கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அ ஆ இ 1995.01

Page 1
Tijdschrift V
 

తā'&శ932
断
or Tamis in Nederland

Page 2
காலாண்டு இதழ்
சுவடு 19 தை 1995
வெளியீடு இலங்கைக் கலாச்சாரக் குழு
A AA E Post bus 85326 3508 AH Utrecht Nederland
LIL 5.56if காசிஆனந்தன் கதைகள்
a 6fc7
1. 1066.67
ராஜேஸ்வரி
2. பலெங்கிர்தரசு
தேவா ஹேராண்ட்
分 ջ մiմս
இளைய அப்துல்லாஹர்
4 தொலைதல்
ரவிவர்மனி
5. பிரேரணைகள்
புதியஜனநாயகக்கட்சி
6. மர்ைக்காடுகளும் முள்முடிகளும்
7. பூக்களின் வாசம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இலங்கையில் சந்திரிகா அரசும் விடுதலைப் புலிகளும் பேசுவதற்கான ஒரு நல்ல குழல் இருதரப்பினரிடையேயும் காணப்படுவது பொதுமக்கள் மத்தியில் கொஞ்சம் நிம்மதியைத் தருகின்ற சம்பவம்தான். இந்த நிம்மதியை மக்கள் மத்தில் தொடர வைக்க வேண்டிய பொறுப்பு இந்த இருதரப்பினரிடம் மட்டுமல்லாது ஏனைய ஆயுதம் தாங்கிய குழுக்களிடமும் அரசியல் அமைப்புக் களிடமும் இருக்கவேண்டியது இன்று மிக முக்கிய விடையமாகும். பேசுகின்ற இருதரப்பினரும் மீண்டும் யுத்தத்துக்கான தயாரிப்பாக இக்காலங்களைக் கடத் தாமல் தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு ஏற்றவாறு பேசித் தீர்கக்கூடியவைகளை பேசித்தீர்ப்பது முற்றி லும் நல்லது. பேசித்தீர்ப்பதும்கூட எம் உரிமை களை வென்றெடுக்கின்ற ஒரு முக்கிய கட்டம்தான்.
ஈழத்திலும்சரி , முழுஇலங்கையிலும்சரி சாதாரண பொதுமக்களது வாழ்க்கை மிகவும் அவலமானது. முந்திய யு.என்.பி அரசின் இனஅழிப்புப்போராலும் பொருளாதாரச் சுமைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்தான். அதன் பிரதிபலிப்புத்தான் சந்திரிகா வின் வருகை. சந்திரிகா எதையும் சாதிப்பாரா என்பதும் பொறுத்துப் பார்க்கவேண்டிய விடையம் தான். வடக்குக்கிழக்குப் பிரதேசத்தில் நிலமை முற்றிலும்வேறானது. விவசாயம், மீன்பிடி, வர்த்தகம், அலுவலகசேவைகள். தொழிற்சாலை வேலையாட்கள், அன்றாடக்கூலி உழைப்பாளர் போன்றவர்களில் அறுபதுக்கும் அதிகமான விதத்தினர் அவற்றைத் தொடரமுடியாத நிலையிலுள்ளனர். மீன்பிடிப்படகுகள்,

Page 3
போக்குவரத்துச்சாதனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகக்கட்டிடங்கள், பாடசாலைகள் சேதமாக் கப்பட்டுள்ளதும், நல்ல செம்மண் வயல் நிலங் களையும், கரையோரப் பகுதிகளையும் விட்டு வெளியேறியும் விட்டனர். சிறுவர்களுக்கான கல்வி வசதிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிருப்பதும் கண்கூடு. தற்போதும்கூட குடாநாடு வன்னியில் உற்பத்தி செய்யப்படும் பெருட்களையும் கொழும்புக் கப்பல்களையும் நம்பியே இருக்கவேண்டுமென்று "யுத்தத்தினால் சிதையுண்ட யாழ்மாவட்டதின் சமூகபொருளாதார நிலமைகள்" என்ற பிரசுரம் குறிப்பிடுகிறது. மேலும் எரிபொருள் இல்லாமையும் போக்குவரத்துச் சேவை மிகக்குறைவாக உள்ளதும் பொதுமக்கள் துவிச்சக்கர வண்டிகளையே பயன் படுத்துவதையும் அப்பிரசுரம் குறிப்பிடுகிறது.
முடிவாக இலங்கையில் தமிழ், முள்லிம், மலைய கத்தமிழ், சிங்கள், ஏனைய சிறுபான்மை மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அங்கீகரித்து வாழக்கூடியதான குழலை எதிர்பார்த்து அதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியகுழு
 

O
d Zܝ ܗ . ؟ O 0. கொட்டுங்கள் سوسیالات
மந்திரங்கள் சொல்லுங்கள் பெட்டை மாட்டைக் கொண்டு வந்து தாலி ஒன்று கட்டுங்கள்"
அவளின் சிரிப்பு குழந்தைத்தனமாகத் தெரிந்தாலும் முகத்தில் ஒன்றும் குழந்தைத்தனம் தெரியவில்லை.
மாமியார் தர்மசங்கடத்துடன் அவளைப்பார்த்தாள். மாமிக்கு வயது எழுபதாகிப்போகிறது. அவளுக்கு- அதுதான் கிழவியின் மருமகளுக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம்.
மாமிக்குப் பெயர் திருமதி.திருச்சிற்றம்பலம். அவளுக்கு என்று ஒரு பெயர் எப்போதோ இருந்திருக்கலாம், ஆனால் ஊருக்கும் உலகத்துக்கும் அந்தக் கிழவி திருமதி.திருச்சிற்றம்பலம்தான்.
மருமகளுக்குப் பெயருண்டு. மஞ்சுளா என்று பெயர். மஞ்சளும்

Page 4
குங்குமமுமாகத் திருமதி.திருச்சிற்றம்பலத்தின் மருமகளாக வந்தவள்.
"பெண்மை என்று பேசுங்கள்
தாய்மை என்று முழங்குங்கள் தாலி கட்டி முடியவிட்டு போலியாக வாழுங்கள்"
"மஞ்சுளா சும்மா இரு" மாமியார் கடுமையாகச் சொன்னாள். மாமியாரின் வாரிக்கட்டிய கொண்டையை மருமகள் தட்டிவிட்டுச் சிரித்தாள்.
மாமியும் மருமகளும் காரில் இருக்கிறார்கள். கார் லண்டனில் ஒரு நெருக்கமான றோட்டில் போய்க்கொண்டிருக்கிறது. மஞ்சுளா கொஞ்ச நாளாக"ஒருமாதிரி இருந்தாள்.
கலியாணமாகிப் பத்து வருடமாகிறது. மஞ்சுளா எப்போதும் ஒரு 'மாதிரியாகத்தான் இருப்பாள். அதைப்பற்றி ஒருத்தரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
கட்டிய கணவன் தாலிகட்டிய கையோடு லண்டனுக்கு வந்ததிலிருந்து மஞ்சுளா 'ஒருமாதிரித்தான்" இருந்தாள். ஆனாலும் அதை ஒருத்தரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கார் ஒரு சிவப்பு லைட் சந்தியிலே நின்றது. வாழ்க்கை, பிரயாணம், சந்திப்புகள், சந்திகள், இப்படி லைட்டுகள்!
"மேடை ஒன்று கட்டுங்கள் மேளம் ஒன்று தட்டுங்கள் தாளம் போட்ட நடையைக் கட்டி சங்கிலிகள் பிணையுங்கள்
மஞ்சுளா இப்போது முணுமுணுத்தாள். மாமியார் பேசுவாள் என்பதை உணரும் நிலையில் அவள் இருந்தாளோ இல்லையோ அவள் இயக்க: AV
 

மெளனமாக முணுமுணுத்தாள்.
காரை ஓட்டி வந்தவன் கிழவியின் சொந்தக்காரப்பையன். கிழவி மறைக்க வைக்கும் உண்மையை எப்போதோ உணர்ந்து கொண்டவன். அவனுக்கு இப்போது முப்பது வயதாகிறது. இருபது வயதில் அவன் திருமதி. திருச்சிற்றம்பலம் வீட்டருகிற்தான் கொழும்பில் வசித்து வந்தான்
கொழும்பில் தனியார் கொம்பனி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த மஞ்சுளா அக்காவையும் சாடையாகத் தெரியும். அவளுக்கு லண்டனிலிருந்து மாப்பிள்ளை வந்ததும் தெரியும்.
அதன்பின் கல்யாணமாகி இரண்டு வருடம் வரை ஏன் மஞ்சுளா அக்கா லண்டனுக்குப் போகவில்லை என்று அவனுக்குத் தெரியாது. 83ம் ஆண்டுக் கலவரம் தொடங்கமுதல் கொழும்பில் அமைதியான வாழ்க்கை தொடர்ந்த காலத்தில் வாழ்வின் முன்னேற்றத்தைத் தேடியலைந்த தமிழ் இளைஞர்களில் அவனும் ஒருத்தன்.
கிழ விக்கு மூன்று மகன்கள் . மூவரும் அப்போது வெளிநாட்டிலிருந்தார்கள். முதல் மகன் சிங்களப் பெண் ஒருத்தியைச் செய்தபின் திருமதி.திருச்சிற்றம்பலம் அடுத்த மகனும் அப்படி ஏதும் செய்து தொலைக்க முதல் உடனடியாக ஒரு தமிழ்ப்பெண்ணைச் செய்து வைத்தாள். கிழவியின் கணவர் இறந்து இரண்டு மூன்று வருடங்களின் பின்னும் கடைசி மகனின் கலியாணம் நடக்கவில்லையே என்று தெரிந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்ததும் இந்த இளைஞன் கேள்விப்பட்டிருக்கிறான்.
அந்தக் காலத்தில் மஞ்சுளா அக்கா மிகவும் அடக்கமான பெண்ணாக - வீணை பழகி, கோயிலுக்குப் போய், விரதங்கள் பிடித்து, சீதணம் சேர்த்து ஒரு நல்ல மாப்பிள்ளைக்குக் காத்துக் கொண்டிருந்தாள்.
"டொக்டர் என்ன சொல்வாளோ தெரியாது" கிழவி யாருக்குச் சொல்கிறாள் என்று தெரியாது.

