கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1991.06-07

Page 1
நெஞ்சு பொறுக்குதில்லையே என்று குமுறியவ மகாகவி பாரதியார். s: அன்று அவர் குமுறியது கொடிய ஆங்கில ஆட்சிக்கு அடங்கி ஒடுங்கி அஞ்சியஞ்சி செத்துக்கொண்டிருக்கும் நமது கோழை மக்களைப் பார்த்துத்தான்!
நமது நாட்டுக்கு 1947 ஆகஸ்ட் 15ல் ஆங்கில ஆட்சி ஒழிந்து ஆனந்த சு த ந் தி ர ம் கிட்டியது. ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று நம்மைத் துள்ளிக்குதிக்க வைத்தது பாரதியின் பாட்டு
"பார்ப்பானே ஐயரென்ற காலமும் போச்சே -வெள்ளைப் பறங்கியை துரையென்ற காலமும் போச்சே என்று பாரதியோடு நாம் துள்ளிக் குதித்தோம்.
"பறையர்களும், பள்ளர்களும் பாரதத்தின்
-புதல்வர்கள் சரி சமானமெய்தி வாழ்வமிந்த நாட்டிலே’ என்று மக்கள் ஆர்ப்பரித்தார்கள். ஆணுல் ஏமாந்தார்கள்.
.
ஆட்சி பீடத்திலிருந்து வெள்ளையர்கள் விலகி" னர்கள். நமது இந்தியர்கள் ஏறி அமர்ந்தார்கள் ஆனுலும் ஆங்கில இறுமாப்பு அகலவில்லே, சில சந்தர்ப்பங்களில் முன்னேவிட அதிகமாக இருந்தது வெள்ளேயரின் ஏவலர்களாய் இருந்த ஆட்சியாளர்" களுக்குப் பதிலாக மக்கள் அரசு நியமித்த ஆட்சியாளர் கள் அமர்ந்தார்கள். ஆனல் அவர்கள் மக்களே அவமதிக்கும் ஆணவக் காரர் களாகவே இருந்தார்கள். இந்த மக்கள் விரோதிகளைக் கண்டுதான் நாம் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று குமுறுகிருேம். அப்படி ஒரு மக்கள் விரோதி இன்று நீலகிரியில் ஆட்சியாளராக அமர்ந்திருக்கிருர் . இந்த நிலைகெட்ட நிலைமையைக் கண்டு நாம் குமுறுகிருேம் ஆத்திரப்படுகிருேம்.
இந்த ஆகஸ்ட் 15ல் நீலகிரியில் மக்கள் விரோதி ஒருவர் தேசியக்கொடியை ஏற்றுவார் என்று என்னும் பொழுதே வெட்கம் தலைகுனியச் செய்கிறது. அவமானம் தாங்க முடியவில்லை!
 
 

நமது தேசியக் கொடி புனிதச் சின்னம். நேரு அவர்களால் செங்கோட்டையில் ஏற்றி வைக்கப் பட்டது. 1947ல் ஆகஸ்ட் 15ல்,
தாயின் மணிக்கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்து ஏற்றிட வாரீர். என்று பாரதி முழங்கினர்
ஜூலை மாதம் 21ம் திகதி முதல் 30ம் திகதி இ}ைT உதகையில் உள்ள அண்ணு விளேயாட்டரங்கில் பாரதப் புதல்வர்கள் இருநூறு பேரை சிறைப்பிடித்து வதைத்து வாட்டிய பாவக்கரங்கள் நமது தேசியக் கொடியைத் தொடலாமா?
அந்நிய நாடாகிய இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் 150 வருடங்களுக்கு மேலாக அடிமை களாய் நடத்தப்பட்ட கொடுமையிலிருந்து, விடுபட்டு 1968க்கு பிறகு சுதந்திர இந்தியாவின் குடிமகன் என்ற பெருமையோடு அசோகச் சின்னமிட்ட பாஸ்போர்ட்டோடு பாரத மண்ணில் அ டி யெடுத் து வைத்து கடந்த இருபது ஆண்டுகளாய் தமது வாழ்க்கையை நிலைநாட்டப் போராடிக் கொண்டிருக்கும் பாமர ஏழைகளை சிறைப்பிடித்து தமது அதிகார அட்டூழியத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் கயமை யைக் கண்டு நம் நெஞ்சு கநிலங்கா திருக்க முடியுமா?
இது அநீதி என்று சுட்டிக்காட்டச் சென்றவர் களுக்கும் சிறைத்தண்டனே. இது தான் இன்றைய நீலகிரியின் ஆட்சி. பிரித்தானிய ஏகாதிபத்தியம் லீன நாயரின் உருவில் வந்தமர்ந்திருக்கிறதா? நீலகிரியில் சனநாயகம் மரித்துவிட்டதா? Dக்கள் அடிமைகளாகி விட்டார்களா? நீதியும் நியாயமும், நேர்மையும் எங்கோ ஒடி ஒழிந்துவிட்டன.
1991 ஆகஸ்ட் 15ல் மீண்டும் நமது தேசியக் கொடி பட்டொளி வீசிப்பறந்திடும்.
சீஆணுல் அதனே அண்ணுந்து பார்க்கும் தாயகம் திரும்பிய தமிழர்களின் கண்களில் நீர் நிறைந்து அந்தக் காட்சியை மறைக்கும்.
நமது தாயின் மணிக்கொடியை நீலகிரியில் ஏற்றி வைக்கும் நீசக்கரங்களே நினைக்கும் பொழுது நெஞ்சு
பொறுக்குதில்லையே!

