கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1990.07

Page 1
-
DG) 1 3,12.
குழந்தைகளைக் ெ
சமுதாயத்தை சோலை என்று சொன்னல் அங்கு பூத்துக் குலுங்கும் புதுமலர்கள்தான் நமது குழந்தைச்செல்வங்கள். மானுட மலர்கள். மணமும், குணமும், அழகும் கொழிக்கும் குதூகலச் செண்டுகள் நம் குழந்தைகள். ஆனல் அவற்றில் நாற்பதாயிரம் நல்ல தண்ணீர் இல்லாத காரணம் ஒன்றினலேயே பூத்த மாத்திரத்தில் புதை குழிக்குள் விழுந்து விடுகின்றன.
நாம் கட்டித் தழுவி முத்தமிடும் சிங்காரச் செல்வங்கள் அரைகுறை உணவால் ஒராண்டுக்குள்ளேயே உலகைத் துறந்து விடுகின்றன.
உயிர் பிழைப்பவர்கள் பலர் நோய் வாய்ப்பட்டு
முடமாய், குருடராய், ஊனமுற்றோராய், உடல் நலிந்தோராய் வாழ்க்கை முழுதும் சோக முகங்களுடன் வாழவேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதற்கும் தப்பினல், கல்வியறிவில்லாமல் பாடசாலைகளைப் பார்க்காமல், பிஞ்சுப் பருவத்திலேயே, நாம் கொஞ்சும் குழந்தைகள் தொழிலாளர்களாய் விடுகிறார்கள்.
இந்தியாவில் 1 . 5 கோடி முதல் 10 கோடிக் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கலாம் என்று உத்தேச மதிப்பீடுகள்கூறுகின்றன. எப்படிப் பார்த்தாலும் 5 கோடிக் குழந்தைகளாவது தமது பிஞ்சுப் பருவத்திலேயே கூலிக்கு வேலை செய்யும் நிலையிலிருக்கிறார்கள். பணக்காரர்களின் இல்லங்களுக்கு தரைவிரிப்பாக இருக்கும், கார்ப்பட் பின்னும் தொழிலிலே மட்டும் லட்சக்கணக்கான குழந்தைகள் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிருர்கள். அந்தப் பிஞ்சு விரல்கள் இல்லாமல் அத்தனை நேர்த்தியான கம்பளங்களை பின்னவே முடியாது என்று சாதிக்கிறார்கள் அவற்றை உற்பத்தி செய்யும் முதலாளிகள். சிவகாசியிலே தீப்
 

s
GESTAT6C5 TIL LIMATGE
பெட்டித் தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தொழில் செய்கிறார்கள். கிராமப் புறங்களிலே விவசாயத்திலே பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கூலிக்கு வேலை செய்கிறார்கள். நகர்ப்புறங்களிலே, கடைகளிலும் ஹோட்டல்களிலும், பெற்றேல் விற்பனை நிலையங்களிலும், பஸ் நிறுத்துமிடங்களில் மூட்டை தூக்குவோராகவும், காய்கறி, பூ விற்பனை செய்பவர்களாகவும், புகைவண்டி நிலையங்களிலே வீசி எறியும் பிளாஸ்டிக் டப்பாக்களை பொறுக்குபவர்களாகவும், பூட் பாலிஸ் போடுபவர்களாகவும் இன்னும் சொல்ல முடியாத பல்வேறு தொழில்களிலும், இரவு, பகலாக நமது குழந்தைகள் இக்கிக் குட்டிச் சுவராவதை நாம் அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இளம் வயதிலேயே இவ்வாறு கல்வியின்றி, உடல் வளர்ச்சி, மனவளர்ச்சியின்றி பெற்றேர்களின் அன்பின்றி, ஊட்டச் சத்தியின்றி சமுதாயத்தின் நச்சுப்பண்ணைகளில் வளர்ந்து வரும் நமது குழந்தைகள் நாளைய சமூக விரோதிகளாய்த்தான் மாறுவார்கள். அல்லது இளமையிலேயே செத்தொழிவார்கள். ஆட்டோ சங்கர் போன்றவர்களின் குழந்தைக் கால கொடுமை அனுபவங்கள்தான் அவர்களை காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாற்றி விடுகிறது. நமது குழந்தைகள் இவ்வாறு நாசமாவதைத்தடுப்பது பெற்ருே?ரின் அடிப்படைக் கடமை. சமுதாயத்தின் தவிர்க்க முடியாத கடமை. மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் சிறுவர்சீரணியின் நோக்கமே நமது செல்வங்கள் நோயின்றி, நொடியின்றி கல்வி அறிவு பெற்று, ஊட்ட உணவு பெற்று நமது சமுதாயத்தின் எதிர்காலத் தலைவர்களாய் உருவெடுக்கவேண்டு.
தொடர்ச்சி பக்கம் 4

Page 2
மண்டல் குழுவின் அரசியல் கொந்த6
பாரத நாடு பழம் பெரும் நாடு என்றார் பாரதியார். பழம் பெரும் நாடாக இருப்பதிலே பல சிக்கல்களுண்டு. பழைய பழக்கங்களும், கொள்கைகளும் சில பலவகைகளில் காலத்திற்கு காலம் கலகங்களுக்கு காரணமாய் அமைந்து விடுகின்றன .இந்து சமய ஆசாரங்கள் பன்னெடுங்காலமாய் நடைமுறையில் இருப்பதால் அதன் புனிததன்மைகள் மங்கி புழுதிகள் படிந்து கொடிய அநாகரிக சட்டங்களாய் சிதைந்து விடுகின்றன. யாகம் செய்தல், பலியிடுதல்,உடன் கட்டைஏறுதல், பெண் சிசு கொலை விதவா விவாகத்தடை, பெண்ணடிமைத்தனம் போன்ற பல அறுவருக்கத்தக்க வழக்குகள் இன்னும் நமது சமுதாயத்தில் நிலவிவருவதை காண்கிருேம். இவற்றுள் மிக கொடிய ஆசாரம் எது வென்ன் சாதிப்பிரிவுகளே. இந்தியாவிற்கு உலக அரங்கிலே இழுக்குத் தேடித்தருகின்ற பண்பெதுவென்றால் அது சாதி முறையும் கல்வியின்மையுமேயாகும். நான் வறுமையை குறிப்பிடாததற்குக்காரணம் அது பல நாடுகளுக்கும் பொருந்து கின்ற காரணத்தால். கல்வியின்மையும் பல ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பொருந்துமெனினும் உலகத்திலேயே எழுத்தறிவற்றவர்கள் அதிகமாக வாழும் நாடு இந்தியா தான் இதனைகூட காலப்போக்கில் நீக்கி விடலாமென் ருல் தீராத அவமானச்சின்னமாகவிருப்பது நம்முடைய சாதிப் பிளவுகள் தான்.
இந்து சமயம் வர்ணு சிரம தர்மத்தைப் போதிக் - கிறது. ‘நான்கு வர்ணங்களாக மனுக் குலத்தையே பிரித்து பெரும்பான்மை மக்களை நாலாஞ்சாதிசூத்திரர் களாக்கி வைத்திருக்கிறது. இது செல்லரித்துப்போன கொள்கை காலத்திற்குஒவ்வாத கணிப்பு. ஜனநாயகத் திற்கும் இக்கால சமூக பொருளாதார வாழ்க்கைக்கும் அறவே ஒத்துவராத அநாகரீகக் கொள்கை இந்த சாதி கொடுமையைச் சாடாத சிந்தனையாளர்கள், பண்பாளர்கள் இல்லை.
புத்தர் சாதிக்கொள்கையை எதிர்த்தார். திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் வகுத்தார். ஒளவையார் சாதி இரண்டொழிய வேறில்லைஎன்ருர் பார்ப்பான ஐயர் என்ற காலமும்போச்சே என்று பாரதியார் முழங்கினர். காந்தி தீண்டாமைமை ஒழிக்க அயராது உழைத்தார் அம்பேத்கார் சாதிப்பிளவுகளைசண்டமாருதமென சாடினுர் . சாதிகள் அர்த்த மற்றவை என நேரு கொள்கை
வகுத்தார். அறிஞர்கள் அறவோர் அனைவரும் ஆண்டவன் படைப்பில் சமமென ஆணித் தரமாக எடுத்துரைத்துள்ளார்கள்.

