கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1991.03-04

Page 1
bas 2 பங்குனி - சித்
தேர்தல் 3
-صير
தேர்தல்கள் அடிக்கடி வருகிற காரணத்தினால் பலர் திக்கு முக்காடிப் போகிறர்கள். இம்மாதம் நடை பெறவிருக்கும் தேர்தல் மிக அவசரமாக முடிவு செய்யப்பட்டதால் ஆரசியல் கட்சிகளும், அரசியல் வாதிகளும் திகைத்துப் போனர்கள். இந்திரா காங்கிரஸ் கூட அவ்வளவு விரைவில் மக்களை சந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. பாரதீய ஜனதா , ஜனதா தள் ஆகிய கட்சிகளே பொதுத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென்று ஆர்வங் கொண்டிருந்தன. தேர்தலை இப்பொழுது நடத்தவே கூடாது என்று ஜனாதிபதியிடம் தூது போன அரசி
யல் வாதிகளும் உண்டு. ம க்க ளி ன் வாக்கு பலம்
பெற்று, ஆட்சி பீடம் ஏறிய பின்னர் தான் தோன்றித் தனமாக நடந்து கொள்ளும் அரசியல் வாதிகளுக்கு நம் நாட்டில் பஞ்சமில்லை. பொதுவாகவே மக்கள் அரசியல்வாதிகளை அவநம்பிக்கையுடன், அசூயை யுடனும் நோக்கின ம் அரசியல் வாதிகள் இன்றி ஆட்சி இல்லை 6 ற காரணத்தினல் ஏதோ ஒரு அரசியல் வாதியைா, அரசியல் கட்சியையே நம்பித் தான் ஆக வேண்டி ய் நிலையில் உள்ளார்கள். யாரை நம்புவது? அதுதான் இன்றைய அரசியல் கேள்வி.
இன்றிருப்பவர்கள் யாரையும் மக்கள் அவ்வளவு
நம்ப மாட்டார்கள் என்று அஞ்சியோ, என்னவோ,
இறந்த தலைவர்கள் பெயரைச் சொல்லி வாக்குப்
பிச்சை கேட்கிறார்கள். எம். ஜி. ஆர். பெயரைச்
சொல்லியும், இந்திரா காந்தி பெயரைச் சொல்லியும்
அம்பேத்கார் பெயரைச் சொல்லியும், காமராஜர்
فر
 

பெயரைச் சொல்லியும், அண்ணா பெயரைச் சொல்லி
யும் வாக்கு கேட்கிருர்கள். இப் பெயர்களுக்குரிய பெருந்தலைவர்கள் அனைவரும் மக்களின் அன்பை பெற்று, அருஞ்சாதனைகள் புரிந்தவர்கள்தான். ஆனால் அந்த பெருந்தலைவர்கள் மறைந்து விட்டார் களே!,
வாழுந் தலைவர்களின் சாதனைகளும், திறமை களுந்தானே முக்கியம்? ஏனென்றால் தேர்தலிலே நாம் தேர்ந்தெடுக்கப் போவது ஒரு முதலமைச்சரையும் ஒரு பிரதமரையுந்தான். மற்றவர்களெல்லாம் இந்தத் தேர்தலுக்கு உதவுவதற்காகத்தான்.
அப்படி நோக்கும் பொழுது தமிழகத் தி லே இரண்டு பேர் மட்டு மே முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுகிறர்கள். நமது அடுத்த முதலமைச்சர் ஜெயலலிதாவா, கருணுநிதியா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுகள் விடை பகரும்.
இந்தத் தேர்தலில் மூன்று கூட்டணிகள் மோது கின்றன. திமுக-தேசிய முன்னணி கூட்டணி. அதிமுக காங்கிரஸ் கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி, இதர கட்சிகளாக பாரதீய ஜனதாவும் சுயேச்சைகளும் களத்தில் நிற்கின்றனர். இந்த கூட்டணிகளை விட்டால் மற்றைய வேட்பாளர்கள், அதிருப்தி களின் பிரதி பலிப்பாகவும், ஜ ன நா ய கத்  ைத க் கொச்சைப்படுத்தும் கோமாளிகளாகவுமே இருப்பார்
தொடர்ச்சி 4 ம் பக்கம் .
ਕs

Page 2
தாயகம் திரும்பியே அரசு அறிவிட்
இந்திய அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ்
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கும் பர்மா அகதிகளுக்கும் வழங்கப்பட்ட க ட ன் க ள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக ! , 8, 88 அன்று எம்.எஸ்.1153 பொது (அகதிகள் மறுவாழ்வு) துறை என்ற அரசாணைமூலம் மத்திய அரசு அறிவித் திருந்தது. தள்ளுபடி, செயல் முறைகள் பற்றி மறு வாழ்வுத்துறை தற்போது விரிவாக அறிவித்துள்ளது.
1.4, 1974 முதற்கொண்டு 31.3, 84 வரையிலான பத்த்ாண்டு காலத்தில் வியாபாரக் "கடன்கள், வீட்டுக் கடன்கள், நிலக் காலனித்திட்டம், விவசாய நிலக் கொள்வனவுத் திட்டம், சொந்த நிலத் திட்டம் ஆகிய எந்த மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கடன் பெற் றிருந்தாலும் 1.4:85 அன்று நிலுவையாக உள்ள கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். ཞུ་ மேற்படி கடன்கள், தாயகம் திரும்பிபீோரின் ۔۔--معزعہ குடும்ப அட்டைகள், நிலப் பட்டாக்கள் மற்றும்
芝/H
நஷ்ட ஈடு கிடைத்தது
கூடலூர் சூண்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் முத்தையா இவரது மனைவி கருப்பாயி 2 -8-90 அன்று சேரன் போக்குவரத்துக் கழக பேருந்தில் விபத்துக்குள்ளாகி காயமடைந்தார். இவர் பல தடவை முயன்றும் எவ்வித நஷ்டஈடும் கிடைக்க வில்லை இறுதியில் கூடலூர் மன்றத்தின் தலையீட்டின் காரணமாக ஆடந்த 25-3-91 அன்று ரூபாய் ஐநூறு நஷ்டஈடாக கிடைத்தது. திருமதி கருப்பாயி மன்றத் துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மீட்கப்பட்ட பெண்
கூடலூர் செம்ப்ாலாவைச் ச்ேர்ந்த செல்லம்மாள் என்ற பெண்ணை கோழிபபாலத்தில் வாழ்ந்த ரவிச் சந்திரன் திருமண்ம் செய்திருந்தார். இரு மாதங்களில் தன் சொந்த ஊரான கேரளாவிலுள்ள மலப்புரத் துக்கு அழைத்து செல்வதாக கூறிய ரவிச்சந்திரன் செல்லம்மாளை கூடலூரில் கைவிட்டுவிட்டு தலை மன்றவானார். கூடலூர் காவல் துறையின் உதவி யுடன் பாண்டிச்சேரி நைனார் மண்டபத்திலுள்ள குழந்தைகள் நலக் காப்பகத்தில் இப்பெண் சேர்க்கப் பட்டார். பெண்ணின் பெற்றோர்கள் கூடலூர் மன். றத்துக்கு சொடுத்த புகாரின் பேரில் கடந்த எட்டு மாதங்களாக பன்றம் தொடர் நடவடிக்கை எடுத்து தற்போது 9-3-91 அன்று செல்லம்மாள் அவரின் oபற்றே! பீடம் ஒப்படைக்கப்பட்டார் கைவிட்ட கணவனுக்கு எதிராக செல்லம்மாள் வழக்குத்தொடர ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ார் கடன் தள்ளுபடி பின் சுருக்கம்
ஆவணங்களை அடமானமாகப் பெற்றே வழங்கபட்டன. எனவே, தள்ளுபடி செய்யப்பட்ட கடன்தாரர் களின் மேற்கண்ட ஆவணங்களை உடனடியாக உரிய வர்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும். இதற்குரிய ஆணை மறு வாழ்வுத்துறை இயக்குநரால் 22. 11:90 தேதியிட்ட எண் 3772 ஆர். எச். 3/89, 6 பொது (மறுவாழ்வு)த் துறை மற்றும், 4.8.90 தேதியிட்ட எண். டி2, 14509/90 ஆகிய கடிதங்களின் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
. 1.4.74 முதல் 31.3.84 வரையில் மறுவாழ்வுக் கடன்கள் பரிந்துரைக்கப்பட்ட, தாயகம் *திரும்பிய மக்கள் உடனடியர்க சம்பந்தப்பட்ட ஓட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி, தம்முடைய எல்லா ஆவ்ணங்களையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு மலை யக மக்கள் மறுவாழ்வு மன்றம் அறிவுறுத்துகிற்து.
ஒற்றுமையை நிலை நாட்டுவோம்
அருமைத் தோழர்களே,
T நீலகிரி பாவட்டத்தில் ஒதுக்கப்ப்ட்ட மக்களிடை
யேயும், ஆதிவாசி மக்களிடையேயும் பணிபுரியும் சமூக
சேவை இயக்கங்களும், மாவட்ட ஒடுக்கப்பட்ட மக்க
ளும், மாவட்ட ஆட்சியாளர் மாண்பு மிகு அம்பேத்கார்
ராஜ்குமார் திடீர் மாற்றம் செய்யப்பட்டதனால் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். -
தேர்தல் விதிமுறைகளுக்கு விரோதமாகவும், சமூக விரோதிகள், ஆதிக்க வெறியர்களின் துரண்டு தலினாலும் இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமாயிருந்த சக்திகள், இடமாற்ற செய்தி கேட்ட உடனே வெடிகள் கொளுத்தியும், இனிப்பு வழங்கியும் ஆரவாரித்தி க்கிறார்கள்.
ஏழைத்தோழனே, ஒடுக்கப் ட சகோதரனே உனக்கு எதிரான இந்த சக்திக்கு உன் பதில் என்ன? உனது துயர் துடைக்க இரவு பகலாக உழைத்த ஏழை பங்காளன், நேர்மையின் திலகம், உண்மைத்தியாகி, நமது மாவட்ட ஆட்சிச்சுடர் அம்பேத்கார் ராஜ்குமாருக்கு நாம் செய்யப்போகும் கைமாறு என்ன?
மக்கள் இயக்கங்கள் ஒன்று கூடி இந்த அநாகரிக, வஞ்சக இடமாற்றத்தைக் கண்டித்து குரல் எழுப்பு வோம். நமது ஒற்றுமையை நிலைநாட்டுவோம்.
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்
நீலகிரி

