கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1990.08-09

Page 1
IDG) 1 9,61600s - I
இயற்  ைக யி
அக்டோபர் மாதம் 25-ம் தேதி வியாழக்கிழமை சீறி எழுந்த இயற்கையின் தாண்டவம் 35-உயிர்களை நீலகிரியில் பலிகொண்டுவிட்டது. கெத்தை கிராமமே மண்மூடிப் போய்விட்டது, 44-வீடுகள் சிதைந்து விட் டன. மின்சார வாரிய ஊழியர்களின் குடியிருப்புகள் மண்ணில் புதைந்துவிட்டன. கிராமத்திலிருந்த 63வீடுகளில் தப்பியவை 19 - மட்டுமே மருத்துவமனை, அஞ்சல் நிலையம், கூட்டிறவு சயகக்கடை அனைத்துமே துவம்சம் செய்யப்பட்டுள்ளன. இயற்கையின் கோரக் கொந்தளிப்பைக் கண்டு நெஞ்சு நடுங்குகிறது. உற் ரு ரை, உடமைகளை இழந்தோருக்கும், காயம்பட்டோ ருக்கும், ஊனமுற்றேருக்கும் எங்கள் ஆறுதல்களை கூறி கொள்கிருேம். கட்டபெட்டு பாரதி நகரில் 12-வீடு கள் இடிந்து விழுந்துவிட்டன. ஏழைகளின் குடிசைகள் பெருமழைக்கு இடிந்துபோவதே நமது தொடருகின்ற துன்பக்கதை. கீழ் கோத்தகிரி அம்பாள் காலனியில் தனது கணவனையும், ஒரே மகளையும் இயற்கையின் கோரத்திற்கு பலிகொடுத்துவிட்டு தனித்து நின்று தவிப் பவர் ராஜம்மாள். இவர்களுக்கெல்லா அரசு ஆறும் தாமதியாது நிவாரண உதவி வழங்கியது பாராட்டத் தக்கது. இரண்டு அமைச்சர்கள் விபத்து நடந்து இடத்திற்கே வந்து பார்வையிட்டது வர வேற் கத் தக்கதே. மாவட்ட ஆட்சித் தலைவர் சீ.ஏ. ராஜ்குமார் அவர்கள் தனது உற்ருர் உறவினர்களை இழந்தது போன்ற சோகத்துடன் நேரடியாக மீட்சிப் பணிகளில் ஈடுபட்டதும், உடனடியாக நிவாரணம் வழங்கியது நினைவின் நீங்கா நற்செயல் . நிர்வாகத்திற்கு மட்டு மல்ல தமிழக அரசுக்கே மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கிக்கொடுப்பதில் முன்னணியில் நிற்பவர் நீலகிரி ஆட்சித் தலைவர் தான்.
இதே சமயத்தில் சில அரசியல்வாதிகள் அரசைக் கண்டிக்கும் வகையில் அறிக்கை விடுத்துள்ளது வருந் தத் தக்கதே. இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்
 

ன் சிற்றம்
பட்டு பரிதவிக்கும் ஏழைகளுக்கு போட்டி போட்டுக் கொண்டு நிவாரம் வழங்குதற்குப் பதிலாக, இதைக் காரணமாக வைத்துக்கொண்டு நிவாரணம் வழங்குவ தற்குப் பதிலாக, இதைக்காரணமாக வைத்துக் கொண்டு அரசியல் லாபம்தேட முனைவது அறுவருக்கத் தக்க செயலாகும்.
உடனடியாக நிவாரணப் பணிகள் வழங்க அரசு, நிர்வாகம் மட்டுமல்ல, மக்களும், மக்களியக்கங்களும் முன்வரவேண்டும். தொழிற்சங்கங்களும், தொண்டு நிறுவனங்களும் தமது பங்களிப்பை நல்கவேண்டும். வழக்கமாக இத்தகைய திடீர் விபத்துகள் நிகழும் பொழுது நாலைந்து நாட்களுக்கு எல்லோரும் அங்க லாய்ப்பார்கள். அதன்பிறகு மறந்து விடுவார்கள். பட்டவர்களுக்கு மட்டுமே துன்பம் தொடரும். மற்ற வர்களுக்கு மறந்த கதையாகி விடும். நீண்டகாலத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்
பயிர் செய்: முறைகள் திருத்தப்பட வேண்டும். மண் அரிப்பு நடவடிக்கைள் தீவிரப் படுத்தப்பட வேண் டும். நீலகிரியில் மலைச் சரிவுகளில் உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை காலங்காலமாகப் பயிர் செய்யப்பட்டு வருகிறது. உருளைக்கிழங்கு விவசாயம் மண் அரிப்பை துரிதப்படுத்துகிறது. சிறு விவசாயிகள் மண் அரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. தேயிலை லாபம் தரும் என்பதற்காக சோலைகளையெல் லாம் அழித்து சிறுசிறு தேயிலைத் தோட்டங்கள் போட்டு விடுகிருர்கள். சிறு தோட்டக்காரர்கள் மண் அரிப்பைத் தடுக்க முயல்வதில்லை. பெருந் தோட்டங்களில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் நீள் வடிகாள்கள் அமைத்து பயிர் செய்கிருர்கள். இந்தவிதமான சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படும் நஷ்டத்தைக் கணக்கிலெடுக்காது.
தொடர்ச்சி 8ம் பக்கம் .

