கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1992.06-07

Page 1
563 fluigi
ஜூலை மாதம் முதல் பத்து நாட்கள், உதகையில் கழித்தார் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நீலகிரி எழி லிலும் அமைதியிலும் முதல் வருக்கு ஒரு மனநிறைவு ஏற்பட்டிருக்க வேண்டும். இயற்கையின் இனிய சூழலில்
வன ங் க  ைள யும் , வண்ண மலர்களையும், அருவி
களையும், ஆறுகளையும் , ஆகாய வண்டி களையும் , பசுமை பள்ளங்களையும், கம்பீர யானைகளையும் கஜமுகனின் ஆலயத்தையும் அவர் கண்டு களித்திருக் கிறார். தொட்ட பெட்டா குன்றேறி இயற்கையின் வண்ணக் கோலத்தைக் கண்டு கண்ணாரக் கண்டு களித்திருக்கிறார். கோத்த கிரி, குன்னுரர், கோட நாடு ஊட்டி, கூடலூர் ஆகிய அனைத் துப் பகுதிகளுக்கும் விஜயம் செய்து நீலகிரி மாவட்டத்தையே முழுமை
வூட்டி மகிழ்ந்திருக்கிறார். யானைகளுக்கு விருந்தளித் திருக்கிறார் ஆட்சிப்பிரதிநிதிகளோடு கலந்தாலோ சித் திருக்கிறார். எதிர் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்திருக் கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரி வித் திருக்கிறார். இங்கு வாழும் ஏழை களையும் அவர் முற்றாக மறந்துவிடவில்லை. வேட்டி, சேலை, தையல் இயந்திரங்கள், முதியோர் ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கி இருக்கிறார் அறுவை சிகிச்சைக்கு உதவி வழங்கி இருக்கிறார். பத்து நாட்களுக்கு மேலாக மு த ல் வ  ைர ப் பாதுகாப்பாகவும், பரவசமாகவும் , வைத்திருந்து வழியனுப்பி வைத்த பெருமை நீலகிரி மாவட்டமக் டின் பெற்றுவிட்டார்கள். நீலகிரி இந்தப் பெருமிதத்தில் இன்னும் சற்றே உயர்ந்து விட்டதோ ?
யாகக் கண்டு களித் திருக்கிறார். மான்களுக்கு உண
மதுரையில் ஒராண்டு சாதனைகளை ஊர்வல மாக்கி வெற்றி வரலாறு படைத்த பின்னர், வெற்றிக் களிப்பை அசை போட்டு, மனதுக்கும், உடலுக்கும் இதந்தேடிக் கொள்ள நீலகிரியின் பசுமையும், ரம்மிய மும் உதவியமை இங்குள்ள மக்களுக்கெல்லாம் மன நிறைவை தருகிறது.
ஊட்டி மலர் கண்காட்சிக்கு முதல்வர் வந்த பொழுது பாதுகாப்பு என்ற பெயரால் தாமரைக் குளத்தை யானை அதம் செய்தது போல் ஊட்டி ஊரையே கலக்கி வைத்த போலீசும், பாது காப்பு படையும் இம்முறை இருக்கவில்லை. எங்கும் இலகு வான நடமாட்டம் முதல்வர் வருகிறார் என்ற சுவடே தெரியாமல் முதல்வர் வந்து போயிருக்கிறார் ஆர வாரமோ, அமர்க்களமோ இல்லாமல், முதல்வர் பல
 

முதல்வர்
இடங்களைச் சுற்றிப் பார்த்திருக்கிறார். மற்ற மா வட்
டங்கள் காணாத சிறப்பை நீலகிரி கண்டது ஒரு ஜன
நாயக சமுதாயத்தில் இப்படித்தான் முதல்வர்கள் மக்கள் மத்தியில் நடமாட வேண்டும் என்ற உண் மையை நீலகிரி நிலை நாட்டி உள்ளது.
ஆனால் நீலகிரியில் வாழும் சில இனவாத விஷமி கள் விடுதலை புலிகள் பதுங்கி இருக்கிறார்கள், இவர் கள் மாவட்ட அலுவலகத்தை குண்டெறிந்து தகர்க்கப் போகிறார்கள் என்று வீண் புரளிகளைக் கிளப்பினார் கள். சில இனவாத பத்திரிகை நிருபர்கள் எந்தத் திருட்டு எந்த கொலை நடந்தாலும் இதில் விடுதலைப் புலிகள் ஈடுபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படு கிறது என்று விஷ மத்தனமாக செய்தி வெளியிட்டார் கள். உண்மையிலேயே தாயகம் திரும்பிய தமிழர்களை இழிவு படுத் துவதற்காகவும், அவர்கள் மீது அவதூறு கற்பிப்பதற்காகவும், அவர்கள் மீது போலீசா ரை அனாவசியமாக ஏவி விடுவதற்காகவும், சில படுக இன வாத விஷமிகள் இத்தகைய பொய்ப் புரளிகளை கட்ட விழ்த்த விட்டு வந்தார்கள். இந்தப் பொய்ப் புரளி களுக்கு இலக்காகி ஏமாந்தவர்களுள் நீலகிரி கலக்ட ரையும் சேர்த்துக் கொள்ளலாம் ஆனால் என்றிருந் தாவது ஒரு நாள் உன் ஐம வெல்லும்,
a.
நீலகிரிக்குக் தமிழக முதல்வர் வருகை தந்து பத்து நாட்கள் பல இடங்களில் மிகச் சிறிய பாதுகாப்புட னேயே பயணஞ் செய்து பத்திரமாக தலைநகர் திரும்பி இருப்பது எதனைக் காட்டியிருக்கின்றது.
நீலகிரியில் விடுதலைப் புலியுமில்லை, பூனையு மில்லை, இங்கு நல்ல மக்கள் வாழ்கிறார்கள். நலிந்த மக்களாய் இருப்பினும், நல்ல மக்களாகவே இவர்கள் வாழ்கிறார்கள். நச்சுப்புரளிகளைக் கிளப்பியவர்களின் சுயரூபங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. இந் த உண்மையை நிலைநாட்டியதற்காக தமிழக முதல் வருக்கு தாயகம் திரும்பிய மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்கிறோம் நீலகிரியில் பத்து நாட்களென்ன பத்து வருடங்கள் வாழ்ந்தாலும் இங்கு உங்களுக்குப் பகைப்புலன் இல்லை இனிமேலாவது இனவாத விஷ மிகளின் பொய்ப்புரளிகளை நம்பி தாயகம் திரும்பி யோரை அச்சுறுத்தும், அவலப்படுத்தும், அயோக்கியத் தனம் அழியும் என்று நம்புவோம்,

Page 2
= மீண்டும் தாயக
e சண்முகத்து
1964-ம் ஆண்டு முதல் முதலாக இந்தியா வழுக்கி விழுந்தது. அதாவது இலங்கைத் தேயிலைத் தோட் டங்களில் பல தலை முறைகளாக உழைத்தவர்களின் உரிமையை இலங்கை அரசு அநியாயமாக 1949-ல் பறித்ததல்லவா? அவர்களுக்கு குடி e i 6o LD 6o il கொடுத்து இந்தியாவில் குடியேற்றுகிறோம் என்று இந்தியா ஒத்துக்கொண்டது.
ஏறக்குறைய ஏழு லட்சம் பேரை இந்தியா ஏற்றுக் கொள்ள இந்தக் கொள்கை வழிவகுத்தது 1964-ல் பூரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் அதனன ஊர்ஜிதம் செய்தது 1974-ல் இந்திரா பூரீமாவோ ஒப்பந்தம் 1984-ல் மலையகத் தொழிலாளர்களை தாயகம் திரும்புவோராக இந்தியாவிற்கு கப்பலேற்றும் பணி தடைப்பட்டது.
இலங்கைக்கும், இந்தியாவிற்குமிடையில் 984 நவம்பரிலிருந்து கப்பல் ஒடவில்லை. 1987 ல் இலங் கையில் இந்தியக்குடிஉரிமை பெற்ற பின்னர், இந்தியா வர முடியாதிருக்கும் ம க் க  ைள göSuur ஏற்றுக் கொள்ளும் என்று ராஜீவ்-ஜயவர் தனா ஒப்பந்தம் மீண்டும் ஊர்ஜிதம் செய்தது. எந்த இந்தியத் தொழி லாளியையும் விருப்புக்கு மாறாக இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதை இந்தியா ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நேரு திட்டவட்டமாகக் கூறினார். அதுவே இந்தியாவின் உறுதியான கொள்கையாகவும் இருந்தது.
ஆனால் நேருவின் மறைவிற்குப் பிறகு இந்தக் கொள்கையிலிருந்து இந்தியா வழுவியது, வழுக்கி விழுந்தது.
சாஸ்திரி முதல் - ராஜீவ் வரை இந்த வழுக்கிய கொள்கைதான் வழக்கில் இருந்தது. இப்பொழுது இந்தியாவில் இருந்த 23,000-க்கும் மேற்பட்ட அரசி யல் அகதிகள் கப்பல் வழியாகவும், விண்வழியாகவும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதால், இலங் கையும் அங்குள்ள இந்தியக் குடியுரிமை பெற்றவர் களை அனுப்பத் தொடங்கியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுள் ஏறக்குறைய இருநூறு குடும்பங்கள் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தாயகம் திரும்புவோராய் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களுள் ஒருவரான சண்முகத்தை நாம் பேட்டி கண்டோம் கே. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ?
நான் பசறைப் பகுதியிலுள்ள GB , T 607 FT é கொல்லை தோட்டத்திலிருந்து வருகிறேன். கே. எந்தத் தொழிற்சங்கத்தில் அங்கத்தினராக
இருந்தீர்கள்? LU . தொண்டமானைத் தலைவரா கொண்டுள்வி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் உறுப்பு ன ராய் இருந்தேன். கே. தொண்டமான் இந்தியாவுக்கு எவரையும் அணு
பக் கூடாது மாறாக இந்தியாவில் குடியேறிஉள்6 இலங்கை-இந்தியர்களுக்கு குடியுரிமை கொடுத்

