கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்

Page 1

ாக்கு
Dolio

Page 2

முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்
த.சிவசுப்பிரமணியம் (தம்பு - சிவா)
வெளியீடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை

Page 3
நூல்
நூலாசிரியர் வெளியீடு
அனுசரணை
வெளியீட்டுத் திகதி அச்சுப்பதிப்பு
விலை
; முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் : த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) : இலங்கை முற்போக்கு
கலை இலக்கியப் பேரவை 1. இராஜசிங்க வீதி, கொழும்பு-06
கற்பகம் இலக்கியச் சோலை
15, வித்தியாலயம் ஒழுங்கை திருகோணமலை.
: 24O2.2OO7
: டெக்னோ பிறின்டர்ஸ்
55, Dr. E.A. குரே மாவத்தை, கொழும்பு - 6. தொ.பே : O777-3O1920
: ரூபா 150/-
ISBN: 978-955-501.15-0-1

சமர்ப்பணம்
ஈழத்து இலக்கிய வரலாற்றில் இமயமென நின்ற பேராசிரியர் க.கைலாசபதிக்கு இந்நூல் சமர்ப்பணம்

Page 4

அணிந்துரை
தமிழில் அதிகம் ஆராயப்படாத துறையாக இருப்பது கட்டுரை வடிவமும் கட்டுரை இலக்கியமும் தான் - அதேவேளை சமகாலத் தொடர்பாடலில் அதிகம் விரவி நிற்பதும் கட்டுரையாக்கம் தான். கவிதைக்கும் கட்டுரைக்குமிடையே அமைப்பியல் வீச்சில் ஒப்புமை காணப்படுகின்றது. கவிதையின் ஓரெல்லையில் முற்றிலும் இறுகிய இசைக்கட்டுமானங்களுக்கு உட்பட்ட "கிருதி" வடிவமும் மறு எல்லை முனைவில் வசனவடிவம் ஓங்கிய நிலையுமான நீண்ட அமைப்பியல் வீச்சுக் காணப்படுகின்றது. கட்டுரை அமைப்பியலில் ஒரு முனைவில் முற்றிலும் அகவயப்பாங்கான அமைப்பும் (இலக்கிய நடையும்) மறுமுனைவில் கறாரான புறவயப்பாங்கான அமைப்பும் (அறிவியல் நடையும்) காணப்படும் பண்புகள் நீண்ட வீச்சை வெளிப்படுத்துகின்றன.
அகவயம், (Subjectivity) புறவயம் (Objectivity) என்று பாகுபடுத்தல் கூட்டுமொத்தப்படுத்தலாக மாற்றப்பட்டு முழு நிறைவு கொண்ட எண்ணக் கருக்களாக சிலாகிக்கப்படும் பொழுது அவை பெரும் கருத்தாடல்களாக மேலெழுகின்றன. அங்கு அறிவின் பகிர்வுப் பண்புகள் மேலோங்க ஒடுக்கற் பண்புகள் பின்னே தள்ளப்பட்டுவிடும் நிலை ஏற்படுகின்றது. கட்டுரை இலக்கியத்தை ஆராயும் பொழுது முதலில் இதனைக் கருத்திலே கொள்ளல் வேண்டியுள்ளது.
“இலக்கியம்” என்பது காலவோட்டத்தில் மாறுநிலை பெற்ற எண்ணக்கருவாகிவிட்டது. கறாரான விஞ்ஞான நடையில் எழுதப்பட்ட கட்டுரைகள் "விஞ்ஞான இலக்கியம்" என்று அழைக்கப்படும் மரபு உலகளாவிய நடைமுறையாகவுள்ளது. படைப்பாக்க மலர்ச்சி (Creativity) என்ற உளவியற் செயற்பாடு கலையாக்கங்களுக்கும் அடிப்படையானது. அதேவேளை விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களுக்கும் அடிப்படையானது. மேலே குறிப்பிட்ட அகவயச் செயற்பாட்டுக்கும் அடிப்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 15

Page 5
படையானது, அதேவேளை புறவயச் செயற்பாட்டுக்கும் அடிப்படையானது. இந்நிலையில் மரபுவழி, "எல்லைப் படுத்தலை" ஊடறுத்துச் செல்லக்கூடிய ஆற்றல் மிகு வடிவமாகக் கட்டுரை அமைகின்றது.
மானிடம் கண்டறிந்த அறிவுத் தேட்டங்களைச் சமூகப்படுத்தலுக்கு (Sociality) இட்டுச் செல்வது கட்டுரை வடிவம் தான். கலைஞருக்குரிய உந்துதலையும் விஞ்ஞானிக்குரிய பொறுப்புணர்ச்சியையும், ஒருங்கே இணைத்து நிற்பது கட்டுரை வடிவம்தான். கட்டுரையில் உள்ளமைந்த "அறிகை அலகுகள்” (Cognitive Units) அறிவைத் திரட்டவும், பாதுகாக்கவும், பரப்பவும் வல்ல நுண்ணிய சாதனங்களாகின்றன. அதேவேளை அவற்றில் அமைந்துள்ள மனவெழுச்சி அலகுகள், ஆழ்மனம் அல்லது நனவிலிமனத்துடனான தொடர்பாடலுக்குரிய நுழைவாயிலை அமைத்துவிடுகின்றன. இவை இரண்டும் இணையும் பொழுது, கட்டுரை 'நிலை ம7ற்றத்தை” உருவாக்கும் வடிவமாக மேலெழுகின்றது.
தமிழிற் கட்டுரை வடிவம் பூரீலழறீ ஆறுமுகநாவலரால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. அறிவுக்கையளிப்புக் கருவியாகவும், கருத்தேற்றம் (Indoctrination) செய்யும் கருவியாகவும் அவர் கட்டுரை இலக்கியத்தை வினையாற்றல் பெற அறிமுகம் செய்தார். தமிழ் மரபிற் கட்டுரை வடிவத்தின் "வலு வேற்றலில்" சுவாமி விபுலாநந்தரின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் மொழியை அறிவியல் மொழியாக்கும் பரிமாணங்கள் அவரது கட்டுரைகளிலே மேலெழுந்து நின்றன. தமிழ்மொழி பல்கலைக்கழக நிலையிலே கற்பித்தல் மொழியாகியமை கட்டுரை இலக்கிய வளர்ச்சியிலே பெரும்பாய்ச்சலை ஏற்படுத்தியது.
பின்னவீனத்துவச் சிந்தனைகளை அடியொற்றி மேலையுலகில் வளம் பெறத் தொடங்கிய சொற்களஞ்சியம் தமிழியலிலும் வரவு கொள்ளத் தொடங்க, தமிழ்க் கட்டுரை வடிவமும் உள்ளடக்கமும், அண்மைக்காலமாக மேலும் வளமும் பல்லினப் பாங்கும் பெறலாயின.
"முற்பே7க்கு"(Progressive) என்ற எண்ணக்கரு பிரித்தானியாவின் அறிகை மரபில் மேலெழுந்தது. பழைமை பேணும் பிரித்தானியச் சிந்தனை மரபுகளுக்கு மாறுபாடாகவும் முரணுரையாகவும் ஆய்வறி வாளர் மத்தியில் இந்த எண்ணக்கரு வளர்த்தெடுக்கப்பட்டது. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த எண்ணக்கரு சிறப்பான பொருள் தாங்கி நிற்கின்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் மார்க்சிய சிந்தனை மரபுகளைத் தழுவுதல் ஆகிய வழித்தடங்கள் வழியான கருத்து
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 16

வினைப்பாடுகளுடன் (Discourses) இது தொடர்பும் இயக்கமும் கொண்டிருந்தது.
எந்த இலக்கிய வடிவமும் நூலாசிரியரின் "கருத்தியலை" மீறி வெளிவருவதில்லை. ஆனால் இந்த மீறும் வீச்சுக்கும் கலைத்துவத்துக்கும் நேர் இணைப்புக்குணகம் உண்டு. நூலியத்தின் மீள்வாசிப்பில் இந்த வீச்சு சுருக்கியும் விரித்தும் நோக்கப்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டு. மரபுவழி இலக்கியங்களில் நுண்பாக அலகுகளாக (Micro Units) இருந்த கருத்தியல் வடிவம், முற்போக்கு இலக்கியங்களில் கோவையாகத் திரண்டது.
மேற்கூறிய அவதானிப்புக்களின் காட்சியிலேதான் இந்நூலாக்" கத்தை நோக்க வேண்டியுள்ளது. இந்நூலின் முதலாம் இயல் இந்தியத் தளத்திலும் இரண்டாம் இயல் இலங்கைத் தளத்திலும் முற்போக்குத் தரிசனங்களைக் காட்டுகின்றன. விவரண முறையும் வரலாற்று முறையும் கலந்த வகையில் கட்டுரையாக்கம் இடம் பெற்றுள்ளது. பரந்துபட்ட வாசகர்களை இலக்குமாந்தர்களாகக் கொண்டு கட்டுரையாக்கம் குவியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நூலாசிரியரின் தொடர்பாடல் அனுபவம் கருத்துக் கையளிப்புத் தெளிவுடன் சங்கமிக்கின்றது.
இலங்கையினதும் இந்தியாவினதும் குறிப்பிட்டகால கட்டத்தின் முற்போக்குச் சிந்தனை வடிவங்களின் "குறுக்குவெட்டுமுகம்" இந்நூலாக்கத்தின் தொகுப்பாகின்றது. சஞ்சிகைகள் பத்திரிகைகள் பலவற்றில் வெளிவந்த ஆக்கங்கள் நூல்வடிவம் பெறும் பொழுது ஏற்படும் 'நிலைமாற்றம்"இசைவு பெறுவதற்குக் கருத்தியற் புலக்காட்சி தளமும் விசையுமாக அமைகின்றது.
தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் எழுத்தாக்கங்களும் ஆளுமை வெளிப்பாடுகளும், முற்போக்குச் சிந்தனைகளின் பன்மை நிலைகளைப் புலப்படுத்துகின்றன. முற்போக்காளர் ஒரே அச்சில் வார்த்த வெளிப்பாடுகளைக் கொண்டவர்கள் என்ற புலக்காட்சியும் இங்கே தகர்ப்புக்கு உள்ளாகின்றது. இது இந்நூலாக்கத்தின் ஒரு பரிமாணம். இதன் வேறொரு பரிமாணம் ஆளுமையின் பன்முகத் தன்மைகளுடே
"கருத்தியலுக்குத் திரும்புதல7க” (Return to ideology) அமைகின்றது.
ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியல் தளத்திலே நின்று புதிய சாத்தியங்களைத் தரும் ஒவ்வொருரதும் ஆளுமைப் பணி முகப் பாங்குகளையும் காட்டும் வகையில் நூலாசிரியரின் புனைவு வேலைப்பாடு அமைந்துள்ளது. ஆளுமையின் பரிமாணங்களையும்,
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் 17

Page 6
நுழைவுப் புள்ளிகளையும் வரன்முறையான கட்டமைப்புக்குள்ளே கொண்டு வருவதற்குரிய மொழிவரைபு நூலாசிரியரது கட்டுரை முறைமையின் செயலூக்கப் (Active) பரிமாணத்தைக் காட்டுகின்றது. இவற்றினூடாக நூலாசிரியரின் தொடர்பாடல் "எழுகை"நிகழ்கின்றது.
பேராசிரியர்சபா.ஜெயராசா கோவில் 6) ITFG) கல்வியியற்துறை இணுவில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை இலங்கை
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 18

முன்னுரை
"முற்போக்கு” எனும் சொற்றொடர் சமூக நிலைப்பட்ட ஒரு கருதுகோளாகும். அச்சொற்றொடர் மனிதன் சமூகம் தொடர்பாகக் கொண்டுள்ள அக்கறையை, மதிப்பீடுகளை விபரிப்பதாகும். சமூகத்தின் படிநிலை வளர்ச்சி பற்றிய கண்ணோட்டமும் இதனுள் அடங்கும். பெரும்பாலும் மார்க்ஸியம் என்ற தத்துவத்தை வரித்துக் கொண்ட" வர்களது அரசியல், சமூக, இலக்கிய நடவடிக்கைகள் இந்த முற்போக்குத் தன்மை கொணி டிருப்பதை அறியலாம். "முற்போக்கு வாதம்” மார்க்ஸியம் கூறும் சமூக வளர்ச்சி விதிகளைக் கற்றுக்கொள்கின்றது. (கா.சிவத்தம்பி:2001:47) இந்த வகையில் முற்போக்குச் சிந்தனையுடன்படைக்கும் இலக்கியங்கள் என்றும், அதைப் படைப்பவர்கள் முற்போக்கு இலக்கியப் படைப்பாளர்கள் என்று கூறுவது இன்று மரபாகிவிட்டது. இலக்கியம் என்பது வெறும்னே - மனமகிழ்ச்சிக்கான ஒன்றல்ல, அது சமூக மாற்றத்துக்கான சமூகத்தை மாற்றியமைப்பதற்கான ஆயுதம் என்பதுதான் இவர்களது அடிப்படைக் கருத்து. சமூகத்தில் காலாகாலமாகப் கட்டமைக்கப்பட்ட மரபுகளையும் பொய்மைகளையும் உடைத்து அவற்றில் இருந்து புதிது புனைதல், அதிகாரங்களினால் கட்டமைக்கப்பட்ட கோட்பாடுகளையும் தத்துவங்களையும் மீள்பரிசீலனை செய்தல், அதிகார வர்க்கத்துக்காக" வன்றி உழைக்கும் மக்களுக்கான விடிவு நோக்கிய இலக்கியம் செய்தல் என்பன இத்தகைய சொல்லாடலுக்குள் அடங்குவன. "சமூக மாற்றம்" அதற்காக உழைத்தல் என்பதே இக்கொள்கையாளரின் அடிப்படைக் கோட்பாடு.
நாம் - இந்தியப் பண்பாட்டுச் சூழலில் குறிப்பாக நமது தமிழ்ச் சூழலில் எமக்குக் கையளிக்கப்பட்ட பல்வேறு இலக்கியங்களைப் பயின்றிருத்தல் கூடும். அல்லது அறிகை நெறியிலேயே அவற்றைத் தெரிந்திருத்தல் கூடும். அவற்றுள் எத்தனை இலக்கியங்கள் சமூக மாற்றத்துக்கான மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தன? அடிநிலை
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.கிவசுப்பிரமணியம் 9

Page 7
மக்களை உழைக்கும் மக்களைப் பிரதிப்பலித்தன என்பது கேள்விக்குறியே. அதிகார வர்க்கத்துக்கும், புனிதர்களுக்கும் துதிபாடுபவை யாவும் அழகியல் சேற்றில் புதையுண்டு போனவையுமாகவே அவற்றை இனங்காண்கிறோம். இவற்றை நிராகரித்து, இலக்கியம் என்பது - மனிதம் சார்ந்தது, அவனது பிரச்சனைகள் சார்ந்தது - அவனது விடுதலை சார்ந்தது - என்று வரும்போதுதான் - இலக்கியத்தில் முற்போக்கு வாதம் என்ற கருத்தியலை உணர முடிகின்றது. இந்த முற்போக்குச் சிந்தனை அவர்களுக்குச் சும்மா வந்துவிடவில்லை. அது நவீனத்துவத்துடனான தொடர்பாடலும், மார்க்ஸியம் என்ற பெருந்தத்துவத்தின் வழிநின்று இலக்கியம் படைத்தோரை, இன்றைய இளம் சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் இந்நூலில் இடம்பெற்ற கட்" டுரைகள் அமைந்துள்ளன. *
இரு பகுதிகளாகத் தொகுக்கப்பட்ட இந்நூலின் முதற் பகுதியில் இந்திய முற்போக்கு இலக்கியக்காரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய இலக்கியப் புலத்தில் புதுமைகளின் விளைநிலமாக விளங்கிய வங்கத்தின் எழுத்தாளர்கள், இலக்கியத்தில் யதார்த்த வாதத்தை நிதர்சனமாக்கிய கேரள எழுத்தாளர், தமிழ்ச் சிறுகதைகளில் அடிநிலை மக்களையும், அன்றாடக் காட்சிகளையும் கதை மாந்தர்களாக்கியது மட்டுமன்றி, மரபான சமூக விழுமியங்களைக் கேள்விக்குள்ளாக்கிய சிறுகதையாளர், எளியபதம், எளிய நடை, வெகுஜனங்கள் விரும்பும் மெட்டு என்று பாரதி கூறிய கருத்தியலை மெய்மையாக்கிய கவிஞர் - ஆகியோரை இந்தியச் சூழலில் எம்முன் நிறுத்துகிறார்.
இரண்டாம் பாகத்தில் பேராசிரியர் க.கைலாசபதி, அறிஞர். அ.முகம்மது சமீம், கவிஞர்.க.பசுபதி, செ.கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், கவிஞர் சுபத்திரன் ஆகியோர் பற்றிய பற்றுறுதியை வெளிப்படுத்துகின்றார். கைலாசபதி அடிப்படையில் படைப்பிலக்கியகாரனாகவும் இருந்துள்ளார். எனினும் அவரது ஆய்வுகளும் விமர்சனங்களும் முற்போக்கு இலக்கியத்துக்குப் புதுப் பாய்ச்சலை ஊட்டிய காரணத்தால் அவரையும் முற்போக்கு இலக்கியச் செம்மல்களுள் ஒருவராக்குகின்றார்.
பேராசிரியர் கைலாசபதிக்கு மார்க்ஸியக் கோட்பாடுகளில் ஆழ்ந்த பற்றும், பிடிப்பும் உண்டு. ஆனால் அவர் வறட்டு மார்க்ஸியவாதியல்ல. அராஜகவாதியுமல்ல. உயிர்த்துடிப்புள்ள படைப்பாற்றல் மிக்க மார்க்ஸியத்தை அவர் விரும்பினார். பின்பற்ற முயன்றார். அவர் தேசியவாதியாக மட்டுமல்ல சர்வதேசியவாதியாகவும் விளங்கினார்.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 10

அவரது வாழ்வும் பணிகளும் இதற்குச் சான்றாகும். இலங்கையில் கடந்த 25 ஆணடுகளில் முற்பே7க்கு எழுத்த7ள7ர் இலக்கியம் ஒரு மகத்த7ன சக்திய7க வளர்ந்துள்ளது என்ற7ல், அரசியல் வேற்றுமைகளைக் கடந்து அனைத்து எழுத்த7ள7ர்களையும் ஈர்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்ற7ல் அதற்குக் கைல7சடதிட%ன் ட/ங்கள7/ம் ஒரு முக்கிய க/7ரணம் என பதில் ஐயமில்லை. (தி.க.சி.விமரிசனத்தை தமிழ் 1993:171) மேற்குறித்த மேற்கோள் கைலாசபதியை நூலாசிரியர் இந்நூலில் இணைத்துக் கொண்டமைக்கான சான்றாக அமைகின்றது.
க.கைலாசபதி போல் முற்போக்கு இயக்க, இலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் அக்கறையுடனான ஈடுபாடு காட்டுபவரும் அது தொடர்பாகத் தொடர்ந்து எழுதி வருபவருமான அறிஞர் அ.முகம்மது சமீமும் முன்னிற்கின்றார். அவரை அறிந்தவர்களுக்கு, அவருடன் ஊடாடியவர்களுக்கு அவர் இங்கு மதிக்கப்படும் தார்ப்பரியம் புரியும். மேலும் தரித்துக் கொண்ட கொள்கைக்காக, தொடர்ந்து இயங்கிய, இயங்கிக் கொண்டிருக்கின்ற கவிஞர்கள், புனைகதையாளர் இங்கு இடம்பெற்றுள்ளார்கள். செ.கணேசலிங்கனும், நீர்வை பொன்னையனும் இன்றும் நம்முடன் வாழ்பவர்கள் தொடர்ந்தும் தாம் கொண்ட கொள்கைக்காக சலியாது உழைப்பவர்கள் அவர்களது அறிமுகம் கெளரவத்துக்கு உரியது. வரவேற்புக்குரியது.
முற்போக்கு இலக்கியகாரர்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் அடிமட்டத்திலிருந்து மேற்கிளம்பியவர்கள், மார்க்ஸிய சித்தாந்தத்தை தத்துவமாக வரித்துக் கொண்டவர்கள் இலக்கியப் புனைவு என்பது மக்களை முன்நிறுத்தியது என்பதில் பிடிமானம் கொண்டவர்கள். தாம் கொண்ட கொள்கைக்காக அதிகாரத்தாருடன் சமரசம் எதுவுமின்றிப் போராடியவர்கள். அதற்காகப் பல இன்னல்களை எதிர்கொண்டவர்கள். இதனால்தான் காலங்களை வென்று அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்" கிறார்கள் என்பதை, அதீத புனைவின்றி தம் வரலாறு போலவும், விமர்சன விவரணம் போலவும் அவர்களது காலமும், வாழ்வும், படைப்புகளும் நூலாசிரியரால் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றது.
நூலாசிரியர் தம்பு - சிவசுப் பிரமணியத்தை கடந்த பல தசாப்தங்களாக அறிவேன். 70 களில் கற்பகம் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் இலக்கிய உலகில் தடம்பதித்து இன்றுவரை எழுதிக்கொண்" டிருப்பவர். இளமைக் காலம் தொட்டு இன்றுவரை மார்க்ஸிய அனுதாபியாக இருந்து வருபவர். புனைவு, பத்தி, விமர்சனம், சஞ்சிகை ஆசிரியர் எனப் பல்வேறு தளங்களில் முகங்கொண்டவர், பண்பாளர்.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 11

Page 8
அவர் அவ்வப்போது பத்திரிகைகள் சஞ்சிகைளில் எழுதிய கட்டுரைகள் இப்பொழுது நூலாக்கம் பெற்றுள்ளன. இலகுவான நடையில் பொதுவாசகர்களும், மாணவர்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் எழுதப்பட்ட இந்நூல் தொகுப்பு வாசகர்களுக்கும், மாணவர்களுக்கும் முற்போக்கு இலக்கியகாரர்களை அறிந்து கொள்வதற்கும், அவர்களது ஆக்கங்களைத் தேடிப்பார்ப்பதற்குமான ஆர்வத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரன் தமிழ்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராதனைப் பல்கலைக்கழகம் இலங்கை.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் |12

என்னுரை
"வண்மை யுடையதொரு சொல்லினால் - உங்கள் வாழ்வு பெற விரும்பு நிற்கின்றோம்” ys
இடதுசாரி இலக்கியம் என்ற ஒன்று நிச்சயமாக உண்டு. சமூகப் பின்னணிக்கு முன்பாக ஒரு மனிதனின் செயற்பாடுகளை நிறுத்திக் காட்டும் எந்த இலக்கியமும் இடதுசாரித்தன்மை கொண்டது. அந்தப் பின்னணியில்தான் மனிதனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். சமூகத்திலிருந்து மனிதனைத் தனியாகப் பிரித்து அவன் அகவயப்பட்ட தன்மைகளை விளக்கும் எந்த இலக்கியமும் மனிதனை முழுமையாகச் சித்தரித்தது ஆகாது. இடதுசாரிகள் கருத்தோட்டங்களில் அதிகம் கவனம் செலுத்தினாலும், சமூகப் பொருளாதார அரசியல் பின்னணிக்கு இடையில் மனிதனின் தனித்துவத்தையும் கவனித்துக் கொள்கின்றார்கள். சமூக நீதி என்பதில் அவர்களுக்கு அக்கறை அதிகம். மனிதநேயம் அவர்களின் மூச்சு.
19ஆம் நூற்றாண்டில் வங்காளத்திலும் இன்னும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் இந்தச் சிந்தனைகள் வலுப்பட ஆரம்பித்தன. அன்னியன் நம்மை ஆள்கிறான் என்ற உணர்வும் அதனால் ஏற்பட்ட வெறுப்பும் அப்போதே தோன்றின. பங்கிம் சந்திர சாட்டார்ஜி போன்றவர்கள் இந்த மக்களின் எழுத்தறிவு இன்மை, விவசாயிகள் பிரச்சினைகள், தொழிலாளர்களின் கஷ்டங்கள், ஆங்கிலேயரின் சுரண்டல் போன்ற சமூக யதார்த்தங்களில் கவனம் செலுத்தினர். இந்தச் சிந்தனையிலிருந்து பிறந்ததுதான் இடதுசாரி இயக்க இலக்கியங்கள்.
இத்தகைய கொள்கைப் பற்றுறுதியுடன் இலக்கியத்துறையில் தடம்பதித்து நின்ற சரத் சந்திரர், இந்தி - உருது மொழிகளில் முற்" போக்கு இலக்கியம் படைத்த கிஷனசந்தர், புரட்சிகர மக்கள் கவிஞர் மக்தூ7ம், மலையாள இலக்கியத்தின் மக்கள் எழுத்தாளர் தகழி சிவசங்கரப்ப7ளர்ளை, எழுத்து வல்லிக்கணணன, பாட்டுத்திறத்தால் வையத்தை வாழவைத்த பட்டுக்கே7ட்டை கவிம/7ணசுந்தரம் போன்ற இந்தியப் படைப்பாளிகளைப் பற்றிய எனது கணிணோட்டத்தை முதல் பாகத்தில் தந்துள்ளேன்.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 13

Page 9
மேலும் 50 களுக்குப் பின் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்கள் படைப்பிலக்கியத்திற்குப் புதுமெருகூட்டி ஆழக்கால்பதித்து முற்போக்கு இலக்கியம் படைத்தார்கள். ஈழத்து இலக்கிய வரலாற்றில் இமயம் என நின்ற பேராசிரியர் க. கைலாசபதி, அறிஞர் அ.முகம்மது சமீம், கவிஞர் க.பசுபதி, கொள்ளைப் பற்றுறுதியுடன் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக இலக்கியம் படைத்துவரும் நீர்வை பொன்னையன், செ.கணேசலிங்கன் மற்றும் மட்டுநகர் தந்த கவிஞர் சுபத்திரன் ஆகியோர் பற்றிய எனது நோக்கும் இக்கட்டுரைத் தொகுதியின் இரண்டாம் பாகத்திலும் இடம் பெற்றுள்ளன.
மார்க்சிய சிந்தனைத்தளத்தில் நின்று மக்களிலக்கியம் படைத்த இலக்கியக் கர்த்தாக்கள் என்றும் நினைவு கொள்ளத்தக்கவர்கள். ஈழத்தின் எழுத்தாளர்கள் மூவர் இன்றும் தடம் பதித்த பாதையில் சென்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மை ஒருநாள் வெளியாகும் - அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும். இலக்கிய ஆர்வம் கொண்ட இளம் தலைமுறையினர் முதுபெரும் எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதல் காரணமாக இக்கட்டுரைத் தொகுதியை வெளியிட எண்ணினேன்.
இந்நூலுக்கு அணிந்துரை தந்த பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களுக்கும், முன்னுரை எழுதிய கலாநிதி வ. மகேஸ்வரனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இக்கட்டுரைகளை ஆர்வத்துடன் எழுதத்துரண்டிய என் அன்புக்" குரிய நீர்வைபொன்னையன் அவர்களுக்கும், கட்டுரைகளைப் பிரசுரித்த தினகரன், தினக்குரல், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளுக்கும், ஞானம் சஞ்சிகைக்கும், இத்தொகுதி வெளிவர ஒத்துழைப்பு நல்கிய நண்பர் தெ.மதுசூதனன் அவர்களுக்கும் எனது துணைவியார் ராதாவுக்கும் என் நன்றி உரித்தாகுக.
மேலும் சிறப்பான முறையில் நூலை அச்சிட்டு வெளிக் கொணர்ந்த டெக்னோ பிரிண்டர்ஸ் அதிபர் திரு.தி.கேசவனுக்கும், அங்கு பணிபுரிகின்றவர்களுக்கும், அட்டைப்படத்தை அழகுற தயாரித்துதவிய திரு. மயூரனுக்கும் எனது நன்றி.
கோமமையடன் 15, வித்தியாலயம் ஒழுங்கை தாழ Ավ திருகோணமலை த.சிவசுப்பிரமணியம்
இலங்கை (தம்பு - சிவா)
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 14

(l)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
உள்ளடக்கம்
(பாகம் -1)
வங்கம் தந்த நாவல் இலக்கிய இமயம் சரத்சந்திரர்
தகழி சிவசங்கரப்பிள்ளையின் அமரத்துவ சிருஷ்டிகள்
புனையியல்வாதி + யதார்த்தவாதி கிஷன்சந்தர்
புரட்சிகர மக்கள் கவிஞர் மக்தூம்
எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன்
மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(பாகம் -11)
இலக்கிய மரபில் கைலாசபதியின் புதிய பரிணாமங்கள்
புது உலகம் காணத் துடித்த கவிஞர் பசுபதி
செ.கணேசலிங்கன் படைப்புகள்
(IO) முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன்
(ll)
இலக்கியத் தேடலில் முகம்மது சமீம்
(12) போராளிக் கவிஞன் சுபத்திரன்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் |15
26
32
4O
5O
67
79
85
9.
99

Page 10

பாகம் -1

Page 11

வங்கம் தந்த நாவல் இலக்கிய இமயம் சரத்சந்திரர்
"உன்காவில் விழுகின்றேன் சரத்பாபு ஒரு கதை நீ எழுதவேண்டும் ஒரு சாதாரண பெண்ணின் கதை குறைந்தது ஆறேழு சாதாரண பெண்களுடன் போட்டிபோடும் நிர்ப்பந்தம் அந்த அதிர்ஷ்டக்கட்டைக்கு. எப்படியும் எனக்காக அவளை வெற்றி பெறச் செய்துவிடு! உன் கதையைப் படிக்கப் படிக்க விம்மிப் பூரிக்கட்டும் என் நெஞ்சு." இந்த வரிகள் ரவீந்தரரின் "சாதாரண பெண்" கவிதையிலிருந்து,
"அடிமைப்பட்ட வங்கத்தின் சீரழிந்த சமூகத் தில் சக்தியற்ற பெண்களின் ஊமை உணர்ச்சிகளுக்கு மொழியில் உருவங் கொடுத்தாய் நீ பெண் மனதின் ஆழ்ந்த இரகசியத்தை உணர்ந்தவனே, உனக்கு வணக்கம்!"
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 19

Page 12
“பெண்ணின் மதிப்புக்குரிய நண்பனே! உனக்கு வணக்கம்!”
இவை சரத்பாபுவின் 57 வது பிறந்த தின விழாவில் வங்கப் பெண்கள் அளித்த பாராட்டுப் பத்திரத்திலிருந்து. வங்காளத்தில் சிதைந்து வருகின்ற மத்தியதரவர்க்கப்பெண்களைப் படம்பிடித்துக் காட்டியதுடன் விடுதலைக்காக வீறுபெற்றெழுகின்ற வங்கப்பெண்மையை எம் முன்கொண்டு வந்து நிறுத்துகிறார்.
வங்காளத்தில் ஹராக்ளி மாவட்டத்தில் தேவானந்தபுரம் என்னும் சிற்றுாரில் சரத்சந்திரர், மோதிலால் சட்டோ பாத்தியாயர், புவனமோகினி தேவியார் தம்பதியருக்கு இரண்டாவது பிள்ளையாக 1876 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் திகதி பிறந்தார். இளமையில் வறுமையுடன் போராட வேண்டிய நிலையில் இருந்தார். சரத்சந்திரரின் தகப்பனாருக்கு குழந்தைகளின் மீது அதிக ஆசை. அவர்களுடன் சேர்ந்து ஆடுவதிலும், பாடுவதிலும் அவருக்கு மிகுந்த விருப்பம். யாரையும் அடிக்கவில்லை, திட்டவில்லை. இதனால் அவர் குழந்தைகளைக் கட்டுப்பாட்டுடன் வளர்க்க" வில்லை. எனவே, சரத்சந்திரருக்குப் படிப்பைவிட ஆட்டத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. இதுபற்றி சரத்சந்திரர் பின்வருமாறு கூறியுள்ளார்.
“என் குழந்தைப் பருவ நாட்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன. மீன் பிடித்தலும், படகுகளைத் தள்ளுவதும், ஊரைச் சுற்றுவதும் தான் என் வேலை. எனக்குப் படிப்பிலும் நாட்டம் செல்லவில்லை”
சரத்சந்திரரின் தாயார் பொறுமை அன்பு நிறைந்தவர். அவரைப் போலவே சரத் சந்திரரும் அன்பின் வடிவமானவர். தேவானந்த புரத்திலிருந்த போது பள்ளிக்கூடத்திற்குச் சரியாகச் செல்லாத படியால் தாயார் மிகுந்த வருத்தப்பட்டார். பாகல்பூருக்குச் சென்ற பிறகு சரத் சந்திரர் கல்வியில் நாட்டம் செலுத்த ஆரம்பித்தார். உடற் பயிற்சியிலும் இவருக்கு மிக்க ஆர்வம். இவர் பாடப்புத்தகங்களோடு நிற்காமல் பலதரப்பட்ட புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினார். பள்ளியில் முதலாண்டுத் தேர்வில் அவர் முதல்வராக வெற்றி பெற்றதால் அவருக்கு இரட்டை உயர்வு கிடைத்தது. பள்ளியின் நூல் நிலையத்தி லிருந்து ஏராளமான நூல்களைப் பெற்றுப் படித்தார். இதனால் சிறுவயதிலேயே இலக்கியத்தில் நிறைய ஆர்வம் கொண்டிருந்தார்.
இசையிலும் இருந்த நாட்டம் காரணமாக, சிறந்த வல்லுனராகப் புகழ்பெற்றிருந்த சுரேந்திரநாத் மஜூம்தார் வீட்டில் சரத்சந்திரர் நாள் தோறும் பல மணி நேரத்தைக் கழித்தார். ராவ்பகதூர் அகோரபாபு அவர்களிடமும் அடிக்கடி சென்று பாடங்களைக் கற்று வந்தார். 1884 இல் சரத் சந்திரர் நுழைவுப் பரீட்சையில் தேறி, பாகல்பூர் தேஜ்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 120

