கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இறப்பு என்பது முடிவு அல்ல (நினைவு மலர்)

Page 1


Page 2


Page 3

இறப்பு என்பது முடிவு அல்ல.
இறப்பு என்பது
முடிவு அல்ல
-பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம்
நினைவாக.1
நந்தி வெளியீடு
பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 4
இறப்பு என்பது முடிவு அல்ல.
நுால் :- இறப்பு என்பது முடிவு அல்ல. முதற் பதிப்பு :- ஜீலை- 2005
தொகுப்பு :- தே.தேவானந்த்.
வெளியீடு :- நந்தி வெளியீடு,
681/2 பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம்- இலங்கை.
கணனி
வடிவமைப்பு :- அ.விஜயநாதன் கணனித் தட்டச்சு :- ந. கஜித்தா அச்சுப்பதிப்பு :- நோபிள் பிறிண்டேர்ஸ்
பலாலி வீதி, யாழ்ப்பாணம்
பக்கங்கள்:-65 பக்கங்கள்
உள்ளே.
எம் நினைவுகளில்.
O இறப்பு என்பது முடிவு அல்ல.
O புனைகதை இலக்கியத்திற்கு புகழ் சேர்த்த படைப்பாளி.
• அமரர் பேராசிரியர் சிவஞானசுந்தரம் மறைவும் நினைவுகளும் () ஓர் பேராசான், அன்புள்ளம் கொண்ட நலன் விரும்பி. O வாழ்நாள் போராசிரியர்.
O பேர் கொண்ட நந்தி.
O சத்திய சாயி அன்பர்களின் அஞ்சலி.
Siva, My good and loyal friend.
O குடும்ப உறவுகளின் உணர்வலைகள்.
O நந்தி - சில குறிப்புகள்
2 பேராசிரியர் நந்தி நினைவாக - 1
 
 

இறப்பு என்பது முடிவு அல்ல.
எம் p56060T6356mls). . . . . . . . . . . . . . . . .
பேராசிரியர் நந்தி இன்று எம்மத்தியில் இல்லை. அவரின் நினைவுகள் நெஞ்சில் கிடக்கின்றன. அவரது குரல் காதுகளில் கேட்கிறது. அசைவுகள், தோற்றம் பல்பரிமாணத் துலங்கல்கள் அனைத்தும் இனி வரும் காலங்களில் எம் வாழ்வியக்கத்தில் மனத்திரையில் மட்டும் சஞ்சரிக்கும்.
“இறப்பு” எங்கள் குடும்பத் தலைவருக்கு புற்றுநோய் வடிவில் அருகில் நிக்கிறது என்பதைக் கேள்விப்பட்டதும் துவண்டு போய் நின்றோம். அவ்வேளை இறப்பை எதிர் கொள்ள தான் தயாரான துடன் எம்மை ஆசுவாசப்படுத்தியதும் தயார்ப் படுத்தியதும் அவரே தான்.
தனது வாழ்வின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் நிகழ்ச்சிகளையும் நீண்டநாட்களிற்கு முன்பே ஒரு பேப்பருடனும் பேனையுடனும் அமர்ந்திருந்து, திட்டமிட்டு, அதனை எழுதி அதன் படி நகர்ந்து சாதிப்பவர். அவரிடமிருந்த அரசு பலம் எம்மை வியப்பிலார்த்தியதுண்டு பல வகையான நோயோடு இறுதி வரை பல்கலைக்கழகத்தில் தன் பணி செய்தவர். தான் வாழ்வில் திட்டமிடும் ஓர் நிகழ்ச்சி போன்றே தனது மரணவீட்டு நிகழ்ச்சியையும் தனது கைப்பட எழுதி தனது இறப்பிற்க்கு ஒன்றரை மாதத்திற்கு முன்பே தனது மருமக்களிடம் (தேவா, தபோ) பூரண விளக்கத்துடன் ஒப்படைத்திருந்தார். மரண வீட்டுக்காக வீடு தயாராகும் புதுமை எங்கள் வீட்டில் நடந்தது. இத்தனை தயார்ப்படுத்தல்களின் பின்னும் அவரது இழப்பைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவர் இழப்பு அறிந்து எம்முடன் துயர் பகிர்ந்து கொண்டவர்கள் பல நூறு பேர்.
3 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 5

இறப்பு என்பது முடிவு அல்ல.
பேராசிரியர் நந்தி
S S S
இறப்பு என்பது முடிவு அல்ல.
5 பேராசிரியர் நந்தி நினைவாக - I

Page 6
இறப்பு என்பது முடிவு அல்ல.
विा' ,
பேராசிரியர் நந்தி அவர்கள் தனது மரண வீட்டு ஒழுங்குகள்
தொடர்பாக 2005 ஏப்பிரல் இறுதியில் எழுதிய குறிப்பு
6 பேராசிரியர் நந்தி நினைவாக - I
 

இறப்பு என்பது முடிவு அல்ல.
Spüų GT CÍLug (plg. Gay (3 Gŭa)
- பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
சிவஞானந்தத்தை950முதல் எனக்குத் தெரியும். அவர் நந்தி பேராசிரியூர்_இ ல் லத்துரை என்ற தனது ஆக்க ஆளுமை குறியீட்டுக்குள்ளே புகுவதற்கு ஆறு வருடங்கள் முன்பிருந்தே அவரைத் தெரியும். அந்தத் தொடர்பு அவர் காலமாவதற்கு ஒருவாரம் முன்புவரை ஆறாதிருந்தது. அவர் "இறந்த அன்று அவரது மருமகன் (எனது மாணவன்) தேவானந்த் மூலம் கிடைத்த தகவல் நெஞ்சையுருட்டுகின்றது. தான் இறந்ததும் அச்செய்தி அறிவிக்கப்படவேண்டியவர் பட்டியலில் இருந்த பெயர்களுள் ஒன்று என்னுடையதென்று தெரிவிக்கப் பட்டது. அந்தச் சொற்கள் என்னைத் தகர்த்துவிட்டுள்ளது. அந்தளவிற்கு நந்தி என்னை மதித்திருந்தாரா? எனக்குச் சிவஞானகந்தரத்தின் நினைவுகளின் பாரம் அழுத்தத்துடன் விரியத் தொடங்குகின்றது.
7 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 7
இறப்பு என்பது முடிவு அல்ல. முதலில் செ.சிவஞானசுந்தரம் என்ற மனிதனின் சாதனைகளை நோக்குவோம். வைத்தியத் துறையில் இலங்கை முழுவதிலும் சிவஞானசுந்தரம் என்ற பெயர் சமூக மருத்துவத் துறையில் எத்துணை முக்கியமானதாகவுள்ளது என்பதை இத் தொகுப்பில் வரும் வைத்திய கலாநிதி சிவராஜாவின் கட்டுரை காட்டுகிறது. அந்தமருத்துவ நுணுக்கங்களுட் நான் செல்ல விரும்பவில்லை. எனது மொழியிற் கூறுவதனால் இப்படித்தான் அமையும் சிவஞானசுந்தரம்- என்ற பெயரைக் கூறாமல் இலங்கை சமூக மருத்துவத்துறை வரலாற்றை எழுத முடியாதென்பதாகும்.
இந்த புகழ் இலங்கைக்குள் மாத்திரம் நின்றுவிட்டதொன்றல்ல. உலக சுகாதாரநிறுவனம் சிவஞானசுந்தரத்தை நிபுணத்துவ முடையவராக பல நாடுகளுக்கு அனுப்பிற்று. அந்நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் மருத்துவ உயர் கல்வி பெருமையை அறிந்தவர்களுக்குத் தான் இந்த நியமனத்தின் முக்கியத்துவம் புலனாகும். சிவஞானசுந்தரத்தின் கட்டுரைகள், நூல்கள் அத்துறை மாணவர்களாலும் அறிஞர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன என அறிகின்றோம். இது ஒன்றே போதும் அவருடைய பெயர் அவரது சிறப்புத்துறையில் நிலைநிற்பதற்கு. சிவஞானசுந்தரத்தின் வைத்தியத் துறைச்சிறப்பு தன்துறை யிலுள்ள நிபுணத்துவத்திற்கு இணையான இன்னுமொரு சாதனையைச் செய்துள்ளது. அது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வைத்தியத்துறை கல்வி வளர்ச்சிக்கும் ஒழுங்கமைப் புக்கும் நந்தியாற்றிய பணியாகும். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதலாவது பீடாதிபதியாக இருந்தவர் பேராசிரியர் கூர்வர். அவர் கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்தில் புகழ்மிக்க பேராசிரியர்களுள் ஒருவராக இருந்தவர்.
கூர் வர் இட்ட அத்திவாரத்தை செழுமைப்படுத்தி வளர்த் தெடுத்தவர் சிவஞானசுந்தரம். வைத்திய பீடத்தின் நிர்வாக ஒழுங்கமைப்பு, கல்வி ஒழுங்கமைப்பு ஆகிய விடயங்களில் இவர் பெருங்கவனம் செலுத்தினார். 1980களின் தொடக்கத்தில் உண்மையில் 1981, 1932களில் யாழ்ப்பாண வைத்தியபீடத்திற்கு அனைத்திலங்கையிலும் பெருமதிப்பு நிலவியது. 1983ல் அதில்
8 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல
பெருஞ்சிதறல் ஏற்பட்டது. தொடர்ந்து வந்த ஐந்து வருடங்களிலும் வைத்தியபிடத்தின் கட்டுக்கோப்பைப் பேணிக்காப்பதில் இவர் பெரும்பங்கு வகித்தார். மாணவர்களிடத்து இவருக்கிருந்த விருப்பு, மதிப்பு காரணமாக அவர் தனது கடமைகளை வழமையான தலையீடுகளின்றி நடத்த முடிந்தது.
இதற்கு மேலாக வைத்தியபீட இளந்தலைமுறை ஆசிரியர்களுக்கு
இவர் பேராசிரியராகவிருந்தார். அதற்கும் மேலாக ஒவ்வொரு வரையும் அவரவர்களுக்குரிய முறையில் மதித்தவர். கெளரவப் படுத்தியவர். இதனாலேயே தான் அவரால் அத்துணைச் செம்மையுடன் கடமையாற்ற முடிந்தது.
இவையெல்லாவற்றுக்கும சிகரம் வைத்தாற் போலிருந்தது அக்காலத்து துணைவேந்தராகவிருந்த பேராசிரியர் வித்தியானந்தனிற்கும் இவருக்குமிருந்த உறவு. அது நீண்ட காலமானது. அத்தியந்தமானது அந்த நட்பில் முகங்கண்டு சிரிப்பதிலும் பார்க்க குறைபாடுகள் கண்டு விமர்சிப்பதே கூடுதலாகவிருந்தது. சிவஞானசுந்தரம் வித்தியானந்தனின் “பார்த்தசாரதி”யாக பலவேளைகளில் தொழிற்பட வேண்டி வந்தது.
ஒரு பல்கலைக்கழகமென்பது அதன் ஒவ்வொரு நிலையிலும் துறை-பீட மட்டங்களில் இணைந்து தொழிற் படவேண்டும். இதற்கு மேலாக முழுப்பல்கலைக்கழகங்களினதும் ஒட்டு மொத்தமான வளர்ச்சி முக்கியமானது. யாழ்ப்பாணப்
d ம்களிட்டாக 1 ல் மிகப்ெ பெயரீட் ற்கான காரணம் அதன் மூத்த ஆசிரியர்கள் குறுகிய விரோதநிலைகளுக்கு மேலே சென்று முழுப்பல்கலைக்கழகத்தினதும் ஒட்டுமொத்தமான வள்ச்சியிற் காட்டிய ஈடுபாடாகும்
சிவஞானசுந்தரத்திற்கு இந்த தொழிற்பாட்டிலும் ஒருமுக்கிய பங்கிருந்தது. இவரது விமர்சனங்கள் தனிப்பட்ட விரோத குரோதங்களிற்கு அப்பாற்பட்டவையென்பது எல்லோருக்கும் தெரிந்திருந்ததால் இவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.
9 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 8
இறப்பு என்பது முடிவு அல்ல. அவர் ஆலோசனையிற் செல்மதி இருந்தது. உண்மையில் யாழ்ப்பான வைத்தியபீடத்தின் வரலாற்றை மாத்திரமல்ல யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்தமான வளர்ச்சியிலும் இவருக்கு முக்கியத்துவமிருந்தது. இவை அவரது தொழின்மை நிலையின் வெளிப்பாடு.
அவரது ஆளுமையின் மற்றையதளம் மிகவும் சுவாரஷ்யமானது. சிவஞானசுந்தரம் ஒர் ஆக்க எழுத்தாளராக ஆர்வமுள்ள நடிகராக விளங்கினார். 'நந்தி’ என்ற எழுத்தாளனை சிவஞானசுந்தரம் என்ற மருத்துவர் பயன்படுத்திக் கொண்டாரா - அல்லது சிவஞானசுந்தரம் என்ற வைத்தியர் பயன்படுத்திக் கொண்டாரா என்பது ஒரு சுவாரசியமான வினாவாகும்.
இந்தக் கட்டத்திலேதான் படைப்பிலக்கிய எழுத்தாளரது உளவியல்நிலைப்பட்ட முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது அவசியமாகிறது. ஆக்க இலக்கியம், படைப்பிலக்கியம் என்பது அடிப்படையில் சமூக மட்டத்தில் உள்ள மனித உறவு ஊடாட்டங்களை சித்தரிப்பதாகும். மனித உணர்ச்சிகள் எனநாம் கொள்பவை, (கோபம், அருவருப்பு, பயம், ஹாஸ்யம் முதலியன) உண்மையில் மனித உறவுகளினூடாகவே தெரியவரும். மனித உறவுகளிலே கோபம் வரும். பயம் வரும். சிரிப்பு வரும். இந்த மனித உறவுகள் ஒரு சமூக பின்புலத்திலே தான் நடைபெறும். இதனை அந்த எழுத்தாளர் உணர்ந்து கொள்கிறார்.அறிந்து கொள்ளுகிறார். எனவே சமூகம் மனிதர் பற்றிய ஏதோ ஒரு அறிவுத் தெளிவு இல்லாமல் இலக்கியம் படைக்க முடியாது, கலைகளைப் படைக்க முடியாது. சிவஞானசுந்தரம் என்ற புலமைத்துவத்தளம் கொண்ட மருத்துவர் ஒருவர் தன்னைச் சூழ உள்ள மனிதர்களைப் பார்க்கிறார். உடலின் நோயியலுக்குப் பழக்கப்பட்ட வைத்தியர் 9 direcTrilatafsir (3DITufu Isoda) (Pathology of the heart and mind) இனங்கண்டறியும் முயற்சிதான் நந்தியின் எழுத்துக்கள். உலக இலக்கிய வரலாற்றில் இது நன்கு தெரிந்த உண்மை. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களில் சிலர் வைத்தியர்களாகவே
10 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல. இருந்தனர். செக் கோவ் ஒரு நல்ல உதாரணம். தமிழிற் படைப்பிலக்கிய கர்த்தாக்களாகவுள்ள வைத்தியர்கள் மிகக் குறைவு வைத்தியத்துறையையும் எழுத்தையும் சம அக்கறை யுடன் கவனித்தவர்கள் மிக மிகச் சிலரே. அவர்களுள் நந்திக்கு நிச்சயமாக ஒரு இடமுண்டு.
இவ்வேளையில், இந்து ஐதீகத்தில் நந்தி எனும் எண்ணக்கரு வகிக்கும் இடம் பற்றி தெரிந்து கொள்ளல் வேண்டும். 'சிவம் பற்றிய தெளிவை உள்வாங்கி அந்த ஞானத் தெளிவினை ஆடம்பரமாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருப்பது நந்தி. ராஜாஜி இந்தப் பெயரை இவருக்குச் சிபார்சு செய்தபோது நம்மிற்சிலர் அதனைக் கிண்டலாகவே பார்த்தனர். இப்பொழுதுதான் புலனாகிறது நந்தி என்பது ஞானத்தெளிவின் குறியீடு. அதற்கு இந்து மதத்தில் முக்கிய இடமுண்டு. சில வேளைகளில் பெயர்கள் வந்து பொருந்தும் முறைமை ஆச்சரியகரமானது. சிவஞானசுந்தரம் என்ற மனிதன் உலக ஞானம்பற்றிய சித்தத்தெளிவு கொண்டிருந்தார் என்பதைப் புலப்படுத்துவதாக அமைகிறது என்பது இப்பொழுதுதான் தெளிவாகிறது.
நந்தியின் இலக்கிய முக்கியத்துவம் பற்றிப் பேசுவதல்ல எனது நோக்கம். நந்தியின் பெயரைக் குறிப்பிடாது20 ஆம் நூற்றாண்டின் ஈழத்து இலக்கிய வரலாற்றை எழுதிவிட முடியாது என்பது உண்மை. ஆனால், எனக்கு இங்கு முக்கியமாகப்படுவது அந்த மனிதனின் உள்ளப்பண்பாடாகும்.
ஆத்மாவும் உள்ளமும் இணைகின்ற நிலை அது. நந்தி என்ற எழுத்தாளரிடத்து குறைபாடுகளை நாம் காணலாம். உண்மையில் குறைபாடுகளும் உண்டு. ஆனால், நமக்கு முக்கியமாவது என்னவென்றால் புலமை ஞானமும் அறிவுப் பரப்பும் ஆழமும் தொழின்மை, நிதானமும் கொண்ட ஒருவரிடத்து இந்தப் படைப்பாக்கத்திறன் இணைகின்றபோது அந்த மனிதன்
11 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 9
இறப்பு என்பது முடிவு அல்ல. பாற்கடல் போல நம் கண்முன்னே விரிகிறான். அவன் எழுத்துக்களும் அறிவும் அனுபவமும் இணைகின்றபோது வண்ண ஆக்கங்கள் வெளிப்படத் தொடங்குகின்றன. இலக்கியத் துறையில் நந்திக்கு ஒரு கருத்து நிலை இருந்தது. சிவஞான சுந்தரம் கொம்யூனிஸ்ட் அல்ல. ஆனால் அவர் முற்போக்கு எழுத்தாளராக இருந்தார். முற்போக்கு இலக்கிய எழுத்தாளர் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளைக்குச் சிலகாலம் தலைவராக இருந்தார். மு.போ.எ. சங்கத்தின் நடவடிக்கைகள் சிலபற்றிய சமூக விமர்சனங்கள் வந்தபோது அவற்றிற்குத் துணிச்சலுடன் முகம் கொடுத்தார்.
நந்தியின் இந்தக் கருத்து நிலைத் துணிபு அவரது ஆழுமைக்கான ஒரு திறவுகோலாகும். நந்தியின் அறிவுக்கும் புலமைக்கும் சமூகத் திசை முகம் ஒன்று இருந்தது. அது வெறும் அறிவு அல்ல. சமூகக் குவிவு உடைய ஒரு தேடல் முயற்சி.
நந்தியின் பிற்கால வாழ்வில் மிகவும் பிரசித்தமாக அமைந்தது சாயி இயக்கத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாடாகும். சாயிபாவா இயக்கம்- தியானநிலைப்பட்ட இந்து மதநிலைப்பாட்டுக்கான (Meditative Hindusin) சடங்குகளையே பிரதானப்படுத்தும் ஒரு மதப் பண்பாட்டினுள் - இந்தத் தியான முறைமை பலருக்கு மிகுந்த “விடுவிப்பு உணர்வை’வழங்கிற்று. நந்தியின் பார்வையில் 659 GTé is Tg5IIILorra (Šaj - (Mental Health) ULg).
நந்தி இலங்கைச் சாயி இயக்கத்திற்குத் தனது மனநல துறை நடவடிக்கைகள் மூலமாக ஒரு புதிய பரிமாணத்தை வழங்கினார். ஆனால் இதனையும் அவர் மற்றவர்கள் பார்வைக்குச் செய்கின்ற முறைமையிலே செய்ய விரும்பவில்லை. இதனால் அவருக்கு இலங்கை முழுவதிலும் இந்தியாவிலும் கூட சாயி பக்தர் களிடையே ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. நந்தியின் ஆழுமை குறிப்பாகக் கடந்த 10 - 15 வருடங்களாக இந்த இயல்புகள் எல்லாவற்றினதும் சேர்க்கையாகவே இருந்தது. இந்தப் பண்புகள் வெறும் கலவையாக நிற்கவில்லை. அவை இணைந்த முறையில் ஒரு புதிய மனப் பரிமாணம் ஏற்பட்டது.
12 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல.
எதையும் புரிந்து கொள்ளுகின்ற தன்மை, எவரையும் புரிந்து கொள்ளுகிற தன்மை ஒவ்வொருவரினதும் நல்லதுகளையும் கெட்டதுகளையும் உணர்ந்து கொள்ளுகிறதன்மை. நல்லது களுக்காக கெட்டதுகளை மறைப்பதுமில்லை. கெட்டது களுக்காக நல்லதுகளை மறப்பதுமில்லை. நந்தியோடு ஊடாடியவர்களுக்குத்தான் தெரியும் அவர் குனம் இன்னும் குன்றேறிநின்றவர். வள்ளுவர் கூட இத்தகையோரிடத்து கோபம் இருக்கலாம் என்று கருதினார். வெறும் புகழ்ச்சிக்காகக் சொல்லவில்லை,பிற்காலத்தில் நந்தி கோபம் என்பது தெரியாத வராகவே இருந்தார். அவருடைய இறுதிக்கால உத்தியோகபூர்வ செயற்பாடுகள் பற்றித் தெரிந்தோருக்கு இந்த உண்மை தெரியும்.
இவற்றைக் கூறும்போது நந்தியை நாம் சாதாரண மனித உறவுகளுக்கு அப்பாற்பட்டவராக எடுத்துக்கொள்ளும் ஒரு நிலைமை ஏற்படலாம். அவர் அற்புதமான நண்பர். அதிலும் பார்க்க முக்கியமானது, அற்புதமான மகன், தமையன், கணவன், தகப்பன், மாமன், பேரன்.
நந்தியின் குடும்பஸ்த நிலையில் அவரோடு உறவாடியவன் நான். பிள்ளைகளில் ஒருத்திக்குப் பெயர் வைத்தவன். இன்னொருத் திக்குச் செல்வச் சந்நிதி வாசலில் சோறுட்டியவன். அவர் அந்த நினைவுகளை மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூறுவார். தங்கை ஒருத்தியின் அன்புக்காக அவர் சுமந்த சிலுவைப்பாரம் எனக்குத் தெரியும். அவரது மகள் தாதி பட்டப்படிப்பிற்காக சேலத்திலோ கோயம்புத்தூரிலோ இருந்தபோது இவரும் அங்கு போயிருந்து அவரது படிப்பிற்கு உதவினார். தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமலே அவர் அங்கிருந்தார். நந்தி மிகவும் அசாதாரணமான, மிகவும் உயர்ந்த மகத்தான, மனிதர்.
சிவஞானசுந்தரம் இல்லை. சிவஞானசுந்தரம் என்ற தேகம்
வியோகமாகி விட்டது. (பிரிந்துவிட்டது) இறப்பு என்பது என்ன, யாழ்ப்பனத்துப் பேச்சுவழக்குத் தமிழ் ஞானம் பொதிந்த விடையைத் தருகிறது. ஒலைகளால் வேயப்பட்ட கூரை
13 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 10
இறப்பு என்பது முடிவு அல்ல. சிதைவுற்ற நிலையில் புதிதாக வேய வேண்டும் என்று சிந்திக்கின்றபோது “ஒலை இறந்து விட்டது” என்பார்கள். பார்த்தால் அந்த ஒலை வடிவம் இருக்கும், மழை வெயில், புழுதி காரணமாக, கைபட்டாலோ காற்றுப்பட்டாலோ அந்த ஒலை "இற்று அதன் வடிவத்தை இழந்து விடுகிறது. இறப்பு என்பது அதுதான். முன்பு இருந்த நிலையில் ஏற்படும் சிதைவு, அது பெளதீக விதிகளுக்கு உட்பட்டது. ஆனால், மனித உயிர்ப்பு என ஒன்று உண்டு (The humen Spirit) கடவுள் நம்பிக்கை உள்ள பண்பாடுகளில் ஆத்மா எனும் சொல் அதனைக் குறிக்கும். ஆனால் அந்த நம்பிக்கை நிலைகளுக்கு மேலாக நின்று மற்ற மனிதருக்கான ஒளிவிளக்காக அமைவதும் உயிர்ப்புத்தான் அந்த உயிர்ப்பு அழிவதில்லை.
நந்தியை நமது தலைமுறையின் மானுட உயிர்ப்பு முனைகளில் ஒன்றாக நான் காண்கிறேன். அந்த நினைவோடு வாழ்கிறேன்.
“எந்தரோ மாஹானு பாவலு அந்தரீக்கு வந்தனமு” (எவரெவர்கள் மஹானுபவர்களோ அவர்களுக்கு எங்கள் வந்தனங்கள்)
அன்புடன் கர்த்திகேசு சிவத்தம்பி கொழும்பு 22.06.2005
(இதனை எழுதுவதற்கு உதவிய சங்கரப்பிள்ளை சுஐாந்தினிக்கும் சந்திரபோஸ் சுதாகருக்கும் நன்றி)
14 பேராசிரியர் நந்தி நினைவாக - I

