கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரங்காடல்

Page 1
மனவெளி கலையாற்
ஒன்பத
(7)
தி /3
March 16, Markham Theatre fi
• (° የíW - Š6ÜIL_ If "كالقمي. QŠ
雷
A. Pathmanaba Iyer 27-139High Street Φίαις.ίστιν fondon E13 O21)
 

றுக் குழு வழங்கும்
5ாவது
( ) 57.67
17 2002
or Performing Arts
Manaveli Performing Arts Group

Page 2
Su:Ö ÕIUGlaJ665
Eugene lonesco (1912 - 1994)
றோமானியாவில் பிறந்திருந்தாலும் தன்னுடைய எல்லா நாடகங்களையும் அயெனெஸ்கோ பிரஞ்சு மொழியிலேயே எழுதினார். அயனெஸ்கோவின் கலை இலக்கிய வாழ்வு பெருமளவுக்கு பிரஞ்சுச் சூழலிலேயே இருந்தது. அபத்த நாடகங்கள் (Absurd Flays) என்று இப்போது உலக நாடக அரங்கியலில் பொதுவாக வழங்கப்படும் ஒரு நாடகப் போக்கின் முன்னோடிகளாகக் கருதப்படுபவர்களில் அயனெஸ்கோ முக்கியமானவர். இன்னொருவர் சாமுவல் பெக்கற்.
அபனெளிப்கோவின் முதலாவது நாடகமான The Bald Prima 0ெnma அபத்த நாடக வகையைச் சார்ந்தது அல்ல. அயனெளப்கோவின் ஆரம்ப நாடகங்களில் உரையாடல், பாத்திர அமைப்பு தொனிப் பொருள், மொழி ஆகியவை நாடகப் பாரம்பரியங்களை ஒட்டியதாகவே அமைந்திருந்தன.
எனினும் தொடர்பு ஊடகமாகத் தொழிற்படுவதில் மொழி பெருமளவுக்குத் தோற்றுப் போய்விட்டது என்ற கருத்தே அயனெனப்கோவிடம் வலுப் பெற்று விட்டது. அந்த அடிப்படையில் தன்னுடைய நாடகங்களில் மொழிக்கு அப்பாலான தொடர்பு முறைமைகளையும், வடிவங்களையும், பாவனைகளையும் அயனெளப்கோ பயன் படுத்த ஆரம்பித்தார். கூடவே மனிதர்களை மையப்படுத்துவதை விட உயிரற்ற, சடப்பொருட்கள் மையம் பெறுவதும், பாத்திரங்களாவதும் அவருடைய நாடகங்களின் முக்கியமான அம்சங்களாயின.
சமகால மனிதர்களிடம் பெருமளவுக்கு விரவியிருக்கும் அந்நியமாதல் என்ற உணர்வே அபத்த நாடகங்களின் மையக் கூறுகளுள் ஒன்று என்று சுறலாம். தன்னுடைய வாழ்விலிருந்து, தன்னுடைய வேலையிலிருந்து, தன்னுடைய சொந்த இயல்பில் இருந்து தானே அந்நியப்பட்டுப் போகிற ஒரு நிலை இன்றைய நெருக்கடி யுகத்தில் மனிதர்களைக் சூழ்ந்து கொள்கிறது. இந்த அந்நியமாதலும் வெறுமையும் மனிதர்கள் பிற மனிதர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளையும் அர்த்தமற்றதாகவும் மேலோட்டமானதாகவும் மாற்றி விடுகிறது. இயலாமையும் அவலமும், வறட்சியும் மனிதர்களை இராட்சதப் பொறிகள் போல வளைத்துப் பிடிக்கின்றன. இந்த நிலைமையை வெளிப்படுத்துவதற்கு மொழி உதவி செய்யாது என்பது மட்டுமல்ல அந்நியப்பட் மனிதர்களுக்கு மொழி எவ்வித உயிர்ப்பையும் தராது என்பது அயனெஸ்கோவின் வாதம் அவருடைய நாடகம் பற்றிய கருத்தியலும் அப்படித்தான் இருந்தது.
நாற்காலிகள் (Les Chaies) 1952இல் மேடையிடப்பட்டது. நாடகங்களை மொழியோடு இணைத்துப் பார்த்துப்

பழகிப்போனவர்களுக்கு நாற்காலிகளும் அபத்த நாடகங்களும் ஆரம்பத்தில் புதிராக இருக்கக் சுடும். எனினும் அயனௌட்கோவை மெல்ல மெல்ல புரிந்து கொள்ளும் போது நாடகம் எழுப்புகிற சிந்தனையின் ஆழமும், மனித நிலை பற்றி மனித உறவுகள் பற்றி அது தருகிற தீவிர விமர்சனமும் எம்முள் ஆழமாக இறங்க ஆரம்பிக்கும்.
"It's not a certain society that seems ridiculous to me, it's man kind."
- Eugene IonesCO
Pese Vist O VeSe
www.manaveli.org

Page 3
D6DT66 (1921-1911)
நவீன தமிழ்க் கவிதையின் மூலவர் என்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் பரவலாக அறியப்பட்டுள்ள மஹாகவி (து. உருத்திரமூர்த்தி) இன்றைய தமிழ்க் கவிதைகளின் நவீனத்துவத்துக்கும் காட்சிப் படிமங்களுக்கும் எளிமையான ஆனால் தாக்கம் வாய்ந்த சொற் பயன்பாடுகளுக்கும் வழிகாட்டியவர். சிக்கலான, மரபு சார்ந்த, பழைமை இறுக்கங்களுக்குள் கட்டுண்டிருந்த கவிதையையும் இலக்கியத்தையும் மரபின் ஆரோக்கியமான அடித்தளங்களை உடைத்தெறியாது புதுமைக்கு மாற்றியவர் அவர். இது வரை வெளியாகி இருக்கிற கவிதைத் தொகுதிகள் வள்ளி விடும் வெளியும், மஹாகவி கவிதைகள், குறும்பா,
மஹாகவியின் காவியங்கள் அனைத்தும் ஆறு காவியங்கள் என்ற தலைப்பிலும், அவருடைய மேடை நாடகங்கள் மஹாகவியின் மூன்று நாடகங்கள் என்ற பெயரிலும் நூலாகி உள்ளன.
ஏராளமான வானொலி நாடகங்கள், இசைப்பாடல்கள் ஆகியனவற்றையும் மஹாகவி எழுதியுள்ளார். அவருடைய இறுதிக் காலங்களில் அவருடைய கவனம் பெருமளவுக்கு மேடை நாடகங்களை நோக்கித் திரும்பி விட்டது. அவருடைய முதலாவது நாடகம் கோடை மேடையேற்றப்பட்டபோது பெரும்
மனவெளி கலையாற்றுக் குழு 9வது அரங்காடல்
 
