கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.07

Page 1
v bGabi z
ஆடிகஜம்ஷேல 1988
கொத்தடிமையின்
blasf li: LL 65 u 6oCSD LTD
ஏற்பட்டுள்ளது
தாயகம் திரும்பியோர் பலர் கொடை கானல் ம  ைல யில் வாட்டில் மரங்களிலிருந்து பட் டைகளை உரிக்கும் தொழிலில் ஈடு பட்டிருந்தார்கள். டான் இந்தியா மற்றும் பல கம்பெனி களிடம் வாட்டில் மரங்களில் பட்டை உரிக்கும் உரிமங்களை தமிழக அரசிடம் பெற்றிருந்த காண்டிராக்டர்கள் கீழ் இவர் கள் இந்த பணியினை செய்து வந்தனர்.
அக் காண்டிராக்டர்களிடம் இவர்கள் கொத் தடிமையாக வைக்கப்பட்டு சொல்ல முடி யாத துன்பங்களை அனுபவித் து வந்தார்கள்
கொடைகான லில் துணை கலெக்டராக பதவி வகித்து வந்த பீர் ஜடா, தாயகம் திரும் பியோர்களான அத்தொழிலா ளருக்கு சேர வேண்டிய பாக் கியை வசூலித்துக் கொடுத்து விடுதலையும் செய்தார் (இவர் எடுத்த நடவடிக்கையின் பல
பப்பட்டதும், தற்போது இக்க பிரச்சனை முடியும் வரை வறு இடத்திற்கு மாற்றக் கூடாது
னாக இவர் இடமாற்றம் செய்
முதுகுவலி போய் திருகுவலி வந்தது போல கொடைகான லில் கொத்தடிமை வாழ்விலிருந்து மிண்ட தாயகம் திரும் பிய தொழிலாளர்கள் கொடும் மைக்கு ஆளாகிவிட்ட
6 g. பரிதாப நிலை
என சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்திருப்பதும் குறிப்பிடத்
లీతత్g)
காண்டிராக்டர்கள் தாயகம் திரும்பியத் தொழிலாளர்களை கொடுமைப் படுத்துவதாகவும் அவர்கள் பிடியிலிருந்து இத் தொழிலாளர்களை விடுவிக்க வேண்டுமென்றும் கோரி பந்து வா முக்தி மார்ச் சா என்ற சமூக சேவா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் ஒன் றை செய்ததை யொட்டி ஒரு கமிஷனும் நியமிக்கப்பட்டிருக் கிறது -
இதன் எதிரொலி, கொடை கான லில், பேரீஜம், இருபத்தி ரெண்டு, ரெட்ட போஸ்ட் ஆகிய கூப்புகளில் மரம் வெட் டும், பட்டை உரிக்கும் தொழி லாளர்கள் வாழ்வு கேள்விக் குறியாகி விட்டது-இவர்களது கொத்தடிமை வாழ்வு வெளிச் சத்திற்கு வந்தவுடன் இவர்கள் வேலையற்ற தொழிலாளர்க ளாக மாறிவிட்டார்கள்.
கொத்தடிமை வாழ்விலே, வேலை செய்துக்கொண்டே வாழ்ந்த போது பிரச்சனைத்
 
 
 
 

மக்கள்ம றுவாழ்வு
சந்தா விபரம் தனிப்பிரதி 75 காசுகள் ஆண்டு சந்தா ரூ. 10 00 விபரங்களுக்கு
மக்கள் மறுவாழ்வு சென்னை-600094
விலை 73 காசுகள் O
J (I6 r6dbl மீண்டவர் 3Fs för PTT fiāpūD Tsf Y
இதழ் 3
தீராதவர்களாக இருந்தவர்கள் வேலை இழந்த நிலையில் எப் படி இருப்பார்கள் ?
கொடிய பசிக்கும் வறுமைக் கும் ஆளாகி இருக்கிறார்கள். சில சமூக சேவா நிறுவனங் களுக்கும் சில தனிப்பட்டவர் களும் ம னிதாபத் துடன் உதவ முன் வத்தாலும் எதிர்ப்புகளுக் கும், தடைகளுக்கும் உட்படுத் தப்படுகிறார்கள்.
கடந்த 8,6, 86 அன்று ஒரு பரிதாப சம்பவம் நடைபெற் றது. வேலையற்று, பசிக்கொடு மைகளுக்குவாடும் அவர்களுக் ö町5 உணவு பொருட்கள் கொண்டு வர சென்றவர்களில் ஒருவர்- பழனிவேல் என்பவர், குங்கிலிய மரக்கட்டைகள் ஏறி வந்த லாரியில் ஏறிவந்த போது லாரி குடை சாய்ந்து அடிப்பட்டு மாண்டார்.
இவருக்கு இரண்டு குழந்தை கள்; வறுமையில் காப்பாற்ற முடியாமல் அதற்கு ஒரு மாதத் திற்கு முன் தான் ஒரு குழந்
தை இறந்தது. மரக்கட்டை t|
டன் இரத்தவெள்ளத்தில் இறந் துக் கிடந்த காட்சி எல்லோரை
பும் கலங்கச் செய்தது உணவு ,
தேடிவந்த மனிதருக்கு நேர்ந்த இந்த பரிதாப சாவு சுமார் 250 குடும் பங்களை so 60of @នានារ៉ា ளத்திற்குள்ளாக்கியது.
கொத் தடிமைக்கும், கொடி! ) வறுமைக்குள்ளாகி வாழுமி
தாயகம் திரும்பியோர் பிரச்
சனை க்கு பொறுப்பு யார்?
இலங்கையில் நாடற்ற மக்க ளாக இருந்தாலும், தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வாழ்க் கையை ஒட்டினார்கள். அன் றாட வாழ்க்கை பிரச்சனை யின்றி கொஞ்சம் நிம்மதியாக வாழ்ந்தார்கள். (குடியுரிமைப் பெற்று வத்த இங்கோ இவர் கள் வாழ்வு கேள்விக்குறியாகி விட்டது. நாடோடிகளாகி நலிந்து மடியும் இவர்கள் வாழ் வுக்கு விடிவு எப்போது ? O
விவசாயிகள் சங்கம் கண்ட னம் !
சப்-கலெக்டருக்கு கொடுக்
கப்பட்டுள்ள இட மாற்றம் கொடைக்கானல் மக்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை
யாகும். எனவே சங்க உறுப் 5 i5(కిషో கொடை வாழ் பொதுமக் க்ளே, நலம் விரும்பி
களே இக்கொடுமைக்கு எதி
ராக குரல்கொடுக்க, நட வடிக்கை எடுக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். -இவ்வாறு சிறுவிவசாயிகள் விவசாயத் தொழில ளர் 8 க்க செயலாளர் திரு ஆர். ராஜ் (7 ம் பக்கம் பார்க்க)

