கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அ ஆ இ 1995.07

Page 1

3.
همچ ബ
or Tamis in Nederland

Page 2
உள்ளே.
க ண்டு இதழ் 01. எனது நிலம்
02. அடையாளம்
03. வேலைவாய்ப்பு.
சுவடு 20
05. ரத்தம் i வெளியீடு இறுககும. இலங்கைக் கலாச்சாரக் குழு 06, ബrഞങ്ങ f
வாழ்க்கையில். A AA E Post bus 85326 07. ஐரோப்பிய. 3508 AH Utrecht 08. முக்கியமானது
Nederland ஏதெனில்
09. O60)6)us
பரிசுக்கதைகள் ai
LIL5-56if 10. புக்கல் ந்தானம்/ராஜா பூத்தி
 
 

இலங்கையில் புதிய அரசு பதவிக்கு வந்து சந்திரிகா ஜனாதிபதியானதும் இலங்கையில் அமைதியும் சமாதானமும் வந்துவிடுமென்று இலங்கை மக்களும் பல அரசியல் அவதானிகளும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்த நம்பிக்கை தொடர்வது போல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் பேச்சுவார்த்தைகளும் யுத்த தவிர்ப்பு ஒப்பந்தங்களும் தொடர்ந்தன. இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட யுத்த நிறுத்தங்களைப் போலல்லாமல் இரு தரப்பினராலும் மிகநேர்த்தியாக நடத்தப்பட்ட இந்த யுத்தநிறுத்த காலத்தில் சில பொருளாதார தடைகள் நீக்கப்பட்டு தமிழ் மக்களின் வாழ்க்கை சீரடையக் கூடியதான சில அறிகுறிகள் தென் பட்டது மறுப்பதற்கில்லை. மக்களுக்கு மூச்சு விடக் கிடைத்த இத்தருணம் யுத்த முனைக்குத் திருப்பப் பட்டது மீண்டும் துரதிஷ்டமான ஒன்றுதான்.
சந்திரிகாவுக்கும் பிரபாகரனுக்கும் இடையான கடிதப் பரிமாற்றங்கள் நடந்தும் எதுவித சாதகமுமற்று நிலைமை முறுகல் நிலையை அடைந்தது. பின்னர் ஆங்காங்கே ராணுவத் தளங்கள் மீதும் அரச படைகள் மீதும் நடந்த பல தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் பல வெற்றிகளை ஈட்டிக்கொண்டது ஒன்றும் மூடிமறைக்கக் கூடிய விடையமல்ல. அதனைத் தொடர்ந்து படைகள் யாழ்குடா நாட்டைப்பிடிக்கும்’ பாரிய திட்டத்துடன் தாக்குதலைத் தொடுத்துள்ளன. இத்தாக்குதலில் 30 க்கும் அதிகமான இடங்களை
ஆதிக்:-

Page 3
தாங்கள் பிடித்துவிட்டதாக அரசு பிரச்சாரம் செய்கிறது. அவற்றை மீளக் கைப்பற்றி விட்டதாக விடுதலைப் புலிகள் அறிவிக்கிறார்கள். எது எப்பிடி இருப்பினும் அந்த இடங்களில் குடியிருந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். நுாற்றுக் கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டும் 3 லட்சம் மக்களுக்கு மேல் குடிபெயர்ந்து அகதிகளாகப் போய் இருக்கிறார்கள் . கண்மூடித்தனமாக செல் தாக்குதல்களும், பாடசாலைகள் பொதுக் கட்டடங்கள் தேவாலயங்கள் மீது விமானத் தாக்குதல்களும் நடத்தப் பட்டிருக்கிறது. யாழ் மருத்துவமனை காயம் பட்ட வர்களால் நிரம்பி வழிவதாகவும் பலர் அங்கவீனர்களாக இருப்பதாகவும் யாழ்ப்பாணச் செய்திகள் குறிப்பிடுகின்றன. செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் மருத்துவ வசதிகளின் பற்றாக் குறைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
தமிழ் மக்கள் மீதான யுத்தம் மீண்டும் அவர்களின் வாழும் உரிமையைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. மக்கள் மீது யுத்தத்தால் திணிக்கப்படும் எந்த "அரசியல் தீர்வுகளும் பயன்தரமாட்டாது. மீண்டும் இருதரப்பினரும் மக்கள் மீது யுத்தச் சுமைகளை ஏற்றாமல் சுமுகமான பேச்சுக்களில் ஈடுபடுவதற்கான வழிவகைகளை தேடுவதே மிகநல்லது.
 

தவழும் குழந்தையின் முதுகை அழுத்தும் கருங்கற்பாறையை காணாதிருத்தல் இறந்த குழந்தையில் பாய்ந்த குண்டு நெஞ்சிலா?
முதுகிலா?
உடலே இல்லையா?
பார்த்தல்
இனம் பிரித்து அறிதல் புறநானூற்றைத் துணைக்கழைத்தல் இயலாதாயின் அழாதாயினும் இருத்தல்பற்றிய வகுப்புகளில் பங்கெடுத்தல் வீரமாய் விளம்பப்படுவதால் உயிரினும் ஓம்பப்படும்.
இனியும் குல் கொள்ளச் சம்மதியா கர்ப்பப்பைகள்
குதித்தோட
துரத்தி
தாவி
கொடுக்கவிழ்த்து முயங்கி விஷம் கொட்டி.
瞩。
இரஜின்குமார்
"வீரசுதந்திரம்
வீரசுதந்திரம்"
தேம்பியழுங் குழந்தை திடங்கொண்டு சேதி சொல்லுதோ? பிறளும் இடம் பார்த்துச் சரி செய்தாய் வீரக்கலவி
வீரக்கலவி
ஆநிரை கவர்ந்து பின் பெண்டிரைக் கவர்ந்து ஊரைக் கொளுத்திய சாம்பர் மேட்டில் கொத்தளம் அமைத்து
இவர் போய் அவரும்
அவர் போய் இவரும்
வில்லும் புலியும் மீனும் பொறித்த கொடியின் பரம்பரை நீ வீர சுதந்திரம் வேண்டி நின்றாய் இனி வேறொன்று கொள்வாயோ?
ஆதி பக்தி

Page 4
"சீ என் அடையாளம் தொலைஞ்சுபோச்சு"
"எங்கடா போச்சு என் அடையாளம்"
அந்த வங்கிக்கவுண்டரில் கொம்பியூட்டரை திருப்பிவைத்துக்கொண்டு அந்த அழகான இளம் பெண் என்னைப்பார்த்துச் சிரிக்கிறாள்.
நான் தாழ்வுக்குள் விழுந்துபோனேன்.
சோஷல் காசு எடுக்க வங்கிக்கு வந்து வரிசையில் காத்திருந்து அவளிடம் போன போது என் 'அடையாள அட்டை"யைக்கேட்டாள் அப்போதுதான் என் சட்டைப்பைகளை எல்லாம் தேடினேன் அதைக்காணவில்லை.
பின்னால் நின்ற வெள்ளைக்காரச்சனம் என் தடவலையே மைக்கேல் ஜாக்சனின் நடனம் பார்ப்பதுபோல் வேடிக்கை பார்த்தனர்.
காற்சட்டை, சேட், ஜக்கற் எல்லாவற்றையும் தடவியாச்சு அப்பாவியாய் அவளைப்பார்த்தேன்.
சிரித்துக்கொண்டே தோள்களைத் துாக்கி, சொண்டுகளைப் பிதுக்கிக் கொண்டாள். அவள் எனக்குக் காசு தரப்போவதில்லை அதற்காகவே
அப்படிச் சைகை செய்தாள். நான் அடையாளமில்லாதவனாய் மெல்ல
 
 

ஒதுங்கி மீண்டும் தேடினேன்.
இல்லை, அது இப்போது என்னிடம் இல்லை.
எனக்குப் பின்னால் வந்த வெள்ளையர்கள் என் இடத்தைப் பிடித்துக் கொண்டு எந்த அடையாளமும் இல்லாத வங்கிக் காட்டுக்கு காசு எடுத்துக்கொண்டு போனார்கள். பார்க்கப் பார்க்க எனக்கு கோபமாயும்,
பொறாமையாயும் இருந்தது.
இப்போது எனக்கிருக்கிற ஒரே அடையாளம் அந்தப் பச்சைக்காட்" தான். சவம் அதுவும் தொலைந்துவிட்டது.
அந்தப் பச்சைக் காட்டைப் பார்த்தாலே எனக்கு அடிக்கடி கோபம் கோபமாய் வரும். இந்தக் காட் தொலைஞ்சு போகட்டும் என்று கூட நினைப்பேன். எப்படித் தொலைந்தது?.
மற திகளுக்குக் கடி வா ளம் போட்டு நினைவுகளுக்குள் அடக்க முடியவில்லை. கிழமை க்குத் தருகிற நுாற்றிப்பத்துக் ’கில்டன்'களுக்காய் அடிக்கடி வங்கிக்கு வருகிறேன். அவள் என்னைப் பார்ப்பதற்குப்பதிலாய் அந்தக் காட்டையே பார்க்கிறாள்.
அதிலுள்ள இலக்கம், கையொப்பமிட்டுள்ள பொலிஸ் அதிகாரி, காவல்துறை முத்திரை அவளது நம்பிக்கைக்குரிய அடையாளங்கள். கடுதாசித்துண்டுகளுக்குரிய மரியாதை எங்கள் முகங்களுக்கோ உணர்வுகளுக்கோ கிடையாது.
அது ஒவ்வொரு கிழமையும் விசாவிற்கு பொலிஸில் சீல் அடிக்கிற பச்சை நிறக்காட்.
அதில் எனது இருண்ட முகம். தேடப்படும் குற்றவாளியைப்போல் மார்புக்கு நோாய் இலக்கங்கள். பின் பக்கத்தில் வேலை செய்யவோ,
படிக்கவோ அனுமதியில்லை என்றும்கூட டச்சில் எழுதப்பட்டுள்ளது.
ஒரு வருடமாய் அகதிகள் முகாமிலும், பின்னர் ஒரு சிறு நகரில் வீடு

