கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மன்றம் 1994.10-11

Page 1
மலர்: 6 ஐப்பசி Af
மக்கள் மன்றம்மக்கள் மன்றம்மக்கள் மன்றம் மக்கள் மன்றம் மக்க
66 F. as Uլու են հունջն, «Ճան տ க்கள் மன்றம் மக்கள் மன்ற "Jour
LLL L L
= =شفت نشان i = LTLDL komunis
நம் அனுபவத்தில் நாம் காண்கிற ஒரு உண்மை அடிக்கடி சொல்லப்படுகின்ற ஒரு வார்த்தை அல்லது வாக்கியம் நாளடைவில் அ ர்த் த மி ழ ந் து போகிறது என்பதுதான்.
sy
'அ ன் பே கடவுள் ' என்கிறோம். ஆனால் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அன்புடனா நடக்கி றோம்?
நம்-வீட்டில் நான்கு பேருக்கு சு க மில் ல ள விட்ட்ாலும் கூட ‘நாங்கள் அனைவரும் நல்ல சுகம்' என்று கடிதம் எழுதுகிறோம்.
‘எப்படி இருக்கீங்க?' 'சுகமா இருக்கீங்களா? என்றெல்லாம் குசலம் விசாரிக்கிறோம். ஆனால் உண் மையான அக்கறையுடனா இதைக் கேட்கிறோம்?
பேருந்தில் 'ஆண்கள் - பெண்கள்’ எ ன் று இரு க்  ைக க ள் ஒது க் கி இருக்கிறார்கள். இதை
கடைப்பிடிக்கவா செய்கிறோம்?
'புகைப்பது உடல் நலத்துக்குக் கேடு' என்று சிகரெட் பெட்டிகளில் போடப்பட்டுள்ளது. புகை பிடிப்ப வர்களின் உடல் நலத்தின் மீது சிகரெட் தயாரிப்பாள களுக்கு மிகுந்த அக்கறை என்றா அர்த்தம்?
'மது வீட்டுக்கு, நா ட் டு க் கு, உயிருக்குக் கேடு" என்று எல்லா மதுக்கடைகளின் பெயர்ப் பலகை களிலும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. 'மதுவாளர்கள்' மனம் திருந்தி விடுகிறார்களா? அல்லது அரசாங்கம் தான் மது அரக்கனை ஒழித்து வி டு மா?
'14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இங்கு வேலை யில் இல்லை," என்று கடைகள், தொழிற்சாலைகளின் வாயில்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். உள்ளே போனால் அவர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார் கள். இதெல்லாம் முதலாளிகளையோ, தொழிலாளர் துறை அதிகாரிகளையோ உறுத்தவா செய்கிறது?
 

- 蚤áu) LOGTT)
ம்மக்கள் மன்றம் மடிமன் துவக்கள் மன்றம்மக்கள் பன்ற 6) gut மக்கள் மனறம்மக்கள்மன்
1) | () ; 7றம்மனென்றம்மக்கள் மன்றம்மக்கள் மன்ற
மன்றம் மக்கள் மன்றம்மக்கள் மன்றம் மக்கள் மன்றம்மக்கள்மன்
இந்த எழுத்துக்கள், பேச்சுக்கள் எ ல் லா ம் வெறும் சம்பிரதாய கோஷங்கள், சாகச வேஷங்கள்.
இன்னும் சொல்லப் போனால் இவை மனித னின் பல்வேறு பொய் முகங்கள்.
இந்த வரிசையில் நாம் தலைப்பில் குறிப்பிட் டிருக்கும் ' சத்திய மேவ ஜயதே ' - அதாவது "வாய்மையே வெல்லும்’ என்ற பாரதத்தின் தாரக மந்திரமும் சேர்ந்து வி டு மே T என்ற அச்சம் எமக்கு அவ்வப்போது எழுவதுண்டு.
பொய்மையின் கோர முகம் தமது கூர்நகங் களைக் காட்டிக் கொண்டு நம் முன் நிற்கும் போது 'வாய்மை வெல்லுமா?’ என்றே நாம் பரிதவித்துப் போகிறோம்.
நமது சுதந்திர ஜனநாயகத் திருநாட்டில் பண மும், பதவியுமே உண்மையை நிர்ணயிக்கும் காரணி களாக மாறி விடுமோ என்ற பயம் நமக்கு எழுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன.
இதோ ஒரு சின்ன உதாரணம்.
நவம்பர் மாதம் 21 ஆம் நாள். குன்னூர் உதவி ஆட்சியர் அலுவலகம்.
மன்ற உறுப்பினர்கள் சிலருடைய நிலப்பிரச்சினை தொடர்பாக மன்றப் பணியாளர்கள் சிலருடன் உத வி ஆட்சியரை சந்திக்கப் போயிருந்தோம்.
நாங்கள் போய், இருக்கையில் அமர்ந்ததும் ஒரு மூதாட்டி கையில் ஒரு மனுவுடன் உதவி ஆட்சியரை அணுகினார். விஷயம் என்னவென்று உதவி ஆட்சியர் கனிவோடு விசாரித்தார்.
மடைதிறந்த வெள்ளம் போல கண்ணிருடன் அம்மூதாட்டி தன் கதையை விவரித்தாள்.

