கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிமிர்வு

Page 1


Page 2

நிமிர்வு
சிறுகதைகள்
நீர்வை பொன்னையன்
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை

Page 3
நூல் <8ѣćЯflшї வெளியீடு
வெளியீட்டுத் திகதி
பக்கங்கள்
அச்சுப்பதிப்பு
6,606)
: நிமிர்வு - சிறுகதைகள் : நீர்வை பொன்னையன்
: இலங்கை முற்போக்கு
கலை இலக்கியப் பேரவை கொழும்பு - O6.
: 2-O3-2OO9
: 8 - 12O
: டெக்னோ பிறிண்டர்ஸ்
55, Dr. E.A. குரே மாவத்தை, கொழும்பு - 6. தொ.பே : O78-5522O46
: Göшт 2OOOO
விற்பனையும் விநியோகமும்
பூபாலசிங்கம் புத்தகசாலை 202, செட்டியார் தெரு, கொழும்பு 1. தொலைபேசி : O12422321 தொலைநகல் : Ol233733 E.Mail: pbdhoGsltnet.lk
Title
Author
Publication
Date of Publication
Pages
Printers
Price
: Nimirvu
: Neervai Ponnaiyan
: Ceylon Progressive
Arts and Literary Council 11, Rajasingha Road, Colombo - 6
: 21-03-2009 : 18 + 120 : Techno Print
55, Dr. E.A. Cooray Mawatha, Colombo -6. Tel: O78-5522046
: RS. 200.00
SBN 978-955-1319-18-2

a#ub/fuyuGoaTub
உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கு.

Page 4
| நிமிர்வு நீர்வை பொன்னையன் IIV |

"நிமிர்வு" இது நீர்வை பொன்னையனின் புதிய சிறுகதைத் தொகுப்பு
மேடும் பள்ளமும் முதல் “நீர்வை பொன்னையன் சிறுகதைகள்" வரையான ஆறு தொகுதிகளை வாசகர்களுக்கு அளித்தவரின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. இதில் அடங்கியிருக்கும் அனைத்தும் கடந்த ஒரிரு வருடங்களுக்குள் எழுதிய புத்தம் புதிய படைப்புகள், முன்னைய தொகுப்புகள் எவற்றிலும் இடம் பெறாதவை. ஒரே படைப்பை வெவ்வேறு தொகுப்புகளில் சேர்த்து வாசகர்களின் தலையில் கட்டும் கயமை இல்லாதவர் நீர்வை.
உங்கள் கையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இருப்பதனை இன்றைய காலகட்டத்தின் வெளிப்பாடு எனலாம். நீங்கள் இன்றைய நவீன உலகின் ஒரு உதாரணப் புள்ளி. செயலூக்கம் கொண்ட ஒரு பாத்திரம். அதன் அவசர ஓட்டத்தின் பங்குதாரி. எதனையும் சுருக்கமாகவும், செறிவாகவும் செய்ய வேண்டியது காலத்தின் நியதி. இணைந்து ஓடாதவர்கள் ஒரங்கட்டப்படுவார்கள்.
ஆம்! காலத்தை வீணடிக்காது, சுருக்கமாகவும் செறிவாகவும் பேசி மனமகிழ்வு அளிப்பதுடன் நின்றுவிடாது, உள்ளத்துள் ஊடுருவவும் வைப்பது என்பதால் இன்றைய காலகட்டத்திற்கான இலக்கிய வடிவமாக சிறுகதை ஆகிவிட்டது. எனவே மக்களிடையே தமது கருத்துக்களைப் பரப்புவதற்கான ஆயுதமாகவும் பயன்படுகிறது. கவிதை மேலும் சுருக்கமானதும் செறிவானதும் என்ற போதும் சற்று அதிக பிரயாசை தேவைப்படும். எனவேதான் சிறுகதையே இன்று அதிகம் வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாக இருக்கிறது.
நீர்வை ஒரு படைப்பாளி. பிரதானமாக சிறுகதை எழுத்தாளர். சமூக முன்னேற்றத்தின் ஊடாக புத்துலகைக் காணர்பதை நோக்கமாகக் கொண்டு எழுதுபவர். ஈழத்து இலக்கிய உலகில்
நிமிர்வு நீர்வை பொன்னையன் IV

Page 5
படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து இலட்சிய வேட்கையுடன் செயற்பட்டு வரும் ஒரு மூத்த படைப்பாளி. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக படைப்பாளுமையிலும், அதன் தொடர்ச்சியை பேணுவதிலும் தேக்கமுறாது பயணிக்கிறார். ஆயினும் எழுதிக் குவிப்பவர் அல்ல. இதுவரை சுமார் 60-70 சிறுகதைகளையே தந்திருக்கிறார். மேலெழுந்த வாரியாக அவசரப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. மிகுந்த சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட அவையாவுமே பெறுமதி மிக்கவை. வயதின் காரணமாக தனது கையெழுத்தின் நேர்த்தியில் தளர்வு ஏற்பட்டுவிட்ட போதும் கலை ஊக்கத்தில் இளைஞனின் உற்சாகத்தோடு செயற்படுபவர்.
சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு புதியது அல்ல. வ.வே.சு.ஐயர், புதுமைப்பித்தன், மெளனி போன்ற ஆளுமைகளால் ஊன்றப்பட்ட பதி இன்று ஆலமரம் போல வளர்ந்து விட்டது. மக்கள்மயப்பட்ட ஏனைய இலக்கிய வடிவங்கள் போலவே இன்றும் வளர்ச்சியுறுகிறது. அது தேங்கிய குட்டை அல்ல. கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை நிதம் நிதம் புத்தாக்கம் செய்து பொலிவுறுகிறது. அதன் அசைவியக்கத்தைப் புரிந்து கொண்ட படைப்பாளி தன்னையும் இற்றைப்படுத்தி, தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏதாவது புதுமையை, தனித்தன்மையை கொண்டு வரவே முயற்சிப்பார்கள்.
நீர்வையும் அத்தகைய ஒரு படைப்பாளியே. எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த காலம் முதல் சிறுகதை இலக்கியம் படைத்து வருகிறார். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் சூட்சுமங்களைப் புரிந்து அதனைத் தனது படைப்புகளில் லாவகமாகப் பயன்படுத்தும் நல்ல படைப்பாளி. அனுபவம் தந்த பாடங்களால் மட்டுமே அவரது படைப்புகள் மெருகூட்டப் படவில்லை. அவரது ஆரம்பத் தொகுப்பான மேடும் பள்ளமும் நூலில் உள்ள படைப்புகளை மீள்நோக்கும் போது கலைநேர்த்தி, சொற்தேர்வு பரீட்சார்த்த வடிவங்களில் படைத்தல் போன்ற தேடலுறும் பண்புகளை அவரது கன்னிப் படைப்புகளிலேயே காண முடிகிறது. சொற்சிக்கனமும், பொருள் அடர்த்தியும், சின்னஞ் சிறியதான வாக்கியங்களும் அவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்களாகும்.
இந்தத் தொகுதியிலும் அவர் ஒரு மாறுபட்ட புது முயற்சி செய்துள்ளார். சிறுகதையின் வடிவம் சார்ந்த ஒரு பரீட்சார்த்த
நிமிர்வு நீர்வை பொன்னையன் (V11

முயற்சி எனக் கொள்ளலாம். நான்கு கதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். இப் படைப்புகள் பந்திகளாகப் பிரிக்கப்படவோ, பகுதிகளாகவே வேறுபடுத்தப்படவோ இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மூச்சில் தொடர்ச்சியாகச் சொல்லி முடிக்கப்படுகின்றன. ஒரு சில வார்த்தைகளையே கொண்ட மிகச் சிறிய வாக்கியங்கள், அவையும் வரிகள் எனும் கட்டுக்குள் அடங்காது. பிரிந்து நிற்பது அழகு சேர்க்கிறது. புதுக் கவிதையோ என மயங்க வைக்கும் நடை. ஆனால் நெடுங்கவிதையாகவும் இல்லை. வாசிக்கும் போது கண்களுக்கு இதமாகவும், மனசுக்கு நெருக்கமாகவும் இருப்பதே அதன் சிறப்பு எனலாம். இதில் அடங்குகின்ற நிமிர்வு, விடுவிப்பு, மீறல், கர்வம் ஆகிய நான்கும் இந்த வகையைச் சார்ந்தவையாக எனக்குப் படுகிறது.
ஆயினும் புதியன செய்ய வேண்டும் என்பதற்காக எழுதுவதில்லை. பேரும் புகழும் பெறுவதற்காகப் படைப்பதில்லை. பாறை போன்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும், பூப்போன்ற மென்மை" யான உள்ளமும் கொண்டவர். லட்சிய வேட்கை கொண்டவராக இருப்பதனால் அவரது படைப்புகள் அடக்கப்பட்ட அல்லலுறும் மக்களையும், தொழிலாளர்களையும், அவர் தம் போராட்டங்களையும் வீறுகொண்டு சித்தரிக்கும். சமூகக் கொடுமைகளையும். சாதீயம் போன்ற ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும். அதே நேரம் மிருதுவான மனம் கொண்டவராதலால் தனிமனித உணர்வுகளையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. நட்பையும் காதலையும், குடும்ப உறவுகளையும் கவனத்தில் கொள்ளவே செய்யும்.
மனித உணர்வுகளைப் பேசும் நீர்வையின் கதைகளில் கூட நிச்சயம் சமூக நோக்கு இருந்தே தீரும். “மீறல்" காலத்தை மீறிய உறுதியான காதலைப் பேசும் கதை. ஆயினும் சாதிப்பிரச்சனையும் சேர்ந்தே வருகிறது. சாதீயத்தின் கொடுங் கரங்களை ஒதுக்கி துணிவோடு காதலித்தவளை கைப்பிடிக்கும் கதை.
முற்போக்கு அரசியலில் நேரடியாக ஈடுபட்டவராதலால் பல அரசியல் கதைகளும் அவரது படைப்பில் அடங்கும். இந்த நூலில் அவ்வாறான நேரடி கட்சி அரசியல் கதைகள் இல்லாதபோதும், அனைத்திலும் முற்போக்கு அம்சம் தெளிவாகப் புலப்படுகிறது. தமிழ் அரசியலில் ஆயுதப் போராட்டம் முனைப்புக் கொண்ட காலத்தில் எழுதப்பட்டவையாதலால் அதனையும் உள்ளடக்கத்
| நிமிர்வு நீர்வை பொன்னையன் (VIII

Page 6
தவறவில்லை. தமிழ் அரசியலில் முக்கிய அங்கமாகிவிட்ட ஆயுதப் போராட்டத்தின் மறுபக்கத்தையும் நேர்மையுடன் பதிவு செய்கிறது. அவ்வாறு எழுதிய ஓரிருவரில் நீர்வையும் இடம் பெறுகிறார்.
தமிழ் அரசியலில் ஆயுத போராட்டம் அரும்பத் தொடங்கும் காலக் கதைகள் இரண்டு இடம் பெறுகின்றன.
"நிமிர்வு" என்பது கறுப்புக் கோட்டுகாரர்கள் தமிழ் அரசியலில் கோலோச்சிய காலக்கதை. அறம் பிழைக்கின் அரசியலும் பிழைக்கும். அவ்வாறே அங்கு பிழைத்தது. இன்று தெற்கிலும் கறுப்புக் கோட் டுக்காரர்களுடன் கழுத்தில் மாலைக்காரர்கள், ஸ்டெதஸ்கோப்காரர்கள், முனைவர்கள், தெருச்சண்டியர்கள் என எல்லோருமே குட்டை குழப்பி அரசியலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கதை தமிழ் அரசியல் போலிகளின் சரிவை எடுத்துக் கூறுகிறது. குறுகிய வசனங்களுடன் 15 பக்கங்கள் நீளுகின்றது. புதிர் போன்ற சிறப்பான முடிவு. மிக வித்தியாசமான ஒழுங்கில் சொல்லப்படுகிறது. நொன் லீனியர் பாணியில் சொல்லும் சாயல் தெரிகிறது.
"வீழ்ச்சி" தேசிய அரசியலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகின்றது. அரசுசார் நிறுவனங்களில் உயர் பதவிகள் அரசியல் மயப்படுவதும், அந்த நியமனங்களுக்கான குத்துவெட்டுகளும், தில்லு முல்லுகளும் இவ்வளவு அப்பட்டமாக இலங்கைத் தமிழ் இலக்" கியத்தில் பதியப்பட்டதாக ஞாபகம் இல்லை. ஒரு சிறு பாத்திரமாக வரும் பாலா மனத்தில் உயர்ந்து நிற்கிறான்.
நீர்வையின் கதைகளின் உள்ளடக்கம் இவ்வாறு இருக்க அவற்றில் உள்ள கலையம்சங்களை நோக்குவதும் அவசியமாகும். சிறுகதை இலக்கியத்தின் பண்புகளை நீர்வை எவ்வாறு தனது படைப்புகளில் உள்வாங்கியிருக்கிறார் என நோக்குவது சுவார்ஸ்மாக இருக்கக் கூடும்.
சிறுகதை ஒரு படைப்பிலக்கியம். ஆனாலும் நாவல், குறுநாவல், கவிதை, நாடகம், கட்டுரை போன்ற ஏனையவற்றை விட பல விதத்திலும் மாறுபட்டது. நாவல், குறுநாவல் போன்று கதையைச் சொல்லிச் செல்லும் ஒரு இலக்கியமே இதுவென்ற போதும் இதற்கான பல தனித்துவங்கள் உள்ளன.
சிறுகதை, நாவல் போன்ற எந்தப் படைப்பிலக்கியமாக இருந்தாலும் அதற்கு ஒரு கரு இருக்க வேண்டும். அதாவது
| நிமிர்வு நீர்வை பொன்னையன் VIII

அதனுடைய மையக் கருத்து நாவல் போன்றவற்றில் அந்த மையக் கருவை தீர்க்கமாக வெளிக்கொண்டு வருவதற்காகவே கதை முழுவதும் சொல்லப்படுகிறது. அந்த மையத்தை வலியுறுத்துவதற்காகவே கதையில் சம்பவங்களைக் கோர்த்தும் தொகுத்தும் செல்வார்கள். அல்லது அக் கருவைச் சுற்றியே கதை படர்ந்து செல்லும். இதனால் கதையை அக்கறையோடு படிக்கும் வாசகனுக்கு அப் படைப்பின் கருவை சுலபமாகப் புரிந்து கொள்ளமுடியும்.
இவ்வாறே எந்த ஒரு படைப்பிலக்கியத்தை வாசிக்கும் போதும் அது ஒரு விடயத்தைச் சொல்லிக் கொண்டு செல்வதாக வாசகன் உணர்வான். அதற்கேற்ப அவனும் அதனை தன்னுள் எழுதிக் கொண்டே செல்வான். இதுவே வாசகப் பங்கேற்பு. நவீன இலக்கிய வடிவங்கள் அனைத்துமே அவனது பங்களிப்பை வரவேற். கின்றன. ஊக்குவிக்கின்றன. வாசகப் பங்களிப்பு இல்லையேல் இன்றைய சூழலில் எந்தப் படைப்புமே வெற்றி பெற முடியாது.
சிறுகதையிலும் அவ்வாறே. ஆனால் சிறுகதையின் வார்ப்பு முறை நாவலை விட முற்றிலும் எதிர்மாறானது. சிறுகதையின் முக்கியம் அது தரும் எதிர்பாராத திருப்பத்தில் மட்டுமே தங்கியுள்ளது. வாசகன் கதையின் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறானோ, எதனைத் தன்னுள் எழுதிச் செல்கிறானோ அதற்கு நேர் எதிராக அல்லது வாசகன் நினைத்தே இருக்க முடியாத புதிய கோணத்தில் கதாசிரியர் கதையை திருப்புவார். வாசகன் மலைத்து நிற்பான். அவ்வாறானதே சிறந்த சிறுகதையாகத் தேறும்.
உண்மையில் சிறுகதையின் முடிவே அந்த திடீர்த் திருப்பத்தில்தான் உள்ளது. திருப்பம் வெளிப்பட்டதும் கதை முடிவதே சாலச் சிறந்தது. அதற்கு மேலும் விளக்கம் கூறி கதையை வளர்த்துச் செல்வது வாசகனை சோர்வடையச் செய்யும். தெரிந்த பாடத்தை மீண்டும் கேட்கும் மாணவன் போலச் சலிப்படைய வைக்கும்.
அந்த முடிவானது மிகக்குறைவான சொற்செட்டுடன் கருத்துச் செறிவான வார்த்தைகளாக வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் வாசகன் தனது கற்பனையைச் சிறகடித்துப் பறக்க விட்டு மிகுதியை தனது உள்ளத்துள் புனைந்து செல்ல முடியும். அதனால் வாசகன் பங்கேற்பு மிகவும் பலமாகிறது. படைப்பாளியே அதிகம் சொல்வது வாசகனுக்கு பாரம்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் IIX

Page 7
“வெறி” என்ற சிறுகதையின் முடிவானது திடீர்த் திருப்பமாக வருகிறது. சரியாகச் சொன்னால் அக் கதையின் கடைசி வசனமாக வருகிறது. நீண்ட வசனம் கூட அல்ல. மூன்றே மூன்று சின்னஞ் சிறிய சொற்களைக் கொண்ட சிறிய வசனம். அந்த குறுகிய வசனத்தினதும் கடைசி வார்த்தையாகவே இந்தக் கதையின் திருப்பம், முடிவு இரண்டும் இணைந்தே வருகின்றன. சிறுகதை என்ற படைப்பிலக்கியத்தின் பண்புகளை நன்கு புரிந்து கொண்டதால் தான் நீர்வை பொன்னையனால் இவ்வாறு இப்படைப்பை நிறைவு செய்ய முடிந்திருக்கிறது.
குடி ஏறுவதால் மட்டும் வருவது வெறி அல்ல. பணம், பொருள், சொத்து போன்றவையும் சேரச்சேர அவற்றின் மீதான வெறியும் ஏறிக்கொண்டெ செல்லும். ஆனால் சொத்து ஆசைக்காக தனது மகளின் வாழ்வையே பணயம் வைக்கும் அளவிற்கு கூட வெறி ஏறுவதை இக்கதையில் படிக்க மனம்நோகிறது. முக்கிய பிரச்சனையாக மனைவியை அவளது பெற்றோர்கள் முன்னிலையிலேயே துன்பப்படுத்துவதும், அவளைச் சோரம் போனவள் எனக் குற்றம் சாட்டுவதுமாக இருக்கிறது. இருந்தபோதும் இந்த சிறுகதை" யின் மிகச் சிறந்த அம்சம் அதன் முடிவுதான். எந்த ஒரு சிறந்த சிறுகதையின் முடிவும் அதன் திடீர்த் திருப்பத்தில்தான் இருக்கமுடி" யும். ஆண்மைக் குறைப்பாட்டால் வரும் மனப்பாதிப்பை, அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமலே மிக சிறப்பாகச் சொல்லியுள்ளார்.
சிறுகதையின் முடிவு பற்றிப் பேசும் இந்த இடத்தில்
“உடைப்பு" சிறுகதையும் நினைவு வருகிறது. கீரை விற்கும் ஏழைத் தமிழ் தம்பதிகளுக்கும் சிங்கள நிலவுடைமைக் காரிக்கும் இடையேயான உரசலை மீறிய உறவைப் பேசிச் செல்கிறது. கதையின் கருவானது இனவேறுபாடுகளை மீறிய மனிதநேயமாக இருந்த போதும், பொருளாதார நன்மைகளுக்காக இனமத உணர்வுகளைத் தூண்டிவிடும் சூழ்ச்சி பற்றியும் சொல்கிறது. தமிழர்களை பொருளாதார ரீதியாக சுரண்ட முடியும், சுரண்ட வேண்டும் என்ற உணர்வு உயர் அரசியலில் மட்டுமன்றி சாதாரண சிங்கள மக்களிலும் ஊறியுள்ளதை வெளிக் கொண்டு வரும் பதச்சோற்றுப் படைப்பாகவும் கொள்ளக் கூடிய கதை.
ஆனால் அந்தக் கதையின் முடிவு மிக அற்புதமாக அமைந்” துள்ளது. "பாப்பாத்தி எண்டைக்கும் என்னுடையவள் தான்." என
நிமிர்வு நீர்வை பொன்னையன் X

ஒரு வசனத்தில் நிறைவுறும் கதையின் முடிவானது திடீர்த் திருப்பத்துடன் வெளிப்படுவது மட்டுமன்றி அதன் கடைசி வரிகள் கவித்துவமாகவும் அமைந்துள்ளதைக் குறிப்பிடலாம். பல நல்ல சிறுகதையாசிரியர்கள் தமது உன்னத படைப்புகளை கவித்துவமான வரிகளால் நிறைவு செய்து அற்புதமாக மனத்தில் விதைத்துச் சென்றுள்ளார்கள்.
சிறுகதை ஆக்கத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் இருக்க வேண்டிய இடைவெளி யாகும். தானாகத் தேர்ந்தெடுத்துப் படைப்பில் விட்டு செல்லும் மெளனம் ஆகும். தெள்ளத் தெளிவாகச் சொல்வது சிறுகதையின் பண்பு அல்ல. கட்டுரைகள் தான் சந்தேகம் ஏற்படாதவாறு முழுமையாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டியவை. படைப்பாளி சொல்வதற்கும் வாசகன் உணர்வதற்கும் இடையில் உள்ள மெளனம்தான் வாசகனைச் சிந்திக்க வைக்கும். அதுதான் படைப்பாளி விட்டுச் சென்ற இடைவெளிகளை தனது கற்பனைகள் மூலம் நிரப்ப வைக்கும். வாசகனையும் படைப்பில் பங்காளி ஆக்கும்.
“கர்வம்" சிறுகதையில், தம்பித்துரையின் நாய் ஏழு பேரைக் கடித்து விட்டது. அதை விசாரிக்க ஏரியா பொறுப்பாளர் வருகிறார். விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் தம்பித்துரையின் நாயைக் கொண்டு வரும்படி பொறுப்பாளர் கூறுகிறார். அப்பொழுது கூட வந்த போராளி "எங்கடை காம்பிலை சமைக்கிற தம்பித்துரையின் நாய் இது" எனப் பிரஸ்தாபிக்கிறான். இதன்போது எழுகின்ற இடைவெளிஎம்மை கற்பனைக்குள் ஆழ்த்துகிறது எம்முள் புனைந்து செல்கிறோம். இதுபோல பல இடங்களில் தனது படைப்பு வெளியில் இடைவெளிகளை விட்டு வாசகனை நிரப்பத் தூண்டுகிறார்.
எந்த ஒரு சிறுகதையும் நினைந்தூற வைத்து மனத்தில் நிலைத்து நிற்க செய்வது அதன் முடிவு என்ற போதும் அதன் ஆரம்பம் சுவார்ஸமாக இல்லையேல் வாசகன் அதனுள் நுழையவே மறுத்து ஒதுக்கி விடுவான். “ஒரு ஊரில் தொழிலாளி ஒருவன் இருந்தான்” என ஆரம்பித்தால் இன்று எவனாவது அப் படைப்பை வாசிக்க முன் வருவானா?
இன்று படைப்பாளிகள் தமது படைப்புகளை பல்வேறு முறைகளில் ஆரம்பிக்கிறார்கள். பலர் தமது படைப் பின் சுவார்ஸமான சம்பவத்துடன் ஆரம்பிப்பார்கள். வேறு சிலர்
| நிமிர்வு நீர்வை பொன்னையன் XII

Page 8
பீடிகையாக ஆரம்பிப்பார்கள். “அவன் பித்தனா? இல்லை. அவன் சித்தனா?” என்ற பீடிகையுடன் இந்நூலின் முதற் கதையான "நிமிர்வு" ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஆரம்பிப்பது வாசகனின் ஆவலைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.
ஆயினும் வாசகனை நேரடியாகவே அப்படைப்பினுள் ஆழ்த்துவதற்கு மிகச் சிறந்த வழி மையக் கருவிலிருந்தே படைப்பை ஆரம்பிப்பதேயாகும்.
"துரோகி ஏமாத்திப் போட்டியேடி? பொன்னம்மா பாட்டி கோபாவேசமாகக் கத்துகிறாள்" என "மாயை" என்ற படைப்பை ஆரம்பிக்கிறார். கதையின் மையக் கருவிலிருந்து, அதனை ஆவேசமாக வெளிப்படுத்தும் உரையாடலுடன் கதை தொடங்கு" கிறது. 20 பக்கங்கள் வரை நீளும் மிக நீண்ட வித்தியாசமான கதை. ஆயுதப் போராட்டத்தின் மறுபக்கம். குடும்ப கெளரவம், பெண்களின் மனம் எனப் பலவற்றைப் பேசுகிறது. ஆயினும் அக் கதையின் மையப் பாத்திரமான பெண், தான் சிறுவயது முதல் விரும்பி இருந்தவனை சொத்துக்கு ஆசைப்பட்டு கை விட்டு விட்டாளா என்பதே மையக் கரு. அதனையே முதல் வசனமாகக் கொண்டு நீர்வை கதையை ஆரம்பித்ததில் வாசகனை ஆர்வத்தோடு கதைக்குள் நுழைய வைக்க முடிகிறது.
இதே சிறந்த படைப்பாக்க முறையை "புதிர்" கதையிலும் காண முடிகிறது. "என்ரை அவரை இன்னும் காணேல்லையே” என ஆரம்பிக்கும் போதே கணவனைக் காணாது ஏங்கும் பெண்ணின் உணர்வை முனைப்படுத்தி படைப்பின் மையத்திற்குள் எம்மை ஆழ்த்திவிடுகிறார்.
இவ்வாறு படைப்பை மையத்திலிருந்து ஆரம்பிக்கும் போது அதன் முன்கதையை பின்நோக்கு உத்தியில் செல்லுதல் அவசியமாகிறது. நீர்வையின் பல படைப்புகளில் பின்நோக்கு உத்தி சிறப்பாக பயன்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பின்நோக்கு உத்தியையும் பல் வேறு முறைகளில் எடுத்தாள முடியும். ஆசிரியர் தானே சொல்லிச் செல்ல முடியும். கதையை கதாபாத்திரங்களின் வாயிலாக ஆங்காங்கே சிதறவிட்டு சொல்லிச் செல்லுதல் மற்றொரு முறையாகும்.
நீர்வை பெரும்பாலும் கதா பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்வது வழக்கம். அவரது உரையாடல்"
| நிமிர்வு நீர்வை பொன்னையன் XII

கள் இயல்பாக அமைந்திருக்கும். அத்துடன் கதை ஒட்டத்தின் ஒழுங்கு சிதையாது கவனமாக அமைக்கப்பட்டு வாசகனை என்ன நடந்தது எனச் சிந்திக்கவும் வைக்கும். இருந்த போதும் உணர்ச்சிச் சிக்கல்களை வெளிப்படுத்துவதற்கு உரையாடல்களை விட கதாசிரியரின் சித்தரிப்பு முறைமை உதவ முடியும்.
பாத்திர வார்ப்பில் கூடிய கவனம் செலுத்துபவர் நீர்வை. ஒவ்வொரு படைப்பிற்கும் அவசியமான பாத்திரங்களே உலவுகின்றன. தேவையற்ற பாத்திரங்கள் கிடையாது. மையப்பாத்திரங்களைப் பொறுத்த வரையில் பாப்பாத்தியும், சுந்தரமும், வேணி மாதவனும் மறக்க முடியாதவர்கள்.
ஒரு கதையின் களமும் நிச்சயமாக படைப்பினைப் புரிந்து கொள்ள அவசியமே. "கொழும்பு மாநகரம் மாலை நேர மழையில் சிலிர்த்து நின்றது" என ஆரம்பித்தால் களம், நேரம் எல்லாம் தெளிவாகத் தெரியும். ஆனால் இது சுவார்ஸம் கெட்ட முறை. வாசகனை கதையில் உள்வாங்காது அலுப்படைய வைக்கும்.
மாறாக களத்தை கதையோடு கதையாக சொல்லி ஆர்வம் கூட்டும் விதத்தில் வாசகனுக்கு அறிமுகப்படுத்த முடியும் என்பதற்கு "மீட்பு" கதையை உதாரணமாகக் கூற முடியும். கதை ஆரம்பித்து ஒரு பக்கம் கடந்த பின்னர் "எமது ஒன்றியத் தலைவன் அணிஷ் றாய் செளத்ரி” என்கிறார் நீர்வை. எமது புருவம் உயர்கிறது. இன்னும் சற்று கடந்து செல்ல "கங்கை நதிக்கிளை ஹில்ஸா மீன்விளையும் ஹரகிளி நதி” எனும் போது ஆச்சரியத்தில் மிதக்கும் எமக்கு "வங்க சரம்பூர் கல்லூரி" எனும் போது களம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே படைப்புக்குள் முழுமையாக இணைந்து விடுகிறோம்.
சிறுகதையைப் பொறுத்தவரையில் அதன் தலைப்பு என்பது ஒரு அடையாளம் மட்டுமே. சில தலைப்புகள் வாசகனைக் கவர்ந்து வாசிக்கத் தூண்டும். ஆயினும் நல்ல தலைப்பானது கதையை வாசித்து முடிந்த பின்னரும் படைப்போடு இணைந்து அசைபோட வைக்கும். நல்ல கதையோடு சேர்ந்திருப்பதால் மட்டுமே தலைப்பு பேசப்படக் கூடியது என்பதுடன் அதனை நினைவில் வைத்திருக்" கவும் உதவும். நீர்வையின் சிறுகதைத் தலைப்புகள் சுருக்கமானவை, ஒரு சொல்லிற்கு மேற்படாதவை. பொருள் புதைந்தவை. நிமிர்வு, மாயை, பலிஆடு, போன்ற பல தலைப்புகள் நினைவில் நிற்கின்றன.
நிமிர்வு நீர்வை பொன்னையன் XI

Page 9
இவை எதுவுமே கதையின் மையக் கருத்தையோ, சாராம்சம் முழுவதையுமோ புட்டுக்காட்டுவது போல வெளிப்படையாக இருந்து வாசகனின் கற்பனைக்கு தடையாக இருக்கவில்லை.
சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழுக்கு அறிமுகமான ஆரம்ப கட்டத்துப் படைப்புகள் வாசகனுக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியை ஊட்டி இறுதியில் மகிழ்வூட்டும் பணியை மட்டுமே செய்து வந்தன. இன்றும் கூட பல சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகள் அத்தகையனவாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஒரு சமூக நோக்கு இருப்பது அத்தியாவசியமானதே.
நீர்வை தனது படைப்புகளை சமூகத்தை முன்நிறுத்தியே எழுதுகிறார். சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் உன்னத நிலை ஏற்பட வேண்டும் என்பதே அவரது இலட்சியம். இதற்காக சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களையும், மூடநம்பிக்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்கு" கிறார். சமூகப் படிநிலைகளாலும், பாரபட்சங்களாலும், சமூக அநீதிகளாலும் மனிதனை மனிதன் ஒடுக்க முனைவதை எதிர்க்கிறார்.
தனது படைப்புகள் ஊடாக புதிய பார்வையை, புதிய கோணத்தை மக்கள் முன் வைக்க முனைகிறார். அதன் மூலம் சமூக மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்பியே படைப்பாகக் முயற்சிகளில் ஈடுபடுகிறார். யோசித்துப் பார்க்கையில் அவரது படைப்பாக்க முயற்சிகள் முழுவதுமே, சமூக மேம்பாட்டை நோக்கிய அவரது போராட்டத்தின் ஓர் அங்கமே எனலாம்.
அறத்தோடு கூடிய வாழ்க்கை முறை கொண்ட நீர்வையின் படைப்புகள் இவை. சாதி, இன, மத, தேசிய, பொருளாதார அடக்கு முறைகள் நீங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவும், சமூக மேம்பாடும், வாழ்வில் அறமும் நிலவ அவாவும் படைப்புகளைக் கொண்ட நூல்
இது. இத்தகைய சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்க கிடைத்தமை மகிழ்வளிக்கிறது.
எம்.கே.முருகானந்தன்
27.1.2008.
நிமிர்வு நீர்வை பொன்னையன் XIV