Page 2
D6imp3 Glduing மாதர் வளர்ச்சிக் கூட்டம்
96.91 அன்று குன்னுரரில் மாதர் வளர்ச்சிக் கூட்டம் நடைபெற்றது. மலையக மாதர் முன்னணி யின் குன்னுரர் கிளை ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத் தில் 35 டெண் கள் பங் சேற்றனர். கட்ட த்திற்கு திருமதி. பாக்கியலெட்சுமி தலைமை வகித்தார் செல்வி. அம்பிகாபதி வர ே நார், பசளிர் சம்பந்தப் பட்ட பல பிரச்சனை சள் ஆராயப்பட்டன. மாதர் முன்னணியில் தலைவி திருமதி. சுந்தராம்பாள் மாதர் அணியின் செயல்பற்றியும் முன்னணியின் குன்னுரர் பிராந்தியச்செயலாளர் செல்வி. ரீட்டா சேமிப்புத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் மன்றத்தின் குன்னுரர் பிராந்திய செயலாளர் திரு. சாந்தகிருஸ்ணன் தேர்தல் நிலமைகள் மற்றும் பாதர் கல்வி முன்னேற்றம் பற்றியும் உரை நிகழ்த்தினர். கூட்டத்தில் ஊர்கள் தோறும் சேமிப்புக்குழுக்கள் அமைப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது, கூட்டத்தில் சிறப்பு அமைப்பாளராக கலந்து கொண்ட மன்றத்தின் துணைப் பொதுச்செயலர் திரு. பூரீஸ்கந்தராஜா பொருளா தாரத் திட்டங்கள் பற்றி சிறப்புரையாற்றினார்.
தொண்டாசிரியர் கூட்டம்
9-6-91 அன்று குன்னுார் பிராந்திய தொண்டாசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. பிராந்திய செயலர் திரு. சாந்தகிருஷ்ணன். மன்ற துணைபொது செயலர் திரு. பூறரீஸ் கந்தராஜா ஆகியோர் தொண்டா சிரியர்களின் நெறிமுறைகளை விளக்கிப் டேசினர்.
கிலப்போராட்டக் கூட்டம்
23 6-91 அன்று குன்னூர் அலுவலகத்தில் நிலப் போராட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது இதில் குன்னுார் பகுதியில் நடைபெற்ற நிலப்போராட் டங்சளில் பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்பு இடம்பெற்றது பொதுசெயலர் திரு. இர. சிவலிங்கம் கடலூர் பிராந்திய செயலர் திரு. சந்திரசேகரன் குன்னுார் பிராந்திய செயலர் திரு. சாந்தகிருஷ்ணன் ஆகியோர் நிலப்போராட்டங்கள், அணுகுமுறைகள் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி பேசினர். கொத்தடிமை மீட்சி, பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பங்களின் ஒருங்கிணைப்பு, அவைபற்றிய விபரம் திரட்டு தல் என்பவற்றில் நிலப்போராட்டக்குழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தமது பிரச்சனைகள் குறித்து அரசு நிர்வாகத்துடன் முறையான பேச்சு -வார்த்தை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. r
தொண்டரணிைப் பயிற்சி
ஜூன் 2,3 ஆகிய தேதிகள்ளில் கோத்தகிரியிலும் ஜூன் 29, 30 ஆகிய தினங்களில் குன்னூரிலும் ஜுலை

கள் = குன்னுTர்
6,7 ஆகிய தேதிகளில் கூடலூரிலும் தொண்டரணிப் பயிற்சி இடம் பெற்றது. மொத்தம் 67 இளைஞர்கள் பங்கேற்றனர். துணைத்தலைவர் திரு. ஏ.சி டீன், இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு. வீராபாலச்சந்திரன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
கலைப் பயிற்சி
ஜ-சன் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான ஒரு வாரகால கலைப்பயிற்சி கோத்தகிரி மன்ற மண்ட பத்தில் நடைபெற்றது. கோத்த கிரி, குன்னூர், கூடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து 40 பேர் கலந்து கொண்ட இப்பயிற்சி மன்றத்தின் கலைக்குழுவை செயல்திறன் உள்ளதாக மாற்றுவதில் பயனுள்ள ஊக்கியாக இருந்தது. கலைக்குழுத்தலைவர் திரு அரசன், து ணத் தலைவர் திரு. ஏ.சி. டீன் இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு. வீரா பாலச் சந்திரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். பழைய கலைக்குழு உறுப்பினர்கள் திருவாளர்கள். பால சுப்பிரம யம், பாபு ஆகியோர் பயிற்சிக்கு ஒத்துழை ப்பாக இருந்தனர். திருச்சியை சேர்ந்த திரு.செல்வராஜ் மற்றும் திரு. சுந்தர் ஆகியோர் பயிற்றுனர்களாக இருந்து கலைஞர்களின் கலாவி லா சத்திற்கு உரமிட்டனர். இறுதி நாள் கோத்தகிரி பாண்டிய நகரில் அம்மன் கோவில் திருவிழாவில் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளை தங்கத்தியது. பயிற்கி பின் விளைச்சலாக இரு தது.
மன்ற அறிமுகக்கூட்டம்
குன்னூரில் 2.7.91 அன்று வள்ளுவர் நகரிலும், 3.7.91 அன்று தைமலை அம்பேத்கார் நகரிலும் மன்ற அறிமுகக்கூட்டங்கள் நடைபெற்றன. வள்ளுவர் நகரிலிருந்து 35 பேரும் அம்பேத்கார் நகரிலிருந்து 40 பேரும் கலந்துகொண்டனர், கூட்டங்களில் மன்ற இளைஞர் வளர்ச் அலுவலர் திரு. வீ ரா பாலச்சந்திரன் கலந்து கொண்டு மன்றத்தின் வரலாறு. நோக்கம், பணிகள் பற்றி எடுத்துரைத்து மக்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். கூட்ட ஏற்பாடுகளை குன்னுரர் இளைஞரணிச்செயலர் திரு' பிரான்ஸிஸ் ஊக்குனர் அம்பிகாபதி ஆகியோர் செய்திருந்தனர். அம்பேத்கார் நகரில் தொண்டரணி உறுப்பினர் திரு. மதியழகன் மற்றும் வசந்தா ஆகியோர் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தனர்.
கிளைகள் அமைப்பு
9.6.91. அன்று குன்னுரர் சின்னக்கரும்பாளத்தில் மாதர் முன்னணியின் கிளை அமைக்கப்பட்டது. தலைவராக. திருமதி சின்னம்மாள் துணைத்தலைவராக திருமதி ராஜாமணி, செயலராக தி ரு மதி
தொடர்ச்சீ4ம் பக்கம்

