கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்விச் சீர்மியம்

Page 1
"/7 ഗ്ഗ<
Z.
TARRIMILUETTLE
ii: bill
لمئزا
V
GuJTósui dLI
 
 

2UTC)

Page 2

கல்விச் சீர்மியம்
Educational Counselling
பேராசிரியர் சபா. ஜெயராசா
போஸ்கோ வெளியீடு
நல்லூர்.
2OO2

Page 3
நூற்பெயர் asias & gosi 6uub
TaunraRiffleutř: Gug Trâfiu ir FL T. Gelugmas NT
முகவரி கல்வியியல்துறை, யாழ். பல்கலைக்கழகம் .
பதிப்புரிமை நூலாசிரியர்
பதிப்பு முதல், 2002
முன் அட்டை ரமணி
அச்சுப்பதிப்பும் வெளியீடும்: போஸ்கோ ஆட்ரோன் பிறிண்டேர்ஸ்
நல்லூர்,
aflauosav: eU5urri 1OO/-
Title: KALVI CHEERMI AM
Author: Prof. S. JAYARASA
4 adress: DEPT OF EDUCATION
UNIVERSITY OF JAFFNA
Edition: FIRST, 2002
Subject: EOUCATIONAL COUNSELLO
Cover Design: RAMANI
Printer sad Publisher. BOASCO ARTONE PRINTERS
NALLUR JAFFNA,
rice Rs... 100/-

முன்னுரை
கல்விச் சீர்மியம் தொடர்பான அனைத்துக் கூறுகளையும் ஒன்றிணைத்துத் தமிழில் வெளிவரும் ஒரு முன்னோடி நூலாக்கமாக இது அமைகின்றது.
பள்ளிக்கூடக் கலைத்திட்டத்திலும், பல் கலைக் கழகங்களினது கலைத்திட்டங்களிலும் கல்விச் சீர்மியம் என்பது உலகளாவிய முக்கியத் துவத்தைப்பெறும் இன்றைய காலகட்டத்தில் இவ் வாறான ஒரு நூலாக்கம் தவிர்க்கமுடியாத தேவையாக எழுந்துள்ளது.
இந்நூலை எழுதுவதற்கு உற்சாகமும் ஊக் கமும் கந்க எமது பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர் களுக்கும், ஏனைய பேராசிரியர்களுக்கும், நண்பர் களுக்கும் உளமார்ந்த நன்றி உரித்தாகுக. இந் நூலின் 'உள்ளார்ந்த விசையை ஒவியமாக்கித் தந்த பல்கலைக்கழக சித்திரம் வடிவமைப்புக்கற்கை நெறி வருகை விரிவுரையாளர் நண்பர் ரமணியும் நன்றிக்குரியவர். இந்நூலை அழகுற அச்சிட்டு வழங்கிய போஸ்கோ நிறுவனத்தினரும் பாராட் டுக்குரியவர்கள்.
- நூலாசிரியர்.

Page 4
2.
0.
.
罩多。
ls.
4.
.
பொருளடக்கம்
பக்கம்
தணியாள் வேறுபாடுகள் a p si Ο
சீர்மியம் என்ற எண்ணக்கரு விளக்கம் p COj ۔
கல்விசார் ஆற்றுப்படுத்தல் - O അ 4.
கல்வியில் தரக்காப்பீடும் இடர்சிக்கிய
மாணவர்களும் w 2 ۔ papa 24
கல்வியில் உளநலன் w-w- 29
தொடர்தொழில் ஆற்றுப்படுத்தல் . o va .. 338 இலங்கையும் தொடர்தொழில் ஆற்றுப்படுத்தலும் 46
தீர்வுகளை நோக்கிய உளச்சிகிச்சை முறைகள் . 52
பிரச்சினை விடுவிக்கும் சீர்மிய நடவடிக்கை w YA (SO
சீர்மியச் செயல்முறை a a a S4 சீர்மிய செயல்முறையின் படிநிலைகள் 6.
சீர்மியச் செயல்முறையின்போது எநிர்கொள்ளப்படும் பிரச்சினைகளும் மீள்வதற்கான நுட்பங்களும் .
செவிமடுத்தல் நுட்பங்கள் sa se
"உளக்குலைவு" - மேலைத்தேச உளவியல் அணுகுமுறைகளின் அபத்தங்கள் US MH og PO 8
ஆளுமை நடையியலும் சீராக்றுைம் U e e
75
34
96.3
97

தனியாள் வேறுபாடுகள்
ஒவ்வொரு மாணவரிடத்தும் தனித்துவங்கள் காணப்பட்டாலும், பள்ளிக்கூடக் கலைத் திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் "பொதுவான அமைப்பியலை"க் கொண்டிருந்தமையால் பல சந்தர்ப் பங்களில் தனியாள் வேறுபாடுகள் நிராகரிக்கப்பட்டு விடுகின்றன. ஒவ்வொரு மாணவரதும் தனித்துவங் களை ஆராய்ந்து அறிந்து கல்வியை வழங்குவதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் கல்விச் சீர்மியம் (Educational Counselling) 560603T G&Furuyub.
தனியாளுக்குரிய தனித்துவங்கள் நிராகரிக்கப் படும் பொழுது உள முரண்பாடுகளும், நெருக்குவாரங் களும் ஏற்படத் தொடங்குகின்றன. சீராக்கப் பிரச் சினைகள் எழுகின்றன. நடத்தைகளிலே பிறழ்வுகள் ஏற்படத் தொடங்குகின்றன. இந்நிலையிலே பெற்றோர் கள் அவர்களைக் கண்டிக்கும் பொழுதும் தண்டனைகள் வழங்கும் பொழுதும் மேலும் சிக்கலான நிலைமைகள் வளர்ச்சிபெறுகின்றன.

Page 5
எமது நாட்டிலே பிறிதொரு பிரச்சினையும் காணப்படுகினறது. மாணவர்கள் தமக்குரிய பாடங் களையும் கற்கை நெறிகளையும் தெரிவு செய்யும் பொழுது, அவர்களின் தனித்துவங்களைக் கூர்ந்து நோக்காது, பெற்றோரும் மூத்தோரும் தமது விருப் பங்களையும் தெரிவுகளையும் பிள்ளைகள்மீது சுமத்தும் பொழுது நிலைமை மேலும் சிக்கலடைகின்றது.
தனியாள் வேறுபாடுகள் நிராகரிக்கப்படும் பொழுது, நிறைவு பெறாத ஆளுமை உருவாக்கம் நிகழ்வதால், ஒவ்வொரு மாணவரிடத்தும் மலரவேண்டிய புத்தாக்கங்களும் புதிய கண்டுபிடிப்புக்களும் ஏற்படா மல் போய்விடுகின்றன. தனித்துவம் மிக்க கலைஞர் களையோ, விஞ்ஞானிகளையோ, சிந்தனையாளர் களையோ, ஆற்றுகைத் திறனுள்ளவர்களையோ உரு வாக்க முடியாமற் போய்விடும். "அச்சில் வார்த்து எடுத் தல்" போன்ற அபத்தமான செயல்முறையைக் கல்வி முறைமை உருவாக்கிக் கொண்டிருத்தலை மாற்றி யமைக்கும் முயற்சிகளை விசைப்படுத்த வேண்டியுள்ளது.
இயற்கையிலே காணப்படுகின்ற பலவகையான கோலங்களையும், வேறுபாடுகளையும், மாறுபாடுகளை யும் கூர்ந்து கவனிக்கவேண்டியுள்ளது. மனிதப் பண்பாடு களிலே காணப்படும் பன்முகத்தன்மைகளை ஆழ்ந்து உற்றுநோக்க வேண்டியுள்ளது. அனைத்திலும் பன்முகப் பாங்குகள் காணப்படும் பொழுது, மனித நடத்தை களிலும் உளப்பாங்குகளிலும் பன்முகப் பாங்குகள் காணப்படும் என்பதைத் தொடர்புபடுத்தி நோக்க வேண்டியுள்ளது.
தனியாள் வேறுபாடுகளுக்குரிய காரணிகளை அடுத்து நோக்கும் பொழுது முதலாவதாக பிறப்பு வழியான "மரபு அணு' பற்றிய ஆய்வுகள் இன்று பெருமளவு முக்கியத்துவம் பெறுதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஒவ்வொருவரதும் உடற் கட்டமைப்பு. உயரம், பருமன், முகவடிவமைப்பு, கேசம், கண்களின்
2 as

அமைப்பு, மூக்கின் தோற்றம் முதலிய உடற் கூற்றுப் பண்புகளில் 'மரபு அணு சிறப்பார்ந்த பங்கு வகிப்ப தாக ஆய்வாளர்கள் கூறுவர். கருவுற்றிருக்கும் பொழுது தாய்க்கு ஏற்படும் அனுபவங்களும், நோய்களும், உணவு ஊட்டமும் குழந்தைகளின் தனித்துவங்களிலே செல் வாக்குச் செலுத்துகின்றன. குழந்தை பிறந்தபின்னர் குழந்தைக்குக் கிடைக்கப்பெறும் குடும்பச் சூழல், வளர்ப்பு முறைமை, பழகும் பொருட்கள், இடைவினை முறைமை முதலியனவும் தனித்துவங்களை ஏற்படுத்து வதிலே பங்களிக்கின்றன.
ஒரே குழலில் வாழும் “சகோதரர்களிடையே கூட தனித்துவமான சிந்தனைகளும், நடத்தைகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புக்கள் இருப்பதை ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. மனிதரிடத்து உள்ளிருந்து எழும் தேவைகளான பசி, தாகம், தூக்கம், நோய் எதிர்ப்பு உந்தல்கள் முதலியவற்றை அவரவர்களாகவே நிறை வேற்றும் பொழுது தனியாள் வேறுபாடுகள் தோன்று வதற்குரிய வாய்ப்புக்கள் அதிகமாகின்றன. ஒருவருக்காக இன்னொருவர் சாப்பிட முடியாது என்பது முதுமொழி. உடல் சார்ந்த தொழிற்பாடுகள் சூழலாலும், கல்வியாலும், வேறுபடும்பொழுது உடலியக்கம் நிலைப் பட்ட தனியாள் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
புலக்காட்சி கொள்ளல், மற்றும் உள அமைப்பு, அறிகை அமைப்பு (Cognitive Structure) அறிகைத் தொழிற்பாடு முதலியனவும் தனியாள் வேறுபாடுகள் தோன்றுவதற்குரிய காரணிகளாகின்றன. ஒருவர் அறிவைத் திரட்டிக்கொள்ளும் விதம், மனத்திலே சுழலை ஒழுங்கமைக்கும் பண்பு, சூழலுடன் தழுவிக் கொள்ளும் விதம், காரணம் காணும் முறைமை, எண்ணக்கருவாக்கம், பொதுமையாக்கம், அறிவைப் பிரயோகிக்கும் உளச்செயற்பாடு முதலியனவும் தனித் துவ உருவாக்கத்திலே பங்கு கொள்ளுகின்றன.
இவை தொடர்பாக இருநிலைச் செயற்பாடு காணப்படும். அதாவது அறிகைச் செயற்பாடுகளுக்
p 3

Page 6
கேற்றவாறு தனித்துவம் உருவாகும். மறுபுறம் தனித் துவத்துக்கேற்றவாறு அறிகைச் செயற்பாடு அமையத் தொடங்கும்.
மனவெழுச்சி விருத்தியும் தனியாள் வேறுபாடு களுடன் தொடர்புடையதாகும். அன்பு, கோபம், பயம் ஆத்திரம், பதகளிப்பு, மகிழ்ச்சி முதலாம் மனவெழுச்சி கள் ஒருவரது தனியாள் வேறுபாடுகளுடன் தொடர் புடையனவாகவே வளர்ச்சியும் விருத்தியும் அடையும்.
மேலும், தனியாள் வேறுபாடுகளை உருவாக்கும் காரணிகளாக சூழலின் கவிநிலை, சூழலில் நிகழும் தொடர்பாடல் முறைமை, மொழியாட்சி முதலியனவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
சமூக மொழியியல், உள மொழியியல் போன்ற துறைகளில் நிகழும் ஆய்வுகள் ஒருவரது தனித்துவத் துக்கும் மொழிக்குமுள்ள தொடர்புகளை நன்கு வெளிப் படுத்துகின்றன.
ஒருவரால் அனுபவிக்கப்படுகின்ற தொடர்பு சாதனங்களின் இயல்பும், தொடர்புசாதன உள்ளடக்கத் தின் ஆற்றலும், வலிமையும் தனித்துவங்களை உரு வாக்குவதிலே பங்குகொள்ளுகின்றன. சமூகக் கற்றற் Gasn't in G. (Social Learning Theory) gabal Lifistu பரந்த விளக்கத்தைத் தருகின்றது. சிலவகையான ஆளுமைக் காட்டுருக்களோடு (Models) ஒன்றிணைந்து தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பொழுதும் எதிர்மறை யான காட்டுருக்களை நிராகரிக்கும் பொழுதும் ஒரு வரிடத்தே தனித்துவமான நடத்தைக் கோலங்களும் விருப்பு வெறுப்புக்களும் உருவாகின்றன.
ஒவ்வொருவருக்கும் கிடைக்கப் பெறுகின்ற பிரச் சினைகள், அவர்களுக்கே உரிய சவால்கள், குடும்பத் திலும் சமூகத்திலும் கல்வி நிலையங்களிலும் அவர் வகிக் கும் நிலை, அவருக்குத் தரப்படும் நடிபங்குகள், பொறுப்

புக்கள், வெகுமதிகள், அவமதிப்புச்கள் முதலியனவும் தனியாள் வேறுபாடுகளை உருவாக்கும் காரணிகளா கின்றன.
உளப்பகுப்பு உளவியலாளர்கள் ஒருவருக்குரிய தனியாள் வேறுபாடு அவருக்குரிய நனவிலி ஊக்கலின் இயல்பினாலும், இட், ஈகோ, சுப்பர் ஈகோ முதலிய ஆளுமைப் பரிமாணங்களின் இயல்பினாலும் உருவாக்கப் படுவதாகக் கூறுவர்.
இந்து உளவியலை வலியுறுத்தும் ஒரு சாரார் தனியாள் வேறுபாடுகள் அவரவர்க்குரிய ஊழ்வினைப் பயனாய் தோன்றுகின்றதென்பர்.
தேவைக் கோட்பாட்டை வலியுறுத்தும் உள வியலாளர், ஒவ்வொருவருக்குமுரிய தேவைகள் நிறை வேற்றப்படும் கோலங்களின் அடிப்படையாகவே தனி யாள் வேறுபாடுகள் மலர்ச்சியுறுவதாகக் கூறுவர்.
மார்க்சிய உளவியலாளர்கள் தனியாள் வேறு பாடுகளின் வழியாக சமூக வர்க்கத்தின் (Social Class) வலு எவ்வாறு முகிழ்த் தெழுகின்றது என்பதை ஆராய்கின்றனர்.
பின்வரும் வெளிப்பாடுகளில் இருந்து தனியாள் வேறுபாடுகளைக் கண்டறிந்து கொள்ளலாம் என்று உளவியலாளர் குறிப்பிட்டுள்ளனர்.
1. ஒவ்வொரு பாடத் துறைகளிலும், ஒவ்வொரு கற்கை அலகுகளிலும் மாணவர் காட்டும் வெளிப் பாடுகள். 2. உளச்சார்பு வெளிப்பாடுகள்.
விருப்பு, வெறுப்பு வெளிப்பாடுகள். 4. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் ஒருவர் நடந்து
கொள்ளும் விதம். 5. பொழுதுபோக்கு வெளிப்பாடுகள்,

Page 7
4,
உடலியக்கம் "சார்ந்த வெளிப்பாடுகள், சீாாக்க முறைமை,
மனோபாவத் துலங்கல்கள். ஆற்றுகை வெளிப்பாடுகள். படிப்பதற்குரிய நூல்களைத் தெரிவு செய்தல். பின்பற்றப்படும் சந்தர்ப்பங்கள், காட்சிகள், மணி தர்கள், பாத்திரங்கள். உணவு விருப்பும், உணவுப் பழக்கமும். தெரிவு செய்யும் உடைகளும், வண்ணங்களும், தளபாடங்களும்.
ஆக்கநிலை வெளிப்பாடுகள்
உளவியலாளர்கள் மனவெழுச்சித் துலங்கல்களில்
இருந்தும் தனியாள் வேறுபாடுகளை இனங்காண முயல்
Sufi
பின்வரும் நடத்தைகள் இவ்வகையில் உற்று
நோக்கத் தக்கவை:
அமைதியும், பின்வாங்கலும், சுறுசுறுப்பும், வசீகர மும்.
பாடங்களில் விருப்பும் வெறுப்பும்.
பள்ளிக்கூடத்துக்கு வராது விடுதலும், வருதலும் தனித்திருத்தலும், கூடிப் பழகுதலும். பிறர் உணர்வுகளுடன் பங்கேற்பதும், பங்கேற் காமல் விடுதலும், பிறருக்கு ஊறு செய்தலும் அன்பு செலுத்துதலும். வன்நடத்தைகளும் அரவணைப்பு நடத்தைகளும். புறங்கூறலும் நேர்படத் தெறித்தலும், பயமும் துணிவும் மனவெழுச்சிச் சமநிலையும், சமநிலைக் குலைவும் தலைமைத்துவ எழுச்சிக் கோலம்.
கணிப்பீட்டுத் திட்டங்கள் வாயிலாகத் தனியான்
வேறுபாடுகளைக் கண்டறிதல் வேண்டுமென்று புதிய கலைத்திட்டச் சீர்திருத்தங்களிலே குநிப்பிடப்பட்டுள்
6

ளது. புதிய கலைத்திட்டத்திலே தரப்பட்டுள்ள விருப் பத்துக்குரிய பாடங்களைத் தெரிவு செய்யும் சுதந்திர மும் தனியாள் வேறுபாடுகளுக்கு உரமூட்டுகின்றது. செயல் முறைகள் வாயிலாகக் கற்பித்தல், செயற்பாட்டு அறை, செயற்றிட்டங்கள் முதலியனவும் தனியாள் வேறு பாடுகள் மீது செலுத்தப்படும் அக்கறையினை வெளிப் படுத்துகின்றன. பள்ளிக்கூடங்களில் ஒழுங்கமைக்கப் படும் இணைந்த கலைத்திட்டச் செயற்பாடுகளும் இத் துறையில் பரந்த பங்களிப்பைச் செய்கின்றன. இளம் விஞ்ஞானிகளை உருவாக்குதல், இளங்கலைஞர்களை உருவாக்குதல், இளம் எழுத்தாளர்களை உருவாக்குதல் முதலியவற்றின் வழியாகவும் தனியாள் வேறுபாடுகள் துலங்கமுடியும்.
பல்கலைக்கழக புதிய சீர்திருத்தத்தின்படி பாடத் தெரிவுகளிலே காட்டப்படும் நெகிழ்ச்சித் தன்மையும் புதிய புதிய பாடங்களின் அறிமுகமும், புதிய புதிய கற்கை நெறிகளின் அறிமுகமும் தனியாள் வேறுபாடு களுக்கு ஒரு வகையிலே உறிசாகம் தருகின்றன
கல்விச் சீர்மியம் தனியாள் வேறுபாடுகளைத் தழுவிச்செல்லும் வகையில் அமைக்கப்படுகின்றது.

Page 8
சீர்மியம் என்ற எண்ணக்கரு விளக்கம்
சீர்மியம் அல்லது உளவளத் துணை என்பது எப்பருவத்தினருக்கும், எந்தத் தொழில் புரி வோருக்கும் வேண்டப்படும் ஒரு தேவையாக மாறி வருகின்றது. ‘உளநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கே சீர்மியம்' என்பது தவறானதும் வழுவானதுமான கருத் தாகும். அனைவருக்கும் உரியதே சீர்மியம் என்பது நவீன கருத்தாகும்.
சித்தனைத் தூண்டல்களாலும் சிந்தனைக் கிளறல் களாலும் ஒருவர் தமது உள்ளத்தை வளம்படுத்தலும் உள அபிவிருத்தியை முன்னெடுத்தலும் சீர்மியத்தின் செயற்பாடாகும். உள்ளம் வளிம் பெறும்பொழுது, உடலியக்கமும், மன வெழுச்சிக் கோலங்களும் வளம் பெறும். இது இருநிலை வினை கொண்டது. உடலும் மனவெழுச்சிகளும் வளம்பெறும் பொழுது உள்ளமும் வளம்oபறும். அதாவது உடல், உள்ளம், மனவெழுச்சி ஆகியவை ஒன்றிணைந்து மேம்பாடு பெறுதற்கு சீர்மியம் துணை நிற்றல் வேண்டும். V
8

சமூக பண்பாட்டுச் சூழல்களும் வாழ்க்கை வினைப்பாடுகளும் பல்வேறு முரண்பாடுகளையும் உராய்வுகளையும் தரவல்லவை. சூழற் கேள்விகளுக்கு (Environmental Demand) (p45th Gastodids 6,6061Tu உதவுதலே சீர்மியமாகும்.
சூழலின் கேள்விகளுக்கும் மனிதரின் உடல், உள்ள மனவெழுச்சி வளங்களுக்குமிடையே சமநிலையை ஏற் படுத்தவேண்டும். சமநிலையும், இசைவும் ஏற்படாவிடில் சீராக்கப் பிரச்சினைகளும் உள நெருக்குவாரங்களும் ஏற்படத் தொடங்கும். இந்நிலையில் சூழலை மாற்றி யமைப்பதற்கு உதவும் செயற்பாடு, 'புறநிலை மலர்ச்சி' என்றும், சூழலுக்கேற்றவாறு ஒருவர் தம்மை மாற்றி யமைக்கும் செயற்பாடு "அகநிலை மலர்ச்சி"யென்றும் கூறப்படும். ஒரு குறிப்பிட்ட கட்டம்வரை உடலும் உள்ளமும் பிறதுணையின்றித் தம்மைத் தாமாகவே மாற்றியமைத்து சூழலுக்கேற்றவாறு இசைவாக்கம் செய்யவல்லவை. குறிப்பிட்ட கட்டத்தைக் கடக்கும் நிலையில் பிற சாதனங்களின் உதவி அல்லது சீர்மியம் வேண்டப்படும். இந்தநிலை மாறும் கோடு அல்லது பிரிகோடு "செங்கோடு" எனப்படும்.
ஆங்கில மரபில் சூழல் மாற்றும் செயல்முறை (Aloplastic) என்றும், தனிமனிதர் தம்மை மாற்றிக்
கொள்ளல் (Autoplastic) என்றும் குறிப்பிடப்படும்.
சீர்மிய நாடிமீது சீர்மியர் தமது கருத்துக்களை ஏற்றிவைத்தல் உளவளத் துணையாகாது. சீர்மியம் ஒரு பணிப்பு நடவடிக்கையன்று. ஒருவரது மனச் சுமையை இன்னொருவர் மீது திணித்து விடுதலும் சீர்மியமாகாது. ஒருவர் தாமே தெளிந்த தீர்மானங் களை எடுப்பதற்கும், தமக்குத் தாமே இசைவான கருத்தேற்றம் செய்வதற்கும், தாம் சுமக்கும் மனச் சுமைகளை எளிதாக்கி இதமாக்கவும் உதவுதலே சீர்மிய
மாகும்.
தமது நடத்தைகளை, தமது செயற்பாடுகளை, தமது எதிர்காலத்தை ஒருவர் சாதுரியமாகவும், நிதான - 9

Page 9
மாகவும், வளமுள்ளதாகவும் உருவாக்கிக் கொள்வதற்கு உதவுதல் சீர்மியச் செயல்முறையாகும். ‘ஒருவர் தன் னுள்ளாகத் தன்னைப் பார்க்கச் செய்வதே சிறந்த தரிசனமாகும். தமது நிலையைத் தாமே அறிய வைத் தல், தமது பலத்தைத் தாமே அறிய வைத்தல், தமது சுகத்தைத் தாமே அறிய வைத்தல் சீர்மியமாகின்றது. சீர்மியநாடியின் தரவுகளையும், சூழலின் தரவுகளையும் புரியவைப்பதே சீர்மியமாகின்றது ஒழுங்கமைக்கப்பட்ட 667Ga Tri Gafushun Ln 5 (Organised Exploratory Activity) சீர்மியம் அமைகின்றது.
வேறுபடும் மனிதர்களையும், வேறுபடும் மனங் களையும், வேறுபடும் சூழலையும் உணரச் செய்யும் நடவடிக்கையைச் சீர்மியம் முன்னெடுக்கின்றது. வாழ் வின் நேர்முக அழுத்தங்களையும் எதிர்முக அழுத்தங் களையும் அது உணரவைக்கின்றது. மாமூலான வழி களையும் மாற்று வழிகளையும் அது விபரிக்கின்றது
சீர்மியம் என்பது உள்ளத்தை மலர்விக்கச் செய் யும் (Unfolding) ஒரு நடவடிக்கையாகும். ஆற்றல் களைக் காட்டுதல், காட்சிகளைக் காட்டுதல், தரிசனங் களைக் காட்டுதல் என்றவாறான கட்டவிழ்த்துவிடும் நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்படுகின்றது. சீர்மியத் தினால் தனிமனித இயக்கம் (Dynamics), குழு இயக்கம், சமூக இயக்கம் முதலியவை உணர்த்தப்படுகின்றன. இயக்கத்தின் விசைகளும் பெயர்ச்சிகளும் எடுத்துக் காட்டப்படுகின்றன.
புலக்காட்சியில் (Perception) தெளிவு, துணிவு, இசைவு முதலியவை சீர்மியத்தினால் ஏற்படுத்தப்படு கின்றது. "தெளிவு குருவின் திருமேனி காணல்’ என்று திருமந்திரத்தில் குறிப்பிடப்படுதல் இங்கு மீள வலியுறுத் தத்தக்கது. புலக்காட்சித் தெளிவு, சிந்தனையிலும் செயலிலும் தெளிவை ஏற்படுத்தும், காட்சியில் தெளிவு உண்டாயின் நடத்தையில் தெளிவு உண்டாகும்.
0 o

புலக்காட்சியின் வழியாக உளப்படிமங்களிலே தெளிவை உண்டாக்குதல் அடுத்து முக்கியத்துவம் பெறுகின்றது. முரண்பாடுகளை அறிதலும், முரண்பாடு களின் இணக்கத்தையும், பிறழ்வுகளையும் விளங்குதலும் வழியாக எழும் உள முன்னேற்றமே தெளிவு" என்பதன் பொருளாகும்.
தன்னமைவாக்கற் செயல் முறையிலும் (Assimilation Process) நேர்முகமான மேம்பாடுகளை ஏற்படுத் துதல் சீர்மியமாகும். ஒருவரது சிந்தனையின் இருப்பை அறியவைத்து, உணர்ச்சிகளின் இருப்பை அறியவைத்து, அவற்றுக்கு இசைவுறும் வகையிலே அறிவை உள்வாங்க வைத்தலும் தெளிவுறப் போராட வைத்தலும் தன்னமை வாக்கற் செயல்முறையில் அடங்கும். இவ்வாறே தன்ன appa, Taissib Gafuái (p65) spa) tu (Accommodation Process) வளம்படுத்துதலும், மேம்படுத்துதலும் சீர்மியத்தில் இடம்பெறும். உளஇருப்பு மற்றும் உணர்ச்சி இருப்புக் களில் இடம்பெறாத புதிய கருத்துக்களையும் உணர்ச்சி களையும் புதிதாகச் சேர்த்துக்கொள்ளும் செயல்முறை யினை ஆக்கபூர்வமானதாகவும் வினைத்திறன் மிக்க தாகவும் அமைத்து நேரிய சிந்தனைகளையும், நேரிய நடத்தைகளையும் வளர்ப்பதற்கு சீர்மியம் வளர்க் கின்றது.
புறவுலகை விளங்குதற்கு உதவுதல் போன்று ஆழ்மனத்தை விளங்குவதற்கும். நனவிலி மனப்புதையல் களைத் தரிசிப்பதற்கும் உதவுதல் சீர்மியமாகும்.
சீர்மியம் என்பது பிரச்சினை விடுவித்தலுக்குரிய உளவலுக்களை சுயமாக வளர்த்தலுக்கு உதவுதலாகும். பிரச்சினைகளை உருவாக்கும் விசைகளை இனங்காணல், பிரச்சினையின் மூலக்கூறுகளையும், பரிமாணங்களையும் மதிப்பீடு செய்தல், அடுத்து முக்கியத்துவம் பெறுகின் றது. அவற்றைத் தொடர்ந்து தீர்வுக்குரிய வழிவகை களையும் வலுக்களையும் முன்னெடுப்பதற்கான வளம் செய்யும் நடவடிக்கைகள் சீர்மியத்தின் வழியாக உரு வாக்கப்படுகின்றன.
a 1.