Page 3
3
கூடலூரில் தமிழ்ப் ம.ம.ம, மன்ற கூடலூர் கிளை 14-4-91 அன்று ஞாயிற்றுக்கிழமை கூடலூர் காந்தி திடலில் தமிழ்ப் புத்தாண்டு விழாவை நடத்தியது. மாலை 4.30க்கு விழா நிகழ்ச்சிகள் தமிழ் வாழ்த்துடன் தொடங்கின.
கூடலூர் மன்ற துணைத்தலைவர் திரு. சத்தியசீலன் விழாவிற்கு தலைமை வகித்தார்.
முதலில் ஆமைக்குளம் திரு. வடிவேலு வாத்தியார் தலைமையிலான மக்கள் இசைக்குழுவினரின் மன்றப்பாடல்களும் மற்றும் விழிப்புணர்வுப் பாடல் களும் இசைமழையைபொழிந்து கூடலூர் மக்களுக்கு கிளுகிளுப்பை ஊட்டின. ஒருமணி நேர இசை வெள்ளத்தின் பின் 5.30. க்கு மன்றக்கலைக்குழுவினரின்நாடகங்கள் இடம்பெற்றன. \ எம். எல். ஏ. யைக் காணோம், விரட்டி அடிப்போம், நாற் காலி, ஒரு கேள்வி, ஆகிய நான்கு நாடகங்களும் விழிப்புணர்வுப் பாடல்களும் இடம் பெற்று நமது கலைஞர்களின் கலைநயத்தை வெளிபடுத்தின. கூடலூர் மற்றும் கோத்தகிரி பிராந்திய கலைக்குழுவினர் இணைந்து இந்நாடக நிகழ்ச்சியை நடத்தினர். மாவட்ட கலைக் குழுத்தலைவர் திரு. அரசன், கோத்தகிரி பிராந்திய கலைக்குழுத் தலைவர் திரு. க. பாலசுப்பிரமணியம் கூடலூர் பிராந்திய கலைக்குழுத்தலைவர் திரு கலாநிதி, கூடலூர் இளைஞரணிச் செயலாலர் திரு. சக்தி வேல் ஆகியோர் நாடகங்களை ஏற்பாடு செய்தனர் தாங்களும் பங்கெடுத்துக் கொண்டனர். பொது மக்கள் குழுமியிருந்தும், கட்டிடமாடிகளிருந்தும் ஆரவாரித்து வரவேற்று மகிழ்ந்தனர். நாடக முடிவில் பொதுமக்கள் சிறு நன்கொடைகள் அளித்தனர். மொத்தம் ரூபா. 51/- சேர்ந்தது. ,
மாலை 6.30க்கு ‘அழுகின்ற கானகங்கள் என்ற தலைப்பில் கவியரங்கம் தொடங்கியது. அதற்குமுன் சிறப்புரையாற்றிய கூடலூர் பிராந்திய செயலாளர் திரு. எம். சந்திரசேகரன் அவர்கள் மன்றத்தின் நோக் கங்கள் செயற்பாடுகள் பற்றி விளக்கினார். ‘‘மன்றம் இனவாதமுடையது அல்ல. என்பதை இக்கவியரங்கம்
ஆதிவாசிக
'நீலகிரி ஆதிவாசி மக்கள் முன்னேற்ற சேவா சங்கம்' என்ற பெயரில் பழங்குடி மக்களுக்கான சங். கம் ஒன்று கோத்தகிரியை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதுமுள்ள குறும்டர், இருளர், முடுகர், சோலைகள் ஆகிய பழங் குடியினங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிக மானோரை அங்கத்தினர்களாகக் கொண்டு செயற் படும் இச்சங்கம், பழங்குடி மக்களின் கல்வி, குடி யிருப்பு மற்றும் பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. அண்மையில் மலையக மக்கள் மறு வாழ்வு மன்றத்தின் ஒத்துழைப்பை நாடி வந்த இச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களிடம் மன்றத்