Page 3
தென்னைமரத்திலே (
பனைமரத்திலே ெ
மே 21, 1991ம் ஆண்டு பாரையே குலுக்கிய படுகொலை தமிழகத்தில், பூgபெரும்புதூரில் நிகழ்ந்தது. பாரதத்தை 21ம் நூற்றாண்டுக்கு இட்டுச்செல்வேன் என்று எக்காளமிட்ட இளந்தலைவர் மே 21ம்திகதி யின் இருண்ட இரவில் இமைப் பொழுதில் கொலைக் குண்டுகளால் சிதறடிக்கப்பட்டார். அன்று அனைத்து இந்தியர்களின் உள்ளங்களும் சிதறடிக்கப்பட்டன. இந்தக்குரூரக் கொலையை உலகமே நிந்தித்த து. ஒவ்வொரு இந்தியரின் நெஞ்சமும் இன்னமும் கனல் கின்றது. அந்தப் பாரதப்புதல்வருக்கு அமரர் ராஜீவ் அவர்களுக்கு எங்கள் இதய அஞ்சலி பல்லாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.
இந்தப் படுகொலைக்குக் காரணமான பாதகி ஒரு இலங்கைப் பெண் எனத் துப்பறியும் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர், அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் வாழும் எல்லா இலங்கைத் தமிழர்களும் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்து பதிவு செய்யாதவர்கள் தனி முகாம்களில் வைக்கப் படுவார்கள் அல்லது நாடு கடத்தப் படு வார் க ள் என்றெல்லாம் அரசு அறிவித்தது. இவை எதிர்பார்க்கப் பட்ட நடவடிக்கைகள் தான். இலங்கைத் தமிழர்கள் குறைந்தது” ஒன்றரை “லட்சம் பேர்கள் தமிழகத்தில் இருப்பார்கள் என்று அரசு அறிவித்தது. محبر
அதேசமயத்தில் தமிழகத்தில், இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஏறக்குறைய ஐந்து லட்சம் இந்தியத் தமிழர்கள் இருக்கின்றர்கள் இவர்கள் 1968ல் இருந்து 1984 வரை இந்தியாவிற்கு வந்தவர்கள் 1984க்குப் பிறகும் மிகச்சிலர் நூற்றுக் கணக்கில் வந்திருக்கின்ருர்கள். இவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள். ஆனல் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இலங்கை அகதிகள் என்றே அழைக்கப்படு கிருர்கள். உண்மையில் இவர்கள் அகதிகள் அல்லர்’ இந்திய அரசால் குடி உரிமை வழங்கப்பட்டு இந்தியாவில் முறையாக குடியேற்றப்பட்டதில் புனர் வாழ். வளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டவர்கள். கடந்த 20 ஆண்டுகளில் இலங்கையில் இருந்து நாடுகடத்தப் பட்ட இந்தியர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு மட்டும் 500 கோடி ரூபாய்கள் செலவிட்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் இம்மக்கள் ஏறக். குறைய இரண்டு லட்சம் பேர் இருப்பார்கள். இவர்களில் சிலர் தமிழகத்தில் வேறு மாவட்டங்க ளில் குடியேற முயற்சி செய்து, அம்முயற்சிகள் பயனளிக் காததால், நீலகிரித் தேயிலைத்தோட்டங்களில் தமக்கு பரிச்சியமான தொழில் வாய்ப்பு இருப்பதால் பெருமளவில் இம்மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்கள். இந்த மாவட்டத்தில் தொழிலாளர் பற்ருக்குறை

தேள்கொட்டியதாம் நறிகட்டியதாம் !
இருப்பதனலும் இங்கு இவர்கள் குடியேறுவதற்கு ஆரம்ப கா ல த் தி ல் அனுகூலமான சூழ்நிலைகள் இருந்தன.
எனினும் இவர்கள் அகதிகள் என்றே அழைக்கப் பட்டனர். அரசாங்க கடி த த் தொடர்பு களிலும் இலங்கை அகதிகள்’ என்றே குறிப்பிடப்பட்டனர். பத்திரிகைகளிலும் அப்படியே குறிப்பிடப்பட்டார்கள். இந்த மக்கள் மட்டும் தம்மைத்தாயகம் திரும்பியோர் என்று முறையாக அறிமுகப்படுத்திக்கொண்டார்கள் ஆனல் தமிழகமோ இவர்களைத் தொடர்ந்து இலங்கை அகதிகள் என்றே அழைத்து வந்தது. தாயகம் திரும்பிய மக்கள் அகதி என்று சொல்லாதே’ என்று ஆர்ப்பரித்தும் ‘நாம் இந்தியர்கள்’ கோஷமிட்டும் கூட தமிழகத்தின் செவிடுபட்ட கா து களி ல் இது ஏறவில்லை.
ஆங்கிலத்தில் மட்டும் இம்மக்களை CR என்று குறிப்பிட்டார்கள். °CR’ என்பது அரசாங்கக் கோப்பு களில் உபயோகிக்கப்படும் குறியீட்டு பெயர் "CR? என் முல் Ceylon Repatriate அல்லது இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் என்பது அர்த்தமாகும். ஆனல் ஆங்கிலத்திலிருந்து தமிழில் சரியாக மொழிபெயர்க்கத் தெரியாத காரணத்தால் 'இலங்கை அகதிகள்’ என்றே அழைத்தார்கள். தமிழக மக்களிடையே தம்மைப் பற்றி சரியாக அறிமுகப்படுத்தப் படமுடியாமல் சளைத்துப் போன தாயகம் திரும்பியோர் கூட இலங்கை அகதி என்ற பெயரை தமது அறியாமையால் ஏற்றுக் கொண்டார்கள்.
அரசாங்க அலுவலகங்கள், தாயகம்திரும்பியோருக் கான மறுவாழ்வுத்திட்ட உதவிகளை மறுக்கும் போது நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாகக் கருதி உமது மனு மறுக்கப்படுகிறது என்று பதில் எழுதுவார்கள். நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து இப்படி ஆயிரக்கணக்கான கடிதங்கள், மறுவாழ்வு உதவி கோரும் மனுக்களை நிராகரித்து எழுதப் பட்டிருக்கின்றன. மறுவாழ்வு உதவி கொடுக்கப்பட்டவர்களின் ஆதாரங்களை அதாவது "பாஸ்போர்ட், குடும்ப அட்டை போன்றவைகளை அரசாங்க அலுவலகங்களிலேயே வைத்துக்கொள்வார்கள். உதாரணமாக மறுவாழ்வுத் திட்டங்களில் வீட்டுக்கடன், வணிகக் கடன் போன்ற கடன் உதவித்திட்டங்களும் உண்டு கடன் வழங்கும் பொழுது, வழங்கும் அலுவலகங்கள் பாஸ்போர்ட், குடும்ப அட்டை ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்வதுண்டு. சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பிக் கொடுப்பதில்லை, சிலசந்தர்ப்பங்களில் விபரம் தெரியாத மக்களை ஏமாற்றும் புரோக்கர்கள் அல்லது தரகர்கள் அவர்களுடைய ஆதாரங்களைப் பெற்றுக்

