கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிர்நிழல் 1999.11-12

Page 1


Page 2
சிறகடிப்பும் படபடப்பும்
வசந்தி-ராஜா
அறிமுகமாகும்
பருவம் பட்டாம்பூச்சிப் படபடப்புகளையும் பருவத்தினர் பந்தாக்களையும் அதற்கே அதற்கான தற்பாதுகாப்புணர்வுகளையும் தன்னகத்தே கொண்டு
Uரசவம் பிரசவிக்கும் பார்வைப் படலங்கட்குள்ளாலும் பரிசீலனை சாத்தியம்தானி சந்ததித் தேர்வுக்கான சரியான சோழக்காய
திளைத்துக் கிடக்கும் பழகிப்போனதால் கனவு காவுதல்கள் சாஸ்வதம் என்பதாய் ტrghuuბ
அடித்துக் கொள்ளும் அங்கலாய்த்தபடி - மனசு செட்டைகள் மொட்டையாக சிறகழப்பு சித்திக்காதோ
6T6 பருவத்தின் எல்லைக்கோட்டில் நினிறபழக்கு.
/
തുട്ട്ല
VO. I NO.6 NOVEMBER - DECEMBER 1999 தொகுப்பாசிரியர்கள்: லக்ஷமி கிருஷ்ணராஜா கலைச்செல்வன்
அட்டை ஓவியம், வடிவமைப்பு:
கிருஷ்ணராஜா ܢܠ
பிரத

ஒரு மரணத்தின்Uனர் வெறுமையான கதிரை. வர்ணம் மெழுகப்பட்ட வேலிக்குள் நிலம் நடுவதற்கு ஏதுமின்றி கிடந்தது.
ÉořUU626TUUosof Unfab பிடுங்குண்ட வேரும் இருதயத்தை அறுத்தெடுத்த துயரமும் வெறுமனே முளைத்த முள்ளிகளின்
பூக்களிலும் முட்களிலும் வழிந்தன.
அடுத்த பருவத்துக்காய்
வாழ்க்கை விரித்த வெளியில் நிலம் நிமிர்ந்து கிடந்தது.
ஹம்சத்வனி
அன்பளிப்பு: தி ஒன்று - 15FF வருட சந்தா - 100FF (6 îJóla56ïı, g5UTgib Qs6os e L'UL) இலங்கை, இந்தியா -இலவசம்
காசோலைகள் அனுப்பவேண்டிய வங்கியும், இலக்கமும்: CREDIT LYONNAIS CODEBANQUE 30002 COMPTE554/6788M/21 ASSOCIATION EXL
தொடர்புகளுக்கு: EXIL, 27 Rue Jean Moulin 92400 CourbeVoie, France e-mail: EXILFRGaol.com
"d'enregistrement de l'association : 13023204

Page 3
Uழக்கிறோம். ஆனால்
அவர்கள் அநீதிபற்றி ஏகாதிபத்தியம்பற்றி சொல்வதில்லை, ஆன கோபத்தில் அல்சர்வர்
சிறகடிப்பும் படபடப்பும் வகத்தி-ர7ஜுர் . நிலம் awzziassava? .............. தமிழில்: எதிலிருந்து. எங்கே..? தெ. மதுகுதணனி . நீங்கள் யார்? A27۶ي) همzzریاضی ۶ین அடிமுடி தேடி (sawiw (GWažiaviomeø). யாதுமாகி நின்றாள் சமதி மூதz/ன . புலம்பெயர் இலக்கியமும் உயிர்நிழலும் ിഞ്ഞZകz് . ஒரு பீனிக்ஸ் பறவையின் புகல்வாழ் குறிப்புகள் இணையவி சிண்னவணி லதா கவிதைகள் Masa . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
சக்தி ஒவியங்கள் (a7....... கடலைவிட்டுப்போன மீன்குஞ்சுகள் துெ2யனர் . புதிய பாதை புதிய அணுகுமுறை கிகலின்கச் .
கிழிகிறதடி என் நாட்கள் 2%தி27 திர்ைவைததன வெளி-வாசல் க/மணி வகுத்தணி குனி தொப்பிகள் தேர்ந்த சே குவேறு உருவ ஒவியங்கள் Mawazóżsýszð Mélozzzwaeva நிழல்கள் .
ஒரு பனிக்காலமும் நெருப்பாய் எரிகிற நினைவுகளும் வி ரவிவர்மனி .
இந்தியா-இலங்கை பரவலும் மொழியும் تحصع تھی 2 قبرصoصنع%ھی بھی نہ ** .பல்துறை அறிஞர் f னுடே வரலாறுகள் எ * டும். இல்லையேல் வர ளைத் திரும்பவும் திரு கொண்டே கழுவ மனி:
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கள்
பண்பாடும்
நளினி உதவியரி ழுதப்பட வேண் லாற்றுக் கறைக δυωμό ΘJφΦώ நகுலம் முற்படும்.
೩*
ஆன் பிராங்க் - 20ம் நூற்றாண்டு மானுடம்: இனவதையின் ஒரு மனத்துளி-குயில்? ஓ! எதிர்காலத்தில் நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகள். நிர்ப்பந்திக்கும் காலம் தொலைவிலிருக்கமாட்டாதா?
இந்தோனேசியாவின் அடுத்த தலைவலி. அசே! தி உமாகத்தனி அமெரிக்கப் போர்க்கப்பல்கள் இந்து சமுத்திரத்திலிருந்தும் பசிபிக் சமுத்திரத்திலிருந்தும் வளைகுடாப் பகுதிகளில் ரோந்து செய்வதும் இக் கடற்பாதைகளினூடாகவே.
விளிம்புநிலைநோக்கி விததன் அவளதும்ன்சிலும் தூவானம் அடித்தது
மழையை இரசித்துப் பார்க்கும்
96),667 வெறுக்கத்தரிகின் யணர்னலை அறைந்து சாத்தினாள்.
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 03

Page 4
தமிழில்: எதிலிருந்து.
தெ. மதுசூதனன்
மனிதர்களின் தேடுதல் பண்புதான் மானிட வளர்ச்சியின் ஆதார அடிப்படை. மனிதர்களின் விடாப்பிடியான சிந்தனைகளும் கண்டுபிடிப்புக்களும் மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்து புதிய வர லாற்றை நோக்கி தடம் அமைத்துச் செல்கின்றன. இயற்கைமீதும், மனிதர்கள்மீதும், சமுகம்மீதும் தனது வன்மையான குறுக்கீடுகளை மனிதர்கள் மீண்டும் மீண்டும் நடாத்தி வருகின்றனர்; மாற்றிய மைக்கின்றனர். ஆக மனிதர்களின் தொடர்ந்த தேடு தலில்தான் மானிடவாழ்வு.
தமிழ்ச்சூழலும் தனக்குரிய தேடுதல்களில் விடாப்பிடியாய் தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. உலக அளவில் ஏற்படும் மாற்றங்கள் சிந்தனைப் புரட்சிகள் தமிழ்ச்சூழலைப்பாதிக்காமல் அல்ல. இது தமிழ்ச்சிந்தனை மரபில் பல்வேறு புதிய பரிமாணங் களை ஏற்படுத்தியுள்ளது.
இதுகாறுமான தமிழ்ச்சிந்தனை வரலாற்றை இரு பதாம் நூற்றாண்டின் பின்புலத்தில் வைத்து நோக் கும்பொழுது காந்தியச் சிந்தனை திராவிடச் சிந் தனை, மார்க்சியச் சிந்தனை என வகைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சிந்தனைப் போக்குகள் ஒரே படித்தான ஒற்றைப் பரிமாணத்துக்குள் - ஓர் சிமிலிக் குள் அடைத்துவிட முடியாது. இவை ஒவ்வொன்றி லுமே பல வித்தியாசங்கள், பலவேறு விதமான போக் குகள் உள்ளன. ஆக இவை தமிழ்ச் சிந்தனையை தமிழர் வாழ்வியலை பெரிதும் மாற்றியமைத்துள் ளன. 20ம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்றில் புதிய வகையிலான சிந்தனைகள் தமிழில் ஊடாட்டம் கொண்டு வருவதை நோக்கலாம். இவை தமிழின் பார்வையை நோக்கலில், புரிதலில் புதிய பாய்ச்சல் களை வழங்கியுள்ளன.
நாம் இன்று சமூகம்பற்றி, கலைகள்பற்றி, இலக் கியங்கள்பற்றிப் பேசும்பொழுது, விளக்க நேரும்பொ ழுது அந்தந்தத் துறைகளுக்கே உரித்தான பல் வேறு சொல்லாடல்களை கலைச்சொற்களை பயன்ப டுத்துகிறோம். இதனால் பல்வேறு புதிய சொற்கள் தமிழில் சாத்தியமாகி உள்ளன. இவை தமிழிற்கு வெறும் சொற்களின் வருகையாக மட்டுமல்ல. பல் வேறு உலகச் சிந்தனைகளின் ஆய்வுகளின் பின்பு
04 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 

எங்கே...?
லங்களையும் தமிழுக்குக் கொண்டு வருகின்றன.
ஆக, தமிழுக்கு ஐரோப்பிய இலக்கியங்களின் வருகை, தமிழில் நவீன விமர்சன மரபையும் தோற்று வித்தது. இது ஐரோப்பிய தத்துவஞான மரபு குறித்த உரையாடலுக்கும் புரிதலுக்கும் நம்மை இழுத்துவிடு கிறது. அது மென்மேலும் ஐரோப்பிய தத்துவார்த்த சொல்லாடல்கள் பலவற்றை பிரயோகிக்காமல் அச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ளமுடியாத நிர்ப்பந் தங்களை ஏற்படுத்தி வருகிறது. இது தவிர்க்க முடி யாமல் அச்சிந்தனைகளை தமிழுக்குக் கொண்டு வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இது வரை தமிழியச் சிந்தனையில் மாக்சியச் சிந்தனை தான் பரவலான வன்மையான குறுக்கீடுகளை நிகழ்த்தியுள்ளது எனலாம். சமுக, அரசியல், பண் பாடு, கருத்தியல் தளங்களில் இதன் தாக்கம் ஆழ மாகவே உள்ளது. இதுகாறும் மார்க்சியச் சிந்தனை வழியிலாக வரும் புலமையாளர்கள் பலர்தான் தமி ழின் புலமைத் தளத்தில் பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளவர்களாகக் காணமுடிகிறது.
இன்று தமிழின் புலமைத்தனம் அகலிக்கப்பட் டுள்ளது. பல்வேறு புதிய சிந்தனைகள் தமிழில் அறி முதமாகி தமிழின் சிந்தனாமாற்றத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. உலகளா வியரீதியில் ஏற்பட்ட பல்வேறு துறைசார்நிலைப்பட்ட சிந்தனைகள் ஆய்வுகள் தமிழ்ச் சிந்தனையோடும் துறைசார் ஆய்வுகளுடனும் ஊடாட்டம் கொள்கின் றன. தமிழுக்கு புதிய வளங்களைக் கொண்டு சேர்க் கின்றன. அவற்றின் வீச்சுக்களால் தமிழுக்குப் புதிய நோக்கலை, புதிய புரிதலை அளித்து வருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் இருப்பியல், அமைப்பி யல், குறியியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவம், பெண்ணியம் போன்ற சிந்தனைகள் பல்வேறு அறிவுத்துறைகளிலும் மிகுந்த தாக்கம் செலுத்திய சிந்தனைகளாக இருந்து வந்துள்ளன. தமிழிலும் இவற்றின் தாக்கம் படிப்படியாக சாத்தியமாயிற்று.
இவ்வாறான புலமைத் தொழிற்பாடுகளில் ஈடுபடு வோரில் பெரும்பாலும் மார்க்சியச் சிந்தனைத்த ளத்தில் இருந்து தொழிற்பட்டவர்கள்தான். இவர்கள் காலத்தில் மார்க்சியச் சிந்தனை பல வாத, விவா தங்களுக்குத் தயாராக இருக்கவில்லை. இதனால் உரையாடலை வளர்த்துச் செல்லும் வகையில் தத்த மது நோக்கில் புதிய கேள்விகளை வாத, விவாதங்க

Page 5
ளுக்கான களங்களை அமைத்துக் கொடுத்தனர். வாசிப்பைத் தீவிரமாக்கினர். புதிய வளங்களை தமி ழுக்குக் கொடுப்பதன்மூலம் உயிர்ப்புமிக்க சிந்த னையாக்க முற்பட்டனர்.
இந்தச் சூழலில் எஸ்.வி.ராஜதுரையின் எக்ஸிஸ் டென்ஷியலிசம் (1975), அந்நியமாதல் (1979) போன்ற நூல்களும் இன்னும் இதுபோன்ற பல்வேறு கட்டு ரைகள் யாவும் தமிழ்ச் சிந்தனைத் தளத்தில் புதிய உத்வேகத்தைக் கொடுத்தன. இதன்மூலம் புதிய சொல்லாடல்கள், புதிய கலைச்சொற்கள் தமிழில் இடம் பெறலாயிற்று. இவற்றின் பயில்வு தமிழ்ச் சிந் தனையில் மேலும் புதிய புரிதல்களை, புதிய படைப் பாக்க உந்துதல்களைக் கொண்டு வந்தன. இதனை அடியொற்றி தமிழில் புதுப்போக்குகள் உருவாயிற்று. ஐரோப்பிய தத்துவ மரபு சார்ந்த உரையாடல்கள் தமிழில் வேகம் கொண்டன.
நம் இலக்கிய அறிவும் பிற துறைகள் பற்றிய அறி வும் பெருமளவு மாற்றமடையத் தொடங்கியது. இவை பற்றிய சிந்தனைகள் ஆங்காங்கு தமிழில் வரத் தொடங்கின. புதிய பயில்வுக்கான வாயில்கள் பல திறக்கப்பட்டன. 1970களின் பின்னரான தமிழின் புலமைச் செயற்பாடுகள் பன்முகப் பாங்கில் வெளிப் படத் தொடங்கின. இவற்றுக்கு புதிய சிந்தனைகள் வழிகாட்ட, புதிய தேடல்கள் அதிகரிக்கத் தொடங் கின.
தமிழவன் ஸட்ரக்சுரலிசம் (1982) எனும் நூலைத் தமிழுக்கு கொண்டு வந்தார். 'மேலும்' என்ற அமைப் பியல் விமர்சனத்திற்கான இதழ், 'புறப்பாடு இதழில் வெளிவந்த கட்டுரைகள், குறிப்பாக நாகர்ச்சுனனின் பல்வேறு கட்டுரைகள், அமைப்பியல் பற்றிய கருத்த ரங்குகள்-இவை யாவும் தமிழில் அமைப்பியல்பற்றிய பயில்வை துரிதப்படுத்தின.
சிறுபத்திரிகைச்சூழல், கல்விநிறுவனம் சார்ந்த சூழல் என பல மட்டங்களிலும் அமைப்பியல் பற்றிய சிந்தனைமீதான ஈடுபாடும் அதிகரிப்பும் வேகம் கொண்டன. இவை பின் அமைப்பியல் சார்ந்த சிந்த னைக்கும் சிந்தனாவாதிகள் பற்றிய அறிமுகங்க ளுக்கும் தள்ளின.
எண்பதுகளின் கடைசிப்பகுதி அமைப்பியல், பின் அமைப்பியல் சார்ந்த புலமை வேட்கையாகவும் புல மைத்தளமாக தமிழ்ச்சூழல் மாற்றப்பட்டது. எஸ்.வி. ஆர், வ.கீதா இணைந்து எழுதிய 'அல்துஸர் ஒர் அறிமுகம்'(1990), 'பிராங்போர்ட் மார்க்சியம்(1991), "அந்தோனியோ கிராம்சி வாழ்வும் சிந் தனை யும்(1991) போன்ற நூல்களின் வருகையும் மார்க்சிய சிந்தனைக்கான பயில்வை ஆழப்படுத்தின.
கட்சி வட்டாரங்களில் மார்க்சியம் இறுகிய தன் மையால் மேலும் பலரை ஆழ்ந்து படிக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தின. மார்க்சியச் சிந்தனை தினமும் அன்றாட அரசியல் நடத்துவதற்கான வெறும் லேபலாக குறுக்கப்பட்ட பின்னர் தமிழின் புல மைத்தளத்தில் தமது குறுக்கீடுகளை மார்க்சியர் கள் வன்மையாக நிகழ்த்த முடியாதவர்களாக மாறி விட்டனர். அரசியல் பண்பாட்டுத்தளத்தில் மையநீ ரோட்ட கட்சிகளின் நிழல்களில் ஒதுக்கம் கொள்ள

வேண்டிய நிர்ப்பந்தமும் அவலமும் கட்சிகளைப் பீடித்துள்ளன. ஆக, உலகளவில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிகள் பற்றிய கவனிப்போ அவற்றின் முக்கி யத்துவமோ எதுவுமே தெரியாது தேங்கிப்போய் விட்டார்கள்.
இந்தப் பின்புலத்தில் தமிழுக்கு புதிய சிந்தனை களின் வருகையும் அவற்றின் விசாலிப்பும் தமிழ்ச்சிந் தனையில் புதிய பார்வைகளை, புதிய புரிதல்களை, புதிய பரிமாணங்களை ஏற்படுத்தின. அரசியல், பண் பாடு, கலை இலக்கியம் பற்றிய இதுகாறுமான பார் வைப்புலங்களில் இருந்து, சொல்லாடல்களிலிருந்து விடுபட்டு முற்றிலும் வேறான பார்வைகளை புரிதல் களை நோக்கி நகர்த்தின. புதிய சொல்லாடல்கள் மூலம் தமிழ்ச் சிந்தனை தடம் அமைக்கத் தொடங் கியது.
1990களில் நிறப்பிரிகையின் வருகையும் அது கிளப்பிய விவாதங்களும் சிந்தனைகளும் அ.மார் க்ஸ் போன்றோரின் கட்டுரைகள், நூல்கள் தமிழ்ச் சிந்தனையில் மேலும் புதிய போக்கினை அடையா ளப்படுத்தின; உருவாக்கின. பின்அமைப்பியல் சிந் தனையின் பிரயோக நிலைப்பட்ட போக்குகள் தமி ழில் இடம் பெறலாயிற்று.
இதன் தொடர்ச்சியில் இன்று பின்நவீனத்துவம் முதன்மையான பேசுபொருளானது. பின்நவீனத்து வம் பற்றிய அறிமுகங்கள், பிரயோகக் கட்டுரைகள் யாவும் தமிழின் புலமைத்தளத்தில் பெரும் விவாதப் பொருளாகின. சிலரை அவற்றில் கவனம் குவிக்கச் செய்தன; பலரை அச்சுறுத்தின.
ஆக, இன்றைய தமிழ்ச்சூழல் ஐரோப்பிய சிந் தனை மரபுகளின் வளங்களைத் தமிழுக்குக் கொண்டு வரமுற்படுகின்றன. அதற்கான சிதறலான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றுக் கான பயில்வும் தேடலும் உரையாடலும் அவசியப்படு கின்றன. இதனை உணர்த்தியுள்ள காலமாகவே இந்த நூற்றாண்டைக் கடக்கப் போகின்றோம்.
தமிழில் வரலாறெழுதியல் நெறிமுறைகளையே கேள்விக்குள்ளாக்கும் அடிநிலை மக்கள் ஆய்வுகள் அல்லது விளிம்புநிலைமக்கள் பற்றிய ஆய்வுகள்பற் றிய பயில்வுக்கான சூழலும் தமிழில் சாத்தியமா யிற்று. 1990களில் முதன்மையாக தலித் அரசியல், தலித் இலக்கியம் தமிழில் வேர் பாய்ச்சத் தொடங் கும் பின்புலத்தில் விளிம்புநிலை மக்கள் பற்றிய ஆய் வுகள் மீதான சிந்தனைகள் பயில்வாக அமையும் பொழுது தமிழின் சிந்தனை முறைமையே மாற்றிய மைக்கப்படுகிறது.
ஆக, இன்றைய தமிழ்ப் புலமைத்தளம் பல்வேறு புதிய சிந்தனைகளின் ஊடாட்டத்துக்கு ஆட்பட்டு வருவது தவிர்க்கமுடியாமல் உள்ளது. தமிழின் நோக்கலிலும் புரிதலிலும் மாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கமுடியாதது. இது வரலாற்றுக் கட்டாயமும் கூட. அத்துடன் நம்மிடையே முன்னிறுத்தும் அனைத்துச் சவால்களையும் நாம் முகங்கொடுத் துத்தான் ஆகவேண்டியநிர்ப்பந்தம். தமிழ் இதனைப் புரிந்து தனது பயணத்தில் நகர்கிறது.
தமிழ்ச்சூழலில் புதிய வகையிலான சிந்தனை
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 |05

Page 6
கள் விமரிசனக் குறுக்கீடுகள் ஆய்வுமுறைகள் உரு வாக்கப்பட்டுள்ளன. இந்தப் புலமை முயற்சிகளில் பலர் தத்தமது ஆர்வத்தினால், தேடலினால், புலமை யால் ஈடுபட்டுள்ளனர் என்பது கவனிப்புக்குரியது. இதில் பல்வேறு தெளிவின்மைகள், போதாமைகள், தொடர்ச்சியின்மைகள் இருப்பினும்கூட ஒவ்வொரு வரினதும் முயற்சிகள் மதிக்கப்படவேண்டும். தமிழின் சிந்தனை முறைமையில், தேடலில், படைப்பாக்க உந்துதலில், புலமைத்தளத்தில் சில மாற்றங்களை, அதிர்வுகளை, வளர்ச்சிகளை, புதிய போக்குகளை ஏற்படுத்தியுள்ளனர். தமிழை பல்வேறு புதிய தளங் களில் பயணிக்க வைத்துள்ளனர்.
நாம் பொதுவில் தமிழ்ச்சூழலைப் பின்னோக்கிப் பாரக்கும் பொழுது புலமைத்தளத்தில் செயற்பாடு கொண்ட எவராயினும் கூட புலமைவேட்கையில் தொடர்ந்த தீவிரமும் புலமைச் செயற்பாட்டில் தொட ர்ச்சிப் பேணுகையும் இல்லாதவர்களாகவே உள் ளனர்.
ஓர் காலத்தில் தீவிரமாக தேடிக்கொண்டிருப்ப வர்கள், இயங்கிக் கொண்டிருப்பவர்கள், பிறிதொரு நிலையில் தேக்கமுற்றும் வளர்ந்து வரும் போக்குக ளைக்கூட புரிந்துகொள்ளும் திராணியற்றும் மாறிவி டக்கூடிய நிலைமையை தமிழில் இயல்பாகவே காணமுடிகிறது. சிந்தனாரீதியில் தேக்கங்களை உடைத்து புதிய சிந்தனா வீச்சுக்கள் மூலம் பல் வேறு உரையாடல்களுக்கு களம் அமைத்துச் சென் றவர்கள், ஓர் சந்தர்ப்பத்தில், ஒர் குறித்த பரப்புக் குள்ளேயே சுருங்கி மாற்றத்தை நிராகரிக்கும் போக் கும் காணப்படுகிறது - மற்றவற்றை ஒரு பொருட்டா கக் கருதாமல் வரும் போக்கு. இதையும் தாண்டி தாம் அடைந்துள்ள, கடைப்பிடிக்கின்ற போக்கை மட்டுமே அனைத்துக்குமான சர்வரோக நிவாரணி யாக ஆக்கும் கொடுமையும் பரவலாக உள்ளது. இன்னும் சிலர், தாம் முன்னர் எழுதிய எழுத்துக் களை, பார்வைகளை மட்டுமே வைத்துக்கொண்டு பின்வரும் காலத்தைக் கடக்கமுற்படுகின்றனர். அத னையே உலகமாகவும் வளர்ச்சியாகவும் சுருக்கி விடுகின்றனர்.
வரலாற்றின் எத்தகைய பிரச்சினைகள், தேடல் கள் உருவாகி, அவை எத்தகைய புதிய பார்வை களை, போக்குகளை உருவாக்கியுள்ளன என்பது குறித்தெல்லாம் அக்கறையும் புரிதலும் இல்லாமல் அனைத்தையும் கற்காமலும் யாவற்றையும் ஒரேயடி யாக சப்பைக்கட்டுக் கட்டி தூக்கியெறியும் போக் கும் பரவலாகவே காணப்படுகிறது.
ஆக, தமிழ்ச்சூழலின் பன்முகப் பரிமாணங்கள் தமிழில் இழையோடி வருவதை காணமுடிகிறது. குறிப்பாக 1970களின் பின்னரே நவீன சிந்தனைகள் தமிழில் அறிமுகமாகின்றதென முன்னர் பார்த்தோம். இங்கே இந்த சிந்தனைகளின் புலமை ஊடாட்டங்
O6 (உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 

களுடன் வருபவர்களிடம் சில பொதுவான பண்புகள் காணக்கூடியதாகவே உள்ளன.
O தங்களுடைய கருத்துக்களை வலியு றுத்தும் அதே நேரம், மற்றவர்கள் கருத்துக் களைப் பொறுமையுடன் கேட்க முடியாத அள விற்கு சகிப்புணர்வின்மை ஊட்டம் கொண்டவர் களாக இருத்தல். O கூட்டுத்தன்மை, கூட்டு மனோபாவம், கூட்டுவிவாதம், கூட்டுச்செயற்பாடு என்பவற்றை சொல்லளவில் வலியுறுத்தினாலும் செயலளவில் துளியளவும் இல்லாது இருத்தல். O அநேகர் குழு மனப்பான்மையுடன் செயற்படுவர். ஏனைய குழுக்களை சம தளத் தில் வைத்து மதித்தல், பரஸ்பர உறவாடல் இல்லை. O தத்தமக்கிடையேயும் கருத்து வேறு பாடுகள் தோன்றிவிட்டால், தன்னிலை அதி காரம்பற்றிய பிரச்சினைகள் முதன்மை பெற்று விட்டால் குழு சிதறல் ஏற்படும். சிலரைத் தனி மைப்படுத்தி ஓரங்கட்டிவிடுதல். இதில் காட்டும் அக்கறை அந்நபரைத் தோழமையாக, நண் பராக அரவணைத்தலில் இருக்காது. O மாற்றுக் கருத்துக்களை வலியுறுத் தும் விமரிசனச் செயற்பாடுகளில் ஈடுபடும் பல ரும், தம்மை யாரும் கேள்வி கேட்டுவிட்டால், விமரிசித்துவிட்டால் போதும் பிறகு அவர் ஒரு விரோதிபோல் தீண்டத்தகாத நபர்போல் நடத் தப்படுவார். O கருத்துரீதியில் ஏற்படும் முரண்பாடு கள், வித்தியாசங்கள் யாவும் ஆள்நிலைப்பட்ட குரோதங்களாக, பகைமைகளாகவே உணர் தல். O X என்பவர் கலந்துகொள்ளும் கூட் டத்தில் Y என்பவர் கலந்துகொள்ளமாட்டார். அதுபோல் Y கலந்துகொள்ளும் கூட்டத்தில் X கலந்துகொள்ளமாட்டார். ஆனால் இவர்களது ஆதரவாளர்கள், நண்பர்கள் கலந்துகொள்வர். பின் அவரவர் தம் வட்டத்துடன் சேர்ந்து விம ரிசனக் கூட்டமே நடத்துவர். இப்படி சில பண்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக, நமது கருத்துப் பரிமாற்றப்பண்பாடு அவரவர் ஆள்நிலைப்பட்ட நடத்தைப் பண்புகளுடன் இணைந்ததாகவே உள்ளன. இவை புலமைத்தளச் செயற்பாடுகளில் எத்தகைய ஆரோக்கியமற்ற போக்குகளை உருவாக்கியுள்ளன என்பதைத் திறந்த மனதுடன் புரிந்துகொள்ள முற்படுவோம்.
(அவ்வளவுதான். ஆக, தமிழ்ச்சூழலின் புலமைத் தொழிற்பா டுகளின் தொடர்ச்சிப் பேணுகை இல்லாதநிலைமை பலருக்கு இந்த வரலாற்றுப்பின்புலங்களையே மறுத் துவிடக்கூடிய, மறைத்துவிடக்கூடிய நிலைமைகள் ஏற்பட்டுவிடுகிறது. அத்துடன் தமிழின் புலமைத் தனச் செயற்பாடுகளின் தளத்தினை சரியாக புரிந்து கொள்ளாது கேலியும் கிண்டலும் பண்ணக்கூடிய சூழலை உருவாக்கிவிடுகிறது.

Page 7
இன்னொருபுறம், இவை எவற்றினதும் வரலா ற்றை, அசைவியக்கத்தை, அதன் தாக்கத்தை, வளர்ச்சியைப் புரிந்துகொள்ளாது - கவனத்திற்கெ டுக்காது அனைத்தையும் தாவிக்குதிக்க முற்படும் போக்குகளும் உள்ன. வரலாற்றின் தொடர்ச்சியில் எதனையும் பார்த்துப் புரிந்துகொள்ளாது, புதியவழி யில் தமிழ்ப்புலமையை நோக்கும் அவலமும் தமிழில் தான் உண்டு.
மார்க்சிய, நவீனத்துவ அணுகுமுறைகள் நமது பாரம்பரியத்தையும் செவ்வியல் மரபுகளையும் புறக் கணிக்கும் தன்மை கொண்டவை. ஆகவே இவற்றை மீறுகின்ற முயற்சி வேண்டும்.நம்மரபின் மீதான ஆக் கபூர்வமான விமரிசன அணுகுமுறைகளை கைக் கொள்ளவேண்டும். நம் மரபுடன் உரையாடும் மேற் கத்தைய சிந்தனைகளை கண்டடையவேண்டும். இவற்றுக்கெல்லாம் சுயத்துவத்துடன் கூடிய சிந் தனை வேண்டும். அது'இந்தியப்பார்வை', 'மண்ணுக் கேற்ற சிந்தனை' என்றே அமையவேண்டுமென கூக் குரல் கொடுக்கும் போக்குகள் அவ்வப்போது தமி ழில் எழுகின்றன. இவர்கள் பழைய சிந்தனைக ளையே புதிய மொந்தையில் ஊற்றித்தரும் கொடு மையும் விசச் சக்கரம்போல சுழன்றுகொண்டே யுள்ளன. இவர்கள்தான் தமிழ்ப்புலமையை அகலிக் கப் போகின்றவர்கள்.
ஆக, தமிழ்ச்சூழலின் தொடர்ந்த தத்துவார்த் தத் தேடலின்மையும் புலமைத் தொழிற்பாடுகளின் மையும் பொதுவான சோம்பேறித்தனங்களும் பல ருக்கு பலமான பகுதிகளாகிவிடுகின்றன. இதனால் இவர்கள் கூசாமல் தமிழில் ஒன்றுமேயில்லை, எல் லாம் சமஸ்கிருதத்தில்தான் உள்ளன, மேற்குலகச் சிந்தனையால் தமிழை வளர்க்கமுடியாது என்றெல் லாம் கூறிக்கொள்ளும் இவர்களால்தான் தமிழ்யாது காக்கப்படப்போகிறது.
தமிழ்ச்சிந்தனை, இந்தியச் சிந்தனை எனக் கட் டம் போட்டுக்காட்டும் மதவாத, சாதிய, ஆணாதிக் கச்சிந்தனைகளையே அறிவார்ந்த உரையாடலாக ஆக்கும் பணியை சிரமேற்கொண்டு செய்கின்றனர். தமிழின் பாதுகாவலர்கள் இவர்களாகவே உள்ள னர். இந்தியச் சிந்தனை, மண்ணுக்கேற்ற சிந்தனை எனப் பேசும்பொழுது நாம் அதனை விரிவாக அறிவி யல் கண்ணோட்டத்தில் பேசவேண்டும். விமரிசன நோக்கில் புரிந்துகொள்ளவேண்டும்.
நண்பர்களே! இங்கே குறிப்பிட்ட கருத்துக்கள், சிந்தனைகள் எனது அனுபவம், தேடல், கற்றல் இவற் றுக்குட்பட்டது. முழுமையாக தமிழ்ப்புலமைச் செயற் பாட்டை பரிசீலனைக்கு உட்படுத்திவிட்டேன் என்ற மிகப் பெரிய பொய்யை நகைச்சுவையாக்கி கூறவர வில்லை.
எனது ஆதங்கம், தேடல், சிந்தனை, எதிர்காலம் பற்றிய பரிசீலனைக்காக. எமது தமிழ்ப்புலமைத்த னத்தை இன்னும் இன்னும் அகலிப்பதற்காக. அவ்வ ளவுதான்!
யாரையும் புண்படுத்தும் நோக்கம் கிடையாது. தமிழ்ப்புலமைத்தளம் ஆரோக்கியப் பண்புகளுடன் இருக்கவேண்டுமென்ற அவா..!

அமைப்பியலை நான் மெதுவாகத்தான் படிக்கத் தொடங்கினேன். இருப்பினும் சில விஷயங்களை அது எனக்குத் தெளிவுபடுத்தியது.
1. தமிழ்நாட்டு சிறுபத்திரிகைச்சூழலில் இருத்த லிய செல்வாக்கால் உசுப்பிவிடப்பட்ட புதிய பிராம ணியத்தை எதிர்கொள்ள அது உதவியது.
2. வெறும் அரசியல் மார்க்சியத்தால் உள்வாங்க இயலாமலிருந்த பண்பாட்டு அசைவுகளைப் புரிந்து கொள்ள அமைப்பியல் மற்றும் பின்அமைப்பியல் உத வின. அந்தோனியோ கிராம்சியின் வழியாக மார்க்சி யத்திற்குள் நுழையும் முயற்சி இது.
3. சமீபத்திய அடித்தள மக்கள் எழுச்சிகள், தலித் இயக்கங்கள் இச்சமுகத்தின் அடிப்படையான சாதி அமைப்பை அசைக்கின்றன என்ற புரிதலுக்கும் அமைப்பியல் சிந்தனை இட்டு வந்தது.
சாதி அமைப்பு, தேசிய இனப்பிரச்சினை ஆகிய இரண்டு அடிப்படையான விஷயங்களை மார்க்சிய இயக்கங்கள் தெளிவோடு கையாளவில்லை என்ற முடிவு என்னில் வலுப்பட்டுவிட்டது.
- முனைவர் ந. முத்துமோகனி
உளவியல்,சர்ரியலிசம், இருத்தலியல், தொல்மா னுடவியல், நாட்டுப்புறவியல், அமைப்பியல் என்று அந்தந்தச் சந்தர்ப்பங்களுக்குப் பொருந்துகிறமா திரி தமிழவன் ஓடி ஒடிச் சேகரித்த கோலம் ஒரு அமைப்புக்குட்பட்ட (system) நேர்வழிப் பாதையா
கத் தோன்றவில்லை.
இறுதியாகத் தமிழவனின் மொழிநடைபற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அவர் மேற்கொண்டிருக் கிற கருத்துப் போராட்டமானது, சமகால நம்பிக் கைகளுக்குப் பாதகமாக அமைவதால் எதிர்பார்க் காத கருத்துக்களின் திடீர்த் தாக்கலுக்கு வாசகர் கள் ஆளாக நேரிடுவதால் மொழிப்பிரயோகம் மிக வும் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. பாரதி, அ.மா தவையா போன்றவர்கள் அன்றைய காலகட்டத்தில் 'அதிர்ச்சி தரும் புதிய சிந்தனைகளை முதன்முத லாகத் தமிழ் உரைநடையில் எழுதியபோது கையாண்ட மொழிப்பிரயோகம் இங்கு நினைவுகூரத் தக்கது. இன்றைக்கு கலை-இலக்கியம்பற்றிய கருத் தாடலில் இதேபோன்ற 'அதிர்ச்சி தரும் புதிய சிந்த னைகளை முன்வைக்கிறபோது தமிழவன் தம் மொழிப்பிரயோகத்தை இன்னும் கவனமாக அமைத் திருக்கலாம். அமைப்பியல் தொடர்பான ஆங்கில நூல்கள், ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள், ஏனை யவகை ஆங்கிலநூல்களைவிடக் கடுமையான சொற்பிரயோகங்களுடன் இக் கட்டுரைகள் இருப் பதை தமிழவன் தனக்குச் சாதகமாகக் கொள்ள
இயலாது?
- ராஜ்கெளதமன்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 07

Page 8
எனது மார்க்சிய அறிவை ஆழப்படுத்தவும், அதன்மீது எனக்குள்ள நம்பிக்கையை உறுதிப்படுத் தவும் எனக்கிருந்த வழிகளில் ஒன்று, மார்க்சியத் துக்கு மாறான கருத்தோட்டங்களை எதிர்கொள்வ தும் அவை எழுப்பும் பிரச்சினைகளுக்கு மார்க்சியத் துக்குள்ளே மேலும் செறிவான வகையில் விடைகள் கண்டறிவதும் ஆகும். இது உடனடியான முறையில் வர்க்கப் போராட்டத்துக்கு உதவாது. ஆனால் வர்க் கப் போராட்டம் செய்வது நியாயமே என்ற நம்பிக் கையை உறுதிப்படுத்த எனது ஞானத்தை அது வலுப்படுத்தும்.
புளித்துப்போன பதங்களையும் சொல் ஜாலங்க ளையும் பயன்படுத்தாமல் மார்க்சியக் கண்ணோட் டத்தை நூல் நெடுகிலும் இழையோட வைத்துள்ள நான் கீழ்க்காணும் நிலைப்பாடுகளையே மேற் கொண்டுள்ளேன்.
ஐரோப்பிய சிந்தனை மரபை உருவாக்கிய இரு பெரும் நீரோட்டங்கள் சமுதாய-பொருளாதார மாற் றங்களினூடாகவும் அவற்றைக் கடந்தும் செல்வாக் குச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட சமுக வாழ்நிலையிலிருந்து பிறந்த தத்துவ உணர்வு உருவாக்கிய கருத்தாக்கங்களில் சில, வேறுபட்ட சூழல்களில் தொடர்ந்து நிலவிக்கொண்டிருக்கின் றன. அதே வேளையில் அவற்றின் உள்ளடக்கம் மாறுபடுகின்றது. பொருளாயத வாழ்வின் வரலாற் றைப் போலவே சித்தாந்தங்களின் வரலாற்றிலும் தொடர்ச்சி, தொடர்ச்சியின்மை இரண்டும் காணப்படு கின்றன. மிக அடிப்படையானதும் மிகத் தீவிரமானது மான சமூக மாற்றங்களின்போது தொடர்ச்சியைக் காட்டிலும் தொடர்ச்சியின்மை மிகுந்து காணப்படு கின்றது?
- எஸ்.வி.ராஜதுரை
எண்பதுகளின் இறுதிப்பகுதியில் ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலானவற்றில் ஏற் பட்ட மாற்றங்களையொட்டி சனநாயகம் முதன்மை பெற்றதை நாம் அறிவோம். நமது சூழலில் சாதிப்பி ரச்சினை குறித்த ஆழமான விவாதங்கள் இதனைத் தொடர்ந்தே தீவிரம் பெற்றன. இலக்கியம் பற்றிய அணுகுமுறையிலும்கூட இத்தகைய மாற்றங்கள் புதிய வழிமுறைகளைத்திறந்துவிட்டன. மார்க்சியம் குறித்த விமர்சனங்கள் எந்தெந்த திசைகளிலிருந்து வந்துள்ளன எனத் தொகுத்துக்கொண்டு சனநாய கத்தின் புதிய விளக்கங்களையும் நடைமுறைகளை யும் கண்டறிய முயன்ற மிகச்சில மார்க்சியர்களில் அ.மார்க்ஸ் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்.4 -ரவிக்குமார்
டெர்ரி ஈகிள்டனைத் தொடர்ந்து நாங்கள் அமைப்பியல் தொடர்பான மூலநூற்களைப் பயிலத் தொடங்கினோம். அறிமுக நூற்களில் தொடங்கித் தான் மூல நூற்களுக்கு வந்தோம். தமிழவனின்'ஸ்ட் ரக்சுரலிசம்' நூலும் டோனி பென்னட்டின் ஓவிய வடிவ வியலாளர்கள் குறித்த இதற்கு பெரிதும் உதவின. கூடவே பிரெக்டின் அழகியற் கோட்பாடுகள் குறித்த
08 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

கட்டுரைகள் அனைத்தையும் முழுமையாகப் படித்து முடித்தோம்.
- பொ. வேல்சாமி
பின்நவீனத்துவத்தை நான் ஒரு புதிய ஆய்வுமு றையாக - சிந்தனைமுறையாகவே காண்கிறேன். எல்லாவித புதிய ஆய்வுமுறைகளிலிருந்தும் மார்க்சி யம் தனக்கு வேண்டிய விஷயங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது. பின்நவீனத்துவத்திலிருந்து எடுத்துக்கொள்ளக்கூடிய விஷயங்களோ, முறை மையோ இருந்தால் எடுத்துக்கொள்ளும். அதில் தப் பில்லை. மார்க்சியம் மதம் அல்ல. இறுகிய இரும்பு விதிகளைக் கொண்டதல்ல அது. மனிதகுலத்துக்கு நன்றாக வாழ சில பாதைகளைப் போட்டுக்காண்பிக் கிறது. ஃபிராய்டியம் வந்தவுடன் சிலர் பிராய்டியப்பண் புகளான மார்க்சியத்தோடு இணைத்தால் மார்க்சி யத்தில் இல்லாத செக்ஸ்-பாலியல் ஆராய்ச்சிச் சிந் தனையை மார்க்சியத்துக்குக் கொடுக்கலாம் என்று முயன்றார்கள். அதாவது ஹெர்பர்ட் மாக்யுர், வில் ஹெம் ரிச் போன்றவர்கள். புதிய சமூகவியல் சிந்த னைகள் அதிகம் ஆய்வுத்துறைகளில் வந்தவுடன் பாட்டமோர் போன்றவர்கள் மார்க்சியத்தை ஒரு சமு கவியல் பண்பு கொண்ட சிந்தனையாய் வளர்க்கப் பாடுபட்டார்கள். ஜார்ஜ் லூக்காச் போன்றவர்கள் ஹேகலியச் சிந்தனை வெளிச்சத்தில்தான் மார்க் சியமும் சிறப்புப் பெறும் என்று சிந்தித்தார்கள். லூயி அல்துஸர் ஹேகலியத்தைத் துடைத்து எடுத்தாற் தான் மார்க்சியம் உருப்படும் என்று சொன்னார். இவங்க யாருக்கும் கெட்ட நோக்கம் இருந்ததா தெரியல்லே. அதுபோல் பின்நவீனத்துவம் வேறுது றைகளில் வர்றதைப் பார்த்து இது மார்க்சியத்துக் குக் கொண்டு வந்தா நல்லதா இருக்குமே என்று சிலர்- அவங்களுடைய மனித அன்பின் அடிப்படையி லேயும் படிப்பறிவு அனுபவங்களின் அடிப்படையிலே யும் முயல்கிறாங்க. அப்படி முயலும்போது ஃபிரெட ரிக் ஜேம்சன் போன்றவர்கள் வர்க்க ஆராய்ச்சி அடிப் படையைக் கைவிடல்ல. Late Capitalism, அதாவது மிகையாக வளர்ந்த முதலாளித்துவத்தின் பண் பாட்டு அடிப்படை பின்நவீனத்துவம் என்று அவர் விளக்குகிறார். டெர்ரி ஈகிள்டன் இத ஒத்துக்கல்ல. என்னா பின்நவீனத்துவத்தின் வேறுபாடுகளையும் போக்கு சரியல்ல என்பது அவர் கருத்து. வேறுபாடு கள் மொழியால் கட்டமைக்கப்பட்டது என்ற கூற்று உண்மையல்ல என்பது இவர் கருத்து. பின்நவீனத்து வத்தை விமரிசிக்க ஒருவகையான நகைச்சுவை கலந்த உரைநடையை ஈகிள்டன் பயன்படுத்துகி றார்.
தமிழ்ல வர்க்கப்பார்வையைவிட சாதிப்பார் வைக்கு முக்கியத்துவம் தந்தவர்கள், பின்நவீனத்து வத்தின் அடிப்படையில அப்படிச் செய்ததாக தெரில. அவர்கள் வேறு காரணங்களுக்காகத்தான் கட்சிக ளின் வர்க்கப்பார்வையைத் தாண்டிச் சாதிப்பார் வைக்கு வந்தனர். இதில் இவர்கள் அமைப்பியலால் தான் அதிகம் ஈர்க்கப்பட்டனர். அதுவும் அல்துரஸ் ரின் கருத்துருவம் என்ற கோட்பாட்டாலதான். சாதி

Page 9
முக்கியம் என்ற சிந்தனையை அமைப்பியல் ஏற்படுத் தியதா சி.பி.ஐ. கட்சியின் சிந்தனையாளரான முத்து மோகன்கூட தனது சமீபத்திய நூலில் கூறுகிறார். அதுபோல் பெண்ணியமும் பின்நவீனத்தில தமிழில் வந்ததா சரித்திரம் சொல்லல. ஆனா தலித்தியம், பெண்ணியம், சுற்றுச் சூழலியல்பற்றி விவாதிக்க விரும்புகிறவர்களுக்கான வாதங்களுக்கு பலம்தேட பின்நவீனத்துவத்திலிருந்துநிறைய உதவி கிடைக் குங்கறத நான் மறுக்கல்ல. ஆனா பின் நவீனத்து வத்தை முழுசா படிச்சு விரிவான நூல் எழுதி பின்பு சர்ச்சை செய்து இது இது பயன்படும், இது இது பயன் படாது என்று சொல்ற அளவு தமிழ்ச்சூழல் வளர்ந்தி ருக்கிறதா என்று தெரியல்ல. ஒரு பாஷன் என்று பார்த்து அந்தப் பெயரை உச்சரிக்கிறதா தெரி யிறது. - தமிழவன்
பின்நவீனத்துவம் பேசுவதால்தான் எங்கள்மீது தாக்குதல்கள் குவிகின்றன என்பதையும் நான்மறுக் கிறேன். நாங்கள் பின்நவீனத்துவம் மட்டுமே பேசிக் கொண்டிருக்கவில்லை.நாங்கள் பேசுகிற விஷயங்க ளில் சுமார் பத்துசத அளவே பின்நவீனத்துவம் குறித் தவையாக இருக்கலாம். மற்றப்படி, நாங்கள் மிகப் பெரிய அளவில் தலித்தியம் பேசுகிறோம்.தலித் அர சியல் குறித்து முதன்முதலில் ஒரு ஆவணம் வெளி யிட்டது நாங்கள்தான். தலித் அரசியல், பண்பாடு ஆகியன குறித்து தமிழில் மிக முக்கியமான பல விவாதங்களுக்கு நாங்களே அடித்தளமாக இருந் திருக்கிறோம். நிறப்பிரிகையின் சார்பாக, தலித் இலக்கிய மலரை வெளியிட்டோம். வரலாறெழுதிய லில் அடித்தளமக்கள் ஆய்வுகுறித்து விரிவான விவாதங்களுக்கு நாங்கள் காரணமாகின்றோம். பெண்ணியம் குறித்தும், புலம்பெயர்ந்த தமிழர்பற்றி யும் நாங்கள் பேசுகிறோம். இப்படி நிறைய சொல்ல லாம். எங்கள்மீதான எதிர்ப்பு என்பது இப்படி எங்க ளது ஒட்டுமொத்தமான செயல்பாடுகள் மீதான எதிர்ப்பு என்றுதான் பாரக்கவேண்டுமேயொழிய, பின் நவீனத்துவம் பேசியதால்தான் இந்த எதிர்ப்பு என் பது எளிமைப்படுத்திப் புரிந்துகொள்வதாகும். ஒன்றைநான் இங்கு அடிக்கோடிட்டுச் சொல்ல விரும் புகிறேன். பின்நவீனத்துவத்தை எதிர்ப்பவர்கள் எல் லோரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலித்தி யத்தை எதிர்ப்பவர்களாகவே உள்ளனர்.
பின்நவீனத்துவம் ஏகாதிபத்தியச் சரக்கு என்றல் லவா சொல்லப்படுகிறது? இது இன்னும் பெரிய வேடி க்கை. அய்ரோப்பாவில் தோன்றிய அனைத்தும் ஏகா திபத்திய சரக்குத்தான் என்றால் எதுவும் அதிலி ருந்து தப்பமுடியாது. மார்க்சியம், தேசியம் உட்பட பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் அய்ரோப்பா வில் பிறந்தவர்கள் என்பதால் மட்டுமே அது ஏகாதி பத்தியத்தின் ஒட்டுமொத்தமான தத்துவம் என்று சொல்லிவிட இயலாது. அங்கும் இது ஒரு எதிர்த்தத் துவமாக, கலகக் குரலாக ஒலித்துவருகிறது. சார்த் தருக்குக்கூட நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் பின்நவீனத்துவச் சிந்தனையாளர்கள் எவருக்கும் இதுவரை நோபல் பரிசோ அரசாங்க விருதுகளோ

வழங்கப்பட்டதில்லை. அதிகபட்சமாக அவர்கள் அனுபவித்துவரும் சொகுசு பல்கலைக்கழகப் பேரா சிரியர் பதவிகள் மட்டுமே! பின்நவீனத்துவச் சிந்த னையாளர்கள் பலரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மூன்றாம் உலக மக்களுக்கு, அகதிகளுக்கு, கருப் பர்களுக்கு, பெண்களுக்கு ஆதரவாகக் குரலெழுப் புபவர்கள்.
ஃபூக்கோ, லியோதார்ட் உள்ளிட்ட பலரும் இடது சாரிப் பாரம்பரியமுடையவர்கள். இன்றைய உலகின் மிகப்பெரிய சிந்தனையாளராகக் கருதப்படும் தெரிதா உள்ளிட்ட யாரும் மார்க்சியத்தின் பங்க ளிப்பை மறுத்தவர்களில்லை. மற்றதன் இருப்பைக் கூவிப் பறை சாற்றுவதென்பதே இவர்களின் பரந்த மனிதநேயச் சிந்தனைக்கு ஒர் எடுத்துக்காட்டு. மற் றதை ஏற்றுக் கொள்ளாத, தனக்குக் கீழானதாகவே உள்வாங்கிப் பழக்கப்பட்ட பார்ப்பனிய மனப்பாங் கால் இதனை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்!
இன்னொரு வேடிக்கை பாருங்கள். இன்று பின்ந வீனத்துவத்தை வெளிநாட்டுச் சரக்கு என்கிற பல ரும் ஒரு காலத்தில் பிராய்டிசம், எக்சிஸ்டென்சியலி சம், சர்ரியலிசம். என்றெல்லாம் புத்கங்கள் எழுதிக் கொண்டிருந்தவர்கள்தான். அன்று இவர்களைப் பார்த்து கட்சி அதிகாரிகள் ஏகாதிபத்தியவாதிகள் என்றார்கள். இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு இவர்கள் நம்மைப் பார்த்து. அதே குற்றச்சாட்டை சொல்லுகிறார்கள். இதில் இன்னும் பெரிய வேடி க்கை என்னவென்றால் ஏகாதிபத்தியநிறுவனங்களு டன் தொடர்புகள் வைத்துக்கொண்டு, பெருமளவில் நிதி உதவி வாங்கிக்கொண்டு தங்கள் நிதி வரத் துக்கள் பற்றிய எந்தச் செய்திகளையும் வெளியே தெரிவிக்காமல் 'இயக்கம்' நடத்திக்கொண்டிருக் கிற சில அறிவுஜீவிகளும்கூட இத்தகைய குற்றச் சாட்டுகளை எங்கள்மீது அள்ளிவீசுவது என்ப துதான்! - அ. மார்க்ளப்
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள பின்நவீனத் துவ எழுத்துக்களின் சமூக அரசியல் பின்புலத்தை மதிப்பீடு செய்யவேண்டி உள்ளது. அவை விரல்விட்டு எண்ணக்கூடியவைதான். ஆனால் தம்மைத்தாமே தமிழகத்தின் அறிவுஜீவிகளென நியமித்துக்கொண் டவர்களின் பனுவல்கள் இவை. இவர்கள் அனைவ ருக்கும் அவரவருக்குரிய வெளியீட்டு வசதிகள் இருந்தன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண் டும். கோட்பாட்டு வெளியில் இவர்களுக்குள் நடக் கும் போராட்டத்துக்கும் இவர்களது நடைமுறைச் செயற்பாட்டுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறைவு. - வெ. பத்மா
அடிக்குறிப்புகள்:
1 அமைப்பியல் பின்அமைப்பியல் (1998) 2 படைப்பும் படைப்பாளியும் (1989)
3 எக்சிஸ்டென்ஷியலிசம் (1983)
4 உடைபடும் புனிதங்கள் (1994) 5 மார்க்சியமும் இலக்கியத்தில் நவீனத்துவமும் (1991) 6 உயிர்நிழல் (மார்ச்-ஏப்ரல் 1999)
7 கவிதாசரண் (ஒக்.நவ 1997) 8 சரித்திரத்தில் படிந்த நிழல்கள்பற்றி ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 09

