கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீர்வை பொன்னையன் கதைகள்

Page 1

TGGGGG
கதைகள்
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை

Page 2


Page 3

நீர்வை பொன்னையன் சிறுகதைகள்
நீர்வை பொன்னையன்
6ીoleflif(b இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை

Page 4
நூல்
தொகுப்பு
பதிப்புரிமை
வெளியீடு
வெளியீட்டுத் திகதி
பக்கங்கள்
அச்சுப்பதிப்பு
6606)
: நீர்வை பொன்னையன் சிறுகதைகள்
: 61.6lyrtGogu IIT
எம்.கே.முருகானந்தன்
: நீர்வை பொன்னையன்
: இலங்கை முற்போக்கு
கலை இலக்கியப் பேரவை I, இராஜசிங்க வீதி, கொழும்பு-06
OO42OO7
: 258
: டெக்னோ பிறிண்டர்ஸ்
55, Dr. E.A. குரே மாவத்தை, கொழும்பு - 6. தொ.பே : O777-3O1920
: 250/=
ISBN 978-955-50216-O-9

சமர்ப்பணம்
மானிட நேயக் கலை இலக்கியவாதி
வ.இராசையா மாஸ்ரர் அவர்களுக்கு.

Page 5

தொகுப்புரை
இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராகிய நீர்வை பொன்னையன் படைத்த சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த சில கதைகளின் தொகுப்புத்தான் உங்கள் கையிலிருக்கும் இந்நூல். கிட்டத்தட்ட கடந்த ஐந்து தசாப்தங்களாக ஈழத்து முற்போக்கு இலக்கியத் துறைக்கு பெரும் பங்களிப்பாற்றிய இவர் ஏற்கனவே ஐந்து சிறுகதைத் தொகுப்பு நூல்களையும் முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் என்ற நூலையும் நாட்டார் கதைத் தொகுதி ஒன்றையும் நாம் ஏன் எழுதுகிறோம் என்ற கட்டுரைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்.
ஈழத் தமிழ் இலக்கியத்தின் புத்தெழுச்சிக் காலகட்டமாகிய அறுபதுகளில் மொட்டு விரிந்த படைப்பாளி நீர்வை கடந்த ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்தும் வாடாது மணம் வீசிக் கொண்டிருக்கும் படைப்பாளியாக தன்னை நிலை நிறுத்தியுள்ளார். கால ஓட்டத்தினால் வற்றாத படைப்பாற்றல், நீர்த்துப் போகாத புதுமை நிறைந்த, மக்கள் சக்தியில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளராக திகழ்கிறார்.
இது ஒரு சாதாரண சிறுகதைத் தொகுப்பு நூல் அல்ல. இவர் எழுதிய சிறுகதைகள் அனைத்தையும் ரசித்துப் படித்து, நுணுகி ஆராய்ந்து, மிக அவதானமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு இது என்பதால் சிறப்படைகிறது.
எல்லோரும் சகல வளங்களும் பெற்றுச் சிறப்பாக வாழ வேண்டும் எனும் பொதுஉடமை நோக்கை தனது வாழ்வின் உறுதியான, தகர்க்க முடியாத அடிப்படை இலட்சியமாகக் கொண்டவர் நீர்வை.
சாதி அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பு, கோயில், சடங்கு, சம்பிரதாயம் ஆகியன இணைந்த வாழ்க்கை முறை கொண்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் பிறந்தவர் இவர். முற்போக்கு இடதுசாரிச் சிந்தனைகளும், தொழிலாளர் போராட்டங்களும் செறிந்த கல்கத்தாவில் தனது பட்டப் படிப்பை மேற்கொண்டார். இலங்கை திரும்பியதும் குறுக்கு வழிகளில் உத்தியோகம் தேட முனையாதலால் தொழிலற்ற
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -5-

Page 6
பட்டதாரியானார். சொந்த ஊரில் விவசாயம் செய்தார். பின் ஒரு இடது. சாரிக் கட்சியின் முழுநேர ஊழியராக தீவிரமாகப் பணியாற்றினார். இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராக சிறிது காலம் பணியாற்றினார். போரின் உக்கிர காலத்தில் தனது சொந்த ஊராகிய நீர்வேலியில் தங்கியிருந்து சமூக சேவைகளில் ஈடுபட்டார். இப்பொழுது விபவி கலாச்சார மையத்தில் தமிழ்த்துறைக்கு பொறுப்பாக கடமையாற்றி வருகிறார்.
இலங்கை முதல் இந்தியா வரையான பரந்த களத்தில் பல்வேறு இயங்கு தளங்களில் பெற்ற அனுபவங்களும், முற்போக்கு சிந்தனைகள் பற்றிய கற்றறிவும் பட்டறிவும், நவீன இலக்கியங்களுடனான பரிச்சயமும் இவரது படைப்புகளைச் செழுமையாக்க உதவியிருக்கின்றன என்றால் மிகையாகாது.
கிராமிய மக்களுடனும், தொழிலாளர்களுடனும் இணைந்து வாழ்ந்து, அவர்களது அன்றாட வாழ்வுப் பிரச்சினைகளில் கலந்து கொண்டவர் இவர். அத்துடன் கட்சிப் பணிகளுக்கு ஊடாக தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் போராட்டங்களையும் நன்குணர்ந்தவர். தான் பெற்றுக் கொண்ட தேடலும், அனுபவங்களும், அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும், அவர்களது வாழ்வியலை மேம்படுத்த வேண்டும், என்ற உயர்நோக்கத்தையும், ஆர்வத்தையும் இவரிடம் வளர்த்தன. இந்த இடர்களிலிருந்து எமது சமுதாயத்தை விடுவித்து, புதியதோர் சமுதாயத்தைப் படைத்து எல்லோரும் எல்லாம் பெற்று வாழ வேண்டும் என்ற இலட்சியத்தை நோக்கி நகரவைப்பதற்காக சிறுகதைகளையும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தினார். அதன் அறுவடைதான் இவரது படைப்புகளும் அவற்றின் தொகுப்புகளான சிறுகதை நூல்களுமாகும்.
மேடும் பள்ளமும், உதயம், பாதை, வேட்கை, ஜென்மம் ஆகியன இவரது சிறுகதைத் தொகுதிகளாகும்.
பொன்னையனுடைய சிறுகதைகள் பொழுது போக்குக்காகவோ வாசிப்பு இரசனைக்காகவோ, உள்ளக் கிளர்ச்சிக்காகவோ படைக்கப்படுபவையல்ல. அவை ஒவ்வொன்றும் வாழ்வியலை நெறிப்படுத்தும் அற்புத ஒளடதங்கள். படிப்பவர்களது சிந்தனையை சரியான பாதையில் வழி காட்டுபவை.
இவர் சமுதாய நோக்குடையவராக இருந்தபோதும், தீவிர போராட்டம், மக்கள் எழுச்சி போன்ற நேரடிப் பங்களிப்புடன் கூடிய சமூகப் போராளியான முற்போக்காளராக வாழ்ந்த போதும், தனது
-6- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

கலையுணர்வை இழக்கவில்லை. இவ்விடத்தில் தனது பல சமகால முற்போக்கு எழுத்தாளர்களிலிருந்து மாறுபடுகிறார். இவரது ஆரம்ப காலக் கதைகள் (மேடும் பள்ளமும் தொகுதிக் கதைகள்) மிகுந்த கலையுணர்வும், பரீட்சார்த்த உத்திகளும், வித்தியாசமான வடிவங்களையும் கொண்டிருந்தன. ஆயினும் தீவிர அரசியல் ஈடுபாட்டைக் கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்ட கதைகளில் பல (உதயம், பாதை தொகுதிகள்) தீவிர அரசியல் பார்வையும், பிரசார தன்மையும் முனைப்புற்றிருந்ததை மறுக்க முடியாது. ஆயினும் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த காலத்தில் கூட வேப்பமரம், எரிசரம், உதயம், சங்கமம், சுயம்வரம், ரத்தக்கடன் போன்ற சிறந்த கதைகளைப் படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்வை பொன்னையன் தனது படைப்புகளுக்குப் பாடுபொருளாக பல்வேறு பிரச்சனைகளையும், வித்தியாசமான களங்களையும் எடுத்தாண்டுள்ளார். ஆயினும் "மார்க்ஸியப் பாதையில் சென்று கொண்டிருக்கின்ற முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாம் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகவும், சுரண் டலுக்கும் சூறையாடலுக்கும் எதிராகவும் குரலெழுப்பி உத்வேகமூட்ட வேண்டும்." என்ற லட்சியத்தைக் கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் இவரது படைப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களாகிய தொழிலாளர்கள், நிலமற்ற விவசாயிகள், சாதியால் தாழ்த்தப்பட்ட மக்கள், பால் ரீதியாக அடக்கப்படும் பெண்கள், வஞ்சிக்கப்படும் குழந்தைகள், இனரீதியாக அடக்கப்படும் தமிழ் மக்கள் ஆகியோரின் பிரச்சினைகளையும், அவ் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் எழுச்சிகளையும் போராட்டங்களையும் சித்தரிப்பதில் முக்கிய கவனமெடுத்துள்ளன.
இந்த வகையில், தொழிலாள வர்க்கத்தினரது பிரச்சனைகள் என்று பார்க்கும் போது மில்தொழிலாளர்கள், பீடி சுற்றும் தொழிலாளர்கள், நெசவாளர்கள், பஸ் தொழிலாளர்கள், கடைச்சிற்றுாழியர்கள் அரச நிறுவனத் தொழிலாளர்கள் என பலவகைப்பட்ட தொழிலாளர்களைத் தனது படைப்புகளின் நாயகர்களாக ஆக்கியுள்ளார். அவற்றுள் வகை மாதிரியான சங்கமம், எரிசரம் ஆகிய இரு நல்ல கதைகள் இத் தொகுப்பில் இடம் பெறுகின்றன.
சந்தையில் மரக்கறி விற்கும் பெண்ணுடன் சம்பாசிப்பதில் ஆரம்பித்து, பின்னோக்கி நகரும் கதை எரிசரம். சோமாவதி என்ற போர்க்குணமிக்க சிங்களப் பெண் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மாத்தறையில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் முன்னணியில் நின்று
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் 7

Page 7
போராடிக் காயம் பட்டதை மிகவும் சுவாரஸ்யமாக விஸ்தரிக்கிறார். தொழிலாளர் வர்க்கம் என்பது இன, மத, மொழி, பிராந்திய அடையாளங்களைக் கடந்தது என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் கதை. ஆயினும் அக்காலத்தின் நம்பிக்கைக்குரிய கருத்தாக இருந்த அது, இன்று சரித்திரமாகிவிட்டது. "சங்கமம்" தொழிற்சங்கத்தில் சேரமறுக்கும் நல்ல உழைப்பாளியான ஒருவன் தானாக மனம் மாறி இணைவதை பிசிறின்றிச் சொல்கிறது.
"குடிமைகள்" யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பின் ஒரு சாபக்கேடு: விவசாயம் சார்ந்த யாழ்ப்பாணத்து சமூக அமைப்பில் சிறு நிலவுடைமை" யாளரும் குடிமக்களும்தான் முக்கிய அங்கமாவர். இங்கு குடிமைகள் பொருளாதார ரீதியாகவும், சாதீய ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் சுரண்டப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்டதை, யாழ் விவசாய சமூகத்தின் பிரதிநிதியான பொன்னையன் சிறுவயது முதலே அனுபவித்து துயரமும், கோபமும், ஆவேசமும் கொண்டுள்ளார்.
இதனாற் போலும் விவசாய மண்ணும், அதன் பசுமையான பயிர்களும், கிராமியத்தின் பண்பாட்டுக் கோலங்களும், இணைந்து வரும் ரம்யமான களத்தில், நயினார்களின் அடாவடித்தனங்களையும், துயர்களையும் கதையாக்கும் போது நீர்வையின் கலையுணர்வும், சொல்லாடலும் மிக அற்புதமாக அமைந்து விடுகின்றன. நீர்வையின் மிகச் சிறந்த மூன்று கதைகளைத் தேர்ந்தெடுத்தால் அவை மூன்றும் நிச்சயம் கிராமியம் சார்ந்ததாகவே இருக்கும்.
நிலமற்ற யாழ் ஏழை விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சிவிடுவ" துடன் நின்றுவிடாது, அவர்களது பெண்களையும் எவ்வாறு சூறையாடுகிறார்கள் என்பதை "மேடும் பள்ளமும்” என்ற சிறுகதையில் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் எடுத்துக் காட்டுகிறார். அல்லட்பட்ட சமூகம் அதனை உடைத்தெறிய ஒன்றிணைவதையும் அக்கதை சுட்டி நிற்கிறது. "உதயம்" சிறுகதையும் விவசாய மக்களின் பிரச்சனையை பேசினாலும் அது வன்னி மண்ணின் குடியேற்றக் கிராமத்தைக் களனாகக் கொண்டது. விவசாயத்துக்கான நீர்ப் பங்கீட்டில் அரச அதிகாரிகள் பணக்கார வர்க்கத்தின் பக்கம் நின்று ஏழை விவசாயிகளை ஏய்ப்பது பற்றிப்பேசுகிறது.
“வேப்பமரம்” வெள்ளைக்கார பாதிரி, உடையான், கவுண்மேத்து ஏசண்டன் என சரித்திரப் பின்னணிக் கதையாகும். "இக்கதையின் இயங்குதளமும், கதை மாந்தர்களது செயற்பாடும், கதை சொல்லப்பட்ட விதமும், கதையில் வரும் சின்னகறுவல் பெரிய கறுவல் ஆகியோரின் விபத்தின் ஞாபகார்த்தமாக "கறுத்தாற்ரை வேம்பு" குறிப்பிடப்படுவதும்,
t நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

கதை சொல்லும் விதமும் நாட்டுப்புறக் கதைகளில் வரும் பழமரபுக் கதைகள் சார்ந்த ஒரு சாயலை அக்கதைக்கு அளித்துள்ளன" என பேராசிரியர் வ. மகேஸ்வரன் விதந்து போற்றுவது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணச் சமூகத்தின் ஈவிரக்கமற்ற, கொடூரமான சாதியம் பற்றி தனது சமகால ஏனைய முற்போக்கு எழுத்தாளர்களான ரகுநாதன், ஜீவா, டானியல் போலவே நீர்வையும் மிக காத்திரமான படைப்புகளைத் தந்துள்ளார். இத் தொகுப்பில் உள்ள மேடும் பள்ளமும், சோறு, ரத்தக்கடன், புரியவில்லை ஆகியன அவ்வகையைச் சார்ந்தன "சோறு" சாதீயத்தின் கொடுமையும், அதன் விளைவான வறுமையும் கூடிய இரு சிறுவர்கள் நிலை பற்றியது. மனத்தை உலுக்கக் கூடியது. "புரியவில்லை” பள்ளி செல்லும் இரு குழந்தைகளிடையே நிலவும் மாசற்ற அன்பை அடிப்படையாகக் கொண்டது. ஊடல், கூடல், எச்சில் மாங்காயைப் பகிர்ந்துண்ணல் என மிக இயல்பாகவும், குழந்தைகளின் கள்ளங்கபட மற்ற பழகுமுறையும் மிக அற்புதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இறுதிச் சம்பவம் மனத்தை உலுக்கிச் சிந்தனை வசப்படுத்துகிறது. பேணியில் தண்ணிர் குடித்த அவள் தனது நண்பனுக்கும் கொண்டு வருகிறாள். அவன் வாயண்டை தனது கைகளைக் கோரிப் பிடிக்க அவள் தண்ணிரை ஊற்றுகிறாள். எந்தவித பிரச்சார நெடியும் இன்றி சாதீயத்தின் கொடுமை பிஞ்சுகளுக்கு நஞ்சூட்டப்படுவதை மிக அற்புதமாக காட்டியுள்ளமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
சமூகத்தின் விரிந்த தளத்தைக் கூர்மையாக நோக்கும் நீர்வை குழந்தைகளையும் சிறுவர்களையும் முதன்மைப்படுத்தியுள்ளார். சிறுவர்களின் விளையாட்டுத்தனம், அவர்களின் கள்ளங்கபடமற்ற பரிசுத்த அன்பு, அவர்களின் அன்பிற்கான ஏக்கம், அவர்களை வாட்டும் பசி, இனக் குரோதம் முற்றி போர் வெடித்த சூழலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எனப் பல்வேறு கோணங்களில் அவர்களின் சிக்கல்களை அணுகியுள்ளார். புரியவில்லை, சோறு, வெண்புறா, வேட்கை, மனிதன் போன்ற கதைகள் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் முதல் நான்கு கதைகளும் இத்தொகுப்பில் அடங்குகின்றன. சிறுவர்களின் பிரச்சனைகளைப் பேசும் போது நீர்வையின் எழுத்து நடையில் எளிமையும், யதார்த்தமும் கலையுணர்வும் மேலும் மெருகேறுகின்றன.
இவ்வாறு தமிழ் சமூகம் எதிர்கொண்ட பிரச்சனைகளைத் தனது படைப்புகளில் எடுத்தாண்ட நீர்வை, இனப் பிரச்சனையானது எண்பதுகளில் முனைப்புப் பெற்ற போது அதனையும் பதிவு செய்யத் தவறவில்லை. "லங்காதகனம்" என்ற சிறுகதை எண்பத்து மூன்றுகளில் இனக்கலவரத்தின் துயரும், கொடுரமும் நிறைந்த சம்பவங்களை மிக
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -9-

Page 8
விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவு செய்திருக்கிறது. சாந்திய தூதுவர்களான பிக்குகளே அப்பாவித் தமிழர்களின் மீதான தாக்குதல்களுக்கு உடந்தையாக நிற்கும் அதே நேரம் மனிதநேயம் முற்றாக அழிந்துவிடவில்லை என்பதை ஒரு வெதமாத்தயா ஊடாக காட்டுகிறார்.
இனக் கலவரத்தைத் தொடர்ந்து, போரின் வெம்மை தமிழர்களை அவர்களது தாயகத்திலேயே சுட்டெரிப்பதை ஆத்மதாகம், வெண்புறா, வேட்கை, கானல், ஆறடி நிலம், ஜென்மம், பிரமாஸ்திரம் போன்றவை சித்தரிக்கின்றன. போர் காரணமாக தமிழ் சமுதாயத்தில் நிகழும் மாற்றங்கள், பொருளாதார வீழ்ச்சி, பெண்கள் மீதான அடக்குமுறை, போரின் தாக்கத்தையும் மீறி சிலர் செய்யும் சமூக விரோத, சுயநல நடவடிக்கைகள் ஆகியவற்றையும் தொடர்ந்து பதிவு செய்துள்ளார்.
"ஆத்மதாகம்” போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளின் துயர் நீக்கவென நீண்டு தேடிவரும் கரங்களை, சாதி, மத வேறுபாடுகளை முனைப்படுத்தி தடுக்கும் கயவர் பற்றிப் பேசுகிறது. அதேபோல "ஆறடி நிலம்" சிறுகதையானது உறவினர்களையும், நம்பி வந்தவர்களையும் ஏமாற்றி, வஞ்சகமாகச் சொத்துச் சேர்த்தவரின் அழிவைக் கூறுகிறது. யுத்தத்தின் காரணமாக கணவனை இழந்ததுடன், சமூகத்தின் ஈவிரக்கற்ற கொடுமைகளுக்கும் ஆளான பெண் அதனால் சுய அழிவிற்குத் தலைப்பட்டு அதிலிருந்து மீண்டெழ முனைவதை நம்பிக்கையோடு சித்தரிக்கிறது “ஜென்மம்".
"வேட்கை"யும், "கானலு"ம் போராளிக் குழுக்கள் சிலவற்றின் லட்சியத்துக்கு மாறான செயற்பாடுகளையும், உள் முரண்பாடுகளையும் போலித்தனங்களையும் விமர்சனம் செய்கின்றன. திறந்த மனத்துடனும் துணிச்சலுடனும் இவ்வாறு பதிவு செய்த நீர்வை ஏனைய சமகால எழுத்தாளர்களிடமிருந்து முற்றிலும் மாறுபடுகிறார். அதே நேரம் தன் காதலை ஒறுத்து, வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பை மறுத்து, மக்களோடு மக்களாகத் தரித்து நின்று அவர்களின் விடிவிற்காகப் போராடும் போராளியை "அன்னை அழைக்கிறாள்" கதையில் விதந்து சித்தரிக்கவும் செய்கிறார். “வெண்புறா" - தனது சொந்தச் சகோதரியையும், பின் சகோதரியாகப் பாசம் வைத்துப் பழகியவளையும் யுத்தத்தின் கொடிய கரங்களால் வெவ்வேறு முறையில் இழந்து ஒருவன் யுத்தம் வேண்டாம் என முடிவுக்கு வரும் கதை.
சுயலாபங்களுக்காகவும், சில்லறைக் கோபதாபங்களுக்காகவும், தனக்கு வேண்டாதவரை “காட்டிக்கொடுப்பவனாக" மாட்டிவிடும் சின்னத்தனத்தை "பிரமாஸ்திரம்” பேசுகிறது இனப் பிரச்சனை
-10- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

முனைப்படைந்து, போர்மேகம் சூழ்ந்த நிலையில் காணாமல் போதல் சட்டத்தை மதிக்காத கைது, கொலை போன்றவற்றுக்கு இட்டுச் செல்கிறது என்பதை உணராத தமிழன் யார் இருக்க முடியும்.
லட்சியம், போராட்டம், கொள்கைப் பிடிப்பு ஆகியவையே நீர்வையின் படைப்புக்களின் அடிநாதமாக இருந்த போதும், மனித உறவுகளின் இனிய கணங்களையும், மனத்தின் உணர்வலைகளையும் சித்தரிக்கவும் தவறவில்லை. அந்த வகையில் "அழியாச் சுடர்" அன்னைக்கும் மகனுக்கும் இடையேயான பாசத்தின் நெகிழ்ச்சியைக் காட்ட, "பனஞ்சோலை", "அசை" ஆகிய இரண்டும் இளமையில் எழும் காதல் உணர்வின் நுண்ணிய பக்கங்களை மிகுந்த இரசனையோடு வெளிப்படுத்துகின்றன. "சுயம்வரம்” ஒரு காதல் கதையாயினும் அது முதுமையின் அந்தியில் நிற்கும் ஒருவர் தனது இளவயது காதல் அனுபவங்களை அசைபோடுவதாக வெளிப்படுகிறது. "வேப்பமரம்" கதையின் நடை போலவே மாந்திரிகம் என மயக்கும் நாட்டார் நடை பிரமிக்க வைக்கிறது.
“சுருதி பேதம்” வர்க்கரீதியில் நேர்எதிர்தளங்களைச் சேர்ந்த இருவரிடையே மலரும் காதல் பற்றியது. பங்களா, கார், பார்ட்டி என்ற கற்பனைகளுள் இருக்கும் அவளுடன், வறுமை, தொழிலாளர் போராட்டம், சமத்துவம் போன்ற கோட்பாடுகளுடன் வாழும் தனக்கு ஒத்துவராது எனப் புரிந்து கொள்கிறான். "உன்னை அடைந்திருந்தால் என் மனச்சாட்சிக்கும் நேரிய வாழ்க்கைக்கும் துரோகம் செய்தவனாக இருந்திருப்பேன்" என்ற அவனது சிந்தனையூடாக காதலை விட நேரிய வாழ்க்கை உயர்ந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறார்.
"தவிப்பும்", "சிருஷ்டி"யும் பெண்களின் உணர்வலைகளை வெளிப்படுத்துகின்றன. குழந்தைக்காக ஏங்கும், குழந்தைகளை கனவிலும், கற்பனையிலும், கண்டு மகிழ்வுறும், பிள்ளை இல்லாத ஒரு பெண்ணின் மனநிலையை நனவோடை உத்தியில் "தவிப்பு" விஸ்தரிக்கிறது. வறுமையின் கொடுமையால் தன் உடலை விற்றுப் பசியாறும் பெண்ணின் தார்மீகக் கோபத்தை உருவகக் கதையாக கூறுவது சிருஷ்டி. இவ்விரு கதைகள் தவிர "ஜன்மம்," "வெண் புறா,” “அன்னை அழைக்கிறார்” ஆகிய கதைகளிலும் பெண்களின் பிரச்சினைகளை மிகுந்த ஆதரவுடன் தொட்டுக் காட்டியுள்ளார்.
"துணை"யும் பெண் உணர்வு சம்பந்தமான மற்றொரு கதை. இளமையின் மிடுக்கிலும், வேட்கைத் தீயிலும் கணவனைப் பிரிந்த ஒருத்தி, இறுதியில் அடிபட்டு, உலர்ந்து ஆங்காரம் அடங்கிக்
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -li

Page 9
கிடக்கையில் கணவனின் சவஊர்வலம் இவள் வீட்டைத் தாண்டிப் போகையில் "என்ரை ராசாவே, என்னை விட்டுப் போறியோ” என்று தீனக்குரல் எழுப்புகிறாள். காலங் கடந்த மனமாற்றம் அர்த்தமற்று போய்விடுகிறது. மனம் கனக்கிறது.
பொன்னையனின் கதைகள் நமது வாழ்க்கையின் பிரதிபிம்பங்கள். இவற்றில் நம்மையே நாம் காண்கிறோம். நமது பிரச்சனைகளை நாம் ஆராய்கிறோம். இக்கதைகளின் உயிரோட்டம் இதுதான். இக்கதைகளின் யதார்த்தத் தன்மை காரணமாக இவை ஒவ்வொன்றும் நமது உள்ளத்தில் ஒன்றி விடுகின்றன. நமது சிந்தனையில் கிளர்வை ஏற்படுத்துகின்றன. இந்தப் பணிபு காரணமாக சமுதாய விழிப்புணர்ச்சி உள்ளுர ஏற்படுகின்றது. அவரது அடிப்படை நோக்கம் பூரணமடைகிறது.
ஒவ்வொரு கதையும் எடுத்துக் கொண்ட இலக்கை நோக்கி விரைந்து செல்கின்றன. வழிபிறழ்தல் இல்லை. அதனால் கதைகளின் கட்டமைப்பு செழுமையாக அமைந்திருக்க காண்கிறோம். தேர்ந்தெடுத்த சொற்களும், செறிவான சுருக்கமான வசனங்களும், குறுகிய பந்தி அமைப்பும், குறுகிய பொருள் செறிந்த தலைப்புகளும் தெளிவான சிந்தனைகளுக்கு உறுதுணையாக நிற்பதால் அவரது கதைகள் வாசகனை கவர்ந்து விடுகின்றன என்பதை இத்தொகுதி மூலம் நீங்களே உணரமுடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
6 -Syrigo). Furt
எம்.கே.முருகானந்தன்
-12- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

உள்ளே.
மேடும் பள்ளமும் பனஞ்சோலை சோறு
தவிப்பு சிருஷ்டி..?
அசை புரியவில்லை உதயம் சங்கமம்
சுயம்வரம் ரத்தக் கடன் சுருதி பேதம் வேப்ப மரம் எரிசரம் அழியாச் சுடர் ஆத்ம தாகம் அன்னை அழைக்கின்றாள் வெண்புறா வேட்கை லங்கா தகனம் ஆறடி நிலம்
55TTG66TG5Q) ஜென்மம் பிரமாஸ்திரம்
துணை
五3
20
25
34
39 41
47
54
64
73
82
92
IO3
12
119
31
147
155
171
188
196
2O7
216
228
245

Page 10

மேடும் பள்ளமும்
69 ரு கிராமம் - அதை உங்களில் ஒரு சிலருக்குத்தான் தெரிந்திருக்கக் கூடும். அவ்வளவு சிறிய கிராமம் அது. யாழ்ப்பாணத்திலிருந்து நல்லூரூடாகச் செல்கிறதல்லவா பெரிய சாலை? அதன் வழியே சென்றால், பன்னிரண்டாம் "மைல்" கட்டை வந்தவுடன், அக்" கிராமம் வந்துவிட்டதென்ற அர்த்தம். செழிப்பான கிராமந்தான் அது. ஆனால் அங்கு வாழும் பெரும் பகுதி மக்களுடைய - மனித மந்தை" களுடைய - வாழ்க்கை.
தெரு வழியே அவர்கள் - ஒரு சாதி மக்கள் செல்லும் பொழுது காவோலையை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டுமாம்! எதற்காக? "சண்டாளன்” – தாழ்ந்த சாதியான் வருகிறான் என்று அறிவிப்பதற்கு! இரவிலேதான் அவர்கள் செல்ல வேண்டும். உயர் சாதியார் அவர்களைப் பார்த்துவிட்டால் அசுத்தமாகி விடுமாம்; பாபமாம்!
அது மட்டுமா?
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -3-

Page 11
ஒரு பிரபுவின் வட்டாரத்திலே திருமணம் நடந்தால், மணப்பெண் தனது "முதல் இரவை" அந்தப் பிரபுவுடன் கழிக்க வேண்டுமாம்.
மனித நாகரீகம் வளர்ச்சியடைந்து முன்னேறி விட்டதல்லவா! பெரிய தெருவுக்குக் கிழக்குப் பக்கமாக ஒரு சில குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
கன்னிப் பெண்ணின் பிறை நெற்றியிலே திலகமிட்டது போல ஒரு தென்னஞ் சோலை வயல் நிலத்து மத்தியிலே கம்பீரமாக நிற்கின்றது. வயலின் கிழக்கு எல்லைக் கோட்டில் சதுப்பு நிலம், அங்கொன்றும் இங்கொன்றுமாக தாழம் பற்றைகள் குத்திட்டு நிற்கின்றன. வானமும் பூமியும் கட்டித் தழுவி முத்தமிடும் எல்லைக் கோட்டில், யாழ்ப்பாணத்தின் பெயர் போன உப்பாறு.
தென்னஞ் சோலையை அண்டித்தான், அருணாசலம் உடையாரின் வயல் நிலம்; மேடும் பள்ளமும்.
விரைவிலே தாயாகப் போகும் கன்னிக் கர்ப்பவதி, தாய்மை உணர்ச்சி பொங்கி வழிய தனது கணவருடைய முகத்தைப் பார்த்துச் சிரிப்பது போல, மேட்டு நிலம் வானத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
பள்ள நிலம். 9 குலசிங்க மணியகாரர் பரம்பரையிலே பிறந்தவர் அருணாசல உடையார். அந்தக் கிராமத்திலுள்ள பூமியில் மூன்றில் இரண்டு பங்கு குலசிங்க மணியகாரருடையது; அது அன்று.
குலசிங்க மணியகாரருடைய நிலம் குறைந்து, தேய்ந்து மிஞ்சியது தான் அருணாசல உடையாரின் முதுசொம். உடையாருடைய குடும்ப வாழ்க்கைக்குப் போதுமான - இல்லை, மேல் மிச்சமான வருவாயைக் கொடுத்து வந்தது அவருடைய வயல் நிலம். ஒரு சிறு பகுதிதான் விளை பூமி. மிகுதி மேட்டு நிலம், பயிர் செய்ய முடியாதிருந்தது ஒரு காலத்தில். கணபதி, அருணாசலம் உடையாரின் கைஆள். அவருடைய வயலில் வேலை செய்து வாழ்ந்தான்.
"நாங்கள் நயினாருடைய உப்பையல்லவா திண்டு, வாழ்கின்றோம்" என்று அடிக்கடி கணபதி சொல்லிக் கொள்வது வழக்கம்.
மாலைச் சூரியனின் ஜோதிச் செக்கர் மெள்ள மெள்ளக் கருகிக் கொண்டிருந்தது. அடிவானச் சிவப்பை, படகு போல அசைந்து மிதந்து வந்த கருமுகில்கள் கெளவத் தொடங்கின. சூரியனுடைய பொன்நிறக் கதிர்கள் விளைந்து, காய்ந்து, குலுங்கிய கதிர்க் குலைகளிலுள்ள, நெல் மணிகளில் பட்டுத் தெறித்தன. வயற் பரப்பு பொன்மயமாக இருந்தது.
-14- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

மேட்டு நிலம் சிரித்துக் கொண்டிருந்தது. வயல் வரம்பில் நின்ற கணபதியின் மார்பு ஆனந்த மிகுதியால் மிதந்து தாழ்ந்தது. புயங்கள் பூரித்தன. அவனுடைய ரத்தத்தை வியர்வையாக உறிஞ்சிய அந்த மேட்டு நிலம் இந்த வருடம் தான் அவனைப் பார்த்து அன்புச் சிரிப்புச் சிரித்தது.
'எட்டுப் பரப்பு. எண்மூண்டு இருபத்தினாலு புசல். மனதுக்குள் கணக்குப் போட்டான் கணபதி.
முந்தின மூண்டு பிள்ளையளையும் பெத்த பொழுது கூப்பன் அரிசி யும் ஆட்டா மாவும் திண்டு. அவளுக்குச் சொறி பிடிச்சு. பிள்ளையளுக்கும் வயித்தாலை அடிச்சு. காசில்லாமல் கஷ்டப்பட்டது. எல்லாச் சம்பவங்களும் கணபதியினுடைய மன அலையில் மிதந்து மோதிச் சென்றன.
இந்த வரியம் வெள்ளைச்சி அதிட்டசாலிதான். பிள்ளைப்பெறுவுக்கு இரண்டு மாதம் இருக்கு. வயல் அரிசிச் சோறு - அதுவும் என்னுடைய கையாலை செய்தது. கொஞ்ச நெல்லை வித்துப் பிள்ளைப்பெத்துச் சிலவுக்கு எடுக்கலாம். எண்ணங்கள் கணபதியினுடைய உள்ளத்திலே புரண்டு நெளிந்தன. ஆனந்த மிகுதியால் தனக்குள் சிரித்துக் கொண்டான்.
வரம்பின் எதிர்ப்புறத்திலுள்ள பள்ள நிலப்பக்கம் திரும்பினான் கணபதி. அவனுடைய உள்ளத்திலே ஏக்கம் படம் எடுத்தது. நெற்றியை உள்ளங்கையால் அழுத்தினான்.
"கணபதி. திடுக்கிட்டுத் திரும்பிய கணபதியின் எதிரில் அருணாசலம் உடையார் நின்று கொண்டிருந்தார்.
yy
"என்ன நயினார்.
ஒடுங்கிக் குடங்கியபடியே, தலையில் கட்டியிருந்த சால்வைத் துண்டை எடுத்துக் கக்கத்துக்குள் வைத்துக் கொண்டு உடையாருடைய முகத்தைப் பார்த்தபடி நின்றான் கணபதி.
"உனக்குத்தான் இந்த வரியம் 'லக்' அடிச்சிருக்கு" கசப்புடன் கூறினார் உடையார்.
"எல்லாம் நயினாருடைய தயவாலைதானே." அவனுடைய சொற்களிலே நன்றி கலந்திருந்தது.
"அது சரி கணபதி. இந்த வரியக் குத்தகைக் காசைப் பிறகு பாத்துக் கொள்ளலாம். எனக்கு வெள்ளாண்மையும் புகைஞ்சு போச்சு. காசுக் கஷ்டம். போன இரண்டு வரியக் குத்தகைக் காசையாவது தந்திடு."
"வெள்ளாண்மை வெட்டி, ஒரு மாதத்துக்குள்ளை நயினாற்றை காசைத் தந்திடுறன்."
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -5-

Page 12
“என்ன, ஒரு மாதத்துக்குப் பிறகா? பிறகேன் எனக்குக் காசை? அது மட்டும் நான் என்ன செய்ய?” உடையாருடைய குரலிலே கடுகடுப்புத் தொனித்தது.
“நயினார். நான் இப்ப காசுக்கு எங்கே போக? யார் தரப்போகினம்? நெல்லு வெட்டி, அடிச்சு, வித்துத்தானே.”
“டே கணபதி குத்தகைக் காசு தந்திட்டுத்தான் நெல்லு வெட்ட வேணும். இல்லாட்டி.." நாகபாம்பு போலச் சீறி விழுந்தார் உடையார். கணபதியினுடைய உடல் நடுங்கியது. அவனுடைய ஆசைக் கனவுகள் எல்லாம், இடிந்த கோட்டை போலத் தரைமட்டமாகின, கண்கள் கலங்கின.
y
“நயினார், தயவு பண்ண வேணும். ஐஞ்சாறு நாள் தவணை.
"முடியாது!” “நயினார்.
y
d5 9. . . . . . . . . . . . . . 9"
승
தெய்வத்திற்குப் பயபக்தியுடன் பிரசாதத்தைப் படைப்பது போல, அருணாசலத்தின் காலடியில் பணத்தை வைத்தான் கணபதி.
“எவ்வளவு?” "நாற்பத்தைஞ்சு ரூபா?.." "நாற்பத்தைஞ்சு ரூபாயா? என்ன ஒருவரியக் காசு தானே. வட்டியும் மற்ற வரியக் காசும்?"
"பத்து நாளைக்கை தாறன் நயினார். இதுவும் வெள்ளைச்சியின்ரை பிள்ளைப்பெத்துச் சிலவுக்கெண்டு அவளுடைய தாலியை அடைவு வைச்சு எடுத்த காசு."
பணத்தை எடுத்து மடியில் வைத்துக்கொண்டார் அருணாசலம். வந்த பணத்தை ஏன் விடுவான் என்ற எண்ணம் போலும்!
“கணபதி மிச்சக் காசையும் வட்டியையும் கொண்டு வந்து வைச்சிட்டு நெல்லை வெட்டு. நாளைக்குக் காசு இஞ்சை வரவேணும். தவறி. னால் நாளைவிட்டு அடுத்த நாள் உன்ரை நெல்லை வெட்டி.."
கணபதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தனது வீட்டை நோக்கி நடந்தான். அவன் கண்முன் சிரிக்கும் மேட்டு நிலம் தோன்றிக் கண்ணாமூச்சி விளையாடியது.
-16- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அருணாசல உடையாருடைய குடிமைக்காரன், அடிமை கணபதி அவனுடைய பரம்பரைக்கும் அடிமையாகத் தொண்டு செய்து வாழ்ந்து கொண்டு வந்தார்கள்.
கணபதி, அருணாசல உடையாருடைய வயலில் வேலை செய்து அவருடைய மாடு கண்டுகளைப் பார்த்து, உடையார் கொடுக்கும் அற்ப கூலியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி வெள்ளைச்சியும் மூன்று பிள்ளைகளும் செத்துக்கொண்டே வாழ்ந்தார்கள். வெள்ளைச்சிக்கும் உடையார் வீட்டிலேதான் வேலை. கணபதியினுடைய குடும்பம் உடையாருடைய குடும்பத்துக்காகவே வாழ்ந்து வந்தது.
அருணாசல உடையாருடைய பள்ளநில வயலைத் தனது சொந்த வயல்போலப் பாடுபட்டு வேலைசெய்து பயிரிட்டு, காவல் காத்து அறுவடை செய்துவந்தான் கணபதி.
அவனுக்குச் சேரவேண்டிய அற்ப கூலியையும் கொடாமல் தட்டிக் கழிக்க மேட்டு நிலத்தில் ஒரு துண்டைக் கணபதிக்குக் குத்தகைக்குக் கொடுத்தார் அருணாசலம்.
கணபதி, பாடுபட்டு அந்த மேட்டு நிலத்தை வெட்டிப் பண்படுத்திப் பயிரிட்டான். மழை இல்லாமையால் சென்ற இரண்டு வருட காலமாகக் கணபதியின் மேட்டு நிலத்தில் விளைச்சலில்லை. அவனுடைய முயற்சி பயனற்றதாகிவிட்டது.
ஆனால் இந்த வருடம்.? நல்ல மழை கணபதிக்கு நல்ல விளைச்சல்! அருணாசல உடையாருக்கு? பள்ள நிலத்திலேயுள்ள பயிர்கள் எல்லாம் வெள்ளத்திலே அழுகிச் செத்து மடிந்தன. ஒரே ஒரு துண்டு மேட்டு நிலம்தான் விளைச்சல் எடுத்தது.
கணபதியின் மேட்டுநில வயலைப் பார்த்ததும், உடையாருக்கு மனம் புகைந்து எரிந்தது. தான் அந்த நெல்லை வெட்ட வேண்டும் என்பது தான் அவருடைய திட்டம். அது மட்டுமல்ல, கணபதியின் குடும்பத்தின் மேல் பழி தீர்க்கவும் வேண்டும். அதற்குச் சந்தர்ப்பத்தையும் பார்த்திருந்தார். எதற்காக? கணபதியும் வெள்ளைச்சியும் உடையாரை ஏமாற்றி வந்தார்கள். வெள்ளைச்சி! அவள் மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகியும் அவ" ளுடைய உடல் இளமையை இழக்கவில்லை; கவர்ச்சி குறையவில்லை. வெள்ளைச்சியின் உடலிலுள்ள நெழிவு வளைவுக் கோடுகள்! அவளு"
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -17.

Page 13
டைய மரகதச் சிரிப்பு அவளைக் காணும்போது உடையாருடைய உடல் அனலைக் கக்கும். அவளுடைய அழகை அப்படியே கடித்து.
உடையார் சந்தர்ப்பம் பார்த்திருந்தார். இன்றைக்குப் பார்ப்போம். நாளைக்கு, அடுத்த வருடம், அடுத்த வருடம்.”
ஒவ்வொரு வருடமும் கணபதியும் வெள்ளைச்சியும் உடையாரை ஏமாற்றி வந்தார்கள். வருடா வருடம் வெள்ளைச்சி தாயாகவேயிருந்தாள். கணபதியின் குடும்பத்தை அழித்துவிட வேண்டும் போலிருந்தது உடையாருக்கு. காலமும் உடையாருக்குக் கருணை காட்டியது.
决。决。宏
“கேட்டியா அண்ணை சங்கதியை?”
'6T6672" "குத்தகைக் காசு கொடுக்கேல்லை எண்டு, உடையார், கணபதி யின்ரை நெல்லை தான் வெட்டி எடுக்கப் போறாராமே?” வேதனையுடன் சொன்னான் வேலன்.
“என்ன அநியாயமிது? கேக்கப் பறைய ஆளில்லையெண்டு தானே உடையார் இப்பிடி எல்லாம் செய்யிறார்."
"நாங்கள் என்ன செய்யிறது? வாய்திறந்தால் நாங்களும் குடியெழும்ப வேண்டியதுதான். உடையாரிடம் பணமிருக்கு, ஆட்கள் இருக்கினம். பொலிசு, கோடு, கச்சேரி எல்லாம் அவற்றை கையுக்கைதானே இருக்கு." "அதுக்கு இப்பிடி அநியாயம் செய்யிறதா?” சீனியன் வெட்டிப் பேசினான்.
“எங்களுக்கென்னத்துக்கு ஊர்த்தொல்லையை? எங்கடை பாட்டை நாங்கள் பார்ப்பம்" முருகன் அலட்சியமாகச் சொன்னான்.
“முருகா! இண்டைக்குக் கணபதிக்கு நடக்கிறதுதான் நாளைக்கு எனக்கு நடக்கும்;அடுத்த நாளைக்கு உனக்கும். நாங்கள் பேசாமலிருக்க இருக்கத்தான் உடையாராக்கள் எங்கடை தோளிலை ஏறி காதைக் கடிக்கினம்" ஆவேசத்துடன் கூறினான் சீனியன்.
"அப்ப நாங்கள் என்ன செய்யிறது?” ஏக்கத்துடன் கேட்டான் கந்தன். “ஞாயத்தைக் கேட்கிறதுதான்!” "ஐயோ! எங்கடை வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைச் சு, எங்களையும் அடிச்சுச் சாக்காட்டிப் போடுவாங்களே உடையாற்றை ஆக்கள்." பயத்தால் நடுங்கியது முருகனுடைய உடல்.
-8- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

"நாங்கள் ஏன் தனிச்சுப் போகப் போறம்? எல்லாரும் ஒத்துமையாய்.”
"நீசொல்லுறது சரிதான் மச்சான். நாங்கள் எல்லாரும் ஒத்துமையாய் நிண்டால் உடையார் என்னண்டு நெல்லை வெட்டுறது? ஒருதரும் நெல்லு வெட்டப் போகாவிட்டால்."
அவர்களெல்லோருடைய முகங்களும் செவ்வாழைப் பூப்போல மலர்ந்தன.
கணபதியினுடைய மேட்டு நில வரம்பிலே, உடையார் கையில் குடையுடன் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார்.
ஆண்கள் பெண்களுமாகப் பத்துப் பன்னிரண்டு பேர் கணபதி. யினுடைய நெல்லை வெட்டிக் கொண்டிருந்தார்கள்.
கணபதி?
அவன் உடையாருடைய பள்ள நிலத்தின் ஒரு மூலையிலே முனகிக் கொண்டு சுருண்டு கிடந்தான். அவனுடைய உடலிலே அங்குமிங்கும்
gd665). Os 515-556.
உடையாருடைய பள்ள நிலத் தொங்கலிலே சில மனிதத் தலைகள் தெரிந்தன. அலட்சியமாக நின்றார் உடையார். மனிதத் தலைகள் வரவரக் கூடிக் கொண்டிருந்தன.
கணபதி சிந்திய வியர்வைத்துளிகள், இரத்தச் சொட்டுகள் அவ்வளவும் மனிதர்களாக மாறிவிட்டனவோ!
அந்த மனித மந்தைகள் - வாழ வேண்டும் என்ற ஆவலால் உந்தப்" பட்டு ஒன்றுசேர்ந்த மக்கள் - ஆரவாரத்துடன் வந்துகொண்டிருந்தார்கள்; உடையாரை நோக்கி அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.
மேட்டுநிலம் சிரித்துக் கொண்டிருந்தது.
கணபதி?
அந்த மக்கள் கூட்டத்திற்கு முன் வந்துகொண்டிருக்கும் எவனோ ஒருவனுடைய தோளிலே கணபதி கிடந்தான்.
அவர்கள் உடையாரை நோக்கி பள்ள நிலத்திலிருந்து மேட்டு நிலத்துக்கு ஏறிக்கொண்டிருந்தார்கள்.
நியாயம் கேட்பதற்கு! வாழ்வதற்கு!
-196O
★
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -19

Page 14
பணஞ்சோலை
வெ ள்ளி நிலவு காய்ந்து கொண்டிருக்கின்றது. இளந்தென்றற் காற்றிலே பனஞ்சோலையின் முனகல், நிலவிலே மூழ்கி எழுந்த ஒலைத் தளிர்கள் வெள்ளித் தகடுகள் போலப் பளபளக்கின்றன.
முற்றத்தில் நின்ற பலாக்கன்றின் கீழ் திலகா என்னதான் அப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்” தாளோ?
நாளை மாலை அவள் பயணம் செல்லப் போகின்றாள். கண்ணுக்கெட்டாத தூரம். ஆழ்" கடலையும் கடந்து, ஆயிரம் மைல்களுக்கப்பாலுள்ள ஒரு புதிய ஊருக்குப் புதுவாழ்வு வாழப் போகின்றோம் என்ற உற்சாகமா?
பிறந்த மண்ணைவிட்டுத் தாய் தந்தையர் உற்றார் உறவினர் எல்லோரையும் விட்டுப் பிரிந்து செல்லப்போகின்றோம் என்ற வேத" 63)6OTI Int?
பனஞ்சோலையிலிருந்த சில காகங்கள் கரைந்து கொண்டு எழுந்து பறந்தன.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

தலை நிமிர்ந்து பார்த்தாள் திலகா. குளுமையாக குமரிப்பருவத்தின் வனப்புடன் கம்பீரமாக நிற்கின்றது பனஞ்சோலை.
அதன் மத்தியில் ஒரு பனைமரம் வளர்ந்து உயர்ந்து தனது ஒலைகளை நாலாபக்கங்களிலும் வீசி, ஆகாயத்தைத் துளாவிப் பிடிப்பது போலிருந்தது. அதன் அடியில் உருவமும் உருவமுமற்ற நிலையில் ஒரு நிழலாட்டம் சலனமிட்டுக் கொள்ள திலகாவின் உள்ளமும் உடலும் நடுங்கியது ஏனோ?
உற்று நோக்கினாள். தனது இரு கைகளையும் அகல விரித்து, அவளை ஆரத்தழுவி அணைப்பதற்குத் தயாராக நின்றது அந்த உருவம். உருவத்தின் இமைகள் படபடத்துத் துடித்துக்கொண்டிருந்தன. உதட்டில் அரும்பிக் கொண்டிருக்கும் மோகனப் புன்னகை. அது யாருடைய உருவம்?.
இன்னும் ஒரு முறை, ஒரே ஒரு முறை அந்த உருவத்தைப் பார்த்து விட்டால்.
திலகாவினுடைய உள்ளத்திலே ஆவல். "ஐயோ! வேண்டாம், வேண்டவே வேண்டாம். நான் அந்த உருவத்தைப் பார்க்க கூடாது. நான் அருகதையற்றவள். அந்த நிழல் என்மேல் பட்டுவிட்டாலும் நான் கருகி, எரிந்து, சாம்பலாகி விடுவேன். பகவானுடைய பரிசுத்தமான கோவில் பனஞ்சோலை. இனிமேல் நான் அதற்குள். எனது அடிகூடப்படக்கூடாது.”
மண் விளையாடத் தொடங்கிய நாள் தொட்டு இதே பனஞ்சோலையில், சின்னச் சின்ன வீடுகட்டி, விளையாடியவள் திலகா. அவள் மட்டுமல்ல அவளைப் போல எத்தனையோ குழந்தைகள். திலகா பருவப் பெண்ணாகி தனது வாழ்க்கைத் துணைவனைக் கைப்பிடிக்கு மட்டும், பனஞ்சோலையும் அவளும் ஒன்று. இப்போ, பனஞ்சோலையைப் பார்த்ததும் அவளுடைய உள்ளமும் உடலும் ஏனோ நடுங்குகின்றன?
பனஞ்சோலைக்குள்தான் அவளுடைய காதலும் அரும்பியது. காதலா? சரி, காதலென்றுதான் வைத்துக்கொள்வோமே! கல்யாணமா? கல்யாணமும் கட்டிவிட்டாள் திலகா. கணவன் எங்கோ பிரதேசத்தில் உத்தியோகம். கணவனுடன் அவளும் இந்தத் தேசத்தை விட்டே போகப் போகிறாள்.
காதல் - நான்கு வருடத்திற்கு முன், அவன் மேற்படிப்பிற்காகப் பயணம் செல்வதற்கு முந்திய நாள் இரவு. இதே பனஞ்சோலையில் அவனுடைய மடிமீது அவள் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருக்" கிறாள்.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -21

Page 15
'திலகா! கலங்காதே. நான்கே நான்கு வருடங்கள். எனது படிப்பு முடிந்ததும் உன்னைத் தேடி ஓடிவந்து விடுவேன். அழாதே, சீ வெட்கம்; குழந்தைமாதிரி" என்று அவளுடைய கண்ணிரைத் துடைத்தான் அவன். "எங்கே, ஒருக்கால் சிரி திலகா" அவளுடைய கன்னத்தைக் கிள்ளிச் சிரிப்பூட்டினான்.
அவனுடைய அணைப்பிலேயிருந்த மென்மை, சொற்களிலேயிருந்த கனிவு, அதில் பிறந்த அன்புப் பிரவாகத்திலே மூழ்கி மிதந்தாள். இல்லை அம்சதுரளிகா மஞ்சத்தில் புரண்டாள்.
வெள்ளி நிலவின் குளுமை, கண்சிமிட்டும் நட்சத்திரங்களின் ஒளிக்கதிர்கள், வானவில்லின் வர்ணஜாலம், பனித்துளிகள் பட்டுமலர்ந்த றோஜா இதழின் மென்மை, எல்லாம் அவளுடைய காதலிலே குழைந்து அரும்பி இன்பத்தைக் கொடுத்தன.
கடவுள் - கடவுளின் சிருஷ்டியான இந்தப் பிரபஞ்சம், பிரபஞ்சத்திலுள்ள சடப்பொருட்கள், அவற்றின் அசைவுகள் எல்லாம் இன்பமயமாக இருந்தன திலகாவுக்கு. காதல் கீதம் அவளுடைய புலன்களில் ஒலித்துப் புத்துணர்ச்சியைக் கொடுத்துக்கொண்டேயிருந்தது.
நான்கு வருடங்கள் எங்கே? நான்கு நாட்கள். ஆமாம். நான்கு நாட்களுக்கு முன் திலகா செல்லத்துரையைக் கல்யாணம் செய்து கொண்டாள். காதல் கல்யாணம்!
நான்கு நாட்கள். அப்பப்பா! அவை நான்கு யுகங்கள்! நரக வேதனை! நிலவின் குளுமை, நட்சத்திரங்களின் ஒளி, வானவில்லின் வர்ணஜாலம், றோஜா இதழ்களின் மென்மை. அம்சதுரளிகாப் படுக்கையில் காணும் இதம் எங்கே?
எல்லாமே தீப்பிழம்பு, கொடிய அந்தகாரம்! திலகாவின் பெண்மை, அவளுடைய உடலின் ஒயில், உள்ளத்தின் மிருதுத்தன்மை, எல்லாமே இந்த நான்கு நாட்களில், தீப்பிழம்பில் பொசுங்கிக் கருகிக்கொண்டிருக்கின்றனவே.
பனஞ்சோலையை நிமிர்ந்து பார்த்த திலகாவின் கண்கள் வெப்பம் தாங்கமுடியாமல் துடித்தன. உடல் சோர்ந்தது.
தள்ளாடியபடி படுக்கையில் போய்ச் சாய்ந்தாள். கண்ணை மூடினாள்;
'திலகா!" அன்புடன் ஒரு குரல் கேட்டது. வானத்தையும் பனிமண்டலத்தையும் தாண்டி எங்கிருந்தோ வருவது போன்ற பிரமை அந்தக் குரல்.
-22- . நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

"அத்தான்." அவளுடைய உதடுகள் அசைந்தன. மோகனப் புன்னகை தவழும் அந்த முகம் நிலவின் முழுமை, நட்சத்திரங்கள் ஒளி - அந்த முகத்தில் பிரகாசித்துக்கொண்டிருந்தது.
பனஞ்சோலையிலிருந்து காதல் கீதம் பிரவாகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.
அவளுடைய உடலை அணைப்பது போன்ற உணர்வு. அந்த அணைப்பில் கலந்திருந்த குளுமை, மென்மை இன்பம்!
"அத்தான்!. அவளுடைய இருகைகளும் தலையண்ையை அணைக்கின்றன.
அரும்பும் மல்லிகை மொட்டிலிருந்து எழும் சுகந்தம் அவளுடைய நாசியில் தவழ்கின்றன.
வெள்ளி நிலவை அள்ளிச் சுருட்டி அவளிடம் கொடுக்கின்றான் அவன். குழந்தைபோலத் துவஞகிறாள் அவள்.
“என் ராஜா!" ஆவலுடன் அவளை அணைக்கின்றான் அவன்! இரு இரும்புக்கரங்கள் அவளைக் கெட்டியாகப் பிடிக்க, அவள் திமிற, மேலும் பிடி இறுக.
"ஆ! வெப்பம் பொறுக்க முடியவில்லையே! திகைப்பு: அக்கினிக் கோளத்திலிருந்து வரும் உஷ்ணம் அவள் மென்மையைப் பொசுக்கு" கின்றது.
"நித்திரை வருகின்றது" என்று முனகிக்கொண்டு மறுபுறம் திரும்பிப்படுத்தாள் திலகா.
உருகிக் கொதித்துக்கொண்டிருக்கும் ஈயத்திற்குள் திலகாவினுடைய உடல் சுருண்டுகொண்டு கிடந்தது.
காலையில் எழுந்தபொழுது, அவளுடைய தலையணை நனைந்” திருந்தது.
பனஞ்சோலையை நிமிர்ந்து பார்த்தாள். மொட்டைப்பனை அவளை வெறித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தது.
அன்று முழுவதும் யந்திரம் போல அசைந்து கொண்டிருந்தாள். அடிக்கடி பனஞ்சோலையையும் பார்த்தாள்.
அடர்ந்து நெருங்கி குளிர்மையான குமரிப்பருவப் பெண்ணின் வனப்புடன் சோலை நிற்கின்றது. அதற்கு மத்தியில் உயர்ந்து வளர்ந்து பட்டுப்போன மொட்டைப் பனை. அதை அண்டினாற் போல ஒரு
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -23

Page 16
நிழலாட்டம். அதற்கு மத்தியில் மோகனப் புன்னகை தவழும் அந்த நிலவொளி வீசும் குளிர்மையான முகம்!
அவள் உள்ளம் நடுங்கிக் கொண்டிருந்தது. சிவந்து, வீங்கிப் பொருமிக் கலங்கிய கண்களை அடிக்கடி துடைத்துக்கொண்டாள்.
உறவினர்கள், அயலவர்கள் எல்லோரும் வந்தார்கள். ஏதோ கேட்டார்கள், போனார்கள். திலகாவும் ஏதேதோ சொன்னாள். அவள் கூறிய பதில் அவளுக்கே தெரியாது.
அவளுடைய மனக்கண்முன் அந்த ஒரே ஒரு காட்சி பனஞ்சோலை. மொட்டைப் பனை, அந்த ஒளிவீசும் முகம்!
பயணம் சொல்வதற்கு. மோட்டாரில் ஏறித் தன் கணவன் செல்லத்துரைக்குப் பக்கத்தில் அமர்ந்தாள் திலகா.
99
"நான் போய்வருகிறேன். தழதழத்த குரலுடன் எல்லோருக்கும் கூறினாள். இறுதியாக, ஒரே ஒருமுறை அந்தப் பனஞ்சோலையைப் பார்ப்பதற்குத் திரும்பினாள். அவளுடைய பார்வையைக் கண்ணிர் மறைத்தது. கண்ணைத் துடைத்துவிட்டு ஒரே ஒரு முறை. இறுதியாக அந்தப் பனஞ்சோலையைப் பார்க்கிறாள். அங்கே. உயர்ந்த மொட்டைப்பனையினடியில் தோன்றும் நிழலாட்டம். நிழலாட்டத்திற்கு மத்தியில் தோன்றும்; - நான்கு வருடங்களுக்கு முன் பிரிந்த அவளுடைய செல்வராஜனின் முகத்தைக் காண முயன்றாள் திலகா. கண்ணிர் பார்வையை மறைக்கிறதா?
புழுதியைக் கிளப்பிக்கொண்டு மோட்டார் கிளம்பியது. தனது இருகைகளையும் கூப்பி, தலையைக் குனிந்து பனஞ்" சோலைக்கும், ராஜனுடைய ஒளிவீசும் முகத்திற்கும் இறுதி வணக்கத்" தைச் செலுத்தினாள்.
"செல்வா நான் போகிறேன்." திலகாவினுடைய உதடுகள் அசைந்தன.
"போய் வா!"என்று கூறுவது போலப் பனஞ்சோலை முனகியது.
-96.O-
★
-24- நிர்வை பொன்னையன் சிறுகதைகள்

சோறு
ரிெனம் நிர்வாணமாக இருந்தது. வானத்தின் மத்தியில் நின்ற காளைச் சூரியன் தனது தீ நாக்குகளால், உலகத்திலுள்ள சடப்பொருள்கள் எல்லாவற்றையும் எரித்துத் தகித்துக் கொண்டிருந்தான்.
வானம் பார்த்த பூமி, தனது மலட்டுத் தனத்தை எண்ணிப் பெருமூச்சுவிடும் பெண்ணைப் போல விம்மிக் கக்கிய செம்புழுதி காற்றுடன் கலந்து புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
பரந்தவெளி. அன்பேயில்லாத நெஞ்சிலுள்ள வரட்டுத்தனத்தைப் போல, ஈரப்பசுமை அற்ற நிலம் வெடித்துப் பிளந்து போயிருந்தது. பாழ்வெளியின் ஒரு எல்லைப்புறத்தில் பனங்காடு. பனங்காட்டைத் தாண்டிச் சென்றால்.
கம்பன் புலம். ሰ கம்பன் புலத்தைத் தெரியுமா உங்களுக்கு? கம்பன் புலம் பெயரளவில் செழிப்பான ஊராகத் தோன்றலாம். உண்மை அதுவல்ல.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -25

Page 17
கள்ளிகளும், மூளிப் பற்றைகளும், கல்லு முட்களும் நிறைந்த பனங்காடுதான் கம்பண்புலம். அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஆமை ஒடு கவிழ்த்த மாதிரிச் சிறு சிறு ஒட்டுக் குடிசைகள்.
ஒரு வேப்பமரம், கம்பண்புலத்து நெஞ்சிலே ஓங்கி வளர்ந்து. நின்று கொண்டிருக்கின்றது. அதன் இலைகள் கருகிச் சுருண்டு கிடக்கின்றன.
வேப்ப மரத்தின் கீழ் ஐந்தாறு இந்நாட்டு “மன்னர்கள்” பிறந்த மேனியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நாலு தடிகளை நட்டு, அதன்மேல் இரண்டு காவோலைகள் போட்டு மூடப்பட்டிருக்கின்றன. அதுதான் அவர்களுடைய கோயில்.
இரண்டொருவர் பழைய தகரங்களைத் தங்கள் கழுத்துகளில் கட்டி மேளம் அடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தகரம் அகப்படாத சிலர் தங்கள் குண்டிகளையும், தொடைகளையும் மேளமாகப் பாவிக்கின்றார்கள். வாழை மட்டைகளை வாயில் வைத்து நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர்.
பூசாரிக்குத் தெய்வம் வந்துவிட்டது! துள்ளித் துள்ளிச் சன்னதம் ஆடிக்கொண்டு நிற்கிறான் பூசாரி அவனுடைய கையிலே ஒரு வாழை மட்டை, அது தான் அவனுடைய கத்தி!
கழுத்தில் கயிற்றால் கட்டி இழுத்து வரப்படுகிறான் ஒருவன். தவழ்ந்து கொண்டுவரும் அவன்தான் ஆட்டுக்கடா!
பூசாரி, ஓங்கிக் கத்தியால் வெட்டுகின்றான்! என்ன பக்தி கம்பன் புலத்தில் அண்ணமார் வேள்வி நடந்து ஒரு சில நாட்கள் தான.
அன்று பெரியவர்கள் வேள்வி, இன்று சிறியவர்கள் வேள்வி! “டே. ஒடியாருங்கோடா! ஒடியாருங்கோடா!” சத்தம் வரும் திக்கைத் திரும்பிப் பார்க்கின்றனர் எல்லோரும் "துவங்கிவிட்டதடா. சோறு குடுக்கப் போகினம். ஒடியாருங்கோடா..."
அவர்களுடைய கண்களிலே ஒளிவீசத் தொடங்கியது. துள்ளிக் குதிக்கிறார்கள். கூக்குரலிடுகிறார்கள், ஒரே ஆனந்தம்! அமர்க்களம்!
கட்டையனுக்குப் பெரும் ஆனந்தம். அது சிறிது நேரம் தான்! அவனுடைய அடி வயிறு வலிக்கின்றது. கை கால்கள் நடுங்கின. தலை சுற்றுகின்றது.
-26- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

ஏன்? ஏனா? அவனுக்குப் பசி வெறுங்குடல் வலி எடுத்தது. முதல் நாள் மாலை குடித்த கூழ்தான்! அசுரப் பசி கட்டையனுடைய குடலைக் குடைந்து கொண்டிருக்கின்றது. கட்டையனை நீங்கள் அநேகமாகப் பார்த்திருப்பீர்கள். உங்கள் ஞாபகத்திலிருக்கிறதோ என்னவோ எனக்குத் தெரியாது. அப்படியிருக்க அவன் என்ன “குளுக்கோஸ்" குழந்தையாய்ப் பிறந்தவனா?
பெயர் கட்டையன் என்றாலும் அவன் நெட்டையன். அவனுடைய பெற்றோர்கள் பெயரைப் பொருத்தமாக வைக்க மறந்து விட்டார்கள் போலும்!
நீண்டு சூம்பின கால்கள், சுரைக்காய் போன்ற முட்டி வயிறு, ஒடுங்கி, மிதந்த கோறை நெஞ்சு. முள் முருக்கம் பூக்காடு போன்ற, பரட்டைச் செம்பட்டைத் தலைமயிர். பிறந்த மேனியை மறைக்க, அரையில் ஒரு அழுக்குப் பிடித்த கச்சை,
அவன் உயிருடன் உலாவுகின்றான் என்பதை எடுத்துக் காட்டுவது, அவனுடைய ஒளி வீசும் பெரிய கண்கள் தான்!
கட்டையனுடைய வயிற்றில் தீராப்பசி எந்நேரமும் அவன் வாய் சப்புக்கொட்டிக் கொண்டேயிருக்கும்.
கட்டையனுக்கு எட்டு வயதிருக்கும் அவனுடைய இடுப்பில் எந்த நேரம் பார்த்தாலும், அந்த உயிர்ப்பிண்டம்; அவனுடைய இரண்டு வயதுத் தம்பி முத்தன் இருந்து கொண்டேயிருப்பான்.
முத்தன் தோற்றத்தில் அண்ணனை வென்றவன். வால்பேத்தை உடல். எந்த நேரமும் பனங்காய் சூப்பிய மாட்டினுடைய மூஞ்சியைப் போல அழுக்குப் படிந்திருக்கும் முத்தனுடைய முகம். சுருண்டு சிக்குப் பிடித்த பரட்டை மயிர். அவனுடைய மூக்குத் துவாரங்களிலிருந்து கள்ளு வடிவது போல, எந்நேரமும் சளி வடிந்து கொண்டேயிருக்கும். அதனால், மூக்கிற்கும் உதட்டிற்கும் உள்ள இடைவெளி வெளிறிவிட்டது. எப்போ பார்த்தாலும் முத்தனடைய சுட்டுவிரல் அவனுடைய வாய்க்குள் தானிருக்கும். கடைவாய் வழியே வாய் நீர் வழிந்து கொண்டேயிருக்கும். கட்டையனுடைய கூக்குரலைக் கேட்ட மற்றவர்கள் எல்லோரும் தங்கள் விளையாட்டை விட்டு விட்டு, தங்கள் தங்கள் குடிசைகளை நோக்கி ஓடுகின்றார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருடைய கைகளிலும் ஒலைப் பெட்டிகள் இருக்கின்றன. “மன்னர்” பட்டாளம் காந்திநகரை நோக்கிப் படை எடுக்கின்றது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -27

Page 18
காந்திநகர் நீர்வேலிக் கிராமத்தின் தென்மேற்கு எல்லைக் கோட்டில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது. அந்த நகர்தான் நீர்வேலிக்குப் பெருமையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அங்குதான் நீர்வேலியின் பெரிய பரம்பரையினர் வாழ்கின்றார்கள்.
கம்பன்புல “மன்னர்" படை காந்திநகர் அருணாசலத்தின் வீட்டை நோக்கிப் பறந்து கொண்டிருக்கின்றது.
அருணாசலத்தின் வீட்டில் பெரிய கொண்டாட்டம். விருந்து
திவசம்! அதற்கென விருந்து
ஏழுஎட்டுப் புரோகிதர்கள், அரிசிப் பொட்டளிகளுடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.
விருந்து தொடங்கிவிட்டது!
சாதாரண விருந்தா என்ன?
பத்துப் பன்னிரண்டு மூடை அரிசி வேகும். இடமல்லவா! ஏக தடல்புடல். பெரிய பெரிய மனிதர்கள் வந்திருக்கின்றனர்.
உணவு உண்ணத் தொடங்கி இரண்டு மணித்தியாலங்களாகி விட்டன. பலவகைக் கறிகள், பலகாரங்கள், பழங்கள், பாயசம். இன்னும் எத்தனையோ வகையறாக்கள்.
முன் ஒரு காலத்தில் ரோமாபுரியில் பெரிய பிரபுக்கள் வீட்டில் விருந்து நடக்கும் பொழுது, அவர்களுடைய முற்றத்தில் ஒரு பெரிய பீப்பா வைக்கப்பட்டிருக்குமாம். விருந்துக்கு வந்தவர்கள் வயிறு நிறைய உண்டபின், தங்கள் கைவிரலைத் தொண்டைக்குள் விட்டுத் தாங்கள் உண்ட உணவை வாயால் வாந்தி எடுத்து விட்டு, திரும்பவும் உண்ணுவார்களாம். அநேக முறை சத்தி எடுத்து விட்டுத் திரும்பத் திரும்ப உண்ணுவார்களாம். அப்படிச் செய்தால் தான் விருந்து கொடுத்தவர் திருப்தியடைவார். அதே போல அருணாசலத்தினுடைய விருந்திற்கு வந்த பெரியவர்களும் பசியில்லாவிட்டாலும் "வேண்டாம் வேண்டாம்” என்று கூறினாலும்,"சாப்பிடுங்கள்" என்று வற்புறுத்தப்பட்டார்கள்.
கம்பண்புல மன்னர்களா?
அவர்கள் அருணாசலத்தின் வீட்டு முற்றத்தில் நிற்கும் மாங்கன்றின் கீழ் இருக்கின்றார்கள். பசி அவர்களுடைய குடல்களை அரித்துக் கொண்டிருக்கின்றது. விருந்து உண்டு கொண்டிருக்கும் பெரிய மனிதர்களைப் பார்த்தபடியே தானிருக்கின்றார்கள். அவர்களுடைய வாயில் சலம் ஊற்றெடுத்து ஒடுகிறது. அவர்களுடைய கண்கள் விருந்தை உண்ணுகின்றன.
விருந்து நடந்து கொண்டுதானிருக்கின்றது!
-28- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அவர்களும் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றனர்!
"சின்னான், ஏன் இஞ்சை கணக்கக் கமக்காரர்கள் வருகினம்?"
கந்தன் கேட்டான்.
"அது. இண்டைக்கு.துவசம்."
“என்னத்துக்கு?"
"ஐய. இவருக்குத் தெரியேல்லை! அது கமக்காரன்ரை. இல்லை, சின்னக்கமக்காரன் செத்ததுக்கு."
"ஆர் மாணிக்க வாசகக் கமக்காரனோ?”
“ஓமடா. ஒ.”
"ஏன் செத்தார்?"
ஆவலுடன் கேட்டான் கட்டையன்
"அது. வந்து. மருந்து குடிச்சுச் செத்தார்."
“gGir?”
"கலியாணம் செய்யவிடேல்லை எண்டு.”
மாணிக்கவாசகர் அருணாசலத்தின் ஒரே ஒரு பிள்ளை. படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தார் கொழும்பில். வாலிபன், பிரமச்சாரி, கொழும்பு வாழ்க்கை, காதல்.
காதல் போட்டியில் தோல்வி அடைந்தார் மாணிக்க வாசகர். பொலிடோல் - புகையிலைக் கிருமி நாசினி, அவருக்குத் தஞ்சம் கொடுத்தது.
இந்த விவகாரம் கம்பண்புலத்து ஒரு சில சிறுவர்களுக்கு அரை குறையாகத் தெரியத்தான் செய்தது.
கட்டையனுக்கு இது புரியாப் புதிர்!
"எங்களுடைய வீட்டிலும் இப்பிடித் திவசம் வந்தால்..? சோறு. கறியள். பலகாரங்கள். நான் வயிறு நிறையச் சோறு சாப்பிடலாம். கந்தன், சின்னான், வேலன், பெரியவர்கள் எல்லாரும் வந்து. என்று எண்ணுகிறான் கட்டையன்."
விருந்து நடந்து கொண்டேயிருக்கின்றது.
கம்பன்புலத்தார் அதைப் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றார்கள்.
"எங்கடை வீட்டிலே ஏன் துவசம் வரேல்லை?” கட்டையன் ஏக்கத்துடன் கேட்டான்.
“உங்கடை வீட்டிலை ஒருத்தரும் சாகேல்லையே” வளர்ந்த ஒருவன்
கூறினான்.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -29

Page 19
"எங்கடை வீட்டை செத்தால் துவசம் வரும். சோறு தின்னலாம். எப்பிடிச் சாகிறது?. மருந்து குடிச்சு
கட்டையனுடைய மூளை முருத்துக்களில் ஏதோ ஊர்ந்து செல்வது போல. தலையைச் சொறிந்து கொண்டே அவன் எதையோ எண்ணுகிறான்.
'ஒரு நீளமான புட்டி, சிவப்புநிறப் படம்.ஒரு மண்டை ஒடு, இரண்டு எலும்புத்துண்டுகள். கட்டையன் மனக்கண்முன் தோன்றி மறைகின்றது.
கட்டையனுடைய கண்கள் பிரகாசிக்கின்றன. முகம் மலர்கின்றது. “டேய் வரிசையாய் இருங்கோ." அருணாசலம் அதட்டுகிறார். “கமக்காரன் எனக்கு. எனக்கு." "டேய் நான் தாண்டா முந்தி வந்தது." "இல்லையடா நான்." "சனியன், மூதேசி, தூ!” சின்னான் வேலனுக்குத் துப்புகிறான். வேலன் சின்னானுடைய தலைமயிரைப் பிடித்து இழுத்து. “டே. டேய் சனியன்களே சத்தம் போடாமை இருங்கோடா." கூறிக் கொணி டே கையிலிருந்த கம்பைச் சுழற்றுகின்றார் அருணாசலம்.
"கமக்காறன். எனக்கு, நான்தான் முந்தி வந்தது." கட்டையன் அசைவற்று நிற்கின்றான். அவனுடைய கண்கள் சோற்றைப் பார்த்தபடியே இருக்கின்றன.
"டேய் கீழ்சாதி நாய்களே! சத்தம் போடாமல் இருங்கோடா." என்று கூறிக்கொண்டே கையிலிருந்த கம்பால் இரண் டொருவருக்குத் தட்டுகிறார் அருணாசலம்.
ஒவ்வொருவருடைய ஒலைப் பெட்டியிலும் கருகல் சோறும், பலாக்காய், வாழைக்காய்க் கறிகளும் விழுகின்றன.
பலாக்காய், வாழைக்காய் கறி" "வெளிக்கறி" - "மன்னர்" படைக்குக் கொடுக்கும் கறி.
கட்டையனுடைய கண்கள் சோற்றைப் பார்த்தபடியே இருக்கின்றன. அவன் உள்ளம் எதையோ தேடி எங்கோ சென்றுகொண்டிருகின்றது.
அவர்கள் சோற்றை அள்ளி அள்ளி வாயில் போடுகின்றார்கள்.
-30- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

எல்லோருடைய முகங்களும் மலர்ந்திருக்கின்றன. ஒரே ஆரவாரம். முத்தன் கட்டையனுடைய ஆசைத் தம்பி என்ன கிடைத்தாலும் அவனுக்குக் கொடுக்காமல் சாப்பிடமாட்டான். முத்தனை அழவிடாமல் பார்த்துக் கொள்வது, நித்திரை செய்யப்பண்ணுவது, தான் செல்லும் இடமெல்லாம் முத்தனை இடுப்பில் கொண்டு செல்வது, முத்தனை அன்பாகக் கொஞ்சுவது, அவனுடன் விளையாடுவது முத்தனைப் பிரிந்து கட்டையன் ஒரு போதுமிருக்கமாட்டான்.
கம்பண்புல "மன்னர்"களுடைய வயிறுகள் நிரவிக் கொண்டிருக்" கின்றன.
பொழுது கருகிக்கொண்டிருந்தது. புத்தாடை உடுத்துப் புதுப்பொலிவுடன் விளங்குகிறாள் பொன்னி. "சின்னான், செல்லன், வேலன், கந்தன் இன்னும் கட்டையனுடைய நண்பர்கள். சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோரும் கட்டையனுடைய வீட்டிற்கு வந்து விட்டார்கள்.
முத்தன் சிரித்தபடியே அங்குமிங்கும் ஓடி விளையாடுகிறான். வீட்டு உயரத்தில் சோற்றுக் குவியல்கள், பலவகைக் கறிகள்,
LG9.5III.5.135GT.....
"கம” “கம" என்ற மணம் கட்டையனுடைய நாசித் துவாரங்களில் பாய்கின்றது.
அவனுடைய வாய் சப்புக் கொட்டுகின்றது. புரோகிதர்களும் வந்துவிட்டார்கள்! சோறு. கட்டையனுடைய உதடுகளில் புன்னகை அரும்புகின்றது. அவனுடைய முதுகிலே ஏதோ கடித்தது, கட்டையன் முனகியபடியே முதுகைச் சொறிகின்றான்.
"சோறு" தன் உணர்வின்றி அவனுடைய உதடுகள் அசைகின்றன. எங்கேயோ கூலிப் பிழைப்பிற்குச் சென்ற பொன்னி வீட்டிற்கு வர இருட்டி விடுகின்றது. அவள் அவசர அவசரமாகத் தினைச்சாமிக் கஞ்சியை சமைத்துக் கொண்டிருக்கின்றாள்.
"குபுக் குபுக்" என்று கஞ்சி கொதித்துக் கொண்டிருக்கின்றது. அதிலிருந்து எழுந்த வாசனை கட்டையனுடைய நாசித் துவாரங்களில் ஏறி.
அவனுடைய வயிற்றிலே பசி- அசுரப்பசி நாவில் ஜலம் ஊறுகின்றது. வாய்சப்புக் கொட்டுகிறது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -31

Page 20
முத்தனை இறுக அணைத்தபடியே சுருண்டு கிடக்கிறான்
35 66.
"ராசா கட்டையா. கட்டையா . என்ரை ராசா." பொன்னி எழுப்புகின்றாள். கட்டையன் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கின்றான். "கட்டையா, எழும்பு. இந்தக் கஞ்சியைக் குடி.” அவன் அசையவில்லை. அவனைத் தூக்கி நிறுத்தினாள். திரும்பவும் அவன்படுத்தான். “டே, சனியன், மூதேசி. பகல்லை துள்ளித்திரிஞ்சு போட்டு இப்ப.”
“பளார்!" கட்டையனுடைய முதுகிலே ஒன்று விட்டாள். அவன் துடிதுடித்துக் கொண்டு எழுந்து திகைத்தபடியே நிற்கின்றான். அவள் அவனிடம் கஞ்சிக் கோப்பையைக் கொடுக்கின்றாள். முத்தன், அவன் தூங்கிக் கொண்டுதானிருக்கின்றான். பொன்னியினுடைய தாய்மைக் கலசங்கள் கனத்து, வலித்து, சுரந்து இளவேதனையைக் கொடுக்கின்றன. அவளுடைய உடலிலே ஒருவித உணர்ச்சி பாயத் தொடங்கியது.
முத்தனைத் தூக்கி அணைத்தாள். தனது மார்பகச் சேலையை அவிழ்க்கின்றாள். அது நனைந்திருந்தது. “என் கண்ணே முத்து. ராசா முத்து." முத்தன் கண் திறக்கவேயில்லை. அவளுடைய ஸ்தனங்களிலிருந்து வெண்முத்துப் போன்ற பால் சுரந்து, கசிந்தது.
பொன்னி தனது செல்வத்தைத் தூக்கி நிறுத்தினாள். முத்தன், வாடி வதங்கிச் சோர்ந்து போன பயிற்றங்காய் போலத்துவண்டு, கொழுந்து மடிந்து. “முத்தா! என்ரை ராசா முத்தா!...” முத்தனுடைய வாயிலிருந்து குடலைப் பிடுங்கும் நெடில்!
குப்பி விளக்கை எடுத்து முத்தனுடைய முகத்திற்கு எதிராகப் பிடித்தாள்.
-32- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

முத்தனுடைய முகம் காய்ந்து, நீலப்பசை ஏறி, மரத்துப் போய்க் கிடந்தது!
கடைவாயிலிருந்து வெள்நுரை, கக்கி, கைகால்கள் விறைத்து வாய்திறந்து, கண்கள் பிதுங்கி.
முத்தனுடைய பிதுங்கிய கண்கள் அசையவேயில்லை!
"ஐயோ!. என்ரை ராசாவே..!"
நிர்வாண வானம், பூமி சடப்பொருட்கள் எல்லாவற்றையுமே இருள் விழுங்கிக் கொண்டிருந்தது. ν
இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு பாய்ந்து சென்றது பொன்னியின் ஒலக்குரல்!
கட்டையன்!
சோறு?
-1960
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -33

Page 21
e e
”! LibL DIT ک9ک
சவுக்கந் தோப்பிலிருந்து கிளம்பி அழிந்து செல்லும் காற்றின் ஒசையைப் போல, அவளு" டைய காதில் வந்து விழுந்தது அந்தக் குரல்.
தாய்மைப் பருவத்திற்காக ஏங்கித் தவித்துக்கொண்டிருக்கும் அவளுடைய உள்ளத்திலே உணர்ச்சியைக் கிளறிவிட்டது குரல்.
"-9jubuplt!" அவள் உடலிலுள்ள நரம்புகள், தசைக்" கோளம், எலும்புகள் ஆகிய எல்லாம் உருகிப் பாலாகச் சுரந்து முட்டிமோதிப் பெருகுவதான உணர்வு. மதர்த்தமார்புக் குவடுகள் தினவெடுத்து வலித்தன. அவளையும் அறியாமல் அவளுடைய கைகள் மார்பகங்களை அழுத்திப் பிடித்தன.
"அம்மா!" மதலைக் குரல் எங்கிருந்து வருகின்றதோ? கண்கள் நாற்புறமும் சுழல்கின்றன.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

