கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சொந்தங்கள்: தம்பு சிவாவின் சிறுகதைகள்

Page 1


Page 2

சொந்தங்கள்
தம்பு சிவாவின் சிறுகதைகள்
த.சிவசுப்பிரமணியம் (தம்பு - சிவா)
இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவை

Page 3
நூல்
நூலாசிரியர் வெளியீடு
அனுசரணை
வெளியீட்டுத் திகதி
பக்கங்கள்
அச்சுப்பதிப்பு
விலை
சொந்தங்கள் தம்பு சிவாவின் சிறுகதைகள்
: த. சிவசுப்பிரமணியம்
: இலங்கை முற்போக்கு கலை
இலக்கியப்பேரவை I, இராஜசிங்க வீதி, கொழும்பு-06
: கற்பகம் இலக்கியச்சோலை
15, வித்தியாலயம் ஒழுங்கை, திருகோணமலை
- O-O6-2OO7
: 44
: டெக்னோ பிறின்டர்ஸ்
55, Dr. E.A. குரே மாவத்தை, கொழும்பு - 6. தொ.பே : O777-3O192O
: б5Шп 2OO.OO
ISBN 978-955-50115-1-8

என்னுரை
“கோரமான கதைகளைப் படித்துப் படித்து நீங்கள் மகிழ்ந்தீர்கள். மனத்தை வாட்டும் கற்பனைகளைப் படித்து உங்கள் உணர்ச்சி இன்பகரமாகத் திருப்தி அடைவதை நீங்கள் வெறுக்கவில்லை. ஆனால் உண்மையான கோரங்களை நான் தெரிந்து கொண்டிருக்கின்றேன். தினசரி வாழ்க்கையில் நிகழும் கோரங்களை நான் கண்டிருக்கின்றேன். நீங்கள் எங்கே வசிக்கின்றீர்கள், எப்படி வசிக்கின்றிர்கள் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியை வர்ணித்து உங்கள் உணர்ச்சிகளைத் துக்கத்திலாழ்த்த எனக்கு உரிமையுண்டு என்று நான் கருதுகின்றேன்.
நாம் வாழும் வாழ்க்கை கீழ்த்தரமான சாக்கடை வாழ்க்கை என்பதை யாரும் மறுக்க முடியாது. மனித சமூகத்தை நான் அளவு கடந்து நேசிக்கிறேன் என்றாலும் பிறருக்கு வேதனையளிக்க நான் விரும்பவில்லை. நாம் மானசிகமாக இருக்கக் கூடாதென்றும், அழகிய சொற்றொடர்களாலும் கவர்ச்சிகரமான பொய்களாலும் உண்மையை மூடிமறைக்கக் கூடாதென்றும் நான் உறுதியாகக் கருதுகின்றேன். வாழ்க்கையுடன் நாம் நெருங்கி நிற்க வேண்டும் " மிக நெருங்கி நிற்க வேண்டும்! நமது மனத்திலும் எண்ணங்களிலும் உறையும் நன்மைகளையும் மனிதாபிமானத்தையும் நாம் வாழ்க்" கையில் ஊற்ற வேண்டும்.
அதிர்ஷ்டத்திலோ, சந்தற்பவசத்திலோ நம்பிக்கை வைக்க" வில்லை. ஆனால் யாருக்கும் அஞ்சாத உறுதி என் உள்ளத்தை வளர்த்தது. வாழ்க்கையில் நெருக்கடி அதிகரிக்க அதிகரிக்க நான் மேலும் பலம் பெற்றதாகவும், என் புத்தி இன்னும் கூர்மையடைந்” தது போலவும் எனக்குப்பட்டது. தனது சுற்றுச் சார்புகளை எதிர்த்து மனிதன் நடாத்தும் போராட்டத்திலேயே அவன் உருவெய்துகிறான் என்பதை எனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே நான் உணர்ந்தேன்” மேற்கண்டவாறு மாக்ஸிம் கார்க்கி (Maxim Gorky) கூறிய, அவர் பெற்ற பயிற்சிகளை இந்த இடத்தில் மீட்டுப் பார்க்கின்றேன்.

Page 4
இலக்கியம் பொழுது போக்குக் கருவி அல்ல. நயம் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கக் கூடியதும் அல்ல. மக்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கருத்தில் கொண்டு உருவாக்க வேண்டியதே இலக்கியம். "உண்மை அது உனது இதயத்தைத் திருப்தி செய்வதாக, உனது சொந்தச் சரக்குப் போன்றதாக நீபொறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்" என்ற படிநிலையில் நின்று எனது எழுத்துக்களை யதார்த்தமாக எழுதிவருகின்றேன். சந்தற்பவாதத்திற்கு விலைபோக முடியாத எனது போக்கு சிலருக்கு ஆச்சரியத்தைத் தந்தாலும், நீண்ட எனது ஏற்றத் தாழ்வற்ற சமுதாயத்தை நோக்கிய லட்சிய யாத்திரை தொடரும்.
"சிறுகதை வாழ்க்கையின் சாளரங்கள், வாழ்க்கையிலே ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை, அல்லது ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறுவது" என்கிறார் புதுமைப்பித்தன்.
எனது இச் சிறுகதைகளின் இலக்கிய மதிப்புப் பற்றிய பிரச்சனையை ஒரு புறத்தில் வைத்துவிட்டாலும் தன்னைத் தானே வெற்றி கண்டுவிட்டது போன்ற ஒருவித உவகை இக்கதைகளால் எனக்கு உண்டாயிற்று. இப்பொழுது நான் பத்திரிகை சஞ்சிகை" களில் கூடுதலாக எழுதிக் கொண்டிருப்பதாக உணர்கின்றேன். பலர் என்னைச் சந்தித்து எனது எழுத்துக்கள் பற்றிய விமர்சனங்களை நேரடியாகவும் பத்திரிகை, சஞ்சிகை வாயிலாகவும் எடுத்தியம்பி வருகின்றார்கள். எத்தகைய விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் எனக்கு உண்டு.
“எழுதுவதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. ஏன் என்றால் எனக்குத் தெரிந்தவற்றைத்தான் நான் எழுதுகின்றேன். எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி நான் ஒருபோதும் எழுதுவதில்லை" என்று அடிப்படைப் பெருமக்களின் அனுபவப் பெருஞ்செல்வனான மார்க் ஸிம் கார்க்கி என்ற உலகம் போற்றும் முற்போக்கு எழுத்தாளர் கூறிவைத்தார். ஆம், இலக்கியம் மக்களுக்காகவே என்ற கோட்பாடு முற்போக்கு எழுத்தாளர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு மக்கள் இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
1970 இல் “கற்பகம்” என்ற கலை இலக்கிய அறிவியல் சஞ்சிகை மூலம் எழுத்துத் துறையில் காலடி எடுத்து வைத்தபோது என்னுடைய இலக்கியதாகத்தின் வளர்ச்சிக்கு உந்துசக்தி கொடுத்தவர்களாக பேராசிரியர் க.கைலாசபதி, நீர்வை பொன்னை

யன், செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன் ஆகிய முற்போக்குப் படைப்பாளிகள் இருந்து வழிகாட்டியுள்ளார்கள். இலக்கியம் மக்களுக்காகவே என்ற பற்றுறுதியுடன் என் சிறுகதைகளை எழுதி வருகின்றேன். இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய பேரவையைச் சேர்ந்த நீர்வை பொன்னையன், அ.முகம்மது சமீம், சிவா சுப்பிரமணியம், இக்பால் போன்றவர்கள் இன்றும் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
என் நெஞ்சை நெருடிய சம்பவங்கள்; என்மனதில் நீண்ட காலமாகத் தேக்கிவைத்திருந்த உள்ளக் கிடக்கைகள் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் எதிரான போக்குகள் போன்றவற்றை உள்வாங்கி யதார்த்தமாக என் சிறுகதைகளை எழுதியமையால் அவைகள் முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டனவாக அமைந்திருக்கின்றன.
யுத்தத்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் மற்றும் புலம் பெயர்வுகள், சுனாமி ஆழிப்பேரலைகள் ஏற்படுத்திய அனர்த்தங்கள், பெண்களின் அவலங்கள், அகதிவாழ்க்கையின் அல்லோலங்கள், வெளிநாட்டுப் பணிப்பெண்களாக சென்றுவந்தவர்களின் சோக வரலாறுகள், கல்வியின் முக்கியத்துவம், குடும்பப் பிரச்சினைகள், வெளிநாட்டுக்குப் போகும் பிள்ளைகளின் போக்குகள், ஏழ்மை, சுரண்டல், ஏமாற்றங்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு இத்தொகுதியிலுள்ள பன்னிரண்டு சிறுகதைகளும் படைக்கப்பட்டுள்ளன. மக்களுக்காக இலக்கியம் படைக்கும் யதார்த்தப் போக்கு என் எழுத்” துக்களின் அடிநாதம்.
"இலக்கியம் என்பது வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி. சமுதாயத்தில் நான் கண்டு தரிசித்த தரிசனங்களை என் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்தி அதைத் திரும்பவும் செழு" மைப்படுத்தி மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் எனக்குள்ள ஈடுபாடு எனது சிறுகதைகளின் வெளிச்சம், ஆலவட்டங்களோ, வார்த்தை ஜாலங்களோ இன்றி இயற்கையாகவே எழுதியுள்ளமையினால் எல்லோரும் இலகுவில் படித்துப் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். மக்களின் இன்றைய தேவைக்கேற்ப கருத்” துக்களை மக்கள் மொழிவழக்கிலேயே வழங்க வேண்டும் என்ற உந்துதலால் கூடியளவு சம்பாசனைகளை மண்வாசனைக்கேற்ப பேச்சு மொழியிலேயே எழுதியுள்ளேன்.

Page 5
சாதாரண பாமரமக்களை நாடி எனது எழுத்துக்கள் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் என் மனதில் ஒரு ஆத்மதிருப்தி ஏற்படும். எனது கதைகளின் கதாபாத்திரங்கள் யாவும் உயிர்த்துடிப்புள்ள ஜீவன்கள். சமுதாயத்தில் அன்றாடம் நாம் தரிசிக்கும் மனிதர்கள். அவர்களில் நானும் ஒருவனாக நடமாடுகின்றேன்.
என் சிறுகதைப் படைப்புகளை நூலாக்கம் செய்யவேண்டும் என்று உந்துசக்தியாக இருந்து செயற்பட்ட எண் ஆத்ம நண்பர்களுக்கும், எனது சிறுகதைகளைப் பிரசுரித்து உற்சாகப்படுத்திய தினக்குரல், தினகரன், வீரகேசரி, புதினம் ஆகிய பத்திரிகைகளுக்கும் ஞானம், இனிய நந்தவனம், மல்லிகை சஞ்சிகைகளுக்கும், இத்தொகுதியைச் சிறந்த முறையில் அச்சிட்டுதவிய டெக்னோ பிரிண்டர்ஸ் நிறுவன அதிபர் திரு.தி.கேசவனுக்கும், அங்கு தொழில் புரிபவர்களுக்கும், அட்டையின் ஒவியத்தை அழகுற வரைந்து தந்த பிரபல ஒவியர் ரமணி அவர்களுக்கும் மற்றும் எனது துணைவியார் ராதாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நன்றி
த.சிவசுப்பிரமணியம் 15, வித்தியாலயம் ஒழுங்கை திருகோணமலை
இலங்கை.

(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9)
உள்ளடக்கம்
உறவு
சதுரங்கம்
பிரளயம்
மனிதம் மரணிக்கின்றது
தீயாய் கனன்ற வாழ்வு
மனமே வாழ்க்கை
ULUGOOTh
கலையும் கோலங்கள்
விடியுமா?
(O) எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
(11) சுரங்களும் சுருதிகளும்
(2) சொந்தங்கள்
பக்கம்
l
25
36
46
66
73
83
95
O6
116
I3

Page 6

2-D6)
னக்குத் திருமணம் நடந்து ஐந்து வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. மனத்திற்கேற்ற ஒரு நல்லதுணை. இரண்டு ஆண்குழந்தைகள். வாழ்க்கைச் சக்கரம் ஒடிக்" கொண்டிருக்கின்றது.
நான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றலாகி வந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டன.
அப்பாவுக்கு அம்மா எப்படியோ, அதிலும்பார்க்க என் அன்பு மனைவி என்" னைப் பெரிதும் நேசித்தாள் என்றுதான் சொல்லவேண்டும். அவள் திருமணம் செய்த நாளிலிருந்து இன்றுவரை தனக்கென்று ஒன்றுகூடக் கேட்டது கிடையாது. என் அப்பா அம்மாவையும் அன்புடன் கவனித்து வந்தாள். அவர்களும் தங்கள் பிள்ளைக்கு மேலாக மருமகளில் அன்பாக இருந்தனர்.

Page 7
ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று எனக்கு லீவு. வீட்டில் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.
“கமலலோஷினி இங்கே வாரும்” எனது மனைவியை அழைத்தேன்.
ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவர் கூப்பிட்டவுடன் வந்துவிட்டார்.
"இன்று உமது பிறந்தநாள். ஏதாவது நீர் விரும்பும் பொருள் ஒன்றை வாங்கித்தர வேண்டும் என்று விரும்புகின்றேன். நான் உமது கணவர் என்ற முறையில் கேட்கின்றேன்; நீர் உமது விருப்பத்தை உடனே சொல்லியே ஆகவேண்டும்" வற்புறுத்தினேன்.
"அத்தான் நான் என்றும் உங்கள் விருப்பத்திற்குக் கட்டுப்பட் டவள். எனக்கென்று நான் சிறுவயதுமுதல் எந்தவிதமான ஆசை களையும் வளர்த்துக்கொள்ளவில்லை. அது என் அப்பா சொல்லித் தந்த பாடம்"
"சீதனத்திற்காக ஏங்கி அலைந்து, எத்தனையோ அபலைப் பெண்களின் வாழ்க்கையை வாழவிடாமல் சீரழித்துக் கொண்டிருக்" கின்ற இந்த பணப் பித்துப்பிடித்த சமுதாயத்திலே என்னைப் போன்ற ஏழைப்பெண்கள் எத்தனையோபேர் திருமணம் செய்ய முடியாமல் ஆசாபாசங்களையெல்லாம் அடக்கிக் கொண்டு வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்திலை கொள்கைப் பற்றுறுதியுடன் வாழுகின்ற தந்தையாரின் அடிச்சுவட்டில் என்னுடன் அன்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற உங்களை விடவா எனக்குப் பிறந்தநாள் பரிசு என்று ஒன்று இருக்கமுடியும்? நான் வாழும் நாள் எல்லாம் எனக்குப் பரிசாக இருங்கள். அதுவே என் பூரணத்துவமான மகிழ்ச்சி. நல்ல அன்பான கணவர், அன்புச் செல்வங்கள், பாசத்தால் என்னை அரவணைத்துக் கொண்டிருக்கும் மாமா, மாமி இவர்கள் எல்லோரையும் விட எனக்கு என்னத்தான் வேண்டும்? உங்கள் அன்பு ஒன்றே போதும்."
§ද 2ද පද්
கணபதிப்பிள்ளை மாஸ்டர் கொக்குவில் இந்துக்கல்லூரியில் படிப்பிக்கும் காலத்திலிருந்தே மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக்கு வேண்டிய எல்லாவகையான உதவிகளை
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 12

யும் செய்துவந்தார். சம்பளம் எடுத்ததும் வீட்டுச் செலவுகள் அதுவும் சிக்கனமாகச் செய்து கொண்டு, மிகுதிப் பணத்தையெல்லாம் வறிய மாணவர்களின் கல்விக்காகவே பயன்படுத்தினார். அதில் திருப்தி கண்டு வாழ்ந்து கொண்டிருந்தார். தனக்கோ அல்லது தனது குடும்பத்துக்கென்றோ ஒரு சேமிப்பும் வைத்துக்கொள்ளவில்லை. அந்தளவு தூரத்திற்கு அவரது கல்விச்சேவை முதன்மை பெற்று நின்றது.
காலம் யாருக்காகவும் காத்து நிற்பதில்லை. வயது வந்து மாஸ்டர் பென்சன் எடுத்துக் கொண்டார். அவருடைய சொற்ப பென்சனுடன் தான் வாழ்க்கை வண்டி ஒடிக்கொண்டிருந்தது.
நீண்ட காலமாகச் சுகயினமாக இருந்த அவர் மனைவி காலமாகி நான்கு வருடங்கள் ஓடிவிட்டன.
கோண்டாவில் மணியத்தின் காரில் சென்று இராமநாதன் மகளிர் கல்லூரியில் கல்விகற்ற அவருடைய ஒரேயொரு மகளும் தாயின் சுகயினம் காரணமாக ஏ.எல். உடன்படிப்பை நிறுத்திக் கொண்டார்.
மாஸ்டருக்கு வயதுபோகப் போக மகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மனத்தைப் பெரிதும் வாட்டிக் கொண்டிருந்தது. தான் கண்ணை மூடுவதற்கு முன் மகளை எப்படியாவது கரைசேர்த்துப் போட வேண்டும் என்ற உந்துதலில் மாப்பிளை தேடும் படலத்தில் ஈடுபட்டு நன்றாகவே இளைத்துவிட்டார்.
தான் கல்விக்காக உதவி செய்த பிள்ளைகள் வீட்டுக்குச் சென்று கேட்டும், அவர்கள் கொளுத்த சீதனத்தை எதிர்பார்த்தார்களே ஒளிய தங்களைப் படிக்க வைத்த ஆசானுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மை எள்ளளவும் இருக்கவில்லை. மாஸ்டர் நன்றாக நொந்து போனார். மகளை நினைத்துக் கவலைப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் அவரால் செய்ய முடியவில்லை.
米 来 米
வானம் நன்றாக இருண்டு கொண்டிருந்தது. “கமலா உந்தக் குடையை கொண்டுவாரும் நான் போஸ்ட் ஒப்பீஸ் மட்டும் போய் பென்சனை எடுத்துக் கொண்டு வாறன்."
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 13|

Page 8
“இந்தாங்கோ அப்பா மழையும் வரப்போகுது கவனமாய் போய் கெதியாய் வந்துவிடுங்கோ"
பென்சன் எடுக்கப் போன இடத்தில் தனது பாலிய நண்பர் நல்லதம்பி வாத்தியாரைக் கண்டுவிட்டார். அவருக்கு ஒருமகன் இருக்கிறான் என்று ஞாபகத்துக்கு வந்தது.
“நல்லதம்பி எப்பிடி உண்ரை பாடுகள். இப்பவும் தோட்டம்
செய்கிறியோ?”
"இல்லை மாஸ்டர் இந்த யுத்தம் வந்து தோட்டக் காணியெல்லாம் தரிசு நிலங்களாய்ப் போச்சு. இப்ப இஞ்ச ஆர் தோட்டம் செய்யினம்?."
“கதேக்கிளை கதை இப்ப உன்ரை மகன் என்ன செய்யிறான்." "அவன் ஏ.எல் மட்டும் படிச்சுப்போட்டு யூனுவசிற்றிக்குப் போக மாக்ஸ் காணாது. திருப்பிப்படிச்சு திரும்பவும் சோதனை எடு எண்டு சொன்னன், கேக்காமல் ஊர்சுற்றித் திரிஞ்சான். ஒரு மாதிரி ஆட்களைப் பிடிச்சு பாங்கிலை கிளாக்காய் சேர்த்துவிட்டன். நம்பமாட்டியள் இரண்டுக்கு மேலை குடுத்துத்தான் சேர்த்து விட்டனான்.
"அப்ப அவன்ரை கல்யாணப்பாட்டை ஏன் கவனியாமல் இருக்கிறாய்?"
“அந்த வயிற்ரெரிச்சலை ஏன் கேட்கிறியள் மாஸ்டர்" "என்ன நல்லதம்பி நடந்தது?"
“என்ரை மணிசிக்காறிண்ரை அண்ணனுக்கு ஒரே ஒரு மகள். நல்ல வடிவான பெட்டை. எலும்பிச்சம் பழம்மாதிரி இருப்பாள். அவளும் ஏ.எல் வரை சுண்டுக்குழியிலை படிச்சவள். நல்ல சொத்துச்சுகமும், அவளைக் கட்டடா எண்டு சொல்ல அவன் கேட்கமாட்டன் எண்டிட்டான்.
“அப்ப?”
“அவன் பாங்கிலை வேலைப்பார்க்கிற யாரோ ஒரு வேதக்காறப் பெட்டையை எங்களுக்குத் தெரியாமல் கல்யாணம் கட்டிக்கொண்டு ஒருநாள் வீட்டுக்கு வந்தான். எனிமேல் நீ இந்த வீட்டுப்பக்கம் வரவேண்டாம் எண்டு சொல்லி கலைச்சுப்போட்டன்.
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் |14

“இப்ப மகன் எங்கை இருக்கிறான்?" “பாசையூரிலை பொம்பிளை வீட்டிலை இருக்கின்றானாம்."
“நல்லதம்பி. யார் யாருக்கெண்டு எழுதிவைச்சப்படிதான் நடக்கும். நீ ஏன் கவலைப்படுகின்றாய். அவன் எங்கையிருந்தாலும் நல்லாய் இருக்க வேண்டும் எண்டு வாழ்த்து."
“சாதி சனம் பாராமல் போய் விழுந்துவிட்டானே! மாஸ்டர்.”
“நல்லதம்பி நீயும் ஒரு உபாத்தியாயரல்லோ. பள்ளிக்கூடத்திலை படிப்பிக்கேக்கை "சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்" எண்டுதானே பிள்ளைகளுக்குப் படிப்பிச்ச நாங்கள். இப்ப இப்படி பேசலாமே"
“என்னதான் இருந்தாலும்." “உங்களைப் போன்ற ஆட்களைத் திருத்தேலாது. நல்லதம்பி மழைக்குணமாய் இருக்கு அப்ப நான் வாறன்."
"றோட்டாலை போறது கவனம் மாஸ்டர். வாகனங்களை ஒட்டுகிறவங்கள் குடிச்சிட்டு கண்மூடித்தனமாக ஓடுகிறாங்கள். நான் வரேக்க ஒரு சையிக்கிளில் வந்த பெடியனை வான்காறன் தட்டிப் போட்டு ஓடிவிட்டான். பெடியனுக்கு சரியான ஆபத்தெண்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போட்டினமாம். சயிக்கிள் எட்டுமாதிரி நெழிஞ்சு கிடக்கு. ஆமிக்காரரின் வாகனந்தான் தட்டிப் போட்டுப் போனது எண் டு சனம் கதைக்கினம். எனக்கு ஒண்டுமாய் தெரியேல்லை” -
来水水
கணவதிப்பிள்ளை மாஸ்டர் பென்சனை எடுத்துக்கொண்டு றோட்டுக்கரையோரமாக நடந்து போய்கொண்டு இருக்கின்றார்.
அவரைத் தாண்டி ஒரு கார் அவருக்கு முன்பாக நிறுத்தப்படுகின்றது. காரில் இருந்து ஒரு இளைஞன் இறங்கி மாஸ்டருக்குக் கிட்ட வருகின்றான்.
“சேர் எப்பிடி இருக்கிறீங்கள்? என்னை தெரியுதா?" அந்த இளைஞன் கேட்கின்றான்.
"குறை நினைச்சுக் கொள்ளாதைய்யா. வயது போனதாலை எனக்கு மறதிகூட சொல்லத் தெரியேல்ல."
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 15|

Page 9
“சேர் நான் உங்களிட்டை ஓ.எல் வரை படிச்சனான். நான் கிளாக்கர் சுப்பிரமணியத்தின்ரை மகன் தர்மராஜா."
“ஒ இப்பதான் ஞாபகம் வருகுது. நீர் இணுவிலல்லே." என்ன மோனை செய்யிறாய்.?
"நான் சேர் டாக்டராக கொழும்பு பெரியாஸ்பத்திரியிலை வேலை பார்க்கின்றேன். உங்கள் படிப்பித்தல்தான் என்னை உயர வழிகாட்டியது. அதை எப்படிச் சேர் மறக்க முடியும்? கொழும்பில் இருந்து அப்பா அம்மாவைப் பார்க்க வந்தனான். வழியில் உங்களை கண்டது எனக்கு சரியான சந்தோஷம் சேர். இப்ப எங்கை சேர் போறிங்கள்?"
"போஸ்ட் ஒப்பீசுக்கு பென்சன் எடுக்க வந்தனான். வீட்டை போறன்."
“காரிலை வந்து ஏறுங்கோ வீட்டிலை விட்டுப்போட்டுப் போறன்.”
“என்ரை ராசா உமக்கு ஏன் சிரமம். உதிலதானே நான் நடந்து போயிடுவன்.”
"இல்லை சேர். நீங்கள் கட்டாயம் காரில் ஏறிவரத்தான் வேணும்."
வற்புறுத்தல் தாங்காமல் கணவதிப்பிள்ளை மாஸ்டர் காரில் ஏறிக்கொண்டார்.
“எப்படிச் சேர் இருக்கிறீங்கள்?"
“என்னிடம் படிச்ச பிள்ளைகளுக்குள்ள உம்மைப் போல குருவை மதிக்கத்தெரிந்த பிள்ளையை பார்க்கிறது எனக்கு அபூர்வ மாகத் தான் இருக்கிறது. உமக்கு உள்ளதைச் சொல்லாமல் இருக்க முடியுமா?"
“என்ரை மணிசி செத்து நாலுவருஷம் ஆச்சு. ஒரேயொரு பொம்பிள்ளைப்பிள்ளை. அதுக்கும் வயது ஏறிக்கொண்டு போகுது. ஒரு மாப்பிளையும் வந்து சேரேல்ல; சீதனம் எண்டு கொடுக்க என்னிடம் ஒண்டுமில்லை. அதாலை என்னட்டைப்படிச்ச பிள்ளையஸ் சின்ன உத்தியோகம் பார்த்தாலும் பரவாயில்லை எண்டு கேட்டுப் போனால் சீதனமில்லாமல் கட்டமாட்டம் எண்டு முகத்துக்கு நேரே சொல்லிப்போட்டுதுகள். எனக்குச் சரியான கவலை தம்பி. நான்
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் | 16|

சாகமுந்தி பிள்ளையை ஒருதன்ரை கையிலை பிடிச்சுக் குடுத்திட்டு கண்ணை மூடுவம் என்று இருக்கிறன்.”
"நான் செய்ததைச் சொல்லிக்காட்ட விரும்பேல்ல ராசா. என்னிடம் படிச்ச எங்கடை ஊர்பெடியன் படிக்கேக்கை சரியான கஷடப்பட்டவன். அவனுக்கு படிப்புக்கு எல்லா உதவியும் செய்தனான். அவன் இப்ப யாழ். ஆஸ்பத்திரியிலை மேல் நேசாக வேலை பார்க்கிறான். அவன்ரை வீட்டை ஒரு நாள் போய் என்ரை மகளைக் கல்யாணம் செய்யும்படி முதலில் கேட்டுப்பார்த்தன்; மண்டாடியும் பார்த்தன்.
அவனும் அவன்ரை தகப்பன்தாயும் ஒண்டுக்கும் வழியில்லாத பொம்பிளையை எடுத்து நாங்கள் என்ன செய்யிறது எண்டு கைவிரிச்சிட்டினம். எனக்குச் சரியான கவலை."
"மகள் என்ன செய்கிறா சேர்?"
"பிள்ளையும் பாவம். ஏ.எல் வரை படிச்சவள். தாய்க்கு வருத்தம் வந்து படுத்த படுக்கையாய் இருந்தபடியால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டிய கட்டாயம் இருந்தபடியால் அவவை என்னாலை தொடர்ந்து படிப்பிக்கவும் முடியயேல்லை. படிச்சு ஒரு வேலையைப் பார்த்துக் கொண்டு சொந்தக்காலில் நிற்கும் பாக்கியமும் கிடைக்கேல்லை. ஒண்டுமில்லாமல் தனிமரமாக நிற்கப்போகின்றாளே என்று மனத்திற்குள் ஒரு ஏக்கம் என்னைப் பெரிதும் வாட்டுகிறது"
சொல்லிக்கொண்டிருக்கும்போது மாஸ்டரின் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததை அந்த இளைஞன் பார்த்துவிட்டான்.
"தம்பி உதிலை இறக்கிவிடுங்கோ. உந்த ஒழுங்கைத் தொங்கலிலைதான் வீடு இருக்கு."
"பரவாயில்லை சேர் வீட்டு வாசலிலை கொண்டு வந்து இறக்கிவிட்டுப் போறன்.”
"ஏன் தம்பி உமக்குச் சிரமம்"
“எனக்கு ஒரு சிரமமும் இல்லை சேர். நீங்கள் சிரமம்பாராமல் என்னைப் படிப்பிச்சு விட்டபடியால்தான் இண்டைக்கு ‘இந்த நிலைக்கு வந்திருக்கின்றன். அதை என்றும் என்னால் மறக்க முடியாது சேர்."
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் | 171

Page 10
அவர் ஒரு குடிசை வீட்டில்தான் இப்பவும் இருப்பதை அவதானித்துக் கொண்டேன். வீட்டு வாசலில் இறக்கிவிட்டு "வாறன் சேர் என்றேன்." அவர் பார்த்த அந்த நன்றிப் பார்வை என் மனக்கண்முன் தோன்றிநிற்க, என்வீட்டுக்கு வந்து சேர்ந்தன்.
3ද 3ද 3%
நான் கொழும்பிலிருந்து அப்பா அம்மாவைப் பார்க்க வந்தது அவர்களுக்கு நல்ல சந்தோஷம். அன்று மத்தியானம் நானும் அப்பாவும் இருந்து சாப்பிட அம்மா எங்கள் இருவருக்கும் சாப்பாடு பரிமாறிக்கொண்டு நிற்கின்றா. நான் அம்மாவிடம் எங்களோடு இருந்து சாப்பிடும்படி கேட்டேன். இல்லைத் தம்பி நீங்கள் சாப்பிட்டு முடிய நான் சாப்பிடுவன் என்று பதில் சொன்னா.
“பிள்ளை ஆசையாய் கேட்கிறான் இருந்து சாப்பிடுமப்பா" என்றார் அப்பா. அம்மாவும் எங்களுடன் இருந்து பரிமாறியபடி சாப்பிட்டா. அப்பொழுது ஊர்புதினங்களை அப்பாவும் அம்மாவும் கதைக்க கேட்டுக் கொண்டிருந்தன்.
அம்மா சொன்னா, “எங்கடை ஊர் நூல் நிலையக் கட்டி" டத்துக்கு காசு சேர்க்க ஊர் பெடியங்கள், காசு கேட்டு இஞ்சை வந்தவங்கள், அப்பா சொன்னார் கட்டிடம் கட்டி முடிய வாங்கோ அப்ப நூல் நிலையத்துக்கு பத்தாயிரம் ரூபாவுக்கு புத்தகங்கள் வாங்கி தருவன் எண்டு. போனமாதம்தான் நூல் நிலையத் திறப்புவிழா நடந்தது. அப்பா புத்தகங்கள் வாங்கி உண்ரை பேராலை குடுத் திருக்கிறார்."
"ஏன் அப்பாவின்ரை பெயரைப் போட்டுக் கொடுத்திருக்கலாம் தானே?”
"உனக்குத் தெரியும் தானே அப்பா விளம்பரத்தை விரும்பாதவர் எண்டு. அதோடை நீ எங்களுக்கு அனுப்புகிற காசிலைதானே அப்பா புத்தகங்கள் வாங்கிக் குடுத்தவர். அப்பா எடுக்கிற பெஞ்சன் எங்கள் சீவியத்துக்குக் காணும் தானே. அதாலைதான் அப்பா அப்படிச் செய்தவர் தம்பி” சாப்பிட்டபின் பிரயாண அலுப்பில் நித்திரை கொண்டுவிட்டு பின்னேரம் ஐந்து மணிக்கு வெளிக்கிட்டுக் கொண்டு புறப்பட ஆயத்தமானபோது அம்மா வந்தா.
“எங்கை ராசா அவசரமாக"
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 18|

“எனக்கு கொக்குவில் இந்துக்கல்லூரியிலை படிப்பிச்ச மாஸ்டர் ஒருவர் கோண்டாவிலை இருக்கின்றார். அவரைப் போய் பாத்திட்டு வாறன்."
"இரண்டு மூண்டு நாள் லீவிலை வந்தபிள்ளை வீட்டிலை எங்களோடை இருக்காமல் வெளியிலை திரியுதே" அம்மா முணுமுணுத்தா.
“அவன் என்ன எங்களோடை கட்டிப் பிடிச்சுக்கொண்டு இருக்கவே வந்தவன். அவனுக்கும் நாலு தெரிஞ் சவையள் இருப்பினம்தானே, போய்வரட்டும் விடப்பா"
அப்பா சொன்னால் அம்மா ஒண்டும் எதிர்த்துச் சொல்லமாட்டா.
கணவதிப்பிள்ளை மாஸ்டர் வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு, கதவில் தட்டி சேர் என்று கூப்பிடுகிறன்.
கதவு திறந்ததும் பார்க்கின்றன். அது சேரின் மகளாகத்தான் இருக்க வேண்டும்.
“சேர் இருக்கிறாரா?” “ஓம் இருக்கிறார்: வாங்கோ உள்ளுக்குள் வந்து இருங்கோ" நான் உள்ளுக்குள் போய் ஒரு கதிரையில் இருக்கிறன். வீடு ஒலையால் வேயப்பட்டிருந்தாலும் மிகவும் துப்பரவாகவும் அழகாகவும் இருந்தது. முற்றத்தில் பூச்செடிகள் பூக்களுடன் காட்சி தந்தன.
மாஸ்டர் வந்ததும் எழுந்து "வணக்கம் சேர்” எண்டன். அவர் கையைக் காட்டி இருக்கச் சொன்னார். "பக்கத்து வீட்டுப் பிள்ளை ஒண்டுக்குச் சுகமில்லை அதுதான் பார்க்கப் போனனான். மகள் வந்து கூப்பிட வந்திட்டன். என்னெண்டு தெரியேல்ல பிள்ளை கொஞ்சம் கஷ்டப்படுது" மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். அதுதான் பிள்ளையைப் பெரியாசுபத்திரிக்குக் கொண்டுபோகச் சொல்லி கொஞ்சக் காசு குடுத்திட்டு வாறன்.”
"நான் வந்து அந்தப் பிள்ளையை பாக்கட்டே சேர்?"
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 19

Page 11
“ஒ. நீரும் ஒரு டாக்டர். அதை நான் மறந்து போனன்; அப்ப வாரும் பாத்திட்டு வருவம்"
நானும் மாஸ்டரும் அந்தப் பிள்ளையின் வீட்டுக்குச் சென்றம். பிள்ளையைப் பார்த்தன். தாயார் அழுது கொண்டிருக்கிறா. அவவிடம் விபரங்களைக் கேட்டு அறிந்தன்.
இரவில் சரியான காச்சல், அனுங்கிக் கொண்டு படுப்பதாகவும், மூண்டு நாலு நாட்களாய் இப்டித்தான் இருப்பதாயும், சாப்பாடு கஞ்சி குடுத்தால் சத்தி எடுப்பதாயும் கூறினார்.
"நீங்கள் பெரியாஸ்பத்திரிக்குப் போய் அலைய வேண்டாம். மருந்து எடுத்து வாறன்.” என்று சொல்லிவிட்டு காரில் புறப்பட்டு வந்து ஒரு பார்மவியில் தேவையான மருந்துகளும், சஸ்ரசின், மாமயிட், குளுக்கோசும் வாங்கிக்கொண்டு திரும்பிவந்து பிள்ளைக்கு ஊசிமூலம் மருந்தும் ஏற்றி, எப்படி மருந்துகளைக் குடுக்க வேண்டும் எண்டும், சஸ்ரசின், மாமயிட் என்பவற்றை குடிக்கக் குடுக்க வேண்டும் எண்டு சொல்லிவிட்டு மாஸ்ரருடன் அவர் வீட்டுக்கு வந்தன்.
“தேத்தண்ணி குடிச்சுவிட்டுப் போகலாம் தம்பி இருங்கோ" எண்டு அன்பாகக் கேட்டுக் கொண்டார்.
நானும் அவர் சொல்லைத் தட்டமுடியாமல் இருந்தன். "பாவம், அந்த ஏழைக்குடும்பத்திற்கு நீங்கள்செய்த உதவி பெரிசு தம்பி"
“அது என்னுடைய டியூட்டி சேர்." “கமலா, தேத்தண்ணி போட்டுக்கொண்டு வந்து தம்பிக்குக்குடு”
"அப்பா, ஆட்டுப்பால் தேத்தண்ணி குடிப்பாரோ எண்டு கேளுங்கோ"
"தம்பி எங்கடை வீட்டிலை பால்மா ஒண்டும் வேண்டிறேல்ல. ஆடு ஒண்டு வளக்கிறம். அந்தப் பால்தேத்தண்ணி குடிப்பீங்களே?”
"ஓம் சேர். நான் குடிப்பன்"
தேத்தணிணி போட்டுக் கொண்டு வந்து "அப்பா இங்க வாங்கோ” என்று கூப்பிடும் சத்தம் கேட்டது.
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் |20

"அது எங்கடை பிள்ளைதான் நீ கொண்டு வந்து குடு."
தேனீர் குவளையை எடுக்கும்போது அவர் மகளின் முகத்தைப் பாத்தன். சாந்தமே உருவான அந்த முகம். தேனீரை தந்துவிட்டு உடனே உள்ளே போய்விட்டார். மாஸ்டருடன் இருந்து பல விடயங்களைக் கதைத்துவிட்டு, ஐயாயிரம் ரூபாவை சேட் பொக்கேற்றில் இருந்து எடுத்து மாஸ்டரிடம் கொடுக்க முனைந்தன் அவர் வாங்க மறுத்துவிட்டார்.
"தம்பி நீங்கள் குறை நினைக்கக்குடாது. நான் என் வருமானத்துக்குள் வாழப்பழகிக் கொண்டவன். கூடுதலாகப் பணம் கிடைத்" தால் என் இலட்சிய வாழ்க்கை தவறிப்போய்விடும். அதனால் என்னை வற்புறுத்த வேண்டாம்."
அவரின் பெருந்தன்மையை எண்ணிக்கொண்டு அவரிடமிருந்து
விடை பெறுகிறன்.
*妆
"அப்பாவும் அம்மாவும் கொழும்புக்கு வந்து என்னோடை இருங்கோவன்."
இரவுச் சாப்பாட்டு நேரம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது சொன்னேன்.
"ஐயோ ராசா அப்பா கிராம முன்னேற்றச்சங்கம், பென்சனியர் சங்கம் எண்டு எல்லாவற்றிலும் தலைவராக இருக்கின்றார். அவர் ஊரை விட்டு வரமாட்டார். அவரைத் தனிய இஞ்சை விட்டுவிட்டு நான் என்னெண்டு வரலாம் சொல்லு."
"அப்ப வரமாட்டியள்"
"கலியாணம் ஒண்டைக் கட்டினியெண்டால் ஒரு பிரச்சனையும் இல்லை.” அம்மா சொன்னார்.
“ஓம். அதைத்தான் நானும் யோசிக்கிறேன்."
"நீ சொல்லுகிறதைப் பார்த்தால். சிங்களத்தியையோ, பறங்கியையோ விரும்புகிறாய் போல கிடக்கு."
"ஏன் அப்பா அதுகளும் மனுசப் பிறவிகள்தானே?” அப்பா அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் (211

Page 12
"இஞ்சருங்கோ! என்ரை அண்ணைமாருக்கும் பொம்பிளைப் பிள்ளைகள் இருக்குதுகள். ஒண்டுக்கை ஒண்டு செய்யலாமெண்டு விரும்புகிறன்."
"நான் உன்னை விரும்பி கலியாணம் முடிக்க வரேக்க. ஒரு செம்புச்சல்லி கூட சீதனம் தரேலாது. விருப்பமெண்டால் கூட்டிக் கொண்டு போ” எண்டு உன்ரை கொண்ணைமார் சொன்னவையல்லே”
"அம்மா ஒன்றும் பேசவில்லை." "நான் சீதணம் வாங்காமல் கலியாணம் கட்டினமாதிரி எங்கடை பிள்ளையும் சீதணம் வாங்காமல் ஒரு ஏழைப்பிள்ளைக்கு இனம் சாதி மதம் என்ற வித்தியாசம் பாராமல் வாழ்வு கொடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்."
அப்பாவிடம் என் விருப்பத்தைச் சொன்னால் ஏற்றுக் கொள்ளுவார் எண்ட நம்பிக்கை இருந்தது.
அப்பா உங்களுடன் ஒரு முக்கியமான விடயம் கதைக்க
வேணும்"
"இஞ்சரும் தம்பி ஏதோ முக்கிய விஷயம் கதைக்க வேணுமாம் நீயும் இருந்தால் தானே எனக்குச் சப்போட்டாக இருக்கும்" அம்மாவைத் தன்பக்கம் சேர்த்துக் கொண்டார்.
"அப்பா நான் கொக்குவில் இந்துக் கல்லூரியிலை படிக்கேக்கை கணவதிப்பிள்ளை மாஸ்டர் ஒருவர் ஓ.எல் வரை எனக்குப் படிப்பிச்சவர். அவற்றை பெண்சாதியும் இறந்துவிட்டா. அவர் தனது சம்பளத்திற்குள் வாழ்க்கை நடத்துவது மட்டுமல்லாமல் பல பிள்ளைகளுக்குக் கல்விக்காக பல உதவிகளும் செய்துவந்தவர். இப்ப பென்சனில் தன் வாழ்க்கையை நடத்துவதுடன் கஷ்டப்பட்டது களுக்கு உதவியும் செய்து வருகின்றார். அவருக்கு வயதுவந்து முதுமையும் பெற்றுள்ளார். இப்பவும் ஆடம்பரமில்லாமல் அமைதியாக ஒரு ஒலை வீட்டில்தான் வாழுகிறார்."
அவருக்கு ஒரேயொரு மகள் ஏ.எல் படிச்சிட்டு தொடர்ந்து படிக்காமல் தகப்பனைக் கவனித்துக்கொண்டு வீட்டில் இருக்கின்றா. அவ சீதணம் இல்லாத காரணத்தாலை கல்யாணச் சந்தையில் விலைபோக முடியாமல் வேதனையின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. மாஸ்டருக்கு மகளை எண்ணி |சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் |221

மிகுந்த கவலை என்னுடன் கதைக்கும்போது சொல்லி அழுதே விட்டார். அந்த நல்ல மனிதரின் மகளைத்தானப்பா கலியாணம் செய்ய நான் விரும்புகிறேன். உங்கடை பூரணமான சம்மதம் எனக்குத் தேவை." என்று சொல்லி முடிச்சன்.
என் அப்பா சமதர்மக் கொள்கையில் பற்றுறுதி கொண்டவர். ஊரில் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு மனிதர். பொது விடயங்களில் முன்னின்று பாடுபடுவார். அவர் வாயிலிருந்து என்ன விடைவரப்போகின்றது என்று எதிர்பார்த்து நிற்கின்றேன்.
அவர் ஒன்றுமே பேசாமல் என்னைப் பார்த்தபடி எதுவித சலனமுமின்றி நிற்கின்றார். என்மனம் ஏக்கத்தில்!
அம்மாதான் கதைத்தார். “தம்பி கஷடப்பட்ட குடும் பத்துப் பிள்ளையளிதான் நல்வாழ்க்கைக்கு ஏற்றவர்களாய் இருக்குங்கள். உன் விருப்பம்தான் எங்கள் விருப்பமும்."
அப்பா பெருவிரலை உயர்த்திக் காட்டினார். என் மனம் நிறைந்திருந்தது. அடுத்தநாள் மாஸ்டர் வீட்டுக்கு அப்பா, அம்மா, நான் மூவரும் சென்றம்.
"மாஸ்டர் இவை என்ரை பெற்றோர். உங்களைப் பார்க்க வந்திருக்கினை. s
"அப்படியா! மிகுந்த சந்தோஷம், இருங்கோ" "மாஸ்டர் அடுத்த வீட்டுப்பிள்ளைக்கு இப்ப சுகமா?" "இப்ப கொஞ்சம் முன்னேற்றமிருப்பதாய் சொல்லிச்சினை" "நான் ஒருக்கா அந்தப் பிள்ளையை பார்த்திட்டு வாறன் நீங்கள் அப்பா அம்மாவோடு கதையுங்கோ.
"அங்கை நாய் நிக்குது. தங்கைச்சி கமலா, டாக்குத்தர் தம்பியை அங்காலை கூட்டிபோ” எண்டு பெலத்துச் சொன்னார்.
மாஸ்டரின் மகள் தலைகுனிஞ்சபடி முன்செல்ல நான் பின்தொடர்ந்து சென்றன். “நாளைக்கு ஒரு ஊசி போட வேணும். நான் தந்த மருந்தை ஒழுங்காகக் குடுங்கோ.” எண்டு சொல்லிவிட்டு
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 123

