கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.06

Page 1
400 தாயகம் திரும்பிே
மக்கள் மறுவாழ்வு மன்ற சாதனை!
தாயாகம் திரும்பியோரைச் சேர்ந்த 400 மாணவர்களுக்கு இலவச கல்வின தங்கும் விடுதி வசதி கிடைக்க ஏற்பாடு Gafuiuug të u ai (i si Gurgs இந்த வசதி கன் கிடைக்க ஏற்பாடு செய்துள்ள மக்கன்
மறுவாழ்வு மன்றத்தி ன் சாத ைஎ
வாகும்
fi5 u mar G3 5) u r-ege ar sħub5f ஒப் பந்தத்தின் கீழ் தாயகம் திரும் பியோர் அரசின் உதவிகள், சலுகைகள், முன்னுரிமைக ளோடு தங்கள் மறுவாழ்வை அமைத்து வந்தாலும் அதில் தோல்விகண்டவராகவே இருக் கின்றனர். பெரும்பான்மை யோர் தகுந்த வசதி வாய்ப் பின்றி-வேலையின்றி வறுமைக் கோட்டுக்கு கீழேயே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமது வருங் கால செல்வங்களான குழந்தை களுக்கு கல்வி அறிவை அளிக்க முடி யாதவர்களாக இருக்கிறார்கள். தங்கள் குழந் தைகளை படிக்க வைத்துமேல் நிலைக்குக்கொண்டு வரவேண் டுமென்ற ஆசை இருந்தாலும் வறுமை காரணமாக முடியாது இருக்கிறார்கள். எதுவும் முடி யாத நிலையில் தமது பிள்ளை களை, 'குழந்தைத் தொழிலா
ளர்களாக" ஆக்கி வரும் பரி தாப நிலைக்கே கொண்டுச் செல்கிறார்கள்.
இது
படிக்கமுடியாது இருக்கும் பல்லாயிரக்கணக்கான தாயகம் திரும்பிய குழந்தைகளின் பரி தாப நிலையை உணர்ந்த மக்கள் மறுவாழ்வு மன்றம் (கோத்தகிரி)இவர்களுக்கு இல 6ü量子拉菁”ö கல்வி வசதியை யும், தங்கிப் படிக்கவும் உரிய வசதிகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமென்ற முயற்சியில் 400 பிள்ளைகளுக்கு அந்த அரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
சிறிலங்கா அகதிகள். தாய கம் திரும்பியோருக்கான தமிழ நாடு இறையியல் சபை (TEC RAS)யின் ஒத்துழைப்புடன் தமிழ் நாட்டில் அனைத்துட் பகுதியிலுமுள்ள தனியார் பாட சாலைகளில் இந்த வசதியை பெ ற் று க் கொடுத்துள்ளது மேற்படி சபையின் நிர்வாக செயலர் தந்தை ரொ பார்ட் குட்டினா அவர்கள் எடுத் முயற்சி பில் 400 குழந்:ை களுக்கு இந்த வாய்ப்பு கிடை
 
 
 

மக்கள்மmவாம்
Ol ழவு சந்தா விபரம்
தனிப்பிரதி 75 ! ஆண்டு சந்தா ரூ. 10 o விபரங்களுக்கு
மக்கள் மறுவாழ்வு சென்னை-600094
யார் குழந்தைகளுக்கு
கல்வி வசதி:
துள்ளது. இச்சபை 400 இடங் களை தேடிக்கொடுக்க, மக்கள் மறு வாழ்வு மன்றம் குழந்தை களை திரட்டி கொடுக்கும் பொறுப்பை ஏற்று வெற்றிகர மாக நிறைவேற்றியுள்ளது.
இரண்டாம் வகுப்பிலிருந்து + 2 வரை பயிலும் மாணவர் களுக்கான எல்லாவகுப்புகளுக் கும் இந்த ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.
ஓர் அமைப்பு ஒரு வருடத் தில் 400 பிள்ளைகளுக்கு இல வச கல்வி- தங்குமிட வசதி ஏற்படுத்திக் கொடுத் திருப்பது இதுவே முதல் தடவை,
தாயகம் திரும்பியோர்க்கான மறுவாழ்வு உதவிகளில் கல்வி சலுகையும் ஒன்று. ஆனால் இந்த வசதி பெரும்பான்மை யினருக்கு கிடைக்க வில்லை. பெற்றுக் கொள்ள (pig-tal வில்லை மறுவாழ்வுத் துறை யும் இதில் அக் கறையும் காட் டியதில்லை. தாயகம் திரும்பி யோர் மத்தி பில் ரத்தனை சங் கங்கள் அமைப்புகள் சேவை கன் ஆற்றி வந்தாலும் தாயகம்
திரும்பியோர் குழந்தைகளின் கல்வி விஷயத்தில் எதுவும் செய்ததில்லை.
மக்கள் மறுவாழ்வு மன்றத் தின் (கோக் த கிரி) மிகப்பெரிய சாதனை ன்று இதை குறிப்
LD ៖ គឺ វិ தாயகம்
1) ஓ !ாழ் மன்றம் திரும்பியோர்களின்
வீட்டுப் பிரச்சனை போன்ற மறுவாழ்வு பிரச்சனனகளிலும் ஈடுபட்டு வந்தாலும் குழந்தை களின் வளர்ச்சியில் மிகவும் முக் கியத்துவம் கொடுத்து வருகி றது. 400 பேருக்கு இலவச
கல்வி வசதி, தங்கும் வசதி ஆகியவற்றை ஏற்பாடு செய் துள்ளது மட்டுமல்ல இந்த
ஆண்டுகோடையில் நூறுகுழந் தைகளுக்கு "வசந்த முகாம் , ஒன்றை ஏற்பாடு செய்திருந் தது. நூறு குழந்தைகளை பிரத் யேக ரயில் பெட்டி, பஸ் வசதி சேய்து பங்களூருக்கு அழைத் துச் சென்று இந்த முகாமை வெற்றிகரமாக நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கதும் பாராட்டத்தக்கதுமாகும். Ο
யாழ்ப்பாணத்தில் விமான தாக்குதல்
சிறிலங்கா சிங்கள இராணு வம் யாழ்ப்பாணத்தில் விமா னத்தாக்குதல் நடத்தி வருகி ቦU&öl•
இவ்விமானத் தாக்குதலால் பலவீடு கட்டிடங்கள் நிர்மூல மாயின. பலர் கொல்லப்பட் டதோடு யாழ்ப்பானத் தீவு கள் பல துண்டிக்கப்பட்டு பலர்
மைக்கு ஆளாகி இருப்பதாக செய்திகள் சிந்துகொண்டிருக் கின்றன, Ο

Page 2
மலர் : 4 ஆனி 1986 இதழ் 1 9
மறுவாழ்வு உதவி என்பது வெறும் சட்டக் குறிப்போ
தன்னை எரித்துக் கொண்டு தன் சாம்பலிலிருந்து மறுப்பிறவி எடுக்க முயலும் போனிக்ஸ்" என்கிற பறவை மாதிரி இழந்த தன் வாழ்வை மீண்டெடுக்க முயல்வதுதான் மறுவாழ்வு
இப்படி மறுவாழ்வுக்கு ஒரு விளக்கம் கொடுப்பது வேறுயாருமல்ல; மறுவாழ்வுத்துறைதான்.
ஆனால் அது விளக்கம் கொடுத்திருக்கிற அள விற்கு மறுவாழ்வுத்துறை, மறுவாழ்வு உதவிகள் அளிக் கும் விஷயத்தில் அக்கறை செலுத்தி வருகிறதா ?
இலங்கையிலிருந்து தாயகம் திரும்புவோர் வரத் தொடங்கி கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகளாகப் போகிறது ஆயினும் பெரும்பான்மையோர் வாழ்வு சீர ழிந்து விட்டது. சின்னா பின்னமாகி விட்டது. பஞ்சத் திற்கும் பசிக்கும் ஆளாகி வாழ்கிறார்கள்,
மறுவாழ்வுத்துறை இவர்களுக்கு மறுவாழ்வு உதவி கள் பல அளித்தாலும், அது நெல்லுக்கு பாய்ச்சிய நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கு பொசிந்தது போல அவர்களுக்கு கிடைப்பதில்லை.இந்த உதவிகள் இடைத் தரகர்களால், காண்ட்ரக்ட் காரர்களால் சம்பந்தப்பட்ட அரசுப் பணியாளர்களாலும் சுரண்டப்படுகிறது.
தாயகம் திரும்பியோருக்கு வழங்கப்படும் வியாபா ரக்கடனில் பெருந்தொகை இடையில் இருப்பவர்க ளால் அபகரிக்கப்படுகிறது. வீட்டுக்கடன் காண்டிரக்ட் காரர்களால் ஏப்பம் விடப்படுகிறது. வேலை வாய்ப்புக் கான முன்னுரிமை, பல சலுகைகள் இருந்தாலும் அவற் றில் சரிவர கவனம் செலுத்தப்படுவதில்லை; எந்த சிட் டங்களுமே இருப்பதாகத் தெரியவில்லை.
இருப்பதையே செயல்படுத்தி வருகிறது. ஆக இவ் வளவு பேருக்கு மறுவாழ்வு உதவி அளித்திருக்கிறோம் என்கிற திட்ட இலக்கை நிறைவேற்றுவது மட்டுமே பணியாகக் கொண்டிருக்கிறது.
இலங்கையிலிருந்து வரும் தாயகம் திரும்பியோர் தமிழகத்தின் வழித்தோன்றல்கள். அந்த வகையில் தமி ழக அரசுக்கு அவர்களுக்கு உரிய வாழ்வளிக்க வேண் டியது கடமை. ஆனால் தாயகம் திரும்பியோர் பிரச் சனை; மத்திய அரசின் பிரச்சனை; அவர்களே அவர் களுக்கு உதவ வேண்டும் என்று தமிழக அரசு ஏற்க னவே பலமுறை தெரிவித் திகிறது.
ஆனால் அகதிகள் பிரச்சனையில் இதன் அக்கறை வேறு மாதிரி இருக்கிறது. இதுவும் மத்திய அரசின் பிரச் சனையாக இருந்தாலும் தமிழக அரசு இவர்கள் விடயத் தில் தனி சலுகையே காட்டுகிறது. இன்று வந்து நாளை திரும்பப்போகிற இவர் சன் தங்குவதற்கு வீடுகள் கட்டிக் கொடுக்கிறது. இடைத்தா ஈர்கள், காண்டரக்ட்காார்கள் சுரண்டலிலிருந்து தாயகம் திரும்பியோர்களை காப்பாற் றும் வகையில் அவர்களுக்குரிய கடனுதவியில் நேரடி
 

