கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சித்த மருத்துவ மூலதத்துவம்

Page 1
சித்த மருத்து
Dr. Gä.
 

வ மூலதத்துவம்
അ
lu6)
பொருட்பண்பியல்
ஓ, சிவசண்முகராஜா, M.D. (8)
上

Page 2


Page 3

சித்தமருத்துவ மூலதத்துவம்
* தத்துவவியல்
* அளவையியல்
* பொருட்பண்பியல்
சித்ருததுவ கலாநிதி Gs. gag sorces (Tarr, B. S. M. S. (Hons) (S. L. J.
M. D. (India) (குழந்தைகள் நல மருத்துவம்) சிரேஷ்ட விரிவுரையாளர்,
சித்தமருத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம் 442, கே. கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம்,
2002

Page 4
Tittle of the book
Author
Pages
fublisher
Printers
Copy Right
First Edition
Price
நூற்பெயர் òff6ህff ቇፅFaረሀሰ
பக்கங்கள்
6362/6of°u*G
அச்சிடுவோர்
பதிப்புரிமை முதற்பதிப்பு
விலை
BBLO GRAPHICAL DATA
Siddha Maruthuva Moola Thathuvam
Dr. S. Sivashanmugarajah, B. S. M. S. (Hons) (S. L.), M. D. (India)
182 -- XIV
Siddha Medcial
Development Society 442, K. K. S. Road, Jaffna.
Bharathi Pathippakam, 430, K. K. S. Road Jaffna.
Author
January 2002
Rs. 250/-
சித்தமருத்துவ மூலதத்துவம் Dr. Gs. சிவசண்முகராஜா B. S. M. S. (Hons) (S. L.) M.D. (India)
l 8 2 -- XV
சித்தமருத்துவ வளர்ச்சிக்கழகம் 442, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
பாரதிபதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம். நூலாசிரியருக்கு
தை, 2002
ரூபா 250/-

சமர்ப்பணம்
எனது அன்புக்கும்
பெருமதிப்புக்குமுரிய
பேராசான்
டாக்டர் பூரீகாந்தா அருணாசலம்
அவர்கட்கு இந்நூலை வணக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும்
சமர்ப்பிக்கின்றேன்.
'தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே".
- திருமந்திரம்

Page 5


Page 6

அணிந்துரை
டாக்டர் சிவசண்முகராஜா சித்தமருத்துவம் தொடர்பாகப் பல நூல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதி வெளியிடும் இன்னொரு நூல் சித்தமருத்துவ மூலதத்துவம் என்பதாகும். இந்நூலுக்கு இச்சிறு அணிந்துரையை எழுதுவதில் மகிழ்ச்சியடைகிறேன். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகச் சித்த மருத்து வுத் துறை தொடங்கும்போது சில விரிவுரையாளர்களுடன் தொடங்கியது. கால ஓட்டத்திலே அத்துறையினுடைய ஆசிரிய வளம் இன்று மிக உயர்ந்த நிலையினை அடைந்துள்ளது. பெரும்பாலான விரிவுரையாளர்கள் M. D. பட்டம் பெற்றுள்ளனர். அத்தகைய வி ரிவு  ைர யா ளர் களிற் சில ர் சித்த மருத்துவத்துறை பாடவிதானத்துக்கமையப் பல நூ ல் கள் எழுதிவருகின்றனர். இந்நூல்கள் சித்தமருத்துவ மாணவர்களுக்குப் பயனளிப்பன. டாக்டர் சிவசண்முகராஜாவின் சித்தமருத்துவ மூலதத்துவம் என்னும் இந்நூல் அத்தகையதே.
சித்தமருத்துவத்துக்குப் பின்னணியிலே ஒரு பெரிய தத்துவம் இருப்பதை இந்நூலூடாக நாம் அறியமுடிகின்றது. தமிழ்நாட்டிலே சித்த மருத்துவம் குரு வினி ட ம் சீடர்கள் பல ஆண்டுகள் பயிலும் போது அம்மருத்துவத்தின் மூலதத்துவத்தினையும் பயின்றுகொள்வார்கள். இதுதொடர்பாக இன்றைய நிலையுடன் நூலாசிரியர் தொடர்புறுத்தி,
"முற்காலத்தில் சித்தமருத்துவம் குருசீட முறையில் வளர்ந்து வந்தததால் மாணவர்கள் 1 ல் லா ண் டு கால ம் தகுந்த குரு வின் கீழ் த த் துவ ப் பயிற்சிபெற்றனர். ஆனால், தற்காலத்தில் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்களின் கீழ் ப யிலும் மாணவர்களால் அத்தகைய தத்துவப் பயிற் சி யி  ைன எங்ங்ணம் பெறுதல் முடியும்?"
என்று கூறுகிறார். தத்துவப் பயிற்சியினை குருசீடமுறையிலே இக் கா லத் தி லே பெற முடி யா துள் ளது. இதனால், அத்தத்துவங்களையாவது மாணவர் வாசித்து அறிந்துகொள்ளும் வகையிலே இது போன்ற நூல்கள் துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை.

Page 7
தத்துவவியல் என்னும் முதல் பகுதியிலே வேதங்கள் தொடக்கம் சைவசித்தாந்தம் வரையான பல தத்துவங்களின் அடிப்படைகளை தெளிவான முறையிலே எடுத்து ஆசிரியர் விளக்குகிறார். ஒவ்வொரு தரிசனத்தினுடைய சுருக்கமான வரலாற்றினை அட்டவணை மூலம் காட்டியிருப்பது கற்றலுக்கு உதவியாயிருக்கும். வேறு பெயர், தொகுக்கப்பட்டகாலம், தோற்றுவித்தவர். ஏற்றுக்கொண்ட அளவைகள், கடவுள், ஆன்மா, முத்தி, நித்தியபொருள்கள், வாதம் என்னும் ஒன்பது அடிப்படைகளை ஒவ்வொரு த ரிசன த் துட னு ம் சேர்த்து நோக்கப்பட்டுள்ளது. பல தரிசனங்கள் கடவுள் உண்டு என ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், சமணம், பெளத்தம், சாங்கியம் போன்ற தத்துவங்கள் கடவுள் இல்லை என்கின்றன. இத்தகைய விபரங்களெல்லாவற்றையும் அவ்வட்டவணைகள் தருகின்றன.
தோற்றம்பற்றி உ ல கிலுள் ள எல்லா நாகரிகங்களுமே ஒவ்வோர் தொன்மங்கள் கொண்டுள்ளன. இந்திய தத்துவங்கள் உலகதோற்றம், மனிததோற்றம் பற்றிக் கூறுகின்றன. தைத்திரிய உபநிடதம் தோற்றம் பற்றிக் கூறுவதை ஆசிரியர்
**இதன்பொருள் யாதெனில், மூலப் பரம் பொரு ள ஈ ன பரமாத்மாவில் இருந்து ஆகா யம் தோன்று ம். அவ்வாகாயத்திலிருந்து வாயு தோன்றும்; அவ்வாயுவிலிருந்து அக்கினி தோன்றும். அக்கினியிலிருந்து அப்பு தோன்றும். அப்புவில் இருந்து பிருதுவி தோன்றும், பிருதுவியில் இருந்து மூலிகைகள் (தாவரங்கள்) உண்டாகும். மூலிகையிலிருந்து அன்னம் தோன்றும். அன்ன த் தி லி ருந்து மனிதன் தோன்றுவான் என்பதாம்"
என்று எ டு த் து க் கூறு கி ற (ா ர். மு த லா வ து பகுதியில் இருபத்துநாலாவது இயல் மருத்துவசோ தி டவியல் பற்றி ஆராய்கின்றது. சித்தமருத்துவத்துக்கும் சோதிடவியலுக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு. சிகிச்சை தொடங்குதல், மூலிகைகளை பதனிடல் போன்ற வற்  ைற எக்காலத்தில் எந்நேரத்தில் தொடங்கலாமென்பதைச் சோதி ட அறிவினா லே பெற்று சித்த மருத்துவர்கள தம்பணி செய்து வந்துள்ளனர். மருத்துவ சோதிடம் பற்றிய பல நுணுக்கமான விபரங்களை இவ்வியல் தருகின்றது.
இந்நூலின் இரண்டாவது பகுதி அளவையியல் பற்றி
விபரிக்கின்றது. ஏற்புடைய அறிவைப் பெறும் வழியே அளவை எனப்படும். இவ்வழி பத்து வகைப்படும். ஒவ்வொரு வழியும்

ஒவ்வோர் இயலாக அமைத்து விளக்கப்படுகின்றது. ஒவ்வொரு அளவை பற்றிக் கூறுமிடத்து அதனைச் சித்த மருத்துவத்துடன் தொடர்புறுத்திக் கூறுவது சிறப்பாயமைகின்றது.
நூலின் மூன்றாவது பகுதி பொரு ட் பண் பிய ல் என அமைகின்றது. ஒட்டுமொத்தமாக, இந்நூல் சித்தமருத்துவ மாணவர்களுக்கு நல்லதொரு உசாத்துணையாக அமையும். சித்தமருத்துவத்துறை விரிவுரையாளர்களுடைய ஆய்வுநோக்கு வளர்ச்சியடைந்து வருகின்றது என்று கூறுதற்கு இந்நூலும் ஒரு" சான்றாக அமைகின்றது. முனிவர்களும், சித்தர்களும் பயின்று வந்த இந்த மருத்துவத்தை நவீன உலகிலே நடமாட விடுதற்கு இத்தகைய நூ ல் களின் தே  ைவ இன்றியமையாததாகும். நூலாசிரியரை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அவருடைய முயற்சியும் சித்தமருத்துவ வளர்ச்சிக்குத் துணைசெய்யும் என்பதில் ஐயமில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம். Guy Haffu), if 9). F6&T (gp35 gys Teifi), யாழ்ப்பாணம் முதுதமிழ்ப் பேராசிரியர்
பீடாதிபதி,
பட்டப்பின்படிப்புகள் பீடம்,

Page 8
என்னுரை
இந்திய தத்துவங்களின்படி மனிதன் பஞ்ச பூதங்களால் ஆக்கப் பட்டவன் என்றும், இருபத்துநான்கு தத்துவங்களால் ஆக்கப்பட்டவன் என்றும், இருபத்தைந்து தத்துவங்களால் ஆக்கப்பட்டவன் என்றும், முப்பத்தாறு தத்துவங்களால் ஆக்கப்பட்டவன் என்றும், தொண்ணுாற் றாறு தத்துவங்களால் ஆக்கப்பட்டவன் என்றும். ஆன்மா, மனம், உடம்பு என்பவற்றால் ஆக்கப்பட்டவன் என்றும் பலவாறாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எனவே, இத்தத்துவங்களில் ஏற்படும் மாறுபாடுகள் மனிதனின் சுகவாழ்வுக்கு குந்தகமாக அமைகின்றன, அதுமட்டுமன்றி இப்பிறப்புக்கும், அதில் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்கும் கர்மமே (வினையே) காரணம் என்று சைவசித்தாந்தம் முதலியன எடுத்துக் கூறியுள்ளன .
"பூரணமாய் மூலமுதலாறாதாரம்
புரிய சட தசவாய்வுநாடிமூன்று காரணமாயிடை பின்னாய் சுழிமுனையுமாகி
கலந்து நின்ற வாத பித்த சிலேத்துமமாகி மாரணமாய் சடத்திலுள்ளே தத்துவங்கள்
மனம் புத்தியாங் காரஞ் சித்தத்தாலே வாரணமாய் நடத்து வித்த கர்மத்தாலே
வந்துதடா நோய்களெல்லாமனிதர்க்காமே"
என்று அகத்தியர் கன்ம காண்டம் என்னும் நூலில் மானிடர்க்கு நோய்வருதற்கு மூ ல கார ண ங் கள் தெளிவாக எடுத்துக் கூறப் பட்டுள்ளன. எனவே, சித்த மருத்துவத்தை பூரணமாகக் கற்றறி வகற்கு இந்திய தத்துவங்களைப் பற்றிய அறிவு - சிறப்பாக இந்து தத்துவங்களைப் பற்றிய அறிவு இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் இத்தத்துவங்களைச் சித்தமருத்துவத்டன் தொடர்புபடுத்தி விளங்கிக் கொள்வதற்குரிய நூல்கள் எதுவும் இலங்கையில் வெளிவராதது பெருங்குறைபாடாகவே இருந்து வந்தது.
சித்தமருத்துவ மூல தத்துவம் என்னும் நூலை எழுகவேண்டும் என்ற எண்ணத்தை எனககு ஏற்படுத்தியவர் எனது மதிப்புக்குரிய விரிவுரையாளர் டாக்டர் பூரீகாந்தா அருணாசலம் அவர்களாவர் நான் சித்தமருத்துவ மாணவனாக இருந்த காலந்தொட்டே சித்த மருத்துவ நூலாய்வின் அவசியத்தை எனக்கு வலியுறுத்தி வந்ததுடன், சித்தமருத்துவத்துக்கென்று தகுந்த மூல தத்துவநூல்கள் இன்மையை யும் அடிக்கடி சுட்டிக்காட்டுவார். 1989 ஆம் ஆண்டு எமது சகமாணவி டாக்டர் கலாநாயகி சிங்கநாயகம் அவர்களின் அகாலமரணத்தினால்

துயருற்ற நாம் அவரின் நினைவை மீட்டிடும் வண்ணமாக மூல தத் துவம் வினாவிடை என்று ஒரு சிறுநூலைத் தொகுத்து வெளியிட்டிருந் தோம் அதைப் பெரிதும் பாராட்டிய டாக்டர் அருணாசலம் அவர்கள் முழுமையான ஒரு சித்தமருத்துவ மூலதத்துவநூல் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தை எனக்கு எடுத்துக் கூறினார்.
சித்தமருத்துவம் சம்பந்தமாக நான் சில நூல்களை வெளியிட் டுள்ளேன். எனது ஒவ்வொரு நூலையும் பார்வையிடும்போதும் சித்த மருத்துவ மூலதத்துவத்துக்கென்று ஒரு நூல் இல்லையே என்ற ஆதங்கத்தை அவர் வெளியிடத் தவறுவதில்லை. நான் எனது பட்ட மேற்படிப்புக்காக இந்தியாவுக்குச் சென்றபோதுகூட ‘சித்த மருத்துவ மூலதத்துவத்தை மறந்துவிடவேண்டாம். அது சம்பந்த மாக அங்குள்ளவர்களிடம் எவ்வளவு தகவல்களைப் பெற முடியுமோ பெற்று வாருங்கள்' என்றுதான் வாழ்த்தி அனுப்பினார்.
சித்த மருத்துவ மூல தத்துவம் பற்றி எழுதுவதற்குரிய தகுதி - "பக்குவம்" எனக்கு இருக்கிறதா? என்பதில் எனக்கே சந்தேகம்தான். ஆயினும், இப்படி ஒரு நூல் எழுதவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் எனக்கு நீண்டகாலமாக இருந்தது. நான் சித்தமருத்துவ மாணவர் களுக்கு மூல தத்துவம் கற்பித்த அனுபவத்தைக்கொண்டும், பல ஆண்டுகளாகச் சேகரித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டும் சித்தமருத்துவ மூலதத் துவங்களைக் கற்பதற்கு அரிச் + வடி போல உதவக்கூடியதாக இந்நூலை உருவாக்கியுள்ளேன் . சித்த மருத்துவ மூலதத்துவத்தில் 12 தத்துவவியல் 2) அளவையியல் 3) பொருட்பண்பியல் 4 முக்குற்றவியல் 5 ) உடற்கட்டியல் (உடல் தாதியல்) 6) மும்மலவியல் (மலம், சிறுநீர், வியர்வை பற்றியது) என்று பல பிரிவுகள் உண்டு. இந்நூலில் தத்துவவியல், அளவையியல் , பொருட்பண்பியல் ஆகிய மூன்று பகுதிகள் அடக்கப்பட்டுள்ளன.
சித்தர்கள், வேதாந்த சித்தாந்த சமரசநெறியில் நின்றவர்கள் என்று கூறப்படுவதால் வேதாந்தம், சைவசித்தாந்தம் ஆகிய இருதத்துவங்களைப் பற்றியும் அறிந்தால் போதுமே! என்று சிலர் கருதக்கூடும். ஆனால், தத்துவங்களைக் கற்க முற்படுவோருக்கு நியாய வைசேடிக தரிசனங்களைப்பறறிய அடிப்படை அறிவு மிகவும் அவசியம. தோற்றக் கிரமத் வற்ப டயறிக கற்பதறகுச் or by Sur தரிசனம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். சித்தர்களின் யோகமுறைகளை விளங்கிக் கொள்வதற்கு யோகதரிசனம் பற்றிய அறிவு அவசியமாகும். சுருங்கச் சொல்வதாயின் இந்திய தத்துவங் களைப் பற்றிய சுருக்கமான அறிவு அவசியமாகும். இதனைக் கருத்தில்கொண்டு இந்நூலின் முதற்பகுதியில் இந்திய தத்துவங்களைப் பற்றி சித்தமருத்துவ மாணவர்களுக்குத் தேவையான அளவிற்கு மட்டும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் இலகுவில் விளங்கிக்

Page 9
கொள்வதற்கு வசதியாக இயன்றவரை ஒப்பீட்டுமுறையில் ஒவ்வொரு தத்துவங்களுக்கும் இடையிலுள்ள பொதுமை (சாமானியம் ), சிறப்பி யல்புகள் (விசேடம்) என்பன எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
அளவையியல், பொருட்பண்பியல் என்னும் பகுதிகள் நியாய வைசேடிக தரிசனங்கள், சிவஞான சித்தியார், தருக்க சங்கிரகம், பதார்த்த தீபிகை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு சித்த மருத்துவத்துடன் தொடர்பு படுத் தி உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நாலாக்கத்துக்கு வேண்டிய ஆலோசனைகள் த க வ ல் கள் என்பவற்றை வழங்கியோர், உற்சாகப்படுத்தியோர் பலர், யாழ்: பல்கலைக்கழகப் பட்டப்பின் படிப்புகள் பீடத் தலைவரும் முது தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் அ. சண்முகதாஸ் அவர்கள் சித்தமருத்துவ வளர்ச்சியில் பெரிதும் ஆர்வங்கொண்டவர். சிறிது காலம் சித்தமருத்துவத்துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். என்னுடைய சித்த மருத்துவ நூல்களை ஆக்கபூர்வமாக விமர்சித்து எனது முயற்சிகளுக்கு என்றும் ஊக்கமளித்து வருபவர். இந்நூலுக்கு அவர் சிறந்ததொரு அணி ந் து  ைர வழங்கியுள்ளார். அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெவித்துக் கொள்கிறேன்.
நான் தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் பாளையங்கோட்டை அரசினர் சித்தமருத்துவக் கல்லூரி யில் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டிருந்த வேளையில் அங்குள்ள பேராசியர்கள், விரிவுரையாளர்கள், மருத்துவர்கள் பலருடன் சித்த மருத்துவ மூலதத்துவம் பற்றி கலந்துரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, பட்ட மேற்படிப்புகள் பிரிவு சிறப்பு மருத்துவத்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் என். செல்லமுத்து அவர் க ஸ் சித்த மருத்துவ மூலதத்துவங்கள் பற்றிய பல அரிய விடயங்களை எனக்குத் தனிப்பட்ட முறையில் போதித்தார். அவருக்கு எனது நன்றிகள் என்றும் உரியது. மேலும் எனது கல்லூரி வாழ்வில் சைவசித்தாந்த சமயக்கல்வியை எனக்கு அன்புடன் போதித்த ஆசிரியப்பெருந்தகை அமரர் கே. பாலசுந்தரக் குருக்கள் அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளேன்.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இந்நூல் வெளிவருவதற்குத் துணை நின்ற எனது சகோ த ர ன் சே. சிவசுப்பிரமணியசர்மா, எனது துணைவியார் டாக்டர் (திருமதி) பிரேமா சிவசண்முகராஜா ஆகியோருக்கும், இந்நூலில் இடம்பெற்றுள்ள படங்களை வரைந்து தவிய யாழ். இந்துக்கல்லூரி சித்திர ஆசிரியர் திரு. துரை. துஷ்யந்தன் அவர்கட்கும் இந்நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு வழங்கிய

பாரதி பதிப்பக உரி ைம யா ளர் திரு. இ. சங்கர் அவர்கட்கும். பாரதி பதிப்பக ஊழியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது ஏனைய நூல்களைப் போலவே இந்நூலும் சித்தமருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் மற்றும் சித்தமருத்துவத்தில் ஆர் முடையோருக்கும் பயன்பட எல்லாம் வல்ல இறைவன் திருவருளை வேண்டுகிறேன்.
நன்றி
சித்தமருத்துவத்துறை, 63. Falaf Gary 5 yrgi M. D. (S)
யாழ், பல்கலைக்கழகம்,

Page 10
哆s锦德
l,
14.
15.
16.
፤ግ.
18.
9.
20,
22.
23.
另4。
25。
26。
பொருளடக்கம்
பகுதி 1 - தத்துவவியல்
அறிமுகம்
வேதங்கள்
உபநிடதங்கள்
உலகாயத தத்துவம்
சமண தத்துவம்
பெளத்த தத்துவம்
நியாய தரிசனம்
வைசேடிக தரிசனம்
சாங்கிய தரிசனம்
யோக தரிசனம்
மீமாம்சை
வேதாந்த தத்துவம்
சைவசித்தாந்தம் இந்தியதத்துவங்களும் சித்ததத்துவங்களும் தோற்றம்/படைப்பு பரராசசேகரத்தை அடிப்படையாகக்கொண்ட தோற்றக்கிரமம்
பஞ்ச பூதங்கள் எழுபத்தீராயாயிரம் நரம்புகள்
சுவாசம்
பிராண சக்தி
சீவசக்தி
குண்டலினி சக்தி
அண்டமும் பிண்டமும் சோதிடமும் மருத்துவமும் சித்தமருத்துவமும் ஆயுள்வேத மருத்துவமும் சில குறிப்புகள்
udistis
O I
07
09
4
17
19
23
26
30
34
38
43
54
57
S6
83
85
86
88
9 O.
93
13
7
22
芷26。

象
s
12.
3.
14.
Lug5S II -966066)
அறிமுகம்
காண்டலளவை
கருதலளவை
உரையவிவை
decisco
. இன்மை
பொருளொப்பு பாரிசேடம்
சாம்பவம்
ஐதிகம் இயல்பு யுக்தி அளவை அனுபலப்தி இறுதி முடிவு
sugge Ili - QIIIфLI6 ild)
அறிமுகம்
பொருள்
ւսeծուկ
செயல்
பொதுமை சிறப்பியல்பு உள்ளார்ந்த தன்மை
gait Gold
காலம்
வெளி
Lo607th
ஆன்மா
நாதய் தமிழிலக்கியத்தில் பொருள் தத்துவம் அரும்பத அகராதி உதவிய நூல்கள்
பக்கம்
星34
136
፤ 39
41
42
43
丑44
卫44
44
44 145
丑45
46.
46
47
i48
5
57
59
61
62
63
卫64
66
67
68
69
7
73
79

Page 11
SATs
3
که
KT
ஆசிரியரின் நூல்கள்
ஈழத்துச் சித்தமருத்துவ நூல்கள் ஓர் அறிமுகம் (சாகித்திய மண்டலப்பரிசு, கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசு
பெற்றநூல்)
சுதேச மருத்துவ மூலிகைக் கையகராதி (இலங்கை அரச கரும மொழித்திணைக்களப் பரிசு பெற்ற
)நூல் ؟ د
உளநெருக்கீடுகளும் மனநலனும்
கட்டு வைத்தியம்
இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து சித்தமருத்துவம்
பிள்ளைப்பிணி மருத்துவம் - கைநூல்
சித்த மருந்தியலும் மருந்தாக்கவியலும்
சித்த மருத்துவ மூலதத்துவம்
حصہ

பகுதி I - தத்துவவியல்
1. அறிமுகம்
சித்தமருத்துவம் கத்துவங்களால் உருவாக்கப்பட்டது. அம்மூல தத்துவங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ளாமல் ஒரு மாணவன் சித்தமருத்துவனாகிவிட முடியாது. தத்துவம் என்றாலே அதை விளங்கிக் கொள்வதற்குப் "பக்குவ* நிலை வேண்டும். இன்றைய விஞ்ஞான உலகில் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்தால் என்ன பிரயோசனம்? என்ற கேள்வியைச் சிலர் எழுப்பக்கூடும். முற்காலத்தில் தத்துவங்களைச் சரிவரப்புரிந்து கொண்டு, தம்மையும் மேம்படுத்தி தாம் வாழ்ந்த சமூகத்தையும் மேம்படுத்தி சித்த வைத்தியர்கள் பெரும்பணி புரிந்துள்ளனர். நோயாளியைப் பார்த்தவுடனேயே அவனது நோயை இன்னதெனக் கூறும் வைத்தியர்களும், கை நாடி பிடித்துப் பார்த்து ஏற்பட்டுள்ள நோய் இத்தனை நாளில் மாறும் அல்லது இத்தனை நாளில நோயாளி இறப்பான் என்று துல்லியமாகக் கூறிய சித்த மருத்துவர்களும் மிகச் சமீபகாலம்வரை எம்மத்தியில் இருந்திருக்கிறார்கள். அவர்களால் இது எவ்விதம் சாத்தியமாயிற்று? சித்தமருத்துவ மூலதத்துவங்களைத் தெளிவாகப்புரிந்து கொண்டு, தம்மையும் அறிவு நிலையில் மேம் படுத்திக் கொண்டதால்தான் அவர்களால் நோயைச் சரிவரக் கண்டறிந்து பரிகரிக்க முடி ந் த து. அவர்கள் மனிதனை (நோயாளியை) ஒரு தத்துவப்பிராணியாகவே அணுகி ஆராய்ந்தனர் என்று கூறலாம்.
முற்காலத்தில் சித்தமருத்துவம் குருசீடமுறையில் வளர்ந்து வந்ததால் மாணவர்கள் பல்லாண்டு காலம் தகுந்த குருவின் கீழ் பயின்று தத்துவப் பயிற்சி பெற்றனர். ஆனால், தற்காலத்தில் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்களின் கீழ் பயிலும் மாணவர்களால் அத்தகைய தத்துவப்பயிற்சியினை எங்ங்ணம் பெறுதல் முடியும்? இக்குறுகிய காலப்படிப்பில் நோய்கள் - மருந்து - சிகிச்சை பற்றிய படிப்பிற்கே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

Page 12
மருத்துவத்தின் நோக்கம் மக்கள் பிணியின்றி சுகவாழ்வு வாழ வழிவகுத்தல் என்பதில் மாறுபட்ட கருத்துகளுக்கிடமில்லை. ஆனால் ஏன் பிணியின்றி வாழவேண்டும்? என்ற கேள்விக்குப் பதிலிறுப்பதில்தான் கருத்து வேற்றுமைகள் காணப்படுகின்றன. "இவ்வுலக வாழ்வை இன்பமாகக் களிப்பதற்கு" என்று விடை பகருவோமேயானால் அது அடுத்துவரும் அத்தியாயத்தில் விபரிக்கவுள்ள உலகாயதரின் கோட்பாட்டை ஆதரிப்பதாக அமைந்துவிடும். ஆனால் மேற்படி கேள்விக்கு சித்தமருத்துவம் பின்வருமாறு விடையளித்துள்ளது.
'மறுப்பது உடல்நோய் மருந்தெனலாகும்
மறுப்பதுளநோய் மருந்தெனல் சாலும் மறுப்பது இனி நோய் வராதிக்க மறுப்பது சாவை மருந்தெனலாமே?”
- திருமூலர் எண்ணாயிரம்
அதாவது, சா / மரணம் வராமல் தடுப்பதே மருந்து அல்லது மருத்துவமாகும். மரணம் வராமல் தடுத்தல் என்று கூறும்போது, இடையில் ஏற்படும் மரணத்தைத் தடுப்பதா அல்லது ஒருவரின் ஆயுள் முடியும்போது ஏற்படும் சாவைத் தடுப்பதா என்ற கேள்வி எழுகிறதல்லவா? சித்த மருத்துவப்படி ஒருவரின் பூரண ஆயுட் காலம் நூறு ஆண்டுகளாம். எனவே, இங்கு இரண்டு விதமாகவும் ஏற்படும் மரணத்தைத் தடுப்பது என்றே பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில், சித்தர்களின் முக்கிய குறிக்கோள் இப் பிரபஞ்சம் அழியும் பிரளயகாலம்வரை (கல்ப காலம்) இவ் வுடலுடனே (அன்னமய கோசத்தாலான இவ்வுடல் என்று கருதுவதிலும் பார்க்க சூட்சுமமான உடலுடனே என்று கருதுவதே பொருந்தும்.) ஈசனுக்கு இணையாக வாழ்தல் வேண்டும் என்பதாம். அவ்விதம் கற்ப காலமளவும் காயமாகிய இவ்வுடலை அழியாது பாதுகாப்பதற்காகவே காயகற்ப மருத்துவமுறையைச் சித்தர்கள் கூறிவைத்துள்ளனர்.
இந்துதத் துவங்களை ஆராய்ந்து பார்ப்போமானால் அவை ஒவ்வொன்றும் ஆன்மாவின் முத்தியை அதாவது ஆன்ம ஈடேற்றத்தை முக்கிய குறிக்கோளாகக் கொண்டவையாக இருப்பதைக்காணலாம். இவ்வுயரிய நிலையை நோக்கியே சித்தமருத்துலம் மக்களை நெறிப்படுத்துகிறது. ஆயுள் என்றால் உயிர்; வேதம் என்றால் அறிதல் என்ற கருத்தினடிப்படையிலேயே சித்தர்கள் தமது மருத்துவத்தை ஆயுள்வேதம் என்று கூறியுள்ளனர். அதற்காக வட மொழி ஆயுள்வேத மருத்துவத்தையும், சித்தர் கூறிய "தென் மொழி
2

ஆயுள்வேத மருத்துவத்தையும் ஒன்றுதான் என்று எண்ணிக் குழம்பத் தேவையில்லை. இரண்டும் வெவ்வேறு மருத்துவமுறைகளாகும். இங்கு ஆயுள வேதம் என்ற வார்த்தைப் பிரயோகம் பொதுப் பெயராகவே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கவனத்திற்கொள்ளவும் . ஏனெனில், சித்தர்கள் கூறும் ஆயுள்வேதம் சிவசம்பிரதாயமுடைய மருத்துவமுறையாகும். இதனைய பரராசசேகரம் முதல் பல்வேறு மருத்துவநூல்களில் நாம் கண்டறியக்கூடியதாகவுள்ளது. ஆனால், வடமொழி ஆயுள்வேதமோ பிரம்மசம்பிரதாயமுடையது. சித்த ஆயுள் வேதம் என்ற சொல் சித்தர்கள் கூறிய ஆயுள்வேத முறைக்கே சிறப்பாக வழங்கப்பட்டுவந்துள்ளது. அதாவது சித்த மருத்துவத்தின் முற்காலப்பெயர் சித்தாயுள் வேதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் உயிரைப்பற்றி அறிதல் அதாவது ஆன்ம ஞானம் பெறுதல் என்பதே சித்த மருத்துவக் குறிக்கோள் ஆகும். தற்காலத்தில் அவ்வுண்மையை விளங்காதோர் சித்த ஆயுள்வேதம் என்பது தமிழ்மொழி சித்தமருத்துவத்தையும், வடமொழி ஆயுள்வேதத்தையும் சேர்த்துக் குறிப்பிடும் ஒரு பொதுப்பெயராகவே கருதுகின்றனர். இப்பொருள் மயக்கத்தைத் தவிர்ப்பதற்காக பரராசசேகரம் அங்காதிபாதத்தில் சித்தவேதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருப் பதும் நோக்கற்குரியது.
தற்காலத்தில் சித்த மருத்துவம் என்ற பெயர் தமிழ் மருத்துவத் திற்குரியதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே சித்த மருத்துவ நூல்களில் ஆயுள்வேதம் என்ற சொல் இடம்பெற்றிருத தலை மட்டும் கரூதி சித்த மருத்துவ நூல்கள் வடமொழி ஆயுள்வேதத்தின் தழுவல் என்ற பிழையான கருத்துக்கு மாணவர்கள் வரக்கூடாது. ஆயுள்வேதம் என்பது வடமொழிப் பெயர் இல்லையா? என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும். அதற்குப் பதில், தேவார, திருமுறை களைச் சிறப்பிக்க அவற்றைத் 'தமிழ்வேதம்" என்று அழைக் கிறோமல்லவா? அதுபோலத்தான் இதுவும். சித்த மருத்துவம் முற்றிலும் தமிழில் உருவானது. சித்த மருத்துவத்துக்கும் வடமொழி ஆயுள் வேதமருத்துவத்துக்கும் இடையில் அடிப்படைத் தத்துவங்களில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுண்டு. அவைபற்றி பின்பு இந்நூலில் எடுத்துக்கூறப்படும்.
சித்த மருத்துவமானது வாதம், வைத்தியம், யோகம், ஞானம், என்னும் நான்கு பகுதிகளை உள்ளடக்கிய ஒரு விசாலமான பரப்புடைய மருத்துவமாகும். இவற்றுள் வாதம், வைத்தியம் இரண்டையும் ஏமவைத்தியம் என்றும் யோகம், ஞானம் இரண்டையும் பிரம்ம வைத்தியம் என்றும் அழைப்பர். வாதம் என்றால் இரச வாதம் ( Alchemy) என்பதனைக் குறிக்கும். உலோகங்களை
3

Page 13
குறிப்பாக இரும்பைப் பொன்னாக்குவதுதான் இரசவாதம் என்று கருதுவோர் பலர். ஆனால் இது சித்தர் ரசாயனமாகும். ( SIDDHER’S CHEMISTRY ) 35 sibsnrav ggr Fmru6oT நூல்கள், மூலகங்கள், சேர்வைகள், உலோகங்கள் முதலியன எவ்விதம் ஒன்றிலிருந்து ஒன்று உருவாகின்றன. அவை பிரியும்போது ஆரம்ப மூலகங்கள் எவ்விதம் உண்டாகின்றன என்பது போன்ற இரசாயனச் சேர்க்கை, இரசாயனப் பிரிகை முதலிய பல விடயங்களை விளக்குவதுடன் அவற்றின் இறுதி வடிவமான அணுக்களைப் பற்றியும் விளக்குகின்றது. அதுபோலவே, சித்தரசாயனம் என்று கூறப்படும் வாதத்திலும் தாதுப்பொருட்கள் பஞ்சபூத அம்சப்படி சேர்தல், பிரிதல் முதலியன விளக்கப் பெறுகின்றன. இதனை வாதவைத்தியம் என்றுங் கூறுவர். இரசவாதம் பற்றித் தெளிவாக அறிந்து கொண்டால்தான் ஒருவன் வைத்தியனாக முடியும் என்பது சித்தர் கூற்று. ‘வாதி மகன் வைத்தியன்" என்ற பழமொழியும் அதனையே உணர்த்துகிறது.
வைத்தியமானது பிணிகளைக் கண்டறிதல், அதற்கான சிகிச்சை முறைகள் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. யோகமானது அட்டாங்க யோகம் முதலிய யோகப் பயிற்சிகளைக் குறிப்பிடுகிறது. ஒரு வைத்தியன் இம்முறைகளால் தன்னை மேம்படுத்தி உயர்நிலைக்கு வந்தால் தான் இவ்வுலகை - பிரபஞ்சத்தைப் பற்றித் தெளிவாக அறியமுடியும். அவ்விதம் அறிந்தால் தான் தன்னைச் சுற்றியுள்ளோரில் உள்ள குறைபாடுகளைச் சரிவர அறிந்து அவற்றுக்குச் சரியான முறையில சிகிச்சையளிக்க முடியும் . அவர்களையும் ஆன்மீகநிலையில் மேலுயர்த்த முடியும்.
ஞானம் என்றால் அறிவு. எதைப்பற்றிய அறிவு? உண்மைப் பொருளைப் பற்றிய அறிவு. உண்மைப் பொருள் (மெய்ப்பொருள்) என்றால் தத்துவம் அதாவது தத்துவ ஞானம் என்று கூறலாம்" இப்போது எவ்வுண்மைப் பொருளைப் பற்றிய அறிவு என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கு விடை இப்பிரபஞ்சத்தைப் பற்றிய அறிவு: அதற்கு அப்பாலும் ஏதாவது உள்ளதா என்பது பற்றிய அறிவு என்பதாம். இப்பிரபஞ்சத்தைப்பற்றி ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? மனிதராகிய நாம் இப்பிரபஞ்சத்தில் தான் (அதன் ஒரு பகுதியாகிய பூமியில்) வாழ்கிறோம். எனவே, நாமும் இப்பிரபஞ் சத்தின் ஒர் அங்கம். பிரபஞ்சத்தில் உள்ளவை யாவும் மனித உடலிலும் ஏதோ ஒரு வகையில் இடம் பெற்றுள்ளன; ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவேதான் பிரபஞ்சத்தைப் பேரண்டமாகவும் மனிதனை அதன் சிற்றுருவமாகவும் கருதுவர். எனவே, பிரபஞ்ச தத்துவத்தைத் தெளிவாக விளக்கிக் கொள்வது மனிதனை ட. மனிதனின் உடல் தத்துவத்தை விளங்கிக்கொள்ள உதவும்.
4.

இன்றைய விஞ்ஞான உலகம் தசை, எலும்பு, நரம்பு, இரத்தம், முதலியவற்றாலான பெளதிக உடம்பு (Physical Body) பற்றியே தனது ஆராய்ச்சியை முன்னெடுத்து வெற்றி கண்டுள்ளது. ஆனால், சித்தர்களோ தத்துவங்களாலாக்கப்பட்ட அகவுடம்பு (Spiritua Body) பற்றி நுட்பமாக ஆராய்ந்தறிந்து கூறியுள்ளார்கள். ஆத்மாவின் வீடு பேறு அல்லது முத்திக்கு உதவும் சாதனமாகவே புறவுடம்பை அவர்கள் கருதினர்.
எனவே, வாதம், வைத்தியம், யோகம், ஞானம் ஆகிய நான்கும் சித்தமருத்துவத்துக்கு அடிப்படையானவை என்பதை மாணவர்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளல் வேண்டும். இவற்றுள் வாதம், வைத்தியம், யோகம் என்பவற்றை விளங்கிக் கொள்ள அறிவு (ஞானம்) அவசியமாகும். அந்த அறிவே தத்துவ ஞானமாகும். இவ்விதம் உண்மைப் பொருளான தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் தத்துவ ஞானிகள் அல்லது மெய்ஞ்ஞானிகள் என அழைக்கப்படுவர்.
தத்துவ ஞானம் என்றவுடன் அது கடவுளுடன் சம்பந்தப்பட்டது என்ற கருத்தும் கணிசமானோர்க்கு உள்ளது. தற்காலத்தில் தத்துவம் வேறு சமயம் வேறு என்றில்லாமல் இரண்டும் பின்னிப் பிணைந்து மக்களின் வாழ்க்கையுடன் கலந்து காணப்படுவதுதான் அதற்குக் காரணம் எனலாம். ஆனால், ஆன்மா, கடவுள் என்பவற்றை ஒப்புக் கொண்ட ஆன்மீக வாதமும் (ஆத்திக வாதம்) அவற்றை மறுத்த அநாத்மிக வாதமும் (நாத்திக வாதம்) ஒவ்வொரு காலகட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதும் மறுப்பதற்கில்லை.
மேற்கு நாடுகளிலும் தத்துவ ஆராய்ச்சிகள் தொன்று தொட்டு இடம்பெற்று வந்துள்ளன. ஆனால் மேற்கு நாட்டுத் தத்துவஞானிகள் புறவுலகைப் பற்றிய ஆராய்ச்சியிலேயே அதிக கவனம் செலுத்தி யுள்ளளனர். அண்மைக் காலங்களிலேயே அவர்கள் ஆன்மா போன்ற அகவுலகு பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்திய தத்துவஞானிகள் அகம் பற்றி - முக்கியமாக ஆன்மாவை மையமாகக் கொண்டு தமது ஆராய்ச்சிகளை மேற் கொண்டனர். அதற்கு அனுசரணையாகவே அவர்கள் புறவுலக ஆய்வினை மேற்கொண்டனர்
அங்ங்ணம் தத்துவாராய்ச்சியில் ஈடுபட்டோர் அதற்குத் துணையாகக் கைக்கொண்ட சாதனங்கள் அளவைகள் (பிரமாணங்கள்) எனப்பட்டன. அவற்றுள் முக்கியமானவை காண்டல் (பிரத்தியட்சம்) கருதல் (அனுமானம்), உபமானம், உரை (ஆகமம்), யுக்தி அ அருத்தாபத்தி, அனுபலப்தி 676ör L56761rb. இவற்றின் விளக்கத்தை அளவையியல் என்னும் பகுதியில் பார்க்கவும். இந்திய தத்துவ
5

Page 14
ஞானிகள் இவ்வளவைகளில் ஒன்றையோ அல்லது பலவற்றையோ துணையாகக் கொண்டு தமது தத்துவாராய்ச்சியினை மேற். கொண்டனர்.
இந்திய தத்துவ ஞானங்கள் மெய்ப்பொருள் காண்டல் என்னும் நோக்குடையவையாதலினால் அவற்றைத் தரிசனங்கள் (தரிசனம் = தரிசிப்பது = காண்பது) என்றும், அவை ஒவ்வொன்றும் உண்மைப் பொருளை நோக்கிச் செல்ல வகுக்கப்பட்ட வழிகளாதலினால் மதம் அல்லது மார்க்கம் என்றும் அழைக்கப்படுவதுமு 3ண்டு. சித்த மருத்துவ தத்துவங்களை விளங்கிக் கொள்வதற்கு பின்வருவன பற்றி சுருக்கமாக அறிந்து கொள்வது அவசியமாகும்.
அ) வேதங்கள்
ஆ) உபநிடதங்கள்
இ) உலகாயத தத்துவம்
ஈ) சமண தத்துவம்
உ) பெளத்த தத்துவம்
ஊ) நியாய தரிசனம்
எ) வைசேடிக தரிசனம்
ஏ) சாங்கிய தரிசனம்
ஐ) யோக தரிசனம்
ஒ) மீமாஞ்ஞை (மீமாம்சை)
ஒ) வேதாந்த தத்துவம்
ஒள) சைவ சித்தாந்த தத்துவம்
இவற்றுள் நியாயம், வைசேடிகம், சாங்கியம், யோகம், மீமாஞ்ஞை, வேதாந்தம் ஆகிய ஆறு தரிசனங்களையும் ஆறு தத்துவங்கள்
ஷட்தரிசனங்கள்) என்று கூறுவர்.

2. வேதங்கள்
இந்து சமயத்தின் ஆதிநூல் வேதமாகும். அது இருக்குவேதம் , யசுர்வேதம், சாமவேதம், அதர்வண வேதம் என நால்வகைப்படும். வேதங்கள் யாரால், எப்போது தோற்றுவிக்கப்பட்டன என்று கூறு வாரி ல ர். அவை முழுமுதற்கடவுளான சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவை என்பது இந்துக்களின் நம்பிக்கை
வேதம் என்றால் அறிவு என்று பொருள். எனவே, வேதத்தை அறிவுநூல் என்றுங்கூறுவர். அவை எத்தகைய அறிவை எமக்குத் தருகின்றன என்ற கேள்வி எழுகிறதல்லவா? இவ்வுலகவாழ்வை இன்பமயமானதாக்குவதற்கும், இந்த உலகும், உலக வாழ்க்கையும் எதற்காக என்று தத்துவ ஆராய்ச்சி செய்வதற்குமான அறிவை அவைதருகின்றன.
வேதங்கள் மூன்று முக்கியபிரிவுகளையுடையன. அவையாவன மந்திரங்கள், பிரமாணங்கள், உபநிடதங்கள் என்பனவாம். அவற்றுள் மந்திரங்கள் இறை வ ைன ப் புகழ்ந்துபாடும் பாடல்களாகவும், பிரமாணங்கள் கிரியைகள் பற்றிய விளக்கத்தையும், உபநிடதங்கள் வேதத்திலுள்ள உண்மைத்தன்மையை விளக்கிக் கூறுவனவாகவும் உள்ளன. இவற்றை முறையே உபாசனாகாண்டம், கர்மகாண்டம், ஞானகாண்டம் என்றுங் கூறுவர். வேதத்தை ஏற்றுக் கொண்டு பின்பற்றுபவர்கள் " வைதீகர்” என்றும், வேதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அவைதீகர் என்றும் அழைக்கப்படுவர். உலகாயதர் சமணர், பெளத்தர் ஆகிய மூன்று பிரிவினரும் வேதத்தை ஒப்புக் கொள்ளாதோர். சாங் கியர், யோகதரிசனவாதிகள், pi) Lumru
7

Page 15
தரிசனவாதிகள், மீமாம்சகர், வேதாந்த தரிசனவாதிகள், சித்தாந்திகள் முதலியோர் வேதத்தை ஒப்புக்கொண்டு பின்பற்றுபவர். எனவே, வேதத்தை ஒப்புக்கொண்டு ஆதரித் த ல், ஒப்புக்கொள்ளாமல் எதிர்த்தல் என்ற இருதரப்பட்டவர்கள் உளர். அங்கனம் வேதத்தை ஆதரித்தோ, அன்றி எதிர்த்தோ தான் முற்கூறிய உலகாயதம் சித்தாந்தம் போன்ற பலபிரிவுகள் தோன்றியுள்ளன. எனவே இந்திய தத்துவஞானங்கள் அனைத்திற்கும் ஏதோ ஒருவகையில் வேதந்தான் மூலகாரணமாக அமைந்துள்ளது என்பதும் வெளிப்படை.
இந்த விளக்கத்தை அ டி ப் படை யாக க் கொண்டு இந்திய தத்துவஞானங்களைப் பற்றி சுருக்கமாக எடுத் துக் கூறுவதே இப்பகுதியின் நோ க் க ம 1ா கும். அதன் மூலம் சித்தமருத்துவ அடிப்படைதீ தத்துவங்களையும் ஒரளவிற்கு விளங்கிக்கொள்ள முடியும். ),
இருக்கு வேதம் இறைவனை வணங்குதற்குரிய துதிப்பாடல்
கள் இதில் இடம் பெற்றுள்ளன.
யசுர் வேதம் யாகம், பலி, தானம் முதலிய கிரியைகள் செய்யும் முறைகள் இதில் விபரிக்கப்பட்டுள் Go
சாமவேதம் பாபத்தை நீக்கிப் பலனைக் கொடுக்கும்
பாடல்கள் இதில் உ ஸ் ள ன. அவற்றை இசையுடன் பாடுவதால் பாபம் நீங்கும்.
அதர்வண வேதம் மந்திரங்களை உச்சரிக்க வேண்டிய முறை , எதிரிகளை அழிப்பதற்கான கிரியைகள் முதலியன இதில் அடங்கியுள்ளன.

3. உபநிடதங்கள்
& வேறுபெயர் - உபநிஷதம், வேதாந்தம்
* வகை - முக்கியமானவை 108
* தோற்றுவித்தவர் - பலமுனிவர்கள்
38 காலம் - கி.மு 7 அல்லது5 ஆம் நூற்றாண்டு
: ஏற்றுக்கொண்ட அளவை - வேதம்
S; கடவுள் - உண்டு
*; ஆன்மா - உண்டு
* முத்தி - உண்டு
வேதங்களில் உள்ள உண்மைத்தன்மையை - தத்துவங்களை
விளக்குபவையே உபநிடதங்களாகும். இவை வேதத்தின்
ஞானகாண்டத்தைச் சேர்ந்தவை. வேதத்தின் இறுதிப்பகுதியாக உள்ளதால் இவ ற் றி ற் கு வேதாந்தம் எ ன் றும் பெயர் (ஆறு தரிசனங்களில் ஒன்றாகக் கூறப்படும் வேதாந்தம் வேறு என்பதை கவனத்திற்கொள்ளவும்) உபநிடதமாகிய வேதாந்தத்தின் உட்பொருளை தெளிவுபடுத்துவதே சைவசித்தாந்தம் என்று கூறுவர். "வேதாந்தத் தெளிவாஞ் சைவசித்தாந்தத் திறன்" என்று சிவப்பிரகாசத்தில் உமாபதிசிவாசாரியார் தெளிவுபட எடுத்துக்கூறியுள்ளார்.
உபநிஷத் என்பதற்கு குரு (ஆச்சாரியன்) அருகில் உட்கார்ந்து அறிந்து கொள்ளப்படும் அறிவு (ஞானம்) என்று பொருள், கொள்வர். உபநிடத நீங்க ள் நூற்றெட்டாகும் அவற்றுள் மு க் கி ய மா ன  ைவ பத்தாகும். அவை வருமாறு: ஐதரேய உபநிடதம்,  ைத த் தி ரீய உப நி ட த ம், கடோபநிடதம், சு வேதா சு வத்த உபநிடதம், பிருகதாரண்ய உபநிடதம்,
9

Page 16
பிரச்னோபநிடதம், கே நோ ப தி ட த பம், ஈசோபநிடதம், முண்டகோபநிடதம், சாந்தோக்கிய உபநிடதம்.
உபநிடதங்களின்படி மூலப்பரம்பொருள் என்று ஒன்று உண்டு. அதுவே "பிரம்மம்." இப்பிரபஞ்சத்தின் மூலப்பரம்பொருள் பிரம்மமாகும். பிரம்மத்திலிருந்தே எல்லாம் தோன்றுகின்றன. பின்னர், பிரளயகாலத்தில் (சர்வசங்காரகாலத்தில்) அவையாவும் பி ர ம் ம த் தி லே யே ஒடுங்குகின்றன. பிரம்மம் எங்கும் நிறைந்துளளது. எல்லாம் அறிவது. அதுவே பரப்பிரம்மம் - பரமாத்மா. அதனை அறிவதோ, உணர்வதோ முடியாத காரியம்.
மேலும், உபநிடதங்கள் ஆன்மா அல்லது உயிர் உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கின்றன. அதுவே ஜீவாத்மா.
ஆன்மாவைக் கண்ணால் காணமுடியாது. ஸ்பரிசிக்க (தீண்ட) முடியாது. அதற்கு பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு என்பன கிடையாது. தைத்திரீய உபநிடதத்தின்படி ஆன்மாவானது
பல கவசங்களால் (கோசங்கள்) மூடப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் புறத்தேயுள்ள கவசமே இந்த உடம்பு, அது அன்னத்தால் அதாவது ஒருவர் உண்ணும் உணவினால் ஆனது. அதற்கு அன்மையகோசம் எ ன்று ம ப ய ர், அவ்வன்னமயகோசத்தினுள் அதைவிட நுட்பமாக உள்ளது, பிராணமயகோசமாகும். அதுவே ஜீவசக்தியாகும். அதற்குள்ளே உள்ளது மனோமயகோசமாகும். அதற்குள்ளே உள்ளது, அறிவுவடிவான (விஞ்ஞானம் - அறிவு)
விஞ்ஞானமயகோசமாகும். அ த ற கும் உ ள் ள |ா கவு ள் ளது ஆன ந் த ம ய மா ன ஆனந்தமயகோசமாகும். இ வ்  ைவ ந் து க வ ச ங் களு க் கும் மத் தி யி ல் உள்ளதே ஆன்மாவாகும். ஆன்மாவானது தனக்கு அந்நியமான இவ்வுறைகளைத் "தான்*
என்று கருதுவதானலேயே அதற்கு கன்மங்களும், மறுபிறப்புகளும் அவற்றோடு சேர்ந்த துன்பங்களும் ஏற்படுகின்றன. பாம்பு செட்டையையுரிப்பதுபோல ஆன் மா வ ர னது இக்கவசங்களை நீ க் கி னால் அதற்கு முத்தி கிடைக்கும். இருவித முத்திகள் கூ ற ப்ப டு கின்ற ன. அவை விதேக முத்தி, சீவன் முத்தி என்பனவாம். தேகம் நீங்கிய பின்னர் அடைவது விதேக முத்தி எனப்படும். இந்த உடலோடு இருக்கும்போதே அடைவது சிவன்முத்தியாகும். இவ்விரு முத்திகளைப் பெறும் மார்க்கங்களும் உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளன,
உபநிடதங்களை ஆக்கியோர் பலமுனிவர்களாவர். எனவே, தோன்றிய காலவேறுபாட்டாலும், பலர் உருவாக்கியதாலும் அவற்றின் கருத்துக்களிலும் ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை. பொதுவாக உபநிடதங்களின் காலம் கி. மு. ஏழாம், ஆறாம் நூற்றாண்டுகளாகும். C
O

4. உலகாயத தத்துவம்
வேறுபெயர் 一 லோகாயதம், சார்வாகம், சாருவாகமதம் ஆ தோற்றுவித்தவர் - பிரகஸ்பதி முனிவர்
பரப்பியவர் - சாருவாகமுனிவர் ፨ጅ gint ay ib · வேதகாலம்
, , i )
杀 ஏற்றுகoகாணட
அளவை - காண்டல் * கடவுள் - இல்லை
霸 3 -g, air uDT இல்லை ஆ மெய்ப்பொருள்கள் - நிலம், நீர், தீ, வளி * வாதம் - காட்சி வாதம்
நிரீசுவரவாதம்
இதனை லோகாயதம் என்றும் சார்வாகம் என்றும், சாரு வாக மதம் என்றுங் கூறுவர். இத் கத்துவங்களின் மூலகர்த்தர தேவகுருவான பிரகஸ்பதி முனிவர் என்பர். உலகாயதக் கொள்கைகளைத் தத்துவ ரீதியாக சார்வாகர் என்பவர் பரப்பியதால் இதற்ரு சார்ாவகம் அல்லது சாருவாகம் என்றும் பெயர் ஏற்பட்டது. இந்திய தத்து வங்களிலேயே மிகவும் ஆதியானது உலகாயததத்துவமாகும். இது தோன்றிய காலம் வேதகாலம் என்பர். வேதங்கள எவ்விதம் கடவுள் உண்டு என்று வலியுறுத்தினவோ அதற்கு மறுப்பாக கடவுள் இல்லை என்று வாதிக்கும் கட்சியும் ஆரம்பமாகிவிட்டது என்றே தோன்றுகிறது. வேதத்திலுள்ள அல்லது வேதத்தைப் பின்பற்று வோர் கடைப்பிடித்த சில மூடக்கொள்கைகள் அல்லது மூட நம்பிக்கைகளை எதிர்ப்பதற்கென்றே இத்தகைய நாத்திக வாதங்கள் தோன்றின என்று கருதலாம்.

