிலே குவியப்படுத்தலாயினர். அக்கருத்து சிலோவ்ஸ்கி அவர்களால் வலியுறுததப்பட்டது.
கலாநிதி சபா ஜெயராசா 47.

Page 26
ரூசிய போமலிசம்
ரூசிய போமலிஸ்டுக்களின் மொழி பற்றிய கருத்து முக்கியமானது. இலக்கியங்களிலே சிறப்பு மொழி நடை கையாளப்படகின்றளது. அது நடைமுறை (Practical) மொழியிலிருந்த வேறுபட்டதாக அமைகின்றது. வேறு விதமாகப் பார்ப்பதற்கே அந்த மொழி பயன்படுகின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அந்த மொழி இலக்கிய மயமப்பாட்டை (Literariness) உருவாக்குவதற்கே பயன்படுகின்றது எனமேலும் வலியுறுத்தினர். அதனைமேலும் விளக்கலாம். நடைமுறை மொழி யிலிருந்து வேறுபடும் இலக்கிய மொழி கட்டுமை செய்யப்பட்ட பண்பைக் கொண்டது. எ டுத்துக் காட்டாக கவிதையில்ஒலிவடிவக்கட்டுமை மேலோங்கியுள்ளது. அந்நிலையில் அது நடைமுறை மொழி யிலிருந்து அடிப்படையில் வேறுபட்டுவிடுகின்றது. நடைமுறையில் ஒருவர் உரையாடும் பொழுத ஒலிக்கட்டுமானங்களைக் கருத்தலே கொண்டு உரையாடுதல் இல்லை.
மேற்கூறிய கருத்துடன் இணைந்து வளரும் ஓர் எண்ணக்கருவாக பரிச்சியமின்மை (Defamiliarization) அல்லது விநோதப்படுத்தல் அமைகின்றது. எடுத்துக்காட்டாக, "தங்கம் உருக்கித்தழல் குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதம்" என்று பாரதிபாடுதல் இந்த விநோதப் படுத்தலைப் (Making Strange) புலப்படுத்துகின்றது.
ரூசிய போமலிசம் கதை என்பதையும் கதையமைப்பு (Plot) என்பதையும் வேறுபடுத்திப் பார்த்தது. கிரேக்க அழகியல் மரபில் கதையமைப்பு (Mythos) என்பது கதை நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பு என்று குறிப்பிடப்பட்டது. அது ஒருகலையாக்கச் செயல்முறையாகின்றது. கிரேக்கத்தின் துன்பியல் நாடகங்களில் திரும்பற் பளிச்சீடு (Flash Back) என்பதுடன் ஆரம்பித்து முந்திய நிகழ்ச்சிகள் மீட்டெடுக்கப்படும். ரூசிய போமலிஸ்டுகள் கதையமைப்பை முற்றிலும் இலக்கிய உத்தியாகக் கருதுகின்றனர். அவர்கள் அதனை ஒரு நிரல் ஒழுங்கமைப்பாக (Araangement) மட்டும் கருதாது, கதை எடுத்துரைப்புக்குரிய ஒரு வழி முறையாகவும் (Device) கருதுகின்றனர். அந்த எண்ணக்கருவை அவர்கள் மேலும் விரிவாக்கி, பரிச்சிய மின்மை என்பதன் பொருட்டு அது பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர். நிகழ்ச்சிகளை
48. மார்க்சிய உளவியலும் அழகியலும்

ரூசிய போமலிசம்
வகைமாதிரியாக அல்லது பரிச்சியமுடையாகத் தரிசித்தலைக் கதையமைப்பு DLL untuLub தடுத்து விடுகின்றது ଟTଚର୍ତtyp] குறிப்பிடுகின்றனர்.
ரூசிய போமலிசத்தின் எடுத்துரைப்புக் கோட்பாட்டில் ஊக்கல் என்ற பரிமாணம் சிறப்பாக இடம் பெறுகின்றளது. கதையமைப்பின் சிறிய அலகு கதைநுண் அலகு (Motif) என அழைக்கப்படும் தெமஸ்கெவெஸ்கி அதனை மேலும் இரண்டு பிரிவாகப் பிரிக்கின்றார். அவை.
(1) கட்டப்பட்ட கதை நுண் அலகு (2) கட்டற்ற கதை நுண் அலகு
கதைக்கெனவேண்டப்படுவது கட்டப்பட்ட நுண்-அலகு. கட்டற்ற கதை நுண் அலகு வழியாகக் கதைத் தொடர்ச்சி முழுவதற்கும் கலைவளமூட்டப்படுகின்றது.
அனைவருக்கும் பழக்கப்பட்ட ஊக்கலாக நடப்பியல் அமைகின்றது. எமது பொதுவான எதிர்பார்ப்புகளோடு, நடப்பிய லோடு அல்லது பொது அறிவோடு பொருந்தாத புனைவுகள் பற்றி எரிச்சல் கொள்ளப்படுகின்றது. அந்நிலையில் நடப்பியல் தழுவா தவை ஊக்கல் தராதவையாக மாறுகின்றன. மனச்சட்ட கத்துக்கு வெளியில் உள்ளவை ஏற்கப்படாதவையாகின்றன."
ரூசிய போமலிஸ்டாகிய மக்கரோவ்ஸ்கி மார்க்சிய அழகியல் நோக்கிலே சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர். அழகியலின் சமூக வருகை அவரால் வலியுறுத்தப்பட்டது. கலை இலக்கியங்கள் வரையறுக்கப்பட்ட ஒடுங்கிய கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவை. அது மாற்றங்களுக்கு உட்பட்ட செயல் முறை என்பதை மார்க்சியம் பல கோணங்களிலே தெளிவுபடுத்தியுள்ளது. கலை இலக்கியங் களுக்கு அழகு தருவது ஒரு சமூக வினைப்பாடு.(Social Act)
சமூக ஏற்றத்தாழ்வுகள் கலையாக்க்ங்களை உயர்ந்தவை தாழ்ந்தவை. என்ற நிரலமைப்புக்கு உட்படுத்தின. ஆட்சி செய்யும் மேலாதிக்கவகுப்பினர் தமக்குச் சாதகமான கலை வரை விலக்கணங் களை எப்பொழுதும் உருவாக்கி வந்துள்ளர். அதற்குரியகருத்தி யலையும் உள்ளடக்கிவைத்தனர்.
கலாநிதி சபா ஜெயராசா 49

Page 27
ரூசிய போமலிசம்
போமலிஸ்டுக்களால் வலியுறுத்தப்பட்டுவரும் பிரதான கருத்தாகிய பரிச்சிய மற்றதாக்கல் மாற்றத்தையும் வரலாற்று வளர்ச்சி யையும் வேண்டிநிற்கின்றது. கலை இலக்கியங்கள் தொடர்பாக வலியுறுத்தப்படும் நித்தியப் பண்பையும் வரையறுக்கப்பட்ட சொல்லாடல்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த எண்ணக்கருக்களின் ச்ெலவாக்கு நாடக ஆசிரியர் பிரெச் அவர்களிடம் பல நிலைகளிலே காணப்பட்டது. அவரின் அரங்கியல் ஆக்கங்களில் முன்னெடுக்கப்பட்ட அந்நியமாதல் விளைவும் காவிய அரங்கின் (Epic Thbeatre) ஆக்கமும் அதனைப் புலப்படுத்தும்.
பக்தின் சிந்தனா கூடம்
போமலிச இயக்கத்தின் பிற்ககூற்றிலே பக்தின் சிந்தனா கூடம் (The Bakhtin School) Gigssipplb Guppg). ஆயின் அது போமலிசத்தின் பகுதியாக அமையவில்லை. மார்க்சிய திறனாய் வாளர்கள் சிலர் ஆரம்பாகலங்களில் போமலிஸ்டுகளின் சிந்தனை களுக்கு எதிரானவர்களாகவுமிருந்தனர். ஆயின் பக்தின் சிந்தனா கூடத்தினர் மார்க்சிசத்தின் செல்வாக்கினுக்கு உட்பட்டிருந்தனர். பக்தின் சிந்தனா கூடத்தைச் சேர்ந்த பின்வருவோர் சிறப்பாகப் பேசப்படுகின்றனர்.
(1 மிக்கைல் பக்தின் (2) பவெல் மெட்வெடெவ் (3) வெலென்டின் வொலோசினோவ்
கருத்தியலிருந்து மொழியைப் பிரிக்க முடியாததென்பது மார்க்சியம் வலியுறுத்தும் ஒரு முக்கியமான கருத்து. இக்ககருத்தை வொலலோசினோவ் தாம் எழுதிய மார்க்சிஸமும் மொழிபற்றிய மெய்யியலும் (1973) என்ற நூலில் விரிவாகவிளக்கினார். கருத்தியல் என்பது ஊடகத்திலிருந்து, அதாவது மொழி யிலிருந்து பிரிந்து நிற்பதில்லை. மொழி என்பது சமூகவழி கட்டுமை செய்யப்பட்ட குறிகளின் தொகுதியாகும். மொழி தன்னிலையில் பொருள்சார்ந்த நடப்பியற் பண்புடையது. பக்தினுடைய சிந்தனா கூடம் மொழியை அருவமான வடிவமாகக் கருதவில்லை. சொற்களை வினைப் பாடுடைய சமூகக் குறியாக அவர்கள் வலியுறுத்தினர். சமூக வர்க்கப்
50 மார்க்சிய உளவியலும் அழகியலும்

ரூசிய போமலிசம்
பிரிவினருக்கேற்றவாறு அவை வேறுவேறு பொருள்தரவல்லவை. வேறுபட்ட வரலாற்றுச் சூழமைவுக்கு ஏற்பவும் கருத்துக்கள் மாற்றமடையும். மொழி வரலாற்றுடன் தொடர்பற்ற அருவத் தொகுதி என்று சுசூர் கூறுவதை அவர்கள் நிரகாரிக்கின்றனர்.
ஆளும் வர்க்கம் சொற்களின் கருத்துக்களை ஒடுக்கி ஒருமை பெறச் செய்யும் நடவடிக்கையில் ஈடபடுகின்றது. அதாவது மொழி யை அவர்கள் ஒற்றைச் சம்மதமுள்ளதாய் (Uniaccentual) மாற்றிவிடுகின்றனர்.
இலக்கியமொழியை இயக்க வடிவினதாக பக்தின் கருதுகின்றார். அதன் அடிப்படையில் ரோல்ஸ் ரோயின் நாவல்களை யும் டெஸ்ரோவ் ஸ்சியின் நாவல்களையும் அவர் வேறுபடுத்திக் காட்டுகின்றார். ரோல் ரோயின் நாவல்களில் ஆசிரியரின் மேலாதிக்கம், ஆசிரியர் குறிப்பிடும் ஒரேஒரு உண்மை மட்டுமே மேலோங்கியுள்ளது. அதாவது ஆசிரியரின் கட்டுப்படுத்தும் செயல் அங்கேமேலோங்கியுள்ளது. அது தனிநிலைத் தருக்கம் (Monologic) என்று கூறப்படும். ஆனால் டொஸ்ரோவ்ஸ்கியின் நாவல்களில் பன்முக ஒலிப்பு மேலோங்கியுள்ளது. ஆசிரியரின் ஆட்சியற்ற நிலை மேலோங்கியுள்ளது. பாத்திரங்கள் ஆசிரியரன் கட்டுப்பாடின்றி இயக்கி விடப்படுகின்றன.
பக்தின் குறிப்பிடும் களியாட்டம் (Carnival) ତTର୍ତtop எண்ணக்கரு அவரின் இலக்கிய அணுகு முறையின் பிறிதொரு பரிமாணமாகின்றது. நூலியத்துக்கும் இலக்கிய உருவங்களின்
வரலாற்றுக்கும் அந்த எண்ணக்கரு பிரயோகிக்கத்தக்கது. அந்த எண்ணக்கரு இலக்கியப் பாத்திரங்களின் அடுக்கமைப்பைத் தலை கீளாக்குகின்றது. அதாவது அரசர்கள் பிச்சைக்காரர்களா கின்றனர். முட்டாள் புத்திசாலியாகின்றார். ஒருவித குழப்பியடித் தலை அந்த எண்ணக்கரு புலப்படுகின்றது. அங்கே மேலாக்கத்தின் இறுக்கம் தளர்த்தப்படுகின்றது.
கலாநிதி சபா ஜெயராசா 51

Page 28
லூகஸ்
12. லூகஸ்
இலக்கியம் பரந்துபட்ட சமூக நடப்பியல் என்ற புலக்காட்சிக் குள்ளே தான் புரிந்து கொள்ளப்பட முடியும் எனப்தை மார்க்சியம் வலியுறுத்துகின்றது. தனிமனிதரையோ கலைப்படைப் பையோ தனிமைப்படுத்திப் பார்க்கும் கோட்பாடுகள் அறிகை நிலையிலே குன்றியவையாகவே இருக்கும். அடிப்படையான மட்டுப்பாடுகள் அவற்றிலே பொதிந்திருக்கும்.
உலகையும் சமூகத்தையும் தரிசிப்பதற்குரிய மார்க்சியத்துக்கு மாற்றீடான கோட்பாடுகள் எதுவுமில்லை. சமூக நடப்பியலைக் கண்டறிவதற்குரிய வரலாற்றுத் தடத்தை மார்க்சியம் போன்று வேறு எந்தக் கோட்பாடும் முன்வைக்கவில்லை. அரசியலாக்கம், கல்வியாக்கம் பண்பாட்டு ஆக்கம் கலையாக்கம் முதலியவற்றை குறிப்பிட்ட பொருளாதார முறைமையுடன் திட்டவட்டமாகத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது.
கலை இலக்கியங்கள் சமூக நடப்பியல் உணர்வை எந்த அளவுக்குப் பிரதிபலிக்கின்றன அல்லது திரிபுக்காட்சியாக்குகின்றன என்பதை அடியொற்றிய ஆய்வை மார்க்சிய அழகியல் முன்னெடுக்கின்றது.
மார்க்சியத்தின் உள்ளடங்கிய முரண் நிலைத்தருக்கத்தை அகிலப் பொதுமை கொண்டதாகக் கருதிய லூகஸ், அனைத்து மனித உணர்வுகளும் முரண்நிலைத் தருக்கம் என்ற கூட்டுமொத்த வடிவத்துடன் இணைந்த ஒன்றுடன் ஒன்று உறவுடையவை என்று கருதினார்.
மார்க்சிய அறிகை முறைமை தெளிவுகொண்ட செல்வழி யாக இருக்கும் வேளை சில எதிர்மோதல்களும் அவ்வப்போது எழுதல் உண்டு. அதாவது பொருளாதார நிர்ணயிப்புடன் இணைந்த
52 மார்க்சிய உளவியலும் அழகியலும்

லூகஸ்
அடிக்கட்டுமானத்தில் ஏற்படும் வளர்ச்சிகளையும் மாற்றங்களையும் துல்லியமாக விளக்கக் கூடியதாக இருத்தல் போன்று அழகியலாக் கங்களில் ஏற்படும் மாற்றங்களை அத்துணை துல்லியமாக விளக்க முடிவதில்லை என்ற எதிர் அறிகை முன்வைக்கப்படுதல் உண்டு. இதிலிருந்து தான் எதிர்மார்க்சிய அழகியல் வாதிகள் தமது வாதத்தை ஆரம்பிக்கின்றார்கள். மார்க்சியத்தைக் குறுகிய ஒற்றை வழியினூடாக நோக்கும்பொழுது தான் இந்த இடர்ப்பாடு ஏற்படுகின்றது.
உலக நடப்பியலே மனித உள்ளத்திலே பிரதிபலிக்கப்பட்டு சிந்தனைக் கோலங்களாகவும் அழகியல் ஆக்கங்களாகவும் வெளிவரு தலை மார்க்சியத் தடம் தெளிவுபடுத்துகின்றது. ஆனால் இப்பிரதி பலித்தல் கண்ணாடி போன்ற பிரதிபலித்தல் அல்ல என்பதை லூகஸ் தெளிவுபடுத்தினார்.
அண்மைக்காலத்தில் வளர்ச்சி பெற்றுவரும் கட்டுமையியல் (Constructivism) என்ற உளவியல் சிந்தனை லூகசின் சிந்தனை களுக்கு அரண்செய்கின்றது. மூளைக்கு உள்நோக்கிப் பாய்ச்சப்படும் தகவல்கள் உள்வாங்குவோரின், ஏற்கனவே உள்ள அறிகை இருப்புக்கேற்றவாறு கட்டுமை செய்யப்பட்டு வெளித்துலங் கல் நிகழ்கின்றது. பிரதிபலித்தலும் அவ்வகையானதே. கட்டுமை யும் பிரதிபலித்தலும் நடப்பியலை மீறி நிகழமுடியாது. நடப்பியல் தனிநபர்களுக்குப் புறத்தே காணப்படுகின்றது. கலையாக்கம் என்பது
நடப்பியல் பற்றிய அறிவாகும். இந்நிலையில் செம்மையாக வடிவமைக்கப்பட்ட ஓர் இலக்கியம் புறவுலகின் பிரதிபலிப்பாகவே அமையும். ஓர் உள்ளடக்கத்துக்குக் கொடுக்கப்படும் அழகியல்
வார்ப்பே வடிவமாகின்றது. நடப்பியலைப் பிரதிபலித்தலே செம்மை யான வடிவம் என்று லூகஸ் குறிப்பிட்டார். பிரதி பலித்தலின் நடுவன் பொருளாக வகை மாதிரிப்படுத்தல் அமைகின்றது. வகை மாதிரியான சூழலில் வகைமாதிரியான பாத்திரங்களைக் காட்டுதல் நடப்பியலாக்கத்துடன் இணைந்து செல்கின்றது. வகை மாதிரிஎன்பது சராசரி என்பதிலும் வேறுபட்டது என்பதை லூகஸ் தெளிவு படுத்தினார்.
கலைப்படைப்பு உளநிலையில் தன்னிறைவு கொண்ட முழுமையான தென்றும் அதே வேளை புறவுலகின் பிரதிபலித்தலும் என்று லூகஸ் கூறுதல் முரண் என்று வாதாடுவோரும் உளர், இணைவின் இருவேறு கோலங்கள் என்று கருதுவோரும் உளர். கலாநிதி சபா ஜெயராசா 53