Page 5
மஞ்சுளாவுக்குக் கிழவி சொல்வது புரியுமோ இல்லையோ என்றும் அவனுக்குத் தெரியாது.
"உலகம் என்ன சொல்லும்" கிழவி பெருமூச்சு விட்டாள்.
9-65DT
அவன் கண்ணாடியில் கிழவியைப் பார்த்தான். அவனுக்கு நல்ல ஞாபகமிருக்கிறது கிழவியின் நாடகம்.
"இந்தப் பையன் லண்டனில் என்ன கூத்து ஆடுறானோ தெரியாது" இப்படித்தான் கிழவி அவனின் தகப்பனிடம் வந்து சொன்னதாக ஞாபகம்.
அவனின் தகப்பன் கிழவியின் துாரத்துச் சொந்தம். இரண்டு பையன்களும் கல்யாணமாகிய ஒரு சில வருடங்களிலேயே குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார்கள்.
கடைசி மகனைப்பற்றி ஏதோ பேச்செல்லாம் அடிபடுவதாகக் கேள்விப்பட்டதும் கிழவி துடி துடித்தது இவனுக்கு ஞாபகமில்லையா
என்ன?
"எந்தத் தேவடியாள் வலையில் விழப்போகிறானோ தெரியாது" கிழவி கோபத்தில் வார்த்தைகளை வெடித்ததை இவனின் அம்மா மிகவும் தர்ம சங்கடத்துடன் சகித்துக்கொண்டாள்.
"ஏன் லண்டனில் யாரும் கேர்ள் பிரண்ட் இருக்கினமா" இவனின் அம்மா கிழவியை மெல்லமாகக் கேட்டாள். கொழும்பில் லண்டன் மாப்பிள்ளைக்கு நல்ல விலை, மஞ்சுளா மாதிரி எத்தனையோ பேரின் குடும்பம் உள்ளதெல்லாவற்றையும் கொடுத்து ஒரு லண்டன் மாப்பிள்ளை எடுக்கத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
காலத்துக்குக் காலம் கத்தரிக்காய்களுக்கும், ஆட்டுக்கும்
 

மாட் டு க்கும் வி ைலயே றுவது போல் ஆண் களுக்கும் விலையேறிக்கொண்டிருந்தது.
மஞ்சுளா ஒரு சாதாரண பெண். சுமாரான தோற்றம், அருமையான குரல், கதை கவிதைகளில் மிக மிக ஈடுபாடு. வீணையோடு தானிணைந்து தெய்வீக குரலில் பாடுவாள்.
வெள்ளவத்தைக் கடற்கரையில் சிலவேளையில் தன் அக்காவின் குழந்தைகளுடன் காற்றும் வாங்கும்போது இவன் சந்திப்பான். இவன் அப்போது விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தான். கிழவி வீட்டுக்கு வருவதும் மகனுக்குக் கல்யாணம் பேசிக் கொண்டிருந்ததும் இவனுக்குத் தெரியும்.
கிழவியின் மகன் திடீரென்று கொழும்புக்கு வந்ததும் மஞ்சுளா அக்கா வுக் குக் கல்யாணம் நடந்ததும் ஏதோ கனவில் நடந்ததுபோலிருக்கிறது.
தான் இறக்கும் தறுவாயிலிருப்பதாகவும் மகனை உடனடியாக வரும்படியாகச் சொல்லி தந்தியடித்ததாகவும் மகன் வந்தவுடன் தான் பார்த்து வைத்திருந்த பெண்ணைக் கல்யாணம் செய்யாமற் திரும்பிப் போனால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கிழவி பயமுறுத்தியதாகவும் இவன் கேள்விப் பட்டான்.
எதையும் கண்ணிராலும் கட்டளைகளாலும் நிறைவேற்றச் சில பெண்கள் தயங்கமாட்டார்கள் என்று இவன் அப்போதுதான் அறிந்து கொண்டான்.
கார் இன்னொரு ட்ரவிக் லைட்டின் சிவப்புலைட்டில் ஸ்தம்பித்து நின்றது. லண்டன் முழுவதும் கார்கள். கார்களிலிருந்து புகை. கண்களைக் கசக்கும் குழந்தைகள்.
அவன் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மஞ்சுளா அக்கா ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தாள். அவள் நீலக் கடலைக்

Page 6
கற்பனை செய்வாளா? நிலவுடைந்து பிரதிபலிக்கும் கடலலைகள் அவள் கற்பனையில் விரியுமா? பசும் தரையும் பாய்ந்தோடும் நதிக்கரையும் அவள் பார்வைக்குத் தெரியுமா?
மஞ்சுளா அக்காவின் பார்வை பரபரப்பானது. விளக்கமில்லாத, கலவரமடைந்த கண்கள்.
கலவரமடைந்த கண்களா?
அவன் காரைச் செலுத்தினான். குடும்பத்துக்குள் உறவுகளுக்குள் மறைத்து வைக் கப்பட வேண்டிய ரகசியங்களை அவன் பகிரங்கப்படுத்தலாமா?
மஞ்சுளா அக்கா கல்யாணமாகியும் இரண்டுவருடங்கள் கொழும்பிலிருந்தாள். 83ம் கலவரத்தில் சிங்களப்பேரினவாதிகள் தமிழர்களை மிருகவேட்டையாடியபோது ஒடிய தமிழர்களில் கிழவியும் ஒருத்தி, மருமகளும் மாமியும் ஒரேயடியாக லண்டனுக்கு வந்து சேர்ந்தார்கள். இவனும் வந்து சேர்ந்தான்.
மஞ்சுளாவின் கணவர் வேறு யாரோ பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருந்ததை மஞ்சுளா எப்படித் தாங்கியிருப்பாள் என்று அவனுக்குத் தெரியாது.
சிங்கள இனவாதம் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களின் பெண்மையைப் பலி கொண்டது, அவர்கள் அந்தக் கொடுமையை என்னென்று தாங்கியிருப்பார்கள்?
மஞ்சுளா அக்கா லண்டனுக்கு வந்தும் பழையமாதிரியே கோயிலுக்கும் பிரார்த்தனைகளுக்கும் போய் வந்து கொண்டிருந்தாள்.
"கோயிலுக்குள் வெறும் சிலைகள் கோபுரத்தில் பெண் சிலைகள் பெரியவர்கள் தர்மவான்கள் பெண்களெல்லாம் பலியாடுகள்." மஞ்சுளா அக்கா சத்தம் போட்டுச் சிரித்தாள்.
 

அவன் சந்தியில் திரும்பினான்.
கிழவி தன் மருமகளை ஒரு மனோவைத்திய டொக்டரிடம் கொண்டுபோவதாகச் சொன்னாள்.
"இந்தப் பெண் கண்டபாட்டுக்குப் பாடத் தொடங்கிவிட்டாளே” கிழவி பெருமூச்சு விட்டாள். ஆண்கள் பாட வெளிக்கிட்டால் அறிஞர்களாகிவிடுவார்கள், பெண்கள் பாடத்தொடங்கினால் பைத்தியப் UL'LUDIT?
மஞ்சுளா அக்கா பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் அவளைத் தொட்டுத் தாலிகட்டிய கணவனிடம் ஏறவில்லை. விவாகரத்து முயற்சிகள் மிகவும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது மஞ்சுளாவில் பெரிய அக்கறையாய் ஒரு மாமா முதலைக் கண்ணிர் வடித்தாரே!
"பட்டங்கள் படிப்புக்கள் சட்டங்கள் சம்பிரதாயங்கள் ஆணினத்தின் சொத்துக்கள் அவர்கள் தொட்ட பெண்களெல்லாம் குரங்கு தொட்ட பூமாலைகள்"
கிழவியின் சொந்தக்கார 'மாமா' மிகவும் பக்திமான். சத்தியபாபா பிரார்த்தனையை மிகப் பக்தியுடன் செய்பவர்.
இவர்களெல்லாம்:
"குட்டியாடு நனைந்ததென்று
குமிறியழும் ஒனாய்கள்"
போனவருடம் மஞ்சுளா அக்காவிற்கு என்ன நடந்தது? அவன் காரை நிறுத்தினான்.
லண்டன் மத்தியில் ஏதோ ஒரு இடம். கூட்டம் நிரம்பி வழிகிறது. வீடற்ற ஒரு சிலர் வீதியருகில் படுத்திருக்கிறார்கள். ரோட்டெல்லாம் மாளிகை போன்ற கார்கள், குழந்தையுடன் கையேந்திப் பிச்சை எடுக்கும் சில ஆங்கிலப் பெண்கள். ஒரு நிமிடத்து ஓராயிரம் ஸ்ரேலிங் பவுண்களை ஊதியமாகப் பெறும் ஒய்யாரிகள்.

Page 7
பெண்கள்,பெண்கள்.
மஞ்சுளா அக்கா ஏதோ தனக்குத்தானே சொல்லிச் சிரித்துக் கொண்டாள்.
கிழவி போன வருடம சுகமில்லாமல் ஆஸ்பத்திரியிற் தங்கவேண்டி வந்தது. மஞ்சுளா அக்கா அதன் பின் தானே'ஒருமாதிரி யாக மாறிப்போனாள்
பூட்டிவைத்த பெட்டகத்து நகைகளை வீட்டு விருந்தாளியாக வந்தவன் விளையாடிப் போய்விட்டானா?
பத்து வருட வாழாவெட்டித்தனத்துள்ளும் தன்னைக் காத்துக்கொண்ட பெண்மையை காட்டு மிருகமொன்று களவாடி விட்டதா?
கிழவி உடல் சுகமாகி வீடு வந்தாள். மருமகள் மனமுடைந்து மூலையிலிருந்தாள்.
மனம் மட்டும்தானா? மஞ்சுளா உலகை வெறித்துப் பார்த்தாள். "விவாகரத்தால் மிகவும் கலங்கிப்"போயிருப்பதாகக் கிழவி ஊரெல்லாம் சொல்லி ஒப்பாரி வைத்தாள். மஞ்சுளா அக்கா தற்கொலை செய்து கொள்ள முயன்றதும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் விவாகரத்தால் வந்த வினை என்று கிழவி ஒப்பாரி வைத்தாள்.
நல்லதோர் வீணையொன்று நாசமாகிவிட்டதை விதியின் தவறிற் துாக்கிப் போட்டாள் கிழவி. மஞ்சுளாவின் தமக்கை தலையிலடித்துக் கொண்டாள். கடவுளை நொந்தாள். தங்கைக்குத் தாலிப் பாக்கியமில்லை என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள்.
'மாமா' விருந்தாளியாய் வந்தபோதெல்லாம் மஞ்சுளா அக்கா வெறி வந்தமாதிரி வீரிட்டுக் கத்தியதை மற்றவர்கள் வேறு விதமாக எடுத்துக் கொண்டார்கள்.
 

கணவரில் உள்ள கோபத்தில் உலகத்து ஆண்களை எல்லாம் மஞ்சுளா திட்டுவதாகக் கிழவி அழுதாள்.
ஆண்களிடம் "மனிதமெங்கே? அவர்கள் என்ன மிருகங்களா? மஞ்சுளாவுக்குக் கேள்வி கேட்கத் தெரியவில்லை.
அமைதியான அவள் சுபாவமெங்கே? அடக்கமான பாவமெங்கே? தெய்வீக ஒலி எழுப்பும் அந்த இனிய குரலுக்கு என்ன தடந்தது?.
'மாமா மஞ்சுளாவில் மிக மிகப் பரிதாபப்பட்டார். அளவுக்கு மீறிப் பெருத்த தன் மனைவியுடனும் அழகிய இரண்டு பெண்களுடனும் மிகத்துக்கப்பட்டுக் கொண்டார்.
அவன் டொக்டர்சேர்ஜறிக்கு முன் காரை நிறுத்தினான். மஞ்சுளா அக்கா இறங்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துச் சத்தம் போட்டதை ஒரு சிலர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டார்கள். லண்டனில் ஏராளமான ஆசியப் பெண்களுக்குப் பைத்தியம் வருகிறது. அவர்களில் மஞ்சுளாவும் ஒருத்தி என்று சொல்லப்படலாம்.
"அவள் எழும்பி ஓடினாலும்.நீயும் உள்ளே வாயேன்" கிழவி இவனைப்பார்த்துக் கேட்டாள்.
"டொக்டர் சரியாகப் பார்த்துக் கொள்வாள்தானே" அவன் வேண்டா வெறுப்பாச் சொன்னான்.
நீண்ட நேரமாக அவர்கள் வரவில்லை. டொக்டர் என்ன சொல்லிக் கொண்டிருப்பாள். மஞ்சுளா அக்காவைப் பயித்தியக்கார ஆஸ்ப்பத்திரியில்
வைத்திருக்கவேண்டும் என்று சொல்லியிருப்பாளா?
அவன் களைப்புடன் தலையைச் சாய்த்துக்கொண்டான்.
அவனுக்குக் கல்யாணம் பேசுகிறார்கள். நிறையச் சீதனம்