Page 5
தந்து குடிவந்து மூன்று வருடங்கள் கழிந்துவிட்டது. விசாவிற்குப் பொலிசும், காசுக்கு வங்கியும் இந்த பச்சைக்காட் நடைமுறையும் மாறவே இல்லை.
எந்தப் பாதுகாப்பும் இல்லாத அடையாளம் இது.
நெதர்லாந்தின் நீதி அமைச்சோ, அல்லது ஒரு நீதிபதியோ நான் கேட்டுக்கொண்ட அரசியல் தஞ்சமும், அதற்காக வாக்குமூலம் அளித்த காரணங்களும் செல்லாது என்று தீர்ப்பெழுதினால். என்னைப்பிடித்து கொழும்புக்கு ஏற்றிவிடக்கூடிய காட்தான் இது. அதுவும் தொலைந்துவிட்டது.
என் அரசியல் தஞ்சக்குறுக்கு விசாரணையில் நான் இலங்கையன் என்றோ, தமிழன் என்றோ நம்ப மறுத்த அந்த நீதி அமைச்சின் அதிகாரியின் முகம் இன்னமும் ஞாபகமிருக்கிறது. இலங்கைப் படத்தைத் துாக்கிப்போட்டு பலாலி எங்கே என்றும், மல்லாவி எங்கே என்றும் விசாரிக்கிறான். நீ பிறந்த நெடுந்தீவு இலங்கைப் படத்தில் இல்லை என்றான். 'உன் டச்சுப் பெயரால் மறைக்கப்பட்ட DELFT அது என்று என்னால் அடையாளப்படுத்தப்பட்டபோது நாகுக்காய் சிரித்துக்கொண்டான்.
பொய்ப்பெயரில் பிளேன் ஏறி சொந்தப் பெயரில் அரசியல் தஞ்சம் பதிந்து நான் ஓர் இலங்கையன் என்பதை அடையாளப்படுத்த முடியாமல் நின்ற அந்தநாளில் இருந்து என் அடையாளம் தொலைந்தேபோய்விட்டது. தொலைந்த என் அடையாளத்துக்கான பச்சைக்காட்டும் இப்போ தொலைந்துவிட்டது.
இப்போது நான் கோபத்தில் பேசுகின்ற கெட்ட வார்த்தைகள் சுத்தத் தமிழில் வந்து போனது.
நான்தான் அவன் என்று நம்பவைக்க இவளிடம் இந்த மொழியும் உதவப்போவதில்லை.
காசு கிடைக்கவில்லை என்ற கோபம் எனக்கு.
எதுவுமே சொல்லாமல் கதவைத் திறந்துகொண்டு எட்டி மிதித்து
வீட்டுக்கு வந்து தேடத் தொடங்கிவிட்டேன். gaas a

இவ்வளவு காலமும் வெறுத்து வெறுத்து என்னிடமே இருந்த அந்தப்பச்சைக் காட் கிழமைக்குக் கிழமை என்னைப் பிடித்து மூட்டை கட்டிவிடுவாங்களோ என்று பயந்து பயந்து பொலிசுக்குக் கொண்டு போன அந்தப் பச்சைக்காட் எங்கே போனது?
இலங்கையில் என் வாழ்வில் கடந்தகால யுத்த கொடூரங்களுக்குள் யாருக்கும் பச்சைக் கொடி காட்டாததால் எனக் கிருந்த அடையாளங்களினால் நன்றாக வேண்டிக்கட்டிக் கொண்டு எல்லை கடந்து நாடு கடந்து இங்கு வந்தபோதும், இல்லாத அடையாளத்துக்காக இருந்த ஒரே அடையாளம் இதுதான்.
பொலிசுக்குப் போகும்போது அந்த தடித்த பொலிஸ் அதிகாரி என் காதுகளையும், கண்களையும், அந்த பச்சைக்காட் படத்தையும் ஏற இறங்க முறாய்த்துப் பார்ப்பான். அதன் பின்னரே சீல் வைத்து அடுத்த கிழமை வா என்பான்.
அந்த அதிகாரியை நினைக்க எனக்குப் பயமாக இருந்தது. அவனிடம் போக ஆயிரம் கேள்விகளை அடுக்குவான் , திரும்பவும் போட்டோ எடுக்கவேண்டும், கைரேகை பதியவேண்டும் என்று
பயமுறுத்துவான்.
நான் என் அடையாளங்களைத் தொலைத்து நிற்கிறேன். எல்லாவிடமும் தேடியாச்சு காணவில்லை. நேற்று அப்பன் வந்தவன் அதுவும் 'போடர்காய்" அடிச்சுக்கொண்டுபோய் ஆரையும் நாடு மாத்தியிருப்பானோ? பிடிபட்டால் என் பேரில தண்டம் வரும் அறுநூறு கில்டன்"
கொலைதான் விழும். என்பாட்டில் கோபப்பட்டுக்கொண்டேன். அப்பன் மிக நல்லவன். அவன் எடுக்கவேமாட்டான். சீ அந்த பச்சைக் காட்டை எடுக்க யார் வருவான். அது 'வெறும் காட்'.
அறை மூலையிலிருந்த முருகன் படத்தட்டில் கிறிஸ்தவ பைபிள் இருந்தது. முருகனுக்கு முன்னால் கிறீஸ்து கிடக்கிறார். நான் இப்போது

Page 6
வீட்டுக்குள் முருகனும் வெளியே கிறிஸ்துவுமாய்.
நான்கு நாட்களுக்கு முன்னர் மதப்பிரசாரம் செய்ய வந்த தமிழர்கள் தந்த வேதாகமம். அவர்கள் மதம் மாறி என்னை மாற்ற நிர்ப்பந்திக்கிறார்கள்.
நம்பிக்கை இழந்து குழம்பிக்கிடக்கும் இந்த அகதி வாழ்க்கையில் நான் யெகோவாவின் சாட்சி ஆகிவிடுவது மிகச்சாதாரணம். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது மிகச் சுலபம் ஐயா.
நண்பன் பாலன் மதம் மாற்றுவதற்கெதிராய் தாறு மாறாய் விவாதித்ததால் சாத்தான் என்று சபிக்கப்பட்டிருக்கிறான்.
"என் நம்பிக்கைகளுக்கும், நம்பிக்கையினங்களுக்குமாக நான் கருத்துக்கூற எனக்கு சுதந்திரம் வேண்டும்" என்று நிமிர்ந்து நிற்கிறான்.
அவனுக்குக் கிடைத்த சபித்தலுக்குப் பயந்தும், நான் ஓர் சுதந்திர மனிதனாய் என்னை எண்ணிக்கொண்டும் அவர்களிடம் வேண்டிய வேதாகமத்தை கடந்த இரவு வாசித்தேன்.
பைபிளை எடுத்து விரித்தபோது அந்தப்பச்சைக்காட் எனது இலக்கம் பதிந்த முகம் சிரித்துக்கொண்டு கிடந்தது. அடையாளத்துக்காக வைக்கப்பட்ட அந்த லுாக்கா சுவிஷேசம் இருபதாம் அதிகாரத்துக்குள். அதில் நான் தொடரவேண்டிய பதின்நாலாம் வசனம். தோட்டக்காரர் அவனைக் கண்டபோது இவன் சுதந்திர வாளி சுதந்திரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு.
ஆம் உ ண் மை தா ன் . எனது சுதந்திரம் எ ல் லா திராட்சைத்தோட்டங்களிலும் கொல்லப்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.
பச்சைக் காட்டை எடுத்துக்கொண்டு வங்கிக்கு ஓடினேன் வங்கி பூட்டிக்கிடந்தது.
 

எனது வேலையின்மையை உறுதிப்படுத்தும் மாதாந்த பதிவு அட்டை தவறியபோது உங்கள் அலுவலகத்திலிருந்த கிழவி அதற்கான மீள் பதிவைச் செய்திருந்தார். பதிவு செய்யப்படவில்லையென இப்போது மறுக்கிறார்.
டிசெம்பர்- ஜனவரி மாத உதவித் தொகையை நிறுத்தும் முடிவு எந்த நியாயாதிபத்தியத்தின் வரைவிற்குள்ளும் அடங்காது ஐயா!
துக்கலூரிலும் கலியாணம், துடியலூரிலும் கலியாணம் நாய் அங்கு ஓடியும் கெட்டது. இங்கு ஓடியும் கெட்டது.
உங்கள் முடிவின் பின்னர் என் மனோநிலை
மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது எனக்கே தெரிகிறது.
வந்த கடனுக்கு வட்டிவளரும்போது படத்தட்டில் இருக்கும் *பத்துச் சென்ரிம் பரம்பரைக்கு உதவாது.
வாழ்வின் அர்த்தம் அந்தலைக்குக் குறைகிறது. அர்த்தமின்மைக்கான இன்னொரு தரவு
அடுத்த மாதாந்தப் பதிவுவரை காத்திருக்க நியாயமில்லை. விரக்தியில் கோம்பிளிவளைச் சிற்றாறு.
செயின் நதி பெரிது. did 60
* பத்துச் சென்ரிம்: பெறுமதியற்றதாகிவிட்டிருக்கும் பிரெஞ்சு நாணயம்.
ஆடு inal

