கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1991.08

Page 1
7,5 OC)
Gblu î5)ùil L.
- புதிய வரவு செலவுத் தி
புதிய அரசின் வரவு செலவுத் திட்டம் சட்டசபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. மத்திய வரவு செலவுத் திட்டத்தில் ரூபாயின் மதிப்பு, ஏறக்குறைய 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்க்கைச் செலவு தீவிரமாக உயர்ந்துள்ளது. வறிய மக்கள் மேலும் வறுமைக்குள் வீழ்ந்து வாடக் கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக உர உற்பத்திக்கு
வழங்கப்பட்டு வந்த மானியம் குறைக்கப்பட்டுள்ள
தால் விவசாய செலவு அதிகரிக்கும். தமிழக வரவுசெலவுத்திட்டத்தில் மின் உபயோகவரி விவசாய உப யோகம் உட்பட, அதிகரிக்கப்பட்டிருப்பதாலும் வேளாண்மை உற்பத்திச் செலவு அ தி க ரி க் கு ம். விற்பனவரி, பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருக்கும் காரணத்தினல் எல்லாப்பொருள்களின் விலைகளும் பெருமளவில் உயரும். நிரந்தர
மாக குறைந்த வருமானம் பெறுகி
( L. 보 e ன்ற ஊழியர்கள், விவசாய தொழி 鲇)ö函鲷 ளாளர்களின் வாழ்க்கை பெரிதும் affi đề 56/*f_fồ பாதிக்கப்படும். சம்பள உயர்வு தாட்டும் பெ போராட்டங்கள் தவிர்க்கமுடியா டைக்கும் பே
வகையில் வெடிக்கும். தொழிற் களுக்கும், ச சங்கங்கள் தங்கள் பலத்தை பெரு க்கிக் கொண்டு, சம்பள உயர்வுக் இடையில் எத் கோரிக்கையை முன் வைத்துப் வெளி பெருகு போராட வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டம் போன்ற பகுதிகளில் மிகக் குறைந்த கூலி வாங்கிக் ரெகண்டு மாதத்தில் 15 நாட்கள் கூட வேலை கிடைக்காமல் வாடிக்கொண்டிருக்கும் தாற்காலிகத் தொழிலாளர்களின் நிலைமை. தான் மிகவும் கவலைப்படுகிற வகையில் பாதிக்கப்படக் கூடும். பொதுவாகப் பொருளாதார சூழ் நிலை சாதாரண மக்களுக்கு சங்கடம் விளைவிக்கக்கூடிய நிலையில் இருந்தாலும் தமிழக அரசின் வரவு - செலவு
 

ஏக்கரில்
(6) ༈ །ཡོད་༽ཀྱི་ |யிர்ச்செய்கை
ட்டத்தில் ஆலோசனை -
திட்டத்தில் மக்கள் நலன் பேணும் நல்ல திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
முதலாவதாக மலிவு விலே மதுக்கடைகளை மூடி யதற்காக முதல்வருக்கு நன்றி கூற வே ண் டு ம் பொருளாதார நிபுணர்கள் இந்த அறிவிப்பை வரவேற்காவிட்டாலும் கோடிக்கணக்கான குடும்பங் களின் வயிற்றில் பால்வார்த்ததற்கு ஒப்பாகும் இந்த
அறிவிப்பு. -
கூட்டுறவு நெசவாளர் குடும்பங்களுக்கு பென்சன் சலுகை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
வயது முதிர்ந்த ஓய்வூதியம் பெறுபவருக்கு இலவச அரிசித் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது
பாராட்டுக்குரியது.
பற்றில்லாத நிர் இவற்றை நிலை ாறுப்பை ஒப்ப = ாது எண்ணங்
ாதனைகளுக்கும் தனை இடைமோ..?"
கிராமப்புறக் குழந்தைகளின் திறன் தேடி அவர்களின் வளர்ச் சிக்கு வழிகோலுவது மிக உன்னத மானதிட்டம்.
1 லட்சத்து 22 ஆயிரம் வீடு கள் இந்த ஆண்டிலேயே கட்டி முடிப்பதான திட்டம் மகிழ்ச்சிக்கு ரியது.
6.14 வயதுக்குள் பள்ளிக\ை லிருந்து விலகி விட்ட சிறுவர்களு க்கு, வேலையற்ற கல்வி கற்ற, இளை
ஞர்களை வேலைக்கமர்த்தி கல்வி வழங்குவதற்காக
20 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை நாம் வரவேற்கிருேம். 15-35 வயதுக்குட்பட்ட எழுத்த றிவற்ற 78 லட்சம் பேருக்கு எழுத்தறிவூட்டும் திட்டம் போற்றற்குரியது.
ஆதிவாசிகள் - ஆதிதிராவிடர்கள் முன்னேற்றத்
திற்கு பத்து அம்ச திட்டம் இயற்றி இரு ப் ப து பாராட்டுக்குரியது.

Page 2
ஆட்சியின்
அட2 1953ல் வந்தவருமா?
ஊட்டி அண்ணா வி  ைள யாட் ட ரங் கில் கடந்த மாதம் இலங்கையர் என்று அடைத்து வைக்கப் பட்ட தாய்கம் திரும்பிய இந்தியர் களில் ஒருவர் 1953ம் ஆண்டு இலங்கையிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்தவர். 1983இற்குப் பிறகுதான் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்தனர். அப்படி இருக்க தமிழ்நாட்டில் கடத்த 38 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரையும்
தேயிலைப் பயிர்ச் செய்கை
1ம் பக்க தொடர்ச்சி .
ஒரு லட்சம் பெண்களுக்கு சுயவேலை வர்ய்ப்புத் திட்டம் வழங்குவதற்காக ஒருங்கிணைந்த மாதர் அபி விருத்தித் திட்டம் கொண்டுவந்திருப்பது மகிழ்ச்சிக் குரியது. குறிப்பாக நடைபாதை கடை, பூவியாபாரம், காய்கறி விற்பனை ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருக் கும் பெண்களுக்கு சிறப்பாக உதவிசெய்ய ஏற்பாடு செய்திருப்பது நல்லதொரு திட்டம்.
ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் ஒரு கோடி ரூபாய் தன்னிறைவு சிறப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த பணம் குடிதண்ணிர், நடைபாதை தெரு விளக்கு, ஆரம்பப்பள்ளி, பாசனசீர்திருத்தம், சத்துணவுமையம், தொலைக்காட்சிப்பெட்டி ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்காக செலவிடப்படும்.
வேலை வாய்ப்பை ஏற்படுத்தவும், வருமானத்தை பெருக்கவும், அடுத்த எட்டாண்டுகளில் 60 கோடி ரூபாய் செலவில் டான்டி நிறுவனம் 7,500 ஏக்கரில் தேயிலைப் பயிர்ச்செய்கையை விரிவு படுத்தும். இதனுல் நீலகிரி மாவட்டத்திலுள்ள தேயிலைத் தொழிலில் அனுபவமுள்ளவர்கள் அதிகம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
வனத்துறைப் பயிர்ச்செய்கை நிறுவனத்தால் அடுத்த ஆறு ஆண்டுகளில் 75,000 ஏக்கரில் மென்மரப் பயிர்ச்செய்கை அதாவது காகிதம், ரேயான் துணி ஆகியவற்றிற்கான மூலப்பொருளான மென்மரங்கள் பயிரிடுதல் அபிவிருத்தி செய்யப்படும்.
நல்ல பல திட்டங்களை உள்ளடக்கி மக்கள் வாழ் வையும் த மி ழ க த் தி ன் பொருளாதாரத்தையும் உயர்த்துகின்ற நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தை வரவேற்கும் அதே வேளையில் மக்கள் பற்றில்லாத நிர்வாகிகளிடம் இவற்றை நிலை நாட்டும் பொறுப்பை ஒப்ப  ைட க் கு ம் போது எண்ணங்களுக்கும், சாதனைகளுக்கும் இடையில் எத்தனை இடைவெளி பெருகுமோ என்று ஏங்காமலிருக்க முடியவில்லை.

