கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1990.05

Page 1
பாரத் ரத்
g5 fir tobb ons ry s!
33
"உங்கள் சோக முகங்களைக் காண்ட தும், உங்கள் வேதனை மிக்க குரலைக் கேட்பதும் எ ன க் கு அளவு கடந்த வருத்தத்தை உண்டா க்குகின்றன. நீங்கள் எவ் வளவோ கால மா ப் சொல்லொ னுத் துயரத்திற்கு ஆளாகியுள்ளீர்கள்! ஆனால், உங்கள் அடிமைச் சங்கிலி களை முத்த மிட் டு க் கொண்டிருக்கிறீர்கள், பூமிக்கு நீங்களோ ர் பாரமேயன்றி வேறொன்று மில்லை , வாழ் வதைவிடச் சரவதே மேல் வீறுபெற்று எழுமின்! அடி மையில் மோகம் கொள்ள வேண்டாம் உயர்ந்தோ ராயினும் சரி; தாழ்ந்தோ ராயினும் சரி; பிற  ைர ப் போன்று நீங்களும் உண்ண உணவு, இருக்க வீடு ஆகியவற்றைப் பெறவேண்டியது உங்க ளின் பிறப் புரிமையாகும். வீறுகொண்டு எழுமின், போராடுமின் , வெற்றி பெறுமின், மனிதனாய் வாழ , வாழப் பிறந்தோ ராய்த் திகழ, முன்வாருங்கள்.’
இவ்வாறு நலிவடைந்த மக்கள் அனைவருக்கும் பாரத ரத்னா பாபா சாகேப் பீம் ராவ் அம்பேத்கார் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்கள் கொங்கினி மாநிலத்தில் ரத்தினகிரி மாவட்டத்தில், அம்பா வாடே என்ற கிராமத்தில், 1891 ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி,
 
 
 
 

'ငါ့ရွီးချို
99 O. இதழ் 5
அம்பேத்கார்
பீமாபாய், ராம்ஜீ தம்பதிகளின் 14வது குழந்தையாய் அன்னார் அவதரித்தார். 8-12-1956ல் இயற்கை எய் தினார். இடைப்பட்ட 65 ஆண்டுகளில் அந்நிய ஆட்சிக் குட்பட்டிருந்த இந் தி யா வி ல், சாதிக்கொடுமைகள் மலிந்த சமு த ஈ ய த் தி ல் அவர் பட்ட துன்பங்களுக்கு அளவில்லை.
அறிவிருத்தும், ஆற்றலிருந்தும், ஆண்மையிருந்தும், தீண்டாமை நச்சரவங்களாலும், ஏழ்மைப் பிணியினா லும், அவர் அனுபவித்த துன்பங்களுக்கு அளவில்லை. 'பறையன் பறையன்' என்ற இழிச்சொற்களால் அவ ரின் இளகிய உள்ளம் புண்படுத்தப்பட்டது. பொதுக் குழாயில், தாகம் தீர்த்துக்கொள்ள தண்ணிர் குடித்த தால், உயர் சாதியினர் என்று கூறிக்கொள்பவர்கள் முதுகு பிய்ந்துபோக அடித்தார்கள். தான் முடிவெட் டிக் கொள்ள விரும் பியபோது, பறையனின் முடியை வெட்டினால், தன் கையும், கத்தரிக்கோலும் அசுத்த மடையும் என்று சொல்லி ஒரு அம்பட்டன் மறு த் து விட்டான்.
அவர் படித்த பள்ளியில் அவர் மற்ற மாணவர்களிட மிருந்து தள்ளி தரையில் உட்கார வைக்கப்பட்டார். க ரு ம் பல  ைக யி ல் எழுத அனுமதிக்கப்படவில்லை. பரோடா மன்னரின் அலுவலகத்தில் அவர் இராணுவச் செயலாளராகப் பணிபுரிந்தபொழுது, அவர் தாழ்த்தப் பட்ட குலத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொண்ட சிறு ஊழியர்கள், கோப்புகளை அவர் கைப்படக்கூடா
தென்று தூரநின்று வீசினர்.
அவர் வழக்கறிஞராக உயர்ந்து, பம்பாயில் நெடுஞ் சாலைக்கு அருகே ஒரு வீடு தேடினார். ஒருவரும் வீடு தர முன் வரவில்லை. வீடு தேடிக் களைத்துப் போன அம்பேத்கார் ஒரு மரத்தினடியில் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார்.
இத்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந் தும் அஞ்சா நெஞ்சனாய், அறிவின் கூர்மையால் அய ராத உழைப்பால் உயர்ந்தார். வறுமையில் வாழ்ந்த

Page 2
குடும்பமென்றாலும், அவரது கல்வி வளர்ச்சிக்கு முடிந்த உதவியைத் தியாகம் செய்துள்ளனர். தாயும், தந்தை யும் பம்பாயில் உள்ள பிரபல கல்லூரியான எல்ஃபின்ஸ் டன் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்.
Lu Cé r (Tt Lrr மகாராஜா வழங்கிய புலமைப் ப்ரிசிலின் உதவியோடு அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்க லைக் கழகத்தில் எம்ஏ பட்டிம் பெற்றார் லண்டனில் உள்ள 'கிரெயின் இன்" என்ற சட்ட்க்க ல் லூ ரி யில் பயின்று பாரிஸ்டர் பட்டம் பெற்று வழக்கறிஞரானார். ல ண் ட னின் பல்கலைக் கழகத்தில் "டாக்ட்ர் ஆப் சயின்ஸ்" என்ற உயர் கல்விக்காகச் சேர்ந்தும், பொரு ளாதார உதவியின்மையால் அதனைக் கைவிட நேர்ந் தது. எனினும் 1921ம் ஆண்டில் இரண்டாம் முறை யாக லண்டன் சென்று "மாஸ்டர் ஆஃப் சயின்ஸ்" பட்டம் பெற்றார்.
பம்பாயின் சட்டக் கல்லூரி அதிபராகக் கட ைம ஆற்றியுள்ளார். 1947ல் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சட்ட அமைச் சர் ஆனார். அதே ஆண்டில் அரசில் அமைப்புச் சட்டக்குழுத் தலைவராக அமர்ந்து, இந்திய நாட்டின் மிகச் சிறந்த அரசியல் அமைப்புத் திட்டத்தை உருவாக்கும் மாபெரும் மேதை
T6tt.
அவர் அனுபவித்த துன்பங்கள் அவர் வாழ்ந்த காலகட்டம், அப்பொழுது நிலவிய சமுதாயக் கொடுமை களை மனதிற்கொண்டு நோக்கினோமானால் அவரது சாதனைகள் வியத்தகு சாதனைகள்; இமாலயச் சாத னைகள். அவரது வாழ்வே நம்பிக்கையூட்டும் விடி வெள்ளியாக இல்ங்குகின்றது.
தனது சமுதாயத்தை அவர் மறந்தாரில்லை. தான் அனுபவித்த அவமானங்களை, பட்ட அவதூறுகளை அ வர் மறந்தாரில்லை. இந்தியாவின் வத்து கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக சளைக்காது போராடினார். *
இந்து சமுதாயம், பிராமணீயமும் தான் சாதிப் பிரிவுகளுக்கும். ஏற்றத் தாழ்வுகளுக்கும் வித்திட்ட சக்தி கள் என்றெண்ணி அவைகளைச் சாடினார். மாற்று வழி கண்டார். பெளத்த சமயத்தைத் தழுவினார் - சாதிக் கொடுமைகளினின்றும் விடுதலைபெறுவதற்கு மதமாற் றம் ஒரு வழி எனக் கருதினார். எல்லாவற்றிற்கும்
அம்பேத்கா எத்தனையோ பேர் பிறக்கின்றா நிறைவு விழாவைக் கொண்டாடு எவ்வளவோ கொடுமைகளுக்கிடை அந்தத் திறமையை அவர் ெ
தப்பட்ட சமுதாயத்தை உயர்த்தி ரைப் பாராட்டுகிறோம்.
ஆகவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவ பெற முயல வேண்டும் பிறப்பின் அடிப்படையில் சலுை கொள்ள வேண்டும். கல்வித்துறையில் தாழ்த்தப்பட்டவ வர நாம் அனைவரும் படிக்க வேண்டாமா? உலகத்தை பின் அடிப்படையில் எத்தனை காலத்திற்கு வளர்ந்துவி மாறவேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்
பள்ளிகளில் குறியீடு (மார்க்கு) பெறுவதே ஒரு கை சிறந்து விளங்க வேண்டும். படிப்பே இல்லாமல் யாரும் விலக்காக ஓரிருவர் இருக்கலாம். 'ஆனால் படித்ததின மாட்டார்கள். கட்டிடத்திற்குச் செங்கல் போல, வா தேவை, தேர்ச்சி தேவை. (15-4-67ல் சென்னை நேரு விளையாட்டரங்கில் நிகழ் நன்றி: "அண்ணா போற்றிய அறிஞர்கள்" என்ற நூல்
2
 

