கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மக்கள் மறுவாழ்வு 1986.08

Page 1
s __y,
ஆவணி-ஆகஸ்டு
வியாபார - வீட்டுக்கடன்
| DE L G J I dija 60).dia
"மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பியோருக்கு அளிக்கப்படும் வியாபாரகடன்வீட்டுக் கடனுதவியை பெறுவ தி லு ம் , வழங்குவதிலும் தொடர்ந்து ஊழல் நடந்து வரு கிறது. இதனால் பல்லாயிரக் கணக்கான வர்கள் தமக்குரிய இ க் க ட னு த வி க  ைள இழந்து விட்டார்கள். அரசு ஒரு கமிஷனை நியமித்து இந்த ஊழல்களை கண்டு பிடிப்பு தோடு உரியவர்களுக்கு முறை யாக வியாபார வீட்டுக் கடனு தவி கிடைக்க வழி செய்ய வேண்டும்.??
இவ்வாறு கடிப் பெயர்ந் தோர் மேம்பாட்டுக்கான சமூக நலச் சங்கம் அரசுக்கு வேண்டு கோள் விடுகிறது.
函T山岛ü கிரும்பியோர்க ளுக்கு மறுவாழ்வுத் திட்டத் தின் மூலம் வியாபாரம் செய்வ தற்கம் வீடுகள் கட்டிக்கொள் வதற்கும் அரசு கடனுதவி அளித்து வருகிறது.
ஆனால் இடைத் தரகர்களா னால், காண்டிராக்ட் காரர்க ளால் இவ்வுதவிகளை முறை யாக பெற முடியவில்லை.
வியாபாரக் கடனில் பெருந் தொகையை கமிஷனாக சுருட் டிக் கொள்கிறார்கள் அல்லது முழுமையாக ஏப்பம் விட்டு விடுகிறார்கள்.
ட்டுக் கடனைப் பொறுத்த
8:55پیدائش: 23باب%&
வரை பெரிய நடைபெறுகிறது.
ஏமாற்றுகளே
வீட்டுக்கடன் பெறும்போது வீட்டு மனை இருக்க வேண் டும் தாயகம் திரும்பியோர்க ளைப் பொறுத்தவரை இந்த வீட்டு மனைகளை பெற முடிவ தில்லை அல்லது அது குறித்து என்னென்ன செய்யவேண்டும் என்றும் தெரிவதில்லை.
இவர்களின் இந்த அறியா மையில் பயன்படுத்திக்கொண் டு இடைத்தரகர்கள் -காண்ட் ராக்டர்கள் மொத்தமாக மல ருக்கு வீட்டுமனை (ாடுத்து இந்த வீட்டுக்கடனை பெற்று வீடுகட்டி கொடுக்க முன்வரு கிறார்கள்.
ஆனால் இவர்கள் ஏமாற்
றியே விடுகிறார்கள். சில இடங்களில் சென்று பார்த் தால் வீட்டுமனை மட்டுமே இருக்கும். சில இடங்களில் அத்திவாரத்தோடு வீடு கட்டு வது நின்றுபோய் இருக்கும். இடங்களில் குட் டிப் சுவர்களோடு நின்று போய் இருக்கும். இப்படி அாையும் குறையுமாக வீடுகள் கட்டப் படுவது போல வீட்டுக் கடனுக் காக வழங்கப்படும் பணம் ஏப் பம் விடபபடுகிறது.
ஒரு தாயகம் திரும்பியோர் எங்கேயோ இருப்பார் வீடு கட்ட ஏற்பாடு நடக்கும். சிலர் வீடுகட்ட குடும்ப அட்டையை
 
 
 
 
 

ജ്
விலை 7 5 55Frörö6îur
மக்கள் மறுவாழ்வு சந்தா விபரம்
தனிப்பிரதி 75 காசு ஆண்டு சந்தா ரூ. 10-00 விபரங்களுக்கு: மக்கள் மறுவாழ்வு GF Gör 6OD 60T-600 094
இதழ்
வழங்குவதில் ஊழல்
கொடுத்திருப்பார்கள். காண்ட் டிராக்டர்களுக்கும் வீடுகட்டப் படுவதாக சொல் வார்கள். ஆனால் அந்த வீடுகளை காட்டமாட்டார்கள் - அது எந்த இடத்தில் எப்படி இருக் கிறது என்பதும் பலருக்கு தெரியாது.
ஒரு தாயகம் திரும்பியவர் தனது குடும்ப அட்டை, கட வுச்சீட்டை காண்ட்டிராக்டர் களிடம் கொடுத்து விட்டால், அவ்வளவுதான். அதன்பின் சம்மந்தப்பட்ட தாயகம் திரும் பியவர் தனக்கு வேண்டிய உதவிகள் அனைத் தையும் இழந்துவிட்டார் என்
6 SUD. iš 5
பதுதான் பொருள்"
இந்தளவில், ஏதும் தெரியாத அப்பாவித் தாயக ம் திரும்பி (8 uLu T Ť 355řT இடைத் தரகர்கள் காண்டிராக்டர்களின் ஆசை வார்த்தைகளுக்கு நம்பி ஏமாந் து போய் இரு க் கி றா ர் க ள்ஏமாந்துக் கொண்டிருக்கிறார்.
இந் த இடைத் தரகர்களால், காண்டிராக்டர்களால் ஏமாந்து எல்லாம் இழந்து பிச்சைக்காரர் களாக நாடோடிகளாக போன ஆயிரக்கணக்கான தாயகம் திரும்பியோர்கள் இருக்கிறார் கள்
எடுத் திருக !
இந் ந இடைத்தரகர்கள், காண்ட்ராக்டர்களுக்கு சம்பந் தப்பட்ட அலுவலங்களில் பணி செய்யும் அதிகாரிகள் உத்தி யோகத்தர்களே உடந்தையாக வும் இருக்கிறார். தனிப்பட்ட வகையில் கடனுதவிபெற சென் றால் கவனிப்பதில்லை. மேற் படியார்கள் மூலம் சென்றால் தான் எல்லாம் நடக்கும்,
இந்த முறை கேடு கள்,
ஊழல்கள் குறித்து பல முறை புகார்கள் செய்யப்பட்டும் எந்த
விதமான நடவடிக்கையும் இல்லை; மாற்றுத் திட்டமும் இல்லை.
இதனால் தாயகம் திரும்பி யோருக்கு கி ைட க் கு ம் மறு வாழ்வு உதவிகள் அவர்களுக்கு
கிடைக்காமல் போகிறது.
இந்த ஊழல்களை கண்டு
பிடிக்கவும், ஊழல்களுக்கு உடந்தையாக இருக்கும், அதி காரிகள், இடைத்தரகர்கள்,
காண்டிராக்டர்கள் முதலான வர்களை த ன்ை டி க் க வும் ஒரு கமிஷன் நியமிக்கப்பட வேண்டும்; இதன் மூலம் உரிய தாயகம் திரும்பியோர்களுக்கு முறையாக உதவிகள் கிடைக்க வழி பிறக்கும் என்று சங்கம் கோரியுள்ளது. Ο

Page 2
Lbsor y 4 ஆவணி 1986 இதழ: 11
நாட்டு மக்களுக்கு இன்னும் விடிவில்லை!
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து முப்பத்தொன் பது ஆண்டுகளாகின்றன. இந்த சுதந்திரம் இரவில் கிடைத்ததனால்தான் என்னவோ, மக்கள் வாழ்வில் விடிவு பிறந்ததாக தெரியவில்லை.
வெள்ளையரிடமிருந்து விடுபடவேண்டும். சுயாட்சி ஏற்பட வேண்டும். சுபீட்சமாகவும், சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழ வேண்டுமென்று போராடி னோம். சுதந்திரமும் பெற்றோம்.
ஆயினும், சுதந்திரமாக இருக்கிறோமா. சுய மரி யாதையுடன் வாழ்கிறோமா சுபீட்சமாக இருக்கிறோமா என்றால் விடை பூஜ்யம்தான்.
வெள்ளையர் ஆட்சியின் வாழ வழியில்லாதுபிழைப் புத் தேடி கடல் கடந்து பலர் போனார்கள், நாடு சுதந் திரம் பெற்று பல வருடங்களுக்கு பின் திரும்புகிற அவர் கள், அதைவிட மோசமான நிலைமைக்குத்தான் முகம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். வாழ்வைத்தேடி நாடோடிகளாக அலையும் நிலைமை; சுதந்திர இந்தியா வில் வாழ்வுக்கு வழி தேடி இன்னமும் கடல் கடந்து போகும் நிலைமைதான்,
சுய தேவையைப் பூர்த்தி செய்துக் கொண்டு வாழ்ந்த கிராமப்புறத்து மக்கள் வாழ வழி இல்லாதவர் களாகி விட்டார்கள் மழையில்லை; வரட்சி; பாசன கிணறுகளும், ஏரிகளும், ஆறுகளும் வரண்டுப் போய் விட்டன-தண்ணீர் பெருக்கெடுத்தோட வேண்டிய காவிரி முதலான ஆறுகளில் மணல் ஏற்றும் லாரிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
-ஆண்டாண்டுகளாக வாழும், சொந்த கிராமங்களை விட்டு வெளியேறும் அவலம். வேலைத் தேடி நகரங்க ளுக்கு சென்று நடை பாதைகளில் வாழும் கொடுமை.
நாட்டு மக்களில் பெரும் பான்மையோர் வறுமைக் கோட்டிற்கு கீழேயே இருக்கிறார்கள். வாழ்வுக்கேற்ற
 

மறுவாழ்வு ஆகஸ்டு 986
வருமானம் இல்லை. வாய்ப்பில்லை. வசதியில்லை விலைவாசி விஷம்போல் ஏறுகிறது. விலைவாசி உயர் வுக்கும். வருமானத்தின் பற்றாக்குறைக்கும் தக்கபடி எதையும் வாங்கி வாழும் சக்தி இல்லாதவர்களாக இருக் கிறார்கள்.
சமூக அமைதி நிலை குலைந்து நிற்கிறது. சமூகங் களுக்கிடையில் சுமூக நிலை, பாஸ்பர உறவுகளில்லை. சாதிய சண்டைகள், சமய பூசல்கள், தீண்டாமை, மொழித்தகராறுகள் கொடிக்கட்டி பறக்கின்றன. இத் தீமைகளால் கொலை, கொள்ளை, தீ வைப்பு போன்ற கொடுமைகள். இந்த கொடுமைகளால் உயிர் இழந்தும் உடைமை இழந்தும் அகதிகளாகி நிற்கும் பரிதாப நிலைமைகள்.
இவற்றிற்கெல்லாம் மகிடமிட்டாற்போல இருப்பது அரசியல். அதாவது கட்சி அரசியல். இந்த அரசியல் காட்டின் - நாட்டு மக்களின் நலன் குறித்து சிந்திக்கும் சமூக அரசியலல்ல; மக்களின் வறுமையையோ வாங் கும் சக்தியின்மையையோ, கிராமப்புரத்து விவசாயிகள் வரட்சியில் வாடும் நிலைமைகளையோ, சாதி, சமய பூசல்கள் குறித்தோ, அதனால் பழியாகும் மக்கள் பிரச்சனைக் குறித்தோ கவலைப்படுவதில்லை.
தனி மனித வழிபாடு, பதவி, அதிகாரம் இவற்றிற் காகவே தனது காலத்தையும் நேரத்தையும் செலவிடும் கட்சி அரசியலே காட்டு மக்களின் பிரச்சனைகளையும் துயரங்களையும் வளர்த்து வந்திருக்கிறது. இதன் மூலம் மக்கள் தங்கள் சுதந்திரத்தையும், சுயமரியாதை யும், சுபீட்சமான வாழ்வுக்கான வழிகளையும் இழந்து நிம்மதியின்றியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சட்டம், ஒழுங்கு கெட்டதோடு மட்டு மல்லாது எங்கும் எதிலும், லஞ்சமும் ஊழலும் மலிந்து கிடக்கின்றன. லஞ்சம் கொடுக்காமல், சிபார்சுக்கு ஆள் பிடிக்காமல் எதையும் சாதிக்க முடியாமல் நிலை மையே. t Y
அரசு வறுமைக் கோட்டிற்கு கீழ் நலிந்து நிற்கும் மக்களுக்காக எத்தனையோ திட்டங்களை வகுத்து உதவுகின்ற ஏற்பாடுகளை செய்திருந்தாலும் இந்த கட்சி அரசியலைச் சார்ந்த அரசியல்வாதிகளால். அவர் களுக்கு ஆளவட்டம் பிடிப்பவர்களால் அவை மக்க ளுக்கு போய் கிடைப்பதில்லை - அவற்றை இவர்களே பங்கு போட்டுக் கொள்ளும் அக்கிரமங்கள்; அகியாயங்
56.
ஆக வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம்பெற்ற நாம் சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகளிட மிருந்து சுதந்திரம் பெறவில்லை. அவற்றிற்கெல்லாம் மூல வித்தாக இருக்கிற அதிகார - ஆளும் வர்க்கத்திட மிருந்து, கட்சி அரசியல் பூசகர்களிடம் இருந்து விடு தலை பெறவே இல்லை - இன்னும் நாட்டு மக்களுக்கு விடிவே பிறக்க வில்லை என்பதை உணர வேண்டும். ஆ