பிஞ்சுக் கரங்களை நீட்டியபடியே தத்தித் தத்தி வந்து கொண்டிருக்கின்றது குழந்தை. அதன் உடலிலிருந்து எப்படித்தான் இந்த ஒளிப்பிரவாகம் எழுந்து பாய்கின்றது? அதன் அழகு?
அந்த அழகைக் கண்ட அவள் இதயம் பயத்தால் உறைந்தது. கடைந்தெடுத்த தந்தச் சிலையின் அங்க அமைப்புடன், பால் வடியும் வதனம். தாரகைகள் போன்று பிரகாசிக்கும் கண்கள். மனிதச் சிருஷ்டியின் அழகுத் தத்துவங்கள் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி, அழகின் உருவாய், அதன் இலக்கிய அமைப்பாய், பூரண நிறைவுற்று விளங்குகின்றது அக்குழந்தை. பவள உதடுகளை விரித்து இரண்டொரு ஒளி வீசும் பற்களைக் காட்டிச் சிரிக்கின்றது. அந்தச் சிரிப்பிலே மனித வாழ்க்கையின் பூரணத்துவ எழில் ஒன்றுபடுகிறது!
ஒடிச் சென்று, வாரி எடுத்து அணைத்து, முத்தமாரி பொழிவதற்கு ஆவலாகத் தனது கைகளை நீட்டிக்கொண்டு ஓடுகின்றாள். ஆனால் அவளுடைய உடல்அசையவில்லை.
“அம்மா!" அவளுடைய காதோரத்தில் ஒலிக்கின்றது குரல். பிஞ்சுக் கரங்கள் அவளுடைய கழுத்தைச் சுற்றிவளைக்கின்றன.
கோகிலாவின் கன்னங்களிலே ரோஜமலர் உதடுகள் பதிகின்றன. இந்த உலகத்தையே மறந்து, தன்னை மறந்து அந்தச் சுகிர்தத்திலே லயித்திருக்கின்றாள். அண்டசாராசரங்களின் சலனங்கள் அனைத்தும் அஸ்தமித்து, தன்னைத் தானே அழித்து, தன்னுள் இப்பிரபஞ்சத்தையும் அடக்கி, பரப்பிரமானந்த நிலையிலிருக்கும் கோகிலாவின் கண்களிலிருந்து கண்ணிர் வடிகின்றது.
"அம்மா! அம்மா! அம்மா! ..." ஏகப்பட்ட மதலைக் குரல்களின் ஒலி. கோகிலாவின் அறையில் குழந்தைகள் மயம். எல்லாக் குழந்தைகளையும் வாரி அணைத்து, தன் உள்ளத்தினுள் அடைத்து விடவேண்டும் போலிருந்தது அவளுக்கு.
அவளுடைய உரோமக் கால்கள் ஒவ்வொன்றினூடாகவும் ஒவ்வொரு குழந்தையின் உணர்ச்சியும் பாய்ந்து இதயத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது. இதைத் தாங்கமுடியாமல், மூச்சுத்திணறி, இறந்து விடும் நிலையில் இருந்தாள் அவள்.
"அம்மா”
“என் ராஜா?”
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -35

Page 22
“உங்களுக்கு என்ன வேண்டும்? என் செல்வங்களே சொல்லுங்கள்! இதோ! பால் குடம் குடமாக இருக்கின்றது. மலைக் குவியலாகப் பலவகைப் பழங்கள், ரசமான பட்சணங்கள், நீங்கள் அணிவதற்குப் பட்டாடைகள். விளையாடுவதற்கு மோட்டார், விமானம் போன்ற பலவகைப்பொம்மைகள். வேண்டுமென்றால் சந்திரனையும், வானத்துத் தாரகைகளையும் உங்களுக்கு விளையாடப் பிடித்துத் தருகின்றேன். நீங்கள் உறங்குவதற்குப் பஞ்சணை மெத்தை. வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?”
"ஆண்டவா! இப்பொழுதுதான் எண் குரல் உன் காதுகளுக்கு எட்டியதா! ஒரு குழந்தை வேண்டும் என்று எத்தனை கோயில்களைத் தரிசித்தேன்? எவ்வளவு தானங்கள் செய்தேன்? எத்தனை நாட்கள் விரதமிருந்து உன்னை வேண்டினேன்?"
எனக்குக் குழந்தையே பிறக்காதென்று எத்தனை பேர் கூறினார்கள். குழந்தையில்லையென்று எத்தனைபேர் என் இதயத்தில் சவுக்கால் அடித்தார்கள். ஒரு குழந்தைக்காக எவ்வளவு அலைந்தேன், ஏங்கினேன், தவித்தேன். இப்போ ஒன்றல்ல, எண்ணிலடங்காக் குழந்தைகள். இனிமேல் எனக்கு ஒன்றுமே வேண்டாம்.
இந்தச் செல்வங்களின் அணைப்பிலே இருக்கும் இந்த வேளையில், என் உயிர் உடலை விட்டுப் பிரிந்து போனாலும் எனக்குப்பூரண திருப்தி இந்தக் கணப்பொழுதே நான் இறந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”
ஜன்னல் திரையைக் கிழித்துக்கொண்டு பாய்ந்து வந்த ஒளிக்கதிர்கள் கோகிலாவின் கண்களைக் கூசவைக்கின்றன. ஒளிப் பிரவாகத்தின் மத்தியில், கையில் கூரிய வேலாயுதம் பளிச்சிட ஆடும் மயிலில் பாலமுருகன்.
அவளையும் அறியாமல் அவள் கைகள் குவிகின்றன.
ஒஒேளிப்பிரவாகம். இல்லை; தீ ஜுவாலை.
தீயின் கொடிய நாக்குகள் அவளை நெருங்குகின்றன.
குழந்தைகள்? பாலமுருகன்?
“முருகா!"
தீஜுவாலைக்குள் கோகிலா!
et
முருகா! ஐயோ! ஆண்டவா!"
குளுமையான அருவியில் புரள்வது போல, கோகிலாவின் உடலில் இதம். அருவியின் சிற்றலைகள் அவளுடைய அங்கங்களிலே மோதி இன்பத்தைக் கொடுக்கின்றன.
-36- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

வேய்ங்குழலின் கானம் அலை அலையாகப் பாயும் இன்பம்.
விரிந்து படர்ந்த குளுமையான ஆலமரம். அடிவானத்தை நோக்கிச் சரிந்து வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு கிளையில் கால் மேல் கால்போட்டுக்கொண்டு செவ்வுதடுகளில் வேய்ங்குழலைப் பதித்து மோகன கானத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறான் கண்ணன்.
கோகிலாவின் உடலும் உள்ளமும் அப் பிரபஞ்ச கானத்திலே கரைந்து மிதந்து கொண்டிருக்கின்றன.
"-9ylibup/T!”
கண்ணன்?
பிரபஞ்ச கானம்?
ஒரே இருள் மயம்!
“கண்ணா"
கோகிலா அலறினாள்.
ஜனன சூனியம்!
"ஆண்டவா! என் செல்வங்கள் எங்கே? என்னை ஏன் இப்படிக் கொல்கின்றாய்?"
மயான அமைதி.
கோகிலாவின் கைகளுக்கிடையில் ஏதோ ஊர்வது போன்ற உணர்ச்சி. உற்று நோக்கினாள்.
உடல் தும்பி எலும்புக் கோர்வைகள் மிதந்து, கண்கள் குழி விழுந்த ஒரு குழந்தை. அது மூச்சுவிடும்போது, விலா எலும்புகள் மேலும் கீழும் அசைந்து கொண்டிருக்கின்றன. நெஞ்சுக் குழியில் உயிர் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றது. அதன் பிஞ்சுக் கரங்கள் அவளுடைய மார்பகத்தைப் பிராண்டிப் பிடித்துத் தனது உலர்ந்த உதடுகளில் வைத்து அழுத்துகின்றது.
LITG)?
சிறிது நேரத்தில் அந்தக் குழிவிழுந்த கண்கள் அவளை ஏக்கத்துடன் பார்க்கின்றன.
கோகிலாவின் அடிவயிற்றில் தீ! குழந்தையின் குழிவிழுந்த கண்களின் ஒரத்தில் நீர்த்துளி.
தனது மார்பகத்தைக் கீறி. இரத்தத்தையாவது குழந்தைக்கு ஊட்டவேண்டும் போலிருக்கின்றது கோகிலாவிற்கு.
குழந்தையின் கண்கள் மண்டைக்குள் சொருகின்றன.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -37

Page 23
தலை சரிந்தது!
"ஐயோ! கடவுளே, உனக்கு இதயமில்லையா?”
வெறி பிடித்தவள் போல ஓடினாள் கோகிலா.
அவள் கைப்பிடிக்குள்ளிருந்த குழந்தை?
"அம்மா!”
விஸ்வாமித்திர மெளனத்தைப் பிளந்துகொண்டு மதலைக் குரல்.
கோகிலாவின் எதிரே. எழில் நிறைந்த குழந்தை. அதன் கடைவாயிலிருந்து பால் வழிந்து கொண்டிருக்கின்றது.
அதை வாரி அணைக்கத் தாவினாள்.
தனது கைகளைக் காற்றில் வீசிக்கொண்டு குழந்தை ஒடுகின்றது.
“JITgm”
"அம்மா!"
ஒடுகின்றாள் கோகிலா.
குழந்தை ஒடுகின்றது. அவளும் ஒடுகின்றாள்.
காற்றைப் பிளந்து கொண்டு, காற்றிலும் வேகமாகப் பாய்ந்து ஒடுகின்றது குழந்தை.
கோகிலா?
பொன்னும் மண்ணும் வேண்டாம். ஐசுவரியம் எதுவும் வேண்டாம், உற்றார் உறவினர் வேண்டாம் கைப்பிடித்த கணவனும் வேண்டாம். இந்த உலகமே வேண்டாம். என்ற ரீதியில் எல்லாவற்றையும் வெறுத்துத் துறந்து, தனக்கு ஒரு குழந்தை தான் வேண்டும். என்ற உத்வேகத்தில் அதைப் பிடிக்க ஓடுகின்றாள்.
காடுகள், மலைகள், ஆறுகள், சமுத்திரங்கள், பாலைவனங்கள். ஏன் இந்தப் பிரபஞ்சத்தையும் தாண்டிக் குழந்தைக்குப் பின்னால் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறாள் கோகிலா.
மனித வர்க்கமேயற்ற, மண் வாசனையே இல்லாத ஒரு புதிய உலகத்திலே குழந்தையும் கோகிலாவும் ஒடிக் கொண்டேயிருக்கின்றார்கள்.
-ኅ96ኀ
女
-38- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

சிருஷ்டி..?
அவள் செத்துவிட்டாள்.
"றிக்காட்" புஸ்தகத்தைத் திறக்கின்றார் சித்திரகுப்தன்.
'g:Irangálf)!" சித்திரகுப்தனுக்குத் திகைப்பு! "அப்பீல் தள்ளுபடியாகிவிட்டால்." என்ற திகிலோ?
"நீ யார்?" காலனின் கர்ச்சனை. "சாவித்திரி" அமைதியாகக் கூறினாள்
-9KG) 1617.
இயமனுடைய தொடைகள் நடுங்குகின்
றன.
"அந்தச் சாவித்திரியல்ல நான்." “gyuGunT?” கூற்றுவனின் குரலில் தெம்பு. "ஒரு விபச்சாரி" வேதனையுடன் கூறுகின்றாள அவள.
"அடிபாவி”!
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -39

Page 24
"நானா பாவி?” கோபாவேசத்தில் அவளுடைய உடல் ஆட்டம் கொடுத்தது.
“என்ன கர்வம் உனக்கு?” காலால் தரையை உதைக்கின்றார் இயமதர்மன்.
“என்ன கலாட்டா?” அலட்சியமாகக் கேட்டுக்கொண்டே வருகின்றார் சிவபெருமான். “சாவித்திரி என்ற பெயருடன் விபச்சாரம் செய்தாளாம் இவள்." “கற்புக்கரசியின் பெயருக்கே களங்கம்" கூறிக்கொண்டே நெற்றிக் கண்ணைத் திறந்தார் உருத்திரன்.
"பசியைப் படைத்துவிட்டுக் கற்பைப் பற்றி பேச்சு வேறா?" சாவித்திரியின் குரலில் ஏளனம்.
முக்கண்ணனுடைய நெற்றி சுருங்கிற்று. முதல் தடவையாகச் சிந்தனையில் ஆழ்ந்தார் சர்வேஸ்வரன்.
-96
女
40- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

* னக்கு வேலை கிடைத்துவிட்டது". நான் இப்படி உரக்கச் சத்தமிட்டிருக்கக் கூடாது. அப்படிக் கூவினாத்தான் என்னவாம். குடியா முழுகிவிடப் போகிறது? நான் ஏன்தான் அப்படிக் கூவியிருக்க வேண்டும்?
கோகிலா ஏன் என்னை அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கின்றாள்? வியப்பின் அறிகுறியா அல்லது ஆனந்தத்தின் அதிர்ச்சியா? வியப்பும் ஆனந்தமும் சேர்ந்துவிட்டால் அப்படித்தான் நிற்பாள்போல இருக்கிறது. இவ்வளவு காலமும் அவள் என்னை என்னவென்று நினைத்திருந்தாள்?
சிறுபிள்ளைகளாக வட்டிற்சோறாக்கி, மண்ணையும் குரும்பட்டித் துண்டுகளையும் சோறும் கறியுமாக எங்கள் வீட்டுப் பனங்காயின் "பணுவிலில்" இட்டுக் கொடுக்க, நான் வாயில் போட்டுச் "சப்பும்" பொழுது பார்ப்பாளே அதே ஆச்சரியப் பார்வையை ஏன் இப்பொழுதும் வீசுகிறாள்?
“கோகிலா! உனது மனதின் ஆழத்திலுள்ள அந்த எண்ணத்தை இன்றே களைந்துவிடு. உனது
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -4-

Page 25
எண்ணம் உன்னையே ஏமாற்றிவிட்டதே. நீ வானவிற் புடவையும் அதற்கிணையச் சட்டையும் அணிந்து, இன்று எண்முன்னால் வானத்துத் தேவதையாக, முதன்முறையாக நிற்கும் பொழுது, அதே பார்வையைக்காட்டி என்னைச் சிறியவனாக்காதே. அதற்கு இப்பொழுது காலநேரம் சரியானதாக இல்லை.”
"அதுதான் வேண்டும். அப்படித்தான் நீ சிரிக்க வேண்டும். இப்பொழுது தான் நீ என்னை அறிந்து கொண்டாய். ஆடிவரும் அலைகளிலே, வட்டவடிவமாகச் சுழிகள் குழிவதைப் போன்று உனது இரு கன்னங்களிலும் அவைகளை எப்படி ஏற்றிவிடுகின்றாய்."? அவளை நான் உன்னிப்பாக நோக்குகின்றேன். அவள் ஏன் அந்திவானத்துச் செம்மைக் குழம்பைத் தன் கன்னக் கதுப்புகளிலே வரவழைத்துக் கொள்கின்றாள்? "கோகிலா! நீ எதையோ கூறமுயல்கின்றாய் போல எனக்குத் தெரிகின்றது. இல்லாவிட்டால் உனது முகம் சிவக்கக் காரணம் என்ன?. எனக்குப் புரிகிறது - எனக்கு வேலை கிடைத்துவிட்டது! கிடைத்துவிட்டால் உனக்கும் எனக்கும்.?அதைத் தான் நீ நினைத்து விட்டாய் என்று நினைக்கின்றேன். அதற்காக உனது உடம்பிலுள்ள இரத்தத்தையெல்லாம் முகத்துக்கு நீ ஏற்றவேண்டியதில்லையே?”
"கோகிலா!” மறுமுறையும் அழைக்கின்றேன். "கலிங்கம் சரசரக்க, நாணிக்கோணி நடந்துவரும் புதுமணப் பெண்ணைப் போன்று, நீ மெளனிக்குள் மெளனியாகிச் சிலையாக ஏன் நிற்கின்றாய்? அப்படியே உன்னைத் தாவி அணைத்து உனது கன்னத்துச் சிவப்பை உன் முகத்தில் அப்பிக்கொள்ள வேண்டும் போலிருக்கின்றது." அவளை நோக்கி எனது கால்கள் நகருகின்றன. அவளது கைகளை அப்படியே தூக்குகின்றேன். உனது கைகள் ஏன் அப்படி நடுங்குகின்றன? கன்னத்தின் செம்மை, கரும் சிவப்பாகி ஏன் மெல்ல மெல்லக் கறுக்கின்றது. நீ என்னை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நான் உனது முறை அத்தானென்பதையும் நீ மறந்துவிடக்கூடாது. உனது கழுத்தில் தாலிகட்டி, உன்னை உலகறிய மணக்கப் போகின்றவன் நான்தானே. உனது முகத்தின் கருமையை எனக்கு இனிமேல் எப்போதாவது காட்டிவிடாதே" - நான் எனது கைகளை விடுவித்துக் கொள்கிறேன்.
"ஓஹோ . எனக்குப் புரிந்துவிட்டது. உனக்கு வெட்கம் வந்து விட்டது. விழிகளைச் சுழற்றி, குழி விழச் சிரித்து, எனது சித்தத்தைக் கிறுகிறுக்கச் செய்த உனக்கு இப்பொழுது வெட்கம் வந்துவிட்டது. நன்றாக வரட்டும். ஆனால் அந்தக் கருமையூட்டும் கடும் வெட்கம் வரவேண்டாம். அது சிறிதளவும் எனக்குப் பிடிப்பதில்லை" - இதமான காற்று வீசுகின்றது. எங்கள் வேப்பமரத்தின் தளிர்களிலே தவழ்ந்துதான் வந்திருக்க வேண்டும். அந்த வேப்பமரந்தான் எப்படி வளர்ந்துவிட்டது.
42- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

சிறு பிள்ளைகளாகத் தோட்டமென்று மரங்களை நாட்டினோமே. அப்பொழுது வைத்த மரங்கள், தப்பிப் பிழைத்த ஒரே மரம் கோகிலாவும் பெரிய மனுஷியாக வளர்ந்துவிட்டாள் தான். அதுதான் அந்த மரமும் வளர்ந்து விட்டதே!
"நீ ஏன் என் கணிகளுக்கு உலகத்தின் அழகியாகக் காட்சியளிக்கின்றாய்? இயற்கையின் வண்ணங்களையெல்லாம் உனது காலடியிற் கிடத்தித் நீயில்லாவிட்டால் உலகத்தையே எனக்கு ஒரு வெற்றிடமாக்கி விடுகின்றாய். உலகத்தின் வெம்மையில் என்னைத் தவிக்கவிடாமல் உன்னிடம் நெருங்கவும் விடுகின்றாய் இல்லையே. உனது வெட்கம் சுக்குநூறாகட்டும், சிதறித்தெறிகட்டும்." தபோவலிமையின் உச்சவரம்பை எட்டிப்பிடித்தவன் மாதிரி ஏதேதோ பேசுகின்றேன். அவளுக்குக் கேட்டிருக்குமோ என்னமோ தெரியாது. அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள்.
எங்கள் தபால்காரன் மிகவும் நல்லவன். இல்லாவிட்டால் எனக்கு வரும் கடிதங்களையெல்லாம் ஏன் அவளிடம் கொடுக்க வேண்டும் எனக்கு நன்றாய்த் தெரியும். எனது ஆச்சியை அவனுக்கு நன்றாய்த் தெரிந்திருந்தும் அவளும் ஆச்சியும் போய்க்கொண்டிருக்கும் பொழுது ஆச்சியிடம் கொடுக்காமல் அவளிடம் ஏன் கொடுக்க வேண்டும்? “அவனால் தான் உனக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டதென்று கூற முடியாது. ஐந்து வருடங்கள் நான் ஊரிலில்லாத காரணத்தால் உமது சிறுபிள்ளைத் தொடர்பு அற்றுப் போய் விடுகிறதா என்ன? உன்னை நான் "அளந்து” விட்டேன். என்னை நீ புரிந்து கொண்டாய்."
"இவ்வளவு நாட்களும் எனக்கு நேரிலே வர வெட்கப்பட்டு ஓடி ஒளிந்துகொள்ளும் நீ இன்று மாத்திரம் எனக்கு முன்னால் இவ்வளவு நேரமும் ஏன் நிற்கின்றாய்? ஆச்சியும் இல்லாத இடத்தில். ஏன், ஆச்சி தோட்டத்துக்குப் போனது உனக்குத் தெரியும் தானே? தெரிந்துதான் நீ வந்திருக்க வேண்டும். இன்று வந்த கடிதத்தில் மாத்திரம் எனக்கு வேலை அழைப்பு வந்திருக்கிறது என்று உனக்கு எப்படித் தெரியும்? “கடிதம் நீட்டிய கரத்தைப் பார்க்கின்றேன். ரோஜா மலர் போன்ற உன்னுடைய கைகளில்தான் எவ்வளவு பசுமை? உன்னை அணைக்க வேண்டும் போல் என்னென்னவோ செய்கின்றது.” கைகளை இலாவண்யமாக எடுத்து அணைக்க முயல்கின்றேன். இமை வெடிப்புக்குள் அவள். கண்கள் பிதுங்குகின்றன. யாரோ வீட்டுப் “படலை” விடும் சத்தம் கேட்கிறது. ஆச்சியாக இருக்கலாம். பட்டதும் படாததுமாக அவளின் ஸ்பரிசத்தை உணரக்கூடியதாக இருக்கிறது. "கோகிலா.கோகிலா!"
ஆச்சியா..? ஆம் ஆச்சிதான். தாய்மையின் பூரணத்துவம் தெரிகிறது. நான் சுதாகரித்துக் கொள்கின்றேன். அவள் தான் எத்தனை
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -43

Page 26
நாட்களுக்கு என்னை இப்படியே பார்த்துக்கொண்டிருக்க முடியும்? "காடு வெட்டிச்" சேலையின் மடமடப்புச் சத்தம் கேட்கிறது. கோகிலா வந்ததை அவள் கவனித்திருக்க முடியாது.”
“கண்டிருந்தால்?” நான் கண்களை இறுகமூடிக்கொள்கிறேன். "நான் பரீட்சையே பாஸ் பண்ணவில்லையென்று எத்தனை பேர் எப்படி எப்படியெல்லாம் பேசிக் கொள்கின்றனர். அப்புதான் சில வேளைகளில் கறுவிக் கொண்டாலும் ஆச்சி எவ்வளவு தூரம் அன்பை அள்ளிக்கொட்டுகின்றாள், நான் ஏன் இன்னும் கண்களை மூடிக் கொண்டிருக்கின்றேன்? எனக்குத் தான் வேலை கிடைத்துவிட்டதே. ஆச்சியென்று கூப்பிட எனது வாய் துடிக்கின்றது. என் சப்த நாடிகள் அடங்கியொடுங்குகின்றன”
“என்ரை அப்பன் பாட்டன்மார் படிக்காதவர்கள் தான். அதனால் நானும் படிக்கக்கூடாதாம்? படித்தும் வேலையில்லாவிட்டால் எவ்வளவு ஏளனம்? கேலிக் கதைகள்? உத்தியோகம் பார்க்காத பரம்பரையில் பிறந்தபடியால் நானும் உத்தியோகம் பார்க்கக்கூடாதாம்; சில ஞானிகள் உபதேசமும் செய்கிறார்கள். ஆனால் பணம் கொடுத்துவிட்டால் அவர்களுக்கும் வேலை கிடைத்துவிடும். நான் முயற்சிபண்ணுவதில்லை என்று சிலருடைய கழுகுக் கண்களுக்குத் தெரிந்துவிடுகின்றது. பணம் கொடுத்து வேலை வாங்கும் நிலைபரம் எனக்கில்லை. மனமும் இல்லை. ஆன முயற்சி செய்யாமல் நான் ஏன் இருக்கப் போகின்றேன். முயற்சியைப் பற்றி இவர்களுக்கென்ன தெரியப் போகிறது? அனுதாபத்தினாலா கூறுகின்றார்கள்? வாழ்க்கையில் இவர்கள் எதைத்தான் சாதித்து விடுகிறார்கள், போலிஸ் கான்ஸ்டபிளாகச் சேர்ந்து போலிஸ் கான்டபி. ளாகவே றிட்டையர் ஆகும் பேர்வழிகள். முயற்சியைப் பற்றி இவர்களுக்கு என்ன தெரியப்போகிறது? எனக்குப்புத்திசொல்வதற்கு இவர்கள் எதனைச் சாதித்திருக்கின்றனர்? இவர்களின் முயற்சியெல்லாம் எங்கிருக்கின்றது? கலியாணம் செய்வதிலும் பிள்ளை பெறுவதிலுமா?"
“எனக்குக் கலியாணம் பேசுகின்றார்கள். கலியாணம் ! கண்டறியாத கலியாணம். என்ன காரணத்திற்காகப் பேசுகின்றார்கள்! காசுள்ளவர்களென்றால் யாராவது தங்கள் மகளுக்கு - அவள் எப்படியானவர்களாக இருந்தாலும் கலியாணம் செய்துவிடலாம் என்று எண்ணுபவர்கள் பலரைக் காண்கின்றோம். ஏன் எனகுக் கலியாணம் பேச வேண்டும்? கலியாணம் செய்துவிட்டால் வேலை கிடைத்துவிடுமா? வேலை கூடத் தேடித்தருவார்களாம். கலியாணம் முடிந்ததும் வேலை கிடைக்காவிட்டால்? வசதியுள்ள குடும்பத்தினர் வேலையும் தேடிக் கொடுத்துக் கல்யாணமும் செய்துகொள்ளலாம். அப்படியென்றால் கோகிலாவைப் போன்ற வசதியில்லாத பெண்களெல்லாம் தூக்குப்
-44- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

போட்டுச் சாகவேண்டியதுதானோ?பணத்துக்காக கல்யாணம் செய்வது சரியென்றால் அதே பணத்திற்காக விபச்சாரம் செய்வது மட்டும் குற்றமாகி விடுகிறதே."
ஆச்சி என் முகத்தைக் குனிந்து பார்க்கின்றாள். எனது நெற்றியின் வியர்வைத் துளிகளைத் தனது முந்தானைச் சீலையால் துடைத்து விடுகின்றாள். எனக்கு அவளின் காலடியில் விழுந்து அழவேண்டும் போல இருக்கின்றது. ஆச்சி எனக்கு வேலை கிடைத்துவிட்டது! ஆச்சி எனக்கு வேலை கிடைத்துவிட்டது! w
அப்பு கோவிலுக்குப் போய்விட்டு வருகிறார். அவருக்கு ஆலகால நஞ்சுண்டவரிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் அவருக்கு ஒரு நம்பிக்கை. கையில் வெள்ளித் தாம்பாளம். அது நிறையப் பழங்கள், பூக்கள், உடைத்த தேங்காய், விபூதி, சந்தனம், இத்தியாதி. நான் பயணம் போவதற்குத் தயாராகின்றேன்.
தனது நம்பிக்கையின் வெற்றிப் பெருமிதத்தில் அப்பு தாம்பாளத்தை எண்முன் நீட்டுகின்றார். விபூதியையும் சந்தனத்தையும் எடுத்து எனது நெற்றியில் பட்டை தீட்டிப் பொட்டிடுகின்றேன். உள்ளத்தின் நம்பிக்கை அவர் முகத்தில் அப்பிக்கிடக்கிறது. ஆச்சி முன் செல்ல நான் பின் தொடர்கின்றேன். வாசலில் கட்டியிருந்த பசுமாடு என்னைப் பார்த்துத் தலையை அசைத்து எனது கால்களை நக்கிக்கொள்கிறது. ஆச்சி என்னைப் பார்த்துச் சிரிக்கிறாள்.
"ஆச்சி போய் வருகின்றேன்" நான் நடந்துகொண்டிருந்தேன். எனது கண்கள் வேலியை ஊடறுத்துச் செல்கின்றன. "அவள்” இங்குதான் எங்கோ இருக்கவேண்டும். "அத்தான், போய்விட்டு வாருங்கள்" எனது காதுகளில் மெதுவாகக் கேட்கிறது. திரும்பிப் போகின்றாள். என்னால் திரும்பிப் பார்க்க முடியவில்லை. ஒழுங்கை முடக்கில் திரும்புகின்றேன். அப்பு பின்னால் வந்துகொண்டிருக்கின்றார். ஆனால் அவரால் என்னை அவதானிக்க முடியாது. அவர் இன்னும் முடக்கைத் தாண்டவில்லை.
கோகிலாவின் கை வேலிக்கு மேலாகத் தெரிகிறது, ஒரு மல்லிகைக் கொத்து. எது மலர், எது கை? வெடுக்கெனப் பற்றுகின்றேன். மலர்க் கொத்து கைகளில் அகப்படுகின்றது. வேலிப் பொத்தலுக் கூடாக இரு விழிகள் ஏதோ பேசுகின்றனவே. "போய் வருகிறேன் கோகிலா."
"மறந்துவிடாதீர்கள். அத்.தா.ண்!" மிகப் பெரிய பாடசாலை. எங்கும் மாடிகள் நிறைந்திருக்கின்றன. வகுப்பறையுள் கல்லூரி அதிபர் கூட்டிச் சென்று அறிமுகம் செய்து வைக்கின்றார்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் 45

Page 27
“வணக்கம் சேர்."
“வணக்கம்." பாடம் ஆரம்பிக்கப்படவேண்டும். அவர்களுக்கு இலக்கியப்பாடம். மிகவும் நல்லதாகிப் போய்விட்டது. இலக்கிய" மென்றால் எனக்கு உயிர்.
"இலக்கியப் புத்தகத்தைக் கொண்டு வாருங்கள்" - ஒரு மாணவன் தருகின்றான். பாரதியார் பாடல்களில் தெரிந்தெடுக்கப்பட்ட தொகுப்பு. எடுத்தவுடனேயே குயிற் பாட்டு. இந்தப் பாட்டைத்தான் எத்தனை தடவைகள் படித்திருப்பேன். படிக்கப் படிக்க இனிமை கொடுத்துக்" கொண்டேயிருக்கும், குயிற் பேடொன்று தனது காதலனுக்காக ஏங்கிக் குரலெழுப்புகின்றது. அந்தக் குயிலுக்குக் காதல் போய்விட்டாலோ சாதல்தான். வளர்ந்தோங்கிய மரங்கள் சூழ்ந்த ஒரு குளம், தென்றல் வீசிக் கொண்டிருக்கிறது. அந்த மரக்கிளையொன்றில் பேடைக் குயிலொன்று குரலெழுப்பிக்கொண்டிருக்கின்றது. யாரோ வருவது போன்ற உணர்வு. ஒருவர் வந்து கொண்டிருக்கின்றார். தலையில் "முண்டாசு"க்கட்டு; நெற்றியில் பித்தளைத் தாம்பாளம் போன்ற குங்குமப் பொட்டு. ஒளி வீசும் கண்கள். அப்பப்பா! எவ்வளவு கம்பீரமும் ஆண்மையும் நிறைந்த தோற்றம், பாரதியாராகத்தான் இருக்க வேண்டும். ஆமாம். அவரே தான். கவிதை வெள்ளம் "மடை" திறந்து பாய்கின்றது. பேடைக்குயில் - அங்கு கோகிலா. அவளுக்கு என்ன நடந்தது? ஏதோ கூறுகின்றேன். எங்கோ சிரிப்பொலி மாணவர்களெல்லாம் சிரிக்கின்றார்கள்.
“அமைதி.அமைதி.அமைதி" சிரிப்புஅடங்கவில்லை. விழுந்து விழுந்து சிரிக்கின்றார்கள். என்ன செய்வது? கண்களை மூடிக் கொள்கின்றேன்.
கண்களை மூடிக்கொண்டால் மட்டும் கடமை தீர்ந்து விடுகின்றதா? இவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும். "நீங்கள் மாணவர்க" ளில்லை. கழுதைகள், மிருகங்கள், எல்லோரும் வெளியே போகலாம்." ஒருவரும் எழும்பும் சத்தம் கூட இல்லை. கணிகளைத் திறந்து நோக்குகின்றேன். ஆச்சி என்னையே பார்த்துக்கொண்டு நிற்கின்றாள். நான் வாசித்துக் கொண்டிருந்த பத்திரிகை வீட்டு முற்றத்தில் கிடக்கின்றது.
வேலை?
வெயில் காய்ந்து கொண்டிருக்கிறது.
-96.O-
ܐܛܐ
-46- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

புரியவில்லை
ருவரும் ஒன்றும் பேசவில்லை. ஏன் பேசப்போகின்றார்கள்? அவர்கள் ஒருவருடன் ஒருவர் கோபம். "யார் முதலில் பேசுவது?" இதுதான் அவர்களுக்கிடையிலுள்ள பிரச்சினை. “ஒருவர் பேசினால் மற்றவர் பேசிவிடலாம். இத்துடிப்பு இருவர் உள்ளத்தி லும் இருக்கத்தான் செய்தது. ஆனால் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டுமே. அது அவர்களிடமில்லை. அதனால் ஒருவரும் பேசவில்லை.
பாடசாலை முடிந்துவிட்டது. இருவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர். அக்கம் பக்கத்தில் யாருமில்லை. மாந்தோப்பு நெருங்குகின்றது. அவர்கள் உள்ளத்தில் ஏக்கமும் துடிப்பும் உறவாடுகின்றன. "அவன் கதைக்காமல் விட்டால்..?” அவளுக்கு அழவேண்டும் போலிருக்கின்றது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -47س-

Page 28
“அவள் பேசாமலே விட்டுவிடுவாளோ?" என்ற எண்ணம் அவன் மனதில் படுகின்றது. அவ்வேதனையை அவனால் தாங்கமுடியவில்லை. அவன் உள்ளம் கனத்தது. கண்கள் பனித்தன. முட்டிவந்த கண்ணிரைச் "சேட்டினால்" துடைக்கின்றான். "கைகளை எடுத்துத் துடைப்பதை அவள் பார்த்துவிட்டால் அவனுக்குத் தோல்வி. அவன் ஆண்பிள்ளை. அவளுக்குத் தோல்வியைச் சகித்துக்கொள்ள முடியாது.
வரிசைக் கிரமமாக கிளைத்துச் சடைத்து நிற்கும் மாமரங்கள். அவற்றினடியில் மெத்தை விரித்தாற் போல் கிடக்கின்றன சருகுகள். இதே மாஞ் சோலையில், அவர்கள் எத்தனை நாட்கள் கும்மாளமடித் திருப்பார்கள். இரு உள்ளங்களும் எவ்வளவு பேசாத பேச்சுக்களைப் பேசியிருக்கும். பாடசாலை விட்டு வரும்பொழுது, அவர்கள் அங்கு தங்கிச் செல்லாத நாட்களேயில்லை. அவர்களுடைய களவு, அத்தோப்புச் சொந்தக் காரணுக்குத் தெரியாது. எவருக்குமே தெரியாதுதான். தெரிந்திருந்தால் அவர்கள் பாடு அதோகதி
அவனும் அவளும் ஒன்றாகக் கூடித் திரிவது அவளுடைய அப்பாவுக்குத் தெரியாது. ஒருநாள் அறிந்துவிட்டார். யாரோ பொல்லாதவர்கள் சொல்லிவிட்டார்கள். அதற்காக அவனை அவர் எப்படி எல்லாம் பேசிக் கண்டித்தார். அவள் மனம் வேதனைப்பட்டது" தான். ஆனால் அவனுடன் கதைப்பதில் காணும் இன்பத்தை அவளால் இழக்க முடியாது. அவன் கதைக்காமலிருக்கும் வேதனையைச் சுமக்க முடியவில்லை அவளால். மனம் என்னவோ செய்தது.
இனியும் ஏன் அவள் அவனுக்குப் பின்னால் மெளனியாகச் செல்ல வேண்டும்? அவனுடன் பேசாமல் செல்வதைவிட, அவள் போகாமலே இருக்கலாம்.
"ஐயோ!" கூவிக் கொண்டு கால் பெருவிரலைப் பிடித்தபடியே இருந்தாள்.
அவன் திரும்பியும் பார்க்கவில்லை. அவள் முகம் கறுத்தது. மூதேசி, அவர் மூஞ்சியைக் காட்டமாட்டார். அவர் பெரிய ராசா. இனிமேல் சனியனுடைய உயிர் போனாலும் பேசமாட்டான். மனதுள் கறுவிக் கொண்டாள்.
அவன் அவளுக்காக நிற்கவில்லை. நடந்தான். பாதையின் வளைவால் திரும்பியும் விட்டான்.
இனி நான் அவனுடன் கதைப்பதில்லை; கதைப்பதில்லை'மனனம் பண்ணினாள்.
-48- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

புத்தகங்களை எடுத்துக்கொண்டு எழும்ப அவள் தலை நிமிர்கின்றது. எதிர்ப்பக்கத்து மரங்களுக்கிடையில் நின்று அவன் பார்ப்பதைக் கண்டுவிட்டாள். அவன் தன்னை விட்டுப் போகவில்லை என்று அவளுக்குத் தெரிந்து விட்டது. உடனே வலி பொறுக்கமாட்டாது அழுவது போல அழுதாள். У
அவனுக்கு அதைப் பார்த்துக்கொண்டு ஒன்றும் செய்யாது நிற்க மனம் வரவில்லை. அவள் இருக்கும் இடத்திற்கு வந்தான். அவளுக்கு அழுகை கூடிவிட்டது. உண்மையில் தேம்பித் தேம்பி அழுதாள்.
அவனால் ஒன்றும் பேசமுடியவில்லை. அவள் தேம்புவதைச் சகிக்கவும் முடியவில்லை. கோபம் மெளனமாகி, இரக்கம் தலையெடுக்கின்றது.
“சரோ. என்ன உனக்குக் கல்லு. அடிச்சுப்போட்டுதா?" சொற்கள் தடம்புரண்டு வெளிவந்தன.
அவளது காலைத் தனது கைகளால் தூக்கித் தடவினான். அவள் காலை இழுத்தாள். அவன் விடவில்லை. அவளுடைய கோபம் பறந்தது. அழுகையும் நின்று விட்டது. என்றாலும் அவள் அதை வெளிக்காட்டவில்லை. கோபிப்பவள் போல முகத்தைச் சுழித்தாள்.
“சரோ, நீ என்னோடை கோவமா?" கேட்டுக் கொண்டே அவளை ஏக்கத்துடன் பார்க்கின்றான். அவள் பேசவில்லை. அவன் தேம்பினான். அவளுக்கு அதில் ஒரு வித திருப்தி என்றாலும் அவளுக்கு அது சகிக்கவில்லை. அவளது தளிர் விரல்கள் அவனுடைய கண்ணிரைத் துடைத்தன.
"என்னோடை பேசமாட்டியா சரோ?". "நீ ஏன் பேசேல்லை?” "நீதானே என்னோடை பேச மாட்டன் எண்டனி" “எனக்கு நீஅடிச்சாய். அதுக்குத்தான் நான் அப்பிடிச் சொன்னான்." "என்னைப் பாத்து நீ ஏன் பல்லைக் காட்டினனி?” "நான் உன்னைப் பாத்துக் காட்டேல்லை. சுந்தரம் என்ரை புத்தகத்தைத் தள்ளினான். அதுக்குத்தான் நான் அவனுக்குப் பல்லைக் காட்டினனான். அதுக்கு நீ ஏன் எனக்கு அடிக்கவேணும்?"
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -49

Page 29
“சுந்தரத்துக்கு நீ பல்லைக் காட்டினால் அவன் உனக்கு அடிப்பான். நீஅழுவாய். அதுக்குத்தான் சும்மா இரெண்டு தட்டினனான். நான் உனக்கு நோக அடிக்கேல்லை சரோ”.
"இல்லை. சுந்தரம் எனக்கு அடிச்சால் நீஅவனோடை கோவம் போடுவியா?”
a 8 . ம் ம் ம் அவனுக்கு அடிப்பன்." நீ அடிச்சதுக்கு நான் வாத்தியரிட்டைச் சொல்லேல்லை. அந்த மகேசுதான் ஒடிப்போய்ச் சொன்னவ.
எனக்கு அடிச்சுப்போட்டு நீ ஏன் அழுதணி? வாத்தியார் அடிப்பார் எண்டு பயந்தா?”
"இல்லை. நீ அழ எனக்கும் அழுகை வந்திட்டுது. அது தான் அழுதனான்.”
"அந்த வாத்தியார் பொல்லாதவர். எனக்கு நீ அடிச்சால் அவருக்கு என்னவாம்? அவரிட்டை நான் போய்ச் சொல்லேல்லை. அவர் உனக்கு ஏன் அடிக்க வேணும்? அவர் அப்பிடித்தான். கூடாத வாத்தியார். அவற்றை சுடு மூஞ்சையைப் பாக்கப் பயமாயிருக்கு, உன்னை நல்லா நோக அடிச்சுப் போட்டார்."
வேதனையுடன் கூறினாள் சரோ. சட்டையை நீக்கி விட்டு, தனது கைகளால் அவனுடைய முதுகைத் தடவினாள் அவனுக்கு அது இதமாக இருந்தது. சணி டைபிடித்தது, அடிவாங்கியது எல்லாம் அவன் மனதிலிருந்து அழிந்து விட்டன. அவன் அவளுடைய தடவலுக்கிணைய வளைந்து கொடுத்தான். அவனுடைய கை அவளுடைய கழுத்தைச் சுற்றி வளைந்தது.
சரோவினுடைய உள்ளத்தில் ஆனந்தம் பொங்கி வழிந்தது. முகம் மலர்ந்தது. குறுகுறுக்கும் கருவிழிகள் ஜீவாமிர்தத்தைச் சொரிந்தன. கூந்தலில் கட்டப்பட்டிருக்கும் சிவப்பு றிப்பன் காற்றில் பட்டுத் தெறிக்கின்றது. அவ்வொளி அவளுடைய ரோஜாக் கன்னங்களை மேலும் சிவப்பாக்குகின்றது. அவளுடைய ஜீவகளை நிறைந்த தோற்றம் அவனுக்கு விந்தையாக இருந்ததோ என்னவோ! தன்னை மறந்த நிலையில் அவன் கண்கள் அவளை விழுங்கிக் கொண்டிருந்தன.
“பசுவதி வாறியா அந்தப் பச்சை தின்னி மாங்காயை ஆஞ்சு தின்னுவம்;"
சகலதும் மறந்த மோன நிலையில் அவன் அவளாகின்றான்.
தாய்மையின் பூரணத்துவம் நிறைந்து விளங்கும் கன்னிக்
-50- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

கற்பவதியின் எழிலுடன், வளைந்து நெளிந்து நிற்கின்றது "பச்சைதின்னி" மாமரம். தடியொன்றை எடுத்து மாங்காய்க் குலைக்குக் குறிபார்த்து எறிந்தாள். மூன்று காய்கள் விழுந்தன. காயாகச் சப்புவதற்கு - அந்த மரத்து மாங்காய்தான் நல்லது. மற்றவை "அம்பலவி” “செம்பட்டான்" அவைகளின் காய் புளிப்பு: வாயில் வைக்க முடியாது.
அவர்களுடைய வாயில் நீர் சொட்டுகின்றது. இருவரும் மாங்காயைச் சப்பிய படியே நடக்கின்றனர். அவளுடைய மாங்காய் முடிந்துவிட்டது. “பசுவதி. எனக்கு ஒரு துண்டு தராய்?" "ஏன், உனக்கு ஒண்டு தந்தனான் தானே." "சப்பிப்போட்டன். அது கூடாது; புளி,ஒரு துண்டு தா." "நான் தரன்." “தராய்? நல்ல புள்ளையல்லே. இல்லையெண்ணாமல் ஒரு துண்டு தா. நாளைக்கு உனக்கு இனிப்புத் தருவன்.”
ஒரு துண்டைக் கடித்து நீட்டுகின்றான். அவள் ஆவலுடன் கையை நீட்டினாள். உடனே அத்துண்டைத் தனது வாய்க்குள் போட்டான் பசுபதி.
அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. மறுமுறை ஒரு துண்டைக் கடித்து நீட்டினான். “எனக்கு வேண்டாம்." முகத்தைச் சுழித்துக் கொண்டு கூறினாள் சரோ. அவன் சிரித்தான். அவள் கண்கள் குளமாயின. அதைப் பார்த்ததும் அவனுக்குப் பெரும் வேதனை.
“இந்தா சரோ. நான் இனி உன்னை ஏமாத்தேல்லை." பசுபதி
கெஞ்சினான்.
அவளுடைய வாயண்டை மாங்காய்த் துணி டைக் கொண்டு
சென்றான்.
அவள் புறங்கையால், அவனுடைய கையைத் தட்டினாள். திடீரென அவளுடைய வாய்க்குள் ஒரு துண்டைத் திணித்தான். சரோ பொய்க் கோபத்துடன் அவனைப் பார்த்தாள். அவளுடைய கண்ணிர்க்கோடுகளை அழித்தன அவன் கரங்கள். சிரித்தபடியே மாங்காய்த் துண்டைச் சப்பினாள் சரோ.
"இன்னும் ஒண்டு தா."
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -51

Page 30
அவன் கடித்துக் கொடுத்தான். பசுபதி கடித்துக் கொடுப்பதை வாங்கி உண்பதில் அவ்வளவு ருசியா? அவள் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.
அவனும் கொடுத்துக் கொண்டேயிருந்தான். அவன் காந்திய மாங்காய்க் கொட்டையை வாங்கித் தானும் காந்திவிட்டு எறிந்தாள். அவள் அதில் என்ன திருப்தியைக் கண்டாளோ?
“பசுவதி உனக்கு என்னிலை கோபமா?” “இல்லை” "நான் ஒண்டும் செய்யேல்லை. எல்லாம் அந்த மகேசுவாலைதான். அவவோடை நான் நாளைக்குக் கதைக்க மாட்டன். கட்டாயம் கண்ணைக் கட்டிக் கோவம் போடுவன்."
பசுபதியின் உள்ளம் குளிர்ந்தது. அவன் சரோவின் கையை இறுகப் பிடித்தான். அவனுடைய தோளில் அவளுடைய கை வளைந்து சுருண்டிருந்தது.
வானத்துச் சிட்டுகளைப் போல நிச்சிந்தையாகப் பேசிக் கொண்டே சென்றார்கள் அவர்கள்.
“பசுவதி, தண்ணி விடாய்க்குது. அந்தக் கடையிலை குடிச்சிட்டுப் போவம்" என்றாள் சரோ.
பசுபதி, வேண்டா வெறுப்புடன் தலையை அசைத்தான். இருவரும் கடையை அடைந்தனர்.
பசுபதி அவளுடைய "சிலேட்" புத்தகங்களை வாங்கினான். சரோ தன் வீட்டிற்குள் செல்வதைப் போலக் கடைக்குள் சென்றாள். உரிமையுடன் பேணியை எடுத்த அவள் கை. "மட மட" வென்று தண்ணிரைக் குடித்தாள்.
பசுபதி அவளைப் பார்த்தபடியே நின்றான். பசுபதிக்குத் தண்ணிர் குடிக்க வேண்டும். தண்ணிர் குடித்தால் வாய்ப் புளிப்பு மாறும். அது அவனுக்குத் தெரியாது. அவள் குடிக்கின்றாள். அதனால் அவனுக்கும் குடிக்க வேண்டும் போலிருந்தது.
கடைக்காரக் கிழவர் செருமினார். திடுக்கிட்டுத் திரும்பினான் பசுபதி. கிழவருடைய கழுகுப் பார்வை அவனுடைய உள்ளத்தைக் கொத்தியது. பசுபதியின் முகம் கருகியது. அவன் கிழவனையும் சரோவையும் மாறி மாறிப் பார்த்தான்.
-52- - நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

சரோ தண்ணீர் குடித்து விட்டாள். பசுபதி மெளனமாக நின்றான். அவனுக்கும் தண்ணிர் கொண்டு வந்தாள் அவள். அவன் கேட்கவில்லை. தான் குடித்துவிட்டு, அவனுக்கும் கொண்டு வருவது அவளுடைய வழக்கம்.
தன் கையிலுள்ள புத்தகங்களை நிலத்தில் வைத்தான் பசுபதி. தாமாகவே அவனுடைய இரு கைகளும் வாயணி டை கோலிப் பிடிக்கின்றன. அவள் தண்ணிரை ஊற்றுகின்றாள். குடித்து முடிந்தது. இருவரும் செல்கின்றார்கள். அவளுடைய கை அவனுடைய கழுத்தைச் சுற்றி இருக்கின்றது.
அவர்கள் நடக்கின்றார்கள். அவள் ஏதோ பேசிக் கொண்டே செல்கின்றாள். அவன் ஒன்றும் பேசவில்லை; மெளனமாக நடக்கின்றான். அவள் சொல்லுவதைக் கவனிக்கின்றானோ அல்லது வேறு ஏதாவது சிந்தனையோ?
சரோவின் பேச்சு நிற்கின்றது. அவன் தான் சொல்வதைக் கேட்கவில்லை என்று தெரிந்து கொண்டாளோ?
அவனுடைய கன்னத்தைப் பிடித்துத் திருப்பினாள். “பசுவதி நீ ஏன் ஒண்டும் பேசேல்லை? என்னோடை கோவமா? கடவுளாணை நான் வாத்தியாரிட்டைச் சொல்லேல்லை."
அவன் ஒன்றும் பேசவில்லை. அவனுக்கு சரோவில் கோபமில்லை. அவன் பேச என்ன இருக்கிறது?
அவன் பேசினானோ, பேசவில்லையோ, பேசிக் கொண்டே சென்றாள் சரோ.
"அவ மகேசுவுக்குப் பெரிய செட்டு. உன்னோடை கோவம் போடச் சொல்லுறா. அவவின் ரை "தேப்பன்" விதானை எண் டால் எங்களுக்கென்ன? அவவின்ரை சொல்லுப்படி நாங்களேன் நடப்பான்?"
சொல்லிக் கொண்டே நடந்தாள் அவள்.
அவன் ஒன்றும் பேசவில்லை!
-96
★
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -53

Page 31
உதயம்
89tlift. . . . . . . . . . . . . . குழந்தையின் இனிய துயில்போல குடியிருந்த அமைதியைக் கலைக்கின்றது அவ" னுடைய கெம்பீரமான குரலொலி.
பதிலில்லை.
மீண்டும் அவன் குரலெடுத்துக் கத்து கின்றான்
"ஆரடா அவன்? விடியுது விடியமுந்தி வந்து கத்தித் துலைக்கிறான். ஆர், இஞ்சாலை வா பார்ப்பம்."
அதிகாரத் தொனியில் கேட்டுக்கொண்டே, மான்குட்டிக்குத் தீன் ஊட்டியதை அரை குறையில் விட்டு விட்டு, எரிச்சலுடன் தனது கொல் லைப் புறத்திலிருந்து வெளியே வருகின்றார் குளக்கட்டு இஞ்சினியர் செல்லப்பா.
势渊
"ஐயா அது நான் வேலுப்பிள்ளை.
“டே ரைகர் விடடா காலை."
நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

தனது கால்களைக் கட்டிப் பிடிக்கும் அல்ஷெசன் நாயிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கேற்றடிக்கு வருகின்றார்.
“அட, நீயேயப்பா. வா மோனை வா. இப்பென்ன மனோடையோ மரையோடையோ வந்தனி?”
சேச்சில் சுருட்டை அடிக்கடி பத்தியதால், கறுத்துத் தடித்த உதடுகளை நாக்கால் தடவி ஈரப்பசுமை யாக்கியபடியே, வெளிறித் தொங்கும் தனது மீசையை ஒதுக்கி, முறுக்கி மேலே சுருட்டி விட்டுக் கொண்டே கேட்கின்றார் இஞ்சினியர்.
“வெள்ளாமை விதைச் சாப்பிறகு இன்னும் ஒரு நாளாவது வேட்டைக்குப் போகேல்லை ஐயா. வேட்டைக்குப் போக எங்களுக்கு எங்காலை நேரம்? பகலிலை வயல் வேலை. இரவிலை. நெல்லுப் பயிரைப் பண்டி அடியாமல் பார்க்க காவல் கொட்டிலிலை விடிய விடியக் காவலிருக்க வேணும். நாங்கள் என்ன செய்யிறது?”
"உதெல்லாம் ஒரு சாட்டு வேலுப்பிள்ளை. அப்ப, நீங்கள் இப்ப ஒருதரும் இறச்சி தின்னிறேல்லையே? இப்பெல்லாம் நீங்கள் சங்கம் உண்டாக்கி, கூட்டம் கூட, பேப்பர் வாசிக்க நேரம் கிடக்கு உங்களுக்கு. வேட்டைக்குப் போகத்தான் நேரமில்லை, என்ன? எனக்கு இறச்சி தர உங்களுக்கு விருப்பமில்லை எண்டு சொல்லுங்கோவன். ஏன் வீண் சாட்டுகள் சொல்லிறியள்?"
உழைப்பினால் உரமேறி வயிரம் பாய்ந்த தனது கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டிக் கொண்டு இஞ்சினியர் சொல்வதை அமைதியாகக் கேட்டுவிட்டு, மெளனமாக வானத்தை நோக்கியபடியே நிற்கின்றான் வேலுப்பிள்ளை.
"ஐயா சங்க விசயம் வேறை. வேட்டைக்குப் போற விசயம் வேறை. தயவு செய்து சங்க விசயத்தை இப்ப கதைக்க வேண்டாம். நேரமில்லாததாலைதான் நான் வேட்டைக்குப் போறேல்லை."
நிதானமாகக் கூறுகின்றான். “சரி, சரி. அது போய்த் துலையட்டும். இப்பென்ன விஷேசம்? ஏன் வந்தனி?”
"ஐயா எங்களை நீர்தான் காப்பாத்த வேணும்." “நான் என்னப்பா உங்களைப் படைச்ச கடவுளே, உங்களைக் காப்பாத்துறதுக்கு?”
கேலியாகக் கேட்கின்றார் இஞ்சினியர். "இல்லை ஐயா, எங்கடை வயல் எல்லாம் எரிஞ்சு கருகிச் சாம்பலாகுது.”
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -55

Page 32
"அதுக்கு 9" தனது இமைப்புருவங்களைக் கூட்டி உயர்த்துகின்றார் இஞ்சினியர் செல்லப்பா.
sy
“எங்கடை வயலுகளிலை உள்ள நெல் பயிருகளுக்கு தண்ணி. “என்ன? தண்ணியா!" ஒன்றுமே தெரியாதவர்போல வியப்பை வலிய வருவிக்கின்றார் தனது முகத்தில்.
“ஓமய்யா, தண்ணி" “வேலுப்பிள்ளை, என்ன பயித்தியக் கதை பேசுகிறாய். தண்ணியைப் பற்றி கதைக்கிறதை விட்டிட்டு வேறை ஏதாவது சொல்லு" "அப்படிச் சொல்லாதையுங்கோ ஐயா. நாங்கள் ஏழையள். வயலை நம்பித்தானே சீவிக்கிறனாங்கள். தண்ணி இல்லாட்டி பயிர் எல்லாம் எரிஞ்சு.
“குளத்திலை நீர் மட்டம் குறைஞ்சு வருகுது. மீன்கள் இருக்கத்தான் இப்ப இருக்கிற தண்ணி காணும். வயலுக்கு விடத் தண்ணி இல்லை."
"அப்ப கிளாக்கராக்களுக்கும் ஒவசியராக்களுக்கும் குடுக்கிறியள்?" "அது. அது அவை கவுண்மேந்து உத்தியோகத்தர். கவுண்மேந்துச் சட்டப்படி அவைக்குக் குடுக்க வேணும்."
"இதிலை இவன் மடங்கிவிடுவன்." பொய் சொல்லி அவனை ஏமாற்றிவிட்டதாக எண்ணிய தனது சாமர்த்தியத்தை நினைத்து அடிமனதுள் குதூகலிக்கின்றார்.
“அவைக்கு கவுண்மேந்திலையிருந்து மாதம் மாதம் சம்பளம் வருகுது. அதோடை வயலிலையும் நெல்லு விளைஞ்சு. போன போகமும் எங்களுக்குத் தண்ணி தராமல் அவைக்குக் குடுத்தியள். இந்தப் போகமும் இப்பிடிச் செய்யிறியள். இது ஞாயமே?”
சென்ற போகமும் போதிய தண்ணீரின்றி வெள்ளாண்மை அழிந்ததால், சாப்பாட்டுக்கே வழியின்றிக் கூலிக்கு வேலை செய்து அரை குறைப் பட்டினியுடன் ஒரு மாதிரிக் காலத்தை ஒட்டியது, கிளாக்கராக்களுக்கு நல்ல விளைச்சலெடுத்து சங்கத்திற்கு அவர்கள் கொடாமல் கள்ள விலைக்கு தனிப்பட்ட வியாபாரிகளுக்கு நெல்லை அதிக விலையில் விற்றது, இப்போகமும் விதை நெல்லுக்கு வழியில்லாமல் தனது இரண்டு மாடுகளை விற்று விதை நெல் வாங்கியது, எல்லாம் வேலுப்பிள்ளையின் மனக்கண் முன் தோன்றுகின்றன.
வேலுப்பிள்ளையின் கண்கள் குளமாகின்றன.
-56- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

"அது எங்கடை விருப்பம். நீங்கள் ஆர் அதைக் கேக்கிறதுக்கு?" இஞ்சினியர் வெடு வெடுப்பாகக் கேட்கின்றார். வேலுப்பிள்ளைக்கு தர்மாவேசம். "ஏன் நாங்கள் தண்ணிவரி கட்டிறம் தானே?” நிதானமிழக்காமல் கேள்வியைக் கேள்வியால் வெட்டுகின்றான் வேலுப்பிள்ளை. அவனுடைய குரலில் கோபக் கனல் தெறிக்கின்றது.
“வேலுப்பிள்ளை வீண்கதை பேசாதை. உன்ரை அலுவலை நீ பார். வேணுமெண்டால். உனக்கு மாத்திரம் தண்ணி. தாறன்."
இஞ்சினியருடைய குரலில் தணிவு. ஒளி நிறைந்த வேலுப்பிள்ளையின் கண்கள் வியப்பில் விரிந்து மின்னுகின்றன.
"என்ன, வேணுமெணி டால் எனக்கு மாத்திரம்? ஐயா வேணுமெண்டால் எங்கள் எல்லாருக்கும் தண்ணி தர வேணும், இல்லாட்டி?”
வேகமாக வெளியேறுகின்றான் வேலுப்பிள்ளை.
米水水
9.
“எனக்கு மாத்திரம் தண்ணி.
"எனக்கு மாத்திரம் இஞ்சினியர் ஏன் தண்ணி தரவேணும்"
வயல் வரம்பில் சென்று கொண்டிருக்கும் வேலுப்பிள்ளை யோசிக்கின்றான்.
இடது புறமாக உள்ள வயல்களை அவனது கண்கள் நோட்டம் விடுகின்றன. எவ்வித உடல் உழைப்புமற்ற கிளாக்கராக்களின் வயல்கள் அவை. வயல் எல்லாம் நீர் பரந்து, அந்தச் செழுமையில் பசும் பயிர்கள் குளுமையாகச் சடைத்து நிற்கின்றன. நீர் அளித்த செழுமையால் வயல் வரம்புகள் பச்சைப் புல்லால் மூடி மறைந்திருக்கின்றன. இப்பொழுது வேலுப்பிள்ளையின் கண்கள் சின்னையரின் வயலில் விழுகின்றன. சின்னையர் நல்ல உழைப்பாளி. அவர் இரவும் பகலும் வயலில்தான். ஆனால் வயலோ போதிய நீரின்றிக் காய்ந்து வெடித்திருக்கின்றது. பயிர்கள் எரிந்து கருகியிருக்கின்றன.
“எனக்கு மாத்திரம் தண்ணி"
மீண்டும் வேலுப்பிள்ளையின் ஞாபகச் சுவட்டில் இஞ்சினியரின் சொற்கள் தட்டுப்படுகின்றன. அதை ஒட்டிச் சிந்தனை அலைகள் விரிகின்றன.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -57

Page 33
"அவருக்கு என்னிலை நல்ல பற்றுதல். முந்தி அடிக்கடி நான் அவருக்கு மானிறைச்சி, மரைவத்தல், காய்கறி இன்னும் எத்தினையோ சாமான்கள் அவர் கேட்கிற நேரத்திலை சும்மா குடுக்கிறனான். அந்த நன்றியை அவர் இன்னும் மறக்கேல்லை."
"அவர் நல்லவர். ஆனா இண்டைக்குக் கொஞ்சம்." "ஏன் நானும் கடு கடுப்பாய்த் தானே அவரோடை கதைச்சுப்போட்டன். சீ, என்ன மடைவேலை செய்துபோட்டன். இனி நான் அவரோடை ஒரு நாளும் இப்பிடிக் கதைக்கமாட்டன். இண்டைக்கு நான் எந்தச் சனியனிலை முளிச்சனோ?”
வாய்க்காலிலிருந்து வேலுப்பிள்ளையின் வயலுக்குள் தண்ணிர் மடைதிறந்து வேகமாகப் பாய்கின்றது.
பச்சைப் பசேலென்ற நெற் பயிர்களின் தொண்டையளவிற்குத் தண்ணிர் தேங்கி நிற்கின்றது. பசுமையான பயிர்கள் மேல் மென் காற்று, அலைகளை விரித்துக் கொண்டிருக்கின்றது.
வேலுப்பிள்ளையின் கண்களில் புத்தொளி. வயல் பொன் மயமாகிக் குலை குலையாக விளைந்த நெற் கதிர்கள் பாரம் தாங்கமாட்டமல் தலை குனிந்து நிற்கின்றன.
அருவிவெட்டுப்பாடல், பாடலுக்கேற்ற தாளம், தாளலயத்திற்கேற்ற அசைவுடன் அருவி வெட்டுகின்றார்கள் ஆண்களும் பெண்களும்.
பத்துப் பதினைந்து சோடி மாடுகள் பூட்டி சூடுமிதியல் நடக்கின்றது. நல்ல பொலி பக்கத்திலுள்ள வயல்காரர்கள் ஒருவரும் வேலுப்பிள்ளைக்கு அருவி வெட்ட வரவில்லை. வர மறுத்துவிட்டார்கள். கூலிக்கு ஆட்கள் பிடித்துச் சூடு மிதியல் நடக்கின்றது.
சங்கத்தில் மூட்டை மூட்டையாக நெல் குவிகின்றது. கத்தை கத்தையாகக் காசு நோட்டுகள். திருமணக் கோலத்தில் வேலுப்பிள்ளையின் மகள். வேலுப்பிள்ளையின் மனைவி புதுப்பொலிவுடன் அவர் பக்கத்தில் புன்முறுவல் பூத்தபடியே நிற்கின்றாள்.
என்றோ இறந்துபோன அவள் மீண்டும் உயிர் பெற்று விட்டாளோ? வேலுப்பிள்ளையின் அயலவர்கள், பக்கத்து வயல்காரர்கள் ஒருவரையும் காணவில்லை. அவர்கள் ஒருவரும் வரவில்லை.
"ஏன்?”
-58- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

"அவர்கள் வேறு, நான் வேறா?”
"அவர்கள் வேறு. அவர்களுக்குத் தண்ணியில்லை. விளைச்சலில்லை. நெல்லில்லை. பணமில்லை."
"அவர்களுக்கு ஏன் தண்ணியில்லை?”
"அவர்களும் இஞ்சினியரோடை நல்லாய்த்தானே இருக்கினை. அவருக்கு அவையஞம் சும்மாதானே சாமான் குடுக்கிறவை. அப்பேன் இஞ்சினியர் அவையளுக்குத் தண்ணி குடுக்கேல்லை?”
“எனக்கு?”
“எனக்கு மாத்திரம் தான் தண்ணி"
"gar?"
"நான்?”
"ஒ, நான் விவசாய சங்கத் தலைவரல்லவா? அதுதான் இஞ்சினியர் எனக்குத் தண்ணி தந்தவர்."
“என்னை நம்பித்தானே அவையள் எல்லாரும் என்னைச் சங்கத்துக்குத் தலைவராக்கினவை."
"ஆனா இப்ப நான்?"
" മൃഞ്ഞഖ?'
“இப்பென்ன? எப்பவும் நாங்கள் ஒண்டுதானே?"
வேலுப்பிள்ளை சுய உணர்வு பெற்றுவிட்டானோ?
"எனக்கு மாத்திரம் தணிணி என்பதை நான் ஒருநாளும் ஒத்துக்கொள்ளமாட்டன்."
“எங்கள் எல்லாருக்கும் தண்ணி தரவேணும். இல்லாட்டி..?"
米米水
பிறந்த ஊரிலுள்ள தங்கள் நிலபுலங்களை, ஒரு சில பணக்காரரின் நிலப்பசிக்கு இரைகொடுத்துவிட்டு வாழவழியற்ற அவர்கள், காட்டை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
அவர்கள் இந்த இடத்திற்கு வந்தபொழுது
அன்று
அவள் கன்னி.
கன்னி என்றாலும் அவளில் களையில்லை. பருவத்தின் பூரிப்பும் செழுமையுமில்லை. ஈரப்பசுமையற்று, வறண்டு வெடித்துப் பிளந்துபோய், பள்ளம் திட்டியாகக் கிடக்கும் அவளுடைய உடலைப் பார்க்கும் எவருக்கும் அவள் மேல் பட்சாதாப மேற்படாமலிருக்க முடியாது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -59

Page 34
அவளைப் பார்த்த அவர்களுக்கு வேதனை.
ஏன்?
ஏனா?
அவர்கள் யார்?
மண்ணில் பிறந்து, உருண்டு புரண்டு, வளர்ந்து பருத்து, மண்ணுடன் போராடி, மண்ணையே உண்பவர்கள் அவர்கள்.
அவர்கள் மண் மக்கள்!
அவர்களுக்கு அவள் மேல் பாசம் - காதல்.
அவளுடைய மார்பகத்தை ஸ்பரிசித்து, கீறிக் கிழித்து, தங்கள் கரங்களால் அவள் உடலெல்லாம் தடவிக் கொடுத்து, அவளுடைய அங்கங்களை வரையிட்டுப் பணி படுத்திப் பொங்கிப் பூரிக்கும் அவளிதயத்திற்கு நீர்ப்பாச்சி, தங்களுடைய சக்தியின் ஒரு பகுதியைத் தியாகம் செய்து, அவளைப் பூரண பொலிவுடையவளாக்கப் பாடுபடுகின்றார்கள் அவர்கள்.
முள்ளுக்கு நடுவே மலர்ந்திருக்கும் ரோஜா மலரை ஒன்று மறியாத ஒரு குழந்தை பறிக்கும் பொழுது முட்கள் குத்துவதைப் போல, முன்பின் அனுபவமற்ற அவர்கள், விஷப் பாம்புகள், கரடிகள், சிறுத்தைகள், காட்டு யானைகள் வாழும் காட்டிற்கு மத்தியிலிருக்கும் அந்தக் கன்னியை அடைவதற்கு அவர்கள் பட்ட இன்னல்கள், துன்ப துயரங்கள்? ஆபத்துக்கள்?
நோயிலும் பட்டினியிலும் எத்தனையோ நாட்கள் அவர்கள் வாடுகின்றார்கள். தங்களுடனிருந்த எத்தனையோ பேர்களுடைய இன்னுயிர்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள். எப்படியிருந்தும் அவர்கள் தங்கள் விடா முயற்சியைக் கைவிடவில்லை.
காலம் இறந்து பிறக்கின்றது.
அவர்களுக்கு வெற்றி!
அவள் இன்று தாய்!
அழகின் பிறப்பிடம்.
செல்வத்தின் இருப்பிடம்.
அவர்களுடைய வியர்வையின் நாற்றம் இன்னும் அவள் உடலை விட்டுப் போகவில்லை. அவர்களுடைய சுவாசத்தின் சூடு இன்னும் அவளுடைய உடலுக்கு வெத வெதப்பைக் கொடுத்துக் கொண்டி" ருக்கின்றது.
-60- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

கண்ணுக் கெட்டிய தூரத்தில் வேகமாக வந்துகொண்டிருக்கும் வேலுப்பிள்ளையைக் கண்டதும் அவர்களுக்குப் பெரும் ஆவல்.
"என்னவாம் இஞ்சினியர்?" குரல் எட்டக்கூடிய தூரத்தில் வேலுப்பிள்ளை வந்து கொண்டி" ருக்கும் பொழுது, எல்லோரும் விழுந்தடித்துப் போய்க் கேட்கின்றனர். கண்கள் வேலுப்பிள்ளையின் வாய் எப்போ திறக்கும் என்று ஆவல் நிறைந்து படபடக்கின்றன.
"தண்ணி தர முடியாதாம்." தலையில் கட்டியிருந்த சால்வையைக் கழற்றி முகத்து வியர்வையைத் துடைத்துக்கொண்டே வெறுப்புடன் கூறுகின்றான் வேலுப்பிள்ளை. அந்தச் செய்கையில் ஏதோ ஒர் உறுதி சாயலிட்டது.
"ஏனாம்?" ஏக்கம் நிறைந்த குரல்கள். "குளத்திலை தண்ணி குறைஞ்சு போச்சாம்." "அப்ப கிளாக்கராக்களுக்குக் குடுக்கத் தண்ணி எங்காலையாம்?" சந்தேகத் தொனியில் கந்தர் அம்மான் கேட்கின்றார். "அதைக் கேக்கிறதுக்கு நாங்கள் ஆராம்?" வேலுப்பிள்ளையின் குரலில் ஆக்ரோஷம். முகத்தில் வெறுப்புத் தாண்டவமாடுகின்றது. பொய்மையையும், கொடுமையையும் காலால் மிதித்து நசித்து அரைத்து விடத் துடிக்கும் வெறுப்பு அது.
“என்ன அதைக் கேட்கிறதுக்கு நாங்கள் ஆரெண்டா கேட்டான் இஞ்சினியர்? ஏன் நாங்கள் தண்ணிவரி கட்டிறேல்லையாமே?”
ஆவேசமாக ஒருவன் கத்துகின்றான். அப்ப இனி என்ன செய்யிறது?" ஒன்றும் புரியாமல் சின்னத்தம்பி கேட்கின்றான். ஆற்றாமை அவன் குரலில் இழையோடியிருக்கின்றது.
“கேட்டம் தரேல்லை. இனி வலோற்காரமாய்ப் பறிக்கிறதை விட வேறை வழியில்லை."
நிதானத்துடன் கூறுகின்றான் வேலுப்பிள்ளை. சின்னத்தம்பி வேலுப்பிள்ளையை நம்பிக்கையுடன் பார்க்கின்றான். அந்தச் சொற்களில் கெம்பீரம் மட்டுமல்ல, சத்தியம் நிறைந்த தர்மாவேசம்
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -61

Page 35
இருக்கின்றது. தோளின் முறுகிய பலம் இப்பொழுது வேலுப்பிள்ளையின் நெஞ்சிற்கும் வந்து விட்டது.
"பறிக்கிற தெண்டால்..?” சின்னத்தம்பியையே கேட்கின்றான். "நாங்களாய்ப் போய் பலவந்தமாய்த் தண் ணியைத் திறக்கவேண்டியதுதான்?"
"அப்ப கோடு கச்சேரி.?” தயங்கியபடியே சின்னையர் கேட்கின்றார். "ஏன் எங்கடை பக்கம்தானே ஞாயம் கிடக்கு. எங்களுக்கு ஒரு சட்டம், கிளாக்கராக்களுக்கு ஒரு சட்டமே?”
சின்னத்தம்பி குறுக்கிடுகின்றான். "ஞாயம் எங்கடை பக்கமிருந்தாலும் இஞ்சினியராக்கள் எங்களை எப்படியெண்டாலும் பொலிசிலை மாட்டாமல் விடுவினையே?"
சின்னையர் பீதியுடன் கூறுகின்றார். "எங்களுக்கென்னப்பா, வெளியாலை இருந்தாலென்ன உள்ளுக்கை இருந்தாலென்ன, எல்லாம் ஒண்டுதானே? எங்களிட்டைப் பறிபோக என்ன கிடக்கு?”
வானத்தை வெறித்துப் பார்த்தபடியே கூறுகின்றான் வேலுப்பிள்ளை. எதற்கும் தயார் என்ற தொனி அவனுடைய குரலில் தொனிக்கின்றது. "அப்பென்ன செய்யச் சொல்கிறாய்?" எல்லோரும் வேலுப்பிள்ளையின் முகத்தைப் பார்த்த படியே கேட்கின்றனர். அவனுடைய முகத்தில் உறுதி பிரகாசிக்கின்றது. கண்களின் ஆழம் நிறைந்த, கூர்மையான பார்வையில் அபூர்வமான நம்பிக்கை மற்றவர்களுக்கு ஏற்படுகின்றது.
"நாங்கள் எல்லாரும் ஒண்டாய்ச் சேர்ந்து போய் வாய்க்காலைத் துறந்து தண்ணியை எல்லாற்றை வயலுக்கும் பாயவிடுவம். வாறது வரட்டும்.”
உறுதியுடன் கூறிவிட்டு மணிவெட்டியை எடுத்துத் தோளில் வைத்துக்கொண்டு பெரிய வாய்க்காலை நோக்கிச் செல்லுகின்றான் வேலுப்பிள்ளை.
ஒரு கணம் சின்யைர் வீரை மரத்தடியிலேயே தயங்கி நிற்க நினைக்கின்றார். ஆனால் நிற்க முடியவில்லை. இந்தக் காடு கரம்பையை பயிர் விளையும் செழுமையான வயலாக்கிய இந்த வலிமையுடைய
-62- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

கரங்கள் உயர்ந்தால் அதற்குத் தோல்வியேயில்லை என்பது போல, வீரை மர நிழலிருந்த அவர்கள் எல்லோரும் ஒழுங்காய் ஒரே எண்ணத்துடன் நடக்கின்றனர். சின்னையரும் அவர்களோடு சேர்ந்து நடக்கின்றார்.
அவர்களுடைய கையிலிருந்த மண்வெட்டிகள் இப்பொழுது ஒரு புதிய வரலாற்றின் கதையை எழுதி வைக்கப்போகின்றன.
- 1966
★
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -63

Page 36
சங்கமம்
LDரி லை நேரம். கடல் தாயின் மடியில் கிடந்து விளையாட ஆவலுடன், வான் முகட்டிலிருந்த கதிரவன், அடிவானத்தில் இறங்கி வந்து கொண்டிருக்கின்றான். ஆனந்தம் தாங்க முடியாத கடல் அன்னையின் இதய அலைகள் பொங்கி எழுந்து, துள்ளிக் குதித்து இன்பப் போதை ஊட்டுகின்றன.
கடற்கரை மைதானம்.
எங்கு பார்த்தாலும் தொழிலாளிவர்க்கத்தின் ரத்தத் தியாகத்தில் உதித்த செங்கொடிகள்.
மைதானத்து மத்தியில் ஒரு கம்பம் உயர்ந்தோங்கி நிற்கின்றது. கம்பத்தின் உச்சியில் கம்பீரமாகப் பறந்து கொண்டிருக்கின்றது ஒரு பெரும் செங்கொடி.
பட்டொளி வீசிப் பறக்கும் கொடியின் செங்குளம்பை வானம், பூமி, கடல் எங்கும், ஆதவன் அள்ளி அப்பிக்கொண்டிருக்கின்றான். பிரபஞ்சமே அழகுடன் ஜாஜ்வால்யமாகத் திகழ்கின்றது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

கண்ணுக்கெட்டிய தூரத்தில், இரு திசைகளிலும் இரண்டு ஊர்வலங்கள்.
தமது இலட்சியப் பாதையில் வெற்றியீட்டி வீறுநடை போட்டு முன்னேறி வரும் கர்மவீரர்களைப் போல, மைதானத்தை நோக்கி வருகின்றன தொழிலாளர்களின் ஊர்வலங்கள்.
தூரத்திலிருந்து எழுந்து வரும் அலை ஓசையைப் போல, ஊர்வலங்களிலிருந்து கிளம்பிய கோஷங்கள் காற்றில் மிதந்து வந்து அவன் காதுகளில் மோதி அதிர்கின்றன.
அவன்?
பிரபஞ்சமே ஆனந்த வெறியில் மூழ்கித் திளைத்திருக்கின்ற வேளையில், அவன் ஏகசித்தனாய் தவத்தில் முயங்கி நிற்கும் முனிவனைப் போல, அடிவானத்துக்கு அப்பால், எங்கோ எதையோ பார்த்துக் கொண்டு நிற்கின்றான்.
கடற் காற்று ஏதோ ஒரு கதையை முணுமுணுத்துக் கொண்டிருக்" கின்றது.
கடலின் கதையைக் கேட்கின்றானா அவன்?
அவனுடைய இதயம் சோக கீதத்தை மீட்டுகின்றது. அது தோன்றிமறையும் மின்னலைப் போல, ஜனித்து கணப்பொழுதில் மரிக்கப் போகும், கண்களுக்குப் புலப்படாத ஏதோ ஒன்றை அறைகூவி அழைத்துக் கொண்டிருக்கின்றது.
அவன் தன்னைத் தானே வெறுக்கின்றான். ஏன்?
ஆறு மாதங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவம்.
சிறு வயதிலிருந்தே, கிராமப் புறத்தில், துள்ளித் திரிந்துகொண்டிருந்தான் அவன்.
அவனுக்கு எதுவித கஷ்டமுமில்லாமல் சோறு போட்டு வந்த தந்தை ஒரு நாள் திடீரென்று இறந்துவிட்டார். அவனுக்கும் தாயாருக்கும் வயிற்றுச் சோற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
உறவினர் ஒருவர் அவனுக்கு ஒரு தொழிற்சாலையில் ஒரு கூலிவேலை எடுத்துக் கொடுத்தார்.
சுதந்திரப் பறவையாகத் துள்ளித் திரிந்த அவனுக்கு ஒரே இடத்தில் நின்று வேலை செய்வது வேதனையைக் கொடுத்தது. தொழிற்சாலை அவனுக்குச் சிறைச்சாலையாகிவிட்டது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -65

Page 37
காலம் கரைந்தது.
அவனுடைய இதயச்சுமை கரையவில்லை.
திருட்டுத்தனமாக மாங்காய் பறிப்பது, குளத்தில் துள்ளிக் குதித்து நீந்துவது, மூங்கிற் காட்டிற்குள் ஒளித்து விளையாடுவது, நாணற்புல்லின் பூக்களை எடுத்து சோடித்து சாமியாடுவது, மாலை வேளைகளில் தன் வயதொத்த சிறுவர்களுடன் நிற்கும் பொழுது, புகையைக் கக்கிக் கொண்டு ஓடிவரும் புகைவண்டியைக் கண்டதும் கைககொட்டிக் குதித்து ஆர்ப்பரிப்பது, மாட்டுக்காரப் பையன்களுடன் திரிவது, பாட்டியின் ராஜா ராணிக் கதைகள், அன்னையின் அன்பு மொழிகள்," என்ன சுகம்? எவ்வளவு இன்பம்? - இப்படி எண்ணற்ற தன் பாலிய நினைவுகள் ஜனிக்கும் பொழுது அவனுடைய கண்கள் குளமாகிவிடும். −
தொழிற்சாலை யந்திரத்தின் பேரிரைச்சல், எண்ணெய் நாற்றம், தூசிகள், தொழிலாளர்களின் அதட்டல்கள், வீதிகளில் ஒடும் வாகனங்களின் அசுர வேகம், நகரத்து நாகரிகத்தின் போலி வேஷம், ஏமாற்றம் எல்லாம் அவனுக்கு வெறுப்பைக் கொடுத்தன. நகரத்தின் ஆத்மா மரணதேவதை" யைப் பார்த்துப் பயந்து ஒலமிடுவது போலிருந்தது அவனுக்கு.
இதயத்தில் வேதனை.
வேலையில் வெறுப்பு.
எங்கேயாவது ஒடித் தொலைந்து விடுவோமா என்று அடிக்கடி அவன் எண்ணுவான். தனக்கும் தன் தாய்க்கும் வயிற்றுச் சோற்றுக்கு உழைக்கும் நிர்ப்பந்தம் அவனை அந்தத் தொழிற்சாலையில் ஒட்ட வைத்திருந்தது.
காலதேவன் அவனுடைய உடலிலும் உழைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தினான். ஆனால் அவனுடைய முகத்தில் ஏனோ வேதனைக் கோடுகள் அப்பிக் கிடக்கின்றன?
அவன் உடலில் உழைப்பின் திரட்சி -
வாலிபத்தின் வனப்பு -
உள்ளத்தில்-?
م چ
எதிர்பாராமலே அவனுடைய வாழ்க்கையிலே அவள் தட்டுப்பட்டாள்.
ஒரு வருடத்திற்கு முன்பு
அன்று தான் அவள் அந்தத் தொழிற்சாலைக்கு வேலை செய்ய வந்தாள்.
-66- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

பேதமை கலையாத பருவம். பருவத்துடன் போட்டி போட்டு வளர்ந்து வரும் அங்கங்கள், வரிந்து கட்டியிருக்கும் உடையைப் பிளந்து கொண்டு வெளியே எட்டிப் பார்க்கத் தவித்துக்கொண்டிருக்கின்றன. மழைக்காலத்தில் முளைக்கும் காட்டுக் கொடியைப் போல, அவளுடைய உடல் செழுமையுடன் மதாளித்து அழகைக் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
பழக்கப்படாத தொழில்.
வெட்கம்.
தடுமாற்றம்.
அவளுடைய பரிதாப நிலையைப் பார்க்க அவனுக்கு வியப்பு, சிரிப்பு, ஒருவித அனுதாபம்
மதிய வேளை, உணவு நேரம்.
சிட்டுப் போலப் பறந்து வந்த அவள் தன் எதிரில் அவன் வருவதைக் கண்டாள். அவள் விழிகளில் மருட்சி, பீதி
தன்னையறியாமலே அவன் வாய் விட்டுச் சிரித்து விட்டான்.
மடிந்திருந்த அவள் இதழ்கள் மலர்கின்றன.
கண்கள் கிறங்கின.
இருவருடைய பார்வையும் முட்டி மோதின. அந்த மோதலில் ஒளிப்பிளம்பு பிறக்கின்றது.
ஒரே ஒரு கணப்பொழுது.
அவள் முகத்தில் நாணம். தலை கவிழ்ந்தது.
அவள் சென்று விட்டாள்.
அவளுடைய செளந்தர்ய லாஹிரியில் மூழ்கிய அவனுடைய இதயத்தில் அவள் வரையாத ஒவியமாகப் பதிந்து விட்டாள்.
அன்று அவனால் வேலை செய்ய முடியவில்லை. அவளுக்கும் அதே நிலை.
அவனுடைய கண்கள் அவளைத் துரத்திக் கொண்டிருக்கின்றன. அவள் தப்ப முயல்கிறாள். முடியவில்லை. அவளுடைய திருட்டுப்பார்வை அவளைக் காட்டிக் கொடுத்தது.
அடிக்கடி அவள் தன்னை மறந்த நிலையில் சிரிக்கின்றாள். தன்னைப் பறிக்க வருபவரைப் பார்த்து மலர் நகைப்பது போலிருந்தது அவளுடைய சிரிப்பு.
அன்றைய தினம் அடிக்கடி அவர்களுடைய விழிகள் கட்டித் தழுவுகின்றன. உதடுகள் காற்றில் முத்தமிடுகின்றன.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -67