2
JGOT
இலங்கைத் தமிழர் என அடைத்துவைத்த அதிமேதா வித் தனத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்துள். 67 frori.
இதில் விநோதம் என்னவென்றால், அவரிடம் பாஸ்போர்ட், குடும்பக்கார்டு கேட்டு அதிகாரிகள் தொந்தரவு செய்ததுதான். இலங்கையிலிருந்த இந்தி யர்கள் இந்தியாவுக்கு திரும்பும் வகையில் இலங்கை” யில் அப்போது பாஸ்போர்ட் முறை அமுலில் இருக்க வில்லை. 1954இற்குப் பிறகே இந்தியா செல்பவர் களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. 1964ல் சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் உருவான பின்பே-அதுவும் அந்த ஒப்பந்தப்படி இந்தியப் பிரசாவுரிமை பெற்றவர்களுக்கேயன்றி ஏற்கெனவே இந்தியப் பிரஜை 95 Golff T &5 இருந்தவர்களுக்கு அல்ல - குடும்பக்கார்டு வழங்கும் முறையும் அமுலில் வந்தது.
உண்மை வரலாறு இப்படி இருக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகமோ 1953ல் வந்தவரையும் சிறைப் பிடித்து வைத்தது. ஏழை களைச் சிறைப்பிடித்து வெறியாட்டம் செய்வது என்ன ஆட்சியோ? என்ன லட்சணமோ ?
காணாமல் போனதற்கு
காரணம் யார்?
ஊ ட்டியில் சிறை வைக் கப்பட்டிருந்தவர்களில் பலர் மறுவாழ்வு உதவிக்காக தமது பாஸ்போர்ட் மற்றும் குடும்பக்கார்டு என்பவற்றை ஊட்டி கலக்டர் அலுவலகத்தில் தான் ஒப்படைத்துள்ளனர். வேறு சிலரோ கூடலூர் தாசில்தார் அலுவலகத் தில் கொடுத்துள்ளனர். அப்படியிருந்தும் அவர்களிடம் பயண ஆவணங்களைக் கேட்டு தொந்தரவு செய்த அதிகாரிகளையும் மாவட்ட ஆட்சியரையும் எப்படித் தான் நொந்து கொள்வதோ? இப்பயண ஆவணங் களை வாங்கும் போது எந்த ஒரு அதிகாரியும் ரசீது தருவதில்லை. பல ஆண்டுகளாக அவர்களின் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு பின்பு அணுகும் போது இப்பயண ஆவணங்களை கொடுத்ததற்கான சான்று எதையும் காட்ட முடியாமல் மக்கள் தடுமாறுகிறார் கள். இந்நிலையில், தன்னுடைய நிர்வாகத்தை சீர் செய்ய முடியாத மாவட்ட ஆட்சியர், சம்பந்தபட்ட மக்களிடம் ஆவணங்கள் கேட்டு கைது செய்தது அவர் ஆட்சியின் லட்சணத்துக்கு ஒரு சான்றாகும்.
சம்பந்தப்பட்ட மக்களிடமிருந்து அவர்களுடைய இந்திய பிரசாவுரிமை ஆவணங்கள் காணாமல் போ - னதற்கு யார் காரணம் என்பது இப்போது புரிகிறதல்லவா?

Page 3
g
*அகதிகள் தாயகம் திரும்
ஐ.ஜி.பி. வால்டர் தே
தமிழ்நாடு காவல்துறையின் சட்ட ஒழுங்குப் பிரிவி தமிழ்நாட்டில் ஈழப்போராளிகளின் நடவடிக்கைகளை ஒ கள் பதிவு செய்யும் ஆணையை கண்காணிக்கும் பொறுப்பு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று போலீசார் நட போலீசார் கைது செய்ததையும் கண்டித்து நமது பொதுச் கையை ஒட்டி ‘இந்து பத்திரிக்கை கேட்டிருந்த கேள்விக் என்று குறிப்பிட்டிருந்தார் (இந்து 1-8-91 ). சென்னையின் கையின் 15-9-91 இதழில் திரு. தேவாரத்துடனான பே
தருகிறோம்:
1. பத்மநாபா படுகொலைக்குபின் தமிழக அரசு இலங்கைத் தமிழர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஆணைபிறபித்து இருந்ததே, அதற்கு கிடைத் த பயன் யாது?
மிகவும் குறைவு. 2000 - க்கும் குறைவானவர்களே பதிவு செய்து கொண்டனர். அந்நேரத்தில் அது ஒரு கோரிக்கையாக இருந்ததே தவிர, எச்சரிக்கையாக அமையவில்லை.
2- தற்போதைய அரசாணை எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டது?
28,000 பேர் பதிவு செய்துள்ள. னர். எங்சுளுடைய கடுமையான நடவடிக்கைகளின் விளைவாக மேலும் 2000 பதிவு செய்யாத அகதிகளைக் கண்டுபிடித்தோம். பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் ஒரு நூறு பேரைக் கைது செய்திருக்கிறோம். ஆகவே இப்போது உள்ள கணக்கின்படி 1,22,000 அகதிகளும், 1300 தீவி. ரவாதிகளும் முகாம்களில் உள்ளனர். முகாம்களுக்கு வெளியே உள்ளவர்களில் பதிவு செய்து கொள்ளாத 2100 இலங்கைத்தமி ழர்கள் போலீசாரால் கண்டுபி. டிக்கப்பட்டுள்ளனர். 28,000 பேர் பதிவு செய்துகொண்டுள்ளனர்"
3- பதிவு செய்யாதவர்கள் உள்ள இடங்களை எப்படி கண்டுபிடிக்கி. நீர்கள்? வீட்டுக்கு வீடு சோதனை செய்கிறீர்களா?
எல்லா இட சாத்தியமாவதில் ஒரு இடத்தின் சந்தே கப் பட் சிடைத்தாலும் வி நடவடிக்கையை றோம். ஒரேயடிய களிலும் சோ
சாத்தியப்படாது
4. தமிழ் நாட் செய்யாத இலக் ளின் எண்ணிக் ை! பட்ட செய்திகள் சிலர் 50,000 டே சிலர் 1 லட்சம் கூறுகிறார்கள். ச கை எவ்வளவு?
பதியாதவர்க அவ்வளவு அதி என நான் எண் 6 5000 பேர் செய்து கொள்
 