நாராயணன் ஜூபிஷி கல்லூரியில் ஏப்.ஏ.வகுப்பில் சேர்ந்தார். ஆங்கில நாவல்களையும் அறிவியல் நூல்களையும் ஏராளமாகப் படிக்கத் தொடங்கினார். டிக்கன்ஸ், தேக்கரே, ஹென்றிவுட் சீமாட்டியார் ஆகியோரின் நாவல்களை மிகவும் ஆர்வத்துடன் படித்தார். ஹென்றிவுட் சீமாட்டியாரின் “கிஸ்டலின்” என்ற நாவலை ஆதாரமாகக் கொண்ட "அபிமான்” என்ற வங்க நாவலை எழுதினார். மற்றும் சில தழுவல் நூல்களை எழுதிய போதிலும் எதையும் அச்சிலேற்ற முடியவில்லை."தேவதாஸ்” இவரின் சிறந்த படைப்புகளில் ஒன்று படிப்பில் மிகுந்த நாட்டமிருந்தது போலவே அவருக்குக் கேளிக்கைகளிலும் ஆர்வம் குறையவில்லை. அத்துடன் பாட்டனாரின் வீட்டிலிருந்த பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தும் வந்தார். ஏப்.ஏ.முதலாண்டு தேர்வின் போது அறிவியல் பரீட்சை நடைபெற்ற முதல் நாள் இவர் இரவெல்லாம் கண்விழித்துப் படித்து நிறைய மார்க்குகளைப் பெற்றார். ஆசிரியர்கள் இவர் “கொப்பியடித்துத்தான் மார்க்குகளை நிறையப் பெற்றார் என்று சந்தேகப்பட்டு மீண்டும் பரீட்சை எழுதச் சொன்னார்கள். அவர்கள் கேள்விகளுக்கு இவர் நேரடியாகவே விடை கொடுத்தது அவர்களுக்கு ஆச்சரியம். மறையும்வரை ஞாபகசக்தி மிக்கவராகவே திகழ்ந்தார்.
படிக்கும் காலத்தில் சரத்சந்திரருக்கு இலக்கியத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. அத்துடன் தாய்மொழிப் பற்றும் அதிகமாகவே இருந்தது. அந்தக் காலத்தில் படித்தவர்கள் ஆங்கிலத்திலேயே கடிதம் எழுதி வந்தனர். ஆனால் இவரோ தன் கடிதங்களை வங்கமொழியில் எழுதியதோடு நிற்காமல் மற்றவர்களையும் தாய்மொழியிலே எழுதுமாறு வற்புறுத்தி வந்தார். அவரது வங்கமொழிப் பற்றுக் காரணமாக "குழந்தை" என்ற கையெழுத்துப் பத்திரிகையையும் நடத்தி வந்தார். சரத்சந்திரரையும் அவரது உயிர் நண்பரான ராஜாவையும் நாடகங்கள் பெரிதும் கவர்ந்தன. அவர்களிருவரும் தங்கள் இனிய குரலாலும், நடிப்பாலும் மக்களைக் கவர்ந்தனர்.
அன்புள்ளம் கொண்ட சரத் சந்திரர் அக்கம் பக்கத்தாரின் காரியங்களில் பெரிதும் துணைபுரிந்து வந்தார். பிறர் துன்பத்தை காணச் சகிக்காத நல்லெண்ணம் கொண்டவராக விளங்கினார். ஏப்.ஏ.பரீட்சைத் தேர்வுக்கு இருபது ரூபா கட்டணம் செலுத்த இயலாத காரணத்தால் அவர் தன் கல்லூரி வாழ்க்கைக்கு தலைமுழுக்குப் போடவேண்டி" யிருந்தது.
பிகாரில் இருந்த காலத்தில் "பிரம்மதைத்தியம்" என்னும் நாவலை எழுதினார். 1903 இல் தகப்பனார் இறந்ததும், கையில் காசில்லாத
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் |த.சிவசுப்பிரமணியம் | 21

Page 13
நிலையில் தன் ஒரே சொத்தான சைக்கிளை விற்று தகப்பனாரின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினார். தந்தை இறப்புக்குப் பின் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட சரத் சந்திரர் பிழைப்புக்காகக் கல்கத்தாவுக்குச் சென்றார். கல்கத்தாவில் ஒரு வழக்கறிஞரிடம் சேர்ந்து இந்தி மொழிக் கடிதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வேலையை மேற்கொண்டார். பின்னர் அந்த வேலையை விட்டு ஊருக்குத் திரும்பினார். அந்த நேரத்தில் அவரது இலக்கியத் திறமையை வெளிக்காட்டுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. வங்க மொழியில் சிறுகதைப் போட்டி நடத்தப்பட்டது. "மந்திர்" என்ற கதையை எழுதி அரேந்திரநாத கங்கோபாத்தியார் பெயரில் போட்டிக்கு அனுப்பி வைத்தார். போட்டிக்கு வந்த 150 கதைகளில் அது முதற்பரிசான ரூபா 25.00 யைப் பெற்றது.
வறுமையின் காரணமாக, பிழைப்புக்கு வழிதேடி தனது 27வது வயதில் சரத்சந்திரர் இரங்கூனுக்குக் கப்பலேறினார். பர்மிய மண்ணில் கால்வைத்தபோது அவரிடம் இரண்டு ரூபா மட்டுமே இருந்தது. வேலை தேடிவந்தவருக்கு இரங்கூனிலிருந்த சிறிய தந்தையார் இயற்கை எய்தியமையால் நிற்க்கதிக்குள்ளானார். பர்மிய மொழிப் பயிற்சி அவருக்கு பெரும் துணைபுரிந்தது.
இசையின் மூலம் மணிந்திர குமாரமித்திரர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மித்திரருக்கு இலக்கியத்திலும் ஈடுபாடு இருந்தமையால் அவருடைய நூல் நிலையத்தில் சரத்சந்திரர் அறிவியல் தத்துவ நூல்களை ஏராளமாகப் படித்தார். அதே வேளை வங்காளிகளின் கழகத்தில் இவர் பெரிய இசை வல்லுனராகத் திகழ்ந்தார். அந்தக் கழ்கத்தினர் சந்திரசென் என்ற வங்கக் கவிஞருக்கு வரவேற்பு விழா நடாத்தினர். அவ்விழாவில் சரத் சந்திரர் பாடினார். இதைக் கேட்ட கவிஞர், சரத் சந்திரருக்கு "இரங்கூன் இரத்தினம்" என்ற விருது வழங்கிக் கெளரவித்தார்.
கல்கத்தாவுக்கு தன் மனைவி இரண்மயிதேவியுடன் வந்து சேர்ந்த சரத்சந்திரர் தான் எழுதிய ஆக்கங்களையெல்லாம் ஒரு நண்பரிடம் கொடுத்துவிட்டு பர்மாவுக்கு மீண்டும் சென்றுவிட்டார். அந்த நண்பர் இவரது கதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பினார். “பாரதி” என்ற பத்திரிகையில் “படதிதி” என்ற கதை வெளிவந்தது. “யமுனை” ஆசிரியரின் வற்புறுத்தலினால் "பிந்துரர் சேலே” போன்ற சிறந்த கதைகள் தொடர்ச்சியாக வெளிவந்தன. 1938இல் கல்கத்தா பல்கலைக் கழகத்தார் "பிந்துார் சேலே" யை பாடப் புத்தகமாக அங்கீகரித்தனர். அவருடைய கதைகளில் முதன் முதலாக நூல் உருவில் “படதிதி” வெளிவந்தது.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 22

திரும்பவும் கல்கத்தா வந்து “பாரதவர்ஷ" பத்திரிகைக்குத் தொடர்ந்து கதை எழுதும் பணிக்கு மாதாமாதம் நூறு ரூபா பெற்றுக்கொண்டு கதைகளை எழுதிவந்தார். வேறு எந்தத் தொழிலிலும் ஈடுபடாமல் வாழ்நாள் முழுவதும் எழுத்தாளராகவே வாழ்ந்தார். அக்காலகட்டத்தில் சுபாஸ் சந்திரபோஸ், பி.சி. ராய் போன்ற பெருந் தலைவர்களையெல்லாம் அவர் மிகவும் போற்றினார். காந்தியடிகளு" டனும், இரவீந்திரருடனும் கருத்துக்களில் பல சந்தர்ப்பங்களில் மாறு: பட்டிருந்தார்.
1929 இல் ஒரே நாளில் இளைஞர் மாநாடு, வங்க இலக்கிய மாநாடு இரண்டுக்கும் தலைமை தாங்க அழைக்கப்பட்டார். இளைஞர் மாநாட்டுக்கே அவர் தலைமை தாங்கி இளைஞர் எழுச்சி குறித்து சொற்பொழிவாற்றினார். "நம் வீழ்ச்சிக்குக் காரணங்கள் நம்மிடையேயுள்ள சாதிப்பிரிவுகள், சமூகக் கொடுமைகள், அன்பில்லாத மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பெண்ணடிமைத்தனம்" என்று ஆணித்தரமாக எடுத்தியம்பினார். “பதேர்தாபி" என்ற நவீனத்தில் சரத்சந்திரரின் உரிமை வேட்கையான சமூக அரசியல் கருத்துக்களைக் காணலாம்.
"பழமை சிறப்புடையதானாலும், அதை பழமையாகவே எண்ண வேண்டும். அதில் மயங்கி விடாமல் எதிர்காலத்தில் நாட்டம் செலுத்துவதே இளமையின் இலக்கணம்” என்று தெளிவுபடுத்தியவர் சரத்சந்திரர். மேலும் ஏராளமான அரசியல் கட்டுரைகளையும் எழுதினார். காந்தியம், இந்து முஸ்லிம் பிரச்சனை, சுதந்திரப் போரில் பெண்களின் பங்கு, இளைஞர் எழுச்சி போன்ற தலைப்புகளில் கட்டுரைகளை வரைந்தார். இதனால் அவர் புகழ் வளர்ந்தது. ஆனால் பத்தாம் பசலி பழமைவாதிகள் அவர் மதத்தை அழிப்பதாக ஒலமிட்டனர்.
ரவீந்திரருக்கு அடுத்தபடியாக வங்க இலக்கிய ஆசிரியர்களிடையே இவர்தான் அதிகம் போற்றப்பட்டுள்ளார். அவரது நூல்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. கல்கத்தா, டாக்கா பல்கலைக்கழகங்கள் அவருக்குப் பட்டமளித்துப் பெருமைப்படுத்தின. 1933 இல் கல்கத்தா மக்கள் அவருக்கு ஒரு பெரிய பர்ராட்டு விழாவை நடத்திக்கெளரவித்தனர்.
வங்கப் பெண்கள் விடுதலைக்கும், எழுச்சிக்கும் அவரது எழுத்துக்கள் மிகவும் பயன்பட்டதால் பெண்கள் அவரைத் தங்கள் விடுதலை வீரராகப் போற்றினர். 40
1938ஆம் ஆண்டு - நோய்வாய்ப்பட்டிருந்த சரத்சந்திரர் என்ற
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 23

Page 14
எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் ஜனவரி 16 ஆம் திகதி இயற்கையெய்தினார். கல்கத்தா இருளில், துக்கத்தில் மூழ்கிவிட்டது. பெருந்தலைவர்கள் பலர் தங்கள் இறுதி வணக்கத்தைச் செலுத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சரத்சந்திரர் இலக்கியத்தில் மட்டுமன்றி நாட்டுப்பற்றிலும், சமூகத் தொண்டிலும் தலைசிறந்து விளங்கினார்.
சரத்சந்தரின் இலக்கியம் உயிர்த் துடிப்புடன் அமைந்திருப்பதற்குக் காரணம், அவர் தனது சொந்த அனுபவங்களையும், நண்பர்களின் வாழ்க்கை அம்சங்களையும் தனது இலக்கியத்தின் மூலம் தந்ததால் தான். அவரது இலக்கியத்தில் வரும் பாத்திரங்களும் கதைப் பொருளும் கற்பனையானவையல்ல. அவை அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவை, பழக்கப்பட்டவை. அதனால்தான் சரத்சந்திரரின் பாத்திரங்கள் நரம்பு, சதையுடன் கூடிய உண்மை மனிதர்களாக நமக்குக் காணப்படுகிறார்கள்.
சரத்சந்திரர் ‘சுபத", "தேவதாஸ்”, “பூரீ காந்தன்”, “சரித்திரஹின் கிருகதகம்”, “தத்த” என்ற நாவல்களில் தன் வாழ்க்கை, நண்பர்களை, தான் வசித்த இடங்களை, தன் சொந்த அனுபவங்களைத் தன் எழுத்துக்களால் படம் பிடித்துக் காட்டுகின்றார். "பூரீகாந்தன்" பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பிரான்சில் நல்ல பெயரெடுத்தது.
இலக்கியத்தையே தன் பிழைப்புக்கு வழியாக அவர் ஏற்றது அந்த நாளில் பெரும் புரட்சியாகும். “பதேர் தாபி" என்ற அவரது நாவல் வெளியான முதல் நாளிலேயே 1000 பிரதிகள் விற்றுவிட்டன. முதல் பதிப்பான 3000 பிரதிகள் ஒரே மாதத்தில் தீர்ந்துவிட்டன. இரண்டாம் பதிப்பான 5000 பிரதிகள் மூன்றுமாதத்தில் விற்றாகிவிட்டன. இத்தாலி, ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கு வழிகாட்டியது போல் வங்கம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக இந்திய மறுமலர்ச்சிக்கு வழிகாட்டி" யது. அத்தகைய வங்கத்தில் தோன்றிய சரத்சந்திரர் நாவல்களுக்கு புது வாழ்வளித்தார். காலவெள்ளம், உரிமைக்குரல், புதுவாழ்வு, பைரவி, இருளில் ஒளி, விராஜ்குமாரி, பார்வதி, புதுமணப்பெண், சந்திரநாத், ரமா, வைகுந்தன் உயில், ஜமிந்தாரணி, அசலா, ஞானதா, சரத்சந்திரர் கதைகள் ஆகிய நூல்கள் வங்க மொழியில் வெளியிடப்பட்டுள்ளன. அத்தனை கதைகளும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வளரும் எழுத்தாளர்கள் இவரின் கதைகளை வாசிப்பதன் மூலம் எழுத்துத் துறையில் உத்வேகம் கொண்டவர்களாக உருவாகுவார்கள்.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் |த.சிவசுப்பிரமணியம் | 24

சரத் சந்திரர் பற்றி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் கூறிய கருத்துக்கள்." அவர் இலட்சிய எழுத்தாளர் மட்டுமல்ல, இலட்சிய தேசபக்தரும் கூட. அது மட்டுமல்ல அவர் இலட்சிய மனிதராவர். இத்தனை சிறப்புகளையும் ஒரே ஆளிடம் காண்பது அரிது"
என்னே! அவர் தீர்க்க தரிசனம்.
சரத்சந்திரர் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்" கின்றார்.
"இன் பத்திலும், துன்பத்திலும், சந்திப்பிலும், பிரிவிலும், சுழன்றுவரும் இயற்கை விசித்திரத்தை அவர் வங்காளிகளுக்கு நன்றாக எடுத்துக்காட்டினார். வங்க மக்களின் நிலைத்த மகிழ்ச்சியே இதற்கு எடுத்துக்காட்டு. வேறு எந்த எழுத்தாளரும் இந்தத் திருப்தியை அளிக்கவில்லை. சரத்சந்திரரைப் போல் எவருமே அனைவருடைய உள்ளங்களையும் கொள்ளை கொள்ளவில்லை” என்று தாகூர் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஞானம் - ஜூன் 2006
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் I 25

Page 15
தகழி சிவசங்கரப்பிள்ளையின் அமரத்துவ சிருஷ்டிகள்
மக்களால் மதிக்கப்படுகின்ற எழுத்தாளர்களுடைய நூல்கள் எந்த மொழியில் வெளி வந்தாலும் அவற்றைத் தேடி வாங்கிப் படிப்பதும், புரியாத மொழியாயின் அவற்றின் மொழி பெயர்ப் புகளை தேடிக் கண்டுபிடித்து வாசிப்பதும் அரங்கேரிய நிகழ்ச்சிகள். இவை இலக்கிய ஆர்வலர்களின் அறிவுப் பசிக்குத் தீனியாக மட்டுமன்றி, அவர்களைச் சிந்திக்கவும் செயற்படவும் தூண்டுபவனாக நெறிப்படுத்தியுள்ளன. ரஷ்ய, சீன, ஆங்கில எழுத்தாளர்களுடன் இந்தியா வின் வங்காளம், மலையாளம், இந்தி, தமிழ் எழுத்தாளர்களும் உலகின் தலைசிறந்த எழுத்தாளர் களாக இனங்காணப்பட்டுள்ளார்கள். வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். ரஷ்ய எழுத்தாளரான மார்க்சிம் கார்க்கி அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்"
முற்போக்கு இலக்கியச் செம்மள்கள் த.சிவசுப்பிரமணியம் 128
 

கின்ற எழுத்துகளால் போராட்ட உணர்வுகளை ஏற்படுத்தி ரஷ்யப் புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார்.
தகழி சிவசங்கரப்பிள்ளை இலக்கிய உலகில் பேசப்படும் ஒரு எழுத்தாளராக மிளிர்கின்றார். அவருடைய செம்மீன் நாவலும் அக்கதையை வைத்து எடுக்கப்பட்ட திரைப் படமும் அவருடைய பெருமைக்குச் சான்று. மலையாள இலக்கியப் பரப்பில் கொடிகட்டிப் பறந்தவர். அத்தகைய எழுத்தாளர் அழியாவரம் பெற்ற அமரத்துவ சிருஷ்டிகளைத் தந்துள்ளார்.
கேரளத்தின் சிறந்த நாட்டிய நாடகமான கதக்களிக்கலையில் நிபுணத்துவம் பெற்ற குடும்பத்தில் தகழி என்ற சிறிய கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு பிறந்தார். இளமையில் வீட்டிலேயே கல்வியைத் தொடங்கிய சிவசங்கரப்பிள்ளை, அம்பலப்புழை நடுத்தரப் பள்ளியிலும், கருவட்டாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பள்ளிக் கல்வி முடிந்ததும் திருவனந்தபுரம் சென்று சட்டக்கல்லூரியில் சேர்ந்தார். வக்கீலாக வெளிவந்த அவர் தனது தொழிலை ஆலம்புழையில் இருந்து நடத்தினார்.
கமலாட்சி அம்மாவைத் திருமணம் செய்து ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையானார். தனது பெயருடன் தனது ஊரின் பெயரையும் சேர்ந்து தகழி சிவசங்கரப்பிள்ளை என்று நாமம் பெற்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தன்படைப்புகளில் தகழி அளித்த இடம் மலையாள இலக்கியத்தின் போக்கையே மாற்றியமைத்தது.
தகழி சிறுவயதில் இருந்து கவிதை எழுதிவந்தார். பெரும் புலவரும் விமர்சகரும் நாடகாசிரியருமான குமாரப்பிள்ளையிடம் தகழிக்குத் தொடர்பு ஏற்பட்டது. தகழியின் திறமை வசனத்தில் அதிகமாகச் சுடர் விடுகிறது என்பதை உணர்ந்து குமாரப்பிள்ளை அவரை வசனத் துறைக்குத் திருப்பிவிட்டார்.
சட்டக்கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் ஏ. பாலகிருஷ்ணப்பிள்ளை என்பவர் வீட்டில் அடிக்கடி கூடும் ஒரு அறிஞர் குழுவில் சேர்ந்து கொண்டார். "கேஸரி” இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியரான பாலகிருஷ்ணபிள்ளை இலக்கியம், அரசியல் சம்பந்தப்பட்ட ஒன்று கூடல்களை ஏற்பாடு செய்து கருத்துகளைப் பரிமாறச் செய்து அறிவுத் தளத்தை விசாலமாக்கினார். இந்தச் சூழ்நிலையில் தான் தகழியின் இலக்கியக் கல்வியும் ஆர்வமும் விரிவடைந்தன. மார்க்ஸ் புரூட் உட்பட ஆங்கில ஐரோப்பிய இலக்கியங்களை விரிவாகப் படிக்கலானார். "வெள்ளத்தினிடையே,"
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் |27

Page 16
"அழகுப் பாப்பா” ஆகிய அவரது கதைகள், அவர் ஒரு புனைக்கதை ஆசிரியர் என்ற அந்தஸ்த்தை கொடுத்தன.
தகழியின் முதல் சிறுகதைத் தொகுப்பான "புதுமலர்” 1934 இல் வெளிவந்தது. அது உடனேயே பிரபல்யம் பெற்றுவிட்டது. அதைத் தொடர்ந்து அவரது முதல்நாவல் “பிரதிபலம்" (கைம்மாறு) வெளிவந்தது. வெளியான சில வாரங்களிலே பிரதிகள் முற்றும் விற்றுப் போய்விட்டன. அதே ஆண்டு "பதிதபங்கஜம்” எனும் மற்றொரு நாவல் உருப்பெற்றது. தொடர்ந்தும் அவரது எழுதுகோல் பலகதைகளைத் தீட்டியது. "அடியொழுகல்", "நித்திய கன்னிகை”, “ஸங்கதிகள்” என்பவை குறிப்பிடத்தக்கன. இக் கதைகள் சமுதாய அமைப்பு வேகம் கொண்டவையாகவும் இடதுசாரி அரசியல் சார்பு கொண்டவையாகவும் இருந்தன.
மலையாள இலக்கியம் வசதியுள்ள நடுத்தரக் குடும்ப வாழ்க்கையோடு பின்னப்பட்டிருந்த காலத்தில், துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் தகழியும் அவர் சாந்தவர்களும் வாழ்க்கையின் சகலதுறைகளிலுமுள்ள மக்களைப் பற்றியும் அவர்களின் சுகதுக்கங்களைப் பற்றியும் குறிப்பாகக் கீழ் மட்டத்தில் இருப்பவர்களின் அவலங்களைப் பற்றியும் தம் படைப்புகளில் எடுத்துக் கூறினார்கள்.
பெரும் காட்டுத்தீபோல நாடு முழுவதும் பரவிய விடுதலை இயக்கத்தில் தகழியும் இணைந்து கொண்டார். இதன் காரணமாக சில சந்தர்ப்பங்களில் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. திருச்சூர் அருகேயுள்ள தடக்கன்சேரியில் தலைமறைவாக வாழ்ந்த காலத்தில் 1947 இல் "தோட்டியுட மகன்” நாவல் வெளிவந்தது. ஒரு தோட்டியின் வாழ்க்கையை தத்ரூபமாகச் சித்திரிக்கும் இக்கதை படிப்பவர் மனம் நொந்து போகும் அளவுக்கு வாழ்க்கையின் உண்மை நிலையை எடுத்துக் காட்டியுள்ளார். இக்கதை மலையாளத்தில் பலமான விவாதத்தை எழுப்பியது. அந்தளவுக்கு அந்த நாவல் பேசப்பட்டது என்று "செம்மீன்” நூலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் நாராயணமேனன் "தோட்டியுட மகன்” குறிப்பிடும் அதே வேளை, இக்கதையை மொழி பெயர்த்த சுந்தர ராமசாமி இக்கதை தொடர் கதையாக "சரஸ்வதி" சஞ்சிகையில் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். தகழி சிவசங்கரப்பிள்ளையின் "தோட்டியுட மகன்” என்னும் மலையாள நாவலை தமிழில் "தோட்டியின் மகன்” என்று முதற்பதிப்பு ஆகஸ்ட் 2000 த்தில் காலச் சுவடு பதிப்பகம் வெளியிட்டு வைத்தது.
தகழி சிறந்த நாவல் ஆசிரியர், சமுதாயத்தில் தான் கண்ட மக்களின் அவலங்களை அவர்களின் போராட்டங்களை கஷ்டதுன்பங்களை தமது
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 128

நாவல்கள், சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தார். மக்களின் நிலையை உணர்ந்தும் “இரண்டிடங்கழி’ (இரண்டுபடி) என்ற நாவல் வெளியாயிற்று.
"ஒரு குடியானவன் என்ற நிலையில் நான் நன்கு அறிந்த அனுபவித்த கஷ்டங்களை அதில் வெளியிடுகிறேன்” என்று தகழியே கூறியுள்ளார். இந்த நாவல் பல இந்திய மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகளிலும் வெளிவந்திருப்பதோடு, சினிமாப் படமாகவும் உருப்பெற்றது. இந்நாவல் "இரண்டுபடி” என்ற பெயரிலும் தமிழிலும் வெளிவந்துள்ளது. "இரண்டிடங்கழி” என்னும் நாவல் பண்ணையில் தொழில் புரியும் புலையர் என்னும் தீண்டாதார் சமூகத்தைப் பற்றியும், கடினமான கீழ்த்தரமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அவர்கள் நிலச்சொந்தக்காரர்களுக்கு உழைப்பதையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது. எழுத்தாளரின் மனித நேயம் தெரிகிறது.
"இரண்டிடங்கழி” நாவலைத் தொடர்ந்து பல சிறுகதைகளும் குறுநாவல்களும் வெளிவந்தன. தகழி சுமார் நாற்பது நாவல்களையும் இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவரின் அநேகமான படைப்புகள் இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
1956 இல் வெளிவந்த "செம்மீன்” இந்தியாவின் சிறந்த இலக்கியப் படைப்புக்கான சாகித்திய அக்கடமிப் பரிசைப் பெற்றது. இந்தக் கதை திரைப்படமாக எடுக்கப்பட்டமையால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மக்களால் புகழ்ந்து பாராட்டப்பட்டது. சினிமா சாதாரணமக்களையும் சென்றடையக்கூடிய சாதனமாக இருந்தமையால் செம்மீன் பற்றி பட்டிதொட்டிகளெல்லாம் பேசப்பட்டன. தகழி கடலோர மக்களின் வாழ்க்கையை அனுபவ ரீதியாக அறிந்து அவர்களின் மொழிநடை, பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள், செயற்பாடுகள், பந்த பாசங்கள் என்ற இன்னோரன்ன விடயங்கள் உள்ளடக்கிய நாவலை வெளிக் கொணர்ந்துள்ளார். இந்த நாவலில் யதார்த்தப் பண்புகள் மேலோங்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை செம்மீன். இது ஒரு காதல் கதையாக இருந்தபோதிலும், ஒரு மீன்பிடிக் கிராமத்தினுடைய கொடிய வறுமை, அயரா உழைப்பு, எளிமை வாழ்வு என்பவற்றை நேரில் சென்று தரிசித்த ஒரு படைப்பாளியால் தான்இத்தகைய மனதை நெருடும் ஆக்கத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் தகழி வெற்றி கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். கடின உழைப்புமிக்க நற்குன்னம், திரிகுன்னம் புழைகிராமத்து மீனவர் குடிகள்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் |த.சிவசுப்பிரமணியம் | 29

Page 17
எவ்வளவுதான் எளிமையாக இருந்தாலும், மனித சமூகத்தின் அம்சமாகவே விளங்கினர் என்பது ஆசிரியரின் மனத்தை ஈர்த்த விடயம்.
காதல் வயத்தால் அதிக ஆசை பிடித்து அதன் காரணமாகச் சீலம் குறைந்த ஒரு மீனவனின் பெண் கறுத்தம்மா, பரீக்குட்டி என்னும் முஸ்லிம் வியாபாரியை நேசிக்கிறாள். ஆனால், அவர்களது தூய காதல் இனிது நிறைவேறவில்லை. தான் பரீக்குட்டியை மணக்க முடியாது என்று கறுத்தம்மாவுக்குத் தெரியும். அன்றைய சமுதாய அமைப்பு அப்படித்தான் இருந்தது. சமூகக் கட்டுப்பாடுகள் அவ்வளவு வலுவானவையாக இருந்த காலம். பரீக்குட்டியிடமிருந்த தன் நினைவை கறுத்தம்மாவால் அகற்ற முடியவில்லை. வசந்த நாளில் தானே மலரும் ரோஜாவைப்போல தவிர்க்க முடியாத வண்ணம் அவர்கள் காதல் மலர்கிறது. இருந்தும் கறுத்தம்மா தனது சமுதாய வழக்கப்படி மெளனமான சோகத்துடன் ஒரு இளம் மீனவனைக் கணவனாக ஏற்கிறாள். தனது மனப்போராட்டங்களுக்கு மத்தியிலும் கறுத்தம்மா கணவனுக்கு உண்மையான மனைவியாக வாழ எவ்வளவோ முனைகின்றாள். இந்த மனப்போராட்டங்களை விவரிக்கும் பகுதிகள் உள்ளத்தை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளன. கறுத்தம்மாவின் வாழ்" வில் பரீக்குட்டியின் நிழல் படர்ந்து கொண்டே வருகின்றது. கடைசியில் கறுத்தும்மாவினதும் பரீக்குட்டியினதும் சோக முடிவு தத்துரூபமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதுதான் செம்மீனின் கதையின் களம்.
நில அமைப்பு சார்ந்த இலக்கியப்படைப்புக்கள் என்றவகையில் கடற்கரை வாழ் மக்களின் வாழ்க்கையை தகழி தனது செம்மீன் நாவலில் தந்துள்ளார். “குடா நாட்டின் வரலாற்று நாயக்” என்று தகழியைச் சிறப்பிக்கின்றனர். நில அமைப்போடு இலக்கியம் கொள்ளும் நெருக்கமும் நேசமும் இதனால் புலனாகின்றன.
இருபது நாட்களுக்குள் இந்த நாவலை எழுதி முடித்தார் தகழி. எளிய கதாப்பாத்திரங்களையும், சாதாரண சம்பவங்களையும், கொண்டு வரைந்த அழியாவண்ணச் சொற்சித்திரம் செம்மீன் யூனஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்டு எழுத்தாளர் தகழி சிவசங்கரப்பிள்ளைக்குப் பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளது. இதன் தமிழ்மொழி பெயர்ப்பை சுந்தரராமசாமி செய்துள்ளார்.
கேரள சமூகத்தில் தோட்டி, குடியானவன், மீனவன் என்று தாழ்த்தி ஒதுக்கிய சிறு சிறு இனங்களின் வாழ்க்கைக் கருவூலங்களை வெளிக்கொணர்ந்த தகழி 1959 இல் எழுதிய “ஒஸப்பின் மக்கள்” என்னும் நாவலை வெளியிட்டார். இந்நாவலில் கேரள நாட்டுக்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 30