Page 17
இவர்கள் காண்டல் (பிரத்தியட்சம்) அளவையையே தமது தத்துவாராய்ச்சிக்குத் துணையாகக் கொண்டனர். எனவே இவர்களை காட்சி வாதிகள் என்றும், இத்தத்துவத்தை "காட்சி வாதம்" என்றுங் கூறுவாரு முளர். நிலம், நீர், தீ, வளி என்னும் நான்கு பூதங்களே இவர்களின் தத்துவங்கள் (உண்மைப்பொருள்கள்) , இவையே நித்தியப்பொருட்கள் அதாவது புலன்களால் உணரப்படுபவையே உண்மையானவை. ஏனையவை பொய். ஆகாயத்தை புலன்களால் உணரமுடியாது என்பதால் இவர்கள் அதனை ஒரு உண்மைப் பொருளாக (நித்தியப்பொருளாக) ஏற்றுக்கொள்வதில்லை. இந் நான்கு நித்தியப் பொருள்களும் வெவ்வேறு விகிதங்களில் இணைவ தால் இப்பிரபஞ்சமும் அதிலுள்ள பொருள்களும் உண்டாகின்றன. அவ்விதமே இவ்வுடம்பும் ஒருணர்வும் (ஆன்மா) உண்டாகின்றது. அவ்வுணர்வு உடம்பு வளர வளரும். உடம்பு தேயத்தேயும் • எனவே, உடம்பிற்கு வேறாக உயிரென்று (ஆன்மா) ஒன்று இல்லை. உயிர் அல்லது ஆன்மா என்பது பொய். பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் சேரும் போது செந்நிறம் உண்டாவது போல நான்கு பூதங்களின் சேர்க்கையினால் ஒருவித சத்தியும் உண்டாகி, உடல் அழியும் போது அச்சக்தியும் அழிந்து விடுகிறது என்பது இவர்கள் கொள்கை.
இந்நான்கு பூதங்களும் வெவ்வேறு விகிதங்களில் சேர்வது அவற்றின் இயல்பு. அதாவது அவை தானாகச் சேரும். தானாகவே பிரியும். அவற்றை சேரவைத்து பிரபஞ்சத்தைப் படைத்தவர் என்று யாரும் கிடையாது. ஏனெனில் அப்படி ஒருவரை / ஒன்றை கண்ணால் காணமுடியாதுள்ளது. எனவே, கண்ணால் காணாமை யால் கடவுள் என்று எவருமில்லை. கடவுள் உண்டென்பது பொய் (நிரீசுவரவாதம்)
உடம்பிற்கு இன்பதுன்பங்கள் இயல்பாக உள்ளன. அவற்றிற்குக் காரணம் வினை என்பதும் பொய். உலக இன்பங்களை அனுப விப்பதே வாழ்க்கையின் தத்துவம் அதற்கு மங்கைப்பருவத்து மகளிரை மணந்து - உண்டு, உடுத்து இன்பமாய் வாழவேண்டும். என்பதாம். அஃதன்றி பகைவரால், நோயால், வறுமையால், பிறவற்றால் வருந்துவதே துன்பம்.
பொருள்கள் அழியும் போது இணைந்திருந்த மூலப்பொருள்கள் பிரிந்து மீண்டும் தனி மூலப்பொருள்களாக மாறிவிடுகின்றன. நான்கு பூதச்சேர்க்கையில் பிராணவாயு ஒன்று நீங்கினால் உணர்விழந்து உடம்பு நாசமாகும். அதுவே வீடுபேறு. அதைவிட வேறு வீடுபேறு உண்டென்பதும் பொய்.
2

இவ்வுண்மையை உணராதவர்களே மறு  ைம யு ன் டெ னக் கொண்டு தவங்கள், பட்டினி முதலியவற்றால் தம்மை வருத்துவர்.
இவ்வுலகாயதத்தில் தே கத்  ைத ஆன்மா என்று கருதும் தேகான்மவாதம், இந் தி ரி யங் க  ைள ஆன்மா என்று கருதும் இந்திரியான்ம வாதம், பிராணனை ஆன்மா என்று கருதும் பிராணான்ம வாதம், அந்தக் கரணங்களை ஆன்மா என்று கருதும்
அந்தக்கரனான்ம வாதம் என்று பல பிரிவுகளுண்டு.
உலகாயதம் சைவ சித்தாந்தம்
1. கடவுள் இல்லை 1. கடவுள் உண்டு
2. ஆன்மா இல்லை (?) 2. உண்டு (பல)
3. சிற்றின்பமே முத்தி 3. பேரின்பமே முத்தி
4. நிலம், நீர், தீ, வளி ஆகிய 4. ஐம்பூதங்களுண்டு
நான்கு பூதங்களே உண்டு.
5. காண்டல் அளவை மட்டுமே 5. காண்டல், கருதல், உரை
! 6. இந்திரியமே ஆன்மா 6. இந்திரியம் மு த லிய ன
பிராணவாயுவே ஆன்மா வேறு, ஆன்மா என்பது அந்தக்கரணங்களே ஆன்மா வேறு.
தேகமே ஆன்மா
3

Page 18
t
11 11:11+1 ܝ 7114: ܢ ܐ
5. சமண தத்துவம்
* வேறுபெயர் - ஆருகதம், ஜைன தத்துவம் * தோற்றுவித்தவர் - மகா வீரர் * காலம் - கி.மு 6 ஆம் நூற்றாண்டு :ே ஏற்றுக்கொண்ட அளவைகள் - காண்டல், கருதல் * கடவுள் - இல்லை :ே ஆன்மா - உண்டு ' 盎 நித்திய பொருள்கள் - (இரண்டு) சீவன், அசீவன்
(மெய்ப் பொருள்கள்) அ வாதம் - அநேகாந்தவாதம்
இதனை ஜைன தத்துவம் என்றும் ஆருகத கத்துவம் என்றுங் கூறுவர். இதனைத் தோற்றுவித்தவர் மகாவீரர் என்பவராவர். சமணதத்துவங்களும், பெளத்த தத்துவங்களும் ஏறத்தாழ ஒரே காலத்தில் கி.மு ஆறாம் நூற்றாண்டு தோன்றி வளர்ந்தவை. வேதக் கொள்: சுனை மறுப்பதற்காகவே இவை ே தான்றி ன எனலாம். முக்கியமாக வேதங்கள் கூறிய மதச்சடங்குகள், வேள்வி பலி முதலியவற்றைக் கண்டித்து இவை வளர்ந்தன எனலாம். அஹிம்சைத்தத்துவத்தை உலகுக்குத் தந்ததில் இவைமுக்கியமானவை என்பதை மறுப்பதற்கில்லை.
சமண தத்துவவாதிகளைப் பொறுத்துவரையில் அவர்கள் காண்டல், கருதல் ஆகிய இரு அளவைகளையும் தமக்குத் துணையாகக் கொண்டுள்ளனர். இவர்களின் கொள்கைப்படி
இப்பிரபஞ்சம் சீவன் (உயிருள்ளது), அசீவன் (உயிரற்றது என்னும் இரண்டு மூலப்பொருள்களாலானது. இரண்டுமே அழிவற்றவை
நித்திய பொருள்கள்)
4

மூலப்பொருள்களின் சேர்க்கையால் இப்பிரபஞ்சமும் அதிலுள்ள
பொருள்களும் தோன்றுகின்றன. அதனைக் கண்ணால் காணமுடியும் (காண்டலளவை) அம் மூலப்பொருள்கள் பிரிந்து ஒனுக்களாகின்றன. அவற்றைக் கண்ணால் காணமுடியாது (கருதலளவை) இவர்கள் நிலம், நீர், தீ, காற்று ஆகிய பூதங்களை மூலப்பொருள்களாக ஏற்றுக்கொளளவில்லை. காரணம் அவற்றை மேலும் பிரிக்கமுடியும் என்று கூறுவர். அப்படிப் பிரித்துக்கொண்டு போகும்போது இனிப்பிரிக்க முடியாது என்ற ஒரு நிலை வருமல்லவா? அதனையே சமணர் அணு என்றனர். அதுவே மூலப் பொருளாகும்.
அணு அழிவற்ற நித்திய பொருள் - அணுக்களின் சேர்க்கையால் பலவித இணைப்புகளால்தான் இப்பிரபஞ்சமும் அதில் அடங்கியுள்ள பொருள்களும் உண்டாகின்றன. அதாவது வடிவமில்லாத மூலப் பொருளே அணு.
சமணதத்துவப்படி பொருள்கள் ஏழுள. அவையாவன: சீவன். அசீவன், ஆச்சிரவம், சமுவரம், நிர்ச்சிரம், பந்தம், வீடு,
இதில் சீவன் அநாதி சித்தன், முத்தன், பெத்தன் என்று மூவகைப்படும். அநாதி சித்தனே அருகக் கடவுள். மோகம் முதலிய
ஆசாபாசங்களினின்று நீங்கினவன் முத் தன் எனப்படுவான். அவற்றால் கட்டுண்டவன் பெத்தன். இச்சீவன் எடுத்த உடம்பு
முழுதும் வியாபித்திருக்கும். அது உடம்புதோறும் வெவ்வேறாம் அதாவது சீவன் பலவாம்.
அசீவனானது நால்வகைப்படும். அ  ைவ ய | வ என புற் கலம் ஆகாயம், தன்மம், அதன்மம். புற்கலமானது உருவப்பொருளான நிலம் முதலிய நாற்பெரும் பூதங்கள், புல்லு, மரம் முதலிய நிலையியற்பொருள், பை, முட்டை முதலியவற்றிற் பிறக்கும் இயங்கியற பொருள்கள் என்பனவாம். இவற்றிறகுக் காரணம் பரமானுக்களாம். ஆகாயமானது உலகாகாயம் (உலகங்கட்குட் பட்டது), உலகங்கடந்த ஆகாயம் உலகங்களுக்குபுறத்தேயுள்ளது) என இருவகைப்படும். தன்மம் என்றால் புற் கலத்தின் வேறாய் நன்மைபயப்பது. அதன்மம் என்றால் தீமை பயப்பது.
பொறிவழிச்சேறல், கன்மத்தொடர்ச்சி என்பவற்றை ஆச்சிரவம் ான்பர். அங்ஙனம் பொறிவழிசேராது தடுத்து முத்திக்கு காரணமாக அமைவது சமுவரம் எனப்படும். அது எறும்பு முதலியன சாகாது வழிநோக்கி மெல்ல, மெல்ல நடத்தல், இனியவை கூறல், நியம உணவு முதலியனவாம். சு டு பாறை யிற் கிடத்தல், தலைமயிர்
5

Page 19
களைதல், முதலிய தவவாழ்வு நிர்ச்சரம் எனப்படும், பந்தம் என்பது சீவனுடைய சுதந்திரத்தை அடக்கி பிறவியிற் சூழல் விக்கும்மோகம் முதலிய எண்குணங்களுமாம். (மோகம், அந்தராயம் கோத்திரம், நாமம், ஆயுஷ்யம், வேதணியம், தரிசனாவரணியம், ஞானவரணியம்)
சீவனானது மோகம் முதலியவற்றினின்றும் நீங்கி, சுதந்திரம் பெற்று உலகங்கடந்து எல்லையின்றியுள்ளதாகிய (உலகங்கடந்த) ஆகாயத்தின் மேனோக்கிச் சேரல் அதாவது மேலெல்லையின் கண் இருத்தல் முத்தி என்பர். சுருங்கச் சொல்வதாயின் சீவனானது உடல், உலகு முதலிய பந்தங்களை அறுத்து விடுதலைபெறும் நிலையே "முத்தி" அல்லது கேவலஞானம் (பூரண அறிவுநிலை) எனப்படும்.
சமணரில் இருபிரிவினர் உளர். ஆடையின்றி (ஆகாயத்தையே ஆடையாகக் கொண்டவர்) திரிபவர்களை திகம்பரர் என்றும் வெண்ணிற ஆடையணிபவர்களை சுவேதாம்பரர் என்றுங் கூறுவர்.
ஏழுவகைப் பதார்த்தங்கள் பற்றியும் விடையிறுப்பதை அநேகாந்த வாதம் என்று கூறுவர். உதாரணமாக இவ்வுடம்பை எடுப்பதற்கு முன்னர் உயிர் இருந்ததா இல்லையா என்ற கேள்வியை எழுப்பின் பின்வரும் ஏழுவிதமாக விடையளிக்கலாம் என்பது அநேகாந்த வாதமாகும்.
1) இருந்தது 2) இல்லை 3) இருந்ததுமில்லையாம் 4) சொல்ல
முடியாது 5 ) இருந்தது சொல்லமுடியாது 6) இல்லை சொல்ல முடியாது 7) இருந்ததுமில்லையுமாஞ் சொல்லமுடியாது என்பதாம்.
O
good சைவ சித்தாந்தம் 1, கடவுள் இல்லை 1. d, layoit 2 oboi (6) 2. அவைதீகமார்க்கம் 2. வைதீக மார்க்கம் 3. ஆன்மாக்கள் பல 3. ஆன்மாக்கள் பல
4. உயிருக்கு பருமனும் அளவும் 4. அவ்வாறில்லை
உண்டு. அதாவது உடலின் பருமனுக்கு ஏற்ப தன்னைக் கூட்டவும் கு  ைற க் க ஷ ம்
கூடியது. 5. வினை தானாகவே சீவனு 15. கடவுளே வினையையும் டன் சேரும். கடவு ள் ஆன்மாவையும் சேர் த் து
* அவசியமில்லை. பிறப்பை ஏற்படுத்துகிறார்.
6.

8. பெளத்த தத்துவம்
* வேறுபெயர் - புத்த தத்துவம்
*; தோற்றுவித்தவர் - கெளதம புத்தர்
S; காலம் - கி. மு. 6 ஆம் நூற்றாண்டு
; ஏற்றுக்கொண்ட அளவைகள் - காண்டல், கருதல்
ஆ. கடவுள் - இல்லை
ஆன்மா - இல்லை / உண்டு (குழப்பம்)
ঈ வாதம் - கணபங்கவாதம்
சூனிய வாதம் அநாத்மவாதம் ,
பெளத்தம் அல்லது புத்த தத்துவமானது கெளதம புத்தரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இவர்காலம் ஏறத்தாழ கி. மு. 6 ஆம் நூற்றாண்டு ஆகும். புத்தர் உலகமக்களின் துயர்நீக்கக்கருதி, போதிமரத்தின் கீழ் அமர்ந்து தவமியற்றி ஞானம் பெற்றவர். இவரின் போதனைகள் அடங்கியநூலுக்கு பிடகநூல் என்று பெயர். ஆன்மா இல்லை என்பதால் பெளத்தத்துக்கு அநாத்மவாதம் என்றும் பெயர்.
இவர்கள் துணைக்கொண்ட அளவைகள் காண்டல், கருதல் ஆகிய இரண்டுமாம். இ வர் க ளின் கொள்கையாதெனில் மூல ப் பரம் பொருள் அல்லது கடவுள் என்று எவருமிலர். எல்லாப்பொருளும் சூனியம் (சூனியவாதம்) ஞானமே (அறிவே) ஆன்மா. அது நீரோட்டம் போல தொடர்ச்சியாக, கணந்தோறும் தோன்றி அழியும். அங்ங்ணம் தோன்றி அழியும்போது மான்மத நாற்றம் போல (கஸ்தூரியை ஒருபெட்டியில் வைத்து எடுத்தபின் அந்தப் பெட்டியில் வேறு பொருள்களை வைத்தால் அவற்றிலும் அக் கஸ்தூரிவாசனை வீசுமல்லவா? அதுபோல) முற்கணத்தின்
17

Page 20
அழிவெய்தும் ஞானத்தில் (ஆன்மாவில்) தோன்றிய வாசனை
மறுகணத்தில் (பிற்கணத்தில்) தோன்றும் அதாவது வினையும்
மறுபிறப்பும் உண்டு. வினை தானாகவே மறுபிறப்பில் பற்றும்
என்பதாம். ஞானத்தில் (ஆன்மாவில்) பற்றுவதால் அறிவு முதலியன
தோன்றும். இங்ஙனம் ஞானத்தில் தோன்றிய வாசனை அழிவதே
முத்தி எனப்படும். இதனையே நிர்வாணம் அல்லது சமாதிநிலை என்றுங் கூறுவர்.
இவர்கள் எல்லாம் கணத்தில் தோன்றி கணத்தில் மறையும் என்று கூறுவதால் இவர் க  ைள கணபங்கவாதிகள் என்றும், இவர்களது வாதம கணபங்கவாதம் என்றுங் கூறப்படும்.
அெளத்த தத்துவமானது மாத் தி யமி க ம், யோகசாரம்,
செ ள த் தி ரா ந் தி கம், வைபாடிகம் எ ன் னு ம் நான்கு
பிரிவினையுடையது.
பெளத்தம் சைவ சித்தாந்தம்
1) கடவுள் இல்லை உண்டு
2) வினை தானாகவே மறு வினையையும் ஆன்மாவையும் பிறப்பில் பற்றும். இணைத்து மறுபிறப்பை ஏற்
படுத்த கடவுள் அவசியம்.
18

7. நியாய தரிசனம்
*; வேறு பெயர்கள் - நியாய தத்துவம், நையாயிக தரிசனம்,
பிரமாண சாத்திரம், தர்க்கம்,
ஆ தோற்றுவித்தவர் - கெளதம முனிவர் (அக்கபாதமுனிவர்)
* தோன்றிய நூல் - நியாயசூத்திரம்
38 காலம் - 6. (լք. 450
* ஏற்றுக்கொண்ட
அளவைகள் - (நான் கு) கான் ட ல், கருதல்,
உபமானம், உரை
* கடவுள் - உண்டு * ஆன்மா - உண்டு (பல) * முத்தி - உண்டு * வாதம் - ஆரம்பவாதம்,
காட்சியளவைக்கொள்கை : நித்திய பொருள்கள் - பல
ஒருவிடயத்தை த ர் க் க ரீதியா க அணுகுவது அதாவது தர்க்கித்து அறிவதுதான் நியாயதரிசனம். எனவேதான் இதனைத் தர்க்கம் என்றுங் கூறுவர். அ றி  ைவ விட அந்த அறிவைப் பெறும்வழியே முக்கியம் என்பது இவர்கள் கொள்கை. ஏற்புடைய அறிவைப் பெறுவதற்கு நான்கு அம்சங்கள் அவசியமாகும்.
அ) அறிபவன் (பிரமாதா) ஆ) அறியப்படும் பொருள் (பிரமேயம்) இ) அறிவதற்கான வழி (பிரமாணம்) ஈ) அறிவு (பிரமிதி)
9

Page 21
இவற்றுள் அறி  ைவ ப் பெறும் வழியான அளவைகளே (பி ர மா ண ங் க ளே) முக்கியம் என்பது இவர்கள் வாதம். இவ்விடயத்தில் இவர்கள் வைசேடிக தத்துவ வாதிகளிலிருந்து வேறுபடுகின்றனர். வைசேடிகர்களைப் பொறுத்த வரையில் அறியப் படும் பொருள் (பிரமேயம்) பற்றிய ஆராய்ச்சியே முக்கியத்துவம் பெறுகிறது.
நியாயம் வைசேடிகம்
பொருளைப் பற்றி அறியப்படும் பொருளைப்பற்றிய அறிவே வழியே (பி ர மா ண ங் கள் / முக்கியம் அளவைகள்) முக்கியமானவை.
ஒரு விடயத்தை அணுகும்வழி சரியானதாக இருந்தால்தான் அதன் மூலம் பெறப்படும் அறிவும் ஏற்புடையதாக இருக்கும். ஒரு பொருளைத் திடீரென்று பார்க்கும் போது முதலில் அதன் பொதுவான தன்மையே தோற்றும் (நிர்விகல்ப காண்டல்) ஆனால், சிறிது நேரத்துக்குள் (கணப்பொழுதுகள்) அதன் சிறப்பான தன்மை தோற்றும் (சவிகல்ப காண்டல்) உதாரணமாக ஒரு கயிற்றைத் திடீரென்று பார்க்கும்போது அது பாம்பு போலத் தோற்றலாம் ஆனால், உடனடியாகவே, மனம் அது பாம்பல்ல சயிறு என்று தீர்மானித்துவிடும். அதனால்தான் நியாயவாதிகள் ஒரு பொருளின் குணம் என்பதுவேறு. அந்தக்குணத்தைத் தாங்கிநிற்கும் பொருள் (குணி) வேறு என்று பிரித்துக் கூறுகின்றனர். அதாவது குணம் தனி, குணி தனி.
நியாய தத்துவம் பெளத்த தத்துவம்
குணம் வேறு; குனி வேறு. குணமும் குணியும் வேறல்ல.
குணத்தையும் பொருளையும் பிரிக்க முடியாது.
அதாவது பொருளையும் குணத்தையும் பிரிக்கலாம்.
இவர்களது கருத்துப்படி பிரபஞ்ச தோற்றத்திற்கு மூலகாரணம் அணுக்களாகும். (ஒரு பொருளைப் பிரித்துக்கொண்டே போனால்
20

ஒரு கட்டத்துக்கு மேல் அதை இனிப்பிரிக்க முடியாது என்ற நிலை வரும் . அதுவே அணுவாகும்.)
நியாய தரிசனப்படி ஆன்மா அல்லது உயிர் ஒரு நித்திய பொருளாகும். ஆன்மாக்கள் பல. அதற்கு அழிவு கிடையாது. அறிவைத் தாங்கி நிற்கும் பொருளே உயிர் ஆகும். அதாவது அறிவு வேறு; ஆன்மா வேறு. (குணம் வேறு குணி வேறு) இரண்டையும் பிரித்தறிய முடியும். உயிரானது மனத்தோடும், உடலோடும் தொடர்பு கொள்ளும் போதுதான் அது அறிவைத் தாங்கி நிற்கிறது. (உயிர் அறிவு வடிவானது என்பது திருமந்திரம். ஆன்மாவுக்கு சுய அறிவு கிடையாது, அறியப்படுத்தினால்தான் அறியும் என்பது சித்தாந்தம்)
உயிரானது சடமாகிய உடம்பிலிருந்து விடுபட்டு, அறிவை இழந்து தனித்து நிற்கும் நிலையே முத்தி எனப்படும். அது கடவுளுடன் இணைவதில்லை.
நியாய தரிசனம் சைவ சித்தாந்தம்
முத்தியில் உயிர் கடவுளுடன் இணையும் (அத்துவிதம்) இணைவதில்லை.
நியாயவாதிகள் கடவுள் அல்லது பரமாத்மா உண்டு என்று ஏற்றுக்கொண்டுள்ளனர். கடவுள் எல்லாம் வல்லவர். அவரே நித்திய திரவியங்களை (பதினாறு) க்கொண்டு இப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழித்தல் தொழிலைச் செய்கிறார்.
நியாய தரிசனப்படி உலகிலுள்ள பொருள்கள் (பதார்த்தங்கள்) பதினாறு வகைப்படும். அவையாவன:
1) ஏற்புடைய அறிவைப் பெறும் வழிகள் (பிரமாணம்), 2) ஏற்புடைய அறிவுக்குரிய பொருள் (பிரமேயம்), 3) சந்தேகம் (ஐயம்) 4) நோக்கம் (பிரயோசனம்), 5) எடுத்துக்காட்டு (திருட்டாந்தம்), 6) உறுதிப்படுத்தப்பட்ட முடிவு (சித்தாந்தம்) 7) உறுப்புகள் (அவயவம்), 8) பிழை ஒடுக்கல் (தர்க்கம்), 9) முடிவு செய்யப்பட்ட அறிவு (நிர்ணயம்), 10) உண்மைக்காக வாதிடல் (வாதம்), 11) வெற்றியை அடைவதற்காக ஆக்க முறையிலும் அழிவு முறையிலும்
2

Page 22
வாதிடல் (செற்பம்), 12) வெற்று வாதம் (விதண்டை), 13) தவறான காரணங்கள் (ஏதுப்போலி), 14) புரட்டு (சலம்), 15) பயனற்ற போலி எதிர்ப்பு (சாதி), 16 சேதமுண்டாக்கும் குறிகள் (தோல்வித் தானம்)
தத்துவம் என்ற முறையில் நியாய தரிசனம் அதிகம் பிரபல்ய மடையவில்லை என்றே கூறலாம். ஆனால், அது கையாழும் அளவையியல் முறையை (Logical Technique) எல்லாத் தத்துவ முறைகளும் எடுத்துப் பயன்படுத்தியுள்ளன. பிற்காலத்தில் நியாயம் அல்லது தர்க்கம் என்ற பெயரில் அளவையியல் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவே, தத்துவவியலைப் பயில ஆரம்பிப்போர் முதலில் அளவையியலில் பயிற்சி பெறுவது அவசியமாகும். எனவே எல்லாத் தத்துவமுறைகளுக்கும் நியாய தரிசனம் ஆதாரமாக உள்ளது என்று கருதலாம். 口
வாதம் - உண்மையை நிலைநாட்டும் பொருட்டு கருத்துக்களை சீர்தூக்கிக் காட்டுவது. அது மிகவும் சீரிய நிலையில் இருக்குமபோது சம்வாதம் எனப்படும்,
விதண்டை - பிறர் மனதிற் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு நெறி
தவறி அகங்காரத்தோடு பேசுவது.
செற்பம் - தனது அதிகாரத்தையோ வல்லமையையோ கொண்டு பிறரைப் பயமுறுத்துவதும், அவதூறு கூறுவதுமாம். இதில் தர்க்கத்திலும், மருத்துவத்திலும் வாதமே முக்கியம் பெறுகிறது.
22:

8. வைசேடிக தரிசனம்
x வேறுபெயர் - வைசேஷிக தரிசனம்
ஆ தோற்றுவித்தவர் -- கணாத முனிவர்
> நூல் - வைசேடிக் சூத்திரம்
S, காலம் - கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
ஏற்றுக் கொண்ட அளவைகள் - (நான்கு) காண்டல், கருதல்
- உபமானம், உரை
38 கடவுள் - உண்டு
* ஆன்மா - உண்டு (பல)
* முத்தி - உண்டு
* வாதம் - ஆரம்பவாதம்
- அசத்காரியவாதம்
ஆ. நித்திய திரவியங்கள் - ஏழு
வைசேடிகதரிசனம் நியாயதரிசனத்துக்கு காலத்தால் சற்று பிற்பட்டது. அணுக்கொள்கை பற்றி இது விசேஷமாகக் கூறுவதாலும் பொருள்களுக்கிடையிலுள்ள சாமானியம், விசேஷத்தை வேறுபடுத்திக் கூறுவதாலும் இதனை விசேஷம் - வைஷேஷிகம் என்று அழைப்பர்.
இவர்களின் கொள்கைப்படி இப்பிரபஞ்ச உற்பத்தியின் மூலப் பொருள்கள் மேலும் பிரிக்கப்பட முடியாத அணுக்களாகும். அவற்றைப் பரமானுக்கள் என்றுங் கூறுவர் பரமானுக்கள் பல. (Atomistic Pleuralism) இதனை அணுமுதற் பன்மைவாதம் என்றழைப்பர் (Atomistic Pleuralism) அவை பலவிதம், அழிவற்றவை நித்தியமானவை. இவ் வணு க் க ளே பிரபஞ்ச உற்பத்திக்கு அடிப்படையாக உள்ளன. அதுபோலவே, இவ்வுலகம் அழியும்போது அதிலுள்ள யாவும் ஆரம்ப அணுக்களாக மாறிவிடும்.
23

Page 23
வைசேடிகரின் அணுக்கொள்கை சமணரின் அணுக்கொள்கை
1. அணுக்கள் பலவிதம் 1 . அணுக்கள் யாவும் ஒரே
உ-ம் நில அணு, நீர்அணு விதம் தீஅணு, காற்றணு
d 2. ஒரேவிதமான க்கள் 2. பலவித அணுக்களின் ஒரேவத ஆணு به حسام சேர்க்கையால் உலகில் తొత பலவித பொருள் கள் பொருள்கள் உண்டா உண்டாகின்றன. கின்றன.
இவர்களின் கொள்கைப்படி உலகில் உள்ள பதார்த்தங்கள் அல்லது பொருள்கள் ஏழுவகைப்படும் அவையாவன பொருள் (திரவியம்) தன்மை (குணம்) செயல் (கரிமம்) பொதுமை(சாமானியம்) சிறப்பு (விசேடம்) உள்ளார்ந்த தன்மை (சமவாயம்) இன்மை (அபாவம்) இதில் இன்மை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகும். இதில் பொருளானது ஒன்பது வகைப்படும். அவையாவன மண், நீர், தீ, காற்று, ஆகாயம், உயிர், மனம், காலம், திக்கு இவற்றை நவதிரவியங்கள் என்றும், நித்திய திரவியங்கள் என்றும் அழைப்பர். பிரபஞ் உற்பத்திக்கு இவை அவசியமாகும்.
பொருள்களின் உற்பத்தியாகிய காரியத்துக்கு அணுக்கள் இணைதலாகிய காரணம் அவசியமாகும். இங்கு காரணத்தில் (அதாவது, அணுக்களில்) இல்லாத புதிய பொருள் காரியமாகத் தோன்றுகிறது. இங்ங்ணம் காரணத்தில் இல்லாத ஒரு புதிய பொருள் காரியத்தில் தோன்றுவதையே அசத்காரியவாதம் (காரிய இன்மைக் கோட்பாடு) என்பர்.
உதாரணமாக மண்ணும் பானையும். ஒரு பானையை எடுத் தோமானால் அதில் மண்ணின்றி பானையில்லை; பானையின்றி மண்ணில்லை. (சமவாயம்) மண் காரணம், பானை காரியம். இங்கு மண் துணிக்கைகள் இணைந்து பானையாகியுள்ளது. அவ்விதம் மண் துணிக்கைகள இணைவதால் புதுப்பொருளாகிய பானை" தோற்றியுள்ளது. இதில் பானையை உடைத்தால் மண் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். பானை என்பது இல்லாததாகிவிடும். எனவே, காரியத்தை அழித்தால் காரணநிலைக்கு அது திரும்பிவிடும். அதுபோலவே, காரியமாகிய பொருள்கள் அழியும் போது காரணமாகிய அணுநிலைக்கு அணிவதிரும்பி விடுகின்றன,
24

விைசேடிகம் சாங்கியதரிசனம்
l - e-9 ġif ġ gis mr iffi uu arr தம் 1. சத்காரியவாதம், காரணத் அதாவது காரணத்தில் தில் உள்ளதே காரியத்தில் இல்லாத ஒன்று காரியத் தோன்றுகிறது.
தில் தோன்றுகிறது.
2. : அழித்தால் 2. காரணத்திலேயே காரியமும் தி”ே 95 )5 (ت உள்ளதால் காரியம் அழிந் தாலும், கா ர னத் தி ல் கா ரி யம் ஏற்கெனவே உள்ளதால் பொருள் அழிய வேண்டிய அவசியம் இல்லை. அதாவது பொரு  ைள அழிக்க முடியாது.
நவதிரவியங்களில் மண், நீர், தீ காற்று ஆகிய நான்கும் பரமானுக்களாலானவை. ஆன்மாக்கள் பல என்பதே இவர்கள் கொள்கையுமாகும். கடவுள் ஒருவருண்டு. அணுக்களை இயக்கி இப்பிரபஞ்சத்தைப் படைத் து, காத்து. அழிப்பது அவரின் தொழில்களாம். எனவே பிரபஞ்ச உற்பத்திக்கு நிமித்த காரணம் கடவுளாவர் (மூலகாரணம் அல்ல)
நியாயதரிசனமும், வைசேஷிக தரிசனமும் அ டி ப்ப  ைட அம்சங்களில் ஒத்திருப்பதால் இவர்களின் தத்துவத்தை நியாய வைசேடிக தரிசனம் என்று ஒன்றாகவே நோக்குவர். படைப்பு அல்லது பிரபஞ்சத் தோற்றம் பற்றிய இவர்களது வாதம் ஆரம்பவாதம் எனப்படும். கீழைத்தேச அணுக்கொள்கையின் தந்தையாக கணாத முனிவரே அழைக்கப்படுகிறார். நியாயதரிசனத்தின் அளவையியலும் (Logic) வைசேடிகரின் அறிவளவையியலும் sEpistemology) as digital ஆராய்ச்சிக்கு அடிப்படை என்று கூறலாம. ل
25

Page 24
9. சாங்கிய தரிசனம்
வேறுபெயர் - சாங்கியம் ஆ தோற்றுவித்தவர் - கபிலமுனிவர் * காலம் - கி.மு 7 அல்லது 6 ஆம் நூற்றாண்டு *; ஏற்றுக்கொண்ட
அளவைகள் - (மூன்று) காண்டல், கருதல், உரை * கடவுள் - இல்லை * ஆன்மா - உண்டு (பல) * முத்தி - உண்டு * வாதம் - பரிணாமவாதம்
சத்காரிய வாதம் - காட்சிப்பொருள் கொள்கை - இருமைக் கொள்கை - பன்மைக்கொள்கை
ஆ. நித்தியபொருள்கள் - இரண்டு
இந்திய தத்துவங்களுள் இது மிகவும் பழமையானது. சங்கியா என்றால் எண்ணிக்கை. இவர்களது தத்துவப்படி படைப்பு '24 அல்லது 25 தத்துவங்களால் ஆக்கப்பட்டது என்பதாகும். இவர்களின் தத்துவப்படி நித்திய திரவியங்கள் இரண்டாகும். (1) ஆத்மா அல்லது புருடன் (2) மூலப்பிரகிருதி. கடவுள் என்று எவரும் கிடையாது. ஆன்மா அறிவு வடிவானது. பிரகிருதி அறிவற்ற சடப் பொருள் (இருமைக்கொள்கை) அருவமானது. உலகிலுள்ள சடப் பொருள்கள் யாவும் இதிலிருந்தே தோன்றி இதிலேயே மறைகின்றன.
26

உலகமாகிய காரியத்துக்கு காரணம் பிரகிருதியாகும். அக் காரணத்தில் (பிரகிருதியில்) உலகமாகிய காரியம் சூட்சுமமாக உள்ளது என்பதே இவர்கள் கொள்கை. இதனையே சத்காரிய வாதம் என்பர். (சைவசித்தாந்தம் முதலியனவும் சத்காரிய வாதத்தையே கூறுகின்றன.) உதாரணமாக மண்ணும் பானையும். இதில் பானை யாகிய காரியம் சூட்சுமமானநிலையில் (அருவமான நிலையில்) மண்ணில் உண்டு என்பதே சத்காரியவாதமாம்.
பிரகிருதியானது படைப்புக்கு முந்தைய நிலையில் மூலப்பிரகிருதி என்று அழைக்கப்படும். அதில் சத்துவம், இராசதம், தாமதம் ஆகிய முக்குணங்களும் சமநிலையில் இருக்கும். இங்கு கூறுப்பட்ட முக் குணங்களை உலக வழக்கில் பயன்படுத்தப்படும் முக்குணங்களாகக் கருதாது, பிரகிருதியின் மூன்று பகுதிகளாகக் கருதல் வேண்டும்.
படைப்பின் போது ஆத்மா அல்லது புருடனானது மூலப்பிர கிருதியுடன் தொடர்பு கொள்கிறது. அப்போது பிரகிருதியில் உள்ள முக்குணங்களின் சமநிலையில் குழப்பம் ஏற்படுகிறது. அதனை குணவிகேஷாயம் என்பர். அதன் விளைவாக மஹத் எனப்படும் புததி தோன்றுகிறது. அம்புத்தியிலும் முக்குணங்கள் தொடர்ந்து காணப் படும். அதாவது ஆத்மாவும் பிரகிருதியும் இரண்டறக் கலந்து புத்தியாகப் பரிணமிக்கின்றன. அப்புத்தியில் இருந்து அகங்காரம் தோன்றுகிறது. அவ்வகங்காரத்திலும் முக்குணங்களும் காணப்படும். அகங்காரமானது மூன்று வகையாகப் பிரியும். அதில் சத்துவகுணம் மேலோங்கும் போது (கரிைக அண்சுதல்) அதிலிருந்து மனமும் ஞானேந்திரியங்களும் (மெய், வாய், கண், மூக்கு, செவி). கன்மேந்திரியங்களும் (நா, கை, கால், குதம், குறி) ஆக மொத்தம் பதினொரு இந்திரியங்கள் உருவாகின்றன. இவற்றை ஏகாதச இந்திரி பங்கள் எனவழைப்பர். இராசத அகங்காரம் தாமச அகங்காரத்தைத் தூண்டுவதால் பஞ்ச தன்மாத்திரைகள் உருவாகின்றன. அவையாவன. சப்ததன்மாத்திரை, ஸ்பரிச தன்மாத்திரை, ரூபதன்மாத்திரை, இரசதன்மாத்திரை, கந்த தன்மாத்திரை, இவற்றிலிருந்து சூட்சுமமான பஞ்சபூதங்கள் தோன்றுகின்றன. எனவே இவற்றை பஞ்சபூதங்களின் மூலப்பொருள் என்றுங் கூறுவர். இவை தாமச அகங்காரத்தில் இருந்து உருவாவதால் அது பஞ்சபூதங்களுக்கு ஆதியாகிறது. எனவே, அதனைப் பூதாதி என்றும் காசியவாகாசம் என்றும் அழைப்பர்.
27

Page 25
85642 / 600 TED fb / 6gr jjbgbà
(பரிணாமவாதம்)
ஆத்மா 1)
புருடன்) -> 2) பிரகிருதி
குணவிக்ஷோபம்
3) புத்தி(மஹத்)
v
4) அகங்காரம்
சத்துவ அகங்காரம் இராசத அகங்காரம்- தாமச அகங்காரம்
5) மனம்
(6-10) ஞானேந்திரியங்கள்
{11-15) கன்மேந்திரியங்கள் 17ル
8)
19)
20)
16) சப்ததன்மாத்திரை
1->21) ஆகாயப் LJrupnog of ஸ்பரிச தன்மாத்திரை
Լ-> 22) aurrպւն
Lu TL ont Sør ரூபதன்மாத்திரை
L-> 2 3 ) g
t tud unngagi இரசதன்மாத்திரை
-> 24) நீர்ப் பரமாணு கந்ததன்மாத்திரை
->25)> மண்
Lup LDr. 609).
அதாவது, சப்த தன்மாத்திரையில் இருந்து = ஆகாயப்பரமாணுவும்
சப்த, ஸ்பரிச தன்மாத்திரைகளில்
eill
... se ,爵多
இரச , ,
கந்த உண்டாகின்றன என்பது விளக்கம்.
s
ps a
28
տ 6մո պւն
25 ܒܗ
சு நீர்ப்
a
s.s
= in Gör
鐵 彎

இத்தோற்றக் கிரமத்தில் ஆத்மா நீங்கலாக கணக்கிடின் இருபத்துநான்கு தத்துவங்களாகவும், ஆத்மாவையும் சேர்த்துக் கணக்கிடின் இருபத் ைகந்து தத் துவங்களாகவும் கொள்ளப்படும்,
சுருங்கச் சொல்வதாயின் பிரபஞ்சத் தோற்றத்துக்கு காரணம் மூலப்பிரகிருதியாகும். அதில் காரியமாகிய பிரபஞ்சம் அடங்கியுள்ளது. இப்பிரகிருதியில் இருந்தே பரிணாமம் ஆரம்பமாகிறது. அவ்விதம் பரிணாமம் ஏற்படுவதற்கு ஆத்மா உடந்தையாக இருக்கிறது. (நிமித்த காரணம்) ஆத்மாவானது மூலப்பிரகிருதியைப் தூண்டுவதால் பரிணாமம் ஏற்படுகிறதேயொழிய ஆத்மாவில் இருந்து ஒன்றும் பிறக்காது. எனவே, அதனை * அபிரசவதர்மிணி** என்றும் பிறப்பிற்குக் காரணமான மூலப்பிரகிருதியை பிரசவதர்மிணி என்றும் அழைப்பர். இங்ங்ணம் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாவதையே பரிணாமம் என்றும் இக்கோட்பாட்டைப் பரிணாமவாதம் என்றும் அழைப்பர்.
பிரகிருதியில் இருந்து ஆத்மா பிரிவதே முத்தி என்பது இவர்கள்
கொள்கை.
நியாய வைசேடிகம் SF iku o
1. நவதிரவியங்களுள் பஞ்ச 1. பஞ்சபூதங்களின் தோற்றம் பூதங்கள் அடங்கும். (பூதாதி) பற்றி விளக்கிக்
கூறுகி றது. அதாவது பரிணாமத் தின் ஒருநிலை யில் பஞ்ச பூ த க் க ள் தோன்றுகின்றன.
2. நித்திய திரவியங்கள் பல 2. நித்திய திரவியங்கள் 2
ஆ த் மா வு ம் மூலப்பிர கிருதியும்,
3. கடவுள் உண்டு. వి. கடவுள் இல்லை.
இவர்கள் ஆன்மாவின் தொடர்பின்றியே உள்ளபொருள் இவ்வுலகு என்று கருதுவதைக் காட்சிப்பொருள் கொள்கை என்றும் , ஒன்றுக் கொன்று முற்றிலும் வேறுபட்ட சடம், உயிர் என்னும் இரண்டு அடிப்படைப்பொருள்கள் உண்டு என்று கருதுவதை இருமைக் கொள்கை என்றும, ஆன்மாக்கள் பல என்று கருதுவதைப், பன்மைக் கொள்கை என்றுங் கூறுவர்.
29

Page 26
10. யோக தரிசனம்
வேறுபெயர் - யோகம், யோகதத்துவம்
sé
* தோற்றுவித்தவர் - பதஞ்சலிமுனிவர்
* காலம் - கிமு. 3 அல்லது 2 ஆம்
நூற்றாண்டு
* ஏற்றுக்கொண்ட அளவைகள் - காண்டல், கருதல், உரை
(மூன்று)
* கடவுள் - உண்டு
* ஆன்மா - (பல) உண்டு
* முத்தி - உண்டு
* வாதம் - சத்காரியவாதம்
: நித்திய பொருள்கள் - (இரண்டு) ஆத்மா,
மூலப்பிரகிருதி.
இங்கு யோகம் என்றால் பிரிதல் என்று கருத்து. அதாவது
ஆத்மாவானது மூலப்பிரகிருதியில் இருந்து பிரிந்து அறிவு நிலையை அடைதல் என்பது கருத்து, அதுவே முத்தி என்பது யோகதரிசனவாதிகளின் கரு த் தா கு ம். (உபநிடதங்களிலே ஜீவாத்மா பரமாத்மாவுடன் இ  ைண வ தே முத்தி என்று
கூறப்பட்டுள்ளது. அங்கு யோகம் என்ற சொல் இணைதலைக்
குறிக்கும்).
சாங்கியதரிசனவாதிகளின் தத்துவங்களையே இவர் களும் பெரிதும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதேவேளை சாங்கியரின் நாத்திகக் கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்ளாது, ஆத்மா, மூலப்பிரகிருதி இரண்டையும் சேர்த்து வைத்து சிருஷ்டியை ஏற்படுத்த கடவுள் அல்லது பரமாத்மா என்று ஒன்று உண்டு என்பதையும் இவர்கள் ஏற்றுக் கொண்டனர். அதன்விளைவாக
3/

சாங்கிய தரிசனத்தில் உள்ள முக்கிய குறைபாடும் நீங்கியது எனலாம். இவ்விரு த ரி ச ன ங் க  ைள யும் சேர்த்து சாங்கிய யோகதரிசனம் எனவழைப்பர்.
யோகதரிசனப்படி கடவுளானவர் பிரகிருதியின் படைப்புக்கு உதவியாக ஆத்மாவை அதனுடன் சேர்த்துவைக்கும் தொழிலைச் செய்கிறார். மேலும் ஆத்மா முத் தி ய  ைட வ தற்கு கடவுள்
துணைபுரிகிறார்.
யோகதரிசனத்தில் மனம் அல்லது சித்தம் என்பது பற்றியே அதிகம் பேசப்படுகிறது. இங்கு கூறப்படும் சித்தம் என்பது சாங்கியதரிசனம் பரிணாமத்தில் கூறும் மகத் அல்லது புத்தியை ஒத்தது. அதுவே பிரகிருதியின் முதற்படைப்பாகும். அதில்
புருடனின (ஆத்மா) பிரதிபலிப்பைக் காணலாம். எனவே, புருடனின் பிரதிபலிப்பைப் பெற்றுச் சித்தம் அறிவுடையதாகிப் பலவகையாகச் செயற்படுகிறது. சித்தம் தன்னளவில் எங்கும்
நிறை ந் தி ரு க் கும் போது அது காரண சித்தம் என்றும் (THE CAUSE MIND). Syg SAf 2-L-GøvrG (og TL-fly கொள்ளும்போது தன் தேவைக்கு ஏற்ப சிறிதாகவும் பெரிதாகவும் மாறும்போது அது காரிய - சித்தம் (THE EFFECT - MIND) என்றும் அழைக்கப்படும். சித்தத்தை தூய ஆரம்பநிலைக்கு மகத்நிலைக்கு) கொண்டு வ ரு த லும் ஆ ன் மா ன் வ பெருந்துன்பத்தினின்று விடுபடச் செய்தலுமே யோகத்தின் குறிக் கோ ளா கும். இ த ந் கு உறு து  ைண யா க வே அட்டாங்கயோகமுறை கூறப்படுகிறது. இதனை யோகத்தின் எட்டுப்படிகள் என்றும் எட்டு உறுப்புகள் என்றுங் கூறலாம். அவையாவன: இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாம்.
இயமம் என்றால் விலக்கவேண்டியவையாம். அவை பிறர்க்கு துன்பம் விளையாமை, பொய்பேசாமை, களவு செய்யாமை,
மிதவாணிகம், பிறர் பொருளை அபகரிக்காமை என்பனவாம்.
5 u Lo ub எ ன் றா ல் கடைப்பிடிக்கவேண்டியவைகளைப் பற்றியது. அவை தூய்மை, மனநிறைவு, துறவு, கற்றல், இறையன்பு முதலியனவாம்.
ஆசனம் என்பது இரு க் கை நிலையாம். ம ன த்  ைத ஒருமுகப்படுத்துவதற்கு உதவுமுகமாக உடலை சரியான நிலையில் வைத்திருப்பதற்கான பயிற்சியாகும். இதற்குப் பலவிதமான ஆசனங்கள் கூறப்பட்டுள்ளன.
3

Page 27
பிராணாயாமம் என்பது மூச்சுப்பயிற்சியாகும். இது மூச்சை உள்ளெடுத்தல் (பூசகம்), உ ட லு ள் நிறு க் த ல் (கும்பகம்), வெளிவிடல் (இரேசகம்) எ ன் னு ம் மூ ன் று படி க ளி ல் மேற்கொள்ளப்படும். இதுவும் மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும் பயிற்சியாகும்.
பிரத்தியாகாரம் என்பது புலன்களைப் பொறிவழி போகாது கட்டுப்படுத்தலாகும்.
தாரணை என்பது மனத்தை ஒருநிலைப்படுத்தலாம்.
அங்கனம் ம ன த் தை ஒரு நி  ைலப் படுத் துவ த b கு ஒரு பொருளின் மீது சீராக மனத்தைச் செலுத்துதல் தியானம் எனப்படும்.
சமாதி என்பது மனம் சுய போ க த் தை இழ ந் து இ  ைற ய ரு O ற் றோ ய், ந் து நிற்கும் நி  ைல யா கும். *" போதாதீத நிலை" என்றும் இதனைக் கூறுவர்.
குறிப்பு: சைவசித்தாந்தம் கூறும் நாற்பாதங்களுள் ஒன்றான யோகம் (சகமார்க்கம்) சீவாத்மா பரமாத்மாவுடன் இணைதலைக் குறிக்கும். அதாவது பிராணவாயுவை அடக்கி, சுழுமுனையில் அதை நிறுத் தி மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம் . அநாகதம், விசுத்தி, ஆக்கினை என்னும் ஆறாதாரங்களை அறிந்து, மூலாதாரத்தில் உறையும் குண்டலியை மேலே எழுப்பி, ஆறாதார தெ ய் வங்க ளா ன விநாயகர் முதலியோரைத்தியானித்து அக்குண்டலினிசக்தியை மேலெழுப்பி பிரமரந்திரம் வரை சென்று அங்குள்ள ஆயிரம் இதழ் த ம  ைர  ைய மலரச் செய்து அம்மூலமண்டலத்தை மூலாக்கினியால் இளக்கி அவ்வழியாக ஒழுகும் அமுதத்தை (இதனயே சித்தர் யோகமுப்பு என்பர்) தேகமுழுவதும் நிரப்பி முழுச்சோதியைத் தரிசித்து நிற்றலாம்.
ஏற்கெனவே கூறியதுபோல மூலப்பிரகிருதியிலிருந்து விடுபட்டு, ஆத்மா தன்னறிவு பெறுதலே முத்தியாகும். கடவுள் அல்லது பரமாத்மாவுடன் அது சேர்வதில்லை என்பது இவர்கள கருத்து.
சாங்கியம் யோகம்
முத்திக்கு வழி ஞான முத்திக்கு வழி தியான LofTrfð, Stf . மார்க்கம் அதாவது, தானாக முயன்று ( கடவுளின் உதவி தேவை.) ஆத்மா தன்னையுணர்வதே
முத்தி. (கடவுள் உதவி தேவையில்லை)
32

யோக தரிசனம் உபநிடதம்
1. மூலப்பிரகிருதியில் 1. ஜீவாத்மா,
இருந்து விடுபட்டு, பரமாத்மாவுடன் ஆத்மா தன்னை இணைவதே முத்தி. உணர்வதே முத்தி.
2. ஆன்மாக்கள் பல. 2. எல்லாமே பிரம்மம்
அதில் விசேடமானது (பரமாத்மா). ஜீவாத்மா பரமாத்மா (கடவுள்) என்பது பிரம்மத்தின்
மாயத்தோற்றமேயாகும்.
குறிப்பு - முதன்முதலில் அட்டாங்க யோகத்தை மருத்துவத்தில் புகுத்திய பெருமை சித்தர்களையே சாரும்.
இதனையே சிவஞான சித்தியார் பின்வருமாறு எடுத்துக் கூறி புள்ளது.
* சகமார்க்கம் புலனொடுக்கித் தடுத்து வளி இரண்டும்
சலிப்பற்று முச்சதுர முதலாதாரங்கள் அகமார்க்கம் அறிந்து அவற்றின் அரும் பொருள்கள் உணர்ந்து அங்கு
அணைந்து போய் மேலேறி அலர்மதி மண்டலத்தின் முகமார்க்க அமுத உடல் முட்டத் தேக்கி
முழுச்சோதி நினைந்திருத்தல் முதலாக வினைகள் உகமார்க்க அட்டாங்க யோகமுற்றும்
உழத்தல் உழந்தவர் சிவன்றன் உருவத்தைப் பெறுவர்.
குறிப்பு - திருமூலர், அருணந்திசிவாசாரியார் முதலியோர் கூறும் யோகம் சிவயோகமாகும். பதஞ்சலி யோகம் பிரிதலைக் குறிக்கிறது. சிவயோகம் ஆன்மா சிவத்துடன் சேர்தலைக் குறிக்கிறது. குண்டலினி சக்தி பற்றி பின்னர் விரிவாக எடுத்துக் கூறப்படும்.
33

Page 28
s
3.
3.
源
Abe, NA ፵ፉ
s
al
Š0/e
11. மீமாம்சை
வேறு பெயர்
பிரிவு
தோற்றுவித்தவர்
g, T 6)tib ஏற்றுக் கொண்ட அளவைகள்
கடவுள் Sysiv udt முத்தி
வாதம்
நித்திய பொருள்கள்
(மீமாஞ்ஞை)
- பூர்வ மீமாம்சை,
கர்மமீமாம்சை, - பட்ட மீமாம்சம்,
பிரபாகர மீமாம்சம் - ஜைமினி முனிவர் - கி.மு. 4ஆம் நூற்றாண்டு - வேதவாக்கு (உரை),
காண்டல், கருதல்,
2. L-ILDT 607 Lb , அருத்தாபத்தி, அனுபலப்தி (ஆறு) இல்லை உண்டு (பல) உண்டு ஞானகர்ம சமுச்சிய வாதம வேதம்
வேதாந்தம்
வேதாந்த தத்துவம்
வேதத்தின் அந்தமாக உள்ள உபநிடதங்களைக்
குறிக்கும்.
உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய தத்துவம்.
வேதங்கள் மந்திரம், பிரமாணம், உபநிடதம் என்று மூன்று பகுதிகளையுடையன என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
34

இதில் பிரமாணங்கள் (வேதப்பிரமாணங்கள்) உபநிடதங்களிலும் பார்க்க காலத்தால் முற்பட்டவை. இப்பிரமாணங்களை அடிப்படை யாகக் கொண்டு தோன்றியவையே மீமாம்ச தத்துவமாகும். எனவே மீமாம்ச த த் துவ மான து வேதப் பிரமாணங்களுக்கும் உபநிடதங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியவையாகும். அது இரண்டு வகைப்படும் 1) பூர்வமீமாம்சை 2 உத்தரமீமாம்சை அதில் பூர்வ மீமாம்சை பிரமாணங்களை ஒட்டியும் (காலத்தால் முந்தியது) உத்தர மீமாம்சை உபநிடதங்களை ஒட்டியும் (காலத்தால் பிந்தியது) உருவாகின.
காலப்போக்கில் மீமாம்சம் என்றால் அது பூர்வ மீமாம்சத்தை மட்டுமே குறிப்பதாயிற்று. உத்தரமீமாம்சமானது வேதாந்தம் அல்லது வேதாந்த தத்துவம் என்று அழைக்கப்படலாயிற்று.
மீமாம்சம் என்றால் முறையாக ஆராய்ந்தறிதல் அல்லது விசாரித்து அறிதல் என்று பொருள். மீமாம்சத்தை விளக்கி குமாரில பட்டர் என்பவரும், அவர் மாணவரான பிரபாகரர் என்பவரும் நூல்கள் இயற்றியுள்ளனர். ஆனால், இருவரின் கருத்துக்களிலும் வேறுபாடு காணப்பட்டமையால் மீமாம்ச தித்துவமானது பட்ட மீமாம்சம் என்றும் பிரபாகர மீமாம்சம் என்றும் இரண்டாகப் பிரிந்துவிட்டது.
வேதம்
| மந்திரம் பிரமாணம் உபநிடதம்
l மீமாம்சம்
பூர்வமீமாம்சை உத்தரமீமாம்சை
(வேதாந்ததத்துவம்) மீமாம்சை தத்துவம்
பட்டமீமாம்சம் பிரபாகர மீமாம்சம்
பிரபஞ்ச உண்மையை அறிய இவர்கள் வேதத்தை ஆதாரமாகக் கொண்டனர். வேதம் தானே தோன்றியது. (அபெளர்ஷேயம்) அதையாரும் படைக்கவில்லை. எனவே, கடவுள் என்று ஒருவர் இல்லை. வேதம் ஒலிகளால் ஆனது அவ்வொலி நித்தியமானது எனவே வேதமும் அழிவற்றது.
35

Page 29
இவ்வுலகம் உண்மை. அழிவற்றது. உயிரும் (ஆத்மா) அழிவற்றது. ஆன்மாக்கள் பல. உலக பந்தங்களில் சிக்குண்டிருக்கும் வரை ஆத்மாவுக்கு விடுதலை இல்லை. அவற்றிலிருந்து விடுபடுவதே முத்தி. முத்தியைப் பெற வேண்டுமானால் சந்நியாவந்தனம், யாகம் செய்தல் போன்ற கிரியைகளை (கர்மா) வேதவிதிப்படி செய்தல் வேண்டும் தியானத்தால் ஆத்மஞானம் பெற்று உலக பந்தங்களிலிருந்து விடுதலை பெற முடியும். இவர்கள் கர்மத்தையும் ஞானத்தையும வலியுறுத்திய தால் மீமாம்சததுக்கு ஞான கர்ம சமுச்சிய வாதம் என்றும், வேத கர்மங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் கர்ம மீமாம்சம் என்றும் பெயர் ஏற்பட்டது.
மீமாம்சகரும் நியாய வைசேடிகரைப்போல் அணுக்கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களே. ஆனால், அணுக்கள் கண்ணுக்குப் புலப்படும் என்பது இவர்கள் கருத்தாகும்.
நியாய வைசேடிகம் LBLDFTD & E.
| 1. பொருளும் அதன் 1. பொருளும் அதன்
குணமும் வேறு. அவற் குணமும் ஒன்றுமல்ல; றைத் தொடர்புபடுத்து தனித்தனியுமல்ல பேதா வது சமவாயம். பேதம் தாதாத்மியம். )
2. அணுக்கள் கண்ணுக்குப் 2. அணுக்கள் கண்ணுக்குப்
lavljul-T. புலப்படும்.
3. Say Götupsr LGv. 3. 52,6ä7 Lost Lua).
4. கடவுள் உண்டு, 4. கடவுள் இல்லை.
go630 D மீமாம்சை
1. வேதம் பொய் | 1. வேதமே மூலப்பொருள் ஆதி அந்தம் இல்லாதது
2. கடவுள் இல்லை 2. கடவுள் இல்லை
3. அணுக்கள் சூட்சுமமானவை 3 அணுக்கள் ஸ்தூலமானவை
கண்ணுக்குத் தெரியும்,
36

பட்ட மீமாம்சத்துக்கும் பிரபாகர மீமாம்சத்துக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள்.
uti- Buoaibarib gUusy Šuom ibafio
1, 6 அளவைகளை ஏற்றுக் 1. அனுபலப்தியை ஏற்பதில்லை
கொண்டுள்ளது. அவை காண்டல், கருதல், உரை உபமானம், அருத்தாபத்தி
அனுபலப்தி
2. உயிர்மாற்றமடையக் 2. மாற்றமடையாது
கூடியது. (சார்ந்ததன் வண்ணமாகிவிடும்.)
3. உயிர்முத்தி நிலையில் 3. முத்திநிலையில் கல்போல
ஆனந்த நிலையை எவ்வுணர்வும் தீண்டாத அடைகிறது. நிலையில் இருக்கும்.
கி. கடவுள் உண்டு 4. -
37

Page 30
12. வேதாந்த தத்துவம்
ஆ. வேறு பெயர் - வேதாந்தம், பிரம்மசூத்திரம்
S பிரிவு - சங்கர வேதாந்தம்,
(அத்வைதம்)
விசிஷ்டாத்தைவம், துவைதம்
மத்வர் அத்வைதம்
Z தோற்றுவித்தவர் - பாதராயணர்
காலம் - கி. பி. 5ஆம் நூற்றாண்டு
ஏற்றுக்கொண்ட அளவைகள் - (ஆறு) காண்டல், கருதல்,
உரை, உபமானம், அருத்தாபத்தி, அனுபலப்தி
- பிரம்மம்
素
奖
* கடவுள்
* ஆன்மா - ஒன்று (ஏகான்மவாதம்) * முத்தி - உண்டு
* வாதம் - விவர்த்தவாதம் ஆ நித்தியபொருள் - பிரம்மம் (ஒன்று)
வேதத்தின் அந்தமாக உள்ளதால் உபநிடதங்களுக்கு வேதாந்தம் என்று பெயர். அவ்வுபநிடதங்களில் காணப்படும் முரண்பாடுகளைக் களைவதற்கென்று தோன்றியதே வேதாந்த தத்துவமாகும். வேதாந்த சூத்திரத்தை (பிரம்ம சூத்திரம்) ஆக்கியவர் பாதராயணர் ஆவர். உபநிடதங்களிலுள்ள முரண்பாடுகளை நீக்கவென்று தோன்றிய இப்பிரம்ம சூத்திரம் விளங்குதற்குக் கடினமாகவும் பல முரண்பாடு களைக் கொண்டும் விளங்கியதால் இது பிற்காலத்தில் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், மத்வர் அத்வைதம் என்றும் பல பிரிவுகளாகப் பிரிந்தது.
38

வேதாந்தம் என்றாலே விளங்குதற்குக் கஷ்டமானது; புரியாதது என்ற கருத்து பண்டிதர்களிடையே கூடநிலவுகிறது.
1. சங்கர அத்வைதம்
洛 வேறுபெயர் சங்கரவேதம், வேதாந்தம் தோற்றுவித்தவர் - சங்கரர் ና  ̇ ፡ காலம் - கி. பி. 8ஆம் நூற்றாண்டு
爵
ஏற்றுக்கொண்ட அளவைகள் - (ஆறு)-காண்டல், கருதல்
உரை, உபமானம்,
அருத்தாபத்தி, அனுபலப்தி
3.
杀 கடவுள் - உண்டு (பிரம்மம்)
ஆன்மா - ஒன்று (ஏகான்மவாதம்) : முத்தி - உண்டு
洛 நித்திய திரவியம் - ஒன்று (பிரம்மம்) ஆ வாதம் - விவர்த்க வாதம்
பிரம்ம குத்திரத்தை அடிப்படையாகக்கொண்டு அத்வைத தத்துவத்தை விரிவுபடுத்தியவர் சங்கரராவர். அத்  ைவ தம் அ+துவைதம்=துவைதம் என்றால் இரண்டு. அ+துவைதம் என்றால் இரண்டல்ல அதாவது ஒன்று; பிரம்மமே அது. இவரின் கருத்துப்படி உலகம் என்பது பொய். (மாயத்தோற்றம்) பிரபஞ்சத்துக்கு மூலப்பொருள் பிரம்மம் ஒன்றே. அதுவே, இவ்வுலகில் வெவ்வேறு வடிவங்களில் காட்சி தருகிறது. பிரமமமே உலகமாக, உயிராக தோற்றுகிறதே தவிர அது எவ்வித மாற்றமும் அடைவதில்லை. இங்ங்ணம் மாறாத ஒரு பொருள், வேறொன்றாக மாறிவிட்டதுபோல் தோன்றுவதற்கு விவர்த்தவாதம் என்று பெயர்.
பிரம்மமும் (ஆத்மாவும்) ஒன்றே. " தத்துவ மஸி * அது நீயாயிருக்கிறாய்” அதாவது பிரம்மம் வேறு ஆன்மா வேறல்ல. பிரம்மம் தான் பல உயிர்களாகத் தோன்றுகிறது. அதனை விளக்கவே பிரம்மத்தை பரமாத்மா என்றும் உயிரை ஜீவாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஒரே ஒரு ஆன்மா (பிரம்மம்) மட்டுமேயுண்டு. எனவே, அத்வைதிகளை ஏகான்ம வாதிகள் என்று கூறுவர். பல பாத்திரங்களில் நீர் நிரப்பி அவற்றில் சூரியனைப் பார்த்தால் பல சூரியன் தெரியும். ஆனால், உண்மையில் நிஜசூரியன் ஒன்றே, அதுபோலவே, பிரம்மமும் ஒன்றே.
39

Page 31
பிரம்மம் ஆனது உலகமாகவும், உயிராகவும் தோற்றமளிப் பதற்குக் காரணம் LDfr6ðunur Gtb. பிரம்மம் மாயையோடு சேராத நிலையில் அதனை நிர்குணபிரம்மம் என்றும் (குணங்களைக் கடந்தநிலை) மாயையோடு சேர்ந்த நிலையில் அதனை சகுேைப் பிரம்மம் (குணங்களோடு கூடிய நிலை) என்றும் அழைக்கப்படும். மாயையால் பிரம்மம் இயங்கத் தொடங்கியதும் அது கடவுள் என்று அழைக்கப்படுகிறது. கடவுளால் படைப்புத்தொழில் நடைபெறுகிறது. இங்ஙனம் மாயாதத்துவம பற்றி இவர்கள் கூறுவதால் இவர்களை மாயாவாதிகள் என்றும் கூறுவர்.
பிரமத்திலிருந்து தோன்றிய உயிர் தனது மாசைத்துடைத்து
மீண்டும் பிரமத்துடன் ஐக்கியமாவதே முத்தி எனப்படும். அதற்குக் ஞானமார்க்கமே சிறந்தவழியாம்.
2. 66Ljš6965 fò
வேறுபெயர் - இராமானுஜர் வேதாந்தம் * தோற்றுவித்தவர் - இராமானுஜர்
* காலம் - கி.பி. 11ஆம் நூற்றாண்டு * ஏற்றுக்கொண்ட அளவைகள் - கண்டல், கருதல், உரை
(மூன்று)
* கடவுள் - உண்டு
* ஆன்மா - உண்டு (பல)
* முத்தி - உண்டு ஆ. நித்திய பொருள் - (மூன்று) பிரம்மம்,(விஷ்ணு)
உயிர், பிரகிருதி
* வாதம் - பரிணாமவாதம்
விசிஷடம் என்றால் விசேடம் என்று பொருள். அதாவது விசிஷ்ட அத்வைதம் என்றால் விசேஷ அத்வைதம் என்று பொருள்.
பிரம்மசூத்திரத்துக்கு இராமானுஜர் எழுதிய பூரிபாஷ்யமே. விசிஷ்டாத்வைதமாகும். இது சங்கர வேதாந்தத்திலிருந்து பல விடயங்களில் வேறுபடுகிறது.
40

விசிஷ்டாத்வைதம்
சங்கா அத்வைதம்
1. பிரம்மம் ம ட் டு மே 1 1. பிரம்மம், உலகம், உயிர்,
26 of 60). D மூன்றும் உண்மை 2. ஆன்மா ஒன்றே (பிரம் 1 2. ஆன்மா பல
மம்) (ஏகான்மவாதம்)
3. உலகம் பொய் 3. உலகம் உண்மை
4. பிரம்மம் தனிப்பொருள் 4. உயிர், உலகு பிரம்மத்
(விவர்த்தவாதம்)
தின் அங்கம்
விசிஷ்டாத்வைதப்படி பிரம்மமும் உண்மை. உலகமும் உண்மை, பிரமத்திலிருந்தே உலகம் தோன்றுகிறது. பிரம்மம் காரணம் உலகம் காரியம் என்னும் பரிணாம வாதத்தை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.
தத்துவமஸி என்பதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கமும்
வித்தியாசமானது.
தத் - அது
துவம் - நீ (யாக) என்பது சங்கரவேதாந்தம் அஸி - இருக்கின்றாய்
தத் - நீ
துவம் - அந்தர்யாமியாக நின்று இயங்கும் இறைவன்
என்பது விசிஷ்டாத்வைதம்
பிரம்மமே இறைவன் (விஷ்ணு) பிரம்மம் ஒன்றே. உயிர்கள் பல, உயிர் பிறவித்துன்பத்தை நீக்கி நாராயணன் பாதம் சேர்வதே முத்தி அதற்கு கர்மம், ஞானம், பக்தி என்பன அவசியம்
4.