என்னுரை
அரசியல் களத்திலிருந்து சிலர் எழுத்து உலகிற்குள் பிரவேசிக்கின்றனர். மற்றும் சிலர் எழுத்துத் துறையிலிருந்து அரசியல் களத்திற்குள் நுழைகின்றனர். நான் அரசியல் களத்திலிருந்து எழுத்து உலகிற்குள் பிரவேசித்தேன்.
எமது சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள், மேடு பள்ளங்கள் என்னை உணர்வு ரீதியிலும் வாழ்க்கை செல்நெறியிலும் பெரிதும் பாதித்தன. இந்த ஏற்றத்தாழ்வுகளையும் மேடு பள்ளங்களையும் தகர்த்தெறிய வேண்டும் என்ற தர்மாவேசம் எனக்கு ஏற்பட்டது. சமூக மாற்றம் தான் இதற்கு ஏற்ற வழி என்பதை நான் உணர்ந்தேன். இந்த சமூக மாற்றத்தை அரசியல் போராட்டங்கள் மூலம்தான் ஏற்படுத்த முடியும் என்பது தெரிய வந்தது. சரியான அரசியல் களத்" தைத் தேடி அலைந்த எனக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் கைகொடுத்தது.
நாற்பதுகளின் இறுதிக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நான் இணைந்தேன். நான் மாணவனாயிருந்த காலத்தில் என் பேரன்பிற்குரிய ஆசிரியர் நீர்வேலி எஸ்.கே.கந்தையா அவர்கள் ஆங்கில இலக்கியத்திலும் மாக்ஸிசத்திலும் எனக்கு ஆர்வத்தை" யூட்டி, எண் அறிவு வளர்ச்சிக்கு வழிவகுத்தார். அதே வேளை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த தோழர் கார்த்திகேசன் மார்க்ஸிசம் பற்றிய தெளிவை ஏற்படுத்தினார். இவ்விரு ஆசான்களது சரியான வழிகாட்டுதலும், இந்த சமூகத்தை மாற்றி அமைப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களும் எனக்கு உறுதியான அரசியல் தளத்தை இட்டன.
புரட்சியின் தொட்டில் என்று கூறப்படுகின்ற கல்கத்தாவிற்கு நான் சென்றபின், வங்காளத் தொழிலாளிவர்க்கத்தின் தீவிர போராட்டங்களிலிருந்தும், கலை இலக்கிய இயக்கத்தின்
| நிமிர்வு நீர்வை பொன்னையன் XV)

Page 10
செயல்பாடுகளிலிருந்தும், நான் பெற்ற புரட்சிகர உணர்வும் அனுபவங்களும் நான் படைப்பிலக்கிய களத்திற்குள் பிரவேசிக்க உந்துதலாயிருந்தன. இக்கால கட்டத்தில் தான் நான் மார்க்ஸிம் கார்க்கி, முல்க்ராஜ் ஆனந், கே. ஏ. அப்பாஸ், பிரேம்சந், கிஷன்சந்தர், சரத்சந்ர சட்டர்ச்சி, மாணிக் பந்தோபாத்யாய, தரசங்கர் பணார்ச்ஜி, விபூதிபூஷன் பர்ணார்ச்சுஜி ஆகியோரது படைப்புகளை ஆங்கிலத்தில் பார்த்தேன். நான் முதல் முதல் படித்த சிறுகதைத் தொகுப்பு புதுமைப் பித்தன் கதைகள். அத்துடன் சிதம்பர ரகுநாதன் தமிழில் மொழிபெயர்த்த மார்க்ஸிம் கார்க்கியின் தாய் என்ற படைப்புத் தான் நான் படித்த முதல் நாவல்.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில், அறுபதுகளின் முற்பகுதியில் நான் இணைந்தேன். எனது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பெரும் உந்துதலாக இருந்தது. ஈழத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும் முற்போக்கு இலக்கிய இயக்கம் பெரும் பங்களித்துள்ளது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முற்போக்கு இலக்கிய இயக்கத்தின் ஒரு மைல் கல். ஐம்பதுகளின் இறுதியில் இலங்கை எழுத்தாளர் சங்கம் என்ற ஒரு அமைப்பு சுவாமி விபுலானந்தர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பு சிறிது காலம் தான் செயல்பட்டது. இச்சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவரான டாக்டர் சரத்சந்ரா கல்வி கற்க லண்டன் சென்றபின் இச்சங்கம் செயலிழந்தது. அறுபதுகளின் முற்பகுதியில் இச்சங்கம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற பெயருடன் புனரமைக்கப்பட்டது.
இலக்கியத்தை மக்கள் மயப்படுத்தல் மக்களை இலக்கிய மயப்படுத்தல், அரச, இன, மத, சாதி ஆகிய சகல விதமான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடுதல், தொழிலாளர் விவசாயிகள் உழைக்கும் வெகுஜனங்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி நிலப் பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்கள் அனைத்தையும் துடைத்தெறிதல், முதலாளித்துவத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிராகப் போராடுதல், சுரண்டலும் சூறையாடலுமற்ற ஒரு சோஷலிஸ சமுதாயத்தை அமைத்தல் ஆகியவை தான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குறிக்கோள்களாகும். இக்குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முழு வீச்சுடன் செயல்பட் டது. இலக்கிய மகாநாடுகள், விழாக்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்"
நிமிர்வு நீர்வை பொன்னையன் XVI

குகள், செயலமர்வுகள் போன்ற இலக்கியச் செயற்பாடுகளை நடத்தி பல அரிய சாதனைகளைப் புரிந்தது முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
அரசியல் எல்லாவற்றிற்கும் தலைமை தாங்குகின்றது. இதற்கமைய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் பிரதிபலித்தது. இதனால் சங்கத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. இச்சங்கத்தைப் புனரமைக்க சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டனர். இம் முயற்சிகள் பலனளிக்கவில்லை. காலத்தின் தேவை கருதி சில மூத்த முற்போக்கு எழுத்தாளர்களால் இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை அமைக்கப்பட்டது. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிறைவேற்ற வேண்டிய வரலாற்றுக் கடப்பாடுகளை இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை கையேற்று நிறைவேற்றுமுகமாக அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றது.
“பாசம்” எனது முதல் சிறுகதை. இது 1959ல் புனையப்பட்டது. மேடும் பள்ளமும் எனது முதலாவது சிறுகதைத் தொகுதி. இத்தொகுதி 1961 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதன் விலை அப்பொழுது இரண்டே இரண்டு ரூபாய்தான். இதே மேடும் பள்ளமும் தொகுதி 2006 ஆம் ஆண்டில் இரண்டாவது பதிப்பாக வெளிவந்தது. இத்தொகுப்பின் விலை ரூபா இருநூறு. தற்பொழுது என் ஏழாவது தொகுப்பான நிமிர்வு என்ற சிறுகதைத் தொகுப்பு எனது ஆத்மநேய வாசகர்களாகிய உங்கள் கையிலிருக்கின்றது.
நிமிர்வு சிறுகதைத் தொகுப்பில் பத்துச் சிறுகதைகள் அடங்கியுள்ளன. கட்சி அரசியல் கதை ஒன்று தானும் இத்தொகுப்பில் இடம் பெறவில்லை. ஆனால் இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதை" களிலும் ஏதோ ஒரு வகையில் இடதுசாரி அரசியல் தொனி புலப்படுவதை நீங்கள் நிச்சயமாய் உணர்வீர்கள், மேலும் இத்" தொகுப்பில் நிமிர்வு, விடுவிப்பு, மீறல், கர்வம் ஆகிய நான்கு கதைகளையும் வித்தியாசமான விதத்தில் ஒரு பரீட்சாத்தமாகச் சொல்லியுள்ளேன். எனது "நிமிர்வு" தொகுப்பை ஆத்மநேய வாசகர்களாகிய உங்கள் முன்வைக்கின்றேன்.
நீர்வை பொன்னையன்
| நிமிர்வு நீர்வை பொன்னையன் XVIII

Page 11
உள்ளே.
நிமிர்வு Ol
Diges) 16
மீறல் 37
உடைப்பு 54
வீழ்ச்சி 68
மீட்பு 75
வெறி 82 பலிஆடு 95 புதிர் O3
கர்வம் II2
| நிமிர்வு நீர்வை பொன்னையன் XVI

நிமிர்வு
அவன் பித்தனா?
இல்லை.
அவன் சித்தனா?
சித்தனென்றால் அவன் சித்து விளையாட்டுக்கள் காட்டியிருப்பானே.
அவன் எத்தனா?
அவன் யாரையும் ஏமாற்றவில்லையே.
ஒருவேளை அவனை யாராவது ஏமாற்றி யிருப்பார்களோ?
யாருக்குத் தெரியும்?
அவன் பக்தனா?
இடுப்பில் "சாயவேட்டி" பரட்டைத் தலை. நரைத்த தாடி, நெற்றியில் திருநீற்றுப் பட்டை. பெரிய குங்குமப் பொட்டு. காதில் பூ இவை இருப்பதால் அவன் பக்தனாகி விடுவானா?
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 11

Page 12
இவைதான் அவன் கோலம். மற்றவர்களை ஏமாற்றவா இந்தக் கோலம்? இல்லை, இல்லவேயில்லை. இந்தக் கோலம்தான் அவனது பிழைப்புக்கு மூலதனம். வயிற்றுக்கு ஒரு பிடி சோறு. கட்டுவதற்கு நான்கு முழத்துண்டு. கிடந்தெழும்புவதற்கு ஆறடி நிலம். அவனுக்குத் தேவை இவைதான். உழைப்பிற்கேற்ற ஊதியம். தேவைக்கேற்ற ஊதியம் அவனுக்குக் கிடைக்கின்றது. அவனுக்குத் திருப்தி ஆனால் அவன் வாழ்க்கையில் அமைதி இல்லை. அவனது உள்ளத்தில் எந்த நேரமும் தீகனன்று கொண்டே" யிருக்கின்றது.
என்ன காதல் தீயா? அது எப்போதோ செத்துவிட்டதே. அப்போ? யாருக்குத் தெரியும்? மற்றவர்கள் அவனைப் பயித்தியம் என்று சொல்லுகின்றார்களே.
என்ன பயித்தியம் என்று அவர்களுக்கே தெரியாது. ஆனால் அவனைப் பயித்தியம் என்றுதான் சொல்லுகின்றார்கள்.
மற்றவர்கள் அவனைப் பயித்தியம் என்று சொன்னால் அவன் பயித்தியமாகிவிடுவானா?
தான் பயித்தியம் என்று அவன் சொல்லவில்லையே. எந்தப் பயித்தியக்காரன்தான் தன்னைப் பயித்தியம் என்று சொல்லுவான்?
அவனைப் பயித்தியம் என்றுதான் அன்றும் சொன்னார்கள்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 12

இன்றும் சொல்லுகின்றார்கள்.
இருபது வருடங்களுக்கு முன்பே மற்றவர்கள் அவனைப்
பயித்தியக்காரன் என்று உறுதியாகச் சொன்னார்கள்.
அன்று-அரசாங்க உத்தியோகம், நிரந்தரம், கொழுத்த சம்பளம். பென்சன்.
இன்னும் எத்தனையோ வரப்பிரசாதங்கள்.
சமூக அந்தஸ்து. மதிப்பு, மரியாதை,
கல்யாணப் பேச்சுக்கள். கொழுத்த சீதனம், டாம்பீக வாழ்க்கை.
எல்லாமே அவனைத் துரத்திக்கொண்டேயிருந்தன.
அத்தனையையும் அவன் துச்சமாக மதித்துத் தூக்கிவீசிவிட்டு
வந்தானே.
இப்படிப்பட்டவனைப் பயித்தியம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?
அதனால்தான் அவனைப் பயித்தியக்காரன் என்று அன்று உறுதியாகச் சொன்னார்கள்.
அவனை வாழத்தெரியாத பயித்தியக்காரன் என்றும் அவனுக்கு நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
ஆனால் அவன்?
பெத்ததாய்க்குப் பேராபத்தென்றால் பொறுத்துக்கொண்டிருக்க முடியுமா?
யார்தான் பொறுத்துக்கொண்டிருப்பார்கள்?
தமிழ் அவன் தாய்.
தாயா அல்லது பதவியா பெரிது?
"தமிழுக்கு பேராபத்து"
"தமிழைக் காக்க தமிழ்க் காளைகளே எழுந்து வாருங்கள்”
"தமிழைக் காக்கப் போராட்டம்"
"ஜீவமரணப் போராட்டம்"
கொதித்தெழுந்தனர் காளைகள்.
தமிழைக் காக்க அரசபதவியையே தூக்கி வீசினான் அவன்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 13

Page 13
அவன் மாத்திரமா? எத்தனையோ காளைகள் தம் பதவிகளைத் தூக்கி எறிந்தனர். தமிழைக் காக்க தமிழ் காளைகள் குதித்தனர் களத்தில், தமிழ் விடலைகள் குதித்தனர் வேள்வித் தீயில். அவன் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். சொத்துப்பத்தில்லாத குடும்பம். அன்றாடம் காய்ச்சிக் குடும்பம். கிராமப்புற வாழ்க்கை. அவன் தாயைப் பிறந்த வீட்டுக்குள்ளேயே இழந்தான். தந்தையையும் பத்துவயதில் பறிகொடுத்தான். சிறிய தாயாருடன் வளர்ந்தான். சிரமப்பட்டு படித்தான்.
படிப்பில் புலி
படிப்பைத் தொடரமுடியவில்லை.
காரணம் வறுமை. சைவமும் தமிழும் அவனிரு கண்கள். வைதீகக் குடும்பம்.
சாதிய இறுக்கம்.
தாவரபோஜனி. பூஜை புனஸ்காரங்களில் கூடுதல் நாட்டம். தொழில் பயிற்சிக்குச் சென்றான். அனுராதபுரம் உழவுயந்திரப் பிரிவில் பயிற்சி. ஓராண்டுப் பயிற்சி.
சிரத்தையுடன் பயின்றான்.
முதலிடத்தைப் பிடித்தான். அந்த நிலையத்திலேயே வேலை. பயிற்றுவிப்பாளர் வேலை. பிள்ளையார் கோவில் குருக்கள் வீட்டில் உணவு. ஆசார அனுஷ்டானங்கள் தொடரவே செய்தன. சக ஊழியர்களுடன் நல்லுறவு, நெருக்கம்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 14|

சிங்கள தமிழ் பேதமேயில்லை. மக்கள் மத்தியில் நல்லுறவு. நான்கு ஆண்டுகள் உருண்டோடின. தேர்தல் வந்தது சிங்கள தமிழ் பேதம் வளர்ந்தது. தமிழுக்கு ஆபத்து தமிழ் மொழிகாக்க அறைகூவல் வந்தது. தமிழ் விடலைகள் கொதித்து எழுந்தனர். அவன்? அவன் அரசாங்க வேலையைத் தூக்கி எறிந்தான். அவன் மாத்திரமா? ஆயிரக்கணக்கில் தமிழ் விடலைகள் பலவித தொழில்களை துச்சமாய்மதித்தனர். தூக்கி வீசினர் தமது தொழில்களை. தாய் மொழிக்காகக் குதித்தனர் களத்தில். தமிழைக் காக்கப் போராட்டம் வெடித்தது. தமிழைக் காக்க தமிழ் தலைவர்கள் களத்தில். சிங்கள தமிழ் பேதம் வளர்ந்தது. சிங்கள ரத்தம் கொதித்தது. தமிழ் ரத்தமும் கொதித்தது. தேர்தல் வந்தது. கறுப்புக் கோட்டு தேர்தல் களத்தில். தலைவர்கள் தமிழில் முழக்கம். மக்கள் திரண்டனர். அவன் ஆவேசப் பேச்சாளன். அவனை அரவணைத்தார் தலைவர்.
அவன் அவரது வாரிசோ? அவன் என்ன கறுப்புக் கோட்டா?
அவரென்ன பயித்தியமா?
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 151

Page 14
பேச்சாளன் வேண்டுமே. அவன் அனல் கக்கும் பேச்சாளன். தமிழ்த் தாயை காக்க வேலையைத் தூக்கி எறிந்தவன். அது போதுமே தலைவருக்கு. அவனது தியாகம் பற்றி நீட்டி முழக்கினார் தலைவர். அவன்! அவனே தமிழ்தாய் மூச்சு! ஆவேசப் பேச்சு. மக்கள் கொதித்தனர். பொங்கி எழுந்தனர். தமிழின் பெயரால் கறுப்புக் கோட்டு வெற்றி! அமோக வெற்றி! அவன் அருமையை அறிந்தார் எம்.பி. அவனை "அமர்த்த" நினைத்தார் எம்.பி அந்தரங்க செயலாளர் பதவி. பதவிபெயரளவில்தான். நியமனம் எம்.பி.யின் மருமகள் தமிழரசிக்கு. தமிழ் அரசிக்கு சம்பளம்.
சிறுதொகை அவனுக்கு. அவனுக்கு எதுவுமே தெரியாது.
சிதம்பர ரகசியம்.
எம்.பி.யின் வீட்டில் அலுவலகம். எம்.பி. ஒரு கறுப்புக் கோட்டு. அரசியல் வேலைகள் வழக்கு விவகாரங்கள் அவனதுதலையில், வடக்கில் போராட்டம்.
தெற்கில் முதலீடு. விழாக்கள் மேடையில் தமிழில் முழக்கம். வீட்டில் ஆங்கிலம்.
கோட்டில் ஆங்கிலம். பிள்ளைகள் இரண்டிற்கும் ஆங்கிலக் கல்வி அவனுக்குப்புரியாப்புதிர்.
எம்.பி அவனது தலைவர்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 16 !

தலைவர் மேல் அவனுக்கு ஆழ்ந்த விசுவாசம்.
குருட்டுப் பக்தி
பகல் முழுவதும் எம்.பி.யின் பணிமனையில் வேலை.
தமிழரசி அவனுக்கு உதவி
சிற்றுண்டி, தேனீர் அடிக்கடி பரிமாற்றம்.
அன்பு பாசமாய் வளர்ந்தது.
LIITs Lib?
பருவத்தின் நெருடல்.
உள்ளத்தில் போராட்டம்.
காதல் மலர்ச்சி.
எம்.பிமோப்பம்.
மணமகன் வேட்டை.
தமிழரசிதவிப்பு.
அவனுடன் ஒடத் தமிழரசிதுடிப்பு.
அவன் அறவே மறுப்பு
“தலைவர் என்மேல் பூரண நம்பிக்கை”
"அவருக்கு என்னில் ஆழ்ந்த பாசம்”
“நீஎங்க வீட்டுப் பிள்ளை”.
“அடிக்கடி சொல்லுவார் என்ரை தலைவர்"
“எனக்கொரு மகள் இருந்தால் உனக்கே கட்டிவைச்சிருப்பன்."
“அடிக்கடி சொல்லுவார் என்ரை தலைவர்."
"நான் என்ரை தலைவருக்கு துரோகம் செய்யவே மாட்டன்"
அடித்துக் கூறினான் அவன்.
எங்கடை காதலை அவர் ஏற்றுக்கொள்வார். எங்கடை கல்யாணத்துக்கு அவர் ஒத்துக்கொள்வார். நான் என்ரை தலைவரை நேரை கேக்கிறன். இப்பவே கேக்கிறன். கேட்டேவிட்டான் தலைவரிடமே.
பொங்கி எழும்பினார் எம்.பி.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 17

Page 15
ரெளத்ரமூர்த்தியானார் எம்.பி
"நன்றி கெட்ட நாயே"
துரோகப் பயலே.”
“போடா வெளியே."
கோபாவேசமாய்க்கத்தினார் எம்.பி. “மண்கிண்டிப் பயலே! உனக்கென்னடா தகுதி?” “நீஎன்ன டாக்டரா? இஞ்சினியரா? அல்லது அக்கவுண்டனா?” “என்ரை மருமகளைக் கட்ட உனக்கென்னடா தகுதி?” "பஞ்சப் பராரியே போடா வெளியே!” கன்னத்தில் அறை!
காலால் உதை!
அவனுக்கு மலைப்பு
அவனுக்கு அதிர்ச்சி!
"இவரா என்ரை தலைவர்?"
“எங்கள் தலைவர் இவரா?” அவன் வெளியேறுகின்றான் நடைப்பிணமாய். வெறுங்கையுடன் வெளியேறுகின்றான்.
எங்கே போவது?
என்ன செய்வது?
அவனுக்கே தெரியவில்லை.
வேலையில்லை.
வீடு வாசலில்லை. வீட்டுப் பங்கை சிறிய தாயாருக்குத் தாரைவார்த்துவிட்டான். தோட்ட நிலப் பங்கை சிறிய தந்தை அமத்திப் போட்டார். எங்கே போவது?
தேசாந்திரியாய் அலைந்து திரிகின்றான்.
"ஐயோ பாவம்!
“இவனுக்கா இக்கதி?”
"அப்பாவியாச்சே”
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 18

"அநியாயமாச்சே”
ஊரார் பச்சாதாபம்.
சொந்தங்கள் பார்த்தும் பாராமலிருக்கின்றன.
பயித்தியமா?
பயித்தியந்தான்.
ஒருவர்தானும் அவனை அண்டவேயில்லை.
உண்ண உணவில்லை.
உறங்க இடமில்லை.
சித்தக் கலக்கம்.
பயித்தியக்காரனாய் அலைந்து திரிகின்றான்.
வயிற்றிலோ பசி,
சாப்பிட்டு எத்தனை நாட்களோ?
அவனுக்கே தெரியாது.
பசி பொறுக்க முடியவில்லை.
மதிய நேரம்.
கொதிக்கும் கனல் வெய்யில்.
தோட்டங்களில் எவருமேயில்லை.
முடிவுக்கு வந்தான் அவன்.
மரவள்ளித்தோட்டத்தில்
கிழங்கு திருட்டு.
பசிதணிகின்றது.
திருட்டுத் தொடர்கின்றது.
அகப்பட்டான் ஒருநாள்.
நல்ல மாட்டு.
வெளுத்து வாங்கல் மரவள்ளிக் கட்டையால்.
ஒடித்தப்பினான். பகல் முழுவதும் பனை வடலிக்குள்.
அன்றிரவே அயலூருக்கு ஒட்டம். பலத்த மழை.
நிமிர்வு நீர்வை பொன்னையன் 191

Page 16
தொப்பமாய் நனைந்தான். வயிரவ கோயில் கொட்டிலுக்குள் தஞ்சம்.
9ļuGTT?
பரந்த பாழ்வெளி.
கன்னிநிலம்,
அரச காணி − பாழ்வெளியின் நெஞ்சில்நெற்றிப்பொட்டாய் சிறிய குடியிருப்பு. பத்துப் பதினைந்து குடும்பங்கள் குடியிருப்பில், கூலிவேலை, கல்லுடைத்தல், கள்ளுச்சீவல் அவர்கள் தொழில். வயிரவர் அவர்களின் காவல் தெய்வம். வெள்ளிக்கிழமை காலை, இரவு விளக்கு வைத்தல், பூசை வருடாவருடம் பொங்கல், மடை அவனுக்கு அபயம் தந்தார் வயிரவர். சோர்ந்துதுயின்றான் அவன்.
விடியல் வந்தது.
கோவில் கொட்டிலுக்குள் ஒருவன். அறிவு நினைவில்லை அவனுக்கு. மரக்கட்டையாய்க் கிடக்கின்றான் அவன். மக்கள் குவிகின்றனர். வயோதிபர் ஒருவர் தொட்டுப் பார்க்கின்றார். அனலாய்க் கொதிக்குது உடம்பு.
காச்சல் கடுமை,
பூசாரி அம்மா வருகின்றா. அருகில் அமர்கின்றா பூசாரி அம்மா.
நாடி பார்க்கின்றா.
நெஞ்சு பதைக்கின்றது.
“காச்சல் நெருப்பாய் எரிகின்றது." குப்பறக் கிடந்த உடலைப் புரட்டுகின்றா பூசாரி அம்மா. உடலெல்லாம் அடி காயங்கள்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் | 10|

ஊமைக் காயங்கள்.
கண்டிச் சிவந்த பெரிய தழும்புகள்.
"ஐயோ பாவம்"
"ஆர் பெத்த பிள்ளையோ?”
பூசாரி அம்மா பொருமுகின்றா.
பனடோல் கொடுக்கின்றா.
நல்லெண்ணை, மஞ்சள்மா, உப்புத்தூள் சேர்த்துக் கொதிக்க
வைத்து ஒத்தடம்.
மெல்லிய சூட்டில் கண்டல் தழும்புகள் மேல் எண்ணை பூச்சு.
இராப் பகலாய் ஒருவர் மாறி ஒருவராய்
அவன் அருகில் பராமரிப்பு மாறிமாறி
மூன்றாம் நாள் கண்விழிக்கின்றான் அவன்.
அவர்களுக்கு ஆனந்தம்.
கஞ்சித் தண்ணிமுதலில்.
பின்னர் சோற்றுக் கரையல்,
உடலில் தென்பு.
உள்ளத்தில் நன்றி.
"ஆர் நீ?"
"எங்கிருந்து வந்தாய்?"
ஒருவர் தானும் அவனைக் கேட்கவேயில்லை.
ஏன்?
பூசாரி அம்மாவின் கட்டளை.
நான்காம் நாள் அதிகாலை.
மெல்ல எழுகின்றான்.
காலைக் கடன்களை முடிக்கின்றான் அவன்.
குடியிருப்புதூக்கத்தில்.
கோவில் கொட்டிலையும் சுற்றுப்புறத்தையும் கூட்டிச் சுத்தம் செய்கிறான்.
வண்ணப்பூக்களால் வயிரவர் அலங்கரிப்பு.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 11

Page 17
தேவார திருவாசகம் தோத்திரம் பாடல்கள் பக்தி பரவசமாய்ப் பாடுகின்றான்.
மக்கள் திரள்கின்றனர்.
வியப்பு. தொடர்ந்து ஒரு மணிநேரமாய்பாடுகின்றான். மக்களுக்கு பேராச்சரியம்.
“அவனா இவன்?"
"நம்ப முடியவில்லையே"
"ஆர் நீ?"
"உன் ஊர் எது?”
பூசாரி அம்மா கேட்கின்றா.
பதிலில்லை.
மீண்டும் கேள்விக் கணைகள்.
மெளனம்.
அவனை எவரும் வற்புறுத்தவில்லை. அவன் பாட்டிலேயே விட்டு விடுகின்றனர். “ஒரு நாள் அவன் தானாகச் சொல்லுவான் தானே" "பொறுத்திருந்து பார்ப்போம்." பூசாரி அம்மா கூறுகின்றா. மூன்றாம் நாள் அவன் புறப்படுகின்றான். "எங்கே போகின்றாய்?"
பூசாரி அம்மா.
“எனக்கே தெரியாது” அவன். "நீபோகவேண்டாம் எங்களுடனே இரு” கூறுகின்றாள் பூசாரி அம்மா. "நான் ஏன் உங்களுக்குப் பாரமாயிருப்பான்?" "நீஎங்களுக்கு எதுவித பாரமுமில்லை. எங்களுடன் இரு. கோயில் பூசையை நீயே செய். உறுதியாகக் கூறுகின்றா பூசாரி அம்மா.
நிமிர்வு நீர்வை பொன்னையண் | 12|

“நீஎங்களோடை இரு. கோயில் பூசையை நீதான் செய்ய வேண்டும்." மக்கள் வற்புறுத்தல். மக்களின் வேண்டுகோளை ஏற்கின்றான் அவன். காலவெள்ளம் கரைபுரண்டோடுது. கால ஓட்டத்தில் சுந்தரபுரம், சுந்தரம் என்ற விடலைப் போராளியை ஆக்கிரமிப்புப்படை சுட்டுச் சாய்த்தது. சுந்தரம் என்ற போராளி மக்கள் மனதில் காவியமானான். சுந்தரபுரமாய் ஜனித்தான் சுந்தரம் என்ற போராளி. பாழ்வெளிநெஞ்சில் நெற்றிப்பொட்டாயிருந்த குடியிருப்பு நெற்றியாய் விரிந்தது. அரச காணி அதற்கிடம் கொடுத்தது.
அவன்?
புதிய பயணத்தில் அவன். புதிய பயணம், அது நெடும் பயணம். நெடும் பயணத்தில் புயலாய்ப் பயணிக்கின்றான் அவன். சுந்தரபுர மக்களும் அவன் சுவட்டில். குடிதண்ணிருக்காக அயலூர் அம்மன் கோயில் கிணற்றடியில் மக்கள் தவம் கிடந்தனர் அன்று. இன்று சுந்தரபுரத்தில் வீட்டுக்கு வீடு கிணறு. தென்னை, மா, பலா, எலுமிச்சை, கமுகு, வான்பயிர். வளவுக்கு வளவு வீட்டுத் தோட்டம். பள்ளிக்கூடம் - விளையாட்டு மைதானம். சலவைத் தொழிற்சாலை. சிகை அலங்கரிப்பு நிலையம். நூல் நிலையம். செய்திப் பத்திரிகைகள். நிறையவே நூல்கள். வாசிப்பும் பெருக்கம்.
நிமிர்வு நீர்வை பொன்னையன் 1.13

Page 18
மக்கள் விழிப்பு.
தேர்தல் வந்தது.
களத்தில் கறுப்புக் கோட்டு. அவர் நான்கு தடவைகள் எம்.பியாக இருந்தார். தமிழின் பெயரால் எம்.பியாக இருந்தார். இனத்தின் பெயரால் எம்.பியாக இருந்தார். தேர்தல்களின் பின்னர் எம்.பி. சுந்தரபுரத்தை எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. சுந்தரபுரத்தைப் பற்றி, சுந்தரத்தைப் பற்றி அவர் நிறையவே அறிந்திருந்தார்.
நெடும் பயணத்தில் சுந்தரபுரம். இதனையும் பற்றி நிறையவே அறிந்திருந்தார் எம்.பி. இந்தத் தடவை தேர்தலில் அவரில்லை. அவரின் மூத்த புத்திரன் அவரது அரசியல் வாரிசு. மூத்த புத்திரனும் கறுப்புக் கோட்டுத்தான். வாக்கு வேட்டையில் சுந்தரபுரத்தை நோக்கி தந்தையும் தனயனும் பரிவாரங்களும் படையெடுப்பு. "அங்கை போக வேண்டாம்." “சுந்தரபுரத்துக்கு போக வேண்டாம்." முன்னாள் எம்.பி. கறுப்புக்கோட் கூறுகின்றார். "ஏன்? எதற்காக?"
தனையனின் கேள்வி. “அது அப்படித்தான். அங்கை போக வேண்டாம்." தந்தை தயக்கம்.
“போய்த்தான் பார்ப்பமே." “தலையோ போகப் போகுது.”
தனயனின் கேள்வி. “வேறை எங்கையாவது போவம். அங்கை வேண்டாம்."
வேண்டவே வேண்டாம்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 114|

முன்னாள் எம்.பியின் வார்த்தைகளில் தடுமாற்றம். "வீட்டை திரும்புவம்"
“இப்பவே போவம்" முன்னாள் எம்.பியின் வார்த்தைகளில் அவசரம். “வீட்டை போவம்.” திக்கிக் திணறிக் கூறுகின்றார் முன்னாள் எம்.பி. முன்னாள் எம்.பியின் அரசியல் வாரிசையும் பரிவாரங்களையும் காணவேயில்லை. வோட்டுப் பொறுக்கிகள் மாயமாய் மறைந்தனர். முன்னாள் எம்.பி தனிமரம். முன்னாள் எம்.பியின் எதிரில் அவன் நிமிர்ந்து நிற்கின்றான். மறுபுறம் திரும்புகின்றார் முன்னாள் எம்.பி அவர் முன் நெடும்பனையாய் நிமிர்ந்து நிற்கின்றான் அவன். எட்டுத்திக்கும் நெடும்பனையாய் அவன். பாழ் வெளியில் பனைமரங்களா? திரும்பும் திசையெல்லாம் விஸ்வரூபமாய் ஆரோகணித்து நிற்கின்றான் அவன்.
கறுப்புக் கோட்டு முன்னாள் எம்.பி சகலதும் இழந்தவராய் சரிந்து கொண்டேயிருக்கிறார். அவன்?
அவன் பித்தனா?
நிமிர்வு நீர்வை பொன்னையன், 15

Page 19
UD(TGIONU
"துரோகி ஏமாத்திப்போட்டியேடி?” பொன்னம்மாப் பாட்டி கோபாவேசமாய்க் கத்துகின்றாள்.
கமலா மெளனமாக இருக்கின்றாள். தங்கராசன் இடிஞ்சுபோயிருக்கின்றான். “காலமெல்லாம் உனக்காகக் காத்திருந்” தானே என்ரை பிள்ளை தங்கராசன். நீ அவன்ரை வாயிலை மண்ணைப் போட்டிட்டி யேடி சண்டாளி”
தங்கராசனுக்கு கமலா மேல் கோபம் கோபமாக வருகின்றது.
கமலா அமைதியாகத்தானிருக்கின்றாள். நான்குடுத்துவைச்சவன். எனக்கென்ன? என்ரை கமலா இருக்கிறாள். என்னை ஒருத்தராலும் அசைக்கேலாது. அடிக்கடி என்ரை தங்கன் சொல்லுவானடி. அவனை
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 116