Page 29
லூகஸ்
மரபுவழி வந்தமாக்சியத் தளத்தில் நின்று அழகியலை நிலைநிறுத்தியும் திறனாய்வுகளை மேற்கொண்டும் வந்தவர் வரிசையில் லூகஸ் சிறப்பிடம் பெறுகின்றார். இலக்கியப் படைப்பை தெறித்தல் வினைப் பாடுடைய செயற்பாடாக லூகஸ் கருதினார். சமூக ஒழுங்கின் அடியமைந்த முரண்பாடுகளைச் சித்தரிக்கும் நடப்பியல் அணுகு முறையை அவர் முன்னெடுத்துச் சென்றார்.
நடப்பியலைத் தெறித்தலே கலையாக்கத்தின் நெறிப்பாடு என்று குறித்துரைத்த லூகஸ் இயற்பண்புவாதத்தை (Naturalism) நிராகரித்தார். ஒவ்வொரு மனிதரும் தெறித்தல் வினைப்பாடு கொண்டவர்கள். சமூகத் தொடர்புகள் பற்றியும் மனித இயல்புகள் பற்றியும் தெறிக்கும் ஆற்றல் ஒவ்வொருவரும் உண்டு. அதன் செயற்பாடு திட்டவட்டமானது. நாவல் உள்ளிட்ட கலைப்படைப்புக்கள் நடப்பியலைத் திட்டவட்டமான புலக்காட்சி யுடன் வெளிப்படுத்துகின்றன.
ஒரு கலைப்படைப்பு தனிமனிதத் தோற்றப்பாடுகளை பிரித்ததுண்டங்களாகத் தனித்த நிலையில் வெளிப்படுத்துதல் இல்லை. அது வாழ்க்கையின் முழுச் செயல் முறையையும் தழுவி நிற்கின்றது. கலைப்படைப்பு நடப்பியலைத் தெறித்தலைச் சிறப்பார்ந்தவகையிலே மேற்கொள்ளலை வாசகர் நன்கு அறிந்து கொண்டுள்ளனர்.
வெளித்தோற்றத்தை மட்டும் பிரதிபலித்தல் பொருத்தமான தெறித்தல்
வினைப்பாடாகாது என லூகஸ் வலியுறுத்துகின்றார். அவரது தெறித்தல் அணுகுமுறை இயற்பண்புவாதத்தையும் நவீனத்து வத்தையும் கீழே தள்ளிவிடுகின்றது. நிழற்படம் போன்ற
பிரதிநிதித்துவப்படுத்தலை லூகஸ் தள்ளுபடி செய்கின்றார். தரப்படும் வெளிப்பாடுகளுக்குரிய கலைப் பண்புடைமையின் தேவையை (Artistic Necessity) அல்லது அத்தியாவசியத்தை அவர் வலியுறுத்தினார். புறவுலகுபற்றிய பரந்தநிலை முழுமையைக் கலைப்படைப்புகள் செறிவுமிக்க முழுமைப்பண்புடையனவாக (Intensive Totality) LDfIsist3765GSaipao.T.
நடப்பியல் என்பது துண்டங்களின் பொறி முறைத் தொகுப்பு அன்று. செறிவுமிக்க வகையில் அவற்றை ஒழுங்கமைக்கும் பணியை
54 மார்க்சிய உளவியலும் அழகியலும்

லூகஸ்
நாவலாசிரியர் மேற்கொள்ள வேண்டுமென லுகஸ் குறிப்பிடுகின்றார். கலைஞர் எழுத்தாளர் உலகின்மீது அருவமான ஒழுங்கமைப்பைத் திணித்து விடுவதில்லை. வாழ்க்கை அனுபவங் களின் சிக்கலான இயல்புகளை உள்வாங்கிச் செறிவுடனும் வளத்துடனும் செழுமைமிக்க படிமங்களைத் தருதல் நடப்பியலின் வெளிப்பாடாகின்றது. சமூக இருப்பின் முரண்பாடுகளையும் நெருக்குவாரங்களையும் நியமமான முழுமையில் உற்றுணர்ந்த வகையிலேதான் அது மேலெழுச்சி கொள்ளும்.
மார்க்சியம் தனக்குரிய வரலாறு தொடர்பான விதியாகிய இயங்கியலை ஹெகலிடமிருந்து பெற்றுக் கொண்டது. வரலாற்று வளர்ச்சி எழுந்த மானமாக நிகழ்வதில்லை, அது நேர்முகமான நெடுங்கோட்டு வளர்ச்சியைக் கொண்டது. குடும்பம் உள்ளிட்ட ஒவ்வொரு சமூகநிறுவனமும் உள்ளமைந்த முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. இவற்றின் முழுமையான உள்ளடக்கம் லூகசின் இலக்கிய நடப்பியலின் உட்பொருளாயிற்று. அவர் எழுதிய வரலாற்றுப் புகழெய்திய நாவல் (1937) மற்றும் ஐரோப்பிய நடப்பியல் தொடர்பான கற்றறிதல் (1950) முதலியவற்றில் நடப்பியல்
தொடர்பான கருத்துக்கள் துல்லியமாக வெளிப்படுகின்றன. இயக்கமற்ற (Statoc) கலைபடைப்புக்களையும் இயக்கமற்ற தெறிப்புக்களையும் அவர் நிராகரிக்கின்றார். வரலாறு பற்றிய
இயங்கியல் நோக்கற்ற அணுகு முறைகள் இயக்கமற்ற நிலையைப் புலப்படுத்தும்.
மனித அவலங்கள் வரலாற்றின் விளைபொருளாகிய சமூக இருப்பிலிருந்து முகிழ்த்தெழுகின்றன. அவற்றை நோக்காத, அணுகாத, அனுபவிக்காத படைப்புக்கள் இயக்க மற்றவையாகின்றன. அகவயமான பதிவுகளும் சமூக வராலாற்றுடன் தொடர்புடைய உள்ளார்ந்த அதிர்வுகளாக இருக்கின்றனவேயன்றி அவை தனித்த தீர்வுநிலையிலே தோற்றம் பெற்றவை அன்று. மனவுணர்வுகளின் ஆழங்களை நோக்காத படைப்புக்கள் அனர்த்தமான படைப்புக்கள் தான். மனித அவலங்களுக்கான புற நடப்பியல் நிலைகளை நோக்காத படைப்புக்கள் ஒருவித கபடநோக்கைக் கொண்டவை என்று லூகஸ் குறிப்பிடுகின்றார்.
நவீனத்துவ எழுத்தாளர்களது கலைப்புனைவுகள் மேற்குறித்த மட்டுப்பாடுகளுடன் பிற்போக்குத்தனமாக மண்டியிடுகின்றன.
கலாநிதி சபா ஜெயராசா SS

Page 30
கெர்பட் மார்க்யூஸ்
13. கெர்பட் மார்க்யூஸ்
மார்க்சியத்தை அடியொற்றிய சிந்தனைக் கிளைபரப் பல்களுள் கெர்பட் மார்க்யூஸ் அவர்களது கருத்தோட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. மார்க்சியச் சிந்தனைகளை இருப்பியம், மற்றும் பிராய்ட்டிசமும் ஆகியவற்றுடன் இணைத்து அறிகை வலுவூட்டும்
செயற்பாடுகள் இவரால் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான அறிக்கை எழுகோலங்கள் ஐரோப்பாவில் மேலும் LG) ஆய்வறிவாளர்களிடத்தும் தோற்றம் பெற்றன. அவ்வகையில்
எரிக்புறோம், மிசேல் பூக்கோ முதலியோரைச் சுட்டிக் காட்டலாம்.
மார்க்யூஸ் நாவல் இலக்கியம் பற்றிய ஆய்வை மேற் கொண்டிருந்தமையால் மார்க்சியம் மற்றும் அழகியல் தொடர்பான உறவுகளைப் பரிசீலனை செய்ய முடிந்தது. சமூக முரண்பாட்டுக்கும் இலக்கிய ஆக்கத்துக்குமான தொடர்புகள் அவரால் விசாலித்து நோக்கப்படுகின்றன. வாழ்க்கை நடப்பியலில் இருந்த படைப்பாளி அந்நியப்பட்டு நிற்கும் நிலை அவரால் சுட்டிக் காட்டப்படுகின்றது. வாழ்க்கையின் நடப்பியலுக்கும் படைப்பாளியின் ஊன்றிய எதிர்பார்ப்புக்களுக்கமிடையே ஏற்படும் முரண்பாடுகள் உலகநடப் பியல் குறித்த பெரும் மறுப்பையும் ஏற்படுத்துகின்றன.
முதலாளியத்தின் பறிப்பு நடவடிக்கைகளும் பலவித முரண்பாடுகளும் இலக்கியங்களில் எடுத்தாளப்படுகின்றன. கலை வடிவங்களைச் சமூகத்துடன் ஒட்டாத தூய வடிவங்களாகக் கருதுவோர்கூட முதலாளியத்தின் பறிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அந்நிலையில் அவர்களின் கலையாக்கங்களில் ஏக்கங்களே இழையோடி நிற்கின்றன.
புரட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான நடைமுறை வழியாகவும் கருத்தியல் பலமாகவும் மார்க்சியம் அமைந்திருந்தலை ஐரோப்பிய சூழலில் அவர் மீள வலியுறுத்தினார். Lotrieš9r)
56 ٭ மார்க்சிய உளவியலும் அழகியலும்

கெர்பட் மார்க்யூஸ்
யத்தின்மையப் பொருளாக இருக்கும் புரட்சியின் செயற்பாட்டை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மார்க்சின் அந்நியமாதல் எண்ணக்கரு மீது அவருக்குத் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. வினைப்பாடே (Act) மனித சாராம்சமாகின்றளது. மனிதரது வினைப்பாடுகள் மறுதலிப்புக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உள்ளாக்கப் படுவதனால் அந்நியமாதல் என்ற தோற்றப்பாடு எழுகின்றது.
அந்நியமாதல் கலைப்புனைவுகளிலே இடம் பெறுதல் அழகியலாக்கத்தின் ஒரு பரிமாணம் என்று கூறும் நிலையில் மார்க்சிய மறுதலிப்பாளர் அந்நியமாதலுக்கும் முதலாளிய சமூக உருவாக் கத்துக்குமுள்ள தொடர்புகளைக் கண்டறியத் தவறிவிடுதல் சுட்டிக் காட்டப்படத்தக்கது.
gš63NJG360d6MTL LurT Lņ6ðt (Radical Act) முக்கியத்துவம் மார்க்யூஸ் அவர்களால் பல பரிமாணங்களிலே வலியுறுத்தப்படு கின்றது. அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
(1) அது மனித இயல்பின் சாராம்சம்.
(2) அதன் வழியாகவே மனிதன் இழந்தவற்றை
மீளப்பெற்றுக் கொள்ள முடியும்
(3) மனிதப் பண்புகள் நலிவடைந்த நிலையில் அதற்கு எதிரான வடிவமாகவே தீவிர வினைப்பாடு மேலெழுகின்றது.
(4) மனிதத் தன்மையற்ற சூழலை மாற்றியமைக்கு
அதுவே வேண்டப்படுகின்றளது.
(5) தீவிர வினைப்பாடு என்பது தனிமனிதருக்குரிய ஓர் ஒடுங்கிய செயற்பாடு அன்று. அது ஒரு பொது வினைப்பாடு அதாவது பொதுமைப்பண்பு கொண்டது.
இச் சந்தர்ப்பத்தில் மார்க்யூசின் சிந்தனைகளையும் அழகியல் ஆக்கங்களையும் தொடர்புபடுத்தி நோக்கவேண்டியுள்ளது. அதனை உன்னிப்பாகத் தொடர்புபடுத்திப் பார்த்தால் கலை இலக்கியங்களும் ஒருவித தீவிர வினைப்பாட்டின் வெளிப்பாடு என்றும், அவை ஒரு பொது வினைப்பாட்டுக்குரிய ஆக்கம் என்றும் விரிவுபெறும்.
கலாநிதி சபா ஜெயராசா 57

Page 31
கெர்பட் மார்க்யூஸ்
மார்க்யூசின் தீவிர திறனாய்வுக்கு உட்படுத்திய கருப் பொருளாக பாசிசம் விளங்கியது. முதலாளியத்தின் உச்சவடி வமாக வும் உக்கிர வடிவமாகவும் அவர் பாசிசத்தைக் கண்டார். அவர் குறிப்பிடும் இணங்கி உறையும் பண்பாடு (Affirmative Culture) என்ற எண்ணக்கரு முதலாளிய சமூகத்திலே தோற்றம் பெறும் குருட்டுப் போக்கான அழகியல் ஆக்கங்களை விளங்கிக் கொள்வ தற்கான கருத்தாடல்களைத் திறந்துவிட்டுள்ளது. ஜேர்மனியில் தோற்றம் பெற்ற பண்பாட்டுக் கோலங்களை அடியொற்றியே அவர் அந்த எண்ணக்கருவை உருவாக்கினார். ஜேர்மனியின் உயர்குடி மக்களின் பண்பாட்டைப் பரிசீலனைக்கு உட்படுத்தாது, நவீன ஜேர்மனியப் பண்பாடு அதனுடன் இணைந்து இசைந்து உருவாக்கம் பெற்றுள்ளது. அதனை அடியொற்றியே அந்த எண்ணக்கருவை அவர் உருவாக்கினார். இக்கலாசாரமும் அதனோடு இணைந்த ஆன்மீக மூடு திரையும் சாமானியர்களின் நடப்பியல் வாழ்வின் அக்கறையைத் தள்ளுபடி செய்கின்றன.
மேலோங்கியவர்களின் விழுமியங்கள், மற்றும் ஆன்மிகம் சார்ந்த புனைவுகளே கலையாக்க அழகு என்பதன் வெளிப்படையற்ற வற்புறுத்தல்கள் இந்தியக் கலை மரபில் நெடிது நீடித்து வந்துள்ள மையைக் காண முடியும்.
தொன்மங்களை மானிடப்படுத்தும் இந்திய அழகியல் அமிசங் கள் இணங்கிச் செல்லும் பண்பாட்டின் கலை வலியுறுத்தலாக இடம் பெறுதலைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
1964 ஆம் ஆண்டில் அவரால் வெளியிடப்பட்ட ஒற்றைப் பரிமாண மனிதன் என்பது மார்க்சியம் தொடர்பான மட்டுப்பாடு களைக் கண்டறியும் திறனாய்வாகவும் மறுபுறம் முதலாளியத்தைத் தீரிவ பரிசீலனைக்குட்படுத்தும் பரிமாணங்களையும் கொண்டிருந்தது.
1920 ஆம் ஆண்டில் உருவாக்கம் பெற்ற பிராங்போட் சிந்தனா கூடத்தைச் சேர்ந்த இவரது கருத்துக்கள் உறுதிறனாய்வுச் சார்ப்புக் கோட்பாடு (Critical Theory) என்ற அறிகைக் கட்டுமானத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தன. மரபுவழி மார்க்சிய அணுகு முறைகளை விட்டு மாற்றுவழிகளிலே மார்க்சிய சிந்தனை களை அணுகியமையும், கார்ல் மார்க்சுக்குப் பிந்திய முதலாளி வளர்ச்சியைத் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியமையும் அவர்களின் அறிகை மேலெழுச்சிகளாயின.
58 மார்க்சிய உளவியலும் அழகியலாம்

அந்தோனியோ கிராம்சி
14. அந்தோனியோ கிராம்சி
மார்க்சிய அடிப்படைகளில்நின்று பண்பாட்டின் இயல்பு களை விளக்கும் புரிதல்களை முன்னெடுத்தவர்களுள் அந்தோனியோ கிராம்சி (1891 - 1937) முக்கியமானவர். சமூக அடிப்படையிலேதான் உண்மையும், விழுமியங்களும்தோற்றம் பெறுகின்றன. அனைத்து வரலாற்று விதிகளும், அழகியல் விதிகளும் சமூக ரீதியானவை என்பதில் கிராம்சி தளராத நம்பிக்கை கொண்டிருந்தார். அவ்விதிகள் இயல்பாகவே சமூக விடுதலைக்கு இட்டுச் செல்ல வல்லவை.
கோட்பாடுகள், மதம், கலை இலக்கியங்கள் முதலியவை பொருண்மியப் பண்பு கொண்ட பண்டங்களாக மாறும் இயல்புடை யவை. கலை இலக்கியங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும் ஒற்றைப் பரிமாணத்தில் அணுகுவதை கிராம்சி ஏற்றுக் கொள்ள வில்லை. இவ்வாறான ஒற்றை வகைப் புனைவு சுரண்டுவோரின் அதிகாரப் பிடிப்புக்கு அவசியமாகின்றது. சமூகத்தின் திரட்டிய ஒப்புதலைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு அது தவிர்க்க முடியாது வேண்டப்படுகின்றது.
அரசு தனது அதிகாரத்தை நிலைநிறுத்த நேரடியான வன்முறையைக் கையாளுகின்றளது. சமயம் உள்ளிட்ட மேலோங்கிய பண்பாட்டு நிறுவனங்கள் அடக்கு முறைப்பண்பை மக்களின் ஒப்புதலுடன் மேற்கொள்கின்றன. ஐரோப்பாவின் வரலாற்றுத் தொடர்ச்சியைப் பார்க்கும் பொழுது, சமயம் பலம் மிக்க பண்பாட்டு நிறுவனமாக விளங்கி, அதிகாரத்தைப் பிரயோகிக்கும் அரசின் செயற்பாடுகளுக்கும் நலன்களுக்கும் சமூக ஒப்புதலை ஈட்டித்தரும் நிறுவனமாகச் செயற்பட்டு வந்தமையை இத்தாலிய வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கிராம்சி விளக்கினார்.
முதலாளியத்தின் தீவிர வளர்ச்சியோடும் சுரண்டலாதிக்க அமைப்பின் செயற்பாடுகளோடும் இணைந்த தனிமனிதவாதம்,
கலாநிதி சபா ஜெயராசா 59