Page 38
உணர்ச்சி அலைகள் பொங்கும் ஊமைப் பார்வையுடன் சில நாட்கள் கழிந்தன. பார்வை பேச்சாகப் பரிணமித்தது.
լ ն)6մr?
சந்திப்பு
வேலை விட்டுச் செல்லும்பொழுது, கொண்டாட்ட தினங்களின் இரவுகளில் கடற்கரையில், அவர்கள் வசிக்கும் சேரியிலுள்ள சந்துமுடுக்கு" களில் இருவரும் சந்தித்தனர். இரவின் இருள் அவர்களுக்குக் காவல் புரிந்தது.
ஒருவருக் கொருவர்.
வாழ்க்கையில் அவனுக்கு நம்பிக்கை பிறந்தது. இருண்டிருந்த அவனுடைய இதயம் அவளுடைய சுடரில் ஜ்வாலித்தது.
அவன் உழைப்பில் ஊக்கம் செலுத்தினான். சிறிது சிறிதாகப் பணம் சேர்ந்தது.
அவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி ஏதோ திட்டம் வகுத்தனர்.
இருவரின் கற்பனைக் கோட்டைகள் வளர்ந்தன.
தொழிற்சாலை வளர்ந்தது.
தொழிலாளர்கள் பெருகினர்.
பிரச்சினைகள் தோன்றின.
தொழிற்சங்கங்கள் முளைத்தன.
முளைத்த தொழிற்சங்கங்கள் வளர்ந்தன.
அவன் தொழிற் சங்கத்தில் சேர மறுத்தான். கல்வியறிவற்ற அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கடினமாக உழைக்கின்றான் அவன். அவனுக்குக் கூலி கிடைத்தால் போதும். கூலி குறைவோ கூடவோ என்ற பிரச்சினை அவனுக்கில்லை. அதைப்பற்றி அவனுக்கு அக்கறையில்லை. கிடைக்கும் கூலியில் ஒரு பகுதியை வயிற்றை வாயைக் கட்டி மிச்சம் பிடித்தான். தனக்காகவல்ல; தங்கள் இருவருக்குமாக.
சிறிது சிறிதாகச் சேரும் பணத்தைக் கொண்டு ஒரு சிறுகுடிசை கட்டவேண்டும், அதில் தாங்கள் இருவரும் தனிக் குடித்தனம் நடத்த வேண்டும், தங்கள் குடிசையில் தங்கச் சிலை போன்ற ஒரு குழந்தை இருந்து கொஞ்சி விளையாட வேண்டும், அதைத் தாங்கள் இருவரும் பார்த்து மகிழ வேண்டும்;~ என்பதுதான் அவனுடைய ஆவல். இதற்காகவே அவன் பாடுபட்டு உழைத்தான்.
அவன் ஆவல் நிறைவேறுமா?
-68- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

தொழிற் சங்கத்தில் அநேக தொழிலாளர்கள் சேர்ந்தனர்.
அவனும் சேரவேண்டும் என்று சில வேளைகளில் எண்ணுவான். ஆனால் அவன் சேரவில்லை. தனது வேலை பறிபோய்விடும் என்ற பயம் அவனுககு.
அந்தத் தொழிற்சாலையிலுள்ள தொழிற் சங்கங்களுக்கிடையில் போட்டி வளர்ந்தது.
ஒரு சங்கத்தின் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டனர்.
தொழிற்சாலை நிர்வாகம் கொடுக்க மறுத்தது.
தொழிலாளர்களுடைய உரிமைப் போராட்டத்தில் ஒரு தொழிற் சங்கம் குதித்தது.
பலன்?
வேலை நிறுத்தம்!
வேலை போய்விடும் என்ற பயத்தினால் சில தொழிலாளர்கள் பின்வாங்குகின்றனர்.
தொழிலாளர் மத்தியில் பிளவு, மோதல்!
ஒரு சங்கத்தின் தொழிலாளர் வேலைநிறுத்தம் செய்தனர். மற்றைய தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர்.
அவன்?
火 宏 火
தொழிற்சாலை நோக்கி வந்துகொண்டிருக்கும் அவனைச் சந்திக்கின்றாள் அவள்.
மின்னலைத் தன் மார்பகத்தில் சுமந்து கொண்டிருக்கும் மேகம், மழையைச் சொரியவா விடவா என்று சிறிது நேரம் தயங்கி நிற்பது போல, அவள் அவனுக்கு ஏதோ சொல்வதற்குத் தயங்கிக்கொண்டிருக்கின்றாள். சிறிது நேரம்தான்.
"நீ வேலைக்குப் போகாதை." பயந்து பயந்து கூறுகின்றாள். "alar?" “எங்களோடை வேலை செய்யிற கனபேர் போகேல்லை,
அதுதான்.
"அதுக்கு எனக்கென்ன?”
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -69

Page 39
"அவைக்கு மாறாய்நாங்கள் போகக்கூடாதாம். அது அநியாயமெண்டு சொல்லினை."
“போனால் என்ன செய்வினையாம்?" "நீபோனால் எல்லாரும் சேர்ந்து. எனக்கு பயமாய்க்கிடக்கு. உனக்கு ஏதாவது நடந்தால்."
"இல்லை, நான் ஒருக்காப் போய்ப்பாப்பம் என்ன செய்யப் போறாங்களெண்டு."
“எனக்கு பயமாய்க்கிடக்கு. என்ரை ராசா நீ போகாதை." "நான் வேலைக்குப் போகாட்டி முதலாளியாக்கள் என்னை வேலையிலிருந்து விலத்திப்போடுவினை. பிறகு நான் என்ன செய்ய?”
இதற்கு என்ன பதில் கூறுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. பயம் வேறு.
வேலைக்குச் செல்ல வேண்டாமென்று அவள் கெஞ்சினாள். கண்ணிர் விட்டாள்.
அவளைப் போல எத்தனையோ தொழிலாளர்கள் முதல் நாளே அவனை வேலைக்குப் போக வேண்டாமென்று கெஞ்சிக் கேட்டனர்.
அவன் ஒருவருடைய சொல்லையும் கேட்கவில்லை. வேலைக்குச் செல்வது என்று பீஷ்மப் பிரதிக்ஞை செய்து கொண்ட அவன் அவர்களுடைய சொல்லைக் கேட்பானா?
"நான் வேலைக்கு கட்டாயம் போகப் போறேன். என்னை நீ தடுக்காதை."
"அது அநியாயம், நீ போகக் கூடாது." “என்னை மறிக்க நீஆர்?" அவன் வெடுக்கென்று கேட்டான். கொதி தண்ணீர் பொங்கிப் பாத்திரத்தின் மூடியைத் தூக்கி எறிவதுபோல, அவனுடைய உடலிலுள்ள ரத்தம் கொதித்து கோபத்தை வெளிக்கக்கியது.
"நீ போறதண்டால் போ. ஆனா இனி என்னோடை நீ கதைக்கக் கூடாது. எனக்கும் உனக்கும் இனிமேல் ஒரு தொடசலுமில்லை."
ஆவேசத்துடன் கூறினாள். அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. அவள் சென்றுவிட்டாள்.
-70- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

மைதானத்தை நோக்கி தொழிலாளர்களின் இரு ஊர்வலங்களும் வருகின்றன.
ஊர்வலங்களை வெறித்துப் பார்த்தபடியே நிற்கின்றான் அவன். கோஷங்கள் அவனுடைய இதயக் கதவில் முட்டி மோதுகின்றன. "தொழிலாளர்களே." ஒரு ஊர்வலத்திலிருந்து கிளம்புகின்றது அசுர கர்ஜனை. “ஒன்று சேர்வோம்!" மறு ஊர்வலத்திலிருந்து எழுந்த குரல்கள் வானைப் பிளக்கின்றன. ஊர்வலங்கள் நெருங்கிவருகின்றன. ஆயிரமாயிரம் தொழிலாளர்கள்! "அப்பா எவ்வளவு பேர்?" உற்றுப் பார்க்கின்றான். "அவர்கள்! என்னுடன் வேலை செய்தவர்களும்.?" அவனுக்குப் பேராச்சிரியம்! "அப்போ, நான்?" "எப்பிடித்தான் சண்டை பிடிச்சாலும் தொழிலாளியள் எண்ட முறையிலை நாங்கள் எல்லாரும் ஒண்டுதான்."
ஆறு மாதங்களுக்கு முன்பு வேலை நிறுத்தம் செய்த ஒரு தொழிலாளி கூறியது அவனுடைய நினைவுச் சுவட்டில் ஜனிக்கின்றது.
அவனுடைய இதயத்தில் புயல். ஆயிரமாயிரமாகத் திரணி டிருக்கும் இத்தனை தொழிலாளர்களிடையே காணப்பட்ட ஐக்கிய உணர்ச்சி அவன் உள்ளத்தில் ஒரு புதிய நம்பிக்கையைப் பீறிடச் செய்கின்றது.
மூடியிருக்கும் மழை இருளைப் பிளந்துகொண்டு வெளிவந்து ஒளிப்பிளம்பைக் கக்கும் மின்னல் கொடியைப் போல அவனுடைய உள்ளத்தில் ஒளிச்சுடர் பொங்கி எழுந்தது. உடலில் புத்துணர்ச்சி. தசைநார்கள் முறுகித்திரண்டு புடைக்கின்றன. ரத்தம் மின் வேகத்தில் முட்டி மோதிப் பாய்கின்றது.
வெறிக்கொண்டவனாக ஊர்வலத்தை நோக்கி அவன் ஒடுகின்றான். இரு ஊர்வலங்களும் கிட்ட நெருங்குகின்றன. தொழிலாளர்களின் குரல்கள் அண்ட கோளங்களையும் அதிரவைக்கின்றன.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -7-

Page 40
எதிர்த்திசைகளில் இருந்து வந்த இரண்டு ஊர்வலங்களும் ஒன்றை ஒன்று கட்டித் தழுவுகின்றன.
பிளவுபட்டிருந்த தொழிலாளி வர்க்கம் ஒன்று சேர்கின்றது!
பிரளய காலத்தில் பொங்கி எழும் கடல் அலைகளைப் போல, தொழி லாளி வர்க்க உணர்ச்சி பொங்கிப் பெருக்கெடுத்துப் பிரவாகிக்கின்றது.
“தொழிலாளர்களே ஒன்று சேர்வோம்!”
தொழிலாளி வர்க்க ஜனசமுத்திரத்திலிருந்து கிளம்பிய கோஷம் வானை முட்டி மோதுகின்றது. இந்த அதிர்ச்சியில் செங்கதிரோன் கடல்தாயின் மடியில் வந்து விழுகின்றான். உணர்ச்சிப் பிரவாகத்தில் கடல் அன்னையின் உடல் ரத்தச் சிவப்பாக மாறுகின்றது.
கிழக்கிலும், மேற்கிலும் - எட்டுத் திசையிலும் நட்சத்திரங்கள் பூக்கின்றன. செங்கொடியிலிருக்கும் நட்சத்திரங்களா கோடானு கோடியாகப் பிரபஞ்சம் அனைத்திலும் பூத்திருக்கின்றன?
“மேதினம் வாழ்க!”
வானமண்டலத்தையும் தாண்டிச் சென்று ஒலிக்கின்றது உணர்ச்சி நிறைந்த தொழிலாளி வர்க்கத்தின் வஜ்ரக் குரல்.
ஐம்புலன்களையும் அடக்கி மூச்சைப்பிடித்து, அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பிக் கோஷிக்கின்றான் அவன்.
அவனுடைய கையை ஒரு மென் கரம் பற்றுகிறது.
LIHi?
அவள்!
அசைந்தாடிக் கொண்டிருந்த செங்கொடி தொழிலாளி வர்க்க உணர்ச்சியின் பூரணத்துவத்தைக் கண்டு காற்றுடன் மோதி தன் ஆனந்த வெறியைப் பிரவாகிக்கின்றது.
இருவருடைய விழிகளும் இரண்டற செளந்தர்த்தில் சங்கமிக்கின்றன. அவற்றில் கண்ணிர்த் துளிகள்.
சோகக் கண்ணிரா?
இல்லை!
"மேதினம் வாழ்க!”
தொழிலாளி வர்க்கத்தின் புனித கோஷத்தில் பிரபஞ்சமே நடுங்குகின்றது.
-1963
★
-72- நிர்வை பொன்னையன் சிறுகதைகள்

சுயம்வரம்
5ணபதியார் தலையை நிமித்திப் பார்க்கின்றார்.
அவருடைய பார்வை அந்தப் பாதையில் நிலைகுத்தி நிற்கின்றது.
"துலாக்கொடி" போன்று நீண்டு செல்கின்றது அந்த ஒற்றையடிப் பாதை. அதன் இரு மருங்கிலும், தமது கைகளை உயர்த்தி கால்களைத் தூக்கி நின்றாடும் நடன மங்கையர்களைப் போல கள்ளிமரங்கள் நிரையிட்டு நின்று நர்த்தனம் செய்கின்றன. காண்டைப் பற்றைகள் மெளனக் கோலமாய் சிரம் தாழ்த்தி நிற்கின்றன. இடையிடையே மூழிப்பற்றைகள். ஒரு ஆள் தட்டாமல் முட்டாமல் செல்ல முடியாத இயற்" கைச் செறிவுடைய இறுக்கமான பாதை அது.
நீர்வேலிக் கிராமத்தின் மேற்கெல்லைப் புறமாகச் செல்கின்றது இராசதெரு. அதன் மேற்கேயுள்ள தோட்டங்களுக்குச் செல்பவர்கள் அந்த ஒற்றையடிப் பாதையால் நடந்து "பெரிய கிணற்றடி"த் தோட்டத்தைத் தாண்டித் தான் செல்ல வேண்டும்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் 73

Page 41
பாதை வழியே சென்ற கணபதியாரின் பார்வை பெரிய கிணற்றடியில் தடைப்பட்டு நிற்கின்றது.
பெரிய கிணற்றடித் தோட்டமும், அந்த ஒற்றையடிப் பாதையும் கணபதியாரின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து ஒன்றாயிருக்கின்றன.
தனது இமைப் புருவங்களைக் கையால் அணைகட்டி, பஞ்சடைந்த கண்களை ஒடுக்கி, பெரிய கிணற்றடியைச் சுற்றியுள்ள தோட்டத்தை ஒருமுறை நோட்டம் விடுகின்றார் கணபதியார்.
பெரிய கிணற்றடித் தோட்டத்திலுள்ள கிணறுதான் அந்தப் பகுதியிலுள்ள கிணறுகள் எல்லாவற்றிலும் ஆழமானது. சோழகக் காற்றுக் காலத்திலும் "மூவாயிரம் கண்டுக்கு" விடாமலிறைத்தாலும் வற்றாத ஊற்றுடையது. எந்தப் பலசாலியும் அதிக நேரம் களைக்காமல் "தனித்துத் துலா மிதித்துத்" தண்ணீர் இறைக்க முடியாது.
தோட்ட நிலம் -
நல்ல விளைச்சல் தரக்கூடியது. பசளையுள்ள இருவாட்டி நிலம்.
கிணற்றடியில் வந்து ஆடுகால் பூவரச மரத்துடன் சாய்ந்து கொண்டிருக்கின்றார் கணபதியார். அவருடைய உள்ளத்திலே பணிபோல மங்கலாக இருந்த கடந்தகால நினைவலைகள் விரிகின்றன.
நாற்பது வருஷங்களுக்கு முன் "
ஒருநாள்.
மதியவேளை.
பெரிய கிணற்றடியில் மாடுகளுக்குத் தண்ணீர் வைத்துக்கொண்டு நிற்கின்றான் கணபதிப்பிள்ளை.
"இந்தப் புல்லுச் சுமையை ஒருக்காத் தூக்கிவிடு".
ஒரு பெண்ணின் குரல்.
சத்தம் வந்த திசைக்குத் திரும்புகின்றான்.
செல்லம்மா!
ஆடுகால் பூவரச மரத்தைப் பிடித்துக் கொண்டு நிற்கின்றாள். அவள் நீறுபூத்த நெருப்பு. யுகயுகாந்தரமாய்த் தவமிருந்து எழுந்து வந்த தோற்றம்.
அவனை அவள் ஒரு மாதிரிப் பார்க்கின்றாள். அவளுடைய கண்கள் திரையிடப்பட்டு எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கின்றது.
கணபதிப்பிள்ளையும் இமைக்காமல் அவளைப் பார்க்கின்றான்.
-74- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

அவளுடைய கண்கள் அவனுடைய கண்களைச் சந்தித்த பொழுது கீழே கவிழ்கின்றன. இது அவளுக்குச் சுலபமாக மூச்சு விடுவதற்குச் சந்தர்ப்பமளிக்கின்றது.
அவனுக்கு அவளிடத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அங்கு நிலவிய மெளனம் இயற்கை கண்மூடித்தியானத்திலிருப்பது போலிருக்கின்றது.
"நேரம் போட்டுது. தூக்கி விடு." நிலத்தைப் பார்த்துக் கொண்டு கூறிய அவள்தான் முதலில் அங்கிருந்த மெளனத்தைக் கலைக்கின்றாள்.
“இந்த வெயிலுக்கை ஏன் அந்தரப்படுகிறாய்? கொஞ்சம் வெய்யில் தணியட்டன். உதுக்கை போக உன்ரை கால் வெந்து போமே."
ஆதூரத்துடன் கூறுகின்றான் கணபதிப்பிள்ளை. “என்ரை கால் வெந்தால் உனக்கென்ன? நான் நேரம் போட்டுதெண்னிறன். அவர் கால் வேகிற கதை பேசுறார்."
"ஏன் செல்லம் வெடு சுடு எண்டு எரிஞ்சு விழுகிறாய்?" "நான் உன்ரை நன்மைக்குத்தான் சொன்னனான்." "சாப்பாடு சமைச்சுப் போட்டு வாழைக்கிறைக்க வரவேணும். அதுதான்."
அவளுடைய குரல் கணிகின்றது. “கொப்பர் எங்கை?"
"அவர் சந்தைக்குப் போட்டார்” “செல்லம் உன்னை நான் ஒரு விசயம் கேக்க வேணுமெண்டு கனநாளாய்."
சிரித்துக் கொண்டே தனது தலையைச் சரித்து அவளை ஒரு மாதிரிப் பார்க்கின்றான் கணபதிப்பிள்ளை.
“இப்ப நீ இந்தப் புல்லுச் சுமையைத் தூக்கிறியோ இல்லையோ?” கோபத்தை வலிய வருவித்துக்கொண்டு கேட்கின்றாள் அவள். “ஒரு வாய் வெத்திலையாவது தாவன்." "வெத்திலையுமில்லை, ஒரு மண்ணுமில்லை. நேரம் போட்டுது. புல்லைத் தூக்கிறதெண்டால் தூக்கு. இல்லாட்டி.."
“இல்லாட்டி என்ன?”
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -75

Page 42
"வீண் கதை பேசாதை, புல்லுத் தூக்கு. இல்லாட்டி உண்ரை வேலையை நீ போய்ப் பார். சும்மா அலட்டிக் கொண்டு நில்லாமல், நான் எப்பிடிப்போறதெண்டு எனக்குத்தெரியும்."
"கடுகடுப்பாகக் கூறுகின்றாள்."
“சரி சரி பின்னைதூக்கு"
கூறிக்கொணி டே புல்லுச் சுமையை அவளுடன் சேர்ந்து அநாயசமாகத் தூக்குகின்றான் கணபதிப்பிள்ளை.
அவள் தனது உதடுகளை உள்மடித்து மூச்சைப் பிடித்து உசாராகத் தூக்கும் பொழுது அவளுடைய கெம்பீரமான தோற்றம் அவனுடைய கண்களில் பதிகின்றது. s
புல்லுச் சுமையை தலையில் வைத்தபொழுது அவளுடைய கழுத்து முறிந்து விடும்போல் இருக்கின்றது.
"அடேயப்பா இந்தப் பாரத்தைச் சுமக்கிறவள் எவளவு பெலசாலியாயிருக்க வேணும்!"
அவனுக்கு வியப்பு.
புல்லுச் சுமையைத் தூக்கி வைத்துக்கொண்டு திரும்பும் பொழுது அவளுடைய சிவந்த உதடுகளின் கடைக் கோடியில் சிறு முறுவல் வெடிக்கின்றது.
அவள் செல்கின்றாள்.
“போறியே போ, உதெல்லாம் ஒரு நாளைக்குக் கேட்டுத் தாறன்"
சிரித்துக் கொண்டே கூறுகின்றான்.கணபதிப்பிள்ளை.
நாலு அடிகள் எடுத்து வைத்த அவள் நிற்கின்றாள். அவளுடைய தலையிலுள்ள சுமை கடைக்கண் பார்வை எட்டு மட்டும் பின்னுக்குத் திரும்புகின்றது. கழுத்து நரம்புகள் புடைக்கின்றன. அவளுடைய கடைக்கணி பார்வையும், அவனுடைய நேரான பார்வையும் முட்டி மோதுகின்றன. அவள் மதுரமாகச் சிரிக்கின்றாள். அடுத்த கணம் அந்தச் சிரிப்பு இருண்ட ஆகாயத்தில் ஜனித்து மறையும் மின்னலைப் போலிருந்தது.
செல்லம்மா சின்னத்தம்பியின் செல்வமகள். அவளுக்குக் கூடப் பிறந்த சகோதரங்கள் என்று கூறிக்கொள்ள ஒருவருமில்லை. அவள் எல்லோருடனும் சரளமாகப் பேசுவாள். ஆனால் யாராவது அவளுடன் விதண்டாவாதம் பேசினால் அவள் லேசில் விட்டு வைக்கமாட்டாள். எல்லோருக்கும் அவள் மேல் பற்றும் ஒரு வித பயமும்.
எதுவித குறைவுமின்றி அவளை வளர்த்து வந்தார் சின்னத்தம்பி.
-76- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

செல்லம்மா அவ்வளவு அழகியில்லாவிட்டாலும், அவளிடம் ஒருவித கவர்ச்சியுண்டு. பருவம் அவளுடைய அழகுக்கு மேலும் மெருகூட்டியது.
"நில புலமில்லாதவனென்டாலும், நோய் நொடியில்லாத, நல்ல முயற்சிக்காறனுக்குத்தான் என்ரை புள்ளையைக் கட்டிக் குடுப்பன்."
அடிக்கடி கூறுவார் சின்னத்தம்பி. செல்லத்திற்குப் பல கல்யாணப் பேச்சுக் கால் வந்தும் சின்னத்தம்பியின் நிபந்தனை எல்லோரையும் பின்வாங்கச் செய்தது.
தனது மகளைப் பற்றி சின்னத்தம்பிக்குப் பெருமை. கணபதிப்பிள்ளை கல்யாணப் பேச்சிற்கு சின்னத்தம்பியிடம் ஒரு ஆளை அனுப்புகின்றான்.
“சும்மா சப்புச்சவருக்கு என்ரை மோளைக்கட்டிக் குடுக்க மாட்டன். நல்ல தைரியசாலியாய் சுறுசுறுப்பாய் முயற்சி செய்யிறவனுக்குத்தான் கலியாணம் செய்து வைப்பன். அதோடை பெரிய கிணத்தடித் தோட்டத்தையும் அவனுக்கு எழுதிக் குடுப்பன். அவளைக்கட்ட இந்தப்பகுதியிலை ஆருக்குத் தருதியிருக்கு?”
கணபதிப்பிள்ளை அனுப்பிய ஆளிடம் வீறாப்புப் பேசுகின்றார் சின்னத்தம்பி.
சின்னத்தம்பி கூறியவற்றை அறிந்ததும் கணபதிப்பிள்ளைக்கு ஆத்திரம் பொங்கியது.
"மினக் கட்டான் வேம்படியில் சிலருடனிருந்து கதைத்துக் கொண்டிருக்கும் சின்னத்தம்பியிடம் செல்கின்றான் கணபதிப்பிள்ளை. “என்ன ஏதோ கனமாய் ஞாயம் பேசினியாம்? நான் சும்மா லேசுப்பட்டவனே?"
கோபாவேசத்துடன் சின்னத்தம்பியைப் பார்த்துக் கேட்கின்றான் கணபதிப்பிள்ளை.
“கணவதி, நீ இதிலை வந்துமொக்கயினப் படாதை. உண்ரை வேலையை நீ போய்ப்பார்."
“என்ரை வேலையைப் பாக்க எனக்குத் தெரியும். நீ என்னகாணும் என்னைக் குறைச்சுப் பேசினியாம்."
“கணவதி நான் உன்னைக் குறச்சும் பேசேலை, கூட்டியும் பேசேல்லை. ஆனால் ஒண்டு சொல்லுறன். என்ரை மோளை நல்ல முயற்சிக்காறனுக்குத்தான் கட்டிக்குடுப்பன்."
"ஏன் நான் குறஞ்சவனோ?”
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -77

Page 43
"நீ பெரிய முயற்சிக்காரனோ?” கேலியாகக் கேட்கின்றார் சின்னத்தம்பி. தனது உருண்டு திரண்ட புயங்களை ஒரு முறை பார்க்கின்றான் கணபதி.
"சும்மாயிருந்து கொண்டு வட்டிக்கு வட்டி வாங்கி, மற்றவன்ரை உழைப்பைத்திண்டு வளர்ந்ததில்லை இந்தத் தேகம். மழை வெயிலெண்டு பாராமல் பாடுபட்டு உழைச்சுத்தின்னிறவன் நான். என்னோடை வேலை செய்ய இந்தப் பகுதியிலை ஆர் இருக்கிறான்? எவனெண்டாலும் வரட்டன் பாப்பம்."
அகண்டு விரிந்து இரண்டாகப் பிளந்திருக்கும் தனது நெஞ்சிலடித்துக்கொண்டு ஆக்ரோசத்துடன் கூறுகின்றான் கணபதிப்பிள்ளை.
"நான் சொல்லிற வேலையை உன்னாலை செய்ய முடியுமே?” “என்ன வேலை?”
"சொன்னால் செய்வியோ?”
"நீ சொல்லு. நான் செய்து காட்டிறனோ இல்லையோ எண்டு பாப்பம்." *
"மூண்டு நீத்துப்பெட்டி குரக்கன் புட்டும், ஒரு சட்டி மரவள்ளிக் கிழங்குக் கறியும் திண்டிட்டு, பெரிய கிணத்தடித் துலாவிலை ஆயிரம் கண்டுக்கு இறங்காமல் தனித்துலா மிரிப்பியோ?”
“எட உதொரு பெரிய வேலையோ? சரி நான் அப்பிடிச் செய்யிறன், ஆனால்."
“என்ன? என்னண்டு சொல்லன்." ஆவலுடன் சின்னத்தம்பி கேட்கின்றார். "நான் புட்டையும் கறியையும் திண்டிட்டு இறங்காமல் ஆயிரம் கண்டுக்கு துலா மிரிக்கிறன். உன்ரை மோள்." “என்ன? என்ரை மோளுக்கென்ன?” சின்னத்தம்பி பரபரப்படைகின்றார். "உண்ரை மோள், அந்த ஆயிரம் கண்டுக்கும் கைவிடாமல் தண்ணி கட்டவேணும்."
“ஒ சரி.” “இண்டைக்கும் நான் தயார்"
உறுதியுடன் கூறுகின்றான் கணபதிப்பிள்ளை.
-78- s நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அந்தப் பகுதியிலுள்ள ஆண் பெண் அனைவரும் பெரிய கிணற்றடியில் கூடி நிற்கின்றனர்.
ஒரே பரபரப்பு.
குரக்கன் பிட்டைச் சாப்பிடத் தொடங்குகின்றான் கணபதிப்பிள்ளை.
செல்லம் மாட்டுத் தொட்டிலுக்கருகாமையில் நின்று பார்க்கின்றாள்.
அவள் முகத்தில் பீதி.
சாப்பாடு முடிந்து விட்டது.
கணபதி துலாவில் ஏறுகின்றான்.
செல்லத்தின் தகப்பன் கிணற்று மிதியில் நின்று தண்ணீர் இறைக்கின்றார்.
செல்லம் தண்ணீர் கட்டுகின்றாள்.
உச்சி வெய்யில்.
வியர்த்து வடிகின்றது கணபதிப்பிள்ளைக்கு. கால்களில் சோர்வு. மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்குகிறது அவனுக்கு.
நேரம் செல்லச் செல்ல வாய்க்காலில் ஒடிக் கொண்டிருக்கும் தண்ணின் வேகம் குறைகின்றது.
தணிணிர் கட்டிக் கொண்டு நிற்கும் செல்லம் தலையை உயர்த்துகின்றாள்.
அவள் கணபதிப்பிள்ளையைப் பார்க்கின்றாள்.
அவளுடைய பார்வையிலே அவனுக்கு உற்சாகம் பிறக்கின்றது.
புதுத் தென்புடன் அவன் துலா மிதிக்கின்றான்.
அடிக்கடி செல்லம் அவனுக்கு உற்சாகமூட்டுகின்றாள்.
ஆனால் அவளுக்கு?
வெய்யில் நெருப்பாய் எரிகின்றது.
செல்லத்தின் முதுகு வெய்யில் வெப்பத்தில் பொசுங்குகின்றது. கால்கள் நடுங்குகின்றன. குனிந்தபடியே நின்று தண்ணீர் கட்டுவதால் இடுப்பில் தாங்க முடியாத வலி. கண்கள் கரிக்கின்றன.
அவளுடைய உடலிலிருந்து வடியும் வியர்வை வாய்க்காலில் ஒடும் நீருடன் சங்கமித்துத் தினைப் பயிருக்குப் பாய்கின்றது.
காய்ந்து வெடித்துப் பிளந்திருந்த நிலம் வேண்டு மட்டும் தண்ணிரை உறிஞ்சிக் குடிக்கின்றது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் 79

Page 44
தாய்ப்பாலுக்காக அழுதுவிட்டு, சோர்ந்து தூங்கும் குழந்தையைப் போல, தண்ணிர் இறைக்காததால் வாடிச் சோர்ந்துபோய் நிற்கின்றது தினைச்சாமிப் பயிர், ஒரு புறத்தில் இதைப் பார்க்கச் செல்லத்திற்கு வேதனை.
"இண்டைக்கு செழிக்கத் தண்ணிர் விட்டுக் கட்ட வேணும்." நினைத்துக்கொண்டு வாய்க்கால் வரம்புகளிலுள்ள கோரைப் புற்களைப் பிடுங்கி வரம்பில் போட்டுவிட்டுத் தண்ணிரை ஒரு பாத்தியிலிருந்து மற்றப் பாத்திக்கு மாறிக் கட்டுகின்றாள் செல்லம்.
ஒரு வாய்க்காலிலிருந்து அடுத்த வாய்க்காலுக்குச் செல்வதற்கு அவள் நாரியை நிமிர்த்துகின்றான்.
தண்ணீர் இறைத்த பகுதியைப் பார்க்கின்றன அவள் கண்கள். பால் குடித்துவிட்டுக் கைகளையும் கால்களையும் அடித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையைப் போல மென்காற்றில் அசைந்தாடிக்கொண்டிருக்கின்றன பயிர்கள்.
ஒரு புறம் தண்ணின்றிச் சோர்ந்து போய் எங்கி நிற்கும் பயிர். மறுபுறம் தண்ணீர் குடித்த தென்பில் கெம்பீரமாக நிற்கும் பயிர்.
செல்லம்? ஒரு பாத்தியில் தண்ணீர் நிரம்பி வழியத் தயாராக நிற்கின்றது. கட்டு மாறிவிட்டு மறுபுறம் திரும்புகின்றாள். இதற்கு முன்பு கட்டிய பாத்தியில் தண்ணிர் நிரம்பித் தெளிந்து போய் நிற்கின்றது.
நீலவானத்தின் மத்தியில் அவள் முகம் " உற்றுப் பார்க்கின்றாள். முத்துப்போல வியர்வை கட்டி நிற்கும் தனது முகத்திலே புதுப் பொலிவைக் காண்கின்றாள்.
கணபதிப்பிள்ளையின் கெம்பீரமான பார்வையுடைய முகம் அவள் கண்முன் தோன்றுகின்றது.
அவளை அறியாமலே அவளுக்கு ஒருவித மயக்கம். தண்ணிரைப் பார்த்தபடியே நிற்கின்றாள். எவ்வளவு நேரம் தான் அப்படி அவள் நிற்கின்றாளோ? முத்துக் கட்டி நின்ற வியர்வைத் துளி ஒன்று தண்ணிரில் விழ, அது கலங்கி வட்டங்கள் போட்டு முகத்து நிழல் ஆடுகின்றது.
தன்னை மறந்த மோன நிலையிலே தண்ணிர் கட்டிக்கொண்டு நிற்கின்றாள் அவள்.
-80- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

இறைப்பு முடித்த பொழுதுதான் அவளுக்குச் சுய உணர்வு வருகின்றது.
பெரிய கிணற்றடியில் ஒரே ஆரவாரம்.
இத்தனை வருஷங்கள் சென்றும், நேற்றுத்தான் நடந்ததுபோன்ற இச்சம்பவம் கணபதியாரின் உள்ளத்தில் அழியாத ஒவியமாக இருக்கின்றது.
"செல்லம் இண்டைக்கு நீ உயிரோடை யிருந்தால்..?”
ஆடுகால் பூவரசமரத்தோடு சாய்ந்தபடியே பெரிய கிணற்றடித் தோட்ட நிலத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் கணபதியாரின் கண்களில் நீர் திரை விரிக்கின்றது.
-90
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -81

Page 45
ரத்தக் கடன்
அவன் தலைமறைவாகி ஒரு மாதம்!
பொலிஸார் அவனைக் கைதுசெய்ய இராப்பகலாக அலைந்து திரிகின்றார்கள்.
அவன் அந்தக் கிராமத்தில்தான் இருக்கின்றான்.
சின்னையாவை பொலிஸாரால் கைதுசெய்ய முடியவில்லை.
ஏன்? தணிணிருக்கும் மீனுக்குமுள்ள உறவு அவனுக்கும் அந்தக் கிராமத்து மக்களுக்கு" மிருக்கின்றது.
அவனைக் கைதுசெய்து உள்ளுக்குள் தள்ளிவிட்டால், அந்தப் பகுதியிலுள்ள போராட் டம் நின்றுவிடும் என்பது சாதி வெறியர்களின் எண்ணம்.
அவனைப் போல நூற்றுக்கணக்கானோர் அங்கு இருக்கின்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
-82- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

சின்னையா ஜாக்கிரதையாக, ஆனால் துணிவுடன் நடந்து வருகின்றான்.
மார்கழிமாதத்துப் பின்னிரவுப் பனிக்காற்று, அவனுடைய உடலைச் சில்லிடவைத்து எலும்புக் குருத்துக்களைத் தாக்குகின்றது.
இரவு முழுவதும் நித்திரையின்மையால் அவனுடைய கண்கள் கரிக்கின்றன.
வயல்வெளியைத் தாண்டி வரும்வரை அவனுடைய தோழர்கள் அவனுக்குத் துணையாக வந்தார்கள்.
இப்போ பயமில்லை. w எந்த எதிரி வந்தாலும் இப்போ சின்னையாவைத் தொடமுடியாது. பனங் கூடலினுடாக வளைந்து நெளிந்து செல்கின்ற அந்த ஒற்றையடிப் பாதை நிற்சாமத்திற்குக் கொண்டு போய் விடுகின்றது.
நிற்சாமம் சங்கானையில் ஒரு பகுதி. நிற்சாமத்தின் பெயரைக் கேட்டாலே விரோதிகளுக்குத் தொடை நடுக்கம்.
அங்கு வாழும் மக்கள் தங்கள் கைகளையே நம்பி வாழ்கின்றார்கள். அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் நிலத்தில் தமது கால்களை நன்றாக ஊன்றி நிற்கின்றார்கள். நிலம் அவர்களுக்குச் சொந்தமில்லாவிட்டாலும், நிலத்தில் நிற்கும் உணர்ச்சி மட்டும் அவர்களைவிட்டு ஒருபொழுதும் நீங்குவதில்லை. அவர்கள் உழைப்பினால் பூமித்தாயைத் தொட்டு உணர்கின்றார்கள். எப்படித்தான் அவர்கள் உழைத்தாலும் காலாதிகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட அடிமைகளாகத்தான் வாழ்ந்தார்கள்.
ஆனால் இப்போ? சின்னையா நிற்சாமத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கின்றான். பனித் திரையினால் போர்த்தியிருக்கப்பட்டிருக்கின்ற குடிசைகள் விடிநிலவொளியில் அவனுடைய கண்களுக்கு மங்கலாகத் தெரிகின்றன. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்கிடக்கின்ற குடிசைகளிலே, பகலெல்லாம் கடுமையாக உழைத்த அலுப்பிலே மக்கள் அச்சமின்றி நிம்மதியாகத் துரங்கிகொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பாக, எதிரியை நுழையவிடாமல் இரவிரவாக காவல் காத்து நிற்கிறார்கள் அப்பகுதியின் வாலிபர்கள்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -83

Page 46
கணபதியின் குடிசைக்குக்கிட்ட வந்த சின்னையாவின் கால்கள் அவனையறியாமலே ஒரு கணம் தயங்கி நிற்கின்றன.
ஒரு நெடு மூச்சு. பின் அவன் கால்கள் அசைகின்றன. “இண்டைக்கு கணவதியண்ணை இருந்தால்..?" “போனவரியம் இந்த மாதத்திலைதான் தேத்தண்ணிக் கடையளை எங்களுக்குத் துறந்துவிடவேணுமெணி டு நாங்கள் போராட்டம் துவங்கினம். அதுக்கு கணவதியண்ணை முன்னுக்கு நிண்டார். ஒரு கிழமையாலை அவரை அவங்கள் ஒட்டியிருந்து சுட்டாங்கள்."
"தம்பி சின்னையா, நான் செத்துப் போனாலும், நீங்கள் இந்தப் போராட்டத்தை கைவிடக்குடாது. எங்கடை உரிமையளை எடுக்கு" மட்டும் நீங்கள் போராட வேணும். நான் உயிர் தப்பிவந்தால் அவங்களுக்கு இந்தக் கடனைத் தீராமல் விடமாட்டன்!”
"அவர் சாகிறதுக்கு முதல்நாள் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியிலை கிடந்துகொண்டு சொன்னார்”
“கணவதியண்ணை மாத்திரமே?” "எங்கடை வேலுப்பிள்ளை, பாலு, சரவணை அண்ணை, இன்னும் எத்தனைபேரை அவங்கள் சுட்டுச் சாக்காட்டினாங்கள். எத்தனைபேரை அடிச்சு முறிச்சாங்கள்? எத்தினை வீடுகளுக்கு நெருப்பு வைச்சாங்கள்? எங்கடை தோட்டம் துரவுகளை."
ஆத்திரத்தில் சின்னையா பல்லை நெருடுகின்றான். இவளவுக்கும் பொலிசு என்ன செய்தது? "சாட்டுக்கு நாலஞ்சு பேரை புடிச்சு இரண்டு மூண்டு நாள் அடைச்சு வைச்சிருந்திட்டு பிறகு வெளியாலை விட்டுது."
"ஆனால் நாங்கள் தற்பாதுகாப்புக்காக திருப்பித் தாக்கினால், எங்களை உடனை புடிச்சு பொலிசு ஸ்டாஷனிலை அடைச்சு வைச்சு அடிச்சு எங்கடை எலும்பை நொறுக்கிறாங்கள்."
'பொலிசும் அவங்கடை பக்கம்தாண் எண்டு எங்களெல்லாருக்கும் இப்ப நல்லாய்த் தெரியும்.'
பொலிசுக்கு நாங்கள் பயந்தகாலம் போட்டுது. 'இதெல்லாத்துக்கும் வட்டியும் முதலுமாய்ச் சேத்து நாங்கள் அவங்களுக்கு.
-84- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

இப்ப ஒருக்கா அவங்கள் எங்களை அசைக்கட்டும் பாப்பம்?" சின்னையா தனது குடிசையை நெருங்குகின்றான்.
“அக்கா."
அரைகுறைத் துரக்கத்தில் கிடந்த செல்லம்மா திடுக் கிட்டு எழுகின்றாள்.
"ஆரது?"
"அது நான்தான், அக்கா."
கண்ணைத் துடைத்துக்கொண்டு குப்பி விளக்கை எடுத்துக் கொழுத்திவிட்டு, கதவைத் திறக்கின்றாள்.
"ஏனடாமோனை இவளவும் என்ன செய்தனி?”
“இப்பதான் கூட்டம் முடிஞ்சுது. கந்தையாவாக்கள் இஞ்சை வந்தவையே?"
“இல்லை. ஏன்?"
“அவை கார் கொண்டாறதெண்டவை. விடியிறதுக்கிடேலை நாங்கள் வெளிக்கிட்டு, சில ஊருகளுக்குப் போக வேணும்."
"gar?"
"அந்த இடங்களிலையும் போராட்டம் துவங்கிட்டுது. அங்கையிருக்கிற ஆக்களோடையும் நாங்கள் தொடர்பு வைச்சு."
“எந்தெந்த ஊர் தம்பி?”
செல்லம்மா ஆவலுடன் கேட்கின்றாள்.
“கொடிகாமம், அச்சுவேலி, மந்துவில், மட்டுவில் இன்னும் வேறை ákad”
செல்லம்மாவிற்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை.
அவளுடைய பெரிய கண்கள் சுடர்விட்டுப் பிரகாசிக்கின்றன.
“சரி சரி, நான் எல்லாருக்கும் தேத்தணிணி வைக்கிறனர். கந்தையாவாக்களும் வரட்டும். எல்லாரும் தேத்தண் ணியைக் குடிச்சிட்டுப்போங்கோ. இல்லை, சும்மா போனால் வெறுவயிறு புகையும். அவள் சின்னாச்சியிட்டை நாலு மரவள்ளிக் கிழங்கு வாங்கியந்து அவிச்சுத் தாறன்."
தாய்மை உணர்வோடு கூறுகின்றாள்.
நிர்வை பொன்னையன் சிறுகதைகள் -85

Page 47
“அதொண்டும் வேண்டாமணை. நேரம் போட்டுது. தேத்தண்ணியை வை. அது போதும்." செல்லம்மா அடுப்பைப் பற்றவைக்கின்றாள்.
செந் தீ நாக்குகள் சுழன்றெரிகின்றன. "இனி எங்களுக்கென்ன? எங்களைப் போலை மற்ற ஊருகளிலையும் போராட்டம் துவங்கீட்டுது."
"விடியப்போகுது, இவையளை இன்னும் காணேல்லை." அவளுடைய சிந்தனை தடைப்படுகின்றது. “என்ன? ஒ, அவையளோ? வாறதெண்டால் வருவினைதானே. ஏன் அந்தரப்படுகிறாய்?"
"வாறவழியிலை ஏதாவது நடந்திருக்மோ? மனப் பதட்டத்துடன் கேட்கின்றான் சின்னையா. "அப்பிடி ஒண்டும் நடவாது. நீ ஒண்டுக்கும் யோசியாதை" ஆறுதல் கூறுகின்றாள் செல்லம்மா. அமைதியைக் கிழித்துக்கொண்டு மோட்டரின் இரைச்சல் வந்து அவர்களுடைய காதில் விழுகின்றது.
“கந்தையாவாக்கடை கார்தானோ? ஒருக்கா நீ பாரக்கா?” பரபரப்புடன் அவன் கூறுகின்றான். குடிசைக்கு வெளியே அவள் வருகின்றாள். கிராமத்தின் எல்லைக்கோடியில் மோட்டாரின் வெளிச்சம் தெரிகின்றது.
“கார் வெளிச்சம் போலை தெரியேல்லை." சந்தேகத்துடன் செல்லம்மா கூறுகின்றாள். அவனும் வெளியே வருகின்றான். கிழக்கு வானத்தின் அடிவயிற்றில் வெண்மை தட்டுகின்றது. "சத்தமும் ஒரு மாதிரிக் கிடக்கு." அவனுக்கும் சந்தேகம். “வேறை ஆர் இப்ப வரப்போகினை?” அவள் யோசனையுடன் வினவுகின்றாள். “ஒருவேளை பொலிசு?" காவல் காத்துக் கொண்டு நிற்கின்ற வாலிபர்களின் விசில் சத்தம் காற்றைக் கிழித்துக் கொண்டு வருகின்றது.
-86- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

நாய்கள் குலைக்கின்றன.
சின்னையா விழிப்படைகின்றான்.
மோட்டார் வெளிச்சம் அவர்களுடைய குடிசையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது.
“பொலீஸ் ஜீப்பு!”
அவன் திகைப்புடன் கூறுகின்றான்.
அவளுக்கும் சிறு பதட்டம்.
“இப்பென்ன செய்யிறது,"
அவனுடைய கேள்வி.
நிதான நிலைக்கு வருகின்றாள் அவள்.
"வாறது வரட்டும், நான் பார்த்துக்கொள்ளுறன். நீபோய் வீட்டுக்கை
உறுதியுடன் கூறுகின்றாள் செல்லம்மா.
அவன் தயங்குகின்றான்.
"போ உள்ளை, கெதியாப் போ."
கதவைச் சாத்திவிட்டு முற்றத்திற்கு வருகின்றாள்.
படலையடியில் ஜீப் வந்து நிற்கின்றது.
அதிலிருந்து குதித்த பொலீஸ்காரர்கள் துப்பாக்கிகளுடன் ஓடிவந்து வீட்டைச் சுற்றி நிற்கின்றனர்.
செல்லம்மா வீட்டு வாசலில் கெம்பீரமாக நிற்கின்றாள். அவளது கண்களில் அசைவற்ற ஒளி நிறைந்திருக்கின்றது.
வாலிபர்கள் சத்தமிட்டபடியே ஓடிவருகின்றார்கள்.
கிராமம் விழித்தது!
பலதிக்குகளிலுமிருந்து மக்கள் சின்னையாவினுடைய வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருக்கின்றார்கள்.
பொலீஸ் அதிகாரி செல்லம்மாவை நோக்கி விரைந்து வருகின்றான்.
அவனுடைய நடையில் அதிகாரத் திமிர்.
அவள் தனது பெரிய ஆழ்ந்த கண்களால் எதையோ வினவுவதுபோல பொலீஸ் அதிகாரியைப் பார்த்துக் கொண்டு நிற்கின்றாள்.
பொலீஸாரின் கடந்தகால அட்டகாசங்கள், கொடுமைகள் அவளுடைய மனத்திரையில் தோன்றுகின்றன.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -87

Page 48
"சந்தையடித் தேத் தண்ணிக் கடையுக்கை போய் எங்கடை பொடியள் தேத்தண்ணி கேக்க, கடைக்காறன் இரண்டு மூண்டு சோடாப் போத்திலுகளை உடைச்சுப்போட்டு, கடையுக்கைவந்து கலாட்டா செய்ததெண்டு பொலிசிலை பொய்முறைப்பாடு செய்தான். உடனை இந்தப் பொலீசுக் காறங்கள் எங்கடை பொடியளைப் புடிச்சு அடைச்சுவைச்சு, அடிச்சு அவங்கடை எலும்பை நொறுக்கினாங்கள். அந்த நோ மாறுறதுக்கு எத்தினை மாதம் செண்டுது?
"எங்களுக்காக ஞாயம் பேசின முருகேசுவின்ரை வீட்டை அவற்றை சொந்தகாகாறச் சாதிவெறியர் அடிச்சு உடைச்சாங்கள். அவங்களை இந்தப் பொலீசுக் காறங்கள் ஒண்டும் செய்யேல்லை. ஆனா கலகத்தை தூண்டிவிடுகிறதெண்டு முருகேசுவை இவங்கள் பொலீசு ஸ்டேசனிலை வைச்சு ஏழெட்டுப் பேர் அடிச்சு, அவற்றை வயித்திலையும் சப்பாத்துக்காலாலை ஏறி மிதிச்சாங்கள்?
“சாதி வெறிக்கெதிராய் சுன்னாகத்திலையிருந்து ஊர்வலம் நடத்தின ஆக்களை இவங்கள் துவக்கு சுறோங்குகளாலையும், பெற்ரன் பொல்லாலையும் அடிச்சு, சப்பாத்துக் காலாலை உதைச் சதை
99
பாக்கேக்கை.
"சின்னையனை வரச்சொல்லு" பொலீஸ் அதிகாரியினுடைய முரட்டுக்குரல் செல்லம்மாவின் சிந்தனையைக் கலைக்கின்றது.
"அவன் இஞ்சை இல்லை." உணர்ச்சிக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு நிதானமாகக் கூறுகின்றாள் செல்லம்மா,
"அப்ப, அவன் எங்கை?" “அவன் இஞ்சை கனநாளாய் வரேல்லை. அவன் எங்கையெண்டு எனக்குத் தெரியாது."
“பொய் சொல்லாதை. அவனைக் கூப்பிடு. இல்லாட்டி.9y மிரட்டல். “எனக்குத் தெரியாதெண்டால் பிறகென்ன?" அவனுடைய கணிகளை அசையாமல் பார்த்துக் கொண்டே கூறுகின்றாள்.
அவளுடைய முகத்தில் வைராக்கியம்.
-88- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

“பொய் சொன்னால் உன்ரை எலும்பெல்லாத்தையும் நொறுக்கிப் போடுவனடி."
உறுமுகின்றான் அவன்.
"அவனைப் பற்றி எனக்கொண்டும் தெரியாது. நீசெய்யிறதைச் செய்."
ஆக்ரோஷத்துடன் கூறுகின்றாள்.
“எடியே, கனமாய்க் கதையாதையடி. உதைப்பண்டி, பொத்தடி
66).
கையை ஓங்கிக் கொண்டு பொலீஸ் அதிகாரி கூறுகின்றான்.
"இப்பென்ன செய்யப்போகிறாய்?"
கோபாவேசத்தோடு செல்லம்மா கேட்டாள்.
"பொறடி செய்து காட்டிறன். சண்முகம் வீட்டை சோதி. இருந்தால் அவனை வெளியாலை இழுத்துக் கொண்டா."
"வீடு சோதிக்கிறதெண்டால் விதானையோடை வந்துதான் சோதிக்க வேணும்."
அவளுடைய பேச்சில் உறுதிதொனிக்கின்றது.
சண்முகம் தயங்கி நிற்கின்றான்.
"ஏன் நிக்கிறாய் சண்முகம்? வேணுமெணி டால் இன்னும் இரண்டுபேரோடை போ."
“வீட்டுக்கை ஒருதரும் போகேலாது."
சண்முகத்தினுடைய கண்களைப் பார்த்துக்கொண்டு உறுதியாகச் சொன்னாள் அவள்.
சண்முகம் முன்செல்கின்றான்.
அவனை இரு பொலீஸார் பின்தொடர்கின்றனர்.
எட்டுத் திசைகளிலுமிருந்து ஜனங்கள் உணர்ச்சிமயமான கொதிப்படைந்து கொந்தளிக்கும் வார்த்தைகளைக் கொட்டிக்கொண்டு வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களுடைய உள்ளங்களில் இவ்வளவு காலமும் பதுங்கிக் கிடந்த, அவர்கள் அனுபவித்த சுரண்டும் வர்க்கத்தினதும், சாதிவெறியர்களதும் அடக்குமுறையினாலும் கொடுமைகளினாலும் எழுந்த வெறுப்புணர்ச்சி உயிர்பெற்றெழுந்து பொங்கிக் குமுறி, போக்கிடம் தேடி, முட்டி மோதிச் சாடிக்கொண்டிருக்கின்றது. அந்த உணர்ச்சியினால் அவர்களுடைய
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -89

Page 49
உள்ளத்தில் ரத்தக் கடன் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஜுவாலைவிட்டுக் கனன்று கொண்டிருக்கின்றது.
வீட்டைச் சுற்றி நின்ற பொலீஸ்காரர்கள் ஒரே இடத்தில் வந்து குவிந்து நின்றனர்.
செல்லம்மா மக்கள் திரளை ஒருமுறை கணிணோட்டம் விடுகின்றாள்.
ஒன்றுபட்ட உணர்ச்சிப் பெருக்கோடு இரைந்து கொண்டு வருகின்றது பெரும் ஜனக்கூட்டம்.
செல்லம்மாவிற்கு புதுத்தெம்பு பிறக்கின்றது. சண்முகம் முன்னேறி வருகின்றான். "கிட்டவராதை. வந்தால். செல்லம்மா எச்சரிக்கின்றாள். அவன் அசட்டுத் தைரியத்துடன் வந்துகொண்டிருக்கின்றான். கைகளில் துப்பாக்கி இருக்கின்றதென்ற துணிவு அவனுக்கு. அவன் அவளை நெருங்குகின்றான். “எடே வீட்டுக்கைகால் வைச்சால்." அவளுடைய வார்த்தைகள் தீப்பிழம்புபோல் சுழல்கின்றன. சண்முகம் தனது கையிலிருந்த துப்பாக்கியால் செல்லம்மாவை ஒருபுறம் தள்ளிவிட்டு வீட்டுவாசலுக்குள் காலடி எடுத்துவைக்கின்றான்.
செல்லம்மாவின் கைகள் காற்றில் உயர்கின்றன. ஒரே பாய்ச்சல். சண்முகத்தின் நெஞ்சில் ஒரு அடி! அடுத்த கணம் - அந்தப் பொலீஸ் காரனுடைய கையிலிருந்த துப்பாக்கி செல்லம்மாவின் கையில்!
பொலீஸ்காரர்களை திடீரென சுற்றிவளைக்கின்றார்கள், போராட்ட உணர்வு நிறைந்த மக்கள். உத்வேக உணர்ச்சியினால் ரத்தம்பாய்ந்து சிவப்பேறிய அவர்களது கண்களில் வெஞ்சினத் தீ
ஒரு பொலீஸ்காரன் ஆகாயத்தில் சுடுகின்றான். பொலீஸ்காரர்களை அசையவிடாது, அவர்களைக் கையே உயர்த்தாதபடி மக்கள் திரள் சுற்றிவளைத்து நெருக்குகின்றது.
-90- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

பொலீஸ் அதிகாரி தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக
நாலுயுறமும் பார்த்துவிட்டு மெள்ள நழுவிச்சென்று ஜிப்பில் ஏறுகின்றான்.
பாய்ந்து சென்று மக்கள் ஜீப் வண்டியையும் சுற்றி வளைக்கின்றனர்.
கிழக்கு சிவப்புமயமாகிக் கொண்டிருக்கின்றது.
1969
நீர்வை பொன்னையன் சிறுகதைகள்
-91

Page 50
சுருதிபேதம்
5ல்யாண ஊர்வலத்திலிருந்து எழுந்து காற்றில் மிதந்து தவழ்ந்து வந்த நாதஸ்வர கானம் எண் உள்ளத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டுகின்றது.
நேரத்தைப் பார்க்கின்றேன். ஒன்பதரை மணி. பத்து மணிக்குத் தொழிற்சங்க கூட்டம். கடைகள் எல்லாம் பூட்டிய பின்பு, இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டுத்தான் கூட்டத்துக்கு வருவார்கள் கடைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள்,
கூட்டத்துக்கு போகுமுன் ஒன்பதரை மணியளவில் வந்து என்னையும் கூட்டிச் செல்வதாகக் கூறியிருந்தான் கந்தையா.
நேரமும் ஒன்பதரை மணியாச்சு. இன்னும் அவனைக் காணவில்லை.
ஒருவேளை அவனும் கல்யாண வீட்டுக்குப் போய் விட்டானோ?
நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

இருக்காது. அவனுக்கு எல்லாவற்றுக்கும் முதலிலுள்ளது அரசியலும் தொழிற்சங்கமும்தான்.
சரி, இன்னும் சிறிது நேரம் இருந்து பார்ப்போம்.
வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தை தலைமாட்டில் வைக்கின்றேன் நான். "லயிற்றை" அணைத்துவிட்டு, படுக்கையில் கிடந்தபடியே கிழக்குப் பக்கமாக இருந்த ஜன்னலை நோக்குகின்றேன்.
மத்தாப்பிலிருந்து பல வர்ணப் பூக்கள் வெடித்துக் கிளம்புகின்றன. அவை இருண்ட வானத்தில் வர்ணக் கோலமிட்டு அழிந்து மறைகின்றன.
ஊர்வலம் நானிருக்கும் தெருவை நோக்கிவந்துகொண்டிருக்கின்றது.
மங்கள கும்பம் வைத்து, குத்துவிளக்கேற்றி, புதுமணத்தம்பதிகளை ஆராத்தி எடுத்து, பொட்டிட்டு வாழ்த்த வேண்டுமென்ற உணர்வு என்னையறியாமலே எனது உள்ளத்தில் ஒரு கணம் தலையெடுக்கின்றது.
சுருட்டுக் கடைக்கு மேலேயுள்ள, சுருட்டுப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற, ஒரு சிறிய இருண்ட அறையில்தானே நான் இருக்கின்றேன்! இந்தச் சூழ்நிலை என்னைச் சரியான சிந்தனைக்குத் தள்ளிச் செல்கின்றது.
என் அருகில் நின்று, பிற புதுமணத் தம்பதிகளை ஆராத்தியெடுத்து வாழ்த்தி வரவேற்க வேண்டிய நீஊர்வலத்தில் வந்து கொண்டிருக்கின்றாய்.
கோகிலா, உன் வருகைக்காக நான் எத்தனை நாட்கள் காத்துக் கொண்டிருந்திருக்கிறேன்?
இன்று நீ திருமணக் கோலத்துடன் கல்யாண ஊர்வலத்தில் வந்து கொண்டிருக்கின்றாய்.
என்றாவது ஒரு நாள் நீஇந்தக் கோலத்தில் வருவாய் என்பது எனக்குத் தெரியும்.
இன்று நீவருகின்றாய்.
உன்னைக் கைப்பிடிக்க வேண்டிய நான்?
உன்னைப் பற்றி அளவுக்கு மீறிய நம்பிக்கைகளை வைத்துக் கொண்டு, உனக்காக இந்த ஜன்னலருகே நான் காத்திருந்தேன்.
காலையும் மாலையும் நீ என்னைக் காண்பதற்காகத் துடிதுடித்து
இப்பக்கமாக வந்ததை அறிந்து, எனது உணர்ச்சிவசப்பட்ட தன்மையினை என்னுள் நினைத்துச் சிரித்திருக்கின்றேன்.
ஆனால் இன்று?
அன்று நாம் முதல் முதலாகச் சந்தித்தது எனக்கு இன்னும் ஞாபகமிருக்கின்றது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -93

Page 51
நான்கு வருடங்களுக்கு முன் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்கு நான் வந்தேன்.
முதலாவது நாள் விரிவுரை முடிந்து வந்து, எங்கள் விடுதிக்கு முன்னாலுள்ள வாகை மரத்தின் கீழ் நானும் எனது நண்பன் பத்மநாதனும் கதைத்துக்கொண்டு நின்றோம்.
மலையிலிருந்து தவழ்ந்து வந்த குளிர் காற்று எங்கள் உடலில் சில்லிட்டது.
பச்சைக் கம்பளத்தில் சிந்திவிட்டதைப்போல் பல வர்ணப் பூக்கள் மலர்ந்து எழில் தந்து கொண்டிருந்தன.
மாலைச் சூரியனின் செவ்வொளியில் வானம் பூமி எல்லாம் மூழ்கித் திளைத்துப் புதுப் பொலிவுடன் ஜொலித்தன.
கூட்டம் கூட்டமாக, நிறம் நிறமாகச் சிரிப்போடு கலகலத்து மாணவ மாணவிகள் வந்துகொண்டிருந்தார்கள். எல்லோரிலும் இளமையின்பூரிப்பு 62/6ծTւ Iւյ.
எனது இதயத்தில் ஒருவித மயக்கம். சிரிப்பொலி கேட்டது. நாங்கள் திரும்பிப் பார்த்தோம். நீயும் ஐந்தாறு மாணவிகளும் உங்கள் விடுதியை நோக்கி வந்து கொண்டிருந்தீர்கள்.
எங்களுக்குக் கிட்ட நீங்கள் வந்ததும் நின்றீர்கள். எனது நண்பன் உன்னை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.
பதிலுக்கு உன்னுடன் வந்தவர்களையும் நீ எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாய்.
அடுத்த நாள், பல்கலைக்கழக நூல் நிலையத்திலுள்ள எண்ணற்ற புஸ்தகங்களை நான் வியப்புடனும் ஆவலுடனும் பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.
என் நண்பன் அடுத்த ஷெல்ஃபிலுள்ள புஸ்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த எண்கணிகளில் நிழலாட்டம் தட்டுப்பட்டது.
என் தலை நிமிர்ந்தது. ஒரு புத்தகத்தைத் தட்டிலிருந்து எடுத்தபடியே நீ என்னைக்
-94- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

குறுகுறுப்போடு பார்த்துக்கொண்டு நின்றாய்.
எமது விழிகள் தமக்கே உரிய தாபத்தோடு முட்டி மோதின. உன் தலை கவிழ்ந்தது. எனது பார்வையை நிலை நிறுத்தி உன்னையே நான் பார்த்துக்கொண்டு நின்றேன்.
எனது நண்பன் எங்கள் பக்கம் திரும்பினான். அவன் எம்மிருவரையும் மாறி மாறிப் பார்த்ததை நாம் உடனடியாய் உணரவில்லை.
அவனுடைய உதட்டில் குறும்புத்தனம் நிறைந்த முறுவல் வெடித்தது. "நல்ல புத்தகங்களைத் தேடிப் பிடிக்கின்றீர்கள் போலிருக்கின்றது" என்று அர்த்த புஷ்டியுடன் மெதுவாக அவன் கூறினான். நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம். எமது நிலையை உணர்ந்த அவன் என்னை வெளியே இழுத்துச் சென்றான்.
நாங்கள் செல்லும்பொழுது நீஎன்னைத் திருட்டுத்தனமாகப் பார்த்துப் பெருமூச்சுவிட்டதை நான் கண்டேன்.
செனட் கட்டிடப் பக்கமாக மகாவலி வளைந்து அமைதியாக ஒடுவதைப் பார்த்தபடியே நான் நின்றேன்.
“முட்டாளே! வேதனையை விலைக்கு வாங்காதே. நீ வந்த வேலையைப் பார்” என்று என் நண்பன் எனக்குப் புத்திமதி கூறினான்.
நான் விடவில்லை. உன்னைப் பற்றி அறிய வேண்டுமென்ற ஆவல் எனக்கு ஏன் ஏற்பட்டது என்று எனக்கே புரியவில்லை.
மத்திய கன்ரீனுக்கு நாம் போகும்போது உன்னைப் பற்றிய சகல விபரங்களையும் அவன் எனக்குக் கூறினான்.
சில நாட்களின் பின் எதிர்பாராமலே உனது கடிதம் எனக்குக் கிடைத்தது.
அக்கடிதத்தில் என்னைப் பற்றிய சில விசயங்களை நீஎழுதியிருந்தாய். என் நண்பன்தான் என்னைப்பற்றி உனக்குக் கூறியிருக்க வேண்டும். அவன் சரியான ஆள். எனக்குக் கூறிய புத்திமதியை அவன் உனக்கும் கூறினானோ என்னவோ?
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -95

Page 52
என் நண்பன் உனக்கு நிச்சயம் புத்திமதி கூறியிருப்பான். அவன் அப்படிப்பட்டவனே!
நீ ஏன் அதைக் கேட்கவில்லை? உனது கடிதத்தால் எனது உள்ளத்தில் ஒருவித சலனம். நான் ஒரு விவசாயியின் மகன். எனது தந்தையின் உழைப்பில் கிடைக்கும் வருமானம் எங்கள் தினசரி வாழ்க்கைக்கே போதாது.
எனது அண்ணன் பதுளையில் வைத்திருக்கும் சுருட்டுக் கடையின் உதவியுடன் தான் எங்கள் குடும்பம் ஒருவிதமாகச் சமாளித்தது.
கடன் பட்டுத்தான் என் தகப்பன் என்னைப் படிப்பித்தார். எங்கள் தகுதியை மீறியெடுத்த முடிவினாலேதான் நான் பல்கலைக்கழகத்துக்கு வந்தேன்.
உனது தந்தை ஒரு அரசாங்க உத்தியோகத்தர். கஷ்டமின்றி உங்கள் குடும்பம் வாழ்ந்தது. அத்துடன் அவர் சிரமமின்றி உன்னையும் படிப்பித்தார்.
நானோ எனது குடும்பத்தின் வயிற்றைப் பட்டினி போட்டுக்கொண்டுதான் பல்கலைக்கழகப் படிப்பை ஆரம்பித்தேன்.
எமக்கிடையில் ஆரம்பித்த இந்த உறவு நிலைக்குமா? என்ற ஐயம் எனக்கு இருக்கத்தான் செய்தது.
எங்களிருவரையும், எங்களிருவருடைய குடும்பங்களையும் ஒப்பிட்டுப் பார்த்ததன் பயனாக இந்தச் சந்தேகம் என்மனதில் தோன்றியது. ஆனால் உனது கடிதங்கள் இந்தச் சந்தேகத்தை அகற்றத்தான் செய்தன.
நாம் கடிதத் தொடர்பில் ஆரம்பித்து, தனிமையில் சந்திக்கவும் தொடங்கினோம்.
நாங்கள் பல்கலைக்கழகப்பூங்காவிலும் வேறு பற்பல இடங்களிலும் இடைக்கிடை சந்திப்போம். அவ்வேளைகளில், எமது படிப்பு முடிந்ததும் நாம் இருவரும் நல்ல உத்தியோகம் எடுத்துக்கொண்டு, ஒரு புதிய காரும் கொழும்பில் ஒரு வீடும் வாங்கி செளகரியமாக வாழவேண்டும் என்று நீ அடிக்கடி கூறுவாய்.
எத்தனை தடவை உனக்குக் கூறியிருக்கின்றேன்?
எட்டாத கனவுகளையும் எனக்குப் பிடிக்காத செளகரியங்களையும் இள வயதிலிருந்தே நான் வெறுத்து வருபவன்.
-96- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

சினிமா பார்ப்பதற்கும், கண்டி கட்டுக்கலைப் பிள்ளையார் கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் போவதற்கும் நீ என்னை அடிக்கடி கூப்பிடுவாய். அவ்வேளைகளில் சில கூட்டங்களுக்கு நான் போக வேண்டியிருந்ததால் உன்னுடன் நான் வரவில்லை. இதற்காக நீ என்னை எத்தனை தடவைகள் கோபித்திருக்கின்றாய்? உனது ஆசாபாசங்களை நான் உணராதவனல்ல ஆனால் கூட்டங்கள் தான் எனக்கு முக்கியமானவை என்பதை அவ்வேளைகளில் நீ உணரவில்லை. அந்த விதத்தில் அதை என்னில் ஒரு குறையாக நினைத்தாய் நீ.
நான் உடையில் கவனம் செலுத்துவதில்லையென்று நீஅடிக்கடி குறை கூறுவாய்.
முதலாம் வருட முடிவில் நடத்தப்பட்ட சோஷலன்று நடந்த சம்பவத்தை இன்னும் நான் மறக்கவில்லை.
சோஷல் முடிந்து நான் எனது விடுதிக்குச் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது நீ என்னிடம் வந்தாய்.
“இங்கு வந்தும் நீங்கள் இன்னும் திருந்தவில்லை" வந்ததும் வராததுமாக நீகடுகடுப்புடன் கூறினாய்.
R 99.
ஏன்?
"வருடத்தில் ஒருமுறை நடைபெறுகின்ற இந்த சோஷலுக்காவது மற்ற மாணவர்களைப் போல உங்களுக்கு உடை உடுத்திக் கொண்டுவர முடியாதா?”
"ஏன், எனது உடைகென்ன?”
வியப்புடன் நான் கேட்டேன்.
"உங்களுடன் பேசுவதற்கு நான் எவ்வளவு ஆவலுடனிருந்தேன் தெரியுமா? உங்களுடைய வழமையான கசங்கிய உடையைக் கண்டு வெட்கப்பட்டுத்தான் நான் உங்கள் பக்கம் வரவில்லை. ஏன் இப்படிச் செய்கின்றீர்கள்?"
பொருமலுடன் நீ கேட்டாய்
இந்த விசயத்தில் நான் உன்னைச் சமாதானம் செய்யாமல் விடுதிக்குச் சென்று விட்டேன்.
என்னிடமுள்ள உடைகளைத்தானே நான் அணியமுடியும்.
காலகதியில் உனது மனதைச் சீர்படுத்திவிடலாமென்று தான் எண்ணினேன். அதற்காக என்னாலானவரையும் முயன்றிருக்கின்றேன்.
நாம் இரண்டாம் வருடத்தில் படித்துக் கொண்டிருக்கையில் திடீரென எனது தந்தை இறந்தார். இதை யாருமே எதிர்பார்க்கவில்லை.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -97

Page 53
எங்கள் வாழ்வையே தாங்கி நின்ற அந்த மரம் சாய்ந்த போது, எனது எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகள் அனைத்தும் தகர்ந்து போய்விட்டன. அது எத்தனை பெரிய இழப்பு?
ஒரு ஏழை விவசாயின் விடியாத வாழ்வாக எனது தகப்பனாரது வாழ்வும் சோக மயமாக முடிந்துவிட்டது.
நான் எனது படிப்பை இடையில் நிறுத்திவிட்டு, என் அண்ணனுடைய சுருட்டுக்கடைக்கு வேலை செய்யச் சென்றேன்.
கால்சட்டை போட்டு, பல்கலைக்கழகத்தின் வசதியான அறையின் படுக்கையிலும் வனப்புமிக்க மேசையில் பக்குவமாக வைக்கப்படும் சாப்பாட்டிலும் என்னை நான் ஆழ்த்திக் கொள்ளாதபடியினால் தான் ஒரு கடையில் வேலை செய்யப்போவது என் மனதுக்குக் கஷ்டமளிக்கும் காரியமாக இருக்கவில்லை.
நான் உன்னை விட்டுப் பிரியும்பொழுது நீ அழுகையை அடக்க முடியாதவளாய் கண்ணிர் விட்டு என் நெஞ்சையே நெகிழவைத்து விசும்பினாய்.
உனது படிப்பு முடிந்ததும் என்னிடம் வந்து விடுவதாக நீ கூறிய வாக்குறுதியை இன்னும் நான் மறக்கவில்லை.
உனது படிப்பு முடிந்தது. நானிருக்கும் பதுளையில் தான் உனக்கு ஆசிரியை வேலை கிடைத்தது. அது தற்செயலானதாயினும் மீண்டும் என்னை நீயே குழப்பினாய்.
நான் வேறு ஏதாவது தொழில் எடுப்பதற்குப் பல முயற்சிகள் செய்தேன்; பலனில்லை.
எனது வேலை சம்பந்தமாக லஞ்சம் கொடுப்பது போன்ற பல வழிகளை நீசொன்னாய். அந்த வேலைகளில் பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற உனது திமிரான போக்கு எனக்குக் கசப்பைக் கொடுத்து, உன்னை நான் ஏசியுமிருக்கின்றேன்.
என் தந்தை ஒரு விவசாயி. அவருடைய தொழிலை நான் மனப்பூர்வமாகச் செய்திருப்பேன். ஆனால் எங்களுக்கு சொந்த நிலமில்லை. முதலீடு செய்வதற்குப் போதிய பண வசதியுமில்லை.
எனது அண்ணன் ஒரு சுருட்டுக்கடைக்காரன். இத்தொழிலைச் செய்யும் என் அண்ணனுக்கு மரியாதைக் குறைவில்லையென்றால், அவருடைய தம்பி, நான் இதைச் செய்வதால் எனது மரியாதை குறைந்துவிடவா போகிறது?
கோகிலா! நீ என்னை மனப்பூர்வமாகக் காதலிக்கின்றாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் நடைமுறை வாழ்வினைச் சிந்திக்காது
-98- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

நீ கதைத்தது எனக்கு அச்சமூட்டியது.
நீ பிறந்து வளர்ந்த வாழ்வின் சூழ்நிலைகள் உன்னை விழுங்கி விட்டபோதும், அவற்றிலிருந்து உன்னை மீட்டெடுக்கலாம் என்ற என் நம்பிக்கையை நீ மெதுவாகத் தகர்க்க முற்பட்டாய்.
நான் சுருட்டுக்கடையில் வேலை செய்வது உனக்குப்பிடிக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியத்தான் செய்தது.
அதற்கு நான் என்ன செய்ய? நான் சுருட்டுக்கடைக்காரனுடைய தம்பி தானே? உனக்கு என் தொழில் கெளரவக்குறைவாகத் தானிருக்கும். இன்று நீ ஒரு ஆசிரியை, உனது தந்தை கொழுத்த சம்பளம் பெறும் ஒரு அரசாங்க உத்தியோகத்தர். ஆனால் அவருடைய தந்தை எனது தகப்பனைப் போல ஒரு சாதாரண விவசாயிதான். இது நீ சொல்லித்தான் நான் தெரிந்துகொண்டது. எனினும் இதை நான் அன்று உனக்கு எடுத்துக்கூறியதற்காக என்னை நீ கோபித்தாய்.
எனக்கு இதனால் ஒன்றும் கெட்டு விடவில்லை. அன்று நீபாடசாலையிலிருந்து வரும்பொழுது என்னைச் சந்தித்தாய். "நீங்கள் சுருட்டுக்கடையில் வேலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை" என்ற எடுத்த எடுப்பிலே நீகூறினாய்.
"ஏன்? “என்னுடன் படிப்பிற்கும் ஆசிரியைகளும் மற்றவர்களும் இதை அறிந்தால் எனது கெளரவம் என்னாவது?" “அதற்கு நான் என்ன செய்ய?” "ஏன்? உங்களுக்குப் படிப்பில்லையா? யாராவது ஒரு தோட்டத் துரையைப் பிடித்து கொஞ்சம் பணத்தையாவது கொடுத்து ஒரு தேயிலைத் தோட்டத்தில் ஒரு கெளரவமான வேலையை எடுத்தாலென்ன? வேணுமென்றால் நானே ஏற்பாடு செய்.”
“என்ன சொன்னாய்? லஞ்சம் குடுத்து உத்தியோக மெடுப்பதா? யார் p5(160TIt?”
"ஏன், அதனாலென்ன?” "பட்டினி கிடந்து செத்தாலும் இப்படியான வேலையை செய்வோமென்று நீ நினைக்கிறாயா?”
ஆத்திரத்துடன் நான் உன்னைக் கேட்டேன். இதனால் அன்றைய எங்கள் பிரிவு எனது முகவெறுப்போடும் உனது அர்த்தமற்ற கண்ணிரோடும் முடிவுற்றது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் 99

Page 54
முதல் முதலாக நாம் இருவரும் மகாவலி கங்கைக் கரையில் தனிமையாகச் சந்தித்தபொழுது நான் கூறியதை நீ மறந்து விட்டாயா? படித்துப் பட்டம் பெற்ற பின்பு எனக்கு வேலை கிடைக்காவிட்டால் எனது தந்தையின் தொழிலை அல்லது எனது அண்ணனுடைய தொழிலைச் செய்வேன் என்று நான் உனக்குக் கூறவில்லையா?
அதனாலென்ன? எனக்கு நீங்கள்தான் வேண்டும்; உங்கள் தொழிலல்ல என்று அன்று நீ கூறவில்லையா? அப்போது நான் அறிவினை இழந்து, உணர்ச்சியின் அடிமையாகி, உன்னைப் பற்றி எவ்வளவு நம்பிக்கை
தோட்டத்துத்துரைமார்களும் பெரிய அரசாங்க உத்தியோகத்தர்களும் போகின்ற கிளப்புகளுக்கு நான் போக வேண்டுமென்று நீ விரும்பினாய். இதை நீ மறைமுகமாக எனக்குக் கூறினாய்.
இப்படி நீ கூறுகையில் எனக்கும் உனக்கும் இடையில் ஒரு சுவர் எழுவதனை நான் உணரத் தலைப்பட்டேன்.
தோட்டத் தொழிலாளர்களும் சாதாரண மக்களும் செல்கின்ற சாப்பாட்டுக்கடைகளுக்கு நான் சாப்பிடப்போவதை நீ வெறுத்தாய்.
உனது தந்தை கொழும்பில் கோல்பேஸ் ஹோட்டல் போன்ற பெரிய ஹோட்டகளிலா சாப்பிடுகின்றார்?
நான் தோட்டத் தொழிலாளர்களுடன் கூடித் திரிவதும், அவர்களுடைய தொழிற்சங்க வேலைகளில் ஈடுபடுவதும் உனக்குக் கெளரவக்குறைவென்று நீபொருமுகின்றாய், இதனால் நீஎன்னை விட்டுப் படிப்படியாக அகலலானாய்.
தோட்டத் தொழிலாளர்களுடைய ரத்தம்தான் தேயிலைச் சாயமாக மாறுகின்றது என்பது உனக்கு எங்கே தெரியப்போகிறது? அவர்களுடைய பரித்தியாக உழைப்புத்தான் எங்கள் நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது என்பது உங்களைப் போன்றவர்களுக்கு எப்படித் தெரியும்?
இதனால் தான் உன் போன்றவர்கள் தோட்டத் தொழிலாளர்களது சோக வாழ்க்கையைப் பார்க்க மறுக்கின்றீர்கள். அவர்களுடையதுன்பமும் துயரமும் நிறைந்த வாழ்க்கைக்கு போராட்டம் மூலம் விடிவுகாண முற்படும் எங்களை வெறுக்கின்றீர்கள்.
நான் பல்கலைக் கழகத்திலிருக்கும்பொழுது, அங்கு குறைந்த சம்பளம் பெறும் ஊழியர்களை ஒன்று திரட்டி ஒரு தொழிற்சங்கம் உருவாக்கியது உனக்குத் தெரியும்தானே?
-100- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

கடைகளில் வேலை செய்கின்ற தொழிலாளர்களை ஒன்றிணைத்து ஒரு தொழிற்சங்கம் அமைப்பதில் நான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று பதுளைக்கு நீ வந்த ஆரம்பத்தில் நான் உனக்குச் சொல்லியுள்ளேன்தானே!
கோகிலா, உனது தந்தையும் அரசாங்க உத்தியோகத்தர்களின் சங்கத்தில் இருக்கின்றார்.
ஏன், உன் போன்ற ஆசிரியர்களுக்கும்தொழிற்சங்கம் இருக்கின்றது. தானே! நீயும் அதில் ஒரு அங்கத்தினராக இருக்கின்றாய்தானே. ,
ஒரு புதிய காரும் பெரிய பங்களாவும் வைத்திருக்கின்ற ஒரு பெரிய தோட்டத்துரை உன்னைக் காதலிக்கின்றார். இன்று உனக்கும் அவருக்கும் திருமணம்.
ஆனால் அவரை நீ காதலிக்கின்றாயோ என்னவோ எனக்குத் தெரியாது. எனினும் நீஎன்னிடம் எதிர்பார்த்துக் காணத் தவறிய ஆடம்பர வாழ்க்கையை அவரிடம் கண்டிருக்கின்றாய் என்பது உண்மையல்லவா? உங்கள் அந்தஸ்த்தைக் காட்டுவதற்கு, உனது திருமணத்துக்கு யாழ்ப்பாணத்திலிருந்து சிறந்த நாதஸ்வரக் கோஷ்டியையும் கூட உனது தந்தை கொண்டு வந்திருக்கின்றார்.
உனது கல்யாணத்துக்கு என்னை நீ அழைத்திருந்தால் நான் வரமாட்டேனென்று நீ நினைத்தாயா?
என்னை நீ ஏன் அழைக்கவில்லை? உன்னை நான் காட்டிக் கொடுத்து விடுவேன் என்ற அச்சமா? அல்லது இந்த இன்பகரமான வேளையில் உனது பழைய காதல் உன் நினைவுக்கு வந்து உன் உள்ளத்தை உறுத்தும் என்று நீ எண்ணினாயா?
அன்று வைத்திருக்க வேண்டுமென்று நீ ஆசைப்பட்ட பெரிய கார் நன்றாக அலங்கரிக்கப்பட்டு, அதில் நீ வந்து கொண்டிருக்கின்றாய்.
உனது கல்யாண ஊர்வலம் நான் தங்கியிருக்கும் சுருட்டுக்கடையை நெருங்குகின்றது.
தெருவைப் பார்க்கும் வடக்குப் பக்கமாக உள்ள ஜன்னல் பக்கம் நான் போய் நிற்கின்றேன்.
இதே ஜனன்லண்டை வந்ததும் முன்பு எத்தனை நாட்கள் உன் விழிகள் உயர்ந்து என்னைக் காண்பதற்கு ஏங்கித் தவித்து நோக்கின!
இன்றும் நீ வருகின்றாய். உன்னையறியாமலே உனது விழிகள் இன்றும் ஜன்னலை நோக்கி உயருமோ?
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -01

Page 55
ஜன்னலுக்கு நேரே நீ வருகின்றாய். உனது வலதுகை உன் நெற்றிப் பொருத்தை ஏன் வருடுகின்றது? உன்னை ஏமாற்றி விட்டு, உன் உள்ளத்திலுள்ள சலனத்தை உன் கண்கள் காட்டிக் கொடுத்து விடும் என்ற அச்சத்தினாலா உன் கண் இமைகளை நீ வருடுகின்றாய்? உன் உதட்டில் புன்னகை, இதை நீ வேண்டுமென்றே வருவிக்கின்றாயா? உனது கல்யாண ஊர்வலம் நானிருக்கும் கடையைத் தாண்டுகின்றது. வெளியே கதவு தட்டும் சத்தம். நான் அமைதியாகச் சென்று “லயிற்றைப்" போடுகின்றேன். ஒரே ஒளிப்பிரவாகம். கதவைத்திறக்கின்றேன். வாசலில் கந்தையா நிற்கின்றான். “செல்வராஜா, பத்துமணியாகப் போகுது. கூட்டத்துக்குப் போவம்" அவன் கூறுகின்றான்.
நானும் கந்தையாவும் புறப்பட்டோம். எனது உள்ளத்திலும் உடலிலும் உத்வேகம்.
கோகிலா, உன்னை நான் அடைந்திருந்தால் என் மனச்சாட்சிக்கும் நேரிய வாழ்க்கைக்கும் நான் துரோகம் செய்தவனாக இருந்திருப்பேன்.
நான் எடுத்த சரியான முடிவினால், எனக்கு வாழ்வையே உணர்த்திய தொழிலாளிவர்க்கத்தின் பேரணியில் நான் என்றென்றும் ஒரு அம்சமாகத் தலை நிமிர்ந்து நிற்பேன்.
கூட்டம் நடக்கப்போகும் தொழிற் சங்கமண்டபத்துக்குள் நானும் கந்தையாவும் செல்கின்றோம்.
எமது சங்கத் தொழிலாளர்கள் தங்களுடைய உரிமைகள் பற்றி ஆரவாரத்துடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
கல்யாண ஊர்வலத்திலிருந்து எழுந்து வந்த நாதஸ்வரகானம் தொழிலாளர்களுடைய உயிரோட்டம் நிறைந்த ஆரவார ஒலியில் மங்கி மடிந்து போகின்றது!
-972
-102- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