Page 13
வர கமலாவும் பின்னால் வந்தார். நான் திரும்பிப் பார்த்து
"ஆட்டுப்பால் தேத்தண்ணி தருவியளா? எண்டு கேட்டன். "அங்கைபோய் இருங்கோ கொண்டுவந்து தாறன்." "யாரோ உங்கள் மாமாவும் மாமியும் வந்திருப்பதாக உங்கள் அப்பா சொன்னார். அவர்களுக்கும் சேர்த்துப் போட்டால் நல்லது” எண்டன்.
"அப்படி எனக்கு மாமா மாமி எண்டு ஒருவரும் இற்றைவரை இல்லை. போய்ப்பார்ப்பம்"
கமலா தேத்தண்ணியுடன் வந்து கொண்டிருந்தாள்.
“பிள்ளை இவைதான் டொக்டர் தம்பியின் அப்பாவும் அம்மாவும்"
எனக்கு தேத்தண்ணி தர வரும் போது முகத்தின் மலர்ச்சியைக் கண்டன். -
கண்கள் மட்டும் பேசின.
cabas' 2006
★
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் |24

சதுரங்கம்
இ ஞ்சருங்கோ உதுகளை ஏன் இஞ்சை
கூட்டிக்கொண்டு வந்தனியள்”
“ஏனப்பா, மச்சான் ஷெல் அடியில் அகப்பட்டு செத்துப்போனார். அதுகள் அங்க இருக்கப் பயந்து அணிணை இருக்கிறார் எண்ட நம்பிக்கையிலை இஞ்சை பிள்ளையளையும் கூட்டிக்கொண்டு வந்திருக்குதுகள்."
"இல்லயப்பா நாலு பெரிய உத்தியோகத்தர்மார் வாற இடம். மகள் சாந்தியோடை படிக்கிற பெரிய இடத்துப் பிள்ளைகள் வாற இடம் மரியாதையாக இருக்க வேண்டாமே.”
"அதுக்கும் இதுகள் வந்திருக்கிறத்துக்கும் என்னப்பா?”
“வீட்டுக்கு வாறவை உதுகளைப் பார்த்திட்டு என்ன பட்டினிப் பட்டாளங்களை
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 125

Page 14
வீட்டில வைச் சிருக்கிறியள் எண் டு கேட்டால் என்னப்பா சொல்லுகிறது?”
"நீ வேற ஒண்டும் சொல்ல வேண்டாம். இவற்றை தங்கைச்சியும் பிள்ளைளும் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கினமெண்டு சொல்லும்."
“அதில்லயப்பா என்ரை பெரியண்ணையும் பிள்ளையஞம் கனடாவிலிருந்து இஞ்ச வந்து ஒருமாதம் தங்கப் போயினமாம்.
y
அதாலை.
“என்ன அதாலை, உன்ரை கொண்ணரெண்டாப்போல என்ன கொம்பே? அவர் காசுக்காறன். ஏதாவது ஒரு ஹோட்டலிலை வந்து நிக்கலாம் தானே?"
"அவர் ஆசையோடை தங்கைச்சி வீட்டை வந்து என்ரை கையாலை சமச்சுவிச்சுச் சாப்பிடவேணும் எண்டு கடிதத்திலை எழுதியிருக்கிறார்”
"உனக்கு அண்ணன் மாதிரித்தான் எனக்குத் தங்கைச்சியும். பாவம் அதுகள் கஷ்டப்பட்டு எல்லாத்தையும் இழந்து என்னை நம்பி வந்திருக்குதுகள்."
“அவை இஞ்சை இருக்கிறது எனக்குப் பிடிக்கேல்லை." "அப்ப என்ன செய்யச் சொல்லுகின்றாய்" “உந்த பூந்தோட்ட அகதிமுகாமிலை கொண்டுபோய் விட்டுட்டு வாங்கோ."
"உனக்கு என்ன விசரே! இந்தப் பெரிய வீட்டிலை அதுகள் ஒரு மூலையில் இருக்கட்டும். எனிப் பேசாதையும்"
“பிள்ளை சாந்தியை தன் மகனுக்குக் கட்டிக்கொடுக்க அண்ணை என்னோடை ரெலிபோனில் கதைக்கேக்கை சொன்னவர். அதுபற்றிக் கதைக்கத்தான் கனடாவிலிருந்து வாறார்."
米 冰 米
இவையின்ரை கதையளின் போக்கு என்ரைமனத்தை வேதி னைப்படுத்துவதாய் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அம்மாவைப் பார்க்கின்றன். அவவின் கண்களில் கண்ணிர் முட்டி முகத்தில் வழிந்து கொண்டு நிற்குது. அக்கா தலையில் கையை
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1261

வைச்சபடி மறுகையால் கண்ணிரைத் துடைத்துக்கொண்டு நிக்கிறா.
எல்லாருக்கும் பசிக்களை நன்றாய் சோந்துவிட்டினை. வெளியிலை போய் ஏதாவது சாப்பாடு வாங்கிவாறன் எண்டு அம்மாவிடமும் அக்காவிடமும் இரகசியமாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டன்.
"வசந்தன் எங்கயடா மேனை போறாய்?" மாமா கேட்டார்.
"நாங்கள் இஞ்சை வந்த ஒட்டோவிலை ஒரு பார்சலைத் தவற விட்டு விட்டம். அதுதான் எடுத்துவரப் போறன்."
“இது வவுனியா. யாழ்ப்பாணம் மாதிரியில்லை. கண்டபடி திரியக்கூடாது. ஐ.சீயையும் கொண்டுபோ. யாரும் கேட்டால் பூட்கொன்றோல் இன்ஸ்பெக்டர் நடராசாவின் மருமகன் எண்டு சொல்லு. சரி கெதியாய் போயிட்டு வா."
"Solid upntlon".
சொல்லிவிட்டு வவுனியா கச்சேரிக்குப் போய் ஓ.ஏ. சிதம்பரப்பிள்ளையிடம் நாங்கள் வவுனியாவுக்கு வந்த விடயம் பற்றிச் சொன்னன். மாமி வீட்டிலை இருக்க வேண்டாம் எண்டும் அகதிமுகாமில் போய் இருக்கச் சொல்லுறா எண்டும் சொன்னன்.
"உன்ரை மாமா இஞ்சை உள்ள கடைக்காரரை பயப்பிடித்தி மாதா மாதம் லஞ்சம் பெற்றுப் பணம் சேர்க்கிறார். உன்ரை மாமி கடைகளிலை வாங்குகிற சாமான்களுக்கு காசு கொடுக்கிறேல்லை. ஜிஏக்கும் இந்த ஊழல் விவகாரம் தெரிஞ்சுபோச்சு.
சிவா முதல் வேலைக்குவந்து கிளாக்காக உணவுக் கட்டுப்பாட்டுத் திணைக் களத்தில் வேலை செய்த போது உண்ரை மாமாவின் வண்டவாளங்கள் எல்லாம் தெரியும்.
சிவாவும் ஆறுமாதம் வேலை செய்துவிட்டு கொழும்பு இன்கம் ரக்ஸ் கந்தோருக்கு மாற்றலாகிப் போட்டார். நான் வேலை மாறி வரேக்கை கொம்மான்ரை விடயத்தைச் சொல்லிவிட்டவர். கடன் வாங்கினால் திருப்பிக் குடுக்கமாட்டார். தன்னட்டை வாங்கின காசு தரவில்லையாம். மரியாதைக்கு அஞ்சி அவரும் திருப்பிக் கேட்காமல் விட்டுவிட்டாராம். வசந்தன் அந்தப் பச்சோந்தி வீட்டிலை இருக்கவேண்டாம்; நீங்கள் எங்கள் வீட்டிலை வந்து இருக்கலாம். பேந்து சிவா என்ன சித்தப்பா நீங்களும் கவனிக்கவில்லையோ
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 127

Page 15
எண் டு என்னைப் பேசுவான். ஒடிப் போய் ஒட்டோவிலை அம்மாவையும் அக்காவையும் கூட்டிக் கொண்டு வா. நான் நீங்கள் வரும்வரையும் நிக்கிறன்.
நான் முதல் யாழ்ப்பாணம் கச்சேரி பென்சன் பிறான்சிலை வேலைக்குப் போகும் போது உங்கடை அப்பா வேலாயுதபிள்ளையர்தான் சீ.சீயாக இருந்தவர். அவரைப் போல ஒரு நேர்மையான மனுசனை நான் காணேல்லை. அவருக்கு கோபம் வந்ததை நான் பார்த்ததில்லை. எல்லாருடனும் அன்பாய் பழகுவர். எனக்கு அவர் வேலை சொல்லித்தந்து பழக்கிவிட்டவர். அந்த நல்ல மனுசன்ரை குடும்பத்திற்கு உதவி செய்யக் குடுத்துவைக்க வேணும்."
என் கண்கள் கலங்கி அழுதிட்டன். "வசந்தன் அழாதையும், என்ன உதவியெண்டாலும் நான் செய்யத் தயாராக இருக்கின்றன். நீர் போய் அம்மாவையும் அக்காவையும் கூட்டிக் கொண்டு வாரும்."
மாமா வீட்டுக்கு வந்து அம்மாவிடமும் அக்காவிடமும் சிவா அத்தானின் சித்தப்பா சிதம்பரப்பிள்ளை கச்சேரியில் ஒ.ஏ.ஆக இருக்கின்றார். அவரைச் சந்தித்தன். அவர் தங்கள் வீட்டிலை எல்லாரும் வந்திருக்கலாம் எண்டு சொன்னவர் எண்டன்.
"அம்மா சொன்னா அண்ணையிடம் சொல்லிப் போட்டுத் தான் போகவேணும். அவர் கோவிப்பர்.”
கதைச்சுக் கொண்டிருக்கும்போது மாமா வந்தார்.
“உடுப்புகளை மாற்றி குளியுங்கோ. நான் வெளியிலை போய் சாப்பாடு வாங்கிக் கொண்டு வாறன்."
“இல்லை மாமா நான் வரேக்கை சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்தனான்."
"எல்லாத்துக்கும் அவசரம்தான்” எண்டு அதிகாரத் தொனியில் கத்தினார்.
"அண்ணை சிதம்பரப்பிள்ளை வீட்டிலை வந்திருக்கும்படி தம்பியிட்டைச் சொன்னவராம். அதுதான் உங்களிட்டை சொல்லிப் போட்டு அங்க போகப் போறம். உங்களுக்கும் பிரச்சனையில்லாமல் இருக்கும்"
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 128|

"அந்த சிதம் பரப்பிள்ளை இவரோடை யாழ்ப்பாணம் கச்சேரியிலை வேலை செய்தவர். இப்ப வவுனியாக் கச்சேரியிலை ஓ.ஏ.யாக இருக்கின்றாராம்."
"என்ரை கெளரவம் மரியாதை எல்லாம் போச்சு. கச்சேரியிலை என்னை யாரும் மதிப்பினமே? ஒரு இடமும் போகவேண்டாம் இஞ்சை இருங்கோ".
"இஞ்சருமப்பா இவை ஒ.ஏ சிதம்பரப்பிள்ளை வீட்டிலை இருக்கப் போயினமாம்."
"ஏன் மச்சாள் அங்கையெல்லாம் போறியள். இஞ்சை இருக்கலாம் தானே"
அம்மா ஒன்றும் பேசேல்லை.
நான் அக்காவிடம் சொன்னன் "நாங்கள் அங்கை போனால் அவையின்ரை வண்டவாளங்கள் தெரிஞ்சுவிடும் எண்டு மாமி பயந்து சறண்ட பண்ணிவிட்டா"
குசினிக்குப் பக்கத்து ஸ்ரோர் றுாமில் எங்களைத் தங்க வைத்தார்கள். வெளிக் கக்கூசு, கிணற்றில் இறைத்து வாளித் தண்ணியில் குளிப்பு. அவர்களுடைய லற், பாத்றுாம் எங்களுக்குப் பாவிப்பதற்கு அனுமதியில்லை.
சமையல், பாத்திரங்கள் கழுவுவது, வீடு வளவு கூட்டித் துப்பரவாக்குவது போன்ற வேலைகள் அம்மாவும் அக்காவும் செய்தார்கள். விறகு கொத்துகிறது, தேங்காய் உரிக்கிறது, பூக்கண்டுகளுக்கு கிணற்றில் தண்ணி அள்ளி ஊற்றது என்று நான் வேலை செய்ய வேணும். கிட்டத்தட்ட அடிமைகள் நிலையில்தான் நாங்கள் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக அங்கு இருந்தோம். தினமும் அம்மாவின் கண்களில் கண்ணிரை மட்டும்தான் பார்க்க முடிஞ்சுது.
3ද ඡීද 3:
அக்கா யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பட்டதாரி. அப்பாவின் அக்காவின் மகன் தான் சிவா அத்தான். அவர் எழுதுவினைஞராகச் சேர்ந்து வரி உத்தியோகத்தராகப் பதவி உயர்வு பெற்று கொழும்பு உள்நாட்டு இறைவரித்திணைக் களத்தில் கடமையாற்றுகின்றார்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 129|

Page 16
படிக்கும் காலத்திலை அக்காவும் சிவா அத்தானும் ஒருவரை ஒருவர் விரும்பியிருந்தார்கள்.
எனது மாமி, சிவா அத்தானின் அம்மாவுக்கு தன் மகனுக்கு அக்காவைக் கட்டிக் கொடுக்கச் சரியான விருப்பம்.
மாமா முருகேசு மூலக்கொதியர். அதனால் மாமிக்கு சரியான பயம். புரிசன்ரை சொல்லுக் கேட்காமல் ஒரு சின்ன அலுவல் கூட செய்யமாட்டா. அவர் எந்தநேரமும் ஏதாவது சாட்டுச் சொல்லி திட்டிக் கொண்டே திரிவார். "கொதியர் முருகேசு” எண்டுதான் ஊரில் பிரபல்யமானவர்.
ஒருநாள் பள்ளிக்கூடப் பெடியள் மாங்காய் பிடுங்கிப் போட்டாங்கள் எண்டு பள்ளிக் கூடத்துக்கு போய் அதிபரைக் கூப்பிட்டு திட்டு திட்டெண்டு திட்டிப் போட்டு வந்திட்டார். அடுத்த நாளும் பெடியங்கள் பிச்சு மாங்காய்களை பிடுங்கி மரத்துக்குக் கீழே போட்டிட்டுப் போட்டாங்கள். போற வாறபெடியங்கள் எல்லாருக்கும் கண்டபடி பேச்சு. அண்டு இரவு ஒருசெத்த நாயை அவற்றை வளவுக்குள் போட்டிட்டு வந்திட்டாங்கள். அது மணக்கத் தொடங்கிவிட்டுது. பேசிப்பேசி கிடங்கு வெட்டித் தாட்டார். அதன் பிறகு பள்ளிக்கூடம் போற வாற பெடியங்களை திட்டுறதை நிறுத்திக் கொண்டார்.
சிவா அத்தான் பெரிய உத்தியோகத்தில் இருக்கிதாய்ச் சொல்லி முருகேசு மாமா கொளுத்த சீதனத்திலை பெண்பார்க்கப் புறப்பட்டு விட்டார். இதை அறிந்து அக்கா விம்மி விம்மி அழத்தொடங்கீட்டா. இரண்டு நாள் சாப்பிடவுமில்லை. எனக்கு அக்காவைப் பார்க்க பரிதாபமாக இருந்துது. அதேவேளை சிவா அத்தான் பிழை செய்யமாட்டார் என்ற நம்பிக்கையும் இருந்தது. கொம்மினிக்" கேசனுக்குப் போய் பலதரம் முயற்சித்து ஒருவாறு லயின் கிடைத்தது. அவரிடம் அக்காவின் விடயத்தைச் சொன்னன்.
யுத்தம் காரணமாகத் தரைவழிப் பாதைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. கொழும்புக்குப் போவதனால் பிளேனில் அல்லது கப்பலில் திருகோணமலைக்குப் போய் அங்கிருந்து பஸ், றெயினில் கொழும்பு போகவேண்டும். அல்லது கிளாலிப் பாதையால் வவுனியா போய் அங்கிருந்து றெயினில் கொழும்பு போக வேணும். போக்குவரத்து கஷ்டமான நிலை. பிளேனில் கப்பலில் போய் வருவதானாலும் பிரதேச செயலகம், பாதுகாப்பு அமைச்சில் பதிந்து
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் |30|

வைத்து அவர்கள் அனுமதி தந்த பிற்பாடுதான் பயணத்தை மேற்கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்திலையிருந்து கொழும்புக்கோ பிற நாட்டுக்கோ செல்வதானால் ஒருவரைப் பிணைவைத்துவிட்டுத்தான் செல்ல முடியும். அப்பொழுதுதான் பாஸ் தருவார்கள். அரச உத்தியோகத்தருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது.
சிவா அத்தான் பிளேனில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்து வீட்டுக்குப் போகாமல் அக்காவிடம் ஓடிவந்தார். அக்காவைச் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தார்.
"இந்த உலகத்திலை எவர் தடுத்தாலும் சுமதி உன்னைத்தவிர நான் எவருக்குமே தாலிகட்டமாட்டன் இது சத்தியம்." அக்காவுக்கு உறுதிமொழி வழங்கினார்.
அக்காவின் முகமலர்ச்சியை காண எனக்குச் சந்தோஷமாக இருந்துது. சிவா அத்தான் தகப்பனை ஊரிலை விட்டால் பிரச்சனை எனவே நாட்டு யுத்த நிலமையைச் சாட்டாக வைத்து தாய், தந்தை, சகோதரி மூவரையும் கூட்டிக்கொண்டு கொழும்புக்குச் சென்று விட்டார்.
米米水
வேலாயுதபிள்ளையின் பிள்ளைகள் எண்டு சொல்வதில் நானும் அக்காவும் பெருமைப்பட்டம்.
என் தந்தை சாதாரண ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தகப்பனாருடன் சேர்ந்து தோட்ட வேலை செய்து கொண்டுதான் பாடசாலை செல்வார். வறுமையிலும் கல்வியில் கண்ணாயிருந்து படித்தார்.
எஸ்.எஸ்.சி பாஸ் பண்ணிய பிற்பாடு தொடர்ந்து படிக்க வீட்டின் நிலவரம் சாத்தியமாக இல்லை. அதேவேளை ஒரு சகோதரியைக் கரைசேர்க்க வேண்டிய பொறுப்பும் இருந்தது.
படிக்கும் காலத்தில் கார்த்திகேசன் மாஸ்டரின் அன்பான அரவணைப்பால் ஒரு இடதுசாரியாகத் தன்னை மாற்றிக் கொண்டார்.
கிளறிக்கல் சோதனையில் சித்தியடைந்து எழுதுவினைஞராகக் கொழும்புக்கு வந்து சேர்ந்து ஜீ.சி.எஸ்.யூ தொழிற்சங்கத்தில் சேர்ந்து |சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் |31

Page 17
தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார்.
சகோதரியின் திருமணம் முடிய ஒருவித சீதனமும் வாங்காமல் அம்மாவை விரும்பித் திருமணம் செய்து கொண்டாராம்.
கடமையை நேர்மையாகச் செய்பவர் என்ற மதிப்புடன் வாழ்ந்” தார். அம்மா சொல்லக்கேள்விப்பட்டன். அவர் தனக்கெண்டோ தன் குடும்பத்தினருக்கெண்டோ ஒரு பொருளும் சேர்க்கவில்லை. கிடைக்கும் சம்பளத்துடன் வாழ்க்கை வண்டியை ஒட்டினார்.
83 இனக் கலவரத்துடன் யாழ்ப்பாணம் வந்துசேர்ந்தார்களாம். அன்று தொடக்கம் கடைசி மூச்சு வரை யாழ்ப்பாணக் கச்சேரியில் கடமையாற்றினார். நான் யாழ்ப்பாணத்தில் தான் பிறந்தேன். அக்காவையும் என்னையும் படிப்பித்தார். அக்கா ஒரு பட்டதாரி நான் ஏ.எல் சோதனை எழுதிவிட்டு சோதனை மறுமொழியை எதிர்பார்த்து இருக்கின்றன்.
ze kak
வவுனியா ஒ.ஏ.சிதம்பரபிள்ளையின் உதவியினால் வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் அக்காவுக்கு ஆசிரியர் தொழில் தற்காலிகமாகக் கிடைத்தது.
நான் கொம்பியூட்டர் வகுப்புக்குச் சென்று படித்து வந்தன்.
அம்மாவுக்கு இன்னும், விதவைகள் பென்சன் கிடைக்கவில்லை. அக்கா படிப்பிக்கவும் நானும் படிக்கவும் செல்வதால் வீட்டு வேலைகள் எல்லாம் அம்மாவே செய்ய வேண்டியிருந்தது.
மாமி ஒடர் கொடுப்பதைத் தவிர ஒரு வேலையும் செய்வதில்லை. மாமா மாமியிடம் பெட்டிப் பாம்பாகவே இருந்தார். மாமாவின் ஊழல் விசாரணைக்கு வந்து வேலையே பறிபோய்விட்டது. தனக்கும் ஏதாவது பிரச்சனை வந்து பொலிஸ் கோடு எண்டு ஏற வேண்டி வருமோ என்று பயந்திருந்தார். ஆடிய ஆட்டம் அடங்கிவிட்டுது. V
ஒருநாள் ஏ.எல் படிக்கும் மாமாவின் மகள் சாந்தி பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வரவில்லை. நானும் கொம்பியூட்டர் கிளாஸ் முடிந்து சிதம்பரப்பிள்ளை மாமா வீட்டைபோய் சிவா அத்தானிடம் சொல்லி அக்காவின் திருமணத்தைக் கெதிப்படுத்துங்கோ எண்டு
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 1321

அவருடன் இருந்து கதைத்துவிட்டு வர இரவு ஏழு மணியாகிவிட்டுது. வீட்டில் ஒரே அல்லோல கல்லோலம்.
"உங்களை நம்பி வீட்டில் அடைக்கலம் கொடுத்து இப்படி மரியாதையை இழக்க வைச்சுவிட்டியளே; காவாலி, என்ரை தங்கப்பவுண்மாதிரி இருந்த பிள்ளையை மயக்கிக் கொண்டோடி விட்டான். நன்றி இல்லாத நாய்ச் சாதியள்."
அம்மாவையும் அக்காவையும் பார்த்து திட்டித் தீர்த்துள்ளார் மாமி. மாமாவும் மாமி சொல்வதை ஆமோதிப்பதாகவே காணப்பட்டாராம்.
நான் வீட்டுக்கு வந்தன்.
"எங்கையடா என்ரை பிள்ளை? நாசமாய் போனவனே!” மாமி என்னைப் பார்த்துக் கொக்கரித்தா.
எனக்கு ஒன்றும் புரியவில்லை.
ஒருநாளும் அடிக்காத அம்மா அகப்பைக் காம்பாலை அடி அடி எண்டு அடிச்சிட்டா.
"எங்கையடா சாந்தி?"
"உன்னாணை அம்மா எனக்கு ஒண்டும் தெரியாது. நான் கொம்பியூட்டர் கிளாஸ் முடிய சிதம்பரப்பிள்ளை மாமாவீட்டை போய்வாறன். சொல்லி அவவின் காலைக் கட்டுப்பிடித்துக்கொண்டு அழுதன்.
"மாயாஜாலக்காரன் செய்ததை மறைத்துப் பொய் சொல்லுகிறான்.” இது மாமியின் தேவவாக்கு.
வீட்டு வாசலில் சையிக்கிள் மணிச்சத்தம். ஐயா என்று கூப்பிட்டுக் கொண்டு கச்சேரிப் பீயோன் பீதாம்பரம் உள்ளே வருகின்றான்.
"ஐயா ஒரு விஷயம் தெரியுமே? சொல்லக் கூச்சமாய் இருக்கு. ஒட்டோ ஒடுகிறதுரை எண்ட பெடியன் உங்கடை மகளைக் கூட்டிக் கொண்டு போய், ஓமந்தைப் பிள்ளையார் கோயிலிலை வைச்சு தாலிகட்டிப் போட்டானாம். இவை இரண்டு பேருக்கும் இடையிலை காதல் இருந்திருக்கெண்டு ஒட்டோக்கார சதாசிவமும் சொன்வன். றிசீஸ்ரர் கந்தோரிலை தான்தானாம் சாட்சிக் கையெழுத்துப் போட்டதெண்டு.”
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 133

Page 18
"இஞ்சருங்கோ பொலிசிலை போய் பிள்ளையைக் காணேல்லை எண்டு ஒரு என்றி போட்டுவிட்டு வாருங்கோ."
"உமக்கென்ன விசரே. றிசீஸ்ரர் முடிஞ்சுதாம். இரண்டு பேரும் விரும்பி" பொலிஸ் ஏற்றுக்கொள்ளும்.
"ஐயா இவன் துரை ஒரு தண்ணிச்சாமியாம். போதைப்பொருள் பாவனை, குடு எண்டு எல்லாப் பழக்கமும் இருக்காம். உங்கடை மகளுக்கும் போதைப்பொருள் குடுத்து மயக்கியிருப்பான். மகள் வீட்டிலும் ஏதாவது பாவிக்கிறவோ எண் டு நீங்கள் கவனிக்கிறேல்லையே?”
"ஒமப்பா படுக்கப் போகேக்கை ஏதோ பவுடர் மாதிரி மூக்கிலை வைச்சு உறுஞ்சுவள். என்ன பிள்ளையெண்டு கேட்டால் அது தடிமனுக்கு மருந்து போட்டனான் எண்டு சொல்லிவிட நானும் நம்பிவிட்டன். இப்பதான் தெரியுது அவளின்ரை விளையாட்டு.”
"எனக்குச் சொல்லியிருந்தால் நான் என்னெண்டு பாத்திருப்பன்."
என்னத்தைச் சொல்லி எண்டைக்கு உங்கட தங்கைச்சி குடும்பம் இந்த வீட்டுக்கு வந்தினமோ அண்டைக்குப் பிடிச்ச சனியன் "உங்களை வேலையிலிருந்து நிப்பாட்டிச்சுது பிள்ளையை பிரிச்சுது. இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ தெரியாது. அண்டைக்கு நான் சொன்னன் நீங்கள் கேட்கேல்லை."
"மாமா, மாமி எண்டு சொல்ல எங்களுக்கு வெட்கமாயிருக்கு. மாமாக்கு வேலைபோனது லஞ்சம் ஊழலாலைதான். அதற்கு நீங்களும் உடந்தை. ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளையை கவனித்துச் சரியாக வளர்க்கத் தெரியாம இருந்தீர்கள். அது யார் குற்றம்? சொந்தத் தங்கைச்சியையும் அவரின் பிள்ளைகளையும் மனிதாபிமானம் இல்லாத முறையில் அடிமைகளாக நடத்தினிர்களே அதையும் பொறுத்துக்கொண்டம். எங்களை வைத்து பராமரித்" தீர்களே அதற்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளம். மாமியின் பழிசொல்லும் புத்தி இன்னும் அவவை விட்டுப் போகேல்லை."
ஒருநாளும் தலைநிமிர்ந்து ஒருவருடனும் பேசாத அக்கா இப்படிப் பேசுவாவா எண்டு நான் எதிர்பார்க்கவில்லை.
“ஒன்றுமே தெரியாத என் அப்பாவித் தம்பிமேல் சந்தேகப்பட்டு எங்களால் தெய்வமாக மதிக்கப்படுகின்ற அம்மாவைப் பார்த்து
சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் | 34|

கேட்டீர்களே கேள்வி அதை உயிருள்ளவரை மறக்கமாட்டம். உங்களுடன் இருந்து இந்த நரகத்தை அனுபவிப்பதிலும் பார்க்க யாழ்ப்பாணம் போய் செத்தாலும் பரவாயில்லை." நாளைக் காலையிலேயே நாங்கள் வெளிக்கிட்டிடுவம். உங்கள் எல்லா உதவிகளுக்கும் நன்றி.
米 米 米
அன்று இரவு மூவரும் நித்திரை கொள்ளவில்லை. யாழ்ப்" பாணம் போய் என்ன செய்வது எண்டு யோசித்தம். ஏதோ நடப்பது நடக்கட்டும் என்று எண்ணிக்கொண்டு அதிகாலையிலேயே புறப்பட்டம்.
கிளாலிப் பாதையால் மிகுந்த சிரமப்பட்டு யாழ்ப்பாணம் இறங்குதுறையில் போய் இறங்கினம். பனைவடலிகளுக்குள் இருந்து புறப்பட்ட சூரியனின் செங்கதிர்கள் கண்ணில்பட்டு தெறித்தன.
எங்களை அழைத்துச் செல்வதற்காக சிவா அத்தான் எதிர்பார்த்து நிற்கின்றார்.
19 - O6-2OO6
女
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் |35

Page 19
பிரளயம்
டற்கோள் வந்து போய்விட்டது. அந்த
ஆழிப்பேரலைகளின் ஊழியத் தாண்டவத்தால் ஏற்பட்ட, இதயத்தை விட்டகலாக் கோரவடுக்கள்.
எனது உடன் பிறப்புக்கள் பற்றி அறிந்து கொள்ள நான் மட்டக்களப்புக்குப் புறப்பட்டேன்.
அன்று திரும்பி கொழும்புக்கு வருவதற்காக மாலை ஆறுமணியளவில் மட்டக் களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைந்தேன். கொழும்பில் இருந்துவரும் புகையிரதம்தான் அன்று இரவு திரும்பவும் கொழும்புக்குச் செல்லும். வருகையைப் பொறுத்துத் தான் செல்லும் நேரம் தீர்மானிக்" கப்படும். இது அன்றாடம் நடக்கும் வழமையான நிகழ்ச்சி.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 136|

ஏனோ தெரியவில்லை அன்று புகையிரத நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருக்கவில்லை. மூன்றாம் வகுப்பு உறங்கல் இருக்கைக்கான பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று புகையிரத நிலையத்தில் போடப்பட்டிருந்த சீமெந்தினால் கட்டப்பட்ட இருக்கையின் ஒரத்தில் எனது பயணப்பையை வைத்துவிட்டு அதன் அருகில் அமர்கிறேன்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்டவாளப் பாதையை வெறித்துப் பார்த்தபடி இருக்கின்றேன்.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் அந்தப் பாதிப்பிலிருந்து மீள்வதற்குமுன் ஆழிப்பேரலைகளின் கொந்தளிப்பால் ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை காவுகொண்டுள்ள நிலையில் வீடுகளை, உடமைகளை இழந்து பரிதவிக்கும் மக்களைப் பார்த்த போது என் இதயத்தில் சோகச் சுமை.
எனது இனத்தவர் ஒருவரின் குடும்பத்தில் மூன்று பேரையும் கடல் பேரலைகள் இரையாக்கிக் கொண்ட துயரச் செய்தி அறிந்து அவர்களின் சோகத்தில் கலந்து கொள்வதற்காகவே மட்டக்களப்புக்கு வந்திருந்தேன்.
அரசாங்க உயர் அதிகாரியாகக் கடமையாற்றிய நாதனும் அவர் மனைவியும் அவர்களது ஒரேயொரு ஆண்பிள்ளையும் கல்லடியிலுள்ள காயத்திரி சித்தரின் மண்டபத்தில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொள்ள ஞாயிறுகாலை எட்டு மணிக்கு சென்றவர்கள், கடல் பேரலைகளால் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக மரணித்து விட்டார்கள். அவர்களுடன் வழிபாட்டில் கலந்து கொள்ளச் சென்றவர்களையும் பேரலைகள் விட்டுவைக்கவில்லை.
நாதனின் மனைவியினதும் பிள்ளையினதும் உடல்கள் மட்டுந்தான் உறவினர்களால் கையேற்கப்பட்டு உடனேயே புதைக்கப்பட்டன. நாதனின் உடல் கிடைக்கவில்லை. அவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டு, எட்டு நிகழ்வு மட்டும் நின்று ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்.
இதற்கிடையில் மீண்டும் மழை பெய்து பெருவெள்ளம். மக்க" ளின் நிலை பரிதாபம் என் நினைவலைகள் முதல் பயணத்தின் போது கண்ட வெள்ளப் பெருக்கின் நிலையை எண்ணிப் பார்க்கின்றன.
米 米米
数。
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1371

Page 20
கொழும்புக் கோட்டை புகையிரத நிலையம். ஆறாவது பிளாட் போம். மட்டக்களப்புக்குச் செல்லும் தபால்கோச்சி.
பயணிகள் தங்கள் பயணப் பொதிகளுடன் முண்டியடித்துக் கொண்டு புகைவண்டியில் ஏறுகின்றார்கள்.
நானும் எனது மனைவியும் மூன்றாம் வகுப்பு உறங்கல் இருக்கைக்கான பிரயாணச் சீட்டுக்கள் பெற்றிருந்தமையால் அவசரமின்றி ஆறுதலாக ஏறினோம். எமக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைக்குச் சென்றபோது அவ் ஆசனங்களில் வேறு ஆட்கள் உட்காந்திருக்கின்றார்கள். அவர்கள் மாறி இருக்கின்றார்கள் என எண்ணிக்கொண்டு அவர்களைப் பார்த்து, "இது நாங்கள் புக் பண்ணிய சீற் 26, 27” என்று சொன்னேன்.
"எங்களின் நம்பரும் 26, 27 என்றுதான் போட்டிருக்கு" என்று சொல்லி தங்கள் ரிக்கற்றைக் காட்டினார்கள்.
ஏதோ பிழை நடந்திருக்கு என்று எண்ணி சிறிது நேரம் யோசித்தோம். உறங்கல் இருக்கை கண்காணிப்பாளர் வந்ததும் விபரத்தைச் சொன்னோம். அவர் தன்னிடமுள்ள பெயர்பட்டியலைப் பார்த்தார்.
26, 27 ஆம் இலக்கங்களில் எமது பெயர்களே இருப்பதாகச் சொன்னார்.
எமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் இருந்தவர்களை எழும்பச் சொல்லிவிட்டு எங்களை இருக்கச் சொன்னார்.
அவரை நன்றியுடன் பார்த்தேன். அவரும் புன்சிரிப்புடன் என்னைப் பார்த்தார். எமது ஆசனங்களில் இருந்தவர்களுக்கு பெயர்ப்பட்டியலைப்
பார்த்து 46, 47 என்று கூற அவர்களும் சென்று அமர்ந்து கொண்டார்கள்.
இரவு எட்டு மணி இருக்கும்.
புகையிரதம் ஆரவாரங்கள் ஓய்ந்த அமைதியுடன் தன் பயணத்தை தொடங்கியது.
சிறிது நேரத்தில் அந்த உறங்கல் இருக்கைப் பெட்டியின் கண்காணிப்பாளர் எங்களுக்கு கிட்ட வந்தார்.
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 138

"யன்னல் கண்ணாடியை இறக்கி விடுங்க. அடுத்த அடுத்த ஸ்ரேசன்களில் றெயின் நிற்கும் போது வழிப்பறித் திருடர்கள், கொள்ளையர்கள் சங்கிலி, காப்பு, கான்பாக் போன்ற சாமான்களைப் பறித்துக்கொண்டு போய்விடுவாங்க. கவனமாக இருக்க வேணும்."
யன்னல் ஓரத்தில் இருந்த என் மனைவியைப் பார்த்துதான் சொன்னார்.
யன்னல் கண்ணாடியை இறக்கிவிட முனைந்தேன் மிகவும் கஷ்டமாக இருந்தது.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர் வந்து கஷ்டப்பட்டு இறக்கிவிட்டார்.
அந்த நேரத்தில் அந்தக் கண்காணிப்பாளரின் மனிதாபிமானத்தைக் கண்டு என்னுள் வியந்தேன். இனப்பாகுபாடு சிறிதளவும் இல்லாத ஒரு உயர்ந்த நிலையில் இருந்த அவர்மேல் ஒரு தனிமரியாதை எனக்கு ஏற்பட்டது.
“நம மொக்கத்த” என்று சிங்களத்தில் உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்.
"என் பெயர் பியதாசா. மாத்தறைதான் நம்மள் ஊர். இப்ப மட்டக்களப்பில் இருக்கிறன்" என்று தமிழில் கூறினார்.
புகையிரதம் மாகோ ஸ்ரேசனில் நின்றது.
கோப்பி கோப்பி. வடே வடே. தெமிலி தெமிலி. என்று வியாபாரம் செய்பவர்களின் சத்தங்கள் கேட்டு கதவோரம் வந்துநின்று ஒரு இளநீரை வாங்கிக் குடிக்கின்றேன்.
பக்கத்தில் பியதாசா வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். “தெமிலி குடிக்கின்றீர்களா? என்று கேட்டேன்.
“தாங்ஸ் மாத்தயா. வேணாம்" என்றார்.
புகையிரதம் மகோ புகையிரத நிலையத்தை விட்டுக் கிளம்பியது. ஒரளவு வேகத்தில் சென்று கொண்டிருந்த புகையிரதம் ஊர்ந்து ஊர்ந்து செல்வதாகத் தெரிந்தது.
“மன்னம்பிட்டி வரப்போகின்றது பாருங்கோவன் வெள்ளத்தை" எங்களுடன் பிரயாணம் செய்யும் ஒருவர் கூறியதைக் கேட்டு
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 139

Page 21
யன்னல் வழியாக எட்டிப் பார்க்கிறேன். பார்த்த இடமெல்லாம் வெள்ளக் காடாகவே காட்சி தந்தது.
“மன்னம்பிட்டிய றோட்டுக்கு மேலே மூன்று அடிக்கு வெள்ளம்; வாகனம் ஒண்டும் போகல்ல. அதனால தான் மிச்சம் கஷ்டம் மாத்தயா" என்று பியதாச வந்து சொன்னான்.
மன்னம்பிட்டி புகையிரத நிலையத்தில் புகையிரதம் வந்து நின்றதுதான் தாமதம். பெருந்தொகையான பயணிகள் பெரிய பெரிய பாக் மற்றும் கொண்டு வந்த பொருட்களுடன் முண்டியடித்துக் கொண்டு ஏறுகின்றார்கள். வகுப்பு வித்தியாசம் இல்லாமல் எல்லாப் பெட்டிகளுக்குள்ளும் நிரம்பி வழிகின்றார்கள். நாங்கள் இருந்த உறங்கல் இருக்கைப் பெட்டியிலும் நெருக்கமாக ஏறி நின்று கொண்டிருக்கின்றார்கள். ஒரே சத்தம். சிங்களத்திலும் தமிழிலும் பேசிக்கொள்கின்றார்கள்.
ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் பிரயாணக் கஷ்டத்தையும், மழை தொடர்ந்து பெய்வதால் விவசாய நிலங்கள் அழிந்துவிட்டதாகவும், பொருட்களின் விலைகள் மோசமாக ஏறியுள்ளதாகவும், முதலாளிமார் இரக்கமேயில்லாமல் கொள்ளை இலாபம் அடிப்பதாகவும் பலதரப்பட்ட கதைகளையும் கதைத்துக்கொண்டிருப்பது என்காதுகளுக்குக் கேட்கின்றது.
இவர்களின் கஷ்டங்கள் எப்ப தீரப்போகின்றதோ! சுரண்டல் முறையை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சமுதாய அமைப்பை மாற்றாவிட்டால் பிரச்சனைகள் ஒருபோதும் தீரப்போவதில்லை என்று என் மனத்துக்குள் எண்ணிக் கொள்கின்றேன்.
புகையிரதம் நீண்ட நேரத் தாமதத்தின்பின் புறப்பட்டது.
காலை ஆறு மணியிருக்கும் மழையும் பெய்து கொண்டிருந்தது. கதிரவனை காண முடியாத நிலையில் வானம் மப்பும் மந்தாரமாகவே காட்சி தந்தது. மன்னம்பிட்டி தொடக்கம் மட்டக்களப்பு வரை ஒரே வெள்ளக்காடாகவே தென்பட்டது. வீடுகளுக்குள் வெள்ளம். பெரியவர்களும் குழந்தைகளும் வெள்ள்த்துக்குள் நிற்கும் காட்சிகளை என். னால் காணமுடிந்தது. வெள்ளப் பெருக்கால் மக்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்த்தபோது என்மனம் மிகுந்த வேதனைப்பட்டது.
மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை காலை ஒன்பது முப்பது அளவில் வந்து சேர்ந்தோம். இறங்கும் போது எங்கள் பயணப்
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 40

பைகளை இறக்குவதற்கு பியதாச வந்து உதவிசெய்தார். நன்றி கூறிவிட்டு புகையிரத நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.
கல்லடியில் இருக்கும் என் மனைவியின் அக்காவின் மகனுக்குத் திருமணம். முதல்நாள் வந்த நாங்கள் அடுத்தநாள் வேதநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் பங்குபற்றிவிட்டு அவசரமாகக் கொழும்புக்கு வரவேண்டியிருந்ததால், காலையிலேயே ஒரு நண்பரை விட்டு உறங்கல் இருக்கைக்கான பயணச் சீட்டைப் பெற்றிருந்தோம்.
கல்யாண மண்டபத்தில், நான் மாகாணசபையில் கடமையாற். றிய காலத்தில் வேலைசெய்த நண்பர்களையும் அவர்களின் குடும்பங்களையும் நீண்ட நாட்களுக்குபின் சந்தித்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
"சேர்” என்று குரல்கேட்டுத் திரும்பினேன். ஒரு பெண் பிள்ளை. யார் என்று யோசித்துப் பார்க்கிறேன்.
"ஓ நிர்மலா எப்படி சுகமாக இருக்கிறீர்களா? “ஓம் சேர். உங்கள் புண்ணியத்தால நீங்கள் எடுத்துத்தந்த வேலையில் இப்ப நிரந்தரம் பெற்று சந்தோஷமாக இருக்கிறன்."
இவளாவது நன்றி மறவாதவளாக இருக்கிறாளே என்று எண்ணி என் மனம் சற்று ஆறுதலடைந்தது. நன்றியில்லாத சமுதாயத்தில் இவள் ஒரு விதிவிலக்கு!
“என்னப்பா மழை குறைஞ்சிருக்கு போவோமா?” என்று என் மனைவி அழைக்க விடைபெற்றுக்கொண்டு புறப்படுகின்றேன்.
மாலை ஆறுமணி எனது மைத்துனர் தனது பிக்கப் வாகனத்தில் எம்மைக் கூட்டிவந்து மட்டக்களப்புப் புகையிரத நிலையத்தில் இறக்கிவிட்டு சென்று விடுகின்றார்.
米 米 米
மழை பெய்து கொண்டிருந்தது.
என்னிடமிருந்த பயணச்சீட்டுக்களை வாசலில் காட்டிவிட்டு அவரிடம் "றெயின் எத்தனை மணிக்கு” என்று கேட்டேன்.
"கொழும்பிலிருந்து வரும் றெயின் ஒரு மணித்தியாலம் லேற். வந்துதான் புறப்படும்."
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 141

Page 22
உள்ளே போகிறோம். புகையிரத நிலையத்திலுள்ள இருக்கை ஒன்றில் அமர்கின்றேன். மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. அதை வெறித்துப் பார்க்கிறேன். இந்த மழை வெள்ளம் வந்து எத்தனையோ குடும்பங்களை இருக்க வழியின்றி சீரழியப்பண்ணி விட்டதே! என்று எண்ணி அங்கலாய்த்தபடி இருக்கின்றேன்.
“மாத்தயா!” என்று கேட்டதும் திரும்பிப் பார்க்கின்றேன். "ஓ பியதாசாவா? என்றேன் “மாத்தயா கொழும்பா உங்க ஊரு” “இல்லை; திருகோணமலை. வேலைக்காக கொழும்பில் இருக்கிறம்"
"நான் மாத்தற; இங்க ஒரு தமிழ் பொம்பிளையை கல்யாணம் கட்டி இரண்டு பிள்ளைகள். வாகரையில்தான் வூடு இருக்கு." "பெண் சாதிக்கு என்ன பெயரு” என்று கேட்டேன்.
பியதாசா சிரித்தபடி "அவங்களுக்கு கமலா; மகனு பிரபா, மகளு பெயரு சுவர்ணலதா"
"அப்ப வூட்டில சம அந்தஸ்துதான்". "ஆமா மாத்தயா பெண் சாதி மிச்சம் நல்லம். அவதான் புள்ளைகளுக்கு பெயருவைச்சுது. நமக்கும் நல்லா பிடிச்சுப்போச்சு. கமலாவுக்கு சிங்களம் தெரியாது. புள்ளைகளும் தமிழ்தான் பேசுவாங்க. நமக்கு தமிழ்பேச மிச்சம் தெரியும். என்ன மாத்தயா, மனுசங்க எல்லாம் ஒண்ணு தானே?”
அவன் கூறிய வார்த்தைகள் அவன்மேல் வைத்திருந்த மதிப்பை மேலும் உயர்த்தி நின்றது.
“மாத்தறையில் யார் இருக்கிறாங்க? நீபோறதில்லையா? எண்டு கேட்டன்.
"மாசம் ஒருமுறை வீட்டுக்குப் போய் வருவன். புதுவருஷம் கதிரகம உத்சவய காலத்தில் கட்டாயம் பெண்சாதி புள்ளைகளை வூட்டுக்கு கூட்டி போவன். நம்ம தாத்தா அம்மே அவங்க மேலே மிச்சம் பாசம். தாத்தாவும் அம்மேயும் இரண்டு நங்கிமாரும் அங்குதான் இருக்கிறாங்க”
“தங்கைச்சிமார் கல்யாணம் கட்டவில்லையா?
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 142