ஏமாத்த உனக்கெப்பிடி மனம் வந்ததடி? நீஅழிஞ்சுதான் போவாயடி மோசக்காரி, பரிசாம்பலாய்த் தான் போவாயடி சதிகாரி!"
சபித்துக் கொண்டேயிருக்கின்றாள் பொன்னம்மாப்பாட்டி. கமலா தனது முடிவில் உறுதியாய்த் தானிருக்கின்றாள். கமலாவைப் பார்க்கப் பார்க்க தங்கராசனுக்கு மனக் கொதிப்பு. அவளை உதைக்க வேண்டும் போலிருக்கின்றது அவனுக்கு
"உன்ரை அப்பன்ரை இழவுவீட்டுக்கு உன்னைக் கட்டாயப்படுத்தி நான் தான் கூப்பிட்டன். நீ வந்து இப்பிடி வாழ்மானம் செய்வாயெண்டு எனக்கு எப்பிடித் தெரியும்? உன்னை இஞ்சை கூப்பிட்டது என்ரை பிழைதான். என்னைச் செருப்பாலடிக்க வேணும்."
தன்னைத்தானே நொந்து கொள்கின்றாள் பாட்டி, 'கமலா இப்பிடிச் செய்வாளெண்டு நான் நம்பியிருக்கேல்லை. அவள் நல்லவள், நேர்மையானவள் எண்டுதான் நாங்கள் எல்லாரும் நம்பியிருந்தம். பதினொருவரியமாய் இவளை எங்கடை சொந்தப் பிள்ளை மாதிரி வளத்தம், ஆனால் இவள் இப்பிடி மோசடி செய்வாளெண்டு நான் எள்ளளவும் நினைக்கேல்லை. கமலாவைப் பற்றி நினைக்க எனக்கு ஒரே குழப்பமாய்க் கிடக்கு?
சுந்தரம் ஆசிரியருக்கு கவலை ஒரு புறம், மனக்குழப்பம் மறுபுறம்.
இவளின்ரை கலியாணத்தை நாங்களே முன் நிண்டு நடத்தி வைக்க வேண்டும் எண்டு நினைச்சிருந்தம். இஞ்சை வந்தாப் பிறகு தான் இவளின்ரை சுயரூபம் தெரியவந்தது. இப்பிடி இவள் மாறு: வாள் எண்டு நான் எள்ளளவும் நினைக்கேல்லை. நாங்கள் எல்லோரும் ஏமாந்து போனம். சீ.இப்பிடிப்பட்டவளா இவள்?
கமலா மேல் சுந்தரத்தாருக்கு வெறுப்பு, கோபம். "ஐயா, இந்தப் பிள்ளையை உங்கடை சொந்தப்பிள்ளையைப் போல நன்றாய் வளர்த்திருக்கிறயள், பார்க்கச் சந்தோசமாய் கிடக்கு. ஆனா ஐயா நீங்கள் போகேக்கை இதையும் கையோடை கூட்டிக் கொண்டு போங்கோ. இது இஞ்சை நிண்டால் அவங்கள் இதையும் நாசமாக்கிப் போடுவாங்கள்."
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 117|

Page 20
காலையில் ஒரு வயோதிபப் பெண் ஆதங்கத்துடன் கூறியதும் சுந்தரத்தாரின் நினைவுத் தடத்தில் தட்டுப்படுகின்றது. அவருக்கு ஒரே குழப்பம்.
“நீகொழும்பிலையிருந்து இண்டைக்கு வாறாய் எண்டு நான் தங்கனுக்கு சொன்னன். அவனுக்குத்தலைகால் தெரியாத சந்தோசம் உன்னைக் கூட்டிக்கொண்டு வர அவன் விடியப்புறமே பிள்ளையார் கோயிலடிக்குப் போனான். ஐஞ்சு மணிக்குத்தான் கொழும்பு பஸ் வாறது. அவன் காலமை நாலு மணிக்கே போட்டான். பஸ் சிலவேளை முந்தி வந்தாலும் வரும் எண்டு சொல்லிப் போட்டுப் போனான். கொயிலடியிலை உனக்காக எவ்வளவு நேரம் காத்திருந்தான் எண்டது உனக்கு எப்படித்தெரியும்? அவன்ரை மன ஆவலை உன்னாலை எப்பிடிப் புரிஞ்சு கொள்ள முடியுமடி? புரிஞ்சிருந்தால் நீ இப்பிடித்துரோகம் பண்ணியிருப்பியா? கேடுகெட்டவளே! நீயும் ஒரு பெண் பிறவியா?”
கமலா மீது பொன்னம்மா பாட்டிக்குக் கடும் கோபம்; வெறுப்பு “ஆறு மாதத்துக்கு முந்தி நீ தங்கனுக்கு அனுப்பி வைச்ச சாரத்தைக் கட்டிக்கொண்டு சிவப்பு "டீ" சேட்டையும் போட்டுக் கொண்டு உன்னைப்பாக்க அவன் எவ்வளவு ஆவலோடை வந்தான் எண்டு எனக்குத்தானடி தெரியும். இப்பிடிப்பட்ட அவனை வஞ்சிக்க உனக்கு எப்பிடித்தான் மனம் வந்ததடி மோசக்காரி?”
வெறுப்பாய் பொரிஞ்சுதள்ளுகிறாள் பொன்னம்மாப்பாட்டி, "அவளை அவளின்ரை பாட்டிலை விடணை பாட்டி. அவள் எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும். இனி அவளுக்கும் எங்களுக்கும் எதுவித சங்காத்தமுமில்லை."
தங்கராசன் வெறுப்பாய்க் கூறுகின்றான். “எப்பிடியடா விடேலும்? நான் உவளை ஆளாக்க எவ்வளவு பாடுபட்டன் எண்டு உனக்குத் தெரியுமே? உவளுக்கு மூண்டு வயதாயிருக்கேக்கை உவளின்ரை தாய் தன்ரை புரிசனையும் உவளையும் விட்டிட்டுக் கள்ளப் புரிசனோடை ஒடிப்போட்டாள். இவளின்ரை தேப்பன் ஆர் தெரியுமே? என்ரை மோன் குழந்தைவேலன் தான், இவளின்ரை தாய் ஓடிப்போன ஆறுமாதத்திலை, தகப்பன் குழந்தையன், இன்னொருத்தியை இரண்டாந்தாரமாய்க்
நிமிர்வு நீர்வை பொன்னையன் 18

கட்டிக் கொண்டு கண்காணாத ஊருக்கு ஒடீட்டான். நான் உவளை வளத்து ஆளாக்க எவ்வளவு கசிட்டப்பட்டன் எண்டு சொல்லி மாளாது. இவள் உனக்கு முறை மச்சாள் எண்டு உன்னைப் பொறுப்பெடுக்கேக்கை உனக்குத் தெரியாது. அப்ப நீ சின்னப் பொடியன்."
“தங்கா உண்ரை அம்மா என்ரை இளைய மோள். உண்ரை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இரண்டு சகோதரிமாருக்கும் என்ன நடந்தது எண்டு எவருக்குமே ஒண்டும் தெரியாது. அந்தப் பாழாய்ப் போன புயல் பிரளயம் வந்து அவை எல்லோரையும் அள்ளிக் கொண்டு போட்டுது. உங்கடை குடும்பத்திலை நீஒருத்தன் தான் தப்பிப் பிளைச்சாய். எங்கடை ஊரிலையிருந்த சனத்திலை முக்கால் வாசிப் பேருக்கு மேலை அந்தப் புயல் பிரளயம் விழுங்கீட்டுது. நான் உன்னைப் பொறுப்பேத்து வளத்து ஆளாக்கி விட்டன், இப்ப நீஎன்ரை மகன் எண்டுதான் மற்றவை நினைக்கின. அப்பவே உன்ரைமுறை மச்சாள் கமலாவை உனக்குக் கட்டி வைக்க முடிவெடுத்தன். போன தடவை அவள் கொழும்பிலையிருந்து இஞ்சை வந்த பொழுது இந்த விசயம் பற்றி உங்கள் இரண்டு பேரிட்டையும் நான் கேட்டன். நீங்கள் இரண்டு பேரும் முழுமனதோடை சம்மதிச்சியள். ஆனா இப்ப அவள் பணக்கார மாப்பிள்ளையைத் தேடிப் போட்டாளடா."
"இவளின்ரை அப்பன் பன்ரண்டு வரியத்துக்கு முந்தி இவளையும் எங்களையும் விட்டுட்டு ஓடினான். கடசியாய் அவன் காசநோய் புடிச்சு என்னட்டை தஞ்சம் கேட்டு வந்தான். என்ன செய்யிறது? நான் பெத்த பிள்ளையாச்சே, படாதபாடுபட்டு ஆறுமாதமாய் அவ னைப் பராமரிச்சன். அவன் செய்த அநியாயத்துக்கு கடசியிலை அவன் நல்லாய் உத்தரிச்சுத்தான் கண்மூடினான். அவன்ரை சாவீட்டுக்குத்தான் நான் இவளைக் கட்டாயப்படுத்தி இஞ்சை கூப்பிட்டன். இஞ்சை வந்தவள் கடசியாய் இப்பிடி மோசம் செய்து போட்டாளே."
தங்கராசன்பாட்டியைபரிதாபத்துடன் பார்த்துக் கொண்டிருக்" கின்றான்.
எதுவித சஞ்சலமோ கோபதாபமோ இல்லாமல் தன்பாட்டில் கமலா நிர்விசாரமாயிருக்கின்றாள்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் (191

Page 21
'அவை தங்கடை மனக்கொதிப்பும் ஆவேசமும் அடங்கு மட்டும் நல்லாய்த்திட்டித் தீர்க்கட்டும். நான் என்ரை பாட்டிலை இருப்பம்."
கமலா தனக்குத்தானே கூறிக்கொள்கின்றாள். அவர்களைப் பார்க்க அவளுக்கு வேடிக்கையாக இருக்கின்றது. அவள் தனக்குள் சிரிக்கின்றாள். நல்லாய் ஆடி அடங்கட்டும் அவை பாட்டியையும் தங்கராசனையும் பார்க்க அவளுக்கு அவர்கள் மேல் பச்சாதாபமேற்படுகின்றது.
கமலா ஒன்றுமே பேசாமலிருப்பதைப் பார்க்க அவனுக்கு அவள் மேல் அனுதாபமேற்படுகின்றது.
“பாட்டி. அதுதான் என்ன செய்ய முடியும்? எனக்கோ நிரந்திர வேலையில்லை. கூலிவேலை தான். அதுவும் இடைக்கிடை கிடைச் சாத்தான். கூலி வேலையில்லாட்டி மீன் பிடிக்கப் போவன். போதிய வருமானமில்லாத என்னைக் கட்டிக்கொண்டு அது ஏன் கஷ்டப்பட வேண்டும்? சொத்துப்பத்துள்ளவனைக் கட்டிக்கொண்டு நல்லாய் இருக்கட்டும். அதிண்ரை பாட்டிலை அதை விட்டிடுவம். அது நினைச்ச படி செய்யட்டும்.
“இந்த அவிசாரியின்ரை துரோகத்தனத்தைப் பார்த்துக் கொண்டு என்னண்டு சும்மா இருக்கிறதடா?”
வெறித்தனமாக குமுறிக்கத்துகின்றாள் பாட்டி,
இவள் சரியான பேராசைக்காறியடா. அவன் தில்லையன்ரை பெரிய நாச்சார் வீடு, கார், லொறி, ஐம்பது பரப்புக்கு மேல் வயல் காணி, பெரிய தென்னந்தோப்பு எண்டு ஏகப்பட்ட சொத்துக்கள் கிடக்குதெண்டு தெரிஞ்சுதான் அவள் இப்பிடி முடிவெடுத்திருக்க வேணும். இந்தப் பெரும் தொகைச் சொத்தைதான் அபகரிக்க வேணுமெண்ட பேராசை புடிச்சிட்டுது இவளுக்கு. உனக்கு என்னடா கிடக்கு? நீ வெறும் ஆள்தானே. கூலிக்காறன் தானே. அவள் போகட்டும். இப்பவே போகட்டும். தில்லையன்ரை மோன் நாகமணியிட்டை போய்த்துலையட்டும்."
விரக்தியுடன் கத்துகின்றாள் பொன்னம்மாப்பாட்டி
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 120 |

"அதைத் திட்டாதையணை பாட்டி, அது விரும்பியவனைக் கட்டிக்கொண்டு சுகமாயிருக்கட்டும்.
தங்கராசனின் வார்த்தைகளில் பச்சாத்தாபம்."உவளுக்கென்னடா பாவம்பழிபாக்கிறது. பேராசைக்காறி, போய்த்துலையட்டும். உவள் நாசமாய்த்தான் போவாளடா."
சீறுகின்றாள் பாட்டி. “அவன் தில்லையன் லேசுப்பட்டவனே? எத்தினை பேரை ஏமாத்தி மோசடியள் செய்தான்? எத்தினை பேற்றை காணியளைக் கள்ள உறுதி முடிச்சு அமத்தினான்? எத்தினை பேருக்கு அறா வட்டிக்குக் காசு குடுத்து, முதலைவிட வட்டி கூட்டி வாங்கித்தான் உவன் சொத்தெல்லாம் சேத்தான். உதெல்லாம் பாவச் சொத்தடா"
பாட்டி வெறுப்புடன் கூறுகின்றாள். “அவன்ரை சொத்தெல்லாம் அவனோடை கிடக்கட்டும். நாங்கள் எப்பவாவது அவனிட்டை உதவி கேட்டுப் போனமே? எங்கடை நிழல்கூட அவன் பக்கம் சாயாதடா."
அவளுடைய வார்த்தைகளில் தன்மானம். “அவன் தில்லையன் எங்களை எப்பவும் புறம் போக்காய்தான் நடத்தினான். தன்ரை இரண்டு பெட்டையளுக்கும் பெரிய இடத்திலை கலியாணம் கட்டிக் குடுத்தான். அப்பகூட எங்களைக் கூப்பிடேல்லை. நாங்கள் வக்கற்றவர்கள். ஏழையள். நாங்கள் கலியாணத்துக்குப் போனால் தன்ரை பவுசு குறைஞ்சுபோம் எண்ட எண்ணம் அவனுக்கு. அவன் கூப்பிட்டாலும் நாங்கள் போவமே? என்ரை அவர் பாம்பு கடிச்சு கிடந்தபோது அவன் எட்டிக்கூட பாக்" கேல்லை. அவற்றை செத்த வீட்டுக்கும் சவம் எடுக்கிற வேளைதான் வந்து எட்டநிண்டிட்டுப் போனான். ஏனெண்டால் செத்த வீட்டுச் செலவு தன்ரை தலையிலை விழுந்திடும் எண்ட பயம் அவனுக்கு. அண்டைக்கே எங்கடை அண்ணன் தங்கை எண்ட உறவு அறுந்து போச்சு. இப்ப அவன் ஆரோ நாங்கள் ஆரோ. இப்பிடிப்பட்ட" வன்ரை மகனைத் தான் இவள் கட்டப்போறாள். இனி இவளுக்கும் எங்களுக்கும் எதுவித தொடசலுமில்லை. போய்த்துலையட்டும்
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 121|

Page 22
வெப்பிசாரமாய்க் கூறுகின்றாள் பாட்டி,
ஆயக்கடவைப் பிள்ளையார் கோவில் வந்துவிட்டது.
கொழும்பிலிருந்து இரவு பத்து மணிக்குப் புறப்பட்ட பஸ் பிள்ளையார் கோயிலடியில் இப்பதான் வந்து நிக்கிறது.
'கமலாவும் நானும் பஸ்சை விட்டு இறங்குகின்றோம்.
அதிகாலை ஐந்து மணிக்கு வந்து சேரவேண்டிய பஸ் கால ஏழு மணிக்குத்தான் கோயிலடிக்கு வந்துது
இரண்டு மணித்தியாலங்கள் தாமதம்.
'றோட்டில் ராணுவத் தொடரணி சென்று முடியும் வரை வாகனங்களோ பொது மக்களோ போக முடியாது.
தடை!
பொதுமக்கள்? ஐயோ பாவம்'
"!oloIL-gs Lib) ! و 2------
என்ரை தங்கன் என்னைக் கூட்டிச் செல்ல விடியப்புறம் ஐஞ்சு மணிக்கு முன்னமே நிச்சயமாய் வந்திருப்பன். இப்ப ஏழு மணி பாவம் அவனால் எவ்வளவு நேரம் தான் காத்திருக்க முடியும்? காத்துக்கொண்டிருந்திட்டு அவன் திரும்பிப் போயிருப்பானோ?
அவன் நிச்சயமாய் போயிருக்க மாட்டான். எனக்காக அவன் எவ்வளவு நேரமானாலும் காத்திருப்பான்.
'அவனைக் காணவில்லையே அவன் போய்த்தானிருப்பான்'
போகட்டும் நான் அங்கை போய் அவருக்கு நல்லாய்க் குடுப்பன். அவர் வாங்கிக் கட்டட்டும்.'
இனி நாங்கள் ஒண்டரை மைல் மணலுக்காலை காலை இழுத்திழுத்து நடக்க வேணும். நான் ஒரு மாதிரிச் சமாளிச்சுப் போடுவன். எங்கடை ஐயா தான் களைச்சுப் போவர். அதுவும் இரவு முழுதாய் நித்திரையில்லாமல் இருந்தவர்.
வண்டில் பாதையாலை போறதெண்டால் மூண்டு மைலுக்கு மேலை நடக்க வேணும். எங்கடை ஐயாவை அலக்கழிக்க வேண்டி வருமே?
என்ன செய்ய? ஒரு மாதிரிச் சமாளிப்பம்.
நிமிர்வு நீர்வை பொன்னையன் 122

இந்தப் பாழாய் போனவங்களாலைதான் எங்களுக்கு இந்தக் கதி. இது மாத்திரமே? இன்னும் எவ்வளவோ தொல்லையளுக்கு நாங்கள் எல்லோரும் முகம் குடுக்கிறம். அவங்களாலை தான் எங்களுக்கு இந்தக்கதி. அவங்கள் வேணுமெண்டால் தங்களுக்கை சண்டை புடிக்கட்டும். எங்களை ஏன் இதுக்கை மாட்ட வைக்கிறாங்கள். எங்களை ஏன் இப்பிடி வதைக்கிறாங்கள்? இந்தப் பாழாய்ப் போன நாசமறுப்பான்கள் எப்பதான் துலையப் போறாங்களோ?
என்ன செய்ய? சரி நாங்கள் நடந்து துலைப்பம்." அவர்கள் இருவரும் நடக்கின்றார்கள். இருவருக்கும் நித்திரை வெறி அசதி அவர்கள் சோர்ந்து போய் நடக்கின்றார்கள். கோயில் பக்கம் திரும்பிப் பார்க்கின்றாள் கமலா.
'ஒன்பது வரியத்துக்கு மேலாச்சு. இந்தக் கோயிலிலை எதுவிதமாற்றமுமில்லையே. அப்படியே இடிஞ்சு பாழாய்க் கிடக்குதே, எல்லாத்துக்கும் இந்தப் பாழாய்ப் போன சண்டைதான் காரணம்.
கோயில் மண்டபத்துக்குள்ளையிருந்து ஆரோ இரண்டு பேர் வெளியாலை வாற மாதிரிக்கிடக்குதே'
கோயில் மண்டபத்துக்கு முன்னால் இரண்டு சைக்கிள்கள்
ஒரு வேளை என்ர தங்கனாயிருக்குமோ? சே, அவர் இவ்வளவு நேரமும் ஏன் காத்துக் கிடக்கப் போறார்?" அவர்களை நோக்கி இருவர் அவசர அவசரமாக வந்துகொண்டிருக்கின்றனர். கிட்டவந்துவிட்டனர்.
அதில் ஒருவர் நல்ல வாட்டசாட்டமாயிருக்கிறார். அடர்ந்த கறுத்த தலைமயிர். மீசை வேறு.
'அவரே தான்! என்ரை தங்கனேதான்!" யார் இவள்? இவளோடை வேறை ஒரு ஆள்?" ஒரு வேளை கமலாவாக இருக்குமோ?
அவனுக்கு சந்தேகம்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 123

Page 23
கிழிஞ்ச அழுக்குப்ப்ாவாடை சட்டை பறட்டைத்தலைமயிர். எந்த நேரமும் சப்புக் கொட்டிக் கொண்டிருக்கும் வாய்'
“என்னைக் கலியாணம் கட்டிறியாடா தங்கா?” 'ஆரோ வம்புக்குச் சொல்லிக் குடுத்ததை வைச்சு கொண்டு அவள் எந்த நேரமும் என்னைக் கேலி பண்ணி கோப மூட்டிக்" கொண்டிருப்பாள். அவள் தானோ இவள்?
அதெப்பிடி? மதாளித்து பொங்கிப் பிரவகிக்கும் பருவம். பருவத்துடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கும் அழகு.
குறும்புத்தனம் நிறைந்த குறுகுறுக்கும் கரிய விழிகள் 'ஆம். ஆமாம். அதே விழிகள்! “அவள் விழிகளில் மின்னல் வீச்சு” "அவளே தான். கமலாவேதான்! அவனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
'ஆறுமாதங்களுக்கு முந்தி நான் அனுப்பிவைத்த பெரிய கோட்டு சிவப்பு நீலம் கலந்த சாரமும் வெண் நீல "ரீ” சேட்டும்!
'ஆம் அவர்தான். என்ரை தங்கன் தான். தங்கனேதான்! அவளுக்குப் பெருமகிழ்ச்சி! ஆனந்தத்தில் திக்குமுக்காடுகின்றாள். தங்கராசன் திகைத்துத் திணறியவனாய் நிற்கின்றான். “என்ரை தங்கா!" ஆனந்த வெறியில் தன்னை மறந்தே அலறுகின்றாள். வானத்துத் தேவதையாய் அவன் முன் நிற்கின்றாள் கமலா. மனதுக்கே புரியாத அவளது இதயத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கின்ற பாச உணர்வு உயிர் பெற்று, பொங்கி பிரவகித்துப் LITTLitefloriipgs.
அவளது நெஞ்சுக்குள் சிலிர்ப்பு. தேகமெல்லாம் புல்லரிப்பு. அவனுக்கு ஆனந்த மயக்கம். அவளது விழிகளில் வைகறை ஒளியைக் காண்கின்றான்.
நிமிர்வு நீர்வை பொன்னையன் 124

கந்தல் பாவாடை சட்டை மென்மையான வெண்நீல சேலை யாக மாறிவிட்டது. பரட்டைத் தலைமயிர் சுருண்டு கடல் அலையாய் நீண்ட கறுத்த கேசம். ஆனால் இப்போதும் குறும்புத்தனம் நிறைந்த அதே கருவிழிகள்.
இப்படியே இன்பமயக்க சொப்பனாவஸ்தையில் யுகபுகாந்திரமாய் நிற்பதான உணர்வு அவர்களுக்கு.
"சரிவாங்கோ போவம்." தங்கராசனின் நண்பன் கூறுகின்றான். கனவு கலைந்தவர்களாய் அவர்கள் இருவரும் சுய உணர்வு பெற்றவர்களாகின்றனர்.
கரத்தை செல்கின்ற பாதையை அடையும் வரை அவர்கள் நால்வரும் மணற்பாதையால் நடந்து செல்கின்றனர்.
கமலாவும் தங்கராசனும் மெளனமாய் நடக்கின்றனர். ஆனால் அவர்களது உள்ளங்கள் ஆயிரமாயிரம் வண்ணக்கதைகள் பேசியபடியே வானத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கின்றன.
கூட்டம் கூட்டமாய் பெண்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கூலி வேலைக்கு அவர்கள் செல்கின்றனர். பெண்களில் ஒருத்தி கமலாவை உற்றுப்பார்க்கின்றாள். அவள் கமலாவை அடையாளம் கண்டுவிட்டாள். "எடியே இஞ்சேரடி எங்கடை அன்னக்கிளியை" பேராச்சரியத்துடன் கத்துகின்றாள் அவள். 'என்ன இவள் கமலாவை அடையாளம் தெரியாமல் அன்னக்" கிளி எண்டு நினைச்சிட்டாள் போலைகிடக்கு.
நான் எண்ணுகின்றேன். கமலா அப்பெண்ணை ஆச்சரியமாய் பார்த்து அதிர்ந்து போய் நிற்கின்றாள்.
"எங்கடை கமலா அன்னக்கிளியா? 'எனக்கு ஒன்றுமே புரியிவில்லை. ஒரே குழப்பம். "அன்னக்கிளி. ஏனடி பேசாமல் நிற்கிறாய்? எங்களை மறந்திட்டியோடி?”
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 125

Page 24
பொய்க்கோபத்துடன் கேட்கின்றாள் அப்பெண்.
அன்னக்கிளி அவர்களின் செல்லக் கிளி.
“யோகமக்கா"
ஆச்சரியத்துடன் கத்துகின்றாள் கமலா.
“யோகமக்கா உங்களை எல்லாம் என்னாலை எப்பிடி மறக்க முடியும்? என்ரை ஆசையோகமக்கா உன்ரை பேர் உடனை எனக்கு ஞாபகத்துக்குவரேல்லை. அவ்வளவுதான். ஒன்பது வரியமாச்சே, அதுதான் யோசிச்சுக் கொண்டு நிண்டனான்."
"நீஎப்பிடி இருக்கிறாய்? சந்தோசமாய் இருக்கிறாயா?"
"ஒம், யோகமக்கா. அவை எனக்கு ஒரு குறையும் விட்டுவைக்" கேல்லை. என்னை அவை தங்கடை சொந்தப் பிள்ளைகளில் ஒண்டாய் பாக்கினை"
பூரண திருப்தி உணர்வு மேலிட்டுக் கூறுகின்றாள் கமலா.
“யோகமக்கா, இஞ்சேர், எனக்கும் பக்கத்திலை நிக்கிறாரே இந்த ஐயா. இவர் என்னை தன்ரை சொந்த மகள்மாரிலை ஒருத்தி யாய்த்தான் வளர்த்து வாறார். எனக்கு ஒரு சின்ன நோய்நொடி வந்தால் அவை எல்லாரும் துடிக்கிற துடியைப் பார்க்க வேணுமே. இந்த ஐயா என்ரை சொந்த தகப்பனை விட எவளவோ மேலானவர். அம்மா இவற்றை பிள்ளையஸ் மூண்டு பேரும் என்னை தங்கடை சொந்த சகோதரியாத்தான் பார்க்கினை. இவையோடை இருக்க நான் குடுத்துவைச்சவள், அதிஸ்டக்காறி"
உணர்ச்சிவயமாய்க் கூறுகின்றாள்.
"அன்னக்கிளி. உன்னைப் பார்க்கத் தெரியுதேடி. நீ குடுத்து வைச்சவள் தானடி. சரி. சரி. நேரம் போகுது. நீங்களும் களச்சுப் போய் வாறியள். நாங்களும் வேலைக்குப் போகவேணும். சாவீடு வேறை. இரண்டு மணிக்குத்தான் பிரேதம் எடுப்பினை, நாங்கள் எல்லோரும் அரை நேரத்தோடை ஒரு மணிக்கே வந்திடுவம். நீங்கள் வேளைக்குப் போங்கோ, அங்கை பாட்டி உன்னை பார்க்க ஆவலோடை காத்திருக்கிறா"
தங்கராசன்?
5LDGIT?
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 126|

அவர்கள் மோன நிலையில் சென்று கொண்டிருக்கின்றார்கள். சுந்தரம் ஆசிரியர்? யார் இந்த அன்னக்கிளி? கமலாதான் அன்னக்கிளியா? 'பதினொரு வரியங்களுக்கு முன் ஏழு வயதுச் சிறுமியாக எங்களிடம் வந்தவள் கமலா. இல்லை, கொண்டு வந்து விடப்பட்ட வள்.
நான், மனைவி நான்கு வயது மகள் என் முதல்வாரிசு. எங்கள் பொன் குஞ்சு.
குழந்தையுடன் குழந்தையாய் எங்களால் எப்படிவிளையாட முடியும்?
'குழந்தைக்குத்தானே குழந்தையின் உணர்வு புரியும்? எங்கள் குழந்தையுடன் விளையாட அதைப் பிராக்காட்ட ஒரு சிறுமி வேணுமெண்டு என் நண்பன் வேல் முருகிடம் சொல்லியிருந்தேன். 'ஒரு நாள் திடீரென என் நண்பன் ஒரு சிறுமியுடன் வந்து நிற்கின்றான். சிறுமிக்கு ஏழு வயது என்று கூறினான்.
"எங்கள் குழந்தை அச்சிறுமியை மருட்சியுடன் பார்க்கின்றது 'சிறுமி திகைப்புடன் நிற்கின்றாள்.' குழந்தை திடீரென தன் பிஞ்சுக்கரங்களைத் தட்டிக் கொண்டு சிரிக்கின்றது.
'சிறுமியின் முகத்திலும் சிறு முறுவல். கணப்பொழுதுதான். குழந்தையும் சிறுமியும் ஒட்டிக்கொண்டு விட்டனர்.
'அக்கணத்திலிருந்து கமலா எங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகி விட்டாள்.'
"எங்களுக்கு மூன்று பிள்ளைகள், கமலாவையும் சேத்துத்தான். ஆண் இல்லை."
'கமலா எங்கள் சொந்தப்பிள்ளை மாதிரி. இல்லை. சொந்தப் பிள்ளை தான், எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரி உடுப்பு. ஒரே உணவு."
| நிமிர்வு நீர்வை பொன்னையன் |27

Page 25
நாங்கள் எங்கு சென்றாலும், திருமண வீடுகள், விழாக்கள், கூட்டங்கள், ஊர்வலங்கள் எல்லாவற்றிற்கும் நாங்கள் ஒன்றாகவே செல்வோம்."
கமலா எங்கள் சொந்தப் பிள்ளைகளில் ஒன்று தான் என்று எல்லோரும் நினைக்கின்றார்கள், கூறுகின்றார்கள்.
'என் மனைவியோ? சொல்லத்தேவையில்லை. எதற்கெடுத்தாலும் கமலா, கமலா என்று கூறிக் கொண்டேயிருப்பாள்.'
"எங்கள் பிள்ளைகள் கூட எதற்கெடுத்தாலும் கமலா அக்கா, கமலா அக்கா என்று கூறிக்கொண்டேயிருப்பார்கள்.
ஒரே ஒரு குறைதான்." கமலா பாடசாலைக்குச் செல்லவில்லை. அந்தக் குறையையும் என் மனைவி போக்கிவிட்டாள். 'என் மனைவியும் ஒரு ஆசிரியைதானே." கமலா நன்றாக எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டுவிட்டாள் என் மனைவியிடம்.'
'பத்திரிகைகள், கதைப்புத்தகங்கள் வாசிக்கக்கூடிய பக்குவம் பெற்றுவிட்டாள் கமலா.
படிப்படியாக தொட்டாட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்து, சமையல் வேலையையும் பூரணமாகக் கற்றுக்கொண்டு விட்டாள். சுருக்கமாகச் சொன்னால் எங்கள் வீட்டு நிர்வாகமே அவள் தான். வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதிலும் அவள் பிசகமாட்டாள்.'
'எந்த நேரமும் ஏதாவதொரு வேலையைச் செய்து கொண்டே" யிருப்பாள். சுறுசுறுப்பு வேறு."
பதினொரு வருடங்கள் ஒரே ஒரு தடவை தான் அவள் தன் ஊருக்குச் சென்றிருந்தாள். சுகமில்லாமலிருந்த தனது பாட்டியைப் பார்க்க."
இரண்டாவது தடவையாக, இன்றுதான் செல்கின்றாள்.' அவளது தகப்பன் கமலாவைப் பார்க்க இரண்டு தடவைகள் தான் வந்திருந்தார். அதுவும் பணம் வாங்கத்தான். முதல் தடவை ஒரு சிறு தொகைப் பணத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தாள்.
! நிமிர்வு நீர்வை பொன்னையன் 128

இரண்டாவது தடவை அவர் வந்து பொழுது கமலா அவரைப் பார்க்கக்கூட வெளியே வரவில்லை. ஒரு சல்லிக்காசு கூட அவருக்" குக் கொடுக்கவில்லை.
“இண்டே என்ரை மோள் செத்துப் போனாள்" திரும்பிப் போகும் போது அவளது தந்தை கூறிவிட்டுப் போனார்."
இன்று கூட பாட்டியின் வற்புறுத்தலால் தான் தன் தகப்பனின் இறுதிக்கிரிகையில் பங்கு பற்றுவதற்காக வந்து கொண்டிருக்கின்றாள்.'
வண்டில் பாதை வழியே பைசிக்கிளில் நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்.
மக்கள் இடைக்கிடையே கூட்டம் கூட்டமாக வந்துகொண்டும் போய்க்கொண்டுமிருக்கின்றார்கள்
பெருமணற்காடு. இடைக்கிடையே சிறு சிறுகுடிசை வீடுகள். அப் பிரதேசத்தின் வறட்சியும் வறுமையும் அம்மக்கள் முகங்களில் அப்பிக்கிடக்கின்றது.
நாங்கள் மரணவீட்டை அடைகின்றோம். ஆண்களும் பெண்களுமாக பதினைந்து அல்லது இருபது பேருக்கு மேலிருக்காது.
"ஐயோ என்ரை அன்னக்கிளி. உன்ரை அப்பன் போச்சேந்திட்" டானேயடி"
கமலாவைக் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்துக் குழறி அழுகின்றார் பொன்னம்மாப்பாட்டி,
கமலா சடமாய் நிற்கின்றாள். அவளது முகத்தில் எதுவித உணர்ச்சியுமில்லை.
சிறிது நேரம் செல்ல பாட்டியின் ஒலம் படிப்படியாகத் தணி கின்றது.
பாட்டி கமலாவை உற்றுப் பார்க்கின்றாள். கமலாவின் வாளிப்பான தோற்றம் பாட்டியை வியக்க வைக்" கிறது.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 129|