வேப்ப மரம்
်g ந்தை கூடப்போகுது. கெதியாய் எட்டி மிதிச்சு வாமோனை" கணபதி அப்பா என்னைத் துரிதப்படுத்தினார்.
எனது கழுத்து முறிந்துவிடும் போலிருந்தது. இடுப்பில் தாங்க முடியாத வலி. மூச்சுவிட முடியவில்லை. காலடி எடுத்து வைக்க முடியாமலிருந்தது.
தலையிலுள்ள வாழைக்குலை என்னை அழுத்தியது.
எழுபது வயதைத் தாண்டிவிட்ட கணபதி அப்பா மூன்று வாழைக்குலைகளைத் தலைமீது சுமந்து கொண்டு எதுவித கஷ்டமுமின்றி, காலை எறிந்து கையை வீசியபடி கெம்பீரமாகச் சென்று கொண்டிருந்தார்.
எங்கள் ஊரின் கிழக்குப் பகுதியிலுள்ள வாழைத்தோட்டத்திலிருந்து அரை மைல் தான் நாங்கள் நடந்திருப்போம். எனக்குக் களைப்புத் தட்டிவிட்டது. மேல் மூச்ச வாங்கியது. ஐந்து மைல்களுக்கப்பாலுள்ள சுன்னாகச் சந்தைக்கு எப்படித்தான் நான் இந்தச் சுமையையும் சுமந்து
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -103

Page 56
கொண்டு செல்லப் போகிறேனோ என ஏங்கினேன்.
"கொஞ்சம் மெதுவாய் நடவணையப்பா. என்னாலை கெதியாய் நடக்கேலாமல் கிடக்கு."
"என்ன இந்த வயதிலை இப்பிடியெண்டால் நீங்கள் எப்பிடித்தான் சீவிக்கப் போறியள்? அந்த நாளையிலை உந்த வயதிலை நான் என்னென்ன வேலையள் செய்தன் தெரியுமே? அப்ப சுமை சுமக்கிறதிலை என்னோடை ஒருதனும் போட்டி போட ஏலாது. ஏன் இப்பதான் என்ன? எங்கை ஒரு தம்பி என்னை அசைச்சுப் பாக்கட்டும் பாப்பம்."
பெருமையுடன் கூறினார் அவர். நாங்கள் சந்தையை நோக்கி நடந்து கொண்டிருந்தோம். எங்கள் ஊரின் நடுவில் ஒரு வெளி. அந்த வெளியின் மத்தியில் கிளைத்துச் சடைத்து, வானத்தை நோக்கி வளர்ந்தோங்கிய ஒரு வேப்பமரம். மங்கிய விடிநிலவொளியில் ஒரு பெரிய கருமுகிலைப்போல நின்றது.
"அப்பா, இந்தவேப்பமரத்தை ஏன் கறுத்தாற்ரை வேம்பு எண்டு சொல்லுறவை?"
“எட மோனை, இந்த விசயம் உனக்கு இன்னும் தெரியாதே? உங்களைப் போல வருங்காலப் பயிருகள் தெரிஞ்சிருக்க வேண்டிய முக்கியமான விசயம் இது!”
ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார் அவர். “சரியணை சொல்லு." "அந்த நாளையிலே வெள்ளைக்காறன் ஆண்ட காலம் அது. அப்ப இண்டையைப் போலை தார் றோட்டு இருக்கேல்லை. எங்கடை ஊரிலை வெறும் கல்லு றோட்டு ஒண்டும், வண்டில் பாதையளும் தான்.
"இப்ப இருக்கிறதைப் போலை அப்ப கல்வீடுகளும் பெரிய பள்ளிக்கூடங்களும் இருக்கேல்லை. பண்டிதற்றை பள்ளிக்குடம் எண்டு நாங்கள் சொல்லிற ஒரு சின்னப் பள்ளிக்குடத்தைச் சிவசங்கர பண்டிதர் எங்கடை ஊருக்குக் கிழக்குப் பக்கத்திலை நடத்தினார்.
“பெரிய பட்டணம் எண்டு நாங்கள் சொன்ன யாழ்ப்பாணப் பட்டணத்திலை கல்லாலை கட்டின நாலஞ்சு கவுணி மேந்துக் கட்டிடங்களும், ஒரு கிட்டங்கியும், மூண்டு நாலு கல்வீடுகளும்தான் கிடந்துதுகள். அப்ப சீமேந்து இல்லை. கட்டிடங்களைக் கல்லு, மண், சுண்ணாம்பு இந்த மூண்டையும் குழைச்சுக் கட்டிறது.
“எங்கடை ஊரிலை, வெள்ளைக்காறனுக்குப் பந்தம் பிடிக்க, அவன்ரை அரசாங்கத்திலை உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்த
-104- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

சின்னத்தம்பி உடையாரும், நீலகண்ட முதலியும் தான் பெரிய நாச்சாரும் வீடும் கட்டியிருந்தாங்கள். அவங்கள் தான் பெருவாரியான காணி பூமியளை வைச்சிருந்தாங்கள். அந்தத் திமிரிலை எங்கட ஊராக்களை அடக்கியாளப்பாத்தாங்கள் அவங்கள்.
"ஆனால் எங்கடை ஊராக்கள் அவங்களுக்குப் பயப்பிடேல்லை. அவங்களை எள்ளளவும் மதிக்கேல்லை.
"பெரிய கறுவல், சின்னக் கறுவல் எண்டு இரண்டு பேர் எங்கடை ஊரிலை இருந்தினை. அவை இரண்டு பேரிட்டையும் கொஞ்சக் கொஞ்ச காணியள்தான் இருந்துது. இரண்டு பேரும் தோட்டம் தான் செய்தினை. அவை இரண்டு பேரும் நெருங்கின சிநேகிதம். அது மாத்திரமில்லை, எங்கடை ஊரிலை உள்ளவை எல்லாரும் கறுவலாக்களைத்தான் மதிச்சினை. அவங்கள் சொல்லுறபடி தான் எல்லாம் செய்வினை. ஏனெண்டால் எல்லாற்றை நன்மை, தீமையிலும் அவங்கள் தான் முன்னுக்கு நிப்பாங்கள். எல்லாற்றை இன்ப துன்பங்களிலும் அவங்கள் பங்குபற்றுவாங்கள்.
"இது உடையானாக்களுக்குப் பிடிக்கேல்லை. கறுவலாக்களை மட்டந்தட்டப் பாத்தாங்கள் அவங்கள். அது பலிக்கேல்லை.
"பெரிய கறுவலையும், சின்னக் கறுவலையும் அண்டல் போட்டு அவங்களைக் கொளுவிவிட்டு மோதப்பண்ண முயற்சித்தாங்கள் உடையானாக்கள். பெரிய கறுவல் எங்கடை ஊரிலை வடக்குப் பகுதியிலை இருந்தான். சின்னக் கறுவல் தெற்குப் பகுதியிலை இருந்தான். வடக்கு மூலையான் தெற்கு மூலையான் எண்டு அவங்களைப் பிறிக்கப் பார்த்தாங்கள்.
"கறுவலாக்களைப் பிறரிக்கிறதாலை ஊராக்களையும் பிறிக்கலாமெண்டு பாத்தாங்கள் அவங்கள். அதுவும் பலிக்கேல்லை.
“சரியான சந்தர்ப்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாங்கள் உடையானாக்கள்.
"ஒருநாள் ஒரு பாதிரியார் எங்கடை ஊருக்குக் குதிரை வண்டியிலை வந்தார். அவர் ஒரு வெள்ளைக்காரன்.
"உடையானையும் முதலியயையும் அந்தப் பாதிரியார் முதல்லை சந்திச்சு கதைத்துப்போட்டு, பிறகு கறுவலாக்களோடை கதைக்க வேணுமெண்டு அவங்களைக் கூட்டிக் கொண்டு வரச்சொல்லி ஒரு ஆளை அனுப்பினார்.
"எங்களைச் சந்திக்கவேணுமெண் டால் அவர் எங்களிட்டை வரட்டும். நாங்கள் அவரைத்தேடி உடையான் வீட்டுக்கு வரமுடியாது எண்டு வந்த ஆளிட்டைச் சொல்லி அனுப்பினாங்கள் கறுவலாக்கள்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -105

Page 57
பாதிரியாரும் உடையானாக்களும் கறுவலாக்களிட்டை வந்தினை. "இதை அறிஞ்ச ஊரும் ஒண்டாய்க் கூடிச்சுது" "வாழைப்பழமும், இளனியும் குடுத்துப் பாதிரியாரை உபசரிச்சுப்போட்டு, வந்த விசயம் என்ன எண்டு பாதிரியாரைக் கறுவலாக்கள் விசாரிச்சாங்கள்.
"நாங்கள் ஒரு கோயில் கட்ட முடிவெடுத்திருக்கிறம் எண்டார் பாதிரியார்”
“எங்கை எண்டு பெரிய கறுவல் கேட்டான். "இந்த ஊருக்கு நடுவிலையுள்ள வெளியிலை தான் கோயில் கட்டத் தீர்மானிச்சிருக்கிறம் எண்டு பாதிரியார் கூறினார்.
"என்ன? ஊருக்கு நடுவிலையுள்ள வெளியிலை கோயில் கட்டப் போறியளா? எங்கை கட்டுங்கோ பாப்பம்” எண்டு சின்னக் கறுவல் கொதிச்செழுந்தான்.
“சின்னக் கறுவல் அவசரப்படாதை பொறு. நான் விசயத்தைச் சொல்லுறன். நீங்கள் கோயில் கட்ட வேணுமெண்டால் தாராளமாய்க் கட்டலாம். ஆனால் இந்த வெளியிலை கட்டக்கூடாது" எண்டு பெரிய கறுவல் உறுதியாய்ச் சொன்னான்.
"ஏன் இந்த வெளியிலை கட்டக்கூடாது?” எண்டு பாதிரியார் கோபத்தோடை கேட்டார்.
"எங்கடை ஊருக்கு நடுவிலை இந்த ஒரேயொரு வெளிதான் கிடக்கு. மற்றதெல்லாம் குடியிருக்கிற காணியள், தீவாளி, வரியப்பிறப்பு நாளுகளிலை இந்த வெளியிலை தான் நாங்கள் கூத்துக்கள் நடத்துகிறது. எங்கடை ஊர்ப் பிள்ளையஸ் விளையாடிறதுக்கும் இந்த ஒரேயொர வெளிதான் கிடக்கு. அதோடை மாரிகாலத்திலை எங்கடை ஊர் ஆடுமாடுகள் மேயிறதும் இந்த வெளியிலைதான். வேணுமெண்டால் எங்கடை ஊருக்குக் கிழக்காலை அல்லது மேற்காலை பெரிய வெளியள் கிடக்கு. அந்த வெளியள் ஒண்டிலை நீங்கள் கட்டலாம்” எண்டு பெரிய கறுவல் சொன்னான்.
“இல்லை இந்த வெளியிலைதான் நாங்கள் கட்டப்போறம்” எண்டு திட்டவட்டமாக சொன்னார் பாதிரியார்.
முடியாது; நீங்கள் கட்டேலாது, வேணுமெண்டால் இதிலை நிக்கிற எங்கடை ஊர் ஆக்களிலலை ஆருக்காவது நீங்கள் இந்த வெளியிலை கட்டிறது விருப்பமோ எண்டு கேட்டுப்பாருங்கோ” எண்டான் பெரிய கறுவல்.
et
-106- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

"ஊர் ஆக்கள் எல்லாரும் விருப்பமில்லை எண்டு ஒண்டாய்ச் சொல்லிச்சினை.
“இது கவுணர்மேந்து விசயம். பாரதுTரமானது! வீணாய் மலையோடை மோதி மண்டையை உடையாதையுங்கோ எண்டு உடையானும், முதலியும் கறுவலாக்களை வெருட்டினாங்கள்.
"ஒய் உடையாரே, வேணுமெண்டால் உங்கடைவளவுக்கை கட்டும். ஆனால் நாங்கள் உயிரோடை இருக்கு மட்டும் இந்த வெளியிலை நீங்கள் கட்டேலாது" எண்டு சின்னக்கறுவல் சீறிப்பாய்ஞ்சான். ஊராக்களும் அவனோடை சேர்ந்து பொங்கி எழுந்தினை.
"பாதிரியாருக்குச் சரியான கோவம். அவர் ஏதோ இங்கிலிசிலை பேசிப் போட்டுத் திரும்பிப் போட்டார்.
"நாலஞ்சு நாளைக்குப் பிறகு மணிணையும், கல்லையும், சுண்ணாம்பையும் கொண்டு வந்து அந்த வெளியிலை பறிச்சாங்கள்.
"பிறகு பாதிரியாரும், நாலஞ்சு பேரும் வந்து கோயில் கட்ட இடத்தை அளந்து அத்திவாரம் வெட்ட முளைக் கட்டையடிச்சுக் கயிறு கட்டினார்கள்.
"இதைக் கேள்விப்பட்ட சின்னக் கறுவல் ஓடிவந்து கயித்தை அறுத்தெறிஞ்சு போட்டு, கட்டையளையும் பிடுங்கினான்.
“ஊராக்களும் இதை அறிஞ்சு பொங்கியெழும்பி, கம்புகளோடையும் தடியளோடையும் வந்து வேலை செய்த ஆக்களை அடிக்கப் போட்டினை.
"பெரிய கறுவல் எல்லாரையும் சமாதானப்படுத்தி போட்டு, பாதிரியாக்களைத் திருப்பியனுப்பினான்.
"பிறகு கறுவலாக்கள் ஊராக்களிட்டைக் கையொப்பங்கள் வாங்கி, கவுண்மேந்து ஏசண்டருக்கு ஒரு பெட்டிசம் அனுப்பினாங்கள்.
“பெட்டிச விளக்கத்துக்கு கவுண்மேந்து ஏசண்டர் ஆக்களைக் கூப்பிட்டார். அவரும் ஒரு வெள்ளைக்காறன் தான்.
"சின்னக் கறுவலை வரவேண்டாமெண்டு மறிச்சுப் போட்டு பெரிய கறுவலும், வேறை இரண்டு மூன்று பேரும் கவுணிமேந்து ஏசண்டரிட்டைப் போனாங்கள்.
“எங்கடை ஆக்களைக் கண்ட உடனே கவுண்மேந்து ஏசண்டல் துள்ளிக்குதிச்சான்.
"ஆரடா அவன் சின்னக் கறுவல்? எண்டு முதலிலை பாஞ்சான்.
“அவன் வரேல்லை, ஐயா" எண்டு பெரிய கறுவல் சொன்னான்
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் 107

Page 58
"ஏனடா?” “அவனுக்குச் சுகமில்லை” எண்டு சொன்னான் பெரிய கறுவல். "அவனை நான் என்ன செய்யிறனெண்டு பாருங்கோடா. ஆரடா பெரிய கறுவல்?” எண்டு பிறகு கேட்டான்.
"நான் தானெண்டு சொல்லிக் கொண்டு பெரிய கறுவல் முன்னுக்கு வந்தான்.
"அடே, என்னடா நீயும் சின்னக் கறுவலும் குழப்பம் செய்ய ஊராக்களைத் தூண்டிறியளாம்" எண்டு ஏசண்டன் கேட்டான்.
"இல்லையே” எண்டு நிதானமாய்ச் சொன்னான் பெரிய கறுவல். "அப்ப இதென்னடா இந்தப் பெட்டிசம்?” எண் டு பெரிய கறுவலாக்கள் அனுப்பிய பெட்டிசத்தைக் காட்டினான் ஏசண்டன்.
“அதென்னண்டால், எங்கடை ஊருக்கு நடுவிலையுள்ள வெளியிலை கோயில் கட்டவேண்டாமெண்டும், ஊருக்கக் கிழக்காலை அல்லது மேற்காலையுள்ள வெளியிலை கோயிலைக் கட்டச் சொல்லிறம் எண்டு” பெரிய கறுவல் சொன்னான்.
"நீங்கள் ஆரடா அதைக் கேக்கிறதுக்கு? மூச்சுக்காட்டினால் உங்களெல்லாரையும் சுட்டுத் தள்ளிப்போடுவம்; கவனமாய் ஒடுங்கோ" எண்டு அதிகாரத்திமிரோடை போனாக்களை எச்சரித்துத் துரத்திப் போட்டான் கவுண்மேந்து ஏசண்டன்.
“உவங்களுக்குச் சரியான பாடம் படிப்பிச்சுக் காட்டிறம்” எண்டு தன்னோடை போன ஆக்கங்களுக்குச் சொல்லிக்கொண்டு திரும்பி வந்தான் பெரிய கறுவல்.
"என்ன நடந்தது?” எணர்டு பெரிய கறுவலை ஆவலோடை கேட்டான் சின்னக்கறுவல்.
"ஏசண்டன் சொன்னதையெல்லாம் பெரிய கறுவல் விபரமாய் சொன்னான்.
"அந்த வெள்ளைக்காறன் இப்பிடிக் கேவலமாய் பேச நீங்கள் சும்மா கேட்டுக் கொண்டு நிண்டிட்டு வந்து அதை இஞ்சை சொல்ல உங்களுக்கு வெக்கமில்லையே? இது அவங்கடை ஆட்சிதான். ஆனா இது எங்கடை தேசம், எங்கடை மண், உவங்களை நான் ஒரு கை பாக்கிறன் எண்டு சின்னக் கறுவல் சபதம் செய்தான்.
“பெரிய கறுவல் அவனைச் சமாதானப்படுத்தினான். “மூண்டு நாலு நாளையாலை அந்த வெளியிலை கோயில் கட்டத் துவங்கினாங்கள்.
-108- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

“கத்தியும் கையுமாய்ப் போன சின்னக் கறுவலைப் பெரிய கறுவலும் ஊராக்களும் புத்தி சொல்லி மறுச்சினை.
"மூண்டு நாலு மாதத்துக்கை கோயிலைக் கட்டி முடிச்சாங்கள். "சின்னக் கறுவல் பயித்தியம் பிடிச்சவன் மாதிரி அலைஞ்சு திரிஞ்சன்.
"கோயில் திறப்பு விழாவுக்கு முதல் நாள் உடையான் வீட்டிலை ஆடும், கோழியும் அடிச்சு குடிவகையோட ஒரு பெரிய விருந்து நடத்தினாங்கள். யாழ்ப்பாணத்திலையிருந்து அந்த விருந்துக்கு இரண்டு மூன்று வெள்ளைக் காறங்களும் அரசாங்க உத்தியோகத்தன்களும் வேறை அஞ்சாறு பேரும் வந்தாங்கள்.
“உடையான் வீட்டுக்கு இரண்டு மூண்டு பேரைக் காவலுக்கு வைச்சாங்கள் கறுவலாக்கள்.
“ஊராக்கள் எல்லாம் ஒண்டாய் திரண்டினை. "கறுவலாக்கள் புயல் வேகத்திலை ஒடியாடித் திரிஞ்சாங்கள். "அண்டைக்கு இரவு எங்கடை ஊர் நித்திரை கொள்ளேல்லை. "திறப்பு விழாவிலண்டு காலமை பாதிரியாரும் வேறை சில ஆட்களும் அந்த வெளிக்கு வந்தினை. கோயில் கிடந்த அந்த வெளியிலை நிலத்தை உழுது குரக் கண் நாத்து நட்டு, அதுக் கிடையிலை வாழைக்குட்டியளும் நட்டுத் தண்ணி இறைச்சு விட்டாச்சு.
"பாதிரியாருக்குச் சரியான கோவம் வந்தது; எல்லாரையும் பேசிப்போட்டு எங்கடை ஊராக்களுக்குப் பாடம் படிப்பிச்சுத்தாறன் எண்டு சொல்லிப் போட்டுப் போனார்.
“கோயிலை ஆர் இடிச்சது எண்டு அறியிறதுக்கு, கவுண்மேந்து ஏசண்டரின்ரை ஒடரிலை எங்கடை ஊராக்களைக் கொஞ்ச கொஞ்சப் பேராய்ப் பிடிச்சு அடிச்சு வெருட்டிப் பாத்தது அரசாங்கம்.
"எங்கடையாக்கள் மூச்சக்கூட விடேல்லை. “பிறகு உடையானும் முதலியும் கவுண்மேந்து ஏசண்டனும் சேர்ந்து சூழ்ச்சி செய்து பொய் வழக்குப் போட்டு சின்னக் கறுவலை மறியலுக்குஅனுப்பினாங்கள்.
“இதனாலை எங்கடை ஊர் குமுறிக்கொண்டிருந்தது. "உடையானும் முதலியும் இரவிலை வெளிக்கிடுறதில்லை. பகலிலையும் தங்கடை கையாக்களோடை தான் பயந்து பயந்து நடமாடினாங்கள்.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -109

Page 59
"சனங்கள் அவங்களைக் கண்டால் வெறுப்போடை காறித் துப்பிச்சினை.
"சில நாளையாலை சின்னக் கறுவல் வருத்தம் வந்து மறியல் வீட்டிலை செத்துப் போனானெண்டு சொன்னாங்கள்.
“பெரிய கறுவருக்குத் தன்ரை வலதுகை முறிஞ்ச மாதிரிக் கிடந்தது. அவன் சரியாய்க் கவலைப்பட்டான். ஊராக்களும் சரியாய்க் கவலைப்பட்டினம்.
"மறியல் வீட்டிலை சின்னக் கறுவலை அடிச்சுத்தான் சாக் காட்டினவங்கள் எண்ட உண்மையை மறியலாலை வந்த தில்லையம்பலம் வெளிப்படுத்தினான்.
"உடனை பெரிய கறுவல் கோபாவேசம் கொண்டு எழும்பினான். “ஊராக்களும் கெம்பி எழும்பிச்சினை. "உடையானும் முதலியும் பயத்திலை ஒளிச்சிட்டாங்கள். ஒரு மாதமாய் அவங்கடை தலைக்கறுப்பைக் காணேல்லை.
"கெம்பி எழும்பின ஊர், தலைவரி கட்ட மறுத்தது." “அதென்னணையப்பா தலை வரி" நான் கேட்டேன். "தலை வரியெண்டு அந்த நாளையிலை ஒரு வரி இருந்தது. இருவத்தொரு வயது வந்த ஒவ்வொரு ஆம்பிளையும் ஒரு வரியத்துக்கு ஒருக்கால் கவுண்மேந்துக்கு வரியாய் ஒரு ரூபா கட்டவேணும். இந்தக் காசை விதானையிட்டைக் கட்டவேணும். இந்தக் காசு கட்டினவைதான் கவுன்சில் தெரிவிலை வோட்டுப்போட ஏலும். வரி கட்டாதாக்களை கவுண்மேந்து மறியலுக்கு அனுப்பும்.
"பெரிய கறுவல்தான் ஊராக்களைச் சேர்த்து இந்தத் தலைவரிக் காசைக் கட்டாமல் குழப்பஞ் செய்தான்.
“கவுண்மேந்தலை ஒண்டும் செய்யேலாமல் போச்சு" ஏணெண்டால் எங்கடை ஊர் ஒண்டாய்ச் சேந்து நிண்டுது. பக்கத்திலை உள்ள ஊருகளில் ஆக்களும் எங்களுக்கு உதவியாய் நிண்டினை.
"பிறகு கோயில் கிடந்த இடத்திலை ஒரு வேப்பம் கண்டையும் நாட்டினை எங்கடை ஊராக்கள். அதுதான் இந்தக் கறுத்தாற்றை வேம்பு. "அட இவ்வளவு நாளும் உனக்கு இந்த விசயம் தெரியாமல் போச்சே, உண்மையிலை கறுவலாக்கள் சரியான வீரவான்கள்தான்.
"இந்த விசயம் பழையாக்களுக்குத்தான் தெரியும். இதைத் தெரிஞ்சவை இப்ப நாலஞ்சு பேர் தானிருக்கினை."
-1 10- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

“கறுவலாக்கள் உண்ரை கூட்டாளியளோணைய்ப்பா?”
“இல்லையடா மோனை, அவங்களிருக்கேக்கை எனக்கு உன்ரை வயது தானிருக்குமெணி டு நினைக்கிறேன். எப்பவும் நாங்கள் அவங்களோடைதான் திரிவம். அவங்கள்தான் எங்களுக்கு வழிகாட்டி. இந்த மனத்துணிவை எங்களுக்கு ஏற்படுத்தினது அவங்கள்தான். அந்த வேப்ப மரத்தைப் போலைதான் அவங்களுக்குப் பெரிய மனசு."
சொல்லிவிட்டு, கணபதி அப்பா மெளனமாக நடத்தார். எனக்கு அளவு கடந்த உற்சாகமாயிருந்தது. தலையிலுள்ள வாழைக் குலையின் பாரம் கூட எனக்குத் தெரியவில்லை.
-1972.
★
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -111

Page 60
எரிசரம்
-1 12
ee
5ரில் றாத்தல் பிஞ்சு மிளகாய் என்ன விலை?”
'அறுபது சதம்." காலை நீட்டியபடியே, வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டு, தலை நிமிராமலே அவள் கூறுகின்றாள்.
"என்ன, ஒரு றாத்தல் பிஞ்சு மிளகாய் இரண்டு ரூபா நாப்பது சதமா?”
வியப்புடன் நான் கேட்கின்றேன். “ஒரு றாத்தல் செத்தல் மிளகாய் முப்பத்தைஞ்சு ரூபா விக்குது. பிஞ்சு மிளகாய் இரண்டு ரூபா நாப்பது சதம் விக்காமல் என்ன செய்யிறது?"
அவளுடைய குரலில் கடுகடுப்பு. “எடே, நிலைமை தெரியாமல் கதையாதை. நேற்றுத்தான் நீ கொழும்புக்கு வந்தனி. பேசாமலிரு."
நண்பன் என்னைப் பேசவிடாமல் தடுக்கின்றான்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

கொஞ்சம் சூடேத்திப் பாப்பம் என்ன நடக்குதெண்டு எனது மனதில் குறும்புத்தனம் தலை தூக்குகின்றது.
"வெள்ளைக்காரன்ரை காலத்திலை ஒரு றாத்தல் செத்தல் மிளகாய் அறுபது சதம்தானே?"
"என்ன? வெள்ளைக்காறன் எங்கடை நாட்டை விட்டு ஒடீட்டானே?" தலையை நிமிர்த்தி எங்களைப் பார்த்துக் கேட்கின்றாள். அவளுடைய கண்களில் கோபக் கனல். நாங்கள் ஒன்றும் பேசவில்லை. “எங்கடை நாட்டிலையுள்ள பெருவாரியான தேயிலை றப்பர் தோட்டங்களை இண்டைக்கும் வெள்ளைக்காறன்தான் வைச்சிருக்கிறான். பெரிய பெரிய கம்பெனியள் எல்லாம் அவன்ரை கையிலைதான் கிடக்கு. இது உங்களுக்குத் தெரியாதே?”
அசந்து போய் நான் நிற்கின்றேன். "அதோடை அமெரிக்காக்காறன் உலக வங்கி எண்ட வட்டிக் கடையை வைச்சு எங்கடை நாட்டைக் கொள்ளையடிக்கிறான். இவைகள் எல்லாருக்கும் இஞ்சையுள்ள தரகு முதலாளியள் முண்டு குடுக்கிறாங்கள்." "இந்த விசயமெல்லாம் காய்கறி விக்கிற இந்தக் கிழவிக்கு எப்பிடித் தெரியும்?”
எனக்குப் பேராச்சரியம். "எங்கடை நாட்டைக் கொள்ளையடிக்கிற இந்த அந்நியன்களை நாங்கள் அடிச்சுக் கலைக்காட்டி.."
இழந்துவிட்ட இளமையை மீண்டும் பெற்றுவிட்டவளாய் அவள் கையை வீசியபடியே ஆவேசத்துடன் கத்துகின்றாள். கோழித் தூக்கத்திலிருந்த சந்தை விழிக்கின்றது. அவள் எங்களை வெறித்துப் பார்த்தபடியேயிருக்கின்றாள். அவளுடைய குழி விழுந்த கண்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. "ஆச்சி, இவன் இடத்துக்குப் புதுசு. விசயம் தெரியாமல் கதைக்கின்றான். நீ கோவியாதையணை. சரி மிளகாயைத்தாணை"
நண்பன் நிலைமையைச் சமாளிக்க முயல்கின்றான். "இந்த விசயத்திலும் விளையாட்டா," எரிச்சலுடன் கூறிவிட்டு அவள் மிளகாயை நிறுக்கின்றாள். “வேறு என்ன வேணும்?” "ஒரு றாத்தல் கத்திரிக்காய், அரை றாத்தல் வாழைக்காய்,
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -1 13

Page 61
வெண்டிக்காய்."
அவள் ஒவ்வொரு சாமானாக நிறுத்துப் போடுகின்றாள். கணக்கைக் கேட்டுக் காசைக் கொடுத்துவிட்டு, நாங்கள் வேறு ஆளிடம் சாமான் வாங்கச் செல்கின்றோம்.
“நல்ல வேளை நாங்கள் தப்பினது. நீவீண் கதை பேசி. அந்த மனிசி வாய் திறந்தால்."
"ஏன், அப்பிடி அவள்.?” "அவளைப் பற்றி உனக்கென்ன தெரியும், இந்தச் சந்தையிலுள்ள வியாபாரியள் எல்லாரும் அவளுக்கு மடக்கம். இஞ்சை தலை தூக்கிற சண்டை சச்சரவு எல்லாத்தையும் அவள் தான் தீர்த்து வைக்கின்றவள். "
"அப்பிடியா?” "ஆராவது அநியாயமாய் நடந்தால் அவள் சும்மா பார்த்துக் கொண்டிராள். எந்த விண்ணணெண்டாலும் அவள் எதிர்த்துச் சண்டை போடுவாள். சரி விடு அவளின்ரை கதையை. நாங்கள் வந்த வேலையைப் பார்ப்போம்."
நண்பன் காய்கறிகளை வாங்கிக் கொண்டிருக்கின்றான். எனது மனம் நிலை கொள்ளாமல் தவிக்கின்றது. அந்த ஆவேசக் குரல் . எங்கோ, எப்பொழுதோ கேட்ட மாதிரி. அலைந்து கொண்டிருக்கின்றது எனது மனம். அவளுடைய அந்த உக்கிரப் பார்வை. அந்த உக்கிரப் பார்வையை எப்பொழுதோ கண்ட மாதிரி எனது நினைவுத் தடத்தில் உணர்வு தட்டுப்படுகின்றது.
"இவளை நான் எங்கே பார்த்தேன்?" எனக்குத் தெளிவில்லை. காய்கறி வாங்கிவிட்டு நண்பன் திரும்பிச் செல்வதற்கு என்னைக் கூப்பிடுகின்றான்.
“சோமாவதி அக்கா, சாமான்களைப் பார்த்துக்கொள். நான் தேத்தண்ணி குடிச்சிட்டு வாறன்."
பக்கத்திலிருந்த பெண் அந்தக் கிழவியிடம் கூறிவிட்டு எழுந்து செல்கின்றாள்.
"சோமாவதி” எனது மனதில் சலனம்.
அதெப்படி முடியும், அவள் அந்த.
-114- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

'சரி ஒருக்கால் கிட்டப் போய்ப் பார்ப்பமே நண்பனிடம் கூறிவிட்டு நான் செல்கின்றேன் "எங்கை போறாய்? பிறகும் அந்தக் கிழவியோடை." "வாறன் பொறு" நான் செல்கின்றேன். நண்பன் என்னைத் தொடர்கின்றான். அவள் மற்றுமொரு வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவிக் கொண்டிருக்கின்றாள்.
அவளை நான் உன்னிப்பாகப் பார்க்கின்றேன். அவளுடைய நெற்றியின் இடது புறத்திலுள்ள அந்தவடு எனது கண்களில்படுகின்றது.
எனக்கு திகைப்பு. சிறிது நேரம் செயலற்று நிற்கின்றேன். "நீங்கள்தானே அந்த சோமாவதி?” துணிவை வரவழைத்துக் கொண்டு வந்து கேட்கின்றேன். "எந்தச் சோமாவதி?” தலையை நிமிர்த்தி, வியப் புற்றவளாய் அவள் என்னைப் பார்க்கின்றாள்.
"கனவரியத்துக்கு முந்தி மாத்தறையிலை நடந்த அந்த ஊர்வலத்திலை."
அவளுடைய கண்களில் ஒளி வீசுகின்றது. "அதுக்கு இப்பென்ன?” "அண்டைக்கு நானும் அந்த ஊர்வலத்திலை. என்னில் எதையோ தேடுவதுபோல அவளுடைய விழிகள் என்னை நிலைகுத்திப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
y
உணர்ச்சி அலைகளுக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் எம்மிருவர் மத்தியில் மெளனம். எம்மைப்புரிந்துகொள்ள முடியாதவனாய் எனது நண்பன் செய்வதறியாது நிற்கின்றான்.
"நீங்கள் அந்த தேயிலை கொம்பனியிலை இப்ப வேலை செய்யிறேல்லையா?”
மெளனத்தைக் கலைத்து நான் கேட்கின்றேன்.
"அந்த விசயம் நடந்த பிறகு அந்த வெள்ளைக்கார தேயிலைக்
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் - 15

Page 62
கொம்பனிகாரன் என்னை வேலையிலை வைச்சிருப்பனெண்டு நினைக்கிறியா?”
"அப்ப சீவியத்துக்கு?"
"மரக்கறி வித்து ஒரு மாதிரி சமாளிக்கிறன். அண்டைக்கு எங்களோடை ஒண்டாயிருந்து சாப்பிட்டு ஒருமிக்கச் சேர்ந்து போராடிச்சினை எங்கடை தலைவர்மார். பிறகு அவர் எங்களை தோளை ஏணியாய்ப் பாவிச்சு மெத்தை வீட்டிலை ஏறின பிறகு எங்களை மறந்திட்டினை," அவளுடைய முகத்தில் வெறுப்புப் படர்கின்றது. "எங்கடை பழைய தலைவர்மார் எங்களைக் கைவிட்டாலும் நாங்கள் தொழிலாளியள், மனம் தளரேல்லை. எங்கடை இலக்கை அடையிறதுக்கு இண்டைக்கும் நாங்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டுதானிருக்கிறம்"
அவளுடைய வார்த்தைகளில் தன்னம்பிக்கை உறுதி
"உங்களோடை நான் ஆறுதலாய்க் கன விசயம் பேச வேணும். உங்களை எங்கை சந்திக்கலாம்?"
"ஏன், என்ரை வீட்டை வரலாமே."
"6 II 12'
"உனக்கு எப்ப வசதியோ அப்ப வரலாம்."
“இரண்டு மூன்டு நாட்களுக்குள்ளை?”
“ஒ, தாராளமாய் வரலாம்,”
தனத வீடிருக்கும் குறிப்பை அவள் கூறுகின்றாள்.
சந்தையை விட்டு நானும் நண்பனும் புறப்படுகின்றோம்."
"கட்டாயம் வரவேணும்."
உரத்துக் கத்துகின்றாள்.
“GugstLDGio?”
கைகளை ஆட்டிவிட்டு நாம் செல்கின்றோம்.
எனக்கு ஒரே உற்சாகம்.
மனம் ஆனந்த வெறியில் கூத்தாடுகின்றது.
"என்னடாப்பா ஏதோ மாத்தறை, ஊர்வலம், தேயிலைக் கொம்பனி எண்டு நீங்கள் கதைச்சியள், எனக்கொண்டும் விளங்கேல்லை. ஆரடாப்பா இந்த சோமாவதி”
"வியட்நாமிலை போலை எங்கடை நாட்டிலையும் வீரப்பெண்கள் இருக்கிறார்களடா கந்தையா."
எனது இதயத்தில் உணர்ச்சியலைகள் முட்டிமோதுகின்றன.
-1 16- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

"நான் சோமாவதியைப் பற்றிக் கேக்கிறள். நீ வியட்நாமைப் பற்றித் துவங்கிறாய். விசயத்தைச் சுற்றிவளைக்காமல் நேராய்ச் சொல்லு. ஆரடாப்பா இந்த சோமாவதி?”
என்னால் சிறிது நேரம் பேச முடியவில்லை.
“ஏனடாப்பா பேசாமல் வாறாய்? என்ன விசயம்?” “சரி நான் சொல்லிறன்”
"நான் மாணவனாயிருந்த காலம் - - அப்ப வெள்ளைக் காரணி எங்களை நேரடியாய் ஆண்டு கொண்டிருந்தான்.
தென் இலங்கையிலை ஒரு மகாநாடு நடந்தது. யாழ்ப்பாணத்திலையிருந்த நானும் போனன். இலங்கையிலுள்ள எல்லாப் பகுதிகளிலிருந்து ஆண்களும் பெண்களுமாய் ஆயிரக்கணக்கிலை மகாநாட்டுக்கு வந்திருந்தினை.
மூண்டு நாட்கள் மகாநாடு நடந்தது. தலைவர்மாரும் அநேக தொழிலாளர்களும் மகாநாட்டிலை உணர்ச்சியோடை பேசிச்சினை.
ஒவ்வொரு நாள் இரவும் கலை நிகழ்ச்சிகள்! மகாநாட்டிலை கலந்துகொண்ட எல்லாருக்கும் பெரிய விழிப்பு; உத்வேகம்.
கடைசிநாள் பெரிய ஊர்வலமும் பொதுக் கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்திருந்தினை.
மூண்டாம் நாள் பின்நேரம் ஊர்வலம் துவங்கிச்சுது. ஊர்வலத்திலை பல்லாயிரக்கணக்கான மக்கள். ஒரு பெரிய சிவப்புக் கொடி ஊர்வலத்துக்கு முன்னாலை பறந்து கொண்டிருந்தது.
தலைவர்மார் ஊர்வலத்தின் முன்னணியிலை நின்டினை. ஊர்வலம் வெளிக்கிட்டுது. நூறு யார் தூரத்திலையுள்ள சந்திக்கு போச்சுது. சந்திக்கு நடுவிலை ஒரு வெள்ளைக்கார அதிகாரி நிண்டான். அவனுடைய கூலிப்படை அவனுக்குப் பின்னாலை நிண்டுது. அவங்கள் எல்லாரிட்டையும் ஆயுதங்கள். ஊர்வலத்துக்குத் தடையெண்டு அவன் சொன்னான்.
முன்னணியிலை நிண்ட தலைவர்மார் திகைச்சபடியே நிண்டினை.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் - 17

Page 63
ஊர்வலத்திலை நிண்ட எங்கள் மத்தியில் கொதிப்பு: கொந்தளிப்பு. நாங்கள் எல்லாரும் ஆக்ரோஷத்தோடை கோஷம் போட்டபடியே முன்னேறிக்கொண்டிருந்தம்.
"எல்லாரும் கலைஞ்சு போங்கோ. இல்லாட்டி உங்களைச் சுட்டுத் தள்ளுவம்” எண்டு வெள்ளைக்காற அதிகாரி திமிருடன் சொன்னான்.
"எங்கை சுடுங்கோடா பாப்பம்" கத்திக் கொண்டு நாங்கள் முன்னுக்குச் சென்றம். தலைவர்மார் எங்களைச் சமாதானப்படுத்தப்படாதபாடு பட்டுக் கொண்டிருந்தினை.
எல்லாரையும் இடிச்சுத் தள்ளிப்போட்டு ஒரு பெண் முன்னுக்கு வநதாள.
தலைவர்மாரையும் தள்ளிப்போட்டு அவள் வேகமாய் முன்னுக்குப் பாஞ்சாள.
"ஏகாதிபத்திய ஏவல் நாயே விடடா வழியை!” முழங்கிக் கொண்டு அந்த அதிகாரியை ஒருபுறம் தள்ளினாள். அவளுடைய அந்த ஆவேசக் குரலிலும் உக்கிரப் பார்வையிலும் அந்த அதிகாரி மலைத்துப் போய் நிண்டான்.
அவனுடைய கூலிப் படையும் செயலற்று நிண்டுது. செங்கொடியை அவள் பிடுங்கினாள்.
கோஷம் போட்டப்படியே முன்னேறினாள். நாங்கள் அவளைப் பின் தொடர்ந்தோம். அதிகாரி அடித் தொண்டையால் ஏதோ உரத்துக் கத்தினான். கூலிப்படையைச் சேர்ந்த ஒருவன் ஊர்வலத்தின் முன்னுக்குச் சென்று கொண்டிருந்த அவளை நோக்கி ஓடினான்.
அவளுடைய மண்டையிலை அவனுடைய குண்டாந்தடி விழுந்தது. அவளின்ரை நெத்தியிலையிருந்து ரத்தம் வடிஞ்சுது. அவள் அதைப் பொருட்படுத்தாமல் முன்னுக்குப் போய்கொணிடிருந்தாள்.
நாங்கள் ஊர்வலமாய்ப் போய்க் கூட்டத்தை நடத்திறம். கூட்டத்திலை நிண்ட எல்லாரது வாயிலும் சோமாவதி எண்ட அவளின்ரை பேர் அடிபட்டுது.
-Դ973
★
-1 18- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அழியாச் சுடர்
இ ருள் திரை மெதுவாக அழிந்து கொண்டி
ருக்கிறது.
உதயத்தின் மலர்ச்சி.
வேகமாக வந்து கொண்டிருந்த புகைவண்டி புகையிரத நிலையத்தில் நிற்கின்றது.
பிரயாணிகள் முண்டியடித்துக் கொண்டு இறங்குகின்றார்கள்.
நானும் இறங்குகின்றேன்.
எனக்குக் களைப்பு; சோர்வு.
இரண்டாயிரம் மைல்களுக்கு அதிகமான தூரம். தொடர்ந்து மூன்று இரவுகளும் இரண்டு பகல்களும் புகையிரதப் பிரயாணம். அலுப்பிருக்காதா?
நித்திரை வெறி வேறு.
வீடு போய்ச் சேர வேண்டும் என்ற
96) lé9Dil D.
உடலில் புதுத் தெம்பு.
பஸ்ஸைப் பிடிப்பதற்குப் பிரயாணிகளின் நாயோட்டம்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -119

Page 64
நானும் அவர்களில் ஒருவன். இடிபட்டுக் கொண்டு ஒரு மாதிரி பஸ்ஸில் ஏறுகின்றேன். பஸ் புறப்பட்டால் தானே. பிரயாணிகள் ஏறிக் கொண்டே இருக்கிறார்கள். எனக்கு எரிச்சல். பஸ் நகருகின்றது. நகரத்தினூடாக பஸ் முக்கி, முனகிக் கொண்டு செல்கின்றது. நகரம் கோழித் தூக்கத்தில். எனது கிராமத்தை நோக்கி பஸ் சென்று கொண்டிருக்கின்றது. எப்பொழுதுதான் இந்தப் பஸ் எனது ஊர் போய்ச் சேரப் போகிறதோ?
என் உள்ளத்தில் தவிப்பு. எண் அன்பு ஆச்சி, அப்பு, தங்கச்சி, நண்பர்களைப் பார்க்க வேண்டுமென்ற பேராவல்.
நீண்ட காலமாக அடக்கி வைத்திருந்த ஆவலல்லவா? ஆச்சி இப்பொழுது முற்றம் பெருக்கிக் கொண்டிருப்பா. அப்பு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருப்பார். தங்கச்சி வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பாள். என் வரவை அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்றொரு ஆசை எனககு.
என்னைக் கண்டதும் ஆச்சி மகிழ்ச்சியில் பொங்கி பூரிப்பா. தங்கச்சி ஆனந்தத்தில் துள்ளிக் குதிப்பாள். அயல் வீடுகளின் சிறுவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு ஆர்ப்பரிப்பார்கள்.
"நீ ஒரு கடுதாசி எழுதிப் போட்டு வரக்கூடாதோடா?” ஆச்சி என்னைச் செல்லமாகக் கண்டிப்பா. அவர்களுக்கு என்மேல் எவ்வளவு நம்பிக்கை. ஆச்சி, என்னை நீபெற்று வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாய்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்திருப்பாய்? எவ்வளவு துன்பங்களை நீ மெளனமாக அனுபவித்திருப்பாய்? என் நிமித்தம் ஊரவர்களிடம் அளவிலா ஏச்சுப் பேச்சுக்களை அவதூறுகளைக் கேட்டு
-120- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

உனது உள்ளம் ஊமையாய் ரத்தக் கண்ணிர் வடித்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்.
உலகில் விசாலமானது சமுத்திரம்தான் என்பார்கள். அந்தச் சமுத்திரத்தையும் விட ஏன் இந்தப் பிரபஞ்சத்தையும் விட விசாலமானது தாயுள்ளம்.
ஒரு சிறு துண்டு நிலத்தை வைத்துக் கொண்டு, என்னை வளர்த்து, உள்ளூரில் படிப்பித்தது போதாதென்று, வெளிநாட்டிற்கு அனுப்பி உயர்படிப்புப் படிப்பிக்க அப்பு நீ எவ்வளவு இன்னல் பட்டிருப்பாய் என்பதை உணராதவன் அல்ல நான். எத்தனை பேரிடம் கடன் பட்டிருப்பாய்? உன் உழைப்பின் பெரும் பகுதி நீ எனக்காகக் பட்ட கடனுக்கு வட்டியாகத் தாரை வார்த்ததை நான் அறிவேன்.
நீங்கள் எனக்காகச் செய்த பரித்தியாகங்களை என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.
"தோட்டம் செய்யிறவன்ரை மகனுக்கு படிப்பென்ன படிப்பு? மண் கிண்டுறதுக்கோ?”
சிலர் கேலி பண்ணினார்கள்
"சும்மா உவன்ரை படிப்புக்கு வீணாய் காசை நாசமாக்காமை, அவனை மறிச்சு தோட்ட வேலையைப் பழக்கு, அல்லது சுருட்டு சுத்துறதுக்கு அனுப்பு."
வேறு சிலர் அப்புவுக்கு புத்திமதி கூறினர். தோட்டக்காரர்களின் பிள்ளைகளும், தொழிலாளர்களின் பிள்ளைகளும் படிப்பது பெரிய மனிதர்களுக்கு விருப்பமில்லை.
நாங்கள் படித்து நாலும் தெரிந்துவிட்டால் எங்கள் தோள்களில் அவர்கள் ஏறியிருந்து சவாரி விடேலாது. எங்கடை உழைப்பை உறிஞ்சேலாது என்ற பயம் அவர்களுக்கு.
“வெளி நாட்டுக்கு படிக்கப் போற உண்ரை மகன் படிப்பை முடிக்கமாட்டான். அவன் ஊருக்குத் திரும்பி வரவும் மாட்டான் எண்டு அவன்ரை சாதக பலன் சொல்லுது”
எனது சாதகத்தைப் பார்த்த சாத்திரி கந்தப்பா ஆச்சிக்குக் கூறினார். சாத்திரங்களையும் சமயங்களையும் ஆயுதமாகப் பாவித்து, உழைக்கிற எங்களை முட்டாள்களாக்கி, எங்கடை உழைப்பைச் சுரண்டி சுக சீவியம் நடத்திக் கொண்டிருக்கின்றது சுரண்டல் வர்க்கம்.
"அவன் அங்கே போய் கட்சி வேலைதானே செய்வான். எங்கை படிக்கப் போறான்” என்றனர் சிலர்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் 121

Page 65
"பரம்பரை பரம்பரையாய் படிச்சவங்களுக்கெல்லோ படிப்பு. அப்பிடிப்பட்டவைதான் அரசியலுக்கும் லாயக்கு. உவங்களாலையும் உவங்கடை கூலிக்காரற்ரை கட்சியாலும் என்னத்தை சாதிக்கேலும்? கொஞ்ச நாளைக்கு சும்மா கத்திப்போட்டுக் கிடக்க வேண்டியதுதான்” என்று ஒரு பிரமுகர் முஸ்தாய்ப்பு வைத்தார்.
வங்காள ஆசிரியர்கள் தமது உரிமைகளுக்காக வேலை நிறுத்தத்தில் குதிக்கின்றனர்.
பொலிசார், ஊர்வலமாய் செல்கின்ற ஆசிரியர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகின்றனர்.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள், கல்கத்தா நகரின் பிரதான வீதியில் ஆக்ரோஷமாகக் கோஷம் எழுப்பிய வண்ணம் சென்று கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் நானும் ஒருவனாய் செல்கின்றேன்.
பொலிசார் எம்மீது பாய்ந்து நரவேட்டையாடத் தொடங்குகின்றனர்.
குண்டாந்தடிகளின் சுழற்சி.
கண்ணிர்ப் புகை.
துப்பாக்கிச் சனியன்களின் குரைப்பு.
மக்களின் பச்சை ரத்தம் வீதியில் ஒடுகின்றது.
நரபலி,
வங்க மக்களின் பேரெழுச்சி.
மக்களின் வெற்றி.
வங்காளத் தொழிலாள, விவசாய, மாணவ இயக்கங்களிலும் அவைகளின் போராட்டங்களிலும் பங்கு பற்ற நான் கொடுத்து வைத்தவன்.
இவ்வியக்கங்களும் போராட்டங்களும் எனக்கு அனுபவங்களைத் தந்து வர்க்கபோதத்தையூட்டின.
இளமையில் அனுபவமும் முதிர்ச்சியுமற்ற எனது நடவடிக்கைகளால் எமது ஊரவர்களின் பெரும் எதிர்ப்புகளையும் வீண் தொல்லைகளையும் உங்களுக்கு நான் தேடித் தந்துள்ளேன். ஆச்சி, இதனால் நீங்கள் எவ்வளவு துன்பமடைந்திருப்பீர்கள்? இனி நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை.
தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தாலும் ஆச்சி, உங்கள் ஆசைகளை நான் நிராசையாக்கிவிடவில்லை.
வெற்றியுடன் தான் உங்கள் மகன் திரும்பி வந்து கொண்டிருக்கின்றான்.
-122- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

எனது பரீட்சை முடிவு வரும் பொழுது இதை நீங்கள் அறிவீர்கள். அப்போது நீங்கள் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். பஸ் தோட்டங்களினுடாகச் செல்லும் வீதியில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
இடைக்கிடை நீரிறைக்கும் இயந்திரங்களின் இரைச்சல். அப்புவுடன் நான் பின்துலா மிதித்துக் கொண்டிருக்கின்றேன். காலைச் சூரியன் தலையை உயர்த்தி பனங்கூடலுக்கு மேலால் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
தூரத்தில் புல் வெளிக்கு அப்பால், பனங்கூடலின் தொங்கலில் ஆச்சி தலையில் கடகத்தைச் சுமந்தபடியே வந்து கொண்டிருக்கின்றா.
கடகத்திற்குள் எனது புத்தகங்கள், உடுப்பு, சாப்பாடு. ஆச்சி எமது கிணற்றடிக்கு வருகின்றா.
தண்ணிர் பாய்ந்து கொண்டிருக்கும் வாய்க்காலில் நான் குளிக்கின்றேன்.
பழைய சோறு, குரக்கன் பிட்டு, மரவள்ளிக் கிழங்குக்கறி, தயிர் எல்லாவற்றையும் குழைத்து உருண்டையாக்கி ஆச்சி எனக்குத் தருகின்றா.
சாப்பிட்டு விட்டு, மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள அயலூர் பாடசாலைக்கு நான் ஒட்டமும் நடையுமாக செல்கின்றேன்.
பஸ் எனது கிராமத்திற்குள் நுழைகின்றது. நிலம் வெளித்துச் சிரிக்கின்றது. வீதியின் இரு மருங்கிலும் செழித்து வளாந்த பச்சைப் பசேலென்ற வாழைகள் நிரையிட்டு நிற்கின்றன.
உருண்டு திரண்ட காய்களுடன் வாழைக் குலைகள் வீதியின் பக்கமாகத் தலை சாய்ந்து நிற்கின்றன.
அவை என்னை வாழ்த்தி வரவேற்கவா அப்படி நிற்கின்றன? வாழைக் குலைக்குப் பெயர் பெற்றது எனது ஊர். வீதியின் கிழக்குப் பக்கமாக விரிந்து பரந்த பச்சைப் பசேலென்ற நெல் வயல்கள்.
வயல்களின் தொங்கலில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் புல்வெளி. புல்வெளியின் தொங்கலில் நீலக்கோடு கீறியது போல் உப்பாறு. உப்பாற்றை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் நீலவானத்தின் அடிவயிறு சிவந்திருக்கின்றது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் *-123

Page 66
காகங்கள் கூட்டங் கூட்டமாக கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருக்கின்றன.
பஸ் கந்தசாமி கோவிலடியில் நிற்கின்றது. ஆவலுடன் நான் பஸ்ஸிலிருந்து இறங்குகின்றேன். உதயத்தின் இளம் தென்றல் என் உடலில் தவழ்கின்றது. எனது ஊரின் மண்ணில் கால் வைத்ததும் என் உடலில் புல்லரிப்பு. நிமிர்ந்து பார்க்கின்றேன். எனக்கு எதிரில் பழைய சிறு கட்டிடம் இருந்த இடத்தில் மூன்று மாடி யூனியன் கட்டிடம் கம்பீரமாக நிற்கின்றது.
எனக்கு பேராச்சரியம், மகிழ்ச்சி. அம்மாண் கதிரவேலு தனது தேநீர்க் கடையைத் திறந்து கொண்டிருக்கின்றார்.
“பொடியா, இப்பதான் வாறியோ? எப்பிடி சுகம்?" வாஞ்சையுடன் குசலம் விசாரிக்கின்றார். “நல்ல சுகம் அம்மான், உங்கடை பாடெப்பிடி?” "மோசமில்லை. ஆனால் எங்கடை உழைப்பை உறிஞ்சிறவங்கள், எங்களை முன்னேற விட்டால்தானே”?
“எங்களுக்கும் காலம் வரும் அம்மான்." "படிப்பெல்லாம் முடிஞ்சுதோ? சோதினை எடுத்தனியே? எப்படி?” "நல்லாய் செய்திருக்கிறன்." "பாஸ் பண்ணுவன் எண்டு நினைக்கிறன்." "உங்களைப் போல ஆக்கள்தான், காலுக்கை கிடந்து மிதிபடுகிற எங்களுக்கு கைகுடுத்துத் தூக்கிவிடவேணும்."
"நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம் அம்மான். எதிர்காலம் எங்களுக்குத்தான்."
“களைச்சுப் போய்வாறாய். பெட்டியை இஞ்சை வைச்சிட்டுப் போ. என்ரை மூத்த பெடியன் தண்ணி அள்ளப்போட்டான். அவன் வந்த உடனை சயிக்கிளிலே பெட்டியை குடுத்து அனுப்பி விடுகிறன்."
"அது பாரமில்லை அம்மான். உங்களுக்கு ஏன் வீண் சிரமம். நான் கொண்டு போவன்."
“சரி வேளைக்குப் போய் களைப்பாறு. பிறகு சந்திப்பம்."
அம்மான் தனது வேலையிலிடுபடுகின்றார்.
-24- நீர்வை பொன்னையன் சிறுகதைகள

நான் வீடு நோக்கி நடந்து கொண்டிருக்கின்றேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் கறுப்பும் வெள்ளையும் கலந்த மறை நாய் ஒன்று ஓடி வருகின்றது.
எங்கடை வீமன்! கிட்ட வந்ததும் வாலை ஆட்டிக் கொண்டு இருகால்களையும் உயர்த்தி என் மேல் பாய்ந்து எனது கைகளை நக்குகின்றது.
அது இங்கே ஏன் வந்தது? நான் வருவேன் எண்டு அதற்கு எப்படித் தெரியும்? அதை நான் அன்புடன் தடவிக் கொடுத்துவிட்டு என்னை விடுவிக்கின்றேன்.
தனது முன்னங் கால்களால் எனது கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு முனங்கிவிட்டு அது திரும்பி வேகமாக ஓடி மறைகின்றது.
வீடு நோக்கி நான் ஆவலுடன் வேகமாக நடக்கின்றேன். சில நிமிடங்களின் பின் வீமன் என்னை நோக்கி ஓடி வருகின்றது. அது எனது வீட்டிற்குச் சென்றிருக்க வேண்டும். நான் வருகிறேன் எண்டு ஆச்சிக்கு உணர்த்தவா அது எனது வீட்டிற்கு ஓடியது..?
ஓடிவந்து தனது கால்களால் எனது கால்களைக் கட்டிப் பிடித்து முனங்கிவிட்டு திரும்பவும் எனது வீடு நோக்கி அது ஒடுகின்றது.
அது போவதும் வருவதுமாக ஒடிக்கொண்டிருக்கின்றது. செல்லர் அண்ணர் றோட்டு முடக்கால் திரும்பி என் எதிரே வந்து கொண்டிருக்கின்றார்.
அவர் எங்கோ பயணம் போகப் புறப்பட்டு வருவது போலதட தெரிகின்றது.
“இண்டைக்கு நீவாறாய் எண்டு எங்களுக்குத் தெரியாதே. ஏன் ஒரு காயிதம் போட்டிட்டு வந்திருக்கலாமே?”
“உங்களுக்கேன் வீண் தொல்லை தருவான் எண்டு தானண்ணை நான் எழுதேல்லை."
நான் பயணத்தால் வரும் வேளைகளில் செல்ல ரண்ணராக்கள் புகையிரத நிலையத்திற்கு வருவது வழக்கம்.
இம்முறை நான் அவர்களுக்கு ஏன் வீண் சிரமம் கொடுப்பானென்றுதான் எழுதவில்லை.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -125

Page 67
"இதென்ன பெரிய கரைச்சலோ? சரி அது போகட்டும் இஞ்சை தா பெட்டியை. நான் கொண்டாந்து தாறன்.”
“வேண்டாமண்ணை, கொஞ்சத்தூரம் தானே. நான் சமாளிப்பன். நீ வெளிக்கிட்ட பயணத்துக்கு போட்டு வா."
"அப்ப சரி. உன் ரை ஆச்சிக்கும் சாடையாய் சுவமில்லை.
96) Gist G8)G)..........
“என்னண்ணை, ஆச்சிக்கு சுவமில்லையோ? என்ன வருத்தம்?" "விழுந்து போனா. காலிலை நோ. இப்ப கொஞ்சம் சுகம்.
ஆனால்.”
“வாறனண்ணை. பிறகு சந்திப்பம்". கூறிக் கொண்டு நான் வேகமாக நடக்கின்றேன். எனக்கு ஓடவேண்டும் போலிருக்கிறது. கையில் பெட்டி வேறு. இயலுமட்டும் வேகமாகச் செல்கின்றேன். "ஆச்சி” கூப்பிட்டுக் கொண்டு படலையைத் திறக்கின்றேன். திண்ணையில்
ஆச்சி படுத்துக் கொண்டிருக்கின்றா.
படுத்திருந்த அவவினுடைய சீலையைக் கெளவிப் பிடித்து இழுத்து
விட்டு வீமன் என்னை நோக்கி ஓடி வருகின்றது.
எனது காலை அது கட்டிப் பிடித்துக் கொண்டு முனகுகிறது. “காலை விடடா வீமன்"
அதை அதட்டுகின்றேன்.
t 99
ஆச்சி. உரக்கக் கூப்பிட்டபடியே செல்கின்றேன். ஆச்சி ஆவலுடன் தலையை உயர்த்திப் பார்க்கின்றா. எழும்ப அவ முயல்கின்றா. முடியவில்லை. எனக்கு அதிர்ச்சி. கையில் இருந்த பெட்டி விழுகின்றது. "ஆச்சி!." அலறிக் கொண்டு ஒடுகின்றேன். ஆச்சி படுத்திருந்தபடியே எனது முதுகை அன்புடன் தடவிக் கொடுக்கின்றா.
எனது ஆத்மா ஒலமிட்டு அலறுகின்றது.
-26- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

என்னால் வாய் திறக்க முடியவில்லை. நான் ஆச்சியை வெறித்துப் பார்த்தபடியே இருக்கின்றேன். கண்ணிர் என் பார்வையை மறைக்கின்றது. ஆச்சியும் வாய் திறக்கவில்லை. அவவினுடைய கண்களில் அருவி பாய்கின்றது. மெளனம்.
எவ்வளவு நேரம்தான் அப்படியிருந்தோமோ? ‘அண்னை!" தண்ணிர் வாளியுடன் வந்த தங்கச்சி ஆச்சரியத்துடன் சத்தம் போடுகின்றாள்.
நான் அவளை நோக்குகின்றேன். அவளால் வாய் திறக்க முடியவில்லை. அவள் பொருமுகின்றாள். அயலவர்கள் வந்து சூழ்கின்றார்கள். சிறுவர்கள் குதூகலத்தில் ஆர்ப்பரிக்கின்றார்கள். ஆச்சிக்கு இப்பிடி நடக்குமெண்டு நாங்கள் நினைச்சிருக்கேல்லை, என்ன செய்யிறது. நடந்து போச்சு."
கவலையுடன் கூறுகிறார் சின்னத்தம்பி அண்ணர். “என்ன நடந்தது? எனக்கு ஏன் எழுதவில்லை?” ஆத்திரத்துடன் கேட்கின்றேன். "அவ சூத்திரம் வளைக்கேக்கை கிறுதி வந்து விழுந்து போனா. நாரிப்பூட்டு விலக்கீட்டுது. முழங்கை எலும்பும் முறிஞ்சு போச்சு."
“எப்ப விழுந்தவ?” "தைப்பொங்கலண்டு.” தங்கச்சி தயங்கியபடியே கூறுகின்றாள். “இவ்வளவு காலமாய் எனக் கேன் எழுதேல்லை? நான் செத்துப்போனன் எண்டு நினைச்சியளோ?”
நான் சீறுகின்றேன். "ஆச்சிதான் எழுதவேண்டாம் எண்டு சொன்னவ." "ar6t?” "உனக்கு எழுதினால் நீபடிப்பை விட்டிட்டு உடனை வந்திடுவியாம். சோதினையும் எடுக்க மாட்டியாம். உண்ரை படிப்புக் குழம்பிப்போம் எண்டு உனக்கு அறிவிக்க வேண்டாமெண்டு சத்தியம் செய்து போட்டா."
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -127

Page 68
செல்லம்மா அக்கா சொன்னா.
"ஆச்சியிலும் பார்க்க எனக்கு படிப்பு பெரிசோ?”
"நீயல்லோ அப்பிடிச் சொல்லுகிறாய். தன்னை வருத்தம் பார்க்க வாறவையிட்டை தனிரை வருத்தத்தைப் பற்றி அவ ஒண்டும் சொல்லேல்லை. உனக்கு எழுதிப் போட வேண்டாமெண்டுதான் மண்டாடிச் சொல்லிக் கொண்டிருந்தா."
சரோ கூறுகின்றாள்.
“இப்ப எவ்வளவோ சுவம். அப்ப நீ அவவைப் பார்த்தியெண்டால்.”
"ஏன்?
“பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போன அண்டே ஒப்பரேஷன் செய்ய முந்தி உனக்கு எழுத வேண்டாமெண்டு சத்தியம் பண்ணிப் போட்டா.”
“பிறகு?” “ஒப்பரேஷன் முடிஞ்சு ஒன்பது நாளாய் அறிவு கெட்டுப் போச்சு. மூச்சில்லாமல் கிடந்தா, நாங்களும் நல்லாய் பயந்திட்டம்.
"ஆனா நாங்கள் உனக்கு என்னண்டு எழுத?” “இடைக்கிடை அறிவு வரேக்கை என்ரை பிள்ளைக்கு மாத்திரம் எழுதிப் போடாதையுங்கோ. அவன்ரை படிப்புக் குழம்பிப்போம். எனக்கு ஒண்டும் நடவாது. நீங்கள் ஒண்டுக்கும் பயப்பட வேண்டாம், எண்டு அடிக்கடி சொல்லுவா."
"இரண்டு முறை ஒப்பறேஷன் நடந்துது. அப்பெல்லாம் அறிவு வரேக்கை இதைத்தான் திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தா.” "அப்ப அவவின்ரை காலைப் பார்த்தா யானையின்ரை கால் மாதிரி வீங்கிப் போய் இருந்துது. இப்ப நல்லாய் வீக்கம் வத்தீட்டுது. ஆனால் அவவாலை நடக்கத்தான் ஏலாது.”
செல்லம்மா அக்காவின் குரல் தளதளக்கின்றது. "ஆச்சி, இப்பிடியேனணை செய்தனி? உன்ரை உயிருக்கு ஏதாவது நடந்திருந்தால் நான்."
“அட பயித்தியக் காறா, இப்பென்ன நடந்து போச் சு? நான்செத்திட்டனே? என்ரை இடது காலும் கையும்தான் ஏலாது. ஆனா வலது கைகால் இருக்குத்தானே.”
அவவினுடைய குரலில் எவ்வளவு தன்னம்பிக்கை, மன உறுதி.
-128- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

"ஆனால் உன்னாலை நடக்கேலாமல் போச்சுதேயணை" "அதெல்லாம் சரி வரும். நீ பயப்பிடாதை. உடுப்பை மாத்திப்போட்டு குளிச்சிட்டு வா."
நான் அவவைப் பார்த்தபடியே அசையாமல் இருக்கின்றன். “எட முட்டாளே, இரண்டு தடவை என்னட்டை இயமன் வந்தான். என்னை அவனாலை ஒண்டு செய்யேலாமல் போச்சு. திரும்பிப் போட்டான். இனி நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை. இன்னும் நான் கனகாலமிருப்பன். என்ரை பேரப் பிள்ளையஞக்கக் கலியாணம் க்ட்டி வைச்சிட்டுத் தான் நான் கண்ணை மூடுவன்."
சிரித்துக் கொண்டு கூறுகின்றா. எதிர்காலத்தில் அவவிற்கிருக்கும் நம்பிக்கையைப் பார்க்க எனக்கு வியப்பாக இருக்கின்றது.
நான் அவவினுடைய காலைத் தடவிக்கொண்டே இருக்கிறன். "போடா, போய் குளிச்சிட்டு வா. புள்ளை அந்தப் பழஞ்சோறு, குரக்கன் புட்டு, மரவள்ளிக் கிழங்குக்கறி, தயிர் எல்லாத்தையும் எடுத்துவை. நான் கொண்ணைக்கு குழைச்சு உறுட்டிக் குடுக்க."
எனக்கு ஆச்சரியம்! "நான் வருவன் எண்டு உங்களுக்கு எப்பிடியணை தெரியும்? குரக்கன் புட்டு அவிச்சு அதோடை பழஞ்சோறும் வைக்க."
"கன நாளாய் குரக்கன் புட்டு அவிக்கேலை. நீ இண்டைக்கு வருவாய் எண்டு ஏதோ என்ரை மனம் நேற்றுச் சொல்லிச்சு. அதுதான் குரக்கன் புட்டும் அவிச்சு அதோடை பழஞ் சோற்றையும் வைச்சிருக்கிறம்." மனப்பூரிப்புடன் கூறுகின்றா ஆச்சி.
"றயிலாலை வந்த களை. வெய்யிலும் ஏறப்போகுது. எழும்பு மோனை. போய் குளிச்சிட்டு சாப்பிடு”
செல்லம்மா அக்கா என்னை அருட்டுகின்றா. "மோனை நான் மறந்து போனன். முந்த நாள் பின்னேரம் யாழ்ப்பாணத்திலிருந்து உண்ரை சோமனாக்கள் வந்தாங்கள்."
ஆச்சி கூறுகின்றா. "என்ன சொன்னவையணை.?” "வாற மாதம் மேதின ஊர்வலமும் கூட்டமும் நடத்தப் போகினமாம். அதுக்கு ஆயித்தங்கள் செய்ய வேணுமாம். நீஎப்ப வருவாய் எண்டு விசாரிச்சினை."
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -129

Page 69
"நீங்கள் என்ன சொன்னியள்?" "நீ வந்த உடனை கட்டாயம் அனுப்பி விடுகிறம் எண்டம்." “நான் இணி டைக்குப் பின்னேரம் போய் அவையளைச் சந்திக்கலாமெண்டு யோசிக்கிறன்."
கூறிக்கொண்டு அவவைக் கேள்விக் குறியுடன் பார்க்கின்றேன். அவவினுடைய முகத்தில் சிந்தனையலை. “என்னணை ஆச்சி நான் பின்னேரம் போகட்டே?” "இனி உன்னை ஏன்ரா நாங்கள் மறிக்கப்போறம்?" நான் அவவின் கண்களை நோக்குகின்றேன். என் ஆச்சியின் கண்களில் தியாகச் சுடர் ஜுவாலித்துக் கொண்டிருக்கின்றது.
நான் புதிய நம்பிக்கையுடன் நடந்து கொண்டிருக்கின்றேன்.
198O.
大
-30- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

ஆத்ம தாகம்
குழந்தை ஒன்று தெருஓரத்தில் வெறும் கோப்பையுடன் நிற்கிறது.
கமலா அந்தக் கிராமத்தை நோக்கி பைசிக்கிளில் வந்து கொண்டிருக்கின்றாள்.
உலகத்துத் துயரம் அனைத்தையும் தன்னகத்தே சுமந்து சோகமே உருவாய், பாசம் பொங்கிப் பிரவகிக்கின்ற மேரி மாதா பாலன் யேசுவை மார்புடன் அணைத்தபடியே, தெரு ஒரத்தில் வெறும் கோப்பையுடன் நிற்கின்ற குழந்தையைக் கருணையுடன் நோக்குவது போலிருக்கின்றது.
இளஞ் சூரியன் கானல் அலைகளை வீசிக்கொண்டிருக்கின்றான்.
அந்த மீன்பிடிக் கிராமம் முன்பு எவ்வளவு செல்வச் செழிப்பாக இருந்தது!
எந்த நேரமும் ஹோ! ஹோ! என்று ஆனந்தமும் ஆரவாரமும் நிறைந்ததாக இருந்தது அந்தக் கிராமத்தின் கடற்கரை.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -131

Page 70
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியோர்கள் எல்லோரும் விடிந்ததும் விடியாததுமாய் கடற்கரையில் வந்து ஒன்று குவிவார்கள்.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற வள்ளங்களை பேராவலுடன் எதிர்பார்த்துக் காத்து நிற்பார்கள் அவர்கள்.
கடல் தாயை - அடிவானம் முத்தமிடும் நெடும் தூரத்தில் கரும் புள்ளிகளாய்த் தோன்றும் வள்ளங்களைக் கண்டதும் அவர்களது ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே.
படகுகள் கரை தட்டியதும், அம் மக்கள் தங்கள் உடன் பிறப்புக்களைக் குதூகலத்துடன் வரவேற்று ஆசுவாசப்படுத்துவார்கள். பின்பு அவர்கள் கொண்டு வந்த கடல் செல்வத்தைப் பார்த்துப் பூரிப்படைவார்கள்.
ஒவ்வொருவரும் அவரவர் கொண்டுவந்த மீன்களை வள்ளங்களிலிருந்து எடுத்து கூறுகூறுகளாய் பெரிய மீன்கள் வேறாகவும் சிறியவை வேறாகவும் தெரிவு செய்வார்கள்.
சிலர் தமது மீன்களை கருவாட்டிற்குப் பதனிடுவார்கள். அங்கு வந்து கூடி நிற்கின்ற முதலாளிகளுக்குச் சிலர் தமது மீன்களை விற்பார்கள்.
கடற்கரை ஒரே அமர்க்களமாய் இருக்கும்.
மதிய வேளை சிறிது ஒய்வு.
மாலையில் மீண்டும் ஆரவாரம்.
தங்கள் உடன் பிறப்புக்களை ஆழ்கடலுக்கு வழியனுப்பி வைத்து விட்டு, அப்படகுகள் கரும்புள்ளிகளாய் மாறி அவை மறையும் வரை விழி வைத்துப் பார்த்திருப்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளென்றால் சொல்லத் தேவையில்லை. காலையும், மாலையும் வெள்ளையுடை உடுத்து, அன்னப் பறவைகளாய் பெண்களும் சிறுவர்களும் சில ஆண்களும் தேவாலயத்திற்குச் சென்று அன்னை மேரியை ஆராதனை செய்து வருவார்கள்.
ஆணிகள் சிலர் தங்கள் உடல் சோர்வகலக் குடித்து வெறியாடுவார்கள். சிலர் சீட்டாடுவார்கள்.
ஆண்டுக்கொருமுறை அவர்களது மேரிமாதா தேவாலயத்தில் கொடியேற்றி விழா நடக்கும் பொழுதும், கிறிஸ்மஸ், புத்தாண்டுப் பண்டிகைகளின் போதும், கூத்துக்கள், நாடகங்கள், பெருவிருந்துகள் எல்லாம் நடத்திக் கொண்டாடுவார்கள். கிராமமே விழாக் கோலமாயிருக்" கும்.
-132- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அக்கிராம மக்களுக்கு வறுமையென்றால் என்னவென்று தெரியாது. தங்கள் உடலை வருத்தி உழைக்கின்றார்கள். அந்த உழைப்பில் வரும் செல்வத்தையும் செழுமையையும் தாமே பூரணமாய் அனுபவிக்கிறார்கள். தார்மீக அரசின் இராணுவம் வடபகுதியிலுள்ள கடல் பிராந்தியத்" தைப் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்திய பின் இக்கிராம மக்களின் வாழ்வு சூன்யமாகி விட்டது.
கடல் செல்வத்தை வாரிக் குவித்த படகுகள் எல்லாம் இப்பொழுது கடற்கரையிலுள்ள தென்னந் தோட்டங்களில் கவிழ்க்கப்பட்டு அநாதரவாய்க் கிடக்கின்றன.
கடற்கரை தூங்குமூஞ்சியாய் இருக்கின்றது. தமது ஊரே அநாதையாகிவிட்டதென்ற உணர்வு அக்கிராம மக்களின் மனதில் நிலைகொண்டு விட்டது.
மக்களுக்குத் தொழிலில்லை, வருவாயில்லை. அவர்கள் உடல் சோர்ந்து, உள்ளமும் சோர்ந்து, நடைப் பிணங்களாய்த் திரிகின்றார்கள். வாழ்க்கையில் பஞ்சம், பசி, பட்டினி, பலவித நோய்கள்.
குழந்தைகளின் நிலை சொல்லவே முடியாது. மரணம் சர்வசாதாரணமாகிவிட்டது.
கிராமத்தில் மனிதத்தன்மையே மறைந்து விட்டது. கமலா போன்றவர்கள் இங்கு வந்து சேவை செய்ய ஆரம்பித்த பின்பு இக்கிராம மக்களின் வாழ்வில் ஒளிக்கீற்றுக்கள் தென்பட ஆரம்பித்தன. தோட்ட நிலங்களைப் பிளந்து பனங்கூடலூடாக மலைப்பாம்பாய் வளைந்து நெளிந்து செல்கின்றது கிறவல் பாதை. பாதையின் இருமருங்கிலுமுள்ள நிலங்களுக்கு முருகைக் கற்கள் எல்லைக் கோடுகள் கீறி வேலிகளாய் அமைந்திருக்கின்றன. இடைக் கிடையே பள்ளந்திட்டிகள் நிரம்பிய அந்தக் கிறவல் பாதையால் வந்து கடற்கரை றோட்டில் மிதந்து, கிராமத்தின் எல்லைக்கோட்டிற்கு வருகிறாள் கமலா. உவர்ப்பும் வெப்பமும் கலந்த கடற்காற்று அவளுடைய கண்களைக் கரிக்கின்றது. வீதி ஒரத்தில் நிற்கின்ற சவுக்கந்தோப்பினுாடாக வருகின்ற கடற்காற்று சோக கீதம் இசைக்கின்றது.
நெற்றியில் முத்துக்களாய் நிற்கின்ற வியர்வைத்துளிகளை ஒரு கையால் துடைத்தபடியே, வேகமாக வந்து கொண்டிருக்கிறாள் கமலா. இன்று நேற்றல்ல நீண்ட நாட்களாக இந்தப் பாதையில் அடிக்கடி வந்து போகின்றாள் அவள்.
கமலா ஒரு தனிவார்ப்பு.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -133

Page 71
குறைந்த வார்த்தைகளில், ஆழ்ந்த கருத்துடன் அமைதியாக அவள் பேசுவாள்.
வாழ்க்கையில் காணும் துன்பதுயரங்களையும் பொய்மைகளையும் எதிர்த்துப் போராடி வருகின்றாள் அவள்.
ஜீவ சத்து நிரம்பிய அவளது வட்டான குறுகுறுக்கும் கருவிழிகள் எந்த நேரமும் ஒளி வீசிக் கொண்டேயிருக்கும். அமைதியும் சாந்தமும் அவ்விழிகளில் குடிகொண்டிருக்கின்றன. அவளுக்குப் பிடிக்காத சம்பவத்தைக் கண்டால் அவள் நிந்தனையுடன் ஒரு சிறு வேதனைப் புன்னகை மட்டும்தான் செய்வாள். அவளது கண்களின் ஜீவ ஒளி அவளது மென்மையான வார்த்தைகளுக்கு அதிக சோபை தருகின்றது. சேவை செய்ய வேண்டுமென்ற அவளது தியாக உணர்வைச் சுமந்து வருகின்ற கட்டுக்கடங்காத அவளது உத்வேகம். அவளுடைய விழிகளின் மூலமும் வார்த்தைகளின் வழியாகவும் வெளியே கட்டுக்கடங்காது பிரவகிக்கும்.
கமலாவின் தோற்றத்தில் எளிமை, செயலில் வலிமை. துன்பமும் துயரமும் நிறைந்த இந்தப் பரந்த உலகில் கமலா வயது வந்த ஒரு சிறு குழந்தை. உலகில் அன்பு பெருக வேண்டும், துன்ப துயரங்கள் அனைத்தும் அகல வேண்டும் என்ற இதயதாகத்தால் தன்னை அந்தரங்க சுத்தியுடன் சேவை செய்வதற்காக அர்ப்பணித்த புனிதமான மனித ஜீவன் அவள்.
எந்த நேரமும் அவள் சுறுசுறுப்புடன் செயற்பட்டுக் கொண்டேயிருப்பாள். நாங்கள் அவளைச் சிட்டுக்குருவியென்றே அழைப்போம். அவளது தலையசைப்பு, வெட்டுப் பார்வை, செயற்பாடு எல்லாம் அவள் சிட்டுக் குருவியே தான்.
வெய்யில், மழையென்று பாராமல் ஹெலிச் சூடுகள், பொம்பர் அடிகள் ஒன்றையும் பொருட்படுத்தாமல், சேவை செய்யும் எமது தொண்டர்களின் முன்னணியின், ஒரு நிலையத்திலிருந்து மற்ற நிலையத்திற்குச் சிட்டுக் குருவியாய் பறந்து திரிவாள் கமலா. வீட்டுத் தரிசிப்பு வேறு. அவள் தனது உணவைக் கூட நேரகாலத்திற்கு உண்பதில்லை.
"ஏன் இப்படி நீர் ஒய்வொழிச்சலின்றி வேலை செய்கின்றீர்? எந்தநேரமும் வெளியிலேதான் ஒடித் திரிகின்றீர். கொஞ்ச நேரமாவது ஒய்வெடுக்கலாமே. கந்தோரிலை இருந்து கொஞ்ச நேரம் வேலை செய்தாலென்ன? எந்த நேரமும் ஒரே ஒட்டம்தான். என்ன உம்மடை காலிலை சில்லுப்பூட்டியிருக்கா?”
நாங்கள் அன்பு கலந்த கண்டனக் குரல் எழுப்புவோம் இடைக்கிடை.
-134- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

“வெளிக்கள வேலையெண் டால் வெளியிலைதானே வேலை செய்யவேணும். கந்தோரிலிருந்து எப்படி வேலை செய்யிறது?"
சிரித்துக்கொண்டே எங்களைக் கேட்பாள். அவளுக்குக் கோபம் வந்ததை நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லை. வலது பக்கமாய் தலையைச் சாய்த்துக்கொண்டு சிரிப்பாள் அவள். அப்பொழுது அவளது விழிகளும் சிரிக்கும்.
கமலாவின் சேவை வியக்கத்தக்கது. அவள் அதை சேவையென்று செய்யாமல் தொண்டென உணர்ந்து செயலாற்றுகின்றாள்.
அவள் ஒரு போஷாக்கு நிலையத்திற்குப் பொறுப்பாகத் தான் இந்தச் சேவையை ஆரம்பித்தாள். சில நாட்களின் பின் மூன்று நிலையங்களை மேற்பார்வை செய்பவளாக அவள் வந்தாள். பின்னர் ஐந்து நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பு அவளுக்குக் கொடுக்கப்பட்டது. தற்பொழுது ஏழு கிராமங்களில் நடைபெறுகின்ற இருபத்தைந்து நிலையங்களை அவள் நிர்வகிக்கின்றாள்.
தன்னுடன் வேலை செய்கின்ற தொண்டர்கள் அனைவருடனும் தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல் பற்றுடனும் பாசத்துடனும் பழகுகின்றாள். அவர்களும் அவளைத் தமது உடன்பிறப்பு என்ற நினைப்புடன் உரிமை கொண்டாடுகின்றனர்.
ஒருநாள், அயல் கிராமத்திலுள்ள நிலையம் ஒன்றில் தாய்மார்களின் கூட்டம் ஒன்றில் பங்குபற்றுவதற்காக அவளும் ஒரு மேற்பார்வையாளரும் நானும் அவசர அவசரமாகச்சென்று கொண்டிருக்கிறோம்.
அவளது பைசிக்கிளின் பின் சில்லிலுள்ள காற்று திடீரெனப் போய்விட்டது.
கூட்டம் ஆரம்பிப்பதற்கு இன்னும் சிறிது நேரம்தான் இருக்கின்றது. பைசிக்கிள் சீர்செய்த பின் தாமதித்துதான் புறப்படுகின்றோம். தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கின்றது. கூடச் செல்கின்ற மேற்பார்வையாளருக்கு சிறிது தயக்கம். "பயப்பட வேண்டாம். சிறிது தூரம் போய்த்தான் பார்ப்போமே” கமலா உற்சாகப்படுத்துகின்றாள். "ஸ்டேசன் பக்கம் தான் பிரச்சினை போலக் கிடக்கு. எதுக்கும் வாற" வையைக் கேட்டுக் கேட்டு அவதானமாய்ப் போங்கோ மோனையள்."
கிராமத்தின் தொங்கலில் வந்து கொண்டிருக்கின்ற வயோதிபர் ஒருவர் கூறுகின்றார்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -135.