ம் திரும்பியோர் =-
டன் ஒரு பேட்டி
கே.
கே.
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுகூறி வரும் பொழுது நீங்கள் எல்லாம் வருவதற்கு சங்கம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லையா? இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது இந்திய பாஸ்போர்ட் உள்ளவர்களுக்கு தோட்டங்சளில் வேலை நிறுத்திவிடுகிறார்கள். வேலையில்லாமல் ஒரு தோட்டத்தில் எப்படி வாழ்வது? வீட்டை விட்டுப் போகச் சொல்லி தோட்ட நிர்வாகம் வற்புறுத்துகிறது. வருமானமுமில்லாமல், சேமிப் பையும், செலவழித்துக் கொண்டு வெளியேறச் சொல்லும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து கொண்டு எவ்வளவு காலத்தை ஒட்டலாம்? முன்பெல்லாம் இந்த மாதிரியான நெருக்கடிகள் பொறுக்க முடியாமல் பல் குடும்பங்கள். வவுனியா பக்கம் சென்று விவசாயத்தில் ஈடுபட்டார்கள். இப்பொழுது தான் வவுனியா போர்க்களமாகி அங்கிருந்து மக்கள் எல்லாம் அகதிகளாகி விட் டார்கள். எங்களைப் போன்ற குடும்பங்களுக்கு இந்தியாவுக்கு வருவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை உங்களோடு எத்தனை குடும்பங்கள் வந்தார்கள்?
எங்கள் பகுதியில் இருந்து 30, 40 குடும்பங்கள்
வந்திருக்கிறார்கள்.
இலங்கை அரசாங்கம் உங்களுக்கு என்ன உதவி செய்தது. தோட்டத்திலிருந்து கட்டுநாயகாவிமான நிலை யம் வரை இலவசமாக வாகன வசதி செய்து தருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் விமானப் பயணச் செலவுக்காக 1800/- ரூபாய் தருகிறார் கள், இந்த உதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு தான் நாங்கள் இங்கு வந்தோம் நிறைய பணம் கொண்டு வந்தீர்களா? இந்தியா வில் எப்படி வாழப் போகிறீர்கள்?. இந்தியாவிலே மறுவாழ்வு பெறுவது மிகச்சிரம மானது என்பது எங் சளுக்கு தெரியும். எங்கள் குடும்பத்தில் மூன்று பேர் வேலை செய்கிறோம். மிகச் சிரமப்பட்டு சேமித்து ரூ. 20.0001கொண்டு வத்தோம். இந்தப் பணத்தில் வீடு வாங்கி எப்படியோ வாழ்க்கையை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும்.
இந்திய அரசாங்கத்திடம் மறுவாழ்வு உதவி கோரவில்லையா? சென்னைக்கு சென்று மறுவாழ்வு இயக்குநரிடம் உதவி கேட் டோம், அவர் நீங்கள் ரூ. 20,000 - கொண்டு வந்திருப்பதால் உங்களுக்கு எந்த உத வியும் செய்ய முடியாது ரூ. 10,000-க்கும் குறைவாக கொண்டு வந்தால் தான் மறுவாழ்வு உதவி கிடைக்கும் என்றுசொன்னார். அதனாலே அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்குமென்று எங்க ளு க்கு நம் பிக்  ைக இல்லை. (தொடர்ச்சி 4-ம் பக்கம்)

Page 3
6) di
ஆதிவாசி சக் தி
剑坊色 ஆண்டு கிறிஸ்தோபர் கொலம்பஸ் என்ற ஸ்பானிய மாலுமி அமெரிக்கக் கண்டத்தில் கா லடி எடுத்து வைத்த 500-வது நினைவாண்டாகும். இதைத் தொ டர் ந் து 1489-ல் வாஸ்கோடாகாமா என்ற மாலுமி இந்தியாவில் மேற்கு கரையில் அமைந்துள்ள கள்ளிக் கோட்டையில் கால் வைத்தான்.
ஐரோப்பியர்கள ஆசியா ஆபிரிக்கா கண்டங்களை கைப்பற்றி ஆட்சி செய்ய ஆரம்பித்த ஆண்டின் 500வது நிறைவைத்தான் ஐரோப்பியா நாடுகள் இந்த ஆண்டு ஆடம்பரமாக கொண்டாட இருக்கின்றன ஆசியா, ஆபிசிக்கா நாடுகளை பொறுத்தவரையில் இந்த நாள் நமது அடிமைத்தனத்துக்கு அடிகோலிய நாள் ஐரோப் பியர்களின் மூர்க்கத்தனமான ஏகாதிபத்திய வெறியில் சிக்கிச் சீரழிந்து நமது பண்பாடுகளையும், நாகரிகத் தையும் இழந்து ஐரோப்பியா மோகத்தில் சிக்குண்ட நாள் மறக்க வேண்டிய நாள்.
எனினும் நாமும் 500 வருட ஐரோப்பிய மோகத் தாலும், ஆதிக்கத்தாலும் சிதைக்கப்பட்ட நமது பன் புகளை, வாழ்க்கை முறையை சீரமைத்து புதிய வழி களை, யுத்திகளை எதிர்காலத்தில் நிறுவ வேண்டிய தின் அவசியத்தை ஆராய வேண் டி ப த ரு ண ம் இதுவாகும்.
நீலகிரியை எடுத்துக்கொண்டால் கடந்த 500 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களை கணிக்கலாம். தோடர். இருளர், கோத்தர், பணியர் ஆகிய ஆதிவா சிகள் மட்டுமே இயற்கையோடிணைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள். கர்நாடகாவிலிருந்து படுகர்கள் வந்து குடியேறாதகாலம். இயற்கை வளமும், நீர்வள மும், செழித்த மலைப் பகுதியாகவே நீலகிரி இருந்து வந்தது. ஹொய்சாலா, விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாகவும் இருந்து வந்துள்ளது. பின்னர் மைசூர் மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டி ருந்தது. திப்புசுல்தானிடம் தோல்வி அடைந்த பின் னர். இப்பகுதி திப்புசுல்தானின் ஆட்சிக்கும் உட்பட் டிருந்தது. இக்கால கட்டத்தில் இங்கு அகதிகளாக வந்து குடியேறிய படுகர்கள், திப்புசுல்தானின் படை வீரர்களிடம் இருந்து தப்புவதற்கு இம்மலைப் பகுதி களில் வாழ்ந்திருந்த ஆதி வா சி மக்களைப்போல் வெள்ளை உ  ைட அணிந்தார்கள். தலைப்பாகை மேலங்கி முதலியனவும் அணிய ஆரம்பித்தார்கள். திப்புசுல்தானைத் தோற்கடித்த ஆங்கிலேயர். நீலகிரி மலைகளை ஆங்கில ஆட்சிக்குட்படுத்தினார்கள்
ஆங்கில ஆட்சி வந் த பிறகுதான் நீலகிரியில் தலைவிதியே வெகு விரைவாக மாற ஆரம்பித்தது மோட்டார்ப் பாதைகள், புகைரதப் பாதைகள் ஏற் பட்டன. புதிய விவசாயம் தொடங்கப்பட்டது உரு ளைக்கிழங்கு காரட், பீட்ரூட், போன்ற ஐரோப்பியப் பயிர் வகைகளின் விவசாயம் நீலகிரியில் ஆரம்பித்தது. பின்னர் காப்பி, தேயிலை கோக்கோ ஆகிய பெருந்