Page 2
upebຕໍ່ : 4 ஆடி 1986 இதழ்
ஜயவர்த்தனாவின்
புதிய மொந்தையி
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்ப தற்கு ஜயவர்தனா தந்துள்ள புதிய பிரேரணையில் சாத கமான அம்சத்தையும் பார்க்கக் கூடியதாக இல்லை. இது புதிய மொந்தையில் பழைய கள்ளை தருகின்ற செயல் தான்.
இந்த புதிய பிரேரணையிலும் மோகாண கவுன்சில்"- 'மத்திய அரசு" என்பது போன்ற அமைப்புகள் குறித்து பேசப் பட்டாலும் தமிழ் மக்களுக்கு உரிய உரிமை களை வழங்க முயல்வதாக இல்லை-தமிழ் மக்களின் - போராட்டும் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வகையில், சிறுபான்மையாக இருக்கின்ற ஒரு தேசீய இனத்தின் சுய உரிமைகள்-நலங்கள் குறித்து அக்கறை காட்டுவதாக இல்லை.
கடந்த காலத்தில் எந்த அளவிற்கு பெரும்பான்மை இனத்தின் அதிகார-ஆளுகைக்குள் அடக்கி வைத்திருந் தோ அதே அதிகார-ஆளுகை மனப்பான்மையையும் போக்கையும் தான் இந்த புதிய பிரேரணை பறைசாற் றுகிறது.
இன்றைய அரசியல் சாசனத்தின் வரம்பிற்குப்பட்டே இயங்கப் போகும் மாகாண கவுன்சில்கள் மத்திய அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டதாகவே இருக்கப்போகிறது பல்வேறுபட்ட மொழிவாரி மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்ட இந்தியாவின் மத்திய அரசு போலல்ல இலங் கையில். அங்கே மிகப் பெரும்பான்மையைக் கொண்ட சிங்களப் பிரதிநிதிகளும், மிகச் சிறுபான்மையைக் கொண்டதமிழ் பிரதிநிதிகளும்தான் அந்த அரசில் இருப் பார்கள் இங்கே எந்தளவிற்கு தமிழ் மக்களின் உரி மைகள் பாதுகாக்கப்படும்,? நலன்கள் பேணப்படும்? அதே பழைய நிலைமைதான் நீடிக்கும் என்பது உறுதி.
திருகோணமலை துறைமுகப்பகுதி எந்த மாகாண கவுன்சிலுக்கும் உட்படாது. மத்திய அரசின் அதிகாரத் திற்கு உட்பட்டதாகவே இருக்கும் என தெரிவிக்கிறது.
நில குடியேற்றம் என்ற தேசீய கொள்கை தமிழ்பிர தேசத்தில் படிப்படியாக சிங்கள மக்களை குடியேற்றம் செய்வது மட்டுமல்லாது, (விகிதாசார) ஒதுக்கீடுகளும் நடைபெறும் பட்சத்தில் தமிழ் பிரதேசம் கொஞ்சம் கொஞ்சமாக தனது பாரம்பரியம் இழக்கும் நிலை ஏற்ப
 

டும். குடியேற்ற்ம் = ஒதுக்கீடுகளைத் தொடர்ந்து நிகழக் கூடிய விகிதாசார தேர்தல் முறையும் தமிழ் மக்களை அரசியல் அனாதைகளாக்கிவிடும்.
மாகாண கவுன்சில்களுக்கு அதிக சுய அதிகாரங்கள் அளிக்கப்படும் என்று புதிய பிரேரணை சொல்கிறது. ஆனால் அக்கவுன்சில்களுக்கு என்ன மாதிரியான அதி காரங்கள் அளிக்கப்படவிருக்கிறது என்பது குறித்து நோக்கும் போது அது திருப்தி அளிப்பதாக இல்லை. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதும், ஜனாதிபதி நினைத்தால் கலைக்கக் கூடியதுமான இந்த கவுன்சில் கள் பெயரளவிலானவை தான். -
புதிய பிரேரணை: ఉ ல் பழைய கள்!
இந்த பிரேரனை தமிழ்மக்கள் கோரிக்கையை நிறை வேற்றுவதாகவோ குறைந்த பட்ட சுய உரிமைகளை யாவது தருவதாகவோ இல்லை.
தமிழ்மக்களின் எண்ணத்திற்கு-உரிமைக்கு உரிய இடம் அளிக்கப்படாத இந்த பிரேரணை இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு அளிக்குமா என்பது கேள்விக்குறி ஆயினும் பேச்சு வார்த்தைத் தொடர் வதற்கு இது வழியாக இருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையில் புதிய பிரேரணை குறித்து அலசி ஆராய வேண்டும்-சரியான தீர்வுக்கு வழி பிறக்க வேண்டும்.
விரைவில் இலங்கை இனப்பிரச்சனையை ஒரு முடி வுக்கு கொண்டு வா வேண்டும்-இலங்கை இராணுவத் தின் கொடுமைக்கு முடிவுகட்ட முயல வேண்டும்.
இராணுவத்தின் கொடுமையில் அப்பாவித்தமிழ் மக்கள் துன்புத்திற்கும், துயரத்திற்கும் உள்ளாகி இருக் கிறார்கள்.
ஜே. ஆர். அரசு ஒரு புறத்தில் தீவிரமான இரா ணுவ நடவடிக்கை மூலம் அப்பாவி மக்களை அழித்
தொழித்து வருகிறது.
வெளிநாடுகளிலிருந்து இராணுவ தளவாடங்களைப் பெற்று, பயிற்சி அளித்து, தனது இராணுவ பலத்தை பன்மடங்காகப் பெருக்கியுள்ளது. விமானங்கள் மூலம் தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசிகொல்லும் கொலைப் பாதக செயலுக்கு தன்னை உயர்த்திக் கொண்டிருக் கிறது.
எனவே இலங்கை அரசின் மனப்போக்கை-மனதில் கொண்டும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழர் கோரிக்கையை வென்றெடுக்க முயல வேண்டும்.
இந்தவேலையில் வன்முறை செயல்களைத் தவிர்க்க வேண்டும் வன்முறை செயல்களை தமிழ் போராளிகள் தவிர்த்து நிதானத்துடன் நடப்பதன் மூலம், தமது லட் சியத்தில் தாம் தெளிவாக இருப்பதை உணர்த்தவும்இந்திய அரசின் நல்லெண்ணத்தை பெறவும் உதவும். ()

Page 3
Arabenb* 86
மக்கள்
புள்ளி விபரம்
மட்டுமே அ
நடைமுறையில் பலருக்கு ம
"புள்ளி விவரம் மட்டுமே அரசின் சாதனை. நடைமுறையில் மாறுபட்டே இருக்கிறது”என்று குமுறுகிறார் கொடைகானலில்
வாழும் தாயகம் திரும்பியவரும், திரு. எம் விபூசனன் அவர்கள்.
கமூக சேவையாளருமான அவர் குமுறி எழுதியுள்ள
கடிதத்தை இங்கு பிரசுரிக்கிறோம் -ஆசிரியர்.
ஜூன் "மக்கள் மறுவாழ்வு", மே இதழில் வெளிப்பட்ட கம் பீரத்தை சற்று சரித்து விட்டது போல தோன்றுகிறது. "பால் மரக் காட்டினிலே போன்ற நேர்முக வர்ணனை கட்டுரை கள், இதர மாநிலத்தில் தாய கம் திரும்பியவர்கள் படும் சுக துக்கங்களை, அல்லது அவர்க ளின் அனுபவங்களை புரிந்து கொள்ள உதவுகிறது.
ஜூன் இதழில் 400 தாயகம் திரும்பியோர் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வசதி என்ற கட்டுரையில், 8வது பாராவில் தாயகம் திரும்பியோர் மத்தி யில் எத்தனையோ சங்கங்கள்,
அமைப்புகள், சேவைகள் ஆற்றி வந்தாலும் தாயகம் திரும்பியோர் குழந்தைகளின்
கல்வி விசயத்தில் எதுவும் செய்ததில்லை, என்று குறிப் பிட்டிருப்பது வேதனைக்குரிய
தும், அதே நேரத்தில் ஆய்வற்
றதுமாகும். ஆய்வு செய்யாத வன் பேசுவதற்கு அறுகதை அற்றவன் என்பது கற்றோர் முடிவு. எமது அமைப்பு'சிராக்” இதுவரைக்கும் நூற்றுக்கு மேற் பட்ட குழந்தைகளை - காந்தி கிராமம், பாய்ஸ்டவுன், மாத் தூர் போன்ற பாடசாலைகளி லும் வேறு சில பாடசாலைகளி லும் மாணவர்களை சேர்த்து விட்டுள்ளது. அத்துடன் தங் கும் வசதிகள் பெற்றுக்கொடுக் கப்பட்டுள்ளது. இஃது ஒன்றும் பெருமைப்படக்கூடிய ஒ ன் றல்ல; ஏனெனில் இவை சமூக சேவையில் துளி போன்றது என்றே தாங்கள் கருதுகிறோம். இது தவிர பல இடங்களில் மாலை பாடசாலைகள் இலவச
மாக நடத்தப்பட்டு வந்துள்
ளன. இவ்வாறு பல அமைப்பு கள், தனிநபர்கள் இதில் ஈடு
பட்டு வந்துள்ளனர். அவர்கள்
எல்லோரையும் புண் படுத்துவ தாக அமைந்துள்ள இவ்வித தவறுகளை தவிர்க்க வேண்டு கிறோம்.
கொத்தடிமை:
வ றுமைக்கோடு
இந்திய அரசின் உமறு வாழ்வு உதவிகள்’ என்ற மறு பிரசுர கட்டுரை புள்ளி விபரங் களால் நிறைந்து போய் உள் ளது. அரசு என்றுமே புள்ளி விவரங்களை சேகரித்து அதிலி ருந்து தமது சாதனைகளை பறைசாற்றிக்கொள்கிறது. ஆயி னும் நடைமுறை என்பது மாறு பட்டே உள்ளது இலங்கையி லிருந்து தாயகம் திரும்பியோர் கள் மத்தியில் ஆய்வு செய்துள் ள "எங்கெங்கும் அந்நியமாகக் கப்பட்ட வர்கள்’ என்ற புத்த கம் இந்த நடைமுறையை வெ ளிச்சத்திற்கு கொண்டு வந் துள்ளது.
நா ங் கள் வாழ்கின்ற கொடைக்கானல் பகுதியை எடுத்துக் கொண்டால், "கூக் கால் மறுவாழ்வு திட்டம், 180 கு டு ம் பங்க  ைள வறுமைக் கோட்டுக்கு கீழே 'புதைத்து விட்டது. இன்னும் காடுகளில் (கூப்பு) கொத்தடிமைகளாக 499 பேர்கள் உள்ளனர். 44 பேர் பற்றி தான் கொத்தடிமை என்று பத்திரிகைகள் பறை சாற்றுகின்றன. இங்கே உண்
மைகள் யூக்கலிப்ட்ஸ் மரங் களாக உயர்ந்து நிற்பதைக்
காணலாம்.
விட்டு லோனுக்கு 3 செண்ட் நிலம் காட்டு, கடன் கொடுக் கிறோம் என்று கூறுகின்றார்.