புத்தாண்டு விழா
நிரூபிக்கிறது. நாம் மலையாள கவிஞர்களையும் இணைத்துக்கொண்டுள்ளோம்' என்றார் அவர். கூடலுார் வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாதவகையில் முதன்முதலாக கவியரங்கம் இடம் பெறுவது பற்றியும் அதுவும் நமது மன்றம் நடத்துகிறது என்பது பற்றியும் தான் மிகவும் பெருமைபடுவ தாக அவர் குறிப்பிட்டார்.
கவியரங்கத்தை வாழ்த்தி கூடலுார் வழக்கறிஞர் திரு.அருணகிரி வாழ்த்துரை வழங்கினார். 6.45.க்கு "அழுகின்ற கானகம் மன்ற இளைஞர் வளர்ச்சி அலுவலரும் கவிஞருமான திரு. வீராபாலச்சந்திரன் தலைமையில் தொடங்கியது இ க்க வி ய ர ங் கில் பல்துறைகளைச் சேர்ந்த 12 கவிஞர்கள் கலந்து கொண்டு இயற்றமிழின் இன்பவெள்ளத்தை அள்ளிப்பொழிந்தார்கள். புலவர் ராஜேந்திரன், அன்வர்சாஜி, எம். என். கந்தையா, மணியரசன், எம்.என் சந்தானம், வண்ணச்சிறகு, ஆர். விஷனுதாசன், மைக்கேல், திருச்செல்வம், ஆகிய கவிஞர்கள் தமிழில் கவிதை ப்டித்தனர். ஜி. கே. என்ற கவிஞரின் தமிழ்க் கவிதைக்கு அவர் நேரில் வர இயலாத காரணத்தால் திரு. முருகேசன் குரல் கொடுத்தார். திரு. கே. ரகு" நாதன், திரு. கிருஷ்ணகுமார் ஆகிய இரு கவிஞர்" களும் மலையாளக் கவிராகம் இசைத்தனர். புதிய மணிப்பிரவாளம் போல தமிழும் மலையாளமும் இணைந்து சுடலுாரில் கவிதை ஒளி கமழ்ந்தது சிறப்பாக இருந்தது. கவியரங்கம் இரவு 9.00. மணிக்கு நிறைவு பெற்றது. ’ . . .
திரு. எம். சந்திரசேகரனின் நன்றி யுரை ை யத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் விழா முடிவடைந்தது மொத்தத்தில் வடிவேலு வாத்தியார் தலைமையிலான w இசைத்தமிழும் மன்றக்கலைக்குழுவின் நாடத்தமிழும்
கவிஞர் வீராபாலச்சந்திரனின் தலைமையிலானஇயற்றமிழும். இணைந்து கூடலுாரில் முத்தமிழ் முழக்கத்தை எழுப்பின. கூட்டவே, மலையாளமும் இணை ந்து பலாச்சுளையில் தேனை நிரப்பியது.
தின் சார்பில் பேசிய திரு. வீரா, பாலச்சந்திரன் Ln6it - றத்தின் உறுப்பினர்களாக மட்டுமின்றி, முழு ஒத்துழைப்பு கொடுக்கும் மக்களாகவும் ஆதிவாசிகள் இருக்கிறார்கள், என்பதை தெரிவித்துக் சொண்ட தோடு ஆதிவாசிகளின் நலன்கள், உரிமைகள் குறித்த அக்கரையில் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் ஒருபோதும் பின்தங்கி விடாது என்றும் உறுதியளித் தார். கலெக்டர் மாற்றத்தை எதிர்த்து நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் இச்சங்கத்தினர் கலந்து கொண்டு ஆதரவளித்தனர் என்பது குறிப்பிட த் தக்கது.

Page 4
தேர்தல் சபலங்கள் முதல் பக்க தொடர்ச்சி
கள். தமிழ் நாட்டில் உள்ள 234 சட்ட சபை தொகுதி களுக்கும் 2834 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார் கள் எத்தனை பேருக்கு உன்மையான அர சி யல் ஆர்வம் இருக்கிறது, எத்தனை பேர் தேர்தல் சபலிங். களினல் அலைக் கழிக்கப்பட்டு தேர்தல் களத்தில் குதிக்கிருர்கள் என்பது ஆய்வுக்குரியது தீவிரமான வேட்பாளர்களை விட சபல வேட்பாளர்கள் தான் அதிகமாக களத்தில் நிற்கிருர்களென்ருல் நமது ஜன நாயக அரசியலில் எங்கேயோ குறைபாடு இரு க்கிறது
என்பது உண்மை.
கட்சிகளில் ஜனநாயகம் இல்லை. கட்சித் தலை வர்களில் எதேச்சாதிகாரம் தான் கொடி கட்டிப் பறக்கிறது என்ற காரணத்தால், கட்சித் தாவு வோரும் சுயேச்சை வேட்பாளர்களும் அதிகரிக்கின்ற னர். கட்சியில் ஜனநாயகத்தை நிலை நாட்ட முடி யாத தலைவர்கள், ஆட்சியில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவார்களா? கொள்கையை விட தொண்டை விட, பணத்திற்கும், சாதிக்கும், மதத்திற்கும் முக்கிய த்துவம் கொடுக்கின்ற காரணத்தினுலும் ஜனநாயகம் கொச்சைப் படுத்தப்படுகிறது. கொள்கை அடிப படையை உறுதியாகக் கடைபிடிக்கும் கட்சிகளில் கூட, பசுந்தோல் போர்த்த புலிகள் புகுந்து விடுவார் கள். இனவெறியையும், மதவெறியையும் ஒழிப்பதே எங்கள் குறிக்கோள் என்று முழக்கமிடும் கட்சிகள் ஏன் இனவெறியர்களை வேட்பாளர்களாகத் தேர்ந் தெடுக்கிருர்கள்? கேட்டால் கொள்கை வேறு, தேர்த லில் வெற்றி பெரம் சாகசங்கள் வேறு என்று பதில் சொல்வார்களோ?
தேசியக் கட்சிகள் நாங்கள், தேசிய ஒற்றுமையை நிலை நாட்டுவோம் என்று கொக்கரிக்கும் அரசியல் கட்சிகள், ஏன் பிராந்திய அரசியல் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொள்கிருர்கள்? கொள்கை வேறு தேர்தல் சாகசம் வேரு?
வறுமை ஒழிப்புத்தான் எங்கள் முதலாவது இலட்சியம் என்று முக்கிய அரசியல் கூட்டணிகள் முழங்குகின்றன. ஆனால் நாற்பது ஆண்டுகளாக இதே மந்திரத்தை உச்சரித்தும் இன்னும் நாட்டுமக்க ளில் அரைவாசி வறுமைப் படுகுழியில் வாடி வதங்கு கிருர்களே அதற்குக் காரணங் கூற எந்த அரசியல் கட்சிக்கு துணிவிருக்கிறது?,
இந்தியா போன்ற உலகத்திலேயே மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், தேர்தல் விதி முறைகள் கட்சி

அமைப்புகள் நாட்டுக்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும் இங்கிலாந்தில் ஐக்கிய அமெரிக்காவில் இருப்பது போல் இரு கட்சி ஜனந்ாயகம் இங்கு சாத்திய மில்லை அல்லது சோவியத் நாட்டிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது போல் ஒரு கட்சி ஆட்சியும் இந்தியாவுக்கு பொருந்தாது. ஆகவே பாராளுமன்ற ஜனநாயகம் என்ற பெயரில் 95 சதவீத மக்களை ஒதுக்கிவிட்டு, 5 சதவீதத்தினரே ஆட்சி செய்து பலன் அனுபவிக்கும் இந்தப் பாசாங்கு ஜன நாயகத்தில் அர்த்தமில்லை. r -
மக்கள் நிரந் த ர அதிருப்தியாளர்களாகவே இருப்பார்கள்.
மாற்றம் வரும் வரைக்கும், இந்த கிழிந்த சேலை ஜனநாயககத்தைத் தான் பாரத மாதா அணிய வேண்டும்.
* தேசிய அரங்கிலே பிரதமராக மூன்று பேர் முயற்சி க் கிரு ர் கள். ராஜீவ் காந்தி, வி.பி. சிங். அத்வானி ஆகிய மூவருமே பிரதமர் ப த விக்கு ப் போட்டியிடுகிறர்கள். மக்கள் யாரை தெரி வு செய்வார்கள்? பழைய பல்லவி பாடும் ராஜீவ் காந்தி யையா? அல்லது பல்லாயிரம் ஆண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர் களுக்கும் அரசியலில் உரிய பங்கு பெற்றுத்தருவேன் என்று உறுதி கூறும் வி. பி. சிங்கிற்கா? அல்லது பெரும்பான்மை இந்துக்களின் சர்வாதிகார ஆட்சியை நிலை நாட்டுவேன் என்று சபதமிடும் அத்வானிக்கா?
தமிழகத்தைப் பொருத்த வரையில் நமது 39 பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் 461 வேட்பாளர்களில் நாம் தெரிவு செய்யும் 39 பேர், எந்தத் தலைவரைப் பிரதமராக்க **விரும்புவார்கள் என்ற அடிப்படையிலே நமது மக்கள் வாக்களிக்க வேண்டும். ' w
இன்றைய அரசியல் சூழ் நிலையில் எந்த கட்சி யும் அறுதிப் பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்கி அமைக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை. மத்தியில் ஒரு கட்டாட்சி தான் அமையும். ஆனால் இது வரையில் காற்றில் பறக்கவிடப்பட்டது போல ல் லா ம ல், கொள்கை அடிப்படையில் கூட்டாட்சி அமைந்தால் நம் ஜனநாயகம் பி  ைழ க் கும் இல்லாவிட்டால், அண்டை நாடுகளில் அமைந்துவிட்ட அவலம் போல் நமது ஜனநாயகம், பெயரளவில் கூட இல்லாமல் பறிபோகும் அபாயமும் இருக்கிறது. இந்தத் தேர்தல் எந்தத் திசையில் நமது ஜனநாயகம், போகிறது என். பதை அடையாளங் காட்டும் வகையில் அமையும். அரசியல் சபலங்களுக்கு முடிவு கட்டும். இந்திய வாக் காளப் பெரு மக்கள் நாட்டின் நலன் கருதியே வாக்களிப்பார்கள். 豪