 

பரபரப்பை ஏற்படுத்தியது. பிரித்தானியர்களின் காலனி ஆதிக்கத்துக்கும் சாதிய மரபுகளுக்கும் எதிரான ஒரு குரலாக ஒலித்த கோடை, தமிழில் மேடையேறிய பா நாடகங்களில் முதன்மையானதொன்றாகும். பா நாடகங்களை மேடைக்காக, எழுதுவதும் மேடையிடுவதும் ஈழத்து நாடக அரங்க முயற்சிக எரில் முக்கியமானவையாக அமைந்தன. மஹாகவி, முருகையன், அம்பி ஆகியோரின் பாநாடகங்கள் மேடையேறியமை ஈழத்துத் தமிழ் நாடக அரங்குக்கு முக்கியமான தள மாற்றங்களை அளித்தது. மஹாகவியின் முக்கியமான மூன்று பாநாடகங்கள், கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று என்பன ஆகும். இவற்றுள் முற்றிற்று இதுவரையும் மேடையிடப்படவில்லை. கோடையும் புதியதொரு விடும் பலதடவைகள் பல நெறியாளர்களால் மேடையேற்றப்பட்டவை.
இம்முறை அரங்காடலில்
இந்த முறை அரங்காடல் நிகழ்வில் சிறப்புப் பெற்ற இரண்டு நாடகாசிரியர்களின் நாடகங்கள் இடம் பெறுகின்றன.
புதியதொரு வீடு மஹாகவியின் நாடகம், 1969 இல் எழுதப்பட்டு 1971 இல் அ. தார்சீசியஸ் ஆல் மேடையேற்றப்பட்டது. கோடையும் புதியதொரு ஜிழ் ஏற்கெனவே ஈழத்தின் பல பாகங்களிலும் Xதமிழ் நர்ட்டில் ଶ୍ରେଷ୍ଠ୍ଯ தடவையும மேடையேற்றப்பட்டன.
நவீன தமிழ் நாடகம் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்பு முனையை ஏற்படுத்தியவை மஹாகவியின் நாடகங்கள். அ. தாசீசியஸ், சி. மெளனகுரு, கா. சிவபாலன், சோ. தேவராஜா, பி. ஏ. சி. ஆனந்தராஜா போன்ற நெறியாளர்களினால் மஹாகவியின் நாடகங்கள் பலவேறு வடிவங்களிலும் பல்வேறுபட்ட மேடைகளிலும் இடம் பெற்றுள்ளன.
இழப்புகள், துயரங்கள் அனைத்தினூடாகவும் மனிதர்களுடைய நம்பிக்கையை வலியுறுத்துவதே மஹாகவியின் சிறப்பான நோக்கமாக இருந்து வந்திருக்கிறது. வேருக்குள் உறுதி கொண்ட வேம்புகள் 'மனிதர்' என்றும் 'எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார் எது வந்ததெனின் என்ன அதை வென்று செல்வார்' என்றும் மனிதத்தை நம்பிக்கையின் குறியீடாகப் புதியதொரு வீடு நாடகத்தில் மஹாகவி சித்திரிக்கிறார். அவருடைய புகழ்பெற்ற பாடலான 'சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் புதியதொரு விட்டின் முத்திரைப் பாடலாக இடம்பெற்றுப் பலரது மனதில் நீங்காத நினைவாக இடம் பெற்றுள்ளது.

Page 4
ஒவ்வொரு நாடகப் பிரதியும் அதனுடைய நெறியாளர்களின் ஆளுமையாலும் பார்வைக் கோணங்களாலும் வேறுவேறான பரிமாணங்களைத் தரவல்லது. அந்த வகையில், புதியதொரு வீட்டின் இப் புதிய தயாரிப்பு, புதியதொரு வீட்டின் வண்ணத்துக்கும் வடிவத்துக்கும் புதிய வீச்சை வழங்குகிறது.
மஹாகவியின் நாடகங்களும் முருகையனின் கடுழியமும், ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றின் செவ்வியல் நாடகங்கள் (Classics) 676ig insp6 Tib
மனவெளி கலையாற்றுக் குழுவினரின் இந்த மேடையேற்றம் இசை, நாடகம், மேடையமைப்பு என்பவற்றில் முற்றிலும் புதிதான ஒரு தன்மையைப் புதியதொரு வீட்டிற்கு வழங்குகிறது. - - -
பொதுவாகவே தமிழில் கவிதையில் எழுதப்படும் நாடகங்கள் குறைவு. எழுதப்படுவனவும் வாசிப்புக்காக எழுதப்படுவனவே அன்றி மேடைக்காக அல்ல. கோடை பற்றிய மஹாகவியின் குறிப்பே 'மேடைக்கோர் பா நாடகம்' என்பதுதான். நமது அன்றாட பேச்சு வழக்குக்கு நெருங்கியததாகவும், நடிப்புக்குரியதாகவும் அதே நேரம் யாப்பு எல்லைகளை மீறாததாகவும் கவிதை மொழியை நவீனப்படுத்தி உள்ளார் மஹாகவி
மஹாகவி மனித நம்பிக்கையைப் பாடுகிற நாடகாசிரியர் என்றால் இயூஜின் அயனெஸ்கோ (1912 - 1994) என்கிற உலகப் புகழ்பெற்ற பிரஞ்சு மொழி நாடகாசிரியர். மனிதர்களுடைய தனிமையையும் வெறுமையையும் நாடகமாக்கியவர். அபத்த நாடகங்கள் என்று குறிப்பிடப்படுகிற ஒரு சிறப்பான நாடக மரபின் முன்னோடிகளில் முதன்மையானவரான அயனெஸ்கோவின் நாடகங்கள் கூர்ந்த அவதானத்தையும் நிறைந்த சிந்தனையையும் கோருபவை. பல சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்குப் பதிலாகச் சடப் பொருட்களே சிறப்பிடம் பெறுகின்ற ஒரு தம்மையை அபத்த நாடகங்களில் நாம் காண முடியும் ஏற்கெனவே சாமுவேல் Gud,05sbpair Waiting for Godot 676ing 9 gig biTL55605áis கருக்கல் வழியும் காத்திருப்பும் என்று தமிழில் மேடையேற்றியிருக்கிற மனவெளி கலையாற்றுக் குழுவின்ர் அயனெஸ்கோவின் நாற்காலிகள்' என்கிற நாடகத்தை இம் முறை வழங்குகிறார்கள்.
புதிய நாடகங்களையும், நாடகமும் அரங்கியலும் என்கிற துறை சார்ந்து புதிய அனுபவங்களையும் நம்மவருக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்கிற மனவெளியின் நோக்கத்துக்கு இணங்க இந்த நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன.
கொண்டாட்டமும், களிப்பும், குதூகலமும் மட்டுமல்லாமல் சிந்தனையும், அனுபவமும், புதியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பும் கூட எங்களுக்குத் தேவை என்பதை நாங்கள் மறுபடியும் வலியுறுத்த வேண்டும்.