மேலாக, கல்வி ஒன்றே தாழ்த்தப்பட்டோருக்கு விமோசனம் என்று கண்டார்.
ஷோலாப்பூரில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதி நிறுவி இலவசமாக உடையும், உணவும் புத்தகங் களும் வழங்க ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்டோர் கல்விக் கழகம் நிறுவினர். தாழ்த்தப்பட்டோருக்கு தனித் தொகுதிகள் ஏற்படுத்தி மாகாண சட்ட சபைகளில் பிரதிநிதித்துவம் வழங்க ஏற்பாடு செய்தார்.
1935ம் ஆண்டு இந்திய அர சு ச் சட்ட த் தி ல் தாழ்த்தப்பட்டோர் யாவர் எனக் குறிப்பிடச் செய்தார். சு யே ச்  ைச த் தொழிலாளர் கட்சியைத் துவக்கினர். தாழ்த்தப்பட்ட மக்கள் பட்டப்படிப்பு பெறுவதற்காக பம்பாயில் "சித்தார்த்தா கல்லூரி' நிறுவினுர் . தனது உயரிய இலட்சியங்களை அடைவதற்காக அயராது பாடு Lu Tř .
அவரது இலட்சியங்களைப் பற்றியும், கொள்கைகளைப் பற்றியும் அவரே கூறுகிருர் :
என் சமுதாயதத்துவம் மூன்று வார்த்தைகளில் அடங்கியுள்ளது எனக் கூறுவேன்-சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். என் தத்துவத்தை பிரெஞ்சுப் புரட்சி யிலிருந்து கடன் வாங்கினேன் என்று யாரு ம் கூற வேண்டாம் . நான் கடன் வாங்கவில்லை என் தத்துவ ம் மதத்தில் வேர் பாய்ந்தது - அரசியல் விஞ்ஞானத்தில் அன்று யான். என் ஆசான் புத்தர் கற்பித்த உண்மை களிலிருந்து அவ்வார்த்தைகளை எடுத்துக் கொண்டேன்’.
"பிறர் எனக்குக் கொடுக்கின்ற மதிப்பை நான் மதிப்பதை விட, என் கொள்கைகளையே நான் பெரிதும் மதிக்கின்றேன்' 'இதோ என் எதிரிலுளள கம்பத்தில் என்னைத் தூக்கிலிட்டாலும்சரி, துப்பாக்கியைக் கொண்டு என்னை சுட்டா லும் ச ரி, நான் என் கொள்கைகளை எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்"
ஜாதிக் கொடுமைகளற்ற சமத்துவ சமுதாயத்தை நிலை நாட்ட, நசுக்கும் நச்சுச் சக்திகளுக்கு எதிராகப் போராட நாம் உறுதி பூண்டு ஒற்றுமையாகச் செயற் படுவதே அமரர் அம்பேத்கருக்கு நாம் செலுத்து ம் காணிக்கையாகும்.
O ர் பற்றி அறிஞர் அண்ணு ர்கள். இறக்கின்றார்கள். அம்பேத்காரின் 76 வது ஆண்டு
கிறோம் என்றால் எத்தனையோ அழுத்தல்களுக்கிடையே யே அம்பேத்கார் திறமையைப் பயன்படுத்தியதால்தான்.
சாந்தத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தாழ்த் விடுவதற்காகப் பயன்படுத்தினார் அதனால் தான் அவ
ர்கள் - பிற்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் நல்ல திறமை ககள் பெறுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தவிர்த்துக் கள் முன்னேற்றம் காணவேண்டும். நாட்டிலே முன்னுக்கு தெரிந்து கொள்ள வேண்டாமா? திறமை பெறாமல் பிறப் ட முடியும்? ஆகவே "தாழ்த்தப்பட்டோர்" என்ற நிலை வர்கள் ஒவ்வொருவரும் திறமைபெற்றாக வேண்டும்.
லயாக வளர்ந்து வருகிறது. அந்தக் கலையிலே நாமும் திறமை பெறமுடியாது. அப்படி யாராவது இருந்தால் விதி ல் யாரும் திறமை போய்விட்டது" என்று யாரும் சொல்ல ழ்க்கை முன்னேற்றத்திற்குப் படிப்புத் தேவை, திறமை
த அம்பேத்கார் பிறந்தநாள் விழாவில் அறிஞர் அண்ணா)
தொகுப்பு ஆசிரியர் :- மறைமலையான்