Page 7
622/760/76 /7 u moflajfl வியக்கவைக்கும் மேதமை
பதிமனோகரன்
g
影
LLLLLL LLL00 CCS LLLL STTT LMLMM LLL LLLLAMS LLLLL LLL LLTTTT SL LLLL LL L LLLSLLLLLLLLOLLLLLLL LTTTTT
சென்ற ஆண்டு சுவீடனின் தலைநகரான ஸ் ரொக்ஹோல்மில் லியனாடோ டாவின்சி (Leonardo da Winci) யின் ஓர் அரும் பொருட் காட்சியகத்தைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. லியனாடோ டாவின்சி ஒரு விஞ்ஞானி, ஒரு புதுமைக் கண்டுபிடிப்பாளர். ஒரு கட்டிடக் கலைஞர். ஒரு பொறியியலாளர். ஒரு உடற் கூற்றியலாளர். ஓர் உளவியலாளர். ஓர் ஓவியர் என்ற பல்வேறு தலைப்புகளில் அவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகள், வரைபடங்கள், ஓவியங்கள் என்பவற்றுடன் அவருடைய பல வரைபடங்களின் மாதிரியுருக்களும் (model) அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பா மூடநம்பிக்கைகளில் திளைத்துக் கிடந்த காலகட்டத்தில் ஆலயங்களின் அழுங்குப்பிடிக்குள், பிரபுக்களின் கொடுங்கோன்மைக்குள் சிக்கிக்கிடந்த காலத்தில் மறுமலர்ச்சியின் புதிய ஒளிரேகையாக லியனாடோ டாவின்சியின் (1452-1519) வருகை அமைந்தது. புளோறன்சில் வின்சி என்ற கிராமத்தில் பிறந்த லியனாடோ டாவின்சி ஐரோப்பிய மறுமலர்ச்சியின் மகத்தான குறியீடாகத் திகழ்ந்தார். சிற்பம், ஓவியம், எழுத்து, கவிதை, இசைக்கருவி, கணிதக்கணிப்பீடுகள்,
[72گس هويته
 
 
 
 
 
 
 
 
 

இயந்திரப் பொறியமைப்பு ஆகிய பல்வேறு துறைகளிலும் மேதாவிலாசம் காட்டிய மாபெரும் மேதையாக விளங்கினார். ஐரோப்பிய மறுமலர்ச்சி யுகத்திற்கான தளத்தை நிர்மாணித்தவர் இவர் தான்.
வேடிக்ஸ் பியர் (1564-1616). றெம்பிராண்ட் (1606-1669), ஐசாக் நியூட்டன் (1643-1727). ஆகியோருக்கு முன்னர் வாழ்ந்தவர் டாவின்சி, நிக்கலஸ் கொப்பனிக்களிற்கு முன்னரே இறந்து விட்டார். பிரான்சில் லுாவர் அருங்காட்சியகத்தில் இன்றும் உலகெங்கிலும் உள்ள ஓவிய ரசிகர்களின் ரசனை ஈர்ப்பிற்கு இலக்கான மொனாலிஸாவினால்தான் அடையாளங் காணப்படும் லியனாடோ டாவின்சி ஒவியத்துறைக்கு அப்பால் வேறு துறைகளில் மேற்கொண்டிருக்கும் சாதனைகள் பிரமிப்பை ஊட்டுவன. கணிதம், இயந்திரங்களின் இயக்கம் ஆகியனவற்றில் மட்டுமன்றி, உயிரினங்களின் அசைவியக்கத்திலும் அவர் பெரிதும் அக்கறை கொண்டிருந்திருக்கிறார். வெறவிகொப்டர் கண்டு பிடிப்பதற்கு முன்னரேயே அதனைப்பற்றிய சாத்தியக் கூறுகளைக் கண்டுபிடித்து அதனை வரைபடமாகத் தந்துள்ளார். இதனை விட கணிதம், பாலங்கள்-நீர்ப்பாசனத் திட்டங்களுக்கான முன்மொழிவுகள், யுத்த ஆயுதங்களுக்கான வரைபடங்கள் என்பனவற்றையும் தீட்டியுள்ளார். தன் காலத்திற்குப் பின்னர் நடந்தேறிய பல மகத்தான கண்டுபிடிப்புகளை அவர் தனது காலத்திலேயே ஆராய்ந்து முன்னறிவித்துள்ளார் என்பதை அவரது கையெழுத்துப் பிரதிகள் மற்றும் வரைபடங்கள் என்பன அறுதியிட்டுக் கூறுகின்றன.
பிரபல்யம் மிகுந்த இடதுசாரியும் லண்டன் பல்கலைக் கழகத்தின் பளிங்கு இரசாயனப்பகுதியில் பேராசிரியராகக் கடமையாற்றிய ஜே.டி.பேர்ணல் (J.D.Bபாாel) விஞ்ஞானமும் சமூகத்திற்கான அதன் பங்களிப்பும்" என்ற தனது நுாலில் லியனாடோ டாவின்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளவை நமது அவதானத்திற்குரியனவாகும். வியனாடோ டாவின்சி அந்நாட்களில் தனது விஞ்ஞான ஆராய்ச்சியைப் போருக்கான ஆயுத உற்பத்தியில் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இக்கண்காட்சி ஒரு கண்காட்சியாக மட்டும் அமையாது அதற்கு அப்பால் அரசியல், விஞ்ஞானம் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளை விளங்கிக்கொள்வதற்கும் உதவியாக அமைந்தது.
卤鹉
sy r.

Page 8
சோலைக்கிளி
ஒரு கவிதை பறந்துவந்து
பூமரத்தில் குந்தி இன்று காலையிலும் எதையோ சொன்னது: கொஞ்சம் அழகாகத்தான் பூமரம், தன்னைச் சோடித்துக் கொண்டு நின்றது.
நேற்றுக் காலையிலும் இக்கவிதை வந்தது. பூமாத்தின் நெஞ்சிருக்கும் கன்னிக்குலை அதிகமுள்ள பகுதியிலே குந்தி சொண்டாலே எதையோ எழுதி விளக்கியது, பூமரமும் நேற்றும்;
தலையாலும் சோடித்து காலாலும் அலங்கரித்து
நின்றது பார்க்க; என்னுடம்பில் மயிர் மணக்க.
கவிதை, சிறு கவிதை
ஆனாலும் அழகு. பூமரத்தில் நின்றால் இரண்டிற்கும் புத்துணர்ச்சி காலையிலே பனியில் அழகுக் கவிதை வந்து குந்தி ஒதுகின்ற பாட்டால் இம் மரவேரும் பூக்கிறது.
 
 
 

பூமரமே பூமரமே
உன் வேரும் பூக்கின்ற அதிசயத்தை நான் கண்டு வியக்கத் தயாரில்லை. உன் பொருத்தக் குருவி
உன் நெஞ்சுக்குள் பாலாறு பொங்கச் செய்து உன் கொண்டையிலும் இன்பத்தை கொட்டி வளர்ப்பதனால்,
பூக்கின்றாய் பூக்கின்றாய் பூக்கின்றாய் பூக்கின்றாய் பூக்கின்றாய் அவன் போல, அவனுடைய பெண் போல
கிடைக்கப்பெற்றோம் காத்தி
ரமான வாசிப்பு

Page 9
பறக்கின்ற பூவின் அழகு வரும்.
நிலா எனக்குள் பயிர் செய்யும், அது நீர் இறைக்கும் வாய்க்காலில்
வெள்ளி மீன்கள் சினை பீச்சி
பொரித்து கோடிக் கணக்கில் துள்ளும், என்னை - பொறாமையின்றி
இந்த
வாழ்க்கையிலே எழுதினால்,
கன்னி கட்டுகிறேன் என்று உணருகிறேன், பறக்கும் அழகுவா நான்.
நிலா இப்போது
என் தலையில் காய்கிறது.
நாம் திறந்து கொட்ட முடியாத பொருள நமது நெஞ்சு
எனது அசிங்கத்தை எல்லாம் பெருங்கடலில் கொட்டுகிறேன்;
வரவர அதன் நிறம் கறுப்பாகிப் போவதற்கு,
காரணத்தில், என்னுடைய அசிங்கமும் ஒன்று!
3
۔ یہ ۔ محمحصص ہے ۔
* * * * es
”Zیھم ۔ --tء بعضس۔ 2 سعے
? گضمخrص ”حساس۔
a 26 uails
 
 
 

அசிங்கத்தில் பெரிய அசிங்கமென்று நான் நினைப்பேன், உனக்குள் விளைந்துள்ள பொறாமைகளின் மலையில் ஒரு துண்டு
எனக்குள் விளைந்ததைத்தான்! நீ எங்கே போனாலும் யாரிலும் எரிச்சல்படும் அளவுக்கு என் சிறுமலை பெருக்காமல் முளையோடு கொத்தி கடலுக்குள் கொட்டுகிறேன், எனக்கு
நான் நடந்தால்
பறக்கின்ற பூவின் அழகுவர. சோலைக்கிளி
20வது இலக்கியச் சந்திப்பு
20th LITERARY CONFERENCE (CANADA) 09.09, 1995 -amo- 10.09. 1995 TORONTO CANADA
புலம் பெயரந்து பல்வேறு திசைகளில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களையும் படைப்பாளிகளையும் ஒன்றிணைக்கும் மையமாக இன்று வளர்ச்சியடைந்துள்ள இலக்கியச் சந்திப்பு நிகழ்வானது, ஜேர்மனி, பிரான்ஸ், ஒல்லாந்து, சுவிற்செர்லாந்து, லண்டன் ஆகிய ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து முதல்தடவையாக கனடாவில் இடம் பெற உள்ளது.
தொடர்புகளுக்கு:
PO BOX 1031, STATION 'F" TORONTO, M6Y-2T7 ONTARIO, CANADA