Page 10
గ్రాం
நீர்கொழும்பூர் முத்துலிங்கம்
நீங்கள் யார்? நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது அத்துமீறி என்னுள் பிரவேசிக்கும் நீங்கள் யார்? நீங்களாக என்னால் மாறமுடியாது நான் நானாகவே இருப்பேனி
முடிந்தால்
நீங்கள் நானாக மாறுங்கள் உங்கள் சட்டங்கள் உங்களுக்கு
எனக்கு?
நான் எழுதுவேன்
அது என் உரிமை
நீங்கள் விமர்சியுங்கள் அது உங்கள் உரிமை - அல்லது அது உங்கள் மேதாவிலாசம் . சிலநேரம் பீடாதிபதி உணர்வுகள் நல்லவேளை புதுமைப்பித்தனி மரணித்துவிட்டான் இல்லையெனில் நீங்கள் கொன்றுபோடுவீர்கள் பூனைக்கு விளையாட்டு எலிக்குஞ்சுக்கு மரணாவஸ்தை உங்கள் கண்ணாடிகள் பழசாகிவிட்டன . மார்க்ஸுக்கு புதிய தொட்டில் கட்டவேண்டாம் மீண்டும் பிறந்தால் குழந்தையின் கழுத்தை தடவிப் தூக்குக்கயிற்றின் தழும்பு இருக்கின்றதா என்று இருந்தால் அது நான்தான் சிறையில் ஒரு கவிஞன் எழுதிய வரிகள் எங்கள் காலவண்டியை ஒட்டிச் செல்பவன் யார்? சாரதி இல்லாமல் வண்டி ஓடுகிறதா? சாரதியார்? என்று கேளுங்கள்! நீயார்? - என்று என்னைக் கேட்க வேண்டாம் அப்பழக் கேட்பதற்கு நீங்கள் யார்? காவியுடைக்குள் புத்தன் ஒளிந்துவிட்டான் ஐந்துவேளைத் தொழுகைக்குள் இறைவன் தொலைந்து போனான் சிலுவை இன்னும் அப்படியே இருக்கிறது கோபுரங்களில் இன்னும் சூலாயுதம் முதலில் அவனைத் தேடுங்கள் என்னைத் தேடவேண்டாம் என்னைத் தேடுதற்கு நீங்கள் யார்? நான் சுயம் நானே வேள்வி
நானே ஆகுதி.
நீங்கள் தேடுங்கள்
என்னை அல்ல!
10 (உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999


Page 11
சிறகடிப்பும் படபடப்பும்
வசந்தி-ராஜா
அறிமுகமாகும்
பருவம் பட்டாம்பூச்சிப் படபடப்புகளையும் பருவத்தினி பந்தாக்களையும் அதற்கே அதற்கான தற்Uாதுகாப்புணர்வுகளையும் தன்னகத்தே கொண்டு
Uரசவம் பிரசவிக்கும் பார்வைப் படலங்கட்குள்ளாலும் பரிசீலனை சாத்தியம்தான் சந்ததித் தேர்வுக்கான சரியான சோழக்காய
திளைத்துக் கிடக்கும் பழகிப்போனதால் கனவு காவுதல்கள் சாஸ்வதம் என்பதாய் ტr[fouuბ
அடித்துக் கொள்ளும் அங்கலாய்த்தUழ - மனசு செட்டைகள் மொட்டையாக சிறகடிப்பு சித்திக்காதோ
66 பருவத்தின் எல்லைக்கோட்டில்
நின்றபடிக்கு.
തുള്ളൂ
Vol. II No.6 NOVEMBER - DECEMBER 1999 தொகுப்பாசிரியர்கள்: 63వelf கிருஷ்ணராஜா கலைச்செல்வன்
அட்டை ஓவியம். வடிவமைப்பு: கிருஷ்ணராஜா ノ ܢ

ஒரு மரணத்தினர்Uனர் வெறுமையான கதிரை. வர்ணம் மெழுகப்பட்ட வேலிக்குள் நிலம் நடுவதற்கு ஏதுமின்றி கிடந்தது.
நீண்ட பிணைப்பினர் Uரிவும் பிடுங்குண்ட வேரும் இருதயத்தை அறுத்தெடுத்த துயரமும் வெறுமனே முளைத்த முள்ளிகளின் பூக்களிலும் முட்களிலும்
வழிந்தன.
அடுத்த பருவத்துக்காய்
வாழ்க்கை விரித்த வெளியில் நிலம் நிமிர்ந்து கிடந்தது.
ஹம்சத்வனி
அன்பளிப்பு: தி ஒன்று - 15FF வருட சந்தா - 100FF
(6 பிரதிகள், தபாற் செலவு உட்பட) இலங்கை, இந்தியா -இலவசம்
காசோலைகள் அனுப்பவேண்டிய வங்கியும், இலக்கமும்: CREDIT LYONNAIS CODEBANQUE 30002 COMPTE 554/6788M/21 ASSOCIATIONEXIL
தொடர்புகளுக்கு: EXIL 27 Rue Jean Moulin 92400 CourbeVOie, France e-mail: EXILFRGaol.com
* d'enregistrement de l'association : 13023204

Page 12
D துஷா வேலைவிட்டு வீடு திரு ம்பியவுடனே முதல் வேலை யாக தேநீர்கோப்பையோடு கொம் ப்யூட்டரின் முன் உட்கார்ந்தாள். எத்தனையோ நாட்களாக தான் நினைத்து வைத்திருந்த அவ்விட யம் இன்று எப்படியோ முடிக்கப்பட வேண்டுமென்ற உறுதியில் இருந் தாள். கணவனுடன் சில விடயங்க ளைக் கலந்தாராயுமுன் தன் கேள் விகளை நிரைப்படுத்த ஆயத்தமா னாள். மகள் பிறந்த ஜெர்மன் நேரம், தேதி, மாதம், வருடம் போன்றவைகளைக் குறித்திருந்த கோவையைத் தேடினாள். அதிலே பதித்து வைத்திருந்த மகளின் சாதகக் குறிப்புகளைக் கவனித்து அது தொடர்பாக சோதிடர் கேட்டி ருந்த கேள்விகளுக்குரிய பதில் களை எழுதத் தொடங்கினாள். மகள் பூப்பெய்திய தினம், நாள், நட்சத்திரம், அன்றைய நாளின் பலன்களை எழுதிய சோதிடரின் பெயர், பலன், சாமத்தியச்சடங்கு நடாத்தியநாள்-அதுவும் சோதிடர் பார்த்துச் சொன்னநாள் என்று சிறு குறிப்புக் காட்டினாள். எப்போது தாம் அவளின் திருமணத்தை நடாத்தி முடிக்கத் திட்டமிட்டுள் ளோம். மகளுக்கும் வசதியான நாட்களையும் சேர்த்தே - விசேஷ மாக அந்த விசேஷ நாட்களில் மக ளது மாதவிடாய் இல்லாத நாட்க ளாய் கணக்கிடப்பட்டுக் கோடு கீறப்பட்டது. இனி மணமகனுடைய விபரங்கள், சோதிட பலாபலன்கள் தனியான பக்கமாக நீண்டன.
இலத்தீன் மொழி வரிவடிவங்க ளுக்கு இணையான தமிழ் எழுத்து வடிவங்கள் வந்துவிட்டதால் உல
85............ ご・ベーく・・・・・。
கம் பூராவிலு( ளோடு தொடர் வசதி வாய்ப்பா
எழுதிய யா கையிலுள்ள மரி ருக்கு இ-மெயில் விட்டால், அனு ம்பி அந்த வழி விரைவில் கிடை ணத்துக்கான 6
 
 
 
 

முள்ள தமிழர்க
புகொள்ள இந்த
ய் இருக்கிறது.
வற்றையும் இலங் ானிப்பாய் சோதிட ) முலம் கொடுத்து ப்பிவிட்டால், திரு யிலேயே பதிலும் த்துவிடும். கலியா லீவுகள் விண்ணப்
பம் கொடுக்கச் சுலபமாய் அமை யும். அதற்கான ஒழுங்குபடுத்தல் களுக்கு தனக்கிருக்கும் பொறு ப்பை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள். கணவனுக்கு இது விடயத்தில் பெரும்பங்கு இல்லாவி டினும் அவனுக்கு என்னென்ன பொறுப்புகளை தரலாம் என மனம் அசைபோட்டது. மகளை நினை த்து மிகவும் பெருமையாய் இருந் தது. தான் சிறுவயதிலிருந்தே தானும் கணவனும் அவளுக்குச் சொல்லிக் கொடுத்தவைகளை அவள் நன்கு கிரகித்துக்கொண் டாள். வேறு குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் மாதிரி அடம் பிடித்த வளில்லை. யார்யாரோடு பழகவே ண்டும் - தாங்கள் தெரிந்தெடுத்த வர்களோடுதான் மகள் பழகவேண் டும் என்பதையெல்லாம் அவள் புரிந்துகொண்டாள். அதுமாதி ரியே நடந்துகொண்டாள். இலங்கையில் ஒரு வீடு, ஜெர்மனி யில் ஒரு வீடு என்றெல்லாம் தானும் தன் கணவனும் உழைத்து வாங் கிப்போட்டிருப்பது அவளுக்காகத் தானே. இதையெல்லாம் நாளுக் கும் பொழுதுக்கும் மகளிடமும் வீட்டுக்கு வருவோர் போவோரிட மும் எத்தனைமுறை சொல்லியி ருப்பார்கள் மதுஷாவும் அபியும். அவளின் திருமண விடயம்பற்றி நிறையவே கதைத்திருந்தார்கள். அதனால்தான் மகளுமே தங்க ளுக்குப் பிடித்தமல்லாத ஒருவ னின் மேல் காதல் கொண்டது மில்லை. அவளுக்குப்பிடித்தமான வன் தங்கள் குடும்ப அந்தஸ் துக்கு இசைந்தவனாய், மற்றவர் பார்த்துப் பொறாமைப்படக்கூடிய
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 11

Page 13
ஒருவனாய், எல்லாத் தரங்களிலும்
தங்கள் மட்டத்துக்கு ஒத்துப் போகக் கூடியவனாய்த்தான் தங்
கள் மருமகன் அமையவேண்டு மென மகளுக்கு எத்தனையோ தடவை தான் மட்டுமல்ல தன் கண வனும் சொல்லி வைத்திருந்தான். மகளும், அச்சொற்படியே நடந்து, அவர்கள்முன் தான் விரும்புவதாக மராவை சரு பெற்றோருக்கு ஒரு நாள் அறிமுகப்படுத்தினாள். இந் நிகழ்ச்சிதம் வாழ்வின் ஒரு தோல் விபோல் மதுவடிாவுக்கும் அவள் கணவனுக்கும் பட்டது. பின்னர் அவன் பற்றி, அவன் படிப்புப்பற்றி, தொழில்பற்றி, அவன் தாய் தந்தை பற்றி, இங்கிலாந்தில் அவன் குடும் பம் வாழ்ந்ததுபற்றி ஆராய்ந்த போது மகளின் தேர்வுபற்றி திருப் திப்பட்டுப் போனார்கள். மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு தம் எண்ணப்படி யாவும் நிறைவேறு வது குறித்து அளவு கடந்த பெருமை கொண்டார்கள்.
மதுவடிாவின் பாட்டி 19ம் நூற் றாண்டின் இறுதிப்பகுதியிலே புக லிடம் தேடி ஜெர்மனியில் வாழ்ந்தி ருந்த சமயத்தில், அவள் கொள் ளுப்பேத்தியும்கூட, பூட்டி போலவே தாயகத்தில் சடங்கு, சம்பிரதாயங் களோடு திருமணம் முடித்த மாதி ரியே ஜெர்மனியில் கலியாணம் முடிப்பாள் என்று கனவுகூடக் கண் டிருக்க மாட்டாள். அவள் நினை வெல்லாம் அவள் தாயகத்தில் இருந்தது. இந்த அய்ரோப்பா வாழ் வைப்பற்றி நாளும் பொழுதும் திட் டிக்கொண்டே இருப்பாள். அவளு டைய நிலவும், கடலும், முற்ற மும். வெறுங் கனவாய்ப் போயின. தன் மகளை சொந்தக் கிராமத் துக்குக் கொண்டு போய் அங்கு அவளை வளர்க்கவேண்டும் என்று நெடுக சொல்லிக்கொண்டிருந் தாளாம். அந்தப் பாழாய்ப்போன இனப் பிரச்சினை தீரவேயில்லை யாம், அவளின் இளமைக் கால இனிய அழகுகள் மிகமிகத் தூரத் திலேயே அவளுக்கு இனிமேல் எட் டாததாய் அழிந்துபோயின. அவ ளுக்கு ஒட்டாமல்போன இந்தக் கண்டத்தின் வாழ்வு அவள் மக ளுக்கு மிக நன்றாகவே ஒட்டிப் போயிற்று. அவளிடம் தமிழ் கொஞ் சிக்கொண்டே இருந்தது. ஆங்கில
மொழி அவளுக் அடுத்தபடியான தது. பிறகென் 6 வேர்களைத் தெ யில் அவளுக்கு கொடுத்தது.
அய்ரோப்பான அவுஸ்திரேலியா வில், தமிழர் என்ே தந்த நாடுகளி பேசிக்கொண்டு, பிரஜைகளாய், ே இந்துமதப்படி ம மற்ற நம்பிக்கை டுள்ளோரும் தங் இங்கு கொண்டு பலவேறு வகை களை முறைய கொண்டு தமிழ் உறவினர்களே! பேணி, நிம்மதியா கின்றனர். தமது அடையாளங்கள் களை தொடர்ந் வருகின்றோம் எ டுக்கொள்ளும் { நல்ல காரியங்கள் டும் திருமணம், ங்கு போன்ற இை யங்களிலும் இன் லிருந்து கணித்து நல்லநாள் ஜா லையே நம்புகி அவர்களுக்கு ஒ பெருமை இருக்க யான விடயங்க பட்டோரும் ஆங் தாலும், இவர்கள் யோரால் விசித்த கள் தமது இனத் ளாகவும் கவனிக் சிலர் நல்ல தமிழு அய்ரோப்பாவின் ளில் இலங்கைய யாவிலிருந்து, ப ந்து அவ்வப்போது வந்து போகின்றன போக்கில் புலம்ெ ரையின் கொஞ்சு புளகாங்கிதமை தமிழினி சாகாது டுப் போகிறார்க ரர்கள் இன்னும் 6 கள் சினிமாப்பட கிக்க வழிகள் இ
12 உயிர்நிழல் 0 நவம்பர் .
டிசம்பர் 1999

கு ஜெர்மனுக்கு இடத்தைப் பிடித் 7 e6) 656oLuu ாடர, இலங்கை ஆங்கிலம் கை
பில், கனடாவில், வில், அமெரிக்கா றொரு இனம் அந் ன் மொழியைப் அந்தந்த நாட்டுப் காயில்கள் கட்டி ட்டுமில்லாமல், களைக் கொண்
கள் முன்னோர்
வந்து சேர்த்த 5 u JIT 60 do fil (35 ாகச் செய்து நண்பர்களோடு, ாடு உறவைப் rய் வாழ்ந்து வரு தமிழர் என்னும் ளை, கலாசாரங் து பாதுகாத்து ன பெருமைப்பட் இவர்கள் நம்பும் ர் எனக் கருதப்ப சாமத்தியச் சட ர்னோரன்ன விட னும் இலங்கையி தருவிக்கப்படும் தகம் பார்த்த ன்றனர். இதில் ரு அலாதியான கிறது. இம்மாதிரி ளுக்கு அப்பாற் காங்கே வாழ்ந் பெரும்பான்மை திரமாகவும் இவர் த்துக்கு எதிரிக கப்படுகின்றனர். ம் பேசுகின்றனர். கோடைகாலங்க லிருந்து, இந்தி )லேசியாவிலிரு து தமிழறிஞர்கள் ார். வந்து போகிற பயர் தமிழ் பரம்ப தமிழைக் கேட்டு டந்து "மெல்லத் வரம் தந்துவிட் ள். சினிமாக்கா ாப்படி இங்கு தங் ங்களை விநியோ ருக்கின்றன என
நோட்டம் விட்டுப்போகிறார்கள். தமிழ் புத்தகங்கள் சில பாது காத்து வைக்கக்கூடிய உருவில் வெளிவருகின்றன. இங்கு கோயில் திருவிழா பற்றிய அறிவித்தல்கள் கூட இன்டர்நெட்டில் இன்னும் தமிழிலேகூட வந்துகொண்டிருக் கின்றன. தமிழ்ப்புத்தகங்கள் வீடு களில், நூலகங்களில், பொதுக் காட்சிச்சாலைகளில் மிகப்பெறு மதி வாய்ந்ததாக மதிக்கப்படு கின்றன. ஏன் எனில் பழைய தமிழ் எழுத்து வடிவங்கள் மிகச்சிலரால் மட்டுமே எழுதப்பட்டு வருகின்றன. அப்படி வெளிவருபவைகளை எவ் வாறு இன்னும் பல நூற்றாண்டு காலத்துக்குப் பாதுகாத்து வைக் கமுடியுமா என்ற ஆராய்ச்சிகள் நீண்டுகொண்டிருக்கின்றன.
மதுவடிாவுக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. தன் தாயின் திருமண அழைப்பிதழை தேடி எடுத்தாள். மிகக் கவனமாக பாது காத்து வைக்கப்பட்டிருந்த அந்த ரசாயன கலவை கலந்த ஒரு பெட் டிக்குள்ளிருந்து அதனைக் கருவி யொன்றால் வெளியில் எடுத்தவள் அதற்குரிய விசேஷமாகத் தயா ரிக்கப்பட்ட பார்வையிடக்கூடிய ஒரு பலகையில் வைத்து படிக்க லானாள். இந்த வடிவத்தில் தன் மகளின் திருமண அழைப்பிதழும் அமையவேண்டுமென்பது அவ ளின் நெடுநாள்ய அவா. இதுபற்றி யும் மகளுடனும் கணவனோடும் இன்று கதைக்கவேண்டும் எனத் தீர்மானித்தாள். தான் செய்து முடித்த அலுவல்களை வரிசை யாக சிந்தித்துப் பார்த்தாள். எல் லாம் சரியாக ஒழுங்காகத் தெரிந் தன. அவள் தன் அலுவலகத்தின் தலைவனுக்குரிய பொறுப்புக்க ளைத் தயாரிப்பது, அவைகளை நிரைப்படுத்தி ஒப்பிப்பது, அவ னுக்கு அன்றன்றைக்குரிய நிகழ்ச் சிகளை ஞாபகப்படுத்துவது போன்ற பல தரப்பு வேலைகளிலும் அவளுக்கு பரிச்சயம் இருந்ததால் திருமணவிழாவுடன் கூடிய ஒழுங் குகளை செய்ய நிர்வகிப்பது பெரும் சுமையாக தெரியவில்லை. இவள் தாயும் கூட இப்பேர்ப்பட்ட நிர்வாகப்பயிற்சி எடுத்திருந்த வள்தான். அதே சமயம் காலம் காலமாக பெண்களுக்கென்று தீர்

Page 14
மானிக்கப்பட்ட சில தொழில்க ளுள் இதுவும் ஒன்றாய் இன்னமும் இருக்கிறது. ஒரு நிர்வாகத்தைக் கொண்டு நடத்தும் திறமை மது ஷாபோன்ற பெண்களுக்கு இருந் தும் இன்னும் தலைமைத்துவம் ஆண்களிடமே இருந்தது. சில சிறு நிறுவனங்களை பெண்கள் நடத் திக்கொண்டிருந்தாலும், பெண்கள் திறமைபற்றிக் கேலி பேசுதலும் மடடுமல்லாமல், ஆண்கள் ஆதிக் கம் பறிபோகாதபடி பல துறைக ளிலும் கட்டுப்பாட்டுவிதிகள் தந் திரமாக கையாளப்பட்டிருந்தன.
மதுஷாவுக்குத் தன் கையிலி ருந்த திருமண அழைப்பிதழின் நேர்த்தி பிடித்திருந்தது. இதை உதாரணமாக வைத்துக் கொண்டே மகளின் திருமண அழைப்பிதழை தானே கொம்ப்யூட் டரில் தயாரித்து, இன்டர்நெட்டில் கொடுத்துவிட்டால் அழைப்பிதழ் அனுப்பும் வேலை முதலில் முடிந் துவிடும். உற்சாகம் கொண்டாள். எல்லாம் தயார்ப்படுத்திய மகிழ்வு அவளைச் சூழ்ந்துகொண்டது. அவளுக்கு விருப்பமான ஒரு பாட லைப் பாடியபடி குசினிக்குள் அவள் நுழைகையில் மணியைக் கவனித்தாள். கணவன், மகள் வீடு வந்துசேர இன்னும் முக்கால்மணி நேரம் இருப்பதால் சமையலை முடித்துவிடவும் போதிய நேரம் இருந்தது. என்னத்தைச் சமைப் பது என்று மண்டையைப் பிராண்ட வேண்டி இருந்தது. நேற்றுச் சமைத்ததையே இன்று சமைத் தால் அதற்கு கணவனின் புறுபு றுப்பு கேட்கவேண்டி இருக்கும். கோபம் வந்தாலோ காரை எடுத்து சீறிக்கொண்டு விரைவுணவு தயார் பண்ணும் உணவகத்துக்கு போய் விடுவான். அத்தோடு இன்று முக் கியமான விடயம் கதைக்க வேண்டி இருப்பதால் கணவனுக் குப் பிடித்தமான சாப்பாடு செய்ய முடிவுசெய்தாள். நவீன குசினிக்கு ரிய அத்தனை வசதிகளும் அங் கிருந்ததால் வேகமாக அன்றைய சமையலை முடித்தாள். இனிமேல் அவர்கள் வருவதுதான் பாக்கி. இந்த நேர இடைவெளிக்குள் ஒரு குளியலையும் முடித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தவளாய் குளி யலறை கதவைத் திறக்கையில்,
கணவன் வீட்டின திறந்து படாரெ6 கேட்டது.
"ஓ! அபி கே றார் இதற்குமே6 றையில் இருந் கோபம் இன்னும் கும். ஆகவே அ திட்டம் கைவிட "என்ன அபிஇ தோடு வந்துவிட்
அவனோடு தாலும் இந்தமா அவனிடமிருந்து நன்கு தெரிந்தி வழமைபோலே தாள். அபி பதில் முகத்தை இன் கொண்டான். கு நுழைந்தான். :ெ வேறு உடுப்பு டான். பல்கனிக் ரட் குடித்தான். ப அவனிடம் நெரு
"என்ன அபி வச் சுக் கொண வேலையிடத்தி னையா?"
"அப்பிடியிரு வளவு நல்லம், ! அப்பிடியில்லை சமாளிக்கப்போ "அப்பிடியெ லாத விசயமெ இருக்கே. ஒவ்ெ களை ஒழுங்கா ளுக்கு கலியான Lö(866UITUD d5 நாங்கள் அப்ட சொல்லுக் கே நல்ல ஒருத்தன திட்டாள். கலிய தையும் எங்களி இப்பிடி வேற எர எந்தப் பிள்ளை "மது இஞ்ச கேல்லை. இந்த எங்களால நடத் மதுவின் மு( த்தாற்போல் சிறிது நேரமென தெரியும் கணவ அதை மாற்ற வேலைத்தலத் வன் சொல்லும்

முன் கதவைத் *று முடும் சத்தம்
ாபத்தில் இருக்கி ஸ்நானும் குளியல தால், அவரின் இரண்டு மடங்கா அவளின் குளியல் Jull-gil. இன்றைக்கு நேரத் டீர்கள்?" எப்படிக் குழைந் திரி சமயங்களில் பதில் வராதென நந்தாலும் அவள் வ கேட்டு வைத் சொல்லவில்லை. "னும் இறுக்கிக் நளியலறைக்குள் வளியில் வந்தான். மாற்றிக் கொண் குப்போனான். சிக மதுவடிா மெதுவாய் ங்கினாள். எதையோ மனசில ர்டிருக்கிறீங்க. லெ ஏதும் பிரச்சி
ந்து போட்டா எவ் இந்தப் பிரச்சினை யே. இத எப்பிடிச் றனோ? ன்ன சமாளிக்கே ண்டு எங்களுக்கு வாருத்தர் பிள்ளை வளக்காம, அதுக னம் ஒண்டு செய்து லவரப்படுகுதுகள். பிடியே. எங்கடை ட்டு எங்கட மகள் னை தேர்ந்தெடுத் ாணம் நடத்திறத் ட்டத் தந்திட்டாள். 3தக் குடும்பத்தில செய்திருக்கு." பார்.நான் நினைக் தக் கலியாணத்த த்த ஏலுமெண்டு" ழ உடம்பும் விறை அங்கு நின்றது. ானம், அவளுக்குத் ன் முடிவெடுத்தால் முடியாதென்று. தில் எப்படித் தலை கட்டளைகளுக்கு
இணங்கவேண்டி இருக்கின்றதோ அப்படியே வீட்டிலும் கணவன் முடி வுகளை ஏற்கவேண்டி இருந்தது. திருமணம் நின்றுவிடுவதற்குரிய நிலைப்பாட்டை எடுத்துவிட்டான் என்பதை கணவன் தொடர்ந்து விடாமல் சிகரட்டை உறிஞ்சும் வேகத்தில் இருந்து அனுமானிக்க முடிந்தது. அவளின் மகளைப்பற் றிய பெருமைக்கு பெருத்த அடி விழுந்தது.
"ஏனப்பா இப்பிடி சிகரட்டை உறியிறீங்கள். என்னத்துக்காக இப்படி ஒரு நல்ல விசயத்தை முறிக்கிறீங்கள்?"
"நான் முறிக்கிறேனா?எல்லாம் உன்ரை மகளாலை வந்த பிரச் சினை."
"அவள் என்ன செய்வாள். அவள் விரும்பினவனைத்தானே நாங்களும் ஒத்துக்கொண்டம், பிற கேன் அவளிலை மோதிரியள்"
"உனக்கு ஒண்டும் விளங்காது. இண்டைக்கு ஒபீசைவிட்டு வெளிக் கிட முந்தி ஒருக்கா இ-மெயில் பார்த்தனான். மானிப்பாயிலிருந்து ஒண்டு வந்திருந்தது. அடிச்சுக் கொண்டு வந்திருக்கிறன். அதைப் போய் எடுத்துக்கொண்டு ஒரு இடத்திலை இருந்து வாசிச்சுப் பார். புரியும்."
மது காற்றாய்ப் பறந்துபோ னாள் அதனை எடுக்க, அதிலே 1வது பக்கத்தில் மரா வாசனின் மகன்.வாசன் குமரப்பாவின் மகன். குமரப்பா மாரிமுத்துவின் ஒரே மகன். குமரப்பா 1980இல் இங்கி லாந்துக்கு அரசியல் தஞ்சம் கோரி வந்தவன். அங்கு அவன் வேலை செய்துகொண்டே படித்த போது ஒரு காரைதீவுப் பெண்ணை காதலித்து கலியாணமும் செய்தி ருந்தான். அவனுடைய பாட்டன் இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்தவன். இவனின் பரம்பரை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
இந்தியாவிலேயே இழிந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் இவர் கள். மராவின் பேரன் என்ன தொழில் செய்தான்? அவன் யாரைத் திருமணம் முடித்திருந் தான்?எந்தச் சாதிக் கலப்பு அவன் பரம்பரையில் நடந்திருக்கின்றது தொடக்கம் எல்லா விபரங்களும்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
13

Page 15
அதிலே இருந்தன. பொருத்தங்கள்
2வது பக்கத்தில் சரு (மதுவின் பொருந்தவில்ை மகள்) பற்றி இவளின் கொள்ளுப் மது யோசித்தா பாட்டன் வேளாள சாதியைச் ரிம்தானே முன்
சேர்ந்தவன். அவளுடைய சாதியி லும் கலப்பு ஒரு சில நடைபெற் றிருந்தாலும், தொடர்ந்தும் கலப்பு
மணமக்களின் ஐ அதன் பதில் எ மானது' என்று
நடைபெறாமலிருக்க எவையெ கொடுத்தார். க வையான கிரியைகளை மேற் றிப்பில் கீழ்க்க கொள்ளவேண்டும். எந்தெந்த காணப்பட்டது. ம கோயில்களுக்கு போய் தோஷங் லாந்தின் பிறப் கள் கழிக்கச் செய்யவேண்டும். அனுப்பியதில் ச இனிமேலும் வேறு சாதிகளோடு டப்படாதபடியாலி தொடர்பு வைத்தால் ஏற்படும் எதிர் த்ததில் முன்ன கால அனர்த்தங்கள்பற்றி குறிப்பி ருக்கிறது. அவ டப்பட்டிருந்தது. மேலும் இத்திரு கமுமே பிழையா மண 9 பொருத்தங்களில் 3தான் டுள்ளது.
பொருந்துகிறது. அதிலும் முக்கிய மதுவடிாவுக்
இரு சிறுகதைத் தொகுப்புகள்
கடந்த நவம்பர் 28ம் திகதி லண்டன் மனோர் மார்க் தமிழ் தகவல் நடுவக் கட்டிடத்தில், விமல் குழந்தைவேல் அவர்களின் "தெருவில் அலையும் தெய்வங்கள் மற்றும் 'அவளுக்குள் ஒருத்தி எனும் இரு சிறுகதைத்தொகுதிகளின் வெளியீட்டுவிழா நடைபெற்றது. திரு பத்மநாபஐயர் தலைமை தாங் கினார். சன்றைஸ் வானொலியைச் சேர்ந்தறிரங்கன் அறிமுகம் செய்து வைத்தார்.
திரு.மு.நித்தியானந்தன், திரு. ராஜமனோகரன், திருமதி மனோகரன், திரு. யமுனா ராஜேந்திரன் ஆகியோர் இரண்டு தொகுதிகளையும் விமர்சித்த னர். திரு. இ. பத்பநாபஐயர் விமர்சனஉரைகளைத் தொகுத்துப் பேசியபொழுது தமிழ்ப் பதிப்புத்துறை குறித்த தனது விரிவான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இலக்கியப் படைப் பின் தன்மை குறித்தும் தனது படிப் பிலிருந்து உதாரணம் காட்டிப் பேசினார்.
'அவளுக்குள் ஒருத்தி தொகு தியில் இடம்பெற்ற 'மந்திரவாதி எனும் சிறுகதை அனைவரது விம ர்சனங்களிலும் சுட்டிக்காட்டப் பட்ட விவாதத்திற்குரிய கதை யாக இருந்தது. ஆசிரியனின் விட் டுவிலகல் இலக்கியத்திற்கு முக்கியம் என்றார் யமுனா ராஜேந்திரன். மட்டக்களப்பு மண்வாசனை யைச் சொன்ன கதை என்றார் மு.நித்தியானந்தன். விஞ்ஞான நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை போன்றவற்றோடு பொருத்தி அக்கதையை நோக்கி னார் ராஜமனோகரன். திருமதி மனோகரன் விமல் குழந்தைவேலின் சமுகப் பொறுப்புணர்ச்சியைச் சுட்டிக் காட்டினார். அறிமுகம் செய்த ரீரங்கன்
14 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 

துப்புரவாகவே கோபம் பிடிபட்டது. ஆக இனிமேல் ல. இவ்விடத்தில் இந்தத் திருமணம் நடக்கப் போவ ர். இதே சோதிட தில்லை. சோதிடன் வார்த்தை, னொரு தடவை ஜாதகம், சாதி இவைகள்பற்றி ஜாதகம் அனுப்பி, அவளுக்குச் சொல்லப்பட்டிருந்த
ல்லாம் பொருத்த அவரும் பதில்
வைகளை தன் மகளுக்கு ஏன் இத் தனை நாட்களாக விளங்கப்படுத்
தத்தின் அடிக்கு தாமல் விட்டுவிட்டோம் என்று ண்ட விளக்கம் யோசிக்கத் தொடங்கினாள். கண ணமகனின் இங்கி வனைத் தேடினாள். அவன் கொம் புநேரம் முன்னர் யூட்டரின் முன் இருந்தான். அவன் ரியாகக் குறிப்பி தன் பரம்பரையில் என்ன சாதிக்க ), பொருத்தம் பார் லப்பு இருந்திருந்தது என்பதைத் தவறு நேர்ந்தி தேட, அதற்குரிய கோவையைத் னின் முழு ஜாத திறந்துகொண்டிருந்தான். O
கக் கணிக்கப்பட்
ச உரையாடல் ஜெர்மன்மொழி
யில் நடைபெறுகிறதென ஊகிக்க
-1509. 1999
கு கணவனின் வும்.
ளில் இருந்து மேற்கோள்காட்டி விமல் குழந்தைவே லின் நாட்டுக்கான பொறுப்பை சுட்டிக் காட்டினார்.
கருத்துரை கூறவந்த திரு. சிவலிங்கம், இக் கூட் டம் ஒரு விவாத மேடையாக அமையவேண்டும் எனும் நோக்கில் கூட்டத்தைத் திட்டமிட்ட முறை குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். விமர்சனங் களை ஆக்கபூர்வமாக எதிர்கொண்ட விமல் குழந் தைவேல் தனது சிறை அனுபவங்கள் தனது எழுத் துக்கு அடிப்படையானதைக் குறிப்பிட்டார். அதே போன்று சிறை இலக்கியம் இன்று சர்வதேசிய இலக் கியவகையினமாகி வருவதை திரு.மு.நித்தியானந் தன் குறிப்பிட்டார்.கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருமே முற்றிலும் ஈழத்து இலக்கியம் குறித்த அக்கறையற்ற, சமகால கலைஇலக்கியப் பிரக்ஞை கொள்ளாத மணிமேகலைப் பிரசுரம் இப்புத்தகத் தைச் செம்மையாக வெளியிடாதது குறித்து தமது விமர்சனங்களை முன் வைத்தார்கள்.
இலக்கியக்கூட்டங்களுக்கு வழக்கமாக வருகிற வர்கள் காணாமல் போயிருந்ததும், புதியவர்கள் இலக்கிய அக்கறையுடன் கலந்துகொண்டதும் இக் கூட்டத்தின் முக்கிய அம்சமாயிருந்தது. O

Page 16
லங்கையின் இனம், மொழி பண்பாட்டின் ரிஷி
முலத்தைக் காண விழைபவர் இந்தியாவை
யும் உள்ளடக்குவது தவிர்க்க இயலாதது. இந்தியாவின் மனித சமூக வளர்ச்சி பற்றிய காய்த் தல் உவத்தலற்ற பார்வை இலங்கையின் வரலாற் றைத் தெளிவுற வைக்கும். எங்கள் முன் வரலாறுகள் என வைக்கப்பட்டிருக்கும் ஆரிய வர்ணாச்சிரம புனைவுகள், சிங்கள பெளத்த புனைவுகள், சைவத் தமிழ் புனைவுகள் என்பன தாண்டி விஞ்ஞானபூர்வ மாக தொல்லியல்,சமூகவியல், உற்பத்தி உறவுகள், கல்வெட்டு ஆதாரங்கள், காசுயியல் என பல்துறை அறிஞர்களின் உதவியினூடே வரலாறுகள் எழுதப் படவேண்டும். இல்லையேல் வரலாற்றுக் கறைக ளைத் திரும்பவும் திரும்பவும் இரத்தம் கொண்டே கழுவ மனித குலம் முற்படும்.
இந்தியாவும் இலங்கையும் ஒரே புவியியற் பிர தேசம். கி.மு. 7000 ஆண்டு அளவிலேயே கடல் இரு பிரதேசங்களையும் முற்றாகப் பிரித்தது என்பது புவி யியலாளரின் முடிவு. சுமார் 5 இலட்சம் ஆண்டுகளாக இந்தியாவில் மனிதன் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்துள்ளன. மனித இனத் தொட்டி லான ஆபிரிக்காக் கண்டத்திலிருந்து (நீக்ரோ மனி தன்) பழங்கற்காலத்திலேயே மனிதன் இந்தியாவை வந்தடைந்தான்.
நவீன மனிதன் (ஹோமாசப்பியன்) உலகில்
தோன்றி கி.மு. 40000 ஆண்டுகள். (நவீனமனிதனின் ஆரம்பக்கூறுகள் கி.மு. 80000 ஆண்டுகளிலேயே தோன்றத் தொடங்கிவிட்டது). மொழிகளின் தோற் றப்பாடு, திட்டமிடப்பட்ட வேட்டையாடல், சடங்கு கள், குலக்குறிதோற்றப்பாடு ஆகியன இக்கால மனி தனின் முக்கியமான வெளிப்பாடுகள். இக்காலத் திலே இந்தியாவில் வாழ்ந்த மனிதனை ஒஸ்ரலோ யிட்டுக்கள் அல்லது வேடோயிட்டுக்கள் என இனவி யலாளர்கள் அழைப்பார்கள். இவர்கள் பேசிய மொழி ஒஸ்றிக் மொழி.
 

adega. Désa
ாழியும் பண்பாடும் stopů unes
தில்லைநடேசன்
இவ் ஆதி ஒஸ்ரலோயிட் மக்கள் கூட்டம் கி.மு. 50000 அளவில் (பின் பழங்கற்காலம்) இந்தியாவுக் குள் நுழைந்ததாகவும் இவர்களில் ஒரு பகுதியினர் இந்தியாவிற்குள் நுழைய இன்னொரு பகுதியினர் தென்கிழக்காசியா நாடுகளெங்கும் பரவி அவுஸ்தி ரேலியாவை அடைந்தனர் என ஆய்வாளர்கள் கருது கின்றனர்.
இவ் ஆதி ஒஸ்ரலோயிட் மக்களுக்கு முன்பு இந் தியாவில் இருந்த மக்கள் நீக்கிரோ மக்கள் எனவும் இவர்கள் பின் வந்த ஒஸ்றிக் மக்களால் ஒரு பகு தியினர் அழிக்கப்பட மற்றொரு பகுதியினர் ஒஸ்றிக் மக்களுட்ன் கலந்துவிட்டதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
ளின் மொழி, பண்பாட்டு அடித்தளத்தை படைத்த வர்கள் இவ் ஒஸ்றிக் மக்களே. இவ் ஒஸ்றிக் மக்கள் இந்தியா எங்கும் பரவினர். அப்போது இந்தியாவுடன் இணைந்திருந்த இலங்கைக்குள்ளும் நுழைந்தனர். இலங்கையின் ஆதிமனிதனும் நீக்கிரோ மனி தனே. இவர்கள் கி.மு. 1 இலட்சத்து 25ஆயிரம் ஆண் டுகளுக்கு முன்பு வாழ்ந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவர்களை அடுத்து கி.மு. 28000 ஆண்டளவில் ஒஸ்றிக் மனிதன் இலங் கைக்குள் நுழைந்தான்.
இவ் ஒஸ்றிக் இன மக்களே இந்தியா, இலங்கை யில் இடைக்கற்கால நாகரிகத்தை ஏற்படுத்திய வர்கள். இந் நாகரிகத்தின் சிறப்பம்சமான வீட்டுப்பி ராணி வளர்ப்பு, ஆரம்பகால கட்டுமரம் கொண்டுமீன் பிடித்தல், ஆரம்பகால விவசாயக் கூறுகள் என்பன. இவர்களுக்கு அடுத்து இந்தியாவுக்குள் புதிய
வாளர்கள் மத்தியதரைக் கடலினம் எனக் குறிப்பி டுகின்றனர். இவர்கள் பேசியமொழி திராவிடமொழி. கிழக்கு மத்தியதரைப்பகுதியில் இருந்து (இன்றைய ஈராக், ஈரான், காக்கேசியா, துருக்கிமேனியா,
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 15

Page 17
ஆப்கானிஸ்தான்) திராவிடர்கள் இந்தியாவிற்குள் நுழைந்தனர். வடமேற்கு இந்தியாவில் கி.மு.7000 ஆண்டளவில் புதிய கற்கால ஆதாரங்கள் கிடைத் துள்ளதால் கிட்டத்தட்ட இக்காலகட்டத்திலேயே திராவிடர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருக்க வேண்டுமென பெரும்பாலான ஆய்வாளர்கள் கருது கின்றனர். (சில ஆய்வாளர்கள் கி.மு. 5000-4000 ஆண்டளவில் நுழைந்திருக்க வேண்டுமெனக் கருது கின்றனர்).
இத் திராவிட மக்களின் ஆரம்பப் பொருளாதாரம் மந்தை வளர்ப்பிலேயே தங்கியிருந்தது. கி.மு. 4000 ஆண்டளவில் நிரந்தரமாக இருந்து விவசாயத்தை ஆரம்பித்துவிட்டனர். இதற்கான ஆதாரங்கள் பாலுஸ்தான பகுதியில் கிடைத்துள்ளன. புகழ் பெற்ற சிந்துவெளிப்பள்ளத்தாக்கில் இதே காலத்தில் திரா விடர்களின் நிரந்தரக் குடியிருப்புக்கள் தோன்றி விட்டன.
இந்தியாவிற்குள் நுழைந்த திராவிடர்களின் ஒரு பகுதியினர் வடமேற்கு இந்தியா, சிந்துவெளிப் பள் ளத்தாக்குகளில் தங்கிவிட மற்றைய பகுதியினர் கிழக்கு இந்தியா நோக்கியும், தெற்கு இந்தியா நோக்கியும் பரவினர். கி.மு.3500 ஆண்டுகளில் கிழ க்கு இந்தியாவையும் கி.மு. 3000-2500 ஆண்டளவில் தெற்கு இந்தியாவையும் திராவிடர்கள் அடைந்த னர். ஆக திராவிட மக்கள் தமிழகத்தை அடைந்த காலம் கி.மு.3000-2500 என்று கொள்ளலாம். இக்காலகட்டத்தில் கடல் இலங்கைை யயும் இந்தியாவையும் பிரித்துவிட்டது. இத னால் திராவிடர்களால் உடனடியாக இலங் கையை அடைய முடியவில்லை. அதற்கான தோணி, துடுப்பு கருவிகளை ஆக்கும் திறன் அப்போது தமிழகக் கரைகளில் இல்லை.
கி.மு.7000 அளவில் இந்தியாவிற்குள் நுழைந்த திராவிடர் மெல்ல இந்தியா முழுவ தும் பரவி முன்பிருந்த ஒஸ்றிக் மக்களை புதி யகற்கால நாகரிகமயமாக்கினார்கள். எதிர்த்தவர்களை வழமைபோல் அழித்தார் கள். இது மிக நீண்டகாலத் தொடர்ச்சியான செயற்பாட்டின்மூலம் நடந்தது. ஒஸ்றிக் மக் களில் ஒதுங்கிக்கொண்டவர்கள் போக மற் றையோர் திராவிடர்களுடன் கலந்துவிட்ட னர். இந்தியாவில் ஆய்வுசெய்த ஆய்வாளர் கள் ஒஸ்றிக் மக்கள் அழிக்கப்பட்டதற்கு கிடைத்த சான்றுகளைவிட புதிய கற்கால SS
초조
நாகரிகத்தை ஏற்றுக்கொண்டு அருகருகாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கூடுதலாக தென்படுவதாகக் கூறியுள்ளனர்.
புதிய கற்கால சிறப்பம்சமான ஆரம்ப விவசாயம், மந்தைவளர்ப்பு, மட்பாண்டங்கள், நிரந்தர குடியிருப் புகள் போன்ற வாழ்வியல் அம்சங்கள் வளர்ச்சிய டைந்தன. புகழ்பெற்ற சிந்துவெளி நாகரிகம் புதிய கற்காலத்தில் செம்பு உலோகத்தின் அறிமுகத்து டன் ஆரம்பமாகின்றது. இந் நாகரிகம் கி.மு. 27501500வரை நிலவியதாக கணிக்கப்படுகிறது. (ஆழ மான தொல்லியல் ஆய்வுகளை நிலத்தடிநீர் தடுப்ப
16 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 

தாகவும் அதனையும் மீறி ஆய்வு தொடர்ந்தால் காலத்தின் தொன்மை மேலும் சிறிது அதிகரிக் கலாம் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்)
சிந்துவெளிநாகரிகத்து தொல்லியல் ஆய்வுகளி லும் ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆய்வுகளிலும் கிடைத்த எலும்புக்கூடுகளை ஆய்வுசெய்த ஆய்வா ளர்கள் இவை இரு இன மக்களின் எலும்புக்கூடுகள் எனவும்
1. மத்தியதரைக் கடலினம் (திராவிடர்) 2. ஒஸ்ரலோயிட்டுகள் (ஒஸ்றிக்) என இரு இனங்கள் வாழ்ந்துள்ளன எனக் குறிப் பிட்டுள்ளனர். இவர்கள் இணைந்ததற்கான அடையா ளமான எலும்புக்கூடுகளும் கிடைத்துள்ளன. இது இந்தியாவில் மாத்திரமல்ல இலங்கையிலும் கிடைத் துள்ளது. இலங்கையில் பொம்பரிப்பு பிரதேசத்தில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
திராவிடர்கள் இந்தியாவுக்குள் நுழைய முதலே தமக்கான பல அடையாளங்களை உருவாக்கிக் கொண்டுவிட்டனர். அதற்கான தொல்லியல் மொழி யியல் தடயங்கள் அவர்கள் பூர்வீக பிரதேசத்தில் இன்னும் அகப்பட்டு வருகின்றது.
திராவிடர்கள் தாய் வழிபாடு, திரிசூலத்தை ஏந் திய எருமைமாட்டின்மேல் உள்ள இன்று சிவனாக அடையாளம் காணும் மலைத்தெய்வம் ஒன்றையும் நீர்த்தெய்வம் ஒன்றையும் (இத் தெய்வத்தை நாரா
யணனாக அடையாளம் காண்கின்றனர்) கொண்டு இருந்தனர். மர வழிபாடு, விலங்கு வழிபாடு, இயற்கை வழிபாடு, நாக வழிபாடும் திராவிடர்களிடமும் இருந் 9ögöl.
இந்தியாவில் இருந்த ஒஸ்றிக் மக்களிடமும் மர வழிபாடு, விலங்கு வழிபாடு, நாக வழிபாடு, லிங்க வழிபாடு, தாய் வழிபாட்டுக்கூறுகள் ஆகியனவும் இருந்தன. திராவிட, ஒஸ்றிக் மக்களின் கலப்பின் போது இவைகளும் ஒன்றிணைந்தன. இன்றைய

Page 18
இந்து மதத்தின் கூறான லிங்க வழிபாடு, விநாயகர் வழிபாடு, நாகதேவன் வழிபாடுகளை இந்தியா இலங் கையில் தோற்றுவித்தவர்கள் ஒஸ்றிக் மக்களேயா கும். இயக்கர், நாகர் எனப்படுவோர் ஒஸ்றிக் மக் களே.
திராவிட மொழிகளில் ஒஸ்றிக் மொழிகளின் தாக்கம் இன்னும் தெளிவுற ஆய்வு செய்யப்பட வில்லை. கி.மு. 1500க்கு முன்பு இந்தியாவில் பேசப் பட்டது திராவிட மொழியும் ஒஸ்றிக் மொழியும்தான். திராவிட மொழியிலிருந்துதான் கி.மு.1500 அள வில் பிரதேச வேறுபாடுகளுடன்
1. வட திராவிடம் 2. மத்திய திராவிடம் 3. தென் திராவிட மொழிகள் தோற்றம் பெற்றன. சிந்துவெளி நாகரிக திராவிட மொழி தன் நாகரிக வளர்ச்சியினூடு எழுத்து வடிவத்தையும் தோற்றுவித் தது. சிந்துவெளி நாகரிக கட்டத்தில் சக்கரம், கல ப்பை, தோணி, துடுப்பு போன்றவை இந்தியாவில் அறிமுகமாகியது. இது மெல்ல மெல்ல இந்தியா எங் கும் பரவியது. (திராவிடர்கள் முதன்முதல் ஆழ்கட லில் கலம் செலுத்தியவர்கள் என்று இன்று ஆய்வா ளர்கள் கருதுகின்றார்கள்)
கி.மு. 1500 அளவில் ஆரியர்கள் இந்தியாவுக் குள் நுழைந்தனர். பிரதான தொழில் மந்தை வளர் ய்பு. ஆரியர்கள் நுழைவதற்கு முன்பே சிந்துவெளி நாகரிகம் அழிவதற்கான சூழல் தோன்றிவிட்டது என்றும் ஆரியர்கள்தான் சிந்துவெளிநாகரிகத்தை அழித்தனர்.என்றும் ஆய்வாளர்கள் அபிப்பிராய பேத ங்கள் கொண்டுள்ளனர். ஆனால் வரலாற்றுச் சக்க ரத்தை யாரும் திருப்பமுடியாது. ஆரியர்களும் இந்தி யமயமானார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
நீக்கிரோ மக்களை வென்று தம் வயப்படுத்திய ஒஸ்றிக் மக்கள் அவர்களைவிட நாகரிகத்தால் முன்னேறியிருந்தனர். ஒஸ்றிக் மக்களை வென்று தம்வயப்படுத்திய திராவிட மக்கள் இவர்களைவிட நாகரிகத்தால் முன்னேறி இருந்தனர். ஆனால் பின்பு வந்த ஆரியர்கள் திராவிட மக்களைவிட நாகரிகத் தால் பின்தங்கி இருந்தனர். இது ஆய்வாளர்கள் நிறு விய உண்மை. எனவே ஆரியர்கள் கட்டிடக்கலை, எழுத்துக்கலை, கப்பல் கட்டும் கலை, ஓவியக் கலை, சிற்பக்கலை எனப் பல வகை நாகரிக சின்
*సానో
னங்களை திராவிடரிடமிருந்தே பெற்றனர் அல்லது 'திராவிட நாகரிக மயமானார்கள்' என்று கூறலாம்.
ஆரியர்களிடம் பல இனக்குழுக்கள் இருந்தன. ஒவ்வொரு இனக்குழுவுக்கும் ஒவ்வொரு கடவுள்கள் இருந்தன. ரிக்வேதப் பாடல்கள் எல்லாம் தங்கள் தங் கள் தெய்வங்களைத் துதிக்கும் தோத்திரப் பாடல்
 

களே. மற்ற மூன்று வேதங்களும் சடங்கு முறைகள் தான். அவை அந்தக்கால ஆரிய மக்களின் வாழ் வைச் சொல்கின்றது. கி.மு. 9ம் நூற்றாண்டில் வேதப் பாடல்கள் தொகுக்கப்பட்டு ஒரு கடவுள் கொள்கை கொண்டு வரப்படுகிறது. அவர்களின் தலைமைத் தெய்வம் இந்திரன். இக்காலப் பகுதியிலே ஆரியர் களின் ஜனசமூக ஆட்சிமுறை அழிந்து அரசர்களின் தோற்ற காலமுமாகும். இதே காலத்தில்தான் இரும் பின் பயன்பாடு கொண்ட பெருங்கற்காலம் தோற்றம் கொள்கின்றது. அடிப்படையில் உற்பத்திக்கருவிக ளின் மாற்றத்தினூடே இம்மாற்றங்கள் ஏற்பட்டன என் பதை துல்லியமாக வரையறுக்கலாம். வர்ணாச்சிர தர்மமுறையும் இக்காலத்தில்தான் எழத்தொடங்கி Lig.
பெருங்கற்காலப் பண்பாடு கி.மு.1000 அளவில் இந்தியாவில் அறிமுகமாகியது. இந்தப் பண்பாட்டை கொண்ட மக்கள் யாரும் இந்தியாவுக்குள் நுழைய வில்லை. இன்னொரு மனிதக்குழு நுழைந்துதான் புதிய பண்பாடு வரவேண்டும் என்ற நிலை அப்போது இல்லை. கப்பல் வாணிப தொடர்புகள் கி.மு. 2000 முன்பாகவே சிந்துவெளி மக்களால் தொடங்கப் பட்டுவிட்டது. பெருங்கற்காலப்பண்பாடு பண்பாட்டுப் பரிமாற்றத்தினூடாக இந்தியாவை வந்தடைந்தது. வட இந்தியாவுக்கு தரை வழியாகவும் தென் இந்தி யாவுக்கு கடல்வழியாகவும் இக்கலாச்சாரம் வந்தது. தென்னகத்தின் குறிப்பாக தமிழகத்தின் நாகரி கப் பாய்ச்சலில் இது குறிப்பான காலகட்டம் ஆகும். பழம் தமிழகத்தில் கி.மு. 3000-2500 ஆண்டுகளில் நுழைந்த திராவிடர்கள் பெருமளவு மந்தை வளர்ப்பு, வேட்டையாடல், மீன்பிடித்தல், உணவு சேகரித்தல், ஆரம்ப விவசாயம் போன்றவையே பிரதான தொழில் களாக இருந்தவை. கி.மு. 12ம் நூற்றாண்டிலேயே பெருமளவுநிலைத்த இடத்திலிருந்து விவசாயத்தில் ஈடுபட்டனர். கலப்பை, சக்கரம், தோணி, துடுப்பு போன்றவையும் இவர்களுக்கு இக்காலத்திலேயே பரவலாக அறிமுகமானது. இக்காலத்தின்நினைவுச் சுவடுதான் ஆதிச்சநல்லூர்.
இக்காலத்தில்தான் தோணியின் உதவியுடன் பாக்குநீரிணையை தாண்டி திராவிடர்கள் இலங்கை யில் காலடி எடுத்து வைத்தனர். தொல்லியல் ஆதா ரங்களும் இதனையே உண்மை என நிரூபிக்கின்றது. இலங்கையில் இதுவரை புதிய கற்கால மக் கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இடைக்கற்கால தொல்லி யல் சின்னங்களுக்குப் பின்பு பெருங்கற்கால சின்னங்களே கிடைத்துள்ளது. எனவே கி.மு. 12ம்-10ம் நூற்றாண்டளவில்தான் திராவிட மக்கள் இலங்கைக்குள் நுழைந்தனர். இவர் கள் பேசிய மொழி, தென் திராவிட மொழி. பெருங்கற்கால நாகரிக வளர்ச்சியினூடு தென் இந்தியாவில் தென் திராவிட மொழியிலிருந்து தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் தோன்றத் தொடங்கின. கி.மு. 9ம் நூற்றாண்டளவில் தமிழ் தனி மொழியாகப் பிரியத் தொடங்கியது.
தமிழகத்தில் கி.மு. 9ம்-7ம் நூற்றாண்டளவில்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 17

Page 19
இரும்பு அறிமுகமாகின்றது. இதே காலப்பகுதியில் தமிழக நாகரிக பாய்ச்சல் தொடங்கியது. கி.மு. 12ம் நூற்றாண்டளவிலேயே தமிழகத்தில் பல இனக்கு ழுக்கள் இருந்தன. இக்குழுக்கள் நிரந்தரமாகத் தங்கி நாடுகளை உருவாக்கிக்கொள்ளத் தொடங் கிவிட்டது.
தமிழகத்து இனக்குழுமங்கள்: ஆயர், பரத X வர், கோசர், குறும்பர், பாண்டியர், உதியர் : (சேரர்), செம்பியர் (சோழர்), நாகர், மழவர், திரையர், ஆவியர், வேளிர்.
இக்குழுமங்களிலே பாண்டிய குலம் முதன் மைக் குலமாக வளர்ச்சியடைய தாமிரபரணி, ? வைகை ஆற்றுப்படுகை விவசாயமும் மேற் ே குத் தொடர்ச்சி மலை விளைபொருளும், $3; கொற்கை கடல் முத்தும் பாண்டி நாட்டை * தமிழகத்தின் மற்றப் பகுதிகளைவிட முன்னேற வைத்தது. இங்கே தமிழர்களின் முதல் நிலையான அரசு தோற்றம் பெற்றது. கி.மு. 9ம் நூற்றாண்டிலேயே கொற்கை துறைமுகத்தில் கடலோடுதல் தொடங் கிவிட்டது. கிமு. 7ம் நூற்றாண்டில் பாண்டிநாடுபற்றி மத்தியப்பிரதேச நாடுகள் அறிந்திருந்தன. பாண்டி நாட்டை அடுத்து சேர, சோழநாடுகளும் வளர்ச்சிய டைந்தன. இம்மூன்று அரசுகளும் மெல்ல மெல்ல மற்றைய அரசுகளை வென்று தமிழகத்தை ஆளத் தொடங்கின.
இலங்கையில் கி.மு.12ம்-10ம் நூற்றாண்டுக்கு இடையில் குடியேறிய இனக்குழுக்கள் நான்கு ஆய் வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
1. பரதவர் (மீன்பிடித்தல், முத்துக்குளித்தல், கட லோடுதல்) 2. ஆயர் (மந்தைவளர்ப்பு) 3. வேளிர் (விவசாயம்) 4. உதியர் (மலை விளைபொருட்கள் சேகரிப்ப வர்?) இவர்களுக்கு முன்பிருந்த ஒஸ்றிக் மக்களே இயக்கரும் நாகர்களும். இவர்கள் பெருங்கற்கால பண்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர். இவர்களில் ஒரு பகுதி மக்கள் காடுகளில் ஒதுங்க மற்றவர்கள் திராவிடருடன் கலந்தனர். இவ்வேளையில் பேசப் பட்ட மொழியே 'எலுவாகும். இதுவே இன்றைய சிங் கள மொழியின் மூலமொழியாகும். (ஈழத்தில் பேசப் பட்ட தென்திராவிட மொழி'எலுவாகும். இதில் ஒஸ் றிக் மொழியின் தாக்கமும் பெருமளவில் இருந்திருக் கவேண்டும்) பெருங்கற்கால பண்பாட்டுக்குள் வராது ஒதுங்கிய இயக்கரே இன்றைய இலங்கை வேடர் மக்களாகும். இவர்கள் இன்னும் ஒஸ்றிக் மொழியே பேசுகின்றனர்.
கி.மு. 9ம் நூற்றாண்டளவில் தமிழ் தனக்கென வளர்ச்சிப் பாதையில் வளர்ந்து கி.மு. 6ம் நூற்றாண் டில் தனித்துவமான பண்பைப் பெற்றது. பாண்டிநாட் டிலேயே முதன்முதல் தமிழ் எழுத்துவடிவம் பெறத் தொடங்கியது. பாண்டியர்கள் வெளி உலகோடுகட லோடு கொண்ட தொடர்பினால் பீனிசியர்களிடமி ருந்து கி.மு. 7ம் நூற்றாண்டளவில் தமிழுக்கு எழுத்து வடிவத்தைப் பெற்றுக்கொண்டனர். இவ்வெழுத்து
18 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 

வடிவமே தென்பிராமி என்று சொல்லப்படும் 'தமிழி வடிவமாகும். இதே காலப்பகுதியில்தான் வட இந்திய மொழிகளும் பீனிசியரிடமிருந்து எழுத்து வடிவத் தைப் பெற்றன. ஆனால் தமிழ் சில தன்மொழிக்கான சில தனித்துவமான எழுத்து வடிவத்தைத் தோற்று
வித்தது.
கி.மு. 8ம் நூற்றாண்டளவிலேயே வணிகமையம் ஆகிவிட்ட பாண்டிநாட்டின் விளைபொருட்கள் எவை யும் விளைவிக்கப்பட்டவை அல்ல என்பதை இங்கு நாங்கள் கவனத்திற்கு எடுக்கவேண்டும். அனைத் தும் சேகரிக்கப்பட்டவையே. (முத்து, வாசனைத்திர வியம், இரத்தினக்கற்கள்). இவைகளின் தேவைகள் கூடியபோது பாண்டிய வணிகர்கள் ஈழத்தை நோக்கி நகர்ந்தனர். ஈழத்தில் இவைகளைச் சேகரித்தனர். ஈழத்து குறுநில தலைவர்களிடம் தொடர்புகொண்டு இவைகளைப் பெற்றனர். ஆக ஈழமும் வணிகமை யத்திற்குள் வந்தது. அதேவேளை பெருங்கற்கால விவசாயம், நீர்ப்பாசனம் ஆகியனவும் சேர ஈழத்தி லும் நாடுகள் தோன்றத்தொடங்கின. இதன் தர்க்க ரீதயான வளர்ச்சியாக 'அரசமைப்பு தோன்றியது. இக்காலகட்டத்தை கி.மு. 5ம் நூற்றாண்டு என எண் ணலாம். ஆனாலும் கி.பி. 4ம் நூற்றாண்டுவரை இல ங்கை வாணிபம் இந்திய வணிகர்கள் கையிலேயே இருந்தது இதனால்தான். வியாபாரம் செய்ய வந்த குதிரை வணிகர்கள் சேனன், குத்திகன் பின்பு எல் லாளன் என்று இலங்கையை பிடித்து ஆளமுடிந்தது. கி.மு. 5ம் நூற்றாண்டிலேயே தமிழின் செல்வாக்கு அனுராதபுர அரசிலே செல்வாக்கு செலுத்திற்று. இலங்கையின் பழைய கல்வெட்டுக்கள் 'தமிழி எழு த்து வடிவில்தான் கிடைத்துள்ளது. அப்போது இலங் கையில் இருந்த மொழி மூன்று.
1. பெரிதும் வளர்ச்சியடையாத 'எலு
2. தமிழ்
3. ஒஸ்றிக் மொழி
ஒன்றை வரலாற்றாசிரியர் கவனிக்கத் தவறு கின்றனர். மொழிவழியான அடையாளம் ஆரம்பத் தில் இலங்கையில் இருந்ததில்லை. அது பின்புதான் தோன்றுகின்றது. கி.மு. 3ம் நூற்றாண்டளவில்தான் தமிழகத்திலேயே தமிழ் என்ற அடையாளம் மேல் எழுகின்றது. இதற்கான அரசியற் சமுகத்தளம் இந்தியாவில் அன்று நிலவியது.
கி.மு.6ம் நூற்றாண்டைத் தொடர்ந்து சேர, சோழ, பாண்டியர் தம் முதன்மைக்கு ஓயாத போட்டியி லீடுபட்டனர். மற்றைய இனக்குழுமங்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க போர்களில் ஈடுபட்டனர்.