Page 10
சீர்மியம் என்பதன் பிறிதொரு விளக்கம் ஒருவர் தம்மைத்தாம் 'புறநிலையில் நின்று மதிப்பீடு செய்யும் திடத்தையும், உபாயங்களையும் வளர்ப்பதற்கு உதவுத லாகும். புறநிலை மதிப்பீடுகளை மீளவலியுறுத்துதலும், பயனுள்ளதாக்குதலும் இங்கு சிறப்பிடம் பெறும்.
நேர்கொண்ட செயற்பாடுகளை நோக்கிய ஊக்கல் முனைப்புக்களை (Motivation) வளர்த்தலும், சித்த வலுவை தெளிவுறுத்துதலும் சீர்மியத்தில் இடம்பெறும். 'கோட்பாடு', நடைமுறை" என்ற இரு பரி மாணங்களைச் சீர்மியம் கொண்டுள்ளது. எமது பண் பாட்டுப் பின்புலத்தை விளங்கிக்கொள்ளாது, மேலைப் புலச் சீர்மியக் கோட்பாடுகளைப் பொருத்தமற்ற சந் தர்ப்பங்களில் பிரயோகிப்பதும் தவறாகும்.
சுரண்டும் மக்களுக்குரிய சீர்மிய நுட்பவியல் களைச் சுரண்டப்படும் மக்களுக்குப் பயன்படுத்துதலும் பொருத்தமற்ற செயற்பாடாகும்.
சீர்மியம் பற்றிய எண்ணக்கரு விளக்கத்தில் பிறிதொரு கருத்தையும் பரிசீலிக்கவேண்டியுள்ளது. மனித நுண்மதியோடு தொடர்புடையதும் மனித நுண் மதியை நெறிப்படுத்தக் கூடியதுமான நித்தியமானதும் உன்னதமானதுமாகிய ஒரு பெரும் நுண்மதி அல்லது மீநுண்மதி உண்டென்றும் அந்த நுண்மதியுடன் ஏற்படுத் தப்படும் தொடர்புகளினால் உளச்சுகம் எட்டப்பட முடியும் என்ற விதந்துரை உள்ளடக்கமும் சீர்மியத்தில் வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது. உளநலம் வேண்டு பவருக்கும், பெரும் நுண்மதிக்குமிடையே இசைவையும் இணைப்பையும் ஏற்படுத்தும் தரிசனமும் சீர்மியருக்கு இருத்தல் வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
இந்தத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு தியானம், தவம், சாதனை முதலியவை துணைசெய்யும் என்று கருதப்படுகின்றது. மீநுண்மதியுடன் தொடர்பாடலை ஏற்படுத்தவல்ல ஊடகங்களைக் கண்டறிதலும் முக்கி யத்துவம் பெறுகின்றன.
12 ao

தளநுண்மதி நிலையில் இருந்து மேம்பட்ட நுண் மதி நிலைக்குரிய நிலைமாற்றத்தை ஒருவர் ஏற்படுத்து மிடத்து மீநுண்மதியுடன் தொடர்புகள் சாத்தியப் படத்தக்கதாக அமையும்.
இயற்கையால் உருவாக்கப்பட்ட தாக்கங்கள், தனிச் சொத்துரிமையின் வளர்ச்சி காரணமாக மனிதர் மனிதர்களுக்கு உருவாக்கிய பாதிப்புக்கள் முதலியவை மனித மனங்களிலே நெருடல்களை ஏற்படுத்தின. அந் நிலையில் பூர்வீக மனிதர் துர் ஆவிகளினால் தமது உள்ளம் பாதிக்கப்படுகின்றது என்று ஒரு தளத்தில் எண்ணினர். அந்நிலையில் சீர்மியம் என்ற எண்ணக் கருவானது, ஆவி விரட்டல் சடங்குகளுடனும், மாய வித்தைகளுடனும் இணைந்திருந்தது.
அறிவின் படிமலர்ச்சியானது சீர்மிய எண்ணக் கருக்களில் மாற்றங்களை வருவித்தது. ஆடல், பாடல் நோன்பு முதலியவற்றால் உளச்சுகம் தேடும் உபாயங்கள் வளரலாயின. அறிவும் தேடலும் மேலும் வளர்ச்சியடைய தியானம், ஞானம், தரிசனம் வழியான சீர்மியம் நாடல் வளர்ந்தது.
ஒவ்வொருவரதும் அதீத இலக்குகளை அவரால் அடையப்படக்கூடிய யதார்த்த இலக்குகளாக மாற்றி யமைப்பதற்குரிய உபாயங்களைச் சீர்மியம் கொண்டிருக் கும். இதனோடிணைந்த பிறிதொரு கருத்தும் சீர்மியத் திலே குறிப்பிடப்படுகின்றது. அதாவது ஒருவர் இன்பம், துன்பம் என்ற இரண்டு தளங்களுக்கும் இடைப்பட்ட நடுத்தளத்தில் வாழப் பழகிக்கொள்வாரானால் மனச் சுகமும் இசைவாக்கமும் எளிதாகிவிடும் என்பதை உணர்த்துதலும் சீர்மியத்தால் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. உளவளத்துணையில் இது "உளச்சுக நடுவம்' என்று குறிப்பிடப்படும். உளச்சுக நடுவக் கோட் பாட்டினை ஒவ்வொரு சீர்மியரும் அறிந்திருக்கவேண்டி யுள்ளது.
- 13

Page 11
கல்விசார் ஆற்றுப்படுத்தல்
கல்விசார் பிரச்சினைகளை ஒரு மாணவர் எதிர்கொள்ளும் பொழுது கல்விசார் ஆற்றுப் UG) 556 (Educational Guidance), Lofboth 6669&ntri Still futi (Educational Councelling) Cougar L'il IGSai, நறது. சூழலின் தேவைகளுக்கும், கேள்விக்கும் ஒரு மாண வர் ஈடுகொடுக்க முடியாத நிலையில் இசைவாக்கப் பிரச்சினைகள் இதழ்விடத் தொடங்குகின்றன.
இசைவாக்கல் செயல்முறை பொதுவாக இரண்டு நிலைகளில் ஏற்படுத்தப்படலாம், அவை
1) பிறநிலை மாற்றம்
(Aloplastic) 2) தன்நிலை மாற்றம்
(Autoplastic) சூழலை மாற்றியமைத்து ஒருவரிடத்துக் கல்வி சார் இசைவாக்கத்தை ஏற்படுத்துதல் *பிறநிலை மாற் றம்’ எனப்படும். சூழலுக்கேற்றவாறு ஒருவர் தம்மை மாற்றிக் கொள்ளுதல் 'தன்னிலை மாற்றம்’ எனப்படும்.
14 -

கல்விச் செயல்முறையில் நாளாந்தமும், கல்விச் சுற்றுவட்ட முடிவிலும் மாணவர்கள் பல பிரச்சினை களையும் இடர்களையும் எதிர்கொள்ள நேரிடுகின்றது. இந்நிலையில் ஆற்றுப்படுத்தல் மற்றும் சீர்மியம் ஆகி யவை வேண்டப்படுகின்றன. ஆற்றுப்படுத்தலும், சீர்மிய மும் பணிப்பு நடவடிக்கைகளோ அல்லது திணிக்கும் நடவடிக்கைகளோ அல்ல. மாணவருக்காக ஆசிரியர் அல்லது சீர்மியர் மேற்கொள்ளும் தீர்மானங்களும் அல்ல. அல்லது மாணவரின் பிரச்சினைகளை ஆசிரியர் உள்வாங்கித் தாமே சுமக்கும் நடவடிக்கையும் அல்ல.
பிரச்சினையுடன் வரும் மாணவர் தாமே சிந்தித்து, தாமே நியாயங்கண்டு, தாமே சில பொருத்தமான தீர்மானங்களை எட்டுவதற்கு உதவுதலே ஆற்றுப்படுத் தலும் சீர்மியமுமாகும். 'தன்னைத் தன்னுள்ளாகப் untii.55's) die (See Through Himself) 2.565Ga) ஆற்றுப்படுத்தலாகும், இந்தச் செயல்முறை இரண்டு படிமானங்களைக் கொண்டது.
1) மாணவரின் தனியாள் ஆற்றல், அவருக்கே உரிய தனித்துவமான நிலவரங்கள். அவரின் பலமும் பலவீனமும் முதலியவற்றை யதார்த்த நிலையில் புரிய வைத்தல்,
2) சூழலின் தேவைக்கும் கேள்விக்கும் ஏற்ற வாறு தம்மை மாணவர் மதிப்பீடு செய்யவும் உருவாக் கிக் கொள்ளவும் உரிய உள ஆற்றலை வளர்க்க உதவுதல்,
அதாவது மாணவரின் தரவுகளுக்கும் சூழலின் தரவுகளுக்குமிடையே இசைவாக்கத்தை ஏற்படுத்த ஆற்றுப்படுத்தலின் வழியாகத் துணை செய்யவேண்டி புள்ளது.
saivalsFrrr} ஆற்றுப்படுத்தலில் பின்வருவன வற்றைக் கருத்திற்கொள்ளுதல் வேண்டும். மாணவரின்,
1) உடல் ஆற்றல்கள்
2) உள ஆற்றல்கள்
- 15

Page 12
3) அடைவுகள்
4) மனவெழுச்சிக் கோலங்கள்
5) ஆற்றுகைத் திறன்கள்
6) சமூகத் திறன8ள்
7) படைப்பாற்றல்கள்.
இச்சந்தர்ப்பத்தில் இரண்டு விடயங்கள் மீது ஆசிரியர் கவனம் செலுத்துதல் வேண்டும். அவையாவன:
1) ஒரு மாணவருக்கும் மற்ற மாணவர்களுக்கு மிடையே காணப்படும் தனிநபர் வேறுபாடுகள்.
2) ஒரு மாணவரின் உள்ளே அமைந்துள்ள தனித் தனி ஆற்றல் வேறுபாடுகள்.
எந்த ஒரு மாணவரும் சமூகத்துக்குச் சுமையான வரல்லர். ஏதோ ஒர் ஆற்றல் அல்லது பல ஆற்றல்கள் ஒவ்வொருவரிடத்தும் புதைந்திருக்கும்.
ஆற்றல் உள்ள ஒருவருக்கு தம்மிடம் என்ன ஆற்றல் உள்ளது என்பதை அறியாதிருத்தலை அறிய வைத்தல் ஆசிரியரின் சீரிய பணியாகின்றது.
இந்நிலையில் கல்விசார் ஆற்றுப்படுத்தல் பின் வரும் இலக்குகளைக் கொண்டிருக்கும்:
1) ஒவ்வொருவரிடத்தும் உட்பொதிந்துள்ள ஆற்றல்களை உணர்த்துதல்.
2) மனிதத் தொடர்புகளைப் புரியவைத்தல் 3) சமூக விசைகளையும், முரண்பாடுகளையும் உணர வைத்தல்
4) Gisi gibga) saoot (Positive Performance) வளர்க்க உதவுதல்.
5) பொருளாதாரப் பாதுகாப்பை வளர்க்க உதவுதல்
6) உளவியற் பாதுகாப்பை வளர்க்க உதவுதல்,
ஆற்றுப்படுத்தல் மற்றும் சீர்மியம் ஆகியவற்றில் ஈடுபடும் ஆசிரியர்களுக்குரிய பொறுப்புக்கள் பின்வரும் காரணிகளால் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன:
6 a.

1) பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளுக்கிடையே பெரும் வீச்சுக்கள் ஏற்பட்டு வருகின்றன.
2) கல்வி இலக்குகளும், கல்வி வாய்ப்புக்களும், பாடத் தெரிவுகளும் பல்கிப்பெருகி வருகின்றன.
3) வேலை உலகும், வேலை நுழைவும் வெகு சிக்கலடைந்து வருகின்றன. பொதுவாக 3000க்கு மேற் பட்ட தொழிற்பட்டியல்கள் வளர்முக நாடுகளிலே வெளியிடப்பட்டுள்ளன.
4) கோள்மயமாக்கல், தகவல் தொழில்நுட்பம் முதலியவை மாணவர்மீது நேரடியான செல்வாக்குகளை ஏற்படுத்திவருகின்றன.
5) கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளில் சிறப்பு வினைகளை உள்ளடக்கிய தொழிற் பிரிவுகள் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளன.
6) அரசியல் மாற்றங்களும் அபிவிருத்திகளும் மாணவர்மீது செல்வாக்குகளை ஏற்படுத்துகின்றன.
7) பரந்துபட்ட மனிதவள மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
8) தொழில் நுட்பவியல், வடிவமைப்பியல் முதலியவற்றில் விசைகொண்ட மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
9) கலையாக்கம், மற்றும் ஆற்றுகை நிகழ்ச்சி களிலே பெருக்கமும், நிதியாதாரங்களும் வளர்ச்சிபெறத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் கல்விசார் ஆற்றுப்படுத்தற் பணி களை முன்னெடுப்பதற்குப் பின்வரும் துறைகளை வளம்படுத்தவேண்டியுள்ளது:
1) தனியாள் தரவுகள்
2) குடும்பப் பின்புலத் தரவுகள்
3) உடலியல் தரவுகள்
4) உளவியல் தரவுகள்
5) கல்விசார் தரவுகள்
17

Page 13
6) தொழில்சார் தரவுகள் 7) சமூகம்சார் தரவுகள் 8 சூழல்சார் தரவுகள் 9) ஆற்றுப்படுத்தல் மற்றும் சீர்மிய வளங்கள்
தொடர்பான தரவுகள். ஆற்றுப்படுத்தற் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் பல்வேறு நுண் உபாயங்களைப் பயன்படுத்தி தமது சேவையை வளம்படுத்த வேண்டியுள்ளது. அவற்றுக்குப் பொருத்தமான தேர்வுகளை வேண்டியவாறு பயன்படுத் துதல் வேண்டும். வகை மாதிரியாக சில எடுத்துக் காட்டுகள்:
1) சிறப்பார்ந்த ஆற்றல்களைக் கண்டறியும்
தேர்வுகள் 2) உளச்சார்புத் தேர்வுகள் 3) விருப்பு அறியும் தேர்வுகள் 4) ஆளுமைத் தேர்வுகள் 5) அடைவுத் தேர்வுகள் 6) வெளிப்படுத்தப்படாது உள்ளார்ந்திருக்கும்
திறன்களைக் கண்டறியும் தேர்வுகள் 7) இசைவாக்கத் தேர்வுகள். தேர்வுகள், தகுதி, நம்பகம், நடைமுறைச் சால்பு முதலியவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். மேற்கூறிய பண்புகளுள் நாம் எதை அளவிட முயல்கின்றோமோ அதை அளவீடு செய்யும் தகைமையைக் கொண்டிருத்தல் தகுதி (Validity) ஆகும். ஒரு தேர்வானது எப்பொழு தாவது அளவீட்டை மேற்கொள்ளும் பொழுதும் அதன் அளவீட்டு இசைவு பிறழாதிருத்தல் நம்பகம் (Reliability) எனப்படும்.
அதிக செலவு, அதிக நேரவிரயம் முதலிய பண்பு கள் இன்றி இலகுவாக செயற்படுத்தப்படும் தன்மை களை நடைமுறைச் சால்பு (Practicability) விளக்கும். தேர்வுகளின் மட்டுப்பாடுகள் (Limitations) பற்றிய அறிவு ஆசிரியருக்கு இன்றியமையாததாகும்.

உதாரணமாக, ஒரு நுண்மதித் தேர்வானது மாணவரின் அனைத்து ஆற்றல்களையும் அளவீடு செய்யும் என்று கொள்ளலாகாது. அல்லது அடைவுத் தேர்வுகளில் கூடிய புள்ளிகளை ஈட்டும் ஒருவர் நல்லொழுக்கமும் நற்பண்பு களும் கொண்டிருப்பார் என்று முடிவு செய்யலாகாது.
கல்வி ஆற்றுப்படுத்தலில் தர அளவுச் சட்டங்கள் வாயிலாகக் கருத்தறிதல், உற்றுநோக்கல் நுட்பங்கள், வாழ்க்கைச் சம்பவப் பதிவுகள், சுய அறிக்கைகள் (Self Report), தன் வரலாற்றுப் பதிவுகள், நேர்காணல், சமூகக்கணிப்பு (Sociometry) முதலிய நுண் உபாயங் களைப் பொருத்தமான சந்தர்ப்பங்களிலே பயன்படுத் துதல் வேண்டும். பின்வரும் நடவடிக்கைகளை ஆசிரியர் முன்னெடுத்தல் வேண்டும்:
1) மாணவருக்கும் ஆசிரியருக்குமிடையே இரு 6D 6a) g)609er6ay (Rapport)
2) ஆசிரியர் தந்திர (Trickly) வினாக்களைக் கையாளலாகாது
3) தமது பெறுமானங்களுக்கு மாறான கருத் துக்களையும் ஏற்றுக்கொள்ளல்.
அனைத்துத் தரப்பினரும் கல்விச் செயல்முறை யின் பயனை நுகர வேண்டுமாயின், மாணவர்களின் பன்முகப்பாடுகளை (Student Diversity) அறிந்து தொடர் ஆற்றுப்படுத்தலையும் சீர்மியத்தையும் ஒழுங்கமைத்தல் வேண்டும்.
கற்றலில் மாணவரிடையே பன்முகப்பாடுகள் காணப்படுதலை பின்வரும் எடுத்துக் காட்டுக்களினால் விளக்கலாம்:
அ) சில மாணவர்கள் இசையைக் கேட்டவாறு வினைத்திறனுடன் கற்பார்கள். ஆனால் வேறு சில மாணவர்களால் மிகுந்த அமைதியான சூழலிலேதான் படிக்க முடியும்.
o 9

Page 14
ஆ) சில மாணவர்கள் அதிக வெளிச்சமாயிருக் கும் பொழுதுதான் நன்றாகக் கற்பார்கள். ஆனால் வேறு சில மாணவர்கள் அதிக வெளிச்சத்திலே குளம்பி விடுவார்கள்.
இ) கணிதம் போன்ற பாடங்களைக் காலையிலே தான் சிலரால் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் சிலருக்கு இரவு நேரமே பொருத்தமானதாக இருக்கும்.
ஈ) சிலர் சாப்பிட்டவாறு நன்றாகப் படிப்பார் கள். சிலருக்கு அந்தச் செயல் ஒவ்வாததாக இருக்கும். உ) சில மாணவர்களது கவனநேரம் சுருங்கி யிருக்கும்; சிலருக்கு அது நீண்டிருக்கும்.
மேற்கூறியவை மாணவர்களது பன்முகப்பாட்டுக் குரிய சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. ஆனால் இவ்வாறு பல உதாரணங்களைக் குறிப்பிடலாம்.
மாணவர்களது பன்முகப்பாடுகளை விளக்குவதற் குக் கடந்த காலங்களில் நுண்மதி ஈவு (Q) என்ற கட்டளையத்தைப் பயன்படுத்தினர். நுண்மதி ஈவுத் தேர்வுகளிலே பல குறைபாடுகள் உண்டு என்பது பின்னர் நிரூபணமாயிற்று. இன்று "பன்முக நுண்மதிகள்' என்ற விரிவான அணுகுமுறை முன்வைக்கப்பட்டுள்ளது. (Howard Gardner, 1989) “дојGior LDS Fаролд 41 jög செல்லல்’ (Beyond the IQ) என்ற தொடரில் அவரால் விளக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தொடர் தொழில் ஆற் றுப்படுத்தலிலும் சீர்மியத்திலும் இன்று முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன.
கார்ட்னர் ஏழுவிதமான நுண்மதிகளையும் அவற் றுடன் இணைந்த ஆற்றுப்படுத்தல் மற்றும் சீர்மிய நடவடிக்கைகளையும் விளக்கியுள்ளார். அவையாவன: 1) அளவை சார்ந்ததும் கணிதம் சார்ந்ததுமான நுண்மதி: தொடர் தொழில் ஆற்றுப்படுத்தலைச் செய்யும் பொழுது இந்த நுண்மதிபடைத்தவர்களைக் கணிதத் துறைக்கோ விஞ்ஞானத் துறைக்கோ வழிப்படுத்தலாம்.
O

2) மொழிசார் நுண்மதி: இத்தகைய நுண்மதி மிக்கோரை எழுத்துத்துறை பத்திரிகைத்துறை முதலியவற்றுக்கு ஆற்றுப்படுத் தலாம். 3) உடல்சார் நுண்மதி: இத்துறையில் சிறந்து விளங்குவோரை விளையாட்டுத் துறை, ஆடல் மற்றும் சத்திர சிகிச்சைத்துறைகளுக்கு வழிப்படுத்தலாம். 4) இசைசார்ந்த நுண்மதி: இந்த ஆற்றல்மிக்கோரை, இசை ஆசிரியத்துவம், இசை யமைப்பு, கவிதைத்துறை முதலியவற்றிற்கு வழி காட்டலாம். 5) வெளி (Spatial) சார்ந்த நுண்மதி: இத்துறையில் மேலோங்கியவர்களை பொறியியல்துறை, சிற்பத்துநை, கடல் ஆய்வுத்துறை, வான் ஆய்வுத் துறை முதலியவற்றுக்கு ஆற்றுப்படுத்தலாம். 6) மனிதர்களுக்கிடையே ஊடாட்டம் கொள்ளும் (Inter
personal) biasi to 5: இத்துறையில் மேலோங்கியுள்ளவர்களை உளவியல்துறை விற்பனைத்துறை, கற்பித்தல்துறை முதலியவற்றுக்கு வழிப்படுத்தலாம். 7) தனக்குள்ளே தான் ஊடாட்டம் கொள்ளும் (Intra
personal) நுண்மதித்திறன்: தன்னை உணர்தல், தன்னை நெறிப்படுத்தல், தனது மனவெழுச்சியின் இயல்பைப் பொருத்தமாகக் கண் டறிதல் முதலியவை இத்துறையில் அடங்கும். இத்துறை யில் மேலோங்கியவர்கள் பிறர்க்கு வழிகாட்டுவதற்குப் பொருத்தமானவர்கள்.
ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவரதும் ஆற்றல் வேறுபட்டுச் செல்வதை விளங்கிக்கொள்வதற்கு பன்முக நுண்மதிக் கோட்பாடு பெருமளவிலே துணை செய்கின்
- 2

Page 15
றது. ஆனால் எமது நாட்டுக் கல்வி முறையானது மாண வர்களின் பன்முக ஆற்றல்களைத் தழுவி முன்னேற்றும் வகையிலே வினைத்திறனுடன் இன்னமும் திட்டமிடப் படவில்லை. வெறுமனே மனனம் செய்தல், கிரகித்தல், ஒப்புவித்தல் என்ற துறைகளில் மேம்பட்டவர்களுக்குப் பொருத்தமான வகையிலேதான் கல்விச் செயற்பாடுகள் பெருமளவில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் பன்முக ஆற்றல்களை விளங்கிக் கொள்வதற்குரிய பிறிதொரு சுட்டியாக விளங்குவது 'மனவெழுச்சி நுண்மதி (E ) ஆகும். டானியல் கோல்மன் என்ற உளவியலாளர் (1995) மனவெழுச்சி SăTLDg60) ulu (Emotional Intelligence) p567 ø5 66MTš6 யுள்ளார். அதாவது, மனவெழுச்சிகளைப் புரிந்துகொள் ளுதல், வெளிப்படுத்துதல், கட்டுப்படுத்துதல் முதலியவை மனிதர்களிடையே வேறுபட்டு நிற்கின்றன. மாணவர் களது தனியாள் வேறுபாடுகள், பன்முகக் கோலங்கள் முதலியவற்றின் துலக்கம் மனவெழுச்சி நுண்மதியுடன் தொடர்பு கொண்டுள்ளன. கல்விக்கு வழிகாட்டல், தொடர் தொழிலுக்கு வழிகாட்டல் முதலியவற்றை மேற்கொள்ளும் பொழுது, மனவெழுச்சி நுண்மதி பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும்.
மாணவரின் பன்முகப்பாட்டுக்கு வேறுபல கார ணங்களும் இருக்கின்றன.
அவையாவன :
1) உள வளர்ச்சி குன்றியிருத்தல் 2) உடல் வளர்ச்சி குன்றியிருத்தல் 3) கற்றல் குறைபாடுகள் காணப்படுதல் 4) வெளியிடும் ஆற்றல் குறைபாடுகள் காணப்
படுதல் 5) மனவெழுச்சித் தாக்கங்கள் 6) நடத்தை ஒழுங்குக்குலைவு 7) கேட்டற் குறைபாடு 8) பார்த்தற் குறைபாடு
22

9) உடலின் இயங்கும் ஆற்றல்களிலே குறைபாடு 10) மீத்திறன் வாய்ப்புக்கள் பெற்றிருத்தல் 11) சமூக மயமாக்கற் பின்னடைவுகள் 12) பண்பாட்டு மயமாக்கற் பின்னடைவுகள்.
எந்த ஒரு மாணவருக்குமுரிய கல்வி வாய்ப்புக் களோ, தொழில் வாய்ப்புக்களோ, உடல், உள்ளக் குறைபாடுகளினால் பாதிப்படையாமல் இருத்தலை உறுதிசெய்ய வேண்டியுள்ளது. இவற்றுக்கான சட்ட ஏற்பாடுகளும் பல நாடுகளிலே உருவாக்கப்பட்டுள்ளன.
அ) உடல் உள்ளக் குறைபாடு உடையவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொருத்தமான கல்வியையும் தொழிலையும் ஒழுங்கமைத்துக் கொடுத்தல் நவீன கல்வியிலே வழுவின்றி வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆ) உடல், உள்ளக் குறைபாடுடைய குழந்தைகள்
அவர்களுடைய சமவயதுக் குழுக்களால் ஒதுக்கிவைக்கப் படுதலையோ, புறந்தள்ளப்படுதலையோ எக்காரணம் கொண்டும் அனுமதிக்கலாகாது.
இ) தொழில் நிலையங்களில் உடல், உளக் குறை பாடுடையோர்மீது எதிர்மறையான பாகுபாடு காட்டு தல் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
ஈ) கல்வி தொடர்பாக யாதாயினும் குறைபாடு கள் தமக்கு இருக்குமாயின் அவற்றைத் தெரியப்படுத்தி ஆகவேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு.
உடல் உள்ளக் குறைபாடுடைய சிறுவர்கள் மீது சிறப்பார்ந்த கவனம் செலுத்தி அவர்களை மேல்நோக்கி நகர்த்துதல் போன்று மீத்திறன் உள்ள மாணவர்களை மேலும் மேம்பாடுடையவர்களாக மாற்றுவதற்கும் நட வடிக்கை எடுத்தல் வேண்டும்.
ത 23

Page 16
கல்வியில் தரக்காப்பீடும் இடர்சிக்கிய மாணவர்களும்
நவீன கல்வி உளவியலில் இடர்
$á6)u uDrr 67ði Sufi (At Risk Students) என்ற தொடர் சீர்மிய நோக்கிற் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. வினைத்திறன் மிக்க கற்றல், கற்பித்தற் செயற்பாடு களை முன்னெடுப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இடர் சிக்கிய மாணவர் பற்றிய ஆய்வு கல்வியியலாளருக்குப் பயன் மிக்கதாக அமைந்து வருகின்றது. மாணவரின் ஆற்றல் தொடர்பான தரக்காப்பீடு (Quality Assurance) பற்றிய மதிப்பீடுகள் விரிவடைந்து செல்லும் இன்றைய காலகட்டத்தில் இடர்சிக்கிய மாணவர்களை நிராகரித்துவிட முடியாதிருத்தலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
இடர்சிக்கிய மாணவரின் பண்புக்கூறுகள் பின் வருமாறு தொகுத்துக் கூறப்படுகின்றது,
1) தன்னம்பிக்கை தாழ்ந்த நிலையில் இருத்த லும், தமது பெறுபானங்களை அறியாதிருத்தலும்.
24 -