மறுவாழ்வு S
LSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL ரசின் சாதனை ! ஆனால் றுவாழ்வு கிடைக்கவில்லை !
நிலம் காட்ட அவர்களுக்கு வழி இல்லை. குட்டிச் சுவர்களாக
பல வீடுகள்
எமது அமைப்பு சில தாயகம்
திரும்பிய குடும்பங்களுக்கு வீடு
கட்ட 3 சென்ட் நிலம் வழங்கி யும், இன்னும் பலருக்கு வீடு கட்டுவதற்கான *Ꮳ 6u fr 6Ꮝir* கிடைக்கவில்லை. வருடக் கணக்கில் "இழுபறியாக உள் ளது. இவற்றையெல்லாம் கவ னத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேட்டுப்பட்டி, திருவரங்குளம், பள்ளத்து வயல் போன்ற புதுக்கோட்டை பகுதிக்கு போய் பாருங்கள். கட்டப்பட்டதாக கூறப்பட்ட வீடுகள் 5000 கிடைக்கும். அவை வீடுகள் அல்ல குட்டிச் சுவர்கள். இதை கட் டப்பட்ட வீடுகள் 5000 ஆக உள்ளது என்று யாரும் புள்ளி விவரத்திற்குள் கொண்டுவந்து பெ ரு  ைம அடிக்கலாம். ஆனால் வாழ்க்கை குட்டிச் சுவராகி” போனவர்களுக்குத் தெரியும் உண்மை புள்ளி விவ ரங்கள்.
அதிகாரிகளின் அக்கறையின்மை
தாயகம் திரும்பியோர். அக திகளுக்கு மறுவாழ்வு. துயர் துடைப்பு உதவிகள் இதுவும் உண்மைகளை புள்ளி விவரங் as t - fr a G3 s) காண்கிறது ஆனால் புள்ளி விவரங்களுக்கு அப்பால் அரசின் "பெரும் புள் ளிகள் தங்களின் ஊழல்களை மறைத்துக் கொள்கின்றனர். கரடிக்குளம், பருத்திப்பாடு காலணி, காந்திதகர் காலணி மக்கள், அரசு வழங்குவதாக கூறிய 8,850 - ரூபாயை பெற லஞ்சம் கொடுத்தும், இழு பறிபட்டதையும்
கொடைக்கர்னலுக்கு, விவ சாயத்திற்கு நிலம் கேட்டு எழுதிவந்த 20 குடும்பங்கள்
ஐந்து வருடங்களுக்கு மேலாக நிலம் தேடி அலைந்து திரிந்த ர்ை. அரசு அதிகாரிகள், இந்த விவசாய நிலம் தேடி அலை யும் தாயகம் திரும்பிய நாடோ டிகளை பார்த்து கூறுவதா வது "நீங்கள் நிலம் தேடிக் கண்டு பிடியுங்கள் நாங்கள் அவற்றை தங்களுக்கு வழங்கு கிறோம்". என்னே! அரசு அதிகாரிகளின் அக் கறை. கொடைக்கானலில் இவர்கள் இறுதியில் கூப்புகளில் தஞ்சம் புகுந்து கொத்தடிமைகளாக மாறிவிட்டனர். ஆகவே, அவர்களை நீங்கள் அணுகி கேட்டால் இந்த மறுவாழ்வு துயர் துடைப்பு திட்டத்தை பற்றி இப்படிக் கூறுவர் ‘விவ சாய நிலத்திட்டம் என்பது, தாயகம் திரும்பியோர்களை நாடோடிகளாக்கும் திட்டம், இறுதி முடிவில் தொத்தடிமை களாக்கும் திட்டம் என்று.
அரசு வழங்கும் மறுவாழ்வு உதவிபெற தீக்குளித்த தற் கொலை செய்துக் கெண்ட சம் பவங்கள் பலவும் உண்டு. ஒ
அரிமா சங்க உதவி
தாயகம் திரும்பிய பெண்கள் தையக்கலை பயில தையல் மெஷின் ஒன்றை இலவசமாக சென்னை பேசின் பிரிஜ் வட்ட அரிமா சங்கம் (கோத்தகிரி)
மக்கள் மறுவாழ்வு மன்றத் திற்கு அளித்துள்ளது.
மேற்படி அரிமா சங்க ஆண்டு விழா 22.8.86யில்
சென்னை ஹோட்டல் அம்பா சடர் பல்லவாவில் நடந்த போது வழங்கப் பட்டது. அரிமா சங்கத் தலைவர் அரி மா போல் பீட்டர் அவர்கள் மு ய ந் சி யில் வழங்கப்பட்ட இந்த தையல் யந்திரத்தை விழாவில் முக்கிய விருந்தின ராககலந்துக்கொண்ட டாக்டர் ர வீ ந் திர நாத் அவர்களின் துணைவியார் சுலோசனா ரவீந்திரநாத் வழங்கினர்(கோத் தகிரி) மக்கள் மறுவாழ்வு மன்ற சார்பில் லீமா ரோஸ்மேரி பெற் றுக் கொண்டார். Ο