கிறிஸ்துவக் குடிமக்களின் வாழ்வை விளக்குகிறார். தெளிந்த ஒட்டமும், வேகமும், சிருஷ்டித் திறனும் கொண்ட தகழி மக்கள் எழுத்தாளராகவே இனங் காணப்படுகின்றார்.
1965 ஆம் ஆண்டு தகழியின் “ஏணிப்படிகள்” கேரள சாகித்திய அக்கடமி பரிசையும், 1980 இல் 'கயிறு" என்னும் நூல் வயலார் நினைவுப் பரிசும் பெற்றது. 1984 ஆம் ஆண்டு ஞானபீடப் பரிசும், 1985 இல் பத்மபூஷண் விருதும் கிடைத்தது. கேரளப் பல்கலைக் கழகமும் மகாத்மாகாந்தி பல்கலைக்கழகமும் டி.லிட் பட்டம் அளித்துள்ளன. w
மக்களின் ஏற்றத் தாழ்வுகளில் இருக்கக்கூடிய அடக்குமுறை" களைத் தகர்த்தெறிய பல வழிகளிலும் போராட வேணி டிய நிலைப்பாட்டை மனதில் நிறுத்தி கேரள இலக்கிய வளர்ச்சிக்கும் உலக இலக்கிய முன்னேற்றத்துக்கும் தன் எழுத்தால் முத்திரை பதித்த ஒரு மக்கள் எழுத்தாளன் 1999 ஆம் ஆண்டு தனது 85ஆவது வயதில் உயிர் நீத்தார். அவருடைய படைப்புக்கள் அழியாவரம் பெற்று இன்றும் மக்களால் மதிக்கப்படுகின்றன.
தினக்குரல்
24-09-2006
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் |31

Page 18
புனையியல்வாதி + யதார்த்தவாதி கிஷன்சந்தர்
இந்தி - உருது மொழிகளில் முற்போக்கு இலக்கியப் படைப்பாளியாகிய கிஷ்ன்சந்தர் இந்திய வாழ்க்கையின் அழகையும் அவலங்களையும் சித்தரித்த புனைவியல்வாதி (Romanticist) பாக எம்முன் நிற்கின்றார். கிஷன் சந்தர் முற்போக்கு எழுத்தாளர் சங்கப்பொதுச் செயலாளராக இருந்து செயற்பட்டதுடன், இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்குகொண்டு பாடுபட்டார். மக்தூம், ராகுல்ஜி போன்றவர்களுடன் கிஷன்சந்தரும் இணைந்து இந்திய மக்களுக்குக் குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்தனர். மறைவுக்குப்பின் கிஷன் சந்தர் அவரைப் பற்றி கவிநயம் நிறைந்த ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அது வாசகனின் இதயத்தைத் தொட்ட நிகழ்வாக
அமைந்தது.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் |32
 

"அவர் நினைவுகள் என் நெஞ்சைவிட்டு நீங்க மறுக்கிறது. ஒரு வினாடி கூட அவரை மறந்து விட வேண்டும். ஏனெனில் அவர் நினைவு இருக்கும் வரை எமது இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல உற்சாகமென்பது இருக்காது. உற்சாகத்தோடு வாழவேண்டுமென்றால் நமக்கு மிக நெருங்கிய நண்பர்களின் மறைவை மறந்துவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களது நினைவு நம்மைக் கூர்மையான முட்களைப் போலக் குத்தும். இக்கட்டுரை என் நண்பருக்கு நான் செலுத்தும் அஞ்சலியல்ல. துன்பவெள்ளத்திலே நான் மூழ்கிப் போகாமலிருக்க, எண்னைப் பாதுகாத்துக்கொள்ள நான் செய்யும் முயற்சிதான் இந்தக் கட்டுரை" என்று கூறுகின்றார்.
கிஷன் சந்தர் தனது இலக்கிய முயற்சிகள் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "கடந்த முப்பது ஆண்டுகளில் நாங்கள் சுமார் முப்பத்தைந்து நபர்கள் உருதுமொழியில் ஒரே இலக்கியப் போக்கைக் கடைப்பிடித்து எழுதி வருகின்றோம். எங்கள் படைப்புகள் சமுதாயக் கடமைகளை வற்புறுத்தி, அறிவின் எல்லைகளை விரிவுபடுத்தின. நாங்கள் முப்பத்தைந்து நபர்களும் விசித்திரமான, விர்ைடுரைக்க முடியாத ஒரு சக்தியால் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்பட்டோம். இலக்கிய உலகில் எங்களுக்கேற்பட்ட சவால்களையும் சோதனை" களையும் சேர்ந்து நின்று சமாளித்திருக்கிறோம். சோதனைகளும் எதிர்ப்புகளும் இல்லாத பொழுது நாங்கள் பிரிந்துவிடுவதும், ஒருவரை ஒருவர் வேடிக்கையாகக் கேலி செய்து கொள்வதும் உண்டு. ஆனால், எங்களுக்கிடையே சிந்தனையிலும் உணர்ச்சியிலும் ஒருமைப்பாடு இருந்தது. எங்கள் நட்பை எதனாலும் குலைக்க முடியவில்லை. நாங்கள் இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழ்ந்தாலும் நாங்கள் ஒரே அணியில் இணைந்து நின்றோம். இளமையிலிருந்து முதுமை வரை துTரமோ கருத்துவேறுபாடுகளோ. எங்களைப் பிரித்ததில்லை. நாங்கள்தான் சிந்தனையில் ஒன்றுபட்டு விட்டோமே!"
கிஷன்சந்தர் இளமைப் பருவம் முதல் துடிப்புள்ள கொள்கைப் பற்றுறுதி கொண்ட செயல்வீரனாக இருந்தார். ஹைதராபாத்தில் ஒரு இலக்கிய மாநாடு நடைபெற்றது. சரோஜினி நாயுடு மாநாட்டைத் துவக்கி வைக்கிறார். மாநாட்டு ஏற்பாடுகளை மக்தூம் மொகிதீன் முன்னின்று செய்திருந்தார். பழைய நிஸாம் மன்னர் உயிரோடு இருந்தகாலம், ஆங்கில அரசாங்கப் பிரதிநிதியும் இருக்கிறார். சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது. அடிமைச் சங்கிலிகள் ஒன்றல்ல இரண்டு பூட்டப்பட்டிருக்கின்றன. பேச்சாளர்கள் நிதானமாகவும் ஜாக்கிரதையாகவும் பேசவேண்டுமென்று வற்புறுத்தப்பட்டிருந்தது.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் |33

Page 19
மாநாட்டுக்கு கிஷன்சந்தர் தலைமை தாங்கினார். அவரும் அவருடைய இலக்கிய நண்பர்களாகிய இளவட்டங்களும் அவரைப் போல சுதந்திரப் போதை மிக்கவர்களாக இருந்து, சொற்பொழிவுகளில் தீப்பொறிகளாக தங்கள் உள்ளக்குமுறல்களை வெளியிட்டனர். மாநாடு மாபெரும் வெற்றியடைந்தது.
"கிஷன்சந்தர் படைப்பாளுமை மிக்கவர். உருது மொழியில் அவரு” டைய நயமான எழுத்தாற்றலை, ஆற்றொழுக்கான உரை நடையை எழுதிக் குவிக்கும் திறமையைக் கண்டு ஒரு எழுத்தாளன் என்ற முறை" யில் நான் ரகசியமாகப் பொறாமைப்பட்டேன். அவருடைய புத்தகங்" களுக்குக் கல்லூரி மாணவிகளிடம் பெரும் வரவேற்பு இருந்தது. மாஸ்கோவில் இந்திய மொழிகளையும் இலக்கியங்களையும் பயில்கின்ற மாணவர்கள் மத்தியில் பேசும் வாய்ப்பு எனக்கு ஒரு தடவை கிடைத்தது. இந்திய இலக்கியங்களில் காணப்படுகின்ற புதிய போக்குகள் பற்றி பேசி முடித்த பின்பு கேள்விகள் கேட்கலாம் என்று கூறினேன். மாணவிகள்தான் அதிகமாகக் கேள்விகள் கேட்டனர். அவர்களின் கேள்விகள் பெரும்பாலும் கிஷன் சந்தரைப் பற்றியே இருந்தன. அவர்கள் எல்லோருமே கிஷன்சந்தரின் ரசிகைகள். அவரைப் பற்றி எல்லா விபரங்களையும் தெரிந்து கொள்ளத் துடித்தனர். இது என்னுடைய அனுபவம் மட்டுமல்ல. சோவியத் யூனியனுக்குச் சென்ற பல இந்திய எழுத்தாளர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு தூரத்திற்கு அவருடைய எழுத்தின் தாக்கம் பலரைக் கவர்ந்திருந்தது." இவ்வாறு எழுத்தாளர் கே.ஏ.அப்பாஸ் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். புனையியல்வாதிகள் “இரண்டு ஜன்னல்கள்” என்ற அணுகு" முறையில் கிஷன்சந்தரைப் பற்றி கே.ஏ அப்பாஸ் எழுதி கட்டுரை இலக்கியத் திறனாய்வில் ஒரு புதிய பரிமாணத்தைக் காட்டுகிறது.
உருது மொழி முற்போக்குக் கவிஞரான அலிசர்தார் ஜாப்ரி ஒருமுறை ரஸ்சிய நகர் ஒன்றிலுள்ள தொழிலாளர்களின் கலாசார மாளிகையில் அமைந்துள்ள நூலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கிருந்த புத்தகக் குவியலில் இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து அதை அருகிலிருந்த மொழிபெயர்ப்பாளரிடம் அதன் ஆசிரியர் யார்? என்று வினவியுள்ளாராம். “அது கிஷன்சந்தரின் சிறுகதைகளின் ரஸ்சிய மொழிபெயர்ப்பு. இதைப் போன்று நான்கு புத்தகங்கள் வெளிவந்துள்ளன" என்று அந்த மொழிபெயர்ப்பாளர் பதில் சொன்னாராம். அப்பொழுது நூலகத்திலிருந்த தொழிலாளர்களைப் பார்த்து ஜாப்ரி உங்களுக்கு கிஷன்சந்தரை பிடிக்குமா? என்று கேட்டார். அவர்கள் ஒரே குரலில் ஆம் என்று பதிலளித்தார்கள். கிஷன் சந்தரின் "செம்மலர்கள்” என்ற கதை பார்வையை இழந்த ஒரு பூ வியாபாரியைப் பற்றியது. அக்கதை பற்றி
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 34

ஒரு ரஸ்சிய தொழிலாளி பின்வருமாறு கூறினார். "அது ஒரு தொழிலாளியின் ஆத்மாவை. அவனுடைய அக வாழ்க்கையை மிக அழகாக சித்தரிக்கின்றது. அதனால்தான் நாங்கள் அக்கதையை மிகவும் விரும்புகின்றோம்" என்று பதிலளித்தாராம். ஒரு பெண் தனது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கையில் “பெளர்ணமி நிலவில்” என்ற கதை முற்றிலும் புனையியற் கதை என்ற காரணத்தால் அது மிகவும் வியப்பைத் தந்தது. இந்தியாவின் அழகை - நாட்டின் இயற்கை அழகையும் முழுமையாக உணரமுடிகிறது. அழகை மட்டுமன்றி வாழ்க்கையையும் நேசிக்கின்ற எழுத்தாளரால் தான் இத்தகைய கதையை எழுத முடியும். அவர் எழுதுவது உரைநடையாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு கவிஞர். அவர் உள்ளம் கவிதையுள்ளம் என்று கூறினாராம்.
ரஸ் சிய நாட்டுத் தொழிலாளர்கள் எவ்வளவு கூர்மையாக கிஷன்சந்தரைப் பற்றியும் புதிய கோணத்தில் அவரின் படைப்புக்கள் பற்றியும் தெளிவுடன் இருந்தார்கள் என்பதற்கு மேலே கூறப்பட்ட இரண்டு விமர்சன நோக்குகளும் எடுத்துக் காட்டாக அமைந்துள்ளன. உயர்தர உணர்ச்சிப் பாங்கும் (Lyricism) நடப்பியலும் (Realism) நயம் படச் சேர்த்து எழுதியுள்ள கிஷன்சந்தரின் படைப்புகள் உருதுமொழி வாசகர்களிடம் தனிக் கவர்ச்சியைப் பெற்றிருக்கின்றன. இலக்கிய விமர்சகர்களுக்கு திகைப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
கிஷன்சந்தர் தனது "தோல்வி” என்ற முதல் நாவலை காஷ்மீரிலுள்ள குல்மார்க் என்ற இடத்தில் இருந்த ஹோட்டல் அறையிலிருந்து எழுதிக்கொண்டிருந்த வேளை இரு வேறுபட்ட சூழலை அவரால் தரிசிக்க முடிந்துள்ளது. அறையின் முன்னும் பின்னும் ஜன்னல்கள் இருந்தன. எழுதிக் கொண்டிருந்தவர் எழுத்தை நிறுத்திவிட்டு முன்புறத்து ஜன்னல் வழியாக வெளியில் பார்க்கின்றார். மலர்கள் பூத்துக்கிடக்கும் பள்ளத்தாக்கையும், படிப்படியாக மேலே உயர்கின்ற பகுதிகளில் தேவதாரு மரங்கள் நிறைந்திருப்பதையும், அவை பனிமூடிய மலைச் சிகரங்களில் முடிகின்ற பேரழகையும் கண்டார். இயற்கையின் காட்சிகளை கண்ட மனப்பூரிப்புடன் பின்புறத்து ஜன்னலைத் திறந்து பார்க்கிறார். ஹோட்டலின் கொல்லைப் புறத்தை, அங்கே குவிந்து கிடக்கும் குப்பை கூளங்களை, உடைந்த மரச் சாமான்களை, நசுங்கிக்கிடக்கும் பாத்திரங்களைப் பார்த்தார். அவற்றுக்கு அப்பால் ஹோட்டல் சிப்பந்திகளின் ஒட்டைக் குடிசைகளை, எங்கும் வியாபித்திருக்கும் அவலட்சணங்களை கண்டார். ஒருபுறத்தில் பூக்கள்,
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 85

Page 20
மரங்கள், மலைச்சிகரங்களைக் கணிடவர் மறுபுறத்தில் மனித வாழ்க்கையைப் பார்க்கின்றார். இந்த யதார்த்தமான அனுபவத்தை அவரது "ஜன்னல்" என்ற கதையில், தரிசிக்கலாம்.
“தோல்வி" என்ற முதல் நாவல் எழுதப்பட்ட சூழ்நிலையை கிஷன்சந்தர் பின்வருமாறு விபரிக்கின்றார்.
“இரண்டு ஜன்னல்கள், அந்த இரண்டு ஜன்னல்களின் வழியாகவும் நான் வெளியுலகத்தைப் பார்த்தேன்” என்கின்றார்.
"அந்த அறையில் மட்டும் இரண்டு ஜன்னல்கள் இருக்கவில்லை. ஒவ்வொரு எழுத்தாளனின், ஒவ்வொரு கலைஞனின் மனத்திலும் இரண்டு ஜன்னல்கள் இருப்பதாக நான் அன்றுமுதல் நினைத்து வருகின்றேன். சிலர் பின் புறத்திலுள்ள ஜன்னலை நன்றாக மூடிவிட்டு மலைச் சிகரங்களை மட்டும் பார்த்து அதன் அழகில் சொக்கி நிற்கிறார்கள். இவர்கள் புனைவியல்வாதிகள். "கலை கலைக்காகவே" என்ற கோட்பாட்டை ஆதரிப்பவர்கள். வாழ்க்கையில் நிறைந்திருக்கும் அழுக்கையும் ஏழ்மையையும் துன்பத்தையும் கொடுமையையும் சித்தரிப்பது இலக்கியத்தின் வேலையல்ல என்று கருதுபவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட யதார்த்தவாதிகள், புரட்சிவாதிகள் இருக்கிறார்கள்.
அவர்களுடைய படைப்புப் பார்வை அழகு, காதல் ஆகியவை மீது விழுவதில்லை. சந்நியாசியோ, சர்வாதிகாரியோ ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தோன்றி மறைகின்ற ஆனந்தத்தை அவர்கள் பார்ப்பதில்லை. அழுக்கையும், அழிவையும் அநீதியையும் மட்டுமே வர்ணிப்பது அவர்களது பழக்கம் அவையே மக்கள் இலக்கியங்கள். என்ற தனது உண்மையான இலக்கிய வழியை நிலை நிறுத்துகின்றார். உருதுமொழி இலக்கிய உலகத்தில் கிஷன்சந்தர் தோன்றிய காலத்தில் இரண்டு போக்குகள் மோதிக் கொண்டிருந்தன. தெய்வங்கள், தேவதைகள் போன்ற கதாபாத்திரங்களை வைத்து எழுதிய புனைவியல் வாதிகளின் இலக்கிய மரபு மக்கள் மத்தியில் வேரூன்றியிருந்தது.
ஆனால் ஒரு புதிய எழுத்தாளர் குழு இந்தப் பிற்போக்கைத்
தீவிரமாகத் தாக்க ஆரம்பித்திருந்தது. இவர்கள் உருது இலக்கியத்தில் அன்று நிலவிய மலினமான, போலித்தன்மை கொண்ட புனைவியல் வாதத்தை உடைத்தெறிந்தனர்.
அன்று உருது இலக்கியத்தில் பிரேம்சந்தின் ஆக்கங்கள்தான் பகட்டாரவாரம் இல்லாத உண்மையான மேம்பாட்டு இலக்கியங்களாக அமைந்திருந்தன.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 136

கிராம மக்களின் வாழ்க்கையை நுணுக்கமாகக் கவனித்து, வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற சம்பவங்கள், கதாபாத்திரங்கள் ஆகியோரைக் கொண்ட உண்மையான இலக்கியத்தைப் படைத்தார். இருந்தும் அதீதமான புனைவியல் கதைகளை அதிகமாகப் படித்து அதில் ஈர்க்கப்பட்ட பெரும்பான்மையான வாசகர்களுக்கு தூய்மையும் குறிக்கோளும் சொற்செட்டும் கொண்ட பிரேம்சந்தின் கதைகள் அவ்வளவாகக் கவரவில்லை. இத்தகைய பின்னணியில் கிஷன்சந்தரின் இலக்கியப் பிரவேசம் ஆரம்பமாகின்றது. முதலில் அது சுவையும் புதுமையும் கலந்த இலக்கியப் போக்கைக் கொண்டிருந்தது. பின்பு உருது இலக்கியத்தின் பல்வகையான போக்குகளின் மிகச் சிறந்த அம்சங்களின் தொகுப்பாக அது வளர்ச்சியடைந்து வாசகர்களைச் சுண்டியிழுத்தது.
ஆரம்ப காலக் கதைகளில் பழைய மரபுகளை ஒழிக்கும் பண்புகளும், இவற்றோடு பிரேம்சந்தின் முக்கிய அம்சமான மக்களை நேசிக்கும் பண்பும், அதன் மூலமாக மக்களைப் பற்றி உணர்ந்து கொண்ட நுணுக்கமான அறிவும் தெளிவு பெற்றிருந்தன.
கிஷன்சந்தரின் தந்தை காஷ்மீர் சமஸ்தானத்தில் மருத்துவராகப் பணியாற்றிய காலத்தில், கிஷன்சந்தரின் இளமைப் பருவம் அந்தச் சொர்க்காபுரியின் அழகு மிகுந்த நகரங்களிலும் சிற்றுார்களிலும் கழிந்தன. வசதியாக வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த கிஷன்சந்தர் இயற்கையின் எல்லையற்ற அழகை அவர் ரசித்தார்.
அந்தப் பருவத்திலும், காஷ்மீர் வாழ் விவசாயிகளின், கூலிகளின் பரிதாபத்துக்குரிய ஏழ்மையைக் கண்டு வருந்தினார். இயற்கைக்கும் மனிதனுக்குமிருந்த வேறுபாடு அவருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதன் காரணமாக அவர் மனத்தில் பரிவு உணர்ச்சி ஏற்பட்டு அது ஆழப்பதிந்துவிட்டது.
சில காலத்திற்குப் பின் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தனது சொந்த அனுபவத்தில் இருந்துதான் "மஞ்சள் காமாலை” என்னும் கதை எழுதப்பட்டது.
நோய் வந்து ஒய்வெடுக்கும் காலத்தில் படுக்கையில் இருந்தபடியே ஜன்னல் வழியாக ஒரு காட்சியைக் காண்கின்றார்.
அதிக வயதான கூலிகள் தாங்க முடியாத பாரத்தைத் தூக்கிக்கொண்டு தள்ளாடியபடி மலைப்பாதைகளில் மெதுவாக, பெரும் சிரமத்தோடு போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தார்.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 37

Page 21
ஒரு பகுதியில் இயற்கை அழகின் ஈடுபாடு, மறுபுறத்தில் துன்பப்படும் மக்களின் அவலங்களை நோக்கும் தன்மை அவரை பாதித்ததனால் அவர் தெளிவு பெற்றார்.
இத்தகைய கலை உணர்வுகளைக் கொண்டிருந்த கிஷன் சந்தர் காதல் வயப்பட்டு குறுகிய காலத்தில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டபோதிலும், அவருக்கு ஏற்பட்ட ஆழமான காதல் உணர்ச்சி ஒரு மென்மையான நினைவை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அவர் எழுதியிருக்கின்ற காதல் கதைகள் அமைந்துள்ளன.
கடைசியாக அவர் மனத்தைத் தொட்ட நினைவு “பெளர்ணமி நிலவில்” என்ற மறக்க முடியாத அழகு நிறைந்த காதல்கதையில்பூரணத்துவம் பெறுகின்றது. இக்கதை இந்தியாவிலும், சோவியத்யூனியனிலும் அக்காலத்தின் வாசகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. வேதனையையும் அதேவேளை ஆனந்தத்தையும் ஏற்படுத்திய கிஷன்சந்தரின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்றாகக் கணிக்கப்பட்டது.
அவர் தலைமுறையைச் சேர்ந்த ஆயிரமாயிரம் இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றிய இந்திய சுந்திரப் போராட்டத்தில் புரட்சி இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு பகத்சிங், சந்திரசேகர், ஆஸாத் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் இரகசியமாகச் செயற்பட்டார். பின்பு பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டு ஒரு முற்போக்கான வார இதழை நடத்தினார். அகில இந்திய வானொலியில் நாடகத் தயாரிப்பாளராக சிறிது காலம் பணியாற்றிவிட்டு, பம்பாயில் (மும்பாய்) திரைப்பட வசனகர்த்தாவ்ானார். கிஷன்சந்தர் தான் வாழ்ந்த காலத்துப் பிரச்சினைகளையும், சம்பவங்களையும் வைத்தே பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் சிறுகதைகளில் தத்ரூபமான வர்ணனை, சுவை குன்றாத நடை, அழுத்தமான பாத்திரப்படைப்பு ஆகியவற்றைக் காண்கின்றோம்.
வங்காளத்தில் யுத்தகாலத்தில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைப் பற்றி அவர் எழுதிய “நான் சாகமாட்டேன்” என்ற நெடுங்கதையும், (இக்கதையை இலங்கையரான முற்போக்கு எழுத்தாளர் செ.கதிர்காமநாதன் தமிழில் மொழிபெயர்த்து வீரகேசரிப் பிரசுரமாக 1972இல் வெளிவந்தது) பம்பாயில் கடற்படையினரின் வேலை நிறுத்தம் பற்றிய சிறுகதையும், கல்கத்தாவில் பெண்கள் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது பற்றி எழுதிய "பிரம்மபுத்திரா" என்ற கதையும் முதல்தரமான சிறுகதைகளாகும்.
LLlLCTTSLLL THtLLTC LLtttLtCLLLL SS LL SttLLLTTTTEMLLL S 00 S

கிஷன்சந்தர் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட ஒரு சிறந்த இந்தியச் சிறுகதை ஆசிரியர். இவர் மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டவராக இருந்தமையால் அவர் எழுத்துக்களிலும் பிரசாரவாடை இன்றிசாதாரண மக்களின் மனதைத் தொடுகின்ற நேரடியான எளிமையான கதை ஆக்கங்களைப் படைத்து உருது இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்றியுள்ளார்.
தினகரன்
06-08-2005
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 39

Page 22
புரட்சிகர மக்கள் கவிஞர் மக்தூம்
1908 ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதி இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள தெலுங்கானா பிரதேசத்தில் மேடக் மாவட்டத்துக் கிராமமொன்றில் மக்தூம் மொகிதீன் பிறந்தார். "என்னுடைய குழந்தைப் பருவத்தில் குழந்தைப் பரு” வம் என்பதே இல்லாமலிருந்தது" என்று ஆண்டன் செகாவ் தன்னைப் பற்றி எழுதிய எழுத்துக்கள், மக்தூம் வாழ்க்கையிலும் நடந்தேறியுள்ளமையை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.
குழந்தைப் பருவத்தில் கவலைகளின்றி வளர்வதும், விரும்பியதைக் கேட்பதும், கேட்டதைப் பெறுவதும் இயற்கை. அத்துடன் பெற்றாரும், உற்றாரும் சீராட்டி வளர்ப்பதும் இயற்கை. மக்தூமின் நான்காவது வயதில் அவரின் தந்தையார் இறந்துவிட்டார். தாயாரும் மறுமணம் செய்துகொண்டு போய்விட்டார். மாமா பஷீருத்தீன் மதப்பற்றும் அன்பும் நிறைந்தவர். அவரிடத்திலிருந்து வளர்ந்தார். தினமும் முறைப்படி தொழுகை
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 40
 

செய்தார். மசூதியைச் சுத்தம் செய்தலும் தொழுகைக்கு வருபவர்களின் பாவனைக்குத் தண்ணிர் கொண்டு வந்து ஊற்றுவதும் அவரது அன்றாட பணியாக இருந்தது.
பள்ளிக்கூடத்துக்குத் தினமும் இரண்டு மைல் நடந்து சென்று கல்விகற்று வந்தார். இளமையில் வறுமை. அதன் கொடுமை மக்தூமை வாட்டியது. காலையில் ஒரு பைசாவுக்கு ரொட்டி வாங்கிச் சாப்பிட்டுப் புறப்படுவார். நண்பகலில் பட்டினி, இரவில் மட்டும் உணவு கிடைக்கும். கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் விவசாயிகளின் துன்பங்களைப் பற்றி நேரடியாகவே தெரிந்தும் அறிந்தும் வைத்திருந்தார். தனது இருபதாவது வயதில் பள்ளி இறுதி வகுப்பை முடித்துக் கொண்டார். கல்லூரிப் படிப்புக்காக ஹைதராபாத்துக்கு வந்தபோது நீண்ட காலத்துக்குப் பின் தன் தாயாரைச் சந்தித்தார்.
வைசிராய் வில்லிங்டன் (ஆங்கிலேயர்) அடக்குமுறை ஆட்சியில் நாடுகொந்தளித்துக் கொண்டிருந்தது. நாடு முழுவதும் மாணவர் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றன. இத்தகைய சூழலில்தான் மக்தூம் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அக்காலத்தில் "நிகார்” என்ற மாதப் பத்திரிகை மதவாதிகளின் பிற்போக்குத் தனத்தை எதிர்த்துப் போர்முரசு கொட்டியது. முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பகுத்தறிவுப் பிரசாரத்தைப் மேற்கொண்டது. இதனால் ஹைதராபாத் சமஸ்தானத்துக்குள் அந்தப் பத்திரிகை வருவது தடைசெய்யப்பட்டது. 1933க்குப் பின் தன்னுணர்ச்சிக் கவிதைகள் எழுதத் தொடங்கிய மக்தூம் உருது, பாரசீய மொழிகளில் எழுதப்பட்ட தொன்மை இலக்கியங்களையும் தற்கால நூல்களையும் ஆர்வத்துடன் படித்து தனது அறிவுப் புலமையை வளர்த்துக்கொண்டார்.
ஹைதராபாத் சமஸ்தானத்தில் நிலப்பிரபுத்துவ ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அது ஏகாதிபத்தியத்துக்குக் கட்டுப்பட்ட நிலப்பிரபுத்துவ ஆட்சி. அங்கே ஒன்றல்ல ஒராயிரம் கொடுமைகள் தலைவிரித்தாடின. அடக்கு முறையை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் சாத்வீகப் போராட்டம் நடத்தி வந்தது. இத்தகைய போராட்டத்தில் அதிருப்தியடைந்த தீவிரமான இளைஞர்கள் சிலர் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்தனர். இதன் தாக்கம் இலக்கியத்திலும் எதிரொலித்தது. மாபெரும் கவிஞரான இக்பால் இந்தப் போக்குகளின் தாக்கத்துக்குள் தன்னையும் உட்படுத்திக்கொண்டார்.
“உழுபவனுக்கு உணவில்லையென்றால்
வயலில் விளைந்த தானியத்தைத் தீயினுக்கிரையாக்குவோம்"
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் |த.சிவசுப்பிரமணியம் | 41

Page 23
என்று பாடினார். மக்தூம், கவிஞர் இக்பால் எழுதிய கவிதைகள் எல்லாவற்றையும் ஆர்வமுடன் படித்தார். லக்னோவிலிருந்த கம்யூனிஸ்ட் எழுத்தாளர் குழுவினருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக ஹைதராபாத்தில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையை ஏற்படுத்தினார். இதற்கு முன்பே ஹைதராபாத்தில் கவிக்குயில் சரோஜினிதேவியின் வீட்டில் மக்தூம், ஜெய்சூரியா, நரசிம்மராவ் (இந்தியப் பிரதமராக பிற்காலத்தில் இருந்தவர்) ஆகியோர் சந்தித்து இலக்கியம், அரசியல் பற்றி விவாதிப்பதுண்டு.
இக்காலகட்டத்தில்தான் மக்தூம் தமது தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பாடல்களை உத்வேகத்துடன் எழுதினார். ஒரு பாடலில், கொடுங்கோல் மன்னனாக இருந்த பாக்பூரின் ஆவியாக ஏகாதிபத்தியத்தைச் சித்தரிக்கின்றார். "மரணத்தையும் அழிவையும் பரப்புவதற்காக அந்த ஆவி என்னுடைய இல்லத்தில் நுழைந்துவிட்டது” என்று எழுதினார். “தேச சுதந்திரம்” என்ற பாடலில் தேசத்தின் தலைவிதியை மாற்ற இளைஞர்களே, வீறுகொண்டு எழுக என்று முழங்கினார். "அரண்மனை” என்ற பாடலில் நிலப்பிரபுத்துவம், குறுகிய மதவாதம் ஆகியவற்றால் செல்லரித்துப் போன சமுதாயத்தை வர்ணிக்கின்றார்.
"மரணப் பிடியில் அழியும் சமூகம் காணிக்கை கேட்கிறது செத்தவர்களை பார்க்குமிடமெல்லாம் இருள். நாசம் பிளந்த சுவர்களில் பாம்புகள் வாசம் அங்கே பிராமணனும் முல்லாவும் முதலாளியும் பழைமை வாதியும் ஆனந்தமாகக் குடியிருக்கிறார்கள்” இந்தப் பாடலில் ஏகாதிபத்திய - நிலப்பிரபுத்துவ அமைப்பின் கொள்ளை, கொலை, பாவச் செயல்களை, நாசத்தை வன்மையாகக் கண்டனம் செய்கின்றார். இந்தச் சமுதாயத்தின் இடுகாட்டின் மீது “சுதந்திரப் பதாதையை உயர்த்தி” வாழ்க்கையை உறுதி செய்வோம் என்று முழங்குகிறார்.
ஏகாதிபத்திய - நிலப் பிரபுத்துவ சமுதாயத்தில் மனிதன் அற்பமானவனாகக் கருதப்படுகின்ற அவலத்தைக் கண்டிக்கிறார். "மரண கீதம்" என்ற பாடலில் இடி, மின்னல், சூறாவளி, பூகம்பம், எரிமலை ஆகியவற்றைக் கூப்பிடுகின்றார். அவரின் தீர்க்கதரிசனம்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 142