Page 2
அதன் சுருக்கம் இதுதான். விதவையான அம் மூதாட்டிக்கு குழந்தைகளோ, வாரிசுகளோ இல்லை. அவரும் அவர் கணவரும் க ஷ் ட ப் பட் டு உழைத்து சிறிது இடம் வாங்கி ஒரு சிறிய வீட்டைக் கட்டியுள்ளனர்.
அவர் கணவர் இறந்ததும் இவ்வீட்டை அப கரிக்க அவருடைய அண்டை வீட்டார் முயற்சி செய்துள் ளனர். V
ஆனால் அப்போது அரு கி லிருந் த காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் உயர்திரு.தர்மராஜ் அவர்கள் நீதி வழு வா மல் அம்மூதாட்டிக்கு உரிய பாதுகாப்பு அளித்திருக்கிறார்.
அவர் மா ற் ற லா ன பின் அம்மூதாட்டியின் அண்டை வீட்டார் காவ்ல்துறையினரை தம் கைவசப் படுத்திக் கொண்டு அம்மூதாட்டிக்கு பல்வேறு இன்னல் கள் விளைவித்துள்ளனர். ஒருமாத காலம் சி  ைற யி ல் தள்ளி கொடுமைப் படுத்தியுள்ளனர். கையை முறித்துள் ளனர். வீட்டைத் தாக்கியுள்ளனர்.
இந்த அபலை பெண்ணின் கண்ணிர் காவ ல் துறையின் கல் நெஞ்சை கரைக்கவில்லை. அடுக்கடுக் காக அவள் கொடுத்த மனுக்கள் அரசுத் துறை அதிகாரி களை அசைக்கவில்லை. ஆனால் அம்மூதாட்டி நீதி யின்மேல் வைத்தநம்பிக்கை வீண் போகவில்லை.
மனுநீதிச் சோழன் மறு பிறப்பு எடுத்தது போன்று ‘இந் த அ ப  ைல க் கு நீதி கி  ைட க் கச் செய்வேன்' என்று சூளுரைத்தார் நீலகிரி மாவட்ட உதவி ஆட்சியர் பொறுப்பிலிருந்த உயர்திரு. சகாயம் அவர்கள்.
பெயருக்கேற்றாற் போல் வாழ்ந்து காட்டும் பெரிய மனிதர் இவர். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்ட வர்களுக்கும் சமூக நீ தி  ைய ப் பெற்றுத் தருவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார் இவர்.
இவருடைய பெருமைகளைக் கேள்விப்பட்டு பெரிய கற்பனைகளை வளர்த்துக் கொண்டு இவருடைய அறைக்குள் போனால், ‘‘அட,இவரா அவர்' என்று மலைக்க வைக்கிறது அவரது தோற்றம்.
எளிய தோற்றம். நரம்புகள் வெளித்தெரியும் அளவுக்கு மெலிந்த தேகம். இனிய குரல்.
மொத்தத்தில் அவருடைய உருவத்தை வைத்து அவருடைய செ ய ல் க ளின் கனத்தை எடை போட
முடியாது.
நொச்சி- மூ லி  ைக O இதன் இலையை கொதிக்க வைத்து ஆவி பிடித்தால்
தலைவலி, தலைபாரம் குணமாகும். O கற்றையாக கட்டி தலைக்கு வைத்து படுத்தா
லும் தலைவலி தீரும் O நொச்சி இலைச்சாறு சுமார் 30 மி. லி உள்ளுக்குள் சாப்பிட்டாலும், அல்லது இலையை வேகவைத்து
2

**உனக்கு அ தி கா ர ம் இருந்தால் அதை
ஏழைகளுக்குப் பயன்படுத்து," என்பது இவரது தாரக
மந்திரம், சொல்லுக்கும் செயலுக்கும் இ  ைட வெளி போடாதவர்.
தாம் பதவி வகித்த இடங்களிளெல்லாம் தம் முத் தி  ைர  ைய பதித்தவர். இவரால் இவர் வகித்த பதவிகளுக்கு பெ ரு  ைம சேர்ந்ததே தவிர இவருக்கு இன்னல்களும், எதிர்ப்புகளும்தான் பெருகியிருக்கின் றன.
** இருப்பினும் பதவி சுகத்துக்காக கொள்கை களை விலை பேசத் தெரியாதவர்,' என்றே இவரைப் பற்றித் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இதே பண்புகளைக் கொண்டவர்தான் உயர்திரு. தர்மராஜ் அவர்களும் தற்போது கோத்தகிரி காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராகப் பணி யா ற் றி வருகிறார். உண்மையான அதிகாரி என்று மக்க ள் மனதில் தனி இடம் பெற்றிருக்கிறார்.
இப்படிப்பட்ட அதிகாரிகளைப் பார்க்கும் போது "வாய்மை வெல்லும், சத்தியம் ஜெயிக்கும்’ என்ற நம்பிக்கை நமக்குள் ஏற்படுகிறது.
இத்தகைய அதிகாரிகளுக்கு அதிகார வர்க்கம் ஒரு போதும் சாதகமாயிருக்காது. மக்கள் ஆதரவு ஒன்று தான் இவர்கள் தங்கள் க ட  ைம  ைய நீதியோடும், நேர்மையோடும் செய்வ தற்கு ஆத்மீக பலத்தைக் கொடுக்கும். ܗܝ ܗܝ -
என்வேதான் இ ம் மா த ‘மக்கள் மன்றம்' இத்தகைய அதிகாரிளை அங்கீகரித்து கெளரவிக்கிறது. உயர்திரு. தர்மராஜ் (துணை ஆய்வாளர் காவல்துறை, கோத்தகிரி) உயர்திரு. சகாயம் (ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் நீலகிரி மாவட்டம்) ஆகிய இவ்விரு அதிகாரிகளும் சத் தி ய த் தி ன் மைந்தர்களாய் வாழ 'மன்றம்’ வாழ்த்துகிறது.
சத்தியத்துக்கு சாவு மணி அடிக்க நினைப்பவர் கள் சருகாகிப் போவது சரித்திர உண்மைதான்.
இருப்பினும் 'காலம் கடந்த நீதி என்பது இழைக்கப்பட்ட அநீதிக்குச் சமம்' என்பதால் இவர்கள் சத்தியத்துக்கு நித்தம் நித்தம் உ யி ரூ ட் ட வேண்டும் என்று 'மன்றம்' வேண்டுகோள் விடுக்கிறது.
சத்ய மேவ ஜயதே
 ைவத் தி ய ம்
தண்ணிரை தினம் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டாலும் த  ைல வ லி, சளி, மூக்கடைப்பு, தலைபாரம், காய்ச்சல் போன்றவை குணமாகும்.
O நொச்சி இலைக் கொழுந்துடன் பூண்டு சேர்த்து
தட்டி துணியில் முடிந்து மூக்கில் துளித் துளியாக விட்டு வந்தால் ஒற்றைத்தலைவலி குணமாகும்.