இறப்பு என்பது முடிவு அல்ல.
புனைகதை இலக்கியத்துக்குப் புகழ் சேர்த்த படைப்பாளி
- என். சோமகாந்தன்
எமது நாட்டின் தமிழ் இலக்கியத்துக்குப்பல்வேறு தொழில்துறை சாாந்த எழுத்தாளர்கள் சிறப்பும் செழுமையும் சேர்த்துள்ளனர் என்பது வரலாற்றுண்மை. மருத்துவத்துறையில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் இருபத்திநாலு மணி நேரமும் சுறுசுறுப்பாக நோயாளி களைக் கவனிப்பது, ஆலோசனைகள் வழங்குவது, ஆராய்ச்சி களில் ஈடுபடுவதென சேவை மனப்பான்மையுடன் இயங்க வேண்டியவர். இவ்வாறான பொறுப்புக்களைச் சுமந்து கொண்டிருந்த GB u III Sforfu u வைத்திய 356535תחט செ.சிவஞானசுந்தரம் (1928 - 2005) அவர்கள், தமது ஓய்வு நேரங்களைப் பயன்படுத்தி தமது மருத்துவப் பணிகளுக்கு எவ்விதத்திலும் துணைநிற்கத் தேவைப்படாத படைப்பிலக் கியத்துறையிலும் ஈடுபட்டு தலை சிறந்த இலக்கிய சிருஷ்டி களைத் தந்துள்ளமை வியப்பையும், அவரிடமிருந்த பன்முக ஆற்றல்களையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன.
15 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 11
இறப்பு என்பது முடிவு அல்ல. பல்கலைக்கழக மருத்துவபீடாதிபதி, சமூகமருந்துவ நிபுணர், இலக்கியப்படைப்பாளி,நாடகாசிரியர்,நடிகர், மேடைப்பேச்சாளர், இலக்கிய இயக்கச் செயற்பாட்டாளர் எனப் பலதுறைகளிலும் ஆழமாகக் காலூன்றிநின்று அவ்வத்துறைகளில் அர்ப்பணிப்பான செயற்பாடுகளினால் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்கள் நந்தி அவர்களைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது.
ஒரு வைத்தியரினால் எவ்வாறு ஒரு நோயாளியின் உடம்பிலுள்ள நோயைக் கண்டுபிடித்து குணமாக்க முடியுமோ, அவ்வாறே சமூகத்தைப் பீடித்துள்ள நோய்களையும் கண்டறிந்து, அவற்றை இலக்கியத்தின் மூலமாக ஓரளவுக்கு சீர்படுத்தலாம் என்ற இலட்சியங் கொண்டவராக இலக்கியப் பிரவேசம் செய்தவர் ‘நந்தி’. பேராசிரியர் செ. சிவஞானசுந்தம் அவர்களுக்கு 'நந்தி’ என்னும் புனைப்பெயரைச் சூட்டியவர் மூத்த தமிழ்ப் பேரறிஞர் இராஜாஜி. அதற்கு முன்னரே வி.செ.சி, பென்சிலின், மகன், ஜெய்ஹிந்த்,சாஸ்திரியார் முதலிய புனைபெயர்களில் கட்டுரைகள், உரைச்சித்திரங்கள், சிறுகதைகள் என எழுதிக்கொண்டிருந்தார். அவரது முதலாவது சிறுகதை ‘சஞ்சலமும் சந்தோஷமும்’1947ல் வீரகேசரியில் வெளியாகியது.
வெறும் அலங்காரத்துக்காகவோ, பிரபலம் எய்த வேண்டு மென்பதற்காகவோ அவர் எழுத்துலகத்துக்கு வந்தவரல்லர் என்பதை அவர் பின்வருமாறு பிரகடனப்படுத்தியுள்ளார்.
“திட்டமிடப் பெற்ற இலக்கிய முயற்சிகள் மூலம் சமுதாயத்தை ஓரளவுக்கு மாற்ற முடியும். அதற்குச் சிந்தனையாளர்கள், அனுபவசாலிகள், திறமையானவர்கள் எழுத்துத்துறையில் இறங்கவேண்டும்” (தேன்பொழுது - சிரித்திரன் 1985) சிந்தனையாளராகவும், அறிஞராகவும், அனுபவ சாலியாகவும் திகழ்ந்த நந்தி அவர்களின் ஆக்க இலக்கியப் படைப்புக்களில் அநேகமானவை சமுதாய மாற்றத்துக்கான நோக்கை அடிப்படையாகக் கொண்டு திகழ்வதை விமர்சகர்கள், தீவிர இலக்கிய ஆர்வலர்கள் பலரும் அங்கீகரித்துள்ளனர்.ள
16 பேராசிரியர் நந்தி நினைவாக -1

இறப்பு என்பது முடிவு அல்ல. ‘நந்தி’ அவர்களிடம் இயல்பாகவே குடிகொண்டிருந்த மனித நேயத்துக்கு ஈடினையே கிடையாது. அன்பு, இரக்கம், நேர்மை, நலிவுற்றோர் உயர்வடைய வேண்டும் என்ற அக்கறை, சமூகப் போலித்தனங்களுக்கு எதிரான சவுக்கடி, சமூக கொடுமைகள் கழையப்பட வேண்டுமென்பதற்கான போர்க்குரல் முதலியவை, அவர் எழுதிய புனைகதைகள் பலவற்றில் அடிநாதமாக ஒலிப்பதை உய்த்துணர்ந்து வாசிப்பவர்களால் உணரமுடிகிறது.
சிறுகதைகளும் நாவல்களும் புனைகதைகள் என்ற வகைப்படுத்தலில் அடங்குகின்றன. 'நந்தி’ அவர்களின் 16 தமிழ் நூல்கள் அச்சில் வெளியாகியுள்ளன. அவற்றில் ஆக்க இலக்கியப் படைப்புகளாக 'ஊர் நம்புமா?’ (1966) கண்களுக்கப்பால். (1984 நந்தியின் கதைகள்(1994), தரிசனம் (2002) ஆகிய நான்கு சிறுகதைத்தொகுதிகளும், மலைக்கொழுந்து (1964 தங்கச்சியம்மா (1977)நம்பிக்கைகள்(1988)ஆகியமூன்றுநாவல்களும் குரங்குகள்(1975) என்னும் நாடகமும் விளங்குகின்றன.
சென்ற அறுபதுகளுக்குமுற்பட்ட காலத்தில்நந்தி’அவர்கள்எழுதிய சிறுகதைகளில்தனித்தமனிதஉறவுச்சூழலில்ஏற்படும்எண்ணங்கள், ஆசாபாசங்கள்,கிராமப்புறச்சூழலில்நிகழும்சம்பவங்கள்,உணர்வுகள்
Ο ல்நடுத்தர,தொழிலாளவர்க்கத்தைச்சேர் மாணவர்களின் ஆசைகள், நாகரிக மோகம், காதல், பாசம், கடவுள் நம்பிக்கை போன்றவை மனிதாபிமானத்துடன் கலையம் கொண்டவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் ‘நந்தி’ அவர்களின் இளமைக்காலம் பெரும்பாலும் பளை, இடைக்காடு, காங்கேசந்துறை முதலிய கிராமங்களிலே கழிந்தது. உயர் கல்வியை றோயல் கல்லூரி, இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு வைத்தியக் கல்லூரி போன்றவற்றில் பயின்றவர். மலையகத்தில் நீண்டகாலமாக மருத்துவராகப்பணியாற்றியவர். குருநாகல், ஹிரிப்பிட்டியமுதலிய வைத்தியசாலைகளில் பணியாற்றிய காலத்தில் சாதாரணச் சிங்கள மக்களுடனும் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். பல நாடுகளுக்கு தொழில் காரணமாகப் பயணங்கள் செய்தவர்.
17 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 12
இறப்பு என்பது முடிவு அல்ல. அதனால், பல்வகையான மக்களுடன் பழகி அவர்களின் உணர்வுகளை நுட்பமாக உள்வாங்கி மனதைத் தொடும்படியான கலாசிருஷ்டிகளாக அவர் இலக்கிய உலகில் உலவவிட்டார்.
நந்தி அவர்கள், பன்றி குட்டி போடுவதைப் போல, படைப்புகளை எழுதிக்குவிப்பதில்லை. ஆண்டொன்றுக்கு மூன்று அல்லது நான்கு சிறுகதைகளையே அவர் சிருஷ்டிப்பது வழக்கம். கதைக்கான கரு ஒன்று அவரின் மனதில் பதிந்து திருப்தியாக உருவாகிய பின்னரே மேலோட்டமாக எழுதிப்பார்த்து மீண்டும் மீண்டும் வேண்டிய திருத்தங்களைச் செய்த பின்னரே அவர் அதனை அச்சுக்கு அனுப்புவது வழக்கம். தேவையற்ற ஒரு சொல்கூட அதில் இடம் பெற்றிருக்காது. சிறு சிறு வசனங் களாலான கம்பீரமானநடை உயிர்கொண்டெழும்பாத்திரவார்ப்பு: நிசமான சம்பவம் போன்ற காட்சிவர்ணனை, தர்மாவேசத்தை வெளிப்படுத்தும் எள்ளல்கள், என்பன நந்தி அவர்களுக்கேயுரிய தனித்துவம். இக்காரணங்களினாலேயே 1960 களுக்குப்பின், நந்தியவர்களின் இலக்கிய சிருஷ்டிகள் ஒவ்வொன்றும் முத்திரைப் படைப்புகளாகத் திகழ்ந்தன.
சென்ற ஐம்பதுகளின் இறுதியில், பொங்கியெழுந்த இலக்கிய இயக்கத்தில் இணைந்து கொண்ட அவர், தனித்துவமான ஈழத்திலக்கியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு தமது படைப்புகள் மூலமாக இலக்கணங் காட்டியவர். அக்காலத்தில் நந்தி, சொக்கன், டொமினிக் ஜீவா, டானியல், வரதர்,நான்,பத்மா, கவிஞர்பாடி, வெள்ளிமுத்தையா ஆகியோர் ஒவ்வொரு பூரணையன்றும் அக்கால யாழ்ப்பாணம் முற்றவெளியில், பால் நிலவில், இரவு பல மணி நேரம் ஈழத்திலக்கியத்தின் செல்நெறி எவ்வாறு இருக்க வேண்டுமென உரையாடுவது வழக்கம். எமக்குப் புலப்படாத பல விஷயங்களை வெகு நுட்பமாக அவதானித்து இலக்கியமாக்கிய வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது.
நானும் எனது மனைவி பத்மாவும் வேறு சில நண்பர்களும் இலக்கிய விழாக்களில் பங்குபற்றுவதற்கென நந்தி அவர்களின்
18 பேராசிரியர் நந்தி நினைவாக -1