T G ( a....
தோட்டப் பயிர் ச் செய்கைகள் ஆரம்பமாயின. காடுகள் அழிக்கப்பட்டன. ஏற்றுமதி விவசாயம் ஆழ மாக வேரூன்றியது, ஆதிவாசிகளுக்கு இந்த விவசாயத் தில் பரிச்சயமுமில்லை, விருப்பமும் இல்லை. ஆனால் பயிர்ச் செய்கையில் பழக்கப்பட டிருந்த படுகர்கள் மட் டும் இந்தப் பயிர்ச் செயிகையில் ஆர்வமுடன் பங் காற்றினர். இதனால் இவர்கள் ஆங்கிலேயர்களுக்கு மிக வேண்டியவர்களானார்கள். நீலகிரியில் பழங்குடி களாக தோடர், கோத்தர் ஆகியோருக்கு கட்டுப்பட் டிருந்த படுகர்கள். ஆங்கில ஆட்சியைப் பயன்படுத்திக் கொண் டு அவர் க ஞ க் கி ரு ந் த க ட் டு ப் பாடுகளிலிருந்து வி ல கி க் கொண்டார்கள். நீல கிரியில் தமக்கு நில உரிமை பெற ஆங்கிலேயர்களை பயன்படுத்திக்கொண்டார்கள். நீலகிரி வாழ் மக்க ளின் சரித்திரத்தை சரிவரப் புரிந்து கொள்ளாத வெள் ளைக்காரர்கள் நீலகிரியில் வாழ்த்த எல்லா மக்களை யும் 'ஆதிவாசிகள்" (Tribes) என்று 1936-ல் பட்டியல் செய்தார்கள் இதிலே தவறாக படுதர்களையும் சேர்த் துவிட்டார்கள் 1948-ல் இந்தப்பிழை திருத்தப்பட் !-து.
42 வருடங்களுக்குப்பிறகு, தம்மையும் ஆதிவாசி கள் பட் டி. ய லில் மீண்டும் சேர்க்கவேண்டுமென்று சில படுக சங்கங்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். தோட்ட முதலாளிகளாக இருப்பவர்களும், அரசியல் லாபம் தேடுபவர்களும், இந்த அர்த்தமற்ற முயற்ச்சி யில் ஈடுபட்டிருக்கிற ர்கள். இந்த ஆதிவா சிசள் ஆங் கிலம் படித்தவர்கள். சொத்துக்கள் உடையவர்கள் நிலப்பிரபுகள் , அ ர சி ய ல் கடசிகளுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்து தம்மை ஆதிவாசிகளாக்க வேண்டு மென்றுமுயற்சிக்கக்கூடிய அளவுக்குமுன்னேறியவர்கள். இதனால்தான் தம்மை பிற் பட்ட வகுப்பினராகக் குறிப்பிடப்பட்டிருப்பதை அவர்கள் விரும்பவில்லை போலும், கடந்த 15 ஆண்டுகளாக இந்தக் கோமா ளித்தனமான அரசியல் நீலகிரியில் நடந்து கொண்டு வருகிறது.
இப்பொழுது புத்தம் புதிய கோமாளி ஒருவர் தோன நியிருக்கிறார். ஆதிவாசிகள் சக்தி நீலகிரிப் பிரிவு என்னும் ஒரு இயக்கம் இப்பொழுது தலையெடுத் திருக்கிறது. இதிலே சில முக்கிய அரசாங்க அதிகாரி களும் இருக்கிறார்கள். இவர்களுடைய கோரிக்கைக ளில் ஒன்று 1950-ற்குப் பின் நீலகிரியில் குடியேறிய வெளியாட்கள், வெளியேற்றப்பட வேண்டும் என்பது
இது மிகவும் விஷமமான கோரிக்கை.
ஆதிவாசிகள் நீலகிரியிலிருந்து அந்நியர்களை வெளியேற்ற வேண்டும் என்றால் முதன் முதலில் வெளி யேற்றப்பட வேண்டியவர்கள் படுகர்கள், ஏனென்றால் படுகர்கள் ஆதிவாசிகளே அல்ல.
Gas T-(5.......- ...)

Page 4
ا9 "புதிய பார்வை'
ஜூலை 12 ஆம் திகதி ஞாயிறு அன்று கோவையில் அமைந்துள்ள திவ்யோதய மண்டபத்தில் ஒரு இனிய நிகழ்ச்சி நடைபெற்றது.
திவ்யோதய என்பது மக்கள் மத்தியில் இன, மத வேறுபாடு இன்றி ஒற்றுமையை வளாப்பதற்காக உரு வாக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் மையம் ஆகும். இதன் நெறியாளராக அருட் தந்தை ஜான் பீட்டர் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இம்மையத்தில் ஜூலை 12 ம் திகதி ஞாயிறு அன்று தேசிய பார்வையற்றோர் சங்கம் ஒரு காலாண்டு இதழை வெளியிட்டது. என்ற செய்தி உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் பார் வையற்றோர் எப்படி பத்திரிகை நடத்துவார்கள் என்ற கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும் அதன் தலைவர் திரு. வி. சுகுமாரன் அவர்கள் இவ்விதழின் ஆசிரியராக இருந்து புதிய பார்வை' என்ற பெயரி ல் இக் காலாண்டு இதழை வெளியிட்டுள்ளார். துணை ஆசிரி யர்களாக திரு. வாளவாடி வண்ணநிலவன், திரு கிழாய் கிள்ளி திரு டி. சதாசிவம் என்பவர்கள் பணியாற்று கின்றனர்.
நம்முடைய சமுதாயத்தில் சண் பார்வை உள்ள வர்கள் இருண்டபார்வை உள்ளவர்களாகவும், மருண்ட நோக்கு உடையவர்களாகவும், உலவி வரும் இக்கால கட்டத்தில், பார்வை இழந்தாலும், நோக்கை இழக் காமல், ஊனக்கண் இருண்டாலும், ஞானக் கண் சுடர் விடுகின்ற காரணத்தினால், நமது சமுதாயத்தை (2-ம் பக்கத் தொடர்ச்சி) கே. பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைவாகக் கொண்டு வந்தும் ஒரு உதவியும் கிடைக்காமல் பரிதவிக்கும் பல்லாயிரக் கணக்கானோர் கதை உங்களுக்கு தெரியாதா ? போகப் போகத்தான் புரியும் என்று நினைக்கி றேன். நாங்கள் அரசை நம்பி வரவில்லை. எங் கள் உழைப்பை நம்பித்தான வந்திருக்கிறோம். இப்பொழுதும் எங்கள் சொந்த உழைப்பில் தான் வாழ்கிறோம். இந்த உழைப்புக்கு மோசம் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கே. உங்கள் பிள்ளைகள் படிப்பிற்கு வசதி செய்திருக்
கிறீர்கள1 ? ப. அதிலேயும் கஷ்டமாக தான் இருக்கிறது, பிள் ளைகளைச் சேர்க்கப் பள்ளிக்குச் சென்றால் எடுத்த எடுப்பிலேயே சாதி என்ன என்று கேட் கிறார்கள். சாதி சான்றிதழ் கேட்கிறார்கள். எங்களுக்கு பல ஆண்டுகளாக இந்தச் சாதி சங் சுதியே மறந்திருந்தது. இப்பொழுது மறுபடி யும் சாதியைத் தேடி கண்டுப்பிடிக்க வேண்டியி ருக்கிறது. கல்வி கற்கும் உரிமைக்கு முன்னுல்சாதி சர்ட்டிபிகேட் என்ற தடையைத் தாண்டு வேண் டியிருக்கிறது. அந்த சாதி சர்ட்டிபிகேட் பெற் றுத்தருவதற்கு தான் ஒருவரைத் தேடிக் கொண் டிருக்கிறேன். சாதிசர்ட்டிப்பிகேட் எ ல் லா ம் இங்கு பணங்கொடுத்து தான் வாங்க வேண்டும்