Page 3
கூறியுள்ளது.
கொடைக்கானல் சங்பு
களில்" பணியாற்றும் தாயகம்
திரும்பிய தமிழர்கள் கொத் தடிமைகளாக நடத்தப் பட் டார்கள்,
இதுபற்றி விசாரிக்க நீதிபதி
சி.ஜே.ஆர். பசல், ஐ.ஏ.எஸ். அதிகாரி, டி. எஸ். சங்கரன் சமூகநல சேவையாளர் ஏ மக்பூப் பட்சா ஆகியோர் கொண்ட கமிஷன் சுப்ரீம் கோர்ட்டுக்கு அறிக்கை அனுப் பியது.
கொத்தடிமைகளே
அந்த அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:
என். எம்.இ கூப்பில் காண் டிராக்டர்களிடம் வேலை பார்க்கும் தாயகம் திரும்பிய குடும்பங்களும் கொத்தடிமைக ளாக நடத்தப்படுகின்றனர்.
22 பீட்கூப்புகளிலும் பாரி
கோம்ப்ை கூப்பிலும் வேலை செய்யும் ஒவ்வொரு தொழி லாளரையும் நாங்கள் விசாரிக்க வில்லை
ஆயினும் இந்த 2 கூப்புகளி லும் கொத்தடிமை நிலைமை இருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள முடிந்தது
மரங்களை வெட்டுதல் பட்டை உரித்தல் போன்ற வேலைகள் செய்யும் தாயகம் திரும்பியோருக்கு பல அரசி யல் சட்ட உரிமைகள் மறுக்கப் பட்டு இருக்கின்றன.
காண்ட்ராாக்ட் முை றகள்
கொடைக்கானலில் :
கொத்தடிமைகளாகவே இரு
கொடைக்கானலில் தமிழர் க்ள் கொத்தடிமைகளாக நடத் தப்பட்டது உண்மை என்று விசாரணைக் கமிஷன் தாக்கல் செய்து உள்ள அறிக்கையில்
துக்கட்ட வேண்டும். ஏன் என் றால் தொழிலாளர்களுக்கு அநீ திகள் இழைக்கப்பட்டதற்கு இந்த காண்ட்ராக்ட் முறை கள்தான் காரண்ம்.
எனவே காண்ட்ராக்ட்முறை எவ்வளவு விரைவில் ஒழிக்கப் படுகிறதோ அதற்கு ஏற்ப இந்த கூப்புகளில்வேலை செல் սկ ւb தொழிலாளர்களின் வேலை நிலைமையும், வாழ்க் கைத் தரமும் உயரும்.
கூப்புகளில் வேலை பார்க் கும்.அடிமைகள் அல்ல. அவர் கள் வேலையை விட்டிச்செல்ல தடை இல்லை என்று காண்டி ராக்ட் நிறுவனங்கள், மறுப்பு வெளியிட்டு இருப்பது'ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
காண்ட்ராக்ட் நிறுவனங் க்ளின் மறுப்பு சரி அல்ல என் தற்கு ஆதாரங்கள் உள்ளன.
வெளியேற
(
8
முடியாது
1985-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் தேதி மேஸ் தி ரிக்கு நிர்வாகம் ஒரு குறிப்பு (சீட்டு) அனுப்பி உள்ளது.
வேலையை விட்டு செல்ல விரும்பிய ஒரு தொழிலாளி கம் பெனியிடம் பட்ட கடனை தீர்த்து விட்டுத்தான் வெளி rயேறவேண்டும் என்று அந்த சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது
அந்த தொழிலாளியின் சம்
* " 認5 ・ "" "、 இந்த வேலையில் காண்ட்
ராக்ட் முறையை உடனே ஒழித்
பளத்தையும் அவருக்கு அறி விக்சுப்பட்ட- அரிசி - ரம்பம் போர்வைகள் துணிகள் ஆகிய வற்றின் விலையை கணக்கிட வேண்டும். கணக் குகளை கம்பெனிகள் சரிபார்த்துதீர்த்த பிறகுதான் அந்த தொழிலாளி அவரது உடைமைகளை எடுத் துக்கொண்டு வெளியேறலாம் என்றும் அந்த குறிப்பில் கூறப் பட்டு இருந்தது.
 

தாயகம் திரும்பியோர் க்கிறார்களென கமிஷன்முடிவு!
லட்சக்கணக்கில் 6) TLD
காண்ட்ராக்ட் நிறுவனத்தின் வரு-வரவு 30 லட்சம் ரூபாய் ஆனால் கனக்கு புத்தகங்கள் எதையும் நிறுவனம் கமிஷனி டம் காட்ட வில்லை. சில - துண்டு காகிதங்கள்
காட்டிப்பட்டன.
தங்களுக்குப் பாதகமான நிலை ஏற்படலாம் என்ற தயக் கம் தான் கணக்குபுத்தகங்களை காட்டாததற்கு காரணமாகும்.
உதவி கலெக்டர் | நடவடிக்கை
கொடைக்கானல் உதவிக் கலெக்டர் குர்னிகால் சிங்கை
கொத்தடிமை முறை ஒழிப்பு
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட 18 ஜிஸ் திரேட்டுமான தான் நியமிக்க வில்லை என்றும் உதவிகலெக் டசி நடவடிக்கை எடுத்தது சரி அல்ல என்றும் அண்ண ப9ா வட்டி கலெக்டர் மாதவன் நம்
* ஏற்பதற்கு இல்லை.
கொத்தடிமை சட்டத்தின் கீழ் அடிமை தொழிலாரை விடு விக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் வழங்கும் தமிழ் நாடு அரசின் அறிவிப்பு எதுவும் காணப்படவில்லை.
20 அம்ச திட்டத்தில்
ஆனால் கொத்தடிமை ஒழிப் புச் சட்டம். இயற்றப்பட்டு 20 ஆண்டு ஆகிறது 20 அம்ச திட்டத்தின் ஒரு முக்கிய அம் சம். கொத்தடிமை ஒழிப்பு ஆகும்.
ஆயினும் அரசு உத்தரவு பற் றியவை எதுவும் காணப்படாத
மட்டும்
ஆ னண் க ள்
தால் அவ்வாறு அரசு உத்தரவு வெளியிடப்படவில்லை என்று முடிவுகட்ட இயலாது.
எனவே உதவி கலெக்டர் குர்ரிைகால்சிங் நடவடிக்கை சட்டத்துக்கு புறம் பா ன து
, : (96u06قہ ,
மேற்கண்டவாறு 3 நபர் கமி ஷனர் அறிக்கையில் கூறப்பட் டுஉள்ளது.
விரிவான ஆய்வு
சுபரீம் கோர்ட்டு கமிஷனின் உத்தரவின் பேரில் ஆர். வித் யாசாகர், அலோசியஸ் இருத யம் எம். தேவதாஸ் ஆகிய சமூக நல தொண்டர்கள்
கொண்ட மற் றெ ரு குழுவும்
அமைக்கப்பட்டது.
இந்தக்குழுவினர் கொடைக் கால ஸ்மலை தாடர்களில் வேலை செய்யும் தொழிலாளர் கள் நிலைமை பற்றி விரிவான சர்வே நட த் தி ஏராளமான
விவரங்களை திரட்டி இருக்கி 1935., பியார் கூறி இருக்கிறார் இதை
' டான் இந்தியா, இந்தியா விஸ்கோஸ் ஆகிய நிர்வினங் கள் நிர்வகிக்கும் கூப்புகளில்
251 குடும்பங்களைச் சேர்ந்த
833 தொழிலாளர்கள்) 362
271 பெண்கள் கொத்தடிமைகளாக இருப்ப தாக இந்த குழு நிர்ணயித்து
* இருக்கிறது.
இந்த குழு தாவது- : ...'
அரசு நிர்ணயித்த ஊதியத் துக்கும் குறைவாக சம்பளம் இல்லாமல் வேலை வாங்குதல்
e- P போன்ற முறைகேடுகள் உள் ளன
கூறி இருப்ப
திருமிணங்கள் நடத்தக் கூட கட்டு ப்ப ாடு க ள் உள்ளன் கான்ட்ராக்டர்கள் அங்கீ கரித்த நாட்களில் தான் திரும
(4 ம் பக்கம் பார்க்க),

Page 4
4. uDébens sur undg
கர்னாடக ரப்பர் தோட்டத்தி
பல கோரிக்கைகளை வைத்
கர்னாடக பாரஸ்ட் பிளாண் டேசன் கார்ப்பரேசனுக்குச் சொந்தமான ரப்பர் தோட்டங் களில் பணி செய்யும் தாயகம் திரும்பிய தொழிலாளர்கள் பல் வேறு பட்ட கோரிக்கைகளை முன் வைத்து அடையாள வே லைநிறுத்தம், குறைந்த உற்பத் தியில் ஈடுபடுத்தல் போன்ற G3Lstru'l-556o குதித்துள் ளனர்.
கீழ்கண்ட கோரிக்கைகளை வைத்து போராடி வருகின்ற
or fl.
எடுத்த மொத்த சம்பளத் திற்கு போனஸ் கிடைக்க வேண்டும்.
வேலையிலிருந்து ஓய்வு பெறுபவர் நியமனம் செய்யும் நபருக்கு நிர்வாகம் அவரது வேலையை கொடுக்க வேண் டும்.
தோட்டத்தில் தொழில் புரி யும் தொழிலாளர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்த பிறகு மற்றவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்.
பிளான்டேசனில் செய்யும் டி. ஆர். சி. எக்கார ணத்தையும் கொண் டு ம் குறைக்கக் கூடாது.
பதிவு
மூன்று. கிலோ மீட்டர் அல்லது அதற்கு மேல் நடந்து சென்று பால் வெட்டி பாலை சேகரித்து சுமந்து வரும் தொழி லாளர்களுக்கு நடை செலவு கொடுக்க வேண்டும்.
நிர்வாகத்தால் திணிக்கப் பட்ட"மினிமம்" தொழிலாளர்க ளுக்கு மிகவும் கஷ்டத்தை ஏற் படுத்தியுள்ளது. எனவே 'மினி மம்" உடனடியாக குறைக்கப் பட்டு சீராக்கப் படவேண்டும்,
பிராவிடெண்ட் (பாரம் எண் 28)
JST பிடித்தம்
செய்த அத்தாட்சி சிலிப் உட னடியாக வினியோகிக்கப்பட வேண்டும்.
அனைத்து காலனிகளுக் கும் மின்சாரவசதி செய்து தரப் பட வேண்டும்.
மின்சாரம் வழங்கப்பட்ட காலனிகளுக்கு தனித்தனியாக மீட்டர் பொறுத்தும் வரை மின் சார தொகையை நிர்வாகம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
தொழி லா ள ர் களி ன் குழந்தைகளுக்கு வயது வரம் பின்றி பாடசாலை புத்தக செ லவு கொடுக்கப்பட வேண்டும்.
சூப்பர்வைசர், டிரைவர் குமாஸ்தா ஏனைய வேலைகள் கே. எப். பி. சி. நிர்வாகத்தில் இருந்தால் தொழிலாளர்களின் தகுதியுள்ள பிள்ளைகளுக்கு மு த லி ட ம் கொடுக்கப்பட வேண்டும்.
ம ரு த் து வ மனை யி ல் போதிய வசதி இல்லை, சரியா னமுறையில் மருத்துவ வசதி செய்து, போதுமான மருந்து வகைகளும் வினியோகிக்க வழி செய்து, கூடுதலாக டாக்டர் ஒருவரும் நியமிக்க வேண்டும்,
அனைத் து காலனிகளுக்
கும் குடிநீர் வசதி செய்து தரப் படவேண்டும்.
தற்போதுள்ள ஆயாக் களுக்கு அதிக சம்பளம் மற்றும் யூ னி பா ர ம் கொடுக்கப்பட வேண்டும்.
ஃ ப ய ர் வாச்சர்களுக்கு கொ டு க் க ப் படும் 300.00 ரூபாய் சம்பளம் அநியாயமான குறைவு; அவர்களுக்கு நியாய மான அதிக சம்பளம் கொடுக் கப்படவேண்டும்.
கர்னாடக பாராஸ்ட்பிளாண் டேசன் கார்ப்பரேசனின் ரப்பர் தோட்டத்தில் 926 தாயகம் திரும்பிய குடும்பங்கள் பணி செய்கிறார்கள். சிறிமா-சாஸ்