Page 32
அந்தோனியோ கிராம்சி
சுதந்திரம், சமத்துவம் போன்ற புதிய எண்ணக்கருக்கள் அவர்களின் அரசியல் நலன்களையும் பொருண்மிய நலன்களையும் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டன. தமது நலன்களைப் பாதுகாப்பதற்குரிய பண்பாட்டு நிறுவனங்களை உருவாக்குவதில் அவர்கள் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். இந்நிலையில் பண்பாட்டு நிறுவனங்களை பண்பாடு மட்டும் என்ற ஒற்றைப் பிரமாணத்தில் நோக்க முடியாது. அவை அதற்கும் மேலான ஆட்சிப் பணிகளுக்கும் சுரண்டலுக்கும் அதிகாரத்திணிப்புக்கு முரிய மக்கள் ஒப்புதலை உருவாக்கித் தருவதிலே தீவிர பங்கேற்கின்றன. இதற்குரிய உடன்பாட்டு நிலையில் கலை இலக்கியங்கள் உருவாக்கப்படுதலையும் கண்டுகொள்ள வேண்டியுள்ளது. இந்நிலை யிலே சுரண்டலுக்கும் பறிப்புக்கும் உள்ளாகும் வர்க்கம் தனது இலக்குகளைச் சென்றடைவதற்குரிய பண்பாட்டு ஆக்கங்களை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். தமக்குரிய ஆய்வறிவாளர் களையும், கலை இலக்கியங்களை ஆக்குவோரையும் உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். பண்பாட்டுத் தளத்தில் வெற்றி பெறாது அரசியல் பொருண்மியத்தளத்தில் வெற்றிபெற முடியாது.
மக்களின் உள்ளங்களை வென்றெடுப்பதில் அரசியற் கரங்களிலும் பண்பாட்டுக் கரங்களே வலிமை படைத்தது. சுரண்டப் படுவோரின் மனங்களிலே பொதுவான ஒப்புதலை அது ஈட்டித்தரவல்லது.
புதிய பண்பாட்டை உருவாக்குவதற்கான புதிய கலைப் படைப்புக்களின் தொடக்கத்தை ஒவ்வொரு நாடும் தத்தமது வரலாற்றுக்குள்ளிருந்தும் ஆரம்பிக்கப்படல் வேண்டும். மேலாதிக்கம் செலுத்தும் பண்பாட்டிலிருந்து விலகிய அலகுகள் தொடர்ச்சியற்ற சிதறல்களாகக் காணப்படும். அவற்றை இனங்கண்டு இணைத்துத் தொகுத்தலும் புதிய பண்பாட்டை உருவாக்கும் செயற்பாட்டிலே முக்கியத்துவம் பெறுகின்றது. தமிழ் மரபில் இது பேசாப்பொருளைப் பேசுதல் என்று குறிப்பிடப்படும்.
பண்பாட்டு வரலாறு என்பது வர்க்கப் போராட்டம் போன்றதுதான் ஆட்சி செய்யும் பண்பாட்டுக்கும் ஆளப்படும் பண்பாட்டக்கு மிடையே நிகழும் போராட்டம் என்பது கிராம்சியின் துணிபு பண்பாட்டு வரலாற்றில் அந்த இரு கூறுகளையும் / விசைகளையும் நாம் வேறுபடுத்திப் பார்த்தல் வேண்டும். தமிழ் மரபில் இந்த
60 மார்க்சிய உளவியலும் அழகியலும்

அந்தோனியோ கிராம்சி
முயற்சியை பேராசிரியர் வானமாமலை, பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கா. சிவத்தம்பி முதலியோர் மேற்கொண்டனர்.
கிராம்சி இத்தாலிய நாட்டின் கமியுனிசக்கட்சியின் தலைவ ாாகவும் கோட்பாட்டாளராகவும் விளங்கியவர். இத்தாலியின் கலை வளமும் சமூக முரண்பாடுகளும் அவரது சிந்தனைகளில் ஆழவே ரூன்றியிருந்தன. பாசிசத்தின் கொடிய கரங்களைக் கண்டறி முடியாத வாறு ஆலைத் தொழிலாளர் வினைப்பட்டுக் கொண்டிருத் தலை ஊடுவி நோக்குதற்குப் பண்பாட்டுக் கட்டமைப்பின் மீது அவரது கவனம் திரும்பலாயிற்று.
பொதுவுடைமைச் சிந்தனைகளை ஐரோப்பிய பண்பாட்டுச் சூழலில் ஒன்றிணைக்கும் ஐரோப்பிய கமியூனிசம் (Eurocom munism) என்ற நடைமுறையில் அவர்தீவிர கவனம் செலுத்தலானார்.
பொதுவுடமைக் கோட்பாடு சுருங்கி ஒடுங்கிய ஒரு வழிப்பதை அன்று என்பதை அவர் எழுதிய சிறைக்குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. மத்திய வகுப்பினரை முதலாளிய மேலாதிக் கத்திலிருந்து மீட்டு மீள் ஒழுங்குபடுத்தும் சிந்தனைகளும் அவரிடத்து மேலோங்கியிருந்தன.
மேலாதிக்க அதிகார நிலை நிறுத்தலில் கலை, இலக்கியம்,
கல்வி முதலாம் வடிவங்களின் பங்கினை மார்க்சிய தளத்தில் நின்று தரிசிக்க முயன்றவர்களுள் கிராம்சி தனித்துவம் பெறுகின்றார்.
கலாநிதி சபா ஜெயராசா 61

Page 33
அடோர்னோ
15. அடோர்னோ
மார்க்சிய ஊட்டம் ஜேர்மனிய மரபில் பிராங்போட் சிந்தனா கூடத்தைத் தோற்றுவித்தது. அவர்களின் புலக்காட்சியாக உறுதிற னாய்வுக்கோட்பாடு (Critical Theory) எழுச்சி கொண்டது. ஹெகலியம் மார்கசியம், இருப்பியம், உளப்பகுப்பியம் போன்ற வற்றின் விசை அவற்றுள் பொதிந்திருந்தது. பாசிசத்துக்கு எதிரான மாற்று வலுவாக அவர்கள் மார்க்சியத்தை தரிசித்தனர்.
பண்பாட்டில் இயங்கியற்பண்பு அவர்களால் வலியுறுத்தப் பட்ட வேளை அதனை விமர்சன நோக்கிலும் அணுகினர். லூகஸ் வெளியிட்ட நடப்பியல் பற்றிய கருத்தை அடோர்னோ ஏற்றுக் கொள்ளவில்லை. நடப்பியலுடன் இலக்கியம் நேர்த் தொடர்பு கொண்டது அன்று அடோர்னோ குறிப்பிட்டார். கலை நடப்பியலுக்கு வேறானவகையில் இடம் பெறுவதாக அவர் வலியுறுத்தினார். அவ்வாறு வேறுபட்டு நிற்பதே அதற்குரிய வளமும் வலுவுமாகின்றது. அவ்வாறு பிரிந்தெழுந்து இயங்குதல் அதற்குப் பொருண்மை தருகின்றது. நவீனத்துவ எழுத்தாக்கங்கள் நடப்பியலை விட்டுப் பிரிந்து நிற்பதன் காரணமாக அதை விமர்சிக்க முடிகின்றது.
அவரின் அழகியல் விவாதங்கள் மேலும் தொடர்கின்றன. சமூகத் தொகுதியைக் கலைப்படைப்புக்கள் நேரடியாகத் தெறித்துக் காட்டுதல் இல்லை. நடப்பியல் தொகுதியியிலிருந்து கலைப் படைப்புக்கள் வினைப்பட்டுக் கொண்டு, அதே வேளை மறை முகமான அறிவுத் தேட்டத்தை அவை உருவாக்கிக் கொள்கின்றன.
கலை என்பது யதார்த்த உலகு அல்லது நடப்பியல் உலகுபற்றிய எதிர்நிலை அறிவு என்று அவர் குறிப்பிட்டார். கடினமான பரிசோதனைகள் வழியாகவே இதனை எட்ட முடியும். கலைப்படைப்புக்கள் நடப்பியலைத் தூரப்படுத்துகின்றன. நவீன எழுத்தாக்கங்கள் நவீன வாழ்க்கையை துண்டங்களாகிய நிலையிலும்
62 மார்க்சிய உளவியலும் அழகியலும்

அடோர்னோ
குழம்பிய நிலையிலும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் அவை நவீன சமூகத்தின் எதிர்மானிடப்படுத்தும் இயல்புகளைக் கண்டறியத் தவறிவிடுகின்றன.
முதலாளிய சமூகத்தின் குறைவிழுந்த கலையாக்கங்களைத் தரிசித்தோர் அவை மீள் நோக்கலைத் தூண்டுகின்றன என்ற பரிமாணத்தை அறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். நவீன சமூகத்திலே புதைந்துள்ள உண்மைகளைக் கண்டறிவதற்கு அவை ஒருவகையில் உதவுகின்றன.
மனித அந்நியமயப்பாடு சமூக நடப்பியலின் உண்மையைப் புறவயமாக நோக்க உதவுகின்றது. நவீனத்துவ அரங்கு நவீன பண்பாட்டின் இல்லா நிலையை (Emptiness) ப்புலப்படுத்துகின்றது. பின்வருவன தூரப்படுத்தலின் வழியாக அழகியல் விளைவுகளை உருவாக்குகின்றன.
(1) நபர்களின் தனித்துவத்தில் உட்பொதிந்த வெறுமை
(2) உரை வினைப்பாடுகளில் இடம் பெறும் அனர்த்தத்
தொடர்ச்சிகள்
(3) கதைத் தொடர்ச்சியில் நிகழும் இடறல்கள்
(4) மொழியில் இடம்பெறும் சிதறி நைந்துபோன
பிரயோகங்கள்
மேற்குறித்த பண்புகள் சாமுவேல் பெக்கெத்தின் நாடகங் களில் இடம் பெறகின்றன. அவற்றின் வழியாக முதலாளிய சமூகத்தின் அவலங்களைக் கண்டு கொள்ள முடியும் என்ற ஒருவிதமான சமாதானத்தை அல்லது இசைவுப்பாட்டை அடோர்னோ முன்வைக்கின்றார்.
இசையின் ஆழகியற் பண்புகளையும் அடோர்னோ விரிவான ஆய்வுக்கு உட்படுத்தினார். இசையாக்கலில் உட்புகுத்தப்படும் தீவிர வர்த்தக மயப்பாடு இசையின் செவ்வியல் ஒருங்கிணைப்பைக் கண்டறிய முடியாது தடுத்துவிடுகின்றதென அவர் குறிப்பிடுகின்றார்.
கலாநிதி சபா ஜெயராசா 63

Page 34
அடோர்னோ
முதலாளிய வர்த்தக நலன்களுக்கு உட்பட்ட இசை வல்லுனர்கள் உடைந்து சிதறிய இசைக்கோலங்களை உருவாக்கிய வண்ண முள்ளனர். இசை மொழியின் இலக்கணங்கள் புறந்தள்ளப்படுகின் றன. அவ்வகையான இசைக்கோலங்களை அவர் உளப்பகுப்புக் கண்ணோட்டத்தில் நோக்குகின்றார்.
அவ்வகையான இசை உடலெழுதூண்டிகளை நனவிலி மனத்தின் சுவடுகளிலிருந்து பிரித்து விடுகின்றளது. நவீன சமூக இயல்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தனிமனிதர் இழப்பு நிலைக்குத்தள்ளிவிடப்படுகின்றனர். பெரும் சந்தை நிலவரங்கள் தனிமனித சுயாதீனத்தை சந்தடியற்ற இழப்புக்குத் தள்ளி விடுகின்றன.
64 மார்க்சிய உளவியலும் அழகியலும்

பேற்றோட் பிரெச்ற்
16. பேற்றோட் பிரெச்ற்
பிரெச்ற் அவர்களின் அழகியற் சிந்தனையில் மார்க்சியம் ஏற்படுத்திய தாக்கம் நாடக ஆக்கங்களில் எழுச்சி கொள்ளலாயின. தொழிலாளர் வர்க்கத்தினரைக் குவியப்படுத்தி அவர்களின் அறிகையை நாடகவழி முன்னெடுக்கமுயன்ற செயற்பாடுகளால் 1933 ஆம் ஆண்டில் நாசி அரசாங்கத்தினால் ஜேர்மனியை விட்டு வெளியேற்றப்பட்டார். நாடுகடத்தப்பட்ட நிலையிலே தான் அவரது பெரும்பாலான எழுத்துருக்கள் ஆக்கம் பெற்றன.
அரங்கியலில் அவர் அறிமுகப்படுத்திய அழகியல் அம்சமான அந்நியமாதல் விளைவு என்பது ரூசிய போமலிஸ்டுகள் அறிமுகப்படுத்திய பரிச்சிய மற்றதாக்குதல் என்ற எண்ணக் கருவைத் தொடர்புபடுத்துவதாய் அமைந்தது. நடப்பியல் மாயைத் தோற்றங்கள் சோசலிச நடப்பியலின் ஒருபரிமாண மாயிற்று. அந்த நடப்பியலுக்கு அவர் எதிர் அரிஸ்ரோட்டலியன் என்று பெயரிட்டார். எதிரிடைய சமூக இயல்புகளைத் தாக்குவதற்கு அது ஒருவழி முறையாயிற்று.
அரிஸ்ரோட்டில் வகுத்த அழகியற் கோட்பாடு துன்பவினைப் பாட்டை ஓர் அகிலப் பண்புடையதாக வலியுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக நாடகத்தைப் பார்ப் போரிடத்துத் தோற்று விக்கப்படும் கத்தார்ஸிஸ் அவலச்சுவையை அடியொற்றிய மனவெழுச்சியின் முக்கியத்துவம் அரிஸ்ரோட்டலினால் வலியுறுத்தப் பட்டது. அரிஸ்ரோட்டலின் அரங்கக் கோட்பாட்டு மரபை பிரெச்றி முற்றாக நிராகரித்தார். இடறல் இல்லாது தொடர்ச்சியாக இணைந்து செல்லும் கதைப்போக்கை, அவர் புறந்தள்ளினார்.
சமூக அநீதியை அரங்கிலே எடுத்தாளல் அவரால் வலியுறுத் தப்பட்டது. அவை அதிர்ச்சியூட்டும் வகையிலிருக்கும் வேளை அதனை அரங்க ஆற்றுகைக்குக் கொண்டுவரல் வேண்டும்.
மரபுவழி அரங்கு பார்வையாளரைத் வினைப்பாடற்ற வெறும் நுகர்வோராயும் ஏற்றுக் கொள்வோராயும் மாற்றிவிட்டது. அதனை
கலாநிதி சபா ஜெயராசா 65

Page 35
பேற்றோட் பிரெச்ந்
மாற்றியமைப்பதற்குரிய உபாயமாக அவர் நடப்பியலின் மாயை நுட்பத்தைப் பயன்படுத்தினார். பார்வையாளரிடத்துத் திறனாய்வுச் சிந்தனையை வளர்க்கும் வகையில் கதையாக்கமும் அரங்க இயக்கமும் நடிப்பும் இடம்பெறல் வேண்டும். நடிகர்களின் ஆற்றுகைச் செயற்பாடுகள் பாத்திரத்தின் சமூக அர்த்தத்தைப் புரியவைப்பதாய் அமைதல் வேண்டும்.
லூகஸ் அவர்களால் வலியுறுத்தப்பட்ட வடிவ ஒருங்கிணைப்பை பிரெச்றி ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய அரங்கு காவிய அரங்கு (Epic Theatre) என அழைக்கப்பட்டது. அது இணைப்புத் தொடர்களின் வலிமை குன்றிய தொடுப்புக் கோலங்களைக் கொண்டிருந்தது. நன்கு திட்டமிடப்பட்ட கதைக்கோப்பு இணைப்பு அங்கே காணப்படவில்லை. என்றும் அழியாவரம் கொண்ட நித்தியப் பொருளாகிய அழகியல் பெறுமானங்கள் இல்லை என்றும் அவர் கருதினார். அந்நிலையிலே குறித்த ஒரு படைப்புத்தான் சோசலிச நடப்பியலுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்ற கருத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஒருவர் மேற் கொண்ட நடப்பியல் உபாயங்களை அவ்வாறே பிரதிபண்ணிப் புதிய ஆக்கமொன்றை உருவாக்குதல் நடப்பியலின் அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று அவர் கருதினார். புதிய சூழமைவுகளுக்கு ஏற்றவாறு புதிய உபாயங்களைக் கண்டறிதல் வேண்டும். உருவாக்கிக் கொள்ளவும் வேண்டும்.
மேற்கூறியவற்றிலிருந்து பிரெச்றி அவர்களின் அழகியல் விதிகள் பரிசோதனைகளை உள்ளடக்கியிருந்தலைப் புலப்படுத்த நிற்கின்றது.
அரசியல் ஈடுபாட்டை உட்பொதிய வைக்கும் நடவடிக்கை களும், பார்வையாளரைக் குலுக்கி அதிரவைத்துச் சிந்திக்க செய்யும் முயற்சிகளும் அவரது அரங்கியல் ஆக்கங்களிலே மேற்கொள்ளப் பட்டன. முதலாளியத் தொகுதியினால் உருவாக்கப்பட்ட படிமங்களின் போலிமைகளைக் கிழித்தெறிதலின் தேவையை அழகி யலாக்கங்களில் அவர் உட்பொதிந்தார்.
66 மார்க்சிய உளவியலும் அழகியலும்

பேற்றோட் பிரெச்ற்
ஆழ்ந்து பார்க்கும் பொழுது நடப்பியல் தொடர்பான வேறுவேறுபட்ட அணுகுமுறையினை லூகஸ் மற்றும் பிரெச்றி கொண்டிருந்தனர். மார்க்சிய அழகியல் நோக்கு குறுகிய ஒற்றைப் பரிமாணம் கொண்டது அன்று என்பதை இருவரதும் வேறுபட்ட அணுகுமுறைகள் புலப்படுத்துகின்றன.
67
கலாநிதி சபா ஜெயராசா

Page 36
பியர் மாஷெறி
17. பியர் மாஷெறி
மார்க்சியக் கருத்தியலின் தாக்கத்துக்கு உள்ளாகி இலக்கிய ஆக்கத்தை விளக்கியவர்களுள் மாஷெறி குறிப்பிடத்தக்கவர். கலை இலக்கிய ஆக்கங்களை உற்பத்திப் பொருட்களாகக் கருதிய அவர் மூலப் பொருள் முடிவுப் பொருளாக நிலைமாற்றம் செய்யும் செல்முறையை முன்மாதிரியாகக் கொண்டார்.
கலைஞர்களின் உழைப்பினால் மொழி , இலக்கிய மரபு, கருத்தியல் முதலிய மூலப் பொருட்கள் கலைப் பொருளாக உருவாக்கப்படுகின்றன. கலைப்பொருளின் ஆக்கம் முடிவுப் பொருளின் ஆக்கத்துக்கு ஒப்புமையாக்கப்படுகின்றது. மூலப் பொருளுக்கும் முடிவுப் பொருளுக்குமிடையே GROG). 65)d35 வேறுபாடுகள் தோற்றம் பெறுகின்றன. அந்நிலையிலே கலைஞரின் செயற்பாடு கைவினைப்பாங்குடையதாக மாற்றம் பெறுகின்றது கிடைக்கப்பெறும் மொழி , கருத்தியல் மற்றும் மரபுகளை அடியொற்றி இலக்கியப் படைப்பை உருவாக்கும் கைவினையாக்கம் நிகழ்த்தப்படுகின்றது.
இலக்கியப் படைப்பு கருத்தியல் தேவையை நிறைவேற்றி வைக்கின்றது. கலைப்படைப்பு கருத்தியலுக்கு அழகியல் வடிவம் கொடுக்கின்றது. கலைகளிலே கருத்தியல் உள்ளீடாக ஆக்கப்படும் பொழுது கலைக்கும் கருத்தியலுக்குமிடையே முரண்பாடுகள் மேலெழுகின்றன. நூலைப் படிப்பவர் கருத்தியலைக் கட்டுமானம் செய்பவராக இருத்தல் வேண்டும். இந்நிலையில் பியரேயின் நோக்கிலே கட்டுமானவியலின் செல்வாக்கு நேரடியாகப் பதிந்துள்ள மையைக் காணலாம். அதேவேளை கட்டுடைப்பு அல்லது தகர்ப்புக் கோட்பாட்டின் தாக்கமும் அவரிடத்துச் செல்வாக்குச் செலுத்துதலைக் கண்டு கொள்ள முடிகின்றது.
நூலாசிரியருக்கும் வாசகருக்குமிடையே கருத்தியல் சார்ந்த அறிவு இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் 68 மார்க்சிய உளவியலும் அழகியலும்