Page 72
"ஸ்டேசனுக்குக் கிட்ட உள்ள நிலையத்தில்தான் கூட்டம். கூட்டத்திற்கு வந்த தாய்மாரின் கதி என்னவோ?”
ஆவல் மேலோங்க அவசர அவசரமாக மேற்பார்வையாளரையும் உற்சாகப்படுத்திக் கொண்டு வேகமாகச் செல்கின்றாள் கமலா.
கிராமத்தின் மையத்திற்குச் செல்கின்றார்கள். ஸ்டேசனுக்கு இன்னும் சிறிது தூரம் தான். ஆள் நடமாட்டமேயில்லை. ஒரு மனிதன் கூட கண்ணில் தென்படவில்லை. ஊர் மெளனத் தியாகத் தீயாக நிற்கின்றது. பதற்றத்துடன் நிலையத்திற்கு வந்து விட்டார்கள் அவர்கள். நிலையம் வெறுமையாக இருக்கின்றது.
“என்ரை ராசாத்தி! இப்ப ஏன் இஞ்ச வந்தனியள்?" பயப்பீதி நிரம்பிய ஒரு நடுங்கும் குரல் கேட்கின்றது. அவர்கள் நாற்புறமும் பார்க்கின்றார்கள். ஒரு சிறு குடிசைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பொன்னாவரசுப் பற்றைக்குள் பதுங்கியிருந்த மூதாட்டி வெளியே வருகின்றாள்.
"ஏன், என்ன நடந்தது?" கமலா ஆவலுடன் கேட்கின்றாள். "ஆமிக்காரர் வரமுந்தி ஒடுங்கோ மோனையள், கெதியாய்ப் போங்கோ." மூதாட்டி அவர்களை அவசரப்படுத்துகின்றாள்.
"அம்மா பயப்படாதயணை. என்னனை நடந்தது. சொல்லணையம்மா."
கமலா வாஞ்சையுடன் கேட்கின்றாள். “மூண்டு நாலு பொடியள் உந்தக் கோயிலுக்குப் பின்னாலையுள்ள வேலியைப் பாஞ்சு ஓடினாங்கள்."
"பிறகு.?" "கொஞ்ச நேரத்தில கோதாரியில போற ஆமிக்காறங்கள் வந்தாங்கள். திடீரென அவங்கள் கோயில் பக்கம் சுடுகடென்று சுட்டாங்கள்."
"அதுக்குப் பிறகு?" "அங்க பாருங்கோ கோயிலடியை. பாழ்ப்பட்டுப் போவாங்கட வேலையை ஆணும் பெண்ணுமாய் ஐந்து மலையள் கோயிலடியில சரிஞ்சு கிடக்குது."
வயிற்றெரிச்சலுடன் கூறுகின்றாள் மூதாட்டி.
-136- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

"நீங்கள் இஞ்சை மினக்கிடாதையுங்கோ மோனையள். கெதியாய்ப் போங்கோ. கெதியாய். yy
அவர்களை மூதாட்டி விரட்டுகின்றாள். கொஞ்ச நேரம் முந்தி வந்திருந்தால் நீங்களும் இந்த அமளி துமளியிக்கை அம்பிட்டிருப்பியள். ஏதோ நல்ல காலம் அந்த முருகன் தான் உங்களைக் காப்பாற்றியவன்."
அந்த மூதாட்டி மனநிறைவுடன் கூறுகின்றாள். “மிச்சம் பெரிய உபகாரமம்மா. நாங்கள் போட்டு வாறம்." நன்றியுணர்வுடன் கூறிவிட்டு வெறிச்சோடிக் கிடக்கின்ற அந்தக் கிராமத்தை விட்டுச் செல்கின்றோம். எமக்கெல்லோருக்கும் ஒருவித
ԼՕ65)6ծւ յւկ.
எந்த நேரமும் எமது கிராமப் புறங்களில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்றது.
கமலா நிதானமாக, அமைதியுடன் வேலை செய்கின்றாள். எங்களையும் அவள் தேற்றி ஊக்குவிக்கின்றாள்.
மீன்பிடிக் கிராமத்தின் எல்லைக்கோட்டிற்கு வந்ததும் கமலா சிறிது தயக்கத்துடன் பைசிக்களை ஒட்டுகின்றாள். "இந்தமாதம் இந்த நிலையத்திலே குழந்தைகளின் நிறை கூட எடுக்க முடியாமல் போச்சே, இஞ்சையுள்ள குழந்தைகளின் நிலை எப்படியோ?”
அவளது உள்ளத்தில் ஒரு வித தவிப்பு, வேதனை. சில நாட்களின் முன் வேறு ஒரு நிலையத்தில் குழந்தைகளின் நிறை எடுப்பதற்கு நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்.
அந்த நிலையத்தை மேற்பார்வை செய்கின்ற சிவானி தயாரிப்பு வேலைகளைச் செய்வதற்காக சற்று முன்னரே சென்று விட்டாள்.
திடீரென துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்கின்றது. எம்மை விலத்திக் கொண்டு மூன்று பொடியள் நனைந்த உடையுடன் ஒடிக்கொண்டிருக்கின்றார்கள்.
மீண்டும் துப்பாக்கி வேட்டுச் சத்தம் தொடர்ந்து கேட்கின்றது. நிலையப் பக்கம் தான் வேட்டுச்சத்தம் கேட்கின்றது.
"சிவானிக்கு என்ன நடந்ததோ” அங்கலாய்ப்புடன் கூறிக் கொண்டு நிலையப் பக்கம் செல்வதற்கு முற்படுகின்றாள் கமலா.
எதிர்த்திசையில் இருந்து ஓடி வருகின்ற மக்கள் எங்களைத் தடுத்து நிறுத்துகின்றனர்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -137

Page 73
சிறிது நேரத்தில் அமைதி. சற்று நேரத்தில் நாங்கள் நிலையத்திற்கு வந்து சேருகின்றோம். போஷாக்கு நிலையத்திற்குள் பதுங்கியிருந்த சிவானி எங்களைக் கண்டவுடன் வெளியே வருகின்றாள்.
அவளது முகம் பேயறைந்தாற் போல் இருக்கின்றது. உடலில் நடுக்கம்.
கமலா அவளை ஆவலுடன் அணைக்கின்றாள். சிவானி கதறி அழுகின்றாள். சென்ற வருடம் இராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட தனது அருமை அக்காவை எண்ணி சிவானி அழுகின்றாளோ?
"சிவானி அழாதையம்மா. ஏன் இப்ப என்ன நடந்திட்டுது?” அவளது முதுகைத் தடவிக் கொடுத்தபடியே சிவானியைத் தேற்றுகின்றாள் கமலா.
"கமலாக்கா! என்ரை கமலாக்கா!" தாயின் அரவணைப்பிலுள்ள குழந்தையாய் சிவானி விக்கி விக்கி அழுகின்றாள்.
கமலாவின் கண்கள் கலங்குகின்றன. "அக்காவைப் போல் சிவானிக்கும் ஏதாவது நடந்திருந்தால்?" கமலாவின் உள்ளம் நடுங்குகின்றது. "அந்தரங்க சுத்தியுடன் புனிதமான சேவை செய்கின்ற உங்களுக்கு ஒன்றுமே நடக்காது. ஆபத்து வேளைகளில் மறைந்திருந்து ஒரு கரம் உங்களை நிச்சயமாய் காப்பாற்றும்.
அவர்களை விட்டுப் பிரிந்து சென்ற மேலதிகாரி அவர்களது சேவையைப் பாராட்டி இறுதியாகக் கூறிய வார்த்தைகள் கமலாவின் “ஞாபகத்தடத்தில்" தோன்றுகின்றது.
ஆறுதலடைந்த கமலா ஆதூரத்துடன் சிவானியைத் தேற்றுகின்றாள். கடற்கரை வீதியில் சென்று கொண்டிருக்கிற கமலாவின் கண்களில், தென்னந்தோப்பில் கவழ்ந்து நிராதரவாய்க் கிடக்கின்ற படகுகள் தென்படுகின்றன.
"இந்தக் கிராமத்திற்கும் இப்படியும் ஒரு நிலையா?” வேதனைப் பெருமூச்சு விடுகின்றாள் கமலா. மதுபோதையில் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருக்கின்ற சொலமன் கமலாவைக் கண்டதும் வெலவெலத்துப் போய், சாலை ஒரத்தில் ஒதுங்கி நின்று அவளுக்கு வழிவிடுகின்றான்.
-138- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

கமலா சொலமனைப் பார்த்ததும் பார்க்காதவளாகச் செல்கின்றாள். “என்ன மாதிரி உழைத்து தன்னுடைய ஏழு பிள்ளைகளையும் மனைவியையும் கெளரவமாய்ப் பார்த்து வந்த மனிசன் இப்ப குடித்து அந்தக் குடும்பமும் சீரழிந்து திரியுதே"
சொலமன் குடும்பத்தை நினைத்துக் கமலாவின் இதயம் அழுகின்றது.
"பாவம் அவன்தான் என்ன செய்வான்?" சொலமனுக்காக அனுதாபப்படுவதைத் தவிர அவளால் எதைத்தான் செய்முடியும்?
கமலா சேவை செய்கின்ற கிராமங்களிலுள்ள மக்கள் அனைவருக்கும் அவளையும் அவளது சேவையையும் பற்றி நன்கு தெரியும். அவளுக்கு அவர்கள் ஒரு வித மரியாதை செலுத்துவதுடன், அவளைக் கெளரவமாக நடத்துகின்றார்கள். பெண்கள் மாத்திரமல்ல, ஆண்களும், சிறுவர்களும், வயோதிபர்கள் அனைவரும் கமலா மீது மட்டற்ற அன்பு செலுத்துகின்றார்கள்.
சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை எல்லோரும் கமலாவை “மாமி” என்று பாசத்துடன் அழைக்கின்றார்கள்.
நிலையங்களிலுள்ள ஒவ்வொரு குழந்தையினதும் பெற்றோர்கள் அவர்களது குடும்ப விபரங்கள் பொருளாதார நிலை பற்றி சகல விபர விசயங்களையும் அவர்களது வீடுகளுக்கு அடிக்கடி சென்று, அவர்களுடன் மனம் விட்டுக் கதைத்து, கலந்துரையாடி சேகரித்து வைத்து, இதன் அடிப்படையில் சேவையாற்றுகின்றாள் கமலா.
மக்கள் தமது இன்பதுன்பங்களை பிரச்சினைகளை அவளுடன் மனந்திறந்து கதைத்துப் பகிர்ந்து கொள்கின்றார்கள். அவர்களது குடும்பப் பிரச்சினைகள் தங்களுக்குள்ளேயுள்ள பிணக்குகள், சச்சரவுகள் ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு அவளை ஆலோசனை கேட்பார்கள். அவள் அவர்களது பல குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து வருகின்றாள். குழந்தைகளும், சிறுவர்களும் அவளை "சத்துணவு மாமி” என்று அன்புடன் அழைக்கின்றார்கள்.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரு ஓரத்தில் குழந்தை ஒன்று நிற்பது அவளுடைய கண்களில்தென்படுகின்றது.
அவளுக்கு சிறு தயக்கம். குழந்தையை நெருங்குகின்றாள் அவள். குழந்தையின் கையில் வெறும் கோப்பை, ஏக்கத்துடன் கமலாவைப் பார்க்கிறது குழந்தை.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -139.

Page 74
உலகத்துத் துயரம் அனைத்தையும் தன்னகத்தே சுமந்து சோகமே உருவாய், பாசம் பொங்கிப் பிரவகிக்க குழந்தையை தனது மார்புடன் அணைத்தபடியே நிற்கின்ற மேரி மாதாவையும், வெறும் கோப்பையுடன் தெரு ஓரத்தில் நிற்கின்ற குழந்தையையும் மாறி மாறிப் பார்க்கின்றாள்
SLD6)IT.
மாதா கோவில் வளவிற்குள் குழந்தைகளும் சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். சிறு குழந்தைகளின் கைகளில் வெறும் கோப்பைகள்.
தேவாலயத்தின் கிழக்கெல்லைக் கோடியில் போஷாக்கு நிலையம். போஷாக்கு நிலையத்திலிருந்து கஞ்சியின் மணமுமில்லை, கலவை மாவின் வாசனையுமில்லை.
அந்த நிலையம் எப்பொழுதுதான் திறக்கப்படுமோ? கமலா தனது நீண்ட தளிர் விரல்களால் குழந்தையின் முதுகை அன்பாக வருடிக் கொடுக்கின்றாள்.
குழந்தையின் முகம் மலர்கின்றது. அதன் உதடுகளில் சிரிப்பு மின்னொளியாய் மிளிர்கின்றது. மாதா கோவில் வளவிற்குள் விளையாடிக் கொண்டிருக்கின்ற குழந்தைகள் எல்லாம் கமலாவைக் கண்டதும் ஆரவாரித்துக் கொண்டு தெருவை நோக்கி சிட்டுக்களாய்ப் பறந்தோடி வருகின்றார்கள்.
குழந்தைகள் அனைவரும் கமலாவைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டு ஆனந்தத்துடன் ஆர்ப்பரிக்கின்றார்கள்.
“அஞ்சி மாமி வந்திட்டா!" தனது பிஞ்சுக்கரங்களைத் தட்டியபடியே குழந்தை ஒன்று குதுரகலமாகத் துள்ளிக் குதிக்கின்றது.
“அஞ்சி மாமியல்லடா, கஞ்சி மாமி எண்டு சொல்லடா கண்ணா” ஒரு சிறுவன் குழந்தையைத் திருத்துகின்றான். கமலா முறுவலிக்கின்றாள். குழந்தைக்கு ஒரே ஆனந்தம். அவர்கள் கைகொட்டி ஆர்ப்பரிக்கின்றனர். "மாமி நீங்கள் ஏன் எங்களுக்கு கனநாளாய் கஞ்சி தாறேல்லை?” ஒரு குழந்தை ஏமாற்றம் நிறைந்த குரலில் கேட்கின்றது. "நாங்கள் கலவை மா உருண்டை திண்டு கனநாளாய்ப் போச்சு. ஏன் நீங்கள் தரேல்ல மாமி?”
-140- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அவளை நோக்கி ஏக்க பாவத்துடன் கேட்கின்ற குழந்தையின் குரலில் சோர்வு.
“மேரி மாதாவே!”
இந்த வார்த்தைகளைத் தவிர கமலாவினால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
அவளது உள்ளத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பு.
கண்கள் பனிக்கின்றன.
"மாமி நாங்கள் இனி ஒரு நாளும் வீட்டை கஞ்சி கொண்டு போகமாட்டம்.”
சில குழந்தைகள் ஒரே குரலில் கூறுகின்றனர்.
"நான் சாப்பிட முந்தி சவக்காரம் போட்டுக் கை கழுவிறனான் மாமி.”
ஒரு சிறுவன் கூறுகின்றான்.
“கக்காக்குப் போட்டு வந்த பிறகு நான் சவுக்காரம் போட்டு நல்லாய் உரஞ்சிக் கை கழுவிறனான் மாமி!”
இன்னொருசிறுவன் கூறுகின்றான்.
கமலாவின் உதடுகளில் சிறு முறுவல்.
"அம்மாமாற்றை கூட்டங்களிலை நாங்கள் அடிக்கடி சொல்லிற சுகாதாரம் சம்மந்தமான விசயங்கள் வேலை செய்யத் துவங்கியிருக்குது போலை கிடக்குது!”
அவள் தனக்குள் கூறிப்பூரிப்படைகின்றாள்.
இதில் அவளுக்கு ஒருவித மனநிறைவு.
"இனி எங்களுக்கு எப்ப கஞ்சி தருவியள் மாமி”
ஒரு குழந்தை ஆவலுடன் கேட்கின்றது.
முருகன் கோயில் மணியின் நாதம் காற்றில் மிதந்து வருகின்றது.
“முருகா!"
கூறியபடியே கமலா நோக்குகின்றாள் வானத்தை,
“எடியே அன்னம், எங்கட கமலாக்கா வந்திட்டாவடி.!" ஆச்சரியத்துடன் கத்துகின்றாள் ஜீவா. ஜீவாதான் அந்தப் போஷாக்கு நிலைதய்திற்குப் பொறுப்பு. “என்ன எங்கட கமலாக்காவோ?”
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -141

Page 75
ஆவலுடன் கேட்டபடியே அன்னலட்சுமி வெளியே ஒடி வருகின்றாள்.
அவர்களுடைய விழிகளில் வியப்பு.
ஆரவாரம் கேட்டு தாய்மார்கள் வந்து கூடுகின்றார்கள்.
"எங்கடமாமி, எங்களிட்டை நிச்சயம் வருவ எண்டு எனக்கு நல்லாய்த் தெரியும்."
ஒரு கர்ப்பிணித்தாய் நம்பிக்கையுடன் கூறுகின்றாள்.
"நாங்கள் என்ன தப்புச் செய்தம் மாமி? இப்ப ஏன் நீங்கள் இஞ்சை வாறேல்லை?”
அவர்களுடைய குரலில் ஏக்கம், வேதனை.
“சரி எங்களிட்டைத்தான் வரவேண்டாம். இந்தக் குழந்தையளையாவது வந்து பார்த்திருக்கலாம் தானே. அதுகள் என்ன குற்றம் செய்ததுகள்?"
மீனாட்சி மனம் வெதும்பிக் கேட்கின்றாள்.
கமலாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“மாமி ஒவ்வொரு நாளும் சரியாய்ப் பத்து மணியெண்டால் குழந்தைகள் எங்களுக்குத் தெரியாமல் கோப்பையைத் தூக்கிக் கொண்டு உங்கட நிலையத்திற்கு வந்திடுங்கள். பிறகு ஏமாற்றத்தோடை வெறும் கோப்பையையும் கொண்டு வருதுகள்."
மகேஸ்வரி முறையிடுகின்றாள். "அதையேன் கேட்கிறியள் மாமி. ஒவ்வொரு நாளும் இப்படித்தான் செய்யுதுகள். நாங்கள் மறிச்சாலும் கேக்குதுகளில்லை. அதுகளை என்ன செய்யிறதெண்டு எங்களுக்கே தெரியேலை." பிலோமினா பிரஸ்தாபிக்கின்றாள். கமலாவினால் இதற்கு ஒன்றும் கூற முடியவில்லை. அவள் மெளனியாய் நிற்கின்றாள். ஊமையாகிவிட்டாளா கமலா? “இதற்கு ஒருதரையும் குற்றம் சொல்ல ஏலாது. எங்கட நிலையத்திலை வேலை செய்யிற பெட்டையளிலதான் பிழை." மாரியம்மா அடியெடுத்து வைக்கின்றாள்.
"அதுகள் “சைவம்", "வேதம்" எண்டு புடுங்குப்பட்டதாலை தான் வந்த வினை" பிலோமினா வெறுப்புடன் கூறுகின்றாள்.
"அதுகள் சண்டை பிடிச்சா அதுக்காக நிலையத்தை மூடுகின்றதோ?”
-142- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

சினத்துடன் சீறுகின்றாள் முத்தம்மா. "ஆர் மூடினது? மாமியா நிலையத்தை மூடினவ?” மாரியம்மாவின் கேள்வி. கமலாவின் முகம் கறுக்கின்றது. அவளுடைய உதடுகள் துடிக்கின்றன. கண்கள் கலங்குகின்றன.
“எடியே மாமியை ஏன் இதுக்கை இழுக்கிறயள். இவ்வளவு நாளும் அவ எங்களுக்கு செய்த சேவைக்கு சன்மானமா? மகேஸ் இடைமறித்துக் கேட்கின்றாள். “அடி ஆத்தே! மாமியை நான் இதுக்கை ஏன் இழுக்கிறன்? உண்மையிலை அந்த உத்தமிதான் எங்களை இந்த நிலைக்கு உயர்த்தி வைச்சவ."
மரியம்மா மன நிறைவுடன் கூறுகின்றாள். "இப்ப இந்த நிலையம் மூடினதுக்கு ஆர் பொறுப்பு?” முத்தம்மாவின் கேள்வி. “இது அந்த ஜீவாவாலை வந்த வினை." "ஏன்?” "ஏனா? அவள் தானே நிலையத்துக்குப் பொறுப்பு. சாப்பாட்டுச்சாமான் எல்லாம் அவளின்ரை பொறுப்பிலதானே இருந்தது."
"அதுக்கென்ன?” பிலோமினா வினவுகின்றாள். W "சாமானுக்குப் பொறுப்பான ஆளிட்டைத்தானே சாமான் வைக்கிற அறைத்திறப்பு இருக்க வேண்டும்?”
மீனாட்சி பொறுப்பை உணர்த்துகின்றாள். “ஏன் எங்கட ஆக்களிலை விசுவாசமில்லையோ?” ஜெனிற்றா விஸ்வாசம் பற்றிக் கூறுகின்றாள். "அது வேறை விசயம். சாமான் குறைஞ்சால் ஆர் அதுக்குப் பதில் சொல்லிறது? எதுக்கும் ஒரு ஒழுங்குமுறை இருக்குதல்லவா?”
“எங்கட கோயிலுக்குச் சொந்தமான அறை விசயமாய் முடிவெடுக்கிற உரிமை எங்கட சாமியாருக்குத்தானே இருக்கு!”
"அது சரிதான். ஆனால் அவர் என்ன சொல்லி அறைத்திறப்பை வாங்கினவர்?"
மகேஸ் கேட்கின்றாள்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -143

Page 76
“தேவாலயத்திலை கொடியேற்றி திருவிழா நடக்கவிருந்தது. அதுக்கு வாற சாமியார் தங்க அறை தேவைப்பட்டது. அதுதான் குருவானவர் இடத்தை விடச் சொன்னவர்.”
"சரி திருவிழா முடிஞ்சாப்பிறகு திறப்பை திருப்பிக் கொடுத்திருக்கலாமே?”
முத்தாம்மாவின் கேள்வி இது. “வேறை மதத்தைச் சேர்ந்த ஆளுக்கு எங்கடை மாதா கோயிலுக்குச் சொந்தமான அறைத் திறப்பை வைத்திருக்க என்ன உரிமை இருக்கு? பங்குத்தந்தை அதுக்கு எப்பிடி உடன்படுவார்?"
ஜெனிற் றாவின் உரிமை பற்றிய பேச்சு முத்தம்மாவுக்குச் சினமூட்டுகின்றது.
"வேறை மதத்தைச் சேர்ந்தவர்களும் மனிதர்தானே. தேவனுக்கு முன்னால் மனிதர்கள் எல்லாம் சமம் என்று உங்கடை மதம் போதிக்குது. பிறகேன் வேற்றுமை காட்டிறியள்?”
முத்தம்மா விட்டுக்கொடுக்காமல் கேட்கின்றாள். ஜெனிற்றா அவர்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. "ஏன் உங்கடை ஆக்கள் என்ன செய்தவை?” "உங்கடை முருகன் கோயிலுக்குப் பக்கத்திலை கிடக்கிற கொட்டிலை போஷாக்கு நிலையம் நடத்திறத்துக்கு தாற மெண்டினை. நாங்கள் நம்பி அந்தக் கொட்டிலைக் கூட்டிச் சுத்தம் பண்ணி மெழுகின பிறகு அவை கைவிரிச்சுப் போட்டினையே" மரீனா விரக்தியுடன் சொன்னாள். "அது முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடக்கேக்கை ஆக்கள் தங்கிறதுக்கும் இடம் தேவைதானே? அதுக்குத்தான் அந்தக் கொட்டிலை மறிச்சவை"
மீனாட்சியின் ஞாயம் இது. அது சும்மா சாட்டு. அதுக்கை வேறை விசயமிருக்கு. நான் புட்டுக்காட்டட்டோ?
பிலோமினா புதிர் போடுகின்றாள். "இதுக்கை என்ன புட்டுக் காட்டக் கிடக்கு? எங்கடை கோயிலிலை கிடக்கிற கொட்டிலுக்கைப் போஷாக்கு நிலையம் நடத்தினா கண்ட நிண்ட சாதியள் எல்லாம் வந்து கொட்டிலுக்கை இருப்பினை. பிறகு குறைஞ்ச சாதிக்காரர் எங்கடை கோயிலுக்கை உள்ளடுவினை. உதுகள் எல்லாத்துக்கும் நாங்கள் இடங் குடுப்போமே?”
-144- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

பெருமையுடன் கூறுகின்றாள். மகேஸ். எல்லோருக்கும் வியப்பு. பிலோமினாவுக்கு ஆத்திரம். "ஏன் உங்கடை சாதி உயர்ந்ததோ? குறைஞ்ச சாதியளுக்கை உங்கடை சாதியும் ஒண்டுதானே?”
பிலோமினா கொதிப்புடன் கேட்கின்றாள். அதிர்ச்சியுடன் எல்லோரும் பிலோமினாவைப் பார்க்கின்றனர். "உங்கடை தேவாலயக் கொடியேத்தத்தாலையும் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தாலையும் எங்கடை குழந்தையளின்ரை வாயிலை மண்ணைப் போட்டியளே”
இவ்வளவு நேரமும் பேசாமல் இரந்த செல்லம்மா வயிற்றெரிச்சலுடன் கூறுகின்றாள்.
"நீங்க ஏன் வீணாய்ச் சச்சரவுப்படுறியள்? நடந்தது நடந்து போச்சு. இனி நடக்க வேண்டியதைப் பார்ப்போம்."
கமலா இடைமறித்துக் கூறுகின்றாள். "இனி என்ன மாமி பார்க்கக் கிடக்கு. இரண்டு பகுதியும் சேர்ந்து எல்லாற்ரை வாயிலையும் மண்ணைப் போட்டிட்டன"
மீண்டும் வலியுறுத்திக்கூறுகின்றாள் செல்லம்மா. "ஏன் வீணாய் குழப்பமடையிறியள். இனி எல்லாம் சரிவரும். நிதானமாகக் கூறுகின்றாள் கமலா. "என்ன சொல்லுறியள் மாமி? எங்களுக்கொண்டும் புரியேல்லையே?” மீனாட்சி கேட்கின்றாள்.
எல்லோரும் கேள்விக் குறியுடன் கமலாவைப் பார்க்கின்றனர். "நிலையம் நிச்சயம் நடக்கும்" அவளுடைய வார்த்தைகளில் உறுதி. சிலருக்கு இதை நம்ப முடியவில்லை. "எனக்கு அப்பவே தெரியும். எங்கடை மாமிசும்மா வரா வெண்டு." "மூடின நிலையத்தை எப்பிடித் திறக்கிறது?” சிலரது உள்ளத்தில் கேள்விக்குறி. “வேம்படி வாசிகசாலைக்காரரோடை நாங்கள் கதைச் சிருக்கிறம்.
அவையளும் நாங்களும் சேர்ந்து நிலையத்தைத் திறக்கிறதுக்கு ஏற்பாடு செய்யிறம்."
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -145

Page 77
கமலா அமைதியாகக் கூறுகின்றாள். "அதுக்கை எப்பிடி நடத்தேலும்? அங்கை பாலர் பாடசாலை நடக்குதே?”
"உணவு சமைத்து எல்லாரும் வசதியாயிருந்து சாப்பிடுகிறதுக்கு ஒரு கொட்டில் போட்டுத் தருவினை."
"அப்ப சாமான் எங்கை வைக்கிறது?" "அந்த வாசிகசாலை அறையுக்கைத்தான். அறைத் திறப்பைத் தாறன் எண்டு சொல்லியிருக்கினை."
“பொதுச் சேவையெண்ட்ால் இப்படியெல்லோ இருக்க வேணும்." திருப்தியுடன் கூறுகின்றனர் சிலர்.
"வாற முதலாம் திகதி உங்கடை நிலையத்தை அங்கை நிச்சயம் திறப்பம்"
எல்லோருடைய முகங்களிலும் மலர்ச்சி. சிறுவர்களும், குழந்தைகளும் ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கின்றனர். உலகத்துத் துயரம் அனைத்தையும் தன்னகத்தே சுமந்து சோகமே உருவாய், பாசம் பொங்கிப் பிரவகிக்க, கண்களில் கருணை ஒளி வீச, குழந்தையைத் தனது மார்புடன் அணைத்தபடியே தியாகத்தின் சின்னமாய் நிற்கின்றாள் மேரிமாதா.
"சரி நான் போட்டு வாறன்." அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கமலா வேம்படி சனசமூக நிலையத்தை நோக்கி வேகமாய்ச் செல்கின்றாள்.
அவளை எல்லோரும் மனதுள் வாழ்த்தி வழியனுப்பி பார்த்தபடியே நிற்கின்றனர்.
முருகன் கோயில் மணியின் நாதம் காற்றில் மிதந்து வருகின்றது. இதயத்தில் இருந்து ஒரு பாரிய சுமை இறங்கியது போன்ற உணர்வு அவளுக்கு.
வானத்தை நோக்குகின்றாள் கமலா. நீலவானத்தில் கூட்டம் கூட்டமாய்க் கடல்பறவைகள் பறந்து கொண்டிருக்கின்றன.
-1993
-146- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அன்னை அழைக்கின்றாள்
ரிெ ன மணி டலத்தில் நிலைகுலைந்த எரிநட்சத்திரம் போல எதிர்பாராமலே அவன் முன் வந்து நிற்கின்றாள் அவள்.
அவனுக்குப் பேரதிர்ச்சி! வெறுப்பும் வேதனையும் கலந்த கோபாவேசத் தீ அவனுள்ளத்தில் சீறியெழுகின்றது. கண்கள் எரிதணலாகின்றன. அவளை அவன் வெறித்துப் பார்க்கின்றான்.
அவளுடைய முகத்தில் பீதி, சப்த நாடிகளும் ஒடுங்கித் தலை குனிந்தபடியே நிற்கின்றாள் அவள். அவளது நிலை பரிதாபகரமாய் இருக்கின்றது. கணப்பொழுதில் அவன் தன்னுணர்வு பெறுகின்றான். அவள் மேல் அவனுக்கு அனுதாபம் பிறக்கின்றது.
'பாவம், அவள் தான் என்ன செய்வாள்? தனக்குத்தானே கூறிக்கொள்கின்றான். நிதானத்திற்கு வந்த அவன், அவளைப் பரிவுடன் நோக்குகின்றான். “ஏன் நின்றுகொண்டிருக்கின்றாய்? உட்கார்வது தானே?” கனிவுடன் கூறுகின்றான்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -147

Page 78
அவள் தயங்கித் தயங்கி உட்காருகின்றாள். அவனை விழுங்கிவிடுவது போல தாபத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன அவளது விழிகள். முப்பது வருடங்களாக அவனைக் கணப்பொழுதாவது பார்க்க வேண்டுமென்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தனவல்லவா அவ்விழிகள். இருவரும் மெளனமாய் இருக்கின்றனர். அவளை அவன் வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
அவளது அடர்ந்த சுருண்ட கூந்தலில் இடையிடையே வெள்ளிக்" கம்பிகளாய் மயிர்கள் தெரிகின்றன. இரட்டை நாடித்தேகம், உடற்கட்டில் மெல்லிய தொய்வு, உடையில் எளிமை. அன்று போல்அவள் செல்வச் செழிப்புள்ளவளாக இருந்தும், தங்க நகைகள் மிகக் குறைவாகவே அணிந்திருக்கின்றாள். அவளது மோகனத் தோற்றத்தில் குறிப்பிடத்தக்க எதுவித மாற்றத்தையும் அவனால் கண்டு கொள்ள முடியவில்லை.
அதே மருட்சி பொங்கும் விழிகள். அவற்றில் ஆழம் காண முடியாத சோக நிழல் படர்ந்த ஏக்கம். முதல் நாளைய பிரயாணக் களைப்பின் சோர்வு அவளில் தெரிகிறது. அவளுடைய பிறை நெற்றியின் இடது புறத்திலுள்ள அந்த வடு. அவனது மனம் அலைகின்றது. அவள் சிறுமியாயிருந்த பொழுது அவனால் தான் இந்தவடு ஏற்பட்டது. ஜன்னலூடாக அவனது பார்வை வெளியே செல்கின்றது.
எண்ணற்ற கரங்கள் வானத்தை எட்டிப்பிடிக்க முயல்வது போல தனது கொப்புகளையும் கிளைகளையும் பரப்பி கிளைத்துச் சடைத்து அடர்த்தியாக வளர்ந்தோங்கி மதர்த்து மரகத மலையாய் நிற்கின்றது ஒரு வேப்பமரம்.
அன்று அவளும் பருவம் பொங்கிப் பூரித்து மதர்த்து மரகத மோகினியாய் இருந்தாள்.
அவனது நினைவுச் சுழல் விரிகின்றது. மண் விளையாடும் பருவத்தில் அவனும் அவளும் தினமும் இதே வேப்பமரத்தின் நிழலில் மணிக்கணக்காக விளையாடுவார்கள்.
வேப்பமரம் கன்னிப் பருவத்து வண்ணக் குமரிபோல் விடலையாயிருந்த போது சித்திரைப் புதுவருடப் பிறப்பு கொண்டாட்டக் காலங்களில் அந்த மரத்தின் கொப்பில் அன்ன ஊஞ்சல் கட்டி அவனும் அவளும் அப்பகுதியிலுள்ள பிள்ளைகளும் சேர்ந்து மாதக் கணக்காக ஊஞ்சலாடி மகிழ்ந்து குலாவியது அவனது ஞாபகச் சுவட்டில் தோன்றிப் படர்கின்றது. ஒருநாள் அவள் அந்த அன்ன ஊஞ்சலில் தாவி ஏறுகின்றாள். அவன் குறும்புத்தனமாக திடீரென ஊஞ்சலை ஆட்டுகின்றான். அவள் நிலை தடுமாறி விழுகின்றாள். அவளது நெற்றியின் இடது பக்கத்திலிருந்து
-148- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

இரத்தம் பீறிட்டுப்பாய்கின்றது. இதனால் ஏற்பட்ட அந்த வடு அவர்களது பால்ய பருவத்தின் நினைவுச் சின்னமாக இன்றும் நிலைத்து நிற்கின்றது. அவள் பருவமடைந்த பின்னர் கூட அவளும், அவனும் வேப்பமரத்" தின் கீழ் மாலைவேளைகளிலும் நிலாக்காலங்களிலும் நீண்ட நேரம் தங்க" ளது எதிர்கால வாழ்க்கை பற்றி மனக்கோலம் வரைந்து மெய்மறந்” திருப்பார்கள். அவர்களது இதயங்களில் தினம் தினம் எண்ணற்ற புதுப்புது இன்பக் கனவுகள் தோன்றி தவழ்கின்றன. •
அவர்களது பெற்றோர்கள் இதை பெரிதும் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் அவர்கள் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.
காலப்போக்கில் இதே வேப்பமரத்தின் கீழ் அவர்களது இதயங்களில் தூய்மையான கன்னி உறவு அரும்பி மொட்டாகி மலர்ந்து எழிலுடன் மிளிர்கின்றது. இந்த உறவில் அவர்களது ஆத்மாக்கள் சுயதன்மையிழந்து இரண்டறக் கலந்து சங்கமிக்கின்றன. இச்சங்கமத்தில் ஜனித்த ஜீவநாதம் பிரபஞ்சத்தில் பிவேசித்து வியாபித்து எதிரொலித்துக் கொண்டேயிருக்கின்றது. ஒன்றாக இணைந்த அவர்களது ஆத்மாக்கள் வண்ணச் சிறகடித்து விண்ணில் மிதந்து உலாவி லயித்திருக்கின்றன.
பிணந்தின்னி அரசின் இரும்புக் கழுகு ஒன்றின் இரைச்சல் திடீரெனக் கேட்கின்றது. அவன் விழிப்படைகின்றான். அவள் பதறுகின்றாள்.
இது ஹெலியின் இரைச்சல். இந்த ஹெலி வழமையாய் பலாலிக்கு இதாலைதான் போய்வாறது. சும்மா நாளையிலை பயப்படத் தேவையில்லை", அவன் அவளைத் தேற்றுகின்றான். அவள் அமைதியடைகின்றாள். அவனது பார்வை மீண்டும் வேப்பமரத்தை நாடுகின்றது. முன்பிருந்த அதே வேப்பமரமா இது?
அவனுக்கே தடுமாற்றம். அவன் தினமும் இந்த வேப்பமரத்தைப் பார்த்திருக்கின்றான்.
ஆனால் இன்று என்றுமில்லாதவாறு இந்த வேப்பமரத்தைப் பார்த்த அவனது மனம் ஆத்மவிசாரத்தில் ஈடுபட்டிருக்கின்றது.
இந்த வேப்பமரம் இவ்வளவு செழிப்பாக, அடர்த்தியாகக் கிளைத்துச் சடைத்து உருண்டு திரண்டு வளர்ந்தோங்கியிருக்கின்றது என்பது அவனது கவனத்தில் புலப்படவில்லை.
ஏன் கோகிலாகூட எவ்வளவு முதிர்ச்சியடைந்து விட்டாள். அவளது சிந்தனையிலும் செயலிலும் எவ்வளவு மாற்றமேற்பட்டுள்ளது என்பது அவனுக்கு எங்கே புரியப் போகின்றது. அவளது உடல் சற்று பருத்துவிட்டதுதான். அதில் அன்றிருந்த ஒயிலும் நளினமும் மெருகும் இன்றுகூட, எள்ளளவும் குறையவேயில்லை. அதில் அதே இளமைத்
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -149

Page 79
துடிப்பு ஆனால் இன்று அந்தியில் தோன்றும் துன்ப நிலவின் சாயல் நிழலாடுகின்றது.
விசும்பும் சத்தம் கேட்கின்றது. தன்னை சுதாகரித்துக் கொள்ளுகிறான் அவன். சுயநிலைக்கு வந்த அவன் அவள் பக்கம் பார்வையைத் திருப்புகின்றான்.
அவளது விழிகளில் கண்ணிர் வழிந்து கொண்டிருக்கின்றது. வாலிப வனப்புடன் இருந்த அவனது வாளிப்பான உடல் சிதைந்து சீரழிந்துவிட்டது. உருக்குலைந்த அவனது தோற்றத்தைப் பார்த்து, தன்னால்தான் அவனுக்கு இக்கதி ஏற்பட்டது என்று வருந்திக் கண்ணிர் விடுகின்றாளா? அல்லது தனது அன்புக்கினியவனுடன் தான் வாழக் கொடுத்து வைக்கவில்லையேயென்று பொருமி அழுகின்றாளா?
"கோகிலா உனக்கென்ன நடந்தது? ஏன் அழுகின்றாய்?" “என்னால்தானே உங்களுக்கிந்தக் கதிநோந்தது" குற்ற உணர்வுடன் கூறுகின்றாள்.
"ஏன்? எனக்கென்ன குறைச்சல்?” “உங்கள் உடல். நீங்கள் ஏன் உங்களை இப்படி அழித்துக் கொண்டிருக்கின்றீர்கள்"
"எனது உடலுக்கென்ன?” “பார்த்தால் தெரியுதே என்ன மாதிரி வாட்ட சாட்டமாயிருந்த உடம்பு இப்படி எலும்பும் தோலுமாய் இளைச்சுப் போச்சே. ஏன் ஊணி உறக்கமில்லாமல், ஒய்வொழிச்சல் இல்லாமல் நாடோடியாய் அலைஞ்சு திரியிறியள்?”
"உனக்கெப்படித் தெரியும்? நேற்றுத்தானே நீ இஞ்சை வந்தனி" “என்னைப் பார்க்க வந்த ஆட்களிட்டை உங்களைப் பற்றி விசாரிச்சனான். அவையிலை சிலபேர் என்னான்லதான் உங்களுக்கிந்த நிலை வந்ததெண்டு பட்டும் படாமலும் சொல்லிச்சினம்."
“வந்ததும் வராததுமாய் என்னைப் பற்றி விசாரணையில் இறங்கிட்டியே? என்னிலை அவ்வளவு கரிசனையே?”
"ஏன் நான் விசாரிச்சால் என்னவாம்? எனக்கு உரிமையில்லையே?” "நான் சும்மாவா சுத்தித் திரியிறன். என்ர வேலையைப் பற்றி எனக்கல்லவோ தெரியும். அதிலை எனக்குக் கிடைக்கிற திருப்தி, மனநிம்மதி மற்றவைக்கெப்படித் தெரியும்? எனக்குத்தான் அது தெரியும்." "நீங்கள் நிம்மதியாய் சந்தோஷமாய் இருக்கிறியள் எண்டு என்மேல் ஆணையாய் சத்தியம் செய்யுங்கோ பார்ப்பம்"
-150- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

உணர்ச்சிமயமாய்க் கேட்கின்றாள். “கோகிலா உண்மையைச் சொல்றதுக்கு என்ன சத்தியம் வேண்டிக் கிடக்கு. உத்தியோகம், சொத்து, காசு பணம் இருந்தால்தான் வாழ்க்கை சந்தோஷமாயிருக்குமெண்டு நீங்கள் நினைக்கிறியள். நீங்கள் எதிர்பார்த்த, எதிர்பார்க்கின்றவை ஒண்டும் என்னட்டை இல்லைத்தான். ஆனால் நான் உண்மையாய் மனத்திருப்தியோடை சந்தோஷமாய்த்தான் வாழ்கிறன்." "அதெப்படி? உங்களிட்டை என்ன கிடக்கு?" அவள் ஒன்றும் புரியாமல் அவனைக் கேட்கின்றாள்.
"நான் எந்த மக்களோடை சேர்ந்து வாழ்கிறேனோ அவர்கள்தான் என்ர சொத்து. நான் அவையின்ரை சொத்து". அழுத்திக் கூறுகின்றான்.
எங்கோ குண்டு வெடிக்கும் சத்தம் கேட்கின்றது. கோகிலா பயப்பீதியடைவதை அவன் அவதானிக்கிறான். “கடலிலையிருந்து பீரங்கியடிக்கிறாங்கள் நேவிக்காரர்.”
R
ஏன்? "கரையிலையிருக்கிற மக்களுக்குப் LJuLö காட்டி கலைக்கிறதுக்குத்தான் இந்தப் பீரங்கியடி. ஆனால் ஆயிரக்கணக்கான மீன் பிடித் தொழிலாளரின் ரை வயித்திலை வரியக் கணக்காய் நெருப்புத்தான்." அவனுடைய வார்த்தைகளில் சூடேறுகின்றது. தீட்சண்யம் நிறைந்த கண்கள் கனலாகின்றன.
கோகிலாவின் சகோதரி இரண்டு தம்ளர்களில் தேநீர் கொண்டு வந்து வைத்துவிட்டு அவர்களைப் பார்த்தபடியே நிற்கின்றாள்.
அவன் அவைகளைப் பார்க்கின்றான். “தேத்தண் ணியைக் குடியுங்கோவன்." அவளுடைய சகோதரி கூறுகின்றாள்.
அவன் தேநீரை எடுக்கவில்லை. “எங்கடை செல்வம் தேத்தணிணி குடிக்கிறதில்லையெண்டு உனக்குத்தெரியாதே?”
உரிமை தொனிக்கும் குரலில் சகோதரியைக் கேட்கின்றாள் கோகிலா.
இவ்வளவு நீண்ட காலத்துக்குப் பிறகும் இந்த சின்ன விசயத்தைக்கூட ஞாபகத்திலை அவள் வைத்திருக்கிறாள் என்பதைக் கண்ட அவனுடைய உள்ளம் பூரித்துச் சிலிர்க்கின்றது. கண்கள் பனிக்கின்றன.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -151

Page 80
"நான் தீர மறந்து போனன். இதோ ஒரு நொடியிலை வாறன்" விர்ரென அவள் அவ்விடத்தை விட்டகல்கின்றாள்.
மீண்டும் வெடிகுண்டுச்சத்தம் இடிமுழுக்கமாய் தொடர்ச்சியாய் கேட்கின்றது.
"அங்கை வீடுகளை ஆயிரக்கணக்கிலை கட்டிக் குடுக்கிறாங்கள். இங்கை இருக்கிற ஆயிரக்கணக்கான வீடுகளை குண்டு வைச்சுத் தகர்க்கிறாங்கள்.” வெறுப்புடன் கூறுகின்றான்.
செல்வராஜ் எலுமிச்சம் பழரசத்தை சுவைத்துக் குடித்துக் கொண்டிருக்கின்றான். அவனது சிந்தனை எங்கோ சென்று
"செல்வம், என்னை நீங்கள் இந்த முப்பது வரியத்தில எப்பவாவது நினைச்சதுண்டா?" அவளது குரலில் அன்றிருந்த அதே குழைவு.
“கோகிலா நான் உன்னை மறந்தாலல்லவோ நினைக்கிறதுக்கு. என்றைக்கும் நீ என்னுடன்தான் இருக்கிறாய்."
கோகிலாவின் இதயம் விம்முகின்றது. கண்கள் குளமாகின்றன. அவனுடைய காலில் விழுந்து கதறி அழவேண்டும் போலிக்கிறது அவளுக்கு.
அவள் சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றாள். சேலைத்தலைப்பால் தனது கண்களைத் துடைக்கின்றாள்.
அவளது இதயத்தின் ஆழத்தில் நெடுங்காலமாக நெருடிக் கொண்டிருந்த முள்ளொன்று அகற்றப்பட்டு விட்டதென்ற உணர்வினால் ஏற்பட்ட ஆனந்தமய லயிப்பு அவளுக்கு.
“செல்வம், நீங்கள் கொஞ்ச நாளைக்கு எங்களோட வந்து இருங்கோவன்", என்ன கேட்கிறேன் என்று தெரியாமல் தன்னை மறந்த நிலையில் அவனைக் கேட்கின்றாள்.
“என்ன உங்களுடன் வருவதா?" வியப்புடன் பார்த்து அவளைக் கேட்கின்றான்.
“ஓம் செல்வம்! எங்களோட வந்திருந்தால் ஒய்வெடுத்து உடம்பைத் தேற்றலாம். வாறியளே?” கெஞ்சிக் கேட்கின்றாள் அவள்.
"சரி நான் வாறதெண்டு வைச்சுக் கொள்ளுவம். ஆனால் ஒண்டு.! "அவன் இழுக்கின்றான்.
வியப்பில் அவளது விழிகள் விரிகின்றன. “என்ன? என்னெணி டு சொல்லுங்கோ செல்வம்?" அவள் அவசரப்படுகின்றாள்.
-152- . நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

“என்ரை சொத்து?” அவன் புதிர் போடுகின்றானா? “செல்வம் நீங்கள் என்ன கதைக்கிறியள்? உங்களிட்டை எங்கை சொத்துக் கிடக்கு? நீங்கள் வெறும் தனிக்கட்டை தானே?" ஒன்றும் புரியாமல் அவள் தடுமாறிக் கேட்கின்றாள்.
"முதலே நான் சொன்னனே. மக்கள்தான் என்ரை செல்வமெண்டு. அதை அழிய விட்டிட்டு நாங்கள் என்னண்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஒடுறது?”
அவளுடைய முகம் கறுக்கிறது. ஏமாற்றம் விம் மலாக வெளிவருகின்றது.
"கோகிலா நேரத்தோடை நாங்கள் போட்டி போடுறம். மூச்சு விடக்கூட நேரமில்லை. இந்த நெருக்கடியான நேரத்திலை எங்கடை நாட்டை விட்டிட்டு நாங்கள் தப்பி ஒடுறதே? இது நடக்கக் கூடிய காரியமே?”
அவளுக்கு குழப்பமாய் இருக்கின்றது. “செல்வம், உங்களோடை சேர்ந்து வாழ நான் குடுத்து வைக்காட்டியும் எங்களோடை நீங்கள் வந்து தங்கினால் எனக்கு மனம் சாந்தியடையும். உங்கட உடம்பும் தேறும். பிறகு நீங்கள் இஞ்சை திரும்பி வந்து நல்லாய் வேலை செய்யலாம். என்ன வாறியளே செல்வம்?" மீண்டும் அவள் மன்றாடுகின்றாள்.
"இதை மாத்திரம் கேளாதை கோகிலா. என்னாலை வர முடியாது. நீ வேற ஏதாவது கேள். நான் செய்யிறன். நான் வரேலாதெண்டால் வரேலாதுதான்." அவனது வார்த்தைகளில் உறுதி, கடுகடுப்பு.
"இனி உங்களிட்டை என்னாலை எதைக் கேக்கேலும்? ஆனால் ஒண்டை மட்டும் உணருறன் செல்வம்."
“என்னத்தை உணர்கின்றாய் கோகிலா?” "என்னட்டை ஏராளம் சொத்திருக்கு. கணவன், பிள்ளைகள், சொந்தகாறர்கள் எல்லாருமிருக்கினை. ஒண்டுக்கும் குறைச்சல் இல்லை. ஆனால் எல்லாம் இருந் தென்ன? நான் ஒன்றுமேயில் லாத அநாதைபோலத்தானே இருக்கிறன். என்ரை வாழ்க்கை என்றுமே வறட்சியும் வெறுமையும் தான் செல்வம்.” மனக்கசப்பும் விரக்தியும் நிறைந்த வேதனையுடன் கூறுகின்றாள் அவள்.
"இதுக்கு என்னாலை என்ன செய்ய முடியும் கோகிலா?” "உங்களாலை ஒண்டும் செய்யேலாதுதான். அது காலம் கடந்து போச்சு. உங்களிட்டை ஒன்றுமேயில்லை. ஆனால் நீங்கள் எல்லாம் உள்ளவராக, நிம்மதியாய், சந்தோஷ10ாய் வாழிறியள் என்றதை
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -153

Page 81
இண்டைக்குத்தான் நான் உணருறன். அதுவே எனக்குப்போதும்."
அவள் மன நிறைவுடன் கூறுகின்றாள். திடீரென ஏதோ அழைப்பு வந்ததை உணர்ந்தவன் போல புறப்படுவதற்கு அவன் எழுகின்றான்.
“கோகிலா, எனக்கு நேரமாச்சு. அங்கை என்ரை ஆக்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பினை. சரி நான் போட்டு வாறன்.” கூறிக்கொண்டே அவன் புறப்படுகின்றான்.
தன்னை இழந்தவளாக கோகிலா அவன் செல்வதைப் பார்த்தபடியே நிற்கின்றாள்.
வெளியே வந்த அவனது உடலில் குழுமையான வேப்பங் காற்று தவழ்கின்றது.
அவன் வேப்பமரத்தைப் பார்க்கின்றான். வேப்ப மர நிழலில் ஏழெட்டு ஆடு மாடுகள் படுத்திருந்தபடியே அசை வெட்டிக் கொண்டிருக்கின்றன.
மறுபுறம் பார்க்கின்றான். "குழந்தைகள் சில தங்களை மறந்து, இந்த உலகையே மறந்து, ஆனந்தமயமாய் விளையாடிக் கொண்டிருக்கின்றன.
இதயச் சுமை இறங்கியவனாய் காற்றில் மிதந்து செல்லும் உணர்வுடன் தன் தோழர்களைச் சந்திப்பதற்கு அவன் வேகமாய்ச் சென்று கொண்டிருக்கின்றான்.
1994.
-154- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

வெணர்புறா
e
9y
e
அண்ணா! நான் போட்டு வாறன்.
"அணி ணா” என்ற அந்த ஜீவ நாதம் அவனது ஆத்மாவையே ஆகர்ஷித்து, அவனை ஆனந்த பரவசமாக்குகின்றது.
"அண்ணா” என்ற அவளது அழைப்பில் பொங்கிப் பிரவகிக்கின்ற பாசம், கணிரென்ற கனிவான மதுரக் குரவோசை, துடுக்குத்தனம் நிறைந்த ஜீவன் ததும்பும் விழிகள், எடுப்பான கூரிய மூக்கு, பேதைமை கலையாத குழந்தைத் தனமான முகத்தின் தேஜஸ், பார்த்தோரையும் பக்தி பரவசமாக்கும் அவளது எழில் தோற்றம் அவனுக்கு ஒருவித ஆத்மார்த்த லயிப்புணர்வை யூட்டுகின்றன.
தன்னை மறந்த மோன நிலையில் இருக்கின்றான் அவன்.
அவனுடைய தீட்சண்யம் மிக்க விழிகள் அவளுடைய குழந்தைத் தனமான முகத்தில் எதையோ தேடுகின்றன.
தனது அன்புச் சகோதரியைத் தேடுகின்றானா அவன்.?
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -155

Page 82
பெயரளவிற்கேனும் சுயநலமேயற்ற, ஜென்ம ஜென்மங்களாய்த் தொடர்ந்து கொண்டிருக்கின்ற மனிதநேய உறவின் வெளிப்பாட்டை அவளுடைய ஜீவன் ததும்பும் விழிகளில் அவன் காண்கின்றான்.
அவளுடைய தரிசனத்திற்காக அவனுடைய இதயம் எந்த நேரமும் ஏங்கித் தவித்துக் கொண்டேயிருக்கின்றது.
"அண்ணா!" அதே மதுரக்குரல், அதே ஜீவன் ததும்பும் விழிகள், அதே பால் மணம் மாறாத குழந்தைத்தனமான முகம், தூய்மை கலையாத வெள்ளை யூனிபோம், பிறை நெற்றியில் கறுத்தப் பொட்டு, இரண்டாகப் பிளந்து பின்னப்பட்டு அடர்ந்த சுருண்ட கருங்கூந்தலின் தொங்கலில் வண்ணாத்துப் பூச்சி போன்று படபடத்துத் துடிக்கின்ற சிவப்புரிபன்கள். பூரணத்துவ எழிலுடன் நிற்கின்றாள் அவள்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவர்களை விட்டுப் பிரிந்த அவனது செல்லத் தங்கை தன்முன் நிற்பதான உணர்வு அவனுக்கு.
நிலத்தில் ஆழ அகலமாக வேரூன்றி, பொருமிப் பருத்து, வான்முகட்டைப் பார்த்து ஓங்காரிப்பதாய் உயர்ந்தோங்கி கிளைத்துச் சடைத்து, குளிர் நிழல் பரப்பி, விஸ்வரூபமாய் நிற்கின்றது அந்த மரம்.
எண்ணற்ற பறவையினங்கள் அந்த மரத்தின் கிளைகளிலிருந்து பலவகையான ஆனந்த இன்னிசை ஒலிகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
வேகமாய் வந்து கொண்டிருக்கின்ற அந்த "சைக்கிள்" சந்திக்கருகாமையிலுள்ள அந்த மரத்தடிக்குச் சமீபமாக உள்ள கடையடியில் வேகம் தணிகின்றது.
"மோட்டார் சைக்கிள்" ஒன்றைப் பழுது பார்த்துக் கொண்டிருக்" கின்றான் அவன்.
"அண்ணா!" என்ற மதுரக் குரலோசை கேட்டு அவன் தலை நிமிர்கின்றது.
கரும்பச்சையாய் கிளைத்துச் சடைத்து விஸ்வரூபமாய் நிற்கின்ற அந்த மரத்தைப் பின்னணியாகக் கொண்டு தூய வெள்ளை "யூனிபோம்" அணிந்த அவனுடைய தங்கை ஒரு காலை நிலத்தில் ஊன்றியபடியே பைசிக்கிளில் ஒய்யாரமாய் நிற்கின்றாள்.
"அண்ணா! நான் போட்டு வாறன்." அவன் பெருமிதப் புன்னகையுடன் சரியெனத் தலையசைக்கின்றான். என்றுமேயில்லாதவாறு அவள் சிறிது நேரம் தயங்கி நிற்கின்றாள். அவளது விழிகளில் ஒருவித பிரிவுத் துயரின் சோக நிழல் படர்கின்றது. இதை அவன் அவதானிக்கவில்லை.
-156- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அவளுக்கு ஏன் இந்தத் தயக்கம், அவள் பிரிய மனமின்றிப் பிரிந்து செல்கின்றாள். இதுதான் அவளது இறுதிச் சந்திப்பு என்பது அவனுக்கு எப்படித் தெரியும்?
அவளது பைசிக்கிள் மெதுவாக நகர்ந்து செல்கின்றது. சிறிது தூரம் சென்றதும் அவள் தன்னுடைய தலையைத் திருப்பி பக்கவாட்டாய் சரிந்து துயரத்துடன் அவனைப் பார்த்துவிட்டு வானத்துத் தேவதையாய்ச் சென்று விட்டாள்.
அவள் போனவள் போனவளேதான். திரும்பி வரவேயில்லை. அவளுடைய புத்தகப் பை தேடுவாரற்று அவளது பாடசாலை வகுப்பறையில் கிடக்கின்றது. பைசிக்கிள் அவள் விட்ட இடத்திலேயே தன்னந்தனியாய் நிற்கின்றது.
அவனும் அவளது பெற்றோரும் அவளைத் தேடாத இடமேயில்லை! அவனுக்கு வாழ்வே இருண்டு விட்டது. ஏக்கம், எதிர்பார்ப்பு, சோகம், அனைத்தையுமே அவன் தனக்குள் புதைத்து வைத்துக் கொண்டு நடைப்பிணமாய்த் திரிகின்றான். ஏகாந்தமான அவனுடைய மனதில் எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் தன்மேல் கோபமும் பொதிந்து அழுத்துகின்ற பாரத்தோடு வாழ்கின்றான் அவன்.
என்றாவது ஒருநாள் அவள் தம்மிடம் திரும்பி வருவாள் என்ற எதிர்பார்ப்புடன்தான் அவனும் அவளது பெற்றோரும் இருக்கின்றார்கள். அவளுடைய வருகைக்காக அவர்கள் ஏங்கித் தவித்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.
கால ஓட்டத்தினால் எத்தனை மாற்றங்கள். நேரம் நத்தையாக நகர்ந்து கொண்டேயிருக்கின்றது. அவளுடைய தரிசனத்துக்காக அவனுடைய இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது.
அவள் இன்னும் வந்த பாடில்லை. நேற்றுக் காலையிலிருந்து அவளுக்காக அவனுடைய உள்ளம் ஏங்கித் துடித்துக் கொண்டேயிருக்கின்றது. அவள் ஏன் வரவில்லை? மதம் கொண்ட யானையாய், மனித உயிர்களின் மதிப்பையும் மகத்துவத்தையும் உணர்ந்தறியாத, ஆயிரமாயிரம் மானுட உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருக்கின்ற அதி உத்தமருடைய தார்மிக அரசின்
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -157

Page 83
இரும்புக் கழுகுகள் அவளுடைய கிராமத்திற்கு நேற்று அதிகாலை விஜயம் செய்திருப்பதாய் அவன் அறிந்திருந்தான்.
“ஒருவேளை பயம் காரணமாக அவளது பெற்றோர்கள் அவளைப் பாடசாலைக்கு விடவில்லையோ? அல்லது அவளுக்கு ஏதாவது.?”
"சீ என்ன துர்க்குறியான எண்ணம், இல்லை! அவளுக்கு ஒன்றுமே நடந்திருக்காது."
தனது மனதிற்கு தானே சமாதானம் கூறுகின்றான் அவன். “அவள் ஏன் நேற்று வரவில்லை?” "அவள் இண்டைக்கு நிச்சயம் வருவாள்." நேரத்தைப் பார்க்கின்றான். நேரமும் எட்டு மணிக்கு மேலாகி விட்டதே. அவளை இன்னும் காணவில்லையே? ஒரு வேளை அவள் இண்டைக்கும் வரமாட்டாளோ? இல்லை. இண்டைக்கு அவள் நிச்சயம் வருவாள். இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்பம்."
அவன் அவளுக்காக காத்திருக்கின்றான். அவனால் எதுவித வேலையும் செய்ய முடியவில்லை. நேற்றையிலிருந்து அவனுக்கு ஏராளம் வேலைகள் குவிந்து கிடக்கின்றன. அவனுக்குக் கையுமோடவில்லை, காலுமோடவில்லை.
மனதில் நிம்மதியேயில்லை. அவளது தரிசனத்திற்காக அவன் தவமிருக்கின்றான் போலும். இன்று நேற்றல்ல, நீண்ட நெடுநாள்களாகவே அவன் அவளைத் தினசரி காலையும் மாலையும் தரிசித்துக் கொண்டேயிருக்கின்றான். அவளது கணிரென்ற மதுரக் குரலைக் கேட்டனுபவித்துக் கொண்டேயிருக்கின்றான்.
இரண்டு வருடங்களுக்கு முன். அன்று காலை ஏழரை மணியிருக்கும் அவளுடைய சைக்கிள் அவனுடைய கடைக்கு அருகிலுள்ள பைசிக்கிள் திருத்தும் கடைக்கு முன்னால் நிற்கின்றது.
“ஏதோ சத்தம் கேக்குது; சைக்கிள் ஒடேலாமைக்கிடக்கு. சரியான இறுக்கமாய்க் கிடக்கு. இதை ஒருக்கா திருத்தித் தாருங்கோ"
அவள் பதட்டத்துடன் கேக்கின்றாள். சைக்கிள் திருத்துபவன் அதை உருட்டிப் பார்க்கின்றான்.
"அச்சு இறுகிப் போச்சு, கோப்பையும் உடைஞ்சு போச்சு எல்லாம்
-158- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

மாத்தி வேலை செய்யிறதென்டால் ஐம்பது ரூபாவுக்கு மேலை பிடிக்கும். என்ன கழட்டிறதோ?”
“என்னட்டை இப்ப பத்து ரூபா தான் கிடக்கு."
அவள் இழுத்துக் கூறுகின்றாள்.
"அப்ப என்னாலை ஒண்டும் செய்யேலாது."
அவள் என்ன செய்வதென்றறியாது சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படுகின்றாள்.
தனது கடை வாசலில் நின்று கொண்டிருந்த அவன் இதை அவதானிக்கின்றான்.
“என்ன மோனை நடந்தது? ஏன் சைக்கிள் திருதேல்லை?”
"திருத்துறதுக்கு ஐம்பது ரூபாவுக்கு மேலே கேக்கிறார். என்னட்டை பத்து ரூபா மட்டும் தான் கிடக்குது. நான் என்ன செய்ய?”
ஏக்கத்துடன் கூறுகின்றாள் அவள்.
அவன் ஒருவாறு அந்த பைசிக்களை ஒடக்கூடிய வகையில் சரி பண்ணிக் கொடுக்கின்றான்.
“இப்ப ஒரு மாதிரி ஒடேலும். ஆனால் இரண்டு மூன்று நாளைக்குள்ளை திருத்திப் போடவேணும். இல்லாட்டி அச்சும் முறிஞ்சு ஆளுக்கும் ஆபத்து வரக்கூடும்"
அவன் எச்சரிக்கின்றான்.
“எவ்வளவு காசு?"
"நூறு ரூபா.”
அவன் கூறுகின்றான்.
அவள் திகைக்கின்றாள்.
“என்னட்டை இதுதான் கிடக்கு. மிச்சத்தை நாளைக்குக் கொண்டு வந்து தாறன்."
தன்னிடமுள்ள பத்து ரூபாவை நீட்டுகின்றாள்.
“எனக்கு முழுக்காசும் வேணும். இப்பவே தரவேணும். இல்லாட்டி சைக்கிளை விட்டிட்டுப் போ. காசை கொண்டு வந்து தந்திட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போகலாம்."
அவளுக்குத் திகைப்பு. என்ன செய்வதன்றே தெரியவில்லை.
கண்கள் நீர்த்திரை கட்டுகின்றன.
“எனக்கு ஒரு சதமும் தரவேண்டாம். நீ சைக்கிளை எடுத்துக் கொண்டு போ மோனை."
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -59.

Page 84
அவன் சிரித்தபடியே கூறுகின்றான். அவள் அதிர்ந்து போய் அசையாது நிற்கின்றாள். "ஏன் பிள்ளை நிற்கின்றாய்? உனக்கு பள்ளிக்குடத்திற்கு நேரம் போட்டுது. நீ போட்டு வா."
மீண்டும் அவன் கூறுகின்றான். அவள் தயங்கியபடியே பைசிக்களை எடுத்து ஏறி, ஒரு காலை நிலத்தில் ஊன்றிநின்றபடியே அவனை நன்றியுணர்வுடன் பார்க்கின்றாள்.
"நீ போட்டு வா மோனை." அவன் நேசமாகக் கூறுகின்றான். "அண்ணா! நான் போட்டு வாறன்." "அண்ணா” என்ற அவளது அழைப்பிலுள்ள பாசம் அவனது இதயத்தை ஆகர்ஷிக்கின்றது.
அவனுடைய தங்கையே அவன் முன்னால் நிற்பது போன்ற உணர்வு அவனுக்கு. அவன் திக்குமுக்காடுகின்றான்.
அவள் மெதுவாக சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்து, பக்கவாட்டாகத் தலையைச் சாய்த்து ஒரு செல்லச் சிரிப்பை வீசிவிட்டு வேகமாகச் செல்கின்றாள்.
அவளது உருவம் பொட்டாகிப், புள்ளியாய் மறையும் மட்டும் அவன் அசந்துபோய் அவள் சென்று கொண்டிருக்கின்ற திசையே பார்த்தபடியே நிற்கின்றான்.
இப்படித்தான் அவனுடைய தங்கையும் அன்றொரு நாள் சென்றாள். அன்றிலிருந்து அவன் அவளுடைய தரிசனத்துக்காகக் காலையும் மாலையும் ஆவலுடன் காத்துக் கொண்டேயிருக்கின்றான்.
சைக்கிள் மணிச்சத்தம். அதைத் தொடர்ந்து "அண்ணா நான் போட்டுவாறன்” என்ற பாசக்குரலோசையும் அவளுடைய செல்லச்சிரிப்பின் ஒளிவீச்சும்.
அவனுடைய தங்கையும் இதே மாதிரித்தான் "அண்ணா நான் போட்டுவாறன்" என்று பாசமாகக் கூறிவிட்டுச் சென்றாள். அன்று, அவள் திரும்பி வராமலே வானத்துத் தேவதையாகி விட்டாளா?
இன்று, "இவளுடைய பெயரென்ன? இவள் எங்கிருந்து வருகின்றாள்"? என்று அவன் கேட்டறியவில்லை. இவளைப் பற்றிய விபரங்களை அறிய வேண்டுமென்ற அக்கறையோ ஆவலோ அவனுக்" கில்லை. அது அவனுக்கு அவசியமாகப் படவில்லை. அவனுக்கு வேண்டியது அவளுடைய பாசம் பொங்கிப் பிரவகிக்கும் அண்ணா என்ற
-160- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அழைப்பும் அந்தப் பக்கவாட்டுப் பார்வையும், செல்லச்சிரிப்பும் ஒளி வீச்சும்தான்.
அவள் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவள். அவளுக்கு மூன்று அண்ணன்மார். தகப்பன் ஒய்வுபெற்ற அரசாங்க அதிகாரி. அவருக்கு ஏராளமான நிலபுலம். பெரிய வசதியான வீடு. பணமும் தாராளமாயுண்டு. ஊரிலும் அவருக்குப் பெரும் செல்வாக்கு. அவரை எதிலும் ஒருவரும் மிஞ்சிவிட முடியாது. எல்லா விஷயங்களுக்கும் அவர் முன்னணியில்தான். அவளோ விருப்பு வெறுப்பற்ற ஒரு துறவியாய் வாழ்க்கையில் பட்டும் படாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். அவள் தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று ஒருநாளும் தன் பெற்றோரைக் கேட்டதில்லை. ஆடம்பரமற்ற எளிய, பற்றற்ற ஒரு வாழ்க்கையையே அவள் கைக்கொண்டிருந்தாள்.
அவளுடைய இதயத்தில் சோகத்தின் நிழல் படர்ந்திருக்கின்றது. சில வேளைகளில் அவள் தன்னிடையே தோன்றும் தர்மாவேச உணர்ச்சிகளுக்கு ஆளாகித் தன்னையே இழந்து விடுகின்றாள்.
"அப்பா, நேற்று நீங்கள் கூட்டத்திலை விளாசித் தள்ளினியளாமே?” அப்பொழுதுதான் வெளியேயிருந்து வந்த தந்தையைக் கேட்கின்றாள்.
“ஆர் சொன்னது மோனை? எப்படியிருந்ததாம் என்ர பேச்சு?" ஆவலுடன் கேட்கின்றார்.
“பேச்சு மிச்சம் உச்சமாய் தானிருந்ததாம் ஆனால்." “என்ன? என்ன ஆனால். ?وو "நாட்டைக் காக்கிறதுக்கு வீட்டுக்கு ஒரு பிள்ளையை விடும்படி கேட்டியளாமே?”
“ஓ, அதிலை என்ன தப்பு?" “என்னப்பா, உங்கட மூண்டு பிள்ளையளையும் வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டமெண்ட துணிவிலைதானே மற்றவையின் ரை பிள்ளையளை விடச் சொல்லி உசாராய்க் கேக்கிறியள். இது நியாயமே?” "இதிலை நியாயம் அநியாயம் எண்ட பேச்சுக்கே இடமில்லை. இது போர்க்காலச் சூழ்நிலை. வைச்சிருக்கிறவை தங்கடை பிள்ளையளிலை ஒண்டைத் தரட்டன்."
"அப்ப நான் போகட்டே அப்பா?” கேலியாகக் கேட்கிறாள். “என்ன? நீ போகப் போறியோ? என்ன விசர்க் கதை பேசிறாய்? உன்ரை நிலையென்ன? தராதரமென்ன? உன்னை நான் லண்டனுக்கு
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -61

Page 85
அனுப்பி டொக்டருக்குப் படிப்பிக்கிறதுக்குத் திட்டம் போட்டிருக்கிறன் நீ என்னடா வெண்டால்.”
"அப்பா, உங்கடை பிள்ளையளி வெளிநாட்டுக்குப் போய் பாதுகாப்பாய் இருக்கலாம். டொக்டருக்குப் படிச்சுப் பெரியாளாகலாம். மற்றவையின்ரை பிள்ளையஸ்தான் படிப்பையும் விட்டிட்டு நாட்டைக் காக்கிறதுக்குப் போக வேண்டும். அவை செத்தாலும் பாதகமில்லை. அப்படித்தானே? இதுதான் உங்கடை நியாயமோ?”
“உண்ரை அப்பன் என்ன ஒண்டுமேயில்லாத ஏக்கி போக்கியே? என்ரை சொத்தென்ன? சுதந்திரமென்ன? தராதரமென்ன? என்ரை மகள்தானே நீ? மற்றப் பிள்ளையளைப் போலை ஒண்டுமில்லாத எடுபிடியே நீ? உந்த விசர்க் கதையளைக் காதிலை போடாமல் நீ கவனமாய்ப் படி. அப்படியெண்டால்தான் டொக்டராய் வரலாம்.”
அவர் கண்டிப்புடன் கூறுகின்றார். "அப்பா நான் டொக்டருக்குப் படிக்கேல்லை. இஞ்சினியராய் வரவும் படிக்கேல்லை. ஒரு சாதாரண ரீச்சராய் வந்தால் போதும். அதுதான் என்ரை விருப்பம். இருந்து பாருங்கோவன் நீங்கள் வீணாய் மனக்கோட்டை கட்டிறியள். கடசியிலை ஏமாறத்தான் போறியள்."
அவள் உறுதியாகக் கூறுகின்றாள். அவர் அவளைப் பார்த்து திகைத்தபடியே வாயடைத்து நிற்கின்றார். “அது மாத்திரமில்லை அப்பா. எங்கடை சொத்தெல்லாம் பழிச் சொத்துக்கள். வட்டிக்கு வட்டி வாங்கிப் பெருக்கின பணம், நம்பிக்கை மோசடி செய்து, எத்தினை பேற்றை காணியளைக் கொண்டிசன் உறுதியெழுதிவிச்சு அந்தக் காணியளை அமத்தி யெடுத்தியள்” அவள் ஆத்திரத்தில் குமுறிக் கொண்டிருக்கின்றாள். வேறு எவராவது இப்படி அவருக்கு நெற்றிக்கு நேர் கூறியிருந்தால் அவர்களுடைய நிலை அதோ கதிதான். என்ன செய்வது? அவருடைய ஒரே ஒரு செல்ல மகள்தான் இப்படிக் கூறுகின்றாள். அவரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அவர் தனக்குள் தானே குமைந்து குமுறுகின்றார். “உங்கடை ஆம்பிளைப் பிள்ளையஸ் மூண்டும் வெளிநாட்டிலை என்ன செய்யினை? மூத்த மகன் பவுடர் கடத்தி பிடிபட்டுக், கம்பியெண்ணுறார். மற்ற இரண்டாவது செல்லம் லட்சக் கணக்கிலை சீட்டுப் பிடிச்சு மற்றவையின்ரை காசெல்லாத்தையும் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். கடைசி மகன் வெளிநாடுகளுக்கு ஆக்களைக் கடத்தி பிடிபட்டு. "மாமியார்” வீட்டுக்கையிருக்கிறார். ஆனால் நீங்கள்
-162- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

இஞ்சை பெரிசாய்க் கதைத்துக் கொண்டு மற்றவயின்ரை தோளிலை ஏறிச் சவாரி விடுகிறியள்."
அவளுடைய வார்த்தைகள் தீப்பிழம்புகளாய்ச் சுழன்று அவரைச் சாடுகின்றன.
"ஏன், செல்லடியிலை செத்த உங்கடை தம்பியின்ரை பிள்ளையளை என்ன செய்தியள் ? அதுகளைப் பராமரிக்கிறணெண்டு பொறுப்பெடுத்தியள். பிறகு என்ன செய்யிறியள்? பள்ளிக்கூடத்துக்குப் போகவிடாமல் மறிச்சு அதுகளின்ரை படிப்பைக் குழப்பினியள். பிறகு இரவு பகலாய் அதுகளைக் கொண்டு வீட்டிலையும் தோட்டத்திலையும் மாடு மாதிரி வேலை செய்விக்கிறியள். சரி அப்படியென்டாலும் அதுகளுக்கு ஆனவாகிலை சாப்பாடுதானும் குடுக்கிறியளே? அதுகளுக்கு வேறை சாப்பாடு, எங்களுக்கு வேறை சாப்பாடு. வரியப் பிறப்பு, தீபாவளியெண்டு நல்ல நாள் பெருநாளுக்குத்தானும் ஆனவாகிலை உடுப்புக்களை எடுத்துக் குடுக்கிறியளே?” அதுகளுக்கு மலிவான இளக்க உடுப்புக்கள், எங்களுக்கு விலை கூடிய நல்ல உடுப்புகள், இதுக்காகத்தான் நீங்கள் எனக்கு எடுத்துத் தாற உடுப்புக்களை நான் உடுக்க மறுத்துச் சண்டை பிடிக்கிறனான்."
அவளுக்கு உடலெல்லாம் எரிவது போலிருக்கின்றது. "அப்பா உங்கடை குடும்பமே பழிக் குடும்பம். அந்தப் பழிக்குடும்பத்திலை நான் ஏன் வந்து பிறந்தேனோ?”
அவளுடைய குரல் தளதளக்கின்றது. கண்களில் நீர்த்திரை. அவர் சடமாய் நிற்கின்றார். அவள் விசுக்கென அவ்விடத்தை விட்டகல்கின்றாள். "அண்ணா!" பாசக்குரல் கேட்டு அவன் தலை நிமிர்கின்றது. என்றுமேயில்லாதவாறு அவள் அன்று தனது சைக்கிளிலிருந்து இறங்கி அவனுக்குக் கிட்ட வந்து தனது பரீட்சைப் பெறுபேற்றுப் பத்திரத்தை அவனிடம் கொடுத்து விட்டு கம்பீரமாக நிற்கின்றாள்.
அவனுடைய சகோதரியும் அன்றொரு நாள் தனது பரீட்சைப் பெறுபேற்றை அவனிடம் ஒப்படைத்துவிட்டுக் கம்பீரமாக நின்ற காட்சி அவனுடைய மனத்திரையில் நிழலாடுகின்றது.
அவனுடைய மனதில் பொருமல். சிறிது நேரக் கலக்கம் அவனுக்கு. தன் நிலைக்கு வந்த அவன், அவளுடைய பெறுபேற்றைப் பார்த்ததும் வியப்படைகின்றான். முகத்தில் மலர்ச்சி.
நீர்வை பொண்னையன் சிறுகதைகள் -163

Page 86
“என்ன, எட்டுப் பாடங்களிலும்"டி" எடுத்திருக்கிறாய்! கெட்டிக்காரி. மிச்சம் சந்தோஷம். நீ இப்பிடி திறமையாய் செய்வாயெண்டு எனக்கு நல்ல நம்பிக்கையிருந்தது.”
அவள் மகிழ்ச்சிப் பெருமிதமாய் அவனைப் பார்க்கின்றாள். "என்னை எப்படிப்பட்டவள்" என்று நினைக்கிறாய், என்பது போலிருந்தது அவளது பார்வையும் நிலையும்.
“சரி இனி என்ன டொக்டருக்குத்தானே படிக்கிற உத்தேசம்?” வினாவுடன் அவளை நோக்குகின்றான். “என்னுடைய அப்பாவும் அப்பிடித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அவர் என்னை லண்டனுக்கு அனுப்பிப் படிப்பிக்கப் போகிறாராம்."
“அட, பிறகென்ன! நல்லதுதானே! பிறகு நாங்களெல்லாம் டொக்டர் அம்மாவுக்குக்கிட்ட வரேலாது."
கிண்டல் பண்ணுகின்றான் அவன். "ஆனா எனக்கு அது விருப்பமில்லை." "ஏன்? என்னத்துக்கு விருப்பமில்லை? அப்பாவாக்களை விட்டிட்டு லண்டனுக்குப் போக விருப்பமில்லையோ?”
“அதுக்கில்லை ஒரு சாதாரண ரீச்சராய் - வரத்தான் எனக்கு விருப்பம்."
"இதென்ன வேடிக்கையாயிருக்கு? லண்டனுக்குப் போய் படிக்க ஆர்தான் விரும்பமாட்டினை? அதுவும் டொக்டருக்கு படிக்க சான்ஸ் கிடைக்குதே. ”
ரீச்சர் தொழிலைத்தான் நான் விரும்புகிறன். எங்களுக்கு ஒரு ரீச்சர் படிப்பிக்கிறா. என்ன மாதிரி அருமையாய்ப் படிப்பிக்கிறா. எங்கள் எல்லாரையும் தன்ரை சொந்தப் பிள்ளையஸ் மாதிரி அன்பாய் நேசமாய் கவனிக்கிறா. அதோடை சரியான அக்கறையாய்ப் படிப்பிக்கிறா. எங்கள் எல்லோருக்கும் அவவிலை உயிர். அவ மாதிரி ரீச்சராய் வரத்தான் நான் ஆசைப்படுகிறன்."
அவன் அவளைப் பேராச்சரியமாய்ப் பார்க்கின்றான். “நல்ல எதிர்கால சந்ததியை உருவாக்கிறவை ஆசிரியர்மார்தானே?” "ஆசிரியத் தொழில் புனிதமானது. அது மாத்திரமே? இந்த டொக்டர்மார் எல்லாரையும் படிப்பிச்சு உருவாக்கிறது ஆர்? அது ஆசிரியர்மார்தானே?”
-164- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

"அடிசக் கையெண் டானாம், அப்பிடி வா வழிக்கு. எங்கடை சனத்திலை எத்தனை பேர் உன்னைப் போல நினைக்கினை?” அவன் அவளை வாஞ்சையுடன் பார்த்துக் கேட்கின்றான். "இந்த உலகத்தை ஆதிசேடன் என்ற ஒரு பாம்புதன்ரை தலையிலை சுமந்து கொண்டிருக்கு எண்டு ஒரு கர்ணபரம்பரைக் கதையுண்டு. அதைப் போலத்தான் டொக்டர்மார் தலையிலைதான் உலகம் இருக்கெண்ட எண்ணம் எங்கடை ஆக்களுக்கு."
அவன் வியப்புடன் அவளைப் பார்த்தபடியே நிற்கின்றான். "ஒரு குழந்தையின்ரை முதலாவது பிறந்ததினக் கொண்டாட்டத்திலண்டு அல்லது அந்தக் குழந்தைக்கு ஏடுதுவக்கிற அண்டைக்கே அந்தப் பிள்ளையை டொக்டருக்குப் படிப்பிக்கிறதுக்குத் திட்டம் போடுவினை எங்கடை ஆக்கள். அதை அடிக்கடி எல்லோருக்கும் சொல்லிப் பெருமைப்படுவினை. இந்த எண்ணத்தை அதாவது இந்த மனப்பான்மை" யைத் தகர்த்தெறிந்தால்தான் எங்கடை சமூகம் முன்னேறும்."
கொதிப்புடன் கூறுகின்றாள் அவள். "ஏன் அப்படிச் சொல்லுகிறாய்.?” ஒன்றும் புரியாமலே அவன் கேட்கின்றான். "இவையள் எல்லாம் ஆற்றை காசிலை படிக்கினை." “அவை தங்கடை காசிலைதானே படிக்கினை." "மணி ணாங் கட்டி. நாங்கள் எல்லோரும் சனங்களின் ரை வரிப்பணத்திலதான் படிக்கிறம். இது எத்தனை பேருக்குத் தெரியும்?"
"அதுக்கென்ன?” “அவை படிக்கட்டும். நல்லாய்ப்படிக்கட்டும். அது நாட்டுக்கும் நல்லதுதான். ஆனால் இந்த டொக்டர்மார் இப்ப என்ன செய்யினை?”
"ஏன் என்ன செய்யினை?” “இந்தப் பயங்கரமான யுத்த காலத்திலை சனங்கள் எல்லாம் செல்லடியிலையும் குண்டு வீச்சிலையும் காயப்பட்டு செத்துக் கொண்டிருக்குது. ஆனால் சனங்களின்ரை வரிப்பணத்திலை படிச்ச டொக்டர்மாரிலை கனபேர் என்ன செய்தவை? கொஞ்சப் பேரைத் தவிர மற்றெல்லா டொக்டர்மாரும் இஞ்சை ஆயிரக்கணக்கில் மக்கள் செத்துக் கொண்டிருக்கிற நேரத்திலை வெளிநாடுகளுக்கு ஒடித் துலைஞ்சிட்டினை அவையளாலை எங்களுக்கும் எங்கடை நாட்டுக்கும் என்ன பிரயோசனம். ஆனால் இஞ்சை கொஞ்ச டொக்டர்மார் நிண்டு சரியான கஷ்டங்களுக்கையும் சனங்களுக்கு சேவை செய்து எத்தனையோ பேற்றை உயிரைக்
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -165