sjoy காலாண்டு இதழ்
சரியாக எடைபோடும் பக்குவத்தோடும் சிறந்த நோக் குடனும் இக்காலாண்டு இதழ் கம்பீரமாக வெளிவந் துள்ளது. இந்த துணிச்சலான செயலை நாம் வரவேற் கிறோம். பாராட்டுகிறோம். கண்பார்வை இழந்த ஹோமரும், மில்டனும் அமர காவியங்கள் படைத் திருக்கும் போது, நாம் ஏன் ஒரு காலாண்டு இதழ் உருவாக்க முடியாது என்ற உணர்வுடன் தங்கள் படைப்பாற்றலை தமக்காக அல்ல, எமக்காக வழங்கி இருக்கின்ற உயர் பண்பை, பொது நல சிந்தனையைப் பாராட்டுகின்றோம்.
நான் படித்த கதை ஒன்று நினைவிற்கு வருகின்றது கண் பார்வையற்ற ஒருவர் இருளில் நடந்து சென்ற போது கையில் ஒரு 'லாந்தர்' விளக்கை ஏந்தி சென் றாராம். அவரைப் பார்த்த ஒரு வழிப்போக்கர் q] ଟrt ୫୪t மாக 'பார்வை இழந்த உங்களுக்கு விளக்கு எதற்கு? என்று கேட்டாராம். அதற்கு அந்த பார்வையற் றவர்" விளக்கு எனக்காக அல்ல, உங்களை போன்றவர் கள் தவறுதலாக எ ன் மீது மோ தி விடா மல் இருப்பதற்க்காகவே 'என்று பதிலளித்தாராம் அது போன்ற நமக்கு 'புதிய பார்வை' ஒளிவிடுகின்றது. இதழ் கிடைக்குமிடம் பார்வையற்றோர் தேசிய சம்மேளனம் (தமிழ்நாடு) மேற்கு 50 6, காமராசர் சாலை, வரதராஜபுரம் கோவை- 5. விலை ரூ. 7.50 என்று ஒருவர் சொன்னார். ஊருக்கு ஊர் விலை 6958) uu Tay UuG) on b. கே. பரவாயில்லையே முதன் முதலாக இந்தியாவில் சர்ட்டிபிகேட் வியாபாரத்தைப் பற்றித் தான் படித்திருக்கிறீர்கள். போகப் போக இப்படிப் பட்ட பெரிய அரசாங்க பிஸ்னஸ் நடைபெறு வதை மனக் கஷ்டததோடு புரிந்து கொள்வீர்கள் இலங்கையிலே நீங்கள் எல்லாம் தேர்தலில் வாக்களித்ததாக ஒரு செய்தி வந்ததே ? ஆமாம் சென்ற ஜனாதிபதி தேர்தலிலே எங் களை எல்லாம்பி ரெமதாசாவுக்கு ஒட்டுப்போடச் சொன்னார்கள் தொண்டமான் கா ங் கி ர ஸ் எங்களுக்கு அப்படி கட்டளை இட்டது. எங்கள் தோட்டத்துரையும் பிரெமதாசாவுக்கு ஒட்டுப் போ டச் சொன்னார் நாங்கள் சொன்னேரம் நாங்கள் எல்லாம் இந்தியப் பிரஜைகள் இங்கே வாக்களிக்க முடியாது என்று பாஸ்போர்ட்டைக் காட்டினுேம் அதற்கு அவர்கள் சொன்னர்கள் பாஸ்போர்ட்டை எல்லாம் காட்டாதே தேர்த வில் பிரேமதசாவுக்கு ஒட்டுப்போடு ஒட்டு ப் போட்டப்பிறகுநீங்கள் எல்லாம் இந்தியாவுக்குப் போகலாம் உங்களுக்குஅரசாங்கம்இலவசமாகப் பிளேன் டிக்கட் வாங்கித் தரும் என்று சொன் of கே. அந்தத் தேர்தல் வாக்குறுதியைத் தான் இப்
பொழுது நிறைவேற்றி இருக்கிறார்களோ ? s அப்படித் தான் நினைக்கிறேன்.

Page 5
மன்றச் செய்திகள்
கூடலூரில் தொழில் 6
"வறுமையின் கொடுமையினால் பாதிக்கப்பட்ட இளைய சமுதாயம் படித்தால் எப்படியும் வேலை வாய்ப்பு கிடைத்து விடும். வாழ்க்கைத் தரத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்புடன் பல்வேறு சிரமங்களுக்கு மத் தியில் தேர்ச்சி அடைகிருர்கள். ஆனல் படிப்பை முடித்து விட்டு வெளியே வந்தவுடன் சண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல விரக்தி அடைகிறார்கள். எனவே தொழிலை எதிர்நோக்கி படிப்பது என்ற மனோநிலை இளைஞர் மத்தியில் இருந்து அகற்ற வேண்டியது மிக, மிக அவசியம்’
இவ்வாறு கூடலூரில் நடைபெற்ற தொழில் வழி காட்டிக் கருத்தரங்கில், மன்ற ஊக்குநர் திரு எம் எஸ் செல்வராஜ் குறிப்பிட டார்.
இவர் தொடர்ந்து கருத்துரை வழங்கிய போது இன்று வேலையின்றி பல்லாயிரக்கணக்கானவர்கள் அல்லலுறுகிறார்கள். இவர்களுள் படித்தவர்களும்
gir 351TgöTTü 1600İö56İT L],
‘இவ்வுலகில் வாழும் அனைவரும் நோய் நொடி பின்றி நீண்ட நாள் வாழ வேண்டுமாயின் மனதை அடக்கி, கோபதாபங்களுக்கு இடங்கொடுக்காமல் மன உளைச்சலின்றி, அளவோடு உணவருந்தி, பசி வரும் போது புசித்து, அதிகாலையில் துயில் எழுந்து, நீராடி உடல் உழைப்பைச் செய்து வரவேண்டும் அப்பொழுது நோய்நொடியின்றி நீண்டகாலம் உயிர் வாழலாம்"
இவ்வாறு சித்த வைத்தியர் அச்சம் தவிர்த்தான் அவர்கள் கோத்த கிரி மன்ற வளாகத்தில் சுகாதாரப்
பணிகள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்ற போது
குறிப்பிட்டார்.அவர் தனதுரையிலே தொடர்ந்து நாம்
அன்றாடம் சரளமாக உபயோகப்படுத்தும் பல டொரு
ட்களே நோயைத்தீர்க்கும் வல்லமை பொருந்தியதாக இருக்கிறது. ஆனாலும் அதனை சரியான அளவுக ளிலும், சரியான முறையிலும் பயன்படுத்தத் தெரியா
ததால் அதன் முக்கியத்துவம் உணரப்படாமல் இருக்
கிறது. நாகரீகத்தின் வளர்ச்சியினாலும், விஞ்ஞான
முன்னேற்றத்தினாலும் இன்று அனைவருமே ஆங்கில
அலோபதி வைத்திய முறை  ைய நாடுகிறார்கள.
ஆனாலும் நாட்டு வைத்தியம் என்று சொல்லப்படு
கின்ற எளிய வைத்திய முறையை பற்றி மக்களுக்குத்
தெளிவாக எடுத்துச்சொன்னால் அதன் முக்கியத்தை
மக்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை
தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து திரு சி. ஆர், பிஜாய் உரை யாற்றினார். அவர் தனதுரையிலே காட்டிலே கிடை

வழிகாட்டி கருத்தரங்கு
அடங்குவர். படிக்காதோரும் அடங்குவர். இந்த இளை ஞர்கள் தங்கள் நியாயமான ஆசைகளைக் கூட நிறை
வேற்றிக் கொள்ள முடியாமல் இருக்கிறார்கள். இவர் களின் விரக்தியை நாம் இன்று பல்வேறு வடிவங்களில் காண்கிறோம் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு வேலை இல்லாமல் பல்லாயிரக்கணக் கோர் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டுமெனின் எல்லோருமே அரசை நம்பியும், அரசு தொழில்களை நம்பியும் காலம் தாழ்த்தாமல் தொழிற் கல்வி கற்றோ, அல்லது சய தொழிலில் ஈடுபட முனைய வேண்டு. என்று கூறினார்.
வேலை வாய்ப்புக்கு என்னென்ன திட்டங்கள் வழி முறைகள் இருக்கின்றன, கிராம அபிவிருத்தித் திட்ட ங்கள். வங்கியில் கடன் பெறுவது போன்றவை பற்றி யும் விரிவாக இக்கருத்தரங்கில் விளக்கப்பட்டது.
Ööılı 36.j516)TLITLâ
க்கும் பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி ஆதிவாசி
மக்கள் தமக்கென்றே ஒரு வைத்திய முறையை கை யாண்டு வருகிறார்கள். இன்று நம் கைக்கு எட்டிய தூரத்தில் இத்தகைய மூலிகைகள் கிடைத்தும், அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் ஆங்கில மருந்தின் மோ கத்திலே வீழ்ந்து விட்டோம். நாட்டு வைத்தியம், கை வைத்தியம் என்று சொல்லப்படுகின்ற இந்த மருத்துவ முறையை மக்களிடத்தில் பரப்ப வேண்டுமாயின் அது தனி ஒருவரால் முடியாது எனவே சமூகப்பற்று கொண்ட மக்கள் ஒன்று சேர்ந்து இது பற்றி சிந்தித்து திட்டம் தீட்டி தொடர் நடவடிக்கையாய் செயற்பட வேண்டும் என்று கூறினார் .
இக் கூட்டத்தில் மன்றப் பணியாளர் உட்பட கூடலூர், குன்னுார், கோத்தகிரி, உதகை பகுதிகளில் இருந்து வந்த 25 பெண்கள் கலந்து கொண்டனர். இக் கலந்துரையாடலில் பல்வேறு காயங்களுக்கும், நோய் களுக்கும் தற்போது மக்கள் கையாண்டு வரும் எளிய வைத்திய முறைகள் என்னென்ன என்று வந்திருந்த பெண்கள் குறிப்பிட்டனர். மேலும் சில நோய்களுக் கான எளிய முறைகளை டாக்டர் அச்சம் தவிர்த்தான் குறிப்பிட்டார்.
கூட்டத்தின் இறுதியில் இயற்கை  ைவத் தி ய ம் பற்றிய 5 நாள் பயிற்சி ஒன்றினை ஆகஸ்ட் மாதத்தில் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