Page 8
கழித்துக் கொண்டிருக்கிறாள்.
இவனுக்கும் ஒரு காலத்தில் ஒரு 'மஞ்சுளா வருவாள். இவனும் ஒரு நாளைக்குத் தாளம் போட்ட நடையை ஒரு சங்கலிக்குள் பிணைப்பானா? இசை பதித்த இதழ்களில் விஷம் எடுத்துப் பூசுவானா?
மஞ்சுளா வெளியில் வருகிறாள். பெரிய அட்டகாசமான சிரிப்பு. ஆண்டவனே நீயெங்கே
« о ф о « и ஆழ்கடலில் அமிழ்ந்தாயோ
so பெண்மை துடிப்பதெல்லாம்
во в е в * பூகம்பமாய் வெடிக்காதோ
மஞ்சுளா சிரிக்கிறாள்.
அது என் பாட்டனாரின் சொந்தக்கிராமம், அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நார் உரிக்கும் தொழிலிலேயே அடங்கிருந்தது. பலதலைமுறைகளாக அவர்கள் நார் உரிப்பினால் வரும் துாசியை சுவாசித்தனர். அதன் மூலம் அவர்கள் தங்களையே கொன்று கொண்டனர். பொறுமையான மகிழ்ச்சியான அவர்கள் ஆட்டுப்பால் கொழுப்புக்களை உண்டனர். உருளைக்கிழங்குகளும் சாப்பிட்டனர். இவர்களுக்கு சிலவேளைகளில் முயல் இறைச்சியும் கிடைத்தது. மாலை வேளைகளிலேயே தங்களை ஆறுதல்படுத்திக்கொண்டனர். அவர்கள் தங்கள் சிறிய வீடுகளிலிருந்து 'ஸ் வெட்டர்கள் பின்னினர். பாட்டுப்பாடினர், தேனீர் அருந்தினர், சந்தோஷமாய் வாழ்ந்தனர். நாள்முழுவதும் அவர்கள் நார் உரிக்கும் தொழிற்சாலையில் உள்ள பழைய இயந்திரங்களிலே வேலை செய்தனர். தணலாய் தகிக்கும்
 
 

அந்த அடுப்புக்களிலிருந்து வெளிக்கிளம்பிய துாசியை அவர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி சுவாசித்தனர். அவர்களது சிறிய வீடுகளில் நிமிர்த்திவைத்தால் அலுமாரி போன்றிருக்கும் படுக்கை இருந்தது. அதில் பெற்றோர்கள் படுத்தனர். பிள்ளைகள் மூலையில் போடப்பட்டிருந்த வாங்குகளிலே நித்திரை கொண்டனர். காலை நேரங்களிலே இவர்களின் வீடுகளில் தீய்ந்த குப்பின் மணம் இருக்கும்.
ஞாயிறுகளில் விசேடமான களியைச் சாப்பிடுவர். இந்தக்களியைக்

Page 9
காணும் பிள்ளைகளின் முகம் சந்தோஷத்தில் சிவக்கும். விழா நாட்களில் தாய்மார்கள் கடும் கோப்பியில் பால் கலந்து எல்லோருக்கும் பரிமாறுவர்.
பெற்றோர் அதிகாலையிலே வேலைக்குப் போய்விடுவர். பிள்ளைகள் வீட்டு வேலைகளைப் பாரமெடுப்பர். அவர்கள் வீடுகளைக் கூட்டி துப்புரவாக்குவர். பரவிக்கிடக்கும் சாமான்களை ஒதுக்கிவைப்பர், சமையல் பாத்திரங்களை கழுவுவர். உருளைக்கிழங்குகளை உரித்து வைப்பர். இவைகள் அவர்களின் விலைமதிப்பான மஞ்சள் கிழங்குகள். இவைகளை இவர்கள் உரிக்கும்போது அதன்தோலை மெல்லிசாகச் சீவுவதன்மூலம் "வீணாக்கிவிட்டனர்" என்ற சந்தேகம் எழாதபடி பார்த்துக்கொள்வர். இவர்கள் பாடசாலையிலிருந்து திரும்பியதும் காடுகளுக்குச்செல்வர். பருவகாலங்களைப் பொறுத்து பிள்ளைகளின் தேடுதலும் அமையும். இலையுதிர்காலங்களிலே காளான்களை தேடவேண்டும். கோடைகாலங்களில் சீரகம், மருந்துக்கீரைகள் போன்றவற்றையும், வயல்களில் அறுவடைக்காலங்கள் முடிந்ததும் அங்கே காய்ந்த பூக்களையும் சேர்ப்பர். ஒரு கிலோ காய்ந்த பூக்களுக்கு இவர்களுக்குக் கிடைக்கும் பணம் ஒடி பெனிக். இப்பூக்கள் நகரில் உள்ள மருந்துக்கடைகளில் நரம்புத் தளர்ச்சியானவர்களுக்கு கிலோ இருபது பெனிக் என விற்கப்படும். இலையுதிர்காலங்களில் சிறுவர்கள் அடர்த்தியான காடுகளுக்குச்செல்வர். காளான்கள் முளைக்கும் பகுதிகளிலே ஒவ்வொருவருக்குரிய பகுதியும் தீர்மானிக்கப்பட்டிருக்கும். அக்காடுகள் பலெக் குடும்பத்துக்குச் சொந்தமானவை. நார் உரிக்கும் தொழிற்சாலையும் அவர்களுடையதே. அந்தக் கிராமத்தில் அவர்களுக்குச்சொந்தமாக ஒரு சிறிய அரண்மனையும் இருந்தது. குடும்பத்தலைவர்களின் பெண்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மாட்டுப்பண்ணையும் ஒரு சிறிய வீடும் இருந்தது. அங்கே சிறுவர்கள் சேர்த்தவைகள் நிறுக்கப்பட்டு பணம் தரப்படும். அங்கிருந்த மேசையின் மேலே பலெக் குடும்பத்துக்குச் சொந்தமான பெரிய தராசு வைக்கப்பட்டிருந்தது. அது மிகப் புராதனமானது. தங்கக்குற்றி பதிக்கப்பட்டது. இதன் முன்னால்தான் என் பாட்டனார் பலதடவைகள் நின்றிருந்தார். கூடையில் நிறைந்திருந்த காளான்களோடும், பேப்பர்பையில் நிறைந்திருந்த காய்ந்த பூக்களோடும் அழுக்கான

கரங்களோடும் நின்றிருந்த சிறுவர்கள், பலெக்கின் மனைவி தராசு தட்டில் தாங்கள் சேர்த்தவைகளை நிறுக்கும்போது ஆர்வத்தோடு பார்த்தனர். அந்தத்தராசின் எடைகாட்டி கறுப்புக்கோட்டில், நிற்கும் அதுவே சரியானது. நீதியானது. அது ஒவ்வொரு வருடமும் செம்மைப்படுத்தப்படும். பலெக்கின் மனைவி சிறுவர்களின் சேர்ப்புக்களை நிறுத்தபின் தோலாலான தடிப்பான புத்தகத்தை எடுத்து நிறுவைகளைக் குறிப்பாள். சிறிய பணக்குற்றிகளையும், அல்லது பெரிய பணக்குற்றிகளையும் அவள் அவர்களுக்குத்தருவாள். ஆனால் பெரியமார்க்குற்றிகளை அவள் தருவது மிக அருமை. எனது பாட்டனார் சிறுவனாய் இருந்த அந்தக்காலத்தில் அங்கே ஒரு போத்தல் நிறைய புளிப்பான இனிப்பு மிட்டாய்கள் இருந்தன. அவைகள் ஒரு கிலோ ஒரு மார்க் விலையானவை. பலெக்கின் மனைவி நிறுக்கும் இடத்தில் குவழியான மனநிலையிலிருந்தால் அந்த மிட்டாய்ப் போத்தலைத்திறந்து ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொன்றாகக் கொடுப்பாள். அப்போது சந்தோஷ மிகுதியால் அந்தச்சிறுவர்களின் முகம் ஒரு பெண்பிள்ளையின் சிவந்த பின்னல் நிறத்தில் , இவர்களின்தாய் விசேஷ நாட்களில் பால் கலந்த கோப்பி போடும் போது எப்படிச்சிவக்குமோ அப்படிச்சிவந்து போகும்.
பலெக் குடும்பம் அந்தக் கிராமத்தவர்களுக்கு ஒரு சட்டம் போட்டிருந்தனர். அது என்னவெனில் அங்கிருந்த வீடுகளில் யாரும் தராசு வைத்திருக்கக் கூடாது என்பதே அது. அந்தச்சட்டம் மிகப்பழையது. அது ஏன் ஏற்படுத்தப்பட்டது என்பது அங்கிருந்த யாருமே யோசிக்கவில்லை. ஆனால் இச்சட்டத்தை யாரும் மீறினால் நார்த் தொழிற்சாலையிலிருந்து நீக்கப்படுவர். அவர்களின் பிள்ளைகளிடமிருந்து காடுகளில் அல்லது வயல்களிலிருந்து சேர்க்கப்பட்டவைகள் வாங்கப்படமாட்டாது. சட்டம் மீறியோர்க்கு பக்கத்துக்கிராமத்தில் கூட வேலை கிடைக்காது. அங்கும் அந்தப்பிள்ளைகளின் உழைப்பு சீண்டப்படமாட்டாது. அந்தஅளவிற்கு பலெக்கின் அதிகாரம் பரவியிருந்தது. ஆனால் என்பாட்டனாரின் பாட்டனார் சிறுவானாயிருந்த காலத்திலிருந்தே பிள்ளைகள் சேர்த்துத்தந்த காளான்கள், செல்வந்தர்கள் தங்கள் குசினிகளில் இறைச்சிக்கு நறுசுவை சேர்க்க உதவின. இவையெல்லாம்

Page 10
கிராமமக்களுக்குத் தெரிந்திருந்தும் கூட அவர்கள் வழமைகளை மீறத்துணியவில்லை. அந்தக்காலத்திலேயே மாவை அளக்கப் பேணி இருந்தது. முட்டைகள் ஒவ்வொன்றாக எண்ணப்பட்டன. நெய்தவைகள் முழங்கை வைத்து அளக்கப்பட்டன. மற்ற எல்லாவற்றையும் பலெக்கின் புராதன தராசு நிறுத்தது. பலெக்கின் தராசுக்கு முன்னால் மற்றைய நிறுத்தல்கள் சரிசமமாக நிற்க முடியவில்லை. அந்த நிறுவைக்கற்கள் கறுப்பு நிற எடைகாட்டியை நிறுத்தியிருந்தன. இந்தத்தராசு இல்லாவிட்டால் சிறுவர்களின் முயற்சியிலும் கூட நீதியை நிலைநாட்ட முடியாது என்ற உணர்வை பலெக்குடும்பத்தினர் அங்கே நிலைநாட்டியிருந்தனர்.
இந்த அமைதியான மனிதர்களுக்கிடையேயும் சட்டத்தை மதிக்காத சிலரும் இருந்தனர். அவர்கள் வேட்டையாடுபவர்கள். இவர்கள் ஒரு இரவில் வேட்டையாடிப் பெற்ற வருமானம் ஒருமாதம் முழுவதும் நார்த் தொழிற்சாலையில் கஷ்டப்பட்டு வேலைசெய்து பெறும் கூலியை ஒத்தது. அவர்களும்கூட தராசு ஒன்றை வாங்கவோ அல்லது சொந்தமாக தயாரிக்கவோ சிந்திக்கவில்லை. அனால் என் பாட்டானாருக்கு பலெக்குடும்பத்தின் நியாத்தை பரிசோதித்துப் பார்க்க தைரியம் வந்தது. பலெக்குடும்பத்துக்குச் சொந்தமாக இரு வண்டிகள் அந்தச்சிறிய அரண்மனையில் இருந்தன. அவர்கள் கிராமத்துப் பையன் ஒருவனுக்கு பிராக் நகரில் சமயக்கல்வி படிப்பிப்பதற்கு பண உதவி செய்தார்கள். அவர்களிடம் புதன்தோறும் மதகுரு வருகை செய்தார். புதுவருட தினத்தில் மாநில அதிகாரியும் அரசமுத்திரை பொறித்த வண்டியில் அவர்களிடம் வந்து போவார். 1900ம் ஆண்டின் புத்தாண்டு தினத்தில் மகாராஜா பலெக்குடும்பத்துக்கு பிரபுப்பட்டம் தந்து கெளரவித்தார்.
என்பாட்டனார் கெட்டிக்காரர். சுறுசுறுப்பானவரும் கூட. இருளடைந்த காட்டிற்குள் போவார். தன்மூதாதையர் எப்போதோ போயிருந்த பகுதிக்குப் போகுமாற்போல் அவர் புகுந்துவிடுவார். அங்கே பில்கான் என்னும் ராட்ஸதன், பால்டரர் என்பவரின் நிலத்தைக் காவல் புரிவதாகக் கதை நிலவியது. ஆனால் என்பாட்டானாருக்கு ந்த ராட்ஸதனைப் பற்றிய பயம் இருக்கவில்லை. அவர் இளைஞனாய்
இப8
 