Page 20
(இந்தச் சூழலில் கிமு. 5ம் நூற்றாண்டு-கி.பி.250வரை யான காலமே சங்ககாலம் ஆகும்)
உண்மையில் கி.மு.3ம் நூற்றாண்டுவரை சேரர், சோழர், பாண்டியர், சத்தியபுத்திரன் என இனக்குழு மங்களின் பெயரின் அடிப்படையிலேயே தமிழகம் அறியப்பட்டது. தமிழ் என்ற கருத்தியல் முன்வைக் கப்பட்டதனை விளங்கிக்கொள்ளவேண்டுமாயின் கி.மு. 3ம் நூற்றாண்டு இந்தியாவைப் பார்க்க வேண் (Bb.
கி.மு. 9ம் நூற்றாண்டில் ஆரிய வர்க்கத்தில் அர சுகளைத் தோற்றுவித்த ஆரியகுலக்குழுக்கள் இரும்பின் உதவியோடு கிழக்கிந்தியா (கங்கை சம வெளி), தென்னிந்தியா (விந்தியமலைத்தொடர்) வரைநகரத் தொடங்கியது. ஆனால் கிழக்கிந்தியா வையோ தென்னிந்தியாவையோ முழுதாக வென்றெ டுக்கமுடியவில்லை.
கி.மு. 5ம் நூற்றாண்டில் வைதீக மதத்திற்கு எதி ராக புத்த சமண மதங்கள் கிழக்கிந்தியாவில் வெடி த்தன. அதேபோல் ஆரிய வர்க்கத்துக்கு எதிராக மகதப் பேரரசு வெளிக்கிளம்பியது. மகதப் பேரரசின் மன்னர் வம்சங்களான சிசுநாக வம்சமோ,நவநந்தர் களோ, மெளரியர்களோ பூர்வீக குடியினர்தான்.
னர் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்)
வைதீக மதம் தன்னைத் தப்ப வைக்க வழிதேடி யது. பூர்வீக வழிபாடுகளைக் கைக்கொண்டது. ஆரி யக்கடவுளர்கள் திராவிடக் கடவுளர்களில் ஐக்கிய மாயினர். ஆனால் வழிபாட்டு, மதகுரு உரிமைகளை தம் வசம் வைத்திருந்தனர் ஆரியர்.
இதேவேளையில் புத்த, சமண மதங்களும்பூர்வீக வழிபாடுகளை தம்வசப்படுத்தின. விகாரைகளிலும் பள்ளிகளிலும் தெய்வ விக்கிரகங்கள் வைக்கப் பட்டன. புத்தர் சிறு தெய்வ, பிரதேச தெய்வ வழிபா டுகளை ஏற்றுக்கொண்டார். புத்தமதமும் ஏற்றுக் கொண்டது. இவைகளை நடைமுறைப்படுத்திய வர்கள் மெளரிய மன்னர்களே, குறிப்பாக அசோகன். மகதப் பேரரசு கி.மு. 4ம் நூற்றாண்டளவில் உரு வாகிவிட்டது. அசோகனின் பேரனான சந்திரகுப்த மெளரியன் கி.மு. 300 அளவில் தமிழகம்வரை படை எடுத்து வந்ததாக வரலாற்றுத் தகவல் உண்டு. இந் தக் காலகட்டத்தில்தான் தமிழகம் விழித்துக்
 

கொண்டது. சேர, சோழ,பாண்டிய அரசுகள் தனித்து மகதப் பேரரசை எதிர்க்க முடியாது. ஒரு பேரரசு தேவை இல்லையேல் கூட்டணியாவது தேவை. இத னைச் சேர, சோழ, பாண்டியர் உணர்ந்தனர். இவர்க ளைத் தமிழ் இணைத்தது. ஆகவே தமிழைத் தூக் கிப் பிடித்தனர். இவர்களை அண்டி வாழ்ந்த புலவர் களும் ஒற்றுமை வேண்டினர். சங்க இலக்கியத்தில் இதற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம்கூட இக்காலத்தில்தான் எழுதத் தொடங்கப்பட்டிருக்கவேண்டும். இதற்கான கல்வெட்டாதாரங்கள் உண்டா என்றால் உண்டு. கலிங்கமன்னன் காரவேலனின் கத்தும்பா கல்வெட்டு இதனை அறிவிக்கின்றது. இம் மன்னன் (கி.மு. 176. 163) தனக்கு முன்பிருந்து 113 ஆண்டுகளாக'தரமின தேச சங்காத (தமிழர் கூட்டணி) ஒன்று இருந்ததா கவும் அது நிலைத்தால் தனது தேசத்துக்கு ஆப த்து வருமென நினைத்து அதனை அழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளான். இவன் பாண்டிநாடுவரை படை எடுத்து வந்ததாக ஒரு வரலாற்றுத் தகவலும் உண்டு.
அசோகப் பேரரசன் காலத்தில் (கி.மு.273-232) முழு இந்தியாவிலும் அவன் ஆட்சிக்குட்படாதது தமி ழகம் மட்டும்தான். அசோகன் பெளத்த மதத்தை ஆதரித்தவன். அதனைப் பல்வேறு நாடுக ளுக்கும் பரப்ப வழிவகை செய்தவன். இலங் கைக்கு பெளத்த மதம் அசோகன் காலத் திலேயே வந்தது. தமிழகத்திற்கு பெளத்தம் அசோகன் காலத்திற்கு முன்பே வந்துவிட் டது. சமணமும் அவ்வாறே. மெளரியப் பேரர சிலிருந்து தப்ப ஆரிய வர்க்கத்தை சேர்ந்த (வடமேற்கு இந்தியா) பிராமணர்கள் தமிழ கத்துக்குள் நுழைந்தனர். தமிழகத்துபூர்வீக வழிபாடுகளை ஆரியமயமாக்கினர். இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். பிராமணர் கொண்டு வந்த வைதீக இந்துமதம் தமிழகம யமாக்கப்பட உதவியது. திராவிட வழிபாட்டு முறைகள் ஒரே வேரில் இருந்து முளைத்த வழிபாட்டு முறைகள் என்பதனால்தான் இணைப்பு துரிதமாக நடந்தது.
இலங்கைக்கு புத்தமதம் வரும்போது, பல சிற் றரசுகள் இலங்கையில் இருந்தன. அனுராதபுர அரசு ஒரளவுபலமான அரசாக இருந்தது. புத்தமதம் இலங் கையில் இருந்த பூர்வீக வழிபாடுகளை அங்கீகரித்து தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டது. பெளத்தமதத் துடன் பாளிமொழி வந்தது. சமஸ்கிருதம் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தது. தமிழ்மொழி வளர்ச்சியான வடிவத்தில் இருந்ததால் தன்னை காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. 'எலுமொழி வளர்ச்சியடைந்த மொழிகளான தமிழ்,பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளின் கூறுகளை உள்வாங்கி சிங்கள மொழி யாக பரிணாமம் அடைந்தது. சிங்கள மொழி தன் செம்மை வடிவத்தை கி.பி. 5ம் நூற்றாண்டிலேயே பெற்றது.
கி.பி. 4ம் நூற்றாண்டுக்கு முன்பு இலங்கைத் துறைமுகத்துக்கு வெளிநாட்டுக் கப்பல்கள் அதிகம்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 19

Page 21
வருவதில்லை. இலங்கை வாணிபப் பொருட்கள் இந் தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்தே பல்வேறு நாடுகளுக்கு ஏற் றுமதியானது. ஆனால் பின்பு இலங்கைத் துறைமுக த்துக்கு நேராகவே அதிகளவு கப்பல்கள் வரத் தொடங்கியது. அத்துடன் நிலமானிய சமூக அமைப் புக்கான பெருமளவு விவசாயமும் கி.பி. 6ம் நூற்றாண் டளவில் தொடங்கியது. இக்கால கட்டத்தில் உறுதி யான அரசமைப்பு தோற்றம் பெற்றது. இக்காலத்தி லேயே சிங்கள பெளத்த கருத்தியல் உருவாக்கப்ப ட்டது. மகாவம்சம் எழுதப்பட்டது. விஜயனின் வருகை கதை உருவாக்கப்பட்டது. புத்தரின் பரிநிர் வாண வேளையில் விஜயன் இலங்கையில் காலடி எடு த்து வைத்ததாக காதில் பூச்சுற்றப்பட்டது. இதற்கு ஆதாரமாக எந்த தொல்லியல் ஆதாரமும் இல்லை. ஒவ்வொரு நிலையான அரசுகளும் தோன்றும் போது தனக்கான புராணக்கதைகளை உருவாக் கிக்கொள்வது வழக்கம். கி.பி. 6-7ம் நூற்றாண்ட ளவில் இந்தியா வந்த சீன யாத்திரீகரான யுவான் சுவாங் என்பவர் இலங்கைபற்றிய கதை ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்தக் கதை பின்வருமாறு:
இலங்கைக்கு தென்னிந்தியாவிலிருந்து இளவ ரசி ஒருத்தி வந்ததாகவும் அவளைக் கண்ட சிங்கம் ஒன்று அவளை தூக்கிச் சென்றதாகவும் காட்டுக் குள் சிங்கத்துக்கும் இளவரசிக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்ததாகவும் மகன் தந்தையான சிங்கத் தைக் கொன்றுவிட்டு தன் தாயையும் தங்கையையும் நாட்டுக்கு அழைத்து வந்ததாகவும் அங்கு ஒரு வணிக மகளைக் கண்டு அவன் மணம் செய்து முதல் அரசை உருவாக்கியதாகவும் - இந்தக் கதையை இலங்கையைச் சேர்ந்த பெளத்த பிக்குகள் தன் னிடம் சொன்னதாகவும் பதிவு செய்துள்ளார்.
இக்கதை மகாவம்சத்தில் உள்ள கதையுடன் ஒத்துப்போனாலும் பல இடங்களில் மாறுபடுகின்றது. இது இருவேறுபட்ட மக்களின் கலப்பை சொல்கின் றது. இதில் ஆரியர்கள் என்று எங்கும் குறிப்பிடப்பட வில்லை. அந்தப் புனைவு பின்புதான் உருவானது.
சிங்கள பெளத்த புனைவுகள் ஏன் உருவாகின. இதனை உருவாக்கியவர்களின் தேவை என்ன?இத ற்கான விடையை கி.பி. 6ம்-7ம் நூற்றாண்டு தமிழகம் சொல்லும். சமண பெளத்த மதங்களின் செல்வாக்கு வீழ்த்தப்பட்டு சைவ வைணவம் அரசோச்சமுற்பட்ட காலமது. வணிக வர்த்தகத்தின் ஆளுமை குறைந்து நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் வலுவடையத் தொடங் கிய காலம், அன்றைய தமிழக வணிகர்கள் சமணர்க ளாயிருந்த காலம். தமிழர்களில் பலர் பெளத்தர்களா யிருந்தாலும் ஆதிக்கத்தில் முதன்மை வகித்தது சமணமே.
சமண பெளத்த மத பீடங்கள் சமுக ஆதிக்க மிக் கவையாய்நிலப்பிரபுத்துவம் வளர தடையாய் இருந் தநிலையில் ப்க்தி இயக்கம் தோன்றியது. வன்முறை மூலம் கருத்தியல்ரீதியிலும் சமண பெளத்தம் வீழ்த் தப்பட்டு அல்லது உள்வாங்கப்பட்டு சைவ வைண வம் மேலெழுந்தது. வன்முறைமூலம் சமணப்பள் ளிகள் புத்தவிகாரைகள் உடைக்கப்பட்டன. நிலப்
20 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

பிரபுத்துவம் வளர்ந்து வந்தது. எங்கே அது தன் னைப் பலிகொண்டு விடுமோ என்ற அச்சம் இலங் கைப் பெளத்தர்களை ஆட்டி வைத்தது. தமிழ கத்திலிருந்து பல தமிழ்ப் பெளத்தர்கள் இலங் கைக்கு தப்பி வந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தநிலையில் சிங்கள மொழியும் பெளத்தமதமும் கருத்துரீதியில் இணைக்கப்பட்டது. சிங்கள பெளத் தம் உருவாக்கப்பட்டது. சிங்கள பெளத்த அரசு என் னும் தம்மதீப கோட்பாடு உருவாக்கப்பட்டது. இந்தப் புனைவுகள் புத்தருடன் இணைக்கப்பட்டது.
ஆனால் இது நடைமுறைரீதியில் நடைபெறமுடி யாது என்பதை மிகக் குறுகிய காலத்திலே சமுக வளர்ச்சிநிரூபித்தது. சோழப் பேரரசின் எழுச்சியில் இலங்கையும் சோழர் வசமானது. அதற்கு முன்புகூட அனுராதபுர அரசில் யார் ஆட்சி செலுத்துவது என் பதை பல்லவபாண்டியர்கள்தான் கூடுதலாகத் தீர்மா னித்தார்கள்.
சோழப் பேரரசின் ஆட்சியின்கீழ் மேலும் தமிழ் மக்கள் ஈழத்தில் குடியேறினார்கள். ஆதிக்கமுடைய நிலப்பிரபுக்கள் தங்கள் தங்களுக்கென விவசாய குடியிருப்புகளைத் தோற்றுவித்தனர்.
சோழர்காலத்தில்தான் இலங்கை முழுமையாக நிலமானிய சமூக அமைப்புக்குள் வந்தது. சாதி அமைப்பு இறுக்கமடைந்தது. எனினும் தமிழக, வட இலங்கை நிலமானிய சமூக அமைப்பும் தென்னி லங்கை சிங்கள நிலமானிய அமைப்பும் அடிப்படை யில் சில வித்தியாசங்களைக் கொண்டது. இதனா லேயும் பெளத்தமதத்தின் தாக்கத்தினாலும் சிங்க ளவர் மத்தியில் தீண்டாமை போன்ற கொடூரங்கள் வேரூன்றவில்லை.
கி.பி. 10ம் நூற்றாண்டுக்குப் பின்பு அனுராதபுர தலைநகரை சிதைத்து பொலநறுவையை சோழர் தலைநகராக்கினார்கள். சோழர்கள் இலங்கையை கட்டுக்குள் வைத்திருக்க, தரைப்படையோடு சேர் ந்து கடற்படையை நம்பவேண்டி வந்தது. அதனா லேயே சோழர்கள் கடலிற்கு அண்மித்ததான பொல நறுவையைத் தலைநகராக்கினார்கள். மகாவலிகங் கையின் கிளைநதி ஒன்று பொலநறுவையில் பாய் வது அவர்கள் போக்குவரத்துக்கு இலகுவாக இருந்தது.
கி.பி. 1070ம் ஆண்டு இலங்கையில் இருந்த சோழ ராட்சி அகற்றப்பட்டாலும் அதன் தாக்கம் பின்பும் காணப்பட்டது. கி.பி. 13ம் நூற்றாண்டில் மகானின் படையெடுப்பு பின் தொட்டு வடஇலங்கையில் தனி யான ஆட்சி ஒன்று உருவாக ஏதுவானது.
இந்தியாவில் பல சமயங்கள் தோன்றின. அதே போல் இந்தியாவுக்கு வெளியே தோன்றிய சமயங்க ளும் இந்தியா இலங்கைக்கு வந்தது. கிறிஸ்துவ சமய போதகர்கள் கிறிஸ்துவ சகாப்தத்திலேயே இந்தியாவுக்கு வந்ததாக சொல்லப்பட்டாலும் அது 16ம் நூற்றாண்டளவில்தான் இலங்கை இந்தியாவில் தாக்கம் செலுத்தியது.
அரேபியர்கள் கி.மு. காலத்திலேயே இந்தியா இலங்கையோடு வாணிபம் செய்தவர்கள். எனினும் அக்காலத்தில் பெரிதாக நிரந்தரக் குடியிருப்புகளை

Page 22
ஏற்படுத்தவில்லை. இஸ்லாம் மதத்தின் தோற்றத் தின் பின்பு கி.பி. 7ம் நூற்றாண்டளவில் அரேபியர் ஒன் றுபட்ட பலத்துடன் எழுந்தனர். மேற்குலக வாணிபத் தில் பெரும்பகுதியை கைப்பற்றினர். இந்தியா இலங்கை துறைமுக நகரங்களில் உள்ளுர் மக்களு டன் கலந்து குடியிருப்புகளைத் தோற்றுவித்தனர். எனினும் கி.பி. 10ம் நூற்றாண்டளவிலேயே பெருமளவு முஸ்லிம்கள் (அரச படைகள்) வட இந்தியாவுக்குள் நுழைந்தனர்.
பதவியிலிருந்த அரசர்களை வீழ்த்தி முஸ்லிம்க ளின் ஆட்சியை ஏற்படுத்தினர். பின்பு அதுவே மாபெ ரும் மொகலாய சாம்ராஜ்யம் அமையக் காரணமா னது. கி.பி. 13ம் நூற்றாண்டுவரை தென்னிந்தியாவில் முஸ்லிம்களால் கால் பதிக்க முடியவில்லை. கார ணம் அப்போதிருந்த சோழப் பேரரசு. சோழப் பேரர சின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாண்டியர்களின் வாரிசுரி மைப் போரைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் தென் னிந்தியாவில் கால் பதித்தனர். அதுவும் விஜயநகர சாம்ராச்சிய எழுச்சியோடு தணிந்து பின்பு விஜயநகர வீழ்ச்சியோடு மேல் எழுத்தது. ஆங்கிலேயர்களே இதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இலங்கையில் முஸ்லிம்கள் உள்ளூர் மக்களு டன் கலந்து தமது குடியிருப்புக்களை ஏற்படுத்தினர். இவர்கள் மொழி தமிழாக இருந்தது. அதற்கான காரணம்
1. அப்போது தென்னிந்திய பிராந்தியத்தின் வணிகமொழியாக தமிழ் இருந்தது. 2. முஸ்லிம்கள் தமிழ்ப்பெண்களையே திருமணம் செய்துகொண்டார்கள். இது தமிழகத்திலேயே நடக்கத் தொடங்கினாலும் இலங்கையிலும் தொடர்ந்தது. மொழியில் தமிழை பேசினாலும் மதத்தில் முஸ் லிம்களாக இருக்கும் இவர்கள் தங்களை முஸ்லிம் இனமாக அடையாளம் கொள்கின்றனர். இதற்கு சைவத் தமிழ்வாதமும் ஒரு காரணம் என்பதை மறுக் கமுடியாது. உள்ளுர் மக்களும் பெருமளவு சாதி ஒடுக்குமுறைக்கு தப்ப முஸ்லிம்களாக மாறியது இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்தது.
கி.பி. 16ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்துசமுத் திர பிராந்தியத்துக்குள் வணிகத்திற்காய் நுழைந்த னர். பின்பு இலங்கை இந்தியாவை தமது ஆட்சிக் குள் கொண்டுவர முற்பட்டனர். இதில் முழுமையாக வென்றவர்கள் ஆங்கிலேயர்களே. ஐரோப்பியருடன்
விரைவில் எதிர்பாருங்கள் பாரிஸில் முதல் முறையாக கண்ணாடி தமிழ் அவைக்காற்று கலைக்
 
 

கிறிஸ்துவ மதம் இலங்கை இந்தியாவிற்குள் புகுந் தது. ஐரோப்பியருடன் முதலாளித்துவ சமூக அமைப் பின் ஆரம்பம் தொடங்கியது. பல்வேறு அரசுகளுக் குள் கீழ் இருந்த இலங்கையும் இந்தியாவும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இக்காலங்க ளில் நடந்த சமுகத் தாக்கம் சகலரும் அறிந்ததே.
இத் தாக்கங்களினூடு தேசிய இன கருத்தாக் கங்கள் தொடங்கின. மகாவம்ச புனைவுகளும், ஆரிய வர்ணாச்சிரம புனைவுகளும், சைவத் தமிழ்ப் புனைவுகளுமாக வரலாறுகள் ஆதிக்க சக்திகளின் பார்வையில் வைக்கப்பட்டு அரசியல் அரங்கேறியது. புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி. 10ஆயிரம் வரு டம் சங்கம் கொண்டு வளர்க்கப்பட்ட தமிழ் பற்றிய முழக்கங்கள், யுகம் யுகமான வர்ணாச்சிரம தர்ம புனைவுகள், அவதாரப் புனைவுகள் என்று வரலாறு மாற்றி எழுதப்பட்டது. எனினும் ஆங்காங்கு உண்மை வரலாற்றை பதிவு செய்ய எத்தனித்த வர்கள் இல்லாமல் இல்லை. O
உசாத்துணை நூல்கள்: 1. பண்டைய தமிழகம் - கலாநிதி சி.க. சிற்றம்பலம் 2. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் - கலாநிதி க.கைலாசபதி 3. தமிழர் வரலாறும் பண்பாடும் - பேராசிரியர் நா. வானமாமலை 4. பாண்டியர் வரலாறு . ம. இராசசேகர தங்கமணி 5. இந்தியாவின் வரலாறு - கொ.அ.அன்தொனவா, கி.ம.போன்காரத்-லேவின்
குறிப்பு: சுமார் 200லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங் கிலிருந்து பிரிந்து மனிதனாக பரிணாமம் அடைய தொடங்கினான். ஆனாலும் 40இலட் சம் ஆண்டுகளின் முன்பே ஓரளவு மனித உரு வம் எடுக்க முடிந்தது. எனினும் சுமார் 40ஆயி ரம் வருடங்களுக்கு முன்பே சிந்திக்கும் மனி தனான ஹோமாசப்பியன் தோன்றினான். இதற்கும் இதன் பின்னும் அவன் பல நாகரிக படிகளைத் தாங்கி வரவேண்டி இருந்தது.
இந்தியாவில் அண்ணளவாக:- 1. பழங்கற்காலம்
- முன் பழங்கற்காலம் - இடை பழங்கற்காலம் }% ဖာ 500000-கி.மு.32000வரை - பின் பழங்கற்காலம் 2. இடைக்கற்காலம் (குறுணி கற்காலம்) கி.மு.30000-கி.மு.7000
3. புதியகற்காலம் கி.மு.7000 கி.மு.1000 4. பெருங்கற்காலம் கி.மு.1000 5. வரலாற்றுக்காலம் கி.மு.5ம் நூற்றாண்டு
நறியாள்கை: க. பாலேந்திரா

Page 23
s ன்ன பதிலைக் காணேலை?" புருவம் உயர
6T ஆர்த்தியை ஆழமாகப் பார்த்தான் ராகுல். பின்னர் தன்னைச் சுதாரித்தபடியே "சரி பிடிக் காட்டி விடுங்கோ" குரலைத் தாழ்த்திச் சிறிது குழைவதைப் போலச் சொன்னான். அவன் கேள்வி யையே தான் காதில் வாங்காதது போல் பாவனை செய்து ரோட்டோரம் தம்மை மறந்து இறுகத் தழு விக் கொண்டு நின்ற அந்த இளம் ஜோடியைக் கண் வெட்டாமல் பாத்துக்கொண்டிருந்தாள் ஆர்த்தி அவர்களின் தழுவல் அவளுக்கு எந்தவிதமான சல னத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக எரிச்ச லையே தந்தது. இருந்தாலும், தான் சலனப்பட்ட தைப்போல் பாவனை செய்தவள், சிறிது வெட்கத் தையும் வேட்கையையும் முகத்தில் சிரமப்பட்டு வர வழைத்துக்கொண்டு ராகுலின் கண்களை மெது வாக நோக்கினாள். அவன் சற்று சங்கடத்துடன் நெளிவது அவளுக்குப் புரிந்தது. அவள் எதிர்பார்த் ததும் அதைத்தான் இனிமேல் அவன் தன் கேள்வி யையே மறந்து விடுவான். மனதில் சிறிது நிம்மதி ஆர்த்திக்கு. இருந்தும் இப்போதெல்லாம் அடிக்கடி அவன் இந்தக் கேள்வியைக் கேட்பதும் தான் பதில் கூற முடியாமல் தடுமாறுவதும் கூடிக்கொ ண்டே போகிறது. இன்றோடு சேர்த்து ஆறு, ஏழு முறைகள் கேட்டுவிட்டான். இனிமேலும் கேட்பான். ஏதாவது ஒரு பதிலை அவன் நம்பும்படியாகக் கூற வேண்டும். அவள் திட்டமிட்டபடியே காய்கள் அழகாக நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில் ஏதாவது உளறி வைத்து அவனின் சந்தேகத்திற் குள்ளாக அவள் விரும்பவில்லை.
ராகுல் அவள் கைகளை மெதுவாகப் பற்றியப டியே நகர்ந்து ஒட்டுவதுபோல அமர்ந்து கொண் டான். அவனின் உடலில் இருந்து வந்த விலையு யர்ந்த வாசனைத் திரவியத்தின் நறுமணம் அவ ளின் நாசியைத் தாக்கியது. கைகளில் சிங்கப்பூரி லிருந்து அவன் அண்ணா சிவம் கொண்டு வந்து கொடுத்த கைக்கடிகாரம். ஆர்த்தியால் இவை ஒன்றையும் ரசிக்கமுடியவில்லை. இருந்தும் எல் லாமே பிடித்தது போல் தன்னைச் சிறிது ஒடுக்கிக் கொண்டு அவன் தோள் மேல் சாய்ந்துகொண் டாள். அவனின் வழிக்கப்படாத தாடி அவள் கன் னத்தைக் குத்தியது. ராகுல் கண்களை முடி அந்த நெருக்கத்தை அனுபவிப்பது அவளுக்குப் புரிந் தது. குற்ற உணர்வால் நெஞ்சம் படபடத்தாலும்
22 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

தானும் அந்த சுகத்தை அனுப விக்க எண்ணிக் கொண்டவளாய்க் கண்களை முடிக்கொண்டாள். M இருந்தும் மனம் முழுவதும்
ராகுல் சந்தேகப்படும்படியாய் எது வும் நடந்துவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தது. திடீரெனத் தீப்பொறிபோல் அவள் மனதில் அந்த எண்ணம் தோன்றியது. உடனே சிறிது விலகி இருந்தவள், ராகுலின் முகத்தைப் பாரத்து "அப் போதை என்ன கேட்டனிங்கள்? ஏன் ரெண்டு மணித் தியாலம் travelபண்ணி அங்க இருந்து இங்க உள்ள Collegeக்கு வாறன் எண்டா? இப்போது அதற்கான பதிலைக் கேட்கும் moodஇல் ராகுல் இல்லை. அது ஆர்த்திக்குப் புரிந்திருந்தாலும் இப் போது சொல்ல மறந்துவிட்டால் அவன் மீண்டும் ஒருமுறை கேட்கும்போது தான் தடுமாறிப் போக லாம் என்ற எண்ணம் எழ, தனது முகத்தை சோக மாக வைத்தபடியே"ஏன் எங்கட வீட்டுப் பிரச்சனை எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லுவான் எண் டுதான், இவ்வளவு நாட்களும் நீங்கள் கேக்கேக்க சொல்லாமல் சமாளிச்சனான். ஆனால் இனியும் உங்களை என்னட்டை இருந்து பிரிச்சுப் பார்க்க நான் விரும்பேல்லை" கூறியபடியே அவன் கைக ளைப்பற்றித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ஆர்த்தியின் சோகம் கண்டு உணர்ச் சிவசப்பட்ட ராகுல்"இல்லை. நான் சும்மாதான்
கேட்டனான். அதிலை பிரச்சினை இருந்தால் விட்டி டுங்கோ" அவன் தடுமாறுவதுகூட ஆர்த்திக்குப் பிடித்திருந்தது. அவனின் அன்பு, உண்மையான காதல், சிறிய கோழைத்தனம் எல்லாமே ஆர்த் திக்கு மிகவும் பிடித்திருந்தது. பாவம் ராகுல். என் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான். இவ னைப்போய் நான் எப்படி? மீண்டும் மனச்சாட்சி அவ ளைக் கேள்வி கேட்க பலவந்தமாக அதைத்தள் ளிவிட்டு அவனைக் கண்கலங்கியபடியே பார்த் தவள் விம்மலோடு, "இல்லை. வீட்டிலை அண்ணி

Page 24
யாலை எனக்கு ஒரே பிரச்சினை. வெளியிலை இரு க்கிற நேரம்தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கி றன். அதுதான் இப்பிடி" அம்மாவுக்கும் மேல் அன்பு காட்டும் அண்ணியைத் தன் சுயநலத்துக்காய் மன ச்சாட்சியின்றி வில்லியாக்கினாள். “Travelingக்கே கனநேரம் போயிடும். அதாலை வீட்டிலை இருக்கிற நேரம் குறையும்தானே." கூசாமல் பொய் கூறிவிட்டு மீண்டும் விம்மத் தொடங்கினாள். ராகுல் துடிதுடித் துப் போனவனாய் அவள் முகத்தைத் தன் கைக ளில் ஏந்தி அவள் கண்ணிரைத் துடைத்துவிட்டான். பாவம் பெண்களாகப் பிறந்து விட்டாலே எவ்வளவு கஷ்டங்கள், எண்ணிக் கொண்டவன், "எனக்கு இப்ப விளங்குது நீங்கள் ஏன் கலியாணத்துக்கு அவசரப்படுத்திறீங்கள் எண்டு. பேசாமல் உங் கடை சாமான்களை எடுத்துக்கொண்டு என் னோடை வந்திடுங்கோ. எங்கடை அண்ணாவும் அண்ணியும் நல்ல ஆக்கள். உங்கடை அண்ணா, அண்ணி மாதிரி இல்லை. ஒண்டும் சொல்லமாட்டி னம். நானும் கெதியா ஒரு வேலை தேடி எடுக்கி றன். அண்ணா சிங்கப்பூராலை வந்தவுடனை கலியாணத்தை வைக்கலாம்" என்றான்.
மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில் ஏறுவ தைப் போல் சினம் வர, அண்ணா அண்ணா. எப்ப பார்த்தாலும் அண்ணாதான். வாய்விட்டுக் கத்த வேண்டும்போல் ஆத்திரம் வந்தது அவளுக்கு. "என்ர அண்ணி தன்ர தம்பியைக் கலியாணம் செய் யச் சொல்லி என்னைக் கரைச்சல் படுத்திறா. என் னாலை எவ்வளவு நாளைக்குத் தாக்குப் பிடிக்க லாம் எண்டு தெரியேல்லை. இப்ப போய் உங்கடை அண்ணா வந்த பிறகுதான் கலியாணம் என்று நீங்க இழுத்தடிச்சா என்னை மறந்திடுங்கோ" சொல்லியபடியே கோபமாக எழும்பியவளின் கைக ளைப் பிடித்து இழுத்துத் தனக்குப் பக்கத்தில் அமர வைத்த ராகுல், "சரி. கோவிக்காமல் என்ன செய்யலாம் எண்டு சொல்லும். எனக்கு ஒரே குழப் பமா இருக்கு. உமக்கே தெரியும் எனக்கு எல்லாமே என்ரை அண்ணா, அண்ணிதான். அவேலிட்டைச் சொல்லாமல் நான் ஒண்டும்." ராகுல் கூறிக் கொண்டே போக. இவன் தன் அண்ணா மேல் வைத்திருப்பது ஒருவித பக்தி. இப்போது நான் அவ சரப்பட்டால், எனக்கு நீர் வேண்டாம், அண்ணாக் குத் தெரியாமல் நான் ஒண்டும் செய்யமாட்டன் என்று கூறி என்னைக்கூட அவன் கைகழுவக் கூடும். பிறகு என் திட்டம் என் வாழ்க்கை எல்லாமே கேள்விக் குறியாகிவிடும். இப்ப நான் ராகுல் மனம் நோகாமல் அவசரப்படாமல் முக்கியமாக என்மீது எந்தவிதமான சந்தேகமும் எழாமல் கதைக்க வேண்டும், எண்ணியவளாக, "இல்லை. எங்கட அண்ணா பற்றி உங்களுக்குத் தெரியாது. திடீ ரெண்டு ஒரு நாளைக்கு இண்டைக்கு உனக்குக் கலியாணம் எண்டு சொல்லி என்னையும் உங்களை யும் பிரிச்சுப் போடுவினமோ எண்ட பயம் எனக்குக் கூடிக்கொண்டே வருகுது. நீங்கள் இல்லாமல் எனக்கு." ஆர்த்தி கண்களைக் கசக்கியபடியே அவனைப் பார்த்தாள்.

அவளுக்கு அவனைப் பாரக்கப் பரிதாபமாக இருந்தது. இவனை நான் எப்படி எல்லாம் வதைக்கி றேன். என் வாயிலிருந்து எவ்வளவு அழகாகப் பொய்கள் வந்து குவிகிறது. எவ்வளவு வடிவாக நடிக்கப் பழகிக்கொண்டு விட்டேன். அவளுக்குத் தன்னை நினைக்க வெறுப்பாக இருந்தது. தன் கலி யாணத்தில் முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கும் என் அண்ணா அண்ணி மேல் கூசாமல் இப்பிடி ஒரு பொய்யைச் சுமத்தி, இவை எல்லாம் எனக்குத் தேவைதானா? மீண்டும் அவள் குழம்பிப் போனாள். ஆர்த்தி சிந்தனையில் ஆழ்ந்துபோக "என்ன கோபமா? ஏன் பேசாமல் இருக்கிறீங்கள்? சரி. நீங் கள் சொன்னது போலவே செய்வம். அண்ணா வந் தாப்பிறகு விளக்கமாச் சொன்னா அவருக்கு விளங்கும். உம்மட அண்ணா மாதிரி இல்லை என்ரை அண்ணா. நல்ல understanding உள்ளவர்" பெருமையோடு அவள் முகம் பார்த்துச் சொன் னான் ராகுல். ஆர்த்திக்குச் சிரிப்பாக வந்தது. என் பக்கம் காற்றடிக்கத் தொடங்கிவிட்டது, எண்ணிய வளாய் "அப்பிடி எண்டா. நீங்க என்ன சொல்லுறீங் கள்." சிறிது சந்தேகத்துடன் அவனை நோக்கிய வள் பின்னர் முகத்தில் சந்தோஷத்தை வரவழைத் தபடியே "அப்பிடியெண்டா நீங்கள் கலியாணத் துக்கு" ஆர்த்தியின் முகத்தில் தோன்றிய அந்த தேஜஸ் ராகுலின் நெஞ்சை நெகிழ வைத்தது. "ஓம். நான் அந்த பகல் வேலைக்குப் போகப் போறன். collegeஐ இரவுக்கு மாத்தலாம்தானே." ராகுல் கூற ஆர்த்தி உணர்ச்சிவசப்பட்டவளாய்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 123

Page 25
ராகுலின் கைகளைப்பற்றிக் கொண்டாள். ராகுல் தொடர்ந்தான். "பிறகு பேசாமல் registerபண்ணிப் போடடு ஒரு இடம் பார்த்துக்கொண்டு போவம். என்ன. இப்ப சந்தோஷமா?" ராகுல் முகத்தில் சந்தோஷத்தை வரவழைக்க முயன்றாலும், தன் னைக் கனடாவுக்குக் கூப்பிட்டு ஆளாக்கிவிட்ட அண்ணாவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்வ தில் அவனுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. என்ன செய்வது? ஆர்த்தியும் பாவம்தானே. எந்த ஒரு காரணத்துக்காகவும் அவன் ஆர்த்தியை இழக்கத் தயாராக இல்லை. அவன் அப்படிக் கூறி யதும் ஆர்த்தி சந்தோஷம் தாளாமல் ராகுலை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். "சரி சரி போதும். யாராவது பார்க்கப் போகினம்" என்ற ராகுல் "நான் இப்ப வீட்டை போகவேணும். இரவுக் குக் calபண்ணுறன். சரியே" கூறிவிட்டு"ஒண்டுக் கும் யோசிக்காதையும். எல்லாம் நல்லபடியா நடக் கும். எல்லா ஒழுங்கையும் நானே செய்யிறன். நீர் வீட்டைவிட்டுக் கவனமா வந்தாப் போதும்." அவன் விடை பெறத், தனது பல நாளைய திட்டம் கைகூ டும் நாள் கிட்டிவிட்ட சந்தோஷத்தில் ஆர்த்தி ஆகாயத்தில் மிதப்பதைப் போல உணர்ந்தாள்.
ஆர்த்தியின் அண்ணா அண்ணிக்கு ஒன்றுமா ய்ப் புரியவில்லை. எதற்காக அவசரப்பட்டுத் தங்க ளுக்குக் கூடச் சொல்லாமல் இப்படித் திருமணம் செய்துகொண்டுவந்து நிற்கிறார்கள். நாங்கள் ஒன்றும் காதலை எதிர்ப்பவர்கள் இல்லை என்று ஆர்த்திக்குத் தெரியும். அப்படி இருக்கும்போது ஏன் இந்த அவசரம், சரி ஏதோ சிறுபிள்ளைத்தனத் தில் செய்துவிட்டார்கள். நாங்கள்தான் மன்னிக்க வேண்டும் என்று குழப்பத்தோடு தம்மைச் சமாதா னம் செய்து கொண்டார்கள்.
ராகுலும் ஆர்த்தியும் தனிக்குடித்தனம் போய் நான்கு மாதங்கள் ஓடிவிட்டது. தன் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதும் குழப்பங்கள் வருமோ என்று சந்தேகத்தில் இருந்த ஆர்த்திக்கு எல்லாமே அழ காக அமைதியாகப் போய்க் கொண்டிருப்பது சந் தோஷத்தைத் தந்தது.
அன்று காலை வழமைபோல் ஆர்த்தியும் ராகு லும் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைப்பு வந்தது. ராகுலின் அண்ணா சிங்கப்பூரிலிருந்து வந்துவிட்டதாகவும் ராகுலின் இந்தத் திடீர்த்திருமணத்தில் அவர் சிறிது மனம் நொந்துபோய் இருப்பதாகவும் அவர் கள் இருவரையும் உடனே வீட்டுக்கு வந்து அவரு க்கு ஆறுதல் கூறும்படி ராகுலின் அண்ணி ராகு லைக் கெஞ்சிக் கேட்டாள். அண்ணா மனம் நொந் துபோய்விட்டார் என்றதும் ராகுல் சோர்ந்துவிட் டான். "அண்ணா எனக்கு எவ்வளவெல்லாம் செய 'தார். நான் அவருக்குத் துரோகம் செய்து போட் டன்." அவன் கலங்கினான். ராகுலின் அண்ணா வந்துவிட்டார். செய்தி கேட்டதும் ஆர்த்தியின் மனத்தில் சொல்லமுடியாத பல அலைமோதல்கள். இன்று நான் அவரைச் சந்திக்கப்போகிறேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும். அவ
24 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

ருக்கு என்னை நினைவிருக்குமா? இல்லாவிட்டால் நான் சொல்லப்போவதில்லை. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அது ராகுலின்மூலம் எனக்குக் கிடைத்துவிட்டது. பழி வாங்கும் எண்ணம் இப்போது எனக்கு இல்லை. ஒரு வேளை என்னைக் கண்டதும், நடந்தது எல்லாவற் றையும் ராகுலிடம் அவர் கூறிவிட்டால், ராகுல் என்னை வெறுப்பானா? வேண்டாம் எனக்கு நீ என்று என்னைத் தூக்கி எறிந்துவிடுவானா? எது எப்படியாயினும் துணிவாக நின்று எதிர்கொள்ள வேண்டும். எண்ணியவளாக ராகுலுடன் அவன் அண்ணனைச் சந்திக்கப் புறப்பட்டாள் ஆர்த்தி. வீட்டின் அழைப்புமணியை அழுத்திவிட்டு நிலைகொள்ளாது தவித்தான் ராகுல். கதவு திறக்க, ராகுலின் அண்ணி தயங்கியபடியே "உள் ளுக்கு வாங்கோ. அண்ணா மேலை நிக்கிறார். கூப் பிடுறன்" கூறிவிட்டு உள்ளே சென்றாள். ஆர்த் திக்கு கைகள் வியர்த்துப் போனது. வாழ்க்கையில் இன்று எனக்கு நிச்சயம் மறக்கமுடியாத நாளாகத் தான் இருக்கும். நெஞ்சம் படபடக்க ஒன்றுமில்லா தது போலொரு வெறுமை உணர்வு அவளுக்குள் எழத் தொடங்கியது. மிகவும் சிரமப்பட்டுத் தன் உணர்வுகளை ஒருநிலைப்படுத்திக்கொண்டாள். ராகுல் கைகளைப் பிசைந்தபடி தவிப்பது அவளுக் குக் கவலையைக் கொடுத்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் கல்யாணம் செய்துவிட்ட குற்ற உண ர்வு அவனுக்குள். எல்லாம் என்னால் வந்த வினை. என் சுயநலமான உணர்வில் ஒரு அப்பாவியைத் தவிக்கவைத்துவிட்டேன். மீண்டும் அவளுக்குள் குற்ற உணர்வு எழத் தொடங்கியது.
வீட்டின் படிகள் ஏற்படுத்திய ஒருவிதமான விநோதமான ஒலி, யாரோ இறங்கி வருகிறார்கள் என்று ஆர்த்திக்குக் கூறியது. பேசாமல் எழுந்து ஓடிவிடுவோமா, சிறுபிள்ளைபோல் அவள் மனம் தடுமாறியது. அருகில் இருந்த ஒரு பத்திரிகையை அவசரமாக எடுத்துப் படிப்பதுபோல் சிறிது முக த்தை முட முயன்றாள். கைகள் நடுங்குவது அவ ளுக்குப் புரிந்தது. தாம் என்ன செய்கிறோம் என்றே அவளுக்குப் புரியவில்லை. திடீரெனத் தான் கோழையாகிப் போய்விட்டது போலொரு உணர்வு அவளுக்குள். ராகுல் எழும்புவது அவளுக்குத் தெரிந்தது. ஒருவித வினோதமான அந்த மணம், அவளுக்குப் பரிச்சயமான அந்த மணம், ஆர்த் திக்கு பழைய நினைவுகளை இழுத்து வர முயன் றது. சிறிது தலைசுற்றுவது போலிருந்தது அவ ளுக்கு. "ம். எப்படி இருக்கிறாய்?" அந்தக் கரக ரத்த குரல். ஆர்த்தியின் உடல் இப்போது இலேசா னது போல் இருந்தது. நாம் பறக்கிறோமா அவளுக் குச் சந்தேகமாக இருந்தது. "ஆர்த்தி" ராகுலின் குரல் எங்கோ கிணத்துக்குள் இருந்து கேட்டது போல் இருந்தது. பத்திரிகையை அருகில் வைத்து விட்டு நிமிர்ந்தாள். முகத்தில் புன்னகையுடன் அவளை நோக்கிய ராகுலின் அண்ணாவின் முகம் யாரோ ஓங்கி அறைந்தது போல் ஒரு முறை அசைந்து கொண்டது. அந்தக் கருமையான முகம்

Page 26
இறுக்கத்தாலும் கோபத்தாலும் மேலும்கருகிவிட் டதை அவள் உணர்ந்து கொண்டாள். "இது அண்ணா. ஆர்த்தி வாரும். காலில் விழுந்து ஆசீர் வாதம் வாங்குவம்." ராகுல் ஆர்த்தியின் கைக ளைப்பற்ற அதைப் பார்க்கச் சகிக்காமல் "அதெ ல்லாம் வேண்டாம்" அவசரமாக விலகிக் கொண் டார் அவர். பின்னர் "நான் அவசரமா வெளியிலை ஒருக்காப் போகவேனும், வந்து கதைக்கிறன். நீங்கள் நிண்டு சாப்பிட்டிட்டுப் போங்கோ" சொல் லிவிட்டு அவசரமாக வெளியே போய்விட்டார் அவர். ராகுல் மெளனமானான். அவன் கண்கள் கலங்கிவிட்டது. "அண்ணாக்கு இன்னம் கோபம் போகேல்லை" கூறியபடியே அண்ணியை நோக்கி னான். அவள் புரியாதவளாக "நீங்கள் வந்திருக்கி றிங்கள் எண்டு நல்ல சந்தோஷமாக வந்தவர். உந் தாளுக்கு என்ன நடந்தது" குழம்பிப் போனாள் அவள். ஆர்த்தியிடம் இருந்து ஒரு பெரிய பெரு மூச்சு வெளிவந்தது. என்னை அடையாளம் கண்டுகொண்டு விட்டார். நிச்சயமாக என் வாழ் வில் இனிமேல் பிரச்சனைதான். அவளுக்கு வாய் விட்டு அழவேண்டும் போல் இருந்தது. இனி என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் சிறிது தடுமாறிப்போய் நின்றுவிட வீட்டுக்கு வந்த வர் களை உபசரிக்கவேண்டிய கட்டாயத்தை உணர் ந்த அண்ணி "அண்ணா கெதியா வந்திடுவார். நான் tea போட்டுக்கொண்டு வாறன் இருங்கோ." அவள் குசினியை நோக்கிச் சென்றாள். "நானுங்க ளுக்கு help பண்ணிறன்" ஆர்த்தி அண் ணியைப் பின் தொடர்ந்தாள், ராகுலைநிமிர்ந்து பார்க்கும் திராணியின்றி.
அண்ணியுடன் சேர்ந்து சமையல் வேலையில் ஆர்த்தி ஈடுபட்டுவிட, ராகுல், அண்ணாவின் பிள் ளைகளுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந் தான். இப்படியே ஒரு சந்தோஷமான சூழ்நிலை என் வாழ்வில் நிலைக்காதா? இப்போது ராகுலின் அண்ணாவின் மனநிலை எப்படி இருக்கும். ஆர்த்தி தவியாய் தவித்தாள். இப்படியே கேள்விக்குறியாக எப்படிக் காலம் தள்ளப் போகிறேன். அவள் சிந்த னையைக் கலைப்பதுபோல் தொலைபேசி சிணுங் கியது. Receiverஜக் கையில் எடுத்த அண்ணி"என் னப்பா அவேலை வரச் சொல்லிப்போட்டு அப்பிடி உங்களுக்கென்ன வேலை" கேட்டவளின் முகம் இறுகிப்போனது. ஆர்த்தியின் கைகள் நடுங்கத் தொடங்கியது. அண்ணி சிரமப்பட்டு முகத்தில் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு "ராகுல், அண்ணா போனிலை, உம்மோடை கதைக்க வேணுமாம்" கூறிவிட்டு ஆர்த்தியைப் பார்த்து "எல்லாத்துக்கும் ஒரு கோவமும் கத்தலும்" என் றாள் சினத்துடன். ஆர்த்திக்கு அப்பாடா என்றி ருந்தது. தன்னைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. ஆனால் ராகுலுடன் கதைக்கும்போது.?ஆர்த்தி அவசரமாகக் கைகளைக் கழுவிவிட்டு வெளியே வந்து பிள்ளைகளுடன் விளையாடுவதுபோல் ராகு லின் முகத்தை நோட்டமிட்டாள். "ஓம் அண்ணா. இல்லை அண்ணா." என்று அவன் குழைந்து