ா வேறு 3 பியோர் வேறு.”
வாரத்துடன் பேட்டி
ன் ஐ.ஜி.பி. யாயிருக்கும் வால்டர் தேவாரம் அவர்கள் டுக்கும் பொறுப்பேற்றிருக்கிறார். இலங்கைத் தமிழர். பும் இவருடையதே. தாயகம் திரும்பிய இந்தியர்களும் டவடிக்கை எடுத்ததையும் அவ்வாறு பதியாதவர்கள்ே செயலாளர் இர. சிவலிங்கம் வெளியிட்டிருந்த அறிக்கு பதிலளித்த அவர், அவ்வாறு கைது செய்தது தவறு மிருந்து வெளிவரும் "அசைடு" என்ற ஆங்கிலப் பத்திரிக் ட்டி வெளியாகியுள்ளது. அதனை இங்கே அப்படியே
ங்களிலும் அது லை. ஏதேனும் மீது நாங்கள் டா லும் தகவல் டு வீடாக தேடும் மேற்கொள்கி ாக எல்லா இடங்
த னை செய்வது
டிலுள்ள பதிவு கைத் தமிழர்கக குறித்து முரண் ா வருகின்றன. ர் என்றும் வேறு
பேர் என்றும் ரியான எண்ணிக்
ளின் எண்ணிகை கமாக இருக்கும் ணவில்லை. சுமார் இன்னமும் பதிவு ளாமல் இருக்கக்
6. பிடிப்பட்டவர்களை
கூடும். அதற்கு அதிகமாக இருக் காது. அகதிகளையும் இலங்கையிலிருந்து வந்த 3லட்சம் தாயகம் திரும்பியோரையும் ஒன்றாக நினை த்து பலர் குழம்பியிருக்கிறார்கள். தாயகம் திரும்பியவர்கள் இந்திய குடிகள் ஆதலால் அவர்கள் பதிவு செய்ய வேண்டியதில்ல்ை,
5-அகதிகள் மீதான நடவடிக்கை கள் மந்தமாக இருப்பதாகவும் கா
ரணம் பதிவு செய்யாத அகதிகளை
எங்கே தங்கவைப்பது என்பது தான் என்றும் கூறப்படுகிறதே?
அது சரியல்ல. நடவடிக்கைகள் இன்னமும் தொடர்கின்றன.
எங்கே தங்கவைக்கிறீர்கள்? அவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
தீவிரவாதிகளுடன் தொடர்பு
உடையவர்களை சிறப்பு முகாம்க
ளில் வைத்திருக்கிறோம். அப்பாவி கள் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இன்னும் புலனாய்வு செய்யப் படவேண்டிய ஏனையவர்கள் பல இடங்களில் காவலில் வைக்கப்பட் டுள்ளார்கள்.
7- அவர்களை அந்தபானுக்கு அனு ப்பும் யோசனை குறித்து?
அதுபற்றி எனக்கு தெரியாது. அது மத்திய அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவு. தமிழக முதல்வ ரும் அரசாங்கமும் தீவிர வா தி க ளின் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு எங்களைக் கேட்டுள்ளனர். முதல
66. LääáP 8íð 11 áðab

Page 4
எழுக! மாணவ
D6)
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் மாணவர் அமைப்பான மலையக மாணவர் மன்றம்
கூடலூரில் கோலாகலமாக உதய
மானது. 29.6.91 அன்று கூடலூர் பிராந்திய செயலாளர் திரு. எம். சந்திரசேகரன் தலைமையில் நடை பெற்ற மாணவர்கள் கூட்டத்தில்
மலையக மாணவர் மன்றத்தின் செயற்குழு தெரி வு செய்ய ப் Llull-gj. தலைவர்
செல்வன் பி. ஜெகதீஸ் துணைத்தலைவர்
பி. அரசகுமாரன் செயலாளர்
6.
பி. ராமகிருஸ்ணன்
300IG)
துணைச்செயலாள செல்வி ஏ. ப பொருளாளர்
செல்வன் பி.
if () ) Ò வாழ்த்திப்பேசிய இர. சிவலிங்கப் ஒன்றுபட்டு c செயல்படுவதுட வளர்ச்சிக்காக போராட முன் என்று கேட்டுக்ே றத் தலைவர் தூரன் பேசுை கள் முதலில் திற துக் கொள்வ முடித்தவர்கள்
இந்திய அதிகாரிகை இலங்கை
ர்கேசரி
ał"h aul. 29šala 8 a? sšu spôíRy, rhuo 199!
இலங்கையின் பிரபல தமிழ் நாளி த ழ ஈ ன ‘வீரகேசரி'தமிழ்நாட்டில் தாயகம் திரும்பிய இந்தியத் தமிழர்கள் மீதான அடக்கு முறைகளை அம்பலப்
படுத்து: ம.ம.ம. மன்றப் பொதுச் செயலர் திரு.இர. சிவலிங்கத்தின்
அறிக்கை ஒன்றை தனது 29.8. 91
இதழில் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்துள்ளது. ம.ம.ம.மன்றத் தோழர்கள் சிறையில் அடைக்கப் பட்ட செய்தியையும் விரிவாக வெ
و بالا ۴ ها اهد که به بیر
{{ly Jగీత
தப் 筑
o || a & { કપક ܪܶ
岁。 கீழ்
$કો
ل
9; ४४.! ւն* «1}ւb ,
,

4
சமுதாயமே எழுக!
மன்றம் உதயம்
Tr于
ாரதராணி
சந்திரபோஸ்
ணவர் மன்றத்தை பொதுச்செயலர் ம் , ** மாணவர்கள் கட்டுக்கோப்புடன் ன் நமது சமுதாய என்றும் துணிந்து எவர வேண்டும்’ கொண்டார். மன்திரு. திருச்செந்கயில், “ ‘மாணவர் ]மைகளை வளர்த் துடன் படிப்பை தாழ்ந்துகிடக்கும்
நமது சமுதாயத்தை உயர்த்தும் எமது போராட்டத்தில் இணைந்து கொண்டு செயலாற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டார். கூடலூர் பிராந்திய செயலர் திரு. எம். சந் திரசேகரன், மன்ற இளைஞர் வளர்ச்சி அலுவலர் திரு. வீரா. பாலச்சந்திரன் ஆகியோரும் வாரி த்துரை நிகழ்ச்சி முடிவில் செயற்குழுவினர் அனை வரும் தமது வாழ்க்கை முழுதும் நம் சமுதாயத்தின் விடுதலைக்காக உழைக்கப் போவதாக தனித் , தனியே சிற்றுரையாற்றினர்.
நீலகிரியில் மலையக மாண வர் மன்றத்தின் தோற்றம் ஒரு
வழக்கினர்.
திருப்பு முனையாக அமையும்.
)ளக் கேலிசெய்யும் க நாளிதழ்
ளியிட்டுள்ளது.
* தாயகம் திரும்பிய இந்தியத் தமிழர்
களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து தொல்லை என்று
தலைப்பிட்டுள்ள
விர சேசரி, அசோக சக்கர முத்
திரையிடப்பட்ட கடவுச்சீட்டை பார்த்து இது இலங் கையா அல்லது இந்தியாவா என திகைக்கும் இந்திய அதிகாரிகள் என்று கேலியும் செய்துள்ளது.
இலங்கையின் வேறு பல
நாளிதழ்களும் இது
பற்றிய செய்திகளைப் பிரசுரித்துள்ளன.
6 f 1ة وهي }r أو "" t f ff l - fi Ab B . நிராகரித்து 虚三。 4. tN8 اپنا خیاؤ
b
& & & & " (pà 8 SJ VfL ÜLÜ'L- Súča) L u Trt bis 6 SM) iku III A. LJET
Ffiguur Auft i GT FYr Dr.
|ல்லது
திகைக்கும் அதிகாரிகள் t
d
தி
ժ, 1 մյ5ւհ 5:) Ի 3
· ۔. .ئنLطن 7Li نے ،ٹ (htو ! ? 1 ۔ ۔ ' ' : ?
(புத்திரை ,