III J
• அபத்த நாடகங்கள் என்றால் என்ன?
அபத்தம் என்ற சொல், அர்த்தமற்றது, கேலிக்குரியது, முட்டாள் தனமானது என்ற கருத்திலேயே எங்கள் மத்தியில் பாவனையில் இருந்து வருகிறது. பொதுவாக நாங்கள் அனைவரும் உண்மை, யதார்த்தம் என்று ஏற்றுக் கொண்டிருக்கிறவற்றை ஒருவர் மறுக்கிற போது அது அபத்தம் என்று கருதப்படுவதே வழக்காக இருக்கிறது. ஆனால், நாடகத்தையும் அரங்கியலையும் பொறுத்தவரை அபத்தம் (Absurd/Absurdity) என்பது சற்று மாறுபட்ட, ஆழமான அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது.
வடிவத்திலும், இயல்பிலும் திட்டமிட்ட முறையில் ஒழுங்கையும் சமச்சீரையும் குலைப்பதன் மூலம் எமது அன்றாட வாழ்வு, சுற்றுச் சூழல், எமது பயங்கள், எமது உறவுகள் பற்றிய ஒரு விசாரணையைச் செய்யகின்றவையே அபத்த நாடகங்கள் எனலாம்.
இதுவரை நீங்கள் நாடகம் என்றால் இப்படித்தான் இருக்கும் அல்லது இருக்க வேண்டும் என்று வைத்திருக்கிற கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் முற்று முழுதாக மறந்து விடுங்கள் என்று அபத்த நாடகாசிரியர்கள் உங்களைக் கேட்டுக் கொள்வார்கள். மரபு சார்ந்த நாடகங்களுக்கு கதை, பாத்திரங்கள், கதையில் வருகிற உச்சக்கட்டம் பிறகு எல்லோருமே புரிந்து கொள்ளக் கூடிய ஒரு முடிவு என்று ஒரு திட்டவட்டமான அமைப்பும் ஒழுங்கும் இருக்கும். ஆனால் அபத்த நாடகங்களில் இந்த அமைப்பு இருக்காது. எனவே தான் அபத்த நாடகங்களைப் பார்க்க வருகிற பார்வையாளர்கள் தங்கள் மனதையும், சிந்தனையையும் திறந்து வைத்திருக்க வேண்டி இருக்கும்.
கதையும் ஒழுங்கான பாத்திரங்களும் சீரான மொழியும் முடிவும் இல்லாமல் ஒரு நாடகம் இருக்க முடியுமா?
முடியும். நாடகத்தில் பல வடிவங்கள், பல போக்குகள் உள்ளன. மகிழ்ச்சிக்காகவும், சிரிப்புக்காகவும், பொழுது போக்குக்காகவும் நாடகங்கள் இடம் பெறலாம். அதேபோல எங்களைச் சிந்திக்க வைப்பதற்காகவும் வாழ்க்கை பற்றிய எங்களுடைய மேலோட்டமான கருத்துக்களை விட்டுவிட்டுக் கொஞ்சம் ஆழமாக யோசிக்க வைப்பதாகவும் நாடகங்கள் இருக்கலாம். எங்களுக்கு மேலும் அறிவூட்டுவதாகவும் நாடகங்கள் இருக்கலாம்.
ஒரு மையக்கரு, அக்கருவைச் சுற்றிப் படர்கிற கதை, பின்னர் முடிவு என்கிற மாதிரியான திரைப்படங்களை நாம் ஏராளமாகப் பார்த்துப் பழகியிருக்கிறோம். பின்னர் திரைப்படங்கள் சில முடிவை உங்களிடமே தீர்மானிக்கும் படி விட்டு விட்ட போது ஆரம்பத்தில் அந்தப்படங்கள் புரியவில்லை என்ற கருத்து நிலவியது. பின்னர் நாம் அத்தகைய படங்களுக்குப் பழக்கப் பட்டு விட்டோம். அது போலத்தான் இந்த நாடகங்களும்.
மனவெளி கலையாற்றுக் குழு 9வது அரங்கடல்