2) கற்றல், கற்பித்தற் செயற்பாடுகளின் அச் சுறுத்தல்களையும் அறைகூவல்களையும் தவிர்த்துக் கொள்ள முற்படுதல்.
3) மேலாதிக்கக் கல்வி நிறுவனங்களினதும், கற்றலை முகாமை செய்வோரினதும் பொறுப்பற்ற போக்குகள், கேடுறுத்தற் செயற்பாடுகள் முதலியவற் றால் நம்பிக்கை வலிமை இழந்திருத்தல்.
4) எதிர்காலத்தைச் சாதகமானதாயும் ஒளிமய மானதாயும் கருதாதநிலை.
5) கல்விசார் ஆற்றல்களிலே பொதுவான பின் னடைவுகளை அனுபவித்தல்.
6) குடும்பப் பின்புலம் கல்வி முன்னேற்றங்களுக் குச் சாதகமற்றிருத்தல்.
7) நீண்ட நேரம் படித்தல், தொடர்ந்து கேட் டல், தொடர்ந்து எழுதுதல், மலின நடைய வேலைகள் (Routine Work) முதலிய செயற்பாடுகளில் பொறுமை வீழ்ச்சியைக் காண்பித்தல்.
8) முயற்சிக்கும் அடைவுகளுக்குமிடையேயுள்ள நேர்த் தொடர்புகளை அறியத் தவறிவிடுதல்.
9) வெற்றிகள் முயற்சிகளினால் கிடைப்பவை அல்ல என்றும் அதிர்ஷ்டவசத்தால் அவை கிடைப்பவை என்றும் எண் ஜதல்.
10) தமது வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் தாம் சிறிதளவேனும் பங்கு இல்லை என்று எண்ணுதல். இடர்சிக்குண்டமை (At Riskness) பற்றிய கோட் பாட்டுநிலை ஆய்வுகளில் பின்வருவன சிறப்பிடம் பெறு கின்றன:
1) மருத்துவக் கண்ணோட்டத்திலே விளக்கப் படும் இடர் சிக்குண்டமை, அதாவது, உடல் சார்ந்த தொழிற்பாடுகள், குறைபாடுகள், இயக்கக் குறைபாடுகள் முதலியவை பற்றிய ஆய்வுகளும், சிகிச்சை முறைகளும் மருத்துவ அணுகுமுறையில் சிறப்பிடம் பெறுகின்றன.
- 25

Page 17
2) தொடர்ச்சியான கற்றல், கற்பித்தல் முறை களின் வழுக்களாலும் மேம்பாட்டுக் குறுக்கீடுகளாலும் தூண்டப்பெற்ற இடர்சிக்குண்டமையும் வளர்ச்சிச் செயல்முறையின்போது எதிர்நோக்கிய தவறான அனு பவங்களும் அணுகுமுறைகளும் இப்பிரிவில் விரிவான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
3) நிறுவனங்களின் குறைபாடுகள் காரணமாக இடர்களுக்குள் சிக்கிக்கொள்ளல், குடும்பம், குழுக்கள். கல்வி நிலையம் முதலாம் நிறுவனங்களின் தவறான இயக்கங்கள் இடர்களைத் தோற்றுவித்தல் உண்டு.
இடரில் சிக்குண்டவர்களை மீட்டெடுப்பதற்குரிய பல அணுகுமுறைகளும் நுட்பவியல்களும் உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றுள் முதலாவதாக நான்கு மாறி களைக் கருத்திற் கொண்ட மீக்கற்றல் (Mastery Learning) ஒழுங்கமைப்பு சிறப்பிடம் பெறுகின்றது. இதில் இடம்பெறும் நான்கு மாறிகளும் வருமாறு:
1) ஊக்கற் படுத்தல் 2) கற்றலுக்குரிய முன்நிபந்தனையான திறன்களை
வளர்த்தல். 3) தரம்மிக்க போதனையை முன்னெடுத்தல், 4) போதுமான நேர ஒதுக்கீடு.
கற்கவேண்டிய பாடப்பரப்பைச் சிறிய சிறிய அலகுகளாக்குதலும், குறித்த நேரத்தில் ஒரு சிறிய அலகைமாத்திரம் கற்பித்து மாணவரிடத்து அகல்விரி தெளிவை ஏற்படுத்துதலும், அவற்றின் விளைவாக மாணவரிடத்து ஊக்கலை அதிகரிக்கச் செய்தலும் மீக் கற்றலின் சிறப்பார்ந்த செயற்பாடுகளாகும்.
அடிப்படை உளவியல் தேவைகளை நிறைவேற் றுதல் இடரில் சிக்கிய மாணவரை மீட்டெடுப்பதற் குரிய முதல்நிலை உபாயங்களுள் ஒன்றாகும். ஏப்பிரகாம் மாஸ்லோ தோடக்கம் வில்லியம் கிலாஸர் (William
26 a

Glasser) வரை தேவைகள் பற்றியும் அவற்றோடு தொடர்புடைய மனவெழுச்சிகள் பற்றியும் விரிவாக ஆராய்ந்துள்ளார்கள். ஐந்து விதமான உணர்வுகள் மனிதரின் நல்லியல்புகளுடன் தொடர்புடையனவாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஐந்துவிதமான உணர்வு களும் வருமாறு:
1) திறனாற்றல்
2) உரிமைகோடல்
3) பயனுடைமை
4) உள்ளுறைவளம்
5) நலமிகு நம்பிக்கை. மேற்குறித்த உணர்வுகள் வளம்பெறத் தொடங்க இடரில் சிக்கியோரை இலகுவில் மீட்டெடுத்துக்கொள்ள (1pւգեւյմ -
மீக்கற்றல் படிநிலைகள் பின்வரும் கட்டங்களாக விளக்கப்படுகின்றன:
1. கற்றல் இலக்குகள்- அதாவது பாடம் நிறை வடையும் பொழுது மாணவர் எத்தகைய அறிவை/ திறன்களை எட்டியிருத்தல் வேண்டும் என்பது பற்றிய தெளிவு.
2. மாணவரை எவ்வாறு பிரக்ஞைப்படுத்தலாம் என்பது பற்றிய முன்னோக்கு (Preview),
3. தொடக்கநிலைப் போதனா நடவடிக்கைகள். கற்போரை ஈடுபாடுகொள்ளச் செய்யவல்ல குறித்துரைக் கப்பட்ட செயற்பாடுகள்.
4. ஆரம்பநிலை மீக்கற்றல் செயற்பாடுகளை எவ்வாறு மதிப்பீடு செய்தல் என்பது பற்றிய தேர்வு (Check Test).
5. 9(5,55 gpsos. Lhéssir (Correctives) தொடக்கநிலை மீக்கற்றலை வெளிப்படுத்தாத மாண வர்களிடத்து மேற்கொள்ளப்படவேண்டிய ԼՔՈ தேர்வுகள்.
a 27

Page 18
6. விரிவாக்கல்- அதாவது மீக்கற்றலை எட்டிய மாணவர்களை மேலும் வளம்படுத்த மேற்கொள்ளப் பட விரிவாக்கல் நடவடிக்கைகள்.
7. ஆரம்பநிலை மீக்கற்றலை வெளிப்படுத்தாத மாணவர்களின் திறன்களை வளர்க்கவும் கண்டறியவும் வல்ல மீள்தேர்வு,
8. திரள் செயற்பாடுகள். மீக்கற்றலை நிறைவு படுத்தவல்ல பொருத்தமானதும், அகல்விரி பண்புகள் கொண்டதுமான செயற்பாடுகள்.
மீக்கற்றல் தொழிற்பாடுகளுடன் இணைந்த பிறி தொரு நடவடிக்கை அண்மைக் காலமாக வளர்ச் கொள்ளத் தொடங்கியுள்ளது. அது "வெளியீடுகளைத் தளமாகக்கொண்ட கல்வி (Outcomes based Education) என்று அழைக்கப்படும். பின்வரும் கோட்பாடு களை அடிப்படையாகக் கொண்டு இது கட்டியெழுப்பப் படுகின்றது:
1) அனைத்து மாணவர்களாலும் அடையப்பட வேண்டிய சில பொதுவான இலக்குகள் உள்ளன.
2) எக்காரணத்தினாலாவது எந்த மாணவனும் தேர்விலே தவறுவதற்கு அனுமதிக்கப்படலாகாது.
3) மீக்கற்றலுக்குரிய ஊக்கலை வழங்கவும் அடையவும் பொருட்டு ‘புலமைப் பாதுகாப்புக் கவசம்' என்பதை ஒவ்வொரு பாடத்துறையினரும் அமைத்துக் கொள்வர்.
4) ஆசிரியரின் வாண்மை ஆக்கத்திறனை உள் வாங்கக் கூடியதாக பாட அமைப்புக்கள் இடம்பெறு வதற்கு ஊக்கம் தரப்படும்.
இடர்சிக்கிய மாணவர்களை மீட்டெடுப்பதற்குரிய சிறப்பான ஏற்பாடுகள் பள்ளிக்கூட ஒழுங்கமைப்பில் இடம்பெறுதல் வேண்டும். மாணவர் தமது உள்ளத்தை, தமது ஆற்றலை தெரியவைப்பதற்கு உதவுதல், இலக்கு கனை எளிதாக்கிக் கொடுத்தல், கற்றலைத் தனியாள் மியப்படுத்துதல் (Personaised), கற்றலுக்காகக் கற்றல் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்துதல்,பொதுத் தேர்ச்சிகளில் இருந்து சிறப்புத் தேர்ச்சிகளுக்கு மாண வரை நகரவைத்தல் முதலிய ஒன்றிணைந்த நடவடிக் கைகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது.

கல்வியில் உளநலன்
நலம்மிக்க ஒருவர் உடல்நலம் மட்டுமன்றி, உளநலம், மனவெழுச்சி நலம், ஆன்மிக பலம் முதலியவற்றை உள்ளடக்கியிருத்தல் வேண்டு மென்பது அண்மைக்கால வரைவிலக்கணமாகும். தனி மனித நலமும் சமூக நலமும் வேறுபிரிக்க முடியாதவை. நலம்மிகு சமூகக்கட்டமைப்பு இன்றி நலம்மிகு தனி மனிதரை உருவாக்குதல் எளிதன்று. சமூகச் சூழல் மட்டுமன்றி, பெளதிக சூழலும் மனித உளநலத்திலே செல்வாக்குச் செலுத்துகின்றன. நிலம், நீர், வளி, ஒலி முதலியவை மாசடைந்து செல்லுதலுக்கும் மனித உள தலம் பாதிப்படைதலுக்கும் தொடர்புகள் காணப்படு கின்றன,
உளநலம்மிக்க ஒருவரின் பண்புக் கூறுகள் பின்வரு மாறு தொகுத்துக் கூறப்படுகின்றன:
1) தமது நடத்தையைப் புறவயமாக மதிப்பிடும்
ஆற்றல்.
- 29

Page 19
30
Σ)
3)
4)
5)
6)
7) 8) 9)
10) 11)
12)
13) 14)
15) 16) 17) 18) 19)
20)
தமது இலக்குகள், விருப்புக்கள், ஊக்கல்கள் தொடர்பான தெளிந்த விளக்கமும் அவற்றின் பலமும் பலவீனமும் பற்றிய அறிவு. தம்மைப் பற்றிய யதார்த்த நிலைப்பட்ட சுயகணிப்பு. தாம் வாழும் சூழல் பாதுகாப்புத் தரும் என்ற உறுதி. அறைகூவல்களை எதிர்கொண்டு முன்னேற முடியும் என்ற அறிகைப்பலம், பொறுப்புக்களை ஏற்றுச்செய்ய முடியும் என்ற உறுதிப்பாடு. தொடங்கும் ஆற்றலும் தொடரும் விருப்பும், நாளாந்த வாழ்வில் நம்பிக்கை உள்ளத்துக்குத் தெளிவுதரும் கோட்பாட்டுப் பலம் அல்லது கருத்தியற் பலம். முரண்பாடுகளை விளங்கும் திறன். எதிரான கருத்துக்களை மனமுவந்து பரிசீல னைச்கு எடுத்தல், சமூகத்தை விளங்கிக்கொள்ளும் திறன், இடர்களைப் பகுத்தாராயும் திறன். வாழ்க்கையின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளல்.
ஆக்கநிலைக் கற்பனை வளம். மனமுறிவைச் சீராக்கும் திறன். மனவெழுச்சி முதிர்ச்சி, உடல்நலத்தைப் பாதுகாக்கும் திறன். சிந்தனைத் தெளிவும், பிரச்சினை விடுவிக்கும் ஆற்றலும். தமது உள்ளார்ந்த ஆற்றல்களை நல்விளைவு மிக்க நடத்தைகளாக மாற்றும் வல்லமை (Productive Forms of Behaviour).

மேற்கூறிய உளநலப் பரிமாணங்களை வளர்ப் பதற்கு கலைத்திட்டமும், கல்விச் செயல்முறையும், ஆசிரியத்துவமும் துணைநிற்கவேண்டியுள்ளன. உளநலத் தின் அடிப்படைக் காரணிகளாக, உயிர் மரபுவழிக் காரணிகள், பெளதிக சூழற் காரணிகள், சமூகக் கார ணிகள், குடும்பம், சகபாடிகள், பள்ளிக்கூடம், அயல் மற்றும் அடிப்படை உடல் உளத் தேவைகளின் நிறை வேற்றுகை முதலியவை பரிசீலிக்கப்படவேண்டியுள்ளன.
தேவைகள் தொடர்ச்சியாக நிறைவேற்றப்படாத நிலையில் சீராக்கப்பிறழ்வும், உளநலக்கேடும் தோன்றும் மனமுறிவை சகிக்கும் ஆற்றலை(Frustration Tolerance) வளம்படுத்துதற்கு கல்விச் செயல்முறை கைகொடுக்க வேண்டியுள்ளது.
தேவைகள் நிறைவேற்றப்பட முடியாமை, தீர் மானங்களை எட்டமுடியாத உளமுரண்பாடுகள், ஒரு வரின் உள்ளேயிருந்து உறுத்தும் முரண்பாடுகள் (Internal Conflicts) முதலியவை பற்றிய தெளிந்த புலக்காட்சியை ஏற்படுத்துதலுக்கு கல்வியும், சீர்மியமும் துணைநிற்றல் வேண்டும். உள்ளுறையும் முரண்பாடுகள் பற்றி உளப்பகுப்பு ஆய்வாளர்கள் தமது கண்ணோட் டத்தில் விளக்கியுள்ளனர். அதாவது இட், ஈகோ, மீஈகோ ஆகியவற்றுக்கிடையே நிகழும் முரண்பாடுகளே ஒருவரின் உள்ளமைந்த முரண்பாடுகள் என்று குறிப்பிட்டுள்ளனர். உள்ளார்ந்த முரண்பாடு நனவுக்கும் (Conscious) நன விலிக்குமிடையே நிகழும் முரண்பாடாகவும் அமையும் அல்லது அகவய நிலைக்கும் புறவய நிலைக்குமிடையே திகழும் முரண்பாடாகவும் அமையலாம். அறியாமையி னாலும், தவறான கருத்தேற்றங்களாலும் முரண்பாடு கள் ஏற்படலாம்.
மணமுறிவைச் சீராக்கம் செய்யும் பின்வரும் நுண் முறைகள் பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு இன்றியமை யாதனவாகும்.
e 3

Page 20
1. gp1 LG (Compensation)
ஒருதுறையில் போதாமை (Deficiency) காணப் படுமாயின் திறன்மிக்க முயற்சியைப் பயன்படுத்தி ஆற் றலை வெளிப்படுத்தி இழப்பீட்டு இசைவாக்கம் செய்ய லாம். ஒரு துறையிலே தாழ்ந்தவர்கள் அதனை ஒரு அறைகூவலாக எடுத்து முன்னேறியுள்ளனர்.
உதாரணமாக சிறுவயதில் கொன்னைபடப் பேசி பவர்கள் சிறந்த பேச்சாளர்களாக வளர்ந்திருக்கின்றார் கள். இது "நேர் இழப்பீடு" எனப்படும். 2. U(555ým GT GOTT 6i) (Rationalisation)
கல்விச் செயல்முறையின் வாயிலாக இச்சீராக் கத்தை நன்கு வளம்படுத்தலாம். தாக்கத்துக்குரிய காரணிகளைப் பகுத்தாராய்தல், நியாயப்படுத்தல் (Justification) அல்லது மெற்கம் கண்டறிதல் (Excuse Making) முதலியவை இப்பிரிவில் அடங்கும். அடைய முடியாதவற்றை அடைவதிற் பயனில்லை என்று கருது தலும், நல்லதை நலமற்றது என்று கூறுதலும், நலமற் றதை நல்லதென்றுரைத்தலும் இப்பிரிவில் அடங்கும்.
3. எறிவு செய்தல் (Projection)
தமது மட்டுப்பாடுகள், குறைபாடுகள் முதலியவை
பிறரிடமும் உண்டென்று எண்ணுதல் எறிவு செய்தல்
என்ற சீராக்க நுண்முறையின் பாற்படும்.
4. siT 5:5:55i) (Identification)
மணமுறிவடைந்தவர், தமது குலப்பெருமை, குழுப் பெருமை, பிரதேசப் பெருமை, நிறுவனப்பெருமை முதலியவற்றுடன் ஒன்றிணைந்து அவற்றின் பெருமை களைப் பேசிச் சீராக்கம் செய்துகொள்ளலாகும். இவை ஏற்புடையதான சீராக்கமுறைமையாக இருந்தா லும் ஒருவரது தனித்துவத்தின் இழப்புக்கு(Loss of Own Identity) இது இட்டுச்செல்லும் என்றும் உளவியலாளர்
குறிப்பிடுகின்றனர்.
32 -

5. Lugo (6 (Substitution)
ஒரு துறையில் ஏற்பட்ட இழப்பை இன்னொரு துறையினால் பதிலீடு செய்யும் உபாயமாக இது அமை யும். ஒரு கல்வித்துறையில் அல்லது கற்கை தெறியில் இடம் கிடைக்காதவிடத்து அதற்கு ஒப்பான வேறொரு கற்கை நெறியைத் தெரிவு செய்து இசைவாக்கம் செய்யமுடியும்.
6. ஏற்புடமையாக்கல் (Sublimation)
சமூகம் ஏற்றுக்கொள்ளாத உணர்வுகளை சமூகம் ஏற்றுக்கொள்ளும் ஆக்கச் செயல்களில் வெளியிடல் "ஏற்புடமையாக்கல்" எனப்படும். அழுத்தங்களை நல் வாய்க்காற்படுத்தி வெளியிடும் முயற்சியாக இது அமையும். ஆத்திரக்காரர் தமது ஆத்திர உணர்வுகளை கடினவேலைகள் செய்தல், கடின விளையாட்டுக்களில் ஈடுபடல் முதலியவற்றில் வாய்க்காற்படுத்தலாம்.
7. அடக்கியழுத்தல் (Repression) ۔۔۔۔
நனவுநிலையில் வெளிப்படுத்தமுடியாத உணர்வு களைப் பெயர்த்தெடுத்து நனவிலியில் அடக்கியழுத்தும் செயற்பாடாக இது அமையும். நனவிலியில் அழுத்தப் படுதல் மேலும் பல சிக்கல்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்திவிடும்.
8. குழந்தமைநோக்கு (Regression)
மனமுறிவுக்கும் மன அழுத்தங்களுக்கும் உள்ளா கும் ஒருவர் குழந்தைகளுக்குரிய நடத்தைகளை வருவித்து குழந்தைகள் போன்று பேசியும், விளையாடி யும் சீராக்கம் செய்யும் செயற்பாட்டினை இது குறிப் பிடுகின்றது. 9. எதிர்நிலை கொள்ளல் (Negativism)
நேர்நிலைப் பண்புகளை நோக்காது எதற்கும் எதிர்ப்புக்காட்டுதலும் கீழ்ப்படியாதிருத்தலும், குறை கூறுதலுமாகும்.
a 33

Page 21
10. Jeg95T i do G36TL6) (Sympathism)
பிரச்சினையைத் தீர்க்கவெண்ணாது அதன் கடினத்தன்மைகளையும், தாம் அனுபவிக்கும் துன்பங் களையும், பிரதிகூலங்களையும் கூறி பிறரின் தயை நோக்கை வேண்டுதலாகும். 11. 56h15yr FFñû L (Attention Seeking)
தமது செயல்கள், நடை, உடை, பாவனை முதலியவற்றை பிறர்காணவேண்டி பளிச்சிடும் நடத்தை களில் தம்மை ஈடுபடுத்தி உளச்சீர்மை செய்து கொள்ள லாகும். 12, வன்செயல் கோடல் (Aggression)
உடல், உள, மனவெழுச்சி வலிமையினை நேரடி யாகவோ, மறைமுகமாகவோ, இடம்பெயர்ந்த முறை யிலோ வெளியிட்டு இசைவாக்கம் பெறுதலை இது
குறிப்பிடுகின்றது. 13. Lasirust tissi) (Withdrawing)
பிரச்சினைகளுக்கும் அறைகூவல்களுக்கும் முகம் கொடுக்காது ஒதுங்குதலும் அந்நியப்படுதலும் (Alienation) உளவியல் சார்ந்த தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். ஒதுங்கி ஒழித்தல், அழுக்குமேனியராதல், தம்மைத் தாழ்த்திக்கொள்ளல், பின்வரிசைகளை நாடுதல்,உடலை யும் உணவுகளையும் பாராமுகமாக விடுதல், தனிமைப் படுதல், ஏங்குதல், தனக்காகத் தான்இரங்குதல் முதலிய பல நடவடிக்கைகளில் அடங்குகின்றன. பகற்கனவு காணல், நடப்பியல் வாழ்வுடன் இணையாத கற்பனை வசப்படல், முகிழ் கற்பனை (Fantasy) முதலியவை பின் வாங்கலுடன் இணைந்தவை. மதுவை நாடுதலும், அதிக செலவாளியாய் அல்லது அதிக கஞ்சத்தனமாய் மாறுத லும், வருமானத்தை மீறிய செலவுகளில் ஈடுபடுதலும், சொத்துக்களுக்கு அழிவை உண்டாக்குதலும், விகார உணர்வுகளிலும் நடத்தைகளிலும் ஈடுபடலும் பின் வாங்கும் சீராக்கற் கோலங்களாகும்.
34 -

கல்விச் செயல்முறையின் வழியாக நல்ல மனோ பாவங்களை வளர்த்தல், நேர்நடத்தைகளைப் பலப் படுத்துதல், ஆக்கமலர்ச்சியைத் தூண்டுதல் முதலிய வற்றை ஆசிரியர்கள் முன்னெடுத்தல் வேண்டும்.
ஆசிரியரின் பொறுப்புக்கள்
ஆசிரியர்கள் விழிப்புணர்வும், மாணவர்பால் உற் சாகமும், வசீகரமும், நட்பும், நம்பிக்கையும் உடையவ ராயிருத்தல் வேண்டும். கல்வி ஆளுமை, பொறுமை, நேர்மை, சமநோக்கு, சமகணிப்புடமை, கூட்டுறவு மனப்பாங்கு, பிசிறலற்ற நடத்தை, நெகிழ்ச்சிப்பாங்கு, பல்துறையாற்றல் முதலாம் பண்புகள் ஆசிரியருக்கு வேண்டப்படுகின்றன. இப்பண்புகளை உடையவர்களே மாணவரின் உளநலத்தை மேம்படுத்த முடியும்.
எதிர்மறையான உளமுட்டம் (Negative Temper), சகிப்புத்தன்மை இல்லாமை, பக்கங்கோடல், பொறுப் பின்மை, பிரித்தாள்கை, கவர்ச்சியின்மை, கல்வி ஆளுமை இன்மை, சோர்வும் துன்பமும் கலந்த முகபாவம், நல்ல வற்றைப் பாராட்டமுடியாமை, குரூரநோக்கு,பொறுமை யின்மை, நகைச்சுவையின்மை முதலியவை ஆசிரியருக்கு இருத்தலாகாது.
தமது வாண்மையை நேசிப்பவராகவும், சீர்மியம் மற்றும் ஆற்றுப்படுத்தல் முதலியவற்றில் புலமை உள்ள வராயும், தொடர்பாடல் ஆற்றல் உடையவராயும், அனுபவங்களைப் பகிர்ந்துகொள்பவராயும், சமூக நோக் குடையவராயும் ஆசிரியர் இருத்தல் வேண்டும். ஆசிரியர் கள் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தவும், தொடங் கும் ஆற்றல்களை உற்சாகப்படுத்தவும் உரிய வளமாக் கலைக் கல்வித் திணைக்களமும் அதிபரும் வழங்குதல் வேண்டும்.
பின்வரும் தகைமைகளை ஆசிரியரிடத்து வளர்ப் பதற்கு ஒன்றிணைந்த நடவடிக்கைகள் வேண்டப்படு கின்றன:
as 35

Page 22
1. பிரயோக உளவியலறிவின் விரிவு. 2. சமூகக் கருத்தியல்கள் தொடர்பான கற்கை. 3. கற்றல் - கற்பித்தல் சிக்கல்களைக் கிரகிக்கும்
ஆற்றல். 4. கலை, பண்பாடு, இலக்கியங்கள் பற்றிய
அறிவின் விரிவு. 5. அறவொழுக்கம், விழுமியங்கள் தொடர்பான
அறிவு.
கலைத்திட்டம்
கலைத்திட்டம், செழுமையும் நெகிழ்ச்சியும் கொண்டதாயும், மாணவர்களை நடுநாயகப்படுத்தி அவர்களின் தனியாள் வேறுபாடுகளைக் கருத்திற் கொண்டு கட்டியெழுப்பப்பட்டதாயும் இருத்தலே சிறந்தது. மாணவர்களின் தேவைகள், மற்றும் விருப் புக்களை நிராகரித்து கல்விச் செயற்பாடுகளைக் கட்டி யெழுப்பமுடியாது. கற்றல் - கற்பித்தற் செயற்பாடுகள் மாணவர்களின் தேவைக்கேற்றவாறு நெகிழ்ச்சிமிக் குடிையதாய் ஆக்கப்படல் வேண்டும், நெகிழ்கலைத் 5 "Lib (Elastic Curriculum) 35 sbg5i5 gi6) 600T (olfiù யும். நெகிழ்கலைத் திட்டத்திற் பாடங்களுக்கு முக்கி யத்துவம் தரப்படாது பாடப்பரப்புப் படிநிலைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். இணைந்த கலைத்திட்டச் செயற்பாடுகளுக்குப் புள்ளிகள் தரப்பட்டு அவற்றையும் பாட அடைவுகளுக்குச் சமனாகக் கருதுதல் மாணவரின் உளநலனை மேம்படுத்த உதவும்.
உடல், உள்ளம், இயக்கம், பாடசாலை, வீடு, சமூகம் முதலியவற்றுக்கிடையே இணக்கத்தையும் ஒன்றிணைப்பையும் வலுப்படுத்துதலே சிறந்தது.
பின்வரும் நடவடிக்கைகளுக்கு வலுவூட்டி வகுப் பறை வாயிலான உளநலத்தை மேம்படுத்தலாம்:
36 a

1. மாணவருக்கு ஒரு பாடம் விளங்கவில்லை என்றால் அதனை ஒரு குற்றமாகக் கருதலாகாதுகோபம் கொள்ளலாகாது.
2. மாணவரின் தளத்தில் நின்று பிரச்சினை களை அணுகுதல் வேண்டும்.
3. தோல்விகளை அறைகூவல்களாக மாற்றும் திறனை மாணவரிடத்து ஊக்குவித்தல் சாலச்சிறந்தது. 4. பரிகாரக் கற்பித்தலை வளம்படுத்துதல் வேண்டும்.
5. மாணவரின் பங்குபற்றலையும் ஈடுபாட்டை பும் கற்பித்தலில் முனைப்புடன் செயற்படுத்துதல் நன்று. 6. ஊக்கல் முனைப்பாக்கம் தொடர்ந்து முன் னெடுக்கப்படல் வேண்டும்.
7. செய்வதன் வழியாகக் கற்றல் சிறந்த பெறு பேறுகளைத் தரவல்லது.
8. மாணவரிடத்துக் காணப்படும் தாழ்வுச் சிக்கல்களை நீக்கிவிடவேண்டும்.
9. என்றுமே வெற்றியை அனுபவிக்காத மாண வர்களுக்கு யாதாயினும் வெற்றிகளை அனுபவிக்கச் செய்தல் வேண்டும்.
10. 5 ipsig)LLDIT fibsDub (Transfer of Learning), org/ual gll DIT fibsoth (Transfer of Experience) (ps லியவற்றைப் பொருத்தமான நிலைமைகளில் ஏற்படுத் துதலே சிறந்தது.
11. மனநலத்தை வளப்படுத்தும் நேர்க்கவி நிலை களை (Positive Climate) முனைப்பாக்குதல் வேண்டும். 12. நல்ல ஒழுக்கங்களை நோக்கிய சுய நெறிப் பாட்டினை மாணவர்களிடத்து வளர்த்தெடுத்தல் வேண்டும்.
மாறிவரும் சமூகச் சூழலில் ஆசிரியர்களுக்கும் கல்வி நிலையங்களுக்குமுள்ள பொறுப்புக்கள் நாளாந்தம் அதிகரித்து வருதலைக் கல்வியியலாளர்கள் சுட்டிக் காட்டியுள்ள்னர்,
37 ܝ