இறப்பு என்பது முடிவு அல்ல வாகனத்தில் நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணஞ்செய்திருக் கிறோம். வழியில் ஒரு நீர் வீழ்ச்சியையோ, பசுமை போர்த்த பரந்த வெளியையோ, பனிபூத்த தொடர் மலைக்குன்றுகளையோ கண்டு விட்டாரெனில், குதூகலம் எய்தி, வாகனத்தை நிறுத்திவிட்டு, அக்காட்சியைபுதிய உதாரணத்தின் மூலம் எப்படிவர்ணிக்கலாம் என எம் ஒவ்வொருவரிடமும், வகுப்பாசிரியர் போல விசாரிப்பார். அவர் கூறும் நவீன உவமானம் எமது சித்தரிப்புக்களையெல்லாம் மீறிக்கொண்டு தலைதுாக்கி நிக்கும். அவரது ஆத்மாவுக் குள்ளேயே ஒரு கலைஞன் வாழ்ந்து கொண்டிருந்தான். அவர் கையாண்ட பொருள்புதிது, சொல்புதிது அதனால் தான் அவரின் இலக்கியப் படைப்புகள் கனதியானவையாகவும், காத்திரமான வையாகவும் விளங்குகின்றன.
ஒரு தடவை நாவலப்பிட்டி இளம் எழுத்தாளர் சங்க விழாவில் பங்குபற்றிஉரையாற்றிவிட்டுநந்திஅவர்களும்நானும்பத்மாவும்புகை வண்டியில் கொழும்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். எமக்கு எதிரில் இருந்த இருக்கைகளில் ஓர் ஏழைச் சிங்களத்தாயும் அவளின் அவலட்சனக் குழந்தையும் அமர்ந்திருந்தனர். எமது மூன்று வயது மகனும் பத்மாவின் மடியில் உட்கார்ந்திருந்து புகை வண்டிப்பயணத்தை மகிழச்சியுடன் அனுபவித்துக் கொண்டி ருந்தான். அந்தச் சிங்களக் குழந்தை எம் அழகிய மகனைத் தொடுவதற்காக அடம் பிடித்து அழுதது. அவனின் புலனை வேறு பக்கம் திருப்புவதற்காக அவனின் தாய் அழுக்குப் பை யொன்றிலிருந்துபணிஸ்ஒன்றைஎடுத்துஅவனிடம்கொடுத்தாள். அக் குழந்தையோ, அதனை எமது மகனுக்குநீட்டியது.
*பத்மா அருமையான கரு. இதனை ஒரு சிறுகதையாக்கிவிடும்’ -நந்தி அவர்களின் ஊக்குவிப்பு "கடவுளின் பூக்கள்” என்னும் தலைப்பில் பத்மா அதனைச் சிறுகதையாக எழுதி, அது தினகரனில் வெளியாகிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து நந்தி அவர்கள் தொலைபேசி மூலமாக, தான் நினைத்ததிலும் பார்க்க வெகு சிறப்பாகச் செய்திருப்பதாக பத்மாவுக்குப்பாராட்டுமழை அவர் விரும்பியிருந்தால், அந்தச் சம்பவத்தை அவரே ஒரு
19 பேராசிரியர் நந்தி நினைவாக -1

Page 13
இறப்பு என்பது முடிவு அல்ல. சிறுகதையாக வடித்திருக்கலாம். ஆனால், நந்தி அவர்களோ, தான் மட்டுமே வளர்ந்தால் போதாது, ஈழத்திலக்கியத்துறையில் இன்னும் பலர் வளரவேண்டுமென்ற பரந்த நோக்குடன், ஊக்கமளித்து வந்தவர்.
‘ஈழத்திலக்கியம் -பல்துறை நோக்கு’ என்ற எனது நூலுக்கு அளித்த முகவுரையில், ஈழத்திலக்கியம் பற்றி ஆய்வு செய்பவர் களுக்கான முன்னோடி முயற்சி எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த நூலின் ஆயிரம்பிரதிகளும் ஆறுமாதத்தில் விற்பனையாகிவிட்டன என அதன் பதிப்பாளரும் நந்தி அவர்களின் நெருங்கிய நண்பரு மானநாவலாசிரியர் செ.கணேசலிங்கன் குறிப்பிட்டதை என்னிடம் வந்து கூறிப் பெருமைப்பட்டவர் நந்தி. பிறர் கழுத்தில் சூட்டப் படவிருந்த பூமாலையை இடையில் பறித்து தமது கழுத்தில் தாமே குட்டிக்கொண்டு, ஆர்ப்பளிப்பவர்கள்மலிந்துள்ள இலக்கிய உலகில்,நந்தி அவர்களைப் போன்ற நேர்மையாளரை,நீதிக்காகப் போராடுபவரை, மற்றவர்களின் வளர்ச்சியைக் கண்டு மகிழ்பவரை இப்பிறப்பில் காண்பது அரிதினும் அரிது.
பன்னிரு சிறுகதைகளைக் கொண்ட 'ஊர் நம்புமா?’ என்னும் நந்தி’யின் முதலாவது சிறுகதைத் தொகுதி, அவரின் நெருங்கிய நண்பர்கள் சிலரால் தொகுக்கப்பட்டு நூலுருவாக அவரின் திருமணப்பரிசாக வழங்கப்பட்டது. அதில் அடங்கியுள்ள கதைகளில் ஆசையின் ஓசை, அதிகாரி காதலுக்கு மருந்து என்பவை மருத்துவ அதிகாரி சிலரைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்டவை. ஆசையின் ஓசையில், கடமையுணர்வுடன் புரிந்த சேவைக்காக, ஒருவன்நீட்டிய பணத்தை முதலில் மறுத்த வைத்தியர், பின்னர் அதைப் பெற்றிருக்கலாமோ எனச் சஞ்சலப்படுவதையும், அதிகாரி சிறுகதை மருத்துவமனையில் பணிபுரியும் சிற்றுாழியன் தனது குழந்தைக் காகச் சிறிது பால்மாவைக் கையாடியதைக் குற்றமெனக் கண்டிருக்கும் வைத்திய அதிகாரி, தமது பிரயானப் படிக்காக பொய்க் கணக்குக் காட்டுவதையும், பெண்பித்துப் பிடித்த நோயாளி ஒருவனுக்கு, பொறுப்பற்ற வகையில் ஆலோசனை வழங்கிய
20 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல.
வைத்தியர், அது அவரின் மகளுக்கே தீங்காக அமைவதை காதலுக்கு மருந்து கதையும் சித்தரிக்கின்றன. ஊர் நம்புமா? சிறுகதை, தான் குடும்பக் கட்டுப்பாடு செய்து விட்டதாக மனைவியிடம் பொய் கூறி அவளுடன் உடலுறவு வைத்துக் கொண்ட கணவனையும், அதன் காரணமாக கர்ப்பந்தரித்துக் கொண்ட மனைவி, மானத்தைக் காப்பதற்காக மரண மெய்துவதையும் கூறி, மலையகத்தில் நிலவும் அவலங்களில் மனதைத்தொடும் வகையாகச் சித்தரிக்கிறது. தாய்க்கு மகன் செய்யத்தவறியஉதவிகளைவேறொருவன்செய்ததைஅறிந்தமகன், அவன் மீது பாசங்கொள்வதை பாததரிசனம் எடுத்துச் சொல்கிறது. அழகில்லாத குழந்தை பிறந்துவிட்டதைக்கண்டு மனம் குமுறல் கொள்ளும் தந்தையின் உணர்ச்சி வெளிப்பாடு -கண்ணாடி
தன்னைப் போல மகளும் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அச்சிறுமியை அநாதைவிடுதியில் சோர்க்கும் தாயின் கதை நூலைப்போல. கழித்துவிட்ட பலவகை வெட்டுத்துணிகளைக் கொண்டு ஏழைத் தையற்காரர் தமது மகளுக்கு சட்டை தைத்துக் கொடுப்பதை பூச்சட்டை சித்தரிக்கிறது. நொடித்துப் போன ஒரு குடும்பத்துக்கு உதவிபுரியும் ஒரு உறவுக்காரர், சில நிமிட மன அவசத்தினால், அவ்வீட்டின் தலைவியுடன் உடலுறவுகொண்டதை அவர் தமது வாழ்நாள் முழுவதும் நினைத்து வருந்துவதை மாமா விளக்குகிறது. தூரத்தில் நின்று தரிசிக்கும் போது அருட்பொலிவு கொண்டு விளங்கும் ஆலய மூலமூர்த்தி, மிக அருகில் சென்று பார்க்கும்போதுகல்லாக மனிதர்களின் கண்களுக்கு தெரிவதை கல்லோகடவுளோவில் காணமுடிகிறது. கனவான்; மிஸ்சுகிர்தம் ஆகியவை, பல்கலைக்கழக்ச் சூழலில் பயிலும் மாணவர்கள் சார்ந்த கதைகள் முன்னதில், கனவான் வேடத்தில் உலவுபவனின் வலையில் வீழ்ந்து உண்மை தெரிந்து குமுறும் பெண்களையும், அடுத்ததில், ஏழை என்பதைக் காட்டிக் கொள்ளாமல் ஆடம்பரமோகத்தில் உழலும் மாணவி யொருத்தியைக் காதலித்தமானவன், அவளின் குடும்பச் சூழலை நேரில் அறிந்தபோது எய்தும் மன உணர்வையும், சித்தரிப்பவை.
21 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 14
இறப்பு என்பது முடிவு அல்ல.
கண்களுக்கப்பாலி. சிறுகதைத் தொகுப்பிலும் பன்னிரு சிறுகதைகள் அடங்கியுள்ளன. தனிமனித உணர்வுகள், யாழ்ப்பான சமூகத்தில் நிலவும் சாதித்தடிப்பு, அந்தஸ்து, போட்டி பொறாமை, சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் பிரச்சனை, மலையகத் தொழிலாளர்களின் வறுமை, கல்வியின்மை போன்றவை வெகு இயல்பாக இக்கதைகளில் சித்திரிக்கப் பெற்றுள்ளன. கதைகள் நிகழும் சூழல், கதாமாந்தர்களின் பேச்சு வழக்கு முதலியவை இக் கதைகள் யதார்த்தமானவையோ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.
இத்தொகுப்பிலுள்ள காப்பு சிறுகதை, கடன்பட்டு வாங்கிக் குழந்தைக்கு அணிவித்த காப்பை, குழந்தை இறந்த பின் கூட கழற்ற முடியாமல் பாசத்தில் துடிக்கும் தந்தையின் உணர்வைச் சித்தரிப்பது. “யாழ்ப்பாணச் சமூகத்தின் வாழ்க்கையில் காணப்படும் சொத்துணர்வு ஏற்படுத்தும் மனித விகார உணர்வு களையும் அந்த உணர்வு விகாரங்களுக் கிடையேயும் குமிழ்விட்டு மேலே கிளம்பும் மனிதாயத்தையும் காப்பு காட்டுகிறது.” என்பர் பிரபல இலக்கிய விமர்சகரும் பேராசிரியருமான கா.சிவத்தம்பி. நந்தி அவர்களின் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. சதையும் சாம்பரும் குடும்பப் பிரச்சனைகளில் மனைவி, தாய் போன்றோரிடம் சீறிச்சினந்து விழும் ஆண், பகல் நேரச் சுடலை ஞானத்தில் தான் அப்படிச் செய்வது தவறு என உணர்ந்தும், மாலையில் வீட்டுக்கு வந்தவுடன், பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை போலாகிவிடுவதை நேர்த்தியாகச் சித்தரிக்கிறது.
அநாமதேயக் கடிதங்களை எழுதி நேசமான தம்பதியர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி, குடும்பங்களில் குழப்பத்தை ஏற்படுத்துவது வக்கிரபுத்தி கொண்ட சிலருக்கு ஒரு வகைப் பொழுது போக்கு. நம்பிக்கையும், பாசமும், புரிந்துணர்வும் கொண்ட தம்பதியரிடம் இது செல்லாது. பணிந்து போகாமல் உறுதியாக நின்று குடும்ப வாழ்க்கையை நடத்திச் செல்லும் தம்பதியரைப் பற்றிய கதை கிழவனும் கிழவியும். அடிவளவு
22 பேராசிரியர் தந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல. அன்னமன்னாவும், ஹூக்ரன்உம் யாழ். சமூகத்தின்மனப்பாங்கைச் சித்தரிப்பவை.துப்பல் யாழ்ப்பாணக் கிராமப்புற உறவினர்களிடம் நிலவும் அர்த்தமற்ற போட்டி பொறாமைகளின் வெளிப்பாடாக விளங்குகிறது. ஆண்களோடு. பெண்கள், நாடகங்களில் ஆண்களுடன் சேர்ந்து நடித்தால் அந்தஸ்த்து கெட்டுவிடும் என்ற யாழ்ப்பாணத்தவர்களின் தவறான அபிப்பிராயத்தை பிட்டுக் காட்டுகிறது. அசுரனின் தலை, கண்களுக்கப்பால் - ஆகிய இரண்டும் யாழப்பாணச் சமூகத்தில் நிலவும் இறுக்கமான சாதிக்கட்டமைப்பின் கொடிய அநீதிகளைச் சுட்டுவன. மலையக மக்கள் அவர்களை அறியாமலே சுரண்டப்படுவதையும் கல்வியறிவில் பின் தங்கியிருப்பதையும், பார்த்தால் தெரியும், பச்சைப்பூக்கள் ஆகிய சிறுகதைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்றன. உயர் பதவி வகித்து ஓய்வுபெற்றவர், தமது அந்தஸ்தை தொடர்ந்து பேணுவதற்காக சமயப் பணி என்ற போர்வையுள் புரியும் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டும் சிறுகதை, ஒரு பகலும் ஒரு இரவும்
நந்தி அவர்களின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பான நந்தியின் கதைகளில் அடங்கியுள்ள 11 சிறுகதைகளில் சரஸ்வதியின் வேண்டுகோள், ஒருபாவாடை கொடியாகிறது என்பவை வீட்டு வேலைக்காரச் சிறுமிகள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை வெளிப்படுத்துவன. மலையக சிறார்களின் படிப்பைக் கெடுத்து, பெற்றோர்கள் தமது ஏழ்மை காரணமாகப் பிள்ளைகளை வீட்டு வேலைக்காரிகளாக அனுப்பிவிட, வேலை செய்யும் வீடுகளில் அச்சிறுமிகள் அனுபவிக்கும் அவலங்கள், வேதனைகள் சொல்லுந்தரமல்ல. இவை மனித நேயமற்ற கொடுமைகளைச் சித்தரிக்கும் கதைகள். விதியின் அர்தங்கள் என்ற கதை வளர்ப்பதற்காகத் தத்தெடுத்த பிள்ளையை, தமக்கென சொந்தமாகப் பிள்ளையொன்று பிறந்ததும், வக்கிர எண்ணங் கொண்ட தம்பதியர் அவளை வேலைக்காரியாக நடத்துவதைச் சாடியுள்ளது. பண்புமிக்க ஆசிரியர் ஒருவர் உயர் பதவிவகிக்கும் ஆனால் ஒழுக்கம் குன்றிய தமது பழைய மாணவனிடம் நன்னடத்தைச் சான்றிதழ்பெறச் சொல்வதையும், அவனின் தாய்
23 பேராசிரியர் நந்தி நினைவாக - I