Page 4
கொண்டு அரசாங்க அலுவலர்களின் அனுசரணையோடு மறுவாழ்வுக் கடன்களை தாமே பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றி விடுவதுண்டு. இம்மாதிரி ஏமாற்றப் பட்டோர், வஞ்சிக்கப்பட்டோர் பல்லாயிரக்கணக்கானவர் இருக்கின்ரு?ர்கள். இப்பொழுது கூட தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்பட்ட வீட்டுக்கடன்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் அதற்காக அடமானமாகப் பெறப்பட்ட பட்டா முதலிய ஆதாரங் களை அவர்சளுக்கே திருப்பிக் கொடுத்து விட வேண்டு மென்றும் அரசு அறிவித் துள்ள து. இருந்தும் பல அலுவலகங்சளில் இந்த ஆதாரங்களை சம்பந்தப் பட்டவர்களுககு திருப்பிக்கொடுக்க மறுத்துவிடுகிருர் கள். ஆனல் தாயகம் திரும்பிய ஒவ்வொருவரின் முழு விபரங்களும் இலங்கையில் உள்ள இந்திய ஹைகமிஷ னரிடமும் தமிழக மறுவாழ்வுத்துறை அலுவலகத்திலும் இருக்க வெண்டும் ,
இவ்வாறு தாயகம் திரும்பியோரைப் பற்றிய அஃனத்து ஆதாரங்களையும் தனது கைக்குள்ளேயே வைத்துக்கொண்டு திடீரென்று ஒருநாள். அவர்கள் தாம் தாயகம் திரும்பியோர் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்காவிட்டால் கைதுசெய்யப்படுவார்கள் என்று மிரட்டுவது என்ன நியாயம்? சனநாயக உணர்வு உள்ள அரசு செய்யக் கூடிய செயலா இது.
19831 ஆண்டுக்குப் பிறகு தான் உண்மையாகவே இலங்கை அகதிகள் இங்கு வரத் தொடங்கிஞர்கள். 1983ம் ஆண்டு ஜ"லே மாதம் இலங்கையில் சிங்கள வெறியர்கள் தமிழ் மக்களை கண்ட கண்ட இடங்களி ஒெல்லாம் படுகொலை செய்ய ஆரம்பித்தார்கள் தமிழர்களின் உடமைகளைச் சூறையாடினர்கள். அதன் பின்னர் சிங்கள இராணுவம் தமிழ் பகுதிகளில் அரா ஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு ஜெர்மனியில் யூதர்கள் வேட்டையாடப்பட்டது போல் இனப்படுகொலே செய்ய ஆரம்பித்தார்கள். இதனல் தனது உயிருக்கு அஞ்சி தமிழகத்தில் தஞ்சம் புகுந்தவர்கள் தான் இலங்கைத் தமிழ் அகதிகள் இவர்களைத்தான் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு ஜூலை மாதம் ஆணயிட்டது.
ஆனல், தாயகம் திரும்பியோர் யார், இலங்கை அகதி யார் என்ற வித்தியாசம் தமிழகத்தில் பலருக்குத் தெரியாமல் போய்விட்டது. எல்லோரையுமே ஒட்டு மொத்தமாக இலங்கை அகதிகள் என்றழைத்ததினுல் ஏற்பட்ட விபரீதம் இது! 1A.S. படித்துவிட்ட அதிகாரிகளுக்குக் கூட இந்த வித்தியாசம் தெரியவில்லை புரிந்து கொள்ள முயற்சிக்கவும் இல்லை பல இடங்க ளில் தாயகம் திரும்பியோர் அணுவசியமாக இம்சிக்கப் ii I f T!' 85 GT.
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய பத்த! யிரம் பேர் அணுவசியமாக இம்சிக்கப்பட்டுள்ள னர். ஜூலை மாதம் 30ம் திகதி தாயகம் திரும்பியோர் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது இதே கருத்தை தமிழக போலீஸ் அதிபதி வல்"

தேவாரம் அறிவித்தார். ஆனால் ஜூலை 20 முதல் 30 வரை தாயகம் திரும்பியோரை நீலகிரி நிர்வாகம் ஒரு இராணுவ ஆட்சிபோல் வேட்டை ஆடியது. கலெக்டர் லீனநாயர் ஹிட்லர் போல தர்பார் நடத்தி 200க்கும் மேற்பட்ட ஏழைகளை அண்ணு விளையாட்டு அரங்கில் அடைத்து வைத்து உதச மண்டலத்தில் ஒரு பெல்சன் முகாமை உருவாக்கிஞர். நீலகிரியில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கொடைக்கானலில் பல தாயகம் திரும்பியோர் தமது குடியிருப்புகளில் இருந்து போலீசுக்கு அஞ்சி ஓடிவிட்டார்கள். சேலத்தில் பலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாசில்தார் அலுவலகத்தின் முன் உண்ணுவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு தமிழக மெங்கும் பரவலாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் துன்புறுத்தப்பட்டதை நினைக்கும் பொழுது தென்னை மரத்தில் தேள் கொட்ட பனைமரத்தில் நெறிகட்டிய கதைதான் நினைவிற்கு வருகிறது.
இருபது வருடங்களாக இந்திய மண்ணிலே இந்தியர்களாக வாழும் மக்களை திடீரென்று பயமுறுத்தி பதிவு செய்யத் தூண்டிய நிர்வாகக் குளறுபடிகள் நிரந் தாமாக நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசு ஐந்து லட்சம் மக்களை இந்தியர்களாக ஏற்றுக்கொண்ட பின்னரும் சில பத்தாம்பசிலி ஆட்சியாளர்களும், அரை வேக்காடு அதிகாரிகளும் அவர்களைத் துன்புறுத்தும் டோக்கு நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் தாயகம் திரும்பிய மக்களிடையே பணிபுரியும் எல்லா தொண்டு நிறுவனங்களும் ஒன்று கூடி இந்நிலையைத் தெளிவு படுத்தி தாயகம் திரும்பிய மக்களுக்கு நிரந்தர பாது” காப்பு வழங்கும் வகையில் ஆணை பிறப்பிக்கவேண்டு மென தமிழக அரசை வற்புறுத்த வேண்டும்.
மன்றச் செய்திகள்.
2ம் பக்க தொடர்ச்சி
பாக்கியம், துணைச்செயலராக சரஸ்வதி, மற்றும் tல்லிகா ஆகியோர், பொருளாளராக திருமதி புஸ்பா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். மேலும் 9 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்ட்டனர் குன்னுரர் பிராந்திய மாதர் முன்னணி செயலர் செல்வி ரீட்டா, மன்ற ஊக்குனர் செல்வி அம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
12-6-91 அன்று குன்னுரர் நேர் கொம்பையில் மன்றக் கிளை அமைக்கப்பட்டது. சுமார் 50 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வருவோர் செயற் குழு உறுப்பினர் 5 எாக தெரிவு செய்யப்பட்டனர்.
و: -
தலைவர் - திரு. எம். கருனாகரன் துணைத்தலைவர் - திரு. எஸ். ரத்தினம் செயலாளர் - திரு. ஆர். ராஜ" துணைசெயலாளர் - திரு. எஸ். கணேசன் பொருளாளர் - திரு. வி. பாலசுப்பிரமணியம்
தொடர்ச்சி 6ம் பக்கம்