Page 5
கண்டனக்
தாயகம் திரும்பிய இந்தியர்களை "இலங்கையர்” எ கைது செய்தும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளா வட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை எடுத்தார்கள் அல்ல. மன்ற நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டதும் தொ அடக்கு முறைகளை கண்டித்தும் அவர்களுக்கு ஆதரவு ே களும் தந்திகளும் அனுப்பியுள்ளன. சில அமைப்புகள் கின்றன. தாயகம் திரும்பிய மக்களுக்கு நேசக்கரம் செ களை கீழே சுருக்கித்தருகிறோம்.
இலங்கை அமைச்சர் தொண்டமான்
இலங்கை, ஊரக வளர்ச்சி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான திரு. செள. தொண்டமான் தமிழக முதல்வர் ஜெயலலி தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'இலங்கைத் தமிழர் களுக்கு எதிராக எடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக் கையும் தமிழ்நாட்டில் இலங்கையிலிருந்து வந்துள்ள இந்திய வம்சாவழித் தமிழர்களை பாதிக்காத விதத்தில் அமைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள் ளார். இலங்கை வாழ் தமிழர்களை இந்திய வம்சாவளி யினர் இலங்கை தமிழர்கள் என்று இரு பிரிவினராக, பிரிக்க வேண்டுமென்றும், வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து வந்துள்ளவர்கள் இலங்கைத் தமிழர்கள், மத்தியப் பகுதியில் இருந்து வந்துள்ளவர்கள் இந்தியத் தமிழர்கள் என்றும் வகைப்படுத்தி காட்டியுள்ள அவர் "சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தப்படி தாயகம் திரும்பிய இந்தியத்தமிழர்கள் தமிழக அரசு எடுக்கும் பதிவு நடவடிக்கைகளினால் பாதிக்கப்படகூடாது' என்றும் கேட்டுள்ளார். திரு; தொண்டமான் ம.ம.ம.மன்றப் பொதுச்செயலருக்கும் இது பற்றி கடிதம் எழுதி யுள்ளார்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கூடலூர் கிளை தாயகம் திரும்பிய இந்தியர்கள் மீதான அடக்கு முறையை கண்டித்து ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அதில், 'நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நி ைல ய ங் களி ல் கையெழுத்துப்போடும்படியும் பதிவு செய்யும்படியும் தாயகம் திரும்பிய மக்கள் வற்புறுத்தப்படுகின்றனர் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இந்த நிலை தொடர்வதாக கூறப்படுகிறது. ஒப்பந்தப்படி இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. தற்போது இவர் களைப் பதிவு செய்ய வேண்டுமென நிர்பந்திப்பது குடியுரிமை என்ற அடிப்படை உரிமையை மீறிய தாகாதா?' என்று கேள்வி எழுப்ப்பியுள்ளது. மேலும்

5
V UU Up
குரலகள ாறு கூறி பதிவு செய்யுமாறும் பதிய மறுத்தவர்களை கியும் தமிழ்நாடு முழுதும் காவல் துறையினரும் மா" பா? இதனை எதிர்த்த மலையக மக்கள் மறுவாழ்வு ந்ததே. தாயகம் திரும்பிய இந்தியர் மீதான இந்த தரிவித்தும் பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கடிதங்
ம" ம.ம.மன்றத்தோடு நேரடி தொடர்பேற்படுத்தி வருாடுத்துள்ள சில அமைப்புகள், தனிநபர்களின் செய்தி
'இப்பிரச்னை பற்றி மாவட்ட ஆட்சியரிடம் பேசச் சென்ற சிலர் மீது (மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத் தினர்) 148, 188, 7 (1)A என்ற பிரிவுகளில் வழக்கு போடப்பட்டு ஜாமின் கூட மறுக்கப்படுகின்றது. வனத்துறை அதிகாரிகளை தாக்கியவர்கள் கூட ஜாமின் பெற்றுக்கொண்டு கூலாக நடக்கும் போது மக்கள் பிரச்சினைக்காக பேசியவர்களும் போராடிய வர்களும் கோவை சிறையில்! இது ஜனநாயகம் தானா?’ என்று கூறப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி
தாயகம் திரும்பியோர் மீதான மனித உரிமை மீறலைக் கண்டித்து முதன் முதல் குரல் எழுப்பிய அரசியற் கட்சி பாட்டாளி மக்கள் கட்சியே என்பது குறிப்பிடத் தக்கது. அக்கட்சியின் தலைவர் பேரா சிரியர் தீரன் ஏற்கனவே கண்டன அறிக்கை வெளி யிட்டது தெரிந்ததே. அத்துடன் 25.8.91 அன்று கூடலூர் காந்தி மைதானத்தில் கண்டனக் கூட்டமும் நடத்தியது. அதில் சிறப்பு பேச்சாளராகக் கலந்து கொண்ட பேராசிரியர் தீரன், தாயகம் திரும்பிய இந்தியர்களின் உரிமைப் போராட்டங்களுக்கு தனது கட்சி முழு ஆதரவு தரும் என்று உறுதியளித்தார். கூட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை பேராயர்
சென்னை மயிலை மறைமாவட்டப் பேராயர் அருட்தந்தை கஸ்மீர் ஞானாதிக்கம் 6.8.91 தேதியிட்டு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 'இலங்கையில் இருந்து சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய வம்சா வழியினரான சுமார் 5 லட்சம் மக்கள் தமிழ் நாட்டில் குடியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் சட்டப்படி இந்திய பிரஜைகளே. இத்தகைய மக்கள் நீலகிரியிலும், கொடைக்கானலிலும் இன்னும் பல இடங்களிலும் காவல் துறையினராலும் மற்றும் அரசு அதிகாரிகளினாலும் அச்சுறுத்தப்பட்டும், கைதுசெய்யப்பட்டும் உள்ளனர் தற்போது நிலவி வரும் சூழ்நிலையினால் இவர்களிடையே பெரும் அச்சம் நிலவியுள்ளது. ஆகவே, தாங்கள் சட்டப்படி இந்தியப் பிரஜா உரிமை யுடன் வாழும் இந்த அப்பாவி மக்களை விடுதலை