வாழ்வு
ஆகஸ்டு 286
6)
துபோராட்டம்!
திரி ஒப்பந்தத்தின் கீழ் தாய கப் திரும்புவோர்களுக்கே இந்த ரப்பர் தோட்டங்களில் வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள் ளது. கர்னாடக மாநிலத்தில் தென் கன்னடம், சுள்ளியா, புத்தூர் மாவட்டங்களில் இத் தோட்டங்கள் இருக்கின்றன.
இவர்கள் மத் தி யி ல் பல தொழிற்சங்கங்கள் இருக்கின் றன. ஜென ர ல் ஒர்க்கர்ஸ் யூனியனைச் சேர்ந்த தொழி லாளர்களே இந் த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலனிக்கு உதவி
புதுக்கோட்டை மாவட்ட முருகராஜ் காலனியில் நீண்ட காலம் கீத்துவீடுகளாக இருந்த 32 வீடுகளுக்கு யூ. எப். எப். ஆர். ஒடுகள் போட்டுக்கொடுத் திருப்பதாக, மேற்படி அமைப் பின் புதுக்கோட்டை பிரதிநிதி கதிரேசன் அவர்கள் தெரிவித் துள்ளார்.
இங்கு கைத்தறி நாற்பு நிலை யம் அமைக்கப்பட்டு, காலணி பெண்களுக்கு காதி போர்டு மூலம் வேலை வாய்ப்புக்கள் அளித்துள்ளது என்றும் தெரி வித்துள்ளார்.
கல்லூர், மேட்டுப்பட்டி, திரு வரங்குளம், கலிபுல்லா, முருக ராஜ் ஆகிய காலனிகளில் பால் வாடி அமைத்து ஆசிரியை களும் செவிலித்தாய்களையும் நியமித்துள்ளதோடு, சில கால னிகளுக்கு குடிநீர் வசதியும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித் துள்ளார்.
(3-ம் பக்கத் தொடர்ச்சி)
ணத்தில் கலந்து கொள்ள லாம் எ ன் ற கட்டுப்பாடும் உண்டு.
இறந்தவர்களுக்கு முறையா ன தகனச் சடங்குகள் நடத்த அனுமதிக்கப்படுவது இல்லை அவசர அவசரமாக உடல்கள் புதைக்கப்படுகின்றன.
மரங்களில் பட்டை உரித்தல் வெட்டுதல் போன்ற வேலை 65 காண்ட்ராக்ட்டுக்கு விடுவதை ரத்து செய்து விட்டு தொழிலாளர் கூட்டுறவுகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
மேற்கண்டவாறு குழு கூறி உள்ளது,
இலங்கை தமிழர்களுக்கு ஏற் பட்ட துன்பங்கள் மற்றும் அவர் களின் நிலைமையை சித்தரித் துக்காட்டும் விவரமான அறிக் கை தமிழக அரசு பரிசீலிப்ப தற்கு உரியது என்று சுப்ரீம் கோர்ட்டு சிபாரிசு செய்து உள் ளது. O
கடைகள் கிடைக்குமா?
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு தமிழ் நாட்டில் பல நகரங்களில் அரசு குறைந்த வாடகைக்குகடைகள் (மார்க்கட்)கட்டிக் கொடுத்துள் ளது.
ஆனால், நாங்கள் வாழும்
கூடலூரில் இவ்வாறான ஏற் பாடு ஏதும் இல்லை.
தற்போது கூடலூரில் கள்ளிக் கோட்டைக்கு செல்லும் சந்திப் பில் (பழைய பஸ் நிலையம்) அருகே 60 கடைகளைக் கட்டி முடிக்க பேரூராட்சி ஏற்பாடு செய்துள்ளது. அரசும் அதற்கு பணம் ஒதுக்கியுள்ளது. இக் கடைகளில் தாயகம் திரும்பி யோருக்கு அரசு அளிக்க முயற் சி மேற்கொண்டுள்ளோம் எங் களுக்கு கிடைக்குமா ?
- 6.g. 5 LITT FT
கூடலூர் - நீலகிரி
உதவிகள் இல்லை
எங்கள் முகாமில் 11 குடும்பங் கள் உள்ளன. மொத்தம் 50 நபர்கள் தான் உள்ளார்கள், இங்குள்ளவர்களுக்குஉதவிகள் கிடைப்பது குறைவு உணவு பொருட்களுக்கு மிகவும் கஷ்ட மாக உள்ளது எல்லாமுகாமி லும் கூடியளவு உதவிகள் செய் கிறார்கள் எங்கள் முகாமில் சிறிதளவு கூட உதவி இல்லா மல் மிகவும் சிரமப்படுகிறோம். வைத்திய வசதிகள் இல்லை. மருத்துவர்கள் யாரும் வந்து பார்ப்பதில்லை. எங்களுக்கு ஏதும் உதவிகள் கிடைக்குமா ?
இலங்கை அகதிகள் அகதிகள் முகாம் ஆலம்பாக்கம் கடலூர்.

Page 5
12 வருடங்களாகியும் கட
இலங்கையிலிருந்து குடும்பத் துடன் தாயகம் திரும்பிய நான் 7.10 84 அன்று மண்டபம் முகாமில் ரூபா 2000 கடன் உதவிப் பெற்றேன். அதன் பின்னர் புதுக் கோ ட் டை மாவட்டம் ஆலங்குடி வட்டத் திலுள்ள எ ன து சொந்த ஊரான வெள்ள கொல்லை கிராமத்தில் குடியேறினேன்.
எனது வீட்டுக் கடனுக்காக 1975ம் ஆண்டு மனு செய் தேன். நான் நேரடியாக விசா ரணை செய்யப் பட்டதோடு, எனது குடும்ப அட்டையையும ஒப்படைத்தேன் ஆ  ைர ல் அந்தவேளையில் எனது கடன் கட்டு மண்டப முகாமிலிருந்து மாவட்ட ஆட்சியாளருக்கு வந்து சேராததால் அது வந்து சேரும் வரை காத்திருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டேன்.
பின்னர் மண்டப முகாமிலி ருந்து எனதுகடன் கட்டுவராத வேளையிலேயே, அலுவலக குமாஸ்தா ஹனிப்பா என்பவ ரால் எனது மனு (சீ எல். ஏ. 1 1975-76) குடும்ப அட்டை யின் ஆதாரத்துடன் பரிசீலிக் கப்பட்டு கடன் வழங்க அனு மதிக்கப்பட்டது.
பின்னர், பல முறை நான் மாவட்ட ஆட்சி அலுவலகத் திற்கு சென்று பார்த்தேன். மறு வாழ்வு இயக்குனருக்கும் விண் ணப்பம் செய்துக்கொண்டேன் நான் எழுதியகடிதத்திற்கு மறு வாழ்வுத்துறை இயக்கக்திலி ருந்து 21.1.76யில் ஒரு கடிதம் (ஒ எம்யூ டீ 730176) வந்தது. அதன் பின்னால் இதுவரை எனது கடன் குறித்து எந்தவித முடிவும் ஏற்படவில்லை.
எனது கடன் கட்டும், கட வுச்சீட்டும் தவறுதலாக மண் டபமுகாமிலிருந்து தஞ்சாவூர் ஆட்சியாளர் அலுவலகத்திற்கு அனுப்பப் பட்டிருந்தது அது 1982 ஜூலை மாதத்தில்தான் தனித்துணைத் கலைக்டருக்கு திருப்பி அனுப்பப் பட்டது, அறந்தாங்கி கோட்ட வரு வாய்த் துறை அலுவலகத்தின் 27-7-1982ந்தேதி (கடித எண் ஆர்ஒ8214/82) அதேவேளை
யில், நான் மனு செய்து க் கொண்ட க ட ன் கட்டோ. குடும்ப அட்டையோ ஆட்சி யாளர் அலுவலக மறுவாழ்வுப் பகுதியில் இல்லை என்று தெரி வித்து விட்டார்கள்.
பின்னர் நான் மறுவாழ்வுத் துறை இயக்குனருக்கு மனு செய்தேன். அதன் பே ரி ல் விசாரணை செய்யும் படி மாவட்ட அலுவலர்க்கு உத்தர விட்டார்.புதுக்கோட்டைதனித் துணை ஆட்சியாளர் திரு முக மது அப்துல் அசீஸ் அவர்கள் விசாரணை செய்து (அவரது கடிதம் 5-3 83) எனது புதிய புகைப் படம் ஒன்றும், ரூபா 2.50க்கு பெறுமதியான பத்திர மும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்
கொண்டார். புதிய குடும்ப அ ட்  ைட வழங்குவதற்கு மேற்படி ஆ வ ண ங் க ள்
மறுவாழ்வுத்துறை இயக்குன ரின் அங்கீகாரத்திற்கு அனுட் யப்பட்டுள்ளதாக தெரிவிக்கட் பட்டது.
மீண்டும் தனித்துணை ஆட் éfluu (T6mTJ Ardio விசாரணைக்கு அழைக்கப்பட்டேன், ஆனால் கடைசியாக செய்துக் கொள் ளப்பட்ட மனுவுக்கு எந்தவித மான பதிலும் அளிக்கப்பட மல் எனது குடும்ப அட்டை வழங்கப் பட்டதற்கான எந் ஆதாரமூம் இல்லை எ ன் பூ கடன் மறுக்கப்பட்டு விட்டது
ஆச்சரியமாகவும், அதிர்ச்
யாகவும் இருக்கிறது. கடனு, விக்கு மனு செய்யும் போதே
 
 