“ஒரு நங்கி, காலியில் நகைக்கடை ஒன்றில பத்தர் வேலை செய்கிற மூதூர் தமிழ் பெடியனை லவ்பண்ணி கல்யாணம் செய்து ஒரு புள்ளயோடை காலியில் இருக்கிறாங்க. மற்ற நங்கி கிக்கடுவ ஹோட்டலில் வேலை செய்கிற ஒறு பேகர் பெடியனை லவ்பண்ணி இப்போ றிஜிஸ்ற செய்திருக்கு. ஜனவரியிலை தான் கல்யாணம் செய்ய வேணும்."
“நல்லது எல்லோரும் சந்தோசமாக இருக்கிறாங்களா?
துவேஷம் காட்டாமல் இருக்கிறாங்களா என்று தெரிந்து கொள்ளத்தான் இப்படிக் கேட்டேன்.
“ஓம் மாத்தயா, எல்லோருக்கும் நல்ல மனசு வேண்டும். அவங்க நல்லவங்க"
யாரோ "பியதாசா” என்று கூப்பிட,
"வாறன் மாத்தயா" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட அவன் போவதையே பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்தை விரும்பும் ஒரு குடும்பம்” என்று என் மனது சொல்லி கொண்டது.
“சாதாரண மக்கள் எவ்வளவோ நல்லவர்கள். இந்தப் பாழ்பட்ட
அரசியல் வாதிகளின் சுயநல வெறியாட்டத்தினால் மக்கள்
துவேஷத்துடன் வாழவேண்டிய நிலை உருவாக்கப்பட்டு விட்டதே!"
என்று எண்ணி என் மனத்துக்குள் வேதனைப்பட்டுக் கொண்டேன்.
米米米
இரவு எட்டு மணி இருக்கும் புகையிரதம் பிளாட்போமில் வந்து நின்றது. பிரயாணிகள் தாம் எடுத்து வந்த பொதிகளுடன் முண்டியடித்துக் கொண்டு ஏறுகின்றார்கள். நாங்களும் மூன்றாம் வகுப்பு உறங்கல் இருக்கைப் பெட்டியில் ஏறி 23,24 இருக்கையை நோக்கிச் சென்றோம். அந்தப் பெட்டியின் ஒரு பகுதியில் தண்ணிர் இருந்தது. யன்னல்கள் சரியாகப் பூட்டாதபடியால் மழைத் தண்ணீர்தான் வந்திருக்குமென எண்ணினேன். சீற்றில் இருந்த தண்ணிரை கடதாசியால் துடைத்துவிட்டு இருவரும் அமர்கின்றோம்.
மழை சோ என்ற சத்தத்துடன் பெலத்து பெய்யத்தொடங்கியது. நாம் இருந்த இருக்கையில் தண்ணீர் விழுந்து சிதறியது. அண்ணார்ந்து மேலே பார்த்தேன்; மேலே இருந்து தண்ணீர் ஒழுகுகின்றது.
சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் (43

Page 23
"பழைய உடைந்த பெட்டியை இப்பவும் வைத்திருக்கிறார்கள் போல” என்று என் மனைவி முணுமுணுப்பது கேட்டது.
மறுபக்க சீற்றில் இருந்தவர் "இஞ்சைதான் மினிஸ்ரர்மார், எம்பிமார் எண்டு பலர் இருக்கினம். இதுகளைக் கவனிக்கமாட்டினம். இவை இருந்தும் என்ன பயன்” என்று ஏதோ வேதனையில் பெலத்து பேசுகின்றார். "பிரயாணச் காசை ஒழுங்காக வாங்குகிறார்கள். ஆனால் எங்களுக்கு இப்படி மழையில் நனைந்து பிரயாணம் செய்ய வேண்டியிருக்கு. அரசாங்கம் இதுகளை கவனிக்குதேயில்லை” நானும் மனத்தில் தோன்றியதை சொல்லியே விட்டன்.
பியதாசவை கண்டதும் விபரத்தைச் சொன்னன். “கொஞ்சம் பொறுங்க மாத்தயா பார்த்துச் செய்கிறன்." புகையிரதம் வாழைச்சேனையைத் தாண்டிவிட்டது. . "வாங்க மாத்தயா அந்த சீற்றிலை வந்து இருங்க” என்று வேறு இரண்டு இருக்கைகளைக் காட்டியதும் நாம் இருவரும் சென்று அமர்ந்து கொண்டோம்.
மழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. பியதாசாவின் மனிதாபிமானச் செயல்கள், அவனது ஒற்றுமையான குடும்பம், அவனது நல்ல குணங்களைப் பற்றி நானும் மனைவியும் கதைத்துக்கொண்டு இருந்தோம்.
புகையிரதம் மழையையும் பொருட்படுத்தாமல் கொழும்பை நோக்கி தன் பயணத்தைத் தொடர்ந்தது.
永米米
எனது சிந்தனையைக் கலைக்கும் விதத்தில் பிளாட்போமில் புகையிரதம் வந்து நின்றது. பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பெட்டிகளில் ஏறும் காட்சிகளைப் பார்த்தவாறு சற்றுநேரம் உட்காந்தபடியே இருக்கின்றேன்.
“மாத்தயா” என்று அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கின்றேன். சோகமே உருவான நிலையில் பியதாசா நிற்கிறான். “என்ன பியதாசா சுகமில்லையா? இன்று டியூட்டி இல்லையா? என்று கேட்டதுதான் தாமதம் ஐயோ! மாத்தயா என்று பெலத்த சத்தமாக அழத்தொடங்கிவிட்டான்.
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 44

“என் பெண்சாதியையும் இரண்டு பிள்ளையளையும் இங்கு வாகரையில் இருந்தவர்கள். கடல் கொந்தளிச்சு அள்ளிக் கொண்டு போட்டுது”
"அப்ப நீ அங்கே இருக்கேல்லையா?
"நான் இங்கை வேலைக்கு வந்திட்டன். பிரேதம் கூடக் கிடைக்க” வில்லை மாத்தயா! பாவங்க எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு செத்துப் போனாங்களோ தெரியாது.
மிகுந்த வேதனையின் மத்தியில் அவன் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அழுதுவிட்டு தொடர்ந்தும் பேசத் தொடங்கினான். í .
"இந்த இடி போதாதென்று மாத்தறையில இருந்த நம்ம தாத்தா, அம்மே, நங்கிமார், மச்சான்மார், அவங்கடை பச்சை குழந்தைபுள்ள எல்லாரும் ஒக்கமே கடல் கொந்தளிப்பால் செத்துப் போச்சாங்க. நான் இப்போ ஒருவருமில்லாத அனாதையாகி விட்டன். நானும் செத்துப் போனால் நல்லம்." என்று தன்னுடைய மனப்பாரத்தை கொட்டித் தீத்தான். நானும் அவனுடைய ஒரு உறவுக்காறன் என்ற எண்ணம் அவன் மனத்தில் இருந்திருப்பதாக எண்ணி, தன் கவலையைத் தீர்த்துக்கொள்ள நடந்தவற்றை எல்லாம் சொல்லி அவன் மீண்டும் அழத்தொடங்கி விட்டான்.
அவன் அழுகையில் பாசத்தின் அர்த்தம் தெரிந்தது. ஆழிப்பேரலைகளின் அகோரத் தாண்டவத்தின் பயங்கர கொடுரம் புரிந்தது. என்னால் என்ன சமாதானத்தை அவனுக்குக் கூறமுடியும். என் கூடப்பிறவா ஒரு சகோதரனுக்கு ஏற்பட்ட சோகம் என்னையே உலுப்பிவிட்டது. என் கண்களே பனித்துவிட்டன. இயற்கையின் சீற்றத்திற்கு அப்பாவி மக்கள் பலர் மரணித்து விட்டார்கள்.
புகையிரதம் புறப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பியதாசாவுக்கு என்னால் முடிந்தளவு ஆறுதல் சொல்லிவிட்டு வந்து புகையிரதத்தில் ஏறிக் கொள்கின்றேன்.
மழை பெய்து கொண்டிருந்தது. இயற்கையும் கணிணிர் விடுகின்றதோ! புகையிரதம் கொழும்பை நோக்கிப் புறப்பட்டது. அவன் மெளனமாக நின்றான்.
19-O6-2OO6
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் |45|

Page 24
மனிதம் மரணிக்கின்றது!
ப்பிரல் பன்னிரண்டாம் திகதி. அந்த நாள். திருகோணமலை வைத்தியசாலை,
அன்றுமாலை அல்லோலப்பட்டு பதட்டத்துடன் காணப்பட்டது.
நான் அன்று வெளிநோயாளர் விபத்துப் பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன்.
மேல்நேஸ் தயாபரன் நாங்கள் இருந்த பகுதிக்கு ஓடிவந்தான்.
"ரவுணிலை ஏதே பிரச்சனையாம். ஒரே வெட்டுக் கொத்தாம; கடைகள் எல்லாம் எரிக்கிறான்களாம்." என்று பதட்டத்துடன் சொன்னான். அவன் சொல்லி வாயெடுப்பதற்குள், உறுமிக்கொண்டு வாகனங்கள் வந்தன.
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 46

வாள் வெட்டு, கத்திக்குத்துக் காயங்கள், எரிகாயங்கள், அடிகாயங்கள் இப்படிப்பலர் உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருப்பவர்கள் அந்த வாகனங்களில் கொண்டுவரப்பட்டனர்.
இரண்டு டாக்டர்களுடன் நானும் தாதிமார்களும் அவர்களுக்கான அவசர சிகிச்சைகளைத் தாமதியாது மேற்கொண்டிருந்தோம்.
வெளியில் பலரின் அழுகுரல் சத்தங்கள் மனத்தை வருடுவனவாக இருந்தது.
நான் யாழ்ப்பாண வைத்தியசாலையில் கடமையாற்றும் போது ஷெல் அடிபட்டவர்கள், குண்டடிப்பட்டவர்கள், சூடுபட்டவர்கள் என்று பலவகைப்பட்டவர்களுக்கும் சிகிர்ச்சை செய்துள்ளேன். ஆரம்பத்தில் இருந்த பயம் வைராக்கியமாக மாறி எதற்கும் துணிந்த மனப்போக்கை உருவாக்கியிருந்தது.
ஒரு இளம் பெண்பிள்ளை என்னிடம் ஓடிவந்து "ஐயோ! என்ரை அம்மாவை வெட்டிப் போட்டாங்கள் டாக்டர் அவவைக் காப்பாற்றுங்கோ" என்று அலறுகின்றாள்.
என் மனம் ஒரு கணம் துடித்தது.
அந்தப் பெண்பிள்ளையை நோக்குகின்றேன்.
காயப்பட்ட அந்தத் தாயைப் பார்க்கின்றேன்.
கழுத்தில், தோள்மூட்டில், முதுகில், வயிற்றில் எல்லாமாக ஏழு வெட்டுக்காயங்கள். இரத்தம் அதிகமாக வெளியேறி இருக்க வேண்டும். ஆள் மயக்க நிலையிலேயே இருக்கின்றார். உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
"டொக்டர், அம்மா இல்லாவிட்டால் நான் அனாதையாகி விடுவன். தயவு செய்து அம்மாவைக் காப்பாற்றித்தாங்கோ."
அழுதழுது வேண்டுகின்றாள். காலைப் பிடித்துக் கதறி அழுகின்றாள்.
என் கண்கள் பனிக்கின்றன. “உங்கள் அம்மாவுக்கு உடனடியாக இரத்தம் ஏற்ற வேண்டும்." “டாக்டர் என் இரத்தத்தை எடுத்து ஏற்றுங்கள்." "இரத்தப் பரிசோதனைக்குப் பின்தான் இரத்தம் ஏற்றமுடியும்."
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 147|

Page 25
“டாக்டர் அம்மாவின் இரத்தக்குறுாப் பி பொசிற்றிவ் எனது இரத்தமும் பி. பொசிற்றிவ்தான்." ر
“உமக்கு எப்படித் தெரியும்?"
"நானும் மருத்துவக் கல்லூரி மாணவிதான் டொக்டர்."
நாங்கள் கதைத்துக் கொண்டு இருக்கும் போதே தாதி இரத்த வங்கியிலிருந்து இரத்தத்தை எடுத்துக்கொண்டு வந்து தந்தார். பி.பொசிற்றிவ் தான். உடனே தாதியின் உதவியுடன் இரத்தம் ஏற்றப்பட்டது. வெட்டுக் காயங்களுக்குத் தையல் போட்டன்.
"தயவு செய்து சொல்லுங்கோ டாக்டர். என் அம்மா உயிர் தப்பிவிடுவாவா?” கண்களிலிருந்து கண்ணிர் வடிந்தோடிக் கொண்டிருந்தது.
“அதற்கான முயற்சியில்தான் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன்" ஆரம்ப சிகிச்சை முடிவுற்றதும், தாதியை அழைத்து "இந்த பேசன்ரை ஐ.சி.யூக்குக் கொண்டுபோய் விடுங்கள்" என்று கூறினேன்.
வெட்டுக்காயங்களுடன் வந்தவர்களுக்கு வைத்தியசாலையைச் சேர்ந்த டாக்டர்களும், தாதிமார்களும் இன மத வேறுபாடின்றி சிகிச்சை அளித்தோம். ஆபத்தான நிலையில் உள்ளவர்களை ஐ.சீ.யூக்கு அனுப்பி வைத்தோம். சிறு காயப்பட்டவர்களை வாட்டில் விடும்படி சொன்னோம்.
ஒரு முஸ்லிம் பெரியவரும் சிறுகாயத்துடன் வந்திருந்தார். தன்னுடைய புடைவைக் கடையும் பக்கத்தில் இருந்த சப்பாத்துக் கடையும் வேறும் பல வியாபார நிலையங்களில் உள்ள பொருட்கள் சூறையாடப்பட்ட பின் அந்த நிலையங்களை நெருப்பு வைத்து எரித்துவிட்டார்கள் என்று மிகுந்த கவலையுடன் தெரிவித்தார்.
இரவு பத்து மணியைத் தாண்டிவிட்டது. "பன்னிரண்டு. டெத் பொடி வந்திருக்கின்றது. அதில் சிலரின் உடல்கள் பார்க்க முடியாதளவு சிதைந்து எரிகாயங்களுடன் இருக்கின்றன."
ஒரு டாக்டர் வந்து சொன்னார். இன்னும் வரக்கூடும் என்று சொல்கின்றார்கள்.
| சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 48

"டொக்டர் இப்ப தொடக்கம் பொலிஸ் கேவியூ போட்டிருக்" காம். ஒட்டோக்களில் வாள், கத்தி, பொல்லு கம்பிகளுடன் வந்த காடையர் கூட்டம்தான். இந்த அராஜகத்தனங்களைச் செய்ததாம். பாதுகாப்புப் படையினர் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக நடந்த இந்தத் திருவியைாடல்களை கண்டும் காணாதவர்களாய் இருந்து விட்டார்களாம்" தயாபரன் சொன்னான்.
வைத்திய சாலையில் உள்ளவர்களுக்கு ஊர்விடயங்களை அறிந்து வந்து தகவல் தருவதில் தயாபரன் ஒரு கெட்டிக்காரன்.
"புதிதாக வந்திருக்கிற புத்தர் சிலைக்கு முள்ளுக்கம்பி வேலி போட்டு அவரைச் சுற்றி ஆயுதங்களுடன் காவல் நின்றவர்கள், அவர்கூறிய தர்மத்தின் படி நடந்துகொண்டதனால், “கொலைச் செயல் பாவம்" என்று எண்ணி காடையர்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார்களாம். பாவம் புத்தர் கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் இருக்கின்றார். மீண்டும் செய்திகளைத் தந்தான் தயாபரன்.
“காடையர்களின் கோரத்தாண்டவம் இப்படியுமா? அதுவும் கோணேசர் பூமியில், மனித உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை. பாதுகாப்பு யார் யாருக்குக் கொடுப்பது” என்று நேஸ் தமயந்தி தமிழில் சொன்னாள்."
"தமயந்தி அக்கா, இஞ்சை இருக்கிற உங்கடை ஆட்கள் சில தமிழாக்களைக் காப்பாற்றியுள்ளார்களாம். இப்படியான வேலை, நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை விரும்பாத நாசகாரக் கும்பல்தான் செய்ததெண்டு பியதாசா ஐயா சொன்னாராம்" தயாபரன் தான் கேள்விப்பட்டதைச் சொன்னான்.
நான் மேல் மாடிக்குச் சென்று யன்னலைத் திறந்து கடலைப் பார்க்கின்றேன். கடல் அமைதியாகத்தான் இருந்தது.
தூரத்தில் புகைமண்டலம் சந்திரனை மறைக்கும் அளவுக்கு வியாபித்திருந்தது. கடற்படைத்தளத்திலிருந்து சத்தங்கள் கேட்ட வண்ணம் இருந்தன. மனத்தில் வெறுப்புணர்வுடன் படிகளில் இறங்கிவந்து எனது பணி அறைக்குச் சென்று தாதியிடம் சொல்லிவிட்டு தங்கியிருக்கும் குவாட்டஸ் நோக்கிப் புறப்பட்டேன்.
வெளியிலுள்ள வாங்கில், வெட்டுக் காயங்களுடன் தாயைக் கொண்டு வந்து சேர்த்த அந்த மருத்துவக் கல்லூரி மாணவி
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 49

Page 26
அழுதுகொண்டு இருக்கின்றாள்.
"நான் குவாட்டஸ் சுக்குப் போகிறேன். நீரும் வாரும் போய்விட்டு வருவம்."
“இல்லை டொக்டர் நான் இதிலை இருக்கிறன்." வற்புறுத்தி அந்தப்பிள்ளையை அழைத்துச் செல்கின்றேன். "உமது பெயர் என்ன?” “சுமதி, எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டுந்தான்". சொல்ல அழத் தொடங்கி விட்டாள். "அழாதேங்கோ சுமதி” "டொக்டர், அம்மா சுகமாகி விடுவாதானே?" "ஒம். அவவுக்கு வேண்டிய சிகிச்சைகள் எல்லாம் மேற்கொண்டுள்ளோம்."
எனது அறைக்குக் கூட்டிச் சென்று, முகத்தைக் கழுவும்படி சொல்லிவிட்டு கோப்பி போட்டுக் கொண்டுவந்து சுமதிக்கும் கொடுத்து நானும் குடித்தேன். எனக்கு வைத்திருந்த இரவுச்
சாப்பாட்டில் அரைவாசியைக் கொடுத்து ஒருவாறு வற்புறுத்தி சாப்பிட வைத்தேன்.
எனது அறையில் இருந்த ஒரு கட்டிலைக் காட்டி அதில் படுத்துக் கொள்ளும் படியும், பன்னிரண்டு மணிக்கு நான் டியூட்டிக்குப் போகும்போது கூட்டிப்போய் அம்மாவைக் காட்டுகின்றேன். அதுவரை கொஞ்சநேரம் படுத்திரும் என்றேன்.
"டொக்டர் எனக்கு நித்திரை வரேல்ல. நான் கம்பஸ்விடுதியில்
இரவு இரண்டு மணிவரை இருந்து படித்துவிட்டுத்தான் படுப்பன். நீங்கள் படுங்கோ டொக்டர் நான் இருக்கிறன்."
"நான் நித்திரை கொள்ளேல்ல. போண் கோல் வந்தால் உடன் போகவேண்டும்.”
"டொக்டர் நீங்கள் யாழ்ப்பாணமே?” "ஒம், எப்படிக் கண்டுபிடித்தாய்." "உங்கள் பேச்சிலிருந்து"
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 50 |

"நீங்கள் மூதூரா," "இல்ல டொக்டர், நாங்களும் யாழ்ப்பாணம்தான். தோட்டம் துரவு வீடு எண்டு நல்லாய்தான் இருந்தம். இப்ப இடம் பெயர்ந்து வந்து மூதூரிலை இருக்கிறம்.
அப்பா கஷ்டத்தின் நிமிர்த்தம் வயல் வேலைக்குப் போய்வாற" வர்.
ஒரு நாள் அப்பா வயல் வேலைக்குப் போய் விட்டு வரேக்க யாரோ வெட்டிப் போட்டுப் போட்டாங்கள். மன்சூர் அண்ணன் அப்பாவை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு போயிருக்கிறார். அப்பா இடையிலேயே இறந்து விட்டார். மன்சூர் அண்ணன் வந்து சொன்னபிறகுதான் எமக்கு அப்பாவின் மரணச் செய்தி தெரியவந்தது.
மரணச் சடங்கை எங்கள் வீட்டுக்கு அக்கம் பக்கத்திலுள்ள, கிறிஸ்தவ, முஸ்லிம் ஆக்களும் சேர்ந்து செய்தார்கள். எங்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
அம்மாவும் நானும் திசைமாறிய பறவைகளானோம். அம்மா இடியப்பம் அவிச்சு வித்துத்தான் வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தார்.
"அப்ப எங்க படிச்சு யூனிவசிற்றிக்குப் போனனிர்.” "பாதர் லோறன்ஸ் தான் எங்கள் கஷ்டநிலையைக்கண்டு படிக்கும்படி உற்சாகப்படுத்தி திருகோணமலைக் கொன்வென்றில் இருந்து படிக்க உதவி செய்தார்."
“டொக்டர் நீங்கள் எங்க படிச்சனிங்கள்."
"நான் சுண்டுக்குளியில் படிச்சனான்." "அப்ப உங்கள் அப்பா அம்மா யாழ்ப்பாணத்திலேயே இருக்கினம்.”
"எனக்கு அப்பா அம்மா இல்லை சுமதி. நான் ஒரு அனாதை."
"ஏன் டொக்டர் அப்படிச் சொல்லுறீங்கள்.” "நான் சின்னப்பிள்ளையாக இருக்கும்போதே எனது குடும்பம் திருகோணமலைக்குவந்து, உப்புவெளியில் ஒரு குடிசை வீட்டில் தான் இருந்தம். ஐயா சீரீபியில்தான் கொண்டக்டராக வேலை |சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 151|

Page 27
செய்தவர். அவர் ஒரு இடதுசாரி தொழிற்சங்கவாதி. எல்லோருட னும் இன மத மொழி பேதமின்றி மிக அன்பாகப் பழகுவார். நேர காலம் பாராமல் எல்லோருக்கும் உதவி செய்வார். அவரது நேர்மை" யான உழைப்புக்காக உயர்பதவி வகிப்பவர்களும் மரியாதை கொடுப்பார்கள்.
சீதனம் வாங்காமல் அம்மாவைக் கல்யாணம் செய்தவர். சின்னத்துரையின் மகள் என்று நான் சொல்லி பெருமைப்பட்டதுண்டு. ஒரு கெட்ட பழக்கமும் அவரிடம் இல்ல. அம்மாவையும் என்னையும் இரண்டு கண்போலப் பாதுகாத்தவர்.”
கண்கள் பனித்தன. உள்ளம் குமுறியது. “என்ன டொக்டர் நடந்தது". தொண்றுாறில் திருகோணமலையில் நடந்த இனக்கலவரத்திலை, மட்கோ சந்தியிலை பஸ்சுக்குள் வைத்து ஐயாவை வெட்டிக் கொன்றுவிட்டார்கள்."
"ஐயோ! டொக்டர் என் அப்பாவுக்கு நடந்தது போலவா?” "நிலாவெளிக்குப்போய் ஏக்கத்துடனும் பயத்துடனும் நானும் அம்மாவும் சிறிது காலம் இருந்தம். நிலமை வழமைக்குத் திரும்பியதும் திரும்பவும் உப்புவெளிக்கு வந்து பார்த்தம், எங்கள் வீடு எரிக்கப்பட்டிருந்தது. பதறிப் போனோம்."
"அப்ப என்ன செய்தனிங்கள்.” "திருகோணமலை றோட்டறி கழகம் ஒரு சிறிய வீட்டைக் கட்டித் தந்தார்கள். அம்மா தோசை இட்லி வடை செய்துவிற்று சீவியத்தை நடந்தினா. இரண்டு வருசத்திலை அம்மா நோய்வாய்ப்பட்டுப் போனா. இங்கு சரியான வைத்தியவசதி இருக்கவில்லை. நானும் நன்றாகப் பயந்து விட்டேன்."
ஒருநாள் இரவு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, வேறு சிலருடன் சல்லியில் இருந்து படகில் புறப்பட்டு யாழ்ப்பாணம் போய் சேர்ந்தோம்.
அம்மாவுடன் படிச்ச அவவின் சிநேகிதி சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் உப அதிபராக இருந்தவதான் என்னைச் சுண்டிக்குளியில் சேர்த்து படிக்க வைச் சவ. அவவுக்குப் பிள்ளைகள்
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 52|

இல்லாதபடியால் என்னில் பாசம் காட்டினா. அம்மாவையும் என்னையும் தங்கள் வீட்டிலேயே தங்க வைத்தா."
“என் வாழ்க்கையில் இரண்டாவது பேரதிர்ச்சி. நாங்கள் பள்ளிக்கூடத்தில். அம்மா இருந்த வீட்டில் ஷெல் விழுந்து அம்மாவின் உயிரைப் பறித்துவிட்டது.
அப்பா, அம்மாவின் பிரிவால் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன்.
சறோஜினி ரீச்சரின் அன்பான அரவணைப்பும், உற்சாகமும் என்னை ஊக்கப்படுத்தி படிக்க வைத்தது. டாக்டரானேன்.
யாழ். பெரியாஸ்பத்திரியில் இன்ரன்சிப் முடித்துக்கொண்டு, மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் மீண்டும் திருகோணமலைக்கு வந்தன். இப்பொழுது இங்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிறன்."
"டொக்டர் எங்கடை ஆள்கள் வெளிநாட்டுக்குப் போகின்றார்களே. நீங்களும் கோகலாம்தானே?” சுமதி கேட்டாள்.
"இலவசக்கல்வி, படிக்கப் பாடப்புத்தகங்கள், யூனிபோம் தைக்கத் துணி எல்லாம் தந்ததுடன், பல்கலைக்கழகம் போனதும் மஹாப்பொல உதவிதந்தது என்னை டாக்டராக்கிய நாட்டைவிட்டு, கஷ்டப்படும் எம் மக்களைவிட்டு எப்படிப் போக மனம் வரும்?”
“டாக்டராகப் படித்தவர்கள் பலர் வெளிநாட்டுக்குப் போய்விட்டார்கள் தானே?"
"உண்மைதான். அவர்கள் மக்கள்மேல் பற்றில்லாத, பண ஆசை பிடித்த சுயநலவாதிகள். எம் நாட்டில் டாக்டர்களுக்குப் பற். றாக்குறை. பாக்கிஸ்தான், கொரியா நாட்டு டாக்டர்கள் இங்கு வந்து கஷ்டமான பிரதேசங்களில் கடமையாற்றும்போது எம்நாட்டு டாக்டர்கள் வெளிநாடுகளில் உல்லாச வாழ்க்கை வாழுகின்றார்கள்."
திருகோணமலையின் வைத்தியசாலை விபத்துப் பிரிவு கொஞ்சக் காலமாக ஓய்வின்றி தனி கடமையைச் செய்து கொண்டிருந்தது. உயிர்பலிகள் சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்ட அறிவித்தலைத் தந்துகொண்டிருந்தது. இந்தவேளையில்தான் அந்தப் பன்னிரண்டாம் திகதிய நிகழ்வும் நடந்தது.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1531

Page 28
"சுமதி, இன்றைய நாளில் எம் மக்களுக்குச் சேவையாற்றக் கிடைத்ததை எண்ணி என் மனம் சோகத்தின் மத்தியிலும், கடமையைச் செய்யும் மனப் பக்குவத்தைக் கொடுத்துள்ளது."
"டொக்டர் உங்கள் கடமைமேல் நீங்கள் கொண்டுள்ள பற்றுதல் என்னையும் சிந்திக்க வைத்துள்ளது"
“என் ஐயா எனக்குச் சொல்லித்தந்த மகத்தான தத்துவஞானியின் கூற்று ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது"
“வாழ்நாளில் பெரும்பாலும் மனிதகுலத்திற்காகச் சேவை செய்வதற்கு ஏற்ற வகையில் ஒரு சூழலை நாம் ஏற்பாடு செய்து கொண்டால், எத்தனை சுமைகளும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது. பணிய வைத்துவிட முடியாது.”
எவ்வளவு உண்மையான கூற்று என்று சொன்னேன். சுமதியின் மனத்தில் நான் கூறிய வார்த்தைகள் புத்துணர்வைக் கொடுத்திருக்க வேண்டும். என்னை உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
சுமதியும் டாக்டராக வந்து மக்களுக்குச் சேவை செய்வாள். எனக்கு ஒரு நம்பிக்கை
தொலைபேசி அலறல் சத்தம் கேட்கின்றது. “ஹலோ” என்றேன். உடன் வரச்சொல்லி அழைப்பு. ஆஸ்பத்திரிக்குப் போகின்றேன். சுமதியின் அம்மா மிகுந்த கஷ்டப்படுவதாகத் தெரிந்தது. கடைசி மூச்சும் நின்றுவிட்டது. என் கண்முன்னே அவர் மரணத்தை தழுவிக்கொண்டார்.
என்னைப் போன்ற நிலைதான் சுமதிக்கும். என் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணிர் விழுந்து சிதறியது.
இந்தச் சோகத்தைத் தாங்கமுடியாமல் வானமும் கண்ணிர் சொரிந்தது.
23-O7-2OO6
★
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 54|

தீயாய் கனன்ற வாழ்வு
6) ழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்", "வாசல் தோறும் வேதனை இருக்கும்" என்ற பாடலைக் கேட்டிருக்கின்றேன்.
என்னுடைய வாழ்க்கை இப்படியாகச் சீரழிந்து போகுமே! என்று நான் எண்ணியிருக்கவில்லை.
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் என் வேதனைக் குமுறல் களை அடக்கமுடியாமல் அங்கு போடப்பட்
டிருந்த ஒரு கதிரையில் இருந்து அழுது கொட்டுகின்றேன்.
கைகள் இரண்டிலும் முதுகிலும் சூட்டுக்" காயங்கள், புண்கள் ஆறவில்லை. வேதனைகளின் ரணம் ஒருபுறம், எதிர்பார்ப்புகளின் ஏமாற்றம் மறுபுறம் என் இதயத்தையே வருடி நிற்கின்றன. ஆறாத வடு. என்னை போல
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 155

Page 29
ஏஜன்சிக்காரர்களின், பசப்பு வார்த்தைகளுக்கு ஏமாந்து, அல்லல்பட்ட பெண்கள் இருநூற்றி ஐம்பத்து இரண்டு பேர் ஒரே விமானத் தில் வந்திறங்கி நிற்கின்றோம்.
வீட்டுக்குச் செல்வதற்கு கையில் ஒரு சதம் கூட இல்லை. பொங்கி வழிந்த கண்ணிரைத் துடைப்பதற்கு கையில் கைக்குட்டை கூட இல்லை. அந்த நிலையில் நான் கொண்டுவந்த பாக்கில் இருந்து ஒரு பாவாடையை எடுத்து கண்களிலிருந்து வழியும் அந்தச் சூடான நீரை துடைக்கிறேன். எங்கள் குழுவில் சிங்களம், தமிழ், முஸ்லீம் என்ற வேறுபாடில்லை. எல்லோரும் ஏமாற்றப்பட்ட வேதனைக் குமுறல்களின் சங்கமம். XA
விமான நிலையத்தில் அழுதபடி ஏதோ பெலமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள். ஒரே கூச்சலும் அழுகையுமாகவே இருந்தது.
எனக்குச் சிங்களம் தெரியாத படியால் அவர்கள் சொல்லிக் கத்துவது எனக்குப் புரியவில்லை. நேரம் ஆக ஆக எனக்குப் பசி எடுத்தது. கையில் காசு இருந்தால் தானே கன்டீனில் ஏதாவது வாங்கிச் சாப்பிடலாம். என் நிலையை எண்ணி ஏங்குவதைத் தவிர என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
ஒரு அதிகாரி, எங்களுடன் சவுதியிலிருந்து வந்தவர்களுக்கு ஏதோ சிங்களத்தில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. அவர் பேசிமுடித்துவிட்டு போனதும், என்னுடன் இருந்த ஒரு சிங்களப் பிள்ளையிடம் அரபுமொழியில் "அவர் என்ன சொன்னார்” என்று கேட்டேன்.
வந்தவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகப் பணிப்பாளர். அவர் சொல்லுகிறார் நீங்கள் வெளிநாட்டுக்கு போகும் போது தங்கள் பணியகத்தில் பதிந்துவிட்டுப் போகவில்லையாம். அதனால் தங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதாம் என்று கூறுகின்றார்."
"ஏஜன்ஸிகாரருக்கு லையிசன் ஸப் குடுத்து, அவர்களை அரசாங்கம்தானே வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களாக வைத்திருக்கின்றது. நாங்கள் முறையாக பாஸ்போட் வீசா எடுத்துக் கொண்டு தானே இந்தக் கட்டுநாயக்கா விமானத்தளத்தில் இருந்து "சிறீலங்கன்” விமானத்தில்தானே சவுதிக்குச் சென்றுள்ளோம். நாங்கள் போய் வந்த பதிவுகள் எல்லாம் இங்கு இருக்கத்தானே வேண்டும். நாங்கள் களவாகப் போகவில்லையே. முறையாகத்தானே விமான
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் |56

ரிக்கெட் எடுத்துக்கொண்டு போனோம். இவங்கள் என்ன புதுக்கதை கதைக்கின்றார்கள்” என்றேன்.
"அதுதான் எனக்கும் விளங்கவில்லை. ஏஜன்ஸிக்காரருக்கும் இந்த அதிகாரிகளுக்கும் உள்ளுக்குள் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும்"
அந்தச் சிங்களப்பிள்ளை சொல்லிற்று. நாங்கள் கதைத்துக் கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டு நின்றது இன்னுமொரு சிங்களப்பிள்ளை.
"அரசாங்க அதிகாரிகள் ஊழல் செய்வதாகவும் கூறி மஹிந்த" வின் சிந்தனையில் ஊழலற்ற ஆட்சி நடத்தப்படும் என்று பத்திரிகை" களிலும் வானொலி தொலைக்காட்சிகளிலும் கூறினார்கள். அதிகாரிகள் எப்படி இருக்கின்றார்கள் என்று இங்கு வந்தபிறகுதான் தெரியுது."
பக்கத்தில் நின்ற ஒரு முஸ்லிம் பெண். "நம்மடை வெளிநாட்டுக் காசு மட்டும் அவங்களுக்குத் தேவை. ஆனால் எங்கடை கஷ்டங்களுக்கு அவங்க உதவி செய்யமாட்டாங்கள். நம்மளய் வெளிநாட்டுக்கு அனுப்பின ஏஜன்சிக்காரருக்கு ஏமாற்றுகின்ற கைங்கரியத்தைக் கொடுத்தாயே!” என்று சொல்லி நொந்து கொண்டார்."
வந்தவர்களை அவர்களுடைய கணவன்மார், தாய் தந்தையர், உறவினர்கள் வந்து அழைத்துப் போகின்றார்கள்.
எனக்கு யார் இருக்கிறார்கள் வந்து கூட்டிச் செல்வதற்கு? யோசித்தபடி கண்கள் இரண்டும் கண்ணிர் சொரிய வேதனையின் கொடூரத்தால் செய்வதறியாது குனிந்தபடி ஆசனத்தில் அமர்ந் திருக்கின்றேன்.
தோளில் யாரோ தட்டி கமலா என்று கூப்பிடுவது, கேட்டு திடுக்கிட்டுப் பார்க்கின்றேன்.
"முகுந்தன்," என்னையறியாமலே கத்திவிட்டேன்.
நீங்கள் எப்படி இங்கே? பணிப்பெண்களாக சவுதிக்கு சென்றவர்கள் அங்கிருந்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் வேலை செய்யமுடியாமல் திருப்பி அனுப்பப்பட்டு கட்டுநாயக்காவில் வந்திறங்கினார்கள் என்று
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 157

Page 30
சொல்லி, வந்தவர்களின் படங்களும் “இன்று மத்தியானம் தொலைக்காட்சியில் போட்டுக் காட்டினார்கள். உங்கள மாதிரி ஒருவரைப் பார்த்தேன். நீங்கள்தானோ என்ற ஐமிச்சத்துடன் உடனே புறப்பட்டு வந்தேன்."
"இந்த அனாதையைக் கூட்டிச் செல்ல யார் வரப்போறார்கள் என்று ஏங்கி இருந்தேன் நீங்கள் வந்துவிட்டீர்களே!” சொல்லிச் சொல்லி அழுகின்றேன்.
"கமலா அழாதேங்கோ! அதுதான் நான் வந்துவிட்டேனே?” முகுந்தன் சொல்லி என்னை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தார். கையில் வைத்திருந்த செல்போனில் ஏதோ பேசினார். சற்று நேரத்தில் கார் ஒன்று வந்து நின்றது. நாங்கள் இருவரும் ஏறிக்கொண்டோம். கார் புறப்பட்டது.
கொஞ்சத்தூரம் சென்றதும் "முகுந்தன் எனக்கு ஏதாவது சாப்பிட வாங்கித் தாறிங்களா? என்று கேட்டேன்.
முகுந்தன் சிங்களத்தில் ஏதோ சொல்வது கேட்டது. சற்றுத் தூரத்திலுள்ள ஒரு ஹோட்டல் முன்பாகக் கார் நிறுத்தப்பட்டது.
“வாங்கோ கமலா” முகுந்தன் அழைத்தார். நானும் முகுந்தன் சொன்னபடி காரில் இருந்து இறங்கி அவருக்குப் பின்னால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு மேசை இருந்த இடத்தில் இருவரும் அமர்கின்றோம்.
முகுந்தன் எனக்கு மட்டும் சாப்பாட்டுக்கு ஒடர் கொடுத்து விட்டு, இரண்டு கூல்றிங்ஸ்சுக்கும் சொன்னார்.
"என்ன முகுந்தன் செய்கிறீர்கள், குடும்பம் பிள்ளைகள்” என்று கேட்டேன்.
"கமலா நான் ஒரு கொம்பனி மனேச்சராக ஜா-எலவில் வேலைபார்க்கின்றேன். அந்தக் கொம்பனி எனது பாவனைக்கு இந்தக் காரைத் தந்துள்ளது. வத்தளையில்தான் இருக்கின்றோம்."
"மனைவி பிள்ளைகள்?"
“ஒரு பிள்ளையுடன் கணவனை இழந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுத்திருக்கின்றேன். இதனால் எங்கள் வீட்டார் என்னை ஒதுக்கி வைத்துவிட்டார்கள். ஒரு பெண்ணுக்கும் ஒரு பிள்ளைக்கும்
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் |58

ஆதரவாக இருக்கின்றேன் என்பதில் என் மனத்திற்கு ஒரு திருப்தி" "உங்களுக்குப் பெரிய மனசு முகுந்தன்” என்று கூறிய என்னை உற்று நோக்குகின்றார்.
"உன்நிலை இப்படியேன் ஆகவேண்டும். உன் கணவன் பிள்ளைகள் உன்னை ஏன் வெளிநாட்டுக்கு அதுவும் பணிப்பெண்" ணாக அனுப்பி சவுதி “றியலை" பெறுவதற்காகவா? என்ன கமலா வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாக போனவர்கள் எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதைத் தெரியாமலா நீ போனாய்? முகுந்தன் மிகுந்த விசனத்துடன் கேட்டார்.
"முகுந்தன் நீங்கள் சொல்வதெல்லாம் உணர்மை. நான் உண்மையிலேயே சரியாகப் பாதிக்கப்பட்டு வேதனைகளை அனுபவித்து ஆற்றாமையால் ஓடிவந்தவள்.
இங்கே பாருங்கள் என் சூடுபட்ட கைகளை என்று போர்த்தி ருந்த போர்வையை விலக்கிக் காட்டுகின்றேன்."
இரத்தமும் சதையுமாக நெருப்பில் வெந்த அந்தச் சூட்டுக் காயங்களை கண்ட முகுந்தன் பட்டபாடு உண்மையிலேயே என் மனத்தை உலுக்கிவிட்டது. A
சாப்பாடு முடிய மீண்டும் காரில் போய் ஏறினோம்.
முகுந்தன் கார் றைவரிடம் ஏதோ சொல்ல, கார் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்குள் சென்று நிறுத்தப்பட்டது. காரிலிருந்து இறங்கி டாக்டரிடம் என்னை அழைத்துச்சென்று ஆங்கிலத்தில் என்னைப் பற்றிய விபரங்களைத் தெரிவித்தார்.
டாக்டர் எல்லாக் காயங்களையும் பார்த்துவிட்டு மாறும் வரையும் வைத்தியசாலையில் தங்க வேண்டும் என்று சொன்னார். முகுந்தனும் அதற்கு உடன்பட்டு நான் தங்குவதற்கு ஒரு றுாமும் எடுத்துத்தந்து என்னைப் பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்வதற்கு ஒரு பெண்ணையும் ஒழுங்கு படுத்திவிட்டு நாளைக்கு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
கட்டிலில் படுத்திருந்து கண்களை மூடியபடி என் கடந்த காலத்தை எண்ணிப் பார்க்கின்றேன்.
§ ප්k (k
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 159|

Page 31
யாழ்ப்பாணத்து ஒரு விவசாயக் கிராமத்திலே சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். எங்கள் குடும்பத்தில் ஐயா, அம்மா, அண்ணா என்னுடன் நாலுபேர்.
ஆறு பரப்புத் தோட்டக் காணி எங்களுக்கு இருந்தது. ஐயா தோட்டம் செய்வதுடன், சுருட்டுத் தொழிலுக்குப் போய் கஷ்டப்பட்டு உழைத்து எங்கள் குடும்ப வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தார்.
ஐயா மூன்று பெண் சகோதரிகளுக்கு அண்ணன். அதனால் சகோதரிமாரைக் கரைசேர்த்த பின்புதான், தாய் மாமன் மகள் என் அம்மாவைத் திருமணம் செய்தாராம். அப்படி ஐயாபட்ட கஷ்டங்களை அம்மா சொல்லும்போது உண்மையிலேயே கண்ணிர் வந்து
விடும்.
ஐயா குடும்பநிலை காரணமாகப் படிக்க முடியாமல் போனதை மனத்தில் வைத்து அண்ணாவையும் என்னையும் படிக்க வைக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் சேர்த்து படிப்பித்தார்.
விடிய நாலு மணிக்கு எழும்பி மாட்டுச் சாணம் குப்பைகள் எல்லாவற்றையும் கடகத்தில் நிரப்பிக்கொண்டு தலையில் வைத்து சுமந்தபடி தோட்டத்துக்குச் சென்றுவிடுவார்.
அம்மா எனக்கும் அண்ணாவுக்கும் சாப்பாடுதந்து பாடசாலைக்கு அனுப்பிவிட்டு, ஐயாவுக்குச் சாப்பாடும் தேத்தண்ணியும் கொண்டு தோட்டத்துக்குப் போவா.
ஐயாவும் அம்மாவும் பிள்ளைகள் இரண்டு பேரிலும் உயிர். கஷ்டங்கள் தெரியாமல் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதில் இருவரும் கண்ணும் கருத்துமாக இருந்தனர்.
அண்ணா ஏ.எல் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கா காத்திருந்தார்.
யுத்த காலம். குப்பிவிளக்கு வெளிச்சத்திலிருந்துதான் இரவில் படிப்போம். மேலே குண்டுவீச்சு விமானங்கள் வரும் சத்தம், ஹெலி வரும் சத்தம் கேட்டதும் பங்கருக்குள் போய் இருக்கும்படி அம்மா கத்துவா.
எம் பெற்றோர் எங்களை வளர்த்தவிதம் ஒரு தனிக்கதை.
யாழ்ப்பாணத்துக்கு இந்திய அமைதி காக்கும் படை வருவதை
| சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 60 |