Page 10
அரங்கு சில குறிப்புகள்
முத்தையாபிள்ளை நித்தியானந்தன்
கடந்த பத்தாண்டு காலமாக இன ஒடுக்குமுறையின் கொடூரப்பிடியில் இருந்து வெளியேறி உலகெங்கும் குவிந்த தமிழ் மக்களின் ரசனை, அப்படியொன்றும் பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய ரசனை அல்ல என்பதில் பெரிய கருத்து வேறுபாடுகள் எதுவுமில்லை. வறுத்த யாழ்ப்பாண மிளகாய்த்துாள், கட்டாசம்பல்,தோலகட்டி நெல்லிரசம்,ஸ்பெசல் மென்டிஸ் , புழுக்கொடியல், முருங்கைக்காய்,யாழ்ப்பாண விளைமீன் இவற்றோடு பாரிஸ் La Chapella so, 606öorL6ör Eastham so, Guffallsör Kreuzberg so ரொறன்ரோ Scarborough இல் "மல்லுவேட்டி மைனர்' இல் இருந்து ரஜனிகாந்தின் 'பாட்சா வரை வீடியோ கொப்பிகளும் தான் இங்கு வந்து குவிந்தன. ஜெமினி சினிமா', 'பருவ விருந்து', 'திரைச்சித்திராவும் தான்
பரபரப்பாக விற்பனைக்கு உள்ளாகின. உலகை உய்விப்பதற்காக
உத்தாரணம் கொண்டிருப்பதாகப் பிரகடனப் படுத்தும் பத்திரிகைகளுக்கு பத்துப்பேர்கூட வாசகர் இல்லை என்பது ஒன்றும் இயக்க இரகசியமல்ல. காத்திரமான புகலிட சஞ்சிகைகள், உன்னத கனவுகளோடு தோற்றங்கண்டு அந்த வேகத்திலேயே நலிந்து மறைந்துபோயின. இலக்கிய இரசிகர்கள், கல்வி வட்டங்கள், வாசகர் வட்டங்கள் எல்லாம் சுற்றிச் சுற்றிப் பத்து விரல்களுக்குள் அடக்கம். இதுவே இன்றைய ஐரோப்பியப் புகலிட சமூகத்தின் கலாசார வாழ்வின் ஒரு குறுக்கு முகம்.
தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் 15 ஆண்டுகளுக்கு முன்னால்,
 
 
 
 

இலங்கையில் எத்தகைய வரண்ட நாடகச் குழலில் தோற்றங் கண்டு பேருழைப்புடன் தனது சீரிய நாடகப் பயணத்தைத் தொடங்கியதோ அத்தகைய ஒரு வரட்சிச் குழலையே ஐரோப்பாவிலும் எதிர் கொள்ள நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானதுதான். உன்னதமான சுதந்திர வேட்கைகளை ஒரு புறம் பிரகடனம் செய்துகொண்டு மறுபுறம் மிக மலிந்த தென்னிந்திய சினிமாப்படங்களைத் திரையிட்டும் அண்ணாமலைக்கு காவடி எடுத்தும் குஷ்புவுக்குத் தங்கச்சங்கிலி அணிவித்தும் தங்களின் அதி உன்னத கலாாசனையை வெளிப்படுத்தும் ரசிகர் கூட்டத்தின் மத்தியிலேயே அன்ரன் செக்கோவையும், பெர்ரோல்ட் பிரெஸ் டையும், வஸ்கா ஹாவெலையும், ஹெரோல்ட் பின்ரரையும், பாதல் சர்க்காரையும் இன்னும் இந்திரா பார்த்த சாரதி, மெளனகுரு, மாவை நித்தியானந்தனை மேடையேற்றும் தளராத இவர்களின் முயற்சிகள் எத்துணை விஷப்பரீட்சை என்பதை இன்றைய யதார்த்த குழலின் பின்னணியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.
இலங்கையிலேயே குழந்தை சண்முகலிங்கம், நா.சுந்தரலிங்கம், அ.தாசீசியஸ் ஆகியோரின் நாடகங்களை மேடையேற்றிய அரங்காடிகள் குழுவினர் மிகப்பெருங் கஸ் டங்களுக்கு மத்தியிலேயே தமது நாடகங்களைமேடையேற்றுவதாகக் கூறுகிறார்கள். பொருளாதார ரீதியான பலமின்மையால், "...இசை"எம் நாடகங்களில் மிகப் பலவீனமடைந்து காணப்படுகிறது நடிகைகள் நமக்கு கிடைப்பது குதிரைக்கொம்பு. இதனால் ஆண் பாத்திரம் அதிகம் உள்ள நாடகங்களை நாம் தெரிவு செய்கிறோம். .அதுமட்டுமன்றி ஆண் நடிகர் கூடக் கிடைப்பது இல்லை. . .ஒவ்வொரு நாடக மேடையேற்றத்தின் போதும், நாம் சில ஆயிரங்களை இழக்கிறோம். விளம்பரங்கள் கிடைப்பதில்லை. நுழைவுச் சீட்டு விற்பதில் இடர்ப்பாடு. ..ரசிகர் அவைக்கான அங்கத்தவர்களைச்சேர்ப்பதிலும் போதிய உற்சாகம் கிட்டவில்லை என்று அரங்காடிகளின் "கோடை" நாடக மேடையேற்ற வெளியீடு" குறிப்பிடுகிறது.
காத்திரமான நாடகமரபு வேரூன்றி, விழுதுான்றி, விருட்ச நிழல்பரப்பி நிற்பதாக விதந்துரைக்கப்படும் நம் சொந்த மண்ணிலேயே இந்த நிலையென்றால் முற்றிலும் மாறுபட்ட அன்னியச் குழலில் ஓர் அமெச்குர் நாடகக்குழுவினருக்கு நிலைமை இன்னும் எவ்வளவு சோர்வூட்டுவது என்பதை விபரிக்கத்தேவையில்லை.

Page 11
அதுவும் அகதிகளாய் புலம்பெயர்ந்த மண்ணில் ஓர் வேரறுந்த கலைஞனின் கலைவெளிப்பாடு அசாதாரணமான நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.".மக்கள் பேசும் மொழியின் ஓசையைக் கேட்கவேண்டிய, அவர்களின் உதடுகளின் அசைவைப் பார்க்கவேண்டிய - பேசும் மொழியோடும், இயல்போடும் குழலோடும் இரண்டறக் கலந்தவர்களான எழுத்தாளர்கள் என்ற கலைஞர்களின் அனுபவங்கள் இன்னும் கசப்பானவை. புலம்பெயர்ந்தபோது அவர்களால் மேற்கொண்டு எழுத முடியவில்லை. எழுத்து வாழ்க்கை, எழுத்தாளன் என்ற வாழ்க்கை முடங்கிப்போனது. எவ்வளவு காலத்துக்குத்தான் மொழியைத் தேக்கி வைக்க முடியும்? எவ்வளவு புத்தகங்களால் நினைவுகளை உள்ளபடி மீட்டுவர முடிகிறது?. என்று குன்ரர் கிறாஸ் (Gunter Grass) அவர்கள் எழுத்தாளன் பற்றித் தெரிவிக்கும் கருத்துக்கள் ஒரு நாடகக் கலைஞனுக்கும் பொருந்திப் போகிறது.
மக்கள் நாடக அரங்கு, சமூகமாற்றத்திற்கான விடுதலை அரங்கு, தளை நீக்கத்துக்கான மக்கள் அரங்கு, அனைத்தும் உட்கொண்ட அரங்கு (Total Theatre) என்று நாம் பலபடக் கூறிக்கொண்டாலும் நாடகத்தை பாரிய சமூகமாற்றத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான பேராயுதமாக அல்லது போராயுதமாக கருதுகின்ற அதீத உணர்வு எத்துணை விரும்பத்தக்கதாக இருந்த போதும் இலங்கையின் யதார்த்த நாடகச் குழல் இந்த முனைப்புக்கு இயையுடையதாக இருக்கவில்லை என்பதையே மேற்கூறிய நாடகக் கஸ் டங்கள் தெளிவுபடுத்துகின்றன. கலை இலக்கியத்தின் சமூகத்தாக்கம் ஓர் எல்லை வரை தான் செயற்படமுடியும்.
ஐரோப்பிய வாழ்வின் நெருக்கடிகள், அவசர வாழ்க்கைப் பயணங்கள், நேர அவலங்கள், பொருளாதாரரீதியில் எப்பொழுதுமே கையைச் சுட்டுக்கொள்ளும் எத்தனங்களுக்கூடாக லண்டன் தமிழ் அவைக்காற்றுக் கழகத்தினர் மேற்கொள்ளும் இந்தத் தீவிர நாடக முயற்சிகள் Lotus auf Steinen" (பாறையிற் பூத்த தாமரைகள்) தான்.
இந்தத் தீவிர நிலைமைக்கூடாகவும் இங்கிலாந்து, சுவிஸ் , நெதர்லாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் லண்டன் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தினர் ஒரு பரந்த ரசிகர்கள் மட்டத்திற்
 