Page 6
s6la y நம்பி
தென் ே
அலையம்மா விஜயன்
விடிகாலை நேரம் ஆலைய மணியோசை கேட்டு மேரி விழித்தெழுகிறாள். அவளது பவுலும், குழந்தைக ளும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்கள். அவள் ஒலை வேய்ந்த குடிசையை நோக்கி மெதுவாக நடக் கும் பொழுது அவளது எண்ண ஓட்டம் எதிர்நோக்கி இருக்கும் வேலைகளை அசைபோடுகிறது. அவள் காப்பி தயாரித்து விட்டு மீன் பிடிக்க அனுப்புவதற் காக பவுலை எழுப்புகிறாள். அவனுக்காக மேரி உணவு தயாரிக்கிறாள். பவுல் வலையை எடுத்துக் கொண்டு கடற்கரைக்குப் போ ய் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.
படகு தொலைவில் சென்று மறையும் வரை மேரி கடற்கரையில் நின்று கொண்டிருக்கிறாள். அவர்களது பாதுகாப்பிற்காகவும் நிறைய மீன் பிடிக்க வேண்டும் எனவும் அவள் அமைதியாக ஜெபம் செய்கிறாள். அவள் பெயரை யாரோ கூப்பிடும் குரல் கேட்டு திரும்பிப் பார்க்கிறாள். அவளுடைய தாய் ரீடா அவளைப் பக்கத்திலுள்ள குடிசையிலிருந்து அழைப் பது தெரிகிறது. அங்கு தான் அவள் தாய் அவளுடைய விதவை சகோதரி ரோசாவுடனும், குழந்தைகளுடனும் வசித்து வருகிறாள் ரீடா கடைத்தெருவுக்கு சீக்கிர மாகசெல்லும் படிமேரியை.அவசரப்படுத்துகிருள் முதல் நாள் மேரி சிறிது தாமதமாச சென்றதால் ஏற்கனவே கடைத்தெருவில் 'ஐஸ் வைக்கப்பட்ட மீன் (பதப்படுத் தப்பட்ட) விட்டிருந்தது. மேரி கடற்கரையில் பெற் றுக் கொண்டு சென்ற மீன்கள்-விலை அதிகமாக இருந் தால் அவளால் எல்லாவற்றையும் விற்க முடியவில்லை
மேரி வேகமாக குடிசையை சுத்தம் செய்து விட்டு அவளுடைய மூத்த மகள் ரோசலியை எழுப்புகிறாள். அவளுக்கு 12 வயது கூட நிரம்பவில்லை ஆனால் அவள் தான் மூன்று இ  ைள ய குழந்தைசளை கவனித்துக் கொள்ள வேண்டும். அவள் பெற்றேர் வெளியில் சென்ற பின் தம்பி தங்கையரை கவனித்துக்கொள்வ. தற்காக "மூன்று வகுப்புடன் படிப்பை நிறுத்தி விட்டி ருந்தாள் கடைத்தெருவுக்கு செல்ல ஆயத்தமாகும் பொழுது மேரி அப்பா வருவதற்கு முன் சோறு சமைக் கும்படி ரோசலிக்கு கட்டளையிடுகிறாள். கா  ைல உணவுக்கு பக்கத்து "டீ" கடையில் இருந்து 'பிட்டு' வாங்கி சாப்பிடும்படி குழந்தைகளுக்கு ஆளுக்கு 50 பைசா கொடுக்கிறாள்.
மேரி கூடையைச் சுமந்து கொண்டு தாயின் குடி சையை நோக்கி நடக்கின்றாள். அரிசியும், மரவள்ளி யும் வாங்க கடைக்குச் செல்லும் போது ரோசலியை யும் கூட அழைத்துச் செல்லும்படி அம்மாவிடம் கேட் டுக்கொள்கிறாள். முதல் நாள் விற்க முடியாது போன மீனை வெயிலில் பரப்பி காய வைக்கும்படியும் குழந் தைகளை கவனித்துக்கொள்ளும் படியும் கே ட் டு க்

is a runs
க்கையுடன் ஒரு போராட்டம் கரளத்து மீன் விற்கும் பெண்களின் கதை
கொள்கிருள். அன்று கடற்கரையில் அதிகமாக மீன் கிடைக்காது என்பதால் தறைமுகத்திற்கு செ ல் ல தீர்மானித்திருப்பதாக கூறுகிறாள் அம்மாவின் பையில் இருந்து வெற்றிலை எடுத்தக்கொண்டு மேரி அவசர மாக துறைமுகத்திற்கு செல்லும் பேருந்தை பிடிக்க நடக்கின்ருள்.
விரைவிலேயே, மேரி படகுகள் கரை திரும்ப காத்துநிற்கும் மற்றைய மீனவ பெண்களுடன் சேர்ந்து கொள்கிறாள். அவளுடைய நண்பி வில்லி மேரியை கவனித்து வி. டு அவள் அருகில் வந்து விடியற் காலை சென்ற படகுகள் கரை திரும்ப ஆரம்பித்து விட்டதா கவும், மீன் அதிக காக பிடிப்பட்டிருப்பதாகவும் தெரி விக்கிறாள். ஆனால் படகு சொந்தகாரர்கள் மீன் விற்கும் பெண்களுக்கு அல்லாமல் உடன் பணம் கொடுக்கும் மொத்த வியாபாரிகளுக்கு அவறறை ஏலம் விட விரும்புவதாக கூறுகிறாள்.
மேரி, சுற் றி லும் காலியான கூடைகளுடன் ஏமாற்றமும் ஆவலும் கலந்த முகங்களுடன் நிற்கும் பெண்களைப் பார்க்கிறாள் இரண்டு கட்டு மரங்கள் கரை ஏறியதும் சில பெண்கள் அதை நோக்கி விரைகி றார்கள், ஆனால் அதில் இருந்த சிறிதளவு மீன் அதிக விலைக்கு கேட்ட ஒரு பெண்ணின் கூடையை நிரப்பவே போதுமானதாக இருக்கிறது. ஆவலுடன் சாத்திருத்தல் தொடர்கிறது. வியாபாரிகள் மீன்களை சைக்கிளிலும் லாரியிலும் கடைத்தெருவுக்கு கொண் டு செ ல் ல தொடங்கிவிட்டார்கள். மேலும் அங்கு காத்திருப்ப தில் பிரியோஜனமில்லை சில பெண்கள் தங்க ள் பணத்தை ஒனறு சேர்த்து மீன் வாங்கி தங்களுக்குள் அதைப் பிரித்துக் கொள்ள தீர்மானிக்கிறார்கள். மேரி முந்தினம் எல்லா மீன்களையும் விற்கவில்லையா தலால் அவள் பங்கு பணத்திற்கேற்ப சிறிய பங்கு மீன் கிடைக்கிறது.
ஏற்கனவே காலை 9 மணியாகிவிட்டதால் ஒட்ட மும் நடையுமாக மேரி கடைத்தெருவை நோக்கி செல் கிறாள், 10 மணிக்கு முன் அவள் அங்கு சென்றடைய வேண்டும் அப்போதுதான் அவள் மீனை விற்கமுடியும் எல்லாவற்றையும் விற்று முடியும் போது மேரிக்கு களைப்பு மேலிடுகிறது. ஏற்கனவே மதிய வேளையாதி விட்டது. அவள் இதுவரை ஒன்றும் சாப்பிடவில்லை. அவள் பக்கத்து டீ கடைக்கு சென்று இரண்டு அப்ப மும், டீயும் சாப்பிடுகிறாள். சந்தை வரியை மேரி விற்பனைக்கு பின் கொடுப்பதாக உறுதியளித்திருந் தாள், அதை பெற்றுச் செல்ல வரி வசூலிப்பவன் ஒரு கூடை சுமைக்கு 50 பைசா வரி என்று அறிவிப்பு பல கையில் குறிப்பிட்டு இருந்தாலும் அவனுடன் வாதிடு வதில் பயன் இல்லை என்பதால் மேரி அவனுக்கு ரூபாய் 3 கொடுக்கிறாள்.