குடும்ப அட்டை, கடவுச்சீட்டு போன்றவற்றை 4 அலுவலகங் களில் சமர்ப்பிக்கும் போதோ எந்தவிதமான சான்றிதழ்களும் வழங்கப் படுவதில்ல்ை. நான் எந்த வகையில் நிரூபிக்க முடி யும்? நான் இந்தியா வந்து உரிய காலத்தில் மனு செய்து ஒன்பது வருடமாகியும் எ ன் மனு குறித்து எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என்ப தோடு, சம்பந்தப்பட்ட எந்த ஆவணங்களும் இல்லை. கண் டுப்பிடிக்க முடியவில்லை.
நான் 1975யிலேயே வீட் டுக்கடனுக்கு மனு செய்து விட் டேன்; ஆனால் மண்டப முகா மிலிருந்து வரவேண்டிய கடன் கட்டு சம்பந்தப்பட்ட ஆவ
ணங்கள் வந்து சேரவில்லை.
ஆறு ஆண்டுகளுக்குப் பின் 1983யில் அது ஆட்சியாளர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந் திது.
அது வந்து சேர்ந்து விசா ரணை செய்யப்பட்ட போது, 1975யில் நான் செய்துக் கொண்ட மனு, சமர்ப்பித்த குடும்ப அட்டை அடங்கிய ஆவணங்கள் காணவில்லை. கண்டேபிடிக்க முடியவில்லை. அலுவலகத்தில் சமர்ப்பிக் கப்படும், ஆவணங்களுக்கு எந்த சான்றிதமும் வழங்கப்படு வதில்லை.
1983யில் மறுவாழ்வு இயக்
குனரில் உத்தரவுக்கு இணங்க
தனித் துணைக் ஆட்சியாள
னுதவி கிடைக்கவில்லை !
ரால் விசாரணை செய்யப் பட் டேன். அவர் கோரியப் படி. புதிய புகைப் படம் ஒ ன் று ம் ரூபா 2/50 பெறுமதியான பத் திரமொன்றும் சமர்ப்பித்தேன்.
ஆனால் கடனுதவி மறுக்கப் பட்டு விட்டது. எ ன் னி டம் எந்த தவறுகளும் இல்லை. சம் பந்தப்பட்ட அலுவலகத்தவர் களே காரணமாகும்
ஐயா! என்னுடைய கடனு தவிக்கு மட்டும் இந்த கதியல்ல பல ஆயிரம் பேர்களுடைய கடன்களும் இதே கதி தான், மனு செய்து பல வருடங்களாகி யும் கடனுதவி கி  ைட க் க வில்லை. அர்த்தமற்ற காரணங் களால் நிராகரிக்கப் படுகிறது. பலருடைய கடன் கட்டுகள் இல்லை. இதனால் சம்பந்தப் பட்ட பல மனுதாரர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கிறார் கள்.
அதிகாரிகள் தங்க ள் பை களை நிரப்புவதிலேயே குறி யாக இருக்கிறார்கள். இடைக் தரகர்கள், கான் டிராக்ட் காரர் களோடு கை கோர்த்துக் கொண்டு தனிப்பட்டவர்களின் கடன் மனுக்களை பரிசீலிப்ப தில்லை. இவர்கள் விஷயத்தில் பலதரப்பட்ட ஊழல்களைச்
செய்து வருகிறார்கள்.
எனது கடன் பெறுவதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுத் தும் கிடைக்கவில்லை. ling வாழ்வுத்துறை அலுவலகர்க ளால் எந்த சரிவும் கிடைக்கப் போவதாக தெரிய வில்லை. சட்ட உதவியை நாடும் நிலை யே இருக்கிறேன்.
-9. éîles rus
வெள்ளக்கொல்லை கிராமம் ஆரயபட்டி
ஆலங்குடி புதுக்கோட்டை வட்டம்
எங்கள் பிரச்சனைகளுக்கு பிரச்சனைகளை எழுதுவோர் மிகத் தெளிவாகவும், விளக்க Lost 6 h எழுதுவதோடு - இரண்டு பிரதிகளாக எழுதி அனுப்ப வேண்டுகிறோம்.
- ஆசிரியர்

Page 6
புதிய கல்விக் கொள்கை கடந்த கல்வி ஆண்டில் கல்லூரி களிலிருந்து கடைத் தெருவரை விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம்
தங்களை மேதைகளாக கற்ப னை செய்துக் கொண்டவர் கள் பலரும் உண்மையான மே தைகளாக இருந்தவர்கள் சில ரும் சேர்ந்து கருத்தரங்கு, மா நாடு என்று திருவிழா காலாட் டாவே செய்துவிட்டனர்
இந் நாட்டில் கல்விமுறையே மாறி எல்லோருக்கும் அறிவு பெருக்கெடுக்க போ கிற து என்று பலரும் நம்பினர்.
திட்டம் அறிவிக்கப் பட்டது கடல் பார்க்க ஆசைப் பட்டவ னுக்கு கடலையே காண்பித் தால் . ஆ ன எ ல் சொத்தை கடலை”யை காண்பித்தால் எப்படி இருக்குமோ அ ப் படி ஆகி விட்டது பலருக்கு.
நான் என் வாழ்க்கையை ஆசிரியனாக ஆரம்பித்தவன் முதலாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை போதிக்கின்ற ஒரு வாய்ப்பை பெற்றவன் ஓர்பத்தி ரிகை விமர்சகனைப் போலில் லாமல் இப்பிரச்சனை நோக்கி அலசிப்பார்க்க விரும்புகிறேன் புதிய கல்விக் கொள்கையைப் பற்றி ஒரிரு கருத்துகளைச் சொல்லி விட்டு, மாறுதலில் முற்றிலும் மறக்கப் பட்டவைப் பற்றி எழுதுகிறேன்,
புதிய கல்விக் கொள்கையின் மி க ப் பெரிய சிறப்பம்சமாக சொல்லியிருப்பது "மாதிரிப்பள் ளிகள் பற்றியது கல்வி மாவட் டங்கள் எல்லாவற்றிலும் ஒவ் வொரு மாதிரிப்பள்ளி அமைக் கப்படும்; அதற்கு ஒரு கோடி (ஒவ்வொரு பள்ளிக்கும்) செல் வாகும். உறையுள் பள்ளிகளாக (Residential Schools) g(5ds கும் இதில் போதனா மொழி ஆங்கிலம். ஹிந்தி தனி முக்கி யத்துவம் பெறும்.
இரண்டாவது சிறப்பம்சம், நாடு முழுவதும் தொழிற் கல் விக்கு முக்கியத்துவம் தரப் படும் வேறு பெரிதான அம்சங் கள் எதுவும் இருப்பதாக அடி யேனுக்கு தெரிய வில்  ைல. ஆ  ைா ல் கல்விப் பிரச்சனை இருக்கிறதே. அது சாதாரண மானதல்ல அவற்றை பார்ப் போம்.
இன்றைய பள்ளிகளின் கிலைமை
ஏதாவது ஒரு கிராமத்துக் குள் நுழைந்துப் பார்ப்போமே. ஊரின் ஒதுக்குபுறமாக இன் றைக்கோ நாளைக்கோ என்று நாட்களை எண்ணிக்கொண்டி ருக்கும் கட்டிடம் தென் படு கிறதா? அ  ைத நெருங்க நெருங்க மூக்கில் சிறு நீர் நெடி ஏறுகிறதா? அது தான் கிராமத் தி லுள் ள T. F. 606) இருக்கும்.
ஆமாம் நம்முடைய நாட் டில் 40 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளின் கட்டிடங்களோ
இக்கட்டுரையாளர் ஒரு எம்.எஸ்ஸி. பட்டதாரி. இவர் பல கல்வி நிறுவனங் களில் ஆசியராக இருந்து பெற்ற பல அனுபவங் களை கொண்டு புதிய கல் விக் கொள்கையை அலசு கிறார்.
இல்லை. 2 இலட்சம் பள்ளிக ளின் கட்டிடங்கள் இன்று விழுந்து விடுமோ நாளை விழுந்து விடுமோ என்று இருக் கின்றன. 60 ஆயிரம் பள்ளிகள் ஒராசிரியர் பள்ளிகள். இரண்டு இலட்சம் பள்ளிகளில் கரும்பல கைகளே இல்லை (இல்லாவிட் டால் என்ன? சுவரில் கரித் துண்டில் எழுதியே கிராமத்து சுடான செய்திகளை பொறுப் புள்ள பலர் மக்களுக்கு தெரி விப்பது இல்லையா?)
கல் லூ ரி க ள் இருக்கின் றனவே, இவை கொஞ்சம் பர
 

மக்கள் Logoa Ta
வா இல்லை. நூலகங்கள் இருக் கும் ஆய்வகங்கள் இருக்கும். நூலகத்திற்கு தேவையான புத் தகங்கள் இருப்பதாக கோப்பு கள் கூறும்.பல புத்தகங்கள் வள் ளுவர் காலத்து செல்லரித்தஉடைந்த ஒலைச் சுவடிகளை நினைவூட்டும். முக்கிய புத்த கங்களை எப்போது கேட்டா லும் யாராவது எடுத்து போய் இருப்பதாக கூறுவார்கள் பையன் தப்பித்தவறி புத்தகத் தை பார்த்து விடப்போகிறான் என்று ஆசிரியர்கள் பத்திரமாக தங்கள் வீட்டிற்கு எடுத்து சென் றிருப்பார்கள். இப்படி குறை பாடுகள் சொல்லி மாளாது.
தனியார் பள்ளிகளை எடுத் துக் கொண்டால் நிலைமைகள் மிகவும் கொடுரம் தான். பள்ளி யில் சேர பத்தாயிரம் நன்கொ டை, விலக ஐயாயிரம் எனப் பிக்கல் பிடுங்கல்கள். இப்பள்ளி களின் கல்வித் தரத்தை ஆசிரி யர்களுடைய நிலைமையை நான் விளக்கும் போது புரிந்துக் கொள்ளலாம்.
பல பள்ளிகளில் கழிப்பிட வசதிகள் கூட இல்லை. சென் னைப் போன்ற நகர்களில் ஒரு பெரியகூரை வீடுதென்பட்டால் அதுகண்டிப்பாக ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியாகத்தான் இருக்கும்
சமீபகாலமாக கல் வி யி ன் தரத்தை உயர்த்த சுய நிதி கல்
லூரிகள், முக்கியமாக தொழிற்
இந் நாட்டிலே உருவாகி உள்ளன. மக்களுக்கு சேவை செய்யவே பிறப்பெ டுத்த பல செல்வந்தர்களின் சேவை இது. ஆய்வகங்களோ செ ய் முறை பயிற்சிக்கென தொழி ல க ங் க ளே இங்கு இல்லை.
கல்லூரிகள்
கல்
மாணவர்கள்
நிலைமை
சூழ்நிலையின் உருவாக்கம் மனிதன். சூழ்நிலை ஒரு மனித
னை முட்டாளாகவும் மாற்றும்
மாமேதையாகவும் உருவாக்கும் இந்தியாவின் சாதாரண மாண வனின் நிலைமை என்ன?பட்டி னியின் கொடுமையில் வாழும்
அவனால் ஆழ்ந்து கல்வி கற்க (Ulquior?
வறுமையின் கோரப்பிடியில் நாட்டில் பாதிக்கு மேற்பட் டோர் உள்ள போது வளமான கல்வி பெறுவது சாத்தியமா?
பின் தங்கிய நிலையிலிருக் கும்-கீழ் மட்டத்தில் இருக்கும்
ஒருவன் தப்பித்தவறி கல்லூரிக் கு வந்து விட்டால் அவன்
தனது வ ச தி யி ன் மை  ைய நினைத்து நொந்துக் கொள்ளத் தான் நேரமிருக்கும். அவனை போல உடைஉடுத்த முடியா தா என்று வசதியுள்ளவனை பார்த்து ஏங்கும் பல புத் திசாலி மாணவர்களை நான் கண்டிக் கிறேன். ஷ" போன்ற காலணி விசயம். இது கூட கிராமத்தில் இருந்து கல்லூரிக்கு வருபவ னுக்கு எட்டாக் கனியாக இருக் கிறது நன்றாக உடை உடுத்தி நல்ல காலணிகளை அணிப வனை ஒரு தாழ்வுடன் பார்க் கும் மாணவர்களை கண்டு நான் மனம் நொந்திருக்கிறேன். நான் U - L U 9- to ly படித்த காலத்தில் இதை மனதில் கொண்டு ஷ"0 முதலிய வைகளை அணிவதை தவிர்த் தும் உள்ளேன் மேலும் ஒரு குடும்ப சூழ்நிலை எப்படி ஒரு வனின் சி ந் த  ைன திறனை
பாதிக்கும் என்பதனை கல்வி
யின் மீது கலாசாரத்தின் பாதிப் புகள் என்ற தலைப்பில் பார்ப் போம்.