இன்று பல ஏகாதிபத்திய நிலப்பிரபுத்துவ நாடுகளில் நடந்தேறிக்
கொண்டிருக்கின்றன. அவலட்சணம் பிடித்த இன்றைய வாழ்க்கையை
சுட்டுப் பொசுக்கி விடுங்கள்; அழகு நிறைந்த எதிர்காலத்தை, உருவாக்குங்கள் என்று வேண்டுகிறார்.
1939ம் வருடத்தில் இரண்டாவது உலகப் போரைக் கண்டனம் செய்து பாடல்கள் எழுதினார். இராமனும் இலக்குவனும் கிருஷ்ணனும் புத்தனும் முகம்மது நபியும் ஏசுநாதரும் பிறந்த பூமண்டலத்தில் இன்று யுத்தங்கள் தான் பிறக்கின்றன. இதற்குக் காரணம் முதலாளித்துவமே என்று கூறிய மக்தூம்.
அதை ஒழிப்பது உறுதி
“செங்கொடி விண்ணில் ஒங்கட்டும் புரட்சி நீடூழி வாழட்டும்” என்று புரட்சிக்கிதம் ஒலிக்கிறார். இன்றைய முதலாளித்துவ நாடுகள் இன்று பல்லுடைந்து நிற்கும் சூழலில் - மார்க்ஸ் சிந்தனைகள் முன்னிலையில் நிற்கும் நிலையில் மக்தூம் இருந்திருந்தால் முதலாளித்துவத்தின் வறட்டுப் போக்கை தன் புரட்சிக்கவிதைகளால் சாட்டையடி கொடுத்திருப்பார். உண்மையான கொள்கைவாதிகள் என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
“போர்வீரன்” என்ற கவிதையில் .
"புரட்சிப் பதாகை
பட்டொளி வீசிப் பறக்கிறது
இருட்டு மறைகிறது
சுதந்திரச் சூரியன் தோன்றப் போகிறான்” என்று தன்நாடு ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெற்றேயாக வேண்டும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் தன் படைப்பு களைப் படைத்தார்.
மக்தூம் எழுதிய "இருட்டு” என்ற பாடல் மிகச்சிறந்த தொன்று. உலகப் புகழ்பெற்ற ஒவியரான பிக்காஸோ, பாசிஸ்டுகள் ஸ்பெயினில் செய்த அட்டூழியங்களைக் கண்டித்து குவெர்னிகா (Guernica) என்ற பெயரில் ஒரு ஒவியத்தை வரைந்தார். அந்தப் படத்தில் அழிவு சர்வவியாபகமாகவும் மிகப் பயங்கரமானதாகவும் சித்தரிக்கப்பட்" டிருந்தது. ஸ்பெயினைச் சுடுகாடாக்கிய பாசிஸம் ஒருநாள் அழியும். மானுடம் தழைக்கும் என்னும் நம்பிக்கை அந்த ஓவியத்தில்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 43

Page 24
சுடர்விட்டிருந்தது. பிக்காஸோவின் ஒவியத்துக்கும் பக்தூமின் கவிதைக்கும் வேறுபாடுகள் காணமுடியாது.
“போர் வீரர்கள் மறைந்திருக்கும் பள்ளங்கள்
நாகரிகத்தின் இரணங்கள்
மின்சாரம் பாயும் முள்வேலி
வேலியில் சிக்கிய உடல்கள்
பிரேதங்களைச் கொத்தும் கழுகுகள்
நொறுங்கிய மணர்டைகள்
சின்னாபின்னமான உடல்கள்
வெட்டப்பட்ட கைகால்கள்
குவிந்து கிடக்கும் பிரேதப் பிரதேசத்தின்
ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை
முனகியும் அழுதும் கதறியும்
வீசும் குளிர் காற்று”
ஹைதராபாத் சமஸ்தானத்தில் அகில இந்திய காங்கிரஸ் நடத்திய
போராட்டம் தோல்வியில் முடிந்தது. இளைஞர்கள் புதிய பாதையைத் தேட ஆரம்பித்தார்கள். ஆந்திரப் பகுதியிலிருந்து கம்யூனிஸ்டுக்கள் தெலுங்கானாவில் உள்ள இடதுசாரிக் குழுக்களோடு தொடர்பு கொண்டார்கள். சோஷலிசத்திலும் பாசிஸ எதிர்ப்பிலும் நம்பிக்கை கொண்ட இளைஞர்கள் "தோழர்கள் சங்கத்தை” உருவாக்கினார்கள். ஆரம்பத்திலிருந்து அதன் சகல நடவடிக்கைகளிலும் மக்தூம் தீவிரமாகக் கலந்து கொண்டார்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மக்தூம், சம்பளம் கட்டுவதற்காகத் தெருவில் படங்கள் விற்பது, பள்ளி மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது, காதல் கடிதங்கள் எழுதிக் கொடுப்பது போன்ற பலவிதமான வேலைகளையும் செய்து தன் கல்வியைத் தொடர்ந்தார். 1937ல் எம்.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பின் கட்சிப் பணிக்காக அதன் செயலாளராக இருந்து முழுநேரம் உழைத்தார். கட்சிப் பத்திரிகைகளையும், பிரசுரங்களையும் விநியோகிப்பதும், கட்சியின் கொள்கைகளை "தோழர்கள் சங்கத்தின்" மூலமாக மக்களிடையே பரப்புவதும் முக்கியப் பணியாகக் கொண்டார். 1940 - 41 களில் யுத்தகால நெருக்கடியினால் விலைவாசிகள் அதிகரித்தன. அதனால் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களும் வெடித்தன.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 44

ஹைதராபாத்திலும் செகந்திராபாத்திலும் இன்னும் முக்கியமான நகரங்களிலும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இப்போராட்டத்திற்கு மக்தூம் சார்ந்த கட்சி வழிகாட்டியாக இருந்து செயற்பட்டது.
உலக யுத்தத்தின் தன்மை 1941ல் மாறியது. பாசிஸ எதிர்ப்பு (ஜேர்மனிக்கு எதிராக) பேரணி உருவாயிற்று. கம்யூனிஸ்ட் கட்சி மீது விதிக்கப்பட்டிருந்த தடை ரத்துச் செய்யப்பட்டது. ஹைதரபாத்தில் பகிரங்கமாக கட்சிக் கூட்டங்கள் நடைபெற்றன. "யுத்தத்தில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கு உடனடியாக இந்தியாவில் தேசிய சர்க்கார் ஏற்பட வேண்டும்” என்று மக்தூம் பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக அவர்மீது வழக்கும் தொடரப்பட்டு இருநூற்றைம்பது ரூபாய் அபராதம், அல்லது மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மக்தூம் அபராதத்தைக் கட்ட மறுத்து சிறைக்குச் சென்றார். இந்த சமயத்தில் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதை மிகவும் பிரபலமடைந்தது. ஜம்பூல் என்ற கஜாக் நாடோடிக் கவிஞன் எழுதிய "ஸ்டாலின் ஆணை” என்ற கவிதையை அவர் மொழிபெயர்த்தார். அந்தப் பாடலில் காணப்பட்ட தேசபக்தியும் பாசிஸ எதிர்ப்பும் சொல் அலங்காரமும் சிறப்பானவை.
1946ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் தலைமறைவாக இருந்து கொணி டு கட்சிப் பணிகளை மேற்கொள்ளுவதென்று முடிவாயிற்று. மக்தூம் பம்பாய்க்குச் சென்றார். அங்கு இருக்கும்போது "தெலிங்கானா" என்ற கவிதையை எழுதினார்.
“காடுகள் மலைகள் கழனிகளில் ஆணர்கள் பெண்கள் அனைவரும் எழுந்தனர் அவர்கள் கரங்களில் அநீதியை வேரனுக்கும் கொடுவாள் கருக்கரிவாள் பளபளக்கிறது ஏர்க்கால் மேலே ஏறுகிறது நிலப்பிரபுத்துவ ஆட்சியின் அஸ்திவாரம் ஆடுகிறது மாளிகைகள் இடிகின்றன கொடுங்கோலாட்சி கடிதில் மறைவது காணர்பீர்!”
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் |45

Page 25
ஹைதரபாத்தில் ரஜாக்கர்கள் அட்டூழியம் செய்தனர். தெலுங்கானாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் விவசாயிகள் ஆயுதமேந்திப் போராடினார்கள். பத்து லட்சம் ஏக்கர் நிலங்கள் நிலமில்லாத ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டன.
1951 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது "சிறை" என்ற கவிதையை எழுதினார்.
இரும்புக் காப்புகளை ஏந்திய கைகள் இளைஞனின் உறக்கத்தில் தவழும் கனவுகள் அவன் புரளும்போது கிளம்பும் ஒசை ஆழ்ந்த துரக்கத்திலும் ஜீவநாதத்தைக் காட்டும் எனது வாழ்க்கையென்னும் விலையிலா வருடங்கள் கொடுமைச் சிறையின் நான்கு சுவர்களுக்கிடையே தேய்ந்து மாய்ந்தனவே என்ன வேதனை எனது தாய்நாடு என்னும் மாபெரும் சிறையை உடைத்துத் தகர்க்கப் பயன்படா வாழ்க்கை என்ன வேதனை!
இக்கவிதையைப் படிக்கும் பொழுது தாய்நாட்டு மக்களோடு அவர் கொண்டிருந்த உணர்ச்சி நேயத்தை எம்மால் உணரமுடிகின்றது. அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து, மக்கள் ஆயிரக்கணக்கில் ஊர்வலமாக வருவதையும் அவர்களுடைய வீர முழக்கங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மக்தூமின் இதயத்தில் ஏற்படுத்தும் வீராவேசத்தையும் அறிய முடிகிறது.
1956ம் ஆண்டு தொடக்கம் அவர் தமது கவிதைகளை கஸல் (Ghazal) என்ற வடிவத்தில் அமைத்திருந்தார். அவர் தமது கவிதைகளைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "இக்கவிதைகள் முந்திய
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 46

கவிதைகளோடு ஒப்பிடுகின்றபோது வேறுவிதமாக இருப்பது உண்மையே. என்னுடைய வயதையும் புதிய அனுபவங்களையும், நேற்றைய உலகத்திற்கும் இன்றைய உலகத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும் இக்கவிதைகள் பிரதிபலிக்கின்றன. இவை என்னுடைய முதிர்ச்சியையும் சமூகத்தின் வளர்ச்சியையும் எடுத்துக் காட்டுகின்றன. எனினும் மனிதாபிமானமும் அழகுணர்ச்சியும் என்னுடைய கவிதைகளின் பொதுத்தன்மை"
1958ம் ஆண்டு "காடு, நிலவு, நட்சத்திரங்கள்” என்ற நெடுங்கவிதையை மக்தூம் எழுதினார். "சுதந்திர தாகத்தையும் எதிர்காலத்தையும் மனதில் நிறுத்தி கவிதையைப் படைத்துள்ளார்.
“தோழர்களே! கைகோர்த்து முன்னேறுவோம் காதலையும் தூக்கு மேடையையும் நோக்கி முன்னேறுவோம் தோள்களில் சிலுவையைச்
சுமந்து முன்னேறுவோம்”
"ஒரு கவிஞனை சூழ்ந்திருக்கின்ற வெளியுலகத்திற்கும் அவனுடைய அகஉலகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டமே படைப்புக்கலையின் ஆதாரமாகும். சமூகப் பிறவி என்ற முறையில் ஒரு கவிஞன் தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தின் தாக்குதலுக்கு உள்ளாகின்றான். மக்தூமும் ஒரு மனிதன்தான்” இது "புதுமலர்” முன்னுரை. அவருடைய ஆற்றல்மிகு கவிதைகள் தோன்றின என்பது மறக்க முடியாத உண்மை.
மக்தூமிடம் நகைச்சுவை உணர்ச்சி அதிகம் காணப்பட்டது. ஜமாலுதீன் என்ற கற்பனை மனிதரை வைத்து வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் வகையில் வேடிக்கையான கட்டுக்கதைகளைப் படைத்துள்ளார்.
நாடகங்களை எழுதுவதிலும் வல்லவராயிருந்தார். கல்லூரியில் நடிக்கப்பட்ட இவருடைய நாடகங்களில் அவரே முக்கிய பாத்திரங்களை ஏற்றுச் சிறப்பாக நடித்துள்ளார். அத்தகைய நாடகங்களுக்கு தலைமைதாங்கிய இரவீந் திரநாத் தாகூர் மக்தூமின் நடிப்பை பாராட்டியிருக்கின்றார்.
மக்தூம் கவிஞர், எழுத்தாளர், நகைச்சுவையாளர், நாடகப் பிரதிகள் எழுதுபவர், நடிகர், மொழிப்பெயர்ப்பாளர் மாத்திரமன்றி ஆய்வாளராக
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 47

Page 26
இருந்து “தாகூரின் கவிதை” என்ற ஆய்வு நூலையும் எழுதியிருக்கின்றார். அதுமட்டுமன்றி அரசியலிலும் தடம் பதித்த ஒரு தொழிலாளர் சங்கத்தலைவர். பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 1953 ஆம் ஆண்டு அவர் உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமையகத்தில் பணிபுரிவதற்காக வியன்னாவுக்குச் சென்றார். ஒரு வருடத்தின் பின் இந்தியாவுக்குத் திரும்பிய மக்தூம் அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸின் உதவிப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று தொழிற்சங்கப் பணிகளில் வழிகாட்டியாக இருந்து செயற்பட்டார். ஆந்திராவில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 1969ஆம் ஆண்டு தனது அறுபத்தோராவது வயதில் மரணமடைகின்றவரை கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் குழுவின் தலைவராக மேலவையில் பணியாற்றினார்.
மக்தூம் பற்றி முற்போக்கு எழுத்தாளரான அப்பாஸ் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
“மக்தூம்: கொழுந்து விட்டெரியும் நெருப்பு குளிர்ந்த பனித்துளி மக்தூம்: புரட்சியின் பேரிரைச்சல் நடனத்தில் கலீரென ஒலிக்கும் மெல்லிசை மக்தூம்: புரட்சி வீரனின் துப்பாக்கி இசை மேதையின் சித்தார் வாத்தியம் மக்தூம்: வெடிமருந்தின் நெடி மல்லிகையின் நறுமணம் அவர் அறிவுச்சுடர், செயல்வீரர் வழிகாட்டி” தனது கவிவளத்தால் வீறுகொண்ட சமுதாயத்தைக் காண முனைந்த மக்கள் கவிஞர் மக்தூமின் கடைசிக் கவிதை -
இதயச் சுமையை இறக்கி வை இனிய வாழ்க்கையை விலை பேசு புறப்படு அந்தியில் தோன்றும் துன்பநிலா அதற்கு மருந்தில்லை அன்பே. வா. கோப்பையில் துன்பத்தைப் பருகிடுவோம் நிலவைக் கோப்பையாக்கிக் குடித்துக் களிப்போம் பருவகாலங்கள் கணிணிர் மழை சிந்தும்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 48

அதைப் பிறிதொரு பொழுதில் வரச்சொல் காதலில் இணைந்த எம்மைச் சூழ்ந்தவை எத்தனையோ அவையனைத்தும் துயரமே அதற்கு மருந்தில்லை.
தினகரன் 16-02-2006
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 149

Page 27
எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன்
"வெளிவந்த ஏடெல்லாம் உண்படையல் வெளிவந்த செய்திகண்டு பற்றுவைத்தேன்.
La7 முகமறியா உன்முகத்தை படைப்பில்கண்டு இலக்கியத்தில் உள்பித்தன் ஆகிநின்றேன்." ஆம். இலங்கைக் கவிஞர் ஒருவரின் கவிவரிகள் இவை. தன்னை விளம்பரப்படுத்தாத ஒருவராக இருந்து கொண்டு இலக்கிய வானிலே இலக்கியப் பிதாமகனாக வாழ்ந்து காட்டியவர். எளிமையான வாழ்க்கை வட்டத்துக்குள் சுழன்று கொணர்டு ஏற்றமிகு இலக்கியங்களைத் தந்தவர்.
கோயில் சுவாமி சன்னதியில் ஒரு விளக்கைப் பொருத்திவிட்டு, அந்தக் குழல் விளக்கிலேயே தன்னுடைய பெயரை எழுதித் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் வாழும் விளம்பரயுகம் இது. இந்த விளம்பரயுகத்தில் ஓரிரு
படைப்புகளை எழுதியவுடனேயே தங்களைப்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 50
 

பெரிய எழுத்தாளனாக எண்ணிக்கொண்டு சொந்தச் செலவில் விழா எடுத்து - தங்களைத் தாங்களே பாராட்டிக் கொனர்டு - பட்டமும் அளித்துக் கொள்ளும் எழுத்தாளர்களை நாம் சந்திக்கின்றோம். ஆனால் கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ்ப்பணி - எழுத்துப் பணி இரண்டையும் தன் உயிர் மூச்செனக்கருதி, ஆயிரக்கணக்கான கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனங்கள் எழுதியிருந்தும் கூட குடத்திலிட்ட விளக்கென தன்னடக்கத்துடன் வாழ்க்கை நடத்தியவர். 09-11-2006 அன்று தனது 86 வது வயதில் சென்னையில் காலமானார்.
தமிழ்நாடு திருநெல்வேலி ராஜவல்லிபுரம் என்னும் கிராமத்தில் 1920 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி ரா.சு.கிருஷ்ணசாமி பிறந்தார். எழுத்துலக வாழ்க்கையில் வல்லிக்கண்ணனாக வெளிவருகின்றார். சென்ற தலைமுறை எழுத்தாளர்களுக்கும், இந்தத் தலைமுறை எழுத்தாளர்களுக்கும் ஒரு பாலமாக விளங்கிய வல்லிக்கண்ணனைப் பெரும்பாலான தமிழ்வாசகன் அறிந்திராததில் ஆச்சரியமில்லை. பெயர், புகழ், பட்டங்களை விரும்பாத ஒரு விசித்திரமான படைப்பாளியாக எழுத்தாளர் வல்லிக்கண்ணன் எம்முன் நிற்கிறார். மிக இளவயதில் அதுவும் 16 வயதில் "இதய ஒலி" என்னும் கையெழுத்துப் பத்திரிகை" யுடன், நெல்லை வாலிப சங்கத்தின் "இளந்தமிழன்" கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றியிருக்கின்றார். இவரது கண்ணிப்படைப்பான முதலாவது சிறுகதை"சந்திரகாந்தக்கல்" பிரசண்ட விகடன் பத்திரிகையில் வெளிவந்தது. அப்பொழுது இவருக்கு வயது 19. அரசாங்கத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த வல்லிக்கண்ணன் தனது இலக்கியப் பணிக்காக தான் வகித்த அரச வேலையை உதறித்தள்ளிவிட்டு முழுநேர இலக்கியப் படைப்பாளியாக வர எண்ணி அவ்விலக்கியப் பணியை வரிந்து ஏற்றுக்கொண்டார்.
"கோயில்களை மூடுங்கள்", "அடியுங்கள் சாவுமனி", "எப்படி உருப்படும்?", "கொடு கல்தா?" என்ற கனல் பறக்கும் படைப்புக்களை இளம் வயதில் கோரநாதன், நையாண்டி பாரதி ஆகிய புனைபெயரில் எழுதினார். "கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?"கல்யாணம் இன்பம் கொடுப்பதா? இன்பத்தைக் கெடுப்பதா?", "செவ்வானம்", "விடிவெள்ளி" போன்ற நூல்களும் இவரது படைப்புகளே!30 வயதுக்குள் 25 நூல்கள் வரை வெளிவந்துள்ளன.
எழுத்தாளர்களுக்கு உற்சாகமூட்டி அவர்களை எழுதத்துTணிடியவர். எழுத்தாளர்கள் யாராவது தமது நூல்களுக்கு அணிந்துரை எழுதித்தரும்படி கேட்டால் - அவற்றை வாங்கி வாசித்து
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் கசிவசுப்பிரமணியம் 151

Page 28
குறிப்பிட்ட நாளில் எழுதிக் கொடுத்துவிடுவார். தனக்கு வரும் கடிதங்கள் யாவற்றுக்கும் தன் கைப்படவே பதில் கடிதம் எழுதி அனுப்பிவிடுவார். அந்தளவு தூரத்திற்கு மற்றவர்களை மதிக்கும் பண்பைப் கொண்டிருந்தார் எழுத்தாளர் வல்லிக்கண்ணன்.
கவிதை, சிறுகதை, நாவல் எனத்தொடர்ந்த இவரது எழுத்துலக வாழ்க்கை திறனாய்வு, சஞ்சிகை, புதுக்கவிதை, வரலாறு என்று பல்வகைப் பரிமாணங்களைக் கொண்டிருந்தன. தனது 60 வயது வாழ்க்கைக்குள் மேலும் 20 நூல்களைப் பதிப்பித்துள்ளார். வாழ்க்கை வரலாற்று நூல்கள் இரணிடு இவரால் எழுதப்பட்டன. தனது சுயசரிதைகளுடன் "20 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வளர்ச்சி" என்ற நூலை கடைசிக்காலத்தில் எழுதியதாகத் தெரிகின்றது. "புதுக்கவிதை" யின் தோற்றமும் வளர்ச்சியும்” ஆய்வு நூலுக்குச் சாகித்திய அக்கடமி விருது இவரை நாடிவந்தது. மேலும் "எழுத்தாளர்கள் - பத்திரிகைகள் அன்றும் இன்றும்" என்ற நூல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் விருதினையும் பெற்றது.
தனது 86 வருடகாலத்துக்குள் மொத்தமாக 75 நூல்கள் வரை எழுதியுள்ளார். நவீன தமிழ் எழுத்தாளர்களுக்குள் வல்லிக்கண்ணன் நூல்கள் பெருந்தொகையாக இருக்கின்ற அதேவேளை இலங்கையரான முற்போக்கு எழுத்தாளர் செ.கணேசலிங்கன் 70 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார் என்பதும் தெரிந்த விடயமே.
வல்லிக்கண்ணனுடைய வாழ்க்கை வரலாற்றை தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.நா.பாலக்கிருஷ்ணனும், மு.பரமசிவமும் எழுதியுள்ளார். களென அறியக்கிடக்கின்றது. சிறுசஞ்சிகைகளைப் பெரிதும் மதித்து அவர்களுக்கு உற்சாகமூட்டுவதில் முன் நின்றவர் வல்லிக்கண்ணன்
"திருமகள்" "சினமா உலகம்", "நவசக்தி”, “கிராம ஊழியன்” "ஹனுமான்” ஆகிய சிறுபத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
புதுக்கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டு "புத்தபக்தி” என்னும் முதலாவது புதுக்கவிதைத் தொகுதியை 1944 இல் வெளியிட்டார். சி.சு செல்லப்பா நடத்திய "எழுத்து” என்ற சஞ்சிகையில் பிரசுரமான இவரது "அமரவேதனை" புதுக்கவிதைத்தொகுதியாக வெளிவந்தது.
yy K y» et
“நம்நேரு", "விஜயலட்சுமி பண்டிற்”, “புதுமைப்பித்தன்” ஆகியோர் பற்றிய வரலாற்று நூல்களும் இவரால் எழுதப்பட்டன. நாடகத்துறையில் ஈடுபாடு காட்டிய வல்லிக்கண்ணன் "விடியுமா?" என்னும் நாடகத்
தையும் எழுதியுள்ளார். "தீபம் யுகம்", "வாசகர்கள் - விமர்சகர்கள்”
"தமிழில் சிறுபத்திரிகைகள்” ஆகிய ஆராய்ச்சி நூல்களை எழுதிய இவர்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 52

மொழிபெயர்ப்பு நூல்களையும் வெளிக்கொணர்ந்துள்ளார். “கார்க்கி கட்டுரைகள்”, “கார்க்கி கதைகள்", "ராகுலசங்கிருத்தியாயண்,” “தாத்தாவும் பேரனும்”, “ஆர்மீனியச் சிறுகதைகள்” என்பன குறிப்பிடத்தக்கன.
1948இல் "பாரதி விடுதலைக் கழக”த்தில் இணைந்து பாரதியின் பொதுவுடமைப் பாடல்களுக்காகப் போராடினார். இவருடன் வ.ரா.முதலியவர்களும் இணைந்து போராடியதாக அறியக்கிடக்கின்றது. இலக்கிய நடவடிக்கைகள் பலவற்றிலும் தனது கடும் உழைப்பைச் செலுத்தக்கூடியவராக இருந்திருக்கின்றார். ஆனாலும் இலக்கிய சர்ச்சை என்று வந்துவிட்டால் மெளனமாக இருந்துவிடுவார். எவர் மனம் நோகவும் நடந்து கொள்ளமாட்டார். புதுமைப்பித்தன் மேல் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார்.
"கதை எழுதிய காலத்தில் இருந்த போக்கு மிகவும் துணிச்சலானது. புரட்சிகரமானதும் கூட. இவருடைய கதைகள் மிகுந்த எதிர்பார்ப்பையும் கண்டனத்தையும் வெறுப்பையும் வக்கிரவிசித்திரங்களையும், கதைகளில் சித்திரிப்பது குற்றமோ பாவமோ ஆகாது என்று வாதாட வேண்டியதாயிற்று. அந்த நாட்களில் இதர எழுத்தாளர்கள் தொடத்தயங்கிய விஷயங்கள் பலவற்றையும் புதுமைப்பித்தனி தனது கதைகளுக்குப் பொருளாக்கினார். தனது நோக்கில் அனுதாபத்தோடு அல்லது கேலியும் நையாண்டியுமாக அல்லது சொல்ல எண்ணியதைச் சொல்ல அல்லது நம்பிக்கை வறட்சியோடு அவற்றைத் சித்தரித்தார்” என்று எழுத்தாளர் வல்லிக்கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
"பாரதிதாசனின் உவமை நயம்”, “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்," "சரஸ்வதி காலம்”, “பாரதிக்குப் பின் தமிழ் உரைநடை" ஆகிய முக்கிய நூல்கள்வல்லிக்கண்ணன் படைப்புகளாகும். சரஸ்வதி, தாமரை, தீபம் போன்ற தரமான இலக்கியச் சஞ்சிகைகளில் தனது இலக்கிய ஆளுமையை நிலைநிறுத்திய எழுத்தாளர் வல்லிக்கண்ணன் உள்நாட்டு வெளிநாட்டுப்பத்திரிகைகளிலும் தனது எழுத்துக்களைப் பதியவைத்துள்ளார். சிறுகதைகளைப் பொறுத்தளவில் அலைகள், பெரியமனுஷி, ஆண்சிங்கம், வஞ்சகம், பயந்தவள், சரியானதுணை என்பவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம். நாவல்துறையில் பிரகாசித்த இவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு “வீடும் வெளியும்” என்னும் நாவலை எழுதினார். மேலும், "அலைமோதும் கடல் ஒரத்தில்", "இருட்டு ராஜா", "நினைவுச்சரம்” ஆகிய சிறந்த நாவல்களையும் வெளிக்கொணர்ந்தார்.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 53

Page 29
"இலக்கியம் பொழுது போக்குக் கருவி அல்ல. நயம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கக் கூடியதும் அல்ல. மக்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டியது இலக்கியம்" இதற்கமைய வல்லிக் கணினனும் தனது இலக்கியப்படைப்புகளை வெளிக்கொணர்ந்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, நாடகம் என்று எல்லாத் துறைகளிலும் ந.பிச்சமூர்த்தியைத் தொடர்ந்து வல்லிக்கண்ணன் பிரகாசிக்கத் தொடங்கினார். பலகட்டுரைகளையும், புதுக்கவிதையும் எழுதினார். சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டித்து எழுத்தில் எழுதுவது போலவே வல்லிக்கண்ணன் பேசுவார். இலக்கிய நடை, வாக்கியமுடிப்பு, ஒருமை பண்மையின் தெளிவான எழுத்து முறையே அவர் பேச்சிலும் இருக்கும்.
அடக்கமான அத்துடன் ஒல்லியான தோற்றம், ஒற்றைச் சுற்று வேட்டி உடுத்து அரைக்கைச் சட்டைப்போட்டு எளிமையாகக் காணப்படுவார். ஏழைத் தமிழ் எழுத்தாளராகிய வல்லிக்கண்ணன் மேல் பிற்காலத்தில் எல்லோரும் ஒருவித மரியாதை கொண்டிருந்தனர். திருமணமே செய்து கொள்ளாமல் பிரமச்சாரியாகவே தியாக அர்ப்பணிப்புடன் வாழ்ந்தார். அதேவேளை இறந்த தனது சகோதரனின் குடும்பத்தைக் கடைசிவரை காப்பாற்றவேண்டிய பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்துள்ளார்.
1996ஆம் ஆண்டு முற்போக்கு எழுத்தாளரான வல்லிக்கண்ணன் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலக்கியப் பெருவிழாவுக்கு வருகைதந்திருந்தார். இவருடன் "தாமரை” ஆசிரியர் மகேந்திரனும், பொன்னீலனும் சமூகம் தந்திருந்தனர். இலங்கை எழுத்தாளர்கள் மீது குறிப்பாக முற்போக்கு எழுத்தாளர்கள் மீது அளவுகடந்த தோழமை உணர்வுடன் கடைசிகாலம் வரை இருந்துள்ளார் வல்லிக்கண்ணன்.
தீவிர இலக்கியத்திற்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தீபம், சரஸ்வதி போன்ற இதழ்களின் வரலாற்றை எழுதியவராகிய வல்லிக்கண்ணன் "எழுத்து" சஞ்சிகையில் தமது ஆளுமையைக் காட்டி நின்றார். ஆற்றல் மிகுந்த அருங்கவிஞராகவும், முன்னுரை எழுதும் ஒரு முன்னுரைதிலகமாகவும் இலக்கிய உலகில் தடம் பதித்து நின்றார். அவர் நாமம் என்றும் வாழும்.
4.32
முற்போக்கு இலக்கியச் செம்மள்கள் | த.சிவசுப்பிரமணியம் |ே

மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
சமுதாய மாற்றங்களுக்கும் உன்னத சமுதாய அமைப்பு வெற்றி காண்பதற்கும் கலை, இலக்கியம் இன்றியமையாத உயர்ந்த சாதனங்கள், மக்களின் கருத்தோட்டங்களை நல்ல முறையில் விரவி வேகமாய் உருவாக்க நாடகம் மிகச் சிறந்த கருவி என்றால் அதைவிட உயர்ந்தது கருத்தோட்டம் மிக்க திரைப்படக் கலையாகும். இவ்வாறு மலர்ந்த திரைப்படக்கலை உலகில், பேரும் புகழும் பெற்ற கவிஞர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற சமூக மறுமலர்ச்சியை உருவாக்கிய மக்கள் கவிஞரை, புதிய சமதர்ம சமுதாய இலட்சியக் கவிஞரை நாம் கண்டதில்லை.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் அருணாசலம்பிள்ளை - விசாலாட்சி அம்மையார் தம்பதிகளுக்கு இளைய மகனாகப்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் நடு

Page 30
பிறந்தார். சதாரண உழவர் குடும்பத்தில் பிறந்த இவர் பட்டப்படிப்பு பயின்றவரல்ல; சாதாரண பள்ளிப் படிப்புத்தான் பெற்றிருந்தார். மக்கள் வாழ்க்கை என்னும் அனுபவப் பள்ளியில் கற்று மக்கள் கவிஞராகத் திகழ்ந்தார். இதனால்தான் இவரை மார்க்சிம் கார்க்கியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார் ப.ஜீவானந்தம் (ஜீவா).
"புத்தக அறிவு புட்டிப்பால் போன்றது. அனுபவ அறிவு தாய்பாலுக்கு ஒப்பானது. பட்டுக்கோட்டை விவசாயத் தொழிலாளி, ஏழை விவசாயி, பாட்டாளி ஆகியவர்களில் ஒருவராக வாழ்ந்து அடிபட்டு அனுபவ அறிவு பெற்றவர். அடிப்படைப் பெரு மக்களின் அனுபவப் பெருஞ் செல்வனான மார்க்சிம் கார்க்கியைச் சோவியத் யூனியன் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே "மக்கள் கலைஞன்” என்று உச்சியில் தூக்கி வைத்து மெச்சுகிறது. அதுபோல பட்டுக்கோட்டையை "மக்கள் கவிஞர்” என்று தமிழ் கூரும் நல்லுலகம் வாயாரப் புகழ்ந்து பாராட்டுகிறது" என்பது ஜீவாவின் கருத்து.
தமிழ் மக்களின் அன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய கவியாய் விளங்கிய இவர் 13-04-1930 ஆம் ஆண்டில் பிறந்தார். கவிஞருக்கு இளம் பிராயத்திலேயே கவிபுனையும் ஆர்வம் அதிகமாக இருந்தது. தனது பத்தொன்பதாவது வயதிலேயே கவிதை இயற்றும் திறனும் படைத்திருந்தார். அதேசமயம் நாடகக் கலையில் மிகுந்த ஆர்வமும், விவசாய இயக்கத்தின்பால் அசைக்க முடியாத பற்றும் அவர் நெஞ்சில் குடிகொண்டிருந்தன.
உழவர்கள் படும் துயரத்தைக் கண்டு உள்ளம் உருகினார். நிரந்தர அனுதாபத்தை அவர்களின் மீது ஆழப் பதித்திருந்தார். இதன் பயனாய் தஞ்சை மண் தந்த வீரத்தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகிய இன்னுயிர் தோழர்களுடன் தோளுடன் தோள் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டிவளர்க்க முனைப்புக் காட்டி தீவிரமாய்ப் பங்கெடுத்தார். இதன்மூலம் தன்னை ஒரு போராட்ட வீரனாகவும் இனங்காட்டிக் கொண்டார். தோழர் பி.சீனிவராவ் தலைமையின் கீழ் சிறப்புடன் இயங்கிவந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 1955 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடாத்திய மாநில விவசாயிகள் மாநாட்டில் "கண்ணின் மணிகள்” என்ற நாடகத்திற்கு உணர்ச்சிமிக்க பாடல்களை இயற்றிக் கொடுத்தார். அத்துடன் அதேநாடகத்தில் நடிகர் பாலசந்திரனுடன் சேர்ந்து நடித்துப் பெரும் பாராட்டுதலையும் பெற்றார்.
அந்நிய ஆங்கில ஆட்சியை வீழ்த்தவும், நாட்டின் அடிமை விலங்கு அறுபடவும் போராடியவர் மகாகவி பாரதி. விடுதலை வேட்கையை
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் (56