Page 7
மேரி வீட்டை அடையும் போது மாலை 4 மணி தாண்டி விட்டிருக்கிறது. வழியில் அடுத்த நாளைக்கு தேவையான உணவுப் பொருட்களையும் விறகும்.வாங் கிக் கொண்டு வீடு செல்கிறாள் அவளை நோக்கி ஓடி வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழங்களை கொடுக்கி றாள் அவளுடைய தாய் மணலில் காய வைக்கப்பட்ட கருவாட்டை சேகரித்துக் கொண்டிருக்கிறாள் ரோசிலி அவளுக்கு கூழ் கொண்டு வருகிறாள். அதைக் குடித்து வி. டு மேரி குளிப்பதற்காக பொதுக்கிணற்றுக்குச் செல்கிறாள் அங்கு அதிகமான கூட டம் இருந்ததால் காத்து நிற்க நேரமில்லாமல் இரண்டு குடம் தண் ணிரை ஊற்றிவிட டு திரும்ப வீட்டை நோக்கி விரைகி கிறாள். அவள் முதுகும் காலும் வலியெடுப்பதால் தன் வரவுச்செலவை கணக்கிட காலை நீட்டி அமர்கி றாள். பஸ் கட்டணம் மதிய உணவு, வரி, கோவில் காணிக்கை, வாங்கி வந்த உணவுப் பொருட்கள் இவை அத்தனை செலவுக்கும் பின் மிக சொற்ப பணமே மிகு தியாகிறது அவளுக்கு இன்னும் வாங்கிய கடனுக்காக வட்டியை கட்ட வேண்டியுள்ளது. நாளை மீன் வாங் கப் பணம் வேண்டும் பவுலுக்கு அதிஷ்டம் இருந்தால் அவன் சிறிது பணம் கொண்டு வருவான், ஆனல் பவுல் ஏற்கனவே வீட்டுக்கு திரும்பி விட்டதாகவும், சாப் பி. டுவிட்டு சீட்டு விளையாட சென்று விட்டதாகவும் ரோசலி தெரிவிக்கிறாள். அவ ன் நண்பர்சளுடன் மிதுக்கடைக்கு போய்விட்டுத்தான் திரும்ப வருவான் என்று மேரிக்கு தெரியும் அவன் 'சீட்டு விளையாட் டுக்கும் பின் எவ்வளவு பணம் மிகுதியாகிறது என்று யாருக்கு தெகியும்' என்று சத்தமாக ஒலமிடுகிறாள அவனிடம் அடிவாங்காமல் இருக்க சத்தம் போடாமல் இருக்கும்படி ரீட்டா அவளை எச்சரிக்கிறாள்.
மேரி இரவு உணவுத் தயாரிப்பதில் ரோசலிக்கு உதவ ஆரம்பிக்கிறாள். திரும்ப கொண்டு வந்த மீனே அவள் சுத்தம் செய்கிறாள். குழந்தைகளுக்கு உணவு கொடுத்து அவர்களை பக்கத்திலுள்ள கோவிலிக்கு ஜெபம் செய்ய அனுப்பி வைக்கிறாள். அவள் பவுல் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
மேரியின் க  ைத 10, 12 வயதுக்கிடைப்பட்ட இளம் வயதிலிருந்து சாகும்வரை மணிக்கணக்காக கடின உழைப்பு, இடைவிடாத பிள்ளைப்பேறு, குடி கார கணவர்களின் கொடுமைகள் சுமக்க வேண்டிய கடமைகள் இவைகளே அலர்கள் வாழ்க்கை அவர்கள் வேலை கீழ்த்தரமானதாக கருதப்படுகிறது. சமுதா யத்திலும் குடும்பத்திலும்பேதத்தை எதிர்நோக்கவேண் டியுள்ளது. அவர்களது வாழ்க்கை ஒரு நீண்ட சோகங் கள் நிறைந்த போராட்டம்.
மீன் பிடித்துறையில் அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் மீனவப் பெண் களின் நலிவுற்ற நிலையை உயர்த்துவதற்கு மாறாக மேலும் நலிவுறச் செய்கின்றன. மீன் பிடித்துறை அபி விருத்தி என்பது மேற்றகத்திய தொழிநுட்ப அறிவின் உதவியுடன் உற்பத்தியை பெருக்கும். நோக்கமாகும். நடைமுறையினால் பயன் அடைந்தவர்கள் உயிர் வாழ் வதற்கு மீன் தொழிலையே நம்பியிருக்கும் மீனவர்கள் அல்ல, மாறாக விலையுயர்ந்த மோட்டார் படகுகளும்

உபகரணங்களும் வாங்கக்கூடிய முதலாளிகளே.
இத்துறையில் பயன்படுத்தப்பட்ட சில அழிவு முறைகள் சிறிது காலம் உற்பத்தியை அதிகரித்தாலும் பின்னர் மெதுவாக மீன் வளங்கள் அழிவுற ஏதுவாகின. மீன் வளங்கள் அழிவுற்றதால் அதிகமாக பாதிக்கப்பட் டவர்கள் மீனவர்களே. இவ் அபிவிருத்தி முறைகள் தங் கள் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஒட்டிவந்த பெண்களுக்கு பா ? மாக இன மந்தது. மீன் உற்பத்தி ஒரு நிலையில் இருந்தபோது சில்லரை Gifuu nru_i n if ar sit குறிப்பாக பெண்கள் ஒரங்கட்டப்படடார் கள் ஆண்க ளின் வருவாய் நிலையில்லாமல் இருந்தால் பெண்கள் குடும்பத்தை நடத்தி செல்ல மேலும் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது உள்ளூரில் வாங்க முடி யாத போது தொலை தூரங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது.
மீன் பிடித்தொழில் ஆபத்தானதால் கடலில் இறப் பது சகஜம் பெரும்பாலும் குடும்பத்தை பார்க்க வேண் டிய முழு பொறுப்பும் விதவை பெண்ணின் மேல் சுமத் தப்படுகிறது. பெண்கள் பொறுப்பில் நடக்கும் குடும் பங்கள் கரையோர பகுதிகளில் கணிசமாக காணப் படுகிறது.
மீன் உற்பத்தி பெண்களின் உயர்வுக்கும் முன்னேற் றத்திற்கும் வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டாலும் நிலமற்ற சொத்துக்களற்ற மீனவ பெண்களின் பொரு ளாதார நிலமை மேலும் கவலைக்கிடமானது. Guatiw களே உருமானம் முழுவதையும் குடும்பச் செலவுக்கு பயன்படுத்தினார்களே ஒழிய ஆண்களின் வருமானத் தில் 60% விகிதம் கூட குடும்பத்திறகாக செலவழிக்கப் படவில்லை அவர்கள் குடிக்காரர்களாக இருந்தால் இதுகூட இல்லை உழைக்கும் பெண்களுக்கு தேவைப் படு!! போது கடன் வாங்க நேரிடுகிறது. அதை திருப்பி செலுத்தும் பொறுப்பும் அவர்களுடையதாகிறது
தென் கேரளத்து கிறிஸ்தவ மீனவ குடும்பங்களி டையே சொத்துமுறைகூள்ளது குடும்பத்தில் சிறிதுநிலம் இருந்தால்பெண்களுக்கு கொடுக் கப்படுகிறது. மணமா னவுடன் ஆண்கள் மனைவியின் கிராமத்திலேயே தங்கி அவளுடைய குடும்பத்தினருடன் மீன் தொழில் மேற் கொள்கிறான். இம்முறையினால் நன்மைகள் உண்டு பெண் அவளுடைய கணவன் வீட்டாரால் துன்புறுத் தப்படாமல் தாய் வீட்டாரிடம்இருந்து உதவி பெறுகி றாள். ஆனால் இம்முறை அவ்வளவாக அவளுடன் வாழ்க்கை நிலை ஆய மாற்றாதது வருந்தத்தக்கது. குடும்பமோ, சமூகமோ பெண்கள் மேல் ஆணின் அதி காரத்தை ஏற்றுக்கொள்கிறது. அவள் அவனுக்கு அடங்கியிருக்க வேண்டியுள்ளது. வ ரு மா ன தி தை அவன் பொறுப்பேற்றாலும் அவனுக்கு குடிக்க பணம் கொடுக்க வேண்டியுள்ளது. குடித்து விட்டு வந்து அவன கொடுக்கும் அடி உதைகளை தாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. மீனவ சமூகத்தில் இது ஆணின் உரிமை அவர்களுடைய சொந்த விஷயம் எ ன் று யா ரு ம் கண்டுக்கொள்வதில்லை. குடும்பத்திலோ கோவிலிலோ, சமூகத்திலோ தீர்மானங்கள் எடுக்கப்
படும்போது. 函鱷隱圈極圈圈
(தொடர்ச்சி மறு பக்கம்)