குழைந்து முகத்தில் சந்தோஷத்துடன் கதைத் துக் கொண்டிருந்தது ஆர்த்திக்குக் கொஞ்சம் வியப்போடு கூடிய சந்தோஷத்தைத் தந்தது. அப் படியானால் அவர் தன்னைப்பற்றி ராகுலுக்குச் சொல்லப்போவதில்லை. என் இந்த வாழ்க்கை நிலையானது. அவள் மனம் குதூகலித்தது. அண் ணாவின் பிள்ளைகளைச் சந்தோஷத்துடன் கட்டிக் கொண்டாள் அவள். அவர்கள் அவளை வினோத மாகப் பார்த்தார்கள். ஆர்த்தி வாய்விட்டுச் சிரித் தாள்.
அண்ணா தனது திருமணத்தை ஏற்றுக்கொண்” டுவிட்டார். வாழ்த்தும் கூறினார். ஏதோ அவசரமான வேலையாம். அதனால்த்தான் போய்விட்டார். கெதியாக வந்துவிடுவார். ராகுல் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டான். ஆனால் இரவு வரை நின்று பார்த்தும் சிவம் வீட்டுக்கு வரவி ல்லை. இரண்டு மூன்று தடவைகள் phoneசெய்து தான் வந்த வேலை இன்னும் முடியவில்லை என்று ராகுலிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். ஆர்த் திக்குப் புரிந்தது, தாம் அங்கு நிற்கும்வரை அவர் வீட்டுக்கு வரப்போவதில்லை. மீண்டும் ஒரு முறை அவளைச் சந்திப்பதை அவர் தவிர்ப்பது அவளுக் குப் புரிந்தது. அதனால் நாளைக்கு வேலை. கெதி யாகப் படுக்கைக்குப் போகவேண்டும் என்று கூறி ராகுலை வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாள். ஆனால் அவள் மனம் தவித்தது. எத்தனை நாளை க்கு நானும் சிவமும் இப்படிக் கண்ணாமூச்சி ஆட முடியும். பேசாமல் கெதியாக அவர் சிங்கப்பூர் போய்விட்டால் நல்லது என்று எண்ணிக்கொண் டாள்.
அடுத்த நாள் அவள் அலுவலகத்தில் வேலை யில் மூழ்கி இருக்கும்போது அவளைத் தேடி யாரோ வந்திருப்பதாகத் தகவல் வந்தது. யாராக இருக்கும் என்று எண்ணியபடியே வெளியே வந்த வள் ஒரு கணம் திகைத்துவிட்டாள். கையில் சிக ரட்டும் சிவந்த கண்களுமாக தனிமையான ஒரு இடத்தில் சிவம் நின்றுகொண்டிருந்தார். இவர் எத ற்காக இங்கே வந்தார்? ஒருவேளை தான் செய்த தவற்றுக்கு மன்னிப்புக் கேட்கப் போகிறாரோ? ராகுலிடமும் அண்ணியிடமும் தன்னைப்பற்றிச் சொல்லவேண்டாம் என்று கெஞ்சப் போகிறாரோ? நான் எப்படி என் கதையை அவர்களுக்குச் சொல் லமுடியும். எண்ணியவளாக மெதுவாகச் சிவத்தை நோக்கி நடந்து வந்தாள். சிவத்தின் முகத்தில் ஏளனப் புன்னகை எழுவது அவளுக்குத் தெரிந் தது. ஆர்த்தியின் மனதில் மெல்ல மெல்ல ஆக்ரோ சம் எழுந்து தீஜூவாலை போல் கொழுந்துவிடத் தொடங்கியது. இவர் சமாதானத்துக்கு வரவி ல்லை. மீண்டும் ஒருமுறை என் உணர்வுகளோடு விளையாடிப் பார்க்க வந்திருக்கும் கொடிய பாம்பு இது. அருகில் வந்தவள் "என்ன வேணும்? எனக்கு நிறைய வேலை இருக்கு" என்றாள். சிவம் வாயை ஆவென்று பிளந்து சிரித்தபடியே"ஓ. என்ன வேலையாக்கும்" என்றான் நக்கலாக. பின்னர் "நல்லாத்தான் பத்தினிக்கு நடிக்கிறாய். பேசாமல்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 25

Page 27
படங்களிலை நடிக்கப் போகலாமே. நல்ல காசு கிடைக்கும்." கூறிவிட்டுத் தன் ஜோக்கைத் தானே ரசித்துச் சிரித்தான். "உன்னோட கதைக்க என க்கு நேரமில்லை" கூறிவிட்டு ஆர்த்தி திரும்ப, "என்ன மரியாதை குறையுது. உன்ரை உந்த வாழ்க்கை எத்தினை நாளைக்கு?ஆ. என்ரை தம்பியை ஏமாத்திக் கெட்டிக்காரத்தனமாக் கலி யாணம் செய்துபோட்டன் என்று மட்டும் நினைக் காதை. பேசாமல் பெட்டி படுக்கையோடை போயிடு. இல்லாட்டி நடக்கிறதே வேறை. இந்தச் சிவத்தைப்பற்றி உனக்குத் தெரியாது." கோபக் கனல் முகத்தில் தெறிக்க கத்தத் தொடங்கினான் சிவம். ஆர்த்திக்கு மனம் இப்போது இரும்பாகிவிட் டது போல் இருந்தது. இனிமேல் நடப்பது நடக்கட் டும். இவருக்கு ஒரு பாடம் படிப்பிக்காமல் நான் விடப்போவதில்லை. எண்ணியவள் வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். "என்னடி சிரிக்கிறாய்?" கேள்வியோடு பல கெட்ட வார்த்தைகளும் சிவத் தின் வாயிலிருந்து வரத் தொடங்கியது."ஒ. உன் னைப்பற்றித்தான் எனக்கு நல்லாத் தெரியுமே. cheapஆ ஆக்களைக் கூட்டிக்கொண்டு வாறன். எங்கட ஆக்களுக்கு helpபண்ண வேணும் எண்டு சொல்லிப்போட்டு, தெரியாத இடங்களுக்கு பொம் பிளைகளைக் கூட்டிக்கொண்டு போய், உன்ரை ஆசைக்குக் கட்டுப்படவேணும் இல்லாட்டி அங் கேயே விட்டிட்டுப் போய்விடுவன் எண்டு பொம்பி ளையளைப் பலி போடுற ஆசாமி நீ எத்தினை எத் தினை பொம்பிளைகள் பயத்தாலை உன்ர ஆசை க்குப் பலியாச்சினம். கலியாணம் செய்தவரைக் கூட நீவிட்டு வைக்கேலை. உன்னால மனம் பாதி ச்சு தற்கொலை செய்தாக்களைக்கூட எனக்குத் தெரியும். உன்ர விளையாட்டு எல்லாரிட்டையும் சரி 6) JEJTIT ĝ51.
இந்த ஆர்த்தியைப் போலவும் சில ஆக்கள் இருக்கத்தான் செய்யினம். அப்ப உன்னட்டை அம் பிட்டுப் பயத்திலை பலியாகிப் போனது உண்மை தான். ஆனால் நீ இப்ப பாக்கிற ஆர்த்திவேற. நான் எதுக்கும் துணிஞ்சிட்டன். உன்ர குடும்பத் தைப் பழிவாங்கவேணும் எண்டுதான் உன்ர தம்பி யைக் கலைச்சுக் கலைச்சு காதலிச்சன். பிறகு தான் தெரிஞ்சுது, உன்னட்ட இருக்கிற எந்தக் கெட்ட குணமும் ராகுலிட்ட இல்லை. எனக்கு அவர் தான் புருஷன். உன்னாலை முடிஞ்சதைச் செய்து பார். ஆனால் ஒண்டு மட்டும் சொல்லுறன். ஏஜென்சி ஆக்களைக் கூட்டிக்கொண்டு வாறன் எண்டு இனி மேலும் சிங்கப்பூர் பக்கம் போனால் நான் சும்மா இருக்கமாட்டன். உன்னைப்பற்றின முழு விபரமும் எழுதி என்ர friendஇட்டக் குடுத்திருக்கிறன். என க்கு ஏதாவது நடந்தால் அந்த letter உடனடியாய் policeஇட்டப் போகும். பேசாமல் போய் இனியாவது குடும்பத்துக்கு ஒரு நல்ல ஆம்பிளையா இருக்கிற அலுவலைப் பார்." சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்க் காமல் வேகமாக அலுவலகத்தை நோக்கி நடந்த ஆர்த்தியைப் பிரமை பிடித்தது போல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவம். O
26 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

டந்த மிலேனியத்தின் மகத்தான பெண்மணி யார் எனும் BBC வாக்கெடுப்பில் காலஞ்சென்ற இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தேர்ந்தெடுக் கப்பட்டிருக்கிறார். எலிஸபெத் 1, அன்னை தெரேசா, மேரி கியூரி, ஜோன் ஆப் ஆர்க், ஆங்க்ஸன் சூகி போன்றோர் அடுத்து இடம்பெறுகிறார்கள். மார்கரட் தாட்சர் 5ம் இடத்தையும் எலியனார் ரூஸ்வெல்ட் 10ம் இடத்தையும் பெறுகிறார்கள். தியாகம், தாய்மை, அர்ப்பணிப்பு உணர்வு, போராட்ட உணர்வு, சமுகத் துக்கான பங்களிப்பு போன்றவற்றின் அடிப்படை யிலேயே "மகத்தான பெண்மணி தேர்வுக்கான அபிப் பிராயங்கள் இடம்பெறுகின்றன. மத இணக்கத்துக் காக எலிஸபெத் I, விஞ்ஞான சாதனைக்காக மேரி கியூரி, ஏகாதிபத்திய கட்ட மைப்புக்காக தாட்சர், தியாகத்துக்காக தெரேசா என்று அவர்களது நேயர் களால் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
பலம் வாய்ந்த மூன்றாமுலக நாடொன்றைக் கட் டியமைத்தல், இறுக்கமான அரசியல் முடிவுகள், புத்தித் தெளிவுடனான நிலைப்பாடுகள், ஜனநாயக அமைப்பாக இந்தியாவைக் கட்டியமைத்தல், அழுத் தமான பெண்நிலைவாத நோக்கு போன்றவற்றுக் காக அவரது பரிந்துரையாளர்கள் இந்திராவைத் தேர்கிறார்கள். பொற்கோவில் தகர்ப்பும் பிந்தரன் வாலேயை தனது அரசியல் நோக்குக்காக ஊட்டி வளர்த்ததும் அரசியல் முதிர்ச்சியின்மை என்றும் ஞாபகப்படுத்திக்கொள்வது இச் சூழலில் பொருத்த முடையது. கோல்டா மேயர், மார்கரட் தாட்சர், யூரீமா வோ பண்டாரநாயக்கா, சந்திரிக்கா குமாரணது ங்கா, இமல்டா மார்க்கோஸ், மேகவதி போன்ற அதி காரம் வாய்ந்த பெண் அரசியல்வாதிகளிலிருந்து இந்திரா காந்தி வித்தியாசமானவர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. கடைசிவரை அமெரிக்க ஏகாதி பத்திய எதிர்ப்பாளராயிருந்தவர், உலக விடுதலைப் போராட்டங்களின் நண்பராயிருந்தவர், சோசலிச முகாமோடு அரசியல் ரீதியில் நின்றவர். இது மட் டுமல்ல மூன்றாமுலகப் பெண்களின் பெருமிதத்திற் கும் இந்திரா ஆதர்சமாகத் திகழ்ந்தவர். இந்திரா காந்தி மிகப் பெரிய படிப்பாளி. அவரிடம் எப்போதுமே படிக்கப்பட வேண்டியபுத்தகங்களின்பட்டியல் ஒன்று இருந்து கொண்டே இருக்கும். இந்திராவின் நண்பர் களில் ழான் பவுல் சார்த்தரும் ஒருவர் என்பதை இங்கே குறிப்பிடுவது பொருந்தும்,

Page 28
டந்த ஒக்ரோபர்மாதம் 10ம்திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 500மணியளவில் ரொறன்ரோ வில் உயிர்நிழல் (Vol1, N°1-Voll, N°4) இதழ்களின் மீதான விமர்சனக்கூட்டம் ஒன்று நடைபெற்றிருந் தது. இதனை ரொறன்ரோ வாழ் இலக்கிய ஆர்வ லர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். இதில் சுமார் 35பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். புலம்பெயர் இலக்கியமும் உயிர்நிழலும் என்ற தலைபபில் காலம் சஞ்சிகை ஆசிரியர் செல்வம் அவர்கள் உரையாற்றினார்.
மேலும்,உயிர்நிழல் சஞ்சிகையில் வெளிவந்தி ருந்த படைப்புகளில் முக்கியமாக சிறுகதைகள் குறித்தும், மற்றும் சில கட்டுரைகள் குறித்தும் கருத் துகள் பரிமாறப்பட்டன.
மேலும் பொதுவான சிறுபத்திரிகைப் போக்கு கள், சிறுபத்திரிகைச் சூழல்கள், சிறுபத்திரிகைக ளைப் பரவலாக்கும் பொறிமுறை ஒன்றின் தேவை என்பன பற்றியும், இன்னும் புலம்பெயர் இலக்கியத் திற்கான அங்கீகாரம் என் றால் என்ன என்பது தொடர் பாகவும் கருத்துகள் பரிமா றப்பட்டிருக்கின்றன.
இதைவிடவும், கருத்கள் முரண்படும்போது அல் லது சேர்ந்து இயங்கமுடியாதபொழுது வெவ்வேறு சஞ்சிகைகள் வருவது தவிர்க்க முடியாதது. எனி னும், அவைகள் ஏற்படுத்தும் விவாதங்கள் ஆரோக் கியமான தளத்தில் நகர வேண்டும். கருத்துரீதியாக கருத்துகளை எதிர்கொள்ளாமல் தனிப்பட்ட முறை யில் கருத்துக்கூறுபவர் தாக்கப்படும்போது விவாதம் வேறு தளத்திற்கு இட்டுச் செல்லும். இந்த விடயத் தில் நாங்கள் அவதானமாக இருக்கவேண்டும்,
கனவு, இலட்சியங்கள் என்பன மட்டும் ஒரு பத்தி ரிகையைத் தொடர்ந்து கொண்டு வருவதற்குப்
 
 

போதுமானதல்ல. தமிழ்ச் சிறுபத்திரிகைகள் நின்று போனதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று நிதிரீதியான தொடர்ச்சியான பங்களிப்புக் கான திட்டமிடல் இன்மைதான்.
ஒரு பத்திரிகை தொடர்ந்து வருவதை ஊக்கு விக்க வேண்டும் எனில் இலக்கிய ஆர்வலர்களு டைய பங்களிப்பு (நிதி, ஆக்கங்கள், விமர்சனங்கள், பரவலாக்குதல்.) தொடர்ந்து இருப்பது அவசியம்.
நடைமுறை வாழ்க்கை, தத்துவங்களுடன் தொடர்புபடுத்திய விவாதங்களில் பத்திரிகை ஈடுப டாவிடில் நடைமுறைபற்றி எந்தச் சிந்தனையும் இல் லாமல் தத்துவங்கள் படிப்பதற்கானவை என்பதாக மட்டுமே போய்விடும்.
சிறுகதைகள் குறித்து - ஞானம் லம்பேட்
சமுக நிகழ்வுகளை ஒரு தளத்தில் வைத்து அந்த நிகழ்வுகளுக்கு ஒரு உருவம் கொடுப்பதிலும் அவற்றைப் பல்லின ஆக்கங்கள் செய்வதிலும் எமக் குப் பெரிய பங்குண்டு. அது நாவலாகவோ, நாட கமாகவோ சிறுகதையா கவோ. இருக்கலாம். எங் களுடைய சமூகத்தில் நட க்கும் நிகழ்வுகளுக்குக் கொடுக்கப்படும் உருவங்க ளைத் தாங்கி வருவதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த ஆக்கங்களில் பொதுவாக எமது பண்பாட்டு வெளிப்பாடு இருக்கும். பண்பாடு என் பது ஒரு சமூகம் தனது வரலாற்றுப் படிமுறைகளி னால் உருவாக்கிக்கொண்ட ஜடப்பொருட்கள், ஆத் மீகக் கருத்துக்கள், மதநம்பிக்கைகள், சமூகக் கட் டுப்பாடுகள், அதன் பெறுமானங்கள் என்பவற்றினால் ஆக்கப்பட்டது. நான் இங்கு பண்பாட்டைப்பற்றிக் குறிப்பிடுவது ஏனெனில் பண்பாடு நிலையானது. அந்த சமுகத்தின் கட்டுமானங்களுடன் இணைந்து அதனோடு தொடர்புடையதாய் இருக்கும். இந்தச்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 27

Page 29
சமூகக் கட்டுமானங்கள், பெறுமானங் கள், பொருளாதாரம், அரசியல் கருத்து நிலைகள் என்பன ஒன்றி ணைந்து அதன் வெளிப்பாடாய் பொருளாதார நிலை ஒன்று ஏற்படும். அந்தப் பொருளா தாரநிலையில் ஒன்று சந்தைப் பொருளா தாரம். இந்தச் சந்தைப் பொருளாதா ரத்திலே சமூகநிலை வெளிப்பாடு உரு வாகிக்கொண்டு வருகிற பொழுது அது வெகுசனப் பண்பாடாகி அதனுாடு எழுத் தறிவு பரப்பப்படும். அந்த எழுத்தறிவு, கல்வியறிவு பரப்புவதில்தான் சிறு சஞ் சிகைகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலிகள். எல்லாம் பங்குபெறுகின்றன.
இவ்வகையில் புலம்பெயர்சூழலில் இருந்து பல நெருக்கடிகளின் மத்தியில் ஒரு சிறு சஞ்சிகையைத் தொடர்ச்சியாகக் கொண்டு வருவது என்பது மிகச் சிரமமான காரியம் என்பது யாவரும் அறிந்ததே.
இப்படியான சஞ்சிகைகளில் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதும் மிகவும் மெச்சத்தக்க விடயம்தான்.
உயிர்நிழல் 1% இதழில் நான்கு சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
1. செங்கல் - அ. முத்துலிங்கம்
நல்ல கற்பனை. ஆனால் இவர் மனைவியை அல் லது பெண்ணை எந்த வகையில் வைத்திருக்கின் றார்?
"இந்த வீட்டின் இடையீட்டினால் என் மனைவியின் இனவிருத்தி ஆசைகளெல்லாம் அழிந்துபோய்விட் டது." இரண்டு பேருக்குமிடையிலான பாலியல் உறவு இல்லை என்பதைச் சொல்லாமல் இனவிருத்திக்குத் தடை ஏற்படுகின்றதென்று சொல்கிறார். இங்கு அவர் மனைவியை இனவிருத்தி செய்யும் இயந்திரமாகப் பார்க்கும் பார்வை தெரிகின்றது. கடைசியில் அவர் கதையை இப்படி முடிக்கின்றார்."ஜன்னல் கம்பியைப் பிடித்தபடியே நின்றேன். தூரத்தில் ஒரு மலை தெரிந் தது. அது வெகு நேரமாக அங்கே இருந்தது. இயற் கைக் காட்சிகளையும் தூரதரிசனங்களையும் அது மறைத்தது. நாளைக் காலை முதல் வேலையாக அதை நகர்த்திவிடவேண்டும்." அது மனைவியா கத்தான் இருக்கலாம். ஏனென்றால் கதையின்படி மனைவிதான் இடையில் தடைக்கல்லாக இருக்கி றாள் அல்லது மனைவிக்காக வீடு கட்டும் ஐடியா வைத்தான் விடப்போகிறாரோ தெரியவில்லை. அது தெளிவாக இல்லை. ஆனால் எல்லாவற்றையும் அவ ளுக்காக விட்டுக் கொடுக்கிறேன் என்று சொல்வ தால் அது வீடு கட்டும் ஐடியாவையே விடுவதாக இருக்கலாம்.
2. வடிகால் - வசந்தி ராஜா
நல்ல கதை. சிறுகதைக்குரிய பக்குவத்துடன்
இது இருந்தபோதும்கூட சில கருத்துக்களில் முரண்
பாடு உண்டு. ஒருவரை ஒருவர் நேசிக்கும் இருவர்
28 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 

கணவன்-மனைவியாகாவிட்டாலும்கூட அதற்கான நெருக்கத்தில் இருக்கிறார்கள். இந்தநிலையில் அவள் மனம் பேதலிக்கிறாள். பேதலிப்பது எங்களுடைய ஆட்களுக்கு இயற்கை. "சமூகத்தின் எதிர்பார்ப்பு ஒரு புறக்காரணியே. அதன் விளைவுகளுக் குப் பயந்து அகங்களைக் காயப்படுத் திக் கொள்ள அவள் தயாராக இல்லை." இந்தக் கருத்து மிகவும் காத்திரமானது. ஆனால் பிறகு, கலியாணம் செய்வதை மறுத்துக்கொண்டிருக்கும் அதேவேளை அவள் சொல்கிறாள் "தாலி மட்டும்தானே கட்டாத குறை. இப்ப உள்ள நிலையில் நான் அவருக்கு என்ன குறை வைத்தேன்." தாலிகட் டினால் மட்டும் இருவருடைய வாழ்வும் நிறைவுபெற் றுவிடாது. இப்படியான சில காரணப்படுத்தல்களால் கதை சொல்ல வரும் நோக்கம் முறியடிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தாலி கட்டாமல் இருப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட காரணம் - தன்னுடைய வய துக்கு வந்திருக்கும் பெண்குழந்தையின் சுதந்திரம் பாதிக்கப்பட்டுவிடும் என்று. அவள் அப்படி எண்ணு வது பிள்ளையின்மீது கொண்ட கரிசனை. ஆனால் அவ்வளவு காலமும் நேசித்த ஒருவரின்மீது இப்படிச் சந்தேகம் கொள்ளலாமா? எல்லா ஆண்களும் அப்ப டித்தான், எனவே பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்னும் சந்தேகமான பார் வை. இப்படியான முரண்பட்ட பார்வைகள் உள்ளன.
3. காதல் என்பது எதுவரை - அர்விந்அப்பாதுரை -
இது மிகவும் சாதாரணமான ஒரு கதை.
4. முடிவுகளில் பிறக்கும் நியாயங்கள் - ரதன்
நல்ல கதை. சிறிய கதைக்குள்ளேயே நிறையக் கருத்துக்களைச் சொல்ல முனைகிறார். தற் கொலை செய்ய எண்ணும் ஒருவரின் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் என்ன என்பதை வேறு தற்கொலை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கிறார். அவருடைய இள மைக்காலத்தில் - ஒன்றுக்கும் உதவாதவன் என்று அனைவரும் அவரைக் கிண்டல் செய்ததனால் ஏற் பட்ட தாழ்வுணர்ச்சியின் விளைவே இந்த முயற்சி வரை கொண்டு வந்திருக்கின்றது. இது சரியான கார ணம்தான்.
ஆனால் முடிவுடன் ஒத்துப்போக முடியவில்லை. பிறகு அவர் கலியாணம் செய்து மனைவி குழந் தையுடன் இந்த நண்பனைப் பொதுவிடமொன்றில் சந்திக்கும்போது, தற்கொலை முயற்சியில் ஈடுபட் டவரின் மனைவி மகனை "பேயா! நரேன் பந்தைப் பறிக்கக் குடுத்திட்டுப் பார்த்துக்கொண்டு நிற்கி றான்" என்று திட்டுகிறாள். இப்படிப்பட்ட காரணங் களால்தான் தான் பாதிக்கப்பட்டேன் என்று விளங் கிக்கொண்ட ஒருவர் தன் மகனை இப்படி வளர்க்க முடியுமா? என்பது கேள்வி.

Page 30
உயிர்நிழல் -2இல் வெளிவந்த கதை கள்
1. வெளி-வாசல்-காமன் வசந்தன் குளிர்நாடன்
பின்நவீனத்துவத்தைச் சாடி அல் லது அதோடு ஒத்துப்போகாதமாதிரி எழுதப்பட்ட கதை. படிக்க ஆர்வத் தைத் தூண்டவில்லை.
2. சதுரங்கம் - வசந்திராஜா இங்கு நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை வைத்துக்கொண்டு எழு தப்பட்ட கதைபோல் தெரிகிறது.
ஒரு பெண் திருமண பந்தத்திற்காக இலங்கை யில் இருந்து இங்கு வ்ந்து சேருகிறார். எழுத்து, வாசி ப்பு என்று தன் விருப்புகளை வைத்திருக்கும் இப் பெண், முதன்முறையாக தான் சேர்ந்து வாழப்போ பவரின் வீட்டிற்கு வந்ததும் யோசிக்கிறாள், நானும் அவரும் சேர்ந்திருக்கப்போகும் இடம். இதை அலங் காரப்படுத்துவதற்கு முதலில் என்னையும் அபிபபிரா யம் கேட்பதற்கு சிறிது பொறுத்திருந்திருக்கலாமே என. பின்பு கணவனை விட்டுப் பிடிப்போம் என்று எண்ணி, அவள் வெளியே வேலைக்குச் செல்வது அவருக்குப் பிடிக்கவில்லை என்று அவரைத் திருப் திப்படுத்துவதற்காக வீட்டிலிருக்கிறாள். இரவு வேலை சென்று அதிகாலையில் வீடு திரும்பும் கணவ னுடன் இருக்கும் அவள், அதிகாலையில் எழுந்து கவிதைப்பிரசவத்துக்காய்பறவைகள் ஒலிஎழுப்பும் சமயம் உலாவச் செல்கிறாள். இவைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று முரண்பட்டுத் தெரிகின்றன. கடை சியில் அவளுடைய கணவனின் நண்பனுக்குத் திரு மணம் நடந்து அவர்கள் ஒருநாள் இவர்கள் வீட்டிற்கு வந்திருந்த பொழுது நண்பனின் மனைவி தங்களால் இவ்வளவு ஆடம்பரமாக வாழ முடியவில்லையே என் றும் அவர் புத்தகம் இலக்கியம் என்று வாழ்கிறார் என்றும் ஆதங்கப்பட்டுக்கொண்டு அழ அவளுக்கு ஆதரவாக இந்தப்பெண் அவளை அணைத்துக் கொள்கிறாள். இது எந்த வகையான ஆதரவு என்று விளங்கவில்லை.
இப்படியான logic இல்லாத முரண்பாடுகள் சில நல்ல கதைகளுக்கு இடைஞசலாக இருக்கின்றன.
3. நதி -சக்கரவர்த்தி நல்லதொரு நாடகம் பார்த்தமாதிரியான உண ர்வு ஏற்பட்டது. வாசிப்பு நிலையில் இருந்து கதை சொல்லிய இடத்திற்கே சென்று வந்ததுபோல் இருந் தது. எனக்குப்பிடித்த மிக நல்ல கதைகளில் இதுவும் ஒன்று.
4. சா விளைச்சல் - சிவலிங்கம் சிவபாலன் இலகுவான கதை. நல்ல நடையோட்டத்தில் கொண்டு செல்கிறார். இலங்கையில் நடந்த நடந்து கொண்டிருக்கிற கதை. எனக்கு இதில் நேரடி அனுப வமில்லாதபோதும் பூநகரிக்கு என்னைக் கூட்டிச் சென்றிருக்கிறார். எனக்கு நன்றாக ஒத்துப்போன கதை. பேரன் ஒருவர் கதை சொல்லக் கேட்டதுமாதி ரியான உணர்வு.
 

உயிர்நிழல் - 3 இல் வெளிவந்த கதை கள்
1. அன்னங்களும் பட்சிகளும் நெய்யப்பட்ட ஒரு ரோஜா வண்ணப் புடவை - அம்பை
பெண்ணினுடைய மனம் என்ன மாதிரி
யாக மெல்லிய உணர்வுகளைக் கொண் டுள்ளதென்பதைக் காட்டுகிறது. 2. பூர்வீகம் - அ முத்துலிங்கம்
சாதாரண ஒரு கதைதான். பிரான்சு தேசத்தில் நடந்த கதையாக எழுதி இருக்கிறார். முன்னைய கதை போல் இல்லாவிட்டாலும் பரவா யில்லை.
3. செந்தட்டி - நா. கண்ணன்
வெளிநாட்டில் படித்த பெண் எங்களைப் போன்ற முன்றாம் உலக நாட்டில் இருக்கும் ஒரு பையனுடன் இணைந்து தன் ஆதங்கங்களை வெளிப்படுத்தி, வெளிநாட்டுக் கலாச்சாரங்களால் தாக்கமடைந்து அதை இங்கேயும் காட்ட வெளிக்கிட்டு, அந்தத் தன்மை எப்படி எங்களுடைய கலாச்சாரத்துக்குப் பொருந்தாது என்பதைக் காட்டும் கதை. நல்ல வடிவாக கொண்டு செல்கிறார். பத்தைகளுக்குள் போய்விட்டு வரும்போது காஞ்சோண்டி பட்டு சிறுநீர் விட்டு எரிச்சல் தணிக்கிறான்.
உயிர்நிழல் 4 இல் வெளிவந்த கதைகள்
1. அவன் அப்படித்தான் . சுமதி ரூபன்
சுமதி ரூபனுக்கு இவ்வளவு துணிச்சலா என்று திகைத்துவிட்டேன். துணிச்சலுக்குத் தலை வணங் குகிறேன். இது ஒரு gay பற்றிய கதை.
2. வித்து - வசந்தி ராஜா
அமைப்பு, உருவம், ஒழுங்கு என்பன நல்லாய் இருக்கிறதோ தெரியாது. ஆனால் logic இல்லாமல் இருக்கிறது. தொடர்ந்து கனவில் வரும் ஒரே மாதி ரியான முகத்தை வைத்துக்கொண்டு அவள் தான் ஒரு இராணுவவீரனால் பாலியல் வல்லுறவுக்கு உட்ப டுத்தப்பட்டு விட்டதாக தீர்மானமாக முடிவெடுப்பது logic ஆக இல்லை. சம்பவம் முக்கியமானது தான். இப்படியான விடயங்களை (ஒரு குழந்தை குறிப்பி டப்படும் தாய் தந்தைக்குத் பிறந்ததா என்பதை) விஞ்ஞானரீதியாக அறிவதற்கு வசதிகள் இருக் கும்போது சாட்சிகள்/தடயங்கள் இல்லாமல் காட்டு வது சரியானதாகப் படவில்லை. குழப்பமாக உள் ளது. இப்படி உறுதியற்ற ஒரு விடயத்தைக் கணவ னிடம் கூடச் சொல்லுவதற்கு முடிவெடுக்கிறாள்.
3. அம்மாவின் நண்பன் . வினோதன்
இடைஞ்சலில்லாத சீரான கதை. பெண்கள் எப் படி ஆண்களால் (தகப்பன்/கணவன்) அடிமையாக் கப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கூறி, பெண்ணின் (அம்மாவின்) சுதந்திரம், நுண்ணிய உணர்வுகள் எப்ப டிக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதைச் சொல்கி
றார.
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 129

Page 31
தமிழவனின் பேட்டி குறித்து: V தமிழவன் எங்களைப்பற்றிச் சொல் லும்போது, இந்திய எழுத்தாளர்களைப் பேசி எங்களை நல்ல மாதிரிச் சொல்கி றார். தமிழவனுக்குத் தெரியவேணும் நாங்கள் புலம் பெயர்ந்து இருப்பதற்கும் இந்தியத் தமிழர்கள் இங்கு இருப்பதற் கும் பாரிய வேறுபாடு உள்ளது. அங்கே ஒருவரையும் பிடித்துக் கலைக்கவில்லை. அ.மார்க் ஸ"ம் ரவிக்குமாரும் இங்கு ஓடி வரவில்லை. (எங்களு டைய ஆட்கள் எல்லாரும் அப்படியும் இல்லை. நாங் கள்தான் ரஜனிகாந்தைச் சந்திக்க 100$ கொடுத் ததும் நதியாவுக்கு கைகுலுக்க 100$ கொடுத்ததும்) சமுகப் பிரக்ஞை கொண்ட ஒரு சிலர்தான் எங்கும் இருக்கிறார்கள்.
மேலும் சிவசேகரம், கைலாசபதி எல்லாரையும் தூக்கி எறியும்படி தமிழவன் சொல்கிறார். இதற்கு மாற்றாக எதனை முன்னுக்கு வைக்கிறார். இவர்கள் இலக்கியச்சூழலில் இன்னும் இருந்து கொண்டிருப் பவர்கள். இவர்கள் மீதான விமர்சனம் என்பது வேறு.
V இன்னும் தமிழர்களுக்கு என்று ஒரு பொதுப் பண் பாடு உருவாகும் என்று எந்த அடிப்படையில் தமிழ வன் சொல்கிறார் என்பது புரியவில்லை. புலம்பெ யர்ந்து வாழும் நாடுகள் ஒவ்வொன்றிலும் வாழும் தமி ழர்கள் அந்தந்த நாடுகளுக்கேற்ற வகையில்தான் அவர்களுடைய வாழ்க்கைத் தன்மை செயற்பாடு கள் எல்லாம் அமைந்துள்ளன. இவற்றில் எங்கு பொதுப் பண்பாட்டை, தன்மையைக் கண்டுபிடிக்கப் போகிறார் என்பதுதான் விளங்கவில்லை. தமிழருக் கென்று ஒரு பண்பாடிருப்பது வேறு. புலம் பெயர்ந்து வாழுபவர்களுக்கென்று ஒரு பொதுப்பண்பாடு எப்படி வரமுடியும் என்பது மிகவும் கேள்விக்குரிய பிரச் சினை. Vதலித் இயக்கத்தை வர்க்கமாகப் பார்க்காமல் ஒரு பண்பாடாகப் பார்க்கவேண்டும் என்று தமிழவன் சொல்கிறார். வர்க்கம் இல்லாமல் தலித்துகள் எல் லோரையும் ஒன்றாகக் காண்பதும் தவறு அல்லது வர்க்கமாக மட்டும் காண்பதும் தவறு.
V உயிர்நிழல் - 4 இல் வந்த யமுனா ராஜேந்திர னின் கட்டுரை தேவையில்லாத விடயம். மார்க் சினதும் மாவோவினதும் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள தொடர்புகள்பற்றி. இப்படியான விவாதங் கள் ஆரோக்கியமானதல்ல. மார்க்சியம் பற்றிய விவாதம் என்பது வேறு விடயம். இது அப்படிப் பெரிய சர்வதேசப் பிரச்சினை என்றால் அந்தக் கைநூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டியது தானே? பிறகு அது கைநூலா அல்லது துண்டுப்பிர சுரமா என்று அடிபட்டுக்கொண்டிருக்கத் தேவை யில்லை. ஆசிரியர்கள் இது போன்ற விடயங்கள்
30 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 
 

குறித்து கவனம் எடுக்கவேண்டும். V உயிர்நிழல், சிறுசஞ்சிகைக்கான சகல விடயங்களையும் கொண்டிருப் பதாகத் தெரிகிறது, வடிவமைப்பு உட் பட, மேலும் விவாதங்கள் தொடரவேண் டும். எதைப்பற்றி என்பது முக்கியமல்ல. விவாதங்களின் மூலம்தான் பலதரப்பட்ட கருத்துக்களையும் அறிந்துகொள்ளக் கூடிய வாய்ப்பிருக்கிறது. V சாருநிவேதிதாவின் கருத்துக்கள் எல்லாம் ஆணாதிக்கத்தின் எல்லையில் நின்று வருவதாக இருக்கின்றன. அவர் புதுமை என்று நினைத்துக்கொண்டு ஏதோ எல்லாம் எழுதுகிறார். அவைகள் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இல்லை. V உயிர்நிழல் - 4இன் அட்டைப்படத்தைப் பார்த்து விட்டு உள்ளுக்குள் ஏதாவது அது சம்பந்தமாக இரு க்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான்.
புலம்பெயர் இலக்கியமும் உயிர் நிழலும் - செல்வம்
உயிர்நிழல் என்னும் பெயர் மிக்க கவித்துவ மானதும் காத்திரமானதும். சினிமாப் பாடல்களில் உயிர், நிழல் என்ற பதங்கள் சீரழிந்து போய்விட்டன. எப்படித்தான் இப் பதங்கள் சீரழிந்தாலும் கவிஞர் களும் படைப்பாளிகளும் இதற்கு மாற்றுப் பதங் களைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள். இச் சொல்லைக் கண்டுபிடித்த கவிஞனுக்கோ படை ப்பாளிக்கோ பாராட்டுக்கள். உயிரின்நிழல் அல்லது நிழல் கொண்ட உயிர். இந்த நிழல் உயிர் கொள் ளுமா என்பதை இனிவரும் காலங்களில் பொறுத் திருந்துதான் பார்க்கவேண்டும். ஏனெனில் இது ஒரு நல்ல சஞ்சிகை என்று நாங்கள் அபிப்பிராயம் தெரி விப்பதற்கிடையில் அந்தச் சஞ்சிகை நின்று போய் விடுகிறது. நின்று போய்விட்டது என்று நினைக் கும்போது திரும்பி வருகின்றது. நாலுபேர் சேர்ந்து செய்யும் சஞ்சிகை இரண்டு மாதத்திற்குள்ளேயே மூன்றாகப் பிரிந்து விடும்.
உயிர்நிழலின் படைப்புகள்பற்றியோ படைப்பா ளர்கள்பற்றியோ இங்கு பேசவில்லை.
எக்ஸில் அல்லது உயிர்நிழல் போன்ற சஞ்சிகை களின் வருகையின் நோக்கம், வருவதற்கான கார ணங்களின் பின்னணி குறித்துப் பாரக்கிறேன்.
எண்பதுகளின் ஆரம்பத்தில் சீரிய இலக்கியங்க ளிற்குத் தாயகமாக இருக்கும் பாரிஸில் இருந்து 'தமிழ் முரசு' என்ற பத்திரிகை ஐந்து ஆண்டுகளாக, மாதமொருமுறை, ஒரு மாதமும் தவறாமல் வெளிவந் தது. இதுதான் தேசவிடுதலைப் போராட்டத்தையும் மார்க்சியத்தையும் இணைத்த முதல் சஞ்சிகை. 8586களில் மொன்றியலில் இருந்து'பார்வை என்று ஒரு இலக்கியச் சஞ்சிகை, அதற்குப் பிறகு ஜேர்மனியில் இருந்து 'தூண்டில், சுவிஸில் இருந்து 'மனிதம் போன்ற சஞ்சிகைகள் வெளிவருகின்றன. அதே சம யம் நோர்வேயில் இருந்து'சுவடு என்ற சஞ்சிகையும் நீண்ட காலமாக வந்துகொண்டிருந்தது. இந்தக்

Page 32
காலத்தில் பெரும் அலையாக இலக்கியம், அரசியல் என்று ரொறன்ரோவில் இருந்து 'தாயகம்' வெளிவந் தது. இந்த இலக்கியச் சஞ்சிகைகள் எப்படி இருக் கவேண்டும் என்பதற்கு 'பணிமலர் நல்ல உதாண மாகத் திகழ்ந்தது. இதே காலகட்டத்தில் 'ஒசை, 'மெளனம்', இன்னும் பெயர் குறிப்பிடப்படாத சில பத் திரிகைகள் வந்திருக்கின்றன. 'எக்ஸில்'. 'உயிர் நிழல்'இன் தோற்றத்திற்கும் இந்தச் சஞ்சிகைகளின் வரவுகள் காரணமாயிருந்திருக்கின்றன. இது வெளி விடயம் சார்ந்தது.
பத்திரிகைகளின் உள்ளடக்கத்தை எடுத்துக் கொண்டால் அது எப்படி மாறுபடுகின்றதென்றால், யதார்த்த இலக்கியம் அலுப்புத் தட்டியபோது நவீ னத்துவம், நவீனத்துவம் அலுப்புத் தட்டியபோது புதுக் கொள்கைகள் வந்தன - பின் அமைப்பியல், பெண்ணியம், தலித்தியம், பின்நவீனத்துவம். இவை கள் விமர்சனத்தோடும் சிந்தனையோடும் சம்பந் தப்பட்ட அளவு வாழ்க்கைக்கும் படைப்பு வெளிப் பாடுகளுக்கும் முக்கியத்துவம் பொருந்தி இருக்க வில்லை. இதை எதிர்கொள்வதற்கும் மற்றவர் களிற்கு விளங்க வைப்பதற்கும் புலம்பெயர் இலக்கி யத் தமிழர் காட்டிய அக்கறையே எக்ஸில் - உயிர் நிழல் சஞ்சிகைகளின் உள்ளடக்கம்.
பீம் சேனா என்ற தலித்திய அமைப்பின் தலை வரும், பாண்டிச்சேரி தலித் இயக்கங்களின் கூட்ட மைப்பின் அமைப்பாளருமான திரு. பூமுர்த்தி அவர் கள் எம். அரியநாயகம் அவர்களின் "அறுவடை நாட கநூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு பாரிஸ் வந்திருந்தார்.
இங்கு அவர் பல்வேறு கலை இலக்கிய நண்பர் களைச் சந்தித்தார். டாக்டர் அம்பேத்கார் தொடர் பாக ஆழ்ந்த தேடலும், ஆழ்ந்த பற்றும் கொண்டி ருக்கும் பூமுர்த்தி அவர்களிடம் இருந்துமார்க்சியம்,
கனவின் மீதி.
கி. பி. அரவிந்தன் கவின்தகள்
"குழந்தை தோளில் சரிகிறது நெஞ்சுள் எதோ குமைகிறது
'நீங்கள் அகதியானது உங்களுக்குச் சரி
எனினை ஏனர் அகதியாக்கி
ജ്ഞ39ബr('.'
மழபற்றி எழுகிறது கேள்வி"
பொன்னி 29 கண்ணகி தெரு மடிப்பாக்கம் சென்னை - 600 091
 
 

புலம்பெயர் இலக்கியத்தினுடைய நோக்கம் என்ன? அது என்ன செய்கின்றது? * இலங்கை அரசின் ஒடுக்குமுறை, இன அழிப்பை வெளிப்படுத்துதல்
ஈழப்போராட்டத்தின் நியாயத்தை, உணர்வுச் செழு மையை படைப்பிலமாக, கட்டுரையாக, கவிதையாக வெளிப்படுத்துதல் * புகலிடத்தின் புதிய சூழல் தரும் அனுபவங்களை வெளிப்படுத்துதல்; இழந்துவிட்ட நாட்டின் துயரை, உறவுகள் பற்றிய பிரிவைப் பேசுதல்
இதற்கும் மேலாக இங்குள்ள அச்சுறுத்தல்கள் பற் றிப் பேசுதல், இதைவிட சாதாரணமான வாழ்க்கை நடைமுறை, குடும்பச்சூழல் இவைபற்றிப் பேசுதல்
படைப்புத் தோன்றிய காலம், சூழல் இவற்றுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவனும் வாசித்து அதைத் தன் அனுபவமாகக் கொள்ளும்போதுதான் அந்தப் படைப்பு வெற்றியளிக்கின்றது.
இலக்கியத்தின் பெயராலும் மனிதநேய விழுமி யங்களின் பெயராலும் விரோத சக்திகளுக்கும் நேச சக்திகளுக்கும் வேறுபாடு தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் புலம்பெயர் இலக்கியச்சூழலை ஆரோக்கியமான திசையில் நகர்த்துவதற்கு இப்படி யான காத்திரமான கலந்துரையாடல்களும் விமர்ச னப்போக்குகளுமே வழிவகுக்கும். O
அம்பேத்காரியம், பெரியாரியம் தொடர்பாகவும் தலித் அமைப்புக்களின் இன்றைய செயற்பாடுகள் தொடர் பாகவும் பல்வேறு கருத்துக்களைப் பெறமுடிந்தது.
"டாக்டர் அம்பேத்கார் சமூகத்தின் இரண்டு எதிரி களை அடையாளம் காட்டினார். அவை பிராமணியம், முதலாளியம். ஆகவே இந்த பிராமணியத்தையும் முதலாளித்துவத்தையும் எதிர்க்கக்கூடிய தத்து வங்களை ஒன்றிணைத்து தலித்திய இயக்கங்கள் கட்டமைக்கப்பட்டு செயற்படவேண்டும். இந்த அடிப்ப டையில் தலித் மக்களுக்காக அவர்களின் விடிவுக் கான வழிகாட்டிகளை உருவாக்கியவர் அம்பேத் கார். அவருடைய கொள்கைகளும் கோட்பாடுக ளுமே தலித் மக்களின், தலித் இயக்கங்களின் வழிகாட்டியாக அமையமுடியும்" என்றார். மேலும் "டாக்டர் அம்பேத்காரின் பணி இரு பெரும் நோக் கங்களைக் கொண்டு முன்னெடுத்துச் செல்லப்ப டுகின்றது. ஒன்று சமுக அல்லது மனித உரிமைக் கான போராட்டம். மற்றையது அரசியல் விடுதலைக் கான போராட்டம். இந்த இரு போராட்டங்களை முன் னெடுப்பதன் ஊடாக மாத்திரமே இன்றைய ஒடுக்க ப்பட்ட வறிய தலித் மக்களின் விடுதலையைப் பெறமு டியும் என நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
இவருடனான கலந்துரையாடலில் தமிழக-பாண் டிச்சேரி தலித் மக்களின் வாழ்நிலைகள், அவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், துயரங்கள், போராட்ட எழுச்சிகள், தலித்திய அமைப்புகளின் செயற்பாடுகள், கட்சிகள், சாதிச்சங்கங்களின் போக்குகள் பற்றி நிறைய அறியமுடிந்தது.
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 31

Page 33
Ondon Saturday Review Guardian eging,5)Ugal (Gutu L பக்க profileக்காக பிரசித்தி பெற்றது. சமகால அரசியல், சித்தாந்த தளங்களில் பங்களிப்புச் செய்தவர்கள் பற்றிய மிகவிரிவான கட்டுரை அதில் இடம்பெறும், மையநபரின் இளமைக்காலம் முதல் அவரது ஆளுமை, பங்களிப்பு என அனைத்தும் பற் நியதாக broad Sheetஇல் இரண்டுபக்கங்களில் அக் கட்டுரை இருக்கும். மிகவும் அரிதான புகைப்படங்க ளோடு, நடுப்பக்கத்தில் புகைப்படக்கலையின் உச்ச மான புகைப்படமொன்றும் இடம்பெறும். இதுவரை இடம்பெற்றவர்களில் ஹாப்கின்ஸ், ஹாப்ஸ்பாம், ஸ்ருவர்ட் ஹால், எட்வர்ட்ஸைத் போன்றவர்கள் ஒரு சிலர். டிசம்பர் 4, 1999இல் இந்த முக்கியமான பக்கத் தில் இடம்பெற்றவர் ஏ.சிவானந்தன் (ஏ.சிவானந்தன் பற்றிய விரிவான நேர்முகம் ஒன்று 'இன்னொரு காலடி தொகுப்பில் வெளியாகி உள்ளது). சிவானந் தன் இலங்கைத்தமிழர், Race and Class பத்திரிகை யின் ஆசிரியர். A World to Win என்றொரு தொகுப்பு, அவரது பங்களிப்பு பற்றியதான பிறரின் கட்டுரைக ளைக் கொண்ட தொகுப்புநூலாக சமீபத்தில் வெளி வந்திருக்கிறது. சமீபத்தின் மரணமுற்ற இக்பால் அக மது, அலிபாய் பிரவுண், சுவந்திரினி பெரேரா போன் றோரது கட்டுரைகள் அந்நூலில் இடம்பெறுகின்றன. இந்த Saturday Review வாழ்வுச்சித்திரம் இரண்டு வகைகளில் அமைகிறது. ஒன்று அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அனுபவங்கள்; மற்றையது அவ ரது எதிரிகளும் நண்பர்களும் அவர்பற்றிச் சொன்ன கருத்துக்கள் குறித்தது.
நாடகாசிரியரும் அவரது நண்பருமான டேவிட் எட்கார் (David Edgar) குறிப்பிடுகிறபோது, சிவானந் தன் இந்நிமிஷம்வரை இந்த அமைப்புக்கு விலை போகாததற்கான காரணங்கள் இரண்டு என்கிறார்.
1. அவர் இந்த நிறவாத சமுகத்தின் சமரச அமை ப்புக்களான பல்கலைக்கழகங்கள், Racial Equal
32 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 

யமுனா ராஜேந்திரன்
미. சிரந்தர் ர்களும் GğičCIJū
ity 0ோாl33ion போன்றவற்றில் பதவிபெற அலை யவில்லை. 2. தகவல் தொழில்நுட்ப சாதனங்களில் பேட்டிய எரிக்கிற அல்லது தோன்றுகிற பெரிய மனிதராக (media figure) ஆகிவிடவில்லை. இந்த இரண்டுமாக ஆகிவிடாததால்தான் சுயா 5TLD Tal, Race and class Institutiong bliga Glfoil வதோடு ஒரு இடைவிடாத போராட்டக்காரராகவும் இருக்கமுடிகிறது என்கிறார் எட்கார்,
நிறவாதிகளின் கையிலிருந்து Race Relation Instiபleஐ தன் கைவசம் கொண்டு வந்த நடவடிக்கை சிவானந்தனின் சாதுரியமான நடவடிக்கை என்கி றார் எர்ருவர்ட் ஹால் (Stuart Hal), புத்தகங்கள், சஞ்சி கைகள், சிறுபிரசுரங்கள், கோப்புகள், விலாச அட்டைகள், தொடர்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு - அவர் சிரமப்பட்டுச் சேகரித்த ஆவணங் கள்-நகரத்தின் முக்கியமற்ற பகுதிக்கு நகர்ந்தார் என்கிற ஹால் ஒரு சிலரே அந்தச் சம்பவங்களை அறிவோம் என்கிறார்.
National Civil Rights Union:36:37 (CFL usiLIITLI TG77 ரான சுரேஷ் குரோபர் சிவானந்தனின் எழுத்துக்கள் தன்னை ஆகர்ஷித்தன என்கிறார். சிவானந்தனின் பல்வேறு கட்டுரைகள் போட்டோகொப்பி பிரதிகளா கவே பலகாலம் கைமாறிக் கொண்டிருந்தது. எண் பதுகளில் தான் அவரது எழுத்துக்கள் WER30, PLUTC) பதிப்பகங்களால் நூல்வடிவில் கொண்டு வரப்பட்டன. (A Different Hunger. Pluto, 1982, Writings on Black Struggle for Socialism: Werso/ 1990)
Post-Fordism, globalisation, P5ugz5NHésir SLÜ பெயர்வு போன்றவை குறித்த இவரது அரசியல் கருத் தாக்கங்களின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள் ரூம் விமர்சகர்கள், சமகால வளர்ச்சி உரையாடல் கள் குறித்து இவர் புதிதாக எதையும் சொல்ல வில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள். சிவானந்தனின்

Page 34
பங்களிப்புகள் நிச்சயமாக எழுபதுகளில் பங்களிப் புச் செய்தது என்கிறார். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பிரபல கறுப்புக் கல்வித்துறையாளர்,
மனப்பகுப்பாய்வு (pshyCo-analysis), கலாச்சார ஆய்வுகள் (Cultural studies), பெண்நிலைவாதம் (Feminism) போன்றவற்றைக் குறித்து அவர் அக்க றைப்படுவதில்லை என்கிறார்அவ்விமர்சகர். அதைப் போலவே கலாச்சார மற்றும் மத அடையாளம் குறி த்து அவர் குறைத்து மதிப்பிடுவதாகவும் அஸ்மின் அலிபாய் போன்றோர் குறிப்பிடுகிறார்கள். இலக்கி யம், கவிதை,TS எலியட், பீத்தோவன், எபீபர்ட் என்று ஆழ்ந்துபோகும் சிவானந்தன் சொல்கிறார் நாம் நிறைய எழுத்தாளர்களைப் படிக்கிறோம். ஆனால் பாருங்கள், அவர்கள் அநீதிபற்றி ஏகாதிபத்தி யம்பற்றி எதுவும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு கோபத்தில் அல்சர் வந்துவிட்டது.
When memory Dies 6.Tgfu fosily T537ËTÉir g5sŮČIL டுகிறபோது "நான் நாவலாசிரியன் இல்லை, கதை சொல்லிதான் (story teler) என்கிறார். இலங்கையின் மூன்று தலைமுறையினர் பற்றிய வரலாற்று நாவல் When Memory Dies. Sisir LFJSTSi Sså SIAT 5 st Bür போனபின்பு குழந்தைகளை வளர்க்கிறதன் முலம் 51 ibi) LDITjioli e-mail
'கார்ல் மார்க்ஸால் e-mail அனுப்பக் கூடிய நிலைமை இருந்திருக்குமானால் வரலாற்றின் திசை வழியே வேறாக இருந்திருக்கும்' என்கிறது பிபிசி ஒன்லைன் விவரணம்.
கடந்த ஜூன் 18ம் தேதியும் நவம்பர் 30ம் தேதியும் உலகம் இரண்டு வித்தியாசமான எழுச்சிகளைக் கண்டது. இங்கிலாந்தின் இலண்டன் நகர மும் அமெரிக்காவின் சியாட்டில் நகரமும் குலுங்கியது. மேற்கத்திய அரசுநிறுவனங்களின் கண்ணாடி யன்னல்கள் சிதறின. கட்டிடங்கள் எரிந்தன. பில் கிளின்டன் பதறிப்போனார். 135 நாடுகளின் வியாபா Jl Gujadiasi (WTO -World Trade Organisation) எய்தம்பித்துப் போயின. தோல்வியுமடைந்தன.
மார்க்ளபியர்கள், மனித உரிமையாளர்கள், சூழ லியலாளர்கள், அராஜகவாதிகள், பெண்ணியவாதி கள் அனைவரும் வறியநாடுகளைச் சுரண்டாதீர்கள், சுற்றுச் சூழலை நாசம் செய்யாதீர்கள் என்று ஒன்று திரண்டார்கள். முதலாளித்துவ எதிர்ப்பு நிறுவனங்கள் அனைத்தையும் தகர்த்தெறிவது
SSSNEŠ, * 8. iš
ت
క్స్టి
| SSSRN
 
 
 