Page 5
5
நீலகிரியில் ஜனநாய
கடந்த மே மாதம் 21ம் திகதி முன்னால் பாரதப் பிரதமர் திரு. ராஜிவ் காந்தி கொடியவளால் கொலை செய்யப்பட்டார். இதனை எண்ணி ஏங்காதோர் எவருமிலர். நாம் எமது கண்ணிர் அஞ்சலியை காணிக் கையாக்குகிறோம். இதுபோன்ற தனிமனித அராஜகத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். அதே வேளை இதனை சாட்டாக வைத்து, சாதாரண ஏழை கள் நசுக்கப்படுவதை, அவமானத்திற்குள்ளாக்கப் படுவதை எம்மால் ஏற்க முடியவில்லை.
அமரர் திரு. ராஜீவ்காந்தியின் மரணத்தின் அடிப் படையில் இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும் தம்மைக் காவல் நிலையங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என அரசு ஆணைபிறப்பித்தது. அரசு ஆணையில் நாம் தவறுகாணவில்லை. அது அமுல் படுத்தப்பட்ட முறை தவறாக இருந்தது. இந்த தாட்டில் வாழவழியின்றி, நாடு அவர்களை வாழ்விக்க வக்கின்றி இருந்ததால் வறுமையில் வாடிய ஏழை இந்தியன் இலங்கை சென்றான். அங்கு நாடற்றவனாய், நசுக்கப்பட்டான். இந்தியத் தமிழன் கள்ளத் தோனி என அவமானப்படுத்தபட்டான் 1964ம் ஆண்டு பாரதப்பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் இலங்கைப் பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயகாவும் தமக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கு மீண்டும் இந்திய குடியுரிமை பெற்ற_வனாக, தான் இந்தியன் என்ற பெருமையோடு 1968 முதல் தாய்நாடு வந்தான். ஏறத்தாழ 5 லட்சம் பேர் அவ்வாறு வந்தனர். இவர்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் நீலகிரியில் வாழ்கின்றனர். என்ன கொடுமை! இங்கும் அவன் இந்தியக் குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்பட வில்லை. இலங்கை அகதி என்றே அரைவேக்காட்டு அ தி கா ரி க ள |ா ல் அழைக்கப்பட்டான். இவர்கள் இந்தியக் குடி யுரிமை பெற்றிருந்தும் இந்தியராக வாழ்ந்தும், தேர்தல்களில் வாக்களித்தும் கூட இலங்கைத் தமிழ் அகதிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற ஆணையை தவறாக புரிந்து கொண்ட அதிகாரிகள் இவர்களையும் பதிவு செய்து கொள்ளுமாறு வற். புறுத்தினர். இதனை ஆட்சேபித்து மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் முதலமைச்சர் முதல் அனைத்து அதிகாரிகளிடமும் ஆட்சேபனை எழுப்பியது. இந்திய குடியுரிமை பெற்ற இந்தியனாக வாழ்ந்து இந்தியாவே எனது எல்லாம் என எண்ணி இறுமாந்திருந்த தாயகம் திரும்பிய தமிழன் வெட்கினான்; வேதனைப் பட்டான் அவமானத்தால் கூணிக் குறுகினான். பதிவு செய்யுமாறு வற்புறுத்தப்பட்டான். ஆணவம் பிடித்த அதிகாரிகள் பதிய மறுத்தவர்களை போலிக்காரணம் காட்டி கைதிகளாக கேம்புசளில் அடைத்தனர்.
இவர்களுக்காக குரல் கொடுக்க எந்த அரசியல் அனுதாபிகளோ முன் வரவில்லை. என்றும் எப்பொழு தும் நசுக்கப்படுவோர் நலிந்தோர்களுக்காகவே தன்னை ஈடுபடுத்தி செயல்படும் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தினர் இ க் கொ டு  ைம கண்டு ஆர்ப்பரித்து எழுந்தனர்.

கத்திற்கு சாவு மணி !
கடந்த 24-7-91 அன்று மலையக மக்கள் மறு வாழ்வு மன்றத்தின் உயர்மட்ட தூதுக்குழு பொதுச் செயலர் இர. சிவலிங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து இதுபற்றி முறை யிட்டது. மாவட்ட ஆட்சியர்சிறிதும் பொறுப்பட்ட விதத்திலும் மனிதாபமான' றையிலும் ஆணவமாக அத், நடந்து கொண்டார் தூதுக்குழுவினரை அவ மா ன படுத்தும் விதத்தில் பேசினார். கிஞ்சித்து இவர்கள் கூற்றை அவர் கேட்க தயாராக இல்லை கேம்புகளில் உள்ளவர்களைப் பார்க்கக் கூட அனுமதிக்க மறுத்தார் துாதுக்குழுவினர் மவட்ட ஆட்சியர் கூறியதை மக்கள் முன்வைத்தனர். தந்தையை பிரிந்த குழந்தையுடன் தாய், கணவன ணப் பிரிந்த மனைவி, மனைவியை பிரிந்து கணவன், மற்றும் உற்றார், உறவினர்கள் பெற்றோர் இவர்கள் வேதனையால் வெகுண் டெழுந்து மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோசமிட்டனர் கேம்களில் உள்ள தமது உறவினர்கள் நடத்தப்படும் மோசமான நிலைகளைக் கோசமாக வெளியிட்டனர்.
காவல்துறை கணநேரத்தில் நடவடிக்கை எடுத் தது. மக்களின் பிரதிநிதியாக கலந்துகொண்ட மக்கள் மறுவாழ்வு மன்ற பொதுச் செயலருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ம்ேபுகளில் இருப்பவர்களைப் பார்வையிட அனுமதித்தது. அவசரமாக நடவடிக்கை எடுத்து மறுநாள் அவர்களை விடுவிப்ப தாக வாக்குறுதி தந்தது. சுமுகமான பேச்சு வார்த்தை யின் பின் ஆர்ப்பாட்டம் அடங்கியது. மகிழ்ச்சியாக அனை வரும் பகல் 2.00 ம ணி ய ள வி ல் கலைந்து சென்றனர். அந்த நேரத்தில் காவல் துறையினர் காட்டிய கண்ணியமான செயல்பாட்டை நாம் பாராட்டுகிறோம். -
ஜனநாயகம் சாகவில்லை என்றுதான் அப்பொழுதும் எண்ணினோம். ஆனால், அது இரவு 10.00 மணி யளவில் சாகப்போகிறது என்று நினைத்துகூட பார்க்க வில்லை. இரவு 10.00 மணியளவில் தாவல் துறையினர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளைக் கைதுசெய்தது. இரவோடிரவாக ஊட்டிக்கு அழைத்துச் சென்று அடுத்த நாள் கோவை மத்தியசிறையில் அடைக்கப்பட்டனர். பொது ச் செ ய ல ர் இர. சிவலிங்கம். திருவாளர்கள் ஏ.சி. டீன், சந்திரசேகரன், சாந்த கிருஷ்ணன், செபஸ்டியன், பாலச்சந்திரன், ராமச்சந்திரன். சுந்தர், கோவிந்தசாமி, அரசன், பரமநாதன், மயில்வாகனம், சுந்தரலிங்கம். ஆகிய 13 பேரும் மக்களுக்காக மக்கள் குறையை எடுத்துச்சொன்னதற் காக சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீன் கூட மறுக்கப்படுகிறது. உரிமைக்குரல் எழு ப் புவது அவ்வகை பெரிய குற்றமாக அங்கே கருதப்படுகிறது
இதுவா மாவட்ட ஆட்சியரின் ஜனநாயகம்? நீலகிரியில் ஜனநாயகம், செத்துவிட்டதா? அங்கு வாழும் மக்கள் தமது குறைகளை எடுத்துச்சொல்லும் உரிமை இல்லையா? அவர்கள் இந்தியத்தாயின் தவப்
தொடர்ச்சி 8ம் பக்கம்