Page 5
நீலகிரி படுகர்களு
சம்பவங்கள் சிலவற்றை தொகுத்துத் தருவதால் மட்டும் உண்மைச் சரித்திரத்தைப் பொய்ப்பிக்கவோ அல்லது மாற்றவோ முடியாது.
படுகர்கள் 300 ஆண்டுகளுக்கு முன்னர் அடைக் கலம் தேடி நீலகிரிக்கு வந்தவர்கள் என்ற உண்மை" யைப் பல சரித்திரச் சான்றுகள் பசர்கின்றன. ஆனால் இச் சரித்திரத்தை மறைத்து படுகர்களும் நீலகிரி மண்ணின் பூர்வீகக் குடிகளே என இன்று படுகர்கள் நீலகிரி மண்ணுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
நீலகிரி மண்ணின் உண்மையான பழங்குடிகளான கோத்தர்கள், குரும்பர்கள், தொதவர்கள் போன்றோரின் நிலங்களை கையகப்படுத்திக் கொண்டும், அரசுக்குச் சொந்தமான பல ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டும், இன்று செல்வச் செருக்கிலே வாழுகின்ற தங்கள் உண்மைச் சொரூபம் தெரிந்து விடுமோ என்றும் தம்மால் ஆக்கிரமிப்புச் செய்யப் பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டு விடுமோ என்ற ஐயத்" தாலும் நீலகிரியிலுள்ள ஆதி திராவிடர் மற்றும் நலிந் தோரின் குடியேற்றங்களை கடுமையாக இவர்கள் எதிர்த்து வருகிறார்கள்,
இதற்கு ஆதரவாக பத்திரிகையைப் பயன்படுத்தி கொள்கிரு?ர்கள். ஆதிதிராவிடர் மற்றும் நலிந்தோரின் குடியேற்றங்களைத் திட்டமிட்டு எதிர்த்துவரும் படுக இனத்தைச் சேர்ந்த ஒரு சிலர் "இந்து' மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்களில் எழுதி வரும் உண். மைக்குப்புறம்பான விடயங்களையும், அதற்கு ஆணித் தரமாக மறுப்புத் தெரிவித்து நாம் அதே பத்திரிகை களுக்கு எழுதியுள்ள் கடிதங்களையும் இங்கு தொகுத்து தருவதன் மூலம், எது உண்மை, எது பொய் என்பதை சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் மக்களுக்கு புரிய வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மார்ச் மாதம் 13ம் தேதி வெளிவந்த இந்து நாளித ளிதழில் அரையட்டி பற்றிய ஒரு செய்தி வெளிவந்தது. உதகை "இந்து’ பத்திரிகை நிருபர் ஒரு படுகர் ஆதலால் இனம் இனத்தோடு சேரும் என்பதற்கொப்ப தம் இனத்தைக் காக்க தாயகம் திரும்பிய இந்தியர் களுக்கு எதிராக உண்மைச் செய்தியைத் திரித்து எழுதப்பட்டுள்ளது. இச்செய்தியைப் படிக்கும் எவ ரும் தாயகம் திரும்பிய இந்தியர் மீது ஒரு தப்பான எண்ணத்தையே வளர்த்துக் கொள்வர். நாமும் பேசா திருந்து விட்டால் நம்மை எதிரிகளாய்க் கணித்து செயற்படும் சிலரின் வாய் இன்னும் நீண்டு விடும் என்பதால் இச் செய்தியைக் கண்டனம் செய்து நமது பொதுச் செயலர் திரு. இர. சிவலிங்கம் 'இந்து ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார். இது மார்ச் 25ல் பிரசுரமானது.

க்கு சொந்தமா ?
'தாயகம் திரும்பிய மக்களை’ ‘அகதி’ என விளிப்பது முறையல்ல எனவும் உதகை "இந்து’ நிருபர் தொடர்ந்தும் இந்த பதத்தைப் பிரயோகித்து வருகிறார். நீலகிரியில் 'அகதிகள்’ எவருமில்லை, தாயகம் திரும்பிய, இந்தியர்களே உள்ளனர்’ என சுட்டி காட்டி உதகை படுக நிருபரின் அறியாமையை வெளிக் காட்டியுள்ள நமது பொதுச் செயலாளர் மேலும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது
*தாயகம் திரும்பிய மக்களும், ஆதிதிராவிட மக்களும் வீட்டுமனைப் பட்டா பெறுவதற்கு சுமார் இருபது தடவைகளுக்கு மேலாக எதிர்ப்பும், முட்டு கட்டையும் போட்ட படுகர்கள், ஒரு திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரத்தால், படுக சமூகத்தைச் சார்ந்த வர்களைத் தவிர வேறு இன மக்கள் வீட்டு மனைப் பட்டா பெறுவதைத் தடுத்து வருகிருர்கள்.'"
** அரையட்டியில் தாயகம் திரும்பிய மக்களும் ஆதிதிராவிடர் மற்றும் நலிவுற்ற மக்களும் குடியேறு வதை படுக இன மக்கள் எதிர்ப்பதின் மூலம், தமது இனவாதத்தை வெகுவாக வெளிக்காட்டியுள்ளார்கள் அத்தோடு படுக கிராமங்களுக்கு அருகில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கூடாது என அரசிடம் கோரிக்கை யும் விட்டுள்ளார்கள். இது பெரும் விந்தைக்குரியதும் கேளிக்குரியதுமாகும். இத் த ைக ய ஒரு கோரிக் கையை முன் வைப்பதன் மூலம் நீலகிரியிலே இனங்களைப் பிரித்து இன வேற்றுமைக்குப் படுகர்கள் தூபமிடுகிறார்கள். w
இவ்வாறு நமது பொது செயலாளர் எழுதியுள்ளார். இக்கடிதம் இந்து இதழில் மார்ச் 25ல் வெளி வந்தது. - ’ .ف
இதற்கு பதில் அளிக்குமுகமாகவும், தாயகம் திரும்பிய மக்கள், ஆதிதிராவிடர் மற்றும் நலிந்தோர் மீதுள்ள தமது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நஞ்சன் என்பவர், "இந்து நாளிதழில் ஏப்ரல் 9ல் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் படுகர்கள் நீலகிரியில் குடியேரி 300 ஆண்டுகள் தான் ஆகின்றன என்ற உண்மையை இவர் ஒப்புக் கொண். டுள்ளார்.
இக்கூற்று பிழையானது என்றும், படுகர்களின் சரித்திரத்தை படுகர்களே அறியாதிருப்பது பெரும் வேதனைக்குரியது என திரு. கே. பி. ராஜ" என்பவர் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதம் 'இந்து நாளிதழில் ஏப்ரல் 26ல் வெளிவந்தது. இக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது
* "கலா எனும் படுக தலைவன் ஒருவன் 1116ம் ஆண்டு முதல் 1162 வரை கூக்கல் கிராமத்தை ஆண்டான் என்றும் இதுபற்றி "எபிகிராபியா கர்நாடகா’ எனும்