தான் பெண்ணாக உணர்ந் தேன் என்கிறார் சிவா னந்தன்.
bi 3L u Tgħi Where The Dance Is எனும் பெயரில் சிறுகதைகளைத் தொகு த்து வெளியிட உழைத் துக்கொண்டிருக்கிறார். சிவானந்தனின் நண்பரும் கலை விமர்சகருமான (gTsäT GLJigsĩ (John Berger) குறிப்பிடுகிறார்:
'சிவா ஒரு கவி சிவா 0ண ஒரு அரசியல்வாதி, சிவா ஒரு கதைசொல்லி சிவா ஒரு உபசரிப்பாளன் வெற்று அரசியலில் சிவா எப் போதுமே வீழ்ந்த தில்லை. உருக்கு ஆலைத்தொழி லில் ஈடுபடுபவன் போன்றவன் சிவா'என்கிறார் தனது நண்பர் பற்றி பெர்ஜர்
Race and Cla83 காலாண்டு இதழ் பற்றிய அல்லது அவரது நூல்கள் பற்றிய விபரங்களுக்கு: INSTITUTE OFRACERELATIONS
2-6 Leeke Streets King's Cross Road Londo WC1X 9H5, U.K.
என்பதுதான் அவர்களது கோஷமாயிருந்தது. எது வும் தனித்ததில்லை அனைத்துமே தொடர்புபட்டது என அறிவித்தார்கள். முலதனத்தின் உலகமயமா தலுக்கு எதிராக உலகமயமான இயக்கத்தை கட்டி எழுப்புவதுதான் தமது கருத்தியல் என்றார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதே தெரியாமல் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் சுடினார்கள். இவர்கள் வருவதை CIAயோ M15 உளவு நிறுவனமோ முன்கூட்டியே அறியமுடிய வில்லை. இலண்டனில் 5000பேர் கூடினார்கள். சியா ட்டிவில் 100,000பேர் கூடினார்கள், 8-mail மூலமே இவர்களுக்குச் செய்தி கிடைத்தது. "Websiteக்கு எவரும் போகலாம். e-mail தனிப்பட்ட முறையிலா னது. இது எம் ஆயுதம்" என்கிறார் இங்கிலாந்தின் sch News Website நிறுவனரும் அராஜகவாதியுமான நடவடிக்கையாளர். இந்த ஆர்ப்பாட்டம் உலகு தழு விய எழுச்சி யொன்றின் தொடக்கம் என்கிறார் L0ாdon Evening Standard ugi gryfsfusisir - JIT-flussü விமர்சகர்.
இன்டர்நெட் வசதியுள்ளவர்கள் 18 or N30 போன்ற Websiteகளுக்கு போய் ஆரம்ப விபரங்கள் அறியலாம்.
உயிர்நிழல் 0 நவம்பர் டிசம்பர் 1999 33

Page 35
சனமற்று இருக்கைகள் வெறுமையாய்க் கிட ந்தன. அடுத்த தரிப்பில் ஏறிக்கொண்ட ஒருத் தன் சுற்றுமுற்றும் பார்த்து உயிர்ப்பற்றுக் கிடந்த இருக்கைகளைத் தவிர்த்து என்முன்னே வந்திருந் தான். அலுப்புத் தரப் போறான் பாவி. நானும் இன்னும் நாற்பது நிமிடமாதல் கடத்தியுமாகவேண்டும்.
ஒரு நிமிடம்கூட ஆகி இருக்காது. மெலிதாய்ப் புன்னகைத்தவாறே உன் ஒரிஜின் (origine) என்ன என் றான். எடுத்த எடுப்பிலேயே எனக்கு எரிச்சல் வந்தது. இந்தக் கேள்வி எப்போதும், எனது நிறமும் எனது முக அமைப்பும் இல்லாத ஒருவரிடமிருந்துதான் எழு கிறது. அது உடனே அவன் என்னை அந்நியமாக, தாங்கள் அல்லாதவனாக, இந்த இடத்திற்கு சம்பந்தமில்லாதவனாகவோ பொருத்தமில்லாதவ னாகவோதான் பார்க்கிறான் என நினைத்தவுடன் எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. கோபம் என்பது அநாகரிகமானது. கோபத்தின் வெளிப்பாடு அனைத்துமே அராஜகம் என்று ஆகி விட்டதால்"உனக்கேன் உந்தக் கேள்வி?" என்பதை யெல்லாம் மனதோடு நிறுத்திவிட்டு "லெமுரியா" என்றேன்.
அவன் "லெமுரியா?" என்று இரண்டு முன்று தட வைகள் கேட்டு ஆச்சரியப்பட் டான். நான் அப்படிச் சொன்னத ற்கு எனக்குக் கோபம் வந்தது மடடுமல்ல, அலுப்புத் தருமளவு நேரம் இருந்ததும் ஒரு காரணம்தான்.
"அவன் அது எங்கே இருக்கிறது" என்றான். "சந்திர மண்டலத்தில்." "சும்மா விடாதை. லெமூரியா? அப்படி ஒரு நாடே நான் கேள்விப்படவில்லையே" என்றான்.
"உண்மைதான். இப்ப அப்படி ஓர் இடமே இல்லா மற்போய்விட்டது. அதனால் எனது ஒரிஜினும் இல்லா மற் போய்விட்டது." சற்று இடைவெளிவிட்டு"எது எப் படித்தான் ஆனாலும் ஒரிஜின் இல்லாமற் போய் விடுமா, என்ன?" என்று அவனைத் திருப்பிக் கேட் டேன். நான் மிகவும் ஹாஸ்யமாக கதைப்பதாக அவன் புரிந்து கொண்டாலும் "நாடு இல்லாமற்போ குமா என்ன.நிலந்தானே அது எப்படி அழிந்து படும்" என்றான்.
அவனும் என்னை விடுவதாக இல்லை. வேறு யாராவதாக இருந்தால் இவனுக்கு மூளை சரி யில்லை என்று எனக்குச் சொல்லாமல் தனக்குள் எண்ணிக்கொண்டு போயிருப்பார்கள்.
"ஆபிரிக்காவும் இந்தியாவும் அவுஸ்திரேலி யாவும் ஒன்றாய்ப் பிணைந்திருந்தபோது அந்தக் கண்டத்தை லெமுரியா என்றுதான் அழைத்தார்கள்.
p லத்தடி ரயிலுள் ஒரு இராப்பொழுது, அதிக
34 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 

அங்கேதான் மனிதன் முதன்முதலாக தோன்றி இருக்கலாம் என்கிறார்கள். அதுதானே எனது ஒரிஜி னாக இருக்க முடியும்?" என்றேன். "அப்படிப் பார்த் தால் எனது ஒரிஜினும் அதுதான்."
"ஏன் எல்லார் ஒரிஜினும் அதுதான்" என்றான். "நல்லதுதானே" என்றேன். அவனுக்குத் திருப்தியளிக்கவில்லைப்போலும். "அதை விடு. நீஎந்த நாட்டில் இருந்து வந்தாய்?" எனறான.
"ஏன் உனக்கு ஒரிஜின் என்பது தேவை இல் லையா? அல்லது உண்மையைக் கண்டுபிடித்துவிட் டாயா?அல்லது வேறு வழியால் உண்மையைத் தேடு கிறாயா?" என்றான்.
"இல்லை. இன்னும் தேடுகிறேன்" மீண்டும் "சந்திர மண்டலத்தில்" என்றேன். அவனுக்கு உண்மையாகவே விசர் வந்துவிட்டது போலும்,
"உனக்கு விசர்" என்றான். "உண்மைதான். பற்றிக்கொள்வதற்கு ஒன்றுமில் லாமல் அந்தரத்தில் நின்றால் அது விசர்தான்" என் றேன்.
"நீஏன் உள்ளதைச் சொல் லத் தயங்குகிறாய்" "உள்ளதைச் சொல்லுவதற்கு உண்மையில் எது O O வும் இல்லாததால்தான் என்
"ஆயினும் உனக்குச் சொல் வதில் என்ன. நான் இரண்டு பதில்களைச் சொல் லலாம். ஒன்று, எனக்கு நாடு என்று ஒன்று இப்போ இல்லை அல்லது எனது நாடு இன்னும் உருவாக வில்லை"
அவன் இப்போது கொஞ்சம் சீரியசாக ஆர்வமாக இருந்தான். எனது முகமும் சிரிப்பைத் தொலைத்தி ருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
"சரி ஒன்றும் வேண்டாம். நீ எந்த நாட்டில் பிறந் தாய்?அதை முதலில் சொல்லு. மிச்சத்தைப் பேந்து d565.
அவனும் பொறுமையை இழந்துவிட்டான்போல் பட்டது. நானும் விடுவதாயில்லை.
"என்னைப் பொறுத்தவரையில் முதலில் உந்தக் கேள்வியே பிழை." அவன் இடைமறித்து"என்ன இந் தக் கேள்வியே பிழையா" என்று என்னை நக்கலடிப் பதுபோல் சிரித்தான்.
"முதலில் நான் சொல்வதை முழுவதுமாய்க் கேள்" என்றேன்.
"சரி" திருப்பித் தருவதற்காக பொறுத்திருக்கி றேன் என்பதுபோல் நிறுத்தினான்.
"இன்றைய 60வயது பங்காளதேசியனை 48ம் ஆண்டுக்கு முன்னர், இதே கேள்வியை நீ கேட்

Page 36
டிருந்தால் அவன் இந்தியன் என்று சொல்லி இருக் கலாம். 49ம் ஆண்டே கேட்டிருந்தால் அவன் பாகிஸ் தானியன் என்றிருப்பான். நாளை கேட்டால் சில வேளை வேறு பெயரும் சொல்லலாம். இன்றுவரை அந்த மனிதன் மூன்று பெயர்களைச் சொல்லவேண் டியதாயிற்று. ஆயினும் இன்று அவர் சொல்ல ஒரு நாடு தன்னும் இருக்கிறது. இதிலும் எனக்குத் தெளி வில்லை. ஆயினும் எனக்கு அதுவும் இல்லை. என்னை என்னதான் சொல்லச் சொல்கிறாய்."
அவன் பேசாமல் இருந்தான். நான் தொடர்ந் தேன். "ரீலங்கா என்று வைத்துக் கொள்வோம். அரசு சொல்கிறது.நாம் தன்நாட்டவன் இல்லையென. எனது ஊரில் உள்ளவர்கள் எவரும் அங்கு இல்லை யென்பதை விடவும், அப்படி ஒரு ஊரே இப்போ இல்லை. பெயர் மாற்றம் பெற்றுவிட்டால்கூடப் பரவா யில்லை. என்றோ ஒரு நாள் போய்ப் பார்ப்பேன் அல் லது அந்தக் கனவோடுதன்னும் சாவேன். யாரிடமும் எந்தக் கேள்வியும் இல்லாமல் வேண்டாப் பிராணி யாய் குண்டுமழை பொழிந்து, எல்லாவற்றையுமே கொன்றொழித்துவிட்டார்கள். பின் டோசரால் எல் லாம் இடித்து, கிணறுகள் உட்பட பள்ளங்கள் எல் லாம் நிரவி, இப்போ ஆமிகாம்ப் ஆக்கிவிட்டார்கள். இப்போ நீ பிறந்த ஊர் எது என்று கேட்டால் நான் ஆமி காம்ப் என்றுதான் சொல்லவேண்டிவரும். இப்போ ஒருநாடு கேட்கிறார்கள். அது இன்னும் உரு வாகவில்லை. ஒருவேளை உருவாகினாலும் அது எனது நாடாக இருக்கப்போவதில்லை."
"ஏன் யார் கேட்கிறார்கள்?" "தமிழர்கள் என்று சொல்கிறார்கள்." "ஏன் நீதமிழன் இல்லையா?" "ஒரு வசதிக்கு அப்படிச் சொல்லாம். ஆயினும் உண்மை அப்படி இல்லை."
"ஏன் நீதமிழ்மொழியில்லையா?" "நான் ஒரு மனிதனேயொழிய ஒரு மொழியில்லை. அதை விடு. நான் தமிழ்மொழி பேசினால் நான் தமி ழன் ஆகிவிடுவேனா என்ன, ஏற்கனவே அங்கு தமிழ் மொழி பேசின முஸ்லிம் மக்களை தமிழர்கள் இல் லையென துரத்திவிட்டார்கள். இன்னொரு மக்களை பிதேசத்தோடு ஒட்டி வராது என்று விட்டுவிட்டார் கள். அது நிற்க. நான் இப்போ பிரெஞ்சு பேசுகிறேன். அப்போ நான் பிரெஞ்சுக்காரனா என்ன? அல்லது நீ ஆங்கிலம் பேசினால் நீ ஆங்கிலேயனா என்ன?" என்றேன்.
"இல்லை உனது பெற்றோர்?" என்றான்."உன் அம்மா? w
"பேந்தும் பேந்தும் என்னை விசர்க்கேள்வி கேக் காதை. எனது மகன் பிரான்சில்தான் பிறந்தான். அவ னுக்கு தமிழும் தெரியாது. பூரீலங்காவும் தெரியாது. ஆயினும் பாஸ்போட் சொல்கிறது யூரீலங்கன் என. என்னால் அப்படிச் சொல்லமுடியவில்லை."
"பிரெஞ்சுக்காரன் என்று சொல்லாம்" அவன் இடைமறித்தான்.
"ஆனால் நீ அவனை நேரே பார்த்தாலும் எந்த ஒரிஜின், எந்த நாடு போன்ற கேள்விகளைக் கேட் கத்தானே போகிறாய். இல்லை பிரெஞ்சுக்காரன் என்றால் விட்டுவிடவா போகிறாய்" என்றேன்.
"அது சரிதான்." "ஆனால் நீ முடிவாய் என்ன சொல்ல வாறாய்"

என ஆழ்ந்த யோசனையோடு சாந்தமானான்.
"இதைப்பற்றி எதுவும் தெளிவாய் சொல்ல என் னிடம் எதுவும் இல்லை. ஆயினும் நான் ஹரீலங்காவும் இல்லை. தமிழனும் இல்லை. பிரெஞ்சுக்காரனும் இல்லை. அது எனக்குப் பிரச்சினையும் இல்லை."
"இல்லை ஏதோ ஒன்று இருக்கத்தானே வேண் டும்."
நான் பேசாமல் இருந்தேன். சிறிது நேரம் இருவ ருமே மெளனமானோம். மீண்டும் என் பதிலை வேண் டிப் பார்த்தான்.
"இருக்கத்தான் வேண்டும் என்றால் இடம்தான் சரியில்லை என்பேன்." ஏன் என்று சற்றுப் பயந்தவ னாக இருந்தான்.
"நீ ஒரு அலுவலகனாக இருந்து நான் அங்கு வந்திருந்தால் நீ கேட்கும் கேள்விகளுக்கு எனது பாஸ்போட்டின்படி பதில் சொல்லி இருப்பேன். இப்போ நீயும் ஒரு பயணி. நானும் ஒரு பயணி.எம்க்குள் உத் தியோகபூர்வம் என எதுவும் இல்லை. ஆதலால் உனக்கு இந்த விசரெல்லாம் தேவையில்லை என் றால் நீயும் என்னை அப்படிச் சொல்லிவிட்டு போய்வி டலாம். ஆனால் உண்மை என்ன என்பது முக்கியம் என்றால் நாம் வெற்றிடத்தில் நிற்பதை நீவிளங்கிக் கொண்டேயாக வேண்டும்."
"அதனால்தான் கேட்டேன் முடிவாய் இதைப்பற்றி என்ன நினைக்கிறாய் என."
"நான் என்ன நினைக்கிறேன் என்பது எனக் குத்தான் முக்கியமே தவிர உனக்கோ யாருக்கோ முக்கியமாக இருக்கப் போவதில்லை. ஆயினும் சக ஜீவியைப் புரிந்துகொள்ள முற்படுகிறாய் என்ற அள வில் எந்த நாடு, எந்த மொழி, எந்த இனம், எந்த சம யம், எந்த ஒரிஜின் என்பதெல்லாம் சக வாழ்வுக்கு அவசியம் அல்லாதது, அநாகரிகமானது, ஒழிக்கப் படவேண்டியது என நினைக்கிறேன்" என்றேன்.
என்னை ஒர் அன்போடு பார்த்தான். பின் நீண்ட நேரம் கழித்து"என்னை நான் இனி பிரெஞ்சுக்காரன் என எண்ணப்போவதில்லை" என்றான். பின்னர் தான் நோர்மண்டி/பிரித்தான்(Normandie/Bretagne) பகுதி யில் இருந்து வருவதாகவும் அது ஒரு தனிப் பிரதே சமாகவும் அதற்கு ஒரு மொழியும் பண்பாடும் இருந் தது எனவும் அது எல்லாம் அழிக்கப்பட்டு பிரான்ஸ் என்ற தேசியம் உருவாகிவிட்டது எனவும் இன்னும் தனது தாய் தந்தையர் பிரித்தான் மொழி பேசுவார் கள் என்றும் தனக்கு அதன் பல சொற்கள் மட்டுமே தெரியும் என்றும் அவர்களுடன் பேசும்போது அச் சொற்கள் கலந்த பிரெஞ்சில் பேசுவதாகவும் சொன் னான்.
நானும் "இன்று பிரெஞ்சு, ஜேர்மனியர், ஆங்கிலே யர் என்று சொல்பவர்களெல்லாம் நாளை ஐரோப்பி யர் என்று சொல்லப் போகிறார்கள். இன்று உரு வாக்கிய ஐரோப்பா நாளை இந்த தேசியங்களை எல்லாம் அழித்துவிடும்"என்றேன்.
அவனும் நானும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட நெருக்கத்தில் நீண்டநேரம் உரையாடி னோம். இடையே அவனது தரிப்பு வந்ததும் அவன் தான் இனி யாரையும் இப்படியான அநாகரிகமான கேள்விகளை எல்லாம் கேட்கப்போவதில்லை என்று சொல்லிச் சிரித்தபடி போனான். O
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 35

Page 37

வழக்கம்போல் இன்றும் வருவாய் வலியின் மென்மை முகமெல்லாம் பூக்க,
உனக்காகக் காத்திருக்கும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் பரிவாரங்கள். உனி அழகான ஆளுமையைத் தேய்ந்துபோன நெருப்புக்குள் அமுக்கி தேகத்தின் வாசனை தாவுவாய் வேறுபாடற்று அனைத்துக் கைகளிலும்
வீட்டுக் கடிகாரம்போல உன் விருப்ப வேகத்தில் உபசரிப்பையும் உச்சுக்கொட்டலையும் பாசாங்கின்றிப் பரிமாறுவாய்.
உன்னை நோக்கிய அட்சயபாத்திரத்தினர் காருண்யஜுவாலை பிச்சைப் பாத்திரங்களிலும் பரவித் தகிக்கும். மேலும் கீழும் ஒழச் சோர்வுறும் வார்த்தைகளில் தேடுவாய் தீர்வாய் ஒன்றை,
எல்லா உயிர்களைப் போலவே உனது இலட்சியமும் சுவாசித்தல்தானி கதவற்ற வாசல்களும் சன்னல்களும் நிறைந்த இந்த உலகத்தின் எந்த இடத்திலும் உனக்கு மூச்சு முட்டுகிறது காற்றே இல்லாத உன் கருவறை தவிர இருளருள் நிறைந்த கூட்டுக்குள் சுருண்டுகொள்ள எத்தனித்த நேரத்தில் உணர் கால்கள் தொட்டுவிட்டன தொடுவான விளிம்பை.
சுகங்களும் சோகங்களும் சுத்தமாய் துடைக்கப்பட்ட உணர் மேசை எதிரே அமர மறுக்கும் கவிதைகளின் வருத்தம் நன்றாய் தெரியும் உனக்கு இருந்தும், மினரல் வாட்டர் கொடுத்து
ஆரோக்கியமாய் இரு' என்பாய்.
பிறகு கணனித் திரையில் கரைய முழயாத சிந்தனைப் பந்தை உருட்டிக்கொண்டே இரவுச் சூரியனுடன் கிளம்புவாய் நாளைப் பூவுக்கு நீரூற்ற, காலைவரை இசைந்து வழக்கம்போல இன்றும் செல்வாய்.

Page 38
ஆடை களைந்தாய் என்றா வாளைத் தூக்கச் செய்தேன்
தாயக்கட்டையில் சாயம் போனUனர் சுற்றி இருக்கும் சேலையிலா தொக்கி நிற்கும் என் 'கற்பு(?)
தொடையில் அமரச் சொல்லி ரீஆதிக்கம் காட்டலாம் கூந்தல் அவிழ்த்து விட்டு நான் துவேஷம் தணிக்க மாட்டேன்
தோள்களில் தொலைத்த பலம் காட்ட பூக்களின் இதழ் தேடி நீவரலாம் உன் தோள் முறிக்க எண் விரல் போதும் குழல் ஊதும் இறைவனைக் கூப்பிட upsTU(3-60
கொக்கரிப்புகளில்கும்பல் சேர்க்கும் கோழி அல்ல சத்தமின்றி கொத்தித் தினினும் கழுகு நான்.
எல்லா வாள்களையும் ஒன்றாய் புதைக்கவே சும்மா ஒரு சபதம்.
H.
 

21ம் நூற்றாண்டு நாங்கள் உலகினர் சுதந்திரகுடிகள்.
எங்கும் சுதந்திரம் கெக்கலிக்க இடைக்கு மேலே கீழே எதற்கும் அனுமதி.
தொலைக்காட்சி திரைகள் விரிக்கலாம் இன்டர்நெட் எதையும் விளிக்கலாம் ஒலிகளுக்குக் கட்டுப்பாடில்லை ஓசையிழந்த சுதந்திரம் ஒளிப்பூச்சுகளில் தாராளமாய் சிரிக்கலாம்.
எங்கிருந்து எங்கும் எங்கெங்கும் கால்கள் நடக்கலாம் கணிகளுக்குத் தடையில்லை முறைத்துப் பார்க்கலாம் முறைத்தவரை திருப்யியும் அழக்கலாம் ஆனாலும் கடமை கணினியம் கட்டுப்பாட்டுடன் வாழும் நாட்டுக்கு சேவை பர்ைனும் உலகக்குடிகள்.
கும்பிடப்படுவது கடவுள் குனிந்து நிற்பவர்கள் பக்தர்கள் எந்தத் திரையையும் யாரும் கிழித்து மாலை கட்ட முழயாது கலங்களில் ஜோதி தெரியும்.
முடிந்தால் எழுவோம் முன்னால் மண்டியிட்டவனி தளர்ந்தால் துப்பாக்கி தூக்குவோம் குறியில் குருவியும் எதிரியும் ஒன்று குருதியில் உறுதிபார்க்கும் கொடிக் கம்பங்கள்.
கழிந்த காலத்தினர் கரகோஷங்களைக் காப்பாற்ற கவிதைகளை மட்டும் தடை செய்கிறோம் இது உட்பட. O
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 37

Page 39
சக்திபுதுச்சேரியைச் சேர்ந்த ஒவியத்தில் தனக்கென ஒரு | நிலைநிறுத்திக்கொண்டவர் T மாநில ஆளுநர் முதற்கொன்
தனது 14 வயது முதற்கொ ஜூனயர் விகடன் ஆகிய இது கோட்டு ஓவியங்கள் அரு வண்ணப்படுத்தும் இவர் வருகிறார். தொழிற்சுமை இவருடைய படைப்பாற்ற காலத்தின் ஒவியத்தின் மீத வளர்த்துக் கொள்வதில் ஆ
38 உயிர்நிழல் 0 நவம்பர் டிசம்பர் 9
 

ஒரு ஓவியர் இவருக்கு வயது 28 புதுவையில் தனித்தன்மையை வகுத்துக்கொண்டு தன்னை
புதுவையில் ஓவியக் கண்காட்சிநடத்திபுதுவை ண்டு பலரின் பாராட்டைப் பெற்றவர். ண்டு ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவர். குமுதம், ழ்களில் அவரது ஒவியங்கள் இடம்பெற்றுள்ளன. பவகை ஓவியங்கள் மூலம் ஓவியவெளியை இன்று தொழில் நிமித்தம் பாரிஸில் வாழ்ந்து
ம் பாரிஸின் இயந்திரத்தனமான வாழ்வும் லுக்குத் தடையாக இருந்தபோதிலும் எதிர் னபுதியதேடல் உலகை நோக்கிய பார்வையை ரவமாகவே உள்ளார்.

Page 40

sëẾl ș6úlusiassii
— 78+ішї 199Ј| 39
■口 心 止 개 匠 [−]] 随 匪 *卧 FF 心 疆

Page 41


Page 42
புதிய பாதை புதி
சிவலி
(2
BEupas GBBTägö
அமெரிக்கா, பிரிட்டன் ஆகியநாடுகளின் பொரு ளாதார நிலைமைகள் அதிகளவு வளர்ச்சியடைந் திருந்தாலும் அந் நாடுகளுக்குள் வாழும் மக்கள் மத்தியிலே உள்ள வருமான ஏற்றத் தாழ்வுமிக அதி கமானதாகும். இதன் காரணமாக குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. பல பழங்களுக்குள் சில பழங் கள் பழுதடைவதுபோலவே சமூகத்தின் மத்தியிலும் சில தவறான மனிதர்கள் இருப்பது பொதுவானது தான் என வாதிடும் நவ லிபரல்வாதிகள் அழுகிய பழங்களை அப்புறப்படுத்துவது போலவே சமுகவி ரோத சக்திகளை சிறைக்குள் தள்ளிவிடுவதுதான் அதற்கான வழி எனவும் வாதிடுகின்றனர். இக்கொள் கைகள் காரணமாக இந்நாடுகளின் சிறைகளிலே வாடுபவர்களில் 70 சதவீதமானோர் பொருளாதாரரீ தியாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்க ளாவர். அத்துடன் சிறைச்சாலைகளின் தொகையும் அதிகரித்து வருவதால் கப்பல்களையும் சிறைச்சா லைகளாக்கி வருகின்றனர்.
காலத்திற்குக் காலம் ஆதிக்கம் பெற்றுவரும் கொள்கைகள் காரணமாக சமூகம் எவ்வாறு பாதிக் கப்படுகிறது என்பதை இச்சம்பவங்கள் உணர்த்து கின்றன. மனிதநேயம் என்பது புதைகுழிக்குள் சென் றுவிட்டதாகவே உணர வேண்டியுள்ளது. அவ்வப் போது கடைப்பிடிக்கப்படும் அதிதீவிர கருத்துகளா லும், அதன் பிரகாரம் மேற்கொண்ட நடவடிக்கைக ளாலும் சமுகம் கூறுபோடப்பட்டுள்ளது என யாரா வது உணர்வார்களாயின் அவர்கள் இது குறித்து செயற்பட வேண்டிய காலம் இதுவேயாகும்.
சமூகத்தை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனை களை இதுவரை பார்த்தோம். இதற்கான காரணங் களை சுருக்கமாகப் பார்ப்போம். அவையாவன:
* சர்வதேசமயப்படுத்தப்பட்டு வரும் பொருளா தாரம், தொலைத் தொடர்பு, செய்திப் பரிமாற்றம் என்பன மக்களின்வாழ்வில் தரும் தாக்கங்கள். 9 தனிமனித சுதந்திரம், தனிமனித அவா என் பன நவீன சமுதாயத்தில் தரும் தாக்கங்கள். 9 வலது, இடது என இதுவரை காலமும் கூறு போடப்பட்டு வந்த அரசியற் கோட்பாடுகள் இனி யும் அர்த்தமுடையனவா? என்பதும் 9 அரசியல் என்பது ஜனநாயகம் என்ற பொறி முறையிலிருந்து விலகிச் செல்கிறதா? என்பதும் 9 முதலாளித்துவ போட்டிச் சந்தை காரணமாக
 

9900)(5(UD60s)
ESD
மூலவளம் அதிகளவு சூறையாடப்படுவதும், சுற் றாடல் அசுத்தமடைவதும் இன்றைய சமுகத்தில் வகிக்கும் பங்கு. என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
சர்வதேசமயம்
சர்வதேசமயம் (Globalization) என்பது குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவரினும் பொருளாதார நடவடிக்கைகள் மிக அதிகரித்த அளவில் சர்வதேசமயப்படுத்தப்பட்டுள்ளது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய பொருளாதார நடவடிக்கை களை தம் தேசிய அரசுகளால் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கைகள் படிப்படியாக வலுவிழந்து வரு கின்றன. குறிப்பாக பொருட்களின் ஏற்றுமதி, இறக்கு மதியை விட நிதிச் சந்தை நடவடிக்கைகள் மிகமிக அதிகரித்து வருவதால் தேசிய அரசுகளின் செயற் பாடுகள் அல்லது தீர்மானங்கள் மிகவும் வலுவற்றதா கவே உள்ளது.
தமது தேசிய பொருளாதாரத்தினைக் கட்டுப்ப டுத்த முடியாத அரசுகள் தம்மை அரசு என நம்பிச் செயற்படுவது கற்பனையா?என்ற கேள்வி எழுகிறது. அரசுகளின் வலு குறைந்து வருவதால் அரசு தனது வலுவை நிலைநிறுத்த அல்லது ஆதிக்கத்தை வலுப்படுத்த வேறு துறைகளில் தனது கவனத்தைச் செலுத்துகிறது. இதன் மூலம் தனது தேசிய அடை யாளத்தை நிலைநிறுத்தத் தலைப்படுகிறது.
இலங்கையில் நிலவிவரும் நிலைமைகள் இத்த கைய ஒரு தோற்றப்பாட்டின் வெளிப்பாடாகவே கருத வேண்டியுள்ளது. தேசிய பொருளாதாரம்
தொடர்பாக அரசும் பல்தேசிய நிறுவனங்களும் மேற்
கொள்ளும் தீர்மானங்கள் பற்றிய விமர்சனங்களை விட தமிழ்பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக் கோரிக்கைகளை நசுக்கும் மார்க்கங்கள் பற்றிய விவாதங்களே அதி முக்கியத்துவம் பெறு கின்றன. ராணுவத்தின் நடவடிக்கைகள் மிகைப்ப டுத்தப்பட்டு தேசிய அடையாளத்தை நிலைநிறுத் தும் உன்னத சக்திகளாக வர்ணிக்கப்படுகின்றன.
su g!60LuT6Ib
இவ்வாறு தேசிய அடையாளத்தைத் தேடும் புதிய முயற்சிகள் காரணமாக தேசிய எல்லைக்குள் வாழும் தேசிய இனங்களும் தமது சுய அடையாளத் தினைத் தேடும் நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 41

Page 43
டுள்ளன. இவ்வாறு ஒர் பாரிய தேசிய எல்லைக்குள் வாழும் இனங்கள் தமக்கான சுய அடையாளங் களை வளர்க்கும் போக்கில் சுய ஆட்சியைக் கோரும் நிலைக்குத் தள்ளப்படினும் பிரிந்துசெல்லும் போக்கினை பெருமளவில் தவிர்த்து வருகின்றன. பாரிய தேசிய எல்லைக்குள் சுய ஆட்சியை நிலை நிறுத்தவே விரும்புகின்றன.
பிரிட்டனின் தேசிய எல்லைக்குள் ஸ்கொட் லாந்து தன்னை சுயாட்சிப் பிரதேசமாக விடுவித்துக் கொள்ள விரும்புகிறது. கியூபெக் கனடாவின் ஆட்சி யிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புகி றது. கற்றலோனா (Catalona) பிரதேசம் ஸ்பெயின் அரசிலிருந்து விடுவித்து கொள்ள விரும்புகிறது. இருப்பினும் இவை பாரிய தேசிய எல்லைகளுக் குள்ளே சுய ஆட்சியுடன் செயற்பட விரும்புகின்றன.
இக்கோரிக்கைகள் அவ்வப் பிராந்தியங்களின் பொருளாதார செழிப்புகளை மையமாகக் கொண்டி ராமல் சர்வதேச வர்த்தகத்தினையே மையமாகக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
சமுக ஜனநாயகக் கோட்பாடுகள் தனிமனித வாதத்தினையே முன்வைக்கின்றன. மார்க்ஸ் அவர் களின் கோட்பாடுகள் கூட்டு நடவடிக்கையினையே வற்புறுத்துகிறது. சுதந்திரமான சமூகத்தின் வளர்ச் சியே சுதந்திரமான தனிமனிதனின் வளர்ச்சிக்குரிய துழலை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார். சோசலி சம் என்பது ஐக்கியத்திற்கும் சமத்துவத்திற்கும் முதலிடம் வழங்குகிறது.
* திறந்த பொருளாதாரமும் க்
| ՑԾԱp&(ԱpLD
திறந்த பொருளாதாரக் கோட்பாடுகள் வழங்கி யுள்ள புதிய நிலைமைகள் தனிமனித செயற்பாடு களை ஊக்குவிக்க உதவுகின்றன. தனிமனித இச் சைகளை சந்தையுடன் இணைத்துவிடுவதன் மூலம் தனிமனிதனின் முழு சக்தியையும் வெளிக்கொணர லாம் என நவ லிபரல்வாதிகள் நம்புகின்றனர். இவர் களின் கனவு நனவாகியதா? இவர்களது கொள்கை கள் நான், எனது என்னும் உணர்வுகளுக்கு வடிகால் அமைத்தது. இதன் முடிவு எமது சமுகம், எமது கலா ச்சாரம் என்ற சமுக விழுமியங்கள் படிப்படியாகச் சாகடிக்கப்படுகின்றன. தனிமனித உரிமைகளுக் கான கூக்குரல் அதிகரித்து வருகிறது. அரசின் கொடுப்பனவுகளில் தங்கி வாழும் மக்கள் சமுகத்து ரோகிகள் எனவும், சமூக பொருளாதார உற்பத் திக்கு உதவாதவர்கள் எனவும், இவர்கள் உழைத்து உண்ணவேண்டும் எனவும் வற்புறுத்தப்படுகிறது. உடல் ஊனமுற்றவர்கள்கூட இந்நிலைக்குத் தள் ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலைமை இதுவரை சமூகம் பின் பற்றி வந்த விழுமியங்களுக்கு மனிதநேயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. தனிமனித னைச் சுற்றிய விவாதங்கள் கூட்டுப்பொறுப்புள்ள சமு கக்கோட்பாடுகளுக்கு சவாலாக அமைவதோடு,
42 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 
 
 
 
 

புதிய சமுதாயத்தினரின் எதிர்காலத்திற்கு புதிய கேள்விகளையும் எழுப்புகிறது. அதாவது காலம் காலமாக குடும்பம், அரசு என்பன அதிகாரத்தின் மூலமாக இருந்த நிலைமைகள் கேள்விக்குறியாக் கப்படுகின்றன. தமது எதிர்காலம்பற்றி தாமே தீர் மானித்தல் வேண்டும் என்ற நிலைக்கு வளர்ந் துள்ளது. இந்நிலை தொடருமாயின் ஒருமித்த சமூக உணர்வு என்பதே அருகிவிடும். பொறுப்புணர்வு, பரஸ்பரநல்லுணர்வு என்பது அர்த்தமற்றதாகிவிடும். உதாரணமாக திருமணமாகாமலே கர்ப்பம் தரிப் பதும், தாயாகும் தராதரத்தை அடையாமலே தாயாக மாறுவதும் தனிநபர் சுதந்திரத்தின் விளை பொருட்களாகியுள்ளன. தனிநபர் சுதந்திரம் என்பது தனிநபர் வளர்ச்சிக்கான காரணியே தவிர தனிநப ரைத் தான் தோன்றித்தனமாக மாற்றுவிக்கும் காரணி அல்ல. இருப்பினும் தோற்றுவிக்கப்பட்டுள்ள புதிய நிலைமைகள் தனிநபர் சுதந்திரத்திற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதால் ஜனநாயகம் என்பது மேலும் விரிவாக்கப்படவேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இவ் ஜனநாயக விரிவாக்கம் ஆரோக்கியமான சமுதாயத்தினை தோற்றுவிக் குமா?
இடது வலது விவாதம்
இக்கேள்வியே நம் முன்னால் விரிந்திருக்கும் பாரிய கேள்வியாகும். அரசியலில் இடது, வலது எனக் குறிப்பிடப்படுவோரும் ஜனநாயகம் பற்றி எதிர் எதிர் கருத்துக்களையே கொண்டுள்ளனர். இடது சாரிக் கொள்கைக் கட்சிகள் படிப்படியாக மத்தி யதர வர்க்கத்தினரின் தேவைபற்றியும் பிரஸ்தாபிக் கத் தொடங்கியுள்ளனர். இவை அரசியல் மாற்றம் என்பதை விட சமூகமாற்றத்தின் பிரதிபலிப்பு என் பதே பொருத்தமான கணிப்பாகும். இருப்பினும் இடது, வலது என்பது தொடர்ச்சியாக இருந்து வரு கிறது. ஏனெனில் அரசியல் என்பது எதிரெதிரான போக்காகவே தொடர்ச்சியாக இருந்து வருவதனா லாகும். இடதுசாரி அரசியல் சம வாய்ப்பு, சம விநி யோகம் , சமூகநீதி என்பதை தொடர்ச்சியாக வலி யுறுத்துகிறது. வலதுசாரி அரசியற்போக்கு உற்பத் தியை நோக்கியே அதிக கவனம் செலுத்துகிறது. சமத்துவத்தை மையமாக வைத்தே இடது, வலது கருத்துகள் வித்தியாசப்படுகின்றன. சமுகம் என்பது பல்வேறுபடிநிலைகளைக் கொண்டிருப்பதால் பொரு ளாதாரரீதியாக உயர்நிலை அடைவதற்கு ஒருவ ருக்கு போதிய சந்தர்ப்பங்கள் வழங்கப்பட் டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதன் முலமே சமத்துவம் அர்த்தமாகும் என வலதுசாரிகள் விவா திக்கின்றனர். பொருளாதார ரீதியில் முன்னேறுவ தற்குரிய தடைகளை அகற்றுவதன் மூலமே ஒருவ ருக்குச் சம சந்தர்ப்பத்தை உறுதியளிக்க முடியும் எனக் கருதும் அவர்கள் அரசின் தலையீடு தவிர்க் கப்படுவதன்மூலமே இது சாத்தியமாகலாம் என நம்புகின்றனர். இதற்கு எதிரிடையாக சம வாய்ப்பு, சம விநியோகம், சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு

Page 44
அரசின் தலையீடு அவசியம் என இடதுசாரிகள் நம்பு கின்றனர்.
எனவே இக்கருத்துமோதல்கள் தொடர்ச்சியாக இருக்கும் என நம்பலாம். சமுக ஏற்றத்தாழ்வு என்பது மனித முன்னேற்றத்திற்கு எதிரியாகும். வறுமை, தேவை என்பது அதிகரிக்கும்போது சமத்துவம் என்பது முதன்மை பெற்ற கோரிக்கையாக எப்போ துமிருக்கும்.
சர்வதேசமயம் என மேற்கத்தைய நாடுகள் அதிகளவு பீத்திக் கொண்டாலும் உள்நாட்டில் அதற்கான நிலமைகள் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. பிரான்ஸ், அவுஸ்ரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வலதுசாரி தேசிய முன்னணிகள் பலமடைந்து வருகின்றன. பிரான்சில் லீபென் , அவுஸ்ரேலியாவில் போலின் கன்சன், அமெரிக்கா வில் பற் புச்சனன் போன்றோர் தேசிய பாதுகாப் புப்பற்றி அதிகம் பேசிவருகின்றனர். உதாரணமாக ஐ.நா. ஸ்தாபனத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அமெரிக்கநலனை முன்வைத்தே எடுக்கப்பட வேண் டும் என அமெரிக்க வலதுசாரிகளும், அந்நியர்களை வெளியேற்ற வேண்டுமென பிரான்சிலும் இயக்கங் கள் நடத்தப்படுகின்றன.
வலது, இடது கருத்துக்கள் இவ்வாறிருப்பினும் புவியியற் பாதுகாப்பு தொடர்பான கருத்துகள் இரு சாராரையும் சிந்திக்க வைத்துள்ளன. அத்துடன் குடும்பம், வேலை, அடையாளம் என்பன சார்பாக இதுவரை கொண்டிருந்த கருத்துகளும் புதிய சிந்த னையைத் துாண்டியுள்ளன.
மூன்றாவது பாதை
இந்த நிலைமைகளைப் பார்க்கும்போது மூன்றா வது பாதை ஒன்றினைத் தேடவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வலது, இடது விவாதங்கள், கருத்து கள், கொள்கைகள், திட்டங்கள் என்பன இதுவரை போதிய அனுபவங்களை மக்களுக்குக் கொடுத்துள் ளது. சமூகத்தை எதிர்நோக்கும் பிரச்சனைகளில் பல, அடிப்படை மாற்றத்தின் அவசியத்தினை வலி upg5glassip607. Feypassig5 (Social Justice), iD6of தனைத் தளைகளிலிருந்தும் விடுவிக்கும் அரசியல் (Emancipatory Politics) 6T6il 16076) fibó0p 9jlgiué0DL அம்சங்களாகக் கொண்ட புதிய பார்வை தேவைப்ப டுகிறது.
இம் முயற்சியானது முதலாளித்துவத்தினைச் சீர்திருத்தும் முயற்சியென ஒரு சாராரும், சோசலிசத் தைப் பின்கதவால் கொண்டு வரும் முயற்சியென மறு சாராரும் வாதிடக் கூடும். இவ்விரு சாராரும் இது வரை கொண்டிருந்த கருத்துகள் சமுகத்தினைக் கூறுபோடவே உதவியுள்ளன என்பதே உண்மை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண உழைக் கும் ஏழை, விவசாய, தொழிலாள மக்களேயாகும். உற்பத்தி, தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு என் பவற்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் சாதாரண மக் களின் வாழ்வுநிலைமைகளைப் பாதித்து வருகிறது
 

என அவதானிப்பின் நாம் சமூக மாற்றம் தொடர்பாக கொண்டிருந்த கருத்துகளையும் மாற்ற வேண்டிய அவசியத்தினை உணர்வோம்.
இந்த வகையில் பார்க்கும் போது அரசின் பணி என்ன என்பதை வரையறுக்க வேண்டிய அவசியம் புலப்படும். அவற்றில் சில:
9 அரசாங்கமானது சமூகத்திலுள்ள பல்வேறு சமூகங்களின் நலன்களையும் பிரதிநிதித்துவப்ப டுத்தும் வகையில் அமைதல் வேண்டும். 9 இவ்வாறான சமூகங்களின் போட்டி நலன் களை தீர்த்துக் கொள்ளும் அமைப்பாக இது அமைதல் வேண்டும். 9 அரசு எடுக்கும் கொள்கைகள் தொடர்பாக பரந்த, தெளிவான, கட்டுப்படுத்தப்படாத விவா தம் மேற்கொள்ள அரசு ஆவன செய்தல் வேண் டும். * சந்தை நடவடிக்கைகள் மக்கள்நலன் கருதிச் செயற்படும்விதத்தில் போதிய சட்டப் பாதுகாப் புகளை வழங்குதல் வேண்டும். 9 சமூகநீதியை நிலைநாட்டும் விதத்தில் பாது காப்புப் படையினை நிறுவுதல். இவ்வாறான பல நடவடிக்கைகளை அரசாங்கம் எடுப்பது அவசியமாகும். மேலே குறிப்பிட்டவாறான நடவடிக்கைகளை சந்தை நடவடிக்கைகள் வழங் கப் போவதில்லை. அரசாங்கமே இதன் முகவராகச் செயற்படவேண்டும். இவை குறித்து அரசியற் கட்சி கள் தெளிவான கருத்துகளை கொண்டிருத்தல் வேண்டும். அரசியற்கட்சிகள் ஜனநாயக அம்சத் தின் மிக இன்றியமையாத பங்காளராகும். அரசியற் கட்சிகள் இவ் ஜனநாயக அம்சங்களை கட்சி அடிப் படைகளில் செயற்படுத்தாவிடில் அரசாங்கத்திடம் இதனை எதிர்பார்க்க முடியாது.
உதாரணமாக இலங்கை நிலைமைகளை எடுத் துக்கொண்டால் கட்சிகள் மத்தியிலே ஜனநாயகம் என்பது மடிந்து வருகிறது. அடிக்கடி தேர்தலை வைப்பது மட்டும் ஜனநாயகமாகாது. கொள்கைப் பிரகடனம், சுதந்திரமான வாக்களிப்பு என்பனவும் ஜனநாயக அம்சங்களாகும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்காத ஒரு நாட்டில் ஜனநாயகம் வளரும் என எதிர்பார்க்க முடியாது. இலங்கையைப் போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஜனநாயக அம்சங்களை அதிகளவு எதிர்பார்க்காவிடினும், ஜனநாயக வளர்ச்சிக்கான அறிகுறிகளையாவது குறைந்தபட்சம் எதிர்பார்க்க வேண்டும்.
ஓர் சிறுபான்மை இனம் தனது அடிப்படை உரி மைகளைக் கோரும்போது பெரும்பான்மை இனம் பெருந்தன்மையாக நடந்து கொள்வதே ஜனநாய கத்தின் சிறப்பம்சமாகும். பெரும்பான்மையானது தனது பலத்தை தவறாகப் பயன்படுத்தும்போது ஜனநாயகத்திற்கான ஆணிவேர் அங்கு சிதைந்து
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 43

Page 45
விடுகிறது. கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக பாரிய சிக்கல்கள் எதுவும் இல்லாமல் இலங்கையில் பாரா ளுமன்ற ஆட்சிமுறை நிலவி வந்தமைக்குக் கார ணம் ஜனநாயக அம்சங்களை நம்பிய அரசியற் கட்சி கள் இருந்தமையேயாகும்.
ஐம்பது ஆண்டுகளின் இறுதிக்காலத்தில் அரசி யற்கட்சிகள் சில தனிக்கட்சி ஆட்சிமுறைக்கான விதத்தில் தம்மை மாற்றம் செய்துகொண்டதன் விளைவாக ஜனநாயகத்தின் மீதிருந்த அச்சிறிய நம்பிக்கையும் சிதறிப் போய்விட்டது. இதன் விளைவே ஆயுதப்போராட்டமாகும்.
ஆயுதப்போராட்டம் தோற்றுவிக்கப்பட்டமைக் கான நிலைமைகள் மாற்றீடு செய்யப்படாத பட் சத்தில் அவ்வாறான நிலைமை சிறிய அல்லது பெரிய அளவில் இருக்கவே செய்யும்.
அரச சார்பற்ற நிறுவனங்கள்
ஜனநாயக சூழ்நிலைகளை அதிகரிப்பதற்கான நிலைமைகள் தற்போது அதிகரித்துள்ளது. அரச சார்பற்ற இயக்கங்கள் உள்ளுர் அளவிலும், சர்வ தேச அளவிலும் வலுவடைந்து வருகின்றன. இவற் றின் வளர்ச்சி காரணமாக பல்தேசிய நிறுவனங்களே தமது கொள்கைகளை மாற்றி வருகின்றன. உல கின் மிகப்பெரிய எண்ணெய்க் கம்பனிகளில் ஒன் றான ஷெல் தனது பிரதான கடமையாக புவியியற் பாதுகாப்பு என பிரகடனம் செய்துள்ளது. இதே போன்று அரச படைகளை உபயோகித்து தமது மக்களைத் தொடர்ச்சியாகக் கொடுமைப்படுத்தும் அரசுகளின் போக்கினையும் சர்வதேச அளவில் அம்பலப்படுத்துவதோடு பாரிய அழுத்தங்களையும் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் பிரயோகித்து வருகின்றன. சமூகத்தின் சில பிரச்சனைகளில் அரசு செயற்படாது அசமந்தமாக இருக்கும் நிலைமைக ளில் அவற்றிற்கு எதிராக சமூகத்தின் வெவ்வேறு தளங்களில் எதிர்ப்பு நிலைமைகள் வளர்கின்றன. உதாரணமாக சிறு பிள்ளைகளைக் கொடுமைக ளுக்குள்ளாக்குதல், போதைவஸ்து வியாபாரம், துழல் அசுத்தமாக்கல் போன்றவற்றிற்கெதிராக மக் கள் இயக்கங்கள் நடாத்துகின்றனர்.
இவை அரசியல்வாதிகள்மீது மக்களுக்குள்ள அவநம்பிக்கைகளையே வெளிப்படுத்துகின்றன. அரசியல்வாதிகள் மீதுள்ள நம்பிக்கையீனம், அரசு என்னும் ஸ்தாபனத்தின் மீதுள்ள அவநம்பிக்கையா கவே மாறுகிறது. எனவே அரசானது மேலும் ஜனநா யகமாக விஸ்தரிக்கப்பட வேண்டியநிலைக்குத் தள் ளப்படுகிறது. மிகப்பெரிய ஜனநாயகவாதியாகப் பீத்திக் கொள்ளும் அமெரிக்காவில் அரசியல்வாதி கள் மீதுள்ள நம்பிக்கை மிகமிகக் குறைந்து வரு கிறது. இதேபோன்று இந்திய சினிமாவில் அரசியல் வாதிகளை கிண்டல் செய்யும் படங்களே அதிகம் வெளியாகின்றன. இவ்வாறான போக்கு ஜனநாயகம் எனக் கருதப்படும் இன்றைய வழிமுறையைப் பற்றிய புதிய அணுகுமுறையைத் துாண்டுகின்றன.
44 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

சமூகத்தின் வெவ்வேறு தேவைகள் குறித்து உருவாகும் எதிர்ப்பு இயக்கங்கள் அரசினைக் கைப் பற்றும் வாய்ப்பினை அதிகம் கொண்டிராவிடினும் அரசியற்கட்சிகளுடன் பேரம்பேசிக் காரியத்தைச் சாதிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதை ஜேர்மனி அனுபவங்கள் காட்டுகின்றன.
விஞ்ஞானம் பிரச்சனைகள்
அதிகளவு உற்பத்தி, அதிகளவு வேலைவாய்ப்பு எனச் சுலோகம் பாடும் போக்கிற்கு எதிராக மக்கள் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளனர். மக்களின் சுகாதா ரம், சூழல் அசுத்தம் என்பதைப்பற்றிய கவனம் இல் லாமல் உற்பத்திபற்றிக் கோஷம் போடும் முயற்சிகள் குறித்து மக்கள் தற்போது கவனமாக உள்ளனர். மேற்குநாடுகளில் இறைச்சி, பால் உற்பத்தி ஆகியன அதிகளவு இரசாயனப் பொருட்களின் உட்சேர்க்கை யில் தங்கியுள்ளன. இதனால் மனிதர்களின் உடலில் இவ்விரசாயனப் பொருட்கள் சேர்ந்து புதிய நோய் களை உருவாக்குகின்றன. இறைச்சிவகைகளின் கழிவுகளைக்கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்கள் மாமிசம் உண்ணாத ஆடு, மாடு களுக்கு உணவாகப் பரிமாறப்படுவதால் பைத்திய DITGB (8biTui (Mad Cow disease) 6T6irgilb (SBITLi LD6of தரைத் திண்டி பலர் இறந்துள்ளனர். இதனால் பலர் இறைச்சி உணவு உண்பதைத் தவிர்த்து வருகின்ற னர். இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டதால் பிரிட்டனில் மட்டும் சுமார் 10 லட்சம் மாடுகள் 6 மாதங்களில் கொல்லப்பட்டன, அதாவது, அழிக்கப்பட்டன.
எனவே விஞ்ஞான வளர்ச்சிபற்றியும் மக்கள் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. தாம் உண் ணும் உணவு, பாவிக்கும் பொருட்கள் அவற்றின் தன்மைகள் பற்றிய விபரங்கள் மக்களின் இன்றைய தேவைகளாகின்றன. விஞ்ஞானம்பற்றிய அறிவு மக் களின் இன்றியமையாத தேவையாகிறது.
மக்களை எதிர்நோக்கும் புதிய சிக்கல்களை இதுவரை பார்த்தோம். இவை உண்மையில் மக்க ளின் இன்றைய நியாயமான தேவைகள் என நாம் உணர்வோமாயின் இதற்கான மாற்றுவழியைத் தேடுவதன் அவசியத்தினை விளங்கிக்கொள்ள லாம். இன்று எதிர்நோக்கும் இத்தகைய பிரச்சனை களை மக்கள் விளங்கிக்கொண்டு அதற்கேற்ற வகையில் தம்மைத் தயாரிப்புச்செய்து மாற்றங் களை மேற்கொள்வதற்கான பாதைகளைத் தேர்ந் தெடுக்க உதவுவது சமுகப்பிரக்ஞையுள்ள ஒவ்வொ ருவரின் கடமையாகும். இதுவே இம் முன்றாவது பாதையின் அரசியலாகும்.
சர்வதேசமயம்(Globalization) தனிமனித வாழ் 656ir LDITsiplb(Transformation in personal life) guib60Débuil&TT60T 6TLDgil 2 D6 (Relationship to the

Page 46
Nature)என்பன பற்றிய எமது கருத்துகளை ஒட்டியே இவை பற்றிய அணுகுமுறையும் இருக்கமுடியும், திறந்த பொருளாதாரம் தேசிய இறைமைக்கு அச்சு றுத்தலா? உள்ளூர் உற்பத்திக்குப் பாதிப்பானதா? என்ற கேள்விகளுக்குப்பதிலைக் காண்பதன்மூலமே நியாயமான அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்க முடி யும். இறைமையும், உள்ளுர் உற்பத்தியும் பாதிக்கப் படுகிறது எனக் கருதினால் பாதுகாத்தல் (Protection) என்பது விவேகமான முடிவா?அல்லது சாத்திய மானதா? என்ற கேள்வி எழுகிறது.
திறந்த பொருளாதாரம் பொருளாதார அபிவிருத்
sessme Gosals.G.
சி. சிவசேகரம் முதற் பதிப்பு: ஏப்ரல் 1994
மறையாத மறு (புகலிடத்துப் பெண்கள் கவிதைத் தொகுப்பு)
முதற் பதிப்பு: பெப்ருவரி 1991
எனக்குள் பெய்யும் மை மூன்றாம் உலகப் பெண்நிலைவ
இருபத்திரண்டு ஆசியக் கவி தொகுப்பும் மொழியாக்கமு
யமுனா ராஜேந்திர
முதற் பதிப்பு: மே 1999
 
 
 
 
 
 