Page 6
செய்து பயமுறுத்தலினின்றும் அவர்கள் காப்பாற்றப் பட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ இவ்வாறு அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். டெக்ராஸ் நிறுவனம்
தமிழகம் தழுவிப் பணியாற்றும் சென்னை டெக்ராஸ் நிறுவனம் தாயகம் திரும்பியோர் மீதான அடக்கு முறைகளை எதிர்த்தும் மலையக மக்கள் மறுவாழ்வு, மன்றத்தினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் தமிழக முதல்வர், தலைமைச் செயலர் ஆகியோருக்கு தந்திகளை அனுப்பியுள்ளது. அத்துடன் ம.ம.ம. மன்றத்திற்கு டெக்ராஸ் தூதுக்குழு வினர் அருட்திரு ஜேகப் பெல்லி தலைமையில் நேரில் 2 வந்து தமது முழுமையான ஆதரவையும் ஒத்துழைப் பையும் வழங்கினர். பொதுச்செயலர் இர. சிவலிங்கம் மற்றும் உறுப்பினர்களை கோவை மத்திய சிறையில் சத்தித்தனர். மன்ற உறுப்பினர்களுக்கு தேவையான எல்லாவித சட்ட உதவிகளையும் ஏற்பாடு செய்வதற்கு தமது அமைப்பு எப்போதும் தயாராக இருப் பதாக உறுதியளித்தனர். டெக்ராஸின் க்ோவை பிராந்திய ஒருங்கிணைப்பாளர் செல்வி ரேகா ம.ம.ம. மன்றத்தோடு தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கம்யுனிஸ்ட் கட்சி
இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் கூடலூர் கிளை செ ய லா ளர் கள் திரு. டி. பாலகிருஷ்ணன் திரு. கே. எல். ரகுநாதன் ஆகியோர் வெளியிட் டுள்ள ஓர் அறிக்கையில், நீலகிரியில் தாயகம் திரும்பி யோர் மீது அடக்குமுறை செலுத்தப்பட்டிருப்பதாக வும் அவர்களை அன்னியர்கள் என்று பதிவு செய்யக் கோருவதன் மூலம் அவர்களின் குடியுரிமை மறுக்கப் பட்டுள்ளது என்றும் இது இந்திய குடி ம க ன ன் உரிமைகளை வழங்கியுள்ள இந்திய அரசியல் சாச" னத்தை பகிரங்கமாக மீறுவதாகும் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. மேலும் பல அமைப்புகள்
சென்னை, இந்திய வம்சாவழித் தமிழர்கள் இயக் கத் தலைவர் திரு. ரெங்கநாதன், மதுரை தாயகம் திரும்பியோர் முன்னணி இயக்கப் பொதுச்செயலர் திரு. ராமச்சந்திரன், திருச்சி தாயகம் திரும்பியோர் ஐக்கிய முன்னணிப் பொதுச்செயலர் திரு. ரத்தினம், சென்னை ஈழக்குடிபெயர்ந்தோர் சங்கச்செயலர் திரு. தேவதாஸ், தாயகம் திரும்பியோர் அ.தி.மு.க சங்கத் தலைவர் டாக்டர் நெய்னார் ஆகியோரும் தாயகம் திரும்பிய தமிழர்களின் குடியுரிமையை மீறும் வகையிலான் நடவடிக்கைகளையும் அடக்கு முறைகளையும் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள னர். இத்துடன் தமிழகம் முழுதுமுள்ள பல சமூகநல இயக்கங்களும் மாநில அரசுக்கு கண்டனத் தந்திகளை அனுப்பியுள்ளன.

ஈரோட்டில் உண்ணா விரதம்
தாயகம் திரும்பியோரை இலங்கையர்கள் என்று கைது செய்ததைக் கண்டித்து ஈரோடு தாசில்தார் அலுவலகம் முன்பு ஈரோடு தாயகம் திரும்பியோர் மறுவாழ்வுச் சங்கம் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது. சங்கத் தலைவர் திரு. வி. ஜார்ஜ் வில்லியம் தலைமை தாங்கினார். பெருந்திர ளான மக்கள் கலந்து கொண்டனர்.
தாயகம் திரும்பியோர்
பதிவு செய்ய வேண்டாம்
- உயர் நீதிமன்றம் தீர்ப்பு -
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழியினர் தம்மைப்பற்றிய விபரங்களை காவல் நிலையங்களில் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கொடைக்கானல் காளிமுத்து என்பவர் தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுவின் மீது தீர்ப்பு வழங்கிய டிவிசன் பெஞ்ச் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேற்கண்ட செய்தி மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் இப்பிரச்சினையில் மேற்கொண்ட நிலைப்பாடு சரியானது என்பதையும் மன்றம் நீதிக்காக குரல் எழுப்பியிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. ஆனால், மன்ற உறுப்பினர்களை சிறைக்கு அனுப்பி யதன் மூலம் நீலகிரி மாவட்ட நிர்வாகம் தனது அநீதியான, மக்கள் விரோத செயலை மூடி மறைக்க முடியுமா? ம.ம.ம.மன்றம் சத்திய சோதனையை வீரத்துடன் எதிர் கொள்ளும்.
துச்சாதனன் கைகள் வெட்டப்பட வேண்டும்
ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டத்தின் சலகுர்த்தி என்ற கிராமத்தில் 14 - 8 - 91 அன்று முத்தம்மா என்ற ஓர் ஏழைப் பெண் நிலப்பிரபுக் களால் கற்பழிக்கப்பட்டதோடு நிர்வாணமாக தெருத் தெருவாக இழுத்துச்செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. நாகரிக உலகம் நாணி வெட்கப் படத்தக்க இந்தக் காட்டு மிராண்டிச் செயல் நமது கண்களிலெல்லாம் கணல் எழும்பச்செய்கின்றது.
பலர் நடுவே பாஞ்சாலியின் துகில் உரிந்த துச்சாதனின் கைகள் வெட்டப்பட்டதை பாரதமாக பல்லாண்டுகளாக பாடிப்பரவிவரும் இந்த மண்ணிலே தான் இப்படியொரு பெண் படுகேவலப்படுத்தப் பீட்டிருக்கிறார். இதனை செய்த மனித நாய்கள் மாபாரதத் துச்சாதனனைவிடக் கொடியவர்கள்.
தொடர்ச்சி 8ம் பக்கம்

Page 7
நீலகிரியில் அவச
நீலகிரி வாழ் மக்களின் உரிமைக்காக போராடிய ம.ம.ம, மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கடந்த மாதம் போலீசாரரல் கைதுசெய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பப்பட்ட செய்தி நீலகிரியெங்கும் காட்டுத் தீ போல் பரவியதும் மக்கள் மத்தியில் கோபமும் ஆத்திர மும் பீதியும் ஏற்பட்டன குறிப்பாக கோத்தகிரியில் பெரும் பதற்றம் நிலவியது. எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கை கள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோல் அமைந்தன.
நீலகிரி மாவட்ட முழுதும் போலீஸ் தடைச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக் கப்பட்டனர். கோத்தகிரியில் மன்றத்தின் தலைமை அலுவலகத்தைச் சுற்றிலும் ஆயுதப்போலீசார் இரவு பகலாக நின்றனர். கோத்தகிரியிலுள்ள தாயகம் திரும்பியோர் காலணிகளிலெல்லாம் ரிசர்வ் போலீசார் நிறுத்தப்பட்டு, ஊர்த்தலைவர்கள் போராட்டங்கள் எதிலும் இறங்கிவிடாமல் அச்சுறுத்தப்பட்டனர். மன்றத்தின் மகளிர் பிரிவான மலையக மாதர் முன்ணியின் நிர்வாகிகள் காவல்துறையினரால் நடுவழியில் மறிக்கப்பட்டு ஆண்போலீசாரினால் விசாரிக்கப்பட்ட
'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை"
சிறையிலிருந்து சிரித்துக் கொண்டே விடுதலையா கும் மன்றத் தோழர்களும், அவர்களை வரவேற்று அழைத்து வரும் மன்றத்தினரும்.
நஷ்டஈடு கிடைக்குமா?
2ம் உலக மகா யுத்தத்தில் அமெரிக்காவின் "பேர்ள்’ துறைமுகத்தின் மீது ஜப்பான் குண்டு வீசிய வுடன், அமெரிக்காவிலுள்ள அனைத்து ஜப்பானியர்களையும் தனி இடங்களில் வைத்தது அமெரிக்க அரசு. அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களின் நாணயத்தை இவ்வாறு சந்தேகித்தது தவறு என்று நீதிமன்றத்தில் தீர்ப்பானது. உடனே, அமெரிக்க அர சாங்கம் அனைத்து ஜப்பானியர்களுக்கும் நஷ்டஈடு
 