ஆலோசனைகளும் ரிப்பும் . இ. சிவலிங்கம் -
நமது அரசியல் அமைப்புத்திட்டத்தில் 14-ம் விதிப் படி அனைத்து மக்களுக்கும் சமத்துவம் அடிப்படை உரிமையென வரையறுக்கப்படுள்ளது. அரசியல் சாசனத்தில் 15 - வது பிரிவில் தெளிவாகக் கூறப்பட் டுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் :-
* முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே? தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே ? இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே? காலிற் பிறப்பார்உண்டோ கழுதையே? நான்முகன் என்பான் உளனே நாயே ? புளுகடா புகன்றவை எல்லாம் போக்கிலியே.
என்று வர்ணு சிரம தர்மத்தை நையாண்டி செய்துள்ளார். எனினும் இந்தியாவில் சாதிகள் சாகாவரம் பெற்றிருக்கின்றன; சாதியின் பெயரால் வாக்குவேட்டை யாடுவதும், வாக்களிப்பதும் எங்களின் சனநாயகப்
சாதிகள் பட்டியல் போடுவது அரசாங்கத்தின் பணிகளில் ஒன்றாகிறது. சாதிகளை புதியஅடிப்படையில் பிரித்து முற்போக்கு சாதிகள், தாழ்த்தப்பட்ட சாதிகள், பிற்படுத்தப்பட்ட சாதிகள்என்று அரசாங்கம் சாதிகளை சாஸ்வதமாக்கியது. இந்தப் பாகுபாட்டின் அடிப்படையில் அரசாங்கம் பல சலுகைகளை வழங்க ஆரம்பித்ததினால் ஒவ்வொருவரும்-சாதிச் சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயச் சடங்காகி விட்டது. அஞ்சலகங்கள் தவிர்த்த மற்றைய அலுவலகங்கள் அனைத்திலும் சாதியைக் கேட்ட பின்னரே தமது பணிகளை ஆரம்பிக்கிறார்கள். சாதி முத்திரை குத்த வேண்டியது அவசியமாகிவிட்டது. சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதி பாடிய நாட்டில் சாதிகள் எத்தனையடி பாப்பா ? என்று கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது . பத்திரிகைகளில் வருகின்ற மாப்பிள்ளை - பெண் வேண்டும் என்ற விளம்பரங்களை படித்தாலே நாம் பிரமித்து விழத்தக்க சாதிப் பட்டியல்களை தயாரிக்கலாம் 1955ம் ஆண்டு மத்திய அரசு காக்கா கலேல்கர் கமிசனை நியமித்து விசாரணை நடத்தியது. காக்கா கலேல்கர் கமிஷன் 2399 சாதி. களைக் கண்டுபிடித்தது. அவற்றுள் 839 சாதியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று பிரிக்கப்பட்டது. இதனால் திருப்தி அடையாத ஜனதா அரசு 1978 ம் ஆண்டு பீஹார் மாநில முதலமைச்சராய் இருந்த B, P , மண்டல் அவர்களின் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து அந்தக் கமிஷன் 3743 பிற். படுத்தப்பட்ட சாதிகள் இருக்கிருர்கள் என்று கண்டு. பிடித்தது. 1955ல் 839 ஆகக் கணிக்கப்பட்ட பிற். படுத்தப்பட்ட சாதிகள் 1980 ல் வெளியிடப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையில் 3743 ஆக உயர்த்தப்பட்டது. இந்தக்கணிப்பு சரியானதல்ல வென்றும்

Page 3
விஞ்ஞான அடிப்படையானதல்ல வென்றும் பலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே நமது நாட்டின் ஏற்றத் தாழ்வுகளை அகற்றும் அரசியல் கொள்கைப்படி தாழ்த்தப்பட்ட சாதியினருக்கும் பழங் குடியினருக்கும் 22.5 விழுக்காடு அரசுப்பணிகள் ஒதுக் கப்பட்டுள்ளன. மண்டல் குமுவின் ஆலோசனைப்படி மற்றைய பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 27 விழுக் காடு அரசு பணிகள் ஒதுக்கீடு செய்யப்யட வேண்டி யிருந்தது. இந்த பரிந்துரையை காங்கிரஸ் ஆட்சிக்" காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படவுமில்லை, நிரா. கரிக்கப்படவுமில்லை. எனினும் மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பின்தங்கிய மக்களைச் சார்ந்த இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் கிளர்ச்சி செய்து கொண்டே இருந்தன காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களை தமக்குச் சாதக. மாக்கிக் கொன்ளவும், பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றவும் ஆர். வங் கொண்டிருந்த ஜனதாதள், தனது தேர்தல் அறிச்சையில் மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்படும் என பிரகடனம் செய்தது. சனநாயகப் பண்பாடு என்னவென்றால் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதனைத்தான் பிரதமர் வி. பி. சிங், செய்கிறார். ஆனல் அவரது தேசிய முன்னணியைச் சார்ந்தவர்கள் கூட தேர்தல் அறிக்கையில் கூறப். பட்டதை சரியாகக்கூடப் படிக்கவில்லை. வி. பி. சிங் யாரையும் கலந்தோசியாமல் அவசர முடிவு எடுத்து விட்டார் என்று இப்போது கூறுகிறார்கள். இதெல். லாம் அரசியல் பித்தலாட்டம். மக்களை ஏமாற்றி தேர்தல் வெற்றி பெற்று மேட்டுக் குடியினருக்கு ஏற்ற வாறு ஆட்சி செய்து தமது குழுவைப் வலுப்படுத்திக் கொள்ளும் பித்தலாட்ட ஜனநாயகத்தின் பிரதிபலிப்
புகள். Y
மண்டல் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு காட்டுவோர் மேட்டுக் குடியினர் குறிப்பாக பல்கலைக் கழக மாணவர்கள். மத்திய அரசிலே ஒரு வருடத்திற்கு 2 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுகின்றன இவற்றில் 22.5 விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களுக் காக ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இப் பொழுது ஆசஸ்டு 7 ல், பிரதமர் அறிவித்தபடி இன்னு மொரு 27 விழுக்காடு மற்றைய பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்கப்பட்டால் ஒரு 55 ஆயிரம் வேலை வாய்ப்புாள் பொதுவாக இல்லாமல் சாதி அடிப்டடையில் ஒதுக்கீடு செய்யப்படும். மிகுதி உள்ள 50.5விழுக்காடு வேலை வாய்ப்புகளுக்கு திறமை அடிப்ட டையில், போட்டி அடிப்படையில் பணியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். மேட்டுக் குடியினர் விரும்பிப் போட்டியிடும் பணிகள் மொத்தமாகவே ஆண், டொன்றுக்கு ஏறக்குறைய 3600 தான் அதாவது 1. A. S. 1. F.S., 1. P. S , நெறியாளர்கள், செயலர்கள் போன்றன. மண்டல் அறிக்கையை அமுல்

படுத்தினுல் முற்போக்கு சாதியினருக்கு மேல் மட்டப் பணிகள் ஒரு ஆயிரம் குறையலாம். இவ்வளவும்தான் எல்லாப் பணிகளையும் எடுத்துக் கொண்டால் கூட உயர்ந்த சாதியினருக்கு ஒரு 55,000 வேலை வாய்ப்புகள் குறையலாம். இதற்காக இத்தனை ஆர்ப்பாட்டங்கள், உயிர்த்தியாகங்கள், கிளர்ச்சிகள்.
இந்தப் போராட்டங்களிலும் கிளர்ச்சிகளிலும் நியாயமில்லை, நேர்மையில்லை ஆனல் அரசியல் சூழ்ச்சிகளும், மேட்டுக்குடி இளைஞர்களின் விரக்தியும், ஆத்திரமும் தான் அடங்கியுள்ளது.
இன்றைய மைய அரசு சிறுபான்மை அரசு, கொள்கை முரண்பாடுகள் உள்ள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. பாரதீய ஜனதா கட்சி, இடது சாரிகளுடன் இணைந்து ஜனதா தள், ஜன் மோர்ச்சா, அஸ்ஸாம் கணபரிஷத், தெலுங்கு தேசம், தி மு க ஆகிய கட்சிகளின் ஒத்துழைப்புடன் இன்றைய அரசு சில முற்போக்கு கொள்கைத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இத்தகைய கூட்டாட்சிகளின் அமைப்பில் தீவிர கொள்கைகளை அமுல் நடத்த முடியாது. கழைக் கூத்தாடிபோன்று, ஆடுகின்றகயிற்றில் நிதானமாக நடக்கவேண்டும். இந்தப் பரிசோதனைக்குத்தான் வி. பி. சிங் தள்ளப்பட்டுள்ளார். அடிக்கடி நம்பிக்கைத் தீர்மானம் போட்டு அவரை உற்சாகப்படுத்தவேண்டியிருக்கிறது. அவரும் ராஜினமா செய்துவிடுவேன், எதிர்கட்சியில் அமரத் தயங்கமாட்டேன், நான் போனல் ராஜீவ்தான் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டிதான் பிரதமர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையில் இருக்கிருர், தேசிய முன்னணியை இணைத்து வைத்துக் கொள்ளக் கூடிய ஒரே ஒரு தலைவர் வி. பி. சிங் மட்டுமே.
ஆனல் சிங்குக்கும் தேவிலாலுக்கு மிடையில் ஏற் பட்ட போட்டா போட்டியில் சாதாரண பிரச்சனைகள் பூதா காரமாய் உருவெடுத்தன துணைப்பிரதம பதவி யிலிருந்து நீக்கப்பட்ட தேவிலால் தன்னுடையஆற்றலை அரசியல் பலத்தை நிலைநாட்ட விவசாயிகளின் பேரணி யைதிரட்டி புதுடெல்லியையே ஒரு கலக்குக் கலக்கி விட்டார். அவர் சாதி அடிப்படையில்தான் ஜாட் சாதியினரைத் திரட்டினர். ஜனதா தளகட்சி நடுத்தர சாதியினரின் ஆதரவோடுதான் ஆட்சிக்கு வந்தது. மண்டல் கமிஷன் இவர்களுக்குத்தான் பதவி ஒதுக்கீடு பரிந்துரை செய்தது. தேவிலாலின் விவசாயிகளின் பேரணிக்கு சவால் விடுவதுபோல் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 27-விழுக்காடு பதவி ஒதுக்கீடு என சிங் அரசியல் சக்களத்தி சண்டையை ஆரம்பித்தார். அவ்வளவுதான் ஜாடிக்குள் இருந்த பூதம் வெளிக்கிளம்பிவிட்டது.
தொடர்ச்சி பக்கம் 12