Page 6
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரித்தானியர்கள் படுகர்களுக்குச் சொந்தமான நாலில் மூன்று பங்கு நிலத்தைப் கையகப்படுத்திக் கொண்டனர். அதற்கு எதுவித நஷ்டஈடும் கொடுக்கவில்லை. ஏற்கனவே பிரித்தானியர்களிடம் நிலத்தைப் பறிகொடுத்தோம் இப்போது தாயகம் திரும்பியோருக்கு மறுவாழ்வு தி ட் டத் தி ன் கீழ் நிலம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் படுகர்களின் நிலை மிக மோசமாகி விடும்,
1000 பட்டாக்கள் தான் வழங்க வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்திருந்தும், 6 280 வீட்டு மனைப் பட்டாக்களை முன்னாள் ஆட்சித் தலைவர் வெளியூரார்களுக்கு வழங்கியுள்ளார். இதனால் வாழையடி வாழையாய் வாழ்ந்த ஒரு சமூகத்தில் நலன்கள் பாதிக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இவரது கடிதத்தை நன்கு ஆராய்ந்து படிக்கும் எவரும், படுக அரசியல்வாதிகளின் குறுகிய நோக் கத்தை நன்கு புரிந்து கொள்வர். "'நீலகிரி மண் படுகர்களுக்கே சொந்தம், அங்கு வேறு எவரும் குடியேற அனுமதிக்கப்படலாகாது." என்பது இவர் களின் உள்ளார்ந்த நோக்கமாகும்.
உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த தாயகம் திரும்பியவர்களானாலும் சரி ஆதிதிராவிடர்களா. னாலும் சரி அல்லது ஆதிவாசிகளானாலும் சரி இன்று ஒரனியில் திரண்டு வருவதைச் படு கர் களால் சீரணிக்க முடியவில்லை. இதற்காக ஆங்காங்கு அவர் கள் அமைத்துவரும் குடி சைகள்ை அகற்றுவதில் தான் முக்கிய கவனம் செலுத்துகிறார்கள்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல தங்களது குறிக்கோள்களை நிறைவேற்ற பத்திரிகைகளின் துணையை நாடுகிறார்கள். அதேப் போல் தம் பண வலிமையால் அரசு அதிகாரி க  ைள தம் கையில் போட்டுக் கொண்டு ஏதாவதொரு காரணத்தைக் காட்டி ஆதிதிராவிடர்கள், நலிந்தோர் மற்றும் தாய கம் திரும்பியோரின் குடிசைகளை அநியாயமாக அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
தம் பூர்வீகத்தை உறுதிப்படுத்த 'இந்து பத்திரிக்கையப் பயன்படுத் தி க் கொண்டது போல "இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் திரு. ராஜ-0 விட்டு வைக்க வில்லை. இதற்குக் காரணம் அப்பத்திரிகையில் திரு. வில்சன் என்பவர் படுகர்களின் உண்மைச் சரித்திரத்தையும் நீலகிரியில் அதிகளவு நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்துள்ளவர்கள் படுகர். களே எனவும் அப்பத்திரிகையில் ஏப்ரல் 10ம் திகதி ஒரு கடிதம் எழுதியிருந்தார். இக்கடிதத்திற்குப் பதில் அளிக்கும் சாட்டில் 'படுகர்களின் சரித்திரம் பற்றிய உண்மைக்ள்’’ என்ற தலைப்பில் சிலவற்றை திரு. ராஜ" குறிப்பிட்டுள்ளார். இது ஏப்ரல் 21 ம் தேதி யிட்ட இந்தியன் எக்ஸ்பிரசில் வெளிவந்துள்ளது.

இதற்கும் பதில் கடிதமாக நமது பொதுச் செயலாளர் அதே பத்திரிகை ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். நமது பொதுச் செயலாளர் விளக்கம் பின்வரும் வகையில் அமைந்திருந்தது.
*படுகர்’ என்ற பதத்திற்கு கன்னட மொழியில் ‘வடக்கன்’ அல்லது வடக்கில் இருந்து வந்தவர் என்று தான் அர்த்தம் என்றும் தன் கூற்றுக்கு ஆதார மாக இரு ஆங்கில நூல்களை மேற்கோள் காட்டிup6ft 6itti. The Caste & Tribes of South India பக்கம் 67ல் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
'படுகர்கள் அல்லது வடுகன் என்ற பெயர் வடக் கில் இருந்து வந்ததால் ஏற்பட்டது, என்றும் படுகர்கள் மைசூரிலிருந்து, மூன்று நூற்றான்டு களுக்கு முன்னர் அரசியல் கொந்தளிப்பு, வறுமை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட அடக்குமுறை என்பவற்றின் கார ண மாக நீலகிரிக்கு குடிபெயர்ந்தவர்கள். s அதேபோல ஜே. பால் ஹாக்கிங்ஸ் என்பவரின் Ancient Hindu Refugees 6T6ir so DIT6 Ga) Sipád Gir டவாறு கூறுகிறார். .
**படுகர்கள் கன்னடச் சொற்கள் மலிந்த ஒரு மொழியைப் பேசுகிறார்கள். படுகர்கள்:கர்நாட கத்திலிருந்து வந்தவர்கள் தான், என்பது சந்தே கத்துக்கு இடமில்லாத ஒரு உண்மை. படகர்கள் லிங்காயத்து முறையைப் பின்பற்றுவது இதனை மேலும் ருசுப்படுத்துகின்றது,’’ எனக் குறிப்பிடு கிறார். '1981ம் ஆண்டுக்குப் பின் நீலகிரியில் 200,000 வெளிமாநிலத்தவர் குடியேறியுள்ளார்கள்’’ என திரு ராஜு ஒரு புள்ளிவிபரத்தைத் தந்துள்ளார். இதனை நமது பொதுச்செயலாளர் ஆதாரபூர்வமாக மறுத்துள்ளார். 1981ம் ஆண்டைய குடிசனமதிப்பீட்டின் படி நீலகிரியின் மக்கள் தொகை 630, 169 ஆகும். 1991ம் ஆண்டின் குடிசனமதிப்பீட்டின்படி நீலகிரியின் மக்கள் தொகை 704, 827 ஆகும். இதன்படி 198lb ஆண்டிற்கும், 1991ம் ஆண்டிற்கும் இடையில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை அதிகரிப்பு 74,658 ஆகும். உண்மை இதுவாக, அதுவும் ஆதாரபூர்வமாகவும் இருக்க 200,000 பேர் நீலகிரியில் குடியேறிவிட்டார்கள். என்று திரு. ராஜ" எந்த அடிப்படையில் குறிப் பிட்டுள்ளார் என்பது பெரும் விந்தைக்குரியது மட்டு மல்ல, பரிகசிப்புக்கும் உரியதாகும்.
நாம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல கி.பி. என்றும் கி.மு. என்றும் சில ஆண்டுகளைக் குறிப்பிட்டு அந்த படுக தலைவன் ஆண்டான், இந்த படுகத் தலைவன் ஆண்டான் என்று கற்பனைச் சம்பவங்களை எழுதிவிட்டால் மட்டும் உண்மைச் சரித் திரத்தை மாற்றியமைத்து விட முடியாது. இதனை தொடர்ச்சி 10 ம் பக்கம் .