Page 3
சமூக நீதித் திருநா
அடிவயிற்றில் பற்றி எரியும் பசித் தீயை அடக்கி விட்
லாம், வயிற்றை நிரப்புவதுதான் முக்கியம் எனக் கருதினால். ஆனால் அ டி வயிற் றில் பற்றிய தீ கொளுந்து விட்டு எரிந்து நெஞ்சைத் தொடும் போது அதனை அன்னமிட்டு அடக்கிவிட முடியாது. இதனை மக்கள் உணர வேண்டும். ஒரு புரட்சியினால் மட்டுமே அதனை அடக்க முடியும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமூக, பொருளாதார நீதி கிடைப்பதற்கு உழைக்க வேண்டும். இ ல் லா வி ட் டா ல் பற்றி எரியும் பெரு, நெருப்பு ஒரு நாள் முழுச் சமுதாயத்தையுமே கபளி கரம் செய்துவிடும். இ த  ைன உறுதிப்படுத்துவதற் காகத்தான், இந்த நீதியை நிலைநாட்டுவதற்காகத் - தான் டாக்டர் அம்பேத்கார் நினைவாக 1990-91ம் ஆண்டை இன்று முதல் சமூக நீதி ஆண்டாக அனு சரிக்க நாம் முடிவு செய்துள்ளோம். -
- UmgrgU Ugg5toff os.U. efus Sodstraksir 12-4-90ல் பாராளுமன்றத்தில்
ஆற்றிய உரையிலிருந்து
1990ம் ஆண்டு ‘சமூக நீதி’ ஆண்டாக அனுசரிக் கப்பட வேண்டும் என்று தேசிய முன்னணி அரசு அறி 'வித்துள்ளது.
அதன் அர்த்தம் என்ன? முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டும் அதற்குப் பிறகும் அரசும், மக்களும் சமூக நீதியை நிலைநாட்டப் பாடுபட வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.
நமது நாட்டை எடுத்துக் கொண்டால் 40 கோடி மக்கள் சமூக நீதியின்றி வாடுகின்றார்கள் என்று கணக் கிடலாம். சமூக நீதி என்றால் சமூகத்தில் வாழுகின்ற அத்தனை பேரும் சமமாகக் கருதப்பட வேண்டும்.
மனிதனுக்கு மனிதன் சமம். ஒவ்வொருவருக்கும் சம உரிமைகள் உண்டு. அம்பேத்கார் அவர்கள் உருவா க் கி ய அரசிய லமைப்புத் திட்டத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய அடிப்படை உரிமைகள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி இந்த உரிமைகளை அ  ைட ய எந்த முயற்சியையும் எந்தக் குடிமகனும் தனியாகவோ, கூட்டாகவோ மேற் கொள்ளலாம். ஒ வ் வொ ரு குடிமகனுக்கும், சமூக, அரசியல், பொருளாதார நீதியும், சமத்துவமும் இருக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு அத்தியாவசிய மான உணவு, உடை, உறைவிடம் ஊர்ஜிதம் செய் யப்பட வேண்டும். 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத் தினை அழித்திடுவோம்' என்று பாரதி குமுறினானே அது இந்த சமூக நீதியை நிலைநாட் டத்தான்.

, O
உணவு உற்பத்தி அதிகரித்துள்ளதால் வெளிநாடு
களுக்குக் கூட ஏற்றுமதி செய்யலாம் என்று திட்டமிடு கிற நமது நாட்டில் எத்தனைப் பட்டினிச் சாவுகள்?
குழந்தைகளுக்கு உணவு ஊட்டமுடியவில்லையே என்று அவர்களையும் கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்ளும் தாய்மார்கள் எத்தனை பேர்? அரசாங்கத் தானிய சேகரிப்பு நிலையங்களில் எலிகளும், பறவை களும் தானியங்களை உண்டு கொழுக்கையில், வயிற்றி லடித்துக் கொண்டு பிச்சை கேட்கும் சின்னஞ் சிறார் கள் எத்தனை பேர்?
நாளுக்கு நாள் பெருகிவரும் ஒ ட் ட ல் களி ல் பரின்றிய உணவை ஏப்பம் விட்டு சாப்பிட்டுவிட்டு எஞ்சியதைத் தூக்கி எறியும் குப்பைத் தொட்டி அருகில் எச்சில் இலைகளுக்காகக் காத்திருப்பவர்கள் எத்தனை பேர்? நமது நாட்டு புள்ளி விபரங்கள் இவற்றைக் கணக்கிட்டுச் சொல்லாவிட்டாலும், நாம் நாள்தோறும் காணுகின்ற காட்சிகள், கே ட் கி ன் ற செய்திகளும் நம் இதயங்களில் பதிந்துவிடுகின்றன. Sri Gas & espas' gig பட்டும், பகட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாள் தோறும் விளம்பரப்படுத்தப்படும் நாட்டில் கோ வண தாரிகளாகவே வாழவேண்டியவர்கள் எத்தனை பேர்? கோடிக்கணக்கில் நமது நாட்டில் உற்பத்தி செய்யப் படும் ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய் யப்படும் அதே வேளையில் கந்தை கட்டி, கிழி ந் த இழிந்த உடைகளை மட்டுமே கொண்டு மானங்காக்க வேண்டிய நிலையில் உள்ள இந்தியர்கள் எத்தனை G...፡ ፬ ?
வீடின்றி பாதை ஒரங்களிலே குடும்பம் நடத்து வோர் எத்தனை பேர்? குடிசைகள் கட்டுவதற்கு நில மில்லாமல் கொத்தடிமைகளாய், பன்றிக் கொட்டில் களில் வாழ்வோர் எத்தனை பேர்? குடிப்பதற்குச் சுத்த மான நீரின்றி, எத்தனை பேர் கொடிய நோய்களுக்கு ஆட்பட்டு அ கா ல மரணமடைகிறார்கள்? மருத்துவ உதவியின்றி மரணத்தை முத்தமிடுவோர் எ த் த  ைன Ꮳu Ꭵfi?
போதிய போஷாக்கின்றி குருடராய், கூனராய், முடவராய், செவிடராய், வாழ்விழந்தோர் எத் த  ைன (oui?
இது மட்டுமா? சமுதாயக் கொடுமைகள்? தீண் டாமை இன்னும் அகலவில்லை. சாதி வெறித் தணிய வில்லை. பெண்களைக் கொடுமைப் படுத்தும் கொடூ ரங்கள் குன்றிவிடவில்லை. பெண்களை விலைமாதராக் கும் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. குழந்தைகள் அபகரிக்கப்பட்டு, அவயவங்கள் முறிக்கப் பட்டு, பிச்சைத் தொழிலுக்கு மூலதனமாக்கப்படுகிறார் கள். முதியவர்களையும், நோயாளிகளையும் பாதுகாக் காமல், ஆலயங்களின் முன்றில்களில் பிச்சை எடுப்பதற் கென்றே அவர்களை அர்ப்பணித்து விடுகிறோம்.