Page 4
சென்று வருகிறேன் ...!
அன்புள்ளங் கொண்டவர்களே, தேயிலைக்கு பசுமையையும் தேநீருக்கு சாயத்தையும் தந்த மலையகத்தின் மண்ணின் மைந்தர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு நாடற்றவர்களாகி, பின்னர் நேரு - கொத்தலாவலை பூரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் பேரில் தாயகம் திரும்பியவர்களை நேரில் காணவேண்டும் சொந்தச் சகோதரர்களை சந்திக்க வேண்டும் என்கிற நீண்டநாள் நெஞ்சின் கனவுகள் இந்த தடவை நனவாகியது. இந்த மக்கள் எங்கு குடியேறுகிறர்களோ அங்கு இவர்களின் உழைப்பு உறிஞ்சப்படுவது வரலாருகிவிட்டது. இலங்கையில் மாத்திரமல்ல, இந்தியாவிலும் இவர்கள் அன்னியமாக்கப்பட்டார்கள் கொத்தடிமைகளாக கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் எங்கு சென்றாலும் துன்பம் இவர்களை தொடர்கிறது. இவர்களை நேரில் சந்தித்து கேட்ட இவர்கள் கண்ணிர்க் கதைகள் நெஞ்சில் உதிரத்தை சிந்தவைக்கும்கொடைக்கானலில் குண்டுப்பட்டியில் கோத்தகிரியில் குன்னுார், கூடலூர் என்று இந்த "மலையக மக்களை தேடித் தேடி சந்தித்தேன் இவர்கள் சொன்ன வார்த்தைகள் எங்கள் சந்தாக்களில் வாழ்ந்த எந்தவொரு தொழிற்சங்கவாதியும் எங்களை எட்டியும் பார்க்கவில்லை சென்னை, திருச்சி, மதுரை என்று ஆண்டுதோறும்
முதல் பக்கத் தொடர்ச்சி. குழந்தைகளைக் கொ
மென்பது தான். குறிப்பாகப் பெண் குழந்தைகள் பேணப்பட வேண்டும். இன்றைய பெண் குழந்தைகளைப் பேணுவதின் மூலம் நாளைய தாய்மைக்கு வலி யூட்டுகிறோம் வனப் பூட்டுகிறோம்.
தென்னசிய நாடுகள் இவ்வாண்டை பெண் குழந்தைகள் பேணப்பட வேண்டிய ஆண்டாகப் பிரகடனப் படுத்தியுள்ளார்கள். செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி நியூயார்க் நகரிலே ஐக்கிய நாடுகள் சபையிலே 70 உலக நாடுகளின் தலைவர்கள் ஒன்று கூடி, உலகக் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு பத்து அம்ச திட்ட மொன்று தீட்டியுள்ளார்கள்.
இவற்றுள் முக்கியமாகச் சிசு மரண விகிதத்தை ஆயிரத்துக்கு 70 ஆக குறைக்கவும், 2000 ம் ஆண்டுகளுக்குள் 80 விழுக்காடு குழந்தைகள் ஆரம்பக் கல்வியும், அடிப்படைக் கல்வி பெறுவதற்கும் வழிவகை செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டிருக்கிறார்கள். இன்று உலக நாடுகள் மனித இனத்தை அழிக்கும் ஆயுதங்களை உற்பத்தி செய்யும் செலவில் ஒரு 5 சதவிகிதத்தை ஒதுக்கினலும், எல்லாக் குழந்தைகளுக்கும்

வந்து போகும் தொழிற்சங்கவாதிகள் ஒரு தடவையாவது இங்கு வந்து பேசக்கூடாதா?’’ இப்படி இவர்களின் நெஞ்சுக்குமுறல்கள் இவர்களின் வாழ்வில் புதிய விடிவெள்ளி தோன்ற மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் பெரும் பணியாற்றி உள்ளதை அறியும்போது அந்த மக்களே அதைப்பற்றி பெருமையாக பேசியதை கேட்டபொழுது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. இங்கு அவர்கள் சாதிக்க முடியாததை அங்கு தமிழகத்தில் சாதிக்கிருர்கள். பாதை தெரிகிறது அவர்களின் பயணம் தொடர்கிறது. எதிர்காலத்தில் பலசாதனைகள் புரிவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது இங்கு கண்ட கனவுகள் அங்கு நனவாகின்றன. பஞ்சாயத்துத் தேர்தலில் நம்மவர்கள் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள். கல்வியில் வெகுவேகமாக முன்னேறி வருகிருர்கள் பல பட்டதாரிகள் தோன்றியுள்ளார்கள். மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்களைப்பற்றி தகவல்களை எல்லாம் இலங்கையில் உள்ளவர்களிடம் சொல்லவேண்டும் என அவாவுடன் இருக்கிறேன். மீண்டும் . . . உங்களையெல்லாம் வந்து சந்திக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இலங்கை செல்கிறேன் சென்று வருகிறேன்
- அந்தனி ஜீவா
nun
ண்டாடுவோம்.
தூய குடி நீர் வழங்க முடியும். ஏழை நாடுகள் கூட கல்விக்கும், சுகாதாரத்திற்கும் செலவைக் குறைத்து நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கு அதிகப் பணத்தைச் செலவழிக்கின்றன. விசித்திரமான உண்மை என்னவென்றால் உலகிலேயே செல்வ மிக்க நாடான ஐக்கிய அமெரிக்காவில் தான், வளர்ச்சியடைந்துள்ள நாடுகளிலேயே மிக அதிகமான சிசு மரணம் ஏற்படுகிறதாம். இந்தியாவில் குழந்தைகள் உழைப்பே, நாட்டின் மொத்த வருமானத்தில் 20 விழுக்காடு தேடிக்கொடுக்கிறதாம். உலகத் தலைவர்கள் ஒன்று கூடி குழந்தைகளைக் கொண்டாடுவோம் என்று தீர்மானம் செய்வதைப் பாராட்டுகிருேம். அடுத்து வரும் ஆண்டுகளில் நமது செல்வக் குழந்தைகளுக்கு சீரும், சிறப்பும் வந்து சேரும் என்று எதிர்பார்ப்போம். இதெல்லாம் உலகப் பிரச்சனை, தேசியப் பிரச்சனை என்றிருந்து விடாமல் நாம் ஒவ்வொருவரும் நமது குழந்தைகளைக் கொண்டாடவேண்டும். உழைக்கும் குழந்தைகளை மீட்க வேண்டும். அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க செயற்பட வேண்டும். 擎

Page 5
கோ க் ச
அண்ணா பிற "நாடென்ன செய்தது நமக்கு என்று கேட்பதை விடுத்து, நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்’ என்ற அடிப்படையில் நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டும்" இவ்வாறு உதகை ஆட்சியர் திரு. அம்பேத்கார் ராஜ்குமார் அவர்கள், கோத்தகிரி மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற, மண்டபத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவின் போது
குறிப்பிட்டார். இவ்விழா அரசு விழாவாக 15-9-90 அன்று நடைபெற்றது.
தொடர்ந்து உரையாற்றுகையில் ஆட்சித் தலைவர் குறிப்பிட்டதாவது :-
** பேரறிஞர் அண்ணா ஓர் சிறந்த சமூக சிந்தனையாளர், அதன் விளைவு தான் நலிந்தோர்க்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள நல்வாழ்வுத் திட்டங்களாகும். ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியிலே தங்கியுள்ளது. ஏழை, எளிய மக்களின் பிரச்சனைகள் ஏராளம், அவை தீர்க்கப்பட வேண்டும். களையப்பட வேண்டும். மக்களின் அடிப்படை வசதி களான குடிநீர் வசதி, சுகாதார வசதி, வீட்டு வசதி, சாலை வசதி, ஆகியவை சிறந்த முறையில் மக்களுக்குக் கிட்ட, வேண்டும், இத்தகைய திட்டங்களே மக்கள் வளர்ச்சிக்கு அடிகோலுபவையாகும்.
ஒவ்வொரு மக்களும் சமூக உணர்வோடு செயற்பட வேண்டும், சமூகத்திற்குப் பணிபுரியும் எவரும், அந்தச் சமூக மக்களிடையே ஒன்றிப் போய் விடவேண்டும். அப்போது தான், அப்பணி சிறக்கும்’ ’ .
மக்கள் பணியில் வேற்றுமை பாராட்டக் கூடாது. படுக இன மக்களானாலும், சரி, தாயகம் திரும்பிய மக்களானாலும் சரி, அல்லது வேறு எந்த இன மக்களானாலும் சரி, தாம் அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறேன். நான் மக்களுக்குப் பணி செய்ய நியமிக்கப்பட்டுள்ளேன். என் பணி இனம், மதம், மொழி என்ற பேதமை கடந்து அனைத்து மக்களுக்கும் போய்ச் சேரும் என்று கு ύ), 1 ή - π. f.
'தாயகம் திரும்பிய மக்கள் மீது தமிழக முதல்.
மன்றச் செய்திகள்
கூடலூர் வட்டம் மில்லிக் குன்னு ம.ம.ம. மன்ற கிளையில் 29.90 அன்று சிரமதானப் பணியாக வீதியை செம்மைப்படுத்தும் வேலை நடைபெற்றது இதனை மன்ற பணியாளர் திரு ரவிராஜா முன்னிலையில் அவ்வூர்த்தலைவர் திரு.மகாலிங்கம் துணைத்தலைவர் திரு எம். வேலாயுதம் செயளர் திரு எ. ராஜேந்திரன் உறுப்பினர்கள் திரு துரைராஜ், சிரு கமலநாதன் திரு.