Page 2
இனங்களுக்கிடையே
நீலகிரி ஆ1
இனங்களுக்கிடையே ஒருமைப்பாடும் சாதி, சமய, வேறுபாடு அகலவும், அக்டோபர் மாதம் 2 ம் திகதி காந்தி ஜெயந்தியன்று சாதி, சமய, இன ஒற்றுமை தினம் கோத்தகிரியில் கொண்டாடப்பட்டது. இக் கூட்டத்தில் பிரதம விருந்தினராக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஜீ. ஏ. ராஜ்குமார் கலந்து உரையாற்றினார். அவர் தனது உரையிலே, "" நீலகிரி மாவட்டத்தின் கடந்த கால சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால், இங்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அமைதி நிலவி வந்ததை காண முடிகிறது. இனங்களுக்கு இடையே பெரிய கலவரங்கள் மூண்டு, அதனால் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு, துப்பாக்கி பிரயோகம் நடத்தி, பலர் இறந்து போய் நிலைமை சீர் கெட்டதாக , சரித்திரம் இல்லை. அதற்கான ஆதாரங்களும் இல்லை : ஆனால் அண்மைக் காலத்தில், குறிப்பாக கோத்தகிரியில் அடிக்கடி அமைதியின்மை ஏற்படுகிறது.
நீலகிரியில் படுகர்கள், மலையாளிகள், தாழ்த்தடப்பட்ட அரிசனங்கள், தாயகம் திரும்பியவர்கள் என பல்வேறு இனங்கள் வாழ்ந்து வருகிறார்கள். இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களை ஆரம்ப காலத்தில் இங்குள்ள படுக தோட்ட முதலாளிகளும், தனியார் தோட்டங்களும், அரசு தேயிலைத் தோட். டங்களும், தங்களுடைய தோட்டங்களில் வேலை செய்வதற்கு இந்த மக்களை பயன்படுத்திக் கொண்டார்கள். காரணம் தாயகம் திரும்பிய இந்த மக்கள்
கோத்த கிரியில்
ஒரு சமூகத்தின் வளர்ச்சியிலே கலை, கலாச்சாரம் என்பன முக்கிய அங்கம் வகிப்பதாலே, மன்றத்தின் வருடாந்தர நிகழ்ச்சிகளிலே, கலைவிழா ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும் கலை விழா, இவ்வாண் டும் மிகச்சிறப்பாக 19-8-90 அன்று கோத்தகிரி மன்ற மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழின் பெரு மையை விளக்கும் வகையிலே அனைத்து நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது ஒரு சிறப்பம்சமாகும். கூடலூர், குன் னுார், கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த குடியிருப்புக்க ளிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர். இக்கலை விழாவிலே இருநூறுக்கு மேற் பட்ட இளங் கலைஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்க ஒரு விசயமாகும்.
இளங்கலைஞர் தம்திறமைகளை வெளிக்கொணரவும் வளர்த்துக் கொள்ளவும் இக்கலைவிழா பெரிதும் உதவி புரிந்தது, எனலாம்.

2
ஒற்றுமை வேண்டும்
:áPmu i 9 6o J
சிறந்த உழைப்பாளிகள் என்பதற்காகவே. நீலகிரி மாவட்டத்தின் இன்றைய சிறந்த உழைப்பாளிகள் இந்த மக்களேயாகும்.
நீலசிரி ம்ாவட்டத்தில் கொலை கொள்ளை,
திருட்டு, வீடு உடைத்து திருடுவது, மோட்டார் வாகன களவு, காடழிப்பது, சந்தன மரம் கடத்தல்,
கள்ளச் சாராயம் காய்ச்சுதல், கலவரம் விளைவித்தல்
போன்ற எது நடந்தாலும், உடனே 'தாயகம் திரும்பியவர்களே இதைச் செய்கிறார்கள்" என கூறுவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. இப்படி ஒரு குறிப்பிட்ட சாராரையே சதா குறை கூறிக் கொண்டிருந்தால் எப்படி ஒற்றுமையை கட்டிக் காக்க முடியும்! அரசு நீலகிரி மாவட்டத்தில் எடுத்த புள்ளி விவரப்படி பார்த்தால், மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் அரை சதவீதம் கூட, தாயகம் திரும்பியவர். கள் சம்பந்தப்படவில்லை என தெரிகிறது. எனவே குறைகூறுபவர்கள் நிதானமாகச் செயல் பட்டால் இனங்களுகிடையே ஒற்றுமை நிலவ வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வ களை, மேடு-பள். ளங்களை சரிசெய்யர்தவரை, சமூக ஒற்றுமை என்பது ஏட்டளவில் தான் இருக்கும் இருக்க முடியும். கோத்தகிரியில் இன்று அமைக்கப்பட்டுள்ள இந்த சமாதான குழுவின் முயற்சிகள் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்" என்றும் இதற்காக எனது வலது கரத்தை நீட்ட தயாராக இருக்கிறேன்' எனவும் குறிப்பிட்டார்.
கலை விழா
கலைவிழாவினையொட்டி, பகுதிவாரியாக கூடலூர் குன்னுார், கோத்தகிரி கிளைகளில் அவ்வப்பகுதி கலைஞர் களுக்கென நாடகப்போட்டி, கவிதைப் போட்டி, கட் டுரைப் போட்டி என்பன நடைபெற்றது. இவற்றிலே மிகச் சிறந்ததைத் தெரிவு செய்து, விழாவின் இறுதி நாளன்று மேடையேற்றி, அவைகளிலே மிகச் சிறந்த வைகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.
பேச்சுப்போட்டியில் குமரன் நகரைச்சேர்ந்த செல் வன் மூர்த்தியும், கூடலூரைச் சேர்ந்த இந்திரா காந்தி யும் பரிகபெற்றனர். கவிதைப் போட்டியிலே ஈளா டாவைச் சேர்ந்த செல்வி ஜெயமணியும், கட்டுரைப் போட்டியில் செல்வி பரிமளாவும் பரிசு பெற்றனர். குழு நடனத்திற்கானப் பரிசினை பாக்கிய நகர், சசிகலா குழு வினர் வென்றனர்.
"புல்லுருவி' என்ற நாடகம் முதல் பரிசையும், பாராட்டையும் பெற்றது. இதில் நடித்த ரவி மிகச் சிறப்பாக நடித்தார். அம்பேத்கார் நகர் குழுவினரின்
தொடர்ச்சி. 3ம் பக்கம்