பியர் மாஷெறி
வலியுறுத்துகின்றார். இலக்கியப் படைப்புக்கள் நிறைவு பெறாத அல்லது முழுமை பெறாத ஆக்கங்களாகவே காணப்படுகின்றன. நூலாசிரியரின் படைப்புக்களிலே காணப்படும் வெற்றிடங்களை அல்லது இடைவெளிகளைக் கண்டறிய வேண்டியதன் முக்கியத்து வம் அவரால் வலியுறுத்தப்படுகின்றது.
நடப்பியல் பற்றிய விளக்கங்களை கலைப்படையின் வழியா கக் கண்டறியமுடியாது.
இலக்கியப்படைப்பு கல்வி முறையின் ஓர் உறுப்பாக இயங்குவதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதிகாரத்தின் கரங்களா கவே கல்விமுறை செயற்பட்ட வண்ணமுள்ளது. கல்வி முறைமை தழுவி இலக்கியவழியான விழுமியங்களும் உருவாக்கம் பெறு கின்றன.
இவரின் கருத்துக்களின் தொகுப்பு
(1) கலையாக்கங்கள் உற்பத்திப் பண்டங்களாகின்றன.
(2) கலையாக்கத்தின்போது தன்னுணர்வு இடம்பெறு தலும் இடம் பெறாமையு மென்ற முரண்கோலங்கள்
தோற்றம் பெறுகின்றன.
(3) எண்ணத்துக்கும் எடுத்தியம்பலுக்குமிடையே இசை
வின்மையும் முரண்பாடும் தோற்றம் பெறுகின்றன.
(4) அந்நிலையிலே கலை இலக்கியங்களிலே உட்
பொதிந்த கருத்தியல் ஐதாகி (Dialuted) நைந்த நிலையைப் பெற்று விடுகின்றது.
66oMýb& &Ls 6gugues 69

Page 37
வால்டா பென்ஜயினும் கிறிஸ்தோபர் கொட்வெல்லும்
18. வால்டர் பென்ஜமினும்
கிறிஸ்தோபர் கொட்வெல்லும்
பிரெச்ந் அவர்களின் நாடகங்களை மார்க்சியக் கண்யோட்டத் திலே திறனாய்வு செய்தவர்களுள் வால்டர் பென்ஜமின் சிறப்பிடம் பெறுகின்றார். வளர்ந்து வரும் முதலாளி பண்பாட்டுக் கோலங்களை தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தியவர்களுள் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பிரெசற் தயாரித்த நாடகங்கள் மார்க்சிசத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கலைத் தயாரிப்பு என அவர் சுட்டிக் காட்டினார்.
நவீன தொழில்நுட்ப வழியாக எழும் புத்தாக்கங்கள் கலையாக்கம் என்ற பண்பைச் சிதைத்து விடுகின்றன. கலைஞர் களுக்குரிய தனித்தவ இழப்பைத் தூண்டிவிடுகின்றன. தனித்துவ மற்ற பிரதிகளையே நவீன தொழில்நுட்பம் வளர்த்து வருகின்றது. கலை நடைமுறையின் உள்ளமைந்த அரசியலை அவர் தீவிரபரி சீலனைக்கு உட்படுத்தினார்.
புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிசயிக்கப்படத் தக்க தாயிருப்பினும் அது புரட்சிகரமான சமூக விளைவுகளை மற்றும் கலை விளைவுகளை உருவாக்கியதாகத் தெரியவில்லை.
சோசலிச நெறி முறையை முன்னெடுக்கும் எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தமது ஆக்கங்களிலே உள்வலுவை மதிப்பீடு செய்து கொள்ளல் வேண்டும்.
சரியான பொருள் மீது கவனம் செலுத்துதால் புரட்சிகரமான கலையாக்கம் எட்டப்படும் என்ற கருத்தை அவர் நிராகரிக்கின்றார். தமது காலத்திலே காணப்படும் கலையாக்கவலுக்களைக் கலைஞர்கள் புரட்சிக்கு உள்ளாக்குதல் வேண்டும். சமூகம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களின் சிக்கலான வரலாற்று நிலவரங்களுக்கு ஏற்ற
70 மார்க்சிய உளவியலும் அழகியலும்

வால்டர் பென்ஜயினும் கிறிஸ்தோபர் கொட்வெல்லும்
பொருத்தமான நுட்பவியல்களை ஆசிரியர்கள் முன்னெடுக்க வேண்டும்.
கிறிஸ்தோபர் கொட்வெல்
மார்க்சிய நோக்கிலே முதலாளியத்தின் பன்முகத்தோற்றப் பாடுகளை இனங்கண்டு கலையாக்கங்களுடன் இணைத்து நேர்க்கும் புலக்காட்சி கொட்வெல்லிடத்து வளர்ச்சியுற்றிருந்தது. முதலாளியம் பல்வேறு சமூக நோய்களை உருவாக்கும் மூலவிசையாகிவிட்டது. முதலாளிய அடிப்படைகளை ஏற்றுக் கொண்டு பிரச்சினைகளுக்குத் திர்வுகாண்பதற்குரிய அவலங்களை அவர் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார். அவ்வாறு தீர்வுகாண முற்படுபவர்கள் மாய நிலையில் நின்று தீர்வு காண்பவர்களாகவே இருக்கின்றனர்.
அவர் எழுதிய மாயைத் தோற்றமும் நடப்பியலும் (Ilusion And Reality) என்ற நூல் அழகியல் பற்றிய மார்க்சிய தரிசனத்தின் வழியான நோக்காக அமைகின்றது. கலைப் படைப்புக்கள் சமூகத்தின் படைப்புக்களாகின்றன. சமூக ஆற்றலின் தெளிவான வெளிப்பாடுகளாகக் கலைகள் அமைகின்றன.
சமூகம் பற்றிய தெளிவான, தருக்க பூர்வமான நோக்கின்றிக் கலைகளின் இயல்பையும் சாராம்சத்தையும் கண்டறிய முடியாது. கலையாக்கத்துக்குரிய மொழியானது சமூகக் கூட்டுறவால் உருவாக்கப் பட்டதாகும். அதன் துணையின்றிக் கலையாக்கம் செய்வோர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. கலைப்படைப்பின் வழியாக முன்வைக்கப்படும் கருத்தமைவுகள் சமூகம் உருவாக்கிய உருவம் அல்லது வடிவம் என்பவற்றின் ஒன்றுபட்ட இணைவிலிருந்தே மேலெழுகின்றன.
உற்பத்தி உறவுகளை நிர்ணயிக்கும் காரணிகள் மாற்றமடைய சமூக உறவுகள் மாற்றமும் படிமலர்ச்சியும் அடைய அவை கலை ஞரையும் கலைப்படைப்பையும் பாதிக்கின்றன. கலைப்படைப்பின் உருமாற்றங்களுக்கு இட்டுச் செல்கின்றன. அந்நிலையிலே புதிய தேவைகளுக்குரிய புதிய வடிவங்கள் உருவாக்கம் பெறுகின்றன.
முதலாளியம் உருவாக்கும் சமூக நெருக்கடிகள் ஒருபுறம் நைந்துபோன கலையாக்கங்களின் உற்பத்திக்கு இட்டுச் செல்கின்றன. இன்னொரு புறம் சிதறுண்டு தனிமைப்பட்ட தனியாள் முனைப்புக்
கலாநிதி சபா ஜெயராசா 71

Page 38
வால்டர் பென்ஜயினும் கிறிஸ்தோபர் கொட்வெல்லும்
கள் மேலெழுகின்றன. இவையனைத்தும் தனிச் சொத்துரிமையின் பரந்துபட்ட அவலங்களாகின்றன.
முதலாளித்துவம் மற்றும் தனிச் சொத்துரிமையின் அழிவு தவிர்க்க முடியாதது என்பதை மார்க்சியத் தளத்தில் நின்று தெளிவாக விளக்கும் கொட்டுவல் அவற்றால் உருவாக்கப்பட்ட அறிவாலும் விஞ்ஞானத்தாலும் கூட அதன் அழிவையும் சிதைவையும் தடத்து நிறுத்த முடியாது என வலியுறுத்தினார்.
பிராய்ட் போன்ற உளப்பகுப்புவாதிகள் உருவாக்கிய உளம்சார்ந்த கற்பனைப் போக்குகளையும் அவர் சாடுகின்றார். பல்வேறு அறிவுத் துறைகளிலும் ஆக்கத்துறைளிலும் உருவாக்கம் பெற்றுவரும் மாயைத் தோற்றங்களை ஆதாரங்களுடன் அவர் தெளிவுபடுத்தி நிற்கின்றார்.
முதலாளிய சமூகத்திலே கலைஞர்களது தொழிற்பாடுகள் எதிர்ப்புணர்வு, உடன்பாட்டுணர்வு, ஒருங்கிணைவு ତTର୍ତtop நிலைகளிலே இடம்பெறலாம். எதிர்ப்பு உணர்வு என்பது பாட்டாளி வர்க்கத்துக்கு படைப்புக்களை உருவாக்குதலுடன் தொடர்புடையது. இவர்கள் பாட்டாளி வர்க்கத்துக்கு வெளியில் நின்று முதலாளிய அமைப்பை முறியடிப்பதற்கென தமது ஆக்கங்களை வெளியிடுபவர்களாக இருப்பர். பாட்டாளிவர்க்க இயக்கங்களுடன் ஒன்றுகலந்து தொழிற்படல் ஒருங்கிணைவாகின்றது.
கொட்வெல்லின் கருத்துக்கள் பின்வருமாறு தொகுக்கப்படும்.
(l) கலையாக்கங்கள் சமூகத் தொடர்பும் வரலாற்றுத்
தொடர்பும் மனவெழுச்சித் தொடர்பும் கொண்டவை.
(2) வரலாற்று வளர்ச்சிக்கு இணைந்த வகையில் அழகின்
சேர்மானங்கள் மாற்றமடைந்து வந்துள்ளன.
(3) அழகின் ஆக்கமும் நோக்கும் காலவோட்டத்தில்
மாற்றம் பெற்றுவந்துள்ளன.
(4) அறிக்கைப் பரிமாணம் மற்றும்உ ணர்ச்சிப் பரிமாணம் ஆகியவற்றைக் கலையாக்கங்கள் கொண்டுள்ள. முதலாளியம் அதன் அறிக்கைப் பரிமாணத்தை இல்லாதொழித்துவிடுகின்றது. அல்லது திரிபுபடுத்தி விடுகின்றது.
(5) அழகியல் பற்றிய விளக்கத்தை அதன் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்தே நோக்குதல் வேண்டும்.
72 மார்க்சிய உளவியலும் அழகியலும்

புதிய இடதுசாரி அழகியல்
19. புதிய இடதுசாரி அழகியல்
புதிய இடது சாரி மார்க்சிய சிந்தனைகளை முன்னெடுத்து வளர்த்தவர்களுள் வில்லியம்ஸ், ஈகில்டன், ஜேம்சன் முதலியோர் 'குறிப்பிடத்தக்கவர்கள். பின்வரும் ஆக்கங்கள் அவர்களின் மார்க்சிய அழகியற் சிந்தனைகளை வெளிப்படுத்தின.
l. பிரடிக்ஜேம்சன் - மார்க்சியமும் வடிவமும் (1971)
மற்றும் மொழியின் சிறைச்சாலை வீடு (1972)
2. ரெறி ஈகில்டன் - திறனாய்வும் கருத்தியலும் (1976)
அழகியலின் கருத்தியல் (1995)
3. ரேமன் வில்லியம்ஸ் மார்க்சியமும் இலக்கியமும்
(1977)
அனைத்துக் கலைவடிவங்களையும் அவற்றின் உருவாக்கு வதற்குரிய பண்பாட்டு நிலவரங்களை வில்லியம் ஸ்தீவிரமாக நோக்கலானார். அதன் தொடர்பில் பண்பாட்டுப் பொருண்மியவாதம் என்ற எண்ணக்கருவை அறிமுகம் செய்தார்.
அல்துஸ்ஸரைப்போன்று ஈகில்டன் கருத்தியல் என்ற எண்ணக் கருவை முதன்மைப்படுத்தி, இலக்கிய ஆக்கங்கள் தொடர்பான மையப்பிரச்சினையைக் குவியப்படுத்தினார். நடப்பியலைப் பொறுத்தவரை நூலியம் அதிலிருந்து விடுபட்டுச் சுயாதீனமாக நிற்கலாம். ஆனால் கருத்தியலைப் பயன்படுத்துவதில் அவ்வாறு விடுபட்டுச் சயாதீனமாக நிற்கமுடியாதென அவர் குறிப்பிட்டார். கருத்தியலே உளப்படிமங்களை உருவாக்கிக் கொள்வதிலே வலிமையான விசையாகத் தொழிற்படுகின்றது. கருத்தியல் என்பது சிக்கலான அமைப்புக்களைக் கொண்டுள்ளது.
இலக்கியம் கருத்தியலில் இருந்து தூர நிற்க முடியும் என்ற கருத்தை ஈகில்டன் நிராகரிக்கின்றார். இலக்கியம் சிறப்பு வாய்ந்த ஒரு கருத்தியல் உற்பத்தியாகும். அந்நிலையில் திறனாய்வு என்பது
கலாநிதி சபா ஜெயராசா 72

Page 39
புதிய இடதுசாரி அழகியல்
இலக்கியக் கருத்தியல் சார்ந்த வினைப் பாடுகளின் உற்பத்தி 65556 iait Guyf5u Iris (The Laws Of The Production Of Ideological Discourses AS Literature) Gibsidis ilul Go JaitlqugitGrigs.
(வகைமாதிரிக்கு கருத்தியல் சார்ந்த உற்பத்தி விதிகளின் வழியாக எஸ்.போவின் எழுத்தாக்கங்களை நோக்கலாம். அவரது ஆரம்ப சிறுகதைகளில் உளக்கவர்ச்சியியல் வாதத்தின் தெறிப்பைக் காண முடியும்)
1970 ஆம் ஆண்டின்பின்னர் ஈகில் டனின் அணுகுமுறைகளில் பெயர்ச்சிகள் ஏற்படலாயின. அல்துஸ்ஸரது சிந்தனை வீச்சிலிருந்த விடுபட்ட நிலையில் பிரெக்ர் மற்றும் பென்ஜமின் ஆகியோரின் கருத்துக்கள் மீது கவர்ச்சி ஏற்படலாயிற்று. கார்ல் மார்க்சின் மூலச் சிந்தனைகள் மீது கவர்ச்சி கொள்ளலானார். வரலாற்றுக்கு விளக்கங்கள் கூறுதல் முக்கியமானதன்று அதை மாற்றியமைத்தலே முதன்மையானது என்ற கருத்த வலியுறுத்தலானார். சரியான ஒரு கோட்பாடு தொழிலாளரின் வர்க்க எழுச்சி நடைமுறையில் இணைந்தது என்ற கருத்தை மீள வலியுறுத்தலானர்.
புரட்சிகரமான திறனாய்வை பென்ஜமின் அவர்கள் திகழ் J5CD56).j(g 6 gri (Against The Grain) 6T65ip G5ITLJITGig56tigaOTITi மார்க்சியக் கோட்பாடு என்றும் தொழிலாளர் போராட்டத்தைப் பிரதிபலிப்பதாகவுள்ளது. ஆனால் பிராங்போட் சிந்தனைகூடம் அந்தப்பாதையிலிருந்து விலகிவிட்டதாக ஈகில்டன் கருதினார். அமெரிக்காவில் தொழிலாளிவர்க்கம் பாதி நிலையிற் கேடுறுத்தப் பட்டு அரசியல் அதிகாரத்திலிருந்து புறந்தள்ளப்பட்டுவிட்டது. அந்தப் பின்னணியில் மார்க்சிய அழகியலை ஜேம்சன் ஆராயலானார். கலைகளின் உட்பொதிந்து ஆழ்ந்த திடமான நடப்பியலைத் தேடுதலும் தெளிபடுத்துதலும் அவரது அணுகுமுறைகளாய் அமைந்தன.
வரலாறு தன்னுள் பொதிந்த முரண்பாடுகளை ஒடுக்கி அழுத்திவைத்திருத்தல் போன்ற செயலை இலக்கிய ஆக்கங்களும் மேற்கொள்கின்றன. இலக்கிய வழியாகத் தரப்படும் தீர்வுகள் குறிப்பிட்ட இடரின் குணங்குறியாகவே இருக்கின்றன என்று ஜேம்ஸ்சன் குறித்துரைத்தார்.
74 மார்க்சிய உளவியலும் அழகியலும்