5
கிரி யில் ந்தநாள் விழா
வர் மு. கருணாநிதி அக்கறை கொண்டுள்ளார், என். னிடம் தாயகம் திரும்பியவர்கள் வாழ்க்கை வசதிகள் பற்றி விசாரித்தார்கள்’’. அரசு சம்பளம் வாங்குவோர் மக்களுக்கு உண்மையாகப் பணியாற்ற வேண்டும். மக்களுக்காகத் தான் இந்த நாடும், இந்த அரசும், இந்த ஆட்சித் தலைவரும் உள்ளோம்’’ என உரையை முடித்தார்.
இவரைத் தொடர்ந்து கோவை நலிந்தோர் நல மைய நெறியாளர் திரு. இர. சிவலிங்கம் உரையாற்
றினார். அவர் தனதுரையில், 'நாட்டின் விடுதலைக்
காகவும், விடுதலை அடைந்த நாட்டைச் சீர்படுத்துவதற்காகவும் பாடுபட்டு, மக்களை வழிநடத்தியவர் அறிஞர் அண்ணா அவர்கள். ஏ, தாழ்ந்த தமிழகமே என்றழைத்து தாழ்ந்து கிடந்த தமிழகத்தை, தட்டி எழுப்பியவர், என்று பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழாரம் சூட்டினார்.
அறிஞர் அண்ணா, நலிந்தோர் வாழ்வில் ஒளிஏற்ற பல நல்வாழ்வுத்திட்டங்கள் தீட்டினார். அவரைத் தொடர்ந்து பல நல்வாழ்வுத் திட்டங்கள் இன்றும் தீட்டப்பட்டுள்ளன. நீலகிரியைப் பொருத்தவரையில் அனைத்து நல வாழ்வுத் திட்டங்களும், சம்பந்தப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சேர, அரும்பணி ஆற்றுகிறார் மாவட்ட ஆட்சியர் திரு. அம்பேத்கார் ராஜ்குமார். மக்கள் மீது பற்றும், பாசமும் அவர்களைத் தொட்டு நலம் விசாரிக்கும் ஒரு நல்ல நிலை நீலகிரியில், இன்றைய ஆட்சித் தலைவரின் காலத்தில் உருவாகியுள்ளது. இதுவே நல்லாட்சிக்கு ஒர் அடை
யாளம்’ ’ என குறிப்பிட்டார்.
இவ்விழாவிலே கட்டப்பெட்டு பகுதியைச் சேர்ந்த 61, நிலமற்ற ஏழைகளுக்கு உதகை ஆட்சித் தலைவர் பட்டா வழங்கினார்.
தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இக் கல்வி உதவித் தொகைத் திட்டம், கோப்-ஐலண்ட் அறக்கட்டளை, தாயகம் திரும்பிய மாணவர்கள், மேற்படிப்பைத் தொடர வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
மில்லிக்குன்னில் சிரமதானம்
ஆர்.ராஜன் திரு பிரான்சீஸ் ஆகியோர் பங்கேற்றனர் அன்று மாலை மில்லிக்குன்னு கிளையின் அலுவலக திறப்புவிழா நடைபெற்றது திரு.எம்.எஸ் ஆறுமுகம் தலைமை வகித்தார் இவ்விழாவில் கூடலூர் பிரதம ஊக்குனர் திரு ர்ாஜ" அவர்களும் மற்றும் சகோ. சின்னப்பன், திரு. எ. மணி திரு.எஸ் மலையூரான் ஆகி
யோரும் சிறப்புரையாற்றினர்.

Page 6
'உழைக்கப் பிறந்தவர்கள்" என்ற பெயர் பெற்ற தாயகம் திரும்பிய மக்கள், உழைப்பதற்கு என்றுமே அஞ்சியதில்லை. தம் கடின உழைப்பால், இலங்கை நாட்டை வளம் கொழிக்கச் செய்தவர்கள் இங்கு நாடு கடத்தப்பட்ட பின்னும், தம் உழைப்பு ஒன்றையே நம்பி இன்றும் வாழ்பவர்கள் .
நீலகிரியின் இயற்கைச் சுவாத்தியத்தையும், இதமான காலநிலையாலும் கவரப்பட்டு இவர்கள் நீலகிரிக்கு வரவில்லை. நீலகிரி மண்ணை நம்பி, இதிலே தம் உழைப்பை மூலதனமாய்த் தரும் நோக்கோடு வந்தவர்கள் .
அரசாங்க மறுவாழ்வுத் திட்டங்கள் மறுவாழ்வைத் தராததாலே, புது வாழ்வைத் தேடி வந்தவர்கள். வந்தவர்கள், ஆங்காங்கே இருந்த சிறு சிறு படுகர்களுக்குச் சொந்தமான, தோட்டங்களிலே வேலை செய்ய முற்பட்டனர். சிலருக்கு வீடுகளும் கொடுக்கப்பட்டன. உழைப்புக் கேற்ற ஊதியமில்லையெனினும் வயிற்றைக் கழுவ அது போதுமானதாக விருந்தது.
ஆண்டுகள் பல ஒடி மறைந்தன. கொத்தடிமை போல், வாழ்ந்த தாயகம் திரும்பியோர் சிந்திக்கத் தலைப்பட்டனர். அடிமையாய் வாழ்ந்தது போதும், தமது உரிமைகளுக்குக் குரல் கொடுக்க ஒன்றுபடுவோம் என உள்ளத்தின் அடித்தளத்தில் எழுந்த உத்வேகத்தால், ஒன்றுபடத் தொடங்கினர்
கோத்தகிரியில் ஏற்பட்ட ஒற்றுமை உணர்வு, குன்னுாரிலும் தோன்றி, கூடலூரிலும் பரவிற்று. இந்த ஒற்றுமை உணர்வை சீரணிக்க முடியாமல் தவித்தனர் படுக முதலாளிகள். 'பேரணிக்குச் சென்றால் உங்கள் வேலை பறிபோகும்,' என பயமுறுத்தினர். 'பொதுக் கூட்டங்களுக்குச் சென்றால், இங்கே வேலை இல்லை' எனவும் பயமுறுத்தினர்.
இந்தப் பயமுறுத்தலுக்கு அஞ்சிய காலம் ஒன்று இருந்தது. ஆனல் இன்று, அந்தப் பயமுறுத்தல்களுக்கு, எதிர்ச் சவால் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தாமுண்டு, தம் வேலையுண்டு என்றிருந்த தாயகம் திரும்பியவர்கள், தம்மைப் பற்றி, தம் சமூகத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிய செயல், படுக முதலாளி களுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கிற்று.
தொழிலாளர்கள் ஒன்று படுவதை, எந்தவொரு முதலாளிவர்க்கமும், சகித்துக் கொள்ளாது. இது

நேசக்கரம்
சரித்திர உண்மை. இதற்கு படுக முதலாளிகளும் விதி விலக்கல்ல. தாயகம் திரும்பிய மக்களுக்கு எதிராக, பல பொய்ப் பிரசாரங்கள் செய்யத்தொடங்கினர். அது இன்று விஸ்வரூபம் எடுத்து இரு இனங்களுக்குமிடையில் பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், இந்நாட்டு மக்களோடு இரண்டறக் கலந்து மகிழ்வுடன் வாழ வேண்டும் என்ற தம் நோக்கம் நிறைவேறாதது ஒருபுறமிருக்க, மனக்கசப்பு மறைந்து. நல்லெண்ணம் தழைத்தோங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற இளைஞர் அணியினர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இக் கூட்டம் 27-8-90 அன்று, கோத்தகிரியில் உள்ள மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞர் அணித் தலைவர் திரு. விஜயகுமார் தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக கோவை, கிறிஸ்தவ தொழிலாளர் சம்மேளனத்தைச் சேர்ந்த அருட்தந்தை W. சாமுவேல் கலந்து கொண்டு உரை. யாற்றினர்.இவர் படுக இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
தான் படுக இனத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், நீலகிரியில் வாழும் அனைத்து மக்களையும், ஒரே, நோக்கிலே, எந்தவித வேற்றுமைக் கண்ணோடும் பார்க்கவில்லை என்று கூறிய அவர், நீலகிரி யாருக்கும் சொந்தமானது அல்ல. இங்கே இந்தியர்கள் எவரும் குடியேறலாம். திப்பு சுல்தான் படையெடுப்பில், அகதிகளாய் வந்த படுகர்களை எவ்வாறு, இங்கிருந்த கோத்தர்களும், தொதவர்களும் இருளர்களும் அவர்களை இங்கு குடியேற அனுமதித்தனரோ அதே போல, இன்று இங்கு வரும், தாயகம் திரும்பியோரையும் படுகர்கள் அன்போடு ஏற்றுக்கொள்ளவேண்டும். இது மனிதாபிமானச் செயல். இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலே, இன்று சில அசம்பாவிதங்கள், மனதை வருத்தும் செயல்கள் இங்கு நடைபெற்று வருவதையறியும் போது மனதுக்கு வேதனையாக இருக்கின்றது. இதற்குக் காரணம், மக்கள் மனதிலே விதைக்கப்படும், நச்சுக் கருத்துக்களாகும். மக்களை வழி நடத்த நல்ல தலைவர்கள், பகைமையுணர்வு பாராட்டாது, மனித நேயத்துடன், செயற்படும் தலைவர்கள் இல்லாத போது, இத்தகைய பிரச்சனைகள் எழத்தான் செய்யும். சுய நலத்திற்காகவும், அரசியல் ஆதாரத்துக்காகவும் திட்டமிட்டு
தொடர்ச்சி பக்கம் 8