Page 3
சேமிப்பு ஒரு மச் (கோத்தகிரியில்
' 'ஐந்தறிவு கொண்ட சிட்டுக் குருவியும், எறும்பும் கூட நாளைய தேவையை அனுசரித்து சேமிக்க முற்படும் போது, ஆறறிவு படைத்த நாம் மட்டும் ஏன் சேமிக்கத் தயங்குகிறோம். எனவே, சேமிப்பின் முக்கி யத்துவதைக் கருதி நம் அனைவரும் ‘’சிறு துளி பெரு வெள்ளம், , என்பதற்கேற்ப, இன்றே சேமிப்பதை ஒரு இலட்சியமாகக் கொண்டு செயல்படவேண்டும்.
இவ்வாறு, மலையக மக்கள் மறு வாழ்வு மன்றம் கோத்தகிரியில் செப்டம்பர் 15, 16, 17, ஆகிய தேதிகளில் நடாத்திய **சேமிப்பு ஒரு மக்கள் இயக்கமாக' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் திருமதி கே. தங்கமணி வலியுறுத்தினர். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மனிதனின் தேவைகள் நாளாந்தம் பெருகி வருகின்றது. எனவே அதற்கேற்றவாறு நம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வழி காண வேண்டும். அல்லது, நம் வருமானத்திற்கேற்றவாறு திட்டமிட்டு செலவுகளை மேற்கொள்ள வேண்டும் திட்டமிட்டு மேற்கொள்ளும் எந்த ஒரு
செயலும் வீண் போவதில்லை.
குறிப்பாக விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டு -ள்ள பெண்கள், உப தொழில்கள் மூலம் வருமானத்தைப் பெருக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும். இனாமாக எதையும், எவரிடமும் எதிர்பார்க்கக்கூடாது,கூடுமானவரை நமக்கும், அதே போல சமூக மேம்பாட்டுக்காகவும் நாம் பாடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்,
கோவை நலிந்தோர் நல மைய நெறியாளர்திரு. இர. சிவலிங்கம், தனது கருத்துரையிலே வரவுக்கு ஏற்றாற்போல் செலவு செய்து அதில் சேமிப்பது மகிழ்" வைத் தரும் ஆனால் வரவுக்கு மேல் செலவு செய்யப்
2-ம் பக்க தொடர்ச்சி .
'திருந்திய உள்ளம் எனும் நாடகத்தில் நடித்த தமிழ் மாறனின் நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது இக்கலைவிழாவின் சிறப்புநிகழ்ச்சியாக நமது மன்ற கலைக்குழுவினரும், திருச்சி கலே, அறிவியல் மையக் குழுவினரும் இணைந்து வழங்கிய நாடகங்களும் விழிப் புணர்வு பாடல்களும் இடம் பெற்றன. "நாற்காலி" * ஒரே கேள்வி' என்ற நாடகங்கள் மக்களின் சிந்தனை யைத் தூண்டுவதாக அமைந்தது. விழாவின் இறுதி யிலே கோத்தகிரி ஜே. எம். ஜே. இன்னிசைக் குழுவின ரின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது,
மதுரை செபர்ட் குழுவினரின் கலை நிகழ்ச்சி களும் இவ்விழாவிலே இடம்பெற்றது. மொத்தத்தில் இக்கலைவிழா, முத்தமிழைஎடுத்தியம்பியதோடு, இளங் கலைஞர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, கலை களிலே அவர்தம் நாட்டத்தைச் செலுத்தவும், மறைந்து கிடைக்கும் தம் திறமைகளை வெளிக் கொண ரவும் இது வாய்ப்பாக இருந்தது.

3
க்கள் இயக்கமாக
கருத்தரங்கு)
படும் போது மன மகிழ்ச்சி ஏற்படாது, மாறாக மன. க்கவலைதான் ஏற்படும்.நமக்கு ஏற்படும் மேலதிகமான செலவினங்களைச் சமாளிப்பதற்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் நாம் கடன் வாங்குகிறோம். அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்குவது ஒரு புறம் இருக்க அனாவசியச் செலவுகளுக்கு கடன் வாங்கும் பழக்கமும் நம்மிடையே உண்டு. நமது தேவைகளை அறிந்து, பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய் யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் சிக்கனம் சேமிப்பின் முதல் படி சிக்கனமாய்ச் செலவு செய்வதால் சேமிப்புப் பழக்கம் நம்மிடையே தோன்றும். அதனை நாளாந்தப் பழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் அப்போது தான் நமது வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ள முடியும்
எனக்குறிப்பிட்டார்
இக்கருத்தரங்கில் ஆயுள் கூட்டுத்தான வளர்ச்சி அலுவலர் திரு. மனோகரன், கோத்தகிரி சிண்டிகேட் வங்கி கிராமிய வளர்ச்சி அலுவலர் திரு. ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மற்றும் திரு.எஸ்.இராமகிருஷ்ணன், மன்றத் தலைவர் திரு.எஸ்.திருச்செந்தூரன், இணைச்செயலர் திரு. எம். சந்திரசேகரன், திரு. க. சாந்தகிருஷ்ணன் திரு. ஏ. தமிழ்ச்செல்வன் ஆகியோரும் கருத்துரைகள் வழங்கினர்.
மூன்று நாள் நடைபெற்ற இக் கருத்தரங்கில் கலந்துகொண்டோர் மூன்று குழுக்களாகப் பிரிந்து ஒவ் வொரு தலைப்புக்களில் விரிவாக ஆய்ந்து அறிக்கைகள் சமர்ப்பித்தனர். முதலாவது குழுவுக்கு திரு. எஸ். செபஸ்தியனும் இரண்டாவது குழுவுக்கு திரு. சின்னப்பனும் மூன்ருவது குழுவுக்கு திரு. எஸ்.ஆர். வனச்சந்திரனும், குழுத்தலைவர்களாய் கடமையாற்றினர்.திருமதி இந்திராகாந்தி நன்றி நவின்றார்.
8
கோப்-ஐலண்ட் அறக்கட்டளை கல்வி உபகாரச் சம்பளத் திட்டத்தில் பலன்பெறும் தாயகம் திரும்பிய மாணவ மாணவிகள்.