Page 7
பின் நிலை எ5
இப்போது ஆசிரியர்களும்கைள்.
கல்வியும் எவ்வாறு இருக்கிறது என்பதைப்பார்ப்போம்.
ஆசிரியர்களும் கல்வியும்
கல்வியின் காவலனாக விளங் குபவர் ஆசிரியர், நம் நாட்டில் சமுதாயத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு இருக்கி றதே அது ஒன்றே போதும் எத் தனை புதிய கொள்கையை அறிவித்தாலும் சமுதாயம் சீர பூழிந்து போவதற்கு.
இந்த நாட்டில் ஓர் ரிசர்வ் பேங்க்பியூனுக்குசம்பளம்மாதம் இரண்டாயிரத்திற்கு மே ல்,
அங்கே நான் ஒருவன் தான் குறைந்த கல்வி தகுதியும் குறைந்த பணியிலும் ஆசிரியர்) ஈடுபட்டிருந்தவன். ஆனால் அங்கு அவர்கள் செய்த விவாதங்களைக்கேட்டு நான் தலையை பிய்த்துக் கொள்ளாத நிலைதான் போங் 66.
ஒரு 55 வயதுநிறைந்த பேரா சிரியர் கல்வி முன்னேற்றத்திற் காக கூறிய கருத்தை கேளுங் 岛6s2
‘ஒரு ஆசிரியனுக்கு நாற்பது வயதில்தான் நல்ல மனவளர்ச் சியும் முதிர்ச்சியும் ஏற்படுகி றது. ஆனால் ஒய்வு பெறு வதோ 58 வயதில், ترکی லால் சரியாக தான் பெற்ற அத் தனை அறிவையும் போதிக்க
ஆனால் ஒரு கல்லூரி ஆசிரிய
னுக்கு ஊதியம் ரூபா 1600குறைந்த பட்ச கல்வி தகுதி முதுகலை பட்டம் பெற்று, மே Gou M. Phi, Lu Lih 6hsrils வேண்டும். இதனால் ஆசிரி யன் சம்பளத்தை பற்றி கேட்க வே வேண்டாம். இதனால் ஆசிரியர் தொழிலுக்கு யாரும் மன விருப்பத்தோடு செல்வ தில்லை. எந்த வேலையும் கிடைக்காத பட்சத்தில், ஒதுங் கும் ஒரு அகதியின் புகலிடமாக ஆசிரியர் பணி இன்றைக்கு திகழ்கிறது. இதனால் சிந்திக் கவே சக்தியற்ற பலர் ஆசிரியர் களாக உள்ளனர். சிந்திக்கிற வர்கள் கணிசமாக இருந்தா லும் அவர்களுடைய பொரு ளாதார சூழ்நிலைகளால் மட்டு
மல்லாமல் நமது நாட்டில் சுய
சிந்தனைக்கு கிடைக்கின்ற மரியாதை கண்டும் சிந்திக்க மறந்து விடுகின்றனர்.
புதிய கல்வி கொள்கைப்பற்றி சில கருத்தரங்குகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத் தது. ஒரு கருத்தரங்கில் கல் லு ரி பேராசிரியர்களும் முதல் வர்களும் கலந்து கொண்டார்
622.
முடியவில்லை. எனவே ஆசி ரியர் ஓய்வு பெறுவதை அறுப தாக உயர்த்த வேண்டும்" என்று.
40 வயதில் முதிர்ச்சி வந் தாலும் 18 வருடங்கள் இருக் கின்றனவே இதில் போதிக் காத போ த னை யை யா இரண்டு ஆண்டு காலத்தில் போதித்து விடபோகிறார்? நீங் களும் சிரிக்கலாம் ஆனால் நான் என்ன சிந்தித்தேன் தெரியுமா?
பாவம் அவருக்கு என்ன பிரச்சனையோ கல்யாண வயதில் அவருக்கு எத்தனை பெண்களோ? ஓர் இரண்டு வருட பதவி. நீடித்தால் அந்த வருமானத்தில் ஒரு பெண் ணுக்கு கஷ்டப்பட்டு கல்யா னைத்தை முடித்து விடலாம் என்று அவர் மனம் சிந்தித்

B6
திருக்கும். திற்கு யோசனையாக அவர் தன் குறைபாட்டை சொல்லும் அளவுக்கு அவருடைய நிலை மை இருக்கிறது. *
அந்த வி வா த த் தி ற் கு தலைமை பொறுப்பேற்றிருந்த இன்னொரு வயதானவர் சொல் லுகிறார் பாருங்கள். ஆரம்ப கல்வியையோ, உயர் பள்ளிகல்வியையோ சீர்திருத்த அவசியமில்லை. கல்லூரி உயர் கல்வியை சீர்திருத்தத்தினால் அந்த சீர்திருத்த உயர் கல் வியை பெற்றவர்கள் ஆரம்ப கல்வியை சீர்திருத்தி விடுவார் கள்’’என்று.எப்படியோசனை?
அவருக்கு என்ன குறை யோ உயர் கல்வியை சீரமைத் தால் கல்லூரி பேராசிரியரான அவருக்கு சிறிது வருவாய் கூடு தலாகும் என்ற உந்துதலோ?
இப்போது நான் சொல்ல போகும் கருத்தை பலர் எதிர்க் கலாம். ஆம் பல வயதான ஆசி ரியர்களை பற்றியது. கல்வியை திட்டமிடும் அதிகாரம் வய தான வருக்கு அளிக்கப்படு கிறது. ஆனால் இவர்கள் அனு பவம் என்ற கொண்டி குதிரை யின் மீது சவாரி செய்வதையே குறிக்கோளாக கொண்டுள்ள 6ხrf. அறிவை வளர்த்துக் கொள்ள சிறிதும் விரும்புவ கில்லை. தனக்கு எல்லாம் தெரி யும் என்ற இவர்களது மனப் போ க்கு கல்வியை குழி தோண்டி புதைத்தே விட்டது. இன்றைக்கு M. A., M. Sc. போ ன் த வகுப்புகளுக்கு போதிக்கும் வயதான பேராசிரி யர்களை தேர்வு எழுதி M.A. M.Sc. பட்டம் பெற சொல்லுங் கள்? ஐம்பது சதவித ஆசிரியர் கள் தேறி விட்டால் நான் வாழ்க்கை முழுவதும் மொட் டையடித்து உலா வருகிறேன். பலர் பெட்டி கடையில்கணக்கு எழுதகூட தகுதியற்றவர்கள்.
கல்வித் திட்டத்
**நாம்
7
எனக்கு M. Sc. வேதியல் போதித்த ஆசிரியர் ஒருவருக்கு தாமிரத்துக்குகுறியீடு(Symbol) தெரியவில்லை. அதே கல்லூரி யின் கணித பேராசிரியருக்கு Sin 180 மதிப்பு தெரியவில்லை இவர்களெல்லாம் கூ ட் டம் போட்டு கல்வியை பற்றி விவா திக்கிறார்கள். இன்னும் கொடு மை அந்த கலலூரி தன்னாட்சி (Autonomous) go f6) s T y tî பெற்ற கல்லூரி, பாடத் திட்ட த் தை நிர்ணயித்து கொள்ளும் Φ ήσσοια இந்தபேராசிரியர்களுக் குண்டு. அவர்கள் காலத்தில் எழுதிய நோட்சையே இப்போ தும் படிக்கிறார்கள். எதுவும் போதிப்பதில்லை. அறிவோடு கூடிய அனுபவத்திற்கு மிக்க மதிப்பு அளிக்க வேண்டும் என் பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால்'வெறும் அனு பவம் ஒன்றை மட்டுமே ஆதார it is கொண்டவர்களுக்கு வாய்ப்பு அளிப்பது மடமை.
ஓர் நல்லாசிரியர் 6 т ц”йц_yl4இருக்க வேண்டும்? அவரு டைய தகுதிகள் என்ன என் பதை பற்றிய என் கருத்துகளை கூறுகிறேன்.
1. ஆசிரியர் நல்ல சிந் தனை திறனும் எதையும் சரி யாக எடை போட கூடிய திற னும் கொண்டவராக இருத்தல் அவசியம்.
சிந்தனை திறன் இருப்பவர் தான் கற்றவற்றை சீர் தூக்கி பார்த்து, அதன் சாதக பாதங் களை நன்கு அறிய முடியும். வெறுமனே புத்தக பூச்சியாக இருந்தால் போதாது?
2. கற்பனை வளம் மிக்கவ வராக இருத்தல் அவசியம், கற்பனை வளம் கொண்டவருக் குத் தான் சரியான எடுத்துக் காட்டுகளை கூறி பாடத்தை விளக்க முடியும்.
3. நல்ல மனப்பக்குவம் மற் றும் போதுமான உளவியல் அறிவு வேண்டும். ஆசிரியன் கையில் வருங்கால சமுதாயம் ஒப்படைக்கப்படுகிறது. அதை அவன் வார்த்தெடுக்க வேண் டும். வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர். நல்ல மனபக்கு
வம் இல்லாதவர்கள் 6) if இன்று ஆசிரியர் பணியில் இருப்பதை காணும் போது
(11-ம் பக்கம் பார்க்க)

Page 8
கர்நாடக பால்மரக் காட்டில்
மக்கள் மறுவாழ்வு ஜூன் மாத இதழ் கிவடத்தது. நன்றி. அவ்விதழில் 'கர்நாடகா பால் மரக்காட்டில்” என்ற தொடர் கட்டுரையில், பக்கம் எட்டு. பத்தி இரண்டில்,
“முதன் முதலில் சாவுக்கு உதவிசெய்யும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது elf Ir Ug5T கலா மன்றம். யாரும் மரண மடைந்தால் சவக்குழி வெட்டிக் கொடுத்தல் போன்ற உதவிகள் செய்யப்பட்டது."
என்று குறிப்பிடப் பட்டக் கருத்து முற்றிலும் தவறு. சார தா கலா மன்றம் ஆரம்பிக்கப் பட்டதின் நோக்கமே தமிழர் களின் கலை, கலாச்சாரம், கல்வி, மற்றும் பொதுநலச் சேவை செய்தலுமே ஆகும். அதில் ஒர் அங்கமே சாவுக்கு இலவசமாக சவக்குழி, மன்ற இளைஞர்களால் தோண்டுவ தும் ஈமக்கிரிகைகளில் பங் கேற்று உதவிபுரிவதுமாகும்.
மேலும் அதே பகுதியில் *கோவில் கமிட்டிகள் உருவாக் கப்பட்டு அதன் உதவியால் விளையாட்டுச் சங்கங்கள் அமைய துணையாகஇருந்தது” என்பதும் தவறு.
உண்மையில் விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள பல இளைஞர்களால் ஆரம்பிக்கப் பட்டதே இவ்விளையாட்டுச் சங்கம். இன்று பரவி புகழ் பெற் று பல இளைஞர்களை விளை யாட்டில் வட்ட மாவட்ட
மாநில அளவில் பங்கேற்கச் செய்துள்ளது. இ த ற் கு உறுதுணையாக தொழிற் சங்கங்களும் விளையாட்டு
உபகரணங்களை இலவசமாக கொடுத்துதவிய ரப்பர் கூட்டு
றவு ஸ்தாபனம் (K.F.H.C Ltd) மும் இளைஞர்களில் விளையாட்டுத் துறை யி ல்
உதவி புரிந்தமை இன்றியமை யாதது. அது மட்டுமல்லாமல் இளைஞர்களின் ஆர்வத்தைக் கண்ணுற்ற நிர்வாகம் அவர் களை ஊக்குவிக்கும் நோக்கு டன் நிர்வாக வருடவிழாவில் முக்கியமாக விளையாட்டு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வரு கின்றது என்பது குறிப்பிடத் தக்கது.
கர்நாடகாவின் ஓர் ஒதுக்குப் புறமாக ஒதுங்கிக்கிடந்த இலங் கைக் குடிபெயர்ந்தோர் மறு வாழ்வு திட்டத்தை 'பால் மரக் காட்டினிலே’ என்ற தொடர் கட்டுரையின் மூலம் வெளி உல கிற்கு இருளில் மூழ்கிக்கிடந்த தாயகம் திரும்பிய மக்களை தெரியத் தந்த மக்கள் மறு வாழ்வு இதழுக்கும் ஆசிரியருக் கும் நன்றிகள்.
நாராயணசாமி
G. Fuj6) it சாரதா கலா மன்றம் சோனன் கேரி
கர்னாடகம்
 