Page 87
காப்பாத்தினை. உண்மையிலை இந்த டொக்டர்மார்தான் மனிதத் தெய்வங்கள்."
"அதுக்கு எங்களாலை என்ன செய்யேலும்?" இயாலாமையை வெளியிடுகின்றன அவனுடைய வார்த்தைகள். "அதனாலைதான் நான் சொல்லிறன், எங்கடை ஆக்களின்ரை இந்த மனப்பான்மையை உடைத்தெறிய வேண்டுமெண்டு.”
அவள் கொதித்துக் குமுறிக் கொண்டு கூறுகின்றாள். “பிள்ளை உனக்கு வயதுக்கு மிஞ்சின புத்தி. உண்ரை பேச்சும் அப்பிடித்தானிருக்கு. ஆனால் எனக்கு உண்ரை கதையளைக் கேக்கேக்கை ஏதோ ஒரு வித பயமாய்க் கிடக்குமோனை."
"இதிலை பயப்பிட என்ன கிடக்கு? எங்கடை ஆக்களின் ரை மனப்பான்மையைப் பற்றித்தானே நான் சொன்னன். சரி இப்ப என்ன வாறது வரட்டும் பாப்பம்."
சவால் விடுவதுபோல அவள் கூறுகின்றாள். ஏதோ நினைத்தவள் போல அவள் திடீரெனத் தனது சைக்கிளை எடுக்கின்றாள்.
"அண்ணா! நான் போட்டு வாறன்." "சரி ரீச்சர் போட்டு வாங்கோ!" குறும்புத்தனமாகச் சிரித்தபடியே அவன் கூறுகின்றான். அவள் கலகலவெனச் சிரித்தபடியே பைசிக்களில் ஏறுகின்றாள்.
அவர்கள் இருவருக்கும் என்றுமேயில்லாத பூரிப்பு இன்று! திடீரென பயங்கர இரைச்சல், "அது என்ன இரைச்சல்?" இருவரும் உஷாரடைந்து அவதானிக்கின்றனர் இரும்புக் கழுகுகளின் பயங்கர இரைச்சல் அந்த இரைச்சல் எங்கோ தூரத்தில் கேட்கின்றது. அவள் புறப்படுவதற்கு எத்தனிக்கிறாள். "பொறு மோனை. கொஞ்சம் பொறுத்துப் பார்த்துப் போகலாம்." சிறிது நேரத்தில் அந்த இரைச்சல் சத்தம் அழிந்து மறைகின்றது. "அண்ணா! நான் போட்டு வாறன்" தயங்கியபடியே அவள் கூறுகிறாள்.
“சரி மோனை அவதானமாய்ப் போட்டு வா."
அவன் மனமின்றி விடை கொடுக்கின்றான்.
-166- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அவள் செல்ல மனமின்றி செல்கின்றாள். சிறிது தூரம் சென்ற அவள் திரும்பிப் பார்த்து, தனது தலையைச் சரித்து அதே பக்கவாட்டுப் பார்வையையும் சிரிப்பொலி வீச்சையும் சிந்தி விட்டுச் சென்றுவிட்டாள்.
அவனுடைய தங்கையும் ஒருநாள் "அண்ணா நான் போட்டு வாறன்" என்று கூறி, இதே பக்கவாட்டுப் பார்வையையும், அதே சிரிப்பொலி வீச்சையும் சிந்திவிட்டுத்தான் சென்றாள். அவள் இன்று வரை திரும்பி வரவேயில்லை.
"அவள் களத்தில் பலியானாள்” என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அதை நம்பவில்லை. ஏனென்றால் அவளுடைய உடலை அவர்கள் காணவில்லை.
என்றாவது ஒருநாள் அவள் திரும்பி வருவாள் என்று அவளுடைய பெற்றோர்கள் எதிர்பார்த்துக் கொண்டுதானிருக்கின்றார்கள்.
ஆனால் அவளுடைய அண்ணன். அவளுக்குப் பதிலாக மற்றொரு தங்கை கிடைத்துவிட்டாள் அவனுக்கு. அவளுடைய வருகைக்குப்பின் அவனது வாழ்வில் மீண்டும் வசந்தம் வந்தது.
அதே தங்கையின் தரிசனத்திற்காகத்தான் அவனுடைய இதயம் இப்போ ஏங்கித்தவித்துக்கொண்டிருக்கின்றது.
அவனுடைய உள்ளத்தில் ஒருவித பதட்டம். நேற்றையிலிருந்தே இந்தப் பதட்டம் அவனை ஆட்டிப் படைத்துக் கொண்டேயிருக்கின்றது. நேற்றைய அந்தக் கனத்த இரவில், அந்த இரவின் மெளனச் சுமை அவனை அழுத்திக் கொண்டேயிருக்கின்றது.
அந்த ஆத்ம வேதனையை அவனால் தாங்கிக்கொள்ள முடியாமலேயிருக்கின்றது.
நேரம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவனுடைய கண்களில் அந்த மரம் தட்டுப்படுகின்றது.
அன்று கிளைத்துச் சடைத்து விஸ்வரூபமாய் நின்ற அந்த மரம் இன்று பட்டுப்போய் கொப்புகளும் கிளைகளும் காய்ந்து முறிந்து சிதைந்து மொட்டை மரமாய் நிற்கின்றது. தப்பியொட்டியிருந்த பட்டுப் போன ஒரேயொரு உச்சாணிக் கொப்பின் தலைப்பில் பறவையொன்று தன்னந் தனியானாயிருந்து சோகக் குரலெழுப்பிக் கொண்டிருக்கின்றது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் 67} - به--

Page 88
அந்த பட்ட மரத்தின் அடியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற மண் மூட்டைகள் கிழிந்து சிதைந்து தேடுவாரற்றுக் கிடக்கின்றன.
நேரம் எட்டரை மணிக்கு மேலாகிவிட்டது. அவள் இன்னும் வரவில்லை. பட்டுப் போன மரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனுடைய மனதில் சோகச் சுமை.
அவனுடைய இதயம் அவளுடைய தரிசனத்திற்காகத் தவித்துக் கொண்டிருக்கின்றது.
அவனுடைய நண்பன் வருகின்றான். அவனுடைய கையில் அன்றைய செய்திப்பத்திரிகை. அவனுடைய முகத்திலும் கவலை படர்ந்திருக்கின்றது. அவன் பத்திரிகையை அவனிடம் தயங்கியபடியே கொடுக்கின்றான்.
நண்பனிடமிருந்து வாங்கிய பத்திரிகையை அவன் வேண்டா வெறுப்புடன் திறக்கின்றான்.
பத்திரிகையின் முன்பக்க வலதுபுற கீழ் மூலையில் தடித்த கறுப்புக் கோடுகளால் கட்டப்பட்ட பெட்டிக்குள் அவளுடைய படம்!
அவனுக்குப் பேரதிர்ச்சி! அவன் அவளுடைய வீட்டிற்கு விரைகின்றான். அங்கு ஊரே கூடி நிற்கின்றது. எல்லோருடைய முகங்களிலும் சோகம்! வெறுப்பு கோபாவேசம்!
ஐந்து பிள்ளைகளின் உடல்கள் வரிசையாக வைக்கப்பட்டிருக்" கின்றன.
அவளுடைய அந்தக் குழந்தைத்தனமான முகம் முதலில் அவனுடைய கண்களில்படுகின்றது.
"ஐயோ! என்ரை தங்கச்சி உனக்கும் இந்த முடிவா?" அவனுடைய இதயம் ஒலமிடுகின்றது.
வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்ற அந்த ஐந்து பிள்ளைகளின் உடல்களைப் பார்த்தபடியே நிற்கின்றான் அவன்.
அவர்களுடைய முகங்களை மாத்திரம்தான் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
அந்தக் குழந்தைத் தனமான பிஞ்சு முகங்களைப் பார்த்த படியே நிற்கின்றான்.
நாங்கள் வாழ்வதற்காகவே பிறந்தோம். ஆனால் இது காலவரை நாங்கள் வாழ்வின் துன்ப துயரங்களைத் தவிர வேறு எதைத்தான்
-168- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அனுபவித்தோம்? வாழ்வின் வசந்த காலத்தை எட்டிப்பிடிக்க ஏங்கித் துடித்துக் கொண்டிருந்த எங்கள் வாழ்வின் எதிர்கால இன்பங்கள் அனைத்தும் தட்டிப்பறிக்கப்பட்டு, நாம் வஞ்சிக்கப்பட்டு எமது வாழ்வே அரைகுறையில் அழிக்கப்பட்டு விட்டதே! என்று அந்தக் குழந்தைத் தனமான பிஞ்சு முகங்கள் கூறுவது போல அவனுக்குத் தோன்றுகின்றது. "ஐயோ! இந்தக் கொலைகளுக்கும் அழிப்புகளுக்கும் முடிவே" யில்லையா?" அவனுடைய உள்ளம் குமுறுகின்றது.
“நண்பனே, போர் என்ற போர்வையில் இன்று மக்களுடைய சொத்துக்கள் பல தரப்பினாலும் அபகரிக்கப்படுவதுடன் அழிக்கப்படுகின்றன. அதுமாத்திரமல்ல. ஆயிரமாயிரமான மக்கள் படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்."
அவனுடைய நண்பன் கூறியது அவனுடைய மனத்தில் தோன்றுகின்றது.
"இந்த அழிப்புகளும் கொடூரக் கொலைகளும் எப்பொழுதுதான் முடிவுக்கு வரும்?” என்று அவன் கேட்கின்றான்.
“நண்பா, எமது நாட்டில் இன்று நரபலி எடுக்கிற நவீன நரகாசுரர்கள் உருவாகிவிட்டார்கள். இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளை என்று அழித் தொழிக்கிறோமோ அன்று தான் இந்தப் பலியெடுப்பு முடிவடையும்."
அவனுடைய நண்பன் கூறியது அவனுடைய மனத்திரையில் ஒடுகின்றது.
"நேரமாகின்றது, ஏன் சுணங்குவான், தூக்குவம்.” அந்த ஊர் பெரியவரின் வார்த்தைகள் அவனைச் சுய உணர்விற்குக் கொண்டு வருகின்றன.
ஊரே அழுது புலம்பி ஒலமிடுகின்றது! இந்த மரண ஒலம் வான் முகில்களைப் பிளக்கின்றன. சோக அலைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இறுதி யாத்திரை ஆரம்பம்.
"பாழாய்ப் போவாங்கள்! பூவெண்டும் பிஞ்செண்டும் பாராமல் எல்லாத்தையும் கூட்டி அள்ளிக்கொண்டு போட்டாங்களே! இந்த பாடேலை போவாங்கள் எப்பதான் அழியப் போறாங்களோ?”
ஒரு முதியவர் குமுறிக் கொண்டே கூறுகின்றார்.
"இந்த நரபலி எடுக்கிற யுத்த வெறிக்கு நாங்கள் முடிவு கட்டத்தான் போறம். இது நிச்சயம் நடக்கும். கெதியாய் நடக்கும்."
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -169

Page 89
அவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டிய அவன் உறுதியான ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவ்விடத்தை விட்டகல்கின்றான்.
சென்று கொண்டிருக்கின்ற அவன் ஏக சித்தனாய் வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான்.
நீலவானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்ற இரண்டு வெண்புறாக்கள் தென் திசையை நோக்கிச் சென்று மறைகின்றன.
வானத்துத் தேவதைகளாகி விட்ட செல்லச் சிரிப்பொலி வீச்சைச் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற இரண்டு குழந்தைத்தனமான எழில் முகங்கள் அவன் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
"அண்ணா!" என்ற ஜீவநாதம் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றது.
-1996
★
-70- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

வேட்கை
செ ந்தழல் சூரியன் சாய்ந்து வீழ்கின்றான். வானஜோதி தயங்கி அணைகின்றது. திகைத்த மாலை மயங்கித் துவழிகின்றது. செக்கர் வானம் கருகி இருள்கின்றது. காலையும், மாலையும் வானத்தில் தோன்றும் விந்தைகளையும், வர்ண ஜாலங்களையும் பார்த்து வியப்புற்று, அதில் மயங்கித் தன்னைத் தானேயிழந்து திகைப்புற்று நிற்கின்ற அவன் இன்று ஏனோ ஒன்றையும் பொருட்படுத்தவில்லை?
இன்று அவன், அவன் நிலையிலில்லை. அவனுக்கு ஒருவித அவசரம், வேகம். ஏன் இன்று அவனுக்கு இந்த உத்வேகம்? நீண்ட நாட்களாகப் பார்க்காத தன் அன்புத் தங்கையைப் பார்த்துவிட வேண்டுமென்ற அங்கலாய்ப்பு அவனுக்கு.
விண்ணில் தொங்கிக் கொண்டிருந்த முன்நிலவு எப்பொழுதோ மறைந்து விட்டது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -171

Page 90
இருளின் ஆக்கிரமிப்புக்குள் உலகம். இருள் திரையைப் பிளந்து கொண்டு ஆழக் கிணற்றின் துலாக்கொடியாய் நீண்டு நெடியதாய் செல்கின்றது கோப்பாய் கைதடி
மலை முகட்டிலிருந்து இருளில் இருளாய் இறங்கி வருகின்ற ராட்சத உருவாய், கையை வீசி, காலை எறிந்து, எட்டக் கவடு வைத்து வீச்சாய் நடந்து கொண்டிருக்கின்றான் அவன்.
சுடலைக் குருவியொன்று அலறியபடியே திடீரென அவனுடைய முகத்தில் உராய்வது போல வேகமாய்ப் பறந்து செல்கின்றது.
அவனுக்கு கணநேரத் திகைப்பு. நடையில் தளர்ச்சி. கோப்பாய்ப் பாலத்தை அவன் நெருங்கிக் கொண்டிருக்கின்ற பொழுது, வடமேற்கு மூலையிலிருக்கின்ற தன்னுடைய கிராமத்தை ஆவலுடன் பார்க்கின்றான்.
பரந்து விரிந்து விசாலித்திருக்கின்ற இருள் வெளியின் அடிவானத் தொங்கலில் சயனித்திருக்கின்ற அவனது கிராமத்தில் பொட்டுப் பொட்டாய் வெளிச்சங்கள் மங்கலாய் மின்னிக் கொண்டிருக்கின்றன.
எண்ணையோ, தண்ணியோ கண்டறியாத பரட்டைத் தலைமயிர் காற்றில் பறக்கின்றது. செம்பாட்டு நிறக் கந்தல் சட்டை 'சின்னண்ணை எப்ப வருவான்? திண்ணிறத்துக்கு என்ன கொண்டருவான்? என்று எதிர்பார்த்து, சடை விரித்துக் கருநிழல் பரப்பி நிற்கின்ற பூவரச மரத்தின் கீழ் எந்த நேரமும் ஆவலுடன் பார்த்துக் கொண்டு நிற்கின்ற அவனுடைய அன்புத் தங்கை தேவியின் மங்கல் தோற்றம் அவன் மனத்திரையில் நிழலாடுகின்றது.
தேவி பெயரளவில் சீதேவிதான். ஆனால் அவனுடைய வீட்டில் மூதேவிதான் நிரந்தரமாகக் குடியிருக்கின்றாள்.
தேவியைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆவல் அலை அவனுடைய இதயத்தில் முட்டிமோதிக் கொண்டிருக்கின்றது.
அவனுடைய நடையில் உத்வேகம். மதர்த்து, மதாளித்து, மூச்சாய் கெம்பி எழும்பி வளர்கின்ற புது அடி மட்டத்துக் கதலி வாழைபோல இந்த ஆறு மாதங்களுக்கிடையில் செல்லக்கண்டனுடைய உடல் முறுகித் திரட்சி கண்டது வியப்புத்தான். விமானக் குண்டுத்தாக்குதல்கள், ஷெல்லடிகள், துப்பாக்கிச் சூடுகள் மத்தியிலும் அவனுடைய தோழர்கள் தடுத்து நிறுத்தியும் அவர்களுடைய
-172- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

வற்புறுத்தல்களையும் கேட்காமல், தனக்கு நேரவிருக்கும் உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல், களத்தில் காயமுற்ற பல சகதோழர்களை, இயந்திர மனிதனைப் போல அவன் லாவகமாய்த் தூக்கிச் சுமந்து வந்து காப்பாற்றியுள்ளான். அவனுடைய மனத்துணிவையும், உடல் வலிமையையும் வீரதீரத்தையும் என்னவென்று சொல்வது!
இன்று அவன் தன்னுடைய அன்புத் தங்கையைப் பார்க்க வேண்டுமென்ற பேராவலுடன் நடந்து கொண்டிருக்கிறான்.
கோப்பாய்ப் பாலத்தை தாண்டி அவன், றோட்டிற்கு அருகே தெற்குப் புறமாக உள்ள மயானத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றான். அரைகுறையாய் எரிந்து கொண்டிருக்கின்ற பிரேதத்திலிருந்து எழுகின்ற நிணநெடி சோழக் காற்றுடன் கலந்து வந்து அவனுடைய நாசியைத் துளைத்து ஒருவித அருவருப்பையூட்டுகின்றது.
அவனுக்கு வயிற்றைக் குமட்டுகின்றது. அவன் வெறுப்புடன் காறித் துப்பிவிட்டு துரித கதியில் நடந்து கொண்டிருக்கின்றான்.
றோட்டின் இரு மருங்கிலும் இடையிடையே சடைவிரிகோலமாய் தியான நிலையில் நிற்கின்றன உப்புக் காற்றில் அடிபட்டு முற்றிக் கிழடு தட்டிப்போன பாரிய பூவரச மரங்கள்.
அவனுடைய வீட்டுப் படலையிலும் சடை விரித்துக் கருநிழல் பரப்பி நிற்கின்றது ஒரு முற்றிப் பருத்த பூவரசு மரம். சிறுவனாயிருந்த பொழுது அவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பூவரசில் ஏறிக் குதித்து விளையாடியிருக்கின்றான். அது மாத்திரமல்ல. அந்தப் பூவரச மரத்தின் இலையைப் பிடுங்கிக் குழல் சுருட்டி "பீப்பீ” ஊதித் தனது தங்கைக்கு விளையாட்டுக் காட்டியிருக்கின்றான். அத்துடன் பூவரச மரத்தின் அடர்ந்த கரு நிழலில் மணித்தியாலக் கணக்காக எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பான்.
மதிய வேளையில் வெயில் வெக்கை தாங்க முடியாமல் அன்னமுத்” தாச்சி காற்றோட்டமாய் நிற்கின்ற அந்தப் பூவரச மரத்தடியில் சாய்ந்து, தனது வற்றி மரத்துப்போன கால்களை நீட்டி ஆசுவாசமாயிருக்கின்ற வேளைகளில் செல்லக்கண்டன் தனது தங்கை தேவியைத் தன்னுடைய தோளில் இருத்திக் கொண்டு அந்தப் பூவரச மரத்தைச் சுற்றிச் சுற்றித் துள்ளித் துள்ளி சாமியாடி ஒடிக் கொண்டிருக்க, அவள் கெக்கட்டம் விட்டுச் சிரிப்பொலியெழுப்ப, அன்னமுத்தாச்சி அதைப் பார்த்து லயித்துச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருப்பாள். அவனுக்கு அளவிலா ஆனந்தம்.
தங்கை தேவிக்கு மூன்று வயதாயிருக்கும் பொழுது தாயை அவர்கள் இழந்து விட்டார்கள். அண்ணன் ஊர் உலாத்தல்காரன். அப்பன்
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -173

Page 91
வெறிக்குட்டி. தங்கை தேவிக்கு செல்லக்கண்டன்தான் சகலதும். அவளுக்குச் சாப்பாடு தீத்துவது, அவளை நித்திரையாக்குவது, குளிக்க வார்ப்பது எல்லாம் அவனுடைய பொறுப்புத்தான்.
இடுப்பிலிருந்து வழுகி விழுகின்ற அரைக் கால் சட்டையை வாழைநாரால் இறுக்கிக் கட்டிக்கொண்டு, எந்த நேரமும் கடை வாயால் வாணிர் ஒழுகிக் கொண்டேயிருக்கும் அவனுடைய மூக்கிலிருந்து வழிந்து கொண்டேயிருக்கின்ற சளியை அவன் அடிக்கடி உள்ளே உறிஞ்சிக் கொண்டேயிருப்பான். அல்லது தனது புறங்கையால் அதைத் தேய்த்து தனது காற்சட்டையில் துடைத்து விடுவான்.
"தங்கச்சி” என்று அவனுக்குக் கூப்பிட வராது. "அங்கச்சி" என்பான். "திவசம்” என்பதை “டிவசம்” என்றுதான் சொல்வான்.
செல்லக்கண்டன் எந்நேரமும் தேவியைச் சுமந்து கொண்டே திரிவான். அவர்களுடைய பகுதியில் நடக்கின்ற கல்யாண வீடுகள், திவச வீடுகள், கோயில் பூசைகள் எல்லாவற்றிற்கும் செல்லக்கண்டன் தேவியைத் தனது இடுப்பில் காவிச்சென்று அங்கு கிடைக்கின்ற சோற்றைத் தேவிக்குத் தீத்திவிட்டுத் தானும் உண்பான். இந்த வேளைகளில்தான் அவர்களுடைய வயிறுகள் ஒரளவு நிறையும். அவன் யாருக்காவது தொட்டாட்டு வேலை செய்தால் கூலியாக அவனுக்குக் கிடைக்கின்ற சாப்பாட்டைக் கொண்டு வந்து முதலில் தேவிக்குத் தீத்திவிட்டுப் பின்னர் எஞ்சியதைத் தான் உண்பான்.
எந்த நேரமும் பசி செல்லக்கண்டனுடைய வயிற்றைப் பிடுங்கித் தின்று கொண்டேயிருக்கும். ஆனால் அவனுக்கு எல்லாமே அவனுடைய அன்புத் தங்கை தேவிதான்.
“சின்னண்ணை, சின்னண்ணை" என்று அவனை வாஞ்சையுடன் கூறிக்கொண்டு நிழல்போல ஒட்டிக் கொண்டேயிருப்பாள் தேவி. அவன் கொண்டு வருகின்ற சாப்பாட்டைத் தனது பிஞ்சு விரல்களால் அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டே அவனுக்கும் தீத்துவாள்.
அவன் படுத்திருந்து கொண்டு தனது கண்களை மூடி நித்திரை செய்வதுபோல பாவனை செய்ய, அவனுடைய கண்களைத் தனது தளிர் விரல்களால் திறக்க முயல்வாள். அவன் கண்கள் திறக்காவிட்டால் அவள் அவனுடைய நெஞ்சில் ஏறியிருந்து கொண்டு தனது பிஞ்சுக் கைகளைக் குவித்து அவனுடைய மார்பில் பொத்துப் பொத்தென்று குத்துவாள். அதற்கும் அவன் கண் திறக்காவிட்டால் அவனுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்து அங்கும் இங்கும் தலையை ஆட்டுவாள். இதில் எழுகின்ற சுகானுபவத்தை அவன் தன் கணிகளை மூடியபடி அனுபவித்துக் கொண்டேயிருப்பான்.
-174- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

செல்லக் கண் டன் தன் அணி புத் தங்கையை ஒருநாளாவது அதட்டியதோ, அடித்ததோ இல்லை. தேவியை வெறியில் அப்பன் அடிக்கும் பொழுது அதைத் தடுக்க முயல்வான். அல்லது அவரை ஏசிச் சண்டை பிடிப்பான். அவ்வேளைகளில் அவனுக்குச் சரியான அடிவிழும். தேவிக்குச் செல்லம் கொடுப்பதாக செல்லக் கண்டனைத் தகப்பன் ஏசுவார்.
அவனுடைய தந்தை சண்முகம் வீட்டில் நிற்கின்ற வேளைகளில், தொட்டதற்கெல்லாம் செல்லக்கண்டனுக்கு ஏச்சும், பேச்சும், அடியும், உதையுந்தான்.
ஒருநாள் செல்லக்கண்டன் திடீரெனக் காணாமல் போய்விட்டான். அவன் சென்ற நாளிலிருந்து தேவிக்குச் சரியான உணவோ, உறக்கமோ இல்லை. “சின்னணி ணை, சின்னணிணை” என்று எந்தநேரமும் அழுது கொண்டேயிருப்பாள். சகலத்தையும் இழந்து விட்டதான உணர்வு அவளுக்கு. அன்னமுத்தாச்சிதான் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றி ஆதரவாக இருந்து வருகின்றாள்.
தனது தங்கையை விட்டுப் பிரிந்த நாள் தொட்டு செல்லக் கண்டனுக்கும் வேதனை தாங்க முடியவில்லை. மன நிம்மதியுமில்லை. அவனுடைய உள்ளம் துயரத்தில் தவித்துக் கொண்டேயிருந்தது.
ஆறு மாதங்களாக செல்லக்கண்டனுக்கு அஞ்ஞானவாசம். மூன்று மாதங்கள் அவன் களத்தில். அவனுடைய உள்ளத்தில் தனது சகோதரியைப் பார்க்க வேண்டும். அவளுக்கு ஆதரவளித்து அவளை ஆளாக்கிவிட வேண்டுமென்ற உணர்வு மேலோங்கவும், பல பிரிவுகள் ஒன்றுக்கொன்று முனைப்பாக்கிக் கொண்டிருக்கவும் அவன் ஒருநாள் அங்கிருந்தும் காணாமல் போய்விட்டான். ஊருக்குத் திரும்பினால் தான் "மாட்டுப்படுவேன்” என்ற பயம் அவனுக்கு. அவன் ஒரு சாப்பாட்டுக் கடையில் வேலைக்குச் சேர்ந்தான். சம்பளம் எவ்வளவென்று பேசவில்லை. அவனுடைய வேலையைப் பார்த்துதான் சம்பளம் முடிவெடுக்கப்படும். ஆனால் மூன்று நேரச் சாப்பாடு, கைச்செலவுக்கு சிறிய தொகை சில்லறை.
இன்று தனது தங்கையைப் பார்க்க வேண்டுமென்ற பேராவலை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை, எப்படியும் தங்கையைப் பார்த்து விட வேண்டுமென்ற ஒரு வித வெறியில் அவன் சென்று கொண்டிருக்கின்றான்.
அந்தப் பெரிய கல்லூரியைத் தாண்டித்தான் அவனுடைய வீடு செல்ல வேண்டும்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -175.

Page 92
அவன் தூரத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது கல்லூரிக் கட்டடத்தில் மின்சார வெளிச்சம் தெரிகின்றது.
இந்தக் காலத்திலை என்னண்டு லைற் எரியேலும்?" அவனுக்கு ஆச்சரியம். இண்டைக்கு இஞ்சை என்ன விசேடம்? அவனுடைய உள்ளத்தில் கேள்விக்குறி. கல்லூரியை அவன் அண்மித்தும் "ஜெனறேட்டரின்" இரைச்சல் கேட்கின்றது.
பல வர்ணங்கள் கலந்த கொடிகள் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன.
கல்லூரி மண்டபத்திற்குள் ஆரவாரம். என்ன நடக்கின்றது என்று அறியும் ஆவலுடன் அவன் உள்ளே செல்ல முயல்கின்றான்.
பாதுகாப்புக் காரணமாக மண்டப வாசல் மூடப்பட்டிருக்கின்றது. ஜன்னலால் அவன் எட்டிப் பார்க்கின்றான். மக்களால் நிரம்பி வழிகின்றது மண்டபம். அவனுடைய கண்கள் மண்டபத்தைத் துளாவுகின்றன. முன்வரிசையில். "அப்பா !” அவனுக்கு ஆச்சரியம். இடுப்பில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சால் வையால் போர்த்தியிருக்கின்றார்.
"அம்மா செத்த அண்டைக்கும் அப்பா இப்பிடித்தான் வெள்ளை வேட்டி கட்டியிருந்தவர். ஆனா இண்டைக்கு?”
“தேவி எங்கே?" ஆவலுடன் அன்புத் தங்கை தேவியைத் தேடி அலைகின்றன அவனது விழிகள்.
"அட, அங்கையிருக்கிறாள்!" முன்வரிசையில் பெண்கள் மத்தியில் இருக்கின்ற தேவியைக் கண்டு விட்டன அவனது விழிகள்.
“தேவிக்குப் பக்கத்தில் எங்கடை அன்னமுத்தாச்சியுமிருக்கிறா. அவவும் இருப்ப எண்டு எனக்கு நல்லாத் தெரியும்."
-76- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

அவனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
"சிவப்பு நிறத்திலை புதுச்சட்டை! தலையும் இழுத்து நல்லாய் பின்னிக் கட்டியிருக்கிறாள் தேவி”?
“எவ்வளவு லட்சணமாயிருக்கிறாள் என்ரை தங்கைச்சி” அவனுக்கு பேரானந்தம். உடலில் புல்லரிப்பு! இப்பவே தேவியைத் தூக்கித் தன் தோளில் வைத்துக் கொண்டு பூவரச மரத்தைச் சுற்றி சாமியாடி ஒட வேண்டும், அவள் கெக்கட்டம் விட்டுச் சிரிப்பதைக் கேட்க வேண்டும் போலிருக்கின்றது அவனுக்கு.
"தங்கச்சி!" தன்னை மறந்து, தன் மூச்சை அடக்கி உரத்துக் கத்துகின்றான் அவன். அவனுடைய வஜ்ரக் குரல் மணி டபத்திலுள்ள ஆரவாரத்தைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கின்றது.
"தங்கச்சி! தேவி!" மீண்டும் உரத்துக் கத்துகின்றான். 'சின்னண்ணையின்ரை குரல்போலையிருக்கு! தேவிக்குப் பேராச்சரியம். “தேவி! தங்கச்சி.!" அவனுடைய எக்காளக் குரல் மணி டபத்தில் ஒலித்து எதிரொலிக்கின்றது.
செல்லக்கண்டன்ரை குரலாய்க் கிடக்கு போலை! அன்னமுத்தாச்சிக்கு வியப்பு. இருக்காது. அவன் எப்போதோ செத்துப் போனானே. அது வேறை ஆரோ சத்தம் போடுறான் போலை கிடக்கு.
அன்னமுத்தாச்சி அமைதி கொள்கின்றா. சபையில் பரபரப்பு. தொலைவில் நிற்கின்ற இவன் இரண்டு இரும்புக் கரங்களின் உடும்புப் பிடியில்.
கறுப்பு உடுப்பு அணிந்திருந்த இருவர் அவனை மடக்கிப் பிடித்து, இழுத்துச் செல்கின்றனர். இதை யாரும் கண்டதாக இல்லை. அல்லது.
சபையில் அமைதி.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -77.

Page 93
அவர்கள் இருவரும் அவனை மணி டபத்திற்குப் பின்புறம் இருட்டிற்குள் இழுத்துச் செல்கின்றனர்.
கல்லூரிக்குப் பின்னாலுள்ள வயல் வெளிக்கு அப்பாலிருக்கின்ற மயானத்தில் எரிந்து கொண்டிருக்கின்ற பிணத்தின் சிதையிலிருந்து தீ ஜுவாலைகள் காற்றில் துடித்துக் கொண்டிருக்கின்றன.
அவனை இழுத்துச் செல்பவர்களுடன் இடையில் மேலும் இரு கறுப்பு உடுப்புக்கள் சேர்ந்து கொள்கின்றனர்.
தூரத்தில் நாயொன்று ஊளையிடுகின்றது. மண்டபத்திற்குள் ஒளிமயம்,
வெளியே பயங்கர இருள். மண்டபத்திற்குள், நாடகம் தொடங்குகின்றது. மண்டபத்திற்கு வெளியே? மை இருட்டிலும் நாடகம் தொடங்குகின்றது. நாடகம் உச்சக்கட்டத்தை அடைகின்றது. வெளியே? நாடகம் முடிந்து விட்டது. நிசப்தம். இருள் மயம். மயக்கம் தெளிந்த செல்லக்கண்டனுடைய உடலெலாம் ஒரே வலி. பேயிருளில் புல்தரையில் விழுந்து கிடக்கின்ற அவன் எழுவதற்கு முயற்சிக்கின்றான். முடியவில்லை. மண்டை பிளந்து விட்டது போன்ற உணாவு.
தலையைத் தடவிப் பார்க்கின்றான் மண்டையின் வலது பக்க பின்புறம் மாங்காய் போலப் பிளந்திருக்கின்றது. ரத்தம் கட்டியாக உறைந்திருக்கின்றது. மூச்சுவிட முடியவில்லை அவனுக்கு. யாரோ அமர்த்தியிருப்பது போல நெஞ்சு இறுக்கமாக இருக்கின்றது. பிரயத்தனப்பட்டு எழுகின்றான். அடிகள் எடுத்து வைக்க முடியவில்லை. கால்கள் நடுங்குகின்றன. அடிவயிற்றில் தாங்க முடியாத நோவு. மெதுவாக அடியெடுத்து வைக்கின்றான்.
நடக்க முடியவில்லை.
-178- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

கஷ்டப்பட்டுத் தள்ளாடித் தள்ளாடி மெதுவாக நடக்கின்றான். தேவிக்காக அவன் கொண்டு வந்த பலகாரப் பொட்டலத்தை நாய்கள் குதறித் தின்றபின் அது சுற்றிக் கட்டியிருந்த, கிழிந்து சிதைந்து போன வாழையிலையும் கடதாசியும் அவனுடைய காலில் இடறுப்படுகின்றன.
மெது மெதுவாக அவன் தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருக்" கின்றான்.
தகரம் அடிக்கும் சத்தம். "இஞ்சேரப்பா ஆரோ தகரத்திலை அடிக்கிறான் போலை கிடக்கு." அன்னமுத்தாச்சியை எழுப்புகின்றார் பதுங்கிக் கந்தையா. "சும்மா கிடவணை" அரைகுறை நித்திரையில் கூறிவிட்டு மறுபுறம் திரும்பிப்படுக்கின்றாள் அவள்.
சிறிது நேரத்தின் பின் மீண்டும் தகரமடிக்கும் சத்தம். "முடிஞ்சுது. எல்லாம் முடிஞ்சுது” பதட்டத்துடன் கூறுகின்றார் spb605tLIII.
"என்னப்பா முடிஞ்சுது? சும்மா அலட்டாமல் கிடவனப்பா" அவள் அசட்டையாகக் கூறுகின்றாள்.
"வந்திட்டான், அவன்வந்திட்டான், அவன் தான் தகரத்திலையடிக்கிறான்."
அவருடைய குரல் நடுங்குகின்றது. "ஆரப்பா அவன்? சொல்லித் துலையன்" எரிச்சலுடன் கூறுகின்றாள்
96). IGT.
"மனிசரை நித்திரை கொள்ளவிடன். சும்மா அரிச்சுக் கொண்டிருக்கிறாய்."
அவளுடைய வார்த்தையில் கடுகடுப்பு. தகரச் சத்தம் மீண்டும். "அங்கேர் அடிக்கிறானப்பா. அவன்தான் செல்லக் கண்டன்தான் வந்திட்டான்."
“என்ன பயித்தியகாரனைப் போல அலட்டிறாய்?" எரிச்சலாய் கூறுகின்றாள் அன்னமுத்தாச்சி.
"இல்லையணை. அவன்ரை பஞ்சமிப் பேய்தான் வந்திருக்கு. அவன் இளந்தாரியல் லே. அவனுக்குத்தான் என்னனென்ன ஆசைகள் இருந்ததோ? அதுதான் அவன்ரை ஆத்மா அந்தரப்பட்டு அலைஞ்சு திரியுது. ஆரைப் பலியெடுக்கப் போகுதோ?”
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் - 79

Page 94
"சும்மா மனதைப் போட்டு அலட்டாமை கிடவப்பா.” “இல்லையணை, முந்தநாள் தானே அவன் ரை செத்தவீடு கொண்டாடினது. அதுதான் அவன்ரை ஆத்துமா அவஸ்தைப்பட்டு அலைஞ்சு திரியுது."
"செல்லக்கண்டன்ரை ஆவியுமில்லை. மண்ணாங் கட்டியுமில்லை. சும்மா பேசாமல் படு.”
"அப்பென்ன சத்தமணை?" “அது. அதுதான் சோழகக் காத்து கடுமையாய் அடிக்குதல்லே. வேலுப்பிள்ளையின்ரை இரண்டாவது மகளின்ரை சாமத்தியச் சடங்கு நாளைக்கல்லே வைக்கினை. அதுக்குப் போட்ட செட்டியாற்றை பந்தலிலை கிடக்கிற தகரம் களண்டு சோழகக் காற்றிலை அடிபடுகுதப்பா. அதுதான் அந்தச் சத்தம். நீ பேசாமல் படணை." அன்னமுத்தாச்சி அமைதிப்படுத்துகின்றா கந்தையாவை. "விசர்க்கதை பேசிறாய் நீ. தகரமடிக்குதாம், தகரம். உனக்குக் கனமாய்த் தெரியுமே? செல்லக்கண்டன் பஞ்சமியிலை செத்தவன். அவன்ரை பஞ்சமிப் பேய் பலி எடுக்காமை விடாதெண்டு, அதுக்குத்தான் சாந்தி செய்ய வேண்டுமெண்டு நேற்று எங்கடை அண்ணாச்சிசாமி ஐயர் சொன்னவர்."
"அவர் கிடக்கிறார். அவர் வரும்படிக்குத்தான் அப்பிடிச் சொன்னவர். நீ எப்பன் அலட்டாமல் கிடவணை."
நேரத்தின் நகர்வு. சோழகக் காற்று ஊழையிடுகின்றது. பனை மரங்கள் இரைந்து நர்த்தனமாடிக் கொண்டிருக்கின்றன. தூரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம். நாய்கள் குரைக்கின்ற சத்தம் வர வரக் கிட்டடியில் கேட்கின்றது. தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருக்கின்றான் செல்லக்கண்டன். நாய்கள் கடுமையாகக் குரைக்கின்றன. வீட்டுப் படலையடிக்கு வந்துவிட்டான் அவன். படலை பூட்டிக் கிடக்கின்றது. மேலே அண்ணாந்து பார்க்கின்றான். இருள் படலத்திற்கு மத்தியில் கிளை பரப்பிச் சடைவிரித்து நிற்கின்றது பூவரசமரம்.
"தங்கச்சி” கூப்பிடுகிறான்.
-180- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

குரலில் வேதனை அவஸ்தை.
நிசப்தம்.
"தங்கச்சி தேவி!” முக்கி முனகிக் கத்துகிறான்.
அந்தப் பிராணாவளிப்தைக் குரலைக் கேட்ட அயலவர்கள் அருண்டெழுகின்றனர்.
“தேவி!”
உரத்துக் கத்துகின்றான் தன்னால் இயன்றளவு.
"சின்னண்ணையின்ரை குரல்" பதைபதைத்தெழுகின்றாள் தேவி.
"அப்பா சின்னண்ணை கூப்பிடுகிறான் போலை கிடக்கு."
“அது வேறை ஆரோவாக்கும். அவன் எப்பவோ செத்துப் போனானே. நீ பேசாமல் கிடவடி"
"நான் சொன்னன் செல்லக்கண்டன்ரை பஞ்சமிப் பேய் வந்திட்டுதெண்டு. அங்கோர் நாய்களும் அமளிதுமளியாக் குலைக்குதுகள்."
கந்தையா நடுங்கிக் கொண்டே கூறுகின்றான். தகரம் அடிக்கும் சத்தத்தையும் நாய்கள் குரைப்பதையும் கேட்டு அயலிலுள்ளவர்கள் எழும்புகின்றார்கள். ஆனால் பயத்தில் ஒருவரும் வெளியே வரவில்லை.
"ஆரோ ஒழுங்கையாலை போகிணையாக்கும். அதுதான் நாயஸ் குலைக்குது!" என்கின்றாள் அன்னமுத்தாச்சி.
தகரம் தட்டும் சத்தம்.
அன்னமுத்தாச்சிபுறுபுறுத்தபடியே எழுகின்றாள்.
"ஆரது?"
வெளியே வந்து அவள் கேட்கின்றாள், பதிலில்லை.
“ஆரப்பா அது?"
மீண்டும் கேட்கின்றாள்.
ஒரு சத்தமுமில்லை.
நாலு பக்கமும் பார்க்கின்றாள்.
அவளுடைய மாலைக் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை.
"இந்தாளாலை நிம்மதியாய் படுக்கேலாமல் கிடக்கு. சும்மா அரிச்சுக் கொண்டு கிடக்குது."
கூறிக் கொண்டே திருப்பிச் சென்று படுக்கின்றாள். நிசப்தம். நேரத்தின் நகர்வு.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -181

Page 95
"தங்கச்சி! ஆ”! ஆழக் கிணற்றின் அடியிலிருந்து எழுந்து வருகின்ற ஈனஸ்வரக் குரலின் முனங்கல்.
"ஐயோ! என்ரை சின்னண்ணை. என்ரை சின்னணணையைச் சாக்காட்டிறாங்கள்!"
திடுக்கிட்டெழுந்த தேவி அலறுகின்றாள். பயத்தில் அவளுடைய உடல் நடுங்குகின்றது. "ஐயோ அப்பா, எனக்குப் பயமாய்க் கிடக்கு அப்பா." அவள் குளறி அழுகின்றாள்.
“தேவி ஏன் மோனை அழுகின்றாய்?" தேவி தொடர்ந்து குளறி அழுததைக் கேட்டுக் கொண்டு கிடந்த அன்னமுத்தாச்சி எழுந்து பதைத் தபடியே கேட்டவளாய் வேலிப்பொட்டுக்குள்ளால் வருகின்றாள்.
"ஏன் மோனை குளறுகிறாய்? என்ன நடந்தது?" "ஐயோ ஆச்சி! என்ரை சின்னணிணையை கறுப்பு உடுப்புப் போட்ட நாலஞ்சு கறுவல் தடியன்கள் கட்டிப் பிடிச்சு அவற்றை தொண்டையை நெரிக்க அவற்றை கண்முழி பிதுங்கி, நாக்கு நீண்டு வெளியாலை வந்து."
"அது கனவு மோனை. நீஒண்டுக்கும் பயப்பிடாதை. நானிருக்கிறன். வா என்ரை வீட்டை”
வேலிப் பொட்டுக்குள்ளால் தேவியைக் கூட்டிச் செல்கின்றாள் அன்னமுத்தாச்சி.
தேவிக்கு சலஞ்சலமாய் வியர்த்துக் கொட்டுகின்றது. அன்னமுத்தாச்சி அவளுடைய வியர்வையைத் தனது சேலைத் தலைப்பால் துடைத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டு படுக்கின்றாள்.
தேவியின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருக்கின்றது. "நீஒண்டுக்கும் பயப்பிடாதை மோனை, நானிருக்கிறன்." தேவியைத் தேற்றுகின்றாள் அவள்.
அன்னமுத்தாச்சியைத் தேவி கட்டிப்பிடித்தபடியே கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்திருக்கின்றாள்.
நான்கைந்து கறுவல் தடியன்கள் கறுப்பு உடுப்புடன் அவளுடைய சின்னண்ணையைக் கட்டிப்பிடித்து அவனுடைய தொண்டைய நெரிக்க, கண்முழிகள் பிதுங்க, நாக்கு நீண்டு வெளியே வருகின்ற காட்சி
-182- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

தேவியினுடைய மனத்திரையில் அடிக்கடி தோன்றுவதும் மறைவதுமாக இருக்கின்றது.
அவள் எப்பொழுது கண்ணயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது. இரவு, அன்றைய தனது பயணத்தின் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
இருள் மெதுவாகக் கரைகின்றது. தயங்கித் தயங்கி நிலம் வெளிக்கத் தொடங்குகின்றது. நிலத்தாயின் முகத்தில் துயரச் சாயல். விடிந்ததும் விடியாததுமாக எழுகின்றாள் தேவி. அவளுடைய மனதில் சஞ்சலம், உடலில் சோர்வு. நித்திரை விட்டெழுந்த தேவி ஏனோ படலையடியில் நிற்கின்ற பூவரச மரத்தடிக்குச் செல்கின்றாள்.
கலைந்தும் கலையாத இருளில் பூவரச மரத்தடியில் ஒரு ஆள். பயத்துடன் மெல்ல மெல்ல அவள் கிட்டச் சென்று பார்க்கின்றாள். மெல்லக் குனிந்து பார்க்கின்றாள். "சின்னண்ணை!" அவளுடைய தொண்டைக்குள்ளிருந்து சத்தம் திக்கித்திணறி வெளியே வருகின்றது.
"சின்னணிணை, சின்னணிணை” தடுமாறியபடியே அவனை கூப்பிட்டு எழுப்புகின்றாள்.
பதிலில்லை. அவன் தலையை ஆட்டுகின்றாள். பேச்சு மூச்சில்லை. "எணே அன்னமுத்தாச்சி, எணே அன்னமுத்தாச்சி இஞ்சை ஒருக்கா வாணை. எங்கடை சின்னண்ணை."
"என்ன மோனை? என்ன?” முற்றம் கூட்டிக் கொண்டு நின்ற அன்னமுத்தாச்சி என்னமோ ஏதோவொன்று பதைபதைத்து ஓடி வருகின்றாள்.
பூவரச மரத்தடியில் படுத்துக் கிடக்கின்ற செல்லக்கண்டனைப் பார்த்ததும் அன்னமுத்தாச்சிக்கு அதிர்ச்சி அவளுக்கு மூச்சுத் திணறுகின்றது. அவள் திகைத்தவளாய் நிற்கின்றாள். ஒன்றுமே பேச முடியவில்லை.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -183.

Page 96
"ஆச்சி, சின்னணிணை எழும் புறானில்லையணை. அவனை எழுப்பணை.” கதறுகிறாள் தங்கை.
செல்லக்கண்டனைக் குனிந்து உற்றுப் பார்க்கின்றாள். அன்னமுத்தாச்சி.
அவனுடைய கண்கள் திறந்தபடியேயிருக்கின்றன. அவன் எதையோ வெறித்துப் பார்ப்பது போலிருக்கின்றது.
வாய் "ஆ" வென்று திறந்தபடியேயிருக்கின்றது. அவள் குந்தியிருந்து பார்க்கின்றாள். அன்னமுத்தாச்சியின் கண் புருவங்கள் உயர்கின்றன. நெற்றி சுருங்குகின்றது. கூர்ந்து பார்க்கின்றாள்.
செல்லக்கண்ணனுடைய தொண்டை வீங்கியிருக்கின்றது. அதில் நகக் கீறல் காயங்கள்.
"இது எப்பிடி நடந்தது? ஆர் இப்பிடிச் செய்திருப்பினை?"அவளுக்கு ஒரே குழப்பமாயிருக்கின்றது.
“செல்லக்கண்டன் எப்பவோ செத்துப் போனான் எண்டு தானே சொல்லிச்சினை. அதுதானே நாங்கள் முந்தநாள் அவன்ரை செத்தவீடு கொண்டாடினம்."
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. "நேற்று ராத்திரி அவனுக்கு அஞ்சலிக் கூட்டம் கூட நடத்தினாங்கள்." 'செல்லக்கண்டன் செத்துப் போனான் எண்டு அண்டைக்கு வந்து சொன்னவன் கறுப்பு உடுப்புப் போட்ட பொடியன். அவன் தான் நேற்று ராத்திரி செல்லக்கண்டனுக்கு அஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தினவன். அவனோடை இன்னம் மூண்டு நாலுபேர் ஒடியாடி கூட்டத்தைக் நடத்தினாங்கள். அவங்களாயிருக்குமோ?
அவளுக்குச் சந்தேகம். 'கூட்டம் முடிஞ்சு நாடகம் துவங்க முந்தி வெளியாலை ஆரோ குழறிக் கேட்டுதே. அந்த நேரம் வெளியாலை போன கறுப்பு உடுப்புப் போட்ட மூண்டு நாலு பேரும் திரும்பி வரேல்லை. நாடகம் முடிஞ்ச பிறகும் அவங்களைக் காணேல்லை.
அவளது சிந்தனை எங்கோ ஒடுகின்றது. இப்பதான் புரியுது விசயம்' இடையிடையே நடக்கிற ஊர்வலங்களுக்கும் கூட்டங்களுக்கும் அன்னமுத்தாச்சி சென்றிருக்கின்றாள். அந்த நேரங்களில் இந்தக் கறுப்பு உடுப்புப் போட்ட மூன்று நாலுபேரையும் கண்டிருக்கிறாள். அவங்கள்
-184- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

தான் முன்னுக்கு நின்று இவைகளை நடத்துகின்றவர்கள் என்பதை அவள் அவதானித்துள்ளாள்.
அன்னமுத்தாச்சிக்கு விசயம் புரிந்துவிட்டது.
'அவங்கள் தான், அவங்களேதான் இந்தக் கொடுமையைச் செய்தவங்கள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் அன்னமுத்தாச்சி செல்லக்கண்டனுடைய முகத்தை ஆராய்சின்றாள்.
அவனுடைய முகத்தில் விரக்தி, வேதனை, ஏக்க உணர்வு தெரிவதாய்ப்படுகின்றது அவளுக்கு,
செல்லக்கண்டனுடைய உதட்டில் இரண்டு இலையான்கள் இருப்பதை அவள் அவதானித்தாள்.
அவன் எடுத்த ரத்தவாந்தி கடைவாய் வழியே வழிந்து உறைந்து போயிருக்கின்றது.
இலையான்களைக் கலைத்துவிட்டு அன்னமுத்தாச்சி செல்லக்கண்ட" னுடைய திறந்திருந்த கண்களைத் தனது கைவிரல்களால் கஷ்டப்பட்டு மூடிவிடுகின்றாள்.
"ஐயோ!" என்ரை செல்லக்கண்டா!" தனது தலையிலடித்துக் கொண்டு குளறுகின்றாள்.
"ஐயோ! என்ரை சின்னண்ணை" வீரிட்டுக் கத்துகின்றாள் தேவி. "தேவி உண்ரை சின்னண்ணை உண்ரை சின்னண்ணை." அவள் தேவியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஒலமிடுகின்றாள்.
அவர்களுடைய ஒலங்கள் அந்தப் பகுதியெங்கும் ஒலித்து எதிரொலிக்கின்றது.
அயலவர்கள் ஓடிவந்து குவிகின்றனர். ஒருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.
“அட நேற்று ராத்திரி இவனுக்கு அஞ்சலிக் கூட்டம் நடந்தது. ஆனா
இண்டைக்கு இவன். y
ஆச்சரியத்துடன் வைமன் கந்தையா கூறுகின்றார். புரியாப் புதிராயிருக்கின்றது அவர்களுக்கு. ஊரே கூடிவிட்டது. அன்னமுத்தாச்சி மெளனமாக இருக்கின்றாள். "இப்பென்ன செய்யிறது?" கந்தையா அவர்களைப் பார்த்துக் கேட்கின்றான். “எங்களுக்கு இவ்வளவும் போதும், நாங்கள் செய்த எல்லாத்துக்கும்
பதிலாய், இதுக்கு மேலாலை எங்களுக்கு வேறை என்ன வேண்டிக்"
கிடக்கு"
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -185

Page 97
எதையோ நினைத்தவளாக திடீரெனக் கூறுகின்றாள் அன்னமுத்தாச்சி. எல்லோரும் அவளை வியப்புடன் பார்க்கின்றனர்.
"நாங்கள் இனி மற்றவையளை நம்பியிருக்கக்கூடாது. எங்கட்ை அலுவல்களை நாங்களே பாக்க வேணும்.”
நிதானித்துக் கூறுகின்றாள் அன்னமுத்தாச்சி. அவளுடைய வார்த்தைகளில் நிதானம், உறுதி. அங்கு கூடி நின்ற அயலவர்கள் அனைவரும் துரித கெதியில் செயல்பட ஆரம்பிக்கின்றனர்.
முந்தநாள் அதே வளவில் நடந்த செத்த வீட்டுக்குக் கொண்டாட்" டத்தைப் போல அந்தக் கிராமத்திலை முன்னர் எப்பொழுதும் அவ்வளவு டாம் பீகமாக நடக்கவில்லை. தகரப் பந்தலென்ன, கதிரைகள், வெத்திலைபாக்கு, சுருட்டு, வாழைகள், தோரணங்கள் எல்லாம் பெரிய எடுப்புத்தான்.
அனுதாபம் தெரிவிக்க அறிந்தவர்கள், அறியாதவர்கள், பெரியவர்கள், பிரமுகர்கள் எல்லோரும் வளவு முட்ட முகமனுக்கு நின்றவர்கள் நீயா நானோவென்று எத்தனை பேர். அங்கு கூடியிருந்தவர்களின் பெரும் பகுதியினர் போலிகள் என்று யாருக்குத் தெரியப் போகின்றது. '
இன்று செல்லக்கண்டனுடைய செத்த வீட்டில் அப்பகுதியிலுள்ள சிறு தொகையினர் துக்கத்தில் பங்கு கொள்கின்றார்கள். அவர்கள் அத்தனை பேரும் அசல்களே.
முந்தநாள் செட்டியாருடைய தகரப் பந்தல் இந்த முற்றத்தில் போடப்பட்டிருந்தது. இன்று நான்கு கைமரங்கள் நடப்பட்டு தேடாவளையக் கயிறு கட்டப்பட்டு அதற்குமேல் கிடுகுகள் பரப்பப்பட்டிருக்கின்ற பந்தல். இதற்குள் சங்கத்துக் கதிரைகளில்லை. கதிர்ப்பாய் விரிக்கப்பட்டிருக்கின்றது.
கிடுகுப் பந்தலின் நடுவேயிருக்கின்ற பலகை வாங்கிலே செல்லக்கண்டனுடைய வாட்டசாட்டமான உடல் கிடத்தப்பட்டு வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருக்கின்றது.
அவனுடைய தலைமாட்டில் சித்தப்பிரமை பிடித்தவளாய் இருக்கின்றாள் தேவி. அன்னமுத்தாச்சி அவளை அணைத்துப் பிடித்தபடியே இருக்கின்றாள்.
கறுப்பு உடுப்புப் போட்ட இருவர் அப்பொழுதுதான் அங்கு பைசிக்கிளில் வந்து இறங்குகின்றனர்.
'அங்கை எங்கடை ஆயிரக்கணக்கான பிள்ளையஸ் தங்கடை உயிரையும் மதிக்காமல் எங்களுக்காக சண்டை பிடிச்சுச் செத்துக்
-186- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

கொண்டிருக்கிறாங்கள். இஞ்சை இந்த நாசமாய்ப்போன ஊர்ச்சோறு தின்னிக் குத்தியன்கள்.?
அன்னமுத்தாச்சி மனதிற்குள் கறுவிக்கொள்கின்றாள். பசுபதியாக்கள் பச்சைக் கமுகை வெட்டிப் பிளந்து பூவரசம் கம்புகளை வில்லாய் வளைத்துக் கட்டி அதற்கு மேலே வெள்ளைத் துணிகளைப் போட்டு மூடி பாடை கட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
செல்லக் கண்டனுடைய உடலைக் கிடத்துவதற்கு பச்சைத் தென்னோலையை இரண்டாகப் பிளந்து கிழித்து பன்னாங்கு பின்னிக்கொண்டிருக்கின்றார் கணபதி.
கிளைத்துச் சடைத்து இதுகாலவரை குளிர் நிழல் தந்து கொண்" டிருந்த அந்தப் பூவரச மரம் தறிக்கப்பட்டு சாய்ந்து விழுந்து கிடக்கின்றது. அன்னமுத்தாச்சி எழுந்து செல்லக்கண்டனுடைய தலைமாட்டில் மங்கலாய் எரிந்து கொண்டிருக்கின்ற குத்து விளக்கிற்கு எண்ணெயை ஊற்றித் திரியைத் தூண்டிவிடுகிறாள்.
விளக்கு சுடர்விட்டு பிரகாசமாய் எரிகின்றது. கறுப்பு உடுப்புப் போட்டவர்கள் நோட்டமிட்டுக் கொண்டு நிற்கின்றனர்.
"அநியாயமாய் ஏன் இந்தப் பூவரசைத் தறிச்சவை?” சாய்ந்து விழுந்து கிடக்கின்ற பூவரச மரத்தைப் பார்த்த செல்லம்மா அக்கா கூறுகின்றா.
"நெஞ்சான் கட்டைக்கு.!" அந்தக் கறுப்பு உடுப்புப் போட்டவர்களைப் பார்த்தபடியே கர்ச்சிக்கின்றாள் அன்னமுத்தாச்சி.
வெடித்துக் கிளம்பிய அவளுடைய வார்த்தைகளில் கனல் தெறிக்கின்றது.
செல்லக்கண் டன் தான் கர்ச்சிக்கின்றானோ என்று அங்கு நிற்கின்றவர்கள் திகைக்கின்றனர்.
கண்ணகியாய் நிற்கின்றாள் அன்னமுத்தாச்சி.
1998
女
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -187

Page 98
லங்கா தகனம்
-188
ee
왕B யோ! என்னைக் கொல்ல வாறாங்க! என்னைக் காப்பாத்துங்கோ!"
தலைவிரிகோலமாய், அலறியபடியே அவள் ஓடிக் கொண்டிருக்கின்றாள்.
அவளுடைய முகத்தில் பீதி. கொலை வெறியர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, அவள் அவலக் குரல் எழுப்பியபடியே ஒடிக் கொண்டிருக்கின்றாள்.
"அவளைப் பிடியடா! அடியடா! வெட்டடா கொல்லடா!"
பொல்லுகள், தடிகள், கத்திகள், வாள்களைச் சுழற்றிக் கொண்டு, முப்பது நாப்பது கொலைப் பாதகர்கள் அட்டகாசமாய்க் கத்தியபடியே அவளைத் துரத்திக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களில் அநேகர் நாட்டுச் சாராயப் போதை தலைக்கேறி, தமிழர்களை அழித்தொழிக்கும் ஏகாக்கிர சிந்தையர்களாய் ஒடிக் கொண்டிருக்கின்றார்கள்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

பேரினவாத அரசின் ஆசியுடன் அந்த நவீன நரகாசுரர்கள் இன சங்கரிப்பை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இன சங்காரம் தொடங்கி, நாடெங்கும் வியாபித்து, ஆயிரமாயிரம் மனித உயிர்கள் பலியெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் வயோதிபர்கள் எல்லோரும் கண்டகண்ட இடங்களில் சங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
சிங்களவர்களின் வீடுகளில் வாடகைக்கிருந்த தமிழர்களின் பொருள் பண்டங்களெல்லாம் வெளியே எடுத்துப் போடப்பட்டுத் தீயிட்டு எரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
தங்களுடைய சொந்த வீடுகளிலிந்த தமிழரின் பொருள் பண்டம் எல்லாம் வீடுகளுடன் கொளுத்தி எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கடைத் தெருக்களில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தமிழர்களின் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் சூறையாடிக் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பாடசாலைகளும் வணக்கஸ்தலங்களும் எரித்துச் சேதப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கொலை, கொள்ளை, பாலியல்வல்லுறவு எல்லாம் முதலாளித்துவப் பிற்போக்கு அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இந்த இன சங்காரத்திற்கு மூன்று நாட்கள் தார்மீக அரசால் “விட்டுக் கொடுக்" கப்பட்டுள்ளது.
"ஐயோ! என்னைக் காப்பாத்துங்கோ! என்னைக் கொல்லவாறாங்க! என்னைக் காப்பாத்துங்கோ!"
கூக்குரலிட்டபடியே அவள் ஓடிக் கொண்டிருக்கின்றாள். சாலையின் இரு மருங்கிலும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எல்லோரும் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சிலர் அவளுக்காக அனுதாபப்படுகின்றனர். ஆனால் ஒருவர் தானும் அவளைக் காப்பாற்றுவதற்குத் துணியவில்லை.
"ஐயோ பாவம்! இவளின்ரை கையாலை வரியக் கணக்காய் நாங்கள் காய்கறிகள் வாங்கிச் சாப்பிட்டம். இப்ப இவளைக் காப்பாத்த முடியவில்லையே?”
தயாவதி அவளுக்காகப் பச்சாதாபப்படுகின்றாள். "இவளைக் காப்பாத்தினால் நாளைக்கு எங்கடை பாடு வில்லங்க" மாகுமே?
குணசீலிக்கு ஆதங்கம்.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் - 189

Page 99
“முன்பொரு தடவை இனக்கலவரம் நடக்கேக்கை ஒரு தமிழ் குடும்பத்துக்கு அடைக்கலம் குடுத்ததுக்காக, பியசீலியாக்களின் ரை ஜன்னல் கண்ணாடியளை அடிச்சுடைச்ச தோடை, கொஞ்ச நாளாய் இரவிலை அவளின்ரை வீட்டுக்குக் கல்லெறிஞ்சு அந்த வீட்டுக்காறருக்குத் தொல்லை குடுத்தாங்கள்! இப்ப நாங்கள் இந்த அபலைக்கு உதவினால் எங்கடைபாடும் அதே கதிதான்."
மனம் புழுங்குகின்றாள் குணசீலி. “என்னைக் காப்பாத்துங்கோ! ஐயோ என்னைக் காப்பாத்துங்கோ! சாலையோரம் நின்றுகொண்டிருப்பவர்களை அவள் கெஞ்சுகின்றாள்.
“வேணும். நல்லாய் வேணும். இந்தப் பறைத் தமிழ் நாயளை கண்ட நிண்ட இடங்களிலை அடிச்சுக் கொல்ல வேணும். உயிரோடை எரிக்க வேணும்."
விமலதாசா கறுவிக்கொண்டு கூறுகின்றான். “அடியடா! அவளைக் கொல்லடா!” ரத்தக் காடேறிகள் ஆர்ப்பரித்துக் கொண்டு அவளை விரட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இன சங்காரம் தொடங்கி இன்று மூன்றாவது நாள். வெறியாட்டம் தணிந்து, சற்று அமைதி போலத் தோன்றுகின்றது. தனது குடும்பத்துக்கு வரக்கூடிய ஆபதத்தையும் பொருட்படுத்தாது அவளுக்கு அடைக்கலம் கொடுத்து, ரத்த வெறிப்பிடித்த காடேறிப் பிசாசுகளின் நரவேட்டையிலிருந்து அவளை மறைத்து வைத்திருந்து பாதுகாத்தது பீற்றர் ஐயாவின் எழைக்குடும்பம். அவர்கள் வற்புறுத்தித் தடுத்தும், அவர்களுடைய சொல்லைக் கேட்காமல், தனது அன்புக் கணவனையும், பதின்நான்கு வயது செல்ல மகனையும் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வேட்கையில், அவர்களைத் தேடி அவள் புறப்பட்டு விட்டாள்.
தனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. தன்ரை கணவனையும் அன்புச் செல்வத்தையும் தேடிப்பிடித்து விட வேண்டும் என்ற வைராய்க்கியத்துடன் அவள் சென்று கொண்டிருக்கின்றாள்.
சந்தையடியில் பதுங்கியிருந்த ஒரு பிணந்தின்னிக்கும்பல் அவளைக் கண்டுவிட்டது.
"பிடியடா அவளை!”
ஒருவன் கத்துகின்றான்.
-190- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

"அந்தத் தமிழ் நாயைக் கொல்லடா!" மற்றொருவன் கர்ச்சிக்கின்றான். அவள் இதை எதிர்பார்க்கவில்லை. திகைப்புற்றுத் தடுமாறி நிற்கின்றாள் அவள். அவளை நோக்கி அந்தக் கொலைக் கும்பல் பாய்ந்தோடி வருகின்றது. கணப்பொழுதில் அவள் தன்னைச் சுதாரிச்சுக் கொள்கின்றாள். அவள் ஒடத் தொடங்கினாள். ரத்த வெறி பிடித்த அந்தப் பிணந்தின்னிக் கழுகுகளிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவள் வேகமாய் ஓடிக் கொண்டிருக்கின்றாள்.
பாலத்தடிக்கு அவள் வந்துவிட்டாள். இந்தப் பாலத்தில் வைத்துத்தான் முந்தநாள் பட்டப் பகலில், பாதுகாப்புப் படையினர் பார்த்துக் கொண்டிருக்க இனவெறியர்கள் ஒரு அப்பாவி மனிதனைத் துடிக்கத் துடிக்க வெட்டிக்கொன்றார்கள். அவனது சடலத்தை இந்தக் கால்வாய்க்குள் வீசி எறிந்தார்கள்.
இந்த நரவேட்டைக்காரர்களால் கொலை செய்யப்பட்டவன் அவளது கணவன்தான் என்பது அவளுக்கு எப்படித் தெரியும்?
அவள் மூச்சிரைக்க ஒடிக்கொண்டிருக்கின்றாள். கல்லெறி தூரத்தில் பன்சலை. பன் சாலையில் தனக்குத் தஞ்சம் கிடைக்கும் என்று அவள் நம்புகின்றாள்.
அகிம்சையையும் ஜீவகாருண்யத்தையும் போதிக்கின்ற புத்த" பகவானுடைய புனித இடமல்லவா பன்சலை?
பன்சலை நோக்கி அவள் விரைந்தோடிக் கொண்டிருக்கின்றாள். ஒரு “பஜ்றோ" வாகனம் பன்சலை அண்டி வீதி ஒரத்தில் நிற்கின்றது. "பஜ்றோ" வாகனத்திற்குள் பால்போன்ற தூய வெள்ளுடைப் பிரமுகர்; கசிப்பு மன்னன்.
பன்சலைக்கு அண்மையிலுள்ள மது விற்பனை நிலையத்தின் உரிமையாளன் தான் அவன்.
வெள்ளை தூய்மையின் சின்னம். தனது இருண்ட இதயத்தின் வக்கிரத்தனங்களை மூடி மறைக்கும் வேசமாய் வெள்ளுடையையே அவனுடைய அரசியல் தலைவனும், அவனும், சகாக்களும் எப்பொழுதும் அணிந்து வருகின்றார்கள்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் - 191

Page 100
உலகின் தீமைகள் அனைத்தும் உருவெடுத்து வந்தவன் தான் அவர்களுடைய அரசியல் மாபியாக் கும்பலின் தலைவன்.
தங்கள் தலைவனின் ஆணையின்படி கடந்த மூன்று தினங்களாய் இனசங்காரத்தை அவனும் சகாக்களும் தீவிரமாய் நடத்தி வருகின்றார்கள். பன்சலைக்கு முன்னால் நிற்கின்ற "பஜ்றோ" வாகனத்திற்குள்ளிருந்து ஏழெட்டு பெரிய சிவப்பு, மஞ்சள் பிளாஸ்டிக் "கான்கள்" மது விற்பனை நிலையத்திற்குள் எடுத்துச் செல்கின்றனர் சிலர். சிவப்புக்"கான்"களுக்குள் பெற்றோல், மஞ்சள் "கான்” களுக்குள் கசிப்பு.
அந்த மது விற்பனை நிலையத்திற்கு முன்னால் பழைய “ரயர்கள்" கும்பல் கும்பலாய் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
அவள் பன்சலையடிக்கு வந்து விட்டாள். ஒரு பால புத்த பிக்கு அவரச அவசரமாய் பணி சலைக்கு முன்னாலுள்ள "கேற்”றைத் திறந்து விட்டு பன்சலைக்குள் வரும்படி அவளை அழைக்கின்றது.
இதை பெரிய பிக்கு கண்டுவிட்டார். அவர் ஒடோடி வந்து, பால பிக்குவை ஒரு புறம் தள்ளிவிட்டு பன்சலைக் "கேற்”றை மூடுகின்றார்.
அவள் வேறு வழியின்றி சந்தியை நோக்கி ஓடுகின்றாள். அன்று பகல் பத்து மணியளவில், அந்த நாற்சந்தியின் நடுவில், ஒரு சிறுவன் மீது பெற்றோல் ஊற்றி, பெரிய ரயர் போட்டு, அவன் அலற தீயிட்டு எரித்தார்கள் கொலை பாதகர்கள்.
இந்தக் கோரக் காட்சியை அந்தப் பால பிக்கு பார்த்து விட்டது. அந்தச் சிறுவன் எழுப்பிய மரண ஒலம் பால பிக்குவின் பிஞ்சு உள்ளத்தில் பெரும் புயலைக் கிளப்பி விட்டது. இதனால் அந்த இளம் தளிர் திக்பிரமை பிடித்துச் சலித்துப் போயிருந்தது.
பெரிய பிக்கு பன்சலைக் கேற்றை மூடிய சம்பவம் பாலபிக்குவுக்கு மேலும் பேரிடியாய் விழுந்தது. பெரிய பிக்கு மீதும் பன்சலை வாழ்க்கை மீதும் வெறுப்பை ஏற்படுத்தியது.
இன்று இரவே நான் இந்த மஞ்சள் காவி உடையை கழற்றி எறிந்து விட்டு எனது கிராமத்துக்கே ஓடி விட வேண்டும்.
மனவைராக்கியம் ஏற்பட்டது பால பிக்குவிற்கு. சந்தியில் அரை குறையாக எரிந்து கிடக்கும் ஒரு சிறுவனின் சடலத்தைப் பார்க்கின்றாள் அவள்.
ஐயோ பாவம் இந்தப் பாலகன்"!
-192- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அவள் உள்ளம் அந்தப் பாலகனுக்காகப் பரிதவிக்கின்றது. அரைகுறையாக எரிந்த நிலையில் கிடக்கின்ற அந்தச் சடலம் அவளுடைய அன்பு மகனுடையதுதான் என்பதை அவள் எப்படி அறிவாள்?
அவள் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள சந்தியைத் தாண்டி ஒடிக் கொண்டிருக்கின்றாள்.
ஓடி, ஒடி அவள் நன்றாகக் களைத்துவிட்டாள். கால்கள் தள்ளாடுகின்றன.
மரண தேவதை அவளை விரட்டிக் கொண்டிருக்கின்றது. மூச்சைப் பிடித்தபடியே அவள் ஒடுகின்றாள். சந்தியிலிருந்து சற்றுத்தூரத்தில், தெற்குப் புறமாக ஒரு சிறிய சந்து. பிரதான வீதியிலிருந்து அவள் திடீரென வெட்டித் திரும்பி, சந்திற்குள் பாய்ந்தோடுகின்றாள்.
ஒரு கொலை வெறியன் அவளைக் கண்டுவிட்டான். "அடோ! அவள் சந்துக்குள் ஒடுகிறாளடா!” அவன் கத்துகின்றான். யமகிங்கரர்கள் சந்துக்குள் அவளைத் துரத்திச் செல்கின்றனர். சந்தின் தொங்கலில் விஷகடி வைத்தியர் ஜெயவீராவின வீடு. "கேற்றடியில் ஒரு குள்ளமான மனிதர். வெள்ளை “சறம்", அரைக் கை வெள்ளை நாசனல். கொம்பு மீசை, கொட்டைப் பாக்களவு குடுமி.
"ஐயோ! மாத்தயா! என்னைக்காப்பாத்துங்கோ!" தன் இரு கைகளையும் முன் நீட்டியவாறே, அலறியபடியே அவரை நோக்கி ஓடி வருகின்றாள்.
அவர் கேற்றைத் திறக்கின்றார்.
“உள்ளே போ!' உரத்துக் கத்துகின்றார். அவள் உள்ளே செல்கின்றாள். அவர் "கேற்"றை மூடிவிட்டு சிலையாய் நிற்கின்றார். கொலைக் கும்பல் கேற்றடிக்கு வந்துவிட்டது. கேற் மூடிக் கிடக்கின்றது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -193

Page 101
நந்தியாய் நிற்கின்றார் ஜெயவீர.
"வெதமாத்தயா கேற்றைத் திறவுங்கோ!"
ஆவேசமாய்க் கத்துகின்றார்கள் நரகாசுரர்கள்.
“எதற்கு?”
நிதானமாகக் கேட்கின்றார்.
அவரில் எதுவித சலனமுமில்லை.
"அந்தத் தமிழ் நாயைக் கொல்ல வேணும்."
அவர்கள்கொக்கரிக்கின்றனர்.
“எதற்காக?"
“அவள் பறைத் தமிழ் நாய். அவளைத் துண்டு துண்டாய் வெட்டி கொல்ல வேணும்."
அட்டகாசமாய் அவர்கள் ஆர்ப்பரிக்கின்றார்கள்.
"கேற் திறக்கேலாது.”
நிதானமாக, உறுதியுடன் கூறுகின்றார்.
“கேற்றைத்திறவுங்கோ. இல்லாட்டி நாங்கள் உடைப்பம்."
"சரி. எங்கை உடையுங்கோ பாப்பம்."
அவர் சவால் விடுகின்றார்.
“வெதமாத்தயா! கேற்றைத் திறவுங்கோ! திறவுங்கோ!"
மூர்க்கத்தனமாய்க் கத்துகின்றனர்.
"உதுதானோடா சிங்களவன்ரை வீரம்?"
வெதமாத்தயா ஆவேசமாய்ச் சாடுகின்றார்.
கொதித்துக் கொண்டு நின்ற அந்த கொலைக்காறர் ஜெயவீராவை வியப்பாய்ப் பார்க்கின்றனர்.
"கேவலம், வெறுங்கையோடை, தன்னந்தனியனாய் நிக்கிற ஒரு பெண்பிள்ளையை ஐம்பது ஆம்பிளையஸ் ஆயுதங்களோடை கொல்லத் துரத்திறதுதான் சிங்களவன்ரை வீரமோடா?”
ஜெயவீர வெதமாத்தயாவின் ஆக்ரோஷ வார்த்தைகள் சாட்டியடியாய் அந்த இனவெறிக் கொலைக்காறர்களைச் சாடி, முட்டி மோதுகின்றன.
இனவெறிக் கொலைகாறர்கள் திகைத்துத் திணறி நிற்கின்றனர்.
வெதமாத்தயாவின் உக்ரோஷ வார்த்தைகள் அவர்கள் அவமானத்தால் கூனிக் குறுகச் செய்துவிட்டன.
-194 நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அந்தக் குறுகிய மனிதரது உருவம் மேலே, மேலே வளர்ந்து உயர்ந்தோங்கி, அவர்கள் மீது அமர்ந்து, அவர்களது அற்ப ஆத்மாவை அமுக்கி நசுக்கி, மூச்சுத் திணறச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு.
வெதமாத்தயா அவர்கள் முன் விஸ்வரூபமாய் நிற்கின்றார். அவரது விழிகளில் தீ ஜுவாலை பிரவகித்துக் கொண்டிருக்கின்றது. அதன் வஜ்ர பயங்கரப் பார்வையின் முன் அவர்கள் திக்கித் திணறிப் போய் செய்வதறியாது நிற்கின்றனர்.
சிறுமைப்படுத்தப்பட்டு, அவமானத்தால் தலை குனிந்தவர்களாய், மெதுவாக அவர்கள் அவ்விடத்திலிருந்து திரும்பிச் சென்று கொண்" டிருக்கின்றனர்.
"உந்த வெதமாத்தயா சிங்களவனுக்குப் பிறக்கேல்லையடா. தமிழனுக்குத்தான் பிறந்திருக்க வேணும்."
தலைகுனிவோடு திரும்பிச் சென்று கொண்டிருப்பவர்களில் ஒருவன் வெறுப்புடன் வெப்பியாரமாய்க் கூறுகின்றான்.
2005
★
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் : - 195

Page 102
ஆறடி நிலம்
-96
ee
வி டுவிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள தங்கடை வீடுகளைச் சொந்தக்காரர் வந்து பார்க்கலாம்” எண்டு ஆமி சொல்லியிருக்காம். இதை அறிஞ்ச ஒரு சிலர் தங்கடை வீடுகளைப் பாக்கப் போய்க் கொண்டிருக்கினை எண்டு கேள்வி.”
சாவகச்சேரிச் சந்தையடிக்குப் போய்வந்த ஆறுமுத்தார், இடம்பெயர்ந்து வந்து, சங்கத் தானையில் தற்காலிகமாகத் தங்கியிருக்கின்ற பென்சனியர் தம்பிமுத்தருக்குச் சொல்கின்றார். "அப்பிடியா! அப்ப நான் இண்டைக்கே என்ரை வீடுகளைப் போய்ப் பார்க்கவேணும்."
ஆனந்தமும் பேராவலும் பொங்கிப் பிரவகிக்க தம்பி முத்தர் தன்ரை வீடுகளைப் போய்ப் பார்க்க அவசர அவசரமாகப் புறப்படத் தயாராகின்றார்.
"காமதேனு", "கற்பகதரு", "அமுதசுரபி" வீடுகள் அவர் மனத் திரையில் நிழலாடி மறைகின்றன. அவற்றின் வனப்பையும் கம்பீரத்"
நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

தையும் பார்த்துப் பலரும் பாராட்டியதை அவர் இப்பொழுதும் நினைத்துப் பெருமைப்படுகின்றார்.
அவருடைய மூன்று வீடுகளும் குடிகொண்டுள்ள விசாலமான வளவுகளுக்குள் செழிப்பாய் வளர்ந்தோங்கிய தென்னை, மா, பலா, தோடை, எலுமிச்சை மரங்கள் எல்லாம் எழில் வனமாய்த் திகழும் காட்சி அவர் விழிகளில் கண்ணாமூச்சியாடுகின்றது.
"அப்பா அது உங்கடை வீடுகளே? அதுகள் மூண்டையும் எப்பவோ எங்கடை அக்காவாக்களுக்குக் குடுத்ததை மறந்திட்டியளே? இப்பென்ன பகல் கனவா காணுறியள்?"
தம்பிமுத்தருடைய இளைய மகன் கருணாகரன் பரிகாசமாய்க் கேட்கின்றான்.
"அந்த மூண்டு வீடுகளும் இப்பவும் எனக்குத்தான்ரா. உண்ரை அக்காமாருக்கு அந்த வீடுகளைச் சீதனமாய்க் குடுத்தனான்தான். ஆனா அந்த வீடு வளவுகளை எனக்குச் "சீவிய உரித்து"க் கண்டுதான் நான் எழுதிக் குடுத்திருக்கிறன். என்ரை அனுமதி இல்லாமல் உண்ரை அக்காமாராலை அந்த வீடுகளை ஈடு வைக்கவோ விற்கவோ முடியாது. இப்பவும் அந்த வீடுகள் என் ரைதான். ஒரு தம்பியாலையும் அசைக்கேலாது."
வீறாப்பாய்க் கூறுகின்றார் தம்பிமுத்தர். அவர் தன் கெட்டித்" தனத்தைத் தானே வியந்தவராய்ப் பெருமிதமடைகின்றார்.
தம்பிமுத்தரே. நீ பெத்த பிள்ளையஞக்கு இப்பிடிச் செய்து போட்டாய் எண்டு நான் வியப்படையேல்லை. நீ இதுவும் செய்வாய், இதுக்கு மேலாலையும் செய்வாய் எண்டு எனக்கு நல்லாய்த் தெரியும். ஏனெண்டால் உண்ரை அப்பண்ரை குணம்தானே உனக்கும் இருக்கும்.
ஆறுமுகத்தார் தனக்குள் கூறிக்கொள்கின்றார். தம்பிமுத்தற் ரை தகப்பன் மயில் வாகனத்துக்கு இரண்டு பெண்பிளைப் பிள்ளையஞம் மூண்டு ஆண்பிளைப் பிள்ளையஞம், அவற்றை மூத்த மகள் முத்தம்மாவுக்கு வீடு வளவை சீதனமாய்க் குடுக்கேக்கை 'வீட்டு மூலைக் கையை விலத்தி நொத்தாரிசு சின்னத்துரையைக் கொண்டு சீதன உறுதி எழுதுவிச்சார் மயில்வாகனம். ஒரு வரியத்துக்குப் பிறகு, முத்தம்மாவின்ரை புருசன் வேலுப்பிள்ளைக்கும் தம்பிமுத்தருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்ட உடனை அவர் வீட்டுக் 'கூரையின் மூலைக்கையைப் புடுங்கினார். வேலுப்பிள்ளை விதானை யாரைக் கூட்டிவந்தார். விதானையார் விசாரணை செய்த பொழுது சீதன உறு தியை எடுத்துப் பார்க்கச் சொன்னார் மயில்வாகனம். உறுதியைப் பாத்த
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -97-,

Page 103
விதானையால் ஒண்டுமே செய்ய முடியாததால், வேலப்பிள்ளையைப் பணிந்து போகச் சொல்லிச் சமரசம் செய்து வைச்சார்.
'அவர் தன்ரை இரண்டாவது மகளுக்கு தன்னுடைய வாழைத் தோட்டத்தின் "தலப்புத் துண்டு” நிலத்தை சீதனமாய் எழுதிக் குடுத்தார். சீதனம் எழுதிக் குடுக்கேக்கை, அந்தத் தலைப்புத் துண்டு வாழைத் தோட்ட நிலத்துக்கு பாதையாய் "வாய்க்கால் வழி” எண்டு சீதன உறுதியிலை எழுதிக்குடுத்தார்.
மாரி காலம் துவங்கின உடனை வாழைத் தோட்ட நிலத்தை மயில்வானம் கொத்துவித்தார். அந்த வேளையிலை தலப்புத்துண்டு வாழைத் தோட்டத்துக்கு தண்ணி இறைக்கிற வாய்க்காலைத் தவிர்த்து நிலத்தைக் கொத்துவித்தார். மயில்வாகனத்தின் இரண்டாவது மருமகன் கந்தையா நிலம் கொத்துவதைத் தடுத்தார்.
"அடித்தறையிலிருந்து நீஎனக்குத் தந்த தலப்புத்தறை வரை செல்லிற வாய்க் காலுக்குப் பக்கத்தாலை ஒற்றையடிப் பாதை போகுது. அடித்தறைப் பாதை நிலத்தை விட்டிட்டு தலைப்புத்தறைக்கு நாங்கள் போற ஒற்றையடிப் பாதை நிலத்தை கொத்துவிக்கிறாய். நாங்கள் என்னண்டு என்ரை தறைக்குப் போறது?”
ஒன்றும் புரியாதவனாய் இரண்டாவது மருமகன் கந்தையா மயில்வாகனத்தைக் கேட்டார்.
"உனக்கு வாய்க்காலுக்குப் பக்கத்தாலை பாதை இல்லை. அதாவது “வழி வாய்க்கால்" இல்லை. "வாய்க்கால் வழி” தான் பாதை. உனக்கு எழுதித் தந்த சீதன உறுதியை எடுத்துப் பார். அந்த உறுதியிலை "வாய்க்கால் வழி” எண்டு தான் எழுதிக்கிடக்கு” எண்டு சொன்னார் மயில்வாகனம்.
“கந்தையா விசனத்துடன் அந்த இடத்தை விட்டகன்றார்." 'மழை காலத்திலை மயில்வாகனத்தின்ரை வளவுக் காணியளின்ரை வேலியளும், தோட்ட நிலங்களின் ரை 'எல்லைக் கல்லுகளும் தங்களையறியாமலே மற்றவையின்ரை நிலங்களை நோக்கி முழக் கணக்காய் நகர்ந்து செல்லும். இது இரண்டு மூண்டு வரியத்துக்கு ஒரு தடவை நடக்கும். இதனால யாழ்ப்பாணம் சிவில் கோட்டிலும், கிறிமினல் கோட்டிலும் நாலஞ்சு எல்லைத் தகராறு வழக்குகளை மயில்வாகனம் ஆறேழு வரியமாய் நடத்தினார். அவரை “கோட்டுப் புலி" "எண்டுதான் சனம் கூப்பிடும். தந்தையின் வழியில் தானே தனயனும்.'
ஆறுமுகத்தார் தம்பித்துரையின் தந்தையைப் பற்றி மனத்தடத்தில் இரை மீட்டுகின்றார்.
-198- நீர்வை பொண்னையன் சிறுகதைகள்