Page 3
இந்திய அரசியலை அடிப்படை மன எம். சந்தி
கோத்தகிரி மனித
டிசம்பர் 10ம் நாள் அனைத்துலகிலும் மனித உரிமைகளைப் பற்றி சிந்திக்கும் நாள். மனிதன், மனித னாக மதிக்கப்பட வேண்டும் - அவனது தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்றெல்லாம் இன்று உலகம் முழுவதும் இதைப் பற்றி பேசாத நாடுகளும் இல்லை, நாட்களும் இல்லை எனலாம். அந்தளவுக்கு இன்று உலக மனித சமுதாயம் இதைப் பற்றி சிந்திக்க ஆரம் பித்து விட்டது.
1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள். ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச மனித உரிமைகள் பிரகட னம் வெளியிடப்பட்ட போது, பல நாடுகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியே ஏற்றுக் கொண்ட நாடுகளும், தங்களின் நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதை ஏட்டளவில் ஏற்றுக் கொண்டனவே தவிர செயலளவில் நடைமுறைக்குக் கொண்டு வரவில்லை என்றே கூற வேண்டும்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர்களின் ஆதிக் கம் மறைந்து, நம்மவர்கள், நம் நாட்டை ஆள த் தொடங்கினார்கள். பின்பு அரசியலமைப்புச் ச  ைப ஒன்று அமைக்கப்பட்டு, அரசியலமைப்புச் சட் டம்” எழுதப்பட்டது. இச்சட்டம் 1950ம் ஆண்டு சனவரி மாதம் 26ம் நாள் அமுலுக்கு வந்தது.
நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் oqûL150L - p_flap LD56i (FUNDAMENTAL RIGHTS) பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்ப 69)L— u9? si) 6mu (ryj 6huğ5,jib 35 2» f) 55) uD (R1GHT FOR LIFE) 6G, GL possib5 p if sold (RIGHT FOR SHELTER) தொழில் பெறுவதற்குரிய உரிமை (RGHT FOR EMPLOYMENT)போன்ற உரிமைகள் வழங்கப்பட்டுள் ளன. அரசியலமைப்பில் அடிப்படை உ ரி  ைம கள்?வழங்கப்படவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தா லும், நடைமுறையில் இது எந்த அளவுக்கு மக்களுக்கு போய்ச் சேர்ந்துள்ளன என்பது கேள்விக்குறியது.
இருந்தும் இச்சட்டத்தின் அடிப்படையில் நமது இந்திய நாட்டில் உச்ச நீதி மன்றம் சில வழக் குகளில் அளித்துள்ள சிறப்பான தீர்ப்புகளைப் பார்க்கும் போது, சட்டம் நமக்கு ஓரளவு பாதுகாப்பையே தருகி றது எனலாம். ஆனால் எத்தனை பேருக்கு இந்த நாட்டில் உச்ச நீதி மன்றத்தின் கதவுகளை, நீதிக்காக தட்ட முடியும்!
உச்ச நீதிமன்றம் இந்த அ டி ப் படை உரி soloss (FUNDAMENTAL RIGHTS) g“ hßör Slo படையில் எவ்வாறெல்லாம் பொது மக்களுக்கு நீதி

மைப்புச் சட்டத்தில்
ரித உரிமைகள்
ரசேகரன்
so-Tif 69) DJ air 96.) If I
வழங்கியுள்ளது என்பதை சில பொது நல வழக்குகளின் ġbiiii'iill (PUBLIC INTEREST LI TIGATION) 5 uDies5 ta' டிக் காட்டுகிறது;-
உதாரணமாக சில உச்ச நீதி மன்ற வழக்குத் தீர்ப்புகளை இங்கே குறிப்பிடலாம்.
(1) -**இந்திய நாட்டில் பம் பாய் ஒரு முக்கியமான துறைமுக நகரம். மிக அதிகமான தொழிற் சாலைகள் நிறைந்த நகரம். இத் தொழிற்சாலை களிலும், துறைமுகத்திலும் வேலை செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு சென்றார்கள். அப்படி சென்ற மக்களுக்கெல்லாம் ஏதாவதொரு வேலை கிடைத்தது. ஆனால் குடியிருக்க வீடு கிடைக்கவில்லை.”*
மாட மாளிகைகள் - உயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடங்கள் ஒரு புறம், படுக்க இடமில்லாது, தெரு ஓரங்களிலும், கடை வாசல்களிலும், எ ங் கெல் லா ம் சிறிதளவு இடம் (நிலம்) கிடைத்ததோ, அங்கெல்லாம் குடிசைகள் கட்டி குடியிருந்து குடும்பம் நடத்தினார்கள். உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாத அளவிற்கு குடிசைகள் - சேரிகள். தெருவிலேயே பிறந்து, தெருவி லேயே வளர்ந்து, குடும்பங்களாகி, தெரு வி லே யே மடிந்து போகும் ஒரு மனிதக் கூட்டம், சுதந்திர ம் பெற்று, 48 ஆண்டுகளாகியும் இன்னும் இந்த மக்கள் தெருவிலேயே வாழ்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் என்ற பிரி வின்கீழ் வழங்கப்பட்டுள்ள விடு பெறுவதற்கு உரி மைகள் வெறும் ஏட்டளவிலேயே இருந்து கொண்டி ருக்கிறது. இப்படி அவல வாழ்வு வாழ்ந்து கொண்டிருக் கும் ஆயிரக் கணக்கான மக்களை - அவர்கள் வாழும் குடி சைகளை இடித்துத் தள்ள வேண்டும், இவர்களை அங்கி ருந்து அப்புறப் படுத்தவேண்டும் என பம்பாய் மாநக ராட்சி முடிவெடுத்து, பெரிய இயந்திரங்களின் துணை யோடு, குடிசைகளை இடிக்க முயற்சித்தார்கள். பல குடிசைகள் இடித்துத் தள்ளப்பட்டன.
இப்படியான நிலையில் இக் கொடுமையை அநீதியை எதிர்த்து, இந்திய உச்ச நீதி மன்றத்தின்
ஒரு பொதுநல விரும்பியால் தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசார  ைண செய்த நீதி மன்றம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ள வாழ்வதற்கு உரிமை (RGHT FOR LIFE) வீடு பெறுவதற்கு உரிமை (RIGHT FOR SHELTER) Gas Typsi) oup 6 glibs p-fold (RIGHT FOR EMPLOYMENT) என்ற அடிப்படையில், இத் தெருவாசிகளுக்கு,