up O சரகாலச்சட்டமா?
னர். மாவட்ட ஆட்சியர் கோத்தகிரியில் இருதினங்கள் முகாமிட்டிருந்தார்.
எனினும், ம.ம.ம. மன்றத்தின் மீதுஅவதூறு கற்பிப்பதற்கு சதி முயற்சிகள் மேற்கொள்ள மாவட்டநிர்வாகம் முயலுவதாகவும் அதனால், மக்கள் அமைதி காக்குமாறும் மக்களை மன்றம் கேட்டுக் கொண்டிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசாருக்கு உணவு சப்ளை செய்தது ஜாதிச்சங்கமா?
கோத்தகிரியில் ம.ம. ம. மன்ற அலுவலகத்தை சுற்றிலும் அது அமைந்துள்ள கிளப்ரோட்டிலும் நிறுத்தப்பட்டிருந்த போலீசாருக்கு நீலகிரியை காப்பாற் றப்போவதாகக் கூறிக் கொள்ளும் செல்வந்தர்களை உள்ளடக்கிய ஒரு ஜாதிச்சங்கம் உணவு சப்ளை செய்து, தாயகம் திரும்பிய தமிழர்களுக்கும் உழைக்கும் மக்க ளுக்கும் எதிரான தனது இனவாத உணர்வையும் ம.ம ம. மன்றத்தின் மீதான தனது காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண்டதாக கோத்தகிரி மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
---. ۶. حمعسیستم
கொடுத்தது. இதேபோன்ற நிலைமையே அண்மை - யில் தாயகம் திரும்பியோருக்கும் ஏற்பட்டது. தாயகம் திரும்பியோர் இந்தியர்கள் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீலகிரி உட்பட தமிழ் நாடு முழுதும் கைது செய்து அடைத்து வைக்கப்பட்ட தாயகம் திரும்பிய இந்தியர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படுமா?--இது சம்மந்தப்பட்ட மக்களின் கேள்வி.
ஐப்பானியர்களோ அமெரிக்காவுக்கு அன்னியர்கள் அப்படியிருந்தும், அமெரிக்கா நஷ்டஈடு வழங்கி யது. இந்நிலையில் சொந்த நாட்டு மக் க ை 63) זו uu அடையாளம் காணத் தெரியாமல் அடைத்து வைத்த இந்திய மண்ணில் இந்த மானிட நீதி கிடைக்குமா?
தொடரும் கொடுமைகள்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன்களு க்காக எத்தனை சட்டங்களே எழுதிவைத்தாலும் அவ ர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன.
ஐதராபாத்தைச் சேர்ந்த ஏதுமறியாத பதினோரு வயதுச் சிறுமி ஒருத்தியை சவூதி அரேபியாவைச் சேர் ந்த ஷேக். யாஹியா-அல்- முகம்மது என்பவர் அவளது பெற்றோருக்குப் பணம் கொடுத்து, மணம் முடித்து அழைத்துசென்ற செயல் நம் நாட்டில் பெண்கள் குழ ந்தைப் பருவத்திலிருந்தே எவ்வாறு பாதிக்கப்படுகிறா ர்கள் என்பதற்கு தக்க சான்றாகும்.
நல்லவேளை, விமானப் பணிப்பெண் ஒருவர் சந்தே கப்பட்டு நடவடிக்கை எடுத்த காரணத்தால் அமீனா என்ற அந்தச் சிறுமி அழிவிலிருந்து காப்பாற்றப் பட்டு
ள்ளாள்.

Page 8
ஐ.ஜி.பி. தேவாரத்துடன் பேட்டி.
மைச்சருக்கு தீவிரவாதிகளினால் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சு றுத்தல் காரணமாக எங்கள் நடவ டிக்கைகளை துரிதபடுத்த வேண்டும் என்பதை உணர்ந்து செயற் ப) கிறோம்.
8 தீவிரவாதிகளுக்கு எதிரான உங்கள் நடவடிச்சை சளிலிருந்து நீங்கள் என்ன கண்டுபிடித்தீர்கள்? தீவிரவாதிகள் தங்கள் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல் களுக்கு உள்ளூர் நபர்களின் நெரு ங்கிய ஆதரவைப் பெற்றிருந்தனர். அவ்வாறு உதவியவர்களுக்கு தாம் என்ன செய்கிறோம் என்பதுபற்றி சிறிதும் தெரிந்திருக்கவில்லை.
ஆனால் வெடி பொருட்கள் தயாரி ப்பதில் உதவி செய்தவர்கள் தாம் எதில் என்ன பங்கு வகிக்கிறோம் என்பதை தெளிவாக அறிந்திருக்கவில்லை. அவை இலங்கையில்தான் முழு வடிவம் பெறும் தற்போது விடுதலை புலிகளுடன் தொடர்பு உடைய 45 இந்தியர்களை கைது செய்து தண்டித்துள்ளோம். இந் நடவடிக்கை தீவிரவாதிகளுக்குக் கிடைக்கும் உள்ளூர் ஆதர  ைவ வெகுவாக குறைக்க உதவியுள்ளது கரையோர மாவட்டங்களில் போ வீஸ் ரோந்து பலப்படுத்தப்பட்டுள் ளது. மேலும் ஏற்கனவே இருந்த கடலோர காவல்படையின் இரு
கப்பல்களை நிறு கடற்படை கட் யுள்ளோம். கட கு எதிராக க எடுத்து வருகிறே
9 கடலோர ம கடத்தல்காரர்க றையினருக்குமி இருப்பதாகக் கூ
“அகதிகளைய லிருந்து அந்த ம் திரும்பியேச நினைத்த பல கிறார்கள். தா வர்கள் இந்திய லால் அவர்க வேண்டியதில் 6
அது ஒரு தவ சமயங்களில் அவ் க்கலாம். ஆனா அது உண்பை யல்
10-தீவிரவாதிகளு தற்போதய நட தனை நாள் தொ கிறீர்கள்?
குறிப்பிட்ட யை என்னால் க களால் முடிந்த
卒扇編
ġlfċif T53536 6b uża, Gay, Lidiife
அவனோ துகில் மட்டுந்தானே உரிந்தான். கற்பழிக்க வில்லையே! இது ஒரு முத்தம்மாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமையல்ல; உலகப் பெண்களையே கேவலப் படுத்தும் இச்செயல் புரிந்த கயவர்களுக்கு எதிராக மனித நலன் விரும்பிகளும் உழைக்கும் மக்களும் நாகரிகப் பிரஜைகளும் ஆர்ப்பரித்து எழ வேண்டும். இந்த இழிசெயல் செய்த மனித மிருகங்களான நவீன துச்சானர்களின் கைகள் பகிரங்கமாக வெட்டப்பட வேண்டும்.
மலையக மக்கள் மறுவாழ்வு மன்றமும் மலையக மாதர் முன்னணியும் இச்செயலை மிக வண்மையாக கண்டிப்பதோடு இதுபோன்ற செயல்களை எதிர்ப்ப