காத்திரமான அங்கீகாரத்துடன் தம் நாடகங்களை மேடையேற்றியே வருகிறார்கள். இந்த நாடகங்கள் சமூகத்தின் சிக்கலான பிரச்சினைகளை மிக நுட்பமாக - கலாபூர்வமாக வெளிக்கொணர்கின்றன. சமூக பொருளாதார அரசியல் போன்ற வெவ்வேறு தளங்களில் சன்னல் பின்னலாக, சிக்கல் மலிந்ததாகத் தென்படும் பிரச்சனைகளை அதன் சகல குட்சுமங்களோடும் வெளிப்படுத்தும் ரஸவாதத்தை இந்த நாடகங்கள் நேர்த்தியாகவே நிறைவேற்றியிருக்கின்றன.
Harald Pinter இன் "போகிற வழிக்கு ஒன்று" என்ற நாடகத்தில் சித்தரிக்கப்படும் ஒரு ஒடுக்கு முறை இராணுவ முகாமிற்குள் நிகழும் சித்திரவதை இன்றைய உலகெங்கும் காணப்படுகின்ற குரூர அவலத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. பாதல் சர்க்காரின் "முகமில்லாத மனிதர்கள்" நாடகத்தில், வேரிழந்து போன நாங்கள் எமது சொந்த முகங்களையே தரிசிக்கிறோம். Havel அவர்களின் "மன்னிக்கவும்" புகலிடத்துத் தமிழர் சமூக வாழ்வில் நாம் அடிக்கடி காண நேரும் தரிசனமேயாகும். Bertold Brecht இன் யுகதர்மம் சுரண்டும் ஒருவனதும் சுரண்டப்படும் ஒருவனதும் நீண்ட கதையைச் சொல்லும் ஒரு அரசியல் நாடகமேயாகும்.
பாகிஸ்தான், பங்களாதேஷ், வங்காளம் ஆகிய இடங்களில் விடுதலை JE Tu 4 9 U Iž (s Berto 1 d Brecht, Garcia Lorca 9 4 u நாடகாசிரியர்களை மிகச் செறிவாகவே உள்வாங்கியிருக்கிறது. பாகஸ்தானின் பெண்கள் நாடக அரங்கு Garcia Lorca வின் "The House of Bernarda Alba" 6T 6TD 5TLEġ56Mg5(Culu g56TLDTEå GlasTGTGG எழுந்திருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் யாழ்ப்பாணத்தில் இதே.
நாடகத்தை 'ஒரு பாலை வீடு' என்ற பெயரிலும் Bertold Brechtஇன் யுகதர்மம்' நாடகத்தையும் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம் மேடையேற்றியமை விடுதலை அரங்க முயற்சிகளாகவே
கொள்ளத்தக்கன.
சமூகப் பிரச்சின்ைகளும் நாடகமும் பற்றிக் கதைக்க முற்படும் போது நாடகக் கலைஞன் முற்றாகவே சமூகப் பொறுப்பில் இருந்து ஒதுங்கி விடுவதற்கில்லை. அது போன்றே ஒரு நாடக நிகழ்வினால் மட்டுமே ஒரு
eta 42

Page 12
சமுதாயத்தையே புரட்டிவிட முடியும் என்ற உட்டோப்பியன் கனவிலும் திளைத்துப்போகவேண்டியதில்லை. இது தொடர்பாக அகஸ் தோ போல் (Augusto Boal) என்ற பிறேசில் நாடகக் கலைஞனிடம் "தீர்வுகளை ஏன் நீங்கள் தருவதில்லை?" என்று கேட்டபோது அவர் கூறிய பதிலை நோக்குவது பொருந்தும்.
"..எதையும் பார்க்கத்தயாராக இல்லாத மக்களிடம் போய் ஒரு நாடகத்தைப் போட்டதும் அது அவர்களது கண்களை அப்படியே திறந்து விட்டு விடும் என்று நான் நம்பவில்லை. இதுதான் 50கள், 60களில் நாங்கள் அரசியல் நாடகங்களைப் போட்ட போது செய்த தவறு. என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். மக்களின் முன்னணிப்படையினராக இருக்கும் எங்களுக்கு சாதாரண மக்களைவிட எல்லாமே அதிகம் தெரியும் என எண்ணிக்கொண்டிருந்தோம்.
பிரேசிலில் நிறவெறிக்கு எதிரான நாடகங்களைப் போட்டுக் கொண்டிருந்த நாடகக் குழுவொன்றை வைத்திருந்தோம். ஆனால் நாங்கள் எல்லாருமே வெள்ளையர்கள்.
கிராமத்து விவசாயிகளைப் பற்றிய நாடகங்களை நாங்கள் போட்டோம். ஆனால் நாங்கள் எல்லாருமே நகரத்தில் வசிப்பவர்கள்.
பெண்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்த்து எப்படிப் போராடுவது என அவர்களுக்குப் பயிற்றுவிக்க முயன்றோம். ஆனால் எங்களில் பெரும்பாலோர் ஆண்கள்.
நாங்கள் பெண்களிடம் சொன்னோம்: நீங்கள் போராட வேண்டும். போராட்டம் யாரை எதிர்த்து? எங்களை எதிர்த்து. ஆண்களை எதிர்த்து. இது சம்பந்தமில்லாத ஒரு விஷயமாய் இருந்தது. நாங்களோ நகரவாசிகள். கிராமத்து விவசாயிகளுக்குப் போதித்துக் கொண்டிருந்தோம். நாங்களோ வெள்ளையர்கள். கறுப்பர்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தோம். நாங்களோ ஆண்கள் பெண்களுக்குப் போதித்துக் கொண்டிருந்தோம். எங்களது நோக்கம் நல்லதாக இருந்தாலும் அது ஈடேறவில்லை.
. eta 259 udf22

ஒருநாள் பிரேசிலின் வடகிழக்குப் பிராந்தியத்தில் விவசாயிகளைப் போராடத் துாண்டுவதற்காக ஒரு நாடகத்தை நடத்தினோம், நாங்கள் எல்லோரும் கைகளில் துப்பாக்கிகளை ஏந்தியபடி "நாம் எல்லோரும் போராட வேண்டும்.நமது மண்ணை விடுவிப்பதற்காக இரத்தம் சிந்த வேண்டும்" என்று முழங்குவதாக அந்த நாடகம் முடியும். அந்தச் சமயம் ஒரு விவசாயி எங்களிடம் வந்தார். நாங்களும் நீங்கள் சொன்னது தான் சரி என்று நினைக்கிறோம். இந்தத் துப்பாக்கிகளோடு வந்து எங்களோடு சேர்ந்து கொண்டு நீங்களும் ஏன் போராடக் கூடாது என்று கேட்டார். நாங்கள் பொய் சொல்கிறோம் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. நாங்கள் சொன்னோம் இவையெல்லாம் நிஜமான துப்பாக்கிகள் அல்ல. ஆனால் அவர் அதைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. இந்தமாதிரி சுட முடியாத துப்பாக்கிகளைச் செய்து என்ன பிரயோசனம் என்று அவர் கேட்டார். நாங்கள் சொன்னோம்: இந்த நாடகம் முடியும் போது நமது மண்ணை விடுவிக்க இரத்தம் சிந்துவோம் என்று முழங்கும் போது இப்படித் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: நீங்கள் உங்களது துப்பாக்கிகளை கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை, எங்களிடம் எங்கள் எல்லோருக்கும் போதுமான அளவிற்கு துப்பாக்கிகள் இருக்கின்றன. நீங்கள் எங்களோடு வாருங்கள். எங்ளோடு இருந்து நீங்களும் சுடுங்கள். நாங்கள் கூறினோம்: நீங்கள் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். நாங்கள் உண்மையிலேயே விவசாயிகள் இல்லை. நாங்கள் நாடகக் கலைஞர்கள். "ஓஹோ, நீங்கள் உண்மையில் நாடகக் கலைஞர்கள். இரத்தம் சிந்துவதைப்பற்றிப் பேசுவீர்கள். ஆனால் உங்கள் இரத்தத்தையல்ல! எங்கள் இரத்தத்தை" என்றார்கள் அவர்கள். எனக்கு அவமானமாகப்போய்விட்டது. அன்றிலிருந்து நான் முடிவுசெய்து கொண்டேன், இனிமேல் மக்களைப் பார்த்து அதைச் செய்யுங்கள், இதைச் செய்யுங்கள் என்று சொல்லி விட்டு நாம் வீட்டுக்குப் போய்விடுகிற மாதிரி நாடகம் போடுவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். மக்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு எந்தவித உரிமையும் கிடையாது. என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு நாம் சொல்ல முடியாது.
மக்களோடு தன்னை இறுகப் பிணைத்துக் கொண்ட ஒரு நாடகக் கலைஞனின் கூற்று இது. போராட்டக் களத்தில் இருக்கும் ஒரு விவசாயிக்கும் பூரண சமூக ஈடுபாடு கொண்ட ஒரு நாடகக்
இ2

Page 13
கலைஞனுக்கும் இடையில் மட்டுமே இத்தகைய அர்த்தம் பொதிந்த சர்ச்சை இடம் பெற முடியும். நாடகம் முடிந்த மறுகணமே அரங்கை விட்டு வெளியேறி விடுகின்ற ஒரு ரசிகனுக்கும் ஒரு அமெச்சூர் நாடகக் கலைஞனுக்கும் இது அர்த்தமாகாது. ஐரோப்பியத் தமிழ் கலாச்சார நடப்பியல் சூழலில் ஒரு வரையறைக்குட்பட்ட வகையிலேயே இந்த நாடகக் கருத்துப்பரிமாற்றம் நிகழ முடியும்.
இவற்றைக் கணக்கில் எடுக்காத பொத்தாம் பொதுவான கருத்துதிர்ப்புக்கள் நம்மை எங்கும் இட்டுச் செல்லமாட்டா."
மீண்டும் மீண்டும் ஏன் எமக்கு கறுப்பு ஜூலைகள்
east 2
 

முக்கியமானது ஏதெனில்
ت
《།། 《སྡེ། ༦ ཡོད་ fl.dacy Jif
ܐ ܢܔܔܓܶ
همې
தென்னிந்திய இசைக் கலைஞர்களுள் இன்று தமிழகத்துக்கு வெளியே மிகவும் நன்கு அறியப்பட்டவர், எல்.சுப்பிரமணியம். உலகின் தலைசிறந்த வயலின் கலைஞர்களுள் ஒருவராகவும் அவர் கருதப்படுகிறார். கர்நாடக இசையை மேற்கிற் பரப்பியவர்களுள் அவரையே முதன்மையானவராகக் கொள்ள நியாயமுண்டு. வயலின் வாசிப்பில் அவரது பிரமிக்கத்தக்க கைத்திறமையையும் கர்நாடக இசைக்கு ஒரு நவீனப்பண்பை வழங்கியமையும் அவரது சிறப்பான இடத்துக்கு முக்கியமான காரணங்கள். மேனாட்டு இசையுடனும் அவருக்கு மிகுந்த பரிச்சயமுண்டு, ஸ்tெfா ன் Gறாப்பெல்லி (Stephane Grappeli) என்ற முதுபெரும் ஜாஸ் வயலின் கலைஞருடன் இணைந்து இசையமைத்திருப்பதோடு வடஇந்தியக் கலைஞர்களுடனும் ஐரோப்பிய இசைக் கலைஞர்களுடனும் வாத்தியக்குழுக்களுடனும் சேர்ந்து இசை வழங்கியுள்ளமை பற்றியும் நம்முட்
அண்மையில் லண்டனில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் அவர் பிரதம கலைஞராகப் பங்கு பற்றினார். இந்த நிகழ்ச்சி நவுண்ட் ஸ்குவயார் (வட்டச் சதுரம்) என்ற பேரையுடையதும் வசதிபடைத்த இந்திய மற்றும் ஐரோப்பியப் பிரமுகர்களது ஆதரவையுடையதுமான தரும தாபனத்துக்கு நிதி திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் நோக்கங்கள் பற்றியோ அடிப்படை பற்றியோ நான் இங்கு ஆராய முனையவில்லை. அமிதாப்பச்சன், ஸோனியா காந்தி ஆகியோருக்கு முக்கியத்துவமளிக்கப்பட்ட
226 Luzz5.