Page 4
பம்பாய்மாநகராட்சி செய்துகொடுத்த பின்னே, இத்தெரு வாசிகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் அதுவரை அவர்கள் அங்கேயே குடியிருப்பார்கள், , எ ன் ற மகத் தான தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு தான் பம்பாய் தெரு வாசிகளை, அவர்களின் இக்கட்டான நிலையிலிருந்து காப்பாற்றியது எனலாம்.
இன்னொரு உதாரணம்:-
இந் தி ய உரக் கூட்டுத்தாபனம் ஒரு அரசு நிறுவனம். இங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர் கள் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனம் தனது தொழிற்சாலையில் உள்ள ஒரு முக்கியமான இயந்தி ரத்தை வெளியாருக்கு விற்பதற்கு - அதுவும் மிகவும் குறைந்த விலையில் விற்பதற்கு முயற்சிகள் எடுத்தனர். இதை அறிந்து கொண்ட, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் இயந்திரத்தை நிர்வாகம் விற்கக் கூடாது என பலத்த எதிர்ப்பு தெரிவித் த ன ர் . இயந்திரத்தை விற்ப த ர ல் , தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, தொழிலாளர்கள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 'இயந்திரத்தை விற்க கூடாது என கூறுவதற்கு, அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிகார மில்லை" என நிர்வாகத்தின் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில், அத் தொழிற்சாலையில் பணி யா ற் று ம் தொழிலாளர்கள், இயந்திரம் விற்கப்படுவதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் ' என கருதும் பட்சத்தில் அதைத் தடுப்பது சரியானதே, என தீர்ப்பு வழங்கி தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை தேடிக் கொடுத்தது.
இப்படியாக இன்னும் பல்வேறு தீர்ப்புகளை இங்கு குறிப்பிடலாம். இந்திய அரசியலமைப்பு நமக்கு வழங் கியுள்ள அடிப்படை உரிமைகளின் கீழே இவற்றை, நாம் பெறுவதற்கு உரிமையுண்டு.
பணியாளர்கள் தேவை
ம  ைல ய க ம க் க ள் மறுவாழ்வு மன்றத்தில் பணிபுரிய கீழ்காணும் பணியிடங்களுக்கு சமூக உணர் வும், ஈடுபாடும், கடின உழைப்பும் கொண் ட ஆண்/பெண் இருபாலரும் வரவேற்கப்படுகிறார்கள். 1. உதவி கணக்காளர் =1 நபர் தகுதி: முதுநிலை அல்லது இளநிலை வணிகவியல் பட்டம் (எம்.காம் அல்லது பி.காம்) குறைந்தது 2 ஆண்டுகள் கணக்கு எழுதும் அனுபவம் அல்லது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2. கணிப்பொறி இயக்குநர்-1 நபர் தகுதி: கணிப்பொறி விஞ்ஞா ன த் தில் முதுநிலை அல்லது இளநிலை அல்லது டிப்ளமோ குறைந்தது ஓராண்டு அனுபவம் பெற்றிருத்தல் விரும்பத்தக்கது. 3. மின்சாதனங்கள் பராமரிப்பாளர் 1 நபர் தகுதி:
6cirgofussi) ticism Gudit (Diploma in Electrical Engg) மின்சாதனங்களை நல்லமுறையில் இயக் கவும், பழுது பார்க்கவும் தெரிந்திருக்க வேண்டும்,

அரசியலமைப்பில் 'அடிப்படை உரிமைகள், பலவற்றை குறிப்பிடலாம், ஒரு மனிதனுக்கு உணவு கிடைப்பதற்கும், வேலை கிடைப்பதற்கும் எந்தவித மான உத்தரவாதமும் இல்லாமை ஒரு பெ ரு த் த ஏமாற்றமேயாகும்.
ஏழை மக்களைப் பொறுத்த மட்டில் உணவு மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. உணவின்றி எவரும் வாழ முடியாது எ ன் ப து வாதத்திற்கு அப்பாற்பட்ட உண்மை. உணவு, வேலை ஆகியன இல்லாமைக்கு நீதி மன்றத்தில் ப ரி க T ர ம் தேட முடியாததொரு நிலையும் இருந்து வருகிறது. இ ன் று இந்தியாவில் பல கோடி மக்கள் தீண்டாமை” எனும் கொடிய விஷத்தால் நாளாந்தம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அரசியலமைப்பின் சட்ட பிரிவு 17ல் உள்ள தீண் டா மை ஒழிப் பு எனும் அடிப்படை உரிமை, வெறும் முலாம் பூசிய நகையாகவே தென்படுகிறது.
எனவே சர்வதேச அளவில் மனித உரிமை களைப் பற்றி பேசும் இத் த ரு ண த் தி ல் , சர்வதேச மனித உரிமை சா ச ன த் தி ல் கையொப்பம் இட்டுள்ள நமது இந்திய அரசு, உ ண வு க் கும், வேலைக்கும், சுரண்டப்படுவதற்கும் ஏதிராக பரிகாரம் தேடும் உரி மையை நீதி மன்றத்தில் கோரும் உரிமையையும் தர வேண்டும். அப்படி செய் வதன் மூலமாகவே அடி படை உரிமைகளின் உண்மையான சரத்தை ம க் க ள் அனுபவிக்க முடியும். அல்லது அது ஒரு ஏ மாற் று வித்தையாகவே ஆகிவிடும்.
பாதிக்கப்படும் ம க் க ள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள ஒன்றுபட்டு நின்று போராட வேண்டும். போராட்டத்தின் குரல் நீதி தேவ னின் காதுகளில் விழ வேண்டும். அப்போது தான் சாதாரண மனிதனின் உரிமைகள் இந்த மண் ணி ல் பாதுகாக்
கப்படும்.
4. சேமிப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் தகுதி: =1 நபர் முதுநிலை வணிகவியல் அல்லது பொருளியல் பட்டம்,சேமிப்பு அல்லது காப்பீட்டுத் திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களும் விண்ணபிக்கலாம் 5. கட்டுமான மேற்பார்வையாளர்=1 நபர் தகுதி கட்டிடப் பொறியியலில் டிப்ளமோ (D. C. E. ) கட்டுமானப் பணியியலில் மேற்பார்வை முன் அனுபவம். எல்லா பணிகளுக்கும் தகுதி, அனுப வம் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் வசிப்போர் மட் டு ம் விண்ணப்பிக்கவும். தாயகம் திரும்பியோர், தலித்து களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்,
1995 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் கீழ்காணும் முகவரிக்கு விண்ணபிக்கவும்.
p6firo). TasáF Gay Loubf, ஐலண்ட் அறக்கட்டளை, 14/56 கிளப் ரோடு, கோத்தகிரி. 643 217.