Page 7
புதிய கலெக்டரும் -
நீலகிரி வரலாற்று தொடரை நிறுத்திவிட்டு
நிகழ்கால சம்பவங்களைப் பற்றி எழுத வேண்டிய நிர் பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
நீலகிரியில் புதிய வரலாறு ஒன்று உருவாகிவரு கிறது. அதற்கான அச்சாரம் அண்மையில் தான் தெளிவிாகி வருகிறது. வரலாறு என்று சொன்னாலே மன்னர்கள், தள பதிகள் ஆட்சியாளர்கள் ஆகியோரைப் பற்றிய செய்திகளின் தொகுப்பாகவே கருதப்படும். இன்றைய புதிய சிந்தனையில் அது தவறாகவே கணிக்கப்படுகிறது. மக்கள் வாழ்வையும், பொருளாதாரத்தையும் பற்றியதுதான் உண்மையான வரலாறு என்பதுதான் புதிய சிந்தனை.
இன்று நீலகிரியில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் வரலாறு படைக்க ஆரம்பித்திருக்கிருர்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் நீலகிரியில் 100 கலெக்டர்கள் ஆட்சியாளர்கள் வந்திருக்கிறர்களாம். இன்று 100வது ஆட்சியாளராக வந் திருப்ப வர் லீனநாயர் என்ற பெண்மணி. ஒரு பெண்மணி ஆட்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது
உலகிலேயே மிகத் தீவிரமான பெண்ணடிமை சமுதாயம் இந்தியாவில் தான் காணப்படுகிறது. கருவிலேயே பெண்களைக் கொன்று விடும் கொடுமை கள் இன்றும் நிலவி வரும் நாடு நமது நாடு. சிலவேலை பிறந்த பின் இந்த நாட்டில் ஒரு பெண் படவேண்டிய துன்பங்களை எல்லாம் எண்ணிப்பார்த்து, பிறக்காமல் சாவதே மேல் என்று எண்ணித்தான் பெண் சிசுக்களை தாய்மார்கள் கருவிலேயே சிதைத்துவிடுகிருர்களோ என்னவோ? உலகத்திலே பொதுவாக சனத்தொகை யில் 50% பெண்கள் இருப்பார்கள். ஆனல் இந்தியா வில் ஆண்களைவிடப் பெண்கள் குறைவாக இருக்கிமூர்கள். பெண்களைப் பின்தங்கியவர்களாக 9 lq.685) LD - களாக வைத்திருப்பதையே நாம் இந்தியாவில் காண்கிறோம். நீலகிரியிலும் அதே நிலைதர்ன். ஆதிவாசிப் பெண்களும், படுகப் பெண்களும், ஹரிசனப் பெண்களும் தாயகம், திரும்பிய மலையகத் தமிழ்ப் பெண்களும், மிகவும். பிற்படுத்தப் பட்டவர்களாகவே இருக்கிருர்கள், அவர்களில் பெரும்பாலோருக்கு கல்வி இல்லை, சுதந்திரம இல்லை, சமத்துவம் இல்லை, சம சம்பளம் இல்லை, ஒய்வில்லை, வேலைவாய்ப்பில்லை, ஒழுங்கான வீடில்லை, மருத்துவ வசதியில்லை, குழந்தை பராமரிப்பு இல்லங்கள் இல்லை வறுமையினல் தம் உடலையே விற்று வாழவேண்டிய பரிதாபநிலையில் இருக்கிறார்கள் வயதுமுதிர்ந்த பெண்கள் பராமரிப்பார்கள் யாருமின்றி பிச்சை எடுத்து வாழுகிறார்கள் பெண்களின் இந்த இழிநிலையை மாற்ற லீன நாயர் முயற்சி எடுப்பாரா?

சாரலிலே .
பழைய கலெக்டரும்
சாதாரணமாகவே கலெக்டர்கள் சகல ஆடம்பரங் களுடனும் வாழ்க்கை நடத்துபவர்கள். அவர்கள் பார் ப்பதெல்லாம், பழகுவதெல்லாம், பணக்காரர்கள், செல்வாக்குடையவர்கள், பிரபுக்கள், கவர்னர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் மட்டுமே மக்களைக் காண அவர்களுக்கு அவகாசமிருப்பதில்லை குறிப்பாக நீலகிரியில் தோட்ட முதலாளிகள் தேயி லைத் தொழிற்சாலை அதிபர்கள், மரவியாபாரிகள், கள்ளக்கடத்தல் காரர்கள் எல்லாம் ஆட்சியாளர்க ளையும் சுற்றிவளைத்து மாயவலை விரித்து தங்கள் கள்ளக் கபடங்களுக்குப் பூச்சூடி, வாசனைத்திரவியங் கள் தடவி மயக்கி தமது கைப்பாவைகளாக ஆக்கிக் கொண்டு, ஏழைகள் மீது ஏறி மிதித்து அவர்களைச் கரண்டி, வதைத்து, அவர்கள் மீது போலிஸ்காரர் களையும், ஆட்சியாளர்களையும் ஏவிவிட்டு எக்காள மிடுவது வழக்கமும், வரலாறுமாகும்.
இந்த கொடிய, நெடிய் வழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வந்தவர் 99 வது கலெக்டரான திரு. அம்பேத்கார் ராஜ்குமார் அவர்கள். அவர் புதிய பொறு ப்புள்ள ஆட்சியாளர்களுக்கு முன்னேடி, ஒர் ஒளி விளக்கு, இரவு பகலாக ஏழைகளுக்காகவே, அவர்கள் வாழ்வை ஒளியூட்ட வேண்டுமென்று உழைத்தார் மா வட்டத் தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்ருர், மக்களின் துயரங்களில் தோழராக சகோ தரனகப் பங்கெடுத்துக்கொண்டார். மனிதர்கள் பருகும் தேயிலையில் மண்ணையும் கலப்படங்களையும் கலந்து விற்று செல்வச் சீமானுய் சிங்கார வாழ்க்கை வாழும் சமூகத்துரோகிகளை அம்பலப்படுத்தினர். அவர் களின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சினிமா தியேட்டர் முதலாளிகள் அளவுக்கதிகமான டிக்கட்டுகள் விற்று கொள்ளைலாபமடிப்பதை நிறுத் தினர். அத்தியாவசியமான பொருட்கள் பதுக்கப்படுவதைத் தடுத்தார். கூட்டுறவுக் கடைகளில் நடக் கும் தில்லு முல்லுசுளுக்கு முடிவுகட்டினர். தூங்கிக் கிடந்த அரசியல் அதிகாரிகளை இரவு பகலாக செயற். படவைத்தார். இரவிரவாக காடழித்து மரங்கடத்திய கடத்தல்காரர்களை கைது செய்தார். ஊர்ாட்சி மன்ற ங்களிலும், நகராட்சி மன்றங்களிலும் நடைபெற்ற ஊழில்களுக்கு முடிவு கட்டினர். சமூக விரோதிகளை தயவு தாட்சண்யமின்றி தண்டித்தார். இடமில்லா ஏழைகளுக்கு தாராளமாகப் பட்டா வழங்கினர். அவர் களுக்கு அரசு தரவேண்டிய சலுகைகளை எல்லாம் தாமதமின்றி வழங்கினர். அல்லற்பட்டிருந்த அடிமட்ட மக்களை உயர்த்தினர். எந்த நேரமும், எவரும் கலெக் டரைப் பார்க்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தினர். ஏழைப்பங்காளனக இருளகற்றும் ஒளி விளக்காய் நீல