Page 14
நிகழ்ச்சி என்பதையும் அந்த அமைப்பின் போஷகர் முன்னாள் கிரேக்க அரசர் கொன்ஸ்த்தன்தின் என்பதையும் இங்கு குறிப்பிடின் போதுமானது.
நிகழ்ச்சி நிரலில் எல். சுப்பிரமணியம் பற்றி எழுதப்பட்டிருந்த அறிமுகக் குறிப்பைப் பற்றி மட்டுமே இங்கு எழுத விரும்புகிறேன். அதில் எல். சுப்பிரமணியம் இரண்டு வயதிலேயே மிகுந்த இசைஞானத்தைக் காட்டினாரெனவும் பக்கவாத்தியமாகக் பயன்பட்ட வயலினைக் கச்சேரிக்குரிய தனி இசைக் கருவியாக்கியவர் அவரெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவற்றை விட, அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளில் இந்திய அரசு வழங்கிய பத்மசிறீ யுடன் தமிழக ஆளுனர் வழங்கிய வயலின் சக்கரவர்த்தி பட்டமும் சிறீகணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி என்பவர் வழங்கிய நாதச் சக்கரவர்த்தி" பட்டமும் சேர்க்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிட்டவை நமது கலைச் குழலில் உள்ள மூன்று நோய்களை அடையாளங்காட்டுகின்றன. ஒன்று கலைஞர்களை அவதாரங்கள் என்றவிதமாகக் காட்டும் மனோபாவம் தொடர்பானது. மிக இளைய வயதிலேயே பலவேறு ஆற்றல்களைக் காட்டும் மனிதர்கள் வரலாற்றில் இருந்துள்ளனர். இந்தவிதமான ஆற்றல்கள் சமுதாயச் குழல், குடும்பச்குழல் போன்றவற்றையொட்டி வளர்க்கப் பட்டுள்ளன. புறக்கணிக்கப்பட்டும் உள்ளன. ஒருவரது ஆற்றலை முற்பிறவிப் பயன், பெற்றோர் மூதாதையாரின் வழிவந்த செல்வம் என்றவிதமாக விளக்குகிற ஒரு பண்பையும் நமது மரபுசார்ந்த கலை நிகழ்ச்சிகளில் உரையாற்றுவோரிடம் காணலாம். இதன் விளைவுகளில் ஒன்றாக, ஒரு கலைஞரின் பெற்றோர் பாட்டன் பாட்டியாரிடமும் சிறப்பான ஆற்றல்கள் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்படுவதுண்டு. எல். சுப்பிரமணியத்தின் தந்தை முன்பு இலங்கையில் வயலின் கலைஞராகவும் ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவர் நல்ல கலைஞர் என்பதில் ஐயமில்லை. அவர் எங்கே பேராசிரியாக இருந்தார் என்று தெரியாது. ஆயினும் அவரைப் பேராசிரியர் லக்ஷமிநாராயணர் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். இது கலாநிதி, பேராசிரியர், டாக்டர், போன்ற பட்டங்கள் மீதான குருட்டுத்தனமான மோகத்தின் விளைவு போலவே தெரிகிறது. கவனிக்கவேண்டியது, எல். சுப்பிரமணியம் ஒரு மருத்துவப் பட்டதாரி. ('டாக்டர்’ ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா மாதிரி டாக்டர் அல்ல.)

இன்னொரு வியாதி சாதனைப்பட்டியல் தொடர்பானது. முதலாவது ஏதாவதாக இருக்கும் ஆசை பலரை விடுவதில்லை. இது பற்றி இங்கு அதிகம் குறிப்பிட அவசியமில்லை. எல். சுப்பிரமணியத்துக்கும் எத்தனையோ வருடங்கள் முன்பு வயலின் கச்சேரிகள் செய்த சௌடையா என்ற கன்னடக் கலைஞரைப் பலர் மறந்தாலும், அவரது பேரைத் தாங்கிய ஒரு கலா மண்டபம் பெங்களுரில் வயலின் வடிவக் கூரையுடன் இன்னமும் உள்ளது. சௌடையா, இறந்து நெடுங்காலத்தின் பின்னும் போற்றப்பட்ட ஒரு அற்புதமான கலைஞர். அவரது கச்சேரிகளிற் சில ஒலிப்பதிவாகியுள்ளன. இந்த விளம்பர யுகம் எவ்வளவு எளிதாக உண்மைகளை மறைக்க அவசரப்படுகிறது!
மூன்றாவது வியாதி கெளரவிப்புத் தொடர்பானது.
எல். சுப்பிரமணியத்துக்கு அளிக்கப்பட்ட எந்தக் கெளரவமும் அவரது தகுதியை மீறியதல்ல. ஆயினுந் தமிழக ஆளுனருக்கு ஒருவரை வயலின் சக்கரவர்த்தி என்று முடிகுட்ட என்ன தகுதி உண்டு என்பது ரசமான விஷயம். சிறி கணபதி சச்சிதானந்த ஸ்வாமிஜி என்பவருக்கு எவரையும் நாதச்சக்கரவர்த்தி என்று பட்டம் தட்டுமளவுக்கு எவ்வளவு இசை ஞானம் உண்டோ தெரியவில்லை. இப்படிப்பட்ட பட்டங்கள் இந்தியச் சூழலில் மிகவும் மலிந்து விட்டவை. பட்டங்களின் பேர்களின் மினு மினுப்பு அவற்றை அளிப்பவர்களின் வெறுமையைக்கூட மூடிக்கட்ட உதவாது. இந்த நிலையில்,இவற்றையெல்லாம் தகுதிகளாகக் காட்டுவது, கலைஞர்களது தகைமையை மாசுபடுத்துகிற காரியமேதான்.
இந்த அறிமுகத்தில் இருந்த சகல குறைபாடுகட்கும் எல். சுப்பிரமணியம் பொறுப்பானவர் என்று க்கூறுவதற்கில்லை. உயர்ந்த கலைஞர்கள் இத்தகைய முகத்துதிகள் பற்றிக் கண்டிப்பாக இருப்பது பிற கலைஞர்கட்கு நல்ல முன்னுதாரணமாக இருக்கும். எந்தத் துறையிலும் சாதனைகளை விட முக்கியமானவை பங்களிப்புக்களே. அபிப்பிராயங்களை விட முக்கியமானவை உண்மைகள், அவை அறியப்படாதவையாயினுங்கூட.

Page 15
சிவசேகரம்
மாநகரின் முகில்கள் விரைந்தோடுகிற குறுகலான வான வீதியைக் கடக்க நிலவுக்கு நெடு நேரமெரத்தது: இருமருங்குமிருந்த கொங்கிறீற்றுச் சுவர்களின் ஒளிச்சதுரங்களால் உபயோகமில்லை சற்று முன்னர் தெருக் கரையில் நின்ற தாத்தாவுக்கும் வெகு நேரம் எடுத்தது.
1லைஒளி முத்தைய fin oop of an - ... 1 to,bsboj 6py j, oboj o t
 
 
 
 
 
 
 

யமுனா ராஜேந்திர
நள்ளிரவில் தொடங்கி அதிகாலை தொகுப்பைப் படித்து முடிக்கையில் எனக்குள் முழுமையாகத் தோன்றி வியாபித்த உணர்ச்சி: துக்கம்.
நிராகரிக்கப்பட்ட மனிதர்களின் உலகு குழந்தைகளின் உலகு போன்று பரிசுத்தமானது. ஸார்த்தருக்கு இலத்தீன் அமெரிக்க இலக்கியம் நிஜ இலக்கியமாக இதனால் தான் தோன்றுகிறது. றேமண்ட் வில்லியம்ஸ் க்கு கிராமிய எல்லைப்புற மக்களின் உலகு பற்றிய தரிசனம் இதனால் தான் அவசியமாகத் தோன்றுகிறது. இந்தக்கதைகளை ஒரே வாசிப்பில் முடித்தபோது சில அற்புதமான மலையாளத் திரைப்படங்கள் என் மனசுக்குள் வந்து போயின. மம்முட்டி நடித்த 'தினராத்தங்கள்', ஜெயபாரதி மது நடித்த 'நீலக்கண்ணுகள்", அசோக்குமார் கொடுத்திருந்த 'மலங்காடு', இந்த மூன்று படங்களும் இக் கதைகளைப் போன்றே அம்மக்களின் நைந்த குடியிருப்புகள், பசி, உடம்பே தமக்கு உடைமையில்லாத தேயிலைத் தோட்டப் பெண்கள், எதிர்ப்பு உணர்ச்சிகளைத் திரட்டிக் கொள்ளாத மக்களின் விரக்தி, சிதறடிக்கப்பட்ட குழந்தைகளின் கனவு, நகர மைய வாழ்விலிருந்தும் பிரதான 'கலை இலக்கிய தரிசனங்களில் இருந்தும் அன்னியமான வாழ்வு, முதலாளி - கங்காணி - அரசு -பொலீஸ் அடக்குமுறை,புதிய தலைமுறையின் விழிப்புணர்ச்சி போன்றவற்றையே தொட்டுச் சென்றன. உலகெங்கும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களின் மனவுலகமும் வாழ்க்கை அனுபவங்களும் ஒடுக்குமுறை அனுபவங்களும் ஒன்றேதான் என்பதை, மறுபடி நிரூபணமாக்கும் படைப்புக்கள் மலையகப்