Page 4
நீலகிரிச் ச
sufófilo
மக்கள் சமுதாயங்களுக்கிடையே ஏற்படும் பொரு ளாதார உறவுகள்தான், அவர்களுக்கிடையே நிலவும் நேசத்தையும், பகைமையையும் நிர்ணயிக்கின்றன. கலாச்சார உறவுகளும், அரசியல் உறவுகளும் முக்கிய மானவை என்ருலும், பொருளாதார உறவுகள் தான் சமூக அடிப்படையை நிர்ணயிக்கின்றன. கலாசாரமும் அரசியலும் பொருளாதார அடிப்படையில் தான்
நிர்ணயிக்கப்படுகின்றன.
நீலகிரியில் ஆதியில் நிலவிய பொருளாதார அமைப்பு சமாதானத்திற்கும் சுபீட்சத்திற்கும், வழிவகுத்தது. தோடர்கள் மந்தை மேய்ப்பவர்கள். பால், வெண்ணையை விற்றலே அவர்களது பொரு ளாதாரம் கோத்தர்கள் கைவினைஞர்கள். கொல்லர் பணியும், தச்சு வேலையும், குயவர் வேலையும், பறை முழங்குவதும் அவர்கள் பணி. பாதுகாப்பும், கானக பொருட்களை திரட்டி விற்றலும் குறும்பர் பணி. இந்த மூன்று பழங்குடி மக்களும் விவசாயத்தை அறியாதவர் கள். தானியங்களுக்காக பிறரையே நம்பியிருந்தார்கள் விவசாயம் தெரிந்தவர்கள் வெளியிலிருந்து வந்தார் கள். அவர்கள் தான் படுகர்கள், தோடர்களும், கோத்தர்களும், படுகர் குடியேற்றத்தை வரவேற்ருர் கள். ஒவ்வொரு கோத்தர் குடும்பமும் பல படுகக் குடும்பங்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒத்துக்கொண்டன அவர்கள் குடியேறி விவசாயம் செய்வதற்கு இடங்கள் ஒதுக்கினர்கள். அவர்களின் விவசாயத்திற்குவேண்டிய கலப்பை, கத்தி, மண்வெட்டி போன்றவற்றைக் கொடுத்தார்கள். அவர்கள் சமைப்பதற்கு பாண்டங் கள் வழங்குகிருர்கள். வீடுகளுக்குத் தச்சு வேலைசெய்து கொடுத்தார்கள். படுகர்களது விழாக்களில் இசை முழங்கினர்கள். இதற்குக் கைம்மாருக படுகர்கள் தானியங்கள் வழங்கினர்கள். இரு சாராருக்கும் இந்த பொருளாதார உறவு வசதியாக இருந்தது. படுகர்கள் கொடுக்கவேண்டிய அளவு தானியங்தைக் கொடுக்கா விட்டாலோ அல்லது வேறு கட்டுப்பாடுகளை மீறின லோ, கோத்தர்கள் அவர்களை ஒதுக்கிவைத்தார்கள். சில சமயங்களில் ஒரு படுக கிராமத்தையே ஒதுக்கி வைத்தார்கள். கோத்தர்களின் உறவில்லாமல் படு கர்கள் விவசாயம் செய்வது இயலாததாக இருந்தது. கலப்பைகளின்றி, கருவிகளினின்றி, நிலமின்றி விவ சாயம் செய்வது எப்படி ?
இந்த சுமுகமான உறவு மற்ற மக்கள் குடியேற்றத் தால் பாதிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் குடியேற்றத் துடனும், சமவெளிப் பகுதியிலிருந்து மற்றமக்கள் குடி யேறிய பிறகு பண்டமாற்றுப் பொருளாதாரம் போய் பணப் புழக்கம் ஏற்பட்டது. பணப்பயிர்ச் செய்கை ஆரம்பித்தது. உருளைக்கிழங்கு விவசாயம் ஐரோப்பி

ாரலிலே - சேயோன் -
y
யர்கள் அறிமுகப்படுத்திய விவசாயம் படுக விவசாயி கள் விவசாயக்கருவிகளுக்காகவும், மற்ற தேவைகளுக் காகவும் கோத்தர்களை எதிர்பார்க்கவேண்டிய அவசிய மிருக்கவில்லை. புதிதாக ஏற்பட்ட கடைவீதிகளில் பொருள்களை விற்ருர்கள், வாங்கினர்கள். பணம் வந்த உடனே போட்டி வந்துவிடும். போட்டி வந்தவுடனே பொருமை வந்துவிடும் பொருமை வந்தஉடனே பகைமை வந்துவிடும். அப்படித்தான் கோத்தர்படுகர் உறவு மாற்றமடைந்தது.
உருளைக்கிழங்கு விவசாயம் நீலகிரி சமுதாய உறவு களிலே ஒரு பாரதூரமான மாற்றத்தை ஏற்படுத்தியது தானியங்கள் பயிர்செய்ய, உழவு மாடுகள் வேண்டும். கலப்பைகள் வேண்டும், சாண எரு வேண்டும் உருளைக் கிழங்கிற்கு இது ஒன்றும் வேண்டாம். உரங்கூட செயற்கை உரந்தான் தேவைப்பட்டது. தானியங்களைவிட மிக அதிகமான நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு பயிர் செய்யலாம். உருளைகிழங்கு குறுகிய காலத்தில் நல்ல விளைச்சளைக் கொடுத்தது. படுகர்கள் பயனடைந்தார் கள். கோத்தர்கள் குன்றிப்போனர்கள். அவர்கள் தொழில் மங்கிப்போனது. உருளைக்கிழங்கு கொடுத்த செல்வ செருக்கால் கோத்தர்கள் விதித்த கட்டுப்பாடு களை படுகர்கள் பொருட்படுத்தவில்லை. உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கை பரவியதால், புல்வெளிகள் குறைந்தன. கால்நடைகளின் எண்ணிக்கை குறைந் தது. கோத்தர்களினதும், தோடர்களினதும் பொரு ளாதார அமைப்பு சிதைந்து அவர்களும் எண்ணிக்கை யில் அருகினர். படுகர்கள் எண்ணிக்கையிலும், பொரு ளாதார வணத்திலும் பெருகினர். இந்தப் பொருளா தாரப் போட்டியில் பழங்குடி மக்கள் தோற்றனர்.
புதிய விவசாயிகள், பணப்புழக்கப் பொருளாதார உறவுகளில் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொண்ட னர். கோத்தர்கள் உருளைக்கிழங்கை ஒரு உணவாக கூடக் கருதவில்லை. அவர்களும் விவசாயம் செய்ய முயன்றனர். ஆனல் தீவிரமாக வளர்ந்த சந்தைப் பொருளாதாரத்தில் அவர்களது பழமை தோய்ந்தது அமைப்புகளும், ஆற்றல்களும் பயன்படாது போயிற்று கோத்தர்களே இரண்டாகப் பிளவுபட்டார்கள். புதிய விவசாய முறைகளை வரவேற்றேரும், எதிர்த்தோரும் என இரண்டாக பிரிந்தனர். இதனல் அவர்களது சமுதாய அமைப்பு மேலும் பலவீனமடைந்தது. இவ்வாறு பழங்குடி மக்களின் அனுசரனையுடன் குடியேறிய படுகர்கள், அவர்களை பொருளாதாரப் போட்டியில் தோற்கடித்து நீலகிரியில் தமது வெற்றிக் கொடியை நிலை நாட்டினர்கள். ஆங்கில ஆட்சியும் அவர்களின் உறவும் படுகர்களின் வளர்ச்சிக்குத் துணைநின்றன.