Page 6
மன்றச் செய்திகள்.
4ம் பக்க தொடர்ச்சி
மேலும் 10 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர். குன்னுரர் பிராந்திய செயலாளர் திரு. சாந்தகிருஸ்ணன், மன்ற துணைத்தலை வர் திரு. ஏசி. டீன், வட்ட இளைஞரணிச் செயலாளர் திரு. பிரான்சிஸ், வட்ட இளைஞரணித் தலைவர் திரு. கிருன்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக்கிளை அமைப்பதற்கு தொண்டரணி உறுப்பினர்கள் திருவாளர்கள் மதிவாகனம், ரவி மற்றும் அன்ணாதுரை ஆகியேசர் கூட்டி ஏற்பாடு
களைச் செய்திருந்தனர்.
13-6-91 அன்று குன்னூர் மக்கள் நகரில் மன்றக் கிளை அமைக்கப்பட்டது. துணைத்தலைவர் திரு. ஏ. சி டீன், பிராந்திய செயலாளர் திரு. சாந்தகிருஸ் ணன், வட்ட இளைஞர் அணி செயலர் திரு. பிரான்சிஸ் ஊக்குனர் செல்வி, அம்பிகாபதி ஆகியோர் கலந்து கொண்டு புதிய கிளை உறுப்பினர்களை வாழ்த்தினர்தலைவராக எம். மூர்த்தி, செயளராக எஸ். கலைச் செல்வன், பொருளாலராக லோகேந்திரன், துணைத் தலைவராக வீரப்பன், துணைச்செயலராக கண்ணன் ஆகியோரும் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏழு பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.
பணியாளர்கள் பயிற்சி
ஜூன் 20, 21, 22 ஆகிய*தேதிகளில் கோத்தகிரி மன்ற மண்டபத்தில் பணியாளர் பயிற்சி நடைபெற்றது. மன்றத்தின் மூன்று பிராந்திய பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்ட இப்பயிற்சியை பொதுச்செயலர் திரு. இர. சிவலிங்கம், தலைவர் திரு. திருச்செந்தூரன் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இரண்டாம் நாளில் கூடலூர் "அக்கார்டு" நிறுவன இயகசூன்ர் திரு. ஸ்டேன் தெக்ககாராவும், மூன்றாம் நாளில் கோவை வேளான்மைப் பல்கலைக்கழகப் இபராசிரியர் டாக்டர் சுப்பிரமணியமும் கலந்து கொண்டு பணியாளர்களுக்கான பல்வேறு கருத்துக் களைப்பொழிந்தனர். அறிவு, ஆற்றல், பயிற்சி ஆகிய மூன்று அடிப்படையில் பணியாளர்களை வளர்த்தெடுக்கும் வகையில் இப்பயிற்சி முகாம் அமைந்தது.
தாலுக்கா கமிட்டிக்கூட்டம்
1. 6, 91 அன்று குன்னுார் தாலுக்கா கமிட்டிக் கூட்டம் நடைபெற்றது. பல்வேறு பிராந்திய பிரச் சினைகள் குறித்து பேசப்பட்டது. இதில் பேசிய பொதுச்செயலர் திரு. இரா. சிவலிங்கம், ‘குன்னூர் பிராந்திய நிலப்போராட்டங்களை மன்றம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை: அவற்றைத்தீர்க்கா மல் மன்றம் ஓயாது’ என்று சூளுரைத்தார். தலைவர், திரு. திருச்செந்தூரன், துணைத்தலைவர் திரு. ஏ.சி. டீன், குன்னூர் பிராந்திய செயலர் திரு. சாந்தகிருஷ் ணன், இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு வீரா. பாலச் சந்திரன் ஆகியோரும் பேசினர். கூட்டத்துக்கு

தாலுக்கா கமிட்டித்துணைத்தலைவர் திரு. பரமசிவம் தலைமை தாங்கினார்.
9.6.91 மற்றும் 23.6.91 ஆகிய இரு தினங்களில் கோத்தகிரி தாலுக்கா கமிட்டிக்கூட்டங்கள் நடை பெற்றன. பிராந்திய பிரச்சினைகள் குறித்து உறுப்பி னர்கள் பலரும் பேசினர். பின்வருவோர் தாலுக்கா கமிட்டி உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்
அமைப்புச்செயலாளர் - திரு. வி. சுப்பிரமணியம்
துண்ை , , - ** ப. பரமநாதன்
உறுப்பினர்கள் - திரு. பி. கோவிந்தசாமி
- , , ஏ. முருகேஷ் - , , சி. இஸ்மாயில் - , , என். கனகராஜ் * , , எஸ். மணி - , , வி.வரதராஜ் - , எஸ். p - , , ஆர். வேலாயுதம்
- , , எஸ். கண்ணையா - , , பி. கருப்பையா - , , எஸ், செல்லையா
- , , கே.பாலசுப்பிரமணியம் - , , ஆர். எஸ். மணி - , , எம், ஜெயபாலன் - , , என். சிவலிங்கம் - திருமதி. சரசு
, , சாவித்திரி.
இதுதவிர கோத்தகிரி, நெடுகுளா, கெங்கரை கொணவக்கரை, நடுஹட்டி, கக்குச்சி, கூக்கல்துரைச தேனாடு, ஜக்கனாரை, குஞ்சப்பனை ஆகிய பஞ்சா” யத்துகளுக்கு பஞ்சாயத்துக் கமிட்டிகளும் தெரிவு செய்யப்பட்டன.
கடன் மீட்சி சேமிப்புக்கூட்டங்கள் கோத்தகிரி வட்டம் சிவகிரி நகர், பாக்கியநசர் குடுமணை, கிரிமநாடு ஆகிய நான்கு ஊர்களில் கடன் மீட்சி சேமிப்புக் குழுக்கள் அ மைக் கப்பட்ட ன பாண்டி ய நகர். சக்தி நகர், குண்டுபெட்-கெட்டிக் கம்பை, காக்காசோலை ஆகிய ஊர்களிலும் சேமிப்புத் திட்டக்கூட்டங்கள் போடப்பட்டு விளக்கப்பட்டது.
பிரதமர், முதல்வருக்கு வாழ்த்து
நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்று மத்தியிலும் மாநிலத் திலும் ஆட்சியைப் பிடித்துள்ள பிரதமர் நரசிம்மராவ் மற்றும் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு ம.ம.ம. மன்றத்தின் பொதுச்செயலர் திரு. இர. சிவலிங்கம் வாழ்த்துக்கடிதங்களை அனுப்பியுள்ளார்.
பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நெருக்கடியான நேரத்தில் பொறுப்பேற்றுள்ள நீங்கள், உங்களின் பழுத்த அனுபவம், அறிவாற்றல் காரணமாக இந்திய
65 g Lidds 7 to suish