தம்பிமார் விரும்பவில்லை. அவர்கள் எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த காலப்பகுதி.
இந்திய அமைதி காக்கும் படை செய்த அட்டூழியங்களையும், அடாவடித்தனங்களையும் யாழ்ப்பாணத்து மக்கள் உயிருள்ளவரை மறக்கமாட்டார்கள்.
நானும் அண்ணாவும் பாடசாலைக்குச் சென்றுவிட்டோம் அண்ணாதான் என்னை பாடசாலைக்குத் தினமும் கூட்டிச் செல்வார். ஐயா தோட்டத்தாலை வந்து கந்தையா முதலாளி வீட்டை சுருட்டுச் சுத்த போய்விட்டார்.
அம்மா வீட்டில் தனியத்தான் இருந்தார். அன்றுதான் எம் வாழ்க்" கையின் மறக்க முடியாத அந்தச் சோகச் சம்பவம் நடந்து விட்டது.
இந்திய அமைதிகாக்கும் படையினரின் செல் விழுந்து என்னைப் பெற்றுவளர்த்த என் அன்புத்தாய் தெய்வமாகிவிட்டார். அன்றுதான் என் ஐயா முதல்முதலாக "ஐயோ என்னையும் பிள்ளைகளையும் தவிக்கவிட்டுப் போய்விட்டியே ராசாத்தி. நான் தனிய என்ன செய்யப்போறன்" என்று ஒப்பாரிவைத்து குலுங்கிக் குலுங்கி அழுதார்.
அணி ணா அம்மாவுக்கு அருகிலிருந்து, ஆவேசத்துடன் காணப்பட்டார். அந்த நேரம் நான் எப்படி இருந்தேன் என்று எனக்கு நினைவில்லை. மரணவீட்டுக்கு ஊரே திரண்டு வந்துவிட்டது.
அம்மாவின் மரணத்துக்குப் பின்பு ஊரவர்கள் வந்து ஐயாவுக்கு ஆறுதல் கூறி பிள்ளைகளுக்காக தோட்டம் சுருட்டு என்று போகத்தொடங்கிவிட்டார்.
அண்ணாவின் போக்கில் மாறுதல்களைக் காணக்கூடியதாக இருந்தது. இருந்தாபோல் அண்ணாவைக் காணவில்லை. ஐயா பதறிப்போய் தேடாத இடமில்லை. இரண்டு மூன்று நாள் கழித்து அண்ணாவின் நண்பர்கள் வந்து மகன் குமரன் இயக்கத்துக்குப் போய்விட்டான் என்று சொல்லிச் சென்றார்கள்.
ஐயா இயக்கக்காரரிடம் சென்று கதைத்துப் பார்த்தும் பயன் ஒன்றும் கிடைக்கவில்லை. அம்மா இறந்து ஒருவருடத்திற்கு உள்ளாகவே அண்ணாவும் இயக்கத்தில் போய் சேர்ந்துவிட்டார்.
அண்ணா இல்லாமல் கொக்குவில் இந்துக்கல்லூரிக்குப் போய்வருவது கஷ்டம் என்று ஐயா நினைந்து வீட்டுக்குக் கிட்ட
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் | 61|

Page 32
உள்ள சைவ மகாஜனாவில் படிக்கச் சேர்த்துவிட்டார். அங்குதான் என் வகுப்பில் முகுந்தனும் படித்தார்.
தொண்றுாற்று நாலில் நடந்தயுத்தத்தில் அண்ணா இறந்துவிட்ட தாகவும் அவருடைய உடலைத்தர முடியாமைக்கு வருந்துவதாகவும் வந்து சொல்லி எங்கள் குடும்பம் மாவீரர் குடும்பத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள்.
米米 米
கந்தையா முதலாளியின் சுருட்டுக் கொட்டிலில் ஐயாவுக்கு வால்சுத்து கட்ட கணேசு என்ற பெடியன் இரண்டு வருடங்களாக இருந்து, சுருட்டுச் சுத்தப் பழகிவிட்டான்.
ஐயாவின் வயோதிபம், வீட்டு நிலவரம் காரணமாக என் படிப்புக்கு முற்றுப்புள்ளிவைத்தாகிவிட்டது.
சிறிது காலம் செல்ல சுருட்டுத் தொழில் பார்க்கிற கணேசுவுக்கு என்னைக் கட்டிவைத்துவிட்டார்கள்.
மூன்று வருடத்துக்குள் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தேன்.
சில வருடங்களுக்குப் பின் ஐயாவும் கண்ணைமூடிவிட்டார்.
ஐயா உயிருடன் இருக்கும் போது நல்லமனிதனாக இருந்த என் கணவன் குடிக்கப் பழகிக்கொண்டான். இதனால் வீட்டில் நித்தச் சண்டை. வேலைக்குப் போகாமல் குடிச்சுக் கொண்டே வந்து அடியும் உதையும்.
பிள்ளைகள் அம்மாவுக்கு அடிக்கவேண்டாம் என்று கத்துவார்கள்.
இருந்த நகைநட்டு தாலிக்கொடி எல்லாம்விற்றுக் குடித்து அழித்தாகிவிட்டது. சாப்பாட்டுக்குத் திண்டாட்டம். வீட்டில் அடுப்பு எரிவதில்லை. சிலவேளைகளில் பிள்ளைகள் பசி எண்டு கேட்டு அழுவார்கள் சில பாணி துண்டுகள் அவர்களின் பசியைப் போக்குமா? பிள்ளைகளுடன் சேர்ந்து அழுவதைத் தவிர என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கணவனும் குடிக்கப்போன இடத்திலை ஒரு பெண்ணோடு தொடர்பாம். வீட்டுக்கே வருவதில்லை.
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 1621

வீடும் ஈடு வைச்சு அறுதியாகிப் போய்விட்டது. என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. வெளிநாட்டு வேலைக்குப் பணிப்பெண்கள் தேவை என்ற விளம்பரம் என் கண்களுக்கு எட்டியது. போவமா? விடுவமா? என்று மனப்போராட்டம்.
பிள்ளைகளின் எதிர்காலம் மனக்கணி முன் வந்து நிற்க, வெளிநாட்டுப் பணிப்பெண் வேலைக்குப் போவதற்கான முடிவை எடுத்தேன். பிள்ளைகளைக் கூட்டிச் சென்று கன்னியர் மடத்தில் சேர்த்துவிட்டு கொழும்புக்கு வந்தேன்.
மருதானையிலுள்ள எஜன்சிக்காரரிடம் என் விருப்பத்தைத் தெரி வித்தேன். அவர்கள் பாஸ்போட், வீசா, பிளேன் ரிக்கட் எல்லாம் எடுக்க வேண்டும் என்று சொல்லி, அவை எடுக்கும் வரை ஒரு வீட்டில் தங்க" வைத்தார்கள். அந்த வீட்டில் என்னுடன் வெளிநாட்டுக்குப் பணிப் பெண்களாகப் போகவந்த பெண்களும், கன்னியர்களும் இருந்தார்கள்.
நான் இருந்த வீட்டுக்கு இரவில் ஒருசில ஆண்கள் வந்து போவார்கள். அங்கிருக்கும் பெண்கள் இணங்காவிட்டால் வெளிநாட்டுக்குப் போவது தாமதமாகும் என்று அங்குள்ளவர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். எனக்குப் பயம் பிடித்துவிட்டது.
என்னிடமும் ஒரு சிலர் வந்தார்கள் நெஞ்சுச் சுகயினம் என்று சொல்லித் தப்பிக்கொண்டேன். இருந்தும் என் பெண்மையும் ஒர் இரு நாட்கள் ஒரு தமிழ் முதலாளியினால் பறிபோய்விட்டது. என் தலைவிதியை எண்ணி எண்ணி ஏங்குகிறேன். என் கணவன் சரியாக இருந்திருந்தால் எனக்கு ஏன் இந்த நிலை ஏற்பட வேண்டும்.
"குடும்பத் தலைவனின் தரங்கெட்ட நடத்தைகளால் இலங்கை" யில் பல பெண்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கற்பு பெண்க" ளுக்குத் தேவை என்று மட்டும் சொல்லும் ஆண்கள் எல்லோரும் கற்புடன் இருந்தால் பெண்களின் கற்பை சந்தேகிக்கும் நிலை ஏற்படாதுதானே? அதை ஏன் இந்த சமூகம் சிந்திக்க மறுப்பதேன். என்று என்மனம் ஆதங்கப்பட்டது.
கொழும்புக்கு வந்து ஒரு மாதம் பத்து நாட்கள் நகர்ந்துவிட்டன வெளிநாடு போனபாடாய் இல்லை. மனத்தில் சுமை ஏறிக் கொண்டே இருந்தது. ஏஜன்சிக்காரரிடம் பலமுறை கேட்டாகிவிட்டது. வேதனை யும் சோதனையும் என்னை வாட்டியது. பொறுமையின் எல்லையைக் கடந்து விட்டேன்.
米米米
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 63

Page 33
சவுதிக்கு வந்து ஒரு வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டேன். மாதா மாதம் சம்பளம் “றியாலில்" தருவார்கள் என்று ஏஜன்சிக்காரன் சொல்லி விட்டான்.
வீட்டு எசமான் நல்லவராகத் தெரிந்தாலும் அவருடைய கழுகுக் கண்கள் என் மேனியில் மேய்வதை அவதானித்திருக்கின்றேன். எசமானி அம்மா எந்த நேரமும் அரபியில் திட்டிக் கொண்டே இருப்பாள்.
என்னிடம் தினமும் நன்றாக வேலை வாங்குவாள். வீடு சுத்தம் செய்வது, சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, உடுப்புகள் தோய்ப்பது, அயன் பண்ணுவது, படுக்கைகளைத் தட்டிப்போடுவது, கக்கூஸ் பாத்றும் கழுவுவது இப்படி ஒய்வின்றித் தொடர்ந்து வேலை எப்படி வேலை செய்தாலும் வயிற்றுக்குப் போதுமான உணவு தரமாட்டார்கள்.
மாதம் முடிய சம்பளம் தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன் கிடைக்கவில்லை. எசமானிடம் சம்பளம் கேட்டேன். அடுத்த மாதம் தருவதாகச் சொன்னார். நானும் பொறுத்திருந்து வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
எசமானி அம்மாவின் ஏச்சும் பேச்சும் வரவர அதிகரித்துக் கொண்டே சென்றது. நானும் பொறுமை இழந்து ஒருநாள் ஏதோ சொல்லிவிட்டேன். சுடுநீரை கையில் ஊற்றிவிட்டாள் அந்தப் பாதகி.
வேதனையுடன் பொறுத்துக் கொண்டேன். உழைத்து சம்பாதித்" துக் கொண்டு ஊருக்கு வந்து பிள்ளைகளுடன் ஒன்றாக வாழவேண்டும் அதுதான் என் ஒரே லட்சியமாக இருந்தது. அதற்காக எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்திருந்தேன்.
ஒருநாள் கோப்பையை தவறுதலாகக் கீழே போட்டு உடைத்தற்காக கம்பிகாச்சி கையில் சூடு வைத்தாள்.
கேட்பதற்கு எவருமில்லை என்ற இறுமாப்பில் எனக்குப் பல விதத்திலும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தாள்.
மாதங்கள் ஒடிக்கொண்டிருந்தன. சம்பளம் தந்தபடில்லை. ஒரு நாள் எசமானி இல்லாத நேரம் பார்த்து எசமான் என்னை பலாத்காரம் பண்ணி என்னைக் கெடுத்துவிட்டான். அவனுடைய முறட்டுக் கரங்களிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. என்
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் | 64|

நிலையை எண்ணி அழுதேன்.காலம் ஒடிக்கொண்டிருந்தது. எஜமானின் திருவிளையாடல் தொடர்கதையானது. ஒருநாள் இந்தக் காட்சியை எசமானி கண்டுவிட்டாள். எனக்குக் கம்பி காச்சி சூடு வைத்தாள் இந்தச் சண்டாளி. வேதனைமேல் வேதனை பொறுமையை இழந்தேன். எனக்குத் தெரிந்த அரபு மொழியில் அவளைத் திட்டினேன். அவள் புருசனைக் கூட்டி வந்து அவன் உதவியுடன் எரிந்து கொண்டிருக்கின்ற காஸ் அடுப்பில் என் இரண்டு கைகளையும் பிடித்து இழுத்து வைத்துச் சுட்டார்கள். கையில் ஏற்பட்ட எரிகாயங்கள் தாங்க முடியாத எரிவைக் கொடுத்தன.
வேலைக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. சம்பளமும் இல்லை. நித்தக் கொடுமைகள். இனி இங்கு இருப்பதால் பயனில்லை என்று எண்ணி அவர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டுப் புறப்பட்டு இலங்கைத் தூதுவராலயத்தில் தஞ்சமடைந்தேன். அங்கு என்னைப்போன்று வீட்டுப் பணிப்பெண்களாக வந்தவர்கள் பலர் வேலைக்கு வந்து சம்பளம் கிடைக்காமல் கொடுமைகளுக்கு உள்ளாகி வந்திருப்பதைத் தெரிந்து கொண்டேன். இலங்கைத் தூதுவ ராலயம் எங்கள் எல்லோரையும் "சிறீலங்கன்” விமானத்தில் இலங்கைக்கு அனுப்பிவைத்தது.
3ද 3%ද 3%
அடுத்தநாள் முகுந்தன் மனைவி பிள்ளைகளுடன் என்னைப் பார்க்க வந்தார். அவர்களைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது.
ஒரு கிழமை கழித்து வந்து என்னைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவருடைய மனைவி என்னுடன் மிகவும் அன்பாகப் பழகிக்கொண்டார். என்னையும் தங்கள் வீட்டில் தங்கும்படி வற்புறுத்தினார்.
"நான் இங்கு இருப்பது உங்களுக்கு கஷ்டம்" என்றேன். "மனித நேயம் கொண்டவரான முகுந்தன், கணவனை இழந்து அவலநிலையில் பரிதவித்துக் கொணடிருந்த என்னையும் பிள்ளைகளையும் சுவீகாரம் செய்து கொண்டார்." எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை”
“இப்படியும் ஒருவரா?” என் கண்கள் பனிந்துவிட்டன.
(30 - 20O6
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 65|

Page 34
மனமே வாழ்க்கை.
ன்னுடைய சின்னத் தங்கைச்சி எனது சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து எனது
மனைவியின் ஒன்றைவிட்ட தம்பியைத் திருமணம் செய்து கொண்டு சுவிஸ்சலாந்தில் நிரந்தரப் பிரஜை அந்தஸ்த்துப் பெற்றுச் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாள்.
அவளின் பிள்ளைப் பெத்துப் பார்க்க அம்மாவும், ஐயாவும் சுவிஸ் சென்றுவிட்டார்கள். சிறிது காலத்திற்குப் பின் அங்கு சென்ற அவர்கள் அங்கேயே இறந்தும் விட்டார்கள். நாட்டுப் பிரச்சினை காரணமாக பிரேதங்களைக் கூட இங்கு கொண்டுவர முடியவில்லை.
பெரிய தங்கைச்சியின் புருஷன் ஜேர்மனிக்குப் போய் இரண்டு வருஷத்திலை பெண் சாதி புள்ளைகளை எடுப்பிச்சுப் போட்டான். சின்னத்தம்பி கொம்பியூட்டர்
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 66
 

என்ஜினியராக அமெரிக்க கலிபோனியாவில் வேலை பார்க்கிறான். ஒரு அவுஸ்திரேலியாப் பெண்ணை மணந்து, இரண்டு மூன்று முறை இங்கை வீட்டுக்கு வந்துபோய்விட்டான். ஐயா அம்மாவின் நல்ல மனத்திற்கு அவற்றை பிள்ளைகள் எல்லாம் நல்லாய் வந்துவிட்டுது கள் எண்டு எங்கள் ஊரிலை ஒரு பரவலான கதை இருக்குது.
நான் பென்சன் எடுத்த பிற்பாடு என் சகோதரங்களின் உதவி யோடு சிறப்பாக இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு சாதாரண கிளறிக்கல் “சேவன்ற்’ ஆக யாழ்ப்பாணம் கமத்தொழில் திணைக்களத்தில் கடமையாற்றியக் கொண்டிருந்தேன். ஒரு நாள் எனது வீட்டில் நடந்த சம்பவம் இன்று நினைத்தாலும் என்மனத்தை வருடி நிற்கின்றது.
என்னுடைய குடும்பம் சாதாரண வறிய குடும்பம். அந்த நிலையில் அன்று இருந்தது.
தந்தையார் தோட்டக்காரன். காலை நாலுமணிக்கு எழும்பி மாட்டுச் சாணம் குப்பைகள் எல்லாவற்றையும் தலையிலை தூக்கிக் கொண்டு தோட்டத்துக்குப் போய்விடுவார். நான் ஏழுமணிக்கு தேத்தண்ணி கொண்டுபோய் ஐயாவுக்கு குடுத்திட்டு பள்ளிக்கூடத்திற்கு ஒடுவன். தோட்ட வேலைகள் எல்லாம் முடிச்சுக் கொண்டு ஐயா ஒன்பது மணியளவில் வீட்டுக்கு வந்து ஏதோ கிடக்கிறதைச் சாப்பிட்டுவிட்டு சுருட்டுச் சுத்தக் கந்தையா முதலாளி வீட்டுக்குச் சென்றுவிடுவார். மாலை ஆறுமணிக்கு சுருட்டுக் கொட்டகையிலை இருந்து வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு மீண்டும் தோட்டத்திற்குப் போய்விடுவார்.
நான்தான் குடும்பத்தில் மூத்தவன். எனக்குக்கீழே இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு தம்பியும். ஐயா பாவம் ஒடி ஒடி உழைத்துத்தான் ஆறுபேர் கொண்ட குடும்பத்தைக் காப்பாற்றினார். எந்தக் கெட்ட பழக்கமும் அவரிடம் இல்லை. கையில் கிடைக்கும் பணத்தை எல்லாம் அம்மாவிடம் கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அதைவைத்து சிக்கனமாகக் குடும்ப வண்டியை ஒட்டிக் கொண்" டிருந்தார் அம்மா. பிள்ளைகள் பிற்காலத்தில் எங்களைப்போல கஷ்டப்படக்கூடாது எண்டுஎண்ணி எங்கள் நால்வரையும் படிக்க வைச்சார்.
நான் எஸ்.எஸ்.சி.யுடன் கிளறிக்கல் வேலை கிடைச்சு கொழும்புக்குப் போய்விட்டன். ஐயாவுக்குப் பெரிய சந்தோஷம்.
சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் | 67|

Page 35
கொழும்புக்கு வழியனுப்ப கோண்டாவில் புகையிரத நிலையத்தில் ஐயா சொன்ன ஒரு வார்த்தை இப்பொழுதும் என் காதுகளில் ரீங்காரம் இட்டபடி இருக்கின்றது.
"தம்பி ராசா, சொல்லுகிறன் எண்டு கோவியாதையெணை. பெண்களுக்கு மட்டும் தான் கற்பு வேண்டும் எண்டு நினைக்காதை ஆண்களுக்கும் கற்பு இருக்க வேணும்" ஐயா இப்படிச் சொன்னது எவ்வளவு அர்த்தமுள்ளது என்பதை கொழும்புக்குப் போனபிறகு" தான் புரிந்துகொண்டன்.
கொழும்புக்குப் போய் எனது திணைக்களத் தலைவராக இருந்த ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழரிடம் எங்கள் குடும்ப நிலையை எடுத்துக் கூறி அவரின் உதவியுடன் மூன்று மாதங்களில் யாழ்ப்பாணம் கமத்தொழிற் திணைக்களத்திற்கு மாற்றம் பெற்று வந்து சேர்ந்தன். வீட்டில் உள்ள எல்லோருக்கும் நல்ல சந்தோஷம். சம்பளம் எடுத்ததும் முழுக்காசையும் அம்மாவிடம் கொண்டுவந்து குடுத்துவிடுவன்.
சிங்களம் பாஸ்பண்ண வேண்டியது தமிழ் அரச ஊழியருக்கிருந்த கடப்பாடு. யாழ்ப்பாணம் வந்த பிற்பாடு மிகுந்த சிரமப்பட்டு ஆறு வருடங்களுக்குப் பின் பாஸ் பண்ணி முடித்தன். அதன் பிறகுதான் இன்கிறிமென்ற் (சம்பள உயர்வு) பதவி நிரந்தரம் எல்லாம் கிடைச்சுது. ரைப்பிங்கும் படிச்சு ஒரு வருஷத்திலை பாஸ் பண்ணினன்.
என்ரை பிள்ளை கிளறிக்கல் சேவன்ற் என்று பலருக்கும் சொல்லி என் ஐயா பெருமைப்பட்டுக் கொள்ளுவார்.
மூத்த தங்கைச்சிக்கு இருந்ததை எல்லாம் குடுத்து எங்கடை சொந்தத்தில தோட்டக்காரர் ஒருவருக்கு கல்யாணம் செய்து குடுத்தாச்சு. அவளுக்கும் ஒரு பெட்டைப்பிள்ளை. ஐயா அம்மா பேரப்பிள்ளையையும் கண்டிட்டினம். எனக்கும் காலாகாலத்திலை கல்யாணத்தைச் செய்து வைக்கவேணும் எண்டு வீட்டில ஐயாவும் அம்மாவும் கதைப்பினம். நானும் சின்னத் தங்கைச்சிக்கு கல்யாணம் செய்து வைச்ச பிற்பாடு தான் கல்யாணம் செய்வன் எண்டு சொல்லிப் போட்டன். ஐயாவும் அம்மாவும் மெளனமாகிவிட்டினம்.
இரண்டாவது தங்கைச்சிக்கு ஒரு ஆஸ்பத்திரிக் கிளறிக்கல்
மாப்பிள்ளை தோதாக வர கல்யாணப் பேச்சு நடைபெற்றது. அவர்
தன்ரை அக்காவுக்கு அவ ரீச்சாரம் எண்டு சொல்லி மாத்துச் |சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 68|

சடங்காய் கேட்க ஐயாவும் அம்மாவும் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஒரு குடும்பம் நல்லாய் வாழ்ந்தால் மற்றக் குடும்பம் நல்லாய் வாழாதாம் எண்டு அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. மாத்துச் சடங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. ஆதாலை தங்கைச்சியின் கல்யாணப் பேச்சும் அதோட நிண்டு போச்சு.
இக்காலகட்டத்தில் ஒருநாள் சின்னத் தங்கைச்சி ஒரு பஸ் கொண்டக்டரோடை தொடர்பாம் எண்டு ஒரு கதை வீட்டுக்குத் தெரிய வந்தது. ஐயா தங்கைச்சிக்கு அடிச்சுப் போட்டார்.
"எங்கள் குடும்பமானம் போகுதே” எண்டும் "இவளுக்கு இப்ப என்ன வந்ததோ” ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டார் அம்மா.
"தங்கைச்சியையும் கொண்டக்டர் பெடியனையும் சுபாஸ் கபேயிலை சோடா குடிச்சுக் கொண்டு இருந்ததைக் கண்டதாக" நான் கந்தோராலை வரமுந்தி வீட்டிலை சின்னத்தங்கச்சியின்ரை விசயத்த பொன்னம்பலத்தார் வந்து சொல்லிப்போட்டாராம்.
இந்த விடயத்தைக் கேள்விப்பட்டு பெரிய தங்கைச்சியும் புருசனும் வீட்டுக்கு வந்து விட்டார்கள்.
“பெடியனை யார் எண் டு காட்டுங்கோ மருதனார்மடச் சந்தியிலை வைச்சு செம சாத்து சாத்திவிடுறன்" மூத்தவளின் புருஷன் ஒரு பக்கத்தாலை கொதிச்சுக் கொண்டு நிற்கிறார்.
"இவளை ரியூசனுக்கு யாழ்ப்பாணம் அனுப்பவும் வேண்டாம். படிச்சது காணும் பள்ளிக் கூடத்தலை மறிச்சுப் போடுங்கோ". பெரிய தங்கைச்சி கூறினாள்.
தம்பி எல்லாற்றை முகத்தையும் பரிதாபத்துடன் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.
சின்னத்தங்கைச்சி அடிவேதனையாலோ என்னவோ அறைக்" குள் அழுதுகொண்டு இருக்கிறாள். தம்பியைவிட மற்றைய எல்லோரும் மாறிமாறி கதைச்சுக் கொண்டிருக்கினம்.
சின்னத்தங்கைச்சி ஏ.எல் படிச்சுக்கொண்டு இருந்தபடியால் யாழ்ப்பாணத்தில் அப்போது பிரபல்யமாக இருந்த "பொண்ட்” ரியூசன் சென்ரரிலை படிக்கிறதிற்காக நான்தான் கொண்டு போய் சேர்த்திருந்தன். அவளும் நல்லாய்த்தான் படிச்சுக் கொண்டிருந்தவள்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 69|

Page 36
வீட்டிலை ஏதோ இழவுவீடு நடந்தமாதிரி அக்கம் பக்கத்து வீட்டுக்காரர் எல்லாரும் வந்து கூடியிருக்கினம். இவற்றைப் பார்க்க எனக்கு ஏதோ மாதிரி இருந்துது.
"மச்சான் நான் சொன்னமாதிரி வடுவாவுக்கு முறையாகுடுத்தா அவளை திரும்பியே பாக்கமாட்டான் என்ன அப்பிடி செய்வம்" என்னைப் பார்த்து பெரிய தங்கைச்சியின் புருஷன் பேந்தும் கேட்டான்.
பெரிய தங்கைச்சியும் "என்ன அண்ணை ஒண்டும் பேசாமல் இருக்கிறியள்” எண்டாள்.
"இவளுக்கு கொய்யா அடிச்சது பத்தாது தம்பி நீயும் நாலு சாத்துச் சாத்து"
அம்மா சொல்லுகிறா ஐயாவின் முகத்தைப் பார்த்தன். கோபத்திலை சிவந்திருந்தது. எனக்கு என்ன செய்வது எண்டு ஒண்டும் புரியவில்லை. என்ன கதைப்பது எண்டு யோசிச்சுக் கொண்டு கொஞ்ச நேரம் பேசாமல் திண்ணையில் இருந்துவிட்டன்.
பொன்னம்பலத்தார் என்னைக்கூப்பிட்டு இரகசியமாய்ச் சொல்லியிருக்கலாம். அவர் எங்கடை வீட்டிலை வெளிப்படை யாய்ச் சொன்னதாலை இப்பிடியாகிப்போச்சு?
எதற்கும் தங்கச்சியை ஒருக்கால் கேட்டுப்பாப்பம் என்று எண்ணினன்.
அவள் இருந்த அறைக்குப் போய் தங்கைச்சி எண் டு கூப்பிட்டன். குப்புறக் கிடந்தவள் தலையை நிமிர்த்தினாள். அழுததிலை முகம் வீங்கிவிட்டது. ஐயா அடிச்சதாலை சொத்தை சிவந்திருந்தது. பாவம் என்னைக் கண்டதும் விம்மி விம்மி அழத்தொடங்கிவிட்டாள்.
கொஞ்சநேரம் பேசாமல் இருந்துவிட்டு கட்டிலிலை கிடந்த துவாயை எடுத்து முகத்தை துடைத்து விட்டன். நன்றியோடு எண்முகத்தைப் பார்த்தாள்.
“என்னம்மா நடந்தது? ஏன் எல்லோருக்கும் இப்படி இருக்கினம்?"
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் |70

நான் இண்டு காலமை நேரம் போச்சுதெண்டு சாப்பிடாமல் போட்டன். அத்தோடை வீட்டுக்குத் தூரமும், பஸ்சிலை சரியான சனம் நிணி டுபோனனான். தலையைச் சுத்தி பஸ் சுக்குள் விழுந்துவிட்டன். கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிஞ்சு போச்சு. என்னோட ரியூசனுக்குவாற சுன்னாகத்துப் பிள்ளை சாந்தியின் அண்ணர்தான் அந்த பஸ்கொண்டக்டர். அவர் என்னை தன்ரை. தங்கச்சியோடை கண்டிருக்கிறார். ஆதால என்னை அவருக்கு நல்லாய் தெரியும்."
சொல்லும் பொழுது கண்ணால் கண்ணிர் வழிந்தபடியே இருந்தது.
"அவர்தான் பஸ்ராண்டுக்கு முன்னால் இருக்கிற சுபாஸ் கபேக்கு சுட்டிப்போய் சோடா வாங்கித் தந்தவர். அவற்றை மிஸ் ஸிஸ் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியிலை நேஸ் வேலை பார்க்கிறார். ஒருமுறை தம்பிக்கு நாய்கடிச்சு ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக அவதான் டொக்டரிட்டை கூட்டிக்கொண்டு போய்க்காட்டி பேந்து ஊசியும் போட்டு மருந்தும் கட்டிவிட்டவ. அவைக்கு ஒரு பிள்ளகூட இருக்கு."
“ஒமோம் நீ சொன்ன ஞாபகம் இருக்கு."
"நான் சுபாஸ் கபேயில் இருந்து சோடாக்குடிக்கேக்கை இவர் பொன்னம்பலத்தார் என்னைக் கண்டவர். அவர்தான் ஐயாவிட்டை இல்லாத பொல்லாததையெல்லாம் சொல்லி அள்ளி வைச்சிருப்பார். நான் உள்ளதைச் சொல்ல வாய்திறக்க முந்தி ஐயா அடிஅடி எண்டு அடிச்சுப்போட்டார். அம்மாவும் ஏதோ ஏதோ எல்லாம் சொல்லிக் கத்தத் தொடங்கிவிட்டா."
“இந்தாளுக்கு உன்னிலை ஏதும் கோவமே?”
“ஓம் அண்ணை. நான் ஓ.எல் ஒருதரத்திலை ஆறு டியும் இரண்டு சீயும் எடுத்துப் பாஸ் பண்ணின்னான். இப்ப ஏ.எல் படிக்கிறன். அவற்றை மகளும் என்னோடை ஓ.எல் எடுத்து நாலு பாடந்தான் பாஸ். நான் நல்ல றிசல்ற் எடுத்து ஏ.எல் படிக்கிறது அந்த மனுசனுக்கு எரிச்சலும் பொறாமையும். பள்ளிக்கூடத்தாலை வரேக்க என்னைக் கண்டுவிட்டு அவருக்குப் பக்கத்திலை வந்த ஒருவருக்கு எனக்குக் கேட்கக் கூடியதாக "சுறுட்டுக் காரன்ரை புள்ளைக்கு ஏன் உந்தப் படிப்போ தெரியேல்ல" எண்டவர். நான்
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 171|

Page 37
அண்டைக்கு உதை வீட்டிலை சொன்னால் எல்லாரும் மனவருத்” தப்படுவார்கள் எண்டு சொல்லாமல் விட்டிட்டன்."
"அப்படியே சங்கதி” எண்டன்.
"நான் படிக்கிறது அவருக்குப் பிடிக்கேல்ல" அதனாலைதான் இல்லாத பொல்லாததெல்லாம் சேர்த்து நெருப்பு மூட்டிவிட்டுட்டார். அதுதான் இப்பொழுது எரிஞ்சு கொண்டிருக்குது. நான் என்ன செய்வன் அண்ணை."
"நீ செய்யாத குற்றத்திற்கு ஏன் பயப்படவேணும். கொத்தானுக்கு உண்மை தெரிஞ்சால் பொன்னம்பலத்தாரை வெட்டியும் போடுவான்."
"உன்னாணை அண்ணை நான் உங்கடை தங்கைச்சி என்னை நம்புங்கோ" என்று கூறி என் கால்களைக் கட்டிப்பிடிச்சு அழத்தொடங்கி விட்டாள். என் கண்களிலிருந்தும் இரண்டு சொட்டுக் கண்ணிர் அவள் தலையில் விழுந்து சிதறியது.
பொன்னம்பலத்தாரை பெட்டை யாரோ ஒரு வேற்று மதத்துப் பெடியனோடை ஒடிப்போய் விட்டாள் எண்டு ஊரே அல்லோலகல்லோலப் பட்டுப்போச்சு. பொன்னம்பலத்தாற்றை ஆட்களுக்கும் பெடியன் ரை ஆட்களுக்குமிடையே சண்டை கத்திவெட்டு. பொலிஸ்வந்து பொன்னம்பலத்தாற்றை ஆட்கள் ஆறுபேரை பிடிச்சுக்கொண்டுபோய், கோட்டு ஒடர்படி விளக்கமறியலில் போட்டிட்டாங்கள். பொன்னம்பலத்தார் ஆடிப் போனார். ஆவராலை ஊருக்குள்ளை தலைகாட்ட முடியவில்லை. அவ" மானத்தால் கூனிக்குறுகிப் போனார். இருந்தாப்போலை ஒரு நாள் மருந்து குடிச்சு செத்தும் போனார் அந்தப் புண்ணியவான்.
2OO3
女
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1721

பயணம்
جنگیخ
O) ன்று ஞாயிற்றுக்கிழமை. புதுவரு” டத்தை அணி டிய ஒருநாள். நான் கொழும்புக்கு வருவதற்காகத் திருகோணமலை பஸ்நிலையத்திற்குச் சென்று பஸ்சில் ஏறி அமர்ந்து கொள்ளுகின்றேன்.
பஸ் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமானது. அது நித்தம்புவ டிப்போ பஸ் திருமலைக்கு வந்து கொழும்புக்குத் திரும்பிச் செல்கின்றது. ஏதோ தெரியவில்லை பஸ்சில் பிரயாணிகள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள்.
பஸ் காலை எட்டுமணிக்குத் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
காலை 7.30 மணிக்கு கொழும்புக்குப் புறப்படவேண்டிய தனியார் பஸ் ஒன்று பிரயாணிகள் குறைவாக இருந்த காரணத்தினாலோ என்னவோ தெரியவில்லை, நான்
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 173

Page 38
பயணம் செய்த பஸ் புறப்படுவதற்குச் சற்று முன்னதாகப் புறப்பட்டு நான் சென்ற பஸ்சை முந்தவிடாமல், பஸ்தரிப்பிடங்களில் றோட்டுக்குக் குறுக்காக நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்றது. எல்லா பஸ்தரிப்பிடங்களிலும் இதே நிலைப்பாடுதான். அதுவும் பலாத்காரமான முறையில் நான் சென்ற பஸ்சை முந்தவிடாமல் பஸ்தரிப்பிடங்களில் றோட்டுக்குக் குறுக்காக நிறுத்தி ஆட்களை ஏற்றிச் செல்லுகின்ற நிலையைப் பார்க்கும்போது பஸ் பிரயாணிகள் மனத்தில் ஒரு ஆவேச உணர்ச்சி.
போக்குவரத்துச் சபையின் பூரண கட்டுப்பாட்டில் பஸ் போக்கு" வரத்து நடைபெற்றபோது, தான்தோன்றித்தனமான இத்தகைய செயற்பாடுகள் தலைத்தூக்க முடியவில்லை. மக்கள்மயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரச செயற்பாட்டினால் வளர்ந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தனியார்மய ஆதிக்கம் வலுப்பெற்றபடியால் இத்தகைய தான் தோன்றித்தனமான நிகழ்வுகள், ஒன்றையொன்றை முந்தும் போட்டியினால் வேகமாக ஓடுதலும், அது தொடர்பான வாகன விபத்துக்களும் பெருகிவிட்டன.
நான் சென்ற பஸ் ஒட்டுநரும், நடத்துநரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மிக அவதானத்துடனும் பொறுமையுடனும் நடந்து கொண்டார்கள்.
பஸ்சில் பயணம் செய்த இளம் பெளத்தபிக்குவும் முன் சென்ற பஸ்சின் செயலைப் பொறுக்க முடியாமல் பொலிஸ்சில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்.
நான் சென்ற பஸ் கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகச் சென்று ஒரமாக நிறுத்தப்பட்டது.
அந்த இளம் பெளத்தபிக்கு பஸ் ஒட்டுனரையும் நடத்துனரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, முன்செல்லுகின்ற பஸ் ஒட்டுநரின் அத்து மீறல்கள் பற்றி முறைப்பாடு செய்திருக்கின்றார்கள்.
அடுத்த பொலிஸ் நிலையத்தில் அந்த பஸ்சை நிறுத்தும்படி பொலிஸ் வயிலஸ் மூலம் செய்தி சொல்லியுள்ளார்கள். அவர்கள் திரும்பிவந்து எங்களைப் பார்த்து கூறினார்கள்.
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 174

கந்தளாய் பொலிஸ் நிலையத்தின் முன்பாக பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பஸ்சில் மொத்தமாக பன்னிரண்டு பிரயாணிகளே இருந்தார்கள். எங்கள் பஸ்சுக்கு முன்னால் சென்ற தனியாருக்குச் சொந்தமான பஸ் எல்லாத்தரிப்பிடங்களிலும் நிறுத்தி, நின்ற பிரயாணிகள் யாவரையும் ஏற்றிச் சென்றபடியால் எங்கள் பஸ் சில் ஒருவரும் ஏறவில்லை. தனியார் பஸ்காரர்களின் தான்தோற்றித்தனமான செயலினால்தான் இலங்கைப் போக்கு" வரத்து சபை நட்டத்தில் இயங்குகின்றது.
பஸ் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
கந்தளாய் வரை எங்கள் பஸ்சுக்குப் போட்டியாகச் சென்ற தனியார் பஸ்சை பின்பு காணவில்லை. அந்த பஸ் முன்னுக்குச் சென்றுவிட்டது.
பஸ்சில் நான் இருந்த ஆசனத்திற்கு முன் ஆசனத்தில் ஒருவயதுவந்த ஒரு அம்மா. அவர் பக்கத்தில் ஒரு இளம் பெண் மடியில் குழந்தையுடன் அமர்ந்திருந்தார்கள். ஆண் குழந்தைக்கு ஒரு வயதுகூட இருக்காது. அவர்கள் சிங்களத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள்.
குழந்தை தாயின் மடியில் எழுந்து நின்றபடி என்னைப் பார்த்து கையை நீட்டியது. நான் குழந்தையின் கையைப் பிடித்து வாஞ்சையுடன் நோக்கினேன். குழந்தையும் என்னைப் பார்த்து சிரித்தபடி நின்றது. நல்ல வடிவான பிள்ளை.
என்னைப் பார்ப்பதும் ஏதோ ஆ. ஊ. என்று கத்துவதும் என்னைப் பார்த்து கையை நீட்டி ஆட்டுவதுமாக விளையாட்டுக் காட்டிக்கொண்டு நின்றது.
குழந்தைப் பருவம் எவ்வளவு சந்தோஷமானது. அந்த அம்மா "மாத்தயாவிட்ட லமயா ஹறி ஆசாய்" என்று சிங்களத்தில் சொன்னார்.
“மாத்தயா எயாக்கே தாத்தாவாகே" மகள் சொன்னார். “மாத்தயா நீங்கள் தமிழா" அந்த அம்மா கேட்டா. நான் ஆம் என்று சொன்னேன்
அவர்களுக்குத் தமிழ்பேச முடியும் எனத் தெரிந்து கொண்டேன்.
சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் | 75|

Page 39
"நான் திருகோணமலை. கொழும்புக்குப் போகிறேன்" "நாங்களும் திருகோணமலையில் தான் இருந்தோம். அதைவிட்டுவிட்டு இப்ப மாத்தறைக்குப் போகின்றோம்."
ஏன் என்று கேட்டேன். அவர்கள் இருவரின் கண்களிலிருந்தும் கண்ணிர் வடிவதைக் கண்டேன்.
என்மனதில் ஒரு ஏக்கம். அவர்களின் கண்ணிருக்கு அர்த்தம் புரியாமல் அவர்கள் இருவரினதும் முகங்களை மாறிமாறிப் பார்க்கின்றேன்.
“சுனாமி வந்து எனது சுவாமிபுருஷயா செத்துப்போனார்." அப்ப நீங்கள், ஏன் மாத்தறைக்குப் போகவேண்டும்?
“எங்கள் சொந்த ஊர் மாத்தறை. நான் அம்மா அய்யா மூவரும் திருகோணமலைக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு வந்தோம். அய்யா கடல் தொழில்தான் செய்கிறது. அவரோடை சேர்ந்து கண்ணன் என்பவரும் கடல் தொழிலுக்குப் போய்வருவார். கண்ணன் அடிக்கடி அய்யாவைக் காண வீட்டுக்கு வருவார். சில வேளைகளில் எங்கள் வீட்டில் சாப்பிடுவார். எனக்கும் அவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு அது அய்யாவுக்குத் தெரியவர எங்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து வைத்தார்.”
அப்ப உங்க அய்யா மிச்சம் நல்லவர்தானே?
"ஆம். ஆனால் கண்ணன் சிங்களத்தியைக் கல்யாணம் செய்து போட்டார் எண்டு அவற்றை அப்பா, அம்மா, சகோதரங்க எல்லாம் சேர்ந்து அவரை ஒதுக்கிவிட்டாங்க. ஆரம்பத்தில் மிச்சம் கவலைப்பட்டாரு. எனக்கு வயிற்றிலை பிள்ளை வந்ததும் நல்ல சந்தோஷமாக இருந்தோம்"
அங்கே எங்கே இருந்தீங்க?
"நாங்கள் மட்டிக்களிகடல் ஒரமாக இருந்தோம். இருக்கிறதுக்கு கல்லால் சுவர் கட்டி கூரைக்குத் தகரம் போட்டு ஒரு புதுவீடு சிறிதாகச் செய்து இருந்தோம்."
“நானும் சுனாமி அழிவுகளைப் பார்ப்பதற்கு மட்டிக்களிப் பக்கம் வந்தேன். பல வீடுகள் அழிக்கப்பட்டிருந்த காட்சியைக் கண்டேன்” என்று சொன்னேன்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1761

"இரவு கடல்தொழிக்குப் போய்வந்த புருஷன் விட்டுக்குள் படுத்திருந்தார். நான் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு பாண் வாங்குவதற்காக மட்கோ சந்திக்குக் கிட்டவுள்ள அஜித் பேக்கறிக்குச் சென்றேன். அம்மா காலையிலேயே உப்புவெளி பன்சலவுக்குப் போய்விட்டார்."
“சுனாமி வரும்போது வீட்டில் இருக்கவில்லையா? என்றேன். "அந்தநேரம் பார்த்துத்தான் சுனாமி வந்திருக்கின்றது."
கடல் கொந்தளித்து பேரலைகள் வருகின்றன. ஒருவரும் மட்டிக்களிப்பக்கம் போகவேண்டாம் என்று சொல்லி அங்கு நின்ற ஆட்கள் மட்கோ சந்தியில் எல்லோரையும் மறிக்கிறார்கள்.
"ஐயா மகே புருஷயா" என்று கத்திக் கொண்டு நிற்கின்றேன். விபரம் அறிந்து அம்மா பண் சலவிலிருந்து ஓடிவருகின்றா. என்னையும் மகனையும் கண்டதும் அவவுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்க வேண்டும்."
“கோ கண்ணன்” என்று அம்மா கேட்டார்." "அவர் வீட்டுக்குள் நித்திரை செய்தவர். என்ன நடந்ததோ தெரியாது என்று பெலத்து அழுதேன்."
வானம் மப்பும் மந்தாரமாக இருந்தது. மழையும் தூறிக்கொண்டிருந்தது.
இயற்கையின் சீற்றம் ஒருபுறம்.
அன்புக்கு இன, மத வேறுபாடுகள் கிடையாது. மனிதநேயம் என்னும் அழிந்துவிடவில்லை. அதுவும் இன்றும் நிலைத்து நிற்கிறது.
அந்தக் கணவன் மனைவிக்கிடையில் இருந்த அன்னியோன்னிய உறவை அந்தப் பெண் கதை சொல்லும்போதே என்னால் உணரக்கூடியதாக இருந்தது.
"எல்லோரும் முண்டியடித்துக்கொண்டு சுனாமிவந்த இடத்தை நோக்கி ஓடுகின்றார்கள். நாங்களும் ஒடுகின்றோம். இறந்தவர்கள் காயப்பட்டவர்களென்று சனம் தூக்கிக்கொண்டு ஓடிவருவதைக் கண்டு அம்மாவிடம் பிள்ளையைக் கொடுத்துவிட்டு என்புருஷனை தேடிப்பார்க்கின்றேன்.
றோட்டில் கடல் தண்ணிபாய்ந்துகொண்டு இருந்தபடியால் ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. அரையளவு தண்ணிருக்குள்
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 77|