sa Tipa e o 86
யாக அரசு வீடு கட்டும் வாரியங்கள், நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக் கை பலமுறை பல அமைப்புகளால் வைக்கப்பட்டும் கூட அதை யாரும் கண்டுக்கொள்வதாக இல்லை. இங் கேயே நிரந்தரமாக வாழப்போகும் மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கத் திட்டமில்லை. கடனைக் கொடுத்து கையைக்கழுவி விடுகிறது. இலங்கையிலிருந்து தாயகம் - திரும்பியவர்கள் எ ங் கே மனைகள் தேடுவார்கள்? வீட்டை கட்டுவார்கள் என்பதை அாசு நினைத்துப் பார்க்கவில்லை; அவர்கள் வசதிக்கு மனைதான் வாங்க
வாழ்வளிக்கும் பிரச்சனை; - திட்ட இலக்கோ அல்ல!
முடியுமா? இந்த பிரச்சனைகளாலே இவர்களை இடைத் ۔۔۔۔ தரகர்கள். காண்டிராக்ட்காரர்கள் இவர்களை சுலப மாக ஏமாற்றுகிறார்கள். இதையெல்லாம் மாநில அரசு உணராமலா இருக்கிறது?
உணர்கிறது. ஆனால் அரசியல் லாபம் ஒன்றையே கணக்கில் எடுத்துக்கொண்டு காரியம் ஆற்றுகிறது? இந் தியா வந்து இந்தியக் குடிமக்களாகியும் அரசியல் அனா தையாக இருக்கும் தாயகம் திரும்பியோர் பிரச்சனையே அரசியல் லாபம் கருதாது மனிதாபிகரமானதாக பார்க்க வேண்டும். சொந்த மக்களாகி இவர்களது பிரச்சனை யில் கவனம் செலுத்தி உரிய மறுவாழ்வினை ஏற்படுத்த வேண்டும். -
கிழக்கு வங்கத்திலிருந்து அகதிகள் வந்த போது, அது மத்திய அரசின் பிரச்சனை என்று தட்டிக்கழிக்கா மல், தாமே கோடிக்கணக்கில் சிலவு செய்து மறுவாழ் வளித்த மேற்கு வங்கத்தை முன்னுதாரணமாக தமிழக அரசு பார்க்க வேண்டும். இவர்கள் இந்த மாநில மக் கள் என்பதை மறந்து விடாமல் சொந்த பிரச்சனையா கக்கருதி மறுவாழ்வு உதவிகள் அளிக்க முன் வர வேண் டும். மத்திய அரசு அளிக்கும் நிதி வீணான வழிகளில் போய் விடாமல் உரிய மக்களுக்கு உரிய முறையில் பய னுள்ள வகையில் உதவிகள் கிடைக்கச் செய்ய வேண் டும். கடனுதவிகளைத் தவிர சரியான வேலை வாய்ப்பு திட்டங்கள் எதுவும் இல்லை.
எனவே வேலை வாய்ப்பை பெறுக்கும் வகையில் தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும். மறு வாழ்வு தொழில் கூட்டுத் தாபனம் என்கிற அமைப்பு மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தொழில் வாய்ப்பு களை ஏற்படுத்தியுள்ளது. அகதிகளுக்கென பலதொழிற் பேட்டைகளையும், பிரிவுகளையும் உருவாக்கி நடத்தி வருகிறது. அது போன்ற முயற்சிகள் தமிழ்நாட்டில இது வரை அமைக்கப்படவில்லை. இருக்கும் வாயப்புகளுக் கும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
எனவே இவற்றையெல்லாம் உணர்ந்து மாநில அரசு தாயகம் திரும்பியோர்க்கு உதவ வேண்டும்; மத் திய அரசிடம் இருந்து அதிகப்பட்சமான நிதி கோருவ தோடு,அந்த நிதியில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். இடைத்தரகர்கள் சுரண்டாத, ஏப்பம்விடாத வாறு கடன் வழங்க திட்டம் வகுக்க வேண்டும். வீடுகள் போன்றவற்றை அரசே கட்டிக் கொடுக்க வேண்டும்.
ஆக, தாயகம் திரும்பியோருக்கு அளிக்கப்படும் உதவிகளை வெறும் சட்டக்குறிப்பாக எடுத்துக்கொள்ள ளாமல், திட்ட இலக்குகளை நிறைவேற்றும் பணியாகக் கருதாமல், மனிதாபமான த்தோடு நிறைவேற்றும் பணி யாகக் கருதி மேற்கொள்ள வேண்டும். தாயகம் திரும்பி யோருக்கு உதவ வேண்டும். O

Page 3
go)eu ?86
மறுவாழ்வு உதவி அளிப்பதில் முன்மாதி
திருச்சி டி. ஆர். ஒ. துரித
காணவில்லை காணவில்லை என்று பதிலளிக்கப்பட்ட கடன் கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுக் கப்படுகிறது. திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி (டி. ஆர்.ஓ.) வி. ஏகாம்பரம் அவர் கள் எடுத்துவரும் இந்த நட வடிக்கைகள் மறுவாழ்வு அலு வலகங்களுக்கு முன்மாதிரியாக
இருக்கிறது என்று பல தெரி
விக்கின்றனர்.
தாயகம் திரும்பும் மக்களுக்கு பலவகையில் மறுவாழ்வு உதவி கள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆயினும் இவ் வு த வி க ள் வழங்குவதிலும், பெறுவதில் பல இடர்பாடுகள், குறைபாடு கள், குறுக்கீடுகள் இருந்து வருகின்றன. வீட்டுக்கடன், வியாபாரக்கடன் உ த வி களுக்கு மனு செய்துக் கொண் டவர்கள் ஏழு வருடம், எட்டு வருடம் என்று பல வருடங் களாக இந்த உதவிகள் கிடைக் காமல் அவதிப்படுகிறார்கள்.
இடைத்தரகர்கள், லஞ்சம் இன்றி எந்த உதவிகளையும் பெற முடியாது என்பது தான் மறுவாழ்வுத்துறை அலுவலகங் களிலுள்ள இன்றைய நிலை.
தனிப்பட்ட வகையில், சம் பந்தப்பட்ட அலுவலர்களை யார் நாடினாலும் அவர்களுக்கு கிடைக்கும் பதில் மனுக்கனை காணவில்லை; குடும்பக்கார் ட்டை காணவில்லை என்பது தான்.
இந்த சூழ்நிலையில் சமீபத் தில் திருச்சி மாவட்ட (மறு வாழ்வு) வருவாய்துறை அதி காரியாக வந்துள்ள ஏகாம்பரம் அவர்கள் இந்த குறைகளை தீர்த்து சம்பந்தப்பட்ட தாய *க்ம் திரும்பியோர்க்கு உடனடி
உதவிகள் கிடைக்க வடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
லால்குடி வட்டத்தில் எது மலை காலனி தாயகம் திரும்பி
யோர்களுக்கு சுமார் 13 வரு டங்களாக வீட்டு மனைப் பட்டா வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக காலணியை பார்வையிட்டு உடனடியாக பட்டா கிடைக்க நடவடிக்கை
எடுத்துள்ளார்.
இவர் எடுத்துக் கொண்ட நடவடிக்கையில் 1978யில் மனு செய்து குடும்ப அட்டை இல் லையென்று பதில் கிடைத்து வந்த, எதுமலை. பி. சுப்பிர மணியம், பொன்னுசாமி என் பவர்களின் குடும்ப அட்டை கள் இருக்க கண்டுப் பிடிக்கப் பட்டுள்ளது. கரவை மாட்டுக் கான 2வது கடன் உதவிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட் டுள்ளன.
தாயகம் திரும்புவோர்க ளுக்கு உரிய முறையில் உதவி கள் அளிப்பதால் முன்மாதிரி யாக இருக்கும் இவர்களைப் போன்ற அதிகாரிகள் மறு வாழ்வு துறைஅலுவலகங்களில் நீடிக்கவேண்டும் என விரும்பு கின்றனர்.
ஆனால் இம்மாதிரி மனிதா பீமானத்தோடு மறுவாழ்வு பணிகளை சிறப்புற செய்யும் அதிகாரிகள் இவ்வலுவலகங் களில் நீடிப்பார்களா என்பது தான் கேள்விக்குறி. காரணம் கடந்த காலங்களில் இம்மாதிரி அதிகாரிகள் மறுவாழ்வு துறை அலுவலகங்களில் நீ டி த் த தில்லை. தாயகம் திரும்பியோர் களுக்கு உதவுகின்ற மனப்பான் மையில்லாத - லஞ்ச லாவண் யத்திலேயே மூழ்கி இருக்கிற அதிகாரிகளே நீண்ட காலங் கள் நீடித்திருக்கிறார்கள்.
நல்ல அதிகாரிகளை இடைத் தரகர்களும் - சம்பந்தப் பட்ட அலுவலகங்களில் பணி செய் யும் ஊழியர்கள் கூட - தங்களு டைய சொந்தம் அல்லது அர சியல் செல்வாக்கை பயன் படுத்தி இடம் மாற்றம் பெறச் செய்து வந்துள்ளனர்.
 

நடவடிக்கை
நீண்டகாலம் வழங்கப்படாத கடனுதவிகளை கவனிக்கவும்தாயகம் திரும்பியோர்கள் குறைகள் தீரவும் இம்மாதிரி யான நல்ல அதிகாரிகள் நீண்ட காலம் நீடிக்க வேண் டும் என சம்பந்தப்பட்ட துறை யினரை மக்கள் மறுவாழ்வு கேட்டுக்கொள்கிறது. O
வெற்றி பெற்றோருக்கு பாராட்டு!
நடைபெற்ற ஊராட்சி மன் றத்தேர்தலில் தாயகம் திரும்பி யோர்களிலிருந்து வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மக்கள் மறுவாழ்வு மன்றத்தால் பாரா ட்டு தெரிவிக்கப்பட்டார்கள். 4-5-86 அன்று, கோத்தகிரி பாரீஷ் மண்டபத்தில் நடைப் பெற்ற இப்பாராட்டு கூட்டத் திற்கு கோத்தகிரி ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் திரு ஜே. உச்சிகவுண்டர் தலைமை தாங்கினார்.
ஊராட்சித் தேர் த லில் வெற்றி பெற்ற P. பரமநாதன் (கொணவக்கரை), எம். சந்திர லிங்கம் (கோத்தகிரி), எஸ். எஸ். செல்லையா (தேகாடு), கந்தசாமி (தேகாடு), சந்திர போஸ் (கோட நாடு), ஈ. முனி ரட்னம் (கக்குச்சி) செல்வி அன்னக்கிளி(கெடுகுலா)ஆகி யோர் பாராட்டப்பட்டார்கள்
இந்த பாராட்டு விழாவில் அனைத்து ஊராட்சித் தலை வர்களும் கலந்து கொண்டார் கள்.
இந்த பாராட்டு கூட்டத்தில் தாயகம் திரும்பியோர் மறு வாழ்வு ஆய்வு மற்றும் தகவல் நிலைய இயக்குனர் திரு ஆர். ஆர், சிவலிங்கம், திருச்செங் தூரன், சகோதரர் அல்போன் சஸ், சந்திரசேகரன், சந்தான கிருஷ்ணன் முதலாக பலர் கலந்துக் கொண்டார்கள். O
வறுமைக்கோடு
அரசு விளக்கம்
கடப்பு கிதி ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த கிராம வளர்ச் சித்திட்டத்தின் கீழ் உதவி அளிப்பதைப் பொறுத்த மட் டில் வறுமைக்கோடு’ என்ப தற்கு என் ன வருமானம் இருக்க வேண்டும் என்று மத் திய அரசு புதிய திருத்த மென்றை அளித்துள்ளதை பத்திரிகைச் செய்தியொன்று கூறுகிறது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ங் தேதி வரை 5 உறுப்பினர் கள் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 3.500 மறறும அதறகு குறைவாக இருந்தால் அது வறுமைக் கோட்டில் இருப்பதாக அரசு தீர்மானித்திருந்தது.
இனி கிராமப் பகுதிக்ளில் ஆண்டுக்கு ரூ.6,400 குடும்ப வருமானம் இருந்தால் அது வறுமைக் கோட்டில் இருப்ப தாக கருதப்படும். ஆதிதிராவி டர்,பழங்குடியினரைப்பொறுத் த மட்டில் உதவிப் பெற இந்த வருமான வரம்பு இதில் 75 சத விகிதமாகும். அதாவது ரூ. 4.800 ஆகும். O
ஒருவேண்டுகோள்
சமீபத்தில் நடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்நாடு எங்கும் தாயகம் திரும்பியோர் களிலிருந்து பலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
வெற்றி பெற்ற தாயகம் திரும்பியோர் மத்தியில் ஒரு கலந்துரையாடலையும், அவர் களுக்கு ஒருபாராட்டு கூட்டத் தையும் நடத்த மக்கள் மறு வாழ்வு மன்றம் விரும்புகிறது.
ஆதலால், வெற்றிப்பெற்ற அன்ப்ர்கள் தங்களைப் பற்றிய விபரங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டப் படுகிறார் கள்.
தொடர்பு கொள்ளும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் "மக்கள் மறுவாழ்வு"முகவரிக்கு எழுத வேணடுமென கேட்டுக் கொள்கிறோம்.
ஆசிரியர்
LTSTSLSTqSSSYMSiSLSq qSqiASSS