Page 7
7
அதிகாரிகளின்
நீலகிரி மாவட்ட அதிகாரிகள் மக்களின் குறை களை வேண்டுமென்றே புறக்கணிப்பவர்களாக உள்ள னர். அண்மையில் நமது மக்களுக்கு ஏற்பட்ட பல்வேறு அனுபவங்களால் அதிகாரிகள் திட்டமிட்டு இவ்வாறு நடக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
(1) மே 6ம் தேதி ம.ம.ம. மன்றத்தின் கோத்தகிரி தாலுகா கமிட்டி கோத்தகிரி தாலுகா அலுவலகத்தின் முன் உண்ணாவிரதப் போராட் டத்தை நட்த்தியது. கொணவக்கரை, மாரிஸ் காலனி, இடுகொரை ஆகிய ஊர்கள் சம்பந்தப் பட்ட பட்டா உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இவ்வுண்ணாவிரதப் போராட்டம் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9.00 மணி முதல் மக்கள் கோஷங்களை எழுப்பிக் கொண் டிருந்தும் தாசில்தாரோ அல்லது வேறு எந்த பொறுப்பான அதிகாரியோ வந்து மனுவை பெற வில்லை. இதனால், கொதிப்படைந்த மக்கள் மாலை வட்டாட்சியர் வீடு திரும்பும் நேரத்தில் கேரோ செய்த னர். அப்போது மனுவை 'நான் வாங்கி என்ன செய்வது? உண்ணாவிரதம் இருந்து விட்டு போக வேண்டியது தானே’’ என்று வட்டாட்சியர் அலட்சியமாக பதில் அளித். தார். எனினும் மக்களின் உணர்ச்சி வேகத்தை பார்த்து மனுவைப் பெற்றுக்கொண்டு மேல் நட. வடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட அவர், இன்று வரையிலும் எவ்வித பதிலும் தராமல் காலம் கடத்தி வருகிறார்.
(2) கோத்தகிரி கூக்கல்துரை அண்ணா நகர் வாழ் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கு முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராஜ்குமார் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். 29.3.91 அன்று பட்டா வழங்கும் விழா நடை
மருத்துவச் சான்றிதழ் விலை ரூ
கோத்தகிரி கேர்கம்பை பஸ் விபத்தொன்றில் தனது கால்களை இழந்த 'கணேஷ்’ என்பவர் விபத்து நிவாரண உதவிக்காக மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகினார். அவரோ ரூ. 100/- கையூட்டு கொடுத்தால்தான் சான்றிதழ் தரமுடியும் என்று கைவிரித்தார். பூசாரி. யிடம் வரம் கிடைக்காத கணேசன் தெய்வத்திடம் கேட்கலாம் என்று மேலதிகாரியை அணுகினார். தெய்வம் பூசாரியையும் மிஞ்சி விட்டது. "பாபர் சலு -
மன்றச் செய்திகள் சமுதாயத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்வீர்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல்வருக்கு தெரிவித்துள்ள வாழ்த்துக்கடிதத்தில், 'தமிழகத்தில்

உதாசீனம்
பெறுவதாக இருந்தது. ஆனால், அவர் திடீரென மாற்றம் செய்யப்பட்ட காரணத்தால் அவ்விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது 5 மாத கால மாகியும் இன்னமும் பட்டா வழங்கும் விழா நடைபெறவில்லை. இது குறித்து இவ்வூர் மக்கள் புதிய மாவட்ட ஆட்சியரைப் பல தடவை அணுகி யும் பட்டா வழங்கப்படவில்லை. இதனால் கூக்கல் துரை, அண்ணா நகர் மக்கள் விசனமும் வேதனையும், அடைந்துள்ளனர்." எல்லா "ஏற்* பாடுகளும் செய்த பிறகும் இவ்வாறு காலம் கடத்துவது குறித்து மக்கள் அதிர்ச்சி தெரிவித்
துள்ளனர்.
இதே போல், கட்டபெட்டு அண்ணா நகர் மனவரைக் காலனி, பங்களுரா ஆகிய பகுதி வாழ் மக்களுக்கும் பட்டா கொடுப்பதற்கு பழைய மாவட்ட ஆட்சித் தலைவர் தேதி குறிப் பிட்டிருந்தார். ஆனால் இதுவரையிலும் பட்டா
கொடுக்கப்படவில்லை: இப்பட்டா உரிமை குறித் து மாவட்ட ஆட்சித் த  ைல வ ர் கவனிப்பாரா?
(3) மலையக மாதர் முன்னணியின் நிர்வாகிகள் அதன் தலைவி திருமதி. சுந்தரம்பாள் தலைமையில் 25, 4,94 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் செல்வி. லீனா நாயரை நேரில் சந்தித்து நீலகிரியில் பெண்கள் பிரச்" சினைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். பல் வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவரங்களை உள்ளடக்கிய மனு ஒன்றையும் அவரிடம் கையளித்தனர். அவற்றில் சிலவற்றை உடனடியாகவும் ஏனைய" வற்றை படிப்படியாகவும் தீர்த்து வைப் பதா க அவர் உத்தரவாதம் அளித்தார். ஆனால், இதுவரை யிலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை பதிலும் வரவில்லை.
100/-
னில் போய் சும்மா உட்கார்ந்திருந்தால் அவர் முடி
வெட்டி விடுவாரா? ஏதேனும் தள்ளி விட்டு போ' என்று தெய்வம் வரம் கொடுத்தது, பாவம்! கணேசன் ரூபாய் 100/-க்கு மருத்துவச் சான்றிதழ் வாங்கினார்.
நீலகிரியில் உள்ள அதிகாரிகளின் இது போன்ற உதாசீனம் குறித்து மக்கள் அதிருப்தியும் கோபமும் அடைந்துள்ளனர். கோபம் வேகமாக மாறுமுன் சரியான நடவடிக்கை எடுக்கப்படுமா?
6 ம் பக்க தொடர்ச்சி
நலிவுற்ற மக்களின் த ல் வாழ்வுக் காக பணியாற்ற வேண்டும்' என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