Page 40
நடந்து சென்று வீடு இருந்த பக்கம் பார்க்கின்றேன். வீட்டைக் காணவில்லை. வீட்டின் தகரக்கூரையையும் அடித்துக் சென்றுவிட்டது. கற்சுவர்களையும் காணவில்லை. வீடு இருந்த இடத்தைக் கண்டுபிடிப்பது பெரும் கஷ்டமாக இருந்தது. தண்ணீர் நிறைந்து காணப்பட்டது."
"உதவிக்கு ஒருவரும் வரவில்லையா?” என்று கேட்டேன். "தமிழ் முஸ்லிம் சிங்கள பெடியங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உதவி செய்து கொண்டு தான் இருந்தாங்க."
"அப்ப உங்கள் கணவர்?" "கண்ணன் கண்ணன் என்று கத்திக்கொண்டு தேடுகின்றேன். என்னுடன் பலர் சேர்ந்து விட்டார்கள். ஒருவாறு வீடு இருந்த இடத்தைக் கண்டு பிடித்தேன். சுவர் கற்களை உதவிக்கு வந்த பெடியன் மார் அகற்றி கொண்டிருக்கின்றார்கள். அதற்குள் அகப்பட்டிருந்த உடலைத் தூக்கி எடுக்கின்றார்கள்.
“ஐயோ! என் கண்ணாவே! உங்களுக்கு இப்படியா ஆகவேண்டும். என்னையும் பிள்ளையையுமா விட்டுட்டு போய்விட்டீர்கள். என் கண்ணா! நான் என்ன செய்வேன். கதறி அழுகின்றேன். சற்று நேரத்தில் நானும் மயங்கி விழுந்து விட்டேன்."
கண்விழித்துப் பார்க்கின்றேன். திருமலை ஆஸ்பத்திரி. அங்குதான் கண்ணனின் உடல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். கள். ஒடிச்சென்று பிரேத அறையில் அவரை அடையாளங் காட்டி" னேன்.”
தனது சோகம் நிறைந்த கதையைக் சொல்லும்போது கண்கள் இரண்டிலும் கண்ணிர் வடிந்தோடிக் கொண்டிருந்தது. குழந்தை தாயின் மடியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது.
அவரின் பிள்ளையைத் தாய்வாங்கி வைத்திருந்தார். அக்குழந்தை அவர் மடியிலும் இருக்காமல் எழுந்துநின்று ஆசனத்தின் மேல்கம்பியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஒரு கையை என்னைப்பார்த்து நீட்டுகின்றது. அக்குழந்தையின் செய்கைகள் என்மனத்திற்கு ஆறுதல் தருவதாக இருந்தது.
பஸ் கபறணையை வந்தடைந்துவிட்டது. சில பயணிகள் தாங்கள் கொண்டுவந்த பொதிகளுடன் இறங்கிக் கொள்ள, சிலர் பஸ்சில் ஏறிக்கொண்டார்கள்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 178|

பஸ் தன் பயணத்தைத் தொடர்ந்தது.
“கண்ணணின் அப்பா, அம்மா, சகோதரங்க எல்லாம் வந்தாங்க திருகோணமலை இந்து மயானத்தில் கண்ணனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கண்ணனின் அம்மா எங்களை எல்லாம் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் போய் தங்களுடன் இருக்கும்படி வற்புறுத்தி னார். நான்கு மாதம் அவர்களுடன் இருந்தோம். எங்களுக்குத் தொடர்ந்தும் மனக்கவலையுடன் திருகோணமலையில் வாழ்வதற்கு முடியவில்லை. மற்றவர்களுக்குப் பாரமாக இருக்க மனம் கேட்கவில்லை. அதனாலைதான் எங்கடை ஊர் மாத்தறைக்குப் போகின்றோம்."
அந்த இளம் பெண் தனது சோகம் நிறைந்த கதையைக் கூறி முடித்தார்.
சுனாமி வந்து எத்தனையோ உயிர்களை, உடமைகளை" யெல்லாம் அழித்துவிட்ட நிலையை எண்ணி வேதனைப்பட்டேன்.
அவள் எடுத்த முடிவு சரியானதாகத்தான் இருக்க வேண்டும். இளம்பெண் வாழ்ந்துதானே ஆகவேண்டும். அவள் தன் ஊருக்குச் செல்வதால் தான் ஆறுதலையும் அமைதியுைம் பெறமுடியுமென்றால், அது சரியாக அவளுக்குத் தோன்றியிருக்கும் மனநிலையே!
என் மனம் எண்ணியது. அவள் தன் சொந்த ஊருக்குச் சென்று மறுமணம் செய்து வாழக்கூடிய சூழல் ஏற்பட வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.
பஸ் தம்புள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் நின்றபோது வடை, கடலை, சோளம் விற்பவர்கள் பஸ்சுக்குள் ஏறி அவற்றின் விற்பனையில் ஈடுபட்டார்கள். சன நெருக்கத்திற்குள் உட்புகுந்து தம் வியாபாரத்தைச் செய்யத் தொண்டை கிழியக் கத்தியும் ஒரு சிலர் மட்டுமே வாங்கியதாகத் தெரிந்தது.
வடை விற்பவர் தமிழில் "சுடச்சுட வடை வாங்கிச் சாப்பிடுங்க” என்று கூறினார். அவர் மலைநாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமென எண்ணிக் கொண்டேன்.
கொளுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது இந்த ஏழை வியாபாரிகள் தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக எண்னமாதிரி எல்லாமோ கஷ்டப்படுகின்றார்கள் என வேதனைப்பட்டேன்.
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 79

Page 41
அடுத்த பஸ்தரிப்பு நிலையத்தில் இந்தச் சிறு வியாபாரிகள் இறங்கிக் கொள்கின்றார்கள்.
கொஞ்சத்தூரம் சென்றதும் பிரயாணிகள் சாப்பிடுவதற்காக ஒரு கடைக்கு முன்னால் பஸ் நின்றது.
"அம்மா சாப்பிட வாரீங்களா?” என்று ஒரு மரியாதைக்குக் கேட்டுப் பார்த்தேன்.
தாங்கள் வரும் போது சாப்பாடு கொண்டு வந்ததாகச் சொன்னார்கள். நான் பஸ்சை விட்டு இறங்கி அந்தக் கடையில் ஒரு குளிர்பானம் வாங்கி குடித்துவிட்டு, அந்தச் சின்னப்பிள்ளைக்கு ஒரு சின்ன பார்சொக்கிளேற் வாங்கிக் கொண்டு வந்து கையில் கொடுத்தேன். பேத்தியார் அந்தப் பிள்ளையிடமிருந்து அதைவாங்கி கடதாசியை உரித்து விட்டுச் சின்னத் துண்டுகளாக உடைத்து தீத்திக் கொண்டிருந்தார். பஸ் சற்று நேரத்தில் பயணத்தைத் தொடங்கியது. சூரியனும் தனது வெப்பக் கதிர்களால் சுட்டுக் கொண்டே இருந்தான்.
பஸ்சில் ஏறிய இளைஞன் ஒருவன் சத்தமாகச் சிங்களத்தில் பேசுவது கேட்டது. திரும்பிப் பார்த்தேன்.
“பொய் இல்லை; களவில்லை; என் பசியைப் போக்குவதற்கும், சுகமில்லாமல் இருக்கும் பெற்றோரைக் கவனிப்பதற்காகவும் பாட்டுப்பாடி உங்கள் ஒவ்வொருவருடைய ஆதரவையும் நாடி நிற்கின்றேன்." என்று சிங்களத்தில் கூறிவிட்டு கையில் வைத்திருந்த றபானை அடித்து சிங்களத்தில் பாடத் தொடங்கினான்.
ஒவ்வொரு பாட்டும் பாடத்தொடங்குவதற்கு முன்பு பாட்டு இயற்றியவருடைய பெயரையும் பாடியவருடைய பெயரையும் சொல்லுவான். முதற்பாட்டு பாடி முடிந்ததும் மொஹிடீன் பேக் பாடிய “புத்தம் சரணம் கச்சாமி” என்று தொடங்கும் பாடலைப் பாடினான்.
எனக்குப் பக்கத்தில் இருந்த ஒருவர் பாடுகிறவரைப் பார்த்து “பொறுக் காறயோ” என்று எனக்குச் சொன்னார்.
சிங்களத்தில் பாடியவர் ஹிந்திப் பாட்டுப் பாடத் தொடங்கி னார். அவர் தொடர்ந்து பாடிவருவதால் போலும் தொண்டை கரகரப்பாக இருப்பது தெரிந்தது. பாடிமுடிந்ததும் றபானை
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1801

உட்பக்கமாகத் திருப்பி பஸ்சில் இருந்த எல்லோரிடமும் பிச்சை கேட்பதுபோல் கேட்டுவந்தார். சிலர் தங்களிடமிருந்த சில்லறைகளைப் போட்டார்கள். சிலர் ஒன்றுமே கொடுக்கவில்லை.
பாடிக் கொண்டு வந்தவர் கணேவல பஸ்தரிப்பில் இறங்கிவிட்டார்.
சரியான வெப்பமாக இருந்தபடியால் பஸ்சில் இருந்தவர்களுக்கு வியர்த்துக்கொட்டியது. எப்பொழுது கொழும்பைப் போய் சேருவோம் என்ற மனநிலையில் பிரயாணிகள் இருந்தார்கள்.
என் இருக்கைக்கு முன் இருக்கையில் இருந்த அந்தக் குழந்தை வெப்ப மிகுதியால் அழத் தொடங்கிவிட்டது.
பஸ்சும் தரிப்பிடங்களில் நின்று பிரயாணிகளை ஏற்றுவதும் இறக்குவதுமாகத் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தது.
யக்கல பஸ்தரிப்பில் ஒரு இருபது வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபன் ஒரு பருவமடைந்த பெண் பிள்ளையின் கையைப் பிடித்துக்கொண்டு பஸ்சில் ஏறினான். அவன் கையில் வெள்ளைப் பிரம்பை மடித்து வைத்திருந்தான்.
"அன்பான கருணையுள்ளம் கொண்டவர்களே! எனது ஊர் தங்காலை. சுனாமி வந்து தந்தை தாயார் இரண்டு பேரையும் கடல்கொண்டு போட்டுது. எனக்கு மூன்று தங்கைச்சிமார் அவர்கள் படிக்கின்றார்கள். இவதான் எனது இளைய தங்கைச்சி. சனி, ஞாயிறு மற்றும் லீவு நாட்களில் தான் இந்தத் தங்கைச்சியையும் கூட்டிக்கொண்டு திரிந்து பிச்சை எடுப்பன். இன்றும் பஸ்சில் ஏறி உங்களிடம் கையேந்தி நிற்கின்றேன். நல்ல மனம் படைத்த உங்களுக்கு கடவுள் நல்லதைச் செய்வார். உங்கள் தர்மத்தில்தான் எங்கள் நாலுபேருடைய வயிற்றையும் பார்த்து, தங்கைச்சிமாரையும் படிக்க வைக்கவேணும்."
மிகுந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்தான்.
அவனது தங்கைச்சி ஒவ்வொரு ஆசனத்தில் இருந்தவர்களிட மும் கையை நீட்டிக்கொண்டு வந்தாள். அநேகமானவர்கள் சில்லறைக் காசே கொடுத்தார்கள். எனக்கு முன் ஆசனத்தில் இருந்த அம்மா பத்து ரூபா கொடுக்க முனைந்தபோது பக்கத்தில் இருந்த மகள் அதைத் தாயிடமிருந்து வாங்கிக் கொண்டு இருபது ரூபா தாளைக் கொடுத்தார். சுனாமி அனர்த்தத்தினால் தன் கணவனை
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 181|

Page 42
இழந்த அந்த இளம் பெண்ணின் மனநிலையை எண்ணி என்னுள் வியந்தேன்.
தாய் என்னைப் பார்த்துச் சொன்னார். "இவளின் தாராள மனம் எவருக்குமே வராது. அந்த நல்லமனத்திற்குத் துணையாக ஒரு நல்லவன் கிடைத்து அவளுக்கு மறுவாழ்வு கொடுக்கவேண்டும்.”
"அத்தி வடிய கத்தாகறண்ண எப்பா அம்மே."
பஸ் ஓடிக் கெர்ண்டே இருந்தது. பிற்பகல் இரண்டு மணியளவில் கோட்டை பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. எல்லாப் பயணிகளும் இறங்கினார்கள். அந்தப் பிஞ்சின் கைகளைப் பிடித்து கொஞ்சிவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு நான் பஸ்தரிப்பிடத்தை நோக்கி புறப்பட்டேன். அவர்கள் மாத்தறைக்குப் போகும் பஸ்சுக்காக கியூவில் சேர்ந்து கொள்கின்றார்கள்.
அந்த வயதான தாய் சொன்ன கூற்று எவ்வளவு நிதர்சனமானது. என்பதை நினைக்கும்போது என் மனம் நிறைந்திருந்தது.
"வாழ வேண்டிய இளம் வயதில் வாழவெட்டியாக இருப்பதிலும் பார்க்க எங்கள் ஊருக்குக் கூட்டிப்போய் மறுமணம் செய்து வைத்தால் அவள் எதிர்காலம் சந்தோஷமாக அமையும்."
தாயின் கூற்று உண்மைதான் அது சீக்கிரமே நிறைவேற வேண்டும் என்று மனத்தில் எண்ணிக்கொண்டு, அந்தக் குழந்தையின் குறும்புத் தனத்தையும் மறக்க முடியாமல் நான் ஏறிப்போகும் பஸ்சுக்காகச் செல்லுகின்றேன்.
சூரியனின் சூடு தணிந்து மேகம் இருண்டு மழைக்காகக் காத்திருக்கிறது.
2.O-11-2OO5
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1821

கலையும் கோலங்கள்
றுவதம் வந்தவளே?" வீட்டுக்கு வந்தவுடன் நல்லதம்பியின் முதற்கேள்வி.
"ஒமப்பா அவள் இவ்வளவு நேரமும் உங்களைப் பார்த்துக்கொண்டிந்திட்டு இப்ப கொஞ்சத்துக்கு முந்தித்தான் போறாள்." "என்னவும் சொன்னவளே?”
“இல்லை ஒண்டும் சொல்லேல்ல."
"அப்பசரி” சொல்லி நல்லதம்பியர் ஒரு பெருமூச்சு
விட்டார்.
"அவள் என்னத்துக்கு உங்களைத் தேடி வந்தவள்”
கண் மணிக்குப் புருசன் மேலே ஒரு சந்தேகம் வந்தமாதிரி கேட்டே விட்டாள்.
சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் | 83|

Page 43
"உனக்கு இப்ப அவசரம் தெரியத்தான் வேணுமே?”
"என்னெண்டு கேட்டதுக்கு உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வரவேணும். எனக்கு ஒண்டுமாய் புரியேல்ல."
"கண்மணி உனக்குப் புரியாமல் இருக்கிறதுதான் நல்லது. கொஞ்சம் சும்மாய் இரப்பா? களைச்சுப்போய் வந்திருக்கிறன். குடிக்க ஏதாவது கொண்டு வாவன்."
"அதுக்கு மட்டும் குறைச்சலில்லை." முணுமுணுத்தபடி கண்மணி குசினிக்குள் செல்கின்றாள்.
"வானம் இருண்டு கிடக்கின்றது. இடி முழக்கத்துடன் மழை வாறது மாதிரி இருக்கின்றது. நல்ல வேளை நேரத்தோட வந்திட்டன்’ நினைத்துக் கொள்கிறார்.
பறுவத்தின் மூத்தமகனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிற வேலையில்தான் நல்லதம்பியர் முழு மூச்சாக ஒடித்திரிகின்றார்.
புருசனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் கடை அப்பம் சுட்டுவித்து கஷ்டத்துடன் குடும்பத்தை நடத்துகின்றாள் பறுவதம். நல்லதம்பி வாத்தியார் உதவி செய்வார் என்ற நம்பிக்கை அவளுக்கு.
மூத்தவனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டால் மற்ற இரு பெண்பிள்ளைகளையும் கரைசேர்ப்பதற்கு உதவியாகவிருக்கும். இதனாலைதான் அவளும் படாதபாடு படுகின்றாள்.
சகோதரங்கள் என்று சொல்வதற்கு பறுவதத்திற்கு ஒருவருமில்லை. இருந்த ஒரு தமயனும் ஒருநாள் நல்லாய் குடிச்சிட்டு வெறி யில் வரும்போது பத்மநாதன்ரை வண்டிச் சில்லுக்கை அகப்பட்டு கழுத்து நெரிஞ்சு செத்துப்போனார். பத்மநாதனை பொலிஸ் வந்து பிடிச்சுக்கொண்டு போய் சுன்னாகம் பொலிஸ்ரேசனில் லொக்கப்பிலை போட்டுவிட்டாங்கள்.
பத்மநாதன் ரை பெண் சாதி பிள்ளைகள் கத்திக்கொண்டு ஓடிவந்து நல்லதம்பியரிட்டை முறையிட்டு அழுதினம்.
நல்லதம்பியருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொஞ்சநேரம் யோசித்தார்.
விறுவிறுறெண்டு எழுந்து பறுவதம் வீட்டுக்குப் போனார்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 184|

"உண்ரை அண்ணர் வெறியில் விழுந்து செத்ததுக்கு பாவம் பத்மநாதனை பொலிஸ் வந்து பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம்."
"எப்ப வாத்தியார் நடந்தது"
"நேற்று இரவு, பத்மநாதனிலை ஒரு குற்றமுமில்லை. பெண்சாதி பிள்ளைகள் வீட்டை வந்து கத்திக் கொண்டிருக்குதுகள்."
"அதற்கு நான் இப்ப என்ன வாத்தியார் செய்கிறது."
"நீ என்னோடை ஒருக்கால் வந்து பொலிசிலை அண்ணன் வெறியிலைதான் விழுந்து செத்தவர் எண்டு சொன்னால் பத்மநாதனை வெளியிலை கொண்டுவந்துவிடலாம்."
"பொலிஸ் ரேசனக்கோ? நான் ஒருநாளும் போனது கிடையாது. உங்களுக்காக வாறன். ஆனால்.”
“என்ன ஆனால் எண்டு இழுக்கிறாய்."
"அண்ணற்றை பெண்சாதி புள்ளையஸ் என்னிலை கோவிக்கமாட்டினமே? அதை நினைக்கத்தான் பயமாய்க்கிடக்கு."
"கொண்ணற்றை பெண் சாதி புள்ளைகள் கொண் ணரை மதிக்கிறேல்ல. அதாலை அவரும் நல்லாய் குடிச்சிட்டு வீட்டுக்கும் போறேல்லை. தகப்பன்ரை பழைய சுருட்டுக் கொட்டிலிலை ஒரு மூலையில் சாப்பிட்ட பாதி சாப்பிடதாததுபாதி எண்டு தன்பாட் டிலை கிடந்துவிடுவார்."
"உண்ணாணை வாத்தியார் எனக்குத் தெரியாது. அவர் பெண் சாதிபுள்ளைகளோடு மானிப்பாயிலை இருக்கிறார் எண்டெல்லோ நினைச்சுக் கொண்டிருக்கிறன். அவர் என்னட்டை ஒருநாளும் வாறதுமில்ல, பேசுறதுமில்லை."
"அவற்றை பெண்சாதி புள்ளையஞக்கு அவர் போனதுதான் சந்தோஷமாயிருக்கும். ஒருத்தருக்கும் உதவாமல் சும்மா குடிச்சுக்" கொண்டு திரிஞ்சால் யார்தான் மதிப்பினம்"
"அந்தக் காலத்திலை அப்பு ஆச்சி இருக்கேக்கை எப்பிடி இருந்தம்."
"நீ ஒண்டுக்கும் யோசிக்காமல் வா பத்மநாதனை மீட்டுக்கொண்டு வருவம்.”
§ද 3ද 3k
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 85

Page 44
இணுவிலில் பொன்னுத்துரையின்ரை சுருட்டுக்கொட்டில் எண் டால் அந்த நாளிலை தெரியாதவை இருக்க முடியாது. கொழும்பு, பாணந்துறை, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்” தோட்டையெண்டு அவற்ரை சுருட்டுப் போகாத இடமேயில்லை. யாழ்ப்பாணம் சுருட்டு என்றால் சிங்கள மக்களுக்கு அலாதி பிரியம். கனகலிங்கம் சுருட்டு, வை.சி.சி.கு சுருட்டு பெயர் பெற்றவை. யாழ்ப்பாணத்து வியாபாரிகள் சிங்களப் பிரதேசங்களிலெல்லாம் சுருட்டுக்கடைகள் வைத்து வியாபாரம் செய்து மதிப்போடு வாழ்ந்தார்கள்.
தனது சுருட்டுக் கொட்டிலிலை சுருட்டுச் சுத்திகிறவர்களுக்கு பொன்னுத்துரையர் கிழமைக்குக் கிழமை கணக்குத் தீர்த்துப் போடுவார். சுருட்டுச் சுத்துகிறவர்களுக்குச் சனிக்கிழமைகளில் லிவு. அவர்கள் இடையில் ஐந்து பத்து என்று தேவைக்குக் கேட்டால் இல்லையெண்று சொல்லாமல் கொடுத்துவிடுவார்.
பத்திரிகைகள் எடுப்பித்து, அங்கு வேலை செய்பவர்கள் நாட்டுநடப்புகளைத் தெரிந்து கொள்வதற்காக உரத்து வாசிக்கின்ற ஒருவரையும் ஒழுங்கு செய்து வைத்திருந்தார். பத்திரிகைகள் வாசிக்கிறவர்களுக்கு அந்த நேரத்தில் சுருட்டுச் சுத்துகிறவர்கள் இனாமாக ஒரு கட்டுச் சுருட்டுக் கொடுக்க வேண்டும்.
இப்பொழுது சம்பள உயர்வுகோரி வேலை நிறுத்தங்கள் நடப்பது போல அந்தக் காலத்தில் சுருட்டுத் தொழிலாளர்களும் கூலி உயர்வு கோரி "கூலிக்கலம்பகம்” நடத்துவார்கள். அக்காலங்களில் சுருட்டுக் கொட்டில்களில் சுருட்டுவேலைகள் தடைப்படும்.
நல்லதம்பியின் தகப்பனாரும் தோட்ட வேலைகளை முடித்து வந்து நாரிகூன இருந்து சுருட்டுச் சுற்றுவார். நல்லதம்பியின் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்ட ஏழைக் குடும்பமாகத்தான் இருந்தது. கஷ்டத்தின் மத்தியிலும் கந்தையர் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி பிள்ளைகள் இரண்டையும் படிப்பிச்சுப் போட்டார். மூத்தவர் நல்லதம்பி ஆசிரியராக இருந்து அதிபராக உயர்ந்தவர். இளையவர் சுப்பிரமணியம் கிளறிக்கல் சேவன்ராக வேலை பார்த்தவர். இந்தப் பிள்ளைகளின் படிப்புக்குப் பொன்னுத்துரையர்தான் உதவிகளை அவ்வப்போது செய்திருந்தார்.
பொன்னுத்துரையருக்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும். மகன் படிப்பை இடையில் நிறுத்தி விட்டு தகப்பனுடன் சேர்ந்து சுருட்டுத்
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 86|

தொழிலைப் பார்த்துவந்தான். சுருட்டுச் சுத்துகிறவர்களுக்கு உள்ளிலை, காப்பிலை தெரிந்து கொடுப்பது, சுருட்டு வெட்டுகிறது, கோடாப் போடுகிறது, பெட்டியில் சுருட்டு அடுக்குவது, வார்நாமம் எழுதுவது போன்ற வேலைகளைத் தினமும் செய்துவந்தான். தகப்பன் தனக்குப் பிறகு தான் செய்துவருகின்ற தொழிலை மகன் தொடர்ந்து செய்ய வேண்டுமென்பதில் பற்றுறுதியுடன் இருந்தார். அத்துடன் மகனுக்கு தன் சகோதரியின் மகளையும் திருமணமும் செய்து வைத்தார்.
மகள் பறுவதம் சின்னப்பிள்ளை. அவளையும் வளர்த்து நல்ல இடத்திலை கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று எண்ணிக்" கொண்டிருந்தார். மகளின் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும் என்று கந்தையருடன் தனிமையில் சந்தித்துக் கதைக்கும் வேளைகளில் சொல்லிக் கொள்வார். அவற்றை பிள்ளைகளில் ஒருவனையாவது மகளுக்குக் கணவனாக எடுத்துவிட வேண்டும் என்ற ஆதங்கம் பொன்னுத்துரையரின் மனத்தில் குடிகொணிடுள்ளதை நல்லதம்பியின் தகப்பனார் தெரிந்தும் வைத்திருந்தார்.
பொன்னுத்துரையருக்கும் நல்லதம்பியின் தகப்பன் கந்தையருக்கும் அன்னியோன்னியமான உறவு இருந்துவந்தது. சனிக்கிழமை" களில் இரண்டுபேரும் யாழ்ப்பாணம் முற்றவெளியில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெறுகின்ற உதைப்பந்தாட்டப் போட்டிகளைக் காணச் சென்று வருவார்கள்.
米米米
ஐம்பத்தாறில் நடந்த இனக்கலவரத்தில் பல தமிழ் வியாபாரிகள் கொல்லப்பட்டு அவர்கள் வியாபாரம் செய்த சுருட்டுக் கடைகளும் எரித்து நாசமாக்கப்பட்டன. அதே வேளை சில தமிழ் வியாபாரிகள் அந்த ஊர் சிங்களமக்களால் காடையர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டுமுள்ளனர். களுத்துறை சுப்பிரமணியம், கெக்கராவ செல்லத்துரை மாவனெல்ல திருநாவுக்கரசு போன்றோர்கள் சிங்கள மக்களால் காப்பாற்றப்பட்டவர்கள்.
கொஞ்சக் காலம் செல்ல பழையபடி சுருட்டுவியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. சுருட்டுக்குடித்துப் பழகிய சிங்கள மக்கள் மத்தியில் யாழ்ப்பாணத்துச் சுருட்டை குடிக்கும் ஆர்வம் குறைந்துவிடவில்லை. அதனால் சுருட்டு வியாபாரத்தை நம்பியிருந்தவர்கள் பயனடைந்தார்கள்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1871

Page 45
எழுபதுகளில் எற்பட்ட சேகுவேரா குழப்பம் காரணமாக சிங்களப் பிரதேசங்களுக்கு சுருட்டு அனுப்புவதில் பெரும் கஷ்டங்கள் இருந்தன. சுருட்டு வியாபாரம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
எழுபத்தேழுகளில் நடைபெற்ற இனக் கலவரத்தினால் மீண்டும் பெரும் பாதிப்புக்கள். யாழ்ப்பாணம் சுருட்டைப் பாவிக்கக்கூடாது என்று சிங்களப் பேரினவாதக் கும்பல் சிங்கள மக்களை எச்சரித்தது. புதிய பரம்பரையினர் சுருட்டுக் குடிப்பதைத் தவிர்த்து நாகரிகமான முறையில் சிகரற் புகைக்கப் பழகி தங்களை மாற்றிக் கொண்டார்கள்.
பொன்னுத்துரையருக்கு வெளிஊர்களுக்கு அனுப்பிய சுருட்டுக் காசுகள் முறையாக உரியவர்களிடமிருந்து கிடைக்காத படியால் நல்லாய் நொந்து போனார். நாற்பது ஐம்பதுபேர் சுருட்டுச் சுத்திய இடத்தில் நான்கு ஐந்துபேர் மட்டுந்தான் சுருட்டுச்சுத்தினார்கள். அப்பொழுது தம்பலகாமம், வவுனியா ஆகிய இடங்களுக்கு மட்டுந்தான் சுருட்டு அனுப்பப்பட்டு வந்தது.
எண்பத்திமூன்று இனக்கலவரம், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட யுத்தம் யாழ்ப்பாணத்துச் சுருட்டுக் தொழிலைப் பெரிதும் பாதித்து விட்டது.
கடன் தொல்லை தாங்க முடியாமல் இருந்த பொன்னுத்துரையர் இருந்தாப்போலை மாரடைப்பு வந்து மரணத்தைத் தழுவிக் கொண்டார். -
பொன்னுத்துரையர் இறந்ததும் கல்யாணம் கட்டாமலிருந்த பொன்னுத்துரையின் மகள் பறுவதத்திற்கு நல்லதம்பியின் தகப்பனார் தான் மோட்டார் சயிக்கிள் பழுதுபார்க்கிற கடை வைத்திருந்த நடராசாவுக்குச் சாதகம் பொருந்திவர முன்னின்று கல்யாணத்தைக் கட்டி வைத்தார். அந்த நன்றியை மறவாத பறுவதம் அவர் மகன் நல்லதம்பி வாத்தியார் மேல் நல்ல மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.
:::::::::
தேனீரை கொண்டு வந்து கொடுத்த கண்மணி, "ஏனப்பா உவள் பறுவதம் அடிக்கடி வந்து போறாள் உண்ணானைச் சொல்லுங்கோ."
"அவளின்ரை மூத்தவனை வெளிநாட்டுக்கு அனுப்ப உதவி செய்யட்டாம்."
| சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1881

“உங்களுக்கு வேற வேலையில்லை." "ஏனப்பா அப்படிச் சொல்லுகிறாய்?"
“அதுதானே பாத்தன் சோளியன் குடும்பி சும்மா ஆடாதெண்டு.”
"விசரி உனக்குத் தெரியுமே நாங்கள் இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம்பறுவதத்தின் தகப்பன் செய்த உதவியால்தான். கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த என்ரை அப்பு என்னைப் படிப்பிக்க எவ்வளவு பாடுபட்டிருப்பார் எண்டுஎனக்குத்தான் தெரியும். என்ரை படிப்புக்கு வேண்டிய நேரங்களில் பறுவதத்தின் அப்பர், அப்பு கேட்கும் போதெல்லாம் பணம் குடுத்து உதவி செய்ததாலை தான் நானும் தம்பியும் படிச்சு உத்தியோகம் பார்க்கிற நிலைக்கு வந்தம். அந்த நன்றிக் கடனைச் செய்வதற்கு ஒரு சந்தற்பம் கிடைச்சிருக்கு அதுதானப்பா ஒடித்திரிகிறன்.” AO
"எங்களுக்கும் இரண்டு பெடியள் இருக்கிதல்லே அதில ஒண்ட வெளிநாட்டுக்கு அனுப்புவமெண்டில்லாமல் ஊர் உலகத்திற்குத் தொண்டு செய்கிறியளோ?”
“எடி கண்மணி உனக்கும் உந்தக் குறுக்கால போன புத்தி எப்பிடி வந்ததோ தெரியேல்ல."
"ஏன் நான் இப்ப என்ன சொல்லிப் போட்டனெணி டு கத்திறியள்? உவள் சின்னத்தங்ககைச்சியின் பெடியன் வெளிநாட்டுக்குப் போய் உழைச்சு காணிவாங்கி மாளிகைமாதிரி பெரிய வீடு கட்டியிருக்கிறான். ரீவி.பிறிஜ், குசன்செற்றி எண்டு வீடு நிறையச் சாமான். எவ்வளவு சந்தோஷமாக சின்னத்தங்கைச்சியின் குடும்பம் வாழுகினம்." *ー。
“எனக்கு றெயினிங் கொலிச்சில கல்விபுகட்டித்தந்த மார்க்கண்டு மாஸ்ரரின் மகள் நீ எண்டு சொல்ல வெட்கமாய்க் கிடக்கு."
"நாலு காசு பணம் சொத்துச் சுகங்கள் இருந்தால்தானே எங்களையும் நாலுசனம் மதிக்கும்."
“அதாலை?”
நல்லதம்பியர் ஆத்திரத்தோடை கேட்டார்.
“எங்கடை மூத்தவனை வெளிநாட்டுக்கு அனுப்புவமே?”
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 1891

Page 46
நல்லதம்பியருக்கு பெண்சாதியின்ரை அறியாமையை நினைத்து என்னத்தைக் கதைத்து விளங்கப்படுத்துகிறது என்று தெரியாமல் சற்றுநேரம் மெளனமாக இருந்தே விட்டார்.
“என்னப்பா யோசிக்கிறியள்?"
கண்மணி விட்டபாடாயில்லை.
"சும்மாய் வாயை வைச்சுக்கொண்டு இருக்கமாட்டியே! எனக்கு என்ன செய்கிறதெண்டு எல்லாம் தெரியும்."
te
அப்ப எங்கடை பிள்ளையளைப் பற்றி உங்களுக்கு அக்கறையில்லை”
"இஞ்சருமப்பா எங்கடை பிள்ளைகளுக்கு என்ன குறை. நல்லாய் படிக்கிறாங்கள். தேவையான எல்லா வசதியும் செய்து கொடுத்திருக்கிறம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலை சேர்த்துப் படிப்பிக்கிறம். அவங்கள் படிச்சு ஒரு டாக்டராகவோ, என்ஜினியராகவோ வரவேணுமெண்டு எவ்வளவு ஆவலோடை இருக்கிறன்."
சின்னத்தம்பியர் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து முடித்துவிட்டார்.
கண்மணிக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தனது அன்றாட வீட்டுக் கருமங்களுக்குள் உசாரானாள்.
கறுத்து இருண்டிருந்த மேகம் மழையைக் கொட்டத் தொடங்கியது.
米米米
"தம்பி ராஜன் ஒருக்கால் நல்லதம்பி வாத்தியார் வீட்டை போயிட்டு வாறியே?”
பறுவதம் மகனை ஊக்கப்படுத்தினாள்.
"ஏன் அம்மா அவரிட்டை."
"உன்னை வெளிநாட்டுக்கு அனுப்புகிறத்துக்கு அவரிட்டைச் சொல்லிவைச்சனான். அப்போதை போனன் சந்திக்கேல்ல. எனக்கு தேகம் கொஞ்சம் அசதியாய்கிடக்கு. நான் அங்கை போனாலும் வாத்தியார் இல்லாவிட்டால் அவற்றை பெண்சாதி துருவித் துருவி கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பா. என் ரை அப்பன் நீ
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 90

ஒருக்காபோய் என்னெண்டு கேட்டுக்கொண்டு வாவன். அவர்
உண்ரை அலுவலாய்த்தான் ஒடித்திரியிறாராம்."
“என்ன வெளிநாட்டுக்கோ! ஏன் அம்மா நான் படிக்கிறது
உங்களுக்குப் பிடிக்கேல்லையோ?”
“என்ர ராசா எங்கடை குடும்ப நிலையை யோசித்துத்தான் இந்தமுடிவுக்கு வந்தனான்.
“என்னம்மா கஷ்டப்பட்டவர்கள் படிச்சு முன்னுக்கு வரமுடியாதா?
“இரண்டு குமர்களை கரைசேர்க்க வேண்டுமே தம்பி"
அம்மா தன் ரை படிப்பை, இலட்சியத்தைப் பாழாக்க நினைக்கின்றாவே என்று மனத்தில் எழுந்த உணர்ச்சிக் கொந்தளிப்பை அடக்க முனைந்தும் முடியாதவனாய்.
“அதற்காக"? என்று பெரிய சத்தத்துடன் தாயைப் பார்த்துக் கேட்டான்.
“சோ" என்று பெய்த கொண்டிருந்த மழை சற்று ஓய்ந்து தூறிக்கொண்டிருந்தாலும் மின்னலும் முழக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
நீ வெளிநாட்டிலை போய் உழைச்சு தங்கைச்சிமார் இரண்டு பேரையும் கரைசேர்க்க வேண்டுமல்லே? அது உன்னுடைய பொறுப்பும் கூட."
யாழ்பாணத்துக் குடும்பப் பணி பாடுகள் அம்மாவைப் பேசவைத்திருக்கிறது.
"அம்மா அவர்களும் படிக்கின்றார்கள் தானே? படித்து முன்னுக்கு வரலாம்."
"இந்தக் காலத்தில் படிப்பை நம்பி வாழலாமா? தம்பி"
"அம்மா நான் இப்ப ஏ.எல் படிக்கிறன். வாற ஏப்பிறலில் சோதனை எடுத்து யுனுவசிற்றி கிடைச்சால் பள்ளிக்கூடத்திற்கு சயிக்கிளில் போய்வாற மாதிரி யாழ்ப்பாணம் யூனுவசிற்றிக்கும் போய்வரலாம். பெரிசாய் காசுச் செலவு வராது அம்மா. “மஹாப்பொல” காசும் தருவார்கள். தயவுசெய்து என்னைப் படிக்கவிடுங்கோ அம்மா."
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 191|

Page 47
ராஜன் தாயைப் பார்த்து மன்றாடினான். "அப்ப தங்கைச்சிமாரை என்ன செய்கிறது.?”
“அவையளையும் நல்லாய் படிப்பிச்சுவிடுவம். அம்மா படிப்புக் கெண்டு எங்கள் மூவருக்கும் கனக்கச் செலவு வராது. எமது நாட்டில யூனுவசிற்றிவரை இலவசக் கல்விமுறை இருக்கு. பாடப்புத்தகங்கள் யூனிபோம் எல்லாம் இலவசமாகக் கிடைக்கின்றன. எந்த நாட்டிலும் காணமுடியாத இம்முறையானது எமக்குக்கிடைத்த வரப்பிரசாதம். கல்விதானம்மா எங்களை வாழவைக்கும்.
"நானும் கண்ணை மூடிவிட்டால் நீங்கள் தனிச்சுப் போய் விடுவியளே! நானும் எத்தினை நாளைக்கு நெருப்புக்காஞ்சு கடையப்பம் சுட்டு விக்கிறது."
பறுவதம் அழத்தொடங்கிவிட்டாள்.
தாயின் அழுகையைக் கண்டு மனம் நொந்துபோன ராஜன் அவரைச் சமாதானப் படுத்துவதற்காக. "நல்லதம்பி வாத்தியார் வீட்டை போயிட்டு வாறன். அம்மா நீங்கள் அழாமல் இருங்கோ."
தாயிடம் சொல்லிவிட்டு, நல்லதம்பி வாத்தியாரிட்டையாவது தன் மனக்குறையைக் கொட்டிவிட வேண்டுமென்ற ஆதங்கத்தில் கால்போன போக்கில் போய்க்கொண்டிருக்கின்றான் ராஜன்.
மழைவிட்டு வானத்தில் வானவில் தோன்றி நிற்கிறது.
வாத்தியார் நல்லதம்பியின் மனைவியைத் தவிர வேறு ஒருவரையும் காணவில்லை.
"வாத்தியார் இருக்கின்றாரோ?” "வாத்தியார் இல்ல நீ யார்?" கண்மணி அதிகாரத்தொனியுடன் வினவுகின்றார்.
"நான் பறுவதத்தின் ரை மகன் ராஜன். உங்கடை மூத்த மகனோடை யாழ். இந்துவிலை ஏ.எல் படிக்கிறன்."
"நீ வெளிநாடு போறத்துக்குத்தானோ வாத்தியார் ஒடித்திரிகின்றார்.”
"வாத்தியாரம்மா தயவு செய்து வாத்தியாரிட்டைச் சொல்லுங்கோ எனக்குப் படிப்பை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் போக
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் |92

விருப்பமில்லை. அதாலை அந்த அலுவலைப் பாக்கிறதை விட்டுவிடுங்கோ எண்டு கட்டாயம் சொல்லுங்கோ."
"வெளிநாட்டுக்குப் போனால் நல்லாய் உழைக்கலாமாம். நீ ஏன் மாட்னெங்கிறாய்? "நான் படிக்க விரும்புகிறன். படிச்சு நல்லாயிருக்க விரும்புகிறன்." அவன் சொல்லில் நம்பிக்கையின் உறுதி!
“சின்னத்தங்கைச்சியின் மகன் வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்து குடும்பத்தை நல்லாய் வைச்சுக்கிறான் தானே?"
"இஞ்சை படிச்சிட்டு வெளிநாட்டுக்குப்போய் படிச்சுக்கொண்டு வேலை பார்க்கிறது வேற சங்கதி. படியாமல் அங்கைபோய் என்ன செய்யலாம்? கோட்சூட் போட்டுக்கொண்டு கான் கழுவுகிற வேலையும், ஹோட்டல்களில் எச்சில் கோப்பை கழுவுகிற வேலைகளும், கூலி வேலை செய்தும்தான் நம்மவர்கள் மிகவும் கஷ்டத்துடன் உழைச்சு மிச்சம் பிடிச்சு வீட்டுக்குக் காசு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
ராஜன் தன் ஆதங்கத்தை கொட்டிவிட்டு வாத்தியார் அம்மாவை நிமிர்ந்து பார்க்கின்றான். அவன் பார்வையில் ஒரு கம்பீரம்
வாத்தியாரின் மனைவிக்கு வியப்பு.
"அப்பிடியா சங்கதி"
"வாத்தியார் வந்ததும் சொல்லுங்கோ. என்ரை அம்மா சொல்வதைக் கேட்காமல், என்னைப் படிக்க விடுங்கோ எண்டு அவவுக்கு நல்ல புத்திமதியாய் சொல்லி, வெளிநாடு போற வேலையை மறக்கச் சொல்லிவிடட்டாம் எண்டு பறுவதத்தின் மகன் வந்து சொல்லிப் போட்டுப் போறான் என்ற விசயத்தை தயவுசெய்து சொல்லிவிடுங்கோ!"
"அவரோடை ஒண்டும் கதைக்கேலாது. நான் சொல்லுறது ஒண்டும் அவர் கேட்க மாட்டார். அவர் வந்ததும் நீ வந்து சொல்லு." வாத்தியார் வருவாரா என்று கொஞ்சநேரம் இருந்து பார்த்தான். வாத்தியாரைக் காணவில்லை.
"வாத்தியாருக்குக் கூடத் தெரியாதா? கல்வி எவ்வளவு சிறப்பானது எண்டு. தன்ரை பிள்ளைகளை படிப்பிக்கிறமாதிரி |சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 193|

Page 48
என்னையும் படிப்பிச்சுவிடச் சொல்லுங்கோ. நான் படிக்க வேணும். அதுதான் எனது ஒரு குறிக்கோள். அதற்குத் தடைபோடாமலிருந்தால் அதுவே எங்கள் குடும்பத்திற்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்." “கல்விக்கு இவ்வளவு மகத்துவம் இருக்கெண்டு எனக்கு இவ்வளவு நாளும் தெரியேல்ல. இவர் பலமுறை சொல்லியும் நான் ஒண்டும் தெரியாத பேச்சியாக இருந்துவிட்டன். நீ சின்னப்பிள்ளை. உனக்குத் தெரிந்த அறிவுகூட எனக்கில்ல."
தனது அறியாமையை கண்மணி சொல்லியே விட்டாள். "அப்ப நான் வாறன். வாத்தியார் வந்ததும் வந்து சந்திக்கிறன்." மழைத்தூறல் விட்டு வானம் வெளித்துக் காணப்பட்டது. வாத்தியார் வீட்டுக்கு வந்ததும் மிகவும் சந்தோஷமாக இருப்பது மாதிரி இருந்தது. என்னவாக இருக்குமென்று அறிவதில் கண்மணி பெரிதும் ஆதங்கப்பட்டாள்.
"இஞ்சருமப்பா பறுவதத்தின் மகனுக்கு வெளிநாடு போகும் அலுவல் சரிவரும் போல இருக்கு. பாவம் அவள் பட்ட கஷ்டத்திற்கு கடவுள் கண்திறந்திட்டார்."
"பறுவதத்தின் மகன் உங்களைத் தேடி வந்தவன். அவன் "சொன்னதை கேட்டு நானே ஆச்சரியப்பட்டுப் போனன். உங்கள் பிள்ளைகளை படிப்பிக்கிற மாதிரி தன்னையும் படிக்க விடட்டுமாம்."
"அவன் சொன்னதில் என்ன தவறு இருக்கு? பாவம் படிக்க ஆசைப்படுகிறான். படிக்கட்டும். என்னாலான எல்லாவகையான உதவியும் செய்ய இருக்கிறன். வெளிநாட்டு மோகம் பிடிச்சு அலையின்ற இந்தக் காலத்தில் தன் சொந்த நாட்டிலேயே படிச்சு முன்னுக்கு வரவேண்டுமெண்டு துணிந்து நிற்கின்ற ராஜன் போன்ற இளைஞர்கள் இருக்கும் வரை என்போன்ற ஆசிரியர்களுக்குப் பெருமையாகத்தான் இருக்கின்றது." நல்லதம்பியரின் மனதில் நின்மதிப் பெருமூச்சு நிறைவு.
வானத்தில் சூரியனின் செங்கதிர்கள்வியாபித்துப் பிரகாசிக்" கின்றன.
நல்லதம்பியர் பறுவதம் வீட்டுக்குச் செல்கின்றார்.
22-O-2OO6
★
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 94