Page 15
இறப்பு என்பது முடிவு அல்ல. தனது மகனின் ஆளுமையைச் சீர்படுத்துமாறு ஆசிரியரை நாடுவதையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு என்னும் கதையில் உறைக்கும் வண்ணம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
உள்ளத்தால் உயர்ந்து ஊரில் பெரியவராக மதிக்கப்படும் உயர்குடிப்பிறந்த ஒருவர், தொழிலால் சிற்றுாழியனாக மருத்துவ மனையொன்றில் பணியேற்க நேர்ந்ததால், அவரை மதிப்பற்ற வகையில் சின்னத்தனமாக மருத்துவ அதிகாரி நடத்துவதை பார்வைகள் தெளிவுபடுத்துகின்றது. பேரினவாத அட்டகாசங் களுக்கு அஞ்சி, புலம் பெயர்ந்து சென்ற ஒருவர் தாயகத்தின் சூழ்நிலை, தனது உறவுகள், பாசம் என்பவற்றிலிருந்து எவ்வாறு அந்நியப்பட்டுப் போகிறாரென்பதை படம்பிடித்துக்காட்டும் கதை, கதையோடு கதையாக, வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்று, கஷ்டமான தொழில்களைச் செய்து, தமது குடும்பங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கும் பணத்தை, இங்குள்ள குடும்பத்தவர்கள், அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்காக ஆடம்பரச் செலவுகளைச் செய்து, உறவுகளில் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதை பல்லுக் கொமுக்கட்டை சித்தரிக்கிறது.
வசந்தி என்ற 15 வயது மாணவி அவலட்சணமான தனது கணித ஆசிரியரின் வியத்தகு திறமையைக் கண்டு, அவர் மூலமாக தனக்கொரு குழந்தை பிறந்தால், அக்குழந்தை வளர்ந்து பெரிய நிபுணனாவான் எனக் கற்பனையில் ஆசையை வளர்ப்பதையும், ஏற்கனவே திருமணம் முடித்த அவருக்கு 25 வயதுடைய மகன், லண்டனில் விஞ்ஞான நிபுணனாகத் திகழ்ந்து குடிப்பழக்கம் காரணமாக மரணிப்பதையும் அவரின் இரண்டாவது மகன் பித்துக்குளியாக இருப்பதையுங் கண்டு, விஞ்ஞான அறிவில் மட்டுமல்லாது நடைமுறை வாழ்க்கையிலும் அறியப்பட வேண்டியவை எத்தனையோ இருக்கின்றன என்பதை வசந்தி உணர்ந்து கொள்வதை வெகுநுட்பமாக கண்டறியாதன வில் சித்தரிக்கப்பெற்றுள்ளது. படிப்பறிவைவிட அனுபவ முதிர்ச்சியே முதன்மையானது என்பதை விபரிப்பது சிங்களத்து மருத்துவிச்சி.
24 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல. பதுங்குகுழி பேரினவாதயுத்த, ஆக்கிரமிப்புக் காரணமாக தமிழர் தாயகம் முழுவதுமே தமிழர்களைப் பொறுத்தவரை பதுங்கு குழியே என்பதைச் சொல்லாமல் சொல்கிற நேர்த்தியான படைப்பு-சிங்களப்பேரினவாதச் சூழலில், தமிழர் மத்தியில் குறிப்பாக இளைஞர்களிடம் உருவான போராட்டத்தின் நியாயப் பாட்டை புரிந்து கொள்ளாமலிருந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்பட்டுவரும் மனமாற்றத்தை உணர்த்தி நிற்கிறது கேள்விகள் உருவாகின்றனஎன்னும் சிறுகதை.
தரிசனம், நந்தி அவர்களின் பன்னிருகதைகளைக் கொண்ட நான்காவது சிறுகதைத் தொகுப்பாகும். பாடசாலை ஒன்றில், மண்டபம் ஒன்றினை அமைப்பதில் முழுமூச்சாக உழைத்து அப்பணியை நிறைவேற்றிய ஆசிரியர் ஒருவரின் பெயரை அதற்குச் குட்டுவதற்கான தீர்மானம் எடுப்பதற்கிடையில், படிப்பித் தலிலோ, மண்டபம் அமைக்கும் பணியிலோ அக்கறை காட்டா திருந்த ஆனால் மாணவர்களுக்கு மிகவும் பிரியமான ஆசிரியர் ரகுபரன் இராணுவக் குண்டுவீச்சில் இறந்துவிட ஆவேசங் கொண்ட மாணவர்கள் அவரின் உடலை ஊர்வலமாகக் கொண்டு வந்து அம்மண்டபத்தில் வைத்து, அதற்கு அவர் நாமத்தைச் சூட்டிவிட, கூடிநின்றவர்களும் ஆமோதித்துக் குரல் எழுப்புகிறார் கள். மனித இயல்புகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலையையும், உணர்ச்சி கரமாக சித்தரிக்கிறது. உணர்ச்சிகள் உணர்ச்சிகள் என்னும் சிறுகதை கக்கூசுத் தொழிலாளியின் மகனுக்கு காலம் மாறிவருவதை உணர்த்த சங்கீத பூஷணம் சர்மா இசைப்பயிற்சியளிக்க முன்வருவதை காலங்கள், இராகங்கள் சித்தரிக்கின்றது. சமூகத்தில் நிலவும் சீதனம் கொடுக்கும் வழக்கம் முதிர் கன்னிகளை உருவாக்குவதைப் பற்றிய ஒரு பெண்ணின் மனநிலைப்பார்வையாக கொடுமைக்கு அப்பால்அமைந்துள்ளது. தன்னம்பிக்கையும், சுதந்திரப் போக்கும், சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்கக் கூடிய அறிவாற்றலும் கொண்ட பெண்ணொருவர், தன் மனதுக்குப் பிடித்தவனை திருமணம் செய்து கொள்வதை இருட்டிலிருந்து. என்னும் கதை சித்தரிக்கிறது.
25 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 16
இறப்பு என்பது முடிவு அல்ல. கண் பார்வையற்ற ஓர் இளைஞனிடம் நிறைந்துள்ள பண்புகளையும்,உணர்வுகளையும் சிந்தனைகளையும் சிந்தரிக்கும் கதை தரிசனம். மருத்துவ சிகிச்சையினால் மட்டுமே நோயாளியைக் குணப்படுத்திவிட முடியாது. பிறரின் ஆறுதல் வார்த்தைகள், அன்பு மொழிகள், தெம்பூட்டல், நம்பிக்கை முதலியவை மிக அவசியமானவை என்பதை வலியுறுத்துவது மருந்துக்கு அப்டால் இறந்தவரின் சூக்குமஉணர்வு வாழ்க்கைப் பிரச்சனைகளையும், மனித உறவுகளையும் பற்றி எண்ணுவதாக சித்தரிக்கப்பட்ட கதை அம்மா அம்மே. யதார்த்தம், கற்பனை என்பவற்றுக்கு அப்பாலும் ஒன்றிருக்கிறது என்ற அறிவுத் தெளிவை கதாசிரியர் ஒருவருக்கு உணர்த்தும் சிறுகதை இராசையாவின் தங்கை திருவிழாவுக்கு மனைவியைக் கூட்டிச் சென்ற கணவன்,சனநெரிசலில் அவள் தவறிப் போய்விட, அவள் இறந்திருப்பாள் என நினைத்துக் கொண்டு, மருத்துவ மனையிலுள்ள பின அறையைத் தேடிச் சென்ற கணவனின் உணர்வுகளைச் சித்தரிப்பது யானை காலடியில் என்னும் சிறுகதை. வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் சுவைத்திட வேண்டுமென்ற எண்ணத்தில் வாலிபன் ஒருவன் விபசாரி ஒருத்தியிடம் சென்றபோது அவள் அவனுக்குநல்லறிவுச் சுடர் ஏற்றி அனுப்புவதை நயமாகச் சித்தரிக்கிறது உபதேசம். ஈழத்தமிழர்கள் எதிர் நோக்கும் விசா, அடையாள அட்டை, பொலிஸ்பதிவுப் பிரச்சனைகள் அர்த்தங்கள் மூலம் வெளி உலகத்துக்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தமது நாய்க்குட்டி காணாமற் போனதையிட்டு, மிகவும் துக்கத்துடன் அதனைத் தேடி அலைகிறார் ஒருவர். ஆனால், அயலில் உள்ள பையனை சிங்கள இராணுவம் பிடித்துச் சென்றதால், அவனின் தந்தையின் சோகத்தைப் பற்றி, அந்த மனிதர் விசாரிக்கவில்லை. பின்னர் தனது தவறை உணர்ந்து அவர் கழிவிரக்கம் கொள்வதை, மனிதநேய உணர்வுடன் மீண்டும் கேள்விகள் உருவாகின்றன சித்தரிக்கின்றது.
நந்தி அவர்களின் சிறுகதைகளின் சிறப்பை தமிழ்நாட்டில் மிகவும் மதிக்கப்படும் மூத்த எழுத்தாள் வல்லிக்கண்ணன் பின்வருமாறு
26 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல.
தமது கருத்தை வெளியிட்டிக்கிறார். ‘நந்தியின் கதைகள் வாசகரின் பார்வையையும் எண்ணங்களையும் விசாலப்படுத்தக் கூடிய புதுமைச் சித்திரங்கள். கதைகளை எழுதிச் செல்லும் முறையிலும் அவற்றில் கலந்து தருகிற சிந்தனைகள், வர்ணிப்புகள், உவமைகளிலும், புதுமையையும் நயங்களையும் வாசகள்கள் உணர்ந்து ரசிக்க முடியும்.”
பிரபல இலக்கிய விமர்சகரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி ‘நந்தி’யின் படைப்பிலக்கியச் சாதனைகளைப் பின்வருமாறு கணிப்பிட்டுள்ளார்.“ஈழத்தின் நவீன இலக்கிய வரலாற்றில் 'நந்தி’ என்னும் எழுத்தாளனுக்கு ஒரு மதிப்பார்ந்த இடம் உண்டு. 'நந்தியின் ஆக்கங்கள் இல்லாத ஈழத்துத் தமிழ் நாவலும் ஈழத்துத்தமிழ்ச் சிறுகதையும் நிச்சயமாக வளக்குறை பாடு உடையனவாகவே இருக்கும். ‘நந்தியின் சிறு கதைகள், ஆழமும், கனதியும், அழகும், அகண்டபுலப்பதிவும் கொண்ட மிக முக்கியமான கலைப் படைப்புகளாகும். ‘நந்தி’யினால் தமிழ்ச் சிறுகதையின் பரிமாணங்கள் அகன்றுள்ளன. நந்தி’மானுடத்தின் குரலைப் பதிவு செய்தவர். அதன் ஆத்ம துடிப்புகளைப் பதிகை செய்தவர்” பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் இக் கூற்று சத்திய வாசகமாக விளங்குவதை வாககள்கள் நன்கு உணர்வர்.
இலங்கை அரசாங்கத்தின் சாகித்தியப் பரிசைப்பெற்ற ‘நந்தி’ அவர்களின் முதலாவது நாவலாகிய மலைக் கொழுந்து மலையகத்தில் நிலவும் தொழிற் சங்கப் போட்டிகளையும், அப்பிரதேச மக்களின் வாழ்க்கை அவலங்களையும் பேச்சு மொழியையும் ஏனைய தமிழ்ப் பிரதேசமக்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்திய ஒரு காதற் கதை. பாத்திரவார்ப்புகளும் சூழல் வர்ணிப்பும் வெகு இயல்பாக அமைந்துள்ளன. மலையக மக்கள் மத்தியில் நீண்ட காலமாகச் சேவை புரிந்ததனால் அப்பகுதி மக்களிடமிருந்து பெறப்பட்ட அனுபவங்களையும் அவர்களின் எண்ணங்களையும் ரக்கங்களையும் வாசகர்களின் மனச்சாட்சியைத் தொடும் வகையில் எழுதப்பெற்ற நாவல் இது.
27 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 17
இறப்பு என்பது முடிவு அல்ல.
தங்கச்சியம்மாயாழ்.குடாநாட்டின் கிராமப்புறங்களில் தாதியாகப் பணிபுரிந்த மலையகத்துப் பெண் ஒருவரின் அவதானிப்புகளைச் சித்தரிப்பது. மலையகத்தவர் ஒருவரின் பார்வையில் யாழ்ப்பா ணத்தில் நிலவும் சாதிப்பிரிவினைகளையும், நலிவுற்ற மக்களின் வாழ்க்கைத்துயரங்களையும் மனித நேயத்துடன் நோக்குகின்ற சமூக சேவையை அடித்தளமாக கொண்ட நாவல் - மொழி நயமும் சிலேடையான உத்திகளும் வர்ணிப்புக்களும் இதனை ஒரு கலாவாடிவமாகத் திகழச் செய்கின்றன.
யாழ்ப்பாணத்தின் பச்சைவேலி (அச்சுவேலி?) கொழும்பு, பேராதனை ஆகிய களங்களில் கதாமாந்தர்களை உலவவிட்டு, அவர்களின் பலம், பலவீனம் மன எழுச்சிகள், விகார உணர்வுகள், சூழ்நிலைகளை வெகு சிறப்பாகச் சித்தரிப்பதாக நம்பிக்கைகள் நாவல் அமைந்துள்ளது.
‘நந்தி’ அவர்களின் மணிவிழாவின் போது (1988) நான் தொகுத்து வெளியிட்ட நந்தி-நோக்குகள் இருபத்தைந்து என்னும் நூலில் “1970-80 கால கட்டத்தின் நிகழ்வுகள் நம்பிக்கைகள்’ மூலம் சரித்திரமாக்கப்பட்டுள்ளன. தமிழ் நாவல், இலக்கிய வளர்ச்சிப்பாதையில் நந்தியின் நம்பிக்கைகள்' மற்றொரு மைற்கல்; எமது மண்ணின் நாவல் இலக்கியத்துறையை மேலும் உயர்ந்த ஒரு படிநிலைக்கு உணர்த்தியிருக்கின்றது’ என நான் குறிப்பிட்டிருந்ததை இங்கு மீண்டும் அழுத்திச் சொல்வது பொருத்தமானது.
“புதிய சொல்லாட்சிகள், புதிய உவமைகள், புதுமையான கற்பனைகள், வருணனைகள் என்பன ‘நந்தி’யின் புத்தாக்கத் திறனுக்கு எடுத்துக்காட்டுக்களாகும். ஒரே தடத்தில் ஒரே மாதிரியானவையும், பயன் செய்து செய்து சேதாரத்துக் குள்ளானவையுமான அணியலங்காரச் சொற்றொடர்களையும், சொற்களையும், வருணனைகளையும் வாசித்து வாசித்து அலுத்து விட்டவர்களுக்கு நந்தியின் உரை நடைப்பாங்கு புத்தெழுச்சி யையும் உற்சாகத்தையும் வழங்கத் தவறாது என்று உறுதியாகச்
28 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல. சொல்வேன்” (தமிழறிஞர், சாகித்தியரத்தினம் 'சொக்கன்’ நம்பிக்கைகள் நாவலுக்கு எழுதிய முன்னுரையில்)
"கலை, இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளிலும் தனது ஆக்கத்திறனைச் செப்பமாகப் பதித்திருக்கும் ஈழத்தின் மூத்த எழுத்தாள் பேராசிரியர் நந்தி, நாவல்துறையில் தனது திறனை மிக ஆழமாகப் பதித்துள்ளார் என்பதற்கு மலைக்கொழுந்து (1964 தங்கச்சியம்மா (1977), நம்பிகைகள் (1988) ஆகிய அவரது நாவல்கள் சான்று. சமூக வாழ்வியலை அவதானமாகப் பொறுப்போடு நோக்குதல், சமூக முரண்பாடுகளை அறிவு புர்வமாக அணுகுதல், வகைமாதிரிப் பாத்திரங்களை முரணின்றி வளர்த்தல், சித்தரிப்புக்குரிய சொற்களைத் தேர்ந்தெடுத்தல் என்பன நந்திக்குரிய தனித்துவ முத்திரைகள்,. சுயமான சிந்தனையோடு கலாரூபமாக ஆக்க இலக்கியம் படைப்பவர் நந்தி. அறுபது வருட அனுபவ வெளிப்பாடுகளாக அவரது புனைகதைகள் அமையும் போது, அவை சமூகச் சிக்கலின் பரிமாணத்தை இனங்காட்டுவதுடன், அதற்கான தீர்வினையும் வெகு இலகுவாகச் சுட்டிவிடுகின்றன. ஈழத்துநாவல்துறைக்கு நந்தியால் பெருமை”-நந்திஅவர்களின்புனைகதைகளைப்பற்றி, பிரபலநாவலாசிரியராக விளங்கும் “செங்கை ஆழியான்’ இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
பேராசிரியர் ‘நந்தி’ அவர்கள் தமிழுலகத்திற்கு அளித்துள்ள இலக்கியப் படைப்புகள் மூலம் மேலும் பல்லாண்டுகளுக்கு வாழ்ந்து கொண்டிருப்பார்.
29 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 18
இறப்பு என்பது முடிவு அல்ல.
arLoyi 6LIJITafMuLuñ öfl6hl65ITEDTöiijgij5Jib
- மறைவும் நினைவுகளும்
- பேராசிரியர் என் .பாலகிருஷ்ணன்
முன்னாள் கலைப்பீடாதிபதி
யாழ். பல்கலைக்கழகம்.
பேராசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு யாழ் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பான சமூகத்திற்கும் ஏற்பட்ட ஓர் பேரிழப்பாகும்.
பல்கலைக்கழக அமைப்புடன் அமரர் சிவஞானசுந்தரம் அவர்களுடைய இணைவுநாற்பது வருடங்களுக்கு மேலானதாக அளப்பரிய பல்பரிமாண சேவைகளைக் கொண்ட அவரின் ஒரு புகழ்மிக்க காலப்பகுதியாக இருந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து யாழ்பல்கலைக்கழகத்திற்கு சமூக மருத்துவப் பேராசிரியராகச் சேர்ந்த காலந்தொட்டு அவருடைய மறைவு வரை மருத்துவத்துறை மேம்பாட்டு முன்னோடி, சிறந்த கல்விமான், ஆராய்ச்சியாளன், புலமையாளன், பல்கலைக்கழக நிருவாகி, எழுத்தாளன், சமூக சேவையாளர், சாயி பக்தன் என்ற பல்பக்க ஈடுபாட்டுடன் சிறப்பாக செயலாற்றிய பெருமையும் புகழும் அன்னாரைச் சேர்கின்றது.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவத்துறையின் வளர்ச்சியில் பேராசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் சமூக மருத்துவத் துறையின் தலைவராக இருந்த காலத்திலும், மருத்துவத் துறைப்பீடாதிபதியாக இருந்த காலத்திலும் நிர்வாகி என்ற
30 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அலல. முறையில் முழு ஈடுபாட்டுடன் சேவை ஆற்றியதனை நினைவு கொள்ள முடிகின்றது. யாழ் மருத்துவத்துறையின் வளர்ச்சி இன்னும் ஆரம்ப காலகட்டத்தில் சென்றுகொண்டிருந்த நிலையில் எழுபதுகளில், எண்பதுகளில் ஏற்பட்ட ஸ்திரமற்ற புறநிலைச் சூழ்நிலைகளின் காரணமாக எழுந்த முட்டுக் கட்டைகளுக்கும்முகம் கொடுக்க வேண்டியிருந்தது. பேராசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள் இத்துறையின் வளர்ச்சியில் பல்வேறு பிரச்சினைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நிள்வாகத்தினை வழிநடத்திச் சென்ற சாதனை அளப்பரியதாகும். மருத்துவத் துறையில் ஆசிரியர்களின் பற்றாக்குறை, கட்டிட வசதிகளின் போதாமை, யாழ்.வைத்தியசாலையில் கற்பித்தல் வசதிகளின் குறைபாடுகள் ஆகியவை அக்காலகட்டத்தில் முக்கியபிரச்சினை களாகத் தலைதூக்கிய நிலையிலும் மருத்துவத்துறையினைப் பேணி ஒரு உருப்படியான, நிலைத்துச் செல்லக் கூடிய நிறுவன மாக வழிநடத்திய நிர்வாகிகளில்(பீடாதிபதிகளில்) மறைந்த பேராசிரியர் சிவஞானசுந்தரத்தின் பங்களிப்பு மகத்தானது.
பேராசிரியரின் பல்கலைக்கழக மட்டத்திலான நிர்வாகி என்ற பங்களிப்பு அவர் பல ஆண்டுகள் மூதவையின் உறுப்பினராகவும், பேரவையின் உறுப்பினராகவும், பலதடவைகள் பதில் துணை வேந்தராகவும் சிறப்பாகச் செயலாற்றியதனை நினைவு கொள் வதும் பொருத்தமாகும். இவைபற்றி அவருடன் சம காலத்தில் பல்கலை நிர்வாகத்தில் பங்குகொண்டவர்கள் நன்கு அறிவர். யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னேற்றத்தில், மறைந்த பேராசிரியர், முன்னால் துணைவேந்தர்கள் அமரர் பேராசிரியர் வித்தியானந்தன், அமரர் பேராசிரியர் துரைராசா, பேராசிரியர் குணரத்தினம் போன்றவர்களுடன் தோளோடு தோள் நின்று, இக் கட்டான காலகட்டங்களில், செயலாற்றியதனை நினைவு கூற
முடிகின்றது
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் யாழ்ப்பாணப்பல்கலைக் கழகம், முன்பு இல்லாத அளவுக்கு வெளிநிலை சார்ந்த அழுத்தங் களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
31 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 19
இறப்பு என்பது முடிவு அல்ல. இச் சூழ்நிலைகளில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு துணைவேந்தர் மட்டத்திலும், பீடாதிபதிகள் , துறைத் தலைவர்கள் மட்டத்திலும், பெரும் சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இக்கால கட்டங்களில், அமைதியாகவும், நிதானமாகவும், பல்கலைக்கழகத்தின் நலன்கள் பாதிக்கப் படாத வகையில் நிலைமைகளை எதிர்கொண்டு செயலாற்றிய வல்லமை பேராசிரியர் சிவஞானசுந்தரம் அவர்களிடம் காணப்பட்டது. மருத்துவத்துறைப் பீடாதிபதியாக இருந்த பொழுதிலும், மூதவை, பேரவை உறுப்பினராக கடமையாற்றிய பொழுதிலும் பதில் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற கட்டங் களிலும் பேராசிரியரின் நிர்வாக ஆற்றலை அறிய முடிந்தது. அவருடைய பார்வையில், நிர்வாகப் பதவியிலிருப்பவர்களின் முதலாவது தேவை, நிர்வாகத்தின் சட்டதிட்டங்களையும், விதிமுறைகளையும் நுணுக்கங்களையும், அனுபவத்தினூடாகவும், அலசி ஆராய்ந்தும் அறிந்து கொள்வது அவசியமானது. அவரும் அவ்வாறு நடந்து கொண்டவர்.
அடுத்ததாக, ஒரு பெரிய பல்கலைக்கழகம் போன்ற பலதுறை களையும், பலரையும், வேறுபட்ட நோக்குடையவர்களையும் கொண்ட ஒரு அமைப்பில் முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருப்பதனையும் அவர் நன்கு அறிந்தவராகவே செயற்பட்டவர். அக்காலகட்டங்களில் வெளிநிலை சார்பான சக்திகளின் செல் வாக்குகள் இடம் பெற்றதனையும் அனுபவத்தி னூடாக நன்று அறிந்தவர். இப்படியான சூழ்நிலைகளில் நிர்வாக நடவடிக்கைகளில் இணக்கப்பாடு ஏற்படுத்துதல், உடன்பாடு காணுதல் ஆகியவற்றை, பல்கலைக்கழகத்தின் நலன்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் அவர் வலியுறுத்தியதை அறியமுடிந்தது. இத்தகைய அணுகுமுறையினைப் பின்பற்றி நிர்வாக மட்டத்தில், மருத்துவத்துறையிலும் சரி, மூதவை, பேரவை விவாதிப்புக்களிலும் சரி, தீர்மானங்களை எடுத்து வெற்றி கண்ட அவருடைய அனுபவங்களை நினைவுபடுத்திக் கொள்வது பொருத்தமுடையது.
32 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல. பதில் துணை வேந்தராகப் பல தடவைகள் கடமையாற்றிய சந்தர்ப்பங்களிலும்,பீடாதிபதியாக செயலாற்றிய கட்டங்களிலும் அவர் எப்பொழுதும் நேர்மையுடன் செயற்பட்டவர். நெருக்கடியான நிலைகளிலும், பரபரப்பின்றி உணர்ச்சி வசப்படாமல் தீர்மானங்களை எடுக்கக் கூடிய ஆற்றல் அவரிடம் இருந்ததனை ஒரு சிறப்பு அம்சமாக அவரின் ஆளுமையின் ஒரு முக்கிய ஒரு இயல்பாக கருதமுடிந்தது. அதனால், அவர் நிர்வாகியாகச் செயலாற்றிய சந்தர்ப்பங்களில் மருத்துவ பீட மாணவர்களின் பிரச்சினைகளை எதிர் நோக்கிய பொழுதிலும், மற்றைய பீட மாணவர்களுடன் உரையாடிய பொழுதிலும் பல்கலைக்கழக ஆசிரிய சமூகத்தினருடன் உரையாடிய பொழுதிலும், பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ளவர்களுடன் கருத்துக்கள் பரிமாறிய பொழுதிலும் அவருடைய நேர்மையும், நிதானமும் விடயங்களை நன்கு புரிந்து கொண்டு, மாற்று வழிமுறைகளை எடுத்துக் காட்டியதில் அவரினதும், அவர் கூறியவற்றின் நிலைப்பாட்டின் ஏற்புடைத்தன்மை, நம்பகத் தன்மை ஆகியவை மேலோங்கி நின்றன. இதனை அவருடன், நிர்வாக மட்டத்தில் நெருங்கிப் பழகியவர்கள் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது.
அமரர் சிவஞானசுந்தரம் அவர்களை நாம் ஒரு நல்ல நிர்வாகியாகப் பல்கலைக் கழகமட்டத்தில் நோக்குமிடத்து, அப்பதவியிலும் அவர் தம்முடைய மற்றைய எல்லாப்பணிகளிலும் கடைப்பிடித்த ஒழுங்கு முறையினை அடிப்படை நெறியாகப் பின்பற்றியவர் என்பதும் அறியக் கூடியதாக இருந்துள்ளது. நேரந்தவறாது சமூகமளித்தல், நிர்வாகம் சம்பந்தமான அடிப்படை விதிகளை நன்கு அறிந்திருந்தல், மாணவர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர், ஊழியர்கள் ஆகியோரின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தல், தாமதமின்றித் தீர்மானங் களை எடுத்தல், மற்றவர்களுடன் கலந்தாலோசித்தல் போன்ற எல்லா விடயங்களிலும் ஒழுங்கு முறையினை அவர் பின்பற்றி வழிநடத்திச் சென்றதனை அறிய முடிந்துள்ளது. நிர்வாகியாக, மற்றவர்களுடன் கருத்துப் பரிமாறல் செய்யும் சந்தர்ப்பங்களில்
33 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 20
இறப்பு என்பது முடிவு அல்ல. பேராசிரியர் சில முக்கியமான விடயங்களை அடிக்கடி வலியுறுத்திக் கூறுவது வழக்கம். நிர்வாகப் பொறுப்பேற் பவர்களிடம் இருக்க வேண்டிய அவர் வலியுறுத்திய பண்புகள் நேர்மை, நிர்வாகத்தின் சட்டங்களையும் விதிகளையும் நன்றாக அறிதல், மற்றவர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளு மிடத்தில் அவர்கள் கூறுவதற்கு நன்கு செவிசாய்த்தல், தாமதமின்றி தீர்மானங்களை எடுத்தல், அவற்றை நடைமுறைப் படுத்தல். இவைகளில் அவர் முழு நம்பிக்கை கொண்டவராக தம்முடைய நிர்வாகப் பணிகளை மேற்கொண்டவர்.
ஒழுங்குமுறையின் அடிப்படையில் அவர் தம்முடைய தனிப்பட்ட, தொழில்சார் வாழ்வின் வழிநடாத்திய பேராசிரியர். அதனை அவர் மேற்கொண்ட எல்லாப் பணிகளிலும் பெரிதும் விரும்பிப் பின்பற்றிவர். பல்கலைக்கழக ஆசிரியராக, பேராசானாக, ஆராய்ச்சியாளனாக, புலமையாளனாக, எழுத்தாளனாக, நிர்வாகியாக அவருடைய செயலாற்றல்களிலும் சாதனைகளிலும் அவரை நாம் கண்டுள்ளோம். அவரின் பல்வேறு சேவைகளையும் பாராட்டுகின்றோம்.
அவ்வகையில் அவரை நினைவு கொள்வது பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரும் அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக அமையும். எமது நினைவில் என்றும் நிலைத்துநிற்பவர் ‘நந்தி’ அவர்கள்.
34 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல.
st Gugnarnai, dailyst GT5 Glasnail Gueri Gallub Ls Luyneflifluñ
hlf.flsugnaðishj]th éIEusöEs
O பேராசிரியர் வ.அரசரத்தினம் உயிரிரசாயனத்துறை, மருத்துவபீடம், யாழ் பல்கலைக் கழகம்.
மருத்துவபீடத்தின் தூண்களில் ஒருவரான பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள் எம்மைவிட்டுப் போய்விட்டார் பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்களை எனக்குக் கடந்த இருபத்தொரு வருடங்களாகத் தெரியும். நான் இந்த மருத்துவ பிடத்தில் இணைந்த போது பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள் பீடாதிபதியாக இருந்தார். அந்த வேளையில் நான் அவருடைய நிர்வாகத்திறமையினையும் கூட்டங்களை முறைப் படுத்தி நேரம் தவறாமல் நடாத்துவதையும் பார்த்து வியந்துள்ளேன். அவரைப் போலநானும் செயற்பட வேண்டும் என எண்ணுவேன். பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் என்றால் எனக்கு எப்பொழுதும் மூன்று விடயங்கள் ஞாபகத்திற்கு வரும் அவையாவன, அவருடைய தன்னலமில்லாச் சேவை மனப்பாண்மை, உடன் வேலை செய்பவருக்கு மன தைரியம் ஊட்டும் தன்மை மற்றும் தன்னைச் சூழ இருந்தவர்கள்மேல் அவர் கொண்ட அன்பும் நட்புமாகும்.
நான் மருத்துவபீடாதிபதியாகப் பதவியேற்ற போது சமூக மருத்துவத்துறையில் நிரந்தர விரிவுரையாளர்களில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்களை இத்துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் மீள்நியமனம் செய்வதற்கு பல்கலைக்கழக மூதவையில் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அவ்வேளையில் பேராசிரியர் செ.சிவஞான சுந்தரம் அவர்கள் எனக்குத் தனது முழு ஒத்துழைப்பையும்
35 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 21
இறப்பு என்பது முடிவு அல்ல. வழங்கினார். அவர் எனக்குக் கூறிய ஆறுதல் வார்த்தைகளாவன “தங்கச்சி பல்கலைக்கழக நிர்வாகம் எதை வேண்டுமானாலும் செய்யட்டும், நான் தொடர்ந்து மருத்துவபீடத்திற்கு எனது சேவையினைச் செய்வேன். மாணவர்களைச் சந்திப்பதும் அவர்களுக்குக் கற்பிப்பதும் தான் எனக்கு ஆரோக்கியமும் போசாக்கும் அளிக்கும் மருந்தாகும் எனவே நீர் பயப்பட வேண்டியதில்லை”. இது அவர் எத்தகைய உயர்ந்த கொள்கை யுடையவரென்பதையும் பல்கலைக்கழகத்துக்காக எப்படித் தன்னலமில்லாமல் உழைத்தார் என்பதனையும் காட்டுகின்றது. பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள்.நான்மருத்துவபீடாதி பதியாக இருந்தபோது எனக்குத் தோள் கொடுத்து உதவியும் ஊக்கமும் வழங்கியதை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்கள் தன்னுடன் வேலை செய்யும் சகஊழியர்களுக்குக் கொடுத்தமனோதைரியம்மிகமிக அதிகம். எமக்கு எப்போ பிரச்சினை ஏற்பட்டபோதும் அவரிடம் ஓடிச்செல்வோம். மருத்துவபீடம் பலகாலமாக நலிவடைந்து பிரச்சினைகளை எதிர்நோக்கியபோது பேராசிரியர் செ.சிவஞான சுந்தரம் அவர்கள் அவற்றைப்பற்றி நன்கு ஆராய்ந்து பல முடிவுகளை எடுக்க உதவிபுரிந்துள்ளார். எமது பீடத்திற்கும் பல்கலைக்கழகத்திற்கும் பேராசிரியர்.செ.சிவஞானசுந்தரம் போன்ற ஒரு பேராசிரியர் மீண்டும் கிடைப்பாரா? பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அனைத்து ஊழியர்களிடத்திலும் அன்பாகப் பழகுவார். அவர் ஒவ்வொரு நாள் காலையிலும் பின்னர் வீடுசெல்லும் போதும் என்னைப்பார்த்துப் பேசுவார். இவ்வாறு நாம் சந்தித்தபோது பலவிடயங்களைப்பற்றி விவாதிப்பதுண்டு
இன்று நாம் ஒர் பேராசானை, அன்புள்ளம் கொண்ட நலன் விரும்பியை இழந்து நிற்கின்றோம். ஒரு நெருங்கிய உறவினரை இழந்தது போல நான் வருந்துகின்றேன். பேராசிரியர் செ.சிவஞானசுந்தரம் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வேண்டுவது போல நானும் அவரது ஆன்மா இறைவனுடைய நிழலில் நெடுஞ்சுகம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.
36 GugráfMfuil sjší fada Omars - I