Page 26
கமலாவையும் என்னையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருக்கின்ற பாட்டிக்கு நன்றிப்பெருமிதம். வரவர மக்கள் திரள் பெருகுகின்றது. வளவு நிறைய மக்கள். எங்கிருந்துதான் இவ்வளவு பேரும் வந்தார்களோ? பிரேத எடுப்புக்கான தயாரிப்பு வேலைகள் துரிதகெதியில் நடக்கின்றன.
கமலா வந்த நேரத்திலிருந்து பிரேதம் எடுக்கப்படும் வரை அவள் நடந்து கொண்ட விதம் அங்குள்ளவர்களைப் பிரமிக்க வைக்கின்றது. அதே நேரம் அவர்களை வரவேற்று, அனுசரித்து, அவர்களைக் குசலம் விசாரிக்கத் தவறவுமில்லை.
கொடுக்கல் வாங்கல்களை அவள் நிதானமாகச் செய்கின்றாள். தந்தையை இழந்துவிட்ட கவலை அவளுக்கு இல்லாமலில்லை. ஆனால் வந்தவர்களை அவள் அனுசரிக்கத் தவறவுமில்லை.
இந்தச் சின்ன வயதில், அதுவும் பெண்ணாக இருந்தும் அவள் எப்படிக் கச்சிதமாக நிதானத்துடன் செயற்படுகின்றாள். அங்கிருந்த” வர்கள் வியக்கின்றனர்.
பிரேதம் இரண்டு மணியளவில் தகனம் செய்ய எடுத்துச் செல்லப்படுகின்றது.
பின்நேரம் நாலு மணியளவில் கிராமத்தில் பரபரப்பு. அக்கிராமத்திலுள்ள அனைவரும் பிள்ளையார் கோவிலடிக்கு சாய்த்துச் செல்லப்படுகின்றனர். மக்கள் மத்தியில் பதட்டம்.
“இன்று ஆர், ஆர் வீட்டில் அடுப்பு எரியாமலிருக்கப் போகின்றதோ?”
ஒவ்வொருவர் மனதிலும் பரிதவிப்பு. கூட்டம் தொடங்குகின்றது. ஆக்கிரமிப்பாளர்களின் அடவாடித்தனங்கள், அட்டகாசங்கள், அட்டூழியங்கள் பற்றி எல்லாம் உணர்வுபூர்வமாக எடுத்தியம்பப்" படுகின்றது.
மக்கள் சடமாக நிற்கின்றனர்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 130 |

"இந்தப் பொறியிலிருந்து எப்படித் தப்புவது?
தங்களையும் தங்கள் பிள்ளைகளையும் எப்படிக் காப்பாற்றிக் கொள்வது? இதற்கு வழி என்ன என்ற கேள்விகள் அவர்கள் இதயங்களில் அலைமோதிக்கொண்டிருக்கின்றன. இக்கேள்வி களுக்கான விடை காண்பதற்கான தவிப்பு.
இடைக்கிடை இயக்கங்களால் இப்படிப்பட்ட கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டது. கூட்டம் முடிவடைகின்றது.
தங்களுடன் இணையும்படி கேட்கின்றார்கள். வீட்டுக்கொரு பிள்ளை தரவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.
இரண்டு மூன்று பிள்ளைகள் தாமாகவே முன்வந்து அந்த இயக்கத்துடன் இணைகின்றனர்.
சில பிள்ளைகளை வரிந்து பிடிக்கும் முயற்சி.
நாகமணியை ஒருவர் பிடிக்கின்றார்.
"நான் மாட்டன்"நாகமணி மறுப்பு.
“øJødir?”
“எனக்கு பயமாய்க் கிடக்கு"
“என்ன பயம்?”
"நான் செத்துப் போவன்"
"ஏன் சாகவேணும்?"
"இயக்கத்திலை சேந்தா சண்டை பிடிக்க வேணும், சண்டை" யிலை நான் செத்துப்போவன். எனக்குப் பயமாய்க் கிடக்கு என்னை விடு, "ஐயோ என்னை விடு”
நாகமணி ஒலமிட்டு "ஒ" வென்று அலறுகின்றான்
அவனது தந்தை தில்லையம்பலம் செய்வதறியாது திகைத்துப் போய் நிற்கின்றார்.
தாயார் அன்னபூரணம் அழுது குழறி ஒலம் வைக்கின்றாள்.
நிற்பவர்களை விலத்திக் கொண்டு அன்னக்கிளி முன்னே வருகின்றாள்.
நாகமணியின் கையை அவள் உறுதியாகப் பற்றுகின்றாள்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 131

Page 27
"விடு இவரை. இவர் என்ரை முறைமச்சான். நான் இவரைக் கலியாணம் கட்டப்போறன்" படபடவென்று கூறுகின்றாள்.
அங்கு கூடி நின்ற மக்களுக்கு வியப்பு. "எல்லாம் பேசி முற்றாச்சு. கெதியிலை கலியாணம், விடுங்கோ எனரை அவரை.
அன்னக்கிளி நாகமணியின் கையை இறுகப் பிடித்து இழுக்" கின்றாள்.
நாகமணிக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் திகைத்தவனாய் நிற்கின்றான்.
மக்கள் மத்தியில் கொந்தளிப்பு நாகமணியை அன்னக்கிளி இழுக்கின்றாள் உறுதியுடன். கடுமையான பிரயத்தனத்தின் பின் நாகமணி விடுவிக்கப்படுகின்றான்
அவனை அன்னக்கிளி உறுதியாய்ப் பிடித்து இழுத்துச் செல்கின்றாள்
இயக்கத்தினர் சற்று நேரம் ஸ்தம்பித்து நிற்கின்றனர். மக்கள் மத்தியில் பெரும் ஆரவாரம், மகிழ்ச்சி. "அன்னக்கிளி துணிந்தவள் தான்" ஒருவர் கூறுகின்றார். "அவள் நினச்சதைச் சாதிச்சுப் போட்டாளடா" மற்றொருவர் "இனி ஒண்டும் செய்யேலாது, நாங்கள் இண்டைக்குத் திரும்பிப் போவம்"
இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகின்றார். "கூடிய கெதியிலை நாங்கள் இஞ்சை திரும்பிவருவம்" வன்மத்துடன் கூறிவிட்டு இயக்கத்தினர் செல்கின்றனர் மக்கள் கலைந்து செல்கின்றனர். "அப்பாடா! இண்டைக்குத்தப்பீட்டம்” ஒருவர் கூறுகின்றார். "உண்மையில அந்த அன்னக்கிளிகெட்டிக்காறிதானடா. அவள் சரியான துணிச்சல்காறிதான்”
மக்கள் தங்களுக்குள் கதைத்துக் கொண்டு செல்கின்றனர்.
! நிமிர்வு நீர்வை பொன்னையன் 1321

"எல்லாம் அந்த இரட்டைக் கொண்டைககாறயாooல பறத
வினை."
“இண்டைக்கு எங்கடை பிளான் குழப்பிப்போச்சே” ஆதங்கப்பட்டு ஒரு போராளி கூறுகின்றான். “போனது போகட்டும். கூடிய கெதியிலை நாங்கள் இஞ்சை வருவம். இந்த இரட்டைக் கொண்டைக்காறிக்கு சரியான பாடம் புகட்டுவம்.”
ஒரு போராளி சபதம் கூறுகின்றான். "உவளைப்போல துணிஞ்சவள்தான் எங்களுக்குத் தேவை. வாற கிழமை நாங்கள் இஞ்சை வருவம். அப்ப அந்த இரட்டைக் கொண்டைக்காறியை நிச்சயமாய்க் கோழி அமத்திறமாதிரிப்புடிச்சுக் கொண்டுபோவம்." அவர்கள் சபதமேற்கின்றனர்.
"இனி எனக்கென்ன? அன்னக்கிளி என்னைக் கலியாணம் கட்டப் போறாள் எனக்கு அதிட்டம் தான்."
நாகமணி கூறுகின்றான். அவனுக்குப் பேரானந்தம்; மகிழ்ச்சி யில் அவன் திணறுகின்றான்.
"அன்னக்கிளி சரியான வடிவு. எங்கடை ஊரிலை அவளைப் போல வடிவானவள் கிடையாது. இப்பிடிப்பட்ட அழகியைக் கலியாணம் கட்டிறதுக்குக் குடுத்து வைச்சிருக்க வேணும். நான் பெரிய அதிட்டக்காறன்தான்."
'அந்த தங்கராசன் எவ்வளவு லட்சணமானவன். அப்பிடிப்பட்டவனை விட்டுட்டு அன்னக்கிளி என்னை ஏன் கலியாணம் கட்" டிறன் எண்டு சொல்லிறாள்? ஒ. அவன் அண்டாடங்காச்சி, கூலிக்" காறன். என்னட்டை பெருமளவு சொத்திருக்கு அதுதான். அவள் என்னைக் கலியாணம் கட்டிறன் எண்டு சொல்லியிருக்கவேணும். 'எப்பிடியெண்டாலும் அன்னக்கிளி என்னைக் கலியாணம் கட்டினால் போதும் நான் அவளை ராசாத்திமாதிரிவைச்சிருப்பன். 'சிலவேளை அவள் மனம் மாறி தங்கராசனைக் கட்டப்போறனென்டால்? அதெப்பிடி? அவள் தான் என்னைக் கலியாணம் கட்டப் போறன் எண்டு எங்கடை ஊர் சனங்களுக்கு முன் சொல்லிப்போட்டாளே."
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 133|

Page 28
அவள் மனம் மாற முந்தி, என்ரை அம்மாக்கிட்டை சொல்லி கெதியாய் கலியாணத்த நடத்தி முடிக்க வேணும். என்ரை அம்மா நிச்சயமாய் செய்வ'
'அன்னக்கிளி எவ்வளவுதுணிஞ்சவள். அவள் கெட்டிக்காறி. அவளில்லையெண்டால் இண்டைக்கு என்ரை புள்ளைதப்பியிருக்" கேலாது. இப்பிடிப்பட்டவள் எனக்கு மருமகளாய் வந்தால்..?
'என்ரை மகனக் காப்பாத்தினவளுக்கு அவனைக் கட்டிக்" குடுக்காமல் வேறை ஆருக்குக் கட்டி வைக்கிறது?
'அதுமாத்திரமே? அவள் எவ்வளவு லட்சணமானவள்? எவ்வளவுதுணிவானவள்? இவளாலை தான் என்ரை குடும்பத்தை சரியாய் நடத்தேலும். இவளிட்டை என்ரை குடும்பப் பொறுப்பை ஒப்படைச்சுப்போட்டு நான் நிம்மதியாயிருப்பன்."
'சிலவேளை அவள் மனம் மாறிட்டாலும் எண்டு என்ரை மகன் பயப்பிடுகிறான். அன்னக்கிளி மனம் மாறுவாள் எண்டு நான் நினைக்கேல்லை. எல்லாத்துக்கும் நாங்கள் இப்பவே போய் அவளோடை கதைச்சு முற்றெடுப்பம். கலியாண எழுத்தை எப்பவைக்கிறதெண்டதை அவளின்ரை வாயாலை சொல்லப் பண்ணிப்போட்டால் நாங்கள் பயப்பிடத்தேவையில்லை. நிம்மதியாயிருக்கலாம்.'
நாகமணியின் அம்மா தன் மகனுடனும், கணவனுடனும் அன்னக்கிளியைப் பார்த்துப் பேசி முடிவெடுப்பதற்கு ஆயத்த" மாகின்றாள்.
அன்னக்கிளி என்ரை மோனைக் கலியாணம் செய்யப்போறன் எண்டு ஏன் சொன்னாள்? எங்களிட்டை ஏராளமான சொத்திருக்" கெண்டு அறிஞ்சிருப்பாள். அதெல்லாத்தையும் நான் அனுபவிக்" கலாம், சுவசீவியம் நடத்தலாம் எண்டு நினைச்சிருக்கிறாள் போலை' 'எப்படியெண்டாலும் அவள் துணிஞ்சவள். எங்கடை குடும்" பத்தைக் கொண்டு நடத்தக்கூடிய வல்லமை அவளுக்கு இருக்கு" தெண்டு நான் நினைக்கிறன். எங்கடை சொத்தெல்லாத்தையும் பராமரித்துப் பாதுகாக்கக்கூடிய திறமை அவளிட்டை இருக்குது. அவள் என்ரை மகனைக் கலியாணம் கட்டிறன் எண்டு சொன்னது நல்லதாய்ப் போச்சு
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 134

இந்தச் சம்பந்தத்தை நாங்கள் கைவிடக் குடாது. உடனடியாய் நாங்கள் போய் அவளோடைதந்திரமாய்ப் பேசிகலியாணப்பதிவை எப்பவைக்கிறதெண்டு அவளிட்டையே கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்ளவேணும். அதோடை கலியாண எழுத்தை கெதியிலை வைக்கிறதுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து போடலாம்.'
தில்லையம்பலம் தன் மனைவியையும் மகனையும் கூட்டிக் கொண்டு அன்னக்கிளியிடம் செல்கின்றார்.
"துரோகிநம்பியிருந்த என்ரை பிள்ளை தங்கராசனை ஏமாத்திப் போட்டியேடி"
பொன்னம்மாப்பாட்டிபொரிஞ்சு தள்ளிக்கொண்டிருக்கின்றா. நாகமணியாக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். பாட்டி அவர்களைப் பார்த்துவிட்டாள். "ஓஹோ அவை வருகினை!" ஆர் வருகினை என்றுதலை நிமிர்ந்து பார்க்கின்றாள் அன்னக்" கிளி.
“எடியே அன்னக்கிளி உன்னைக் கூட்டிக் கொண்டு போக அந்தப் பெருச்சாளியள்வாறாங்களடி"
அன்னக்கிளியின் மனதில் எதுவித சஞ்சலமுமில்லை. அவளு" டைய முகத்திலும் சிறிது மாற்றமுமில்லை. அவள் அமைதியாகத்" தானிருக்கின்றாள்.
"ஆஹா வாருங்கோ! வாருங்கோ! இப்பதான் உங்களுக்கு வழிதெரிஞ்சுதா? இவ்வளவு நாளும் எங்கை போனியள்?"
ஆவேசமாகக் கத்துகின்றாள் பொன்னம்மாப்பாட்டி. "என்ன மருமகளைக் கூட்டிக்கொண்டு போக வாறியளோ?” தில்லையம்பலமாக்கள் ஒன்றும் பேசவில்லை. அவர்கள் மெளனித்து நிற்கின்றனர்.
"உன்னைக் கூட்டிக்கொண்டு போக இந்த வஞ்சகர்கள் வந்தி ருக்கினையடி"
அன்னக்கிளி ஒன்றும் பேசவில்லை. அவள் சிலையாயிருக் கின்றாள்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 135|

Page 29
"ஏனடி இருக்கிறாய்? அந்தப் பிணந்தின்னியளோடை போடி," அந்தப் பாவியளின்ரை பாவச் சொத்தை நல்லாய் அனுபவியடி. இப்பவே அந்தப் பணப்பிசாசுகளோடை ஒடடி" அட்டகாசமாகக் கத்துகின்றாள் பாட்டி "நான் போமாட்டன்" நிதானமாகக் கூறுகின்றாள் அன்னக்கிளி. "ஏனடி போமாட்டாய்?" "நான் என்ரை தங்கராசாவைத்தான் கல்யாணம் கட்டுவன். உறுதியாகக் கூறுகின்றாள் அன்னக்கிளி அன்னக்கிளியின் விழிகளில் தீட்சண்ய ஒளி
女
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 136|

lf)
GQ)
அர்த்த சாமம். திடுக்கிட்டு எழுகின்றான் அவன். துரக்கக் கலக்கம். நெஞ்சில் லேசான வலி. கும்மிருட்டு. வானத்தின் கனைப்பு. நெஞ்சில் வலி அதிகரிப்பு. சண்முகத்தை எழுப்பவா? 'பாவம் அவன், கிடக்கட்டும். தாங்கமுடியாத வலி எழுந்திருக்கின்றான். தலைச் சுற்று.
மீண்டும் படுக்கின்றான். வலிதாங்க முடியவில்லை.
நிமிர்வு நீர்வை பொன்னையன் 137|

Page 30
“சண்முகம், தம்பிசண்முகம்" தட்டி எழுப்புகின்றான் சண்முகத்தை, சடமாய்க் கிடக்கின்றான் சண்முகம். 'பாவம். அவன் தான் என்ன செய்வான்? நாள் முழுவதும் விறகுப் பாரத்தோடை சயிக்கிள் ஓடி அலைஞ்சிட்டுக் கிடக்கிறான். என்னண்டு எழுப்புறது அவனை? கிடக்கட்டும் கொஞ்ச நேரம்." வெட்டி அடிக்கின்றதுமின்னல். பாறாங்கல்லை
நெஞ்சில் வைத்து
அமத்துவது போல தாங்க முடியாத வலி. மூச்செடுக்க முடியவில்லை. "சண்முகம். மோனை சண்முகம்" தட்டி எழுப்புகின்றான் சண்முகத்தை, மரக்கட்டையாய்க் கிடக்கின்றான் சண்முகம்.
மூச்சுத் திணறுகின்றது.
இந்த நேரம் என்ரை கனகம் என்னோடை இருந்தால்.
மழை சோனாவாரியாய் கொட்டுகின்றது.
'கனகம் என்மேல் தன்ரை உயிரையே வைச்சிருந்தாள்
'எண்டைக்காவது ஒருநாள் என்ரை கனகம் என்னட்டை வருவள்.
நிச்சயம் வருவள் மழை ஊழித்தாண்டவம், நெஞ்சுவலி தாங்கமுடியேல்லை. சலஞ் சலமாய் வேத்துக் கொட்டுதே'
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 138

மலமும சலமும் வாறமாதிரிக் கிடக்கு. 'வரேல்லை"
"ஐயோ அம்மா” “இனி என்னாலை தாங்கேலாது." “சண்முகம். தம்பிடே." தட்டி எழுப்புகின்றான். பதைபதைத்து எழுகின்றான் சண்முகம் “என்னண்ணை?”
“என்ன வேணும்?" "நெஞ்சுக்கை குத்துது மோனை, தாங்கேலாமல் கிடக்கு."
“என்னண்ணை நீ? என்னை ஏன் எழுப்பேல்லை?” “பகல் எல்லாம் நீ விறகுச் சுமையோடை சயிக்கிள் ஓடிக் களைச்சுப் போய் கிடக்கின்றாய். என்னண்டு நான் உன்னை எழுப்புறது மோனை?” “பேக்கதை பேசாதை. துவக்கத்திலையெண்டால் என்ரை சயிக்கிளிலை ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கலாம்." வலிகூடிட்டுது.
இப்பென்னண்டு போறது?" “வாய்வெண்டுதான் நான் நினைச்சன் மோனை" “பச்சரிசிச் சோறும் பிலாக்காய்க் கறியும் ராத்திரி திண்டனானல்லே அதுதான்
வாய்வுச் சேட்டை யெண்டு
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 139

Page 31
நான் நினைச்சன் மோனை." "முந்திவந்த நெஞ்சுவலி எண்டு இப்பதான் தெரியுது." “மழையும் கொட்டுது. நடுச்சாமமாய்க் கிடக்கு. இப்பென்ன செய்யிறது?" கலங்குகின்றான் சண்முகம். “பனடோலாவது போட்டால் கொஞ்சம் குறையும். அதுக்கிப்பெங்கை போறது?" “அண்ணை உதை
வைச்சுக் கொண்டிருக்கேலாது” ஆறுமாதங்களுக்கு முன்னமும் உந்த வலி வந்து உன்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய்ச் சேர்க்க நாங்கள்
பட்ட பாடெவளவு? ஊரடங்குச் சட்டமப்ப. நடுச்சாமம். நெடுவல் செல்லையன்ரை காரில்லாட்டி முடிஞ்சிருக்கும் உன்ரைகதை அரிக்கன் லாம்பு இரண்டை இரண்டு பக்கமும் உயத்திப்புடிச்சுக்கொண்டு ஆமி செக் பொயின்டுகளை
கடந்து போனமப்ப
நிமிர்வு நீர்வை பொன்னையன் 140 |

அப்ப யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி நடந்துகொண்டிருந்தது. இப்ப அதுவுமில்லை. தொலைஞ்சு போச்சு. நாங்களும் அங்கையில்லை இடம் பேந்து வந்து இருக்கிறம் இஞ்சை மூண்டு மாத காலமாய். சாவகச்சேரி ஆஸ்பத்திரிக்குத்தான் போய்க் காட்டவேணுமிப்ப" “தம்பி சண்முகம் இப்பென்னண்டு போறது?" விடியட்டும் பாப்பம்." “மடைக்கதை பேசாதை. நெஞ்சுவலி கூடி அவலப்படேலாது. ஆஸ்பத்திரிக்கு இப்பவே போய்க் காட்டவேணும் கெதியாய் போற வழியைப் பாப்பம்." "அப்ப உன்ரை சயிக்கிளிலை போவமே?” “முட்டாள்தனமாய்" கதையாதை அண்ணை. உடனே போகவேணும். போய்த் தீர வேணுமிப்ப. “என்னண்டு போறது?"
இப்ப வலி கொஞ்சம்
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 141

Page 32
குறஞ்சிட்டுது மோனை. விடியட்டும் பாப்பம்." “பேசாமலிரண்ணை. முன்வீட்டு வல்லிபுரத்தாற்ரை லான் மாஸ்ரரைக் கேட்டுப் பாப்பம். அவர் என்ன சொல்வாரோ?” “அந்த ஆள் நல்ல மனிசன். எங்களுக்கு அவர் எவ்வளவு உதவியள் செய்துள்ளார். மறுக்கமாட்டார் அவர் கேட்டுப் பாப்பம்." வல்லிபுரத்தார் வீட்டுக்கு ஒடுகின்றான் சண்முகம். சிறிது நேரத்தில் லான் மாஸ்ரருடன் வருகின்றான். சாக்குப் படங்கு மெத்தையாய் மடிகின்றது. மெத்தையில் கனகசிங்கம். ஆஸ்பத்திரி நோக்கி லான்மாஸ்ரர் விரைவு. தனியார் மருத்துவமனையில் கனகசிங்கத்திற்கு வேலை. கனகம்மாவிற்கும் அதே இடத்தில் வேலை. கனகசிங்கம் வீடு செல்லும் வழியில் தான் கனகம்மாவின் வீடும்.
காலையும் மாலையும்
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 142

அவர்கள் இருவரும் ஒன்றாகவே பயணிப்பு. அவர்கள் இருவருக்குமிடையில் நெருங்கிய நட்பு. காலகெதியில் நட்பு காதலாய் மலர்வு.
என்ன, ஒருதலைக் காதலா? ஆருக்குத் தெரியும்?
கனகம் தனனைக காதலிக்கின்றாள் என்ற நினைப்பு கனகசிங்கத்திற்கு, கனகசிங்கம் தன் நண்பன் சண்முகத்திற்கு தனது காதல் பற்றி தயங்கித் தயங்கி சொல்கின்றான். சண்முகத்திற்கு பெரும் அதிர்ச்சி.
"கனகத்தை நீ காதலிக்கின்றாய் என்ற விசயம் அவளுக்குத் தெரியுமா?" "அது எனக்குத் தெரியாது." "அவளுக்கு நீசொல்லேல்லையா?” “இல்லை.”
"கனக சிங்கண்ணை
|நிமிர்வு நீர்வை பொன்னையண் 431

Page 33
விட்டிடு இந்த விசப் பரீட்சையை." "முடியாது. சண்முகம். என்னாலை கனகத்தை மறக்கவே முடியாது.” "நடக்கக்கூடிய காரியமா உது? "கனகம் உதுக்கு உடன்படுவாளா?” “ஆருக்குத் தெரியும்? "இனித்தான் அவளுக்கு சொல்லப் போறன்.” “நிச்சயமாய் அவள் சம்மதிப்பள்.” உறுதியான நம்பிக்கை. அசட்டுத்துணிச்சல். சொல்லிவிட்டான் கனகத்திற்கு தன் காதல் பற்றி கனகத்திற்கு அதிர்ச்சி. இப்படி நடக்குமென்று கனகம் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சி ஒருபுறம். அச்சம் மறுபுறம் "விட்டிடுங்கோ உந்த விபரீத ஆசையை” நடக்கக் கூடிய காரியமா உது?” "நடந்தேதீரும் கனகம் நிச்சயமாய் நடக்கும்."
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 144

“6 Ili'uu 5uq?”
“கனகம்
இந்த விசயத்திலை நீ உறுதியாய் இருக்கவேணும்." "கல்யாணம் கட்டிறதெண்டால் நான் உன்னைத்தான் கட்டுவன்." இல்லையெண்டால் வாழ்நாள் முழுவதும் நான் பிரமச்சாரிதான்.” “உங்கடை வீட்டார் சம்மதிப்பினையா இதுக்கு? “உங்கடை ஊரார் ஏற்பினையா இதை?" “கனகம், இது எங்கடை சொந்த விடயம். இதிலை தலையிட எவருக்கும் உரிமையில்லை." தயங்கித் தயங்கி கனகம் சம்மதிக்கின்றாள். மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியவருகின்றது இந்த விசயம். கனக சிங்கத்தை அழைத்தது நிர்வாகம், அவனது திருமணம் பற்றி கேட்டது நிர்வாகம்.
உண்மைதான் என்று
|நிமிர்வு நீர்வை பொன்னையன் 145

Page 34
ஒப்புக் கொண்டானவன். "முட்டாள்தனமான செயலிது. விட்டிடு உந்த வீண் முயற்சியை கனகசிங்கம்.” "என்ன நடக்குமெண்டு உனக்குத் தெரியுமா? "நீவிடாட்டி உன்ரை வேலை பறிபோகும். அது மாத்திரமில்லை. இன்னும் கனமாய் நடக்கும் உங்களுக்கு." எச்சரிப்பு. “இது எங்கடை சொந்த விசயம். இதிலை தலையிட உங்களுக்கு உரிமையில்லை." “உது நடக்கக்கூடிய காரியமா?
"ஏன் நடக்காது?" நடத்திக் காட்டிறன் இருந்து பாருங்கோ." “எங்கை பாப்பம் உன்ரை வீம்புத்தனத்தை" "மறந்திடு அவளை." “அதைச் சொல்ல நீங்கள் ஆர்?” “என்ன செய்வியள்?"
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 146

"இருந்து பார் நடக்கிறதை." மீண்டும் எச்சரிப்பு. கனகம்மாவை நிர்வாகம் அழைப்பு. "கனகம்மா மறந்திடு கனகசிங்கத்தை இல்லாவிட்டால் பறிபோகும் உன்ரை வேலை." நிர்வாகம் அச்சுறுத்தல். கனகத்திற்கு திகைப்பு; அச்சம்.
"கனகசிங்கனுக்கு வேலை பறிபோனால் என்னண்டு அவன் கனகத்தை கலியாணம் கட்டுவன்?" கனகசிங்கத்தை வேலையிலிருந்து அகற்றுவதற்கு திட்டமிட்டு சதிசெய்கிறது நிர்வாகம். லினன்றுாமுக்குள் கனகம்மாவை பலாத்காரம் செய்ய கனகசிங்கம் முயன்றான். குற்றச்சாட்டொன்றை சோடித்தது நிர்வாகம். "விசாரணை நடக்கேக்கை
|நிமிர்வு நீர்வை பொன்னையன் 147|

Page 35
எங்களோடை நீஒத்துழைக்க வேணும். ஒத்துழைக்க மறுத்தால் உண்ரை வேலை பறிபோகும்." கனகம்மாவை நிர்வாகம் மிரட்டல்.
கனகமென்ற அபலைப் பெண்ணை துரும்புச் சீட்டாய் பயன்படுத்தியது நிர்வாகம். விசாரணை நடந்தது. கனகசிங்கம் குற்றவாளி. கனகசிங்கத்தின் வேலை பறிப்பு.
மானம் போனது.
saoTagsLib?
என்ரை கனகம்
என்மேல் உயிரையே வைச்சிருந்தவள். ஏனிப்படிச் செய்தாள் அவள்? விசாரணை நடக்கேக்கை ஏன் கனகம் வாயே திறக்கேல்லை? ஏனந்த மெளனம்? இப்பென்ன?
என்ரை
வேலையும் போச்சு
நிமிர்வு நீர்வை பொன்னையன் 148|

மானமும் போச்சு நானும் போறன்.
கனகம் என்ன செய்யப் போறாளோ? நான் என்ன செய்வேன்? எங்கை போவன்?
எங்கடை வீட்டுக்கு எப்பிடிப் போவன்? மானம் போச்சு.
வேலையும் போச்சு. இப்பென்ன செய்ய? ஒண்டுமே தெரியேல்லை. குழப்பமாய்க் கிடக்கு. ஒரே குழம்பம். குழம்பிக் குழம்பி மனது குழம்பி புத்திபேதலித்து சித்தம் கலங்கி பயித்தியமானான் கனகசிங்கம். "ஐயோ பாவம். அட கடவுளே. இவனுக்கேன் இக்கதி?” கனகசிங்கத்தை பார்ப்பவர் பச்சாதாபம். 'என்னால்தானே என் அன்பிற்கினியவனுக்கு ஏற்பட்டுது இக்கதி
நிமிர்வு நீர்வை பொன்னையன் 1491

Page 36
இப்பிடி வருமெண்டு எண்ணியிருக்கேல்லை நான்?
"உன்னால் தானே அப்பாவி கனகசிங்கத்துக்கு இக்கெடுதல் ஏற்பட்டுது” கனகத்தின் சக ஊழியர்கள் கனகத்தை வெறுத்து ஒதுக்கிவைப்பு. தனது வேலையை விட்டு வீட்டோடு அடைந்து கிடக்கின்றாள் கனகம்
காலத்தின் கரைவு. அரசாங்க தாதி வேலை கனகத்திற்கு கிடைப்பு. நீண்ட காலம் கனகம் வெளிமாவட்டங்களில் தாதியாக ஊழியம். கனகசிங்கத்தின் நினைவலை அடிக்கடி அலைக்களிப்பு கனகத்தை. 'எண்டைக்காவது
ஒருநாள் என் அன்பிற்கினியவனை நான் அடைஞ்சே தீருவன்.' உறுதியான நம்பிக்கை கனகத்தின் இதய ஆழத்தில்,
நிமிர்வு நீர்வை பொன்னையன் 50

பிறந்த ஊரை நாடி திரும்பிவருகின்றாள் கனகம். பிறந்த ஊருக்கு போகமுடியவில்லை அவளால். பாழாய்ப் போன யுத்தத்தாலே காணாமல் போனது கனகத்தின் கிராமம். உற்றார் உறவினர் உடன் பிறந்தோர் ஊரார் எல்லாம் எங்கே என்று கனகத்திற்கு தெரியவில்லை. எவரையும் அவளால் பார்க்க முடியவில்லை. அவளது அன்பிற்கினிய கனகசிங்கத்தையும் அவளால் பார்க்க முடியவில்லை. யாழ்ப்பாண பெரியாஸ்பத்திரியும் தொலைந்து விட்டது. சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் கனகத்திற்கு வேலை. ஆயிரக்கணக்கில்
நோயாளர் அங்கே. அவர்களில் கனகசிங்கமும் ஒருவன். கனகம் அவனை
அடையாளம் காண்கின்றாள்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 151

Page 37
அவளுக்கு அதிர்ச்சி அதைத் தொடர்ந்து அளவற்ற ஆனந்தம். கனகசிங்கமும் கனகத்தை தற்செயலாகக் காண்கின்றான். அவனால் நம்பமுடியவில்லை. இது கனவா நினைவா? அல்லது இரண்டும் கலந்த ஒன்றா. அதிர்ந்தவனாய் அவன் தன்னை மறந்தவனாய் கனகத்தை பார்த்ததும் பார்க்காதவனாயிருக்கின்றான். கணப்பொழுதுதான். அவன் சுதாரித்துக் கொள்கின்றான். இக்கோலத்தில் என்னைக் கனகம் பார்த்தால் எவ்வளவு வேதனைப்படுவாள்? தன்னைக் கட்டுப்படுத்துகின்றான் கனகசிங்கம் கனகத்தைப் பார்த்தும் பாராதவனாய் பாசாங்கு. கனகமும் அப்படித்தான். ஒருவரை ஒருவர் தெரியாதவராய் பாவனை. இவர்களின் இதயங்களில் அடங்காத தவிப்பு.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் | 52|

அடிக்கடி கனகம் கனகசிங்கத்தை பார்க்க & வருகின்றாள். கனகசிங்கத்திற்கு மார்புவலி தணிகின்றது. கனகத்தின் அப்பன்
கதிரன் கள்ளுச்சீவ பனையேறி தவறி விழுந்து செத்துப் போனார் என்ற செய்தியை சண்முகம் சொல்கின்றான் கனகத்திற்கு, அதிர்ந்து போனாள் கனகம். கனகம் ஆருமற்ற அனாதையா? சாதிவெறித் தகர்ப்பில் களம் பல கண்ட போராளி கனகசிங்கம் கனகத்தின் கையை
பற்றுகின்றான் உறுதியாய்.
女
! நிமிர்வு நீர்வை பொன்னையன் 153

Page 38
உடைப்பு
“கீரை. கீரே.99 அலைபாய்கின்றது மதுரக்குரலோசை, "கீரை. கீரே." மீண்டும் மதுரக்குரலோசை மூன்றாவது ஒழுங்கையில்.
பழக்கப்பட்ட குரலாய்க்கிடக்கு. 'ஆற்ரை குரலாயிருக்கும்? ஒருவேளை பாப்பாத்தியின்ர குரலாயிருக்குமோ?
சே. அவள் ஏன் இந்தப் பக்கம் வரப் போறாள்?
அவையளுக்கும் எனக்குமிடையிலுள்ள தொடர்பு என்றோ விடுபட்டுப்போச்சே
இனி அவை ஏன் இந்தப் பக்கம் வரப்போகின?
நிமிர்வு நீர்வை பொன்னையன் 154

“கீரை. கிரே. என்ன, எங்கடை வீட்டுக்கு முன்னாலை கேக்குதே. நல்ல பழக்கப்பட்ட குரலாய்க் கிடக்கு. "பாப்பாத்தியின்ரை குரல்தானோ? ஆறுமாதங்களாய் வராதவள் இப்ப வரப்போறாளோ?” "கீரை. கீரே.99 பாப்பாத்தியின்ரை குரல் தான்' 'எதுக்கும் ஒருக்கா நேரை பாப்பம்." கதவைத் திறக்கின்றாள் மாலினி பாப்பாத்தி! மாலினிக்கு அதிர்ச்சி! கள்ளங் கபடமற்ற குழந்தைத்தனமான அதே சிரிப்பு. தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றாள் பாப்பாத்தி, தலையில் கீரைச்சுமை.
“பாப்பாத்தி!” தன்னையறியாமலே கத்துகின்றாள் மாலினி அவளுடைய குரலில் குதூகலம், கண்களில் பேராச்சரியம். ஆனந்தம் தாங்க முடியவில்லை மாலினிக்கு. "பாப்பாத்தி. நீ. நீ." வார்த்தைகளில் தடுமாற்றம். விழிகள் குளமாகின்றன. "நோனாம்மா எங்கடை நோனாம்மா” பாப்பாத்தியின் குரலில் பாசம். "நோனாம்மா இன்னும் நீங்கள் எங்களை மறக்கேல்லையே நோனாம்மா?”
“பாப்பாத்தி என்ன, நான் உங்களை மறக்கவா? நான் அவ்வளவு நன்றிகெட்டவள் எண்டு நீநினைக்கிறியா?”
"இல்லிங்க நோனாம்மா நான் அப்பிடி நினைக்கேல்லை." "அப்போ?"
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 155 !