Page 7
7
கொடை கொத்தடிமைகளு
முறையான மறுவாழ்வு கிட்டாமையால்கொடைக் கானல் காடுகளில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பினுல் மீட்கப்பட்ட தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
திண்டுக்கல் - காயிதே மில்லத் மாவட்ட ஆட்சியர் திரு. சக்தி கந்த தாஸ் அவர்களின் முயற்சியினல் 157 "கொத்தடிமைக் குடும்பங்களுக்கு மறுவாழ்வு கிடைத்
துள்ளது.
"கூப்' எனப்படும் சிறு கூடாரங்களிலே ஐந்து முதல், ஏழு வரையிலான சுமார் 157 குடும்பங்களைச், சார்ந்த நபர்கள் அடைக்கப்பட்டு அவர்களின் பல மணி நேரம் உழைப்பைப் பெறும் ஒரு கூட்டம், அந்தத் தொழிலாளர்களை சுதந்திரமாக உலவ விடுவதில்லை என்ற ஒரு முறையீட்டை 'பந்துகா முக்தி மோர்ச்சா' என்ற சமூக சேவிை இயக்கம், உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தது, இதன் விளைவாக 1986ம் ஆண்டு ஒரு விசாரணைக் கமிசனை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
இம் மறுவாழ்வுத் திட்டங்களைச் செயற்படுத்த, *கபாட்' எனும் அரசு உதவி பெறும் நிறுவனம் பெரிதும் உதவியுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் இவர்களின் மறுவாழ்வுக்கென பல்வேறு திட்டங்களை அனுமதித்திருந்தது என அம்மாவட்ட ஆட்சியர் கூறு
-கிறார்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரு ஏக்கர் விவசாய நிலம் வழங்கல், அவற்றைப் பண்படுத்த உதவுதல், என் பது ஒரு மறுவாழ்வுத்திட்டமாகும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருகறவைப் பசுக்கள் வழங்கல் இன்னுமொரு திட்டமாகும். இவைகள் இல்லாமல் வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு, அவர்கள் குடியிருக்க வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. அத்தோடு அத்தியாவசிய தேவைகளான, குடிநீர், கிணறுகள், பாதைகள், பள்ளிக்கூடங்கள்' மருந்துக்கூடங்கள் என்பனவும் உருவாக்கப்பட்டுள்ளன.
இத் திட்டங்களுக்காக தமிழக அரசு ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேலாக ஒதுக்கியது. இத் திட்டம் மக்களுக்கு முறையாகச் சென்றடைய, அதாவது வீட -மைத்தல், பட்டா வழங்கல், நிலத்தைப் பண்படுத்தல் விவசாய உதவிகள், அத்தியாவசியத் தேவைகள் ஏற்படுத்தல் என்பனவற்றை "யங் இந்தியா திட்டம்' மூலமாக " " கபாட்' நிறுவனம் செயற்படுத்தியுள்ளது. இத்திட்டம் விரைந்து செயற்பட தமிழக அரசு திட்டம்

க்கானல் ருக்கு மறுவாழ்வு
மற்றும் மீளாய்வுக் குழு, ’’ 'திட்ட செயற்பாட்டுக் குழு’’ என இரு குழுக்களை நியமித்திருந்தது.
மாவட்ட ஆட்சியரின் கருத்துப்படி, ஒரு வீடுகட்ட ரூ6000/- முதல் 7, 800/- வரை செலவு பிடித்துள்ளது எனவும், ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்கென ரூ3000/- ம் சுகாதார வசதிகளுக்கு ரூ 1250/-ம் நிலம் பண்படுத்த ரூ3,200/-ம், விவசாயத் தேவைகளுக்கு ரூ5000/-ம், கறவை மாடு ஒன்றுக்கு ரூ3,000/- செலவு செய்யப்பட்டடுள்ளது. எல்லப்பட்டி எனும் இடத்தில் 41 வீடுகளும், குண்டுப்பட்டியில் 51 வீடுகளும்- கீழக்கோட்டையில் 20 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. பச்சைமலையன் கோட்டை எனும் இடத்தில், இரு வீடுகள், ‘கிராமிய நிலமற்றோர் வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
இவையில்லாமல், வயது வந்தவர்களுக்கு ரூ82-50ம், சிறுவர்களுக்கு ரூ41, 25ம் மாதமொருமுறை வழங்கப்படுகிறது. அத்தோடு மாதமொருமுறை ஒரு கிலோ அரிசி 57 பைசா வீதம் 12 கிலோ அரிசியும், சிறுவர் களுக்கு 6 கிலோ அரிசியும், வழங்கப்படுகிறது. வருட மொருமுறை ஒரு சேலை, ஒரு வேட்டி வழங்கப்படும்.
குண்டுப்பட்டியில், சிறுவர்களின் நலன் கருதி, சத்துணவுகூடம் ஒன்றும், எல்லப்பட்டியில் விவசாயத் துக்கென ஒரு காற்றாடிமுறை நீர்த்திட்டமும் (wind mill) அமைக்கப்பட்டுள்ளது. எல்லப்பட்டியிலும், கீழக் கோட்டையிலும் முறையே இரு ஆழ்துளை கிணறுகள்
கட்டப்பட்டுள்ளன.
பல்லாண்டுகளாக கொடைக்கானலில் கொத்தடி மைகளாக வாடிய தாயகம் திரும்பிய மக்கள் இன்று கொத்தடிமையிலிருந்து மீட்சி பெற்று மறுவாழ்வு கிட்டி உள்ளது என்ற செய்தி தாயகம் திரும்பிய மக்களிடம் பற்றும் அக்கறையும் கொண்டோருக்கு மட்டுமல்ல, மனித நேயம் கொண்ட ஒவ்வொருவருக்கும் பெருமகிழ்ச்சிதருவதொன்றாகும்.
கொத்தடிமை முறையை ஒழிக்க பல்வேறு சட்ட" ங்கள் இருந்தும் இது போன்று பல்வேறு இடங்களில் கொத்தடிமை நிலை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்நிலை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதோடு கொத்தடிமை நிலை ஒழியவும் ஆவனசெய்ய வேண்டும்.
ஆதாரம் - இந்து.

Page 8
எழுத்தாளர் பன்னீர்செஸ்
* எழுத்தாளன் என்பவன், மக்களின் பிரச்சனை களை முழுதுமாய் அறிந்து, அவர்களோடு ஒன்றிவிடும் போது தான் அவனது படைப்புக்கள் புத்துயிர் பெறு கின்றன. இந்த அடிப்படையிலே, தனது 18-வயது முதல் எழுதத்தொடங்கி, மக்களது பிரச்சனைகளைத் தெள்ளத் தெளிவாய் தம் படைப்புகளில் வெளிப்படுத் தும் திரு. பன்னீர்செல்வம் அவர்கள், இன்று உலகளா விய எழுத்தாளர்கள் வரிசைக்கு உயர்த்தப்பட்டு உள்ளது, நம்மனைவர்க்கும். பெருமகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தியாகும். '"
இவ்வாறு மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத் தலைவர் திரு. எஸ். திருச்செந்தூரன், அண்மையில், கோத்தகிரியில் எழுத்தாளர் பன்னீர்செல்வத்துக்கு அளிக்கப்பட்ட பாராட்டுவிழாவின் போது குறிப் பிட்டார். ܖ
திரு. சி. பன்னீர்செல்வம், இலங்கையில் மலைய கத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். 18-வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர், இலங்கைசாகித்திய மண்டலத்தின் தங்கப்பதக்க முதல், தமிழ்நாடுஇயல், இசை நாடக மன்றத்தின் பரிசுகள் உட்பட, பல பரிசுகளை, தனது உயரிய படைப்புகளுக்காகப்பெற்றுள்ளார். பல சிறுகதைகளை எழுதியுள்ள இவர், 'திறந்த வெளிச் சிறைகள்’’ எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.
பாரிஸ் நகரில் இயங்கி வரும் ஐரோப்பிய எழுத்தாளர் ஒன்றியம் நடத்திய சர்வதேச சிறுகதைப் போட்டியில் ‘போரும் கிழவியும்' என்ற இவரதுசிறு கதை முதலாவது பரிசை பெற்றுள்ளது. இதற்கென ரூ. 10,000 வழங் கப்படவிருக்கிறது. இப்போட்டியில் பரிசு பெறுவதன் மூலம் சர்வதேச தரத்துக்குத் தன்னை உயர்த்திக்கொண்டுவிட்டார். தற்போது திண்டுக்கல்லில் இருந்து வெளி வரும் ‘சென்றவார ம் வார இதழின் ஆசிரிபு + குழுவில் பணிபுரிகின்றனர்.
6ம் பக்கதொடர்ச்சி படுகர்களுக்கு நேசக்கரம் .
செயற்படு ஒருசில டனக்காரர்கள், ஒன்றுமறியா ஏழை எளியவர்களை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
இந்நிலை மாறவேண்டும். இந்நிலையை மாற்ற இருதரப்பிலும் இருந்து நேசக்கரம் நீட்டப்பட வேண்டும். இது சாத்தியமாகாததல்ல. இரு தரப்பிலும் உள்ள, மனித நேயம் கொண்டவர்கள் முதலில் சந்திக்க வேண்டும் கலந்துரையாட வேண்டும். கருத்துக்கள் பரிமாறப்பட வேண்டும்
மனக்கசப்பு வேற்றுமையுணர்வு என்பது தொன்று தொட்டு வருவதல்ல அது இடையில் ஏற்பட்ட ஒன்று.