தம்பிமுத்தன் மாணவனாக இருந்த காலத்திலேயே அவனுடைய குள்ளத்தனம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.
உடையார் வளவிற்குள் விளாங்காய் பிடுங்கும் பொழுதும் கோயில் தென்னங் காணிக்குள் "கள்ள இளநீர்” பறிக்கும் பொழுதும் மற்றவர்களுக்குத் தெரியாமல் ஒரு பகுதியைப் பதுக்கி விடுவான் தம்பிமுத்தன்.
தம்பிமுத்தனின் ஊரின் கிழக்குப் பக்கத்தில், ஒய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர் இராசா இருந்தார். அவர் வறிய தோட்டக்கர்ரரின் பிள்ளைகளுக்கு இலவசமாக ஆங்கிலம் போதித்து வந்தார்.
தம்பிமுத்தனும் அவனுடைய நண்பர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து மாலை வேளைகளில் படிக்கச் செல்வது வழக்கம். ஒரு நாள் நண்பர்கள் இருவரும் படிப்பதற்கு அவனைக் கூட்டிச் செல்ல அவன் வீட்டுக்குச் சென்றனர்.
"அவன் வாழைக்கு தண்ணி இறைக்கப் போட்டான் மோனையள்”. தம்பிமுத்தனின் தாய் கூறினாள். நண்பர்கள் வாழைத் தோட்டத்துக்குப் போவதற்கு திரும்பினார். "எடே! ஏமாந்த சோனகிரியளே! அவன் கட்டையன் தான் வாழைத் தோட்டத்துக்குப் போட்டன் எண்டு உங்களுக்குச் சொல்லச் சொல்லி எங்கடை ஆச்சியிட்டை சொல்லிப் போட்டு, அவன் இங்கிலிசு படிக்க ராசா வாத்தியார் வீட்டை போட்டான். வேணுமெண்டால் நீங்கள் அங்கை போய்ப் பாருங்கோடா."
தம்பிமுத்தனின் இளைய சகோதரி தங்கச்சி அம்மா சொன்னாள். நண்பர்கள் இராசா ஆசிரியரின் வீட்டுக்குச் சென்ற பொழுது தம்பிமுத்தன் படித்துக் கொண்டிருந்தான்.
எஸ்.எஸ்.சி பரீட்சையில் சித்தி அடைந்த பின் தம்பிமுத்தன் அரசாங்க சேவையில் இணைந்தான். அரசாங்க கட்டிட இலாகாவில் பரி சோதகர் வேலை. காலம் செல்லச் செல்ல கட்டிடக் கொந்தறாத்துக்காரருடன் அவனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் கட்டுகின்ற கட்டி" டங்களை பரிசோதித்துச் சிபார்சு செய்வதாற்கு லஞ்சம் பெற்று பணம் பண்ணினான்.
அவனுக்குத் திருமணம் நடந்தது. அவனுடைய மனைவியின் தந்தை ஒய்வு பெற்ற ஒவசியர். அத்துடன் கட்டிட கொந்தறாத்துக்காரர். சாடிக்" கேற்ற மூடியாச்சு. மாமனின் பேரில் பாரிய கட்டிடக் கொந்தராத்துக்களை எடுத்து பெரும் தொகைப் பணத்தைப் பெருக்கினான் தம்பிமுத்தன்.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் - 199

Page 104
கிடைத்த பணத்தை மாமனார் மூலம் வட்டிக்குக் கொடுத்துப் பணத்தைப் பெருக்கிக் கொண்டிருந்தான்.
தம்பிமுத்தனும் பண்டாரக்குளத்தடி முத்தையனும் ஒன்றாகவே அரசாங்க கட்டிட இலாகாவில் நீண்ட காலமாக வேலை செய்து வந்தனர். முத்தையன் கட்டைப் பிரமச்சாரி. அவனுக்கு நல்லூர் கோவில் வீதியில் முடமாவடிச் சந்தியிலிருந்து தெற்கே கல்லெறி தூரத்தில், இருபத்திநாலு பரப்பில் ஒரு பெரிய வளவுக்காணியும் பழைய வீடொன்றுமிருந்தது. அது மலட்டுச் சொத்து. முத்தையனுக்கு மனைவியோ பிள்ளை குட்டியளோ இல்லை. முத்தையன் முடாக்குடியன். அவனுடைய வளவுக்குப் பின்னால்தான் தம்பிமுத்தனடைய சீதன வீடு வளவு. இருவரும் நீண்ட கால நெருங்கிய நண்பர்கள். முத்தையனுக்கு நன்றாகக் குடிக்கக் குடுத்து, அவனை ஏமாற்றி அந்த இருபத்திநாலு பரப்பு வளவுக் காணியை கள்ள உறுதி முடிச்சு அமர்த்திப் போட்டான் தம்பிமுத்தன். இறுதியில் முத்தையன் அநாதையாகி, கைதடியிருள்ள முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்தான். அவன் நோய்வாய்ப்பட்டு ஒன்றரை வருடத்தின் பின் முதியோர் இல்லத்திலேயே மரணமானான்.
அரசாங்கக் கட்டடங்களைக் கட்டுவதற்குப் பெறப்படும் சீமந்து இரும்புக் கம்பிகள், பாலை முதிரை மரங்களின் ஒரு பகுதி காலத்துக்குக் காலம் கைமாறியது. இக்கட்டிடப் பொருட்களுக்கான பெரும் தொகைப் பணமும் வட்டிப் பணமும்சேர்ந்து, ஒரு காலத்தில் பண்டாரக்குளத்தடி முத்தையனுக்குச் சொந்தமாயிருந்த கோயில் வீதியிருள்ள இருபத்தி நாலு பரப்புக் காணியில் “காமதேனு”, “கற்பகதரு”? "அமுதசுரபி" என்ற பெயர்களுடன் மூன்று வீடுகள் உருவெடுத்தன.
மூன்று பெண்பிளைப் பிள்ளைகளுக்கும் திருமணம் செய்தாகி விட்டது. மூத்த மகளின் கணவன் எக்கவுண்டன். இரண்டாவது மகளின் கணவன் டாக்டர். மூன்றாவது மகளின் கணவன் இஞ்சினியர். ஒவ்வொரு மாப்பிளைக்கும் ஒவ்வொரு வீடும், ஒவ்வொருவருக்கும் முப்பது லட்சம் ரூபாவும் சீதனமாகக் கொடுத்தான் தம்பிமுத்தன். மூன்று மாப்பிளைகளும் சுண்டி எடுத்த சைவ வேளாளக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். முதல் இரு பெண்களும் கனடாவில். இளையவள் லண்டனில். இது போதாதா தம்பிமுத்தன் யாழ்ப்பாண சமூகத்தில் மிடுக்காய்த் தலை நிமிர்ந்து நிற்பதற்கு.
தம்பிமுத்தன்ரை மூத்த மகன் கட்டிடக் கொந்திறாத்துத் தொழில். கொழுத்த சீதனத்துடன் ஒரு கொந்திராத்துக்காரரின் மகளைத் திருமணம் செய்திருக்கின்றார். இளைய மகன் இஞ்சினியரிங் படிக்கின்றான். படிப்பு முடிந்ததும் கனடா செல்லும் உத்தேசம்.
-200- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

தம்பிமுத்தன் இப்போ அரசாங்க சேவையிலிருந்து ஒய்வு பெற்றுவிட்டான். ஆனால் தொழில் செய்வதிலிருந்து அவன் ஒய்வு பெறவில்லை. இப்பொழுதும் அவன் நகை அடைவு பிடிக்கும் கடையில் பங்காளியாக இருக்கின்றான். இந்தத் தொழில் அவனது சொந்தக் கடைக் கட்டிடத்தில் தான் நடக்கிறது. இத்துடன் யாழ் நகரில் இரண்டு கடைகளை வாடகைக்குக் கொடுத்துள்ளான். ஒரு எம்.பி.யைப் பிடித்து மது விற்பனை லைசன்ஸ் எடுத்து ஒரு மது விற்பனைக் கடையைக் குத்தகைக்குக் கொடுத்துள்ளான். அவனுக்கு வவுனிக்குளத்தில் நாப்பது ஏக்கர் வயலுமுண்டு. ஆட்களை வைத்து நெல் வயலில் திறமையாகச் சர்குபடி செய்கின்றான். பளையில் அவனுக்கு ஒரு தென்னந் தோட்டமுமுண்டு.
தம்பிமுத்தன் இப்போ பெரும் புள்ளி. செல்வந்தன். பெரும் சமூக சேவையாளன். அது மாத்திரமில்லை, அவன் ஜே.பி.சமூகத்தில் அவனுக்கு பெரும் மதிப்பு. அவன் இப்போ நல்லூர் வாசி. தனது கிராமத்திலுள்ள உற்றார், உறவினரின்தொடர்பை இருபது வருடங்களுக்கு முன்பே துண்டித்துவிட்டான். தன் கிராமத்தின் பெயரையே தன் இதயத்திலிருந்து அவன் துடைத்தெறிந்து விட்டான். இப்போ அவன் வசிக்கின்ற பிரதேசத்தில் நடைபெறுகின்ற பாடசாலை விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை விழாக்களில் முதன்மை விருந்தினராக அழைக்" கப்படும் பெரும் பிரமுகர் வரிசையில் முன்னணியில் நிற்கின்றான்.
தம்பி முத்தனின் நீண்ட நாள் நண்பன் கனகசுந்தரம். அவனுடன் சேர்ந்து கோழிப் பண்ணை நடத்துவதற்கு ஐந்து லட்சம் ரூபாவை முதலீடு செய்தான் தம்பிமுத்தன். கனகசுந்தரம் அவருக்குத் தண்ணி காட்டி விட்டான். கோழிப் பண்ணை நட்டத்தில் போகின்றது என்று கூறி, அதை இரகசியமாக வேறு ஒருவனுக்கு விற்பனை செய்து முழுப்பணத்தையும் ஏப்பம் விட்டுவிட்டான். சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தம்பிமுத்தனுக்கு எதுவித ஆதாரமுமில்லை. இயக்கத்துக்கும் முறையிடுவதற்கு அவனுக்கு விருப்பமில்லை. இதனால் இயக்கத்துக்கும் தான் லட்சக் கணக்கில் குடுக்க வேண்டிவரும் என்ற பயம் அவனுக்கு.
குடாநாட்டுப் போர் உக்கிரமடைந்து உச்சநிலையை எட்டியதும், மக்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறினர்.
மூன்று நாட்களின் பின் திரும்பி வருவோம் என்ற நிலையில், “காமதேனு”, “கற்பகதரு", "அமுதசுரபி" வீடுகளுக்கு காவலாக வைமனை விட்டுவிட்டு தம்பிமுத்தன் தனது குடும்பத்தினருடன் தென்மராட்சிக்கு சென்றுவிட்டான்.
வைமன் கடந்த இருபத்தைந்து வருடங்களாக தம்பி முத்தனுடன் இருந்து வருகின்றான். தம்பிமுத்தன் திசாமாராவில் வேலை செய்யும்
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -20

Page 105
பொழுது, ஒரு தடவை கதிர்காமம் சென்றிருந்தான். அப்பொழுது எட்டு வயதாக இருந்த வைமனை ஒரு ஆளுக்கு முன்னூறு ரூபா கொடுத்து சுவீகாரம் செய்து கொண்டான். வைமன் தமிழனா, சிங்களவனா அல்லது இந்தியனா என்று அவனது பூர்வீகம் பற்றி ஒருவருக்குமே தெரியாது. அவன் கொச்சைத் தமிழிலும் கதைக்கின்றான். சிங்களத்தை அறவே மறந்து விட்டான்.
தம்பிமுத்தனுடன் யாழ்ப்பாணம் வந்த நாளிலிருந்து வைமன் அவனுடைய வீட்டில் கிணற்றில் தண்ணீர் இறைப்பது, விறகு வெட்டுவது, துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, ஆடுமாடுகளுக்குத் தீனி போடுவது போன்ற சகல வீட்டு வேலைகளையும் செய்து வந்தான். அத்துடன் தம்பிமுத்தனின் மூன்று வீடுகளும் குடிகொண்டுள்ள வளவுகளுக்குள் உள்ள தென்னை, மா, பலா, தோடை எலுமிச்சை போன்ற சகல கன்றுகளுக்கும் தண்ணிர் விட்டு, பசளையிட்டு அவைகளை வனப்புள்ள சோலையாக்கிய உழைப்பு முழுவதும் வைமனுடையதே.
“மூண்டு நாட்களுக்குள் திரும்பி விடுவம் எண்டுதான் வெளிக்கிட்டம். ஆறு மாதங்களாகியும் எங்கடை இடத்துக் போகக்கிடைக்கேல்லை. என்ரை மூண்டு வீடுகளின்ரை கதி என்னவோ? தண்ணி இறைப்பில்லாமல் வளவுகளுக்கை உள்ள வான் பயிர்கள் எல்லாம் கருகிச் செத்துப் போயிருக்குமே. எவ்வளவு பெரிய நட்டமாய்போம். வைமனாலை என்ன செய்ய முடியும்? சாப்பாடு, தண்ணி வென்னிர் இல்லாமல் அவனும் செத்திருப்பன். அல்லது ஆமிக்காறங்கள் அவனைப் புலி எண்டு சுட்டுச்சாக்காட்டியிருப்பாங்கள். அவன் செத்திருந்தாலும் பறுவாயில்லை. அவன் செய்யிற வேலைக்கு வேறை ஆரையாவது கூலிக்குப் புடிச்சாப் போகுது. வைமன் இருந்து வயது போய் பிற்காலத்திலை நோய்வாய்ப்பட்டு பாயில் கிடந்து எங்களுக்கு பெரும் பாரமாய் இருப்பதிலும் பாக்க இப்பிடிச் செத்துப் போவதும் நல்லதுதான்.
இழப்பிலும் ஒரு ஆறுதலை மானசீகமாகக் காணர்கிறான் தம்பிமுத்தன்.
எது எப்படியென்றாலும் தன்னுடைய வீடுகளைப் போய்ப் பாத்துவிட வேண்டுமென்ற அங்கலாய்ப்பு தம்பிமுத்தனுக்கு.
“இப்போ வீடுகளைப் போய்ப் பார்க்கலாம்" என்றதும் தவியாய்த் தவிக்கின்ற அவன், உடனே போவதென்றே திடவைராக்கியம் கொண்டுவிட்டான்.
தம்பிமுத்தனின் இளைய மகன் கொழும்பிலிருந்து லீவில் யாழ்ப்பாணம் வந்தவன். இப்போ இடம்பெயர்ந்து தனது தாய் தந்தையுடன் சங்கத்தானையில் தங்கியிருக்கின்றான். அவன் தந்தையுடன்
-202- நீர்வை பொன்னையன் சிmககைகள்

யாழ் வந்தால் புலி எண்டு ஆமி பிடித்து விடும் என்ற அச்சம் அவனுக்கு. மூத்த மகன் குமாரலிங்கம் இரட்டை நாடித் தேகம் போந்து பொலிந்தவன். நடக்கும் பொழுது தாரா மாதிரி அசைந்தசைந்துதான் நடப்பான். ஆமிக்காறனுக்கு சந்தேகம் வராது. எனவே அவனைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு யாழ் புறப்படுகின்றான்.
நாவற்குளியைக் கடந்து செம்மணியை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.
தொலைவினிலே, விரிந்து பரந்த தொடுவானம் விருப்பு வெறுப்பற்று விழிபூத்துக் காத்திருக்கின்றது.
நீண்ட நெடுஞ்சாலை உயிரற்றுச் செத்துப் போய்க் கிடக்கின்றது. காலை வேளையில் அந்தச் செம்மணிச் சூனிய வெளியில் சென்று கொண்டிருப்பது அவர்கள் குடாநாட்டின் குடலுக்குள் துருவிச் செல்வதாய் புலப்படுகின்றது. சென்று கொண்டிருக்கும் அவர்கள் பின்னால் காலைச் சூரியன் நோக்கெறிந்து நிற்கின்றான்.
புழுதியை மேகங்களாய் இறைத்த காற்று, மூர்க்கமாய் வீசிக்கொண்டிருக்கின்றது. சென்றுகொண்டிருக்கும் அவர்களை புழுதிப் படலம் விழுங்கிவிட்டது.
ஆள் நடமற்று, சந்தடியற்று விளங்கிய அந்தச் சூனியப் பிரதேசத்" துக்குள் தந்தையும் மகனும் பயப்பீதியுடன் பயணித்துக் கொண்டிருக்" கின்றனர்.
செம்மணித் தொங்கலில் “கெற்றப்போலாய்” கிளைவிரித்து இரண்டாகப் பிரிகின்றது சாலை. ஒன்று யாழ் நகருக்கு மற்றது கல்வியங்காட்டுக்கு.
முச்சந்தியில் நாலைந்து ராணுவத்தினர் கும்பலாய் நிற்கின்றனர். ராணுவத்தினர் நின்ற இடத்திலிருந்து குறிப்பிட்டளவு தொலை தூரத்தில், தம்பிமுத்தனும் மகனும் தங்கள் பைசிக்கிளிலிருந்து இறங்கி அவற்றை உருட்டிக் கொண்டு பயத்துடன் தயங்கித்தயங்கி நடந்து வந்தனர்.
அவர்கள் சந்தியை வந்தடைகின்றனர். றோட்டருகாமையில் ஒரு பெரிய அலுமீனிய அண்டாவில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருக்கின்றது.
"தண்ணிர் வேண்டுமா?" என்று ஒரு ராணுவ வீரன் கொச்சைத் தமிழில் அவர்களைக் கேட்கின்றான்.
“வேண்டாம்" என்று அவர்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -203

Page 106
"பைசிக்கிளிலிருந்து இறங்கி நடக்கத் தேவையில்லை, பயப்பிடாமல் ஓடி செல்லலாம்” என்று அவர்களில் ஒருவன் கூறுகின்றான்.
யாழ் செல்லும் வீதியால் செல்லும்படி அவர்கள் கூறுகின்றனர். சந்தியின் வடக்கே, முழு அமைதி நிலவி, வியாபித்திருக்கின்ற அந்தப் பரந்த வெளியிலேயிருந்த செம்மணி மயானமும், ஆகாயமும் மோன நிலையிலுள்ளன.
யாழ் செல்லும் வீதிவழியே சென்று கொண்டிருக்கின்ற அவர்கள் ஊர் எல்லையை அடைந்தனர்.
சாலையின் இரு மருங்கிலுமுள்ள வீடுகள் இடிந்து சிதைந்து காணப்படுகின்றன.
பனை மரங்களும் தென்னை மரங்களும் பட்டுப் போய், வட்டுகள் சரிந்து மூளியாய் நிற்கின்றன.
தெருவோரத்தில் புல் பூண்டுகள் அடர்த்தியாய் ஆக்கிரமித்து நிற்கின்றன.
வளவுகளுக்குள் உள்ள மரந்தடிகள் காய்ந்து பட்டுப்போய் நிற்கின்றன. ஆனால் காட்டுச் செடிகள் பற்றைக் காடாக் காட்சியளிக்" கின்றன.
மனித சஞ்சாரமற்ற அந்தப் பிரதேசத்தில் பயங்கரமான மயான அமைதி
குண்டும் குழிகளும் நிறைந்த அந்தச் சாலை வழியே அவர்கள் நத்தையாய் சென்று கொண்டிருக்கின்றனர். நேரம் போனதே தெரியவில்லை. மதியச் சூரியன் வான்முகட்டைத் தொட்டுவிட்டான். கொதி வெய்யில்.
நீண்டு செல்லும் பகல் பொழுதில் அவர்கள் சோர்ந்து போய் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
அரியாலை ஊடாக, நெடுங்குளம், மாம்பழம் சந்தி வழியே சென்று அவர்கள் யாழ் கச்சேரியடியைச் சேர்ந்தனர்.
"நாங்கள் கள்ளியங்காட்டு சந்தையடியாலை போவம்" தம்பிமுத்தன் கூறுகின்றான். "நாங்கள் ஏன் அவளவு தூரம் போவேணும்? நல்லூர் கந்தசாமி கோயிலடியாலை போகலாமே?”
மகன் குமாரலிங்கம் சொல்கின்றான்.
-204- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

"தம்பி குமார், நான் நல்லூர் கந்தசாமி கோயில் திருப்பணி வேலையளுக்கெண்டு எத்தினை ஆயிரம் ரூபாயைச் சிலவளிச்சன். நல்லூர் திருவிழா இருபத்து நாலு நாள்கள் முழுவதும் விரதமிருந்ததோடை, ஒவ்வொரு நாளும் கோயில் உள்வீதியைச் சுற்றி அங்கப் பிரதட்சினை செய்தன். அது மாத்திரமே? நான் ஐப்பசி வெள்ளி விரதமிருந்ததோடை கந்தசஷ்டி ஆறு நாளும், பத்து வரியமாய், உபவாச விரதம் பிடிச்சன். அப்பிடிப்பட்ட எனக்கு இந்தக் கதியை விட்ட கடவுள் இருக்கிற கோயில் பக்கம் இனி நான் கடசி வரை காலடி எடுத்து வையன்."
விரக்தியும் வெறுப்பும் நிறைந்தவனாய் வைராக்கியத்துடன் கூறுகின்றான் தம்பிமுத்தன்.
அவர்கள் கச்சேரி நல்லூர் வீதியால் சென்று முத்திரைச் சந்தையை அடைந்து, பருத்தித்துறை வீதியால் சென்று கல்வியங்காட்டு சந்தையடியை அடைந்தனர்.
அவர்கள் சென்று கொண்டிருக்கும் சாலையின் இரு மருங்கிலும் போரின் கோரக் காயங்கள் வாய்பிளந்து விகாரமாக காட்சியளிக்கின்றன. கல்வியங்காட்டுச் சந்தை ஆளவரமற்றுக் கிடக்கின்றது. கடைத்தெரு சிதைந்து சின்னாபின்னமாய்க் காடசியளிக்கின்றது.
சந்தையடியால் திரும்பி திருநெல்வேலியை நோக்கிச் செல்லும் றோட்டால் செல்கின்றனர்.
நாற்சந்தி. மேற்கே திருநெல்வேலிக்குச் செல்லும் வீதி, வடக்கே இருபாலையை நோக்கிச் செல்லும் இராசவீதி, தெற்கே நல்லூர் கோவில் வீதியை நோக்கிச் செல்லும் இராமலிங்கம் றோட்.
தம்பிமுத்தனாக்கள் கோயில் வீதிப்பக்கம் திரும்புகின்றனர். தனது வீடுகளைப் பார்த்துவிட வேண்டுமென்ற வேட்கை தம்பிமுத்தனுக்கு. களைப்பையும் பொருட்படுத்தாமல் அவன் ஆவேசத்துடன் பைசிக்கிளை ஒட்டுகின்றான்.
இராச வீதிச் சந்தியிலிருந்து அரை மைல் தூரத்தில் வாலை அம்மன் கோயில், அதன் முன் பகுதி “செல்" விழுந்து சேதமுற்றுச் சிதைந்து கிடக்கின்றது.
கோவில் கதவுகள் அகலத் திறந்திருக்கின்றன. கோவிலடியிலிருந்து கூப்பிடு தூரத்தில் றோட்டோரத்தில இரண்டு மனித எலும்புக் கூடுகள்.
தம்பிமுத்தனின் நெஞ்சில் திகில் உறைந்தது. மகனுடைய ஆழ்மனதில் அச்சம் திரளாய்ப் புரண்டது.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -205

Page 107
பதட்டத்துடன் அவர்கள் அவ்விடத்தை விட்டு விரைவாய் அகல்கின்றனர்.
கோயில் வீதி முடமாவடிச் சந்தியிலிருந்து கல்லெறி தூரத்தில் தம்பிமுத்தனின் வீடுகள்.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் செல்லும் பொழுதே "செல்" வீச்சில் முறிந்து சிதைந்து தென்னைகளும் மா, பலா மரங்களும் காய்ந்து கருகிப் பட்டுப் போய் நிற்கின்றன.
தம்பிமுத்தராக்கள் அவனது வளவுகளை அண்மித்ததும் அவனது விழிகள் அவனுடைய வீடுகளைத் தேடி அலைகின்றன.
"என்ரை காமதேனு', 'கற்பகதரு ,'அமுதசுரபி எங்கே?" தம்பிமுத்தனின் இதயம் ஒலமிடுகின்றது. “காமதேனு”, “கற்பகதரு", "அமுதசுரபி" வீடுகள் கொங்கிரீற் குவியல்களாய்ச் சிதைந்து கிடக்கின்றன.
"ஐயோ என்ரை வீடுகள்” ஆவேசமாக அவன் வீரிட்டு அலறுகின்றான்.
அவனுடைய விழிகள் உருண்டு பிரள்கின்றன. நெஞ்சை அழுத்தியபடியே தம்பிமுத்தன் சாய்கின்றான். “அப்பா! அப்பா!” மகன் குமாரலிங்கம் கத்திக் கொண்டு தந்தையைத் தாங்கிப் பிடிக்கின்றான்.
"என்ரை வீடுகள், என்ரை." உதடுகள் அசைகின்றன. கணப்பொழுதில் தம்பிமுத்தனின் விழிகள் நிலைகுத்தி நிற்கின்றன. பயபிதியில் குமாரலிங்கம் அலறியபடியே ஒடிக் கொண்டிருக்கின்றான்.
"காமதேனு" குடிகொண்டிருந்த வளவின் ஒரு மூலையில் தம்பிமுத்தரின் பிரேதம் அனாதரவாகக் கிடக்கின்றது.
அடுத்த நாள் கோவில் வீதியால் வந்த ராணுவக் "கப்ரனின்" கட்டளைக்கிணங்க ராணுவத்தினரால் எரியூட்டப்பட்ட தம்பிமுத்தனின் பிரேதத்தின் எரிந்த சாம்பல் ஆறடி நிலத்தில் படர்ந்திருக்கின்றது.
-2OO5
★
-206- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

கானல்
ee
அண்ணர்!”
"என்ன தம்பி வடிவேலு?"
“வந்து கொண்டிருக்கு"
“என்ன வந்துகொண்டிருக்கு"
"சனம் வந்துகொண்டிருக்கு"
நிலம் வெளித்துக்கொண்டிருக்கிறது. விடிந்தும் விடியாமலுமிருக்கின்றது. அப்போது சுப் பர்செனிக்கின் இடிமுழக்கம் போன்ற பயங்கர உறுமல். தூரத்தில் தொடர்ந்து பயங்கர குண்டுச்சத்தம். இரவிரவாக சகடைபீப்பா, பொம்மர், தும் பி எல்லாம் மாறி மாறி மூர்க்கத்தனமான குண்டுமாரி வெறித்தனமான ஷெல் அடி.
மூன்று நாட்களின் முன்னரே சீபிளேன் அப்பிரதேசத்தில் தாழப்பறந்து நோட்டமிட்டுச் சென்றது.
“என்ன நடக்கப் போகின்றதோ" என்று அப்பிரதேச மக்கள் கடந்த மூன்று நாட்களாக, இராப்பகலாகப் பயபிதியுடன் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -207

Page 108
தார்மீக அரசின் அதி உத்தம தர்மிஷ்டரின் ஆசியுடன் நேற்று மாலை வலிகாமம் மேற்கில் இராணுவ நடவடிக்கை தொடங்கிவிட்டது.
வானமும் பூமியும் புகை மண்டலம். போராளிகள் வீராவேசமாக எதிர்த்துச் சமராடிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் இரவிரவாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
"புன்னாலைக்கட்டுவன், ஊரெழு, கோப்பாய் றோட்டுக்களால் மக்கள் திரள் திரளாக வந்து கொண்டிருக்கின்றனர். இப்பென்ன செய்யிறது சிவா அண்ணை?”
"அதுக்கேன் பதட்டப்படுகிறாய் மோனை?”
“சனம் எக்கச்சக்கமாய் வந்து கொண்டிருக்கு. நாங்கள் என்னண்டு சமாளிக்கப்போறமோ?"
"தம்பி வடிவேல். இது எங்களுக்கு முதல் முறையே? இதுக்கு முந்தி எங்கடை ஊருக்கு எத்தினை தடவை சனம் சனமாய் வந்து குவிஞ்சுது. நாங்கள் அவையளை ஆதரிச்சு அனுப்பேல்லையே?"
"ஆனா இந்த முறை.
"ஒப்பறேசன் லிபறேசன் நடக்கேக்கை வடமாராட்சியிலையிருந்தும், அச்சுவேலி, ஆவரங்காலிலிருந்தும் எவ்வளவு மக்கள் இடம்பெயர்ந்து வந்து ஒரு மாதத்துக்கு மேலை எங்கடை ஊரிலையுள்ள நாலு பள்ளிக்கூடங்களிலையும், வீடுகளிலையும் இருந்தினை. நாங்கள் அவையளை ஆதரிச்சனுப்பேல்லையே?”
s
"ஆதரிச்சனாங்கள்தான். அவையளுக்கு எதுவித குறைபாடுகளுமில்லாமல் ஆதரிச்சனுப்பி வைச்சம்"
“பலாலி இராணுவ முகாமை ஐஞ்சு இயக்கங்களும் அடிக்கேக்கை பலாலி, வசாவிளான், குப் பிளான், குரும்பசிட்டி, ஏழாலை, புன்னாலைக்கட்டுவன் பகுதியளிலிருந்து எங்கடை ஊருக்குத்தானே மக்கள் வந்தினை. அவைக்கு நாங்கள் ஒரு குறையும் விட்டு வைக்கேல்லையே."
"நீ சொல்லிறது மெய்தான் சிவா அண்ணை."
"ஏன், இந்தியன் ஆமிப் பிரச்சினை துவங்கின பொழுது யாழ்ப்பாணம், நல்லுTர், வணிணார்ப்பணிணை, கந்தர்மடம், திண்னவேலிப் பகுதியளிலையிருந்து எவ்வளவு சனம் இடம் பெயர்ந்து வந்து எங்கடை பள்ளிக்கூடங்களிலும் வீடுகளிலும் இருந்தினை. நாங்கள் அவையளை கைவிட்டமே? எங்களால செய்யக்கூடிய எல்லாத்தையும் செய்தனாங்கள்தானே. இப்பேன் யோசிப்பான்?”
அதில்லை அண்ணை. இப்ப உள்ள நிலைமையிலை.
-208- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

“இப்பென்ன? இப்ப வலி மேற்கிலையிருந்து மக்கள் இடம்பெயர்ந்து கொண்டு வருகினை. நாங்கள் தயாராய்த் தானிருக்கிறம். சரி, வா இப்ப பள்ளிக்குடத்தடிக்குப் போவாம்."
பைசிக்கிளை எடுக்கின்றான் சிவதாசன். "ராஜன் தம்பி?” “என்ன அண்ணை?" அயல்வீட்டு ராஜன் கேட்டுக் கொண்டே படலையடிக்கு வருகின்றான். "தம்பி ராஜன், நேற்று நடந்த எங்கடை கூட்டத்திலை நாங்கள் எதிர்பார்த்தபடி இப்ப வலி மேற்கிலையிருந்து மக்கள் இடம்பெயர்ந்து இரவிரவாய் வேறை ஊர்களுக்கு ஓடிக் கொண்டிருக்கினை. அவையிலை கணிசமான ஆக்கள் எங்கடை ஊருக்கும் வந்து கொண்டிருக்கினை." "இப்ப நாங்கள் என்ன செய்ய வேணும் சிவா அண்ணை?" "ராஜன், முதலிலை நீ கொலனிக்குப் போ. அங்கை உள்ள விமலாவையும் நாலு பெண்பிள்ளையளையும் உடனடியாய் தெருவடிப் பள்ளிக்குடத்துக்கு வரச் சொல்லு"
"ஏன் விமலாவாக்களை தெருவடிப் பள்ளிக்குடத்துக்கு வரச் சொல்லுறியள்?"
"வாற ஆக்களை முதலிலை தெருவடிப் பெரிய பள்ளிக் கூடத்திலை இருத்த வேணும். விமலாக்கள் வந்து ஆக்களைப் பதிவு செய்து சரியாய் கணக்கெடுத்தால் தான் வந்த ஆக்களுக்கு சமையல் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய முடியும்.
“சரி சிவா அண்ணை இப்பவே நான் கொலனிக்குப் போறன்." ராஜன் கொலனிக்குப் புறப்படுகின்றான். "பொறு மோனை ராஜன். விமலாவாக்களை பள்ளிக் கூடத்தடிக்கு அனுப்பிப் போட்டு, நீ கையோடை மூண்டு பேக்கறிகளுக்கும் போ. ஒவ்வொரு பேக்கறிக்காரரிடமும் பாண் நூறு இறாத்தல் வீதம் காலை எட்டு மணிக்கு முந்தி தெருப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வரச் சொல்லு. நேற்றி கூட்டம் முடிஞ்ச உடனை பேக்கறிக்காறரிட்டை இது பற்றி நாங்கள் சொல்லியிருக்கிறம். அத்தோடை ஒவ்வொரு பேக்கறி யிலையிருந்தும் நூறு நூறு கல்பணிஸ்களை கையோடை எடுத்துவா."
"ஏன் அண்ணை கல்பணிஸ்?" "ஆக்கள் இரவிரவாய் நித்திரை முளிச்சு, கனதுாரம் நடந்துகளைச்சுப் போய் வந்திருக்கினை. முதலிலை அவைக்கு தேத்தண்ணியும் கல்பணிசும் குடுப்பம். பிறகு ஒன்பது மணியளவிலை பாணையும் பருப்புக்கறியையும் குடுப்பம்."
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -209

Page 109
“சரி அண்ணை நான் முதல் கொலனிக்குப் போறன்." ராஜன் கொலனியை நோக்கி விரைகின்றான். ஆரவாரம் கேட்டு கனகலிங்கம் வருகின்றான். " என்ன சங்கதி சிவா அண்ணை? பரபரப்பாய் நிக்கிறியள்?" "தம்பி கனகு, இடம் பெயர்ந்து மக்கள் வந்து கொண்டிருக்கினை. நீ போய் செட்டியாற்ரை லான்ட்மாஸ்டரைப் பிடிச்சுக் கொண்டு யூனியனுக்குப் போய், அங்கையிருந்து அரிசி, பருப்பு, தேயிலை, சீனி எல்லாத்தையும் எடுத்துக்கொண்டா. கணக்கை பிதேச சபைச் செயலாளர் தீர்க்கிறன் எண்டு சொல்லியிருக்கிறார். அதோடை றெட்பானா கிளையிலை பெரிய அண்டாக்களையும் சாப்பிடுகிற கோப்பைகளையும், தண்ணி குடிக்கிற பிளாஸ்டிக் கப்களையும் எடுத்துக் கொண்டுவா."
கனகலிங்கம் செட்டியார் வீட்டுக்கு விரைகின்றான். சிவாவும் வடிவேலும் தெருவடிப் பள்ளிக் கூடத்தடிக்குச் செல்கின்றனர்.
பள்ளிக்கூட வாசலில் றோட்டின் இரு பக்கங்களிலும் நூற்றுக்கணக்" கான மக்கள் மூட்டை முடிச்சுகளுடன் களைச்சுச் சோர்ந்து போயிருக்கின்றனர். அவர்களுடைய முகங்களில் பயபிதி. அவர்கள் அனைவரும் பேரதிர்ச்சியுடன் இருக்கின்றார்கள்.
பள்ளிக்கூட "கேற்” பூட்டிக்கிடக்கின்றது. கேற்றிற்குப் பின்னால் காவலாளி சண்முகம் தூங்கி விழுந்து கொண்டிருக்கின்றான்.
"சண்முகம், இவை ஏன் றோட்டிலை இருக்கினை? நீ ஏன் கேற் திறக்கேல்லை?”
சிவா கடுகடுப்பாகக் கேட்கின்றான். காவலாளி சண்முகம் திருதிருவென்று முழித்தபடியே நிற்கின்றான். "ஏன் பேசாமல் நிக்கிறாய்? கேற் ஏன் திறக்கேல்லை?” அதட்டுகின்றான் சிவா. "ஆக்கள் வந்தால், கேற்றைத் திறந்து அவையளை பள்ளிக்கூடத்" துக்கை விடச்சொல்லி நான் நிக்கேக்கை நேற்று பள்ளி அதிபர் உனக்கு சொன்னவர் தானே. நீ ஏன் கேற் திறக்கேல்லை?”
கர்ணகடுரமாகக் கத்துகின்றான் சிவா. "நான் என்ன செய்யிறது சிவா அண்ணை? நேற்று இரவு இரண்டு பேர் வந்தினை. அவையின்ரை தோளிலை துவக்குகள். நாங்கள் வந்த ஆக்களைப் படம் எடுக்கவேணும் நாங்கள் சொல்லும் மட்டும் கேற்
-210- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

திறக்க வேண்டாம் எண்டு சொல்லிப் போட்டு போச்சின. அப்ப நான் என்னண்டு கேற்றை திறக்கிறது?” சண்முகம் அச்சபாவத்துடன் கூறினான். "அது போகட்டும். சரி இப்ப நாங்கள் சொல்லிறம். கேற்றைத்திற." உறுதியுடன் சிவா கூறுகின்றான். "சரி அண்ணை நான் திறக்கிறன். பிறகு வாற பிரச்சினைக்கு நீ தான்பொறுப்பு.”
“ஒ. அதை நான் பாத்துக் கொள்ளிறன். இப்ப கேற்றைத்திற." கேற்றைத் திறக்கின்றான் சண்முகம். மக்கள் பள்ளிக்கூடத்துக்குள் செல்கின்றனர்.
"இப்ப நீங்கள் எல்லாரும் வடக்குப் பக்கத்திலையுள்ள அந்த பெரிய மண்டபத்துக்கை போங்கோ. அங்கை உங்களுக்கு வசதியான இடத்தைப் பிடித்துக் கொண்டு களைப்பாறுங்கோ. உங்களுக்கு வேண்டியதெல்லாத்தையும் நாங்கள் செய்து தாறம். நீங்கள் ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ." சிவாவும் வடிவேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறித் தென்பூட்டுகின்றனர்.
மக்கள் வசதியான இடம் பிடிப்பதற்கு முண்டியடித்துக்கொண்டு மண்டபத்திற்குள்செல்கின்றனர். விமலாவும் ஏனைய தொண்டர்களும் அந்த முகாமிலுள்ளவர்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.
இப்பள்ளிக்கூடத்தின் கணக்கெடுப்பு முடிந்த பின் ஊரிலுள்ள மற்றைய மூன்று பள்ளிக்கூடங்களிலும் உள்ள இடம்பெயர்ந்தவர்களைக் கணக்கெடுக்க இத்தொண்டர்கள் செல்ல வேண்டும்.
இந்த முகாமிலுள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு கல் பணிஸ்களும் தேனீரும் வழங்கப்பட்டு விட்டது. இனி அவர்களுக்கு ஒன்பது மணியளவில் பாணும் பருப்புக் கறியும் வழங்கப்படவிருக்கின்றது. மக்கள் தங்களை ஆசுவசப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். குண்டு வீச்சாலும், ஷெல் அடியாலும் அவர்களுக்கு ஏற்பட்ட அச்சமும் அதிர்ச்சியும் அவர்களிடமிருந்து இன்னும் அகலவில்லை. தங்களுடைய வீடு வாசல்களையும் பொருள் பண்டங்களையும் இழந்து நிற்கதிக்குள்ளாகி விட்டோமே என்ற துயரம் அவளர்களது இதயத்தை வதைத்துக் கொண்டேயிருக்கின்றது.
சுன்னாகச் சந்தை கூடவில்லை. நீர்வேலி வாய்கால் தரவைப் பிள்ளையார் கோவிலடியில் சந்தை கூடியிருக்கின்றது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -2ll

Page 110
மார்க்கண்டு ஆட்கள் முகாமிலுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவு சமைப்பதற்குத் தேவையான காய்கறிகளைச் சந்தையில் சேகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
சாப்பாடு சமைப்பதற்கும், சுகாதாரத்தைப் பேணுவதற்கும் முகாமிலுள்ளவர்களிடையே ஏற்படுகின்ற பிணக்குகளைத் தீர்த்து வைப்பதற்கும், முகாமிலுள்ள தகுதிவாய்ந்த ஆண்களையும் பெண்களையும் சில தொண்டர்களையும் உள்ளடக்கிய குழுக்கள் முகாமிலுள்ளவர்களின் கூட்டத்தில் அமைக்கப்பட்டு விட்டன.
முகாமிற்கு பெரிசுகள் வருகின்றனர். "சிவா அண்ணை நல்ல வேலை செய்யிறியள். நாங்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்யிறியள். இதாலை எங்களுக்கும் பெரும் ஆறுதல். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள். நாங்கள் களத்துக்குப் போறம். உங்களுக்கு ஏதாவது தேவையெண்டால் எங்கடை முகாமுக்குச் சொல்லி அனுப்புங்கோ. சரி நாங்கள் போய்வாறம்."
பெரிசுகள்' செல்கின்றனர். 'சிறிசுகள் வருகின்றனர். "தோழர் ஏதாவது உதவி தேவையா? நாங்கள் எப்பவும் உதவத் தயார். உங்களுக்கு என்ன தேவை சொல்லுங்கோ தோழர்”
“இப்ப எல்லாம் இருக்கு. தேவையெண்டால் சொல்லியனுப்புறம்." "சிவா, நாங்கள் போட்டு வாறம்." 'சிறுசுகள் செல்கின்றனர். 'கறுப்பு உடையுடன் சிலர் வருகின்றனர். இந்த முகாமிலுள்ளவர்களின் விபரங்களடங்கிய ஒரு பட்டியல் எங்களுக்குத் தேவை. அதைத் தயாரித்துத் தாருங்கோ. தேவையெண்டால் வேண்டிய அரிசி, மா, சீனி போன்ற சமான்களைத் தாறம்."
"இங்கு இப்பெல்லாம் இருக்கு. தேவையெண்டால் கேக்கிறம்.” வடிவேலின் பதில்.
"பட்டியலை எங்கடை முகாமுக்கு அனுப்பி வைக்க வேணும். சரி நாங்கள் வாறம்."
'கறுப்பு சேட்டுகள் செல்கின்றனர். துப்பாக்கிகளுடன் இருவர் வருகின்றனர். “இந்த முகாமுக்கு பாதுகாப்புக் கொடுக்கும்படி எங்கடை "ஹை கொமாண்டிலிருந்து ஒடர்” வந்திருக்கு. நாங்கள் இரண்டு பேரை
-212- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

ஆயுதங்களுடன் அனுப்பி வைக்கிறம். அவை இந்த முகாமிலை தங்கியிருந்து பாதுகாப்பு வழங்குவினை."
"இப்ப இஞ்ஞை ஒண்டும் தேவையில்லை. பாதுகாப்பு தேவையெண்டால் உங்களிடம் கேக்கிறம்.”
வடிவேல் கூறுகின்றான். துப்பாக்கிகள் செல்கின்றன. சமையல் ஆரம்பமாகிவிட்டது. மும்முரமாகச் சமையல் நடந்து கொண்டிருக்கின்றது.
“ஐயய்யோ! இதென்ன கொடுமை! இதைப் பாக்கக் கேட்க ஆளில்லையோ?”
உரத்த குரல்கள். சத்தம் வந்து கொண்டிருக்கும் பக்கம் எல்லா விழிகளும் திரும்பு கின்றன.
பதைபதைப்புடன் கத்திக்கொண்டு "ஐவர் ஓடி வந்து கொண்டிருக்கின்றனர்.
ஐவருக்கும் வாட்டசாட்டமான மிடுக்கான உடற்கட்டு, ஒரே மாதிரி ஊதா நிற நீள் காற்சட்டை வெண் நீல சேட் ஒரே மாதிரி முடிவெட்டு.
அங்கு கூடியிருந்த மக்களுக்கு ஆச்சரியம். “ஆர் இஞ்சை பொறுப்பாளர்?" ஆவேசக் குரல். “ஏன்? நான்தான் என்ன சங்கதி?” சிவா நிதானமாகக் கேட்கின்றான். “உங்களுக்கு எள்ளளவும் ஈவிரக்கமில்லையே?” "ஏன் கேக்கிறியள்?" "எங்கடை இந்த மக்கள் அகோர விமானத் தாக்குதலாலையும், கொடூர ஷெல் அடியாலையும் தங்கடை வீடு வாசல்களை விட்டு இடம் பெயர்ந்தார்கள். அவை இரவிரவாய் நித்திரையில்லாமல், பயத்தோடை இவ்வளவு தூரம் நடந்து களைச்சுப் போய் வந்திருக்கினை."
"அது எங்களுக்கும் நல்லாய்த் தெரியும்." வடிவேலு அழுத்திக் கூறுகின்றான். "அப்பிடிப்பட்ட 'எங்கடை மக்களைச் சமைக்க விட்டிட்டு உங்கடை ஆக்களெல்லாம் அரட்டை அடிச்சுக் கொண்டிருக்கினை. இது தானே உங்கடை சேவையின் லட்சணம்?"
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -213

Page 111
"இஞ்சை எங்கடை ஆக்கள் ஒருதரும் அரட்டை அடிச்சுக் கொண்டிருக்கேல்லை. அவையவைக்குக் குடுத்த அந்தந்த வேலையளை அவை செய்து கொண்டுதானிருக்கினை."
"அப்ப இஞ்சை சமைச்சுக் கொண்டிருக்கிறது ஆர்?" “எங்கடை சில தொண்டர்மாரும் முகாமிலை உள்ள சிலரும் சேர்ந்துதான் சமையல் செய்து கொண்டிருக்கினம். முன்பும் எத்தினையோ தடவை இப்பிடித்தான் செய்தனாங்கள். இதுதான் வழக்கம்."
"நீங்கள் எல்லாரும் விடுங்கோ. நாங்கள் செய்யிறம்." சமையல் செய்து கொண்டிருப்பவர்களை அப்புறப்படுத்திவிட்டு, வந்த ஐவரும் வேலை செய்யத் தொடங்குகின்றனர்.
வந்தவர்களில் ஒருவர் தேங்காய் திருவுகின்றார். இன்னொருவர் காய்கறி வெட்டுகின்றார். மற்றொருவர் அரிசியைக் கழுவிக் கொண்டிருக்கின்றார். இன்னொருவர் விறகுகளை அடுப்பிற்குள் செருகிக் கொண்டிருக்கின்றார். ஒருவர் தேங்காய்ப்பால் பிழிந்து கொண்டிருக்கின்றார்.
'ஐவரும் கனகச்சிதமாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு கூடியிருந்த மக்களுக்கு வியப்பு. பேராச்சரியம், இவ்விளைஞர்களின் செயலைப் பார்த்து மக்கள் புளகாங்கிதமடைகின்றனர். சிலரது கண்கள் பனிக்கின்றன.
"அங்கை எங்கடை பொடியள் எங்களைப் பாதுகாக்கிறதுக்கு தங்கடை உயிர்களைப் பணயம் வைச்சு ஆமியோடை வீரதீரமாய் சண்டை பிடிச்சுக் கொண்டிருக்கினை."
ஒருவர் பெருமையுடன் கூறுகின்றார். "இது இண்டைக்கு நேற்றல்ல. வரியக்கணக்காய் இவை போராடிக் கொண்டிருக்கினை."
மற்றவர். “இந்தச் சண்டையிலை நாங்கள் எங்கடை வீரர்கள் எவ்வளவு பேரை இழந்திட்டம். ஆயிரக்கணக்கிலை பறிகொடுத்திட்டம்."
மனம் குமைந்து வேதனையுடன் கூறுகின்றார். ஒருவர். "இப்பிடிப்பட்ட பிள்ளையளைப் பெற்றதற்கு நாங்கள் எவ்வளவு குடுத்து வைச்சம்?"
அங்கு கூடியிருந்தவர்கள் ஆத்மாத்தமாக வாழ்த்துகின்றனர்.
'ஐந்து இளைஞர்களும் சமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
-214- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

திடீரென ஒரு "வீடியோக் கமறா" நுளைகின்றது. அந்த ஐவரையும் சுற்றி பலகோணங்களில் கமறா இயங்குகின்றது. வந்த மாதிரியே வீடியோக் கமறா வெளியேறுகின்றது. அந்த ஐவரும் கமறாவைப் பின்தொடர்ந்து செல்கின்றனர். அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பேரதிர்ச்சி! தேங்காய் துருவிய குறையில் கிடக்கின்றது. மரக்கறி வகைகள் வெட்டியபடியே குறையில் கிடக்கின்றன. உலைத் தண்ணீர் கொதித்தபடியே இருக்கின்றது. "இவங்கள் எங்கடை பெடியள்தானா?”
மக்கள் மனதில் சந்தேகக் கேள்வி.
-2005
★
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -215

Page 112
ஜென்மம்
-216
ee
உள்ளே செல்லவா அல்லது திரும்பிப் போகவா?”
அவள் மனதில் ஊசலாட்டம். “என்ன திரும்பிப் போவதா? பதினைஞ்சு பதினாறு மைல் சைக்கிள் ஓடி வந்தம். அதுவும் எதிர்காத்துக்கை எவ்வளவு கஷ்டப்பட்டம். சும்மா திரும்பிப் போகவா இவ்வளவு கஷ்டப்பட்டம்?"
"நான் என்ன ஊர் உலாத்தவா வந்தனான்?" "அப்ப, நான் எந்த முகத்தை வைச்சுக் கொண்டு மனிசருக்கு முன்னாலை போய் நிற்கிறது?”
“இப்பிடிக் கேடு கெட்ட வேலையைச் செய்து போட்டு.
“என்ன, ஒரு தரமா? இரண்டு தரமா, மூண்டு தடவையள் படுகேவலமாய் நடந்து போட்டு, எப்படி மணிசர் மக்களின் ரை முகத்திலை முளிக்கிறது?"
நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

"நான் திரும்பிப் போனால் உமா அக்கா என்னைப் பற்றி என்ன நினைப்பா?”
"உமா அக்கா எவ்வளவு நம்பிக்கையோடை, என்னைக் கஷ்டப்பட்டு இஞ்சை கூட்டி வந்தா?”
"அவவுக்கு இதிலை என்ன இலாபம்? என்ரை நன்மைக்குத்தானே அவ இவ்வளவு கஷ்டப்படுகிறா."
"அப்பிடி என்ன மற்றவை செய்யாததை நான் செய்து போட்டன்?" "உலகத்திலை இப்பவும் என்னைப் போல எத்தனையோ பேர் நடந்து கொண்டிருக்கினை."
"இவ்வளவும் நடந்து போச்சு. இனி இதுக்கு மேலை என்ன நடக்கக் கிடக்கு?”
"சரி, உள்ளைய் போய்த்தான் பார்ப்பமே." அவள் உள்ளே செல்வதற்குக் காலடி எடுத்து வைக்கின்றாள். மனதில் பதட்டம். ஆளரவம் கேட்டு, தலையை நிமிர்த்திப் பார்க்கின்றாள் இந்திரா. கோகிலாவின் உடலில் சிறு நடுக்கம். இந்திரா அப்பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு நிலையப் பணியாளர்.
சாந்தம் நிறைந்த கம்பீரத்துடன் இருக்கின்றாள் இந்திரா. நெற்றியில் நெருப்புத் தணலாய்ப் பெரிய குங்குமப் பொட்டு. கண்களில் மலர்ச்சி. சிறு முறுவல்.
"வா மகள். இப்பிடி வந்து இரு மோனை." வாஞ்சையுடன் கூறுகின்றாள் இந்திரா. தன் மேசைக்கு முன்னாலுள்ள கதிரையை இழுத்து விடுகின்றாள். கோகிலாவுக்கு வியப்பு. அவள் உள்ளத்தில் தென்பு. "என்ரை அம்மாவைத் தவிர, இப்பிடி ஒருத்தரும் என்னைப் பாசமாய்க் கூப்பிட்டதில்லையே. என்ரை அம்மாவின்ரை குரல் சாயலாயிருக்கு. அம்மாவைப் பாக்க வேணும் போலை கிடக்கு.
என்ரை அம்மா இப்ப பள்ளிக்குடத்திலை படிப்பிச்சுக் கொண்டிருப்பா.
இந்த நிலையிலை நான் என்னெண்டு அம்மாவைப் பார்க்கிறது. இந்தக் கோலத்திலை அம்மா என்னைப் பாத்தா, அவவின்ரை மனம் என்ன
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -27

Page 113
பாடுபடும்? அதுவும் மூண்டு வரியத்துக்குப் பிறகு. என்ரை இந்த விதவைக் கோலத்தைப் பாத்தா அவவாலை எப்படித் தாங்கேலும்?"
கோகிலா பொருமுகின்றாள். அவள் கண்கள் பனிக்கின்றன. “ஏன் தயங்கிறாய் மகளே. இரன்." கோகிலா உட்காருகின்றாள். தனக்கு முன்னாலிருந்த புத்தகத்தை மூடுகின்றாள் இந்திரா. கோகிலாவைப் பார்த்து முறுவலிக்கின்றாள்.
அவளது நிர்மலமான முறுவலிப்பில் கருணை பொங்கிப் பிரவகிக்கின்றது.
சஞ்சலமாயிருந்த கோகிலாவின் உள்ளம் சாந்தமடைகின்றது. என்னெண்டு வந்தனி? சயிக்கிள்ளையோ? நல்லாய்க் களைச்சிருக்கிறாய் மோனை.
“ஓமம்மா. சயிக்கிள்ளைதான் வந்தனாங்கள்." “என்ன செய்யிறது? இந்தக் காலத்திலை இப்படிக் கஷ்டப்பட வேண்டிக் கிடக்கு."
"நான் மாத்திரமே அம்மா? என்னைப் போலை எத்தினை ஆயிரம் பேர் சொல்லொணாத் துன்பப்பட்டுக்கொண்டிருக்கினை?”
“ஆர் உமாவோடையே வந்தனி?” “ஓமம்மா. உமாஅக்கா தான் என்னை இஞ்சை கூட்டி வந்தவ." "உம்மைப் பற்றி உமா எல்லா விசயத்தையும் போன கிழமை சொன்னவ. ஏன் இப்படிச் செய்தனி மகளே?”
ஆதூரமாய்க் கேட்கின்றாள் இந்திரா. சிலையாயிருக்கின்றாள் கோகிலா. சிறிது நேர அமைதி, திடீரென மடைதிறந்தாற் போலக் குலுங்கிக் குலுங்கி அழுகின்றாள் கோகிலா.
அவளை வைத்த கண் வாங்காமலே பார்த்தபடியே இருக்கின்றாள் இந்திரா.
இந்திராவின் உள்ளத்திலும் குமுறல். எவ்வளவு நேரம்தான்.அவர்கள் அப்படி இருந்தார்களோ? கோகிலா அழுது, ஆறி அமைதியடைகின்றாள்.
-218- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

கோகிலாவின் மனச்சுமை மெல்ல மெல்ல அகல, அவளது முகம் நிர்மலமாகின்றது.
"பிள்ளை, அந்த பூக்கண்டடியிலை தண்ணிப் பைப் இருக்கு. முகத்தைப் கழுவி விட்டு வா மேனை."
விழிகளை மலர்த்தி, நிமிர்த்தி கோகிலாவைப் பார்த்து கனிவாய்க் கூறுகின்றாள் இந்திரா.
கோகிலா முகம் கழுவிவிட்டு வருகின்றாள். தனது "பிளாஸ்"க்கிலிருந்து இரண்டு கோப்பைகளில் தேனீரை ஊற்றுகின்றாள் இந்திரா.
"குடி மோனை." நன்றிப் பார்வையுடன் தேனீரைக் குடிக்கின்றாள் கோகிலா. “சரி என்ன நடந்ததெண்டு இப்ப சொல்லு மகளே." மூண்டு வரியத்துக்கு முந்தி ஒரு நாள். பின்நேரம் ஐஞ்சு மணி இருக்கும். நானும் இரண்டு சிநேகிதிகளும் சயன்ஸ் அக்கடமியிலை "ரியூசன்" முடிஞ்சு பஸ் எடுக்க வந்து கொண்டிருக்கிறம்.
திடீரென பாரிய குண்டுச் சத்தம்! நாங்கள் பயந்தபடி பஸ் ஸ்ரான்ட்டுக்கு ஓடினம். பஸ் ஸ்ரான்டிலை ஒரு சனத்தையும் காணேல்லை. பஸ்கள் ஒண்டும் இல்லை. ஒரே ஒரு மினிபஸ்தான், பஸ் ஸ்ரான்ட் தொங்கலிலை நிண்டுது. எங்களுக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. அந்த மினி பஸ்சடிக்குப் போனம். அந்த பஸ் அச்சுவேலிக்கு ஒடுறது. திகைச்சுப் போய் நிக்கிறம். "என்ன தங்கச்சியள்? எங்கை போக வேணும்?” ஒரு இளைஞன் கேட்கின்றான். "நாங்கள் கோண்டாவிலுக்குப் போக வேணும்." “சரி ஏறுங்கோ, கொண்டே விடுகிறன்." நிதானமாகக் கூறுகின்றான். எங்களுக்கு நம்பிக்கையில்லை.
நாங்கள் மெளனமாய் நிக்கிறம்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -29-.

Page 114
"பயப்பிடாதையுங்கோ. ஏறுங்கோ." திகைத்து நிக்கிறம். “ஆமிக்காரங்கள் வரப்போறாங்கள். நிக்கிறதுக்கு நேரமில்லை. கெதியாய் ஏறுங்கோ."
அவன் அவசரப்படுத்துகின்றான். நிண்டாலும் பெரிய ஆபத்து. ஆமி வந்தால் எங்கடை கதை முடிஞ்சுது. வேறை வழியில்லை. பஸ்ஸிலை ஏறினம்.
எங்கடை நெஞ்சு "திக், திக்” எண்டு அடிச்சுக் கொண்டிருந்தது. பஸ் சரியான பாதையிலைதான் போய்க் கொண்டிருக்குது. யாழ் நகரம் கழிஞ்சிட்டுது. நகரத்திலை சண்டப்பிரசண்டமாய் துப்பாக்கி வேட்டுச் சத்தம். இடைக்கிடை செல்சத்தம். அப்பாட தப்பினம்!
பத்திரமாய்கொண்டு வந்து கோண்டாவில் சந்தியிலை எங்களை இறக்கிவிட்டார் அந்த அண்ணர்,
"அண்ணை நீங்கள் செய்த இந்த உதவியை நாங்கள் உயிருள்ள வரை மறக்கமாட்டம்."
நாங்கள் மூண்டு பேரும் நன்றிப் பெருக்கோடு சொன்னம். அண்டையிலையிருந்து அவரைப் பாக்க வேணுமெண்ட தவிப்பு எனக்கு. ஆனால் அவற்றை ஊரையோ, பெயரையோ நாங்கள் அண்டைக்குக் கேட்டு வைத்திருக்கேல்லை.
நான் "டவுணுக்குச்" செல்லும் வேளைகளில் பஸ் ஸ்ராண்டில் என் கண்கள் அவரைத் தேடி அலையும். அவரைக் காண முடியேல்லை.
மூண்டு மாதங்களின் பின்னர், ஒரு நாள் பின்நேரம் நான் எங்கடை லைன் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டு நிண்டன.
அச்சுவேலிக்கு ஓடிற மினி பஸ்களிலை ஒண்டு வந்து நிண்டுது. தற்செயலாய் நான் திரும்பிப் பார்த்தன். அவர் நின்று கொண்டிருந்தார்.
நான் மெதுவாய் அந்த பஸ்ஸடிக்குச் செல்கின்றேன். என் மனதிலை கொந்தளிப்பு.
அவர் என்னைக் கண்டிட்டார். நான் திகைத்துப் போய் நின்றன். “என்ன இணி டைக்கும் குண்டு வெடிக்கும் எணர்டு எதிர்பார்க்கிறியளா?” சிரிச்சுக் கொண்டு கேட்டார்.
நான் மெளனமாய் நிக்கிறன். அண்டைக்கு துவங்கினதுதான் எங்கடை நட்பு. இரண்டு வரியங்களுக்கு மேலை எங்கள் சந்திப்புத் தொடர்ந்துது.
-220- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

ஆனால் மற்றவை மாதிரி அவர் என்னை சினிமாவுக்கோ, பாக்கிற்கோ ஒரு நாளாவது கூப்பிட்டது கிடையாது. நானும் அதை எதிர்பார்க்கவில்லை. அவரிட்டை ஒரு நல்ல பழக்கம். அதுதான் அவர் நிறையப் புத்தகம் வாசிப்பார்.
என்னையும் புத்தகங்கள் வாசிக்கும்படி ஊக்கப்படுத்துவார். முதலில் அவர் எனக்குக் கதைப் புத்தகங்களைத் தருவார். அப்புத்தகங்கள் வித்தியாசமானவை. சமுதாய மாற்றத்தை வேண்டி நிக்கும். சிறுகதைகள், நாவல்கள். இடைக்கிடை அரசியல் புத்தகங்களையும் த்ருவார். இலக்கியம் பற்றியும் அரசியல் பற்றியும் அவர் என்னோடை ஆர்வத்துடன் பேசுவார். அவற்றை பேச்சைக் கேட்க, சில வேளை எனக்கு பயமாய்க் கிடக்கும்.
காலகெதியில் எங்களது வலுவான இரு இதயக் கொடிகளின் பிணைப்பு வலுப்பட்டு காதலாக மலர்ந்தது.
திடீரென, ஒரு நாள் என்ரை அம்மா, என்ரை கல்யாணப் பேச்சை எடுத்தா.
என்ரை அம்மாவின்ரை தம்பி ரவுணிலை நகை அடைவு கடை நடத்தி வருகின்றார். அவரைக் கல்யாணம் கட்டும்படி அம்மா என்னை வற்புறுத்தினா. அந்த ஆளைக் கட்ட எனக்கு விருப்பமில்லை எண்டு நான் சொன்னன். அம்மா என்னை நிர்ப்பந்தித்தா. இந்தக் கல்யாணத்துக்கு என்ரை அப்பாவுக்கும் விருப்பமில்லை. ஆனால், பயத்தினால் அவர் பேசாமடந்தையாயிருந்தார்.
அம்மா கல்யாண எழுத்து நாளையும் குறிச்சிட்டா.
முதலில் நான் பயந்தன். பிறகு ஒரு முடிவுக்கு வந்தன். நான் திடீரென வீட்டை விட்டுக் கிளம்பினன். ரவுணிலை அவரைச் சந்திச்சன். என்ரை நிலைமையை அவருக்கு எடுத்துச் சொன்னன். ஆனால், அவர் என்னை வீட்டை திரும்பிப் போகும்படி வற்புறுத்தினார். நான் வீட்டை திரும்பிப் போகமாட்டன் எண்டு பிடிவாதமாய்ச் சொன்னன். அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நான் ஒண்டுக்கும் மசியேல்லை. என்ரை மனவைராக்கியத்தைக் கண்ட அவர், கடைசியாய் என்னை ஏற்றுக் கொண்டார்.
அவர் என்னை அரியாலையிலுள்ள தன்ரை நண்பன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்.
அடுத்த நாள் நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டம். ஒரு மாதம் அவர் என்னை மட்டுவில் மானாவளை என்ற இடத்திலையுள்ள தன்ரை நண்பன் வீட்டிலை தங்கவைச்சிருந்தார். அந்த
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -221

Page 115
ஒரு மாதமும் அந்த நண்பன் வீட்டாரும், அந்தக் குறிச்சியிலை உள்ளவையும் எங்களை எவ்வளவு அன்பாய், கரிசனையோடு ஆதரிச்சினை என்பதைச் சொல்லிமாளாது. என்ரை வாழ்நாளிலே அவையளை எள்ளளவும் மறக்கேலாது.
ஒரு மாதத்தாலை, அவர் என்னை தன்ரை வீட்டை கூட்டிச் சென்றார். சீதனமில்லாத “வெறும் பொம்பிளையைக்" கூட்டிக் கொண்ணந்திட்டுது எண்டு அவற்றை அம்மா துள்ளிக் குதிச்சா. நான் “எந்தப் பகுதி” எண்டதை அறிஞ்சதும் பெரும் சந்தோசப்பட்டார்.
"சீதனம் இல்லாட்டியும் பறுவாயில்லை. என்ரை மோன் ஒரு வெள்ளாளப் பெட்டையைக் கொண்ணந்திட்டான். எங்கடை ஆக்களிலை ஆராலை இப்பிடிச் செய்யேலும்?"
பெருமையோடை நெஞ்சை நிமித்திக் கொண்டு அடிக்கடி சொல்லித் திரிவா.
மூண்டு மாதங்களின் பின் ஒரு நாள் வேலைக்குச் சென்ற அவர் திரும்பி வரேல்லை. அடுத்த நாளும் அவர் வரேல்லை.
காலையிலிருந்து நான் அவரைத் தேடத் தொடங்கினன். அவற்றை நண்பன் செல்லக்கண்டனும் அவரைத் தேடினான். அண்டைக்குக் காலையிலை, கறுப்புச் சேட் போட்ட இரண்டு பேர் சயிக்கிளிலை அவரை ஏற்றிக் கொண்டு போனார்கள் எணர்டு சந்தையடியிலை சொல்லிச்சினை. வசாவிளான் செல்வநாயகபுரப் பக்கம் அவரைக் கொண்டு போனார்களாம்.
மதிய வேளை. கொளுத்தும் வெய்யில். நான் செல்வநாயகபுரப் பக்கம் போனன். மனித சஞ்சாரமற்ற இடம். காடாய் புதர்கள் மண்டிய பயங்கரப் பாதை. வழியில் ஒரு முதியவர் வந்து கொண்டிருந்தார். "ஐயோ புள்ளை. இந்த ஆபத்தான பாதையிலை ஏன் தனிய வந்தனி?” என்னைப் பார்த்துப் பீதியுடன் கேட்டார். "நேற்றுக் கூட ஒரு பொம்புளைப் பெட்டையை இரண்டு ஆமிக்காறங்கள் கதறக்கதற நாசமாக்கிப் போட்டாங்கள். அவங்கள் பரிசாம்பலாய்ப் போவாங்கள்."
ஆத்திரத்துடன் திட்டினார்.
-222- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

"என்ன செய்யிறது பெரியவரே. என்ரை அவரைக் காணேல்லை. அவரை இரண்டு பேர் இந்தப் பாதையாலை கொண்டு வந்தாங்கள் எண்டு சந்தையடியிலை சொல்லிச்சின. அதுதான் வந்தனான்." “சரி புள்ளை அவதானமாய் பாத்துப் போ” சொல்லிக் கொண்டு முதியவர் போனார். ஊர் தொங்கலிலையுள்ள ஒரு வீட்டை போய் விசாரிச்சன். "நேற்றுப் பொழுதுபடேக்கை இரண்டு பேர் ஒரு ஆளைசயிக்கிளிலை எங்கடை காந்தி வாசிகசாலைப் பக்கம் கொண்டு போனாங்கள். அந்தாளின்ரை கண்கள் இரண்டும் கறுப்புத் துணியாலை கட்டிக்கிடந்துது."
அந்த வீட்டுக்கார அன்ரி சொன்னா. "ஐயோ என்னைக் கொல்லாதையுங்கோ! எனக்கொண்டும் தெரியாது. என்னைக் கொல்லயாதையுங்கோ."
"இரவு முழுவதும் வாசிகசாலைப் பக்கம் குழறிக் கேட்டுது. நாங்கள் ஒருதரும் அந்தப் பக்கம் போகேலாது. ஐயோ பாவம் அந்த ஆள். அதுக்கு என்ன நடந்துதோ தெரியாது."
வேதனையாய்ச் சொன்னா அந்த அன்ரி நான் வாசிகசாலைக்குள்ளை போய்ப் பாத்தன். "ஐயோ! வாசிகசாலை உள்புற சுவரெல்லாம் இரத்தம் சொட்டுச்சொட்டாய் தெறித்துக் கிடந்துது."
நான் அழுதபடியே திரும்பி வந்தன். நவக்கிரி எல்லாளன் வாசிகசாலையடியிலை ஒரு பிரேதம் கிடக்குதாம். அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையடியிலை சொல்லிச்சினை.
நான் அங்கை போனன். போற வழியிலை, ஒரு கிழிஞ்ச நீலக் கோடுச் சேட்டு கிடந்தது. அவற்றை "சேட்" தான் அது.
வாசிகசாலைக்கு முன்னாலை அவற்றை பிரேதம் கிடந்தது. அது முகம் குப்புறக் கிடந்துது. தலையின் பின்பக்கமாய் மூண்டு துப்பாக்கிக் குண்டு துளைத்து மூண்டு காயங்கள்.
இரத்தம் வழிஞ்சு காஞ்சு கிடந்துது. நான் மயங்கி விழுந்தன். அதுக்குப் பிறகு என்ன நடந்துதெண்டு எனக்குத் தெரியாது.
அவற்றை பிரேதத்தையும் என்னையும் வீட்டை கொண்ணந்தினை. செல்லக்கண்டன்தான் எங்களைக் கொண்டு வந்ததெண்டு பிறகு
சொல்லிச்சின.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -223

Page 116
இடைகிடை எனக்கு மயக்கம் வந்து கொண்டிருந்துதாம். சொன்னார்கள்.
அவற்றை பிரேதம் படலையாலை வெளிக்கிட்டுது. “இனி எனக்கெண்டு ஆர் இருக்கினை? நான் இருந்து என்ன பிரயோசனம்?"
உடனை வளவுக்கை உள்ள கிணத்துக்கை குதிச்சன். அங்கை நிண்டவை என்னை உடனே தூக்கி காப்பாத்திப் போட்டினை.
“ஏன் அப்படிச் செய்தனி மோனை?” இந்திரா ஆதுரத்துடன் கேட்டாள். "அம்மா நாங்கள் கணவன் மனைவியாய் மூண்டே மூண்டு மாதங்கள்தான் வாழ்ந்தம்."
"அப்புறம்?" அதை பாத்துப் பொறுக்கமாட்டதவங்கள் பொய்த் தகவல் குடுத்து அவரை அழிச்சுப் போட்டாங்கள். இதுக்குப் பிறகு நான் இருந்து என்ன பிரயோசனம்? அதுதான் நான் என்னையே அழிச்சுக் கொள்ளத்துணிஞ்சன். அவர் தந்திட்டுப் போன அன்புச் சின்னம் என்ரை வயித்திலை இருந்துது. அதைக் காப்பாற்ற வேணும் எண்ட எண்ணம் பிறகுதான் வந்தது. அதுக்காகவாவது நான் உயிரோடை இருக்க வேணுமெண்டு தீர்மானிச்சன்.
குழந்தை பிறந்துது. பெண் குழந்தைதான். அவர் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்?
நான் பிள்ளையஞக்கு "டியூசன்” குடுத்து, தையல் வேலை செய்து உழைச்சு மூண்டு வரியமாகக் கஷ்டப்பட்டு என்ரை குழந்தையை வளர்த்தன்.
அப்பா இல்லை எண்டு அது நினைக்காத வண்ணம் ஒரு குறையும் வைக்காமல் பாடுபட்டு வளர்த்தன். அதையும் பாத்து மனம் பொறுக்காமல் அவற்றை தாய் என்ரை அன்பு மகளை என்னட்டையிருந்து வலோற்காரமாய் பறிச்செடுத்திட்டா. அது மாத்திரமே?
அவவும் அவவின் ரை மருமகனும் சேந்து என்னைக் கெட்ட நடத்தையுள்ளவள் எண்டு கதை கட்டி விட்டினை.
அவற்றை சிநேகிதன் செல்லக்கண்டன் எங்களைப் பார்க்க இடைக்கிடை வருவார்.
என்னையும் செல்லக்கண்டனையும் சேத்துக் கதை கட்டி விட்டினை அவற்றை தாயும் மருமகனும்.
-224- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

இந்த அவப்பேரைச் சுமந்து கொண்டு எப்படி என்னாலை தலை நிமிர்ந்து நடக்கேலும்.
தூக்குப் போட்டு என்ரை உயிரை மாய்க்க முயண்டன். பாழாய்ப் போனவங்கள் என்னை வாழவும் விடுகிறாங்களில்லை. சாகவும் விடுகிறாங்களில்லை.
கோகிலா குமுறினாள். சரி, அதுதான் கதையோடு கதையாய்ப் போகட்டும். அவவின்ரை மருமகன் என்னை நிம்மதியாய் இருக்க விடுகிறானே?
"66ir?" “இவர் மோசம் போய் மூண்டு மாதங் கூட ஆகேல்லை. சந்தையடியிலை கிடக்கிற தன்ரை வீடியோ கடையிலை வந்து என்னை வேலை செய்யச் சொல்லிக் கேட்டான். நான் போக மறுத்துப் போட்டன்." "வருவாய் கிடைக்குந்தானே. நீர் ஏன் போகேல்லை மோளே? "எப்பிடி அம்மா அவனை நம்பிப் போகேலும்? அவன்ரை அந்தக் கடையிலை முந்தி ஒரு இளம் குமர்ப் பிள்ளை வேலை செய்துது. அதை அவன் என்ன மாதிரியோ மயக்கிக் கெடுத்துப் போட்டான்."
"பிறகு ஒருதருக்கும் தெரியாமல் மந்துவில்பொடியன் ஒண்டுக்கு கலியாணம் கட்டி வைச்சான்."
"கொஞ்சம் நாளையிலை அந்தப் பிள்ளை நாலு மாதக் கற்பினி எண்டு அந்த மந்துவில் பொடியனுக்குத் தெரிஞ்சு போச்சு. உடனை அந்தப் பொடியன் அந்தப் பிள்ளையைத் துரத்திப் போட்டுது. அந்தப் பிள்ளை தாய் வீட்டை திரும்பி வந்து தற்கொலை செய்திட்டுது. இப்பிடிப்பட்ட வன்ரை கடைக்கு நான் எப்பிடிப் போகேலும்?
"அது மாத்திரமே அம்மா? அந்த அநியாயப்படுவான் வேறை ஒரு ஊரிலையிருந்து ஒரு பெண்பிளைப் பிள்ளையை ஏமாத்திக் கொண்டு வந்து மூண்டு நாளாய், தன்ரை கடையுக்கை ஒருதருக்கும் தெரியாமல், இராப்பகலாய் வைச்சிருந்தான். பிறகு அந்தப் பிள்ளையை ஒரு இந்தியன் ஆமி அதிகாரியிட்டைக் குடுத்திட்டான். பிறகு அதுக்கு என்ன நடந்தெண்டு ஒருதருக்கும் தெரியாது."
“என்ரை பிள்ளையைத் தாருங்கோ. என் ரை பிள்ளையைத் தாருங்கோ” எண்டு அந்தப் பிள்ளையின்ரை தாய் தலைவிரி கோலமாய் மூண்டு நாலு நாள் இராப்பகலாய் தெருத் தெருவாய் ஒப்பாரி வைச்சுக் குழறித் திரிஞ்சுது."
ஒரு நாள் நடுச்சாமம். அவன் என்ரை அறையுக்கை மெதுவாய் நுழைஞ்சான். நல்ல வேளை, நான் தூங்கேல்லை. முளிப்பாய்க் கிடந்தன்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -225

Page 117
எனக்குப் பயம் ஒருபுறம். மறுபுறம் ஆத்திரம். அவன் என்ரை காலை மெதுவாய் தடவினான். எனக்கு அருவருப்பு:ஆவேசம். ஒரு உதை! கள்ளன்!” உரத்துக் கத்தினன். பொத்தெண்டு விழுந்த அவன், எழும்பி ஓடிட்டான். பாழாய் போன என்ரை உடம்புக்குத்தானே அவன் இப்பிடி நாயாய் அலையிறான்.
இதுக்கு ஒரு முடிவு கட்ட நினைச்சன். உடனே நான் என்ரை உடம்பிலை மண்ணெண்ணெயை ஊத்தி நெருப்பு வைச்சன்.
என்ரை அலறல் சத்தம் கேட்ட அயல் வீட்டாக்கள் ஓடி வந்தினை. ஈரச்சாக்கை போட்டு என்னைக் காப்பாத்திச்சினை. என்ரை உடம்பிலை சில இடங்களிலைதான் எரிகாயங்கள். அதுக்குப் பிறகு அயல்வீட்டு அன்னமுத்தாச்சி எனக்கு இரவிலை துணையாய்ப் படுக்கிறவ.
"அந்த நாய் இனி இஞ்சை வந்தால் இந்தக் கொடுவாக்கத்தியாலை அவனை வெட்டிச் சாய்ப்பன்."
அன்னமுத்தாச்சி சபதம் கூறினா. என்ரை வாழ்க்கை ஒரு மாதிரி ஒடிக் கொண்டிருக்குது அம்மா. நீண்ட நாட்களாய் தன் சோகச் சுமையை இறக்கி, ஆதரவு தர ஒருவரும் இல்லையே என ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தாள் கோகிலா. இன்று இந்திரா என்ற சுமை தாங்கி கிடைத்து விட்டது.
கோகிலா ஆசுவாசமாய் பெருமூச்சு விட்டாள். இன்று அவள் இதயச் சுமையை இறக்கி விட்டாள். கோகிலாவின் துயரக் கதையைக் கேட்டுக் கொண்டிருந்த இந்திராவின் இதயத்தில், அதனை விட பன்மடங்கு ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று கிளம்பி, அவள் முன்னாலிருந்தவளின் உள்ளத்தில் வேர் வரை சென்று நிசப்த அலைகளாய் மோதின என்பதை அவள் அறியவில்லை.
'இந்தப் பிள்ளை விழுந்து கிடக்கு. இதைத் தூக்கி நிறுத்த வேணும். இது தன் ரை காவிலை நிண்டால் தான் இதுக்கு நல்ல காலம்; குழந்தைக்கும்.
"கோகிலா வாழ வேணும். வாழ்ந்து சாதிக்க வேணும்." "அதெப்படி அம்மா முடியும்?"
-226- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

"முடியும். உன்னாலை நிச்சயமாய் முடியும். நீ நினைச்சால்." "என்கு நம்பிக்கை இல்லை அம்மா." "கோகிலா, குமுதினிப் படகிலை அந்த நவீன நரகாசுரன்கள் நடத்திய படுகொலைகள் பற்றி உனக்குத் தெரியுமா?
இந்திராவின் குரலில் இறுக்கம். "ஓ அந்தப்படுபாதகங்கடை கொலை வெறி பற்றிக் கதைகதையாய்க் , கேள்விப்பட்டிருக்கிறன்."
“அதிலை செத்த ஒரு அப்பாவிப் பொடியனுக்கு இருபத்தெட்டு வயதுதான்."
"அப்படியா?" "அதின்ரை மனிசிக்கு இருபத்தொரு வயது. மூண்டு பிள்ளைகள்." "ஐயோ பாவம்!" "தன்ரை துணைவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அந்தப் பிள்ளை கேள்விப்பட்டுது."
"அது என்ன பாடுபட்டிருக்குமோ?" "என்ன பாடு. உடனை நஞ்சு குடிச்சிட்டுது." "பிறகு?” "அயலவை காப்பாத்திப் போட்டினை." "பாவி என்னப் போலைத்தான்." "கொஞ்ச நாளைக்குப் பிறகு உங்கடை உமா அக்காவைப் போல ஒரு பிள்ளை அதை உதவி கேட்டு எங்களிட்டைக் கூட்டி வந்துது."
"அப்புறம்?" "அந்தப் பிள்ளை கல்யாணம் கட்ட முந்தி ஏ.எல். சோதினையிலை நல்லாய் பாஸ் பண்ணியிருந்துது. நாங்கள் உதவி செய்தம். அதோடை மேலே படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தினம்."
"அது படிச்சுதா? அதனாலை எப்பிடிப் படிக்கேலும்?” "படிச்சுதோ? படிச்சுப் பட்டதாரியாச்சுது. இப்ப ரீச்சர். நல்லாய் படிப்பிக்குது அந்தப் பிள்ளை."
"அப்பிடி கனக்க பேர்." கோகிலாவின் விழிகளில் நம்பிக்கைச் சுடர். "கோகிலா, துணைவன் பறிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி."
இந்திராவின் குரலில் சிறு நடுக்கம்.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -227

Page 118
கோகிலாவிற்குப் பேரதிர்ச்சி. திகைப்புற்றவளாய் இந்திராவையே வெறித்துப் பார்த்தவளாய் இருக்கின்றாள்.
அவங்கள் எனக்கு அனுப்பி வைச்சாங்கள் வெள்ளைச் சேலை. வெள்ளைச் சேலையை நான் கட்டேல்லை.
கோகிலாவின் உடலெல்லாம் புல்லரிப்பு. அவளது இருண்ட இதயத்தில் புத்தொளி சுடர் விடுகின்றது.
“சரி, கோகிலா உமா உனக்காகக் காத்துக் கொண்டிருப்பா. நீர் போட்டு வாரும்."
"அம்மா, உங்களைப் பார்க்க நான் நாளைக்கு வரட்டா?" இரந்து கேட்கின்றாள் கோகிலா. "ஒ. தாராளமாக நீர் வரலாம். " பூரண திருப்தியுற்றவளாய்க் கூறுகின்றாள் இந்திரா. "நிச்சயமாய் நான் நாளைக்கு வருவன் அம்மா." உறுதியுடன் கூறுகின்றாள் கோகிலா. "சரி கோகிலா. போயிற்று வா." உளப் பூரிப்புடன் தலையசைத்து விடை கொடுக்கின்றாள். கோகிலாவும் உமாவும் சயிக்கிளில் சென்று கொண்டிருக்கின்றனர். இப்போ இயற்கை வெகு உல்லாசமாய், மாமியார் வீட்டிற்கு வந்திருக்கும் புதுமணப் பெண் போல் தோன்றுகின்றது கோகிலாவிற்கு.
தண்மை நிறைந்த மாருதம் சிலிர்த்துக் குழைக்கின்றது. வெண் முகில் கூட்டங்கள் நீல வானில் கவிந்து நீந்தி மிதக்கின்றன. காற்றை முத்தமிட இதழ் குவித்து மரக்கிளைகள் காற்றின் திசையில் சாய்கின்றன.
-2OO4
★
-228- நீர்வை பொண்னையன் சிறுகதைகள்