ஆழமாய்த்தூண்டி சிறந்த மக்கள் இலக்கியம் படைத்தார் பாரதி. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே சுதந்திர கீதம் பாடியவர் பாரதி. விடுதலை பெற்றபின் சமதர்ம கீதம் பாடியவர்கள் பாரதிதாசனும், பட்டுக்கோட்டையுமாவார். பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பலவும் 1952க்கும் 1960க்கும் இடைப்பட்ட காலத்தில் மலர்ந்தவையாகும். மார்க்சிய சிந்தனையில் பொதுவுடமை இயக்கத்துடன் சேர்ந்து வாழ்ந்தமையால் அவருடைய கவிதைகளில் பொதுவுடமைக் கருத்துக்கள் மேலோங்கி இருந்தன.
தாய்நாடு பலதியாகங்களைக் கண்டு பெற்ற சுதந்திரத்தைப் பறிக்க நாட்டின் அகமும் புறமும் சில சமூகத் துரோகிகள் திட்டமிட்டு முயன்றனர். மக்களின் வாழ்வைச் சிதைத்து, யுத்த பீதியை உண்டாக்கி, உலக சமாதானத்தைச் சீர்குலைக்கவும் அவர்கள் தயங்கவில்லை. அதே வேளை இத்தகைய நாச சக்திகளை அம்பலப்படுத்தி நல்வாழ்வுக்காகவும் உலக சமாதானத்தை நிலை நிறுத்தவும் மக்கள் போராடி வந்தனர். இச் சூழலில்தான் பட்டுக்கோட்டையின் பாடல்கள் தமிழ்த் திரைப்பட உலகில் இசையுடன் முழங்கியது. இதை நினைக்கும் போது மக்கள் கவிஞனின் தொண்டு எத்துணை சிறப்புடையது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மக்கள் கவிஞர் 1959 ஆம் ஆண்டு தனது 29 வயதில் மரணத்தைத் தழுவிக் கொண்டார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம்மை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் பட்டுக்கோட்டையின் கீதங்கள் தமிழ் மக்களின் வாழ்வில் பிணைந்து, இதய ஒலியாய்த் திகழ்ந்து, திரையிலும் மக்கள் நாவிலும் தவழ்ந்து தொடர்ந்து ஒலித்து வருகின்றன.
"திருடாதே" என்ற படத்தில்.
"திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”
என்ற வரிகள் யதார்த்தமான நிலையை எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
இவருடைய பாடல்கள் அரசியல், சமூகம், காதல், பல்சுவை எனப் பல்வேறு வகைப்பட்டனவாக அமைந்துள்ளன. மக்கள் கவிஞரின் இலட்சியப் பிடிப்பும் கவித்திறனும் கவிதைகள் மூலம் சிறப்பித்துக் காட்டப்படுகின்றன.
தஞ்சை மாவட்டம் கல்யாணசுந்தரம் என்ற பெயர் பூண்ட இரு பெரியார்களைத் தந்துள்ளது என்பர். ஒருவர் வி.கல்யாணசுந்தரனார் (திரு.வி.க). மற்றொருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவர் சில ஆண்டுகளே தமிழுலகை ஆண்டு சூறாவளிபோல் நம்மையெல்லாம்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 51

Page 31
ஆட்டிப்படைத்தார். அத்துடன் கார்ல் மார்க்சின் கருத்தோடு மக்களின் வாழ்க்கையை இயக்கினார். மேலும் பாரதி பாரதிதாசன் வழிவந்து கார்ல் மாக்ஸ் தத்துவத்தில் நிலைகொண்டு, மக்களின் இயக்கத்தைத் தமது பாட்டுத் திறத்தாலே பாலித்தார். தமிழ் மொழியிலே உழைப்பாளிகளின் குரலை, சினிமாக் கலைத் துறையில் இயக்கத்தில் வீறடையச் செய்தார். இவரிடத்தே தன்னடக்கம், எளிமை, புலமை, மக்கள் பற்று, இயக்கத்தோடு ஒன்றிய நிலை, பொருளை விரிய ஆயும் நோக்கு, தமிழ்மொழியின் இசைநயத்தை நுகர்ந்து வெளியிடும் திறன் என்பன காணப்பட்டன.
பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மக்கள் கவியாக விளங்கி ஏழை எளிய மக்களுக்காகவே பாடிய கவிஞர். மக்கள் படைத்த எல்லாக் கலைகளும் மக்களின் மேம்பாட்டுக்கே உரியவை. உண்டு கொழுத்து வந்த ஒரு சில சுரணர் டல் காரர்களின் கைளில் அரிய உயரிய பாட்டுக்கலை சிக்கித் தவிர்த்தபோது வீராவேசத்தோடு பாரதியும் பாரதிதாசனும் மீட்டுக் கொணர்ந்து முன்னெடுத்துச் சென்ற பட்டுக்கோட்டை அவ்வப்போது இயற்றிவந்த கருத்துச் செறிவும், கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை “ஜனசக்தி" பத்திரிகை மகிழ்ச்சியோடு வெளியிட்டு, கவிஞருக்கு உற்சாகமூட்டி வந்தது. "ஜனசக்தி” அளித்த இத்தகு ஆதரவே கவிஞரைத் தமிழ்த் திரைப்பட உலகம் வரவேற்க வைத்ததெனலாம். 1951 ஆம் ஆண்டில் "படித்த பெண்” எனும் திரைப்படத்திற்கு முதல்முதலாகப் பாடலை இயற்றித் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைத்தார். திரைப்பட உலகில் இவரது பாடல்களுக்குத் தனிப்புகழ் ஏற்பட்டு, குறுகிய காலத்திலேயே நாடெங்கிலும் அவர் பெயர் பரவத்தொடங்கியது.
தோழர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் பலவித இடுக் கணிகளுக்கிடையேயும், சுயமுயற்சியாலும், இலட்சியத் தெளிவாலும் திரைப்பட உலகின் வாயிலாய் உன்னத நிலையினை எட்டிப்பிடித்து முன்னுதாரணமாய் விளங்கினார். இவ்வாறு உயர்ந்த அவர், எந்நாளிலும் விவசாய இயக்கத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியையும் மறக்கவில்லை. தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது பாடுபட்டார்.
தோழர் ஜீவாவின் பாடல்கள் முற்போக்கு ஏடுகளிலும், நாடக அரங்குகளிலும் ஏறி மக்களை விழிப்புறச் செய்தன. திரையுலகப் பாடல்களோ கறைபட்டிருந்தன. அந்நேரத்தில் திரையுலகின் குறை
மற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 58

நீங்கவும், மக்கள் நெஞ்சம் நிறைவுறவும், வியத்தகு செந்தமிழில் வெல்லத் தென்பாங்கின் வில்லோசை மிக்க ஒரு நல்லோசை எழுந்தது. அந்தச் சொல்லோசையால், வீழ்ச்சியுற்ற நெஞ்சங்கள் எழுச்சி பெற்றன. தாழ்வுற்ற தலைகள் நிமிர்ந்தன. தமிழகத்தின் ஏழை உழைப்பாளிகளும், அறிவால் உழைக்கும் இடைநிலை மக்களும் தங்களுக்காகத் திரையுலகிலே குரல் கொடுத்துத் தங்கள் வாழ்வை மேம்படுத்த முன்னின்ற ஒருவரைக் கண்டனர். அச்சிறப்புக்கு உரியவர் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
"தனியுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா” என்றும்
“காயும் ஒரு நாள் கனியாகும் நம் கனவும் ஒரு நாள் நனவாகும் காயும் கனியும் விலையாகும்” என்று நம்பிக்கையை
குறுகிய நோக்கின்றிப் பரந்த உலகளாவிய நோக்கில் அவர் எண்ணம் வியாபித்திருந்தது.
“உழைப்பை மதித்துப் பலனைக் கொடுத்து உலகில் போரைத் தடுத்திடுவோம்! அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து அருள் விளக்கேற்றிடுவோம்" என்ற அன்புணர்வோடும், உண்மையுணர்ச்சியோடும் திரையுலகின் வழியாக உரத்த குரலை எழுப்பினார்.
"வாளும் திடமுடைய தோளும் துணையிருக்க
யார்க்கும் உலகில் அஞ்சிடேன்” என்று உலகமக்கட்காகவே உணர்ச்சிப் பிழம்பானார். மறைந்து கொண்டிருந்த தமிழ்த் தென்பாங்கு, சிந்து, இலாவணி போன்ற நாட்டுப் பாடல்களின் கூட்டிசைக்குப் புத்துயிரூட்டத் திரையுலகில் தனக்குக் கிடைத்த பத்தாண்டெல்லையில் மற்றவர்கள் நூற்றாண்டெல்லையில் செய்ய முடியாத சாதனையை இளம் வயதிலேயே செய்து காட்டினார்.
கருத்துப் புதுமையும் - இசைப் பழமையும், காலத்தின் குரலும் இணைந்து பிணைந்த கவிஞரின் திரையிசைப் பாடல்கள் ஒலித்தட்டுகளிலும் வானொலியிலும் இசைத்து, மக்களை இசைவித்தது. பட்டுக்கோட்டையாரின் கவிதைகள் ஏட்டில் சிறப்புறுபும் இலக்கியமாகிக் காட்டும் எண்ணத்தில் நியூ சென்சுரி புக் ஹவுஸ் 1965 மேயில் முதற் பதிப்பை வெளிக் கொணர்ந்தது. இத்தொகுப்பை
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் 159

Page 32
திரு.பி.இ.பாலகிருஷ்ணன் தொகுத்திருந்தார். இந்நூலின் பன்னிரண்டாம் பதிப்பு 1989இல் வெளிவந்தது. இவற்றைவிட வேறும் பலரும் பட்டுக் கோட்டையாரின் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.
இரண்டு துறைசார் அறிஞர்கள் பட்டுக் கோட்டையாரின் பாடல்களை ரசித்து தமது ஆய்வுகளை வழங்கியுள்ளார்கள். ஒருவர் தோழர் ப. ஜீவானந்தம் (ஜீவா) மற்றவர் குன்றக்குடி அடிகளார்.
பல்கலைச் செல்வர் தோழர் ஜீவா மக்கள் கவிஞரைப் பற்றி கூறிய கருத்துக்களை நோக்குவோம். “கவிஞர் தமது பாட்டுத் திறத்தாலே இரண்டொரு ஆண்டுகளுக்குள் தமிழ்ப் பெருமக்களை ஆட்டிப் படைத்துவிட்டார். மக்கள் கோணத்திலிருந்து பார்த்தால் "இன்ப உருவெடுப்பது கவிதை” என்ற கவிமணியின் வாக்குக்குப் பட்டுக் கோட்டையின் பாடல்கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
பாட்டின் இன்பத்தைப் பற்றி பட்டுக்கோட்டை.
“எத்தனையோ இன்பம் இந்த நாட்டிலே உண்டு. அத்தனைக்கும் பெரிய இன்பம் பாட்டிலே உண்டு”
இந்த இரண்டு வரிகளிலும் உணர்ச்சி பொங்கி வழிய அவர் வெளியிட்டுள்ள உண்மை, பாட்டால் அவர் அனுபவித்த இன்பத்தையும் பாட்டால் மற்றவர் அனுபவிக்க அவர் விரும்பிய இன்பத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது. பொதுமக்கள் வாழ்வில் அவருக்குக் கிடைத்த தெள்ளிய அனுபவமும், பாட்டின்பத்தில் அவருக்கிருந்த அழுத்தமான ஈடுபாடும் அவர் பாடல்களில் எல்லாம் உள்ளீடாக விளங்குவதைக் காணமுடியும்.
"பட்டுக்கோட்டையின் பாடல்களில் நான் மிகச் சிறந்த இரண்டு கூறுகளைக் காண்கிறேன். ஒன்றுநாடோடிப் பரம்பரை (Folk Tradition). அதாவது வழிவழி மரபு. மற்றொன்று நவீன முறையில் வெளியிடுதல் (Modern Expression). வழிவழி மரபையம் நவீன உணர்வையும் இணைத்து பாட்டுத்திறன் காட்டுவது இன்று மிக மிக முக்கியம்; மிக மிகத் தேவை. நிலப்பிரபுத்துவச் சமுதாயத்திலிருந்து விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் மலிந்த தற்கால நாகரிகத்திற்கு முன்னேறிச் செல்லும் மக்களுக்கு இந்த வழி அதிமுக்கியமானது. நமது நாடும் - பாரதமும் தமிழகமும் - பிற்போக்கைத் தேய்த்து முன்னேற்றத்தில் வளரத் துடிக்கும் நாடுதான். இந்த வளர்ச்சி நமது இலக்கியத்திலும் முதலிடம் பெற வேண்டும் எனச் சொல்லத் தேவையில்லை.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 60

சராசரி மனிதனின் சாதாரண விருப்பு வெறுப்புக்களையும் மன அசைவுகள் உணர்ச்சிப் பெருக்குகளையும் எளிமையாக நேர்ப்பாங்காக உயிர்த் துடிப்பாகச் சொல்லும் மரபே நாடோடி மரபு. இதில் சிக்கலான கருத்துக்களுக்கும், உருவங்களுக்கும் இடமில்லை. எளிய விவசாய நாகரிகத்தின் அடிப்படையான உணர்வுகளை வெளியிட்டு வந்திருப்பதையே இந்த மரபில் பார்க்கிறோம்.
சிக்கல் நிறைந்த நிகழ்கால வாழ்க்கைத் தோற்றத்தை மிகச் சாதாரண கண்ணோட்டத்தில் வைத்துக் கூறுவதும், கேட்பவரின் நெஞ்சை உடனடியாகக் கவரும் விதத்தில் நேரான வழி வழியான ஆற்றலோடு வெளியிடுவதும் நாடோடி மரபின் இரட்டைக் கூறுகள். நம் நாட்டில் குருதேவர் தாகூரும், கவியரசன் பாரதியும், உயர்ந்த தத்துவக் கருத்துக்களை இலட்சிய நாட்டங்களை நாடோடி மரபு மணம் வீசும் விதத்தில் பொழிந்திருக்கிறார்கள். லோக்கா, பப்புலோ நெருடா, ஆல்பர்ட்டா, ஹிக்மத் போன்ற மேல் நாட்டுக் கவிஞர் பெருமக்கள் நவீன முறையில் நாடோடி மரபை வளப்படுத்தி மக்கள் கவிஞர்களாகப் பொலிகிறார்கள். பட்டுக்கோட்டை காலக்குரலின் இந்த நாடோடி மரபுக்குத் தனி முத்திரை வைத்து ஒளிவிடுகிறார்,” என்கிறார் ப.ஜீவானந்தம் (ஜிவா).
நாடகம், அதைவிடத் திரைப்படம் இன்று பென்னம் பெரும் நகரத்திலிருந்து, சின்னஞ்சிறு பட்டி தொட்டிவரையுள்ள மக்களில் உள்பகுதியினரையும் இழுத்துக் குவிக்கும் பிரச்சாரப் பேராற்றல் வாய்ந்த கலைக்கருவி. பட்டுக்கோட்டையின் பாடல்கள் இந்தத் திரைப்பட உலகில் சுவையிலும் பாணியிலும் தன்னிகரில்லாதவையாகத் திகழ்கின்றன.
பாரதியின் மேல் கொண்டிருந்த அளவற்ற மதிப்புக் காரணமாக அவரைப் பற்றியும் பட்டுக்கோட்டை பாடல்கள் தந்துள்ளார். அஞ்சா நெஞ்சனாகவும், அறிவின் பிழம்பாகவும், எண்டிசையும் ஒலியும், எதிரொலியும் எழுப்பும் வெற்றி முரசாகவும் பாரதியைப் பட்டுக்கோட்டை காண்கிறார்.
"வீரமும் நெஞ்சந்தனில் ஈரமும் வேண்டுமென்றான் வேற்றோரைக் கண்டஞ்சுவோர் வீணரென்றே புகன்றான் சோர்வகற்றி யாவரும்
ஒர்முகமா யெழுந்தால்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 61

Page 33
சூழும் அடிமை இருள் சொல்லாமல் ஒடும் என்றான்”
"பாதகம் செய்பவரைப் பாட்டாலே உழிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான் பேதங்கள் வளர்ப்பவரைப் பித்தரென்றே இகழ்ந்தான் பெண்மையை, சக்தியை உண்மையைப் புகழ்ந்தான்"
அவர் பாரதிக்குப் பாமாலை சூட்டுவதன் மூலம், அவர் தமக்கு உகந்த வழி என்பதையும் நமக்குப் புலப்படுத்துகிறார்.
உழவர் பெருமக்களின் இரங்கத்தக்க நிலைமைக்கும் குறை தீர்க்கும் கோரிக்கைக்கும் கோரிக்கை வெற்றி காணி போருக்கும் பட்டுக்கோட்டை தீப்பொறி பறக்கக் குரல் கொடுக்கிறார்.
“தேனாறு பாயுது செங்கதிர் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது மானே இந்த நாட்டில் வகையான மாறுதல் வந்தாலன்றி ஏது நீதிகள்? உழவனும் ஒயாத உழைப்பும் போல் நாமே ஒன்றுபட்டு வாழ்க்கையில் என்றுமிருப்போம்"
குன்றக்குடி அடிகளார் பட்டுக்கோட்டையின் கவிதைகளை படித்துச் சுவை கண்டவர். அவர் கூறும் கருத்துக்களை நோக்குவோம். “நல்ல பல கவிஞர்கள் தோன்றி வாழ்ந்திருக்கின்றார்கள். அவ்வாறு வாழ்ந்து வரலாறு முடித்த ஒரு சிறந்த கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். நஞ்சை கொழிக்கும் தஞ்சையைச் சார்ந்த இவர் சமுதாயத் துறையில் முற்போக்குக் கருத்தினர். எளிய வாழ்வினர், முகமன் கூறாமல் உள்ளதைச் சொல்பவர். வளங்கள் பலவற்றைச் சுவைத்தறியாதவர். இவருடைய பாடல்கள் இசைப் பாடல்களாகவே வெளிவந்துள்ளன. அதிலும், பெரும்பாலும் கிராமியப் பண்பையும், பணிணையும் தழுவி வந்துள்ளன. உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டுகிறார். கிராமத்து சாதாரண மனிதனின் மொழியில் பேசுகிறார். பாடல்கள் எளிய நடையில் இருந்தாலும்,
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 62

கருத்தாலும் அவை ஆழமாக இருக்கின்றன. கவிதைகள் சிந்தனைக்கினியனவாக வாழ்வுக்கு வளமூட்டுவனவாக இருக்கின்றன. பல்வேறு கவிதைகளில் வேற்றுமைகளை விலக்கி ஒற்றுமையை உருவாக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார். இவரது கவிதையில் உவமைநயம் இருப்பது படித்து இன்புறத்தக்கது. இக்கவிஞருடைய கவிதையாற்றலால் வேதனை கலந்த வியப்புணர்ச்சி மிகுகிறது. "இரைபோடும் மனிதர்க்கே இரையாகும் வெள்ளாடே இதுதான் உலகம். வீண் அனுதாபம் கண்டு நீ ஒரு நாளும் நம்பிடாதே" என்கிறார். எளிய சொற்கள். ஆழமான பொருள், நினைத்து இன்புறத்தக்க உவமை - இக் கவிதை தான் பட்டுக்கோட்டையாரிடம் ஈடுபடுத்தி ஆற்றுப்படுத்தியது" என்கிறார்.
தனது 29 ஆண்டுவாழ்வில் 17 தொழில்களில் ஈடுபட்டு இறுதியில் கவிஞராக வெளிப்படுகின்றார். இத்தகு சிறந்த கவிஞரை தமிழன்னை பெற்றெடுத்தது காலம் விளைத்த நற்பயிராகும். தமிழ் மொழியும் உலகமும் உள்ளளவும் தவமகன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் புகழ்நிலை காலத்தால் மறையாது என்றும் நிலைத்து நிற்கும்.
ஒலை - மார்கழி 2OO6
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 63

Page 34

பாகம் -11

Page 35

இலக்கிய மரபில் கைலாசபதியின் புதிய பரிமாணங்கள்
இலக்கிய மரபிலே புதிய பரிமாணங்களை உருவாக்கியவர் பேராசிரியர் க.கைலாசபதி ஆவார். அத்தகைய துறையில் பெரும் ஈடுபாடு கொணர்டு செழுமை மிக்க பணியை ஆற்றியவர் என்ற வகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் இமயமாக நிற்கின்றார்.
1933 ஆம் ஆணர்டு மலேசியாவில் பிறந்த கைலாசபதி அங்கு ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்டு இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். பேராசான் மு.கார்த்திகேசனிடம் கற்கும் வாய்ப்புக்கிடைத்தது. மார்க்சிய சித்தாந்தவாதியான மு.கார்த்திகேசனின் பொதுவுடைமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். யாழ். இந்துக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த காலத்தில் இ.முருகையனின் நட்புக் கிடைத்தது. அந்த நட்பு கடைசிக்காலம் வரையும் தொடர்ந்தது.
வாழ்வும் எழுத்தும்' எனினும் மகுடத்தில் பிறநாட்டு நல்லறிஞர் சிலரை, குறிப்பாகப் பிரித்தானிய
முற்போங்கு இலக்கியச் செம்மல்கள் |த.சிவசுப்பிரமணியம் |Tே

Page 36
எழுத்தாளர்களைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கல்லூரி மாணவராக இருந்து கொண்டு, இவருடைய மாணவப் பருவக் கட்டுரைகளை தமிழ்மணி', 'இந்து சாதனம்', 'சுரபி' போன்ற பத்திரிகைகளிலும் கல்லூரி இலக்கிய மன்றச் சஞ்சிகைகளிலும் இடம்பெறச் செய்தார்.
1956 ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரி மாணவராகின்றார். வாசிப்புப் பழக்கம் மிக்கவராகிய கைலாசபதி பல்துறை சார்ந்த நூல்களைப் பயின்றதோடு ஆங்கில இலக்கிய விமர்சகர்களின் ஆக்கங்களைப் பெரிதும் விரும் பிப் படித்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு வெளியேறிய கைலாசபதி 'தினகரன்’ நாளிதழின் ஆசிரியரானார். இவர் காலத்தில் தினகரன் பத்திரிகை புதிய தளத்தில் நின்று செயற்படத் தொடங்கியது. அதன் அடி ஊற்றாக நின்று ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குத் தன்னாலான பணியை ஆற்றினார். பல இலக்கியக் கர்த்தாக்களை உருவாக்கிய பெருமை கைலாசபதியைச் சாரும்.
1956க்குப் பின்னர் ஈழத்து முற்போக்கு இலக்கியம் முனைப்பாக வளர்ச்சியடையத் தொடங்கியது. அப்பொழுது ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் படைப்பிலக்கியத்தளத்தை, படைப்பிலக்கிய அனுபவத்தை அகலித்து ஆழப்படுத்தினர். இந்த எழுத்தாளர்களின் படைப்பாளுமை, சமூகநோக்கு, கலைநுட்பம், மற்றும் மொழிநடைச் சிறப்பு, தனித்துவம், வித்தியாசம் போன்ற அம்சங்கள் பன்முகப் பரிமாணங்கள் வெளிக் கொணரப்பட்டன.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது. இளங்கீரன், சில்லையூர் செல்வராசன், பிரேம்ஜீ, நீர்வை பொன்னையன், டொமினிக் ஜீவா, என்.கே.ரகுநாதன், டானியல், முகம்மது சமீம், க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, மருதுரர்கனி, காவலூர் இராசதுரை, ஏ.இக்பால் போன்றோர் முன்னின்று செயற்பட்டனர். க.கைலாசபதி பெரும் உந்துசக்தியாக விளங்கினார். ሶ
1961ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராகச் சேர்ந்து 1966 இல் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். கலாநிதிப் பட்டத்திற்காக 'வீரயுகப் பாடல்கள் (Tamil Heroic Poetry) என்னும் ஆய்வேட்டை வழங்கியிருந்தார். இந்த ஆய்வேடு தமிழுலகுக்குப் பல புதிய திறப்புகளையும் எல்லைகளையும் அறிமுகப்படுத்தியது. சங்ககாலம் வாய்மொழிப் பாடற்காலம் என்றும், சங்க காலம் வீரநிலைக்காலம் என்றும் கைலாசபதி இந்நூற்கணி குறித்துள்ளார். மீண்டும் பேராதனைப் பல்கலைக்கழகப் பணியைத்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 68

தொடர்ந்த வேளை 1974 இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகத் தலைவராக நியமனம் பெற்றார். இப்புதிய வளாகத்தைக் கட்டி எழுப்பும் பணியை சிறப்புற ஆற்றினார். இதுவே இன்றைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக உயர்ந்து நிற்கிறது.
இலக்கிய ஆர்வலர்களால் நன்கு மதிக்கப்பெற்ற இவர் இலக்கியத் திறனாய்வாளராகவும், திறமையும் வளமும் மிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்தார். பதினைந்துக்கு மேற்பட்ட தமிழ், ஆங்கில நூல்களை வெளியிட்டதுடன் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மார்க்சிய கண்ணோட்டத்தில் விமர்சனப் போக்கை முன்னிறுத்திய பேராசிரியர் கைலாசபதியின் வழியை இந்தியாவில்
பேராசிரியர் வானமாமலை முன்னெடுத்துச் சென்றார்.
பேராசிரியர் கைலாசபதி எல்லோருடனும் அன்பாகப் பழகுவார். இவருடைய பல்கலைக்கழக நண்பர்களில் பேராசிரியர் சிவத்தம்பி, அறிஞர்.அ.முகம்மது சமீம் ஆகியோர் முக்கியமானவர்கள். அவருடைய மாணவ பரம்பரை விசாலமானது. அநேகர் முற்போக்கு எழுத்தாளர்களாகச் சங்கமமானவர்கள். செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன், குறிப்பிடத்தக்கவர்கள். மேலும் பேராசிரியர் எம்.ஏ.நுஃ மான், பேராசிரியர் சி.மெளனகுரு, பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு, கலாநிதி துரைமனோகரன், பேராசிரியர் சபா.ஜெயராசா, பேராசிரியர் சிவலிங்கராசா போன்றவர்களை விதந்து குறிப்பிடலாம்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வியை மேற்கொண்டிருந்த வேளையில் நாடகங்களிலும் நடித்துள்ளார். பேராசிரியர் க.கணபதிப் பிள்ளையினால் இயற்றப்பட்டு சு.வித்தியானந்தனால் நெறியாளப்பட்ட தவறான எண்ணம்', 'சுந்தரம் எங்கே' ஆகிய மேடை நாடகங்களில் கா.சிவத்தம்பியுடன் இணைந்து நடித்துள்ளார்.
கைலாசபதி ஒரு படைப்பாளியாகவும் இருந்துள்ளார். கவிதைகள், சிறுகதைகள் சிலவற்றையும் ஆக்கியுள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார். இவை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டன. முப்பதுக்கு மேற்பட்ட நாடகங்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன. சேக்ஸ்பியரின் 'ற்றெம்பெஸ்ற் என்னும் நாடகத்தை வானொலிக்கென தமிழாக்கி தொடராக ஒலிபரப்பச் செய்துள்ளார். 'கல்லறைக்கு எதிரில் புதுமைப்பித்தனின் 'கபாடபுரம்', 'குரல்கள்' என்பன இவரின் முயற்சியால் வானொலி நாடகமாக வெளிவந்தன. நாடகங்களில் மட்டுமன்றி மாணவர் மன்றத்தின் கூட்டங்கள், விவாதங்கள், விழாக்கள்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 69

Page 37
ஆகியவற்றிலும் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். பல்துறை இலக்கியச் செயற்பாடு காரணமாக அவரின் ஆய்வறிவு, திறனாய்வு, விமர்சனப் போக்கு என்பன மேலும் கூர்மை பெற்றன.
"இலக்கியத்துறையில் இவர் செயற்பட்ட தளம் வேறு. இவர் விமர்சகர் என்பதைவிட இலக்கிய ஆய்வாளர். இலக்கியப் புலமையாளர் என்று கூறமுடியும். மார்க்சியக் கருத்து நிலைத்தளத்தில் இருந்து இலக்கியப் போக்குகளை விளக்க இவர் முயன்றார். சமூக வளர்ச்சிப் போக்குக்கும் இலக்கியச் செல்நெறிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை நோக்கினார். கைலாசபதியின் மிகப் பெரும்பாலான எழுத்துகள் இவ்வகைப்பட்டவைதான். மார்க்சியம், இலக்கிய வரலாறு, சமூகவியல் ஆகிய துறைகளில் இவருக்கிருந்த ஆழ்ந்த புலமை இவற்றில் வெளிப்பட்டது. வையாபுரிப்பிள்ளைக்குப் பிறகு தமிழ் இலக்கிய ஆய்வை பிறிதொரு கட்டத்திற்கு வளர்த்தெடுத்ததில் கைலாசபதியின் பங்கு மகத்தானது" என்று பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் இயம்பியுள்ளார்.
"பூப் பூக்காமலே சடைத்து வளர்ந்து பெரும் தோற்றம் காட்டும் தமிழறிஞர் மத்தியில் பூத்துக் காய்த்துக் கனிந்து நின்றது கைலாசபதி என்ற பெருமரம், ஆய்வறிவு தந்தக் கோபுரத்துள் இடம்பெறும் ஒன்றல்ல என்பது அவரது கருத்து. அறிவும் தகவல்களும் சரியானபடி மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற மனப்போக்குடையவர்" என்று பேராசிரியை சித்திரலேகா மெளனகுரு குறிப்பிட்டுள்ளார்.
"புரட்சிகரமான நாவல், நாடகம், சினிமா எல்லாம் வாழ்க்கையின் ஆதர்சம் பெற்ற பல்வேறு ரகப் பாத்திரங்களை சிருஷ்டிக்க முயல்கின்றது. பொது மக்களை உற்சாகப்படுத்தி சரித்திரத்தை முன்னுக்குக் கொண்டு போக முடிகிறது. உதாரணமாக வறுமையிலும், அடக்கு முறையிலும் வதங்கி வாடும் பல மக்கள் இருக்கின்றார்கள். அதே சமயத்தில் தங்களது சகோதர மனிதர்களைச் சுரண்டி ஒடுக்கி வாழும் மக்களும் இருக்கிறார்கள். இத்தகைய சமாச்சாரங்கள் பரந்த அளவில் பொதுப்படையாக எங்கும் காணப்படுவதால், இதுதான் சுபாவம் என்று ஜனங்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்தச் சம்பவங்களை, ஒரு முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட உருவத்தில் திரட்டி வடித்துத் தரவேண்டியதுதான் கலை இலக்கியத்தின் வேலையாகும். அத்தகைய இலக்கியமும் கலையும் மக்களைச் செயலில் ஈடுபடும்படி தூண்டும்; விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். ஐக்கியப்படும் படியாக உற்சாகமூட்டி ஒரு திட்டமிட்ட போராட்டத்தை நடத்திச் செல்லவும் அதன் மூலம் பொது மக்கள் தங்கள் நிலையை நிர்ணயிக்கும் காரியத்தைத் தாங்களே ஏற்றுக் கொள்ளவும் கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்தும். இயற்கை
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் |த.சிவசுப்பிரமணியம் |10