Page 5
அபத்த நாடகங்கள் குழப்பமானவையாகவும்
விளங்காமலும் இருக்கும் என்று
சொல்கிறார்களே?
வாழ்க்கையில் குழப்பம், சஞ்சலமும் அவலமும் இருக்கிறபோது அது மேடையிலும் வரத்தான் செய்யும், ஏங்களுடைய வாழ்க்கையில் சந்தம் இல்லை என்றால் நாடகத்திலும் சந்தம் இல்லாத முறையில்தான் அந்த வாழ்க்கையைக் காட்ட முடியும் அபத்த நாடகங்கள், இரண்டாம் உலகப் போரின் பிற்பாடு, போரும் புலம்பெயர்வும், இழப்பும் மனிதகுலத்தின் மீது ஏற்படுத்திய பாதிப்புக்களால் எழுந்தவை. மனிதத்தின் மீது சந்தேகம், விரக்தி சொந்த வாழ்க்கையிலிருந்தே நாங்கள் அந்நியப்பட்டுப் போனமை, நம்பிக்கை இழப்பு, அரசியல் நிறுவனங்கள், மதங்கள் என்பனவற்றால் உறுதிப்படுத்தப் பட முடியாமல் போன நிம்மதியும் சமாதானமும் என ஏராளமான காரணங்களின் விளைவுதான் ஆபத்த நாடகங்கள் எனலாம்.
போர், முதுமை, அச்சம், துயரம், ஆதங்கம் போன்ற பல உணர்வு நிலைகளையும் அவற்றிற்குக் காரணமான சமூக, உளவியல் காரணங்களையும் பரிசீலனை செய்கிற இந்த நாடகங்கள் ஆழமானவை. எனவே உங்களுடைய பொறுமையையும் சீரிய கவனக் குவிவையும் அவை வேண்டி நிற்கின்றன.
* அபத்த நாடகங்களை யார் எழுதினார்கள்?
நாடகாசிரியர்களும், கலைஞர்களும் தாங்கள் படைக்கிறபோது இந்தப் பிரிப்பு முறைகளைத் தீர்மானிப்பதில்லை. அபத்த நாடகங்கள், காவிய நாடகங்கள் போன்ற பிரிவுகள் திறனாய்வாளர்களால் தான் உருவாக்கப்பட்டவை, இலக்கியத்துக்குப் பிறகுதான் இலக்கணம் வரமுடியும் அல்லவா? முக்கியமான அபத்த நாடகாசிரியர்கள் என்று இப்போது கருதப்படுகிற இயூஜீன் அயனெஸ்கோ, சாமுவேல் பெக்கற் ஜெனே, எட்வேர்ட் அல்பி, ஹரோல் பின்ரர் போன்றோர் வேறு வேறு சூழல்களில் எழுதிய நாடகங்களையே ஒரு பொது அடிப்படையில் அபத்த நாடகங்கள் என்று குறிப்பிடலாம். இத்தகைய அபத்த நாடகப் போக்கின் சில அம்சங்களை நமது கிராமப்புறக் கலை வடிவங்கள். தெருக்சுத்து என்பனவற்றிலும் நாம் இனங்கான முடியும் இந்த நாடகங்களின் வடிவம் சார்ந்தே அவை ஆபத்த நாடகங்கள் என்று பெரும்பாலும் வழங்கப் படுகின்றன.
" அபத்த நாடகங்களின் வடிவம் தான் என்ன?
வடிவங்கள் பற்றிய கேள்வியே எப்போதும் சிக்கலானது அபத்த நாடகங்களைப் பொறுத்த வரை, வடிவமற்ற வடிவம் அல்லது வடிவங்களுக்கு அப்பாலான வடிவங்கள் என அவற்றை எளிதில் கூறிவிட முடியும் அல்லது எதிர்நாடகங்கள் என்று கூட இவற்றைச் சொல்ல முடியும், ஆழ்மனதின் சிக்கல்கள், மனித உறவுகள் எமது அடி ஆழத்தில் கிளப்புகிற நுண்ணிய துயர அலைகள், நம்பிக்கை இழப்பு என்பவற்றைத் துல்லியமாக மேடையில் கொண்டுவர,
மண்வெளி கலையாற்றுக் குழு 9வது அரங்காடல்

சாதாரனமான மொழிப்பயன்பாடு போதாது. மொழியின் வரையறைகளுக்கு அப்பால் புதிய முறையில் இந்த நாடகங்கள் இயங்குகின்றன. அதனால்தான், பல சந்தர்ப்பங்களில் அபத்த நாடகங்கள் மொழியை விசித்திரமாகப் பாவிக்கின்றன; அல்லது மொழியைக் குழப்பி விடுகின்றன. கூடவே கதை, பாத்திரவார்ப்புகள் எல்லாவற்றையும் சிதைத்து விடுகின்றன. கதையின் அழிவு, மொழியின் சிதைவு, பாத்திரங்களின் அழிவு என்பனவெல்லாம் அபத்த நாடகங்களில் புதிய அனுபவங்களை எமக்குள் ஏற்படுத்த உதவி புரிகின்றன. இவை புதிய வடிவத்துக்கு எம்மை இட்டுச் செல்கின்றன. புதிய நாடக மொழியை உருவாக்குகின்றன.
அபத்த நாடகங்களை மேடையேற்றுவது கடினமான முயற்சியா?
மற்றைய நாடகங்களை மேடையேற்றுவதுடன் ஒப்பிடுகிறபோது அபத்த நாடகங்களை மேடையேற்றுவது மிகவும் கடினமான முயற்சிதான் மொழிக்கு அப்பால், அசாதாரணமான நடிப்பாற்றல், உடலசைவு சிக்கலான மேடைப்படிமங்கள் என அபத்த நாடகங்கள் நிறைய அம்சங்களைக் கோருகின்றன. வழமையாக அபத்த நாடகங்கள் சிறியவையாகவும் ஓரங்க நாடகங்களாகவுமே இருக்கும். எனினும் அயனஸ்கோவின் நாற்காலிகள் நீளமானது: ஆழமும் நுணுக்கமும் உணர்வுச் செறிவம் நிறைந்தது. பார்வையாளர்களிடமிருந்து மேலதிகமான கவனத்தைக் கோருவது உல்லாசத்தையும் களிப்பையும் மட்டுமே எதிர்பார்க்கிற ஒரு சுவைஞருக்கு மிகவும் சவாலானது.
பிரஞ்சு, ஆங்கிலம், ஜேர்மன் போன்ற மொழிகளில்கூட நாற்காலிகள் நாடகத்தை தயாரிப்பது என்பது பெரிய சவாலாகவே இப்போதும் கருதப்படுகிறது. தமிழில் நாற்காலிகள் மேடையேறுவது குறித்து நாங்கள் பெருமைப்படுவதற்கு TöÜsloss հllէllյելLITET நியாயப்பாடுகளும் உள்ளன