Page 4
சுள்ளியா தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவிக்கிறது!
கர்னாடக பால்மரக் காட் டில்"என்ற கட்டுரையை வாசித்
தேன். உண்மை நிலையை யும் நமது தாயகம் திரும்பி யோரின் கல்வி, விளையாட்
டுப்போட்டிகளில் திறமையை யும் கோடிட்டுக் காட்டி வெளி யுலகத்தாருக்கு தெரிய தந்த மக்கள் மறுவாழ்வுக்கு எங்கள் சுள்ளியா தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நன்றி மலர்களை அள்ளித் தெளிக்கிறேன்.
அதே வேளையில் கட்டுரை யில் ஏற்பட்டுள்ள ஒருசில தவ றுகளை எங்கள் கருத்துக்கெட்
டிய வகையில் தெரிவிக்க விரும்புகிறேன்.
இங்குள்ள தொழிலாளர்க
ளுக்கு இரண்டு வகையான விட்டு வசதி கொடுக்கப்பட் டுள்ளது. ஒன்று நான்கு குடும் பங்கள் வசிக்கக்கூடியது. அது 4X10 அளவில் ஒரு வராந்தா 8X10 அளவில் முன் அறையும் அதையொட்டி இன்னொரு அறையும் 7X10 அளவில் ஒரு சமையல் அறையும் (இதை சமையலறையாக சிறிய குடும் பங்கள் மாத்திரமே உபயோகிக் கின்றனர்) மற்றும் மலசல கழிப்
பிடமும் உண்டு. (இதை யாரு
மே பாவிப்பதே கிடையாது,
சிலர் சமையல் அறையாகவும்
வேறு சிலர் தட்டு முட்டுச் சாமான்களை வைக்கவும் உப யோகித்து வருகின்றனர்) அதி கமானோர் வெளியில் சொந்த செலவில் சமையல் அதைகட்டி உபயோகித்து வருகின்றனர்.
மற்றது இரண்டு குடும்பங் கள் வாழும் வீடு இதல் ஒரு வராந்தா, அடுத்து அதைவிட சிறிது பெரிய அளவில் ஒரு அறை அடுத்து சமையல் அறை, மற்றும் மலசல கழிப்பி டமும் உண்டு. அதில் வசிப் போரும் மேல் குறிப்பிட்டப்படி யே உபயோகித்து வருகின்ற னர்.
மற்றும் ஈழ விடுதலை இயக் கங்கள் எடுக்க வேண்டிய நட வடிக்கை” என்ற ஆசிரியரின் தலையங்கமும் பாராட்டுக்குரி யவைகளே! தாயகம் திரும்பி *"மக்கள் மறு வாழ்வு?? கொண்டுள்ள பற் றுக்கு எமது உளங்கனிந்த பாராட்டுக்கள், நன்றி.
எஸ். டி. அமிர்தலிங்கம்
பொதுச்செயயாளர் சுள்ளியா தமிழ்ச்சங்கம் கர்னாடகம்
நன்றி தெரிவிக்கிறோம்!
'மே' மாத இதழ் மிகவும் அருமையாக இருந்தது மக்கள் மறுவாழ்வு தொழிலாளர்களின் தோழன் என்பதை உறுதி படுத்தியது முசிறியில் அகதி கள் உண்ணாவிரதம் இருச் கும் திட நம்பிக்கை கண்டு ஆ ன ந் த ம் ; நிலை கண்டுப்
 

i
வாழ்வு
-9) Gör ”863
வேதனை, வெற்றி பெற வாழ்த் துக்கள். நித்திலனின் தஞ்சம் புகுந்த மண்ணில் தவறு செய் யலாமா. உண்மையான கருத்து பாராட்டுக்கள். அகதிகளாக வந்துள்ள அனைத்து பகுதியி லுமே இதுபோன்ற தவறுகள் நடந்து கொண்டேயிருக்கின்
றன. சம்பந்தபட்டவர்கள் மன ந்
திருந்துவார்களா..? மண்டப முகாமில் கட்டாய கருத் தடை கண் டி க் க வேண்டியதே. வேதனையிலும் வறுமையிலும் வாடும் போது இது தேவையா யார், யாரோ பதவி - பணம்
பெற அகதிகளாக அல்லல் படு
வது கண்டிக்க வேண்டிய விச யம் "சஞ்சயன்" இருட்டில் உள்ள கோடை கால மக்களை நன்றாக காட்டுகிறார், கொ டைக்கான லில்,
மே தினச் சிந்தனைகள் மிக வும் அருமை. சரியான சந் தர்ப்பத்தில் 'பிறைசூடி தொ குத்து தந்தது மிக பொருத்தம். நம்மவர்கள் சிந்திப்பார்களா?
5வது ஆண்டுமலர் அழகாக சிறக்க வாழ்த்துகிறேன். பல ரின் படைப்பை எதிர்பார்க்கி றோம்.
துரத்தப்பட்ட நாம் துயர நிலையில் இருக்கும் போது கடத்துவது மிகவும் வேதனைக் குரிய விஷயம்.
மனிதாபிமானம் உள்ளவர்
கள் இப்படி கடத்துவார்களா,
கடத்தலுக்கு உடந்தையாவார்
56.
மேலும்.இதுவரை எந்த இதழுமே வெளியிடாதபடி இந்த கன்னட நாட்டு மூலை யிலும் அகதிகள் காட்டை நாடாக்குகிறார்கள் என்பதை கா ட் டி யு ள் ஸ்ரீர்கள். மேலும் வளர வாழ்த்துக்கள்.
கே. கணேஷ் குமார்
சுப்பிரமணியா ரப்பர் டிவிசன் கர்னாடகம்
மனம் மகிழ்கிறது!
மே இதழில் வெளிவந்த அய் யம்பேட்டை புயல் பாதுகாப்பு இல்லத்தைப் பற்றி வாசித்த போது என்மனம் மகிழ்ந்தது அவர்களுக்கு எனது மன மார்ந்த நன்றி.
J56. It
மேல்தட்டப் பள்ளம் நீலகிரி
நன்றி தெரிவிக்கிறேன்
மே 86 இதழ் "மறுவாழ்வு' படித்தேன். அதில் எனது கண வரும் சகோதரர் ஜூட் பெர் னாண்டோவும் கடத்தப்பட்ட செய்திபற்றியும் நாங்கள் நடத் திய போராட்டங்கள் பற்றிய தெளிவாகக் குறிப்பீட்டுள்ளீர் கள். அதற்காக ரொம்பவும் நன்றி.
இங்கே இன்னொரு முக்கிய அம்சத்தைக்கூற விரும்புகி றேன். உங்கள் பத்திரிகையில் அகதிகள் பிரச்சினைகள் பற்றி 'நாடக நித்திலம்" என்ற பெய ரில் தொடர்ச்சியாக எழுதி வந் தவர் என் கணவர் அருண் அண்டணிதான் என்பதை இப் போது கூறுகிறேன். இதனை வெளியிடுவதன்மூலம் அவர் எவ்வளவு தூய்மையான வர் என்பதை உலகுக்கு நீங்கள் எடுத்துக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
என் கணவர் சிறந்த நாடகக் கலைஞர். இலங்கையில் பல மேடைகளில் சிறப்பாக நடித் துள்ளார். அதனால்தான் அவ ருக்கு கொழும்பில் வைத்து கொடுக்கப்பட்ட அந்தப்பட் டப்பெயரிலேயே அவர் தனது எழுத்துக்களையும் கவிதை களையும் வெளியிட்டு வந்தார்.
உங்கள் பத்திரிகையில் அகதி கள் பிரச்சனைகள் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதி* யிருக்கிறார்.மே86 இதழில்கூட 'தஞ்சம் புகுந்த மண்ணில் தவ றுகள் செய்யலாமா?’ என்ற தலைப்பில் அவர் எழுதிய செய்திக் குறிப்பு அவரை யார் என்று சரியாக இனம் காட்டு கிறது. கடத்தப் படுவதற்கு முன் எழுதிய கடைசிக் கட்டு ரையும் இதுதான்.
அந்தக்கட்டுரையில் கூட, *தமிழக மக்களின் ஆதரவில்
தமிழகத்தில் தஞ்சம் புகுந்திருக்
கும் நாம் 'இலங்கைத்தமிழர்கள் மோசமானவர்கள்" என்ற
அவப்பெயரைத் த டு த் து,
தமிழ் மக்களின் அனுதாபத்தை மேம்படுத்தி sp.) geolours நின்று தமது விடுதலைப் போராட்டத்தை சரியான வழி யில் நடத்திச் சென்று ‘சுதந்
(11-ம் பக்கம் பார்க்க)

Page 5
el su o 36
மக்கள் மறு
இந்திய அரசின் LD 6 T ) 6oa 9 l g
பொனிக்ஸ்” என்ற புராண பறவையை தீயிட்டு கொன்றா லும் அதன் சாம்பலிருந்துஉயிர் பெற்று வருமாம். அதுபோன்ற தோர் நிகழ்வுதான் பாதிக்கப் பட்டவருக்கு மறுவாழ்வு அளிப்பதென்பது.
சுதந்திர இந்தியாவின் சரித் திரமே மறுவாழ்வு பணியோடு தான் ஆரம்பித்தது. இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் போது 1.8கோடி மக்கள் இருந்த இருப்பிடங்களை விட்டு நாடு மாற வேண்டியிருந்தது. சுதந் திர பாரதத்தின் பக்கங்கள் அப் பொழுது நடந்த கலவரங்க ளால் சிவந்தன. பிறகு 1971ல் கிழக்கு பாக்கிஸ்தான் (இன் றைய பங்காளதேஷ்) போராட் டத்தின்போது லட்சக்கணக் கான அகதிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். தபால் அட் டைகள்கூட அதிக விலைக்கு விற்கப்பட்டு பாரதம் அகதிக ளுக்கு ஆதரவு அளித்தது.
1950லியே அகதிகள் முகாம் களை மூடி, மக்களுக்கு மறு மறுவாழ்வு பணிகளை செய்ய ஆரம்பித்தது, இது மத்திய அர சின மறுவாழ்வு மற்றும் நிவா ரண அமைச்சகம். விவசாய குடும்பங்களுக்கு 6 முதல் 8ஏக் கர் வரை நிலம் வழங்கப் பட் 6. பாக்கிஸ்தானிலிருந்து குடிபெயர்ந்தவர்களுக் கெ என பத்தொன்பது நகரங்கள் தோற்றுவிக்கப்பட்டன. 136 காலணிகள் அமைக்கப்பட்ட னர். 1,66,000 வீடுகள் மற்றும் குடியிருப்புகள் இவ்விடங்களில் உண்டாக்கப்பட்டு 10 லட்சம் அகதிகள் 1959க்குள் குடிய மர்த்தப்பட்டனர். இந்திய அர சாங்கம் 88 கோடி ரூபாய் செலவிட்டது.
பிரிவினையின்போது குடி பெயர்ந்தோரின் அசையும் மற் றும் அசையா பொருட்களை பற்றி, இந்திய பாக்கிஸ்தான் அரசாங்கம் பேச்சு வார்த்தை கள் நடத்தின. இந்திய அர சாங்கம் 191.5 கோடி ரூபாய்
நஷ்டஈடு வழங்கியது. மேற்கு பஞ்சாபில் நிலம் வைத்திருந்த 5,75,000 GL fassifisio 4,75,000 பேர் வடஇந்தியாவில் குடி யமர்த்தப்பட்டனர். 3,00,000
குடும்பங்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ஏறக் குறைய 70 ஆயிரம் பேர்
தொழில் நுட்பம் மற்றும் மற்ற தொழில் கல்வி கற்பிக்கப்பட்ட னர். இதுதவிா ஆக்கிரமிக்கப் பட்ட காஷமீரின் 1,35,000 மக் களுக்கும் மறுவாழ்வு அளிக்கப் பட்டது.
பிரிவினையின்போது சுமார் 40 லட்சம் மக்கள் கிழக்கு பாக் கிஸ்தானிலிருந்து குடி பெயர வேண்டியிருந்தது. அவர்களில் பலர் விவசாயிகள், மேற்கு வங்கமாநிலத்தில் அவர்களுக்கு தேவையான இடமின்மையால் பல்வேறு மாநிலங்களிலும் குடி யமர்த்தப்பட்டன.
தண்டகாருண்யா என்ற திட் டம் இயற்றப்பட்டு மத்திய பிர தேசம் மற்றும் ஒரிசாவின் காடு கள் மறுவாழ்வு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டனர்.
1971 வங்க தேசத்திலிருந்து 99 லட்சம் பேர் இந்திய மண்
ணில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இவ்வளவு மக்க
ளுக்கும் இந்திய அரசாங்கம் தற்காலிகமாக உணவு, உடை, இருப்பிடம் தந்து பாதுகாத்து வந்தது.
1971ஆம் ஆண்டு மார்ச் 25ந் தேதிக்கும் நவம்பர் 30 தேதிக்கும் இடைப்பட்டகாலத்
தில் ஒரு மணி நேரத்திற்கு சரா
சரியாக 1700 பேர் இந்தியா வில் அகதிகளாக தஞ்சம் புகுந்
தது சரித்திரம் கண்டிராத ஒன்று. அ கதி க ளி ன் , பிரச்சினைகளால் பா ர தம்
வெகுவாக பாதிக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் மட் டும் 75 லட்சம் மக்களுக்கு புக லிடம் அளிக்க பட்டது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகை யில் 16 விழுக்காடாக அகதி கள் எண்ணிக்கை உயர்ந்தது.