Page 4
உழைக்கும் உரிமை அனைவருக்கும் ஊர் ஜித ம் செய்யப்பட வேண்டும். அது அடிப்படை உரிமையாக் கப்பட வேண்டும் என்று அரசு கூறிவருகிறது.ஆனல் உழைப்பவர்களுக்கு போதிய ஊதியமில்லை.
முடிந்தவர்கள், வேலை நிறுத்தம் செய்து, போராட் டம் செய்து சம்பள உயர்வு பெற்றுக் கொள்கிறார்கள் . ஆனால் நாளாந்தக் கூலிகளாய், விவசாயக் கூலிக 7 ளாய், கட்டிடத் தொழிலாளர்களாய் போதிய சம்பள மின்றி உழைத்து, உழைத்து உருக்குலைந்து போன வர்கள் எத்தனை கோடி? உழைப்பைச் சுரண்டி உல் லாச வாழ்வு வாழும் வர்க்கத்திற்கு எவ்வித அச்சுறுத் தலுமில்லை. உண்ணும் உணவினிலே கலப்படம் செய்யும் வியாபாரிகள், கோடீஸ்வரர்கள் ஆபத்தான மருந்துகளை அகவிலைக்கு விற்று கொள்ளையடிப்பவர்கள் எத்தனை பேர்? இயற்கை வளங்களைச் சுரண்டி நாட்டையே அழிப்போர் எத்தனை பேர்? இலஞ்சம் வாங்குவதையே குறியாகக் கொண்டு தமது கடமைகளைச் செய்யாது குறுக்கு வழியில் சிலருக்கு சலுகைகள் செய்து பிழைக் கும் அரசாங்க ஊழியர்கள் எத்தனை பேர்?
பொய், கலப்படம், கொள்ளை, இலஞ்சம், சுரண் டல், ஏமாற்று. திருட்டு இவை நமது இன்றைய சமு
அமரர்
இலங்கையின் தொழிற்சங்க, அரசியல் வரலாற் றைப் பற்றி சிந் தி க்கு ம் எவரும், ஜணுப் அப்துல் அஸிஸ் அவர்களைப் பற்றி நினைவு கூருமல் இருக்க முடியாது, ஏனெனில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இரு துறைகளிலுமே இரண்டறக் கலந்துவிட்ட நிலையிலே பொது வாழ்வில் ஈடுபட்ட பெருமை அன்ன ரைச் சாரும்.
இத்தகைய பெருமை பெற்ற அஸிஸ் அவர் கள் ஏப்ரல் மாதம் 30ம் திகதி உயிர் நீத்தார் என்ற செய்தி அவரைப் பற்றி நன்கறிந்த அனைவருக்கும் ஒரு பெரும் அதிர்ச்சியாகும். இலங்கையின் அரசியல் வரலாற்றிலே, தொழிற்சங்க வரலாற்றிலே அழிக்க முடியாததொரு பெயரைப் பதித்து விட்டு அவர் மறைந்து விட்டார்.
4.
 

தாய அணிகலன்கள். ந ம து சமுதாயத்தை இந்தக் கொடுமைகளிலிருந்து என்றைக்கு விடுவிக்கப் போகி றோம்?
மனித நேயத்தை, சகோதரத்துவத்தை, சமத்து வத்தை என்று எங்கள் சமுதாயத்தின் இலக்கணமாக ஆக்கப் போகிறோம்?
இந்தக் கேள்விகளுக்கு விடைகாண சமூக நீதித் திருநாளை நாம் கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் கிறிஸ்தவர்கள் இயேசு மறு படியும் பிறந்து அநீதிகளுக்கு எக்காளமிடுவார் என்ற நம்பிக்கையிலே கிறிஸ்துமஸ் கொண்டாடுகி சார்கள். தீபாவளித் திருநாள் கொண்டாடுபவர்கள் மீண்டும் எங்கள் வாழ் வில் இருளகன்று ஒளி பிறக்க வேண்டு மென்று இ  ைற வ  ைன வேண்டித் தீபத திருநாள் கொண்டாடுகிறார்கள். நாமும் சமூக நீதித் திருநாள் கொண்டாடுகிறோம். இந்திய மண்ணில் சமூக நீதியை நிலைநாட்டுவோம், சமுதாயக் கொடுமைகளைக களை வோம் என்ற எங்கள் இலட்சியத்தை உறுதிப்படுத்து. வதற்காகவே.
= இரசி
அஎபீஸ்
மகாத்மா காந்தி பிறந்த போர்பந்தரிலே அளிஸ் அவர்கள் 1912ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் திகதி பிறந்தார். கராச்சியிலும், பம்பாயிலும் கல் வி கற்று பட்டதாரியானுர் . கல்லூ ரி யி ல் படிக்கும் போதே மாணவர் த லை வ ரா ய் த் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் தந்தைக்கு வியாபார ரீதியில் உதவுமுகமாக இலங்கைக்குச் சென் ருர். ஆணுல் வியாபாரத்தில் அவர் மனம் லயிக்கவில்லை. பொது வாழ்வில் ஈ டு பட வே அவரது மனம் தூண்டியது, அக் கால கட்டத்திலே இந்தியர்களுக்காக இலங்கையில் பல்வேறு அமைப்புகள் இருந்தன. அதிலே இந் தி ய சேவா சங்கம் என்ற அமைப்வின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
'இந்திய வம் சா வளித் தமிழர்களுள் பெரும் பான்மையினர் தோ ட்ட த் தொழிலாளர்களாகவே இருக்கின்றனர். அவர்களை ஒரு கட்டுப்கோப்புக்குள் கொண்டு வந்து தங்க ள து பிரச்சனைகளைத் தாமே தீர்த்துக் கொள்ளும் ஒரு மனுேநிலையினை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்" என்ற ஒரு செய்தியினை தான் க ல ந் து கொண்ட எல்லா கலந்துரையாடல்களிலும் முன்வைக்கத் தவறவில்லை. இதன் விளைவாக இலங்கைஇந் தி ய தேசிய காங் கி ர ஸ் என்ற ஓர் இயக்கம் உருவாக்கப்பட்டு அதன் செயலர் பொறுப்பை ஏற்ருர் . இதுவே பின்னர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர் களின் முன்னிலையில் இலங்கை-இந்திய காங்கிரசாக உருமாற்றப்பட்டது.
1940ம் ஆண்டு இலங்கை-இந்திய காங் கிர ஸ் தொழிலாளர் யூ னிய ன் எ ன் ற ஒரு தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டு அதன் தலைவராகவும் ஜனுப் அஸிஸ் பொறுப்பேற்ருர் . அக்காலகட்டத்திலே தொழிற்சங்க நடவடிக்கை என்பது ப ா ர தூ ர மா ன குற்றமாகக் கருதப்பட்டது. தோட்டங்களுக்குச் சென் று தொழி லாளர்களைச் சந்திக்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. தொழிற்சங்கத் தலைவரான அஸிஸ் இரவு நேரங்களில் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து அங்கத்தினரை சேர்த்ததோடு அவர்களது பிரச்சனை களையும் தெரிந்து கொண்டார்,