Page 6
நாற்காலிகள்
மேடையில்:
சபேசன் சுமதி ரூபன் குரும்பசிட்டி இ. இராசரத்தினம்
நினைவூட்டுகை; நந்தினி
தமிழாக்கம், நெறியாள்கை: P. விக்னேஸ்வரன்
புதியதொரு வீடு
மேடையில்: கே. எஸ். பாலச்சந்திரன் சுப்புலஷமி காசிநாதன் துஷ்யந் ஞானப்பிரகாசம் அனுஷியா ஜெயலிங்கம் சஜீபன் பூரீகிருஷ்ணராஜா சுகந்தன்
நடனம் கஜேந்தினி செல்வராஜா தர்ஷனி வரப்பிரகாசம் சிவா பிரான்சினி சிதம்பரம்பிள்ளை எலிசபெத் மாலினி சிதம்பரம்பிள்ளை சத்தியவரதன் தர்சன் ரீகிருஸ்ணராஜா பத்மசிகாமணி பாபு தியாகராஜா விஜயசீலன் சத்தியா தில்லைநாதன் கோபாலு பகீரதன் சத்தியகுமார் ஜெயபால் பிரஷாந்தி பத்மநாதன் கிங்ஸ்லி செபஸ்ரியாம்பிள்ளை துளசி மனோகரலிங்கம்
p5L607 960LDILI: ஆனந்தி சசிதரன்

பாடகர்கள் ஞான ஆனந்தன் வ. திவ்யராஜன்
சோம. சச்சிதானந்தன் சுரேஸ்குமார் சித்திராங்கி ஜெயக்குமாரி செழியன் சவிரிமுத்து மைக்கேல்தாஸ்
இசை நிர்வாகம்: வ. திவ்யராஜன்
மெட்டுகள்: ஞான ஆனந்தன்
ஆர்மோனியம்: சிவபாதம் .சி
தபேலா அனந்தகுமார் நடராஜா
கடம்: சிறிஸ்கந்தராஜா
மிருதங்கம்: சுஜிந்தர் தர்மலிங்கம்
வயலின்: விஜயலட்சுமி பூரினிவாசகம்
பின்னணிக் குரல்: அ. கந்தசாமி (கவிதை)
வேணி
இலக்கியா இனியா ஒவியா மானசன்
ஹரிஹரன்
சிந்துஜன்
நினைவூட்டுகை; நளின
நெறியாள்கை: செல்வன்
நெறியாள்கை மேற்பார்வை: கே. எஸ். பாலச்சந்திரன்
W மனவெளி கலையாற்றுக் குழு 9வது அரங்காடல்

Page 7
ஒலிச்சேர்க்கை: முல்லையூர் பாஸ்கரன்
ஒலிப்பதிவு: சங்கதி மியூசிக் அன்ட் கிராபிக்ஸ்
ஒளி வடிவமைப்பு: சிவம்
ஒலி வடிவமைப்பு:
கருணா
ஒலியமைப்பு உதவி: சுரேஸ்குமார் ஆறுமுகம்
மேடை வடிவமைப்பு: சிவம்
மேடை அமைப்பு உதவி: கு. மார்க்கு கமலன் (மார்க்வூட் கொன்ஸ்ரக்ஷன்ஸ்)
půl svost: பிலோமினா கிருஷ்ணபிள்ளை
ஒப்பனை உதவி: யோசபின் கிருஷ்ணபிள்ளை இளவேணி விநாயகமூர்த்தி விஜிதா ரீஸ்கந்தராஜா ஜெயந்தி சிவராஜா
ஒத்திகைக்கான இடங்கள்: றோயல் குயின் மண்டபம் விக்னேஸ்வரன்
சிற்றுண்டிகள்: குவாலிற்றி பிறட் பேக்கரி கே. எம். எஸ். இன்ரர்நஷனல் பேக்கரி
நிகழ்ச்சிக்கான உணவுகள்: சந்திராஸ் கேற்றறிங் பகீரதன் செல்வராஜா
Քե60ւ- 6VIգ67/60ւDմւյ: கெளசலா செல்வா
ஆடைகள்: சாமி அன்ட் சண்ஸ் நீலம் சில்க் என்.கே.எஸ். ட்ரப்பேர்ஸ்
மனவெளி கலையாற்றுக் குழு 9வது அரங்காடல்

பொருள் இடமாற்றம்: ராஜ் மூவிங் அன் டெலிவரி
கணினி வரைகலை: டிஜி வரைகலை அமையம்
விளம்பரம் அச்சு:
ஆர். ஜே. மல்ரி லித்தோ இங்க்.
புகைப்படம்: உதயன்
தொலைபேசி விளம்பரம்: தர்மராஜா நாகேஸ்வரி திருநாவுக்கரசு சுகந்தி உதயன்
நுழைவுச்சீட்டுகள்: நந்தினி
கணக்காளர் நளினா
ஊடகவியல் தொடர்பாளர்: செந்தில்
அரங்க உதவியாளர்கள்: சீலன் அமல் U6)16i ஜெயன் இளங்கோ தேவன் ராம்சுந்தர் அமிர்தசாகரன் சக்கரவர்த்தி கரன்
மேடை நிர்வாகம்:
சுகுணன் இரா. சிவரத்தினம்
அறிவிப்பாளர்: பவானி சத்தியசீலன்
வரவேற்பாளர்: கதிர். துரைசிங்கம்
அரங்க நிர்வாகம்: நாகமுத்து சாந்திநாதன்

Page 8
Naakaalika
The Chairs)
A play by Eugene lonesco Translated and Directed by: P Wickneswaran
Eugene lonesco's comic-absurdist play, The Chairs, is the story of an old couple that invites a large number of guests to symbolise humanity to whom it wants to reveal its life experience. The guests never arrive and are symbolised by the vacant chairs, but having convinced themselves the guests are present, the old man and the woman kill themselves, leaving the task of the revelation to an orator, who ironically is deaf-mute.
Cast: Sabesan, Sumathy Ruban, Kurumbasity Rajaratnam
Promter: Nanthini
Puhivahoru Veedu The House The Mayan Buil A play by Mahakavi
Directed by: Selvan Directorial Supervision by: K.S. Balachandran
losses and tragedies are part of human life and they only enrich humanity. This is the core message that Mahakavi espoused through his numerous works. In The House That Mayan Built, which is considered as a classic play by Tamils in Sri Lanka, Mahakavi brings out the value of hope through a family in a north Sri Lankan fishing community that loses everything, yet does not lose the hope and therefore is on its way to regain what it had lost.
Cast: K. S. Balachandran, Suppulakshmikasinathan, Dushyanth Gnanapragasam, Sajepan Srikrishnarajah
Anushiya Jeyalinkam, Suganthan