வாழ்வு
字
பேர்கள் குடிபெயர்ந்தனர். 1971 போ ரின் போது
5 6
14லட்சம் மக்கள் தொகையே கொண்ட திரிபுராவின் மக்கள் தொகை அகதிகளின் வருகை யால் இருமடங்கு ஆனது. மேகாலாயாவின் அகதிகள் தஞ்சம் புகுந்தனர். அந்த மாநில மக்கள் தொகை யைவிட இது அதிகம். அசா மில் 3 லட்சம் பேர் குடிபெயர்ந் தனர்.
அரசு மிக கடினமான முயற் சிகளை எடுத்து அகதிகளுக்கு உதவி அளித்தது. 7ே9 லட்சம் மக்கள் சுமார் 825 அகதிகள் முகாம்களில் குடியமர்த்தப்பட் டனர். மற்றவர்கள் அவர்கள் உறவினர்களுடன் வாழ் ந் தனர்.
1971 டிசம்பர் பங்களாதேஷ் உருவானதும் ஒருவாறாக பிரச் சனை தீர்ந்து அகதிகள் நாடு திரும்பினர்.
கிழக்குபாக்கிஸ்தானிலிருந்து 1958 வரை 40 லட்சம் பேரும் 1984 முதல் 1971 வரை பதி னொரு லட்சம் பேரும் இந்தியா வில் குடியேறினர்(நிரந்தரமாக) மேற்கு வங்கஅரசு மட்டும் 180
கோடி ரூபாய் செலவிட்டது.
1964லிருந்து வரும் குடி பெயர்வோர் மேற்கு வங்கம் தவிர்த்த பிற மாநிலங்களில் தான் குடியமர்த்தப்பட்டனர், 1971 வரை ஏழு ஆண்டுகளில் குடிபெயர்ந்த 10 லட்சம் மக்க ளில் ஐயாயிரம் பேர் தவிர எல் லோருக்கும் மறுவாழ்வு அளிக் கப் பட்ட து, எழுபதுகளில் அகதிகளின் வரவு மிக அதிக மாக மறுவாழ்வு பணிகள் பாதிக் கப்பட்டன. 1972 ஆண்டு இந்த பிரச்சினை தீர்த்து வைக் கப்பட்டது.
ஆந்திர பிரதேசம், மகராஷ் டிரம், மத்திய பிரதேசம் ராஜஸ் தான் போன்ற மாநிலங்களில் விவசாயம் நிலங்கள் வழங்கப் பட்டன.
1965-ல் இந்திய பாக்கிஸ் தான் போரின் போது எல்லை மாநிலங்களிலிருந்து 3,60,000
7,00,000
8,36,000 பேர்கள் இந்தியா வின் உள்ளேயே குடி பெயf
வேண்டியிருந்தது.
ஆப்பிரிக்க நாடான மொசாம் பிக்கிலிருந்து 2,510 பேர் குடி பெயர்ந்தனர்.
உகண்டா 10,076 உகண் டாவிலிருந்து 1975-ல் குடி பெயர்ந்தனர்.
ஜைரே:- 35 குடும்பங்களை சேர்ந்த 110 பேர் ஜைரேயி லிருந்து குடி பெயர்ந்து குஜா ராத்தில் குடியமர்த்தப்பட்ட 6ö了面广。
1959யில் திபெத்திலிருந்து சுமார் 56 ஆயிரம் பேர் அகதி களாக இந்தியாவுக்கு வந்தார் கள். இவர்களில் 20 ஆயிரம் பேருக்கு கர்னாடகா, ஒரிசா மத்தியபிரதேஷ், ஜம்மு.காஷ் மீர் மற்றும் அருணாசலப்பிர தேஷத்தில் நிரந்தரமாக விவ சாயத்தில் குடியேற்றப்பட்ட னர். ஆயிரத்து இருநூறு பேர் சிக்கிம்மிலும் 3 ஆயிரம் பேர் பூட்டானிலும் குடியேறியுள்ள ଶor if .
பர்மா தன் வணிகத்தை நாட்டுடமையாக்கியது. அயல் நாட்டினர்கள் மீது கட்டுப்பாடு களைக்கொண்டுவந்தது. பர்மா அரசின் இத்தகைய கொள்கை யினைத் தொடர்ந்து இந்திய மக்களின் வழி வந்தோர் அதிக அ ள வில் இந்தியாவிற்கு 1-6-63 முதல் வரத் தொடங் தொடங்கின. 01-1.85 வரை தமிழ், பீகார், தெலுங்கு மோழி யினத்தவர்கள் சுமார்2,07,693 பேர் கப்பல், விமான மார்க்க மாக இந்தியாவுக்கு வந்தனர். இவர்களுக்கு மறுவாழ்வு உதவி கள் அளிக்கப்பட்டுள்ளது.
த மி பூழி ன த் த வ ர் க ளி ன் 1,44,283 பேர் தமிழ்நாடு வந் தனர். 43,444 குடும்பங்க ளுக்கு மறுவாழ்வு அளிக்கப் பட்டுள்ளது. 1947க்குப்பின் விமானத்தின் மூலம் மட்டுமே 266 குடும்பங்கள் சேர்ந்த 827 பேர் வந்து சேர்ந்தனர்.
இலங்கையில் வாழ்ந்து வந்த இந்திய தமிழர்களில் 'நாடற்ற வர்கள்’ என்று எந்த நாட்டுரி மையும் இன்றி இருந்து வந்த 9.75 லட்ச மக்கள் பிரச்சனை
(10 ம் பக்கம் பார்க்க)

Page 6
தாயகம் திரும்பியோர் குழந்
தாயகம் திரும்பிய மக்களின் மறுவாழ்வுப் பிரச்சனைகளை அணுகும் பொழுதெல்லாம், தொழில் வாய்ப்பு, வீட்டுப்பிரச் சனை ஆகிய இரண்டையுமே முக்கியமாக முன்னெடுத்துக் கொள்வது வழக்கமாகி விட் டது. ஆனால் ஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டில் குடியேறு வோருக்கு விடும், தொழிலும் முக்கியமான முதற்பிரச்சனை கள் தான் என்றாலும் அடிப் படையில் பலவிதமான தேவை களும் வாய்ப்புகளும் அவர்க ளு க் கு அவசியமாகின்றன. தாயகம் திரும்பியோரில் கணிச மான அளவினர் பள்ளி செல் லும் பருவத்தினரும் குழந்தை களும் ஆவார்கள். இதுவரை ஏறக்குறைய இரண்டு லட்சம் குழந்தைகள் தமிழகம் வந்திருக் கிறார்கள்.
கல்வி வளர்ச்சி
அவர்களும் வாழ்வை வளப் படுத்தவோ கல்வி வளர்ச்சி செய்து கொடுக்கவோ பெரிய முயற்சிகள் செய்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. பல குடும்பங்கள் சீர்குலைந்த நிலையிலும், நாடோடிகளாக வும் இருந்துவிட்ட காரணத் தால் பல குழந்தைகனின்கல்வி பாழாய்ப் போனது. மறுவாழ் வுத்திட்டங்களில் கல்விச் சலு கைகள் இருந்தும்கூட அத னைக் கோரியவர்கள் அற்ப சொற்பமா புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள மாத்தூர் பாடசாலை தவிர்ந்த வேறு பாடசாலைகள் தாயகம் திரும்பிய குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்படவில்லை. மருத் துவக் கல்லூரியிலும் சட்ட தொழில் நுட்பக் கல்லூரிகளி லும் தாயகம் திரும்பியோருக் காக ஒதுக்கப்பட்ட இடங்க ளைப் பெற்றுக் கொள்ளும் தகைமைகள் இல்லாமையி
னால் அந்த இடங்களைக் கூட மற்றவர்கள் பிடித்துக் கொள்கி றார்கள். ஆகவே நாடு திரும் பிய நமது மக்களின் கல்வி நிலை தாழ்வாகவே இரு ச் கிறது.
குழந்தைகள் நலம்
மக்கள் மறுவாழ்வு மன்றம் நாடு திரும்பிய நம்மவர்களின் நலிவைப் போக்கும் பணியில் முக்கிய அங்கமாக கல்வி வளர்ச் சியையும் குழந்தை நலத்தை யும் பேணுவதைப் பொறுட் பேற்றிருக்கிறது. கோத்தகிரி யில் நிலையான வீடின்றி நிரர் தரமான தொழிலின்றி வாடு கின்ற நமது மக்களின் நூறு குழந்தைகளுக்கு கோடை விடு முறையில் பங்களுரில் சிறுவர் முகாம் ஒன்று ஏற்பாடு செய் யப்பட்டது. இச்சிறுவர்களுக்கு கோத்தகிரியில் 'இருத்து பங்க ளூருக்கு அருகே அமைந்துள்ள வைட் பீல்ட் என்ற இடத்தில் விழியிழந்த மாணவர்களின் பள்ளியில், விடுதி வசதிகளு டன் கூடிய வளாகத்தில் பத்து நாட்களுக்குப் பயிற்சி வழங்கட் பட்டது. இந்த அனுபவம் தாய கம் திரும்பியோர் சேவையில் பு தி யது. பொலிவான து இதனை மக்கள் மறுவாழ்வி மன்றத்தின் மகத்தான சாத னையென்றே கூற வேண்டும்
கோடை முகாம்
முதன்முதலாக இந்தஅலே
சனையை மு ன் வைத்தவ தந்தை குட்டினா. தந்தை குட்டினா இந்திய இயேச சபையின் தேசிய இணைப்
பாளர் கோத்தகிரியில் மக்கள் மறுவாழ்வு மன்றம் அமைவத கான மூல காரணர்களுள் ஒரு வராவார். கோடை விடுமுறை
 

T i Dag 5a TTpGia
தைகளுக்கு ஒர் குதரகல அ
யில் நமது குழந்தைகளை பங்க ளுருக்குக் கூட்டிச் சென்று ஒரு பயிற்சி முகாம் நடத்தினா லென்ன? என்று தந்தை குட் டினா பீடிகை போட்டார். செய்வோமே!” என்று மக்கள் மறுவாழ்வுமன்றத்தினர் ஆமோ தித்தனர். ஆனால் இந்த அரு 6ᏍD1 Ꮭ ᎥᎥ ; ᏝᎢ ᎧᏍᎭ ஆலோசனையை செயற்படுத்துவதில் எத்தனை சிரமங்கள்?
நூறு குழந்தைகள்
முதலாவது நூறு குழந்தை களைத் திரட்ட வேண்டும். பெற்றோர்கள் இணங்குவார் களா? நாம் எதிர்பாராத வித மாக பலர் முட்டுக் கட்டை போட ஆரம்பித்தார்கள். இந் தக் குழந்தைகளைக் கூட்டிச்
சென்று கண்களைப் பிடுங்கப்
போகிறார்கள் என்று ஒருவர் வதந்தி எழுப்பினார். இன் னொருவர் இல்லை. இவர்
களை கிறி ஸ் த வர் க ளாக மாற்றப் போ கிறார் கள்? என்று விஷமம் செய்தார். இது ஒரு சேவையா? ஏழைக் குழந்தைகளை ஒரு வாரத் திற்கு பங்களூர் கூட்டிச் செல் வதில் என்ன லாபம்?” என் றார், லாப-நஷ்டக் கணக்குத் தெரிந்த ஒருவர். இருப்பினும் மக்கள் மறுவாழ்வு மன்ற ஊக் குநர்கள், ஒவ்வொரு குடி யிருப்புக்களுக்கும் சென்று தாய், தந்தையர்களையும் குழந் தைகளையும் சந்தித்தார்கள். கோடை விடுமுறை முகாம் பற்றி விளக்கினார்கள்.
சிரமங்கள்
குழந்தைகளிடையே ஏ கப் பட்ட வரவேற்பு இருந்தது, யாரை அழைத்துச் செல்வது யாரை விடுவது என்பதே பிரச்
சனையாகி விட்டது. சிறு, சிறு போட்டி வைத்து திறமையான வர்கள் தெரிவு செய்யப்பட் டார்கள். இதன்பிறகு இவர் களை அழைத்துச்செல்ல விசே டமாக ஒதுக்கப்பட்ட ரயில் பெ ட் டி தேவைப்பட்டது. அதைப் பெறுவதற்கு எத் தனை முட்டுக்கட்டைகள்? எத் தனை அலைசல்கள்? 6T is தனை மனுக்கள்?
இரயில் பயணம்
இறுதியாக இம்மாதம் 9ம் தேதி பிற்பகல் 99 குழந்தைகள் 8 வயதிற்கும், 12 வயதிற்கும் உட்பட்டவர்கள், விசேடமாக ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டி யில், வைட் பீல்ட் நோக்கி, உற்சாகமாக மறுவாழ்வு மன்ஜ ஊக்குனர்களின் உறுதுணை
யோடு புறப்பட்டார்கள். இதில் எத்தனை புதுமை?
இனிய சூழ்நிலை
பலருக்கு முதன் முதலாக தாய், தந்தை, சகோதர்கள் துணையின்றி தனியாக வழிப் பயணம். வாழ்க்கையில் புதிய அனுபவம். வைட் பில்ட் வந் தடைந்த பின்னர் தெய்வீக ஒளி விழியிழந்தோர் பாட சாலை வளாகத்துக்கு அழைத் துச் செல்லப்பட்டார்கள். ஒவ் வொருவருக்கும் அவரவர்களுக் குரிய இடம், கட்டில் ஒதுக்கப் பட்டது. பிரயாணக் களைப்பி னால் பிள்ளைகள் இளைப்பாறு வார்கள் என்று எதிர் பார்த் தோம். ஆனால் அந்தப் பள்ளி யின் பாங்கான வளாகத்தை க் கண்டு மகிழ்ந்த குழந்தைகள் ஊஞ்சலாடவும் ஒடியாடவும் ஆரம்பித்து விட்டார்கள்.