Page 5
இப் படி யாக தன் தொழிற்சங்க வாழ்க்கையை ஆரம்பித்த அஸிஸ் அவர்கள் தோட்டத் தொழிலாளர் களது நல்வாழ்வுக்காக மட்டுமல்லாது இலங்கையின் சிறுபான்மை மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை கள், சலுகைகள் குறித்தும் பல பேச்சுவார்த்தைகளும், போராட்டங்களும் நடத்தத் தவறவில்லை. இலங்கைஇந்திய காங்கிரசின் பிரிதிநிதியாய் 1946ம் ஆண் டு மஸ்கெலியா தொகுதியிலே போட்டியிட்டு இலங்கையின் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை-இந்திய காங்கிரஸ் தொழி லா ள ர் யூனியன் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எனப் பெயர் மாற்றப்பட்டது. கருத்து வேறு பா டு காரணமாக 1955ம் ஆண் டு புதியதொரு தொழிற் சங் கத்  ைத ஜனு ப் அஸிஸ் அவர்கள் ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் எ ன் ற பெயரிலே ஏற்படுத் தினார். அன்று முதல் அவர் இறக்கும் வரை அதன் தலைவராய் இரு ந் து தோட்டத் தொழிலாளர்களின்
மேம்பாட்டுக்காக அரும்பாடுபட்டார். பல்வேறு சர்வ
ww-r's --
மன்றச் செய்திகள்
சிறுவர் சீரணி பயிற்சி முகா
மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற கோத்தகிரி வளாகத்தில் சிறுவர்களுக்காக பயிற்சி முகாம் ஒன்று 13-5-90ல் ஆரம்பமானது. லண்டன் குழந்தைகள் நிறு வனத்தைச் சேர்ந்த திருமதி. ராஜி ராஜகோபாலன் அவர்களும், "எம்மா’ இயக்குநர் அருட்தந்தை. எம். இம்மானுவேல் அவர் க ஞ ம குத்துவிளக்கேற்றி இப் வயிற்சி முகாமை தொடக்கி வைத்தார்கள். மன்றம் பணியாற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறு மியர் இதில் கலந்து கொண்டனர்.
அருட்தந்தை இம்மானுவேல் தன் தொடக்கவுரை யில் 'சிறுவர், சிறுமியர் தங்களது அனைத்து சக்தி யையும் ஒன்று சேர்த்து தம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அதற்காக தங்களுக்குக்
சிறுவர் சீரணி கோடை
சிறுவர்களுக்காக கோடைகாலப் பயிற்சி முகாம் கோத்தகிரி மன்ற வளாகத்தில் மே மாதம் 14ம் திகதி முதல் 16ம் திகதி வரை நடைபெற்றது. இம்முகாமில் 23 குடியிரூப்புகளில் இருந்து 44 சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். இக்கோ டைப் பயிற்சி முகாமிலே அருட்தந்தை இம்மானுவேல், எம். செபஸ்தியான், திரு. எஸ். ஆனந்தராஜா, திரு. ஏ. சீ. டீன், திரு. ஏம். விஜயகுமார், திரு. ஏ. தமிழ்ச் செல்வன், திரு. ஏ. மணி, செல்வி. வியா குலமேரி, செல்வி. விஜயநிர்மலா , செல்வி. எம் ராஜாமணி, செல்வி. டபிள்யூ. ரீட்டா ஆகியோர் பயிற்சியாளர்களாகச் செயல்பட்டனர்.
இம்முகாமில், கல்வியின் அவசியம் என்ன? பள்ளி செல்லா மா ன வ ர் களை பள்ளிக்கு அனுப்புவதில்

தேச அரங்குகளிலும், இலங்கைப் பாராளுமன்றத்திலும் தொழிலாளர்களின் நலனுக்காகவும், சிறுவான்மை யினரின் நலனுக்காகவும் குரல் கொடுத்து வந்தார்.
ஆபிரிக்க-ஆசிய தோழமைக் கழகத்தின் இலங் கைக் கிளையின் செயலாளராகச் சிறப்புற பணியாற்றிய அவர் அக் கழகத்தின் சர்வதேசப் பி ரி வின் துணைத் தலைவராகவும் விளங்கினர் உலகத் தொழிற் சங்கங் களின் இணைப்பு சங்கத்தில் (W.F.T. U ) முக்கிய பிரதிநிதியாகத் தி க ழ் ந்து பல மாநாடுகளில் பங்கு பற்றியுள்ளளார். மலையக மாணவர்கள் சோவியத் யூனி யனில் கல்வி பயில்வதற்கு வழிவகை செய்தார். மலையக மக்களை இலங்கையின் முற்போக்கு அர சி ய லுக் கு இட்டுச் சென்றவர் அ ஸிஸ். பழகுவதற்கு இனியவ ராகவும், பார்ப்பதற்கு அழகியவராகவும், தொண்டாற் றும் திறமையில் உயர்ந்தவராகவும் விளங்கிய அஸிஸ் அவர்களின் நாமம் வாழ்க! உபூந்
கிடைக்கக்கூடிய வசதி வாய்ப்புக்களை சரியாக பயன் படுத்திக் கொள்ளவேண்டும் எனவும் கூறினர். சிறுவர் சீரணியின் ஆரம்ப வரலாறு பற்றி குன்னூர் மன்ற ஊக்குனர் செல்வி டபிள்யூ. ரீட்டா எடுத்துக் கூறினார். சிறுவர் சீரணியின் எதிர் கால திட்டங்கள் பற்றி இளை ஞர் அணிச் செயலர் திரு. எம். ஆனந்த ராஜ் எடுத் துரைத்தார். குடியிருப்புக்களில் சிறு வர சீரணி எவ் வாறு செயல்படுகின்றது என்பது பற்றி ஈளாடா பாரதி நகரைச் சேர்ந்த செல்வன் மூர்த்தி, சக்தி நகர் செல்வி தேன் மலர், வள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வன் கிருஷ்ணராஜ் ஆகியோர் தம் கருத்துக்களைத் தெரி வித்தனர்.
சுற்றுப்புறச் சுத்தம், தனி நபர் சுத்தம், என்பன பற்றி பாடல்கள், நாடகங்கள், குழு நடனம், செயல் முறை விளக்கம் மூலம் சிறுவர்கள் எடுத்துக்காட்டினர்.
கால பயிற்சி முகாம்
ஏற்படும் நடைமுறை சிக்கல்களை தீர்க்க தேவையான அணுகுமுறை என்ன? சிறுவர் சீரணியின் நோக்கம் என்ன போன்றவை பற்றி விரிவாக எடுத்துக் கூறப் பட்டது.
இதில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர் தம் கருத் துக்களை கூறு கை யி லே 'சிறுவர் சீரணி பற்றி முழு ைம ய ா க த் தெரிந்து கொண்டதாகவும், சிறு சேமிப்பின் முக்கியத்துவம், நல்ல பழக்கவழக்கங்கள், முதலுதவி, கட்டுப்பாட்டோடு இருத்தல், தலைமைப் பண்பு, சகோதரத்துவமாக பழகுதல் போன்றவைகள் பற்றி தாம் அறிந்து கொண்டதாகவும் கூறினர்.