Page 4
நம் உள் ள ங் க  ைள யும், உணர்வுகளையும் ஓயாது உறுத்திக் கொண்டிருப்பது ஈழத்தமிழர் போராட்டமாகும். இலங்கை வாழ் தமிழ் மக்கள் படும் தொல்லைகளையும், துய ரங்களையும், அல்லல்களையும் அனர்த்தங்களையும் a -6ir ளத்தால் உணரும் பொழுது நாம் அனலிள டைப்பட்ட மெழுகு போல் உருகிப்போகி றோம். உணர்வுகள் வெந்து போகின்றன.
மூன்றாண்டுகளாக அழுத கண்ணும், வெந்த உள்ளமு மாகவே பல லட்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்ந்து கொண் டிருக்கிறார்கள் இலங்கைவாழ் தமிழ் மக்கள் திசை பற்ற கப் பல் போல் கரை தெரியாமல் கலங்கி நிற்கிற நிலைத்தான் காணமுடிகிறது.
இலங்கைச் சரித்திரத்திலே யே, இராணுவ விமானங்களின் குண்டுத்தாக் குதலையும் கப்பல் படைகளின் பீரங்கித்தாக்குதலையும் சமா ளிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத்தமிழ் மக்கள் தள் ளப்பட்டிருக்கிறார்கள். இலட் சக்கணக்கானோர் படகுகள் மூலமாக இந்தியாவில் தஞ்சம டையவும், உலக நாடுகளில் அடைக்கலம் கோரி நாடுகடக் கவும் நிர்ப்பந்திக்கப்பட்டுள் ளார்கள் ஆயிக்கணக்கான தமிழ் இளைஞர்கள் காரண மீன்றி கைது செய்யப் பட்டு காலவரையறையின்றி தடுப்புக் காவலில் வைக்கப் பட்டுள்ளார் கள். தமிழர்களின் கிராமங்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. விவ சாயம் குன்றி விட்டது. தொ ழில் நசுக்கப்பட்டுள்ளது.
வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. குடும்பங்கள் சிதைக்கப்பட்டுள் ளன குழந்தைகளும், பேண்க ளும்முதியோரும் கொலைக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப் பட்டுள்ளனர். ணம், பயம் என்று தமிழினமே ஒரு மரணப் படுக்கையில் வீழ்த்
"பட்டுள்ளது.
எதிர்ப்பையும்
பட்டினி, மர
கொழும்பில் வாழும் தமிழர்
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள் தமிழப் போராளிகள் தமது
உயிரைப் பணயவைத்து இரா னுவக் கொடுமைகளை எதிர்த் தும், எதிர் தாக்குதல்கள் நடத் தியும் வருகிறார்கள். இதற்கெல் லாம் பெயர் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் அல்லது ஈழப் போராட்டம்.
இப்படி ஒரு இனம் தனது தன் மானத்திற்காக மனித உரி மைகளுக்காக பயங்கரக் கொடு மைகளுக்குப் பலியாகி தீக்குளி யல் நடத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில்,
தமிழ்மக்களின் பெ ய ர | ல் தமிழ்மக்களின் விடுதலைக் காகப் போராடுகிறோம் என்று
* பிறைசூடி"
போர் முழக்கமீட்டுக் கொண்டு போராளிகளைப் போராளிக ளே கொலை செய்வதும், தூற் றுவதும் தாக்குவதும் ஈழப் போராட்டத்தை எங்கு கொண்
டு நிறுத்தியுள்ளது ?
ஈழத்தை ஆ த ரி கிறோம் என்று கூறு அரசியல் வாதிகள் ஈழப் போராளிகள் மத்தியிலே யே பிரிவினையை வளர்ப்பதும் விடுதலை இயக்கங்களைச் சாடுவதும், இது ஜனநாயகப் போராளிகளின் செயல், அது அராஜரீகப் போராளிகளின் செயல் என்று இனம் பிரித்து குஞ்சம் கட்டுவதும் எதனைக் காட்டுகிறது?
ஈழப் போராட்டம் தமிழ்மாநி லங்களில் இராணுவத்தைத் தாக்கி, போலீசைத் தாக்கி ஆரம்பித்து இன்று கொழும்பி லும் பிற சிங்களப் பகுதிகளிலும் குண்டு வைத்து பொருளாதார அடிப்படைகளைத் தகர்த்து சிங்கள மக்களின் குடியேற்றங் களை அழித்து, விமானங்கள்,
 
 
 

மக்கள் மறுவாழ்வு
தொலை சாதனைகளைத் தகர்த்து ஒரு போர்க்கோலம் பூண்டிருப்பது எதனைக் காட் டுகிறது?
புகை "வண்டிகளை, (IL F)};
ஆரம்ப கட்டத்தில் கண் மூடித்தனமாக ஈழத்தமிழர் களை ஆதரித்த தமிழக அரசி யல் கட்சிகளுக்கும் இயக்கங்க ளுக்கும் இன்று சிலரைக் கண் டித்து சிலரைப் பாராட்டியும் அறிக்கைககள் விடுவதன் மர்ம மென்ன? இன்று சில தமிழக சக்திகள் இந்த போராட்டக் கூர்மைகளை மழுங்க வைத்து, ஈழ ப் போராட்டத்திற்கான ஆதரவைத் திசை திருப்ப முனைவதன் மர்மமென்ன?
இலங்கையிலேயேயும், ஈழப் போராளிகளிடையிலேயும் இந் திய தலையீட்டைக் கண்டிக்க வும் கண்டனஞ் செய்யவும் சில சக்திகள் முதன்முறையாக முற் படுவதன் காரணமென்ன?
திடீரென்று தமிழகத்தில் உளவாளிகள் எனச் சிலர்
கைது செய்யப்படுவது எதனை
காட்டுகிறது?
தமிழ் ஈழ ஆதரவினர் எனக்
கூறிக்கொள்வோரிடையேயும் ,
ஒருவர் ஒருவர் துரோகிகள் என்றும், உளவாளிகள் என் றும் அர்ச்சனை செய்வதன்
அர்த்தமென்ன?
பல காரணங்கள் இருக்கின் றன. ஒன்றே ஒன்று மட்டும் உண்மை. தமிழ் ஈழப் போராட் டத்தைக் திசை திருப்பும் முயற் சிகள் வெற்றிபெற்று வருகின் றன, இவை அபாய அறிகுறி கள் இவற்றை தமிழ் மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்
டும்.
ஒரு கட்டத்தில் தமிழீழப்
போராட்டத்தை சர்வ தேச
மயப்படுத்தினால் அப்போ
ராட்ட முயற்சிகள் வலுவடைந் தன இன்றைய கட்டத்தில் சர்வதேச சக்திகள் ப்ோராட் டத்தை 1ழுங்க வைக்க முயற் சிக்கின்றன. ܖ
இன்று எந்த தேசியப் பிரச் சனையையும் தேசிய எல்லைக் குள்ளேயே வைத்துக்கொள்ள முடியாத ஒரு சர்வதேசச் சூழ் நிலையில் நாம் வாழகிறோம். நம்மை அறியாமலேயே நாம் சர்வதேசக் சக்திகளின் வலை களுக்குள்ளே சிக்கிக் கொள் கிறோம்.
நாம் தான் இயங்குகிறோம் எ ன் று நினைக்கிறோம்,
நாடற்றவர்கள் எவ்வள
1964லில் தோராயமாக கணக்கிடப்பட்ட தொன
இந்தியக் குடியுரிமை இலங்
1934- 1974 ஒப்பந்தத் கிலிருந்து கொடுக்கப்பட கொடுக்கப்பட வேண்டியது கொடுத்தது வேண்டியது 6OO,OOO 421,207 878,000 மிகுதி 178,793 (அ)
1986 ஜனவரி உடன்பாடு
85,000 ((அ)யிலிருந்து)?
மிகுதி
93,793 (இ)
கொடுக்கப்படவேண்டிய (இ) + (ஈ) தொகை 1964-1985 இடையில் 30% இயற்கை அதிகரிப்பு
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதும், புதிய ஒப்பந்தத்தி
இன்னும் கொடுக்க இருப்பது 85,000+ 94,000 ஆக இன்று இருக்கும் நாடற்றோர்
நன்றி