யா இருந்திருந்தால் நான் என்னமாதிரி இருந்திருப்பன்.
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்டு நான் அனுபவிக்கும் நரக வேதனை சொல்லிமாளாது.
நித்தம் குடிப்பதற்குக் காசு கேட்டு ஒரே சண்டைதான். ஒவ்வொரு நாளும் காசுக்கு எங்கை போவன்.
இரண்டு பொம்பிளைப் பிள்ளைகள். மூத்தவள் பெரிசாகிவிட்டாள். மூத்ததம்பி பெண் சாதியோடை வந்து மூத்தவளுக்குத் தண்ணி வாத்துப் போட்டு ஐந்நூறு ரூபா காசு கொடுத்திட்டுப் போய்விட்டான்.
காசு குடுத்த சங்கதியை கழுகுக்கணிணால் பார்த்துக்கொண்டிருந்தவர் என்னிடம் வந்து அந்தக் காசைத்தரும்படி கேட்டார். நான் இல்லையென்று சொன்னன்.
சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் | 95|

Page 49
பளார் எண்டு எனக்கு அடிவிழுந்தது. மெளனமானேன்.
"ஐயோ அம்மாவை அடிக்காதேங்கோ அப்பா" என்று இரண்டு பிள்ளைகளும் கத்தி அழத்தொடங்கிவிட்டனர்.
“பொத்துங்கோடி வாயை" இவர் கத்தினார். எனக்கும் சொக்கை வீங்கி அழுகை வந்துவிட்டது. "அழுகுணி நாய்கள்" என்று திட்டயபடி வீட்டைவிட்டுப் புறப்பட்டார்.
இடி மின்னலுடன், மழை சோ என்று கொட்டிக் கொண்டிருந்தது.
"மழை பெய்யுது குடையைக் கொண்டு போங்கோவன்” என்று
“காசுக்கு என்னைத் தேவையில்லை. குடைக்கு என்னைத் தேவையாக்கும். நீயும் உண்ரை குடையும்" என்று கேட்கக் கத்தியபடி மழையில் நனைந்து கொண்டு கோபத்துடன் புறப்பட்டுவிட்டார்.
வீட்டில் இருந்த அரிசி சாமானைக் கொண்டு சோறும் காச்சி கத்தரிக்காய் வெள்ளைக் கறியும், கறணைக்கிழக்குக் குழம்பும் கொஞ்சம் வறட்டலாக காச்சி மத்தியானம் சாப்பிட வருவார் என்று காத்திருந்தேன். இரண்டு மணியாகியும் அவரைக் காணவில்லை. பிள்ளைகள் "அம்மா பசிக்குது" என்று கேட்டனர். அவர்களுக்குச் சாப்பாட்டைக் கொடுத்து விட்டு அவர் வரவுக்காகக் காத்திருக்கின்றேன்.
எனக்கும் பசிக்களை விடியத் தொடங்கி ஒன்றும் சாப்பிடவில்லை. இருக்கும் சோறு கறி அவருக்குத்தான் காணும். வீட்டில் அரிசி சாமான் இல்லை. நாளைக்குத்தான் மகளுக்குத் தம்பி கொடுத்த காசிலைதான் வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்க வேண்டும் என எண்ணினன்.
ஒரு தேத்தண்ணியைப் போட்டுக் குடிப்பம் எண்டு அடுக்களைக்குள் நுழைகின்றேன். கேற்றிலில் தண்ணியை எடுத்து அடுப்பில் வைக்கின்றேன்.
மழை பெய்த ஒழுக்குக் காரணமாக நிலம் நனைந்திருந்தது. கிடந்த ஒரு சில விறகுக் கட்டைகளை எடுத்து அடுப்புக்குள்
| சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 96|

வைக்கின்றேன். ஈரவிறகு எரியாது என எண்ணிக் கொண்டு மண்ணெண்ணை போத்திலைப் பார்க்கின்றேன். அது வெறும் போத்தலாகவே இருந்தது. குப்பி விளக்குக்குள் இருந்த எண்ணையை விறகுக்கட்டைகள் மேல் ஊற்றுகின்றேன். நெருப்புப் பெட்டியை எடுத்துத் தட்டுகிறேன் அது மழையில் நனைந்த காரணத்தால் பிடிவாதமாக எரிய மறுத்துவிட்டது.
எனக்கு மன வெப்பியாரம் கண்களிலிருந்து நீர் சொரிந்து மழை வெள்ளத்துடன் சேர்ந்து விட்டது.
மழை சற்றுத் தணிந்திருந்தது. அடுத்த வீட்டுக்குச் சென்று பாறுவதி அக்கா என்று வாசலில் நின்று கூப்பிடுகின்றேன்.
“என்னடிமோனை அருந்தவம்" கேட்டுக்கொண்டு வந்தார்.
“எங்கடை நெருப்புப் பெட்டி மழைத் தண்ணியிலை நனைஞ்சு போச்சு. உங்கடை நெருப்புப் பெட்டியை ஒருக்கால் தாங்கோ அடுப்பை பற்றவைச்சுப் போட்டுத்தாறன்.”
“எடி அருந்தவம் வீட்டிலை ஒரு நெருப்புப் பெட்டியும் வைக்க இவர் விடமாட்டார். சுருட்டுப் பற்றவைக்கிறன் எண் டு எல்லாத்தையும் தேடி எடுத்துப் போடுவார். கொஞ்சம் நில் பாப்பம். எங்கையும் மாறி வைச்சிருப்பார் பார்த்திட்டு வாறன்.”
தீப்பெட்டியை வாங்கிவந்து அடுப்பை பற்ற வைக்கின்றேன். மணி எண்ணை ஊற்றப்பட்ட விறகு கட்டைகள் சிறிது நேரம் எரிந்ததும் புகைக்கத் தொடங்கின புகையும் மண்எண்ணை மணமும் சேர்ந்து எனக்கு தலை சுற்றத் தொடங்கிவிட்டது. சிறிது நேரம் அப்படியே இருந்துவிட்டேன்.
பாதி எலுமிச்சம் பழம் ஞாபகத்துக்குவர அதை எடுத்து ஒரு கோப்பையில் பிழிந்துவிட்டு தண்ணிரைக் கொஞ்சம் ஊற்றிக் கலந்து சீனிப்போத்திலை எடுத்துப் பார்க்கின்றேன் சீனி முடிந்திருந்தது.
என் வாழ்க்கை நிலையை எண்ணி அழுவதைத் தவிர என்னால் சிந்திக்க முடியவில்லை. உப்பு கொஞ்சம் கலந்து குடிக்கின்றேன்.
நேரம் மூன்று மணிக்கு மேல் இருக்கும் கோபித்துக்கொண்டு வெளியில் போனவர் என்னும் வந்து சேரவில்லை. அசதியில்
சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 1971

Page 50
நிலத்தில் தூங்கிவிட்டேன்.
ஏழுமணி இருக்கும் பிள்ளைகள் என்னைத்தட்டி எழுப்பி “பசிக்குது அம்மா" என்று கேட்கும் போதுதான் நான் நீண்டநேரம் நித்திரையாய் இருந்துவிட்டேன் என்ற எண்ணம் அப்பொழுதுதான் தெரிந்தது.
"அப்பா வந்தவரா?" என்று பிள்ளைகளைப் பார்த்துக் கேட்கின்றேன்.
“இல்லை அம்மா அப்பா வரவில்லை" என்றார்கள்.
இருந்த ஒரு லாம்பை கொழுத்தினேன்.
"பிள்ளைகள் இருங்கோ. கடை பூட்ட முந்தி ஓடிப்போய் மாவும் தேங்காயும் வாங்கிக் கொண்டு வந்து றொட்டி சுட்டுத்தாறன்" சொல்லிவிட்டு தம்பி காலையில் மகளுக்குக் கொண்டுவந்து கொடுத்த ஐந்நூறு ரூபாவையும் எடுத்துக் கொண்டு மண்எண்ணைப் போத்திலையும் தூக்கிக்கொண்டு ஒட்டமும் நடையுமாகக் கடைக்குப் போகின்றேன்.
மா, தேங்காய், சீனி, மண்ணெணையுடன் அவருக்கு முட்டை ஒன்றும் வாங்கிக் கொண்டு காசைக் கொடுக்கின்றேன். மிச்சக் காசை தரும்போது கடைமுதலாளி என் கையைத் தடவுகின்றார்.
"என்ன ஜென்மங்களோ" என்று மனத்தில் நிறைந்த பாரத்துடன் வீடுநோக்கி ஓடுகின்றேன்.
மழை பெய்து கொண்டிருந்தது வாங்கிய சாமான்களை மடியில் சீலையால் சுற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்து சேருகின்றேன். "அவர் வீட்டுக்கு வந்துவிட்டார்.” மனத்தில் ஒரு நிம்மதி. "யாரோடையடி படுத்துவிட்டு வாறாய்.” கணவனின் கேள்வி வேதனைப்படுத்தியது.
நல்ல வெறியிலை வந்திருக்கின்றார். இப்பொழுது கதை கொடுத்தால் சண்டைதான் வரும் என்று, எண்ணிக்கொண்டு குசினிக்குள் போகின்றேன்.
"எடியேய் உன்னைத்தானடி நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லடி, யாரோடை இப்ப படுத்திட்டு வாறாய்”
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1981

கேட்டுக் கத்துகிறார்.
நல்லாகக் குடித்துவிட்டு வந்தபடியால் அவரால் எழுந்து நிற்கமுடியவில்லை.
முதலில் முட்டையை அவித்து தோலை உடைத்து மத்தியானம் சமைத்து வைத்திருந்த சோறு முழுவதையும் ஒரு கோப்பையில் போட்டு கறிகள் எல்லாவற்றையும் அவித்த முட்டையையும் அதில் வைத்துக் கொண்டு அலுமீனியச் சொம்பில் தண்ணியும் எடுத்து அவரிடம் வந்து "சாப்பிடுங்கோ” என்று சொல்லிக் கோப்பையை அவர் கையில் கொடுத்தேன்.
அதை வாங்கியவர் "நீயும் உன்ரை சாப்பாடும்” என்று சொல்லி வாசல் வழியாக முத்தத்தில் கோப்பையுடன் வீசிவிட்டார்.
என் மனம் பதைபதைத்துவிட்டது. பிள்ளைகள் சாப்பிடாமலே நித்திரையாகிவிட்டார்கள். நானும், சாப்பிடாமல் வைத்திருந்த சாப்பாடு பிள்ளைகளுக்காவது கொடுத்திருக்கலாம் இப்பொழுது அணியாயமாகப் போச்சே, மனம் மிகுந்த வேதனைப்பட்டது. ஒரு மூலையில் இருந்து அழுகின்றேன்.
புருஷன் என்ற உறவு வேதனையின் சின்னம். அது ஒன்றைத் தவிர எண் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் அவமானங்கள் சொல்லிலடங்கா.
திருமணம் செய்யும்போது என் ஐயா எனக்கு வேண்டிய நகைகள் எல்லாம் போட்டு, தாலி கூறை கல்யாணச் செலவுக்கு மாப்பிள்ளை வீட்டாருக்குக் காசும் கொடுத்திருந்தார்.
ஐயா ஒரு தோட்டக்காரன். தோட்டத்தாலை வந்து சின்னக்கிளி முதலாளி வீட்டுக்கு சுருட்டுச் சுத்த போவார். அவருக்கு வால் சுத்து கட்டினவர்தான் ஐயாவால் சுருட்டுச் சுத்தப் பழகிக் கொண்டார். “ஆறுமுகம் நல்லகெட்டிக் காறன் ஒரு வருஷத்திலை நல்ல சுருட்டுக்காறனாகிவிட்டான். நல்ல குணமான பெடியன்."
ஐயா அம்மாவுடன் கதைத்துக் கொண்டிருக்கும்போது எனது காதில் விழுந்தது ஞாபகம்.
நான் அப்போது சைவ மகாஜனாவில் ஓ.எல் படித்துக் கொண்டிருந்தேன்.
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 1991

Page 51
ஐயா என் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஆறுமுகத்துக்கு என்னை கட்டிக் கொடுத்தார். இரண்டு பிள்ளைகளும் கல்யாணம் கட்டி மூன்று வருடத்தில் பிறந்துவிட்டார்கள்.
ஐயா உயிருடன் இருக்கும்வரை அடிக்கடி வீட்டுக்குவந்து எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் வேண்டியதை வாங்கித்தருவார்.
இவரும் ஐயாமேல் மரியாதை வைத்திருந்ததுடன் எங்கள் மேலும் அன்பாய் இருந்தார்.
ஐயாவின் மறைவுக்குப் பின்பு எங்கள் வாழ்க்கையில் புயல்வீசத் தொடங்கியது.
இவர் குடிக்கப் பழகிக் கொண்டார். வேலைக்கு ஒழுங்காகப் போவதில்லை.
கடை முதலாளி செல்வநாயகத்திற்கு என்மேல் ஒரு கண். நான் அவர் கடைக்குச் சாமான் வாங்கப் போனால், அவரது கண்கள் என் உடம்பில் மேயும். அதன் பிறகு அந்தக் கடைக்குச் சாமான் வாங்கப் போவதை நிறுத்திவிட்டன். சாமான் வாங்க காசை கணவ" னிடம் குடுத்து வந்தேன். அவர் கொடுத்த காசுக்கு நன்றாய் குடித்துவிட்டு வெறுங்கையோடு வந்து நிற்பார். இது வழமையாகிவிட்டது. சில நேரங்களில் பாறுவதி அக்காவிடம் குடுத்து
சாமான்கள் வாங்கி வந்தேன்.
கணவனோ வேலைக்குப் போவதில்லை. வறுமை வீட்டில் தாண்டவமாடத் தொடங்கிவிட்டது. நகைகள் ஒவ்வொன்றாக விற்கும் நிலை ஏற்பட்டது.
அது வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமல்லாது, கணவனின் தினக்குடிக்கும் நகை விற்ற பணமும் செலவாகிக் கொண்டே இருந்தது. காசு கொடுக்காவிட்டாலும் அடி உதைத்தான். காசு கொடுத்தாலும் குடித்துவிட்டு வந்து சாப்பாடு சரியில்லை என்று சொல்லி அதற்கும் அடிதான். நகைகள் எல்லாம் விற்று முடிந்து விட்டது. காதில் இருந்த தோட்டையும் குடிப்பதற்காக கழற்றச் சொல்லி வாங்கிக் கொண்டு போய்விட்டார். அன்றாட சாப்பாட்டுக்கு நான் பட்ட கஷ்டம் சொல்லிலடங்கா. சில நாட்கள் சாப்பிடாமல் கூட இருந்து என் நிலையை எண்ணி வருந்தியிருப் பேன்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 100 |

முதலாளி செல்வநாயகமும் இவரும் குடியில் நண்பனார்கள். கந்தன் வீட்டுக்கு கள்ளுக்குடிக்க இருவரும் போய்வருவது எனக்குத் தெரிந்தது. கந்தன் வீட்டில் அவன் மனைவி பொன்னாச்சி தான் கள்ளு விற்பது. காலப்போக்கில் என் கணவர் அவளே தஞ்சனமென இருந்துவிட்டார். கந்தண் பொன்னாச்சிக்குப் பயம். வீட்டில் பொன்னாச்சி வைச்சது தான் சட்டம். செல்வநாயகம் முதலாளி பொன்னாச்சியிடம் காசு கொடுத்து ஆறுமுகத்திற்கு கேட்கும் வரை கள்ளும் கசிப்பும் கொடுத்து அவனை அங்கேயே இருத்திவைக்கும்படி கூறிவைத்திருந்தார். அவளும் காசுக்காக முதலாளி சொன்னபடி ஆறுமுகத்தை மடக்கி வைத்திருந்தாள்.
“ஆறுமுகம் வீட்டுக்கு வராமலே விட்டுவிட்டான். அருந்தவம் ஆடிப்போனாள்." என்று பாறுவதி தன்ரை புருசனுக்கு சொல்ல "பாவங்கள் என்ன செய்யப்போகுதுகளோ?”
வீட்டில் அடுப்பு எரிவதில்லை. பக்கத்துவீட்டு பாறுவதி அக்கா கொடுக்கும் சாப்பாட்டை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு மிகுதி இருந்தால் மட்டும் சாப்பிடுவேன். ஒரு நாள் செல்வநாயகம் வீட்டுக்கு வந்து உனக்கு வேண்டிய சாமான்களைக் கடையில் வந்து வாங்கு என்று சொல்லிவிட்டுப் போனார். அவரது கழுகுக்கண் பார்வை அவர் ஏதோ திட்டம் போட்டுள்ளார் என்பதைப் புரிந்து கொண்டேன். பச்சோந்திகள் நம்ம ஊரிலும் இருக்கின்றார்களே என்று எண்ணி மனவேதனைப்படுவதைத்தவிர என்னால் என்ன செய்ய முடியும்?
பாறுவதி அக்கா வீரகேசரிப் பேப்பரைத்தூக்கிக்கொண்டு வந்து எடி அருந்தவம் வெளிநாட்டுக்கு பணிப் பெண் களை எடுக்கிறாங்களாம் என்று விளம்பரம் போட்டிருக்கு, நீ இங்கிருந்து கஷ்டப்படுவதிலும் பார்க்க இரண்டு காசு சம்பாதித்தால் பிள்ளைகளை நல்லாகக் கவனிக்கலாம் என்று சொன்னா.
வெளிநாட்டுக்குப் பணிப்பெண்களாகப் போறவர்கள் உடல் உள ரீதியாக்கப் பாதிக்கபட்டு சம்பளம் கொடுக்காமல் சித்திரவதைக்கு உள்ளாகி நாட்டுக்குத் திரும்பி வந்த சம்பவங்கள் பல பத்திரிகைகளில் படித்திருக்கிறன்.
பாறுவதி அக்கா பணிப்பெண்ணாகப் போற பெண்கள் பலர் பெரும் கஷ்டப்படுவதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன் என்றேன்.
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 101

Page 52
“போடி விசரி எல்லாரும் அப்பிடியே. பாஸ்போட், விசா எல்லாம் அவங்களே இலவசமாக எடுத்துத் தருவார்களாம். நீ வீட்டிலே இருந்து என்னத்தைச் செய்யப்போறாய்? பிள்ளைகளின் எதிர்காலத்தில் அக்கறை இருந்தால் நீ கட்டாயம் பேய்த்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார்."
இரவு நித்திரை வரவில்லை, படுத்திருந்து யோசிக்கின்றேன்.
பாறுவதி அக்கா சொல்லுவதும் சரி. ஆனால் பிள்ளைகளை யாரிடம் விட்டுவிட்டுப் போவது என்று யோசித்துப் பார்க்கின்றேன். மூத்த தம்பியோடை விட்டுவிட்டுப் போனால் பார்ப்பான் என எண்ணினேன். ஏதோ எல்லாம் நல்லபடியாய் நடந்தால் அதுவே போதும் என மனம் சொல்லியது.
அடுத்தநாள் காலை மூத்த தம்பிவீட்டுக்குச் சென்று விடயத்தைச் சொல்லுகிறன். தம்பி ஒன்றுமே பேசவில்லை மெளமாக இருக்கின்றான். மச்சாள் தம்பியை அழைத்துக் கொண்டு அறைக்குள் செல்லுகின்றா. “கொக்கா ஊர்சுற்றப் போறாவாம் நாங்கள் உதுகளை வைச்சு கட்டி அழுகிறதே"
மச்சாள் சொல்வது என் காதுகளுக்குக் கேட்கிறது. இடி மின்னல், மழை கொட்டுகிறது.
தம்பி வந்து சொன்னான் "அக்கா குறை நினைக்காதை குமர்பிள்ளைகளை வீட்டில் வைச்சிருக்க என்ரை மணிசிக்கு விருப்பமில்லையாம்.
அத்தான் குடிச்சுவிட்டு வந்து தொந்தறவு கொடுப்பாராம்." நீயும் சொல்லுகிறது சரிதான் தம்பி அப்ப நான் வாறன்.
வீட்டுக்கு வந்து பாறுவதி அக்காவிடம் விடயத்தைச் சொன்னேன்.
அவவும் விடயத்தைக் கேட்டு யோசித்தா.
“அருந்தவம் என்னோடை நீவா ஒரு இடத்திற்குப் போய்விட்டு வருவம்"
அவவுடன் புறப்பட்டு 'கருணை இல்லத்திற்குச் சென்றோம்.
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 102

பாறுவதி அக்காவுக்கு கருணை இல்லத்துப் பெரிய சிஸ்டரை நல்லாகத் தெரியும். அவ எங்கள் விடயத்தை சிஸ்டரிடம் சொல்லி பிள்ளைகள் அங்கு தங்குவதற்கு அனுமதி பெற்றுத் தந்துவிட்டா.
அடுத்தநாள் பாறுவதி அக்கா தந்த காசுடன் கொழும்புக்கு வந்தன். மருதானையில் இருக்கும் அந்த ஏஜன்சிக்காரரிடம் நான் பணிப்பெண்ணாகப் போவதற்கு விரும்பி வந்துள்ளன் எண்டு கூறினன். அவர்களும் எனது விண்ணப்பத்தை ஏற்று பாஸ்போர்ட் விசா டிக்கற் எல்லாம் எடுக்க ஒருமாதம் செல்லும் சிலவேளை அதற்கு முந்தியும் வரலாம் அதுவரை ஒரு வீட்டிலை உங்களைத் தங்க வைக்கின்றோம் என்றார்கள். நானும் விஷயம் ஒப்பேறினால் காணும் எண்டு அவர்கள் சொன்னபடி அந்த வீட்டில் இருந்தேன். அந்த வீட்டில் மேலும் ஆறு பெண்கள் வேலைக்குக் காத்திருப்பதை அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
அடுத்த நாள் காலை ஒன்பது மணியிருக்கும் ஒரு இருபத்தைந்து வயது ஒரு வாலிபன் வந்து என்னிடம் "அக்கா பாஸ்போட்டுக்கு விசாவுக்கு எல்லாம் படம் எடுக்க வேண்டும் வாங்கோ என்று அழைத்தான்". நானும் சேலை கட்டிக்கொண்டு புறப்பட்டேன். "அக்கா சாறியை அவிட்டுப்போட்டு சட்டையும் ஜீன்சும் போட்டுக்கொண்டு வாங்கோ” என்றான்.
நான் சொன்னன் என்னிடம் சட்டை ஜீன்ஸ் ஒன்றம் இல்லை நயிற்றி மட்டும்தான் இருக்கின்றது என்றேன்.
“உங்களை மலேசியாவுக்கு ஒரு மலே வீட்டுக்குத்தான் அனுப்ப இருக்கின்றார்கள். அவர்களுக்கு சாறி உடுப்பவர்களைப் பிடிக்காது. நீங்கள் நயிற்றியோடை வாங்கோ" என்றான். வேசம் போட்டால் ஆடித்தானே ஆகவேண்டும்.
நான் அந்த இளைஞனுடன் புறப்பட்டு ஒட்டோவில் போய் படம் எடுத்துக் கொண்டு வரும் வழியில் ஒரு புடவைக் கடைக்குக் கூட்டி சென்று கையில்லாத இரண்டு ரீ சேட்டும் இரண்டு ஜின்சும் வாங்கித்தந்தான். எனி இதைத்தான் போடவேண்டும் என்று சொன்னான்.
அக்கா இப்ப உங்களைப் பார்க்க முப்பத்திரண்டு வயது என்று சொல்லமாட்டினம் பதினெட்டுவயது பெட்டை மாதிரி வடிவாக இருக்கின்றீர்கள் என்று சொன்னான். தேவையானதெல்லாம் கேட்டு வாங்கிக் கொண்டு வந்து தருவான்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 103|

Page 53
ஒருநாள் இரவு பத்து மணி இருக்கும் நான் படுத்திருந்த கதவு தட்டும் சத்தம் கேட்டு பயத்துடன் கதவைத் திறக்கின்றேன். அதே இளைஞன் அறைக்குள் வந்து கதவைச் சாத்திக் கொண்டு எனது கட்டிலில் இருக்கின்றான்.
"ஏன் தம்பி இந்த நேரத்திலை வந்தனி” என்று கேட்டேன்" “ஒன்றுமில்லை உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அதுதான் வந்தனான்."
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. நான் படுக்கவேனும் நீர் போய் விட்டு நாளைக்கு காலையிலை வாரும் கதைப்பம் என்றன். அவன் போனபாடாயில்லை. வேர்க்குது என்று சொல்லி சேட்டைக் கழற்றினான். பின்பு என் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.
அதன்பிறகு தினமும் இரவில் வந்து விடியத்தான் போவான். எனது காரியம் ஆகும்வரை பொறுமையுடன் இருந்துவிட்டன்.
ஒரு மாதத்திற்கு மேலையாகிவிட்டது.
ஒருநாள் அந்த வாலிபன் பின்னேரம் ஓடிவந்தான். "அக்கா உங்களுக்கு நாளை மறுநாள் பிளயிற். முதலாளி ஒருமாதச் சம்பளத்தை முற்பணமாகக் கொடுக்கச் சொன்னார்” என்று சொல்லி ஏழாயிரம் ரூபாவை கையில் தந்தான்.
“நாளைக் காலமை ஒரு மணியோடர் எடுத்து என் பிள்ளைகளுக்கு அனுப்ப வேண்டும் போஸ்ற் ஒப்பீசுக்குப் போக வாறிரா?” என்றேன்.
“நாளை மறுநாள் நீங்கள் போய்விடுவீர்கள் அதனால் இப்பதொடக்கம் உங்களோடை இருக்கப்போறன்” என்று சொல்லி விட்டான்.
இரவு நித்திரை கொள்ளாதவன், விடிய ஒன்பது மணிவரை நித்திரை. ஒருவாறு அவனை எழுப்பினேன். அவனுக்குச் சரியான அசதியாக இருந்திருக்க வேண்டும். என்னுள் ஒரு உற்சாகம் இருப்பதாக உணர்ந்தேன்.
பத்துமணிபோல் இருவரும் புறப்பட்டு போஸ்ட்ஒப்பீசுக்குப் போய் மணிஓடர் ஐயாயிரம் ரூபாவுக்கு எடுத்து சிஸ்ரருக்கு
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 104

அனுப்பிவைத்தேன். வரும் வழியில் ஒரு றவலிங் பாக் மற்றும் தேவையான சில சாமான்களும் வாங்கிக் கொண்டு வந்தோம்.
றவலிங் பாக்கில் கொண்டு போவதற்கான உடுப்புச் சாமான்களையெல்லாம் அவனே வடிவாக அடுக்கித் தந்தான்.
"விடியற்காலை, ஆறுமணிக்கு பிளயிற்” என்று சொல்லி பாஸ்போட் டிக்கற் தேவையான படிவங்கள் எல்லாம் நிரப்பிக் கொண்டு இரவுச் சாப்பாடும் வாங்கிக் கெள்ண்டு என்னிடம் வந்துவிட்டான்.
“காலை மூன்று மணிக்கு வான்வரும் நாம் எல்லோரும் அதில் ஏயர் போட்டுக்குப் போக வேண்டும் அக்கா இன்று கடைசி இரவு என்றான் அழுத்தமாக,
விமானத்தில் ஏறி அமருகின்றன். பிள்ளைகளை எண்ணிப் பார்க்கின்றன். விமானம் மேலெழுந்து பறக்கத் தொடங்கிவிட்டது. வானம் வெளித்திருந்தது. மனத்திலே பெரிய பாரத்தை சுமந்து செல்வது போன்ற பிரமை என்னுள் தோன்றி நின்றது.
2 Ο O 6
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 105|

Page 54
எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்
வசம்பு போய்ச் சேர்ந்துவிட்டார். நல்லாய் இருந்த மனுசன் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறத்துக்கிடையில் நிரந்தரமாக நித்திரையாகிவிட்டார். விஷயம் கேள்விப்பட்டதும் ஊரே திரண்டு வந்துவிட்டது.
"பிள்ளைகளுக்கு அறிவிச்சாச்சே" கந்தையர் வீட்டுக்காரரிடம் கேட்கிறார்.
வீட்டுக்காரருக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. அவரும் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து குடும்பத்துடன் சிவசம்பு வீட்டில் தற்காலிகமாகத் தங்கி இருப்பவர்தான்.
"நல்லையா என்ன செய்ய உத்தேசம்; என்ன பேசாமல் இருந்தால் பிரேதம் இப்படியே கிடந்து நாறுகிறதா? முதலில் எம்பாம்
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 106

செய்கிறத்திற்கு ஒழுங்கைச் செய்யும். பிள்ளைகள் வரும் வரையும் பிரேதத்தை வைக்கவேணுமல்லே”
கந்தையர் அதிகாரத் தொனியுடன் கூறுகிறார்.
மூன்று பெண்பிள்ளைகள் பெண்சாதியுடன் இடம்பெயர்ந்து வந்திருக்கும் நல்லையா கூலிவேலை செய்துதான் குடும்பத்தைக் கொண்டு நடத்துகின்றார்.
சிவசம்பு கொடுக்கும் பென்சன் பணம் சாப்பாடு, மருந்துச் செலவுகள், மற்றும் பால் புறோட்டிநெக்ஸ் போன்றவற்றுக்குத்தான் காணும். மற்றப்படி மனிதாபிமான அடிப்படையில்தான் நல்லையா குடும்பத்தவர்கள் சிவசம்புவை அக்கறையுடன் பார்த்துக் கொள்வார்கள். தன்பிள்ளைகள் பார்க்க வேண்டிய கடமைகளை நல்லையாவின் பிள்ளைகளே கவனித்து வந்தமையால் சிவசம்புவும் நல்லையாவின் பிள்ளைகள் மேல் பாசமாக இருந்தார்.
நல்லையாவிடம் எம் பாம் பணி ணவோ செத்தவீட்டுச் செலவுகள் பார்க்கவோ காசு இருக்கவில்லை.
பென்சனியர் சதாசிவம் வந்து விட்டார். அவர் கச்சேரியிலை சீவ்கிளாக்காக இருந்து பென்சன் எடுத்தவர். அவர்தான் அந்த ஊர் பென்சனியர்கள் சங்கத்தலைவர்.
பென்சனியர்கள் ஏழு எட்டுப்பேர் தினமும் காளிகோயில் பூசை முடிய கோயில் வீதியில் இருந்து நாட்டு நடப்புகளைக் கதைத்தவிட்டு இரவு எட்டு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். இந்தச் சந்திப்புகளில் தான் சிவசம்பு தன் பிள்ளைகளை விட்டுக் கொடுக்காமல் கதைப்பார்.
மூத்தவன் ஜேர்மனியிலை, நடுவிலான் பிரான்ஸிலை கடைக்குட்டி சுவிஸிலை. பெருமையுடன் கூறிக்கொள்வார்.
"உன்ரை மூத்தவன் என்ரை மகனுக்கு முந்தியோ பிந்தியோ போனவன்” சதாசிவத்தார் கேட்டார்.
மூத்தவன் தொண்ணுற்ரி மூண்டிலை போனவன் இப்ப
அவனுக்கு நிரந்தர குடியுரிமையும் கிடைச்சிருக்கு.
"என்ரை மேன் சொன்னவன் உன்ரை மூத்தவன் தருமன் ஒரு ஜேர்மன்காறியோடை திரிகிறானாம். போனகிழமை வந்தவன் உன்ரை மகனைப் பற்றிச் சொன்னான்” என்று சதாசிவத்தார் சொன்னார்.
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 107

Page 55
சிவசம்புவுக்கு நெஞ்சு திக் என்றது. தன்னைத் திடப்படுத்திக் கொண்டார். தன்ரை மகனை விட்டுக்கொடுக்க மனம் வரவில்லை.
அங்கை பீ.ஆர் எடுப்பதற்கு அங்கையுள்ள பொம்பிளையளை கட்டினால்தான் சுகமாகக் கொடுப்பார்கள். அங்கு காசு கொடுத்தால் பொம்பிளைகள் கல்யாணம் கட்டிப் போட்டு பீ. ஆர் வந்ததும் டைவோஸ் எடுத்துக் கொண்டு போய்விடுவாளவையாம். அது ஒரு பிஸ்னஸ்சாக நடக்குதாம்"
"உன்ரை மேனுக்குப் பிறகு போன என்ரை மகனுக்கும் பீ.ஆர் கிடைச்சு விட்டது. கல்யாணம் ஒன்டை கட்டிக் கொண்டு பெண்சாதியையும் கையோடை கூட்டிக் கொண்டு போக வந்திருக்கின்றான்” சதாசிவத்தார் கூறினார்.
“உங்கடை மகனும் என்ரை மகன் பீ.ஆர் எடுத்த மாதிரி எடுத்திருப்பான்” சிவசம்பு ஏதோ தெரிந்தவர் மாதிரி சொல்லியே விட்டார்.
米 米 米
சிவசம்புவும் பாறுவதமும் மனமொத்த தம்பதிகள்.
ஊரில் நிலம்புலம், வீடுவாசல் என்று செல்வாக்குடன் வாழ்ந்த குடும்பம். "மூன்றும் ஆண் பிள்ளைகள் உனக்கென்ன மூன்று ஆம்பிளைப்பிள்ளைகளைப் பெற்ற நீ பாக்கிய சாலிதான்”
ஊர் பெண்டுகள் சொல்லும்போது பறுவதம் மகிழ்ச்சியால் பூரித்துவிடுவார்.
கொள்ளி வைக்கிறதிற்கு ஆண் பிள்ளைகள் இருக்கினம் என்ற இறுமாப்பு சிவசம்புவிடம் இருந்து வந்திருப்பதை அவரின் நண்பர்கள் தெரிந்திருந்தார்கள். பிள்ளைகளுக்கு வீட்டில் செல்லம் கொடுத்து வளர்த்தபடியாலும் கேட்கும் நேரங்களில் பறுவதம் ஏன்? எதற்கு? என்று கேட்காமல் காசு கொடுப்பதாலும் அவர்கள் படிப்பில் அக்கறை காட்டாமல், பெடியங்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவதிலும் பாடசாலைக்குப் போகாமல் தியேட்டர்களுக்குப் போய் படம் பார்ப்பதிலும், குடித்துக் கும்மாளம் அடிப்பதிலும் தங்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தனர்.
பிள்ளைகள் மூன்று பேரும் அண்ணன் தம்பி என்ற வித்தியாசம் இல்லாமல் கள்ளுக் குடிக்கிறது, தம் அடிக்கிறது ஆகிய பழக்கங்
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 108

களில் தேறி விட்டார்கள்.
சிவசம்புவுக்கு பிள்ளைகளின் நடவடிக்கைகள் தெரிந்து இரண்டு மூன்று முறை கண்டித்தும் இருக்கின்றார்.
ஒருநாள் இவர்கள் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து பள்ளிக்கூடம் போகாமல் கீரிமலைக்குப் போய் அங்கு கூவில் கள்ளு குடித்துவிட்டு பொலிசாருடன் ஏதோ பிரச்சனை பட்டுள்ளார்கள். பள்ளிக்கூடத்திற்குத் தெரியவர அந்த மாணவர்கள் எல்லோரையும் பாடசாலையி: லிருந்து நீக்கிவிட்டார்கள். இதை அறிந்த சிவசம்பு கையில் கிடைத்த பொல்லால் மூத்தவனுக்கு வாங்கு வாங்கெண்டு அடித்துப் போட் L-πή.
பறுவதம் பதறி அடிச்சுக் கொண்டுவந்து சிவசம்புவைத் தடுத்து பொல்லையும் பறிச்சுவிட்டார். அல்லாவிட்டால் மற்ற மக்களுக்கும் அடிவிழுந்திருக்கும்.
சிவசம்பு மூன்று பிள்ளைகளையும் நினைத்து கொஞ்சம் ஆடிப்போனார்.
“பிள்ளையஞக்கு உந்த ஏழரைச் சனியன் போட்டு ஆட்டுது போலை. அதாலைதான் என்ர பிள்ளைகள் இப்பிடி இருக்குதுகள்" புருசன் சிவசம்புவுக்கு பறுவதம் சொல்லி ஆறுதலடைவார்.
பிள்ளைகள் கெட்டுப் போக பெண்சாதிபறுவதம் கொடுக்கின்ற செல்லம்தான் காரணம் என்று தெரிந்தாலும் மனிசி வீண் மன வருத்தப்படுவா என்று எண்ணி ஒன்றும் பேசாமல் இருந்துவிடுவார்.
பள்ளிக்கூடம் போகாமல் வேலை வெட்டி ஒன்றும் இல்லாமல் ஊர் சுற்றித் திரிவதால் வீண் வம்புகளை விலைக்கு வாங்கிக் கொண்டு வருவதை எண்ணி பறுவதமும் கவலை கொள்ளத் தொடங்கி" விட்டார்.
"ஆம்பிளைப் பிள்ளைகளைப் பெத்தம் எண்டு சந்தோஷப்பட்" டம். இப்ப அதுகளாலை கவலையாய் கிடக்கு. உவர் சின்னத்' தம்பியற்றை பெடியன் வெளிநாட்டுக்குப் போய் மற்றச் சகோதரங்கள் இரண்டையும் எடுப்பிச்சுப் போட்டானாம். இப்ப சின்னத்தம்பியரும் மனிசிக் காறியும் பிள்ளைகளிட்டை போகப் போயினமாம். உவள் சின்னத்தங்கம் வந்து சொல்லிவிட்டுப் போறாள்."
“அதுக்கு இப்ப என்னவாம்" என்றார் சிவசம்பு.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 109

Page 56
"உவன் எங்கடை மூத்தவன் தருமனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பமே?”
"உமக்கென்ன விசரே? மூண்டு நேரமும் நீ வாய்க்கு ருசியாப் போடுகிற சாப்பாடுகளைச் சாப்பிட்டு விட்டு ஊர்சுற்றுகிற சோம்பேறிகள் அங்கைபோய் என்ன வேலை செய்வினம்? அங்க உவைக்கு கான்கழுவுகிற வேலை அல்லது ஹோட்டல்களில் எச்சில் கோப்பை கழுவுகிற வேலைதான் கிடைக்கும். உன்ரை பிள்ளையஸ் இஞ்சை மகாராசாக்களாக இருக்கினம்; அங்கை போய் குனிஞ்சு நிமிருவினமே" என்றார்.
பறுவதம் ஒன்றுமே கதைக்கவில்லை. கண்ணில் வந்த கண்ணிரை தன் சீலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.
சிவசம்புவுக்கு இரவு நித்திரை வரவேயில்லை. வீட்டுக்குள் ஒரே புழுக்கம். வெளியில் வந்து வேப்ப மரத்தடியில் போடப்பட்டிருந்த சாய்மனைக் கதிரையில் படுத்திருந்து தன் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கின்றார்.
பறுவதம் சொல்லுவதும் சரி, எத்தனை நாளைக்கு இதுகளை வைச்சு தண்டச் சோறு போடுவது. மூத்தவனை எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்புவம் என்று தீர்மானித்தவராய் சாய்மனை கதிரையில் நித்திரையாகி விட்டார்.
3ද 3ද 3ද
பறுவதத்திற்குக் கொடுத்த சீதனக் காணி பத்துப்பரப்பும் நல்ல செம்மண் தோட்டம் அவசரத்துக்கு விற்கப்போய் ஐந்துலட்சம் தான் கிடைச்சிது. அத்துடன் பாங்கிலை ஒருவருக்கும் தெரியாமல் வைத்திருந்த தன்ரை கொம் மூட்டற் பென்சன் பணத்தையும் எடுத்து சிவசம்பு ஒரு ஏஜன்சிகாரர் மூலம் மூத்தவனை ஜேர்மனிக்கு அனுப்பிவைத்துவிட்டார். மனத்திலை ஒரு பாரம் குறைஞ்ச மாதிரி இருந்தது.
ஜேர்மனிக்குப் போனவன் ஒரு கடதாசி கூடப் போடவில்லை. மூத்தவன்ரை கடிதம் வந்ததும், அவனிட்டைச் சொல்லி இரண்டாவதையும் அங்கு அனுப்பிவிட்டால் ஒரு ஆறுதல் என்று சிவசம்பு எண்ணியிருந்தார்.
இரண்டு வருடங்கள் ஒடிக் கழிந்துவிட்டன. மூத்தவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இருக்கிற வீடுவளவை ஈடுவைத்து,
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 110|

பறுவதத்தின் தாலிக் கொடியையும் இருந்த நகைகளையும் விற்று இரண்டாவது மகனையும் பிரான்சுக்கு அனுப்பி வைத்துவிட்டார் சிவசம்பு போனவன் போனவந்தான் எதுவித தகவல்களும் இல்லை.
இரண்டு பிள்ளைகளையும் நினைக்க சிவசம்புக்கும் பறுவதத்திற்கும் வேதனையாக இருந்தாலும் தங்கள் வேதனைகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்தார்கள்.
சிவசம்புவின் பென்சனுடன் வாழ்க்கை ஒடிக் கொண்டிருந்தது. தோட்டக்காணி உட்பட பறுவதத்திடமிருந்த நகைகள் தாலிக்கொடி ஈறாக எல்லாம் விற்றுவிட்டார்கள். இருக்கிற ஒரேயொரு வீடும் ஈட்டிலை கிடக்குது. போதாக் குறைக்கு இளைய மகனின் பிரச்சனை வேறுவந்து சேர்ந்து சிவசம்புவையும் பறுவதத்தையும் பெரிதும் வாட்டிவிட்டது.
சின்னமகன் கள்ளுக்குடிக்கப் போற இடத்திலை சீவல் தொழிலாளியின் மகளோடை தொடர்பாம் என்று ஊரிலை கதைத்துக் கொண்டார்கள். பெட்டையின் ரை அண்ணன்மார் சுவிஸிலை இருக்கிறார்களாம். அவங்கள் தங்கள் தங்கைச்சியையும் சிவசம் புவின் கடைசி மகனையும் சுவிஸ் சுக்கு எடுப்பிச்சு கல்யாணமும் கட்டிவைச்சிட்டாங்கள் என்று கேள்வி.
பறுவதம் இதைக் கேள்விப்பட்டாள்.
“எங்கடை சாதிசனத்திலை இல்லாத ஒன்றை என் ரை கடைக்குட்டி செய்து போட்டானே" என்று ஒப்பாரி வைச்சுக் கொண்டு சிவசம்புவிடம் வந்து சொல்லுகிறா.
சிவசம்புவுக்கு முன்பே இந்த விடயம் தெரியும். பொன்னன் இந்த விடயத்தை ஏற்கனவே தன் ரை மகளும், உங்கள் மகனும் காதலிச்சவை என்ரை பிள்ளைகளுக்கு தெரிஞ்சு சுவிஸ் சுக்கு எடுப்பிச்சு விட்டினம் என்று வந்து சொல்லியிருக்கின்றான். சிவசம்பு இதைப் பறுவதத்திற்குச் சொல்லவில்லை. தெரிந்தால் பறுவதம் வேத" னைப்படுவாளே என்பதற்காக இந்த விடயத்தை மறைத்தேவிட்டார்.
மன்னாருக்குப் போய்விட்டுவாறன் என்று பறுவதத்திடம் சொல்லி விட்டுச் சென்ற மகன் நாலு ஐந்து நாட்களாக காணாத படியால் அக்கம் பக்கத்திலை விசாரித்து அறிந்த விடயத்தைத் தான் பறுவதம் வேதனையுடன் வந்து சிவசம்புவிடம் சொல்லுகின்றார்.
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் ! 111