 
 

இருந்தபோது அடர்ந்த காடுகளுக்குள் புகுந்து விலையான காளான்களை தேடிக்கொணர்ந்து பலெக்மனைவியிடம் தந்து ஒரு றாத்தலுக்கு முப்பது பெனிக் வீதம் பெற்றார். அவர் தான் விற்றுப்பெற்ற சேர்ப்புக்களையும் பெற்ற பெனிக்குகளையும் கலண்டரின் பின்னால் குறித்து வைத்தார். அவர் அதனை மிக கவனத்துடன் தனது ஏழு வயதிலிருந்து பன்னிரண்டு வயது வரை செய்தார். 1900ம் ஆண்டு என்பாட்டனாருக்கு பன்னிரண்டு வயது ஆனது.
இச்சமயத்தில்தான் பலெக் குடும்பமும் மகாராஜாவால் கெளரவிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு பலெக் குடும்பம் கிராமத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் கால்றாத்தல் நல்ல பிரேசில் கோப்பியை இனாமாக வழங்கினர். ஆண்களுக்கு இலவச பியரும், சுருட்டும் கிடைத்தன. அரண்மனையிலே பெரிய விழா நடைபெற்றது. நிறைய வண்டிகள் அரண்மனையின் முன்னால் அணிவகுத்து நின்றன. விழாவிற்கு முந்திய நாட்களிலே தராசு வைக்கப்பட்டிருந்த சிறிய அறையில் கோப்பி அனைவருக்கும் வழங்கப்பட்டது. சுமார் நூறு வருட காலமாக வழங்கிவந்த பலெக்கின் பெயர் இப்போது பில்கானின் பலெக் என மாறியது. பலெக் வாழும் அந்த அரண்மனை ஒரு காலத்தில் பில்கானுக்குச் சொந்தமாக இருந்தது என்கிற ஒரு கதை அங்கு . لنعـا الاوالإق
அன்று புதுவருடத்தின் முதல்நாளின் பகல். அறைகள் அலங்கரிக்கப்படவேண்டும். பலகாரங்கள் தயாரிக்கப்பட வேண்டும். நாலு குடும்பங்களுக்குரிய கோப்பியைப் பெறுதற்கு நான்கு பிள்ளைகளும் தொலைநடையும் தேவையா என்ன? என்பாட்டனார் என்னிடம் பலதடவைகள் வர்ணித்திருக்கிறார் எப்படி அவர் பாடசாலை முடிந்ததும் கோப்பியைப் பெறப்போனார் என்று.
அங்கே அறையில் இருந்த சிறிய ஒடுங்கிய வாங்கில் அவர் உட்கார்ந்திருந்தார். வேலைக்காரி கேட்ருட் ஏற்கனவே நிறுக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்த நாலு கால்றாத்தல் பக்கெட்டுக்களை எண்ணினாள். பாட்டனார் தராசின் இடது பக்கத்தட்டிலே அரைக்கிலோ நிறுவைப்படிகள் இருப்பதைக் கவனித்தார். பலெக்கின் மனைவி

Page 11
விழாவிற்குரிய ஆயத்தங்களில் மூழ்கியிருந்தாள். கேட்ரூட் எனது பாட்டனாருக்கு இனிப்புகள் தருவதற்கு போத்தலுக்குள் கைவிட்டபோது அது வெறுமையாய் இருந்தது. அந்தப்போத்தல் வருடத்துக்கு ஒரு முறைதான் நிரப்பப்படும். கேட்ரூட் என் பாட்டனாரிடம் "இங்கே கொஞ்சம் பொறுத்திரு நான் உள்ளே போய் இனிப்புக்களை எடுத்து வருகிறேன்" என்று சொல்லி உள்ளே போனாள். இந்தச் சரியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த என் பாட்டனார் முனைந்தார். ஏற்கனவே யாரோ மறந்து தராசில் வைத்துவிட்டுப்போன அரைக்கிலோ நிறு வைப் படிகள் இருந்த எதிர்ப்பக்கத்தில் அந்த நாலு பக்கெட்டுக்களையும் வைத்தார். நீதியைச் சரிவரக்காட்டும் எடைகாட்டி இடதுபுறமாக அழுந்தியே இருந்தது. அவரது இதயம் வேகமாக அடிக்கத்தொடங்கியது. நிறுவைப்படிகள் கீழே நிற்க அரைக்கிலோ கோப்பி உயரத்தில் மிதந்தது. காட்டுக்குள் ராட்சத பில்கானுக்குப் பயந்து அவர் செடிகளுக்குள் பதுங்கும்போது எப்படி இதயம் அடித்ததோ அப்படி இதயம் அடித்தது. அவரிடம் எப்போதும் கைவசம் சில கற்கள் இருக்கும் , அவை கள் தாய் உண்டாக்கியிருக்கும் தோட்டத்துக்கீரைகளை உண்ண வரும் குருவிகளை விரட்ட உதவும் ஆயுதங்கள். அந்தக்கற்களை கோப்பி இருந்த தட்டில் 1,2,3,4,5 என வைத்தார். இப்போது அசைய ஆரம்பித்த எடைகாட்டி சரிநிகரான இடத்துக்கு வந்தது. என் பாட்டனார் சடாரென தராசிலிருந்து கோப்பி யை எடுத்தார் . கற்களையும் தன் பை யில் போட்டுக்கொண்டார். அப்போது கேட்ரூட், மகிழ்ச்சிப் பூரிப்பால் சிறுவர் முகங்களை சிவக்க வைக்கும் இனிப்புக்களை கொண்டுவந்து போத்தலில் நிறைத்தபோது அங்கே எந்தச்சலனமுமின்றி அந்த இளைஞன் நின்றான். என்பாட்டனார் மூன்று கோப்பிப் பக்கெட்டுகளை மட்டும் எடுத்துக்கொண்டு முறைத்து நின்றார். கேட்ரூட் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். அவள் தந்த இனிப்புக்களை நிலத்தில் வீசி எறிந்து அவைகளைக் காலால் மிதித்து " நான் பலெக்கின் மனைவியோடு பேசவேண்டும்" என்று கத்தினான்.
அவள் "பில்கானின் பலெக்" என்று திருத்தினாள்.
"ஆம் பில்கானின் பலெக்கின் மனைவி"
ஆனால் கேட்ரூட் அவனைப்பார்த்து சிரித்தாள். அவன் தன் கிராமத்துக்குத் திரும் புகையில் மாலையானது. மூன்று
*ஆஇய்க்20
 

குடும்பத்துக்குமுரிய கோப்பிகளை அந்தந்தக் குடும்பத்துக்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, தான் கிராமத்து மதகுருவிடம் போய்வருவதாக சொல்லிப் போனான். ஆனால் அவன் அந்த இரவில் குறிகற்களை தன் பையில் போட்டுக்கொண்டு, இரண்டு மணித்தியாலங்கள் நடந்து ஒரு சிறிய கிராமத்தை அடைந்தான். அங்கே தராசு வைத்திருந்த அந்த மருந்துக் கடைக்காரரின் கதவைத்தட்டியபோது, தயாராகும் சமையலின் வாசம் மூக்கைத்துளைத்தது. மருந்துக்கடைக்காரர் கதவைத்திறந்தபோது, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த இளைஞனின் முகத்தில் சாராய நெடி அடித்தது. அவரின் உதட்டிலே சுருட்டு நனைந்திருந்தது, குளிரில் விறைத்திருந்த அந்த இளைஞனின் கைகளைப் பற்றியபடி " உன் தகப்பனின் நெஞ்சு வருத்தம் கூடிவிட்டதோ " என்று கேட்டார்
"இல்லை இல்லை நான் மருந்துக்காக வரவில்லை. எனக்கு." தன் பையிலிருந்த குறி கற்களை வெளியில் எடுத்து "இவைகளை எனக்காக நிறுத்து எவ்வளவு எடை இருக்கிறது என்பதைச் சொல் வீர்களா? " என்று பயத் தோடு அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டே கேட்டான். மருந்துக் கடைக்காரர் கோபமடையாமலும் ஒன்றும் திருப்பிக்கேட்காமலும் இருக்கவே அவன் மேலும்
" இது. இது. நீதியில் இந்தளவு குறைகிறது" என்றான். அந்தச்குடான அறையில் நின்றபோதுதான் தன்பாதங்கள் எப்படிக்குளிரில் நனைந்து போயிருந்தன என்பதை அவனால் உணர முடிந்தது. பிய்ந்த சப்பாத்துகளுக்குள்ளாக பணி புகுந்திருந்தது. காட்டு வழியாக நடந்தபோது தலையில் விழுந்த பனி இப்போது உருகத்தொடங்கியது. களையும் பசியும் அவனை உருக்கின. திடீரென அவன் அழத்தொடங்கினான். மருந்துக்கடைக்காரர் தன் மனைவியிடம் இவன் விடையத்தைச் சொல்வதற்காக அவளைக் கூப்பிட்டபோது அவன் தான் கஷ்டப்பட்டு தேடித்தந்த காளான்களும் மருந்துக்கீரைகளும் காய்ந்த பூக்களும் தராசில் ஐந்து குறிகற்களின் எடை தவிர்க்கப்பட்டு சரியான நீதியைத்தராமல் நிறுக்கப்பட்டதை நினைத்து, நினைத்து அழுதான். தனது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும், மூத்தபரம்பரையினரும் அலைந்து, களைத்துச் சேர்த்தவைகள் எல்லாம் அந்த தராசில் நிறுக்கப்பட்டதையும் நினைத்தபோது அவனுக்கு முன்னால் அந்தத்தராசு இங்கி2த்