Page 5
மக்கள் - மன்றம் -
கி. பி 2000 ஆண்டுக்குள்ள நம் ம ஊ ரு ல உள்ள மக்கள், நீல கிரி மாவட்டத்திலுள்ள மக்கள், தமிழ் நாட்டிலுள்ள மக்கள், இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலுள்ள எல்லா வித மா ன இனமக்களும் மொழி பேசக்கூடிய மக்களும், கலாச்சார வேறுபாடுள்ள மக்களும் நி  ைற வாழ் வு பெற்று வாழனுமுனு நம்ம அரசாங்கம் 1978 ஆம் ஆண்டிலேயே முடிவு எடுத்தாச்சு. அந்த முடிவு எடுத்து 16 ஆண் டு கள் முடிஞ்சிடுச்சு. ஆனால், நாம எந்த அளவுக்கு நிறைவாழ்வு பெற்றிருக் கோமுனு நமக்குத்தான் தெரியும்.
நிச்சயமாக கி , பி 2000 ஆண்டு முடிவுல ஒரு மிகப் பெரிய கொண்டாட்டம் நடைபெறும் , அப்போது வித விதமான பொய்யான சாதனைப் பட்டியல்கள் வெளி யிடப்படும். எது எப்படியிருப்பினும் நாம நிறை வாழ் வுப் பெறணுமுனா ஒவ்வொருவரும் விழிப்பாக இருந்தே ஆகனும். ஏன்னா நம்முடைய அடிப்படைப் பிரச்சனை யே வீட்டுமனைப்பட்டா, குடியிருக்க வசதியான வீடு ஆண் பெண் சம க் கூ லி நல்ல உணவு, சுத் த மான பாதுகாக்கப்பட்ட குடிநீர், தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு, பத்தாம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி, லஞ்சம் ஊழல் இல்லாத அரசு நிர் வா க ம் ஆகியவைகள் இல்லா மைதான்.
அரசாங்கம் நம் ம ஏமாத்துகிறது. மனுக்கள் போட பல பல நாட்கள்செலவு செய்கிறோம். பதில் கிடைக்க இரவு பகலாக தவமிருக்கிறோம். அதிகாரி யினு, மந்திரியினு அலைய அலைய வாழ்நாள் முடிஞ்சு போகுது. ஏங்குகின்றநமது கண்களுக்கு நிறை வாழ்வு எப்போது?
டங்கல் திட்டம், புதிய பொருளா தா ர க் கொள்கை, புதிய மருந்து கொள்கை, புதிய தொழிற் கொள்கை அப்படினு அரசாங்கம் புதுசு புதுசா பேசி ந ம்  ைம மயக்கப்பாக்கிராங்க. ஜாக்கிறதையா இல் லேனா நம்மையே ஏப்பம் விட்டிடுவாங்க. நமது பாரம் பரியம் அழிஞ்சு, உடல்வளம், மனவளம் குன்றி புதுப் புது நோய்கள் நம்மை வாட்டி வதைக்க இடம் கொடுக் கக்கூடாது. புதிய பாதை அமைக்க வேண்டும். ஆட்சி
இலங்கைத் தமிழர் படுகொலையைக்
கட்சியினர் நடத்தி இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங் செய்யப்படுவதைக் கண்டித்து கூடலூர் மன்றச் அனைத்து கட்சி சார்பில் 9-1295 அன்று கா இருந்து காந்தி திடல் வரை பேரணி நடைபெற்றது நடைபெற்றது. மன்ற துணைத்தலைவர் சிங்கரா மறவர்கள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் கல மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தன.

சுகாதாரம் 3
- செபாஸ்டியன்
யும், அதிகாரமும் நம்ம உழைக்கும் மக்கள் கையில் வந் தாகனும், அதற்கு முதற்படிதான் இனிவரும் பஞ்சாயத்து தேர்தல். 'எத்தனையோ பஞ்சாயத்து தேர்தல் வந்தது. இது வரைக்கும் எதைத்தான் சாதிச்சிட்டோம். இந்த தேர்தல்ல எதைச் சாதிக்கப் போகிறோம்?' அப்படினு அலட்சியமா இருந்திடக் கூடாது. நாம ஏமாற்றப் படாம நமக்குத் தேவையான கதை நாம சாதிக்கனுமுனா உழைக் கும் மக்கள் தலைமை ஏற்கனும். அப்பொழுது தான் நமக்கு நாமே முடிவெடுக்க முடி யும், நல்ல வேலை வாய்ப்பை பெருக்க முடியும், வருமானத்தை பெருக்க முடியும், தொழில் வளர்ச்சி பெருகும், நல்ல உறவு மலரும், சகோதரத்துவம் வளரும், வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். சுருக்கமாக சொல்லப்போனா எல்லோரும் எல்லாமும் பெற்று வாழனும், அதற்கு நாம் அநீதியை எதிர்த்து பேராடியே ஆகனும் . ஆதிகால முதல் தமிழ் நாட்டில் வாழ்ந்த அனைத்துச் சித் த ர் களும் சமூக அநீதியை எதிர்த்து தொ ட ந் து போராடினார்கள். அதனால் தான் அதிகார வர்க்கம் திட்டமிட்டு அவர் களது வரலாற்றை மறைத்துள்ளது. அ த ற கு நல்ல ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் நமது தமிழ் நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு, வாழ்க்கைத் தத்து வமாகி புகழ் பெற்றிருந்த ‘சித்த மருத்துவ தத்துவம்' அழிந்து கொண்டே போவதைச் சொல்லலாம். இதை நாம் தெளிவாக புரிந்து கொண்டோமானால் பல பிரச் சனைகள் நம் மத்தியில் ஒழிய, நல்வாழ்வு, நி ைற வாழ்வை பெற வழியமைக்க முடியும்.
சித்த மருத்துவம் ,ஆயுர்வேத மருத் துவ ம். யுனானி மருத்துவம், இயற்கை மருத்துவம், யோகம், அக்கு பங்ச்சர், அக்கு பிரசர் போன்ற நமது மருத்துவ முறைகளெல்லாம் முடக்கப்பட்டு, மக்களின் உண்மை யான பிரச்சினை திசைதிருப்பபட்டு சாதிச்சண்டைகள், மதச்சண்டைகள், இனமோதல்கள் திட்டமிட்டு நாள் தோறும் உருவாக்கப்படுகிறது.
இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு புது வாழ்வுகான புதுப்பாதை அமைக்க வேண்டும். இறுதி வெற்றி எப்படி இருக்கும் என்பதை காலம் தீர்மானிக் கும், வரலாறு படைப்போம்! தொடரும்.
கண்டித்து கூடலூர் மன்றம் அனைத்துக் ய கண்டன பேரணி. கை ராணுவம், விடுதலைப்புலிகளால் படுகொலை
செயலர் திரு. எம். எஸ். செல்வராஜ் தலைமையில் லை 11-30 மணிக்கு பஞ்சாயத்து அலுவலகத்தில் 1. வண்டிப்பேட்டை காந்திதிடலில் பொதுக்கூட்டமும் ஜ், மாதரணி செயலர் விஜயலட்சுமி, மற்றும் மன்ற ந்துகொண்டு பேசினார்கள். பேரணியில் 1500க்கும்
J.