வாழ்வு
ஆகஸ்டு 86
எது சரி ?
ஜூன் மாத ‘மக்கள் மறுவாழ் வில் பெங்களுரை "பங்களுர்* என்று ஆக்கியுள்ளிர்கள். நீங் கள் மட்டுமல்ல; தமிழ் நாட்டி லிருந்து வெளிவரும் குமுதம் போன்ற பல பத்திரிகைகளும் இந்தத் தவறைத் தொடர்கின் றன.
'Quibas (Boiled beans) + ஊரு, என்றிருந்தது தான் பிற்காலத்தில் “Bengaturu” என்று பரிணமித்தது. இப் பெயர் 16-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்டு வந்த ஹொய்ஸல மன்னர்களால் சூட்டப்பட்டது என்பதுதான் வரலாறு. ஆக தமிழில் எழுதி னாலும் சரி:ஆங்கிலத்தில் எழு தினாலும் சரி பெங்களுர் என் பதுதான் முற்றிலும் சரியானது.
Linds 56T மறுவாழ்வைத் தொடர்ந்து படித்து வருகி றேன். மக்கள் மறுவாழ்வு பெயருக்கும் இதழில் வரும் விஷயங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கவேண்டும்.
முகமது இஸ்மாயில் பெங்களுர்-8.
类
துணிச்சலோடு சொல்கிறீர்கள்!
பரிமாவிலும் இலங்கையிலும் இருந்து தாயகம் திரும்பியுள்ள அனைத்துத் தமிழ் மக்களின் அளவிலா துயரங்களையும் மறுவாழ்வுத் துறையின் சகல நடவடிக்கைகளை துணிச்ச லோடு எடுத்துக் காட்டி தமிழ் மக்களின் உள்ளத்தில் நிலைத்தும் நிற்கும், மக்கள் மறுவாழ்வு மாத இதழுக்கும் இதைத் தொடர்ந்து நடத்தி வருகிறவர்களுக்கும் எனது மன மார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ்.இராஜரத்தினம் திருச்சி. 19
濠
சேவை தொடர வேண்டும்!
மக்கள் மறுவாழ்வு சேவை யினால் பயனடைந்து வந்த நாங்கள் அனுப்பிய கடிதங்க ளுக்கு பதிலோ பத்திரிகையில் பிரசுரமாகவோ இல்லை தங் கள் பத்திரிகையை முதலில் அறிமுகம் செய்த திரு. அருள் அண்டனி அவர்களுக்கு எமது முகாமில் கண்ணிர் அஞ்சலி செலுத்தினோம். அவர் மூல மாக எங்கள் பிரச்சனைகள் தங்கள் பத்திரிகையில் பிரசுரிக் கப்பட்டு வந்தன. தொடர்ந்து தங்களின் சேவை எங்கள் முகா மில் தொடரவேண்டும்.
6Tib. Lotu 66ir
அகதிகள் முகாம் அய்யம்பேட்டை கடலூர்.
ஐந்தாவது ஆண்டுமலர்
அதிக பக்கங்களோடு வெளிவரவிருக்கிறது மலையக மக்களின்
வரலாறு
வாழ்க்கை,
சமூக,
கலை
இலக்கியம்
மற்றும்
தாயகம் திரும்பியோர் பிரச்சனைகள்
குறித்தும்
6) if
எழுதுகிறார்கள்
விபரங்களுக்கு: மக்கள் மறுவாழ்வு அஞ்சல் பெட்டி எண்: 5560 சென்னை-600 09?

Page 9
ch as 86
dėdės sffr |
செய்திக் குறிப்புக்கு மறுப்பு :
நாடற்றவர்கள் எவ்வளவு பே
மக்கள் மறுவாழ்வு ஜூலை இதழில், நாடற்றவர்கள் எவ்வ ளவு பேர் என மகுடமிட்டு *சிலோன் டுடே" என்ற சஞ்சி கையிலிருந்து பெற ப் பட் டு வெளியிடப்பட்ட செய் தி க் குறிப்பில் காணப்படுகிற நாடற் றவர் பற்றிய மதிப்பீடு,தவறான தும் அபத்தமானதாகும். அக் குறிப்பிலே, நாடற்றவர்கள் 681,298 பேர் என கணக்கிடப் பட்டுள்ளமை உண்மைக்கு புறம்பானதும், தவறான முடிவு களுக்கு இட்டுச் செல்லக் கூடி. யதாகும்.
கணிப்பீட்டினை கவனிக்கு முன்னர் யார் நாடற்றவர்கள் என்பதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும் இலங்கை அரசோ, இந்திய அரசோ பொறுப் பேற் காமல்- அதாவது குடியுரிமை வழங்கி தன்னுடைய பிரஜைக ளாக்கி கொள்ளாத ஒரு நிலை யில் உள்ளவர்களே நாடற்றவர் கள் 1954ம் ஆண்டிற்கும் 1984 ஆம் ஆண்டிற்கும், இடையில் இந்த நிலை இலங்கை வாழ் இந்திய வம்சா வழியினருக்கு வந்து சேர்ந்தது 19ᏮᏎ tᎥh ஆண்டு சிரிமா சாஸ்திரி ஒப்பந் தம், 1974 ம் ஆண்டு சீரிமா. இந்திரா ஒப்பந்தம், 1986 ம் ஆண்டு ஒப்பந்தம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலை யில், நாடற்றோர் எவ்வளவு பேர் என கணக்கிட்டு கொள் வது பொருத்தமான ஒன்றே,
செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளபடி, 1 96 ረ4 ሀh ஆண்டு தோராயமாக கணக்கி டப்பட்ட நாடற்றோர் தொகை 975,000 ஆகும் இந்த தொகை 1964 ம் 1974 ம் ஆண்டு ஒப் பந்தங்களின்படி இந்தியாவுக்கு 6 இலட்சம் எனவும், இலங் கைக்கு 375,000 எனவும் பங்கிடப் பட்டது. இந்த ஒப்பந் தங்கள் ச ரி வர நடைமுறைப் படுத்தாத நிலையில், இந்தியா வுக்கு 5 இலட்சத்து 6 ஆயிரம் விண்ணப்பங்களே கிடைக் கப் பெற்ற நிலையில், 1986ல் ஆண்டு ஒப்பந்தப்படி, இலங்
கை 94,000 பேரை - தன் டைய நாட்டவராக்க ஏற்றுக் கொண்டது. எனவே, இந்தியா வின் கோட்டா 6 இலட்சத்திலி ருந்து, 5 இலட்சத்து 6 ஆயிர மாகக் குறைய இலங்கையின் தொகை 4 இலட்சத்து 89, ஆயிரமாக கூடியுள்ளது 1986 ம் ஆண்டளவில் இந்தியா 421, 207 பேருக்கு மிரஜா உரிமை வழங்கி, 3,31,000 பேரை, அவர்களுடைய இயற் கை அதிகரிப்புடன், தன்னு டைய நாட்டிற்கு வரவழைத்து கொண்டது ஆகவே, இந்திய தரப்பில் இன்னும் பிரஜா உரி மை வழங்கப்பட வேண்டியவர் கள், ஏறக்குறைய 85,000 பேராகும் (5 06.000-420, 000) இதே போல இலங்கை தரப்பில் 197,535 பேருக்கு பிரஜா உரிமை வழங்கப்பட்டுள் ளது எனவே இன்னும், இலங் கை பிரஜா உரிமைவழங்கப்பட வேண்டியவர்கள் தாம், நாடற் றவர்கள் என எடுத்துக் கொண் டால் அந்த தொகை 356, 465 ஆகும். (85,000 + 27 1 465) இத்தோடு ஒரு 30 சத வீத இயற்கை அதிகரிப்பான 106,989 guyuh சேர்த்துக் கொண்டதால் இந்த தொகை 463,404ஆகவே அமையும்.
ஆனால், செய்திக் குறிப்பில் ஆச்சரியப்படத்தக்க வகையில் மதிப்பிடப்பட்ட  ெத ர கை, 681,298 ஆகும். இந்த இரண் டிற்கும் இடையில் இத்தகைய வித்தியாசம் ஏன் ஏற்பட்டது? இப்பாரதூரமான பிழை எங்கு ஏற்பட்டது? என்ற கேள்விகள் பிறக்கின்றன,
கணிப்பீட்டிலே 2 Lurfu u பிழைகள் விேடப்பட்டுள்ளன முதலாவது இலங்கை தரப்பில் 1986ல் 94,00) பே  ைர சேர்த்த பொழுது இந்திய தரப் பில் இந்த எண்ணிக்கைகுறைக் கப்பட்டிருக்க வேண்டும். இது செய்யப்பட வில்லை. செய்திக் குறிப்பில் "இ" என குறிப்பிடப் பட்டுள்ள 93,793 தொகையே
 

இப்படி பிழையாக கூட்டப்பட் டுள்ளது. இரண்டாவது பிழை மிகப்பாரதூரமானதும், 1964 - 1986 காலப் பகுதியில் 30% இயற்கை அதிகரிப்பு, 325 ஆயி ரம் பேர் குறிப்பிடப்பட்டுள் ளது. இதுவும் தவறானதாகும் 975ஆயிரம் பேருக்கு 30 சத விகிதம் அதிகரிப்பு, 292,500 ஆகும் இந்த கணக்குப்பிழை யை நாம் அவ்வளவு பொருட் ப டு த் த வேண்டியதில்லை. ஆனால் இந்திய குடி உரிமைப் பெற்று, தாயகம் திரும்பிய 331 ஆயிரம் பேருக்கும் சேர்த்து கணக்கிட்டிருப்பது D-6) யான ஒன்றாகும். உண்மை யில் இந்திய பிரஜா உரிமை பெற்ற 421 ஆயிரம் பேரையும் இலங்கை பிரஜா உரிமை பெற்ற 197,535பேரையும் இக் கணிப்பீட்டிலே  ேச ர் க் க கூடாது. இவர்களை ஆரம்ப நாடற்றோர் தொகை 975 ஆயி Sib (Suffs) did 6.L. Tsio 328,465 பேரே மிஞ்சுவர். இவர்களின் இயற்கை அதி கரிப்பு 30 சதவிகிதக்தை சேர்த் துக்கொண்டால், தற்போதைய நாடற்றோர் எண்ணிக்கையை பெற்றுக் கொள்ளலாம். சுருக் கக் கூறின், S.
1. இலங்கை பிரஜா உரிமை
பெற இருப்போர் 27,465
2. இந்திய பிரஜா உரி,ைம
பெற இருப்போர் 85,000
மொத்தம்(1+2) 356 465
8. 30% அதிகரிப்பு (1+2ன்)
மொத்தத்தில் 106,939 ஆக 463,404
உண்மையான கணிப்பீடு, இப்படி எளிதானதாக அமைந் திருக்கும்போது, ஏனிந்த பிழை கள் மலிந்த அபத்தமான கணிப்பீடு?
-எம். வாமதேவன்
சித்தார்த்த புத்திரர்கள் வண்ணச்சிறகு
அந்த தெருவில் முதலில்
ஒரு நாய் சில மனிதர்கள்
சில கட்டிடங்கன் சில பொகுட்கள் எரிந்து போயின
அப்போதும், சித்தார்த்த புத்திரர்கள் சீற்றம் தணியவில்லை. தெரு முழுதும் தீ மேவியது.
மானுட நாகரீகம் வலைந்த மாதிரி இரும்புக் கம்பிகள் வலைந்து போயின.
இனி
Լյ60&tL (փtց-աn 5
உடல்களைப் போல
கட்டிடங்கள்
புகைந்து போயின
என் முன்னால்
எல்லாமே
எரிந்து போயிற்று நாகரீகம் உட்பட
ஏன்?
is TGüT 2-lu-lul-.