Page 12
நீதியற்றதாக தெரியவே அவன் விக்கி, விக்கி அழுதான். மருந்துக்கடைக்காரரின் அனுமதியில்லாமலே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனுக்கு மருந்துக்கடைக்காரரின் மனைவி குடான ரொட்டியையும் கோப்பியையும் தந்தாள். அவன் அழுகை நின்றது. கடையிலிருந்து மீண்ட மருந்துக்கடைக்காரர் மெல்லிய குரலில் தன் மனைவியிடம் "இக்கற்கள் 55கிராம்(டெக்கா) நிறை இருக்கிறது" என்றார்.
என் பாட்டனார் மீண்டும் இரண்டு மணித்தியாலம் காட்டு வழியாய் நடந்து வீடு திரும்பி தந்தையாரிடம் நன்கு அடி வாங்கினார். கோப்பி பற்றிக் கேட்டபோது அவர் மெளனம் சாதித்தார். ஒன்றும் பேசவில்லை. கணக்கு எழுதிவைத்திருக்கும் கலண்டரை எடுத்து கணக்குப் பார்க்கத் தொடங்கினார். நடுநிசியில் அரண்மனை மணிகள் பெரிய சத்தம் எழுப்பின. முழுக் கிராமமும் கரகோஷமிட்டபோதும், குடும்பத்தினர் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு புதுவருட வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்ட போதும் அவர் மெளனமான குரலில் " பலெக் எனக்கு 18மார்க்குகளும் 32 பெனிக்குகளும் பாக்கி தரவேண்டும்" என்றார். மீண்டும் அக்கிராமத்துப் பிள்ளைகள் கஷ்டப்பட்டுத் தேடிக் கொணர்ந்தவைகள் பற்றி நினைத்துப்பார்த்தார். தன் சகோதரி லுாட்மில்லா, இன்னும் பல குடும்பங்களின் சிறுவர்களும் தங்கள் உழைப்பை பலெக்குக்காக உரமாக்கியதை உணர்ந்த இத்தருணத்தில் அவர் அழவில்லை. பதிலாக தனது பெற்றோரிடமும் சகோதரிகளிடமும் தான் கண்டுகொண்டதை விளக்கினார்.
புதுவருடத்திலன்று பலெக் குடும்பம் கோவில் சிறப்புப் பூசைக்கு வந்திருந்தனர். அவர்கள் வந்த வண்டியில் கூனிக்குறுகியிருக்கும் இராட்சத சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இவர்களுடைய வருகையை அங்கிருந்த மக்கள் கூட்டம் இறுகிய முகத்தோடு பார்த்தது. பலெக்குடும்பமோ கிராமத்தவர்கள் தங்களை உற்சாகத்தோடும் களிப்போடும் வரவேற்பர் என்று எதிர்பார்த்தனர். அவர்கள் வீதி வழியாகப் போனபோது மயான அமைதி நிலவியது. கோவிலில் அவர்கள் விரோதமான முகங்களையும் கடும் மெளனத்தையும்
 

இத்இரத்த
அவதானித்தனர். மதகுரு பிரசங்கத்துக்காக மூலஸ்தானத்துக்கு வந்தபோது, மகிழ்ச்சியான, அமைதியான முகங்களுக்குப் பதிலாக அங்கே ஒரு அசாதாரணநிலை இருந்ததை உணர்ந்தார். அவர் தன் பிரசங்கத்தை மிகவும் கஷ்டப்பட்டு முடித்துக்கொண்டு வியர்த்தபடி தன் இருக்கைக்குத் திரும்பினார். பில்கானின் பலெக் குடும்பம் முதல் வரிசையிலிருந்து எழுந்து வெளியேறும்போது இருமருங்கும் அமர்ந்திருந்த மக்கள் கூட்டம் அவர்களை அந்நியமாய்ப் பார்த்தனர். பலெக்குடும்பத்துப் பெண்ணொருத்தி சிறுவர் இருந்த வாங்குக்கு வந்து நின்றாள். அவள் அங்கே என் பாட்டனாரைக் கண்டுபிடித்து "ஏன் நீ உன் அம்மாவுக்குரிய கோப்பியை வாங்கிப் போகவில்லை" என்று கேட்டாள். என்பாட்டனார் இருக்கையை விட்டு எழுந்திருந்து "ஐந்து கிலோ கோப்பியின் விலைமதிப்பு அளவிற்கு நீங்கள் எனக்குப் LIGGOTLb தரவேண்டும்" என்றதோடு தன் காற்சட்டைப் பையிலிருந்து ஐந்து குறிகற்களை எடுத்து அவளிடம் நீட்டி " இந்தக்கற்களின் நிறையளவு உங்களின் அரைக்கிலோ கோப்பியில் எடை குறைகிறது. அது நீதியில்லை" எனச்சொல்லியபோது அவளும் ஏதோ பதில் சொல்ல முனைந்தவேளை அங்கிருந்த மக்கள் கூட்டத்திடமிருந்து "ஒ இறைவனே பூமியின் அநீதி உன்னைக் கொன்றுவிட்டது' என்ற பாடல் எழுந்தது.
பலெக் குடும்பம் கோயிலில் இருந்த சமயத்தைப் பயன்படுத்தி வேட்டைக்காரனான வில்லியம் அவர்களின் சிறிய அறையினுள் புகுந்து தராசையும் கணக்கெழுதி வைத்திருந்த புத்தகத்தையும் களவெடுத்தான். அதிலே பலெக் குடும்பம் கிராமச்சிறுவர்கள் சேர்த்துத் தந்த ஒவ்வொரு கிலோ காளான்களினதும் காய்ந்த பூக்களினதும் எடைக்கணக்கு எழுதப்பட்டிருந்தது. புதுவருடத்தின் பகல் வேளையன்று கிராமத்தின் ஆண்கள் அனைவரும் என் பாட்டனாரின் வீட்டில் கூடியிருந்து தங்களிடமிருந்து பெறப்ப்பட்டவைகளின் விலையில் பத்தில் ஒரு பங்கைத் தேடினர். தங்களுக்குத் தரப்படவேண்டிய எவ்வளவோ ஆயிரம் பணக்குற்றிகளை அவர்கள் கணக்கெடுத்தும், கணக்கு வேலை முடிந்திருக்கவில்லை. அப்போதுதான் திடீரென காவல்படையினர் துவக்குளால் சுட்டபடியும் கண்டவைகளை நிர்மூலமாக்கியபடியும் அங்கே புகுந்தனர். அவர்கள் என்பாட்டனாரிடமிருந்து பலாத்காரமாக தராசையும் கணக்குப்புத்தகத்தையும் பறித்தெடுத்தனர். இந்த இழுபறியில் என்பாட்டனாரின் தங்கை லுாட்மிலா கொலை

Page 13
செய்யப்பட்டாள். சில ஆண்களும் காயப்பட்டனர். வேட்டைகாரன் வில்லியத்தால் ஒரு படைவீரனும் கத்தியால் குத்தப்பட்டான்.
எங்கள் கிராமத்தில் மட்டுமல்லாது பக்கத்துக் கிராமங்களிலும் கிளர்ச்சி நடந்தது. ஒரு வாரமாய் நார்த் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் படைவீரர்கள் கிராமத்துக்குள்ளே புகுந்து "வேலைக்குப் போக விட்டால் சிறையில் போடுவோம்" என்று ஆண்களையும் பெண்களையும் பயமுறுத்தினர். பலெக் குடும்பம் கிராமத்து பாடசாலையில் மக்களைக் கூட்டுவித்து தங்களுடைய தராசு நீதியாய் தான் இருக்கிறது என்று சொல்லும்படி மதருவை அச்சுறுத்தினர். கிராம மக்கள் மீண்டும் தொழிற்சாலைக்குப் போனார்கள். ஆனால் யாருமே பாடசாலைக்குப் போகவில்லை. மதகுரு அங்கே தனியாய் உதவியற்று சோகமாய் நிறுவைக் கற்களோடும் தராசோடும் கோப்பிப்பக்கற்றுகளோடும் நின்றார். சிறுவர்கள் மீண்டும் காளான்கள், காய்ந்தபூக்கள், மருந்துக்கீரைகள் சேர்க்க காடுகளுக்குப் போனார்கள். பலெக்குடும்பம் ஒவ்வொரு தடவையும் கோவிலுக்குள் வந்தபோது பாடப்பட்ட 'ஒ இறைவனே பூமியின் அநீதி உன்னைக் கொன்று விட்டது' என்ற பாடல், நகர அதிகாரி அதனைத் தடை செய்யும் வரை பாடப்பட்டது. என் பாட்டனாரின் குடும்பமும் கொலைசெய்யப்பட்டவளின் புதைகுழியும்கூட அவ்வூரை விட்டுப் போகவேண்டிதாயிற்று.
அவர்கள் கூடை பின்னுபவர்களாக மாறினார்கள். அவர்களால் எந்தக்கிராமத்திலும் நிறையக்காலம் இருக்க முடியவில்லை. அங்கிருந்த காலங்களில் நீதி சரியாக செயற்படாத உண்மையைக் கண்டபோது அவர்கள் இதயம் கனத்தது. நெடுஞ்சாலையிலே தங்கள் கட்டை வண்டிகளை இழுத்துக்கொண்டும், மெலிந்த ஆட்டை அதன்பின்னே கட்டியிழுத்துக்கொண்டும் அவர்கள் போனார்கள். யாரும் அவர்களைக் கடந்து செல்ல நேரிடும்போது "ஒ இறைவனே பூமியின் அநீதி உன்னைக் கொன்றுவிட்டது" என்ற பாடலைக் கேட்கமுடியும். யாரும் இதுபற்றி அவர்களிடம் விபரம் கேட்டால் பில்கானின் பலெக்கின் கதையையும் அவர்களின் நீதியில் பத்துவீதம் குறைந்தது பற்றியும் கேட்கலாம். ஆனால் யாருமே அவர்களிடம் அதுபற்றி கேட்கவில்லை.
 

நான் உட்கார்ந்திருக்கிறேன். கால்களை அப்படியே குத்தென மடித்து நாடியை இடையில் வைத்து கையை முழங்காலில் வரிந்து கட்டியபடி. குண்டியை பூமி மீது பொறுக்க வைத்திருக்கிறேன். தெருநாய் ஒன்று என்மீது உரசுகிறது. என் சிந்தனை ஒடி கூர்மையினுள் குவிகிறது. ஓடிப்போய் நாய் தன் கவட்டைத் தூக்கி குப்பைத் தொட்டிமீது சிறுநீர் கழிக்கிறது. கலைந்த சிந்தனையில் ஒரு குதிர்ப்பாட்டை உணர்கிறேன். என் தேகத்தை திறந்துகொண்டு ஓடுகிறேன். அது என் தாய்நிலம். என் பூமி. திடீரென நெல் ஒட்டுகள் நிறைந்த ஒரு வயல் வெளி. பாரப்பட்ட என் மனதை காக்க முடியாமல் துாக்கிக்கொண்டு கங்காரு குட்டி காவியதாய் இதயம் தொங்க ஓடுகிறேன். வெடித்துப் பாளாகிவிட்ட என் பூமியின் தரையைப் பார்க்கிறேன். முன்னால் குளக்கட்டு. அதில் ஒரு பேய்விரட்டி புளியமரம் "ஆ." ஒரு பாளத்தினுள் என் கால் இறங்குகிறது. கிழித்துப் போட்டது. என் கால்களைக் குத்திக் கிழித்து விட்டது. இரத்தம் வருகிற மாதிரி கிழியல். கால்ப்பாதம் வலியெடுத்தது. காய்ந்த சேற்று முளைகள் ஊசியாய்க் குத்தி வேதனை செய்தன. குனிந்து காலைத்துாக்கி கிழிபட்ட இடத்தைப் பார்த்தேன். என் பூமி மீதும் என் இரத்தம் படிந்திருந்தது. இரத்தம் படிவதற்கு ஒரு இடந்தானும் பாக்கி