Page 8
ia)pjJI?a ம.ம.ம.மன்றத் தோழர்கள் சிறையில் அடைந்த அ கைதிகளுக்குள் பண்டமாற்றம் நடைபெறுவதற்கு Vʼ; .. தேய்ந்துபோன பீடியோடு தொடங்குகிறது.
ஈரோட்டிலிருந்து கோவைக்கு வருகிறாள் அந்த ஏழைத்தாய். சிறைபட்டிருச்கும் தன் ஒரே மகனை பல மாதங்களுக்குப் பின் மனு போட்டாவது பார்க்க இாம் என்ற ஏக்கம் நெஞ்சிற்குள் அவன் வீட்டிலிருக் கும் போது அவன் புகைப்பதைக் கண்டிக்கும் அவள் இப்பேர்து அவனுக்காக ஐந்து கட்டுகள் பீடி வாங்கி வருகிறாள். அவனுக்கு பிடித்ததை கொடுக்க வேண்ம்ே என்ற அவளது தாய்மை உள்ளத்துக்கு இக் கணத்திலது தவறாகத் தெரியவில்லை. பீடிக்கட்டுகள் தவிர அவளிடம் மேலும் 5 ரூபாய் தான் இருந்தது,
சிறை வாசலில் நேர்க்காணலுக்காக மனு கொடுக்கும் போதே ஒரு ரூபாய் போய்விடுகிறது. நோ காணல் அறைக்கு பொறுப்பாயுள்ள காவலர் இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்ட பிறகுதான் அவளை உள்ளேயே அனுமதிக்கிறார். எஞ்சியுள்ள இரண்டு ரூபாயை பீடிக்கட்டுகளுடன் சேர்த்து மகனிடம் கொடுத்துவிட்லாம் என்ற எண்ணத்தோடு
அந்தத்தாய் நேர் காணல் அறையில் தன் மகன் முகம்
காண காத்திருக்கிறாள்.
அதோ! அவன் வந்து விட்டான். அவள் நெஞ்சுக்குள் பொங்கியெழுந்த வாஞ்சையை இடையி
லிருந்த சிறைக்கம்பிகள் தடுக்கின்றன. இரண்டு
ரூபாயை எடுத்து நீட்டுகிறாள். மகன் கையை நீட்டுவதற்கு முன்பே ஒரு முரட்டுக்கரம் அதனை பிடுங்கிக்
கொண்டது. ‘இந்தாம்மா ஜெயிலுக்குள்ள பணமெல்லாம் கொடுக்க முடியாது’. அங்கு கடமை
யிலிருந்த காவலர் அதனை தனது பைக்குள் போட்டு
3.
மக்கள் மறுவாழ்வு மன்) II Il 6f Dj5i
தாயகப் திரும்பிய இந்தியர்கள் மீது நீலகிரி மா வட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ள அடக்கு முறை யையும் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத் தலைவ ர்களை கைது செய்து சிறையில் அடைத்ததையும் பாட் டாளி மக்கள் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் தீரன் கண்டன அறிக்கை-வேளியிட்டுள்ள ர், 'தாயகம் திரும்பிய
தமிழர்கள் இந்தியர்கள். அப்படியிருந்தும் அவர் சளை இலங்கையர்களாகக் கருதி காவல்துறை தொல்லை
கொடுத்ததோடு மட்டுமல்லாமல் பலரைச் சிறைப்படு
.
த்தி காவலில் வைத்து பின் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் நடத்திய போராட்டத்திற்குப் பின் விடுவித் துள்ளது.ஆனால் ம.ம.ம.மன்றத் தலைவர் ,பொறுப்பா ளர்கள் மீது பொய்வழக்குப் போட்டு சிறையில் அடை த்துள்ளது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமி ழர்களை போலீசார் அத்துமீறிய அடக்குமுறைக் கொ டுமைகளுக்கு ஆளாக்குகின்றளர். இதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மா பெரும் கண்டனப்
வெளியீடு : மலையக மக்கள் மறுவாழ்வு மன்
தபால் பெட்டி எண். 2758 கோவை

Đì8)IIl0Uhlö6II லுபவங்களை, தொடர்ந்து எழுதவுள்ளார்கள். சிறைக் ஒரு ஊடகமாகவும் உள்ளது. அதனால் இத்தொடர்
காண்டார். ஒஹோ! கைதிகளுக்கு மட்டுந்தான்
பணம் கொடுக்கக் கூடாதோ! * சரி பீடிகட்டுகளையாவது கொடுப்போம். எடுத்து நீட்டுகிறாள். இன்னொரு காவலர் அதில் மூன்று கட்டுகளை தான் எடுத்து கொள்கிறார். மிகுதி இரு கட்டுகளுடன் மகன் விடைபெற்றுச்செல்கிறான்,
இரண்டு கட்டுகளுடன் கைதிகள் வார்டை நெருங்குகிறான் அவன். வார்டன், '' வா! வா! உன்னைச் சர்ச்பண்ண வேண்டும்’ என்று அழைக்கிறார். ஒரு கட்டுபீடி அவருக்கு ப  ைட ய ல |ா கி விட்டது.
மிகுதி ஒரு கட்டுடன் தனது வார்டுக்குள் நுழைகிறான். கணக்கன், ஓவர்சியர் கேட்கீப்பர், தோட்டி இவர் சிளுக்கெல்லாம் அந்த ஒருகட்டு பீடியிலிருந்து தானம் செய்ய வேண்டியிருக்கிறது. தனக்கு அவ்வப் போது ஒரு பீடியும் ஒரு தம் இழுப்பும் கொடுத்துதவு கிற சக கைதிகள் சிலருக்கு ஒவ்வொரு பீடி.
கடைசியாக மிஞ்சியது இரண்டு பீடிகள்தாம்
அதில் ஒன்றை சிறைக்குள் நட்பை வெளிப்படுத்திய தன் பக்கத்து செல் நண்பனுக்கு கொடுக்கிறான். எஞ்சியது ஒன்றே ஒன்று. அதைப் பற்றவைத்து நன்றாக இழுத்துப் புகைவிட்டான். முடிந்தபோது தன் தாயார் கம்பங் கொள்கையில் வேலை செய்த ஒரு நாட்கூலியில் ஒரு பீடிதான் மிஞ்சியது நினைவுக்கு வந்தது. இப்போது, அவன் வாயில் புகை முடிந்து; கண்களில் கண்ணிர் வடிந்தது.
இது கதையல்ல சிறைக்குள்; அன்றாடம் நடக்கும் பல சம்பவங்களில் ஒன்று.
ம் மீது அடக்குமுறையா?
r
|ம்
-5 ம்-டிக்க-தொடர்
5d 5616)It
பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது . இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கும், பேராசிரியர் தீர னுக்கும் ம. ம.ம. மன்றம் தனது நன்றியைத் தெரி த்துக் கொள்கிறது.
நீலகிரியில் ஜனநாயகத்திற்கு சாவு மணி .
புதல்வர்கள் இல்லையா? இதுதான் ஆட்சியா உரிமை மறுக் சப்படுகிறது, உரிமைக்குரல் நெறிக்கப்படுகிறது. எனவே நீலகிரியில் ஜனநாயகத்திற்கு சாவுமனி அடிக் கப்படுகிறது. r
மக்கள் குறையை மாவட்ட ஆட்சியரிடம் எடுத்து சொன்னதுதான் அவர்கள் செய்த குற்றம். சிறைக் கம்பிகள் அவர்களது உள்ளத்தில் எழும் எண்ணங் சளுக்கு, உரிமைகளுக்கு சிந்தனைக்கு உணர்வுகளுக்திரையிடமுடியாது என்பது வரலாறு புகட்டும் பாடம்.
, இல, 187, இராஜா அண்ணா மலைத் தெரு,
641 011 (தனிச்சுற்றுக்கு மட்டும்)