உருவத்தில் இலக்கியமும் கலையும் நிலவி வருமானால், ஜீவன் நிறைந்த வடிவத்தில் அது ஆக்கப்படாமல் இருந்தால் இலக்கியமும் கலையும் மேற்சொன்ன பணியை நிறைவேற்ற முடியாது" என்று மாசேதுங் விளக்கியுள்ளார்.
இந்த அடித்தளத்தில் நின்று கொண்டு பேராசிரியர் க.கைலாசபதி தனது இலக்கியப் பயணத்தை மேற்கொண்டார். மார்க்சிய சிந்தனைத் தளத்தில் நின்று படைப்பிலக்கியத்தை விமர்சித்தார். அந்தப் போக்கு அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது. 1992 இல் ஈழத்தின் முற்போக்கு நாவல் இலக்கியத்தின் முன்னோடி இளங்கீரன், “பேராசிரியர் கைலாசபதி நினைவுகளும் கருத்துகளும்” என்னும் நூலை வெளியிட்டிருந்தார். "காலத்திற்குக் காலம் இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழாராய்ச்சி செய்யும் மாணவர்கள் எனது கணவரைப் பற்றிய தகவல்களை கேட்டு எழுதுவார்கள். அப்பொழுதெல்லாம் அவரைப் பற்றிய நூல்கள் இல்லாத குறையை உணர்வேன். இந்த நூலை இளங்கீரன் அவர்கள் எழுதியுள்ளது எனக்கு அளவற்ற நிம்மதியையும் திருப்தியையும் தருகிறது. கைலாசினுடைய நீண்டகால நெருங்கிய நண்பராக கீரன் இருந்தமையால் இவருக்குப் பல விஷயங்கள், உண்மைகள் தெரிந்திருந்” தன. அவற்றை அவரால் தான் எழுத முடியும்” என்று திருமதி சர்வம் கைலாசபதி இளங்கீரனின் நூல் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கிய ஆர்வலர்களால் நன்கு மதிக்கப்பட்ட பேராசிரியர் க.கைலாசபதி இலக்கியத் திறனாய்வாளராகவும் திறமையும் வளமும் மிக்க எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். பதினாறு தமிழ், ஆங்கில நூல்களை வெளியிட்டதுடன் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். 'அடியும் முடியும்', 'பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், ஒப்பியல் இலக்கியம், இலக்கியமும் திறனாய்வும்', 'கவிதை நயம்', 'இரு மகாகவிகள்', 'சமூகவியலும் இலக்கியமும்', 'ஈழத்து இலக்கிய முன்னோடிகள்', 'இலக்கியச் சிந்தனைகள்', 'தமிழ் நாவல் இலக்கியம்', 'திறனாய்வுப் பிரச்சினைகள்', ‘நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்', 'நாவலர் பற்றி கைலாசபதி, 'பாரதி ஆய்வுகள்', 'Art and Literature', 'Tamil Heroic poetry 9,5u DIgbé56061T 6056)|Téfugs அவர்கள் தந்துள்ளார்கள். தனது கலாநிதிப் பட்டத்திற்காக 1966 ஆம் ஆண்டு பாமிங்ஹாம் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பெற்ற Tamil Heroic Poetry என்ற ஆய்வேடு ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்குப் பின் தமிழ் வடிவம் பெற்றது. தமிழ் வீரநிலைக் கவிதை' என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த ஆய்வேடு தமிழுலகிற்குப் பல புதிய திறப்பு களையும் எல்லைகளையும் அறிமுகப்படுத்தியது. இந்நூல் தென்இந்திய
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் |த.சிவசுப்பிரமணியம் 11

Page 38
பண்டைய வீரநிலைக் கவிதை பற்றிய ஆய்வாகும். மற்றும் சிறப்பாகக் கிரேக்கம் உள்பட பல்வேறு நாட்டு வீரநிலைக் கவிதைகளுடனும் ஒப்புநோக்கி தமிழ்ப் பண்டைய பாடல்களின் மேம்பாட்டையும் இவ் ஆய்வு நூல் விளக்கும் பணி டைய தமிழ்க் கவிஞர்களை அறிமுகப்படுத்துவதுடன் அவர்க்குரிய தகுதிவாய்ந்த இடத்தையும் விவரிக்கும்; ஒப்பீட்டு இலக்கிய மரபில் பணிடைய பாணர்கள், புலவர்கள் மரபையும் சமூகப் பணியையும் கூறும் "ஆய்வியல் நெறிகள் முற்றிலும் சரியாகக் கடைப்பிடிக்கப்பெற்ற ஆய்வேடு என அறியக்கிடக்கின்றது. சங்ககாலம் வாய்மொழிப் பாடற் காலம் என்றும், சங்கப் பனுவல்கள் வாய்மொழிப் பாங்கின என்றும், சங்ககாலம் வீரநிலைக் காலம் என்றும் கைலாசபதி இந்நூற்கண் குறித்துள்ளார். அறிஞர் கைலாசபதியின் ஆங்கில நடை அழகும் செழுமையும் வாய்ந்தது என்று குவெ.பாலசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் வீரநிலைக் கவிதை" என்ற நூலின் பொருளடக்கம் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1. சான்றாதாரங்களின் மதிப்பீடு, 2.புலவரும் புரவலரும், 3. புலவர்களும் புலமை மரபுகளும், 4.வாய்மொழிப் பாடலாக்கக் கலைநுட்பம், 3. அடிக்கருத்துக்களும் சுழல் நிகழ்வுகளும், 6. வீரர் உலகம் என்பனவாகும்.
"பேராசிரியர் கைலாசபதியின் பார்வையில் கலை இலக்கியம்" என்ற அறிஞர் அ.முகம்மது சமீம் கட்டுரையில். கலையும் இலக்கியமும் அவை தோன்றிய காலத்திய சமுதாயத்தை பிரதிபலிப்பன: வாக அமைகின்றன என்பது மார்க்சிய சித்தாந்தம். "பேராசிரியர் கைலாசபதி ஒரு மார்க்சியவாதி, அவர் கலையையும் இலக்கியத்தையும் மார்க்சியக் கண்கொண்டுதான் பார்த்தார். சங்க இலக்கியங்களை, மார்க் சிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்து தனது முடிவுகளை தமிழுலகிற்கு வைத்ததில் தான் கைலாசபதியின் மேதாவிலாசம் தெரிந்தது. தொன்மை" யான இனக்குழு, பழம் பொதுமைச் சமூகம், அடிமைச் சமூகம், நில வுடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம் என்று சமூக அடிப்படையில் இந்த இலக்கியங்களை ஆராய்ந்தார்" என்று கூறியுள்ளார். அவரின் 23 ஆவது நினைவு தினத்தையொட்டி 'கைலாசபதி தளமும் வளமும் என்னும் கட்டுரை நூல் வெளிவந்தது. 24 ஆவது நினைவு தினத்தை யொட்டி தமிழ் வீரநிலைக் கவிதை நூல் வெளிவந்துள்ளது. பேராசிரியர் க.கைலாசபதி என்றும் எம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.
தினக்குரல் []:-I:-:ԼԻԱՀ:
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் |கசிவசுப்பிரமணியம் 112

புது உலகம் காணத் துடித்த கவிஞர் பசுபதி
வர்க்க பேதத்தினால் ஏற்றத் தாழ்வுற்றுச் சின்னாபின்னப்பட்டுக் கிடக்கும் சமூக அமைப்பை, ஒரு சிலருக்கு எல்லாவற்றையும் மிகப் பலருக்கு இல்லாமையையும் திணித்து, வாழ்க்கையில் கோணற்தனத்தையும், கொடுமையையும், நிலவச் செய்திருக்கும் இச்சமூக அமைப்பை மாற்றி, வர்க்க பேதமற்ற, ஏற்றத் தாழ்வற்ற, ஒரு சுபிட்சமான சமூக மாற்றத்தை, ஒரு புதிய உலகைத்தோற்றுவிக்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையினால் உந்தப்பட்டு, அதற்கமைய இலக்கியம் படைப்பவர்கள் தான் மக்கள் எழுத்தாளர் ஆவர். கலையோ அல்லது இலக்கியமோ மக்களை இயக்கி அவர்களைச் செயலூக்கத் தூணர்ட வேண்டும். இத்தகையவர்களின் ஆக்கப் படைப்புகள் பெரும் சமூக மாற்றங்களுக்கும், மானிட வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் உதவியிருக்கின்றன. அத்துடன் இலக்கியத்துக்குரிய பங்கைச் செலுத்தியிருக்கின்றன.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 113

Page 39
இவர்கள் தாம் வாழ்ந்துவந்த காலத்தை ஒரு இலக்கிய சகாப்தமாக்கிச் சென்றுள்ளதோடு அதை அடியொட்டி வரக்கூடிய வாரிசுகளையும் உருவாக்கினர். அவர்களின் ஒரு வாரிசாக யாழ்ப்பாணக் கவிராயர் பசுபதியும் எம்முன் நிற்கின்றார்.
ஆக்க இலக்கிய வடிவங்களில் நோக்க வேகமும், உணர்வுச் செழுமையும், கலையம் சமும் கொண்டு பூரணத்துவம் பெற்றது கவிதையே! அக்கவிதையூடாக, புது உலகம் காணத்துடித்த கவிஞர் பசுபதி ஆவேசத்துடன் பல நூற்றுக்கும் அதிகமான கவிதைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார். 'புது உலகம்' என்ற கவிதைத் தொகுதியை எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம்' அவர் இறந்த பின்பே 1965 ஆம் ஆண்டு வெளிக் கொணர்ந்தது. இத்தொகுப்பில் பல்வேறுபட்ட 42 கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறையிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் 1925 ஆம் ஆண்டு கந்தையா அன்னம் தம்பதியினருக்குப் புத்திரராகப் பிறந்தார். இளமைக் காலத்திலிருந்தே கவிபுனையும் ஆற்றல் வாய்க்கப் பெற்றவராக இருந்தார். காலஞ்சென்ற தமிழறிஞர் கந்த முருகேசனாரிடம் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தமது கவிதைப் புலமையை விருத்தி செய்து கொண்டார். அவரது ஆக்கங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் வெளிவரும் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. படாடோபத்தன்மை சிறிதும் இல்லாத ஒரு சாதாரண மனிதர். அவர் வெறும் கவிஞராக மட்டுமல்லாது போராட்ட வீரராகவும், முற்போக்கு இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்ட செயல்வீரராகவும் விளங்கினார்.
இவரது கவிதைகளில் கேலியும், குத்தலும், கேள்விக்கணைகளும், போராட்ட உணர்வும் தர்மா வேசமும் நிறைந்து காணப்பட்டன. கல்விகற்ற காலம் முழுவதும், பாடசாலைகளில் சாதிக் கொடுமையை எதிர்க்க வேண்டிய நிலை இருந்ததால், இளமைக்காலத்திலிருந்தே சாதிவெறியை எதிர்த்த போராட்ட உணர்வும், சமூகசேவையில் நாட்டமும் கொண்டவராக இருந்தார். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில், பருத்தித்துறையில் இருந்த சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம், இருந்த நல்வழி ஐக்கிய சேவா சங்கம் போன்ற சமூக சீர்திருத்த ஸ்தாபனங்களுடன் இணைந்து சேவை ஆற்றினார்.
1956 இல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு அங்கத்தவராகச் சேர்ந்து ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட உழைப்பாளி மக்களின் விடுதலைக்காக இதயபூர்வமாக உழைத்தார். 1956 இல் இருந்து 1963 வரை அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் இணைச்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் |14

செயலாளராகவும், நிர்வாகச் செயலாளராகவும் பணியாற்றினார். இக்காலங்களில் மகாசபையின் முயற்சியால் ஒடுக்கப்பட்ட சிறார்கள் கல்வி கற்பதற்காக யாழ்ப்பாணப் பகுதியில் சுமார் 16 அரசாங்கப் பாடசாலைகள் நிறுவப்பட்டமை முக்கிய நிகழ்வாகும். மேலும் மகாசபை நடத்திய தேநீர்க்கடைப் பிரவேசம், மனித உரிமைப் போராட்டம் என்பவற்றில் கவிஞர் க.பசுபதி தீவிரமாக ஈடுபட்டுழைத்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்துவரும் இன்னல்கள், அவர்களுடைய பிரச்சினைகள், எதிர்காலத்திட்டங்கள் முதலியவற்றை வளர்ச்சிபூர்வமாக விளக்கி 1959 இல் மகாசபையால் வெளியிடப்பட்ட மலரின் பொறுப்பாசிரியராக இருந்து பணியாற்றினார்.
நல்லூர் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்று பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளிவந்த கவிஞர் பசுபதி முதலில் இரத்மலானையிலும் பின்னர் கைதடியிலுள்ள செவிப் புலன், கட்புலனற்றோர்களுக்கான கல்வி நிலையங்களில் கடமையாற்றினார். எவருடனும் இனிமையாகப் பேசும் இயல்பினர். அவர் பேசும் போது நகைச்சுவை இருக்கும். தன்னம்பிக்கையும் திடசித்தமும் கொண்ட உள்ளத்தினராக இருந்தார். கொடுமைகளை எதிர்த்துப் போராடுவதில் பின்னிற்கமாட்டார். யாராக இருந்தாலும் துணிவுடன் தட்டிக் கேட்காமல் விடமாட்டார்.தான் வாழ்ந்த சமுதாயத்தில் அனுபவித்த கஷ்டங்கள் வருங்கால சந்ததியினரும் அனுபவிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து பாடுபட்டார். பாரதியைப் போல், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப்போல் இளமையில் அதுவும் 40 வயதில் மரணத்தைத் தழுவிக் கொண்டாலும் தான் கொண்ட கொள்கையில் பற்றுறுதியாக இருந்து வாழ்ந்து காட்டினார். கம்யூனிஸ்டாக வாழ்ந்து கம்யூனிஸ்டாகவே இறந்தார். தமிழ்க்கவிதைத் துறைக்கு பெரும் பங்காற்றி ஒரு முற்போக்கு எழுத்தாளராகத் தன்னை இனங்காட்டிக் கொண்டார். அதனால் அவர் பலராலும் மதிக்கப்பட்டார்.
"மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் முறையில் எழுதப்பட்ட கவிதையே உயர்ந்ததாகவும், மறத்தற்கரியதாகவும் கொள்ளப்படுகிறது. மக்கள் வாழ்விற்கு உழைப்பே அத்திவாரம். எனவே எக்காலத்திலும் எந்நாட்டிலும் உழைப்பாளர்களே காட்சிக்கெளிய பல்லாயிரக்கணக்கான கரங்களையுடைய இவ்வுலக பிரம்மாக்களாவர். தொழிலாளி வர்க்கத்தின் பரந்த பலம்வாய்ந்த சர்வதேச இயக்கத்தில் ஈடுபட்டார். அவரது இதயத்தினின்றும் தோற்றமெடுத்த, கவிதைகளே அவ்வியக்கத்திற்குக் காணிக்கையாயின. அவருடைய கவிதைகள் கருத்தும் குறிக்கோளுமுடையவையாக விளங்கின, விளங்குகின்றன.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் |15

Page 40
வேறு வகையாகக் கூறினால் அவரது ஏட்டிலே எடையுண்டு, எழுத்திலே ஆணியுண்டு. அவரது கவிதைகள் ஏழை மக்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் ஒதுக்கப்பட்டவர்களுக்குமே எழுதப்பட்டவை. புத்துலகினைப் படைப்பதற்கு ஊக்கமளிக்கவே எழுதப்பட்டவை” என்று பசுபதியின் கவிதைகள் பற்றி கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
"சிந்தையால், வாக்கால்,
செம்மைச் செய்கையாற்
புரட்சி உய்க்க, செந்தமிழ் செங்கொடிக்குச்
சேவகம் செய்ய வைக்க
வந்தமா மனிதனான
பசுபதிக் கவிஞன்,
காயம்
வெந்தழல் உண்டும்
வாழும்
வித்தகன் உயிர், இப்பா
நூல்!” என்று பசுபதியின் பாநூல் பற்றி சில்லையூர் செல்வராசன் கவிதை சொல்லியுள்ளார்.
"மரணம் தன்னை நோக்கி நெருங்கி வருவதை அறிவுபூர்வமாக உணர்ந்து கொண்டு, அதற்காகத் துளியேனும் கலக்கம் கொள்ளாமல், எமது பாதையிலே அணிவகுத்து நிற்கும் ஆயிரமாயிரம் தோழர்களுக்கு நாளை நம்முடையதே என்று தன்னையும் உள்ளடக்கி ஒருமைப்படுத்தி எதிர்கால நம்பிக்கையை ஊட்டி, உலகெங்கும் தமது விடுதலைக்காகப் போராடி நிற்கும் கோடானுகோடி மக்களை நினைவுப்படுத்தி நிலையான இடத்தைப் பெற்றுச் சென்றுள்ளளார் தோழர் பசுபதி” என்று முற்போக்கு எழுத்தாளர் கே.டானியல் தெரிவித்திருந்தார்.
"நிலப்பிரபுத்துவத்தின் சாபக் கேடான சமூகக் கொடுமைகட்கும், முதலாளித்துவ சுரண்டலுக்கும் உட்பட்டு சமூகத்தின் அடித்தளத்தில் கிடந்து உழன்று கொண்டிருக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்வுக்குமாகத் தன் இளம் பராயம் தொடக்கம் உழைத்து வந்தவர் க.பசுபதி அவர்கள், இத்துறையில் அவர்பெற்ற அனுபவங்களைத் தம்முள் இயற்கையாக அமைந்திருந்த கவிப்புலமையினால் காலத்துக்குக் காலம் பல கவிதைகளைப் புனைந்து வெளியிட்டுள்ளார். அவரது கவிதைகள்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 176

மக்கள் மத்தியில் அமரத்துவம் பெற்று நிலவும்" என்று எம்.சி.சுப்பிரமணியம் அவர்கள் பசுபதியைப் பற்றியும் அவரது கவிதைகள் பற்றியும் கூறியுள்ளார்.
புது உலகம் என்ற கவிதைத் தொகுதிக்குள் உட்புகுந்து அவருடைய கவிதைகளில் என் மனதைத் தொட்ட சில கவிதைகளை வாசகராகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகின்றேன். 'சாதிக் கொடுமை' என்ற கவிதையில்.
“சாதியெனும் கொடுமையினால் தமிழர் கூட்டம் சஞ்சலத்தில் வீழ்ந்த தடாசகதியாகி ஆதியிலே ஒரு சாதி இருந்த தென்பர் அந்தநெறி இந்நாளில் காணவில்லை நீதியிலே பிழைத்தவர்கள் நெடுமரம் போல் வீழ்ந்த செய்தி ஒதுகின்றார் நீதியில்லை சேதியிது. தமிழ்நாட்டுச் சேதிகேளிர் செயலில்லை; செப்புதலே மட்டும் தம்பீ”
இப்படியாகத் தன் மனக்குமுறல்களை வெளிக்காட்டியுள்ளர்ர். 'ஒடுக்கப்பட்டோர் உரிமைக் கீதம்' இப்படியாகச் சொல்கின்றது.
மனிதர் உரிமை மனிதர் பறிக்கும் மடமை இந்த நாட்டில் உண்டாம் மனிதர் தம்மை மனிதர் தாழ்த்தும் மயக்க நிலையை மாய்க்க வேண்டும்! ஒடுக்கப் பட்டோர் உரிமை முழக்கம்
உயிரின் மூச்சு, உணர்விண்பேச்சாம்!
தடுக்கும் உரிமை தரணிக்கில்லை
தமிழா! இதை நீ சரியாய் உணர்வாய்!
சாத்திரம் கோத்திரம் சஞ்சலம் யாவும்
குழ்சியில் குத்திரம்;
சுயநலம் வாஞ்சை மீத்திடும் உலகினில்
மேன்மை காணா மேவிடு செல்வம் மிக்க
நல் உரிமை!
முடிவு காண்போம்' என்ற கவிதையில் கவிஞர் பசுபதி வேதனை
பிரதி பலிப்பாய் இயம்புவதை நோக்கலாம்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் IT

Page 41
சுதந்திரம் பெற்ற நாட்டில் சுகத்தினை விரும்பிநின்று நிதம்நலம் உழைத்த மக்கள் நிர்க்கதி யுற்று வாடும் விதந்தனை இங்குகணர்டோம் வெந்தவர் உள்ள மெல்லாம் இதம்பெறு நாளெப்போதோ இதற்கொரு முடிவு காண்போம்! மக்களுக்காக மக்கள் இலக்கியம் படைத்த முற்போக்குக் கவிஞரின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
யாழ்ப்பாணக் கவிராயர் என்று - புரட்சி யாப்புக்குள் கவிசெய்த தோழா வாழ்க்கைக்கு முற்றிட்டுச் சென்றாய் நீ வைத்திங்கு சென்ற கவி வாழும்! சுபத்திரன் என்ற முற்போக்குக் கவிஞர் தோழர் பசுபதியின் மறைவின் பின் பாடிய கவிதையில், "வைத்திங்கு சென்றகவி வாழும் என்றார்.
தினக்குரல்
-ol
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 118

செ.கணேசலிங்கன் படைப்புகள்
ஈழத்து நவீன தமிழிலக்கியத்தின் பன்முகப் பரிமாணங்களை விளங்கிக் கொள்ளும் விதத்தில் பல நிலைகளில் கவனம் குவிக்க வேண்டியுள்ளது. இதன் ஒரு நிலையாகவே 1950க்குப் பின்னர் ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியம் முனைப்பாக வளர்ச்சியடையத் தொடங்கியது. அக்காலக்கட்டத்" தில் ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்கள் படைப்பிலக்கியத்தளத்தை அகலித்து ஆழப்படுத்தினர்.
இந்த எழுத்தாளர்களின் படைப்பாளுமை, சமூக நோக்கு, கலைத்துவம், மொழிநடை, தனித்துவம், மார்க்சிய நோக்கு போன்ற அம்" சங்களை விரிவாகவும் நுண்ணியதாகவும் கருத்து நிலை சார்ந்தும் விளங்கிக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.
முற்போக்கு இடதுசாரி இயக்க செல்நெறி களில் ஆழக்கால்பதித்த செ.கணேசலிங்கன் ஈழத்து
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் |ந.சிவசுப்பிரமணியம் | 79

Page 42
தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு கடந்த 50 ஆண்டு காலத்துக்கு மேலாகப் பணி ஆற்றி வருபவர்களில் முதன்மை பெற்று நிற்கின்றார். 75 க்கு மேற்பட்ட நூல்களை உருவாக்கியவர். சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், சஞ்சிகை என்றுபல்துறை இலக்கிய வடிவங்களுக்கூடாக தன் ஆளுமையை நிலை நிறுத்தியுள்ளார்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் அதன் கொள்கை வழிநின்று செயற்பட்ட பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, அ.முகம்மது சமீம், நீர்வை பொன்னையன், என்.கே.ரகுநாதன், கே.டானியல், டொமினிக்ஜிவா, இளங்கீரன், கே.கணேஷ், எச்.எம்.பி.மொஹரிடீன், சில்லையூர் செல்வராஜன். ஏ.இக்பால் இ.முருகையன், பிரேம்ஜி போன்றவர்களுடன் தோழமை உணர்வுடன் ஒன்றிணைந்து முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பணியாற்றினார் செ.கணேசலிங்கன் மேலே கூறப்பட்டவர்களில் சில முக்கியமானவர்கள் காலமாகிவிட்டார்கள். வேறு சிலர் சுயநலத்துக்காகத் தடம்புரண்டு விட்டார்கள். இருந்தும் இன்றும் கொள்கைப் பற்றுறுதியுடன் பலர் இருந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக செ.கணேசலிங்கன் நம்முடன் நிற்கின்றார்.
'எனது இலக்கியத் தேடல்' என்ற நூலின் முன்னுரையில் அ.முகம்மது சமீம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். செ.கணேசலிங்கன் எழுதிய நாவல்களும், சிறுகதைகளும் அவருடைய சோஷலிச யதார்த்த கண்ணோட்டத்தைக் காண்பிக்கிறது. குறிப்பாக அவர் குமரனுக்கு எழுதிய கடிதங்கள் என்ற சிறு நூலில் அவருடைய பொதுவுடைமைக் கருத்துக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன. முற்போக்கு எழுத்தாளர்கள், தேசிய இலக்கியம், மண்வாசனை, யதார்த்த வாதம், மக்கள் இலக்கியம் என்ற பல அடித்தளங்களில் நின்று இலக்கியங்களைப் படைத்துக் கொண்டிருந்தார்கள். அதில் முக்கியமான ஒருவர்தான் கணேசலிங்கன்.
இலங்கைச் சமுதாயத்தின் முக்கியமாக யாழ்ப்பாணச் சமுதாயத்" தின் ஏற்றத்தாழ்வு பாமரமக்களின் அபிலாஷைகளையும், ஆசாபாசங்களையும் அவர்களின் ஏக்கங்களையும் தன்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் செ.கணேசலிங்கன் வெளிப்படுத்தியுள்ளார்.
1970களில் வெளிவந்த 'கற்பகம்' என்ற சஞ்சிகையில் 'குருவின் குற்றம்' என்ற ஒரு சிறுகதை அன்றைய சமுதாயத்தில் படித்தவர்கள்
உத்தியோகமின்றி இருந்த நிலையை, யதார்த்தமாகப் படித்துப் பயனற்ற பாமரமக்களின் உள்ளக்குமுறலாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
ாnர்போக்க இலக்கியச் செhமஸ்கள் 1 க.சிவசுப்பிாமணியம் 180

நல்லவன்' என்ற சிறுகதைத் தொகுதியும் இவரின் படைப்பாகும்.
செ.கணேசலிங்கன், அவர்கள் மு.வரதராஜன், அகிலன், காண்டேகர், ஜானகிராமன் ஆகியோரின் எழுத்துக்களால் ஆரம்பகாலத்தில் கவரப்பட்டவராக இருந்தார். பின் கார்த்திகேயன் மாஸ்டரின் வழிகாட்டலில் மார்க்சிய சிந்தனையாளராக மாறினார். 'மார்க்ஸ் கண்ட இலங்கியல்' என்பது இயற்கை, சமூகம் சிந்தனைகளின் தொடர்ந்த இயக்கத்தையும் அவற்றிடை ஏற்படும் முரணி பாடுகளையும் அடிப்படையாகக் கொணி டது. சமூகமாற்றம் ஏற்படும் போது, சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றை மறுப்ப்வர்கள் மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல் வாதத்தை மறுப்பவர்களாவர்” என்கிறார் கணேசலிங்கன்.
“சிறுகதை என்பது ஒரு குறிக்கோளை விபரிக்கும் கதை. எவ்வாறு சிறுகதை என்ற கலை வடிவத்துக்கு இலக்கணம் கூறினாலும், மற்றைய கலைவடிவங்கள் போலவே அதன் அமைப்பு மட்டுமல்ல அக்கதை எழுப்பும் சமுதாய உணர்வே முதன்மையானது" என்று சிறுகதைக்கு விளக்கம் கூறியுள்ளார்.
'நாவல்' இலக்கியத்துறையில் 40 நாவல்களுக்கு மேல் எழுதிச் சாதனை படைத்துள்ளார். இவர் எழுதிய நாவல்களின் பாதிப்பு ஈழத்தை விட தமிழகமே எதிர்கொண்டது. அந்த அளவுக்கு நாவல் இலக்கியத் துறையில் கணேசலிங்கன் பேசப்பட்டார். நீண்ட பயணம்' என்ற அவரது முதல் நாவல் கதையை வெறுமனே கூறும் தன்மையிலிருந்து விடுபட்டு ஆழத்தடம் பதித்து அகலம் பெறுவதைக் காண்கின்றோம். இவரின் சமூகவியல் மார்க்சிய நோக்கு ஆழவிரிந்து பார்க்கும் தன்மை போன்ற அம்சங்கள் தமிழ்நாட்டு எழுத்தாளர்களைப் பெரிதும் பாதித்தது. சடங்கு, செவ்வானம், போர்க்கோலம், மண்ணும் மக்களும் போன்ற நாவல்கள் வேறுபட்ட படைப்பாற்றலை பறை சாற்றுகின்றன. 1965 வெளிவந்த நீண்ட பயணம் அடித்தளத்திலுள்ள வாழ்க்கை நிலை பார்க்கப்படுகின்ற கதையம்சம் கொண்டது.
நீணி ட பயணம், போர்க் கோலம், சடங்கு என்ற மூன்று நாவல்களின் பாத்திரப்படைப்புக்களும் கலாபூர்வமான படைப்புக்" களாகக் காட்டப்படுகின்றன. இரத்தமும் சதையும் போல் உயிர்த்துடிப்பு மிக்க பாத்திரங்களை சடங்கு கொண்டுள்ளது. சிறு சம்பவங்களை எடுத்துக்கூறும் பண்பு அலாதியானது. உணர்ச்சி உளவியல், இயல்பான பாத்திரப்படைப்பு நீண்ட பயணத்தின் தொடர்ச்சியாக போர்க்கோலம் கொண்டுள்ளது. சடங்கு மிகச் சிறந்த நாவல். நிலப்பிரபுத்துவத்தினர்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 81

Page 43
திருமணச் சடங்கு, மரணச் சடங்கு சம்பவம் உளவியல் ரீதியில் இயங்கும் பாத்திரங்கள் மூலம் சடங்கின் பொய்மை காட்டப்பட்டுள்ளது.
செவ்வானம், தரையும் தாரகையும், மத்தியவர்க்கத்தினரின் சமகால அரசியல் பின்னணிகள் சம்பந்தமான விடயங்கள், நடவடிக்கைகள், நாவல்கள் ஊடாக வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளன. "எக்கதையும் சமகால வரலாற்றின் ஒரு துணுக்குத் துண்டாகவே இருக்க முடியும். அதேவேளை தனிப்பட்ட தனி மனிதனின் பிரச்சினையைத் தொடாது பரவலான சமூகத்தைப் பிரதிபலிக்கத்தக்கதான மாதிரிக் கதை மாந்தரை பாத்திரங்களாகத் தேர்ந்து சிறுகதைகளாகக் கலை வடிவம் ஆக்குவதே சிறந்த கலைப்படைப்பாகும்." கதையின் சமூகப் பணியும் அதுவேயாகும் என்கிறார் கணேசலிங்கன்.
இவரது சிறுகதைகள் பல வெளிவந்து தாக்கத்தை ஏற்படுத்தியது போல் நாவல் துறையிலேயே கூடிய ஈடுபாடு காட்டியுள்ளார். 75 நூல்கள் வரை எழுதி வெளியிட்டுள்ள கணேசலிங்கன். 1958இன் இனக்கலவரத்தின் தாக்கம் அவர் மனத்தில் பதிந்திருந்த காரணத்தால் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தப்பட்ட கொள்கைகளை எட்டு நாவல்கள் ஊடாகப் பதியவைக்கின்றார். பேராசிரியர் கைலாசபதியின் பெருமை தமிழ் நாட்டில் பிரகாசித்தது போல் முற்போக்கு எழுத்தாளர் கணேசலிங்கனும் பேசப்பட்டு வருகின்றார்.
"சிறுகதைகளில் விரவியிருக்கும் கருத்துக்கள், அவருடைய தமிழ் நாவல்களைப் பொறுத்தளவிலும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தார். நாவல் சமுதாயத்தைப் பிரதிபலிக்க வேண்டும். சமுதாயத்தின் வளர்ச்சி, அச்சமுதாயத்தின் பிரச்சினைகள், ஏற்றத்தாழ்வுகள், அடக்கியாளும் வர்க்கத்தின் எதேச்சதிகாரத்தை எதிர்த்துப் போராடும் தாழ்த்தப்பட்டோரின் போராட்டம் அவற்றைப் பிரதிபலிக்கும் பாத்திரங்கள் அடக்" கியதுதான் சமூகநாவல் என்பது முற்போக்காளர்களின் தத்துவம். மார்க்" சியக் கொள்கையில் ஊறி நின்ற செ.கணேசலிங்கன் தனது சிறுகதைகளிலும், நாவல்களிலும் இக்கருத்துக்களைத் தான் படைத்த பாத்தி ரங்கள் வாயிலாகவும் சம்பவங்கள் மூலமாகவும் எடுத்தாள்கின்றார்” என்று முற்போக்கு விமர்சகர் அறிஞர் அ.முகம்மது சமீம் தெரிவித்துள்ளார்.
"செ.கணேசலிங்கனின் பின் வந்த நாவல்கள் உணர்வுப்பூர்வமாகக் கருத்துக்களைத் தெரிவிப்பனவாக அமைகின்றன. இந்த நிலைப்பாடு, மண்ணும் மக்களும், நாவலிலிருந்து தொடங்குகின்றது. சாதியம், வர்க்கம் சார்பாக பல்வேறுபட்ட பார்வையில் நின்று தேசிய இனப்பிரச்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 82