Page 39
"நாங்க உங்கள எப்பிடி மறக்கேலுங்க? நாங்க அப்பிடி நன்றி கெட்டவங்களா? நீங்க எங்களுக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறீங்க."
"அப்பிடி என்ன பெரிசா நான் உங்களுக்குச் செஞ்சேன்?" “என்ன நோனாம்மா சொல்லுறீங்க? நாங்க கீரைத் தோட்டம் போட உங்கடை நிலத்தை நீங்க எங்களுக்குத் தரேல்லையா?”
"ஆமா. தந்தனான்தான்." "அது பெரிய உதவி தானே? “இது பெரிய உதவியோ? நான் என்ரை நிலத்தை உங்களுக்கு சும்மாவா தந்தன்?" m
"அது வேறை விசயம் நோனாம்மா. நாங்க கீரைத்தோட்டம் போட்டு ஆறுமாதம். ஒரு கரத்தை வாங்கிறதுக்கு நாங்க உங்களிட்டை பணஉதவி கேட்டம். எதுவித பொறுப்புமில்லாமல், வட்டிக்காசுமில்லாமல் மூவாயிரம் ரூபா காசை கடனாய் தந்தீங்க. இது பெரிய உதவியில்லையா? இப்பிடிப்பட்ட உங்களை நாங்க எப்பிடி மறக்கேலுங்க? ஏழேழு சென்மம் எடுத்தாலும் நாங்க உங்களை மறக்க மாட்டமுங்க நோனாம்மா." மாலினிக்கு உள்ளம் புளகிக்கின்றது. "என் வீட்டுக்காரர் கூட உங்களைப் பத்தி அடிக்கடி சொல்லி கவலைப் படுவாங்க .
"அப்ப ஏன் நீங்க என்னைப் பாக்க வரேல்லை? கடசி ஒரு தரமாவது என்னை எட்டிப்பாத்தீங்களா?”
“என்ன செய்யிறது? நேரமில்லீங்க." "அப்பிடியா?” "அது மாத்திரமில்லை நோனாம்மா. நாங்க வந்தா உங்களுக்குத் தான் தொல்லையுங்க. அதுதான் நாங்க வாறேல்லையுங்க."
"நீங்க வராததுதான் எனக்கு பெரிய மனக் கஸ்டம்." "அப்பிடியில்லிங்க. நாங்க வந்தா உங்கடை சொந்தக்காறங்க உங்களுக்குத் தொல்லை கொடுப்பாங்க."
"பாப்பாத்தி. நான் யாரிலையாவது தங்கியிருக்கிறேனா?
! நிமிர்வு நீர்வை பொன்னையன் 156

என்ரை சொந்தக்காறர் எனக்குப்படி அளக்கிறார்களா? நான் என்ரை சொந்தக்கால்லைதான் நிக்கிறன். என்னை ஒருத்தராலும் ஒண்டும் பண்ணேலாது. நீங்க வராததுதான் எனக்குப் பெரிய கவலை பாப்பாத்தி"
"ஐயோ நோனாம்மா. கடவுள் சத்தியமா நாங்க உங்களை மறக்கேல்லை. மறக்க மாட்டமுங்க."
"அப்ப ஏன் நீங்க வரேல்லை? சரி. கீரை விக்க வர வேண்டாம். ஒருக்கா சும்மா வந்து எட்டிப்பாத்திருக்கலாமே."
பாப்பாத்தி மெளனியாய் நிற்கின்றாள். “ஒரு நாளா இரண்டு நாளா? ஆறு மாதங்களாய் நீங்க என்னட்டை வரேல்லை."
"நோனாம்மா. உங்கடை மனத்தாங்கல் எங்களுக்கு நல்லாப் புரியுதுங்க. ஆனா என்ன செய்யிறது? உம்மையிலை எங்களுக்கு நேரமில்லையுங்க."
"அப்பிடி என்ன வேலை?" “வேலை தானுங்க. விடியது விடிய முந்தி கீரை வாங்க பாலத்துறைக்குப் போவாருங்க அவர். திரும்பி ஏழு மணிக்கு வந்தா நாங்க இரண்டு பேரும் பன்னிரண்டு மணிவரை சந்தையிலை கீரை யாவாரமுங்க. பிறகு வீட்டை வந்து சமயல் சாப்பாடு. சாப்பிட்ட கையோடை தோட்ட வேலை."
"என்ன! தோட்ட வேலையா? எங்கை?" மாலினியின் குரலில் ஆச்சரியம். "எங்கை தோட்டம்? என்ன தோட்டம்? மாலினிக்கு அறியஆவல். "நோனாம்மா. உங்க ஒழுங்கைக்குப் பின்னாலை ஏழாவது ஒழுங்கையிருக்கல்லே."
"ஆமா. கிடக்கு." "அதின்ரை தொங்கலிலை ஒரு பள்ளக்காணி கிடந்தது. சரியா உங்கடை காணிபோலதான்."
“அதுக்கென்ன?”
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1371

Page 40
“அந்தப் பள்ளக்காணியிலை தான் நாங்க இப்ப கீரைத் தோட்டம் போட்டிருக்கிறம்"
“என்ன? கீரைத்தோட்டமா!"
நான்கு வருடங்களுக்கு முன் ஒருநாள் காலை பத்து மணியிருக்" .ههه مDLDق&)
"கீரை. ܬܳܐGr...............
மாலினியின் வீட்டுக்கு முன்னால் மதுரக்குரலோசை,
கதவைத் திறந்துகொண்டு மாலினி வெளியே வருகின்றாள்.
கள்ளங் கபடமற்ற குழந்தைத் தனமான சிரிப்பு.
கட்டுக் குலையாத மிடுக்கான உடற்கட்டு.
கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கின்றாள் ஒரு விடலை.
தலையில் கீரைச் சுமை.
"நோனாம்மா, கீரை வேணுங்களா?”
மதுரக்குரல்.
“அறக்கீரை. முளைக்கீரை, செங்கீரை, கங்குங்கீரை, பொன்னாங்காணி, சாறனை, வல்லாரை, அகத்திக்கீரை."
அடுக்கிக்கொண்டே போகின்றாள்.
“கொஞ்சம் பொறு."
“என்னாங்க?"
"உன்ரை பேரென்ன?”
“பாப்பாத்தி”
"அச்சாப்பேர். பாப்பா மாதிரித்தான் பேசிறாய்."
சிரித்துக் கொண்டே கூறுகின்றாள் மாலினி
"நோனாம்மா. நேரம் போகுதுங்க. நீங்க கீரை வாங்கலியா? எல்லாம் புதுக்கீரையுங்க."
"கலியாணமாச்சா?"
"கட்டீட்டங்க. அவர் பேரு வேலு. அவரும் கீரை யாவாரம் தானுங்க
நிமிர்வு நீர்வை பொன்னையன் 1581

“பிள்ளைகள்?" “இரண்டுங்க. நேரம் போட்டுதுங்க." “சரி. ஒரு அறக்கீரைப்புடியைக் குடு.” பாப்பாத்தி தெரிந்தெடுத்து ஒரு பிடி அறக்கீரை கொடுக்கின்றாள். "இந்தக் கீரை பிஞ்சுக்கீரைங்க. பட்டர் மாதிரி. சமைச்சுத் திண்டுபாருங்க”
"சரி. சரி. பாப்பாத்தி நீ ஒவ்வொரு நாளும் எனக்குக் கீரை கொண்டு வந்து தருவியா?”
ஆமாங்க. நான் ஒவ்வொரு நாளும் நோனாம்மாக்கு கீரை கொண்ணாந்து தருவேனுங்க."
கூறிவிட்டு, ஒரே மூச்சில் கீரைச் சுமையை லாவகமாய் தூக்கித் தலையில் வைக்கின்றாள் பாப்பாத்தி
மாலினிக்கு ஆச்சரியம். தலையில் கீரைச் சுமையுடன், கையை வீசி ஒய்யாரமாய் நடைபோட்டுச் செல்கின்றாள் பாப்பாத்தி.
இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தும் இன்னும் கட்டுக் குலையாத உடல்வாகு இவளுக்கு.
சென்று கொண்டிருக்கும் பாப்பாத்தியைப் பார்த்து ரசித்த படியே நிற்கின்றாள் மாலினி
வேலு சந்தையில் கீரை யாவாரம். பாப்பாத்தி தினமும் மாலினி வசிக்கின்ற ஒழுங்கைக்கு கீரை கொண்டுவருவாள்.
வேலுவும் இடைக்கிடை அங்கு கீரை கொண்டு வருவான். மாலினியின் வீட்டிற்கு முன்னால் ஒரு விசாலமான வெற்றுக் காணி இருப்பதை பாப்பாத்தி அவதானிக்கின்றாள்.
“என்னாங்க, அந்த மாலினி நோனாவின் வீட்டுக்கு முன்னாலை ஒரு வெற்றுக்காணி தேடுவாரற்றுக் கிடக்குதுங்க."
“நானும் அதைப் பாத்தனான் தான். அதுக்கென்ன?” “ஏனுங்க, தோட்டம் போட அந்தக் காணியைக் கேட்டுப் பாப்பமே?”
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 159|

Page 41
"அவுங்க தருவாங்களா?”
“ஒருக்கா கேட்டுத்தான் பாப்பமே”
அடுத்த நாள் மாலை பாப்பாத்தியும் வேலுவும் மாலினி வீட்டுக்குச் செல்கின்றனர்.
அவர்களைக் கண்டதும் மாலினிக்கு வியப்பு.
“என்ன இந்த நேரம் வந்திருக்கிறியள்?" அதுவும் சோடி போட்டு”
மாலினி சிரித்த படியே கேட்கின்றாள்.
"நோனாம்மா. இந்த வெற்று நிலத்துக்கு சொந்தக்காரர் யாருங்க?"
பாப்பத்தி ஆவலுடன் கேட்கின்றாள்.
“இது எங்கடை நிலந்தான். இதாலை எங்களுக்குப் பெரிய தொல்லை."
“ஏனுங்க?"
“சரியான நுளம்புத் தொல்லை. மாரிகாலத்திலை இதுக்கை தண்ணி தேங்கி நிக்கும். இதாலை சேறும் சகதியும். ஒரே நாற்றம். அதோடை நுளம்பு பெருகி இராப்பகலாய் கடிதான்."
"நோனாம்மாக்கு விருப்பமெண்டால்.8y)
தயங்குகின்றாள் பாப்பாத்தி
“என்ன, என்ன? நீங்க அந்தக் காணியை வாங்கப் போறியளா?"
கேலியாகக் கேட்கின்றாள் மாலினி
"ஐயோ நோனாம்மா. அதுக்கு எங்களிட்டை காசெங்காலை? நாங்கள் அன்றாடம் காச்சியள்."
"அப்பென்ன?”
“இந்த நிலத்திலை நாங்கள் கீரைத்தோட்டம் போட்டால்.”
“பாப்பாத்தி. உங்களுக்கென்ன பயித்தியமே? இது சரியான பள்ள நிலம். மாரி காலத்திலை வெள்ளம் தேங்கி நிக்கும். கோடை காலத்திலை ஒரு சொட்டுத் தண்ணிகூடக்கிடையாது. நிலம் காஞ்சு வெடிச்சுப் போய்க்கிடக்கும்.”
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 160

“அதாலை பாதகமில்லை நோனாம்மா. நீங்க சரியெண்டால் மிச்சத்தை நாங்க பார்த்துக் கொள்கிறமுங்க."
வேலு கூறுகின்றான்.
"உது வீண் முயற்சி வேலு."
"அதில்லை நோனாம்மா. நாங்க ஒருக்கா முயற்சித்துப் பாப்பமுங்க."
“சரியப்பா, உங்கடை ஆசையை நான் ஏன் கெடுப்பான். நீங்க செய்யிறதைச் செய்யுங்க. லாப நட்டமெல்லாம் உங்களோடைதான். நீங்க பட்டபாடு."
பாப்பாத்திக்கு ஆனந்தம்.
வியப்பில் அவள் விழிகள் விரிகின்றன.
"நோனாம்மா. ஒரு விசயம். “என்ன வேலு ஏதாவது காசுகீசு? வேலு நீ என்னட்டை ஒரு சதமும் கேக்கக் குடாது. கேட்டாலும் நான் தரமாட்டன். காசை உதுக்கை போட்டு வீணா நாசமாக்கிறது தான் மிச்சம். உப்பிடியெண்டால் நீங்க நிலத்தைப் பற்றி கதைக்கக்குடாது. நீங்க உங்கடை பாட்டைப் பாருங்கோ."
வீட்டுக்குள் செல்ல முனைகின்றாள் மாலினி. "நோனாம்மா, நோனாம்மா. நில்லுங்கோ. சத்தியமா நாங்க உங்களிடமிருந்து ஒரு சல்லிக்காசு கூட கேக்கமாட்டம், நாங்க சொல்லிறதை ஒருக்கா கேளுங்கோ. நோனாம்மா."
“என்ன சொல்லப்போlங்க. சொல்லுங்கோ." திரும்பி நின்று அவர்களைப் பார்க்கின்றாள். “உங்கடை நிலத்துக்கு குத்தகைக்காசு எவ்வளவு எண்டு நீங்கள் சொன்னால் .”
ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்க்கின்றாள் மாலினி. "குத்தகைக் காசு தரப்போகினையாம். குத்தகைக்காசு. எந்த பாங்கிலை காசு போட்டு வைச்சிருக்கிறீங்க. எவ்வளவு தொகை கிடக்கு? போங்கோ பயித்தியங்களா. போய் உங்கடை வேலையைப் பாருங்கோ. எப்ப வேலை துவங்கப்போறியள்? அப்ப என்னையும்
நிமிர்வு நீர்வை பொன்னையன் 161

Page 42
உங்களோடை சேத்துக்கொள்ளுங்கோ."
அவர்களை அன்புடன் நோக்கி சிரித்துக்கொண்டு கூறுகின்றாள் மாலினி.
"நோனாம்மா. அப்ப ஒரு கண்டிசனுங்க"பாப்பாத்தி “என்ன கண்டிசன் பாப்பாத்தி?” "குத்தகைதான் வேண்டாமெண்டிட்டீங்க. போகட்டும். நாங்க சொல்லிறதை நீங்க கேக்க வேணுங்க, அப்பதான் நாங்க உங்க நிலத்திலை தோட்டம் போடுவம்.”
"நான் என்ன செய்ய வேணும்?" "நாங்க தோட்டம் போட்டபிறகு, ஒவ்வொரு நாளும் சந்தைக்கு கொண்டு போக கீரை வெட்டுவம். அந்த வேளையிலை, உங்களுக்கு தேவைப்படுகிற, நீங்க விரும்புகிற கீரைப்புடியை நீங்க எடுக்க வேணுமுங்க. அதுக்கு நாங்க காசு எடுக்க மாட்டமுங்க."
பாப்பாத்தி வற்புறுத்திக் கூறுகின்றாள். “இந்தக் கண்டிசனை நீங்க ஏத்துக்கணுமுங்க. அப்பிடியெண்டால் தான் நாங்க உங்கடை காணியிலை தோட்டம் போடுவோமுங்க."
மாலினியின் நெஞ்சு பொருமுகின்றது. கண்கள் பனிக்கின்றன. “இவங்க சரியான அப்பாவியளாயிருக்கிறாங்களே. இதுகளைப் போல பேராசையில்லாத மனிசரைக் காணேலாது. இவையின்ரை மனதைப் புண்படுத்தக்கூடாது.”
“பாப்பாத்தி, உங்கடை ஆசையை நான் ஏன் கெடுப்பான். நீங்க சொல்லுறபடி நான் செய்யிறன். இல்லையெண்டால் நீங்கள் என்னை விடப்போறியளா?”
பாப்பாத்தியாக்களுக்கு ஆனந்தம் தாங்கமுடியவில்லை. அவர்கள் மாலினியை மனமார வாழ்த்தி விட்டு விடைபெறுகின்றனர்.
அடுத்த நாள் பின்னேரம் இரண்டு மணியளவில் மாலினியின் வெற்று நிலத்திற்கு பாப்பாத்தியும் வேலுவும் வருகின்றனர்.
தரிசு நிலத்தில் அவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்கின்றனர்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் | 62|

வேலு அசுரத்தனத்துடன் வேலை செய்கின்றான். உழைப்பால் உரமேறிய உடல், விரிந்து பரந்த மார்பு. முறுகித் திரண்ட புயங்கள்.
மாலினிவேலுவின் உடற்கட்டைப் பார்த்து வியக்கின்றாள். அவனது மண்வெட்டி நிலத்தை வெட்டிப் பிழக்கின்றது. மண்ணைக் கடகத்திற்குள் நிரப்புகின்றான் அவன்.
பாப்பாத்திவேலு வெட்டிய மண்ணைச்சுமந்து செல்கின்றாள். வேலுவின் சுறுசுறுப்புக்கு பாப்பாத்திஈடுகொடுக்கும் வகையில் சளைக்காது வேலை செய்துகொண்டிருக்கின்றாள். W
சிறிது நேரத்தின் பின் பாப்பாத்தி மண்வெட்டுகின்றாள். வேலு அந்த மண்ணைச் சுமந்து செல்கின்றான்.
தினமும் மத்தியானச் சாப்பாட்டின் பின், இருட்டும் வரை அவர்கள் வேலை செய்கின்றனர்.
அந்தப் பள்ளநிலத்திற்குள் வெளியேயிருந்து வெள்ளம் வருவதைத் தடுக்க வேண்டும். முதலில் அந்தப்பள்ளநிலத்தைச் சுற்றி உயரமான வரம்பு கட்டுகின்றனர்.
அதன் பின் கீரைப் பயிர்களுக்கு தண்ணிர் பாய்ச்சுவதற்கு மடு ஒன்று வெட்டுகின்றனர்.
மூன்று மாதங்களுக்குள் கீரைத் தோட்டம் போட்டாகிவிட்டது. அந்தத் தோட்டத்தில் பலவித கீரைகளைப் பயிரிட்டனர். அறக்கீரை, முளைக்கீரை, புளிக்கீரை, செங்கீரை, கங்குன் கீரை, சாறணை, அகத்தி, வல்லாரை போன்ற பலவிதக் கீரைகளைப் பயிரிட்டிருந்தனர்.
தினமும் மாலினி காலையில் எழுந்து, தன் வீட்டிற்கு முன்னாலுள்ள கீரைத்தோட்டத்தைப் பார்த்தப்படியே நிற்பாள்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரகதக் கம்பளம் விரித்தாற்” போல் கீரைத்தோட்டம் காட்சியளிக்கும்.
இக்காட்சியை மாலினிரசித்தபடியே மெய்மறந்து நிற்பாள். இதற்குக் கால்கோளாகவிருந்த பாப்பாத்தியையும் வேலுவையும் மனதிற்குள் போற்றிப்பாராட்டினாள்.
நிமிர்வு நீர்வை பொன்னையன் 163|

Page 43
தங்களது தோட்டத்தில் முதல் முதலாக வெட்டிய கீரையில் முதல் பிடியைப் பாப்பாத்தி இரண்டு கைகளாலும் மாலினிக்கு பெளவியமாகக் கொடுக்கின்றாள்.
மாலினிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பாப்பாத்தியாக்களை இதயபூர்வமாகப் பாராட்டி வாழ்த்துகின்றாள்.
வேலுவாக்களுக்குப் பெருமிதம். “கீரை. கீரே.99 பாப்பாத்தியின் மதுரக் குரலோசை தினசரி காலை பத்துமணி. யளவில் அந்த ஒழுங்கையில் அலைபாயும்.
திடீரென அவர்களதும் குரலோசை அப்பிரதேசத்தில் ஒலிக்கவில்லை.
ஆறு மாதங்களுக்கு மேலாக பாப்பாத்தியாக்களின் குரலோசை அங்கு ஒலிக்கவில்லை.
ஏழாவது ஒழுங்கையிலுள்ள தங்களது புதுத்தோட்டத்தில் இன்று தான் முதல் முதலாக அவர்கள் கீரை வெட்டியுள்ளார்கள்.
“எங்கடை புதுத்தோட்டத்திலை இண்டைக்குத்தான் நாங்கள் முதல்முதலாய் கீரை வெட்டினனாங்கள். அதிலை முதல் புடியை எங்கடை மாலினி நோனாவுக்குக் குடுக்க வந்திருக்கிறமுங்க."
மாலினி திகைத்தவளாய் அவர்களைப் பார்த்தபடியே நிற்கின்றாள்.
பாப்பாத்தியாக்களுக்கு நான் பெரிய கெடுதலைச் செய்தன். அப்பிடியிருந்தும் அதுகள் என்னை வெறுக்கேல்லை. மறக்கேல்லை, தங்கடை புதுத்தோட்டத்திலை வெட்டின முதல் புடிகீரையை எனக்குத்தர, என்னைத் தேடி வந்திருக்குதுங்கள். இவைக்கு எவ்வளவு பெரிய மனசு.
மாலினியின் இதயம் விம்முகின்றது. கண்கள் பனிக்கின்றன. “நோனாம்மா என்ன பாத்துக்கொண்டு நிக்கிறீங்க? எங்க" ளிட்டை கீரை வாங்க உங்களுக்கு விருப்பமில்லையா?”
கவலையுடன் கேட்கின்றாள் பாப்பாத்தி
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 164|

“எங்களிட்டை கீரை வாங்க உங்களுக்கு விருப்பமில்லாட்டிச் சொல்லுங்கோ. நாங்கள் இனிமேல் இந்தப்பக்கம் வரேல்லை."
வேலுவின் குரலில் வேதனை. “உங்களுக்கு நான் எவ்வளவு பெரிய கெடுதலைச் செய்திருக்கிறன். அப்பிடியிருந்தும் நீங்கள் என்னைத் தேடி முதல் புடி கீரை தர வந்திருக்கிறியள். உங்களுக்கு எவ்வளவு பெரியமனசு?”
வெட்கம் கலந்த வேதனையுடன் கூறுகின்றாள் மாலினி. "இல்லிங்க நோனா, நாங்க அப்பிடி நினைகேல்லையுங்க." "இல்லை வேலு. உங்களிட்டையிருந்த கீரைத்தோட்டத்தை நான் அநியாயமாய் பறிச்சன். நீங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு அந்ததோட்டத்தை உண்டாக்கினியள். அதை நான் என்ரை கண்ணாலை பாத்திருக்கிறன். அப்பிடியிருந்தும் நான் மிலேச்சத்தன. மாய் உங்களிட்டையிருந்து பறிச்சன். அதாலை நீங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பீங்கள்?அப்பிடியிருந்தும் எல்லாத்தையும் மறந்து நீங்கள் என்னைத்தேடிவந்திருக்கிறியள். உங்களுக்கு எவ்வளவு நல்ல шо60тgr?”
மாலினி உணர்ச்சிவயப்பட்டுக் கூறுகின்றாள்" "நோனாம்மா நீங்களாய் எங்களுக்கு வேண்டுமெண்டு கெடுதல் செய்யேல்லையுங்க.
"அப்ப ஆர் செய்தது?" "பாவம் நீங்க, உங்களாலை தனிய என்ன செய்யேலும்? அவை எல்லாரும் ஒண்டாய் நிண்டினை அதாலை தான் நீங்க அப்பிடிச் செய்தீங்க நோனாம்மா."
“என்ன பயித்தியக்கதை பேசினாய்? உங்கடை தோட்டத்தை நான் தானே மறிச்சன்." ««y*
“நோனாம்மா. நீங்களாய் மறிக்கேல்லை உங்கடை சொந்தக்காரர்தான் இதுக்குக் காரணம்.”
"நீ என்ன சொல்கிறாய் வேலு? எனக்கொண்டும் விளங்கேல்லை."
“நோனாம்மா. நீங்க தனியன். உங்கடை தம்மசேனாதான் காரணம். தம்மே உங்கடை சொந்தக்காறர் எல்லாரையும்
|நிமிர்வு நீர்வை பொன்னையன் | 65|

Page 44
ஒண்டுசேத்து உங்களுக்கு கடும் நெருக்கடி குடுத்தாங்க. உங்களாலை தனிய ஒண்டும் செய்யேலாமல் போச்சுதுங்க. அவங்கடை நிற்பந்தத்தாலை தான் நீங்க கீரைத்தோட்டத்தை மறிச்சீங்க."
மாலினி திகைத்தவளாய்பாப்பாத்தியாக்களைப் பாத்த படியே நிற்கின்றாள்.
"நோனாம்மா. எங்களுக்கு எல்லாம் தெரியுமுங்க." "என்ன தெரியும்?" “வேலுவும் பாப்பாத்தியும் தமிழர். இந்தியாக்காறர். அதுவும் தோட்டக்காட்டாங்கள்."
"அதுக்கென்ன?” "இந்தத் தோட்டக்காட்டான் எங்கடை நிலத்திலை கீரைத் தோட்டம் போட்டிருக்கிறான். எங்கடை நிலத்திலை உண்டாகின்ற கீரையை எங்களுக்கே வித்து எங்கடை காசைச் சூறையாடிக் கொண்டிருக்கிறான். தோட்டக்காட்டான் வேலு. பட்டப் பகலிலை எங்களைக் கொள்ளையடிக்கிறான். நாங்கள் எல்லோரும் ஏமாளியளாய்ச் சும்மா பாத்துக்கொண்டிருக்கிறம்."
"நான் அப்பிடிச்சொல்லேல்லையே." "நீங்க சொல்லேல்லை நோனாம்மா. உங்கடை சொந்தக்காறன் தம்மே தான் அப்பிடிச் சொன்னான். இப்பிடி அவன் உங்கடை சொந்தாக்காரர் எல்லோருக்கும் சொல்லி அவையளை எங்களுக்கு எதிராய் தூண்டிவிட்டான். அவை எல்லாரும் ஒண்டாய்ச் சேந்து உங்களுக்குக் கடுமையான நெருக்கடி குடுத்தினை. அதாலை தான் நீங்கள் தோட்டத்தை மறிச்சியள். இது எங்களுக்கு நல்லாய் தெரியுமுங்க. உங்களிலை தப்பில்லை நோனாம்மா.
"கடசியா என்ன நடந்தது? உங்களிட்டையிருந்துகீரைத் தோட் டத்தை பறிச்சு தம்மேயிட்டைக் குடுத்தன்."
“இது நீங்க தனிய எடுத்த முடிவில்லை நோனா. இது தம்மேயும் உங்கடை சொந்தக்காறரும் எடுத்த முடிவு. இது எங்களுக்கு நல்" லாய்த் தெரியும் நோனாம்மா."
"நீங்க கஸ்ட்டப்பட்டு உண்டாக்கின கீரையை தம்மே வெட்டி வித்து நல்லாய்க் குடிச்சுத் திரிஞ்சான். கீரை வெட்டி முடிஞ்ச பிறகு
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 66

அவன் இந்தப்பக்கம் தலைகாட்டவேயில்லை. ஒரு நாளாவது அவன் என்னை எட்டிக்கூடப்பாக்கேல்லை. நீங்க கஸ்டப்பட்டு உண்டாக்" கின தோட்டத்தை தம்மே பாழாக்கி அழிச்சதுதான் மிச்சம்."
"நோனாம்மா. தம்மே கீரையாவராம் செய்யிறதுக்கு அந்தத் தோட்டத்தை எங்களிட்டையிருந்து பறிச்செடுக்கேல்லை."
"அப்ப எதுக்கு அந்தத் தோட்டத்தை எடுத்தான் பாப்பாத்தி?” "எங்கடை குடும்பத்திலை வஞ்சம் தீக்க. எங்களைப் பழிவாங்கத்தான் அவன் அப்பிடிச்செய்தான் நோனாம்மா."
“எனக்கொண்டும் புரியேல்லையே பாப்பாத்தி" நீங்க கீரைத் தோட்டத்தை பறிக்கிறதுக்கு ஒரு மாதத்துக்கு முந்தி தம்மே தலையிலை பெரிய கட்டுப் போட்டிருந்தான் நினைவிருக்கா நோனாம்மா?"
"ஒமோம். ஞாபகமிருக்கு வேலு." "அதோடை அவன் கையிலும் காலிலும் "பத்து" போட்டுக் கொண்டு நொண்டி நொண்டி நடந்து திரிஞ்சான்."
"அது, அவன் சைக்கிளாலை விழுந்து காயப்பட்டது எண்டு சொன்னானோ.”
"இல்லை நோனாம்மா. அது என்ரை பாப்பாத்தி அவனுக்குக் குடுத்த சன்மானம்.”
கண்களில் கோபக் கனல் தெறிக்கக் கூறினான் வேலு. "தம்மையாலை அந்தக் கீரைத்தோட்டத்தைத் தான் என்னட்டையிருந்து பறிக்க முடிஞ்சுது. ஆனா அவன் நினைச்சது நடக்கேல்லையே."
மாலினிவேலுவை கேள்விக்குறியுடன் பார்க்கின்றாள். "நோனாம்மா. என்ரை பெண்டாட்டி பாப்பாத்தியை என்னட் டையிருந்து தம்மையாலை பறிக்க முடியேல்லை."
“பாப்பாத்தி எண்டைக்கும் என்னுடையவள் தான்."
大
நிமிர்வு நீர்வை பொன்னையன் 674

Page 45
வீழ்ச்சி
“லிங்கனை நான் உடனே சந்திக்கவேணும்.”
அச்சம் கலந்த பதட்டம் தலைவரின் குரலில்,
“தெரிவுக் குழு நாளைக்கு மட்றாஸ் பயணம். லிங்கனும் அதிலை இருக்கிறான். அவனை நான் உடனை பாக்கவேணும்."
"கொழும்பிலை அவன் எங்கை தங்கியிருக்கிறான்? அந்த அட்றஸ் உனக்குத் தெரியுமா பாலா?”
தலைவரின் கேள்வியில் ஆவல், கோபத் தொனி
என்ன"அவன்","இவனெ"ண்டு சொல்லு றார் தலைவர்? ஏதாவது ஏறுமாறாய் நடந்" திட்டுதோ?
'நேற்றுப் பின்னேரம் தானே அவை இரண்டு பேரும் நெருக்கமாய், அன்னி
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 168|