Page 5
96ÕI I " 5 TIL ) 06I 6ÖT"
நண்டுக்கும் வளையுண்டு
நரிக்கும் பொந்துண்டு
காட்டுக் குருவிக்குக் கூட கூடுண்டு’
ஆனால் இந்த மனித மகன் தலை சாய்க்க ஓர் இடம் இல்லையே!!
ஆம் இந்த இழி நிலையைப் போக்குவதற் கும் நாடற்றவன் என்ற நாமத்தினின்றும் விடுபட்ட தாயகம் திரும்பியமக்களுக்கு வீடற்றவன்' என்ற புதிய நாமம் சூட்டப்பட்டதை நீக்குவதற்கும்தான்" மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் கோத்தகிரி இந்தோ-பூஜீலங்கன் அபிவிருத்தி அறக்கட்டளையின் (ஐலண்ட் அறக்கட்டளை) ஒத்துழைப்புடன் வீடு கட்டும் திட்டத்தை உருவாக்கியது.
சாலை ஓரங்களில் ஒலைக்குடிசைகள் - மலைச் சரிவுகளில் மண்குடிசைகள் - கற்பாறைகளின் மேலே காற்றடித்தால் தூக்கிக் கொண்டு போய் விடுமோ என்று பயப்படும் நிலையில் உள்ள குடிசைகள் - மழை வெய்யிலிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள, இல்லையில்லை இரவிலே மட்டும் தலை சாய்க்க 'வீடுகள் என்ற பெயரில் குடிசைகள். இந்த பரிதாப நிலையை சிறிதளவாவது மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் நமது வீட்டை நாமே கட்டுவோம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
சொந்தமாக இடம் வாங்கி மிகச் சிறந்த முறையில் பெறும் பணச்செலவுகளுடன் வீட்டைக் கட்டி மறுவாழ்வு திட்டத்தின் அடிப்படையில் கட்டிய வீட்டை விலைக்கு வாங்கும் திட்டத்தின் கீழ் 21 வீடுகள் கட்டப்பெட்டு திருச்செல்வ நகரில் (பாக்கிய நகருக்கு அருகில்) கட்டப்பட்டது. கட்டிய வீட்டை வாங்கும் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பிய சிலருக்கு வீடுகளை கொடுப்பதற்காக அரசுக்கு மனுக்களை சமர்ப்பித்தார்கள். மேற்படி வீட்டை வாங்குவதற்கு வேண்டிய சகல தஸ்தாவேஐ"களையும் சமர்ப்பித்தும் உரிய காலத்தில் மனுச் செய்தும் வருடங்கள் தான் கூடிக்கொண்டு இருக்கிறதே தவிர சம்பந்தப்பட்டவர்களுக்கு இதுவரை கடன் கிடைக்கவில்லை! அரசு இயந்திரம் தூங்கி விட்டதா அல்லது ஆமை வேகத்தில் செயல்படுகிறதா? புரியாத புதிர்.
வீடு கட்டுவதில் முற்றிலுமே புதிய அனுபவம். 21 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதன் மூலமாக வீடற்றவன். என்ற நிலை மாறிவிடுமா? எனவே வீடு கட்டுவதில் வேறு முறைகளை நாடினோம்.
மலர்ந்தது சிவகிரி நகர்
"நமது வீட்டை நாமே கட்டுவோம்’ என்ற சிந்தனையை-விழிப்புணர்வை மக்களிடம் வளர்த்து பல கூட்டங்கள்-கலந்துரையாடல்கள் நடத்தி - மக்களை உற்சாகப்படுத்தி கெங்கரை குராகரையில் ஐலண்ட் அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் மலையக மக்

இன்று "வீடற்றவன்"
 ைஎம். சந்திரசேகரன் -
கள் மறுவாழ்வு மன்றம் வீடுகள் கட்டும் பணியைத் தொடங்கியது. வீடுகள் கட்டுவதில் முன்பு ஏற்பட்ட அனுபவங்கள் இங்கு வேறொரு அணுகுமுறையை கடைப்பிடிக்க ஏதுவாக அமைந்தது.
நாமே நேரிடையாக வீடுகட்டுவதில் ஈடுபடாது" அவரவர்களே தங்கள் வீடுகளை கட்டிக் கொள்ள தூண்டினோம். வீடுகளுக்கு தேவையான மரம், கதவு ஜன்னல், ஒடு முதலிய பொருட்கள் கொடுக்கப்பட்டு வீடு கட்டுவதற்கான திட்டங்களையும், ஆலோனைகளையும் வழங்கி வேலையை நேரிடையாக மேற்பார்வை செய்து வீடுகட்டும் பணியில் இந்த gait மச்களை முழுமையாக ஈடுபடுத்தினோம். எமது கனவு நனவாகியது. 58 வீடுகளையும் அவர்களே கட்டிக் கொண்டார்கள். ஒரே வருடத்தில் 58 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 1988 ஆகஸ்ட் 15ம் நாள், இந்திய சுதந்திர தினத்தன்று, 58 குடும்பங்கள் சுதந்திரமாக துங்களின் சொந்த வீடுகளில் குடியேறியதுடன், குரா" கரை என்ற பெயர் *சிவகிரி நகர்’ என பெயர் மாற்றம் பெற்ற அந்த நல்ல நாளை இந்நேரத்தில் நினைத்துப் பார்ப்பதில் ஒரு ஆத்ம திருப்தி,
எப்படி நாங்கள் வீடு கட்டுவது-எங்களிடம் வசதி இல்லையே வீடுகட்டும் வேலை தெரியாதே' என். றெல்லாம் இந்த ஊர் மக்கள், வீடு கட்டும் வேலையில் உற்சாகம் காட்டாது இருந்த போதும், மன்ற பணியாளர்களின் அயராத உழைப்பும், உற்சாகமும், உத்வேகமும் இந்த ஊரில் 58 வீடுகள் கட்டி முடிக்க முடிந்தது. அரசால் கூட, ஒரே வருடத்தில் ஒரு இடத் தில் இவ்வளவு வீடுகளை கட்ட முடியாத போது, மன்றத்தால், மக்களின் பூரண ஒத்துழைப்புடன் இவ்வளவு வீடுகள் கட்டப்பட்டது எதைக் காட்டுகிறது என்றால், மக்களின் ஒத்துழைப்புடன் எதையும் செய்யலாம், எதையும் சாதிக்கலாம் என்பதையே காட்டுகிறது.
அரசு பலருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி வருகிறது. அத்துடன் அரசின் கடமை முடிந்து விடுகிறது. வீட்டுமனைப் பட்டா பெற்ற இந்த ஏழைகள் என்ன செய்வார்கள். எப்படி தங்கள் வீடுகளைக் கட்டிக் கொள்வார்கள். இது ஒரு பெரிய கேள்விக் குறி ? ஒன்னட்டி முத்தமிழ் நகர்
ஆம்! ஒன்னட்டி முத்தமிழ் நகரைச் சேர்ந்த 48 பேருக்கு தாயகம் திரும்பிய சிலருக்கும், * ‘தலித்’ மக்கள் சிலருக்குமாக 48 வீட்டு மனைப் பட்டாக்கள் 1985ல் கொடுக்கப்பட்டது. வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தனவே தவிர, கொடுக்கப்பட்ட இடத்தில் வீடுகள் கட்டுவதற்க்கு, எந்த முயற்சியும் நடந்ததாக தெரியவில்லை. வெறுங்கை முழம் போடுமா? கையில் பணமில்லாத இந்த ஏழைகளுக்கு எப்படி மலையை செப்பனிட்டு வீடுகள் கட்ட )upL+ tHLibو
தொடர்ச்சி 8ம் பக்கம் .