Page 23
தொடர்தொழில் ஆற்றுப்படுத்தல்
தொழிலை விளங்கிக்கொள்ளல்
குறித்த தொழிலை எவ்வாறு மேற்கொள்ளல் வேண்டும், அதற்குரிய உடல் ஆற்றல் கள் யாவை, உள ஆற்றல்கள் யாவை, எத்தகைய முறையியல்களை அந்தத் தொழிலிலே பிரயோகித்தல் வேண்டும், அங்கு நடைபெறும் இடைவினைகள் எப்படிப் பட்டவை, தொழிலுக்குரிய தெரிஅறிகை (Know How) என்னவாக இருத்தல் வேண்டும், அந்தத் தொழிலின் உள்ளீடுகள் யாவை, வெளியீடுகள் யாவை, தொழிலுக் குரிய சமூகத் தொடர்புகள் எப்படிப்பட்டவை, எத்த கைய சமூக மட்டங்களோடு தொடர்புகள் நிகழ்கின்றன, தொழில் கொள்வோரும், தொழில் புரிவோரும் அணு பவிக்கும் பலாபலன்கள், தொழிலில் இடம்பெறும் வழுக் கள் பற்றிய அறிவு முதலியவை தொழிலை விளங்கிக் கொள்ளலில் இடம்பெறும்.
ஒரு தொழிலை விளங்கிக்கொள்வதற்குப் பின் வருவன உறுதுணையாக இருக்கும்:
88 ജ

1. தொழிலின் வரலாறு - வளர்ச்சிப்போக்கு 2. சமூகத்தில் குறித்த தொழில் பெறும் இடமும்,
அந்தஸ்தும். 3. அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் மொத்த
எண்ணிக்கை. 4. தொழிலாளருக்குரிய தேவைகளும் தகைமை
களும்,
5. தொழில்சார் சிறப்புத் தகவல்கள். தொழில் பகுப்பாய்வு:
குறிப்பிட்ட தொழில் பற்றிய கட்டமைப்பு - அசைவியம், விவரணங்கள் உள்ளடக்கம், நேர்வியங்கள் (Facts) ஒருவர் அந்தத் தொழிலைச் சிறப்புற ஆற்றுகை செய்வதற்கான பரிமாணங்கள் அனைத்தும் தொழிற் பகுப்பாய்வில் (UOB Analysis) இடம்பெறும். தெரிந் தெடுக்கப்பட்ட தொழிலுக்குரிய அறிவு, திறன் மானம், மனப்பாங்கு, வெறுப்பு முதலியவற்றை ஒருவர் பெற்றுக் கொள்வதற்குத் தொழிற் பகுப்பாய்வு துணைசெய்யும். தொழிற் பகுப்பாய்வின் முடிவுகளைக்கொண்டு பொதுக் கல்வி, சிறப்புக்கல்வி, தொழில்நுட்பக் கல்வி முதலிய வற்றைத் திட்டமிடமுடியும்.
பொருத்தமான தொழில் நாடியைப் பொருத்த மான தொழிலுக்கு அழைத்துச் செல்வதற்கு இது வழி வகுக்கும். இதன் வழியாகக் குறித்த தொழிலில் வினைத் திறனையும் தொழில்சார் உள நிறைவையும் ஏற்படுத்
56)rth.
தொழில் பகுப்பாய்வானது மூன்று பகுதிகளைக் கொண்டதாக அமையும்.
1. குறித்த தொழில் முழுமையாகவும் திட்டவட்ட மாகவும் வரையறை செய்யப்படுதல் வேண்டும். 2. குறித்த தொழிலில் நிறைவேற்றப்பட வேண் டிய பனிக்கூறுகள் திட்டவட்டமாகக் குறிப் பிடப்படல் வேண்டும்.
- 39

Page 24
3. குறித்த செயற்பணிகளைத் திறம்படவும் வெற்றிகரமாகவும் ஆற்றுகை செய்வதற்குரிய மனிதவளத் தேவைகள் பற்றியும் திட்டவட்ட மாகக் குறிப்பிடுதல் வேண்டும். மேற்கூறியவை எண்ணளவுப் பெறுமானங்களி அலும் தரப்படுதல் விரும்பத்தக்கது. தொழிற் பகுப் பாய்வை மேற்கொள்வதற்கு முன்னோடியாக "தொழில் விவரணம்'(Job Discription)தயாரிக்கப்படல் வேண்டும். ᏯᎥ©ᏡᎧJ ,
1. தொழிலின் தலைப்பு (Title) 2. தொழில் இடம்பெறும் துறையை அல்லது
புலத்தை இனங்காணல் 3. குறியீட்டு இலக்கம் 4. தொழிலாளர் எவ்வாறு செயற்படல் வேண்டும்
என்பவை பற்றிய விளக்கங்கள். தொழில்சார் நுண்தகவல்கள்:
மனிதர் ஒரு புறமும், தொழில்கள் மறுபுறமுமான F LD6ör UntG) (Person Job Equation) 960g/35LÜLuGauss sibi மனிதவள மேம்பாடு ஒருபுறமும், தொழில் தகவல்கள் மறுபுறமுமாக அணுகப்படவேண்டியுள்ளன. தொழில்கள் பற்றிய காட்சி, தொழில் நுழைவுக்குரிய தகவல்கள், பதவியுயர்வுக்கான வாய்ப்புக்கள், தொழிலின் உறுதிப் பாடு, விபத்துச் சந்தர்ப்பங்கள், இழப்பீடுகள், மிகு ஊக்கல்கள், வேலைக்கவிநிலை முதலியவை தொழில் சார் தகவல்களிலே திரட்டப்படுகின்றன. தொழில்கள் தொடர்பான அறிக்கைகள், முன்மொழிவுகள், முயற்சித் திட்டங்கள், பணிக்காலப் பயிற்சிப் பதிவேடுகள், விளம் பரங்கள், புள்ளிவிபரத் தொகுப்புக்கள், தொழில்களை தடுநாயகப்படுத்திப் புனையப்பட்ட திரைப்படங்கள், நாடகங்கள், இலக்கியங்கள், ஆவணப்படங்கள் முதலி யவை தொழில்சார் தகவல்களிலே இடம்பெறுகின்றன
தொழில்நிலை மட்டங்கள் அல்லது அடுக்குநிர லமைப்பு பின்வருமாறு பாகுபடுத்தப்படும்:
40 -

வாண்மை நிலை நிர்வாக நிலை Spairs as a fia06 (Skilled) . ஓரளவு திறன்தகவு நிலை
திறன்தகவு அற்ற நிலை,
தொழில்சார் தரவுகள் திட்டவட்டமானவையும், அகல்விரிபண்பு (Comprehensive) உடையதாகவும், கால வளர்ச்சியோடு புதுப்பிக்கப்பட்டதாயும் (Up-to-date) தொழில்சந்தை அசைவுகளைப் புலப்படுத்தக் கூடியதா கவும், எளிதில் எல்லோருக்கும் கிடைக்கப்படத் தக்க தாகவும் இருத்தல் வேண்டும். தொழில்சார் தகவல் களை அடிப்படையாக வைத்தே சிறந்த ஆற்றுப்படுத் தலையும், சீர்மியத்தையும் மேற்கொள்ளமுடியும்.
தொழில் ஆற்றுப்படுத்தல் தொடர்பான முன்னோடி நடவடிக்கைகள்
தொழில்களின் பன்முகப்பட்ட வளர்ச்சியின் பின் புலத்திலே தொழில்களைத் தேர்ந்தெடுப்பதற்குரிய ஒருவித உளவியல் சார்ந்த 'தவிப்பு ஏற்படத் தொடங் கிய சமூகச் சூழலில் ஒரு சமூக நலன்புரி தடவடிக்கை யாக பிராங் பார்சன்ஸ் (Frank Parsons) Gist fai) ஆற்றுப்படுத்தல் நடவடிக்கையை முன்னெடுத்தார். அதற்குரிய பயிற்சித் திட்டங்களையும் சீர்மியர்களை உருவாக்குவதற்குரிய செயற்பாடுகளையும் அவர் மேற் கொண்டார்.
தொழிலில் ஒன்றைத் தெரிவுசெய்தல் p6ö7 apy முக்கியமான காரணிகளிலே தங்கியுள்ளது என அவர் இனங்கண்டார். அவையாவன:
1. தனிமனிதரின் ஆற்றல், விருப்பு, திறன், எதிர் பார்ப்பு, வெளிப்பாடு, மட்டுப்பாடு, உள் ளார்ந்த வளங்கள் என்பவற்றை அறிதல்.
4.

Page 25
2. பல்வேறுபட்ட தொழில்களையும் பற்றிய அறிவு, அவற்றில் ஏற்படக்கூடிய முன்னேற்றம், அனுகூலம், பிரதிகூலம், சந்தர்ப்பங்கள் என் பவை பற்றிய அறிவு. V
3. மேற்கூறிய இரண்டு காரணிகளையும் பகுத்து
ஆராய்ந்து ஒரு முடிவுக்குவரும் திறன்.
பார்சன்ஸ் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமது ஆற்றுப்படுத்தற் கோட் பாடுகளை இவ்வாறு முன்வைத்தவேளை தமது காலத் தில் நிலவிய விஞ்ஞான பூர்வமான பல்வேறு தேர்வுக் கருவிகளையும், நியாயமான பரீட்சை அமைப்புக்களை யும் குறித்துரைக்கத்தக்க ஒப்படைகளையும் பயன்படுத் தினார். தொழில்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன் படுத்தப்பட்ட சோதிடம், கைரேகை அறிதல், கை யெழுத்து அறிதல், எழுந்தமானத் தெரிவுமுறைமை முதலியவற்றை அவர் நிராகரித்தார். தொழில் மேம்பாடும் ஆற்றுப்படுத்தலும்
தொழில் ஒன்றை ஒருவர் தெரிவுசெய்யும் பொழுது மூன்று அடிப்படை வினாக்கள் ஆற்றுப்படுத் தலில் எழுப்பப்படுகின்றன. அவை,
1. அந்தத் தொழில் தற்செயலாகக் கிடைத்ததா? 2. உளவியல் உந்தல் தொழிலைத் தெரிவுசெய்யத்
தூண்டியதா? 3. ஒருவரது ஆற்றலுக்குப் பொருத்தமான முறை யில் குறித்த தொழில் கிடைக்கப்பெற்றதா? மேற்கூறிய வினாக்களை ஆழ்ந்து ஆராய்ந்த உளவியலாளர்கள் பல்வேறு கோட்பாடுகளை உருவாக்க முயன்றார்கள். அவற்றுள் முதலாவதாகக் கின்ஸ்பேர்க் கோட்பாடு (Ginsberg Theory) விதந்துரைக்கத்தக்கது. இவரது கோட்பாடு மூன்று அடிப்படைகளில் இருந்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அவை,
42 -

1. சிறு வயதிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான கல்விச் செயல்முறைக்கு ஏற்றவாறே ஒருவர் தொழிலைத் தெரிவு செய் கின்றார்.
2. கல்விச் செயல்முறை பின் திரும்பிச் செல்லப் பட முடியாததாக உள்ளது என்பதை அறிதல் வேண்டும்.
3. ஒவ்வொரு தொழிலையும் தெரிவுசெய்யும் போது அவற்றோடு ஒத்துப்போகக்கூடிய நல் லிணக்கம் அவசியமாகும்.
கின்ஸ்பேர்க்கின் கோட்பாட்டை உள்ளடக்கிய தாகவும், மிகுந்த அகல்வரிப் பண்புடையதாகவும் சப்பர் (Super) என்பவர் தொழில் விருத்திக் கோட்பாட்டை அணுகினார். ஒருவரது பிறப்பிலிருந்து தொழில்பெற்று ஒய்வுபெறும் வரையுள்ள ஐந்து பிரதான வளர்ச்சிப் பருவங்களை இனங்காட்டினார். அவையாவன:
1. சிறுகுழந்தை நிலையிலிருந்து கற்பனை, உள நாட்டம், ஆற்றல்பெறல் என்பவற்றோடு வளர்ச்சிபெறும் பருவம். 2. தொழில்கள் பற்றிய கண்டுபிடிப்பு உசாவல்
நிரம்பிய பருவம். 3. தொழில்களைப் பெறும் பருவம். 4. தொழில்களை நிலைநிறுத்தும் பருவம். 5. தொழிலில் இருந்து ஒய்வுபெறும் பருவம்.
சமூகக் காரணிகளும் தனிமனிதக் காரணிகளும் இடைவினை கொள்வதன் வாயிலாக ஒருவருக்குரிய சுய எண்ணக்கரு வளர்கின்றதென்றும் இந்த அணுகு முறையில் விளக்கப்படுகின்றது. சிறுவயதிலிருந்தே உருவாகிவரும் சுய எண்ணக்கருவின் பண்புக்கு ஏற்ற வாறே ஒருவருக்குரிய தொழில் தெரிவு, தொழில் நுழைவு, தொழில் பராமரிப்பு, தொழில் திருப்தி என்
- 43

Page 26
பவை தோன்றுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அந் நிலையில் சுய எண்ணக்கருவைக் கருத்திற்கொண்டே ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
தொழில் மேம்பாடும் ஆற்றுப்படுத்தலும் தொடர் பான ஆய்வில் கொலண்ட் என்பவரின் கோட்பாடு சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது. பல்வேறுபட்ட சிக்க லான காரணிகளின் இடைவினைகள் வாயிலாகவே ஒருவர் தமக்குரிய தொழிலைத் தெரிவுசெய்து கொள் கின்றார் என்று விளக்கும் கொலண்ட் ஆறுவிதமான தொழிற் சூழல்களை இனங்காட்டியுள்ளார். அவை வருமாறு:-
தொழிற் சூழல் தொழில் விளக்கங்கள்
1. உடலியக்கம் சார்ந்தவை - இயந்திரம் இயக்குநர்,
ஒட்டுநர்.
2. உயர்நுண்மதி சார்ந்தவை . விஞ்ஞானி, ஆய்வாளர் 3. அனுசரணை, உயர்சேவை - ஆசிரியர், சமூக
சார்ந்தவை சேவையாளர் 4. எச்சரித்தல் சார்ந்தவை - விற்பனையாளர்,
அரசியல்வாதி 5. நிலையுறுதி சார்ந்தவை - எழுதுவினைஞர்,
செயலாளர் 6. அழகியல் சார்ந்தவை . இசையாளர்,
எழுத்தாளர், ஓவியர்.
ஒவ்வொருவரதும் ஆற்றல்களுக்கேற்பவும், சுய மதிப்பீட்டுக்கு ஏற்பவும் தொழில்தெரிவு இடம்பெறும். சுயமதிப்பீடு என்ற பிரிவில் குறித்த நபரின் சமூக பொருளாதாரப் பின்புலம், அந்தஸ்துதேவை, கல்வி சுய எண்ணக்கரு முதலியவை இடம்பெறும்.
சுய மதிப்பீடும், நுண்மதி ஆற்றலும் ஒன்றிணைந்து ஏறுநிரை அமைப்பின் தொழில் மட்டத்தைத் தீர்மா
44 -

னிக்கும். ஒவ்வொரு தொழிற்சூழலிலும் பல்வேறு தொழில்கள் காணப்படும். அவற்றுக்கிடையே ஓர் ஏறு நிரை அமைப்பு உள்ளது. உதாரணமாக உடலியக்கம் சார்ந்த தொழிற் சூழலில் ஏறுநிரை அமைப்பும் உள்ளது.
1. வெறும் உடல் உழைப்பு 2. கருவிகளுடன் கூடிய உடல் உழைப்பு 3. எளிய இயந்திரங்களை இயக்குதல் 4. சிக்கலான இயந்திரங்களை இயக்குதல்.
நிரை அமைப்பின் பிரிவுகள் நிரை மட்டங்கள் எனப்படும்.
தொழில் தெரிவின் சுய மதிப்பீடு என்பதுடன் சுய அறிவும் பங்குகொள்கின்றது. சுய அறிவு என்பது ஒருவர் தம்மைப்பற்றிக் கொண்டுள்ள தகவல்களின் உள்ளடக்கம். ஒருவரது இறுதியான தொழில் தெரிவில் குடும்ப அழுத்தங்கள், பொருளாதார நிலை, நண்பர், டாடசாலை என்பவற்றின் செல்வாக்கு முதலியவை பங்குகொள்ளும்.
மேற்கூறிய கோட்பாடுகள் தொழிலை நாடிச் செல்வோரது கண்ணோட்டத்தில் தெரிவை விளக்கு கின்றன. பிலாயு (Blau) என்பவர் தொழில் வளங்கும் புறமுகவரது கண்ணோட்டத்தில் தொழில் தெரிவை விளக்கமுயன்றார். பொருளாதார செயற்பாடுகளுக்கு ஏற்றவாறும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்றவாறும் புற முகவர்கள் தொழில் தெரிவை அமைத்துக்கொள்ளு கின்றனர்.
தொழில் நாடிகளுக்கும் தொழில் வழங்குவோருக் கும் இடையேயுள்ள இடைவினைகள் தொழில்தெரிவில் தீர்மானிப்பு *வலுக்களாக விளங்குதல் பிலாயு அவர் களால் விளக்கப்பட்டுள்ளது.
n 45

Page 27
இலங்கையும் தொடர்தொழில் ஆற்றுப்படுத்தலும்
இலங்கையின் கல்வி முறைமைக் கும் தொழில் உலகுக்குமிடையேயுள்ள இடைவெளி பல்லாண்டுகளாகச் சுட்டிக்காட்டப்பட்டுவந்துள்ளது. ஆனால் அண்மைக் காலமாகக் கல்விக்கும் தொழில் உலகுக்குமிடையே பாலம் அமைக்கும் முயற்சிகள் திட்ட மிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. பள்ளிக்கூடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற்றவரும் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல் (Career Guidance) நட வடிக்கை அவ்வாறு பாலம் அமைக்கும் முயற்சிக்கு எடுத்துக்காட்டாகும்.
2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி தொடர் தொழில் அங்காடி (Careet Fair) ஒன்று அமைக்கப்பட்டமையும் தேசிய மட்டத்தில் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல் மற்றும் பயிற்சி தொடர் பான தேசிய நிறுவகம் ஒன்றை அமைப்பதற்கு அங்கீ காரம் கிடைத்தமையும் குறிப்பிட்டுக் கூறக்கூடிய நிகழ்ச்சிகளாகும்.
46 s

பள்ளிப்பருவத்திலிருந்தே ஒருவரது ஆற்றல் மற்றும் உளப்பாங்கு முதலியவற்றை அறிந்து பொருத்த மான தொழில்களுக்கு ஆற்றுப்படுத்துதல் கலைத்திட் டச் செயற்பாடுகளிலே திட்டமிட்டு மேற்கொள்ளப் படவேண்டியுள்ளன. பொருத்தமான தொழில் கிடைக் காமையும், தொழில் இன்மையும் கல்விச் செயல்முறை யின்மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. ஒருவரது திறமை, ஆற்றல், உளச்சார்பு, உளப்பாங்கு முதலிய வற்றை தொழில் உலகின் தேவைகளோடும், கேள்வி களோடும் குறிப்பிட்டு ஒப்பிட்டுப் பார்த்தல் "தொழில் நெறிக் குறிப்பிடுகை' (Job Specification) எனப்படும்.
தொழில்நுட்ப வளர்ச்சியும் பொருளாதாரக் கோலங்களின் பன்முகப்பாங்கும், தொழில்களின் பெருக் கத்தையும் சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலை யில் கல்விச் சீர்மியமும், தொடர்தொழில் ஆற்றுப் படுத்தலும் தவிர்க்கமுடியாத தேவைகளாக எழுந்துள் ளன. தொழில் வழங்குவோர் தொழில்நாடிகளை உள் வாங்கும் நிபந்தனைகளையும் கல்வித்தகைமைகளையும் காலத்துக்குக் காலம் மாற்றிவருதல் மேலும் சிக்கலான நிலைகளை ஏற்படுத்தி வருகின்றது. மனிதவளத்தை வினைத்திறனுடன் உற்பத்திகளில் ஈடுபடுத்தல் பொரு ளாதார, சமூக மேம்பாட்டுக்கு அடிப்படையாக அமை வதால் தொடர் தொழில் ஆற்றுப்படுத்தலை வாண்மை நுட்பங்களுடன் சிறப்புறக் கையாளவேண்டியுள்ளது.
இலங்கையின் அண்மைக்கால நிலவரங்களைப் பொறுத்தவரை தனியார் துறையினரே கூடியளவு தொழில்களை உருவாக்கி வழங்குவோராயுள்ளனர். தொழில்வழங்கும் ஆற்றலில் அரசதுறை 2000 ஆண்டி லிருந்து வீழ்ச்சியடைந்துகொண்டு வருகின்றது. படித் தவர்களிடம் காணப்படும் வேலையின்மையும் வேலை தேடி அங்கலாய்த்தலும் 2000 ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலவரங்களோடு ஒப்பிடுகையில் தற்போது மேலும் அதிகரித்து வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில்
a 47

Page 28
வேறொரு நெருக்கடியும் எதிர்கொள்ளப்படுகின்றது. கல்வி நிறுவனங்கள் பாரம்பரியமான பாடத்திட்டங்க ளோடு பெருமளவிலே கட்டுப்பட்டு நிற்கின்றமையால் தனியார்துறைகள் எதிர்பார்க்கும் நவீன அறிவையும், திறன்களையும் வழங்கமுடியாதுள்ளன. மாணவர் மத்தி பிற் காணப்படும் ஆங்கில அறிவுப் பின்னடைவும், பொது வாசிப்புப் பின்னடைவும், பொது அறிவுப் பின்னடைவும் மேலும் இடர்களை ஏற்படுத்தியுள்ளன.
மாணவர்களது தொடர்பாடல் திறன்களிலும், ஆளுமை விருத்தியிலும் கல்வி நிறுவனங்கள் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குறைபாடும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பட்டதாரிகளிடம் பிறிதொரு குறைபாட்டினை யும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது, பெரும்பாலான பட்டதாரிகள் தமது பட்டங்களைப் பெற்றபின்னரே என்ன தொழிலைப் பெறலாம் என்ப தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்குகின்றனர். சுய தொழில் முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்தும் ஒன்றி ணைந்த திட்டங்களும் வறிதாகவேயுள்ளன. பட்டம் பெற்றவர்கள் பாரம்பரியமான உத்தியோகங்களில் ஈடு படுதல் தொடர்பாகவே கூடுதலான அக்கறை காட்டு கின்றனர்.
மாறிவரும் தொழில்களோடு அவர்களை இசைவு படவைப்பதற்கும் உத்தியோகங்கள் தொடர்பான மாற்றுவகைச் சிந்தனைகளை அவர்களிடத்தே மலர வைப்பதற்கும் தொடர்தொழில் ஆற்றுப்படுத்தல் தவிர்க்கமுடியாது வேண்டப்படுகின்றது.
தொழில்கள் பற்றிய அறிவு, கூட்டாகச் செயற் படும் ஆற்றல், நெகிழ்ச்சித்தன்மை, தெறிரிந்தனை, ஆக்கத்திறன், திறனாய்வு மனப்பாங்கு, சமூகக் கடப் பாடு முதலியவை பட்டதாரிகளிடத்து ஆழமாக வளர்ச்சி பெறவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்
48 -

ளது. விரிவுரையாளர்கள் வழங்கும் குறிப்புகளிலே மாணவர்கள் பெருமளவு தங்கிப் பட்டங்களைச் சுவி கரித்துக்கொள்ளுகின்றார்கள் என்ற கண்டனமும் உண்டு.
அவர்களுக்குப் பாடசாலைகளிலும் பல்கலைக் கழகங்களிலும் போதுமான கல்விச் சீர்மியமும் தொடர் தொழில் வழிகாட்டலும் கிடைப்பதில்லை. மாணவர்கள் க. பொ. த. உயர்தரத் தேர்வில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையிலும் வாழ்விடங்களின் அடிப்படையிலும் பல்கலைக்கழகங்கள் கிடைக்கப்பெறுகின்றனவேயன்றி தொழில் தெரிவுக்குரியவாறு அனுமதி கிடைக்கப்பெறு வதில்லை. மரபு தழுவிய பல்கலைக்கழகங்கள் புதிய பாடங்களை உருவாக்குவதிலும் தயக்கம் காட்டுகின் றன. புதிய பாடங்களை அறிமுகம் செய்தால் பல்கலைக் கிழகங்களின் ‘உன்னதம் மாசுபட்டுவிடும் என்று கருது வோரும் உள்ளனர்.
பட்டதாரிகள் தம்மைப்பற்றிய தெளிவானதும், அனைத்துப் பண்புகளையும் ஆற்றல்களையும் உள்ளடக் கக் கூடியதும், நன்கு நிரற்படுத்தப்பட்டதுமான "வாழ் வியல் தரவை' (Bio-Data) சுயமாகத் தயாரிக்கமுடியா திருக்கின்றார்கள் என்ற விமர்சனமும் முன்வைக்கப் பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேர்முகத்தேர்வு களில் அவர்களால் சரியான சமர்ப்பணங்களைச் செய்ய முடிவதில்லை என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் கல்விச் சீர்மியமும், தொடர்தொழில் ஆற்றுப்படுத்த லும் மேலும் முக்கியத்துவம் பெறுதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
TIL FT6ð06) மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் பல்வேறு சீராக்கப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்றார்கள். பிறருடன் பழகும்பொழுதும் பொது நிகழ்ச்சிகளில் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் போதும், தமது அகத்தை (Self) பிறரது அகத்துடன்
- 49

Page 29
பொருத்தப்பாடுகொள்ளச் செய்யும்போதும் உளவியல் சார்ந்த நெருக்குவாரங்கள் அவர்களிடத்தே கண்டறியப் படுகின்றன. தமது மனவெழுச்சிகளை எவ்வாறு நெறிப் படுத்தல் வேண்டும், கட்டுப்படுத்தல் வேண்டும், திசைப் படுத்தல் வேண்டும் என்பவை தொடர்பான சீர்மியமும் அவர்களுக்குப் பரந்த அளவிலே கிடைப்பதில்லை.
மேற்கூறியவற்றைத் தொகுத்து நோக்கும் பொழுது சீர்மியமும் தொடர்தொழில் ஆற்றுப்படுத்த லும் பள்ளிக்கூடமட்டங்களில் இருந்தே வினைத்திற னுடன் வழங்கப்படவேண்டியுள்ளன. உளவியலும், ஆளுமை விருத்தியும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படு தலும் வரவேற்கப்படுகின்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இத்துறைகளில் பல பங்களிப்புக்களையும் பல முன்னோடி நடவடிக்கை களையும் மேற்கொண்டுள்ளது. துணைவேந்தர் பேரா சிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களது முயற்சி யினால் தொடர்தொழில் ஆற்றுப்படுத்தல் அலகு ஒன்று ஏனைய பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு முன்ன தாகவே நிறுவப்பட்டது. அதன் முக்கியத்துவம் பலரா லும் உணரப்படாமையால் இடைத்தடங்கல் அந்தத் திட்டத்தில் ஏற்பட்டது. மீண்டும் அந்தத்திட்டம் செயற்படத்தொடங்கியுள்ளது.
மருத்துவப் பின்புலத்தில் சீர்மியம் தொடர்பான பல்வேறு செயற்றிட்டங்களைப் பேராசிரியர் தயா. சோமசுந்தரம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நிறைவேற்றி வருகின்றார். ‘மனவடு என்ற நூலும் அவரால் எழுதப்பட்டது. எனது முயற்சியினால் ஆற்றுப்படுத்தலும், சீர்மியமும்" என்ற நூலும் உள நெறிக் கதைகள்" என்ற சீர்மிய நூலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உள மருத்துவத்துறையைச் சேர்ந்த விரிவுரையாளர் வண. பிதா டேமியன் அடிகளாரும் சீர்மியத்துறையில்
50