இறப்பு என்பது முடிவு அல்ல.
வாழ்நாள் பேராசிரியர் செல்லத்துரை சிவஞானசுந்தரம்
வைத்திய கலாநிதி ந.சிவராஜா
இவ்வாண்டு யூன் 4ம் திகதி ஏற்பட்ட வாழ்நாள் பேராசிரியர் செல்லத்துரை சிவஞானசுந்தரம் அவர்களின் மறைவு சமுதாய மருத்துவத்துறையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர் சிவஞானசுந்தரம் யாழ். சமுதாயமருத்துவத்துறையை உருவாக்குவதில் முன்னின்றுழைத்தவர். இந்த உழைப்பு அவருடைய இறுதி மூச்சுவரை தொடர்ந்தது. பல்கலைக் கழகத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும் 12 ஆண்டு சமுதாய மருத்துவத்துறைக்காக தொடர்ந்துழைத்தவர். பேராசிரியர் சிவஞானசுந்தரம் அவர்கள்1955ம் ஆண்டுகொழும்புப்பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த பின், 1967 இல் லண்டன் பல்கலைக்கழகத்தில் DPHபட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து 1971ம் ஆண்டு அதே பல்கலைக்கழகத்தில் PhDபட்டம் பெற்றார்.
அரச சுகாதார சேவையில் 1966ம் ஆண்டு வரை கடமையாற்றிய பின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமுதாய மருத்துவத் துறையின் விரிவுரையாளராக இணைந்தார். அதிலிருந்து இணைப் பேராசிரியர் பதவிக்கு உயர்ந்தார். அப் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட M. Med.Science, வைத்தியப்பட்டப்பின்படிப்பு நிறுவனத்தினால்நடாத்தப்பட்டM.D (Community Medicine) பயிற்சிநெறிகளுக்குக் கற்கைநெறிப் பணிப்பாளராகக் கடமையாற்றினார்.1978 இல்யாழ்.மருத்துவபீடம் ஆரம்பிக்கபட்ட போது யாழ்.மருத்துவ பீடத்தின் முதலாவது சமுதாய
37 பேராசிரியர் நந்தி நினைவாக -1