Page 6
இன்றைய மலை
அந்தனி ஜீவா கூறுகி
கொழும்பில் இருந்து வெளிவரும் "கொழுந்து' மாத இதழின் ஆசிரியர் திரு. அந்தணி ஜீவா அண்மையில் தமிழகம் வந்திருந்தார். அவரை "மக்கள் மன்றம் சார்பில் பேட்டி கண்டோம். கலை,இலக்கியம் தொழிற்சங்கம், அரசியல் என்பன பற்றியும் குறிப்பாக இளைஞர்கள் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம்.
அந்தனி ஜீவா மலையக இலக்கிய வளர்ச்சியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். 'ஈழத்து தமிழ் நாடகம்' " அன்னை இந்திரா?" என்ற இரு நூல் களை எழுதியுள்ளார். இவர் ஒரு நாடகாசிரியரும் கூட. தொழிலாள வர்க்கப்பிரச்சனை பற்றிய இவரது ** அக்கினிப் பூக்கள்’ எனும் நாடகம் பன்னிரண்டு முறை மேடையேறியுள்ளது. 1978ம் ஆண்டு இவர் தயாரித்து நெறிப்படுத்திய 'அலைகள்' எனும் நாடகம் இரு விருதுகளைப் பெற்றுள்ளது. மலையக கலை இலக்கியப் பேரவையின் செயலர் பொறுப்பில் இருக்கும் இவர் மலையக எழுத்தாளர்களின் படைப்புக்கள் நூலுருவில் வெளிவர வேண்டும் என்ற அவாவுடன் செயற்பட்டு வருகிறார். இவர் சார்ந்துள்ள மலையக கலை- இலக்கியப் பேரவை இதுவரை ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது "மக்கள் பன்றம்’ சார்பில் இவரை பேட்டி காண்கிறார் எல். பூஜீஸ்கந்தராஜா - ஆர்)
'கொழுந்து ஆசிரியர் திரு. அந்தனி ஜீவா.
 

O யக் கை பேட்டியும் கட்டுரையும்
III  ைறுநீ வ
கேள்வி :- எழுத்துத் துறையிலே குறிப்பாக மலையக இலக்கிய வளர்ச்சியில் அதிக ஈடுபாடு
காட்டும் தாங்கள் மலையக இலக்கிய வளர்ச்சி பற்றி
என்ன கூற விரும்புகிறீர்கள்?
பதில் :- மலையக இலக்கியம் அறுபது ஆண்டு வரலாற்றைக் கொண்டது. ஈழத்து இலக்கிய வரலாற் றோடு ஒப்பிடுகையில் தனித்துவம் வாய்ந்ததாகத் திகழ் கிறது. 1960 க்குப்பின் மலையகத்தில் புதுமைப் பார் வையும், புதிய வீச்சும் தோன்றின. புதுமை விரும்பிய பல இளம் எழுத்தாளர்கள் தோன்றினர். இவர்களுக்கு தூண்டுகோலாக இருந்தது சோகம் நிறைந்த மலையக வரலாறு என்று தான் கூற வேண்டும். ஒரு சில இயக்கங்களும், பத்திரிகைகளும் இவர்களை உற்சாகமூட்டி உரமிட்டன. அறுபதுகளில் ஏற்பட்ட வளர்ச்சி எழுபதுகளில் ஓர் மந்த நிலையை அடைந்து மீண்டும் எண்பதுகளில் புத்துயிர் பெற்றது. அறுபதுகளில் தோன்றியது போன்று எண்பதுகளிலும் புதிய எழுத்தாளர்கள் தோன்றியுள்ளனர். இதுவே மலையக இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு நல்ல அறிகுறி.
கேள்வி :- மலையக எழுத்தாளர்களின் படைப்புக்கள் அனைத்தும் நூலுருவில் வெளிவருவதில்லை. ஆனால் அவ்வப்போது இலங்கையின் பிரபல தமிழ்ப் பத்திரிகைகள் மலையக தமிழ் எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துத் தந்தன. குறிப்பாக * தோட்ட மஞ்சரி' 'குறிஞ்சிக்குரல் , “மலையக மாருதம்‘ என்ற பகுதிகளைக் குறிப்பிடலாம். இப். போதைய நிலை என்ன ? மலையக எழுத்தாளர்களின் படைப்புக்கள் நூலுருவில் வெளிவர மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகள் என்ன ?
பதில் :- மலையக எழுத்தாளர்களுக்கு போதிய பிர
சுர களம் இல்லாததால் அவர்களே பாதையும் வெட்டி பயணஞ் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இந்நிலையை மாற்றியமைக்க 1985ல் மலையக வெளியீட்டகம் என்ற அமைப்பை நிறுவி இதுவரை ஒன்பது நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மலையக எழுத்தாளர்களின் படைப்புக்கள் நூலுருவில் வெளிவர இவ்வமைப்பு முயற்சி செய்யும். நாம் வெளியிடும் "கொழுந்து மாத இதழில் மலையக படைப்புகளுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும்கொடுத்து வருவதோடு மூத்த எழுத்தாளர்களின் படங்களையும், அவர்களது வரலாற்றையும் வெளியீட்டு அவர்களை கெளரவப்படுத்தியும் வருகிறோம்.