Page 57
சிவசம்புக்கு முன்பு தெரிந்த விடயமாக இருந்த போதிலும் மனைவி சொல்வதைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருக்கின்றார். மனைவியின் புலம்பல்கள் முடிய சிவசம்பு நிதானத்துடன் சொன்னார்.
“வெளிநாட்டுக்குப் போனவங்கள் அங்கை அந்த நாட்டுப் பொம்பிளைகளை கல்யாணம் கட்டி இருக்கிறாங்கள். அதுகள் என்ன சாதியெண்டு யாருக்குத் தெரியும். அவளவைகளுக்கு கண்டநிண்ட ஆட்களோடை திரிவதும், கிளப்புகளுக்கு அரைகுறை உடுப்பு களுடன் டான்சுகள் ஆடித்திரிவதும் கலாசாரம் எண்டு, பெரிசா எங்கடை ஆட்களும் சொல்லுகிறார்கள். எங்கடை மூத்தவனும் உதைத்தானே செய்திருக்கின்றான் எண்டு சதாசிவத்தாற்றை மகன் என்னிடம் சொல்லியிருக்கின்றான்."
“பொன்னன்ரை பிள்ளை தமிழ்ப்பிள்ளை. எங்கடை கலாசாரம் பண்பாடோடை வாழுகின்ற பிள்ளை அவளுக்கு ஆதரவாக அவளின் சகோதரங்கள் கூட இருக்கிறான்கள். கடைக்குட்டிக்கு ஒரு குறையும் வராமல் பாத்துக்கொள்ளுவான்கள்."
பறுவதம் எதுவுமே பேசவில்லை. கணவன் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவர் சொல்வதும் ஏற்றுக்கொள்ள கூடியதென எண்ணிக்கொண்டார்.
"பொன்னனின் குடும்பமும் பிள்ளைகள் கூப்பிட்டு சுவிஸ்சுக்குப் போய்ட்டார்களாம். அவனும் கஷ்டப்பட்டு பாசத்தோடை பிள்ளைகளை வளர்த்தபடியால், பிள்ளைகளும் நன்றியுடன் பெற்றவர்களை சகோதரங்களை மதித்து எமது கலாசார பாரம்பரி யங்களைப் பேணி பாதுகாக்கின்றார்கள்."
சிவசம்பு கூறிமுடித்தார்.
பிள்ளைகளின் கடிதங்களை எதிர்பார்த்து நாட்கள் மாதங்களாக மாதங்கள் வருடங்களாக ஓடி மறைந்து விட்டன.
பிள்ளைகளிடமிருந்து ஒரு கடிதமும் வரவில்லை. அவர்கள் பெற்றவர்களை மறந்துவிட்டார்கள்.
கவலை தாங்கமுடியாமல் வாழ்ந்து கொண்டிருந்த பறுவதமும் கொஞ்சக் காலத்தில் கண்ணை மூடிவிட்டாள். பிள்ளைகளுக்கு அறிவிக்க அவர்களின் விலாசம் கூடத் தெரியாதே! சிவசம்பு மனைவியின் இறுதிக் கிரியைகளை முன்னின்று செய்து முடித்தார்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 112

இப்பொழுது அவர் தனிமரம். புலம்பெயர்ந்துவந்து சிவசம்பு வீட்டில் இருக்கும் நல்லையா குடும்பந்தான் அவரைப் பார்த்து வந்தார்கள்.
3ද 2ද යද්ද
“எனக்கு சிவசம்புவின் குடும்ப விஷயம் நல்லாகத் தெரியும். பிள்ளைகள் ஒண்டும் வரமாட்டுதுகள். அதனாலை எம்பாம் பண்ணத் தேவையில்லை. கந்தையருக்கு ஒண்டும் தெரியாது. அவர் கத்திப் போட்டுக் கிடக்கட்டுக்கும் நாளைக் காலையிலை பிரேதம் எடுக்கிற அலுவலைப் பார். பெண் சனியர் சங்கத்தாலை ரூபா ஐயாயிரம் செத்தவீட்டுச் செலவுக்குக் கொடுக்கிறவ. இந்தா இதிலை ஐயாயிரம் இருக்கு நீ ஒண்டுக்கும் யோசிக்காமல் அலுவலை பார்." நல்லையாவிடம் சதாசிவத்தார் வந்து சொன்னார்.
நல்லையரும் கொடுத்த காசை வாங்கிக் கொண்டார்.
முரளி என்ற இளைஞன் அந்த ஊர் வாசிகசாலை, கிராம முன்னேற்றச் சங்கத் தலைவர். துடிப்புள்ள வாலிபன். நல்ல பிரயாசி. தோட்டம் செய்து கொண்டு தாயாருடன் இருக்கின்றான். சதாசிவம் பெண்சாதியின் அண்ணன்மகன். தகப்பன் சிறுவயதிலேயே செத்துப் போனார்.
சதாசிவம் பண ஆசை பிடித்த மனிதர். முரளி குடும்பத்தை ஏன் எண்டுகூடத் திரும்பிப் பார்ப்பதில்லை.
தாய் மிகவும் கஷ்டப்பட்டு கடையப்பம் சுட்டு வித்துத்தான் மகனை வளர்த்துப் படிப்பிச்சார். தாயின் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் ஏ.எல்.உடன் தனது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டான்.
அந்தக் கிராமத்தில் நல்ல கெட்டது நடந்தாலும் தன் நண்பர்களுடன் முன்னுக்கு நின்று எல்லாக் காரியங்களையும் செய்வான். கிராமத்திலுள்ள எல்லோராலும் விரும்பப்பட்ட ஒருவன்.
படிக்கும் காலத்திலிருந்து கந்தையருடைய மகள் வனிதாவைக் காதலித்து வந்தான். ஊர் உலகத்திற்குத் தெரியவந்த விடயம். கந்தையர் குடும்பமும் அதற்குத்தடையாக இருக்கவில்லை. முரளியின் தாய்க்கும் வனிதாவைப் பிடித்திருந்தது. முரளிக்கும் வனிதாவுக்கும் தான் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 113|

Page 58
கந்தையருக்கு ஒரேயொரு பெண்பிள்ளை. இருக்கிற சொத்து எல்லாவற்றையும் அபகரிக்க வேண்டுமென்று சதாசிவத்தாருக்கு உள்ளார ஆசை. அதனால் முரளி - வனிதா கூட்டை உடைக்கவேண்டுமென்று ஆசைப்பட்டு கந்தையருக்குக் குழையடிச்சு அவரைத் தன்பக்கம் சேர்த்துக் கொண்டு வனிதாவிடம் போனார்.
"தோட்டக்காரனோடையே நீ மாரடிக்கப் போறாய் என்ரை மகனைக் கட்டினியெண்டால் நீ இராசாத்தி மாதிரி ஜேர்மனியில் இருக்கலாம்." அவளுக்கும் வெளிநாட்டு மோகத்தைக் காட்டி கல்யாணத்திற்குச் சம்மதம் வாங்கிவிட்டார் சதாசிவம்.
வனிதாவும் வெளிநாடு போற ஆசையில் மயங்கினாள். சதாசிவத்தாரின் மகனுக்கு கழுத்தை நீட்டி விட்டாள். கந்தையரின் பணத்தில் கல்யாணம் வெகு ஆடம்பரமாக நடந்தேறியது.
வெளிநாட்டில் வேலையை இழந்து ஜேர்மனியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவன் சமாசிவத்தின் மகன்.
முரளிக்கு மனதார பெரு ஏமாற்றம். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அன்றாடக் கடமைகளில் மூழ்கிவிட்டான். அவன் தாய்க்கு வனிதாவின் செயல் பெரும் வேதனையைக் கொடுத்தது என்பது உண்மை.
முரளியின் அப்பா உயிருடன் இருக்கும்போதும், இறந்த பிற்பாடும் சிவசம்பு அவன் குடும்பத்திற்கு நல்ல உதவிகள் செய்து வந்துள்ளார். அவருக்கு நன்றியா இருக்க வேண்டுமென்று முரளியின் அம்மா மகனுக்குச் சொல்லி வந்துள்ளார்.
சதாசிவத்தாரும் கந்தையரும் சேர்ந்து முரளியின் திருமணத்தைக் குழப்பியது சிவசம்புவுக்குச் சரியான ஆத்திரம். முரளியைக் கூப்பிட்டு ஆறுதல் சொல்லித் தேற்றுவார். முரளியும் அவர்மேல் நல்ல மரியாதை வைத்திருந்தான்.
சிவசம்புதன் வீட்டில் இருக்கின்ற நல்லையாவின் மூத்தமகளை அதுவும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பப்பிள்ளையை கட்டு என்று கூற முரளியும் முழுச் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டான்.
>k k sk
"மாமா பென்சனியர் சங்கத்தலைவர் சதாசிவத்தார் எவ்வளவு காசு கொண்டு வந்து தந்தவர்." ரூபா ஐயாயிரம் என்று சொன்னார்.
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 114|

'அறுவான் ஐயாயிரத்தை ஏப்பம் விட்டிட்டான். பென்சனியர் சங்கத்தாலை செத்த வீட்டுச் செலவுக்காக வழமையாகப் பத்தாயிரம்தான் கொடுப்பார்கள். செத்தவீடு முடிய அவரை நான் சந்திச்சு கட்டாயம் கேட்பன்."
"மாமா கிராம அபிவிருத்திச் சங்கத்தாலையும் செத்தவீட்டுச் செலவுக்கு மூவாயிரம் தருவார்கள். சங்கப் பொருளாளர் பரமசாமி கொண்டு வந்து தருவார். என்னட்டையும் நாலாயிரம் ரூபா இருக்கு. இந்தாங்கோ எல்லாத்தையும் வைச்சு செத்த வீட்டைச் சிறப்பாக நடத்துங்கோ.
“சிவசம்புவின்ரை பிள்ளையஸ் ஒண்டும் தகப்பன்ரை இறுதிக் கிரியைகளுக்கும் வரவில்லையாம். வந்தான் வரத்தான் தான் செத்தவீடு நடத்துகின்றான். கொள்ளி வைக்க யார் சொந்தக்காரர் இருக்கினம்"
செத்த வீட்டுக்கு வந்தவர்கள் ஆளுக்காள் கதைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
"கிரித்தியம் செய்ய ஒரு ஆயத்தத்தையும் காணேல்லை. அப்ப உது அனாதைப் பிணமாகத்தான் போகப் போகுது போலை” இன்னுமொருவர் பேசிக்கொள்கின்றார்.
சற்று நேரத்தில் வாசிகசாலைப் பெடியங்கள் பந்தல்போட்டு வாழை தோரணங்கள் கட்டிக்கொண்டார்கள். கிரித்தியம் செய்ய மடத்தடி ஐயரும் அவர் உதவியாளரும் வந்து கும்பம் வைத்து தங்கள் அலுவல்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
தேவாரம், சுண்ணப்பாட்டுப் படிக்கும் பாட்டுக்காரரும் வந்து நமச்சிவாயப் பதிகம் படித்து முடித்து விட்டார்கள். "யார் கொள்ளி வைக்கப் போகிறார்கள்"
சனத்திற்கு ஒரே அங்கலாய்ப்பு. கொள்ளி வைக்க யார் வருவார்கள் என்று செத்த வீட்டுக்கு வந்தவர்கள் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வெள்ளை வேட்டி உடுத்து அரையில் சால்வையைக் கட்டிக் கொண்டு ஈரத்தேகத்துடன் ஐயர் முன்வந்து அமருகின்றான் முரளி
grari 2oo5
★
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் (1151

Page 59
சுரங்களும் சுருதிகளும்
ர்க்கண்டரின் தங்கைச்சியின் மகள் பெரிசாகிவிட்டாள் என்ற செய்தி சொல்ல அவற்றை தங்கைச்சியும் மச்சானும் வீட்டுக்கு வந்து சொன்னார்கள்.
"மச் சான், விடியத் தணிணிவாக்க வேணும் தாய்மாமன் உனக்குத்தான் அந்தக் உரிமை இருக்கு அவவையும் கூட்டிக் கொண்டு பொழுதோடை வந்துவிடுங்கோ"
"விடிய ஆறுமணிக்கு வந்தால் போதுமே?” அப்பா கேட்டார்.
"நாங்கள் தண்ணிவாக்கிறத்துக்கு ஒருவருக்கும் சொல்லேல்லை. நீங்கள் வசதிபோல வாங்கோ வந்ததும் வாப்பம்."
“சரி வசதிபோலை வாறம் மச்சான்.”
“இராகு காலம் 7.50க்குத் தொடங்குது அதற்குமுன் செய்ய வேணும். அப்ப நாங்கள்
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 116|
 

வாறம்.” மாமா சொல்லிப்போட்டு போய்விட்டார்.
சின்னமாமி ஒன்றுமே பேசவில்லை. சின்னமாமா கதைக்கேக்கை ஏன் குறுக்கிடுவான் என்று பேசாமல் இருந்து விட்டார்.
"பாத்தியளே அவவின்ரை கெப்பரை. அதுதான் உங்கட சின்னத்தங்கைச்சியைத்தான் சொல்லுறன். அந்த ஆள் உங்கட மச்சான் சிவலிங்கம் எவ்வள ன்மையாய் ககைக்கிmார் பார்க்கியளே."
வு த தககற த என்று அம்மா சொல்வது கேட்கிறது.
“ஒரு விடயத்தை இரண்டுபேரும் ஏன் சொல்வான் எண்டு இருந்துவிட்டாளாக்கும்” என்றார் அப்பா,
"வீடு தேடி வந்தவள் ஒரு வார்த்தை எண்டாலும் கதைச்சிருக்" கலாம். பேசாமல் போய்விட்டாள்."
அம்மா கதையை வளர்த்துக்கொண்டு போவதை விரும்பாத அப்பா "சரி பேசாமல் இரும் " என்றார்.
"நீங்கள் உங்கள் தங்கைச்சி செய்கிறதெல்லாம் சரி. நாங்கள் ஏதோ சும்மா கத்துகிறம் எண்டு நினைக்கிறியள் போலை” "இப்ப என்னப்பா என்னைச் செய்யச் சொல்லுகிறீர்.” “நாளைக்கு தண்ணிவாக்கப் போகக் கூடாது. நானும் வரமாட்டன்."
“உமக்கென்ன விசரே! தாய்மாமன் எண்ட முறையிலை அவை முறையாக வந்து சொல்லிவிட்டுப் போயினம். போகாட்டி இனசனம் என்ன நினைப்பார்கள்"
அப்பா கொஞ்சம் கடுமையாகச் சொல்லிவிட்டார். அம்மாவுக்குத் தெரியும் அப்பா சின்னத்தங்கைச்சி குடும்பத்தோடை நல்ல ஒட்டு. அதனால் அவரிடம் கதைப்பதில் எதுவித பயனுமில்லை என்று நினைத்தாவோ தெரியாது. ஒன்றும் மேற்கொண்டு கதைக்காமல் வீட்டுக்குள் போய்விட்டார்.
நான் வீட்டுக்கு ஓடிவருவதைக் கண்டார் அப்பா. "ஏனடா தம்பி ஓடிவாறாய்” "கனடாச் சித்தப்பாவும் சித்தியும் பிள்ளைகளும் சின்னமாமி
வீட்டை போகினம். நான் றோட்டிலை பெடியங்களோடை
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 117|

Page 60
நிக்கேக்கை கண்டனான். அவை ஒருதரும் என்னை காணேல்லை”
"அப்படியோ சங்கதி. பொறிக்கிப்பயல். சபை சந்திக்கு வந்திட்டான். அவன் நிக்கிற இடத்திற்கு நான் போறதே? என்னையும் அவனைப் போலை கேடுகெட்டவன் எண்டு நினைச்சிட்டான் போலை" அப்பா கத்தினார்.
"ஏன் அப்பா சித்தப்பா என்ன துரோகம் செய்தவர் எண்டு அவரை பேசுகிறியள்”
"பேசுகிறதோ! அவன்ரை கண்ணிலை கூட முழிக்கமாட்டன். நம்பிக்கைத் துரோகி”
"விசயத்தை சொன்னிங்களெண்டால் நான் போய் கதைக்கிறன்” "நீ கூட அவனிட்டை போகக்கூடாது"
"ஏன் அப்பா சித்தாப்பாவோடை இவ்வளவு கோபமாக இருக்கிறியள்?”
"உனக்குத் தெரியுமே அவன் படிக்கிற காலத்திலை நான்தான் ஐஞ்சை பத்தைக் குடுத்து உதவிசெய்தனான். அவன்படிச்சு வந்து பாங்கிலை வேலை செய்யேக்க ஒரு கொளுத்த சீதணத்தோடை கல்யாணம் பேசி இனாமாக ஐஞ்சுலட்சம் தாறமெண்டு பொம்" பிளை வீட்டுக்காறர் சொல்லிச்சினம். நானும் சந்தோஷப்பட்டன். அந்த இனாம் காசை வாங்கி உன்னர அக்கா ரதியின்ரை பெயரிலை போட்டு வைக்கலாம் எண்டு நம்பி இருந்தன். உவன் எல்லாருக்கும் தண்ணி காட்டிப்போட்டு, பாங்கிலை வேலை செய்கிற, ஒண்டுக்கும் வழியில்லாத, குடும்பத்திலை சீதணம் ஒண்டும் வாங்காமல் ஒருதருக்கும் சொல்லாமல் கல்யாணம் கட்டிப்போட்டான். அண்டைக்கே சொல்லிப்போட்டன் எங்கட வாசல்படி ஏறக்கூடாது எண்டு. அவனும் இஞ்சை வரமாட்டான்."
"அப்பா நீங்கள் மச்சாள் பெட்டேன்ரை தண்ணிவாக்க போக மாட்டியளே? வீட்டை தேடி வந்து சொல்லிவிட்டுப் போன சின்னமாவும், சின்னமாமியும் கோவிக்கமாட்டினமே?”
"இஞ்ச வா சந்திரன் உன்னர சித்தப்பனும் பெட்டைக்கு தாய் மாமன் தானே! குடும்பத்தோடை வந்திருக்கிறான். அவன் தண்ணி வாக்கட்டுக்கும். நான் செத்தாலும் அவன் இருக்கிற இடத்துக்குப் போகமாட்டான்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 118

அப்பாவுக்கு ஏதோ அடிமனத்திலை பெரியதாக்கம் இருக்கு. இவரோடை இப்ப கதைக்கிறதிலை எதுவித பயனும் இல்லை என்று நினைச் சுக் கொண்டு அம்மாவிடம் போய் அவவின் நிலைப்பாட்டை அறியமுனைந்தன்.
"அம்மா சின்னமாமியின் பெட்டையின்ரை தண்ணிவார்ப்புக்கு சித்தப்பா குடும்பம் அங்க வந்ததாலை அப்பா போகமாட்டாராம் நீங்களெண்டாலும் போகத்தானே வேணும்."
"அப்பா போனாலென்ன போகாட்டாலென்ன சிவலிங்கத்துக்காகவாவது நான் போகத்தான் எண்ணியிருந்தன். ஆனா?”
“என்ன ஆனா? அம்மா"
"அண்டைக்கு தண்ணிவாக்கிறத்திற்கு வரச்சொல்லி அழைக்க வந்த உன்ரை சின்னமாமி மச்சாள் வாருங்கோ எண்டு தலைநிமிந்து ஒரு வார்த்தையெண் டாலும் கதைக்கேல்ல. சிவலிங்கத்தை கல்யாணம் கட்டிப்போட்டன் எண்ட கெறுக்கு அவளுக்கு. அவளின்ரை வீட்டை நான் போகமாட்டன்”
"சின்னமாமி சிவலிங்கத்தாரை கல்யாணம் கட்டினதாலை உங்களுக்கு என்ன வருத்தம் அம்மா”
"வருத்தமோ! அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறாய்? நானும் உன்ரை சின்னமாமியும் ஒன்றாய்த்தான் படிச்சனாங்கள். படிக்கிற காலத்திலை சிவலிங்கம் இளம்பெடியன். பள்ளிக்குடத்துக்கு போற றோட்டிலைதான் அவற்றை புடவைக்கடை இருந்துது. நாங்கள் போகேக்கை வரேக்கை எங்களைப் பாத்து சிரிப்பார். அவர் எனக்கு கிட்டிய சொந்தக்காறன். என்ர ஐயா எனக்குச் சிவலிங்கத்தை கல்யாணம் பேசி போயிருக்கின்றார். அவர் மாட்டன் எண்டு சொல்லிப்போட்டு உண்ர சின்னமாமியை கல்யாணம் கட்டிப்போட்டார். பேந்துதான் தெரிஞ்சுது அவை இரண்டு பேரும் காதலிச்சவை எண்டு. என்ர நல்ல சினேகிதியாக இருந்தவள் எனக்கு கல்யாணம் பேசேக்கை விட்டுக் குடுத்திருக்கலாம். அவளுக்கு சிநேகிதியிலும் பார்க்க காதல் பெரிசாய் போச்சு. அண்டைக்கே அவளுக்கும் எனக்கும் இருந்த உறவு முறிஞ்சு போச்சு.”
அம்மாவின் மனத்தாங்கலை புரிந்துகொண்டபோதிலும் ஒண்டும் தெரியாதவனாய் "அப்ப நீங்களும் போகமாட்டியள்”
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1191

Page 61
"நான் அவள் வீட்டை போய் நக்குவன் எண்டு நினைச்சிட்டாள் போல”
"அப்ப அக்காவின்ரை கல்யாணம் எப்பிடி நடக்கப்போகுது?"
“அவை இல்லாட்டி கொக்காவுக்கு என்ன கல்யாணம் இல்லையோ"
"தயாளன் மச்சான் அக்காவைத்தான் கட்டுவாராம். அக்காவும் நம்பி இருக்கின்றா. நீங்களும் அவையஞம் கீரியும் பாம்புமாய் இருந்தால் அக்காவின்ரை கல்யாணம்? அக்கா பாவம்"
"நீங்களும் வராவிட்டால் இருக்கோ நானும் அக்காவுமெண்டாலும் போட்டுவாறம்" -
"அங்க போகக் குடாது. காலடிச்சு முறிச்சுப்போடுவன்"
அம்மா கத்துகிற சத்தம் கேட்டு அப்பா உள்ளுக்கை வந்துதிட்டார். நான் அக்காவிட்டை போய் சின்னமாமி வீட்டை போறவிசயம் பற்றியும் அப்பா அம்மாவின்ரை இழுபறி பற்றியும் சொன்னன்.
"தயாளன் அத்தான் கோவிப்பார். தம்பி நானும் நீயுமெண்டாலும் கட்டாயம் போவம்"
வீட்டுக்குள்ளை அப்பா அம்மாவும் சண்டைபிடிக்கிற சத்தம் கேட்டுது. கொஞ்ச நேரத்திலை அமைதியாய்ப் போச்சினை. அப்பா என்னையும் அக்காவையும் கூப்பிட்டார். நாங்கள் இரண்டு பேரும் அப்பாவுக்குக் கிட்டப்போனம்.
"அக்காவும் நீயும் விடிய சின்னமாமி வீட்டை போங்கோ. ஆனா சித்தப்பனோடை மட்டும் கதைக்கக் குடாது. இது என்ரை கண்டிப்பான கொண்டிசன். கதைச்சியள் எண்டு கேள்விப்பட்டன், இரண்டு பேரையும் வீட்டைவிட்டுக் கலைச்சுப் போடுவன்.”
அப்பா சொல்லிப்போட்டுப்போட்டார். அம்மா எங்கள் இரண்டு பேருக்கும் கிட்டவந்தா.
"ரதி அங்கை போறது சரி. சின்னமாமியோடை கதைச்சுப் போடாதை. அவவின்ரை கெப்பரை அடக்கவேணும்."
பெண்பிள்ளைகள் பெரிசானதும் முதலில் கிட்டிய இனத்தவரை, குறிப்பாகத் தாய்மாமனை கூப்பிட்டு தண்ணிவாக்கிற சடங்கு
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 120|

நடைபெறும். வசதிபோல் சாமத்தியச் சடங்கை பணச்சடங்காக ஊரெல்லாம் சொல்லி சிறப்பாக நடத்துவார்கள். அதுதான் அந்த ஊர் வழக்கம்.
இப்ப நானும் அக்காவும் சின்னமாமி வீட்டை தண்ணிவார்க்கிற சடங்குக்குப் போறதுக்கு வெறுங் கையோடு போகேலாது. இதைப் பற்றி வீட்டிலை கேட்டால் அங்கை போகவும் விடமாட்டினம். என்ன செய்யிறது எண்டு யோசித்தம்.
"தம்பி பக்கத்துவீட்டு பறுவதம் அக்கா வீட்டை போய் ஊர் கோழி முட்டை இருந்தால் ஒரு பத்துப் பன்னிரண்டை வாங்கிக் கொண்டு போய் கந்தையற்றை கடையிலை வைச்சுவிட்டு வா. போகேக்கை எடுத்துகொண்டு போவம்"
அக்கா சொன்னா.
அக்கா தந்த காசை வாங்கிக் கொண்டு போய் பறுவதம் அக்காட்டை, வீட்டிலை சொல்லாதேங்கோ எண்டு சொல்லி பன்னிரண்டு முட்டை வாங்கிக் கொண்டு போய் கந்தையர் கடையில் வைச்சிட்டுவர அக்காவும் குளிச்சிட்டுவந்து சாறி உடுத்துக் கொண்டு இருக்கிறா. நானும் குளிச்சிட்டு உடுப்பு மாத்திக் கொண்டு, அப்பா அம்மாவிடம் சொல்லிப் போட்டுப்போக போனதும் அம்மா கல்அட்டியல், பென்ரன் சங்கிலி, முத்துமாலை, காப்புகள் எண்டு தன்னிடதமிருந்த நகைகள் எல்லாத்தையும் அக்காவுக்குப் போட்டுவிட்டார். நாங்கள் என்ன கல்யாணவீட்டுக்கே போறம் ஏன் இந்த எடுப்புகள் எண்டு அக்கா கேட்டா.
"உன்ர சின்னமாமியின்ரை கெப்பருக்கு நாங்கள் என்ன ஒண்டுமில்லாதவை எண்டு நினைச்சுப் போட்டாளோ? அவள் உன்னைப் பார்த்து பொறாமைப்படவேணும். அதுதான் எல்லா நகைகளையும் போட்டுவிட்டனான். நீங்கள் இரண்டுபேரும் அவளோடை மட்டும் கதைச்சுப் போடக்குடாது என்ன தெரியும் தானே?”
அம்மா கூறிய காரணத்தைக் கேட்க எனக்கு சிரிப்பு வந்திட்டது. "ஓம் அம்மா நாங்கள் என்ன உங்கள் பிள்ளைகளல்லவா? அம்மாவுக்கு ஐஸ் வைச்சிட்டு அப்பாவிட்டை போறம்.
“என்னடி பிள்ளை கல்யாணவீட்டுக்குப் போறமாதிரி நகையெல்லாம் சாத்திக் கொண்டு போறாய்.”
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 121|

Page 62
"அம்மாதான் போட்டுவிட்டவ"
sp
"அவ இந்த நேரத்திலை தன்ரை பவுசைக் காட்டுறா போலை அப்பா சொல்லுறார்.
"உதுகளைப் பாக்க உங்கடை சித்தப்பன் அண்ணனிட்டை எக்கச்சக்கமாக இருக்குப்போலை எண்டு நினைக்கப்போறான். எங்கடை கஷ்டத்தை அவன் விளங்கிக் கொள்ளமாட்டானே?
"ஏன் அப்பா சித்தப்பாட்டை ஏதாவது எதிர்பார்த்து இருக்கிறீங்களோ?" ஒண்டும் தெரியாத மாதிரி கேட்டேவிட்டன்.
"அவன் கஞ்சப்பயலின்ரை செப்புச் சல்லிக்குக்கூட நான் ஆசைப்படமாட்டனர். சரி நீங்கள் போய் மாமி சாப்பிடச் சொன்னால் இருந்து சாப்பிட்டிட்டு வாங்கோ. ஆனால் சித்தப்பாவோடை கதைகாரியம் வைச்சுக்கொள்ளாதேங்கோ. ஏன் எண்டால் சித்தப்பா கட்டியிருக்கிற பொம்பிளை வீட்டிலை நாங்கள் செம்பு கூட எடுக்கமாட்டம். அவை கொஞ்சம் குறைஞ்ச பகுதி"
எல்லாரும் மணிசர்கள்தானே. அப்பா, அம்மாவின் உபதேசங்களைக் கேட்டுக் கேட்டு மனம் சலிச்சுப்போச்சு. விட்டால் காணும் எண்டு நினைச்சுக் கொண்டு நானும் அக்காவும் வீட்டைவிட்டுப் புறப்பட்டம். கந்தையற்றை கடைக்குப் போய் காலையிலை அங்கு வைச்ச கோழி முட்டைகளையும், அவற்றை கடையிலிருந்த சீல்வைச்ச நல்லெண்ணை போத்தில் ஒண்டு வாங்கிக் கொண்டு ஒரு ஒட்டோவில் சின்னமாமியின் வீட்டை போனம்.
米 ※米
ஒட்டோ சத்தம் கேட்டதும் மாமி வாசலுக்கு ஓடிவந்து விட்டா.
"வாருங்கோ, வாருங்கோ உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தனான். நீங்கள் வந்தது எனக்கு நல்ல சந்தோஷம்” எண்டு இன்முகம் காட்டி வரவேற்றார்.
ஏன் அண்ணனும் மச்சாளும் வரேல்லையே பிள்ளை” எண்டு மாமி அக்காவை கேட்டார்
“அவைக்குக் கொஞ்சம் சுகமில்லை” “என்ன சுகமில்லைத் தம்பி?” மாமி கேட்டா” நான் சொன்ன அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 122

அக்கா ஒருமாதிரி சமாளிச்சு “இரண்டு பேருக்கும் தடிமன் காய்ச்சல் அதாலைதான் இண்டைக்கு வரேல்லை. சாமத்தியச் சடங்கு வீட்டுக்கு கட்டாயம் வருவினம்" என்று சொல்லி முடித்தார்.
“என்ன ரதி எப்படி இருக்கின்றாய் என்ன மெலிஞ்சு போனாய். தயாளனை கல்யாணம் கட்ட எல்லாம் சரியாய் வந்துவிடும்" சித்தி எங்களிடம் வந்து சொல்லிச் சிரித்தார்.
"சந்திரன் நீங்கள் என்ன செய்கிறீங்கள்” என்னைப் பார்த்துக் கேட்டா. "உங்கட சித்தப்பா சொல்லுவார் உங்களையும் கனடாவுக்கு எடுப்பிக்கலாம். உங்கடை அப்பா விடமாட்டாரம் என்று சொல்லி மனவருத்தப்படுவார்."
"நான் சித்தி ஒரு என்.ஜிஒவிலை உளவியல் ஆலோசகராகக் கடமை பார்க்கிறன்” என்று சொன்னேன்.
அவர்களின் அன்பான உபசரிப்பும், ஆறுதலான வார்த்தை" களும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தன.
நாங்கள் போகும்போது சின்னமாமாவும் சித்தப்பாவும் வீட்டில் இருக்கவில்லை. சின்னமாமா வந்ததும் அக்காவைக் கண்டுவிட்டார்.
"என்ன மருமகள்" அன்புடன் விசாரித்தார்.
“மகள் உன்னைப் பார்க்கத்தான் கனடாவிலிருந்து இங்கு வந்தனாங்கள். வேணுமெண்டால் சித்தியைக் கேட்டுப்பார். அப்பா அம்மா எப்பிடி இருக்கினம்? நான் இங்கே இருக்கிறபடியால் கொப்பா வரமாட்டார் எண்டு தெரியும்." சித்தப்பா சொன்னார்.
தலைக்குத் தண்ணி வாத்து முடிந்து, எல்லோருக்கும் சாப்பாடு மாமியும், சித்தியும் பரிமாறினார்கள். "என்ன மருமகள் மேலை சரியான கரிசனை போல கிடக்கு" மாமியைப் பார்த்து சின்னமாமா கிண்டலடிக்க எல்லோரும் சிரித்தார்கள். அந்த நல்ல மனிதர்களுடன் சந்தோஷமாக இருந்து சாப்பிட்டம். சாப்பிட்டு முடிய சின்னமாமி ஒரு சோடி காப்பு கொண்டு வந்து அக்காவுக்கு போட்டுவிட்டார்.
சிறிது நேரம் பல கதைகளையும் கதைத்துக்கொண்டு இருந்துவிட்டு நாங்கள் போட்டுவாறம் எண்டு எல்லோரிடமும் சொல்லி விட்டுப் புறப்பட்டம்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 123

Page 63
சின்னமாமா, மாமி, சித்தப்பா, சித்தி எல்லோரும் வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்தார்கள்.
"நாண் பாங் மட்டும் போறன். உங்களையும் அதிலை றோட்டிலை இறக்கிவிடுகிறன்" சித்தப்பா சொன்னார்.
நாங்களும் காரில் ஏறிக்கொண்டு சென்றம்.
கார் பாங் வாசலில் நிறுத்தப்பட்டது. சித்தப்பா எங்களையும் கூட்டிக்கொண்டு போனார். அக்காவின்ரை பெயரிலை ஒரு கணக்கு ஆரம்பிக்க வேண்டுமென்று படிவங்களை வாங்கி தானே நிரப்பி அக்காவிடம் கையொப்பமும் வாங்கினார். தன்னுடைய சேமிப்புக் கணக்கில் இருந்த ஐந்து இலட்சத்து எண்பத்தையாயிரத்து இருநூறு ரூபாவையும் அக்காவின் கணக்குக்கு மாற்றினார். தன்னுடைய சேமிப்புக் கணக்கை குளோஸ் பண்ணிவிட்டார். ン
அக்காவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி.
சித்தப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டன.
சித்தப்பாவும் எனக்கு கடமை இருக்கு என்று சொல்லி அக்காவின் தலையைத் தடவிவிட்டார்.
பாங் அலுவல் முடிந்து காரில் ஏறினோம். கார் புறப்பட்டு சற்றுத்தூரத்திலுள்ள புடவைக்கடையில் போய் நின்றது.
"சித்திக்கு சாறி வாங்க வேண்டும். நல்ல செலக்சனாக வந்து, எடுத்துதா” என்று கூறி அக்காவைக் கூட்டிப் போனார். நானும் உடன் சென்றேன்.
காஞ்சிபுரம், பனாறிஸ், பெங்களுர், கஸ்மீர் என்று பலவகைப்பட்ட ஐந்து சாறிகள் எடுத்து வைக்கப்பட்டன. எனக்கும் ஜீன்ஸ் இரண்டு சேட் இரண்டு எடுத்தாச் சு. மொத்தமாக இருபத்தொராயிரம் ரூபா பில் தந்து சித்தப்பா காசு கொடுத்துவிட்டு பொருட்களுடன் காருக்குள் ஏறினம்.
“பாங்கில் காசுபோட்டவிடயம் வீட்டிலை ஒருவருக்கும் தெரிய வேண்டாம். சாறி உடுப்புகள் உன் ரை தயாளன் அத்தான் இலண்டனில் இருந்து அனுப்பியிருந்தவர், சிவலிங்கமாமா தந்தவர் எண்டு சொன்னால் ஒரு பிரச்சினையும் இருக்காது" சித்தப்பா சொன்னார்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் ! 124

வீடு வந்து சேர்ந்தம்.
"அவன் சித்தப்பா ஏதாவது கதைச்சவனே? அப்பா கேட்டார்
"இல்லை அப்பா" அக்கா சொன்னா.
"அதுதானே பாத்தன் பொறுக்கிப்பயல்" சித்தப்பாவை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தார்.
உடுப்புகளையும், அக்காவின் கையில் போட்டிருந்த புதுக் காப்புகளையும் பார்த்துவிட்டு "உதுகளை யார் தந்தது" என்று அம்மாகேட்டார்.
"தயாளன் அத்தான் அனுப்பினதெண்டு சின்னமாமா தந்தவர்" "அவ கெப்பர் காட்டுகிறவ ஒண்டும் கதைக்கேல்லையே?”
"சின்னமாமி குசிணியை விட்டு வெளியிலை வரேல்லை”
அக்கா சொன்னா.
"அவள் சரியான மோசக்காறி” என்றார்.
அப்பா அம்மா இருவர் மனத்திலும் இருக்கின்ற மனத்தாக்கங்கல்கள் எப்படியான வார்த்தைகளால் வெளிக்காட்டப்படுகின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சித்தப்பாவின் காதல் திருமணம் அப்பாவையும், மாமியின் காதல் திருமணம் அம்மா" வையும் வெவ்வேறு கோணங்களில் மன அழுத்தங்களை ஏற்படுத்தி யிருந்தன.
来来米
சின்னமாமியின் மகளின் சாமத்தியச்சடங்கு மிகவும் பெரிசாகச் செய்வதற்கு ஏற்பாடுகள் எல்லாம் தடல்புடலாக நடக்கின்றது. ஒரேயொரு மகள் ஊரெல்லாம் சொல் வித்தான் செய்யப் போயினமாம் என்று சின்னமாமி சொன்னவர். பெரியமாமி, மாமா பிள்ளைகளும் கொழும்பிலிருந்து வருவினமாம். சின்னமாமாவின் அக்கா குடும்பம் வவுனியாவிலிருந்து நேற்றே வந்துவிட்டினம். சின்னமாமாவின் தம்பி குடும்பமும் வட்டுக்கோட்டையிலிருந்து வந்து விடுவினமாம். நான் அங்கை போய்விட்டுத்தான் வந்தனான் என்று வீட்டின் முன்பக்கத்தில் இருந்த அக்காவுக்கும், அப்பாவுக்கும் சொல்லிக்கொண்டிருந்தன்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 125

Page 64
அம்மா குசிணிக்கிள் இருந்து நாங்கள் கதைக்கும் இடத்துக்கு வந்தா.
"உன்னை யாரடா அங்கை போகச் சொன்னது" என்று கேட்டார்.
"என்னரை தங்கச்சி வீடுதானே. அவன் போனதாலை உனக்கு என்ன செய்யுது?” அப்பா அம்மாவைப் பார்த்துக் கேட்டார்.
"நீங்கள் குடுக்கிற சப்போட்டிலைதான் பிள்ளையஸ் என்னை மதிக்காமல் நடக்குதுகள்."
“எடியேய் வாயைப்பொத்து."
அவள் என்ரை கூடப்பிறந்த தங்கைச்சி. என்ரை பிள்ளையஸ் அங்கை போனால் உனக்கேன் உறுத்துது?.
"அவ பெரிய மாய் மாலக் காறி. சிவலிங்கத்தை மயக்கி கல்யாணம் கட்டினவளல்லே. அந்தப் புத்தி எங்கை போகப் போகுது?. எங்கட பிள்ளைகளையும் மயக்கிப்போடுவாள்."
அம்மாவும் விட்ட பாடில்லை.
இவை இரண்டு பேருடைய பேச்சுவார்த்தைகளைச் சகிக்காமல் அக்கா சொன்னா "இரண்டு பேரும் கொஞ்சம் சண்டை பிடிக்கிறதை தயதுசெய்து நிப்பாட்டுங்கோ. அக்கம் பக்கதிலை இருக்" கிறவை என்ன நினைப்பினம்? இந்த வீட்டிலை நித்தச் சண்டையெண்டெல்லோ சொல்லப்போயினம். உங்களாலை எங்களுக்கும் அவமானம்." அக்கா சொன்னா.
“பொத்தடி வாயை."
அம்மா கத்துகிறார்.
கேற் கதவு திறக்கும் சத்தம் கேட்டு எல்லோரும் வாசல் பக்கம் பார்த்தோம்.
சின்னமாமா, சின்னமாமி, பெரியமாமா, பெரியமாமி எல்லோரும் வீட்டுக்குள் வருகிறார்கள்.
அப்பாவும் அக்காவும் அவர்களை வரவேற்று முன் கோலிலுள்ள கதிரைகளில் அமர வைக்கிறார்கள்.
பெரியமாமியும், சின்னமாமியும் இருக்காமல் நிற்கின்றார்கள்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1126

அப்பா இருந்ததும் தான் அவர்களும் அமர்ந்தார்கள். தமையன் மேல் ஒரு பக்தியும் மரியாதையும் அவர்கள் வைத்திருந்ததை அவதானித்துக் கொண்டேன்.
அம்மா இவர்களைக் கண்டதும் பின்பக்கத்தாலை அடுத்த வீட்டுக்குப் போவிட்டா. அப்பா அவர்களுடன் கதைத்துக் கொண்டிருக்க அக்கா வந்தவைக்கு பிஸ்கட் கொண்டுவந்து கொடுத்துவிட்டு தேனீர் போடப் போய்விட்டா.
“எங்கை மச்சாளைக் காணவில்லை”
பெரியமாமி கேட்டார்.
"உங்கைதான் இருந்தவ. தம்பி அம்மாவைப்பார்” அப்பா சொல்லுகிறார். நானும் வீடு முழுக்கத் தேடிப் பார்த்தேன் அம்மாவைக் காணவில்லை.
அக்கா தேத்தணி னி கொண்டுவந்து கொடுக் கேக்கை அவர்களுக்குச் சொல்லுவது எனக்குக் கேட்கிறது.
"அம்மா உங்கை ஒரு இடத்தை சுகமில்லாத ஒரு ஆளைப் பார்க்கப் போய்விட்டா."
அக்கா பொய் சொல்லி சமாளித்துப் போட்டா. "என்ன பிள்ளை ரதி, தயாளன் வாறமாதம்வாறானாம். சட்டுப்புட்டெண்டு கல்யாணத்தை வைச்சுப் போடுங்கோ எண்டு சின்னமாமாவிட்டையும் சின்னமாமிட்டையும் சொல்லிப்போட்டன்”
அக்காவின் முகம் பூரிப்படைந்திருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது.
"இப்ப எங்களோடை நீயும் தம்பியும் வந்துவிடுங்கோ. அப்பாவும் அம்மாவும் நாளைக்கு வரட்டுக்கும்” சின்னமாமி சொன்னார். அக்கா அப்பாவிடம் கேட்க அப்பாவும் போங்கோ என்று சொல்லிப் போட்டார். அம்மா வந்தால் விடமாட்டா என்று எங்க" ளுக்கு தெரியும். அக்கா அப்பாவிடம் சொன்னா "சாறி உடுப்புகள் எல்லாம் எடுத்தாச்சு. நகை எடுக்க அம்மாதான் வரவேணும்."
"பிள்ளை உண்ரை கொம்மாவின் ரை ஒண்டும் உனக்கு வேண்டாம். நீ உடுத்த உடுப்போடை வந்தால் காணும்." சின்னமாமி அக்காவிடம் சொல்லி அவவின் கையைப் பிடித்து இழுத்துக் |சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் |127|

Page 65
கொண்டு போனா. நானும் பின்னால் போய் அவர்கள் வந்த காரில்
ஏறி சின்னமாமி வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டோம்.
அடுத்த நாள் சாமத்தியச்சடங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தூர இடங்களிலிருந்தும் எல்லாச் சொந்தக்காரரும் வந்துவிட்டார்கள். எங்கள் அம்மா அப்பா இரண்டு பேரும் வரவேயில்லை.
※米米
தயாளன் அத்தான் இலண்டனிலிருந்து வந்திட்டார். அடுத்தநாள் அக்காவைப் பார்க்க வந்து வீட்டிலுள்ளவர்களுடன் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார். அம்மா அவருடன் கதைக்கவே இல்லை. அப்பா அன்பாகக் கதைத்தார்.இருந்து கதைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
“பொம்பிளைப் பிள்ளை பெத்த நாங்கள் முறையாகப்போய் மாப்பிள்ளை கேட்க வேணும். இண்டைக்கு நல்ல நாள் போய்விட்டு வருவம் வெளிக்கிடும்." அப்பா அம்மாவைப் பாத்துச் சொன்னார்.
"அவள் போக்கணம் கெட்டவளிட்டை நான் வீடுதேடிப்போய் மாப்பிள்ளை கேட்கிறதா? அவள் கல்யாணம் கட்டாமல் வீட்டோடை கிடக்கட்டும் நான் வரமாட்டன்."
“இந்த ஜென்மத்திலை நீதிருந்தவேமாட்டாய். நான் கண்ணை மூடுகிறத்திற்கு இடையிலை பிள்ளையின்ரை நல்ல காரியத்தைக் கூட பார்க்கவிடமாட்டாய்."
அப்பா மிகுந்த வேதனையுடன் கூறினார்.
அக்கா அழத்தொடங்கிவிட்டா. அவவைப் பார்க்க எனக்கும் மனவேதனை.
அம்மாவின் நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன?
மனப்பாதிப்பு அடிமனத்தில் இருப்பதால் அந்த மனஅழுத்தம் இவவை இப்படி நடந்துகொள்ள வைக்கின்றதா?
அப்படி என்ன பாதிப்பு.
அம்மாவை அணுகி. "அம்மா நீங்கள் எடுத்ததற்கெல்லாம் கோபப்படுகின்றீர்களே ஏன்?
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 128|