Dancers: Gajenthini Selvarajah, Tharsiny Warapragasam, Siva Pomniah, Francini Sthamparampilai, Elizabeth Sithamparampilai, Sathyavarathan, Tharsan Srikrishnarajah, P. Babu, T. Wijayaseelan Sathya Thillainathan, Pakeerathan Gopalu, Sathyakumar Jeyapal, Prashanthy Pathmanadan,
Kingsly Sebastiampillai, Thulasi Manoharalingam
Choreography: Ananthy Sasitharan
Chorus: Gnana Ananthan, W. Thiviyarajan, Soma. Satchithananthan, Sureshkumar Chithranki,
Jeyakumary, Chelian, S. Mickalethas
Music Coordinator: V. Thiviyarajan
Melodies:
Gnana Ananthan
Harmonium: S. Sivapatham Tabla: Anandakumar Nadarajah Gatam: Sriskantharaja Miridangam: Sujeenthar Tharmalingam Violin: Vijayaluxmy Srinivasagam
Background Voices: A. Kanthasamy(Poem), Verny, Elakiya, Iniya, Oviya,
Manasan, Hariharan, Sinthujan
Prompter: Nalina
Sound Effects & Editing: Mullaiyoor Baskaran Recording: Sankathy Music & Graphics
Light Design: Sivam Sound Design: Karuna Sound Assistant: Sureshkumar Arumugam
Stage Design: Sivam Design Assistants: S. Mark, Kamalan (Markwood Furniture)
Make-up: Flomina Krishnapillai,
Make-up Assistants: Josophin Krishnapillai, llaveni Vinayagamoorthy, Wijitha Sriskantharaja,
Jeyanthy Sivaraja
மண்வெளி கலையாற்றுக் குழு 9வது அரங்காடல்

Page 9
Rehearsal Space: Royal Queen Banquet Hall, Wickneswaran
Refreshments: Quality Bread Bakery, K.M.S. international Bakery
Catering: Chandras Catering Baheerathan Selvarajah
Costume Design: Gowsala Selva
Costumes: N.K.S. Drapers, Samy and Sons, Neelam Silk,
Movers: Raj Moving & Delivery Production Photographer: Uthayan
Tele Marketing: Tharmarajah, Nakeswary Thirunavukarasu, Suganthy Uthayan
Tickets: Nanthini Accounts: Nalina
Press Representative/Publicity: R. Senthilnathan
மனவெளி கலையாற்றுக் குழு இ
மனவெளியின் தயாரிப்புகள்
1. குறும்பா நிகழ்வு (புராந்தகன்) 2. வானம் தொடுகின்ற (வி. திவ்வியராஜன்) 3. மறையாத மறுபாதி
(அன்ரன் செக்கோவ் / ஞானம் லம்பேட்) 4. இரு துயரங்கள்
(அன்ரன் செக்கோவ்/நாகமுத்து சாந்திநாதன்) அபகரம் (முருகையன் / P விக்னேஸ்வரன்) விட்டு விடுதலையாகி (புராந்தகன்) கருக்கல் வெளியும் காத்திருப்பும் (சாமுவல் பெக்கற் / ஞானம் லம்பேட்) 8. தண்டனை (அ. ராமசாமி/ராஜன், செல்வன்) 9. சரளா (சுஜாதா / புராந்தகன்) 10. எல்லாப் பக்கமும் வாசல் (பா. அ. ஜயகரன்) 11. கண்ணிரின் மறுபக்கம் குருதி (சேரன்) 12 அன்னை இட்ட தீ
(குழந்தை சண்முகலிங்கம் / ஞான ஆனந்தன்) 13. யாழ்ப்பாணம் 84 (சபேசன்) 14. இன்னொன்று வெளி (பா. அ. ஜயகரன்) 15. மடியும் உண்மைகள் (ஜின் ஜெனே / ஞானம் லம்பேட்) 16. வெளியில் ஆடும் விளக்கு
(சேரன் / சங்கீதா திவ்வியராஜன்)
இதுவரை மனவெளி 29 நாடகங்கள் 53 தடை இந்த நாடகங்களி 200க்கும் அதிகமான நடிகர்கள், பின்ன
மண்வெளி கலையாற்றுக் ggup 9வது அரங்காடல்

Auditorium: Seelan, Amal, Bavan, Jeyan, Thevan, Ramsunthar, Amirthasagaran, Chakarawarthy, Haran, lango
Graphic Design: Digi Graphics & Studios Video Ad: SV Productions Flyer Printing: RJ Multi Litho Inc.
Drama Workshop Instructor: Glen Gaston Tom Raul (Children)
Stage Managers: Sugunan, Ira. Sivaratnam
Compere: Bhavan Sathyaseelan
Front Office: Kathir Thuraisingam
Program Manager: Nagamuthu Santhlnathan
துவரை மேடையேற்றிய நாடகங்கள்
17 வட்டத்தினுள் நீங்கள (மாலினி கிருபாகரன்) 18. போகாத வழி மீது
(பொன்னையா விவேகானந்தன்/நாகமுத்து சாந்தி நாதன்) 19. பெருங்கதையாடல் (செழியன் / புராந்தகன்) 20. இனி ஒரு எதிர்காலம் (P விக்னேஸ்வரன்) 21. அவன்.அவள் (சேரன் / க. நவம்) 22. இப்படிக்கு பிள்ளைகள் (நாகமுத்து சாந்திநாதன்) 23. வேருக்குள் பெய்யும் மழை (செழியன் / புராந்தகன்) 24. அந்தமும் ஆதியாகி (பிரேமிள் /இரா சிவரத்தினம்)
ஏனையவர்களின் தயாரிப்பில் மேடையேறியவை
லண்டன் அவைக்காற்றுக் கழகம் 25. முகமில்லாத மனிதர்கள் (பாதல் சர்க்கர் / பாலேந்திரா) 26. மன்னிக்கவும் (வஸ்லாவ் ஹவல் / பாலேந்திரா) 27 துன்பக் கேணியிலே (ஈழத்துக் கவிஞர்கள் / பாலேந்திரா) 28. ஆற்றைக் கடத்தல் (அம்பை/பாலேந்திரா)
ஏனையவர்கள்
28. காலம் (குருத்துக்கள் கலைக் குழு - சுவிஸ்)
(இரா. சிவரத்தினம்) 29. இன்டிகோ (சுதர்சன் துரையப்பா)
கலையாற்றுக் குழுவால் வை மேடையேற்றப்பட்டன. ல் 17 நெறியாளர்கள் னணிக் கலைஞர்கள் பங்காற்றியுள்ளனர்.