Page 14
இல்லாமல் எத்தனை விதமாயினும் அங்கிங்கெனாதபடி இரத்தக்கறை. எரிகிறது காலில். பக்கத்தில் கிடந்த தொட்டாற் சுருங்கி இலையைப் பிடுங்கி உள்ளங் கையில் வைத்துக் கசக்கி அதனை ஈரலிப்பாக்கி எச்சிலைச் சேர்த்து சாறு எடுத்து காயத்தின் மீது வைக்கிறேன், லேசாய் எரிகிறது. இரத்தம் போவது குறைகிறது வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சொல்லி தேனும் சுண்ணாம்பும் கலந்து போடவேணும். கெந்திக் கெந்தி நடந்து போய் வயல்ப் பிள்ளையாரடியில் பிள்ளையாருக்குப் பக்கத்தில் ஒரு வெட்டையில் அமர்ந்தேன். பிள்ளையாரைச் சுற்றி பற்றைக்காடு அவருக்கும் வெளிச்சமில்லை. எல்லாம் முள்ளுப்பற்றை, துளசிச் செடியின் மணம் மூக்கினுள் விழுந்தது. பாம்பு வராமல் இருப்பதற்காகவா இங்கே நட்டிருக்கிறார்கள். பண்டாரம் ஒருத்தர் முள்ளியவளையில் இருந்து வந்தால்த்தான் பிள்ளையாருக்கு துாபம் காட்டுதலோடு இடமும் துப்புரவாகும். விதைப்புக் காலம் வந்தால் வெட்ட வெளிச்சமாய்ப் பிள்ளையாரடி கிடக்கும். நேர்த்தி வைப்பதும் நிறைமணி போடுவதும் என்று பண்டாரத்திற்கும் பரவாயில்லை. இப்போது விதைப்புமில்லை, மழையுமில்லை, தண்ணியுமில்லை, பண்டாரம் வருவதுமில்லை, பிள்ளையாரடி செருக்குவதுமில்லை. வயல்ப் பிள்ளையாரை எப்படிச் சந்தோஷப்படுத்துவது அரிசி நாற்பது ரூபா, சக்கரை இல்லை. சீனி எழுபது ரூபா, தேங்காய்ப்பாதி இருபத்தேழு (UT.....
கெந்திக் கெந்தி குளக்கட்டின் மேல் மெல்ல மெல்ல ஏறுகிறேன். மாடுகள் போன பாதையால்த்தான் போகிறேன். எல்லாம் காய்ந்து போய் இறுகி சீமெந்து போட்டது போல் இருக்கிறது. களிமண் இறுகி கறுப்புப்படலமாய் உரம் போட்டிருந்தது. குளக் கட்டில் ஏறி புளியங்குளத்தின் இடது பக்கத்தில் இருந்த மானுருவிப்பக்க வானிலிருந்து மெதுவாய் மெதுவாய் என் பார்வையால் என் தாய் மண்ணுக்கு நீர்பாச்சிய குளத்தைப் பார்க்கிறேன். என் மண்ணைச் செழிப்பாக்கிய அந்த தண்ணிர்த் தடாகத்தைப் பார்க்கிறேன். எல்லாம் வற்றி காய்ந்து கருவாடாகி, குளமா அது? ஒரு சுடலை போல அல்லது அழிந்து நாசமாகிப்போன கிராமம்போல அது. சுற்றிவர பட்டமரங்கள் வியாபித்துப்போய்.காட்டு மிருகங்கள் காணாமலாகிவிட்ட ஒரு வரண்ட நிலம் போல. குளத்தின் துருசடியில் பார்வை வந்தவுடன்
 

திடீரென மனது ஒரு முறை ஆடி ஓய்ந்தது.
வண்டில்மாடு குளிப்பாட்டப் போன குமாரண்ணையை முதலை பிடித்தது இந்த இடத்தில்த் தான். சுழியோடிப்போய் ஆனந்தன் பிரேதத்தைக் கொண்டுவரும்போது குமாரண்ணையின் கையை முதலை கொண்டுபோய்விட்டது. என்ன பிரயாசைக்காரன். கொஞ்சம்கூட மற்றவைக்கு தீங்கு நினைக்காத நல்ல மனிசன். இப்பிடியான இரத்தம் தோய்ந்த வரலாறும் புளியங்குளத்திற்கு உண்டு. துருசு கறள் கட்டிப்போய் புரி எல்லாம் இறுகிப்போய் இருந்தது. இனி எப்பவாவது குளம் நிரம்பி தண்ணி திறக்க வேண்டி ஏற்பட்டால் கொஞ்ச நஞ்ச கஷ்டமே பட வேணும். இந்தத் துரு சைத் திறந்து தண்ணிர் எடுப்பதென்றால் யம வேலை.
ஒரு கூட்டம் பச்சைக்கிளிகள் குளத்திற்கு மேலால் பறந்து போனது. குடலை நெல்லுப் பால் குடிக்கவரும் தினையன் குருவிகளை கண்ணாலும் காணவில்லை. காகமும் பிராந்துகளும் கூட்டம் கூட்டமாய் சவம் தின்ன வருகின்றன. காட்டுப்பக்கம் போக ஏலாது அவ்வளவு மணம். மிருகங்களின் பிணங்களும் கிடப்பதாக செல்லையாண்ணை சொன்னவர். எத்தனை விடயத்தைக் கேள்விப்பட எத்தனை விடையத்தை விட, எங்கேயோ காடு கொளுத்துகிறார்கள் புகை திரள் திரளாய் வானம் நோக்கி. இல்லை இல்லை பிரேதம் கொளுத்துகிறார்களோ? ஏதோ புகை வருகிறது. கால்கள் மெல்ல நகருகின்றன. துாரப்பார்வையில் வடதுருவ நாரைக் கொக்குகள் வழமையாக வருவது போல இம்முறையும் எங்களுர் குளிர்மையை நோக்கி வந்ததுகளுக்கு குளம் பார்த்ததும் ஒரே ஏக்கம் போலும் பத்து பன்னிரண்டு முறை வட்டமடித்தன. காடுகளை ஒரு முறை அல்ல பல முறை தலை சரித்துப் பார்த்தன மனம் சோர்ந்து போய் மீண்டும் கிழக்குப் பக்கமாகவே திரும்பிப் பறக்கத் தொடங்கின. என்ன இது குருவிகளுக்கும் வேண்டாத தேசமாயிற்று எங்கள் தாய்மண்.
எலும்பும் தோலுமாய் மாடுகள். அதுகள் தின்பதற்கும் ஒன்றுமில்லை. அப்படியே குளக்கட்டால் நடந்து போகும்போது செருப்பில்லாத வெறுங்காலை நெருஞ்சி முட்கள் குத்துகின்றன.
já

Page 15
ஒரு நாள் முற்றவெளியில் றிகலிலை படம் பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது வெடில் அடிக்குள் அகப்பட்ட ஞாபகம் வந்தது. கால் நிறைய நெருஞ்சி முள்ளுக் குத்தி இரத்தம் கசிந்தது. மேலால் ஆமிக்காரன் விடாமல் துரத்தித் துரத்தி அடித்தான். பெண் புரசுகள் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமே.
குளக்கட்டு முடிந்துபோய் கிரவல் றோட் வலது பக்கமாகத் திரும்பி மெயின் றோட்டோடு இணைந்து நின்றது. ரெத்தினத்தை பூபதி கள்ளப் பொஞ்சாதியாய் வைத்திருந்தது தொடங்கி தொய்விலை வாச்சர் செல்லையர் இழுப்பது வரை அப்படியே நேர்முக வர்ணனையாய் மனதினில் அதிர்வு. எல்லாம் அலை அலையாய்.
அள்ளி எடுத்து அளைந்து விளையாடி விட்டுப் பிரிந்து போன மண், எத்தனை விதமான அவஸ்ைைதகளின் மையமாய் அது.
மீண்டும் அந்தத் தெருநாய் நான் அமர்ந்திருக்கும் கல்லின் அருகே வருகிறது. இன்னுமொருமுறை சிறுநீர் கழிக்க நாடுகிறது. இப்போது பக்கத்தில் குடை தைத்துக் கொண்டிருக்கும் கிழவனின் பழைய குடைத்துணிகள், கம்பிகள், பிடிகள் என்று கட்டி வைத்திருந்த பொட்டலத்தை குறிபார்த்தது. கால்துாக்கி ஒரு முறை பீச்சியடித்தது. இரண்டாம் முறைக்கு முன் கிழவன் கண்டு விட்டான். கல்லெடுத்து கோபமாய் மூர்க்கத்தோடு எறிந்து விரட்டினான். அரைவாசியோடு அது ஓடிவிட்டது. பின்னர் பழைய குப்பைத் தொட்டியில் ஆசுவசமாய் பெய்தது. முன்பைப் போல. ஊரில் ஹஸன் மாஸ்டர் தமிழ் படிப்பிக்கும் போது ஏதோ நாய் பற்றிய பேச்சு வந்தது.
"நாய் ஏன் சேர் காலைத் துாக்கி மூத்திரம் பெய்யுது வேற மிருகங்கள் அப்பிடி இல்லை யே" ஒருவன் கேட்டான்.
"அதனுடைய சிறுநீர்ப் பையின் அமைப்பு அப்படி காலைத் துாக்கினால்த் தான் அதற்கு மூத்திரவாசலால் சலம் வரும்" விளங்கப்படுத்தினார். இன்று போல் நினைவு.
 

ஹஸன் மாஸ்டரும் அவரது மனைவியும் மகள் ஷானாஷம் அழுது கொண்டு போனது இன்னும் பசுமையாய். தாங்கொணாத கறைகளை வரலாற்றின் சுவடுகளாக எத்தனை அவலங்களைச் சுமந்திருக்கிறது என்மண், "தனியொருவனுக்கு உணவில்லையெனில் செகத்தினை அழித்திடுவோம்" அதே ஹஸன் மாஸ் டர்தான் சொல்லித்தந்தார். என்னால் அகதி முகாமில் இருக்க முடியவில்லை. அது ஏதோ எனக்குக் கட்டுப்பாடு விதிப்பதாய் உணருகிறேன். அதனைவிட்டு வந்து எத்தனையோ நாட்களாகிவிட்டது. பயந்து பயந்து எத்தனை நாட்களுக்குத் தான் உத்தரிப்பது. பொலிஸ் செக்கிங், ஆமி செக்கிங், ஆள்பிடிப்பு இவைகளைத் தவிர்த்துக் கொள்ள நடை பாதையில் பிச்சைக் காரனைப் போல. ஒருவகையில் இது முடியுமான தொன்று. நான் சுதந்திரமாகும் வரையும் அல்லது நம் தேசம் அதைச் செய்யும் வரையும். குளம் நிறைந்தது. வயல் வரம்புகள் நிறைந்து தண்ணிர் ஓடி. பனம்பழம் பழுத்து விழுந்து.
நெல்வயல்கள் எல்லாம் செழித்து.
நான் உட்கார்ந்திருக்கிறேன். கால்களை அப்படியே குத்தென மடித்து வைத்து கைகளை முழங்காலில் வரித்து கட்டிய படி..உட்கார்ந்திருக்கும் என்னைப் பார்த்து தமிழனாய் உணர்ந்த ஒரு பொலிஸ் காரன் என்னை நோக்கி வருவது தெரிகிறது. என் சப்த நாடிகளும்.
இல்லை இல்லை. நான் பயப்படப் போவதில்லை. நான் பிச்சைக்காரன்.
என்றாலும் தமிழன். பாரம் துாக்கி தினவெடுத்த என் தோள்களிரண்டும் ஒரு சிலிர்ப்புக்குள்ளாகின.