Page 8
(7-ம் பக்க தொடர்ச்சி) பெண்களுக்கு குடும்பத்தை யும் வெளிவருமானத்தையும் பார்க்கும் சுமை அதிக மானால் சுமையின் ஒரு பகுதி பெண் குழந்தைகள் மேல் சுமத்தப்படும். பெண் குழந்தைகள் தாய்க்கு உத வுவதற்காக பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டிலிருக்க நேரிடுகிறது. இதுவே ஏ ழ்  ைம படிப்பறிவின்மை போஷாக்கின்மை ஆகியவற்றின் ஆரம்பம் அறிவு, தீர் மானம் எடுக்கும் சந்தர்ப்பங்கள் வலிமை போன்றவற் வற்றில் ஆணிற்கும் பெஸ் னிற்கும் உள்ள இடைவெளி பால் தாழ்வு மனப்பான்மை மேலோங்குகிறது
இவை அனைத்தும் இருந்தபோதும் ஒரு சந்தர்ப் பம் இருக்கிறது. பெண்கள் விற்பனையில் முக்கிய பங் கேற்பதால் அவர்களுக்கு சில அனுகூலங்களும் உண்டு மற்றைய சமூகத்து பெண்களை விட மீனவ பெண்கள் மிக சுறு சுறுப்பானவர்களாகவும் பல வித அனுபவங் களை உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் புதிய கருத்துடையவர்களாகவும் எழுச்சியுள்ளவர்களாகவும் காணப்படுகிருர்கள்.
அண்மை, ஆண் மீனவர்களின் போராட்டங் களை நோக்கும் போது பெண்களே தீவிரம்ாகவும் எழுச்சியுடனும் மீன்வளங்களை பசிபாலிக்கும்படி கோரி வருகிறார்கள். அநியாய சந்தை வரி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தங்கள் சமூகத்து ஆண்களிடம் காணப்படும் குடிப்பழக்கம் ஆகியவற் றிற்கும் எதிராக தீவிர போராட்டம் நடத்துகிறார் கள். இம்முறையில் தாங்கள் பெண் தொழிலாளர் என்ற எண்ணம் அவர்கள் மனதில் வேர்விட்டு வளர் கிறது.
மொழியாக்கம் ஜேன். மோத்தா நன்றி :- மனுஷி' இதழ் 61
O O O மன்றச் செய்திகள் கோத்தகிரியில் சட்டப்பயிற்சிக் கருத்தரங்கு ஜூன் மாதம் 6, 7, 8 ஆகிய தேதிகளில் கோத்த கிரி மன்ற மண்டபத்தில் சட்டப்பயிற்சிக் கருத்தரங்கு நடைபெற்றது. மன்றத்தலைவர் திரு. எஸ். திருசெந் தூரன் தலைமையில் இக்கருத்தரங்கு நடைபெற்றது. * சட்டமும், மக்களும்’, ‘சர்வதேச மனித உரிமைகள்' 'அரசியல் அமைப்புச் சட்டம்’, ‘அரசியல் அமைப்பு நீதி நிர்வாக முறை, போலீசும் சட்டமும, தொழிற் சங்க சட்டங்கன், 'நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 'சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் போன்ற பல் வேறு தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. 25 பேர் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் பொதுச் செயலர் திரு. இர. சிவலிங்கம், வ ழக் க றி ஞ ர் திரு. வி. பி. சா ர தி திரு. எம். சந்திரசேகரன் திரு. எஸ். சாந்தமூர்த்தி, திரு ம தி வா க ன ம் திரு. எம். எஸ். செல்வராஜ் ஆகியோர் கருத்துரைகள் வழங்கினார்கள.
"கற்பழிக்கும் கயவர்களை தூக்கிலிட சட்டம் இயற்ற வேண்டும்’ மலையக மாதா முன்னணி தீர்மானம் நீலகிரி மலையக மாதர் முன்னணியின் செயற்குழு 21-6-1992 ஞாயிற்றுக்கிழமையன்று கோத்தகிரியில்

கூடியது செயற்குழு பின்வரும் தீர்மானத்தை நிறை வேற்றியது.
தென்னார்க்காடு மாவட்டம் , சிதம்பரம், அண் ணாமலை நகர் காவல் நிலையத்தில் பத்மினி என்னும் பெண்மணி கணவன் முன்பே காவல் நிலையத்தில் கற் பழிக்கப்பட்டசெய்தி அறிந்த அதிர்ச்சியடைகிறோம். இச்சம்பவம் பெண்பாலினர் அனைவரையுமே இழிவு படுத்துவதாகும் என்று மலையக மாதர் முன்னணி கருதுகிறது. இச்சம்பவத்தை கடுமையாகக் கண்டிக் கும் இம் முன்னணி சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை எடுக்குமாறு மாண்டிமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கேட்டுக்கொள்கிறது. இது போ ன் று காவல் நிலையத்திலேயே பெண்கள் கற்பழிக்கப்படும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக சம்பந்தப் படும் நபர்களை தாக்கிலிடும் வகையில் சட்டத்திகுத் தம் கோரி தமிழ்நாடு முழுதும் உள்ள மாதர் இயக்கங் கள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று அனைத்து மகளிர் அமைப்புகளையும் இம் மலையக மாதர் முன்னணி தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.
e ஒலியலைகள்
தங்கள் இதழ் சித்திரை. வைகாசி. 92 கிடைத்தது. ரோம்நகர் தீப்பிடித்து எரிந்த போது நீரோ மன்னன் என்னசெய்தான்? வறட்சியிலும் ஒரு வசந்தவிழா பாதி வாசிகள் சிறப்பான பேட் டி எழுத்தாணியில் வரும் பயனீட்டாளர் குரல் இதழ் எனக்கு கிடைத்தது. சிந்த னையை எப்படி ஒருமுகப் படுத்தி-இலக்கு நோக்கி குவிக்கிறார்கள் இங்குள்ள இதழாளர்களுக்கு இது ஏன் முடியவில்லை, சிண்டுமுடிதலும் சீண்டி விடுதலும் திரித் துக் கூறலுமே வியாபார ரீதியில் மிகுந்து காணப்படு கிறதே இது மாறுமா ?
பொள்ளாச்சி நசன்,
பொள்ளாச்சி
சித்திரை - வைகாசி இதழிலில் வறட சியிலும் ஒரு வசந்த விழா என்ற தலைப்பில் தாங்கள்" கூறியுள்ள உண்மையான செயலை கண்டு மனம் வருந்துகிறேன் மலரை ரசிக்கும் அரசு மலரை கொடுத்த ஏழை தொழி லாளியை நினைக்கும் காலம் இன்னும் எத்தனை வரு
டங்கள் ஆகும் என்று தெகியவில்லை.
தே. தேவன் பு
கேலம்பாக்கம்.
தாயின் உயிரை காத்த பிள்ளை என்ற தலைப்பில் அமெரிக்காவில் உள்ள இரண்டாவது நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இனக் கலவரத் தில் ஒரு பிள்ளை தான் தாயின் உயிரைக் காத்த பெருமை உண்மையிலேயே ஒரு உலக அதிசயங்களில் ஒன்று தான்.
சரண்யா, எம். காவியா.
கோவை,

Page 9
குழந்தைத் தொழிலாளர் மீட் சி
தாயகம் திரும்பிய மக்களினதும், நலிந்த மக்களின் நல்வாழ்வுக்காகவும் பல்வேறு நலத்திட்டங் கள் தீட்டி செயற்படும் மன்றப் பணிகளிலே குழந்தைத் தொழிலாளர் மீட் சி யும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் முதற் கட்டமாக கோத்த கிரி தாலுக்காவில் குழந்தைத் தொழிலாளர்கள் பற்றிய ஒரு ஆய்வு நடத் தப்பட்டது. இதுவரை 109 குழந்தைத் தொழிலாளர் கள் இனங்காணப்பட்டுள்ளனர். இக் குழந்தைகளை மீட்டு அவர்கள் மீண்டும் பள்ளிகளிலே இணைந்து பயில வேண்டும் பள்ளிக்குச் செல்லும் வயதிலே கல் வியை இடைநிறுத்தி தொழிலுக்குச் செல்கின்ற இநக குழந்தைகளுக்கு ஒரு நல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்ற எமது முயற்சியின் ஒரு நடவடிக்கையாக கோத் தகிரி மன்ற வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் களும், அவர்களது பெற்றோரும் கலந்து கொள்ளும் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்ப. டது.
குழந்தைகளை பெற்றேர்கள் தொழிலுக்கு அனுப்பு வதற்கான காரணங்களிலே வறுமையே முதன்மைபெறு கிறது குடும்பத்தில் நிலவும் வறுமையைப் போக்க தம் குழந்தைகளைத் தொழிலுக்கு அனுப்புவது தான் ஒரே வழி என பெற்றோர்கள் கருதுகிறார் 4 ன் ஆனால் குழந்தைகளுக்கு மனோரீதியாகவும், உடல் ரீதியாக வும் ஏற்படக்கூடிய தாக்கங்களை அவர்கள் உணருவ தாக இல்லை எத்தனை சிரமங்கள் வந்தாலும் குழந் தைகளை படிக்க வைக்க பெற்றோர்கள் முன் வர வேண்டும் , உண்மையிலேயே பிள்ளைகளை படிக்க வைக்கமுடியாத பெற்றோர்கள் இருப்பின் அத்தகை யோர் மன்றத்தோடு தொடர்பு கொண்டால் அவர் களுக்கு கல்வி உதவி அளிக்க மன்றம் முன்வரும்“ என பொதுச் செயலர் திரு. இர. சிவலிங்கம் இக் கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.
அவரது உரையைத் தொடர்ந்து கருத்துத் தெரி வித்த பல பெற்றோர்களே தம் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்க அனுப்ப உறுதி அளித்தனர். அதன்படி இது வரை 35 குழந்தைத் தொழிலாள தள் மீட்கப் டு பள்ளிகளிலே சேர்க்கப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில் கோத்தகிரி பிராந்தியத் செயலர் திரு. பா செபஸ்தி யனும், அவரது உதவியா 51 கிளும் முழு பங்கெடுத்துக் கொண்டனர்.
 