புதிய இடதுசாரி அழகியல்
அவருடைய ஒரு சிறப்பான கருத்து இலக்கியங்களுக்குப் பொருள்கோடலுடன் தொடர்புடையதாயிருந்தது. வலிதான பொருள் கோடல் என்ற கருத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அனைத்துப் பொருள்கோடலும் கருத்தியல் வயப்பட்டதாகவும் கடப்பு நிலைக்கு உட்பட்டதாகவும் இருக்கும் என வலியுறுத்தினார்.
பிராய்டிசத்தை அடியொற்றி அரசியல் நனவிலி (Political Un Conscious) என்ற கருத்தை ஜேம்சன் முன்வைத்தார். ஒடுக்கல் (Repression) என்ற செயற்பாட்டை அவர் தனிமனித நிலையிலிருந்து கூட்டு நிலைக்கு விரிவுபடுத்தினார். புரட்சியைக் கருத்தியல்கள் அடக்கிவைக்கின்றன. ஒடுக்குவோருக்கு அது சாதகமாக அமைந்து விடுகின்றது.
தெரிஈகிள்டன்
மார்க்சியச் சிந்தனைகளால் ஊட்டம் பெற்ற திறனாய்வாளருள் ஒருவராக ஈகிள்டன் விளங்குகின்றார். திறனாய்வுக்குரிய கருத்தியல் தளத்தைத் தொடர்புபடுத்தி திறனாய்வும் கருத்தியலும் என்ற நூலை வெளியிட்டார். மார்க்சியத் திறனாய்வையும் அழகி யலையும் பொறி முறை வாய்ப்பாடுகளாக விளக்க முயன்றவர்களுக்கு வழங்கப் பெற்ற பதிலுரையாகவும் அந்தநூல் அமைந்துள்ளது.
மார்க்சியக் கருத்தியலும் உள்வாங்கலும் இருபதாம் நூற்றாண்டிலே பிரவாகமெடுத்த அறிவுப்போக்கும் அழகியற் சிந்தனைகளும் அவரது முன்மொழிவுகளில் ஆழ்ந்த உட்பதிவுகளாக அமைந்தன. மார்க்சிய இலக்கியக் கோட்பாட்டுக்கான அடிப்படைக் கூறுகளாக அவர் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்.
(l) அவற்றுள் முதலாவதாக அமைவது பொது உற்பத்தி முறையாகும். பொருள் உற்பத்தியும் அதனோடிணைந்த சமூக அமைப்பு முறையும் இதில் அடங்கும். உற்பத்தி முறையில் இதுவே மேலோங்கிய வடிவமாகும்.
இவ்விடயத்தைப் பொறுத்த வரை மார்க்சியத் திறனாய் வாளரிடத்து இரண்டுவிதமான புலக்காட்சிகள் எழுந்துள்ளன. ஒரு சாரார் பொது உற்பத்தி முறையும் இலக்கிய உற்பத்தி முறையும் வேறு
கலாநிதி சபா ஜெயராசா 75

Page 40
புதிய இடதுசாரி அழகியல்
பிரிக்க முடியாத, ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்று காட்சி கொண்டனர். ஆனால் ஈகிள்டன் போன்றோர் பொருள் உற்பத்தி முறையை இலக்கிய உற்பத்தி முறையிலிருந்த வேறுபடுத்தி அறிகைப்படுத்தினார்.
இலக்கிய உற்பத்திக்கான சமூக உறவின் ஒருங்கிணைப்பாக இலக்கிய உற்பத்தி முறை தோற்றம் பெறும். எழுத்தறிவின் வளர்ச்சியும் இலக்கிய முயற்சிகளும் பல்வேறு இலக்கிய உற்பத்தி முறைகளைத் தோற்றுவித்த வண்ணமிருக்கும். பல்வேறுபட்ட இலக்கிய உற்பத்தி முறைகளுக்கிடையே ஒப்புமைகளும் ஒருங்கிணை வும் காணப்படலாம். முரண்பாடுகளும் மோதல்களும் தோற்றம் பெறலாம். அவற்றின் கூட்டு மொத்தமான அமைப்பு அல்சமச்சீர்மை நிலையை அல்லது சமச்சீர் அற்றநிலையைக் கொண்டதாக அமையும். அத்தகைய சமூகத்தில் மேலோங்கி நிற்கும் இலக்கிய உற்பத்தி முறைமை 6TGObaOTu 1 இலக்கிய உற்பத்தி முறைமைகளைப் புறந்தள்ளிவிடும்.
இலக்கிய உற்பத்தி முறைமைகளுக்குள் நிகழ்ந்த மோதல்கள் இங்கிலாந்தில் மட்டுமன்றி பின் காலனிய நாடுகளிலும் காணப்படும் ஓர் அகிலப் பண்பாகவுள்ளது.
மேலும் சமூக மாறுதல்கள் ஏற்படும் பொழுது முன்னைய சமக அமைப்பிலே தோற்றம் பெற்ற ஓர் இலக்கிய முறைமை பின்னைய சமூக அமைப்புக்களிலும் நீடித்து நிற்றல் உண்டு.
முதலாளித்துவ பொது உற்பத்தி முறைமையில் நூல்கள், இதழ்கள், முதலியவற்றின் விரைந்த உற்பத்தியும், திரைப்பட வாக்கம், வலைப்பூக்கள், இணையத்தள வாயிலான கலை உற்பத்தி முதலியனவும் விரைந்து நிகழ்கின்றன. அதே வேளை முதலாளித்து வத்துக்குச் சார்பான உள்ளடக்கங்களும், எதிர்ப்பு இலக்கியங்களும் ஒரே நேரத்திலே தோற்றம் பெறுகின்றன.
மேலும் அவரது ஆய்வுகள் பொதுக் கருத்தியல், நூலாசிரியர்
கருத்தியல், நூலியம் முதலான பரிமாணங்களிலும் வளர்ச்சியடைந் துள்ளன.
76 மார்க்சிய உளவியலும் அழகியலும்

புதிய இடதுசாரி அழகியல்
ஈகிள்டனுடைய கருத்துக்களைப் பின்வருமாறு தொகுத்துக்
கூறலாம்.
l.
2.
மார்க்சிய அழகியல் விளக்கம் விஞ்ஞான பூர்வ மாயிருத்தல் வேண்டும். கலை இலக்கியங்கள் உற்பத்திப் பண்டங்களாகின்றன. கலை இலக்கிய நூலியங்கள் (Text) கருத்தியல் தளத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. புனைவு என்ற பண்பைக் கலை இலக்கியங்கள் உட்பொதிந்துள்ளன. அந்நிலையில் அவை கண்ணாடி போன்ற நேர்ப்பிரதிபலிப்பாக அமைதல் இல்லை. கலைஞரது தனித்துவ நோக்கும், கருத்தியலும் கலைப்படைப்பிலே சங்கமித்துக் கொள்ளும். கலையாக்கங்களில் உட்பொதிந்துள்ள கருத்தியல் சுவைப்போரது அகவலயப்பாங்கில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பது கூர்ந்த நோக்கினுக்குரியது.
கலாநிதி சபா ஜெயராசா 77

Page 41
லுசியன் கோல்டுமன்
20. லுசியன் கோல்டுமன்
கலையாக்கங்கள் குறிப்பிட்ட நூலாசிரியர் சார்ந்துள்ள சமூகக் குழுவின் கருத்தைப் பிரதிபலித்து நிற்பதாகக் கோல்டுமன் கருதினார். கலைப்படைப்பு கலைஞரின் உளக்கட்டமைப்பிலிருந்து தோற்றம் பெறுகின்றது. அந்த உளக்கட்டமைப்பு தன்னிச்சையாகத் தோற்றம் பெறுவதில்லை. சமூக இயல்பும் சமூக நடத்தையுமே கலைஞரிக்குரிய உளக்கட்டமைப்பைத் தோற்றுவிக்கின்றன. இந்நிலையிலே கலைப்படைப்பு சமூகக் குழுக்களின் கூட்டான நடவடிக்கையால் தோற்றம் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்நிலையில் கலைஞரின் பணி குறிப்பிட்ட சமூகக் குழுவின் கருத்துக்களைத் தெளிவாகவும் கூர்ம்மைப்படுத்தியும் விழிப்புணர்ச் சியைத் தூண்டும் வகையிலும் வெளிப்படுத்தும் செயற்பாடாகின்றது. இவ்வேளை கலைஞரின் பணியும் முக்கியத்துவம் பெறுகின்றது. கலைஞர் வெறுமனே தெறிப்பவராக இராது தனது திறமையால் கூர்ம்மைப்படுத்தித் தெறிப்பவராக விளங்குகின்றார்.
குழுவின் உளப்பாங்கைச் செம்மைப்படுத்துவதற்கும், செழுமையாக்குவதற்கும் கலைப்படைப்புத்துணை நிற்கின்றது. குறித்த சமூகக் குழுவின் கூட்டு உற்றுணர்வு கலைப்படைப்பின் வழியாக வெளிவருகின்றது. குழுவின் இயல்பும் நோக்கும் செல்வழியும் கலைப்படைப்பினால் வெளித்துலங்குகின்றன.
இலக்கியப் படைப்பிலே கருத்து வெளிப்பாடே முதன்மை பெறுகின்றது. கலைச்சிந்தனையை முரண்நிலைத்தருக்க முறைமை யின் கூறாகவே அவர் கருதினார். அவருடைய இலக்கிய ஆய்வு பிறப்பாக்க மூலத்தைக் கண்டறியும் பிறப்பு நிலை (Genetic) வழி முறையைக் கொண்டிருந்தது. மார்க்சியத் தருக்க முறையை அடியொற்றி இலக்கியங்கள் தொடர்பான மூலம் காண் அணுகு முறையாக அது அமைந்துள்ளது. குறிப்பிட்ட இலக்கியத்துக்குரிய சமூகப் பின்புலத்தை விளங்கிக் கொள்வதற்குரிய குறிப்புக்கள் இவரால் முன்வைக்கப்பட்டுள்ளன.
78 மார்க்சிய உளவியலும் அழகியலும்

ÁSGBagrdio பூக்கோவில் மார்க்சியச் செல்வாக்கு
21. மிசேல் பூக்கோவில்
மார்க்சியச் செல்வாக்கு
மார்க்சியம் பல்வேறு அறிவுத்துறைகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருதல் மீண்டும் மார்க்சியத்திற்குத் திரும்புதல் (Back To Marx) எண்ணக்கருவினால் புலப்படுத்தப்படும். பின் அமைப்பியல் வாதியாகிய பூக்கோவின் ஆக்கங்கள் மார்க்சியம், இருப்பியம், உளப்பகுப்பியம் முதலாம் விசைகளுக்குப் பலநிலைகளிலே பலதளங்களிலே உள்ளாகியிருக்கின்றன.
மார்க்சியச் சிந்தனைகளைப் பெருமளவிலே அடியொற்றி அவர் அதிகாரம் மற்றும் கருத்து வினைப்பாடு (Discourse) ஆகிய எண்ணக் கருக்களை உருவாக்கினார். அதிகாரம் என்பது கருத்துவினைப்பாடுகள் வழியாக நடைமுறை கொள்வதை அவர் சுட்டிக்காட்டினார். அதன் வழியாகவே அதிகாரம் உச்ச நிலையில் நடைமுறை கொள்கின்றது.
கருத்து வினைப்பாடு மனித செயற்பாடுகளின் மையப் பொருளாகின்றது. சமூக நடைமுறைகள், நிறுவனங்கள், கருத்து வினைப்பாடுகள் ஆகியற்றுக்கிடையே மிகுந்த சிக்கலான தொடர்புகள் காணப்படுகின்றன. சமூக ஆக்கத்திலிருந்த பிரித் தெடுக்க முடியாத மொழியின் அதிகார ஆட்சியாகக் கருத்து வினைப்பாடு விளங்குகின்றது. அதற்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களால் உருவாக்கப்படுதல் பின்திரும்பும் (Textural Play) கருத்து வினைப்பாடாகின்றது. ஆனால் ஒடுக்கப்பட்டோர் என்பதற்கு அவர் உளவியல்நிலைப்பட்ட ஒடுங்கிய விளக்கத்தையே வழங்கினார். (உதாரணம். தன்பால் சேர்க்கையில் ஈடுபடுவோர்)
கருத்து வினைப்பாட்டின் மாற்றங்களுக்கான வரலாற்றுப் பரிமாணங்கள் அவரால் நோக்கப்பட்டன. அதே வேளை நித்சேயின் கருத்துக்களை அடியொற்றி வரலாற்றிலிருந்து புறவய அறிவைத் கலாநிதி சபா ஜெயராசா 79

Page 42
மிசேல் பூக்கோவில் மார்க்சியச் செல்வாக்கு
திரட்டிக் கொள்ள முடியாதென்ற கருத்தை முன்வைத்தார். வரலாற்றை ஒரு நூலிய விளையாட்டாகவே (Textural play) அவர் கருதினார். மறுமலர்ச்சிக்கால இலக்கியங்களை வெறும் மொழி விளையாட்டாகவே அவர் கருதினார். அவற்றின் உருவாக்கத்துக்குரிய சமூகவரலாற்று விசைகளை அவரால் தரிசிக்க முடியாமற் போய்விட்டது. அவர் எழுதிய பொருள்களின் ஒழுங்கமைப்பு (1966) என்ற நூலிற் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
(l) ஒவ்வொன்றும் வேறொன்றையே எதிரொலிக்கின்றன. (2) எதுவும் தன்னிலே தங்கியிருக்கவில்லை.
ஜோன்டென்னேயின் கவிதைகளை அவர் மேலும் எடுத்துக்காட்டாக்குகின்றார். அவருடைய மனம் எதிலும் தரித்து நிற்கவில்லை - தெய்வீகத்திலிருந்து இயற்கைக்கும், மனிதனிலிருந்து தெய்வீகத்துக்கும், பிரபஞ்சத்திலிருந்து மனிதருக்கும் அலைந்து கொண்டிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார். இங்குகூட மனித அலைச்சலுக்கும் உழைச்சலுக்குமுரிய சமூகத் தளத்தை அவரால் கண்டறிய முடியாமற் போனது.
பூக்கோவின் எழுத்தாக்கங்கள் புதிய வரலாற்றியல் வாதத்தை (New Historicism) முன்னெடுப்பதற்கு விசை வழங்கின அவ்வாதத்தை முன்னெடுத்தோர் குறித்த காலகட்டத்தின் பொதுப்பண்பாட்டுக்கும் அக்கால கட்டத்தலே தோற்றம் பெற்ற
இலக்கியங்களுக்குமிடையேயுள்ள இடைத் தொடர்புகைளக் கண்டறிய முற்பட்டனர். அது ஒருவகையில் மார்க்சிய சிந்தனை களின் நேரடிச் செல்வாக்கைப் புலப்படுத்தியது. அத்துடன்
மரபுவழியான வரலாற்றியல் வாதத்தைத் தீவிரபரிசீலனைக்கு உட்படுத்தினர்.
வரலாறு ஒர் எடுத்துரைப்பாக விளங்குவதனால், கடந்த கால நிகழ்ச்சி உள்ளவாறே எடுத்தியம்பப்படுதல் சாத்தியமற்றது என்று பின் அமைப்பியல் வாதிகள் கருதினர். வரலாறு நூலிய வடிவத்தைப் பெற்றுள்ளமையால் நூலியத்துக்குரிய மட்டுப்பாடுகளை அது கொண்டிருக்கும். வரலாற்றுக்கால கட்டங்கள் திட்டவட்டமான ஒருங்கிணைப்பின் முடிவுகள் அன்று. ஒரு வரலாறு என்று ஒன்றில்லை. தொடர்பற்ற முரண்படும் வரலாறுகளே காணப்
80 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மிசேல் பூக்கோவில் மார்க்சியச் செல்வாக்கு
படுகின்றன. அதிகாரத்திலுள்ள மேலோங்கியோர் தமது நலன்களின் காப்பரணாகவே வரலாற்றை உருவாக்கி வந்துள்ளனர். அந்நிலையில் உறுதியான நிலைத்தவரலாறு இன்மையால் அவற்றின் பின்னணியில் இலக்கியத்தை நோக்குதல் தவறானது என்ற குழப்பமான கருத்தை முன்வைக்கின்றனர்.
அல்துஸ்ஸர் மற்றும் பூக்கோ ஆகியோரின் சிந்தனைகளை அடியொற்றி பண்பாட்டுப் பொருள் முதல் வாதம் (Cultural Materialism) என்ற எண்ணக்கரு ஆக்கம் பெற்றது. அவர்களின் கருத்துப்படி மனித அனுபவங்கள் சமூக நிறுவனங்களாலும் குறித்துரைக்கப்படும் கருத்து வினைப்பாட்டினாலும் உருவாக்கம் பெறுவதாகக் குறிப்பிடப்படுகின்றளது. கருத்தியல் சமூகப் போராட்டத்தின் வழியாக உருவாக்கம் பெறுகின்றது. கருத்தியல் என்பது பொருள்சார் நிறுவனங்களுக்கு உட்பட்டது என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. பொருள்சார் நிறுவனங்கள் என்று கூறும்பொழுது, அரசியல் நிறுவனம், நீதி நிறுவனம், கல்வி மற்றும் சமய நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன. கருத்தியலானது தனிமனிதரைத் தம்முள் அடக்கிக் கீழ்ப்படிந்து தொழிற்படவைக்கும் வலுவைக் கொண்டுள்ளது. சமூக நிறுவனங்களிலே கருத்து வினைப்பாடுகள் ஊன்றிவேர் கொண்டு எழுதலைப் பூக்கோவும் சுட்டிக்காட்டியுள்ளார். சுரண்டலை நிலைநிறுத்துவதற்கும் வலிமைப் படுத்துவதற்குமான கருத்து வினைப்பாடுகளை முதலாளிய அதிகாரம் உருவாக்கியுள்ளது.
அழகியலும் ஒருவகையான கருத்துவினைப்பாடுதான் முத லாளியத்தின் அதிகாரத்தையும் வலிமையையும், பறிப்பு நடவடிக் கையையும் நிலைநிறுத்தும் வண்ணம் அழகியற் கருத்துருவங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. தூய அழகியல், அழகு அழகுக்காக முதலியவை அவ்வகையில் எழுந்த அணுகு முறைகளே.
புதிய வரலாற்றியல் வாதமும் பண்பாட்டுப் பொருள் முதல்வாதமும் இலக்கியங்களையும் வரலாற்றையும் கற்பதற்குரிய பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு நுழைவாயிலமைத்துள்ளன. ஆனால் அவை மார்க்சியத்தைவிட்டு வழிதவறிய பாதைகள் தான்.
கலாநிதி சபா ஜெயராசா 81

Page 43
ஹேர்ப்பம்ஸ் அவர்களின் பின்னைய மார்க்சியநோக்கு
22. ஹேர்ப்பம்ஸ் அவர்களின்
பின்னைய மார்க்சியநோக்கு
DTர்க்சிய சிந்தனைகளின் ஒருபக்க வளர்ச்சியை ஹேர்ப்பமஸ் அவர்களின் எழுத்தாக்கங்கள் வெளிப்படுத்துகின்றன. சமகாலத்தில் வளர்ச்சி பெற்று வரும் தொடர்பாடற் பண்பாட்டின் மீது தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டியதன் தேவையை அவர் முதன்மைப்படுத்தினார்.புதிய வகையான தொடர்பாடற் பண்பாட்டை அடியொற்றி மேலெழும் முரண்பாடுகளே நவீன உலகைப் பலநிலைகளிலும் பாதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தொடர்பாடல் மென்பொருளினதும் வன்பொருளினதும் பின்புலத் திலே தென்படாக் கரமாக இயங்கிக் கொண்டிருக்கும் நவீன முதலாளியத்தின் இயல்பை அவர் ஆழ்ந்து தரிசிக்காது அதனை முதன்மைப்படுத்தலானார்.
மனித நடத்தைகளை அவர் பின்வரும் நிலைகளிலே இரண்டு விதமாகப் பாகுபடுத்துகின்றார்.
(1) தருக்க நிலைப்பட்ட நோக்குடைய நடத்தை (Rational
Purposive Behaviour)
(2) தொடர்பாடல் சார்ந்த நடத்தை (Communicative
Behaviour)
முதலாளியம் மற்றும் பொதுவுடைமை முதலியவற்றை விளங்கிக் கொள்வதற்கு மேற்கூறிய முதலாவது வகை நடத்தை அடிப்படையாகின்றது. அதேவேளை தருக்கம் சார்ந்த இலக்குடைய நடத்தையின் எல்லைகளை விளங்குவதிலும் வரையறுத்துக் கொள்வதிலும் இடர்ப்பாடுகள் காணப்படுகின்றன.
மனித இயல்பு தருக்க நிலைப்பட்ட எல்லைகளுடன் மட்டும் கட்டுப்பட்டு நிற்பதில்லை. மனிதரின் உள்ளார்ந்த வலுவையும்
82 மார்க்சிய உளவியலும் அழகியலும்