திக்கான யந்திரமாக அமையலாம். ஆனால் இதுவே சமுக, கலாச்சார விழுமியங்களை அழிப்பதற்கான உட்சக்தியையும் கொண்டிருப்பதால் இதன் நடைமு றைகளை அவ்வப்போது பரிசோதிப்பது அவசியமா கிறது. இப்பரிசோதனை சமூகநீதி என்ற அடிப்படை யைக் கொண்டதாக அமைதல் வேண்டும். தனிமனித சுதந்திரமும், சமத்துவமும் இங்குநிச்சயமாக முரண் படுகின்றன.தனிமனித சுதந்திரம் என்பது என்ன?என்
பதை வரையறுக்க வேண்டும். தனிமனித செயற்பாடு களுக்கும், சமுகக் கடமைகளுக்கும் இணைப்பினை
ஏற்படுத்த வேண்டும். அதாவது தனிமனிதனின் சமு
JITâ
கம் தொடர்பான கடமைகளும், உரிமைக ளும் வரையறுக்கப்பட வேண்டும். கடமை இல்லாமல் உரிமை இல்லை என்பதே அடிப் படைச்சித்தாந்தமாகும்.
இவ்வாறான நோக்கு எப்பின்னணியில் எழுகிறது? என்பதை தற்போது பார்ப்பது அவசியமாகிறது. எமது நாட்டினை உதா ரணமாகக் கொண்டால் கூட்டுச்சமுகமாக வாழ்ந்த சமுகம் படிப்படியாக அத்தன்மையி னை இழந்து வருவதோடு தனிமனித சுதந் திரத்திற்கு அதிக அழுத்தம் கொக்கும் சமு கமாகவும் மாறி வருகிறது. குறிப்பாக திற ந்த பொருளாதாரக் கொள்கைகள் அறிமு கப்படுத்தப்பட்டதன் பின் இந் நிலைமைகள் தீவிரமடைந்துள்ளன. குறுகிய காலத்தில் நிறையச் சேர்க்க வேண்டும், சந்தர்ப்பத் தினை நழுவவிடக் கூடாது.இந்நிலைமை தொர்ந்து கிடைக்காது என்பன போன்ற சந் தேகங்கள் சுயநலத்திற்கான அவாவினை வளர்க்கின்றன. தனது செயற்பாடுகள் தான் வாழும் சமுகத்தை எவ்வளவு துாரம் பாதிக் கிறது என சிந்திப்பதிலிருந்து தவறுகிறார் கள். உதாரணமாக விபச்சாரம், போதை வஸ்து, சூழல் அசுத்தமாதல் என்பன பற்றி சம்பந்தப்பட்டவர்கள் கவலை கொள்வதி ல்லை. வியாபாரி கலப்படம் பற்றிக் கவலை கொள்வதில்லை. உற்பத்தியாளன் தொழி லாளிக்கு போதிய ஊதியத்தை அளிப்ப தில்லை. தனிமனித சுதந்திரம் என்பது தனி மனித விருப்பு வெறுப்பு, தனது வாழ்க் கையை தானே தீர்மானித்தல் என்ற குறு கிய விளக்கங்களுக்குள் சென்றுவிடுவ தால் சமுக உணர்வு படிப்படியாக விடைபெ ற்று விடுகிறது. சமூக ஏற்றத் தாழ்வு அதிக ரித்துச் செல்லும்போது தனிமனித சுதந்தி ரமும் சுரண்டப்படுகிறது. உயர்நிலை மக் கள், தாழ்நிலை மக்களை ஏய்ப்பதற்கும், சுரண்டுவதற்கும் ஓர் வாய்ப்பான நிலைமை யாக இது அமைந்து விடுகிறது. ஒருவன் தனது சுயவிருப்பின் பேரில் தனது உழைப் பினை விற்கிறான். அது அவனது தனிமனித சுதந்திரம் என்பதால் உழைப்பை உறிஞ்சு பவருக்குச் சமுகக்கடமை இல்லையென் றாகிறது. O
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 45

Page 47
46 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 


Page 48
திகாலை ஆறு மணியி ருக்கும் வெளியே பார்த்த போது புள்ளிபோல் தோன்றியது. சூரிய வெளிச்சம் புள்ளி மேல் பட்டு ஒளிர்விட்டது. நேரம் செல் லச் செல்ல புள்ளியின் அளவு பெருத்தது. இன்னும் சிறிது நேரத்தில் புள்ளிக்கும் அவனுக் குமிடையிலான இடைவெளி குறைந்து விடும்.
நீண்ட பன்னிரண்டு வருடகால இடைவெளியின் பின்னர் மீண்டும் அவன் திரும்புகிறான். விமானம் இன்னும் சிறிது நேரத்தில் தரை யிறங்கிவிடும். நேற்றுப்போல் இருந்தது.
லண்டனில் ஏயர் லங்காவில் ஏறிய சிறிது நேரத்தில் பணிப் பெண்கள் விழுந்தடித்து உபசரித்தார்கள். பணிப் பெண்"ஐ போவன்"
அந்த மொழி. அந் தக்குரல் அருகில் கேட் டது. கருங்காலிக் கரம் ஒன்று குரல்வளை பற்றி உரக்கக் கத்தியது.
"ஏறடா." இன்னும் உரத்துக் கேட்டது காதில், காக் கிச் சட்டையின் காக்கிப் பச்சைக்கும், விமானப் பணிப்பெண்ணின் சேலைப் பச்சைக்கும் இடையில் எத்தனை வித்தியாசம்? பார்வையில் கூட. என்ன. இரண்டுக்கும் அடிமை யாகி விடுகிறோம். கொச்சைத் தமிழும் "ஐ போவனும் விமானத் துக்குள்ளேயே பழகியாகி விட்டது.
அம்மா, அப்பா, அண்ணன் மனதிற்குள் ஒரு தடவை அவர்க ளது முகங்களை பதித்துக் கொண்டான். இறுதியாக கிடைத்த படங்களில் இருந்த முகங்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டான். புகை மண்டலத்தி னுள் இருந்து வெளியே வருவது போல் நினைவுகளை மீட்க முயன்றபொழுது. கடைசியாக பார்த்ததிற்கும், படத்தில் பார்த் ததிற்கும் எத்தனையோ வித்தி யாசங்கள். கறுத்துப்போய் உடல் மெலிந்து பரந்த பார்வை. போரும், வயதும் பிள்ளைகள் பற் றிய கவலையும் முகங்களையே
மாற்றிவிட்டன.
அதற்குள் வி றங்கி விட்டது. னில் பட்டது த்ெ அதற்குப் பக்கத் காக்கி - துவக்கு எச்சில் தொ இறங்க மறுத்த: ஓடி வரும் குழந் பவர முகததை மறுபக்கம் ஒடிச் போல் ஓர் உண கனவில் செல்வ இயங்கின. கழிய காவல். ஏனோ ர திரம் பெய்ய வே தோன்றியது.
தூரத்திலே(
முகம் கண்க6ை சுருக்கத்திலும் அது. கரு பதித் கால உதைதது கனவுகளை சும தெம்புடன் வரு திருக்கும் தாய் உற்சாகம் தொ கண்களால் வர
'தம்பி வா இது தாய். * மேல் பேச முடிய அதுவே அவனு உள்ளத்தை ெ தோளில் தட்டி அண்ணன். அன க்க, 'கன நேரம 'இல்லை, இ ஒரு அரை மணி 919 db.dbig dist காவல் அரண்க வற்றையும் விட பாக அவன் கன
 

மானம் தரையி முதலில் கண் தன்னைமரம். ததில் பச்சைக் நடன் - காவல். ண்டைக்குள் து. ஆசையுடன் தை, துாக்கவரு பார்த்தவுடன் *செல்லும். அது ர்வு, கால்கள் து போல் தானாக பலறைக்குள்ளும் தீண்ட நேரம் மூத் 1ண்டும் போல்
யே சுருங்கிய
ாத் துளைத்தது. சுடர்விடும் ஒளி த நாளிலிருந்து 1. தலை பிடித்து, ந்து மனதில் வான்'எனக் காத் மை. கால்களில்
ற்றிக் கொண்டது.
வேற்கும் தந்தை.
அவளால் அதற்கு ாது. ஆனால் க்கு அவளது நளிவாக்கும். புன்னகைக்கும் )மதியைக் குலை ா நிற்கிறியளோ' ல்லை இப்ப வந்து த்தியாலம் தான் ண்களில் பட்டது ளே. வேறெல்லா அதுவே இயல் *களை தொட்
டது அதிகம்.
Biblîl police report 6T(Bă.5 வேணும். நீஒருக்கா passport ஐத் தா. நான் உங்களை இறக்கி விட்டிட்டு வெள்ளவத்தை police Station36) 6TCBg5glds கொண்டு வாறன்.
இங்குள்ள அனைவரும் ஏதோ ஒரு வகையில் காவலில் தான் உள்ளார்கள்.
வந்து இரண்டு நாட்களாகி
விட்டது. வீடே அமர்க்களப்பட்
டது. அம்மா குசினிக்குள்ளேயே அடைந்து கிடந்தாள். அவனு க்கு சாப்பாடு சமைக்க வேணும். அதைச் சாப்பிடும்பொழுது அவள் பார்த்துக்கொண்டிருக்க வேணும். இடைக்கிடை இப்
பிடிச்சாப்பிட்டா எப்படி
y
a ss
'ஒழுங்காய்ச் சாப்பிடு
'தம்பி உன்னோட வந்த தரகரை ஒருக்காப் போய் பார்ப்பமே
அம்மாவின் கவலை அவளுக்கு. அப்பாவோ அதில் தீவிரமாய் இற ங்கி விட்டார். அவ னுக்கோ அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல். மனதிற்குள் மீண்டும் ஒரு தடவை பழைய ஞாபகங்களை கிளறிப் பார்த்தான். எதாலை ஓடினான். காலி றோட்டாலை தெகிவளையும் தாண்டி ஒடேக் கைதான் அது நடந்தது. ஒட் டமா அது. உயிரைக் கையிலை பிடித்துக் கொண்டு. தனது கால்களா! இன்றைக்கும் நம்ப முடியவில்லை, கால்களை வாஞ் சையுடன் தடவிக் கொடுத்திருக் கிறான் இதை நினைக்கும் போது. தலையில் பட்ட ஒரு அடி யுடன் மயங்கி விட்டான். நல்ல காலம் துரத்தியவர்களில் மற்ற வர்கள் வேறு சிலரை குறி வைத்து துரத்த ஒருவன் மட்டும் ஓடிவந்தான். இப்பொழுதும் அந் தக் குரல்கள் காதுகளில் ரீங்கா ரமிட்டன.
அவன் எழுந்து பார்த்தபொ ழுது ஒரு குடிசைக்குள். அரு கில் ஒரு இளம்பெண். அவள் அரு
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 47

Page 49
கில் வயது வந்த மணிசி, காயத் துக்கு கட்டுப்போட்டிருந்தார்கள், அடுத்து வந்த நாட்களில் அவர் களை தங்களது வறுமையிலும் உபசரித்தார்கள்.
மீண்டும் காடையர்கள் கேள் விப்பட்டு வந்தபோது, முதலில் இங்கு ஒருவரும் இல்லையென்ற னர். நம்ப மறுத்து உள்ளே வந்த போது அவர் என் கனவர் சுக மில்லாது இருக்கின்றார் என்று அடித்துக் கூறினாள்.
இருவருக்கும் தெரிந்த ஆங் கிலத்திலும் இவனது அரைகுறை சிங்களத்திலும், அவளது பெயர் சங்கமியென்றும், அவளது தந்தை ஒரு சிறு வியாபாரி, ஊர் ஊராகப் போய் பொருட்களை விற்பவர், இடைக்கிடை வீட்டை வந்து போவார் என்றும் அறிந்து கொண்டான். அவர் திரும்பி வந்த பொழுது அவனைப்
f 骷陷 -
பார்த்து ஆச்சரியப்பட்டாலும் கத்தவில்லை, ஒரு சில நாட்க ளில் நிலைமை சீரானபொழுது அவரே கப்பலில் ஏற்றி விட்டார். வீட்டை விட்டு வெளியேறிய பொழுது, "நான் உங்களை ஒருக் காலும் மறக்கமாட்டன். மீண்டும் ஒரு தடவை சந்திப்பேன். போயிட்டு வாறன்' கூறியது நினை அக்கு வந்தது. அவர்களது கண் களிலும் கண்ணிர், ஒரு சில நாட் களில் ஏற்பட்ட உணர்வு ஓராயி ரம் ஆண்டுகள் வாழ்ந்தபோதும் ஏற்படவில்லையே. சங்கமியின் தாய் சோறு பரிமாறியபோது தாயின் நினைவே வந்தது. அவளை மீண்டும் ஒருதடவை
பார்க்கமாட்டோ வித்தது. புரிந்து போல் அவள் ஆ அந்தச் சில நாட் ரத்தையும் மீறி : தைகள் மனதை டுத்தின.
வீடு வந்து ே அம்மாவே கூறின் பெயருக்கு ஒரு : செய்ய வேண்டும் நல்லாயிருச் கள் அவள் மன கொண்டாள். அ
- ,
பக்கத்துவிட் விட்டு கந்தப்பு அ கொன்டே போது களை விரைவில் கொண்டான், ே பயிற்சி. தாய்', ருந்து கங்கை
துடித்தான்.
ஊரில் ஒவ்ெ வொரு விட்டிலிரு கள் வெளியேறி: ஓம் ஒருநாள்.
தலைமையை போது தலைக்கு கள். தட்டுத் தடு கொடுத்தனுப்பி ன்சி தலை வெட் இப்போது மீண்டு னில்,
எப்படியாவது கண்டு பிடிக்க ே த்தான் இருக்கு அது. விசாரிக் இருந்தது. கூட 6
48 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 

மா? மனம் பரித கொண்டவள் றுதல் கூறுவாள். களில் பயங்க ஆறுதல் வார்த்
அமைதிப்ப
சர்ந்தபொழுது ாாள், அவர்கள் அர்ச்சனை
க்க வேணும் அது நிற்குள் நேர்ந்து வளால் ஆனது
டு ராசன், கல் அடுக்கிக் 5லாம் இழப்புக் ம் தொத்திக் பாராட்டம்,
"வால்காவிலி ரை' கரைத்துக்
நீண்ட காலமாக கொழும்பில் வசிக்கிறான். சிங்களம் சரளமா கப் பேசத் தெரியும். அங்கிருந்த ஒருவரைக் கேட்டபோது ரன சிங்க. சங்கமி. அவர்கள் காட் டிய குடிசை. பதினாறு வருடங்க ளின் பின்னர், இன்னமும் அதே தோற்றத்துடன் காட்சியளித்தது அந்தக் குடிசை குடிசைக் கத வைத் தட்டினார்கள். கதவைத் திறந்த பெண். அள்ளி முடித்த 'மயிர்' முகத்தில் வியர்வை, புகைக்குள் இருந்து வருவது போல் காட்சியளித்தாள். இவர் களை ஆச்சரியத்துடன் பார்த் தாள்.
'உள்ளே வரலாமா?
பயந்தவள் உள்ளே பாய்ந்து சென்று தகப்பனை அழைத்து வந்தாள். அவர் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தார். நண்பன் விடயத்தைக் கூறியபோது
வாரு நாளும் ஒவ் இந்தும் இளைஞர் னார்கள். அவ
ப விமர்சித்த
வெடி என்றார் நிமாறி, தமையன் பகாசில், ஏஜ டி, கடல் கடந்து, ம் அந்த மன்ை
அந்த வீட்டைக் பினும், அதாய் ம், இல்லை கவும் பயமாக வந்த நண்பன்
இவனை உற்று நோக்கியவர் சிநேக பாவத்துடன் கைகளை நீட்டிக் குலுக்கினார். மகளை அழைத்து அறிமுகப்படுத்தினார். அனைவரும் அந்த சில நாட் களை நினைவுபடுத்திக்கொண் டனர். பரிசுப் பொருட்களை அவர்களிடம் கொடுத்து விட்டு நிமிர்ந்தபொழுது தெரிந்தது கம்பீரமான ஆண்மகனின் படம் மாலையுடன், உற்று நோக்கிய பொழுது, அவர் கூறி னார்.'சங்கமியின் புருஷன்.
கண்கள் ஒரு நிமிடம் கலங்க, முகத்தைக் குனிந்தவள் உள்ளே சென்றாள்.
"அவள் கணவன், யாழ்ப்பா

Page 50
ணத்துக்கு ஆமியாய்ப் போனவர். உடம்பு மட்டும்தான் திரும்பி வந்தது
'கலியாணம் கட்டி சில மாதங் களுக்குள்ளேயே இது நடந்தது.
அதுக்குப் பிறகு இப்பிடியே காலம் கழியுது.
எத்தனையோ தரம் அழுத வள் போகவேண்டாம் என்று. எங்
The Hindu பத்திரிகையில் (1.12.98) வெளிவந்த
விமர்சனத்தின் ஒரு பகுதி.
The author has a unique, inimitable style. He has a gestalt Sense of humour that is not of ten Seen in Tamil Writers. He describes events with a leisure and a ritual and shows such passion for details that one does not find anywhere in Tamil writing. He manipulates the language that is at once arresting and capable of Creating envy in other practitioners. His observations are breathtaking.
கிடைக்குமிடங்கள்: மணிமேகலைப் பிரசுரம் த. பெ. எண் 1447 4 தணிகாசலம் சாலை
தி. நகர், சென்னை 600017 தொலைபேசி: 4342926
D. திலிப்குமார் 216.10 சு. மு மத் ரோடு மைலாப்பூர், சென்னை 600004 தொலைபேசி: 4952217
கடை வறுமையி ளாலை என்ன ெ
சங்கமியின் மாற்றி, 'அன்றை செய்த உதவிை வீடு தேடி நீங்க செய்யிறது எண் எங்களுக்கு.
வெளியே மன தொடங்கி விட்ட அருகே நின்று ச யைப் பார்த்துக் தாள். அவளது னம் அடித்தது. ப துப் பார்க்கும் அ கத் தொடங்கின அறைந்து சாத்த நிதானப்படுத்தி உள்ளே வந்து, ' டுவிட்டுத்தான் ே அவர்களால் வில்லை. அவள் றும்பொழுது ஒரு அவளை நிமிர்ந் இன்னமும் அந்த முகம் அவளில் ே அமைதியான புல் த்தை மீண்டும் ஒ துக் கொண்டான் இந்த இழப்பு.?
அவர்கள் வெ. போது மழை நின் கூடுமானவரை ெ இருந்தான். விை வாகனங்கள், வீ யாடும் சிறுவர்க UiTuilibgpg).
நாடு(?) திரும் டும் ஒரு தடவை சென்று பார்த்தா சங்கமியுடன் கதைத்தான்.
‘என்ன செய்: சம். என்னால் எ செய்ய முடியுமே செய்கின்றேன். ஊர் செல்கின்றே சென்று தொடர்பு எனக் கூறினான். disgb/TT600TLDIT வர்களுக்கு நன் றவனை, அவன் பாதை, அவர்கள் பொழுது கேள்வி தாய் எவ்வள
 

லை எங்க சய்ய முடியும் 5/Tui (3 Jéfaat க்கு நாங்க ப மறக்காமல், வந்தது. என்ன டே தெரியேல்ல
ழ பெய்யத் து. யன்னல் ங்கமி மழை கொண்டிருந் மனசிலும் தூவா ழையை இரசித் வளே வெறுக் ாள். யன்னலை தினாள். மனதை F சிரித்தவாறே நீங்கள் சாப்பிட் பாகவேணும்' மறுக்க முடிய சாப்பாடு பரிமா தடவை து பார்த்தான். க் குழந்தை தெரிந்தது. னனகை. முக ரு தடவை பார்த் ா. இவளுக்கா
வளியே வந்த ாறு விட்டது. மளனமாகவே ]ரந்து செல்லும் தியோரம் விளை ள். மனம் அலை
>ப முன்னர் மீண் அவர்களைச் ‘ன்.
மனம் விட்டுக்
வதாக உத்தே ன்ன உதவி அதனைச் நாளை மறுநாள்
ன். அங்கு
கொள்கிறேன்'
க, உதவி செய்த றி கூறவே சென் கடந்து வந்த D67TU IITIT55
எழுப்பிவிட்டது? வோ கேட்டும்
திருமணத்துக்கு மறுத்து விட் டான். தந்தையார் ஒன்றுமே பேச வில்லை. மீண்டும் ஊர் திரும்பிய போது விமானநிலையத்தில் தாய் ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள். அவளைத் தேற்றுவது கடினமா கவே இருந்தது. உறவுகள். அறுக்க முடியாத உறவுகள். அன்புதான் அவர்களை ஆட்டுகி றது. அம்மாவுக்குத் தன் பேச்சை மகன் தட்டவில்லை எனப் பெருமை பேசும் அன்பு. அப்பா வுக்கு தான் சொல்லித் தட்டி னால் தனக்கு அவமானம் என நினைக்கும் அன்பு, தமைய னுக்கு மதிக்கமாட்டான் என்ற பெயர் வரும் எனப் பயத்துடன் கூடிய அன்பு, உறவுச் சங்கிலிக ளில் சுயநலம் அதிகமாகவே இருந்தது.
வந்து ஒரு சில நாட்களி லேயே தீவிரமாக இறங்கிவிட் டான். நண்பர்கள் சிலர் அவனது முடிவைக் கேலி செய்தனர். சிலர் நீமுட்டாள் என்றனர்.
ஒரு நாள் மாலை ஒரு சில நண்பர்கள் அவனுடன் பழையபடி கொள்கை, போராட்டம், எங்க ளது இன்றைய நிலை. அவனது முடிவை விமர்சித்து விவாதமே நடத்தினார்கள். மறுநாள் காலை எழ, இருபத்திநாலு வெறும் பியர்ப்போத்தல்களை குப்பைக்குள் போட்டான். இவர் கள் யாவரும் மறந்தது ஒன்று, மனிதாபிமானம். அதற்கு முன் னால் வேறு எந்தச் சுவர்களும் இருக்கக் கூடாது.
வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. காலையில் தொடங்கியது இன்னும் நிற்க வில்லை. பியர்க்கடைக்கு போட்டு வரவே ஒரு மணித்தியா லம் எடுத்திட்டுது. தூரத்தே வரும்பொழுது அவனது அப்பார்ட் மென்டில் ஒளி நிறைந்திருந்தது. நெருங்க நெருங்க ஒளியின் வீச்சு அதிகரித்தது. உள்ளே சத்தம். அந்த இனிய மாலைப் பொழுதை அவனது துணைவி தோழி சங்கமியும் நண்பர்களும் அவர்க ளது குடும்பத்தினரும் கலகலப் பாக்கிக் கொண்டிருந்தார்கள். அவன் ஒளியை நெருங்கிக் கொண்டிருந்தான். O
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 149

Page 51
Un Moment S
காமன் வசந்த6
னைத்துலக மன்னிப்புச்சபையின் ஒல்லாந் 994 துப்பிரிவின் பொறுப்பாளர் அவசரமாக
என்னை அழைத்தபோது நான் பயந்து போய்விட்டேன், இலங்கையில் ஏதாவது பயங்கர மான அம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதா அல்லது இன் னொரு படுகொலை நடந்துவிட்டதோ என்பதே என் னுடைய பயத்துக்குக் காரணம், அம்ஸ்ரர்டாமுக்கும் நான் இருக்கும் சுற்றயல் நகருக்கும் பயணதூரம் முப் பது நிமிடங்கள்தான். பொழுதுபட, "பாகஸ் ஸ்ட்ராட் டில் உள்ள பியர்க்கடையில் மன்னிப்புச் சபையின் பொறுப்பாளரைச் சந்தித்தேன். கலவரமும் பதட்ட மும் துடியிருந்த அவருடைய முகத்தில் வழமையாக
5D உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 
 

S'il VOUS Plaît
ண் குளிர்நாடன்
இருக்கும் மீசையைக் காணவில்லை (நமது தேசியத் தலைவர் போல ஒன்றிரண்டு நரைமயிர் வந்ததும் மீசையையும் பூண்டோடு அழித்துவிட்டாரோ தெரி பாது!!
"என்ன ஆயிற்று? என்ன இவ்வளவு அவசரம்" என்று கேட்டேன்.
"பாரிஸிலிருக்கும் ஒரு தமிழ்க்குழுவிடம் இருந்து அவசரமாகத் தம்மைக் காப்பாற்றும்படி 13% தந்தி e-mal, கடிதம் மற்றும் 803 தொலைபேசி அழைப்பு கள் வந்துள்ளன. என்ன செய்வது என்று தெரிய வில்லை"
"யாரிடமிருந்து காப்பாற்றும்படி?" என்று கேட் டேன்.
"இன்னொரு தமிழ்க்குழுவிடமிருந்து" என்று சொன்னார். இது என்னடி சிக்கல் என்னுடைய மொழியியல் பெண்ணியத்தைக் கவனிக்கவும்!) என்று நினைத்தவாறே "இந்தக் குழுக்கள் ஆயுதம் ஏந்தியவர்களோ" என்று கேட்டேன்.
"அதுபற்றிய தகவல் இல்லை. ஆனால் அவர்களு டைய குரலிலும் எழுத்திலும் இருக்கிற தொனியைப் பார்த்தால் பயங்கரமான ஆயுதங்களும் அணுவாயு தங்களும் வைத்திருக்கிறார்கள் போலத் தெரிகி றது. ஐக்கியநாடுகள் சபைக்கும் அவர்கள் தம்மைப் பாதுகாக்கும்படி கேட்டு அவசரக்கோரிக்கை விடுத் திருக்கிறார்கள். என்றாலும் ஒளாமா பின் போட துடன் தொடர்புள்ளவர் களாக அவர்கள் இருப் பார்களோ என்ற சந்தே கத்தில் நிலைமை சரி வரத் தெரியாமல் என்ன செய்வது என்று ஐ.நா.சபையும் முழிக் " கிறது" என்றார் திரு இடி வாளர் அம்னெஸ்டி, Vi "அடி சக்கை" என்றேன்.
"என்ன நீங்கள் ராணுவம பமாக்கப்பட்ட மொழியில் பேசுகிறீர் கள்?சக்கை அடி என்றால் கன்னிவெடி

Page 52
வைத்துப் பிரிப்பது என்றல்லாவா ஈழத்தமிழ் வழக் கில் அர்த்தம்" என்றார் திருவாளர் அம்னெஸ்டி.
"ஐயோ, மறந்துபோய்விட்டேன். பொறுத்தருளுங் கள்" என்று அவரிடம் வேண்டிக்கொண்டேன். மன்னிப் புக்காக உலகம் எங்கும் வாதாடுவதுதானே அவரது தொழில். என்னை உடனடியாக அவர் மன்னித்து விட்டார். (அப்பாடி(டா) நான் தப்பிவிட்டேன். தமிழ் நாட்டில் சா ஒறுப்புப் பெற்றிருக்கும் நால்வரும் தப் புவது எப்போது என்று என்னுடைய பெரிய ஆதங்கம்)
"நான் ஒரு ஸாமான்யன், தேமே என்றிருப்பதே எனது ஜீவித லட்சியம், அஹிம்ஸை வழிதானே என் னது. நான் என்ன பண்ணமுடியும்?" என்று கேட்டேன். "முதலில் நான் சொல்வதைக் கேளுங்களேன்" என்றுவிட்டுத் திருவாளர் அம்னெஸ்டி சொன்ன விஷ யங்களின் ஸாராம்ஸம் அதாவது 'உள்ளீடு' இது தான்:
ஒரே ஒரு பாரிஸில் ஒரே ஒரு தமிழ்க்குழு இருந் தது. அதனுடைய பெயர்'க' ஒருமை என்பது எப்போ துமே பாஸிஸம் அல்லவா. எனவே 'க' இரண்டாக உடைந்தது. இரண்டாவது குழுவின் பெயர் 'கா'. 'க'வுக்குத் தனியான குடை, கொடி, வாகனம், ஆல வட்டம் இருந்தன. 'கா'க்கும் தனியான கொடி,குடை, ஆலவட்டம், ஒகே வட்டம் எல்லாம் இருந்தன. பொது க்கூட்டம் ஒன்றில் 'க'வைச் சேர்ந்தவர்களில் ஓரிரு வர் 'கா'வைச் சேர்ந்தவர்களைக் கடிக்க முயன்றார் கள் என்பது 'க'இன் குற்றச்சாட்டு. 'கடி' என்பது வன் முறை என்னும் வினையடியாகப் பிறந்தது (நல் வினை?திவினை?செய்வினை?செயப்பாட்டு வினை? ஊழ்வினை?) என்பது'கா'வின் வாதம், பயம், அச்சம். எனவேதான் அவர்கள் பாதுகாப்புத்தேடி உலகம் எங்கும் SOS அனுப்பியிருக்கிறார்கள்.
"அப்படீங்களா?" என்றேன். "நீங்கள் சொல்கிற விஷயத்துக்கு அதாவது பாடத்துக்கு அல்லது பிரதிக்கு அல்லது textஇற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புகள் சாத்தியம் அல் லவா?நான் எந்த வாசிப்பை நம்புவது?" என்று கேட் டேன்.
"அந்தப் பிரச்சினையை ஐ.நா. சபையின் பாது காப்புக் கவுன்ஸிலிடம் விட்டுவிடுங்கள். எங்களு டைய பிரச்சினை என்னவென்றால் நாங்கள் இப் போது 'கா'வுக்கு ஏதாவது பதில் அனுப்பியாக வேண்டும். அச்சத்தில் மூழ்கி பாரிஸ் நகரிலிருந்து வெளியேற முடியாமல் பதுங்கு குழிக்குள் ஒளிந்தி ருக்கிறார்கள் அவர்கள். அவர்களை எப்படியாவது காப்பாற்றவேண்டும். மற்றும் அவர்களது குரலைப் பலமாக ஒலிக்கச் செய்யவேண்டும். காலங்காலமா கத் தமது குரலை வரலாறு வேறு தடைசெய்து விட் டுள்ளது என்றுமுறையிடுகிறார்கள் அவர்கள்" என்று வலியுறுத்தினார் திருவாளர் அம்னெஸ்டி.
"அது நல்ல விஷயம்தான். உடனடியாக ஒரு சமா தானப்படையை பாரிசுக்கு அனுப்பவேண்டியதுதான். கொஸோவா, சூடான், பொஸ்னியா, ஈழம் எல்லாவற் 60pub65L gg. (SLDITéFLDIT607 Humanitarian tragedy தான். சமாதானப்படை தொடர்பான தீர்மானத்தைப்

பாதுகாப்புக் கவுன்ஸிலில் கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள். எங்களால் முடிந்த அளவுக்கு ஆதர வைத் திரட்ட நாங்கள் முயல்கிறோம்" என்றேன்.
"நல்லது. ஆனால் ஒரு சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்று நாம் அஞ்சவேண்டி இருக்கிறது" என்றார் திரு. அம்னெஸ்டி.
"என்ன சிக்கல்?" என்று குழப்பமாகக் கேட்டேன். " 'கா' குழுவில் ஒரு ஸ்டாலின் இருக்கிறாராம். பாதுகாப்புக் கவுன்சிலில் ரஷ்யா இருப்பதாலும் அவர்கள் ஸ்டாலினத்தை எப்போதோ நிராகரித் துவிட்டபடியாலும், ஸ்டாலின் என்ற பெயரையே அவர்கள் தடைசெய்துவிட்டபடியாலும், 'கா' குழுவி னரின் பாதுகாப்புப் பிரச்சினையை ரஷ்ய அரசு வீட்டோ செய்துவிடுமோ என்று பயப்படுகிறோம்!" என்று அழாக்குறையாகச் சொன்னார் திரு. அம் னெஸ்டி.
இது என்ன புதுச்சிக்கல் என்று யோசிக்கவேண்டி ஆயிற்று. சோவியத் ஸ்டாலினிடம் அவரது மீசை யைவிட எந்த நல்ல அம்சமும் இருந்ததில்லை என் பதுதான் என்னுடைய கருத்தும்.
"பெயரை மாற்றச் சொல்லி அவசரமாக ஒரு SOS அனுப்புங்களேன்" இது என்னுடைய பரிந்துரை.
"சரி, நான் அப்படியே கேட்டுப் பார்க்கிறேன். ஆனால் உங்களுடைய பரிந்துரையை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவர்களுடைய பரப்புரையைப் பார்க்கிறபோது அதற்கான சாத்தியமில்லை என்றுதான் தோன்று கிறது. எனினும் நான் முயல்கிறேன்" என்று அரைமன தோடு ஒப்புக் கொண்டார் திருவாளர் அம்னெஸ்டி.
"அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால் நீங்கள் அவர்களுக்குத் தற்பாதுகாப்பு ஆயுதம் ஒன்றை வழங்கலாம்" என்றேன் நான். "என்ன அது?" என்று ஆர்வம் மேலிடப் பெற்றவராக திரு அம்னெஸ்டி கேட்டார். ..
"நேரடி வன்முறை சாத்தியமில்லை என்றால் அறி 6.565uj6 6.6ir(p60),D (Epistemological Violence) 6T6ip ஒன்று இருக்கிறது. அதனைப் பயன்படுத்தச் சொல் லுங்கள். கூடவே ஆறுமுகநாவலர் பாணி Polemical violenceஐயும் பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்யுங்கள்" என்றேன்.
"என்ன நீங்கள்? பின்-நவீனத்துவம், பழந்தேசியம் என்று எல்லாவற்றையுமே குழப்புகிறீர்கள்" என்று அழ ஆரம்பித்தார் திரு. அம்னெஸ்டி.
Je voudrais deux demies s'il vous plaît. I'm sorry. Could have two beers please? O
பெண்கள் இல்லாமலேயே ஆண்களினால் மட்டும் உருவாக்கப்பட்டு உலகிற்கு அறி முகப்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சட்ட திட்
டங்களைப் பெண்கள் நிராகரிப்பதில் எந்த வித நியாயங்களுமில்லாமல் இல்லை. స్టో': ' - 469747 4/6/6/7
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 |51

Page 53
恋
தொப்பிக தோழர்க தொப்பிக
தொப்பிக sp6.6sfogg ஆற்றாை
6)ğ5/TÜUPa: தலையில்
666 கதை இரு
பொறுை பொறுக்க பொருந்து பிறராற் ே தாமாய்ப் பொருந்து பொருள் - பொறுக் பொதிக
பொருந்து
60U (T(Qg5é பூட்டிக் ெ . பத்தி
தொ6ை
52 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 
 

ளைப் பூட்டாதீர்,
ளே - தலைத்
ளைப் பூட்டாதீர்.
தொப்புட் கொடிகளல்ல தலைத்தொப்பிகள் . உறுஞ்சிச் சப்பி முழந்தபின், உருவி வெட்டியெறிதற்கு ബൈബf.
ள்
ந்து ஒட்டிக் கொள்ளும்
மகள் ஆழப்புதைக்கும் தலை,
ஏறினால், இரங்காது இறங்க மறுக்கும் எடுக்க எத்தனித்தால், எகிறும் ஏளனம் பண்ணும் எட்டி உதைக்கும்.
ளைப் பாராதீர்கள்
வைப்பவர்
Tப் பாருங்கள்.
நக்கும் கறை தெறிக்கும்.
சிறு தொப்பிகட்குள்ளும் தொங்கி ஒளியலாம்
எரித்தொழிக்கும் Uஸ்மாசூரர் கரம். puustuiU $ப் பழகுங்கள் தும் தொப்பிகளை. போடப்படுதலெல்லாம் பொருந்திப் போகர்
போட்டுக்கொண்டதெல்லாம் பொருத்தமாய் வாரா. மெனப் பொறுக்கிப் போட்டபின், முகம் மறைக்க,
விற்றவனைச் சாடாதீர், ''ኤ கி அவனல்ல,
ட்டி வழிவந்து தெரு விரித்தது மட்டுமவன் செயல்.
அவரவர்க்கு அதது அல்ல, தொப்பிகள் அவரவர் தலைக்கதது ஆகுவது மட்டுமல்ல, தொப்பிகள் அவரவர் தகுதிக்கும் பொருந்தட்டும் அவர் பொறுக்கு தொப்பிகள். து தொப்பிகளைப் புனைந்தோர்கூட, க்கும் பூணெண்றதைப் காள்ளாதீர். ரமற்றுத் லயககூடியவை,
to6ofфј க்ைசிறு சாவிகள்.

Page 54
அவர்கள் வந்து எங்களைப் பிடிக்கும்வரை காத்திருக்காது நாங்களாகவே தலைமறைவாவோம்
தமிழில்: குயிலி
 

O3.07. 1942 வெள்ளிக்கிழமை
அன்புடன் கிட்டிக்கு,
ஹரி என்னுடைய பெற்றோரைச் சந்திப்பதற்காக நேற்று எங்களுடைய விட்டிற்கு வந்திருந்தான். நான் ஒரு கிறீம் கேக், இனிப்புப் பலகாரங்கள். பலவித விநோதமான பிஸ்கற்றுகள் கொஞ்சம் எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். ஆனால் எனக்கோ ஹரிக்கோ இரண்டு பேரும் கம்மா ஒன்றும் கதையாமல் பக்கத்திலை பக்கத்திலை தந்திக்கொண்டிருக்க கஷ்டமாக இருந்தது. எனவே இரண்டு பேரும் உலாத்தப் போனோம். பிறகு அவன் என்னைக் கொண்டு வந்து விட்டில் விடும்போது இரவு நேரம் 8.2. அப்படி நான் வீட்டை பிந்தி வந்தது என்னுடைய பிழை என்பதால் அப்பாவுக்கு என்மேல் சரியான கோபம். ஏனென்றால் யூதர்கள் இரவு 8.00மணிக்குப் பின்பு விட்டிற்கு வெளியில் இருப்பது மிகவும் ஆபத்தானது. அதனால் இனிமேல் இரவு எட்டு மணிக்குப் பிந்தாமல் விட்டிற்கு வருவேன் என்று அப்பாவுக்குச் சத்தியம் செய்து கொடுக்கவேண்டியதாகப் போய்விட்டது.
ஹரி நாளைக்கு என்னைத் தன்னுடைய விட்டிற்கு வரும்படி அழைத்திருக்கிறான். என்னுடைய தோழி யொப்பி, எந்த நேரமும் ஹரியைப்பற்றி ஏதாவது சொல்லிச் சொல்லி என்னைச் சிண்டிக்கொண்டே இருப்பாள், சத்தியமாக, எனக்கு ஹரி மேல் காதல் அப்படி இப்படி என்று எதுவும் இல்லை, எனக்கு நண்பன்கள் நிறையப்பேர் இருந்தால் ஒருவரும் அதைப்பற்றி ஒன்றும் வித்தியாசமாக நினைக்கமாட்டார்கள். ஆனால் குறிப்பாக ஒரு நண்பன், அதுவும் அழகானவனாக அம்மா அவனை அழைப்பது போல இருந்துவிட்டால் அதற்கு வேறு அர்த்தம் உண்டு.
ஹரி ஒரு நாள் மாலை ஈவாவைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறான். அப்போது ாவா, ஹரியிடம் "உனக்கு பானியிலா அல்லது ஆணிலா கூட விருப்பம்" என்று கேட்டிருக்கிறாள். அதற்கு ஹரி "உனக்கு அது தேவையில்லாத பிரச்சினை" என்று கூறி இருக்கிறான். அன்று மாலை முழுவதும் அவர்கள் இருவரும் எதுவுமே கதைக்கவில்லை. ஆனால், அதற்குப்பிறகு அவன் ஈவாவிடம் விடைபெறும்போது "சரி இப்ப கேள், இப்ப என்ன எப்பவுமே ஆன்தான் எனக்கு விருப்பமானவள். ஆனால், ஒரு பிள்ளைக்கும் சொல்லாதை" என்று கூறிவிட்டு மின்னல்போல் மறைந்துவிட்டான்.
ஹரி என்மேல் காதலாக இருக்கிறான் என்பதைக் கண்டு கொள்வது மிகவும் சுலபம், ஒரு மாற்றத்திற்கு சுவாரசியமாக இருக்கிறது, "ஹரி மிகவும் மரியாதையான பையன்" என்று மார்கொட் சொல்லுவாள். எனக்கும் அதில் உடன்பாடுதான். ஆனால், அவள் சொல்லுவதை விடவும் அவன்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 |53

Page 55
மேலானவன். அம்மா எந்தநேரமும் அவனைப் புழுகியபடிதான்: நல்ல வடிவான பெடியன், நல்ல நடத்தையுள்ளவன், நல்லவன் இப்படியாக, எங்களுடைய குடும்பத்தில் எல்லாருமே அவனை அங்கீகரிப்பதையிட்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவனும் அவர்களை விரும்புகிறான்.
ஆனால், என்னுடைய தோழிகள் எல்லாரும் மிகவும் குழந்தைத்தனமானவர்கள் என்று அவன் நினைக்கிறான். அவன் அப்படி நினைப்பது மிகவும் சரிதான்.
உன்னுடைய
ஆன்.
05.07. 1942 ஞாயிற்றுக்கிழமை காலை அன்புடன் கிட்டிக்கு, எங்களுடைய பரீட்சை முடிவுகள் சென்ற வெள்ளிக்கிழமை யூத அரங்கில் அறிவிக்கப் பட்டன. என்னுடைய பரீட்சை முடிவுகள் இதைவிடத் திறமாக இருக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கக்கூடாது. ஒரு பாடத்திற்கு மிக மோசமான புள்ளிகள். அட்சரகணிதத்திற்கு 50, இரண்டு 60கள், மிகுதி எல்லாப் பாடங்களுக்கும் 70ம் 80ம். என்னுடைய பெற்றோர்களை ஏனைய பெற்றோருடன் ஒப்பிடும்பொழுது, என்னுடைய படிப்பு விஷயம் குறித்து அவர்கள் மிகவும் வித்தியாசமான எண்ணம் கொண்டவர்கள். அப்படி இருந்தும் என்னுடைய பரீட்சை முடிவுகளைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து போனார்கள். அவ்வளவு துடுக்குத்தனம் இல்லாமல் நல்ல பிள்ளையாகவும் சந்தோஷமாகவும் நான் இருக்கும்வரையும், நான் என்னுடைய படிப்பில் எப்படி இருந்தாலும் அதைப்பற்றிக் கொஞ்சமும் அக்கறை கொள்ளமாட்டார்கள். என்னுடைய சந்தோஷம்தான் அவர்களுக்கு முக்கியம். மகிழ்ச்சியாக இருந்தால் மிச்சம் எல்லாம் தன்பாட்டில் வரும் என்று நினைப்பவர்கள். நான் அதற்கு நேரெதிர். பாடசாலையில் கரிசனை இல்லாத ஒரு மாணவியாக இருப்பதில் எனக்கு இவழ்டமில்லை. நான் உண்மையில் மொன்ரிசோரி பாடசாலையில் 7ம் வகுப்பில் இருந்திருக்க வேண்டும். ஆனால் யூதர்களின் கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டது. எல்லா யூதப் பிள்ளைகளும் யூதர்களிற்கான பாடசாலைக்குச் செல்லும்பொழுது, கல்லூரியின் தலைமை ஆசிரியர் எனக்கும் லைஸ்இற்கும் நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கினார். நாங்கள் எங்களால் முடிந்தளவு திறமையாகப் படிப்போம் என்று அவர் நம்பினார். அவருடைய நம்பிக்கையை நான் காப்பாற்ற விரும்புகிறேன். அவருடைய நினைப்பில் மண்அள்ளிப்போட எனக்கு விருப்பமில்லை.
என்னுடைய அக்கா மார்கொட்டுக்கும் வகுப்பு அறிக்கை கொடுத்திருந்தார்கள். அவள் வழக்கம் போலவே மிகவும் திறமையாகச் செய்திருந்தாள்.
54 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

பரிசு கொடுக்கும் முறையொன்று அப்பாடசாலையில் இருந்திருந்தால் மிக உயர்ந்த பரிசை அவள்தான் தட்டிச் சென்றிருப்பாள். அவள் அவ்வளவு கெட்டிக்காரி.
அப்பாவுக்கு அவருடைய வியாபார வி விஷயங்கள் சம்பந்தமாக மாக மறைந்திருக்கப் அவ்வளவு வேலை போகிறோம் என்று என இருக்காததால் அவர் க்கு இன்னும் தெரியாது மிகவும் கெதியாகவே உா வீட்டிற்கு வந்துவிட்டார். இவ்வளவுதூரம் யோசிப்பது தேவையற்றதாக இருக்கக்கூடும்.
ட்ராவிஸ் கொம்பனியை திரு. கூப்புவிஸ் உம் கோலன் அன் கொம்பனியை திரு. கிராலரும் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள்.
சில நாட்களுக்கு முன் எங்களுடைய சிறிய சதுக்கத்தைக் கடந்து நாங்கள் போய்க்கொண்டிருந்தபோது, நாங்கள் ஒரு மறைவிடத்திற்குச் செல்வதுபற்றி அப்பா கதைக்கத் தொடங்கினார். இதைப்பற்றிக் கதைக்கத் தொடங்கவேண்டிய நிலைமை இப்போது ஏன் வந்தது என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார், "ஓம் ஆன், இப்பொழுது வந்திருக்கிறது. உனக்குத் தெரியும் இப்போ ஒரு வருடத்திற்கு மேலாக உணவு,உடை, தளபாடங்கள் என்று எல்லாவற்றையும் மற்றவர்களிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய உடைமைகள் ஜேர்மனியர்களால் அபகரிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக, நாங்களாகப் போய் அவர்களுடைய இறுக்கமான பிடிக்குள் விழுவதற்கு விரும்பவில்லை. அதனால்தான், அவர்கள் வந்து எங்களைப் பிடிக்கும்வரை காத்திருக்காது, நாங்களாகவே தலைமறைவாவோம்" "ஆனால் அப்பா, அது எப்பவாக இருக்கும்?"நான் கேட்டேன். அவர் பேசியவைகள் அலட்சியப்படுத்தமுடியாதபடி மிகவும் சீரியசாக இருந்ததால் எனக்கு அதைப்பற்றி மேலும் அறிய ஆவலாக இருந்தது.
"நாங்கள் எல்லாவற்றையும் ஒழுங்கு செய்வோம். நீ இதுகள் ஒன்றையும் பற்றிக் கவலைப்படாமல் உன்னால் முடிந்தவரை சுதந்திரமாக, சந்தோஷமாக இரு. அவ்வளவுதான்" என்று அப்பா கூறிவிட்டார். ஒ! எதிர்காலத்தில் நம்பிக்கையற்ற இந்த வார்த்தைகள் நிர்ப்பந்திக்கும் காலம் தொலைவிலிருக்கமாட்டாதா?
உன்னுடைய
ஆன்.
நாங்கள் எங்கு இரகசிய

Page 56
O8.07.942 புதன்கிழமை அன்புள்ள கிட்டிக்கு, ஞாயிற்றுக்கிழமைக்கும் இந்தக் கணத்துக்கும் இடையில் பல வருடங் கள் உருண்டோடியது போல் ஒரு உணர்வு. அவ்வளவு விஷயங்கள் நடந்தேறியிருக்கின்றன. (நாடு சுமுகமாக இருந்தபோது) மொத்த உலகமும சகோதரி மார்கொட்டும் தாயாரும் தலைகீழா
கவிழ்ந்துவிட்டது போல் இருக்கின்றது. ஆனால் நான் இன்னும் உயிரோடிருக்கிறேன், அது முக்கியமான விஷயம் என்று அப்பா செல்கிறார்.
ஆம், உண்மையாகவே நான் இன்னும் உயிரோ டிருக்கிறேன். ஆனால் எங்கே, எப்படி என்றெல்லாம் கேட்காதே. ஏனென்றால் உனக்கு அது கிஞ்சிற் றும் விளங்கப்போவதில்லை. அதனால், ஞாயிற் றுக்கிழமை பின்னேரம் என்ன நடந்ததென்று சொல்கிறேன் கேள்.
பின்னேரம் மூன்று மணிக்கு யாரோ அழைப்பு மணியை அடித்தார்கள். (அப்பொழுதுதான் போன ஹரி திரும்பி வந்திருந்தான்) எனக்குக் கொஞ்சம் பஞ்சியாக இருந்ததால் நான் விறாந்தையில் படுத்திருந்து சூரியவெளிச்சத்தில் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு மணியடித்த சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரத்தின் பின் மார்கொட்டைப் பார்த்தால் அவள் குசினிக் கதவடியில் மிகவும் பதட்டத்துடன் நின்றுகொண்டிருந்தாள். "இரகசிய சேவையில் இருந்து அப்பாவைத் தேடி ஒரு அறிவித்தல் அனுப்பி இருக்கிறார்கள்" என்று தனக்குள் முணுமுணுத்தாள். தொடர்ந்து "அம்மா திரு. வான் டானைப் பார்க்கச் சென்றுவிட்டாள்" என்றாள். (வான்டான் அப்பாவுடன் வியாபாரரீதியாக இணைந்து வேலை செய்யும் ஒரு நண்பர்). ஒரு அறிவித்தல் வந்திருக்கின்றது என்று கேள்விப்பட்டதுமே எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது; அறிவித்தல் என்றால் என்ன என்பது குறித்து ஒவ்வொருவரும் அறிவார்கள். கைதி முகாம்களும் தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலைக் கூண்டுகளும் என் கண்முன்னே படமாய் விரிந்தன. நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாகக் காத்துக்கொண்டிருந்தபொழுது "நிச்சயமாய் அவர் போகமாட்டார்" என்று மார்கொட் உறுதியாகக் கூறினாள். "அம்மா வான் டான் குடும்பத்தினரிடம், நாளைக்கு நாங்கள் எங்களுடைய மறைவிடத்திற்குக் கட்டாயம்
 
 

போகிறோமா என்பதுபற்றிக் கலந்தாலோசிக்க, போயிருக்கிறாள். அவர்களும் எங்களுடன் வருகிறார்கள். நாங்கள் எல்லாமாக ஏழு பேர்" என்று தொடர்ந்தாள். அதன் பின் அமைதி. எங்களால் தொடர்ந்து கதைக்கமுடியவில்லை. நாங்கள் அப்பாவைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தோம். அப்பா இவைகளைப்பற்றி அதிகம் தெரியாமல் Joodse Invalideஇல் உள்ள சில வயதானவர்களைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறார், நாங்கள் அம்மாவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். ஒரே வெக்கை. அதோடு புதிர்களும் சேர்ந்து எங்களை மிகுந்த பயத்துடன் அமைதியாக இருக்கவைத்தது.
திடீரென்று மீண்டும் மணி ஒலித்தது. "அது ஹரி" என்று நான் சொன்னேன். "கதவைத் திறக்கவேண்டாம்" என்று மார்கொட் என்னைத் தடுத்தாள். ஆனால் அதற்குத் தேவை இருக்கவில்லை. கீழே அம்மாவும் திரு. வான் டான் உம் ஹரியுடன் பேசுவது எங்களுக்குக் கேட்டது. பிறகு அவர்கள் கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்தார்கள். ஒவ்வொரு தடவையும் அழைப்புமணி ஒலித்தபோது அது அப்பாவாக இருக்காதா என்று நானோ மார்கொட்டோ மெதுவாக எட்டிப் பார்த்தோம். அவரைத் தவிர வேறு யாருக்காகவும் கதவைத் திறக்காமல் இருப்பதற்காகத்தான்.
திரு. வான் டான் அம்மாவுடன் தனியாகக் கதைப்பதற்கு விரும்பியதால் என்னையும் மார்கொட்டையும் வெளியே அனுப்பிவிட்டார்கள். நாங்கள் எங்களுடைய படுக்கைஅறையில் தனியே இருந்தபோது மார்கொட் சொன்னாள் "அறிவித்தல் வந்தது அப்பாவுக்கில்லை தனக்குத்தான்" என்று. நான் இதைக் கேட்டதும் எப்போதும் இல்லாததுபோல் மிகவும் பயந்து அழத் தொடங்கினேன். மார்கொட்டுக்கு இப்போது பதினாறு வயது. இந்த வயதில் உள்ள பெண்பிள்ளைகளையும் அவர்கள் தங்களுடன் கூட்டிச் செல்வார்களா?"ஆனால் அவள் போகமாட்டாள். அதற்காக ஆண்டவனுக்கு நன்றி சொல்லவேண்டும்" அம்மா தனக்குள் இப்படிச் சொன்னாள். நாங்கள் மறைவிடம் செல்லவேண்டியதுபற்றி அப்பா எங்களிடம் கதைத்தபோது அப்பாவும் இதைத்தான் கருதியிருக்கவேண்டும். மறைந்திருப்பதற்கு
நாங்கள் எங்கு செல்லக்கூடும்?ஒரு நகரத்திற்கு, ஒரு வீட்டிற்கு, ஒரு குடிசைக்கு. எப்பொழுது, எப்படி, எங்கு? இப்படியான கேள்விகளைக் கேட்பதற்கு எனக்கு அனுமதி இல்லை. ஆனால் இந்தக் கேள்விகளை என் மனதில் இருந்து எடுக்கமுடியவில்லை.
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 55