சினையைப் பார்க்கிறார். அவரின் 'இளமையின் கீதம் (1983) போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. 'அயலவர்கள்', 'ஈனத் தொழில்' (1995) ஆகியவற்றின் இடப்பெயர்வின் பதிவுகளைத் தரிசிக்கலாம். அத்துடன் சாதியம், சீதனம் என்பனவும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றது. 'பொய்மையின் நிழல், இராணுவ அழிவுகளையும் பின்புலத்தில் வெலிக்கடைப் படுகொலைகளைப் பற்றியும் எடுத்துச் சொல்லுகின்றது.
பெண்ணிலைவாதச் சிந்தனைகளை (1998) மார்க்சிய நோக்கில் வெளிப்படுத்தியுள்ளார். பல விடயங்களை கணேசலிங்கன் பெண்ணிலைவாத நிலையில் நின்று நோக்கிச் சொல்லியிருப்பது கவனத்திலெடுக்க வேண்டிய விடயமாகும்.
ஒரு குடும்பத்தின் கதை'நான்கு சுவருக்குள்ளே' என்ற நாவல்கள் பெண்ணிலை எழுத்தாளர்களாலும் தொட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு யதார்த்தமாக எழுதியுள்ளமை சிறப்பம்சமாகும். இரண்டாவது சாதி என்ற நாவல் மார்க்சியம், பெண்ணிலைவாதச் சிந்தனைகள் கொண்ட பாத்திரங்கள் வாயிலாக முன்நிறுத்துகிறார்
'நீ ஒரு பெண் நாவல் கலாசார ரீதியான புரட்சி காட்டப்படுகின்றது. இருபது கோடி பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எடுத்துக் காட்டுவது மனத்தை நெருடுவதாக இருக்கின்றது” என்று செ.கணேசலிங்கன் படைப்புகள் பற்றிய ஆய்வரங்கில் கருத்துத் தெரிவித்த கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் கலாநிதி செ.யோகராசா தெரிவித்துள்ளார்.
இலக்கியம் யாருக்காக? இலக்கியம் சமூகத்தோடு தொடர்புடை" யது. சமூகத்தைப் பிரதி பலிப்பதுதான் இலக்கியம். இலக்கியம் யாருக்காக என்பதில் முற்போக்காளர்களிடையே கருத்து வேற்றுமை இல்லை.
“இலக்கியம்” இன்ப நுகர்ச்சியில் தெவிட்டி நிற்கும் ஒரு சீமாட்டிக்கோ சலிப்புற்றிருக்கும் மேல் தட்டு பத்தாயிரம் பேருக்கோ எழுதப்படுவதல்ல. இது கோடிக்கணக்கான பாட்டாளி மக்களின் கலை” என்று மார்க்சியமும் இலக்கியமும்' என்ற நூலில் தோழர் நம்பூதிபாட் தெளிவுபடுத்தியுள்ளார். இங்கு கணேசலிங்கன் நாவலுக்கு என்ன இலக்கணம் உணர்டு என்று சொல்லும் போது “உரையாடல்கள் வாசகர்கள் மத்தியில் கூடுதலான ஈர்ப்பை ஏற்படுத்திச் சிந்தனையை விரிவு பெறச் செய்கின்றன. பாட்டாளி வர்க்க விடுதலையை நோக்கிய பார்வை முதன்மை பெறுவதை அவதானிக்கலாம்.”
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 83

Page 44
"உலகச் சந்தையில் ஒரு பெண் பொருளாதாரப் பிரச்சினைகளை எடுத்துக்காட்டும் முதல் தமிழ் நாவல் என்று சொல்லப்படுகின்றது. பல்வேறுபட்ட பெனர்கள் அவரினர் பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். புகலிடம் சார்ந்த பெண்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் கோடையும் பணியும்' , 'இருட்டறையில் உலகம்" ஆகியவற்றை மார்க்சிய நோக்குடன் பார்த்து கலாபூர்வமாக வெளிப்படுத்துகின்றார். மேலும் தமிழ் நாட்டு அரசியலை அடிநாதமாக கொண்டு ஒரு அரசியல் கதை' என்ற நாவலில் தற்றுணிவுடன் நடக்கும் விதத்தினைக் காட்டியுள்ளார். 'புதிய சந்தை" (1977) இலங்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களைக் காட்டுகின்ற போது வித்தியாசங்களைக் காணமுடிகின்றது. கவர்ச்சிக்கலை', 'கடவுளும் மனிதன்' என்பனவற்றில் சினிமாவின் தாக்கம், 'கலாச்சார சீரழிவுகள் வித்தியாசமான முறையில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. "மரணத்தின் நிழலில் இந்நாவலில் முதுமை தொடர்பான கருத்துக்களை முன்வைக்கிறார். நரகமும் சொர்க்கமும் சுற்றுச் சூழல் சம்பந்தப்பட்ட விடயங்கள் சொல்லும் நாவலாக அமைந்துள்ளது.
சஞ்சிகையைப் பொறுத்தளவில், 'குமரன்' என்ற கலை இலக்கியப் படைப்பை வெளிக்கொணர்ந்து ஈழத்து இலக்கியத்திற்குப் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தினார். பல்துறைசார் பரிமாணங்களுடன் மார்க்சிய சிந்தனையில் பற்றுறுதியுடன் செயற்பட்டு இன்றும் சோர்ந்து விடாமல் ஈழத்து எழுத்தாளர்களுடைய பல நூல்களை குமரன் வெளியீடாக வெளிக் கொணர்ந்துள்ளார். இலக்கியப் பணியைத் தொடர்ந்து செய்துவரும் செ.கணேசலிங்கனை முற்போக்கு உலகம் என்றும் மறக்காது.
ஐபீரகேசரி
Ա;-15-ՋIIԱՃ
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் |ே

முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன்
ஈழத்தின் இலக்கிய வரலாற்றிலே முற்போக்கு எழுத்தாளர்கள் ஆற்றிய பங்களிப்பு:அளப்பரியது. அறுபதுகளுக்குப் பின் முற்போக்கு எழுத்தாளர்கள் செழிமை மிக்க சிருஷ்டிகளைப் படைக்கலாயினர். அதன் காரணமாக ஈழத்து இலக்கியம் செழுமை பெற்று இலக்கிய வரலாற்றிலும் தனித்துவம் பெற்றது. இக்கால கட்டத்தில் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் பரவலாகப் பேசப்படலாயின. முற்போக்கு எழுத்தாளர்கள் சமுதாயத்தை மாற்றி யமைக்க வேண்டுமென்ற இலட்சிய வேட்கையுடன் தமது படைப்புகளை ஆக்கினார்கள். முற்போக்கு எழுத்தாளர்களில் அநேகர் மார்க்சியக் கோட்பாட்டை ஏற்றுக் கொணி டவர்கள். இவர்கள் ஸ்தாபனமயமாய் இயங்கும் நோக்குடன் "இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்" என்ற அமைப்பை ஐம்பதுகளில் உருவாக்கினார்கள். இவர்கள் மக்களுடைய போராட்டங்களில் நேரடியாகவே
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | க.சிவசுப்பிரமணியம் 186

Page 45
பங்கு பற்றியிருக்கின்றார்கள். மக்களுடைய போராட்டங்கள் - தீண்டாமை ஒழிப்பு வெகுஜனப் போராட்டம் - தொழிலாளர்கள் விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றில் நேரடியாகப் பங்குபற்றி இருந்ததுடன் அப்போராட்டங்களில் தாங்கள் பெற்ற அனுபவங்களையும், உணர்வுகளையும் கலைத்துவமான படைப்புகளாக வெளிக்கொணர்ந்தார்கள். இவர்கள் மக்களைப் பற்றி மக்களுக்காகவே தமது படைப்புகளை மக்களுக்கு வழங்கினார்கள். அதனால்தான் இவர்களின் படைப்புக்கள் வலிமையானதாகவும் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியனவாகவும் அமைந்துள்ளன.
அத்தகைய எழுத்தாளர் இயக்கத்தைச் சேர்ந்த நீர்வை பொன்னையன் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள் "ஒரு எழுத்தாளன் எதை எழுதுகிறானோ அதன்படி அவனும் வாழ்ந்து காட்ட வேண்டும். அப்பொழுதுதான் சமுதாயம் அவனையும் அவன் எழுத்துக்களையும் மதிக்கும்” அவரைப் பொறுத்தளவில் அவர் எதை எழுதுகின்றாரோ அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றார். தான் கொண்ட கொள்கையில் இம்மியளவும் மாறாமல் இலட்சிய வேட்கையோடு நேர்மையான ஓர் எழுத்தாளராக எம்முன் நிற்கின்றார். புகழ்ச்சி, பட்டங்களுக்கெல்லாம் சிறுமைப்படாமல் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக அமைதியாக இருந்து இலக்கியப் பணிசெய்து வருகின்றார். இந்த இடத்தில் மார்க்ஸிம் கார்கியின் வார்த்தை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது. "மனிதன் என்னே அற்புதமானவன்” இந்தக் கூற்று நீர்வைக்கு மிகவும் பொருந்தும். அவர் இலட்சிய வழிநின்று நேர்மை தவறாமல் இலக்கியப் படைப்புக்களைப் படைப்பதுடன் இளம் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியும் தந்துள்ளார்.
"முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்” என்ற நூலை எழுதிய நீர்வை பொன்ன்ையன் "என்னுரை” என்ற பகுதியில். உலகளாவிய கலை இலக்கிய வரலாற்றில் முற்போக்கு இலக்கியம் இன்று ஆழத்தடம் பதித்துள்ளது. உலக இலக்கிய வளர்ச்சிக்கும் செழுமைக்கும் அது அளப்பரிய பங்கினைச் செலுத்தியுள்ளது. வரலாற்று வளர்ச்சிப்போக்கில் அதுவும் இணைந்து வளர்ந்து விருத்தியடைந்துள்ளது.” ஆழ்ந்து அனுபவித்து எழுதிய இக்கூற்று முற்போக்கு இலக்கியத்திற்கு ஒரு முத்தாப்பைக் கொடுக்கின்றது.
1930 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - நீர்வேலி என்னும் விவசாயக் கிராமத்திலே பிறந்த நீர்வை பொன்னையன் தன் கிராமத்திலுள்ள அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் கல்கத்தா சர்வகலாசாலையில் பி.ஏ.பட்டதாரியானார். கல்வி கற்கும்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 186

காலத்திலேயே மாணவர் போராட்டங்களில் பங்கு கொண்டவர். அநீதிக்கும் அடக்கு முறைக்கும் எதிராக குரல் கொடுக்கத் தவறாத ஒரு இலட்சிய வாதியாகவே இருந்தார். 1957 இல் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர் பல ஆண்டுகளாக வேலைதேடி அலைந்து வேலை கிடைக்காமையால் தோட்டக்காரனாகவே வாழ்ந்தார். மூத்த முற்போக்கு எழுத்தர்ளராகிய இவர் "சமுதாயத்தின் கண் தான் தரிசித்த போராட்டங்களை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தி அதைப்பட்டை தீட்டி மக்களுக்கு வழங்குகிறவனே உண்மையான படைப்பாளி” என்று கூறிக்கொண்டு அறுபதுகளிலிருந்து இன்றுவரை எழுதிக் கொண்டே இருக்கின்றார்.
sy et
“நீர்வை", "ஞானி’ ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகள், சிறு கதைகள் எழுதியதோடு பிறநாட்டு இலக்கிய மொழி பெயர்ப்புகளும் செய்துள்ளார். "கலைமதி”, “வசந்தம்” ஆகிய முற்போக்குக் கலை இலக்கியச் சஞ்சிகைகள் மூலமும் தன் பணியை மேற்கொண்டார். “தேசாபிமானி”, “தொழிலாளி” ஆகிய அரசியல் வாரப் பத்திரிகைகளின் ஆசிரிய குழுவில் பணியாற்றி ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதியுள்ளார். 1969 ஆம் ஆண்டிலிருந்து 1983 வரை அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். 1996 இல் இருந்து "விபவி மாற்றுக் கலாசார மையத்தில் தமிழ்பிரிவின் இணைப்பாளராகச் செயற்பட்டு ஆக்க இலக்கியம் மற்றும் கலை சம்பந்தப்பட்ட விடயங்களில் தன்னாலான பங்களிப்பைச் செய்து வருகின்றார்.
இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி "மேடும் பள்ளமும்” 1961 ஆம் ஆண்டு வெளிவந்தது. "ஈழத்து எழுத்தாளர்கள் தென்இந்திய எழுத்தாளர்களுக்குக் குறைந்தவர்களல்லர். என்பதற்கு நீர்வை பொன்னையனுடைய கதைத் தொகுதி ஒர் எடுத்துக் காட்டு. இவரது எழுத்தில் நோக்கமிருக்கிறது தெளிவிருக்கிறது. துணிவிருக்கின்றது" என்று முதலாம் பதிப்பிற்கான பதிப்புரையில் எச்.ஜி.எஸ்.ரத்னவீர குறிப்பிட்டதிலிருந்து நீர்வை பொன்னையனின் எழுத்தின் உன்னத நோக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். இந்நூல் சாஹித்ய பரிசிற்குத் தெரிவு செய்யப்பட்டபோதிலும் "சிறுகதை” இலக்கியமல்ல என்று சாஹித்திய இலக்கியக்குழுவில் இருந்த ஒரு தமிழ் பேராசிரியர் இதற்கு பரிசு வழங்குவதைத் தடுத்துவிட்டார். முதல் வருடமும், ஒரு வருடம் விட்டு அடுத்த வருடமும் சிறுகதைக்கு சாஹரித்திய பரிசு கொடுக்கப்பட்டது. இரண்டு வருடத்தின் இடைப்பட்ட வருடத்தில் மட்டும் சிறுகதைக்கு பரிசு வழங்காமல் விட்டதன் காரணம் நீர்வை ஒரு கொம்யூனிஸ்ட் என்ற காரணத்தினாலேயாகும்.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 81

Page 46
1970 ஆம் ஆண்டு வெளிவந்த 'உதயம்' சிறுகதைத் தொகுதி சாஹித்ய மணி டல தமிழ் குழுவினால் சிறந்தது என்று தெரிவு செய்யப்பட்டு விருதுக்காக சிபார்சு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களைக் காட்டி 'உதயம் சிறுகதைத் தொகுதி நிராகரிக்கப்பட்டு விருது வழங்கப்படவில்லை. மூவர் கதைகள், பாதை, வேட்கை, ஜென்மம் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் உலகத்து நாட்டார் கதைகள், முற்போக்கு இலக்கிய முன்னோடிகள், நாம் ஏன் எழுதுகின்றோம்?, போன்ற பல்வகைப்பட்ட படைப்பிலக்கியங்களை ஈழத்து இலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளார். இவரின் 'பாதை சிறுகதைத் தொகுதி தமிழ் நாட்டில் வெளிவந்து முற்போக்கு இலக்கியத்தின் இலக்கணமாகத் திகழ்ந்தது. அடுத்து வேட்கை ஐந்தாவது சிறுகதைத் தொகுதியாக தமிழ் நாட்டில் அறிமுகமானது.
நீர்வை பொன்னையன் நேர்மையுடன், ஒழுக்கமும் பண்பாடும் மிக்க மனிதர், எல்லோருடனும் அன்பாகப் பழகக் கூடியவர். விளம்பரத்தை விரும்பாத ஒரு மனிதர். கலை இலக்கியம் சம்பந்தப்பட்ட விடயங்களில் நீண்டகால அனுபவஸ்தர். எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் அதிலும் இளம் எழுத்தாளர்களை வளர்த்துவிட வேண்டும் என்று அயராது பாடுபடுபவர். உழைக்கும் தொழிலாளர் விவசாயிகள் தானி முற்போக்கு எழுத்தாளர், நீர்வையின் படைப்புகளின் கதாநாயகர்கள்; இவர்களே வரலாற்றின் உந்துசக்தி, வரலாற்றின் போக்கை நிர்ணயிப்பவர்கள் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர்.
'உலகத்து நாட்டார் கதைகள்' என்ற இவரது படைப்பு தமிழில் மீள்மொழிவு செய்து 2001 ஆம் ஆண்டு முதற்பதிப்பும் 2004 இல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்தன. இந்நூலுக்கு நூல்முகம் தந்த இ.முருகையன் அவர்கள் “நாட்டார் கதைகள் பொதுமதியின் உறைவிடம்” என்று குறிப்பிட்டுள்ளார். "இக்கதைகள் அவற்றிற்குரிய கால அடிப்படையிலே தேச அடிப்படையிலோ இங்கு தொகுக்கப்படவில்லை. காரணம், இவை கால தேச வர்த்தமானங்களைக் கடந்தவை. உலக சமுதாயத்திற்கு உரிய பொதுமைக் கருத்தியலை வெளிப்படுத்துபவை” மக்கள் இலக்கியம் என்று தனதுரையில் நீர்வைப் பொன்னையன் விளக்கியுள்ளார். இந்நூலில் 250 நாட்டார் கதைகள் அடங்கியுள்ளன. இத்தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தும் தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வாரப்பதிப்பில் வெளிவந்தவை.
இவருடைய நூல்களில் என்னை வெகுவாகக் கவர்ந்த நூல் எல்லோரும் வாசித்து வரலாறுகளை அறிந்து கொள்ள வேண்டிய நூல்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் 188

"முற்போக்கு இலக்கிய முன்னோடிகள்". எல்லோருடைய படைப்புகளையும் வாசிக்காத எம் போன்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். முன்னோடிகளைப் பற்றியும் அவர்கள் எழுதிய சிறுகதைகளையும் தந்து எழுத்துலகப் பார்வையை வியாபிக்க வைத்துள்ளார். தோழர் மு.கார்த்திகேசன் ஞாபகார்த்தமாக, அவரின் மறைவின் 25வது ஆண்டில் இந்நூல் வெளிவந்துள்ளது. இந்த நூலில் மிக நீண்ட முன்னுரையை எழுதிய நீர்வை பொன்னையன் "ஒரு எழுத்தாளன் அல்லது கலைஞன் தனது வாழ்வை, விதியை மக்களின் விதியோடு, அவர்களது விடுதலை, மேம்பாடு, மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை ஆகியவற்றுக்கான போராட்டத்தோடு இணைக்கின்றபோது தான் அவன் புனர் ஜென்மம் எடுக்கிறான். அவனுடைய படைப்புக்கள் வீரியமும் வலுவும் உள்ளனவையாக அமைகின்றன. அவனுடைய படைப்புக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தையோ குறிப்பிட்ட நாட்டையோ சார்ந்தவையாக இருக்க முடியாது. அவை சர்வ வியாபகமானவை, காலத்தை வென்றவை” என்று தெளிவான தனது கருத்தை கூறியுள்ளார்.
உலகம் ஏற்றுக்கொண்ட எழுத்தாளர் மார்க்ஸிம் கார்க்கியின் புகைப்படத்தை அட்டையில் தாங்கி வெளிவந்திருக்கும் இந்நூலில் பத்து இலக்கிய கர்த்தாக்களின் அறிமுகத்துடன் அவர்களின் படைப்பாற்றல்களின் உத்வேகத்தை நயம்பட எடுத்தியம்பியுள்ளார். மார்க்ஸிம் கார்க்கியின் 'மனிதன் பிறந்தான்', பிரேம் சந்த் எழுதிய கொஞ்சம் கோதுமை", லூசுன் தந்த 'ஒரு நிகழ்ச்சி, சரத் சந்திரர் எழுதிய மகேஷ், ஆஸ்த்றோவஸ்கி படைத்த "வீரம் விளைந்தது, தகழி தந்த தந்தையும் மகனும், அப்பாஸ் படைத்தஅநாமதேய அகதி, அசுரவேக எழுத்தாளர் ராகுல சாங்கிருத்யாயனின் 'சுமேர், முல்க்ராஜ் ஆனந்த் எழுதிய நாவிதர் சங்கம், கிருஷன் சந்தர் படைத்த முழுநிலவு ஆகிய முத்தான பத்து சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கபட்டு இவரின் நூலின் இடம் பெற்றுள்ளன.
நீர்வைப் பொன்னையனின் நாம் ஏன் எழுதுகின்றோம்?' என்ற கட்டுரைத் தொகுதியின் முதற்பதிப்பு 2004 செப்டம்பரில் வெளிவந்தது. 1970களில் வெளிவந்த 'களனி என்ற இலக்கிய சஞ்சிகையிலும், 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டு மகாநாட்டு மலராகிய "புதுமை இலக்கியத் திலும்", "விபவி” கலாசாரமையத்தின் செய்தி ஏட்டிலும் வெளிவந்தகலை இலக்கியக் கட்டுரைகளில் பதினைந்து இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது. "முற்போக்கு இலக்கியம் ஒரு வாழ்க்கை நோக்கு, அதாவது
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 89

Page 47
வரலாற்றுப் பின்னணியில் அமைந்த மக்களின் மேம்பாட்டுக்கான ஒரு சக்திமிக்க கோட்பாடு, இலக்கியம் இலக்கியத்துக்காகவே என்று கூறுகின்ற ஒரு வெறும் போக்கு அல்ல். முற்போக்கு இலக்கியம் மனிதநேயக்குரல் ஓங்காரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும்; இது கலகக்குரல். பழைய உலகை மாற்றி புதிய உலகை உருவாக்கும் உன்னத லட்சியத்துடன் முற்போக்கு இலக்கியம் படைக்கப்படுகின்றது."
இந்த இலட்சிய வேட்கையுடன் எழுத்துலகில் தடம்பதித்துள்ள மூத்த முற்போக்கு எழுத்தாளர் நீர்வைப் பொன்னையன் கம்பீரமான தோற்றத்துடன் தனது 76 வது வயதிலும் கலை இலக்கியத்துறைக்கு பெரும் பங்காற்றி உழைத்து வருகின்றார். எதற்கும் மனஞ்சோராத இந்த ஆக்க இலக்கிய கர்த்தா தொடர்ந்தும் நீண்ட காலம் தனது கலை இலக்கிய சேவையை மக்களுக்காக ஆற்ற வேண்டுமென்று இலக்கிய நெஞ்சங்கள் எதிர்பார்க்கின்றன.
ஞானம் ggᏉᏍᏈ0Ꮿl: 80ᏪᎼ
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் 90

இலக்கியத் தேடலில் முகம்மது சமீம்
மார்க்ஸிசம் ஒரு மகோன்னத தத்துவம். ஆத்தத்துவத்தை இன்றுவரை ஏற்று அதன் வழிநின்று செயற்படுகின்ற ஒரு படைப்பாளி - ஆய்வாளர் வரிசையிலே அறிஞர் அ.முகம்மது சமீம் முன்னிற்கின்றார். பள்ளிப்பருவத்தில் பயிலும் காலத்தில் இருந்து மார்க்ஸிச சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டு அந்நூல்களை எல்லாம் தேடிப் படித்தார். முக்கிய மான பல தமிழ் ஆங்கில நூல்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். திரு.க.கைலாசபதியுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த காரணத்தால் இருவரும் நெருங்கிப் பழகி ஆத்ம நண்பர்களானார்கள். இருவரும் மார்க்ஸ்பிச சித்தாந்த வாதிகள் என்ற அடிப்படையில் அவர்களின் நட்பு குடும்பு மட்டத்திலும் மேலோங்கியிருந்தது. இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள், எழுத்தாளர் மாநாடுகளில் இருவரும் சேர்ந்து பங்காற்றினார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நிறுவும் செயற்"
முற்போக்த இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் [9

Page 48
பாட்டில் இருவரினதும் பங்கு அளப்பரியது. பேராசிரியர் க.கைலாசபதி மறைந்த பிற்பாடு அவர் வழிகாட்டலில் வளர்ந்தவர்களில் சிலர் தமது சுயநலத்திற்காகத் திசைமாறிச் சென்றபோதும், அவரின் கொள்கை வழிநின்று செயற்படுகின்ற கொள்கைவாதியாக அறிஞர் அ.முகம்மது சமீம் இன்றும் திகழுகின்றார். முற்போக்கு எழுத்தாளர் சங்க முக்கிய உறுப்பினர்கள் சிலர் மரணமடைந்தும், சிலர் சுயநலவாதிகளாக மாறியமையாலும் சங்கம் (மு.எ.ச.) செயற்படாமல் இருந்து இந்நிலைமை நல்லெணி ணம் கொணி ட பற்றுறுதிபடைத்த முற்போக்காளர்களை இனங்காண முடியாத நிலைக்குத் தள்ளியது. இதை உணர்ந்த முற்போக்கு எழுத்தாளர்களாகிய அறிஞர் முகம்மது சமீம், எழுத்தாளர் நீர்வை பொன்னையன், கவிஞர் ஏ.இக்பால் போன்ற முதுபெரும் படைப்பாளிகளுடன் மார்க் ஸிச கருத்துடைய பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், நாடகவியலாளர்களும் சேர்ந்து “இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை" என்ற அமைப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் முன்னின்று செயற்படுபவர்களில் அறிஞர் அ.முகம்மது சமீமும் ஒருவர்.
வரலாற்றுத்துறையில் சிறப்புப்பட்டம் பெற்ற அ.முகம்மது சமீம் அவர்கள் அகமதுபுள்ளை - நாச்சியாஉம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக பதுளையில் பிறந்தார். ஆரம்ப காலத்திலேயே தமிழ்மொழியில் ஆர்வம் காட்டிய சமீம் அவர்கள் பேச்சுப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றதுடன், தன்னுடைய மாணவப் பருவத்திலேயே பதுளை தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகச் செயற்பட்டு, பதுளையில் தமிழ் வளர்ப்பதற்குப் பாடுபட்டார்.
நான்கு பாகங்களைக் கொண்ட 'ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சனைகள்' என்ற வரலாற்று - அரசியல் நூலை எழுதிய சமீம் அவர்கள் கல்வி, கலாசாரம், இலக்கியம் போன்ற துறைகளிலும் நூல்களையும், கட்டுரைகளையும் எழுதினார். 'விமர்சனக் கட்டுரைகள் என்ற இவரது மற்றுமொருநூல் பன்முக ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டது. இவரது 'படைப்பாளிகளும் ஆய்வாளர்களும்' என்ற நூல் இலங்கைக் கவிஞர்களையும், சிறுகதை ஆசிரியர்களையும், ஆய்வாளர்களையும் பற்றிய கட்டுரைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவர் எழுதிய 'சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' என்ற தொகுதிக்கு சாஹித்ய மண்டலப்பரிசு கிடைத்தது. முஸ்லிம் விவகாரத் திணைக்களம் இவருக்கு அறிஞர்' என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முஸ்லிம் தமிழ்மாநாட்டில் கலந்துகொண்ட இவர் அங்கும் கெளரவிக்கப்பட்டார்.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் 192

கலாசாரத்திணைக்களம் வழங்கிய கலாபூஷணம் விருதும் பெற்றுள்ளார்.
சாந்த சுபாவம் கொண்ட இவர் எல்லோருடனும் அன்பாகப் பழகும் இயல்பினர். வரவேற்று உபசரிப்பதில் அவருக்கு நிகர் அவரே, திருக்குறள், சைவசித்தாந்தம், பாரதிபாடல்கள் ஆகிய நூல்களில் தனது புலமையை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர். நிறைய வாசிப்பதால் எல்லாத்துறைகளிலும் தனது ஆளுமையை வெளிக்காட்டுவார். இலக்கியம், வரலாறு, அரசியல் சார்ந்து அவர் கதைக்கும் போது பல உதாரணங்களை எடுத்துச் சொல்லக்கூடிய மதிநுட்பம் வாய்ந்தவராக இருக்கின்றார். பல நூல்களை வாசிப்பார். அந்நூல்கள் பால் அவர் ஈர்க்கப்பட்டால் உடனே அந்நூல்கள் பற்றிய தனது நோக்கை கட்டுரையாக வடித்து பத்திரிகைகளுக்கு அல்லது சஞ்சிகைகளுக்கு அனுப்பி வைத்து விடுவார். இவரது கட்டுரைகள் பல 'தினகரன்' பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளன. "ஞானம்' சஞ்சிகைகளிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன. 'எனது இலக்கியத் தேடல்' என்ற இவரது கட்டுரை நூல் அண்மையில் வெளிவந்துள்ளது.
பேராசிரியர் க. கைலாசபதியின் 23வது ஆண்டு நினைவாக வெளியிடப்பட்ட 'கைலாசபதி தளமும் வளமும்' என்னும் நூலில் அ.முகம்மது சமீம் அவர்கள் 'கைலாசபதியின் பார்வையில் கலை இலக்கியம்' என்னும் கட்டுரையை எழுதியுள்ளார். 'கலையும், இலக்கியமும்' அவை தோன்றிய காலத்திய சமுதாயத்தைப் பிரதிபலிப்பனவாக அமைகின்றன என்பது மார்க்சிய சித்தாந்தம். கலையும் இலக்கியமும் காலத்தைப் புறக்கணித்து வாழமுடியாது. மார்க்சிய கருத்துப் படி பழமை இலக்கியம், மதம், அறம், இவையெல்லாம் மேட்டுக்குடியினர் தமக்குச் சார்பாகத் தோற்றுவித்த தத்துவங்கள். மேல்தட்டில் உள்ளவர்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதே அடிமட்டத்திலுள்ள மக்கள் உழைப்புத்தான். அடிமட்டத்திலுள்ள மக்களின் உற்பத்திச் சக்திகளும், உற்பத்தி உறவுகளும்தான் ஒரு சமூகத்தின் போக்கை நிர்ணயிக்கிறது” என்று தெளிவுபடுத்தியுள்ளார். இந்தக் கட்டுரையில் பேராசிரியர் கைலாசபதிபற்றி குறிப்பிடும் போது. "சங்க இலக்கியங்களை, மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆய்வுசெய்து தனது முடிவுகளை தமிழுலகிற்கு வைத்ததில்தான் கைலாசபதியின் மேதாவிலாசம் தெரிந்தது” என்றார்.
படைப்பாளிகளும் ஆய்வாளர்களும்' என்ற நூலில் முகம்மது சமீம் அவர்கள் பின்வருமாறு தன்னுரையில் கூறியிருப்பது ஈண்டு கவனிக்கப்பாலது. “வரலாற்றுத்துறையிலேயே மூழ்கிப் போயிருந்த நான்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 98 . ܬܵܐ