Page 32
3. மத்வர் துவைதம்
* வேறு பெயர் - மத்வர் வேதாந்தம்
தோற்றுவித்தவர் மத்வர்
* காலம் - கி. பி. 1 199
ஆ8 ஏற்றுக் கொண்ட அளவைகள் - காண்டல், கருதல்
ge 6)
* ச டவுள் - உண்டு
35 உயிர் - உண்டு (பல)
* முத்தி - D-667 GB)
ஆ. நித்திய பொருள் - இ  ைற வன், உயிர்,
பிரகிருதி
இறைன், உயிர், உலகு மூன்றும் உண்மை என்பது இவர் வாதம், பிரம்மமே இறைவன்; விஷ்ணு. உயிர்கள் பல. பிரகிருதியே ஜட உலகுக்கு மூலப்பொருள். சாங்கிய தரிசனப்படியே பரிணாமம் ஏற்படும். ஆனால், அதற்கு இறைவன் நிமித்தகாரணமாய் இருப்பான். முத்தி நிலையில் இறைவனும், உயிரும் ஒன்றாகக் கலப்பதில்லை. பிறவிப்பிணியில் இருந்து விடுபட்டு உயிர்கள் விஷ்ணு உலகை அடைவதே முத்தியாகும். அதற்கு வைராக்கியம் (எதையும்எண்ண மற்றிருப்பது) அவசியமாகும்.
சங்கர வேதாந்தம் மத்வர் வேதாந்தம்
1. பிரம்மம் ஒன்றே மூலப் 1. இறை, உயிர் பிரகிருதி
பொருள் என்று மூலப்பொருள் மூன்று
2. பிரம்மமே ஆன்மா 2. பிரம்மம் வேறு, ஆன்மா
வேறு
3. பிரம்மத்திலிருது 3. பிரம்மமே இறைவன்
உண்டானதே இறைவன் (விஷ்ணு) 4. உயிர், உலகு பிரம்மத்தின் 4, உயிர், உலகு இறைவன்
மாயத்தோற்றமே. மூன்றும் உண்மை
ஒடுங்குவதே முத்தி அடைவதே முத்தி.
உயிர் இறைவனுடன் ஒன்றாகக் கலப்பதில்லை
42

13. சைவ சித்தாந்தம்
ஆ வேறு பெயர் - சித்தாந்தம், சித்தாந்த சைவம்,
வேதாந்தத் தெளிவு
3 தொகுக்கப்பட்ட காலம் - 13ஆம் நூற்றாண்டு
* தோற்றுவித்தவர் - Lu Gudrio
ஏற்றுக் கொண்ட அளவைகள் - காண்டல், கருதல், உரை
(ypačrg) )
* கடவுள் ட உண்டு (சிவபெருமான்)
5 -2gså udt - உண்டு (பல)
* முத்தி - உண்டு
நித்திய பொருள்கள் - (மூன்று) பதி, பசு, பாசம்,
* வாதம் - சற்காரிய வாதம்
பன்மை வாதம்
சைவ சித்தாந்தக் கோட் பா டு கள் தமிழர்களுக்கேயுரிய சிறப்புடையவை. இந்துசமயம் என்ற பெயர் தோன்றுவதற்கு முன்பே சைவசமயம் என்ற பெயர் தமிழர் வழக்கில் இருந்து வந்துள்ளது. சைவசித்தாந்தமானது வடமொழி வேத, ஆகமங்களைத் தழுவி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது என்று கூறுவாருமுளர். ஆனால், தென்னாட்டு அறிஞர்கள் இதனை மறுத்து, வேதம், ஆகமம் இரண்டும் ஆரியர் வருகைக்கு முன்னர் தமிழிலேயே இருந்தன என்றும், காலசக்கரச் சுழற்சியில் தெற்குத் தாழ்ந்து வடக்கு மேலோங்கியபோது தமிழரின் இவ்வரிய சொத்துக்களும் ஆரியரால் எடுத்துச் செல்லப்பட்டு அவர்தம் வடமொழியில் வளம் பெற்றன என்றும் கூறுவர்.
43

Page 33
வேதம், ஆகமம் இரண்டினுள் வேதம் பொதுநூல் என்றும், ஆகமம் சிறப்புநூல் என்றும் வழங்கப்பெறும். சைவசித்தாத்தத்தில் வேதத்திலும் பார்க்க ஆ க ம த் துக் கே மு க் கி யத் துவ ம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவேதான், ஆஉபாசம், ó=Lf<开。 ம=பதி அதாவது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை விளக்குவதே ஆகமம் என்றுங் கூறுவர். ஏனைய இந்திய தத்துவங்கள் வேதத்துக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சைவம் என்றால் சிவம். சித்தாந்தம் என்றால் சித்திக்கப்பெறுவது என்று பொருள். அதாவது சிவத்தை அடைந்து சித்தி (முத்தி) பெற வழிகாட்டுவதே சைவசித்தாந்தமாகும். சைவசித்தாந்தத்தில் சமயமும் தத்துவமும் இணைத்துக் கூறப்படுவது ஒரு சிறப்பம்சமாகும். சைவசித்தாந்த தத்துவமும் மிகப்பழமையானதே. பழந்தமிழ் இலக்கிய நூல்களான தொல்காப்பியம், புறநாநூறு சித்தர் பாடல்கள், தேவார திருமுறைகள் முதலியவற்றிலும் சைவி சித்தாந்தக் கருத்துகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் அவை முறைப்படி தொகுக்கப்பட்ட காலம் கி. பி. பதின்மூன்றாம் நூற்றாண்டாகும். (சித்தர் பா ட ல் க ள் , சித்த மருத்துவம் என்பனவும் ஏறத்தாழ இக்காலகட்டத்தில்தான் தொகுக்கப்பட்டன.) எனவேதான் இந்திய தத்துவங்களில் அது காலத்தால் பிந்தியது என்று ஒரு சாராரால் கூறப்படுகிறது.
சைவசித்தாந்தத்துக்கு அடிப்படை வேத, சிவாகமங்கள், பன்னிரு திருமுறைகள் (திருமந்திரம் உட்பட), சிவஞானபோதம் முதலாய பதினான்கு சைவசித்தாந்த நூல்களுமாம். இவற்றுள் திருமுறைகளைத் தோத்திரநூல்கள் என்றும் சைவசித்தாந்த நூல்களைச் சாத்திர நூல்கள் (மெய்கண்ட சாத்திரங்கள்) என்றும் அழைப்பர். சைவ சித்தாந்த சாத்திரங்களுள் சிவஞானபோதம், சிவஞானசித்தியார், திருவருட்பயன், சிவப்பிரகாசம் ஆகிய நூல்கள் முக்கியமானவையாகும்.
சைவசித்தாந்தத்தில் இறை, உயிர், தளை என்னும் முப்பொருள்கள் பற்றி விரிவாகப் பேசப்படுகிறது. இவை முறையே பதி, பசு, பாசம் என்றும் அழைக்கப்படும். இவை மூன்றும் நித்திய
திரவியங்களாகும்.
44

SGepair
வேறுபெயர் - பதி, தலைவன். கடவுள், பரமாத்மா.
சிவபெருமானே முழுமுதற்கடவுள். அச் சிவன் எவ்வித குணமும், தொழிலும், உருவுமின்றி இயல்பாய் நிற்கும் நிலையை நிர்க்குனர் என்பர். இதனை இறைவனின் சொரூப இலட்சணம் என்றும் பதியின் உண்மைநிலை என்றுங் கூறுவர். இந் நிலையில் கடவுள் எமது எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் அப்பாற்பட்டு நிற்பதால் அவரை எம்மால் அறிதல் இயலாதாம். அவ் இறைவன் ஆன்மாக்கள் மீது அருள்கொண்டு குணங்களுடையவராய் நிற்கும் நிலையை சகுனர் என்பர். இதனை இறைவனின் தடத்த இலக்கணம் என்றும் பதியின் பொது இயல்பு என்றுங்கூறுவர். இந் நிலையில் இறைவன் எண் கு ன ங் க  ைள யு  ைட ய வ ரா ய் ப் படைத்தல் முதலிய ஐந்தொழில்களில் ஈடுபடுகிறார். அங்ங்ணம் ஐந்தொழில்களில் ஈடுபடுவதற்கு அவருக்கு இச்சாசக்தி (இச்சை = விருப்பு), கிரியாசக்தி (கிரியை = செயல்) ஞானசக்தி (ஞானம் = அறிவு) ஆகிய மூவகைச் சக்திகள் அவருக்குத்துணை நிற்கின்றன. இவற்றை முறையே விருப்பாற்றல், செயலாற்றல், அறிவாற்றல் என்றுங் கூறலாம். இச் சக்திகளிலிருந்து சிவத்தைப் பிரிக்கமுடியாது.
சிவனின் எ ன் கு ண ங் க ளா வன தன் வ ய த் த ரா த ல், தூயஉடம்பினராதல், இயற்கையுணர்வினராதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல், பேரருளுடமை, வரம்பிலின்பமுடமை, முடிவில் ஆற்றலுடமை, என்பனவாகும். இறைவன் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூவகைத் திருமேனிகளையுடையவர். அருவத்திருமேனிக்கு உதார ண ம் சிதம்பரத்திலுள்ளது போன்று ஆகாயவடிவம். அருவுருவத்திருமேனி இலிங்கம், சோதிவடிவமாகும். உருவத்திருமேனிக்கு உதாரணம் கல்யாண சுந்தரேஸ்வரர், சோமாஸ்கந்தர் போன்ற வடிவங்களாம்.
சாங்கியர்களைப் போ ல வே  ைச வ சித் தா ந் தி களும் சத் கா ரிய வா த த் தை பே ஏற்றுக்கொண்டுள்ளனர். அதாவது, * உள்ளது போகாது; இல்லாதது வராது " என்பதாம். (சத்காரிய வாதத்தையே சித்த மருத்துவமும் ஏற்றுக்கொண்டுள்ளது.) அதன்படி இப்பிரபஞ்ச உற்பத்திக்கு முதற்காரணம் மாயை. நிமித்த காரணம் இறைவன். துணைக்காரணம் பராசக்தியாகும். இதைப் பின்வரும் உதாரணமூலம் விளங்கிக் கொள்ளலாம். குயவன் திரிகை முதலிய கருவிகளின் உதவியுடன் மண்பானை @ಕ್ಲಿಕೆ
எடுப்போமேயானால் இங்கு பானைக்கு முதற்கர
45

Page 34
துணைக்காரணம் திரிகை முதலிய கருவிகள், நிமித்த காரணம் குயவன் ஆவான். அவ்விதமே இங்கு பிரபஞ்ச உற்பத்திக்கு இறைவன் நிமித்த காரணமாகிறான்.
ஏன் இறைவன் படைப்புக்கு மு த ந் கா ர ண மாக க் கருதப்படுவதில்லை என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கு சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம் பின்வருமாறு: இறைவன் சித்துப் (அறிவுப்) பொருள். உலகம் அசித்துப் (சடப்) பொருள். எனவே, சடப்பொருளாகிய உலகுக்கு வித்தாக சடப்பொருளாகிய மாயையே இருக்க முடியும். சடத்திலிருந்துதான் சடம் தோன்றுமேயொழிய சித்திலிருந்து சடம் தோன்றாது. எனவேதான் படை ப் புக் கு இறைவன் முதற்காரணமாகவன்றி நிமித்த கார ண ன T க க், கொள்ளப்படுகிறான்.
எனவே, பிரபஞ்சமாகிய காரியத்துக்குக் காரணம் மாயையாகும். அம்மாயையில் பிரபஞ்சமாகிய காரியம் சூட்சுமமாக இடம் பெற்றிருக்கும். உலகம் ஏதாவது ஒன்றிலிருந்து படைக்கப்படல் வேண்டும். பின்னர் அது அழியும்போது அணுவாகி, பரமாணுவாகி, நுண்பொருளாகி தோன்றியதிலேயே (மாய) ஒடுங்க வேண்டும். அங்ங்ணம் பிரபஞ்சம் தோன்றி மாய்வதற்கு மூலகாரணமாயுள்ளது எதுவோ அதுவே மாயையாகும். மாயையும் இறைவனைப் போலவே ஒரு நித்திய பொருளாகும். சித்துப் பொரு ளா ன இறைவனிலிருந்து அசித்துப் பொருளான மாயை தோன்ற முடியாது என்பதாலேயே சைவ சித்தாந்திகள் மாயையையும் ஒரு நித்திய பொருளாகக் கொண்டனர்.
அடுத்து இறைவன் இவ்வுலகை ஏன் படைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அதற்கு விடை ஆன்மாக்கள் பிறப்பதற்கும், இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்கும் அவற்றின் கன்மமே (வினையே) காரணமாகும். அறிவில்லாத கன்மம் செய்தோனை (ஆன்மாவை)த் தானாகவே தேடிச்சென்று சேர வல்லதல்ல. அது போலவே, தான் முற்பிறப்பில் செய்த கன்மங்களைத் தேடியறிந்து அவற்றின் பலன்களை அனுபவிக்கும் ஆற்றல் ஆ ன் மா வுக் கு கிடையாது. எனவே இவ்விரண்டையும் சேர்த்து பிறவியை ஏற்படுத்த இறைவன் அவசியமாகும் என்பதே சைவசித்தாந்திகள் கருத்தாகும். இறைவன் இ வ் வுல  ைக ப் படைக்கிறானேயன்றி உயிர்களைப் படைப்பதில்ல்ை, இறைவன், மாயை என்பவற்றைப் போலவே உயிர் களும் நித்திய பொருள்களாகும். எனவே, உயிர்களுக்கு அழிவில்லை. இவ்வுயிர்கள் அநாதிமுதல் "ஆணவ மலத்தால் கட்டுண்டு அல்லற்ப்டுகின்றன. அதிலிருந்து அவற்றை விடுவிப்பதற்காகவே இறைவன் இவ்வுலகைப் படைக்கிறான். இதுவே ப்டைப்பின் நோக்கமாகும். A
46

9
வேறு பெயர்: ஆன்1nா, பசு , ஆத்மா, புருடன், சீவன் சீவாத்மா.
இறைவனைப் போலவே உயிரும் ஒரு நித்திய பொருள் (அழிவற்றது) என்றும் உள்ளது; வடிவமற்றது; எங்கும் உள்ளது (விபுத்துவம், Giunt Luash); விகாரப்படாதது (நிர்விகாரம்); தனித்துவமானது; சிந்திக்கக் கூடியது (சேதனத்துவம்). ஆன்மாக்கள் பலவாகும் (அநேகம் - பன்மை வாதம்). ஆன்மாவானது ஆணவம் முதலிய மலங்களால் (பாசத்தால்) கட்டுண்டு கிடப்பதால் அதனைப் பசு என்றும் அழைப்பர். ஏற்கெனவே குறிப்பிடப்பட்டதுபோல் கடவுள் உயிரைப் படைப்பதில்லை. ஆனால், பாசத்தால் கட்டுண்டு கிடகுக்ம் உயிர் அதிலிருந்து விடுபட்டு முத் தி ய  ைட வ த ஹ் கு உதவியாக உடம்பையும் அதனுள் பொறி, புலன், கரணம் முதலிய கருவிகளையும் அமைத்து வழங்குகிறான். அவை உடல்தத்துவங்கள் எனப்படும். உள்நிலைக் கருவிகள் முப்பத்தாறுதத்துவங்கள், புறநிலைக்கருவிகள் அறுபது தத்துவங்கள் என்று உடல்தத்துவங்கள் "தொண்ணுரற்றாறாகும். அவற்றின் விபரம் பின்னர் எடுத்துக்
கூறப்படும், i
ஆன்மாவின் இயல்பை அதன் இயற்கை நிலையிலும் உடலோடு கூடிய நிலையிலும் - சிவஞான சித்தியார் தெளிவாக வரையறுத்துக் கூறியுள்ளது.
இயற்கை நிலையில் -
" "அசித்தரு வியாபகம் போல்
வியாபக மருவமின்றாய் வசித்திட வரும் வியாபி
யெனும் வழக்குடையனாகி நசித்திடா ஞானச் செய்தி
யநாதியே மறைந்து நிற்கும் பசுத்துவ முடையனாகிப்
பசுவென நிற்குமான்மா"
நித்தமாய், வியாபகமாய், அருவமாய், அறிவானது ஆணவ மலத்தால் அநாதியாகவே ம  ைற க் க ப் பட்ட தாய் அதனால்
பாசத்தால்) கட்டுண்ட பசுவாக நிற்பதே ஆன்மாவாகும். உடலெடுத்த நிலையில் ஆன்மாவின் வரைவிலக்கணம்:
47

Page 35
"உயிரெனப் படுவதிந்த
வுடலின் வேறுளதாயுற்றுச் செயிருறு மிச்சா ஞானச்
செய்திகளுடையதாகிப் பயில்வுறு மின்பதுன்பப்
பலங்களு நுகரும் பார்க்கிற் றுயிலொடு மஞ்சவத்தைப்
படுமுண்மை துரியாதீதம்"
உபிரானது உடலினின்றும் வேறுபட்டது. இச்சை (விருப்பு. செயல் (கிரியை), அறிவு (ஞானம்) உடையது. கர்மத்தைப் பொறுத்து இன்ப துன்பங்களை நுகர்வது. நனவு, கனவு, உறக்கம் பேரு ந க் கம்: உயிர் ப் ப - க்கம் எ ன் னும் ஐத் து அவத்தைகளையுடையது
ஆன்மாவைத் தி ரு மூல ர் அறிவு வடி வானது என்று திருமந்திரத்தில் கூறியுள்ளார்.
"அறிவு வடிவென்றறியாத என்னை
அறிவு வடிவென்றருள் செய்தான் நந்தி அறிவு வடிவென் றருளால் அறிந்தே அறிவு வடிவென் றறிந்திருந்தேனே"
மேலும் ஆன்மாவின் அளவுபற்றியும் திருமந்திரம் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளது.
"மேவிய சீவன் வடிவது சொல்விடில்
கோவின் மயிரொன்றை நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிர மாயினால் ஆவின் கூறு நூறாயிரத் தொன்றாமே"
அதாவது பசுவின் மயிர் ஒன்றினை எடுத்து நூறு பங்காக்கி அந்த நூறில் ஒரு பங்கினை எடுத்து ஆயிரம் கூறுசெய்தல் வேண்டும் - அதில் ஒரு கூறினை எடுத்து நூறாயிரமாகக் கூறிட்டால் எவ்வளவு ஏற்படுமோ அதுவே உயிரின் அளவாகும். அதாவது உயிர் அணுவின் அணுவாகும்.
ஆன்மாக்களுக்கு ஐந்து அவத்தைகளுண்டு. அவை நனவு சாக்கிரம்), கனவு (சோப்பனம்), உறக்கம் (சுழுத்தி), பேருறக்கம் துரியம்), உயிர்ப்படக்கம் (துரியாதீதம்) என்பனவாகும்.
AR

== = = = ==
字iGè山L、
ஆநீrடிமன்-ே
KJTTTTTS ST AS SAA AAAA A A SAA AAAA AAAASK S SJSA
கதே
பேடுறங்கடே!) མཚམས་དག་གི་ལག་ |||||||||||||||-------تاتاق آمریکایی تاب
--, -.--Fanfrt. டோனே
டகோதாரம்

Page 36

நனவு என்பது விழிப்பு நிலையாகும். இவ்வவத்தைக்குரிய ஸ்தானம் புருவ நடுவாகும் (ஆக்கினை). இந்நிலையில் அறிவுக்கும் செயலுக்குமான முப்பத்தைந்து தத்துவங்களும் தொழிற்படும்.
கனவு நிலைக்குரிய ஸ்தானம் கண்டமாகும் (விசுத்தி), இந்நிலையில் பொறி புலன்கள் செயற்படாது அடங்கியிருக்கும். அந்தக்கரணம் முதலியன தொழிற்படினும் புறப்பொருள் விடயம் ஆகையால் அகத்தே குக்கும தேகத்தோடு நின்று இருவினைப் பயன்களை அனுபவித்து நிற்கும் அவத்தை இதுவாகும்.
உறக்கநிலையில் அந்தக்கரணங்களும் அடங்கி, பிராணவாயுவும் மனத்தின் விருத்தியாகிய சித்தமும் செயற்பட்டு நிற்கும். இதன் ஸ்தானம் இருதயமாகும் (அனாகதம்).
பேருறக்கநிலையில் சித்தமும் அடங்கி பிராணவாயுவும் ஆன்மாவும் மட்டும் செயற்பட்டு நிற்கும். இதன் ஸ்தானம் உந்தி ஆகும் (மணிபூரகம்).
உயிர்ப்படக்கநிலையில் பிராணவாயுவும் செயலிழந்துபோ க ஆன்மா மட்டும் செயற்பட்டு நிற்கும். இவ்வவத்தைக்குரிய ஸ்தானம்
மூலாதாரமாகும்.
அவத்தை ظا-سا{نتی கருவி
1) நனவு ஆக்கினை முப்பத்தைந்து
2) கனவு விசுத்தி இருபத்தைந்து
3) உறக்கம் அனாகம் eup airly
4) பேருறக்கம் மணிபூரகம் இரண்டு
5) உயிர்ப்படக்கம் மூலாதாரம் ஒன்று
சைவ சித்தாந்தப்படி ஆன்மாக்கள் நித்திய பொருள்களாக இருந்தாலும் அவை சுதந்திரம் அற்றவை. அதாவது ஆன்மாக்கள் ஒரு போதும் தனித்து நிற்பதில்லை. அவை எதைச் சார்ந்து நிற்கின்றனவோ அதன் தன்மையைப் பெறுகின்றன. உதாரணமாக அவை பாசத்தைச் சார்ந்து நிற்கும்போது பாசத்தின் இயல்பைப் பெறுகின்றன (அசத்து). பதியைச் சார்ந்து நிற்கும்போது பதியின்
49

Page 37
இயல்பைப் பெறுகின்றன (சத்து). இங்ஙனம் ஆன்மா சார்ந்ததன் வண்ணமாக உள்ளதால் அதனைச் சதசத்து (சத்து + அசத்து) எனறுங்கூறுவா.
ஆன்மாக்கள் மலத்தோடு கொண்டுள்ள தொடர் புக ள் மூவகைப்படும். ஆன்மாக்களில் ஆணவமலத்கை மட்டும் உடையவர் விஞ்ஞானகலர் என்றும், ஆணவம், கன்மம் ஆகிய இருமலங்களை உடையவர் பிரளயாகலர் என்றும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்க  ைள யு மு  ைட ய வ ர் க ள் சகலர் என்றும் அழைக்கப்படுவர். மானிடப்பிறவி எடுத்த நாம் அனைவரும் சகலரேயாம். சகலர் இறைவன் உணர்த்தினாலன்றித் தம்மையும் உணரார்; இறைவனையும் உணரமாட்டார்.
இன்னொருவகையில் ஆன்மாவின் அவத்தைகள் மூவகைப்படும் , அவை கேவல அவத்தை(இருள்நிலை), சகல அவத்தை (மருள்நிலை ) சுத்த அவத்தை (அருள் நிலை) என்பனவாம். கேவல அவத்தையில் ஆன்மா ஆணவமலத்தோடு மட்டும் கூடி அதன் வண் ண மாக நிற்கும். இந்நிலையில் ஆன்மா விருப்பு (இச்சை), செயல் (கிரியை), அறிவு (ஞானம்) எதுவுமே இன்றி ஒடுங்கிக் கிடக்கும். இந்நிலையை இருள் நிலை என்றுங் கூறுவர். இங்ங்ணம் ஒடுங்கிக் கிடக்கும் ஆன்மாவானது சகல அவத்தையில் மாயையில் இருந்து தோன்றும் உலகையும் உடம்பையும் பெற்று இயங்கத் தொடங்கும் . இந்நிலையில் ஆன்மாவானது ஆணவம், கன்மம், மாயை ஆகிய முப மலங்களுடனும் சேர்ந்து நிற்கும். இந்நிலையில் விருப்பு, செயல், அறிவு ஆகிய மூன்றும் உண்டு. மானிடராகிய எ மது நிலை இதுவாகும்
சகல அவத்தையிலிருந்து கேவல அவத்தைக்கும், கேவல அவத்தையிலிருந்து சகலாவத்தைக்கும் ஆன்மாக்கள் மாறி, மாறிச் சென்று கொண்டிருக்கும். அதாவது சகலாவத்தையில் பிறந்து, பிறந்து, இறந்து இறந்து களைப்புற்ற ஆன்மா அக்களை தீர்த்தற் பொருட்டு கேவல . அவத்தையை அடைகிறது என்பதாம். சகலா வத்தையில் ஆன்மா தனு கரணங்களின் துணையினால் சிறிது அறிவைப் பெற்றாலும் அந்த அறிவு பூரண அறிவு ஆகாது. மாயையினால் மயங்கியிருக்கும். எனவே அறிவு மயக்கத்தைக் கொடுக்கும் சகலாவத்தையை மருள் நிலை என்றுங்கூறுவர். சுத்தாவத்தை - மேற்படி இரு நிலைகளும் நீங்கி ஆன்மா பூரண அறிவைப் பெறும் நிலை இதுவாகும். இதனை அருள்நிலை என்றுங் கூறுவர்.
ஆன்மாக்களின் இம் மூன்று அவத்தைகளுக்கும் இறைவனின் ஐந்தொழில்களுக்கும் நேரடித் தொடர்புண்டு, U60-556)
50

காத்தல், மறைத்தல் ஆகிய மூன்று தொழி ல் களும்
சகலா வத்தைக்குக் காரணமாகிறது. அழித் தற் றொழி ல் கேவலாவத்தைக்கும் அருளற்றொழில் சுத்தாவத்தைக்கும் காரணமாகிறது.
Ffit
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றும் மும்மலங்கள் எனப்படும். இவை உயிர்களை இறைவனை அடையவிடாமல் தடுத்து, கட்டி நிற்பதால் தளை என்றும் பாசம் என்றும் அழைக்கப்படும். ஆன்மாவுக்கு அழுக்காக விளங்குவதால் மலம் எனப்படும். இவற்றுள் ஆனவ மலமானது அநாதியாகவே
ஆன்மாவைப் பற்றிநிற்கும். எனவே அது சகஜ மலம் (சகச மலம்) ( சகஜம் - கூடவே பிறந்தது ) என்றுப் மூலமலம் என்றும் அழைக்கப்படும். கன்மம் மாயை இரண்டும் இடையிட்டு வருவதால் அவை ஆகந்துகமலங்கள் எனப்படும்.
கன்மம் - கன்மம் என்பது வினை, செயல், கர்மம் என்றும் வழங்கப்படும். ஒருவர் செய்யும் செயல்கள் யாவும் அவரின் கன்மமே யாம், கன்மமே பிறப்பிறப்புகளுக்குக் காரணமாக உளளது. ஒரு பிறப்பில் ஒருவர் செய்யும் செயல்களின் பலன்கள அனைத்தையும் அவர் அப்பிறப்பிலேயே அனுபவிக்கமுடியாமற் போகலாம். அவ்விதம் அனுபவிக்காமல் எஞ்சியவற்றை அனுபவிப்பதற்காகவே மேலும் பிறவி எடுக்க நேரிடுகிறது. அவ்விதம எடுக்கும்போது அவர் புதிதாகவும் வினைகள் பல புரிய நேரிடுகிறது. எனவே தான் கன்மம் காரணமாகப் பிறப்பும், பிறப்புக் காரணமாக கன்மமும் மாறிமாறி ஏற்படுகின்றன. வினைகள் மூன்று வகைப்படும் . அவையாவன சஞ்சிதம் (பழவினை). பிராரப்தம் (நிகழ்வினை), ஆகாமியம் (எதிர்வினை).
பல பிறவிகளிலும் செய்து இன்னும் அனுபவிக்கப்படாது சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் வினைத் தொகுதியே சல்நசிதம் எனப்படும். சஞ்கிதத்திலிருந்து இப்பிறவியில் அனுபவிப்பதற்கென்று எடுக்கப்படும். வினை பிராரப்தம் எனப்படும். பிராரப்தத்தை அனுபவிக்கும் போது புதிதாகச் செய்யும் வினை ஆகாமியம் எனப்படும் .
இவ்விடத்தில் வினைப் பயன்பற்றி இன்னொரு விடயத்தையும் சை வ சித் தா ந் த ம் தெ R வு பட எடுத்துக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவர் செய் த பாபத்தை அவர் செய்த புணணியத்தால் நீக்கிவிட முடியாது. இரண்டையும் அனுபவித்தே யாக வேண்டும். துன்பத்தை அதுமட்டுமன்றி அவரவர் செய்த
5

Page 38
வினைகளின் பயனை அவரவரே அனுபவித்தல் வேண்டும். மேலும் புண்ணியம் செய்வதால் மட்டும் முத்தி கிடைத்துவிடமாட்டாது. பாபம் செய்தவன் துன்பத்தை அனுபவிக்கப் பிறப்பதைப்போன்று, புண் ணியம் செய்தவன் இன்பத்தை அனுபவிக்கப் பிறக்கிறான். நல்வினை, தீவினைகளை சமமாகக் கருதும் இருவினையொப்பு நிலையே முத்திக்கு வழிகோலும்.
மாயை - இதுவும் ஒரு நித்திய திரவியமாகும். குக்குமமான கண்ணுக்குப்புலப்படாத அறிவற்ற சடப்பொருள். இறைவனுக்குச் சக்தி போன்றது. இதிலிருந்தே இச்சடவுலகு உற்பத்தியாகின்றது. (தனுகரண புவன போகங்கள் உற்பத்தியாகின்றன.)
"நித்தமாய் அருவாய் ஏகநிலையதாய் உலகத்திற்கோர்
வித்துவாய் அசித்தாயெங்கும் வியாபியாய் விமலனுக்கோர்
சத்தியாய் புவன போகந்தனு கரணமும் உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யுமன்றே**
(6). GR )
மாயையானது சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை (திரோதாயிமாயை) என மூவகைப்படும். இதில் சுத்தமாயை மட்டும் இ  ைற வ னோ டு நேரடியாகத் தொடர்கொள்ளும் , சுத்த மாயையானது விஞ்ஞானாகலருக்கும், பிரளயாகலருக்கும் த னு கர ண பு வன போ கங் க  ைள க் கொ டு க் கி றது. அசுத்தமாயையானது சகலருக்குத் தனுகரணபுவனபோகங்களைக் கொடுக்கிறது. பிரகிருதிமாயை ஆன்மாவை இவற்றில் மயங்கிக் கிடக்கச் செய்கிறது.
முத்தி - ஆன்மாவானது பாசத்திலிருந்து விடுபட்டு சிவத்தை அ டை வ தே முத் தி என ப் படும். இங்கு முத் தி க்கு வழிகாட்டுபவையாக சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நாற்பாதங்கள் கூறப்பட்டுள்ளன. இவற்ற்ைப் பின்பற்றுவோர் முறையே சாலோக (இறைவனுடைய உலகத்தை அடைதல்), சாமீப (இறை வணு க்கு அண்மை யில் இருத்தல்), சாரூப (இறைவனது ரூபத்தை அடைதல்), சாயுச்சிய (இறைவனோடு இரண்டறக் கலத்தல்) முத்திகளை அடைவர் என்று கூறப்படுகிறது. எனவே, அவரவர் தகுதி அல்லது, பக்கு வநிலை க் கே ற் ப மூத்திமார்க்கத்தை சைவ சித் தா ந் தம் எடுத்துக்கூறியுள்ளது. 67 6öT6)Fʼf Lf .
ஆன்மா பக்குவமடைதல் மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. அவை இருவினையொப்பு, மலபரிபாகம், சத் தி னிபா தம்
52

என்பனவாம். இருவினையொப்பு என்றால் நன்மை, தீமைகளை ஒன்றாக நோக்கும் நிலையாகும் இது மலங்கள் நீங்கப்போவதன் அறிகுறியாகும். அங்ங்ணம் மலங்கள் நீங்கும் நிலையை மலபரிபாகம் “என்பர். அதன் தொடர் ச் சி யா க இறைவனின் அருட்சக்தி
ஆன்மாவில் பதியும் இந்நிலையே சத்தினிபாதம் எனப்படும்.
பக்குவமடைந்த அல்லது ம ல ங் களி லி ரு ந் து விடுபட்ட ஆன்மாக்களுக்கும், கடவுளுக் கும் இடையிலுள்ள தொடர்பு "அத்துவிதம்' எனப்படும். இங்கு அத் து வி தம் என்றால் ஒன்றுமல்ல, இரண்டுமல்ல, ஆனால் ஒன்றில் இரண்டு என்பதாம். சகல அவத்தையில் ஆன்மாவானது பிறப்பு, இறப்புகளுக்குள்ளாகி பாசத்துடன் அத்துவிதமாக இருக்கும். முத்திநிலையில் அது இறைவனுடன் அத்துவிதமாக இருக்கும். இதனையே பிற்காலச் சித்தர்களில் ஒருவரான தாயுமானவர்,
"ஆணவத்தோடு அத்துவிதம் ஆனபடி மெஞ்ஞானத்
தாணுவினோடு அத்துவிதஞ் சாருநாள் எந்நாளோ"
என்று பாடியுள்ளார். அதாவது ஆணவத்தோடு அத்துவிதமாக உள்ள நான் கடவுளுடன் அத்துவிதமாவது எந்நாளோ? என்பதாம் •
சாங்கிய பரிணாமவாதம் சைவசித்தாந்த பரிணாமவாதம்
1. சிரு ஷ் டி க்கு கடவுள் 1. அவசியம்
அவசியம் இல்லை (நிமித்தகாரணம்)
2. சிருஷ்டிக்கு முதற்காரணம் 2. மாயை
பிரகிருதி
3. பி ர கி ரு தி யில் அவ்வித 3. மாயையில் 3 விதமுண்டு பேதம் இல்லை. சுத்தமாயை, சுத்தாசுத்த
மாயை, அசுத்தமாயை 4. சிருஷ்டியில் பிரகிருதிக்கு
முதலிடம் 4. 13 ஆவது இடம்
5. மொத்த தத்துவம் 24 5. மொத்த தத்துவம் 36
53.

Page 39
14. இந்திய தத்துவங்களும்
சித்த தத்துவங்களும்
இந்துசமயம் அல்லது சைவசமயமானது தற்காலத்தில் வேதாந்தம், சித்தாந்தம் ஆகிய இரு கோட்பாடுகளிடையே பெருமளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதில் வேதாந்த த த் துவ ங் க ைள ப் பின்பற்றுவோர் வேதாந்திகள் என்றும் சைவசித்தாந்த தத்துவங்களைப் பின்பற்றுவோர் சித்தாந்திகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இ வ. ற் று க் கி  ைட யி லு ஸ் ள வேறுபாடுகளை மாணவர்கள் விளங்கிக் கொள்வதும் அவசியமாகும்.
வேதாந்தம் என்றால் விளங்கிக் கொள்ளக் கஷ்டமானது அல்லது விளங்கிக்கொள்ளமுடியாதது. நடைமுறைக்கு சாத்தியப்படாதது என்று கருதுவோரும் உளர். எனவே தான் நடைமுறைக்கு ஒத்துவராத விளங்கக் கஷ்டமான விடயத்தை யாராவது கதைத்தால், "இவர் என்ன வரட்டு வேதாந்தம் பேசுகிறார்” என்ற ரீதியில் அதை அலட்சியம் செய்யமுயல்கிறோம். சைவசித்தாந்தமானது வேதாந்தமான உ ப நி ட த ங் களி ல் கூறுப்பட்டுள்ளவற்றையே
தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. எனவேதான் ‘'வேதாந்தத் தெளிவாஞ் சைவசித்தாந்தத்திறன்" என்று உமாபதி சிவாச்சாரியார் எடுத்துக் கூறியுள்ளார். சித்தர்களைப் பொறுத்தவரையில்
வேதாந்தம் சித்தாந்தம் இரண்டையும் &FLDLDIT 355 கருதி வந்துளளார்கள் என்பதை தாயுமானவ சுவாமிகளின் பின்வரும் பாடல் வரிகள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.
"" வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற
வித்தகச் சித்தர் கணமே ""
வேதம் பொதுநூலாகவும் ஆகமம் சிறப்பு நூ லா கவும் சைவர்களால் கருதப்படுவது போலவே வேதாந்தம் பொதுவாகவும் சைவசித்தாந்தம் சிறப்பாகவும் சித்தர்களால் பின்பற்றப்பட்டு
54

வந்திருப்பதை பல்வேறு சித்தர்களின் பாடல்கள் மூலம் அறியக் கூடியதாயுள்ளது.
அதுமட்டுமன்றி நியாய வைசேடிக தத்துவங்கள் சித்த மருத்துவம் கற்போருக்கு அடிப்படை அளவையியல் பற்றிய அறிவை ஏற்படுத்த அவசியமாகின்றன. சாங் கி ய ரி ன் பரிணாமவாதக் கொள்கையை சைவசித்தாந்தம் ஏற்றுக்கொண்டது போலவே சித்தர்களும்  ைச வ சித் தா ந் த ம் கூறும் தோற்றக் கிரமத்தை (அதில் கூறப்பட்டுள்ள முப்பத்தாறு த த் து வங்க  ைள யும் (அகக்கருவிகள், அதற்குப் புற க் கரு வி க ளா ன அறுபது தத்து வங்க  ைள யும் சேர்த் து) தொண்ணுர ற் றா று தத்துவங்களுடையதாக ஏற்றுக்கொண்டனர். மேலும், சாங்கியரின் சத்காரியவாதம் சித்தமருத்துவத்துக்கும் பொருத்தமுடையது. பதஞ்சலி மு னி வ ரின் யோகதத்துவத்தை மருத்துவத்துடன் இணைத்து நரை, திரை, பிணி மூப்பின்றி வாழவும் இறைவனுடன் இரண்டறக் கலந்து (அத்துவிதம்) பேரின்ப வாழ்வு பெற உதவும் சாதனமாகவும் சித்தர்கள் 6oo is uLu T Gior -- Gor riř. (பதஞ்சலி யோகதத்துவமானது ஆன்மா மூலப் பிர கி ரு தி யி ல் இருந்து பிரி வ ைத யே முக்கிய நோக்கமாகக் கொண்டது) எண்வகை யோகமுறைகளை (அட்டாங்க யோகம்) பின்பற்றி குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பி மதியமிர்தம் என்னும் யோக (ஞான) முப்புவையுண்டு ஆன்ம தரிசனம் பெற்று பேரின்ப வாழ்வுக்கு வழிகாட்டியவர்கள் சித்தர்களாவர். யோக மு  ைற க  ைள ச் சித்தர்பாடல்களிலும் திருமந்திரத்திலும் அதிகம் காணமுடிகிறது. இவைபற்றிய விபரங்கள் இனிவரும் அத்தியாயங்களில விரிவாக
எடுத்துரைக்கப்படும்.
55

Page 40
வேதாந்தம்
சைவசித்தாந்தம்
0.
1 .
பிரம்மம் மட்டுமே உண்மை . வேதத்துக்கே மிகமுக்கியம்
பிரமாண நூல்
பிரம்மத்துக்கே முக்கியத் துவம் ,
ஆன்மா ஒன்றே a.
உலகம் பொய் 3.
பிரம்மத்தின் சகுணநிலையே! 4. இறைவன் பிரம்மம் தனிப்பொருள் 5. (விவர்த்தவாதம்)
மாயை என்பது அறியாமை | 6, என்ற கருத்தில் பயன்படுத் தப்படுகிறது. ஒரு பிரம்மம் பல உயிர்களாகவும் உலகா கவும் தோன்றும் மயக்க நிலையே மாயை முத்திக்கு வழி ஞானமார்க் | 7, கமே.
மாயை உள்ளதா இல்லையா 8. என்று தெளிவாக விபரிக்க வில்லை ஏற்றுக்கொண்ட அளவைகள் 9. e$2.0
வேத, உபநிடதங்களே 10.
ll.
இறை, ! உயிர், தளை மூன்றும் உண்மை. சிவாகமத்துக்கே மிகமுக்கி யத்துவம் கொடுக்கப்பட் டுள்ளது. ஆன்மாக்கள் பல (பன்மை வாதம்)
உலகம் உண்மை
இறைவனின் இரு நிலை களில் சகுனமும் ஒன்று இறை, உயிர், தளை சிருஷ் டி யில் பங்குபற்று கின்றன. (பரிணாம வாதம்)
சடவுலகுக்குக் காரணமான ஒரு சடப்பொருளே மாயை. இதுவே சிருஷ்டிக்கு முதற் காரணம். இது ஒரு நித்திய தி ர வி யம் (உண்மைப் பொருள்) முத்திக்கு வழி நாற்பா தங்கள் . மாயை உண்டென்று தெளி வாக எடுத்துக் கூறப்பட் டுள்ளது மூன்று. காண்டல், கருதல், "ש (60- פ8
வேத, உபநிடதங்கள்,
ஆகமம், தேவாரம், சைவ சத்தாந்த சாத்திரங்கள் மதத்துக்கும் இறைவனுக் கும் சிவனுக்கும்) முக்கி யத்துவம் .

15. தோற்றம் / படைப்பு
 ைசவ சித் தா ந் த த் தி ன் படி பரிணாமம் முப்பத்தாறு தத்துவங்களை அடக்கியது என்று சிவப்பிரகாசறுால் எடுத்துக் கூறுகிறது. சிருஷ்டிபற்றிய கொள்கைக்கு அடிப்ப ை(", சாங்கியதரிசனத்தை சைவசித்தாந்தமும் ஏற்றுக்கொண்டுள்ளது போல் தோன்றுகிறது. சடமான பிரகிருதியிலிருந்து இருபத்துநான்கு தத்துவங்கள் தோன்றுவதாக சாங்கியர் கூறுவர். affa மாயையில் இருந்து முப்பத்தாறு தத்துவங்கள் தோன்றுவதாக சைவசித்தாந்தம் கூறுகிறது. சைவசித்தாந்தம் கூறும் முப்பத்தாறாவது தத்துவமும் சாங்கியதரிசனவாதிகள் கூறும் இருபத்துநான்காவது தத்துவமும் ஒன்றேயாம். சைவசித்தாந்திகளது பதின்மூன்றாவது தத்துவமே சாங்கியரது முதலாவது தத்துவமாகிய பிரகிருதியாகும். சைவசித்தாந்தம்கூறும் மேலதிக பன்னிரண்டு தத்துவங்களின் தோற்றம் வருமாறு மாயையானது சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளதல்லவா? இதில் சுத்தமாயைமட்டுமே இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்கிறது. சுத்தமாயையிலிருந்து தோன்றுவதே அசுத்த மாயை. அது மும்மலத்துடன் கலந்து மு த ஹ் கார ண மா ய் நிற்பது. அசுத்தமாயையிலிருந்து தோன்றுவது பிரகிருதிமாயை. அது நித்தியமாய், வியாபகமாய், அருவமாய் சடமாய் நிற்பது. அசுத்தமாயையில் இருந்து வித் தி யா த த் துவ ம் ஏழும் சுத்தமாயையில் இருந்து சிவதத்துவம் ஐந்தும் பிரகிருதிமாயையில் இருந்து ஆன்ம தத்து வம் (புருடதத்துவம்) இருபத்துநான்கும் தோன்றும். ஆக மொத்தம் மாயையில் இருத்து தோன்றும் தத்துவம் முப்பத்தாறாகும்.
இதில் சுத்த தத்துவத்தை பிரேரகாண்டமென்றும், சுத்தா சுத்த தத்துவத்தைப் போககாண்டம் என்றும், அசுத்த தத்துவத்தைப் போகிய காண்டம என்றும் அழைப்பதுமுண்டு.
S7

Page 41
5) på god
(சிவஞானசித்தியார் நூலை அடிப்படையாகக் கொண்டது.)
1. சிவசத்தி
2. சுத்தமாயை 8. அசுத்தமாயை
3. நாதம் 9. 5IT GJub
4. விந்து 10. நியதி
5. சாதாக்கியம் 11. கலை
6. மகேச்வரி
12. வித்தை 13. பிரகிருதிமாயை 7. சுத்தவித்தை
14. புருடன்
(முக்குணங்கள்)
| (புத்தி) 15. அகங்காரம்
தைசத அகங்காரம் வைகாரி பூதாதி அகங்காரம்
(சத்துவ குணம்) அகங்காரம் (தமோகுணம்)
(இராசதகுணம்) 18. மனம் (27) சப்தம்
(22-26) கன்மேந்திரியங்கள் -> ஆகாயம் (17-21) (நா, கை, கால், (32) ஞானேந்திரியங்கள் குதம், குறி) (28) ஸ்பரிசம் (மெய் , வாய், கண் ட>வளி மூக்கு செவி) (29) ரூபம் (33)
نقل <ا ا (30) Urቇub (84) firتقl L-> f (31) கந்தம் (35) -> மண்
(36)

1) அசுத்தமாயையில் இருந்து தோன்றும் வித்தியா தத்துவம்
2)
ஏழினுள் காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய ஐந்தும பிரகிருதியிலும், புருட னிலும் தங்கியுள்ளன. இவ் வித்தியாதத்துவங்கள் நித்தியமானவை . அவை மரணத்தின் பின்னர் மறுபிறப்பிற்காக ஆத்மாவைத் தொடர்கின்றன.
காலமானது இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனழுவகைப்படும். அது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலையும் சிவன் கட்டளைப்படி சரிவர நடப்பிக்கும்.
** மாயையிற் காலமோடு நியதிபின் கலாதி தோன்று
மாயவக்கால மூன்றா யாக்கியு மளித்தும் போக்கிக் காயமோ டுலகுக் கெல்லாங் காலசங் கையினைப்பண்ணி நாயகனாணை யாலே நடத்திடுஞ் சுகத்தையெல்லாம்”*
(சி. சி)
கலைதத்துவத்திலிருந்து நியதி தோன்றும். அது அவரவர் வினைப்பயனை அவரவரையே அனுபவிக்கச் செய்யும். எனவே நியதியை ஊழ், விதி என்றும் அழைப்பார். மேலும் அது ஆணவமாகிய திரையை சிறிது நீக்கி, உயிரை இயக்குவதற்கான சக்திகளை அ  ைம த் து வினைக்கீடாய் இன்பதுன்பங்களைக் கொடுக்கும். கலைவளர வளர அறிவுணர்ச்சி மேலோங்குவதால்
சிவநிலை தோற்றும், கலையானது நிவிருத்திகலை, பிரதிஷ்டா கலை வித்தியா சாந்திகலை, சந்தீத கலை என ஐந்துவகைப் படும். இவை ஒவ்வொன்றும் ஆன்மாவின அறிவுணர்ச்சியை படிப்படியாகத் தூண்டும்.
* நியதிபின் றோன்றிக் கன்ம நிச்சயம் பண்ணி நிற்கு
மயர்விலாக் கலைபின் றோன்றியாணவ மொதுக்கிச் சித்தின் செயல்புரி கிரியாசத்தி தெரிவிக்குஞ் சிறிதே வித்தை யுயர்கலை யதனிற் றோன்றி யறிவினையுதிக்கப் Uಬ್ಡಣ್ಣ'
(சி. சி)
வித்தை (அறிவு) யிலிருந்து அராக த த் துவ ம் தோன்றும் . அவ்வராகம் ஒருவர் செய்த வினைகட்கீடாக இன்பம் (இச்சை) முதலியவற்றைக் கொடுக்கும். இங்ங்ணம் கலை (கிரியா), அறிவு (வித்தை), இன்பம் (இச்சை) ஆகிய மூன்றினையும் அறிவித்து நன்மை தீமைகளை வரையறுத்தலைக் காலம் நியமித்துச் செய்யும். நியதி, கலை, வித்தை அராகம் பிரகிருதி முதலிய தத்துவங்களோடு உடலைப் பெற்ற ஆன்மாவானது இச்சாசக்தி (விருப்பு), கிரியாசக்தி (செயல்) ஞான சக்தி (அறிவு) என்பவற்றோடு கூடி நிற்கும்
59

Page 42
"விச்சையினராகந் தோன்றி வினைவழி போகத்தின்க
ணிச்சையைப் பண்ணி நிற்குந் தொழிலறி விச்சை மூன்றும் வைச்சபோ திச்சா ஞானக் கிரியை முன்மருவியான்மா நிச்சயம் புருடனாகிப் பொதுமையினிற்ப னன்றே"
(S. 3.) 4. இனி பிரகிருதியிலிருந்து முக்குணங்கள் தோன்றும் அவையாவன சாத்துவிகம், இராசதம், தாமதம் என்பனவாம் இம்மு க் குணங்கள் ஒன்றோடொன்று கூடி ஒன்பதாகும். அவற்றின் விபரம் வருமாறு சாத்துவிகம் சாத்துவிகத்தில் இராசதம், சாத்துவிகத்தில் தாமதம், இராசதம், இராசதத்தில் சாத்து விகம், இராசதத்தில் தாமதம், தாமதம், தாமதத்தில் சாத்து விகம், தாமதத்தில் இராசதம் என்பனவாம். இங்ங்ணம் உருவான குணங்கள் ஆன்மாவின் வினைக்கீடாக இன்பதுன் பங்களை அதற்களிக்கும்.
"வருங்குண வடிவாய் மூலப் பிரகிருதிகலையிற் றோன்றித்
தருங்குண மூன்றா யொன்றிற்றான் மூன்றாய் மும்மூன்றாகு மிருங்குண ரூபமாகி யியைந்திடு மெங்கு மான்மாப் பெருங்குண வடிவாய்ப் போக சாதனம் பெந்த மாமே?
(Sf. Sf).) 5. முக்குணங்களிலிருந்தும் புத்தி தோன்றும் . அப்புத்தியானது
பாவ புண்ணியங்களைச் சார்ந்து, தோ ன் றி ய பொருள்
இன்னதென அறிவித்து, சுகதுக்கங்களில் மயங்கி அறிவுத் தொழிலையும் பேணி நிற்கும்.
"சித்தமா மவ்விபத்தஞ் சிந்தனை யதுவுஞ் செய்யும்
புத்தியவ் வியத்திற் றோன்றிப் புண்ணிய பாவஞ் சார்ந்து
வத்துநிச்சயமும் பண்ணி வருஞ்சுக துக்க மோகப் பித்தினின் மயங்கி ஞானக் கிரியையும் பேணிநிற்கும்: g
(因。9月)
6. புத்தியினின்றும் அகங்காரம் தோன்றும். அவ்வகங்காரம் மூன்று வகைப்படும். அவை தைசத அகங்காரம் (சாத்துவிக அகங்காரம்) வைகாரி அகங்காரம் (இராசத அகங்காரம்) பூதாதி அகங்காரம் (தாமத அகங்காரம்) என்பனவாம். அகங்காரமானது நான், எனது என்ற முனைப்பை (அகந்தை) ஏற்படுத்தும்.
"ஆங்காரம் புத்தி யின்கணு தித்த கந்தைக்கு வித்தாங்கார்தா
னென்னோ டொப்பா ரென்றியா னென்னதென்றே நீங்காதே நிற்குந் தானு மூன்றதாய் நிகழுமென்பர் பாங்கார் பூதாதி வைகாரிகந் தைசதந்தானென்றே"
(ઈને, ઠરે) 60

7.
8.
9.
தைசதவகங்காரத்தினின்று மனமும் அறிதற்குக் கருவிகளான மெய், வாய், (நாக்கு) கண், மூக்கு, செவி ஆகிய ஐந்தும் (ஞானேந்திரியங்கள்) தோன்றும்
இவ்வைந்தும் முறையே தொடுகை, சுவை, பார்வை மணம், கேட்டல் என்பவற்றுடன் சம்பந்தப்பட்டவையாம்.
"நற்செவி துவக்குக் கண்ணா நாசியைந்தினையு நல்லோர்
புத்தியிந் திரியமென்று புகன்றனரிவை தமக்குச் சத்த நற்பரிச ரூப விரதகந் தங்களைந்தும் வைத்தனர் விடயமாத வடைவினின் மருவுமென்றே??
வைகாரி அகங்காரத்தினின்றும் தொழில் இயக்கத்திற்காதார மான கன்மேந்திரியங்கள் தோன்றும் (கர்ம + இந்திரியங்கள் - தொழில் கருவிகள்) அவையாவன நா, கை, கால், குதம், குறி என்பனவாம். இவை முறையே பேசுதல், எடுத்தல், (கொடுத்தல்) நடத்தல், கழித்தல், தோற்றுவித்தல் முதலான ஐந்தொழிலுக்கும் கருவியாம்.
எ வாக்கொடு பாதம்பாணி பாயுவோடு பத்தமைந்து
நீக்கினர் முன்னே கன்மேந்திசியங்களென நினைந்தே யாக்கிய வசன கமன தானமும் விசர்க்கானந்த மூக்கமாரைந்து மைந்தின் றொழிலென வோதினரே**
(சி. சி)
ஆன்மாவின் அறிவுத் தொழிலை விளக்குதற்கு ஞான, கன்மேந்திரியங்கள், மனம் முதலிய உட்கருவிகள், காலம் முதலியன போதாவாம். ஏனெனில் ஒரு பொருளை அறிவதற்கு ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள் முதலியன புறத்தே நின்று தொழில்புரியும் புற க் கருவி க ள |ாம். அங்ஙனம் இந்திரியங்களால் அறியப்பட்ட பொருளினை மனம் முதலிய அலைப்பாடுடைய கருவிகள் அகத்தே வைத்து பகுத்தறியும் உட்கருவிகளாம். கலை முதலியனவோ மனம் முதலியவற்றால் அறியப்பட்டவற்றைச் சிந் தை யு ள் அழுத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி முதலியன பொருந்தச் செய்தலினால், அதனை உள்ளம்என்றுங் கூறுவர். எனவே, மனம் முதலியவைகளை அகப்புறக்கருவிகள் என்றும், கலை முதலியவற்றை உள் அகக்கருவிகள் என்றும் கூறுவர்.
6.