ஹேர்ப்பம்ஸ் அவர்களின் பின்னைய மார்க்சியநோக்கு
ஆற்றலையும் உணர்ந்து கொள்வதற்கு அவர்களுக்குரிய தளம் வேண்டப்படுகின்து. அந்நிலையில் தனிமனிதர்களின் தேவைகளை யும் விருப்புக்களையும் அடையப்பெற்றுக் கொள்வதற்கு உச்சநிலை யான தொடர்பாடலைக் கொண்ட அரசியல் தளம் வேண்டப் படுகின்றது.
தருக்க நிலைப்பட்ட நோக்குடைய நடத்தையின் வரையறை தொடர்பாடல் சார்ந்த நடத்தையை முன்னெடுக்க உதிவுகின்றது.
தொடர்பாடல் சார்ந்த நடத்தை முதலாளிய சமூகத்திற்கும் வேண்டப்படுகின்றது. முதலாளியம் சாரா சமூகத்திற்கும் வேண்டப் படுகின்றது.
அந்த நடத்தை வளர்ச்சியுடன் இணைந்த சமூக பண்பாட்டு நிலவரங்களின் போலித்தனங்களையும் முகமூடிகளையும் கிழித்தெறி தல் தொடர்பான எழுத்தாக்கங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளன. அனைத்துத் தொடர்பாடல் நடத்தைச் செயல் முறைகளினதும் சமூக பண்பாட்டுச் சூழமைவை விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. பேச்சு வினைப்பாட்டுத் தளத்தை அடியொற்றி தொடர்பாடல் நடத்தை வெளிப்பாடு கொள்கின்றது.
Gugs, 6560)6OTL'il IITG) (Speech Act) 6T6ölp Gls-up IIICB) அவருடைய எழுத்தாக்கங்களில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த எண்ணக்கரு பேச்சு மொழி யிலும் வேறுபட்டதும், உயர்ந்த நிலையில் உள்ளதுமாகும்.
தொடர்பாடலை வியாக்கியானம் செய்வதற்கோ ஊடுருவிப் பொருள்கோடல் செய்வதற்ககோ விஞ்ஞான பூர்வமான மொழித் தேட்டமோ பேச்சு வினைப்பாடோ உருவாக்கம் பெறவில்லை.
ஒவ்வொரு பேச்சு வினைப்பாடும் ஒவ்வொரு சூழமைவுக்கும் ஏற்றவாறு வேறுபடுகின்றது. அதற்குரிய பொதுமைப்பட்ட அகிலப் பண்புடைய விதியாக்கமும் சாத்தியப்படாததொன்றாகின்றது.
நவீன சமூகத்தின் தொடர்பாடல் சார்ந்த நடத்தை திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்ட திரிபுபடுத்தல்நடவடிக்கையாகின்றது. நடப்பி யலைத் திரிபுபடுத்தும் கருத்தியல் அங்கே உட்பொதியப் பட்டுள்ளது.
கலாநிதி சபா ஜெயராசா 83

Page 44
ஹேர்ப்பம்ஸ் அவர்களின் பின்னைய மார்க்சியநோக்கு
தருக்கவயப்பட்ட நோக்குடைய நடத்தையின் மட்டுப்பாடு களை விளங்கிய ஒரு சமூகத்தின் தொடர்பாடலே பொருண்மை கொண்ட செயற்பாடாகின்றது.
பிராங்போட் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் மற்றும் சமூக வியல் பேராசிரியராக இருந்து அவர் மேற்கொண்ட ஆய்வுகளின் வெளிப்பாடுகளாய் தொடர்பாடல் சார்ந்த எழுத்தாக்கங்கள் அமையப்பெற்றன. அவரது சிந்தனைகள் ஆசிரியராகிய அடோர் னோவின் ஆக்கங்களை அடியொற்றி மேலெழுந்தன.
அதிகாரவேட்கையை முன்னெடுத்தலும், சமத்துவமற்ற நிலையை உருவாக்குதலும் முதலாளியத்தின் இயல்பான குணங்கள் என்பதை வலியுறத்தினர். ஆனால் முதலாளிய சமூகத்தல் வாழ்வோர் அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு செப்பனிடப்படுகின்றனர். நலிந்த வர்களும் ஒடுக்கப்பட்டவர்களும் அவற்றை ஏற்றுக் கொள்ளுமாறு பல்வேறு ஊக்கல்களும் உபாயங்களும் அங்கே பயன்படுத்தப் படுகின்றன.
தமது வலுவைப் பறிப்போரின் அதிகாரத்தில்பறிப்புக்கு உள்ளாவோர் நம்பிக்கை வைத்திருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி யுள்ளார். பறிப்பை மேற்கொள்வோரின் கருத்தியல் தீவிர திறனாய்வுக்குரியது.
அவ்வாறு கருத்தியலைத் திறனாய்வுக்கு உட்படுத்துதல் நான்குபடி நிலைகளைக் கொண்டது.
படிநிலை ஒன்று - நடப்பியலில் உள்ள சூழமை விளக்குதலும், பொருள்கோடலும்.
படிநிலை இரண்டு - சூழலில் இருந்து பெறப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு காரணங்களை ஊடுருவி நோக்கல்.
படிநிலை மூன்று - சூழமைவை மாற்றியமைப்பதற்குரிய நிகழ்ச்சித்திட்டத்தை வடிவமைத்து இயக்குதல்.
84 மார்க்சிய உளவியலும் அழகியலும்

ஹேர்ப்பம்ஸ் அவர்களின் பின்னைய மார்க்சியநோக்கு
படிநிலை நான்கு- உருவாக்கப்பட்ட புதிய சூழமைவைப் பரிசீலனைக்கு உட்படுத்துதல்.
கருத்தியலானது செயற்பாடுகளை நேரடியாக உருவாக்கு கின்றது.
நவீன சமூகம் தருக்கவியலையும் நியாயித்தலையும் அதிக அளவு வலியுறுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். தனிமனித எழுச்சியையும் சமூக எழுச்சியையும் அவர் சமப்பப்படுத்தி நோக்குகின்றார். சமூக மாற்றத்துக்குரிய கருவிகளுள் தொடர்பாடல் மீது அவர் அதீத நம்பிக்கை வைத்துள்ளார்.
கல்வியால் அதிகாரம் உற்பத்தி செய்யப்பட்டும் மீள் உற்பத்தி, செய்யப்பட்டும் வெளிப்படுதலைத் தமது கல்வியியற் சிந்தனை களிலே வெளிப்படத்தினார்.
அவர் நவீனத்துவத்தின் இயல்புகளைப் பாராட்டினார். பின்னவீனத்துவத்தைக் காட்டிலும் நவீனத்துவமே சமூகத்தின் எழுச்சிக்கு ஆதரவு தரவல்லதென்றும் அதன் ஆற்றல்கள் முழுமையாக எடுத்தாளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இருபதாம் நூற்றாண்டில் அதீத வளர்ச்சிபெறத் தொடங்கிய தொடர்பாடல் என்ற செயற்பாட்டைத் தனித்து மிகைப்படுத்தி நோக்கியமை அவரது ஆய்வுகளில் இழையோடிய மட்டுப் பாடாகின்றது.
கலாநிதி சபா ஜெயராசா 85

Page 45
அமைப்பியலும் அழகியலும்
23. அமைப்பியலும் அழகியலும்.
1960 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பாவின் புலமை வாழ்க்கை அமைப்பியலின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அவற்றால் மார்க்சிய அணுகுமுறைகள் பாதிக்கப்படவில்லை என்ற கருத்தும் மேலோங்கியது. சமூக இருப்பிலிருந்து தனிமனிதரை வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்ற கருத்தை மார்க்சியமும் அமைப்பியலும் ஏககாலத்தில் வலியுறுத்தின. தனிமனிதர் தனித்துவமான முகவர் அல்லர் அவர்கள் சமூக இருப்பின் நிபந்தனைக்கு உட்பட்டவர்கள்.
அமைப்பு எண்ணக்கருவைப் பொறுத்தவரை அமைப் பியலுக்கும் மார்க்சியத்துக்குமிடையே குறிப்பிடத்தக் வேறுபாடு உண்டு. அதனைப் பின்வருமாறு தெளிவுபடுத்தலாம்.
O அடிப்படை அமைப்புக்கள் காலக்கட்டுப்பாட்டைக் கடந்து தம்மைத் தாமே நெறிப்படுத்திக் கொள்ளும் செயற்றொகுதிகள் என அமைப்பியலாளர் வலியுறுத்தினர்.
O மார்க்சியக் கோட்பாட்டைப் பொறுத்தவரை அமைப்பு என்பது முரண்பாடுகளை உள்ளடக்கிய வரலாற்று விளைவினால் உருவாக்கம் பெற்றதுடன் முரண்பாடுகளின் இயக்கங்களினால்
மாறும் பண்பைக் கொண்டிருக்கும்.
அமைப்பியலை அடியொற்றி நூலியத்தை (Text) விளக்கியவர்களுள் லுசியன் கோல்மென் சிறப்பிடம் பெறுகின்றார். தனிமனிதரது தனித்துவ இயல்பால் நூலியம் உருவாக்கப்படுதல் இல்லை. குறிப்பிட்ட வர்க்கங்களின் ஊடுதொடர்பு கொண்ட நபரின் p GMT gjøODLIDL 'n sej;ȰpGmr (Trans Individual Mental Structures) அடியொற்றியே நூலியம் ஆக்கமும் தோற்றமும் பெறுவதாக அவர் குறிப்பிட்டார். தம்முன்னுள்ள மாறும் சமூக இயல்புக்கு ஏற்றவாறு சமூகக் குழுக்களால் உலகுபற்றிய நோக்குக்கட்டுமை செய்யப்படு கின்றது.
86 மார்க்சிய உளவியலும் அழகியலும்

அமைப்பியலும் அழகியலும்
மாறும் நடப்பியல் உலகின் நிலைகளுக்கு ஏற்றவாறு சமூகக் குழுக்கள் தமக்குரிய உலகநோக்கை உருவாக்கியும் மாற்றியும்
கொள்ளும். அவர்களது உள்படிமங்கள் அவ்வாறான இசைவாக் கலை மேற்கொண்ட வண்ணமிருக்கும். அந்த உளப்படிமம் நன்கு வரையறிக்கப்படாததாய் இருக்கும். சரியாக உணரப்படாத
நிலையிலே தோற்றுவிக்கப்ப்டடதாகவும் இருக்கும். ஆனால் பெரும் படைப்பாளிகள் உலகுபற்றிய நோக்கினைச் சிறந்த முறையிலே கட்டுமானம் செய்து கொள்வார்கள். கோல்டுமன் தமது காலத்தைய பிரான்சின் சமய நோக்கை மாற்றமுறா இயல்புக்கு உதாரணமாக எடுத்துக்காட்டினார்.
நவீன சந்தைப் பொருளாதாரத்துக்கும் நவீன நாவல்களுக்கு மிடையேயுள்ள தொடர்புகள் அவர்களினாலே விளக்கிக் காட்டப்பட்டன. மரபு வழிநாவல்களில் பொருட்கள் தனிநபரைப் பொறுத்தவரை பொருண்மை கொண்டவையாய் அமைந்திருந்தன. ஆனால் நவீன நாவல்களில் பொருட்கள் தனிநபரை நிலை பெயரச் செய்துவிட்டன.
அமைப்பியல் வாதியாகிய அல்துஸ்ஸர் அனைத்தையும் தொடர்புற இயக்கும் அமைப்புப் பற்றி விளக்கினார். அதன்
தொடர்பில் அவர்சமூக ஆக்கம் (Social Formation) ଶTର୍ତt[D எண்ணக்கருவை முன்மொழிந்தார். வாழும் உயிர்ப் பொருட்கள் போன்று அமைப்பு ତTର୍ତtugs) அதன் இயக்கத்துக்குரிய
எழுமுதன்மைகளைக் (Principles) கொண்டதன்று அது தோன்று வதற்குரிய மூலக்கூறும்இலை. அது மேலோட்டமான இணைப்பை யும் கொண்டிருக்க வில்லை. சமூக ஆக்கத்தின் உள்ளமைந்த பல்வேறு மூலக்கூறுகளும் பொருண்மியத்தளத்தின் தெறிப்புக்களாக அல்லது பிரதி பலிப்புக்களாகக் கொள்ளப்படுதல் இல்லை. அமைப்பின் ஒவ்வொரு மட்டங்களும் சுயாதீனமானவை. இறுதி நிலையில் மாத்திரம் அவை பொருண்மிகத்தீர்மானிப்புக்கு உட்படுகின்றன.
சமூக ஆக்கம் என்பது ஓர் அமைப்பாகும். உள்ளமைந்த முரண்பாடுகளைக் கொண்டதும், பரஸ்பர முரண்பாடுகளைக் கொண்டதுமான சிக்கல் மிகுந்த பண்புகளைக் கொண்ட பல பல மட்டங்களைக் கொண்டதாக அது அமைக்கப்பட்டுள்ளது. அவற்றுள்
கலாநிதி சபா ஜெயராசா 87

Page 46
அமைப்பியலும் அழகியலும்
அமைந்துள்ள முரண்பாடுகள் எளிமையானவை அன்று. அமைப்பின் முரண்பாடு ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு அமைப்பு அல்லது பல அமைப்புக்களின் தீர்மானிப்புக்கு உட்பட்டிருக்கும். ஆனால் இறுதியில் அது பொருண்மிய மட்டத்தின் தீர்மானிப்புக்கு உள்ளாகும். இந்நிலையில் மார்க்சின் கருத்துக்களும் தொடர்பு படுத்திக் காட்டப்படுகின்றன.
நிலமானிய சமூக ஆக்கத்தில் சமயம் அமைப்பியல் நிலையில் ஆதிக்கம் கொண்டதாயிருந்தமையை மார்க்ஸ் சுட்டிக்காட்டினார். ஆனால் அது நிலமானி அமைப்பின்மையப் பொருளாகவோ சாராம்சமமாகவோ அமையவில்லை என அவர் தெளிவுபடுத்தினார். அதனுடைய பிரதான தீர்மானிப்பு வலிமையாகப் பொருண்மிய மட்டம் இடம்பெற்றாலும் அந்தத் தொடர்பு நேரடியானதாக அமையவில்லை.
கலைகளை ஒருவகையான கருத்தியல்வடிமாக எளிமையான வகையிலே கொள்ளமுடியாதென அல்துஸ்ஸர் கருதினார். ஒரு பெரும் கலைப்படைப்பு நடப்பியல் எண்ணக்கருவை விளங்கிக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படுதல் இல்லை, அல்லது குறிப்பிட்ட வகுப்பினரது கருத்தியலைப் பிரதிபலிப்பதுமில்லை. தூர இருப்பவற்றைத் தரிசிப்பதற்கு அெை துணைக்கின்றன. கலைப்படைப்பினுள் அமைந்திருக்கும் கருத்தியல் அதனைக் கலை என்பதிலிருந்து பிரித்து விடுகின்றது. இவ்வாறாக விளக்கும் அல்துஸ்ஸர்கருத்தியல் என்பதற்குரிய விளக்கத்தையும் தருகின்றார்.
கருத்தியல் என்பது தனிநபரால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது. அது இருப்பின் நடப்பியல் நிலவரங்களுக்கும் தனி நபர்களுக்குமிடையிலான கற்பனையான தொடர்புகளை விளக்கும் பிரதிநிதித்துவப்படுத்தலாகின்றது. கற்பனையான அந்த உணர்வு உலகுபற்றிய நிலவரத்தை அறிய உதவுகின்றது. அதேவேளை உண்மையான தொடர்புகளை அறிந்து கொள்வதை அடக்கிவைப்பதற்கும் துணைநிற்கினற்து. உதாரணமாக விடுதலை என்ற கருத்தியல் அனைவருக்கும் விடுதலை என்பதை நம்பச்
88 மார்க்சிய உளவியலும் அழகியலும்

அமைப்பியலும் அழகியலும்
செய்கின்றது. அதேவேளை முதலாளியப் பொருண்மியத்துக்குக்கும் அந்த எண்ணக்கருவுக்குமுள்ள தொடர்பைத் திரையிட்டு மறைத்து விடுகின்றது.
ஆட்சி செலுத்தும் வர்க்கத்தின் நலன்கள் பாதுகாக்கப்படும் செயல் முறையைக் கொண்ட வலுவான ஆட்சி செலுத்தும் கருத்தியல் பொருட்களைப் பொது அறிவுடன் காட்சி கொள்ளவைப் பதற்கான கருத்தியலாகக் காட்சி கொள்ளவைக்கப்படுகின்றது.
கலை என்பது தம்மை உருவாக்கிய கருத்தியலை ஓரங்கட்டி விடுகின்றது. உளப்பகுப்பு உளவியலாளர் போன்று கலைத்திறனாய் வளரும் கலையாக்கத்தில் என்ன வெளிப்படுத்தப் படவில்லை என்பதிலே கூர்ந்த கவனத்தைச் செலுத்துகின்றனர். என்ன தவிர்க்க முடியாது ஒடுக்கிவைக்கப்படுகின்றது என்பதை நோக்குகின்றனர்.
கலாநிதி சபா ஜெயராசா 89