Page 10
மக்கள்
பகலில் ஒரு சுதந்திரம்
கவிதை தொகுதி
ஆசிரியர்: y TLD égné un shif,
് ബൈബിuf(';
பாரதி பதிப்பகம் 108, உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17
விலை : ரூபா 5
எனது தேசத்தில் நிஜங்கள்
கண்ணிர்க்குடம் சுமக்க, பொய்
களே மகுடம் சுமக்கின்றன. ஆதலால் எழுத்துக் கோலை ஏந்தியுள்ளேன் எனது கவிதை கள் ரசிகர்களை உ ரு வா க்க அல்ல ராணுவ வீரர்களை உரு வாக்கவே எ ன் று கூறிக் கொண்டு புதுக்கவிதை புனை யத் தொடங்கியிருக்கும் இளங் கவிஞர் ராம சூரியனின் புதுக் கவிதை தெர்குதி, பகலில் ஒரு சுதந்திரம்.
புதிய கவிஞராக இளைய கவி ஞராக இருந்தாலும்புதுக்கவிதை இவருக்கு லாவகமாக வருகி றது. நறுக்குத்தெறிக்க நான்கு வார்த்தைகளில் சொல்லுகிற புதுக்கசிவிதைப் பாங்கு இவர் கவிதைகளில் தெரிகிறது.
சொல்லாட்சியும் பாராட்டத் தக்கது.
சமூகத்திலுள்ள வறுமையும்,
கொடுமைகளையும் ' இழிவு களை சாடுகிறார். அரசியல் வாதிகளையும் 'அர் சையும்
தனதுகவிதைக் கத்தி கொண்டு கிழித்துக் காட்டுகிறார்.
*வியாபாரியின்
இதழும் விபச்சாரியின்
விழியும் கலந்தது தான்
அரசியல் வாதியின் இதயமோ
எ ன் று அரசியல்வாதிகளை இனங்காட்டுகிறார்.
சமூகத்தைப் பார்த்து விரக்தி யுறும் இவர்
“பறக்குது. பறக்குது
பலவண்ணக் கொடிகள் ப்சிக்குது ப்சிக்குது பிரிதாபக்
- குரல்கள் வியர்க்குது வியர்க்குது துடிக் པ་ཆེ་ குது விரல்கள் விழித்திரு விழித்திரு காண் போம் விடைகள்”
என்று இராணுவ வீரர்களை யும் உருவாக்கத்துடிக்கிறார்.
இவர் இளங்கவிஞரல்லவா?
நம் உடல்களை சிலுவையில் அடித்தாலும் நம் உள்ளங்களுக்கு சிறகுகள் முளைப்பது அவர்களுக்கு தெரியாது"
என்று காதல், சிறகடித்தும் பறக்கிறார். இத் தொகுதியில் காதல் கவிதைகளே, நிறைய சிறகடித்து பறக்கின்றன.
குழந்தைகள் விடுகதை, புதிர் போடுவது போல வார்த் r தைகளை புனைந்து புதுக் கவிதைகள் என்று பலர் இன்று எழுதுவதை பத்திரிகை, சஞ் ம் சிகைகளில் காண்கிறோம்
இத்தொகயில் இரண்டொரு கவிதைகள் இதுபோன்று இருப் பதை பார்க்காமல் இருக்க
கவிதை எழுத வரப் பெற்ற இவரது “கவிதைகளில் இவரது எதிர்காலம் , பிரகாசமாகவே தெரிகிறது. ஆயினும் இவரது இலக்கு, எண்ணங்கள் என்ன என்பதில் இவர் தடுமாறுவதை காணக்கூடியதாக இருகிகிறது
புதுக் கவிஞராக் இவர் கவி
* தை புண்) ன்பும் ஆற்றல் உள்ள
இவர் வளர வேண்டியவர். வாழ்த்தி வளர வைக்க வேண் டியவர். இவரது தொகுதியை வாசித்துப் பார்க்கும் போது ரசிக்கவே செய்கிறது.
C)
 

- Dresa papa
ஆகஸ்டு 83
குறட்பாக்களுக்கு வுரையும் வழங்கி இருக்கிறார்.
வாழ்வியல்
(குறட்பாக்கள்)
ஆசிரியர் : வெண்பா வீராசாமி
ଗଣ}}ଣୀfiu୩G சிந்தனையாளர் பதிப்பகம், 59 இலென்ரின் தெரு, குலசேகரபுரம், ଗ3För 6006 or - 1 1 1
விலை ரூபா 10.
சமூகம் எப்படி வேண்டும்; சமூக மாந்தர் எப் படி வாழவேண்டும்; சமூக அமைதிக்கும் வாழ் வின் வளர்ச்சிக்கும் என்ன தேவை என்பது குறித்து R சிந்திப்பது வாழ்விய்ல், x - . . *
சிந்திக்கத் தூண்டும் கருத்து களை குறட்பாக்களில் யாத்துத் தந்திருக்கிறாச் ஆசிரியர். விளக்க
இயற்கை, மண், மழை, ஏர்
உழைப்பு பொருள் உடமை,
பொதுமை, அரசு என்று ஒவ் வொரு பொருள் பற்றியும் சிந்
f
தித்து அரிய கருத்துகளை
குறட்பாக்களில் தந்துள்ளார்.
குறட்பாக்க்ளின் இவர் சொற்
சிலம்பம் ஆடுகிறார். கருத்து களை சொல்லும்
இவர் வெண்பாவில் புலி தான் என நிரூபிக்கிறது.
படித்து, அறிவை வளர்க்க
இது சிறந்த நூலாகும்.
o
FF pi
போராளிகளின்
சிந்தனைக்கு.
ஆசிரியர்
எரிதழல் வெளியீடு: V. தோழமை
20, கோதண்டபாணி- தெரு,
குடிந்தை 612107
விதமும், ! சொற்களை ஆளும் திரனும்
ஈழ விடுதலை இயக்கங்களில்
இன்றுள்ள போக்கையும், ந்ட
வடிக்கைகளையும் சுட்டிக்காட்
டும் சிறு துண்டுப்பிரசுரமிது.
ஈழவிடுதலைஇயக்கங்களின்
இராணுவ நடவடிக்கையையும்
முன் தளத்தில் விடுதலை இரா
ணுவத்திற்கும் மக்களுக்கும் இருக்கும் இடைவெளியையும், பின் தளத்தில் போராளிகளுக் கும் மக்களுக்குமுள்ள இடை வெளியையும், இயக்கங்களுக் குள்ள தனி நபர் வாதம், மூர்ண் படுகிறவ்ர்களை பழி வாங்கும் டோக்குமுதலானவற்
றையும், இப்பிரசுரம் விமர்சிப்ப இருக்க
தோடு, இயக்கங்கள் தங்கள்
தவறுகளை திருத்திக்கொண்டு
உடனடியாக எடுக்க வேண்டி
ய செயல்பாடுகள், நடவடிக்
கைகுறித்தும் எடுத்தியம்பியுள்
O
சாதி மதங்களும்
புதிய சனநாயகப் புரட்சியும்
ஆசிரியர் : அ. மார்க்ஸ் வெளியீடு தோழமை.
இலங்கை எழுத்தாளர் கே. டோனியலின் கானல் நாவலுக் காக எழுதப்பட்ட முன்னுரை சிறு பிரசுரமாக வெளியிடப்பட்
வரலாற்றுப் போக்கில் சாதி
யம் வளர்ந்த விதம் குறித்தும்,
இந்தியாவில் சாதி முறை, புதிய ஜனநாயகப் புரட்சியில் சாதி ஒழிப்பு நடவடிக்கை குறித்தும் சுருக்கமாக விளக்கி யுள்ளார். இதன் ஆசிரியர்,
()
முகம்
ஆசிரியர்
புகழேந்தி
முகவரி
18, 68 வது தெரு
11வது பிரிவு. கருணா நிதி நகர்
சென்னை-78
கதை, கவிதை, துணுக்குகள் நிறைந்த இலக்கிய மாத
இதழே முகம், O

Page 11
ஆகஸ்( 83
Idédérissar ud
(7-ம் பக்கத் தொடர்ச்சி)
வேதனை ஏற்படுகிறது. தங்க Sh60pl–u ம ன விரக்தியை குடும்ப சூழலின் சீற்றத்தை மாணவர்களை அடித்து தீர்த் துக்கொள்ளும் ஆசிரியர்களை நான் கண்டிருக்கிறேன். ஆசிரி யனுடைய தகாத கவனிப்பால் பாழ்பட்ட மாணவர்கள் பலரை நான் அறிந்திருக்கிறேன் மாகooன வர்களிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாத காரணத்தால் தவிக்கும் உண் மையிலே நல்ல மனிதர்கள் ஆசிரியர் பணியில் உள்ளனர். எனவே உளவியல் அறிவு அத் தியாவசியமானது. (BEdல் உள வியல் பாடம் உண்டு என்று சிலர் கூறலாம். பரீட்சை தேற மட்டும்தான் அது பயன்படும்.)
மிக சிறந்த மக்கள் தொடர் பாளனாக ஆசிரியன் இருக்க வேண்டும். சொல்ல நினைத்த வற்றை தெளிவுற சொல்லும் திறன் ஆசிரியனுக்கு அவசியம் சில ஆசிரியர்கள் மிக புத்தி of உடையவர்களாகܗ̄f ܗ இருப்பார்கள். ஆனால் தெளி வுற போதிக்கும் திறன் அற்ற வர் க ள |ா க இருப்பார்கள்.
எனவே அவர்களுடைய அறிவு ஆசிரிய தொழிலில் பயனற்று போகிறது.
(அடுத்த இதழில் முடியும்)
aunan
மக்கள் fO DJ
கோத்தகிரி, கர்சன்வேலி அரசினர் தேயிலைத்தோட்டத் தில் மக்கள் மறுவாழ்வு மன் றம் அமைக்கப்பட்டுள்ளது.
பின் வருவோர் நிர்வாகிக ளாக தெரிவு செய்யப்பட்டுள் 6ят6л šї.
தலைர்ை: திரு. பி. சந்தா ம்ை, துணைத் தலைவர்: திரு. 6ாஸ் மூர்த்தி; செயலாளர். திரு. பி. செ ல் வ நா தன், துணைச்செயலாளர்: திரு.என் தர்மராஜ், பொருளாளர்: திரு. ஏ இராமசாமி.
m
vg
ஈ. பா க. கூட்டம்
ஈழத் தமிழர் பாதுகாப்புக் கழகத்தில் 3வது மாதாந்தக் கருத்தரங்கு26-7-1986 அன்று சென்னை மகா ஜன சபா மண் டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு இலங்கைமுன் னால நாடாளுமன்ற உறுப்பி னர்:திரு.தங்கத்துரை தலைமை தாங்கினர் Ο
கொடைகானலில்
அனைத்து தொழிலாளர் கூட்டம்
s9 6öör 60Or AT மாவட்டம், கொடைக்கானல் 2O. 7-86 அன்று கொத்தடிமைவிடுதலை முன்னணியும், கொடைக்கா னல் ஐக்கிய தொழிலாளர் சங்க மும் இணைந்து பொதுக் கூட் டம் ஒன்றை நடத்தியது. இக் கூட்டத்தில் ஆண்களும்பெண் களுமாக சுமார் 1000 பேர் கலந் துக் கொண்டனர். கூப்பில் வசிக்கும் தொழிலாளர்கள் மட் டுமல்லாது, இதர தொழிலா ளர்களும் கலந்துக் கொண்டு தமக்கு இழைக்கப்பட்ட அநீதி களுக்கு ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர்.
இப் பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு கொத்தடிமை விடு
தலை முன்னணி அமைப்பா ளர் வழக்கறிஞர் சக்தியமூர்த்தி அவர்கள் தலைமைத் தாங்க், முன்னணித் தலைவர் திரு சுவாமி அக்னிவேஷ், திரு ஹென்றி(PUCL), திரு டி என். கோபாலன் (நிருபர், இந்தியன் எக்ஸ்பிரஸ்) திரு ஜான் பீட்டர் (த க.தொ சங்கம்), திருமதி எஃப். எம் செல்வி (மாதர் சங் கம், கொடை க்கானல்) கிரு
காதர்(குதிரை ஒட்டுநர் சங்கம்) திரு K. K. காமு வழி காட்டுநர் சங்கம்) திரு ரவி(சிராக்), திரு காளிமுத்து, திரு M. ஆசீர் (சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம்) மற்றும் தனுஷ் கோடி, பாதர் ஆரோக்கியசாமி ஆகி Gusri Gudfoo T is 6it. Ο
 