Page 6
நூலகம் இல்லாத உ6
*" கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த் துவதில் எல்லையற்ற சக்தி படைத்ததாக நூ ல க ம் இருக்கிறது’’ என நூலகத் தந்தை என அழைக்கப் படும் டாக்டர் எஸ். ஆர். ரங்கநாதன் அவர்கள் கூறி 6TT.
பகுத்தறிவாற்றலைப் பெற்றுள்ள மனிதன் தனது எண்ணங்களையும், கருத்துக்களையும், படைப்பாற்றல் களையும் தலைமுறை தலைமுறையாக புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பாடல்கள், கவிதைகள் நாடகங் கள், இசை, இலக்கியம், பத்திரிகைகள், நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி போன்றவைகள் மூலமாக வெளிப்படுத்துகிறான். இ  ைவ க ள் அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்திருப்பது "மொழி இம்மொழி யின் மூலமாகவும் அல்லது புத்தகங்கள் மூலமாக வும் கருத்துக்களை வெளிப்படுத்துகிறான். தனது
மனித வரலாற்றில் நடந்தது நடப்பது, நடக்க போ வ து ஆகியவற்றை அறிவதற்கு அடித்தளமாக அ  ைம வது நூலகம்’. நூலகத்தை அழித்தால் அந்த இனத்தையே அழிப்பதற்குச் சமம். நூலகங்களுக்குத் தீயிடுவது என்ற அநாகரீகச் செயல் போர்களின்போது
மன்றச் (
சுற்றுச் சூழல் குழுக் கூட்டம்
12 - 11 . 95 ஞாயிறு அன்று கோத்தகிரி மன்ற கலை அரங்கில் ‘இயற்கையின் இமைகள்’’ சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இயற்கை உரம் தயாரித்தல், நீல கிரி யி ன் பிரதான சுற்றுச்சூழல் பி ர ச் ச னை, குழுவின் செயற்பாடுகள், எதிர்கால நடவடிக்கைகள், சுற் று ச் சூழல் பயணம், அடையாள அட்டை, சிரமதானம் ஆகியன குறித்து பேசப்பட்டது, மா  ைல யி ல் கிளப் ரோட்டில் உள்ள பள்ளங்களை நிரப்பி சாலையை சீர்செய்யும் சிரமதான பணி நடைபெற்றது. இ க் கூ ட் டத் தி ல் கோத்தகிரி, குன்னூர், உதகை வட்டாரங்களைச் சேர்ந்த இயற் கையின் இமைகள் குழுவினர் கலந்துக் கொண்டனர். இக் கூ ட் டத்  ைத இக் குழுவின் பொறுப்பாளர் திரு. க. பாலசுப்ரமணியம் நடத்தினார்.
இளைஞரணி செயற்குழுக் கூட்டம்
21 , 11 . 95 அன்று நமது கூடலூர் மன்ற கட்டிடத்தில் மன்ற இளைஞரணியின் மாவட்ட செயற் குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் எ ச ர வ ண ன் தலைமை ஏற்று நடத்தினார். கூட்டத்தில் ம ன் ற பொதுச்செயலாளர் திரு . ரா , கி , ராமச்சந்திரன் கூடலூர் வட்டச்செயலர் திரு . எம் . எஸ் . செல்வராஜ் மாவட்ட இளைஞரணி

ஊரில் குடியிருப்பதா?
நடந்திருக்கிறது" உதாரணமாகச் சொல்ல வேண்டு மானால் இந்தியாவில் புராதனமாக கல்வி, கலாச்சார மையமாகிய நாலந்தா பல்கலைக் கழகம் பலமுறை இத் தகைய தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.
மொழி அறிவு உள்ளவரிடம் வாசிப்புப் பழக்கம் வளரும், வாசிப்பு ப ழ க் க ம் வளர்ந்தால் சிந்தனைத் தெளிவு கருத்துத் தெளிவு, ஆளுமை வளர்ச்சி, விஞ் ஞானநோக்கு, படைப்பாற்றல் பொருளாதார வளர்ச்சி வாழ்க்கை தரம் உயரும். அதோடு மனித நேயத்தை யும் வளர்க்க முடியும் எனவே, மேற் கூ ற ப் ப ட் ட அனைத்திற்கும் மையமாக அமைவது 'நூலகம்’ என் பதைப் புரிந்து ந ம து கிராமங்களில் நூலகம் அமைப் போம், வசழ்க்கைத்தரத்தை உயர்த்துவோம். அத்தோடு நூலகத்தரத்தையும் உயர்த்துவோம்.
** கோயில் இல்லாத ஊரில் குடியிருக்காதே’’ என்ற பழமொழியைவிட 'நூலகம் இல்லாத ஊரில்
குடியிருக்காதே’ என்ற புதுமொழியே சிறந்தது.
= பா. செபாஸ்டியன்
செயலர் திரு . அ க ர ம் . சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்து வட் டா ர இளைஞரணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நல்கினர்.
கூட்ட தொடக்கத்தில் மறை ந் த ந ம து மன்றத்தின் தியாகி தோழர் பழனிவேலுக்கு அ ஞ் ச லி செலுத்தப் பட்டது. கூட்டத்தின் முக்கிய தீர்மானமாக இதுவரை "மலையக இளைஞர் முன்னணி’ என்ற பெயர் இனி வரும் காலங்களில் "மன்ற இளைஞரணி" எனற பெயரில் செயல்பட தீர்மானிக்கப்பட்டது. நீலகிரி யில் இளைஞர்களுக்கு உள்ள பிரச்சனைகள் பல்வேறு அமைப்புகளில் இளைஞர்களின் இன்றைய ஈ டு பா டு போன்ற கருத்துக்களில் திரு. செல்வராஜ் பேசினார். மன்ற பொதுச்செயலர் தனது உ  ைர யி ல் நாளைய இளைஞர்களின் முக்கிய தேவை குறித்தும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க ஒன்றுபட்ட ஒற்றுமையின் அவ சியம் பற்றியும் எடுத்துரைத்தார்.
1996 ஜனவரி மாதம் கோத்தகிரியில் முத்தமிழ் விழா நடத்துவது பற்றியும் இளைஞர்கள் பலர் ரத்த தான்ம் , கண்தானம் செய்வது குறித்தும் நீலகிரி மாவட்ட போக்குவரத்துக்கழகத்தை சீரமைக்க முதல்வருக்கு மனு அ னு ப் பு வ து பற்றியும் 11-12-1995 அன்று கோத்த கிரியில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் இளைஞர்கள் பங்குகொள்வது பற்றியும் பேசப்பட்டது.
முடிவில் கூடலூர் இளைஞரணி செயலாளர் திரு . அ , விஜயசிங்கம் நன்றி நவின்றார்.