யோன்யமாய் பேசிக்கொண்டு வெளியாலை வந்தினை. பிறகு அவை தலைவற்ரை ஆடம்பரக்காரிலை போச்சினை. அவை ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு தண்ணி யடிக்கத்தான் போயிருப்பினை. ஆனா இண்டைக்கு?
அவைக்கிடையிலை ஏதாவது பிணக்கு ஏற்பட்டுதோ? 'அதெப்பிடி? அவை இரண்டு பேரும் சரியான ஒட்டு? 'அதுமாத்திரமில்லை. 'லிங்கம் அமைச்சற்ரை ஆளாச்சே." நாகலிங்கத்தின் நண்பன் அருமைநாயகம். லிங்கத்தின் தற்போதைய இந்தப் பதவி தனக்கு வருமெண்டு நம்பியிருந்தார் அருமைநாயகம். ஆனா அமைச்சரின் பார்வை லிங்கம் பக்கம் சாய்ந்தது. லிங்கம் பணிப்பாளர் சபை உறுப்பினரானார்.
'நேற்று தலைவரும்லிேங்கமும் கூட்டம் முடிஞ்சு வெளியாலை வந்தினை. லிங்கத்தின் முகத்தில் ஆனந்தப்பூரிப்பு. அதுக்கிடையிலை இவை இரண்டு பேருக்குமிடையில் என்ன நடந்துபோச்சு?
பாலசிங்கத்திற்கு ஒரே குழப்பம். "அந்தக் கேடு கெட்டவன் எங்கை தங்கியிருக்கின்றான் பாலா? நான் அவனை உடனை பார்க்க வேணும் பாலா?”
“எனக்குத் தெரியாது சேர்." "நீங்கள் இரண்டு பேரும் நெருக்கமான ஒட்டெண்டு லிங்கன் இஞ்சை வந்து முதல் நாளே எனக்குச் சொன்னான்." "அது முப்பது வரியத்துக்கு முந்தின கதை." "நானும் லிங்கனும் மாணவர்களாயிருந்த காலம். அந்த நாளையிலை நாங்கள் இரண்டு பேரும் இணைபிரியாத் தோழர்கள்." “அந்த நாளையிலை நாங்கள் இரண்டுபேரும் கொடி புடிச்சு, கோஷம் போட்டுக்கொண்டு ஊர்வலங்களிலை ஆவேசத்தோடை முன்னணியில் சென்றுகொண்டிருப்பம். ஆனா இப்ப அவன் ஆரோ. நான் ஆரோ. என்ரை பாதைவேறை. அவன்ரை பாதை வேறை"
“இப்ப அவன் யானைச் சவாரி"
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1691

Page 46
"சரி பாலா, இப்ப நான் அவனை அவசரமாய்ப் பார்க்க வேணும். அவனை என்னண்டு கண்டுபிடிக்கிறது?"
“சேர். கொச்சிக்கடைப் பக்கத்திலை தான் அவன் ரை நெருங்கின நண்பன் நடராசன் இருக்கிறான். அவனோடைதான் லிங்கம் தங்கிறவன் எண்டு கேள்வி. ஆனா அந்த இடம் எனக்கு தெரியாது."
"பாலா. இப்ப பன்னிரண்டு மணி மூண்டு மணிக்கு முன்னம் எப்பிடியும் அவனைக்கண்டுபிடிச்சிட வேணும்."
சேர். லிங்கம் இப்ப கொச்சிக்கடைப் பக்கத்திலையுள்ள ஏதாவது ஒரு "சாராய பாறிலை" தான் இருப்பன்."
"வெயிற்ரர். இன்னுமொரு "கல்" டபிள் கொண்டா." லிங்கத்தின் முன்னிருந்த வெற்று கிளாஸ்கள் இரண்டையும் எடுத்துச் செல்கிறான் வெயிட்ரர்.
நாளைக்கு பகல் இரண்டு மணிக்கு நான் பிளேனிலை. என்னோடை இன்னும் இரண்டு பேர்.' அதுகள் மரக்கறியள். அதுகள் இரண்டுக்கும் ஒரு “டபிள் பெட்றுாம். 'எனக்கு சிங்கிள் பெட்றுாம்.' ஒரு ஸ்ரார் ஹோட்டலிலை இரண்டு றுாம்கள் புக்பண்ணச் சொல்லியிருக்கிறன்.
நாங்கள் ஐஞ்சு நாட்கள் தங்கல். ஒரு நாளைக்கு மூன்று உருப்படியள் பார்ப்பு. ஐஞ்சு நாளை" யிலும் பதினைஞ்சு உருப்படியள். பத்து உருப்படியள் தான் தெரிவு. ஒரு உருப்படிக்கு குறஞ்சது இருபத்தையாயிரம் கொமிசன். பத்து உருப்படிக்கும் இரண்டரை லட்சம். ஒரு வரியத்திலை நாலு தடவை பயணம். குறஞ்சது ஆறு தேறும். இதிலை தலைவருக்கு அரைவாசி"
நண்பன் சங்கருக்கு பத்து.' ஐஞ்சு நாளும் இரவிலை என்னோடை தங்கிறதுக்கு ஒரு மொட்டு ஏற்பாடு செய்திருக்கிறதாய் சங்கர் சொன்னான்."
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 170 |

"அத்த மொட்டுக்கு ஒரு ஐஞ்சு.
"வெயிற்ரர். இன்னுமொரு "கல் டபிள்" மூண்டு திறிறோஸ்சும் கொண்டா."
ஒ. மறந்து போனன். நான் போகேக்கை சங்கருக்கு “மென்டிஸ் ஸ்பெசல்" இரண்டு போத்தில். எனக்கு ஐஞ்சு நாளைக்கும் "கல்” போத்தில் நாலு மற்றதுகள் எனக்கு வேலை செய்யாது, பொச்சம் தீராது.
போகேக்கை நாங்கள் மூண்டுபேரும் ஆளுக்கு இரண்டு போத்தில்கள் கொண்டு போகலாம். சுங்கத் தீர்வையில்லை.
“எனக்கு ஒரு திறிறோசஸ் பண்டிள், சங்கருக்கு ஒரு பிறிஸ்டல் பண்டிள்."
மற்றாசிலையிருந்து நாங்கள் திரும்பிவரேக்கை, அந்த இரண்டு மரக்கறியளுக்கும், ஆளுக்குப் பத்தாயிரம் ரூபா பெறுமதியான காஞ்சிபுரம் சாறியள் வாங்கிக் கொடுத்தா சரி.
நான்தானே உருப்படியள் கொள்வனவும் பேரப் பேச்சு. மற்ற இரண்டு பேரும் டம்மியள் தான்."
"வெயிற்ரர். இன்னுமொரு “கல் டபிள்"
"லிங்கம்!”
'கருணறட்னாவின்ரை குரல் போல கிடக்கு.
அந்தாள் இந்தப் பக்கம் ஏன் வரப்போகுது?
"லிங்கம்"
மீண்டும் குரலொலி.
திரும்பிப் பார்க்கிறான்.
பணிப்பாளர் சபை செயலாளர் கருணரட்ணா!
அவருடன் இன்னும் இரண்டு பேர்.
“கரு. வாங்கோ. இருங்கோ."
"இல்லை, நாங்கள் உடனை போவேணும்."
“தலைவர் உங்களைக் கையோடை கூட்டிக்கொண்டு வரச் சொன்னார்.”
நிமிர்வு நீர்வை பொன்னையன் 171|

Page 47
"சரி. நான் வாறன். இப்பிடி இருங்கோ. முதலிலை இரண்டு சொட் அடியுங்கோ. போவம்.”
“வேண்டாம் லிங்கம். நாங்கள் அவசரமாய்ப் போவேணும். உன்னைக் கூட்டிக்கொண்டு போகத்தான் வந்தனாங்கள். எழும்" புங்கோ போவம்.”
"நான் வாறனெண்டுதானே சொல்லிறன். முதலிலை இரண்டு சொட் அடியுங்கோ. பிறகு எல்லாரும் போவம்.”
“வெயிற்ரர் மூண்டு டபிள் பொல். டபிள் கல் ஒண்டு." “வேண்டாம் லிங்கம். அவசரமாய் போய்த்திர வேணும்." கருணாறட்ணா லிங்கத்தின் கையைப் பிடிக்கின்றார். “கையை விடுங்கோ. நான் வாறன். கணக்குத் தீர்க்கவேணும்." "வெயிற்ரர். பில் எவ்வளவு?” பில் கொடுக்கின்றான் வெயிற்ரர். காசைக் கொடுக்கின்றான். “மிச்சத்தை நீவைச்சுக்கொள்” லிங்கம் எழுகின்றான். “என்ன மனிசர் நீங்கள். நீங்களும் குடிக்கமாட்டியள். என்னையும் அரைகுறையிலை எழுப்பிறியள். சரிவாங்கோ போவம்."
"லிங்கம். உங்கடை பாஸ்போட், விமானப் பயணச்சீட்டு, “ரவலேர்ஸ் செக்" மூண்டையும் கையோடை கொண்டுவரச் சொன்னார் தலைவர். அதுகள் உங்கை கிடக்கே?"
"660Intlb?" "ரவலேர்ஸ் செக்கிலை பதினையாயிரம் ரூபா தான் கிடக்காம், அது போதாதாம். இன்னும் ஐயாயிரம் கூட்டிப் போட வேணுமாம்." “அதுகள் மூண்டும் இஞ்சை என்ரை "அற்றாச் கேசுக்கை' கிடக்கு."
அலுவலகம். நால்வரும் வாகனத்திலிருந்து இறங்குகின்றனர். அலுவலக மேல்மாடி
மேல்மாடியில் றோட்டைப் பார்க்கும் ஜன்னல்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 172

ஜன்னலோரம் பாலசிங்கம். பாலசிங்கத்தை தற்செயலாகப் பார்க்கின்றார் நாகலிங்கம். பாலாவுக்கு மேல்மட்டத்திலிருந்து அடிமட்ட ஊழியர் வரை நல்ல மதிப்பு.
'பாலா நேர்மையானவன். அன்றிலிருந்து இன்றுவரை ஒரே நிலைப்பாடு.
'அவன் தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். நான்? பணிப்பாளர் சபைக் கூட்ட மண்டபம். மேசையைச் சுற்றி பணிப்பாளர் சபை உறுப்பினர்கள். பதினைந்து பேர் பணிப்பாளர்கள். மூன்று பெண் உறுப்பினர் உட்பட பதினொரு பேர் பிரசன்னம்.
பாலாவிற்கு ஆச்சரியம். நேற்றுத்தானே கூட்டம் நடந்தது. ஆனா இண்டைக்கு? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. "குட்மோனிங் சேர்." ஐம்புலன்களையும் அடக்கி, பயபக்தியுடன் தெய்வத்தின் முன் நிற்கும் பக்தனாய் தலைவருக்கு முன் நிற்கின்றான் லிங்கம்.
“வா லிங்கம் வா." அசட்டுச் சிரிப்புடன் லிங்கனை வரவேற்கின்றார் தலைவர். “என்ன ஆச்சரியமாயிருக்கா?” "அவசர கூட்டம்" தெரிவுக்குழுவின் மற்றாஸ் பயணம் பற்றிய கூட்டம். "அதுதான் நேற்றுத்தான் கூட்டம் நடந்துதே. அதில் மற்றாஸ் பயணம் பற்றி முடிவெடுத்தாச்சே."
“சரி. அதிருக்கட்டும் லிங்கம். உன்ரைபாஸ்போட் விமானப் பயணச் சீட்டு, ரவலேர்ஸ் செக் எல்லாம் கொண்டு வந்தியா? எடு
அதுகளை."
மூன்றையும் தலைவரிடம் கொடுக்கின்றார் லிங்கம்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 173

Page 48
பாஸ்போட்டை மாத்திரம் அவனிடம் திருப்பிக் கொடுக்கின்றார் தலைவர்.
"உனக்கு அருமைநாயகத்தைத் தெரியுமா?" “ஓம் சேர். அவர் என்ரை நெருங்கிய நண்பர்." "நீமாணவனாய் இருக்கேக்கை ஒரு மே தினக் கூட்டத்திலை, எங்கடை அதி உத்தமரை படுமோசமாய்த் தாக்கி, கேவலமாய்ப் பேசியிருக்கிறாய். இல்லையா?”
கோபத்துடன் தலைவர் லிங்கனைப் பார்த்துக் கேட்கின்றார். “இல்லை சேர். நான் பேசேல்லை." "அந்தப் பேச்சு ஒரு பத்திரிகையில் வந்திருக்கு. அது வந்த பத்திரிகை நறுக்கையும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பையும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியிருக்கிறார் உன்ரை நண்பன் அருமைநாயகம். இப்பென்ன சொல்லிறாய்?"
பிரமித்தவனாய் நிற்கின்றான் லிங்கம். “நாளைக்கு திட்டமிட்டபடி தெரிவுக்குழு மட்றாஸ் பயணம். "அப்ப நான்?" "உன்ரை மற்றாஸ் பயணம் கான்சல்” “பணிப்பாளர் சபைத் தீர்மானம். மலைத்தவனாய் நிற்கின்றான் லிங்கம். “இன்றிலிருந்து பணிப்பாளர் சபையில் நீஇல்லை."
女
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 174

இளமையின் வெற்றி மக்கள் மகிழ்ச்சி. கல்லூரி மைதானம் இசை விழாக்
கோலம்.
மக்கள் பிரவாகம் மைதானம் எங்கும். முட்டிமோதிக் கொந்தளிப்பு.
இசை விழா மேடையில். இசை மேதை" கள் வீற்றிருப்பு.
இசை மேதைகள் மத்தியில் வேணி
LDITg56) 607.
அவன் இசைக் கல்லூரி செல்லவில்லை பட்டங்கள் பெறவில்லை. பாடசாலைப்படிப்பு மூன்றாம் வகுப்புத் தான.
ஆனால்
கேள்வி ஞானம் உச்சம்!
நிமிர்வு நீர்வை பொன்னையன் 175|

Page 49
இளமையில் வெற்றி
மக்கள் மகிழ்ச்சி.
புரட்சிகரமாணவர் நாம் மாற்றம் வேண்டி ஒன்று திரண்டோம். வெற்றி கண்டோம். புரட்சிகரமாணவர் ஒன்றியம் உதயம். மாணவர் ஒன்றியத் தலைவன் அணிஷ்றாய் செளத்ரி. றேணுகா சட்டச்சி ஒன்றியச் செயலர். ஏழுபேர் நாங்கள் செயற்குழு உறுப்பினர். மாணவர் ஒன்றியத் தீர்மானம் வெற்றிவிழாக் கொண்டாட்டம். இசைவிழா.
இசைவிழா மக்கள் மயம்.
கல்லூரி மண்டபத்திற்குள் அதிகார வர்க்கத்தின் குறுகிய வட்டத்துக்கு நடந்துவந்த இசைவிழா வெளியே அரங்கேற்றம். கல்லூரி மைதானம். இசைவிழாக் கோலம். மக்கள் பிரவாகம் முட்டி மோதிக்கொந்தளிப்பு. கல்லூரி நிர்வாகம் திணறித் தடுமாற்றம் கங்கை நதிக்கிளை ஹில்ஷா மீன்விளையும் ஹரகிளி நதி
நதியின் இக்கரையில்
வங்க மறுமலர்ச்சிக்கு வித்திட்ட வில்லியம் கேரியின் புகழ்பூத்த சரம்பூர் கல்லூரி.
நதியின் அக்கரையில் சிப்பாய்க் கலகம் வெடித்த வீரம் விளை நிலம் பரக்பூர். பரக்பூரில்
சரம்பூர் கல்லூரி விடுதி.
விடுதியிலிருந்து கல்லூரிக்கும் கல்லூரியிலிருந்து விடுதிக்கும்
நிமிர்வு நீர்வை பொன்னையன் 1761

காலையும் மாலையும் நாங்கள் இரண்டனா படகுப் பயணம். நதியின் அக்கரையில் விரிந்து பரந்த புல்வெளியில் மாடுகளின் பின்னால் மாடாய் அலைந்திடுவான் வேணி மாதவன் அன்றொரு நாள் நான் சுகவீனம் காரணமாய் கல்லூரி செல்லவில்லை. கல்லூரி விடுதியிலே தன்னந்தனியனாய் தங்கியிருந்தேன். காலை பதினொரு மணியிருக்கும் விடலை வெய்யில் கொதித்து தகிப்பு. புல்லாங்குழலோசை காற்றிலே தவழ்ந்து அலைபாய்ந்து வருகின்றது. வேங்குழல் ஒசையினால் கவர்ந்திழுக்கப்பட்ட நான் நதிக்கரைக்குச் செல்கின்றேன். நதியின் கீழ்கரையில் விரிந்து பரந்த புல்வெளி. புல்வெளியின் நெற்றியில் இறங்கு துறை. இறங்கு துறையை அண்டி செழித்துப் படர்ந்த ஆலமரம். ஆலமரக் கரு நிழலில்
அவனிருந்து அமிர்த கானம் பொழிகின்றான் தனை மறந்து. அங்கு சென்ற நான் அவன் பின்னால் அமர்ந்திருந்து அமிர்த கானம் பருகுகின்றேன். இசை மழை ஒய்ந்த பின்னர் நான் அவனை விடுதிக்கு அழைக்கின்றேன். குளிர்பானம் வழங்கி அவனுக்கு உபசரிப்பு. அளவிலா ஆனந்தம் அவனுக்கு. சனி ஞாயிறு நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் நாம் அவனை எங்கள் விடுதிக்கு அழைத்து இசை அமுதம் பருகித்திளைத்திடுவோம்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் | 77|

Page 50
இதையறிந்த விடுதி வார்டன் சமத்தார் வந்தார் ஒரு நாள். அவனைக் கண்ட வார்டன் கொதித்துக் குமுறிகொக்கரிக்கின்றார். “ஆர் நீ? ஏன் இங்கு வந்தாய்?" “புல்லாங்குழல் ஊதி பெண்களை மயக்கவா வந்தாய்?" வார்டன் சமர்த்தார் பொரிந்து தள்ளுகின்றார். “பாபு, இது ஆண்கள் விடுதி. இங்கு பெண்கள் எங்காலை
நான் மயக்கிறதுக்கு?” சிரித்துக் கொண்டு கூறுகின்றான் வேணி மாதவன். பக்கத்து வீட்டுப் பாதிரியார் குடும்பத்தில் பருவப் பெண்கள் மூவர். என்ரை குவார்ட்டசில் என் மனைவியுடன் பெண் பிள்ளைகள் இரண்டு, என் சகோதரிகள் மூவர். எல்லாரும் இளசுகள்." வார்டன் நீட்டி முழக்குகின்றார். “பாபு. உங்கள் பெண்களை நீங்களே சந்தேகப்பட்டால் அதுக்கு நான் என்ன செய்ய?” “எங்கள் வீட்டிலும் அக்கா தங்கையர் மூவர். பக்கத்து வீட்டுகளிலும் பருவப் பெண்கள் பலர். எங்கள் தெருவிலும் ஏராளமான பருவப் பெண்கள். அவர்களில் எவரையாவது
நான்
புல்லாங்குழல் ஊதிமயக்கினேனா? கேட்டுப்பாரும்.". பாபு. உடையைப் பாத்து எடை போடாதே மனிதனை நான் யார் தெரியுமா? நாங்கள் யார் எண்டு தெரியுமா உனக்கு?
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 178

உழைத்து உழைத்து உருக்குலையும் வங்க விவசாயிகளதும் வங்கதேசத்திலேயுள்ள ஆலைகளிலும் மில்களிலும் மாடாய் உழைத்துருகும் தொழிலாளர்களதும் உரிமைக்குரலெழுப்பும் மக்கள் கலைஞர் நாம்." திகைத்தவராய்நாங்கள். வாயடைத்துப் போனார் வார்டன். விட்டகன்றார் அவ்விடத்தை, கல்லூரி இசைவிழா கொண்டாட்டம் வந்தது. கல்லூரிமைதானம் இசைவிழாக் கோலம், மைதானத்தில் மக்கள் பிரவாகம். இசைவிழா மேடையில் இசை மேதாவிகள். பட்டு பீதாம்பர பகட்டான ஆடைகள். வேணி மாதவன்? வங்காளிகளின் எளிமையான உடையில். இசைமேதைகள் இந்த அற்பனை அலட்சியப் பார்ப்பு. இசை மேதைகள் மனதில் வெறுப்பு. “இவன் எப்படி இங்கு வந்தான்?" எங்கள் விடுதி வார்டனின் மனதில் கேள்வி. முக்கண் பார்வை. கல்லூரி முதல்வர் கடுப்பாய்ப்பார்ப்பு. “எப்போ ஆரம்பிக்கும் இந்தக் கச்சேரி?” மக்கள் பேராவல். நேரம் நகர்வு. "அப்பாடா! ஆரம்பிச்சிட்டுது கச்சேரி” இசை மேதைகள் ஆளுக்கொருவராய் இரண்டு மூன்று உருப்படிகள்
பாடிமுடிப்பு.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 179

Page 51
வந்தது வேணிமாதவன் முறை. புல்லாங்குழலை எடுக்கின்றான். இசை மேதைகள் புறப்பட ஆயத்தம். “வந்தே மாதரம்" வங்கமேதை பங்கிம் சந்தரின் சுதந்திர கீதம் வெடித்துக் கிளம்பி மைதானத்தில் பிரவகிப்பு. இசை மேதைகள் பிரமிப்பு.
மக்கள் வியப்பு. இசைமேதைகளின் பக்கவாத்தியங்கள் புல்லாங்குழலிசையுடன் தாமாகவே இணைவு வங்கச் சிங்கம் சுபாஸ் சந்ரபோஸின் வீர முழக்கம் நாட்டார் பாடலில். வங்கதேசத்தின் இளம் புரட்சிக் கவிஞன் சுகந்தே பட்டசாரியவின் அஞ்சல் ஒட்டக்காரனின் சோகக் காவியம், பெளர்ணமி இரவில் நடுநிசியில். ஹரகிளி நதியின் நட்டநடுவே தன்னந்தனியனாய் நிற்கின்ற படகோட்டி காற்றுடன் காற்றாய்க் கலந்திட்ட தன்னவளை நினைந்துருகிப்பாடுகின்றதுயரப்பாடல், பாரதமாதாவின் விடுதலை வேள்வியின் புரட்சிப்புதல்வர்கள் தியாக தீபங்கள் பகத்சிங்
ராஜ்குரு
குருதேவ்
ஆகியோரின் புரட்சி வாரிசு. வங்கதேசத்தின் புரட்சிப்புயல் குதிராம் போசின் வீரகாவியம்
நிமிர்வு நீர்வை பொன்னையன் 180 |

உத்பால்தத்தின் உழைப்பாளர் உரிமை முழக்கம் மிர்னால் சென்னின்
புரட்சிக் காவியம்
ஒன்றன் பின் ஒன்றாய் வேணி மாதவனின் புல்லாங்குழலில் ஜனித்து அலைபாய்ந்து பிரவகிப்பு. இசைவிழா மைதானம் மூச்சுவிடமறந்து மயங்கிக் கிடப்பு. ஒரு மணிநேரம் எப்படித்தான் போனதோ? புல்லாங்குழல் இசைப் பிரவாகம் முட்டி மோதி அலைபாய்ந்து ஒய்வு. அதிகார வர்க்கத்தின் உடமையாய் இருந்த இசை விடுதலை பெற்று மக்கள் மயமானது. சிறைப்பட்டிருந்த
வங்கத்தின் ஆத்மா விடுதலை பெற்றுவிககிப்பு. மக்களுக்கு புல்லரிப்பு. புத்துணர்வு. புதுவேகம், வேணி மாதவனுக்கு பட்டம், பதவி, பணம் எல்லாம் வழங்கி தம்முடன் இணைத்திட இசை மேதைகள் அங்கலாய்ப்பு. வேணி மாதவன் மேடையில் இல்லை. மக்களுடன் மக்களாய் வேணிமாதவன் சங்கமித்துவிட்டான்.
இளமையின் வெற்றி
மக்கள் மகிழ்ச்சி.
★
! நிமிர்வு நீர்வை பொன்னையன் 81|

Page 52
வெறி
"ஐயோ என்ரை அம்மா!" "ஐயோ என்னைக் கொல்லுறான்!”
“என்ரை அம்மா ஒடியாங்கோ!"
“என்னைக் காப்பாத்துங்கோ!"
மழை இரைச்சலைக் கிழித்துக்கொண்டு ஒலிக்கின்றது அவளது ஒலம். "ஐயோ என்ரை அம்மா!" “என்னைக் காப்பாத்துங்கோ!" “ஒடியாங்கோ அம்மா!" என்னைக் காப்பாத்துங்கோ!” மீண்டும் அவளது வீரிட்ட அலறல்.
செல்லம்மாவின் உள்ளத்தில் பதட்டம்.
உடலில் நடுக்கம்.
"விடென்னை”
“என்ரை புள்ளையை அவன் அடிச்சுக்
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 182

கொல்லுறான். நான் அவளைக்காப்பாத்த வேணும். நான் உடனை போவேணும்"
"விடென்னை" “செல்லம். அவள் விசரி. கத்துறாள். நெடுகத்தானே அவள் ‘உப்பிடிக் கத்துறாள். கத்திப்போட்டுக் கிடக்கட்டும். நீ பேசாமப்
படுத்திரு.
கந்தையன் செல்லம்மாவை இறுக அணைத்தபடியே கூறுகின்றான்.
"ஐயோ என்ரை அம்மா!" “என்னைக் கொல்லுறான்!" “என்ரை அம்மா ஒடியாங்கோ!" மீண்டும் மரண ஒலம். "ஐயோ! என்ரை புள்ளையை அவன் அடிச்சுக் கொல்லப் போறான். அவளைக் காப்பாத்தவேணும். நான் இப்பவே போவேணும். என்னை விடு!”
"மடச்சி. சும்மா பேசாமல் கிட, சரியான மழைக்குளிராய்க் கிடக்கு. உண்ரை உடம்புச்சூடு எனக்கு இதமாய்க் கிடக்கு. நீ பேசாமல் கிடவடி"
செல்லம்மாவை இறுக்கி அணைத்தபடியே அதட்டுகின்றான். “சீ! நாயே. நீயும் ஒரு தகப்பனா?” "பெத்த புள்ளையை அவன் அடிச்சுக் கொல்லுகிறான். நீ என்னடா வெண்டால் உன்ரை உடம்புக்கு இதம் தேடிறாய்"
"நீயும் ஒரு மனிசனா?” “விடடா என்னை!” செல்லம்மா ஆவேச வெறியுடன் தன்னை விடுவிக்கின்றாள். தன்னுடைய மகளின் வீட்டை நோக்கிப்புயலாய்ப் பறக்கின்றாள் செல்லம்மா.
மழை கொட்டிக்கொண்டிருக்கின்றது.
மங்கல் லைட் ஒளி
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1831

Page 53
"ஐயோ! என்னைக் கொல்லுறான்! “என்ரை அம்மோ!"
கேற்றடிக்கு வந்துவிட்டாள் செல்லம்மா. கேற்பூட்டிக் கிடக்கின்றது.
“என்ரை ஐயோ கொல்லுறான்!”
ஒலம்.
“தம்பி என்ரை ராசா அவளை அடியாதையணை செல்லம்மா மன்றாடுகின்றாள். அவன் அடித்துக் கொண்டிருக்கின்றான். “ராசா. அடியாதையணை. என்ரை ராசா அடியாதையணை. தாயின் குரல் கேட்டதும் புவனேஸ்வரி உரத்துக்கத்துகின்றாள். “அறுப்பான். என்னை அடிச்சுக் கொல்லுறான்." “என்ரை அம்மா! என்னைக் காப்பாத்தனை. என்ரை அம்மா! “தம்பிராசா அடியாதையணை. ராசா அடியாதையணை" செல்லம்மா கெஞ்சுகின்றாள். புவனத்தின் அடிவயிற்றில் ஒரு உதை விடுகின்றான். "ஐயோ! நான் செத்தன்!”
வீரிட்டு அலறுகின்றாள் புவனம். மீண்டும் ஒரு உதை கொடுக்கின்றான். புவனத்தின் மரண ஒலம். அடிப்பதை நிறுத்திவிட்டு கேற்றடிக்கு வருகின்றான் மகா
மங்கல் லைற் ஒளியில் நிற்கின்ற செல்லம்மா கைகூப்பி
மன்றாடுகின்றாள்.
“கேற்றைத் திறவணை ராசா” “கேற்றை திறக்கேலாதடி! “போடி அங்காலை.”
“திறவணை ராசா. என்ரைராசா திறவணை"
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 184|

கேட்றை ஆட்டியபடி மன்றாடுகின்றாள். “கேட் திறக்கேலாதடி, போடி நாயே!”
“திறவடா கேற்றை!"
கத்துகின்றாள் செல்லம். மகாலிங்கன் ஓடிப்போய் புவனத்தின் நாரியில் ஒரு உதை"
விடுகின்றான்.
“போடி அங்காலை. இல்லாட்டி உனக்கும் உதைவிடுவன்." திரும்பிவந்து செல்லத்தை எச்சரிக்கின்றான். செல்லம் ஆவேசமாக கேற்றில் ஏறுகின்றாள். மகாலிங்கன் கேற்றில் ஏறுகின்ற செல்லம்மாவை நெட்டித்
தள்ளுகின்றான்.
கீழே விழுந்த செல்லம்மா எழ முயற்சிக்கின்றாள் முடியவில்லை.
நாரியில் கொழுவிவிட்டது. "ஒருதரும் என்ரை வளவுக்கை கால் வைக்கக்குடாது. அப்பிடி
ஆராவது நீங்கள் கால் வைச்சால் வெச்சவையை வெட்டிக் கொல்லுவன்."
எச்சரிக்கின்றான் மகாலிங்கன். மழை கொட்டிக் கொண்டிருக்கின்றது. மகாலிங்கன் திரும்பிச் சென்று விட்டான். செல்லம்மா மெதுவாக எழுந்து கேற்றைப் பிடித்தபடியே
நிற்கின்றாள்.
கேற்றடியைப் நோக்குகின்றாள் புவனம். மழையில் ஒன்றும் தெரியவில்லை.
“போடி உள்ளை." புவனத்தைப் பார்த்துக் கத்துகின்றான் மகாலிங்கன். கேற்றடியில் நிசப்தம் தாயார் திரும்பிச் சென்றுவிட்டார் என்ற நினைப்பில் புவனம்
வீட்டிற்குள் செல்கின்றாள்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 185

Page 54
புவனேஸ்வரி கந்தையாவின் கடைசி மகள். புவனத்திற்கு நான்கு அண்ணன்மார்கள். அவள் செல்லமாக வளர்ந்தவள்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு பிரபலமான பெண்கள் கல்லூரி யில் கல்விகற்றவள். ஏ.எல்.பாஸ் பண்ணிவிட்டாள். கம்பஸ் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை.
புவனம் விளையாட்டுத்துறையிலும் சாதனைகள் பல படைத்தவள்.
அவளது தந்தை தாய் அண்ணன்மார் புவனத்தை பார்த்துப் பெருமைப்பட்டனர்.
கந்தையா மிகவும் செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வருகின்றார். அவருக்கிருந்த பூர்வீகச் சொத்தும் அவரது மனைவியும் பெருமளவு சீதனத்துடன்தான் வந்தாள்.
கந்தையாவிற்குள்ள ஏராளமான சொத்து அவரை சமுகத்தில் உச்ச அந்தஸ்தில் நிறுத்திவைத்துள்ளது. அவரது அனுசரணையுடன் தான் அப்பிரதேசத்தில் சகல பொது விவகாரங்களும் நடைபெற்று வருகின்றன.
மகாலிங்கம் கந்தையாவின் அயலவன். கந்தையாவை விட மகாலிங்கம் பெருமளவு சொத்துக்கு அதிபதி. பெரிய தென்னந்தோப்பு. ஐம்பது பரப்புவயல் நிலம், அரிசி ஆலை ஒன்று, லொறி ஒன்று, ஏ.போட்டி மோட்டார் வாகனம். வசதியான வாழ்க்கை.
எல்லாமிருந்துமென்ன? மகாலிங்கத்தின் வாழ்க்கை உப்புச் சப்பற்றது.
மகாலிங்கம் ஒன்றிக் கட்டை, தாய் தந்தையரை இளமையிலே இழந்து விட்டான்.
அவனுக்கு ஒரே ஒரு தம்பி அவனும் ஒரு வருடத்திற்கு முன் பாம்பு கடித்து இறந்து விட்டான். சொந்தமென்று கூற எவருமில்லை.
சமையலுக்கு ஒரு வேலைக்காரன் மாத்திரம் தான். மகாலிங்கனும் கந்தையாவும் நெருங்கிய நண்பர்கள்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 186|