0வத்துக்குப் பாராட்டு .
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் அளித்த பாராட்டு விழாவில், ஏற்புரைநிகழ்த்தியஅவர் 'தனது 25-வருட எழுத்துலக அனுபவமே தன்னை இப்பரிசுக்கு தயார் படுத்தியது என்றும், தனக்களிக்கப்பட்ட பாராட்டும்" கெளரவமும், தன் சமூகத்துக்கே கிடைத்தபெருமை' எனவும் குறிப்பிட்டார். மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற செயலர் திரு . எம். சந்திரசேகரன், எழுத்தாளர் பன்னீர்செல்வத்திற்கு பொன்னாடை போர்த்தினர். இளைஞர் அணிச்செயலர் திரு. எஸ். ஆனந்தராஜா, பரிசு வழங்கி கெளரவித்தார். அன்னுரை பாராட்டி, திரு. எல். பூஞரீஸ் கந்த ராஜா கவிதை வழங்கினர்.
இளைஞர் அணிச்செயலர் திரு. எஸ். ஆனந்தராஜா திரு. பன்னீர்செல்வத்துக்குப்
பரிசு வழங்குகிருர்,
படுக இன மக்கள் ஆதிகால முதல் நல்ல உள்ளம் கொண்டவர்களாகவே இருந்துவந்துள்ளனர். இடையில் ஏற்பட்ட இம் மாற்றம், தொடர்ந்தும் நீடிக்க விடக் கூடாது என தமதுரையில் குறிப்பிட்ட அருட் தந்தை W. சாமுவேல் இரு இன மக்களுக்கும் இடையில் நல்லுணர்வு வளர தம் இயக்கம் அனைத்து உதவி
யையும் செய்யும் என உறுதியளித்தார்.
சுமார் நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில், கோவை நலிந்தோர் நல மைய நெறியாளர் திரு. இர. சிவலிங்கம், இளைஞர் அணிச் செயளாலர் திரு. எஸ் ஆனந்தராஜா ஆகியோரும் உரைநிகழ்த்தினர். - பூg .

Page 9
9
நீலகிரிச் சார
и твъі
陆 ல கிரி யி லே நிலைத்துவிட்ட படுகர்களின் வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து எழுதிய ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் திட்டவட்டமாக கூறுகிற உண்மை அம்மக்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து குடியேறியவர்கள் என்பதேயாகும். அவர்கள் விஜயநகர சாம்ராஜ்யம் வீழ்ச்சிஅடைந்த காலப்பகுதி யான 1565 ஆண்டளவில் நீலகிரி மலைப்பகுதிகளில் குடியேற ஆரம்பித்திருக்கிருர்கள். இந்த கு டி யேற்றத்தை உம்மாத்தூர் குறுநில மன்னர்கள் ஊக்குவித்திருக்கிறார்கள்.
உம்மாத்தூர் குறுநில மன்னர்கள் மூன்று மலைக்கோட்டைகளை கட்டியுள்ளார்கள். இக்கோட்டைகள் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்டன. இக் கோட்டைகளுக்குள்ளேயும், அதைச் சுற்றியுமே குடியேற்றங்கள் நடந்துள்ளன. முதலில் கட்டப்பட்ட கோட்டை பகாசுரன் கோட்டை. இக்கோட்டையைச் சுற்றியுள்ள குடியேற்றங்களைத் தான் மேற்கு நாடு என்று படுகர்கள் குறிப்பிடுகிறார்கள். மலைக்கோட்டை என்பது 16 ம் நூற்றாண்டு கட்டப்பட்ட கோட்டை. இக்கோட்டையைச் சுற்றி அமைந்த குடியேற்றங்களுக்கு தோடநாடு என்று பெயரிடப்பட்டது. கிழக்கே ஹதரகோட்டை அமைந்தது. இதைச்சுற்றி ஏற்பட்ட குடியேற்றங்களுக்கு பொறங்கு நாடு என்று பெயரிடப்பட்டது. கோத்தர்களுக்கும், படுகர்களுக்கும் எல்லைப்பிரச்சினை ஏற்பட்ட பொழுது படுகர்கள் குடியேறிய பகுதிகளை நான்கு நாடுகளாக பிரித்து எல்லைகள் வகுத்தார்கள். 'உம்மத்தூர் குறுநில மன்னர்களே இந்தஏற்பாடுகளைச்செய்தார்கள். 1830ம் ஆண்டளவில் குந்தாநாடென்ற பிறிதொரு குடியேற்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இந்த நான்கு நாடுகளின் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் தான் படுகர்கள், வாழவேண்டுமென்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதைத்தான் இன்னும் படுகர்கள், அவர்களின்பேரணி யில் எங்கநாடு ‘நாக்குபெட்டா' என்று கோஷ மிடுகிருர்கள். ‘நாக்கு பெட்டா' என்ருல் மேற்கூறப்பட்ட நான்கு மலைகள் சூழ்ந்த "நான்கு நாடுகள்’ என்றுதான் அர்த்தம். “பெட்டா" என்ருல் படுகர் மொழியில் மலை கன்னடமொழியில் ‘பெட்டு’ என்ருல் மலை. மொழிப் பொருத்தத்தை வைத்துப்பார்த்தால்கூட படுகர்கள் மைசூரிலிருந்து வந்தவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தலாம்.
ஆகவே 'நாக்கு பெட்டா" என்பது முழு நீலகிரி மாவட்டமல்ல, கர்நாடகப் பகுதிகளிலிருந்து குடி யேறிய மக்களுக்கு வரையறுக்கப்பட்ட பகுதிகள். இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் மறந்துவிட்ட அல்லது மறைத்துவிட்ட படுகர் இன அரசியல்வாதிகள் நீலகிரிமாவட்டமே ‘நாக்கு பெட்டா என்ற தப்பான கோரிக்கையை அரசியல் கோஷ மாக்கியுள்ளார்கள்.

ଓଜଃ (36) சேபேரண் =
6
இனி இந்தக்குடியேற்றம் எப்பொழுது ஆரம்பித்து எப்பொழுது முடிவடைந்ததென்றுநோக்குவோம். சில ஆராய்ச்சியாளர்களின் கணிப்பின்படி 1565 ஆண்டு அளவில் தொடங்கி 1819-ம்ஆண்டளவில் முடிவுற்றி ருக்கவேண்டும். 1819-ம்ஆண்டுக்குப்பிறகு நீலகிரியில் படுகர்களின் புதிய குடியேற்றங்கள் ஏற்படவில்லை. கடைசியாக ஏற்படுத்தப்பட்ட புதிய கிராமம் என்ருல் அது 1950-ம் ஆண்டளவில் கோத்தகிரி அருகே ஏற். படுத்தப்பட்ட தப்பகம்பே என்கிற கிராமமேயாகும். ஏறக்குறைய முன்னுாறு ஆண்டுகளாக பிரிந்து சிதைந்திருந்த படுகர்கள் அண்மைக்காலத்தில் தான் ஒன்றுபட ஆரம்பித்திருக்கிருர்கள். அதாவது அவர்களின் ஒற்றுமையுணர்வு படிப்படியாக வளர்ந்து 1980-அளவில் உச்சநிலை அடைந்துள்ளது. ܀-
படுகர்களிடையே ஒரு அரசியல் உத்வேகம், ஒரு இன உணர்வு வளர்ந்து வருகிறது. தமது பல்வேறு பிரிவினைகளைஒன்றிணைத்து தமக்கு ஒருஅங்கீகாரம்பெற வேண்டுமென்கிற பேரவா தலையெடுத்து நிற்கிறது. 1979-ம்ஆண்டு நீலகிரிமலைவாசிபடுகர்நல சங்கமென்ற பெயரில் படுகர்களை ஆதிவாசிகள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருக்கிருர்கள். இந்த கோரிக்கையை 1983 ம் ஆண்டு இளம் படுகர்கள் சங்கம் விடுத்திருக்கிறது. 1987 ல் நீலகிரி படுக மகாஜன சங்கம் என்ற பெயரில் படுகர்கள் ஆதி வாசிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. 1989 ம் ஆண்டு இந்த கோரிக்கை மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. படுக சங்கங்களின் கூட்டமைப்பின் கீழ் இதே கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கோரிக்கையை பிறிதொரு கட்டுரையில் நுணுக்கமாக ஆராய்வோம். இப்போதைக்கு இக்கோரிக்கை, சனநாயக அரசியலுக்கோ, வரலாற்று உண்மைகளுக்கோ, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கோ சற்றேனும் பொருந்தாத ஒரு அபத்தமான கோரிக்கை என்பது வெளிப்படை.
படுகர்கள் தமது தனித்துவத்தையோ, கலாசாாத்தையோ, மொழியையோ சமய ஆசாரங்களையோ பாதுகாக்க விரும்புவது இயற்கை. அதற்கு முற்போக்கு சிந்தனை உள்ளவர்களும், சனநாயக அரசியலில் நம்பிக்கை உள்ளவர்களும் ஆதரவளிப்பார்கள். ஆனல் அவர்களது தனித்துவத்தை நிலைநாட்ட முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலக்கூடாது. வரலாற்று உண்மைகளைப் பொய்மைப் படுத்த முடியாது. பிற சமுதாயங்களின் உரிமைகளுக்கு எதிர்ப்புக் காட்டவும் கூடாது,
தொடரும்