Page 47
தெறித்தல் வினைப்பாடு
24. தெறித்தல் வினைப்பாடு
தெறித்தல் வினைப்பாடு அல்லது பிரதிபலித்தற் செயற்பாடு மார்க்சிய அழகியலிற் சிறப்பிடம் பெற்றுவரும் அறிகைப் பரிமாணமாகின்றது. சமூகம் என்ற பெரும் பரப்பு இலக்கிய வழியாகத் தெறித்துக் காட்டப்படுகின்றது. முழுமையாகச் சமூகத்தைத் தெறித்துக் காட்டலும், துண்டங்களாகவும் துணிக்கை களாகத் தெறித்துக் காட்டலும் அவ்வப்போது நிகழ்த்தப்படுகின்றன. தெறித்தல் வினைப்பாடுபற்றிய உரத்த சிந்தனை லுக்கஸ் அவர்களால் மார்க்சியத் தளத்திலிருந்து வெளியிடப்பட்டது.
உளவியலிலே தெறித்தல் என்பது புலன்கள் வழியாக ஆரம்பிக்கின்றது புறவுலகச் செய்திகளைப் புலன்கள் மூளைக்கு அனுப்புகின்றன. மூளை அத்தகவல்களைத் துண்டங்களாக வைத்திருப்பதில்லை. அத்தகவல்கள் மூளையில் பொருண்மை கொண்ட வகையிலே நிரற்கோடல் (Encoding) செய்யப்படுகின்றன. அவை உணர்வுகளுடன் கலக்கின்றன. மனிதன் மேற்கொள்ளும் அறிகைச் செயல்முறையும் (Cognitive Proces) உணர்வுகளும் புறத் தகவல்களில் உட்பொதிந்துள்ள உண்மைகளையும் பொருண்மை களையும் எடுத்துக்காட்டுகின்றன. அந்நிலையில் மனித மூளையின் செயற்பாடு கண்ணாடிபோன்று பொறி முறையாகத் தெறித்துக் காட்டுவதற்கு சமனாகாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
சமூகத்திலே மேலெழும்புறத்தோற்றங்களின் உட்பொதிந்த உண்மைகளைக் கண்டறிந்த படைப்புக்களின் ஆக்கமே உயர்ந்த நிலையை எட்டுகின்றது. இதுவே மார்க்சியம் குறிப்பிடும் தெறித்தல்வினைப்பாட்டின் உட்பொருளாகின்றது. தெறித்தலை அறிக்கை சார்ந்த செயற்பாடாக லூக்கஸ் கருதுகின்றார். அவரது கருத்துப்படி அழகியலாக்கம் என்பது ஒரு வகையான சாய்வு நிலை கொண்ட அல்லது விலகல் நிலைத் தெறிப்பு (Deflection) ஆகும்.
90 மார்க்சிய உளவியலும் அழகியலும்

தெறித்தல் வினைப்பாடு
அழகியற் புனைவுக்குரிய கட்டமைப்பும் விதிகளும் நடப்பியலை மாற்றியமைத்துவிடுகின்றன.
கலைப்படைப்பு நடப்பியல் நிலவரங்களை நேரடியாகத் தெறித்துக் காட்டுதல் இல்லை. அதனைச் அச்சொட்டாகப் பிரதிபண்ணித் தருதல் இல்லை. அங்கே ஒருவிதமான சிதைத்தல் இடம் பெற்றுவருகின்றது. இவ்வாறாகத் தெறித்தல் என்ற கலை வினைப்பாடு நேர்நிலையிலும் மாற்றுநிலையிலும் நோக்கப்படுதல் கலையாக்கத்தில் அதன் முக்கியத்துவத்தை மீள வலியுறுத்தி நிற்கின்றது.
தெறித்தல் வினைப்பாட்டுக்குரிய அறிகைத்தளம் மார்க்ஸ் ஏங்கல்ஸ் ஆகியோரில் வடிவமைக்கப்பட்டதாயினும் அதற்குரிய முழுமையான வடிவத்தை லெனின் உருவாக்கினார். தெறித்தல் என்பது சூழலுக்கும் மனிதமூளைக்குமிடையே உள்ள நிகழ்ச்சி யாகின்றது. புறத்தில் நிகழ்பவை உள்ளத்தைச் சென்றடைகின்றன. ஆனால் பரந்து விரிந்த புறவுலகின் தெரிவு செய்யப்பட்டவையே உள்ளத்தைச் சென்றடைகின்றன. இந்நிலையில் தெறித்தல் என்பது வரையறைகளுக்கும் மட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டதாகின்றது.
மனிதமூளை மிக நீண்ட உயிரியல் மற்றும் சமூகவரலாற்றின் விளைவுகளால் படிமலர்ச்சி கொண்டது. சமூக வரலாற்றின் விளைவாத் திரண்டெழுந்து அனுபவத் தொகுப்பு நனவறியுணர்வு அல்லது உற்றுணர்வு (Consciousness) எனப்படும். (உளப்பகுப்பு உளவியல் நனவறியா உணர்வு பற்றியும் குறிப்பிடுகின்றது) இது சமூகத்தினாற் கட்டுப்படுத்தப்படுகின்றது. புறவுலகம் மனித மூளையில் படிமங்களாக மாற்றம் பெறுகின்றது. இவ்வாறான படிமவாக்கம் எண்ணக்கருவாக்கம் (Concept) என்று உளவியலிலே குறிப்பிடப்படும். சூழலுடன் மேற்கொள்ளப்படும் இடைவினை களால் அது ஆக்கம் பெறுகின்றது. இடைவினைகளின் இயல்பு களுக்கு ஏற்றவாறு பொருள்கள், நிகழ்ச்சிகள் பற்றிய எண்ணக்கருவாக்கம் அல்லது படிமவாக்கம் இடம்பெறும். இந்தப் படிமவாக்கம் நிலைத்தவடிவம் கொண்டதன்று. இடைவினைகள் வளர, வளர படிமம் தொடர்ந்து மாற்றமடைந்த வண்ணமிருக்கும். இந்நிலையில் புறப்பொருளிலிருந்து வேறுபட்ட வடிவமாகவோ, மாறுபட்ட வடிவமாகவோ படிமங்கள் உள்ளத்திலே கட்டுமை
கலாநிதி சபா ஜெயராசா 91

Page 48
தெறித்தல் வினைப்பாடு
(Construct) செய்யப்படுகின்றளன. இவ்வாறான கட்டுமையின் இயல்புக்கும் செறிவுக்கும் ஏற்பவே தெறித்தல் வினைப்பாடு இடம் பெறும்.
மனத்திலே கட்டுமை செய்யும் செயற்பாடு பதித்தல் (Recording) என்பதோடு மட்டும் நிறுவிடுதல் இல்லை. சூழலை
விளங்கிக் கொண்டு அதன் எதிரிடையான கொடுமைகூர் இயல்புகளை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்பது தொடர்பான படிமங்களையும் மூளை உருவாக்கிக் கொள்கின்றது. ஆகவே
உள்ளத்திலே புதிய புதியபடிமவாக்கங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இந்நிலையிலெ தெறித்தல் என்பது சிக்கல் பொருந்திய ஓர் உளச் செயல் முறை என்பது புலனாகின்றது.
கலையாக்கம் என்பதும் மேற்குறித்த சிக்கலான செயல் முறையின் வழியாகவே தோற்றம் பெறுகின்றது. இந்தச் சிக்கலான தோற்றப் பாட்டை விளங்கிக் கொள்வதற்குரிய ஒர் எண்ணக் கருவாகவே தெறித்தல் வினைப்பாடு அமைகின்றது.
இயற்பண்பு வாதம் தெறித்தல் என்ற செயற்வபாட்டை ஒரு கண்ணாடிச் செயல் முறைக்கு ஒப்பானதாக பொறி முறைப்பண் புடையதாகக் காண்கின்றது. இவ்வாறான நேரடித் தெறித்தல் நடப்பியற் புனைவு ஆகாது. சமூகத்தை தெரிவு செய்தலும், அவற்றின் உள்ளமைந்த முரண்பாடுகளை இனங்காணுதலும், நேர் வலுக்களுக்கு மீள்வலுவூட்டுதலும் நடப்பியற் புனைவுகளிலே இடம்பெறுகின்றன. சோசலிச நடப்பியலில் அந்தச் செயற்ளபாட்டை மேலும் கூர்மைப்படுத்தி நோக்குகின்றது.
சோசலிச நடப்பியலில் கலைப்படைப்பைத் தருபவரது உள்ளத்தின் வழியாக சமூகம் பற்றிய அறிகை தெறித்துக் காட்டப்படுகின்றது. சமூகம் பற்றிய அறிகை மார்க்சிய வழி புடமிடப்படுகின்றது. சுரண்டல் அல்லது பறிப்பின் நுண்ணிய அலகுகள் தொழிற்படுமாறும் அவை தூண்டி நிற்கும் மனவெழுச்சி வண்ணங்களும், பொருத்தமான ஊடகங்கள் வழியாகத் தெறித்துக் காட்டப்படுகின்றன.
தெறித்தலின் போது இடைவெளிகள் தோற்றம் பெறுதல் தவிர்க்க முடியாது. சில எடுத்துக் காட்டுகள் வருமாறு.
92 மார்க்சிய உளவியலும் அழகியலும்

தெறித்தல் வினைப்பாடு
I. குறிப்பிட்ட சில காட்சிகளைத் தெரிந்தெடுக்கும்
போது, வேறு சில விடுபட்டுப் போகலாம்.
2. தெறித்தலை உருவாக்கும் உள்ளத்தின் அறிக்கை அமைப்பு அல்லது அனுபவங்களின் திரளமைப்பு பண்புநிலைக்கட்டமைப்பின் மிகைநிலை அல்லது போதா நிலை இடைவெளிகளைத் தோற்றுவிக்கலாம்.
3. தெறித்தலை எடுத்துச் செல்லத் தெரிந்தெடுக்கப்படும் ஊடகத்தின் நம்பகத்தன்மையும், போதாமையும் இடைவெளிகளைத் தோற்றுவிக்கும்.
மேற்கூறிய காரணிகளினால் தெறித்தல் என்பது ஒரே பண்பினதாக அன்றி பல்வேறு பண்பினதாக அமைகின்றது. அதாவது தெறித்தலிலே சமச்சீர் அற்றபோக்குகள் தோன்றுதல் தவிர்க்க (Lplitt lig5gi. ஆனால்மார்க்சிய நிலைப்பட்ட தெறிப்பில் வர்க்கக் குணவியல்பு ஏதோ ஒருவகையில் சாராம்சமாக உட்பொதிந்திருக்கும்.
தெறித்தலிலே நூலாசிரியரது எதிர்பார்ப்புக்களும் தவிர்க்க முடியாது கலந்துவிடும். இந்தியா விடுதலை பெறுவதற்குமுன்னரே பாரதி ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டதாகத் தெறித்துக் காட்டினார். சோளகம் என்ற சிறுகதையிலே செ.யோகநாதன் எனிவரப்போகும் சோளகம் எப்படியிருக்கும் என்ற ஏக்க எதிர்பார்ப்புடன் கதையை முடிக்கின்றார்.
பிரதிபலித்தலின் எதிர்க் கோணத்தில் கலைநுகர்ச்சியாளர் இருக்கின்றனர். தெறித்தலைப் புலக்காட்சி கொள்ளல் அல்லது விளங்கிக் கொள்ளல் அவர்களின் வர்க்கசார்புடைமை சார்ந்த அழகியற் பெறுமானங்களுடன் சம்பந்தமுடையது. உதாரணமாக டானியலின் நாவலின் தெறிப்பானது பறிப்புக்கு உள்ளானரிடத்து ஏற்படுத்தும் தெறிப்பின் சுவையை மேட்டுக்குடி மனப்பாங்குடைய வாசகரிடத்து ஏற்படுத்த மாட்டாது.
கலாநிதி சபா ஜெயராசா 93

Page 49
மார்க்சிய அழகியல்
25. மார்க்சிய அழகியல்
மெய்யயில் நடப்பியலாக மாற்றம் பெறவேண்டும். உலகை நிலைமாற்றம் செய்தல் அதன் வழியாக முன்னெடுக்கப்படல் முக்கியமானது. உலகு நிலைமாற்றம் செய்யப்படுவதுடன் மனித உணர்வுகளும் நிலைமாற்றம் செய்யப்படல் வேண்டும். மனிதர், சடப்பொருள், அறிவு, இயற்கை முதலியவற்றுக்கிடையேயுள்ள இயக்கநிலை உறவுகளைக் கண்டறிதலும் அவற்றை வரலாறு சமூகம், அரசியல், பண்பாடு மற்றும் பொருண்மிய நடப்பியலோடு தொடர்புபடுத்தலும் முன்னெடுக்கப்பட்டது.
சமூகத்தின் நடப்பியல் அடிப்படையாக இருக்கும் உழைப்பும் உற்பத்திச் சாதனங்களும் மற்றும் கூட்டுமொத்தமான உற்பத்தி உறவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. உற்பத்தி உறவுகள் என்று கூறும்பொழுது அதில் உற்பத்தியையும் விநியோகத்தையும் ஒழுங்கமைத்து நெறிப்படுத்தும் சமூகம் மற்றும் அரசியல் கட்டமைப்பும் சிறப்பிடம் பெறுகின்றன. வாழ்க்கை இயக்கங்களும், கல்வியும் பண்பாடும் கலையாக்கங்களும் அவற்றோடு நேரடியாகவோ மறைமுகமாகவோல, இணைந்தோ சிதறியோ தொடர்புபட்டிருக்கும்.
பொருண்மிய நோக்கில் வரலாறு, கமியூனிசத்துக்கான வழிமுறை, தொழிலாளர் வர்க்ப் புரட்சி, அரசியற் பொருளாதாரம் மூலதனம், சமூகமாற்றத்துக்கான தருக்கம், பறிப்பும் மனித அந்நியமயப்பாடும் முதலாம் துறைகளிலே விரிவான ஆய்வுகளை மேற் கொண்ட மார்க்ஸ் கலையாக்கம் மற்றும் அழகியல் பற்றி விரித்து ஆராயவில்லையாயினும் அவரின் மேற்குறித்த சிந்தனைகள் அழகியல் விளக்கத்துக்கும் ஆக்கத்துக்கும் எறிவு செய்யப்படக் கூடியவையாகும்.
94 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சிய அழகியல்
மார்க்சிய அழகியல் என்ற எண்ணக்கரு மார்க்சின் சிந்தனை களோடு மட்டும் கட்டுப்பட்டு நிற்கவில்லை. மார்க்சியச் சிந்தனை மரபில் வந்தவர்களும், மாறும் உலக நிலவரங்களுக்கு ஏற்ப மார்க்சியத்தை விரிவுபடுத்தியவர்களும் மார்க்சிய அழகியல் அறிக்கைக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.
கலைகளுக்குரிய பொருள்சார் முன் தேவைகளை மார்க்ஸ் பொருண்மிய மற்றும் மெய்யியல் எழுத்துருவில் (1844) தெளிவாக வெளிப்படுத்தினார். அழகுபற்றிய விதிகளின் அடிப்படையில் படைப்பாக்கம் செய்யும் மனித உழைப்பின் பாத்திரத்தைச் சுட்டிக்காட்டினார். அழகை நுகர்த்தலும் ஆக்குதலும் உழைப்பின்வழி நிகழ்தல் தெளிவுபடுத்தப்பட்டது. மனித இருப்புக்குரிய சமூக வரலாற்று நிலவரங்கள் மாற்றமடையும்பொழுது அழகியல் தொடர்பான கருத்துக்கள், இலட்சியங்கள், தேவைகள், தரக்கணிப்பீடு முதலியவற்றிலே மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும்.
அழகியலாக்கம் மனித இயற்கைப் பண்புகளிலே பெருமளவில் தங்கியிருக்கவில்லை. சமூகம் மற்றும் வரலாற்று நிலவரங்களிலே தான் அது பெருமளவிலே தங்கியுள்ளது.
சமூகவாழ்விலே கலையாக்கம் சிறப்பார்ந்த பாத்திரத்தைப் புரிய வேண்டியுள்ளது. ஆக்கப்படைப்புக்கள் உலகுபற்றிய தெறித்துக்காட்டலாகவும், உலகைக்கையாள்வதற்குரிய வழிமுறை யாகவும் அமைகின்றன. முற்போக்கான கலைகள் சமூகத்திலே முற்போக்கான வினைப்பாடுகளைப் புரிகின்றன. சமூக உறுப்பினர்களின் அறிக்கையிலும் ஆன்மவளர்ச்சியிலும் அவை நேர்முகமாகப் பங்கேற்கின்றன. சமூகத்தின் வளர்ச்சி மட்டத்துக்கேற்பவே கலையாக்களின் வளர்ச்சி மட்டங்களும் அமையும். அக்காரணத்தினால் தான் ஒவ்வொரு காலகட்டங் களுக்குமுரிய இலக்கியங்கள் அவ்வக் காலத்துக்குரிய தனித்துவங் களாக மேலெழுகின்றன. அதனால் தான் சமகாலத்தில் ஒரு தொன்மத்தையோ, இறைகாவியத்தையோ புனயை முடியாதுள்ளது.
அழகியற் கலைகள் பொதுவான சமூக விதிகளுக்குத் துணையானவையாயிருப்பினும் அவை தமக்குரிய தனித்துவமான
குணவியல்புகளையும், உணர்வுகளையும், தனித்துவமான பரிமாணங்
கலாநிதி சபா ஜெயராசா 95

Page 50
மார்க்சிய அழகியல்
களையும் கொண்டிருக்கும். கிரேக்க அழகியற் படைப்புக்களை அடியொற்றி மார்க்ஸ் மேற்குறித்த கருத்தை முன்வைத்தார்.
மார்க்சிய அழகியலை மேலும் விரிவுபடுத்துவதற்கு லெனின் முயன்றமையால் மார்க்சிய - லெனினிச அழகியல் என்ற தொடரும் வழக்கில் உண்டு. மாவோ அச்சிந்தனைகளுக்கு மேலும் மெருகு தந்தார்.
மார்க்சிய அழகியலின் சாரம்சத்தைப் பின்வருமாறு நிரற்படுத்
தலாம்.
l. அது இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டது.
2. அழகியல் என்பது அறிவியல் சார்ந்த பரிமாணங் களைக் கொண்டிருப்பதும் அதற்கென உரிய விதிகளைக் கொண்டிருத்தலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
3. ஒவ்வொரு அழகியல் வடிவங்களுக்கு முரிய தனித்துவங்கள் கண்டறியப்பட்டு அதன் வழியாகவே பொது விதிகள் ஆக்கப்படல் வேண்டும்.
4. அழகியல் என்பது வினைப்பாடுடையது'
5. கலைசார்ந்த ஆக்கமலர்ச்சி அறிவியல் விதிகளின்
வழியாக விளக்கப்படத்தக்கது.
6. சமூக உணர்வும் மனச்சான்றும் கலைவடிவங்களாக
எழுச்சிகொள்கின்றன.
7. உலகுபற்றிய மனிதரின் கிரகித்தல் கலையாக்கத்தின்
உள்ளடக்கமாகின்றது.
8. வாழ்க்கைப் பிரதிப்பதே கலையாகின்றது. வாழ்க்கையி லிருந்து பிரிந்த தனிமனித வெளிப்பாடாக அது அமையமாட்டாது.
9. நடப்பியலை ஆக்கமலர்ச்சியுடன் மீளாக்கல் செய்தலே
கலையாகின்றது.
lO. உயிர்ப்பன்மையியல் போன்று சமூகமும் பன்மை
இயல்புகளைக் கொண்டது. அந்நிலையிலே பன்மை இயல்புகளைக் கொண்ட வடிவங்களும் முறைகளும் கலைப்படைப்புக்களிலே தோற்றம் பெறுகின்றன.
96 மார்க்சிய உளவியலும் அழகியலும்