Page 22
இறப்பு என்பது முடிவு அல்ல. மருத்துவத்துறைப் பேராசிரியராக கடமை ஏற்பதற்கு அழைக்கப் பட்டார். அவருடைய மறைவுவரை இந்தப்பதவியில் தொடர்ந்து செயலாற்றினார். இக்காலப்பகுதியில் 1984 தொடக்கம் 1988 வரையான மிக நெருக்கடியான காலகட்டத்தில் திறமையாக மருத்துவபீட பீடாதிபதியாகக் கடமையாற்றினார். 1979-1993 வரை யாழ்.பல்கலைக்கழகப் பேரவை அங்கத்தவராகச் சேவையாற்றினார்.
பொதுச் சுகாதாரத்துறைக்கும் சமுதாய மருத்துவத் துறை முன்னேற்றத்திற்கும் அளப்பெரிய சேவை செய்தார். சமூக மட்டத்தில் பல முன்னோடியான ஆய்வுகளை நடாத்தினார். பல ஆய்வுகளுக்கு மேற்பார்வையாளராகவும் கடமையாற்றியுள்ளார். 1981 இல் இருந்து ஒரு வருட காலம் ஜோடான் நாட்டுச் சுகாதார அமைச்சின் துணை மருத்துவ சேவைகளிற்கான பயிற்சியிற்கு ஆலோசகராகக் கடமையாற்றினார். இதற்காக இவரால் உருவாக்கப்பட்ட வழிகாட்டி நூல் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இன்றும் பாவனையில் உள்ளது. உலக சுகாதார நிறவனத்தின் ‘சுகாதார சேவைகள் ஒழுங்கமைப்பு ஆய்வு’ (Health System Research) beg Stir6JG835SF s-ą86 om SF35JITIÐ 19851999 வரை கடமையாற்றினார். அக்காலகட்டத்தில் மலேசியா, பங்களாதேஷ், வடகொறியா, மொங்கோலியா, இந்தியா, மியான்மார், சிம்பாப்வே போன்ற நாடுகளில் சுகாதார வைத்தியர்களுக்கு இது தொடர்பான பயிற்சிப்பட்டறைகளை நடாத்தினார்.
இவர் ஒரு சிறந்த ஆசிரியாராக விளங்கினார். மாணவர்களுடன் கண்டிப்பாக நடந்துகொண்டாலும் அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அனுதாபத்துடன் நடந்து கொள்வார். அவரின் எந்த நிலையிலும் மாணவர்களின் நன்மைக்கே முன்னுரிமை வழங்குவார். மருத்துவபீடத்தில் சக ஊழியர்களிடமும் அவரின்கீழ் பணிபுரிவோரிடமும், எந்தச் சந்தர்ப்பத்திலும் மாணவர்கள்தான் மிக முக்கியமானவர்கள் என்பதை அடிக்கடி ஞாபகமூட்டுவார். தனது செயற்பாடுகளை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் செய்ய
38 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல வேண்டும் என்பதை சொல்லிலும் செயலிலும் வாழ்ந்து காட்டியவர். எந்தக் கூட்டத்தையும் ஆரம்பத்தில் இருந்துமுடியும் வரை நேர அட்டவணை போட்டு செயற்படுத்துபவர். தனது மரணச்சடங்கு எவ்வாறு நடைபெறவேண்டும் என்பதை ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி வைத்திருந்தார்.
ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதுவதில் மிகவும் திறமைசாலி. 13 வயதில் எழுதத் தொடங்கிய இவர் கடைசிவரை எழுதிக் கொண்டே இருந்தார். இவருடைய 3 நாவல்கள் “இலங்கையின் சாகித்திய விருது” பெற்றவை. இவருடைய ஒரு குறுநாவல் “வடகீழ் மாகாண ஆளுநர் விருது” பெற்றது. இவர் சாயிமார்க் கத்தின் ஆசிரியராக 1998 இல் இருந்து இறுதிவரை கடமையாற்றியவர்.
இவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பாலும் மருத்துவம் சார்பானவை. “Learning Research’ என்னும் ஆய்வு பற்றிய நூல் 2ம் பதிப்பைப் பெற்றது. இந் நூல் இன்றும் இலங்கையில் சகல மருத்துவ பீடங்களிலும் மருத்துவ பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்கும் கைநூலாக பயன்படுத்தப் படுகின்றது.
இவரின் 50 ற்கும் மேற்பட்ட ஆய்வு வெளியீடுள் உள்நாட்டு, வெளிநாட்டுமருத்துவ சஞ்சீகைகளில் வெளிவந்துள்ளன. தமிழில் 16ற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இவரினால் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் 4 புத்தகங்கள் நோய்த் தடுப்புப்பற்றியும்,2புத்தகங்கள் குழந்தைகளுக்காகவும், 2 ஆன்மீகம் சம்பந்தமானதாகவும், சத்தியசாயி-“மனித விழுமியக் கல்வி கற்பிக்கும்”ஆசிரியர்களுக் குரியதுமாகும்.
சமுதாய மருத்துவத்துறையை ஒரு கூட்டுக் குடும்பமாகக் கருதி வழிநடத்தினார். இப்பொழுது எங்கள் குடும்பம் குடும்பத் தலைவரை இழந்து நிற்கின்றது.
39 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 23
இறப்பு என்பது முடிவு அல்ல. ßust blüllIdlLB
SLIJTAfriluft flequente föjõgi
வைத்திய கலாநிதி செ. சு. நச்சிநார்கினியன்
நிக்கோட், திருகோணமலை.
யாழ்பல்கலைக்கழக மருத்துவபீடத்தில், ஆரம்பித்தநாள்முதல் இறுதி மூச்சுள்ள வரை, கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக, பிரச்சனைகளினால் பல பேராசிரியர்கள் விலகிப்போன போதும் சமுதாய மருத்துவ துறையில் கலங்கரை விளக்காக நின்று ஒளிவீசிக்கொண்டிருந்தவர் பேராசிரியர் சிவஞானசுந்தரம். இவர், அறிவுக்கனலாக மருத்துவம் சமுதாயத்தை மேம்படுத் தாது, சமுதாயமருத்துவம் அனைத்து தனிமனிதரையும் கொண்ட சமுதாயத்தையே மேம்படுத்தும் என்னும் தத்துவத்தை, மருத்துவ மாணவர் உள்ளங்களில் விதைத்து வந்தார்.
சுகநலன் என்பது உடல், உள்ளம், சமூகம் என்பவற்றை உள்ளடக்கி, அதற்கு மேலான ஆன்மீக தேடலில், இறை நம்பிக் கையை சேர்த்து இருக்கின்றது என்பதற்கு தனது வாழ்வையே உதாரணமாக காட்டிவந்தவர். பகவான்பூரிசத்தியசாயிபாபாவின் “மாணவனாக”, அவர் கட்டளையை நேராகவே ஏற்று, “மனித (3Lnthuli (bésatire T at 66.5” (Education for Human values) 6T6rp மேன்மையான கோட்பாட்டுக்காக, பலஉயர்ந்த பொறுப்புக்களை ஏற்று, ஆசிரியர்களையும் மற்றவர்களையும் இவ்வழியே பின்பற்றச் செய்தார். இதன் ஒரு அம்சமாக வெளியிடப்பட்ட ஒரு சிறந்த சிந்தனைக் கருவூலம். “வள்ளுவரின் குறளும் சாயியின் குரலும்” என்னும் பேராசிரியரின் நூல். அது ஒரு சிறந்த நூல் என்பது நூல் பிடித்துப்பார்க்கும் நூலோர்க்கு துலங்கும்.
பேராசிரியர் சிவா அவர்கள் மருத்துவ மாணவர்களுக்காக, மருத்துவ ஆய்வாளர்களினால் போற்றப்படும் “ஆய்வு செய்யும் முறைமை” பற்றிய நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டிருக்
40 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல. கின்றார். அந்த நூலின் இரண்டாம் பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. கடிதங்களாக, கதைகளாக தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். சமுதாய மருத்துவத்துறையில் பேராசிரியராக இருந்ததால் சமுதாயத்தை நன்றாக விளங்கி, இவரால் எழுதி வெளியிடப்பட்ட “தங்கச்சியம்மா”, “நம்பிக்கைகள்” போன்ற தமிழ் நூல்கள் பலராலும் போற்றப்பட்டன. இவரது நாவல்கள் சாகித்திய விருதுகளும் பெற்றன. தமிழறிஞர் ராஜாஜி இவருக்கு “தேர்ந்து” கொடுத்தநந்தியென்ற புனைப்பெயரிலேயே இவரது தமிழ்க் கதைகள், கட்டுரைகள், பத்திரிகைகள், புத்தகங்கள் வாயிலாக மக்களைச் சென்றடைந்தன.
விடையேறிய சிவத்தை, ஞானத்தை, கசிந்து கண்ணிர்மல்கியோர் கண்ட சுந்தரத்தை தனது பெயராகக்கொண்ட பேராசிரியர் சிவஞானசுந்தரத்திற்கு, நந்தியென்ற பெயரைராஜாஜி எவ்வளவு பொருத்தமாக சூட்டி விட்டார்.
இறையருளில் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துக் கொண்டு, மழிக்காமல், நீட்டாமல் சாதாரண மனிதராக எம்மிடையே வாழ்ந்து, மாணவரிடையேயும் மக்களிடையேயும் உடல் உள சமூக ஆன்மீக மேம்பாட்டுக்காக உழைத்த எங்கள் பேராசிரியர் சிவா, எல்லோருக்கும் ஆசானாகிய சிவத்தின் திருவடியை அணுகியிருப் பார் என்பதில் ஐயமில்லை. பேராசிரியர் சிவா உலக சுகாதார மையத்தினால், ஆரம்ப சுகாதார கவனிப்பு ஆய்வுப் பகுதிக்கு நிபுணராக ஏற்றுக் கொள்ளப்பட்டு யோர் தான், கொரியா, மங்கோலியா, வங்காளதேசம் முதலிய பல நாட்டு சுகாதார அமைச்சுகளுக்கு ஆலோசகராக அனுப்பப்பட்டவர். யாழ் பல்கலைக்கழகம் இப்பெரியாரை வாழ்நாள் பேராசிரியராக்கி தனக்கு பெருமை தேடிக்கொண்டது.
எளிமையான,நிறைவான அவரதுவாழ்வுஎமக்கொருநல்உதாரணம் அவரது மாணவர்கள் அவர் காட்டிய வழிநின்று செயல்படுவதே மாணவர்களுக்காகவும் மக்களுக்காகவும் இறுதி மூச்சுள்ள வரை உழைத்த அப்பெரியாருக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.
41 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 24
இறப்பு என்பது முடிவு அல்ல.
ஓம் பூரீ சாயி ராம்
Fjölu FIull áletListöEisla égjöfal
வைத்திய கலாநிதி ஆர்.கணேசமுர்த்தி யாழ்ப்பாணம்.
அமரர் -பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி) அவர்கள் இறைவனடி எய்தியது, பலவிடங்களில் வெற்றிடங்களை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பல துறைகளில், பல பதவிகளை வகித்து, விளக்கங் களுடன் தகவல்களைப் பரப்பி, பல சமுதாய மட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
இக் குறுகிய நினைவு கூரலில், அன்னார் பூரீ சத்திய சாயி சேவா நிறுவனத்தில், இணைந்து ஆற்றிய அளப்பெரும் சேவையை நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன்.
அன்னார் இவ்வரிய ஆன்மிக சேவை நிறுவனத்தில் வகித்த பதவிகளாவன.
0 சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி (தமிழ்ப்பிரிவு) தேசிய
இணைப்பாளர். 0 சத்திய சாயி தேசிய கல்விச் சபையின் அங்கத்தவர். 0 பாங்கொக்கிலுள்ள சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி
நிறுவனத்தில், பூரீலங்காவின் பிரதிநிதி 0 சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வியில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணிப்பாளர் இவரும் இவரின் குழுவும் பல்லாயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்கள். 0 தமிழ் மொழியில் வெளிவரும் சாயி மார்க்கம் சஞ்சிகையின்
ஆசிரியராகப் பல வருடம் இருந்தார்.
42 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல. 0 சத்திய சாயி மத்திய அறக் கட்டளை நிர்வாக அங்கத்தவர். 0 யாழ் சத்திய சாயி நிலைய நிர்வாகக் குழு அங்கத்தவர். 0 மானிப்பாய் சத்திய சாயி பாடசாலை நிர்வாகக் குழுவின்
அங்கத்தவராகவும் பணியாற்றினார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, சாயி அடியவனாக, 1980ம் ஆண்டு தொடக்கம் செயற்பட்டுள்ளார்.
அவர் அடிக்கடி சொல்லிக் கொள்வார்,"என்னுடைய தனிப்பட்ட, குடும்ப விடயங்களிலெல்லாம் பகவான் சத்திய சாயி பாபா கைகொடுத்துத் தூக்கியுள்ளார். ஆகவே என் பணி, அவர் பணி செய்வதேயாகும்.
அவர், விசேடமாக, சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்விக்கு அளித்த சேவை அளப்பரியது. முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கும், ஆசிரியப் பயிற்சி மாணவர்களுக்கும் பல தீவிர பயிற்சி முகாம்களை முன்னின்று நடத்தியுள்ளார். அவரால் வெளியிடப்பட்ட ‘மனித மேம்பாட்டுக் கல்வி - பயிற்சி கைநூல் பகவானின் கல்வித் திட்டத்திற்குச் செயலமைப்பைக் கொடுத்துள்ளது.
பேராசிரியரின் கற்பித்தல் திறன் மிகவும் அபாரமானது. பட்டதாரிப்பின் படிப்பு மாணவர்களென்றாலும், பட்டதாரி மாணவர்களென்றாலும், முன்பள்ளி ஆசிரியர்களென்றாலும், சிறு பிள்ளைகளாயினும், அவர் மிகவும் திறமையாகக் கற்பித்தார்.
எமது அன்புக்குரிய சாயி அடியவனின் இழப்பு அவரின் குடும்பத்தினருக்கும், எமக்கும் பெரிய இழப்பாகும். அண்ணாரின் குடும்பத்தினருக்கு இப் பாரிய இழப்பை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை பகவான் அருளவேண்டுமென்பதே எமது பிரார்த்தனை.
ஜெய் சாயி ராம்
43 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 25
இறப்பு என்பது முடிவு அல்ல.
Siva, my good and loyal friend
- Prof. Malcolm A Fernando
It was in 1964, at the request of my Professor in the Faculty of Medicine in Colombo. I accepted the post of lecturer in charge of the department of Community Medicine, of the second medical School at the University of Peradeniya. In 1965 Dr. C. Sivagnanasundram joined me as a lecturer, in which post he continued until 1978, when he moved to the new medical School in Jaffna as the Professor of Community Medicine. During this period and even after, we continued our well established friendship.
He delivered lecturers to undergraduates and post graduates skillfully and in an innovative style, which was appreciated by the students.
He participated enthusiastically in the service functions and research conducted in the newly established field practice area
44 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல.
- the Hindagala Community Health Project.
In 1972 he played a leading role in the organization and conduct of the first post graduate course in Community Medicine in Sri Lanka, after successful completion of which they were awarded the degree of master of Medical Science (Peradeniya). The holders of this degree, held high positions in the health administration in the Country.
It is often stated that "A friend in need is a friend in deed”, Siva was such a friend. If for some reason a colleague or I was unable to deliver a pre-arranged lecture, he would willingly undertake to do so at short notice. Although he had a rough exterior he was a simple, kind and careing man, ready to help anyone in need of his help. Above all he was a great gentleman; it was my privilege and pleasure to have associated with him.
It is thirty one days since he left us, having contributed immensely in many spheres during his life, may he achieve the final goal in death- Moksha.
45 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 26
இறப்பு என்பது முடிவு அல்ல.
பிறப்பு - 1928-03-30: இறப்பு - 2005-06-04:
 
 
 