Page 43
"வாயாதி சோத்திராதி புறத்துவாழ் கருவியாகு
மோயாத மனாதி காயத்துணருமுட்கருவியாகு மாய்வார்கட் கராக மாதி யவற்றினுட் கருவியென்பர் மாயாடன் வயிற்றி வற்றாற் றுடக்குண்டு வாழுமான்மா??
(ga. Sa).
10. பூதாதி அகங்காரத்தினின்றும் பஞ்சதன் மாத்திரைகள் தோன்றும் . அவையாவன முறையே ஒலி (சப்தம்) தொடுகை (ஸ்பரிசம்), ஒளி (ரூபம்), சுவை (ரசம்). நாற்றம் (கந்தம்)
(5T6ểT!_{&T &ìff^{f] .
"ஓசை நற்பரிசரூப விரதகந் தங்களென்று
பேசு மாத்திரைகளைந்தும் பிறக்கும் பூதாதி கத்தி னேசவிந்திரியங் கட்கு நிகழறி விதனாற்காண்டு மாசைசேர் மனாதி தன்மாத்திரை புரியட்டகந் தான்*
(சி. சி),
11. பஞ்ச தன்மாத்திரைகளின்றும் சூக்குமமான பஞ்சபூதங்கள் தோன்றும் . அதன் விபரம் வருமாறு: ஒலி தன்மாத்திரைகளி லிருந்து வானும் (ஆகாயம்), ஒலி, ஸ்பரிச தன்மைகளிலிருந்து வளி பூதமும், ஒலி, ஸ்பரிச ஒளி தன்மாத்திரைகளிலிருந்து தீ பூதமும், ஒலி, ஸ்பரிச, ஒளி, சுவை தன்மாத்திரைகளில் இருந்து நீர்ப்பூதமும், ஒலி. தொடுகை , ஒளி, சுவை, நாற்றத் தன்மாத்திரைகளில் இருந்து மண்பூதமும் தோன்றும் என்பதாம். அதாவது ஆகாயத்தினின்று வளியும், வளியினின்று தீயும், தீயினின்று நீரும, நீரினின்று மண்ணும் தோன்றும் என்பதாம். இதனை மாணிக்கவாசக சுவாமிகள் தனது திருவாசகத்தில் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளதும் இங்கு நோக்கத்தக்கது.
"பாரிடை யைந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி**
அதாவது நிலமாகிய ஐந்தாம் பூதமாயும், நீராகிய நான்காம் பூதமாயும், அக்கினியாகிய மூன்றாம் பூதமாயும், வாயுவாகிய இரண்டாம் பூதமாயும், ஆகாயமாகிய முதலாம் Ա5ւ0ո պւհ இருப்பவனே போற்றி என்பதாம்.
62

இவைகள் ஒன்றுகூடி இத்திரியங்களை இயக்குதற் பொருட்டு தூலவடிவாக (பருப்பொருள்) தோற்றம் பெற்றன. அதன் விளைவாக அறுபது தத்துவங்கள் தோன்றின.
எனவே, சிவதத்துவம் - 5 வித்தியாதத்துவம் - 7 ஆன்ம தத்துவம் - 24 ஆகமொத்தம் 36 தத்துவங்களோடு அறுபது தத்துவங்கள் சேர்ந்து மொத்தம் 96 தத்துவங்களாயின.
'சாற்றிய பஞ்ச தன்மாத்திரைகளிற் சத்த முன்னாத்
தோற்றும் வான் வளி தீ நீர் மண்டொடக்கியே யொன்றுக் கொன்றாங் கேற்றமா மோசையாதி யிருங்குண மியைந்து
மாற்றவே விடய யூத மங்காதி பாவத்தாமே?” (சி.சி)
12. பஞ்சபூத பஞ்சிகரணம் - குக்குமமான (அருவமான) பஞ்ச பூதங்களிலிருந்து தூலமான பஞ்ச பூதங்கள் உண்டாகும் விதத்தையே பஞ்சிகரணம என்பர். பஞ்சீகரணம் என்பது ஐந்தும் சேர்ந்து ஒன்று உருவாவதைக் குறிக்கும். ஒரு குக்குமமான பூதத்தின் அரைப்பாகத்துடன் மற்ற நான்கு பூதங்களின்
பங்குசேரும் போது ஒரு தூலபூதம் வரும் உ+ம்.
மண்பூதம் க மண் 3 + 4 ஆகாயம் + வளி + + நீர் + தீ நீர்ப்பூதம் - நீர் இ + 4 மண் + 4 ஆகாயம் + வளி + 4 தீ தீப்பூதம் = தீ 3 + 4 மண் + 4 ஆகாயம் + நீர் + வளி வளிபூதம் - 3 வளி + 4 மண் + 4 ஆகாயம் + நீர் + 4 தீ ஆகாயபூதம் = ஆகாயம் : + மண் + நீர் 4 + தீ + வளி
இங்ங்ணம் உருவான தூல பஞ்சபூதங்களின் கலப்பினால் உண்டானதே இத்துரலவுடலாம். ஆகவே, தூலபூதங்கள் ஒவ்வொன்றிலும் மற்றப் பூதங்களின் சேர்க்கையும் உண்டு. எனவேது. பிரபஞ்சப் பொருள்கள் ஒவ்வொன்றிலும் பஞ்சபூதங்களுமுண்டு.
13. இவ்வாறு உண்டான தூலபூதங்களில்
மண்ணின் கூறாக - என்பு, தசை, மயிர், தோல், நரம்பு
முதலிய ஐந்தும் நீரின் கூறாக - இரசம், குருதி, வியர்வை, சிறுநீர்,
சுக்கிலம் ஆகிய ஐந்தும் தீயின் கூறாக - உணவு, தூக்கம், அச்சம், மைதுனம்,
சோம்பல் ஆகிய ஐந்தும்
63

Page 44
வளியின் கூறாக - ஒடல், நடத்தல், நிற்றல், இருத்தல்,
கிடத்தல் ஆகிய ஐந்தும் விண்ணின் கூறாக - காமம், குரோதம், உலோபம், மோகம்,
மதம் ஆகிய ஐந்தும்
ஆக 25 தத்துவங்கள் தோன்றுகின்றன. இவை பஞ்சபூதங்களி லிருந்து தோன்றுவதால் பூதகாரியங்கள் என்றும் அழைக்கப்படும்.
14. மேலும் வளியிலிருந்து தசவாயுக்கள் உண்டாகும். அவை
grrr Goor Gör (உயிர்க்காற்று). உதானன் (ஒலிக்காற்று) வியானன் (தொழிற்காற்று), சமானன் (நிரவுகாற்று)
அபானன் (மலக்காற்று), நாகன் (தும்மற் காற்று) கூர்மன் (விழிக்காற்று), கிருகரன் (கொட்டாவிக்காற்று) தேவதத்தன் (இமைக்காற்று) தனஞ்செயன் (வீங்கற்காற்று) என்பனவாம் .
15. ஆகாயத்திலிருந்து (வெளியிலிருந்து) தசநாடிகள் தோன்றும்,
அவற்றின் விபரம்:
இடகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி சிகுவை, புருடன் குகு, சங்கினி, அலம்புடை
இப்பத்து நாபிகளும் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளினுள் ஒடுங்கிவிடும். இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் வாத நாடியிலும் காந்தாரி, அத்தி, சிங்குவை, புருடன் ஆகிய நான்கும் பித்தநாடியிலும், ஏனையவை கபநாடியிலும் ஒடுங்கும்.
இடகலையும், பிங்கலையும் மூலாதாரத்தில் முறையே சுழு முனையின் இடப்பக்கமிருந்தும வலப்பக்கமிருந்தும் கிளம்பி கத்தரிக்கோல் வடிவாக மாறி சிரசு வரை சென்று, பிறகு முன்னோக்கி மூக்கு நடு, புருவம், நெற்றி வரை சென்று மீண்டும் அதுபோலவே கீழிறங்கி மூலாதாரத்தை அடையும்.
காந்தாரி நாபியிலிருந்து உதித்து, பெரிய நரம்புகள் ஏழாக உண்டாகி, மேலே சிரசுவரை சென்று, கண்டத்தில் புகுந்து நாக்கின் அடியில் அமர்ந்திருக்கும்.
அத்தி, சிகுவை இரண்டும் மூலத்தினிடத்துத் தோன்றி மேனோக்கிச் சென்று இரண்டு செவிகளிலும் அமர்ந்திருக்கும்.
புருடன், 'அலம்புடை இரண்டும் அடி மூலத்தைப் பற்றி மேலேறி இரண்டு கன்னத்திலும் அமரும் . .
64

சங் கி னி யும், குகுவும் நாபியில் தோன்றி குதம் வரை பரவியிருக்கும்.
16. இவற்றோடு வசனம் (சொல்), கமனம் (செயல்), தானம் (கொடு), விசர்ச்சனம் (விடுதல்), ஆனந்தம் (மகிழ்தல்) ஆகிய ஐந்தையும்,
17. குக்குமை (நுண்ணோசை), பைசந்தி (நினைவோசை), மத்தமை (மிடற்றோசை), வைகரி (செவியோசை) ஆகிய நால்வகை வாக்குகளையும்,
18. முற்கூறிய முக்குணங்கள் மற்றும் மூவகை ஏடணைகள் என்பவற்றையும் கூட்ட ஆக மொத்தம் 60 தத்துவங்களாம்.
C
'முப்பது முப்பது முப்பத்தறுவரும்
செப்பு மதிலுடைக் கோவிலுள் வாழ்பவர் செப்பு மதிலுடைக் கோவில் சிதைந்த பின் ஒப்பிலனைவரும் ஓடெடுத்தாரே'
- திருமந்திரம்
30 டி 30 + 36 = 96 தத்துவங்களைக் கொண் ட உடம்பு கோவிலை ஒத்ததாம். கோவில் பாழாயின் தத்துவங்கள் நிலைத் திடாவாம்.
65

Page 45
16. பரராசசேகரம் அங்காதிபாத நூலை
அடிப்படையாகக் கொண்ட தோற்றக்கிரமம்
படைப்பு அல்லது தோற்றக் கிரமம் பற்றிய சைவ சித்தாந்த கோட்பாடுகளையே சித்தமருத்துவமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இதைப் பல்வேறு சித்த மருத்துவ நூல்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. யாழ்ப்பாணத்துச் சித்த மருத்துவ நூலான பரராசசேகரம் அங்காதி பாதத்திலும் இத் தொண்ணுாற்றாறு தத்துவங்களும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு:-
1. “சொன்ன நான்மறைகட் கெல்லாந் தூயநற் பதியாமீசன்
தன்னுறு சோதிதன்னிற்றானே மெய்ப்பரத்தை நல்க அன்னதோர் பரத்தின்கண்ணே யரியதோர் சிவமுண்டான உன்னருஞ் சிவத்திற் சத்தி யுதித்துவந் தெழுந்ததாமே"
நான் மறைகட்குத் தலைவனான ஈசன் (நிர்க்குணன்) சோதி வடிவாக மெய்ப்பரம் பொருளாய்த் தோன்றி, அப்பரம் பொருளில் இருந்து சிவமுண்டாகி (சகுணன்) அச்சிவத்திலிருந்து சக்தி (மாயை) தோன்றும்.
2. "எழுந்திடுஞ்சத்தி தன்னாதம் வந்தெய்தி நின்ற
அழுந்துமந் நாதந்தன்னில் விந்து வந்துதித்தவற்றால் தொழுஞ் சதாசிவமுண்டான வதின் மயேச்சுரந் தோன்றுற்ற மொழிந்திடுமயேச்சுரத்திலுருத்திர முர்த்தி வந்த" அச் சக்தியிலிருந்து நாதமும், அதிலிருந்து விந்தும், அவற்றிலிருந்து சதாசிவமும், அதிலிருந்து மகேசுவரனும் தோன்றும. மகேசுவரனிலிருந்து உருத்திரன் தோன்றும் .
66

3. "வந்திடுமுருத்திரன் பான் மாயவன்றானும் வந்தான்
அந்த மாயவன்கண் வேதாவடுத்தன னவன் வானத்தைத் தந்தனன்னவ் வான் வாயு தனைத் தந்த வாயுதானும் செந்தழலதனைத் தந்ததிலப்புச் சேர்ந்து நின்ற**
உருத்திரனிலிருந்து விட்டுணு தோன்ற, அவ்விட்டுணுவினின்றும் பிரம்மன் தோன்றினான் அப்பிரம்மன் வான், வாயு, அழல், அப்பு, புவி ஆகிய ஐம்பூதங்களைப் படைத்தான்.
4. நின்ற வப்புவியினிற்றானே பிருதுவி நேர்ந்தங்குற்ற
துன்றுமங்கதனாலோ சதி தோன்றியதனாலன்னம் ஒன்றிய விரதமற்றாலுதித்தவ் விரசத்தாலே மற்ற நல்லு திரமுண்டாய் வளர்த்த மாமிசத்தைத் தந்த"
'தந்த மாமிசந்தான் மூளை தன்னையே யுதிக்கச் செய்த தந்த முளையினா லத்தியாயதள் வத்தியாலே முந்திய மேதையுண்டாய் முழைத்த தம் மேதை மூலம் வந்த சுக்கிலந் தன்னாலே சுரோணித மருவிற்றன்றே"
பிருதுவியிலிருந்து முலிகைகள் (ஒவுதி/தாவரங்கள்) உண்டாயின. மூலிகைகளில் இருந்து அன்னம் தோன்றியது. அன்னத்திலிருந்து மனிதன் (ஜங்கமங்கள்/சீவவர்க்கம்) தோன்றினான். மனிதன் உண்ணும் உணவினால் (அன்னத்தால்) இரசம், இரததம் , மாமிசம், மேதஸ், அத்தி, மூளை, சுக்கிலம் / சுரோணிதம் என்னும் ஏழு உடற்கட்டுகளும் தோன்றும்.
இதே கருத்தை தைத்தீரிய உபநிடதத்தில் பின்வரும் மந்திரமும் எடுத்துக் கூறியுள்ளது கவனத்திற் கொள்ளத்தக்கது.
"தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: ஸ்ம்பூத/ ஆகாசாத்வாயு:/ வாயோ ரக்னி அக்னேராப:/ அத்ப்ய ப்ருதிவீ/ ப்ருதிவ்யா ஒஷதய:/ ஒஷதீப்யோஜன்னம்/ அன்னாத் புருஷ://
இதன் பொருள் யாதெனில், மூலப் பரம்பொருளான பரமாத் மாவில் இருந்து ஆகாயம் தோன்றும் அவ்வா காயத்திலிருந்து வாயு தோன்றும் அவ்வாயுவிலிருந்து அக்கினி தோன்றும். அக்கினியில் இருந்து அப்பு தோன்றும். அப்புவில் இருந்து பிருதுவி தோன்றும் , பிருதுவியில் இருந்து மூலிகைகள (தாவரங்கள்) உண்டாகும் மூலிகையிலிருந்து அன்னம் தொன்றும். அன்னத்திலிருந்து மனிதன் தோன்றுவான் என்பதாம் .
67

Page 46
5)
"மருவு மிந்திய வித்தாலே வந்துதான் வளருமிந்துப்
பொருவிலா வுடம்பு பார்க்கிற் புகழ்பரா பரமாய் மேவும் ஒருவனா யுலகுக் கெல்லா முன்னரும் பரசிவன்றான் அருவமாய் நின்று நாளு மாட்டுவனருளினாலே"
அங்ங்ணம் உருவாகி இந்திரியங்களின் செயலாலே வளரும் இந்த
உடம்பை பரமசிவனானவன் அருவமாய் நின்று தன்னருளினாலே நாளும் இயக்குவிப்பான் என்பதாம்.
இதனையே சிவஞான சித்தியார் பின்வருமாறு கூறுகிறது.
'சிவம் சக்தி நாதம் விந்து சதாசிவன் திகழுமீசன் உவந்தருள் உருத்திரன்தான் மால் அயன் ஒன்றில் ஒன்றாய்ப் பவந்தரும் அருவம் நாலு இங்கு உருவம்நாலு உபயம் ஒன்றா நவம்தரு பேதம் ஏகநாதனே நடிப்பன் என்பர்”*
குறிப்பு: இங்கு சிருஷ்டிக்கு அடிப்படையாக பதியின் ஒன்பது வ
வங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவையாவன:
சிவம் (அறிவு)
சக்தி (ஆற்றல்) கடவுளின் நாதம் (ஒலி) f அருவத்திருமேனிகள் விந்து (ஒளி)
சதாசிவன் (அருளல்) πακωχό அருஉருவத்திருமேனி
மகேசுவரன் (மறைத்தல்) உருத்திரன் (அழித்தல்) விட்டுணு (காத்தல்) பிரம்மா (படைத்தல்)
உருவத்திருமேனி
இங்ங்ணம் தோற்றத்துக்கு மூலத்தைக் கூறிய பின்னர் தொண்ணுற் றாறு தத்துவங்கள் எடுத்துக் கூறப்படுகின்றன.
1) தான்முதலாகு மீசன் றந்திடுமுடம்பின் றன்மை
岑)
ஆனது தொண்ணுரற்றாறு தத்துவ வியக்கமாகும் வான் வளியனனிர் மண்ணாய் வகுத்திடு பஞ்சபூதம் ஆனவையாதியான தத்துவ மறைதலுற்றாம்.
இங்ங்ணம் ஈசன் முன்னின்று படைத்த இவ்வுடம்பு தொண் ணுாற்றாறு தத்துவங்களினால் இயக்கப்படுகிறது.
அத்தத்துவங்களின் விபரம் வருமாறு.
அறைதரு பூதமைந்து மடுத்த விந்திரியம் பத்தும் நிறைதரு கர ண நான்கு நிகழ் தன்மாத்திரைகளைந்தும் உறை தரு வித்தையேழு முயர் சிவ மைந்து மென்று மறைபகர் முப்பத்தாறு மக மினிப்புறம் வகுப்பாம்.
68

சிவதத்துவம் வித்தியா தத்துவம் தன்மாத்திரைகள்
LDققش4 ஞானேந்திரியம் 翠 கன்மேந்திரியம் E அந்தக்கரணம் سكتة=
மொத்தம் se 36
పూ
■
இவை முப்பத்தாறும் உட்கருவிகள் எனப்படும். இவற்றோடு பின் வரும் புறக்கருவிகள் அறுபதும் சேர தத்துவங்கள் தொண்ணுரற்றாறு ஆகும்
3.
"புறத்துறு கருவியைந்து பூதத்தின் கூறையைந்து
நிறத்துறு வாயு பத்து நிகழ்தரு நாடிபத்து மறுத்தவிர் குணங்கண் மூன்று வசனாதியைந்து தான்கு திறத்துறு வாக்கு மூன்றா மேடணையறுப தோதும்"
பஞ்சபூதம் ஒவ்வொன்றின் கூறும் ஐந்தைந்தாக
மொத்தம் = 25 வாயுக்கள் = 10 நாடிகள் s 0 குணங்கள் = 3 வசனாதிகள் ܫܒe 5 வாக்குகள் - 4
gut-60) 600T S 3
மொத்தம் 60
பஞ்சபூதம் ஒவ்வொன்றின் கூறுகளின் விபரம் வருமாறு:
"கொள்ளுமிச் சடந்தான் பஞ்ச பூதியக் கூறாய் நிற்கும்
அள்ளிலை வேற் கணாளே பிருதுவியப்புத் தேயு விள்ளரும் வாயு மானம் விளம்பிய பூதமைந்தாம் தள்ளரும் பிருதுவிக்குச் சார்குணத்தன்மை கேளே’
'தன்மைதான் மயிரெலும்பு தசை நரம் போடு தோலாம்
சொன்னவப்பினுக்கு மச்சை, சுக்கிலத் தோடிரத்தம் பன்னுநீர் மூளையாகும் பகர் தேயுக் குணஞ்சோம்போடு மன்னிய பயமாங்காரமைதுனத் துஞ்சலாமே?”
*"துஞ்சலில் வாயுக்கூறு துள்ளியே நடத்தலோடல்
பஞசியாய்க் கிடத்தனிற்றல் பரிவுடனிருத்தலாகும் மிஞ்சு மாகாயக்கூறு வெய்ய காமியங்குரோதம் வஞ்சியே மோக லோப மதமுடன் வகையோரைந்தே"
69

Page 47
ஆகாயத்தின் வடிவம்
அதாவது மண்ணின் கூறுகள் - மயிர், எலும்பு, தசை, நரம்பு, தோல் அப்பின் கூறுகள் - மச்சை, சுக்கிலம், இரத்தம், நீர், மூளை தேயுவின் கூறுகள் - சோம்பல், பயம், அகங்காரம்,
மைதுனம், துஞ்சல் வாயுவின் கூறுகள் - நடத்தல், ஒடல், கிடத்தல், நிற்றல்,
இருத்தல் - ஆகாயத்தின் கூறுகள் - காமம், குரோதம், மோகம், லோபம்,
மதம்.
'ஒரைந்து பூதியங்களொன் றினுக்கைந்து பேதம் சேருமையைந்தே யாகச் செறிந்திடுகருவியாகும் பார்நிறம் பொன்தானாகும் பளிங்கு நீர் பவளந்தேயு கார்நிறம் வாயுவாகுங் ககனமும் வெண்மைகானே?"
பஞ்சபூதங்களுள் மண் - பொன்னிறம் நீர் - பளிங்கு (வெண்மை) நிறம் , தீ - பவளநிறம் (சிவப்பு), வளி - கருறைநிறம், ககனம் (வான) - வெண் (புகை) நிறம் ஆகும்.
மேலும் பஞ்சபூதங்களின் வடிவம், நிறம், எழுத்து (அட்சரம்) முதலியனபற்றி சிவஞானசித்தியாரில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளதும் நோக்கற்குரியது.
'மண்புனலனல் வான்பால் வடிவு நாற்கோணமாகுந்
தண்பிறை மூன்றுகோணந் தருமறுகோணம் வட்டம் வண்பொன்மை வெண்மை செம்மை கறுப்பொடு தூமவன்ன மெண்டரு மெழுத்துத் தானும் லவரய வவ்வுமாமே".
மண்ணின் வடிவம் - நாற்கோணம்; நிறம் - பொன்; எழுத்து" "ல**காரம்
நீரின் - வடிவம் - பிறை நிறம் - வெண்மை; எழுத்து "வ"காரம்
தீயின் - வடிவம் - முக்கோணம்; நிறம் - செம்மை; எழுத்து" "ர**காரம்
வளியின் வடிவம் - அறுகோணம்; நிறம் - கறுப்பு;
எழுத்து" "ய**காரம் ,
வட்டம் நிறம் - புகை; எழுத்து'அவ்'வுமாகும் ,
(இவ்வைந்து பூதங்களையும் மூலாதாரம்முதல் முதல் ஐந்து
ஆதாரங்களுடன் தொடர்புபடுத்தி நோக்கவும்)
70

6. தசவாயுக்களின் விளக்கம்
தசவாயுக்களாவன - பிராணன், உதாணன், வியானன், சமானன் அபாணன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன் தனஞ்செயன்.
îJ T606 TUų:
"என்னவகுத்திடும் பிராணவாயுத் தன்மை
யியம்பக் கேணிலவண்ண மூலாதாரம் தன்னிலோங்கார வெழுத்தாகத் தோன்றித்
தானருந்து முணவையெல்லாஞ் சமிக்கச் செய்யும் சொன்ன சிரசினின் முட்டி விழிமையத்தைத்
தொடுநாசி வழிவிரவீராறு பாயும் மன்னுமெட்டு முள்வாங்குமொரு நான்குந்தான் வறிதாக வெளிதனிலே பாயும் பாழே**
அதாவது பிராணவாயுவானது மூலாதாரத்தில் 'ஓம்கார' வெழுத்தாகத் தோன்றி, தான் அருந்தும் உணவையெல்லாம் சமிக்கச் செய்யுமாம். அது சிரசு நோ க் கி ச் சென்று புரு வ நடு  ைவ ய  ைட ந் து நாசிவழி 12 விரற்கிடை பாயும். 8 விரற்கிடை உள்வாங்கும். எனவே நான்கு வீணாகும். (பாழாகும்.)
9L T60,T61 TU:
"பாழான வபானன்றன் பரிசைக் கேளாய்
பச்சைநிறஞ் சுவாதிட்டானத்திற்றோன்றிக் கேளான போசனத்தைச் சுருக்கி நாளுங்
கீழ்நோக்கி மலசலத்தை யுறுமித்தள்ளும் தாளான வன்னத்தின் சாரமெல்லாஞ்
சடத்தினுக்காதாரமுறச் சாரு விக்கும் கீழான வயிற்றினுள்ளே யுலாவி நிற்குங்
கேட்டிடாய் வியானனுடை கெதியைத் தானே?"
அபாணவாயு பச்சைநிறம். சுவாதிட்டானத்தில் தோன்றி போசனத்தை சுருக்கி, மலசலத்தைக் கீழ்நோக்கித் தள்ளும். இது ஆசனவாயைச் சுருக்குவதால் அன்னத்தின் சாரத்தை உறிஞ்ச வைத்து சடமான இவ்வுடலில் சுவறச் செய்யும். வயிற்றின் கீழ்ப் பகுதியில் உலாவி நிற்குமாம்.
71

Page 48
666 TU
"கெதியான பாணிறமாய்த் தோளிலுற்றுக்
* கிளர்ந்தெழுபத் தீராயிரமாம் நரம்பிற் சேர்ந்து பதியான சர்வசத்தின் முடக்க நீட்டப்
பண்ணியே பரிசங்களறியச் செய்யும் புதிதானகளை தவன மாக்குவிக்கும்
பொசிப்பிலுறு சாரமெல்லாம் பூரித்தெங்கும் விதியான வுடம்புதனை நாள் கடோறும்
மிகவளரச் செய்யுமென விதித்திட்டாரே'
வியான வாயுவானது பால் நிறமாக மணிபூரகத்தில் தோன்றி உடலிலுள்ள எழுபத்தீராயிரம் நரம்புகளிற் பரவி உடம்பினசைவு களுக்குதவுவதுடன் பரிசங்களையறியவும் உதவும். களையைக் கொடுக்கும் சமிபாடடைந்த உணவுச் சாரத்தை உடல் முழுவதும் எடுத்துச் சென்று வளர்ச்சிக்குதவும்.
2 576ự6uIII,
" விதித்த வுதானன்றானே மின்னின் வன்ன மிகவிதயந் தனிலனலை யெழுப்பு வித்து மதித்த புசிப்புகளெல்லாஞ் செமிக்கச் செய்து வளர்நாடி நரம்புகளிலூட்டு விக்கும் குதித்து நிறுத்திடலெழுப்பல் கலங்குவித்தல்
குறித்த கனா வருவித்தலிரு மறும்மல் கதித்து வருந்திடச் செய்த வினைகளெல்லாங்
கண்டறிவாயுதா னன் காரணத்தானாமே”
உதானவாயு மின்னல் நிறமாக (பொன்னிறமாக) இதயத்தில் தோன்றி (அனாகதம்) அனலை எழுப்புவிக்கும் உண்ட உணவுகளை செமிக்கச் செய்து நாடி நரம்புகளுக்கு ஊட்டுவிக்கும். குதித்தல், எழுப்பல், கலங்குதல், கனாக்காணல், இருமல், தும்மல் மற்றும் செய்த வினைகளெல்லாம் (செயல்கள்) கனவில் தோற்றுவிக்கும்.
JD 63 GNU
**காரணமாஞ் சமானன்னிறம் புட்பராகங்
க்சிவாகியறு சுவைசேரன்னந் தண்ணீர்
பூரண்மாயுடம் புதனிற் சமனாயெங்கும்
புகுத்தியே வாயுகளை மிஞ்சொட்டாமல்
72

தாரணையாயடக்கியே சமன தாக்கித்
தானிருக்குமடி நாபி குய்பந்தன்னில்
வாரண மா முலையாளே கூர்மனென்னும்
வாயுநிறம் வெண்மையென வகுப்பார் மாதே"
சமானனின் நிறம் புட்பராகம் - இது சமிபாடடைந்த அன்னரசம் உடம்பு எங்கும் சமனாகப்பரவ உதவும் . ஏனைய வாயுக்களை அதிகரிக்க விடாமல் சமநிலையில் வைத்திருக்க உதவும். இதன் ஸ்தானம் நாபி, குய்யம் முதலியனவாம்.
Ji.i (D6r
இதன் நிறம் வெண்மை. லலாடத்தினின்று (நெற்றி) தோன்றி
உடம்புக்குப் பெலனும் விழிகளை இமைத்துமூடி காட்சிக்குதவும். கண்ணீர் வீழ்தல், வாய் பேசாது மூடுவிக்கும்.
**வகுப்பான விலாடத்தினின்றெழுந்து
வடிவான வுடம்பினுக்குப் பெலனுண்டாக்கித் தொகுப்பான விழிகளினை யிமைத்து மூடித்
துறந்திட்டே காட்சியெலாந் தோன்றக் காட்டும் உகப்பான நயனத்தாற் கண்ணிர் வீழ்த்து
முரையாமல் வாய்மூடு முலாவி நிற்கும் மிகப்பாலிற் சுவைத்த மொழிமானே கேளாய்
விளம்புவேனாகனுடையியல் பைத் தானே'
psr 565
இது பொன்னிறம். கலை, ஆகமங்கள் கற்றுத்தேறல், கொட்டாவி, விக்கல் உண்டுபண்ணும்.
d5(5.56
இது கரியநிறம். பசியுணர்வை எழுப்பல், உண்ணாக்கு, நாசியில் கசிவுண்டாக்கல். இருமல், தும்மல் என்பவற்றை ஏற்படுத்தல் இதன் தொழிலாகும்.
"இயல்பான நாகன் பொன்னிறமே யாகும்
மியம்புகலை யாகமங்களெல்லாந் தேரும் பயில்வாயிற் கொட்டாவி விக்கல் பண்ணும்
படிக்கு மிதயத்திருக்கும் பண்பதாகும் செயலான கிரிகரன்றான் கரியவன்னஞ்
சிந்தை தனி னின்றுபசி யெழுப்புவித்தங் குயர்வாக வநுபவித்தலிருத்தல் போத
லுண்ணாக்கு நாசிதனிற் கசிவுண்டாதல்"
73

Page 49
"கசிவுண்டா யிருமறும்மன் முடக்கி நீட்டிக்
காட்டுவித்தல் கிரிகரன்றான் கண்டுகொள்ளும் இசைவான தேவதத்தன் படிகவன்ன
மியம்பல்படுத்திடலெழுந்து கோபஞ் செய்தல் அசையாமல் விழிக்கும் போதயர்வு நீக்க
லார்ப்பாரித்தல் சண்டையிடல் தர்க்கம்பேசல் நசையாகக் குய்யமிருப்பிடமேயாகு
நல்லதனஞ் செயனடத்துங் குணத்தைக்கேளே”
தேவதத்தன்
படிகநிறக் குய்யத்தை இருப்பிடமாகக் கொண்டது. பேசுதல், படுத்தல், எழும்பல் கோபம் விழியை வெவ்வேறு பக்கங்களுக்குந் திருப்பல் ஆர்ப்பரித்தல், சண்டையிடல் தர்க்கித்தல் முதலிய தொழிற்பாடுகளைச் செய்யும்.
தனஞ்செயன்
நீலநிறம். மூக்கினின்று உடம்பு முழுவதையும் வீங்கச் செய்யும் கன்னத்தில் கடல்போல் தேங்கிக் காணும். இறந்தவுடனேயே ஏனைய வாயுக்கள் எல்லாம் சோர்ந்துவிடும். ஆனால், தனஞ்செயன் மூன்று நாள் வரை இருந்து பிணைத்தின் தலை வெடித்த பின்பே மறையும் .
குணமான தனஞ்செயன்றானில வன்னங்
கூரிய மூக்கினின்றுந் தடிக்கு மெய்யை வணமாக வீங்கிடவே பண்ணுவிக்கு
மதிக்கரிய கன்னத்திற் சமுத்திரம் போற் கனமான சுந்தரகோ சந்தானாகிக்
கடிதாக நீர் வடித்துப் பிராணனோடு மணமான வாயுவெலாம் போய் மூன்றாநாண்
மண்டை வெடித்தே வரிசை யாகப் போமே?”
1) f is 1356
தச நாடிகளானவை தச வா யு க் களு க்கு ஆதாரமாயிருக்கும். அவையாவன இடகலை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, சிங் குவை, வலம் புருடன், அத்தி, சங்கினி, குகு, வைரவன் (அலம்புடை)
**வரிசையாய்த் தசவாயுச் செயலிதாகும் வாயுவுகளுக்காதார மாயிருக்கும்
துரிசில்லாத் தசநாடி தன்னைக்கேளு
சுழுமுனையோடிடைகலை பிங்கலை காந்தாரி
74

சரியான சிங்குவலம் புருடனத்தி
சங்கினி நற்குகுதனொடு வைரவன்றான்
பிரியாமன் மூலத்திற் றோன்றி நிற்கும்
பேசக்கேள் சுழுமுனையின் சூட்சந்தன்னை"
2. Ji (pp 6D6), SL56D6), fill FD60.
சுழுமுனை மூ லா தா ர த் தி ன் தோன்றி கம்பம் போன்று நேரியதாய் ஆறு ஆதாரங்களையும் ஊடுருவிச் சென்று சிரசுவரை சென்றிருக்கும். இடகலை, பிங்கலை இரண்டும் மூலாதாரத்திற் றோன்றி கத்தரிக்கோல் வடிவாக வலம் இடமாக மாறி சுழு முனையைச் சுற்றிச் சுற்றி ஏறி சிரசு வரை சென்று மூக்குநடு புருவம், நெற்றி வரை சென்று நிற்கும்.
"சூட்சமாஞ் சுழுனை குய்ய வடி மூலத்திற்
றோன்றியே கம்பமதா யெழுந்து மேற்போய் ஆட்சியா யாதார மாறுஞ் சென்றே
யசைவற்றுச் சிரசளவா யமர்ந்து நிற்கும் மாட்சியா மிடைகலை பிங்கலையிரண்டு மன்னியே கத்தரிக்கோன் மாயலாகி நீட்சியாஞ் சுழுமுனைதனைச் சுற்றியேறி
நெட்டிட்டே சிரசளவாய் நேருந்தானே?"
3. 65 Tf
'நேரான மூக்கு நடுப் புருவ நெற்றி நின்றுமே நாசியிரு மூலம் புக்கும் பேரான காந்தாரி நாபியுற்றுப்
பெருநரம்பின் வழியாகவுலாவி யேறிச் சீரான சிரசளவாய்க் கண்டஞ் சேர்ந்து
செப்பியவேழிசைக் குருவாய் தாவினின்று நீரான தைப்பொழிந்து கசியப் பண்ணி
நிற்குமே சிங்கவத்தி நிகழ்த்துவேனே"
காந்தாரியானது நாபியில் தோன்றி பெருநரம்பு வழியாகச் சிரசுவரை சென்று பின் கண்டத்தை அடைந்து நிற்கும் இது
ஏழிசைக்கும் காரணமாய் நிற்கும். நாவினின்று நீரைக்கசியப் பண்ணும்.
75

Page 50
*4) சிங்கவை, அத்தி
மூலத்திற்றோன்றி நரம்புகளிற் கலந்துலாவி இரு செவிகளையும். அடையும் பின் வலம் இடமாக கண்களை அடைந்து அகத்திலே வரும் நான்கு அவத்தைகளினளவாய் நிற்கும்.
"" நிகழ்த்துவேன் சிங்வுவத்தி மூலந் தன்னி
னின்று நரம்பெவற்றினும் போய்க் கலந்துலாவி மகத்தான செவிகளிரண்டினிலுந் தொட்டு
வலமிடமாய்க் கண்களிலே மருவிச் சேர்ந்தே அகத்தினிலே வருமவத்தை நான்கினுள்ளு
மளவாகி நின்றிடுமங் கறிந்து கொள்வாய் சுகத்தான வலம்புருடன் செய்திகேளு
சுழித்திடுமுந்திக் கீழாய்த் தோன்றுந்தானே?"
5) வலம்புருடன், குகு
இது உந்தியின் கீழாகத் தோன்றி நரம்புகளினூடாக விலாவூ டோடி, தோள், கைக்குழி (அக்குள்)க்குச் சென்று கண்களைய டைந்து, இடம் வலமாய் செவிகளை அடைந்து நிற்கும்:
குகுவானது நாபியிற்றோன்றி ஈரலைப்பற்றி, குடலில் குமட்டலை யுண்டுபண்ணி வாயால் நீர் குழகுழத்தோடப்பண்ணும்.
‘'தோன்றியே நரம்புவழி விலாவூடோடித்
தோளொடு கைக்குழி புக்கு நயனத்துற்றே ஆன்ற செவி தன்னிலிடம் வலமாய் நின்றங் கறிவவச மாக்கியே யமர்வன் கண்டாய் ஏன்ற குகு தன்னாபி தன்னி னின்றங்
கீரல்பற்றியே குடலைக் குமட்டு வித்தங் கூன்றிய வாயாற் றண்ணிர் குழகுழத்தே
யோடுவிப்பன் சங்கினியினுண்மை கேளே"
6) as if Gof, GDaly alir
சங்கினி நாடி குய்யத்தில் நின்று உடற்றத்துவங்கள் கருவிகளை ஒன்றை ஒன்று மிஞ்சாமல் சரியாகத் தொழிற்பட வைக்கும் வைரவன், இடக்கா தளவாய் நிற்கும் என்பர்.
76

'உமைகேள் சங்கினி நாடிகுய்யத்
துறுதியாய் நின்றுடலிற் றத்துவங்கள் வண்மையாங் கருவிகளை மிஞ்சொட்டாமல்
வசப்படுத்திக் கொண்டிருக்கும் வரிசையாக வெண்மையாங் கலைநிறைந்த மதியம்போல
விளங்குமெழின் முகம்படைத்த மின்னாளே திண்மையா நாடியிவை பத்தின் பேருஞ்
செய்கை குணங் குறிகளையுந் தேர்ந்துபாரே**
வேறு சில நூல்களில் தொண்ணுாற்றாறு தத்துவங்கள் பின்வருமாறு கூறப்பட்டுள்ளன.
'உறுதியாம் பூதாதி யோரைந்தாகும்
உயர்கின்ற பொறியைந்து புலனைந்தாகும்
சுருதியாங் கன்மவிந்திரிய மைந்தும் கடிதான ஞானவிந்திரியமைந்தும்
திறுதியாந் தீதாய கரணம் நான்கும்
திறமான அறிவொன்றும் தசநாடிபத்தும்
மறுதியாம் வாயுவது பத்துமாகும்
மகத்தான விசய மஞ்சு கோசமஞ்சே”
**அஞ்சவே ஆதாரம் ஆறுமாகும்
அரியமண்டல மூன்று மலமூன்றாகும் தொஞ்சவே தோடமூன் ரீடணை தான் மூன்று
தோதகமாம் குணமூன்று வினை இரண்டாம் தஞ்சவேராக மெட்டவததை யைந்து
தங்கியதோர் கருவிகள்தான் தொண்ணுாற்றாறு ஓங்கவே ஒவ்வொன்றாய் விரித்துச் சொல்வேன்
உறுதியாம் பூதாதியு ரைக்கக் கேளே??
77

Page 51
பூதம் பொறி
புலன்
கன்மேந்திரியம் கன்மேந்திரிய விடயம்
கரணம்
ஆன்மா
நாடி
Թյո պ
ஆசயம் (விசயம்)
கோசம்
ஆதாரம்
A657 Lalib
Gsnt-th
மலம்
Algo) of
குணம்
வினை
இராகம்
அவத்தை
மொத்தம்
ബ
5 (மண், நீர், தீ, வளி, வான்) 5 (செவி, மெய், கண், நாக்கு, மூக்கு 5 கேட்டல், தொடுகை, பார்வை, சுவை,
மணம் 5 (வாய், கால், கை, குதம், குறி1 5. (பேசுதல், நடத்தல், கொடுத்தல்,
மலம் விடுதல், மகிழ்தல்) 4 (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் 1 அறிவு 10 (இடகலை, பிங்கலை முதலிய பத்துமாம்! 10 (பிரணவாயு, அபாணவாயு, முதலிய
பத்துமாம்) 5 (அமர்வாசயம், பகிர்வாசயம்,
சலவாசயம், மலவாசயம், சுக்கில வா சயம்
5 (அன்னமயகோசம், பிராணமயகோசம்
மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்) 6 (மூலாதாரம், சுவாதிட்டானம், மணி
பூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை 3 (அக்கினிமண்டலம், சூரியமண்டலம்,
சந்திரமண்டலம்) 3 (வாதம், பித்தம், கபம்) 3 (ஆணவம், கன்மம், மாயை
3 (மண்ணாசை, பெண்ணாசை,
பொன்னாசை 3 (சாத்துவிகம், இராசதம், தாமதம் 2 (நல்வினை/புண்ணியம், தீவினை/
LuíT Jh J 8 (காமம், குரோதம், லோபம், மோகம் மதம், மாற்சரியம், இடும்பை, வேகம்] 5 (சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி,
துரியம், துரியாதீதம்)
96
78

இவற்றுள் முக்கியமானவற்றுக்கான விளக்கங்கள் வருமாறு
அந்தக்கரணங்கள்:
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்குமாம், இதில் மனம் ஒன்றை நினைக்கும். புத்தி அதனை ஆராயும். அகங்காரம் முடிவு செய்யும். சித்தம் அதைச் செய்துமுடிக்கும்.
2.Fui si:
இரைகுடல் (அமர்வாசயம்), செரிகுடல் (பகிர்வாசயம்), நீர் க் குடல் (சலவாசயம்), ம ல க்கு டல் (மலவாசயம்), வெண்ணிர்க்குடல் ( சுக்கிலவாசயம் ) என்னும் ஐந்துமாம்.
இதில் அமர்வாசயமானது ஆமாசயம் என்றும் வழங்கப்பெறும். ஆசயம் என்றால் தாங்குவது என்று பொருள். உண்ட உணவு, நீர் முதலியன அமர்வதால் (அவற்றைத் தாங்குவதால்) இது அமர்வாசயம் எனப்படுகிறது. உணவுக்கால்வாயில் இரைப்பை வரையுள்ள பகுதியை இது அடக்குகிறது.
உண்டஉணவினைச் செரிப்பித்து இரசமாகவும், திப்பியாகவும் பிரித்து, அவ்விரசத்தை (சாரத்தை) உறிஞ்சி உடலின் ஏனைய பாகங்களுக்கு பகிர்ந்தளித்து உதவும் பாகம் பகிர்வாசயமாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடைப்பட்ட சிறுகுடற் பகுதியாகும். சிலர் இதனை கிராணி என்றுங்கூறுவர்.
கழிவுப் பொருள்களைத் தாங்கிநின்று (சேகரித்து வைத்து) வெளியேற்றும் பகுதி மலவாசயமாகும். உணவுக்கால்வாயின்
கடைசிப்பகுதியான பெருங்குடலை இது குறிக்கிறது. எனவே, உணவுக்கால்வாயானது அமர்வாசயம், பகிர்வாசயம், மலவாசயம்
என்று மூன்று பகுதிகளையுடையதாக இங்கு கூறப்பட்டுள்ளது.
சிறுநீர்க்கழிவுகளை வெளியேற்றும் பகுதி சலவாசயமாகும்: இது சிறுநீரகம், சலப்பை, சலவழி முதலியவற்றை அடக்கியதாகக் கருதப்படும்.
சுக்கில /சுரோணிதங்களை அடக்கியிருப்பது சுக்கிலவாசயமாகும். இது ஆண், பெண் ஜனனேந்திரியங்களைக் குறித்து நிற்கும். ஆசயமாகும்.
(65 fair:
கோசம் என்றால் பை, கவசம், உறை என்று பொருள்படும். மனிதன் அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமயகோசம்,
79

Page 52
விஞ்ஞானமயகோசம், ஆன ந் தமயகோ சம் என்னும் ஐந்து கோ சங்க ளா ல் ஆனவன். இதில், நாம் உண்ணும் உணவு முதலியவைகளால் (அன்னத்தால்) ஆனது இச்சடவுடம்பு. இதனுள் பிரா ண ம ய கோ சம் செயற்படுகிறது. அதனுள் சூடசுமமாக tஅருவமாக) மனோமயகோசம். விஞ்ஞானமயகோசம், ஆனந்தமய கோசம் என்பன உண்டு. இதில் உணவினால் ஆன இச்சடவுடம் அன்னமயகோசமாகும். பிராண சக்தியை த ன் னு ஸ் அ டக் கி ய து பிராணமயகோசமாகும். அந்தக் கரணங்களால் ஆனது மனோமய கோசமாகும். அறிவினால் ஆனது விஞ்ஞானமயகோசமாகும். ஆன்மாவானது ஆனந்தநிலையில் இருக்கும் இறுதி க்க வ ச ம் ஆனந்தமயகோசமாகும்.
இன்னொருவிதத்தில் உடம்பானது மூன்று வ ைகயா கப் பிரிக் கப்பட்டுள்ளது. பருவுடல் (தூலசரீரம்), நுண்உடல் (சூக்குமசரீரம், காரணவுடல் (காரணசரீரம்) தூலசரீரமானது தசைகளாலும் என்பினாலும் ஆன இச்சடவுடலாகும். சூக்குமசரீரம் இது கண்களுக்குப் புலப்படாமல் இருப்பது. இதை லிங்க சரீரம்
எ ன்று ங் கூறு வர். பிராணமயகோசம். மனோமயகோசம், விஞ்ஞானமயகோசம் என்பவற்றை க் கொண்டதாகவுள்ளது. க்ாரணசரீரமானது. ஆனந்தமயகோசத்தைக் கொண் டது.
சஞ்சித வினைகாரணமாக உண்டாவது, தூலசரீரம், சூக்குமசரீரம் இரண்டுக்கும் காரணமாயுள்ளதால் இதைக் காரணசரீரம் என்றுங் கூறுவர்.
பிராணமயகோசமானது அன்னமயகோசத்தையும் ஏனைய மூன்று கோசங்களையும் இணைத்துவைக்கிறது. இறக்கும்போது பிராணமயகோசமானது அன்னமய கோசத்தினின்றும் பிரிந்து வேறாகும். சிறிது கால த் துள் பிராணமயகோசமும் பிரிந்து வே றாகி விடும். அதாவது ஒருவர் இறக் கும் போது அன்னமயகோசமும், பிராணமயகோசமும் மட்டுமே அழிகின்றன. ஏனைய மூன்று கோசங்களும் அருவமாக, மறுபிறப்பை நோக்கி ஆத்மாவுடன் செல்கின்றன. எ ன வுே தான் இறைவனின் ஐந்தொழில்களில் அருளல் ஆத்மாவின் கவசங்களை (கோசங்களை) நீக்கி தன்னையுணர்வித்தலாகக் கூறப்படுகிறது.
ஆறாதாரங்கள்:
இவை பற்றி: பின்னர் விரிவாகக் கூறப்படும்.
80

பூண்டலங்கள்:
சூரியமண்டலம் (ஞாயிற்றுமண்டலம் / ஆதித்தியமண்டலம்), சந்திரமண்டலம், (திங்கள் / நிலாமண்டலம்), அக்கினிமண்டலம் (தீமண்டலம்) என மூவகைப்படும். இதில் அக்கினிமண்டலமானது மூலாதாரத்துக்கும் சுவாதிட்டானத்துக்கும் நடுவில் முச்சுடரோடு
கூடிய மணிபோல காணப்படும். சூரிய மண் ட ல மா ன து மணிபூரகத்தின் நடுவில் வளையம்போன்று சுற்றிப்பிரகாசித்து அனாகதம் வரை வியாபித்திருக்கும். சந்திரமண்டலமானது
விசுத்திக்கும் ஆக்கி  ைன க் கும் இடையில் கோடி சந்திரர்கள உதித்ததுபோல் பிரகாசிக்கும். இதனை அமிர்த கலை (யோகமுப்பு) என்றுங்கூறுவர். இவற்றை வா சி ப் பழ க் கத் தி னா லே யே (பிராணாயாமம்) அறியமுடியும் .
தோடங்கள்
வாதம், பித்தம், கபம் என்று தோடங்கள் மூவகைப்படும். இவை வளி, அழல், ஐயம் என்றும் கூறப்படும். உயிராகிய ஆன்மாவை இவை தாங்கி நிற்பதால் உயிர்த்தாதுக்கள் என்றுங் கூறப்படும். ஆத்மாவானது இ ச் ச ட வுட  ைல மனம் முதலிய இந்திரியங்களைக் கொண்டும், வளிமுதலாகிய உயிர்த்தாதுக்களைக் கொண்டும் இயக்குகிறது. மனத்தைப் போலவே வளி, அழல், ஐயம் ஆகியனவும் அருவமானவை. அவற்றைக் கண்ணால் பார்க்கமுடியாது. ஆனால், அவற்றின் செ ய்  ைக க ள் மூலம் அவற்றை அறியமுடியும்.
முத்தோடங்கள் தொண்ணுாற்றாறு த த் துவங் களு ள் அடக்கப்பட்டிருப்பது சித்தமருத்துவத்துக்குரிய ஒரு சிறப்பாகும். அதுமட்டுமன்றி இவற்றின் தோற்றக் கிரமத்தைப் பொறுத்து வாதத்தை படைத்தலுக்கும் (இதன் தெய்வம் பிரம்மன்) பித்தத்தைக் காத்தலுக்கும் (இதன் தெய்வம் விட்டுணு கபத்தை அழித்தலுக்கும் (இதன் தெய்வம் உருத்திரன்) ஒப்பிடுகிறார்கள். இதனையே
"வாதமாய்ப் படைத்துப் பித்த வன்னியாய்க் காத்துச் சேட்ட சீதமாய்த் துடைத்துப் பாராந் தேகத்திற்குடியாமைந்து" என்று தேரையர் மருத்துப் பாரதத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் சித்தமருத்துவத்தில் ஒருவரின் ஆயுளின் ஆரம்பகாலத்தில் 1 . 33 வயது வரை) வாத காலம் என்றும் நடுப்பிராயத்தில்
ஐ4 - 66 வயது வரை) பித்த காலம் என்றும் இறுதிப் பிராயத்தில் (67 - 99 வயது வரை) கபகாலம் என்றும் கூறப்பட்டுள்ளது.
81

Page 53
(ஆயுள்வேத மருத்துவத்தில் இதற்கு எதிர்மாறாக முதலில் கபகாலம் பிறகு பித்தகாலம் இறுதியில் வாதகாலம் என்று கூறப்பட்டுள்ளது) எனவே தான் சித்த மருத்துவத்தில் முக்குற்றங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது வளிமுதலாய மூன்று என்று கூறப்படுகிறது.
"மிகினுங் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று"
என்று திருவள்ளுவரும் வளியையே முன்னிறுத்திக் கூறியுள்ளார். இங்ங்ணம் வளியை முன்னிறுத்திக் கூறுவதற்குக் காரணம் என்ன வெனில் தோற்றக் கிரமத்தில் முதலில் சப்த தன்மாத்திரையும் அதிலிருந்து ஆகாயப் பரமாணுவும், பின் ஸ்பரிச தன்மாத்திரையும் அதிலிருந்து வளிப்பரமாணுவும், பின் ரூ ப த ன் மாத் தி  ைர யும் அதிலிருந்து தீப்பரமாணுவும், பின் ரசதன்மாத்திரையும் அதிலிருந்து நீர்ப்பரமாணுவும், பின் கந்ததன் மாத்திரையும் அதிலிருந்து நிலப்பரமாணுவும் உண்டாகின்றனவல்லவா? பஞ்சபூத அம்சப்படி வளியில் (வாதம்) வளி + ஆகாய பூதங்கள் அதிகமுண்டு. எனவே அது முதலில் உருவாகிறது. அழலில் (பித்தம்) தீபூதம் (சிலர்தீ + நீர் என்பர்) அதிகமுண்டு. எனவே அது அடுத்து உண்டாகிறது. ஐயத்தில் (கபம்) நீர் + நிலபூதங்களுண்டு. எனவே இறுதி யில் உண்டாகிறது.
வளியானது (வாதம்) முக்குற்றங்களில் முதலில் தோன்றுவ தாலும், ஏனைய உயிர் உடற்றாதுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி ஒழுங்கு படுத்துவதாலும் அதனை உயிர்ச்செயற்பாடு களின் ஆக்கத்திற்கு (படைப்புக்கு) காரணமாகக் கூறப்படுகிறது. அதனால் வாதத்துக்கு அதிபதியாகப் படைப்போன் (பிரம்மா) கூறப்படுகிறார்.
பித்தமானது உடற்றொழிற்பாடுகளுக்கு வேண்டிய சக்தியை வழங்கி (Metabolism), உடற்சூட்டையும் பேணி உதவுவதால் (உயிரனல்) அது காத்தல் என்னும் தொழிலைச் செய்வதாகவும் அதற்கு அதிபதியாகக்காத்தற் கடவுளான விட்டுணுவும் கூறப்படு கிறார்.
கபமானது மிகும்போது உயிரிழப்பை ஏற்படுத்துவதால் அதனை அழித்தலுக்குக் காரணமாகவும் அதற்குரிய கடவுளாக உருத்திரனை யுங் குறிப்பிடுவர்.
AJ Taib
காமம் (ஆசை), குரோதம் (கோபம்), லோபம் (கஞ்சத்தன்மை), மோகம் (எதன் மீதும் பிரியம் வைத்தல்), மதம் (கர்வம்), ம்ாற்சரியம் (அகங்காரம் / ஆணவம்), இடும்பை (உதாசீனம்), வேகம் (கடூரம்) என எட்டுவகையாம். d R.
82

17. பஞ்ச பூதங்கள்
1 Csör
வேறுபெயர் - நிலம், பிருதுவி, Ly6, until
வடிவம் - நாற்கோணம் நிறம் - பொன்னிறம் எழுத்து - லகாரம்
குறி - வச்சிரம் கடவுள் - அயன் (பிரம்மா) பண்பு - கடினம்
சுபாவம் - கிடத்தல்
செயல் - பொறுத்தல்
虚命
வேறு பெயர் - அப்பு. புனல், சலம்
வடிவம் - பிறை
நிறம் - பளிங்கு (வெண்மை) எழுத்து - வகாரம்
குறி - கோகநகம்
கடவுள் - மால் (விட்டுணு) பண்பு - நெகிழ்ச்சி சுபாவம் - பரத்தல் Luab - கட்டுண்டல்ܣܛ(2)
83

Page 54
வேறு பெயர்
வடிவம் -. நிறம் 67 (ԼքՖ 3:1 - குறி - கடவுள் --
பண்பு www.
voir Lisl’6)}LA) -
செயல் r
வளி
வேறு பெயர்
வடிவம் - நிறம் - எழுத்து - குறி ~~ கடவுள் - ւյ6ճծ Լվ fon» LT6ò - செயல் -
வான்
வேறு பெயர்
வடிவம் - எழுத்து - குறி ـــــــــــــــ கடவுள் ை பண்பு சுபாவம் ை செயல் -
- அக்கினி, தேயு, அழல், நெருப்பு, அனல்
முக்கோணம் சிவப்பு ரகாரம் சுவஸ்திகம் சிவன்
சுடுகை வனவுதல் உலர்த்தல்
* வாயு, காற்று அனிலம், கால், உயிர்
அறுகோணம் கறுப்பு
பகாரம்
அறுபுள்ளி சதாசிவன்
சவித்துத்திரட்டல் நிறைத்தல் விம்முதல்
- விண், ஆகாயம், வெளி, விசும்பு
Gull-th
அவ்
அமுத விந்து மகேசுவரன் இடம்கொடுத்தல் நிற்றல் போக்குதல்
84

18. எழுபத்தீராயிரம் நரம்புகளின் விபரம்
வேறு பெயர் - நாடி
ஓங்காரமான மூலாதாரத்திலிருந்து சூட்சுமமாய் எழும் எழுபத்
தீராயிரம் நாடி நரம்புகள் உடலெங்கும் ஒடி பின்னி பரந்திருக்கும் அவற்றின் விபரம்:
சிரசில் நரம்பு = 7,000 செவியிரண்டில் 3 ܒܗ : G00 (கன்னமுட்பட)
கண்களில் is 4,000 மூக்கில் is 3,330 பிடரி, கீழ், மேல் தோளில் a 5,000 கழுத்தில் 000, 6 ܒܩ கையிரண்டில் 090 தொண்டையில் ܚܗs 3 ,000 தொண்டையின் கீழும் தொப்புழ் மேலும் 6 1 69 9 ܒܗ விலாவில் .0 0 0 : است முதுகுதண்டில் 8,000 ܒܗ
வயிறு, லிங்கத்தில் 0 00 7 ܒܚܒ கணைக்கால் பாதம் தொடை 6:54 : 8 ܡܗ மூலத்தில் 0 0 0 1 =س
72, ooo
85