மார்க்சிய அழகியல்
11.
12.
13.
14.
15.
6.
17.
18.
19.
2O.
2I.
22.
கலையின் பொருட்பரப்பைக் கண்டறிதல் சிறப்புப்
பெறுகின்றது. g560)Gv -9pløOS (Cognition) நிலைப்பட்டது. கலைப்படைப்புக்களிலே வரம்பற்ற அறிக்கை
உள்ளார்ந்த வலுகாணப்படுகின்றது. நடப்பியலைப் படிமங்கள் வழியாக மீளாக்கல்கலைச் செயற்பாடுகளில் மேற் கொள்ளப்படுகின்றது. படிமம் என்பது நடப்பியலின் உளமும் மனவெழுச்சி யும் சார்ந்த வடிவம். அதுதணித்துவங்களின் திடவடிவ மாகின்றது. வாழ்க்கையின் தோற்றப்பாடு விதிகளைக் காட்டிலும் செழிப்பும் சிறப்பும் உடையது என்ற லெனின் கூற்று கலையாக்கத்தின் தனித்துவவெளிப்பாடாகின்றது. கலைத்திறன்கள் போதாத விடத்து கலைப்படைப்புச் சீரழிந்துவிடும். பாத்திரப்படைப்பும் சீர்கெட்டுவிடும். (டால்ஸ்டாயின் போரும் சமாதனாமும் என்ற நாவலில் 550 பாத்திரங்கள் இடம்பெற்றுள்ன. ஆனால் அத்தனையும் சோடை போகாத புனைவுகள்) சமூக உண்மைகள் பல்வேறு வழிகளில் அதாவது பன்மை நிலையில் வெளிப்படுத்தப்படலாம் வகைமாதிரியான (Typical) பாத்திரங்கள் என்று கூறும் பொழுது தனித்துவங்களை இழந்தபாத்திரங்கள் என்று பொருள் கொள்ளலாகாது. நடப்பியற்கலையிலே பொதுமை யாக்கலை மேற் கொள்வதற்குரிய வழிவகையாகவே வகைப்படுத்தல் (Typification) நுட்பம் கையாளப்படுகின்றது. குறிப்பிட்ட வகையான இயல்பினரைச் சுட்டுவதாக அது அமையும். கலைப்படிமத்தில் அகவயப் பண்புகளும் புறவயப் பண்புகளும் சீராக ஒன்றிணைக்கப்படுகின்றன. 6TCLp(B60 - (Style) யானது மனத்தலே குறிப்பிடத் தக்கதும் தனித்துவமானதுமான பதிவுகளை ஏற்படுத்து கின்றது.
அகவயவாதம் (Subjectivism) பொய்ம்மையான பொதுமையாக்கலுக்கு இட்டுச் ச்ெலகின்றது. பொய்மைகளைக் கலை பொறுத்துக் கொள்வதில்லை.
கலாநிதி சபா ஜெயராசா 97

Page 51
98
23.
24.
25.
26.
27.
28.
29.
3O.
மார்க்சிய அழகியல்
கலைப்படிமம் அழகியல் சார்ந்த மனவெழுச்சிப் பரிமாணங்களைக் கொண்டிருக்கும் (மனித உண்மை களை மனித மனவெழுச்சி இன்றிக் கண்டறிந்து கொள்ள முடியாது - லெனின்.)
எண்ணமுதல் வாதிகள் குறிப்பிடுதல் போன்று
வாழ்க்கை உண்மையும் 956) உண்மையும் வேறானவை அன்று. கலைப்படைப்பில் உருவமும் உள்ளடக்கமும்
பிரிக்கவியலா முழுமை கொண்டிருக்கும். தனித்து உருவ வடிவில் மட்டும் கலைமேலெழமுடியாது. நடப்பியல் வாழ்க்கையின் அழகியற் பிரதி பலிப்பாக உள்ளடக்கம் அமைகின்றது. நடப்பியல் அழகியல் பொருள் கோடலுக்கு உட்படுத்தப்படுகின்றது. கலைப்படைப்புக்கள் கருத்துருவங்களை உருவாக்கு தல் இல்லை. ஆனாற் அவற்றிலே கருத்துருவங் களைச் சுளுவாகப் பிரசாரவடையின்றிப் பிரதிபலித்துக் காட்ட முடியும். அந்நிலையிலே கருத்துக்கள் அழகியற் புனைவோடு கையளிக்கப்படுகின்றன. கலைநுகர்வோர் தெறிப்பற்ற நுகர்ச்சியாளர் அல்லர். ஆற்றல்மிக்க கலைப்படைப்பு அவர்களை வினைப் படும் நுகர்ச்சியாளராக மாற்றிவிடும். கலை உள்ளடக்கத்தின் அகக்கட்டுமானத்தை வெளிப் படுத்தும் அமைப்பே உருவம் அல்லது வடிமாகின்றது. உருவமின்றிக்கலை இல்லை (ஆனால் உள்ளடக் கமற்ற பேருருவம் குரூர உருவமாகும் - டி. மூர்) விஞ்ஞானத்தினதும் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சி புதியகலை வடிவங்களைத் தோற்றுவிக்கவல்லது.
மார்க்சிய உளவியலும் அழகியலும்

நிறைவாக
26. நிறைவாக
அழகியலாக்கம் இவ்வாறுதான் இடம்பெறவேண்டுமென்ற கட்டளைகளை மார்க்சியம் முன்வைக்கவில்லை. ஏனெனில் இயற்கைப் பொதுத்தளத்தின் பன்முகப்பாட்டையும் சமூகம் என்ற அடித்தளத்தின் பன்முகப்பாட்டையும் மார்க்சிய இயங்கியல் தெளிவுப்படுத்தியுள்யளது. கலை உளப்பாங்கும் சமூக உளப்பாங்கும் சங்கமிக்கும் நிலையில் அழகியலாக்கம் மேலெழுகின்றது. வெறும் சூத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட கலைப்புடைப்பு சோபை இழந்து விடுகின்றது. கலைப்படைப்பில் நடப்பியற் சிந்தனையானது இயல்பாக முகிழ்த் தெழவேண்டுமேயன்றி வலிந்து திணிக்கப்பட வேண்டுமென மார்க்சியம் வலியுறுத்தவில்லை. மார்க்சியத்தை ஒற்றைப்பரிமாணத்தில் புரிந்த கொண்டவர்கள் திணிப்பு என்ற புலக்காட்சியை முன்மொழிவார்களாயின் அதற்குமார்க்சியம் பொறுப்பில்லை.
மார்க்சிய அழகியற் சிந்தனைகள் இரண்டு தளங்களிலே இயக்கப்படுகின்றன. அவை.
l. வரையறுக்கப்பட்ட மார்க்சிய சிந்தனைகளின் மையத்
தில் நின்று அழகியலை நோக்குதல். 2. திறந்த மார்க்சியச் சிந்தனைகளில் நின்றவாறு
அழகியலை நோக்குதல்.
திறந்த நிலையிலிருந்த மார்க்சிய அழகியலாளர் அவ்வப்போது தீவிரமார்க்சியப் போக்காளரது கண்டனங்களுக்கும் உள்ளாக்கப் பட்டனர். கலைவடிவங்கள் மாமூலான சமூக நியதிகளின் எதிர் வினைப்பாடுநிலையில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் இயங்கி வருவதல் இருசாராரினாலும் அவ்வப்போது சுட்டிக்காட்டப் பட்டது. சமூக இயக்கத்தால் உருவாக்கப்படும் மனிதரின் சீரழிவைக் காட்டுதலும் சமூக நிலவரங்களுக்கு எதிரான வினைப்பாடுதான்.
கலாநிதி சபா ஜெயராசா 99

Page 52
நிறைவாக
கலையாக்கம் என்பது மாயவித்தைத் தொழிற்பாடுகளுடன் இணைந்தே ஆக்கம் பெற்றது. அதன் தொடர்ச்சியும் பரிணாம வளர்ச்சியும் (படிமலர்ச்சியும்) இன்றுவரை நீண்டுகொண்டிருக்கும் நடப்பியலைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உளவியல் நோக்கிலே பார்க்கும் பொழுது கலை ஒரு பிணியாய்வு முறையாகவும் ஒரு சிகிச்சை முறையாகவும் அமைந்தமை அதன் தொடர்ச்சிக்கும் நீடிப்புக்குமுரிய வலுவான காரணிகளுள் ஒன்றாயிற்று.
கலைகளில் உள்ளமைந்த அகவயப்பாங்கின் வீச்சுக்கள் இதுவரை கண்டறியப்பட்ட ւյՈ26ւյս 1 வரைவிலக்கணங்களை மீறிக்குதறி வெளிவரவும் செய்கின்றன. அருவ ஒவியங்களே இதற்கு நல்ல எடுத்துக் காட்டாகின்றன. இந்நிலையிலே புதிய வளர்ச்சிகளை உள்வாங்கக் கூடிய புதிய புறவயமுறைமைகளின் உருவாக்கம் வேண்டப்படுதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. மார்ச்சியத் தருக்கம் மேலும் மேலும் புதிய கண்டறிதல்களை உருவாக்குவதற்குக் கைகொடுக்குமேயன்றி வளர்ச்சித் தருக்கத்துக்கு அணைபோட்டு விடமாட்டாது.
வாசகரது அல்லது சுவைப்பவரது உளக்கட்டமைப்போடு இணைந்த படைப்புக்களே நிலைத்திருக்கும் என்றுகூற முடியாது. முரண்படுவனவும் நிலைத்திருக்க முடியும்.
மார்க்சிய உளவியலும் அழகியலும் மனிதரது தன்னிலை மற்றும் பிரபஞ்சம் குறித்த அறிவை விரிவாக்கி வருகின்றன. நாட்டார் அழகியலும் தொன்மங்களும் இந்த முயற்சியையே முன்னெடுத்து வந்துள்ளன. இந்நிலையில் உலகின் புகழ்பூத்த படைப்புக்கள் எல்லாம் இழக்கப்பட (Lplgitt Islg5 கலைச் செல்வங்கள்தான். பெரும் காவியங்களிலும் கலைப்படைப்புகளிலும் ஒருபுறம் வர்க்க நலன்கள் இழையோடி நின்றாலும் அவற்றுக்குரிய மறுபக்கத்தில் நிராகரிப்புக்கும் பறிப்புக்கும் உள்ளாக்கப்பட்டோரின் உணர்வுகள் அடங்கியிருப்பதன் காரணமாகவே சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுவோரிடத்தும் அவை நீடித்து நிற்கின்றன.
மார்க்சிய உளவியலாளர் கலைப்படைப்பைச் சமூக உளவியல் தோற்றப்பாடாகக் கருதினர். உலகைக் கிரகித்தலில் மட்டும் கலையின் சாராம்சம் உள்ளடங்கவில்லை. கலைகள் மனிதத் தொடர்புகளையும் புறநிலை உலகோடு மனிதனால் மேற்கொள்ளப் படும் தொடர்புகளையும் உள்ளடக்கவேண்டியுள்ளன. எத்தகைய ஒருகலைப்படைப்பும் மக்களின் உளநிலையிலிருந்தே தோற்றம் பெறும். அந்த உளநிலை சமூக இருப்பிலிருந்தே மேலெழுகின்றது.
100 மார்க்சிய உளவியலும் அழகியலும் .

உசாத்துணை நூல்கள்
27. உசாத்துணை நூல்கள்.
REFERENCES
Basic texts
Adorno, Theodor W., Prisms (Neville Spearman, London, 1967). ; Adomo, Theodor W. and Horkheimer, Max, Dialectic of Enlightenment (Allen Lane,
London, 1972). Adorno, Theodor W., Benjamin, Walter, Bloch, Ernst, Brecht, Bertolt and Lukacs, Georg,
Aesthetics and Politics (New Left Books, London, 1977). . * Althusser, Louis, Lenin and Philosophy and Other Essays, trans. Ben Brewster (Verso, London, 1971), especially 'Ideology and Ideological State Apparatuses' and "A Letter on Art'. Anderson, Perry, Considerations on Western Marxism (Verso, London, 1976). Auerbach, Erich, Minesis: The Representation of Reality in Western Lit-erature (1946),
trans. W. R. Trask (Princeton University Press, Prince-ton, NJ, 1953). Baxandall, Lee and Morawski, Stefan, Marx and Engels on Literature and Art
(International General, New York, 1973). Benjamin, Walter, Illuminations (Schocken, New York; Cape, London, 1970).
18 A Reader's Guide to Gontemporai \ Benjamin, Walter, Citarles Baudelaire: A Lyric Poet in the Era of High Capitalism, trans. H. Zohn (New Left Books, London, 1973a). Benjamin, Walter, Understanding Brecht, trans. A. Bostock (New Left Books, London,
1973b). Eagleton, Terry, Criticism and Ideology (New Left Books, London, 1976). Eagleton, Terry, Marxism and Literary Criticism (Methuen, London, 1976). Eagleton, Terry, Walter Benjamin or Towards a Revolutionary Criticism (New Left
Books, London, 1981). Eagleton, Terry, The Rape of Clarissa (Basil Blackwell, Oxford, 1982). Eagleton, Terry, Literary Theory: An Introduction (Basil Blackwell, Oxford, 1983). Eagleton, Terry, Against the Grain: Essays 1975-1985 (Verso, London, 1986). Eagleton, Terry, The Ideology of the Aesthetic (Basil Blackwell, Oxford, 1990). Eagleton, Terry, Ideology: An Introduction (Verso, London, 1991). Eagleton, Terry, Heathcliffand the Great Hunger (Verso, London, 1995). Eagleton, Terry and Milne, Drew (eds), Marxist Literary Theory: A Reader (Basil,
Blackwell, Oxford, 1995).
கலாநிதி சபா ஜெயராசா 101

Page 53
உசாத்துணை நூல்கள்
Goldmann, Lucien, The Hidden God (Routledge & Kegan Paul, London, 1964). Jameson, Fredric, Marxism and Form. Twentieth-Century Dialectical Theo-ries of
Literature (Princeton University Press, Princeton, NJ, 1971). Jameson, Fredric, The Prison-House of Language: A Critical Account of Structuralism and Russian Formalism (Princeton University Press, Princeton, NJ, and London, 1972). Jameson, Fredric, The Political Unconscious: Narrative as a Socially Syn-bolic Act
(Cornell University Press, Ithaca, 1981). Jameson, Fredric, The Ideologies of Theory. Vol. 1 Situations of Theory, Vol. 2 The Syntax
of History (Routledge & Kegan Paul, London, 1988). Jameson, Fredric, Postmodernism, or the Cultural Logic of Late Capitalism (Verso,
London, 1991). Jameson, Fredric, The Seeds of Time (Columbia University Press, New York, 1994). Lukacs, Georg, The Historical Novel (1937) (Merlin Press, London, 1962). Lukacs, Georg, Studies in European Realism (1950) (Merlin Press, London, 1972). Lukacs, Georg, The Meaning of Contemporary Realism (1957) (Merlin Press, London,
1963). Macherey, Pierre, A Theory of Literary Production, trans. G. Wall (Rout-ledge & Kegan
Paul, London, Henley and Boston, 1978). Macherey, Pierre and Balibar, Etienne, “On Literature as an Ideological Form”, in Francis Mulhern (ed.) Contemporary Marxist Literary Criticism (Longman, London and New York, 1992). Marcuse, Herbert, One-Dimensional Man (Beacon, Boston; Sphere, Lon-don, 1964). Marcuse, Herbert, Negations (Allen Lane, London, 1968). Marcuse, Herbert, The Aesthetic Dimension (Macmillan, London, 1979). Sartre, Jean-Paul, What is Literature? (Philosophical Library, New York, 1949). Willett, John (ed.), Brecht on Theatre (Methuen, London, 1964). Williams, Raymond, Culture and Society 1780-1950 (Chatto & Windus, London, 1958). Williams, Raymond, The Long Revolution (Chatto & Windus, London, 1961). Williams, Raymond, Television: Technology and Cultural Form (Fontana/ Collins,
London, 1974). Williams, Raymond, Marxism and Literature (Oxford University Press, Oxford, 1977). Williams, Raymond, Politics and Letters: Interviews with New Left Review (Verso,
London, 1979). Williams, Raymond, Problems in Materialism and Culture (New Left Books, London,
1980). Williams, Raymond, Keywords: A Vocabulary of Culture and Society (Fontana/Collins,
London, 1983). Williams, Raymond, Towards 2000 (Chatto and Windus, London, 1983). Williams, Raymond, Writing in Society (Verso, London, 1984). Williams, Raymond, Resources of Hope (Verso, London, 1988). Williams, Raymond, The Politics of Modernism: Against the New Conform-ists, ed. Tony
Pinkney (Verso, London, 1989).
102 - மார்க்சிய உளவியலும் அழகியலும்


Page 54
பேராசிரி யாழ்ப்பா கல்வியிய இருந்தவ கருத்துக்
முனவை இராமநா இருக்குட பாடநெற கண்டவ
மார்க்சிய
LDT60)/L 6 கலையிய முன்னிறு கட்டுரை நூல்கள். சான்றாக
வரப்பட்
 

யர் சபா. ஜெயராசா ாணப் பல்கலைக் கழகத்தின் பல்துறைப் பேராசிரியராக பர். ஆணித்தரமான களைத் துணிவுடன் |ப்பதில் முதன்மையானவர். தன்நுண்கலைத் தலைவராக ம்போது அத்துறைசார்ந்த புதிய றிகளை உருவாக்கி வெற்றி
Π.
Iம் சார்ந்து உளவியல், வியல், கல்வியியல், பல் கருத்துக்களை வத்தி பல நூற்றுக்கணக்கான களை எழுதியுள்ளார். பல அவரின் ஆளுமைக்குச்
வெளிகொண்டு
டுள்ளன.
ISBN 978-955-1810-122
9II7 8 955 1 ll8 1 0 1 22