இறப்பு என்பது முடிவு அல்ல.
ത്രി || - || ബീ് 2- Ems bll:118)di Ef ...
என் பெற்றோர் தந்த பரிசு. என் அன்புத் தெய்வம். அருகில் அப்பா சொல்வதை உணர்கின்றேன். மறுபடி குடும்ப அங்கத்தவர் ஆவாரா
A 7 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 27
இறப்பு என்பது முடிவு அல்ல.
நந்தி = என் பெற்றோர் தந்த பரிசு
- செல்லத்துரை திருநாவுக்கரசு (அப்பர்)
நந்தி என்ற மருத்துவர், நந்தி என்ற எழுத்தாளர், நந்தி என்ற பேச்சாளர், நந்தி என்ற கலைஞர் என்று அவரை அறிந்தோர் பேசியும் எழுதியும் உள்ளார்கள். எனவேதான் நான் இந்தத் தலைப்பை எடுத்தேன். மேலும், ஒன்று. நான் அவருடைய ஒரே சகோதரன். இப்படி நான் சொல்வது முறையல்ல. ஏனெனில, அவர் எல்லோரையும் தனது சகோதரர்கள் என்றும் கணித்தவர். எனவே நான் ஒரு அடைமொழியையும் இணைத்து கூடப்பிறந்த சகோதரன் என்ற உண்மையைச் சொல்ல வேண்டும். இந்தக் காரணத்தினால் எனக்கு அவரைப்பற்றிச் சற்றுக் கூடத் தெரியும். என்னைவிடக் கூடத் தெரிந்தவர் மூவர். எனது பெற்றோரும் சகோதரியும் ஆகிய அவர்கள் இன்று இல்லை.
நந்தியினுடைய படைப்பிலக்கிய ஆற்றலையும் கற்பனா சக்தியையும் நான் சிறு வயதிலேயே அறிந்தேன். இன்று அவற்றை அசை போட்டு வியக்கிறேன். நான் அப்போது சிறுபையன். அவருக்கு 14 வயது போலிருக்கும். என்னையும் எமது சகோதரியையும் பக்கத்துவிட்டுப்பிள்ளைகளையும் வைத்து அவர் ஓர் அரசாங்கத்தையே நடத்தினார். நாங்கள் அவரின் பிரஜைகள். அவரே தேசாதிபதி, பிரதமர், டொக்டர், ஆசிரியர், படத் தயாரிப்பாள் மற்றும் பல. பாடசாலையில் வகுப்புகள் நடக்கும். நாம் பயன்படுத்தும் நூல்களும் அதில் வரும் கட்டுரைகள், கதைகள், பாடல்கள் அவராலேயே எழுதப்பட்டவை. காபன் வைத்துப் பிரதிகள் எடுக்கப்படும். நாம் இப் புத்தகங்களைக் கொண்டுதான் அவரின் பள்ளிக்கூடத்திற்குப் போவோம். டொக்டராக இருக்கும் போது அவராலேயே கிளேயினால் செய்து தரப்பட்ட ஒரு கர்ப்பிணியை எம்மிடம் தந்து அவளைத்தான் நாம் வைத்தியசாலைக்குக் கொண்டு போவோம். அவர் ஒரு
48 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல. ஃபிளேட்டினால் சிசேறியன் சத்திர சிகிச்சை செய்து சிசுவை வெளியே எடுப்பார்.
அவர் திரைப்படம் தயாரிப்பார். கதை, வசனம், தயாரிப்பு, வெளியிடுதல், படத்தைத் திரையிடுபவர் எல்லாம் அவரே. நான்கு அங்குல அகலமும் சுமார் 20 அடி நீளமும் உள்ள கடதாசியிலே அவரே ஏராளமான படங்களை வரைந்து ஒரு பெட்டியையும் பயன்படுத்த, கதையோடு படம் ஒடும்.
என்னையும் எமது சகோதரியையும் வளர்த்தவர் அவர். அவரின் கண்காணிப்பிலேயே எமது படிப்பும் வாழ்வும் முன்னேறியது.
நாம் சிறு வயதிலிருந்தே கொழும்பில் வாழ்ந்தும் (40களில் ஆரம்பித்தது) தமிழிலே எமக்கு உள்ள பற்றை அவர்தான் வளர்த்தார். அண்ணா, கருணாநிதி, ம.பொ.சி. இவர்களுடைய பேச்சுக்கள் எங்கள் வீட்டில் ஒலிக்கும்.
சிங்களம் மட்டும் என்ற சட்டம் வந்து Reasonable use of Tamil என்றும் வந்தபின்னும் எம்மக்கள் தமிழை விட்டு ஆங்கிலத்தையே பயன் படுத்தினார்கள். காரணம், அரசாங்கத்திற்குத் தமிழிலே கடிதம் எழுதினால் பதில் வராது என்ற பயம். உண்மைதான். ஆனாலி, என் அண்ணன் மனதில் ஓர் அருமையான யோசனை உதிர்த்தது. எமது கடிதம் அரசுக்கே பயன் கொடுக்கும் என்றால் அவற்றைத் தமிழிலேயே எழுதலாம் என்று. உதாரணமாக, வருமான வரி இலாகாவுக்கு தனது வருமானம் தொடர்பான விபரங்களைத் தமிழிலே எழுதி அனுப்பினார். பதில் வராவிடில் வரிகட்டத் தேவையில்லை. பதில் வந்தால் தமிழ் அரச மொழியாகிறது. ஆனால், 60களில் இவர் யாழ்ப்பாணத்தில் சேவை செய்தபோது எமது மக்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கான வழிகளை வகுத்து அமரர் தந்தை செல்வாவுக்கு ஒரு கடிதம் எழுதி ஆங்கிலத்திலே விலாசம் இட்டு பதிவுத் தபாலில் அனுப்பினார். கடிதம் கொழும்பு போய்த் திரும்பி வந்தது. அரச மொழி சிங்களம் என்றும் எனவே விலாசத்தை சிங்களத்தில்
49 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 28
இறப்பு என்பது முடிவு அல்ல.
எழுதும்படி உறையிலே சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது. அண்ணன் கடிதத்தை அப்படியே என்னிடம் தந்து கொழும்பு சென்று தந்தை செல்வாவிடம் நேரிலே கொடுக்கும்படிசொல்ல நான் அப்படியே செய்தேன்.
இப்படியாக அவரின் பல செயல்கள் ஊருக்குத் தெரியா. வீட்டிலும் சரிநாட்டிலும் சரிதவறைத் தவறென்றே சொல்லுவார் - அதைச் செய்தவர் யாராக இருந்தாலும்-பெற்ற தாயாக இருப்பினும்கூட. பல வருடங்களுக்கு முன், அம்மாவுடன் ஒரு நாள் வாக்குவாதப்பட்டார். ஒருவர் செய்தது சரியென்றும் அம்மாவின் கருத்து பிழையானதென்றும் அண்ணன் சொன்னார். தான் சரியென்று அம்மா வாதாடினா. விவாதம் முற்றி வர அம்மா சொன்னா, நீசொல்வதைப் பார்த்தால் இந்த விடயம்நீதிமன்றம் போனாலும் நீ அவர் பக்கம்தான் வாக்குமூலம் கொடுப்பாய் போல. அண்ணனின் பதில் அவரின் மனப்பாங்கை வெளிப் படுத்தியது. “ஓம், கட்டாயமாக அவர் பக்கம் தான் வாக்கு மூலம் கொடுப்பேன். ஆனாலி, உங்களுக்கு வாதாட இந்த ஊரின் திறமைமிக்க சட்டத்தரணியை எடுத்து அவரின் கூலியையும் நான் கொடுப்பேன்". இதுதான் நந்தி. இதுதான் பேராசிரியர் சிவஞானசுந்தரம்.
இதுதான் பெற்றோர் எனக்குத்தந்த பரிசு.
50 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல
ഞ്ഞ് ടി, ിgിഖ്,
சாந்தி. சி (மனைவி)
உங்கள் மறைவு எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அந்த துக்கத்தை மாற்ற என்னால் முடியவில்லை. உங்களுடன் வாழ்ந்த 39 வருடமும் சந்தோஷமாக வாழ்ந்தேன். பொறுப்புகள் எதனையும் எனக்கு நீங்கள் தரவில்லை. நான்கு பெண் பிள்ளைகளுடன் சேர்த்து, நீ எனக்கு ஐந்தாவது பெண்பிள்ளை எனக் கூறி, என்னையும் உங்கள் பிள்ளையாகவே சேர்த்து பாதுகாத்தீர்கள்.
இறுதிமூச்சு இருக்கும் வரைநீங்கள் உங்கள் கடமையில் இருந்து விலகவில்லை. உங்களிற்காக செய்வதற்கென எமக்கு எந்த வொரு பொறுப்பும் இருக்கவில்லை.
நான்கு பிள்ளைகளும் பெண்களாகப் பிறந்த போதும், சிறிதும் கவலைப்படாமல் இரவும் பகலும் அவர்களின் முன்னேற்றத்திற் காகப்பாடுபட்டீர்கள். மூன்றுமருமக்களும் எமக்கு மகன்மார்கள் எனப் பெருமைப்படுவீர்கள்.
மிகவும் திருப்தியுடன், சந்தோஷப்பட்டு கண்மணி போன்ற பேரனுடன் கொஞ்சிகுழாவிநீங்கள் வாழ்க்கையை அனுபவித்தது கண்டு இயற்கை பொறாமைப்பட்டதுவோ? உங்களிடமிருந்து நாங்கள் கற்க வேண்டியது ஏராளம். மனைவியாக நான் அனுபவித்தது அன்பு, ஒரு தந்தையின் பாசம், கண்டிப்பு, சிறிது கோபம், நேர்மை, ஒழுக்கம், விசுவாசம், தன்னலமில்லா சேவை, சகிப்புத்தன்மை. இன்னும் பற்பல.
51 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 29
இறப்பு என்பது முடிவு அல்ல.
இன்னும் சிறிது காலமாவது நீங்கள் எம்மோடு இருக்க வேண்டுமென பல தெய்வங்களிடம் நான் சென்று மன்றாடியிருப்பேன். இன்று உங்கள் உடல் தான் எம்முடன் இல்லை. கணிரென்ற உறுதியான அன்பான குரல் எம்மை எல்லாத் திசைகளிலுமிருந்து வழிகாட்டிக் கொண்டேயிருக்கிறது.
இறுதிவரை உங்கள் வாழ்க்கை எமக்கு வழிகாட்டியாகவே
இருக்கும். ஏனெனில், இது அன்பினில் கலந்த சத்தியம் நிறைந்தது.
‘சத்தியம்' நாம் வாழும் வீட்டுக்கு நீங்கள் வைத்த பெயர்.
52 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல.
ellhäld éMILIII blfidbum
2 millileiksgi
லக்ஷ்மி. க (மகள்)
அருகில் சொல்வது உணர்கின்றேன் வழியில் செல்லும் போது நிறுத்து, கவனி, ஒடு
அருகில் சொல்வது உணர்கின்றேன் நேர்முகப் பரீட்சையில் நிதானம், சத்தியம், ஒழுங்கு
அருகில் சொல்வது உணர்கின்றேன் உண்ணும்போது இறைவணக்கம், விண் விரயம் செய்யாமை, வெறுப்புக்காட்டாமை
அருகில் சொல்வது உணர்கின்றேன் உறவினர், நண்பர்களிடம் அன்பு, மதிப்பு சத்தியம் பேசல், உதவி எதிர்பாராமை, உபசரிப்பு
அருகில் சொல்வது உணர்கின்றேன் செய்யும் தொழிலில் இருக்க வேண்டியது ஒழுக்கம், விசுவாசம், திருப்தி
அருகில் சொல்வது உணர்கின்றேன்.
பெண்களிடம் இருக்க வேண்டியது அடக்கம், அன்பு, சகிப்புத்தன்மை, துணிவு, இறைபக்தி
அருகில் சொல்வது உணர்கின்றேன். பெரியோர்களிடம் பெறுவது ஆசீர்வாதம் பாதுகாப்பு, வழிகாட்டல்
53 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

Page 30
இறப்பு என்பது முடிவு அல்ல.
அருகில் சொல்வது உணர்கின்றேன் முதியோருக்கு கொடுக்க வேண்டியது அமைதி வாழ்வு, அன்பு, உதவி
அருகில் சொல்வது உணர்கின்றேன் முன்னேற்றத்திற்கு வேண்டியவை - நேர்மை உண்மை, உற்சாகம், தன்னம்பிக்கை
ஆனால் இன்னும் உணரவில்லை எம் அப்பா எம்முடன் இல்லை என்பதை.
54 பேராசிரியர் நந்தி நினைவாக - I

இறப்பு என்பது முடிவு அல்ல
UDPLug
ம்ை கும்பத்தின் அங்கத்தவர் ஆவாரா.
எமது கலாச்சாரத்தில் முதுமைக்கு ஓர் அந்தஸ்து உண்டு. இனிவரும் காலத்திலும் இந்த மரியாதையும் மதிப்பும் பேணப்பட வேண்டும். முதியோரின் அனுபவ அறிவாலும் ஆலோசனை ஆசீர்வாதத்தாலும் இளைஞர்சமூகம் ஆண்மீக பக்குவமும் தமது செயலாற்றல்களில் தவறுகளைத் தவிர்க்கக் கூடிய வல்லமையும் பெறும்.
-பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி)
ஜீலை நாலாம் திகதி காலை வேளை அபிராம். அபிராம். அம்புலஸ் வண்டி வீட்டு வாசலில் நிற்கும் போது அதில் ஏறுவதற்கு முன் பேராசிரியர் நந்தி அவர்கள் தனது மூன்று வயது பேரனை மிக உரத்த குரலில் அழைக்கிறார். அவரின் ஒரே ஒரு செல்லப் பேரன் ஓம் வாரேன். வாரேன். என்று கத்தியபடி அவரின் அருகில் வந்து நிக்கிறான். தன்னிடமிருந்த சாயி பாபாவின் திருநீற்றை அபிராமின் நெற்றியிலும் முதுகிலும் தடவி ஆசீர்வதித்து அன்புலன்சில் செல்கிறார். அதே நாள் மாலை ஆறுமணிக்கு அத்திமகால சேவை வழங்கும் நிறுவனமொன்றின் வாகனத்தில் பெட்டியொன்றுக்குள் வைக்கப்பட்டு தூக்கி வரப்படுகிறார். மேலே அவர் குறிப்பிட்டது போன்று அவரின் அனுபவம் அறிவு, ஆலோசனை ஆசீர்வாதம் இன்னும் பல ஆண்டுகள் எமக்குக் கிடைத்திருக்க வேண்டும் அவரது பேரனுக்குக் கிடைத்திருக்க வேண்டும். கிடைக்கவில்லை
பேராசிரியர் நந்தி அவர்கள் தனது கொடியநோயின் அவஸ்தையால் துயருற்று ஒரு மாத காலம் மட்டுமே வீட்டினுள் கிடந்தார். அது வரை இயங்கிக் கொண்டிருந்தவர். வீட்டில் முடங்கிக் கிடந்த காலத்திலும் தான் இல்லாத குடும்பத்தின் நலனை நன்கு திட்டமிட்டு அவற்றை நடைமுறைப் படுத்து வதற்கான வழிகளை ஆக்கியபடி இருந்தார்.
55 பேராசிரியர் தந்தி நினைவாக - 1

Page 31
இறப்பு என்பது முடிவு அல்ல.
என்று விரும்பியவர் பாபாவின் அருளால் அற்புதம் நிகழலாம் நான் இன்னும் பல வருடம் இருக்கலாம். இருந்தாலும் இரண்டாவதாக மருந்து ஏற்றப்படும் போது நான் இருப்பது கஷ்ரம் அதற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். என்று அடிக்கடி கூறுவார். இறப்பை எதிர்நோக்குகின்ற அதேவேளை வாழவேண்டுமென்று ஆசை கொள்வது இதுவே இதிலுள்ள மிகப்பெரும் துயர் இந்தத் துயரை எதிர் கொள்வதற்கான மனநிலையைப் பெறுவது ஒரு கொடை கடவுளின் ஆசீர்வாதமிருந்தால் தான் அந்தக் கொடை கிடைக்கும்.
2004 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் ஒரு நாள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வந்த போது தனக்கு புற்றுநோய் என்ற தகவலுடன் வந்தார். முகத்தில் சிறிய அதிர்ச்சி சற்று தளர்ந்து கதிரையில் அமர்ந்திருந்தார். சிறிது நேரம் மட்டும் தான் அவரது தளர்வு பின் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தார். பிள்ளைகளைக் கூப்பிட்டு தனது வங்கிக் கணக்குகளின் விபரம் ஏனைய பெறுமதியான ஆவணங்கள் மற்றும் விடயங்கள் பற்றி கூறி ஒவ்வொரு பிள்ளையிடமும் ஒவ்வொரு பொறுப்பை ஒப்படைத்தார். தான்குடும்பத்திற்காகச் செய்யவேண்டியவற்றை தான் இல்லாத குடும்பத்தை கற்பனை பண்ன தொடங் கியிருந்தார். அன்றிலிருந்து கிட்டத்தட்ட எட்டு மாதகாலம் தன் சாவை எதிர் பார்த்து காத்திருந்தார். இந்த எட்டு மாத காலத்திற்குள் தனது கடைசி மகளுக்கு ஒரு வீட்டைக் கட்டி முடித்ததோடு அவருக்கு திருமணத்தையும் தானே முன்னின்று நடத்தியிருந்தார்.
அவர் கடுமையான உழைப்பாளி தன் அறிவு விருத்திக்காகவும் புலமைவிருத்திக்காகவும் அயராது கடுமையாக உழைத்தார் பணத்திற்காக அங்கலாய்த்தது கிடையாது.ஆனால் பணத்திலும் நிறைவாக இருந்தார். அவர் கடைப்பிடிக்கும் சிக்கனம் எமக்கு அடிக்கடி பணத்தின் பெறுமதியை உணர்த்தி நிற்கும். தினமும் இரவு இரண்டு மணிக்கு எழுந்து வாசிப்பதும் எழுதுவதுமாக இருப்பார். காலை 5.00 மணிக்கு மீண்டும் உறங்கி 6.00 மணிக்கு எழுந்திருப்பார். அவர் உறங்கும் போதும் அவரது கையில் மணிக்கூடு கட்டியிருப்பார். ஒரு காரியத்திற்கு 56 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல.
கையில் மணிக்கூடு கட்டியிருப்பார். ஒரு காரியத்திற்கு செல்வதானால் குறித்த நேரத்திற்கு அரை மணி முன்னரே ஆர்பரிக்க ஆரம்பித்திருப்பார். அவரது ஒவ்வொரு அணுவும் நேரக்கட்டுப்பாட்டுடன்தன்பாட்டில் அசைந்துசெல்லும் அதிசயம் தான் அவரது சாதனைகள் அனைத்திற்குமான மூலமுதல்.
தன் குடும்பத்தை தன்மனதுள் திட்டமிட்டு அல்லது மனதுள் தாங்கி அவர் அமைதியாக ஏனைய பணிகளை ஆற்றுவது குடும்பத்தினருக்கு வியப்பாக இருக்கும். அதுவே சில வேளைகளில் முரணாகவும் இருக்கும்.
பேராசிரியர் நந்தி அவர்கள் ஒவ்வொரு ಶೌg பிள்ளையையும் ஒவ்வொரு மனிதனையும் வரவேற்ப்பார். ஏறறுக கொள்வார் அவரது கண்டிப்பான தோற்றப்பாடு அதற்கு அணிசெய்யும். எவருடனும் எவ்வளவு நேரமும் சலிப்பின்றி உரையாடியபடி இருப்பார். ஆனால் தொலைபேசியில் உரையாடும் போது நறுக்காக இருப்பார். அவரிடம் தொலைபேசியில் எவ்வாறு உரையாடுவது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். தன்னிடம் இருந்த அனைத்தையும் பிறரிடம் கொடுத்து விட்டு தெளிந்த மனதோடு குடும்ப உறவுகள் ஒவ்வொருவருடனும் எதிர்காலத் திட்டமிடல்கள் பற்றிப் பேசினார்.
அவர் மகள் ஜனனி கற்பவதியாக உள்ளார். அவர் இறப்பதற்கு இரண்டு கிழமை முன்பு பிறக்கின்ற குழந்தை ஆணாக இருந்தால் எவ்வாறான பெயர்களை வைக்கலாம் பெண்ணாக இருந்தால் எவ்வாறான பெயர்களை வைக்கலாம் என்பது பற்றியெல்லாம்
உரையாடினார். குடும்பத்தில் ஒவ்வொரு சிறுசிறுவிடயங்களுக்கும் தனது ஒவ்வொரு அபிப்பிராயத்தை தெரிவிக்கத் தவறமாட்டார்.
வாழ்ந்ததின் நிறைவு கடமைகளைப் பூர்த்தி செய்த பூரிப்பு ஆண்மீகத்தில் சாதித்த சாந்தம் இவற்றோடு கூடுவிட்டு உன்னத பதவிக்கு சென்றுவிட்டார். இருப்பினும் அவர் திருநீறு தடவிச் சென்ற பேரன் இன்னும் கேள்விகளோடு உள்ளான். அவை. CDl . செத்தது என்றால் என்ன?
57 பேராசிரியர் நந்தி நினைவாக - I