Page 10
எறிகின்ற கடலென்று மனிதர்கள் அஞ்சார், எது வந்ததெனின் என்ன அதை வென்று செல்வார்.
மீண்டும் ஒரு முறை கனடா வாழ் தமிழ் மக்களை மனவெளி கலையாற்றுக் குழு ஒன்பதாவது அரங்காடலினுாடு சந்திக்கின்றது. இம் முறை தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு அடையாளத்தைப் பதித்துவிட்ட மஹாகவி உருத்திரமூர்த்தியின் ஒரு நாடகமும், அபத்த நாடகத் தந்தை என்று கருதப்படும் இயூஜின் அயனெஸ்கோவின் ஒரு நாடகமும் மனவெளியால் தயாரிக்கப்பட்டு மேடையேறுகின்றன. வழமைபோல் இம் முறையும், அரங்காடல் எல்லா ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களையும் நிவர்த்தி செய்யும் என்று நம்புகின்றோம்.
மனவெளி கலையாற்றுக் குழு, தனது ஏழு வருடகால கலைப் பயணத்தில், இதுவரை 24 காத்திரமான கலைப் படைப்புக்களை கடந்த எட்டு அரங்காடல்களினூடாக உங்களுக்குத் தந்துள்ளது. ஒன்பதாவது அரங்காடலில் இடம்பெறும் மஹாகவியின் "புதியதொரு வீடு', இயுஜீன் அயனெஸ்கோவின் "நாற்காலிகள்” ஆகிய இரு பெரும் நாடகங்களோடு, படைப்புகளின் எண்ணிக்கையை 26 ஆக உயர்த்துகின்றது. படைப்புகளின் எண்ணிக்கையை மட்டுமின்றி, இன்று கனடாவில் சீரிய நாடக ரசிகர்களின் எண்ணிக்கையையும் மனவெளி கலையாற்றுக் குழு உயர்த்தியுள்ளது. 1996ம் ஆண்டு ஒரு சிறிய அரங்கான யோர்க்வூட் நூல்நிலைய அரங்கில், "விட்டு விடுதலையாகி’ என்ற நாடகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட மனவெளியின் நாடக முயற்சி, இன்று நவீன தொழில்நுட்ப வசதிகள் பொருந்திய நாடகங்களுக்கெனவே வடிவமைக்கப்பட்ட அரங்கான, “மார்க்கம் தியேட்டரில்' ஒன்று, இரண்டு காட்சிகள் என நடத்தி, இம் முறை மூன்று காட்சிகளை வெற்றிகரமாக நடத்தும் அளவுக்கு ஒரு சிறந்த, சீரிய நாடக ரசிகர் வட்டத்தைக் கனடாவில் உருவாக்கியுள்ளது.
கனடாவில் சிரிய நாடகங்களுக்கான அமைப்பொன்றின் தேவையை உணர்ந்து, அத் தேவையினைப் பூர்த்தி செய்யவே, மனவெளி கலையாற்றுக் குழுவானது தோற்றுவிக்கப்பட்டது. அன்றிலிருந்து, தனது அயராத முயற்சியால் ஒரு சீரிய நாடகக் குழுவாக பரிணமித்தது மட்டுமின்றி, கனடாவில் சீரிய நாடகங்களுக்கான ஒரு நல்ல சூழலையும் அது உருவாக்கியுள்ளது. தனது வளர்ச்சிப் பாதையில், தன்னுடன் சேர்த்து, பல நாடகக் கலைஞர்களையும், ஒலி ஒளி தொழில்நுட்பவியலாளர்களையும் மனவெளி உருவாக்கியுள்ளது. சிறந்த நாடகங்களை சீரிய முறையில் தயாரித்து வழங்குவது மட்டுமின்றி, புதிய நடிகர்களையும், நடிகைகளையும், நாடக ஆசிரியர்களையும், நெறியாளர்களையும் உருவாக்குவதில் மனவெளி கலையாற்றுக் குழுவானது மிகுந்த அக்கறை கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு அரங்காடல் நிகழ்விலும் ஏதோவொரு வகையில் புதியவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களை ஊக்குவித்து வருகின்றது.
இன்று கனடாவில் உருவாகியுள்ள சீரிய நாடகங்களுக்கான சூழலில், பல புதிய நாடகக் குழுக்கள் உருவாக வேண்டும் என்பதே மனவெளி. யின் ஆவலாகும். புதிய நாடகக் குழுக்கள் உருவாகி சிறந்த கலைப் படைப்புக்களை வழங்கும் பட்சத்தில், இப்போது உருவாகியிருக்கும் இந்தச் சிறு ரசிகர் வட்டம், பல மடங்குகளாகப் பெருகும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. ஆனால் இன்றுவரை ஒரு சில புதிய நாடக முயற்சிகளே எம்மிடையே தோன்றியுள்ளன. எனினும் இன்னும் பல புதிய நாடக முயற்சிகளை உருவாக்கும் நோக்குடன், மனவெளி கலையாற்றுக்குழு தொடர்ந்து புதிய நாடகக் கலைஞர்களை
 