Page 55
19. சுவாசம்
வேறுபெயர்: வாசி, சரம், மூச்சு
சரவோட்டம் என்பது பிராணவாயுவின் இயக்கமாகும். இதில் பிராணவாயுவை உள்ளெடுப்பதை பூரகம் என்றும் (இதன் மாத்திரை யளவு 16 ஆகும்), அதை உடலுள் நிறுத்தி வைப்பதை கும்பகம் என்றும் (இதற்கு மாத்திரையளவு 32 ஆகும்), பின்னர் மெதுவாக வெளிவிடுவதை இரேசகம் என்றும் (இதற்கு மாத்திரை அளவு 16 ஆகும்) கூறுவர்.
சரவோட்டம் அல்லது வாசியோட்டமானது ஒரே நேரத்தில் ஒரு மூக்குத்துவாரத்தினாலேயே நடைபெறும். இதில் இடது மூக்குத் துவாரத்தால் நடக்கும் சுவாசத்தை இடகலை என்றும், வலது மூக்குத் துவாரத்தால் நடைபெறும் சுவாசத்தை பிங்கலை என்றுங் கூறுவர். இவை ஐந்து நாழிகைக்கு (2 மணித்தியாலம்) ஒரு தடவை மாறி மாறி நடக்கும். திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை களில் அதிகாலை நான்கு மணி தொடங்கி, ஆறுமணி வரை இட கலையாகச் சுவாசம் நடக்கும். மற்ற நாட்களில் இதே நேரத்தில் பிங்கலையாக (வலது மூக்குத் துவாரத்தால்) சுவாசம் நடக்கும் , வலது நாசியில் சரவோட்டம் பழகுவது நன்மை பயக்குமாம். இடது புறம் சரிந்துபடுப்பவரில் அதிகாலையில் வலது நாசி வழியாக சுவாச நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே குறிப்பிடப்பட்டது போன்று சுவாசத்தின் போது பன்னிரண்டங்குலம் வெளிப்போந்து, மீண்டும் எட்டங்குலம் உள்ளிழுக்கப்பட்டு, மீதி நான்கு அங்குலம் வீணாய்ப் (பாழாய்) போகும். நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு சுவாசம் நடைபெறும். அதன் விபரம் வருமாறு:
86

d
மூலாதாரத்தில் சுவாசம் = 699
சுவாதிட்டானத்தில் , 6000 ۔ மணி பூரகத்தில் = 6 000 அனாகதத்தில் P 000 6 ܒ விசுத்தியில் ... = 1000 ஆக்கினையில் as 1 000 நாதாந்தத்தில் = 1 000
21,600
இதில் 14,400 சுவாசம் உட்சுவாசமாயும், 7, 200
சுவாசம்
வெளிப்போந்து பாழாய்ப் போகுமாம் இங்ஙனம் பாழாய்ப்போகும் சுவாசத்தை கட்டுப்படுத்தி பிராணசக்தியை உடலினுட் தேக்கும் பயிற்சி முறையே பிராணாயாமம் அல்லது மூச்சுப் பயிற்சி எனப்படும்.
அதன் மூலம் உடலின் பிராண சக்தியையும்
முடியும் என சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்.
* பன்னிரண் (டு) அங்குலம் பறிந்திடும் பிராணன் பின்னதின் நான்கும் பிரிந்துபோம்; அதனால் ஆயுளும் குறைந்திட்(டு) ஆக்கையும் தளர்ந்து சாயும் என்(று) உரைத்துச் சாகா(து) இருக்க நாடி ஒர் பத்தும் நாடி, நாடிகள் புக்(கு)"
"ஓடிய வாயு ஒருபதும் தேர்ந்து
சொன்ன நாடிகளிற் சுழுமுனை நடுவாம் இன்னதின் பக்கத்(து) இடை பிங்கலையாம் அக்கினி திங்கள் ஆதவன் கலைகள் புக்க முச்சரமும் போய் மீண்(டு) இயங்கும்"
(s S AAM qSSA MMAS Aqqq MSAq MSS MAM S SMSSM Mq Sqqqqq qLLL MAM MMM SS MLLLMM MMMM LLLMMMMS MM MMM
இருபத்தோராயிரத்(து) அறுநூறாய் மருவி நாள் தோறும் வளர் சுவாசத்தைச்"
"சங்ங் என வாங்கிச் சமனுறக்கும்பித்து
அங்ங் (என்று) எழுப்பும் அசபையும் அருளி'
(திருச்சிற்றம்பல நாடிகள் திருச்செந்தூர்க் குமரன்
87
பேணிப்பாதுகாக்க
GoFuir
இயற்றிய
அகவல்

Page 56
20. பிராணசக்தி
சித்தமருத்துவத்தில் உடல் இயங்குவதற்கு ஆதாரமாக பிராணசக்தி, குண்டலினிசக்தி, சீவசக்தி என்னும் மூவகை சக்திகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இதில் பிரானசக்தியானது சுவாசமூலம் கிடைக்கப்பெறுவது. இச்சடவுலகில் உயிர் உடலில் தரித்து நிற்பதை எடுத்துக் காட்டுவது. இப்பிராணசக்தியானது ஆறு ஆதாரங்களிலும் பரவி அவ்வவ்விடங்களிலுள்ள உறுப்புக்களை வன்மைப்படுத்தி மனத்தையும் ஒரு நிலைப்படுத்தி, அறிவினை (ஆத்மாவை) அறிந்து உடலை அழியாதிருக்கச் செய்வதற்கும் உதவும். எனவேதான் இப்பிராணசக்தியை சரியானபடி நடாத்துவதற்கு பிராணாயாமம் என்னும் சரப்பழக்கம் அல்லது சுவாசப்பயிற்சி கூறப்படுகிறது. சுவாசம் சரியாக நடைபெற்றால் பிணி, «Մ)ւնԿ, சாக்காடு இன்றி என்றும் இளமையோடிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், பிராணாயாமம் சரிவர பழகிவந்தால் தேகத்திலுள்ள எழுபத்தீராயிரம் நாடிநரம்புகளையும் கண்டுணரலாம் என்று ஞானசரநூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளதும் இங்கு நோக்கற்குரியது.
**சொல்லிய வாதனங்கள் பலவற்றுணன்றிற்
றுய்ய பங்கயாதன மாயிருந்து தோன்றும் அல்லலறுத் தேகமனமாக்கி யொட்டி
யான பந்த பிராணாயமங்கள் பண்ணி எல்லையிலுந்தியின் கீழாமெழுத்தைப் பற்றி
எழுபத்தீராயிரம் நாடியிலீரைந்து நல்லனவாமதில் மூன்று நாடியோடு
நலந்தரும் பேரவ்வெழுத்தை நவிலப்பாரே'
அதாவது, பத்மாசனத்தமர்ந்து மனத்தை ஒரு நிலைப்படுத்தி பிராணாயாமம் பயின்றுவரின் உந்தியின் கீழ்ப்பகுதியில் மூலாதாரத்
88

துள்ள ஓங்காரமாம் (பிரணவம்) எழுத்தைப்பற்றி எழுபத்தீராயிரம் நாடிகளிருப்பது புலனாகும்; அந்நாடிகளுள் முக்கியமானவை தசநாடிகளாம்; அத்தசநாடிகளுள் முக்கியமானவை இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றுமாம். அவை முறையே அபாணன் , பிரானன். சமானன் ஆகிய வாயுக்களால் தூண்டப்பெற்று வளி, அழல், ஐய நாடிகளாக மாறும். இத்தத்துவத்தை நேரில் காண "சரப்பயிற்சி" இடம் கொடுக்கும் என்கிறார்.
இங்கு கூறப்பட்ட பிரணவ எழுத்துப்பற்றி மேலும் விரிவாக அகத்தியர் தனி ஞானத்திலுள்ள பாடல் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளது.
**அண்ணான உச்சி வெளி தாண்டி நின்று உமையவளும் கணபதியு முந்தியாகி விண்ணொளியாமம் பரமாம் ஓம் அவ்வும் உவ்வும்
விதித்த பரமொருவருக்கு மெட்டா தப்பா பண்ணான உண்ணுயிர்தான் சிவமதாச்சு
பாற்கடலில் பள்ளி கொண்டோன் விஷ்ணுவாச்சு கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால்
கலந்துருகி யாடுமடா ஞானமுற்றே**
அதாவது, "ஓம் அவ்வும் உவ்வும்" ஆகிய எழுத்துக்களே உயிருக்கு ஆதாரமான பிரணவமாகும். சீவாத்மாவே பரமாதமா அதாவது பிரம்மத்தின் மாயத்தோற்றமே. சீவாத்மா என்பது அத்வைதிகளின் (வேதாந்திகளின்) கருத்து. சீவாத்மாவும், சிவமும் (பரமாத்மா) வேறு வேறு என்பதும் அதில் பரமாத்மா (சிவன்) ஏ கன் என்பதும் சீவாத்மா அநேகன் என்பதும் சைவசித்தாந்திகள் கொள்கை, அவ்விதமே பரமாத்மா (விஷ்ணு) ஒன்று என்பதும் சீவாத்மா அநேகன் என்பதும் விசிட்டாத்வைதக் கொள்கை. இங்கு பிராணாயமப் பயிற்சியினால், அறிவு வடிவான சீவாத்மாவை அறிய முடியும். அவ்விதம் தன்னையுணரும்போது பரமாத்மாவும் புலனாகும் என்பதாம். இப்பாடலின் மூலம் சித்தர்களின் வேதாந்த, சித்தாந்த சமநோக்கும் வெளிக்காட்டப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
ஒம் என்னும் பிரணவ மந்தி ரத்தில் அ, உ, ம என்ற மூன்று ஒலிகளும் சேர்ந்துள்ளன. அவற்றை அகார, உகார, மகார மாத்திரைகள் என்றுங் கூறுவர். அவற்றை முறையே சூரியன்,
சந்திரன், அக்கினிக்கு ஒப்பிடுவதுமுண்டு.
இடகலை (சந்திரகலை , பிங்கலை (சூரியகலை), சுழு முனை (அக்கினி) ஆகியவற்றின் இயக்கம் நின்றுபோதலே மரணம் என்று கூறலாம. அதாவது பிராண சக்தியின் அல்லது பிராணவாயுவின் இயக்கம் நின்று போதலான் இச்சடவுடம்பினின்று சீவன் வெளியேறி விடுகிறது என்பதாம். மறுதலையாக இப்பிராணவாயு அல்லது பிராண சக்தியின் இயக்கத்துக்கு சீவன் அல்லது ஆத்மாவே காரண மாகிறது. எனவே, சீவனானது இச்சட உடலை பிராணசத்தியின் இயக்கத்துக்கு சீவன் விட்டுப் பிரிந்து செல்லும் போது இப் பிராணவாயுவின் இயக்கமும் நின்று போய் விடும் என்பதாம். O
89

Page 57
21. சீவசக்தி
உடலில் உயிர் தரித்திருப்பதற்குக் காரணமாகவுள்ள சக்தியை சீவசக்தி (ஜீவசக்தி) என்றுங்கூறுவர். அதாவது சீவனைத் (ஆன்மாவை) தாங்கும் சக்தி சீவசக்தியாகும். உயிரைத்தாங்கும் இச்சக்தியையே உயிர்த்தாது, சீவதாது, தாது, நாடி, ஆத்ம சக்தி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். உயிரானது (ஆத்மாவானது) இராசதம், தாமதம், சாத்துவிகம் என்னும் முக் குணங்களூடாக மனத்தையும், (வளி (வாதம்), அழல் (பித்தம்) , ஐயம் (கபம்) என்னும் முத்தாதுக்களூடாக உடலையும் இயக்கு விக்கிறது. இம்முக்குணங்களும், முத்தாதுக்களுமே சிவசக்திக்கு ஆதாரமாயுள்ளன என்று கூறலாம்.
நிர்க்குன நிலையில் பரம்பொருளாக உள்ள சிவம் சகுண நிலையில் தானே பிரம்மனாகவும், தானே விஷ்ணுவாகவும், தானே உருத்திரனாகவும் நின்று முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்வதுபோல ஆன்மாவானது இச் சடவுடலில் தானே வளியாகவும், தானே அழலாகவும், தானே ஐயமாகவும் நின்று ஆக்கல் (Anabolism), காத்தல் (Metabolism அழித்தல் (Catabolism) ஆகிய முத்தொழில்களையும் புரிகின்றது எனலாம். அதாவது உயிர்த்தாது அல்லது சீவசக்தி எனப்படுவது ஒன்றேயாகும். அதுவே தொழில் காரணமாக மூன்று பிரிவுகளாகச் செயற்படுவது போல் தோற்றுகிறது.
எனவே, தாது என்றும் நாடி என்றும் சித்தமருத்துவத்தில் கூறப்படும் வளி, அழல், ஐயம் ஆகிய மூன்றும். சீவசக்தி என்ற ஒன்றின் மூன்றுவித வடிவங்களேயாகும். இவை மனிதனின் ஸ்தூல சரீரத்துடனும் சூக்கும சரீரத்துடனும் தொடர்புடையன.
90

உயிர்த்தாதுவாகிய சீவசக்தியானது எவ்விதம் வாத பித்த கப மாகப் பிரிகிறது என்று விளக்குவாம். ஏற்கெனவே பிராண சக்தியில் குறிப்பிட்டது போன்று உந்திச்சுழியிலிருந்து எழுபத்தீராயிரம் நாடி நரம்புகள் தோன்றி உடல் முழுவதும் பரவியுள்ளன. இவற்றுள் தசநாடிகள் முக்கியமானவையாகும். அவற்றுள் இடகலை, பிங்கலை சுழுமுனை மூன்றும் முக்கியமானவை. இவை முறையே அபானன், பிராணன், சமானன் ஆகிய வாயுக்களின் கூட்டுறவால் தொழில் புரியும் போது வளி, அழல், ஐயம் ஆகிய மூன்று சக்திகளும் (தாதுக்களும்) தோன்றுவதாகக் கூறப்படுகிறது. இவை முறையே வளி, தி, நீர் பூதங்களின் செயல்களைப் பிரதிபலிக்கும் இவற்றுடன் மேலும் விண் பூதமானது வாயுவுடனும், மண் பூதமானது நீருடனும் சேரும். எனவே வளி (வாதம்)யானது வளி + விண் பூதங்களையும் தீ (பித்தமானது) தீ பூதத்தையும் (சிலர் இதனுடன் நீரையும் சேர்த்துக் கூறுவதுண்டு) ஐயமானது நீர் + மண் பூதங்களையும் சார்ந்தவையாக உள்ளன என்று கருதலாம்.
நாடிப்பரீட்சையானது சித்தமருத்துவத்தில் இதயத்துடிப்பு எண்ணிக்கையை மட்டும் கணிப்பதற்கான ஒரு முறையாக மான வர்கள் கருதக்கூடாது. சீவசக்தியின் நிலையைக் கண்டறிவதற்கான ஒரு வழியே நாடிப்பரீட்சையாகும். எனவே இதனைச் சீவ தாதுப் பரீட்சை என்றுங் கூறலாம். எனவே தான் நாடியைப்பற்றி சதக நாடி நூலில் பின்வருமாறு நாடிநுட்பம் விளக்கப்பட்டுள்ளது.
**நாடி என்றால் நாடியல்ல நரம்பில் தானே
நலமாகத் துடிக்கின்ற துடி தானு மல்ல நாடி என்றால் வாதபித்த சிலேற் பனமுமல்ல
நாடி எழுபத்தீராயிரந்தானுமல்ல நாடி என்றால் அண்ட ரண்டமெல்லாம்
நாடி எழுவகைத் தோற்றத்துள்ளதாய் நின்ற நாடியது யாராய்ந்து பார்த்தா ரனால்
நாடியுறும் பொருள் தெரிந்து நாடுவாரே??
எனவே, அறிவாகிய ஆன் மா  ைவ நாடியறிய முற்படுவதே நாடிப்பரீட்சையின் தாத்பரியமாகும். அதற்கு சீவசத்தியின் நிலை உதவும் என்க.
எனவே, நாடிப்பரீட்சையில் கைதேர்ந்த ஒருவரே கை நாடி பார்த்து உடலில் உள்ள சீவதாதுவின் நிலை, ஸ்தூலமான, குக்கும மான இச்சரீரத்தின் நிலை . 96 தத்துவங்களின் நிலை போன்ற பல விடயங்களைக் கண்டறிந்து நோயையும் அதற்கான பரிகாரங் களையும் துல்லியமாகக் கூற முடி யும். இது சாதாரணமக்கள்
9

Page 58
நி  ைல யி ல் நின்று செய்யக்கூடியதொன்றன்று. பிராணாயாமம், யோகப்பயிற்சி, இறையருள் என்பவற்றினாலேயே இது சாத்தியப் படும். எனவே, சித்த மருத்துவ மாணவர்கள் தம்மை அத்தகைய நிலைக்கு உயர்த்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பிரானசக்தி, சீவசக்தி இரண்டுக்கும் நுட்பமான வேறுபாடு களுண்டு என்பதையும் மாணவர்கள் விளங்கிக் கொள்ளல் வேண்டும். பிராணன், சீவன் இரண்டும் ஒரு பொருட் கிளவியாக இருந்தபோதிலும் இங்கு பிராணசக்தி என்று கூறப்படுவது சரவோட்டத்தையே குறிக்கும். சீவசக்தி என்பது உயிராகிய ஆத்மாவைத் தாங்கி நின்று அதனால் இயக்குவிக்கப்படுவதாகும். அதுவே வாதபித்த கபங்களாக வெளிக்காட்டப்படுகிறது. சிலர் பிராணசக்தி சீவசக்தி இரண்டையும் ஒன்று என்று கருதுவர். இவ் விடயத்தை அவரவர் சொந்த அறிவுக்கு விட்டுவிடுவதைத் தவிர வேறுவழியில்லை, இந்நூலாசிரியரைப் பொறுத்தவரையில் குருமூலம் கேட்டறிந்ததையே இங்கு பிரானசக்தி சீவசக்தி என்று குறிப்பிட நேர்ந்துள்ளது.
சித்தர்கள் சீவதாதுவைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு பத்து இடங்களை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளனர். அவை மர்மஸ்தானம் (காமியம்) உந்தி, மார்பு, காது, மூக்கு, கழுத்து (கண்டம்) கை (கரம்) புருவம், உச்சி கணுக்காலின் உட்புறம் என்பனவாம்.
"தாதுமுறைகேள் தனித்தகுதிச் சந்தோடு
ஒதுறு காமியமுந்தி நெடுமார்பு காது நெடுமூக்குக் கண்டம் கரம் புருவம் போதுறுமுச்சிபுகழ் பத்தும் பார்த்திடே"
- திருமூலர்நாடிநூல்
'கூர்ந்திடவே கன்னமது சுழியிற்றானும்
குறிப்பான கைகளிலும் மர்மஸ்தானந்தன்னில் சார்ந்திடவே கணுக்காலினுட் புறத்தில் சார்வாகப் பெருவிற்கால் மேலதாக
SLLSLLLLLLLL 0L0SLSSLSLLLLL LSLSLSLSL LSL LSLLLLLLLL LS0L0LLLSLSL LSLSLSL SLLLSLLLLLSLLLLL LSL 00LLLSL LLTLLSLLLS L0L0L LLLLL LLLLLL i
92

22. குண்டலினி சக்தி
குண்டவினி அல்லது சிவ அனுபூதிநெறிபற்றி சித்தர்களே அதிகமாகக் கூறியுள்ளனர். குண்டலினி என்பது ஆன்மாவில் சுருண்டு, முடங்கி உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனோசக்தியாகும். இங் B ன ம் அறியாமை நிலையில் சுருண்டு உறங்குவதாலேயே அதற்குக் குண்டலினிசக்தி / குண்டலி என்று பெயர். இச்சக்தியை தட்டி எழுப்பி மேலே கிளப்பி சகஸ்ராரத்தில் உள்ள சிவத்தோடு அதனை இரண்டறக் கலந்துவிடச் செய்வதே கு ன் ட லி னி யோகத்தின் குறிக்கோளாகும். அதாவது சக்தியும் சிவமும் இரண்டறக் கலந்து பேரின்பமடையும் ஒரு நிலையாகும். இங்ஙனம் குண்டலினி சக்தி பலபடிகளைக் கடந்து ஆதி உள்பொருளான சிவத்தை அடைவதே முத்தியாகும். குண்டலினி சக்தியையே சுத்தமாயை என்றுங்கூறுவர், (சுத்த மாயையே பரமாத்மாவுடன் நேரடியாகத் தொடர்பு கொள்கிறது என்பதை நினைவிற்கொள்க.) எனவே, சுத்த மா  ைய யா கி ய குண்டலினி மூலமே ஆன்மா தன்னையும் சிவத்தையும் அறியமுடியும்.
குண்டலினியானது அருவமான (சூட்சுமமான) நிலையில் வீணாதண்டு அல்லது மேருதண்டம் என்று அழைக்கப்படும் LLLLLL S LLLLLL ST SLL T T TTL TLLT LLLL TTTT S TTS T T T TTT இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வீணா தண்டின் அடியிலிருந்து குண்டலினி ஊடுருவிச் செல்லும் (மேல்நோக்கிச் செல்லும்) அறிவுமையங்கள் ஆறு அமைந்துள்ளன. இங்கு அறிவு என்பதை ஆன்மா என்றுணர்க. அவை முறையே மூலாதாரம் (முதல்நிலை) சுவாதிட்டானம் (இரண்டாம்நிலை), மணிபூரகம் (மூன்றாம்நிலை). அனாகதம் (நான்காம்நிலை). விசுத்தி (ஐந்தாம்நிலை), ஆக்கினை (ஆறாம்நிலை) என்பனவாம். இவற்றுக்குமேல் சகஸ்ராரம் என்னும் ஒரு சக்கரமும் உண்டு. இ வ. ற் று ஸ் மு த ல் ஐந்தும்
93

Page 59
பஞ்சபூதங்களின் மையம். ஆறாவது மனம் இருக்கும் பகுதி. சகஸ்ராரம் பரமசிவத்தின் உறைவிடம். அதுவே மிகவுயர்ந்த அறிவானந்தத்தின் இருக்கையாகும்.
"ஆறாதாரத் தெய்வங்களைநாடு அவர்க்கும் மேலான ஆதியைத்தேடு கூறான வட்ட ஆனந்தத்திற்கூடு
கோசம் ஐந்தும் கண்டு குன்றேறி ஆடு'
(8à . Lumr...)
இவ்வாறுமையங்களும் ஆறா தா ரங்க ள் எ ன் று ம், உணர்வுநிலை (சைதன்யம்) என்றும், சக்கரங்கள் என்றும், படிநிலை என்றும் அழைக்கப்படும். இவை ஒவ்வொன்றும் ஐந்துகோசங்களிலும் தனித்தனி உள்ளதாகக் கூறப்படுகிறது. மனம், ஆத்மா முதலியன எவ்விதம் சூட்சுமமானவையோ அதுபோலவே இவ்வாறாதாரங்களும் சூட்சுமமானவை என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளல் வேண்டும். சிலர் கூறுவது போல இன்றை ய விஞ்ஞானம் குறிப்பிடும் நரம்புக் கூட்டங்கள் (Nerve Plexuses), நரம்புகள் (Nerves) முதலியவற்றுடன் ஒப்புநோக்க முற்படின் பிழையான விளக்கமே ஏற்படும்.
ஆறாதாரநிலைகளில் முதல் மூன்றுநிலைகளும் இச்சையுடம்பு அதாவது ஸ்தூல உடம்புடன் சி ம் பந்த ப் பட்ட  ைவ யாக க் கருதப்படும். இன்னொருவிதத்தில் சொல்வதானால் இவைமுன்றும் இச்சடவுலகுடன் சம்பந்தப்பட்டவையாம். சிலர் இம்மூன்று: நிலைகளையும் கீழாலவத்தை என்று கூறுவர். மேலும் இம்மூன்று நிலைகளையும் உள் ள டக் கி ய தே தீமண்டலம் அல்லது அக்கினிமண்டலமாகும். இம்மூன்றுநிலைகளும் முறையே பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் (சுவர்க்கலோகம்) என்பவற்றுடன் ஒப்பிடப்படுகின்றன. ஆன்மாவானது தான் செய்யும் வினைகளின் பயனாகவே (இச்சையால்) அதனை அனுபவித்தற்பொருட்டு பிறவி எடுக்கின்றது என்கிறது சைவசித்தாந்தம். அவ்விதம் eg,6ärt ofr தனது இச்சைகளை அனுபவித்தற்பொருட்டே கடவுள் தனு கரண புவன போகங்களைப் படைத்து உதவுகிறார். கீழாலவத்தை எ ன ப் படுகி ற முதல் மூன்று நி  ைல களும் சகலராகிய (மும் மலத்  ைத யுடைய வர்) எமக்கு (மனிதர்க்கு) உரிய நிலைகளாகவுள்ளன. ஆயினும் இந் நிலை களை நாம் உணரமுடியாதபடி மாயையானது எமது உணர்வை (சைதன்யத்தை) மயக்கி பூலோகம் முதலிய புவனபோக நுகர்ச்சியில் சிக்கவைக்கிறது. அதனால், பிறவி எடுத்ததன் பயனை நாம் -9յ60ւ-ազpւգաուohi)
94

செய்து விடுகிறது. இதனையே கடுவெளிச் சித்தர் பின்வரும் பாடலில் சூசகமாக எடுத்துரைத்துள்ளார்.
"நந்தவனத்திலோராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந் தானொரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி".
(நந்தவனம்  ைபூலோகம் முதலி ய நுகர் ச் சி ப் பொருள் ஆண்டி - ஆன்மா, குயவன் - இறைவன், தோண்டி - சரீரம்.)
குண்டலினி சக்தி எந்த ஆதாரத்தில் தங்கி யுள்ள ே g5 IT அதைப்பொறுத்து மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய புவனம். (உலகம்) வேறுபடும். அதாவது நாம் எல்லோரும் ஒரே இடத்தில் இருப்பதுபோல் தோன் றி னா லும் உண்மையில் வெவ்வேறு உலகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம்.
அனாகதம், விசுத்தி, ஆக்கினை ஆகிய மூ ன்  ைற யும் மேலாலவத்தை என்றுகூறுவர். இவை குக்கும (அருவ) உடலுடன் சம்பந்தப்பட்டவை. இம்மூன்று நிலைகளையும் முறையே மகாலோகம், ஜனலோகம், தபலோகம் என்பவற்றுடன் ஒப்பிடுவர். இந்நிலை
ஏற்படுகிறது. தபலோக நிலையை ஒரு சிலராலேயே அடைய முடியும். இந்நிலையில் தன்னையும் சூழலையும் ஒருவரால் சரிவர அறியமுடியும் . ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் பதினெட்டு அங்குல சுற்றளவில் ஏழு உலகங்கள் முதலியன உண்டு என்று கூறப்படுகிறது. இவற்றின் செயற்பாட்டையெல்லாம் ஜனலோக, தபலோக நிலையையடைந்தவர்களால்தான் உணரமுடியும். அவ்விதம் உணர்ந்து, அறிந்தவர்கள் சொன்னதே சித்தமருத்துவமாகும . எனவேதான் அது இறைவனால் சொல்லப்பட்டது எனப்படுறது.
சித்தமருத்துவன் நோயாளியை இந்த ஏழு உலக நிலைக்கு (அதாவது ஆன்மீகத்தின் உச்ச நிலைக்கு) படிப்படியாக உயர்த்த முற்படுகிறான். எனவே, தனக்கும், உலகுக்கும் நன்மை தரத்தக்க வாழ்வு வாழ்கிறான்.
95

Page 60
யோகசாதனைளை அடிப்படையாகக் கொண்ட ஆதாரபடி நிலை வளர்ச்சிக்கும் சித்தமருத்துவத்திற்கும் என்ன தொடர்பு (அல்லது ஏன் இந்தத் தொடர்பு என்ற ஐயம் மாணவர் மனதில் எழக்கூடும். அதற்கு விடை உடம்பு ஆரோக்கியமாக இருந்தால்தான் யோகசாதனைகளில் ஈடுபட்டு மனிதன் இந்நிலைகளை அடைய முடியும் என்பதாம். எனவே, ஒவ்வொரு ஆதாரநிலை, தினை குறிஞ்சி, மருதம் முதலியன) காலம் பருவகாலங்கள் வயது முதலியன) போன்றவற்றைக் கருத்திற்கொண்டு நோய்க்குச் ஒஇர்சையளிக்கவேண்டும் என்பதே சித்த மருத்துவக் கோட்பாடாகும் இங்கு முக்கியமாக காயகற்பம், அட்டாங்க யோகம், மணிமந்திர அவுடதம், பூநீர், செயநீர், திராவகம் முதலியன சித்தர்களால் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆதாரத்துக்கும் தனித்தனி வடிவம், ஒலி (அட்சரம்) உலகம் (புவனம்), கடவுள், நிறம் என்பன கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக வடிவமும் ஒவியும் கொடுக்கப்பட்டமைக்கு விளக்கம் யாதெனில், ஒலிகளின் பரிணாமமும் வடிவங்களின் பரினாமமும் ஒரே படிமுறையின் இருவேறு அம்சங்களாதலினால் grgğT##;. மூலாதாரத்திவிருந்து "ஓம் நமசிவாய" என்ற அதியுயர் பஞ்சாட்சர மந்திரம் இங்கு ஒலிவடிவில் உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டதே சித்தர்களின் மணிமந்திர அவுடத சிகிச்சையில் வரும் மந்திரமாகும்.
ஒருவரின் குண்டலினி சக்தி எந்தச் சக்கரத்தில் தங்குகிறதோ, அந்தச் சக்கரத்தை சார்ந்ததாக அவரின் சைதன்யம், உலகம் முதலியன பிரதிபலிக்கும். அந்த ஆதாரப் பொருளாக , தேவைகளாக அந்தச் சக்கரத்துக்குரிய தெய்வம் மணிதனை உந்தி அவ்வுலகிற் செயற்படவைக்கும். ஒவ்வொரு சக்கரத்துக்குமுரிய அதிட்டதெய்வ மாக அப்புவனப் பொருள்களில் மறைந்து ஆத்மா இருக்கும் சைதன்ய மும் அந்த ஆதார எல்லைக்குள் அடங்கி செயற்படும் அந்த ஆதார LP&Gör போகங்கள் அனுபவிக்கப்பட்டு, தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பொழுது அந்த ஆதாரப் பொருள்கள் மீது விருப்பு வெறுப்பற்ற நிலை (இருவினை ஒப்பு) ஏற்படுகிறது. அந்த உலகத்தைப் பற்றிய அறிவு அல்லது ஞானம் பிறக்கிறது. சைதன்பம் சற்று விருத்தியடைந்து விழிப்புணர்வு ஏற்படுகிறது. ஆத்மாவை மறைத்திருத்த திரை சிறிது நீக்கப்படுகிறது. இந்நிலையில் அந்த ஆதாரத்தேன்வ பூர்த்தியாகிறது. அதற்கு குறியீடாக அவ்வாதாரத்தாமரை இதழ்கள் விரிந்து மலரும். எனவே ஆத்மா அடுத்த ஆதாரநிலையை சென்றடைகிறது. இவ்விதம் ஒவ்வொரு ஆத ர மா க கடந்து இறுதியில் சகஸ்ரார கமலத்தில்
96

-சகரேந் |பரமபதிே
ஆறாதாரங் இேடு ேேது முக்திய PET-34:s. F.
LL

Page 61

உள்ள பரமாத்மாவை ஆத்மா சென்றடைகிறது. இந்நிலையே விடுதலை அல்லது முக்தி எனப்படுகிறது.
இவ்விடத்தில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் யாதெனில் ஒருவரின் முந்தைய பிறவிகளில் செய்த கர்மவினை, இம்மையில் செய்யும் வினைகள் என்பவற்றைப் பொறுத்து ஒருநிலையில் (ஆதாரத்தில்) இருந்து மறுநிலைக்கு முன்னேறுவது அல்லது கீழிறங்குவது தங்கியிருக்கும் . எனவே, ஆதார நிலைகளூடாக மேலேறுவதைப்போலவே, சறுக்கி விழவும் (ஆன்மீக சாதனையில் பின்னடைவு) ஏற்பட இடமுண்டு என்பதாம்.
đ}6)Hỹ. TT[]
ஸ்தானம் - உடலின் மத்திய ஸ்தானத்தில் குதத்துக்கும்
கருவாய்க்கும் இடையில் அமைந்துள்ளது.
வடிவம் - குண்டலி வட்டமாய்
அதனுள் முக்கோணம் அதன் நடுவில் நாலிதழ் தாமரை
எழுத்து - அத்தாமரையின் நடுவில் "ஒம்" எழுத்து
(ஓங்காரம்)
நிறம் - செந்நிறம்
கடவுள் - பிள்ளையார் + வல்லயை சக்தி
பஞ்சபூதம் - பிருதுவி
'செப்பிய மூலாதரந் தெரிவருஞ் சூட்சமாகும்
ஒப்பிலா முக்கோணத்தாய்க் கமலநாலிதழ் கொண்டோங்கும் தப்பிலா நடுவோங் காரந் தன்னிலோர் தம்பந்தோன்றி அப்படிச் சிரமட்டாக வடுத்திடு மேருவாக**
"மேருவதான வீட்டில் விளங்கிய கணேசன் றன்பாற்
சேரும் வல்லபையினோடு சிறந்து வீற்றிருந்து வாழ்வன் ஆருமங் கறியொனா வீடருங்கதி கொடுக்கும்வீடு நேரிலா மூலவீடு நித்தியமான வீடே"
(ப. சே. அ. பா)
மூலாதாரநிலையில் ஒருவரின் உணர்வுகள் அன்னமயகோசத்தில் நிலைபெற்றிருக்கும். எனவே இச்சடவுலக வாழ்க்கைக்கு அடிப்படை யான உணவு, உடை, உறையுள் முதலியவற்றிலேயே அவரின் ஈடுபாடு ! செயல் இருக்கும். இன்னொரு விதத்தில் சொல்வதாயின் ஈடணை என்று கூறப்படும் மண், பெண், பொன்னாசைகளை
97

Page 62
நோக்கியதாக மாயை அவரை மயக்கி வைத்திருக்கும் நிலை இதுவாகும். இவற்றை அனுபவித்து திகட்டிய நிலையிலேயே மனிதன் நல்லவை கெட்டவைகளை உணர்ந்து தன்னைப் பற்றி (தன் ஆத்மாவைப் பற்றி) சிந்திக்கத் தொடங்குவான். இதுவே ஆன்மீக சாதனையின் முதற்படிநிலையாகும்.
36a ĝiŝ LT60 Ö
ஸ்தானம் - மூலாதாரத்துக்கு இரண்டு விரற்கடை மேல்
பாலுறுப்புகளுக்கு (குறிப்பு) அருகில் வடிவம் - நாற்சதுரம்
அதனுள் ஆறிதழ் தாமரை எழுத்து - அதன் மத்தியில் 'ந' எழுத்து (நகாரம்) நிறம் - பொன்னிறம் கடவுள் - பிரம்மா + சரஸ்வதி
பஞ்சபூதம் - -9յւնւլ
"வீடிது தனக்கு மேலாய் விளங்கிய சுவாதிட்டானம்
கூடிதழாறு நான்கு கோண நல்லெழுத்தைக் கொள்ளும் பீடுறு துரியாதீதப் பெரும்பதி பிரமனோடு நாடிய வாணி யாங்கே நயந்துறைந்திடுவராமே”
(.rTلy Lوے . تمی تق) .L.J)
காமம், மோகம் முதலிய உட்பகைகளை வென்று கடக்கும் சக்கரம் இதுவாகும். எனவே, இந்த ஆதாரநிலையில் உள்ளவர்கள் பாலியல் இன்பத்தில் நாட்டங்கொண்டவராய் அதில் மூழ்கி இருப்பர். சிற்றின்பமும் அதன்பேறாக ஏற்படும் பிறப்பிறப்புகளுக்கும் இந்நிலை வாழ்க்கையே காரணமாம். எனவே தான் படைத்தற் கடவுளான பிரம்மன் இந்த ஆதாரத்துக்கு அதிபதியாகக் கூறப்பட்டுள்ளார். (குறிப்பு புராணங்களில் சப்தலோகங்களில் பிரம்மாவின் உலகமாக சத்தியலோகம் கூறப்படுவதுண்டு. ஆனால் ஆதாரங்களை ஒட்டி சப்தலோகங்கள் கூறப்படுகையில் சத்தியலோகமானது பிரபஞ்ச தோற்றத்துக்கு நிமித்த காரணனாத உள்ள பரமசிவனுக் குரியதாக கொள்ளப்படுகிறது. அதுவே தபலோகத்துக்கு மேலுள்ளது அதுவே
கைலாசம் அதுவே சகஸ்ராரம்)
எனவே சிற்றின்பநிலையை விடுத்து பேரின்ப நிலையை நோக்கிய நகர்வே அடுத்த ஆதாரமாகும்.
98

DGOfy as
ஸ்தானம் - நாபி. இதனை உந்திக்கமலம் என்றுங் கூறுவர்.
வடிவம் - மணியுருவானது மூன்றாம் பிறை?
பத்திதழ்த் தாமரை
எழுத்து - ம (மகாரம்)
நிறம் - படிகநிறம்
கடவுள் - விட்டுணு + இலக்குமி
பஞ்சபூதம் - தேயு
tunr 6) :
* உறைந்தவப்பதிக்கு மேலாயுறுமணி பூரகந்தான் பிறிந்திடு மிதழிரைந்து பிறை வடிவாமக்கோணம் அறிந்திடுமெழுத்து மவ்வா மடுத்திடு மரியினோடு
சேர்ந்து வாழ்துரிய வீடே."
(ப. சே. அ. பா)
இச்சக்கரநிலையை அடையும் போது உலகத்தைப் படைத்து காத்து அழிக்கும் சக்தி கைகூடும் என்பர். இதனையே பாம்பாட்டிச் சித்தர் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளார்.
"வேதன்செய்த சிருஷ்டிகள்போல் வேறு செய்குவோம்
வேதனையு மெங்கள் கீழேமேவச் செய்குவோம் நாதனுடன் சமமாக நாங்களும் வாழ்வோம் தாங்கள் செய்கை யாமிது வென்றாடு பாம்பே??
(rחו_t .58) அதாவது பிரம்மனைப் போல தாங்களும் வேறு சிருஷ்டிகள் செய்வோம். அதுமட்டுமன்றி அந்தப் பிரம்மனையே எமக்கும் கீழாக (மணிபூரகத்துக்குக் கீழாகவுள்ள சுவாதிட்டானத்தின் கடவுள் பிரம்மன் என்பதை கணிக்க) இருக்கச் செய்வோம். பரமாத்மாவுக்குச் சமமாக நாங்களும் வாழ்வோம் என்பதாம்.
3.GJITSSË
ஸ்தானம் - மணி பூரகத்துக்கு மேல் மார்பின் நடுப்பகுதியில்
(இருதயத்திற்கு அருகில்)
வடிவம் - முக்கோணம்
அதன் நடுவில் 12 இதழ்தாமரை
99

Page 63
எழுத்து - சி (சிகாரம்)
நிறம் - அக்கினி நிறம் கடவுள் - உருத்திரன் + பார்வதி பஞ்சபூதம் - வாயு
'துரியமாம் பதிக்குமேலாய்ச் சுழுத்திவீடனாகதந்தான்
உரிய முக்கோணமாகு மோங்கிடு மிதழீராறு தெரியுமக்கரஞ் சிவ்வாகுந் தேவிருத்திரி தன்னோடு பொருவரு முருத்திரன்றான் பொலிந்திடும் பதியதாமே?
(חנJ. C54 - 9) • L ו)
தன்னலமற்ற அன்பு, கருணை என்பவற்றின் உறைவிடம் இந்தச் சக்கரமாகும். மேலாலவத்தையின் முதற்படி இதுவாகும். ஆன்மீக அறிவு இந்நிலையில் தான் ஏற்படத் தொடங்குகிறது என்பர்.
63.5
ஸ்தானம் - அனாகதத்துக்கு 10 விரற்கடை பிர மா ண ம்
மேலே (கண்டஸ்தானம்)
வடிவம் - அறுகோணம் அதனுள் 16 இதழ்தாமரை
எழுத்து = வ (வகாரம்)
நிறம் - மேகநிறம் (கறுப்பு)
கடவுள் - மகேஸ்வரன் + மகேஸ்வரி
பஞ்சபூதம் - ஆகாயம்
*பதியதன் மேல் விசுத்தி பகருஞ் சொப்பன வீடாகும்
துதியுறு கோண மாறு சூழ்ந்திடு மிதழிரெட்டாம் கதிகொளக் கரம் வவ்வாகுங் கருதருமயேச்சுரன்றான் துதி மயேஸ்வரியினோடு சூழ்ந்துறை தலந்தானாமே?”
(ப. சே. அ. பா)
இந்நிலையில் சீவாத்மா சுத்தமடைந்து (ஆத்மசுத்தி) (மலபரி பாகம்) முத்திக்கு வழி திறக்கப்படுகிறது. இந்நிலையில் ஆணவமலம் முற்றிலும் அற்றுப்போகிறது (மலபரிபாகம்) இந்நிலையிலேயே ஆத்மா தன்னையும் தனது சூழலையும் அறிந்து கொள்கிறது.
OO

ஆக்கினை (ஆக்ஞை)
ஸ்தானம் - விசுத்திக்கு மேல் 12 விரற்கடை பிரமாணம்
மே லே வீணாதண்டின் முடிபோலிருக்கும். (புருவநடு)
வடிவம்
எழுத்து - ய (யகாரம்)
நிறம் - பொன்னிறம்
கீ டவுள் - சதாசிவம் -- மனோன்மணி
'தலமிதன் மேலதாகத் தங்குமாக்கினைதான் வட்டம்
உலையுமூன்றிதழாகாரமுரிய சாக்கிரத்தின் வீடு தொலைவறு சதாசிவந்தான் றுாமனோன் மணியினோடே
அலகிலா வருளினோடு மரசிருந்தளிப்பனாமே?”
(Lu. Gö3F. J. Lunt)
இந்நிலையில் அந்தராத்மாவை சோதிவடிவில் தரிசிக்கலாம் என்பர். இதுவே சீவன் முத்தி நிலையுமாகும்.
குகுபதம் (சகஸ்ராரம்)
ஸ்தானம் - ஆக்கினைக்கு மேல் சிரசில் வடிவம் - ஆயிரம் இதழ்த்தாமரை கடவுள் - பரமசிவன்
* "அரசு செய் பதிமேனாத மங்குல மாறிராறில்
இரவி மண்டலமாமப்பாலிருக்கு நாலங்குலத்தில் உரைசெயும் விந்தி யங்கி யொளி வெளியாயிருக்கும் தெரிசனங் கண்டோர் மண்ணிற் செனித்திடாச்சென்மமாமே? (ப. சே. அ. பா)
ஆறாதாரங்களுக்கும் மேலாக சிரசில் ஆயிரம் இதழ்த் தாமரை (சகஸ்ராரம்) பரமசிவனின் உறைவிடமாகத் திகழ்கிறது. இதுவே கைலாசமாகும். இந்நிலையில் குண்டலினி சக்தி சிவத்துடன் இரண்டறக்கலக்கிறது. இதுவே பேரின்பநிலையுமாகும். சீவாத்மா இந்நிலையில் பரமா த் மா வை அடைந்து அத்துவித முத்தி
ஒன்றுமல்ல, இரண்டுமல்ல) நிலையை அடைகிறது.
""ஒன்றாலும் ஒன்றாது இரண்டாலும் ஒசைஎழாது
என்றால் ஒன்றன்று இரண்டுமில்" - திருவருட்பயன்
O

Page 64
சிவானுபூதி என்று இறைவனை ஞா ன வ டி வில் கண்டு பேரானந்தநிலையை அனுப விக் கு ம் நிலையும் இதுவாகும். தூங்காமல் தூங்கிச் சுகம்காணும் நிலையிதாம். சிவனின் தாண்டவ நடனத்தையும் இந்நிலையில் கண்டு களிக்க முடியும் என்பர்.
இந்நிலையை அடைவதே மானிடப் பிறவி எடுத்ததன் நோக்கம் என்று கூறும் சித்தர்கள் இப்பேரானந்த அனுபவம் பற்றிப் பலவிதத்தில் பாடியிருக்கிறார்கள். அவற்றுள் சில வருமாறு
'அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவத்தை ஐந்தும் விட்டேறிப்போன வெளிதனிலே வியப்பொன்று கண்டேன் வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந்திருக்க எட்டாத பேரின்பம் என்னை விழுங்கியிருக்கின்றதே"
(சி. பா.) - பட்டினத்தார்
அதாவது அட்டாங்கயோகத்தால் ஆறுஆதாரங்கள், ஆன்மாவின் ஐந்து அவத்தைகள் (சாக்கிரம் சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்) என்பவற்றைக் கடந்து வெளியை (சகஸ்ராரத்தில்) அடைந்து அங்கே வியப்பொன்று கண்டேன். அதாவது வண்டாகி (வட்டு) ஆங்கு ஞானப்பால் (ஞானமுப்பு) உண்டு மகிழ்ந்திருக்க அதுவரை எட்டாத பேரின்பம் என்னை முழுமையாக விழுங்கியது என்பதாம். அதாவது பேரின் பத்தில் மூழ்கினேன் என்பதாம்.
"நவ்வுமவ்வை யும் கடந்து நாடொணாத சியின்மேல்
வவ்வு யவ்வுகளும் சிறந்த வண்மைஞான போதகம் ஒவ்வு சுத்தியுள் நிறைந்து உச்சியூடுருவியே இவ்வகையறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே’’
(சி. பா.) - சிவவாக்கியர்
அதாவது ஓம் நமசிவாய என்பவற்றைக் கடந்து (இவையே மூலாதாரம் முதலாய ஆறாதார எழுத்துக்கள். எனவே இவற்றைக் கடத்தல் என்னும் போது (ஆறாதாரங்களைக் கடத்தல் என்றாகிறது) சகஸ்ராரத்தை அடைந்தவர்கள் ஈசன் என்பது ஈசன் ஆணை (அதாவது இறைவனுக்குச் சமம் என்பதாம்)
"முத்தனாய் நினைந்தபோது முடிந்த அண்டத்துச்சிமேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார் சித்தரான ஞானிகாள் தில்லை ஆடல் என்பீர்காள் அத்தன் ஆடல் உற்றபோது அடங்கல் ஆடல் உற்றவே.
(சி. பா) - சிவவாக்கியர்
அதாவது சகஸ்ரார நிலையை (அண்டத்துச்சி) அடைந்தவர்கள் அம்மையப்பனின் தாண்டவ நடனத்தைக் கண்டனுபவிக்கலாம் என்கிறார்.
O2

இறைவனுடன் அத்துவித முத்தி நிலையில் இரண்டறக கலப்பதை சிவவாக்கியர் பின்வரும் பாடல்மூலம் எடுத்துக் கூறியுள்ளார்.
“சுழித்ததோர் எழுத்தை உன்னி சொல்முகத்து இருத்தியே
துன்ப இன்பமுங்கடந்து சொல்லும் நாடியூடுபோய் , அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே *றுபங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே
( . חנL .98)
விழித்தகண் குவித்தபோது அடைந்துபோய் எழுத்தெலாம் விளைந்துவிட்ட இந்திரசால வீடதானவெளியிலே
அழுத்தினாறு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே"
(GF). Lunr. ) சுழித்ததோர் எழுத்து - ஓங்காரம் துன்ப இன்பங்கடத்து - இருவினையொப்பு நாடியூடு போய் - சுழுமுனையூடு ஆறுபங்கயம் கடந்து - ஆறாதாரத்திலும் உள்ள தாமரைகள் வெளி - சகஸ்ராரம் ,
அவனுமுண்டு-நானுமில்லை = இறைவனுடன் அத்துவிதமான நிலை
இதனை இன்னொரு விதமாகவும் சிவவாக்கியர் எடுத்துக் கூறியுள்ளார்.
'மவுன அஞ்செழுத்திலே வாசி ஏறி மெள்ளவே
வானளவாய் நிறைந்த சோதிமண்டலம் புகுந்தபின்
அவனும் நானும் மெய்கலந்து அனுபவித்த அளவிலே அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே"
(Surr.)
(வாசி - சரவோட்டம்) சோதிமண்டலம் - மதியமுது
"மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி? - குதம்பாய்!
(சி. பா.) - குதம்பைச்சித்தர்
ஞானமாகிய மாங்காய்ப்பாலையுண்டு (இதனையே யோகமுப்பு என்பர்) சகஸ்ராரத்தில் (மலைமேல்) இருப்பவர்களுக்கு இவ்வுலக அறிவு ஏதுக்கடி? என்பதாம்.
O3

Page 65
இதனையே,
'உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங்கு ஏதுக்கடி" குதம்பாய்
(சி. பா) குதம்பைச் சித்தர் என்றும் பாடியுள்ளார்
(உச்சிக்குமேல் - ஆறாதாரத்துக்கு மேல் இச்சிப்பிங்கு - இவ்வுலக இச்சை)
'மூலப்பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கந்தெரு நடுவே சாலப் பதிதனிலே தணலாய் வளர்ந்த கம்பம் மேலப் பதிதனிலே என்கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ!"
(சி. பா) - அழுகணி சித்தர்)
மூவிரண்டு வீடு - ஆறாதாரம் குதர்க்கந்தெரு - வளைந்து வளைந்து செல்லும் இடகலை,பிங்கலை நடுவே தணலாய் வளர்ந்த கம்பம் - அவற்றுக்கு நடுவில் நேராய் நிற்கும் அக்கினியாகிய சுழுமுனை.
இவற்றைத் தாண்டிஆனந்தத்தை அனுபவிக்க மாட்டேனோ? என்று கேட்கிறார்.
கொங்கணர் தமது ஞானக்கும்மியில் இதனை பின்வருமாறு அழகாக எடுததுக் கூறியுளளார்.
"வாசிப்பழக்க மறியவேணு மற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்
நாசிவழிக் கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப்பாரடி வாலைப்பெண்ணே**
(6. Lunt) ,
'உச்சிக்கு நேராயுண்ணாவுக்கு மேல்நிதம்
வைத்தவிளக்கும் எரியுதடி அச்சுள்ள விளக்கு வாலையடி அவி
யாமலெரியுது வாலைப் பெண்ணே"
(6)). Llunr).
குறிப்பு: சித்தர்களிற் சிலர் குண்டலினி சக்தியை பெண்ணுக்கு (வாலைக்கு) ஒப்பிட்டு பாடியுள்ளனர். இங்கு விளக்கு என்பது ஆக்கினையில் தோன்றும் சோதிவடிவாம்.
04

தனக்குள் இருக்கும் ஆத்மாவை, இறைவனை அறிய முற்படாமல் கோவில்கள் தோறு ம் சென்று கல்விக்கிரகங்களுக்கு பூசையிட்டு கடவுளைப்புற உலகில் தேடி அலைபவர்களைப் பார்த்து சிவவாக்கியா என்னும் சித்தர் நகைச்சுவையுடன் பின்வருமாறு இடித்துரைத்துள் 6tt.
நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பஞ் சாத்தியே சுற்றிவந்து மொணமெணென்று சொல்லுமந்திரமேதடா நட்ட கல்லும் பேசுமோ நாகனுள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை யறியுமோ??
(rחוL .8)
இன்னொரு சித்தரான அருணகிரிநாதர் ஆறுமுகப் பெருமானின் ஆறுமுகங்களையுமே ஆறாதாரங்களுக்கு ஒப்பிட்டு முத்தி நிலையைப் பாடியுள்ளார்.
ஏறும்மயில் ஏறி விளையாடுமுகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவாய் வேல்வாங்கி நின்றமுகம் ஒன்றே
மாறுபடுகுரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறிமுகமான பொருள் நீயருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே."
இதன் தத்துவப் பொருள் யாதெனில்
மூலாதாரநிலையில் - பிரணவரூபமாய் உள்ளவர் கணபதி பிரமனுக்கு அப்பிரணவப் பொருள் தெரியாததால்
சுவாதிட்டானநிலையில் - (ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்று) பிரணவத்துக்குப் பொருளு ரைத்தது பிரமனாய் நின்று படைத்தல் தொழில் புரிந்தது
10ணிபூரகநிலையில் - காத்தற்கடவுளான விஷ்ணுவாக நின்று அடியார் வினை தீர்ப்பது ஒரு முகம்
அனாகததிலையில் - வேல் அழித்தல் தொழிலுக்குரியது. உ ரு த் தி ர னா க நின்று அழித்தற் றொழில் செய்வது ஒரு முகம்
O 5

Page 66
விசுத்திநிலையில்
(ஆணவம் மு த லிய மலங்களை
வதைத்தல்)
ஆக்கினையில் - வள்ளியை மணம்புணர வந்தமுகம்
திருச்சிற்றம்பல நாடிகள் இயற்றிய அகவல் என்னும் நூலில் குண்டலினி சக்தி பற்றியும் அதன் பயனாகக்
ஒன்று (பேரின்பநிலை)
சதாசிவனாக நின்று அருளல் தொழில்
புரிவது.
கிடைக்கும் யோகமுப்பு பற்றியும் பேரின்ப நிலை பற்றியும் பின்வரு
Long)
தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
'மூலக்குண்டலியாம் உரசும் மூச்செறிந்து
வாலது மேல் கீழ் மண்டலம் இட்டுப் படந்தனைச் சுருக்கிப் படுத்துறங்குவது நடந்து மேல் நோக்கி ஞான வீடு அளிக்கும் மண்டலம் மூன்று மருவு தூண் புகஅக்
குண்டலி எழுப்பும் கொள்கையீது என்றான்
முன்னது இரேசகம் முப்பத்திரண்டு
பின்னது பூரகம் பேசும் ஈ ரெட்டுக் கும்பகம் நாலோடு அறுபதாகக் கூறும் தம்ப மாத்திரையின் தன்மையும் உணர்த்தி
மூலமே முதலா முடிநடு உச்சிப் பால் அளவினும் நீள்படுதுளை நோக்கி மூலாதாரத்தின் முச்சுழிச் சுடரை மேல் ஆதாரத்தின் மெல்லெனத்துரண்டி *இருவழிக் காலும் ஒருவழி நடத்திக்
கருவழி அடைத்துக் கமலம் ஆறு உருவிப் பன்னிரண்டு அந்தம் பரிதியும் மதியும் மன்னி ஒன்றான வண்ணமும் தெரிந்து கமடம் ஐந்து அடக்கும் கருத்தெனப் பொறியின் மமதைகள் அடக்கி மனோலயம் ஆக்கி
豪
இருவழிக்கால் - இடகலை பிங்கலை, கால் - வாயு,
ஒருவழி - சுழுமுனையூே
O6
-> மாறுபடு சூரரை வதைத்தமுகம் ஒன்று
திருச்செந்தூர்க் குமரன்

மூலக் கனலால் முழுமதி உருக்கிப் பாலைப் பருகும் பண்பு தந்தருளி இட்டகாமியமும் எண்ணெண்கலையும் அட்டமாசித்தியும் அன்புறக் கொடுத்தும் பன்னிருபட்சியும் பறவாவண்ணம்
என்னுள்ளே நிறுத்தும் இயற்கையும் விண் டான் மூலமே முதலா மூவிரு தலத்தின் கோலமும் 2யூதக்குறிமஞம் அதன்பால் ஐம்பதோடு ஒன்றாம் அக்கர விதமும் பொன்பொலி கமலப்பூ இேருமூன்றும்
4தாரக எழுத்தும் சோர்பெழுத்து அஞ்சும் வோரணமுகவன் 7மலரோன் திருமால் வருத்தம் இல் உருத்திரன் மகேச்சுரன் சதாசிவன் உருத்தெளிந்திடநம் உருவே ஆகும் ஆறுமாமுகத்து அமர்ந்ததும் இதுவே
வேறிலை என்று மெய்ம்மொழி செப்பி இலங்கும் ஆயிரத்தெட்டு இதழ்த்தாமரைமேல் துலங்கிடும் நடனச் சோதியும் காட்டி"
பட்டினத்தார் தமது பூரணமாலையில் ஆறாதாரம் பற்றி
பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளார். பூரணமாலை என்றால் மூலாதாரச் சங்கமம் என்று பொருள்.
1.
மூலத்து உதித்தெழுந்த முக்கோணச் சக்கரத்துள் வாலைதனைப் போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே (வாலை - சிறுபெண் - வல்லபை சக்தி)
உந்திக்கமலத்து உதித்துநின்ற பிருமாவைச் சந்தித்துக் காணாமல் தட்டழிந்தேன் பூரணமே! (உந்திக்கமலம் - சுவாதிட்டானம்)
யோகமுப்பு
பஞ்சபூதக் குறிகள் ஆறாதாரத்திலுள்ள தாமரைப்பூ ஓம் பிரணவ எழுத்து நமசிவாய
பிள்ளையார்
ტზartóupრf
107