பல செயற்றிட்டங்களை நிறைவேற்றி வருகின்றார். பல்கலைக்கழக சமூக மருத்துவத்துறையினரும் கல்வி யியல் துறையினரும் பல்வேறு பங்களிப்புக்களைச் சீர்மியம் தொடர்பாகச் செய்துவருகின்றனர்.
V யாழ்ப்பாணப் டில்கலைக்கழக புறநிலைப்படிப்பு அலகினரும் சீர்மியம், மற்றும் தொடர்தொழில் ஆற்றுப் படுத்தல் தொடர்பான கருத்தரங்குகளை நடத்திவரு கின்றனர். ஆனாலும் இப்பணிகள் மேலும் விரிவாக்கப் படவேண்டுமென்பதை மாணவர் மத்தியில் நிலவும் அமைதியின்மையும், இசைவாக்கப் பிரச்சினைகளும் உணர்த்திவருகின்றன.
51

Page 30
தீர்வுகளை நோக்கிய உளச்சிகிச்சை முறைகள்
எமது பாரம்பரியமான சடங்கு கள், மாயவித்தைகள், வழிபாடுகள், தியானம், சாதனை, கலையாக்கம் முதலியவை ஒருவகையில் வலிமை பொருந் திய உளச்சிகிச்சை முறைகளாகவே அமைந்தன. மேலை யுலகில் பின்வரும் சிகிச்சைமுறைகள் உருவாக்கப் பட்டுள்ளன.
உளப்பகுப்பு முறைமை:
மேலையுலகில் ஒழுங்கமைந்த உளச்சிகிச்சை முறைகள் உளப்பகுப்பாய்வு (Psycho Analysis) நடவடிக் கைகளுடன் தொடர்புபட்டு வளர்ச்சியடையத் தொடங் கின. பல்வேறு எடுகோள்களின் அடிப்படையில் அவர் களின் சிகிச்சைமுறைகள் வளர்ச்சியடையத் தொடங்கின. நனவிலி முரண்பாடுகள், சிறார்நிலையில் இருந்து அடக்கி வைக்கப்பட்ட உந்தல்கள், இட் என்ற உள அமைப்பின் பாலியல் சார்ந்த உந்தல்களுக்கும், உன்னதமான அகத்தின் அறவொழுக்கக் கட்டளைகளுக்குமிடையே
2 =

நிகழும் போராட்டங்கள் முதலியவை உளச்சுகத்தைப் பாதிக்கின்றன என்று அவர்கள் கருதினார்கள். பதகளம், உளநலப்பாதிப்பு, நேர்த்தொடர்பற்ற பயம் முதலியவை அவற்றால் ஏற்படுகின்றன. இவற்றுக்குரிய சிகிச்சை முறைகளை விளக்கவந்த சிக்மன்ட் பிராய்ட் பின்வரும் சிகிச்சை முறைகளை முன்மொழிந்தார்.
1. a5 L "L-ibso 2060) GOOTLÜLjš5 GMT mrsio (Free Associa
tions) உளச்சுகம் தேடுதல்.
2. கனவுகளைப் பகுத்தாராய்ந்து உணர்ச்சி
வெளிப்பாட்டுக்கு உதவுதல்.
3. ஆழப்பதிந்த உள்ளத்துக் கற்பனைகளை வெளிக் கூறமுடியாத நிலையை (Resistance) உடைத்து உதவுதல்.
4. நீண்ட நாட்களாக அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகளை korrigj606 (Transference) செய்யத் துணைநிற்றல்.
மானிடப்பண்பு முறைமை:
உளவியல்சார்ந்த உளச்சிகிச்சை முறைமைகளுள் to Toofliugiarly 9 grey (p6DsD (Humanistic Approach) தீவிர வளர்ச்சிபெற்று வருகின்றது. சீர்மிய நாடியை மத்தியாகக் கொண்ட சிகிச்சை முறைமையை இவர்கள் வளர்த்துவருகின்றனர். ஒருவர் தம்மைப்பற்றிக் கொண் டுள்ள விளக்கம், அவரது சுய எண்ணக்கரு, அவரது உளப்பாங்கு, தம்மைத்தாமே நெறிப்படுத்தவல்ல நடத் தைகள் முதலியவற்றை மூலவளங்களாக வைத்து வளம் படுத்தும் நடவடிக்கைகளால் உளச்சுகம் தரமுடியும் என்பது இவர்களின் அணுகுமுறையாகின்றது. ஒருவரது சுய எண்ணக்கருவுக்கும் (Self Concept) அவரது அனு பவங்களுக்குமிடையே காணப்படும் இசைவின்மையும் முரண்பாடுகளுமே உளநலப் பாதிப்புக்குரிய காரணி கனாக இவர்கள் கருதுகின்றார்கள்.
- 52

Page 31
ஒவ்வொருவரிடத்தும் உள்ளார்ந்த வகையில் நற்பண்பு நிறைந்துள்ளது என்று கார்ல் ரொஜர்ஸ் (1980) வலியுறுத்தினார். ஒருவருடைய சுய எண்ணக் கருவை அடியொற்றியே அவரது ஆளுமையாக்கம் நிகழ்கின்றது. சுய எண்ணக்கருவை அவர் மேலும் விபரிக்கையில் இரண்டு படிமங்களைக் குறிப்பிட்டார்.
ാഞഖ,
1. இலட்சிய வடிவிலான சுய எண்ணக்கரு (Deal Self) 2. 5LúL9u/b 57u 676ô76007šaso (Real Self).
தாம் எவ்வாறு அமையவேண்டும், உருவாதல் வேண்டும் என்பதன் படிமமே இலட்சியச் சுய எண்ணக் கரு. யதார்த்தநிலையில் தமது இருப்பு எவ்வாறு உள்ளது என ஒருவரால் கொள்ளப்படும் காட்சியே நடப்பியல் சுய எண்ணக்கருவாகும். இலட்சிய எண்ணக் கருவையும் நடப்பியல் எண்ணக்கருவையும் முரண்பட வைக்கும் அனுபவங்கள் உள அமைதியைப் பாதிக் கின்றன.
ஒருவரது மனக்கோலத்துக்கும் புற யதார்த்தத் துக்குமிடையே நிகழும் முரண்பாடுகளால் உளநலம் சீர்குலைகின்றது. மானிடப்பண்பு உளவியல் ‘மூன்றாவது விசை" என்றும் உளவியலிலே குறிப்பிடப்படும் முதலா வது விசையாக உளப்பகுப்புக் கோட்பாடும் இரண்டா வது விசையாக நடத்தைக் கோட்பாடும் குறிப்பிடப் படுகின்றன.
இதன் தொடர்பில் தன்னியல் நிறைவை அடைந்த ஒருவரிடத்துப் பின்வரும் பண்புகள் காணப் படும். தம்மையும் மற்றையோரையும் அங்கீகரித்தல், யதார்த்த வாழ்வை மேற்கொள்ளல், மகிழ்ச்சியான தொடர்புகளை மற்றவர்களிடத்து ஏற்படுத்துதல்,நகைச் சுவை நயப்பு, பிறரிடம் ஒத்துச்செல்ல வேண்டும் என் பதற்காக வேண்டாத மரபுகளுக்குக் கட்டுப்படுதலை மறுத்தல், சூழலை விரிவாக்கியமைக்கும் திறன், ஆக்க
ܡܢ 54

மலர்ச்சி, மக்களாட்சி நல விழுமியங்கள், தம்மை நடுநாயகப்படுத்தி நோக்காது பிரச்சினைகளை நடுதாய கப்படுத்தி நோக்குதல், மற்றவரது அபிப்பிராயங்களுக்குக் கட்டுப்படாது சுயமாகத் தொழிற்படும் ஆற்றல், திறந்த மணம், ஊற்றாகத் தொடரும் செயற்பாடுகள், ஆக்க பூர்வமாக ஆழ்ந்து சிந்தித்தல், முடிவை வழி வகைகளில் இருந்து பிரிக்கும் ஆற்றல், கலை இரசனை முதலிய பண்புகள் தன்னியல் நிறைவை அடைந்தோரிடத்துச் செறிந்து காணப்படும்.
உளநலம் பாதிக்கப்பட்டோரிடத்து பரிந்துணர்வு காட்டுதல், ஒத்துணர்வை வெளிப்படுத்துதல், நிபந்தனை யற்ற நேர்முக அங்கீகாரத்தை வழங்குதல் முதலியவை மானிடப்பண்பு சிகிச்சை முறையிலே வலியுறுத்தப்படு கின்றன. வினைத்திறன்மிக்க ஆழ்ந்து கேட்டல் (Active Listening) இவர்களால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தனது உணர்ச்சிகளைச் சீர்மியநாடி தெளிவுபடுத்திக் கொள்வதற்கும் சீர்மியரின் அங்கீகாரத்தைப் பெறுவதற் கும் இது துணைசெய்கின்றது.
முழுமைப்புலச் சிகிச்சை (Gestalt Therapy)
உடைந்து சிதறிய உள்ளார்ந்த அகத்தின் துண்டங் கள்ை ஒன்றிணைத்து சுயகாட்சியை முழுமைப்படுத்திச் 'சுகம்காண வைக்கும் உபாயமாக இது விளங்குகின்றது. பேர்ல்ஸ் (1973) இந்த நுட்பவியலை முன்மொழிந் தார். உளப்பகுப்பு ஆய்வு கடத்தகாலத்திலே கவனம் செலுத்த முழுமைப்புல அணுகுமுறை நிகழ்காலத்தின் மீது அழுத்தம் கொடுக்கின்றது. பின்வரும் செயற்பாடு களில் இவர்கள் தீவிர கவனம் செலுத்துகின்றார்கள்: 1. நடிபங்கு ஏற்று சீர்மிய நாடியை நடிக்கச்
செய்தல். 2. சீர்மியநாடி சொல்வதற்கும் செய்வதற்கு மிடையேயுள்ள இசைவின்மையைச் சுட்டிக் (35 - 6.
- 55

Page 32
9. Gap,56um b ' gegentur as (First Person) pisivo பேசவும் வெளியிடவும் வல்ல ஆற்றலை சீர்மிய நாடியிடத்து வளர்த்தல். நேரடியாகச் சுட்டிக்காட்டுதல், கூடிய பின்னூட் டல்களை வழங்குதல், நேரடியான அணுகுமுறைகளைக் கையாளுதல் முதலியவை இந்த நுட்பவியலிலே பயன் படுத்தப்படுகின்றன.
பகுத்தறிவு எழுச்சி தூண்டற்சிகிச்சை (Rational Emotive Therapy) (RET)
அறிகை அமைப்பு, அறிகைத் தொழிற்பாடு முதலி பவற்றுடன் இணைந்த அணுகுமுறையாக இது அமை கின்றது. அல்பேர்ட் இலிஸ் (1984) இந்தச் சிகிச்சை முறைமைக்குரிய அமைப்பியலை வழங்கினார். உளநலம் பாதிக்கப்பட்டவர்களின் அறிகை அமைப்பை தெளி வாக்குவதன் வாயிலாக சுகம் காணமுடியும் என்பது இவர்களின் துணிபு.
ஒவ்வொருவரும் தமது அனுபவங்களைப் பகுத் தறிவற்றவகையில் வியாக்கியானம் செய்வதனால் உளச் சுகம் பாதிக்கப்படுகின்றது. அவ்வாறு பிழையான சீராக்கம் கொண்ட அறிகைக் கோலங்களுக்கு அறை கூவல் விடுத்து அவற்றை மாற்றியமைத்தற்கு உதவுதல் வேண்டும். சீர்மிய நாடிகளிடத்துக் காணப்படும் - தாம் தோற்றவராகக் கருதும் நோக்கினை (Self Defeating Outlook) மாற்றியமைத்தல் வேண்டும். இதன் பொருட்டுப் பின்வரும் நுண் உபாயங்கள் பயன்படுத்தப் படும்:
1. பலவற்றை உள்ளடக்கியதும், அதிக வீச்சுக்கள் கொண்டதுமான முறையியல்கள் தருதல், 2. ஆரோக்கியமான கருத்து முரண்பாடு வழங்
குதல்.
3. உடன்பட வைத்தல் 4. நடிபங்கு ஏற்படுத்தல் 5. வியாக்கியானம் செய்தல்
566 ao

6. நடத்தைகளை மாற்றிச் செழுமைப்படுத்துதல், 7. உணர்ச்சிகளைத் தெறித்துக் காட்டுதல்.
பகுத்தறிவு பூர்வமான சிந்தனைகளை அரும்பச் செய்தலும், வளர்த்தலும் இந்த உபாயத்திலே அதிக நேரச் செலவின்றி முன்னெடுக்கப்படும். அறிகை மீள் வடிவமைப்புக் கோட்பாடு (Cognitive Restructuring Theory)
இதுவும் ஒருவகையில் அறிகையோடு தொடர் புடைய ஒரு சிகிச்சை முறையாகும். அறோன் பெக் (Aaron Beck) என்பவரால் இந்த அணுகுமுறை வடி வமைக்கப்பட்டது (1976). மனநலக் குழப்பமடைந்தோ ரிடத்து எதிர்மறையான சுயபடிமம் காணப்படும் என்று கருதப்படுகின்றது. இந்த எதிர்மறையான சுயபடிமம் தம்மைப்பற்றிய எதிர்மறையான சுயகாட்சித் துண்டங் as 6TIT6 (Negative Self Labels) a-c, sirr distulligo is கும். இவ்வாறான எதிர்மறையான காட்சித் துண்டங் களை மாற்றியமைப்பதற்குச் சீர்மியத்தின் வழியாக உதவுதல் வேண்டும்.
சீர்மியநாடி தம்மைப்பற்றித் தாம் கொண்டுள்ள சுயபடிமக் காட்சிகளைப் பட்டியலிடச் செய்தல் வேண்டும்.
அத்தகைய எதிர்மறைச் சுயபடிமங்கள் தவறா னவை என்பதை உணர்த்துவதற்குரிய பரிசோதனை களைச் சீர்மியர் வடிவமைத்தல் வேண்டும். அவற்றின் வழியாக செழுமையான சுயபதிவுகளை மலர்வித்தலே இந்த அணுகுமுறையில் சிறப்பிடம் பெறுகின்றது.
slising, rar 595 6that upongp56it: (Behaviour the Rapies) தொல் சீர் நடத்தை நிபந்தனைச் சிகிச்சை முறைமை ஜோசப் வூல்ப் (Joseph Wope) என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒருவரது சமகால நடத்தைகள் அல்லது வினைப்பாடுகளே பிரச்சினைகளைத் தோற்று விக்கின்றன என இவர்கள் கருதுகின்றார்கள். சீர்மிய
a 57

Page 33
நாடிக்கும் உடனடிச் சூழலுக்குமிடையே பொருத்த மான மாற்றங்களை ஏற்படுத்துவதன் வாயிலாக உளச் சுகத்துக்கு வழிவகுக்க முடியும் என்பது இவர்களின் துணிபு.
மேலும் பொருத்தமான இசைவாக்கல் நடத்தை களை உருவாக்குவதனால் உளச்சுகத்தை வளம்படுத்த முடியுமென்று அல்பேட் பண்டுறா குறிப்பிட்டுள்ளார். ஒரே நேரத்தில் ஒருவர் ஓய்வு நெகிழ்ச்சியிலும் அதேவேளை பதகளத்திலும் இருக்க முடியாது. ஒய்வு நெகிழ்ச்சியில் ஒருவர் இருப்பதற்குரிய நடவடிக்கை களைப் படிப்படியாக முன்னெடுத்து வந்தால் பதகளிப்புப் படிப்படியாக நீங்கி உளச்சுகம்பதகளிப்பான நிலையிலும் குறிப்பிட்ட ஓய்வு நெகிழ்ச்சித் தூண்டலுக்கு ஒருவரைத் துலங்கச்செய்து உளச்சுகத்தைப் படிப்படியாக வளர்க்க முடியும். இது ஒழுங்கமைந்த மனவெழுச்சிக் குதம்பற் 6606vÜL (Systematic Desensitization) 6767üU(Çıb.
எதிர்த்துலங்கல் நிபந்தனைப் பாட்டினை (Aversive Conditioning) ஏற்படுத்தலும் இந்தச் சிகிச்சை முறையிலே பயன்படுத் கப்படுகின்றது. ஒரு சிறிய உதா ரணத்தால் இதனை விளக்கலாம், மதுவுக்கு அடிமைப் பட்டவர்களுக்கு மதுவுடன் சேர்த்து அருவருப்பையும் குமட்டலையும் ஏற்படுத்தும் ஆபத்தில்லாத ஒரு இரசா பனப் பொருளைக் கலந்து கொடுக்கும்பொழுது அவ ரிடத்து எதிர்த்துலங்கல் மதுவின்மீது வெறுப்பை ஏற்படுத்தும். கருவிசார் நிபந்தனைப்பாட்டு சிகிச்சை முறைகள் (Operant Conditioning Therapies)
மீள வலியுறுத்திகளைப் பொருத்தமான முறை யிலே மாற்றியமைத்தல் வாயிலாக ஒருவரிடத்து உளச் சுகத்தை வருவிக்கும் முறையியலாக இது அமைந்துள் ளது. ஒவ்வொருவரும் வெகுமதிகளை நோக்கியே செயற்பட்டுக்கொண்டிருப்பதால் வெகுமதிகளின் வழி யாக நடத்தைகளில் இங்கிதமான மாற்றங்களை ஏற் படுத்த முடியும்.
58 -

நடத்தைப் பிறழ்வுகள் எத்தகைய துலங்கலுஉ னும், வெகுமதிகளுடனும் தொடர்புபட்டிருக்கின் றனவோ அவ்வாறான வெகுமதிகளைக் கட்டுப்படுத்து வதன் வாயிலாக நடத்தைப் பிறழ்வுகளை மாற்றி யமைக்க முடியும். இது 'புறம்போக்கும் நுண்மை" (Extinction Technique) 6TalliuGub. 567 L60607 assist இந்த நடவடிக்கைகளிலே பயன்படுத்தப்படுதல் உண்டு. காட்டுருவாக்கல் (Modeling)
பிறரை மாதிரிகையாகக் கொள்ளும் சமூகக்கற்றல் (Albert Bandura, 1986) 2 UTILU Iiiiies6TT6Ayyub 0677 ġieri ssib எட்டப்படலாம் என்று கருதப்படுகின்றது. நேர்த் தொடர்பற்ற பயத்தை நீக்குவதற்கு இந்த உபாயம் பெருமளவில் துணைசெய்யும். ஒரு சிறு எடுத்துக்காட் டினால் இதனை விளக்கலாம்.
ஒரு சிறுவன் பற்சிகிச்சைக்குப் பயந்து அழுகின் றான் இந்நிலையில் சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் பற் சிகிச்சைக்கு உட்படும் வீடியோ படங்களையும் நேர்க் காட்சிகளையும் காண்பித்தால் பயமுற்ற சிறுவர் அவற்றை உள்வாங்கி தமது பயத்தை மாற்றிக் கொள்வர். spá93&fns upong) (Group Therapy)
பிரச்சினையைத் தீர்க்கவல்ல குழுக்களை அமைத் துச் செயற்படுத்துவதன் வாயிலாக உளச்சுகம் வழங்கும் முறையியலாக இது அமைகின்றது. இந்த முறையியலில் g5Gib 5&63)a qp60so (Family Therapy) gió0600Tari. துணைவியர் சிகிச்சைமுறை (Couple Therapy) முதலி யவை உள்ளடங்குகின்றன. நாடக சிகிச்சைமுறை கலையாக்கச் சிகிச்சை முறை முதலியனவும் இதில் அடங்கும்.
மேற்கூறியவை சீர்மியரால் உதவப்படக் கூடிய தீர்விய முறைகளாகும். இவை தவிர உள மருத்துவர் களால் மேற்கொள்ளப்படக் கூடிய உளச்சத்திரசிகிச்சை (Psychosurgery) Lólaö7 GMTL - 66Sở GDF GypGpp (Ecectro Convuisive Therapy) 86755Tada L-div upтš86ogascir (Psychoactive LUrugs) (p6oppsEarth 2 Gin GMTGOw.

Page 34
பிரச்சினை விடுவிக்கும் சீர்மிய நடவடிக்கை
பிரச்சினைகளை இனங்காணு தல், வகைப்படுத்துதல், பிரச்சினைகள் தொடர்பான தெளிந்த புலக்காட்சியை ஏற்படுத்திச் சீர்மியத்தை வளம்படுத்துதல் முதலியவை சீர்மியரால் முன்னெடுக் கப்படவேண்டியுள்ளன.
நேரடியான முனைப்புவினாக்கள், ஆழ்ந்து கிர கித்துக் கேட்டல், சீர்மிய நாடியை உற்சாகமளித்துப் பேசவைத்தல், சீர்மிய நாடியின் விளக்கங்கள் மீது குவியப்படுத்தலை முன்னெடுத்தல் முதலிய பல நுட்ப வியல்களைக் கையாண்டு பிரச்சினையின் இயல்பையும், செறிவையும் இனங்காண முடியும்.
சீர்மியநாடியின் வாழ்நிலை இயல்புக்கேற்றவாறு பிரச்சினைகள் பலவகைப்பட்டவையாயும், பல கோலங் களைக் கொண்டவையாயும் காணப்படும். பின்வருவன பிரச்சினைகளின் வகைகளுக்குச் சில எடுத்துக்காட்டுக ளாகும்:
60 -

பரீட்சைகள் தொடர்பான பிரச்சினைகள் கற்றல் இடர்ப்பாடுகள் குடும்ப இடர்கள் தொழில்சார் பிரச்சினைகள் பாலியற் பிரச்சினைகள் பொருளாதாரப் பிரச்சினைகள் . தொடர்புநிலைப் பிரச்சினைகள்.
இச்சந்தர்ப்பத்தில் பிரச்சினை விடுவித்தற் சுழல் (Problem Solving Cycle) usba)u 9pa Gril 15u(5š8 இன்றியமையாது வேண்டப்படுகின்றது. பிரச்சினை விடுவித்தற் சுழல் என்பது பின்வரும் கட்டங்களை உள்ளடக்கியதாகும்:
1. கட்டம் ஒன்று: இக்கட்டத்தில் பிரச்சினை பற்றிய தெளிவை சீர்மியரும் சீர்மிய நாடியும் செப்பமான உரையாடல் வாயிலாக அறிந்துகொள்வார்கள்.
2. கட்டம் இரண்டு: பிரச்சினையைத் தீர்ப்பதற் குரிய ஏற்புடையதான நடவடிக்கைகளை சீர்மியரும் சீர்மிய நாடியும் சேர்ந்து உருவாக்கிக்கொள்வர். 'மூளை உருட்டல்" (Brainstorm) உபாயத்தை இக்கட்டத்திற் பயன்படுத்திக்கொள்ளலாம்.
3. கட்டம் மூன்று: மூளைவிசை உபாயத்தின் வழி யாக உருவாக்கப்பட்ட தீர்வுப்பட்டியலில் இருந்து சரி யான தீர்வை சீர்மிய நாடியின் விருப்புடன் தெரிவு செய்தல்.
4. கட்டம் நான்கு: பிரச்சினைக்குரிய பொருத்த மான தீர்வை சீர்மியநாடி செயற்படுத்துதல்.
5. கட்டம் ஐந்து மதிப்பீடு செய்தல் . தீர்வுச் செயல்முறையானது வினைத்திறன் கொண்டுள்ளதா எதிர்பார்த்த வெற்றியைத் தந்துள்ளதா என்பவற்றைச் சீர்மியரும், சீர்மியநாடியும் ஒன்றுசேர்ந்து மதிப்பீடு
a 6.

Page 35
செய்வர். எதிர்பார்த்த பலாபலன் அல்லது விளைவு விடைக்கப் பெறாவிடில் இருவரும் முதலாம், இரண்டாம் கட்டங்களுக்கு மீண்டு செல்லவேண்டியிருப்பதால் இது "சுழல்" நடவடிக்கை என்று குறிப்பிடப்படுகின்றது. அக்கட்டங்களில் பிரச்சினையை மீள்பரிசீலனை செய் தலும், மாற்றுத்தீர்வுகளைப் பிறப்பாக்கம் செய்தலும் முன்னெடுக்கப்படும்.
பிரச்சினையை ஆழ்ந்து தரிசித்தல், பிரச்சினை யின் பன்முகப்பாங்குகளை இனங்காணல், அகல்விரி பண்புடன் தோக்குதல், பிரச்சினையின் மையப்புள்ளி யைக் கண்டறிதல், பிரச்சினையை உருவாக்கும் விசை களைப் பகுப்பாய்வு செய்தல், பிரச்சினையின் உள்ள மைந்த முரண்பாடுகளைப் பெயர்த்து அறிதல், பிரச் சினைக்கு ஆதாரமாயிருக்கும் கட்டமைப்புக்களைப் பரிசீலித்தல், பிரச்சினைச் சேர்மானங்களின் இயல்பு களை விபரித்தல் முதலியவற்றிலே கவனம் செலுத்துதல் வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் முன்னர் பெற்ற பட்டறிவு இருவருக்கும் துணை நிற்கும். சீர்மியர் முன்னைய அனுபவங்களை மீட்டெடுத்துக் கொடுப்பதற்குத் துணை நிற்றல் வேண்டும்.
பிரச்சினைக்குரிய தீர்வின் நடைமுறைப் பண்பு களையும் தெளிவாக ஆராய்தல் வேண்டும். நடை முறைக்குச் சாத்தியப்படாத தீர்வுகள் சீர்மிய நாடி யிடத்துப் பதகளிப்பை அதிகரிக்கச் செய்வதுடன், நம் பிக்கை வரட்சியையும் மனத்தாங்கலையும் ஏற்படுத்தி விடும்.
இச்சந்தர்ப்பத்தில் "பாதிநிலைத் தீர்வுகள் பற்றிய எண்ணக் கருவையும் விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது சில தீர்வு நடவடிக்கைகள் இடைநடுவில் நின்றுவிடக் கூடியவையாயிருக்கும். நகரமுடியாது பாதியில் நின்றுவிடும் தீர்வுகள் மனப்பதகளத்தை ஏற்படுத்திவிடும்.
62 -

சிலவகையான தீர்வுகள் "வலுக்குன்றிய தீர்வு களாக இருக்கும். அதாவது பிரச்சினையின் செறிவையும் வலிமையையும் அத்தகைய தீர்வுகளினால் எட்டப்பட முடியாமலிருக்கும். வலுக்குன்றிய தீர்வுகள் ஏமாற்ற உணர்வைத் தூண்டவல்லவை.
பிரச்சினை விடுவித்தற் திட்டத்தில் பொதுவாக மூன்று கூறுகள் காணப்படும். அவையாவன:
1. பிரச்சினை தொடர்பான காட்சித்தெளிவு
(Clarification)
2. பிரச்சினைக்குரிய தீர்வை இனங்காணல்
(Identification)
3. இலக்குகளையும், நோக்கங்களையும் வடி
ou6DLD556 (Drawing up of Goals).
பிரச்சினை விடுவித்தற் திட்டத்தை நடைமுறைப் படுத்தும்பொழுது சீர்மியரின் பங்கு யாது என்பதை அடுத்து நோக்குதல் வேண்டும்.
திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது சீர்மியர் தாமே முழுமையாக நின்று செயற்படுத்தாது, செயற்காட்சியின் தாழ்மட்டத்தில் நின்றுகொண்டு, (Keeping a Low Profile) 9ri lilu 5Tug6)u (upgpaoud யாகச் செயற்பட வைத்தல் வேண்டும். சீர்மியர் தொடர்ந்து ஆதரவையும், உற்சாகத்தையும் வழங்கி வருதலுடன், சீர்மிய நாடியின் ஈடுபாட்டைத் தங்கி பிருக்கும் நிலைக்குத் தள்ளிவிடக்கூடாது. மாற்றங் களுக்கும், தூண்டிகளுக்கும் சீர்மியர் துலங்குபவராக இருத்தல் வேண்டும்.
(5.