Page 8
கிரியை உண்மையிலே தமிழகத்தின் மிக உயர்ந்த மாவட்டமாக மாற்றினர்.
ஆனல் நமது நாட்டு போலிச் சனநாயகமும் பிரபு த்துவமும், அவரைச் சும்மாவிடவில்லை. பணக்கார முதலைகளைப் பொருட்படுத்தாமல், அவர்களது சாகச வலைகளில் வீழ்ந்துவிடாமல் நெஞ் சுரத்தோடு நிமிர்ந்து நின்ற ஆட்சித்தலைவர் அம்பேத்கார் ராஜ்கு மாரின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர சதித்திட் டம் தீட்டினர்கள்.
நீலகிரியில் ஏழைகளுக்கு வீடுகட்ட அதிகமான பட்டாக்கள் வழங்கி விட்டார். என்று அவர் மீது போர் தொடுத்தார்கள் படுக முதலாளிகள். அரை ஹட்டி பிக்ஹட்டி ஆகிய இடங்களில் குடியேறிய மக்களை விரட்டியடிக்க வேண்டுமென்று படுக முதலாளிகள் கலெக்டருக்கு மனுக் கொடுத்தார்கள். நீலமலை ராஜா என்ற படுகர் அரைஹட்டியில் உண்ணு விரதப் போராட்டம் நடத்தினார். பணக்கார படுக முதலாளிகளும், கள்ளக்கடத்தல் மரவியாபாரிகளும், மக்களை க்ரண்டி வாழ்ந்த சில அரசியல் வாதிகளும் நேர்மையான ஆட்சியாளரை மாற்ற வேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றார்கள். பணத்தை அள்ளி வீசி னர்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட சந்தர்பத்தையும் காங்கிரசின் மறைமுக செல்வாக்கு ஓங்கியிருப்பதையும் பயன்படுத்திக்கொண்டு இர வேரடு இரவாக கள்ளக் கடத்தல் செய்து கைதேர்ந்த கபோதிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடித்துக் கொண்டிருந்த அரசியல் வாதிகளின் அதிகார வேட்கையை பயன்படுத்தி ஒரே நாளில் அம்பேத் கிார் ராஜ்குமாரை இடமாற்றம் செய்தார்கள் இந்த இழிசெயல் ஏழைகளின் நெஞ்ஞத்தில் பாய்ச்சிய வேல்.
பணக்கார சதி வென்றது
ஏழைகளின் தோழன் இடமாற்றம் செய்யப் புட்டார்.
எழைகள் தோற்றார்கள், அரைஹட்டியில் குடியேறிய குடும்ப்ங்கள் போலிஸ் கார்ர்களால் அகற்றப்பட்டனர். பிக்ஹட்டியில் குடியேறிய மக்களையும் லீன நாயர் விரட்டியடித்தார்.
படுக முதலாளிகள் வென்றுவிட்டர்ர்கள். ஆதி வாசிச ளும், மலையகத் தமிழர்களும், ஹரிஜன மக்களும் குமுறினர்கள், கதறினர்கள், கண்ணீர் விட்டார்கள் சாலை மறியல் செய்தார்கள். பிரியாவிடையாய் கண் ணிரில் தோய்த்தெடுத்த பூ மா  ைல க  ைள அணி அணியாய் அணிவித்து தமது அன்பைக் கொட்டினா கள் நன்றியைக் காட்டினார்கள்.
இந்த ஆட்சியில் ஏழைகளுக்கு வேறென்றும் செய யத் தோன்றவில்லை. ஏழைகளின் ஒட்டுக்களில் ஆட்சி யைக் கைப்பற்றி, ஏழைகளுக்கெதிராக பணக்கா வர்கத்திற்குப் பாத பூஜை செய்பவர்களின் ஆட்சி ன் கனை நாளைக்கு நீடிக்கும்? . ۰ ۶ م

அதே துரோகிகள், ஏழைகளை நசுக்கி வாழும் கொடியோர்கள் இன்று உங்களிடம் வாக்குப் பிச்சை கேட்கிறார்கள்?
என் ஏழைத் தோழா, இன்னும், எத்தனை நாளை க்கு நீ அரசியல் குருடனய் இருப்பாய்? எழுந்திரு ஆட் சியை நீ கைப்பற்றி புதிய வரலாறு படைக்க வேண்டும் ஆம் நீலகிரியிலுந்தான்.
ஆட்சித் தலைவரை மாற்றியதின் எதிரொலியாய் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய் யப்பட்ட நமது மன்ற அங்கத்தினர்களும் ஆதி வாசிக ளும், கோத்தகிரி காவல் நிலைய வளாகத்துள் அமர் ந்திருக்கும் காட்சியும், இடமாற்றத்தைக் கண்டித்து ஏகமனதாய் நிறைவேற்றப்பட்ட தீர்மாணங்களை இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு. வீரா. பாலச்சந்தி ரன் மக்கள் ம்த்தியில் சமர்ப்பிப்பதையும் படத்தில் காணலாம் .
தேர்தல் கவிதை
* சொகுசான வாழ்க்கை வாழ எங்களுக்கு வாக்களியுங்கள் ஒவ்வொரு தேர்தலுக்கும் இதே பல்லவியை 1ாடும் அரசியல் வாதிகளை
சிலர் பொய்யர்கள் என்று சொல்கிறார்கள்
fTs T அவர்களை பொய்யர்களென்று சொன்னது? அவர்கள் வார்த்தை தவறாதவர்கள் அவர்கள் சொன்னது போலவே
சொகுசான வாழ்க்கைதான் வாழ்கிறார்கள் நாம் தான் அப்படியொரு வாழ்க்கை நமக்கு அமைத்து தருவார்களென்று நம்பி ஏமாந்தோம்
கே. இராமகிருஷ்ணன்

Page 9
கோத்தகிரியில் வட்டாட்சிய
கோத்தகிரி வட்டாசியர் அலுவலகத்தில் முன் 615191 அன்று பட்டினி போராட்டம் நடைபெற்றது. மாரிஸ் நகர், கொணவக்கரை, இடுகொரை ஆகிய ஊர்களிலுள்ள நிலமற்ற ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா, கோரியும் சாலை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்திதரக் கோரியும், ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட சுமார் 250 பேர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட ஊர்களிலிருந்து மட்டு மின்றி கோத்தகிரி வட்டம் முழுவதிலிருந்தும் மக்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் கோத்த கிரி தாலுகா கமிட்டி ஏற்பாடு செய்திருந்த இந்த பட்டினி போராட்டத்தை கோத்தகிரி பிராந்தியச்
செயலாளர் திரு. செப்ாஸ்டியன் தொடங்கி வைத்தார்
கோரிக்கை மனுவை வாங்கமறுத்த வட்டாட்சியரை உண்ணாவிரதம் இருந்தவர்கள் கேரோ செய் தனர். மன்ற பிரதிநிதிகள் அவர்களை ச்சாந்த படுத்தின்ர். அதன் பின் மனுவைப் பெற்றுக்கொண்டு
காணவில்லை
தகவல் தரவும் ペ
பெயர் : கல்யாணி வயது : 16 படிப்பு 10 ம் வகுப்பு காணமல் போன நாள் : 1.3 - 91 கருப்பு சட்டை, பூபோட்ட பாவாடை அணிந்திருந் தாள். ஊர் : பெருங்கரை தொண்டியாளம். காண்பவர்கள் எமது அலுவலகத்திற்கு உடன் தகவல் தரவும். ܫ
பிராந்திய செயலர் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் கூடலூர் நீலகிரி மாவட்டம்
 
 
 
 