Page 5
fossa) 86
ஆனால் நம்மை இயக்குவிப் பது இன்னொரு சக்தி. குடி போதையில் ஒருவன் நடந்து கொள்வது போல, சர்வதேச அரசியல் சக்திகள் பலருக்கு பல்வேறு போதைகளை ஊட்டி விட்டு வேடிக்கை பார்த்துக் ஐகாள்ளுகின்றன.
இலங்கையின் அரசியலில் இடது சாரி சக்திகள் வேகமாக முன்னேறி வந்தன. ஆனால் இனப் பிரச்சனை தலையெடுத் ததன் பின்னர், இடது சாரி அரசியல் இருந்த இடம் தெரி பாமல் மறைந்து விட்டது. இன் றும் ஈழப்போராட்டம் மும்முர மடையுமானால், அதன் பிரதி u 66 u lura5 சிங்கள மக்களி டையே முற்போக்கு சக்கள் மும்முரமடையக் கூடிய சாத்தி யக் கூறுகள் உள்ளன. கையை முதலாளித்துவக் காட் சிப் பொருளாக வைத்திருக்க விரும்பிய யாருக்கோ இது வ யி ற்  ைற க் கலக்குகிறது. ஆகவேதான் சர்வதேச சதிக் கும்பல்கள் ஈழப் போராட்ட சக் திகளை ஊடுருவி அனர்த்தங் கள் விளைவித்துக் கொண்டு வருகின்றன தமிழ் மக்கள் கண் விழித்து அபாய அறிகுறிகளை புரிந்து கொள்ள வேண்டும். ஈழப் போராளிகள் நிதானம் பெற வேண்டும். நெறிகள் நிலை நாட்டப்பட வேண்டும்.
әј (Зий ? Das 9, 75,000
கைக் குடியுரிமை
கொடுத்தது 1Ꮽ7,585 177,465 (ஆ)
94,000 (7ஆ)விலிருந்து?
88,485 (ஈ)
177,258 325,000 502,258 179,000 681,298
றி: "சிலோன் டுடே'
A6di» (387 gFABgyıb
இலங்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
திருமண, சடங்கு, தாயங்களில் கூட நிலைமைகள்
சம்பீர
அவ்வாறே நிலவுகிறது - தென் கன்னட மாவட்டத்தில் நிலவும் பழக்கங்களை அப்ப டியே கைக்கொள்ள ஆரம்பித் திருக்கின்றனர்.
திருமணத்தில் மணமக்கள் அமர்ந்தவாறு தாலி கட்டுவ தில்லை; நின்ற வண்ணம்-இரு வரையும் இடுப்பை சுற்றி நூல் கட்டி இருக்க-தாலி அணிதல்:
நெற்றியிலும், முன் வகிட்டி லும் குங்குமம் இட்டுக் கொள் ளல்;
தாவணி அணிவதில்லை; பாவாடை, ரவிக்கை மட்டுமே அணிதல்;
மூக்குக் குத்திக் கொள்வ தில்லை;
திருமணம் - சாவின் போது தப்பு அடிப்பதில்லை; திரு மணத்தில் பேண்ட் வாத்தியம் பயன் படுத்தல்;
உள்ளூர் கடவுள் வழிப்பாடு:
ஒவ்வொரு வீட்டு முன்னும் துளசி செடி வைத்தல்;
- இப்படி உள்ளுர் மக்களின் கலாச்சார, பழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆயினும்கூட, இலங்கை மலை நாட்டில் நிலவிய அதே *லயத்து மனோபாவம் இருக் கிறது; சங்கங்கள் அமைத்தல், கட்சி கட்டல், பல தலைவர் களை உருவாக்குதல், கூட் டாக வாழும் வாழ்க்கை முறை அப்படியே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் மக்களுடன் உறவுகள்
முதலில் தாயகம் திரும்பி யோர்கள் இங்கு வந்த போது
s
t
 

ரக் காட்டில்
ள்ளுர் வாசிகள், இவர்களை TT 6160rsh) வாரிசுகள் ன்று நெருங்கிப் பழகவேபயத் ருக்கிறார்கள்.
இலங்கையைப்பற்றி - இன்று |ங்கு நிலவும் தமிழர். சிங்கள ர் இனப்பிரச்சனைகள் பற்றி ல்லாம் அவர்கள் அறிந்திருக் வில்லை - இலங்கையைப் ற்றி எல்லாம் அவர்களுக்கு தரிந்ததெல்லாம் அங்கு இரா ணன் என்ற இராட்சசன் ாழ்ந்தான். அவன் சீதையை
றையெடுத்தான் இராமன் டையெடுத்து அவர்களை வற்றி கொண்டான் என்ற )g foru60or dfunsdorgijs6ir
6.
அ தன எ ல் இலங்கையி
டீயெஸ்ஸார்
ருந்து வந்து இவர்கள் இரா பனன் பரம்பரை, மனிதனைத் தின் பார்கள் என்று பயந்து பசவே அச்சப்பட்டிருக்கிறார்
s
பிறகு போகப் போக உண் மைகளை புரிந்துக் கொண்டுப் பழக ஆரம்பித்திருக்கிறார்கள்.
வெளியுலக நாகரீகம் அதிகம் பீசாத-வெளியூர்களுக்கு கூட செல்லாத - ரயிலைப் பார்த்தி ாத . சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்கடலைக்கூட பார்த்திராத அளவிற்கு பெரும் பான்மையினராக வாழும் உள் ளூர் மக்கள் இனதுவேஷம் குறைந்தவர்களாக பழகுகிறார் கள்.
ஆரம்பத்தில் தாயகம் திரும் பும் பெரும்பான்மையோர் கருப் பாக இருப்பதால் இவர்கள் தாழ்ந்த சாதியினர் என்றே ஒதுங்கியிருக்கின்றனர். பின் னர் புரிந்து கொண்டு தம்மை திருத்திக் கொண்டனர்.
"சாமி சாமி” என்று எல்லோரு டனும் இனிமையின-பேதமின்றி பழகுகிறார்கள். இன்னொரு தேசியம்- பகுதியிலிருந்து வந்த வர் என்பதால் தாயகம் திரும்பி யோர் விஷயம் அலிந்தவர்க கள் என்று நினைக்கிறார்கள் அந்த உணர் வோடு இவர்களை *வழிகாட்டுதலாக கருதி பயன் படுத்தி கொண்டுள்ளனர்.
ஆயினும் - இன்று அரசியல் வாதிகளின் இனப்பிரச்சாரம் இவர்களை தமிழர்களாக, அன் னியர்களாக கருதும் நிலைதுவேஷம் காட்டும் நிலை ஏற்ப டத் தொடங்கியுள்ளது.
அது மட்டுமல்ல, வேலை வாய்ப்பு, உள்ளுர் வாசிகளை சிந்திக்கத் தூண்டியுள்ளது.
எந்த கூலிக்கும் தாயகம் திரும்பியோர் வேலைசெய்தல், இதனால் உரிய கூலி கிடைக் காது போகும் நிலையில் உள் ளூர் தொழிளாளர் பாதிப்பு, இவர்கள் வேலை செய்யும் தோட்டங்களில் வேலை கேட் கும் நிலை. இப்படிப்பட்ட பிரச் சனைகள் இவர்களுக்கிடையில் வேற்றுமைகளை தோற்றுவித் துள்ளது.
ஆரம்பத்தில் கன்னடர்கள் காடுகள் அழித்து றப்பர் கன்று கள் நட்டு வளர்த்த தோட்டங் கள் தான், தாயகம் திரும்பி யோர்கள் குடியமர்த்தப்பட்ட தோட்டங்கள். குடியேற்றத் தின்போது எந்த எதிர்ப்பும் காட்ட வில்லை. விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் கேர ளாவில் இதுபோன்ற சூழ்நிலை யில் தாயகம் திரும்பியோர்க ளுக்காக கேரள தொழிலாளர் கள் விட்டுக் கொடுக்கவில்லை; தாங்கள் உருவாக்கிய தோட் டங்களில் தாங்களே வேலை செய்ய வேண்டுமென போரா
டியது குறிப்பிடத்தக்கது.
(7-ம் பக்கம் பார்க்க)