Page 10
1
பாவேந்தர்
இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றை எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் புரட்சிக் கவிஞராகத் திகழ்பவர் பாவேந்தர் பாரதிதாசன் ஒருவரே. புலவர்கள் மடியில் நொண்டிக் குழந்தையாய் கிடந்த தமிழ்க்கவிதையை அனைத்து மக்கள் மடியிலும் தவழச் செய்த பெருமைக்குரியவர்.
1891 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ம் நாள் லட்சுமி கனகசபை தம்பதியினருக்கு புதல்வராய்ப் பிறந்தார் அவர் தன் 17ம் வயதிலேயே புலவர் தேர்வில் தமிழ் நாட்டிலேயே முதல் மாணவராய் தேர்வு பெற்றார். சுப்புரத்தினம் என்ற பெயரோடு கவி வானில் சுற்றிவந்தவர். பாரதியின் நட்பால் தன் திறம் வளர்த்து அவர் மேல் கொண்ட அன்பால் பாரதிதாசன் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
பாவேந்தர் அவர்கள் ஒர் பகுத்தறிவு சிந்தனையாளர். அவர் சாதி மத பிரிவினையைச் சாடியவர். பெண் முன்னேற்றம் வேண்டியவர். மூடநம்பிக்கைக்கு எதிராய் முழக்கமிட்டவர். வறுமையைக் கண்டு வருந்தியவர். தமிழையும், தமிழர்களையும் பாட்டால் உயர்த்திய பண்பாளர். புரட்சி ஒன்றால் தான் சமூக மாற்றத்தை காணலாம் என்பதை அவர் பாடல்கள் பறைசாற்றியது. இந்த சமூகத்தின் பொருளாதார அரசியல், கல்வி, கலாச்சார நிலை அனைவருக்கும் ஏற்றதல்ல. பணக்காரர்கள் கையில் ஏழை மக்கள் பகடைக் காய்களாய் பயன்படுவதைக் கண்டு அன்றே பாடினார்.
"புதிய தோர் உலகம் செய்வோம் கெட்ட,
போரிடும் உலகத்தை வேறொடு சாய்ப்போம்
பொதுஉடமை கொள்கை திசைஎட்டும் சேர்ப்போம் புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்'
மக்கள் அமைதியை காக்க வேண்டி போரை வெறுத்
தார். பணக்கார, ஏழை பாகுபாட்டையும் ஆண்டான்
அடிமை வேறுபாட்டையும் கடந்து ஓர் பொதுஉடமை
சமுதாயம் அமைக்கப் பெற்று அதை நாம் உயிரென
எண்ணிக் காக்க வேண்டும் என்றார். அவர் படைக்க
முயன்ற புதிய சமுதாயத்தை இன்றும் காண இயலவில்லை.
எங்கும் பாகுபாடு. மாட மாளிகையில் ஒருபிரிவும் மண் தரையில் ஒரு பிரிவுமாய் சமூகப் பிரிவின் உச்சத்தில் பரிதவிக்கும் அவல நிலை.
ஏழ்மை நிலைக்கு காரணமாய் சோம்பலையும் மக்கள் தொகை பெருக்கத்தையும் பொய்க்காரணமாய் காட்டும் இந்நாளில் பாவேந்தர் அவர்கள் புதிய விளக்கத்தோடு இவ்வாறு கூறுகிறார்.

பாரதிதாசன்
அ. தமிழ்ச் செல்வன் -
‘‘கைதிறனும் வாய்த்திறனும் கொண்டபேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தை எல்லாம் கொத்திக் கொண்டேப்பமிட்டு வந்ததாலே கூலிமக்கள் அதிகரித்தார் என்ன செய்வேன்"
இப்படி, மக்களை வாயாலும் கையாலும் அடித்து அவர்களின் சொத்துக்களை பறித்துக் கொண்டவர்கள் பணக்காரர்களாய் சமூகத்தில் பவனி வருவதை சுட்
டிக்காட்டுகிறார்.
நாட்டில் சாதி மத பேதமெல்லாம், ஒரு சாரார் தம் வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்துக்கொள்ள மக்களை பிரித்துவைப்பதற்க்கு 'செய்த சூழ்ச்சி என்ற உண்மையை முதலில் சொன்னவர் பாவேந்தர். அந்த சூழ்ச்சியில் சிக்கி அவதியுறும் மக்களைப் பார்த்து
** இருட்டறையில் உள்ளதடா உலகம்-சாதி " இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே!"
என்று பாடினார்.
இந்த சமுதாயத்தையும் இந்த நாட்டு மக்களை ஆள்கின்றவர்களையும் பார்த்து, பறையன், சக்கிலியனைத் தாழ்த்துகின்றான். பறையனை வேளாளன் தாழ்த்துகின்றான் வேளாளனை பார்ப்பான் தாழ்த் துகின்றான். இந்த இழி நிலையை மாற்றா விட்டால் இந்த நாட்டை நாய் ஆண்டால் என்ன என்றார்.
தொழிலாளர்களை பற்றி பாடிய பாவேந்தர் தொழிலாளி நாட்டின் முதுகெலும்பு. உற்பத்திக் காரணிகளில் நிலம், முதல், உழைப்பு ( தொழிலாளி) அமைப்பு ஆகிய வற்றில் உன்னதமானது தொழிலாளியின் உழைப்பு. ஆனால் அவர்களோ வறுமையில் வாடும் நிலையை காண்கிறோம் என்றவர்
* உடலை கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியிலும் கண்டேன்-இவ்உலகு உழைப்பவர்க்கு உரியது என்பதையே;
என கலங்குகிறார்.
நாட்டில் உழைப்பவர்க்கு உண்ண உணவில்லை உடுத்த உடையில்லை. வீடின்றி பாதைகளில் உறங்கு-- கிறார். அவர் பாடுபட்டதற்கு பரிசு இதுதானா என்றார். இன்னமும் மாறவில்லை இந்த நிலை நாட்டினிலே, *ン
உழைக்கும் மக்கள் அனைவரும் ஆயுதம் தூக்கித்தான் இந்நிலையை மாற்ற வேண்டுமா இல்லை. ஒற். றுமையுடன் அனைவரும் கிளர்த்தெழுந்தால் நிலை மாறுவதில் ஐயம் இல்லை. ஒற்றுமையில் பஞ்சம் இருக்கின்றவரை நாட்டில் உழைப்பவர் நிலையில் பஞ்சம் திர வழியும் இல்லை.

Page 11
பெண்ணுக்கு பெருமை சேர்த்த பெரும் புலவர் பாவேந்தர். பெண்ணைப் போற்றிய நாட்டில் காலப்போக்கில் பெண்ணுரிமை மறுக்கப்பட்டு இருண்ட சமுதாயத்தின் கொடிய கரங்கள் எழில் மாந்தர்களின் குரல் வளையை இறுக்கிய கொடூரத்தை காண்கின்றோம் என்றவர், பெண்முன்னேற்றத்தை செயல் படுத்தும் நோக்கோடு தன் பாட்டிலும், கவிதையிலும், நாடகத்திலும் பெண்ணுக்கே பெருமை சேர்த்தார்.
வன்மை, உயர்வு, மனித நலம், ஆகியவை பெண்மையினால் வளர்ந்திடும் வளங்கள் என்றார். குடும்பத்தை வழி நடத்த, குழந்தையை பேணி வளர்க்க உலகத்தை உணர்ந்துகொள்ள, பெண் கல்வியே அவசியம் என வலியுறுத்தினார்.
'வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணந்தால் தீதோ பாடாத தேனீக்கள் உலாத் தென்றல் பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ, ,? எனக் கேட்கின்றார்
கணவன் இறந்தால் பெண்ணை விதவை என்று அவள் வாழ்வை பாழாக்கும் சமூக நிலை, இளம் பெண்ணை முதியவர்க்கு மணமுடிக்கும் மூடத்தனம், பெண்ணடிமை என்பவைகளைக் கண்டு பெண்கள் அஞ்சாமல் இச்சமூக தீமைகளைக் களைய முன்வர வேண்டியவர்கள் பெண்களே என வலியுறுத்தினர். பெண்களைப் பேணாதோர் படிப்பதும் எழுதுவதும் பண்பில்லாதது என்றார்.
தாய் மொழியையும் தமிழ் மக்களையும் போற்றி னார். அவர்களை தன் பாட்டால் நலம் தேற்றினார். தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் பழிவந்தால் பொறுக்
மலையக சி 6T65. GTGi. GI. JT6)
fழத்து தமிழ் இலக்கியத்திற்கு மலையக இலக்கியம் புதுரத்தம் பாய்ச்சியதென பெருமையுடன் பேராசிரியர் கைலாசபதி பாராட்டும் அளவிற்கு மலையக இலக்கியத்தில் சிறு சதைத் துறையில் சிறப்புற்று ‘மலையக சிறுகதைச்சிற்பி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட என்.எஸ்.எம். ராமையா. 3-9-90 கொழும்பில் காலமானார்.
மலையக சிறுகதைக்கு உருவம் கொடுத்தவர் என மலையக சிறுகதை எழுத்தாளர்களாலேயே பாராட் டப் பட்டவர் என்.எஸ். எம். ராமையா இவரது. ‘ஒரு கூடைக் கொழுந்து சிறுகதைத் தொகுதி 1980-ம் ஆண்டு அரசின் இலக்கிய விருதைப் பெற்றது. இவரது சிறுகதைகளை தமிழகத்து "மஞ்சரி” மறு பிரசுரஞ் செய்தது. அக்கரை இலக்கியத் தொகுப்பில் இவரது *வேட்கை சிறுகதை இடம் பெற்றுள்ளது. வேட்கை சிறுகதை ஆசிய நாடுகளின் சிறந்த சிறுகதையாக