Page 7
கேள்வி :- இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் ""குன்றின் குரல்’ என்ற நிகழ்ச்சியை மாதமிரு முறை நடத்தியது. இது தொடர்கிறதா ? இது போன்ற மலையக மண்வாசனை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் ரூபவாஹினியில் இடம் பெறுகின்றனவா ?
பதில் :- ஆரம்ப காலத்தில் இருந்த நிகழ்ச்சியின் தரம்
இன்றில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அரசியல் தலையீடு காரணமாக தரம் குன்றிவிட்டது. ரூபவாஹினி கூட மலையக மக்களுக்கு போதிய வாய்ப்புகள் தருவதில்லை. ஆனால் வானொலியில் திறமைமிக்க மலையகக் கலைஞர். களுக்கு வாய்ப்பு நல்கப்படுகின்றது.
கேள்வி :- மலையக நகர்ப்புறங்களிலும் தோட்டப் புறங்களிலும் நடைபெறும் திருவிழாக்களின் போது அதிக கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. குறிப்பாக கரகாட்டம், காவடியாட்டம், காமன் கூத்து போன்றன. இவைகள் தொடர்கின்றனவா ? அவற்றின் வளர்ச்சி குறித்து ஏதேனும் அக்கறை காட்டப்படுகின்றனவா மேடைநாடகங்கள் எந்நிலையிலுள்ளன ?
பதில் :- படிப்படியாக மறைந்து வருகின்றது என்று
தான் சொல்ல வேண்டும். அதற்கு நாட்டின் தற்போதைய அரசியல் நிலை ஒரு முக்கிய காரணம். இரவில் நடைபெற்ற திருவிழாக்கள் தற்போது பெரும்பாலும் பகலிலேயே நடைபெற்று வருகின்றது. நாடகத்துறையிலும் வளர்ச்சி குன்றிவிட்டது. முன்னர் நடந்தது போன்ற இலக்கிய கூட்டங்கள் கூட இப்போது நடைபெறுவதில்லை. அத்தி பூத்தாற் போல் ஓரிரு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கேள்வி :- மலையகத் தொழிற்சங்கங்களின் நிலை, போக்கு என்ன? தோட்டத் தொழிலாளர்களின் மத்தியிலும், குறிப்பாக இளந் தலைமுறையினரிடையும் அவைகள் எவ்விதம் வரவேற்கப்படுகின்றன, நோக்கப்படுகின்றன ?
பதில் :- மலையகத் தொழிற்சங்கங்கள் எவ்வாறு
கடந்த பல தசாப்தங்களாகச் செயற். பட்டனவோ அதே நிலையில் தான் இன்னும் செயற் பட்டு வருகின்றன. இவர்களது அணுகு முறையில் மாற்றம் இல்லாததால் தொழிலாளர்கள் இன்னும் தொழிற்சங்கத்தை நம்பியே தம் வாழ்நாளை கழித்து கொண்டிருக்கிறார்கள். மலையக இளைய தலை முறை யினர் தொழிற்சங்கங்களின் மீது அதிருப்தியை வளர்த்து வருகிறார்கள். புதிய சிந்தனையோடு புதிய வேகத்தோடு அரசியல் ஞானம் பெற்ற இளைஞர் கூட்டமொன்று மிக வேகமாக மலையகத்தில் வேரூன்றி வருகின்றது. மலையக மக்களின் கலை-இலக்கிய வளர்ச்சியில் கூட தொழிற்சங்கங்கள் அதிக அக்கறை காட்டுவது கிடையாது.
கேள்வி :-இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு தாயகம்

திரும்ப வேண்டிய நிலையிலுள்ள மக்களின் மனோநிலை என்ன? அவர்களுக்கு இந்தியாவர விருப்பமா ? அங்கு அவர்களின் வேலை வாய்ப்புகள் அடிப்படை வசதிகள் எந்நிலையில் உள்ளது ?
பதில் :- இந்தியக் குடியுரிமை பெற்று தாயகம்
திரும்ப வேண்டிய நிலையிலுள்ளவர்களில் பெரும்பான்மையினர் இந்தியாவுக்கு வர விரும்புவதாக இல்லை. இதற்குக்காரணம், ஏற்கனவே இங்கு வந்து ஒழுங்காக மறுவாழ்வு கிட்டாமையால் அவதி. யுறும் மக்களைப் பற்றியும், குறிப்பாக கொத்தடிமை நிலையில் வாழ்வோரைப் பற்றிய பல செய்திகளுமேயாகும். தமிழக அரசு புதிய தேயிலைத் தோட்டT. களை உருவாக்கி அதில் அவர்களை வேலைக்கமர்த்தி வீட்டு வசதிகள் அளிக்கப்பட்டால ஒரு வேளை வர எண்ணலாம். இளைஞர்கள மததயல் ஏறபட்டுள்ள புதிய சிந்தனைகள் கூட அவர்கள் இந்தியா வர விரும் பாமல் ஆக்கி இருக்கலாம். அவர்களுக்கு வேலை வாய்ப்பு, அடிப்படை வசதிகள் தோட்டத்துக்கு தோட்டம் மாறுபடுகின்றன.
கேள்வி :- மலையகத் தோட்டப்புற மக்கள் பலருக்கு
குடியுரிமை வழங்கப்பட்டு வாக்களிக்கக்கூடிய நிலையிலே தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் தெளிவு பெற்றிருக்கின்றார்களா ? அல்லது இன்னும் தொழிற்சங்கத்தை நம்பியிருக்கும் நிலை தொடர்கிறதா ? அல்லது புதிய திருப்பங்கள் ஏற் பட்டுள்ளனவா ?
பதில் :- முதியோர்கள் மத்தியில் அரசியல் தெளிவு இல்லை. எனினும் படிப்படியாக அவர்கள் விழிப்புணர்வு பெற்று வருகின்றார்கள். நாங்களும் இந்த மண்ணுக்குரியவர்கள் என்ற படித்த இளைஞர்கள் மத்தியில் எற்ப்பட்டுள்ள உணர்வு மலையக மக்களை சிறுபான்மை இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோசம் எழுப்பும் ஓர் நிலையை ஏற்படுத்தியுள்ளது. மலையக இளைஞர்களால் எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் எற்படும் என்பது உண்மை அத்தகைய மாற்றத்தை விரும்பும் இளைஞர் குழாம் ஒன்று கல்வித் துறையில் மலையகத்தை முன்னேற்ற பல அர்ப்பணிப். புகள் செய்து வருகின்றனர்.
கேள்வி :- மலையக இளைஞர்கள் எந்தத் தாகத்துடன், இலட்சியத்துடன் செயலாற்றி வருகின்றனர் ?
தில் :- மலையக இளைஞர்களின் புதிய உத்வே கத்தைப் பற்றி ஏற்கனவே ஆங்காங்கே குறிப்பிட்டு விட்டேன். நாமும் இம்மண்ணுக்குரியவர்கள் என்ற உணர்வோடு செயற்படத் தொடங்கிவிட்டதால் அவர்கள் மலையக மக்களின் நிலை உயரவும், அரசியலில் ஒரு ஸ்திரத்தன்மையை எற். படுத்திக் கொள்ளவும் பாடுபடுகின்றார்கள். 章