Page 6
பெண்கள் விழிப்புணர்
மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற குன் னு ர் கிளையும் டெக்ராஸ் நிறுவனமும் இணைந்து, குன் னுரர் தூதுர் மட்டத்தில் ஒரு கருத்தரங்கை நடத்தினர். இக்கருத்தரங்கு 20-5-90 ஞாயிற்றுக்கிழமை காலை 11-00 மணிக்கு ஆரம்பமானது. இப்பகுதியினைச் சேர்ந்த 40 பெண்கள் இக்கருத்தரங்கில் பங்கு பெற்றனர்.
செல்வி வி. அம்பிகாபதி வரவேற்புரை நிகழ்த்தி னார். இக் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்து பேசிய "டெக்ராஸ் " நிறுவனத்தைச் சார்ந்த திரு. ஜேம்ஸ் ஆண்டனி, ‘டெக்ராஸ் நிறுவனத்தைப் பற்றியும், மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்துடன் இணைந்து மக்கள் முன்னேற்றத்துக்காக செயற்படுவது பற்றியும் எடுத்துக் கூறிஞர். மலையக மாதர் முன்னணி செயலர் செல்வி கே. ரேவதி பேசுகையிலே, பெண் களின் அறியாமைக்கு கல்வியறிவின்மையே முக்கிய காரணம் என்றும், ‘கற்கை நன்றே, கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என கல்வியின் அவசிய ம் பற்றி குறிப்பிட்டார். பெண் கள் மத்தியில் விழிப்பு ணர்வு ஏற்பட, மன்றம் உருவாக்கியுள்ள திட்டங்கள் குறித்தும், அரசு பெண்களுக்கென அறிவித்துள்ள அ  ைன த் து சலுகைகளையும், பெற்றுக் கொள்வது பெண்களின் கடமை எனவும் குறிப்பிட்டார்.
மாணவர்
கோடை விடுமுறையை - குதூகலமாய் கழிக் கும் மாணவர்கள் தம் விடுமுறையில் பலன் பெற வேண்டும், என்ற நோக்கோடு மலையக மக்கள் மறு வாழ்வு மன்றம் மாணவர்களுக்கான பயிற்சிக் க ரு த் த ரங் கு ஒன்றை கோத்தகிரி ம ன் ற வளாகத்தில் மே மாதம் 21, 22, 23ம் திகதிகளில் நடத்தியது. இப்பயிற்சிக் கருத் தரங்கில் 16 மாணவர்கள் கலந்து பலன் பெற்றனர்.
இன்றைய மாணவர்களின் நிலை, இ ன்  ைற ய கல்வி நிலை, சமூக முன்னேற்றத்துக்கு கல்வி எவ்வாறு அமைய வேண்டும், மாணவர்களின் பொறுப்பு போன்ற தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றது. அத் தோடு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு கலந்துரையாடலின் முடிவில் வெளியான கருத்துக் கள் தொகுக்கப்பட்டு
கொளப்பள்ளியில் ை
விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஈடு படுத்தி அவர்தம் திறமைகளை வளர்ப்பதை த ன து முக்கியப் பணிகளில் ஒன்றாகக் கொண்டிருக்கும் மலை யக மக்கள் மறுவாழ்வு மன்றம் கூடலூர் கொளப்பள்ளி
யில் இப்பகுதி இளைஞர் அணிகள் பங்கு கொள்ளும்
கைப்பந்தாட்டப் போட்டி ஒ ன் றி  ைன நடத்தியது. பத்து அணிகள் பங்கு கொண்ட இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் கொளப்பள்ளி முருகன் ஸ்டார் அணியும்
6

ச்சி பற்றிய கருத்தரங்கு
சிறுவர் சீரணி பொறுப்பாளர்களுள் ஒருவரான திருமதி. லட்சுமி கர்ப் பிணிகள், தாய்மார்கள் ஆகி யோர் சுகாதாரமாய் இருக்க வேண்டியதின் அவசி யம் பற்றியும், சத்துள்ள உணவு, நோய்கள், அதனை தடுக்கும் முறைகள் பற்றி அறிந்திருத்தல் மிக அவசி யம் எனவும் குறிப்பிட்டார். வீட்டுத் தோட்டம் ஏற் படுத்துதல், முதலுதவி பற்றிய அறிவை ப் பெற்றுக் கொள்ளல் ஒவ்வொரு தாய்மார்களினதும் முக்கிய கட
மைகளில் ஒன்று என எளிய முறையில் தன் கருத்துக் களை வெளிப்படுத்தினார்.
செல்வி ரீட்டா, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றும், ஒன்றுபட்டு குரல் எழுப்பு வதன் மூலம், தம் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும் என தன் உரையிலே குறிப்பிட்டார்.
கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி செல்வி வி. அம்பிகாவதியும், செல்வி காளிதேவியும் தம் கருத் துக்களை கூறினர்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து பெண் களும், மன்றத்தின் சகல நடவடிக்கைகளுக்கும், பூரண ஒத்துழைப்பு நல்க உறுதியளித்தனர்.
கருகுகுரங்கு
அறிக்  ைகயா க சமர்ப்பிக்கப்பட்டன கல்விப் பணி பொறுப்பாளர் திரு. கே. மாதவனும், இளைஞர் இயக் கமும் இக்கருத்தரங்குக்கான ஏற்பாடுகளைச் செய்திருந் தனர். இக்கருத்த ரங்கில் திரு. கே. மாதவன், திரு. எஸ். ஆனந்தராஜா, திரு. ஏ. தமிழ்ச்செல்வன், திரு. ஏ.சி. டீன், திரு. எம். சந்திரசேகரன் ஆகியோ ர் பயிற்சியாளராக கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கைத் தொடர்ந்து குடியிருப்புகள் அனைத்திலும் நூறுவிழுக்காடு கல்வி என்ற கோட்பாட்டிற் கிணங்க வரும் கல்வி ஆண் டி ல் குடியிருப்புக்களில் பள்ளி செல்லும் பருவத்தை எய்தியவர்கள் அனை வரும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற முனைப் போடு மன்ற ஊக்குநர்கள் அனைவரும் மிகுந்த சிரத் தையோடு பணியாற்றி வருகின்றனர்.
கப்பந்தாட்டப் போட்டி
டேன்டீ அணியும் மோதின. டேன் டீ அணியினர் சிறப் பாக ஆடிய போதும் அவர்களை விடத் திறமையாக
ஆடி முருகன் ஸ்டார் அணி முதல் இடத்தைப் பெற்றது.
இப்போட்டிகளை மன்ற பி ர த ம ஊக்குநர் திரு. ஏ. சீ. டீன், கூடலூர் மன்ற அலுவலக உதவியாளர் திரு. ரவிராஜா மற்றும் இளைஞர் அணியைச் சேர்ந்த திரு. ஏ. தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னின்று நடத் தினர்.