Page 7
குழந்தைகள் தினவிழா
19 - 11 - 95 அன்று கே ரத் த கிரி மன்ற வளாகத்தில் குழ்ந்தைகள் தினவிழா சிறப்பாக கொண் டாடப்பட்டது. கோத்தகிரி வட்டார சிறுவர் சிறுமியர் கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழ வில் பாட்டு, பேச்சு, நாடகம் போன்ற போட்டிகள் நடத்தப் பட்டன. போட்டி நடுவர்களாக கோத்தகிரி சிண்டிகேட் வ ங் கி  ைய ச் சேர்ந்த திரு. ர விச் சந் தி ர ன் , திரு. வெங்கடேஷ் இலக்கிய பேரவை அமைப்பைச் சேர்ந்த திரு. யோகநாதன் ஆகியோர் கடமையாற்றினர் விழா வினை மன்றத்தலைவர் திரு. சு.திருச்செந்தூரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். சிறப்பு அழைப் பtளர்களாக கோத்தகிரி காவல்துறை துணை ஆய்வா ளர்திரு. எ ஸ். தர்மராஜ் காவல் நிலைய எழுத்தர் திரு. ஜெய பால் ஆகியோர் கலந்துகொண்டனர்.
திரு. தர்மராஜ் அவர்கள் சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார். மன்ற பணியாளர்கள், வட்டார பொதுமக்கள், மற்றும் பலரும் கலந்து சிறப் பித்தனர். முடிவில் சிறுவர் சீரணி பொறுப் பா ள ர் செல்வி. ரஞ்சனி நன்றி நவின்றார்,
சேமிப்பு கூட்டம் = கருத்தரங்குகள்
நவம்பர் 8, 9 ஆகிய இரு தினங்கள் ம ன் ற கட்டிடத்தில் சேமிப்பு கருத்தரங்கு நடைபெற்றது, இதில் கூடலூர், உதகை, குன்னூர், கோத்தகிரி ஆகிய நான்கு வட்டார பணியாளர்கள் கலந்து கொண்டனர் கருத்தரங்கு பயிற்சியாளராக நொவீப் சேமிப்புத்திட்ட ஆலோசகர் திரு. ஆர்.சி. குப்தா கலந்து கொண்டார்.
9-11-1995 அன்று கோத்தகிரி வாசுகிநகரில் சேமிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர். சி. குப்தா மன்ற பொதுச் செயலர் திரு. ரா. கி. ராமச்சந்திரன் மற்றும் மன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
26-11-1995 ஞாயிறன்று கோத்தகிரி மன்ற வளாகத்தில் சேமிப்பு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது இதில் பழைய குழுக்களுக்கும் நன்றாக செ ய ல் படும் குழு உறுப்பினர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டது.
 

பயிற்சியாளர்களாக மன்றப் பொதுச்செயலர், துணைச் செயலர், கோத்த கிரி வட்டார முதன்மை ஊக்குனர் திரு. ஆனந்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
2 - 12 - 95 அன்று ஈளாடா காந்திநகரிலும் 4 - 12 - 95 பெட்டட்டி அண்ணாநகரிலும் சேமிப் பு கூட்டம் நடைபெற்றது. இதில் சேமிப் புத் தி ட் ட பொறுப்பாளர் திரு. எஸ்.கோவிந்தசாமி. மன்ற பொதுச் செயலர் திரு. ரா.கி. ராமச்சந்திரன், வட்டார முதன்மை ஊக்குனர் திரு. எஸ். ஆனந்தராஜா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாலுகா கமிட்டி கூட்டம்
13 - 11 - 95 அன்று மன்ற வளாகத் தில் கோத்தகிரி வட்டார தாலுகா க மி ட் டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நமது கிரா மங்களின் அடிப்படை வசதிகள் கோரி உண்ணாவிரதம் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் தாலுகா க மி ட் டி தலைவர் வைத்தியலிங்கம், செயலர் திரு. தியாகராஜன் மன்ற பொ து ச் செ ய ல ர் ரா. கி. ராமச்சந்திரன், கே ரத் த கி ரி பொது உறவு ச் செ ய ல ர் திரு எம். சந்திரசேகரன், கோத்தகிரி மன்ற முதன்மை ஊக்குனர் திரு. ஆனந்தராஜா, மா த ர னி தலைவி திருமதி லட்சுமி இளைஞரணி செயலர் திரு. அகரம். சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"பஞ்சாயத்து ராஜூம்,
Soją fiJ60–ł 3-l-(pfb”
நமது மன்றத்தின் சார்பில் 28, 29-10-95 இரு நாட்களில் குன்னூர் பெட்போர்டில் உள்ள பேரிஸ் மண்டபத்தில் "பஞ்சாயத்து ராஜாம், அடிப்படைச் சட்டமும்’ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் கருத் தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கு வட்டாரச் செயலாளர் முன்னிலையில் 28 ம் தேதி காலை 10 மணியளவில் பங்கேற்பாளர்களின் அறிமுகத்துடன் ஆரம்பமானது.
இப்பயிற்சியில் ஆண்களும், பெண்களுமாக 35 நபர்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். இக் கருத்தரங்கில் ந ம து மன்றத்தின் சார்பில் பெண்கள் வளர்ச்சித்திட்டப் பொறுப்பாளர் செல்வி அனுபமா மேனன், தெருவாழ் குழந்தைகள் இல்ல பொறுப்பாளர் திரு. ஜேக்கப், பொது தொடர்பு அலுவலர் திரு. எம். சந்திரசேகரன் ஆகியோர் கலந்துக்கொண்டு பஞ்சாயத்து ராஜ் என்றால் என்ன? என்ற தலைப்பின் கீழ் பயிற்சி வழங்கினார்.
மற்றும் குன்னுரர். வழக்குரைஞர் திரு. கே. பி. ராஜன் அவர்கள் கலந்து கொண்டு அ டி ப் ப  ைட ச் சட்டம் என்றால் எ ன் ன ? அடிப்படைச் சட்டங்களில் நமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும்" பொதுவானப் பிரச்சினைகளை எவ்வாறு நீதி மன்றத் தில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தலைப்பின் கீழ் பயிற்சி நடைபெற்றன. இரவு சுமார் 9 மணி யளவில் ‘நம்ம ஊரு பஞ்சாயத்து’’ என்ற வீடியோ படக்காட்சியும் காட்டப்பட்டது.