Page 57
நானும் மார்கொட்டும் எங்களுடைய இன்றி யமையாத உடைமைகளில் சிலவற்றை பாடசா லைப் புத்தகப்பை ஒன்றினுள் அடுக்கினோம். அந்தப் பையினுள் நான் முதலாவதாக வைத்தது, இந்த நாட்குறிப்பேடுதான். பிறகு தலைமயிர் சுருட்டும் கிளிப்புகள், கைக்குட்டைகள், பாட சாலைப் புத்தகங்கள், ஒரு சிப்பு, பழைய கடிதங் கள் என்பவற்றை வைத்தேன்; நாங்கள் மறைவி டத்திற்குப் போகிறோம் என்ற எண்ணம் மேலிட, கண்ட விசர்ச்சாமான்கள் எல்லாத்தையும் தூக்கி வைத்தேன். ஆனால் இப்படி நேர்ந்ததற்காக நான் வருத்தப்படவில்லை. என்னைப் பொறுத்தவ ரையில் என்னுடைய நினைவுகள், என்னுடைய ஆடைகளை விடவும் மிகவும் பெறுமதியானவை. கடைசியில் பின்னேரம் ஐந்து மணிக்கு அப்பா வந்துவிட்டார். நாங்கள் திரு. கூப்புவிஸ் இற்கு போன் பண்ணி பின்னேரம் எங்கள் வீட்டிற்கு வர அவரால் முடியுமா? என்று கேட்டோம். வான் டான் மியப்பைப் போய்க் கூட்டிக்கொண்டு வந்தார். அவர் 1933ம் ஆண்டு தொடக்கம் அப்பாவினுடைய வியாபாரத்தில் கூட்டாளியும் நல்ல நண்பியும் ஆவார். அதேபோல்தான் மியப்பினுடைய புதிய கணவன் ஹெங்க் உம், மியப் வந்ததும் கொஞ்ச சப்பாத்துகள், உடுப்புகள், கோட்டுகள், உள்ளா டைகள், காலுறைகள் என்பவற்றை அவளுடைய பையில் இருந்து எடுத்துக்கொண்டுமாலையில் திரும்பி வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுவிட்டாள். வீட்டில் அமைதி குடிகொண்டது. வீட்டில் இருந்த யாருக்கும் ஏதாவது சாப்பிடவேண்டும் போல் தோன்றவில்லை. இன்னும் வெக்கையாக இருந் தது. எல்லாமே விசித்திரமாக இருந்தது. நாங்கள் எங்களுடைய மேல்வீட்டிலுள்ள பெரிய அறையை, இன்னும் திருமணமாகாத முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க திரு. கூட்ஸ்மிற்றுக்கு வாடகைக்கு விட்டிருந்தோம். அவரை வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு நாங்கள் அவரிடம் சிறிது முர்க்கத்தனமாக நடக்கவேண்டி இருந்தது. இரவு பத்து மணிவரையும் அவர் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தார். இந்தக் குறிப்பிட்ட மாலைப்பொழுது அவரை எதுவும் செய்யவில்லை. இரவு பதினொரு மணிக்கு மியப்பும் ஹெங்க்கும் வந்தார்கள். மீண்டும் ஒரு முறை சப்பாத்துகள், காலுறைகள், உள்ளாடைகள் எல்லாம் மியப்பினுடைய பையினுள்ளும் ஹெங்க்கினுடைய பெரிய கோட் பாக்கெட்டுகளுக்குள்ளும் மறைந் தன. இரவு 11.30க்கு அவர்களும் போய்விட் டார்கள். நான் மிகவும் களைத்துப் போய் இருந் தேன். அன்றுதான் என்னுடைய கட்டிலில் நான் படுக்கும் கடைசிநாளாக இருக்கலாம் என்று தெரிந்திருந்தும் படுத்த உடனேயே நான் நன்றாக நித்திரையாகிவிட்டேன். அடுத்தநாள் காலை ஐந்து மணிக்கு அம்மா என்னைக் கூப்பிடும் வரையும் நான் எழும்பவே இல்லை. அதிர்ஷ்ட வசமாக ஞாயிற்றுக்கிழமைபோல் அன்று வெக்கை யாக இருக்கவில்லை. அன்று முழுவதும்
56 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

குளிரில்லாத மழை பெய்தது. ஏதோ வடதுருவத்திற்குச் செல்பவர்கள்போல ஒரு முட்டை உடுப்புகளைப் போட்டுக்கொண்டோம். இப்படிச் செய்ததற்கு ஒரே ஒரு காரணம் எங்களுடைய உடுப்புகளை எங்களு டன் கொண்டு செல்ல
வேண்டும் என்பதுதான். }; எங்களுடைய ஆன் குழந்தையாக. நிலைமையில் எந்த
ஒரு யூதரும் ஒரு சூட்கேஸ் நிறைய உடுப்புகளைக் கொண்டு வெளியே செல்வதை கனவு காணக்கூட முடியாது. நான் கையில்லாத இரண்டு தடித்த மேற்சட்டைகள், மூன்று நீளக்காற்சட்டைகள், இன்னும் ஒரு முழு உடுப்பு, அதற்கு மேல் இன்னொரு பாவாடை, ஒரு ஜாக்கெட், ஒரு சம்மர் கோட், இரண்டு சோடி காலுறைகள், நாடா கட்டும் சப்பாத்து ஒன்று, கம்பளித்தொப்பி, கழுத்துக்குச் சுற்றும் ஒரு துண்டு இப்படி நிறைய எல்லாத்தையும் போட்டிருந்தேன். நாங்கள் வெளிக்கிடுவதற்கு முன், எனக்குமூச்சுத் திணறுவதுபோல இருந்தது. ஆனால் இதைப்பற்றி ஒருவரும் கேட்கவில்லை.
மார்கொட் தன்னுடைய பாடசாலைப் புத்தகப்பையை புத்தகங்களால் நிரப்பினாள். தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தாள். என்னைப் பொறுத்தவரையில், எங்களிற்குத் தெரியாத ஒரு இடத்திற்கு மியப்பின் பின்னால் சைக்கிளில் சென்றாள். பார், நாங்கள் எங்கு இரகசியமாக மறைந்திருக்கப் போகிறோம் என்று எனக்கு இன்னும் தெரியாது. காலை 7.30மணிக்கு நாங்கள் வீட்டைவிட்டு வெளிக்கிட்டபின் எங்களுடைய வீட்டுக்கதவு பூட்டப்பட்டது. நான் பிரியாவிடை பெற்றுக்கொண்ட ஒரே ஒரு ஜீவி, என்னுடைய குட்டிப்பூனை முர்ட்ஜிதான். அயலில் உள்ளவர்கள் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். திரு. கூட்ஸ்மிற்றுக்கு எழுதி வைக்கப்பட்ட கடிதத்தில் இவை எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
குசினியில் பூனைக்கு ஒரு இறாத்தல் இறைச்சி இருந்தது. மேசையில் இருந்த காலைச் சாப்பாட் டுச் சாமான்கள், விரிப்புகள் இல்லாத கட்டில்கள் எல்லாம் தாறுமாறாகக் கிடப்பது ஒருவித எண் ணத்தை ஏற்படுத்தும். ஆனாலும் எந்த அபிப்பி ராயத்தைப் பற்றியும் நாங்கள் கவலைப்பட வில்லை. நாங்கள் வெளிக்கிட்டுப் பாதுகாப்பாக வந்து சேர்வதைப்பற்றி மட்டும்தான் அப்போது சிந்தித்தோம். வேறு எந்த எண்ணமும் எங்களிடம் இருக்கவில்லை. நாளை தொடர்கிறேன்.
உன்னுடைய ஆன். O

Page 58
இ நபத்தியோராம் நுாற்றாண் டு இந்தோனேசியாவிற்கு இன்னுமொரு புதிய வலியுடன் பிறக்கப் போகிறது. இந்தோ னேசியாவின் ஆதி ய்ய சாம்ராச்சியத் திற்கு கிழக்குத் திமோர் கொடுத்த அடியின் வலி மறை யுமுன்னர் இப்போது அடுத்த மரனஅடியைக் கொடு க்: அசே (ACEH) தயாராகிறது. கிழக்குத் திமோரின் விடுதலையைத் தொடர்ந்து அதுே உரத்து ஒலிக்க விட்டிருக்கும் விடுதலைக்கான குரல், இன்று இந் தோனேசிய அரசை மாத்திரமல்ல அதன் சகபாடி களையும் கலக்கம 3 :L) ബ്ള്യു
է 11:Այl.
அசேனிய மக்க எரின் விடுதலைக் கான கோரிக்கை அலட்சியப்படுத்தக்சு டிய ஒன்றல்ல என்
曹 பர்தி நடந்த நமே
பர் மாதம் 8ம் திகதி இந்தோனேசியாவும் உலகமும் புரிந்து கொண்டன, அசே யின் தலைநகரான பண்டாவின் மையத்தில் அமைந்துள்ள பிரதான பள் எரிவாசலின் முன் அணிதிரண்ட5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் வரையிலான அசேணிய மக்கள் (அதா வது அசேணிய மக்கள் தொகை 4 மில்லியன், அதில் ஐந்திலொரு பங்கு மக்கள்) கிழக்குத் திமோரைப் போலவே அசேயின் விடுதலை குறித்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். 1700 தீவுகளை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டுள்ளதும் உலகின் நான் காவது சனத்தொகை மிக்க நாடும் 88வித முஸ்லிம் மக்களைத் தனது சனத்தொகையில் கொண்டுள்ள போதும் 400 வெவ்வேறுபட்ட இன, மத மக்கள் வாழும் நாடாகிய இந்தோனேசியாவின் வரலாற்றில் நை பெற்ற மிகப்பெரும் பிரிவினைக்கான அணிவகுப்பு இதுவேயாகும்,
 
 
 
 

琶、_上
F
எட்டு இலட்சத் துக்கு துறைவான اله 签 | மக்கள் தொகையும் Mஇ| குறைந்த நிலப்பரப் பும் ஏழ்மையும் கொண்ட கிழக்குத் " திமேரில் கடந்த ஆகஸ்டில் நடைபெ | ற்ற விடுதலைக் கான சர்வஜன வாக் கெடுப்பும் அதன் வெற்றியும் அசேயின் விடுதலைக் கோரிக்கைக்கு உந்துசக்தி ஆகியுள்ளன. இதனையே இந்த அணி வகுப்பை ஒழுங்கு செய்த குழுவின் தலைவரான மொஹமட் நளபார் நாங்கள் இந்தோனேசிய அரசி டம் கோருவது என்னவென்றால் விடுதலையா = அல்லது அதிகாரமா i'r § என்பது குறித்த சர் விஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி எது மக்களின் விருப்பம் என்பதை வெளிப்பு டுத்த ஒரு சந்தர்ப் பத்தைத் தாருங்கள் என்பதுதான்' என்கி நறார். அதே சமயம் அணிவகுப்பில் கல ந்துகொண்ட மக் ምኽÑÉŠቖ; கள் சுமந்த பதாகை 4R,RFSi: ஒன்றில் "சர்வஜன வாக்கெடுப்பு என்றால் அதன் அர்த்தம் விடுத லையே' எனக் குறிப்பிட்டிருந்ததும் அணிவகுப்பில் பேசிய அனைத்துப் பேச்சாளர்களும் அசே பிரிந்து செல்லவேண்டும் என வலியுறுத்தியதும் அசேனிய மக்களின் விருப்பம் என்ன என்பதைத் தெளிவாக் கியுள்ளது. அது மட்டுமல்ல சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடப்பின் அவர்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பதையும் தெளிவாக்கியுள்ளது.
ஆனால் அசேபிணிய மக்களின் விடுதலைப் போரா ட்டம் கடக்கவேண்டிய பாதை கடினமானது. இந்தப் போராட்டத்துக்கான எதிர்த்தரப்பில் பல சக்திகள் உள்ளன. குறிப்பாக இந்தோனேசிய இராணுவம் உள்ளது. 1989ம் ஆண்டு அசேனிய மக்களின் வீடு தலைப்போராட்டம் ஆரம்பமான பின்னர் 2000க்கும் மேற்பட்ட மக்கள் இராணுவத்தால் படுகொலை
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 155

Page 59
செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல பாலியல் வன் முறைகள், தீ வைப்புக்கள், கைது செய்தல்கள், காணாமல் போகச் செய்தல்கள் உட்பட பலவிதமான மனித உரிமைமீறல்களிலும் இந்தோனேசியப் படை கள் ஈடுபட்டுள்ளன. இவை குறித்த முறையான விசா ரணைகளோ அன்றி இவற்றைத் தடுப்பதற்கான முய ற்சிகளோ நடந்தது கிடையாது. இராணுவத்தைப் பொறுத்தவரை அசே இந்தோனேசியாவின் ஒரு பகு தியே. அது எமது காலடிக்குக் கீழேயே கிடக்க வேண்டும் எனக் கருதுகிறது. சர்வஜன வாக்கெடுப் புக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் குறித்து கருத் துத் தெரிவித்த இராணுவ பிரதம பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுட்ராஜற்’அசே இந்தோனேசியாவின் ஒரு பகுதி. அதனால் அசேனியமக்களும் இந்தோனேசிய மக்களும் இணைந்தே அசேயை ஆளவேண்டும். அத னாலேயே சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கை யதார்த்தமற்றது. பிரிவினை என்பது அரசியல் சட் டத்திற்கு எதிரானது என நான் கூறுகிறேன்' எனப் பேட்டியளித்துள்ளார். அதுமட்டுமல்ல 'அங்கு இப் போது உள்ளுர் அரசு இயங்கவில்லை. பொருளா தாரம் ஸ்தம்பிதநிலையை அடைந்துவிட்டது. பயங் கரவாதம் தலைவிரித்தாடுகிறது. எனவே அசேயில் இராணுவ ஆட்சியைப் பிரகடனம் செய்யவேண்டும் எனவும் அவர் கண்டிப்பான தோரணையில் அரசைக் கேரியுள்ளார். அவரைத் தொடர்ந்து 1950ம் ஆண்டுக் குப்பின்னர் இந்தோனேசியாவின் பாதுகாப்பு அமைச் சர் பதவியை முதல் தடவையாக ஏற்றிருக்கும் இரா ணுவம் தவிர்ந்த சிவிலியனான யுவானோ சுடர்ஸொ னோவும் அசேயில் மக்கள் தலைவர்கள் சுதந்திர மான, சுமுகமான வாழ்வுநிலையை ஏற்படுத்தத்தவ றினால் இராணுவம் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ் தான் மற்றும் சில ஆபிரிக்கநாடுகள் போன்றநிலைக் குத்தான் நாமும் போகவேண்டி வரும்' என இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது போலவே இந்தோனேசிய அரச படைகளின் பிரதம தளபதியாகிய அட்மிரல் விடோடோவும் அசேயின் விடுதலைக்கோரிக்கையை அடக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியுள்ளார். ஆனால் அசேயின் விடுதலைப் போராட்டம் இன்று பல்வேறுபட்ட தரப்புகளாலும் முன்னெடுக்கப் பட்டு வருகிறது. 1989ம் ஆண்டிலிருந்து அசே விடு
எப்போதாவது ஒருநாள் திரன் செவ்விந்தியன் கவிதைகள் ناظ
'நமக்கான காலம்
போய்விட்டதைப் போலுள்ளது
யுத்தம் வந்து
ஊருக்குள் நதிகளையும்
சிற்றாறுகளையும் புகவிட்டு
வாரியடித்துக்கொண்டுபோயிருக்கிறது"
தாமரைச் செல்வி பதிப்பகம்
கலைஞர் நகர் சென்னை -78
58 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 

தலை இயக்கம் அரசபடையினருக்கு எதிராக ஆயு தப்போராட்டத்தை நடத்தி வருகிறது. காடுகளில் மறைந்து இப்போராட்டத்தை முன்னெடுக்கும் அப் துல்லா ஸைஃபி 'விடுதலை அல்லது மரணம்' என்கி றார். அதே சமயம் 75ஆயிரம் மாணவர்களை உறுப்பி னர்களாகக் கொண்டறயித்தா தலிபான் அசே அமை ப்பு வேலைநிறுத்தம், பகிஷ்கரிப்பு, ஒத்துழையாமை போன்ற அரச எதிர்ப்பு சாத்வீக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் தலைவரான பலகெய்னி தன்ஜோன்கன் நாங்கள் சாத்வீகமான போராட் டத்தை முன்னெடுத்து வருகிறோம். எமக்கு வன்மு றைமீது நாட்டமில்லை' என்கிறார். ஆனால் இவர்கள் அனைவருமே சுவீடனில் தற்போது வசிக்கும் 75 வய துடைய அசேனிய விடுதலை இயக்கத் தலைவர் ஹஸன் டீதிரோவின் சொல்லுக்குக் கட்டுப்படுகிறார் கள். அசேனியக் கிராமங்கள் தோறும் திரோவுக்கு பெருமதிப்பு இருக்கிறது. இந்தோனேசிய அரசாங்கம் திரோவுடன் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் எனப் பெரும்பான்மையான அசே மக்கள் விரும்புகிறார் கள். ஆனால் அசேனிய விடுதலை இயக்கத்தின் சார் பில் ஸ்ரொக்ஹோமிலிருந்து கருத்துத் தெரிவிக்கும் இயக்க முக்கிய பேச்சாளரான பக்தியார் அப்துல்லா நாங்கள் விடுதலை பெறுவது குறித்து மிதமுனைப் பாக உள்ளோம். எமக்கு முன்னையவர்கள் 1949ம் ஆண்டு டச்சுக்காரர்களை விரட்ட முடிந்ததென் றால், எங்களால் ஏன் இந்தோனேசியர்களை விரட் டமுடியாது? எனக் குறிப்பிட்டதுடன் "இரண்டாவது உலகயுத்தத்தின் பின் அசேயை ஆக்கிரமித்த இந் தோனேசியா அசேனிய மக்களுக்கு மிகமோசமான இராணுவக் கொடுமைகளை இழைத்துள்ளது. அது மட்டுமல்ல அசே காலனித்துவ ஆட்சிக்குட்பட முன் னர் சுதந்திரமாக ஒருநாடு. அதன்பின்னரே இந்தோ னேசியா அசேயை மாத்திரமல்ல மற்றும் பல பிரதே சங்களை ஆக்கிரமித்தது என்கிறார்.
கிழக்குத் திமோரைவிட அசே நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் பெரியது. அது மட்டுமல்ல கிழக்குத் திமோரைப் போல அசேயில் விடுதலைக்கு எதிரான, இந்தோனேசிய அரசுக்கு ஆதரவான அமைப்புக்கள் எதுவும் இல்லை. இருப்பினும் அசே கடக்கப்போகும் விடுதலைப்பாதை இலகுவான தல்ல. இதற்கான காரணங்கள் பல. முதல் காரணம் செல்வமும் வளங்களும் மிக்க இந்தப் பிரதேசத்தை இலகுவில் இழக்க இந்தோனேசியா சம்மதிக்காது. இந்தோனேசியா ஏற்றுமதி செய்யும் திரவமயமாக் கப்பட்ட எரிவாயுவில் மூன்றில் ஒரு பகுதி அசேயி லேயே உற்பத்தியாகின்றது. அது மட்டுமல்ல பெற் றோல், தங்கம், வெள்ளி, மிளகு,றப்பர், மரம் போன்ற விலையுயர் பொருட்களும் அசேயில் உற்பத்தியா கின்றன. இந்த வளம் நிறைந்த பிரதேசத்தையும் அதனால் கிடைக்கும் வருமானத்தையும் மிக மோச மான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி உலக வங்கியின் காலடியில் மண்டியிட்டுக் கிடக்கும் இந் தோனேசியா இலகுவில் இழக்க முனையாது. அது மட்டுமல்ல அசே பிரிந்து செல்வது என்பது இந்தோ னேசியாவின் ஆதிக்கத்துக்கு விழும் மரண அடியா

Page 60
கும். காரணம் இதனைத் தொடர்ந்து விடுதலைக் கான குரல்களை எழுப்பி வரும் ஐரியன் ஜாயா, றியோ, தென் சுலாவெஸி, மலுக்கு தீவுகள் போன்ற வையும் பிரிந்து போகும் நிலை ஏற்படும். அதனால் இந்தோனேசிய அரசு தனது உச்சநிலை இராணுவ பலத்தைப் பிரயோகித்து அசேயின் விடுதலையைத் தடுக்கவே முனையும்.
அதுமட்டுமல்ல அமெரிக்காவும் ஜப்பானும் கிழக் குத் திமோர் விடயத்தில் தாம் எடுத்த நிலைப் பாட்டை அசே தொடர்பாக எடுக்கமாட்டோம் என் றும் அசே பிரிந்து செல்வதற்கு தாம் உடன்படமாட் டோம் என்றும் இந்தோனேசியாவிடம் தெரிவித்தி ருக்கின்றன. இதற்கான காரணம் உலகின் 40வீத DIT 60 கப்பல் போக்குவரத்துக்கள் இந்தோனேசியாவின் கடல் பிராந்தியப் பாதைகளி னுாடாகவே நடைபெறுகின்றது. அது மட்டுமல்ல வளைகுடாநாடுகளிலிருந்து ஜப்பானுக்கு விநியோ கம் செய்யப்படும் பெற்றோலில் 80விதம் கப்பல்களின் மூலம் இக்கடல் பாதையினுடாகவே நடைபெறு கிறது. அத்துடன் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் இந்து சமுத்திரத்திலிருந்தும் பசிபிக் சமுத்தி ரத்திலிருந்தும் வளைகுடாப் பகுதிகளில் ரோந்து செய்வதும் இக் கடற்பாதைகளினூடாகவே. எனவே தான் உறுதியான இந்தோனேசியாவே தமது நலன் களைப் பாதுகாக்கும் என்ற அடிப்படையில் அமெரிக் காவும் ஜப்பானும் இந்தோனேசியாவின் ஆதிக்கக் கரங்களைப் பலப்படுத்த முனைகின்றன. இந்தவகை யில்தான் கிழக்குத் திமோர் பிரச்சினையின்போது அமெரிக்கா இந்தோனேசியாவுக்கு எதிராக விதித்த தற்காலிக ஆயுத விற்பனைத் தடையைத் தளர்த்தி இந்தோனேசியாவுடன் இராணுவக் கூட்டுறவுச் செயற்பாடுகளை விரும்புவதாக அறிவித்துள்ளது. அசேயின் விடுதலைப் போராட்டம் முனைப்பெடுத்த வேளையில்தான் இவ்வறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்தோனேசியா வின் ஆக்கிரமிப்பிலிருந்து அசே விடுதலை பெற்ற பின், அசே ஒரு இஸ்லாமிய இராஜதானியாகப் பிரகட னப்படுத்தப்படும் எனவும் சுல்தான் ஆட்சிமுறையும் இஸ்லாமியச் சட்டமும் அமுல் நடத்தப்படும் எனவும் அசேனிய விடுதலை இயக்கத்தலைவர் திரோ அறி வித்திருப்பது இந்தோனேசியாவின் அயல்நாடுகளில் அபாயச்சங்கை ஊதி அந்நாடுகளை அசேயின் விடு தலைக்கு எதிராக திருப்பி இந்தோனேசியாவுக்கு ஆதரவளிக்க வைத்துள்ளன. தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்களும் முக்கிய அதிகாரிகளும் இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோரைத் தொடர்ந்து அசேயும் பிரிவதென்பது சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா போன்றவற்றில் ஏற்பட் டது போன்ற உடைவை ஏற்படுத்தும் என எச்சரித் துள்ளனர். அத்துடன் ASEAN என அழைக்கப்படும் புறுாணை, பர்மா, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் அடங் கிய கூட்டமைப்பில் பெரும் பொருளாதாரப் பாதிப்பை அசே பிரிந்து செல்வது ஏற்படுத்தும் எனவும் அவர்

கள் கூறியுள்ளனர். சிங்கப்பூரின் உயர் அமைச்சரான லீ குவான் யூவும், பிலிப்பைன்சின் வெளிநாட்ட மைச்சரான டொமிங்கோ ஸியஸோனும் அசே பிரி ந்து செல்வது என்பது இந்தோனேசியாவில் மட்டு மல்ல, இதர கிழக்காசியநாடுகளிலும் மேலும்பலபிரி வினைகள் ஏற்பட வழி வகுக்கும் என அபாய எச்ச ரிக்கை விடுத்துள்ளனர். அசே பிரிவடைந்து உருவா கப்போகும் இஸ்லாமிய இராஜதானியோ அல்லது இஸ்லாமியக் குடியரசோ ஏற்கனவே இஸ்லாமியப் பிரிவினைவாத இயக்கங்கள் போர்க்கொடி தூக்கி யுள்ள பிலிப்பைன்சிலும் தாய்லாந்திலும் பெரும்பாதி ப்பை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவித்திருக்கும் பிலிப்பைன்சின் வெளிநாட்டமைச்சர் ஸியஸோன், எப்படி மிண்டானோ தீவு பிலிப்பைன்சின் ஒரு பகு தியோ அப்படியே அசேயும் இந்தோனேசியாவின் ஒரு பகுதி எனவும் பிரிவினைக்கான சர்வஜன வாக்கெ டுப்பு என்பது இந்தோனேசியாவின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கூறி யுள்ளார். அசேயில் ஏற்படும் இஸ்லாமிய ஆட்சி மலே சியாவின் அடிப்டைவாத இஸ்லாமியக் கட்சியை மேலும் பலப்படுத்தும் என மலேசிய அதிகாரிகள் அச் சம் தெரிவிக்கின்றனர். "அசே ஒரு நேரவெடிகுண்டு நிலையிலிருக்கிறது. உடனடியாக அதனைச் செய லிழக்கச் செய்யும் முயற்சியில் ஜனாதிபதி வாஹிட் FFGBLILC36.60ör(Bib' 67607 Business Times of Singapore எச்சரித்துள்ளது. "அசே பிரிந்து செல்வது என்பது இந்தோனேசியாவுக்கு மாத்திரம் ஆபத்தானது அல்ல. முழுத் தென்கிழக்காசியாவுக்கும் ஆபத்தா னது. அதுமட்டுமல்ல அசேயின் பிரிவினை இப்பிரதே சத்தில் முடிவில்லாத முரண்பாடுகளை ஏற்படுத்தி வெளிச் சக்திகளின் தலையீடுகளை ஏற்படுத்தும்' என அடுத்த அபாய அறிவிப்பை அறிவிக்கிறார் முன் னாள் இந்தோனேசிய ஜனாதிபதி பி.ஜே. ஹபீபியின் வெளிநாட்டுக்கொள்கை ஆலோசகர் தேவி ஃபோர் ருனா அன்வர்.
இந்தோனேசியாவின் இன்றைய எரியும் பிரச்சி னையாக அசே மாறியுள்ள இந் நிலையில் அசே குறித்து உறுதியான முடிவு எடுக்கவேண்டிய நிலை யில் உள்ள இந்தோனேசிய ஜனாதிபதி அப்துல் ரஹ்மான் வாஹிட் குழப்பமான ஒரு நிலையிலேயே உள்ளார். சமீபத்தில் கம்போடியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அசேயின் விடுதலைக்கான சர்வஜன வாக்கெடுப்புத் தொடர்பான கோரிக்கை குறித்த கேள்வி ஒன்றுக்கு அக்கோரிக்கை நியாய மானதே எனப்பதிலளித்தவாஹிட் இந்தோனேசியா திரும்பியதும் இராணுவத்தினரின் அழுத்தம் காரண மாக, அது தமது தனிப்பட்ட கருத்தே ஒழிய அரசாங் கத்தின் கருத்தல்ல என மறுதலித்துவிட்டார். அது போலவே தமது சமீபத்திய சிங்கப்பூர் விஜயத்தின் போது சுவீடனில் இருக்கும் அசேனிய விடுதலை இயக்கத்தலைவர் ஹஸன் டி திரோவுடன் தாம் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் விரைவில் தாம் அவரைச் சந்திக்கப் போவதாகவும் கூறியி ருந்தார். ஆனால் இது குறித்து உடனடியாக மறுப்ப றிக்கை வெளியிட்ட ஹஸன் டி திரோ அவ்வறிக்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 59

Page 61
கையில் தமக்கு வாஹிட்டுடன் தனிப்பட்ட முறையில் எவ்வித தொடர்புமோ உடன்படிக்கையுமோ இல்லை எனவும் அசேனிய மக்களாகிய நாம் எப்போதுமே ஜகார்த்தாவில் இருக்கும் ஜாவா-இந்தோனேசிய நவகாலனித்துவவாதிகளை அங்கீகரித்ததில்லை எனவும் அசேயின் விடுதலையை அடையும்வரை வெளி ஏகாதிபத்தியச் சக்திகளுக்கும் நவ கால னித்துவ ஆட்சியாளருக்கும் எதிரான தமது போர் தொரும் எனவும் கூறியுள்ளார். இந்த மறுப்பறிக் கைக்கு இந்தோனேசிய ஜனாதிபதியின் மெளனம் பதிலாகியது.
ஆனால் அசேயின் விடுதலைப் போராட்டம் கடக் கவேண்டிய பாதை கடினமானது. அசேயின் விடு தலை இயக்கம் சரியான சந்தர்ப்பத்தில் போர்க்கு ரலை உரக்க ஒலித்துள்ள போதும் பல்வேறு சக்திக ளிடையே இப்போராட்டம் இன்று சிக்கியுள்ளதுவிடுத லைக்கான பாதையைக் கடினமாக்குகிறது. ஒரு புறம் போராட்டத் தரப்பில் இஸ்லாமிய ஆட்சியை வலியுறுத்தும் அசேனிய மதவாதிகள். மறுபுறம் ஜன நாயகத்துக்கு ஆதரவான மாணவர் அமைப்புகளும் மனிதஉரிமை அமைப்புகளும். அதே சமயம் போரா ட்டத்துக்கு எதிராக ஏற்கனவே கிழக்குத் திமோரில் பட்ட அவமதிப்பை மீண்டும் ஒருமுறை பெற விரும் பாத ஆதிக்கவெறி பிடித்த இந்தோனேசிய இராணு வம், அசேயின் பிரிவு மேலும் பல பிரிவினைகளுக்கு
காவலூர் ஜெகநாதன்
DOT6 epi&LEDGIT
KAVALOOREGANATHAN MEMORAL FOUNDATION
காவலூர் ஜெகநாதன் காவலூரின் கரம்பொ கிராமத்தில் 1955ம் ஆண்டு பிறந்த ஜெகநாதன் 20வது வயதில் எழுத்துலகில் பிரவேசித்தார் முந்நூறுக்கும் அதிகமான சிறுகதைகளையு நாவல்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார் இவர் ஈழத்தில் நடைபெற்ற பல சிறுகதைப் களில் பரிசுகளைப் பெற்றவர், கமத்தொழில் திணைக்களத்தில் உதவி ஆ உத்தியோகத்தராக பணியாற்றி வந்த இவ இனக்கலவரத்தைத் தொடர்ந்து தமிழகத்திற்கு பெயர்ந்தார். அங்கு இனந்தெரியாத ஆயுதக்குழு னால் 1985ம் ஆண்டு மே மாதம் 31ம்திக கொலைசெய்யப்பட்டார்.
60 உயிர்நிழல்  ெநவம்பர் - டிசம்பர் 1999
 

வழிவகுக்கும் என அச்சம் கொண்ட இந்தோனேசிய அரசு, குழப்பமான நிலையிலுள்ள இந்தோனேசிய ஜனாதிபதி, அசேயின் பிரிவு தமது நாடுகளிலும் பிரி வினைகளை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் அப் பிரிவினைக்கு எதிராக குரல் எழுப்பும் தென்கி ழக்காசிய நாடுகள், தமது நலன்களைப் பாதுகாப் பதற்காக'உறுதியான இந்தோனேசியா' என்ற பெய ரில் இந்தோனேசியாவில் ஆதிக்க கரங்களைபலப்ப டுத்துவதற்கு அசேயின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு ஆயுதங்களையும் நிதியையும் அள் ளிக் கொடுப்பதற்குத் தயாராக இருக்கும் மேற்குல கம். இத்தடைகளை அசேனிய மக்களின் விடுத லைப் போராட்டம் எப்படித் தகர்க்கப் போகிறது என் பதை இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பகாலம் நிர்ணயிக்கும். O
பெண்நிலைவாதத்திற்கு வரைவிலக்கணம் காண்பதில் நான் எப்போதுமே வெற்றி கண் டதில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் என் னவென்றால், ஒரு அடிமையும் நானும் ஒன் றென்று கருதி என்னை நடத்துவதை நான் அனுமதிக்க மறுக்கும் ஒவ்வொரு தடவை யும் அவர்கள் என்னை ஒரு பெண்நிலைவாதி என்று கூறுகிறார்கள்.
-விறபேக்கா வெஸ்ட்
வருடந்தோறும் பரிசு
இந்த அறக்கட்டளையில் இருந்து - காவலூர் ஜெகநாதன் நினைவாக சிறந்த சிறுகதைக் கும், சில்லையூர் செல்வராசன் நினைவாக சிறந்த கவிதைக்கும் வருடந்தோறும் தனித் தனியே 50ஆயிரம் இலங்கை ரூபாய்கள் பரி சாக வழங்கப்படும். பரிசுக்குரியபடைப்புக்கள், மூன்று இலக்கிய அறிஞர்களால் பரிசீலிக்கப் பட்டுத் தெரிவுசெய்யப்படும். ஈழத்து சிறுகதை யாசிரியர்கள், கவிஞர்களின் படைப்புக்கள் (அவர்கள்எந்தநாட்டிற்குப்புலம்பெயர்ந்திருந் தாலும்) மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்படும். படைப்புக்கள் சஞ்சிகைகளிலோபத்திரிகை களிலோ குறித்த ஆண்டிற்குள் பிரசுரமா
வையாக இருக்கவேண்டும். --
1998ம் ஆண்டிற்கான படைப்புகள் பரிசீலனைக்
ன் என்ற காக இருப்பதால், ஆக்கதாரர்கள் தமது
GLO படைப்புகளை, வெளிவந்த பத்திரிகை சஞ்
,5 து சிகை பெயரையும் காலத்தையும் குறிப்பிட்டு
s இவர் அறக்கட்டளைக்கு அனுப்பி உதவலாம். மற்
|D, L6) றும் இலக்கிய ஆர்வலர்களும், இதில் ஆர்வம்
. காட்டி உதவுவது அறக்கட்ட ளையின் நோக்
போட்டி கத்தைச் செவ்வனே பூர்த்தி செய்ய உதவும்.
GSL335i).
ராய்ச்சி
T. 198 KWAWIJA (OOR GANATHAN
Ј. 3 MMORA FOUNDATION
ப புலம 51 RUE DE LA PARABOLE,
g 95800 CERGY, FRANCE,
TEL: (0033) 01 30 32 5725

Page 62
ன்வண்டி இவ்வளவு வேகமா கப் போய்க் கொண்டிருந்த லும் உள்ளுக்குள் ஒரே அவி ச்சாேகத்தானிருந்தது. தலைப்பிடி பும் வயிற்றுக் குமட்டலுமாக வேறு இருந்தது. ஒரு பாட்டம் மழை வந் தாபி:Trது வெக்கை அடங்கும். அதுவும் வாறாதிரித் தெரிய வில்லை,
தோட்டங்களெல்iாம் காப் ந்து, நிலம் பொருக்குப் பொருக் காய் விேடித்துப் போயிருந்தது. தூரத்தே, அதாவது தோட்டவெளி பையும் தாண்டிப் பார்த்தாகப் கானல்நீர் வரிவரிபாய்த் தோன்றி
|l lցնI.
ஏறத்தாழ வண்டியில் வந்த, வயது வித்தியாசமில்லாத அத்த னைபேரும் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்கள். எனக்கும் கைகொடுக்கவென சிலர் இருந் தார்கள்தான், அவர்களும் என் னைப்போல ஒன்றுக்கும் வழியில் விாதவர்களாயிருக்கலாமென்று என் மனம் சொன்னது.
எனக்குச் சற்றுத் தள்ளி ஒரு இளவயதுக்காரி, அதாவது ஒரு இருபதுக்கும் இருபத்தைந்துக்கும் இடையில் தானிருக்கும். கையில் ஒரு தடித்த எண்ணெய்ப் பதார்த் தத்தைக் கொண்ட போத்தலிலி ருந்து அந்த என்ைனெபை எடுத்து தன் கை, கால், இடுப்பு, நெஞ்சு என்று பூசிக்கொண்டாள். கண்டிப் பாக புத் தி சுவாதினமற்றவளா கத்தான் இருக்கவேண்டும்,
தன்னாட்டம் எதையோ சொல் லிச் சிரித்துக்கொண்டு. இவ்வளவு சனங்களும் பயணம் செய்யும் இந்த வண்டியில் இப்படியான ஒரு காரியத்தைச் செய்கிறாள். பாவ ருக்கும் கண் சுசும்படியான செய லைச் செய்யும்போது, அப்படித் தான் எண்னத் தோன்றியது.
இந்த வெக்கையிலும் எனக்க ருகிலிருந்த இருவர் கோட்டும் ரையும் அணிந்திருந்தது எனக்கு வியப்பாக இருக்கவில்லை. இது இவர்களுடன் கூடப் பிறந்தது. நான் வெறும் சேட் மட்டுமே அணிந் திருந்தேன். தங்களுக்குள் அவர் கள் கதைத்துக்கொண்டபடிக்கு, இவள் இளவயதிலேயே சிகரட், போதை என்றும் துடி என்றும் இருந் திருப்பாள். தன் வாழ்க்கையை
சிவலி
அவளே அழித்து என்ற தோரணை கொண்டனர். உன் ாைக இருக்கலாம். இங்கு என்ன வில்லை. எல்லாே புத்தகத்துள் தன் திக்கொண்ட ஒரு திரே சாவகாசம மேலே காலுைப் பே கறுப்புக் கண் ை மேலே செருகிவிட் வரியாக கறுப்பு கோர்த்துவிட்டது ! தகவரிகளை பார் டிருந்தாள்.
இவள் படிக்கிற துயில் கொள்ளுகி புரியவில்லை. பிரி, எழுத்தாளர் 'அச்
 

ங்கம் சிவபாலன்
க் கொண்டாள் ாபரில் பேசிக் ன்மையும் அது
ශ්‍රී T සil JF L- ඩී ජිං ம நடக்கிறது. னைச் செலுத் த்தி எனக்கெ ாக காலுக்கு ாட்டபடியும் தன்
:BuנJ-55ל LLI (5-3 נוIT டபடியுமாக, வரி
மணிகளைக் போலிருந்த புத் ர்த்துக்கொண்
நானா, இல்லை; றாளா எதுவும் த்தானிய பழம் கதா கிறிஸ்ரி"
(Agatha Christie)шћgзлLш Bп5шsi: தான் அது. அவவுடைய பன்னி ரெண்டுக்கு மேற்பட்ட புத்தகத் தொகுதியொன்றை அண்மையில் ஒரு புத்தகக் கடையில் பார்த்த போது வியந்துதான் போனேன்,
இவருடைய துப்பறியும் நாவல் கள், யாருமே எதிர்பாராத வகை யான வரிக்கு வரி திருப்புமுனை களைக் கொண்ட குறுநாவல்க ளென்று ஏராளம், அவரது நாவல் கள் சில திரைப்படமானதுமுண்டு. அவரும் சிலகாலங்கள் மனநோ யால் பாதிக்கப்பட்டிருந்தது முன்டு.
வண்டி தன் வேகத்தைக் துறைத்துக் கொண்டு "சென் டெனீஸ் வண்டிமேடையில் நின்று சனங்களை ஏற்றி இறக்குவதற் காக சில நிமிடங்கள் ஓய்வு எடுத்
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 61

Page 63
துக்கொண்டது. இறங்கவேண்டிய வர்கள் இறங்க ஏறவேண்டியவர் கள் ஏறினார்கள். ஏறியவர்களில் ஒன்றிரண்டு பேர்கள்தான் வெள் ளைத் தோல்கள்.
மீண்டும் வண்டி புறப்படத் தயா ரான வேளை, இந்த நாட்டுக்கா ரர்தான், இருவர் மேடையில் பலகை ஆசனத்திலமர்ந்தபடி பல த்த குரலில் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கண்களும் வாயும் முக்கும் மட்டுமே தெரிய மீதி இரு முகங்களும் தலைமுடி யாலும் முக உரோமங்களாலும் சடைத்துப் போயிருந்தது. பாத அணியைப் பற்றியோ அவர்கள் அணிந்திருந்த உடுப்பைப் பற் றியோ சொல்லத் தேவையில்லை. மரத்தாலான அந்த ஆசனத் தின் கீழ்ப்பகுதியில் ஐந்தாறு முட்டை முடிச்சுக்கள். இது அவர் களது பூர்வீகச் சொத்துப் போலும், கூடவே 'பிளாஸ்ரிக்' போத்தல்க ளில் அடைத்து விற்கப்படும் மலி வுவிலை சோமபாணம். சில போத் தல்கள் காலியாகவும், சில அரை வாசி முக்கால்வாசி உறிஞ்சப் பட்ட நிலையிலுமாகக் காணப்பட்
ill-gi.
கம்பீரமான உறுமல்கள். எதையோ சொல்லி, யாவரையும் பார்த்து ஏசினார்களா, திட்டினார் களா, வாழ்த்துச் சொன்னார்களா தெரியவில்லை. யாரும் அவ்விரு வர்களையும் கண்டுகொண்டதாக வுமில்லை. இது இப்போ வழமை யாகிவிட்டதுபோல. இவர்களது புத்தியும் பேதலிச்சுப் போச்சுதா? எதனால். இவர்களும் ஒரு வேளை 'அகதா கிறிஸ்ரிபோல ஏதாவது நாவல்கள் எழுதினார் களோ?
எதிரே இருந்தவள், கால்
உளைந்திருக்கிறது போலும்.
காலை மாற்றி வைத்துக்கொண் டாள். அப்போ அவள் துயில் கொண்டிருக்கவில்லைப் போலும் என்று அறிந்துகொண்டேன். நூல கத்தில் ஒரு பிணம்' என்பதுதான் அந்தப் புத்தகத்தின் பெயர்.
கடையில் பொருட்களிருக்கும். சுடுகாட்டில் பிணமிருக்கும். இதெ ன்ன நூலகத்தில் பிணம். அப்போ நூலகத்திலுள்ள புத்தகங்களெல் லாம் சுடுகாட்டுக்குப் போய்விட்ட
னவோ. இருபதா லவா! இன்னும் தனை அதிசயங் கின்றன.
தேர் போல வண்டி, கார்போ காற்றையும் கிழ விரைந்தது. உ எண்ணை பூசியஸ் னிருந்தாள். ஒரு தது. ஏதாவது மி என்று எண்ணி அவளையே அெ கொண்டிருந்தார் பார்வை அவனை வில்லை. அவை தாபமாகத்தான் அடுத்த தரி இறங்கவேண்டு பைகளையும் எ அப்பெட்டியில் சிலர் முண்டியடி வுக்கருகில் போ L6Orii.
நான் வெறு பயணித்ததால், தான் பொறுை னேன். வெளியே தான் ஒரு தற்கா கிடைத்ததாக உ சில்லென்றகு பில் படும்போது தது. போன உயி போலிருந்தது. வெளி. வெய்யில் உயரமாகக் கூ ததால் குளுகுளு இன்னும் கொஞ ருக்கலாம் போல ரும் படிகளில் நெருங்கிக்கொ திப்படுகிற சை ட்டு. என்று சற். கொண்டபோது நகர ஆரம்பித்த அருகிலிருந்
ரரும என்னுட கொண்டார். வன தைலம்பூசியவ6 பார்த்தான். அவ லால் ஏதோ சை சொன்னாள். ஏ தான் எனக்குத் ணம் மற்றவர்கள் தவிதம்.
62| உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

ம் நூற்றாண்டல் எத்தனை எத் பகள் நிகழப்போ
வெளிக்கிட்ட ல வெளிக்கிட்டு, ழித்துக்கொண்டு டம்பு முத்தாவும்
வள் அப்படியேதா
கெட்ட நெடியடித் ருகத் தைலமோ க்கொண்டேன். நேகர் பார்த்துக் "கள். இவர்களது ா எதுவும் செய்ய ளப் பார்க்கப் பரி இருந்தது.
ப்பிடத்தில் நான் ம், தமது பயணப் டுத்துக்கொண்டு பயணஞ் செய்த த்து எழும்பி கத ய் நின்று கொண்
ங்கையுடன்தான் வெறுங்கையுடன் மயாக இறங்கி இறங்கியபோது லிக விடுதலையே உணர்ந்தேன். குளிர்காற்று உடம் இதமாக இருந் ர் திரும்பி வருமாப் எங்கும் வெட்ட ஸ்ாக இருந்தாலும் டாரமமைத்திருந் நவென்றிருந்தது. ந்ச நேரம் அங்கி ) தோன்றியது.நக மனிதக் கூட்டம் "ண்டு போக,'அவ ாம் முதல் போக று ஆறுதல்பட்டுக் வண்டி மீண்டும்
5göl. த கோட்டு, ரை கா னேயே நின்று ண்டியினுள்ளிருந்த ளை இவன் மீண்டும் ளோ தன் கைவிர கை காட்டி ஏதோ சியிருப்பாளென்று தோன்றியது. கார ள் இவனைப் பார்த்
அமைதியாக பொறுமையாகப் போன கிருசாம்பாள் "மோதகத் துள் தங்க மோதிரம் பெற்ற கதை யாக, அமைதியாக பொறுமை யாக வண்டிமேடையைவிட்டு வெளியே வந்தபோதுதான் அர விந்தனைச் சந்தித்தேன். எவ்வ ளவு காலத்து நட்பு. சொந்தமும் தான்.
கடந்த ஒன்றரை வருடங்க ளாக அவனைக் காணமுடிய வில்லை. அடிக்கடி எங்கும் காணக் கூடியதாக இருக்கும் அரவிந்தன் தலைமறைவோ. எதற்கு அவன் தலைமறைவாக வேண்டும் - என்ன குற்றமும் செய்யக் கூடியவனல்ல. அருமையான பிள்ளை.
ஒருவேளை கனடாப் பக்கம் போய்விட்டானோ. போறதென் டால் ஆருக்குச் சொல்லாமல் விட் டாலும் எனக்குச் சொல்லிப்போட் டுத்தான் போவான். அவனுக்கு இஞ்சைநல்ல விசா.நல்ல வேலை. நல்ல வீடு. திடீரென்று அரவிந்த னைப பாரதததும எனககு அவனை நம்பமுடியவில்லை. நன் றாகத் தலைமயிரும் கொட்டி, முகம் ஒரு வித்தியாசமான வீக் கம், ஒரு வருத்தக்காரனைப்பார்க் கும்படியான ஒரு தோற்றத்தை எனக்கு உண்டுபண்ணியது.
"என்னடா அரவிந்தா.இந்தக் கோலம். ஏன் என்ன நடந்தது?"
இருநூற்றுப் பத்தாம் இலக்க பஸ் எடுக்கவேண்டி, நான் பஸ் தரிப்பு நிலையத்துக்குப் போகும் போதுதான் அவனைச் சந்தித் தேன். அவன் தானும் அதே பஸ் ஸில்தான் வருவதாகச் சைகை காட்டினான். எனக்கு அவனைப் பார்த்ததும் மனம் ஒரு நிலையி லில்லை. இவனுக்கு ஏதோ.
நான் அரவிந்தனுடன் மட்டும் தான் பியரடிப்பது. அதுவும் வெய் யில் காலமென்றால் மட்டும்தான். இவனைச் சந்திக்காது விட்ட போது எதுவுமேயில்லை. எப்பவுமே "வா கபே(cafe) குடிப்பம்" என்று தான் கூட்டிக்கொண்டு போவான். பியர்தான் ஒடர் பண்ணுவான். தொடுகிலும் நான் காசு குடுக்க விடமாட்டான்.
"இன்னொண்டு ஒடர் பண் ணட்டே" என்பான். நான் வேண் டாமென்றதும் விட்டுவிடுவான்.