Page 16
நம்பிக்கையற்றுப்போன இந்த நிமிடங்கள் வரையும் மனஅலைச்சலுற்று ஊழையிடுகின்றது வாழ்வின் ஒவ்வொரு கணங்களும்
எப்போதாவது
வந்து போற துாரத்து வாழ் நண்பர்களின் கடிதங்களும் தொலைந்து போயின இப்போ
முன்னையவிட இந்தநாட்கள் இன்னும் இன்னும் என்னில் கோரமாய் எழுகின்றன.
எழும்பமுடியாமலும் துரங்கமுடியாமலும் புரண்டலுத்தபடி நீட்டி நிமிர்ந்து கிடக்கிறேன்.
மரங்களை உலுப்பி வேடிக்கைகாட்டும்
மாலைநோக்காற்று யன்னலுக்கு வெளியேயும் குதித்துக் கும்மாளமிடுகிறது.
உடைந்துபோன மனசுக்குள்ளிருந்து ஊரின் நினைவுகள்
ஒவ்வொன்றாய் எழுகின்றன.
அந்த அரசமரச்சந்தி கோயிலடி வெட்டை
குளத்தடி
கிளாக்கற்ற தென்னந்தோப்பு அலைகள் வந்து அடிபட்டெழும் கடற்கரைவெளி
எல்லாம் எல்லாம் என்னில் இன்னும் ஈரமாய்க்கழிகின்றன
 
 

1)தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு அப்பிரதேசத்தில் முழு அதிகாரங்களும் கொண்ட பூரண பிரதேச சுயாட்சி அமைப்பு முறையும் அதனோடு இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகளும் உருவாக்கப்படுதல் வேண்டும்.
2) இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்பு முறையினை வடக்கு-கிழக்கு பிரதேச சுயாட்சிப் பிரதேசம் எனப் பெயரிடப்படுதல் வேண்டும். அதன் எல்லைகள் ஏற்கனவே இருந்து வரும் வடக்கு-கிழக்கு மாகாணங்களின் எல்லைகளாக இருத்தல் வேண்டும்.
3)இப்பிரதேச சுயாட்சி உள்ளமைப்பினதும் அதனோடு இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகளினதும் அதிகாரங்களும், செயற்பாடுகளும் தெளிவாக வரையறுக்கப்படுதல் வேண்டும். அதேவேளை மத்திய அரசின் அதிகாரங்கள், கட்டுப்பாடுகள், செயற்பாடுகள் எவ்வாறு இருத்தல் வேண்டும் என்பதும் தெளிவுபடுத்துவதுடன் மேற்குறித்த யாவும் அரசியல் யாப்புரீதியான உத்தரவாதத்தைப் பெறுதல் வேண்டும்.
4)வடக்கு-கிழக்கு பிரதேச சுயாட்சிப் பிரதேசத்தில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் முஸ்லிம் மக்களின் செறிவுக்கு ஏற்றவிதமாக மாவட்டங்களை இணைத்தோ, அன்றித் தனித்தனியாகவோ கொண்ட ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாகவோ பலமான சுயாட்சி உள்ளமைப்புக்களை உருவாக்குதல் வேண்டும். இவ்வமைப்புகள் வாயிலாக முஸ்லிம் மக்கள் தமது பொருளாதார, நீர், நிலவேலைவாய்ப்பு,கல்வி போன்றவற்றில் பூரண உரிமைகளைப் பெற்றிருக்க வகை செய்யப்படுதல் வேண்டும். அதேவேளை அவர்களின் மத- கலாசார அம்சங்களுக்கு உரிய இடத்தினை வழங்கி அவர்களது தனித்துவத்தை ஏற்று மதித்து செயல்படும் விதமாக இச் சுயாட்சி உள்ளமைப்பின் அதிகாரங்களும், செயற்பாடுகளும் வரையறுக்கப்படுதல் வேண்டும்.
5) முஸ்லிம் மக்களின் சுயாட்சி உள்ளமைப்பின் அதிகாரங்களிலும், செயற்பாடுகளிலும் மத்திய அரசோ அன்றி வடக்கு கிழக்கு பிரதேச சுயாட்சி நிர்வாகமோ எவ்வித தலையீட்டையும் குறுக்கீட்டையும் கொண்டிருக்காதவாறு இவ்வமைப்பின் அதிகாரங்கள் உருவாக்கப்படுதல் .su6doI(hlubٹ) 蘇。

Page 17
6) வடக்கு - கிழக்கு பிரதேச சுயாட்சி பிரதேசத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கான சுயாட்சி உள்ளமைப்பு வலுவானதாக அமைக்கப்படுதல் வேண்டும்.
அதே போன்று இப்பிரதேச சுயாட்சி அமைப்புக்கு வெளியே வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய விதமான உள்ளமைப்புகள் ஏனைய பிரதேசங்களில் நிறுவப்படுதல் வேண்டும்.
7) நிலமின்மையாலும் பொருளாதார, கல்வி, தொழில் போன்றவற்றினால் பின்தங்கிய வகையில் இன்று பல பகுதிகளில் பின்தங்கிய சமுதாயப் பிரிவினராக வாழ்ந்து வரும் "தாழ்த்தப்பட்ட மக்களின் சமுக முன்னேற்றத்திற்கான வசதிகளும் சலுகைகளும் ஏற்றவிதமாக உத்தரவாதப்படுத்தி பிரதேச சுயாட்சி அமைப்பில் வழங்கப்பட வேண்டும்.
8) வடக்கு கிழக்கு பிரதேச சுயாட்சி அமைப்பின் கீழ் அப்பிரதேசத்தின் விவசாயம், கைத்தொழில் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட சுயமான பொருளாதார விருத்திக்குத் தடைகள், தலையீடுகள் ஏற்படுத்துவது நிர்வாக-சட்ட ரிதியாக தடுக்கப்படுவதற்கு உத்தரவாதம் வழங்கப்படுதல் வேண்டும்.
9) இப்பிரதேச சுயாட்சிப் பிரதேசத்தில் நிலப்பகிர்வை மேற்கொள்வதற்கும், நீர்பாசனத்தை ஒழுங்குபடுத்தவும் குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் பிரதேச சுயாட்சி அமைப்பிற்கு பூரண அதிகாரம் வழங்கப்படல் வேண்டும். 1977 ம் ஆண்டுக்குப்பின் வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்ட திட்டமிட்ட குடியேற்றங்கள் யாவும் அகற்றப்படல் வேண்டும். அதேவேளை மத்திய அரசு ஏற்படுத்த விரும்பும் குடியேற்றத் திட்டத்தை பிரதேச சுயாட்சி அமைப்பு, ஏற்கவும் அல்லது நிராகரிக்கவும் பூரண உரிமை இருக்கவேண்டும்.
10) வடக்கு கிழக்கு பிரதேசத்தில் நிதி, நீதி, நிர்வாகம், மொழி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கலாச்சாரத் துறைகள் அனைத்தும் அரசியல் அமைப்பிற்கு அமைய சுதந்திரமான வழிகளில் அப்பிரதேச மக்களின் தேவைக்கேற்றவாறு முன்னெடுக்கப்படுவதற்கும் வளர்க்கப்படுவதற்கும் வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும்.
11) வடக்கு கிழக்கு பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும்
 

வகையில் உள்ளுர் பாதுகாப்பிற்கான பொறுப்பினை மேற்படி பிரதேச சுயாட்சி நிர்வாகத்திடம் இருப்பதற்கு அனுமதிக்கப்படுதல் வேண்டும். மேலும், அந்நிய அச்சுறுத்தல் - ஆக்கிரமிப்புக்கான குழல் இல்லாத நிலையில் இராணுவத் தளங்கள் வைத்திருப்பது அல்லது விஸ்தரிப்பது பற்றிய முடிவை பிரதேச சுயாட்சி நிர்வாகத்துடன் கலந்து பேசி முடிவினைக் கொள்ளல் வேண்டும்.
12) தேசிய மட்டத்திலும், பிரதேச சுயாட்சி மட்டத்திலும் இனம், மொழி, சாதி, மதம், பால் போன்றவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான உறுதிமிக்க நடவடிக்கைகளை அடிப்படை மனித உரிமை, ஜனநாயக உரிமை, தொழிற்சங்க உரிமை என்பவற்றின் வழிநின்று வரையறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
13) மலையகத்தில் கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவழி மக்கள் தமது இனத்தனித்துவங்களையும், தன்னடையாளங்களையும் பேணிப்பாதுகாத்து விருத்தி செய்யும் வகையில் அவர்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புக்கள் அப்பிரதேசத்தில் உருவாக்கப்படுதல் வேண்டும்.
14) மலையகமக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்பானது அவர்கள் செறிவாக வாழ்ந்து வரும் மத்திய ஊவா, சப்பிரகமுவா மாகாணங்களை உள்ளடக்கியதாக அமைக்கப் படுதல் வேண்டும். அதே வேளை இச்சுயாட்சி அமைப்பிற்கு வெளியே வடக்கு கிழக்கு உட்பட ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவழி தமிழ் மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கக்கூடிய வகையில் சுயாட்சியிலும் ஏனைய உள்ளமைப்புக்களிலும் உரிமைகள் வரையறுக்கப்படுதல் வேண்டும்.
15) மலையகத்தில் மலையக மக்களுக்கான வலுவுள்ள சுயாட்சி உள்ளமைப்பினாலும் ஏனைய சிறு அளவிலான உள்ளமைப்புக்களாலும் அவர்கள் நீண்ட காலம் போராடிப் பெற்று வந்ததும் - வெறும் பெயரளவிலானதாக இருந்து வருவதுமான பிரசாவுரிமை, வாக்குரிமை உட்பட பெற்றுக்கொள்ளவேண்டிய ஏனைய அடிப்படை உரிமைகளையும் பூரணப்படுத்த முடியும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, வீடமைப்பு. சுகாதாரம், மற்றும் மொழி கலாச்சாரத் துறைகளிலான வளர்ச்சிக்கு முழுமையான வாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும்.
型

Page 18
விரியாத மொட்டுக்களாய் குவிந்து நிற்கும் பலவர்ணப் பூக்கள். நீண்டு ஒரு பத்து மீற்றர் வரை தெரிந்த அந்தப் பூந்தோட்டம். அதன் நான்கு பாத்திகளும் விரித்துவிட்ட ஒவ்வோர் நிறக் கம்பளமாய் தெரிகிறது.
அது வெளிக் காற்றைத் தடுத்து, கண்ணாடியால் வேயப்பட்ட வீடுகளுக்குள் செயற்கை வெப்பத்தை வழங்கி ஒரு மாதகாலத்தில் வளர்த்தெடுத்துப் பூக்க வைக்கின்ற மிகப் பெரிய பூந்தோட்டங்கள்.
எங்கும் வேலைகள் அமழியாய் நடக்கிறது. கார்த்திகைப் பூக்கிழங்குகள் போன்ற ருல்பன் கிழங்குகளை நடுவது ஒரு புறமும், மொட்டு விரித்துச் சிரிக்கின்ற பூக்களை பிடுங்கி பெட்டிகளில் பக்குவமாய் அடுக்குவதும். அவற்றை மேலே தொங்கும் அச்சுக்களில் சுழலுகின்ற வண்டில்களில் இருபுறமும் சமமாய் ஏற்றுவதும் வரிசையாய் நடக்கிறது.
குனிந்து தொடரும் புடுங்கலும் நாரி உழைய நிமிரும்போது, 'கோத்துறுடோமா', 'குளோச்சக்' என்று கெட்ட வார்த்தைகளினால்
ஆஇயக்3
 
 
 
 