Page 6
மக்கள் மறு
(சென்ற இதழ் தொடர்ச்சி)
அவர் சொன்னபடி இங்கே நிலமையும் இருக்கிறது. இவர் கள் இல்லாவிட்டால் எல்லாம் நல்லபடி நடக்கும்.
நான் கூட எங்கள் தலைவ ருக்கு பத்து கேஸ் போல பிடித்து கொடுத்திருக்கிறேன். அப்படியும் கூட என் கேஸ் இழுபறியில் தான் இருக்கிறது,
இன்றைக்கு எப்படியும் முடிந்து விடவேண்டும்.
ஆபீஸில் கிளார்க் மார்கள் எல்லாம் வந்து விட்டார்கள்,
அ க தி கள் கலைக்டரும், டி.ஆர் ஒ. ஐயா அவர்களும்
வந்து விட்டார்கள். நமது தலைவரைத்தான் இன்னும் கானவில்லை.
அடே அப்பா! அதற்குள்ளே மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டது.
எனக்கு வயிற்றை வேறு
கிள்ளுகிற மாதிரி இருக்கிறது.
காலையிலே வெறும் வயிற் றோடு வந்தது. டீ கடைபக்க மாக போனேன். இரண்டு ஆமை வடையும் ஒரு டீயும் குடித்து விட்டு, ஆபீஸ் பக்கம் போனேன். ஆபீஸஸுக்கு முன் னால் எதோ சத்தமா இருந்
5 . . . er
ஒடிப்போய் பார்த்தால் ஒரு கழுதையை விரட்டிக் கொண் டு இருந்தார்கள், அதன் வாயி லே ஒரு கடுதாசி கத்தை; கவ் விக்கொண்டு இருந்தது.
'ஏய்!.புடி. புடி. “
சத்தம் போட்டு அதை வலைத்தார்கள்.
அதுவோ அங்கேயும்
இங்கேயும் ஓடி எல்லோரையும் அலைகழிக்க வைத்தது
எப்படியோ ஒரு வழியாக ஒருவர் அதன் வாயிலே இருந்த கடுதாசி கத்தையை பிடித்தி இழுத்து பறித்து எடுத்து விட்
Tif.
அதில் கொஞ்சம் கிழிந்து அதன் வாயிலேயே போய் விட்டது. அதோடு அது ஓடிப் போய் விட்டது.
சிரிப்பாகக் கூட இருக்கிறது
F s É
ஒரு கட்டு திட்டமே இல்லை இந்த ஊருலே எங்கே பார்த்தா லும் கழுதையும் பன்றியும் ஏராளமாக அலைகின்றன.
அங்கே எல்லாம் இவையெல் லாம் இல்லை.
பன்றிகளை இப்படி பார்க்க
முடியாது. சில தோட்டங் களில் வெள்ளைக்காரத்துரை forfassir வளர்த்தார்கள்.
அதை இப்படியெல்லாம் விட மாட்டார்கள். அதுவும் வெள் ளைப் பன்றிகள். பட்டிஅடித்து வளர்த்தார்கள் •
இந்த கழுதைகள் இருக்கிற தே இது அங்கே இல்லை இதை பார்த்தது கூட இல்லை பள்ளிக் கூட புஸ்தகத்திலே பார்த்ததுதான். இந்தியா வந்த பிறகு தான் உயிரோடு பார்க்கி றோம்.
es مه
தலைவர் எப்போது வந்தார்" ஆபீஸ் உள்ளே இருந்து வெளி யே வந்தார்.
மெல்ல அவர் அருகே போ G56তো গঠিা
"கொஞ்சம் இருங்க உங்க வேலை ஆயிடும்” என்றார்.
நான் பழையப்படி புளிய மரத்தடிக்கே போனேன்.
"சீ காத்து காத்து உக்காந்து ஒரே அழுப்பா இருக்கு”
திங்கள் கிழமை வேறு. தலைவர்மார்கள் அங்கேயும் இங்கேயுமாக ஆபீஸஸுக்கும், டி கடைக்கும் புளிய மரத்தடிக் குமாக ஆள்களோடுஆபீஸிலே வேலை பார்க்கிறவர்களோடு
பறந்து கொண்டு இருந்தார்கள்
நமது தலைவருக்கு எல்லாம் அத்துப்படி தான் ஆபீஸிலே அத்தனைப் பேரையும் கைக் குள்ளே போட்டு வைத்திருக்கி றார்.

அவர் மூலமாக மனுப்போட் டவர்களெல்லாம் வந்து போய் விட்டார்கள்.
என் விசயம் இன்னும் முடிந்த பாடில்லை. மறந்து 69. LArGJIT ?
பொழுது வேறே சாய்கிறது. கடைசி பஸ்ஸாம் ஏழரை மணிக்கு.அதையும் விட்டு விட் டால் ஒன்றும் பண்ண முடி
Jr.
மெல்ல ஆபீஸ் பக்கம் போய் நின்றேன். தலைவரும் அங்கே இருந்தார்.
என்னையா இந்த மேசை மேலே தானே அது இருந்தது அதுக்குள்ளே அது எங்கையா போகும் ?” என்று எட்கிளாக் கர் ஐயா என்னவோ திட்டிக் கொண்டிருந்தார்.
மேசைகளெல்லாம் கடுதாசி கட்டா நிறைந்துக் கிடந்தது. எதிலே இருக்கிறதோ ?
தேனுTரன்'
எட்கிளார்க்கையா ரொம்ப
கோபமாக இருந்தார்.
அப்படியும் இப்படியும்பார்த் துக் கொண்டே வந்தார்.
"அந்த கட்டுக்கு மேலே இருக்கிற பைல் என்னா?” என்று ஒரு இடத்தை காட்டி 6GT rif.
பியூன் எடுத்துக் கொடுத்
தார்
**இது என்னா இப்படி இருக்கு ” என்று திருப்பித் திருப்பிப்பார்த்தார்.
"கழுதை இழுத்துக்கிட்டு போனது' என்று பியூன் இழுத் தார்.
"இதோ? இது எப்படியா
1Sam Gao 786
இங்க இருந்து அங்க போ னது” என்று அதட்டி விட்டுச் சொன்னார், -**இந்த ஆபீஸி லே இதே எழவா போயிடுச்சு எதுவும் ஒழுங்கா இருக்கிற தில்லே’ என்று.
எட்கிளார்க்கர் ஐயா பைலை புரட்டிப்புரட்டிப் பார்த்தார்.
பிறகு தலைவரிடம் கொடுத் தார்.
"என்ன சார் இப்படி இருக் கிது ?? என்று தலைவர் இழுத் தார்.
"புதுசா ஒரு பைல் ஒப்பன் பண்ணணும்” என்று கிளார் கர்ஜயா சொன்னார்.
கால்வாசியை அந்த கழுதை தான் தின்றுவிட்டதே
*என்ன ஸார் ரொம்ப நாள் ஆயிட்டுது பாவம் இந்த மனு தாரர் ரொம்பகஷ்டப்படுகிறார்” என்று தலைவர் சொன்னார்
"நான் என்னப்பாசெய்யறது உடனே எப்படி போடறது ஒரு வாரத்துலே போட்டு கொடுத்துடலாம்” 6T 6ër goj அவர் பதில் சொன்னார்.
தலைவர் கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டு இருந்து விட்டு வெளியே வந்தார்.
என்னங்க அது உங்க பையில்தான் எல்லாம் முடிஞ்சி இன்றைக்கு கொடுக் குறத் துக்கு தயாராக இருந்தது. அதுக்குள்ள கழுத.” என்று இழுத்தார்.
எனக்கு வயிறே கலக்கி விட் L一逐列一
ஐயோ! இன்றைக்கு கிடைக் கும் என்று இருந்தேன். என் றைக்கு இந்த லோனை வாங்கி திறது. கேணியை வெட்டுகிறது. வெள்ளம பண்ணுறது ? அதற் குள்ளே குழந்தை குட்டி யெல்லாம் பிச்சை எடுக்க
வந்து விடும் போல இருக்கிறது
ஒன்றுமே தோன்றவில்லை.
வந்த யோ க ம் கழுதை வாயுக்கு போனது. ዓo