Page 7
சந்த பைவம் f
பல நிகழ்ச்சிகள்
10-ம் தேதி முதல் 16ம் தேதி வரை இம்முகம் நடாத்தப்பட் டது. விழியிழந்தோர் பள்ளி யின் நிர்வாகிகளும் ஆசிரியர் களும் மிகச்சிறந்த நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்திருந்தார் கள். காலை உணவுக்குப்பின் னர் அறிமுகம் நடைபெற்றது, ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவரும் ஒருவருக்கொரு வர் அறிமுகமானார்கள். அறி முகத்திற்கு பின்னர் வகுப்புகள் நடைபெற்றன. வகுப்பில் இந் தியாவைப் பற்றிய பொது அறிவு. சுகாதாரக்கல்வி, ஆங் கில அறிவு, உடற்பயிற்சி ஒவி யம், இசை, நடனம், கைப் பணி ஆகியன குழந்தைக ளுக்கு நாள்தோறும் பயிற்று விக்கப்பட்டன.
ஒவ்வொரு நாளும் பொம்ம லாட்டம், திரைப்படம், நாடக இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன. பிள் ளைகளுக்கு ஒரே கொண்டாட் டம்! அங்கு தெலுங்கு, கன்ன டம், ஆங்கிலம், மொழிகள் பேசப்பட்டன. பிள் ளைகளுக்கு மொழிப் னையே இருக்க வில்லை. அவர்கள் அனைவரும் பயன் படுத்திய அன்புமொழி, எல்லா
குழந்தைகளுக்கும் புரி ந் த
மொழி.
திறமை சான்றிதழ்
ஒருநாள் குழந்தைகளுக்கு
இலவச வைத்திய பரிசோத னை. தகுந்த தராதரமுள்ள வைத்தியர்கள் குழந்தைகளின் உடல் நலத்தைப் பரிச்ோதித்து முக்கியமான குறைகள் இருந் தால் அதனைப் பெற்றோர் களுக்கு அறிவிக்கு முகமாக குறிப்பெழுதித்தந்தார்கள். ஒவ் வொரு குழந்தைக்கும் அதனு
தமிழ் ஆகிய
பிரச்ச
காம்
டைய உடற்திறமை, கல்வி? திறமை, கலைத்திறமை ஆகி" விபரங்களடங்கிய ஒரு சான் தழ் வழங்கப்பட்டது.
ஒருநாள் சுற்றுலா; இரண்டு அழகிய சுற்றுலாப் பேருந்து களில் பங்களூர் நகரததையும் பூங்காக்களையும் அருங்காட்சி அகங்களையும் கண்டு களித்து வந்தார்கள். ஒருநாள் விளை யாட்டுப் போட்டி , ტნ,60x6სა, இசை,நாடக, ஒவியம் போட்டி மற்றொரு நாள். இப்படிக கோலாகலமாக நடந்து நிறை வேறியது சிறுவர் முகாம்.
fluunt 66DL
ஒவ்வொரு நாளும் சிறந்த உணவு, பழங்களும், பண்டங் களும், பயிற்சிகளும், பண்பு களும் குழந்தைகளின் முகங் களிலெல்லாம் மகிழ் ச் சி ப் பொங்கி வழியச் செய்தது, அத னைப் பார்த்தோருக்கு ஆனந் தம் ஏற்பட்டது. தந்தை குட்டி ருவுக்கும் பூரிப்பு. இறுதி நாள் குழந்தைகள் போக மாட்டோம் என்று சொல்கின்ற அளவுக்கு ஒன்றிணைந்து போனார்கள். ஊறோடும், உறவோடும் ஒன்றி விட்டார்கள்.
16ம் தேதி இரவு வைட் பீல்ட் ஸ்டேசனில் அழுத கண் களும், கூப்பிய கரங்களுமாய் விடை பெற்றுக் கொண்டார் கள். ஒன்றிணைந்த இதயங் கள் பிரிவால் விம்மின. ரயில் வண்டி அவர்களை கோயம்புத் தூர் கொண்டு சென்றது.
அங்கிருந்து மீண்டும் ஓர் மகிழ்ச்சிகரமான அனுபவம் தங்கள் பெற்றோர்களோடு இணைந்து வீடு திரும்பினார் கள். அவர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சி வித்துக்கள் ஊன்றப் பட்டன. அவர்கள் வாழ்வு மகிழ்ச்சியின் பூங்காவாக மாற மக்கள் மறுவாழ்வு மன்றம் அவர்களோடு என்றுமிருக்கும் அவர்கள் பணியில் நமது மகிழ்ச்சியும், நிறைவும் மலரும்.
 
 

eitir
BG
விளம்பரம் செய்யுங்கள்
Ο
நீங்கள் உங்கள் வர்த்தகத்தைப் பெருக்கிட, நிறுவனத்தின் பணிகளை அறிமுகப்படுத்திட
மக்கள் மறுவாழ்வு? பத்திரிகையில் விளம்பரம் செய்யுங்கள்.
இலங்கை, பர்மா முதலிய வெளிநாடுகளிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் தாயகம் திரும்பிவிட்டதிரும்பிக் கொண்டிருக்கிற லட்சோப லட்ச மக்களின் நலனுக்காக வெளிவரும் மக்கள் மறுவாழ்வு ஏட்டில் நீங்கள் செய்யும் விளம்பரம் பலனுள்ளதாக இருக்கும்.
இம்மக்கள் இந்நாட்டில் - தமிழ்நாட்டிலும் கர்னா டகம், ஆந்திரா, கேரளா ஆகிய தென் மாநிலங் களிலும் குடியேறி, தமக்கென ஒரு புது வாழ்வை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். புது வாழ்வினை அமைக்கும் இவர்கள் வீடுகள் வாங்குகிறார்கள். மனைகள் வாங்கி வீடுகள் கட்டுகிறார்கள் கட்டிடங்கள் நிலங்கள் வாங்கு கிறார்கள்; வியாபாரம் செய்யவும், விவசாயம் செய்யவும் மற்றும்; தொழில்-வேலை வாய்ப்பு களை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்.
இவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வர்த்த கர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பல தொழில்களில் - துறைகளில் ஈடுபாடுள்ள பல தரப்பட்ட மக்களாவார்கள்.
இவர்கள் மத்தியில் உங்கள் வர்த்தகம் பெருகிட வும், பணி செய்யும் வாய்ப்பினை பெற்றிடவும், இவர்களிடமிருந்து தகுதியானவர்களை உங்கள் பணிகளுக்கு தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் மக்கள் மறுவாழ்வில் விளம்பரம்
செய்யுங்கள்.
விவரங்களுக்கு :
1, தெற்கு சுங்கையம்மன் கோயில்
2வது தெருத அஞ்சல் பை எண்: 5360
Gs giransgra 60 O O P4.

Page 8
B
Abdess egg
(சென்ற இதழ் தொடர்ச்சி)
இலங்கைத் தோட்டப்புறங் களில் இருந்தது போலவே கையில் கிடைத்ததும் சிலவு செய்வது என்ற நிலையில் இருக்கிறார்கள். ஆண்கள் மத்தியில் குடிப்பது என்பது பொதுவாக உள்ள பழக்கமாக உள்ளது.
நண்பகலுடன் வேலைவிட்டு திரும்பி விடும் இவர்களுக்கு நிறைய பொழுது இருக்கிறது. அவற்றை நன்மை தரும் வழி யில் பலன் படுத்துவது மிகக் குறைவே.
மிகச் சிலர் கைப்பந்தாட்டம் போன்றவற்றில் ஈடுபடுகிறார் கள், 6 I 6tb 5სiT வீடுகளிலும் பெரும்பாலும் வானொலி பெட்
கர்னாடக
டிகள் வைத்திருக்கிறார்கள். தமிழர் பற்றி செய்திகளைக் கேட்பதற்கு சாதகமாக உள் ளது. இதுவும் ஒரு பொழுது போக்காகவுள்ளது.
தொழிற்சங்கங்கள் பிற அமைப்புகள்
இங்கும் பல தொழிற்சங்கங் கள் உண்டு.
1. ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனி யன்
2. சி.ஐ.டி.யூ.)
3. கர்னாடக ராஜ்ய ஸ்ர மிக்க சங்க
4. கர்னாடக இண்டஸ்ட் ரியல் ஸ்டாஃப் யூனியன்
5. தகூழிண கன்னட ரப்பர் பிளான்டேசன் அன்ட் ஜென ரல் ஒர்க்கர்ஸ் காங்கிரஸ்
முதலாக பல தொழிற்சங்கங் கள் உள்ளன.
இச்சங்கங்களின் முக்கிய பதவிகளின் தாயகம் திரும்பி யோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அப்பகுதி கன்னட தொழிலாளர்களுக்கும் உத்தி யோகஸ்தர்களுக்கும் முன்னோ
தோட்டத் தொழிலாளர்
மரக் கரி
டியாகவும் வழிகாட்டியாகவும் பல காரியங்களை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தாயகம் திரும்பியத் தொழி
லாளர்கள் மத்தியில் பல தொ
ழிற்சங்கங்கள் இருந்தாலும் அவை ஆரம்பத்தில் அவர் களுக்கு பல நன்மைகளை செய்துக் கொடுத்துள்ளதை மறுக்க முடியாது.
கம்பளி வழங்குதல், குடை வழங்குதல், மருத்துவ வசதி, சம்பளத்தில் உயர்வு, Lfმნofმ அட்வான்ஸ் போன்ற பல நன் மைகள் செய்துக் கொடுத்தி ருக்கின்றன.
இன்றைக்கு அவற்றுள் பல
பிரிவினைகள், கருத்து வேறு பாடுகள், சுயநலம் போன்ற வற்றால் ஒன்று திரண்டு
போராடி எதையும் பெறமுடி யாத நிலை.
முதன் முதலில் ‘சாவுக்கு" உதவி செய்யும் நோக்கோடு ஆரம்பிக்கப் பட்டது சாரதா கலா மன்றம். யாரும் மரணம டைந்தால் சவக்குழி வெட்டிக் கொடுத்தல் போன்ற உதவிகள் செய்யப்பட்டது.
கோவில் கமிட்டிகள் உரு வாக்கப்பட்டு கோவில் கட்ட உதவிகள் செய்துள்ளது.
 