Page 36
சீர்மியச் செயல்முறை
சீர்மியம் அல்லது உளவளத் துணை என்பது ஒருவழிமுறை(Means)யே அன்றி ஒரு முடிபு அல்ல. இலக்கு மிக்குடைய உரையாடல் வாயிலாக ஒருவர் மற்றவர்க்கு உதவுதல் சீர்மியமாகின்றது. பிரச் சினை விடுவிக்கும் தொடர்ச்சியான நேர்காணல் பல வற்றை அது உள்ளடக்கி நிற்கின்றது. சீர்மிய நாடியும், சீர்மியரும் ஒன்றிணைந்து தனியாள் பிரச்சினைகளைப் புலக்காட்சி கொள்ளலும், விளம்புதலும் அவற்றுக்குரிய தீர்வுகளை இனங்காணுதலும் என்ற செயல்முறைகள் அங்கு இடம்பெறும். பிரச்சினைகளுக்குரிய நடைமுறை சார்ந்ததும் சாத்தியப்படத்தக்கதுமான தீர்வுகளை இனங்காணுதலும், தீர்வுகளை நோக்கி நகர்தலுமாகிய முறையியல்கள் சீர்மியத்தில் முன்னெடுக்கப்படும்.
சீர்மிய நாடியின் உணர்வுகளை நேர்நிலையிற் கிளர்ந்தெழச் செய்தலும், அவர்களின் உரைக்கோவை களை ஆழ்ந்து செவிமடுத்தலும், தலையாய நிகழ்ச்சி களாகின்றன. சீர்மியநாடி தமது பிரச்சினைகளுக்குரிய
64 ·

தீர்வுகளைத் தாமே கண்டறியச் செய்தலும், தீர்வு பற்றிய தெளிந்த புலக்காட்சியை ஏற்படுத்துதலும் முன்னெடுக்கப்படுகின்றன. பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டுமென்பது இருவரினதும் எதிர்பார்ப்புக்களாக அமைகின்றன.
சீர்மியருக்கும், சீர்மிய நாடிக்கும் ஒத்துணர்வுத் Gôg5 mtl Lrfl (Empathic Relationship) 9)6ör/i52uLu60) uDuLuIT தது. ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை வைத்திருத்தலும், பிறரறியா இரகசியங்களைப் பரிமாற்றம் செய்துகொள் வதற்குரிய கவிநிலையும் அங்கே சிறப்பிடம்பெறுகின்றன. சீர்மியர் பிரச்சினையோடு மிக அண்மித்து நிற்றல் வேண்டும். எதனையும் பேசக்கூடிய, வெளிப்படுத்தக் கூடிய இதமான கவிநிலை சீர்மியநாடிக்கு இருத்தல் வேண்டும். நிறைவான இருவழி இணக்கம் (kapport) அங்கு நிலவுதலே சாலச்சிறந்தது.
வினைத்திறனுடைய சீர்மியத்துக்குரிய பின்வரும் கருதுகோள் கட்டமைப்புக்களை கார்ள் ரொஜர்ஸ் (Carl Rogers 1957) பின்வருமாறு விளக்கினார்:
1. இருவரும் உளவியல் தொடர்பாடல் நிலையில்
இருத்தல்.
2. முதலில் சீர்மியநாடி நெருஞ்சி நிலையிலும்
(Vulnerable) அவா மிக்குடைய நிலையிலும், பதகளிப்பு நிலையிலும் இருத்தல்.
3. இரண்டாவதாக சீர்மியர் தொடர்பாடலை
உள்வாங்கி ஒன்றிணைத்தல்,
4. சீர்மிய நாடிமீது நிபந்தனையற்ற நம்பிக்கை யினைச் சீர்மியர் அனுபவிக்கத் தொடங்குதல்,
5. சீர்மிய நாடியின் உள்ளார்ந்த உசாத்துணை oulgou 60). I'll 60607 (Internal Frame of Reference) சீர்மியர் ஒத்துணர்வுடன் விளங்கி அனுபவித்தல்.
to 6S

Page 37
மேற்கூறிய நிலை எட்டப்படுதல் சீர்மிய நடவடிக் கையின் அடிமட்டத் தேவையாகும்.
சீர்மியம் என்பது பின்வருவனவற்றை எக்காலத் திலும் உள்ளடக்கலாகாது.
1. சீர்மியர் ஆலோசனை சொல்ல முயலுதல், 2. உளச்சிகிச்சை நடவடிக்கையில் இறங்குதல். 3. உளநலப் பாதிப்புக்குச் சிகிச்சை அளிப்பவ
ராகத் தம்மை ஆக்கிக்கொள்ளல், 4. வாழ்க்கையின் அனைத்துப் பிரச்சினைகளையும்
தீர்க்க முயலுதல். ஒரு தனிநபர் வாழ்க்கையின் அனைத்துப் பிரச் சினைகளையும் தீர்க்க முயலுதல் வெறும் கற்பனாவாத நடவடிக்கையாக மாறிவிடும். மனித உளநலம் பாதிப் படைவதற்குச் சமூக நிலவரங்களே காரணிகளாக இருப்பதனால், சமூக இயல்பையும், சுரண்டற் கோலங் களையும் நிராகரித்த தனிமனித சீர்மிய நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்து விடலாம். இதன் காரண மாக சீர்மியமானது பல மட்டுப்பாடுகளைக் (Limitations) கொண்ட நடவடிக்கை என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும். பேச்சிலிருந்து செயல் நடவடிக்கை களை நோக்கி நகராவிடில் சீர்மியம் என்பது வெறுமனே உரையாடலாகவே மாறிவிடும்.
சீர்மியர் தமது முடிவுகளை சீர்மிய நாடிமீது ஒருதலைப் பட்சமாகத் திணித்தல் தவறானதும் பொருத்தமற்றதுமான நடவடிக்கைகளாகும்.
சீர்மியருக்குரிய குணவியல்புகள் பின்வருமாறு தொகுத்துக் கூறப்படுகின்றன: 1. ģ556TIT Y Ga (Empathy)
சீர்மியநாடி காண்பது போன்று காணல், உணர் வது போன்று உணர்தல், அவரது பிரச்சினைகளைத்
66 -

தமது பிரச்சினைகளாகக் கொள்ளல். தமது சுயத்தையும், கெளரவத்தையும் மமகாரத்தையும் விட்டுக்கொடுத்து ஒத்துணர்வைப் பெறுதல் வேண்டும்.
2 பிறர்நலவிருப்பு (Warmith)
இயல்பாகவே பிறர் நலனிலும், விருப்புக்களிலும் அக்கறை கொள்ளல்.
3. G35 Lor Gorúd (Genuineness)
சீர்மியநாடியின் நலனிலும், முன்னேற்றத்திலும் அப்பழுக்கற்ற வகையில் உதவிசெய்ய எண்ணுதல். 4. p5 is 56.551 usiTs), p. (Positive Regard)
எதுவித பிரதி உபகாரமும், மீள்நயமும் கருதாது உதவுதல்.
5. SL-5606) (Concreteness)
சீர்மியநாடி சொல்வதை முழுதாக உள்வாங்கும் ஆற்றலும் அவர் சொல்வதை முகப்பெறுமானமாக (Face Value) உள்வாங்குதலும், அதற்கு வியாக்கி
யானமோ, இடைச்சொருகலோ வழங்காதிருக்கும் நிலையுமாகும். 6. 56th 53:3760shjust 1s 6 (Sense of Humour)
இதன் பொருட்டு சீர்மியர் ஒரு கோமாளியாக வேண்டியதில்லை. சீர்மியநாடி சொல்வதை நயந்து ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருத்தல்.
7 glit is usi plast fra (Sense of Tragic)
வாழ்க்கையின் துன்பகரமான பரிமாணங்களை அனுபவிக்கத் தக்கவராக இருத்தல்.
8. 56irgo. 6 Tia (Self Awareness)
பிரச்சினைகள் பற்றியும் தமது மட்டுப்பாடுகள் பற்றியும் சீர்மியர் உணர்ந்திருத்தல்,
67

Page 38
சீர்மியச் செயல்முறையின் படிநிலைகள்
சீர்மியச் செயல்முறையின் முதலா வது படியாக அமைவது "கால்கோள் நிலையாகும். இதில் சீர்மியர் சிறப்பார்ந்த நிலையிற் செயற்படல் வேண்டும். சீர்மியநாடியை ஆறஅமர இருத்தி, விறைப்பு நிலையினைத் தணியச்செய்து, நெகிழ்ச்சியான சுகம் காணச்செய்தல் சீர்மியரின் சிறப்பார்ந்த கடமையாகும், ஒரு சிலரே முதலாவது சந்திப்பில் தம்மை வெளிப் படுத்துவோராய் இருப்பர். முதலாவது சந்திப்பில் பெரும்பாலும் பலரிடத்தும் ஒரு விதமான தயக்க நிலையே காணப்படும். முதலாவது சந்திப்பில் பின்வரும் விடயங்களைச் சீர்மியநாடி தெளிவுபடுத்துவார்:
இருவரதும் சந்திப்பின் மீடிறன்
. சந்திக்கும் நேரம்
3. எப்பொழுது முடியும் என்பது பற்றிய எதிர்
பார்ப்புக் காலம்
4. இருவரும் இரகசியமாகப் பேசமுடியுமா
என்பதன் சாத்தியப்பாடு.
68 -

செயல்முறையின் இரண்டாவது கட்டமாக அமைவது தொடக்கவுரையாகும். தொடக்கவுரையில் பரந்த, திறந்த வினாக்களைப் பயன்படுத்துதலே சிறந் தது. “உமது வாழ்க்கைப் பின்னணியைத் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்பதே ஒரு திறந்த வினா வாகும், சீர்மியநாடியின் மெளனத்தில் உடைப்பை ஏற்படுத்துவதற்கு திறந்த வினாக்கள் துணைசெய்யும்.
படிநிலையில் மூன்றாவதாக அமைவது பிரச்சினை யின் நடுப்புள்ளிகளை இனங்காணலாகும். இந்நிலை யில் சீர்மியர் வளமாக்கும் (Facilitative) வினாக்களை எழுப்புதல் வேண்டும். "அதனைப்பற்றி என்ன உணர் கின்றீர்?" "அத்தவேளை கொப்பளித்த உணர்ச்சிகள் என்ன?' 'உமது துலங்கலின் பின்னர் என்ன நடந்தது?" முதலியவை வளமாக்கும் வினாக்களுக்குச் சில எடுத்துக் காட்டுகளாகும். சீர்மியநாடியிடத்து முகிழ்ப்பை ஏற் படுத்த சீர்மியர் தொடர்ந்து உதவுதல் வேண்டும்.
செயல்முறையின் நான்காவது கட்டமாக அமை வது "உணர்வுகளுடன் ஒத்துச்செல்லலாகும், பிரச் சினைப் புள்ளிகளை வெளிப்படுத்தும்பொழுது சீர்மிய நாடிக்கு மனவெழுச்சி நெருக்குவாரத்திலிருந்து விடுதலை கிடைக்கும் நிலை (Emotional Release) ஏற்படுகின்றது. நாளாந்த வாழ்க்கைச் செயற்பாடுகளும் கல்வி முறை மையும் மனவெழுச்சிகளை அடக்கியொடுக்கப் பழக்கு வதால், மனவெழுச்சி அழுத்தங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் சுகத்தை உருவாக்குதல் சீர்மியத்தின் குறிப் பிடத்தக்க அடைவாகக் கருதப்படுகின்றது.
ஐந்தாவது படிநிலையாக அமைவது அடக்கி வைக்கப்பட்டுள்ள உணர்வுக் குவியல்களை வெளியிடு வதற்கு உதவிசெய்தலாகும். நீடித்தபயம், நீடித்த கோபம், நீடித்த துன்பம், நீடித்த கூச்சம் முதலிய வற்றை வெளியிடத் தூண்டுதல் தருதலாகும். கோபம் உரத்த ஒலியிலும், பயம் நடுக்கித்துடனும், துன்பம்
69 سے

Page 39
கண்ணிருடனும், கூச்சம் ஒருவித சிரிப்புடனும் பொது வாக வெளிப்படுத்தப்படும். அந்த வெளிப்பாடுகளுக்கு உற்சாகமும் அங்கீகாரமும் தருதல் வேண்டும்.
ஆறாவது படிநிலையாக அமைவது எட்டப்படக் கூடிய தீர்வுகளை இனங்காணுதலாகும். நடப்பியல் நோக்கு இந்தப்படிநிலையில் இன்றியமையாததாகும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்படுதல், அத்துணை இலகுவானதல்ல. சீர்மியநாடி தாமே தீர்வு களை எட்டும் நிலமையை சீர்மியர் உருவாக்குதல் வேண்டும். இந்நிலையில் பிரச்சினைகளை எழுந்தமான மாகப் பட்டியலிட்டு அவற்றிலிருந்து பொருத்தமான ஒரு தீர்வை மேற்கொள்ளும் 'மூளைவிசை' அல்லது "மூளை உருட்டல்" (Brain Storming) முறைமையைப் பயன்படுத்தலாம். எதையும் தவிர்த்துக்கொள்ளாது பலகோணங்களில் விரியும் சிந்தனைகளுக்கு இந்த முறை யியலில் இடமளிக்கப்படுகின்றது. ஆக்கச் சிந்தனை, விரி சிந்தனை, தருக்க சிந்தனை, இயல்பாகக் கிளர்ந்தெழும் சிந்தனை முதலியவற்றுக்கு இச்சந்தர்ப்பத்தில் உற்சாக பsளித்தல் வேண்டும்.
ஏழாவது படிநிலையாக அமைவது நடைமுறைச் செயற்பாட்டுத் திட்டத்துக்கு இருவரும் ஒன்றிணைந்து ப்புதல் தருதலாகும், திட்டம் நியாயமானதாகவும் எட்டப்படத்தக்கதாகவும் இருத்தல் வேண்டும். திட் டத்தை எழுத்துவடிவில் கொண்டுவருதல் வரவேற்கத் தக்கது.
படிநிலையின் நிறைவுக் கட்டமாக அமைவது எழுத்துருவில் உள்ள திட்டத்தை நடைமுறைப்படுத்த லாகும். நடைமுறைப்படுத்தும் பொழுது சீர்மியநாடிக் குப் பதகளிப்பு ஏற்படலாம். பதகளிப்பை எதிர்கொண்டு சமாளிக்கும் திறனை சீர்மியநாடிக்கு வளர்த்துக் கோடுத்தல் சீர்மியரின் கடமையாகும்.
சீர்மியத்தைத் திட்டவட்டமாக முடித்து வைத் தலே இருசாராருக்கும் வெற்றியென்று கருதத்தக்க
நடவடிக்கையாகும்.
70 ،---

சீர்மிய நுட்பவியல் திறன்கள்
சீர்மியத்திறன்களுள் முதலாவதாகக் குறிப்பிடப் படுவது "செவிமடுத்தல்' என்பதாகும். செவிமடுத்தல் என்பது உற்றுநோக்கலையும் உள்ளடக்கும். ஆழ்ந்து நன்கு கவனித்து, கவனக் கலைப்பான்களில் ஈடுபடாது ர்ேமியநாடி சொல்வதைக் கேட்டும் அசைவுகளைப் பார்த்தும் உற்றுநோக்கல் வேண்டும். கேட்டலில் மூன்று பரிமாணங்கள் காணப்படுகின்றன. அவையாவன:
1. மொழியியற் பரிமாணம் 2. கடப்பு மொழியியற் பரிமாணம் (Paralinguistics) 3. சொல் சாராத் தொடர்பாடல்.
1. சீர்மியநாடி தேர்ந்தெடுக்கும் சொற்கள், சொற்றொடர்கள் உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு அவர்கள் பயன்படுத்தும் உவமை உருவகங்கள் முதலியவை பாரம் பரியமான மொழிப்பிரயோகங்களிலும் மேலானதாக இருக்கும், அல்லது மாறுபட்டவையாக இருக்கும்.
2. பேசும் சொற்கள் சொற்றொடர்கள் முதலிய வற்றின் காலஅளவு, அழுத்தம், தொனி, கனம் முதலிய கடப்புமொழிப் பரிமாணங்களில் இருந்து சீர்மியநாடியின் உணர்வுகளை இனங்காண முயல வேண்டும்.
3. சொல்சாராத் தொடர்பாடல் உடல்மொழி என்றும் கூறப்படும். முகபாவனை, சைகைகள், இருக்கும் மூறைமை, சீர்மியருடன் உள்ள தூரத்தெரிவு முதலிய வற்றையும் உற்றுநோக்குதல் வேண்டும். எல்லா சீர்மிய நாடிகளும் குறித்த மனவெழுச்சியை ஒரே உடல்மொழி யால் வெளிப்படுத்துவார்கள் என்றும் கூறமுடியாது உடல் மொழியைத் தெளிவுபடுத்துவதற்கு சீர்மியநாடி செய்வது போன்ற உடல் மொழிகளைச் செய்து 4ாட்டி "இந்த அசைவிலிருந்து எதை விளங்கிக் கொள்ளுகின்றீர்?" என்றும் கேட்கலாம்.
சீர்மியத்தொடர்பு அடிப்படையைப் பொறுத்து எந்தளவு தகவல்களை எவ்வாறு வழங்கலாம் என்பதைத்
・ 7I

Page 40
தீர்மானிக்கலாம். தனியாள் கூர்மொழிவுகளைக் காட்டி லும் (Personal Issues) திடநிலைக் கூர்மொழிவுகளை (Concrete Issues) வழங்குதலே சிறந்தது. இரண்டு வகைகளுக்குமுரிய சில எடுத்துக்காட்டுகள் வருமாறு:
1. தணியாள் கூர்மொழிவுகள்
அ) உறவுகளைத் தொடர்தல் ஆ) குடும்ப சிதைவு இ) உறவுத் துன்பத்தோடு இணைதல் ஈ) மனஅழுத்தத்தோடு வேலை செய்தல். 2. திடநிலைக் கூர்மொழிவுகள்
அ) கல்வியை மேம்படுத்துதல் ஆ) தொடர்தொழிலை மேம்படுத்துதல் இ) ஒரு பொருளை வாங்குதல் அல்லது பரா
மரித்தல். தனியாள் கூர்மொழிவுகளில் சீர்மியநாடியே சீர்மியரிலும் கூடிய அறிவுள்ளவராக இருப்பார். திட நிலைக் கூர்மொழிவுகளில் சீர்மியரே ஆற்றல்மிக்கவ ராக இருப்பார். சீர்மியநாடியின் அனுபவங்களையும் உணர்வுகளையும் சீர்மியர் தமது உணர்வுகளுடன் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்த்தல் வினைத்திறன்மிக்க செயலாக மாட்டாது.
* கிளறியெடுத்தல்" (Drawing out) என்ற செயல் முறை சீர்மியத்தில் சிறப்பார்ந்த செயலாகக் காணப் படுகின்றது. சீர்மியநாடியின் மனத்திலே உறைந்துள்ள உணர்வுகளைக் கிளறி மொழிவழியாக வெளிப்படுத்தும் கவிநிலையை உருவாக்குதல் வேண்டும். பேசி வெளிப் படுத்துவதனால் சுகம் காணச்செய்தல் (Taking Cure) முக்கியமானதாகும். இதன் பொருட்டு மூன்று நுட்ப வியல்களைச் சீர்மியர் பயன்படுத்தலாம். அவையாவன:
1. திறந்த வினாக்கள் 2. மூடிய வினாக்கள் 3. தெறித்தல்.
72 -

1. சரியான விடையையோ, சரி, பிழை சொல் லக்கூடிய விடையையோ, குறுவிடையையோ, திறந்த வினாக்கள் கொண்டிருக்கமாட்டா. திறந்த வினாவுக்கு ஒர் எடுத்துக்காட்டு வருமாறு:- (அ) "மின்சாரம் நின்று விடும்பொழுது எத்தகைய உணர்வுகள் உங்களிடத்தே தோன்றுகின்றன?"
2. ஆம், இல்லை மற்றும் சரி, பிழை என்று சொல்லக்கூடிய குறுகிய வீச்சைக் கொண்டவையே மூடிய வினாக்களாகும். இதற்கு ஓர் உதாரணம் வரு மாறு:- "மின்சாரம் நின்றபொழுது நீங்கள் பயம் கொண்டீரா? மகிழ்ந்தீரா?”
3. தெறித்தல் நுட்பவியல் கார்ல் ரோஜர்சின் சீர்மிய முறையியலில் பெருமளவு பயன்படுத்தப்படுகின் றது. அதாவது சீர்மியநாடியின் உரையாடலின் இறுதி யில் அமைந்த சில சொற்களைப் பிரதிபலித்துக் காட் டல். ஓர் எடுத்துக்காட்டு வருமாறு:- "நான் பலநாள் முயன்று அலைந்தேன். பணிமனைப்படிகள் பலவற்றில் ஏறி இறங்கினேன்; பலரைச் சந்தித்தேன்; தொழில் இன்னமும் கிடைக்கவில்லை’ என்று சீர்மியநாடி சொல்ல, சீர்மியர் பின்வருமாறு தெறித்துக்காட்டுகின்றார்: “தொழில் இன்னமும் கிடைக்கவில்லை. தொழில் பெறுவது இன்னமும் கடினமாகவுள்ளது.”
சீர்மியநாடியின் சிந்தனைகளையும் உணர்வுகளை யும் தெளிவுபடுத்தி உதவுதற்கு தெறித்தல் உபாயம் துணைசெய்யும்.
அறைகூவல் தருதல்
அறைகூவல் வழங்கல் (Challenging) அல்லது சவால் வழங்கி வளஞ்செய்தலும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் பயன்படுத்தக்கூடிய ஒரு சீர்மிய நுட்ப வியலாகும். பின்வரும் நிலைமைகளில் அறைகூவல் நுட்பம் பயன்தருவதாக அமையலாம்:
a 73

Page 41
1 சீர்மியநாடி யாதாயினும் ஒரு கருத்தைத் தெளிவின்றிக் கூறும்பொழுது, அவரின் இயல்புக்கு ஈடு செய்யக்கூடிய அறைகூவல் தருதல்.
2. தான் எப்பொழுதும் தோல்வியைத் தழுவியவ ராகவும், பின்வாங்குபவராகவும் இருப்பதாக சீர்மிய நாடி கூறும்பொழுது, அவருக்கு உற்சாகம் தரும் அறை கூவலை வழங்கலாம்.
3. சில விடயங்களைத் தவிர்த்து ஒதுக்க முயலும் வேளைகளில் பொருத்தமான அறைகூவலை இதமாகத் தரலாம்.
அறைகூவலுக்குச் சீர்மியநாடி துலங்சல் தரத் தொடங்கினால் அல்லது நேர்முகமான அருட்சியைக் காட்டினால் அந்த உபாயம் பயன்தரத் தொடங்கி விட்டது என்பதை உணரலாம். ஆனாலும் "ஆலோ சனை வழங்குதல்" போன்று இந்த உபாயத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்துதல் வேண்டும்.
ஆதரவு தருதல்
ஆதரவு கருதல் அல்லது அன்புக்கரம் தருதல் Supporting) என்பது சீர்மியச் செயல்முறையின் நடு நாயகமான பண்பாகும். உற்சாகம் தருதல், சீரிய கவனம் எடுத்தல், பங்கெடுத்தல், துணை நிற்றல், நம்பிக்கை யூட்டல் என்பவற்றை மேற்கொள்ளும்பொழுது சீர் மியர் தாம் ஓர் உயர்ந்த நிலையில் இருந்து செயற்படு பவராகக் கொள்ளல் தகாது. சீர்மிய நாடிமீது இது தான் சரி (Put things Right) நிலையும் தகாத நட வடிக்கையாகும். சீர்மியநாடி பிரச்சினைகளைத் தாமே இனங்கண்டுகொள்ளக்கூடிய தொடர்ச்சியான செயல் முறைக்கு ஆதரவு தருதலே முக்கியமானதாகும். சீர் மிய நாடியுடன் ஒன்றுசேர்ந்து செல்லும் ஒரு சக சுற்றுலாக்காரராகவே (Fellow Traveler) சீர்மியர் இத மாக இயங்குதல் வேண்டும். உளவளத்துணை செய்யும் சீர்மியர் வாழ்க்கையில் தாம் பலவகைகளிலும் வல்லவர் என்றோ, பல பரிமாணங்களும் வசதிகளும் கொண்டவர் என்றோ எண்ணுதல் தகாத தொழிற்பாடாகும்.

சீர்மியச் செயல்முறையின்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளும் மீள்வதற்கான நுட்பங்களும்
afTri 5505556) (Dependence) என்பது சீர்மியச் செயல்முறையின்போது முதற்கண் எதிர்கொள்ளப்படும் பிரச்சினையாகும். மற்றவர்களுக்கு எமது உதவியும் ஒத்துழைப்பும் வேண்டுமென எண்ணு வதும் எங்களுக்கு மற்றவர்கள் உதவிசெய்ய வேண்டு மென எண்ணுவதும் இருமுனைப்பட்ட சார்ந்திருத் தலைக் குறிப்பிடுகின்றது. சீர்மீயநாடி தமது உதவியை நாடி வருகின்றார் என்ற நடப்பியலை முதலில் சீர்மியர் விளங்கிக்கொள்ளல் வேண்டும். இந்த விளக்கமானது நம்பிக்கையைக் கட்டியெழுப்பலுக்கு அடித்தளமா கின்றது.
சீர்மியரும், சீர்மியநாடியும் ஒருவர்மீது மற்றவர் சார்ந்திருப்பதான கவிநிலை வலுவடையும்பொழுது இங்கிதமான கருத்துப் பரிமாறலும் தொடர்பாடலும்
75 ہے

Page 42
நிகழும். சார்ந்திருத்தல் என்ற சமநிலைக்கு வலுவூட்டல் சீர்மியரின் தலையாய கடமையாகும். கருத்துப் பரிமாற் றமும் நேர ஒதுக்கீடும் இந்தச் சமநிலையோடு சம்பந்தப் பட்டவை என்பதை முதற்கண் மனங்கொள்ளல் வேண்டும்,
நேர ஒதுக்கீடு உரிய முறையிலே மேற்கொள்ளப் படாவிடில் அதீத சார்ந்திருத்தல் (Over Dependence) வளர்ச்சியடையத் தொடங்கும். உதாரணமாக சீர்மிய நாடி எல்லா நேரங்களிலும் சீர்மியரைச் சந்திக்க முனைந்துகொண்டிருப்பார். ஆகவே நேரத்தை உரிய முறையிலே திட்டமிடல் இப்பிரச்சினையைத் தீர்க்கத் துணை செய்யும். அதாவது உளப்பிணி நீக்க உதவும் உபயோகமான ஒரு தூரம் சீர்மியரால் திட்டமிடப் படல் வேண்டும்.
சீர்மியச் செயல்முறையில் மொழிப்பிரச்சினையும் ஒரு பிரதான இடராகவுள்ளது. நிலையாமை சார்ந்த மொழி, இருப்பியம் சார்ந்த மொழி, தமக்கே உரிய சுயமொழி, சுருங்கியமொழி, செப்பலுக்கும் யதார்த்தத் துக்கும் இடைவெளி கொண்ட மொழி, மாற்றுவகை மொழி போன்ற பலவகையான மொழிகளைச் சீர்மிய நாடிகள் பயன்படுத்துதலைக் காணலாம். இவ்வகை யான மொழிகளின் வாயிலாக சரியான கருத்துக்களைக் கண்டறிதல் பிரச்சினைக்குரியதாக இருக்கும், மறுபுறம் சீர்மியர் தமக்கென உருவாக்கி வைத்திருக்கும் மொழி நடை சீர்மிய நாடிகளுக்கு விளங்காமலிருக்கும்.
நெருக்கீட்டுச்சுவாலை (Burnout) என்பது பிரச்சினைக்கும் ஆய்வுக்கும் உரிய ஒன்றாகும். நீண்ட காலத்துக்கு உரியதும், தொழில்முறை சார்ந்ததுமான நெருக்கீட்டு அடிப்படைகளுடன் தொடர்புடைய உணர் வுகளைக் கொண்ட நிலை நெருக்கீட்டுச் சுவாலை எனப் LuGh.
மனவெழுச்சிக் குதம்பல், தளர்வு, எதிர்மானிடப் படுத்தல் முதலியவற்றுடன் தொடர்புடையதான உள
76 -