திட்டுகின்ற முதலாளிக்குப் பயந்தும் வேலை மும்முரந்தான். நாம் பலர்.
போட்டிக்கு ஒடும் குதிரைகளாய்.
அது நெதர்லாந்தின் வடக்கேயுள்ள கடலோரக் கிரா மங்களில் ஒன்று. காலம் காலமாக பூ உற்பத்தியில் செல்வம் பெறுகின்ற தோட்ட முதலாளிகளின் பகுதி. உலகம் முழுவதும் பேசப்படுகின்ற கொலண்ட் பூக்கள்' இன் உற்பத்தி.
விதையை கிளறிப் பத்து நாட்களில் உலரவைத்து, பின்னர் ஈரமாக்கி, முளைக்கவைத்து, ஒரு மாதத்தில் பூக்களாக்கி சந்தைக்கு விடுகின்ற துரித விஞ்ஞான உற்பத்தி இது.
இயந்திரங்களாலும், மின்சக்தியினாலும், கதிர் இயக் கங்களினாலும் இயற்கை எவ்வளவு எளிதாக மாற்றப்படுகிறது என்பதற்கு இது எம் கண் எதிரே நடக்கின்ற ஒரு நல்ல உதாரணம்.
ஆயினும் பூக்களின் நிறக்கலப்பும், அவை மொட்டு விரித்துச் சிரிப்பதும், தாழம் இலைகளைப்போன்ற சிறிய இலைகளில் முத்துக்களாகத் தெரியும் நீர்த்துழிகளும் மிக ரம்மியமானவை. நான் அந்தப் பூக்களோடு உறவாடும் காதலனாய்.
சந்தோசமும், களிப்பும், காதலும், அன்பும், சோகமும், இழப்பும் என்ற எல்லா உணர்வுகளுக்கும் உகந்த 'பரிசுப்பூக்களாய்" பெற்றோரிலிருந்து காதலர்வரை உலகம் பூராகவும் போய்க்குவியும் இப்பூக்களின் சிரிப்பில் எனதும், எங்களதும் உழைப்பு வியர்த்து விழுந்து கிடக்கிறது. "இதழ்களில் மின்னும் அத்துளிகள் எங்களுடையது'.
அகதிகளாக வந்த தமிழர்கள் பலர், பாண், படுக்கை, குளிப்புத் திட்டத்தின் கீழ் அகதி முகாம்களுக்குள் குவித்து அடைக்கப்பட்ட காலங்களில் இக்கடலோரக் கிராமங்களிலும் சில முகாம்கள் திறக்கப்பட்டது.

Page 19
பணத்தேவையும், பல்வேறு தேவைகளும் இத்தோட்டங்களை நாடி இளைஞர்களை வேலைக்கு விரட்டியது. வேலை அனுமதியில்லாமலே குறைந்த சம்பளமாயினும் இலங்கைக் கணக்கில் பெருக்கி திருப்திப்பட்டுக்கொண்டு நாம் முதலாளிமாரை 'வேலைதந்த தெய்வங்களாய்" பார்த்து உழைக்கத் தொடங்கிவிட்டோம். வேலை தேடிய அக்காலங்களில் எங்களுக்கு கிடைத்த இந்தத் தோட்ட வேலைகள் மிகமுக்கியமானவை. எமது கடின உழைப்பும் முதலாளிகளின் திருப்திக்குரிய தொழிலாளர்களாகவும் இருப்பதனால் தான் என்னவோ. தோட்ட வேலைகளுக்கு தமிழர்களைத் தேடுவது இன்னும் தொடர்கிறது.
நெதர்லாந்தில் பூ வேலை செய்யாத தமிழர்கள் மிகக் குறைவு என்றால் பொய்யில்லை.
நான் அந்த வேலையில் முன்று வருட அனுபவசாலி.
ஆம்! அது ஒரு சனிக்கிழமை வேலையில் கெஞ்சி அரை நாள் ‘விடுப்பு வேண்டி முகாமுக்கு வந்தபோது அந்த நீல 'ஏறோகிறாம்" சேதி சொன்னது.
அண்ணரைக் காணவில்லையாம்.?
"வவுனியாவரை சைக்கிளில் சாமான் வேண்டப் போனவர் திரும்பி வரவேயில்லை. அந்த நாட்களில் யாரும் இறந்து போனதற்கான அடையாளங்களும் இல்லை. என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. பிடிபட்டிருக்கலாம். யார்? ஏன்?"
சின்னக்கா எழுதிய கடிதம் இது. அழுதிருக்கிறா என்பது கரைந்து தெரிந்த எழுத்துக்களாய் முகம் காட்டியது. அண்ணியும் இரண்டு குழந்தைகளும். என்ன செய்வார்கள்?
அந்த மனிதனுடைய நினைவுகள். மிகமிகப் பசுமையானவை. அழுதேன் மீண்டும் மீண்டும் அழுதேன். அழுகையை என்னால் அடக்கமுடியவில்லை. நான் வளர்ந்ததன் பின்னர் அழுத நாட்கள் குறைவு. ஆனால் இன்று. இது என் நினைவுகளில் ஆற்ற முடியாத நாட்கள்.
 

அண்ணன் - அவன்.
நான் சிறியவனாக படித்த காலம் வரை வயற் காடுகளில் போராடி குடும்பச் சுமைகளைப் பொறுப்பேற்று வளர்த்தவன். எப்போதும் ஒரு அதிகாரம் மிக்க அண்ணனாக இல்லாமல் ஒரு நல்ல நண்பனாய். எதையும் கதைக்கவும், விவாதிக்கவும், விட்டுக்கொடுக்கவும், நாகுக் காய்ச் சுட்டிக்காட்டவும் முடிந்த மனிதன் இப்போது எங்கிருக்கிறான்?
நான் இப்போது கண்களைக் கட்டிக் காட்டில் விடப்பட்ட மனிதன். எப்படித் தேடுவது? அகதி என்ற பெயரில் முகாமுக்குள் அடைக்கப்பட்டு, படுக்கையும் உணவும் கடிதம் போடத்தக்க காசும் கிடைக்கின்ற ஒரு வகைச் சிறைக் கைதி. வாரம் ஒருமுறை பச்சைக் காட்டில் ‘விசா". ஊசி போடவும் எக்ஸ்றே (x ray) எடுக்கவும் இன்னொரு நகர்.
நாம் 'மூன்றாம் உலகி லிருந்து கொள்ளை நோய்களைக் கொண்டு வந்திருப்போம் என்று அவர்களுக்குப் பயம்,
ஆனால் நானோ என் நோய்க்கு மருந்தில்லை என்பது போல்.
எனக்கும், என் தேசத்தின் நினைவுகளால் நொந்து தொங்கு கின்ற எம் போன்றவர்களுக்கும் யார் மருந்து போடுவார்கள்?
அன்னியச் குழலில் எல்லா வகை நெருக்குதல்களுக்கும் ஆளாகி.
அடிக்கடி சிரிக்கவும், தன் பாட்டில் கதைக்கவும் எல்லா வற்றிலும் கோபமும், ஆத்திரமும் வெறுப்பும் கொண்டுள்ள மனிதர்களாய். பலர். இந்த வாழ்வை வெறுக்கின்ற நினைவுச் சின்னங்கள் நாங்கள்.
ஒரு புதிய வாழ்விற்கான உந்துதலும் கற்பனையும் வளர்கிறது. ஆனாலும் நடைப் பிணங்களாய்.

Page 20
என்னை வெளிநாட்டுக்கு ஓட விரட்டிய இயக்கங்களும் அரசும். பக்குவமாய் நான் இங்கு வந்து சேர்ந்து விட்ட திருப்தி யிலிருந்த அண்ணன்.
நான்- அவன் அறியாத அவலம் நிறைந்த அகதியாய். அவன் அங்கே அவலம் நிறைந்த கைதியா?
அப்பாவிகள் கொல்லப் படுவதும், கைதுசெய்யப்படுவதும் எமது தேசத்தின் வீரம் நிறைந்த வரலாறு. வரலாறும் ஒரு நெடுங்கோடாய்த் தொடர்கிறது.
அண்ணன் கொல்லப்பட வில்லை என்பது போல் அக்கா எழுதியிருப்பது ஏன்?
ஒரு அப்பாவித்தனமான நம்பிக்கையா?
ஒருவன் காணாமல் போவது அல்லது கொல்லப்படுவது ஒரு நல்ல மனிதனாய் வாழ்ந்ததாலும் இருக்கலாம்.
வெறுக்கப்பட வேண்டிய யுத்தம் இது? இந்த யுத்தம் நியாயமானதுதானா? இருக்கலாம் ஆனால்.
ஒருவர் மீது ஒருவர் போட்டியும் குரோதமும் மிக்கதாய் வளர்ந்து கழுத்தை நெரிக்கிறதே.
அப்பாவிகள் மீது கொடுமைகளைச் சுமத்தியிருக்கிறதே. யுத்தம் போராட்டம் என்றால் இப்படித்தான் என்கிற
சமாதானத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
எமது உரிமைகளை நசுக்கிக் கொண்டு எமக்கு உரிமை பெற்றுத்தர போராட்டம் நடத்துவதாக எல்லோரும் சொல்கிறார்களே.
எப்படி நம்புவது?
இப2

கடந்த காலம் என் எல்லா நம்பிக்கைகளையும் இரத்தத் துண்டுகளாக வெடித்துச் சிதற வைத்த வெடி குண்டுகளாகத் தெரிகிறது.
"எல்லா அடக்குமுறைகளையும் உடைத்தெறி" என்ற என் இளமைக்கால கோஷம் கோஷமாகவே நின்றுவிட்டது..?
இப்போது நாமெல்லாம் அரசியல் அனாதைகளாய் அகதிகளாய்.
நான் விரும்பும் உறக்கம் என்னை விட்டு விலகி விலகிப் போகிறது. நான் நேசிக்கின்ற என் காதலி என் கனவுகளில் வர மறுக்கிறாள்.
அவளையும் சிறைப்பிடித்து. அல்லது கொன்று போட்டு விட்டார்களா?
நான் தஞ்சமடைந்திருக்கிற இந்த நாட்டில் மதுவிடத்திலும், புகையிடத்திலும் மற்றெல்லாப் போதைகளிலும் தஞ்சமடைந்து வீழ்ந்து
கிடக்கவா?
முகாம் முழுவதும் செய்தியறிந்து பலர் ஆறுதல் சொன்னார்கள். பலர் இழப்புக்களோடு வாழ்பவர்கள்தான். அவர்கள் யுத்தமும் போராட்டமும் வேண்டாம் என்கிறார்கள்.
ஆயினும் என் இனிய நண்பர்கள் பலர் மீண்டும் புதிதாய்புதிதாய்ப் போராடுவோம் என்கிறார்கள்.

Page 21

காற்றில் உடைந்து நொருங்கிய சருகுகளாய் காலத்தின் விரிசல்
மனஆழத்தின்
அடிவரை நீண்டு விரியும்
நேற்றின் முகங்களில் கருமையும் சிவப்புமாய் வாழ்வு சிதைந்த குட்சுமங்களின் தொடரல்
வானத்தின் உடைந்த இடுக்குகளிலிருந்து நழுவியோடும் மேகத்துண்டுகளாய்
வாழ்வு
அரிந்து அரிந்து
சிதையும்
பொறுக்கிய என் நண்பர்களின் நினைவுகளிலெல்லாம் பூக்களின் வாசம்
மலர்வளையங்கள் சாத்திய என் மனவாசல் (ՄԱքճյ5յլի நண்பர்களையும் நல்ல மனிதர்களையும் இழந்து போன துயரம் மட்டும் மிகுதியாய்.