Page 16
பரிசுக்கதைகள். இவ்வகையில் இக்கதைகள் உலகெங்கும் நிராகரிக்கப்பட்ட மனிதர்களோடு தம்மையும் இனங்காண்கிறது, இணைத்துக் கொள்கிறது. 180 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இலங்கைப் பெருந்தோட்டங்களுக்கு கூலி அடிமைகளாகப் போனார்கள் மலையக மக்கள். இவர்கள் தம்மோடு தமது நினைவுகளையும் தெய்வங்களையும் சேர்த்தே எடுத்துக் கொண்டு போனார்கள். தமிழகத்தின் பிரதான கலை இலக்கிய தளங்களிலும்சரி, ஈழத்தின் பிரதான கலாசார தளங்களிலும்சரி தலித் இலக்கியம் போலவே மலையக இலக்கியம் பற்றின பிரஸ்தாபங்களிலும் தவிர்க்கப்பட்டே வந்திருக்கின்றன. ஈழத்து இலக்கியம் யாழ்ப்பாணிகளின் இலக்கியம், தமிழக இலக்கியம் பிராமணீய ஆதிக்க மைய இலக்கியம் என்றே விவாத மையங்கள் உருவாக்கப்பக்டிருக்கின்றன. இச் குழலில் இக்கதைகள் தமது தனித்துவ இன அடையாளம் பற்றியும் பேசுகிறது. 16 சிறு கதைகள், தெளிவத்தை ஜோசப்பின் முன்னுரை, எச்.எச்.விக்ரமசிங்காவின் தொகுப்பு பற்றிய குறிப்புகள், கலை ஒளி முத்தை யா பிள்ளை பற்றிய வாழ்க்கை விவரணம் எனத் தொகுக்கப்பட்டிருக்கிறது இப் புத்தகம்.
கதைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
1. மலையகத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட கல்வி கொடுத்த உத்தியோகத்தில் அதனின்று தம்மை அன்னியப்படுத்திக்கொண்ட- அந்த நினைவுகள் மற்றும் வாழ்விலிருந்து முற்றிலும் விடுவித்துக்கொள்ள முடியாத மனிதர்களின் - அவர்களின் மறுவருகை அவர்களுக்குள் "எழுப்பும் மனோவிமர்சனங்கள்.
அல் அசுமத்-விரக்தி
மயில்வாகனம்-சமர்ப்பணம்
2. மலையக வாழ்வின் வரலாற்றை- வாழ்வை- சிதறுண்ட மனித உறவுகளை- சோகத்தை- எதிர்ப்பை- காதலை வெளிப்படுத்தும் ஒன்பது
கதைகள்.
3. பெண் எழுத்தாளர்களின் 5 கதைகள்
susta

பெண் எழுத்தாளர்களைத் தனியே எடுத்துக்கொள்ளக் காரணம், அவர்களின் பிரத்தியேக அனுபவத்தையும் பிரத்தியேகக் கதைக் கருக்களின் தனித்துவத்தையும் கட்டிக்காட்டுவது கருதித்தான்.
I
அம்மாவின் மெளன மகிழ்ச்சிக்கு எல்லை இருக்கவில்லை. மருமகளின் அன்பளிப்புக்களால் உடல் பூரித்தது. தான் சமைத்தவற்றை மூத்த மகனும் பேரனும் உண்டதால் பெற்றவயிறு குளுகுளுத்தது. இரு லயத்தார்களும் வந்து முறை வைத்து கதைத்துச் சென்றதால் மனம் பெருமிதப்பட்டது. நள்ளிரவு நெருங்குமுன் முச்சந்தி மண் களவெடுத்து வந்து திட்டி சுற்றிப் போட்டதால் கலக்கமும் அறுந்தது. தாயாரின் இத்தகைய நிறைவுகளுக்காக அவர் அங்கே தலையாடிக்கொண்டிருக்கும் வரையிலுமாவது அந்த ஊரை நான் குத்தகைக்குச் சொந்தம் கொண்டாடினாலும். தாயோடு அறுசுவை மட்டுமா போகும்?. மறுநாள் நாங்கள் புறப்பட்டபோது அம்மா ஒரு தசாப்தத்தை அடக்கி வினாவினார். இனி எப்ப வருவீங்க? அல்அசுமத்தின் விரக்தி இப்படித்தான் முடிகிறது. பிறந்த மண்ணைப் பிரிந்தும் பிரியாத- ஒட்டியும் ஒட்டாத விரக்தி. புல் பூண்டுகளும் சந்திகளும் மண்ணும் மனிதர்களுடன் தனது ஒவ்வொரு சொல்லோடும், நினைவோடும் கலந்துவிட்டு,கணத்தில் கசியும் மனம், மாத்தளை, நீங்கள் குடியிருந்த நிலாவெளி. நான் குடியிருந்த பச்சார் பாளையம். வேல்ஸின் ஒரு குக்கிராமம். வாழ்க்கையில் மிகமிகத் துக்கமானதும் பிரக்ஞை பூர்வமான சோகமும் பிரிவுதான். தன் மண்ணைப்பிரிந்த அந்த வேதனைதான் அல் அசுமத்தின் விரக்தி.
மயில்வாகனத்தின் "சமர்ப்பணம்" மாறிவரும் தலைமுறையின்
மனத்தில் கொழுந்துவிடும் சமூகமாற்றத்தின் விதைகள் பற்றிப் பேசுகிறது.
டெவண் லட்சுமணனின் நிகழ்காலப் பிரதிநிதிகளாக அருண், அவனோடு தனது எதிர்காலத்தை, கனவுகளை இணைத்துக்கொள்ளும் மயூரி.
குழ்நிலையில் பொறுப்பை மறுதலித்த தந்தையின் மன அவசத்தை மலையகத்திற்குத் திரும்பிப்போகும் தன் மகள் நினைவால்-முடிவால் இட்டு நிரப்புகிறார் தந்தை.

Page 17
"தலைக்கொரு கூரை" இல்லாத துக்கத்தை பெரும் மழை யில் நனைந்தபடி கையறு நிலையோடு சொல்கிறார் வடிவேலு.
பிரஜாவுரிமையற்றுக் கழியும் தம் நாட்களை வியாபாரமாக்கும் தொழிற் சங்கங்களில் நம்பிக்கை இழக்கிறார்கள் வீரையாவும் நண்பர்களும். மலையகம் தனது நாடு என வலியுறுத்தி வந்தவன், இறுதியில் தன் நம்பிக்கைகள் பொடிபட தோற்றுப் போகிறான். இந்தியாவுக்கான கப்பல் எப்போது எனக் காத்திருக்கிறான் கோவிந்தராஜின் வடிவேலு.
இந்தியத்தமிழகத்தில் பண்ணையாருக்கும் ஜமீன்தார்களுக்கும் கூலி அடிமைகளாக ஊழியம் செய்வதிலிருந்து தப்பிக்க நினைத்து பிலையகம் வந்த தமிழர்கள் அதைவிடக் கேவலமான கூலி அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதை ஆனந்தனின் கொலையின் பின்னணியில் பேசுகிறது சிவலிங்கத்தின் "இனி எங்கே?"
சிங்கள விவசாயிகளைக் குடியேற்றி நிலத்தையும் குடியிருப்புகளையும் பறித்துக்கொண்டபின் வவுனியா, கிளிநொச்சிப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்த குடும்பங்களினால் சிதறுண்டுபோன ஜானகி-சத்திவேலு காதலை அசோகவனத்துச் சீதையைத்தேடும் அனுமான் கதையோடு தேடிப்போகிறார் மல்லிகைகுமார்.
ஆண்டாண்டுகாலமாக உழைத்த அம்மா சந்தனம், வைத்திய வசதியின்றி சாகக்கிடக்கும் தருணத்தின் கொடுமை பற்றிய கதை சதாசிவத்தின் "சந்தனக்கட்டை".
துரைகளதும் கங்காணிகளதும் பாலியல் பலாத்காரத்துக்கு இரையாகிற காவேரிகளில் ஒருத்தி கங்காணியைச் சீவிவிட்டு துரையைக் கத்தியோடு விரட்டுகிறார். ராஜதுரையின் கதை அக் காவேரியின் கதையை விவரிக்கிறது.
வறுமையும் பட்டினியும் அடைமழைக்குப் பெய்த மண்சரிவில் புதைந்துவிட்ட அலமேலுவின் சாவும் நிராதரவான குழந்தைகளின் வாழ்வின் அனாதரவான தன்மையும் எதிர்காலம் இருட்டு என்பதற்குச் சாட்சியமாகிறது