Page 7
Editingen alae * 86 மக்கள்
-தாயகம் திரும்பியோருக்கு ܐܢ ST6OT-85 உள்ளுர் மக்களுக்கு முள்ள செளஜன்யத்தை சிதைக்க
(5-ம் பக்கத் தொடர்ச்சி)
ஆயினும் இன்று அரசியல் சமூக பொருளாதார சூழ்நிலை கள் தாயகம் திரும்பியோர். உள்ளுர் மக்கள் மத்தியில் விரி சல் தோற்ற ஆரம்பித்திருக் கிறது.
எதிர்காலம்.?
தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என இன் றைக்கோ அவர்கள் கேட்கும் நிலையிலும் இருக்கிறார்கள்.
இதன் நிர்வாகம் சரிஇல்லை. ரப்பர் தோட்டங்கள் திட்டமிட் டப்படி நடத்தப்படவில்லை. அதன் உற்பத்தி. மரம் நடப் படும் பரப்பளவு அதிகரிக்கப் படவில்லை, அக்கறை இன் மையாக இருக்கிறார்கள்- ரப்பர் நடுகைக்குப் பதில் மர முந்திரி நடுகிறார்கள். இதன் மூலம் தொழிளாளருக்கு சரியான வேலை கிடைக்காது.
மக்கள் உற்பத்திக்கு தகுந்த
மாதிரி ரப்பர் தோட்டம் வளர்ச்சி பெறவில்லை. தொ டர்ந்து இத்தோட்டங்கள்
இருக்குமா என்ற ஐயம் உண்டு இதன் மூலம் வேலை இல்லாத பிரச்சனை தலை தூக்கும்.
படித்தவர்களுக்கு சலுகை இல்லை தகுதிக்கேற்ற வேலை யில்லை. தோட்ட நிர்வாகத்தில் தாயகம் திரும்பியோர் பிள்ளை களுக்கு வேலை மறுக்கப்படு கிறது.
கேஸ"வலாக ஒரு குடும்பத் திலுள்ள ஒருவருக்கு மேல் வேலை கொடுத்தாலும், அது வாய் இருப்பவருக்கு - சக்தி இருப்பவர்களுக்கே நடைபெறு கிறது.
இன ரீதியாப் பார்க்கும்போது மெல்ல இ ன த் துவே ஷ ம் முகம் காட்டவும் ஆரம்பித்துள் ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய அரசியல் போக்கு அரசியல்வாதிகளில் பிரச்சாரம்
முற்பட்டிருக்கிறது. தோட்டங் களில் உள்ளூர் வாசிக்கு வே லை என்று அரசியல் வாதிகள் தூண்டுதல், கூலி வித்தியா சம் போன்ற வேற்றுமைகள் வளரவும் தொடங்கி விட்டன. தா ய கம் திரும்பியோர்கள் அனைவருமே தொழிளாளர் கள். சொத்துக்கள் எதுவும் இல்
லாதவர்கள் வேலை தான் ஜீவாதாரம். இந்நிலையில் கன்னடம் தெரிந்தால் தான்;
வேலை இல்லா விட்டால் எது வும் கிடைக்காது என்ற நிலை யும் இருக்கிறது.
மனோநிலை
மறுவாழ்வு மூலம் இந்தியா வில் ஒரு மாநிலத்தில் இவர்கள் குடியமர்த்தப்பட்டாலும் அன் னியமான உணர்வு இவர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கி A) 25.
பலர் இந்த வாழ்விலிருந்து மீண்டும் தமது வாழ்வை தமிழ் நாட்டுடனே இணைத்துக் கொள்ள விரும்புகின்றனர்.
சொந்த நிலம் வாங்கி விவ சாயம் செய்கிறவர் கூட இது ஒரு கற்காலிக வாழ்வாகவே கருதுகிறார்கள்.
இலங்துையில் அன்னியராகக் கரு த ப் பட்டு விரட்டப்பட் டோம். இங்கு வந்தும் தமிழர் அல்லாத பகுதியில் அன்னிய ராகவே வாழ்கிறோமே என்று சலிப்பும் அடைகிறார்கள்.
(இத்துடன் முடிவடைகிறது)
தவிர்க்க முடியாத காரணங் ளால் இந்த இதழ் எட்டு பக் கங்களாக மட்டுமே வெளி வரு கிறது. அடுத்த இதழ் வழக்கம்
போல வெளிவரும்.
-ஆசிரியர்
Editor & Publisher T. S. RAJU, 1, South Gangai
amman koi 2nd Street,
Madras -6OOO94. Printed:
L. S. Srinivasan at Jai Kaidas Press, 29, B. E. Colony,
4th Street, Madras -24.

* நீங்கள் தமிழ் எழுத மட் டும் தெரிந்திருந்தால் பட்டப்
படிப்பு பயிலலாம். இதற்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து அஞ்சல் வழி மூலம் பயிலலாம்,
மேல்நிலை கல்வி அல் லது அதற்கு நிகரான கல்வி கற்றவர்கள் சில தொழில்களில் பயிற்சி பெற்று "டிப்ளோமா? சான்றிதழ் பெறலாம்,
ஆe கல்வி கற்பதற்கான உதவி தொகை பெறலாம்.
ஆ கன ரக போக்குவரத்து ஊர்தி ஒட்டுநர் பயிற்சி பெற
சேவைப்பகுதி
லாம். கும்மீடிப்பூண்டியிலுள்ள சாலைப் போக்குவரத்து கழகத் தில் சேர்ந்து பயிற்சி பெறலாம்.
--இது போன்ற பல டாட்ட பட்டப்படிப்பு, தொழிற்பயிற்சி களில் தாயகம் திரும்பிய நீங் கள் சேரலாம்.
உங்கள் படிப்பு, தகுதி, வய துக்கு தகுந்தபடி ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யலாம்.
இதுபோன்ற லிபரங்களை விளக்கங்களையும் பெற கடந்த மாத தினமணி, இந்தியன் எக்ஸ்பீரஸ் போன்ற தமிழ் ஆங்கில தினசரிகளைப் புரட்டி னால் தேவையான தகவல்கள் da60)-discyth. D-L-607tg-uj Tas.......
விவசாயிகள்.
(முதல் பக்கத் தொடர்ச்சி)
குமார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், குர்னிகால் சிங் பிர சாதா என்னும் நல்ல ஒரு அதிகாரி கொடைக்கானலில் துணை ஆட்சியாளராக பொ றுப் பேற்ற 6 மாத காலத்திற் குள் மக்கள் குரலுக்கு செவி சாய்த்து குறைகளுள்ள இடங் களுக்கெல்லாம் இரவு பகல் širubih utyr5 Groflšo Qs6črg) பார்வையிட்டு, தன் சக்திக் கேற்ப நடவடிக்கை எடுத்தார். கொடைக்கானல் காட்டுப் பகுதியில் மக்கள் பிரச்சனை கள் ஆண்டாண்டு காலமாய் கவனிக்கப்படாமல் இருப்பது எல்லோரும் அறிந்ததே. குடி தண்ணிர் முதல் நடைபாதை வரை எல்லா பிரச்சனைகளும் எந்த அதிகாரியாலும் இது வரை கண்டுக்கொள்ளப்பட வே இல்லை.
பணக்காரர்களின் கைகளில் சி க்கு ன் டு, கொத்தடிமை களாக கடத்தப்பட்ட மக்களை மனிதராக வாழ வை க் க கினைத்து விடுதலை செய்ய
வடவடிக்கை எடுத்தார். பணக் காரர்களும், அவர்களது கைக் கூலிகளுமான அரசியல் வாதி களும் லஞ்சத்திலேயே ஊறிப் போன அதிகாரிகளும் இவர் மக்கள் தொண்டனாய் இடுப் பது பிடிக்காத காரணத்தாலும் இவரது மனிதாபிமான நட வடிக்கையால் தங்கள் வயிற் றில் அடிபடுகின்றதே என்றும் குறுகிய நோக்கத்தில் அவருக் கு கொடுத்திருக்கும் தண் டனை இடமாற்றம் என்று அவ் வறிக்கையில் கூறியுள்ளார். O
வாழ்த்துகிறோம்
சென்னை, அம்பத்தூர் பி. எஃப், செக்யூரிட்டி ஃபோர்ஸ் உரிமையாளர் திரு பிரான்சீஸ் அந்தோணிசாமி அவர்களுக் கும், திருச்சி மாவட்ட புள்ளம் u T lą- G36 (T 6n 6obr T (só ở đf (லேட்) அந்தோணிசாமி அவர் களின் புதல்வி சகாயமேரிக்கும் 11.6.86 அன்று இனிதே திரு மணம் நடைபெற்றது. மணமக்
களுக்கு நல்வாழ்த்துகள் (ஆ-