கந்தையாவுக்கு நீண்டகாலமாக மகாலிங்கனின் சொத்தில் ஒரு
ტყ56ბებT.
மகாலிங்கனின் சொத்து அனைத்தையும் அமத்திப் போட" வேண்டும் என்ற ஒரு வித வெறி.
"என்ரைமகள் புவனத்தை மகாலிங்கனுக்குக் கட்டிக் கொடுத் தால் போதும். அவனுடைய சொத்து எல்லாம் எங்க வசமாகிவிடும்."
கந்தையனுடைய உள்ளத்தில் உந்தல். "தம்பி மகாலிங்கம். நீஎவ்வளவு நாளைக்கு தனிக்கட்டையாய் இருக்கப் போறாய்? வயதும் முப்பதாச்சு. காலா காலத்தில் ஒரு பெண்ணைக் கட்டினாலென்ன?”
“கந்தையா அண்ணை, நான் என்னண்டு கலியாணம் கட்டுறது?" "ஏன் தம்பி?” “எனக்கு ஆர் பெண் தருவினை?" “தம்பி, நீஎன்ரை புவனத்தைக் கட்டுறியா?" “என்ன சொல்லிறாய் கந்தையா அண்ணை" மகாலிங்கனுக்கு ஆச்சரியம். "நீ அவளைக் கட்டுறியா?" "புவனம் சம்மதிக்குமா?" "மகான். நீஏன் தயங்கிறாய்"அதை நான் பார்த்துக்கொள்ளிறன்" தலைகால் தெரியாத புழுகம் மகாலிங்கத்துக்கு. “செல்லம்" “எங்களுக்குக் குருசந்திரயோகம் அடிச்சிருக்கு" “என்ன சொல்லிறாயப்பா?” "எங்கடை கடைக்குட்டி புவனமிருக்கிறாளல்லே." "ஓ. அவளுக்கென்ன?” "அவளைக் கட்டிறத்துக்கு அந்த மகாலிங்கம்." "என்ன? மகாலிங்கம் என்னவாம்?" "மகாலிங்கத்துக்குப்புடிச்சிருக்காம்"
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 187|

Page 55
"புடிச்சா அதுக்கென்ன?” "எங்கடை புவனத்தை விரும்புகிறானாம்." “அவன் விரும்பினால் என்ன?” குழம்பியவளாய் செல்லம்மா. "புவனத்தைக்கலியாணம்கட்டவிரும்பிறன்எண்டு சொன்னான்" "அதுக்கு நீஎன்ன சொன்னாய்?" "நானும் சரியெண்டிட்டன்." "அடப்பாவி என்ன? எங்கடை புவனத்தை அவனுக்குக் கட்டிக் குடுக்கப்போறியா? அதுக்கு உனக்கு எப்பிடி மனம் வந்துது?”
"அதுக்கென்ன, அந்தப்பொடியனிட்டை எவ்வளவு சொத்துக் கிடக்கு?”
"சொத்தா பெரிசு? அவனுக்குக் கட்டி வைக்கிறதிலும் பார்க்க நீஅவளையும் என்னையும் நஞ்சு போட்டுச் சாகடிச்சிடு"
“எங்களிட்டை சொத்தில்லையா? அவளைக் கட்டிறதுக்கு எத்தினை பேர் தவிக்கினை."
“எங்கடை பிள்ளேன்ரை லட்சணமென்ன? அவளைப் போல வடிவான பெம்புளைப் பிள்ளையஸ் எங்கடை பகுதியிலிருக்கிது 56TIT?
“மடைக்கதை போசாதை. நான் புவனத்தை மகாலிங்கத்துக்குத் தான் கட்டி வைப்பன்."
செல்லம்மா ஒப்பாரிவைத்துப்புலம்பிக்கொண்டிருக்கின்றாள். "ஏனம்மா அழுகிறாய்? அப்பா உன்னைத் திட்டி அடிச்சாரா?” சிறியதந்தை வீட்டிலிருந்து வந்த புவனம் தாயை ஆதங்கத்துடன் கேட்டாள்.
“என்னை அவர் அடிச்சுக்கொண்டாலும் பரவாயில்லை மகளே. அவர் உன்னையல்லவா பாழ்கிணத்துக்கை தள்ளப் பார்க்கிறார்”
“என்னம்மா? என்ன சொல்லுறியள்?" "உன்னை அந்தக் மகாலிங்கனுக்குக் கட்டி வைக்கப் போறானாம் உண்ரை கொப்பன்."
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 188|

“என்ன! என்னையா? அவனுக்கா?" "ஒ. மகளே. அவனுக்குத் தான். அவனும் சம்மதிச்சிட்டானாம்." "அப்போ என்ரை படிப்பு?” “எனக்குக் கலியாணம் கட்டிவை எண்டு நான் அவரைக் கேட்டனானே?"
"அவருக்கென்ன பயித்தியமா? அவர் சும்மா அலம்புறார். அலம்பிப்போட்டு இருக்கட்டும். நீபயப்பிடாதை அம்மா."
"இல்லை மகளே. அவர் அவனுக்கு வாக்குக் குடுத்திட்டாராம்" "அம்மா உது நடக்கிற காரியமா? நீபேசாமலிரம்மா." "மகளே புவனம். உனக்குத்தெரியும்தானே உன்ரை கொப்பன்ரை குணம். அந்தாள் நினைச்சதை நிச்சயமாய்ச் சாதிச்சுத் தீருவார். எனக்குப் பயமாய்க் கிடக்கு மகளே. இப்பென்ன செய்ய?”
"குஞ்சி அப்பாட்டை சொல்லிப்பாப்பமே அம்மா?" “அவற்றை சொல்லை அவர் கேப்பரோ என்னவோ தெரியாது. எதுக்கும் ஒருக்காக் கேட்டுப்பாப்பம்."
சிறிய தந்தையிடம் அவர்கள் செல்கின்றனர். முறையிடுகின்றனர்.
“புவனம். என்ரை சொல்லை அவர் கேக்கமாட்டார். நான் உந்த விசயத்திலை தலையிட விரும்பேல்லை."
சிறிய தந்தை தட்டிக் கழிக்கின்றார். அண்ணைமார்? தந்தையுடன் கதைக்க அவர்களுக்குப் பேய்ப்பயம். அண்ணன்மார் கை விரித்துவிட்டனர். தந்தையுடன் கதைக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.
தந்தையின் நெருங்கிய நண்பர்கள் மூன்று நான்கு பேருக்கு முறையிட்டனர்.
"உமது அப்பன் ஒரு புடிச்சிராவி அவர் நினைச்சதைச் சாதித்து முடிக்கின்றவர். அதுவரையும் அவர் நித்திரையே கொள்ள மாட்டார். எங்கடை சொல்லொன்றும் அவருக்கு ஏறாது. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது."
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 189|

Page 56
நண்பர்களும் நழுவிவிட்டனர். மகாலிங்கத்துக்கும் புவனேஸ்வரிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.
புவனம் மகாலிங்கத்துக்கு ஒரு அலங்காரப் பொம்மை. அவன் அவளைப் பட்டுப் புடவைகளாலும் தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கத்தான் செய்தான்.
புதுமணத்தம்பதிகளைப் பார்த்து எல்லோரும் வியக்கத்தான் செய்தனர்.
ஆனால் புவனத்தின் இளமைக் கனவுகளும் கற்பனைகளும் கானல் நீராகிவிட்டன.
திருமணத்தின் பின் மற்றப் பெண்களுக்கு கிடைக்கின்ற இன்பகரமான தாம்பத்ய வாழ்க்கை புவனத்திற்கு எட்டாக்கனியாகி விட்டது.
மகாலிங்கனுக்கு ருசிகரமான உணவுகளைச் சமைத்துப் போடும் ஒரு யந்திரமாகிவிட்டாள்.
தனது வாழ்க்கை இப்படியாகுமென்று அவளுக்கு எப்படித் தெரியும்?
புவனேஸ்வரி இப்படி தன்னை அலங்கரிப்பதும், எடுப்பாக நட" மாடுவதும் தன்னைக் கவர்வதற்காகவா அல்லது மற்றைய இளைஞர்களை ஈர்ப்பதற்காகவா என்ற ஐயம் மகாலிங்கனின் உள்ளத்தில் தலைதூக்கியது.
மகாலிங்கனும் புவனமும் அயலிலுள்ள கோயிலுக்குச் சென்றிருந்தனர்.
தற்செயலாக புவனம் தனது சக மாணவன் ஒருவனைச் சந்திக்க நேரிட்டது.
அவன் புவனத்தைப் பார்த்து புன்னகைத்ததுடன் குசலம் விசாரித்தான். புவனமும் சிரித்து சரளமாகக் கதைத்தாள்.
அந்தக் கணத்திலேயே மகாலிங்கனின் உள்ளத்தில் சந்தேகம் வலுவாகியது.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 190

“அவன் ஆரடி? உனக்கும் அவனுக்கும் எவ்வளவு காலமாய் தொடுப்படி?”
வீடு சென்றதும் மகாலிங்கன் கத்தினான். "அவர் என்னோட படிச்சவர் என்று கோயிலடியிலேயே உங்களுக்கு அறிமுகப்படுத்த வில்லையா?”
"அது வெளிவேசமடி" “இல்லை. உண்மையாகத்தான். அவர் என் சகமாணவன் தான். என் நண்பன்."
“சொல்லடி. அவன் ஆரடி? உன்ர முன்னாள் காதலன் தானே?" அடித்தான் மகாலிங்கன்.
"உவன் எத்தினையாவது ஆளடி?” அன்று தொடங்கிய அடியும் உதையும் தொடர்ந்தது. ஒரு நாள் அடிதாங்க முடியாமல் போகவே ஒலம் வைத்தாள். “என்ரை அம்மா! என்னக் கொல்லுறான்” “ஒடியாங்கோ” “என்னைக் காப்பாத்துங்கோ!” கந்தையனும் செல்லம்மாவும் ஒடி வந்தனர். "தம்பி என்ரை புள்ளையை ஏன் அடிக்கிறாய்?" "அதைக் கேக்க நீஆரடா?” கந்தையாவும் செல்லம்மாவும் திகைத்து கேற்றடியில் நிற்கின்றனர். Y>
“எடே, நீங்கள் ஆராவது என்ரை வளவுக்கை கால் வைச்சால் நான் அவளை வெட்டிக் கொல்லுவன்?
“என்ன தம்பி. ஏன் இப்படிக் கோவிக்கிறியள்?" செல்லம்மா பதட்டத்துடன் கேட்கின்றாள். “ஒரு அவிசாரியை நீங்கள் என்ரை தலையிலை கட்டிவைச்சிட்டு இப்ப ஞாயம் கேக்கவாறியளோ?”
அவர்கள் அதிர்ந்து போய் நிற்கின்றனர்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 191|

Page 57
"இனி நீங்கள் ஆராவது என்ரை வளவுக்கை வந்தால் கொலை விழும்"
செய்வதறியாது அவர்கள் திரும்பிச் செல்கின்றனர். இப்ப இவன் ஆடுறான். நல்லாய் ஆடட்டும். ஆனா ஒரு நாள் இவன்ரை சொத்தெல்லாம் எனக்குத்தானே வரப்போகுது. அது வரைக்கும் நான் பொறுமையாய் இருப்பம்."
தனக்குத் தானே கூறிக்கொண்டு செல்கின்றார் கந்தையா. "என்ரை புள்ளையை இந்த வெறிக் கொம்பனுக்குக் கட்டிக் குடுக்கக்கூடாதெண்டு நான் நாண்டு கொண்டு நிண்டன். இந்த மனிசன் கேட்டுதே. தலைகீழாய் நிண்டு இந்த உலுத்தனுக்கு கட்டி வைச்சு என்ரை புள்ளையின்ரை வாழ்க்கையை நாசமாக்கிப் போட்டுதே. இப்பென்ன செய்ய?
செல்லம்மா மனம் வெதும்புகின்றாள். மூன்றாண்டுகள் உருண்டோடிவிட்டன. புவனத்தின் அவல ஒலம் அடிக்கடி கேட்டுக்கொண்டு தானிருக்கின்றது.
ஆனால் இன்று புவனத்தின் குரல் வித்தியாசமாக இருக்கின்றது. காச்சிய இரும்புக் கம்பியின் சூடுகளால் புவனம் துடிதுடித்துக் கத்துகின்றாள்.
"ஐயோ என்ரை அம்மா என்ரை கைகால், முதுகு எல்லாம் பொசுங்கி எரியுதே."
“என்னைக் கொல்லுறான் ஒடியாங்கோ!" செல்லம்மா பதைபதைத்து ஓடி வருகின்றாள். கேற்பூட்டிக் கிடக்கின்றது. மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. செல்லம்மா கேற்றைப் பிடித்தபடியே நிற்கின்றாள். புவனத்தின் மரண ஒலம் படிப்படியாகத்தணிந்து ஒய்கின்றது. சோனாவாரியாகக் கொட்டிக் கொண்டிருக்கின்ற மழை படிப்படியாக ஒய்கின்றது.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1921

இயற்கை அன்னை துயரப் பெருமூச்சு விடுகின்றாள். சோகத்தைச் சுமந்த இருள் சோர்ந்து படிப்படியாக மடிந்து கொண்டிருக்கின்றது.
துயர் நிறைந்த உலகைப் பார்க்க விரும்பாத விடியல் படிப்படியாகத் தலை தூக்குகின்றது.
நிலம் வெளிக்கின்றது. சோர்ந்து கிடந்த புவனம் திடுக்குற்று விழிக்கின்றாள்.
பதைபதைத்து எழுந்து வந்து கேற் பக்கம் பார்க்கின்றாள். கேற்பூட்டிக்கிடக்கிறது. பூட்டிக் கிடக்கின்ற கேற்றைப்பிடித்தபடியேதன் அன்புத் தாய் நிற்பதைப் பாத்து விட்டாள்.
"ஐயோ கொட்டும் மழையில் இரவிரவாக விடியும்வரை என்ரை அம்மா நின்று கொண்டிருக்கின்றாவே."
புவனம் பதைபதைத்துகேற்றடிக்கு ஒடுகின்றாள். கிட்டப் போய் தாயை உற்றுப் பார்க்கின்றாள். செல்லத்தின் உடலில் அசைவில்லை. பேச்சு மூச்சில்லை. கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன. வாய் திறந்தபடியே கிடக்கின்றது. செல்லத்தின் உதட்டில் இரண்டு மூன்று இலையான்கள். "ஐயோ! என்ரை அம்மா!" புவனத்தின் மரண ஒலம் அந்தப் பிரதேசத்தையே அதிர வைக்கின்றது.
கந்தையன் விழுந்தடித்து ஓடி வருகின்றான். அப்பிரதேசத்திலுள்ள மக்கள் ஓடி வருகின்றனர். குவிகின்றனர். மகாலிங்கன் மரமாய் நிற்கின்றான். கந்தையா மலைத்தவனாய் நிற்கின்றான். “என்ரை அம்மாவை கொண்டிட்டியளேடா பாவியள்!"
புவனம் கத்துகின்றாள்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1931

Page 58
சுட்டெரிக்கும் விழிகளால் கந்தையனை வெறித்துப் பார்த்த" படியே நிற்கின்றாள்.
"இவன் எப்பிடிப்பட்டவன் எண்டு உனக்கு முன்னம்ே நல்லாய்த் தெரியும் தானே?"
"தெரிஞ்சும் சொத்துக்காக ஆண்மையில்லாத இவனை எனக்" குக் கட்டி வைச்சாய். நீ என்ரை வாழ்க்கையைப் பாழடிச்சிட்டி" யேடா பாவி"
"நீயும் ஒரு தகப்பனா?”
"இவன் ஒரு அலியடா!"
★
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1941

பலிஆடு
அவள் யாராக இருக்கும்?" 'ஒரு வேளை வசந்தாவோ? 'வசந்தா இஞ்சை ஏன் வரப்போறாள்? வேறை ஆராக இருக்கும்?" உற்றுப்பார்க்கின்றேன். 'வசந்தா போலத்தான் கிடக்கு. 'அவள் போலத்தானிருக்கு. சற்றுக்கிட்டப் போய்ப் பார்க்கின்றேன். 'வசந்தா. வசந்தாவே தான். 'என்னால் நம்ப முடியவில்லை. நல்ல காலம் 'வசந்தா என்னைப் பாத்துவிடவில்லை' 'ஏன் தொல்லையை வலிய விலைக்கு வாங்குவான்?
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 195|

Page 59
மெதுவாக அவ்விடத்தை விட்டு நழுவி கொஞ்சத் தூரத்தில் மறைவாக நிக்கிறன்.'
'வசந்தா ஏன் இஞ்சை வந்தாள்?
'அவளால் எப்பிடி வரமுடிஞ்சுது?
அவளுக்கு ஏற்பட்ட அந்தப் பேரிழப்பு!
'அந்தப் பேரிழப்பு நடந்து இன்னும் மூண்டு மாதங்கள் கூட ஆகேல்லை.
அந்தப் பேரிடியால் அவளுக்கு ஏற்பட்டதுயரத்திலிருந்து அவள் எப்பிடி மீண்டு வந்தாள்?
'ஒன்றும் புரியவில்லை.
'எனக்குப் பெருவியப்பு
“சிவா அண்ணை.”
“என்ன கந்தையா?"
“இந்த விசயத்தை என்ரை மனிசிவசந்தாவுக்கு நான் எப்பிடிச் சொல்ல?”
"ஏன் கந்தையா?”
"வசந்தா இதை எப்பிடித் தாங்குவாள்?"
"அப்ப சொல்லாமல் விடப்போறியா?”
“என்னண்டு சொல்லிற தெண்டு எனக்குத் தெரியேல்லையே சிவா."
“எப்பிடியெண்டாலும் நீசொல்லித்தான் தீரவேணும்."
“இதை அறிஞ்சதும் அவள் துடிதுடிச்சுச் செத்துபோவள். நிச்சயமாய் அவள் நஞ்சு குடிச்சுச் செத்துப் போவள். எனக்குப் பயமாய்க் கிடக்கு."
“கந்தையா நீபயப்பிடாதை. அப்பிடி ஒண்டும் நடக்காது."
“இல்லை அண்ணை. எனக்கு அவளின்ரை குணம் நல்லாய்த் தெரியும். ஒரு சின்ன வேதினையைக் கூட அவளாலை தாங்கேலாது. இப்ப நான் என்ன செய்ய?"
“எப்பிடியெண்டாலும் நீ சொல்லித்தானாக வேணும். நீ
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1961

சொல்லேல்லை எண்டு வைச்சுக் கொள்ளுவம். இந்த விசயம் பேப்பரிலை வரத்தான் செய்யும். அதை ஆராவது பாத்திட்டு அவளுக்கு சொன்னால் உன்ரைகெதி என்ன ஆகும்?"
"அண்ணை. என்னாலை சொல்லவுமேலாது. சொல்லாமலு மிருக்கேலாது. எனக்கு என்ன செய்யிறதெண்டு தெரியேல்லையே” “கந்தையா. நீ சொல்லித்தானாக வேணும். ஆனா அதை மெதுவாய் படிப்படிபாய்ச் சொல்லு,
“எப்பிடிப் படிப்படியாய் சொல்லிறது?” “முதலிலை அந்தக் கப்பல் காணாமல் போட்டுது எண்டு பேப்பரிலை வந்திருகெண்டு கதைக்கினை. இதை முதல் அவளுக்குச் சொல்லு"
“அந்தக் கப்பல் உடைஞ்சு போச்சாம். அதிலை போன ஆக்களைத் தேடினையாம் இரண்டு மூண்டு நாள் கழிச்சுச் சொல்லு"
“ஒருதரும் கிடைக்கேல்லையாம். எல்லாரும் கடலிலை மூழ்கிப்போச்சினை எண்டு பேசிக் கொள்கிறதாச் சொல்லப்பா."
“என்னவோ நீ சொல்லுறாய். நானும் அவளுக்கு அப்பிடிச் சொல்லிப்பாக்கிறன். சரி நடக்கிறது நடக்கட்டும்."
“சிவாண்ணை. பொடியனை வெளிநாட்டுக்கு அனுப்புறது எனக்கு துண்டாய் விருப்பமில்லை. உந்த வேலை வேண்டாம். சும்மா இரு எண்டு நான் அப்பவே சொன்னன். அவள் கேக்" கேல்லை."
"ஏன், எங்களுக்கு சீவிக்கிறதுக்கு வழியில்லையே. எனக்கு மாதாமாதம் சம்பளம் வருகுது வாழைக் குலைச் சங்கத்திலிருந்தும், அதோடை உருளைக்கிழங்கு, வெண்காயம் எண்டு தோட்டத்திலை செய்து ஆயிரக்கணக்கிலை வருகுது இது போதுமப்பா. நான் சொன்னன் கேட்டாளே?”
“சிலபேருக்கு இது புரியாது கந்தையா." “சிவா அண்ணை. எங்களுக்கென்ன கன பிள்ளையளே? மூண்டே மூண்டு தான். அது மாத்திரமில்லை. அவங்கள் படிக்" கிறாங்கள். கெட்டிக்காறர் நல்லாய்ப் படிக்கிறாங்கள். படிப்பு
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1971

Page 60
முடியட்டும். மேல் படிப்புப் படிச்சிட்டு அங்கை போனால் நல்ல வேலை எடுக்கலாம். நல்லாய் உழைக்கலாம். கெளரவமாயுமிருக்கும். அவங்கடை படிப்பைக் குழப்பாதை எண்டு நான் அவளுக்கு எவ்வளவோ சொல்லிப்பார்த்தன். என்ரை சொல்லை அவள் கேக்கேல்லை.” y
"எங்கடை இரண்டாவது மகன் வசந்தன் பெரிய படிப்புப் படிச்சவனே? அவன் உழைச்சு மாசாமாசம் ஐம்பதாயிரம் அறுபதினாயிரமெண்டு எங்களுக்கு அனுப்பேல்லையே?”
வசந்தா என்னைக் கேட்டாள். “அடுத்த வீட்டு லிங்கனைப்பார். அவனுக்குக் கடிதம் கூட எழுதத் தெரியாது. வேறை ஆரோதான் அவனுக்குக் கடிதம் எழுதிக் குடுக்கிறது. அவன் இத்தாலிக்குப் போய் லச்சம் லச்சமாய் அனுப்பிக்கொண்டிருந்தான்."
“இப்ப அவன் கம்பி எண்ணிக்கொண்டிருக்கின்றான் இது தெரியாதே உனக்கு."
“அது வேற கதை. ஏன் அவந்தானே எங்கடை வசந்தனையும் தன்னோடை வைச்சிருந்தான். அது மாத்திரமில்லை. அவனுக்கும் வேலை எடுத்துக் குடுத்தவன்.”
“எங்கடை மூண்டு பொடியளிலை ஒருதனை அனுப்புவம் எண்டு சொன்னாள்."
“பெரியவன் குமரன் ஏ.எல்.படிக்கிறான். அவனைக் குழப்பக் கூடாது."
"அப்ப இரண்டாவது மகன் தீபனை அனுப்புவம் எண்டாள்." "வசந்தா. உனக்கென்ன பயித்தியமா? அவனுக்கு இப்பதானே வயது பதின்நாலு"
"ஏனப்பா, அடுத்த வீட்டு லிங்கன் பதினஞ்சு வயதிலைதானே இத்தாலிக்குப் போனான். அவன் உழைக்கேல்லையா? அப்ப நாங்களும் வசந்தனை அனுப்புவம். இத்தாலிக்கு அனுப்புவம்.”
“சிவா என்னாலை ஒண்டும் செய்யேலாமல் போச்சு. வசந்தனை அனுப்பினம். இத்தாலிக்கு லிங்கனிட்டைத் தான் அனுப்பிவைச்சம்"
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1981

"வசந்தன் இரண்டு வரியத்துக்கு முந்தித்தான் இத்தாலிக்குப் போனான். அவன் மாதாமாதம் ஐம்பது அறுபதினாயிரம் எங்களுக்கு அனுப்பிக்கொண்டிருந்தான். எங்களுக்கும் சரியான சந்தோசம்."
"வசந்தன் எங்களுக்கு அனுப்பின காசிலை நாங்கள் எவ்வளவு வேலையள் செய்திட்டம்."
“எங்கடை வளவைச் சுத்திக் கிடுகு வேலி கிடந்துது. அதை வெட்டிப் போட்டு சுத்துமதில் கட்டினம். வீட்டு நிலத்துக்கு மாபிள் போட்டம். துலாவாலை இறைச்ச கிணத்துக்கு மோட்டார். ஒரு சின்ன பழைய றேடியோ கிடந்துது. அதுக்குப்பதிலா முப்பத்தெட்டு இஞ்சி கலர்ரி.வி. வந்துது. என்ரை பழைய சயிக்கிளை வித்தன். அதுக்குப்பதிலாய் ஒரு ஐந்நூறு சீசீஹொண்டா வந்துது."
“முந்தி ஆராவது வீட்டுக்கு வந்தால் தேத்தண்ணி குடுப்பம். இப்ப மிறான்டா அல்லது கொக்கோகோலா தான் பிறிச்சிலையிருந்து எடுத்துக் குடுக்கிறம்"
“பிள்ளையார் கோயில் கோபுரம் கட்டிடத் திருப்பணிக்கு வசந்தா குடும்பம் பேரிலை ஒரு லட்சத்து ஒரு ரூபா குடுத்தம்."
“கலியாணவீடு, சாமத்தியச் சடங்கு எண்டு சொன்னால் திருப்பித்தரக் கூடிய குடும்பங்களுக்கு ஐயாயிரம் பத்தாயிரம் எண்டு குடுத்துவாறம்" p
“சிவா. நான் உனக்குச் சொன்னாலென்ன. முன்னம் இடைக்கிடை தென்னங்கள்ளு அல்லது உரும்பிராய் வடி சாராயம் பாவிச்சு வந்தன். இப்ப மென்டிஸ் ஸ்பெசல் தான் பாவிக்கிறன்."
"வசந்தன் போய் இரண்டு வரியத்துக்கை இவளவும் நடந்தது." "இப்ப ஆறு மாதமாய் வசந்தனிட்டையிருந்து எந்தத் தகவலும் கிடைக்கேல்லை. ஒரு கடிதம் கூட வரேல்லை."
“லிங்கன் இப்ப மறியலிலை இருக்கிறானாம்." "வசந்தனைப்பற்றி ஒண்டும் தெரியேல்லை." “கொஞ்ச நாளைக்குப் பிறகு குமரனை அனுப்புவம் எண்டு துவங்கினாள் வசந்தா."
"வசந்தா, குமரன் இப்ப கம்பசிலை எடுபட்டுக் கொமேஸ் படிக்கிறான். படிக்கட்டும். அவனைக் குழப்ப வேண்டாம். படிச்சு
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1991

Page 61
முடிஞ்சு பிறகு பாப்பம் எண்டன்."
“அவள் கேட்டாளோ?” “தலை கீழாய் நிண்டு அவள் தான் குமரனை இத்தாலிக்கு அனுப்பிவைச்சாள். இப்பென்ன நடந்துது?”
“கந்தையா உனக்கு வேலை லேசாப் போச்சு.” "வசந்தாதானே முழுமூச்சாய்நிண்டு குமரனையும் இத்தாலிக்கு அனுப்பிவைச்சவள்?”
"ஒமோம். அவள் தான் அடம்புடிச்சு குமரனை அனுப்பி வைச்சவள்."
"அப்ப பாரத்தை அவளின்ரை தலையிலை போடு கந்தையா. "அது சரிதான் சிவா. ஆனால் இந்த விசயத்தை அவள் தாங்கமாட்டாள். நிச்சயமாய் நஞ்சுகுடிச்சுச் செத்துப்போவள். எனக்குப் பயித்தியம் புடிச்சிடும் போலை கிடக்கு. என்ன செய்யிற தெண்டு தெரியேல்லை."
“சரி. சரி. என்ன செய்யிறது? ஒரு மாதிரி சமாளிக்க வேண்டியது தானே. அவளைத் தெண்டிச்சு சமாதானப்படுத்த முயற்சி. எல்லாம் சரிவரும்." w
'குமரன் கடலில் காணாமல் போய் இன்னும் மூன்று மாதங்கள் கூட முடியேல்லை. வசந்தாவால் எப்பிடி இஞ்சை வர முடிஞ்சுது?
'வசந்தா இப்ப ஏன் இஞ்சை வந்தாள்? இஞ்சை இப்ப நடக்கிற சாமத்திய சடங்குக் கொண்டாட்டத்" துக்காகவா கொழும்புக்கு வந்தாள்?
இந்த கொண்டாட்டத்தை நடத்திறவைக்கும் வசந்தாவுக்கும் எதுவித உறவுமுறையுமில்லையே? அப்போ, அவள் ஏன் இதுக்கு வந்தாள்?
இந்தக் கொண்டாட்டத்தை வைக்கிறவை தெற்குப் பக்கம். நானும் வசந்தாவும் வடக்கு. இந்த பெண்ணின் அப்பாவும் நானும் ஒரே கந்தோரில் வேலை செய்யிறம். அதுதான் என்னை அவர் கூப்பிட்டார். ஆனால் வசந்தா?
இந்தப் பெண்ணின்ரை தாயாரும் வசந்தாவும் ஒன்றாய்ப் படிச்சவை. இப்பதான் எனக்கு ஞாபகம் வருகுது. அதுதான்
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 100 |

வசந்தாவையும் அவை கூப்பிட்டிருக்க வேணும். அதுக்காக வசந்தா இவ்வளவு காசு சிலவழிச்சு இதுக்கு வர வேணுமா?
'சரி வசந்தாவையே கேட்டுப் பார்த்தால் தெரியும் தானே." நான் அவளோடை என்னண்டு கதைக்கிறது? கதைக்கேக்கை குமரன்ரை கதை வந்தால்..?
'சிவாண்ணை நான் இந்த விசயத்தை அவளுக்கு என்னண்டு சொல்லிறது? இதை வசந்தா என்னண்டு தாங்கப் போறாளோ? இதை அறிஞ்சதும் வேதினை தாங்க முடியாமல் செத்துப் போவள். நிச்சயம் அவள் நஞ்சுகுடிச்சுச் செத்துப் போவள். நான் என்ன செய்ய daust?'
'மூண்டு மாதங்களுக்கு முன்னர் கந்தையா யாழ்ப்பாணம் செல்லுமுன்னர் சொன்னது எனது நினைவுத் தடத்தில் தட்டுப்படுகின்றது.
நானாய்ப் போய் அவளோடை கதைக்கேக்கை தற்செயலாய் குமரன்ரை கதை வந்து அவள் கத்திக்குழறி அட்டகாசம் செய்தால்? 'ஏன் நான் வலியப்போய் வீணாக வினையை விலைக்கு வாங்குவான்?
v
'அவளைக் கண்டும் காணாதது போலிருப்பம்' நானாய்ப் போய் வீணாய் ஏன் மாட்டுப்படுவான்.' பேசாமலிருப்பம்." அவளை நான் சந்திக்காமலிருப்பதுதான் நல்லது. அவளைச் சந்திப்பதைத் தவிற்பதற்கு நான் முயல்கின்றேன்" 'அவளுடைய கண்ணில் படாமலிருக்க நான் முயச்சிக்கிறன். ஆனால் அவள் என்னைப் பார்த்துவிட்டாள்! 'என்னை நோக்கி அவள் வருகின்றாளே! 'எனக்கு அந்தரமாய்க் கிடக்கு. “என்ன சிவா அண்ணை? எப்பிடியிருக்கிறியள்?” “நல்லாயிருக்கிறன் வசந்தா."
“உங்கடை பாடு?”
நிமிர்வு நீர்வை பொன்னையன் 1101

Page 62
“பறுவாயில்லை அண்ணை" 'குமரன்ரை கதை வராமலிருக்கவேணும். என்ன செய்ய? 'எனக்கு மனோ அவஸ்தை." “சிவா அண்ணை. இவன் என்ரை கடைக்குட்டி" "பொடிப்பயலாயிருக்கிறானே." "அப்பிடியா?” "பிஞ்சுத் தவ்வல் தானே.” “ஓம் சிவா அண்ணை." “கந்தையா வரேல்லையே?" "அண்ணை. அந்தாள் ராசியில்லாத மனிசன்." “என்ன சொல்லிறாய் வசந்தா?” "அவர் தான் குமரனை போன தடவை இஞ்சை கூட்டி வந்து இத்தாலிக்கு அனுப்பிவைச்சவர். என்ன நடந்தது?"
"அந்தாள் துரதிஷ்டம் புடிச்சமனிசன்." “அதுதான் நான் இந்தத் தடவை வந்தனான்." இவள் என்ன சொல்லுறாள்? 'எனக்கு ஒண்டும் புரியேல்லையே. “இவன் வேந்தனை நான் தான் கூட்டி வந்திருக்கிறன்." “இவன் நாளைக்கு இத்தாலிக்குப் போறான்!"
| நிமிர்வு நீர்வை பொன்னையன் | 102