தலப்பாதிப்பே "நெருக்கீட்டுச் சுவாலை” என மேலும் விப ரிக்கப்படும். ஊக்கமின்மை, பிறர்மீதும் தொழில்கள் மீதும் எதிர்ப்பு உளப்பாங்கு கொள்ளல், அதீத நகைச்சுவைப் படல் அல்லது முற்றான நகைச்சுவை இழப்பு, மாற்று வழிகளைத் தெரிவு செய்தலை ஒதுக்குதல், அந்நியமா தல், கடந்த காலத்தில் தாம் செய்ததெல்லாம் ‘குதறல் வேலைகள்’ என்று கழிவிரக்கப்படல், பிறரை ஒதுக்கி விட்டு, வேலைசெய்யும் மறை சந்தர்ப்பங்களை நாடு தல் முதலியவை நெருக்கீட்டுச் சுவாலையின் பிரதான பண்புகளாகும்.
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் மீண்டெழுவதற்கும் பின்வரும் நுட்பங்களைப் பயன் படுத்தலாம்:
1. பிரச்சினை பற்றிய நுண்விளக்கங்களை ஏற்
படுத்துதல். 2. பொறுப்புக்களை ஏற்கும் திறன்களை வளர்த்
தல். 3. அறிகைத் தெளிவு நிலைகளை எட்டவைத்தல். 4. இசைந்து செல்வதற்குரிய புதிய செயற்கருவி
களை வளர்த்தல்.
"கட்டுப்பாடுகளை இழந்து செல்லும் நிலைகளும் சீர்மியரால் எதிர்கொள்ளப்படலாம். இதற்கு உதாரண மாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:
1. பேசமுடியாது சீர்மியநாடி அழுதுகொண்டிருத் தல் அல்லது உளப்பிசிறல் (Hysterical) பண்பு களைக் கொண்டிருத்தல். 2. சீர்மியநாடி உளநோய்வாய்ப்பட்டிருத்தல். 3. பகுத்தெடுக்க முடியாத சிக்கல் முனைப்புக்
களைச் சீர்மியநாடி கொண்டிருத்தல், அழுதல் என்ற செயல்முறையினால் மனவெழுச்சி கள் வெளிவீசப்பட்டு சுகம்பெற முடியும் என்று கூறி னாலும், சில சமயங்களில் அழுதல் என்பது கட்டுப்
77

Page 43
பாடற்றதாக மாறுதல் பிரச்சினையாகிவிடுகின்றது. உளப்பிசிறல் நிலையால் யதார்த்தங்கள் வெளியிடப் படாது, கற்பனைக் கே. புரங்களே வெளிப்பட்டு நிற்கும். இவை பற்றிய தெளிந்த விளக்கம் சீர்மியருக்கு இன்றி யமையாததாகும். சீர்மியநாடி உளநோய்வாய்ப்பட்டிருப் பின் உரிய முகவரிடம் அவரை அனுப்பிவைத்தல் வேண் டும். பகுத்தெடுக்க முடியாத சிக்கல் முனைப்புக்கள் வெளியிடப்படும் பொழுது சீர்மியர் மிகுந்த பொறுமை யுடனும், தன்முனைப்பு எல்லைகளை மீறிவந்தும் பிரச்சினைகளை அணுகுதல் வேண்டும்.
சீர்மியக் கோட்பாடுக் கோலங்களும், கூர்மொழிவுகளும்
உளவளத்துணை என்பது ஒரு கலையாகவும், ஒர் அறிவியலாகவும் வளர்ச்சிபெற அந்த வளர்ச்சிக்குத் துணை செய்யவும், அணிசெய்யவும், கோட்பாடுகள் உருவாக்கப்படலாயின. திறனாய்வுகளும், மதிப்பீடுகளும் கோட்பாடுகளின் வளர்ச்சிக்கு மேலும் துணை நிற்கின்றன.
பின்வரும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகள் சீர்மியத்திலே பயன்படுத்தப் படுகின்றன. 1. சீர்மியநாடியை நடுவனாகக் கொள்ளும் அணுகு
(p60sp (The Client Centre Approach) 2. உளவியக்க அணுகுமுறை
(The Psychodynamic Approach) 3. Upcp65). Dillya) displey (p60AD (The Gestalt Approach) 4. தனியாள் கட்டுமான அணுகுமுறை
(The Personal Construct Approach) 5. தடத்தையியல் அணுகுமுறை
(The Behavioural Approach) 6. பரிமாற்றப் பகுப்பாய்வு அணுகுமுறை
(The Transactional Analysis Approach)

7. 9A6Ds sig09/ggp6.ad (The Cognitive Approach) 8. LDTridi5u ogo) (5ypso (The Marxian Approach)
1 சீர்மியநாடியை நடுவன்நபராகக் கொள்ளும் அணுகுமுறைக்கு முழுமையான வடிவம் தந்தவர் கார்ல் ரொஜர்ஸ் (1967). சீர்மியர் தாம் மேலானவர் என்ற நிலையிலிருந்து ஆலோசனை மற்றும் மதியுரை வழங்குதல் இங்கு தவிர்க்கப்படுகின்றது. ஆனாலும் சீர்மியரின் முக்கியத்துவம் தொடர்ந்து வற்புறுத்தப் படுகின்றது. உளவியக்க அணுகுமுறை மற்றும் நடத்தை வாத அணுகுமுறை ஆகியவற்றை நிராகரித்து எழுந்த மூன்றாவது அணுகுமுறையாக இது உளவியலிலே கருதப்படுகின்றது.
2. உளவியக்க அணுகுமுறைக்கு சிறப்பார்ந்த வடிவம் சிக்மன்ட் பிராய்ட்டினாலும், அவரது சிந்தனை மரபினராலும் வழங்கப்பெற்றது. உளப்பிறழ்வுக்கு நணவிலிமனத்தின் தொழிற்பாடுகளே அடிநிலையாக இருத்தல் இந்த அணுகுமுறையில் வலியுறுத்தப்படுகின் நிறது. நனவிலி மனத்தின் அடக்கல் உணர்வுகளை நனவு நிலைக்கு வெளிக்கொண்டு வருதலால் சுகம் எட்டப் படலாம் என்று வலியுறுத்தப்படுகின்றது.
3. முழுமைப்புல அணுகுமுறைக்கு முழுவடிவம் கொடுத்தவர்களுள் பேர்ல்ஸ் (1969) சிறப்பிடம் பெற்று விளங்குகின்றார். உடலாலும், மொழியாலும், பன்முகப் பாங்குகளின் ஒருங்கிணைப்பாலும் தொடர்பாடல் கொள்ளும் சீர்மியமுறைமை இங்கு வலியுறுத்தப்படு கின்றது.
4. தனியாள் கட்டுமான அணுகுமுறையானது ஜோர்ச் கெலி (1955) என்பவரால் வளமாக்கப்பட்டது. தனிநிலை உளவியலே இந்த அணுகுமுறைக்கு ஆதார மாகும். ஒவ்வொரு மனிதரும் தம்மை ஒரு விஞ்ஞானி யாகக் கொண்டு செயற்படவைக்கும் பிணிநீக்கற் கருவி
இங்கு எடுத்தாளப்படுகின்றது.
79

Page 44
5. நடத்தையியல் அணுகுமுறையென்பது பரி சோதனை ஆய்வுகளை அடியொற்றி உருவாக்கப்பட்டது. சீர்மியத்தில் நடத்தைகளை ஆய்வு செய்தலும், நடத்தை களை மாற்றியமைப்பதாற் சுகங்காணச் செய்தலும் இங்கு வலியுறுத்தப்படுகின்றது.
6. பரிமாற்றப் பகுப்பாய்வு அணுகுமுறையென் பது நவபிராய்டிசக் கோட்பாடுகளை அடியொற்றி எரிக் பேர்ணி (1972) என்பவரால் விருத்தி செய்யப்பட்டது. சீர்மியநாடிகளை வளர்ந்தோர் (Adult State) நிலையில் பெருமளவில் வாழச்செய்வதற்கு உதவுதல் இங்கு சிறப் பிடம் பெறுகின்றது. ஈகோ எனப்படும் நிலைகளில் இருந்து இசைவு செய்யக்கூடியவாறு உலக அனுபவங் களை எதிர்கொள்ள உதவுதலும் இங்கு வலியுறுத்தப் படுகின்றது.
7. அறிகை அணுகுமுறையில் சீர்மியநாடியின்
பகுத்தறிவற்றதும், தருக்கநிலைக்கு ஒவ்வாததுமான கருத்துக்களை மறுதலித்துத் தெளிவுபடுத்தும் அறிகைச் செயல்முறைக்கு இடமளிக்கப்படுகின்றது. சீர்மியர் தம்மைப் பற்றியும் சீர்மியநாடியைப் பற்றியும் எவ்வாறு சிந்திக்கின்றாரோ அவை உளவளத் துணையைப் பாதிக்கும் என்பதும் இந்த அணுகுமுறையில் குறிப் பிடப்படுகின்றது.
8. மார்க்சிய அணுகுமுறையானது மனிதரை வரலாற்றின் விளைபொருளினராகக் கருதுகின்றது. மனித இருப்பில் (Existence) இருந்தே உணர்வுகளும், மனவெழுச்சிகளும், உளநலம் பாதிக்கப்படுதலும் தோன்றுவதாக இந்த அணுகுமுறை வலியுறுத்தி நிற் கின்றது. பரந்த சுரண்டற் கோலங்களில் இருந்து ஒருவரை விடுவிக்காது உளவளத்துணை செய்தல் தோல்வியில் முடிவடைந்துவிடும் என இந்த அணுகு மூறை குறிப்பிடுகின்றது.
சீர்மியக் கோட்பாடுகளோடு இணைந்த கூர் மொழிவுகளில் முதற்கண் தம்மைப்பற்றிய உணர்வு,
80 -

அல்லது சுயபிரக்ஞை (Self Awareness) ஆராயப்படி வேண்டியுள்ளது. சுயஉணர்வு என்பது என்றும் முழுமை யடைந்த ஒரு காட்சியன்று, தம்மை மதிப்பீடு செய்தல், தமது பிரச்சினைகளை ஆராய்தல், தமது பிரச்சினை களைத் தீர்ப்பதில் கோட்பாடுகளின் துணையை உற்று நோக்குதல், தமது பலத்தையும், பல வீழ்ச்சியையும் அறிந்துகொள்ளல் முதலியவை சீர்மியருக்கு இன்றியமை யாதவையாகும்.
இதனைத் தொடர்ந்து பிறருடன் கொள்ளும் தொடர்புகள் பற்றிய கூர்மொழிவுகள் (Interpersonal Issues) ஆராயப்படவேண்டியுள்ளன. தம்மைப் பற்றிய உணர்வு பிறர்மீது ஏற்படுத்தும் செல்வாக்குகள் பற்றி யும் நோக்குதல் வேண்டும். தாமும், பிறரும், சமூகமும் தொடர்ந்தும் மாறிய வண்ணமுள்ள காட்சியின் விளக் கத்துக்கும் கோட்பாடுகள் துணைசெய்வதாக அமையும். சீர்மியச் செயல்முறையானது சந்தர்ப்பக் கூர் @LDTys) y FG5—6ör (Contextual Issues) 606007 iš 35g. என்பதையும் மனங்கொள்ளல் வேண்டும். ஒரு சந்தர்ப் பத்தில் பிரயோகிக்கப்பட்ட ஒரு நுட்பவியல் இன்னொரு சந்தர்ப்பத்தில் வெற்றிதரும் என்பதும் உறுதிபடக் கூறமுடியாததொன்றாகும்.
சமூக பொருளாதார கூர்மொழிவுகள், அரசியற் கூர்மொழிவுகள் முதலியவை பற்றிய தெளிவும் சீர் மியருக்கு இன்றியமையாததாகும்
மேற்கூறியவற்றைக் கருத்திற்கொண்டு சீர்மியத் திறன்களை வளர்த்துக்கொள்ளல் வேண்டும். சீர்மியத்திறன்களின் அடிப்படைகள்
உளவளத்துணையை மேற்கொள்ளுதல் என்பது மிகவும் பொறுப்புவாய்ந்ததும், கடுமையானதுமான பணியாகும் நீண்ட பயிற்சியும், சீர்மியத்தில் ஈடுபட்ட வர்களது அனுபவங்களும் சீர்மியத் திறன்களை வளம் படுத்தத் துணைநிற்கும். பின்வருவன சீர்மியத்தின் அடிப்படைத் திறன்களாகும்:
8

Page 45
1) கோட்பாட்டு உள்ளீடு
(Theory Input) 2) தன்வழிக் கண்டுபிடிப்பு உந்தல்
(Self Exploration) சி) திறன்களின் சட்டமைப்பு (Skills Framework) 4) திறன்களின் ஒத்திகை
(Skills Rehearsal) 5) ஆற்றுகைமீது தெறித்தல்
(Reflecting on Performance) சி) நடைமுறையுடன் கோட்பாட்டைத் தொடர்பு
படுத்தல் (Relating Practice to Theory) 7) நடப்பியல் வாழ்வில் பிரயோகித்தல்
(Application to Real life) 8) மேம்பாட்டைத் தொடர்தல்
(Continuing Development).
கோட்பாடு உள்ளீடானது சீர்மிய நடவடிக்கை யில் ஈடுபடுவோர்க்கு அடிப்படையாக வேண்டப்படும் திறனாகும். சீர்மியப் பயிற்சிபெறுவோர் சீர்மியக் கோட்பாடுகள், இலக்கியங்கள்,பொருத்தமான ஆய்வுகள் முதலியவற்றில் போதுமான அறிவுப்பலத்தைக் கொண் டிருத்தல் வேண்டும். தமது நம்பிக்கைகள், விழுமியங் கள், சிந்தனைகள், உணர்ச்சிகள் முதலியவற்றை ஆழ்ந்து தேடுதலும், ஆழங்களைக் கண்டுபிடித்தலும் வேண்டப் படுகின்றன.
திறன்களின் சட்டமைப்புப்பற்றி ஆராயும்பொழுது கெறொன் (Heron, 1990) குறிப்பிட்ட ஆறுவகையான தலையீட்டுப் பகுப்பாய்வு (Interwention Analysis) இணைத்து நோக்கப்படல் வேண்டும், எல்லாவகையான சீர்மிய நடவடிக்கைகளும் பின்வரும் தலையீடுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்படத்தக்கவை.
(32 --

1. தீர்வியக் குறிப்புத் தலையீடு
(Prescriptive Intervention) 2. பரப்புரைத் தலையீடு
(Informative Intervention) 3. உராசல் தலையீடு
(Confronting Intervention) 4. உணர்ச்சி விடுகைத் தலையீடு
(Cathartic Intervention) 5. ஊட்டல்நிலைத் தலையீடு
(Catalytic Intervention) 6. ஆதரவுநிலைத் தலையீடு
(Supportive Intervention).
செவிமடுத்தல், உற்றுநோக்கல், உணர்வுகளைத் தெறித்தல், உள்ளடக்கத்தைத் தெறித்தல், அறைகூவல் தருதல், உணர்வுகளுடன் இசைவுதல், உறவுகளைத் தொடங்குதலும் நிறைவுசெய்தலும், நேரம் வகுத்தல், தகவல் தருதல், ஆதரவு தருதல் என்றவாறு சீர்மியத் திறன்கள் பலவாறு விரிந்து செல்லும்.
திறன்களை ஒத்திகை பார்த்தல்,சீர்மிய ஆற்றுகை 'யுடன் அவற்றைத் தொடர்புபடுத்தல் ஆகியவற்றின் மீதும் கவனம் செலுத்துதல் வேண்டும். மற்றும் கோட் பாடுகளை நடைமுறைகளுடன் இணைத்தலும், நடை முறைகளில் இருந்து கோட்பாடுகளுக்கு நகர்தலும், சீர்மியத்தின் அடிப்படைத் திறன்களாகும்.
கற்ற விடயங்களை நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்த்தலும் சீர்மியப் பயிற்சியில் இடம்பெறவேண்டியுள்ளது. ஒரேநேரத்தில் அல்லது ஒரே நூலில் சீர்மியம் பற்றிய அனைத்து விடயங்களையும் கற்றுவிடமுடியாது. தொடர்ச்சியாகக் கற்றலும், தொடர்ச்சியாக அனுபவங்களைத் திரட்டலும் சீர்மியருக் குரிய இன்றியமையாத குணவியல்புகளாக இருத்தல் வேண்டும்,
as 83

Page 46
செவிமடுத்தல் நுட்பங்கள்
ஈகான், (Egan, 1990) என்பவர் உற்றுநோக் கலும், செவிமடுத்தலும் என்ற நுட்பங்கள் தொடர் பான பொருத்தமான நடத்தைகளை "Soler' என்ற தொடரினால் விளக்கினார்.
அதன் பொருள் பின்வருமாறு அமையும்:-
1. சதுரவிய இருக்கை - Sitting Squalely 2. கட்டற்றநிலை - Open Position 8. (psi 3607 it di Sid Frt tig56) - Leaning Forward 4. கண் தொடர்பு - Eye Contact 5. நெகிழ்ச்சியான ஒய்வு - Relaxing
அண்மிய நிலைச் செவிமடுத்தலிலும் உற்று நோக்கலிலும் பின்வருவனவற்றைக் கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது:
1. முழங்காலும், முழங்காலும் மிக அண்மித்ததாக
நெருங்கியிருத்தல்
34 -

2. கால்களைக் கைகளைக் குறுக்கேயிடாது திறந்த
நிலையில் இருத்தல்
3. பொருத்தமான தலையசைவுகளை வருவித்தல்
4. சந்தர்ப்பத்துக்கேற்றவாறு "ஆம்", "ம்" போன்ற
வற்றைத் தருதல்
5. குறைந்தளவு வினாக்களைக் கேட்டல்
6. பொருத்தமான முக வெளிப்பாடுகளை வெளி
யிடுதல்.
செவிமடுத்தலிலும் உற்றுநோக்கி ஈடுபடுதலிலும் பின்வருவனவற்றைக் கருத்திற்கொள்ளல் வேண்டும்.
1. உடனடிச் சூழல் கவனக் கலைப்பான்களில் இருந்து விடுபடல். உதாரணமாக நேரம் பார்த்தல், சத்தங்கள் வந்த திசையை நோக்கித் திரும்புதல், பிற பொருள்களைத் திரும்பிப் பார்த்தல் முதலியவற்றைத் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.
2. உள்ளார்ந்த கவனக் கலைப்டான்களில் இருந்து விடுபடல். எடுத்துக்காட்டாக உள்ளிருந்து எழும் சிந்தனைகளுக்குத் துலங்குதல், அகத்தில் எழும் உணர்வுகள், கருத்துக்கள் முதலியவற்றைப் பற்றிச் சிந்தித்தலைத் தவிர்த்துக்கொள்ளுதலே சிறந்தது.
3. உரையாடலின் உள்ளடக்கம் தொடர்பாக எழும் கவனக் கலைப்பான்களில் இருந்து விடுபடல். பேச்சில் இருந்து எழும் தொடர்புகள், உறுத்தல்கள், வெக்கங்கள் முதலியவற்றில் இருந்து விடுபட்டு செவிமடுத்தலே சிறந்தது.
6.5g/6007 stay as 'liqGuaphudi (Empathy Building) என்பதும் சீர்மிய நுட்பவியலின் பிரதான பரிமாணங் களுள் ஒன்றாகும்.
பின்வரும் உரையாடல் பாங்குகள் ஒத்துணர்வு கட்டியெழுப்பலுக்குத் துணையாக இருக்கும்:
- 85

Page 47
1. 'இப்பொழுது நீங்கள் மிகுந்த நெகிழ்ச்சியாகவும்
இதமாகவும் இருக்கின்றீர்கள்’ 2. "அந்தச் சம்பவமே உங்களுக்குக் கோபமூட்டியிருக்க
வேண்டும் போன்று தெரிகின்றது" 3. "அது உங்களுக்கு நம்பிக்கைக் குலைவை ஏற்படுத்தி
யிருத்தல் வேண்டுமென்று கருதலாம்".
தெறித்தல் (Reflection) தொடர்பான நுட்ப வியல்களையும் சீர்மியர் அறிந்திருத்தல் வேண்டும். தெறித்தல் பலவகைப்படும். அவையாவன:
1. எளிமையான உள்ளடக்கத் தெறித்தல் 2. எளிமையான உணர்வுத் தெறித்தல்
3. தெரிந்தெடுத்த தெறித்தல்.
தெறித்தல் என்பது ஒத்துணர்வுடன் இணைந்த ஒரு செயற்பாடாகும். எளிமையான தெறித்தலுக்கு ஒர் எடுத்துக்காட்டு வருமாறு:-
1. சீர்மியநாடி "நாங்கள் சிறிது காலம் கொழும்பில் வாழ்ந்தோம். ஆனாலும் அங்கு தரித்திருப்பதில் சில பிரச்சினைகளை எதிர்கொள்ள நேர்ந்தது".
சீர்மியர் :- "ஆம்"
சீர்மிய நாடியின் சிந்தனைத் தொடரைத் தங்குதடையின்றி வளர்ப்பதற்கு உற்சாகமளிக்கும் நடவடிக்கையே “தெறித்தல்" என்பதாகும். சீர்மிய நாடியின் இயல்பை மெல்லென எதிரொலித்தலே தெறித்தல் நடவடிக்கையின் பிரதான இயல்பாக இருத்தல் வேண்டும். சீர்மியநாடியின் உரையாடலின் இறுதி வரியினை, அல்லது சொல்லினைப் பின்னூட்டல் செய்தலும் தெறித்தலின் பாற் படும்.
2. உணர்வுகளைத் தெறித்தல் என்பது தனித் துவமான பண்புகளைக் கொண்டது. வேலைச்சூழல், வாழ்க்கைச் சூழல், குடும்பச் சூழல் தொடர்பாக
86 a

எழும் கோபம், நச்சரிப்பு, கழிவிரக்கம், பயம் முதலாம் உணர்வுகளோடு சீர்மியநாடியுடன் சீர்மியர் ஒன்றித்து நிற்றலும், அவற்றை மீளவலியுறுத்தி நிற்றலும் உணர்வுகளைத் தெறித்தலாகும்.
3. தெரிவுசெய்து தெறித்தல் (Selective Reflection) என்பது சீர்மிய உபாயங்களுள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. சீர்மிய நாடி முன்வைக்கும் ஒரு சொல்லை, அல்லது ஒரு தொடரை, அல்லது ஒரு வசனத்தைத் தெரிவுசெய்து மீள வலியுறுத்துதலே இங்கே குறிப்பிடப்படுகின்றது.
சீர்மியச் செயல்முறையின்போது ஒத்துணர்வைக் (Empathy) கட்டியெழுப்பும் நிலைகளில் பல்வேறு இடர்களும் எதிர்கொள்ளப்படலாம். எல்லோரிடத்தும் ஒத்துணர்வைக் கட்டியெழுப்பல் கடினமாக இருக்கும். சீர்மியர் என்பவர் முழுநிறைவான மனிதர் அல்லர். அவரிடத்தும் மட்டுப்பாடுகள் காணப்படலாம். சீர்மிய fleir நம்பிக்கைகள், விழுமியங்கள், உணர்வுகள் தொடர்பான மட்டுப்பாடுகள் எழலாம்.
ஒத்துணர்வைக் கட்டியெழுப்பலில் இடர்களை எதிர்நோக்கிய சில சந்தர்ப்பங்கள் வருமாறு:-
1. இளம் தம்பதியர் கருச்சிதைவு செய்துகொள்ள
வேண்டி நிற்கின்றனர். 2. சிறாரைக் கேடுறுத்தலில் ஈடுபடுத்தும் ஒரு நபர் தமது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார். 3 போதைவஸ்துக்களை நுகரும் ஒருவர் தமது
எண்ணங்களை நியாயப்படுத்துகின்றார்.
சீர்மியத்தில் ஈடுபடுவோர் சீர்மியநாடிகள் கேட்கும் தகவல்களை ஒழுங்கமைந்த முறையில் வழங்குவோராய் இருத்தல் வேண்டும். இந்நிலையில் சீர்மியர் வளமான கல்விப்புலமும், அனுபவமும், வழி
87

Page 48
காட்டல் ஆற்றலும் உடையவராக இருப்பதே சிறந்தது பின்வரும் துறைகள் தொடர்பான தகவல்களைச் சீர்மிய நாடிகள் வேண்டிநிற்கலாம்:
1. தொண்டு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள்
கற்கைநெறிகள், பரீட்சைகள் தொடர்பான விபரங்கள்
3 ஒர் ஆய்வைத் திட்டமிடல் G5m Liture.87
விபரங்கள்
கருத் தடைச் சாதனங்கள் பற்றிய தகவல்கள் தொழிற்கோலங்கள் பற்றிய தகவல்கள் சுற்றுலாத் தகவல்கள் வர்த்தகம், முதலீடு சார்ந்த தகவல்கள் பொழுதுபோக்குத் தகவல்கள் 9. நலவியல் சார்ந்த தகவல்கள் 10. கலை இலக்கியத் தகவல்கள் 11. சமயத் தகவல்கள்.
தகவல்களை வழங்குதலோடு மட்டும் நின்று விடாது, தகவல்பெறும் வழிமுறைகளையும் எடுத்துக் கூறுதலே சிறந்தது.
தகவல்களோடு இணைந்த சில அலோசனை களையும் வழங்க (Advice Giving) நேரிடலாம். ஆனால் ஆலோசனை வழங்கலை மிகுந்த எச்சரிக்கை யுடன் பயன்படுத்தல் வேண்டும். தாம் மேலான ஒரு நிலையில் உள்ளவர் என்று சீர்மியர் எண்ணலாகாது. சீர்மிய நாடியை மத்தியாக வைத்து சீர்மியத்தை முன் னெடுத்தலே சிறந்ததாகும். ஆலோசனை வழங்கும் பொழுது அதிகம் பேசலாகாது. ஆலோசனைகள் எளிமை யானவையாயும், சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமானவை யாயும், சீர்மியநாடியால் மனமுவக்கப்பட்டவையாயும் இருத்தல் வேண்டும். எளிமையான ஆலோசனையை வழங்கும்பொழுது விடாப்பிடியாக வற்புறுத்துதலையும், மேலாதிக்க நிலையில் இருந்து வற்புறுத்துதலையும் தவிர்த்துக்கொள்ளுதல் சிறந்தது.
88

ஆலோசனைகள் எளிமையானவையாயும், தெளி வானவையாயும், குறுகியனவாயும், ஒரு நேரத்தில் ஒரு சிறிய ஆலோசனை அலகினை வழங்குதலாயும் இருத்தல் வேண்டும்.
சீர்மிய நுட்பவியலில் பயன்தரு முரண்பாடு (Controntation) என்பது முக்கியமானதாகும். சீர்மிய நாடியின் துலங்கலை அறிவதற்கும், மறுதலிப்புக்களைக் கண்டறிவதற்கும் பயன்தரு முரண்பாடு துணை செய்யும். சீர்மியர் பயனும், ஆக்கமும் தரும் வகையில் நெகிழ்ச்சி பாக மறுதலிப்பதே பயன்தரு முரண்பாடாகும். தொடர் பாடலின் நேர்முகப் பண்புகள், எதிர்முகப் பண்புகள் பற்றிய தெளிவு இச்சந்தர்ப்பத்திலே சீர்மியருக்கு அவசிய
மானதாகும்.
சீர்மிய நாடி எந்தச்சந்தர்ப்பங்களில் அம்" என்ற நிலையில் உள்ளார், எப்போது அங்கீகரிக்காத நிலையில் உள்ளார், எப்போது தமது கருத்துக்கள் சரியாகப் பரி மாறப்படவில்லை என்று தவிக்கின்றார் முதலியவற்றை நன்கு அறிந்துகொண்ட பின்னரே நலன்பயக்கும் முரண் பாட்டை அல்லது பயன்தரும் முரண்பாட்டை முன் னெடுத்தல் வேண்டும்.
இவற்றை அடியொற்றி வளமாக்கல் (Facili. tation) நடவடிக்கைகளை விரிவுபடுத்தல் வேண்டும்.
- 9

Page 49
"உளக்குலைவு மேலைத்தேச உளவியல் அணுகுமுறைகளின் அபத்தங்கள்
pardig60) Gay (Psychological Disorders) தொடர்பான மேலைத்தேச அணுகுமுறை கள், சிறப்பாக நடத்தைவாத அணுகுமுறைகள், பல் வேறு மட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆனால் எமது நாட்டிலுள்ள உளவியலாளர்களால் மேலைத்தேச உளவியல் நூல்கள் குறிப்பிடப்படும் கருத்துக்களை, எவ்வித திறனாய்வுமின்றி எதுவித கருத்து முரண்பாடு மின்றி, அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலை வளர்ச்சி அடைவது போன்று தெரிகின்றது. இந்நிலையானது, ஆரோக்கியமான அறிவு வளர்ச்சிக்குத் தடையாக அமை கின்றது. உளவியல் தொடர்பான திறனாய்வற்ற உளப் பாங்குகளை வளர்க்க அது உதவுகின்றது. "உளக்குலைவு என்ற தாக்கத்திற்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை, வளர்ச்சியடைந்த மேலைத்தேசங்களில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவில் மேற்கொள்ளப்
90 -