3ம் பக்க தொடர்ச்சி
த்திவிட்டு ஐ ந் து பல்களை நிறுத்தித்தல் காரர்களுக்டும் நடவடிக்கை DiTib.
ா வட்டங்களில் ளுக்கும் காவல்து டையே நெருக்கம் றப்படுவது பற்றி?
பும் இலங்கையி 3 லட்சம் தாயக ரையும் ஒன்றாக ர் குழம்பியிருக் யகம் திரும்பிய க்குடிகன். ஆத ள் பதிவு செய்ய
7 AV
O6).
றான சருத்து. சில 1வாறு நடத்தியிரு ல் பெரும்பாலும் iல "
நக்கு எ தி ரா னத் வடி கிசைகள் எத் டரும் என நினை
கால வரையறை
உறமுடியாது. எங் ளவு சிறப்பான
முறையில் இயங்கி வருகிறோம் முதலமைச்சரின் முழுமையான ஒத்துழைப்பும் கிடைத்து வருகிற து. இலங்கைத் தமிழர்கள் உள்ளூர் தமிழர்களுடன் வெகு சுலபமாக
இரண்டறக் கலந்து விடுவதனால்
அவர்களை அடையாளம் காண்பது கஷ்டமாக உள்ளது. ஈழத்தமிழர் கள் மாநிலம் முழுவதும் தொடர் புகளை நன்கு வலுப்படுத்தி உள் ளார்கள். இதுவரையில் 18 வயர் லெஸ் கருவிகளைக் கைபற்றியுள் அவர்களின் பலமான உள்ளூர்த் தொடர்புகளை முறியடி க்க முயற்சி செய்து வருகிறோம்.
ளோம்.
11-இங்குள்ள தீவிரவாதிகளுக்கும் இலங்கைத் தமிழ்ப் போராளிகளு க்குமிடையே தொடர்புள்ளதா?
இல்லை. இடதுசாரித் தீவிரவா திகள் போராளிகளுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவில்லை. சில தமிழ் தீவிரவாதிகளுக்கு மட்டும் தொடர்புண்டு. இதுகூட பண த்தொடர்பே. பெரும்பாலும் போ ராளிகளுடன் இணைந்திருப்பவர் கள் ஒன்று கடத்தல்காரர்கள் அல் லது பண ஆசைக்கு பலியானவர் கள். தொடர்புகளை உருவாக்குவ தில் பணமே முக்கிய காரணமாக உள்ளது.
நன்றி - அசைடு
தில் உலகம் முழுதும் உள்ள ஜனநாயக சக்திகள்
நேரடி செயல் களி ல் கோரிக்கை வைக்கின்றன.
இறங்க வேண்டும் என்றும்
N. O S2 S2. さ*。 * அஞசல *
ம.ம.ம. மன்றத்தின் குன்னூர் பிராந்திய இளை
ஞர் அணிச் செயலர் திரு. பிரான்சிஸ் அவர்களின்
தந்தையார் கடந்தமாதம் அகால மரணமடைந்தார். திரு. பிரான்சிஸ் மற்றும் குடும்பத்தினருக்கு மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது அண்ணாரின் ஆத்மசாந்திக்காக அஞ்சலி செலுத்து கிறது.

Page 9
Հl
.பொய்ப் "மக்கள் குரல்" பத்திரிை
6larш5һої
சென்னையிலிருந்து வெளிவரும் "மக்கள் குரல்" பத்திரிகையின் 28.8.91 இதழில் "நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் கூலிப்பட்டாளம்" என்ற தலைப்பில் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு எதிரான பொய்யும் புனைகதையுமான ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதனை அம்பலப்படுத்தி "மக்கள் குரல்’ பத்திரிகை ஆசிரியருக்கு ம.ம. ம.மன்ற பொதுச் செயலர் திரு. இர. சிவலிங்கம் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் மக்கள் குரலின் பொய்ச்செய்தி கண்டு தான் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அக்கடி தத்தில் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
இந்திய வம்சாவழியினர் தமிழ் ஈழக் கோரிக் கைக்கு தீவிரமாக எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். காரணம், தமிழ் ஈழக் கோரிக்கையில் அவர்களது எதிர்காலத்திற்கு இடமேயில்லை நீலகிரியில் விடுதலைப் புலிகள் ஆயுதப்பயிற்சி
அளித்ததும் கிடையாது. ஆள் சேர்த்ததும்கிடை
யாது. இது அப்பட்டமான பொய்.
* பூரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தில் வந்தோர் அனைவரும் இந்தியக்குடிமக்கள். இவர்களில் எவரும் விடுதலைப்புலிகளின் பட்டாளத்தில் சேரவில்லை.
* இலங்கையில் ஈரோஸ் என்ற ஸ்தாபனமே அழிந்துபோய் விட்டது. இலங்கைத் தேயிலைத் தோட்டங்களிலோ, யாழ்பாண, மட்டக்களப் புப் பகுதிகளிலோ ஈரோஸ் இயங்கவில்லை.
துணைப் பொ இலங்கை மந்திரி
ம. ம. ம. மன்றத் துைைணப் பொதுச் செயலர் திரு. பூரீஸ்கந்தராஜா இலங்கை அமைச்சரும் இலங்கைவாழ் இந்தியத் தமிழர்களின் பிரதிநிதியுமான திரு. செள. தொண்டமான் அவர்களை 15.9.91 அன்று சென்னை" யில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ம. ம. ம. மன்றத்தின் மீது நீலகிரி மாவட்ட நிர்வாகம் அண் மையில் மேற்கொண்ட அடக்கு முறைகளையும் தமிழ் நாட்டில் உள்ள தாயகம் திரும்பியோர் எதிர்கொண்ட உரிமைப் பிரச்சினைகளையும் திரு. பூரீஸ்கந்தராஜா விளக்கினார். இது குறித்து தாம் ஏற்கெனவே பிரதமர் நரசிம்மராவிடம் பேசியிருப்பதாகவும் விரைவில் நல்ல

பிரசாரம். கக்கு மன்றப் பொதுச் மறுப்பு
மேற்குறிப்பிட்டுள்ள உண்மைகளுக்கு மாறாக நீங்கள் செய்திகளைத் திரிபுபடுத்தி வெளியிட்டிருப் பதைக் கண்டு மனம் வருந்துகிறோம். காரணம் நீல கிரியில் வாழுகின்ற தாயகம் திரும்பிய தமிழ்த் தொழிலாளர்களுக்கு எதிராக பலர் பிரசாரம் செய்து அம்மக்களை துன்புறுத்தி வருகின்றனர். இந்தப் பணியில் சில இனவாத சக்திகள் மட்டுமே தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட தப்பும் தவறுமான பிரசாரங்களை செய்து வருகின்றன. அந்தப் பிரசாரத்திற்கு தங்கள் பத்திரிகையும் பலியாகிவிட்டதோ என அஞ்சுகிறோம்.
இனவாத சக்திகளின் துஷ்பிரசாரத்திற்கு மாவட்ட நிர்வாகத் தலைமைபீடமும், காவல்துறை யினரும் பலியாகியுள்ளனர். அவர்களுடைய தவறான கணிப்பில் நீலகிரி வாழும் தாயகம் திரும்பிய இந்திய வம்சாவழியினர் பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர் அண்மையில் கூட நிர்வாகத்தின் அடக்கு முறையை சுட்டிக்காட்டிய நீலகிரி மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் பொறுப்பாளர்கள் 13 பேருக்கு எதிராக மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சிறையில் அடைத்தார் கள் இந்த உண்மைச் செய்திகள் ஏனோ தங்களது பத்திரிகையில் இடம்பெறுவதில்லை.
மேற்கண்டவாறு பொதுச் செயலர் கடிதம் எழு தியுள்ளார்.
துச் செயலர் யுடன் சந்திப்பு
முடிவு வருமென்றும் திரு. தொண்டமான் உறுதி அளித்தார். V−
அன்று காலை சென்னை இந்திய வம்சாவழித் தமிழர்கள் சங்கம் நடத்திய கூட்டத்திலும் கலந்து கொ ண்டு திரு. பூநிஸ்கந்தராஜா உரையாற்றினார். அண். மையில் தமிழ்நாடு முழுதுமுள்ள தாயகம் திரும்பிய இந்தியர்களின் குடி உரிமை கேள்விக் குறியாக்கப்பட்ட செயலை வண்மையாக கண்டித்த அவர், இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டு விடாமல் ‘இனியொரு விதி செய்வோம் அதனை எந்தநாளும் காப்போம்' என்று அறை கூவல் எழுப்பினார்.