Page 67
9.
0.
நாவிக்கமல நடு நெடுமால் காணாமல் ஆவிகெட்டு யானும் அறிவழிந்தேன் பூரணமே! (நாவிக்கமலம் - மணிபூரகம்) உருத்திரனை இருதயத்தில் உண்மையுடன் பாராமல் கருத்தழிந்து நானும் கலங்கினேன் பூரணமே! (இருதயத்தில் - அனகதம்) விசுத்தி மகேசுவரனை விழிதிறந்து பாராமல் பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே! நெற்றி விழியுடைய நிர்மல சதாசிவத்தைப் புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே! நாதவிந்து தன்னை நயமுடனே பாராமல் போதம் மயங்கிப் பொறி அழிந்தேன் பூரணமே! (நாதவித்து - ஒலி முதல் (ஒம்), போதம் -அறிவு) உச்சி வெளியை உறுதியுடன் பாராமல் அச்சமுடன் நானும் அறிவழிந்தேன் பூரணமே நகாரமகாரம் என்பார்; நடுவே சிகாரம் என்பார் வகாரயகாரம் என்பார் வகை அறியார் பூரணமே!
குருவாய் பரமாகி குடிலை சத்தி நாத விந்தாய் அருவாய் உருவானது அறிகிலேன் பூரணமே! (குடிலை - குண்டலி) (இ. பா)
ஏறத்தாழ இதே கருத்துகளையே பத்திரகிரியாரும் பின்வருமாறு
கூறியுள்ளார்.
1.
2.
ஆதார மூலத்தடியில் கணபதியைப் பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம்? மண் வளைந்த நற்கீற்றில் வளைந்திருந்த வேதாவைக் கண்வளர்த்து பார்த்துள்ளே கண்டிருப்பது எக்காலம்? (வேதா = பிரம்மன்) அப்பு பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணுவை உப்புக் குடுக்கையுள்ளே உணர்ந்தறிவது எக்காலம்? (உப்புக்குடுக்கை = உடல்) மூன்றுவளையம் இட்டு முளைத்தெழுந்த கோணத்தில் தோன்றும் உருத்திரனைத் தொழுது நிற்பது எக்காலம்? வாயு அறுகோணம் அதில்வாழும் மகேச்சுரனைத் தோயும்வகை கேட்கத் தொடங்குவதும் எக்காலம்? வட்டவிழிக்குள்ளே மருவும் சதாசிவத்தைக் கிட்ட வழித்தேடக் கிருபை செய்வது எக்காலம்?
08

7. உச்சிக்கிடை நடுவே ஓங்கும் குருபதத்தை
நிச்சயித்துக் கொண்டிருந்து நோவதினி எக்காலம்? 8. ஆறு ஆதாரம் கடந்த பேரொளியை
பேறாகக் கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம்? 9. ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச்
சுழுமுனையின் தாள் திறந்து தூண்டுவதும் எக்காலம்? 16. இடை பிங்கலை நடுவே இயங்கும் சுழுமுனையில்
தடை அறவே நின்று சலித்திருப்பது எக்காலம்? 11. மூலநெருப்பை விட்டு மூட்டி நிலாமண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்?
("חוL .8)
பால் = ஞானப்பால் (யோக முப்பு). நிலாமண்டபம் - சகநஸ்ராரம் (சந்திரமண்டலம்) என்றும் கருத்து.
இவ்விடத்தில் சித்தரின் முப்பு பற்றி எடுத்துக்கூறுவதும் அவசியமாகிறது.
சித்த மருத்துவத்தில் முப்பு என்பது பற்றி வியந்து பேசப் படுகிறது. இது கற்பமருந்துகளில் ஒன்றாகும். இம்முப்பு மூன்று வகைப்படும். அவையாவன. வாத முப்பு, வைத்திய முப்பு, யோகமுப்பு அல்லது ஞானமுப்புவாகும். இவை முறையே சித்த மருத்துவத்தின் வாதம், வைத்தியம், யோகம் ஞானம் GT 6ör luar வற்றுக்குரியனவாகும். வாதமுப்புவானது வேதை என்றுங் கூறப்படும். இது இரும்பு, செம்பு போன்ற உலோகங்களை வேதித்துத் தங்கமாக்க உதவுவது. அதுபோலவே உடலையும் பத்தரைமாற்றுத் தங்கமாக (நோயின்றி) வைத்திருக்க உதவும்.
வைத்திய முப்புவானது உயர்தரக்கட்டு, களங்கு, உருக்கு செந்தூரம், பற்பம் முதலியன தயாரிப்பதற்குப் பயன்படும். இவ் விதம் செய்யப்படும் மருந்துகள் ஆயுளை நீடிக்க உதவுமாம்.
யோகமுப்பு அல்லது ஞானமுப்பு என்பது குண்டலியோகம்
(இலய யோகம்) போன்ற சாதனைகளினால் ஆன்மஞானம் உண்டாகும்போது உடலில் சுரக்கப்படுகிறது. அதாவது குண்டவி சக்தியை மேலெழுப்பி ஆக்கினையை புருவநடு) அடையும்போது
யோகமுப்பு சுரக்கப்படுகிறது. இதனையே சித்தர்கள் மதியமுது, பால் "சோமநீர், சக்தி, அமுது, பூரணம், குடிலைநீர், அமிர்தம், சோதி, பேரொளி என்று பலவித பெயர்களால் அழைப்பர். இம்மதியமுது சுரந்தால் காயசித்தி ஏற்படும். எனவே பிறப்பிறப் பின்றி கற்பகாலம் வாழமுடியும். இதனையே,
09

Page 68
""ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்கலாம்"
என்று ஒளவையார் குறளிலும்,
'உண்டநீர் உனக்குள் பாய்ந்திடில்
சண்டனில்லை சாக்காடெய்துவதில்லை காண்"
என்று ஞானவெட்டியானிலும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பின்வரும் பாடல் முப்புவின் மகிமையையும் அது காயகற்பமாகச் செயற்படுவதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
"கற்பத்தையுண்டால் காயமழியாது
கற்பத்தினாலே காணலாம் கைலையை கற்பத்தினாலே காணலாம் சோதியை கற்பத்தினாலே காலையும் கட்டிடே"
கால் - வாயு, சுவாசம் கைலை . சகஸ்ராரம் சோதி - யோகமுப்பு
இதனையே இடைக்காட்டுச் சித்தர் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளார்.
* சாவாதிருந்திடப் பால்கற - சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற வேவாது இருந்திடப் பால்கற வெட்டவெளிக்குள்ளே பால்கற"
சிரந்தன்னில் இருந்திடும்பால் - அமிர்த கலை (மதியமுது) வெட்ட வெளி - சிதாகாசம் = ஞான ஆகாசயம் (சகஸ்ராரம்)
ஆறாதாரங்களைப் பற்றி விளங்கிக்கொள்வதற்கு இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய நாடிகளைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகும். சக்கரங்களில் உள்ள தாமரை இதழ்கள் அச்சக்கரங்களில் ஒன்று கூடும் யோகநாடிகளைக் குறிப்பனவா யுள்ளன. இவை குண்டலினி செல்லும் கால்வாய்களாயும் உள்ளன. இதில் தலையாயது சுழுமுனையாகும். வீணா (தண்டின்) மேருதண்டம் இடப்பக்கத்தில் மூலாதாரத்தில் சந்திரன் என்று வழங்கப்படும் வெளிறிய இடகலை நாடி அமைந்துள்ளது. வ ல ப் பக்க ம் சூரியன் எனப்படும் செந்நிறப் பிங்கலைநாடி அமைந்துள்ளது. இவை இரண்டும் மேல்நோக்கி இடமிருந்துவலமும், வலப்பக்க மிருந்து இடமுமாய் மாறி எல்லாத் தாமரை இதழ்களையும்.
0

சுற்றிச் சுற்றி (பாம்புபோல வளைந்து வளைந்து) சென்று ஆக்கினைச் சக்கரத்தை அடைந்து பின் நாசித் துவாரங்களை நோக்கிச் செல்கின்றன, இந்நாடிகள் வழியே தான் பிரானசக்தி உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாய் உள்ளது. இவை இரண்டிற்கும் இடையே நேராக நிற்பது சுழுமுனை நாடியாகும்.
எனவே, வலது நாசித்துவாரத்தால் சுவாசிக்கும்போது பிராணசக்தியானது இடதுபக்க உடலுறுப்புகளை இயக்குகிறது. இடதுபக்க நாசித்துவாரத்தால் சுவாசிக்கும்போது பிரான சக்தியானது வலதுபக்க உடலுறுப்புக்களை இயக்குகிறது. இதில் இடகலையை விட்டுணு என்றும் (காத்தல்), பிங்கலையை பிரம்மா என்றும் (படைத்தல்) , சுழுமுனையை உருத்திரன் என்றும் (அழித்தல்) கூறுவர். ஆதிசிவனே (மூலசக்தியே) இவ்வுலகைப் படைக்கவும் (பிரம்மா), காக்கவும் (விட்டுணு), அழிக்கவும் (உருத்திரன்) காரணமாகவுள்ளது. எனவே, இம்மும்மூர்த்திகள் சிவத்தின் அம்சமேயொழிய வேறில்லை.
பிராண சக்தியானது சூரியனிடமிருந்தும் பெறப்படுகிறது. மேலும் உண்ணும் ஆகாரங்களால் பகிர்வாசயம், மண்ணிரல் முதலியவற்றிலிருந்தும் கிடைக்கிறது. எனவே, சூரியஒளியும், உணவு நன்னிலையும் ஆரோக்கியத்தின் அடிப்படைகளாகின்றன. (இடகலை நாடியை பெண்பாலாகவும், பிங்கலை நாடியை ஆணாகவும் கொள்வதுமுண்டு) W
சுழுமுனையில் தாமதகுணம் மேலோங்கியிருக்கும், இதன் உள்ளே பிரகாசமான இராசதகுணம் மேலோங்கி நிற்கும் வஜ்ரிணி என்னும் நாடி அமைந்துள்ளது. இதன் உள்ளே சத்துவகுணம் இயற்கையாகவே அமைந்துள்ள வெளிறியதும் அமுதம் சுரக்கின்றதுமான சித்திரிணி நாடி அமைந்துள்ளது. இச் சித்திரிணிக்கு உள்ளே பிரமநாடி காணப்படும். அதனுள் பிரமத்துவாரம் காணப்படும். இது குண்ட லினியின் கீழ் முனையிலிருந்து அதியுயர்ந்த சிவம்வாழும் சகஸ்ராரம் வரை வியாபித்துள்ளது. இப்பிரம்மநாடி வழியேதான் குண்டலினி சக்தி ஊடுருவிப் பாய்ந்து சகஸ்ராரத்தை அடையும். இவ்வழியை குலமார்க்கம் அல்லது சக்திமார்க்கம் (குலம் = சக்தி) என்றுங் கூறுவர்.
மூலாதாரத்தில் நாலிதழ் கமலத்தின் நடுவில் குலகுண்டம் என்னும் இடத்தை வாயால் கெளவிக் கொண்டு சாதாரணமாய் குண்டலினி சக்தி உறங்குகிறாள்.

Page 69
மூலாதாரமும் சுவாதிட்டானமும் அக்கினி மண்டலத்துக்குரியன. இதில் பிரம்மக்கிரந்தி என்னும் நாடிகளின் முடிச்சுள்ளது. இங்கு கிரந்தி என்பது நாடி முடிச்சையும் அதனுாடு பாயும் எண்ணங்களில் பூர்வ ஜன்ம வாசனையால் ஏற்படும் சிக்கல்களையும் குறிக்கும்.
மணிபூரகமும் அனாகதமும் சூரியமண்டலத்துக்குரியன. இதில் விஷ்ணுக்கிரந்தி என்னும் நாடிகளின் முடிச்சு உள்ளது. விசுத்தியும் ஆக்கினையும் சந்திர மண்டலத்துக்குரியன. இதில் ருத்திரக் கிரந்தி என்னும் நாடிமுடிச்சுள்ளது. எனவே, அக்கினி மண்டலத்தைக் கடப்பதில் பிரம்ம முடிச்சின் (பிரம்மக்கிரந்தி) பிளவும், சூரிய மண்டலத்தைக் கடப்பதில் விஷ்ணுக்கிரந்தியின் பிளவும், சந்திர மண்டலத்தைக் கடப்பதில் ருத்திரக் கிரந்தியின் பிளவும் அவசியாகும்
இங்கு கூறப்பட்ட முக்குணநிலைகளில் தமோகுண நிலையில் நின்று பார்த்தல் தமோகுணம்தான் தெரியும். இராசதகுணநிலையில் நின்று பார்த்தால் இராசதகுணம்தான் தெரியும். சத்துவகுண நிலையில் நின்று பார்த்தால் முக்குணநிலையும் தெரியும்.
குண்டலியோகம் இலயயோகம் என்றும் அழைக்கப்படும். இது சிவனோடு (ஆத்மாவோடு) குண்டலி சக்தியை மிக உயர்ந்த பேரின்ப அனுபவ நிலையை அடையும் வரை ஒவ்வொருபடியாக உயர்த்திக் கொண்டு போவதில் தங்கியுள்ளது. இதற்கு அட்டாங்க யோகமுறை அவசியமாகும். மேலும் மந்திரங்ளின் (மூலமந்திரங்கள்) உதவியும் அம்மந்திரங்களின் கடவுளர்களின் துணையும் அவசியமாகும், இதில் ஓம் என்னும் பிரணவத்தை தியானித்தல் முக்கியமாகும் , இம்முறைகளைக் கையாண்டு பிராணனைச் சுழுமுனை நாடிவழியாக ஒடச் செய்து, மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்போது குண்டலினி சக்தி மேலெழும்பி ஆறுசக்கரங்களையும் ஊடுருவிச் சென்று சகஸ்ராரத்தை அடைந்து பரமாத்மாவோடு அத்துவி, மாகிவிடுகிறது என்பது இதன் விளக்கமாகும் இன்னொரு விதமாய்ச் சொல்லின் குண்டலினியாகிய சக்தி (சுத்தமாயை) சிவத்துடன் இணைவதே இலய யோகமாகும்.)
எனவே, பிராண சக்தியைக் கட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் சீவசக்தியை வளர்த்து, அதன் மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி சிவத்துடன் ஐக்கியமாகி பிறவாப் பேரின் பவாழ்வு வாழலாம் என்க. இந்நிலைகளுக்கு வழிகாட்டுவதே உண்மையான சித்த மருத்துவமாகும்.
2

23。 அண்டமும் பிண்டமும்
எல்லையற்ற பிரபஞ்சத்தை அண்டம் என்று கூறின் பிண்ட மாகிய மனித உடலை அவ்வண்டத்தின் சிற்றுருவம் என்று கருதலாம் என்பது சித்தர்களின் கூற்றாகும் . இதனையே "அண்டமே பிண்டம்; பிண்டமே அண்டம்’ என்றும், "அண்டத்திலுள்ளதே பிண்டத்தில் உண்டு " என்றும் கூறுவர். "அண்டமும் பிண்டமும் ஒன்றே அறிந்துதான் பார்க்கும்போது' என்கிறது சட்டமுனி நிகண்டு. அதாவது உலகத்தில் இருப்பவையெல்லாம் மனித னுக்குள்ளும் இருக்கின்றன. எனவே, பஞ்சபூதங்களும், நவக்கிரகங் களும் அதனதன் சக்திகளை (செயலை) மனிதன்மேல் செலுத்து கின்றன. மனிதன் அதற்குட்பட்டவனாகிறான். இதை இன்னொரு விதக்தில் சொல்லப்போனால் மனிதன் உலகின் இபக்கங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு விதத்தில் அணுவின் அணு வாகவாவது சம்பந்தப்படுகிறான் என்றுங் கூறலாம்.
1. பஞ்சபூதங்களும் மனித உடலும்
தேகம் பஞ்சபூதங்களாலானது என்பது சித்தர்களின் கொள்கை பாகும். எனவே, இச்சட உடம்பை ஆக்கும் மிகச்சிறிய அணுக்கள் வரை யாவும் பஞ்சபூகங்களால் ஆக்கப்பட்டவை என்பது தெளிவு. ஆயினும் உடலின் சில பகுதிகளில் சில பஞ்சபூத அம்சங்கள் கூடுதலாகக் காணப்படுகின்றன. அவற்றின் விபரம் வருமாறு:
முக்குற்றங்களில் வளியில் வாயு ஆகாய பூதங்களும், அழல் தாதுவில் தீ பூதமும், ஐயதாதுவில் மண், நீர் பூதங்களும் உண்டு , அவ்விதமே உடற்கட்டுக்களில் சாரத்தில் - நீர் பூதமும் இரத்தத்தில் - தீ பூதமும், ஊனில் - மண் பூதமும் கொழுப்பில் - 19ண், நீர் பூதமும், என்பில் மண் பூதமும்,மூளையில் - நீர் பூதமு 6,
13

Page 70
சுக்கிலத்தில் - நீர் பூதமும், சுரோனிதத்தில் தீ பூதமும் அதிகன வில் உண்டு.
மேலும் மனித உடஸில் மண்ணின் கூறாக மயிர், நரம்பு, தோல், மாமிசம், என்பு முதலியனவும், நீரின் கூறாக சாரம் சுக்கிலம், கொழுப்பு. சிறுநீர், மூளை முதலியனவும் தீயின் கூறாக பயம், அகங்காரம், நித்திரை, சோம்பல் மைதுனம் முதலியனவும், வளியின் கூறாக (செயலாக) ஒடல், தாண்டல், நடத்தல், இருத்தல், கிடத்தல் முதலியனவும், விண்ணின் கூறாக காமம், குரோதம், உலோகம், மோகம், மதம், மாற்சரியம் மு த வி ய என வும் கானப்படுகின்றன.
அதுமட்டுமன்றி வாயுவானது பிராணன், உதாணன், வியானன் சமானன். அபாணன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன்" தனஞ்செயன் எனப்பல விதமாக மனித உடலில் செயற்படுகிறது, அசுகினியானது ஜாடராக்கிணி (ஜாடரம்-வயிறு), பூதாக்கிளி (கல்லீரலில் உள்ளது). தாதுவாக்கினி என்று மூன்றுவிதமாகவும் அனற்பித்தம், இரஞ்சக பித்தம், சாதக பித்தம், ஆலோசகபித்தம், பாசசுபித்தம் என்று ஐந்துவிதமாகவும் மனித உடலிற் செயற் படுகின்றது. இன்னொரு விதத்தில் உயிரானது உடலில் தரித்திருப் பதற்கு அக்கினி அல்லது தேகச்சூடு இன்றியமையாததாகிறது. இதனையே உயிரனல் என்றும் சீவாக்கினி என்றும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பஞ்சபூதங்களுக்கும் இந்திரியங்களுக்கும் மனத்துக்கும் தொடர்புகளுண்டு. உதாரணமாக ஆகாயத்திலிருந்து பிறக்கும் ஒலி அல்லது கேட்டலுடன் கீாதும், வாயுவிலிருந்து பிறக்கும் ஸ்பரிசம் அல்லது தொடுகையுடன் தோலும், அக்கினியிலிருந்து பிறக்கும் ரூபம் அல்லது வடிவத்துடன் கண்ணும், அப்புவிவிருந்து பிறக்கும் ரசம் அல்லது சுவையுடன் தாவும், பிருதுவியிலிருந்து தோன்றும் கந்தம் அல்லது மணத்துடன் நாசியும் சம்பந்தப் படுகின்றன. எனவே பஞ்சபூதங்களின் விபரம், பஞ்சிகரணம் என்பன பற்றிய அறிவு ஒரு மருத்துவனுக்கு இன்றியமையாததாகும்.
2. நவக்கிரகங்களும் மனித உடலும்
நவக்கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவும் மனித உடலில் தமது ஆட்சியைச் செலுத்துகின்றன. இதுபற்றி அடுத்த அத்தியா பத்தில் விரிவாக எடுத்துக் கூறப்படும்.
14

இ ಸ್ಧಿ _چه#LJ |
리
NAS IŠGERS
*、
血、
:IPrrāī

Page 71

3. மனித உடலில் பதினான்கு உலகங்கள்
இப்பிரபஞ்சமானது மேல் ஏழு லகங்கள், கீழ் ஏழுலகங்கள் எனப் பதினான்கு உலகங்களாலானது. அவையும் அவை மனித உடலில் தொடர்புறும் ஸ்தானங்களும் பின் வருமாறு:
சிரம் - சத்தியலோகம்
நெற்றி - தபோலோகம
கண்டம் - ஜனலோகம்
இருதயம் - மகாலோகம் மேல் ஏழுலகங்கள் நாப் - சுவர்க்கலோகம் பாலுறுப்புக்களுக்கு அருகில் - புவர்லோகம்
மூலாதாரம் * - பூலோகம்
மூலாதாரத்தின் கீழ் - பாதாளலோகம் பாத7 6ாலோகத்தின் கீழ் - ரசாதலம்
தொடை - தலாத லம்
முழங்காலுக்கு மேல் - நிதலம் - . } கீழ் ஏழுலகங்கள் முழந்தாள் -- சுதலம்
கனைக்கால் - 65 500 LD
உள்ளங்கால் - அதலம்
நாம் ஏற்கனவே ஆறாதாரங்களிற் குறிப்பிட்டதுபோல் மனித உடலைச் சுற்றி பதினெட்டு அங்குல சுற்றளவில் இவ்வுலகங்களின் அம்சங்கள் பிரதிபலிக்கும்.
4. மனித உடலும் எழுவகைத் தீவுகளும் (சப்தத்தீவுகள்)
மனித உடலில் எழுவகைத் தீவுகளின் அம்சங்கள் பின்வருமாறு அமைந்துள்ளன.
என்பு - நாவலந்தீவு
GLD56ë - சாகத்தீவு
தசை - குசத்தீவு
15 Մաbւլ - கிரெளஞ்சத்தீவு
தொக்கு (தோல்) - சான்மலித்தீவு மயிர் ۔ - பிலக்ஷத்தீவு
உகிர் (நகம்) - புஷ்கரத்தீவு
5

Page 72
5. மனித உடலும் ஏழு சமுத்திரங்களும் (சப்த சமுத்திரங்கள்)
மூத்திரம் - உப்புக்கடல்
நீர் I - பாற்கடல்
கடம் - சுராக்கடல்
மச்சை - நெய்க்கடல் வாய்நீர் - கருப்பங்கடல்
இரத்தம் -- தயிர்க்கடல்
வாயிலுண்டாகும் மதுரப்புனல் - சுத்தோதகக்கடல்
எனவே, பிரபஞ்சம் முழுவதும் அதன் சிற்றுருவமான மனிதனில் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புறுத்தப்படுகின்றது. இத்தத்துவ நுட்பங்கள் ஒரு சித்த மருத்துவனுக்குத் தெரிந்திருத்தல் அவசியமாம்.
"அண்டத்திலுள்ளதே பிண்டம் பிண்டத்திலுள்ளதே அண்டம் அண்டமும் பிண்டமும் மொன்றே அறிந்துதான் பார்க்கும் போதே?
GL-up Gof நிகண்டு
Γ
6

24. சோதிடமும்
சித்தமருத்துவமும்
மனிதனை பிரகிருதியின் மூலத்தில் உண்டாகி, கிரக சம்பந்தமும் உலக (லெளகிக) சம்பந்தமும் உடையவனாய் உடம்பிலுள்ள ஏழு தத்துவங்களையும் கொண்ட ஆன்மாவைப் பொருத்தியவனாக சித்த மருத்துவம் கூறுகிறது. எனவே அண்டத்திலுள்ள நவக்கோள்களும் மனித உடலில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தியவண்ணமிருக்கின்றன இந்நவக்கிரகங்களும் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்று சொல்லப் படுகின்ற பன்னிரு இராசிகளுள் அடக்கப்படுகின்றன. இந்த இராசி மண்டலமும் அண்டத்திலுண்டு. ஒவ்வொரு கிரகமும் சூரியனைச் சுற்றி வலம் வந்தவண்ணமுள்ளன. அவ்விதம் சுற்றி வரும்போது தினமும் மேற்படி பன்னிரு இராசிமண்டலங்களூடாகவும் செல்கின்றன. இங்ஙனம் ஒவ்வொரு கிரகத்தினதும் சூரியனைச் சுற்றி வரும் பாதை (Orbit) Gibri (Positive) (9,6ags, gait oud) grain pub at gif (Negative) (அல்லது பெண்மை) என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் பன்னிரு இராசிகளும் கிரகங்களும் அமைந்துள்ள விதம் பற்றி சோதிட நூல்கள் பின்வருமாறு எடுத்துக் கூறியுள்ளன.
மனித உடலானது வலது பாதி நேர் (ஆண்மை) என்றும் இடது 1ாதி எதிர் (பெண்மை) என்றும் இரு பாதியாகக் கருதப்படுகிறது. (அர்த்த நாரீசுவர தத்துவமும் இதுவே)
| 7

Page 73
மேடம் இடபம் மிதுனம்
வியாழன் செவ்வாய் சுக்கிரன் புதன் எதிர் எதிர் கும்பம் авLasto
பன்னிரு இராசிகளும் சனி சந்திரன்
மகரம் சிங்கம் கேர் ஆட்சிக் கிரகங்களும் d நா afeof சூரியன் நேர்
வியாழன் செவ்வாய் சுக்கிரன் புதன்
தனுசு விருச்சிகம் துலாம் கன்னி
r
இதில் தலையிலிருந்து மூக்குவரை சிங்கராசி (நேர்), கடகராசி (எதிர்) என்பவற்றால் ஆட்சி செய்யப்படுகிறது. இவற்றில் முறையே சூரியன், சந்திரன் என்பன ஆட்சியுடைய கிரகங்களாம். (படத்தை
turrri.i.d56 b )
வாயிலிருந்து தொண்டைவரை மிதுன ராசி (எதிர்) கன்னி ராசி நேர். இவற்றில் ஆட்சியுடைய கிரகம் புதனாகும். புதனே வாக்கிற்கு அதிபதியாகும்.
தொண்டையிலிருந்து மார்வுவரை இடபராசியும் (எதிர்), துலாராசி (நேர்)யும் ஆட்சியுடையன. இவற்றில் ஆட்சியுடைய கிரகம் சுக்கிரனாகும்.
மார்புக்கும் வயிற்றுக்குமிடையில் பூமிக்குரிய (பூமியும் ஒரு கோளல்லவா?) பாகமாகும்.
மேல்வயிற்றுக்கும் கீழ்வயிற்றுக்கும் இடைப்பட்ட பாகம் மேடராசிக்கும் (எதிர்), விருச்சிகராசிக்கும் (நேர்) உரிய பாகமாகும் இதில் ஆட்சியுடைய கிரகம் உணவுக்கும் யுத்தத்துக்குமுரிய செவ்வாயாகும்.
8

கீழ்வயிற்றில் மீனராசியும் (எதிர்), தனுசு ராசியும் (நேர்) ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றுக்கு அதிபதி புத்திரகாரகனான வியாழனாகும்.
கீழ் வயிற்றுக்குக் கீழ் கும்பராசி (எதிர்)யும், மகரராசியும் (தேர்) ஆதிக்கம் செலுத்துகின்றன. இவற்றுக்கு அதிபதி கர்மத்துக்கு (வினைக்கு) அதிபதியான சனிக்கிரகமாகும்.
இராகு, கேது என்பன சாயாக்கிரகங்கள் என்று சொல்லப்படும். அவற்றிற்குத் தனித்தனி இராசிகள் இல்லை.
ஆறாதாரநிலையுடன் ஒப்புநோக்கும் போது மூலாதாரம் சனிக் கிரகத்தின் ஒழுக்கு (Orbit) அல்லது பாதையிலும் சுவாதிட்டானம் வியாழக் கிரகத்தின் ஒழுக்கிலும், மணிபூரகம் செவ்வாய்க் கிரகத்தின் ஒழுக்கிலும், அநாகதம் சுக்கிரனின் ஒழுக்கிலும், விசுத்தி புதன் கிரகத்தின் ஒழுக்கிலும் அமைவதைக் காணலாம்.
இனி, நவக்கிரகங்களுக்கும் ஏழு உடற்கட்டுகளுக்கும் உள்ள தொடர்பைக் கருதுவோமானால் சாரத்துடன் சம்பந்தப்பட்ட கிரகம் சந்திரனாகும். செந்நீருடன் சம்பந்தப்பட்ட கிரகம் செவ்வாயாகும். ஊன்தாதுவுடன் சம்பந்தப்பட்ட கிரகம் புதனாகும். கொழுப்பு தாதுவுடன் சம்பந்தப்பட்ட கிரகம் வியாழனாகும். என்பு தாதுவுடன் சம்பந்தப்பட்ட கிரகம் சனியாகும். மூளை தாதுவுடன் சம்பந்தப்பட்ட கிரகம் சூரியனாகும். சுக்கில தாதுவுடன் சம்பந்தப்பட்ட கிரகம் சுக்கிரனாகும்.
இவ்விதம் உடலுக்கும் நவக்கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை அறிவதால் என்ன பயன்? என்ற வினா மாணவர்க்கு எழக்கூடும். உடலில் குறிப்பிட்ட ஒரு பகுதி அல்லது குறிப்பிட்ட ஒரு தாது பாதிக்கப்படும் போது அந்த நோயாளியின் சாதகத்தில் அக்குறிப்பிட்ட பகுதி அல்லது தாதுவுக்குரிய கிரகம் நன்னிலையிலுள்ளதா அன்றி திங்கு விளைவிக்கும் நிலையில் உள்ளதா என்பன போன்ற விபரங்களை அறிந்து கொண்டு அதற்குரிய முறையில் சிகிச்சைகளையும், கிரகங்களுக்குரிய பரிகார முறைகளையும் மேற்கொள்ள முடியும், எனவேதான் சித்தமருத்துவத்தில் நோயாளிக்குச் சிகிச்சை செய்யு முன்னர் வைத்தியன் நோயாளியின் சாதகப்படி கிரகநிலைகளைத் தெரிந்து கொண்டு சிகிச்சையளிக்க முற்படவேண்டும் என்று கூறப் பட்டுள்ளது.
எனவே, சித்தமருத்துவர்களுக்கு மருத்துவம் சார்ந்த சோதிட வியலில் (Medical Astrology) ஓரளவு அறிவு இருப்பது அவசிய்ம் என்று கூறப்படுகிறது. தற்காலத்தில் சித்தமருத்துவம் சித்திக்காமல்
19

Page 74
இருப்பதற்கு சித்தமருத்துவர்களுக்குச் சோதிட அறிவின்மையும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். மருத்துணுைக்குரிய அடிப்படைத் தகு பிகளில் சோதிட சாஸ்திர அறிவையும் சித்தர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.
"சோதிடம் பஞ்சபட்சி துவங்கிய சரநூல் மார்க்கம்
கோதறு காரவித்தை குருமுனி ஒதுபாடல்
இதிலாக் நக்கிசங்கள் செப்பிய கன்மகாண்டம்
ஈதெலாங் கற்றுணர்ந்தோர் இவர்களே வைத்தியராவார்."
- பதினெண் சித்தர் நாடிநூல்
சோதிடம் - சோதிடசாத்திரம், பஞ்சபட்சி - பஞ்சபட்சி சாத்தி ரம், சரநூல் மார்க்கம் - பிராணாயாமம், கக்கிசங்கள் - தத்துவங்கள் நன்மாண்டம் - சோதிடநாடி சாத்திரம். அகாரவித்தை - வேதை நூல் முதலியன . தடு up Th ஒதுடTடல் - அக்த்தியர் 13. T சித்தர் கனின் நூல்கள்
சித்த மருத்துவக்கில் பரம்பரை வியாதிகள், தீராத விபாதிகள் என்பவற்றுக்குக் காரணம் கர்மவினை என்று கூறப்பட்டுள்ளது . அது பற்றிய விபரங்கள் சித்தர் நாடி எனப்படும். கன்மகாண்டத்தில் (தர்மம் + காண்டம் கூறப்பட்டுள்ளது. இது ஒவ்வொருவரின் தனிப் 1. சாதக விடயமாகும். எத்தனையோ நூறாண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் தமது தெய்வ சகாயத்தினால் எழுதி வைத்த இந்நூல் தற்போது கூட இதில் நம்பிக்கை வைத் து வாசிப்பவர்களுக்கு காண்டம் வாசித்தல் என்டர்) :-ண்மை நி ன ல  ைய எடுத்துக் கூறுகிறது. இதில் சாதரின் பற்றிய விபரம், நாள் தோறும் நடக்கக் கூடியன யாவும் உண்மையாகவும், நேர்மையாகவும் எழுதப்பட்டுள்ளது
காண்டம் வாசிப்பவர் தனது கவனக்குறைவினாலும் அல்லது அர்த்தம் சொல் திெல் பிழை விடுவதாலும், பிறந்த நேரம் சரிவரக்
குறிக்கப்படாமல் போவதாலும் பிழை ஏற்படலாமேயொழிய ரவில் பின் இல்லை. பூர்வ கர்மத்தினால் தெய்வசங்கல்பமாக
!,င်္ဂါ၊ နူနှီး لا 点
ஏற்படும், நோய்களுக்கு தெய்வீகமுறைப்படிதான் சிகிக்சையளிக்க முடியும் சோதிட சின்ம காண்டத்தில் அவற்றுக்கான பரிகாரம் கூறப்பட்டுள்ளது. எனவே தான் செப்பிய கன்மகாண்டம் என்று
பாடல் கூறுகிறது.
மேலும் நோய் ஏற்படும் நட்சத்திரங்களைக் கொண்டு அது குனமாகுமா, குணமாகாதா என்றவிபரம், மருந்துண் ண ஆரம்பிக்க உகந்த நட்சத்திரங்கள், அரக்கர் பகவத்தியம் எனப்படும் அறுவை வைத்தியம் செய்வதற்கு உகந்ந நாட்கள் என்று பலவிடயங்களை சோதிட சாத்திரம் மூலம் அறிந்து கொள்ளமுடியும்.
I 2.0


Page 75

உதாரணமாக நோப்மிருத்து நாட்கள் (மரணம் ஏற்படக்கூடிய நாட்கள்) வருமாறு; பூரட்டாதி, கேட்டை, பரணி, கார்த்தினசு, திரு வாதிரை, சதயம், அவிட்டம், சுவாதி, ஆபிவியம் முதலிய நட்சத்தி ரங்களும், நவமி, சதுர்த்தி, சஷ்டி, துவாதசி முதலிய திதிகளும் செவ்வாப், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளும் சேர்ந்த நாட்களில் வியாதி உண்டானால் அந்நோயாளி இறப்பார் என்பதாம். (இதற்கு விளக்கம் - செவ்வாய்க்கிழமை நவமி திதியில் பூரட்டாதி நட்சத்திர மும் அன்று இருந்தால் அந்த நோயாளி இறப்பார் என்பதாம். இவ்வாறே ஏனையவற்றையும் விளங்கிக்கொள்க.
நைலாப்பியங்கத்துக்கு உகந்த நாட்கள் திங்கள், புதன், சனி நன்றாம் அல்லாத நாட்களும், உத்திரம், கேட்டை, திருவாதிரை, திருவோணம் சென்ம நட்சத்திரம், அட்டமி, பிரதமை, சஷ்டி, ஏகாதசி, சதுர்த்தசி, பூரணை, அமாவாசை, துவாதசி, இராக் காலம், சங்கிரமகாலம் (மாதப்பிறப்பு) என்பனவு ம் ஆகாவாம். சுமங்கலிப்பெண்களுக்கு செவ்வாய், வெள்ளி தகுமென்பாருமுளர்.
அஷ்டதம் உண்பதற்கு உகந்த நாட்கள் வருமாறு அனுசம், அத்தம், சித்திரை, சுவாதி, மிரு சுசீரிடம், அவிட்டம். புதர்பூசம் பூசம், உத்திரட்டாதி, சதயம், ரோகிணி, திருவான h, ரேவதி நாட்களில் சரராசி உதயமாயிருக்கையில் 3, 6, 7, 8 ஆம் இடங்கள் சுத்தியாக இருக்க அவுடதமுண்ண ஆரம்பித்தல் நன்றாம். ஒருவரின் சென் மநட்சத்திரமும் இதில் சொல்லப்படாத நட்சத்திரங்களும் ஆகா வாம். பொதுவாக செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகள் மருந்துண்ண ஆரம்பிக்க நன்றாம்.
அரக்கர் வைத் திய த் து க்கு உகந்த நாட்கள் 'að's', 'frr:TM ஆபிலியஸ் , திருவாதிரை. மூலம், சேட்டை நட்சத்திரங்களும் ஞாயிறு, சனி, செவ்வாய்க்கிழமைகளும், கன்னி, துலாம். மேடம் , கர்க்கடகம், இவ்விராசி உதயத்தில் (8 ஆம் இடம் சுத்தியாக இருக்கையில் (8 ஆம் இடம் மார* ! மரண ஸ்தானம்) பக்கச்சித்திரை (சதுர்த்தி, நவமி, சஷ்டி அட்டமி. துவாதசி, சதுர்த்தசி ) ஆகிய திதிகளில் புண்ணறுத்தல் சுடுதல். காரமிடுதல், அட்டை விடுதல் முதலிய அரசுகர் வைத்தியம் செய்யலாம்.
நோய் மாறிக்குளிப்பதற்கு உகந்த நாட்கள் வருமாறு: பூனேர்பூசம் ரேவதி, சுவாதி, உத்திரட்டாதி, மகம், ஆயிலியம். ரோகிணி ஆகிய நட்சத்திரங்களும், சிந்திரன், வெள்ளி இராசிவரோதயங்களும் சதுர்தது. நவமி, சதுர்த்தசி திசமியில் முன் சொன்ன குரூர வரோதிய சகங்களிலே நோய் மாறிக்குளிக்கலாம்,
மருத்துவ சோதிடவியலை விளக்சுப்புகின் அது நீண்டு கொணடு போகும் என்பதால் இத்துடன் இவ்வத் நியாயத்தை நிறைவு செய்தல் தவிர்க்க முடியாததாகிறது. மாணவர்கள் இதுபற்றி விரிவாகக்
கற்றல் அவசியமாகும்.
2.

Page 76
25. சித்தமருத்துவமும் ஆயுள்வேத மருத்துவமும்
சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்றாக இருக்கின்றன; எனவே அவை இரண்டையும் ஒன்றாகவே கருதவேண்டும்; அவற்றுக்கிடையில் பே த ங் க ள் தேவையில்லை என்று வாதிப்போர் பலர். ஆனால், இவ்விருமருத்து வங்களின் அடிப்படைத் தத்துவங்களில் பெரும் வேறு பாடுகள் காணப்படுகின்றன என்பதே உண்மையாகும். எனவே, இவ்விருமருத்து வங்சளும் தனித்தனி முறைகளாகும். இந்திய தத்துவங்களுக்கிடையில் எவ்விதம் ஒற்றுமை, வே ற் று  ைம க ள் காணப்படுகின்றனவோ அதேபோல் சித்த ஆயுர்வேத மருத்துவங்களுக்கிடையிலும் ஒற்றுமை வேற்றுமைகள் காணப்படுகின்றன. நாம் இந்நூலின் ஆரம்பத்திலே எடுத்துக் கூறியதுபோல் தமிழ்சித்த ஆ யு ள் வே தம் என்பது (தற்காலத்தில் சித்தவைத்தியம் என்று வழங்கப்படுகிறது) வேறு; வடமொழி ஆயுள்வேத வைத்தியமுறை என்பது வேறாகும். இவற்றை வேண்டுமானால் இந்துமருத்துவ முறைகள் அல்லது இந்திய மருத்துவ முறைகள் என்று சொல்லலாமேயொழிய இரண்டும் ஒன்று என்று சொல்வது பொருத்த முடையதாகாது அற்கான கா ரண ங் கள் வருமாறு:
சித்தமருத்துவமானது முழுமுதற்கடவுளான சிவனிடமிருந்து வந்ததால் சிவசம் பிரதாய முடையதுஎன்று வழங்கப்பெறுகிறது. ஆனால் ஆயுர்வேதமருத்துவம் பிரம்மனிடமிருந்து தோன்றியதால் பிரம்மசம பிரதாயமுடையது எனப்படுகிறது.
சித்தமருத்துவமானது ஆறு தரிசனங்களைப் ஷட்தரிசனங்கள்) பொதுவாகவும் சைவசித்தாந்த தத்துவத்தைச் சிறப்பாகவும் கொண்டு உருவானது. ஆனால், ஆயுர்வேத மருத்துவமானது ஆறு தரி
22

சனங்களையே அடிப்படையாகக்கொண்டது. மேலும் சித்தமருத்துவம் தொண்ணுாற்றாறு தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆயுர்வேத மருத்துவம் இருபத்து நான்கு (ஆத்மாவையும் சேர்த்தால் இருபத்தைந்து) தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது.
சித்தமருத்துவம் தமிழர் வாழ்வை அ டி ப் ப ைட யா க க் கொண்டது; ஆயுர்வே தம் அதர்வவேதத்தின் ஒரு பகுதியாக உபவேதமாகக் கருதப்படும்.
சித்தமருத்துவத்தில் முக்குற்றங்கள் வாதத்தை முன்னிறுத்தி "வளி, ஆழல், ஐயம் என்று கூறப்படும். "வாதம் வைகறை பிற் றோன்றும் மத்தியானத்திற்பித்தம் சீதமார் மாலை தன்னிற் சேடமே பிரவேசிக்கும்" என்கிறது இருபrலைச் செட்டியார் வைத்திய விளக்கம். ஆனால் ஆயுர்வேதமருத்துவத்தில் வாத, பித்த, கபம் என்று பேசப்பட்டாலும் கபமே முன்னிறுத்தப்படுகிறது. ஆயுள், உணவு, நாள் முதலியவற்றில் கபமே முதலில் பலம் பெறுவதாக ஆயுர் வேதம் கூறுகிறது மேலும் உயிர்த்தாதுக்கள் (முக்குற்றங்கள் ) மூன்றும் தொண்ணுரற்றாறு தத்துவங்களுக்குள் அ ட க் க ப் பட்ட சிறப்பும் சித்த மருத்துவத்துக்கேயுரியது. நா டி சா த் தி ர முறை சித்தமருத்துவத்துக்கேயுரிய தனிச்சிறப்புடையது. புராதன ஆயுர்வேத நூல்களில் நாடி பற்றி ஏதும் கூறப்பட்டில்லை.
ஏழு உடற்கட்டுக்களை (சப்ததாதுக்கள்) பொறுத்த வரையில் ஆயுர்வேத மருத்துவத்தில் இரசதாது, இரத்த தாது மாமிசதாது மேதஸ்தாது, அஸ்திதாது, மஜ்ஜைதாது, சுக்கிலதாது அல்லது சுரோணிததாது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், சித்த மருத்து வததில் சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை , வெண்ணீர் அல்லது சுரோணி தம என்று கூறப்பட்டுள்ளது. இவற்றுள சாரம் என்பது இரசத்தை அதாவது இரசதாதுவைக் குறிப்பதாக இருந்தாலும் செவ்வணுக்கள் தவிர்ந்த குருதியையே இரசதாது என்று ஆயுர்வேத நூலார் கூறுவர். ஆனால், சித்த மருத்துவம் அன்னரசத்திலிருந்து உண்டாகும் சாரத்தையே முக்கியமாகக் குறிப்பிடுறகிது. எனவே உடலிலுள்ள திரவ அம்சங்கள் (Body Fluids) அனைத்தையும் சாரம் என்பது குறிப்பதாகக் கருதலாம். இச்சாரம் (இரசம் / இரதம்) உட்கொள்ளும் உ ன வி லி ரு ந் து உண்டாகிறது.
*அருந்திய வன்ன மவை மூன்று கூறாம்
பொருந்து முடன் மனம் போமல மென்னத் திருந்து முடன் மனமாங்கூறு சேர்ந்திட்டு இருந்தன முன்னாள் இரதம தாகுமே"
- திருமந்திரம்
23

Page 77
இரத்ததாது என்பது குருதியிலுள்ள செவ்வணுக்களைக் குறிப் ப த க வே ஆ யு ர் வேத நூ ல் கள் கூறும். ஆனால் சித்தமருத்துவத்தில் செந்நீர் என்ற சொல் குருதியை முழுமையாகக் குறிப்பிடுகிறது. அதாவது செவ்வணுக்கள், வெண் அணுக்கள், குருதிச்சிறுதட்டுகள், அன்னரசம், உடல்தாதுரசம் உப்புக்கள் முதலியவற்றைக் கொண்டதே சித்தமருத்துவம் கூறும் செந்நீராகும். இதனையே ஒளவை குறளில் உதிரம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆயுர்வேத மருத்துவத்தில் என்பும் (Bone) அதனுள் இரு க் கும் ம ச்  ைச யும் (Bone Marrow) த னித் தனி தா து க் க ள ஈ க க் கூறப்பட்டுள்ளன. சித் த மருத்து வம் இவ் விர ண்  ைட யும் ஒன்றாகக் கருதி என்புதாது என்று குறிப்பிடுகிறது. மஜ்ஜை தாதுவுக்குப் பதிலாக சித்தமருத்துவம் மூளை என்பதைக் குறிப்பிடுகிறது. சிலர் மஜ்ஜையும் முளையும் ஒன்றே என்று கூறுவர். ஆனால், இவை இரண்டும் ஒன்றல்ல. மூளை என்பது நரம்புத் தாதுவைக் குறிக்கும். மூளைத்தாது என்பினுள் அமைந்துள்ளது என்று கூறப்படுவதாலேயே இத்தகைய குழப்பம் பலருக்கு ஏற்படுகிறது. இவ்விடத்தில் மாணவர்கள் ஒன்றைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். என்பின் ஒருபகுதியான மஜ்ஜைக்கும் என்பினுள் அமைந்துள்ள மூளைக்கும் வித்தியாசம் உண்டு. என்பினுள் என்று சொலலும்போது கபால என்புகளுக்குள் அமைந்துள்ள மூளையையும் முள்ளந்தண்டு என்புக் கால்வாயுள் (Spinal Cannal) அமைந்துள்ள மூளையின் பகுதியையும் (Spinal Cord) - alipsoit isgi தோன்றுகின்ற நரம்புகளையுமே கருத்தில் கொள்ளல் வேண்டும்.
ஒளவை குறளில் ஏழு உடற் கட்டுகளின் பெயர் பின்வருமாறு கூறபபட்டுள்ளது.
"தொக்குதிரத் தோடூன் மூளை நிண மென்பு
சுக்கிலந் தாது களேழு"
அதாவது தொக்கு (தோல்), உதிரம். ஊன், மூளை, நிணம் (கொழுப்பு), என்பு, சுக்கிலம் எனத் தாதுக்கள் ஏழாம். இன்றைய விஞ்ஞானத்தோடு இவ்வுடற் கட்டுக்கள் ஓரளவுக்கு ஒத்துவருவதைக் காணக் கூடியதாக உள்ளது. (விபரம்: பக்கம் 125)
மேலும், சோதிடம், அ ட் டாங் க யோகம், அட்டமாசித்தி முதலியனவற்றையும் மருத்துவத்துடன் இணைத்துக் கூறப்பட்டுள்ள சிறப்பையும் சித்த மருத்துவத்தில் காணக் கூடியதாகவுள்ளது,
24

பற்பங்கள், செந்தூரங்கள், கட்டு, களங்கு, முப்பு போன்ற உயர்தர - தேவ வைத்திய மருந்துகள் சித்தமருத்துவத்தில் சிறப்பம்சமாகக் கொள்ளப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
வடமொழி " "உத்தர தந்திரம்" என்னும் நூலின் முகவுரையில் காயசிகிச்சைமுறையும் பொதுவான நோ ய் க  ைளக் குறித்த விடயங்களையும் சித்தநூல்களிலிருந்து திரட்டி எழுதியதாக கூறப்பட்டிருப்பதும் ஆராயப்படத்தக்கது.
நவீன மருத்துவத்துடன் ஏழு உடற்கட்டுக்களையும் பின்வருமாறு தொடர்புபடுத்தலாம்.
1. Frrprub - Body Fluid
g)5 spg, 156 (as Irig, grgia) Skin and Connective Tissue (சாரம், தொக்கு) இவற்றில் எதைக்கொள்வது என்பது ஆராயத்
தக்கது.
2. செந்நீர் -- Cardiovascular System
3. ஊன் - Muscular System
4. கொழுப்பு - Connective Tissues'
5. என்பு - Skeletal System
6. மூளை - Nervous System
7. Grá Gleiwit/3 Grr Grifigin - Reproductive System
குறிப்பு:
Digestive System - (3) LDrfaint Fulb. பகிர்வாசயம், மலஆசயம்
முதலியவற்றாலும்,
Respiratory System - பிராணமய கோசத் தாலும்,
Renal System - சல ஆசயத்தாலும் குறிப்பிடப்பட்டுள்ள
மையும் நோக்கற்குரியது)
25

Page 78
26. சில குறிப்புகள்
ஒத்தர்கள் வேதாந்த சித்தாந்த சமரச நோக்குடையவர்களாயும் ச ம ய ங் க ட ந் த வர் க ள |ா யு ம் வாழ் ந் து மக்களுக்கு வழிகாட்டியுள்ளனர்.
பிரளய காலத்தில் பிரபஞ்சம் ஒடுங்கி, ஆன்மாக்கள் யாவும் பிரம்மத்தில் ஐக்கியமாகிவிடும் அல்லது பிரம்மமும் ஆன்மாவும், மூலப்பிரகிருதியுமே எஞ்சியிருக்கும் என்பதால் அதுவரை
ess T Go Gp tiħ (கல்ப காலம்வரை) எ டு த் த - இந்த ச் சரீரத்துடனேயே இருக்க வேண்டும் எ ன் ப த ர ல் அ த ற கு அனுகூலமாக மருத்துவத்தைப் பயன்படுத்தினர். அதன்
விளைவாகக் கிடைத்ததே சித்தமருத்துவத்தின் சிறப்பான காயகற்ப முறையாகும்.
இந்தச் சரீரம் சடமானது. அதன் ஆயுட்காலம் ஏறத்தாள நூறு ஆண்டுகள் என்று கூறும் சித்தர்கள் அக்குறுகிய
காலத்துள் மக்கள் நோய்நொடியின்றி வாழ்வதற்காகவும்
ஏற்பட்ட நோய்களை நீக்குவதற்காகவும் மருத்துவத்தை அறிமுகப்படுத்தினர்.
அவ்விதம் மருந்துகளை கண்டறிந்தபோது அவற்றைத் தத்துவ அடிப்படையில் நாத, விந்துச் சரக்குகள் என்று பிரித்துக் கூறினர்.
மருந்துகள யாவற்றுக்கும் அடிப்படை பஞ்சபூதமே என்று கூறினர். உதாரணம்: சுவை பஞ்சபூதம்; குணம் பஞ்சபூதம்.
அன்னமய கோ ச த் தா லா ன இந்த உடம்பைப் பற்றிச் சித்தர்களின் எண்ணம் இவ்வளவே. நூறு ஆண்டு உடலை
126

普
它
杀
இயன்றவரை அதிகரிக்க அவர்கள் சில சாதனைகள் செய்தனர். அதனாற்றான் திருமூலரால் மூவாயிரம் ஆண்டுகள் வரை சட் சரீரத்துடன் இருக்க முடிந்தது.
ஆனால், காய கல்பம் என்ற முறை யில் தமது சூக்குமசரீரத்தையே சித்தர்கள் பெரிதும் பேணமுயன்று வெற்றிகண்டனர். சித்தர்கள் தமது அன்னமய கோசத்தாலான உ ட லு டன் சமாதியடைந்தபோதிலும் sa Gib al 2-l-3}i L-6ir தற்போதும் இருப்பதாகக் கூறுவர். அவர்களை எமது ஊனக்கண்களால் காணமுடியாது. ஆனால், சித்தர்கள் விரும்பினால் தமது உருவை மானிடர்க்குக் காண்பிப்பர்.
சித்தர்களில் யாக்கை (உடம்பு) தி  ைல யா  ைம பற்றி உபதேசித்தவர்களும் உண்டு. "காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்று பாடிய சித்தர்கள் "உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்" என்பதால் "உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்" என்ற நினைப்பினை மாற் றி உடம்பை வளர்க்கும் உபாயமறிந்து உடம்பை வளர்த்து உயிரையும் வளர்த்தனர்.
சித்தர்கள் வேதாந்த சித்தாந்த சமரச சன்மார்க்க நெறிநின்ற போதிலும் சிவத்தை முழுமுதற் கடவுளாகக் கொண்டவர்கள். சைவ சித்தாந்த தத்துவங்களைச் சிறப்பாக பின்பற்றியவர்கள். ஆனால், சைவ சமய அனுட்டானங்களைப் புறக்கணித்துவிட்டு ஆத்மஞானம் ஒன்றையே கடைப்பிடித்தவர்கள்.
சித்தர்கள் காரணகாரிய வகைகளால் உடம்பைச் சோதித்து எ வ் வெப் பொருள் வ  ைக க ளா ல் உடம்பு வளர்ந்து அழிகிறதென்பதைக் கண்டறிந்து உடம்பைப் பொய் என்று சொல்லுவதற்கு மாறாக மெய் என்று கூறினர்.
மூச்சை அடக்கி மூலக்கணலாகிய குண்டலினி சக்தியை எழுப்பி, மன்னி மந்திர மருந்துகளின் உதவியால் மாறாத மதியமிர்தமுண்டு (யோகமுப்பு) நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு என்பவற்றைக் கடந்து நித்திய 2-L-lb60L1 பெற்றவர்கள்.
சித்தர்களின் பிராணாயாமமுறை **அசபா காயத்திரி* (அசபா = செபிக்கப்படாதது) என்றும், சித்த வித்தை என்றுங் கூறுவர். இதில் உள் சுவா சப் பயிற்சி யே முக்கியமாகும். வெளிமூச்சுக்கு இதில் வேலையே இல்லை.
27.