எங்களைக்கூட ஒருநாளாவது அன்புடன் நடத்தவில்லையே ஏன்?
அப்பாவை உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அப்படிப் பிடிக்காதவரை ஏன் திருமணம் செய்தீர்கள்?. அக்காவையும் என்னையும் நீங்கள் தானே பெத்தீர்கள்.
நீங்கள் ஒரு இடமும் போகாமல் ஏன் இருட்டுக்குள் இருக்க விரும்புகின்றீர்கள்.
அம்மா சின்னமாமாவோ அல்லது சின்னமாமியோ உங்களுக்கு எத்தகைய துரோகத்தையும் செய்யவில்லை என்பதை நீங்கள் ஆழமாக உங்கள் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.
சின்னமாமா சிவலிங்கம் படிக்கிற காலத்திலேயிருந்து சின்னமாமியைக் காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்து எவருடைய தூண்டுதலும் இன்றிச் சுயமாகவே திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்கள் இருவரும் எவருடைய வாழ்க்கையையும் பாதிப்புக்கு உள்ளாக்" கவோ அல்லது வேதனைப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவில்லை. மனமொத்த காதல் வாழ்க்கை வாழுகின்றார்கள்.
சித்தப்பாவும் சித்தியும் ஒருவரை ஒருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டார்கள்.
அப்பா இவர்கள் விடயத்தில் எதிர்பார்த்து கைகூடவில்லை என்ற ஆதங்கத்தில் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி சித்தாப்பாமேல் கோவப்படுகிறார்.
சித்தப்பா கனடாவிலிருந்து அக்காவைப் பார்க்க வந்து அவவின் பாங்கணக்கில் ஐந்து இலட்சத்து எண்பத்தையாயிரம் வரை வைப்பிலிட்டுச் சென்றிருக்கின்றார். என்னையும் கனடாவுக்கு எடுப்பிப்பதாகச் சொல்லியுள்ளார்.
சின்னமாமி அக்காவுக்குத் தேவையான நகைகள் எல்லாம் புதிதாகச் செய்து வைத்திருக்கிறார். உடுத்த துணியோட வந்தாலும் மருமகளாக ஏற்றுக் கொள்ளுவேன் என்ற நல்ல மனத்துடன் இருக்கின்றார்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 1291

Page 66
தயாளன் மச் சானும் ரதி அக்காவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். அவர்களை எவராலும் பிரிக்கமுடியாது. அவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்வதற்கு சின்னமாமா, சின்னமாமி, சித்தப்பா, சித்தி எல்லோரும் எல்லாவகையான உதவிகளையும் செய்யக் காத்திருக்கின்றார்கள்.
பெரியமாமா, பெரியமாமி கூட தயாளன், ரதி திருமணம் எப்ப நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
அப்பாவும் அம்மாவும் செய்யக்கூடிய உதவி அத்தானையும் அக்காவையும் சிறப்பாக வாழவைப்பதுதான்.
நான்கூறியவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அம்மா அழத்தொடங்கிவிட்டார்.
என் வாழ்நாளில் அம்மா அழுததை அன்றுதான் கண்டேன்.
அக்காவின் திருமணம்?
2OO5
米米米
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 130|

சொந்தங்கள்
ங்கள் பருத்தித்துறைக்கு வந்து
இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. உடன்பிறப்புக்களின் எண்ணம் மனத்தை வந்துவாட்டும். என்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழிச்சு, கொஞ்சக் காசு சேர்த்துக்கொண்டு அகதிமுகாமுக்குப்போய் சொந்தங்களை கூட்டி வரலாம் என்றிருந்தம்.
கிறிஸ்மஸ் அன்று ஒருவரும் வேலைக்குப் போகவில்லை. நிக்கலஸ் அணி ணன் குடும்பமும் நாங்கள் நால்வரும் அந்தோனியர் கோயிலுக்கு சாமப் பூசைக்குப் போய் வந்து விடிய விடிய வெடிகொழுத்தினோம். நீண்ட நாட்களுக்குப் பின் வெடிகொழுத்திய சந்தோஷம்.
நிக்கலஸ் அண்ணாவும் அவர் மனைவி மேரி அக்காவும் அன்று நல்ல பலகாரங்கள் செய்துதந்தார்கள். மத்தியானம் ஆட்டிறைச்சி
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 131

Page 67
யுடன் சோறும் தந்து உடுக்க ஆளுக்கொரு சாரமும் வாங்கித் தந்திருந்தார்கள். அன்றைய நாள் எங்கள் எல்லோருக்கும் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது.
அன்றிரவு ஏனோ எனக்கு நித்திரை வரவில்லை. மனத்தில் ஏதோ ஒரு இனந்தெரியாத உறுத்தல். எனக்கு என்ன என்று தெரியவில்லை. பக்கத்துக் குடிசைப் பெரியவரும், அலோசியஸ்சும், அந்தோனியும் கடலுக்குப் போய்விட்டார்கள். நிக்கலஸ் அண்ணனும், வரதனும், நானும் மணல்தரையில் படுத்திருக்கின்றோம்.
அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை என்னால் எழுந்திருக்க" முடியவில்லை. நிக்கலஸ் அண்ணனும் வரதனும்தான் காலை கடலுக்குப் போனார்கள். காலையில் கடலாலை வந்தவர்கள் உடம்பு அலுப்பில் மணலில் படுத்துவிட்டார்கள்.
நான் எழுந்து சற்றுத் தூரத்தில் றோட்டுக்கரையோட இருக்கின்ற கடைக்குப் போய் இரண்டு பனடோலும் ஒரு இஞ்சிச்சோடாவும் வாங்கிக்கொண்டு கடைவாசலில் நிற்கின்றன்.
"கடல் வந்திட்டுது, கொந்தளிச்சு பெரிய அலைகள் வந்திட்டுது” மக்கள் கத்திக்கொண்டு ஓடிவருகின்றார்கள்.
“அங்காலை கடல்பக்கம் போகவேண்டாம்" என்று கூறி சனத்தைப் போகவிடாமல் பெடியங்கள் மறிக்கின்றார்கள்.
ஒரு மணித்தியாலத்திற்கு மேலாக ஒரே அமளிதுமளி, கத்தலும் கூச்சலும். சனங்கள் பதறியடித்து அங்கும் இங்கும் ஒடுகின்றார்கள்.
"எல்லாரையும் கடல் அள்ளிக் கொண்டு போய்விட்டுது."
பலர் கத்துவது கேட்கின்றது. நானும் இவர்களின் கூக்குரலால் பயந்தேவிட்டன்.
"ஐயோ என்ரை புருஷன், என்ரை புள்ளையஸ், என்ரை அப்பு ஆச்சி, என்ரை சகோதரங்கள், எங்கடை அப்பா, அம்மா, ஐயோ தம்பியவை."
தங்கள் உறவினர்களைப் பற்றிய கூக்குரல்கள் கேட்டவண்ணம் இருக்கின்றது. நானும் நாங்களிருந்த குடிசைப்பக்கம் ஒடுகின்றேன்.
அங்கிருந்த குடிசைகள் ஒன்றையுமே காணவில்லை.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1321

தோணிகள் கட்டுமரங்கள் தூக்கி வீசப்பட்டன. இறந்தவர்களின் உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. தென்னை மரங்கள் முறிந்தும் வேருடன் வீழ்ந்தும் இருக்கின்றன.
அல்லோல கல்லோல கரமான நிலையில் அக் கிராமம் காட்சிதந்தது.
பார்த்து வேதனைகளைச் சுமந்த வண்ணம் என் சொந்தங்கள் எங்கிருப்பார்களோ என்று அங்கலாய்த்து அசையாமல் நிற்கின்றேன்.
ஆழிப்பேரலைகளின் அகோரத் தாண்டவம் நெஞ்சை உலுக்கிவிட்டது.
கரையோரத்தில் கரை ஒதுங்கிக் கிடந்த பிரேதங்களை ஒவ்வொன்றாக அவதானித்தபடி கால் போன போக்கில் நடக்கின்றேன்.
காய்ச்சலின் உரம் கண்ணையும் மயக்கி நின்றது.
நிதானத்துடன் என் சொந்தங்களைத் தேடுகின்றேன்.
நிக்கலஸ் அண்ணா, வரதன், அலோசியஸ், அந்தோனி பக்கத்துக்குடிசைப் பெரியவர் எவரையுமே காணவில்லை.
மேரி அக்காவையும் பிள்ளைகளையும் தேடுகின்றேன்.
தூரத்தில் இரண்டு பிள்ளைகளையும் அணைத்தபடி மேரி அக்கா பிணமாகக் கிடக்கின்றார்.
"ஐயோ! மேரி அக்கா! நீங்களுமா என்னைத் தனியாக விட்டுவிட்டு போய்விட்டீர்கள்.
ஆண்டவா! அந்தப் பிள்ளைகள் என்ன பாவத்தை செய்தன?
என்னையறியாமலே பெலத்துக் கத்துகின்றேன்.
உணவு தந்து ஆதரவு நல்கி அன்பு காட்டிய அந்த நல்ல நெஞ்சம் அணைந்துவிட்டது.
எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து அழுதுகொண்டிருக்கின்றேன்.
நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டு விட்டன. செய்வதறியாது திகைத்து நிற்கின்றேன்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 133|

Page 68
கடந்துவந்த வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டு மீட்டுப் பார்க்கின்றேன்.
§ 3ද 28:
யுத்த நிறுத்தம் வந்த பிற்பாடு, வவுனியா அகதிமுகாமில் தங்கியிருந்த என் மாமனார் நல்லதம்பியின் குடும்பம் தங்கள் சொந்த ஊருக்குப் போய் இருக்க ஆசைப்பட்டார்கள்.
நாலு பிள்ளைகளுடன் வந்த குடும்பம். பாம்புக்கடிக்கு ஒரு குழந்தையையும், காய்ச்சல் சன் னி எண்டு வந்து மற்றப் பிள்ளையையும் இழந்து மனவியாதி பிடித்துவிட்ட தங்கம்மா மாமியையும், மற்ற இரண்டு பெண் பிள்ளைகளையும் அதில் ஒன்று அகதிமுகாமில் பெரிசானது. இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அங்கு போதிய பாதுகாப்பு இல்லை. ஆகவே தான் முகாமைவிட்டுக் கூடிய சீக்கிரத்தில் வெளியேறவேண்டும் என்று எண்ணியிருந்தார். இப்படியான மனப் பாரத்தின் மத்தியிலும், வெளியில் சென்று சுருட்டுச் சுத்திவரும் சிறிதளவு பணத்துடன் அகதிமுகாம் வாழ்க்கை. எல்லோருக்கும் பூச்சி கொல்லி மருந்தை வாங்கிக் குடுத்து தானும் குடித்து செத்துவிடலாமெண்டு நல்லதம்பி மாமா பலமுறை யோசித்ததுண்டு. வாழ்க்கைமேல் அவ்வளவு வெறுப்பு. அம்மா இவையைப் பற்றிச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.
அகதிமுகாம் வாழ்க்கை எவ்வளவு மோசமானது என்பதை மற்றவர்கள் சொல்வதால் மட்டும் அறிந்துவிடமுடியாது. அதற்குள் இருந்து அனுபவிப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை புரியும். அங்கு நடக்கும் குட்டி இராச்சியத்தின் மன்னனாக அகதிமுகாம் பொறுப்பாளர். அவருக்கு எடுபிடிக்கென ஐந்து ஆறுபேரை வைத்திருப்பார். எல்லோரும் சேர்ந்து அகதிகளுக்கு உதவி செய்கின்றார்கள் என்று வெளியில் பேசிக்கொள்வார்கள்.
அகதி முகாமுக்குள் அவர்களின் தர்பார் தாங்கமுடியாது. அட்டகாசங்களும் அப்பாவிகளைக் காட்டிக் கொடுத்து விலைபேசும் தரகர்களாகவும் செயற்பட்டு வந்திருக்கின்றார்கள்.
யுத்த நிறுத்தம் கைச்சாத்தாவதற்கு முன்னுள்ள காலப்பகுதியில் அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. காக்கிச் சட்டைக் காரரை கைக்குள் வைத்துக்கொண்டு முகாமுக்குள் இருக்கும் அப்பாவி இளம் பிள்ளைகளை ரவுண்டப் என்ற போர்வையில்
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 134

பிடித்துக் கொண்டு போகச் சொல்வார்கள். “உங்கள் பிள்ளையை மீட்டுத்தாறம். ஆனால் அவங்களுக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும். தந்தால் முயற்சி செய்கிறம். ஆனால் அவங்கள் விடாட்டி ஒன்றும் செய்ய இயலாது.”
அதைப் பெரிய பிரச்சனையாக்கி புறோக்கர்களாகவும் தாங்கள் பெரிய செல்வாக்குள்ளவர்கள் என்றும் சொல்லி அப்பாவி மக்களிடம் காசு சுரண்டும் கூட்டம்.
அகதிகளுக்குக் கொடுப்பதற்கு அகதிமுகாமுக்கு வரும் பொருட்களை உரியவர்களுக்குப் பகிர்ந்தளிக்காமல் ஏப்பம் விட்டு விடுவார்கள். சில முக்கிய சாமான்கள் பின்கதவால் வியாபாரிகளைச் சென்றடைந்துவிடும். யாராவது அதுபற்றித் தட்டிக் கேட்டால் அப்படிப்பட்டவர்களை தனிமையில் இருட்டுக்குள் கூட்டிச்சென்று அடித்துப் போடுவார்கள். அல்லது வேறு பொய்க் குற்றச்சாட்டு சொல்லி பொலிசில் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள். பயத்தில் 'ஏன் எங்களுக்கு வீண்வம்பு’ என்று அங்குள்ளவர்கள் ஒரு சோலிக்கும் போகாமல் தங்கள் பாட்டில் இருந்து விடுவார்கள்.
வெளியில் ஏதாவது சிறியவேலை செய்தால்தான் கிடைக்கும் சொற்பபணத்தைக் கொண்டு அரைகால் வயிற்றை கழுவிக்கொண்டிருக்கலாம் என அகதிமுகாமில் உள்ளவர்கள் எண்ணிச் செயற்படுவார்கள். அத்தகைய வேலைகளும் முகாம் பொறுப்பாளரின் அனுமதியுடன் தான் ஈடேறவேண்டும். உழைப்பதில் ஒரு பங்கை தினமும் அவருக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அகதி முகாமைவிட்டு வெளியே போகமுடியாது. அவர் கெஞ்சிக் கேட்டாலும் அனுமதிக்கமாட்டார். சுரண்டல் எந்தரூபத்தில் உருவாகியுள்ளது என்று எண்ணி மனம் நொந்து கொள்வேன்.
வெளியில் வேலைக்குப்போக அனுமதியாதவர்கள் முகாமி. லேயே இலவச சேவையில் ஈடுபடவேண்டும். விறகு கொத்துதல், கிணற்றில் தண்ணீர் அள்ளி ஊற்றுதல், சமைத்தலுக்கு உதவிசெய்தல், பாத்திரங்கள் கழுவுதல், கூட்டித் துப்பரவு செய்தல், சாம்பல் அள்ளிக் கொட்டுதல் போன்ற கடினமான வேலைகளைச் செய்து வயிறுகழுவ வேண்டிய பரிதாபநிலை. இதற்குப் பயந்து வெளியில் வேலைக்குப் போறவர்கள் இரகசியமான முறையில் உழைக்கும் உழைப்பில் ஒரு பகுதியைத் தினமும் கொடுத்தே வந்தனர். நல்லதம்பி மாமா இந்த விடயம் பற்றி எனக்கு ஒருமுறை சொல்லியிருக்கின்றார்.
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 135|

Page 69
சுரண்டல் என்பது எந்த வகைகளில் இந்த அகதிமுகாமில் ஈடேறி வருகின்றது என்பதை நானும் வரதனும் அவதானித்துக்கொண்டே வந்தோம். இதைத் தட்டிக் கேட்டால் அகதிமுகாமைவிட்டு வெளியேற வேண்டிவரும் என்பதும் தெரியாமலில்லை.
முன்பு நாம் இருவரும் பொலிசால் பிடித்துக்கொண்டு போகப்பட்டு காசுத் தரகர்களால் மீட்கப்பட்டவர்கள். நாங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து திரிவது கதைப்பது, இருப்பது பொறுப்பாளருக்குப் பிடிக்கவில்லை. அதனால் தனது ஆட்களிடம் எங்கள் நடவடிக்கைகளை அவதானிக்கும்படி கூறிவைத்துள்ளார். இது எப்படியே எங்களுக்குத் தெரிந்துவிட்டது. இப்பொழுது எங்களுடன் ஆலோசியஸ்சும், அந்தோனியும் சேர்ந்து கொண்டார்கள். நாங்கள் நாலு பேரும் நல்ல நண்பர்களானோம்.
அகதி முகாமில் மதுபாவனை, கசிப்புப் பாவனை, குடு, போதைவஸ்துப்பாவனை போன்றவை சர்வசாதாரண நிகழ்ச்சி. மன அழுத்தம், வறுமை, சூழ்நிலை காரணமாக அங்குள் பெரும்பாலானவர்கள் வயது வித்தியாசம் இல்லாமல் மேற்கூறப்பட்ட பாவனையில் தாராளமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக பல குடும்பங்கள் நிற்கதியாகியுள்ளன. கணவன்மாருக்கு போதையைக் கொடுத்துவிட்டு அவர்கள் மனைவி பிள்ளைகள் மேல் பாலியல் சேட்டைகள் விடுவது போன்ற கீழ்த்தரமான நிகழ்ச்சிகளும் நடந்தன.
விபச்சாரம், பாலியல் வல்லுறவுகள், பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம் என்பன கோலோச்சுமிடமாக இந்த அகதிமுகாம் நாம் அறிந்த நாட்தொடக்கம் செயற்பட்டு வருகின்றது. அகதி வாழ்க்கையின் சூழல் கலாசாரச் சீரழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. குடும்பப் பெண்கள் சிலர் இத்தகைய நிலையை வெளிப்படையாக எதிர்த்து நின்றனர். அதனால் அவர்களில் சிலர் பாலியல் வல்லுறவுக்கு உள்படுத்தப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
கல்வி நிலை மிகவும் மோசம். படிக்கப் போறவர்கள் மிகக்குறைவு. உடுப்பு, பாடசாலை உபகரணங்கள் பெறுவதில் கவுர்டம். ஒரு யூனிபோமை தோய்த்துத் தோய்த்து எத்தனை நாட்களுக்குத்தான் போட முடியும். அப்பியாசப் புத்தகங்கள், எழுதுகருவிகள் வாங்கப் பணம் இல்லாத நிலை. அகதிமுகாமில் படிப்பதற்கு வசதியில்லை. ஒன்பது மணியுடன் லயிற் ஒப் பண்ணிப்
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 136|

போடுவார்கள். எனவே படிப்பபைப்பற்றி உத்தரவாதம் சொல்ல முடியாத நிலை. எங்களால் கூட படிப்பைத் தொடர முடியவில்லை.
சுகாதாரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. இதற்கான பெரும் பொறுப்பை அகதிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கைநிலை காரணமாக எல்லோரும் சுகாதாரப் பழக்கங்களை சரிவரக் கடைப்பிடிக்காமையும் முகாம் பொறுப்பாளரின் பொறுப்பற்ற தன்மையும் சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்தி யுள்ளன. சரியான வெய்யில் காலங்களில் கண்நோய் வந்து ஒருமுறை முழுப்பேருக்கும் தொற்றிவிட்டது. மலேரியா நுளம்புகளின் பெருக்கத்தினால் பலர் மலேரியாநோய்க்கு ஆட்பட்டு வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவந்துள்ளனர். சிலர் இறந்தும் விட்டனர். நெருப்புக்காய்ச்சல், வாந்திபேதி, கொலறா இத்தகைய நோய்களும் தலைகாட்டத்தவறுவதில்ல.
மழைகாலத்தில் அகதி முகாம் அல்லோலகல்லோலப்படும். படுப்பதற்குக்கூட இடமில்லாமல் பலர் அவஸ்தைப் பட்டுள்ளார். கள். நுளம்புத்தொலை, சக்கரைப்பாணியன் (ஒருவகை கறுத்தவண்டு காதுக்குள் போனால் பெரும் வேதனை), பாம்பு, விசஜந்துக்கள் இப்படிப் பலசோதனைகளுக்கு மத்தியிலும் வாழ வேண்டிய பரிதாப நிலை.
அகதிமுகாமுக்கு சிறுவயதில் வந்து சேர்ந்த நாங்கள் இன்று வாலிபர்களாக வளர்ந்துவிட்ட நிலையில், இந்த அனாகரிகச் செயல்களைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதவர்களாணோம். நாம் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து இவர்களுக்குத் தக்கபாடம் படிப்பிக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கொண்டோம்.
வரதனின் குடும்பமும் எங்களுடன் தான் அகதிமுகாமில் தங்கியிருந்தார்கள். அவன் ரை அப்பாவை இருந்தாப்போலை ஒருநாள் காணவில்லை. அவனுடைய அம்மாவும் அண்ணனும் தகப்பனைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ்ரேசன், ஆமிக்காம்ப், அரசாங்க அதிபர், யூ என். எச். சி. ஆர் எண்டு எல்லா இடமும் திரிஞ்சும் கிடைக்கவில்லை. என்ன நடந்தது என்று ஒருவருக்கும் தெரியாது. அந்தநேரம் ஒன்றுமே கதைக்க முடியாத நிலையில் அங்கிருந்தவர்கள் பயந்துபோய் இருந்தார்கள். உண்மை என்ன என்று வரதனின் அண்ணனுக்குத் தெரிந்திருக்கும். அவரும் ஒன்றும் பேசவில்லை. வரதனின் அண்ணன் வெளியில் சென்று கூலிவேலை செய்துவந்துதான் அவனையும் அம்மாவையும் பார்த்து வந்தார்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 1371

Page 70
வரதன் பள்ளிக்கூடம் ஒழுங்காகப் போகவதில்லை. படிப்பதில்லை என்று சரியான கோபம்.
ஒருநாள் அண்ணன் நல்லாய் அடிச்சுப்போட்டார். அவன் அழுதுகொண்டுவந்து என்னிடம் சொன்னான். “எங்களுக்கு விடிவுகாலம் வெகுவிரைவில் கிடைக்கும் அதுவரை கொஞ்சம் ஆறுதலாக இரும்” சொல்லித் தேற்றினேன்.
நண்பர்களாகிய நாங்கள் நால்வரும் நன்றாக நெருங்கிவிட்டோம். அகதி முகாமில் அகங்காரம் பிடித்து கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றவர்களுக்கு செமசாத்துச் சாத்த வேண்டும் என்று திட்டமிட்டோம்.
ஒரு அமாவாசை இருட்டு. நகுலன் இரவு பத்துமணிக்குப் பிறகு தான் கசிப்பு குடிக்க பக்கத்திலுள்ள தகரக் கொட்டகைக்குப் போவான். இதை நாங்கள் நால்வரும் நன்றாக அவதானித்து வந்தோம்.
அமாவாசை அன்று பேய் அடிச்சு நகுலன் செத்துவிட்டான் என்று முகாமில் கதைத்துக் கொண்டார்கள்.
இரவில் ஒருவரும் தாங்கள் குடிக்கும் கசிப்புக் கடைக்குப் போகக்கூடாது என்பதற்காக நகுலனின் பேய் உலாவுகிறது என்று அகதி முகாம் பொறுப்பாளரும் அவர் அடியாட்களும் ஒரு வதந்தியைப் பரப்பிவிட்டார்கள்.
இது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது என்றே கூற வேண்டும். கும் இருட்டுக் காலங்களில் நாம் பேய்களானோம்.
சண்முகம் நேற்றிரவு நல்லவெறியிலை முகாமிலிருந்து மோட்டார் சயிக்கிளில் போகும்போது மரத்துடன் மோதி அடிபட்டு செத்துப் போனான் என்று அகதி முகாம் எங்கும் சண்முகத்தின் கதைதான். பேய்ப் பயம் இருமடங்காகியது. பத்து மணிக்குமேல் முகாமைவிட்டுப் போகும் எடுபிடிகள் மாலை ஏழு மணிக்கே தங்கள் தங்கள் வீடுகளுக்குப் போய்விடுவார்கள். அகதிமுகாம் இரவில் சற்று ஆறுதலாக இருப்பது தெரிந்தது.
ஒருநாள் விறகு கொத்துவதற்கு அந்தோனியை அகதிமுகாம் பொறுப்பாளர் கூப்பிட்டார். அந்தோனிக்கு சரியான காய்ச்சல். அதனாலை எனக்கு விறகு கொத்த ஏலாது என்று சொன்னான்.
"கரையாரப் பயலுக்கு மீன்பிடிக்க மட்டும்தானே தெரியும்” விறகு
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் | 1381

கொத்தத் தெரியாது என்று சொன்னார். அந்தோனி அவரை
முறைத்துப் பார்த்தான்.
“என்னடா முறைச்சு பாக்கிறாய்" என்று சொல்லி அடிச்சுப்
போட்டார். எங்கள் மனங்கள் கொதித்தெழுந்தன.
அன்று அமாவாசை இருட்டு மாலை ஏழுமணிக்கே பேய்கள் உலாவத் தொடங்கிவிட்டன.
அன்றிரவு முகமூடிகளின் செமசாத்தலுக்கு உள்பட்டதாகக் கேள்வி. இரவோடு இரவாக அந்த நரக வாழ்க்கையைவிட்டு, எஞ்சியிருந்த சொந்தங்களையும் விட்டு கால்நடையாக வந்து, இரண்டு லொறிக்காரரின் உதவியுடன், பருத்தித்துறை கரையோரக் கிராமம் ஒன்றுக்கு வந்து சேர்ந்தோம் நாங்கள் நால்வரும்.
அலோசியஸ்சின் தூரத்துச் சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்றம். அலோசியஸ் சின் அப்பா அவருடன் சேர்ந்து முன்பு கடற்றொழிலுக்குப் போறவராம்.
இடம்பெயர்ந்த கதைகள், அகதிமுகாம் வாழ்க்கையின் அல்லோலங்கள், அந்த நரக வாழ்க்கையை விட்டு. எஞ்சியிருந்த சொந்தங்களையும் விட்டு கால் நடையாக ஓமந்தைவந்து லொறிக்காரர்களின் உதவியுடன் வந்து சேர்ந்ததுவரை எல்லா விட யங்களையும் அலோசியஸ் அந்த வீட்டுக்கார நிக்கலஸ் அண்ணரிடம் கூறிமுடித்தான்.
அலோசியஸ் கூறியவற்றை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்த நிக்கலஸ் அண்ணா அப்பா எப்படி இருக்கின்றார் என்று அலோசியஸ் இடம் கேட்டார்.
அப்பா குடிச்சுக்குடிச்சு ஈரல் கருகி போன வருஷம்தான் செத்" துப்போனார். உங்களைப் பற்றி பலமுறை சொல்லியுள்ளார். இவை மூன்று பேரும் யாழ்ப்பாணம்தான். சின்னவயதிலை அகதிமுகாமுக்கு வந்தபடியால் அவர்களுக்கு அவர்களின் ஊர்களில் ஆதரிப்பதற்கு ஒருவருமில்லையாம். அதனாலை என்னோடை இங்கு வந்துவிட்டார்கள். அப்பா உயிரோடை இருக்கும்போது, உங்களிட்டை போனால் நீங்கள் காப்பாற்றுவீர்கள் என்றும் சொல்லுவார். பாழாப்போன மனுசன் அம்மா, தங்கைச்சிமார் என்னையெல்லாம் கூட்டிக்கொண்டு யுத்தநிறுத்தம் வந்த நேரத்திலேயே இங்கு வந்திருக்கலாம். சரியான குடி எந்தநேரம் நிறை தண்ணிரலைதான்
|சொந்தங்கள்|த. சிவசுப்பிரமணியம் 1391

Page 71
இருப்பார். உழைக்கிற காசு முழுவதையும் குடிச்சுவிடுவார். போதாக்குறைக்கு அம்மா, தங்கைச்சிமாருக்கும் அடி உதை. நான் அவரோடை இருக்காமல் ஒழிச்சு என் நண்பர்களுடன் இருந்து விடுவேன். எங்கள் நாலு பேருக்குப் பின்னாலையும் பெரிய சோகம் இருக்கு.
அந்தோனி பாசையூரைச் சேர்ந்தவர். இவர் ரமேஸ் மாவிட்ட புரம். மற்றவர் வரதன் குப்பிழானை பிறப்பிடமாகக் கொண்டவர் என்று அறிமுகத்துடன் எல்லா வியடத்தையும் அலோசியஸ் சொன்னான். நானும்அந்தோனியும் வரதனும் நிக்கலஸ் அண்ணாவைப் பார்த்துக்கொண்டு இருந்தோம்.
கடற்கரைப் பக்கத்தில் ஒரு குடிசை. பனைஒலைகளால் வேயப்பட்டு தென்னை ஒலைகளால் நாலுபக்கமும் அடைக்கப்பட்டிருந்தது. உள்போவதற்கு ஒரு சின்னவாசல். கதவோ யன்னலோ கிடையாது. இளம் தம்பதிகள் இரண்டு சின்னப்பிள்ளைகள். தாயும் பிள்ளைகளும் படுப்பதற்கு மட்டும்தான் அந்த குடிசை காணும். குசினி என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை. காத்துக்காக ஒரு பழைய தகர மறைப்பு அதில்தான் சமையல் நடக்கும்.
அவர்களைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நிக்கலஸ் சின்னக் கட்டுமரத்தில் பக்கத்துக் குடிசையிருள்ள வயது வந்தவருடன் சேர்ந்து மீன்பிடிக்கப்போய் வந்து விற்று கிடைக்கும் சொற்ப பணத்தில்தான் சீவியம் போய்க்கொண்டிருந்தது. நிக்கலசின் குடிசையைப் போல அந்தக் கடற்கரை ஓரம் பல குடிசைகள் அங்கும் இங்குமாக இருந்தன.
கடற்கரை ஓரம் ஒருசில தாளை மரங்களும், தென்னை மரங்களும் காட்சிதந்தன. நீண்ட அந்தக் கடற்கரை மணலில்தான் அந்தக் குடிசை வாழ்மக்கள் அநேகமானவர்கள் படுத்துறங்குவார்கள். மழை பெய்தால் பெரும் கஷ்டம்தான். பக்கத்திலை சுவர் இல்லாத ஒரு கொட்டகை தென்பட்டது. அதுதான் வாசிகசாலையாம். மழைக்கு ஒதுங்கும் இடமாகவும் அதைப் பாவிப்பார்களாம்.
நாங்கள் பசியோடை வந்திருப்பதை நிக்கலஸ் தெரிந்துகொண்டு தன் மனைவியுடன் ஏதோ கதைத்தார்.
“தம்பிமாருக்கு தேத்தண்ணி வச்சுக்கொடும் வந்துவிடுவன்" சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டார்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 140|

அந்த அக்கா வெறுந் தேத்தண்ணியும் சிறுதுண்டு பனங்கட்டி" யும் கொண்டு வந்துதந்தா. அவவை நன்றியுடன் பார்த்தோம். தேத்தண்ணியும் பனங்கட்டியும் எங்களுக்குப் புது அனுபவம். இருந்தபோதிலும் எங்கள் பசிக்களைப்புக்கு அந்தத் தேத்தண்ணி சிறிது உச்சாகத்தைக் கொடுத்தது. வந்த தேக அலுப்பில் கடற்கரை மணலிலேயே படுத்துத் தூங்கிவிட்டோம்.
“தம்பியவை எழும்பிச் சாப்பிட்டுவிட்டுப் படுங்கோ"
நிக்கலஸ் அண்ணர் வந்து எழுப்பினார்.
ஒவ்வொரு கோப்பையிலும் சோறும் கருவாட்டுக் கறியும் போட்டுக்கொண்டு வந்து நாங்கள் இருந்த இடத்தில் அவரும் மனைவியும் தந்தார்கள். சோற்றுக்குள் விட்டுச் சாப்பிடுவதற்கு ஒரு பேணியில் சொதியும், கிளாசில் குடிக்கத் தண்ணியும் கொண்டுவந்து தந்தார்கள். நிக்கலஸ் அணி ணனும் ஒரு சட்டிக்குள் சாப்பாட்டைப் போட்டுக்கொண்டு வந்து எங்கள் பக்கத்தில் அமர்ந்திருந்து சாப்பிட்டார்.
அரிக்கன்லாம்பு வெளிச்சத்தில், கடற்கரை ஓரத்தில் எங்களுக்கு விருந்து அந்த நல்ல உள்ளங்களை மனதார நன்றியுடன் நோக்கிக் கொண்டு சாப்பிட்டோம். நாம் அறிந்தளவில் நீண்ட காலத்திற்குப்பின் அப்படியான ஒரு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி
ஒரு சுதந்திரமான மன நிலையில் இந்த அன்பு காட்டுகின்றவர்களின் விருந்தோம்பல் எமக்கு ஆறுதலளிப்பதாக இருந்தது. சாப்பிட்டு முடிந்ததும் அக்காவும் பிள்ளைகளும் குடிசைக்குள் சென்று படுத்துக்கொண்டார்கள்.
நிக்கலஸ் அண்ணர் எங்களுக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டார். எங்கள் எதிர்காலம் பற்றியும், அகதிமுகாமில் இருக்கும் எங்கள் சொந்தங்களை திரும்பவும் யாழ்ப்பாணம் கூட்டிவருவது பற்றியும், அவர்கள் அங்கு படும் கஷ்டங்களுக்கு பரிகாரம் காணவேண்டியதும் எங்கள் பொறுப்பாகும் என்றும் நாங்கள் நால்வரும் எடுத்துக் கூறினோம்.
"இங்கு கடற்றொழில் மட்டும்தான் செய்யலாம். என்னிடம் ஒரு கட்டுமரந்தான் இருக்குது. நீங்கள் கடற்றொழிலுக்குப் பழக்கமில்லாதவர்கள் என்ன செய்ய உத்தேசம்"
நிக்கலஸ் அண்ணர் கேட்டார்.
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் | 141

Page 72
அலோசியஸ்சும், அந்தோனியும் கடற்றொழிலாளர்களின் பிள்ளைகள். நானும் வரதனும் கமக்காரனின் பிள்ளைகள். நாட்டின் போர் நிலையால் இடம் விட்டு இடம்பேர்ந்து, கல்வியையும் இழந்து அகதிமுகாமில் வாழ்ந்தவர்கள். அலோசியஸ்சும், அந்தோனியும் நாங்கள் கடற்றொழிலுக்கு வாறம் என்று சொல்லிவிட்டார்கள். எங்கள் வாழ்க்கைக்கு கட்டாயம் ஒரு தொழில் தேவை. படியாத எங்களுக்கு என்ன வேலையைத்தான் பெறமுடியும். எனவே கடல்பயம் இருந்தபோதிலும், நானும் வரதனும் கடற்றொழில் செய்ய வருவம் என்று துணிந்தே கூறிவிட்டோம்.
ஒரு கட்டுமரம் என்றதினால் இரண்டு குறுப்பாகப் பிரிந்து கடலுக்குப் போய்வருவது என்று தீர்மானித்தோம். நிக்கலஸ் அண்ணனுடன் வரதனும் நானும் கடலுக்கு காலயிைல் போய் மாலையில் வருவோம். நிக்கலஸ் அண்ணனின் பக்கத்துக் குடிசையி லுள்ள பெரியவரும் அலோசியஸ்சும், அந்தோனியும் ஒரு குறுாப். அவர்கள் மாலையில் கடலுக்குப்போய் காலையில் வந்துவிடுவார்கள்.
நிக்கலஸ் அண்ணாவின் மனைவிக்கு மேரி என்றுதான் பெயர். அதனாலை அவவை மேரி அக்கா என்றுதான் கூப்பிடுவம். அவ ஒருநாள் என்னுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது நிக்கலஸ் அண்ணாவும் வரதனும் பக்கத்தில் இருக்கின்றார்கள். கதையோடை கதையா "உன்ரை ஊர் மாவிட்டபுரமோ? குடும்பத்திலை எத்தனை பேர்?" என்று கேட்டார்.
"ஐயா , அம்மா, அக்கா இரண்டுபேரிலை ஒரு அக்கா யாரோடையோ ஓடிப்போய்விட்டாவாம் எண்டு சொன்னவர்கள். எனக்கு அவவை அவ்வளவாக ஞாபகமில்லை. மற்றது தம்பி நான் எண்டு எங்கள் குடும்பத்தில் ஐந்துபேர்.
யுத்தம் காரணமாக நாம் இடம்பேர்ந்து அங்க அகதிமுகாமிலை பலவருடங்களாக இருந்திருக்கிறம்.
போர் நிறுத்தம் வந்ததும் நாம் எல்லோரும் ஊருக்குப் போவம் எண்டு எண்ணினம். ஐயா மாவிட்டபுரத்திற்கு போய் பார்த்தபோது வீடு தரைமட்டமாய்க் கிடக்குதாம். அங்கு ஒருவரும் குடியேற வரப்படாதாம் ஆமியின்ரை ஒடராம். ஐயா மனமுடைந்து வந்து எல்லாருக்கும் சொல்லி அழுதார். கொஞ்ச நாளிலை மாரடைப்பு வந்து அகதிமுகாமிலே இறந்துவிட்டார். நாங்கள் தவிச்சுப்போனோம். அம்மா, அக்கா, தம்பி, நான் நாலுபேருடைய வயிறு நிரப்ப அகதி
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் I 142

முகாமில் கொடுக்கும் நிவாரணம் போதாமல் பெரும் கஷ்டப்பட்” டோம். . W
அந்தச் சந்தற்பத்தில் அகதிமுகாமில் இருந்த நகுலன் என்பவன் அக்காவை கல்யாணம் கட்டுகிறன், உங்களையெல்லாம் நல்லாய் வைத்திருப்பன் எண்டு அம்மாவிடம் வந்து சொன்னான். அக்காவுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவனை கல்யாணம் கட்டமாட்டன் என்று சொல்லிப் போட்டா.
ஒருநாள் இரவு நகுலன் அக்காவை பலாத்காரம் பண்ணி கெடுத் துப் போட்டான். அக்கா அவமானம் தாங்க முடியாமல் அடுத்தநாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்திட்டார். அம்மாவும் இதை யோசித்து யோசித்து மனநோயாளியாகிவிட்டா. அங்கை இனியும் இருக்கேலாது. அம்மாவையும் தம்பியையும் திரும்பவும் யாழ்ப்பாணத்திற்குக் கூட்டி வந்து நல்லாய் வைச்சிருக்க வேண்டும் எண்டுதான் இஞ்சை வந்தனான்.
"உன்ரை அப்பா அம்மாவுக்கு என்ன பெயர்"
"அப்பாவுக்கு சிவசம்பு அம்மாவுக்கு நல்லம்மா. அம்மா நல்லதம்பி மாமாவின் தங்கைச்சி”
"அப்ப நீங்கள் வெள்ளாமாக்களா தம்பி"
மேரி அக்கா கேட்டார். அது எனக்கு விளங்கேல்லை. “எனக்குத் தெரியாது" என்று மட்டும் சொன்னேன். அக்கா மெளனமாகிவிட்டா வரதனிடமும் அவனின் குடும்பவிபரம் கேட்பா என எண்ணினேன். ஆனால் அவ அழுதபடி பிள்ளையையும் தூக்கிக் கொண்டு குடிசைக்குள் ஓடிவிட்டார். அவ பெலத்து அழும் சத்தம் கேட்டது. நிக்கலஸ் அண்ணர் என் முகத்தைப் பார்க்கின்றார்.
※ 来 来
“பிரேதங்கள் எல்லாத்தையும் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகட்டாம்” என்று பெடியங்கள் சொல்லிக் கொண்டு வந்தார்கள். காக்கிச் சட்டைக்காரர்கள் ஒருவர் இருவராகத் தூரத்தில் நிற்பதைக் கண்டேன். அங்கு உதவிக்குவந்தவர்கள் மூலம் இறந்துவிட்ட மேரி அக்காவையும் அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் உழவு இயந்திரப் பெட்டியில் ஏற்றிக்கொண்டு பருத்தித்துறை ஆஸ்பத்திரிக்" குச் செல்கிறேன். அங்கு பிரேதங்கள் நிறையக் காணப்பட்டன. பிரேதங்கள் வைப்பதற்கே இடமில்லாத நிலையில் வெளிவிறாந்தை"
|சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் 143

Page 73
யிலும் கொண்டுவந்து வைக்கிறார்கள். நானும் அங்கு நின்றவர்களின் உதவியுடன் மேரி அக்காவினதும் குழந்தைகளினதும் உடல்களை இறக்கி வைக்கின்றேன். பிரேதங்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. ஒரே பிரேதக்குவியல். அதற்குள் என் சொந்தங்களைத் தேடுகின்றேன்.
அங்கு பதிஞ்சு போட்டுத்தானாம் உறவினர்களிடம் பிரேதங்கள் ஒப்படைப்பார்களாம். அடுத்தநாள் இரண்டு மணிக்குப் பிறகுதான், உடன் புதைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சொந்தக்காரன் என்று கையொப்பமிட்டு மேரி அக்காவினதும் பிள்ளைகள் இரண்டினதும் உடல்களை எடுத்துவந்து அந்தோனியர் கோவில் சேமக்காலையில் முறைப்படி மூவரையும் நல்லடக்கம் செய்துவிட்டு அந்த இடத்தில் மண்டியிட்டு இருந்து மொழுகுதிரிகளைக் கொழுத்தி வைத்து என் உடன்பிறவா அக்காவுக்காக அழுகின்றேன்.
என் சொந்தங்களை, நண்பர்களை இழந்த துக்கம் தாங்கமுடியாமல் வாய்விட்டு அழுகிறேன். என் தோளில் யாரோ தொடுவது மாதிரி உணர்ந்து திரும்பிப் பார்க்கின்றேன். அந்தோனியார் கோயில் பங்குத்தந்தை பக்கத்தில் நிற்கின்றார்.
"பாதர்! என் அக்காவும் பிள்ளைகளும் அனாதைப் பிணங்க" ளல்ல. நான் தான் உண்மையான சொந்தக்காரன் எனவே என் கடமையைச் செய்துள்ளேன்” என்றேன்.
"மேரி உன்னுடைய சொந்த அக்காதான் மகனே. கிறிஸ்மஸ் பூசைக்கு கோயிலுக்கு வந்தபோது என் கூடத்தான் தம்பி வந்திருக்கின்றார் என்று சொல்லி சந்தோஷப்பட்டார்."
ஐயோ! அக்கா நீங்கள் என்னை தெரிந்து கொண்ட மாதிரி நீங்கள் உயிரோடை இருக்கேக்கை எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! என்று அலறுகின்றேன்.
"அவர்கள் ஆண்டவனால் அழைக்கப்பட்டு விட்டார்கள் மோட்சராச்சியத்திலே அவர்கள் இருப்பார்கள்" பாதர் சொல்லுவது என் செவிகளுக்குக் கேட்கிறது.
அவர்களுக்குக் கேட்குமா?
25-Ο9-2OO5
★
சொந்தங்கள் த. சிவசுப்பிரமணியம் |144


Page 74
இச்சிறுகதைத் தொகு ஆசிரியர் த.சிவசுப்பி (தம்பு - சிவா) யாழ்ப் இணுவில் கிராமத்தி தையல்நாயகி தம்பத் 24-02-1944 இல் புத்த கல்வியை இணுவில் வித்தியாசாலையில்
கொக்குவில் இந்துக் 1967 இல் அரசாங்க
இறைவரித் திணைக் வரி உத்தியோகத்தர அரசாங்க லிகிதர் கே உத்தியோகத்தர் சங் உறுப்பினராக இருந் தன்னை அடையாள இடதுசாரி இயக்க ெ அடக்குமுறை எங்கு குரல் கொடுக்கும் எ வந்துள்ளார். 1970, 1 வெளிவந்த “கற்பகம் சஞ்சிகையின் சிறப்பு பணி ஆற்றியுள்ளார் கலை இலக்கியப் ே உறுப்பினருமாவார். 'காலத்தால் மறையா தொகுப்பின் தொகு பத்திரிகைகளிலும் ச கொண்டிருக்கும் இ செம்மல்கள்" என்னு ஆசிரியருமாவார். " முதலாவது சிறுகதை
 

தப்பின்
பிரமணியம்
பாணம் -
ல் தம்பு -
நியினருக்கு நிரராகப் பிறந்தார். ஆரம்பக்
ଶ0}୫FରJ LD5(T୫ ତଥ୍ୟ கற்று, இடைநிலைக் கல்வியை கல்லூரியில் தொடர்ந்தார். எழுதுவிஞையராக உள்நாட்டு களத்தில் சேர்ந்து 1975 இல் ாகப் பதவி உயர்வு பெற்றார். Fவைச்சங்கம், வரி கம் ஆகியவற்றின் செயற்குழு து தொழிற்சங்கவாதியாகத் ம் காட்டிக் கொண்டார். சயற்பாட்டாளரான இவர், நடந்தாலும் அதற்கு எதிராகக் ழுத்தாக்கங்களைப் படைத்து 971 ஆம் ஆண்டுகளில் " கலை இலக்கியச் ாசிரியராக இருந்து இலக்கியப் . இவர் இலங்கை முற்போக்கு பரவையின் செயற்குழு
த கற்பக இதழ் சிறுகதைகள் பாசிரியராவார். தற்பொழுது ஞ்சிகைகளிலும் எழுதிக் வர் "முற்போக்கு இலக்கியச் ம் கட்டுரைத் தொகுதியின் சொந்தங்கள்" இவரது த் தொகுப்பாகும்.