Page 32
இறப்பு என்பது முடிவு அல்ல.
Ο92.
O3.
O4.
O5.
O6.
O7.
O8.
O9.
lO.
அம்மப்பா எங்க பேயிற்றார்? எப்ப வருவார்? அம்மப்பா ஏன் கதைக்காமல் படுத்திருக்கிறார்? அவர இனி நாங்கள் பார்க்கமுடியாதா? ஏன்? அவர் இருக்கிற இடத்தில போய் பார்த்து வரப்போறன்? நான் கூப்பிட்டாலும் வரமாட்டாரா? ஏன் அம்மப்பாவை பெட்டியில வைச்சு தூக்கிக் கொண்டு வந்தவை? அம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு போற எல்லோரும் affereoil of p கம்பசில இருந்து காரில அம்மப்பாவை எங்க கொண்டு (8 JIT6O1606 up அம்மப்பா கடவுளிட்ட பேயிடுவாரெண்டா என்ன? எப்படி கடவுளிட்ட போவா?
பெட்டியோட அப்படியே பறந்து போவாரா?
அவனுக்கு விடை அளிக்கும் பக்குவம் எமக்கில்லை. அவனுக்கு விடையளிக்க அவனது அம்மப்பா மறுபடி எம் குடும்பத்தின் அங்கத்தவராவாரா? மறுபிறப்புண்டேல் அது நடக்குமல்லவா?
- தேவா ஜனா,
58 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல
நந்தரி - சில குறிப்புகளி
பிறப்பு: இணுவில் 1828.0830
பிரபவ வருஷம் பங்குனி 18. பூ சம். மிதுனலக்கினம் (றப்பு நல்லுர் 2005.06.04
ah págairt
தந்தை வினாசித்தம்பி செல்லந்துரை (1890 - 1967) பாண்டியன் தாழ்வு (சிலோன் வேர்கபே கொம்பனி)
μπάι ασώανιδιοπ, (1900 - 1986) நல்லூர் மனைவி சாந்தி (விவாகத்தின் முன் தங்கச்சியம்மா) (187)
ar 2.05.1988.
daadi adafi (1967). Gia (171), garafi (17), R (7) மருமகள்மார் தபோதரன் (2000) தேவானந்த் (2001) கமலரூபன் (200) dupůdor olymh paraš (2002)
உடன்பிறந்தோர் திருமதி சிவஞானமணி நித்ததாயகம், செதிருநாவுக்கரசு
(Qưnộêuwaử, gạch, agiopiah, Inâẩyanç) шнийц
19 - 1934 URunaw, sus savalt unu-Taurow 1984 - காங்கேசந்துறை ரோமன்
srSkisuwurandR 18 ைஇடைக்காடு தமிழ் பாடசாலை,
(இப்போதைய மகாவித்தியாலயம்) 1986-1988 & 1941 undsásib. Ggrstað sógarfi 1919 - 1940 & 1942 - 19ás Ganghu Goiáskó (grsúaó séggð 1946 - 1948 றோயல் கல்லூரி 1980 - இலங்கை பல்கலைக்கழகம் 1961 - 1965 Qasrgulių amausudi skyria MBBS
தமிழ் கற்பித்தவர்கள் விசெல்வநாயகம் (சிறிய தந்தையர்) அமரியதாசன்.
Tačů.g.wikisač, GasMukigumsorgull.
59 Guynófuil sifil fiana aura - I

Page 33
இறப்பு என்பது முடிவு அல்ல.
மேற்படிப்பு
லண்டன் பல்கலைக்கழகம் 1968 - DPH
1969 - 1971 PhD GaFaroa
1955 - 1956 இன்றேர்ன். பொது வைத்தியசாலை = குருநாகல் 1956 - 1958 வைத்திய அதிகளி, கிராம வைத்தியசாலை. ஹிரிப்பிட்டியன. 1958 - ஹவுஸ் ஒபிசர், லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலை 1959 - 1980 சுகாதார வைத்திய அதிகளி - நாவலப்பிட்டி 1961 ஜீன் - ஜீலை. ஹவுஸ் ஒபிசர். பொது வைத்தியசாலை- யாழ்ப்பாணம் 1961 - செப். 1983 சுகாதார வைத்திய அதிகாரி - யாழ்ப்பாணம் 1963 - ஜீலை 1965 சட்ட வைத்திய அதிகாரி - யாழ்ப்பாணம் 1985 - 1967 விரிவுரையாளர், சமூக வைத்தியத்துறை பல்கலைக்கழகம் போதனை 1971 - ஏப்ரல் - 1975 - சிரேஷ்ட விரிவுரையாளர் (மேற்படி) 1975 - செப். 1978 இணைப்பேராசிரியர். (மேற்படி) 1979 - இதுவரை பேராசிரியர் சமூக வைத்திய பிரிவு யாழ்பல்கலைக்கழகம் 1979 - 1993 தலைவர் சமூக மருத்துவத்துறை நான்குவருடங்கள்
பீடாதிபதி, மருத்துவ பீடம், யாழ்பல்கலைக்கழகம் 1998 - 2005 வாழ் நாள் பேராசிரியர், சமூக மருத்துவத்துறை மருத்துவ பீடம், யாழ். பல்கலைக்கழகம்
சில முக்கிய நியமனங்கள்:
1961 - 1965 unleisra, Quiglurari M. Med Sc
1961 - 1965 பகுதி நேர விரிவுரையாளர்(உடலமைப்பியல் சக உடற்தொழிலியல்)
பாழ்தாதிமள் பயிற்சிக் கல்லூரி Gasrüu Prif ffurir saws Ffrannu 1978 பல்கலைக்கழகம், பேராதனை பாடவிதான பொறுப்பாளர் 0
(சமுதாய மருத்துவதுறை பல்கலைககழகம் பேராதனை) 1984 - 1988 பீடாதிபதி மருத்துவபீடம், யாழ் பல்கலைக்கழம்
மூதவை உறுப்பினர். - யாழ் பல்கலைக்கழம்
1979 - 1983, 1984 - 1988, 1991 - 1993 1980-2001 பரீட்சகள், உறுப்பினர். சமுதாய மருத்துவத்துறை,
பட்டமேற்படிப்பு கொழும்பு 2000-2005 உறுப்பினர். பட்டமேற்படிப்பு. யாழ். பல்கலைக்கழகம் 1985-1991 குறுகியகால உலக சுகாதார ஸ்தாபன மருத்துவசேவை
ஆராய்ச்சி ஆலோசகர்-மலேசியா, பங்களாதேஷ், வட கொரியா,
60 பேராசிரியர் நந்தி நினைவாக -1

இறப்பு என்பது முடிவு அல்ல.
பங்குபற்றிய கருத்தரங்குகள், பயிற்சிகள், !
1971
1977
1973
197
1977
1980
1981
198
உலக சுகாதார ஸ்தாபனத்தின் (உ.சு.ஸ்) சமூக வைத்தியம் கற்பித்தல் பற்றிய கருத்தரங்கம் (10 நாள்) சுரபாபா, இந்தோனேசியா al.,.6ts operations Research. d5(5iisgristi (10 prof) UTEQasiri. உ.க.ஸ் குடும்பக்கட்டுப்பாடும மக்கள் விருத்தியும்,
(2கிழமை)டக்காவங்காளதேசம் உசுஸ் மக்கள் புள்ளிவிபரவியல், (3 மாதம்) London School of Economics. உ.சு.ஸ் பட்டதாரிகளுக்கு சமூக வைத்தியம் கற்பித்தல், பயிற்சி (3 மாதம்) சிங்கப்பூர், பாங்கொக், கல்கத்தா. உ.சு.ஸ் அடிப்படை சுகாதார சேவை பற்றிய கற்பித்தல், பயிற்சி, (3 Larsii) Liver pool School of Tropical Medicine உதவி வைத்தியர்களுக்கான பாடத்திட்டத்திற்கு ஆலோசகர், சுகாதார அமைச்சு, ஜோர்தான் (1வருடம்) சிரேஷ்ட மருத்துவ புலமைப் பரிசு (3 மாதம்)
இங்கிலாந்தில் 12 மருத்துவக் கல்லூரிகள்
ஆராய்ச்சித் துறைகள்
1968
1969-71
1972
1973
1975
1975
1978
1979
198
1985
1986
1986
1986
குழந்தைகளின் நிமோனியாக்கள் இலங்கையில் மலேரியா (Ph.D ஆராய்ச்சி) மலேரியா பற்றி மக்களின் அறிவு ஆகியன இலங்கையில் நோயியல் அராய்ச்சியும் நாட்டிற்கு நன்மைகளும் கோண்டாவில் வடக்கில் கொலரா பேராதனை பல்கலைக்கழக புதிய மாணவரிடையே ராகிங் இலங்யிைல் 132 தனி மருத்துவர் பற்றிய ஆய்வு இலங்கையில் 201 ஆயுள்வேத மருத்துவர் பற்றிய ஆய்வு குழந்தைகள், பிள்ளைகள் மரணப் பதிவு கோப்பாய் சுகாதார வைத்தியரின் பிரதேசத்தில் குழந்தைகளின் மரணம் சுகாதார சேவை - சில பிரச்சனைகள் கோப்பாய் சுகாதார வைத்தியரின் பிரதேசததில் பிள்ளைகளின் மரணம் யாழ். வட்டாரத்தில் மரணப்பதிவு
61 பேராசிரியர் தந்தி நினைவாக - 1

Page 34
இறப்பு என்பது முடிவு அல்ல. -
தமிழ் எழுத்துத்துறையில்.
1917 முதலாவது சிறுகதை சஞ்சலமும் சந்தோஷமும் (வீரகேசரி)
1955 வரை சொந்தப் பெயருடன் உபயோகித்த புனைப் பெயர்கள் விசெ.சி.
பெனிசிலின், மகன். ஜெய் ஹிந்த் சாஸ்திரியார்
5 ஜீன் மாதம் 9ம் திகதி "ராஜாஜி அவர்கள் அருளிய புனைப்பெயர் நந்தி
1959 இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு
19 தலைவர். இமு.ச (யாழ் கிளை)
19B இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு - மலைக்கொழுந்து நாவலுக்கு
2001 தமிழ் இலக்கிய விழா ஓக், 1 ஆளுநர் விருது
1960 அருமைத் தங்கைக்கு (மருத்துவ அறிவுரை) தமிழ்ப் புத்தகாயம் சென்னை
1983, இரண்டாம் பதிப்பு, பாழ் கலுைவாணி அச்சகம்
19B மலைக்கொழுந்து (நாவல்) யாழ் ஆசீர்வாதம் அச்சகம் 1982, இரண்டாம் பதிப்பு. நர்மதா பதிப்பகம், சென்னை
1966 ஊர் நம்புமா? (12 சிறுகதைகள்) யாழ், ஆசீர்வாதம்
1973 அன்புள்ள நந்தினி (மருத்துவ அறிவுரை) ஆத்மஜோதி அச்சகம்
1973 உங்களைப் பற்றி (சிறுவர் அறிவுரை நூல்) யாழ்.சக்தி அச்சகம்
1975 குரங்குகள் (நாடகம்) கண்டி ரோயல் பிரின்டர்ஸ்
1977 தங்கச்சியம்மா (நாவல்) வீரகேசரி பிரசுரம் 54
1984 கண்களுக்கு அப்பால் (12 சிறுகதைகள்) சென்னை-புக்ஹவுளம்
1989 நம்பிக்கைகள் (நாவல்)
1991 இதய நோயும் தடுப்பு முறைகளும் (மருத்துவ அறிவுரை நூல்) வானதிபதிப்பகம்
1992 அன்பார்ந்த சாயி அடியார்களுக்கு. (ஆத்மீக நூல்) வெளியீடு பகவான் பூ சத்ய
சாபி சேகா சமித்தி யாழ்ப்பாணம்.
1994 நந்தியின் கதைகள் 11 சிறுகதைகள். குமரன் பதிப்பகம் வடபழனி
1996 தம்பி தங்கைக்கு (இளைஞர் அறிவுநூல்) குமரன் பதிப்பகம் வடபழனி
OOC சாயியின் குரலும் வள்ளுவர் குறளும்
(மனித மேம்பாடுகள் சார்ந்த ஆத்மீக கல்வி நூல்) கடர் ஒளி பதிப்பகம், கொழும்பு
ՉՍՍՀ தரிசனம் (2 சிறுகதைகள்) குமரன் கொளணி
III): சத்திய சாயி மனித மேம்பாட்டுக்கல்வி
(பாடசாபை ஆசிரியருக்கான (1 - 9) கைநூல் பூ சத்திய சாயி நிறுவன். இலங்கை)
2003 Learning Research (A guide to medical Students, Senior doctors
and related professionals)- 1999 - yup,
O05 நந்தியின் சிறந்ந சிறுகதைகள் -12 பூரணி வெளியீடு.
62 பேராசிரியர் நந்தி நினைவாக - 1

இறப்பு என்பது முடிவு அல்ல.
தேவாரம்
திருஞானசம்பந்தர் - மூன்றாம் திருமுறை நநல்லூர்ப்பெருமனம் பன் - அந்தாளிகுறிஞ்சி
அன்புறு சிந்தைய ராகி யடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின் நின்புறு மெந்தை யினையடி யேத்துவார் துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே
திருநாவுக்கரசர் -ஐந்தாம் திருமுறை தனித் திருக்குறுந்தொகை
மாசில் வீனையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யினைபடி நிழலே.
திருவாசகம்
பால் நினைந் துTட்டுந் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம் புறந்திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
63 பேராசிரியர் நந்தி நினைவாக -1

Page 35
இறப்பு என்பது முடிவு அல்ல.
திருப்புகழ்
பக்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வில்
முத்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தம தானசற் குணநேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா வெற்றி வேலாயுதப் பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
64 பேராசிரியர் நந்தி நினைவாக - 1


Page 36
Vinacithamp Alangaran
GD
Chelathurai . ઉોર (Sellamma) Rasiah (Kamalambikai) (Si
G
o Siva Siva S. Thiru sivagana- svagana mandan mani -I Sundaram -maml navukkarasu (Pararaja (S
o o B o (Santhi) དང་། མ་བཟང་། (Bavani) sinkam)
Nantha Thu asi (3)ahin IndumathyThirumal Amavimchi G3OK Senthiru -d Ni 3 ka VaIIi oly John Lun
(Thabotharan) (Thevananth) (Kamalaruban
Albiran
nே lakavathy Kumara Mangyakarasi K
nia,
(Narayna nayakam nayak anhathy (3)Ranlanan &n. Kalaimathi
(D Children (2) Grand Children G) Great grand chil

у வேரும் விழுதுகளும்
samani (OKanakasinkam vadason) Snapt)
iva ဇွxါးဇုနျ(ဒို့) Devi (Sondari) Nandabalan Nirmala
ivathason) (Kalyani) (Subanandan)
Gedra G)Aluma Prasanthan U O uhan pra Abirami apan irupa -
ಲೆಟ್ಟ
Vathana
Kukapirya Harykumar
Mamonmani (Rajasooriar)
, (2)Kukaran (Sundara (Gnana- (Gankahey) (Yukabala-(Santhi
k linkam) prakasam) སia"ལྟས་ Kumar)
@端 ury Kantha Viveka Anitha Thepá V 2*.
· Boy opana i Vanathy Thiviya Ahilan Parthipan
Vanaja Vinutha Piravanan
Amalan

Page 37


Page 38


Page 39
நந்தியின் பெயரைக் குறிப்பி ஈழத்து இலக்கிய வரலாற்ை என்பது உண்மை. ஆனால் படுவது அந்த மனிதனின் உ
Noble Printers -103, Palaly
 

து இருபதாம் நூற்றாண்டின் எழுதிவிடமுடியாது எனக்கு இங்கு முக்கியமாக STSTUL600rUTL15ub.
பேராயர் கா. சிவத்தம்பி
Road, Jaffna. O77 31267.48