போதை ஒழிப்பு பிரச்சாரக் கலைப் பயணம்
குடியினால் ஏற்படும் பல்வேறு வகை தீமைகள் விளக்கும் வகையில், மன்றத்தின் குன்னுார் பிராந்தியம் போதை ஒழிப்புப் பிரச்சார கலைப் பயணம் ஒன்றை மேற்கொண்டது.
ஆரக்கொம்பை என்ற இடத்தில் ஆரம்பித்த இக்கலைப்பயணம் சோல்ராமட் டம் வழியாக கம்பிச் சோலை வரை தொடர்ந்தது. ஒவ்வொரு ஊரிலும் மக்கள் ஏராளமாகத் திரண்டு இக் கலை நிகழ்ச்சி களைக் கண்டு களித்தனர்.
க.  ைமூலம் மக்கள் நிலையில் மாற்றத்தை ஏற் படுத்தலாம் என்பதனை உறுதியாக நம்பும் நாம் கலை கலாச்சார வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்க ளைத் தீட்டி செயற்பட்டு வருகிறோம். இதன் ஒே அங்கமாகத் தான், இந்த போதை ஒழிப்புப் பிரச்சார கலைப்பயணமும் மேற்கொள்ளப்பட்டது. இப்பயணத் தின் போது, சுற்றுப்புறச் சூழல் பெண்களின் பிரச்ச னைகள், ஒற்றுமை என்பவற்றை வலியுறுத்தும் பல் வேறு நிகழ்ச்சிகளும கூட நடத்தப்படடன.
இக்குழுவில் சுந்தர், மதிவாசனம், பிரான்சீஸ் ரவீந்திரன, நாகராஜ், விஜயநாதன், கமலாதேவி ஆகியோர் அங்கம் வகித்தனர்.
அன்னை பூமிக்கு ஆபத்து

Page 10
ஊட்டியின் அழகையும், வசீக
தமிழ் நாடு அரசாங்கம், ஊட்டியில் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காகவும், இந்த மலையக நகரை ஒழுங் காண முறையில் பராமரிக்கவும் கூடிய சீக்கிரம் ஒரு பெருந்திட்டத்தை அறிவிக்க இருக்கிறது.
ஊட்டியை அழகுபடுத்த எடுக்கப்படும் அவசரத் திட்டத்திற்கு நமது முதலமைச்சர் அவரது வருகையின் போது, தென்னிந்தியாவின் அழகிய சுற்றுலா மையமான ஊட்டியில் காணப்படும் சீர் கேடுகளைப்பற்றிய தனது அதிர்ப்தியை வெளியிட்டதே காரணம் எனலாம். இத் திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், ஊட்டி யின் அழகும் வசீகரமும் கெடாதவண்ணம், நகருக்கு வெளியேஉல்லாச விடுதிகளை அமைக்க தனியாக இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதே.
நமது அரசின் தற்போதைய சிந்தனை என்னவென் றால் கோத்த கிரி, குன்னுரர் ஆகிய இடங்களில் விடுதி களை அமைக்க அனுமதி வழங்கலாம் என்பதே. கண்ட இடங்களில் விடுதிகளை அமைக்க அனுமதி வழங்காமல் முதலீடு செய்பவர்களை ஏர்காடு, டிரான்குபார் போ ன்ற சுற்றுலா மையங்களில் ஹோட்டல்களை அமைக்க ஊக்கப்படுத்தவும் ஆலோசிக்கப்டுகிறது. ஆணுல் பெரிய பெரிய ஹோட்டல் உரிமையாளர்கள் எல்லாம் ஊட்டி யிலேயே தங்கள் பணத்தை முதலீடு செய்ய ஆவலாக
கூடலூர் அருகில் நடந் சந்தன கடத்தல்கா
முதுமலை சரணாலயம் அருகே உள்ள காட்டில் வன அதிகாரிகளுக்கும், சந்தனக் கட்டை கடத்தல் காரர்களுக்குமிடையே செவ்வாய்கிழமை நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ஒரு கடத்தல்காரர் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். வன அதிகாரிகள் ரூ 3 லட்சம் பெறுமதியான 800 கிலோ சந்தன மரக்கட் டைகளை சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மீட்டடனர்.
"சில்வர் கிளவ்டு’ தேயிலை இருப்பதாக அங்கே யுள்ள அடர்ந்த காட்டில் கடத்தல்காரர்கள் பதுங்கி இருப்பதாக வன அதிகாரிகளுக்கு செய்தி கிடைத்தது. உடனே மாவட்ட வன அதிகாரி பிரபாகரன் தலைமை யில் வன அதிகாரிகளும், போலிஸ் அதிகாரிகளும் அடங்கிய ஒரு பஸ்சை கடத்தல்காரர்களை பிடிக்க அவ்விடத்திற்கு விரைந்தது.
சுமார் 30 பேர்கள் அடங்கிய கடத்தல் கோஷ்டி அதிகாரிகளைக் கண்டதும் அவர்கள் மீது நாட்டு வெடி
வெளியீடு : மலையக மக்கள் மறுவாழ்வு மன் தபால் பெட்டி எண் 2758 கோவை -

ரத்தையும் காக்க பெருந்திட் Ab
உள்ளனர். 1991/92ம் ஆண்டில் மட்டும் இதற்காக ரூ 33 கோடி தனியார் முதலீட்டாரினால் ஒதுக்கப் பட்டுள்ளது. ஊட்டியில் ஹோட் டல்கள் கட்டுவதற்கு அனுமதிகேட்டவர்களில் பிரபலசினிமா நட்சத்திரமான மிதுன்சக்ரவர்த்தியும் ஒருவர் ஆகும்
ஊட்டியில் சுற்றுலா வை ஊக்குவிக்க தேவையான விதி முறைகளை ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறை யிலிருந்த சட்டத்திட்டங்களுக்கு முரணாக இல்லாத வகையில் தயாரிக்கும்படி சம்மந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளை முதலமைச்சர் பணித்திருப்பதாக அறி கிறோம். தற்போதய மான் சரணாலயத்தை அபிவி ருத்தி செய்யவும், மேலதிகமான பூந்தோட்டம் அமைக் கவும் சமீபத்தில் நெருப்பினால் அழிந்து போன பொடாபெட்டி காடுகளில் மீண்டும் மரங்களை நடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. "་:
ஊட்டி ஏரியில் நீரை சுத்தப்படுத்தும் திட்டத்திற் காக ரூ 7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் ஏரியில் எவ்வித கழிவும் கலந்துவிடாமல் தடுக்கப்படும் இதற்கு தேவையான பண ஒதுக்கீடு ‘மலையக அபிவி, ருத்தி திட்டத்தின்" கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தி
ஆதாரம் : இண்டியன் எக்ஸ்பிரஸ் தமிழாக்கம். ஆர். மேத்தா
த துப்பாக்கி சண்டை
ரர் காயமடைந்தார்
குண்டுகளை வீசித்தாக்கியது சிறிது நேரத்திற்கு பின்பு இக்கோஷ்டியை சேர்ந்த நால்வர் மட்டும் துப்பாக்கி தாக்குதல் நடந்து மற்றவர்கள் தப்பிஓடிவிட்டனர். அதிகாரிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இச்சண் டையில் ஷாஜி (28) எனப்படும் கடத்தல்காரனும்,
தமிழ்நாடு விசேஷபோலிஸ்படையைச் சேர்ந்த ப கோ
விந்தன், வனத்துறை அதிகாரி ஆறுமுகம் வனத்துறை பாதுகாவலர் இளம்சேரன் ஆகியோர் துப்பாக்கி குண்டு காயங்களுக்கு உள்ளானார்கள் இவர்கள் அனைவரும் ஊட்டி அரசாங்க மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த கடத்தல்காரர்கள் காட்டில் பல நாட்களாக தங்கியிருந்து சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட் டுவதில் ஈடுபட்டு இருந்ததாக அதிகாரிகள் சந்தேகிக் கின்றனர். கடத்தல்காரர்கள் பயன்படுத்திய சமையல் பாத்திரங்கள் அவ்விடத்தில் உள்ள பாறைகளுக்கி டையே மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
ஆதாரம் : இண்டியன் எக்ஸ்பிரஸ்
ம், இல 187, இராஜா அண்ணாமலைத் தெரு, 41 011. (தனிச்சுற்றுக்கு மட்டும்)