Page 49
இலக்கியத்தில் ஈடுபாடு கொள்வதற்கு முக்கிய காரணமாயமைந்த என்னுடைய சர்வகலாசாலை நண்பன் கைலாசபதிக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக இருக்கின்றேன். என்னோடு சக மாணவனாகவும் நண்பனாகவும் இருந்த சிவத்தம்பியையும் என்னால் மறக்க முடியாது. எனது ஆரம்பகால மாணவப்பருவத்தில் எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர் ஆறுமுகராசா அவர்களையும், சாஹிராக் கல்லூரியில் தமிழ் கற்பித்து, தமிழில் ஆர்வம் ஏற்படுத்திய என்னுடைய ஆசானும் எனது ப்ெருமதிப்புக்குரியவருமாகிய கமால்தீன் அவர்களையும் என்றென்றும் நினைவு கூறுகிறேன்.” என்னே அவர் பெருந்தன்மை. ஆசான்களை நண்பர்களை மதிக்கும் நற்பண்பு மிக்கவராக முகம்மது சமீம் அவர்கள் எம்முன் நிற்கின்றார். கொள்கைப் பற்றுறுதியுடன் வாழ்பவர்கள் என்றும் தம்மை மாற்றிக்கொள்ளமாட்டார்கள் என்பதன் உதாரண புருஷர் அவர். முகம்மது சமீம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியைப் பதுளை சரஸ்வதி வித்தியாசாலையிலும் பதுளை முஸ்லிம் பாடசாலையிலும் பெற்றார். பின்பு தர்மதூதக் கல்லூரியில் சேர்ந்து ஆங்கிலக் கல்வியை பயின்றார். அக்கல்லூரியில் தமிழ் மாணவர் சங்கத்தில் இணைச் செயலாளரில் ஒருவராக இருந்த முகம்மது சமீம் அவர்கள், தமிழ் கூட்டங்களையும் அரசியல் ஊர்வலங்களையும் நடத்தினார். தர்மதுரதக் கல்லூரியின் தமிழ் ஆசிரியராக இருந்த திரு.ஆறுமுகராசா தலைமையில் தமிழ் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.
'தர்மதுரதன்' என்ற சஞ்சிகையையும் இவர் நடத்தினார். முகுந்தன்' என்ற புனை பெயரில் சமீம் அவர்கள் சிறுகதைகளை எழுதினார். திருடன் வீடடைந்தான்' என்ற வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதை பலராலும் வரவேற்கப்பட்டது. லண்டன் மெட்ரி குலேசன் பரீட்சையில் சித்தி அடைந்து 1951இல் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் சேர்ந்து படித்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார். 1953 இல் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரலாற்றுத்துறையில் B.A. சிறப்புப்பட்டம் பெற்றார். இவருடைய சகமாணவர்களாகப் பல்கலைக்கழகத்தில் கைலாசபதி, சிவத்தம்பி, சோ. செல்வநாயகம் போன்றோர் இருந்துள்ளார்கள்.
இலங்கைச் சர்வகலாசாலையில் வரலாற்றுத்துறையில் பட்டம் பெற்றபின் ஐம்பதுகளில் சாஹரிரா கல்லூரியில் ஆசிரியராகக் கடமையேற்றார். 1958ஆம் ஆண்டு அக்கல்லூரியின் உப அதிபர்களில் ஒருவராகப் பதவி உயர்வு பெற்றார். அக்காலப்பகுதியில் இலக்கியக் கட்டுரைகளையும், வரலாற்றுக் கட்டுரைகளையும் எழுதத்தொடங்கினார். டாக்டர் மு.வரதராசனைப் பற்றிய அவருடைய
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 94

விமர்சனம் எல்லோராலும் பாராட்டப் பெற்றது. 1958 ஆம் ஆண்டு ஊவாக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்விழாவில் கலந்துகொண்ட சமீம் அவர்கள் பாரதியாரைப் பற்றியும் தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
சாஹித்ய மண்டலத்தின் உறுப்பினராகிய சமீம் அவர்கள், முற்போக்கு எழுத்தாளர்களை பதுளைக்கு வரவழைத்து கூட்டங்களை நடத்தினார். கவிஞர் சுபைரினால் நடத்தப்பட்ட சஞ்சிகையில் வரலாற்றுக் கட்டுரைகளை எழுதினார். பதுளைப் பிரதேசத்தில் வித்தியா தரிசியாகவும், பெரும்பாக வித்தியா தரிசியாகவும் கடமையாற்றிய சமீம் அவர்கள் பின்பு கணி டி மாவட்ட வித்தியாதரிசியாக இருந்த காலத்தில், தோட்டத் தொழிலாளர். வர்க்கத்துக்கு ஒரு கலங்கரை விளக்கமாக இருந்த திரு. இர.சிவலிங்கம் கல்லூரி அதிபராக இருந்தார். உத்தியோக விடயமாக அவர் கல்லூரிக்கும் அப்பிரதேசத்துக்கும் சமீம் அவர்கள் செல்லும் போது திரு.இர.சிவ" லிங்கத்துடன் தங்கியிருந்து தோட்டத் தொழிலாளர்களுடைய பிரச்சினைகள் பற்றியும் வேறு பல கருத்துக்கள் பற்றியும் பேசியதாக அறியக் கிடக்கிறது. அவர்மேல் கொண்ட உண்மை நட்புக் காரணமாக அவர் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்து சென்றபிறகும் அவர்கள் நட்பு நீடித்தது. பதுளையிலும், பண்டாரவளையிலும் நடந்த கலைவிழாக்களில் முகம்மது சமீம், இளங்கீரன், எச்.எம்.பி.மொகிதீன், சில்லையூர் செல்வராசன், முருகையன், எஸ்.பொன்னுத்துரை, அ.ந.அப்துல்ஸமது ஆகியோர் இப்பிரதேசத்தின் தமிழ் உணர்வை வளர்த்தனர். 1968ஆம் ஆண்டில் பதுளையில் நடந்த இலக்கிய விழாவில் பங்குபற்ற பாரதியாரின் பேத்தியும் தமிழ் நாட்டு எழுத்தாளர் கு.அழகிரிசாமியும் வந்திருந்தனர். சமீம் அவர்கள் அந்த விழாவில் பாரதியாரும் ஷெல்லியும் என்ற தலைப்பில் சிறப்பான உரையொன்றை நிகழ்த்தினார். இந்த உரையைத் தொடர்ந்து பாரதி பற்றிப் பேச இருந்த கு.அழகிரிசாமி பாரதியைப் பற்றி இவ்வளவு தெரிந்த ஒரு சபையில் கூறுவது கூறல் பொருத்தமற்றது என்று எண்ணி தனது பேச்சின் தலைப்பை மாற்றி "நாட்டுப் பாடல்கள்” என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். சமீம் அவர்கள் பாரதியைப் பற்றி பேசுவதற்கு அவர் பெற்றிருந்த ஆழமான அறிவு மற்றவர்களுடைய கவனத்தை எந்தளவுக்கு ஈர்த்துள்ளது என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்றாகும். பணி டாரவளையிலும் வித்யாதரிசியாக இருந்து கடமையாற்றினார். அரசாங்க பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியிலும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தொண்டாற்றியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிறுவும்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவகப்பிரமணியம் | 95 ,

Page 50
முயற்சியிலும் பின்புலத்தில் நின்று செயற்பட்ட ஒரு கல்வியாளன், அறிஞர் அ.முகம்மது சமீம் ஆவார். இவர் கிழக்கு மாகாணத்திலும், காலியிலும் வித்தியாதரிசியாக இருந்து கல்வி வளர்ச்சிக்காகச் செயலாற்றியுள்ளார் என அறிய முடிகிறது.
அ.முகம்மது சமீம் அவர்களின் கல்விசார் பணி அளப்பரியது. 1960 ஆம் ஆண்டு கல்வி நிர்வாக சேவைக்கு ஈர்க்கப்பட்டு கல்வி வித்தியதரிசியாக நியமனம் பெற்றார். அதே காலப்பகுதியில் கல்வி அமைச் சில் இடமாற்ற சபையின் உதவிச் செயலாளராகப் பணியாற்றினார். 1963இல் பெரும்பாக வித்யாதரிசியாகப் பதவி உயர்வு பெற்றார். 1969 ஆம் ஆண்டு பிரதம கல்வி அதிகாரியாக மட்டக்களப்பில் கடமையாற்றினார். 1970 தொடக்கம் 1974 வரை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்தார். 1975 இல் வகுப்பு 1- தரம் 1 கல்விப் பணிப்பாளரானார். 1978 ஆம் ஆண்டு அகில இலங்கை கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்றார். அக்காலத்தில் கல்வித்துறையில் புதிய போக்குகளை உருவாக்க முன்னின்று உழைத்தார்.
1980ம் ஆண்டு தற்காலிக கல்வி பிரதிபணிப்பாளர் நாயகமாக கடமையேற்றார். 1981இல் இருந்து சவுதி அரேபியா றியாட்டில் தனியார் துறையிலும், கல்வித்துறை சம்பந்தப்பட்ட பதவிகளையும் வகித்தார். 1989 ஆம் வருடம் றியாட்டில் அமைந்துள்ள இன்ரநாஷனல் இஸ்லாமிக் அக்கடமியின் பணிப்பாளரானார். 1990 இல் இலங்கைக்குத் திரும்பிவந்த முகம்மது சமீம் அவர்கள் சாஹரிராக் கல்லூரியின் அதிபராகப் பணியேற்றார். இளைப்பாறிய பின் ஒரு இன்ரநாஷனல் கல்லூரியை அமைத்து நடத்தி வருகின்றார்.
அவர் தன் எழுத்துலக வாழ்க்கையைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "நான் எழுத்துலகில் புகுவதற்கு முக்கியமாக இருந்தவர் கைலாசபதிதான். சர்வகலாசாலைப் படிப்பை முடித்துக்கொண்டு சாஹிரா கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் கைலாஸ், சிவத்தம்பி, நான் மூவரும் தினமும் பின்னேரங்களில் சந்தித்து இரவு வெகுநேரம்வரை இலக்கியம் சம்பந்தமான சர்ச்சைகளில் ஈடுபடுவோம். அவ்வேளையில் தான் வரலாறு சம்பந்தப்பட்ட கட்டுரைகளை எழுதும்படி கைலாசபதி என்னைத் தூண்டினார். வரலாறு கண்ட முஸ்லிம் பெரியார்கள், இஸ்லாமிய கலாசாரம், இளப் லாமிய தத்துவஞானம், முஸ்லிம் திருமணச் சம்பிரதாயங்கள் மற்றும் இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகளையும் எழுதினேன்.”
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 96

"பேரினவாத அரசாங்கத்தின் இனவாதக் கொள்கைகளினாலும், அட்டூழியங்களாலும், அடக்கு முறையாலும் தமிழ் முஸ்லிம் மக்கள் பட்ட கஷ்டங்களை பார்த்துக் கொண்டிருக்கச் சகிக்காமல், நான்கு பாகங்களைக் கொண்ட 'ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள்' என்ற நூலை எழுதினேன். இந்நூலுக்கு சாஹித்ய மண்டலப் பரிசு கிடைத்தது. சென்னையில் நடந்த அகில உலக இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் கெளரவிக்கப்பட்டேன். இலங்கையில் முஸ்லிம் விவகார அமைச்சினால் விருதுகள் பல பெற்றேன். "கலாபூஷண” விருதும் என்னைத் தேடிவந்தது. கொழும்பில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டில் கெளரவிக்கப்பட்டேன். எனது 'படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் என்ற நூலுக்கு கிழக்கு மாகாணப் பிரதேச சபையினால் சாஹித்ய பரிசு வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகத்திற்குள் இருந்து ஆற்றமுடியாத பெரும் கல்விச் சேவையை வெளியிலிருந்து தன் ஆளுமையால் பலரும் மெச்சத்தக்க வகையில் மேற்கொண்டார். அந்தவகையில் கல்விசார் சமூகத்தின் மனங்களில் அழியா இடம் பெற்றுள்ளார். தொடர்ந்தும் அவர் எழுதும் ஆழமான அறிவுசார் கட்டுரைகள் கனதியாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
அறிஞர். அ.முகம்மது சமீம் அவர்கள் தன்னைப்பற்றி விளம்பரப்படுத்த விரும்பாதவர். அமைதியாக இருந்து இலக்கியப் பணி ஆற்றுபவர். அவர் தனது மனதிற்குப் பிடித்த இலக்கியவாதிகளை 'படைப்பாளிகளும் ஆய்வாளர்களும்' என்னும் நூலில் வெளிக்காட்டியுள்ளார். தனது ஆழ்ந்த அறிவின்பால் நின்று தனது கருத்துக்களைத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நூலில் பலதரப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர்களை பற்றி எழுதிய கட்டுரைகளில் தனது நண்பர் தான்தோன்றி கவிராயர் சில்லையூர் செல்வராசா பற்றி மூன்று கட்டுரைகளைத் தந்துள்ளார். "சில்லையூர் செல்வராசாவின் கவிதைகள் - ஒரு ரசிகனின் பார்வையில் என்ற முதல் கட்டுரையில் கவிதையே தனது வாழ்க்கையாகி விட்டதை கவிஞன் சொல்கின்றான்.
"ஆன7” என்றே7ரெழுத்தை அழித்தழித்தம் மணல் மிது அன்றெழுதப் பயிற்ற, இன்றே7 பேன7வைப்படித் தெழுதும் உரையெழுத்தும் கவியெழுத்தும் தலையெழுத்த7ய் மிழைப்ப7ய்க் கொணர்டேன்”
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 97

Page 51
மேற்கூறிய கவிதைமேல் கட்டுரையாசிரியருக்கிருந்த ஈடுபாடு புலனாகின்றது. 'பாரதியின் கவிதை மரபில் வந்த ஈழத்துக் கவிமணி சுபையர்', 'கவிஞர் அன்பு முகைதீனின் உத்தம நபி வாழ்வில் என்னும் கட்டுரையும் அவர் நூலில் இடம்பெற்றுள்ளன.
சிறுகதை ஆசிரியர்களைக் குறிப்பிடும் போது என்.கே.ரகுநாதன் பற்றி இரணர்டு கட்டுரைகளும், புதுமைப்பித்தன் பற்றி மூன்று கட்டுரைகளும், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் பற்றி ஒரு கட்டுரையும் இடம்பெற்றுள்ளன.
"புதுமைப் பித்தனுடைய கதைகளையும் கட்டுரைகளையும், கவிதைகளையும் வாசித்த நான் அவருடைய கடிதங்களை வாசிக்கும்போது என்னுள்ளிருந்த "வரலாற்று ஆய்வு" அவரை வேறொரு கண்ணோட்டத்தில் நோக்கத் தூண்டிவிட்டது. புதுமைப்பித்தன் என்ற புனைபெயரைக் கொண்ட விருத்தாசலத்தின் உள்மனத்தை அறிய அவர் கடிதங்கள் உதவின." என்கிறார் கட்டுரை ஆசிரியர்.
"ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் "அவலும் சில வருடங்களும் என்ற இந்நாவலை விமர்சனம் செய்வதன் மூலம் புலம் பெயர்ந்த தமிழர்களுடைய வாழ்க்கையைப் பற்றி எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை ஒரு வரப்பிரசாதமாக என ரிை இக்கட்டுரையை வரைந்தேன்" என்று கூறுகிறார்.
ஆய்வாளர்கள் வரிசையிலே பேராசிரியர் கைலாசபதியை முன் நிறுத்தி. 'கைலாசபதியும் முற்போக்கு இலக்கியமும், 'கைலாசபதியின் வீரயுகம் பற்றிய ஒரு ஆய்வு' ஆகிய இரு கட்டுரைகளையும் மற்றும் பேராசிரியர் சிவத்தம்பியின் இரண்டு கட்டுரைகளையும், இரசிவலிங்கம் - மலையக மக்களின் மறுமலர்ச்சித் தலைவன்' என்ற கட்டுரையுடன் மொத்தமாக 16 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவருடைய நூலில் அறிஞர் முகம்மது சமிம் அவர்களுடைய பன்முகப் பார்வை, ஆழ்ந்த நோக்கு பகுத்தறியும் தன்மை என்பவற்றின் மூலம் சிறந்த ஒரு விமர்சகராக மிளிர்கின்றார் என்று சொன்னால் அது மிகையாகாது. "எனது இலக்கியத்தேடல் என்ற இவரது ஆய்வுக்கட்டுரை நூலில் புதிய எழுத்தாளர்களுடைய படைப்புக்களையும் விமர்சன நோக்கில் அவதானித்துள்ளார். வெகு விரைவில் அவருடைய நூல்கள் இரண்டு வெளிவரவிருக்கின்றன என்ற அறிவித்தலுடன், தொடர்ந்தும் சோர்வின்றி தமது இலக்கியப் பணியை மேற்கொள்ள வேண்டுமென்று இந்த மார்க்ஸிய சிந்தனையாளரை வேண்டி நிற்கின்றோம். அவர் பணி தொடரட்டும்.
ஞானம் Trio -SELJPG முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் 198

*、
போராளிக் கவிஞர் சுபத்திரன்
சொல்லிலும் செயலிலும் வழுவாத ஒருவராக வாழ்ந்தவர் கவிஞர் சுபத்திரன். முற்போக்குத் தளத்தில் நின்று மக்கள் விடுதலைக்காக உழைத்" தார். மக்களுக்காக மக்கள் கவிஞராக வாழ்ந்து கவிதைகளைப் படைத்தார். அத்தகைய மனித நேயம் கொண்ட சுபத்திரன் அவர்கள் மறைந்து இருபத்தேழு வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. அவர் மறைந்தும் மறையாமல் மக்கள் நெஞ்சங்களில் வீற்றிருக்கின்றார்.
மட்டக்களப்பு நகரில் 1935ஆம் ஆணிடு கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதியினருக்கு புத்திரராக அவதரித்தார். தங்கவடிவேல் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் "சுபத்திரன்" என்ற புனைப்பெயருடன் இலக்கியத் துறையில் அறிமுகமாகின்றார். பயிற்றப்பட்ட ஆசிரியரான இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுபத்திரா என்பவரை திருமணம் செய்து ஐந்து ஆணர்பின்ளைகளுக்குத்
தந்தையானார்.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் |ந.சிவசுப்பிரமணியம் 199

Page 52
இலங்கையில் தமிழ்க் கவிதை உலகைப் பொறுத்தவரை, முற்போக்கு இலக்கியப் பாரம்பரியம் அ.ந.கந்தசாமி அவர்களுடன் ஆரம்பமாகின்றது. 1940களில் முற்போக்கு இலக்கிய பாரம்பரியத்தின் தோற்றத்தை இனங்காண முடிந்தாலும், அப்பாரம்பரியத்தின் முழு" மையான எழுச்சியை 1960களிலேயே தெளிவாகக் காணலாம். இந்த முற்போக்கு எழுச்சியினால் உத்வேகம் கொண்ட இலக்கியவாதிகளில் சுபத்திரனும் ஒருவர். 1960 களின் முற்பகுதியில் தன்னை ஒர் முற்போக்குக் கவிஞராக அடையாளப்படுத்தி சுபத்திரன் முன்னெழுகின்றார்.
தான் ஏற்றுக் கொணி ட முற்போக்கு இடதுசாரி இயக்க சென்நெறிகளில் ஆழக்கால்பதித்து, அத்தளத்தில் பற்றுறுதியுடன் நின்று இலக்கியம் படைத்தார். தான் ஏற்றுக் கொண்ட கொள்கையை நடைமுறைப்படுத்த அதற்குரிய தாபனத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டார். அந்த வகையில் அரசியலோடு தன்னை இணைத்துக் கொண்ட ஒரு இலக்கியவாதியாகவே அவரைக் காண வேண்டியுள்ளது.
சுபத்திரனுடைய கவிதைகள் பன்முகப் பரிமாணங்களை கொண்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. கட்சிக் கவிதைகள், அரசியல் கவிதைகள், பொதுவான கவிதைகள், அக உணர்வுக் கவிதைகள் என்று பல்வகைப்பட்ட கவிதைகளை யாத்துள்ளார். கட்சிக் கவிதைகள் கட்சியின் தேவையைக் கருத்திற் கொண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையாகிய “தொழிலாளி"யிலேயே வெளிவந்தன. சுபத்திரனின் அரசியல் கவிதைகள் மிக இறுக்கமான தன்மையைக் கொண்டனவாக அமைந்துள்ளன. மேலும் சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான கவிதைகளையும் சுபத்திரன் ஆக்கியுள்ளார். தமிழ் நாட்டில் தலித் இலக்கியம் தலையெடுப்பதற்கு முன்பே சுபத்திரன் சாதி எதிர்ப்புக் கவிதைகளைத்தந்துள்ளார். அவை மிகவும் காத்திரமான படைப்புகளாக முன்னெழுந்துள்ளன.
சுபத்திரன் கிழக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டாலும் 1960களின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சாதியத்திற்கும், தீண் டாமைக்கும் எதிரான போராட்டத்தில் பங்காளியானார். போராட்டம் தீவிரமடைந்த வேளை போராடிய மக்களுக்காக தனது கவிதைகள் மூலமாக குரல் எழுப்பினார். 1969 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற "தீணி டாமை ஒழிப்பு வெகுஜன மகாநாட்டில்” வைத்து முழுக்க முழுக்கச் சாதிய எதிர்ப்புக் கவிதைகள் அடங்கியதான சுபத்திரனின் "இரத்தக்கடன்" என்னும் கவிதைத் தொகுதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் | 100

சுபத்திரன் பிறப்பால் உயர்குடியைச் சேர்ந்தவராக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவராகத் தன்னை இருத்தியே அவர் தமது சாதி எதிர்ப்புக் கவிதைகளை எழுதினார். சுபத்திரன் ஏற்றுக் கொண்ட மார்க்சிய லெனினிச சித்தாந்தமே இதற்குக் காரணமாக அமைந்தது. சொல்லாலும் செயலாலும் பொதுவுடமை வாதியாகவே வாழ்ந்து காட்டினார். தான் இணைந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ள போலி இடதுசாரிகளுக்கு எதிராக அவருடைய அரசியல் கவிதைகள் 1970 களில் வெளிவருவதைக் காணலாம். இருந்தும் இடதுசாரிக் கொள்கைகள் மீதான அவரின் பற்றுறுதி எள்ளளவும் குறையாமல் இருந்தமையை எழுபதுகளில் அவர் எழுதிய கவிதைகளில் தரிசிக்கலாம்.
பொதுவாசகர்களுக்கு சுபத்திரன் எழுதிய கவிதைகள் அவரின் கவிச்சிறப்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. அத்துடன் அக்கவிதைகள், லாவகமாக்கும் அவர் திறமையை பறைசாற்றி நிற்பதை அவதானிக்கலாம். அக உணர்வு சார்ந்த சுபத்திரனுடைய கவிதைகள் அவர் மனதில் உருவாகிய உணர்ச்சிவயப்பட்ட நிலையை எடுத்துக் காட்டுவனவாக அமைந்திருப்பதை நோக்கலாம்.
சுபத்திரனுடைய கவிதைகளில் நாம் இனம்காண வேண்டிய ஒரு சிறப்பம்சம் உண்டு. எவர் பொருட்டு அவர் தன் கவிதைக் குரலை ஒலித்தாரோ அவர்களில் ஒருவராக தன்னை நிறுத்தியே தனது குரலை அவர் ஒலித்துள்ளார். உதாரணமாக அவரின் "இரத்தக் கடன்” என்ற கவிதையில்.
"இரத்தக்கடன் மிக உண்டடா அதை இல்லையென் பான் இங்கு யாராடா? இரத்தக் கடன் தனை மீட்பது என எண்ணி விட்டோம் இனிப் பாரடா” என்று பாடும் போது சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக நின்றே தன் குரலை எழுப்புகின்றார். “பாரதத்தாய் விழித்தெழுவாள்” என்ற கவிதையில் தான் ஏற்றுக் கொண்ட சர்வதேசிய வாதத்திற்கு ஏற்ப பாரத பாமர மக்களில் ஒருவராக நின்று தன்னை நிலை நிறுத்தி கவிபாடுகின்றார். "ஒரு சித்தாத்தன் நிர்வாணம் அடைகின்றான்” என்ற படைப்பில் படித்துவிட்டு வேலையற்றிருக்கும் ஒரு இளைஞனாகத் தன்னை வெளிப்படுத்துகின்றார். மேலும், தெருவில் பொறுக்கி உண்ணும் பிச்சைக்காரர்களில் ஒருவராக நின்று “கெளரவம்" என்னும் கவிதை மூலம் வெளிப்படுகின்றார்.
சுபத்திரன் தானாக நின்று குரல் எழுப்பும் பண்பைக் கொண்டவ"
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் | 101

Page 53
ராக இருப்பதால், அவர் ஆக்கங்களில் கவிதை உணர்வும் அதன் அழகியலும் வெளிப்படுவதை அவதானிக்க முடிகின்றது. யாருக்காகக் கவிதைகளை எழுதினார் என்பதைப் பொறுத்தே, வடிவமும் பொருளும் அமைந்துள்ளன. தானும் பாத்திரமாக மாறும் உத்தியை அவரின் கவிதைகள் தெரிவிக்கின்றன.
துணிவுமிக்கவரான இவரின் ஆதங்கம் "அடிமை விலங்கும்
ஆயுதமும்” என்ற கவிதையில் காணலாம்.
"அடிமை விலங்கு அறுப்போம்
அதில்
ஆயுதங்களைச் செய்திடுவோம்
கொடுமை மிக மலிந்த
இந்தக்
குவலயத்தை மாற்றிடுவோம்” இக்கவிதை மூலம் பரந்த அவருடைய உலகப் பார்வை தெளிவாகின்றது. "நான்” என்ற மகுடம் தாங்கிய கவிதையிலே உரிமைப் போராட்டத்தின் தார்ப்பரியமும் அதைக் கொண்டு நடத்துபவன் எவ்வித பெருமைக்குரியவன் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். வாசகனைச் சிந்திக்க வைக்கின்ற கவிதை அடிகள் கவிஞரின் எண்ணக் கருவூலமாக மேலெழுந்து நிற்பதைக் காணலாம்.
"ஒரு கோடி கவிதைகளால்
உலகம் போற்றும்
பெருங்கவிஞன் என நாமம்
பெற்றாலும் அஃது
ஒருசொட்டு இரத்தத்தை
உரிமைப் போரில்
தருபவனின் புகழ்முன்னே
தூசு தூசு!"
1964 ஆம் ஆண்டு "தொழிலாளி” என்ற பத்திரிகையில் எழுதிய
கவிதைகள் மார்க்சிய சிந்தாந்தத்தின் மேல் அவர் கொண்டிருந்த பற்றுறுதியை தெட்டத் தெளிவாகக் காட்டி நிற்கின்றன. அதுவே விடுதலைக்கான விடிவெள்ளியாக அவர் எண்ணுகின்றார். மார்க்சியம் தெரியாதவர்களுக்கும் தனது கவிதை வரிகளால் தெளிவுபடுத்த முனைகின்றார். "மார்க்சிஸமே மறமலரே" என்ற கவிதையில் பின்வருமாறு கூறுகின்றார்.
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் | த.சிவசுப்பிரமணியம் ( 102

மாக்ஸ் கணிட தத்துவத்தை
மேடையேற்றி
ஆக்கெமனும் அணிகலனால்
அழகு செய்து
வாக் கொளியால் திரிபுக்கு
வெடிகள் வைத்து
போக்கற்ற ஏழைகளைப்
பேணிக்காத்து
தூக்கத்தில் இருந்தவற்குத்
துணிவு ஊட்டி
தாக்க வந்த எதிரிகளைத்
தரையில் வீழ்த்தி
பூக் கட்டும் புதுப்புரட்சி
புதுமை நோக்கி
ஆக்கட்டும் புது உலகம்
என்று சொன்ன
தீக் கதிரே செங்கொடியே
லெனினே தூய
மாக்சிஸமே மறமலரே
அறிவே உம்மைப்
பாக் கொண்டு போற்றுவதற்குப்
பாரில் இன்று
மாஒவின் கவிக்குத்தான்
சக்தியுண்டு
இதில் மார்க்சிசத்தின் மேல் அவர் கொண்ட தெளிவுபுலனாகின்றது. பெருந்தொகையான கவிதைகளை எழுதிய முற்போக்குக்
கவிஞனின் "இரத்தக்கடன்"கவிதைத் தொகுதியின் பின், நீண்ட கால இடைவெளியில் அதாவது, இருபத்தெட்டு வருடங்களுக்குப் பின் "சுபத்திரன் கவிதைகள்” தொகுப்பு வெளிவந்துள்ளது. இத்தொகுப்பை பூவரசுகள் மட்டக்களப்பில் இருந்து வெளியிட்டுள்ளனர். மக்கள் கவிஞர் மக்கள் மனங்களில் என்றும் நிலை பெற்றிருப்பார். தன் நண்பர் பசுபதி (யாழ்ப்பாணக் கவிராயர்) பற்றி அவர் மறைவுக்குப் பின் பின்வருமாறு கவிதையால் கூறுகின்றார். * :
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் த.சிவசுப்பிரமணியம் I03

Page 54
யாழ்ப்பாணக் கவிராயர் என்று புரட்சி யாப்புக்குள் கவிசெய்த தோழா ! வாழ்க்கைக்கு முற்றிட்டுச் சென்றாய் நீ வைத்திங்கு சென்ற கவி வாழும்! சக கவிஞர்களையும் மதிக்கும் பண்பாளனாகச் சுபத்திரன் இங்கே மிளிர்கின்றார்.
விவசாயிகளை ஆண்டவனாகத் தரிசிக்கும் சுபத்திரனின் கவிதை ஒன்று 1963 களில் "தொழிலாளி”ப் பத்திரிகையில் பிரசுரமாகியது.
காட்டை வெட்டி களமாக்கி அதைக் கதிர்கள் கொட்டும் தலமாக்கும் நாட்டின் இறைவன் விவசாயி ஏன் நன்றி மறந்தாய் முதலாளி என வர்க்கப் பார்வையில் தன் கருத்துக்களை சுபத்திரன் வெளிக்காட்டுகின்றார்.
அன்னை நாட்டை காப்பவனே அதை பசியில் நின்று மீட்பவனே அனைத்தும் நீதான் அமுதூட்டும் எம் ஆண்டவன் நீதான் நீவாழ்க என்று பாடுபட்டு உழைக்கும் விவசாயியைப் போற்றுகிறார்.
இத்தகைய முற்போக்கு எண்ணங்களைக் கருத்தில் கொண்டு, இலட்சிய உறுதியுடன் கவிதைகளைப் படைத்த மக்கள் கவிஞர் சுபத்திரன் தமது 44 வது வயதில் மறையும் வரை எழுத்தை மறக்கவில்லை. அத்தகைய இலட்சியக் கவிஞரை இளம் சமுதாயத்தின. ருக்குக் காட்ட வேண்டியது இலக்கியத் தளத்தில் உள்ளவர்களின் பொறுப்பு, அந்த வகையில் விபவி கலாசார மையமும், முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து ஆய்வுக் கருத்தரங்கு மூலம் சுபத்திரன் என்ற படைப்பாளியின் படைப்பு ஆளுமையை பல நிலைகளிலும், பல கோணங்களிலும் ஆய்வு செய்ய முன்வந்தமை போற்றப்பட வேண்டியதாகும். சுபத்திரன் எனும் முற்போக்குக் கவிஞர் என்றும் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
தினகரன்
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் தசிறுதுஷ்பிரமணியம் | 104


Page 55
ஒடுக்குமுை தளத்திலே தரும் ஒவ்ெ பங்குகளை ցքրքիրքերի துள்ளது. நுழைவுப் 暈_員_喬QLD」 குரிய மொ முறைமையி மாணத்தை Այդ 6 սոցիա: நிகழ்கின்றது
றுள்ளன.
வாசகர்களும் கொள்ளும் தொகுப்பு
களுக்கும் அறிந்து கெ களைத் தே
 
 
 

றக்கு எதிரான கருத்தியல் நின்று புதிய சாத்தியங்களைத் வாருவரதும் ஆளுமைப் பன்முகப் Tպմ Յու0ւի հարցերի: G புனைவு வேலைப்பாடு அமைந் ஆளுமையின் பரிமானங்களையும் புள்ளிகளையும் வரன் முறையான க்குள்ளே கொண்டு வருவதற் h a looու நூலாசிரியரது கட்டுரை ன் செயலுக்க Active if காட்டுகின்றது. இவற்றினூடாக ன் தொடர் Τσαρεσκε"
Těstuf un. gigung
காலந்தொட்டு இன்றுவரை அனுதாபியாக இருந்துவரும் ல
விமர்சனம் னைவு சஞ்சிகை னப் பல்வேறு தளங்களில் முகங் தொடர்ந்தும் எழுதிக் கொன ர். அவர் அவ்வப்போது பத்திரி சஞ்சிகைகளிலும் எழுதிய கட்டு ப்பொழுது நூலாகி பெற் இலகுவான நடையில் பொது மாணவர்களும் விள வகையில் எழுதப்பட்ட இந்நூல்த் வாசகர்களுக்கும் மான Pற்போக்கு இலக்கியகாரர். ள்வதற்கும், அவர்களது ஆக்கங் பப்படிப்பதற்குமான ஆர்வத்தை என்பதில் ஐயமில்லை
கலாநிதிவல்லிபுரம் மகேஸ்வரன்
ISBN 978-955-501.15-0.