Page 64
தானும் குடிக்கமாட்டான்.
"வா கபே குடிப்பம்" அவனது பாணியிலேயே நான் இப்போ அவ னைக் கேட்டேன். தலையை அசைத்து வேண்டாமென்றுவிட் டான். நான் அவனது கையைப் பிடித்து இழுத்தும் அவன் பஸ் தரிப்புநிலையத்திலிருந்து அரங்க வில்லை.
"உனக்கென்னடா ஆச்சு. என் னெண்டாலும் என்னட்டைச் சொல் லன். நான் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தாலும், அவன் என் முகத்தைப் பார்க்கவே யில்லை. எனக்கு ஒரு மாதிரித்தா னிருந்தது.
ஒருநாள் எனக்கு போன் பண் ணினான். "மச்சான் நாளைக்கு காலமை எட்டுமணிக்கு எயாபோட் டுக்கு போவம். வாறியே?" ஆரவா ரம் தெரிந்தது.
"அதுக்கென்ன. ஆர்வாறது? எனக்கும் ஆச்சரியம். கேட் டுக்கொண்டேன். அவனும் அடித்த மாதிரிப் பதில் சொன்னான்.
"அம்மா, அப்பா வரியினம்" இது பற்றி இவன் எனக்கு ஏதும் சொல் லாதபடியால் எனக்கு ஆச்சரி யமாக இருந்தது.
"ஸ்பொன்சர் பண்ணிக் கூப்பி டுறியோ?" என் சந்தேகத்தைக் கேட்டேன். ஒரு சின்ன அமைதி யின்பின் சொன்னான்.
"கனேடியன் பாஸ்போட்டிலை, ஒராள் கூட்டிக்கொண்டு வாறார்." மிகுதியை அடுத்தநாள் நேரில் கதைப்பதாகச்சொல்லிபோனைத் துண்டித்துக் கொண்டான். அடுத்த நாள் அதேபோல அவன் தனது காரில் ஏழுமணிக்கு முன்னதா கவே வந்துவிட்டான். இவனுடைய ஆளைப்பிடித்து எவ்வளவானா லும் பரவாயில்லை. அம்மா அப் பாவை நானும் எடுப்பிக்கவேனும் என்ற தீர்மானத்திலேயே இவனி டம் இதுபற்றி விசாரித்தபோது தான் எல்லா விபரங்களையும் சொன்னான்.
"elbf6rol (tourist) 65éfIT6ég அப்பிளை பண்ணினனாங்கள். மச்சான் பிள்ளையஸ் எல்லாரும் வெளிநாட்டிலை இருக்கிறபடியால் நீங்கள் திரும்பி வரமாட்டீங்கள் எண்டு சொல்லி விசா குடுக்கமாட் டமெண்டு விட்டாங்கள்."
"அப்ப. கூட்டி வர். எப்பிடி உ என்று நான் இழுத் னான.
"இவை கிளி நிண்டு கஸ்டப்பு சொல்லி காயிதம் நான் கொழும்புக் போன்பண்ணி ஆ6 பண்ணச் சொன் தான் எல்லா அலு ருக்கிறார்"
"இப்ப எவ்வள "ரெண்டு பே போனவையெண் ரெண்டுக்குக் கு எண்டு போட்டான அம்மாதானே அது காசோ எண்டிட்டு பையும் நானே ஏத்
l lD6قت 6DJ6OT}9ع திருப்தியும் சந்ே ததை உணர்ந்து இதே போலவொரு யும் திருப்தியைய வேன் என்ற எண் நேரத்தை எதிர்ப
g6007 60600TL ரெண்டுபேரும் கு சினம். அவையிட் ரிம் வேண்டப்பட வோடைதான் இந் கால வைச்சனா6 அவன் எண்ணரு டப்பும் எனக்கு ஆ தொரு அபிப்பிரா பண்ணியது.
தாயையும் முதன்முதலில் அ தபோது, இரும்ட தாண்டிப்போய் அ டிப்பிடித்து அன்பு மல்கியது எனக்கு ஞாபகம் இருக்கி மணி நேரங்கள் னும் பட்ட பாடி வொரு கற்பனை
b.
விமானநிலை மட்டுமல்ல, தந் அழுதார். கிரா ளுக்கு இல்லாத துக்களா! தின னமே, சில மாதங் பிடிக்கும் அவ்வ

க்கொண்டு வாற உங்களுக்கு." தபோதே சொன்
நொச்சியிலை படுகினமெண்டு போட்டிச்சினம். க்கு மாமாவுக்கு ரையேன் அரேஞ் னனான். அவர் லுவலும் பார்த்தி
வாம் முடியுது"
ருக்கும் வயசு ாடபடியா பன் றைக்கமாட்டன் ர். சரி. அப்பா, துகளுக்கில்லாத }, முழுப்பொறுப் த்துப் போட்டன்." னதில் ஒருவித தோசமும் இருந் துகொண்டேன். நசந்தோசத்தை பும் நானும் பெறு ணத்தில், அந்த ார்த்துநின்றேன்.
D 9d is T60D6) டும்பமாப் போச் டை ஐஞ்சு சென் ாது எண்ட முடி த விசயத்திலை ன். ஒரு படியா." pub LD60TÜ Lu Lu அவன்பால் நல்ல ாயத்தை உண்டு
தந்தையையும் அரவிந்தன் பார்த் வேலிகளையும் அவர்களைக் கட் குழைய கண்ணிர் த இப்பவும் நல்ல
றது. ஒரு அரை
அவர்களும் இவ ருக்கே. எந்த க்கும் அடங்கா
யத்தில் தாயார் தையாருங்கூட மத்தில் இவர்க சொத்துப் பத் ம் வரும் வருமா களைத் தாக்குப் ளவு வசதி. அர
விந்தனும் மற்றும் சகோதரங் களும் போரிலிருந்து உயிர் தப்பி நல்லபடி வாழவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் இங்கு அனுப்பி வைக்கப்பட்டார்களேயன்றிபொரு ளாதாரத்தை நிவர்த்தி செய்ய வேண்டுமென்ற எண்ணம் இவர்களி டம் எள்ளளவும் கிடையாது.
ஒருவேளை சாப்பாட்டுக்கெ ன்ன. ஒருவேளை குடிக்கத் தண் ணிருக்கே தாம்பட்ட கஸ்டத்தைச் சொல்லி அழுதார்கள். எனக்குக் கூட உண்மையில் அழுகை வந் துவிட்டது. இவர்களைப் போலத் தானே என் பெற்றோரும் விமான நிலையத்தில் வந்திறங்கிக் கதறு
வார்கள்.
இவர்களின் வருகைக்காகவே நிலத்துடன் தனிவீடு வேண்டினான் அரவிந்தன். நகர்ப்புறத்துக்கு அண்மையில்தான் அமைந்தது அந்த வீடு. மின்வண்டி நிலையத் திலிருந்து ஆமைவேகத்தில் போனால்க் கூட பத்து நிமிடம் தேவையில்லை. விசாலமான வீடு. பத்து வருடத்திற்குள்ளாகவே நிர்மாணிக்கப்பட்ட வீடு இது. கூரை ஓடுகளால் பொருத்தப்பட் டிருந்ததால் வீடும் அறைகளும் எந்தவிதமான வெக்கையுமில்லா மலே இருக்கும்.
வீட்டுக்குப் பின்னே சுமார் நூறடி தூரத்துக்கு வேலி. இரும ருங்கிலும் ஆறடி உயரத்துக்கு ஒரு வகை பச்சைப் பசேலென்ற தளிர் மரங்கள் நின்று கண்களை யும் மனதுகளையும் கவர்ந்து கொள்ளும் அழகே தனி.
பெற்றோரிருவரும், கூடவே தன் எதிர்கால மனைவி புனிதாவும் கூட இருக்கவேண்டுமென்ற கன காலத்துக் கனவுக்காக இவன் அலைந்த தேசங்களும் செய்த செலவுகளும் வேலையாய் முறிந்த முறிவுகளும் எண்ணிக்கூடப் பார் க்க முடியாதவை. அரவிந்தன் அர விந்தன்தான்.
இவனைப்போலவே நானும் வர வேண்டும். என் மனம் என்னைத் தினம் உறுத்திக் கொள்ளும், அத ற்கான முயற்சியிலும்தான் நான் ஈடுபட்டேன்.
வந்து சேர்ந்த பெற்றோருக்கு வெளிநாட்டு வாழ்க்கை பத்து மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடி
உயிர்நிழல் 0 நவம்பர் -
டிசம்பர் 1999 63

Page 65
க்கவில்லை.
"கதவைப் பூட்டிப் போட்டியிரு ங்கோ. ஆர் தட்டினாலும் திறக் காதையுங்கோ. காலை பத்து மணிக்கு வெளிக்கிட்டால், இரவு பன்னிரண்டு மணிக்குத்தான் வேலை முடித்துக்கொண்டு வரு வான் அரவிந்தன். சனி, ஞாயிறும் அதேபோல, செவ்வாய்க்கிழமை மட்டுந்தான் விடுமுறை. இவன் செவ்வாய்க்கிழமை மட்டுந்தான் தன்பெற்றோரை வெளியே எங்கும் கூட்டிக்கொண்டு போக முடியும். மீதி ஆறு நாட்களும் சிறை வைத் தாற்போல.
பகலில் அவர்கள் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந் தாற்கூட மீண்டும் கதவைப் பூட்ட முடியாது. எட்டுத் திருகிகள் கொண்ட பூட்டு அது. இதற்குப் பயந்தே அவர்கள் பகலில் வெளி யில் வருவதில்லை.
ஒவ்வொரு நாளும் அவர்க ளுக்கு ஒவ்வொரு யுகங்கழிந்தமா திரி. கிழமை நாட்களில் எந்த வொருவரும் வீட்டில் லீவில் இரார் என்பதால் உறவுக்காரர் என் போரை இவர்கள் சந்திப்பதென் பது அரிதின்மேல் அரிதானது.
பன்னிரெண்டு பரப்பு காணிக் குள் வீடு, அறைகள், ஹோல், தாழ் வாரம் கிணத்தடியென்றும் ஏகப் பட்ட பிரதேசங்கள் சோலையா யிருக்க, சுற்றிவர உறவுக்கார ரிருக்க காலாற, கையாற நடந்து திரிந்தவர்கள். சீமெந்து அறை யினுள் அடைபட்டுக் கிடக்க இவர் களுக்கு என்னவிதி?
இவர்களது மனம் பாதிப்புக் குள்ளாகியது. மகனை வருத்தவும் மனது இடங்கொடுக்கவில்லை. தந்தையாருக்கும் மனது பொரு மியடித்துக்கொண்டு வந்தது. அவ ரது நிலையைப் பார்த்த தாயா ருக்கும் உதறலெடுத்தது.
"ஏலாட்டி.நாங்கள் ஊருக்குப் போவமப்பா. பிள்ளையிட்டை நான் தன்மையா கேட்டுப் பாக் கிறன்"
"காணி, பூமி, வயல் வாய்க்கா லெண்டு பாத்து மேச்சுக்கொண்டு திரிஞ்சாலே மனசுக்குத் தெம்பாயி ருக்கும். நாலு சனத்தோடை மனம் விட்டுக் கதைக்கலாம். இதென்ன டாவெண்டால். ஒருத்தனையும்
முன்பின் தெரியா கதைக்கிறதென பெடியன் வேை மாக் குடுத்து இரு கூப்பிட்டுவிட்டா பச் சொல்லி என் றது?
காலை தெ ரைக்கும் இவர் இதைப்பற்றிய சி னத்தைப் பேசுவ பேசக் கூடாது ஒருவித கேள்வி றித் தமக்குள்ளே ப்பட்டுக் கொண் ஒருநாள் அர போன் அழைப்பு யசிங்கத்தார் இ அவரது மகன் இருந்தான். வன் இவர்களது கிரா காலம் விதானை மகனுடன் இங்கு வர். எந்தவித ( ல்லாமல் வாழ்ந்த பேப்பர் வாசி ருந்தவராம். தி விழ. மதியத்து போட்டுவிட்டு வ தன் தந்தையை அழைத்துக்கெt அங்கு மரண எந்தவித அடை மாலை ஏழு மன அவர்கள் வீட்டு: வீடு சாதாரண லேயே இருந்தது அமர்ந்திருந்த அறையினுள் ய கத் திறந்துவிட் போத்தல்கள் ச அறையில் பெல் சினிமா, குடும்ப சிறுவர்கள் வீடி டியே மரணவீடு கிறது.
அரவிந்தன வொரு அறைய ந்து திறந்து பா வந்தார். இறந் வநது எனன என்ன வேணும்? "கொய்யாவி ஒருக்காப்பாக் மோனை வளத்
64 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

து. என்னத்தைக் ன்டும் தெரியாது. ) லெச்ச லெச்ச ந்சை எங்களைக் ன். திரும்ப அனுப் னெண்டு கேக்கி
ாடங்கி இரவுவ களிருவருக்கும் ந்தனைதான். என் து, என்னத்தைப் ான்று இருவரும் நியாயங்களுமின் ாயே வாக்குவாத டிருந்தனர். விந்தனுக்கு ஒரு வந்தது, வன்னி றந்துவிட்டாராம். தகவல் சொல்லி னியசிங்கத்தார் மத்துக்கு அதிக ாயாக இருந்தவர். 5 வந்து வாழ்ந்த நோய் நொடியுமி தமனிசன். சித்துக் கொண்டி இரென்று மயங்கி க்கு மேல் லீவைப் ந்த அரவிந்தன்,
Լյավմ? 35/T602եւյսվաD ாண்டு போனான். வீடு என்பதற்கான யாளமும் இல்லை. ரிபோல் இவர்கள் க் கதவைத் தட்ட, இயல்பு நிலையி து. சிலர் ஹோலில் னர். சிலர் ஒரு
666)6O 60 டபடி சிகரட்டுகள், கிதம். இன்னொரு ண்கள் அரசியல், க் கதைகளுடன். யோ கேம். இப்ப நிறைந்து கிடக்
பின் தாயார் ஒவ் ாய் கதவைத் திற
ர்த்துக்கொண்டே
தவர் மகள் ஓடி மாமி தேடுறியள்?
பின்ரை முகத்தை கவேணும். எங்கை தி இருக்கிறியள்?"
"ஐயாவின்ரை சீவன் போனவுட னையே நாங்கள் ஹொஸ்பிட்ட லுக்கு போன் பண்ணின உடனை அவை பிரேதத்தைக் கொண்டு போய் அங்கை வைச்சிருக்கினம். உடனை எரிக்க இடமில்லையாம். வாற புதன்கிழமைதான் நேரம் தந்திருக்கினம். பின்னேரம் முண்டு மணிக்கு நேர எரிக்கிற இடத் துக்கு கொண்டு வருவினம். அங் கைதான் இனிப் பாக்கலாம்."
அரவிந்தனின் தாயாருக்கு
அழுகை பீறிட்டுக்கொண்டு வந்
లిలి
எனனநாசங் கடடின ஊரபபா இது. பெத்து வளத்த மனிசனை ஆசுப்பத்திரியிலை கொண்டு போய் எறிஞ்சாச்சு. இருக்கும்வ ரைக்கும் மனிசன். உயிர் போனால் பிரேதம். ஊரிலையெண்டால் வீட் டிலை வைச்சு எத்தினை பணி விடையள் செய்வம். இஞ்சை."
இந்த நாடுகளுடைய வழமை அப்பிடி. அது இவர்களுக்குத் தெரியவரவில்லை. தங்களுக்கும் இதே கதி தான் என்று இவர்கள் நினைத்திருக்கவும் கூடும். என்ன செய்யலாம். அந்தந்த நாடுகளில் அந்தந்த வகையான நடைமு றைகள்.
அன்றிலிருந்து ஆரம்பமாகி யது இவர்களுடைய பிடிவாதப் போர். அரவிந்தன் களைத்து விழு ந்து வேலையால் வந்த போதே இவர்களிருவரின் கோரிக்கைக ளும் அரவிந்தனை நெருக்குத லுக்குள்ளாக்கியது.
"தம்பி. நீ பட்ட கடனோடை எங்களை ஊருக்கு அனுப்பிவிடு ராசா. எங்களுக்கு இந்த வாழ் க்கை பிடிக்கேல்லை, நாங்கள் உயிரோடை இருக்கவேணுமெண் டால் இந்த உதவியை மட்டும் செய்து போடு. பிறகு நாங்கள் எந்த உபத்திரவமும் உனக்குத் தரமாட்டம்."
அரவிந்தனும் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான். தான் பட்ட சிரமங்கள், தான் பட்ட அவமானங் கள், கடன்கள் யாவற்றையும் எடுத்துச் சொல்லியும் அவர்கள்
விடுவதாயில்லை. யாருடைய பேச்
சும் இங்கு எடுபடவில்லை. பெற் றோரிருவரும் தாம் எடுத்த முடி வில் எதுவித மாற்றமும் இல்லை

Page 66
என்ற விதமாக ஒற்றைக்காலில் நின்றார்கள்.
மற்றைய சகோதரங்களுக்குத் தகவல் கொடுத்து இவர்களுடைய நிலைப்பாட்டை விளக்கியாகி
விட்டது. யார் சொல்லுக்கும் இவர்
கள் கட்டுப்படுவதாக இல்லை. வேறு வழியும் அரவிந்தனுக்குத் தெரியவில்லை.
உள்ளே வந்து சேருவதற்கும் பிரச்சினை. அதேபோல உள்ளேயி ருந்து வெளியே போவதற்கும் ஏகப் பட்ட பிரச்சினைகள். அவ்வளவுக் கும் அரவிந்தன்தான் முகங்கொ டுக்கவேண்டி ஏற்பட்டது.
அவர்கள் நல்லபடி ஊருக்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். அவர்களுக்காக அரவிந்தன் பட்ட கடன் நல்லபடி கட்டிமுடிக்க வில்லை. பெருமூச்சுவிட்டபடி யாரு க்கும் சொல்ல முடியாமல் மனதுக் குள் புகைந்து புகைந்து தன் னையே, தன் மனத்தையே தளர்த் திக் கொண்டான்.
ஆடியசைந்து நின்றது இருநூற் கக பஸவணடி, ! எதுவும் பேசவி யாக இருந்தான் யபடி "ஏறு பஸ் g(pg5(3356öT. DITL மாகத் தலைை பொறுமையிழந்த வுகளைச் சாத் எனக்கும் இவ கொள்ள முடியவி
"வா. கபே ( காரமாக அவ பிடித்து இழுத் தொடுகிலும் மா டான். "பியரடிப்ப கும் தலையசை அசைவுகள், பா கைகள் எனக்கு தந்தன. ஒரு 2 கினேன்.
"என்னடா. க்கு. சொல்லட
சென்ற நவம்பர் மாதம் 22ம் திகதி இலங்கைத் தொழிலா ளர் காங்கிரஸ் தலைவரான காலஞ்சென்ற தொண்டமான் அவர்களின் இரங்கற் கூட்டம் பாரிஸ் வதனி மஹால் உணவக மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் எழுத்தாளர் த.ஞானலிங்கம் பேசும்போது "நாங்கள் தமிழர்களுக்கெல் லாம் விடிவு வேண்டும் என்று கூறிக் கொண்டாலும் கூட, மலையக மக்களை எப்படிப் பாகுபாட்டுக் கண்ணோட்டத் தோடு நடாத்தினோம் என்பதை மறக்கக்கூடாது. தமிழ்த் தலை வர்கள் என சொல்லிக் கொள் கிறவர்களுடைய வீடுகளில் வேலைக்காரர்களாக அமர்த்
தப்பட்டவர்கள் எல்லாம் இந்த வறிய மலையக மக் களே என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும். ஜாதி அடிப்படையில் எப்படி யாழ்ப்பாண சமுதாயத்தைப் பிரித்து வைத்தார்களோ, அதே மனநிலையோடு மலையக தமிழ்ச் சமூகத்தை வடக்கத்தையான், வந் தேறுகுடி, நாடோடி, தோட்டக்காட்டான் என்றெல்
 
 

கொண்டு வந்து றுப் பத்தாம் இல ான்னுடன் அவன் ல்லை. அமைதி முதுகைத் தடவி ஸிலை" என்று டேன் என்ற வித ப அசைத்தான். 5 பஸ் தனது கத திக்கொண்டது. னைப் புரிந்து ல்லை.
நடிப்பம்" வலோத் னது கையைப் தேன். மீண்டும் ட்டேனென்றுவிட் ம் வாவன்" அதற் த்தான். அவனது ர்வை, நடவடிக் க் கவலையைத் டலுக்கு உலுக்
நடந்தது உன ா. சொல்லடா.
எங்கை உன் ரை கார்? என்ன உன் ரை கோலம் ? கொண் ணைக்கு போனடிச்சுச் சொல் லட்டே."
ஏளனமாய் என்னைப் பார்த்துச் சிரித்தான்.
தான் எழுதிய நாவல்களைத் தத்ரூபமாய்க் கொண்டு போக வேண்டி 'அகதா கிறிஸ்டி' சதா மனதைக் குழப்பிக் குழப்பி மனநோயாளியானாள்.
மின்வண்டியில் பயணித்த சிறு வயசுக்காரி அதிக போதைக்கு தன்னைக் கொடுத்து, மனதைக் குமைய வைத்து தன்னைப் பறி கொடுத்தாள்.
'பிளாட்போம்" கதிரைகளில் இருந்த இருவரும் இளவயதில் தாமீடுபட்ட சேட்டைகளில் காலத் தைப் போக்கி, எதிர்பார்த்த வாழ் க்கை கிடைக்காமல் தம்மைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கி றார்கள்.
அரவிந்தன்? O
லாம் நாமகரணம் சூட்டி ஒதுக்கி வைத்தார்கள். இந்த தமிழ்த் தலைவர்கள் எல்லாம் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டார்களே தவிர மலையக மக்களையும் தங்களைப்போல் கருதிக்கொ ண்டது கிடையாது.
அவர்கள் சமமாக மதிக்கப் படாது விலக்கிவைக்கப்பட்டி ருந்த காரணத்தினால் திரு. தொண்டமான் அவர்கள் தன்னா லேயாவது அந்த மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். அதற் காக எந்த மந்திரிசபையின் ஆட்சியில் நான் தொங்கிக் கொண்டிருந்தாலும் பரவாயி ல்லை. என்னுடைய மக்களுக் காக எதையாவது செய்கிறேன்
என்று அவர் செயற்பட்டதை நாங்கள் தவறாகக் கருதிக்கொள்ள முடியாது"என்றார்.
இக் கூட்டத்தில் கவிஞர் தி. திவ்வியநாதன், திரு. சி. புஸ்பராஜா, திரு. பேடினன், திரு. க. உதயகுமார், சுட்டுவிரல் ஆசிரியர் திரு. அ. இயல்வாணன் ஆகி யோர் உரைநிகழ்த்தினார்கள். O
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 65

Page 67
ழேகுணசீழேரசீழேகுங்ஃழேறசி
புதிய சிந்தனைக்களங்களை அறிமுகப்படுத்து வதாக உயிர்நிழல் உள்ளது. உண்மையை உணர்த் தும் உலகச் செய்திகள் உணர்வுபூர்வமானவை. புதிய சொல்லாட்சிகளை உயிர்நிழலில் காணமுடி கிறது. சாருநிவேதிதாவின் கோணல் பக்கங்கள் எளிமையான நக்கல்கள். ஆன் பிராங்க் நாட்குறிப்பு ஆக்கபூர்வமான மொழிபெயர்ப்பு. இது போன்ற மொழிபெயர்ப்புகள் தொடர்ந்து வெளிவரவேண்டும். கதைகளைவிட கட்டுரைகளே எனக்குப் பிடித்துள் ளன. புத்தக விமர்சனங்கள் புதிய வரவுகளை அறிந்துகொள்ள உதவுவதோடு முழுப்புத்தகத்தை யும் படித்தது போன்ற நிறைவினையும் ஏற்படுத்து கின்றன.
வாசகியை முதன்மைப்படுத்தும் லக்ஷமி அவர்க ளின் கருத்துப்போக்கு எனக்குப் பிடித்துள்ளது. பெண்களைப்பற்றிச் சிந்திக்க பெண்கள் முன்வரும் பொழுதில் கருத்துப்போக்கில் வித்தி யாசமான பார்வைகள் ஏற்படும். ஆண் கள் எழுத்துக்களிலும் சரி பல பெண் கள் எழுத்துக்களிலும் சரி ஆணினமே மையப்படுத்தப்படுவது இயல்பான ஒன் றாக உள்ளது. இது மாற்றப்படவேண் டும். மொழிப் பயன்பாட்டிலும் பெண்க ளுக்குரிய இடத்தைப் பெண்களே தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
நல்ல சூழலும் வாய்ப்பும் இருந்தும் குப்பைகளையே எழுத்தாக்கும் கூட்ட மும் அதனையே சிறந்த இலக்கிய மாக எண்ணிப் படிக்கும் கூட்டமும் அதிகரித்துவிட்ட இன்றைய சூழலில் தரமான இதழை இரு மாதத்திற்கொரு முறை தவறாது கொண்டு வரும் உங்கள் முயற்சியும் ஆர்வமும் உரமானவை. தேடிச் சோறுநிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசும் வேடிக்கை மனி தராக இல்லாமல் தசையினைத் தீச்சுடினும் தரமான இதழைக் கொணரும் தாங்கள் பாராட்டுக்குரியீர். உயிர்நிழலோடு எந்தன் உறவுநிழல் தொடரும்.
க. சந்தானலட்சுமி மதுரை, இந்தியா
0000
66 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999
 
 

:ழேரு*ை கீழருகீைழேறஃைழேகு
62 ൈK
NNS
உயிர்நிழல் என்பதன் அர்த்தம் யாது?உங்களது இதழில் எடுத்தாளப்படும் தமிழ்நடை சற்று விநோத மாயிருப்பதாக எனக்குப் படுகிறது. இதோ சில உதாரணங்கள்:
"மரபு மனிதனின் விழிப்புணர்வுக்கு மரபு ஏற்படுத் தும் சங்கடங்களையும் சேதங்களையும் முறிவுக ளையும் நாம் அன்றாடம் எதிர் கொள்கின்றோம்." -
Jaisabib 23
"வடிகால் கதை, குழந்தைகள் கொண்டிருக்கிற ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தமக்குள், மேற்கத் தைய சூழலில் கொண்டிருக்கும் பாலியல் உறவைக் குறித்தும்." - பக்கம் 25 (இதில் கொண்டிருக்கும் என்பதின் அர்த்தம் என்ன?)
"உலகளவில் மார்க்சியம் மீதான பார்வை ஒவ் வொரு விடயம் மீதும் ஒன்றாகவே இருக்கும். வேறு பட்ட பார்வை ஒரு பிரச்சினைமீது இருப்பதில்லை" -
பக்கம் 65
விளக்கம் குறைவாகவும் சில அடிப் படைத் தமிழ் இலக்கண மரபுகளை மீறியதாகவும் படுகிறது. சில சொற்கள் விடுபட்டுப் போயினவா?இவை போன்ற பிழைகளைத் திருத்தி செம்மைப்ப டுத்தும் உரிமை இதழ் ஆசிரியருக் கில்லையா? இப்பிழைகள் வேறு அந் நிய மொழிகளைக் கற்றபடியால் அதன் * தாக்கத்தால்தான் ஏற்பட்டவையா? இங்கும் சிலர் ஆங்கில மொழியின் தாக்கத்தால் அப்படி ஒரு நடையைக் கடைப்பிடித்தார்கள். இன்றும் சிலர் தமிழில் நினைத்து ஆங்கிலத்தில் எழுத முற்பட அது ஆங்கில மரபுக்கு ஒவ்வாததாக படிந்துவிடுகிறது.
உங்களின் இதழில் பிழை கண்டுபிடிப்பதற்கோ, அதன் மகிமையைக் குறைப்பதற்கோ நான் இதை எழுதவில்லை. பல நல்ல கருத்துக்களையும் விடயங் களையும் உள்ளடக்கிய இச் சஞ்சிகையின் நடையழகும் நன்றாக இருக்கலாமே என்ற ஆதங் கம்தான் என்னை இக்கடிதம் எழுதத் தூண்டியது.
செல்வி திருச்சந்திரன்
கொழும்பு, இலங்கை,
(d000

Page 68
சிறுகதை, கவிதைக்கு வழங்கப்படும் முக்கியத் துவத்தைவிட விமர்சனம், கருத்துப்பரிமாற்றத்துக்கு முக்கியத்துவம் வழங்கி ஒரு சஞ்சிகை வெளிவரு வது நல்லதொரு இலக்கியச் சூழலை உருவாக்கும். உயிர்நிழல் அதனைச் செய்கிறது.
பிரெஞ்சுப் படைப்புகளின் மொழிபெயர்ப்பு சஞ்சி கைக்கு கனதியைக் கொடுக்கிறது. தமிழ் இலக்கி யச்சூழலில் பிறமொழி இலக்கியங்களை அதன் போக்குகளை அறிந்துகொள்ளமுடியாத, அறிந்து கொள்ள விரும்பாதநிலை காணப்படுவதனால் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கு மந்தமாகவேயுள்ளது. (குறிப்பாக ஈழத்து தமிழ் இலக்கிய சூழலில்). உயிர் நிழலில் மொழிபெயர்ப்பை முக்கியப்படுத்தும் முயற் சியும் சிறந்தது.
சிறுகதைகளை பிரசுரிக்கும்போது உள்ளடக் கத்துடன் உருவத்தையும் கவனித்து பிரசுரியுங்கள். ஏனெனில் உருவமும் உள்ளடக்கமும் சிறப்பாக அமையும்போதே படைப்பு வலுவடையும்.
வெ. தவராஜா (படி)
மட்டக்களப்பு, இலங்கை
{0 000
உயிர்நிழலில் பெண்-பெண் சார்பான எழுத் துக்கள் பற்றி சொல்லவேண்டும். லக்ஷமியின் மொழி பெயர்ப்புக்கள் பெண்ணியம் பற்றிய மேலும் தெளி வான விவாதங்களைத் தூண்டும் இச்சூழலில் மிக அவசியமானது
வசந்தி ராஜாவின் 'அகங்களைக் காயப்படுத்த அவர்கள் தயாரில்லை. தெளிவானநடையில் இடை யூறாக வடிகால். 'அன்பனே, எனக்கு சமூகமும் எதிரி யில்லை. குடும்பமும் எதிரியில்லை. என் மனமே என்னை துன்புறுத்துகின்றது. இப்படியான சில வச னங்கள் என்னை மனோகரா படத்துக்குத்தான் அழைத்துச் சென்றன. ஆனால் கருத்தியல் ரீதியாக நடைநிகழ் முரண்கள் வடிகாலில் நிறைய உண்டு. மற்றும் சினிமாத்தனமான அல்லது உப்புச்சப்பற்ற அவளுக்குப்பிடித்தமான பாடலுடன் காரை எடுத் தாள்'முடிவுகள், வடிகால் போன்ற தத்தளிக்கும் தர மான கதைகள் தந்தவரின் சதுரங்கம் 'சப் ரகம், வித்து, அந்தப் பெண் தனக்கு நடந்ததை/நடந்த தாக நினைத்ததை தன் கணவனிடம் சொல்ல வேண்டும்கூடாது என்பதல்ல அங்கு பிரச்சினை. சொன்னால் மகனிடம் தந்தைக்குரிய அன்பு குறை யும் என்கின்ற தாய்மை இவர் அடிக்கடி மறைந்து கொள்ள எத்தனிக்கும் ஒன்று. இங்கு உடல் சார்ந்த கற்பிதங்கள் 'கெட்டுப்போனதை கணவனிடம் சொன்னால் அதன்பின். என்னதான் படித்தவர், உலகம் புரிந்தவர் என்றாலும் அவரும் ஒரு ஆண் தானே?நிகழும்/நிகழப்போகும்"கற்பு ரீதியான குழப் பங்கள் சார்ந்தது. ஒரு பிரச்சினையுமில்லாத தெளி ந்த நீரோடை போன்ற குடும்பத்தில் இதனால் ஏற்ப டும் விளைவுகள் கணவன் சார்ந்த தனது எதிர்காலம் சம்பந்தப்பட்டது. எத்தனைகாலம்தான் குசினி வேலையை சின்ன வேலையெனப் போகிறார் களோ!?-'.நான் என்ன செய்கிறேன். தனியே சமை யல் மட்டும் செய்துகொண்டு.. அது சரி வரவேற்

பறை ஷோபாவில் சாய்ந்தவர் எழும்போது திடீ ரென்று எப்படி பிஸ்கட் துகள்களைத் தட்டுகிறார்? நான் மேற்குறிப்பிட்ட குறைகள்,சம்பந்தமற்ற பல இடைச்செருகல்கள், முடிவுகள். ஒரு கதைக்கு கட் டாயம் முடிவு என்ற ஒன்று கொடுக்கவேண்டுமா என்ன? இல்லாமல் வருமெனின் நிச்சயமாக குறிப் பிடத்தகுந்தவர்.
வஸந்தி, காசு கொடுத்து கணவன் வாங்கி. ஒரு கவி வடிவம் பெற்றதோ இல்லையோ வித்யாச மான எண்ணம். பெண் சார் பிரச்சினைகள் மேலை த்தேய நாடுகளில் இல்லாததுபோலான ஒரு அப்பா வித்தனம் தவிர அது நல்ல கவிதை/கருத்து.
சுவிஸ் ரஞ்சி, Frankfurt ரஞ்சினி மனதில் நிற்க வில்லை. கவிதைகள் தலையிடியைத் தந்தது.
சுமதிரூபனது சுமார் ரகக் கவிதை கழுகு, அவன் அப்படித்தான்கூட பரவாயில்லை. சாதுவாக சியாம் செல்வதுரையின்'Funny boy"ஐ ஞாபகப்படுத்தியது போலிருந்தது. مح۔
விநோதனின் அம்மாவின் நண்பன் அருமையான ஒரு கதையாகப்பட்டது. நல்ல கதைக்குரிய எந்த அம்சமும்? இல்லாமல் அதாவது ஒரு விஷயத்தைக் கூறி முடிச்சை அவிழ்க்க முயலும் தன்மையற்று இருந்தது. உரையாடல் தெளிவாக இருந்திருப்பின் அது சிறந்த கதையாக அமைந்திருந்திருக்கும். சிறிது குறுகி விட்டதுபோலவும் தோன்றியது.
நானும் ஒரு சாதாரண வாசகிதான். பிரதீபாவின் கதை மிகத் தெளிவாக புரியவில்லையென்றாலும் சித்தார்த்த சே குவேராவின் கதையோடு ஒப்பிடத் தகுந்ததா என்று தெரியவில்லை. (வாய்க்குள் நுளையாத பகுதியிலிருந்து) வேண்டுமென்று புகுத் தியது போல தெரியவில்லை. ஆனால் stereo type ஆக இருந்தது. அந்த கதையை கொஞ்சம் தெளிவு படுத்தியிருக்கலாம் என்பது தவிரவும் அதை வடிவம் குறித்த முயற்சியாக மட்டும் பார்ப்பது சிறிது கவ லையாக இருக்கிறது. ஒரு நல்ல கதை தெட்டத் தெளிவாக புரிய வேண்டியதன் அவசியம் என்ன என்று யோசிக்கிறேன். பதில் கிடைக்கலாம். ராஜே ஸ்வரியினதும் நல்ல கதை. ஆழியாளின் கவி தையை நான் மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் பெண் இதழ் ஒன்றில் பார்த்த ஞாபகம், பெண்மொழி என்ற தலையங்கத்தில், அஃதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னைப் பொறுத்த மட்டில் இன்னும் இன்னும் தரமான கனமான ஆக்கங்களை நான் மிக வும் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இவ்வளவு அழகான அட்டையமைப்புடன் வெளிவரும் உயிர் நிழல் மிக மிக தரமானதாகவும் இருக்கவேண்டு மென நான் விரும்புகிறேன்.
உங்கள் இலக்கியப்பணியில் ஜனரஞ்சகத் தட ங்கல்களைத் தவிர்க்கப் பாருங்கள்.
சிநேகா
இலங்கை
0000
தொடர்ச்சியும் ஒழுங்கும் ஒரு சஞ்சிகைக்கு வாய்த்துவிட்டால் தரம் தானே இணைந்துவிடும். இவ் வகையில் உயிர்நிழலின் தொடர்ச்சியும் வளர்ச்சி
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 167

Page 69
யும் நம்பிக்கை தருகிறது.
கடந்த இதழில் பிரதீபா தில்லைநாதன் சிறுக தையினுடே தன் சிந்தனைகளை விதைத்திருந்தார். அவரது புதிய குருதியும் துணிச்சலும் பிரமிக்க வைக்கிறது.
அதேவேளை நிதானமும் இலகுத்தன்மையை யும்(வாக்கியங்களில்) காட்டுவாராகில் எதிர்நாளில் நல்ல படைப்புகளை எதிர்நோக்கலாம்.
சுதாகரன்
6
0000
புலம்பெயர் சூழலில் இருந்துவரும் சஞ்சிகைக ளையும் அவற்றில் நிகழும் உரையாடல்கள் விவா தங்களையும் கவனித்து வருகிறோம். உங்க ளுடைய வாழ்க்கைநிலை கருத்துப் போக்குகள், உணர்வுகள் என்பவற்றோடு எங்களின் புரிதல்க ளுக்கு இவை முக்கியமாகப் படுகின்றன. தமிழ்மொ ழிசார் சூழல் இன்று பல்வேறு நாடுகளிலும் விரவிக் கிடக்கும் நிலையில் இம்மொழியூடாக சாத்தியப்ப டும் பல்வேறு வித்தியாசங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியமாகப்படுகின்றது. இதற்கு இது போன்ற இதழ்கள் தொடர்ந்து வரவேண்டும்.
GBgb
பாண்டிச்சேரி, இந்தியா
0000
இக்கடிதத்தினை சாருநிவேதிதாவின் கோணல் பக்கங்களில் கண்ட கோணல் ஒன்றிலிருந்து துவக் குவது சரியாக இருக்குமென்று நினைக்கிறேன். சோகம்-3 என்னும் தலைப்பில் சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட் படம் பற்றிய விமர்சனத்தில் சாரு "இப்போதெல்லாம். யாரும் டெரரிஸ்ட் என்றே கூப்பி டுவதில்லை. மிலிடன்ட்/போராளி என்றுதான் அர சாங்கமே குறிப்பிடுகிறது" என்கிறார்.
சாரு நிவேதிதா இந்தியாவுக்கு வெளியே எங் காவது வசிக்கிறாரா? அல்லது இந்தியப் பத்திரி கைகள், வானொலி, டி.வி. ஆகியவற்றில் அவர் கவ னம் செலுத்துவதில்லையா?என்பது தெரியவில்லை. இங்கு யாராவது, அரசாங்கத்தின் ஊதுகுழல்கள் ஏதாவது மிலிடன்ட் என்ற வார்த்தையையோ போராளி என்ற வார்த்தையையோ பயன்படுத்தி யதை சாரு அவதானித்திருக்கின்றாரா? போராளி களை டெரரிஸ்ட் என்று அழைக்கும் அரசு ஊதுகு ழல்கள் என்ன புரிதலில் அழைக்கின்றனவோ அதே புரிதல்தான் சந்தோஷ் சிவனுடைய புரிதலும்.
ஆனால் சோகம்-3இன் இறுதிப்பராவில் சாரு தன் நியாயமான வருத்தத்தை முன் வைக்கிறார். நமக் கும் ஏற்புடையதே. சந்தோஷ் சிவன் மட்டுமல்ல, வியாபாரச் சினிமாவுக்குள் சீரழிகிற, சீரழிக்கிற எல்லாக் கலைஞர்களுமே இதற்கு விதிவிலக்கல்ல.
சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் பல புதிய விஷயங்களை அறியத் தருவதுடன் அதன் நையாண்டி கலந்த நடை படிக்கச் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவர்மீது முந்தைய நிழல்களில் வைக் கப்பட்ட விமர்சனத்தை அதற்குத் தன் நிலைப்
68 உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

பாட்டை வைப்பதன்மூலம் எதிர்கொள்வார் என்று எதிர்பார்த்தேன். இவ்விதழில் அப்படி எதையும் காணமுடியவில்லை.
நிழல்கள்பகுதியில் றயாகரன் தனது கடிதத்தில் "மாவோ காலத்தில் மக்கள் பெற்ற சலுகைகள், வசதிகள்." என்று குறிப்பிட்டு நெடுக எழுதுகிறார். நிஜத்தில் அவை உரிமைகள் என்றல்லவா இருக்க வேண்டும்?
மேகவண்ணன் ராமேஸ்வரம், இந்தியா.
{0 000 தங்கள் உயிர்நிழல்கள் கனமாகவும் காத்திரமா கவும் இருக்கின்றது. புலம்பெயர் சிருஷ்டியா ளர்களின் ஆளுமை ஒரு காலத்தின் பதிவாக பிரதிப லிக்கின்றது. எனினும் ஏற்கனவே இங்கிருந்து சென்ற இலக்கிய கர்த்தாக்கள் புலம்பெயர் இலக்கியப் பூங்காவினை அலங்கரிக்கின்றனர்.
அவர்கட்குப் பின்னர்? இதுவே பெரும் கேள்விக்குறி? நீர்கொழும்பூர் முத்துலிங்கம் நீர்கொழும்பு, இலங்கை,
8000 உயிர்நிழலில் பெண்-பெண் சார்பான எழுத்துக்க ளின் வருகை பாராட்ட வேண்டியதும் அத்தோடு விமர்சிக்கப்படவேண்டியதும்,
தென்னாசிய பெண்நிலைவாதம், சிமோன் தி போவுவா பற்றிய லக்ஷமியின் மொழிபெயர்ப்புக்கள் பெண்ணியம் பற்றிய மேலும் தெளிவான விவாதங் களை துரண்டும்.
அக்கரைப்பச்சை ரஞ்சி (சுவிஸ்) என்ன சொல்ல வருகிறார்? அவரின் மதிப்பு மதிப்பறிக்கை தொடர் பான தெளிவோ உணர்ச்சிப் பதிவோ அந்தக் கதை யில் இருக்கவில்லை. ஒரு வகையில் இந்தக் கதை யில் என்ன ஏன் கேள்விகள் எல்லாம் மிஞ்சிவிட்டது. ஏன் வாசித்தோம் என்ற கேள்வி. உயிர் நிழலில் ஒரு தொய்வை ஏற்படுத்தியது.
Frankfurt ரஞ்சினியின் கவிதை காலம் -மாற் றம்=தலையிடிதான்!
சுமதிரூபனின் கழுகு சுமார் ரகம், அவரின் 'அவன் அப்படித்தான் மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான தலை ப்பு. ஆனால் சம்பந்தமேயில்லாத கரு!!!! பொது வாக ஓரினச் சேர்க்கை பற்றிப் பேசும் நாங்கள் பால்ரீதியான வேறுபாடுகள் பற்றியும் பேசலாம். சியாம் செல்வதுரையால் அவனை எழுத முடிந்தது. ஆனால் ஒரு பெண் எழுத்தாளரால் 'பயர் மாதி ரிக்கூட (குறைந்தபட்சம்!) படைக்க முடியவில்லை. இவர், அவள் அப்படித்தான்படைத்தால் எந்த மாதிரி எழுதுவார் என சிந்திக்கத் தோணுகின்றது. வேறே தும் தோணவில்லை. ஏன் இதைக் கூறுகின்றேன் என் றால் பெண்ணென்று எழுதும்போது அது எழுதும் பெண்தான் அது என முத்திரை குத்தும் அபாயம் இருக்கிறதே!
அம்மாவின் நண்பன் - 'கணையாழியில் வந்த 'அம்மாவின் காதல் மற்றும் தஞ்சை குமாரின் 'அம் மாவின் நண்பர்கள் போன்ற கதை, கவிதைகளின்

Page 70
சாயல் இருந்தாலும் அருமையான ஒரு கதை யாகப்பட்டது.
AMISTAD பற்றிய மீள் பார்வை ரொம்ப முக் கியமானது. ரதனிடம் நல்ல மொழியிருக்கிறது. ஆனால் அது பல சமயத்தில் அவருக்கு வசப்படா மலும் போகிறது. அதுதான் அவரது எழுத்தின் பல வீனம். வசப்பட்டால்.
கட்டுரைகளில் பாலியல் அரசியல் high lighted ones. நல்ல கட்டுரை. எல்லாம் சரி, ஆனால்'எழுந்து வாருங்கள் தோழர்களே' என்பதுபோல இறுதியில் மானுடம் வெல்லும் ரகமாய் முடிக்கும்போது சிரிப் பாய் இருக்கிறது.
ஸ்வப்னா இலங்கை
0000 பத்திரிகையை ஒரே முச்சில் படிக்க முடிந்ததே நல்ல விஷயம். கதை, கவிதை, கட்டுரை, மதிப்புரை, விவாதம் எனப் பலவகை விஷயங்களும் கொண்டி ருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
பின்நவீனத்துவம் - ஒரு பார்வை, எனக்கு மிகப் பயனுள்ளதாக இருந்தது. உருப்படியாக நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது. விஷய கனத்தோடும் எளிமையாகவும் இருக்கும் இது போலக் கட்டுரை களைத் தொடர்ந்து வெளியிடவேண்டும்.
புதியபாதை, புதிய அணுகுமுறை கட்டுரையும் இன்றைய அரசியல்/சமூக நிலைமைகளை எடுத்துப் பேசுவதோடு இதில் பொருளாதார நிலைகள் அமை வதையும் விளக்கமாகச் சொல்கிறது. நிகழ்கால உலகச்சூழல் மற்றும் போக்குகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
பின்நவீனத்துவமும் பெண்ணியமும், இதேபோல இன்னொரு முக்கியமான கட்டுரை.
திமோர் பற்றிய கட்டுரையும் பிரயோசனமானது. பொதுவாக கட்டுரைகளை அபூர்வமாகவே படிப் பது. ஆனால் இந்தக் கட்டுரைகள் கொண்டிருக்கும் விஷயம் எடுத்ததுமே படிக்க வைத்தது. இப்படிக் கட் டுரைகள் இன்றைய சூழலுக்கு வெகுவாக வேண்டி யவை என்றே கருதுகிறேன்.
சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்களை எப் பொழுதும் போல ஆர்வத்துடன் முதலிலேயே படித் துவிட்டேன். அவருடைய கிண்டல், கேலி, விமர்ச னத்துக்குப் பின்னால் இருக்கும் உண்மையான அக் கறையைப் பெரிதும் மதிக்கிறேன். ஆனால் அவர் இவஷ்டத்துக்கும் தமிழ்க்கவிதைதமிழ் இலக்கிய வாதிகள் பற்றியெல்லாம் பேசுவதுதான் கஷ்டமாக இருக்கிறது. "தமிழ் இலக்கியவாதிகள் தமிழ்தின சரிகள் படிப்பதில்லை" என்பது அவர் பார்த்த வரையில் இருக்கலாம். திருநெல்வேலி, கோயில் பட்டி, மதுரை, நாகர்கோயில் இப்படித் தென்மா வட்டத் தமிழ் இலக்கியவாதிகளுக்குப் பொருந் தாது. தினத்தந்தி/தினமலர்தினமணி முன்றையும் ஒப்பிட்டு 'டாக்ரரேட்' வாங்குகிற அளவுக்குத் தெரி ந்து வைத்திருக்கிற நிறைய இலக்கியவாதிகள் இருக்கிறார்கள். இது சாரு அறியாத பக்கம்.
பிறகு - சாருவுக்கு நவீன தமிழ்க்கவிதை பற்றி

எல்லாம் பெரிய அறிவும் கிடையாது. வாசிப்பும் கிடையாது. இருந்தால் அவர் இப்படி எல்லாம் எழுத மாட்டார். யூமா வாஸ"கி என்கிற சிறந்த கவிஞனை விட்டுவிட்டு, கைலாஷ் சிவன், யுவனிகா, ரீராம், சம யவேல் என்கிற புதிய தலைமுறைக் கவிஞர் களையெல்லாம் பேசாது ‘கூட்டுக்காரன்’பிரேம்ரமேஷ் மற்றும் ஒவியர் நடேஷ் பற்றிப் பேசிக்கொண் டிருக்க மாட்டார். தமிழ்நாட்டுத் தமிழ்க்கவிதை பற்றி, இளப்பமாகவே பேசும் சாரு, மேலே நான் குறிப்பிட் டுள்ள கவிஞர்களின் கவிதைகளைப்பற்றி என்ன நினைக்கிறார் என்று உயிர்நிழல் மூலம் உலகுக்குச் சொன்னால் உதவியாயிருக்கும். செய்வீர்களா சாரு?
விக்ரமாதித்யன் தென்காசி, இந்தியா,
{{ {{0 யமுனா ராஜேந்திரனின் கட்டுரையின் மையக் கருத்து எனக்கும் உடன்பாடானதே. சுய சிந்தனை யுள்ள எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து. உல கின் மிகச் சிறந்த மனிதர்களாக வாழ்ந்த மறைந் தவர்களின் தலைக்குப் பின்னால் புனித ஒளிவட் டங்களைப் பொருத்திப் பழகிவிட்டவர்களுக்கு இது சகிக்க முடியாத விடயமாகவே இருக்கும். நாம் யாரைத்தான் அவர்களது பலம் பலவீனங்களுடன் ஏற்றுக் கொண்டோம். மகாத்மா, புனிதர் போன்ற மாயைகளிலிருந்து நம் மக்கள் விடுபடவேண்டும்.
பெருந்தலைவர்கள் என்றால் அவர்கள் விமர்ச னத்துக்கு அப்பாற்பட்டவர்களாகி விடுகிறார்கள். இதுநம் மக்களிடம் தொன்று தொட்டு இருந்துவரும் ஒருவகை வியாதி.
பிரேம் ஆனந்த் திருவாரூர், இந்தியா.
0000 குறிப்பாக மாக்சியம் பற்றிய கலந்துரையாடல் களும் அது தொடர்பான கருத்தாடல் மடல்களும் இன்றைய காலகட்டத்தின் தேவை. இந்த நூற்றாண் டின் விளிம்பில்நின்று பேசுகிறபொழுது அடுத்த புதிய நூற்றாண்டுக்கான ஒரு தத்துவமாக மாக்சியம் மட் டுமே உள்ளது. நவமுதலாளித்துவத்தின் சவால் களை எதிர்கொள்ளக்கூடியதாக மாக்சியம் புதிய சந்ததியினருக்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டும். திட்டமிடப்பட்டமுறையில் செயல்படுகின்ற நவமுத லாளித்துவத்தை நாம் புதிய உத்வேகத்துடன் எதிர் கொள்ளவேண்டும். அதுவும் குறிப்பாக தமிழ்ச்சூ ழலில் இதன் தாக்கம் பெரிதும் உணரப்படவேண்டும். தங்கள் சஞ்சிகைக்கு பாராட்டுக்கள்.
பாலசுகுமார் மட்டக்களப்பு, இலங்கை,
dd {00 சொந்த நாட்டுக்குள் ஒரே மொழி எல்லையில் வேலை நிமித்தம் நகரத்திற்கு இடம்பெயர்ந்துநகர நெருக்கடிக்கு உள்ளாகிக் கிராமத்து மண்ணின் வாழ்வுக்கு ஏங்குவதை வாசித்து வெறுமனே சிலா கித்துப்போகும் தமிழ் இலக்கியப்போக்கை உயிர் நிழல் (இதழ் தலைப்பும்) அதிர்ச்சிக்குள்ளாக் குகிறது. காலடி மண் பறிக்கப்பட்டு, வேர்களை
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 69

Page 71
இழந்து அந்நிய மொழி, பண்பாட்டு, சுற்றுச் சூழலுக் குள் உழலும் உயிர்த் தகவமைப்புப் போராட் டத்துக்கு மத்தியில் சொந்த மண்ணின் விடுதலை, மக்களின் வாழ்வு அவலம் என சுயம் இழந்த பரந்த பார்வையுடன் அவற்றை வெளிப்படுத்தத் துடிக்கும் மனத்தூண்டலை உயிர்நிழலால் அறிந்தேன்.
காலச்சுவடு போன்ற இதழ்களால் புலம்பெயர்ந்த தமிழர்களைப்பற்றியும் இலக்கியம் பற்றியும் அறிந் திருந்தாலும் உயிர்நிழல் பாதிக்கவே செய்தது.
புலப்பெயர்வு பல்வேறு அறிவுத்தளங்களை யெல்லாம் தமிழ்மொழிக்குள் கொண்டு வருவது விரும்பத்தக்கதே. அதற்கு ஒரு இனம் கொடுக்கும் விலை கொடுந்துன்பமானது. இதுவரை தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்த நம் பண்பாடுகள் உடைந்து நொருங்குவதை இதழ் அழகாகப் பதிவு செய் துள்ளது (கூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான்). ஆன் பிராங்கின் நாட்குறிப்பு பிரமிக்க வைத்தது. தமிழக இளையோர் மனமும் குடும்பச் சூழலும் அப் படி என்றைக்கு வடிவம் கொள்ளுமோ?! முனைவர் கே. பழனிவேலு புதுச்சேரி, இந்தியா.
0000
யுத்தத்தை தின்போம் கவித் தொகுப்பை விமர் சித்த அருந்ததி, சக்கரவர்த்திபிரதி எடுத்தாற்போல் ஜெயபாலனின்
என்ன நம் குடும்பங்கள்
காற்றில் விதிக் குரங்கு கிழித்தெறியும்
பஞ்சுத் தலையணையா?
(ஒரு அகதியின் பாடல்)
சைவமும் தமிழும்
கொலையும் கொடூரமும்தானா?
என்ன நம் சரித்திரம்
நரபலி கேட்கும் ரத்தக் காட்டேறியா? என்ற வரி களுக்கு பயன்படுத்தியிருப்பது போன்ற விடயங் களையும்
போகிற போக்கில் ஒப்பிட்டிருக்கலாம். "ஆரோக் யமான விமர்சனப் போக்குக்கு வழிகாட்டி இருக்க லாம்தான்.
ஜெயபாலனை பிரதி எடுத்தது போல் இருக்கிறது வரியும் வடிவமும், ஆனால் சில சமயங்களில் சில பாதிப்புக்களும் தவிர்க்க முடியாததுதான்.
சீற்றா
இலங்கை,
0000
எடுத்தவுடனேயே சிறுகதைகளைப் படிக்கும் எனக்கு, பிரதீபா தில்லைநாதனின்'சோகித்தபொழு துகளின் நிமித்தம்' என்னுள் ஆயிரம் மின்வெட்டுக ளைப் பாய்ச்சியது. வாழ்க்கையின் ஓர் அகோர வெட் டுமுகம், மானிடத்தின் உயிர்த்தலில் சோகித்தல் மிகவும் கலைத்துவமாக வார்க்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ கதைகள், பலதும் தொடங்கும் போதே மனது அதனுடன் இணைய மறுத்து அப்ப
70 (உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999

டித்தான் பிரயாசையோடு தொடர்ந்தாலும் அடுத் தகணமே அதனை மறக்கமுடிகிற வகைகள் இப்படி இப்படி, எத்தனை தடவைகள் வாசிப்பினும் சோகி த்த பொழுதுகளாய் மனதில் கனத்தை ஏற்றும் வல் லமை பிரதீபாவிடம் இருப்பதைக் கண்டு கொண்ட போது பெருமையாக இருக்கிறது. அவரால் இன்னும் இதைவிடவும் மேலாகவும் முடியும் என்ற நம்பிக்கை யையும் தருகிறது.
நுண்ணிய அவதானிப்புகளாய் சேர்த்துக் கன த்த பதிவுகளை வாசிப்பவர் மனதில் ஒட்ட வைத்து விடும் லாவகம், மெல்லிய அசைவுகளாய் மனதை உடைத்து நொருக்கும் பாங்கு. இன்னும் நேரடி யாகக் கதைசெல்வது, முரண்படுவது, முடிவு கட்டு வது என்று முற்றுப்புள்ளி வைக்காமல் படிப்பவரின் மனதில் எத்தனையோ பொறிகளைத் தோற்றுவித்து விடுகிறார். தாங்கள் அனுபவங்களானதை உணர வைத்து அதிர வைக்கிறார்.
பெண்ணாகத் தன்னை வெளிப்படுத்தி இருப்பதை உணரமுடியும்போது இந்தப் படைப்பு மேலும் ஒரு படி உயர்கிறது.
"இன்னும் கொஞ்சக் கதை பாக்கி இருக்கிறது. அதில் நீநிம்மதி பெறுவதே முடிவாய் இருக்கும்" என்று அவர் எழுத்தை நிறுத்தும்போது அநாதர வாய் அந்தரத்தில் விட்டது போன்று மனது உடை ந்து போகிறது.
இந்தக் கதையாரையாவது பாதிக்காமல் இருக் கக்கூடுமோ என்ற கேள்விக்கே இடமில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது. உயிர்நிழல் இது போன்ற படைப்பிலக்கியங்களுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்றும் நட்புடன் கேட்டுக் கொள் கிறேன்.
மனோரஞ்சிதம்
லண்டன், இங்கிலாந்து.
0000
அட்டையின் நிறத்தையும் ஒவியத்தையும் பார்த் ததும் இவ்விதழ் பெண்ணிய ஸ்பெஷலாக இருக்க லாம் என்று எண்ணிப்பிரித்தேன். உள்ளே சஜிதாவின் ஓவியமும் பிரதீபாவின் கதையும் அட்டைக்குப் பொருத்தமாக இருந்தன. நூல் விமர்சனங்கள், வெளி வாசல் காத்திரமாக இருந்தாலும் இவைகள் தொடர் ந்த விவாதத்தளங்களைத் தோற்றுவிப்பின் ஆரோக் கியமாக இருக்கும். திமோரின் தீராதவலி, எங்க ளுக்கும் உலகவிடுதலை விரும்பிகளுக்கும் மிக முக் கியமானது. தி. உமாகாந்தனின் கட்டுரைகளை அவ தானிக்கும்போது அவர் காலத்திற்கேற்ப உலக நடப்புகளை வெளிப்படுத்துவதில் ஒர் நேர்மையான அரசியல் விமர்சகராகத் தெரிகிறார். நழ்நாட்டின் இன்றைய தேவையும் இதுதான். உலகின் முலைக ளில் முனங்கிக்கொண்டும் சமயங்களில் முழங் கிக்கொண்டும் இருக்கிற விடுதலைக் கனல்களை நமக்குக் காட்டுகிறார்.
கிருஷ்ணகுமார்
யாழ்ப்பாணம், இலங்கை

Page 72
பி. ரவிவர்மன்
1999/10/13
 

மின்விளக்கினர் ஒளிகளில் நிழல் தெறித்துக்கிடக்கும் அன்னிய வீதிகளில் மனுசனைத் தினினும் பாடல்களே நெருப்பாய் எரிகிறது
மனிதப் புதைகுழிகள் எங்கெங்கே மூடிக் கிடக்கிறதென யாருக்கும் தெரிவதில்லை எல்லோருக்கும் எல்லாமே தெரியும்
ஒருவருக்கொருவர் U6066igstuluy(8UsT60T Usef வாழ்வினைத் தொலைத்த வனாந்தரங்களின் கற்பாறைகளினர் தடக்கல்களில் இனி எதைத் தேடிப்போவது
நிறையத்தூரம் கடந்தும் மிகநீண்ட தொலைவிலேயே காத்துக்கிடக்கிறோம்.
நண்பர்களின் கல்லறைகளில் கொட்டிய பூக்கள் என்றுமே காய்வதில்லை பனிக்காலம் முழுவதும் கடந்து மழைக்காலத்தில் நனைந்து கோடையிலும் வாசம் வீசுகிறது நினைவழியாத் தொலைவிடங்களின் 9ഖബൈTഗ്ര കൺബങ്ങpകണfഇb
வாழ்வதற்காய் மரித்த நண்பர்களே. நீண்டு விரிகிறது உங்கள் முகங்கள் சவுக்கந்தோப்புகளின் புதைகுழிகளுக்குள்ளிருந்தும்.
மூச்சடங்கிப்போகிற இனிறைய ஒவ்வொரு ராவிலும் இழப்பினர் கொ ரங்களில் வீரியமிக்க நாளைகளுக்காய் இனினும் எத்தனை காலம் காத்துக்கிடப்பது
ஆற்றின் கரைகளில் அள்ளுண்டு போன குச்சிகளாய் கூளங்களாய். எல்லாமே தொலைந்து போயிற்று.
புணர்தலில்
புசித்தலில்
வாழ்தலில்
எதிலுமே பிடிப்பற்று இப்பழத்தானி கழிகிறது இன்றைய ஒவ்வொரு கணங்களும். O
உயிர்நிழல் 0 நவம்பர் - டிசம்பர் 1999 71

Page 73

an Restauran 23 Rue Cail, 75010 Paris Tel 014.034 2072
La Chapelle Oui (Gare du Nord
e-mail: EXILFRGaol.com
No d'enreg. 1302320