Page 79
莺
தொண்டைக்குழிக்கும் கொப்பூழுக்கும் இடையில் தான்
உள்மூச்சுப் பயிற்சியாகிய சித்த வித்  ைத. இதன் மூலம், சித்தர்களால் நினைத்ததைச் சாதிக்கமுடிந்தது.
சித்த மருந்துக்காக மூ லி கை களைப் ஃறிப்பதற்கும் சேர் ப் ப த ந் கும் சில கிரகங்கள் கூடும் காலத்தில் இரவாயினுஞ்சரி, பகலாயினுஞ்சரி பறிப்பதால் மூலிகைகள் அவைகளுக்குண்டான பூரண குணத்தைக்காட்டும் .
வியா தி களும் , கெ டு தி யான சம்பவங்களும் கிரக தோஷங்களினாலும் பூர்வ க ர் மங்களாலும் (வினை)
உண்டாகக் கூடுமாதலால் நோயாளிக்குச் சிகிச்சை செய்யுமுன் வைத்தியன் நோயாளியின் சாதகப்படி கிரகநிலைகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். அதன் பின்பே வைத்தியம்
செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
சித்தர்கள் பெற்றிருந்த எ ண் வ  ைக ச் சித் தி களும் (அட்டமா சித்திகள்) வருமாறு அணிமா (அணுரூபமாதல்), மகிமா (பெரிதாதல் - விஸ்வரூபம்), இலகிமா (பாரமான பொருளில் இலகுவாயிருத்தல்) கரிமா (வடிவம் மாறாமல் எடையை மட்டும் அதிகரிக்கச் செய்யும் ஆற்றல்), பிராத்தி (இமைப்பொழுதினுள் நினைத்ததைச் சாதிக்கும் ஆற்றல்), பிரகாமியம் (பரகாயப்பிரவேசம், க கன மார் க் க த் தி ல் (வாணவெளியில் சஞ்சரித்தல்) வசித்துவம் (பிற உயிரினங்களை வசப்படுத்தல்) ஈசத்துவம் (ஈசனுக்கு இணையாக படைத்தல் . காத்தல், அழித்தல் முதலிய தொழில்களைச் செய்தல், கிரகங்களைத் தம்மிஷ்டம்போல் நடப்பித்தல். )
இடைக்காட்டுச் சித்தரின் வரலாற்றில் கிரகங்களைத் தன். இஷ்டத்துக்கு மாற்றியதாக ஒரு கதை உண்டு (ஈசத்துவம்.) (அபிதான சிந்தாமணியைப் பார்க்கவும்)
சிக் த ர் கள் ஒங் கார நா த த் துக் கு முக்கியத்துவம்
கொடுத்துள்ளார்கள். அ (அகாரம்), உ (உகாரம்), ம (மகாரம்)
மூன்றும் சேர்ந்ததுதான் "ஓம்" என்னும் பிரணவ மந்திரமாகும். இதில் அ - சூரியன், உ - சந்திரன், ம - அக்கிணி என்றும், அ - நாதம், உ - வித்து, ம - கலை என்றும், அ - இடகலை,
உ - பிங்கலை, ம - சுழு முனை என்றும், அ - கிரியாசக்தி,
2. - இச்சாசக்தி, ம - ஞான சக்தி என்றும் தேவைக்கேற்ப பொருள் கொள்வது சித்தர் மரபு.
இன்பதுன்பமற்ற இடம் ஒன்றுண்டு; அதுவே சூன்யம் என்பது:
அதுவே வெட்டவெளி; அதுவே உண்மையானது; அதுவே ஆக்கினைக்கு மேலுள்ளது என்பர் சித்தர்.
28

亲
சித்தமருத்துவ மூலிகைகளில் உத்தமம், மத்திமம் என்ற பிரிவுகளுண்டு. இவற்றுள் உத்தமமூலிகைகள் த வ த் தி ன் மிக்காருக்கே புலப்படுமாம்.
பஞ்சபூதத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாம் (அதன் மூலமே அகத்தியர் சமுத்திரத்தையே சுண்டக்காயள வாக்கிப்பருகினார் என்பர்) அதன் மூலம் இயற்கையிலுண்டான பேதங்களையும் மாற்றி அமைக்கலாம். அதனால் சிருஷ்டியில் எவ்விதரூபமும் எடுக்கலாம். தனதுடம்பையே நீக்கவும் ஆக்கவும் செய்யலாம்.
பிராணாயாமத்தால் மனிதன் தனக்கு இயல்பாகவேயுள்ள காந்தசக்தியைப் பெருக்கலாம். அதனால் பிறரைத் தனது கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
மனிதன் ஒருவனுக்கே எல்லா வித சக்திகளும் (தத்துவங்களும் ) உடம்பினுள் மறைந்து கிடக்கின்றன. இச்சக்தியால் மனிதன் கடவுளின் ஆற்றலுக்கு இணையாக வரமுடியும். ஆனால் மனிதனோ இத்தகைய சக்திகளைக் கொஞ்சமும் கவனியாது அஞ்ஞானத்தில் மூழ்கியிருக்கிறான். மனிதனுக்கு இயல்பிலே இருக்கும் பூரண சக்தியானது மாயையி னால் மறைக்கப்பட்டு, சரியான பாதையில் செல்லவிடாமல் தடுக்கிறது. அவ்வித சக்தியை வெற்றி கொண்டால் மனிதனால் எதையும் சாதிக்கமுடியும்.
உடம்பில் உயிர்நிலைபெறக் காரணமாக ஆத்ம ரா விற்கு ஆதரவாகப் பஞ்சபூதங்கள், ஆறாதாரங்கள், மூன்று நாடிகள், முக்குணங்கள் முதலான 96 தத்துவங்களுண்டு.
சித்தர்முறைப்படி வியாதி உடம்பையும் மனத்தையும் அநுசரித்து வரும என்பதால் ஒன்று மற்றொன்று இல்லாமல் இருக்க (up lg-ufTgi.
சித்த மருத்துவம் மனிதனின் வெளிப்புற உடம்பை (சடம்) மட்டுமன்றி உட்புறமான ஆத்மநிலையையும் கவனத்திற் கொள்கிறது.
ஆகவே அசித்தை விட (சடம்) சித்தையே (அறிவு = ஆத்மா) ஆதாரமாகக் கொண்டது சித்தவைத்தியமாகும்.
நோயின் மூலவேரைக் கண்டறிவதற்குச் சித்தர் தத்துவம் உதவும்
29

Page 80
& தன்னைத்தான் கண்டறியும் சித்தர்களின் பேரறிவே சித்தர்
ஞானம் அல்லது ஆத்மஞானம் எனப்படும்.
உயிர் இருக்கும்போதே முத்திக்கு வழி தேடவேண்டும். அதற்கு உதவுவதேயோகம் என்பது சித்தர் கருத்து.
兹
உடம்பிலுள்ள கூர்மசக்கரத்தின் நிலையைக் கொண்டு ஆண், பெண்பாலருக்கு நாடிபார்க்க வேண்டும்.
* உடம்பில் ஆன்மாவைத் தாங்கி நிற்கும் தாதுக்களே
உயர்த்தாது எனப்படும்.
ܗ
நாடியைக் கொண்டு நோய் குணப்படும். குணப்படாது என்பதை தெளிவாக அறியமுடியும் . இதுவே சித்த மருத்துவத்தின் சிறப்பாகும். சித்த வைத்தியரின் இயல்பான காந்தசக்தி, சாதனை (பயிற்சி) என்பன இதன் உண்மைத் தன்மைக்கு a golf.
உலகத் தோற்றத்துக்கு காரணமாக உள்ளவை நாதமும் விந்துவுமாகும். பிரபஞ்சதோற்றத்தைப் பொறுத்தவரையில் சிவம் (கடவுள்), ஆதிசுத்தமாயை (சக்தி), அதிசூக்குமை வாக்கும் (நாதம்) ஆகிய மூன்றும் முக்கியமானவை. நாதம் என்றால் ஒலி . இது சூக்குமமான ஒலியாகும். சிவனின் கையிலுள்ள உடுக்கு இதனையே குறிப்பிடுகிறது. எனவேதான் இறைவன் நாதசொரூபி என்று வர்ணிக்கப்படுகிறான். சூக்குமை ஒலியின் வேறுபட்ட தன்மையினாலேயே சிருஷ்டி ஆரம்பமா கிறது. இவ்வொலியானது எல்லா அணுக்களினதும் இலத்திரன் (Electron ) ,புரோத்தன் (Proton), வெளி (Space) அனைத்திலும் ஊடுருவ வ வல்ல தாம். எமது எண்ணங்களுக்குக் கூட இவ்வருவ ஒலியே காரணம் என்று கூறப்படுகிறது.
柴
(இதுபற்றி பகுதி 111 இல் நாதம் என்ற தலைப்பின் கீழே பார்க்கவும்)
ஆதி சுத்த மாயையானது (சக்தி) விந்து என்றுங் கூறப்படுகிறது இதனையே குண்டலி, குடலை என்றுங் கூறுவர். இச்சக்தியானது நாதத்துடன் இணைவதனால் சிருஷ்டிக்கு வேண்டிய சக்தியை வழங்குகிறது எனலாம். எனவே சிவத்திடமிருந்து தோன்றும் நாதமும் (ஒலியும்) ஆதிசுத்த மாயையில் (சிவசக்தி) இருந்து தோன்றும் விந்தும் சேர்ந்து தோற்றத்துக்கு காரணமாகின்றன. சிவனிட மிருந்து தோன்றும் நாதமானது சூக்குமைவாக்கு சுத்தமாயையாக பரிணமிக்கும். இச்சூக்குமைவாக்கும் சுத்தமாயையும் சேர்ந்து சுத்தவித்தையை தோற்றுவிக்கும். இச் சுத்த வித்தையிலிருந்தே வித்தியாதத்துவம் உருவாகிறது.
3D

எனவே, சிவம், சிவசக்தி, அதிகுக்குமை வாக்கு, சுத்தமாயை என்பன பிரபஞ்சத் தோற்றத்தின் முதலாம், இரண்டாம், po Gör spritub நான்காம் இடத்தைப் பெறுகின்றன. இங்கு சிவத்தை ஞான சக்தி என்றும், சக்தியை கிரியாசக்தி என்றுங் கூறுவர்.
சித்தர்கள் இந்நாதவிந்துத் சித் துவத் துக் கே மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். விந்து நாதத்தின் முடிவான பொருளே சித்தர்களின் சித்தியாகும். விந்துவானது தTதத்தை சென்றடைந்து அனுபவிப்பதே காயசித்தியா கும். அதுவே பேரின்ப Long, Lib. குண்டலினியோகத்தின் தாற்பரியமே அதுவாகும். eggf பற்றி ஏற்கெனவே குண்டலினி சக்தி என்பதன் கீழ் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இன்னொரு வகையில் விந்து என்றால் 4ழிச்சாறு: நாதம் என்றால் இலைச்சாறு: விந்து என்றால் இரசம், நாதம் என்றால் கந்தகம்; சித்தர்கள் இவ்விரண்டையும் (நாதம், வித்து) சிம்பந்தப் படுத்தி பலவித பற்பங்கள் செந்தூரங்கள் சுண்ணங்கள் காயகற் பங்கள் என்பவற்றைச் செய்து தமது தேகம் மூப்பு, பிணி அடையாத வாறு பாதுகாத்து வந்தனர். w
நாதம் என்றால் ஒலி; விந்து என்றால் ஒளி இவ்வொலியும் ஒளியும சேர ஓங்காரம் பிறக்கும் , இப் பிரணவ மே உலகிற்கு ஆதாரம். இத்தத்துவத்தை உணர்ந்து அனுபவித்தவர்களே சித்தர்களாவர்.
; சித்த மருத்துவமானது மணி மந்திர அவு!-தம் என்ற திகிச்ை
முறைகளைக் கொண்டது. இதில் மணி என்பது இரசமணி என்றும் முப்பு என்றும், சோதிடம் (மருத்துவ சோதிடம்) என்றும பிரார்த்தனை என்றும் பொருள் கொள்வர். மந்திரம் என்பது மனத்திறன்; நினைப்பவனைக் காப்பது என்று பொருள். சித்தர்களின் மந்திரம் ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சர மாகும், இம்மந்திரமே (எழுத்துக்களே மூலாதாரய முதல் ஆறாதாரங்களுக்கு உரியனவாக உள்ளன. எனவே, இம்மந்தி ரங்களை உச்சரிக்கும் போது s/60( ے 61ھgy 651 قn5ی ー塾 あTTái 56flai) 960rfGO GAu (Vibration ) ஏற்படுத்தி அதற்குரிய தெய்வங்களைத் தூண்டி அதன் மூலம் இட்டமான பலன்களைப் பெற உதவு என்பதாம். அவுடதம் என்பது நோய் நீக்குவதற்குரிய மிருந்துகள் முதலியனவாம்,
s 米
சிச்ெசையானது தேைெவத் இயம் மானிட ைேவத்தியடி, அரக்கர் வைத்தியம் என மூவகைப்படும். தேவவைத்தியடிஸ்ன்பது Lisbu
13

Page 81
杀案
2
செந்தூரங்கள் முதலிய உயர்தர மருந்துகளால் செய்யப்படும் சிகிச்சையாகும். மானிட வைத்தியம் என்பது குடிநீர், சூரணம் மாத்திரை, எண்ணெய் முதலானவற்றால் செய்யப்படுவது அரக்கர் வைத்தியம் என்பது அறுத்தல், கீறுதல், வெட்டுதல் சுடுதல் அட்டைவிடல் முதலான அறுவை மருத்துவத்துடன் சம்பந்தப்பட்டவையாகும்.
மனிதன் பிரகிருதியின் மூலத்தில் உண்டாகி கிரிகசம்பந்தமும், உலகசம்பந்தமும் பெற்ற உடம்பில் ஆன்மாவைப் பொருந்தி யிருக்கிறான்: பிரகிருதி என்றால் பிர - என்றால் எழுச்சி, கிருதி - என்றால் சிருஷ்டி, எனவே சிரு ஷ் டி யி ல் எ மு ச் சி யு  ைட ய து பிரகிருதி எனப்படும். இன்னொரு விதத்தில் பி ர - சத் துவ கு ண ம் கிரு - இராசதகுணம். தி. தமோகுணம் அதாவது முக்குண சம்பந்தமுள்ளது பிரகிருதி எனப்படும் .
மனிதர்களுக்காக இவ்வுலகின் கண் வரையறுக்கப்பட்ட விட யங்கள் பற்றியும், அவர்கள் யாதொரு இடையூறுமின்றி உயிர் வாழ்தற்குரிய வழிகள் பற்றியும் சித்தர் கண்டறிந்தனர். மனித உடம்பினுள் ஒவ்வொரு அவயவழும் தனக்கு வேண்டிய
வற்றை விருத்திக்காக பிரகிருதியின் மூலப்பகுதியிலிருந்து கிரகித்துக்கொள்கிறது.
எவன் பிரகிருதியின் கூறுபாடுகளைத் தெளிவாக அறிந்து கொள்கிறானோ அவன்தான் மனித உடம்பின் கூறுபாடுகளையும் அறிந்து கொள்ள முடியும். அவனே சிறந்தவைத்தியனுமாம். மனிதனிடத்தில் இரண்டுவித அமைப்புக் கூறுபாடுகளுண்டு. தேகத்தின் வெளியமைப்புக்கூறுபாடு - பருவுடம்பு. உள்ளுடம்பு நுண்ணுடப்பு இதன் கூறுபாட்டை அறிந்து விட்டால் மூலவஸ்து மூலமாய் மனிதனுக்குள்ள நோ  ைய யும், gig, sps, 357 -steer நிவர்த்தியையும் எளிதில் அறியலாம்.
சோதிட அனுபவமும் வாத, பித்த, சிலேட்டும் ஞானமும் இருந்தால் தான் வைத்தியம் சித்திக்கும்.
ஆத்மா, மனம், உடம்பு மூன்றும் சேர்ந்ததே புருடன்
ஆன்மா மனத்தையும் உடம்பையும் தூண்டவும், செயலாற்றவும் செய்ய வல்லது. ஆனால், தான் ஒருவித பற்றுமின்றி இருக்கும்.
32

* உடம்பில் பஞ்சபூதம் தங்கிநிற்கும் இடங்கள்:
மண், நீர் என்பன தசையைப்பற்றி உஷ்ணத்தைப்பரவச்செய்து உடம்பை வளர்க்கும் தீயானது உடம்பில் உஷ்ணம் எழக் காரணமானது: உணவை இரசமாகமாற்றி சீவ அணுக்களை ஏற்படுத்தும். வளியும் வானும் மூளையிலும் நரம்புகளிலும் தங்கி நிற்கும்.
* சித்த வைத் தி யம் ஆன்ம சக்தி அ  ைட ந் த பிற கு விடயங்களை தெளிவாக அறிந்தபிறகு சித்தர்கள் கூறியது, எனவேதான் கடவுளிடமிருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது
ஒரு எல்லைக்கு மேல் சித்த மருத்துவ தத்துவங்களை எழுத்தில் வடித்தல் இயலாதாம்.
எனவே, மாணவர்கள் சித்த மருத்துவ தத்துவங்களை நன்கு ஆராய்ந்து தெளிந்து பின்பற்ற முயற்சி எடுக்க வேண்டும்.
33

Page 82
பகுதி II - அளவையியல்
1. அறிமுகம்
வேறுபெயர் - பிரமாணவியல் .
வரைவிலக்கணம் - விடயங்களைப் பற்றி அறியும் முறை அளவையியல் எனப்படும். இது கண்ணால் காணும் பொருள்களைப் பற்றியும், கண்ணால் காணமுடியாத பொருள்கள்களைப்பற்றியும்
கண்டு, கருதி கேட்டு அறிதலாம்.
சித்தமருத்துவத்தைப் பொறுத்தவரையில் ஒருநோயைப்பற்றி, அதன் காரணங்கள், குறிகுணங்கள் அதற்குப் பிரயோகிக்கத் தகுந்த மருந்துகள் என்பவற்றைப் பற்றி அறிவதற்கு அளவையியல் பற்றிய அறிவு இன்றியமையாததாகும்.
அளவையியலில் அ) விடயங்களை அறிதல் ஆ) ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்து பேதப்படுத்தல் இ) தொகுத்தல் ஈ) பிரயோகித்தல் என்று நான்கு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும் இ தி ல் பின் வரும் நான்கு கார ணி கள் சம்பந்தப்படுகின்றன:
1. ஏற்புடைய அறிவைப் பெறுபவர் (பிரமாதா) 2. ஏற்புடைய அறிவைப் பெறும்வழி (அளவை) 3. ஏற்புடைய அறிவுக்குரிய பொருள் (பிரமேயம்)
4. ஏற்புடைய அறிவைப் பெறுதல் (பிரமிதி)
அறிவைப் பெறும் வழிகள் (அளவைகள் I பிரமாணங்கள்)
34

பத்து வகையாம். அவையாவன:
காண்டல் (பிரத்தியட்சம்) கருதல் (அனுமானம்) உரை (சப்தம்) இன்மை (அபாவம்) பொருளொப்பு (அருத்தாபத்தி) ஒப்புமை (உவமானம்) பகுத்தறிதல் (பாரிசேடம்) ஐயக்காட்சி (சம்சயம்) வழக்கு (ஐதிகம்) இயல்பு (சாம்பவலிங்கம்)
* அளவை காண்டல் கருதலுரை
அபாவம் பொருளொப் பாறென்பர் அளவை மேலும் மொழிபுண்மை
ஐதிகத்தோடியல்பெனநான்கு அளவை காண்பரவையிற்றின்
மேலு மறைவரவை யெல்லாம் அளவை காண்டல் கருதலுரை
என்றிம் மூன்றினடங்கிடுமே"
( 3. S.)
35

Page 83
2. காண்டலளவை
வேறுபெயர் - பிரத்தியட்சம், காட்சி, புலக்காட்சி
வரைவிலக்கணம் - "காண்டல் என்பது ஊனக்கண்ணாலும் ஞானக்கண்ணாலும் விடயங்களைக் கண்டறிதலாம். சாதாரணமாக காண்டல் ஏற்படுவதற்கு ஆத்மா -> மனம் ஈ பொறிகள் -> பொருள் என்ற நான்கு அம்சங்கள் அவசிய மா கும். அதாவது ஆத்மாவால் தூண்டப்பட்ட மனமானது ஐம்பொறிகளின் உதவியுடன் விடயத்தை (பொருளை) அறிதலே காண்டல் எனப்படும். இது ஊனக்கண்ணால் காணும் பொருளுக்கே பொருத்தமுடையது. இதனையே புல்க்காட்சி என்றுங் கூறுவர். ஆனால் ஞானக்கண்ணால் ஏற்படும் காண்டலுக்கு ஐம்பொறிகளினதும் பொருள்களினதும் நேரடித்தொடர்பு அவசியமில்லை. உதாரணமாக இறைவன் புலன்களின் உதவியின்றியே எல்லாப் பொருள்களையும் அறிந்து கொள்கிறான். யோகிகள் தொலைதூரத்திலுள்ள பொருள்களையும் இறந்தகால, வருங்கால நிகழ்ச்சிகளையும் அவற்றோடு புலன் தொடர்பின்றியே அறிந்துகொள்கிறார்கள். (யோகக் காண்டல்)
காண்டலளவை முக்கியமாக நான்கு வகைப்படும். அவையாவன :
1. வரையறுக்கப்படாத காட்சி (நிர்விகல்ப காண்டல்) இதனையே விகற்பம் என்றும் நேர்மையில்லாக் காண்டல் என்றுங் கூறுவர். இதில் ஒரு பொருளைக் கண்டவுடன் ஏற்படும் அறிவாகும். உ-ம் வளைந்து கிடக்கும் கயிற்றைக்கண்டு பாம்பெனத் திடுக்கிடல். இதில் காணும் பொருளின் பெயர். வகை (சாதி) பண்பு (குணம்), தொழில் (காரணம்) என்பன பகுத்தறியப் படுவதில்லை.
136

காட்சியறிவின் கரண நற் காண்டலாகக் காட்சியது மாட்சி நிதியுடனித்தியங் கூடிட மன்னறிவு
காட்சி விகற்பம் விகற்பிலி யென்றிரு காட்சியதா மாட்சியிற் காண்ப லறிவே விகற்பிலி வாள் விழியே
- பதார்த்த தீபிகை
2 ஐயக் காண்டல் - பொருளினைக்கண்டு அதனை எது என
ஆராயாது துணிதலாம்
3. கலக்கக் காண்டல் (விபரீதக்காட்சி) ஒரு பொருளை வேறு ஒரு பொருளாகக் கொள்ளுவதாம். உதாரணமாக குன்றி வேரை அமுக்கிராவேரெனக் காண்டல்
4. வரையறுக்கப்பட்ட காண்டல் (சவிகல்ப காண்டல் ) இதனை நேர்மைக்காணல் என்றும் விகற் பிலிக்காட்சி என்றும் கூறுவர். இதில் காணும் பொருளின் பெயர், வகை, பண்பு. தொழில் ஆகியன காணப்பட்டு ஐயங்களைந்து உள்ளது உள்ளவாறு அறியப்படும்.
காண்டலளவை இன்னொரு விதத்தில் (1) இந்திரியக்காட்சி (பொறியாலறிதல்) (2) மானதக்காட்சி (ம ன தா ல றி த ல்) (3) வேதனைக்காட்சி (தன்னாலறிதல்) (4) யோகக் காட்சி என்று நாலு வகையாகக் கூறப்படுவதுமுண்டு.
நிர்விகல்ப காண்டல், ஐயக்காண்டல், கலக்கக் காண்டல் ஆகிய மூன்றும் இந்திரியக் காட்சிகளாம்.
சவிகல்பக் காண்டல் மனத்தினால் சிந்தித்து பகுத்தறியப் படுவதால் மான தக் காட்சியாம். மருத்துவத்தில காண்டல் மூலம் நோயை அறிவதற்கு மானதக் காட்சி அவசியமாகும்.
யோகநிலையில் ஐம்பொறிகளின் உதவியின்றி விடயங்களை அறிதல் யோகக் காட்சியாம். சித்தர்கள் யோக நிலையிலேயே சித்த மருத்துவத்தையும் மருந்துகளையும் கண்டறிந்து கூறினர் என்பர்.
மருத்துவத்தில் காண்டலளவை மிகமுக்கியமானதொன்றாகும். ஒரு நோயாளியை - அவரின் நோயின் குறிகுணர் 9, 17 முதலில்
கண்ணால் பார்க்கிறோம். அப்போது நிர்விகல்ப காண்டல், பல் வேறு
37

Page 84
நோய்களின் குறி குணங்க  ைளக் கண்டு நோய் இதுவோ அதுவோ என்ற மயக்கம் (ஐயக்காண்டல்) அதன் விளைவாக (விபரீதக்காட்சி) சிலவேளை தவறான நோய்கனிப்பு என்பனவும் ஏற்பட வாய்ப்புண்டு. ஐயங்களைந்து, இந்திரியங்கள் மனம் என்பவற்றின் உதவியுடன் நோய் இன்னதுதான் என்று கண்டறிதலே காண்டலின் பயனாகும்.
as gob La Gran al GDub usigib 5 Tyana air
காணும் பொருள் அதி நுண்மையாக (அணுத்தன்மை)வோ, அல்லது அதிக சமீபமாகவோ அல்லது அதிக தூரத்திலோ இருந்தால் காண்டல் சரியாக ஏற்படாது. மேலும் புலன்கள் பலவீனப்பட்டிருந் தாலும் மனம் வேறு திசைகளில் சென்றாலும் (அலைபாய்ந்தாலும்) சமமானவற்றுடன் கலந்திருந்தாலும் காட்சியளவை பாதிக்கப்படும்.
O
காண்டில்
KO | | நிர்விகல்ப ஐயக கலக்கக் சவிகல்பக் காண்டல் காண்டல் காண்டல் காண்டல்
இந்திரியக் இந்திரியக் இந்திரியக் மாணதக் காண்டல் காண்டல் காண்டல் காண்டல்
38.

3. கருதலளவை
வேறுபெயர் - அனுமானப்பிரமாணம், அன்வீகூடிா , யூகம் வரைவிலக்கணம் - இது கொண்ட பொருளினைக் கருதி அறிதலாம்.
அனுமானம் என்றால் பின்பு ஏற்படும் அறிவு என்றுங் கூறுவர். ஏனெனில் கருதலளவை மூலம் விடயத்தை அறிவதற்குக் காண்டல், உரை முதலிய அளவைகளின் உதவியும் தேவையாம். கருதலளவை யானது தன்பொருட்டுக்கருதல் (ஸ்வதார்த்த அனுமானம்) பிறன் பொருட்டுக்கருதல் (பரார்த்த அனுமானம்) என இரண்டு வகைப்படும். உதாரணமாக ஒருவர் புகையைக் கண்டவுடன் ஆங்கு நெருப்புண்டு என்று ஊகித்தல் தன்பொருட்டுக் கருதலாகும். அதனை இன்னொருவருக்கு எடுத்துக்கூற முற்படின் அது பிறன்பொருட்டுக் கருதலாம்.
கருதலளவையின் ஐந்து உறுப்புக்கள் (பஞ்ச அவயவங்கள்)
1, மலையின்கண் நெருப்புள்ளது (பிரதிஞ்ஞை = நிலைநாட்ட
வேண்டியது)
2, ஏனெனில் அங்கு புகை இருக்கிறது. (ஹேது - காரணம்)
3. எங்கெல்லாம் புகை உள்ளதோ அங்கெல்லாம் நெருப்பு உண்டு
உ-ம் சமயலறை (உதாரணம்)
4. நெருப்போடு மாறாது தொடர்ந்து வருகின்ற புகை இம்
மலையில் இருக்கிறது. (உபநயம்)
5. எனவே இம்மலையின் கண் நெருப்புள்ளது (றிகமனம் - முடிவு)
39

Page 85
இன்னொரு விதத்தில் கருதலளவை இறந்த காலக் கருதல், நிகழ் காலக் கருதல், எதிர் காலக் கருதல் என மூவகைப்படும். இவற்றை முக்காலக் கருதலளவை என்பர் - உதாரணமாக ஒருவரின் இடது புயத்தில் காணப்படும் சிறு தழும்பைக் கொண்டு அவருக்கு சிறு வயதில் காசநோய்த்தடுப்பூசி (BCG) போடப்பட்டது என்று அனுமானிப்பது இறந்தகாலக் கருதலளவையாகும். ஒருவர் இரத்த வாந்தி எடுப்பதைக் காணும்போது அவருக்கு இரைப்பை - குடற்புண் இருக்கலாம் என்று கருதுவது நிகழ் காலக் கருதலளவையாகும். ஒரு குழந்தை காதில் கை வைத்தபடி அழுதால் அதற்கு காதில் ஏதோ நோய் என்று அனுமானிக்கலாம். ஒரு குழந்தைக்கு அடிக்கடி லசுனதாபிதம் ஏற்படுவதைக் கண்டு அதற்கு வளிக்கீல்வாயு (Rheumatic Fever) ஏற்படக்கூடும் எனக் கருதுவது எதிர்காலக் கருதலளவையாகும்.
காண்டல் கருதலளவைகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் வருமாறு:
காண்டலளவை கருதலளவை
1. உடனடியாக ஏற்படும் 1. பின்பு ஏற்படும் அறிவு
அறிவு.
2. நிகழ் காலத்துடன் 2. முக் கா லத் து ட னு ம்
தொடர்புடையது, தொடர்புடையது.
3. தெளிவான விபரம் 3. தெளிவாகவோ, தெளிவற்
(அறிவு) றதாகவோ இருக்க லாம்.
4. பொருளுடன் நேரடித் ! 4. நேரடித் தொடர்பு
தொடர்பு அவசியம். அவசியமில்லை.
5. ஆத்மா , மனம், பொறி 5 , அவ்வாறில்லை.
புலன்கள் பொருள் என்ப வற்றுக்கிடையில் நேரடித் தொடர்புண்டு.
6. ஏனைய அளல வகளின் 6. காண்டல், உரை முதலிய
உதவி தேவையில்லை. ஏனைய அளவைகளின்
உதவி தேவை.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரையில் நோய்நிதானிப்பதில் கருதலளவை முக்கிய இடம் வகிக்கிறது.
40

4. உரையளவை
வேறுபெயர் - ஆப்த உபதேசம், வாக்கு, வேதவாக்கு, ஆகமம்,
சப்தப் பிரமாணம், சான்றுரை, நூலளவை,
வரைவிலக்கணம் - குற்றமில்லாத உண்மைப் பொருளை அறிந்த அறிஞர்களால் சொல்லப்பட்டனவும். எழுதி வைக்கப்பட்டவை யுமாகியவற்றைக் கொண்டு ஒரு பொருள் பற்றி அறிவது உரை அளவையாகும். உரையளவை இரண்டு வகைப்படும் - 1) அைெளகிக உரை (வைதிகம்) 2) உலகியல் கூற்று (லெளகிகம்)
அலௌகிகம் - என்றுமே பிழையாத கூற்றாகும். உதாரணமாக வேதம் , ஆகமம் முதலியன கடவுளால் ' சொல்லப்பட்டதாகக் (அருளப்பட்டதாக) கொள்வதால் அவற்றில் பிழையிருக்க முடியாது என்று கருதி அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். இதனையே வேத வாக்கு என்றும் ஆகமம் என்றும் கூறுகிறோம். சித்த வைத்தியமும் முற்றுமுணர்ந்த சித்தர்களால் கூறப்பட்டுள்ளதால் அதுவும் அலெளகிகமாகும். அப்படியே ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பது அறிஞர் கருத்தாம்.
உலகியல் கூற்று - இது பிழைக்கக் கூடியது. உதாரணமாக சித்தமருத்துவம் சித்தர்களால் கூறப்பட்டுள்ளதால் அதை அலெளகிக உரை என்கிறோம். ஆனால், தற்போது எமக்குக் கிடைத்துள்ள சித்தமருத்துவ நூல்கள சித்தர்களால் கூறப்பட்டவை மட்டுமன்றி அவர்கள் வழிவந்தவர்களால் கூட்டியும் குறைத்தும் மாற்றியும் எழுதப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. எனவே, அவ்விடயங் களின் நம்பகத்தன்மையும் சந்தேகத்துக்குரியதாகிறது. அதாவது உலகியல் கூற்று மாறுபடக் கூடியது என்பதாம்.
எனவே, உரை அல்லது நூலளவையின் நம்பகத்தன்மை அதைக் கூறியவரிலேயே பெரிதும் தங்கியுள்ளது. O
41

Page 86
5. உவமையளவை
வேறு பெயர் - உபமானப்பிரமாணம், எடுத்துக் காட்டு, ஒப்புமை
வரைவிலக்கணம் - ஒரேமாதிரியாய் இருத்தல் பற்றிய அறிவே இதற்குக் கருவியாய் அமைகிறது. பிரசித்தமான ஒன்றைக் கொண்டு பிரசித்தமல்லாத ஒன்றை அறிதல் அல்லது தெரிந்த ஒன்றைக் கொண்டு தெரியாத ஒன்றைப்பற்றி அறிதல் உவமையளவையாகும். இங்கு அறிந்த ஒன்றுடன் அறியாத ஒன்று ஒப்புநோக்கி அறியப் படுகிறது.
உதாரணமாக வாதநாடி என்றல் என்ன என்று அறிவதற்கு அந்நாடியின் நடையானது மயில், அன்னம், கோழி, ஓணான், குயில், கொக்கு முதலியவற்றின் நடைக்கு ஒப்பிடப்படுகிறது. பித்தநாடியின் நடை ஆமை அட்டை ஆகியவற்றின் நடைக்கு உபமானமாகக் கூறப்படுகிறது. தவளை, பாம்பு இவற்றின் நகர்வு ஐயநாடிக்கு உபமானமாகக் கூறப்படுகிறது.
அதாவது கோழி, ஓணான் முதலியன தமது கால்களைத்தூக்கி வைத்து நடக்கும் அதுபோல வாத நாடியும் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதாம். எனவே தான் வாத நாடியின் மாத்திரையளவு ஒன்று என்று கூறப்பட்டுள்ளது. அதுபோன்று ஆமை, அட்டை முதலியன மேற்கூறிய பறவைகளிலும் பார்க்க குறைந்தளவே தமது பாதங்களை நகர்த்தி நகருகின்றன. அதுபோலவே பித்த நாடியும் இருக்கும் என்பதாம் , எனவே அதன் மாத்திரை அரை என்று கூறப்பட்டுள்ளது தவளை, பாம்பு முதலியன தரையில் அழுந்தியும் பாய்ந்தும் நகர்கின்றன. அது போன்றதே ஐயநாடி என்பதால் அதன் மாத்திரை கால் என்று கூறப்பட்டுள்ளது .
சித்தமருத்துவத்தைப் பொறுத்தவரையில் காண்டல், கருதல், உரை, உவமை ஆகிய நான்கு அளவைகளுமே முக்கியமானவை
யாகும்.
42

.ே இன்மை
வேறுபெயர் - அபாவம்
வரைவிலக்கணம் - ஏதோ ஒன்று ஏதோ ஓரிடத்தில்குறிக்கப்பட்ட நேரத்தில் இல்லை என்பதாம்.
இது ஐவகைப்படும் அவை
முழுதுமின்மை 2. ஒன்றில் ஒன்றின்மை * முன்இன்மை 4. உள்ளதின்மை
5. அழிவுபட்டின்மை என்பனவாம்
1. முழுதுமின்மை - மனிதனுக்கு எக்காலமும் கொம்பில்லை என்று
கூறுவது,
2. முன்னின்மை (பிராகபாவம்) இதைக் காரியத் தோற்றத்துக்கு முன் இன்மை என்று கூறலாம் உதாரணமாக குடம் செய்வதற்கு முன் மண் மட்டுமே இருப்பது (குடமின்மை) இங்கு குறிப்பிட்ட பொருள் (குடம்) உண்டாக்கப்பட்டவுடன் இன்மை முடிவுக்கு வருகிறது இதற்குத் தொடக்கம் இல்லை முடிவுண்டு.
3. அழிவுபட்டின்மை (பின்இன்மை அல்லது பிரத்துவம்சாபாவம்) இது குடம் உடைந்த பின் குடத்தின் ஒடுகளையும் மண்ணையும் பற்றியது. அதாவது குடம் அழிந்துபோனதால் இப்போது இல்லை என்பதாம். இதற்குத் தொடக்கம் உண்டு, ஆனால் முடியவில்லை
4 உள்ளதின்மை (அத்தியந்த அபாவம்) நிலத்தில் குடமில்லை
என்பது. முன்பு. இருந்தது; இப்பொது இல்லை.
5. ஒன்றில் ஒன்றின்மை (பரிமாற்றின்மை அல்லது அன்யோன் யாபாவம்) இரு பொருள்களைப் பற்றியது. குடம் ஆடையன்று இரண்டும் வேறு என்பதாம்.
143

Page 87
7. பொருளொப்பு
வேறு பெயர்- அருத்தாபத்தி
வரைவிலக்கணம்: இரு பொருள்களை மறைமுகமாக ஒப்பு நோக்கிக்காட்டல். உதாரணமாக ஒருவன் பகலில் உண்பதில்லை; ஆனால், பருத்திருக்கிறான் என்று கூறின் அவன் இரவில் உண்கி றான் என்ற அறிவு மறைமுகமாகக் கிடைக்கிறதல்லவா? அதுவே அருத்தாபத்தி,
8. பாரிசேடம்
வேறுபெயர் - அவினாபாவம்
வரைவிலக்கணம்: இருபொருள்களில் இது, அதுவென அறிதல்,
உ+ம் இனிப்பு, புளிப்புச்சுவைகளில் இனிப்புச்சுவையில் தீ
பூதம் இல்லை என்று கூறல். (அதாவது தீபூதம் உள்ளது புளிப்புச் சுவை என அறிதற்போலாம்)
9. சாம்பவம்
வேறுபெயர் - ஐயக்காட்சி
வரைவிலக்கணம் இப்படியும், அப்படியும் இருக்கலாம் என
ஐயத்துடன் அறிதல். உதாரணமாக பருத்த வயிற்றுடன் வரும் பெண்ணைக் கர்ப்பிணி என நினைத்தல் போன்றதாம்.
10. ஐதிகம்
வேறுபெயர்: வழக்கு, எயாத்தி, மரபு
வரைவிலக்கணம்: தொன்று தொட்டு வழங்கி வருவதைக்
கொண்டு அறிதல். உதாரணம் சித்த மருத்துவத்தின் தந்தையாக அகத்தியரைக்கொள்வதே வழக்கு
1 44

11. இயல்பு
வேறுபெயர் - சகஜம், சாம்பவலிங்கம்
வரைவிலக்கணம் - இயற்கை (இயல்பைக்) யைக் கொண்டறித லால்,
உதாரணமாக கண்ணால் காணாதிருக்கும் ம ல் லி  ைக யி ன் மணத்தைக்கொண்டு அங்கு மல்லிகைப்பூ உள்ளது என இயற்கை யாலறிதல்.
இங்கு பின்னர் கூறப்பட்ட அளவைகள் ஏழும் காண்டல், கருதல் , உரை ஆகிய மூன்றினுள்ளும் அடங்குவனவாம். எவ்வாறெனில்,
காண்டல் அளவையுள் - இன்மை அடங்கும்.
கருதல் அளவையுள் - பொருளொப்பு, உவமை, பTரிசேடம்
ஐயக்காட்சி, இயல்பு ஆகிய ஐந்தும் அடங்கும்.
உரையளவையுள் - ஐதிகம் அடங்கும்
எனவே தான் சைவசித்தாந்திகள் அளவைகள் மூன்று எனக் கொண்டனர்.
இவற்றைவிட யுக்தி (உத்தி), அனுபலப்தி என்னும் இரு அளவை, களும் சில நூல்களில் கூறப்பட்டுள்ளன.
12. யுக்தி அளவை வேறுபெயர் - உத்தி
வரைவிலக்கணம் - ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட உரையளவை முதலியவற்றால் அறிந்து கொண்ட ஒரு பொருளை நூல் வழக் கொடும், உலக வழக்கொடும் பொருந்தக்காட்டி அப்பொருளை சந்தர்ப்பமறிந்து யாவரும் ஏற்கத்தக்கதாக இன்னோரிடத்தில் பயன் படுத்தி அறிதற்குக் கருவியாக்கல் யுக்தி அளவையாம்.
மருத்துவத்தில் நோய்களை நிதானிப்பதற்கும், உரிய சிகிச்சை யளிப்பதற்கும் இவ்வளவை அவசியம் என்பது சிலரின் கருத்தாகும்.
45

Page 88
13. அனுபலப்தி
வரைவிலக்கணம் குறித்த ஒரு பொருள் குறித்த ஒரு இடத்
தில் இல்லை என்று ஏற்படும் அறிவாகும். இதுவும் இன்மையைத் தெரிவிக்கும் ஒர் அளவையாகும். உதாரணமாக மாணிக்க கங்கையில் உள்ளது கதிர்காமம் என்றால் அவ்வாற்றிலன்றி ஆற்றங்கரையில் உள்ளது என்றே பொருளாகிறதல்லவா? அதுவே அனுபலப்தி. ()
O Spij (plga (Conclusion)
வரைவிலக்கணம்: ஒரு விடயத்தைப்பற்றி - அது இன்னதுதான்
என்ற முடிவுக்கு வருதல் இறுதிமுடிவு அல்லது சித்தாந்தம் எனப்படும் அது நான்கு வகைப்படும்.
1.
சர்வதந்திர சித்தாந்தம்: இது யாவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய இறுதிமுடிவாகும். உ-ம்: பிறந்தால் இறக்க வேண்டும் .
பிரதிதந்திர வித்தாந்தம் இது சந்தர்ப்பத்துக்கேற்ப எடுக்கும் இறுதிமுடிவாகும். உ-ம்: இரசம் என்பது உணவு; பஞ்சதன் மாத திரையில் ஒன்று சுவை; குதம்: ஏழுதாதுக்களில் ஒன்று; அன்ன ரசம்.
அதிகரண சித்தாந்தம் ஒரு இறுதிமுடிவில் இருந்து இன்னொரு இறுதி முடிவுக்கு வருதல் உ-ம்: இரவும் பகலும், தற்போது பகல் (ஒரு இறுதி முடிவு) பிறகு இரவு (மற்றொரு இறுதிமுடிவு)
அபியுபகம சித்தாந்தம் சந்தேகம் தீரும்வரை தற்காலிகமாக எடுக்கும் இறுதிமுடிவாகும். உ-ம் ஒருவர் திடீரென்று மெலிந்து கொண்டு போதல் - புற்று நோயாக இருக்கலாம். (பின்பு இதுவே நிரந்தர இறுதிமுடிவாகவும் வரலாம்)
146

பகுதி II - பொருட்பண்பியல்
1. அறிமுகம்
வேறுபெயர் - பதார்த்தவியல், பதார்த்த விஞ்ஞானம்,
அறிவளவையியல்.
நியாய வைசேடிக தத்துவங்கள் கூறும் பதார்த்தக் கொள்கை சித்தமருத்துவத்துக்கும் ஏற்புடையதாகும். பதார்த்தம் என்றால் உள்ளதும் (அஸ்தித்துவம் அறியக்கூடியதும் (ஞேயத்துவம்), விளங்கப்படுத்தக் கூடியதும் (அபிதேயத்துவம்), நிரூபிக்கக்கூடிய துமான (பிரமேயத்துவம்) பண்புகளையுடையது. பதார்த்தங்களைப் பற்றி அறிவதற்கு அளவையியல் பெரிதும் உதவும். உதாரணமாக ஏதாவது ஒன்று (ஒரு பொருள்) உள்ளதா என்று அறிவதற்கும், நிரூபிப்பதற்கும் அ ள  ைவ யி ய லின் உதவி அவசியமாகின்றது. பதார்த்தங்கள் ஏழு வகைப்படும் . அவையாவன (1) பொருள் (திரவியம்), (2) பண்பு (குணம்), (3) செயல் (கர்மம்), (4) பொதுமை (சாமானியம்), (5) சிறப்பியல்பு (விசேடம்), (6) உள்ளார்ந்த தன்மை (சமவாயம்), (7) இன்மை (அபாவம்) என்பனவாம்.
147

Page 89
2. பொருள்
வேறுபெயர் - திரவியம்
வரைவிலக்கணம் - பண்பும் செயலும் இணைபிரியாத வகையில் எதில் இடம் பெற்றுள்ளதோ அதுவே பொருள் எனப்படும். பொருளே முதன்மையான பதார்த்தமாகும். ஏனெனில் இது உயிருள்ள பொருள்கள், உயிரற்ற பொருள்கள் ஆகிய அனைத்தையும் தன்னுள் அடக்கியிருக்கிறது. பொருட்கள் பல விதமாக வகைப்படுத்தப்
பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமானவை வருமாறு:
1. நித்திய பொருள்கள் (என்றும் உள்ளவை) 2. அநித்திய பொருள்கள் (அழியக்கூடியது)
நித்திய பொருள்கள் என்றும் உள்ளவை. அழிவற்றவையாகும். அவை ஒன்பது வகைப்படும். (நவபொருள்கள்) அவையTவன. (1) நிலம் (பிருதுவி), (2) நீர் (அப்பு) (3) தீ (தேயு), (4) சாற்று ( வாயு), (5) விண் (ஆகாயம்), (6) காலம் {7) வெளி (திக்கு), (8) ஆன்மா (ஆத்மா), (9) மனம் என்பனவாகும். இவ்வான் மீகச் சடப்பொருள்களாற்றான் இப்பிரபஞ்சம் ஆக்கப்பட்டுள்ளது. இவற்றுள் நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கும் மனமும் அணுத்தன்மையுள்ளவை. எனவே இவற்றைப் பெளதிகப்பொருட்கள் என்றுங் கூறுவர். சிலர் விண்ணையும் இதனுள் அடக்குவர். ஆனால், அது அணுக்களால் ஆக்கப்பட்டதன்று. அது முடிவில்லாதது. அது எதையும் தோற்றுவிக்காது. காலமும் வெளியும் விண்ணைப் போன்றவையே. வெளியும் விண்ணும் ஒன்றல்ல. விண்ணால் நிரப்பப்பட்டதே வெளியாகும். எனவே, ஆத்மா, காலம், வெளி விண் ஆகிய நான்கையும் அபெளதிகப்பொருள்கள் என்றுங் கூறுவர். ஆன்மாவானது எங்கும் நிறைந்ததாயும் எங்குமுள்ளதாயும் இருப்
48

பினும் அது மீண்டும் மீண்டும் பிறக்கும்போது மனம் உடல்என்பனவற் றுடன் தொடர்பு கொள்ளும்போது வரையறை செய்யப்படுகிறது. அறிதல், பற்று, வெறுப்பு இயற்றிநிலை (Volition), இன்பம், துன்பம், சிறப்பு, இழிவு என்பன அதன், பண்புகளாகும். இப்பண்புகள் யாவும் தற்காலிகமானவையே. ஆன்மாவோடு நிரந்தரத்தொடர்புடையவை அல்ல. ஆன்மா வீடுபேறடையும்போது ஆன்மாவுக்கு எந்த ஒரு இயல்பும் இருக்காது. தன்னுணர்வுகூட இருக்காது. ஒவ்வோர் ஆன்மாவுக்கும் சொந்தமான ஒரு மனம் உண்டு. LID607 Lb அறிதலுக்குரிய கருவியேபாகும். எனவே அது உயிர்ப் பற்றது. எப்பொருளையும் தோற்றுவிக்காது. மனம் வழியாகவே ஆன்மா உணர்கிறது. மீண்டும் மீண்டும் பிறக்கிறது.
மேலும், பொருள்களைக் காரணப்பொருள்கள் காரியப் பொருள்கள் என்று இரண்டாகப் பிரித்துக்கூறுவர். காரணப் பொருள்களால்தான் காரியம் ஏற்படுகிறது. (சற்காரியவாதம்) காரணமின்றிக் காரியமில்லை. காரணத்திரவியங்களாக மேற்கூறிய நவபொருள்களும் கருதப்படும். இப்பிரபஞ்சமாகிய காரியத்துக்கு இவையே காரணப் பொருள்களாகும. காரியப் பொருள்கள் உயிருள்ள பொருள்கள் (சேதனப் பொருள்கள்), உயிரற்ற பொருள்கள் (அசேதனப் பொருள்கள்) என இருவகைப்படும். உயிருள்ள பொருள்கள் உணர்வுகளை வெளிக்காட்டுபவை (உ+ம் மனிதன்), உணர்வுகளை உள்ளே வைத்திருப்பவை (உ + ம்: தாவரங்கள்) என்று மேலும் இருவகைப்படும்.
இன்னொரு வகையில் பொருள்களை மருந்துப் பொருள்கள் (அவுடதப் பொருள்கள்), உணவுப்பொருளகள் (ஆகாரப்பொருள்கள்) என இரண்டாகப் பிரித்துக் கூறுவர். உணவுப் பொருள்களைப் பொறுத்தவரையில் அவற்றின் பண்பு, செயல் என்பவற்றோடு சுவையும் முக்கிய இடம் பெறுகின்றது. அதனாற்றான் "உணவே மருந்து" என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்திய சித்தர்கள் மருந்துப் பொருள்களிலும் சுவையை முக்கியமானதாகக் கூறினர். அதுபற்றி பின்னர் எடுத்துக்கூறப்படும். மருந்துப் பொருள்களைப் பொறுத்தவரையில் அவற்றின் இயல்பு, செயல், சுவை என்பவற் றுடன் ஆற்றல் அல்லது வீரியமும் முக்கியத்துவமுடையதாகக் கூறப்படுகிறது.
மருத்துப் பொருள்களைப் பொறுத்த வரையில் அவை காணப்படும் இடத்தைப் பொறுத்து பின்வருமாறும் வகைப்படுத்தப்
பட்டுள் 6TGOf
149

Page 90
1. மலைபடு பொருள்கள் - உ + ம் மிளகு, கோட்டம், அகில்,
தக்கோலம்.
2. காடுபடு பொருள்கள் - உ + ம்: தேன், கொம்பரக்கு,
நாவி, மயிற்பீலி 3. நாடுபடு, பொருள்கள் - உ + ம் செந்நெல், சிறுபயறு,
கரும்பு, வாழை 4. கடல்படு பொருள்கள் - உ + ம் உப்பு, பவளம், முத்து,
சங்கு,
செயலடிப்படையில் நோக்குமிடத்து பொருள்கள் செயலாற்றல் கூடியவை (தீட்சண வீரியம்). செயலாற்றல் குறைந்தவை (மிருது வீரியம்) இடைத்தரமானவை (மத்திம வீரியம்) என ep6iv gy வகைப்படும்.
1. செயலாற்றல் கூடியவை - நேர்வாளம் (தீவிரமலகாரி)
2. செயலாற்றல் குறைந்தவை - கரணக்கிழங்கு (மலத்தைச்
சிறிது இளக்கும்)
3. இடைத்தரமானவை - கடுக்காய் (இலகுமலகாரி)
இன்னொரு முறையில் சீத வீரியம், வெப்பவிரியம் என இருவகைப்படும்.
1. சீதவீரியம் - ஆக்கச் செயற்பாட்டுக்கு (Anabolism) ஆதார
Dnr 35 gol-Git GTGØD 6. 2- - b. Linri)
2. வெப்ப வீரியம் - சிதைவுச் செயற்பாட்டுக்கு (Catabolism) ஆதாரமாக உள்ளவை. உ + ம், சுக்கு மிளகு, திற்பலி
மருந்துப் பொருள்களை கூடியிருப்பதைக் குறைத்தல் (சமனம்) குறைந்திருப்பதைக் கூட்டல் (கோபனம), ஒரு குறிக்கப்பட்ட நிலையை அப்படியே பேணல் (சுவஸ்தம்) என்று மூன்று வகையாகவும் கூறுவா .
இன்னொரு முறையில் மே ல் நோ க் கும் பொருள்கள் (விண் + காற்று பூதங்களாலானவை), கீழ்நோக்கும் பொருள்கள் (நிலம் + நீர் பூதங்களாலானவை), நாற்புற புறம் பரவக்கூடியவை (தீ பூதத்தாலானவை) என்று மூவகையாகவும் கூறப்படும். உதாரணமாக வாந்தியையுண்டுபண்ணும் பொருள்கள் மேல் நோக்கும் தன்மையின, பேதியையுண்டுபண்ணும் பொருள்கள் கீழ்நோக்கும் இயல்பின. வெப்பகற்றி, நஞ்சுண்டாக்கி, தீபன, பாசனமுண்டாக்கி பொருள்கள் நாற்புறமும் பரவக்கூடியன. O
150

3. பண்பு
வேறு பெயர் - குணம், இயல்பு, தன்மை
வரைவிலக்கணம் - ஒரு பொருளை ஆதாரமாகக் கொண்டது; ஏனைய பண்புகளில் இல்லாதது; சேர்தலுக்கோ, பிரிதலுக்கோ காரணமாயில்லாதது; அவற்றோடு எவ்வித சம்பந்தமுமில்லாதது. பொருளில் பண்பும் செயலும் இணைபிரியாத வகையில் இடம்பெறும் என்று கூறப்பட்டது. எனவே ஒரு பொருளின் செயலுக்கு அதன் பண்பே முக்கிய காரணமாகிறது. பண்புத் தன்மை சாமானியமானது. பொருளைப் பற்றியது.
பண்பானது ஒரு பொருளில் கட்டாயமாக என்றுமுள்ளதாக (நித்தியமானதாக) இருக்க வேண்டும் என்பதில்லை. உதாரணமாக வில்வம் பழத்தை எடுப்போமானால் அது நன்கு பழுக்காத நிலையில் இலேசு, வரட்சி என்னும் பண்புகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் அது பழுக்கும் போது பாரம், நெய் ப் பு முதலிய பண்பு களைப்புடையதாக மாறுகிறது. அதற்கேற்ப அதன் செயலும மாறுகிறது. உதாரணமாக வில்வங்காய் மலத்தைக் கட்டும். வில்வம்பழம் மலமிளகதியாகச் செயற்படுகிறது.
மேலும் பல பண்புகள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களுக்குப் பொதுவானவையாக இருக்கலாம். அதே வேளை சில பண்புகள் குறிப்பிட்ட ஒரு பொருளுக்கேயுரிய தனியியல்புகளாகவும் காணப் படுகின்றன. உதாரணமாக மண்ணிற்கு - மணமும், நீருக்கு - சுவையும், தீயிற்கு - உருவமும், வளிக்கு - ஊறும் (ஸ்பரிசம்), விண்ணுக்கு - ஓசையும் தனிப்பண்புகளாம்.
151

Page 91
பொருள்களின் பண்புகள் இருபத்து நான்கு என்று கூறப்படுகின் றன. அவற்றுட் சில சடச்சார்புடையன; சில உளச்சார்புடையன. அவை வருமாறு: உருவம், சுவை, மணம், ஊறு. ஓசை (சத்தம்), எண், அளவு (பரிமாணம்), தனித்திருக்கும் தன்மை (பிருதத்துவம்), சேர்தல் (சம்யோகம்), பிரிதல் (விபாகம்), சேய்மை (பரத்துவம்), அண்மை (அபரத்துவம்), அறிவு (புத்தி), இன்பம் (சுகம்), துன்பம் (துக்கம்), விருப்பம் (இச்சை), வெறுப்பு (துவேசம), முயற்சி (பிரயத்தனம்), மந்தம் (குருத்துவம்), நீர்மை (திரவத்துவம்), ஒட்டுறவு (சினேகம்), கலைத்திறன் (சம்ஸ்காரம்), நன்மை, தீமை, எனினும் மருத்துவத்தில் இப்பண்புகளிற் பல அதிகம் முக்கியத்துவம் பெற்றில்லை. இவற்றுக்குப் பதிலாக மருத்துவத்தில் இருபது பண்புகள் கூறப்படுகின்றன. அவை நேர்ப்பண்புகள் எதிர்ப்பண்புகள் என்று பிரித்துக் கூறப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு:
நேர்ப்பண்புகள் எதிரிடையான பண்புகள்
1. Lurt Titið 1. இலேசு / நொய்மை 2. தாழ்த்தல் / மந்தம் 2. கூர்மை / தீக்ஷணம்
3. குளிர்ச்சி 3. வெப்பம்
4. நெய்ப்புத்தன்மை / 4. 6 TL 3
சினிக்தம்
5. வழுவழுப்பு 5. கரகரப்பு
6. திண்மம் 6. நீர்த்தன்மை / திரவம்
7. மிருது 7. கடினம்
8. ஸ்திரம் / நிலையானது 8. சரம் / பெருகியோடும்
தன்மை / அசையக்
கூடியது
9. நுண்மை / சூக்ஷ"மம் 9. பருமை / தூலம் 10. மாசற்ற தன்மை / 10. தெளிவின்மை/பிச்சிலம்
விசதம்
52

ஒவ்வொரு பொருளினதும் பண்பு அல்லது குணம் பற்றித் தெரிந்தால்தான் மருத்துவத்தில் அவற்றைத் தகுந்த முறை பில் பிரயோகிக்க முடியும். உதாரணமாக மெலிந்து கொண்டு போகும் ஒருவரில் இலகுகுணம் மேலோங்குவது வழக்கம். அத்தகைய நிலையில் காற்று, விண், பூதங்கள் அதிகரித்துக் காணப்படும். எனவே, அவருக்கு வழங்கும் அவு டத, ஆகாரங்கள் பாரத் தன்மையுடையன வாகவும், நிலம், நீர், பூத அம்சங்களுடையவையாகவும் இருத்தல் அவசியம். அத்தகைய பொருள்கள் பெரும்பாலும் இனிப்புச் சுவை யுடையனவாக இருப்பதைக் காணலாம்.
முக்குற்றங்களின் பண்புகள் அல்லது குணங்கள்
1. வளியின் பண்புகள் - வரட்சி, குளிர்ச்சி (தண்மை), நுண்மை
இலேசு, அசையக் கூடியது.
2. அழலின் பண்புகள் - வெப்பம், நீர்த்தன்மை, கூர்மை
3. ஐயத்தின் பண்புகள் - குளிர்ச்சி (தண்மை), பாரம், அசைவின்மை (நிலையானது), மிருது, நெய்ப்புத்தன்மை, தாழ்த்தல் (மந்தம்), திண்மம்,
2 Linds[($is6.fléir tu6ÃIIIi.6i
1. சாரம் - திரவத்தன்மை, நெய்ப்புத்தன்மை, மந்தம்,
அசையக் கூடியது.
2. செந்நீர் - திரவத்தன்மை
3. ஊன் - பருமை, நிலையான தன்மை, பாரம், கடினம். 4. கொழுப்பு - திரவத்தன்மை, நெய்ப்புத்தன்மை, 6մ(ԼՔ 6ն(ԼՔ{1ւ 5. என்பு - பாரம், கடினம், பருமை, நிலையான தன்மை 6. ypaden - நெய்ப்புத்தன்மை
7. சுக்கிலம் - திரவத்தன்மை, நெய்ப்புத்தன்மை
இங்ங்ணம் நாம் முக்குற்றங்கள், உடற்கட்டுகள் முதலியவற்றின் குணங்களை - பண்புகளை அறிந்து கொண்டால் நோய்நிலையில் அவுடத, ஆகாரங்களைப் பிரயோகிப்பதற்குப் பேருதவியாக இருக்கும். உதாரணமாக வளிமேலிடும்போது அதன் பண் புக ள |ா ன
153

Page 92
வரட்சி, இலகு, குளிர்ச்சி, அசைவு முதலியவற்றில் ஒன்றோ அல்லது பலவோ அதிகரிக்கக் கூடும். அத்தகைய சந்தர்ப்பங்களில் நாம் அவ்விதம அதிகரித்த பண்புக்கு எதிரிடையான பண்புள்ள அவுடதம், ஆகாரம், செய்கை என்பவற்றைப் பிரயோகிப்பதன் மூலம் அதிகரித்த வளியைத் தன்னிலைக்குக் கொண்டுவர முடியும். சிலவேளைகளில் வளியின் பண்புகளில் ஒன்றோ அல்லது பலவோ குறைவதனாலும் நோய் ஏற்படக்கூடும். அத்தகைய சந்தர்ப்பங்களில் குறைவடைந்த பண்புடைய பொருள்களை வழங்குவதன் மூலம்
விபச் சாதாரண நிலைக்குக் கொண்டுவர முடியும்
குணங்களுக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையிலான தொடர்பு வருமாறு:
1 - t.jsrir (g, 6ðI th ட நிலம் + நீர் 2. இலகுகுணம் - தீ + காற்று + விண் 3. மந்தம் / தாழ்த்தல் - நிலம் + நீர் 4. கூர்மை 缀 5. நெய்ப்புத்தன்மை - நீர்
6. வரட்சி - தீ + காற்று
7. வழுவழுப்பு - விண்
8. கரகரப்பு - மண் + காற்று
9. திண்மம் - மண் + நீர்
10. திரவம் நீர்
11. மிருது - isri + a367
12. கடினம் - மண்
13. நிலையானதன்மை ~ LD 650T
14. அசையுந்தன்மை - நீர்
(பெருகியோடல்) •j
15. குளிர்ச்சி - நீர் + காற்று
16. வெப்பம் - தீ
17 , நுண்மை ட தீ + காற்று + விண்
I 8. u (i, 3) LD سسنے LD66T
19. விசதம் / - தீ + காற்று + விண்
மாசற்றதன்மை
20 , பிச் சிலம் / - r്
தெளிவின்மை
LLS S S 0LS S L0LSSY மாணவர்கள் முக்குற்றங்கள், உடற்கட்டுகள் முதலியவற்றின் பண்புகள் அல்லது குணங்களை நன்கு தெரிந்து கொள்வதுபோல் ஒவ்வொரு மூலிகை, தாது, சீவவர்க்கப் பொருள் களின்
154