f (56TT RīIITī
மேல் நடவடிக்கை எடுப்பதாக, வட்டாட்சியர் உறுதி அளித்ததால் கூட்டம் கலைந்தது. இதனால் வட்டாட் சியர் அலுவலக முன்றிலில் மாலை நான்கு மணிக்கு சுமார் ஒருமணி நேரத்திற்கு பதற்றம் நிலவியது.
போராட்டத்தில் பேசிய பலரும் மனுவை வாங்க மறுத்த வட்டாட்சியரின் அசமந்த போக்கு குறித்து கடும் கண்டணம் தெரிவித்தனர். மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் துனைத்தலைவர் திரு. ஏ.சி டீன் பழரசம் கொடுத்து முடித்து வைத்து பேசுகையில் ‘ஒரு ஜனநாயக நாட்டில் மனுவாங்குவதற்க்குக்கூட மறுக்கும் இதுபோன்ற அதிகாரிகளினால்தான் மக்கள் சாத்வீக போராட்டங்களில் நம்பிக்கை இழந்து தீவிரவாத வழிகளை கையில் எடுத்துக் கொள்கின்ற னர். எனவே இதுபோன்ற அதிகாரிகளின் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்று கேட்டுக்கொண்டார். -r
மன்ற இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு. வீரா பாலச்சந்திரன், திருவாளர்கள் ஆனந்தராஜ் தர்ம லிங்கம், சிவசுப்பிரமணியன், சின்னப்பன், திருமதி. சரஸ்வதி, முத்துலட்சுமி, மற்றும் பலரும் பேசினர் "
குடியிருப்பு நல நாள் விழா
ம. ம. ம. மன்றத்தின் மாவட்ட் இளைஞரணி 173-91 அன்று கோத்தகிரி கட்டபெட்டு பாக்கிய நகர், அண்ணாநகர், அம்பேத்கார் தகர் ஆகியவற்றை இணைத்து ‘குடியிருப்பு நல நாள் விழா” நடத்தியது ஊர்த்தலைவர்கள் திருவாளர்கள், சிவலிங்கம், ஆறு முகம், மணிஆகியோர் முன்னிலையில் மாவட்ட இளை ஞரணித்தலைவர் திரு. மணி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிரமதானப்பணி, விளையாட்டுப்போட்டி என்பன இடம்பெற்றன். மாலையில் பரிசளிப்பு விழா இடம் பெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மன்ற காப்பாளர் அருட்திரு. அல்போன்ஸஸ் அவர்கள் கலந்துகொண்டு பரிசில்களை வழங்கினார். அவர் தனது சிறப்புரையில், "மன்றமென்பது வெறும் கட்டி டமல்ல, மக்கள் தான் மன்றம். எனவே மக்கள் ஐக்கிய மாக இருக்கும் போதுதான் மன்றம் செயற்பட முடி யும்’ என்று குறிப்பிட்டார். மன்றத்தின் இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு. வீரா பாலசந்திரன் பேசுகை யில் ‘இதுபோன்ற விழாக்களில் பொது மக்கள் அதிகம் பங்களிப்பு செலுத்துவது அவசியம். இவ்விழாவில் எதிர் கால சந்ததியினரான சிறுவர்கள் அதிகம் பங்களிப்பு காட்டியுள்ளமை மிகவும் போற்றத்தக்கது ஆகும்’ என்று கூறினார். விழாவில் படுக சமூகத்திலிருந்து திரு வாளர்கள் ராஜன், கனேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தியதுடன் நன்கொடையாக ரூ.50/-ம் வழங்கி னர். இளைஞரணி மற்றும் மகளிர் அணி முக்கியஸ்தகள் பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர் விழாமுடிவில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

Page 10
கக்குச்சியில்
கோத்தகிரி வட்டம் கக்குச்சி இந்திரா நகரில் மே தின விழா வெகு சிறப்பாக நடை பெற்றது. மலையக மக்கள் மறுவாழ்வு' ம்ன்றத்தின் கக்குச்சி கிளை ஏற்பாடு செய்திந்த இவ்விழாவிற்ருகு திரு.  ார் தலைமை தாங்கினார். மன்றத்தின் பிராந்தியச் செயலாளர் திரு. செபாஸ்டியன் கிளை மன்ற கட். டிடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார். 'வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களினால்தான் உலகம்
குன்னூரில் பஞ்சாயத்
-- குன்னூரில் பிராந்திய செயலாளர் கே. சாந்தா கிருஷ்ணன். தல்ைமையில் 18-3-91 அன்று பஞ்சா யத்து.குழுக்களும் தாலுகா குழுவும் அமைக்கப்பட்டன
பஞ்சாயத்துக் குழுக்கள். (3 மலுச் w திரு. டி. ராமசாமி
’ கே. கணேசன் *’ என் ராமதாதன் திருமதி கே. பாப்பாத்தி திரு: ம. வரதராஜ் s 5 e dh I. 19; - திரு. வி. துரைராஜ்.
’ ஜி. கருப்பன் ’’’ e gjit. [56 GO GWLuny * ’ வி. சிக்கன்.
உபதலை ; - திரு. எம். பாக்கியநாதன்
’, எஸ். தெய்வானை, ༣ ༣
ஜி. பழனியாண்டி
எஸ். பரப்சிவம்
அதிகரெட்டி ; - திரு. என். செல்வராஜ்
’ என். முத்துநாயகம் பரவியார் ;- திரு. எஸ். அழகுமலை
- e.
நீலகிரி படுகர்களுக்கு சொந்தமா?
(க. ராஜ": அதே போன்று தாயகம் திரும்பியோர் திதிராவிடர்கள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கெதி 1. த் திட்டமிட்டு செயற்படுவோரும் நன்கு புரிந்து
- مسیر
:ே ஸ்ள வேண்டும் ,
எது எப்படியாயினும், நீலகிரி மண் படுகர்48 க்கே “சொந்தமானது என்று உரிமை கொண்டா
வா அல்லது வெளி மாநிலத்தவர் எவரும் குடி
யேறவோ அல்லது குடியேற்றவோ அனுமதிக்கலாகாது
என கூ க்குரல் இடவோ எ வருக்கும் உரிமையில்லை
வெளியீடு : மலையக மக்கள் மறுவாழ்வு ம த.ரில் பெட்டி எண் 27 58 சாயிபாபா கால6

மேதின விழா
இயங்குகிறது. அதனால் அவர்களின் ஒற்றுமை மிகவும் அவசியம். அது ஒன்றுதான் அவர்களை உயர்த்தும் " என்றார் அவர். ソ
திரு. சதானந்தம் செங்கொடி ஏற்றி இனிப்புக்கள் வழங்கினார். மலையக மாதர் முன்னணிசெயலர் செல்வி. வியாகுலமேரி, மன்ற இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு. வீரா. பால்ச்சந்திரன், மற்றும் பலர் பேசினர்.
து தாலுகா குழுக்கள்
° டி. கதிர்வேல் எடப்பள்ளி - திரு.எஸ். ராமையா பேரட்டி ;- திரு. எல்.விஸ்வநாதன் குன்னூர் - திரு பி. சக்திவேல்
தாலுகா குழு
தலைவர் ; - திரு பெ. சக்திவேல் துணைத்தலைவர் ; - திரு. எஸ். பரமசிவம். செயலாளர் ;- திரு. வி. துரைராஜ்
தாலுகா குழு உறுப்பினர்களாக திருவாளர்கள் ஜி.பழனியாண்டி, எஸ். ராமையா, என். அழகுமலை டி. கதிர்வேல், என். செல்வராஜ், எல். விஸ்வநாதன் கே. கணேசன், என். ராமநாதன், ஆர். நல்லையா . பதின்ழர் தெரிவு செய்யப்பட்டனர். . . .
மன்ற துணைத்தலைவர் திரு. ஏ.சி. டீன் மற்றும் கூட்லூர் பிராந்திய செயலாளர் திரு. சந்திரசேகரன் ஆகிய்ோர் தெரிவு செய்யப்பட்டவர்களை வாழ்த்தி பேசினர்: குன்னூர் இளைஞர் அணி செயலர் திரு பிரச்ன்ஸிஸ் வரவேற்றுப் பேச மகள்ர் அணி பொறுப் பாளர் செல்வி ரீட்டா நன்றி கூறினார்.
6 ம் பக்க தொடர்ச்சி .
இந்திய அரசியற் சாசனத்தில் பகுதி 3. சரத்து 19ல் குறிப்பிட்டது போல இந்திய குடிமகன் எவனும் இப்பரந்த பாரதத்தில் எந்த மூலையிலும் வாழவோ, குடியேறவோ உரிமை பெற்றவனாகும். இதனைத் தெரிந்தும், தெரியாதது போலவும் கண்மூடித் தனமாய்ச் செயற்படும் திரு. ராஜும். அவரைப் போன்ற மற்றோரினதும் போக்கு கண்டனத்திற் குரியது.
ன்றம், 187-இராஜா அண்ணாமலைத் தெரு னி கோவை-11 தனி சுத் றுக்கு மட்டும்