Page 7
குடும்ப நலமும் சமூக சுக
கோத்தகிரி மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின ரால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்ப நல சமூக சுகாதா ரக் கருத்தரங்கு 17-6-1990 அன்று காலை 11-00 மணியளவில் திட்டமிட்டபடி ஆரம்பமாயிற்று. இக்கருத் தரங்கின் ஆரம்ப விழாவில் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. அம்பேத்கார் ராஜ்குமார் அவர்களும் டா க் டர் காணிக்கராஜ், திரு. இர. சிவலிங்கம் ஆகி யோர் உட்பட இன்னும் பலரும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
ஆரம்ப விழா, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் குத்து விளக்கேற்றி தமிழ்த்தாய் வாழ்த்து, சுகாதாரப் பாடல் ஆகியவற்றுடன் ஆரம்பமாயிற்று. வரவேற்புரை யில் மன்றத் தலைவர் திரு. சு. திருச்செந்தூரன் அவர் கள் வந்திருந்த விசேட பிரமுகர்களை வரவேற்றதுடன், இது நாள் வரை பலமுறை முயன்றும் எமது விழாக் களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்களை அழைக்கவே முடியாத நிலை ஏற்பட்டிருந்தது என்றும், தற்போது பதவியிலிருக்கும் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர் கள் ஒப்புதல் அளித்து இந்த விழாவிலும் கலந்து சிறப் பித்தமைக்கு மக்கள் சார்பிலும், மன்றத்தின் சார்பிலும் நன்றி கூறியதுடன் இதனை முன்னின்று ஏற்பாடு செய்த இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் த  ைல வ ர் டாக்டர் காணிக்காாஜ் அவர்களுக்கும் எல்லோர் சார் பிலும் நன்றி கூறி இந்த விழாவை சிறப்பிக்க வந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், நண்பர்கள் அனை வரையும் வருக வருக என வரவேற்றார்.
− தொடர்ந்து உரையாற்றிய நலிந்தோர் நல மைய நெறியாளரும், இவ் விழா வின் தலைவருமான திரு இர. சிவலிங்கம் அவர்கள் தமது உரையில் இந்த மண் டபமே மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. குடும்பங்களில் மகிழ்ச்சி சிறப்பாக அ  ைம ய வேண்டும். குடும்ப நலம் பேணப்பட வேண்டும். எனவே இதன் அடிப்
படையாக உருவாக்கப்பட்டி கருத்தரங்குதான் இந்த
குடும்ப நலமும் சமூக சுகாதாரமும் என்ற கருத்தரங்கா கும். மக்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக்கொண்டு இந்தமன்றம் செயல்பட்டு வருவ தோடு நமது ஆட்சியாளர் அவர்களும் அதே கருத்து டையவர் எ ன் பதும் வரவேற்கத்தக்கது. அரசுக்கும் ஆளும் கட்சியினருக்கும் விசுவாசமாக இருப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படும் அதி கா ரி க ள் இருக்கும் இந்தக் கால கட்டத்தில் மக்கள் மேம்பாட் டையே கருத்தில் கொண்டு அதற்கு இலக்கணமாகத் திகழும் நமது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை எல்லோர் சார்பிலும் பாராட்டினார். இவரது செயற் பாடுகள் தினமும் பத்திரிக்கைகளில் வருவதை காணக் கூடியதாய் உள்ளதையும் சுட்டிக் காட்டினார். இந்த சிறிது காலத்தில் நீல கிரி அரசு அலுவலகங்களில் சிறப்பு மிகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை பொது மக்கள் கூறியதை வைத்து நோக்கும்போது அதற்கான
கே

ாத்தகிரியில் கருத்தரங்கு
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் உரையாற்றுகிறார்.
கரரணம் வேறு எங்குமில்லை. இங்கு அமர்ந்திருக்கும் எமது ஆட்சித் தலைவர் அவர்களே என குறிப்பிட்டார். இதனைப் போலவே ஒரு மக்கள் தொண்டர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக டாக்டர் காணிக்கராஜ் திகழ்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்ததாக மாவட்ட ஆட்சித் த  ைல வ ர் தமது உரையில் அரசிடம் பல திட்டங்கள் உள்ளது, ஆனால் மக்கள் உணர்ந்து தேட முன்வருவதில்லை. எனவே, நீங்கள் மு ன் வந்து மக்கள் மறுவாழ்வு ம ன் ற ம் போன்ற அமைப்புகள் மூலமாக திட்டங்கள் சீராக வந்து சேரவும், தடைகளை அகற்றவும் செயற்பட வேண்டும் என்றும் தாயகம் திரும்பியோருக்கு இந்த மாவட்டத் தில் உள்ள உ ரி  ைம க ள், தி ட் டங்க ள் மற்றும் அவற்றை அ வ ர் க ள் அடைவதற்குள்ள த  ைட க ள் போன்றவற்றையும் தெளிவாக எடுத்துரைத்தார், அர சினால் எற்படுத்தப்பட்டுள்ள சலுகைகளை மக்கள் மறு வாழ்வு மன்றம் புத்தக வடிவில் தொகுத்து மக்களுக்கு கொடுத்து உதவும்படியும் வேண்டுகோள் விடுத்தார். திட்டங்களுக்கென பணம் இந்த மாவட்டத்திற்கென ஒது க்க ப் பட் டு அலுவலகத்தில் உள்ளது. ஆனால் அவற்றை முறையாக பெற்று பயன் பெற ஒருவரும் முன் வருவதில்லை. உதாானமாக நீலகிரி மாவட்டத் திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 100 ஆட்டோக்களுக்கு இது வரை விண்ணப்பம் வராததை குறிப்பிட்டார் .
அ டு த் து உரையாற்றிய டாக்டர் காணிக்கராஜ் அவர்கள் தமது உரையில் இந்த ஏழை மக்களை சந் திக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறியதுடன் இந்த கூட்டத்தில் கலத்துகொள்ள வேண்டும் என்ற அவாவுடன் வந்தேன் எனவும் கூறினார். இந்தக் கருத் தரங்கின் மு க் கி ய த் துவ ம் பற்றி குறிப்பிட்டார். தொடர்ந்து இக்கருத்தரங்கில் தமக்கே உரிய பாணி யில் சுவா ராசியமாக குடும் ப நலம் லெப்ராஸ் கோப் முறை மற்றும் குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை யும் அதில உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி 607 frf.