Page 8
உங்கள் சிந்தனைக்கு . . .
புகைப்பவர் சுவாசிக்கும் புகையைவிட, இரண் டாம்தர புகையில் (புகைபிடிக்காதவர் சுவாசிக்கும் புகை யில்) 2 மடங்கு கூடுதலான நிகோடின், 3 மடங்கு கூடுதலான தார், 5 மடங்கு கூடுதலான கா ர் பன் மோனாக்சைட் மற்றும் 50 மடங்கு கூடுதலான புற்று நோய் ஏற்படுத்தும் பொருட்கள் அடங்கியிருக்கின்றன.
புகை பிடிக்கும் ஒருவரின் மன்ைவிக்கு துரை யீரல் புற்றுநோய் மற்றும், மாரடைப்பு நோய் அதிக மாக இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது.
புகைப்பாளரின் குழந்தைகள் மனவளர்ச்சியில் மெதுவான பாதிப்பை எதிர்நோக்குவதோடு, நெஞ்சுச் சளி ஏற்படுவதற்குரிய அபாயம் அதிகமாக இருக்கின்
AD35.
மனைவி மற்றும் குழந்தை கொலையாளியாக
நீங்கள் இருக்க வேண்டாம். உங்களை நீங்கள் பாது காத்துக் கொள்ளுங்கள். பிறர்க்காக வாழுங்கள்.
- நன்றி: மலேசிய பயணிட்டாளர் குரல்.
wNZe uses ጭ ግጬ
இந்திய இதயம் நீ . . .
ஒ . . . இந்திய சகோதரா! இந்திய நாடு நம் இதயம் இங்கே மதங்கள் உண்டு மனிதத்தை அழிக்க அரசியல் உண்டு ஆடம்பரமாய் வாழ சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றோம் அன்னிய ஏகாதிபத்தியத்திற்கு அடகு வைத்து இந்தியன் என்று மார்தட்டி சொல்கின்றோம் சாதியின் பெயரால் சங்கங்கள் வைத்து ஓ . . இந்திய சகோதரா புறப்பட்டுவா புதுயுகம் படைப்போம் இந்திய நாட்டை இமைபோல் காக்க எழுச்சி சகோதரா எழுந்து வா
அ. விஜயசிங்கம் கூடலூர்.
62s uses ጭ ግNTM
வாசக அன்பர்களே!
சமுதாய முன்னேற்றத்தில் அங்கம் வகிக்கும் உங்கள் ஒவ்வொருவரின் அன்பும் ஆதரவும் தான் நமது இதழ் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது. உங்கள் உள்ளக்குமுறல், படைப்புகள், இதழ் விமர்சனம் ஆகிய வற்றை எழுதுங்கள்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை நமது மக்கள் மன்ற இதழ் தெரிவித்துக் கொள்கிறது.
வாசகர் விமர்சனம் அடுத்த இதழில் இடம்பெறும் = ஆசிரியர் குழு
வெளியீடு: மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் 14-56

வெளிச்சம் வெளியில் இல்லை
நண்பனே நல்வாழ்த்துக்கள். புதியதோர் புத்தகம் உன் கையில்புத்தாண்டின் வடிவாக, எழுதிய நூல் அல்ல இது. எழுதாத ஏடு. எழுத்தாணி உன் கையில். அவசரப்பட வேண்டாம். ஏட்டை அழுக்காக்கி விட வேண்டாம். பொறுகடந்த 365 நாட்களாக நீ எழுதிய கவிதையை. நீயே ஒரு முறை வாசித்துப் பார்
பலமும், பலவீனமும் பளிச்சென்று தெரியும். உன்னை அடுத்தவன் விமர்சிக்க அனுமதியாதே, உனக்குள் நீயே நுழைந்து பார். நாற்றம் எடுக்கிறதா? நாணப்படாதே! நறுமணம் வீசுகிறதா? ஆணவப் படாதே! நாற்றமும், நறுமணமும் கலந்ததுதான் நமது வாழ்க்கை. ஆனால் நாற்றத்தை குறைக்க நம்மால் முடியும் மாற்றத்தை மனம் விரும்பினால் வாழ்க்கை திசை மாறும் நம்பு. வெளியிலிருந்து வரும் எதுவும் உன்னைப் பாதிக்க விடாதே. வெளிச்சமும், இருளும் வெளியில் இல்லை உன் கண்ணில் இருக்கிறது இன்பமும் துன்பமும் பிறர் தருவதில்லை. நீ வருவிப்பது. வஞ்சகர் தரும் துன்பத்தை நீ ஏற்றுக் கொள்ளும் வரை அது உன்னைப் பாதிப்பதில்லை. உணர்ந்து கொள். உன் வாழ்க்கைப் புத்தகத்தை வித்தியாசமாய் எழுது. புதியதோர் புத்தகம் உன் கையில்புத்தாண்டின் வடிவாக,
மஎம்.எல்.அ. ராஜ்
கிளப்ரோடு, கோத்தகிரி 643 217. (தனி சுற்றுக்குமட்டும்)