Page 8
Regd. No. R. N. 42556/83
தாயகம் திரும்பியோரின் வழிகாட்டி
Regd No. TNAMS
re-as
தொடர்ப்பு முகவரி:
அஞ்சல் பை எண். 5560 சென்னை-600094
தாயகம் திரும்ப இருப்போ
திரும்பியோர் பிரச்சனைக
தாயகம் திரும்ப இருப்போ ரைப்பற்றி திட்டம் போடுவதை விட்டு, திரும்பியோர்களில் வாழ்வுக்கு உதவ மறுவாழ்வுத் துறை முயல வேண்டும்.
தாபகம் ளுக்கு உடனடியாக நிவார ணம் - மறுவாழ்வு உதவிகளை அளிக்க மறுவாழ்வு துறை இருக்கிறது ஆனால் 1984 அக்டோபர் 22ந் தேதியுடன்
இராமேஸ்வர - தலைமன்னார்,
படகு சேவை நிறுத்தப்பட்டு விட்டதால் இலங்கையில் தாய கம் திரும்புவோர் வருவது நின்று போனது, இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்ந்து இலங் கையில் ஒரு சுமூகமசன சூழ் திலை ஏற்பட்ட பிறகு தான் தாயகம் கிரும்ப இருப்பவர்கள் இந்நாட்டுக்கு திரும்புவார்கள்.
இந்நிலையில் இந்த இடைக் காலத்தில் ஏற்கனவே வந்து வாழ்கிற தாயகம் திரும்பியோர் கள் பிரச்சனைகள்ை தீர்க்கவும் இதுவரை மறுவாழ்வு உதவி கள் பெறாத வி ர்கள் உடன் உதவி பெறவும் rig), 6) is by துறை முன் வர வேண்டும்.
தாயகம் திரும்பி பல வருடங்
கள் ஆகியும் பலர் இன்னும் (முதல் கடனுதவியே வாங்கா திருக்கிறார்கள். பலர் இரண் டாவது கடன் வாங்க முடியாது இருக்கிறார்கள். 6J J A 6T Lost 60f
Stuff தால்- அதை தேடிப் பிடித்து வாங்கம் சக்தியில்லாததால் வீட்டுக் கடன் பெற்று வீடு
திரும்புகிறவர்க
வீட்டு மனையில்லாத
கட்ட முடியாது திண்டாடு கிறார்கள்.
தாயகம் திரும்பியோர் கூட் டுறவு வங்கி மூலம் சின்னஞ்சிறு தொழி ல் நிறுவனங்களில் வேலை பெற்றவர்கள் பல்வேறு பட்ட காரணங்களால் வேலை இழந்து எதுவும் பெற முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
பிற மாநிலங்களுக்கு வேலை வாய்ப்பு பெற்ற பலரும் பல பிரச்சனைகளால் தமிழ்நாடு திரும்பி வேலை இன்றி துன்பப் படுகிறார்கள்.
கல்வி உதவி மற்றும் சலுகை கள் எதுவுமே திருப்தி கரமாக கிடைப்பதில்லை. பல உதவி கள், முன்னுரிமைகள் எல்லாம் குறைந்துப் போய் விட்டன.
இவர்கள் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு அலுவலகங்களோடு தொடர்பு கொள்ளும் போது இவர்கள் பிரச்சனைகளை பிரச் FSO)66 its எ டு த் து க் கொள்ளப்படுவதில்லை; மனி தாபத்தோடு கவனிக்கப்படுவ தில்லை,
இவர்கள் கோரிக்கைக்குபிரச்சனைக்கு எந்த பதிலும் திருப்திகரமாக கி  ைட ப் ப தில்லை. கீறல்விழுந்த இடைத் தட்டுப் போல ஒரே மாதிரி யான பதிலே அளிக்கப்படு கிறது.
தாயகம் திரும்பியோர் முகம் கொடுக்கும் எந்த பிரச்சனை
 

MAKKALMARUVAZHVoo
ரை கவனத்தில் கொண்டு
ளை கவனியா
யாக இரு ந் தாலும் இ து குறித்து இதுவரை எந்த பரிசி லனைகளும் செய்யப்பட்டு மாற்றுத் தட்டங்களோ - பரிகா ரங்களோ தில்லை.
மொத்தத்தில் எதுவும் செய்ததாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
தாயகம் கிரும்புவோருக்கு வேலை வாய்ப்பு அளிப்பதற் காக மத்திய அரசு பலவேறு பட்ட தொழில் நிறுவனங்க ளுக்கு கடனுதவி அளித்துள் ளது. ஆயினும் தாயகம் திரும்புவோர் வராதிருப்பதால் இந்த வேலை இடங்கள் நிரப் பப்படவில்லை தாயகம் திரும்பு வோர்  ைருகையில்லாததால் - வேலைக்கு போட முடியாது இருப்பதால் பெற்ற கடனை ஒப்படைத்து விடவும் வேறு ஆட்களை போட்டுக் கொள்ள வும் உத்தேசிப்பதாக சில நம்ப மான தகவல்கள்.
கூ ட் டு ற வு நூற்பாலை போன்றவற்றில் கூட தாயகம் திரும்பியோர்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக அறியப் படுகிறது.
மத்திய அரசும் தாயக்ம் திரும்பியோர் மறுவாழ்வுக்காக நிதி அளிக்க தவறவில்லை.
ஆயினும் தாயகம் திரும்ப இருப்போர்களையே கருத்தில் கொண்டிருக்கிறார்கள், உரிய காலத்தில் உரிய முறையில் -
வழங்க ப் பட் ட
யாருக்கும்
திருப்பதா?
உரிய உதவிகள் பெறாது இருக் கும் தாயகம் திரும்பியோர்கள் குறித்து அரசும் - சம்பந்தப்பட் ட துறையும் - சம்பந்தப்பட்ட மறுவாழ்வு அலுவுலகங்களிலுள் ள அதிகாரிகளும் அக்கறை காட்டுவதாக இல்லை.
தாயகம் திரும்ப இருப்பவர் கள் எப்போது வருவார்கள் என்று சொல்ல முடியாது இலங் கைத் தமிழர் பிரச்சனை எப் போது தீரும் என்றும் தெரி யாது.
எனவே, அவர்கள் வருவதற் கிடையில் . தாயகம் திரும்பி விட்டவர்கள் பிரச்சனைகள் குறித்து ஆராயவேண்டும்
காலம் கடந்ததால் ers frg 600Taȷ. Ar 6ü) - உதவிகள் இழந்து, வேலை இழந்து நாடோடிகள் போல-நடைப் பினங்கள் போலவும் வாழ்க் கையில் - பொருளாதாரத்தில் நலியுற்று வாழும் தாயகம் திரும்பிய மக்களின் சனைகள் குறித்து பரீசீலிப் பதோடு அவர்கள் தங்களுக் குரிய உதவிகளை - இழந்த வேலைகளை மீண்டும் பெற மாற்றத் திட்டம் அமைக்க வேண்டும். மறு சந்தர்ப்பம் தர வேண்டும்.
மனிதாப த் துட ன், இவர் களுக்கு மறு வாழ்வு பெற்று வாழ்வில் தேட்டமுற சம்பந் தப்பட்ட நடவடிக்கை எடுக்க
வேண்டும் O