Page 8
முதல் பக்க தொடர்ச்சி இயற்கையின் சீற்ற
சொந்த லாபம் மட்டும் கருதியே செய்யப்படும் விவசாய முறைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். விவசாயி களின் அறிவை உயர்த்துவதோடல்லாமல், பொது நல அக்கறையுடன் விவசாயம் செய்வோருக்கு அரசு சிறப்பு சலுகைகள் வழங்கவேண்டும், தொழில் நுணுக்க உதவி களும் வழங்கவேண்டும்.
நீலகிரியில் பலர் ஏழைகளை ஒடுக்குவதிலும், அடக்குவ திலும் தான் அக்கறை காட்டுகிருர்களே அல்லாமல், ம ண் ணை ப் பாதுகாக்க, இயற்கையைப் பாதுகாக்க செயற்படுவதில்லை .இந்த சிறுமைகளை எல்லாம் கண்டு தான் இயற்கை சீற்றம் கொள்கிறதோ தெரியவில்லை!
நமது நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் இத் தகைய இயற்கைச் சீற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடி யாமல் இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறர் கள்.
அண்மையில் ஆந்திராவில், அதற்கு முன்னர் பங்ளா தேஷிலும், புயலாலும், சூருவளியாலும் எண்ணற்ற மக்கள் பாதிக்கப்பட்டார்கள். நில நடுக்கத்தால் மெக் சிகோ, சீனு, ரஷ்யா ஆகிய நாடுகளில் இலட்சக்கணக்
ஐந்தாம் பக்க தொடர்ச்சி அன்று நாடற்றவ
வீட்டு மனைப் பட்டா அரசால் கொடுத்து விட்டால் வீடு உருவாகிடுமா? பல தலைமுறைகளாக அடிமைத் தளையிலிருந்து ஆண்டான் கொடுத்த லயம் என்ற 10-சதுர அடி கொண்ட அறைகளிலே முடங்கிக்கிடந்த இந்த மனித கூட்டத்திற்கு சொந்த வீட்டைப் பற்றி எப்படி சிந்தனை வரும்!
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெற்ற பட்டாவை வைத்துக் கொண்டு என்ன செய்வது என விழித்துக் கொண்டிருந்தார்கள் ஒன்னட்டி முத்தமிழ் நகர மக்கள். நமது மன்றம் இம் மக்களின் வீடு கட்டும் பிரச்" சனையை தீர்த்து வைக்க முன் வந்தது. பல பேச்சு வார்த்தைகள் - கலந்துரையாடல்கள் - கூட்டங்கள் நடத்தப்பட்டன. முடிவில் வீடு கட்டுவதற்கு ஆகும் செலவில் 50% சத வீதத்தை 5 வருடங்களில் சிறிது சிறிதாக சிறு சேமிப்பின் மூலம் இந்த மக்கள் திருப்பி செலுத்துவதெனவும் வீடுகள் கட்டுவதற்கு தேவையான உழைப்பை இந்த ஊர் மக்களே தருவதென்று முடிவெடுத்து பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்தவர்களை ஒன்று சேர்த்து முத்தமிழ் நகர மக்களுக்கு வீடுகள் கட்டுவதற்சாக "சிரமதான" அடிப்படையில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
மலைய மக்கள் மறுவாழ்வு மன்ற இவ்விதழ் முதல் தெ
வெளியீடு : மலையக மக்கள் மறுவாழ்வு மன்ற தபால் பெட்டி எண். 2758, கோவை-641

கான மக்கள் உயிரிழந்தார்கள். எரிமலையினல் ஜப்பா னிலும், மெக்சிகோவிலும் ஏராளமானேர் இறந்தார் கள். இவ்வாறு வெள்ளம், புயல், நிலநடுக்கம் ஆகிய இயற்கை உபாதைகளினல் ஆண்டு தோறும் இலட்சக் கணக்கானேர் உயிரிழக்கிருர்கள். கோடானு கோடி பொருட்சேதம் ஏற்படுகிறது.
1990-ம் ஆண்டு முதல் இயற்கைச் சீற்றங்களைத் தவிர்க்கும் பத்தாண்டாக , சர்வதேச இயக்கங்கள் பிர கடனப்படுத்தியுள்ளன. இயற்கை ச் சீற்றங்களைத் தவிர்க்கும் முதல் உலக மாநாடு 1991 பிப்ரவரி மாதத்தில் புதுடெல்லியில் நடைபெற உள்ளது.
நம்முடைய, விஞ்ஞான தொழில் நுணுக்க அறிவினை இவ்வாறு இயற்கைச் சீற்றங்களைக்குறைப்பதற்கு பயன் படுத்திக் கொள்ளவேண்டும். இப்பொழுதெல்லாம் வானிலை ஆராய்ச்சியின் வளர்ச்சியினல் முன்கூட்டி எச் சரிப்பதன் மூலம் உயிர்ச்சேதங்களை குறைக்கமுடிகிறது. அதேபோன்று விஞ்ஞானரீதியான பயிர்ச் செய்கை மண் அரிப்புத் தடுப்பு, இயற்கைப் பாதுகாப்பு, மரழ் வளர்த் தல், புல் வளர்த்தல் போன்ற முறைகளினல் கெத்தை போன்ற துயரங்கள் தோன்ருமல் தடுக்கலாம்.
ன் இன்று வீடற்றவன் .
முத்தமிழ் நகர் மக்களின் பூரண ஒத்துழைப்புடன் வீடுகள் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது, ஆரம்பத்தில் உழைப்பை முழுமையாக கொடுத்த இவர்கள்’ நாளாக நாளாக அது குறைந்து கொண்டே வந்தது. "கழுதை தேய்ந்து கட்டெறும்பானது" என ஒரு பழமொழி உண்டல்லவா? அந்த நிலைதான் இங்கு நடைபெற்றது. சிறு சேமிப்பின் மூலம் வீட்டிற்குரிய பணத்தை கட்டுவதாக கொடுத்த உறுதிமொழிகள் ஏட்டளவிலே முடிந்து விட்டது. இறுதியில் கூலி கொடுத்து ஆட்களை அமர்த்தி வீடுகளை கட்டி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.வீடுகள் கட்டும் திட்டத்தில் இது மூன்றாவது இடமானாலும் எமது அனுபவங்கள் இந்த துறையில் கூடியிருந்தாலும் இந்த முத்தமிழ் நகர மக்கள் வீடு கட்டும் பணியின் முக்கியத்துவத்தை உணராதபடியால் பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதையும் மறக்க முடியவில்லை. நிலைமை இப்படி இருந்தும் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இந்த முத்தமிழ் நகர் மக்கள் முத்தான வீடுகளில் குடியிருந்து வருவது மனமகிழ்வைத் தருகிறது. மலைச் சரிவிலே அமைந்துள்ள இந்த வீடுகள் வரிசை வரிசையாக பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி தருகிறது.
- தொடகும் - வீடு கட்டும் பணி பற்றிய வரலாறு ாடராக வெளிவருகிறது
ம் , இல, 187, இராஜா அண்ணாமலைத் தெரு,
0 1 1. (தனிச் சுற்றுக்கு மட்டும்)