 

ஜ"டுன் 983
களின் குடியிருப்புகள்
a
விளையாட்டுச்சங்கம் அமைய இது துணையாகஇருந்தது நிர் வாகத்தின் உபகரணங்கள் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
தொழிற்சங்கப் பிரச்சனைஒத்துழைப்பு இன்மை காரண மாக இச்சங்கம் செயலிழந்தது.
இந்த மாநிலத்தில் குடிப்பெ யர்ந்து கன்னட மொழியின்சமூக, கலாச்சாரத்திற்கு மாறிக் கொண்டு போகும் தாயகம் திரும்பியோர்கள் மத்தியில்
டீயெஸ்ஸார்’
தமிழ்மொழி உணர்வு பற்று தலை ஏற்படுத்த வேண்டிய தன் அவசியம் கருதி தமிழ்ச் சங்கம் ஒன்று உருவாக்கப்பட் டுள்ளது.
தாயகம் திரும்பியோர்களுக் கென சிலோன் ரிம்பார்ட்டி யேட் மல்டி பர்போஸ் கோப்ப ரேடிவ் சொசைட்டி (பெல்லாரி டி.கே) என்ற பெயரில் பல நோக்கு கூட்டுறவு சங்கம் ஒன்று உண்டு. இதுஆரம்பித்த போது ஐ.என்.டி.யூ.சியின் சக்தி வாய்ந்த தாக இருந்தது. அதனால் அதைச் சேர்ந்தவர் கள் இதன் முக்கிய அங்கத்தி
னர்களாக இரு ந் தா ர் கள். இதன் தலைவர் மோகனதாஸ் செட்டி என்ற கன்னடத்த வரே.
இந்த சங்கத்தால் இது வரை தாயகம் திரும்பியோருக்கு எந்த பயனும் இல்லை. அதன் அலுவலகத்தில் தொங்கிய போர்ட்கூட இப்போது இல் லை. ரூ. 1 லட்சத்து 5000க்கு இதன் சொத்திருக்கும், 8 வரு டங்களில் (1983யில்) 15,000 லாபம் காட்டப்பட்டது. இப் போது அதை நிருவகிப்பவர் களின் "லாபம்’ பெறும் நிறுவன மாகவே அது இருக்கிறது.
மொழிப்பிரச்சனை
பேச்சளவில் கன்னடத்தை யும் துளுவை நன்றாக கற்று ச ர ள மா க பேசுகிறார்கள். கொங்கணி, மலையாள மொழி களையும் சிலர் பேசப்பழகி யிருக்கிறார்கள்.
முதலில் வந்த காலத்தில் இவர்கள் ரொம்பவும் கஷ்டப் பட்டிருக்கிறார்கள். மொழிப் புரியாத இந்த ஊருக்கு வந்து விட்டோம் எப்படித்தான் வாழ போகிறோமோ என்று கண்ணிர் விட்டதாகவும் சிலர் தெரிவித்தனர். (அவர்களே இன்று அங்குள்ளவர்களுக்கு முன்னோடியாகவும் விளங்கு கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது) மொழிபுரியாது திண் டாடி இருக்கிறார்கள். கடைக்கு சென்று பொருட்கள் வாங்க சிரமப்பட் டி ரு க் கி றா ர் கள். பொருட்கள் வேண்டுமென் றால் வீட்டிலிருந்து பொருட் களை எடுத்துக் கொண்டு போய் காட்டி வாங்கி இருக் கிறார்கள்.
ஆரம்பத்தில் பேசும் போது இவர்களுக்கும் உள்ளுர்காரர் களுக்கும் அர்த்தம் புரியாத அர்த்தத்தை அனர்த்தமாக புரிந்துக் கொண்டு "விவகாரங்" களுக்குள்ளாகிய கதை கள் ஏராளம் உண்டு.
இப்போது உள்ளுர்வாசிக ளோடு மட்டுமல்ல தத்தமக் குள்ளேயே தமிழ் தேய்ந்து கன்னடமே ஒலிக்கத் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
(10-ம் பக்கம் பார்க்க)

Page 9
(p)s 86
(f(Ob
கலைக்டர் ஆபீஸ்"க்கு வந்
ததுமே கழுதை கத்தியது. கழுதை கத்தினால் நல்ல சகு னம் என்று சொல்வார்கள்.
அப்படி என்றால் இன் றைக்கு நான் போட்ட "லோன், னுக்கு முடிவு தெரிந்துவிடும்.
அப்பா எத்தனை நாள்? எத்தனை மாதம்? எத்தனை வருடம்? இந்த லோனை வாங் குறதுக்கு”
நானும் இந்த நாட்டுக்கு அகதியாக வந்து ஏழு, எட்டு வருடங்களாகப் போகிறது.
எனக்கும் வயசு நாற்பது நாற்பத்தைந்து ஆகப் போகி றது பெண்டாட்டி, ஆறெழு பிள்ளைகள். மூத்த இரண்டும் பெண்பிள்ளைகள். கல்யாணம் செய்கிற வயசிலே இருக்கின்
ങ്ങT.
இவங்களை வைத்துக்கொண் டு ஏழு, எட்டு வருடமா பட்ட பாடு, சொல்லி மாளாது. உங் கள் வீட்டு கஷ்டமா? எங்கள் வீட்டு கஷடமா?
என்றைக்கு இந்தியாவுக்கு பாஸ்போர்ட் வாங்கினோமோ அன்றைக்கே சனியன் பிடித்து விட்டது.
வாயை கட்டி, வயிற்றைக் கட்டி சம்பாதித்தது கொஞ் சமா? நஞ்சமா? பாஸ்போர்ட் டுக்கு மனுபோட்டு 9عهI 60D 6ت வாங்கி, வீசா எடுத்து, பர்மிட் டுக்கு போட்டு வாங்கி வருகிற தற்குள்ளே போதும் போதும் என்றாகி விட்டது.
அட அதுதான் போகட்டும். அங்கே இருந்து, அப்படி இப் படி என்று கொண்டு வந்ததை யாவது வைத்து காப்பாற்ற வேண்டுமே?
நகை நட்டு, வெங்கல பாத்தி
ரங்கள், கொண்டுவந்த ரூபாய்,
காசு பணம். எல்லாம் அழிந் துப் போய் விட்டது.
அது மட்டுத்தானா?
வந்த ஆறு மாதத்தில என் அப்பாவும் இறந்துப்போய்விட் டார். அதே ஏக்கத்திலே என் அம்மாவும் படுத்ததுதான். இரண்டு மாதத்திற்கு முன் னாலே அவர்களும் கண்ணை மூடி வி ட் டா ரீ க ள். போன மாதத்தில் என் கடைசி மகனும் வயிற்றுக் கடுப்பிலே போய் விட்டான்.
இவர்களுடைய நோயுக்கும் நொடிக்கும் அழித்தது தான் மிச்சம். செத்துப் போய் விட லாம் போல இருக்கிறது.
ஏன் இந்த ஊருக்கு வந் தோம்? எனக்கு இந்த ஊரே தெரியாது. நான் சிலோனிலே பிறந்தவன் எங்க அப்பாவும், அம்மாவும் இங்கே பிறந்தவர் கள். அந்த ஊரிலே வந்து கல் யாணம் செய்துக் கொண்டார்
6.
அப்போதே நான் தலை யிலே அடித்துக் கொண்டேன். *வேண்டாம்பா இந்த ஊருக்கு” என்று.
அவரோ, "செத் தாலும் பொறந்த மண்ணுலத்தான்
சாகணும்' என்று விட்டார்.
"இனியும் இந்த சிங்களப்பல
$26ii (მხ6ს இருக்கப்படாதுடா. பெண்டு புள்ள கள வச்சுக் கிட்டு, உசுரவிட்டு கிட்டு
எதுக்குடா வாழனும்? நம்ம நாடுமாதிரி ஆகுமடா" என்று சொல்லிவிட்டார்.
எப்படியோ மூட்டை முடிச்சு களை கட்டிக்கொண்டு வந்து விட்டோம்.
வந்து விட்டதற்கு என்ன! ஒரு மண்ணும் புரியவில்லை. என் அப்பாவும் அம்மாவும் கூட சின்ன வயதிலே இங் கிருந்து போனவர்கள். அத னால் அவர்களுக்கும் எதுவும் தெரிய வில்லை.
 

வாழ்வு
இங்கே என் சிற்றப்பனை நம்பித்தான் வந்தோம். என் அப்பா சிலோனுக்கு வரும் போதெல்லாம் எங்களுக்கு நிலம், வீடு எல்லாம் இருந் திருக்கிறது. ஐம்பத்தியிரண் டிலே, மண்டபம் கேம்ப் மூடு வதற்கு முன்னாலே கூட என் அப்பா ஒரே ஒரு முறை இங்கு வந்து விட்டுப் போய் இருக் கிறார். அப்போ தெல்லாம் இருந்திருக்கிறது. அதுக்கு பின் னாலேயும் என் சிற்றப்பன் கடிதமும் போட்டுக்கொண்டு தான் இருந்தார். என் அப்பா வும் நானும் பணமும் அனுப்பிக் கொண்டுத்தான் இருந்திருக் கிறோம்,
இங்கே வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது-சிற்றப்பன் அனுப்பியப் பணத்திற்கும் ஒன் றும் செய்யவில்லை. இருக்கிற தையும் விற்று தின்று விட்டார் என்று.
அந்த ஏக்கத்திலேதான் என் அப்பா படுத்தவர்.
பிறகு ஊரிலே எப்படியோ பஞ்சாயத்தை கூட்டி பேசிய பிறகுதான் இருந்ததில் ஒரு மூன்று குழி நிலம் கொடுத்தார்.
தேனுTரன்'
இப்போது அந்த காடுதான் மிச்சம். அதுதான் இப்போது என் குடும்பத்திற்கு சோறு போடவேண்டும்.
ஆனால் மழை பெய்யாமல் தண்ணிர் இல்லாமல் அது எப் படி சோறு போடும்?
கேணியை
வெட்டினால் போதும்.
அதோடு ஒரு
ஆயில் என்ஜினும் பூட்டிவிட்
டால் கவலையே இல்லை.
அதற்குத்தான் இந்த படாத பாடு. இந்த லோனை வாங்கி விட்டால் போதும்.
அடே அப்பா எத்தனை முறைதான் இந்த கலெக்டர் ஆபீஸ்"க்கு வந்து வந்து போவது. பஸ்ஸாக்கும் டீ செல வுக்கும் ஒரு தொகை செல வழித்தாகி விட்டது,
சிறுகதை
அகதிகள் லோனுக்கு மனு போட்டு பலவருடமாகப் போகி றது, எனக்கு இந்த லோன் விஷயம் அதுக்கு மனு போடு வது பற்றி எல்லாம் ஒன்றும்
தெரியாது.
எங்கள் ஊருக்கு ஒருவர் வந்தார். அகதிகளுக்காக ஒரு சங்கம் இருக்கிறதாக சொன் னார். அதுக்கு ஒரு தலைவர் இருப்பதாகவும் சொல்லி அவரி டம் அழைத்துச் சென்றார்.
அவரும் என் பாஸ்பேர்ட், குடும்பக்கார்டு எல்லாவற்றை யும் வாங்கிக் கொண்டு மனு போட்டார். அவருக் கும் எவ்வளவோ கொடுத்து தொ லைத்து விட்டேன்.
வருடம் என்னவோ ஏழு ஆகிவிட்டது லோன்தான் இன்னும் கிடைத்தபாடில்லை,
இந்த முறை கண்டிப்பா லோன்பில் கையிலே கிடைத்து விடும் என்று சொல்லி இருக்கி றார்.
எனக்கு நம்பிக்கைதான் இன்றைக்கு எல்லாமே நல்ல சகுனமாகத்தான் இருக்கிறது.
ராத்திரி கூட ஒரு நல்ல கனவு. கனவிலே பணம் கட்டு கட்டா வாங்கிற மாதிரி. சில்ல ரையை கண்டால் தரித்திரம் 6T6ö p சொ ல் வா ரீ க ள், நோட்டை கண்டால் உடனே பணம் கிடைக்குமாம்,
ஆபீஸ்
பத்து மணிக்கு
மேலேதான்.
நான் தேரத்துடன் வந்துவிட்
GSL6ör. என்னைப் போல
சிலோன் காரர்கள், பர்மா
காரர்கள் வந்து இருந்தார்கள் - லோன் வாங்கவும், மனு போட வும்,
ஆபீஸ்"க்கு முன்னாலே கொஞ்சம் தள்ளி இருக்கிற புளி யம் மரத்தடியிலே போய் உட் கார்ந்தேன். அங்கேயும் நிறை யப்பேர் இருந்தார்கள்.
அதிலே தலைவரிடம்லோன்
விசயமா கொடுத்திருந்த இரண் டொரு மு கங் கள் தெரிந்தன.
(10-ம் பக்கம் பார்க்க)