பிரமாஸ்திரம்
ee d A
6 ங்கடை பொன்னம்பலம் வாறான்!
ஒடியாங்கோ! அவளது ஏகப்பிரவாகமான குரல் காற்றில் மிதந்து ஒலிக்கின்றது.
"எங்கடை பொன்னம்பலம் வாறான்! எல்லாரும் ஒடியாங்கோ!"
அன்னமுத்தாச்சியின் குரலில் ஆனந்த பரவசம்.
'அது உப்பிடித்தான் சும்மா கத்தும். இரண்டு வரியமாய்க் கத்துது. ஏதோ தான் நினைச்சபடி கத்திக் கொண்டிருக்கு. நினைச்ச உடனை கத்துத்தான். பாக்கப் பாவமாய்க் கிடக்கு.
செல்லம்மா தனக்குத்தானே சொல்லி ஆதங்கப்படுகின்றாள்.
'அதுக்கும் தொல்லை. எங்களுக்கும் இடஞ்சல். என்ன செயிறது. ஆருமற்ற அனாதை. அதோடை அன்னமுத்தாச்சி எங்கடை உராச்சே." செல்லம்மாவுக்கு அனுதாப உணர்வு.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் 229

Page 119
இரண்டு வருடங்களுக்கு முன் அன்னமுத்தாச்சி தன் மகனைப் பறிகொடுத்தா. காடேறிப் பிசாசுகளின் ரத்தவெறிக்குப் பலிகொடுத்தா. அண்டயிலிருந்து ஒரே ஒப்பாரிதான்.
செல்வராசன் அன்னமுத்தாச்சியின் ஏகபுத்திரன், செல்வமகன். வாட்டசாட்டமான உடற்கட்டு. கடும் உழைப்பாளி. செல்வராசனுக்குச் சொந்த வயல். ஆனால் வாழ்க்கைக்குப் போதுமான வருமானம் கிடைப்பதில்லை. அவன் கூலிவேலையும் செய்வான். அவன் தன் அன்புத் தாயாரை எதுவித குறையுமின்றி பராமரித்து வந்தான்.
பொன்னம்பலம் செல்வராசனின் உற்ற நண்பன். இருவரும் சம வயதினர். அவர்கள் வன்னியில் ஓர் எல்லைக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இக்கிராமத்தில் தமிழ் சிங்கள மக்கள் வாழ்ந்து வந்தனர். இக்கிராம மக்கள் எதுவித வேற்றுமையோ பேதமோ இன்றி செளஜன்மமாய் வாழ்ந்து வந்தனர். வேளாண்மை அவர்களுக்கு வாழ்வழித்தது.
தங்கள் பயிர்ச் செய்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், விவசாயத்தை முன்னேற்றுவதற்கும் அவர்கள் ஒரு விவசாய சங்கத்தை உருவாக்கினர்.
விவசாய சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம். அமரதாஸ் செயலாளர்.
பொன்னம்பலம் சேவை மனப்பான்மையுடையவன். அவன் சரளமாகச் சிங்களம் பேசுவான். தெளிவாக எழுதுவான்.
அமரதாஸா நன்றாகத் தமிழ் பேசுவான். எழுதத் தெரியாது. தமிழ், சிங்களப் பண்டிகைகளை அவர்கள் எல்லாருமாகச் சேர்ந்து கொண்டாடுவார்கள்.
விவசாய சங்கத்தின் உதவியுடன் அவர்கள் தங்கள் விவசாயத்தை அபிவிருத்திசெய்தனர். அவர்களது வாழ்க்கையிலும் பெரும் முன்னேற்றம். என்று பேய்களும் பிசாசுகளும் அவர்களது கிராமத்தில் காலடி" யெடுத்து வைத்தனவோ அன்றே அவர்களது கிராமத்தில் அமைதி குலைந்து விட்டது.
அதிஉத்தமர் என்று தன்னைத்தானே கூறிக்கொண்டு திரியும் யுத்தக் கழுகின் கட்டளைப்படி பிரகடனப்படுத்தாத யுத்தம் வெடித்தது.
-230- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

இரத்தக் காடேறிப் பிசாசின் ஏவலினால் இந்த எல்லைக் கிராமத்திலும் சுடலைமாடன், எரிமாடன் எறிபாடன் பிசாசுகள் மூர்க்கமாய் மோதிக் கொண்டிருந்தன. இம் மோதலுக்கிடையில் அக்கிராமத்தின் மக்கள் சிக்கிக்கொண்டனர். செல்வராஜன் கொல்லப்பட்டான். அவனுடன் சேர்த்து எட்டுப் பேர் பலியானார்கள்.
அக்கிராமம் செல்வராஜன் என்ற செயல்வீரனை இழந்தது. அன்னமுத்தாச்சி அனாதையானாள். பொன்னம்பலம் அன்னமுத்ததாச்சியைப் பொறுப்பேற்றான்: கிராம மக்கள் இடம்பெயர்ந்தனர். தமிழ் மக்கள் அகதிகளாய் வடபுலம் நோக்கி வந்தனர். சிங்கள மக்கள் தென்புலம் சென்றனர்.
பொன்னம்பலமாக்கள் அன்னமுத்தாச்சியுடன் எங்கள் ஊரிலுள்ள இந்த முகாமிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே வந்தார்கள்.
இடம் பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கின்ற இந்த முகாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டது. எமது கிராமத்திலுள்ள விவசாய விளைபொருள் விற்பனைச் சங்கக்கட்டிடத்தில் இந்த முகாம்
அமைககபபடடது.
"எங்கடை பொன்னம்பலம் போனவரியம் காணாமல் போனான். அண்டையிலையிருந்து அன்னமுத்தாச்சியின் நிலமை படுமோசமாச்சு.
தனி ரை மகன் செல்வராசனுக்கு நடந்தது போலைதான் பொன்னம்பலத்துக்கும் நடந்துபோச்சு எண் டு நினைச் சிட்டா அன்னமுத்தாச்சி. அதுதான் அவ இப்பிடிப் பித்துப் புடிச்சுப் போய் கத்திறா. அட்டகாசம் பண்ணிறா. பாவமாய்க் கிடக்கு
மனம் வெதும்புகின்றாள் செல்லம்மா. உச்சி வெய்யில்.
கனல் தெறிக்கும் காங்கை. கானல் அலை பாய்கின்றது. அன்னமுத்தாச்சிக்கு வெக்கை தாங்க முடியவில்லை. ஒரே புழுக்கம். முகாமிற்குள்ளிருந்த அவள் வெளியே வருகின்றாள் காற்றுவாங்க. முகாமிற்கு முன்னால் பாரிய அரசமரம். சடைத்து, வளர்ந்தோங்கி, நிழல் விரித்து நிற்கின்றது அரசமரம். அன்னமுத்தாச்சி அரசமரத்தின் கீழ் அமர்ந்திருக்கின்றாள். தளர்ந்து வளைந்த தன் முதுகை அரசமரத்தின் அடிப்பாகத்தில் சாய்த்து, கால்கள் இரண்டையும் நீட்டி அனாசயசமாக அமர்ந்திருக்கின்றாள்.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -231

Page 120
உச்சி வெய்யில்.
கனல் தெறிக்கும் காங்கை.
கானல் அலை பாய்கின்றது.
கானல் அலையின் மையத்தில்
ஓர் உருவத்தின் நிழலாட்டம்.
காற்றில்லை.
வெய்யில் வெக்கை தாங்க முடியவில்லை அன்னமுத்தாச்சிக்கு.
உடலெல்லாம் வியத்துக் கொட்டுகின்றது.
முகத்திலுள்ள வியர்வையை தன் சேலைத் தலப்பால் துடைக்" கின்றாள்.
கிழக்கு நோக்கி பார்வையை எறிகின்றாள் அன்னமுத்தாச்சி.
கானல் அலை மையத்தில் ஒரு உருவம் நர்த்தனமாடிக் கொண்" டிருப்பதான பிரமை அவளுக்கு.
அன்னமுத்தாச்சியின் பஞ்சடைந்த விழிகள், கானல் அலை மையத்தில் நர்த்தனமாடிக் கொண்டிருக்கின்ற உருவத்தை வெறித்துப் பார்த்தபடியே நிலைகுத்தி நிற்கின்றன.
தெரு ஒரமாக நிற்கின்ற, முற்றித் திரண்ட முள் முருங்கை மரங்கள்.
ரத்தச் செம்பூக்களைப் பிரசவித்துவிட்டு நிற்கின்றன முள் முருங்கை
LDITS1356T.
ரத்தச் செம்பூக்களின் அரண்களாயிருக்கின்ற கரும்பச்சை இலைகள் நடுங்கித் துடிக்கின்றன.
முள்முருங்கை மரங்களைக் காப்பரணாய்க் கொண்ட, காவோலைகள் செறிந்த பனந்தோப்பு, சடைத்த தன் தலையைச் சிலுப்பிச் சன்னதமாடுகின்றது.
வானத்தைக் கட்டித் தழுவத் துடிக்கும் வேட்கையுடன், வளர்ந்தோங்கிய அரசமரம் அன்னமுத்தாச்சியின் கிரமத்தின் நெஞ்சில் நெட்டுயிர்த்து நிக்கின்றது.
ஞான ஒளிச்சுடர் வீசிப் பிரகாசித்த அரசிலைகள் பளுத்து, காய்ந்து சருகாகிச் சொரிந்து தரையைப் போத்தியிருக்கின்றன.
இலைகளற்ற, விரல்களாய் விரிந்திருக்கின்ற அரசங்கிளைகளில், தொங்கிக்கொண்டிருந்த, பச்சை, சிவப்பு, மஞ்சள் முக்கோணத் துணிக்கொடிகளைக் காணவில்லை. துணிக் கொடிகளைத் தொலைத்துவிட்ட அரசங் கிளைகளில் மனிதக் குடல்களும், துண்டிக்கப்பட்ட
-232- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

தலைகளும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. குடல்களிலிருந்தும், துண்டிக்கப்பட்ட தலைகளிலு மிருந்தும் ரத்தத் துளிகள் சொட்டிக் கொண்டிருக்கின்றன.
இங்கு ரத்தக் காடேறிப் பிசாசுகளின் உன்மத்தத் தாண்டவம் அரங்கேறிவிட்டதா?
அரச மரத்தின் எதிரே பனந்தோப்பு. பனந்தோப்பிலுள்ள எல்லாப் பனை மரங்களும், ஒலைகளும் வட்டுகளுமற்ற, மொட்டை முண்டங்களாய் நிற்கின்றன.
மொட்டையாய் நிற்கின்ற பனை மரங்களின் உச்சியில், பக்கவாட்டாக, நாற் திசைகளிலும் மனிதக் கரங்கள் திடீரென முளைக்கின்றன. அந்த மனிதக் கரங்கள் நெடுந்தூரம், நீண்டு, தொங்கி, அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. அந்தக் கரங்கள், மனித உயிர்களைக் குடிக்கத் துடிக்கும் துப்பாக்கிச் சனியன்களையும் எறிகுண்டுகளையும் எந்தியவண்ணம் அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன.
சுடலைமாடன், எரிமாடன், எறிமாடன் பிசாசுகளின் உறைவிடமாகிவிட்டதா பனந்தோப்பு.
இக்காட்சிகளைப் பார்த்த அன்னமுத்ததாச்சியின் ரத்தம் பயத்தில் உறைந்து விட்டது.
திகிலடைந்த அன்னமுத்தாச்சி வீரிட்டுக் கத்துகின்றா. அந்த அலறல் சத்தம் அத்தராத்திரியில் முகாமில் ஒலித்து எதிரொலிக்கின்றது.
முகாமில், நடுநிசியில் ஆழ்ந்த நித்திரையிலிருந்தவர்கள் எல்லோரும் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுகின்றனர்.
பதைபதைத்து, திகிலடைந்த அன்னமுத்தாச்சி மரண பயத்தில் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறாள்.
அவளுடைய விழிகளில் பீதி. அவளைச் சாந்தப்படுத்துகின்றனர் செல்லம்மா, தங்கமாக்கள். அன்னமுத்தாச்சியைத் தூங்கச் செய்வது, பொன்னம்பலத்தின் மனைவி தங்கத்திற்குப் பெரும் பாடாகிவிட்டது.
இரவு அன்னமுத்தாச்சி நித்திரையில் கண்ட பயங்கரக் காட்சி அவளுடைய மனத்திரையில் அடிக்கடி தோன்றி மறைந்து கொண்டி" ருக்கின்றது.
தன்னைச் சுதாகரித்துக்கொள்கின்றாள் அரச மரத்தடியிலிருந்த” படியே. h
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -233

Page 121
கிழக்கே பார்வையை எறிகின்றாள். கானல் அலை மத்தியில் நிழலாடிய உருவம் அவளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
'பொன்னம்பலம் போலை கிடக்கு 'பொன்னப்பலம்! ஆம் பொன்னம்பலமேதான்! அவளால் நம்ப முடியவில்லை. அதிர்ச்சி அன்னமுத்தாச்சிக்கு. "எங்கடை பொன்னம்பலம்!" "எங்கடை பொன்னம்பலம் வாறான்! ஒடியாங்கோ!" ஆனந்த பரவசமாய்க் கத்துகின்றாள். அன்னமுத்தாச்சி. ஒருவரும் வரவில்லை. "எங்கடை பொன்னம்பலம் வந்திட்டான். எல்லாரும் ஒடியாருங்கோடி."
திரும்பத் திரும்பக் கத்துகின்றாள். ஒருவர்தானும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. வழமைபோலக் கத்துகின்றா அன்னமுத்தாச்சி என்று முகாமிலுள்ளவர்கள் நினைத்துவிட்டார்கள். அதனால்தான் ஒருவரும் வரவில்லை.
"எங்கடை பொன்னம்பலன்னை வந்திட்டார்! ஓடிவாங்கோ! கெதியாய் ஒடியாங்கோ!"
தண்ணிர் எடுக்கக் குடத்துடன் சென்ற நல்லம்மாவின் ஆவேசக்குரல் முகாமிலுள்ளவர்களைத் திகைக்கச் செய்கின்றது.
அனைவரும் பரபரப்புடன் முண்டியடித்துக் கொண்டு வெளியே ஓடி வருகின்றனர்.
தங்கத்திற்குப் பேரதிர்ச்சி! தங்களது இரண்டு பிள்ளைகளையும் இளுத்துக்கொண்டு ஆவலுடன் வேகமாய் ஓடிவருகின்றாள் தங்கம்.
தங்கமும் பிள்ளைகளும் பொன்னம்பலத்தை நோக்கிப் புயலாய்ப் பாய்ந்தோடுகின்றனர்.
முள்முடி தரித்தவனாய் பொன்னம்பலம் நடக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி மெதுவாக நடந்து வருகின்றான்.
அஜானுபவனான பொன்னம்பலத்தின் வீச்சான கம்பீர நடையை அவர்களால் பார்க்க முடியவில்லை.
-234- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

இருபிள்ளைகளும் ஒடிச் சென்று அவனை ஆவலுடன் இறுகக் கட்டிப் பிடிக்கின்றனர். அவர்களுக்கு அளவிலா ஆனந்தம்.
பொன்னம்பலம் தன் இரு பிள்ளைகளையும் வாஞ்சையுடன் அணைக்கின்றான்.
அவன் தங்கத்தைத் தாபத்துடன் உணர்வுப் பிளம்பாய் நோக்கு" கின்றான். −
தங்கத்திற்குத் தாங்க முடியாத தவிப்பு, தாபம். பொன்னம்பலத்துடன் மண்டபத்துக்குள் எல்லோரும் வருகின்றனர். அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
அன்னமுத்தாச்சி ஆனந்த பரவசத்துடன் ஒடிச்சென்று பொன்னம்" பலத்தையும் பிள்ளைகளையும் சேர்த்து அணைக்கின்றாள்.
தனது செல்ல மகன் செல்வராசனே வந்துவிட்டதான பேரானந்தம் அன்னமுத்தாச்சிக்கு.
முகாமிலுள்ள அனைவரும் பாச உணர்வு பொங்க பொன்னம்" பலத்தைச் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஆனந்தப் பூரிப்பு ஒருபுறம். அவனுடைய நோயுற்று வாடிச் சோந்து தளர்ந்த உடலைப் பார்த்தும் இடிந்து போகின்றனர் மறுபுறம்.
'அறுப்பான் வந்திட்டான். துலைவான் போனமாதிரி ஒரேயடியாய் போய்த் துலைஞ்சிருந்தால் எங்களுக்கு நிம்மதியாயிருந்திருக்கும். கொண்டு போனவை இவனை முடிச்சிருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும். இப்ப எங்களுக்கு என்ன, செய்யிறதெண்டு தெரியாமல் கிடக்கு.
நவமணி பொன்னம்பலத்தை வெறுப்புடன் மனத்திற்குள் சபிக்கின்றாள்.
“எட மோனை பொன்னம்பலம். இவளவு நாளும் எங்கையடா போய்க் கிடந்தணி? ஒரு வரியமாய் என்ன செய்தனி?” அன்னமுத்தாச்சி ஆவலாய்க் கேட்கின்றாள். மெளனியாய் நிற்கின்றான் பொன்னம்பலம். "ஏனடா பேசாமல் நிக்கிறாய்? உன்ரை கோலமென்ன? கசக்காறன் மாதிரிக் கிடக்கு. என்ன நீ வருத்தமாய்க் கிடந்தனியே?”
மகேஸின் குரலில் சோகச்சுமை. "உன்னைக் காணாமல் நாங்கள் பட்ட அவஸ்த்தை, அனுபவித்த வேதினை கொஞ்ச நெஞ்சமே?”
செல்லையா உருகிக் கூறுகின்றான்.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -235

Page 122
“எங்களுக்கு இப்பிடியென்டால், தங்கமும் பிள்ளையஞம் பட்ட அவஸ்த்தை, வேதினை சொல்லி மாளாது. எத்தினை நாள் அதுகள் அன்னந் தண்ணியில்லாமல், கவலையோடை படுத்த படுக்கையாய்க் கிடந்துதுகள். நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, அதுகளைத் தேத்தி சாப்பிடப் பண்ணினம்."
பொன்னம்பலம் தங்கமாக்களையும் அன்னமுத்தாச்சியையும் மாறிமாறிப் பார்த்தபடியே ஸ்த்தம்பித்து நிற்கின்றான்.
“ஆனா இண்டுவரை, உன்னை இப்ப பார்க்கும் வரைக்கும் தங்கம் கண்ணிரும் கம்பலையுமாய், சொல்லொணாத்துயரத் தோடை தானிருந்தாள். பிள்ளையஞம் இராப்பகலாய் "அப்பா" "அப்பா” எண்டு அடிக்கடி அழுது புலம்பிக்கொண்டிருந்துதுகள். பொன்ம்பலண்னண். பார் அதுகளின்ரை கோலத்தை, காஞ்சு கரிக்குரவியாய்ப் போச்சுதுகள்?"
நல்லம்மா அக்காவின் குமுறல். "அன்னமுத்தாச்சி, முதலிலை உங்கடை பாடு எப்பிடி? சொல்லுங்கோ. நீங்கள் எல்லாரும் எப்பிடியிருக்கிறியள்? நிவாரணச் சாமான்கள் உங்களுக்கு ஒழுங்காய்க் கிடைக்குதே? பிள்ளையஸ் எல்லாம் ஒழுங்காய் பள்ளிக்குடம் போகுதுகளே?”
கரிசனையாய் பொன்னம்பலம் கேட்கின்றான். எங்களை நீ இப்ப நேரிலை பார்க்கிறாய் தானே. நாங்கள் நல்லாய்தானிருக்கிறம். முதலிலை உன்னைப் பற்றிச் சொல்லு.
வேலாயுதம் வினயமாகக் கேட்கின்றான். “எடே, பொன்னம்பலம். நீவெம்பின மாங்காய் மாதிரி இருக்கிறாய். உடம்பெல்லாம் மஞ்சள் பத்திக் கிடக்கு. முகமும் சோகை புடிச்சு மஞ்சள் காமாளைக்காறன் போலை கிடக்கு. நெஞ்சு எலும்புக் கூடாய் சுருங்கீட்டுது. உன்ரை பெனியனுக்காலை தெரியுது. காச நோய்க்காறன் போல கிடக்கு. உனக்கு என்னடா நடந்தது? விசயத்தைச் சொல்லித் துலையனடா.
அன்னமுத்தாச்சி வியாகூலத்துடன் கேட்கின்றாள். “அண்டைக்கு இரவு என்னைக் கூட்டிக் கொண்டு போனவைதானே இரண்டு பேர். அவை என்னை விசாரிச்சுப் போட்டு இரண்டு மணித்தியாலத்திலை விட்டிடுவம் எண்டு சொல்லித்தானே கொண்டு போச்சினை"
“ஒ மோம் அப்பிடித்தான் சொல்லிப் போட்டுக் கொண்டு போனவை. ஆனா அவை அப்பிடிச் செய்யேல்லையே. அவை ஒரு
-236- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

வரிசமாய் விடேல்லை. எங்கை வைச்சிருந்தவை? ஏன் வைச்சிருந்தவை? ஒரு வரியமாய் உன்னை விசாரிச்சவையே?”
செல்லக்கண்டன் ஆத்திரமாய் பொரிஞ்சுதள்ளினான். "ஒமோம். அவையள் எல்லாரும் அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காறர் தானே"
பொன்னம்பலத்தின் வார்த்தைகளில் கசப்பு. ஏன் என்ன செய்தவை? வேலுப்பிள்ளையின் கேள்வி. என்னைப் புடிச்சுக் கொண்டு போன அண்டைக்கு ராத்திரி பக்கத்து ஊரிலையுள்ள ஒரு வீட்டிலை வைச்சிருந்தினை. என்னோடை இன்னும் இரண்டு பேர்.”
என்ன செய்தவை? விசாரிச்சவையே? அடிச்சவையே? சொல்லன்." செல்லக்கண்டன் அவசரப்படுத்துகின்றான். விசாரணையுமில்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. அடுத்த நாள் எங்கள் மூண்டு பேரையும் யாழ்ப்பாணம் கொண்டு போச்சினை."
"அங்கை ஏன் கொண்டு போனவை?” செல்லையன் வினவினான். "அங்கை தான் அவையின்ரை “காம்ப்" அதுதான் “மெயின் காம்ப்". “ஏழெட்டுப் பெரிய வீடுகளுக்கிடையிலுள்ள மதில்கள் எல்லாத்தையும் உடைச்சுத் தகர்த்துப் போட்டு, எல்லா வீடுகளின் வளைவுகளையும் ஒண்டாக்கி சுத்து மதில் போட்டுக்கிடக்கு. பெரிய விசாலமான வளவு. அதுக்கை பலவிதமான மரங்கள். மா, பிலா, தென்னை, எலுமிச்சை, தோடை மரங்கள் சோலைதான். ஆகாயத்திலை இருந்து பாத்தா அது ஒரு முகாம் எண்டு தெரியாது. அப்பிடிப்பட்ட சோலை. வீடுகளுக்கு முன்னாலை பல விதமான பூக்கண்டுகளும் குறோட்டன்களும், அல்செசன், பொமினேறியன் நாய்கள் ஏழெட்டு, புள்ளிமான்கள் நாலு, முயலுகளும்தான்.
"அப்பிடியா?” வியப்பில் விழிக்கின்றனர் எல்லோரும். என்ன ஆச்சரியமாய்க் கிடக்கா? இன்னும் எவ்வளவோ. அவர்கள் எல்லோருக்கும் வியப்பு. “கொண்டு போன அடுத்த நாள் எங்கள் மூண்டு பேரையும் அங்கையுள்ள பூக்கண்டுகளுக்கு தண்ணிர் இறைப்பு, புல்லு வெட்டுவது,
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -237

Page 123
வளவைக் கூட்டிச் சுத்தம் படுத்துவது போன்ற வேலை. ஒருகிழமைதான். பிறகு சமயல் வேலை நேற்றுவரை."
"சாப்பாடு எப்பிடி? உங்களுக்கு நல்ல வேட்டையாயிருந்திருக்குமே?”
செல்லம்மா கேலியாகக் கேட்டாள்.
“சாப்பாடா? ஒ அதுவா? எங்களுக்கு போன அண்டைக்கு தரத் துவங்கின 'அம்மாப் பச்சை' அரிசிச்சோறு, பீற்றுாட், சக்கரைப் பூசணிக்காய்க் கறியள் நேற்று வரை கிடைச்சுது. காலையும் இரவும் பாணும் பருப்பும் அல்லது கூப்பன் மா றொட்டியும் முழகாய்ச் சம்பலும். தொடர்ந்து இது தான் எங்கடை சாப்பாடு.
“அவையஞக்கும் இதே சாப்பாடுதானா?” செல்லையன் வினவுகின்றான். “என்ன? அவையளும் நாங்களும் ஒண்டா? எங்கள் மூண்டு பேருக்கும் சமயல் டிப்பாட்மென்டிலை வேலை. நிதந்திர வேலை. ஆனா சம்பளமுமில்லை. பென்சனுமில்லை."
"அப்போ?” அவர்கள் எல்லோருக்கும் அறிய வேண்டு மென்ற அவா. “காலை நாலு மணிக்குத் துவங்கினால், இரவு பதினொரு மணிவரை வேலைதான். ஓயாத வேலை. ஒவ்வொரு நொடிப் பொழுதும் எங்களை நெருப்புத் திண்டுகொண்டிருந்தது."
அங்கு கூடி நின்றவர்களுக்கு பொன்னம்பலமாக்கள் மீது அனுதாபம்.
56-606). - - - -
"அது மாத்திரமில்லை. இடைக்கிடை விசாரணை என்ற பேரிலை, அவையள் சிலர் எங்களிலைதான் அடிச்சுப் பழகினவை"
பெருமூச்சு விடுகின்றான் பொன்னம்பலம். “ஆறு மாதங்களுக்கு முந்தி ஒரு நாள் இரவு நடுச் சாமம். இரண்டு பேருக்குக் கைகால்கள் உளஞ்சிருக்கவேணும். என்னைக் கடுமையாய் விசாரிச்சினை.
“எடே நச்சுப்பிசாசே! உன்னை என்ன செய்யிறன் பாரடா!” “வெறுப்போடை கத்திச்சுது ஒரு பொடியன்." “விஷப் பாம்பை அடிச்சுக் கொல்லும் கோபாவேசம் அதிண்ரை பார்வையிலை.”
என்ரை நெஞ்சிலை முழங்காலாலை ஒரு இடி!"
-238- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

“கொஞ்ச நேரம் என்னாலை மூச்சு விடேல்லாமைக் கிடந்தது. மயக்கம் வாறமாதிரிக் கிடந்துது. நான் செத்துப் போவன் போலை கிடந்தது.”
அவனுடைய கண்கள் குளமாகின. தொண்டை கேரியது. "அண்டைக்குத் துவங்கினதுதான் இந்த நெஞ்சு நோவும் இருமலும். இடைக்கிடை சளியோடை ரத்தமும் வருகுது. நான் குடுத்துவைச்சது அவ்வளவுதான். இஞ்சை வந்ததுக்கு எனக்கு இது போதாதா?”
பொன்னம்பலத்தின் குரலில் வேதனை, வார்த்தைகளில் விரக்தி. அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு வேதனை, வெறுப்பு. அவர்கள் எல்லோருக்கும் மனக் கொதிப்பு, கோபாவேசம். ஆனால் அவர்களால் என்ன செய்ய முடியும்? மனம் வெதும்புவதைத் தவிர.
“சரி உங்கள் பாடு எப்பிடி? சொல்லுங்கோ." “பொன்னம்பலம் நீபோய் ஒரு மாதத்திலை சுந்தரம் இயக்கத்துக்குப் போட்டான். குமாரலிங்கம் இப்போ இல்லை. அவன் குடும்பத்தோடை களவாய் இந்தியாவுக்குப் புறப்பட்டான். அவன் மாட்டன் மாட்டன் எண்டு எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவன்ரை மனுசி நவமணி அடம்புடிச்சு அவனையும் மூண்டு பிள்ளையளையும் வாலோற்காரமாய் இழுத்துக் கொண்டு போனாள்."
"பிறகு என்ன நடந்தது? சொல்லு இளுத்தடியாமல்" பொன்னம்பலம் அவசரப்படுத்தினான்.” "நடுச் சாமம், நல்ல இருட்டு. சிறீலங்கா நேவி சுட்டுது. குமாரலிங்கமும் வேறை நாலு பேரும் பயத்திலை குதிச்சாங்கள். தோணியிலை களவாய்ப் போன மிச்சம் பதினேழு பேரையும் நேவி புடிச்சுக்கொண்டு வந்து பொலிசிலை ஒப்படைச்சுது. மூண்டு நாளையாலை நவமணி பிள்ளைகளோடை எங்கடை முகாமுக்குத் திரும்பி வந்தாள். குமாரலிங்கத்துக்கு என்ன நடந்ததென்று தெரியேல்லை."
செல்லையா கூறிமுடித்தான். 'குமாரலிங்கம் எவ்வளவு நல்ல மனுசன் கடும் உழைப்பாளி. எந்த நேரமும் மற்றவைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடையவன். போய்ச் சேந்திட்டானே. ஐயோ பாவம் அவன்ரை மூண்டு பிள்ளையஞம்!
மனம் வெதும்புகின்றான் பொன்னம்பலம்.
"அவன்ரை பெண்சாதிக்குக் கவலையில்லை. ஏன் குமாரலிங்கம்
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -239.

Page 124
உயிரோடை இருக்கேக்கை அவள் அவனை மதிச்சவளே? தன்ரை பிள்ளையளையும் விட்டிட்டு அவள் டேவிட்டோடை அவன் ரை சயிக்கிலிலை சுத்தித் திரிந்தவள். கேட்டால் அவன் தம்பி முறை என்பாள். குமாரலிங்கத்தைக் கேட்டால் அவன் தனக்கு டேவிட்டைப் பற்றி எதுவும் தெரியாதென்பார்.
டேவிட் சில நாளையில் இரவில் இந்த முகாமில் தங்குவான். இது பற்றி முகாமிலுள்ளவர்களுக்கு மனத் திருப்தியில்லை. பலவிதமான பேச்சுக்கள்.
"முகாமிலை இல்லாதாக்கள் இரவிலை இஞ்சை தங்கக்குடாது" பொன்னம்பலம் முகாம் தலைவர் என்ற வகையில் உறுதியாகக் கூறிவிட்டான். இதன் பிறகு டேவிட் இரவில் இந்த முகாமில் தங்குவதில்லை.
"பொன்னம்பலமண்ணை, நீ போன பிறகு டேவிட் பழையப்படி எங்கடை முகாமில் அடிக்கடி இரவில் தங்கி வருகிறான். பெண்புரசு இருக்கிற இடத்திலை இது பெரிய சங்கடமாய்க் கிடக்கு."
“வெளியாக்கள் இரவிலை தங்கக் குடாது எண்டு சொல்லி நீங்கள் ஏன் அவரைத் துரத்தேல்லை?”
"ஆர் சொல்லிறது? ஆராவது வாய் திறந்தால் குமாரலிங்கத்தின்ரை மனுசி நவமணி கொக்கரித்து, அட்டகாசம் பண்ணிறாள். கேளாத கேள்வி எல்லாம் கேட்டு துள்ளிக் குதிக்கிறாள்."
"சரி அது கிடக்கட்டும். பிறகு பாத்துக் கொள்ளுவம். நிவாரணச் சாமான்கள் எல்லாம் ஒழுங்காய்க் கிடைக்குதா?”
யாழ்ப்பாணத்திலையுள்ள அந்தத் தொண்டர் நிறுவனத்திலை நிவாரணச் சாமான்களை எடுத்துக் கொண்டுவர எங்கடை ஆக்கள் ஒழுங்காய்ப் போறேல்லை. இடைக்கிடைதான் போவினை. போறத்துக்கு பொருத்தமான ஆக்களில்லை. எடுத்துவாற சாமான்களுக்கும் சரியான கணக்கு வைக்கிறேல்லை. அந்தத் தொணி டர் நிறுவனம் தாற சாமான்களுக்கு கணக்குக் கேட்டால் குடுக்கிறேல்லை. அந்த நிறுவனம் நிவாரணத்தை நிப்பாட்டீட்டுது.
நீபோனாப் பிறகு முகாமிலை ஒரு கூட்டம் தானும் வைக்கேல்லை. எல்லாம் சீர்கெட்டுப் போச்சு."
கவலையுடன் கூறினான் செல்லக்கண்டன். "ஆர் நிவாரணச் சாமான்கள் எடுக்கப்போறது?"
பொறுமையிழந்தவனாய்க் கேட்டான் பொன்னம்பலம்.
-240- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

"நீயில்லை. உன்ரை இடத்துக்கு பொருத்தமான ஆளில்லை. சாமான் தாற ஆக்களோடை கதைக்க, அவை கேக்கிற கேள்வியளுக்கு சரியான பதில் சொல்ல வேணுமே. அதுக்குத் தகுந்த ஆளில்லை. சுந்தரும் இயக்கத்துக்குப் போட்டான். குமாரலிங்கமும் கடலுக்கை போய்ச் சேந்திட்டுது. வேலாயுதனும் பாரியவாதம் வந்து படுத்த படுக்கையாய்க் கிடக்கிறான். ஒவ்வொருத்தரும் தன்ரை தன்ரை பாட்டை மாத்திரம் பாத்துக் கொண்டிருக்கினை மற்றவையைப் பற்றி எள்ளளவும் யோசிக்கிறேல்லை." Y
செல்லையன் கூறிக்கொண்டு போக பொன்னம்பலத்துக்கு உள்ளம் குமுறிக் கொண்டிருந்தது.
"நாங்கள் இஞ்சை வந்த புதுசிலை, இந்த ஊரிலையுள்ள சனம் ஒரு மாதமாய், "நான் முந்தி நீ முந்தி” எண்டு போட்டி போட்டுக் கொண்டு மூண்டு வேளையும் எங்களுக்குத் தாராளமாய் சாப்பாடு தந்தினை. அதோடை தங்கடை தோட்டங்களிலை வேலையும் தந்து, பாத்துப் பாராமல் நல்ல சம்பளமும் தந்தினை. அவைக்கு எவ்வளவு நல்ல மனசு. தாராள மனப்பான்மை. பாழாய்ப் போன இந்தச் சண்டையாலை அவையின்ரை தோட்டச் செய்கையும் கெட்டழிஞ்சு போச்சு. அவையும் இப்ப நல்லாய் நொடிஞ்சு போச்சினை. இப்ப நாங்கள் அவையிட்டை எப்பிடி உதவியை எதிர்பார்க்கேலும்?”
தெய்வேந்திரம் மனமிடிஞ்சு முறையிட்டான். "நாங்கள் எவ்வளவு நாளைக்கு இப்பிடிக் கையேந்திச் சீவிக்கின்றது? எதுவித உழைப்புமில்லாமல், வரியக் கணக்காய் நிவாரணத்தை நம்பி வாழுறது?"
பொன்னம்பலத்தின் கேள்வி அவர்களை ஒரு கணம் உசுப்பி யோசிக்கத் தூண்டுகின்றது.
"எங்கடை ஊரிலை நாங்கள் எப்பிடிக் கையைக் காலை அடிச்சு உழைச்சம். ஆரிட்டையும் கையேந்தினமா? நல்லாய் உழைச்சம். உழைப்புக்கேத்த வருமானம் வந்து கொண்டிருந்துது. மிடுக்கோடை சீவிச்சம். ஆனா இப்ப இஞ்சை அடங்கி ஒடுங்கி கையேந்திச் சீவிக்கிறம். எங்கடை உடலும் மனமும் இந்த ஒட்டுண்ணி வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுப் போச்சு. என்ன கடைகெட்ட சீவியம்? எங்கடை வாழ்நாள் முழுவதும் நாங்கள் இப்பிடிச் சீவிக்கப் போறமா?”
பொன்னம்பலத்தின் வார்த்தைகளில் கசப்புணர்வு. அவனுடைய கேள்வி அவர்களை விழிக்க வைக்கின்றது.
கோப்பாய்ச் சந்தியிலை இருந்த "சென்றியை” இரவிரவாய் உடைச்சுப் போட்டு ஊருக்கை இறங்கிச்சுது இந்தியனாமி. இஞ்சை
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -241

Page 125
இருக்கப் பயந்து அன்னம்மா ரீச்சராக்கள் கொடிகாமத்துக்கு வானிலை ஒடிப்போச்சினை. அவை போன மினி பஸ்சுக்கு இந்தியன் "முதலைக் ஹெலி" ஏவுகணை அடிச்சுது. அன்னம்மா ரீச்சரும் அவவின்ரை நாலு பிள்ளையஞம் சேத்து, எல்லாமாய் எங்கடை முகாமிலையிருந்து போன முப்பத்தேழு பேரும் மினிபஸ் சோடை எரிஞ்சு கருகிச் செத்துப் போச்சினை."
பொன்னம்பலம் அதிந்து போனான். "நாங்கள் எங்கடை ஊரிலை இருக்கேலாது எண்டு இஞ்சை வந்தம். இஞ்சையும் வாழேலாட்டி நாங்கள் எங்கை போறது? என்ன? நாங்கள் எல்லாரும் கீரிமலைக் கடலுக்கை விழுந்து சாகிறதா?”
செல்லக்கண்டன் கோபாவேசக் குரலில் கேட்டான்? எல்லோரும் திகைத்துப் போய் நிற்கின்றனர். "நாங்கள்தான் பிழைவிட்டிட்டம். இப்பதான் எங்கடை பிழை தெரியுது. நாங்கள் எங்கடை பிறந்த மண்ணை விட்டிட்டு இஞ்சை வந்து, நீண்ட காலம் இருக்கிறது எவ்வளவு மடைத்தனம்"
பொன்னம்பலம் நிதானமாகக் கூறுகின்றான். ஒன்றும் புரியாமல் அங்குள்ளவர்கள் பொன்னம்பலத்தை வியப்புடன் பார்க்கின்றனர்.
“பயத்திலைதான் நாங்கள் இஞ்சை ஓடிவந்தம், இரண்டு மூண்டு மாதத்திலை நாங்கள் எங்கடை ஊருக்குத் திரும்பிப் போயிருக்கலாமே. எங்களைப் போல வேறை ஊர்களிலுமிருந்தும் ஆக்கள் ஓடி வந்தவைதான். கொஞ்ச நாளையிலை நிலைமை தணிந்த உடனை அவை எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்கு திரும்பிப் போட்டினை. அவை எல்லாம் நெருக்கடி நாட்களிலை வேறை இடங்களுக்குப் போவினை. நெருக்கடி தணிஞ்ச உடனை தங்கடை ஊர்க்களுக்குத் திரும்பிவிடுவினை. ஆனால் நாங்கள் இரண்டு வரியமாய் இஞ்சை இருக்கிறம். கையேந்தி சீவிக்கிறம். இதுக்கு ஒரு முடிவு கட்டத்தான் வேணும்.” உறுதியாய்க் கூறுகின்றான் பொன்னம்பலம். 'அழிஞ்சு போவான் வந்திட்டானே. போனமாதிரி இவன் துலைஞ்சிருந்தால் எங்களுக்கு எவ்வளவு நிம்மதியாயிருக்கும். இனி நான் இரவிலை இஞ்சை தங்கேலாமல் போச்சே."
மனதிற்குள் திட்டுகின்றான் டேவிட். டேவிட்டும் நவமணியும் ஒருவரை ஒருவர் அடிக்கடி மாறிமாறிப் பார்க்கின்றனர்.
-242- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

அவர்களது இதயங்களில் வேதனை, குமுறல். பொன்னம்பலம் இதைப் பார்த்தும் பாராதவனாய் இருக்கின்றான். "நல் லாய்க் களைச் சுப் போய் வந்திருக்கிறாய் மோனை. எல்லாத்தையும் பிறகு வடிவாய்க் கதைக்கலாம். நீ வா. வந்து தண்ணி வெண்ணியைக் குடிச்சிட்டு ஆறு."
அன்னமுத்தாச்சி பொன்னம்பலத்தை அழைக்கின்றாள். "சரி வாங்கோ போவம்." தங்கமும் பிள்ளைகளும் அவனுடைய கைகளை ஆதூரசத்துடன் பிடித்து இழுக்கின்றனர்.
டேவிட் ஒருவருக்கும் தெரியாமல் மெதுவாய் அவ்விடத்தை விட்டு நழுவிச் செல்ல முயல்கின்றான்.
அமைதியற்று, பதட்டத்துடன் வெளியேற முயன்றுகொண்டிருக்" கின்ற டேவிட்டை நோக்கிச் செல்கின்றான் பொன்னம்பலம்.
"ஐயோ! பொன்னம்பலண்ணை என்னை ஒண்டும் செய்யாதை. உன்னைக் கும்பிடுறன் அண்ணை. என்னை ஒண்டும் பண்ணாதை."
நடுங்கிக் கொண்டே மன்றாடுகின்றான் டேவிட். “தம்பி டேவிட் நீ ஏன் பயப்படுகிறாய். என்னக்கொண்டும் புரியேல்லையே. என்ன நடந்தது?"
"நான் தெரியாமல் செய்து போட்டன், இனி அப்பிடி ஒண்டும் செய்யமாட்டன."
“என்னடாப்பா. என்ன சொல்லுகிறாய்? எனக்கு ஒரே குழப்பமாய்க் கிடக்கு. நீ எனக்கு என்ன செய்தனி?
"நான் இரவிலை இஞ்சை தங்கிறதை நீதானே தடுத்தனி? “ஒ, நான்தான் தடுத்தனான். அதுக்கு இப்பென்ன?” பொன்னம்பலம் குழம்பியவனாய்க் கேக்கிறான். "அதுக்கு உன்னிலை எனக்கு சரியான கோவம்.” "அதாலை?” "அந்த ஆத்திரத்திலை நான். டேவிட் தயங்குகிறான்.
sig
"சொல்லு என்ன செய்தனி" "எனக்கு ஒண்டும் செய்யேல்லை எண்டு நீவாக்குத்தந்தால்.
"சரியடாப்பா நான் உன்னை ஒண்டும் செய்யேல்லை. சொல்லு"
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் 243

Page 126
உறுதியளிக்கிறான் பொன்னம்பலம்.
"சொல்லடா, சொல்லித் துலையடா"
செல்லக்கண்டன் ஆவேசமாகக் கத்துகின்றான்.
என்னவென்றறிய பொன்னம்பலத்திற்குப் பேராவல்.
"சரி. தயங்காமல் சொல்லு டேவிட்”
ஊக்குவிக்கின்றான் பொன்னம்பலம்.
"நீ ஆமியின் ரை உளவாளி எண் டு 'அவைக்கு நான் தான் சொல்லிக்குடுத்தனான்."
பொன்னம்பலத்திற்குப் பேரதிர்ச்சி!
அங்கு நின்ற அனைவரும் மலைக்கின்றனர்.
அன்னமுத்தாச்சியின் ரத்த நாளங்களில் தீக்குருதி பீறிட்டுப் பாய்கின்றது.
"எடே துரோகி”
டேவிட்டை நோக்கிப் பத்திரகாளியாய்ப் பாய்கின்றாள் அன்னமுத்தாச்சி.
-2OO7
-244- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

துணை
ee
10 ங்களம், பறைச் சத்தம் கேக்குது. ஆர் கண்ணை மூடினது?"
"ஆரோ கோப்பாய் மனிசனாம். நேற்று யாழ்ப்பாணம் பெரியாஸ் பத்திரியிலை செத்ததாம் மாமி”
"கோப்பாய் மனிசனெண்டால்..? ஆராம்?" "ஆரோ சிற்றம்பலமாம்." அலட்சியபாவத்துடன் கூறுகின்றாள் மங்களம்.
"என்ன! சிற்றம்பலமோ?" பர்வதம் பாட்டிக்கு அதிர்ச்சி! நான் பிறந்து வளந்த எங்கடை பரம்பரை வீட்டிலை வைச்சுத்தான் என்ரை பிரேதம் எடுக்கவேணும். என்ரை அப்பு ஆச்சியின்ரை பிரேதங்கள் எரிச்ச எங்கடை ஊர் சுடலையிலைதான் என்ரை பிரேதம் எரிக்கவேணும். அதுதான் என்ரை ஆசை
"அந்தப் சிற்றம்பலம் நெடுகச் சொல்லி வந்தவராம். அதாலைதான் அந்தாளின் ரை
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -245

Page 127
பிரேதத்தை இஞ்சை கொண்டுவந்தவையாம்.
தன்பாட்டில் சொல்லிக்கொண்டே போனாள் மங்களம். அவள் கூறியது பர்வதம் பாட்டியின் காதில் விழுந்ததோ என்னவோ? அவள் அறியாத ஏதோ ஒரு சக்தி தன்னை வேறு ஒரு உலகிற்கு, அதள பாதாளத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருப்பதான உணர்வு, பர்வதம் பாட்டிக்கு.
பர்வதம் பாட்டி படுத்த படுக்கையாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகின்றது. அவளுக்குப் பக்கவாதம். ஒரு கையும் ஒரு காலும் வழங்காது.
கட்டிய கணவன் மலைபோலிருக்கின்றான். மூன்று பிள்ளைகள். ஒன்று பெண் . ஆணி இரண்டு. எல்லோரும் உயிருடன் தான் இருக்கின்றார்கள்.
ஏராளம் சொத்து பர்வதத்திற்கு. நெல்வயல், தோட்டநிலம், பனங்காணி, பெரிய "நாச்சார் வீடு" வளவு, வளவிற்குள் மா, பலா, தென்னை, நிறைசோலை. எல்லாவற்றிற்கும் அவள் அதிபதி.
சிற்றம்பலம் பர்வதத்திற்கு முறை மச்சான். அவனுக்கு அவளைக் கட்டி வைத்தார்கள். சொத்துப் பிரியாமவிருக்கும்தானே.
சொத்தில் குறைந்தவனல்ல சிற்றம்பலம். பர்வதத்திலும் பார்க்க இரு மடங்கு சொத்து அவனுக்கு.
சிற்றம்பலம் தர்மசிந்தையுள்ளவர். தயாள குணம் படைத்தவர். பொதுச் சேவை அவரது வாழ்வின் லட்சியம்.
கோவில் மணியகாரர், அவர். சைவப் பள்ளிக்கூட மனேச்சர் கிரமசமைத்தலைவர்.
தனது கிராமத்தின் தெரு ஒரமாக மூன்று இடங்களில் மேச்சல்மாடுகள் தண்ணிர் குடிக்கத் தொட்டிகள் கட்டியுள்ளார். அத்துடன் தெரு ஓரமாக இரண்டு சுமைதாங்கிகளையும், தன் சொந்தச் செலவில் சுடலை மடம் ஒன்றைக் கட்டியுள்ளார். அதற்குப் பக்கத்தில் ஒரு கிணற்றையும் வெட்டினார்.
நல்லூர் கந்தசாதி கோவில், சன்னதிகோவில், மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோவில் ஆகியவற்றில் கொடியேறித் திருவிழாக்கள் தொடங்கினால் போதும். இத்திருவிழாக் காலங்களில் தண்ணிர்ப் பந்தல்கள் வைப்பார். வருடா வருடம், பக்தர்களுக்கு சக்கரைத் தண்ணிர், ஊறுகாய்த் தண்ணீர், மோர், குளிர் தண்ணீர் தாராளமாக வார்ப்பதற்கு ஏற்பாடு செய்வார். இதற்காக அவரிடம் பெரிய சாடிகள் ஆறு உண்டு. தணிணிர்ப் பந்தலுக்கு தேவையான ஊறுகாய் தயாரிப்பதற்கும்,
-246- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

சர்க்கரைத் தண்ணிருக்கும் தேவையான எலுமிச்சம் பழங்களை மூட்டை மூட்டையாக வன்னியிலிருந்து கொள்வனவு செய்து வந்தார்.
சிற்றம் பலத்திற்கு வன்னியில் நெருங்கிய தொடர்புண்டு. கோடைக்காலங்களில் தனது பட்டியிலுள்ள மாடுகளை வன்னிக்கு மேச்சலுக்காக அனுப்பி வைப்பார். அத்துடன் தனது புகையிலைக் கண்டு பயிர் செய்வதற்கான பசளைக்கு தேவையான மாட்டெருவை வன்னியிலிருந்து கொள்வனவு செய்துவந்தார். பூவரசங்குழையை வண்டிக் கணக்காக பூனகரியிலிருந்து தருவிப்பது வழக்கம்.
பர்வதத்தின் குடும்பமும் செல்வச் செழிப்பானது. பர்வதத்தின் இளமையின் வனப்பும், அழகிய இறுக்கமான உடற்கட்டும் அக்கிராமத்து விடலைகளை ஆகர்ஷித்தது. பலர் அவளைப் பெண் கேட்டு வந்தனர். ஆனால் குடும்பச் சொத்துடன் சொத்துச் சேர்வதற்காக சிற்றம்பலத்தை பர்வதத்திற்கு கட்டி வைத்தனர்.
புது இளமையில் பர்வதம் தன் கணவனின் அன்பையும் அரவணைப்பையும் பெருமளவில் எதிர்பார்த்து ஏங்கித் தவித்தாள்.
பர்வதத்தின் இதயம் மென்பூவாய் விகசித்து மலர்ந்திருந்தது. அவளது கணவன் சிற்றம்பலமோ சுகப்பிரியன். சபல சுபாவம். பர்வதத்தின் எதிர்பார்ப்பு கானல்நீர். பாவம் பர்வதம் எப்படியோ கணவனுக்கு மூன்று பிள்ளைகளைப் பெற்று விட்டாள்.
அவளுடைய வேட்கை தணியவில்லை. அவள் வேட்கைத் தீயில் திணறிக் கொண்டிருந்தாள். சிற்றம்பலத்தால் பர்வதத்தின் வேட்கைத் தீயை அணைக்க முடியவில்லை, தணிக்கக்கூட முயலவில்லை.
பர்வதத்திற்கு தன்கணவன் மீது ஆரம்பித்த வெறுப்பு படிப்படியாக அதிகரித்து விஸ்வரூபமெடுத்தது. வெறுப்பு பகையாகி, பிரிவு.
கடைசிமகன் வெற்றிவேலு பிறந்து ஒரு மாதத்தில் பர்வதம் சிற்றம்பலத்தை விட்டு நிரந்திரமாகவே பிரிந்து விட்டாள்.
இளமையில் அவளுக்குத் தர்மம், அதர்மம், நல்லது கெட்டது, நியாயம் அநியாயம் பற்றி தெளிவான பார்வை இருந்தது. நாள் செல்லச் செல்ல அவளது பார்வையில் பகையுணர்வு படிப்படியாகப் பரவிச் செறிந்தது. இந்தப் பகையுணர்வு நாளுக்கு நாள், நொடிக்கு நொடி அவளது எலும்பு வரை பரவி வயிரம் பாய்ந்து விட்டதால், புறத்தே அது வீறிட்டுப் பாய்ந்து, துளி துளியாக அவளது அகத்தை ஆக்கிரமித்து வக்கிரத்தனம் நிறைந்ததாக்கி விட்டது.
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -247

Page 128
மென்மையான சுபாவமுடையவளான பர்வதம் திடீரென மூர்க்கமான மிருகமாக மாறிவிடுவாள். அவ்வேளை அவளது முகம் இறுக்கமாகி விகாரமடைந்து விடும். அவளது இறுகிய முகத்தில் அசாத்தியமான, அமானுஷ்ய மூர்க்கத்தனம் தென்படும். அவளுடைய செயற்பாடும் வக்கிரமானதாகிவிடும்.
பர்வதத்தின் ஏக புத்திரி புவனேஸ்வரி. வளமான குடும்பத்தில் புவனேஸ்வரிக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
புவனத்தின் கணவன் குலசேகரம் நிதானமானவன், பொறுமைசாலி. பர்வதம் மகளது குடும்ப விவகாரங்களில் அடிக்கடி அனாவசியமாகத் தலையிட்டு வந்தாள்.
தனது குடும்ப வாழ்வில் ஏற்பட்ட முறிவினால் பர்வதத்திற்கு விரக்தி ஏற்பட்டது. விரக்தி அவனது உள்ளத்ததில் வக்கிரத்தனத்தை ஏற்படுத்தியது. இதனால் மற்றவர்களது குடும்ப வாழ்வு ரம்யமானதாக இருப்பதை அவள் விரும்பவில்லை. இளம் குடும்பங்களின் இனிய வாழ்வைச் சிதைப்பதையே தனது லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தாள். கணவன் மனைவி இருவரது ஆத்மாக்கள் சங்கமிப்பதை பர்வதம் விரும்பவில்லை. அவள் எப்பொழுதும் குரோதத்துடன் அவர்களைப் பார்த்து வருவாள். அவர்களைப் பிரித்து மோதவைக்கும் விதத்தில் அவள் சாதுர்யமாகச் செயல்படுவாள்.
பர்வதத்தின் வஞ்சகச் செயற்பாட்டால் அவளுடைய ஒரே ஒரு மகள் தனது கணவனைப் பிரிய நேரிட்டது. பதினைந்து வருடங்களுக்குமேல் அவள் கணவனைப் பிரிந்து வாழ்ந்தாள்.
நல்ல உள்ளங்களின் பெரு முயற்சியால் புவனம் மீண்டும் தனது கணவனுடன் இணைந்து விட்டாள். பலன் அவள் இரண்டு பிள்ளைகளுக்குத் தாயானாள். ஆனால் புவனேஸ்வரி தனது தாயை எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.
மூத்த மகன் மகாலிங்கமும் திருமணம் முடித்தான். ஒரு மாதத்தில் அவன் தன் மனைவியின் வீட்டுக்கு நிரந்திரமாகவே சென்றுவிட்டான். தன் தாயாரின் வீட்டில் தான் மனைவியுடன் தங்கியிருந்தால் தனது சகோதரிக்கு ஏற்பட்ட கதிதான் தனக்கும் நேரிடும் என்ற பயம் அவனுக்கு. வெற்றிவேலு பர்வதத்தின் கடைசி மகன். அவன் ஆங்கில ஆசிரியன். தாய் அவனுக்கு உயிர். தாயாரின் பூரணசம்மதத்துடனேயே அவன் சக ஆசிரியை தனலக்ஸ்மியை மணந்து கொண்டான்.
தனலக்ஸ்மி சைவப்பழம். சிறந்த குடும்பப்பெண். பொறுமைசாலி. அடக்க ஒடுக்கமானவள். மாமியாரைத் தன் தாயென மதித்து நடந்தாள். அவள் கட்டளைப்படியே நடந்தாள். இருந்துமென்ன?
-248- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

தன் குடும்ப வாழ்வு சிறப்பாக அமைந்து விட்டது என வெற்றிவேலு மகிழ்ச்சிப் பெருமிதமடைந்தான்.
மூன்று மாதங்கள்தான். மூன்றே மூன்று மாதங்களுக்கிடையில் அவன் திருமண வாழ்வு அஸ்தமித்துவிட்டது. தாயாரின் "புண்ணியத்தில்" வெற்றிவேலுவின் மணவாழ்க்கை விவாகரத்தில் முடிவுற்றது.
வெற்றிவேலு பிறந்து முப்பதாம் நாள், பர்வதத்தின் கணவன் சிற்றம்பலம் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் போனவர்தான். நேற்றுவரை திரும்பவேயில்லை. முப்பதாண்டுகளாக அவர் அயலூரி லுள்ள தன் உடன் பிறந்த சகோதரி கமலம்மாவுடன் தான் வாழ்ந்தார். ஒரு நாள்தானும் சிற்றம்பலம் பர்வதத்தை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. சிற்றம்பலம் பிறந்த வீட்டில் அவரின் மூத்த சகோதரி திலகவதி வாழ்ந்து வருகின்றாள். இடைக்கிடை அவர் தன் சகோதரியைப் பார்க்கச் செல்வார். பெற்றோர்கள் ஏராளமான சொத்துக்களை சிற்றம்பலத்துக்கு விட்டுச் சென்றனர். அந்தக் காணி பூமிகளை அவர் நேரடியாகவே பராமரித்து வந்தார்.
தோட்ட நிலத்தில் சிறுதானியப் பயிர்செய்கை, வாழை, புகையிலை, வெண்காயம் போன்ற காசுப்பயிர் செய்கையையும் மேற்கொண்டார்.
சிற்றம்பலத்தின் வயல் காணியை வெள்ளவாய்க்கால் பிழந்து செல்கின்றது. வருடா வருடம் அவரது வயல் காணியில் அமோக அறுவடை.
பனங்காணி முப்பது பரப்பையும், புல்லு, ஒலை வெட்டுவதற்கு குத்தகைக்கு விட்டிருந்தார்.
பர்வதத்திற்கு எங்கள் குறிச்சியிலுள்ளவர்கள் எல்லோரும் பயம், மரியாதை.
உறவினர்களைத் தவிர பர்வதத்திற்கு எங்கள் குறிச்சியிலுள்ளவர்களுடன், ஏழைகளாக இருந்தாலும் சரி, இறுக்கமான உறவு, பாசம், பிணைப்பு. அவர்களுடைய நன்மை தீமைகளில் அவள் முழு மனதுடன் பங்கு பற்றுவாள். எந்த வீட்டிலாவது மரணம் சம்பவித்தால், முன்னுக்கு நின்று செயலாற்றுவது பர்வதம் தான். அந்த வீட்டில் "எட்டுச் சிலவு" வரைக்கும் பர்வதம் "உலையேற” விடாள். அந்த "இழவு" சம்பவித்த வீட்டிற்கு மூன்று நேரமும் தன் வீட்டிலிருந்துதான் சாப்பாடு அனுப்பிவைப்பாள்.
எங்கள் குறிச்சிச் சிறுவர்கள் மீது அவளுக்கு நல்ல "வாரப்பாடு” பர்வதம் பாட்டியினுடைய மகன் வெற்றிவேலு மாஸ்ரரிடம் நாங்கள் “பாடம் கேட்கப்” போவோம். இரவு வேளைகளில் அவளுடைய வீட்டு
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -249

Page 129
"தலைவாசலில்" நாங்கள் படுத்துறங்வோம். சனி ஞாயிறுகளிலும் பாடசாலை விடுமுறை நாட்களிலும் எங்களுக்கு பர்வதம் பாட்டி வீடுதான் தங்குமிடம். சாப்பாட்டு வேலைகளில்தான் நாங்கள் எங்கள் வீடு செல்வோம்.
பர்வதம் பாட்டி மாம்பழம், பலாப்பழம், விளாம்பழம், மோர், ஊறுகாய்த் தண்ணிர், பனாட்டு எல்லாம் வாஞ்சையுடன் எங்களுக்குத் தருவா.
எங்கள் ஊரில் மூன்று பெரியகோவில்கள். கந்தசாமி கோவில் தெற்கில் அரசகேசரிப் பிள்ளையார் கோவில், அரசகேசரி மன்னன் கட்டினது என்ற ஐதிகம். மேற்கில் வாய்க்கால் தரவைப் பிள்ளையார் கோவில் கிழக்கில். இந்தக் கோவில்களில் நான்கு ஐந்து திருவிழாக்களின் "உபயகாரி" பர்வதம் பாட்டிதான். தனது திருவிழாக்கள் நடக்கின்ற நாட்களில் பெருமளவு கோயில் நிவேத்தியப் பலகாரங்களுக்கு ஏற்பாடு செய்வாள் பர்வதம்பாட்டி, சர்க்கரை அமுது, மோதகம், முறுக்கு, வடை, வாழைப்பழம் எல்லாம் எங்களுக்கு மனம்போல நிறைவாய்த் தருவா. அது மாத்திரமல்ல. அயல் வீடுகளுக்கும் கோயில் பலகாரங்களை பனை ஒலைப் பெட்டி பெட்டியாக அனுப்பி வைப்பா.
பர்வதம் பாட்டியின் கணவன் சிற்றம்பலத்திற்கு தனிக்கிணற்றுத் தோட்டம். அந்தக் கிணற்றில் வேறு எவருக்கும் பங்கு இல்லை.
ஊருக்கு மேற்கே தோட்ட நிலம். செம்மண், செழிப்பான மண். யாரைப்புலம், என்றொரு பகுதி. இங்குதான் சிற்றம்பலத்தாரின் தோட்டம். தனிக் கிணறு. தணிணிர் இறைக்க மாட்டு வாளிச் சூத்திரம். சிற்றம்பலத்தாற்றை தோட்டத்தை "சூத்திரக் கிணத்தடித் தோட்டம்" என்றுதான் கூறுவார்கள்.
சிற்றம்பலத்தாரின் தோட்டத்துக்கு மாட்டுவாளி சூத்திரம் மூலம் தான் தண்ணிர் இறைப்பு. மற்றெல்லாருடைய தோட்டங்களுக்கு "துலா" மிதித்து துலாக்கொடி "பீலிப்பட்டை" இறைப்பு.
“சூத்திரக் கிணத்தடி"த் தோட்டத்தில் சிற்றம்பலத்தார் "ஐயாயிரம் கண்டு" வாழை, மிச்சத்தறையில் மரவள்ளி, இராசவள்ளி, கொம்புவள்ளி மோதகவள்ளி, கரணைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைப் பயிர் செய்கை. அத்துடன் குரக்கன், சாமி, பயறு போன்ற சிறுதானியப் பயிர்செய்கை. மேலும் போகத்துக்குப் போகம் வெண் காயமும் புகையிலையும் பெருமளவில் பயிரிடுவார்.
மாட்டுச் சூத்திரம் வளைக்க ஒரு சிறு பையன். தண்ணிர் பாச்ச இரண்டு இளந்தாரிகள். V
-250- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

வாழைத் தோட்டத்திற்கும் புகையிலைப் பயிர் செய்கைக்கும் சிற்றம்பலம் தாராளமாகப் பசளையிடுவார். பூனகரியிலிருந்து கொழும்புத் துறைக்கு “வத்தை"கள் மூலம் பூவரசம் குழை கட்டுக் கட்டாகக் கொண்டு வருவார்கள். அங்கிருந்து வண்டில் கணக்கில் பூவரசம் குழையை கோப்பாய் சந்திக்கும் மருதனாமடச் சந்திக்கும் கொண்டு வருவார்கள். இங்கிருந்து பூவரசம் குழையை கொள்வனவு செய்து தறையில் தாழ்க்கப்படும். அத்துடன் பசளைக்கு மாட்டு எரு வன்னியிலிருந்து கொண்டு வரப்படும்.
"மாட்டுச் சூத்திரம் வளைக்க நாலு பணம், (25 சதம்) நாள் கூலி. அதோடை இரண்டு வேளை சாப்பாடு. காலையிலை அவிச்ச மரவள்ளிக் கிழங்கும் மிளகாய்ப்பச்சடியும், அல்லது சாமிப் பளஞ்சோறும் மரவள்ளிக் கிழங்குக் கறியும். மத்தியானம் குரக்கன் புட்டும் மரவள்ளிக் கிழங்குக் கறியும். தறை கொத்த அல்லது குழைதாக்க ஒரு ஆளுக்கு பன்னிரண்டு பணத்திலிருந்து பதிநாலு பணம் வரைதான் நாள் கூலி. அதோடை இரண்டு வேளை சாப்பாடு. நெல் வயலிலை களை பிடுங்க பொம்பிளையளுக்கு தலா எட்டு பணம் நாள் கூலி"
தன் தகப்பனார் அந்த நாளையிலை தான் கூலி குடுத்த தென்று தனக்குச் சொன்னதாக பொன்னம்பலம் அடிக்கடி கூறுவார்.
அந்த நாளையிலை தனது தகப்பனார் இப்பிடிதான் தங்கடை ஊரிலை உச்ச விலைக்கு புகையிலைக் கண்டு வித்தவராம். ஆயிரம்கண்டு புகையிலை ஏழு பவுணுக்கு (ஒரு பவுண் பத்து ரூபா) ஐயாயிரம் கண்டு புகையிலை முப்பத்தைஞ்சு பவுணுக்கு வித்தவராம். கோண்டாவில் புகையிலை வியாபாரிதான் வாங்கினவராம்.
சிற்றம்பலத்தாரும் தன் தகப்பனாரைப் போல கரிசினையோடை தோட்டம் செய்து வந்தார்.
ஒரு போத்தல் சீல் சாராயம். மூன்று போத்தல் பெற்றோல். செழுமையாய்ச் சடைத்து, அடர்த்தியாயிருக்கின்றது சிற்றம்பலத்" தாரின் பனந்தோப்பு. கரு முகில்களாயிருந்த தோப்பிலுள்ள பனம் குருத்தோலைச் சார்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடி வதங்கி, கருகிச் செத்துக் கொண்டிருக்கின்றன. படிப்படியாக தோப்பிலுள்ள பனை" வட்டுகள் சாய்ந்து தலை குத்தி ஒவ்வொன்றாக விழுந்துகொண்டிருக்" கின்றன. பனைகள் எல்லாம் மூளியாய் நிற்கின்றன.
பனந்தோப்பு விதவைக் கோலத்தில். ஊரில் பரபரப்பு. பல வித வதந்திகள்.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -251

Page 130
சிற்றம்பலம் இடிந்து போனார். முப்பது பரப்பு வயல்நிலம் சிற்றம்பலத்திற்கு. இந்த வருடம் மொட்டைக் கறுப்பன் நெல்விதைத்தார். நெற்பயிர் செழிப்பாய் வளர்ந்து கதிர்முற்றி விளைந்து, இன்றோ நாளையோ பிரசவிக்கப் போகும் பூரண கற்பிணித் தாய்க்கோலத்தில் வயல்.
"சா வெள்ளாண்மை" சிற்றம்பலத்தாருக்கு. நெல் வெட்டி பாரிய மலையாய் மூன்று நெற் "சூடுகள்" சூடு மிதிப்பதற்கு எருது மாடுகள் பத்துச் சோடிகள் தயார் நிலையில். நாளை விட்டு மறுநாள் இரவு சூடுமிதிப்பும் "புதிர்ப்பொங்கலும்" அமாவாசை இருட்டு. நள்ளிரவு. தன்னந்தனியனான மனித நடமாட்டம். மூன்று நெற்சூடுகளிலும் தீ! சோழகக் காற்றில் தீக் கொழுந்துகள் வான் முட்ட பொங்கியெழுந்து ஜுவாலித்துநர்த்தனமாடுகின்றன.
ஒரு மனித உருவம் பாய்ந்தோடி தாளம் பற்றைகளுக்குள் மறைகின்றது.
சிற்றம்பலத்தாரின் நெற்சூடுகள் மூன்றும் அக்கினிப் பிசாசின் கோரப் பசிக்கு இரையாகி விட்டன.
மலைத்துப் போனார் சிற்றம்பலம். "ஐயோ பாவம் சிற்றம்பலம். ஊர்மக்களின் பச்சாதாபம். “எந்தப் பாடேலை போவான் இதைச் செய்தானோ? அவனைப் பாம்பு வெட்டும். அவன் பரிசாம்பலாய்த்தான் போவான்."
ஆதங்கப்பட்டு திட்டினார்கள் ஊர் மக்கள். இது போதாதென்று சிற்றம் பலத்தாரின் தோட்டத்துச் சூத்திரவாளிகள் இரண்டும் ஒர் இரவு காணாமல் போய்விட்டன.
தோட்டத்திலுள்ள பயிர்களுக்கு தண்ணிர் பாச்சமுடியாமல் போய்விட்டது சிற்றம்பலத்தாருக்கு. -
தோட்டத்திலுள்ள வாழைகள் எல்லாம் தண்ணீர் இறைப்பின்றி வாடி முறிந்து கொண்டிருக்கின்றன.
இருண்ட முகில்களாய் செழித்து வளர்ந்து கொண்டிருக்கின்ற குரக்கண் பயிர் எல்லாம் வாடிக் கருகிச் செத்துக் கொண்டிருக்கின்றன.
-252- . நீர்வை பொன்னையன் சிறுகதைகள்

சிற்றம்பலத்தின் இதயம் குமுறி அழுதுகொண்டிருந்தது. "சூத்திரவாளி திருடியவன்ரை தலையிலை நிச்சயம் இடிவிழும்" சபித்துத் திட்டினர் சிலர்.
பர்வதம் பாட்டியின் மனத்திரையில் கடந்தகால நிகழ்வுகள்.
அவளது இதயத்தின் ஆழத்திலிருந்து கிழம்பிய கனத்த பெருமூச்சு வெளியேறிக் காற்றுடன் கலக்கின்றது.
திடகாத்திரமாய், மிடுக்காய், வயிரம் பாய்ந்த அவளது உடற்கட்டு, காலவெள்ளத்தில் அடிபட்டு, உலர்ந்து, உரமின்றி, உருமாறி, விருப்பு வெறுப்பற்ற இதயத்தைச் சுமக்கின்ற சடமாகிவிட்டது. அவளது விழிகள் சோர்ந்து, வரண்டு, குழிவிழுந்து பஞ்சடைந்து விட்டன. அவளது ஆணவமும் அகங்காரமும் என்றோ செத்து மடிந்து விட்டன.
பர்வதம் பாட்டியின் இளைய மகனுக்கு தூரத்திலுள்ள ஒரு கிராமப் பள்ளிக்குடத்தில் வேலை, மாதத்தின் ஒரிரு தடவைதான் அவன் தாய் வீட்டிற்கு வருவான்.
பர்வதம் பாட்டி இப்போ தனிமரம். அவளுக்கு ஒர் ஊன்று கோல் அவசியம். பாஞ்சான் செல்லையன் பர்வதம் பாட்டியின் அயலவன். செல்லையனுக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு பெண்கள், ஆண் ஒன்று.
மங்களம் செல்லையனின் கடைக்குட்டி. சிறு வயதிலேயே அவள் தாயை இழந்து விட்டாள். அவளுடைய அக்கா நல்லம்மா மங்களத்திற்கு ஏழு வயதாயிருக்கும்போதே, மாட்டுத் தரகன் ஒருவனோடு ஒடிப் போய் விட்டாள்.
பாஞ்சான் செல்லையன் முடாக்குடியன். அண்ணன் இந்திரன் அலார் பேர்வளி மங்களத்திற்கு உரிமை கொண்டாட எவருமில்லை. வறுமை அவளுடன் உடன் பிறப்பு. தந்தையும் தனையனும் நினைத்த நேரம் வருவார்கள். நினைத்த நேரம் போவார்கள். அவர்களுக்கு நிரந்திரத் தொழில் ஏதுமில்லை, வருமானமில்லை. ベ செல்லையன் மாட்டுத் தரகன். கிடைக்கும் வருவாயில் பெரும் பகுதி குடிக்கு. கையில் ஏதாவது மிஞ்சினால் வீட்டுச் செலவுக்கு. இல்லை" யென்றால் மங்களம் பட்டினி.
நீர்வை பொன்னையண் சிறுகதைகள் -253

Page 131
மங்களம் அயல் வீடுகளில் தொட்டாட்டு வேலைகள் செய்வாள். அவர்கள் ஏதாவது கொடுத்தால்தான் அவளது வயிறு அரைகுறையாக" வாவது நிரம்ப வழியுண்டு. இல்லாவிட்டால் பட்டினிதான்.
உடல் தேய உழைப்பாள் மங்களம். ஊதியம் தான் போதாது. மங்களத்தின் மீது பர்வதம் பாட்டிக்கு நெடுக ஒரு கண். செல்லையனும் மகனும் சில வேளைகளில் மூன்று நான்கு நாட்கள் வீட்டுக்கு வராமலிருப்பார்கள். மங்களம் அயலிலுள்ள அன்னமுத்தாச்சி. யின் வீட்டில் இராப்பொழுதுகளில் தங்குவாள்.
அன்னமுத்தாச்சிதான் மங்களத்தின் பாதுகாவலன். பர்வதம் பாட்டி மங்களத்தை தன் மருமகளாக்க எண்ணினாள். தனது எண்ணத்தை அவள் முதலில் அன்னமுத்தாச்சிக்குத் தெரிவித்தாள்.
அன்னமுத்தாச்சிக்கு வியப்பு. மட்டற்ற மகிழ்ச்சி. பர்வதம் பாட்டி முன்னையைப் போலல்ல இப்போ அவள் நல்லாய் பட்டுத் தெளிந்துள்ளாள். தனிமை அவளைத் தெளிய வைத்துவிட்டது. அவளிடமிருந்த செருக்கும் திமிரும் எப்போவோ செத்து மடிந்து விட்டன. பர்வதம் பாட்டி இப்போ மறு பிறவி எடுத்தவள். இதை அன்னமுத்தாச்சி நன்றாய்த் தெரிந்திருந்தாள். இதனால்தான் அவள் பர்வதம் பாட்டியின் எண்ணத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாள்.
பர்வதம் பாட்டியும் அன்னமுத்தாச்சியும் ஒரு நாள் திடீரென செல்லையன் வீட்டுக்குச் சென்றனர்.
“மங்களத்தை பர்வதம் தன்னுடைய மருமகளாக்க விரும்புகிறாள்" "மங்களத்தை தன்ரை இளைய மகன் வெற்றிவேலுக்குக் கட்டி வைக்க விரும்புகிறாள். நீ என்ன சொல்லிறாய்?" பாஞ்சானைக் கேட்டாள் அன்னமுத்தாச்சி. பான்சானுக்கு வியப்பு! "மங்களத்தை என்ரை மருமகளாக்க எனக்கு ஆசை. என்ரை சொத்து எல்லாத்தையும் அவளின் ரை பேரிலை எழுதிவைப்பன். உனக்கு சம்மதமா? நான் அவளைக் கண் கலங்காமல்."
பர்வதம் பாட்டி உணர்ச்சிபூர்வமாகப் படபடனக் கூறிக்கொண்டே போனாள்.
தலை அசைவால் பாஞ்சான் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.
-254- நீர்வை பொன்னையண் சிறுகதைகள்

"ஆனால் ஒரு நிபந்தனை? நீயோ உன்ரை மகனோ மங்களத்தைப் பார்க்க, அவளோடை உறவு கொண்டாட எங்கடை வீட்டுக்கு ஒருநாள்தானும் வரக்குடாது. என்ரை வளவுக்கை நீயும் உண்ரை மோனும் கால்வைக்கக்குடாது. அவளும் உங்கடை வீட்டை வரக்குடாது.
இது கடுமையான கொண்டிசன் தான். என்ன செய்ய? வேறை வழிஇல்லையே. விட்டுப் பிடிப்பம்.
தனக்குத் தானே கூறிக்கொண்ட பாஞ்சான் தனது உடன்பாட்டைத் தெரியப்படுத்தினான்.
பெரும் பாரம் இறங்கிய உணர்வு அவனுக்கு. ஒரு நல்லநாள் பார்த்து மங்களம் பர்வதம் பாட்டிவீட்டுக்குச் சென்றாள்.
வெற்றிவேலு மங்களத்தைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டான். பர்வதம் பாட்டிக்குப் பேரானந்தம். தன்சொத்து அனைத்தையும் மங்களத்தின் பெயருக்கு எழுதிவைத் தாள்.
சின்னஞ் சிறு பெண்ணாக இருந்தாள் மங்களம். அவளுக்குக் கன்னங்கரிய விழிகள். அருவிச் சிரிப்பு. முழுமதியாய் வட்டமுகம். செக்கச் சிவந்தமேனி. கருங்கூந்தல் தானாகச் சுருண்டு, ஒவியன் வரைந்த ரேகைகளாய் அடர்ந்து அலை மோதுவதாய் வளைந்து நெளிந்து சென்றது. அவளது கறுத்த விழிகளில் ஒரு ஜீவ ஒளி சுடர் விட்டுக் கொண்டிருந்தது. குழந்தைபோன்ற கபடமற்ற அவளது முகத்தில் வறுமையின் கோரப் பிடியினால் ஏற்பட்ட துயர நிழல் படர்ந்திருந்தது.
இப்பொழுது மங்களம் அடக்கமும் ஆசாரமுமுடைய பெரிய மனுஷியாகிவிட்டாள்.
விரக்தியைச் சுமக்கும் அவளது விழிகளில் சரணபாவமும் முதுமையும் நிலவியது. உள்ளம் இயல்பாகவே பிஞ்சானது.
மங்களத்தின் யெளவனச் சிரிப்பு, மனக்கிளர்ச்சி, இளமையின் இதய ஆவேசம் எல்லாமே செத்து மடியத் தொடங்கியது. அவள் அகல விழியில் தென்பட்ட வியாகூலம் வாழ்க்கைப் புயல் ஒளியில் பறவையாய் வெளியேறிப் பாய்த்தது. அவள் இதயத்தில் சாம்பராகிக்கொண்டிருக்கும் வேதனையை எவரால் அவளது இதயக் குகையில் புகுந்து பார்த்துணர முடியும்? அவளது இதயக்குமுறலில் எண்ணத்திவலைகள் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கின்றன.
வறுமையினால் வறண்ட மங்களத்தின் வாழ்வில் அனுதாபமும் அக்கறையும் கொண்டவளாக இருந்தாள் பர்வதம் பாட்டி,
நீர்வை பொன்னையன் சிறுகதைகள் -255

Page 132
"பிரேதம் தூக்கியாச்சுப் போலை கிடக்கு."
நீட்டி முழக்கி அடிக்கப்படுகின்ற பறைமேளச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டவளாய் கூறுகின்றாள் பர்வதம் பாட்டி. அவளது தீனக் குரலில் பதகளிப்பு, நடுக்கம்.
பர்வதம் பாட்டியின் இதயத்தில் பூகம்பம்.
உடலில் நடுக்கம்.
"நடைமேளச் சத்தமாய்க் கிடக்கு. பிரேதம் வருகுது போலை கிடக்கு மாமி.”
மங்களம் கூறுகின்றாள்.
"நேரம் கிடக்கு. பிரேதம் வாறதுக்கிடேலை கிணத்தடி அலுவலை முடிச்சிடுவம்."
கிணற்றடிக்குச் செல்கின்றாள் மங்களம்.
"மாமியின்ரை துணியளை பிரேதம் வாறதுக்கிடேலை தோய்த்து முடிச்சிடுவம். பிறகு அவவுக்கு குளிக்க வாக்கலாம்."
துணிகளைத் தோய்க்கின்றாள் மங்களம்.
சந்திக்குச் சந்தி, "குடிமோன்” வாரியின்ரை தலைமையில் பறை மேளச் சமா வைத்தபடியே, பிரேதம் வந்து கொண்டிருக்கின்றது.
உள்ளூர் பறை மேளம் மூன்று சோடி. மூவாயிரம் ரூபா பேசி நாலு சோடி யாழ்ப்பாணம் பாசையூர் மேளக்கூட்டம் நாலு. நெல்லிய மேளக் கூட்டம் நாலு.
அப்பாத்துரைக் கட்டாடியின் தண்டிகைப் பாடை
வீட்டிலிருந்து சுடலை வரை செல்லர்க் கட்டாடியின் நிலபாவாடை விரிப்பு"
இவை அனைத்தையும் கொண்ட பிரேத ஊர்வலம் பர்வதம் பாட்டியின் சங்கடப் படலையடிக்குக் கிட்ட வருகின்றது.
"ஐயோ! என்ரை ராசாவே!
என்னை விட்டிட்டுப் போறியே!”
பர்வதம் பாட்டியின் இதயக் குகையிலிருந்து வெடித்துக் கிழம்பிய தீனக்குரல் ஹரங்காரமாய் ஒலித்து வான் வெளியில் வியாபித்துக் காற்றுடன் சங்கமிக்கின்து.
இரண்டு வருடங்களாகப்படுத்த படுக்கையாகக் கிடந்த பர்வதம் பாட்டி எப்படித்தான் படலையடிக்கு வந்தாளோ?
-256- நீர்வை பொன்னையன் சிறுகதைகள்
-2OO6

ஆசிரியரின் படைப்புகள்
மேடும் பள்ளமும்
உதயம்
| 5605
வேட்கை
r ஜென்மம்
★
உலகத்து நாட்டார் கதைகள்
女
முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் * நாம் ஏன் எழுதுகின்றோம்
女
தொகுப்புகள்
* முற்போக்கு இலக்கியப் புனைகதைச் சுவடுகள் * முற்போக்கு இலக்கியக் கவிதைச் சுவடுகள்

Page 133


Page 134


Page 135
பட்டதாரியான இளமையிலும் கொண்டிருந்த ஒய்வு காலங் தோட்டத்தில்
இலக்கிய மொ "கலைமதி குழுவில் Հt:1 "தொழிலாளி குழுவில் அங்க 1969 இலிருந்து
பேரவை செயற்
 

சேர்ந்த ஒல்லைக் குறிச்சியில், தந்தை திரு. இ. இராமலிங்கம், தி இலட்சுமி நீர்வேலியிலுள்ள துக் கல்லூரியில் ஆரம்பக் கல்வி தா சர்வகலாசாலையில் பி. ஏ
重 ரி கல்கத்தாவில் படித்துக் காலத்திலும்சரி, விடுமுறை, களில் தந்தையுடன் சேர்ந்து உழைத்தவர். 1958இல் படிப்பு ம் திரும்பிய பின்னரும் பல வலை தேடி அலைந்து வேலை mTea55 தோட்டக்காரனாகவே
மனிதாபிமானமும் கொண்ட வில் மாணவ வாலிப இயக்கங்
ஹராக்லி பிரதேச அமைப்புச் ம் பணியாற்றியவர். இலங்கை
னர் முற்போக்கு இயக்கங்களி
பெயர்ப்புகளும் செய்துள்ளார். சஞ்சிகையின் ஆசிரியர் பாற்றியவர். "தேசாபிமானி வாரப்பத்திரிகைகளின் ஆசிரியர்
வகித்தவர். 1995 வரை இலக்கிய வனவாசம். து "விபவி மாற்றுக் கலாசார மிழ் பிரிவு இணைப்பாளராக கிறார்.
கலை இலக்கியப்
ISBN 978-955-5026-0-9
7
|