பட்ட கணிப்பீடுகளின்படி ஆண்டுதோறும் 1.7 மில்லியன் மக்கள், உளநல மருத்துவ நிலையங்களில் அனுமதிக்கப் படுகிறார்கள். சுமார் 2.4 மில்லியன் மக்கள் வெளி நோயாளர் பிரிவுக்கு வருகை தருகிறார்கள். உலக சுகாதார ஒழுங்கமைப்பின் ஆய்வின்படி உலகம் தழுவிய தாக 400 மில்லியன் மக்கள் உளக்குலைவின் பாதிப் பிற்கு உள்ளாவதாகக் காணப்பட்டுள்ளது.
உளக்குலைவு பற்றி ஆராய்வதற்கு முன்னர் உளக்குலைவு பற்றிய நடத்தை உளவியலாளரின் விளக் கத்தை நோக்குதல் வேண்டும். வகைமாதிரியாகக் காணப்படாத நடத்தை (Atypical), குழம்பிய நடத்தை (Disturbing), 675 it gana 6.5 dió5 lb (Maladaptive), நியாயப்படுத்த முடியாத நடத்தை (Unjustifiable) முதலியவை உளக்குலைவு என்று விளக்கப்படுகின்றது. இந்த விளக்கமே முதலில் திறனாய்வு செய்யப்பட வேண்டியுள்ளது. குறித்த பண்பாட்டிற்குரிய சமூக விதிகளையும், குழுமத் தடைகளையும் வைத்து ஒருவரது நடத்தை குழம்பிவிட்டது என்று கூறும் உளவியல் உபாயம் மறுபரிசீலனை செய்யப்படவேண்டியுள்ளது. இந்த வரைவிலக்கணங்களை வைத்துக்கொண்டு ஒரு தலைப் பட்சமான நடவடிக்கையாக உளவியலாளர்கள் தமது சமூகத்தில் மேலாண்மை செலுத்தும் பண்புகளும் வளர்ச்சி அடையத் தொடங்குகின்றன.
அமெரிக்கப் பழங்குடிமக்கள் அவர்களுக்குரிய சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, பாரம் பரியமான தொழில் முறைகளிலிருந்து குழப்பப்பட்ட நிலையில், அவர்களிடத்தில் விலகல் நடத்தைகள் தோன்றின. வறுமைத்துயர் அவர்களை வாட்டியது. குடும்ப வாழ்க்கை சிதறலுற்றது. இந்நிலையில் குழம்பிய நடத்தைகளும், எதிர் இசைவாக்கங்களும் ஏற்பட்டன.
- 9

Page 50
இத்தகைய தோற்றப்பாடுகளை விளக்குவதற்கு பாரம் பரிய உளவியல் அணுகுமுறைகள் போதுமானவையாக இல்லை. மார்க்சிய நவமார்க்சிய உளவியல் ஆய்வு முறைகளே இவற்றிற்குத் தெளிவான விளக்கங்களைக் கொடுக்கின்றன. நடத்தைவாத உளவியல் ‘வெளிப் பாடுகளை ஆராய்கின்றதேயன்றி, வெளிப்பாடுகளுக் குரிய தளங்களையும், வேர்களையும் ஆராயத் தவறி விடுகிறது.
II
உளக்குலைவு என்பது பரந்த தளத்திலும், அகல் வரி அணுகுமுறைகளின் வாயிலாகவும் விளக்கப்பட வேண்டியுள்ளது. சமூக இயல்பு, சமூகக் கட்டமைப்பு, சமூக சுரண்டற் கோலங்கள், சமூக இயக்கம், தனிமனித இயல்பு, தனிமனித அந்நியமயப்பாடு, தனிமனிதர் மீது செலுத்தப்படும் பன்முகமான புறவிசைகள், ஒரு நாட்டின் பொருண்மிய, மற்றும் அரசியற் கோலங்கள் முதலிய ஒன்றிணைந்த காரணிகளைத் தொடர்புபடுத் திய நிலையில் அது விளக்கப்படல் வேண்டும்.
உளக்குலைவு பலவாறு பகுத்து ஆராயப்படு கின்றன. அவை வருமாறு:-
1. பதகள உளஒழுங்குக் குலைவு
(Anxiety Disorder) 2. பகுத்தறிவற்ற பயம் சார்ந்த உளஒழுங்குக் குலைவு
(Phobic Disorder) 3. மீண்டெழும் சிந்தனை சார்ந்த உளஒழுங்குக்குலைவு
(Obsessive Disorder) 4. மீண்டெழும் நடத்தை சார்ந்த உளஒழுங்குக்குலைவு
(Compulsive Disorder) 5. உடல்சார் உளஒழுங்குக் குலைவு
(Somato form Disorder)
ܚ 92

6. நினைவு இழப்பு உளஒழுங்குக் குலைவு
(Dissocitive Disorder) 7. மனக்கோல உளஒழுங்குக் குலைவு
(Mood Disorder) 8. பிரிநிலை உளஒழுங்குக் குலைவு
(Bipolar Disorder) 9. நடப்பியல் முறிவு நிலைப்பட்ட உள ஒழுங்குக்
(Schizophrenia Disorder). குலைவு
மேற்கூறிய ஒவ்வொரு குலைவிற்குமுரிய தனித் துவமான நடத்தைக் கோலங்கள் காணப்படுகின்றன. பதகள உளக்கோலக் குலைவிற்கு உள்ளானவர்களிடம் அமைதியற்ற போக்கு, கட்டுப்படுத்த முடியாத மன வெழுச்சிகள், பதற்றம் முதலிய தோற்றப்பாடுகள் காணப்படும்.
பொருட்கள், சம்பவங்கள் தொடர்பான காரண மற்ற பயம்சார்ந்த நெருடல்கள், பகுத்தறிவற்ற பயம் சார்ந்த உளஒழுங்குக் குலைவிலே வெளித்துலங்கும்.
ஒரு விஷயத்தையே மீண்டும் மீண்டும் சிந்தித்துக் குழப்பம் அடைதல் மீட்டெழும் சிந்தனை உளஒழுங்குக் குலைவிலே காணப்படும்.
ஒரு செயலையே மீண்டும் செய்வதன் வாயிலாக உளஒழுங்கு விலகி இருத்தல், மீண்டெழும் நடத்தை சார்ந்த உளஒழுங்குக் குலைவிலேயே விரவியிருக்கும்.
பலவிதமான நோய்களும் அவற்றுடன் தொடர் புடைய குணங்குறிகளும் ஒருவரிடத்துக் காணப்படும். ஆனால் உடற்கூறு அடிப்படையிலும், உடற்றொழில் அடிப்படையிலும் அவற்றிற்கு விளக்கம் தரமுடியாம விருக்கும். இவை உடல்சார் உளஒழுங்குக் குலைவிலே காணப்படும்.
a 93

Page 51
இவற்றிலே கூட சமூக இயல்பின் பங்களிப்பை இணைத்து நோக்காவிடில் உளவியல் அணுகுமுறைகள் முழுமையடையமாட்டா. உதாரணமாக சீனர்கள் பொதுவாக தமது உடல்சார் உணர்ச்சிகளைப் பொருட் படுத்தாமையும், சமூகத்தால் அவை பெரிதும் பாராட் டப்படாமையும் ஆய்வாளர்களினாற் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. இந்நிலையில் நடத்தை வெளிப்பாடுகள் பண்பாட்டுக் கோலங்களால் திசைப்படுத்தப்படுதலை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. முன்னைய சிந்தனை கள், முன்னைய நினைவுகள் முதலியவற்றை இழந்து நிற்கும் அவலம் நிரம்பியதாக நினைவு இழப்பு உள ஒழுங்குக் குலைவு காணப்படும்.
சோர்வு, நம்பிக்கையின்மை, உற்சாகமின்மை, தளர்ந்திருத்தல் போன்ற உணர்வுகள் மனக்கோல உளஒழுங்குக் குலைவிலே நிறைந்திருக்கும். லியோ ரோல்ஸ்ரோய் கூறிய ஒரு கருத்து இங்கே தொடர்பு படுத்தி நோக்கத்தக்கது. "எனது வாழ்க்கை திடீரென்று நின்றுவிட்டது. ஆனால் என்னால் சுவாசிக்கவும், சாப் பிடவும், நீர் அருந்தவும், நித்திரை கொள்ளவும் முடி கின்றது. அவற்றை என்னால் விடமுடியாமல் இருக் கின்றது. ஆனாலும் என்னிடத்தில் உண்மையான வாழ்க்கை காணப்படவில்லை."
அளவிற்கு மீறிப்பேசுதல், அளவிற்கு மீறி இயங்கு தல், இலகுவில் உணர்ச்சி வசப்படல் என்ற ஒருவித துருவப்பாடும், மறுபுறம் மந்தநிலை, இயக்கங்குன்றிய சோர்வு முதலாம் இருநிலைப்பாடுகள் "பிரிநிலை உள ஒழுங்குக் குலைவிலே காணப்படும்.
நடப்பியல் முறிவுசார்ந்த ஒழுங்குக் குலைவானது, மிகவும் அவல நிலைக்குள்ளான தோற்றப்பாடாகும் ஒழுங்குநிலை குலைந்த சிந்தனை, நிலை குலைந்த புலக்காட்சி, நிலைகுலைந்த வெளிப்பாடுகள் முதலிய வற்றை உள்ளடக்கியதாக நடப்பியல் முறிவு உள ஒழுங்குக் குலைவு அமைந்திருக்கும்.
94 -

III
மேற்கூறிய உளஒழுங்குக் குலைவிற்குரிய மேலைத் தேசத் தீர்வுமுறைகள், சிகிச்சை முறைகள் முதலிய வற்றை, எதுவித திறனாய்வு மதிப்பீடுமின்றி, எமது நாட்டு உளவியலாளரும், உளவளத் துணையாளரும் பயன்படுத்த முனைவதைக் காண்கிறோம். இதனால் இவர்கள் பயன்படுத்தும் உளவியல் உபாயங்கள், உள வளத்துறை முனைப்புக்கள், சீர்மிய நடவடிக்கைகள் முதலியவை தோல்வியில் முடிவடைந்து வரும் அவலங் களையும் காண்கிறோம். மேலைத்தேச நடத்தைவாத அணுகுமுறைகளை அடியொற்றிய பின்வரும் சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன:
1) உளப்பகுப்புச் சிகிச்சை முறை. 2) மானிடநிலைச் சிகிச்சை முறை. 3) கெஸ்ரேல் சிகிச்சை முறை. 4) நடத்தைச் சிகிச்சை முறை. 5) பகுத்தறிவுத் தூண்டற் சிகிச்சை முறை 6) அறிகை நிலைச் சிகிச்சை முறை. 7) குழுச் சிகிச்சை முறை.
மேற்கூறிய அனைத்தும், மேலைப்புலப் பொரு ளாதாரக் கோலங்களையும், பண்பாட்டுக் கோலங்களை யும், மக்கள் இயல்புகளையும் தழுவி உருவாக்கப் பட்டவை. அவற்றை எமது சூழலுக்குப் பயன்படுத்தும் போது பொருண்மையற்றதாயும், வழுக்கள் நிறைந் தவையாயும் ஆகிவிடுகின்றன.
மேலைநாட்டுச் சூழலிலும் அவை தோல்வியைத் தழுவி வருதல் பலசந்தர்ப்பங்களில் எடுத்துக்கூறப் பட்டுள்ளது. மேலைத்தேச உளவியல் அணுகுமுறைகளில் அபத்தங்கள் காணப்படும்பொழுது நாம் அவற்றிலே சரண்புகுந்து நிற்பது பொருண்மையற்றதும், பொருத்த மற்றதும் ஆகும். இந்நிலையில் எமது பாரம்பரியத்திலே
- 95

Page 52
காணப்படும் உளவளத்துணை உபாயங்கள் எத்துணை வலிமை கொண்டவை என்பதை மீளாய்வு செய்தல் இன்றியமையாதது.
அரசியல் முரண்பாடுகளும், தீவிர போட்டிகளும், சுரண்டலும், பல்தேசிய நிறுவனங்களின் கோரமான தாண்டவமும், சமூக முரண்பாடுகளும் பற்றிய பரி சீலனைகள் இன்றி தனித்து உளக்குலைவை ஆராய்வதும், சிகிச்சை முறைகளை முன்னெடுப்பதும் பொருத்த மற்றவை என்பதைக் குறிப்பிடவேண்டியுள்ளது. எமது பாரம்பரியத்தில் சூழலை அறிந்தும் மாற்றியமைத்தும், சூழலைத் திடப்படுத்தியும் சிகிச்சை அளிக்கும் முறை
காணப்பட்டது.
உளவளத்துணை அல்லது சீர்மியம் என்பது முழு வாழ்க்கையோடும் ஒன்றிணைந்த வகையிலே செயற் படுத்தப்பட்டது. ‘வாழ்க்கையே ஒழுக்கம்" அதாவது தியானமாக அமைந்த நிலையில், புறவிசைகளால் மனிதரும் சூழலும் சூழப்படாத நிலையில் உளக்குலைவு அடைந்தோரின் எண்ணிக்கை கிராமிய வாழ்வில் மிகக் குறைவாகக் காணப்பட்டது.
96

ஆளுமை நடையியலும் சீராக்கமும்
ஒருவரது சீராக்க முறைமை அவரது ஆளுமை pao) Lulu gy Lair (Personality Style) Gant Lily68) -u தாக இருக்கும். ஒருவருக்குரிய பண்புக்கூறுகள், விருப்பு கள், வெளித்துலங்கும் நடத்தை, சிந்தனைக்கோலங்கள், மனவெழுச்சி வெளிப்பாடுகள் முதலியவை ஆளுமை நடையியலின் உள்ளமைந்த கூறுகளாகும். தவறான பொருத்தப்பாடு, இசைவான பொருத்தப்பாடு முதலிய வற்றை விளங்கிக்கொள்வதும், உளநெருக்குவாரங் களை (Stress) எவ்வாறு நேர்முகமாகக் கையாள்வது என்பதைத் தெளிந்துகொள்வதும், தாம் பயன்பெறவும், பிறருக்குத் தீங்குதராது வாழ்வதும், சீராக்கத்தின் பரி மnணங்களாகக் கருதப்படுகின்றன.
ஆளுமை நடையியலில் ஒருவரது நடத்தையின் இயைபுத் தொடர்ச்சியும் (Consistency), தளராத உறுதித் தன்மையும் (Stability) கருத்திற்கொள்ளப்படு கின்றன.
கிரேக்க மருத்துவர் ஹிப்போகிறற்ஸ் காலந் தொடக்கம் ஆளுமையை அறிதலும் வகைப்படுத்தலும்
- 97

Page 53
பலவாறு நிலவிவந்துள்ளன. சாந்தமானவர்கள், சோக மானவர்கள், கோபஅருட்சி கொண்டவர்கள், மகிழ்ச்சி யும் நம்பிக்கையும் கொண்டவர்கள் என அவர் ஆளுமையை வகைப்படுத்தினார். கிரேக்க அறிஞராகிய அரிஸ்ரோட்டிலது மாணவர்களுள் ஒருவராகிய தியோ பிரஸ்ரஸ் என்பார் கிரேக்க நகர வீதிகளிலே சென்று அங்குள்ள மனிதர்களின் நடத்தைகளைப் பார்த்தபின் முப்பது வகையான ஆளுமைக்கோலங்களை இனங் é5600TL-fTfT
தமிழ் மரபில் மெய்ப்பாடுகள் அல்லது மன வெழுச்சிகளை அடிப்படையாகக் கொண்டு ஆளுமைக் கோலங்களை வகைப்படுத்தும் பண்பு நெடுங்காலமாக வேரூன்றியிருந்தது. பண்டைய சித்தமருத்துவவியலாளர் கள் குளிர் உடம்பினர், சூட்டு உடம்பினர், பித்த உடம் பினர், சளி உடம்பினர் என்றவாறு உடம்பின் இயல் புடன் தொடர்புபடுத்தி ஆளுமைக் கோலங்களை தொன்மையான மருத்துவக் கண்ணோட்டத்தில் விளக் கினர். தமிழ்க் காலக்கணிதர்கள், ஒருவர் பிறக்கும் போதுள்ள கிரகநிலையை அடியொற்றி அவரின் ஆளுமையை விளக்கினர்.
உளவியலில் ஆளுமை வகைப்பாட்டில் முன்னோடி யான பங்களிப்பைச் சிக்மன்ட் பிராய்ட் முதற்கண் சுட்டிக்காட்டப்படத்தக்கவர். குழந்தை நிலையில் இருந்தே ஒருவரது நனவிலி மனத்தில் அழுத்தி அடக்கி வைக்கப்படும் உணர்வுகளும்,நனவிலி ஊக்கலும்,ஆளுமை உருவாக்கத்தில் விசைகொண்டு செயற்படுதலை பிராய்ட் விளக்கினார். மேலும் அவர் ஆளுமையின் மூன்று சிறப் பார்ந்த பரிமாணங்களை விளக்கினார். மகிழ்ச்சிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இட்" (id) என்ற பரிமாணம், யதார்த்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட "ஈகோ’ (Ego) என்ற பரிமாணம், உயர்ந்த அறநெறிப் பரிமாணங்களை அடிப் படையாகக் கொண்ட 'சுப்பர் ஈகோ’ (Super Ego) என்ற பரிமாணம் ஆகியவற்றை அவர் விளக்கினார்.
பிராய்ட்டைத் தொடர்ந்து யுங் (1923) ‘அக Gp64s6ih” (Intraverts) “LAD(yp6356ir” (Extraverts)
98 -

என இருவகையாக ஆளுமைக் கோலங்களையும், நடை யியலையும் வகைப்படுத்தினார். அகமுகிகள் அகவயத் தன்மை கொண்டவர்கள், தன்மயமாக வாழ்பவர்கள், கடும் பிடிவாதம் கொண்டவர்கள். இவற்றுக்கு எதிர் மறையான பண்புகள் புறமுகிகளிடம் காணப்படும். இவர்கள், புறவயமாகச் சிந்திப்பவர்கள், தனிமைப் படாது கூட்டாகச் செயற்படுபவர்கள், தமது உணர்ச்சி களைப் பகிர்ந்துகொள்பவர்கள், பயன்கொள் வகை யினராக இருப்பவர்கள் - என்றவாறான பண்புகளைக் கொண்டிருப்பார்கள்.
மேற்கூறிய இரு பண்புகளையும் சமநிலையாகக் கொண்டிருப்பவர்கள் இருமுகிகள் (Ambiverts) எனப் படுவர். இஸ்பிரான்ஜர் என்பவர் ஆளுமை நடை யியலை வகைப்படுத்தும்பொழுது, கோட்பாட்டுப் பண்புடையோர், பொருளியற் பண்புடையோர், அழகி யற் பண்புடையோர், சமூகப் பண்புடையோர், அரசியற் பண்புடையோர், சமயப் பண்புடையோர் என்றவாறு பிரித்து விளக்கினார். இவற்றைத் தொடர்ந்து பதி னாறு வகையான ஆளுமைக் காரணிகளைக்கொண்டு (16 Personal Factor Test) golf 60LD pao) LuSugo)6) வகைப்படுத்தலும் தேர்வுகள் வளர்ச்சியடைந்தன.
பதினாறு வகைப் பிரிவுகளும் வருமாறு:-
1) குளிர்ந்து இறுகியபண்பு - உற்சாகப்பண்பு 2) உருவநிலைச்சிந்தனை - அருவநிலைச்சிந்தனை 3) உணர்ச்சிவசப்படல் - உணர்ச்சிவசப்படாமை 4) அடங்கிவாழும் பண்பு - ஆட்சிசெலுத்தும் பண்பு 5) அமைதி - உற்சாகத்தூண்டல் 6) குயுக்திப்பண்பு - மனச்சான்றுப்படல் 7) வெட்கம் - வெட்கமின்மை 8) வலிய உள்ளம் - இளகிய உள்ளம் 9) நம்பிக்கைஉறுதி - நம்பிக்கைஇன்மை 10) நடைமுறைப்பாங்கு - கற்பனைப்பாங்கு 11) கபடமின்மை = கபடப்பாங்கு

Page 54
12) சுயவுறுதி - சரணடையும் பாங்கு 13) குழுமனப்பாங்கு - தன்னிறைவுப்பாங்கு 14) அகமுரண்பாடு - கட்டுப்பாடு 15) ஒய்வு - விறைப்பு 16) பழைமைபேணல் - பரிசோதித்தல்.
அண்மைக்கால உளவியலாளர்கள் மேலும் விரி வான அடிப்படைகளில் ஆளுமை நடையியலை வகைப் படுத்த முயன்றனர். கெசல் என்பவர் மனிதவளர்ச்சி அடிப்படையில் ஆளுமை நடையியலைப் பின்வருமாறு வகைப்படுத்தினார்:
1) தாமதித்த வளர்ச்சிகொண்டோர் 2) விரைந்த வளர்ச்சிகொண்டோர் 3) ஒழுங்கற்ற வளர்ச்சிகொண்டோர்.
செல்டன் என்பவர் உடற்கட்டு மற்றும் உடல் இயக்க அடிப்படையில் பின்வருமாறு பாகுபடுத்தினார்:
1) ஓய்வாகவும், அமைதியாகவும், சாந்தமாகவும்
இருப்போர். 2) துடிதுடிப்பாகவும், சாதனையாளராகவும்,
போட்டியிடுவோராகவும் இருப்போர். 3) தனிமை விரும்புவோராயும், தன்மயமான சிந்தனை உள்ளோராயும் இருப்போர்.
சாபர் (Schafer) என்பவர் உளவியலடிப்படையில் ஆளுமை நடையியலை பின்வருமாறு விளக்கினார்:
1) நகைச்சுவை வகையினர். 2) மனோரதிய வகையினர். 3) சோகவகையினர். 4) ஒதுங்கல் வகையினர்.
கலுக்கொன் (Kluckhohn) பண்பாட்டுக் கோலங் களை அடிப்படையாகக் கொண்டு ஆளுமை நடையியல் வகைகளைப் பின்வருமாறு விளக்கினார்:
100 -

1) மூத்தோராலும், பண்பாட்டுப் பாரம்பரியங் களினாலும் உருவாக்கப்படுவோர் இயற்கையால் கட்டுப் படுத்தப்படுபவர்கள். f
2) சமகாலத்தவர்களால் உருவாக்கப்படுபவர் கள், தம்மைப்பற்றிய ஆக்கத்தை அவாவி நிற்பவர்கள், இயற்கையோடு இசைவாக்கம் கொண்டவர்கள்.
3) செயல் உந்தல் கொண்டவர்கள் எதிர்கால இலட்சியங்களை நோக்கி இயங்கிக்கொண்டிருப்பவர்கள், இயற்கைமீது ஆட்சிசெலுத்த எண்ணுபவர்கள்.
மேற்கூறிய ஆய்வுகளை அடியொற்றி ஆறுவகை பான சாதாரண ஆளுமை நடையியல்களை ஆய்வாளர் கள் விளக்கியுள்ளனர். அவையாவன:-
1) கட்டுப்படுத்திய ஆளுகை
(Controlled)
2) நம்பிக்கைக்குலைவு ஆளுமை
(Pessimistic)
3) எதிர்ப்பிய ஆளுமை
(Prickly) 4) அரங்கியல் ஆளுமை
(Theatrical) 5) வினைப்படும் ஆளுமை
(Active)
6) நம்பிக்கை நிறைவு ஆளுமை
(Optimistic).
கட்டுப்படுத்திய ஆளுமை நடையியலைக் கொண் டோர் நிபந்தனைகளுக்கும், நேரசூசிகைகளுக்கும், சடங்கு களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடங்கி இசைவாக்கம் செய்வர். ஒழுங்காகவும், சுத்தமாகவும் இருப்பர். ஆபத்துக்களை அதிகம் தாங்கி முன்னேற விரும்ப மாட்டார்கள். எவற்றையும் விரிவாக ஒழுங்கமைத்துச் செயற்படுத்த எண்ணுபவர்கள்.
101 ے

Page 55
நம்பிக்கைக்குலைவு ஆளுமை நடையியலைக் கொண்டோர், எதையும் துன்பமாகக் கருதுவர். அவர் கமளிடத்து துன்பமயமான பேச்சுக்களும், எதிர்பஈர்ப்புக் களும் இழையோடிக் காணப்படும். மகிழ்ச்சியும் கலகலப் பும் அற்று மூட்டமான மனநிலையைக் கொண்டிருப்பர். தோல்விகளுக்குத் தம்மைத் தயாரித்துக்கொண்டிருப்பர்.
எதிர்ப்பிய ஆளுமை நடையியலைக் கொண்டோர் அகவயமாகச் சிந்திப்போராயும், எதிர்ப்புக் குணமுடை யோராயும், இலட்சியப் பாங்குடையோராயும், ஆடத்துக் களைத் தாங்குவதில் விருப்புடையோராயும், பொதுவாக விடாப்பிடியான பண்புடையோராகவும் காணப்படுவர்.
அரங்கியல் ஆளுமை நடையியலைக்கொண்டோர், மனோரதியப் பாங்குடையோராய், உள்ளுணர்வு மிக் கோராய், நடிப்பால் உணர்ச்சிகளை வெளிப்படுத்து வோராய், அங்க அசைவுமிக்கோராய், பொறுப்பியம் குறைந்தோராய், மாறும் நடத்தைகளைக் கொண்டோ ராய்க் காணப்படுவர்.
வினைப்படும் ஆளுமை நடையியலைக் கொண் டோர். எந்நேரமும் செயலூக்கம் கொண்டோராய், சவால்களை எதிர்கொள்ளும் தயார்நிலையில் உள் ளோராய், வினைத்திறன் மிக்கோராய், ஆபத்துக்களைத் தாங்குவோராய், பயன்கொள்வாதிகளாகக் காணப்படு வர். எதிர்காலம் பற்றிய நோக்கு அவர்களிடத்து வலிமை பெற்றிருக்கும்.
நம்பிக்கை நிறைவு ஆளுமை நடையியலைக் கொண்டோர், தெரிவுசெய்து கவனம் செலுத்துவோ ராய், பிரச்சினைகளைப் பகுத்தறிவுடன் ஆராய்வோ ராய், நிறைவேறும் இலட்சியப் பாங்குடையோராய், சமூக இணைப்புடையோராய், நேர்மை மிக்கோராய், மன்னிப்புத் தருவோராய்க் காணப்படுவர்.
1 92 -

எல்லாரும் நாளாந்தம் பிரச்சினைகளோடும் முரண் பாடுகளோடும் வாழவேண்டியுள்ளமையால் சீராக்க நுண்முறைகள் அனைவராலும் அறிந்திருக்கப்பட வேண்டியுள்ளன.
சீராக்கத்தை இங்கிதப்படுத்துவதற்கான பின் வரும் ஆலோசனைகளை உளவியலாளர்கள் முன்மொழிந் துள்ளனர்:
1. தமது உடலிலே கவனம் செலுத்துதல் 2. நம்பிக்கையை எப்பொழுதும் வளர்த்தெடுத்தல் 3. புதிய நேர்நிலை அனுபவங்களை ஏற்கத்
தயாராக இருத்தல் 4. மனவெழுச்சிகளைக் கைநழுவ விடாதிருத்தல் 5. நற்செயல்களுக்குரிய மனத்தைத் திடப்படுத்
துதல் 6. தன்னம்பிக்கையை வளர்த்தல் 7. இன்றைய தொடர்ச்சியாகவே நல்ல எதிர்
காலம் உருவாகும் என்பதை நம்புதல் 8. அன்பை வளர்த்தல் 9. அறத்தை வளர்த்தல் 10. சாந்தியை ஏற்படுத்தல் 11. நகைச்சுவை மனப்பாங்கை வளர்த்தல் 12. கூட்டுறவின் வலிமையை அறிதல் 13. நல்ல கலை இலக்கியங்களில் ஈடுபாடு 14. தியானம் 15. தேடலிலும் ஆய்விலும் ஈடுபடல்.
- 1:03

Page 56
FOOT NOTES
O4
Robins, L and Regier, D. (1991), Psychiatric Disorders in America, Free Press, New yerk, pp. 499, 532.
Lonner W.J. and Malpass (1994), Psychology and Culture, Allyn and Bacon, p. 574.
David G. Myers, (1995), Psychology, Worth Publishers, New York, p. 501.
Brislin (Ed) (990), Applied Cross Cultural Psychology, New Bury, p.502.
Leo Tolstoy, (1887), My Confession.


Page 57
BOASCO ARTON

E PRዘNፐERS