Page 10
1 O
Dé56 bge
இந்திய .
(5-ம் பக்கத் தொடர்ச்சி)
குறித்து 1964லிலும் 74லிலும் இலங்கைக்கும் கும் ஒப்பந்தங்கள் ஆயின (இப் போதுள்ள தொகைப்படி 8 லட்சம் ஆகும்)
இந்த ஒப்பந்தப்படி 8 லட்சம் பேர்களை இந்தியா எடுத்துக் கொள்வதென முடிவானது. 1984ஆம் ஆண்டு வரையில் 4,59,327 பேர்கள் அடங்கிய 1,15,400 குடும்பங்கள் இந் தியாவிற்கு திரும்பியுள்ளன.
இவர்களின் 90,221 குடும் பங்கள் தமிழகத்திலும், 4992 குடும்பங்கள் தென் மாநிலங் களான கர்னாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் குடி யேற்றப்பட்டுள்ளனர்.
இது தவிர 1983 யில் இலங் கை நடந்த இனக்கலவரத் திற்கு பின் அகதிகளாக அலச் வந்துக் கொண்டிருக்கிறார்ல்பி, இதுவரை கடல் மர்க்கமாகவும், விமானம் மூலமாகவும் சுமார், 1.25 லட்சம் அகதிகள் இந் தியா திரும்பியுள்ளார்கள்.
இவர்களுக்கு தமிழ் நாட்டில் 17 முகாம்கள் அமைக்கப் பட்டு துயர் துணிப்பு அளிக்கப பட்டுவருகிறது.
(அரசு வெளியீடுகளிலி ருந்து திரட்டப் பட்டது.
(8-ம் பக்கத் தொடர்ச்சி)
கலாச்சாரம் பழக்கவழக்கங்கள்
திருமண அழைப்பிதழைக் கூட கன்னட மொழியில் அச் சிடும் நிலையில் இருக்கிறார் கள் (இங்கு தமிழ் அச்சகம் இல்லாத சூழ்நிலை கூட பிற மொழியில் செயல்படும் நிர்ப் பந்தத்தை உருவாக்குகிறது . )
இங்கு வந்து வாழ வேண் டிய நிர்ப்பந்தம் இவர்களை இப்பகுதி மொழியையும் கலாச்
சாரத்தையும், பழக்கவழக்கத் யும் இலகுவாகப் பின்பற்ற வைத்திருக்கிறது,
இத்தியாவுக்
அளவிக்கு இந்த
குழல் கூட உடை ,
நம்மை பய
88ல் ஹேலி வால் நட்சத்தி ரத்திற்கு சமமான பிரசித்தி பெற்றுள்ளது எய்ட்ஸ் நோய்.
தமிழகத்தில் "எ ய் ட் ஸ் நோய் கண்டுபிடிப்பு’ என்ற செய்தி பலருக்கு அதிர்ச்சியை யும், வேதனையும் உண்டாக்கி உள்ளது. மனித இன த்  ைத ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பிளேக், காலரா, மலேரியா, பெரியம்மை, டைபாய்டு, ஜான் டிஸ் போன்ற பலவிதமான நோய்கள் தாக்கி லட்சக்கணக் கான உயிர்களை பலிக்கொண் டுள்ளது. விஞ்ஞானத்தின் அடி யொற்றி நடைபோடும் மனித
வாழ்க்கையின் நிர்பந்தம் சிறுபான்மையினராக சென்று வாழும் இந்த மக்களை, உள் ளூர் வாசிகளைவிட விரைந்துக் கற்றுக கொள்ளும் திறமை, அறிவாறறல், ஊக்கத்தை இவர்கள் பததியில் ஏற்பட்டுள் ளது. இந்த நிர்ப்பந்தம் சிறு பான்மையோர் பெரும்பான் மையோடு போட்டி போடக் கூடிய நிலையில் வளர்ச்சி பெறவைக்கிறது. இதை தாய கம் திரும்பிய மாணவர்கள் நிரூ பித்திருக்கிறார்கள் - தாயகம் திரும்பியோர் அவர்களை விட உலகநோக்கிலும், விஷயஞா னத்திலும் முன்னணியில் நிற் பதை காணக்கூடியதாக இருப் பதை அவர்களே ஒப்புக்கொண்
டிருக்கிறார்கள். அவர் ள் இவர்
களைப் பின்பற்றி - வழிகாட்டி யாக 'பயன்படுத்தக் கூடிய மாற்றம் இருப்பது குறிப்பிடத்தக்கதாக இருப்பது அறியவருகிறது.
வாழ்க்கை நிர்ப்பந்தம் மட்டு மல்ல; வாழும் இடத்தின் وسJb6ODL வாழ்வியல் முறையில் கன்னட
மக்களை பின்பற்றும் நிலைக்கு
தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
(அடுத்த இதழில் முடியும்)
 

வாழ்வு
ஜூன் 986
குலத்திற்கு தவிர்க்க முடியாத தடைகள் ஏற்படுவதில் ஆச்சர் யம் ஒனறுமில்லை.
HTLV || வைரஸ் கிருமி
Accquited immuno defecency Syndrome 6T 6õT Ufssör சுருக்கமே “எய்ட்ஸ்” (AIDS) ஆகும். 1980 ஆண்டு முதன் முதலில் தாக்கியது 85-ல் ஜாக் ஹட்ஸன் என்ற பிரபல ஆங் கில நடிகர் இந்நோயால் பதிக் கப்பட்டு மரணமடைந்த பிறகு தான் உலகப் புகழ பெற்றது!
“எய்ட்ஸ்” என்ற கொடிய நோய் முதல் முதலாக அமெ ரிக்காவில் 1981 கண்டு பிடிக் கப்பட்டது. ஆயிரக்கணக் கான மக்கள் இந்நோயால் அவதிப்படுகிறார்கள் என்ற உண்மை உலகையே பரப்பர புக் குள்ளாக்கியது. எய்ட்ஸ் நோய்க்கு முக்கிய காரணமான எஸ்.டி.எல் வி. 111 என்ற நுண்கிருமி ஆப்பிரிக்காவின் காட்டில் உள்ள பச்சை இனக் குரங்குகளிடம் காணப்படுவ தாக ஆய்வாளர்கள் கூறு கின்றனர். மனிதனுக்கு இ க் கிருமி எப்படி தொற்றியது என் பது தெரியவில்லை.
ஏன் வருகிறது ?
*எய்ட்ஸ்” நோய் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக் தியை அழித்துவிடுகிறது, இது தொற்று நோய் அல்ல. விபச் சாரம், ஓரினச்சேர்க்கை. முறை யற்ற உடலுறவுப் பழக்கங்கள், போதைப் பொருட் களு க் கு அடிமை போன்ற காரணங் களால் 'எய்ட்ஸ்" வருகிறது.
எச்சில் விந்து முதலியவை களில்தான் இக்கிருமிகள் அதி கம் காணப்படுகிறது.
எய்ட்ஸ் நோய் உள்ளவர்
களிடம் உறவு வைத்து கொள்
பவர்களை இந்நோய் கண்டிப் பாக பிடிக்கும் இந்நோய் கிருமி கள் உள்ளவர்களின் குழந்தை களையும் இந்நோய் பிடிக்க வாய்ப்புகள் அதிகம். எச்சில்
விந்து முதலியவர்களில்தான்
இக்கிருமிகள் அதிகம் காணப் படுகிறது. அமெரிக்காவில் தான் இந்நோய் கண்டவர்கள் அதிகம். இங்கு போதை மருந்து களும் கூடா ஒழுங்குகளும் தலை விரித்து ஆடுகின்றன.
இந்நோய்கிருமிகள் உடலில் காணப்பட்டால் உடனே அவர் கள் எய்ட்ஸ் நோயால் பீடிக்கப் பட்டவர்கள் என்று பொருளா காது. இக்கிருமி செயல்வடிவம் பெறும் போதுதான் நோ ப் பிடிக்கும். சமீபத்தில் தமிழகத் தில் ஆறு பெண்களிடத்தில் இந்நோய்கிருமிகளான அறிகுறி கள் தான் தென் பட்டுள்ளன 6了6öT தெரிவிக்கப்படுகிறது. இவர்களை நோய் பீடித்துள்ள தாக சான்று அல்ல. எந்தவகை நோய்க்கும் உடலில், ஓர் நோய் எதிர்ப்பு கிருமி உண்டா கும். அவ்வகையான எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு கிருமி இந்த ஆறு பெண்களிடம் காணப்படு கிறது. அவ்வளவுதான். நோய் பீடிப்பின் எந்த அறிகுறியும் இவர்களிடம் காணப்பட வில்லை. ஏதாவது அறிகுறி காணப்பட்டால் ஒழிய நாம் நோய் தாக்கத்தை உறுதி செய்ய இயலாது என்கிறார், பால்வினை நோய்களுக்கான அரசின் ஆலோசகர் டாக்டர் பார்கவா.
6T-6) ஆராய்ச்சி
எய்ட்ஸ் நோய் பற்றி ஆராய உலகெங்கனும் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன. HTLV ! கிருமிகளை பற்றிய ஆராய்ச்சி யில் ஜப்பானியர் வெற்றி கண் டாலும் நோயை கட்டுப்படுத்து வதில் முன்னேற்றம் காணவில் லை. நமது நாட்டில் புனேவி லும், வேலூரில் உள்ள கிருத் துவ மருத்துவ கல்லூரியிலும் (CMC) ஆராய்ச்சி நிலையங் களை ஏற்படுத்தி நோய்களை ஆராய்ச்சி செய்கிறது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (CMR).
(11-ம் பக்கம் பார்க்க)

Page 11
Ptoleu o B 6
LfDd65 shs un
(10ம் பக்கத் தொடர்ச்சி)
"எய்ட்ஸ் நோய்க்கு இது வரை மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை. மரணம் நிச்சய மானது.
எய்ட்ஸ் அறிகுறிகள்
உடலின் எடை குறையும்; சோர்வு, பசியின்மை, அசதி ஆகியன தோன்றும், காய்ச் சல், இருமல், வயிற்றுப்போக்கு போன்றவை தொடர்ந்து இருக் கும். உடலில் இடுப்புக்கு கீழோ, அக்குளிளிலோ கரை யாத கட்டி அல்லது வீக்கம் ஏற்படும்.
போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள்
சீரழிவின் பிறப்பிடமாக திக ழும் அமெரிக்காவில் 5கோடிக் கும் மேலானவர்கள் போதை மருந்துகளுக்கு அடிமையாகி யுள்ளனர். இந்திய இளைஞர் களையும் இந்த போதை மருந் துகள் அடிமையாக்கியுள்ளது சென்னை, பம்பாய், கல்கத்தா டெல்லி போன்ற முக்கிய நிக ரங்களில் உள்ள கல்லூரி மான வர்களிடையே போதை மருந்து
கள் நடமாடுவதை காணலாம்.
சென்னை நகரின் எல்லா
மூலைகளிலும் போதை மருந்து கள் விற்கப்படுகின்றன.
போதை மருந்துகளுக்கு அடி மையான வர்கள் Gh a too) fft up too) PD யற்ற பால் உணர்வு குற்றங் களைச் செய்கின்றனர், எய்ட்ஸ்
நோய் பரவுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்;
அமெரிக்காவில் ஐயாயிரத்
துக்கும் மேற்பட்டவர்கள் இந் நோயால் தாக்குண்டு இறந்து விட்டனர். 13,600 தபர்கள் இந்நோயால் மெல்லச் செத்துக் கொண்டுள்ளனர். அமெரிக்கா இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் பரவி யுள்ள இந்த நோய் இந்தியா வில் நுழைந்துள்ளது.
இந்திய அரசு மருத்துவ மனைகளில் உள்ள டாக்டர் களின் கவனக் குறைவால்
நிறையப்பேர் சாகின்றனர்.
நன்கு "ஸ்டெரிலைஸ்" செய்
யப்படாத ஊசிகள் மூலம் எல்ட்ஸ் பரவுகிறது
முறைகேடான முறையில் பால் உறவு கொள்வதால் எய்ட்ஸ் வருகிறது.
போதை மருத்துகளுக்கு அடிமையானவர்களை பெரு
மளவில் எய்ட்ஸ் நோய் தாக் குகின்றது,
எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கிடையாது, சாவு நிச்சயிக்கப் பட்டது!
இது ஒரு தொற்று நோய்
கிடையாது!
s:--
aurarsfes6fr.
(4-ம் பக்கத் தொடர்ச்சி)
திர நாடு’ காணவேண்டும் என்ற ஒரே உண ர் வுட ன் செயல்படவும், t இனியாவது நமது தவறுகளை திருத்திக் கொள்ளவும் முற்பட வேண் டும்” என்றுதான் அவர் குறிப் பிட்டுள்ளார்.
இப்போது சொல்லுங்கள் இயக்கத்துக்கு எதிராக வேலை செய்தார், தமிழ்மக்களை பிரித் தார், இலங்கை அரசுக்கு தக வல் அனுப்பினார் என்றெல் லாம் குற்றம் சொல்லி அவரைக் கடத்திச் சென்றிருப்பது நியா யம் தானா?
அந்தக் கட்டுரையில் கடத் தல், களவு, உட்பட பல குற் றச்செயல்கள் அகதிகளிடம் இருப்பதை அவர் கண்டித்துள் ளோர். நடைமுறை வாழ்க்கை யிலும் அப்படியேதான் வாழ்ந் தார். அதனால் தான் அவர் மீது எரிச்சல் கொண்ட பகை மை கொண்ட உண்மையான குற்றவாளிகள் அவருக்கு எதி ராக விடுதலை இயக்கங்களி டம் முறையிட்டிருக்க வேண் டும். இதை நம்பிக்கொண்டு ஒரு விடுதலை இயக்கம் இவ் வாறு செய்வதென்பது உண் மையிலும் தமிழ் ஈழ விடுத லைக்கு பயன்தராது (சகோத y f g SD *Oluf 607 ar 6bT Gsar 6th இதே இயல்பு கொண்டவர். ஆதலால்தான் அவருக்கும் எதிரா க குற்றம் கூறி இருக்கி
றார்கள்)
எனவே விடுதலை இயக்கங் கள் என் கன வரை விடுதலை