Page 8
-எதிரொலி- வாசகர்
கோத்தகிரியில் சமீபத்தில் நடந்த ஒரு பேரணியில் ஆ தி வா சி க ச ைள கே வ லப் படுத்து வ து போல ஒரு கூட்டத்தினர் பேசினர். நிறைய தேயிலைத் தோட் டங்களை சொந் த மா க வைத்துக் கொண்டு ஏழை களுக்குக் கூலி கொடுக்காமல் நிறைய லாபம் சம்பா தித்து வெள்ளைக்காரன் வீசியெறிந்த கோட்டு, சூட்டு போட்டுள்ளார்கள். த ம்  ைம ஆதிவாசிகளாக தமிழக அரசு ஏற்றுக் கொள்ள வேண்டுமென சொல்வது ஆதி வாசிகளை கேவலப்படுத்துவதாகும். இ ன்  ைற க் கு மேய்க்கால் நிலத்தை, ரெவின் யூ போரஸ் காடுகளை அழித்து டீச் செடி, காப்பிச் செடி ஊன்றுகின்றவர்களா நீல கிரி  ைய காப்பாற்றுவோம் என்று யாரையோ ஏமாற்ற சப்தம் போடுகிறார்கள். ஏழைத் தமிழர்கள் வீட்டுமனைப் பட்ட ஏ கேட்டால் வீடுகள் இடிக்கப் படும். கு டி  ைசக ள் கொளுத்தப்படும். இப்படிப்பட்ட ஒரு அநாகரீகமான நிலைமை நீலகிரியில் இருப்பதைப் பார்க்கும் போது கண் கூசுகிறது. தமிழக அரசுக்கு இது தெரியாதா? இதையெல்லாம் திருத்தாமல் எப்படி நீல கிரி யில் வாழும் தமிழர்களுக்கு நீதி கிடைக்ப் போகிறது.
ஆ. முத்துசாமி - தூதுர் மட்டம்
6256586)ło6uorbö gß6oso6)u jbpnručí , --(μή Φυ π)
தாழ்ந்தோன் தாழ்ந்தோனென
தரணி மக்கள் வைதபோது வீழ்ந்தழிந்து நோகாது
விவேகமாய்ச் சிந்தித்து ஆழ்ந்து திடங்கொண்டு.
அரும்பணிகள் புரிந்திடவே வீழ்ந்த சமூகத்து
விடிவெள்ளியா யுதித்தாய்
கல்விதரு மாசானும்
கற்கவந்த மாணாக்கரும் எள்ளி நகையாடி
எல்லைக் கோடிட்ட வேளை எல்லையில்லா தொல்லைதனை ஏற்றிடவே உறுதிகொண்டு உள்ள மதில் உரமதனை
உருக்காக நீ வளர்த்தாய்
குலமதுவோ தாழ்ந்ததென்றால்
குன்றிவிடல் முறையோவென உளமதிலே உரங்கொண்டு
உய்த்தறிந்தாய் பல்கலையும் பலநாடு சென்றங்கே
பட்டமுடன் மீண்டு - நாடு நலம் பெற்றோங்கிடவே
நல்கருத்து முன்மொழிந்தாய்
பாரதத்தின் புகழ்சேர்க்கும்
புதல்வர்களுள் ஒருவராகியதன் அரசியற் சாசனத்து
அருஞ்சிற்பி தானாகி குறைமலிந்த தீண்டாமைக் கெதிராக குரலெழுப்பி நிறைவாக நெஞ்சமெலாம்
நீங்காத நிலைபெற்றாய் (அம்பேத்கார் நூற்றாண்டு விழா - கவிதை) வெளியீடு: டிலையக மக்கள் மறுஒாழஷ மன்றம்
இல, 187, இராஜா அண்ணுமலைத் தெரு, தபால் பெட்டி எண். 2758 கோவை-641 011.
(தனிச் சுற்றுக்கு மட்டும்.

கடிதங்கள்
'நீலகிரியில் இனவாதமா' என்ற தலைப்பில் வந்த கட்டுரை அனைவரையும் சிந்திக்க வைப்பதாக உள் ளது. இதுவரை காலம் உலக அரங்கில் நடைபெற்று வந்த நடந்து கொண்டிருக்கின்ற இனவாத போராட்டங் கள், பிரிவினைவாத போராட்டங்கள் நாடுகளில் உள்ள மாநிலங்களில் தான் பார்த்து இருக்கின்றோம். ஆனால் நீலகிரியில் நடிைபெறுகின்ற போராட்டம் இன்னொரு இனத்தை அடக்கி ஒடுக் கி அழித்துத் தசன் தங்கள் இனத்தை மேன்மை அடையச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நடைபெறுவது இது வேதனைக்குரியது. ஒரு சிலர் தங்கள் சுய இலாபத்திற்காக ஒரு பிரிவி னரை பகடைக் காய்களாக பயன்படுத்துவது மோச மான விளைவுகளை எதிர்காலத்தில் உண்டாக்கும்.
ஆரம்ப கா ல மாக தற்போது நீலகிரியில் நடக் கின்ற இந்த இனவாதத்தை அரசாங்கமோ சமுதாய நலனில் அக்கரை கொண்டவர்களோ க  ைள யா து விட்டுவிட்டால் கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய் பவர்கள் கவலைப்படுவது போல் ஆகிவிடும்.
து. கோவிந்தராஜன் கல்லடிப்பட்டி - திருச்சி மாவட்டம்
பேரணிக்கான நன்கொடை அளித்தவர்கள் (10-6-1990ல் நடந்த கூட்டத்தின் போதும், பின்னரும்)
பெயர் seriff தொகை ரூ. ரங்கநாதன் சக்திநகர் OO முத்துசாமி தும்மணட்டி 25 சுப்பிரமணியம் டேன் டீ 0 கிருஷ்ணசாமி இந்திராநகர் 10 ஊர்மக்கள் காக்காசோலை 125 கே. வேலாயுதம் பாண்டியன்நகர் 5 பகவதி இந்திராநகர் 50 விஜயன் அன்னை இந்திராநகர் 101 குப்புசாமி காந்திநகர், கட்டபெட்டு 25 பரமநாதன் வாட்டர்போல் 10 முனுசாமி வாட்டர்போல் 10 ஊர்மக்கள் பாக்கியநகர் 35 இளைஞர் அணி தவிட்டுமேடு 25 தாமோதரன் பாண்டிய நகர் 0. ஊர்மக்கள் கலைஞர் கருணுநிதிநகர்
கேர்பெட்டா 50 மாரியம்மாள் ஈளாடா, காந்திநகர் 15 or futuruń கைத்தலா 5 லெட்சுமி கைத்தலா 5 *மூரணியாண்டி அண்ணுநகர் 10 ரெங்கசாமி மணவறைக்காலணி 10 கிருஷ்ணசாமி அத்திக்கம்பை 5 பாக்கியராஜ் காந்திநகர் 5 மயில்வாகனம் m கூக்கல்தொரை 5 கோவிந்தசாமி தாவக்கம்பை O பத்மஜோதி அம்பேத்கார்நகர் 10 ஆண்டியப்பன் ஈளாடா பாரதிநகர் 20 TTLorf திருச்செல்வ நகர் 5 ரவி / சகாயராஜ் அண்ணுநகர் 25 ஊர்மக்கள் சக்திநகர் 100 ஊர்மக்கள், பில்லிக்கம்பை, மணவறை காலணி 100 எஸ். ரத்தினம் வள்ளுவர்நகர் 50 கண்ணையா வள்ளுவர் நகர் 25 சுந்தரராஜ் வள்ளுவர்நகர் 25 பொதுமக்கள் வள்ளுவர் நகர் 366 பொதுமக்கள் குண்டுர்நகர் நிகாங் 168 பொதுமக்கள் பாரதிநகர், கட்டவெட்டு 105
பத்திரிகை அச்சாகும் வரை கிடைத்த மொத்த தொகை : a 1660 நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி, Sidawigwaxaxuxyopisywał