உருவாக்குவதில் அயராது உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது. புதியவர்களுக்கு ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் ஏற்படுத்தும் வகையில் பல நாடகப் பயிற்சிக் களங்களை மனவெளி கலையாற்றுக் குழு நடாத்தி வருகின்றது. கடந்த வருடம், நாடகத் துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்த பயிற்றுனரைக் கொண்டு பத்துக்கும் மேற்பட்ட பயிற்சிக் களங்களை நடாத்தியுள்ளது. இந்த ஒன்பதாவது அரங்காடலிலும், சிறுவர் பராமரிப்பு நிலையத்தில், சிறுவர்களுக்கு நாடகத் துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்குடன், சிறார்களுக்கான நாடப் பயிற்சி ஒழுங்குகளை மனவெளி ஏற்பாடு செய்துள்ளது. இப் பயிற்சிகளினூடக எதிர்காலத்தில் தமிழ் நாடக உலகுக்கு சிறந்த கலைஞர்கள் உருவாகுவார்கள் என உறுதியாக நம்புகிறோம்.
இன்று உருவாகியிருக்கும் இந்த சிரிய ரசிகர் வட்டத்தை இன்னும் பெரிதாக்கும் நோக்குடன், மனவெளி கலையாற்றுக் குழு, அரங்காடலில் மட்டுமின்றி, வேறு பல கலைவிழாக்களிலும் நாடகங்களை நிகழ்த்தி வருகின்றது. கனடாவில் மட்டுமின்றி அமெரிக்காவிலும் மனவெளி நாடக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த வருடம் நியூஜேர்சியில் நடைபெற்ற ஒரு கலைவிழாவில், மனவெளியின் இரண்டு நாடகங்கள் வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். எதிர்காலத்தில், இன்னும் பல நாடுகளில் மனவெளி தனது நாடக முயற்சிகளை முன்னெடுக்க இருக்கின்றது.
மனவெளி முன்னெடுக்கும் ஒவ்வொரு விடயத்தையும் மிகவும் அக்கறையுடனும் சீரிய முறையிலுமே செயற்படுத்த விரும்புகிறது. உதாரணமாக, ஒரு நாடகம் அரங்காடலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, குறைந்தது ஆறு மாத காலத் தயாரிப்புக்குப் பின்னரே அது அரங்குக்கு வருகிறது. அது மட்டுமின்றி, நாடகங்களைத் தெரிவு செய்யும் போதும், அந் நாடகத்தின் மூலம் சமுகத்திற்கு என்ன செய்தி கிடைக்கப் போகின்றது என்பதில் மனவெளி மிகவும் கவனமாக இருந்து வருகின்றது. அத்துடன், நாடகங்களில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு, சிறந்த நட்புடன் கூடிய ஒரு குடும்பச் சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு மனவெளி எப்போதும் தவறியதில்லை. மனவெளி நாடகங்களில் பங்கேற்கும் கலைஞர்கள் அனைவருமே, நாடகக் கலையை மட்டுமின்றி, ஒரு வேலையை குழுவாகச் சேர்ந்து நேர்த்தியாகச் செய்வதற்கும் கற்றுக் கொள்கிறார்கள். எந்தவொரு சிறிய விடயமெனினும், மனவெளி அங்கத்தவர்கள் அனைவரும் சேர்ந்து, ஒருமித்த கருத்துடனேயே முடிவெடுக்கின்றனர். எதுவித இலாப நோக்கமும் இல்லாத, ஒரு சிறந்த நாடக அமைப்பை கட்டியெழுப்புவதில், மனவெளியின் அங்கத்தவர்கள் பெருமிதம் அடை. கின்றனர்.
தொடர்ந்தும் பல நாடகக் கலைஞர்களை இணைத்தும், புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்கியும், சீரிய நாடகங்களுக்கான சிறந்த சூழலை விரிவாக்கியபடி மனவெளி கலையாற்றுக் குழு தனது வளர்ச்சிப் பாதையில் உறுதியுடன் முன்னேறுகின்றது. மனவெளியின் இவ் வளர்ச்சிக்கு, நாடகக் கலைஞர்களின் பங்கேற்பை விட, பார்வையாளர்களின் ஊக்கமும், பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கனடாவாழ் தமிழ் வர்த்தகர்களின் உதவிகளும் பெரும் துணையாக இருந்து வந்திருக்கின்றன. அவர்கள் எல்லோருக்கும் இச் சந்தர்ப்பத்தில் மனவெளி தனது நன்றியைத் தொ. வித்துக் கொள்கின்றது.
- மனவெளி கலையாற்றுக் குழு
மண்வெளி கலையாற்றுக் குழு 9வது அரங்காடல்

Page 11
ஒன்பதாவது அரங்காட
Computeko
Established 1991 (416) 285-9941
š
தயாரிப்புகள் (416) 750-1976
QUALITY BREAD BAKERY
(416) 431-9829
சந்திராஸ் உணவகம்
(416) 264-3345
PRINTEK (416) 3
அரங்காடல் பற்றிய செய்திகளையும், வி TV CEYLON, CFMT stu Qg5Itsodeuss அலையோசை ஆகிய வானொலிகளுக்
முழக்கம், ஈழமுரசு ஆகிய பத்
மண்வெளி கலையாற்றுக் குழு 9வது அரங்காடல்

லுக்கு ஆதரவு தருவோர்
தரமான பாகம் தவறாத நேரம் தரமோ நிரந்தரம் (416). 299-5200
Kya6 Queil) Banquet qlal
(416) 264-8220
KMSINTERNATIONAI BAKERY
(416) 269-4217
NKS. DRAPERIESE BLINDS
(416) 321-6420
GRAPHICS 321-3794
lembugilssonenuqub Q66ílul- TVI, TBC, smo stassbässbub, СТВС, 456msofii, CTR, கும், விளம்பரம், உதயன், ஈழநாடு, நிகரி, திரிகைகளுக்கும் எமது நன்றி.

Page 12
СNANJAMA SU DOS
CELEBRATING OUR 3 HSUCCESSFULANNIVERSARY IN CANADA 2381 Eglinton Ave. E, Scarborough, ON
46-750-88
ఫళ్ల இசையரங்கம் வழங்கும்
স্বল্প : :::::::::: கதி
f
ஃ" இசைக்கு ஏது எல்லை4
l40 McLevin Ave.f5, Scarborough, ON Ml83Yl 416-297-9013
MANUJE JESU DASAN
Barrister, Solicitor & Notary Public 80 Corporate Drive, Suite 210, Scarborough, ON 46-444-8070
ME DA SI
 
 
 
 
 

(YA EPAGE
ivathasan, B. Sc. Eng. ge R.E.Svcs. Ltd., 4218 Lowrence Ave. Eust, West Hill
284-4751 (416) 804-3443
A MAAXX СЕ СПЈ. ГоМ Се) ". VG
COMPUTERIZED SERVICES WITH MODERNEQUIPMENT 185 Midwest Rd., Scarborough
46-285-8425
வெளிவருகிறது ஏப்ரல் 13 முதல் காலாண்டு சஞ்சிகை 46-282-80.59
4090 RIDGCUAYDR., Unit 18 Mississauga, ON
905-569-7883
PONSORS :
cBC
கீதவாணி