றுவாழ்வு
ar.
வாழ்வு மன்றக் கிளைகள்
செயற்குழு உறுப்பினர்கள் : திருவாளர்கள் சிவாஜி கணே சன், ராஜேந்திரன், முருகே சன், பாலகிருஷ்ணன் , குமார். மயில் வாகனம், சக்திவேல், மனோகரன் , கந்தையா, எம். குமார் ஆகியோர்கள்.
கட்டுபெட்டு பாரதிநகர்
கோத்தகிரி கட்டுபெட்டு, பாரதிநகரில் மக்கள் மறுவாழ்வு
பின் வருவோர் நிர்வாகிகளாக தெரிவு செய்யப் பட்டுள்ளனர்.
தலைவர்; திரு. என். கே. பத்மநாதன் துணைத்தலைவர் திரு. ஆர். வேவாயுக்ம் செய லாளர்; திரு. எம். பழனிவேல் துணைச்செயலாளர் திரு. ஆர் கோவிந்தன், பொருளாளர் : திரு எஸ். ராஜா,
செயற்குழு உறுடபினர்கள் : திருவாளரகள் ஆர். ஜெயராம் ஆர் ஏசையன், டி, ரெங்கசாமி எம்.கே. பெருமாள், வி. கிருஷ் ணன் , என். அருணாசலம், எம். கோபால்.
மன்றம் அமைக்கப்பட்டுள்ளது Ο
இனப்படுகொலையை கண்டித்து
மண்டபத்தில் மவுன ஊர்வலம்
மண்டபம் முகாமில் அகதி லத்தை வணபிதா சூசை
கள் இலங்கையில் நடக்கும் இன படுகொலையை கண் டித்து மெளன ஊர்வலம் நடத்
தினர்.
இலங்கை யி ல் 1983ம் ஆண்டு ஜூலைமாதம் வெளிக் கடை சிறையில் படுகொலை செய்யப் பட்ட ஈழ போராளி களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாகவும் இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படு கொலை செய்யப்படுவதை கண்டித்தும் ஈழத்தமிழர்கள் பிரச்சனையை மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்துதீர்க்கக்கோரியும்மண்ட பம்முகாமில் தங்கியுள்ள அகதி கள் மெளன ஊர்வலம் நடத்தி னர். - -
இந்த மெளன ஊர்வலம் வி. தர்மலிங்கம் தலைமையில் இளைஞர்கள் யுவதிகள் சிறு வர்கள் மூவாயிரம் பேர்கள் கலந்து கொண்டனர். ஊர்வ
மாணிக்கம் அவர்கள் ஆரம் பித்துவைத்தார். சுலோக அட் டைகளை ஏந்திய ஆண்களும் பெண்களும் மெளனமாக மண் பம் முகாம் தனித்துணை ஆட் சியர் அலுலகம் முன்புள்ள பிர தான நுழைவாயிலை அடைத் தனர்.
மெளன ஊர்வல முடிவில் மகேந்திரன். ரெக்ஸ் குவாஸ், எஸ். எட்மன், வி, தர்மலிங்கம் ஆகியோர் தமிழ் ஈழ விடுதலை பற்றி உருக்கமாக பேசினார்கள் மெளன ஊர்வலத்தில் கலந்து கொண்ட தாயகம் திரும்பி யோர் ஐக்கிய முன்னணி சம் மேளனத்தின் மாவட்ட செய லாளர் ட (ா க் ட ர், அம்மை. சொர்னமணி சிறப்புரை ஆற் றினார். ஈழமக்கள் சகா ய அன்னை மன்றத்தினர் விடு தலை புரட்சிபாடல்களை பர்டி னார்கள், கிரகரி. பாக்கியராசா
நன்றி கூறினார். O
Editor & Publisher amman koi 2nd Street,
T.S. RAJ U,
1, South Gangai Madras-6OOO94. Printed:
L. S. Srinivasan at Jai Kalidas Press, 29, B. E. Colony,
4th Street, Madras-24.

Page 12
Regd. No. R. N. 42556 83
Regd. No,
8
Jln Tull 3G d g(riñou PCG u rrfshir வழிகாட்டி
தொடர்பு முகவரி :
அஞ்சல் பை எண். 5560 சென்னை-600094
இலங்கைத்தமிழர்பிரச்சனை.
பேச்சுவார்த்தைதொடர்கிறது
இலங்கை அரசு அளித்துள்ள புதிய பிரேரணைக் குறித்து பேச்சு வார்த்தை GSG -f கிறது. பல்வேறு பட்ட கருத்து சாதகமாகவும் பாதகமாகவும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை அரசுக்கும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்ன ணிக்குழுவுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் சில விஷயங் களில் உடன்பாடு ஏற்பட்டிருப் பதாக த.ஐ.வி.மு செயலாளர் திரு அமிர்தலிங்கம் தெரிவித் திருக்கிறார்.
இந்த பேச்சு வார்த்தை குறித்து "நாங்கள் நம்பிக்கை யுடனும் இல்லை; 10ன அதைரி யப்படவும் இல்லை" என்று த. ஐ.வி.மு. தலைவர்கள் தெரி வித்துள்ளனர்.
இலங்கையில் நடந்த அனைத் துக்கட்சிக் கூட்டத்தில், இலங் கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண மாற்றுத் திட்டம் தரு மாறு விடுக்கப்பட்ட கோரிக் கையை ஈழ விடுதலை இயக் கங்கள் நிராகரித்து விட்டன.
அண்மையில் தமிழர் விடு தலை கூட்டணி ஈழத்திற்கு பதிலாக மாற்றுத்திட்டம் ஒன் றினை மத்திய அரசுக்கு தயா ரித்துக் கொடுத்திருந்தது. ஆனால் இத்திட்டத்தை இலங் கை நிராகரிக்க விட்டது. இந்த நிலையில் விடுதலைக்கு போரா டும் இயக்கங்களை திட்டங்கள் தயாரித்து தரும்படி
மாற்றுத்
கேட்பது கேலிக்கூத்தாகும் என்று ஈழ தேசிய விடுதலை முன்னணி தெரிவித்திருக்கிறது
1970ம் ஆண்டிற்குப் பின் னர் விடுதலை இயக்கங்கள் பேச்சு வார்த்தை பாதையை நிராகரித்து 'ஈழம்" என்ற இலக் கினை வைத்து அதற்கான போராட்டப் பா  ைத  ைய வகுத்து ஆயுதம் தாங்கி போராடி வருகின்றன. எனவே தமிழர் பிரச்சினை தீர்வு காண திட்டம் எதுவும் இந்த இயக் கங்களால் முன் வைக்க முடி Lu ATg5). அப்படி வைப்பதாக இருந்தால் அது ஈழம் குறித்த தாக இருக்கும் தமிழர் பிரச் சனையை உருவாக்கிய சிங்கள வர் அரசுகளே. அதற்கான தீர் வையும் காண வேண்டியது சிங்கள அரசாங்க மே" என்று தனது தரப்பில் தெரிவித்திருக் கிறது.
படுகொலை தொடர்கிறது
புதிய பிரேரணைக் குறித்து சமரச பேச்சு வார்த்தைதொடர் கிறது: இலங்கையில் சர்வ கட் சிகளும் கூடி பேசுகின்றன.
இந்த பேச்சு வார்த்தைகள்' தொடரும்போதே இராணுவப் படு கொலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இராணுவத்தினர் மட்டுமல்ல; சிங்கள வெறியர்களும் அப்பா வித் தமிழர்களை குழந்தை
 

FN MS (C) 702
"۰۰به ۰۰ر ۰باید د: ·* ت». م"f `ک2 ,Av:y: i' ?نامpاټ
பெண்கள் உட்பட- கொன்று குவித்து கொண்டுதான் இருக் கிறார்கள்.
இந்த பேச்சு வார்த்தையின் போது பல நூறு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். வீடுகள் கடைகள் தீக்கிரையாக்கப்பட் டன; நூற்றுக்கணக்கான இளை ஞர்கள் கைது செய்யப்பட்டி ருக்கிறார்கள்.
FF 65. 63). (p நிராகரிப்பு
தங்களுடன் பேச்சுவார்த் தைக்கு வருமாறு தமிழர் ஐக் கிய விடுதலை முன்னணி அழைத்த அமைப்பை ஈழ தேசிய விடுதலை முன்னணி நிராகரித்து விட்டது. பேச்சு வார்த்தை மூலம் எந்த தீர்வும் ஏற்படப் போவதில்லை" என்று ஈ.தே.வி.மு. தெரிவித்துள்ளது.
விடுதலை புலிகள் சந்திப்பு
இலங்கை அரசுடன் நடத் திய பேச்சு வார்த்தைகள் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணித் தலைவர் கள் சந்தித்து பேசியுள்ளது, மீண்டும் பேச்சு வார்த்தை
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இரண்டாவது சுற்றுப் பேச்சு கள் மீண்டும் ஆகஸ்ட் 16ந் தேதி கொழும்பில் ஆரம்பமாக
லாம் என்று பத்திரிகை செய்தி கள் கூறுகின்றன.
С$ ц_у á; ат வார்த்தைகளைத் தொடர்ந்து இன்னும் இரண்டு
MAKKAL MARUVAZHV0Ö
மாதங்களில் தமிழர் பிரச்சனை க்கு தீர்வு ஏற்படும் 6T60 இலங்கை ஜனாதிபதி ஜயவர்த் தனா நம்பிக்கை தெரிவித்துள் 6T (Tif.
மலையகத்தில் கலவரம்
இலங்கையில், மலையகத்தில் நுவரெலியா, தலவாக்கொல்லை ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 2ந் தேதி சிங்களக்குண் டர்களால் 44 வீடுகள் தீக்கிரை யாக்கப்பட்டன.
பாதுகாப்பு படையினர் தமி ழர் ஒருவரை கைதி செய்ததை தொடர்ந்து சுமார் மூவாயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத் தம் செய்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
தொடர்ந்து 2ம் நாளாக 3 ந் தேதி சிங்கள வெறியர்கள் தாக் கியதில் 35 வீடுகளும், 28 கடைகளும் தீக்கியரை யாக்கப் பட்டன.
இத்தாக்குதலில் 300 குடும் பங்கள் வீடிழந்துள்ளதாக தமி ழிழ விடுதலை புலிகள் இயக்கம் ஒரு தகவலை தெரிவித்துள் 6T.
சந்தேகத்தின் பேரில் போலீ சாரார் பூண்டுலோயா பகுதி யில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 500 தமிழ்த் தொழிலாளர்கள் கத்தி அரிவாளுடன் ஆர்ப் பாட்டம் நடத்தியதைத் தொட ர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்
5 பேர் சென்ற காரொன்றும் தீக் ரை யாக்கப்பட்டதில் அவர்
கள் தீக்காயங்களுடன் ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட் டுள்ளன. Ο