புதிர்
(1
என்ரை அவரை இன்னும் காணேல்லையே?
நேரம் போட்டுது. எப்ப அவர் வரப்போறாரோ?" 'மாமியை டொக்டரிட்டைக் காட்ட வேணும்.
'ஆறு மணிக்கு வாறன். ஆயித்தமாயிருங்கோ.
'அவர் போகேக்கை சொல்லிப் போட்டுப்போனவர்.' 喙
'ஆறரை மணியாச்சு.இன்னும் அவரைக் காணேல்லையே.
அவர் சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்திடுவர். ஆனா இண்டைக்கு அவர் ஏன் இன்னும் வரேல்லை?
அவர் தன்ரை தாயாற்றை விசயமெண்டால் ஒற்றைக் காலிலை நிப்பர். ஆனா
நிமிர்வு நீர்வை பொன்னையன் 103

Page 63
இண்டைக்கு அவருக்கு என்ன நடந்தது?"
'ஒரு வேளை அவர் தன்ரை சகோதரியின்ரை விசயமாய் ஆரையாவது பார்க்கப் போயிருப்பரோ?
'அவர் தன்ரை சகோதரியை கொழும்புக்குக் கொண்டு போகவேணும். அவவிட்டை அடையாள அட்டையில்லை. துலைச்சுப் போட்டா. அந்த விசயமாய் விதானையிட்டை போவேணும் எண்டு சொன்னவர். விதானையிட்டை ஒரு வேளை போயிருப்பரோ?
இப் பென்ன செய்ய? நேரம் போய்க் கொண்டிருக்கு." நெருப்பில் மிதித்தவளாய் தவிக்கின்றாள் புவனேஸ்வரி. ஹாட்டொக்டர் போட்டாரெண்டால் ஒண்டும் செய்யேலாது." மருந்தும் முடிஞ்சு போச்சு. இனி அடுத்த மாதம்தான் அந்த டொக்டரிட்டைக் காட்டலாம். 'அந்த டொக்டர் கொழும்பிலையிருந்துவாறவர். மாதம் ஒரு முறைதான் யாழ்ப்பாணம் வாறவர். பிளேனிலைதான் வருவர்.
மெகானிக் மார்க்கண்டு நறுக்கான பேர்வழி. அவன் கூறின நேரத்துக்கு வேலையை முடித்துக் கொடுத்துத்திடுவான். அவனுக்கு நேரம் முக்கியம்.
மார்க்கண்டு மோட்டார் கறாச் வைத்திருக்கின்றான். அவனுடைய கறாச்சில் ஏழு பேர் வேலை. மோட்டார் வாகனங்களைப் பழுது திருத்துவதில் அவன் நிபுணன்.
அவனுடைய கறாச்சில் பழுது திருத்துவதற்கு மோட்டார் வாகனங்கள் கியூவில் நிற்கின்றன.
அவன் கூறிய தவணைக்குக் கண்டிப்பாக வாகனத்தை பழுதுதிருத்திக் கொடுத்திடுவான்.
இயக்கங்களின் வாகனங்களுக்கு முன்னுரிமை. அவன் இயக்கங்களுக்கிடையில் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லா இயக்கங்களையும் அவன் ஒரேமாதிரித்தான் மதிக்கின்றான்.
"இயக்கங்கள் என்ரை சொந்தப் பிள்ளையஸ்."
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1104

"ஆக்கிரமிப்பு ஆமிக்கு எதிராய் எங்கடை பொடியள் சண்டை புடிச்சுக் கொண்டிருக்கிறாங்கள்."
“எங்கடை பொடியள் தங்கடை உயிரைப் பணயம் வைச்சு வீராவேசமாய்ப் போராடிக் கொண்டிருக்கிறாங்கள்."
"இந்த இன அழிப்பு ஆமிக்கு எதிராய் நான் நேரடியாய் பங்கு பற்றேலாமல் கிடக்கு. கடசி இயக்கங்களின்ரை வாகனங்களை பழுது திருத்திக் குடுத்தாவது என்ரை பங்கை நான் செலுத்திக் கொண்டிருக்" கிறன்."
அடிக்கடி மார்க்கண்டு கூறுவான். “எங்கடை பொடியளின்ரை வாகனங்களை உடனுக்குடன் பழுது திருத்திக் குடுக்கிறன். ஆனால் கூலி ஒரு சதமேனும் எங்கடை பொடியளிட்டை நான் கடசி வரையும் வாங்கமாட்டன்."
“பொடியளின்ரை சில வாகனங்களுக்கு தேவையான சில “பாட்ஸ்கள்" யாழ்ப்பாணத்தில் எடுக்கேலாது. அப்பிடிப்பட்ட பாட்ஸ்களை நான் கொழும்புக்குப் போய் அங்கையுள்ள பஞ்சிகாவத்தையில் வாங்கி வருவன்."
ஏ.நயின் வீதியில் அநேக இடங்களில் சோதனைச் சாவடிகள். மார்க்கண்டு இச்சோதனைச் சாவடிகளில் நிற்கின்ற ஆமிக்" காறரை லேசாகச் சமாளித்து விடுவான்.
மார்க்கண்டு கொழும்பிலுள்ள ஒரு மோட்டார் கறாச்சில் மெக்கானிக்காக ஏழு வருடங்கள் வேலை செய்து வந்துள்ளான்.
எண்பத்து மூன்று ஜூலையில் அதி உத்தம தர்மிஷ்டரின் தலைமையில் இன அழிப்பு யுத்தம் ஆரம்பித்து நடத்தப்பட்டது. இதை அடுத்து மார்க்கண்டு இதயச் சுமையுடன்தான் யாழ்ப்பாணம் திரும்பிவந்தான்.
யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலுக்கு அண்மையில் மோட்டார் வாகனங்கள் பழுது திருத்தும் ஒரு கறாச்சை ஆரம்பித்தான். தற்பொழுது அந்த கறாஜ் மிகவும் பிரபலம்.
எப்படிப்பட்ட பாரிய திருத்த வேலையென்றாலும் மார்க்கண்டு கெச்சிதமாகச்செய்து முடித்துவிடுவான்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் | 105

Page 64
மார்க்கண்டுவின் குடும்பத்தில் மனைவி, இரண்டு பிள்ளைகள், தாய்' அவனது ஒரு சகோதரி.
மார்க்கண்டுவின் தாயாருக்கு இருதய நோய். சகோதரிக்குக் கான்சர். சிகிச்சைக்காக அவன் சகோதரியை கொழும்புக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
சகோதரிக்கு அடையாள அட்டை இல்லை. தொலைந்து விட்டது.
கிராமசேவகரின் சிபார்சுடன் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்திருந்தான். ஆறுமாதங்கள் சென்றுவிட்டன. இன்னும் அது கிடைக்க வில்லை.
மார்க்கண்டு கிராமசேவகரிடம் செல்கின்றான். “உங்கடை ஐ.சி. இன்னும் வரேல்லை மார்க்கண்டு. ஒருக்கா கச்சேரிக்குப் போய் விசாரித்துப் பாரும்"
கிராமசேவகர் கூறுகின்றார். கச்சேரிக்குச் செல்கின்றான் மார்க்கண்டு. “உங்கடை ஐ.சி. போன கிழமையே வந்திட்டுது." அதிகாரி கூறுகின்றார். மார்க்கண்டுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "நான் ஜி.எஸ்.சிடம் கேட்டன். அது இன்னும் வரேல்லை எண்டு சொன்னார்." V−
“உங்கடை ஜி.எஸ் அந்த ஐ.சியை நாலு நாளைக்கு முந்தியே இங்கையிருந்து எடுத்துக் கொண்டு போட்டார். இஞ்சை பாரும் அவர் எடுத்ததாக அவருடைய ஒப்பம்."
பதிவேட்டைக்காட்டுகின்றார் அதிகாரி மார்க்கண்டுவிற்கு தலைகால் தெரியாத கடுங்கோபம். மார்க்கண்டு மீண்டும் கிராமசேகவரிடம் செல்கின்றான். “கச்சேரியிலை விசாரிச்சியா மார்க்கண்டு?” "அந்த ஐ.சி. போன கிழமையே வந்திட்டுது. அதை நீஇரண்டு நாளைக்கு முந்தியே எடுத்து வந்திட்டாய்."
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 106

"ஆர் சொன்னது?" “அவங்கள் பொய் சொல்லுறாங்கள்." "பொய் செல்லுறது நீயா அல்லது அவையா?” “என்ன? கதை ஒரு மாதிரிக் கிடக்கு." கோபமாய் ஜி.எஸ். "ஒய் என்ன காணும்? மற்றவையிட்டை நூறு இருநூறு எண்டு வாங்கிற மாதிரி என்னிட்டையும் எதிர்பாக்கிறியா?”
மார்க்கண்டு சீறிப்பாய்கின்றான். "அப்பிடியில்லை மார்க்கண்டு. அதுவும் உன்னட்டையிருந்தா?” பணிவாக ஜி.எஸ். "அப்போ அந்த ஐ.சி. எங்கை?" "அது. அது. வந்து. இயக்கம் எடுத்துக் கொண்டு போட்டுது." “எந்த இயக்கம்?" “சிறிசு இல்லையில்லை. பெரிசுதான் கொண்டு போனது." கிராமசேவகர் தடுமாறுகின்றார். “எங்கடை பொடியள் இப்பிடிப்பட்ட சில்லுண்டித்தனமான வேலையள் செய்யாங்கள். எனக்கு நல்லாய்த் தெரியும்."
உறுதியாகக் கூறிகின்றான் மார்க்கண்டு. "அப்ப வேறை ஆர் எண்டு செல்லுறாய்?" “தப்புத் தண்ணிதான் இப்பிடிப்பட்ட கேடுகெட்ட வேலையள் செய்யிறது."
"அப்ப நான் தப்புத்தண்ணியா?” "அதிலும் பார்க்க மோசமானவன். படுகேடுகெட்டவன். நீ ஏழையளிட்டைக் கூட ஐஞ்சுக்கும் பத்துக்கும் கை நீட்டிறவன் தானே.”
"மார்க்கண்டு. என்ன கனமாய்க் கதைக்கிறாய்?"
“என்னைப்பற்றி உனக்குத் தெரியுமே?” "ஒமடா நீபத்து சிறீதானே?”
நிமிர்வு நீர்வை பொன்னையன் 107

Page 65
"பத்தாயிரம் குடுத்துத்தானே உந்த ஜி.எஸ் வேலை எடுத்தனி" "உனக்கார் சொன்னது?" "ஊரே சொல்லுது. அது மாத்திரமில்லை. உன்ரை பரம்பரையைப் பற்றியும் எனக்கு நல்லாய்த் தெரியுமடா"
"அப்பிடி என்ன தெரியும்?” “எடே உன்ரை பாட்டன் வெள்ளைக்காறனுக்குச் சேவகம் செய்தான். அதுக்குப் பிச்சையாய் அவன் காணி குடுத்தான். அது தான் அந்த காற்றாடிக் கிணத்தடி மணியம் தோட்டம். அதோடை நீங்கள் இப்ப இருக்கின்ற பெரிய வளவும் அவன் போட்ட பிச்சைதான்ரா."
"உன்ரை கொப்பன் றோட்டு ஒவசியராயிருந்தான். ஏழாம் வகுப்போடை அவன் றோட்டுக்கு கல்லையும் மண்ணையும் போட்டு லச்சக்கணக்கிலை அடிச்சு உண்ரை அக்காமார் நாலு பேருக்கும் காணிவாங்கிநாலு கல்வீடுகள் கட்டினான்." கிராமசேவகர் பேயறைந்தவராய் நிற்கின்றார். “எடே நீகூட“குதிரை ஓடித்தான்"ஓ.எல். பாஸ் பண்ணினனி" "இதிலை உன்ரை பவிசு வேறை." கிராம சேவகர் வாயடைத்துப்போய் நிற்கின்றார். “எல்லாத்துக்கும் மேலை நீ எனக்கு எவ்வளவு கெடுதல் செய்திருக்கிறாய் தெரியுமா?"
என்ன என்று கேட்பதுபோல கிராமசேவகர் மார்க்கண்டனைப் பார்க்கின்றார்.
"நான் பொடியளின்ரை வாகனங்களை உடனுக்குடன் பழுது திருத்திக் குடுக்கிறன். அதுக்கு ஒரு சதம் கூட கூலிவாங்குவதில்லை. நான் இயக்கங்களின்ரை ஏஜன்ட். கடும் ஆதரவாளன் என்று ஆமிக்காறருக்கு சொல்லியிருக்கிறாய்."
"ஆமிக்காறர் என்னைக் கூப்பிட்டு துருவித் துருவி விசாரிச் சாங்கள். நான் மறுத்திட்டன். ஆனா ஆமிக்காறர் என்னை கடுமை" யாய் சந்தேகிக்கிறாங்கள். என்ரை நடவடிக்கையளை உன்னிப்பாய் அவதானித்துவாறாங்கள். நான் இதுக்குப் பயப்பிடேல்லை. ஆனா
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 108

நான் பொடியளுக்கு செய்யிற கடமையை தொடர்ந்து மிகவும் அவதானமாய்ச் செய்துதான் வாறன்."
கிராம சேவையாளருக்கு பெரும் அதிர்ச்சி. "அதோடை விட்டியே? எனக்கு சிங்களம் நல்லாய்த் தெரியும். நான் மோட்டார் வாகன பாட்ஸ்களை வாங்குவதென்ற சாட்டில் அடிக்கடி கொழும்பு சென்று வாறன். நான் இயக்கங்கள் பற்றி உளவு பாத்து ஆமிக்கு சொல்லிவாறன். எனக்கும் ஆமிக்கும் நெருங்கின தொடர்பிருக்கு. நான் ஆமியின்றை உளவாளி எண்டு இயக்கங்களுக்கு நீ சொல்லியிருக்கிறாய். அது எடுபடேல்லை. எங்கடை இயக்கங்கள் உன்னை நம்பேல்லை. இதுவும் எனக்கு நல்லாய்த் தெரியும்."
ஜி.எஸ்.திகைத்தவராய் நிற்கின்றார். "உன்னை நான் சும்மா விட மாட்டன். இண்டைக்கே நான் இயங்கங்களின் மேலிடங்களுக்கு உன்னைப் பற்றி சொல்லி வைக்கிறன் பார்."
"மார்க்கண்டன் நானும் உன்ரை திமிருக்கு முடிவுகட்டித் தாறனடா."
கிராம சேவகர் சபதமேற்கின்றார். “சீ. நாய் பயலே. நீயும் ஒரு மனிசனா? தூ" காறித்துப்பிவிட்டுச் செல்கின்றான் மார்க்கண்டு. உச்சி வெய்யில் தகிக்கின்றது. மார்க்கண்டுவின் உள்ளமும் கொதிக்கின்றது. நேரம் எட்டு மணியாச்சு. இன்னும் என்ரை அவரைக் காணேல்லை' அவருக்கு இண்டைக்கு என்ன நடந்தது? புவனேஸ்வரிதவியாய்த் தவிக்கின்றாள். அவளது உள்ளமும் உடலும் பதறிக்கொண்டிருக்கின்றது. திடீரென காற்று ஊளையிடுகின்றது. வானத்தின் கனைப்பு இரவின் மெளனத்தைக் கலைக்கின்றது. மின்னல் இருள் திரையைக் கிழிக்கின்றது.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் | 109|.

Page 66
இலை குழைகள், சருகுகள் தூசியெல்லாம் அடித்து வீசப்படுகின்றன.
தூசிப் படலம் பூமியிலிருந்து கிளம்பி வான மண்டலத்தில் வியாபிக்கின்றது.
புவனமாக்களுக்கு பயப்பீதி,
வாகன உறுமல் சத்தம். கேற்றடியில் வாகனம் ஒன்று திடீரென வந்து நிற்கின்றது.
இந்த நேரத்தில் வாகனத்திலை ஆர்வாறது?
'ஒரு வேளை அவர் ஆற்றையாவது வாகனத்தில் வந்திறங்கு" றாரோ?
அல்லது ஆமியின்ரை வாகனமோ?
'ஆமி இப்ப ஏன் வரப்போகுது?
'பத்து மணிக்குத் தானே ஊரடங்கு.
கறுப்புச்சீருடையில் நால்வர்.
நால்வரும் விடலைகள்.
'ஆர் இவங்கள்?
இஞ்சை ஏன் இவங்கள் வாறாங்கள்?"
ஒன்றுமே புரியாதவளாய் புவனம்.
நான்கு விடலைகளும் எதையோ தூக்கிவருகின்றனர்.
இவங்கள் என்னத்தைத் தூக்கிவாறாங்கள்?
வானம் இடித்து முழங்குகின்றது
ஒரு துளி மழைகூட இல்லை.
சூறாவளிக்காற்று சுழன்றடிக்கின்றது.
புவனம் உற்றுப் பார்க்கின்றாள்.
பிரேதப்பெட்டி
புவனத்திற்கு மலைப்பு.
இவங்கள் இதை ஏன் இஞ்சை கொண்டாறாங்கள்?
ஒரு வேளை இடம் மாறிவாறாங்களோ?”
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 1110 |

அயலவர்கள் வந்து குவிகின்றனர்.
புவனத்திற்கு ஒரே குழப்பம்.
“உங்கடை வீட்டுக்கு முன்னாலை விறகுகாலை”
'விறகுகாலையைப் பற்றி இவங்கள் எங்களுக்கு ஏன் சொல்லுறாங்கள்?
“சுடலையும் உங்கடை வீட்டுக்குக் கிட்டத்தான் கிடக்கு."
இவங்கள் என்ன சொல்லுறாங்கள்? எனக்கொண்டும் புரியேல்லையே."
“எந்தவித ஆரவாரமுமில்லாமல் ஒரு மணித்தியாலத்துக்கை இந்தப் பிரேதத்தை எரிச்சுப் போடவேணும்."
கறுப்புச் சீருடை ஒன்று கண்டிப்புடன் கூறுகின்றது.
நான்கு சீருடைகளும் புறப்பட்டுச் செல்கின்றன.
'ஆற்றை பிரேதம்?
புவனத்திற்கு ஒரே குழப்பம்.
அயல்வீட்டு கந்தசாமி பிரேதப் பெட்டியை மெதுவாகத் திறக்கின்றார்.
"ஐயோ! என்ரை ராசா!"
புவனத்தின் மரண ஒலம்.
அண்டசராசரங்களும் அதிர்ந்தன.
இடிஇடிக்கின்றது.
★
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 11111

Page 67
கர்வம்
தம்பித்துரையின் செல்லக் கெனடி தவராசாவின் செல்ல மகள் புனித மலரைக் கடித்துவிட்டது. புனித மலருக்கு வயது ஐந்தேதான். இரண்டு இடங்களில் கடிகள். இரண்டில் ஒரு கடி கெண்டைக்காலில் இரண்டாவது கடி தொடையில், "ஐயோ! பாவம் வேதினை தாங்கே"
GROTE DGR)
தவிக்குதடா என்ரை பாலன்." தவராசாவுக்கு தாங்கேலாத கோபம். “எடே, தம்பித்துரையா உன்ரை கெனடியை என்ரை பாலனை ஏனடா கடிக்க 6f "LTuiu?”
உன்ரை கெனடியை நீ ஏனடா கட்டி வைக்கேல்லை?”
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 112

“எடே தவராசா நான் ஆரெண்டு உனக்குத் தெரியுமோடா?
என்ரை குடும்பம் எப்பிடிப்பட்ட குடும்பம் எண்டு உனக்குத் தெரியுமோடா?”
தம்பித்துரை தவராசனைக் கேட்டான்.
தவராசா பாவம் வாயடைத்துப் போனான்.
மரியாதையினாலாஅல்லது பயத்தினாலா? அல்லது இரண்டும் கலந்த ஒன்றினாலா?
ஐயோ பாவம்! துடிக்குது குழந்தை புனிதம்.
கோப்பாய் ஆஸ்பத்திரிக்கு புனிதத்தைக் கொண்டு போனான் தவராசா
"உன்ரை மகளைக் கடித்தது தெரு நாயா அல்லது வளர்ப்பு நாயா?”
ஆஸ்பத்திரி டாக்டர் கேட்டார்.
“வளப்பு நாய் தான்”
தவராசா சொன்னான்.
"அது நல்ல நாயா அல்லது விசர்நாயா?”
டாக்டரின் கேள்வி.
"அது கனபிள்ளைகளைக் கடிச்சுப் போட்டுது”
“நல்லநாயெண்டால் எதுக்கு கனபிள்ளையளைக் கடிச்சுது?"
"அது விசர் நாயாகத்தான் இருக்க வேணும்."
டாக்டரின் அனுமானம். &
“இதுக்கு விசர்நாய்க்கடி தடுப்பு ஊசிதான் போடவேணும்.
egoist...............
இந்தப் பாழாய்ப் போன யுத்தத்தாலே
இஞ்சை விசர்நாய்க்கடி தடுப்பு ஊசிமருந்து இல்லை.
“யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு பிள்ளையை உடனை கொண்டு போ."
கவலையுடன் கூறினார் டாக்டர்.
நிமிர்வு நீர்வை பொன்னையன் 113|

Page 68
கொதிக்கும் வெய்யிலில் புனித மலரை கொண்டு போனான்
S6)|JITSFIT.
"விசர் நாய்க்கடி தடுப்பு ஊசிமருந்து இஞ்சை இல்லை கொழும்பிலை தான் கிடக்கு. எங்களாலை ஒண்டும் செய்யேலாது. புண்ணுக்கு மாத்திரம் மருந்தைக் கட்டிறம்." நாசமாய்போன யுத்தத்தைச்சாட்டி பாழ்படுவாற்ரை அரசாங்கம் மருந்தைக் கூட தமிழ்பிரதேசத்துக்கு அனுப்புதில்லை. என்ன செய்வது எங்கே போவது? தம்பித்துரையின் செல்லக் கெனடி வீரசிங்கத்தின் மகன் கோபாலையும் கடித்துவிட்டது. கோபாலுக்கு வயது எட்டுத்தான். "தம்பித்துரை ஏன் உன்ரை கெனடியைக் கட்டி வளத்தால் என்ன?
என்ரை மகன் கோபாலனை அநியாயமாய் அது கடிச்சுப் போட்டுதே"
வீரசிங்கம் வேதனையுடன் கேட்டான் தம்பித்துரையை. "அதைக் கேக்க நீஆரடா? என்ரை கெனடியை கட்டி வைக்கிறதா இல்லையா எண்டதை நாங்கள்தான் முடிவெடுக்கிறதடா."
"அது அநியாயமில்லையா?” வீரசிங்கம் கேட்டான். “நான் யாரெண்டு தெரியுமாடா உனக்கு? என்ரை குடும்பம் என்ன குடும்பம் எண்டு தெரியுமோடா உனக்கு?”
வீரசிங்கம் வாயாடைத்துப் போனான். மரியாதையினாலா அல்லது பயத்தினாலா? அல்லது இரண்டும் கலந்த ஒன்றினாலா?
போகட்டும்.
! நிமிர்வு நீர்வை பொன்னையன் | 114|

வேலுப்பிள்ளையின் மகன் வேதவனத்தையும் சண்முகத்தின் மகன் சிவதாசனையும் இன்னும் எல்லாமாய் மொத்தம்
ஏழு பிள்ளைகள் என தம்பித்துரையின் செல்லக் கெனடி. கடித்துக் குதறியதெல்லாம் சின்னப்பிள்ளைகள்தான். என்ன? சின்னப் பிள்ளைகளின் பிஞ்சு இரத்தம் அவ்வளவு உருசியா தம்பித்துரையின் செல்லக் கெனடிக்கு? போராளிகள் இரண்டு மூன்று பேருக்குச் சொல்லி முறையிட்டனர் மக்கள். பொறுப்பாளரிடம் சொல்லுறம் என்றனர் போராளிகள்.
பலன்?
பாவம் அவர்கள் தான் என்ன செய்வார்கள்? இன அழிப்பு இராணுவத்தை குறிவைத்துத் தாக்கி அழிப்பதில்தான் அவர்களது கவனமெல்லாம். “பொறுத்தது போதும் போவோம் வாருங்கோ ஏறியா பொறுப்பாளரிட்டை” தவராசா பாதிக்கப்பட்டவர்களை அழைத்தான். பாதிப்புற்ற பெற்றோர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சென்றார்கள். ஏறியா பொறுப்பாளரிடம் நடந்த அநியாயம் அனைத்தையும் எடுத்துக் கூறினர் பெற்றோர்கள். கூறிய அனைத்தையும் பொறுமையுடன் கேட்டறிந்த ஏறியாப் பொறுப்பாளரின் புருவங்கள் உயர்ந்தன. கண்களில் கோபத்தீகனன்றது. கோபத்தை அடக்கிதன் நிலைக்கு வந்த பொறுப்பாளர்
நிமிர்வு நீர்வை பொன்னையன் 115

Page 69
"நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்
நான் அங்கை வாறன்." கூறி அனைவரையும் அனுப்பிவைத்தார் பொறுப்பாளர். மறுநாள் காலையிலே தம்பித்துரையின் வீட்டுக்கு சென்றார் ஏறியா பொறுப்பாளர். தம்பித்துரையின் செல்லக்கெனடி கடித்துக்குதறிய பிள்ளைகளையும் பெற்றோர் அனைவரையும்
அழைத்து வரும்படி
கூறினார் ஏறியாப் பொறுப்பாளர். பாதிப்புற்ற அனைவரையும் தம்பித்துரை ஒடி ஒடி அழைத்து வந்தான். தம்பித்துரையின் செல்லக்கெனடியால் கடித்துத் குதறப்பட்ட ஏழு பிள்ளைகளும் துவண்டு போய் வரிசையாய் நிற்கின்றனர். “தம்பித்துரை இதுக்கு என்ன சொல்லுறாய் நீ?" சோர்ந்து துவண்டு நிற்கின்ற ஏழு பிள்ளைகளையும் சுட்டிக்காட்டிக் கேட்கின்றார் பொறுப்பாளர். தம்பித்துரையன் மெளனமாய் நிற்கின்றான். "ஏன் பேசாமல் நிக்கின்றாய்?" பதில் சொல்லு" தம்பித்துரையன் வாய் திறக்கவில்லை. நட்டமரமாய் நிற்கின்றான். "உன்னால் பதில் சொல்ல முடியாது. நீமாத்திரமில்லை உன்ரை குடும்பத்தினரும் குற்றவாளியள் தான்." எமது மக்கள் உண்ண உணவின்றிதவியாத் தவிக்கின்றனர்.
உங்களுக்கு செல்லப்பிராணி வேண்டிக்கிடக்கு.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் ( 116|

நீங்கள் போராளி குடும்பமா?"
“இல்லை." தயங்கித் தயங்கிக் கூறுகின்றான் தம்பித்துரை. "மாவீரர் குடும்பமா நீங்கள்?"
'ബൈ'
"தம்பித்துரையன்” அப்பிடியிருந்தும் நாங்கள் உங்களுக்கு வேலையும் தந்து வீடும் தந்தும்.
ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? எங்கள் குழந்தைகளின் உயிர்களுடன் விளையாடுகின்றீர்கள். நீங்கள் கேடுகெட்டவர்கள். கொடியவர்கள்! நீங்கள் இந்த ஊரில் இருப்பதற்கு அருகதை அற்றவர்கள். இனிமேல் நீங்கள் இந்த ஊரில் இருக்க முடியாது. உங்கள் உடமைகள் எல்லாவற்றையும் எடுத்து விட்டு வீட்டைப்பூட்டி துறப்பை மூண்டு நாலு நாட்களுக்கிடையில் எங்கடை காம்பிலை ஒப்படைத்திட வேண்டும்." தம்பித்துரையாக்கள் திகைத்து நிற்கின்றனர். "தம்பித்துரை கொண்டா மண்வெட்டி ஒன்று." தம்பித்துரை மண்வெட்டியைக் கொண்டு வந்தான். “வளவு மூலையில் கிடங்கொண்டு வெட்டு." தம்பித்துரை கிடங்கை வெட்டினான். “தம்பித்துரை கொண்டா உன்ரை செல்லக் கெனடியை" செல்லக் கெனடியைக் கொண்டு வந்தான் தம்பித்துரை. "அண்ணை எங்கடை காம்பிலை சமைக்கிற சமயல்காறன் தம்பித்துரையின்ரை நாய் இது?" பொறுப்பாளருடன் வந்த போராளி கூறுகின்றான்.
| நிமிர்வு நீர்வை பொன்னையன் 117|

Page 70
கெனடியைக் கண்டதும் சிறுவர்கள் ஏழுபேரும் பயபிதியில் அலறி ஒலமிடுகின்றனர். சிறுவர்கள் ஏழுபேரும் வெளியேற்றப்படுகின்றனர். தம்பித்துரையையும் தம்பித்துரையின் செல்லக் கெனடியையும் மாறிமாறிப்பார்க்கின்றார் பொறுப்பாளர். கணப்பொழுதுதான்.
பொறுப்பாளரின் கை உயர்கின்றது.
ஒரே ஒரு வெடி!
வானம் அதிர்ந்தது.
தம்பித்துரையின் செல்லக்கெனடி
அலறிக்கொண்டு
துள்ளி எழும்பி
சுருண்டு விழுந்தது!
! நிமிர்வு நீர்வை பொன்னையன் 118|

ஆசிரியரின் ஆக்கங்கள்
சிறுகதைகள்
1. மேடும் பள்ளமும் 1961
2. உதயம் 1970
3. பாதை I997
4. வேட்கை 2OOO
5. ஜென்மம் 2005 6. நீர்வை பொன்னையன் கதைகள் 2007
7. நிமிர்வு 2009
ஏனைய நூல்கள்
8. உலகத்து நாட்டார் கதைகள் 2OOI 9. முற்போக்கு இயக்கிய முன்னோடிகள் 2OO2 10.நாம் ஏன் எழுதுகின்றோம்? 2004
தொகுக்கப்பட்ட தொகுப்புகள் 1. ஈழத்து சமகால தமிழ் இலக்கியம் (தொகுதி - 1) 1998 2. ஈழத்து சமகால தமிழ் இலக்கியம் (தொகுதி – 2) 1999 3. முற்போக்கு இலக்கியத்தில் புனைகதைச் சுவடுகள் 2006 4 முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச் சுவடுகள் 2006 5. ஈழத்து முற்போக்குச் சிறுகதைகள் 2007
ஆசிரியரினர் படைப்புகள் பற்றி நீர்வை பொன்னையன் இலக்கியத் தடம் 2OO8

Page 71


Page 72
而 TTT
ISBN 978-955-1319-18-2
மேடும்
வாசகர்களுக்கு தொகுப்பு இது. கடந்த ஒரிரு 6.
படைப்புகள், மு 9ւլի பெறாத தொகுப்புகளில் கட்டும் 55.
நீர்வை
கதை எழுத்தா புத்துலகைக் எழுதுபவர் ஈழ கியத்தில் தெ
செயற்பட்டு வரு
தசாப்தங்களு
பயணிக்கிறார். தின் நேர்த்தியி
ஊக்கத்தில் இ6 பவர்.
திரெது 11
தேசிய பொரு
வாழ்வில் அற கொண்ட ប្រចាំ
 
 

பள்ளமும் முதல் நீர்வை பொன்னை கள் வரையான ஆறு தொகுதிகளை 5 அளித்தவரின் ஏழாவது சிறுகதைத் இதில் அடங்கியிருக்கும் அனைத்தும் ருடங்களுக்குள் எழுதிய புத்தம் புதிய முன்னைய தொகுப்புகள் எவற்றிலும் வை. ஒரே படைப்பை வெவ்வேறு சேர்த்து வாசகர்களின் தலையில் இல்லாதவர் நீர்வை
ஒரு படைப்பாளி. பிரதானமாக சிறு ளர் சமூக முன்னேற்றத்தின் ஊடாக காண்பதை நோக்கமாகக் கொண்டு த்து இலக்கிய உலகில் படைப்பிலக் ாடர்ந்து இலட்சிய வேட்கையுடன் நம் ஒரு மூத்த படைப்பாளி. கடந்த ஐந்து க்கு மேலாக படைப்பாளுமையிலும், ச்சியை பேணுவதிலும் தேக்கமுறாது வயதின் காரணமாக தனது கையெழுத் ல் தளர்வு ஏற்பட்டுவிட்ட போதும் கலை ளைஞனின் உற்சாகத்தோடு செயற்படு
டைப்புகள் ஊடாக புதிய பார்வையை, தை மக்கள் முன் வைக்க முனைகிறார். மூக மாற்றம் ஏற்படும் என உறுதியாக ப்பாகக் முயற்சிக T க்கையில் 960
ாடு கூடிய வாழ்க்கை முறை
டைப்புகள் இவை சாதி, இன, மத நளாதார அடக்கு முறைகள் நீங்கி, மக்களின் விடிவும், சமூக மேம்பாடும், மும் நிலவ डेङे
எம்.கே.முருகானந்தன்