மெய்யன் நடராஜாவின் வார்த்தைகளில், சாக்கு சடையனின் அர்த்தமற்ற சாவையும் அதன் பின்னணியில் விரியும் வியாபார மனிதர்களையும் நொந்து "இங்கெவர் வாழவோ?" எனக்கேட்கிறார் பாலச்சந்திரன்.
இதுவன்றி மிஞ்சும் கதைகளில் பெண்களின் ஐந்து கதைகளும் இ.பரமேஸ்வரனின் "உயர்ந்தவர்கள்" கதையும் தான். "உயர்ந்தவர்கள்" கதை மிக மோசமான தமிழ் சினிமா பாதிப்பில் உருவான, நிமிடத்தில் காட்சி மாறும் கதை. நொடியில் மனம் மாறும் மனிதர்களை-Stereotype. தமிழ் சினிமா கதாபாத்திரங்ளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கதைத் தொகுப்பில் எவ்வாறு இடம்பெற முடிந்தது என்பது அர்த்தமுள்ள கேள்வியாகவே இருக்கும்.
II விடியல் எப்போது? - சுகந்தி வெள்ளையக் கவுண்டர் சாபக்கேடு - 56Tulsf 56ULT பசி - பாலாஞ்சனி சர்மா சட்டி கட்டுவிடும் - ரோகினி முத்தையா இது ஒன்றும் புதிதல்ல- பேபி ராணி இம்மனுவேல்
மலையக சமுதாயத்தில் கவிந்திருக்கும் மூடத்தன்மை எனும் அந்தகாரத்தைப் பற்றிய தன் மனக்குமைச்சலைக் கதையிற் கொட்டுகிறார் சுகந்தி வெள்ளையக் கவுண்டர். மூடநம்பிக்கை ராமாயியின் உயிரை மட்டும் குடித்ததோடு ஓய்ந்து விடுமா என்று முதற் கதையிலேயே கேள்வி எழுப்பும் சுகந்தியின் கதையினுாடு ஒரு நல்ல எழுத்தாளரின் வருகைக்கு எதிர்வு தெரிகிறது.
நளாயினி சுப்பையாவின் கதை குடிவெறிக்கு ஆளான அப்பா, அப்பாவைத்தாங்கிப் பிடிக்கும் அம்மா. இவர்களது பொறுப்பின்மையால் பள்ளிக்கூடத்தில் ராமுவுக்கு இலவசமாகக் கொடுக்கப்படும் துணிகூட விலைபேசி விற்கப்படுகிறது. குழந்தையின் விளையாட்டுக் கனவுகள், பரிசுக் கனவுகள் போட்டுக் கொள்ளச் சரியான துணியின்மையால் நொருங்கிப்போகிறது. இக்கதை சரிந்துவிட்ட ஒரு குழந்தையின் கனவைப் பேசுகிறது. தன் குடும்பத்தின் வறுமையைப் போக்க ஸ்ரோர்கீப்பரின்
as a

Page 18
ஏற்பாட்டின்படி கள்ளத்தனமாகத் தேயிலை விற்கப் போய் ரவுணில் சிக்குப்பட்டு பொலிஸ் நிலையத்தில் அவமானத்தால் மாரடைப்பால் இறக்கிறான் வடிவேலு. இறப்புக்குக்காரணமான துரைக்கு எதிராக ஸ்ரைக் தொடங்குகிறது. தொடர்ந்த பட்டினியின் முன் அது கலைந்து போகிறது. பத்மா அவளது தாய் தம்பி அனைவரும் நிராதரவாகின்றார்கள். "பசி" யில் றஞ்சனி சொல்லும் கதை இது.
வசதி கிடைத்தவுடன் தம் கடந்த காலத்தை மறந்துவிடும் தேயிலைத் தோட்டத்து மனிதர்களுக்கிடையில் ஸ்ரைக் போன்ற நடவடிக்கைகளில் விலகி நடக்கும் மாணிக்கத்தின் கதை ரோகினி முத்தையாவின் "சட்டி சுட்டுவிடும்'. குடிகாரக் கணவன் தினக்கூலிவேலை. பள்ளியின் உணவுக் கூப்பன் வெட்டுப்படும் எனும் பயம். தன் குழந்தையின் படிப்பு இவ்வாறாய்ச் சுழலும் சிவம்மையின் துயரத்தை இது ஒன்றும் புதிதல்ல என்கிறார் செல்வி பேபி இம்மானுவேல்.
இந்த ஐந்து கதைகளும் குடும்பம், பொறுப்பற்ற கணவன், குழந்தைகளின் உலகம், பசி போன்ற உடனடி உலகத்தைப் பற்றி பேசுகின்றன. ஒரே வார்த்தையில் புற உலகு, ஆண் பெண்ணுக்கிடையில் ஏற்படுத்தும் நெருக்கடிகளின் உடனடி விளைவுகளைப் பற்றிப் பேசுகிறது. இந்த உடனடி விளைவுகள் நம் சமூக வாழ்வில் நேரடியாக பெண்களையே பாதிப்பதால் அவர்களது படைப்புக் களமும் யதேச்சையாக வாழ்வின் அடிப்படை இருத்தல் பற்றிய பிரச்சினைகளையே பேசுகிறது. இவ்வகையில் இக்கதையில் மலையகத்தின் வறுமை மற்றும் விரக்தி, கையறுநிலை போன்றவற்றைப் பற்றிய உயிருள்ள அடிப்படைச் சித்தாந்தங்களாகிறது. இந்த அனுபவ நெருப்பு வெளியுலகின் தத்துவ அரசியல் தரிசனங்களில் இடறும்போது அற்புதமான சிருஷ்டிகள் முகிழ்த்து விடுகின்றன. அதற்கான பொறி இக் கதைகளில் இருக்கிறதென்று சொல்ல முடியும்.
III ஆரம்பத்தில் ஒட்டுமொத்தமாக இத்தொகுப்பு என்னில் ஏற்படுத்தும் உணர்ச்சி துக்கமென்று குறிப்பிட்டேன். அத்துக்கம் இக்கதைகளின் "முறியடிக்கப்பட்ட வாழ்வின்" தொனியால் ஏற்படுவது. பாரம்பரியத்
தமிழர்களால் ஒதுக்கப்பட்டமை, கைவிடப்பட்டமை, கள்ளத்தோணி,

வடக்கத்தையான் என இகழப்பட்டமை, தொழிற்சங்கத் தலைமைகளாற் கைவிடப்பட்டமை, தொழிற்சங்கப் போராட்டத்தில் நம்பிக்கை இழப்பு, சிங்கள இனவாதத் தாக்குதல், பூர்வீகத் தாயகமான இந்தியாவினால் கைவிடப்பட்டமை முழுமையாக அன்னியமான ஒதுக்கப்பட்ட, முறியடிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை. அருண், மயூரி போன்ற ஒரு சில கதாபாத்திரங்களைத் தவிர இக்கதைகளின் நுாற்றுக் கணக்கான மனிதர்களும் மனதளவில் தோற்கடிக்கப் பட்டிருப்பதான துக்கம் தான் என்
துக்கம்.
நம்பிக்கையோடும் தார்மீகப் பண்புகளோடும் வாழ்ந்த கலையொளி முத்தையாபிள்ளை போன்றே மலையகத்தின் அனைத்து மனிதர்களும் நம்பிக்கைகளும் நம்பியவர்களாலேயே அழிந்து பட்டபோது இந்தத் துக்கம், இந்த நம்பிக்கையின்மை இயல்பானது தான். ஒடுக்கப்பட்ட மனிதர்களின் மனரீதியிலான பெளதீக ரீதியிலான அரசியல் ரீதியிலான ஒன்றிணைவு மட்டுமே நம்பிக்கையை அளிக்கவல்லது. இந்த நம்பிக்கையை தொழிற்சங்கம், அரசியல் போன்றவற்றிலிருந்து அருண், மயூரி போன்றவர்கள் பெறுவார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்தும் கொழும்பிலிருந்தும் வவுனியாவிலிருந்தும் நீலகிரி மலையிலிருந்தும் திருநெல்வேலியிலிருந்தும் இம்மனிதர்களுக்கிடையிலான புரிதலும் இணக்கமும் சகோதரத்துவமும் நிலவும் போது இத்துக்கம் மறையத் தொடங்கிவிடும்.
இந்தப் பணியைத் தான் எச். எச். விக்கிரமசிங்காவும் மணிமேகலை கமலகாந்தனும் இத்தொகுப்பைத் தமிழ் மக்களின் முன் வைப்பதன் மூலம் செய்திருக்கிறார்கள். இத்தொகுப்பில் பல கதைகளின் படைப்பாளிகள் ஆரம்ப எழுத்தாளர்கள். வாழ்வு பற்றிய அனுபவமும் கலை இலக்கியப் படிப்பும் பயிற்சியும் இணையும் போது மிகச் சிறந்த படைப்புக்களைத் தருவார்கள் என நம்ப இடமளிக்கும் அளவு இவர்களின் கதைக் கருத் தேர்வுகள் இருக்கின்றன.
புத்தகத்தின் முகப்பை ட்ரொட்ஸ்கி மருது வரைந்திருக்கிறார்.
இளைஞன். கலைந்த தலை, சோகமான முகம். வானத்தைத் தான் பார்க்கின்றன.
e-A) uz35

Page 19
GUIT66TLDITSO)6)
உலகிற்கு இத
ஒரு கோழிமுட் இந்த அறைக் கவிதை எழுதி உயிர் பூக்கும் பற்றி ஒரு கவி கடற்கரையில்
ெதன்னை LDJ's
ஒரு பொன்மா இன்று கவி:ை ஆனாலும் உன் காணாமல் இ முடியாது பொ உன் கரத்தால் மினக்கெடுத்தி
உன் காற்று 6 மாலைத் தங்க ஆம்; என்குரு பொன்மாலை
மினுங்காத இ
சோலைக்கிளி
 
 
 
 

தே
பொழுதே கொஞ்சம் பொறு ம் கொடுத்து நில்லு
டைக்குள் கிடப்பதனைப் போல குள்ளே கிடந்துவிட்டேன். த்தான்.
குயிலைப்
தை. நிற்கின்ற என்னில் பிரியமுள்ள ங்களைப் பற்றியும் ஒன்று.
லைப் பொழுதே மறக்கின்ற அளவுக்கு 5 எனக்கு வரல் மகிழ்ச்சியேதான்.
T முகத்தைக்
நப்பதற்கும் ழுதே, கொஞ்சம் பொறு, மரங்களிலே
தங்கத்தைப் பூசி, நேரத்தை க் கொள்ளு, நான் வந்துவிடச் சற்று.
ாங்காமல் எனது மனம் பூக்காது. நிறம் பட்டால்தான் என்குருதி மினுமினுக்கும். தி மினுமினுக்க
நீ வேண்டும் த்தத்தை நான் சுமக்க முடியாது.