Page 10
G35T (6ft is 6)guidi
சிறை அனு1 (மன்றத் தோழர்கள் கோவை சிறையி
கோவை மத்திய சிறையில் கிட்டத்தட்ட 2000 கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளார்கள். வெளி உல கையே பல மாதங்கள், வருடங்கள் பார்க்காத கைதி களும் இருக்கிறார்கள். அவ்வப்போது ஏதாவதொரு குற்றத்தை செய்து விட்டு வந்து போவார்கள். இந்தக் கைதிகளை மகிழ்விப்பதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் திறந்த வெளி (அதுவும் சிறைக் கூடத்திற்குள் தான்) சினிமா அரங்கில் திரைப் படம் காட்டப்படுவது வழக்கம் வாரத்தில் ஒருநாள் அங்குள்ள அலுவலர்களுக்கும், அவர்கள் குடும்பத்தார்களுக்கும், கைதிகளுக்கும் சினிமா காட்டப்படுவது வழக்கம். கைதிகள் வைக்கப்பட்டுள்ள பிளாக்குகளிலிருந்து நான்கு பேர் கொண்ட வரிசைகளாக எண்ணப்பட்டு சினிமா பார்ப்பதற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் பல இடங்களில் கணக்கெடுப்பு ஊர்வலம்.
இப்படியானதொரு நிலையில், நாங்கள் சிறையில் இருந்த அந்த 22 நாட்களில் மூன்று சினிமாப்படங் கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. போய்ச் சேர்ந்த வாரத்தில் "எதிர் காற்று’ என்ற படமும், பின்பு, "ஆராத்தி எடுங்கடி என்ற படமும், இறுதியில் "கற்பூர முல்லை" என்ற படமும் பார்த்தோம்.
ஆகஸ்ட் 13ம் திகதி கற்பூர முல்லை திரைப்படம் காட்டுவதாகக் கூறியிருந்தனர். மாலை 5.00 மணிக்கு நாங்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு விடுவோம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம். அன்று அதற்கான உத்தரவு வந்து சேர தாமதமாகி விட்டது வானமும், எம் மனதைப் போல கறுத்து, மழை தூறிக் கொண்டிருந்தது. இரவு உணவு மாலை 5.00 மணிக்கு கொடுத்து முடித்ததும், சினிமா பார்ப்பதற்கு எல்
ஆத்திரமூட்டும் ஆர்
ஆந்திர மாநிலம் சுண்டுர் கிராமத்தில் 21 அரிஜன ங்கள் உயிரோடு வைத்துக் கொளுத்தப்பட்ட சம்பவம் நமது நெஞ்சங்களில் ஆத்திரத்தைத் தோற்றுவித்துள்ளது. அவர்கள் செய்த குற்றம் தான் என்ன? நிலச் சொந்தக் காரர்களான மேல் ஜாதியினரிடம் தமது உழைப்புக்கு கூலி உயர்வு கேட்டதுதான்.
இதே போன்ற சம்பவம் 20 ஆண்டுகளுக்கு முன்னால் தஞ்சை மாவட்டத்தின் கீழவெண்மணி கிராமத் தில் இடம் பெற்றது. அதன் பிறகு தென்னிந்தியாவில் இடம் பெற்ற மிகமோசமான அரிசனப் படுகொலை
சுண்டூரில்ேயே இடம் பெற்றுள்ளது.
ஆண்டாண்டுகாலமாக மனித உரிமை அனைத்தும் மறுக்கப்பட்டவர்களாய் அடிமைகளாக நடத்தப்பட்டு வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்தியா முழுவதிஆம் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளுக் அளவேயில்லை. இம்மக்கள் தொகை தொகையாக படுகொலை செய்ய ப்படும் சம்பவங்கள் தொடர் கதைகளாக நிகழுகின்
வெளியீடு: மலையக மக்கள் மறுவ ாழ்வு மன்றம், தபால் பெட்டி எண். 27 ) 8 சே

கற்பூரமுல்லை வங்கள் 2 ல் பெற்ற அனுபவங்களின் தொடர்)
லாரும் தயாராகுங்கள் என காவலர் (வார்டன்) உத்தரவிட்டார். மழை தூறிக் சொண்டிருக்கிறதே எப்படி சினிமா பார்ப்பது என எல்லோருமே சிந்தித்து கொண்டிருந்தபோது காவலரின் கட்டாயத்தின் பேரில் சினிமா பார்ப்பதற்கு வரிசையாக உட்கார்ந்து இருந் தோம். மழை பெருத்துக் கொண்டே வந்தது. பெரு மழை பெய்யாதோ?, சினிமாவிற்கு செல்வதிலிருந்து தப்பிக்க மாட்டோமா? என எங்களைப் போல பலர் எண்ணிக்கொண்டிருந்தும், மழை சாதாரணமாக தூறிக் கொண்டே இருந்தது.
மந்தைக் கூட்டத்தை அடித்து விரட்டி செல்வதை போல் அனைவரும் திரை அரங்கத்தை நோக்கி விரட்டி செல்லப்பட்டோம். வெளி அரங்கினுள் அமர்ந்தாயிற்று ஆனால் மழை ஓய்ந்த பாடில்லை படமும் ஆரம்பமாகி விட்டது மழை விடவில்லை. தூறிக் கொண்டே இருந் தது. சினிமா பார்க்க விருப்பமில்லை மழையில் நனைய முடியாது என கூறி எழுந்தால் காவலர்களின் கெடுபிடிகள் நம்மை கீழேயே உட்கார வைக்கின்றன. நனைந்து கொண்டே மூன்று மணி நேரத்தை சினிமா பார்த்து கழித்தது உண்மையிலேயே மறக்க முடியாத சம்பவம்.
கற்பூர முல்லை எங்களைப் பொருத்தவரை மணக் சவில்லை கசப்பான ஒரு அனுபவத்தையே கொடுத்தது சிறையில் உள்ளவர்களும் மனிதர்கள் தானே! அதி. காரிகளுக்கு மனிதாபிமானமாவது இருக்க வேண்டாமா? அவர்களுக்குத் தேவை கைதிகளை மகிழ்விப். பதற்காக படம் காட்டப்பட்டது. என்ற அறிக்கையை மேலதிகாரிகளுக்கு அனுப்புவது தானே! அது நிறை வேறிவிட்டது.
- மலை மதி -
திரப் படுகொலை
றன. இந்த வரிசையில் ஆந்திரப் படுகொலை ஓர் அத் தியாயத்தைச் சேர்த்திருக்கிறது.
இது வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களோடு மட்டுமே சம்பந்தமுடையதல்ல. இந்த உலகை உருவாக் கும் உழைக்கும் மக்களின் பிரச்சினை, கூலி உயர்வுக் காக குரல் எழுப்புவோருக்கு கிடைக்கும் தண்டனை.
எனவே, சுண்டூர் கிராமத்தின் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக அனைத்து உழைக்கும் மக்களும் ஆதரவு குரல் எழுப்புவோம். சுண்டூர் கிராம நிலப்பிர புகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத் திய, மாநில அரசுகளை வற்புறுத்துவோம்.
அரிசன மக்களை கூண்டோடு எரிக்கும் நிலவுடை மையாளர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படு வதற்கு சட்டம் இயற்றப் படவேண்டும். இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும் இந்திர யா முழுதும் கிளர்ந்து எழவேண்டும்.
இல, 187, இராஜா அண்ணாமலைத் தெரு, ாவை 64 1 011.(தனிச்சுற்றுக்கு மட்டும்)