குணங்களையும் தெளிவாக அறிந்து கொள்ளல் அவசியமாகும். முக்கியமான சில மருந்துப்பொரு: களின் பண்புகள் வருமாறு.
. கடுக்காய் - வரட்சி இலகு 2. நெல்லிக்காய் - வரட்சி 3. தான்றிக்காய் - குளிர்ச்சி, வரட்சி 4. திரிபலை - வரட்சி 5. சீந்தில் - இலகு 6. வில்வங்காய் - இலகு, வரட்சி 7. வில்வம் பழம் - u fir Tui 8. மகாபஞ்சமூலம் ~ இலகு 9. பெருங்குமிழ் as Luirg Lif 10. கண்டங்கத்தரி - இலகு, வரட்சி 11. செவ்வாமணக்கு - பாரம்
2. தாயுருவி - கூர்மை 13. நேர்வாளம் - பாரம், நெய்ப்புத் தன்மை 14. வெண்சிவதை - வரட்சி 15 , கொம்மட்டி - இலகு 16. கொள்ளு - Li LTL 17. கடுகுரோகிணி - வரட்சி, இலகு
8. அழிஞ்சில் - இலகு, வரட்சி, கூர்மை 19. வேம்பு - இலகு
வேப்பம்பழம் - இஃகு, நெய்ப்புத்தன்மை 20. மலைவேம்பு - வரட்சி 21. நிலவேம்பு - விரட்சி, இலகு 22. குடசப்பாலை -"رقيته (بني هو شا ترفذت س 23. மருக்காரை - வரட்சி, இலகு 24. கற்கடகசிங்கி - வரட்சி 25. சித்தரத்தை - шта ћ 26. சாத்தாவாரி - பாரம், நெய்ப்புத்தன்மை 27. சிறுதேக்கு -- வரட்சி 28. மஞ்சள் ہم "$ ۔ ۔ ۔ , " { 29. மஞ்சிட்டி - Luar ru 30. கார்போ கரிசி -en 6au Durl",5) 31. கரிசலாங்கண்ணி -- வரட்சி 32. மணித்தக்காளி - *ெப்புத்தன்மை 33. தூத்துமக்கொத்தான்
ஆகா சவல்லி - தெளிவின்மை (பிச்சிலம் 34. ஆடுதீண்டாப் * 60 نة6 قرنين سني س ، ، ، نة LD ) 6إقليم والذ
fi 6)6
35. நிலப்பனங்கிழங்கு - பாரம் 36. சேராங்கொட்டை - இலகு 37. தும்பை - பாரம், வரட்சி
55

Page 93
38. பிரமி - இலகு
39, ஊமத்தை سس LunrDT lp 40. கார்த்திகைக்கிழங்கு - கூர்மை, இலகு 41. கஞ்சா - கூர்மை, இலகு 42. அபினி விதை - பாரம் 43. அபின் பழ வெளித்
தோல் வரட்சி 44. சுக்கு இலகு, நெய்ப்புத்தன்மை 45 இஞ்சி unt Tib 46. மிளகு கூர்மை, வரட்சி 47. திப்பலி நெய்ப்பு, இலகு
இலகு, வரட்சி இலகு, வரட்சி கூர்மை, இலகு இலகு, நெய்ப்புத் தன்மை
48. திப்பலி மூலம் 49. சித்திரமூலம் 50. ஓமம் 51. கொத்தமல்லி
52. பெருங்காயம் கூர்மை 53. வெண் காரம் வரட்சி 54. கஸ்தூரி unT U Lò 55. சந்தனம் வரட்சி, இலகு , 6. செஞ்சந்தனம் l_f Pr b 57. சாதிபத்திரி இலகு 58. இலவங்கம் இலகு 59. கறுவா இலகு
(சன்னல வங்கப்படை)
60. சிறுநாகம் பூ - இலகு, வரட்சி 61. தாளிசபத்திரி - இலகு, கூர்மை 62. வெட்டிவேர் - வரட்சி, இலகு 63. குக்கிலு - விசதம், நுண்மை 64. செம்பு - இலகு 65. வெள்ளியம் -- இலகு, வரட்சி 66. இரும்பு - Luitprls, 6 pr.g. 67. அப்பிரகம் - விசதம், பாரம் 68. மனோ சிலை - நெய்ப்புத்தன்மை 69. சங்கு - இலகு 70. அத்தி ---- LufT U to 71, இலவம்பிசின் - நெய்ப்புத்தன்மை 72. புங்கு - கூர்மை 73. முந்திரிப்பழம் - Luft Drib 74. நாவல்பழம் - வரட்சி
75. வாழைப்பழம் பாரம், நெய்ப்புத்தன்மை
குறிப்பு: மாணவர்கள் மருந்துப் பொருள்களின் குணங்கள் பற்றி குணபாடம் நூலில் அறிந்துகொள்ளவும், ם
i56

4. செயல்
வேறுபெயர் - கர்மம், கன்மம், செய்கை, தொழில், இயக்கம், வினை
வரைவிலக்கணம் - பொருள்களில் காணப்படுகின்ற பல வகை யான பெளதிக இயக்கங்களைக் குறிக்கும். அது ஒரு பொருளில் மட்டுமே உறைவது; பண்புகள் இல்லாதது; சேர்தல், பிரிதலின் உடனடியான காரணம் என்றும் கூறப்படும்.
பொருள்
பண்பு செயல்
செயலுக்கும் பொருளுக்கும் உள்ள தொடர்பு பொருளுக்கும் குணத்துக்கும் உள்ள தொடர்பைச் சரியாக ஒத்துக்காணப்படும். எனவே, குணங்களின் தனி இருப்பை உணர்ந்து கொள்வதைப் போலவே ஒரு பொருளின் இயக்கங்களின் தனி இருப்பையும் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
பொதுவான செயல்கள் ஐந்து வகைப்படும். அவையாவன:
l, எழும்பல் (உட்சேபணம்) இது கீழிருந்து மேல் நோக்கிய இயக்கமாகும். உதாரணம் - வாந்தியுண்டாக்கும் பொருள்கள், கோழையகற்றிப் பொருள்கள்.
2. வீழ்தல் (அவட்சேபணம்) இது மேலிருந்து கீழ் நோக்கிய இயக்க மாகும். உ+ம் மலமிளக்கிச் செய்கையுள்ள பொருள்கள்,
சூதகமுண்டாக்கிப் செய்கையுடைய பொருள்கள்
S7

Page 94
3. வனைதல் (ஆகுஞ்சனம்) இது ஒடுங்குதலாகும்.
உ+ம்: துவர்ப்பி, குருதிப்போக்கடக்கி, மலமிறுக்கி செய்கை யுடைய பொருள்கள்
4. நிமிர்தல் (பிரசாரணம்) இது உடல் முழுவதும் பரவும் தன்மை யுடைய இயக்கமாகும். உ+ம வஸ்தி சிகிச்சை, உள்ளழலாற்றி (உடற்கட்டுகளுக்குப் பரவி அவற்றின் எரிச்சலைத்தணிப்பது), உரமாக்கி முதலிய செய்கையுடைய பொருள்கள்.
5. நடத்தல் (கமணம்) இது இடப்பெயர்ச்சியை ஏற்படுத்தும் இயக்கமாகும். உ+ம்: கற்றுாளாக்கி, குருதி பெருக்கி - செய்கை யுடைய பொருள்கள்.
ஒவ்வொரு உணவு / மருந்துப் பொருளும் அதன்சுவை, பண்பு, பிரிவு (விபாகம்). ஆற்றல் வீரியம் என்பவற்றைப் பொறுத்து உடலிற் செயற்படும். இவற்றுள் சுவையானது பிரதமசுவை (நாக்கினால் உணரப்படுவது), அனுசுவை (சமிபாட்டின் இறுதியில் ஏற்படுவது) என இருவகைப்படும்.
பிரிவுஎன்பது அது (உணவு / மருந்து அமர்வாசயம், பகிர்வாசயம் முதலியவற்றில் அடையும் மாற்றமாகும். அங்ங்ணம் சமிபாடடைந்த உணவு (அன்னரசம்) ஒவ்வொரு உடற்கட்டுக்களிலுமுள்ள பரமானுக்களால் (Cels; பயன்படுத்தப்படும்போது ஏற்படுவதே அதன் ஆற்றலாகும் , அதுமுக்கியமாக தண்மை (சீதவீரியம்), வெம்மை (வெப்பவிரியம்) என இருவகைப்படும்.
சில பொருள்கள் பிரிவில் (விபாகத்தில்) நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக மாறுதலடைவதுமுண்டு. (உதாரணம் தேன். இது பிரிவில் இனிப்புச்சுவையாக மாறுவதற்குப் பதில் கார்ப்புச்சுவையாக மாறுகிறது) இதனை அப்பொருளின் தனிமாண்பு (பிரபாவம் என்று கூறுவர். Π
58

5. பொதுமை
வேறுபெயர்: சாமானியம், ஒப்புறை, ஜாதி (சாதி)
வரைவிலக்கணம்: ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களில், இயல்பு களில் செயல்களில் காணப்படும் பொதுமைப்பாட்டினை எடுத்துக் காட்டுவது சாமானியம் அல்லது பொதுமை எனப்படும். இன்னொரு வகையில் சொல்வதானால் நித்தமாய், ஒன்றாய், பல வற்றி ன் ஒருங்கு சேரலையுடைய சாதி பொதுமை எனப்படும்.
பொதுமையானது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருள்களுக்குப் பொதுவாக உள்ள கூறு அல்லது பண்பையுணர்த்தி நிற்கும். இது ஓர் இனத்தைச்சேர்ந்த அத்தனை உறுப்பினரிடமும் இருக்கும் பொதுக்குணமாகும். ஒரு தனிப்பட்ட நபர் அக்குணத்தைக் கொண்டிருப்பதால் அந்த இனத்தின் உறுப்பினராவதற்குரித்துடைய வராகிறார். உதாரணம் மனிதத்தன்மை, விலங்குத்தன்மை, செடிகள் . கொடிகள், மரங்கள் .
தனிப்பட்ட பொருள்கள் பலவாக இருந்த போதிலும் அவை தோன்றும் போதும், அழியும் போதும், இப்பொதுமைக்குணம் ஒன்றாயும், என்றுமுள்ளதாயும் அந்தப் பல பொருள்களில் உறைந்தி ருக்கிறது. உதாரணமாக மனிதன் பிறந்து, சில காலம் வாழ்ந்து மடிகையில் 'மனித இனத்திற்கே பொதுவான மனிதகுணம் என்பது நிலைத்து நிற்கிறது. அவ்வாறே மரஞ் செடி கொடிகளுமாம்.
பொதுமையானது பொதுவான குணங்களின் (இயல்புகளின்) அடிப்படையில் பல உறுப்பினர்களை ஒன்று சேர்க்க உதவுகிறது. உதாரணம் - தாவரங்கள், மனிதர்கள், குழந்தைகள், மூலிகைச் செடிகள் முதலியன. எனவே பொதுமையானது விருத்திக்குக் காரண
59.

Page 95
மாகிறது. பொதுமையானது மருத்துவத்தில் 1) பொருள் பொதுமை 2) பண்புப்பொதுமை 3) செயற்பொதுமை என்று மூனறுவகை யாகக் கருதப்படுகிறது.
பொருள் பொதுமை என்பது மனித உடலில் ஏதாவது ஒர் அம்சம் நோயினால் குறைவுபடும்போது அதே இயல்பு செயல்களை யுடைய (பொருள் என்பது இயல்பும் செயலும் உடையது) பொரு ளைப் பிரதியீடு செய்தல் அல்லது வழங்குதலாம். உதாரணமாக ஒருவரில் இரத்த இழப்பினால் இரத்தக்குறைவு ஏற்படும் போது அதே வகுப்புக்குரிய இரத்தத்தை வழங்குவதைக் குறிக்கும். வேறு உதாரணங்கள் : நீரிழிவு நோயாளிக்கு இன்சுலின் வழங்குவது Myxoedema நோயாளிக்கு தைரொக்சின் வழங்குவது.
பண்புப் பொதுமை என்றால் அவ்விதநோயாளிக்கு இரத்தத்தின் இயல்புக்குச் சமமான (சமசெறிவுடைய) உ ப் புக் க  ைரசல் வழங்குதலாம். செயற்பொதுமை என்னும் போது இரத்தத்தை விருத்தியடையச் செய்வதற்குரிய அவுடதங்களை (உதாரணம் அயசெந்தூரம்) வழங்குதலாம்.
இங்கு மூன்று செயல்களிலும் இரத் தவிருத்தி / அதிகரிப்பு ஏற்படுகிறது. என்வே பொதுமை விருத்திக்குக் காரணமாகிறது. இங்ங்ணம் வழங்கப்படும் மருந்துப்பிரயோகமுறையையே ஒப்புறை என்று சித்த மருத்துவநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலசந்தர்ப்பங்களில் ஒப்புறையானது சிகிச்சையில் பொதுவான கொள்கைகளுக்கு மு ர ண் பட்ட நி  ைல யி லு ம் பிரயோகிக்க நேர்வதுண்டு. உதாரணமாக மா ந் த நோ  ைய எடுத்துக் கொள்வோமேயானால் அங்கு பசித்தீ ம ந் தி த் து கழிச் சல் ஏற்படுகிறது. இங்கு கழி ச் ச  ைல நிறுத்தவேண்டும் என்பதே நோயாளியின் முதல் விருப்பாக இருக்கும். ஆனால், செமிககாமல் ஏற்படும் இத்தகைய ஆமக்கழிச்சலை பக்குவநிலைக்குக் கொண்டு வருவதற்கும், பசித்தீயைத் தூண்டுவதற்கும் கொடுக்கப்படும் அவுடதங்கள் (ஒப்புறையாக) சிறிது கழிச்சலை ஏற்படுத்தும் விதமாகவே செயற்படும் (விருத்த அபிமத கிரியா என்று இதனை ஆயுர்வேதநூலார் கூறுவர்)
60

6. சிறப்பியல்பு
வேறுபெயர் - விசேடம், வேற்று", எதிருறை, தனித்தன்மை.
வரைவிலக்கணம் - ஒன்றுக்கு G Lן, מb Lנ L"- L- பொருள்களில், இயல்புகளில், செயல்களில் காணப்படும் வேறுபாட்டினை எடுத்துக் காட்டுவது சிறப்பியல்பு அல்லது விசேடம் எனப்படும்.
அதாவது ஒன்  ைற மற்றொன்றினின்றும் வேறுபடுத்திக் காட்டக்கூடிய த னி யி ய ல் பு அதன் சிறப்பியல்பு அல்லது விசேடமாகும். இது பன்மைக் கொள்கையை எடுத்துக் காட்டும் . உதாரணமாக உலகிலுள்ள மணிகர் யாவரும் ஒரே மா தி ரி இருப்பதில்லை. ஒவ்வொரு வ ரு க் கும் உருவத்தில், குணத்தில், செயலில் சிறப்பியல்புகள் காணப்படும். அவற்றைக் கொண்டே ஒவ்வொரு மனிதரையும் நாம் வேறு படுத் து கிறோம் . பொதுமைப்பண்பு எ வ் வா று ஒன்று சேர்க்கிறதோ அதற்கு நேர்மாறாக சிறப்பியல்புகள் பொருள்களை ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்துகின்றன. குறைவுக்கக் காரணமாகின்றன.
சிறப் பி ய ல் பும் 1) பொருள் சிறப்பு 2) பண்புச் சிறப்பு 3) செயல் சிறப்பு என்று மூவகைப்படும் .
1) பொருள் சிறப்பு - விரிபருக்க நாளம் (Varicose Weln) உள்ள ஒருவரில் அட் டை விட ல் மூலம் அல்லது நாளத்தைக் கீறி இரத் த்தை எடுப்பது பெ" ." சிறப்பாகும். அதுபோலவே உயிர்ச்சத்து A, உயிர்ச்சத்து D என்பன அதிகரித்த நிலையில் (Hyper Vitaminosis) அவை சேர்ந்த உணவு க  ைள யோ மருந்துகளையோ வழங்காது விடுதலும் பொருள் சிறப்பாகும். இங்கு பொருள் சிறப்பு ஒத்தபொருள் வெளியேற்றப்படுதல் அல்லது வழங்கப்படாது விடுதலினால் குறைவுக்குக் காரணமாகிறது.
6

Page 96
பண்புச் சிறப்பு - சுரம் அதிகரித்த ஒரு நோயாளிக்கு பனிக்கட்டி (Ice Bag) வைப்பது அல்லது குளிர்ந்த நீரால் துடைப்பது பண்புச் சிறப்பாகும். இங்கு சுரத்தில் வெப்பத்துக்கு எதிரிடையான பண்புள்ள குளிர் பிரயோகிக்கப்படுகிறது. மூட்டு வீக்கமுள்ள இடத்தில் கர்ப்பூரத் தைலம் பூசுதல். இங்கு வீக்கத்தில் நெய்ப்புத் தன்மை ஒரு முக்கியமாகவுள்ளதால் அதற்கு எதிரிடையாக கர்ப்பூரத் தைலம் வரட்சியாகச் செயல்படும்.
செயல் சிறப்பு - பாரிசவாத நோயாளியில் நோயாளியின் ஒருபக்க கை கால் வழங்க முடியாமல் இருக்கும். அத்தகைய நோயாளியை கை, காலை அசைக்கச் செய்தல், நடக்கச் செய்தல் முதலியன செயல் சிறப்பாகும்.
சித்தமருத்துவத்தில் பெரும்பாலான சிகி ச் சை முறை கள் காரணத்துக்கு எதிரானவையாக அமைவதைக் காணலாம். இதனை எதிருறை என்றுகூறுவர்.
சிலசந்தர்ப்பங்களில் ஒப்புறை, எதிருறை ஆகிய இரண்டு முறைகளையும் கையாளவேண்டியநிலை ஏற்படலாம். அதனைக் கலப்புறை என்று கூறுவர்.
7. உள்ளார்ந்த தன்மை
வேறுபெயர் - சம வா யம், நீ க் க மின்றி இருத்த ல் இணைபிரியாத்தன்மை,
வரைவிலக்கணம் - ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாதவாறு இணைபரியாது சேர்ந்திருக்கும் தன்மை சமவாயம் எனப்படும்இங்கு இருவிடயங்களுக்கிடையில் மிக நெருங்கிய உறவு காணப்படுகிறது. உதாரணம் பெருங்காயமும் அதன் மணமும் (நாற்றமும்) பாலும் வெள்ளை நிறமும். Cl
162

8. இன்மை (அபாவம்)
இன்மைபற்றி ஏற்கெனவே அளவையியலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது . இன்மை என்பது இல்லாமையைக் குறிக்கும். அது தற்காலிகமாக ஏற்பட்டதாகவோ அல்லது நிரந்தரமாக ஏற்பட்டதாகவோ இரு க் க லா ம். இ ன்  ைம ய ர னது 1) முழுது மின்  ைம 2) முன்னின்மை 3) பின்னின்மை 4) ஒன்றில் ஒன்றின்மை 5) உள்ளதின்மை என ஐவகைப்படும் என ஏற்கெனவே கூறியுள்ளோம் இவற்றை மருத்துவ நோக்கில் விளங்கப்படுத்துவதானால், சில குழந்தைகளில் பிறப்பிலிருந்தே சில உறுப்புகள் உதாரணம் மூளை, விதைகள் பெண் உறுப்புகள் முதலியன விருத்தியடைந்திருப்பதில்லை. சில ரி ல் இர த் தம் உறைவதற்கான பொருள் இன்மையால் குருதியுறையாநோயினால் (Haemophilia) 6) (b 5 g. 6u i. 3606). Cup (pg| Ló 6ón 6) lo 5 g5 உதாரணங்களாம்.
குழந்தைகளில் , ஈரல் விருத்தியடையாது இருப்பதனால் கொழு ப் புச் சமிபா ட் டு க் குரிய பித்தம் போதியளவில் சுரக்கப்படுவதில்லை. ஆனால், சிறிது கால த் துள் Fア3i)
விருத்தியடைந்து போதியளவு பித்தத்தைச் சுரக்கும். இது முன்னின்மைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பின்னின்மை என்பது அழிவுபட்டின்மை என்றும் வழங்கப்படும். இதற்கு உதாரணமாக குழந்தைகளில் Thymus சுரப்பி செயற்பட்டு பின்னர் மறைந்து போவதைக் குறிப்பிடலாம்.
உள்ளதின்மைக்கு உதாரணமாக உயிர்ச்சத்துப் பற்றாக்குறை (Vitamins Dificiency). g3GLDIT667. L'sbpfráé560sp (Hormonal Deficieies), இரும்புச்சத்துக்குறைவு முதலியவற்றைக் கூறலாம். அறுவைச் சிகிச்சை மூலம் கேடயச்சுரப்பி (Thyroidectomy) அகற்றப்படுதல், லசுனங்க: :றப்படுதல் (Tonsilieu tomy) என்பவற்றையும் இதிற் குறிப்பிடலாம்.
ஒன்றிலொன்றின்மைக்கு உதாரணம் A வ குப் புக் கு ரு தி B வகுப்பன்று. (இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டது) என்று கூறுவது போன்றதாகும் • s
63

Page 97
9. காலம்
வரை விலக்கணம் - பரிணாமம் அல்லது மாற்றத்தின் வேகத்தையோ அல்லது இரு அவத்தைகளுக்கிடையேயுள்ள இடைவேளையைக் குறிக்கும். காலம் முக்கியமாக மூவகைப்படும் 1) இறந்தகாலம் 2) நிகழ்காலம் 3) எதிர்காலம்.
இறந்தகாலம் - மருத்துவத்தில் நோயாளியின் முந்தைய நோய்வரலாற்றை (Pase History) அறிவது. நோய்நிர்ணயத்தில் மிகவும் முக்கியமானது. உ தா ர ண மாக வளிக் கீ ல் வா யு (Rheumatic Fever) நோயாளியின் இறந்தகால (கடந்தகால) வரலாற்றில் லகனதாபிதம் பெரும்பாலும் இருக்கும்.
நிகழ்காலம் - நோயாளியின் தற்போதைய (History of Present Iness) குறிகுணங்கள் பற்றியதாக இருக்கும்.
எதிர்காலம் - குறிப்பிட்ட நோ யி ன் விளைவு எப்படி இருக்கும் என்பது பற்றியது. நோய்குணமாகுமா? அல்லது அதிகரிக்குமா ? அல்லது குறையுமா? அல்லது அப்படியே இருக்குமா? என்பது போன்ற விபரங்களைக் குறிப்பதாக அமையும்?
காலமானது இ ன் னெ (ா ரு வ கை யி ல் 1) நித்தியகாலம் 2) அவத்தைக்காலம் என இர ண் டாக ப் பிரிக்கப்படுகிறது. நித்தியகாலம் என்பது நாள், கிழமை, மாதம், வருடம் முதலியனவாக இருக்கலாம்.
அவத்தைக் காலம் என்பது (Phase) வேறுபட்ட நிலைகளுக்குரிய நேரத்தைக் குறிப்பதாகக் கருதலாம். உதாரணமாக மாறற்சுரத்தில்
64

a golfinitial)a) (Cold Stage), Gaulu is 30a) (Hot Stage) afuti digib
நிலை (SWeating Stage) என மூன்று அவத்தைகளுண்டு.
ஒரு நோய் ஏற்படும் போது (உதாரணம் இரைப்பிருமல்) அது எவ்வளவு காலம் (நேரம்) நீடிக்கிறது? ஒருமுறை வந்தால் மறு முறை எப்போது வரும் என்பவற்றுக்கிடையான காலம் என்பனவும் அவத்தைகளாம்.
ஒரு நோய்க்குச் சிகிச்சையளிப்பதிலும் காலம் முக்கிய பங்கு வகிக்கிறது. உதாரணமாக மருந்து கொடுப்பதற்கு முன்னர் நோயா வி யி ன் வயது? நோ யி ன் நி  ைல (அது எந்த அவத்தையிலுள்ளது என்பது பற்றிய கணிப்பு), மருந்து கொடுக்க வேண்டிய நேரம் (காலையா? மாலையா? ஆறுமணித்தியாலத்துக்கு ஒருதடவையா? இரவா?), மருந்து கொடுக்க வேண்டிய கால அளவு (ஒருதடவை, மூன்று நாட்கள், ஏழு நாட்கள் ஒருமண்டலம் முதலியன) என்பன காலத்தைச் சார்ந்ததாக உள்ளன.
இவ்விடத்தில் மாணவர்கள் தாதுப்பரிணாமகாலம் பற்றி அறிந்து கொள்வது பொருத்தமுடையதாக இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து பெறப்படும் அன்னரசம் அல்லது சாரமானது இரத்தத்தினால் ஏழு உடற்கட்டுகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வினியே ரா கி க் க ப் படுகி ன் ற ன. அங்கனம் பெற்றுக்கொண்ட சாரத்தைக் கிரகித்து ஒவ்வொரு உடற்கட்டு அல்லது தாதுவும் தன்னளவில் தன்னை விருத்தி செய்து கொள்வதற்கு கால அளவுகள் கூறப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு தாதுவுக்குரிய காலம் 4 நாட்களாகும். எனவே ஏழு தாதுவுக்கும் உரியகாலம் (7 X 4 = 28) இரு பத் தெ ட் டு நாட்களாகும். உதாரணமாக பெண்களில் ஏழாவது தாதுவான சுரோணித தாதுவின் செயற்பாட்டுக்காலம் இருபத்தெட்டுநாட்கள் என்று கூறப்படுகிறது. எ ன வே தா ன் பெண்களில் இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு த ட  ைவ சூதகம் உ ன் டா கி றது. இது மாறியுண்டானால் தாதுக்களில் ஏதோ பிரச்சினை என்று கருத்து.
இக்கொள்கையடிப்படையில் நோ  ைய யு ம் அதற் கான மருத்துப்பிர்யோக கால அளவையும் பின்வருமாறு தீர்மானிக்கலாம்.
தாதுப்பரிணாமப்படி ஒரு தாதுவுக்குரிய காலம் நான்கு நாட்களாகும். உதாரணமாக ஒரு நோய் ஏற்படும் போது அது இரசதாது (சாரம்) வைப் பற்றி நான்கு நாட்களும், பின்னர் செந்நீர் (இரத்ததாது) ஐப் பற்றி அடுத்து நான்கு நாட்களும், பிறகு ஊன் (மாமிச) தாதுவைப் பற்றி நான்கு நாட்களும் .
65

Page 98
இவ்விதம் பரிணாமம் அடையும். எனவேதான் சித்தமருத்துவத்தில் வியாதிகள் 5 ஆம் நாள் அல்லது 9 ஆம் நாள் அல்லது 13 ஆம் நாள் தணியும் அல்லது கூடும் என்று கூறப்படுகிறது. அதாவது ஒருதாதுவில் அதன் பரிணாமம் முடிந்ததும் அது தணிகிறது; அவ்விதமின்றி அடுத்த தாதுவைப் பற்றினால் கூடுகிறது.
உதாரணமாக தடிமன் வியா தி  ையக் கருதின் அது இரசதாதுவைப் பற்றியுண்டாவதால் 3, 4 நாட்களில் தணியும். மாறாவிடின் அது அடுத்ததாதுவைப் (செந்நீர்) பற்றி மேலும், விருத்தியடைகிறது என்று கருத்து.
வயிற்றுளைவை (சீதபேதி) கருதின் அது சாரம், செந்நீரைப் பற்றி உண்டாவதால் 4 + 4) 9 நாட்களில் தணிவடைகிறது. நெருப்புக்காய்ச்சலை எடுத்தால் 21 நாட்களில் (4 x 5 = 20) 21 நாட்களில் தணிவடைகிறது. சின்னமுத்து, கொப்புளிப்பான் போன்ற வியாதிகள் ஊன்தாதுவைப் பற்றுவதால் 13 நாளில் tporTyph.
எனவே, வியாதிகளின் தாதுப்பரிணாம காலத்தைப் பொறுத்து நோய்க்கு மருந்துகொடுத்தல் அவசியமாகும். உதாரணமாக இரத்ததாதுவைப் பற்றிய வியாதிக்கு 9 நாள் மருந்து கொடுத்தல் வேண்டும்.
நடைமருந்து 40 நாள் கொடுக்கக் காரணம் 10 தாதுக்கள் கழியவேண்டும் என்பதற்காம், அதாவது ஒரு தாதுவட்டம் (28 நாட்கள்) பூர்த்தியாகி மற்றத் தாதுவட்டத்தில் அரைவாசி நாள் கழியவேண்டும் ,
10. வெளி
வேறுபெயர் - திக்கு, இடம், இடைவெளி.
வரைவிலக்கணம் - இடைவெளி அல்லது இருப்பிடத்தைக் குறிக்கும். இடம் என்பது ஆகாயமன்று என்பதை விளங்கிக் கொள்ளல் வேண்டும் , ஆகாயம் என்பது இடத்தை நிரப்புகின்ற பொருளாகும். இருபொருட்கள் ஒரேநேரத்தில் ஒரே இடத்தில் இருக்கமுடியாது எனவே, ஆகாயம்வேறு; வெளிவேறாகும்.
காலம், வெளி (இடம்) ஆகிய இரண்டும் படைப்பிற்கு நிமித்த
காரணங்களாகும். O
66

11. மனம்
சுகம் முதலிய அனுபவத்திற்குக் கருவியாகிய இந்திரியம் மனம் எனப்படும். மனமும் உயிர்கள் தோறும் அனேகமாய், பரமானந்த ரூபமாய், நித்தமாய் இருக்கும். அதாவது ஒவ்வொரு ஆத்மாவுக்கும் தனியான மனமுண்டு. மனமானது ஆத்மாவுடன் நெரு ங் கி ய தொடர்புடையதால் அந்தராத்மா என்றும், உட்கருவியாக உள்ள தால் அந்தக்கரணம் என்றும், ஞானேந்திரியம், கன்மேந்திரியம் என்பவற்றை ஆட்சிபுரிவதால் அதிஇந்திரியம் என்றும் ஒரு விடயத்தை விசாரணை செய்து நிச்சயிக்கக்கூடிய ஆற்றலுடையதாயிருப்பதால் புத்தி என்றும் அழைக்கப்படுகிறது. v
அந்தக்கரணம் நான்கினுள் மனம் ஒன்றைப்பற்றி நினைக்கும் புத்தி அதனை ஆராயும, அகங்காரம் முடிவு செய்யும் சித்தம் அதனைச் செய்துமுடிக்கும்.
ஆன்மாவின் ஐந்து அவத்தைகளான நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் என்பவற்றுடன் மனம் நெருங்கிய தொடர்புடையதாக இருக்கிறது. அது பற்றி ஏற்கெனவே எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மனமானது அணுத்தன்மை வாய்ந்தது. அது ஒரு நிலைப்பட்ட தன்று. அறிவைப் பெறுவதற்கு ஆத்மாவிற்கு உதவியாகவுள்ளது" அதேவேளை ஆன்மாவின் பார்வையை திசைதிருப்பி வினைகள் ஈட்டவும் காரணமாகி விடுகிறது. அதன் பயனாகவே ஆன்மா பல பிறவிகள் எடுக்க நேரிடுகிறது. எனவே தான் சித்தர்களும், ஞானி களும் மனத்தை ஒருநிலைப்படுத்துவதே முத்திக்கு வழி என்று கூறினர்.
67.

Page 99
மனமானது பண்பும் செயலும் உள்ளதாக இருப்பதால் அதுவும் பொருள் எனப்படும்.
மனத்தின் பண்புகள் இராசதம், தாமதம், சத்துவம் என்பனவாம்.
இதில் இராசதம் குணம் = மனவூக்கம், ஞானம், வீரம் , தவம், தருமம், தானம், கல்வி, கேள்வி etc
- பேருண்டி, நெடுந்துயில், சோம் பல்.
தாமதகுணம்
நீதிவழுவல், ஒழுக்கவழு, வஞ்சகம், மறதி, பொய், கோ பம், காமம், கொலை முதலியனவாம் .
சத்துவகுணம் = ஞானம், அருள். தவம், பொறை,
வாய்மை, மேன்மை, மோனம், ஐம் பொறி அடக்கல் முதலியனவாம்.
மனத்தின் செயல்கள் = பொறிகளைத் (இந்திரியங்களை) தூண்
டுதல்
தன்னைத்தான் கட்டுப்படுத்தல், விசா ரனை செய்தல்
நிர்விகல்ப, சவிகல்ப, பிரத்தியட்சங்களை ஏற்படுத்தல்
செய்வது எது செய்யக்கூடாதது எது என்பதை ஆராய்தல்
இயல்புகளைப் பற்றிச் சிந் தித் த ல் முதலியனவாம்.
12. ஆன்மா
வேறு பெயர் ஆத்மா, சீவன், உயிர், பசு, சீவாத்மா
ஆன்மா பற்றிய விபரங்களை சைவசித்தாந்தம் என்ற தலைப்பின் கீழ் பார்க்கவும்.
168

13. நாதம் / ஓசை
வேறுபெயர்: வாக்கு, சத்தம், தொனி, ஒலி ஒசை
தொண்ணுாற்றாறு தத்துவங்களுள் ஒசை, (வாக்கு) தத்துவமும் ஒன்றாகும். அது நான்கு வகைப்படும். அவை முறையே நுண் ணோசை (பராவாக்கு , சூக்கும ஒலி,) நினைவோசை (பைசந்தி, வாக்கு) மிடற்றோசை (மயூதியமை வாக்கு) செவியோசை (வைகரி வாக்கு) என நான்கு வகைப்படும்.
இந்நான்கு வகை ஓசைகளும் உற்பத்தியாவதில் அந்தக் காரணங் கள், ஆத்மா, பிராணவாயு என்பன தூண்டுதலாகவுள்ளன. எவ்வா றெனில், ஆத்மாவும், மனமும் மூலாதாரத்தில் அதாவது விணா தண்டின் முடிவுப்பகுதியில் இருப்பதையே குண்டலி என்று அழைப் கப்படுகிறது. ஆத்மாவானது எமது எண்ணங்களை வெளிப்படுத்த முற்படும் போது, பிராணவாயு மனம் என்பவற்றின் உதவியுடன் ஒசை என்னும் இந்திரியத்தை மூலாதாரத்திலிருந்து எழுப்பும் இந்த இடத்தில் ஓசை குக்குமமாக இருப்பதால் அதனை நுண்ணோசை என்றும் பராவாக்கு என்றும் கூறுவர். இதனைக் காதால் கேட்கவோ உணரவோ முடியாதாம். இந்த நுண்ணோசையானது வீணா தண்டி னுாடு மேல் நோக்கி மூளையின் உணர்வுப்பகுதி அல்லது அகங்கார தத்துவத்துக்கு கடத்தப்படும் போது அது நினைவோசை எனப் படும். இதுவும் காதால் கேட்கமுடியாத ஒலிபாகும். இதனை ஒலி யின் ஆரம்ப தற்காலிக நிலை என்றுங்கூறுவர் (Transient State of Sound) இந்நினைவோசையானது மூளையிலுள்ள புத்தி தத்து வத்தை அடைந்ததும் எ ன் ண ங் க ள ஈ க வும் செயல்களாகவும் (Thoughts And Ideas) மாற்றமடையும் அதனை மிடற்றோசை என்பர். இம்மிடற்றோசையானது அகங்காரதத்துவத்தை அடைந்து அங்கு சித்தத்துடன் தொடர்புடையதாக வரும். இந்நிலையில் இந்த
69

Page 100
ஒனசயானது உதாணவாயுவினால் வாயினூடாக வெளிப்படுத்தப் படுகிறது. அதுவே செவியோசை எனப்படும். இதுவே நாம் சாதா ரணமாகப்பேசும் (அல்லது கேட்கும்) பேச்சொலியாகும். செவி யோசை தவிர்த்த ஏனைய ஓசைகள் செவியினால் கேட்க முடியா தவையாம்.
எனவே எமது பேச்சுக்கு (Speech) ஆத்மா, மனம் முதலிய அந்தக் கரணங்கள். உதான வாயு, பிராணவாயு என்பன அவசிய மாகும். இவ்விதம் ஒலிவடிவில் தோன்றியே நாம் எழுதும் எழுத்துக் களும் உதயமாகின்றன. செவி ஒசையானது இருவகைப்படும்.
1) பருமை செவியோசை (துரலவை கரிவாக்கு) (2) நுண்செவியோசை
துரலசெவியோசையே நாம் பேசும் போது வெளிவரும் சத்த மாகும். இது உதாண்வாவுவினால் ஏற்படுத்தப்படுவது. கிாதால் கேட்கக்கூடியது. மண், நீர், வளி, ஆகாயம் என்பன இச்சத்தத் தைக் கடத்தவில் ை.
இத் துரaசெவியோசையானது நுண்செவியோசையாக மாற் றப்படக்கூடியது. இதனைக்கடத்தச் சிறந்த ஊடகம் ஆகாய மாகும். இந்த சத்தம வானெலி அனல் முகவியனவாக இருக்க லாம். தற்காலத்தில் ஒலிப்பதிவு நாடாக்களில் தாலசெவியோசை பானது நுண்செவியோசையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது
வருக்கு ம் தெரிந்த ஒன்றாகும்
குறிப்பு - 1) சித்தர்களால் நாதம் என்று குறிப்பிடப்படும் அதி நுண்னோசையானது இப் பிரபஞ்சத்துக்கும் அப் பாற்பட்ட ஒலியாகும். இது அதி சுத்தமாயையு டன் தொடர்புடையது. இவ்வொவியே "ஓம்" என்னும் பிரணவமாகும். இதனைக்காதால் கேட் கவோ உணரவோ முடியாது. இதுவே படைப்பின் ஆரம்பமாகும். இதனனயே சித் தர்கள் தமது பாடல்கள் பலவற்றிலும் எடுத்துக் கூறியுள்ளனர்.
மிடற்றோசையானது ஒலி அலைகளாக மாற்றப்படத்தக்கது. முற்காலத்தில் ஞானிகளும், சி ஷி க ஞ ம் இவ்விதம் மிடற் றோசையை ஒலியலையாக மாற்றியே வெகு தாரங்களில் இருந்து கொண்டு ஒருவருடன் ஒரு வர் தொடர் பு கொண்டனர்
(Telepathy என்று கூறப்படுகிறது.

(IT
d
ST 5ισε βοστασης.
un ஆஇே.ை வரிக்)ே( تمEngrيمNnهت])
கிேநாத ஐந்துவம்

Page 101

14. தமிழிலக்கியத்தில் பொருள்தத்துவம்
தமிழர் உலகிலுள்ள பொருள்களை முதல் பொருள், கருப் பொருள் , உரிப்பொருள் எனமு ன்றாக வகுத்துக் கூறியுள்ளனர். சங்கத் தமிழிலக்கியங்களில் இருந்து இ வ ற  ைற த் தெளிவாக அறிந்து கொள்ளக் கூடியாதாகவுள்ளது.
** முதல் கரு உரிப் பொருள் என்ற மூன்றே
நுவலுங்காலை முறை சிறந்தனவே பாடலுட் பயின்றவை நாடுங்காலை”*
(அகத்திணையியல்)
அவற்றுள் முதல் பொருள் என்பது நிலமும் (இடமும்) காலமு LDfT (5th . இவையே படைப்பிற்கு நிமித்த காரணங்களாம். நிலமானது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைத்து. காலமானது மாத்திரை, நாழிகை, சாமம், பொழுது, நாள், மாதம், பருவம் (ருது அயனம், ஆண்டு, யுகம் முதலியனவாம்.
கருப்பொருளாவது மேற்படி நிலத் தி லும், காலத்திலும் தோற்றுவிக்கப்படும் மக்கள், விலங்குகள், தாவரங்கள், முதலியனவும் யாழ், பறை முதலிய பிறபொருள்களுமாம். உரிப்பொருளானது மக்களின் அனுபவித்தல், செயல் முதலியனவாம். அது அகத்திணை, புறத்திணை என இரு வகைத்து அகத்திணையாவது போகநுகர்ச்சி முதலியனவாம் . அது உள்ளத்தால் உணரப்படுவது. முக்கியமாக புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனவும் கைக்கிளை , பெருந்திணை எனவும் ஏழுவகைப்படும் இவை முறையே குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை, மருதம் முதலிய நிலங்களுக்குரியனவாம்.
புறத்திணையாவது யுத்தஞ் செய் த லும் அறம்முதலியன செய்தலுமாம்.
| 7

Page 102
இங்கு கூறப்பட்ட ஐவகை நிலங்களுள் மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். காடும் காடுசார்ந்த இடமும் முல்லை நிலமாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதநிலமாகும். கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலமாகும். வரண்ட நிலம் பாலையாகும். இந்நிலங்கள் இவற்றில் வாழும் மனிதர் இவற்றிலுள்ள தாவர விலங்குகள் பற்றிய அறிவு சித்த மருத்துவர்க்கு அவசியமாகும்.
அதுபோலவே பருவ காலங்கள் முதலான இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பணி, பின்பணி என்பவற்றின் அறிவும் நோய்களைக் கண்டறியவும், உரிய சிகிச்சையளிக்கவும் அவசியமாகும் . இவை பற்றி தகுந்த நூல்களில் அறிந்து கொள்ளவும்.
மக்களின் வாழ்க்கைக் காலத்தை எடுத்தால் அது பச்சிளங் குழந்தைப்பருவம் (பிறந்து ஒரு மாதம் வரை) குழந்தைப்பருவம், இளம் பருவம், நடுத்தரப்பருவம், வயோதிபப் பருவம் என்று பிரிக்கப்படும். மேலும் இவற்றுட்பல உட்பிரிவுகளுமுண்டு. அவ்வப் பருவங்களைப் பற்றி அவ்வக்காலங்களில் ஏற்படக்கூடிய நோய்கள், அவற்றுக்குரிய சிகிச்சைகள் என்பனபற்றி தெளிவாக அறிதலும் அவசியமாகும். இவைபற்றி பிள்ளைப்பிணி மருத்துவம் முதலிய வற்றில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. மேலும் காலம் என்ற தலைப்பின் கீழ் கூறப்பட்டவையும் இதனுடன் சேர்த்துக் கருதப்படல் வேண்டும்.
அளவையியலும், பொருட்பண்பியலும் சித்தமருத்துவத்தைத்
தெளிவாகக் கற்பதற்கும், இத்துறையில் மேலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கும் அவசியமானவையாகும்.
72

அரும்பத அகராதி
அகங்காரம் - ஆணவம், முனைப்பு அகவுடம்பு - சூக்கும சரீரம் அஞ்ஞானம் - அறியாமை அண்டம் - பிரபஞ்சம் அதிநுண்ணோசை - அதிசூக்கும வாக்கு அத்தன் - சிவம், நாதம் அத்துவிதம் - இரண்டுமல்ல, ஒன்றுமல்ல என்றநிலை
ஒன்றில் இரண்டு (சை. சி)
அநாகதம் - ஆறாதாரத்தில் நான்காம் நிலை அந்தக்கரணங்கள் - உட்கருவிகள் (மனம், புத்தி. சித்தம்,
அகங்காரம்)
அழல் - தீ, பித்தம், தீக்குற்றம்
அழித்தல் - சங்காரம் s
அருள் - சாதாக்கியம்
அவத்தைகள் ஐந்து - பஞ்ச அவத்தைகள்
அவா - காமம், ஆசை
அறிவாற்றல் - ஞானசக்தி
அறிவுடம்பு - விஞ்ஞானமயகோசம்
அன்னை - சக்தி, விந்து
ஆகாமியம் - எதிர்வினை
ஆக்ஞை - ஆறாதரத்தில் ஆறாம்நிலை, ஆக்கினை
ஆணவம் - அகங்காரம், மூலமலம், சகசமலம்
ஆற்றல்கள் - சக்திகள்
ஆறு ஆதாரங்கள் - ஆறுசக்கரங்கள், ஆறுநிலைகள்
ஆனந்தம் - மகிழ்தல்
ஆன்மதத்துவம் - உயிர்த்தத்துவம், புருடதத்துவம்
73

Page 103
இடகலை - சந்திரகலை
இடக்கண் நரம்பு - காந்தாரி
இடச்செவிநரம்பு - அலம்புடை
இடமூச்சுநரம்பு - இடகலை, சந்திரகலை
இமைக்காற்று - கூர்மன்
இருப்புவினை - சஞ்சிதகன்மம், தொகைவினை
பழவினை
இரைக்குடல் - ஆமாசயம்
இன்பவுடம்பு - ஆனந்தமயகோசம்
உட்பகைகள் - இராகங்கள்
உணவுடம்பு - அன்னமயகோசம், பருவுடம்பு
உண்மைப்பொருள் - மெய்ப்பொருள்
உயிர்க்காற்று - பிராணன்
உள்நாக்கு நரம்பு - சிகுவை
உறக்கம் - சுழுத்தி
உயிர்ப்படக்கம் - துரியாதீதம்
உலகப்பற்று - லோகவேடணை, மண்ணாசை
ஊறு - ஸ்பரிசம், தொடுகை
ஊன் - மாமிசம்
என்பு - அஸ்தி
ஏமவைத்தியம் - வாதம், வைத்தியம் சேர்ந்தமுறை
ஏழு உடற்கட்டுக்கள் - சப்ததாதுக்கள்
ஏற்றல் - தானம், கொடுத்தல் (கன்மேந்திரியத் தொழில்களில்
s ஒன்று
ஐங்குடல்கள் - பஞ்ச ஆசயங்கள்
ஐந்து தொழில் உறுப்புக்கள் - பஞ்சகன்ம இந்திரியங்கள்
ஐந்து நுண்பொருள்கள் - பஞ்சதன்மாத்திரைகள்
ஐம்பூதங்கள் - பஞ்சபூதங்கள்
ஐம்பொறிகள் - பஞ்சஞான இந்திரியங்கள்
ஐயம் - கபம், சிலேத்துமம்
ஐவகையுடம்புகள் - பஞ்சகோசங்கள்
174

ஒலிக்காற்று - உதாணன்
ஒளி - ரூபம்
கண் - சட்சு
கமனம் - நடத்தல்
கிருமித்தனம் - லோபம்
கருவாய் - உபஸ்தம், குறி கருவாய்நரம்பு - சங்கினி கன்மம் - கர்மம், வினை, செயல் "கனவு - சொப்பனம்
காத்தல் - ஸ் திதி
காரனவுடம்பு - காரணசரிரம் காரியவாகாசம் - தாமதகுணம் கால் - பாதம், வாயு காற்றுடம்பு - பிராணமயகோசம், வளிஉடம்பு குடிலை - குண்டலி, சுத்தமாயை, மாமாயை, விந்து கை - பாணி
கொட்டாவிக் காற்று - தேவதத்தன் கொழுப்பு - மேதஸ்
சகஸ்ராரம் - பரமபதம் சகுனர் - குணங்களோடு கூடிய கடவுளின் நிலை சாரம் - இரசம்
சீவதாது - உயிர்த்தாது சுவாதிஷ்டானம் - ஆறாதாரத்தில் இரண்டாம்நிலை சுவை - இரசம்
சைதன்யம் - உணர்வு செந்நீர் - இரத்தம், குருதி செயலாற்றல் - கிரியாசக்தி, சிற்சக்தி செரிகுடல் - பகிர்வாசயம்
செருக்கு - மதம், வெறி செவி - சோத்திரம், கரோத்திரம்
75t

Page 104
செவியோசை - வைகாரி வாக்கு தத்துவஞானம் - உண்மைப் பொருள்பற்றிய அறிவு தலைமை - ஈசுரம் தீ - தேயு, அக்கினி, அழல், பித்தம் தும்மல்காற்று - கிருகரன் தூமாயை - சுத்தமாயை, குண்டலி, மாமாயை, விந்து தூயநினைவு - சுத்த வித்தை தூவாமாயை - அசுத்த மாயை தொழில் காற்று - வியானன், பரவுகாற்று தோற்றம் - சிருஷ்டி படைப்பு நடுமூச்சு நாடி - சுழுமுனை, அக்கி னிகலை நனவு - ஜாக்கிரம், சாக்கிரம் நாற்றம் - கந்தம், மணம்
நித்திய திரவியங்கள் - நித்தியபொருள்கள், உண்மைப்பொருள்கள் நிரவுகாற்று - சமானன் நிர்குணர் - குணங்களற்ற கடவுளின்நிலை நினைவோசை - பைசந்தி வாக்கு
நீர் - அப்பு, தண்ணிர், புனல் நீர்க்குடல் - சலவாசயம நுகர்வினை - பிராரத்துவ கன்மம், துவக்கவினை, நிகழ்வினை நுண்ணுடல் - சூக்கும சரீரம் நுண்ணோசை - சூக்குமை வாக்கு பகுதி மாயை - பிரகிருதி மாயை, பிரகிருதி பத்து நாடிகள் ~ தசநாடிகள்
ப்த்து வாயுக்கள் - தசவாயுக்கள் பருவுடல் - தூல சரீரம் பிரம்மா - வேதா, படைப்போன் பிரம்ம வைத்தியம் - யோகம், ஞானம் சேர்ந்த முறை புத்திரப்பற்று - புத்திரவேடணை புறவுடம்பு - தூல உடம்பு
176

பேருறக்கம் - துரியம்
பொருட்பற்று - அர்த்த வேடணை, பொன்னாசை பொறாமை - மாற்சரியம் மண் - பிருதுவி, நிலம், புவி, Ամ மணிபூரகம் - ஆறாதாரத்தில் மூன்றாம் நிலை மயல் / மயக்கம் - தாமசம் மருள் - மோகம், மயக்கம்
மலக்குடல் - மலவாசயம்
மலவாய் - பாயு, குதம்
மலவாய்நரம்பு - குகு மறைப்பாற்றல் - திரோதானசக்தி மனவெழுச்சி - இராசதம மனவுடம்பு - மனோமயகோசம் மிடற்றோசை - மத்திமைவாக்கு முக்குணங்கள் - திரிகுணங்கள் முக்குற்றம் முத்தோடம் மூக்கு - ஆக்கிராணம், (மணத்தல் இதன் தொழில் ) மூலப்பிரகிருதி - மாயை மூலாதாரம் - ஆறாதாரத்தில் முதல் நிலை மூவகைப்பற்று - மூவேடனை, மூவாசை மூவுடல்கள் - முச்சரீரம்
மெய் - தொக்கு (தோல்) வசனம் - சொல்லல் (கன்மேந்திரியத் தொழில்களில் ஒன்று) வலக்கண் நரம்பு - புருடன் வலச்செவி நரம்பு - அத்தி வலமூச்சுநாடி - பிங்கலை, சூரியகலை வளி - வாயு, கால், காற்று, வாதம் 6um,5th – 6u sỉ, cu truụ, இரசவாதம் வாய் - சிங்குவை, வாக்கு
வான் - ஆகாயம், விண், விசும்பு
77

Page 105
விசர்ச்சனம் - விடுதல் கன்மேந்திரியத் தொழில்) விசுத்தி - ஆறாதாரத்தில் ஐந்தாம்நிலை விருப்பாற்றல் - இச்சாசக்தி விழிக்காற்று - நாகன் விளைவாற்றல் - ஆதிசக்தி வீங்கல் காற்று - தனஞ்செயன் வெகுளி - குரோதம், சினம்
வெண்ணிர் - சுக்கிலம்
வெண்ணீர்குடல் - சுக்கிலவாசயம்
வைப்பாற்றல் - பரிக்கிரகசக்தி
78

l
4.
உதவிய நூல்கள்
அங்கதிபாதம்
(பரராசசேகரத்தைச் சார்ந்த நு] ஐ. பொன்னையா (பதிப் பாசிரியர்) ஏழாலை திருஞானசம்பந்தர் அச்சுயந்திரசாலை,
1936.
அங்காதிபாதம்
இரா. தியாகராசன் (பதிப்பாசிரியரி) அருள்மிகு பழனி தண் டாயுதபாணி திருக்கோவில், சித்தமருத்துவ வெளியீட்டுக்குழு, முதல் பதிப்பு 1976,
அபிதான சிந்தாமணி
ஆ. சிங்காரவேலு முதலியார், Asian Educational Services,
1996.
ஆயுர்வேதசாரம் (முதல் பாகம்) மெ. சுந்தரராஜாசார்ய, S, V. இராத கிருஷ்ண சாஸ்த்ரீ தமிழ்நாடு ஆயுர்வேத மஹாமண்டலம், திருச்சி-2, 1960 .
இந்திய தத்துவ ஞானம் கி. லசுஷ்மணன், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, ஐந்தாம் பதிப்பு 1997.
இந்து சமயம் (முது நிலை) சுவுாமி மதுரானந்தர் (தொகுப்பு) ஹிந்து தர்ம வித்யாபீடம், இரண்டாம் பதிப்பு 1995 ,
இந்த சமய தத்துவம் T. M. P. Lo smrGanu Gär
இந்துமத இணைப்பு விளக்கம்
கே. ஆறுமுகநாவலர், பாரதி அச்சகம், நாகர்சேர்வில், Լ16ձr னிரண்டாம் பதிப்பு 1999.
18്

Page 106
0.
1 is
12.
3.
4.
15.
16.
7.
18.
இருபாலைச் செட்டியார் வைத்திய விளக்கம் ஐ. பொன்னையா (பதிப்பாசிரியர்), யாழ்ப்பாணம் சைவப்பிர
காச யந்திரசாலை 1927.
soloi) g55g a lib
பு. மு. வேணுகோபால், இந்திய மருத்துவம் மற்றும் ஒமி யோபதி இயக்ககம், சென்னை 106, மூன்றாம் பதிப்பு 1993.
ஒளவை குறள் மூலமும் உரையும், B. இரத்தின நாயகர் சன்ஸ் சென்னை 1
955.
சித்த மருத்துவம்
க. ந. குப்புசாமி முதலியார், தமிழ்நாடு சித்த மருத்துவ வாரிய வெளியீடு, இரண்டாம் பதிப்பு 1987.
சித்த மருத்துவம் (சிறப்பு) ஆர். தியாகராஜன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம், சென்னை 106, இரண்டாம் பதிப்பு 1995.
சித்த மருத்துவாங்கச் சுருக்கம் க. சு. உத்தமராயன், தமிழ்நாடு அரசு சித்த அறிவியல் மேம் பாட்டுக்குழு வெளியீடு - 1983.
சித்த மருத்துவ நோய்நாடல் நோய் முதல்நாடல் (முதலாம் பாகம்) ம. சண்முகவேலு, தமிழ்நாடு சித்த மருத்துவ வாரிய வெளி யீடு, 1987.
சித்தர் பாடல்கள் (பாகம் 1 + II) அரு. ராமநாதன் பிரேமா பி ர சு ர ம், சென்னை 24 ஏழாம் பதிப்பு-1989
சித்த வைத்திய பதார்த்த குணவிளக்கம் (மூலவர்க்கம்) சி. கண்ணுசாமிபிள்ளை, B. இரத்தினநாயகர் அன்ட் சன்ஸ் சென்னை 79, 1998.
சிவஞான சித்தியார் சுபக்கம் அருணந்தி சிவாசாரியார், யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம் 1971.
80

19.
20,
21.
22.
23.
24.
25.
26,
27.
28.
29.
சிவஞானபோத மும் சிவஞான பாடியமும் வித்தியாதுபாலன யந்திரசாலை, சென்னை, துர்மதி இடு.
சிவப்பிரகாசம் : உமாபதி சிவாசாரியார், யாழ்ப்பாணக் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், யாழ்ப்பாணம் 1974.
தாயுமானவர் பாடல்கள் f லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்) மணிமேகலை பிரசுரம், சென்னை 17, முதல் பதிப்பு 1986.
தருக்க சங்கிரகம் (மூலமும் உரையும்) பூரீலபூரீ ஆறுமுகநாவலர்
தன் ஆதமாவைத் தேடி அலையும் மனிதன் P. J. சோமசுந்தரம், யாழ்ப்பாணப்பல்கலைக் கழக வெளியீடு, 1994.
திருச்செந்தூர் அகவல் சிற்றம்பல நாடிகள் இயற்றியது.
திருமந்திரம் குமரகுருபரன் சங்கம், பூறிவைகுண்டம், 1968.
திருவாசகம் பூரீமத் சுவாமி சித்பவானந்தர் (விளக்கவுரை) பூனிராம கிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை 115 ஒன்பதாம் பதிப்பு,
997
தோற்றக்கிரம ஆராய்ச்சியும் சித்தமருத்துவ வரலாறும் க. சு. உத்தராயன், தமிழ்நாடு அரசு வெளியீடு, 1992. பதார்த்த தீபிகை (முருகேச பண்டிதர் பிரபந்தத் திரட்டு) கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (தொகுப்பு) புலவரகம்,
சுன்னாகம், 1956 .
பதினெண் சித்தர் நாடி சாஸ்திரம் B இரத்தன நாயகர் ஸன்ஸ், சென்னை, 1952.
81

Page 107
31
32.
33。
3.
35.
36.
38.
பிரும்ம ரகசியம் ர. சு. நல்லபெருமாள், வானதி பதிப்பகம், சென்னை 17 ஐந்தாம் பதிப்பு 1998.
மூலதத்துவம் (வினா விடை)
Dr. கலாநாயகி சிங்கநாயகம் நினைவு வெளியீடு 1989.
விதான மாலை மூலமும் உரையும், சோதிடப்பிரகாச அச்சுயந்திரசாலை, இரண்டாம் பதிப்பு-1977.
Encyclopaedia of Indian Medicine (Vol II) S. K. Ramachandra Rao, Popular Prakasan, Bombay 1st Edition 1987.
Glimpses of Saiva Siddhanta C. N. Singaravelu, Saiva Siddhanta Perumanram, Madras 004.
Materia Medica of Ayurveda Bhagwan Dash B. Jain Publishers (P) Ltd. 1994.
Saiva Sithantham in Relation to Science S. M. Muthian. Saiva Prakasa Press, Jaffna, 1967.
Studies in Hinduism K. Navaratna In Jaffna, 1963.
Tamil English Dictionary (Vol. I & III) T. V., Sambasivampillai, the Research Institute of Siddhar's Science, Mount Road, P. O. Madras, 1931.
82


Page 108


Page 109