கலாமா என்றவர் பொங்கி எழுந்து இவ்வாறு பாடுகிறார். s:-
**தாய் மொழிக்கு பழிவந்தால் சகிப்பதுண்டோ உயிர் தமிழை உயிரென்று போற்று மின்கள்’’
இப்படி 40,000 வரிகளை தமிழ்ப்பாக்களாய் பாடி தமிழுக்கு பெருமைசேர்த்தார்.
அரசியல் என்பது மக்களால் மக்கள் நலன் கருதி அமையவேண்டியது. ஆனால் அதற்கு மாறாக மக்கள் எண்ணங்களை திசை திருப்பி பொதுஉடமை, முதலாளித்துவம் என்ற கோட்பாடுகளை மக்களுக்கு புரியாமல் பேசி தங்களுக்கு சாதகமாய் மாற்றிக்கொள். ளும் நிலையைப் பார்க்கின்றோம். இந்நிலை மாறி உண்மை அரசியல் வளரும் நாள் எந்நாளோ என கலங்கினார்.
பாவேந்தர் படைப்புகளில் தமக்கென ஒர் புரட்சி பாதையை அமைத்துக் கொண்டவர். அவர் தவறை சுட்டிக்காட்ட அஞ்சியது இல்லை. பணத்திற்காக பாடியதும் இல்லை. எதிர்ப்புகள் வந்த போதும் ஏளனம் செய்த போதும் எழுதுவதை நிறுத்தவில்லை. தன் பாடல்களால் தமிழ் நாட்டு மக்களை தட்டி எழுப்பிய இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற பெருமையை பெற்றவர்.
விடுதலை இயக்கம் தந்த வெண்ணிலா பாரதி என்றால் சீர்திருத்த உலகம் தந்த செங்கதிரே பாவேந்தர் எனலாம்.
அன்னாரின் கனவு நனவாகும் நாள் எந்நாளோ!
றுகதைச் சிற்பி III БIаТ6)IHi !
தேர்வு செய்யப்பட்டு ஏசியன் ஜெர்னலில் இடம் பெற்று ள்ளது. சோவியத் மொழிகளிலும், செக் மொழியிலும் இவரது கதைகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
1960-களில் எழுத்துத் துறையில் நு  ைழ ந் த என்.எஸ்.எம். ராமையா தன் எழுத்தின் வளத்தால் கடல் கடந்த இடங்களில் கெளரவத்தைப் பெற்றிருக் கிறார். ம ன் லய கம் எ ன் ற பிராந்தியத்திற்கே விஷேட தன்மைகளைக் கொண்டெழுந்த மலையக சிறுகதை இலக்கியத்திற்கு உருவம் அமைத்தவர் என்ற வரிசையில் ராமையாவே வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறார் என விரிவுரையாளர் மு. நித்தியானந்தம் குறிப்பிடுகிருர்,
மலையக எழு த் தா ளர் களி ல் மூத்தவரான என்.எஸ்.எம். ராமையாவின் சிறுகதைகள் அவரின் நாமத்தை என்றென்றும் நினைவூட்டும்.

Page 12
தாயகம் திரும்பிய மாணவர்க
தாயகம் திரும்பிய மாணவர்களின் மேற்படிப்புக்கு உதவவென, கோப் நிறுவனமும் ஐலண்ட் அறக்கட்டளையும், கல்வி உதவித் தொகைவழங்கும் திட்டமொன்றை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் உதவி பெற, இக்கல்வியாண்டில் 40-மாணவ, மாணவியர் தெரிவு செய்யபட்டனர். இவர்களுக்குரிய முதல் தவணைத்தொகை கோத்தகிரியில் நடந்த பேரறிஞர் அண்ணு பிறந்தநாள் விழாவின்போது நீலகிரிமாவட்ட ஆட்சித் தலைவர் திரு. அம்பேத்கார் ராஜ்குமார் வழங்கினர்.
அதன்பின் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கல்வி உதவிபெறும் மாணவர்களும், ஐலண்ட் அறக்கட்டளையின் முக்கியஸ்தர்களான திரு. இர. சிவலிங்கம், திரு. எஸ். திருச்செந்தூரன், ஆகியோரும் மதுரையிலிருந்து வருகைதந்த பேராசிரியர் பி. ராஜ கோபால், ‘‘கொழுந்து ஆசிரியர் திரு. அந்தணி ஜீவா, ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் தாயகம் திரும்பிய சமூகத்தினிடையே கற்றவர்கள் உருவாக வேண்டும், அதன்மூலம் சமூகமும் உயரும் என மன்றத் தலைவர் திரு. எஸ். திருச்செத்தூரன் குறிப்பிட்டார்.
3 ம் பக்க தொடர்ச்சி மண்டல் குழுவின் .
பயங்கரமான சாதிச்சண்டைஉருவெடுத்துள்ளது. மாணவ சமுதாயம் கொந்தளிப்படைந்துள்ளது. அளவுக்கு அதிகமாகவே ஆர்ப்பாட்டங்கள் பெருகிவிட்டன மாணவர்களின் தீக்குளிப்புப்போராட்டம் எல்லா அரசியல் கட்சிகளையும் திகிலடையச் செய்துள்ளது. சிங் பதவி விலகவேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. சிறுபான்மைக்கட்சி உட்பூசல் நிரைந்த கட்சிஎன்ற காரணத்தால் ஆட்சி ஆட்டங்கண்டுள்ளது.
இந்தச்சிக்கலுக்காக ராம ஜென்ம பூமி - பாப்ரி மஸ்ஜித் சண்டையும் சேர்ந்துகொண்டது. எப்பொழுது சமயச் சண்டை வெடி மலையாய்க் குமுறுமோ என்று தெரியவில்லை. இவர்களோடு அரசியல் அதிருப்தியாளர்கலும், அராஜக சக்திகளும் ஒன்று சேர்ந்து சொண்டு பேயாட்டம் ஆடுகின்றன. இந்த சூல்நிலைக்கு ஈடுகொடுக்க முடியாமல் திண்டாடுகின்ற மத்திய அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறது. இந்த சிக்கள்களில் இருந்து தப்புவதற்கு உச்ச நீதிமன்றத்தின் இடைக்மால தடை உத்தரவைக் கவசமாகக் கொள்ளலாம் என்று கருது
கிறது.
வேகமாகப் பாலைவனத்தில் ஒடுகின்ற தீக்கோழி தன் தலையை மணலுக்குள் பதுக்கிக் கொண்டு எதிரிகளிடமிருந்து மறைந்து தப்பிவிட்டதாக நிளைத்துக்கொள்ளுமாம். அப்படித்தான் வி. பி. சிங் 9ي, ]J" 5 தலைத்தப்பினல் போதும் என்ற மனே நிலேயில் இன். றிருக்கிறது.
வெளியீடு : மலையக மக்கள் ம்றுவாழ்வு ம6 தபால் பெட்டி எண். 2758, கோன

ருக்கு கல்வி உதவித் தொகை
- தொடர்ந்து நெறியாளர் திரு. இர. சிவலிங்கம் கருத்துத் தெரிவிக்கையிலே, கல்வி உதவிபெறும் மாணவர்கள், சமூகத்துக்கு நன்றியுடையவர்களாக இருத்தல்வேண்டும் எனவும், தாம் பெற்ற கல்வியை மற்றேர்க்குப் பகிர்ந்து கொடுத்தலே அவர்கள் செய் யும் கைமாறு என குறிப்பிட்டார்.
பேராசிரியர் பி.இராஜகோபால், தன்னுரையிலே உதவித்தொகையாகக் கிடைக்கும், பணத்தின் ஒவ் வொரு பைசாவும், உரிய வழியிலே செலவழிக்கப்பட அழிவேண்டும் எனவும், இந்த உதவித்தொ ை த் திட் டத்தை ஏற்படுத்தியுள்ள ஐலண்ட் அறக்கட்டளைக்கும் கோப் நிறுவனத்துக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். எனவும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் 'கொழுந்து ஆசிரியர் திரு. *அந்தனி ஜீவா ? மன்றச் செயலர் திரு. எம். சந்திரசேகரன் ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.
உதவிபெறும் மாணவர்கள் மன்ற நடவடிக்கை களுக்கு ஒத்துழைப்பு நல்குவதாகவும், தம் சமூக முன் னேற்றத்திற்கு பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர்.
ஆனல் இன்று தோன்றியிருக்கிற அரசியல் கொந்தளிப்பு, நாளைய போராட்டத்திற்கு ஒரு எச்சரிக்கை. இட ஒதுக்கீடு, சாதி அடிப்படை, பொருளாதார அடிப்படை , சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கும், கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைப்படுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும், சமத்துவத்திற்கும் வழிகாட்ட வேண்டிய சரியான அடிப்படை எது என்று பாரத சமுதாயம் நிர்ணயிக்க வேண்டும். உச்சாணிக் கிளைகளில் ஒய்யார வாழ்வு வாழ்ந்து வந்த சிங்காரச் சீமான்கள், சற்று இறங்கியே ஆகவேண்டும். இந்த சரித்திரப் போக்கை தடுத்து நிறுத்த முடியாது. சாதி, சமயம் சச்சரவுகளின் முடிவில், வர்க்கப்போராட்டம் முகிழ்க்கலாம்.
நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு. அ. ராஜ்குமார் அண்ணு பிறந்த நாள் விழாவில் பட்டா வழங்குகிருர்
றம், இல, 187, இராஜா அண்ணாமலை தெரு, ப-641 011. (தனிச் சுற்றுக்கு மட்டும்)