றுவாழ்வு
1.
சிறுகதை .
(9-ம் பக்கத் தொடர்ச்சி) அதிலே ஒருவர் என்னை
பார்த்து விட்டர்; வாங்க வாங்க இப்பத்தான் வர்றிங் களா? தலைவர பார்த்தீங்
*களா? என்று ஆரம்பித்தார்.
நானும், "தலைவர பாக்க லிங்க. நானும் நேர பஸ்ஸை விட்டு இறங்கி நேரே இங்கே யே வந்துட்டேன்’ என்றேன்.
"உங்க லோன் விசயம் எந்த
அளவுல இருக்குது" என்று இன்னொருவர் கேட்டார்.
‘என்னமோ போங்க. இன் னைக்கு பில்லு கிடைச்சுடும் னார். எப்படியோ தெரியலே எத்தனை வாட் டிதான் அலை யறது. மூணு நர் ஓவருஷமா இதுக்கே ஒரியாட்டமா போ யிடுச்சு’!
*இந்த ஒபீஸிலேயும் இது ஒரு எழவா போயிடுச்சு. ஒன்னை யும் ஒழுங்கா வாங்கிக்க முடி ti j6u). எதைக் கேட்டாலும் ஒழுங்கா பதிலும் சொல்லமாட் டேங்கிறான். நாயை வெரட் டுற மாதிரி வெரட்டுறான்” என் றார் ஒருவர்.
அவர் முடிப்பதற்குள் இன் னொருவர் சொன்னார்.
எல்லாத்துக்கும் புரோக்கர் காரணம்.
இந்த பயலுகங்கத்தான் எல்லாம் இவன்க
செய்யவேண்டு மென்று கேட் கிறேன்
ரெஜினா திருச்சி-21,
பாராட்டு
தாயகம் திரும்பிய தமிழ் மக்
களின் அளவிலா துயரங்களை அனுபவிக்கும் கொடுமைகளை
துணிவோடு எடுத்துக்காட்டி,
அனைவரின் மனதையும் நெகி ழச்செய்யும் மக்கள் மறுவாழ் வுக்கு எனது ம ன மார் ந் த பாராட்டுகள் .
பிைரமானந்தன்
மேல்தட்டப்பள்ளம்
ளாலத்தான் குட்டிச் சுவர் லோன் எடுக்க வர்ரவணுங்க எல்லாம் கொஞ்சநாள்ள புரோக்கர் ஆயிடுறான். லோ துணுக்கு மனு போட்ட வுடன் சட்டுபுட்டுனு முடிச்ச த் தானே. அதுவே வருஷக் கணக்காயிடுது. அதுக்குள்ள லோன் வாங்க வரவனுக்கும் எல்லாம் அத்துப்படி, விடிஞ் சா நாலு கேஸ புடிச்சிகிட்டு கலைக்டர் ஆபீஸ்"க்கு வந்துடு றானுங்க” என்றார்.
(அடுத்த இதழில் முடியும்)
இவர்களைப்பற்றி.
திரு. பன்னிர் செல்வம் 1973 யில் தாயகம் திரும்பி நீலகிரி, கூடலூர் லட்ட, சூண்டி பகுதி யில் குடியேறியவர்.
1986 பிப்ரவரி 20-ம் தேதி நடந்த உள்ளூராட்சி தேர்த லில், கூடலூர். ஒவேலி பேரூ ராட்சியின் உறுப்பினர் ஒருவ ராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்,
ஒவேலி பேரூராட்சி துணை
தலைவர் தே ர் த லி லு ம் துணைத்தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள இவர்
பதுளை தெமோதர தோட்டத் தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த வர். எட்டாம் வகுப்பு வரை படித்த இவர் இங்கு வந்து தி. மு.க.வின் சூண்டிப்பகுதியின் செயலாளராகி அப்பகுதி மக்க ளுக்காக போராடி - சிறைவாச மும் அனுபவித்திருக்கிறார்.
O
" திரு. ஹரிதாஸ் துறையூர் ஊராட்சி ஒன்றியதைச்சேர்ந்த கண்ணனூர் ஊராட்சி மன்றத் தலைவராக தெரிவு செய்யப் பட்ட தாயகம் திரும்பியோ ராவார் ፭
Ο
* திரு. கணேஷன் துறையூர்
ஒன்றியத்தைச் சேர்ந்த ஆத
னுரர் ஊராட்சி ஒன் ப்ய உறுப் பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தாயகம் திரும்பியோராவார்.
Editor & Publisher, T. S. RAJU, south Gangai
aminan koi 2nd S feet,
Mi3 dras 60 9 4. i F : inted:
L. S. Srinivasan at Jai Kalidas ress, 29, B. E. Colony,
4th Street, Madras-24.

Page 12
Regd. No. R. N. 42556/83
Regd No. FN'MS
m
- . . . . .
தாயகம் திரும் பியோரின்3 ○ジー
Gal 55 f'Tal- L
தொடர்பு முகவரி:
அஞ்சல் பை எண், 5560 சென்னை-600094
அரசின் தகவல் :
தாயகம் திரும்பியோர்-அ
மறுவாழ்வு
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முடிய 1 லட்சத்து 25
ஆயிரத்து582 பேர் இலங்கை யிலிருந்து இந்தியாவிற்கு அக
திகளாக வந்துள்ளனர் என் றும் இவர்களில் 31 ஆயிரத்து 447 பேர் ஆதரவற்ற நிலை யில் உள்ளதால் அரசு முகாம் ஆளில் சேர்க்கப் பட்டுள்ளனர் என்றும் சட்டப் பேரவையில் காக்கல் செய்யப்பட்ட அகதி கள் மறுவாழ்வு மானியக் கோரிக்கை தொடர் பா ன நொள்கை விளக்கக் குறிப்பு தடிறியுள்ளது.
1988 ஜாலை மாதம் ஏற் பட்ட வன் செயல்களைத் தொ டர்ந்து அகதிகள் இலங்கையி லிருந்து இந்தியாவுக்கு வரத் தொடங்கினர். 5-8-88 முதல் இராமேஸ்வரத்தில் இவர் களின் வருகை பெருமளவில் அதிகரித்தது என்றும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டி ருந்தது.
தொடக்கக்கட்டத்தில் இந்த அகதிகள் மண்டபம், கொட் டப்பட்டு முகாம்சனில் அணு மதிக்கப்பட்டனர். இவை தற் காலிகமாக ஏற்படுத்தப் பட் டவை, ஆனால் பல்லாயிரக் கனக்கில் எந்துள்ள அகதி கள் அனைவருக்கும் இந்த முகாம்களில் உள்ள இடவசதி போதுமான காக இல்லை என் பதால் இவர்கள் பல்வேறு மா
துயர்துடைப்
வட்டங்களில் ஏற்படுத்தப்பட்
டுள்ள தற்காலிக முகாம்களுக்கு மாற்றப் பட்டுள்ளனர். இவ் வாறு மொத்தம் 171 தற்காலிக முகாம்கள் மாநிலத்தின் பல் வேறு மாவட்டங்களில் அமைக் கப்பட்டுள்ளன, இட நெருக் கடியைச் சமாளிக்க மத்திய அரசு மண்டபம் முகாமில் 300 தற்காலிக குடியிருப்புகளும், 1800 நிலையான குடி இருப்பு களும் கட்ட நிதியுதவி அளித் தது. கொட்டப்பட்டு, தூத் துக்குடி ஆகிய இரண்டு இடங் களிலும் ஒவ்வொரு இடத்தி லும் 100 நிரந்தரக் குடியிருப்பு கள் கட்ட அனுமதி அளித்துள் ளது என்று அந்தக் குறிப்பு கடறயது.
முகாம்களில் அகதிகளுக்கு கீழ்க்கண்ட உதவிகள் வழங் கப்படுகின்றன என்று அந்தக் குறிப்பு தெரிவித்தது.
1. இலவச தங்குமிடம், 2. மாதம் ஒன்றுக்கு வயதுவந்த வர்களுக்கத் தலா ரூ. 55 என் ற விகிதத்தில் செலவுத்தொகை TTé Lr TagL" பட்டுவாடா, 8. நாள் ஒன்றுக்கு வயது வந் தவிர்களுக்கு தலா 100 கிராம் Intrம் குழந்தைகளுக்க சலா 800 கிராம் என்ற ஒளவில் கிலோ ஒன்றுக்கு 57 எ சா OtuOOMtuTOt OHHTtS S TY S 0 K சரியாக ஒள் வொரு சடும்பத்
 

(C) 702
MAKKAL MARUWAZHW () ()
---ே-ெ:
' '5-\ \ \
//
* *リーでも○
- - ר ורץ דן חי-רם
S.
கதிகளுக்கு பு உதவிகள்
திற்கும் ஏழத்தாழ 540 மதிப் பிற்கு உடைகள், சமையல் பாத்திரங்கள், பாய்கள் மற்றும் போர்வைகள், 5 இலவசமருத் துவ உதவி, சிறார்களுக்கு இல வச கல்வி மற்றும் விடுமுறை காலப் பயிற்சி,
தாயகம்
திரும்பியோர்
பர்மா மற்றும் இலங்கையிலி ருந்து தாயகம் திரும்பும் குடும் பங்களில் சொந்க நிலம் இல்லா மலும் உழைக்கும் கொண்ட இரண்டு நபர்களா வது உள்ள குடும்பங்கள் சாபத் திட்டங்களில் குடியமர்த் தப்படுகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ் வொரு குடும்புத்திற்கும் புறம் போக்கு நிலங்கள் மூன்று ஏக்
கர் வரை இலவசமாகப் பட்டா செய்து கொடுக்கப் படுகிறது விவசாயர் செய்யவும் கினறு வெ"டவும், மாடுகள். உழவுக் கருவிகள் விதைகள் முதலி பவை வாங்குவதற்கும் ரூ. 3850 வரை கடன் தரப்படுகி ዘ] Jil...
விவசாயக்கிலிருந்து வருமா நாம் கிடக்சர் காலம் வரை பார் 31 rாகங்களக்க குடும் பத்தில் உள்ள நபர்களின் எண் ணிைக்கையைப் பொறுத்து மா
தம் ஒன்றுக்கு ரூ. 40 முதல் ரூ. 150 என்ற விகிதத்தில்
|
குடும்பப் பராமரிப்பு ரொக்கத்
தொகை வழங்கப் படுகிறது. இதில் முதல் 9 மாதங்களுக்கு முழு மானியமாகவும் பிறகு உள்ள 12 மாதங்களுக்குப்பாதி தொகை மட்டும் கடனாகவும்
தரப்படுகிறது.
இவர்களுக்கு வீடு கட்டுவ
தற்கு வீட்டுக்கடனும் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு மற்றும் காய்கறி பயிரிடுவது போன்ற உபதொழில்கள் செய்து வரு மானத்தைப் பெருக்கிக் கொள் வதற்கும் தேவையான கட்னும் வழங்கப் படுகிறது. இத்திட் திட்டத்திற்கு வழங்கப் படும் எல்லாக்கடன்களும் 8 ஆண்டு தவணைகளில் திரும்ப வசூலிக் கப்படுகின்றன என்று அந்தக் குறிப்பு கூறியது.
இலங்கையிலிருந்து தாயகம்
திரும்புவோரில் சொந்த நிலம் இல்லாமலும் ஆனால் உழவத் தொழிலில் ஈடுபட விரும்பும் குடும்பங்களில் ரூ. 5 ஆயிரத் திற்கு அதிகப்படாமல் மதிப் புள்ள பொருள்கள் கொண்டு பேரும் குடும்பங்களுக்கு கனரி யாரிடமிருந்து விவசாய நிலங் கள் வாங்கி உழவித் தொழி வில் ஈடுபட கடன் வழங்கப் கிறது. ஓர் ஏக்கர் ரூ. 2 ஆயிரம் என்ற மதிப்பீட்டில் மூன்று ஏக்கருக்கு மேற்படாத அளவு க்கு நிலம் வாங்கக் கடன் வழக் கப்படுகிறது. விவசாயக் குடிய மர்த்தும் திட்டங்களில் அமர்த் தப்பட்டுள்ளது குடு ம் பங் களுக்கு வழங்கப்படுவதைப் போலவே இவர்களுக்கும் விவ சாபக் கடன், குடும்பப் பரா மரிப்புத் தொகை வீட்டுவச திக் கடன் மற்றும் உபதொழில் கள் "செய்யக் கடன் போன்ற வை வழங்கப்படுகின்றன என் றும் அந்தக் குறிப்பு கூறியது - 0